கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2001.05

Page 1


Page 2
இந்த இதழில்ண
கவிதைகள்
இ) முருகையன். ம்ே ஜெயசீலன். A faur. தில் கல்வயல் குமாரசுவாமி. A) பளை கோகுல ராகவன். A) அபீராஜன். தில் மீசாலையூர் கமலா, தி கடலோடி தி கிராமத்துக்குயில் ஒவியா. Afp Inaccf.
சிறுகதைகள்,
தில் சிவானந்தன். (லண்டன்) ப்ே வனஜா நடராஜா. நீப் சிவபெருமான்.
கட்டுரைகள்
4) சிவசேகரம். A) பாமரன். A) உலகள்.
Sana
Modonna & The Child
Oil on Canvas I997. 36" x 48"
 

புதிய ஜனநாயகம்
தாயகம் புதிய வாழ்வு
புதிய பண்பாடு
(3D 2001 இதழ் 42
அமெரிக்காவும் தாயகக் கோட்பாடும்
இன்றைய கணனி தகவல் தொழில்நுட்ப யுகத்தில் உலகம் கிராமமாக சுருங்கி வருகிறது என்பது உண்மை. அது போன்றே அவ் உலகக் கிராமத்தின் சேரிகளான மூன்றாம் உலக நாடுகளது இறைமைகளும், மக்களது உரிமைகளும் உலகின் சட்டாம்பிள்ளையாகத் தன்னைக் கருதும் அமெரிக்காவின் அதிகார வலைக்குள் சுருங்கி வருகின்றன.
உலகநாடுகள் பலவற்றின் மீதும் பல தசாப்தங்களாக அவர்கள் மேற்கொண்டு வரும் அதிகார வெறிச் செயல்களும் அடாவடித்தனங்களும் அப்பட்டமானவை. அவர்களது பலம் வாய்ந்த தகவல் தொடர்பு ஊடகங்களால் திரித்து மறைக்கப்பட்ட போதும் அவை வெளிச்சத்துக்கு வருகின்றன. இனப்பிரச்சினையைச் சாட்டாக வைத்து இலங்கைத் தீவும் அவர்களது அதிகார வலைக்குள் இழுத்து இறுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியான வெளிப்பாடாகவே அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்கத்தூதர் அலஸ்ஸின் அதிகாரத் தொனியிலான வார்த்தைகள் அமைந்திருந்தன.
ஒரு அமெரிக்கத் தூதரிடமிருந்து இத்தகைய வார்த்தைகள் வெளிவந்தது வியப்பல்ல. பேரினவாதத்துக்கு எதிராகப் பெரும் விலைகளைக் கொடுத்த இம்மண்ணில் ஒரு எதிர்ப்பலையோ சலசலப்போ எழாமல் இருந்ததுதான் வியப்பாகும். அந்த அளவுக்கு நாம் பல்வேறு முனைகளாலும் நன்கு பதப்படுத்தப்பட்டுள்ளோம்.
இலங்கையின் புவிசார் அரசியற் சூழல் இத்தகைய ஆதிக்கப் போட்டிகளுக்கும் அதிகாரத்திணிப்புக்களுக்கும் இடம் தந்திருப்பதை இரத்தம் தோய்ந்த அனுபவங்களுக்கூடாக எமது மக்கள் கற்றறிந்த பின்பும் இத்தகைய நிலை இருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரிய ஒன்றாகும்.
இரு தசாப்தங்களாக தொடரும் போரை நிறுத்தி சமாதானத்தையும் நீதியான தீர்வையும் ஏற்படுத்துவதில் நடுநிலை நண்பர்களாக நின்று எவரும் ஆலோசனை வழங்குவது தவறல்ல. ஆனால் தத்தமது ஆதிக்க நலன்களைப் பேணும் நோக்குடன் தமது அதிகாரநுகத்தடியை திணிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அதனைப் பயன்படுத்த முனைவது தவறாகும்.

Page 3
இலங்கையின் இனவாத அரசியல் யுத்தமாக வெடித்து நீண்டு தொடரும் சூழலில் பேரினவாதிகளுடன் இணைந்து தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் அவர்களது வாழ்வுரிமையை - மரபுவழித் தாயகத்தை - மறுப்பதும், இலங்கையின் எப்பகுதியும் எவருக்கும் சொந்தமில்லை என்பது போல் - உலகமய அரசியல் - பேசுவதும் நீதியான தீர்வில் அக்கறை கொள்பவர்கள் கூறும் கூற்றல்ல. இதன் நீடிப்பில் இலாபமடைய விரும்புபவர்கள் கூறும் வார்த்தை இது.
அமெரிக்காவின் பார்வையில் தேசியம், சுயநிர்ணயம் என்பதெல்லாம் மக்களின் விருப்பிலிருந்து வெளிவருவதில்லை. அவை அமெரிக்க நலன்களில் இருந்து எழுபவை. சுதேசிகளான செவ்விந்தியர்களை கொன்றழித்து அவர்களது மரபுவழித்தாயகத்தை அபகரித்தது மட்டுமல்ல. அத்தகைய வழிமுறையை - "வல்லதே வாழும்” என்ற ஆதிக்கக் கோட்பாட்டை நவீன உலகிலும் அமெரிக்கா தொடர்ந்து பேணிவருறது.
அனைத்துலக மக்களின் சுதந்திரம், சுபீட்சம், நல்வாழ்வு என்பதற்கு பதிலாக தனது ஏகாதிபத்திய, அரசியல், பொருளாதார, கலாச்சார, கருத்தியல் ஆதிக்கத்தின் கீழ் உலகினை வைப்பதற்கு அது முயல்கிறது. தனது கரண்டற் பொருளாதார அமைப்பிலிருந்து விடுபட எண்ணும் உலக நாடுகள் பலவற்றின்மீது அவர்களது இறமைகளையும் மதியாது செய்துவரும் அடாவடித்தனங்கள் உலகறிந்தவை. வியட்னாம் முதல் கியூபாவரை - பல ஆசிய ஆபிரிக்க லத்தீன்அமெரிக்க நாடுகள் இதற்கு உதாரணங்களாகின்றன. தமது நலன்களுக்கு பாதகமாக இருந்தால் தேசங்களை திட்டமிட்டுப் பிளவுபடுத்துவதும், சாதகமாய்மைந்தால் இறுக்கமாக ஒன்றிணைத்து வைப்பதும் அதன் வரலாறு, ருஷியக் கூட்டமைப்பை சிதறடித்ததிலும், யூகோளம்லாவியாவை தனது மேசைக்கு அளவாகத் தூண்டாடியதிலும் வெளிப்பட்டது தேசிய இனங்களின் விடுதலை மீது அமெரிக்கா கொண்டிருந்த அக்கறை அல்ல. அவர்களது உலக மேலாண்மைக்கான அதிகார வெறித்தனமே அங்கு வெளிப்பட்டது. ஈராக்குக்கு எதிராக அதன் எல்லையில் உள்ள குர்திஷ்மக்கள் விடுதலை இயக்கத்துக்கு ஆதரவு வழங்கும் அமெரிக்கா, ஒச்சலான் தலைமையிலான குர்திஷ் மக்கள் விடுதலை இயக்கத்தை நசுக்குவதில் முன்நிற்கிறது. இது அமெரிக்காவின் இரட்டை வேடமல்ல இது அவர்களின் நலன்களுக்கு அவசியமான தாயகக் கோட்பாடு.
பிரித்தாளும் தந்திரம் என்பது காலனித்துவத்துடன் நின்றுவிடவில்லை. நவகாலனித்துவ அமைப்பிலும் தொடர்கிறது. பலம் மிக்க மக்கள் சக்தியை தமக்கெதிராக ஒன்றுபட்டு ஏழாமல் தடுப்பதற்கு அவர்கள் செய்யும் சூழ்ச்சி இது. எனவே ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகும் மக்கள் ஒருவரது சுதந்திரத்தை ஒருவர் மதிப்பதுடன் - தமது உரிமைகளுக்கும். நலன்களுக்கும் - உலக எஜமானர்களின் தயவை நாடுவதைத் தவிர்த்து தமது சொந்தப்பலத்தில், சொந்தக் கால்களில் நிற்பதற்கு உறுதிகொள்ளவேண்டும்.
- ஆசிரியர் குழு
Gլը 2001 தாயகம்

மனித மண்பு
- முருகேயன்
உயர்ந்தவர்கள் நாங்கள் எல்லாம் உலகத் தாய் வயிற்று மைந்தர் நசிந்து நொந்து கிடக்க மாட்டோம் நாங்கள் எல்லாம் நிமிர்ந்த நிற்போம்
எங்கள் விதியை நாமே துணிவோம் ஏனையோரின் உரிமை பறியோம் தங்கள் திமிரைத் திணிக்க வந்தால் தட்டிக் கேட்கத் தயங்க மாட்டோம்
சொந்த மண்ணை விற்க மாட்டோம் சுய தணிச்சல் எங்கள் சொத்து பந்து போல உருள மாட்டோம் பதங்கி வதங்கி வெருள மாட்டோம்
தேசியத்தைத் தொலைக்க மாட்டோம் சிறுமை கண்டு பொறுக்க மாட்டோம் பூசி ழுெகி மழுப்பல் நம்போம் புரிந்து விளங்கி உணர்ந்த தெளிவோம்
குட்டக் குட்டக் குனிய மாட்டோம் கொள்கைப் பற்றில் நலிவு காட்டோம் சட்டம் நீதி ஆய்ந்து பார்ப்போம் தடங்கல் கண்டு மடங்க மாட்டோம்
மீண்டுயிர்த்த மனிதர் நாங்கள் மீட்சி எங்கள் வேட்கை ஆகும் சீண்டுகின்ற சேட்டை வேண்டாம் செம்மையான நீதி வேண்டும்
சண்டை நீக்கம் நிகழ வோடும் சந்தி நோக்கம் திகழ வேண்டும் மண்டை விக்கப் பாய வேண்டும் மனித மான்பு நிறைய வேண்டு
|
மனிதனது உடமை கள் அனைத்திலும் விலைமதிக்க முடியாதது அவனது வாழ்வாகும். மனிதன் ஒரு தடவை தான் வாழமுடியும். அந்த வாழ்வை கால மெல்லாம் குறிக்கோள் இனிறி பாழாக்கி விட்டேர் ଶ୍ରେTଙ୍ଗୀ [] எண்ணம் வதைப்பதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் அவனி சீராக வாழ வேண்டும். அற்ப்பனாக வாழ்ந்து இழிவு தெடினேன் என்ற அவமானம் உள்ளத்தை எரிப்பதற்கு இடமில்லாத வகையில் அவன் நேராக ରାl || வேனிடும். உலகின் தலை சிறந்த இலட்சியத்துக்காக, மனித குத்ெதினர் பொன்னான விடுதலைக் காக எனது வாழ்வ முழுவதையும் அற்ப் பனித்தேன் என்று இறக்கும் பொழுது சுடறும் உரிமைபெறும் வகையில் அவள் வாழ வேண்டும்,
| iii
I:I 2 JD.

Page 4
(SD 2001
Aso23D R==276 ~ த.ஜெயசீலன் ஒவ்வோர் மனிதனிலும் காலம் பதித்தள்ள தழும்புகளை மெல்லத் தடவிநான் பார்த்து வந்தேன்.
காலம். கடித்த காயத்தில் இன்றுகூட ரத்தக் கசிவை, ரணவலியைத் தரிசித்தேன்.
ஒவ்வோர் உளத்தள்ளும் ஊறியுள்ள அவலங்கள், ஒவ்வொர் முகத்தினதம் உண்மையான விம்பங்கள், ஒவ்வொருவரையுஞ் சூழ்ந்த உருக்குலைக்குங் கஷ்டங்கள், ஒவ்வொருவருந் தாங்கிப் பழகிவிட்ட உள்வலிகள், ஒவ்வோர் சிரிப்புள்ளும்
உறைந்தள்ள சோகங்கள், தன்பங்கள், தயரங்கள். “சூ” இந்தக் காலமொரு கொடுங்கோலன் போலக் கொடுமைகளைக் கட்டவிழ்த்த அடக்கு முறைக்குளெல்லோ அனைத்தினையும் வைத்துளத! சீவனினை. காலம்
செடில் பிடித்த தன்விருப்புக்கு ஏற்றபடி ஆட்டுதிதை ஏனென்றார் கேட்கிறத? கயிற்றில் நடத்தலெனக்
கழிகின்ற வாழ்வியலில் எதவும் நடக்குமெனக் காலம் சிரிக்குத. ஆனால். வளமான வாழ்வை வளைத்துள்ளார்’ சிலர் வெற்றி விளைவுகளைச் சுரண்டி விளைந்தள்ளார் பலர், அவர்கள். காலத்தக்கும் லஞ்சம் கொடுத்தனரோ.? தெரியாது:
ஆனால். இக்காலம் ‘ஆட்டமிட்ட பலர்வீழ வாட்டியத, காலமெப்போ தன் தவறை திருத்தவதரி
4. தாயகம்

. ஏ.சிவானந்தன் லண்டன்
எல்லாமே ஏற்பாடாகிவிட்டது. எஸ்எஸ் ஒத்ரான்தோ கப்பல் சதாம்ற்றன் துறைமுகத்தில் தரிக்கும் போது அவன் கப்பலேறித் தன் மனைவியையும் குழந்தைகளையும் சந்திக்கலாம். கப்பல் கம்பனியிடம் பேசி கப்பல் வரும் நேரத்தை மீண்டும் உறுதிப்படுத்தினான். பி. அன் ஒ. கப்பல் கம்பனி ஆள் நக்கலாகப் பேசினான். கப்பல் நாளையும் நாளைமறுநாளும் அதற்கடுத்தநாளும் அவன் குடும்பத்துடன் அங்கேயே இருக்கும். யாரும் அவர்களைக் களவாடிச் செல்லமாட்டார்கள் என்றான். தன்னுடைய பகிடிக் குத் தானே சிரித்தான்.
இன்னும் ஆறு மணிநேரம்
பொழுதை எப்படிக் கழிப்பது? ஆகவும் முந்தித் துறைமுக மேடைக்குப் போய்ச் செய்ய ஏதுமில்லாமல் துாங்கிவழிவதில் பயனில் லை. வீட்டை மறுபடி துப்பரவாக்கிக் கட்டில்களை இடம்மாற்றி வைக்கலாமா? வீடு? அது ஒன்றும் வீடல்ல, நொட்டிங் ஹில் பகுதியில் விக்றோரியா காலத்துப் பழம் வீடு ஒன்றில் தரைமட்டத்துக்குக் கீழாக தளத்தில் ஒரு பெரிய அறையும் குசினியும் இருண்டு மங்கின இடம். உடைந்த இயந்திரங்களும் தளபாடங் தாயகம்
தமிழில் மணி
களும் குவிக்கப்பட்ட பாழ் நிலத்தை நோக்கினாற் போல ஒரு யன்னல். என்றாலும், ரவி, மலர்களும் படங்களும் ஒரு கொத்து அலங்கார பலுான்களும் கொண்டு அறையைப் பிரகாசப்படுத்தி யிருந்தான். அவன் மேலதிகமாகப் பொருத்திய இரண்டு மின்விளக்குகளும் ஒரு மாபெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவனுக்கு அனுமதிக்கப் பட்டதை விட ஒரு வாட் மின்சாரத்தை யேனும் அவன் பாவித்தால் அவனை வீட்டை விட்டுத் துரத்தி விடுவதாக வீட்டுக் காரன் மிரட்டி யிருந்தான். ஏனென்றால் மின்கட்டணம் செலுத்துவது வீட்டுக்காரன் அல்லவா? ரவியின் வாடகையிற் பெரியதொரு பங்கு மின்சாரத்திற்கானது என்பதோ அவனது வாடகை அவனுக்கு மேலுள்ள தளத்தில் இருக்கும் வெள்ளையனின் வாடகைபோல நாலு மடங்கு என்பதோ திருவாளர் ஸ்மாலெச் ஏற்கக்கூடியன அல்ல. ரவிக்கு இது பிடிக்காவிட்டால் வேறு எங்காவது இடம் தெடலாம். யாருமே அவனை ஏற்க மாட்டார்கள். அதுவும் அவனுடைய குழந்தைகளுடன் திருவாளர் ஸ்மாலெச் அவனுக்கு அவன் குடும்பத்துக்கு தங்க இடம் கொடுத்து தானும்முன்பு ஒருஅகதி,
CSD 2001

Page 5
என்பதாலும் தானும் களல்டங்களை அனுபவித்தவன் என்பதாலும் தான். அந்த விடயத்தை விளக்கிக் கொண்டிருந்த போதே படிக்கட்டின் இடைத்தளத்தோடு இருக்கிற கழிப்பறை வீட்டின் இரண்டு அடுக்குக் களுக்கும் பொதுவானது என்றும் ரவியின் தனிப்பட்ட பாவிப்புக்கானது அல்ல என்றும் நினைவூட்டினார். அவனது குழந்தைகள் அதை அசிங்கப்படுத்தக் கூடாது. அவர்கள் குந்துவார்களா. அமர்வார்களா? மலந்துடைக்கும் தாளைப் பாவிக்க அவர்களுக்குத் தெரியுமா? குண்டிகழுவப் போய் முழு இடத்தையும் அசிங்கப 'படுத்துவதை அவர் விரும்பவில்லை. இரவு பதினொன்றுக்கு விளக்குகளை அணைத்தாக வேண்டும் எரிவாயுமீற்றரில் கைவைக்கக் கூடாது.
இன்னும் ஐந்து மணி நேரம். குளியற் தொட்டிக்கு மேலாக நீண்ட கயிற்றில் ரவி துவாய்களை விரித்துப் போட்டான். குசினிக்குள் ஒரு குளியலறை அது ஒரு ஆறுதல், வீட்டிற் போல வடிவர் இல்லை. ஆனால் வுல் வேர்த்ஸ் கடையில் வாங்கிய ரப்பர் உபகரணம் மனைவியைச் சாந்தப்படுத்தும் . இளஞ்சிவப்பு நிறத் துவாய்கள் அவனது மகள்மார் லீலாவுக்கும் சாந்திக்கும். அவர்களுக்கு அதிலிருந்த பூ வேலைப்பாடு விருப்பமாயிருக்கும். சின்ன வனுக்கு, அவனுக்கு நாளை நாலு வயது, ஆங்கில அரிச் சுவடியும் அப்போது தான். வாசிக்கத் தொடங்கிய பாப்பா பாட்டும் பொறித்த துவாய். அவனது மனைவிக்காக அடுப்புக்கு மேலாக இன்னும் மலர்கள். அவை சமையல் நெடியை விரட்ட உதவும். அவன் முன்பு வாங்கிய மோசமான மணமுள்ள ரசாயனப் பொருளை விட ஏற்றது. மல்லிகையினதும் மனோரஞ் சித்தினதும் மூக்கைத் துளைக்கும்
CD 2001
வாசனைக்காக அவனது மனம் ஏங்கியது ரோஜாக்களதும் டெய்ஸிகளதும் அடக்கமான மணம் அவனுக்குத் திருப்தி தரவில்லை.
போக நேரமாகிவிட்டது. வாட்டர்லூ ரயில் நிலையத்தில் ஒரிரண்டு சஞ்சிகைகள் வாங்கி சதாம்ற்றன் போகும் வண்டி ஏறமுன் கோப்பி குடிக்கவும் நேரம் இருக்கும்.
ரவி போய்ச் சேர்ந்த போது கப்பல் எதிர்பார்த்ததற்கும் முன்பாக மேடைக்கு வந்து விட்டது. இப்போது அவனுக்குள் ஒரே பதற்றம். வேகமாகக் கப்பற் தளத்திலேறும் ஆவலும் மனை வியையும் குழந்தைகளையும் ஒன்றாக என்றென்றைக்குமாக அரவணைக்கும் ஏக்கமும் அவனது வெறுமையின் வேதனையுள்ளிருந்து அறுமாதமாகத் தினமும் அழுது கொண்டிருந்த வெற்றிடத்தை நிரப்பத்துடித்தன. அவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். தன் பதற்றத்தைப் பகுத்தறிவால் தணித்துப், படகுக்கான ரயிலிருந்து மற்றவர்கள் பாய்ந்து விரையவிட்டு, ஆற இருந்து அமைதியாகவும் ஆறுதலாகவும் கடைசியாக இறங்கினான். கப்பலை நெருங்குகையில் அவனது காலடிகள் துரிதமாயின் கப்பற் தளத்தில் சேலை அணிந்த பெண்ணின் கையில் இருப்பது அவன் மகன் ராமா? மற்றவர்களைப் பக்கவாட்டாகத் தள்ளிக் கொண்டு கப்பலில் ஏறும் வெறியுடன் ஒடத் தொடங்கனான். இப்போது அவன் கப்பலின் மேற் தள்த்தில் நிற்கிறான். அவனுடைய குடும்பம் அங்கே இல்லை. படிக்கட்டுவழியே கீழே வரவேற்பறை வழியாக, கடைகளைத் தாண்டி ஓடினான். யாருமே இல்லை.
தாயகம்

அவனுடைய ஊரார் யாருமே இல்லை. பொறுப்பாளர் அறையை நோக்கி ஓடினன் 'ஏய், ரவி, ரவி, யாரோ அழைத்தனர். திரும்பினான். அங்கே’சேன நின்றான்
‘அவர்கள் எங்கே? அழாத குறையாகக்
கேட்டான். ‘ஏய், ஏய், ஆறுதாலாத’ என்றான் அவன் நண்பன். ‘அவர்கள் இங்கே தான் இருக்கிறார்கள். மேல் தட்டில், நான் இப்போது தான் அவர்களை அழைத்துச் சென்றேன். ரவி படிக்கட்டு வழியே பாய்ந்து அந்தப் படிக்கட்டின் வழியே பார்த்துக் கொண்டிருந்த மகன் மீது விழாத குறையாக மேலேறினான்.
‘அம்மா, அக்கா, என்று ராம் தாயினதும் தமக்கைமாரினதும் கவனத்தை ஈர்த்தபடி தகப்பனின் கரங்களுக்குள் தாவினான்.
மகன், மகன்' என்று பையனை முத்த மிட்டபடியே தகப்பன் முணுமுணுத் தான். நீ வளர்ந்து விட்டாய். எங்கே அக்காமார்? ஆ. மகள்.
இப்போது அவன் எல்லாரையும் தன் விரிந்த கரங்களுள் அனைத்திருந் தான். பழைய வேதனைச் சுமைகுறைந் தது, ஆனால் வெற்றிடம் நிரம்புவது தாங்க இயலாததாக இருந்தது. இத்தனை காலம் வெறிதாக இருந்தது திடுமென்று நிறையும் போது, வேதனை தாங்கவே இயலாததாகியது. மகனை இறக்கி விட்டுக் கீழே அமர்ந்தபடி, தன்மனைவியை மட்டும் அணைத்தபடி, அவன், மரித்துப்போன
மனிதன், ‘என்னுடைய சீவியம்" என்று
குசுகுத்தான்.
棗 豪 臺
‘ற்றாக்ஸிக்கு நான் காசைக் கொடுக்கிறேன். நீர் போய்க் கதலுைத் திறவும்’ என்று மனைவியிடம் சொன்னான். ‘போம், இந்தாரும் திறப்பு. லீலா, சாந்தி, ராமைப் பிடியுங்கள். தெருவால் ஓடுகிறான்'
参见 = --e t = 8“ = x.
அவனுடைய மனைவி கட்டடத்தின் சாம்பல் நிறத்தின் முன் செயலற்று அசையாமல் நின்றாள். யூலை மாதத்து வெய்யரிலாலும் தகப் பனுடன் இருப்பதாலும் மகிழ் வுகொணி ட குழந்தைகள் கதவை நோக்கித் தாயாரைத் தள்ளினர். மனைவியிடம் திறப்பை வாங்கிய ரவி, அவர்களை நடுவிறாந்தை ஊடாக, படிகள் வழியாக, அவர்களுடையதான அறைக் கு அழைத்துச் சென்றான். வீட்டுக்குள் விரைந்த லீலா. இருந்தாற்போல் இருட்டி விட்டது. என்றாள். “இங்கு வெளிச்சமே இல்லை. அந்த சுவிச் சுகளோடு விளையாடாதே சாந்தி’ என்று தங்கை யைக் கண்டித்தான். ராம் எங்கே ராம், இன்னொருகால் ஒளிக்கிறாயா? வா வெளியே, அப்பா கூப்பிடுகிறர்.
‘வீட்டைப் பற்றி எழுதினேன், இல்லையா’ வாசலில் தயங்கி நின்ற மனைவியிடம் ரவி விளக்கினான். குசினியைத் தாண்டித்தான் வரவேற்பு அறைக்குள் வர முடியும் என்பது
புதினமாய் இராது?
“எதுவும் பரவர்யில்லை”. அவன்
கைகளைப் பற்றியவாறே அவள்
சொன்னாள் எதுவும் பரவாயில்லை நாங்கள் ஒன்று சேர்ந்தாயிற்று. அது போதும் 'குசினி பிழையில்லை’ என்று சொன்னபடி, அவ்வழியே படுக்கை யறைக்குப் போனாள். ‘எங்கே வரவேற்பு அறை? ஓ, எல்லாமே ஒன்று தான், இல்லையா? என்றாலும் எல்லாவற்றையும் வடிவாக ஒழுங்குபடுத்தி இருக்கிறீர்கள்
ரவி. குழந்தைகளின் கட்டில்கள் அந்த
மூலையில், எங்களுடையது இங்கே இந்த மூலையில், கதிரை மேசைகள் நடுவில் - நல்லாக இருக்கிறது. வடிவாக நீங்கள்
மே 2001

Page 6
கடிதங்களில் எழுதினதை வைத்து நான் நினைத்ததிலும் நல்லாக. அந்தப் பூக்கள்.?,
‘அப்பா’ என்று கூவினான் ராம். ‘வெய்யில் எங்கே? ஏன் யன்னல்கள் இல்லை? நான் மாமரத்தில் ஏற இயலுமா? இதென்ன விளக்கு? நாறுகிறது. சத்திவரப் பார்க்கிறது.”
"மகனே அது விளக் வில்லை" என்று மென்மையான குரலில் ரவி சொன் னான் ‘அது அறையைச் சூடாக்குவதற்கு ஒரு லாம்பெண்ணைக் கணப்பு. இந்த ஊரில் குளிர்தாங்க இது தேவை. வெய்யில் காலத்திலும் தான். இங்கே ஒரு மரமும் இல்லை. பகல் சாப்பிட்ட பிறகு பூங்காவுக்குக் கூட்டிக் கொண்டு போகிறேன்.”
‘எங்களுடைய பூக்கள் மாதிரி -யே இவை இல் லை. ’ என்று கேட்டபடியே ஒரு ரோஜாவின் இதழ் களைப் பியப் த்துக்கொண்டு லீலா குசினியால் வந்தாள்.
*அப் பா, கக் கூசைச் க் காணவில்லை? எங்கே? அப்பா, நான் குளிக்கலாமா?’ என்று கெஞ்சிக் கேட்டான். குழந்தைகள் எல்லாருக்கும் ஒரேயடி யாக மறுமொழி சொல்ல,ரவி அவர்களை நோக் கினான் திடீரென்று, தன்னிடம் ஒரு மறு மொழியும் ஒரேயடியாக மறுமொழியும் இல்லை என்று அவனுக்குத் தெரிந்தது. தம் நாட்டின் பசுமை, வெய்யில் மரங்கள், கடற்காற்று எல்லாவற்றினின்றும், அவர்களைக் சூழத் திறந்து இருந்த இல்லங்களின் அன்பினதும் நட்பினதும் குளுமையினின்றும், மலர்கட்கும் மரங் கட்கும் இடமிருந்த ஒரு மண்ணிலிருந்தும் கடல் அலைகளிலிருந்தும் வெகு தொலைவில் குழந்தைகட்கு இட மில்லாத ஒருமண்ணுக்கு, வீடுகள் நடுவே ஒரு வீடாக இல்லமாக இல்லாத ஒரு இடத்தக்குக் கொண்டு வந்திருக்கிறான். அவன் வெதும்பி அழுதான்.
/ー
ܢܠ
(SD 2001 8
ஆன்மீகமும் தீவிர மதவாதிகளும் “கடவுள் நம்பிக்கையற்றவர்கள் ஆன்மீகவாதிகளாக இருக்கமுடியாது. கடவுள் நம்பிக்கையும் ஆன்மீகமும் ஒன்று என்று பொதுவாகக் கருதப்படுகிறது. இக்கருத்து சரியல்ல. ஐன்ஸ்டைன் கடவுள் நம்பிக்கையற்றவர்தான். ஆயினும் அவர் உண்மையான பொருளில் ஆன்மீக வாதி. லெனின், மாசேதுங் போல் வரலாற்றின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களையும் நான் ஆன்மீகவாதிகளாகவே கருதுகிறேன். தற்காலத்தில் கடவுள் என்ற சொல்லின் பொருள் முன்னைக் காட்டிலும் விரிவானதாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் லெனின் போன்ற மாமனிதர்களை தள்ளிவிட்டு அவர்களுக்கு பதிலாக தீவர மதவாதிகளை ஆன்மீகவாதிகளாக ஏற்றுக்கொள்ள நேரும்”
།།༽
- ரவீந் ாத் தாகர்
ரவீந்திரநாத் த ン
தாயகம்

தாயகம்
g Game asis Castrës
- கல்வயல் வே. குமாரசாமி வேலி கிடுகு அடைப்பு உள் வரிசை முள்கம்பி நாலு வளமும் நடுவில் இரும்புக்கேற் பித்தளை ‘யேல் பூட்டு பெரிய தடிப்பு எழுத்தில் ‘கவனம் கடிநாய்’ படலையிலே தொங்கும் தவமிருக்கும் மவுனம் குடிபோன வீடோ? காஞ்சீபுரம் சேலை கனகாம்பரமாலை பூஞ்சிட்டுப் போலப் பொடிச்சி ഖഖഴ്സ് வீட்டில் கொலு இருத்தி விட்டிருக்கு ஆரேனும் கேற்றடிக்கு வந்தாலே மோப்பம் பிடிச்சுவிடும் தாற்றல் தொடங்கி கொதி எழுப்பும்
அவ்வளவில் நாற்றம் எடுக்கும் மண் நாசு அரிக்கும் தம்மினால் ஆற்றை நினைப்பில் என ஆவேசம் கொண்டு
எதையோ சோற்றுக்குள் வீசிப்
பழஞ் சேலையாய்க் கிழியும் ஒற்றைக்கால் கொக்காக் மீசை அடையாளம் நெற்குவியல் மேல் ஓணான் போல் நிறை அழிவு தொண்டை வரண்ட விடாய் எச்சில் வர மறுக்கும் சண்டாள நாக்குச் சவண்டொன்றும் பேசாத ஒரு மிடறு தண்ணீர் கிடையாத வீடாச்சு தாகத்தால் தொண்டை வரண்ட விடாய்
அப்பா! முயற்சியால் ஆழ வெடிவைச்சுக் கற்பார் பிளந்த அன்றே கண்ட தண்ணீர் நல்ல தண்ணீர் கற்கட்டுமெல்லே பொழிகல்லில் பக்கத்தில் கலக்குப்பருவம் கவனிப்பார் இல்லாமல்
9 (3D 200

Page 7
செவ்விளை இன்று குலை தள்ளி வாடுகுத தவ்வலாய் நின்று தவண்டையடிப்புப் பார் ஒற்றைக் கால் கொக்கு நரை மீசை காவலோ ஆடுகால் பாறி அச்சுலக்கை தேய்ஞ்ச்தலா பட்டையும் பீத்தல்
கயிறும் பிறுதல் ஒரு சொட்டுத் தண்ணிரேனும் அள்ள முடியாத பட்டை எதக்கு? பரபரத்த பொய் வாழ்க்கை “டை அடிச்ச மைக்கறப்பு ‘ரை’ ச்சுருக்கிலே கழுத்து ஒருவாளி தண்ணீரை அள்ளப் பலமில்லை பூசைக் குதவாத பூவென்று தள்ளி விடக் கூசாத நாக்கு நோய் கொண்னி நடுங்குதடி
* 女
மேனகையாம் ஊரெல்லாம் மெல்லக் குசுகுசுக்கும் மேனகைதான்
மேல் எல்லாம் தங்க நகை ஆதலினால் வைரத்தால் அட்டியல் முழங்கை வரை வளையல் மார்ப்பதக்கம் சங்கிலி மணநாள் அலங்காரம் பார்த்தா(ல்) மதன் - ரதி பார்த்தார் ஆர் உள் மனையல் மூக்கைப் பிடிச்சால் தம் வாய் திறக்கத் தெரியா சாக்குருவி ஆரூடம் சொல்லும் அறிஞர்கள் அப்பா கொடுத்த வரம்
மீட்கா(த)
அடைவு வைச்சு தப்புக்குதவாத் தடக்குக் கதையாச்சு
* 女
புழுதியிலே எழுதியதால்
பொற் கவிதை தொலைஞ்சுதடி
(3D 2001 

Page 8
CSD 2001
இனி ஹெவி
- பளை கோகுலராகவன்
இதழ் சுமந்த புண்ணகை இழந்துபோன பாழ் வெளியில் நான் இரசிக்கும் பச்சைத் தென்னை என்னவாகி இருக்கும்? பனியுறைந்து நிலவெறிக்கும் அழகிருக்கும் இரவினில் பேயறைந்து போன நாய் ஊளையிட்டு அழும் கல் கல்லாய் சுமந்த கட்டிய வீட்டுக்குள் சமித்த ஆட்டின் தலை ஆர் கொணர்ந்த போட்டானோ? நட்சத்திர நிலவினில் காற்றாடும் மல்லிகைச் செடி வாசம் போய் எங்கிருந்த வந்திருக்கும் இந்தப் பிணவாடை நாய்களும் கருமூஞ்சிப் பேய்களும் சந்ததியை பழித்தபடி உலவித் திரிய எப்படித் தாங்குமோ என் நிலம்? மோகனம் சுமந்த காற்றின் கீர்த்தனம் இழந்த தொய்விண்குரல் இன்னமும் கேட்கின்றது கிளிகளின் கூட்டினில் சுடலைக் குருவிகளை வாசம் செய்ய விட்டழகு பார்க்கும் வண்ணத்தை என்ன சொல்ல சுடலைக் குருவியின் கீதம் இனிமையாய் இருக்கும் வரை எண்வெளி பாழ்தான்.
శళీశీథీశీ
12 தாயகம்
 
 

ஈழத்து தமிழ் இலக்கியமும்
தடம் புரளும் பார்வையும்
("ஈழத்து தமிழிலக்கியத் தடம்" என்ற தலைப்பில் மூன்றாவது மனிதன் வெளியீடாக வந்துள்ள கா. சிவத்தம்பியின் கட்டுரைத் தொகுப்புத் தொடர்பான சில கருத்துக்கள் இவை. இந்நூல் பற்றிய விரிவான ஒரு மதிப்பீட்டை மூன்றாவது மனிதன் சஞ்சிகைக்காக எழுதியுள்ளதால் அவற்றை இங்கு எழுதவில்லை. அதே வேளை, இந்த நூல் அடையாளங் காட்டுகிற ஒரு சிந்தனைப் போக்கைப் பரவலாக விமர்சிக்கும் தேவை கருதி அரசியற் கோணத்திலிருந்து சில கருத்துக்களைக் கூறுகிறேன்.)
1. சிவத்தம்பியின் அரசியல் சமரசங்கள்எவ்வாறு அவரது இலக்கியக் கொள்கையைத் தீர்மானித்துள்ளன. என்பதை இங்கு அறிய முயல்கிறேன். நுT லுக் குப் - புறம் பான 60 விடயங்களையும் இங்கு குறிப்பிட நேருகிறது.
11. சிவத்தம்பி இந்த நூலில் மட்டுமல்லாமல் அண்மையில் ஞாயிறு தினக்குரலில் சொல்லிய விடயங்களிலும் சோவியத் சார்புக் கட் சியையே கம்யூனிஸ்ட் கட்சியாயும் சமசமாஜக் கட்சியை மட்டுமே த்ரொத்ஸ்கியக் கட்சி யாகவும் காணுகிறார். 1963ம் இரு கட்சி களிலும் நேர்ந்த பிளவுகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல. இடதுசாரி இயக்கத்தில்
தயாகம்
- சி. சிவசேகரம்
நேர்ந்த பிளவின் பின்பு சண்முகதாசன் தலைமையிலான மாக்ஸிய லெனினியவாதிகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1963 முதல் 1970 வரை தேசிய மட்டத்தில், சகல தேசிய இனங்களிடையிலும் தொழிற் சங்கம், விவசாயிகள் *அமைப்புக்கள் உட்பட அனைத்து அமைப்புக்களிலும் இருந்த வலிமையை அவர் புறக்கணிப்பது தற்செயலான தல்ல. அதேவேளை வடக்கில் சாதியத்துக்கு எதிரான இயக்கத்தை “இடதுசாரிகள்” நடத்தியதாக நூலிலும் உரிமை கொண்டாடுகிறார். சோவியத் சார்புக் கட்சியினர் இந்தப் போராட்ட காலத்தில் செய்த காட்டிக்கொடுப்புகள் பற்றி அவர் அறியாதவரல்ல. ஆனால் “சீனசார்பு” கட்சியின் முக்கியத்தை குறைத்துக் காட்டுவதன் மூலம் அவர் செய்வன இரண் டு. ஒன்று அவர்களுடைய ஆக்கமான பங்கின் முக்கியத்தை மறுப்பது மற்றது வலது சந்தர்ப்பவாதி களான இரண்டு இடதுசாரிக் கட்சிகளது துரோகங்களை ஒப்புக் கொள்ளும் போது விலக்கில்லாமல் எல்லா இடதுசாரிகள் மீதும் பழி விழுகிற விதமாகத் தனது கூற்றுக்களை அமைப்பது.
III. பாராளுமன்றத்தில் ஒரு எம்பியாக இல்லாதது தான் குறை என்றால் சில காலம் எஸ். டி. பண்டார
13 CD 2001

Page 9
நாயக்க “சீனசார்பு” கட்சியுடன் இணைந்து நின்றது பலருக்கும் மறந்து போயிருக்கலாம். என்றாலும், இக்கட்சி பாராளுமன்ற அரசியற் கட்சி அல்ல என்பது உண்மை. சிங்களவர் ஒருவர் தலைவராக இல்லாதது ஒரு குறை என்றால் அது எந்த விதமான மாக்ஸிய மனோபாவமோ தெரியாது. எனினும் 1963 - 1974 இடைவெளியில் அக்கட்சி யில் பெரிய பிளவுகள் ஏற்படும் வரை, மத்திய கமிட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்தோர் இருந்தனர் என்பதும், சிங்களவர் பெரும்பான்மை யினராக இருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிட அவசியமானவை. சிங்கள இனவாதம் இடதுசாரி அரசியலில் ஒங்கியதன் பின்பு இடதுசாரி இயக்கம் பொதுவாகவே சரிவைக் கண்டது. ஆயினும் எவ்விதமான இனவாதத் துக்கும் பலியாகாத பெருமை மாக்ஸிய லெனினிஸ்க் கம்யூனிஸ்ட்டுகட்கு உண்டு. சிவத்தம்பி இதைமிகுந்த தயக்கத்துடனேயே ஏற்றுக்கொள்கிறார். அவருடையஅரசியல் கடந்த காலத்தை, குறிப்பாக 1963 முதல் சோவியத் யூனியனின் சரிவு வரையிலானகாலத்தை, அவர் விளக்காமல் இடதுசாரி அரசியலை யும் முற்போக்கு இலக்கிய இயக்கத் தையும் விமர்சிக்கிறதில் பொருளில்லை.
IV இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம் என்ற அமைப்பு 1965க்குப் பின் முடங்கிவிட்டது. சோவியத் சார்புக் கட்சியின் கையாட்கள் பதவிகளைப் பிடித்திருந்தாலும், அதை உடைத்து இடதுசாரி இயக்கத்தைப் பலவீனப் படுத் தலாகாது என்ற நோக்கிலேயே திரிபுவாதத்தை எதிர்த்த படைப்பாளிகள் ஒருமாற்று அமைப்பை உருவாக் காமல் இருந்தனர். ஆனால் சாதியத் துக்கு எதிரான எழுச்சியை இந்த அமைப்பு எவ்வாறு கருதியது? தொடர்
(SD 2001
தொடரான அரசியற் துரோகங்களின் பின்னரே தேசிய கலை இலக்கிய பேரவை உருவானது. அதன் தோற்றத் தின் பின்பு நூல் வெளியீட்டு, சஞ்சிகை வெளியீடு புதிய படைப்பாளிகளது உருவாக்கம் போன்ற ஒவ்வொரு வகை யிலும் அதன் பங்களிப்புடன் ஒப்பிடுகை யில் இ.மு.எ.சவின் செயற்பாடு அற்ப மாகவே இருந்தது. காரணம் சமூகப பிரக்ஞையுடன் எழுதியவர்களில் ஏகப் பெரும்பான்மையினரால் இ.மு.எ.ச.வின் அரசியலைச் சீரணிக்க இயலவில்லை. என்றாலும், சிவத்தம்பி மறந்தும் கூட தேசிய கலை இலக்கியப் பேரவை பற்றியோ “தாயகம்' சஞ்சிகை பற்றியோ எங்கும் குறிப்பிடவில்லை. இதுவும் தற்செயலானதல்ல.
V சோவியத் சார்பு கம்யூனி ஸ்ட்டுகள் 1970 அளவில் சோஷலி சத்தை முற்றாகவே கைவிட்டு விட்டனர். அதற்கு 1965 அளவிலே இனவாதத் துடன் சமரசம் செய்தனர். இத்தகைய இடதுசாரிக் கட்சிகளின் சீரழிவு 1990ல் சோவியத் யூனியனின் உடைவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆட்சியின் சரிவும் வரை காத்திருக் கவில்லை.1990க்குப் பின்னரே சிவத்தம்பி இடதுசாரி இயக்கத்தின் சரிவை ஆராயப் புகுந்தாலும் 1983 அளவிலேயே தமிழ்த் தேசியவாத்துடன் அவரது சமரசம் தொடங்கிவிட்டது. இன்று தனது தமிழ்த் தேசியவாத விளக்கங்கட்கு மாக்ஸிய வியாக்கியானம் தருவதாலேயே அவரு டன் இங்கு முரண்பட வேண்டியிருக்கிறது.
VI பல்வேறு புதிய சிந்தனை களையும் உள்வாங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் சிவத்தம்பி, பின் அமைப்பியல் பின், நவீனத்துவம் போன்றவற்றின் இருப்பை ஏதோ மாக்ஸி யர்கள் மறுப்பது போல எண்ணுகிறார். ஆனால், தமிழகத்தில்
தாயகம்

செய்யப்பட்டதை விடக் காத்திரமான முறையில் இங்கு பின் வீனத்துவம் விமர்சிக்கப்பட்டுள்ளதை அவர் கண்டு கொள்ள மறுக்கிறார். அதேவேளை பின் நவீனத்துவம் பற்றித் தன்னுடைய
கணிப்பைத் தெளிவு படுத்தவும் அவர் '
ஆயத்தமாக இல்லை. நவீன சிந்தனை
மாக்ஸியர்களால் "1980க்கு பிறகு எதையுமே தரமுடியவில்லை. அதுபோல ஒப்பிக்கப்படுகின்றன. இதுதான் அவரது அண்மைய எழுத்தினதும் இந்நூலினதும் சாரம்.
IX. இடதுசாரி இலக் கரிய
களின் மீது அவரது கவர்ச்சி மாக்ஸிய விரோத சிந்தனைப் போக்குகள் மீது திரும்புவது தவறல்ல. அவர் அவற்றை விமர்சிக்க தவறுவது தான் பிரச்சனை.
V11. இன் றைய மக்கள் இலக்கியக் கோட்பாட்டுக்குப் பல ஊற்றுக்கண்கள் உள்ளன. ஆனால் மக்கள் இலக்கியம் போராட்ட இலக்கியம் போன்றவை சிவத்தம்பியின் கணிப்புக்குள் வரவில்லை. போராட்டப் பாங்கான ஒரு படைப்பு அவரது கண்ணிற் பட்டிருந்தால் அதில் ஆக்க இலக்கியத்தின் போராட்டப் பணியை அவர் முக்கியப்படுத்தியுள்ள தாகக் கூற முடியாது. மாஓ சேதுங், ஹோ சிமின், லு ஷ"ன் போன்றோரது படைப்புக் களோ இலக்கியக் கொள்கைகளோ அவருக்கு ஏற்புடையனவாக இருக்க அவசியமில்லை. ஆயினும் அவற்றின் வரலாற்று முக்கியம் காரணமாக அவை பற்றிய ஒரு விமர்சனப் பார்வைக்காவது தேவை உள்ளது. இன்றைய பின் நவீனத்துவக் கோட்பாட்டை விடச் சமூக அளவிலும் படைப்பிலக்கியத் தளத்திலும் முக்கியமானது மக்கள் இலக்கியக் கோட்பாடு. இது ஏன் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லை?
VIII. நூலின் கட்டுரைகள் கூறமுயல்வது ஒன்றே. இ.மு.எ.ச. முனைப்புடன் செயற்பட்ட காலத்தில் இடதுசாரிகளால் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஏதோ செய்ய முடிந்தது. பின்பு எல்லாமே தமிழ்த் தேசிய வாதத்தின் வசப்பட்டுப் போய்விட்டது. தாயகம்
ஆமுயற்சிகளின் நலிவை இடதுசரி
*இயக்கத்தின் நலிவினின்றும் பிரிக்க முடியாது. ஆயினும் தீவிரமாகச் செயற்படுகிறார்கள் என்றால் அவர்கட்கான வழிகாட்டல் எங்கிருந்து வந்தது என்பதை நாம் மறக்ககூடாது.
X. சிவத்தம்பி வேண்டுமென்றால் தனது அரசியல், இலக்கியப் பார்வை களின் குறைபாடுகட் காக தான் இப்போது சமரசம் வேண்டி நிற்கும் பலரகப்பட்ட தேசியவாதிகளுடனும் உடன்படலாம். ஆயினும் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை முழு இடதுசாரி இயக்கத்தின் மீதும் அதன் இலக்கியத் தின் மீதும் சுமத்துவது சரியல்ல.
XI, நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும் என்று பின்னோக்கிய பார்வையில் எழுதுவதுஎவருக்கும் எளிது. இனி என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்து வழிதேடுவதும் செயலில் இறங்குவதும் அவ்வளவு எளிதல்ல.
XII. சிவத்தம்பி மாக்ஸிய லெனினிய வாதிகளையும் அவர்கள் சார்ந்த இலக்கிய பார்வையையும் செயற்பாடுகளையும் வெளிவெளியாக விமர்சிக்க வேண்டும். அவருடன் என்னால் உடன்படமுடியாது போனாற் கூட அவர் நமது சமூக இலக்கிய வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியைக் கணிப்பிற் கொண்டு அறிய முயல்கிறார் என்ப தற்காக அவரை மேலும் மதிக்க இயலுமாகும். இனி வருங்காலங்களில் இது நிகழும் என எதிர்பாபர்க்கிறேன்.
GD 2001

Page 10
சிறுமை
- 6)6OTST 6LUIST
கனகம் தேத்தண்ணியை பேணியில் ஊற்றி விறாந் தையின் நடுவில் இருந்த மேசையின மேல் வைத் தாள். அதனுடன் கூடவே ஒரு தட்டில் மோதகமும் வடையும்.
“வா, வா இப்பதானோ வீட்டு நினைவு வந்தது?நான் ஒருத்தி இந்த தள்ளாத வயதிலையும்.” . LDS66T கணேசலிங்கத்தைக் கண்டு கனகம் புறுபுறுக்கிறாள்.
“என்னணைள, எப்பவும் சும்மா புறுபுறுத்தபடி,இப் என்ன நேரம்
ஏழரை
காலையில் கனகம் ள்ளையார் கோயிலு
ਅ
N இருந்தாள் கணேசலிங்கத்திற்கு கோயில் வடை உனக்கு ஒரு கால என்றால் நல்ல விருப்பம்கிணற்றடியில் கட்டைபோட்டு இருந்திருந்தால் நீ கை, கால அலம்பிவிட்டு வந்த ஏழரைக்கு வந்தாலென்ன, நடுச்சா கணேசலிங்கம் இறைவனை ஒரு கணம் மத்திலை வந்தாலென்ன படுகிறதுக்கு மனதுக்குள் பிரார்த்தித்துக் கொண்டார். ஒருத்தி இருப்பாள் சாகிற வேளையிலும் பிறகு தான் தேனீர்க் கோப்பையை எனககு நிம்மதி இல்லை கண்டறியாத கையில் எடுத்துக் கொண்டார். சமூக சேவையாம், பெத்தவளை இந்த
தீானே?
கணேசலிங்கம் ஒரு கையால்
பாடுபடுத்திக் கொண்டு கனகம் தேனீக்கோப்பையை பிடித்துக்கொண்டு வழமையான தனது நீண்ட ஒப்பாரியை மறுகையால் அன்றைய பத்திரிகையை வைததாள. புரட் டுகிறார். பத் திரிகையரின்
உட்பக்கத்தில் அவரைப் பற்றிய செய்தி “கணேசலிங்கம் சட்டையை பிரசுரமாகியிருந்தது.
கழற்றி கொடியில் உலரப் போட்டார்.
பிறகு கிணற்றடியை நோக்கிச் சென்றார். ஆவலுடன் படிக்கின்றார்.
கணேசலிங்கம் தாயின் இந்த “மாணவரும் சமூக சேவை ஒப்பாரியை தன் சமூக சேவைக்கான வாரமும்” என்னும் பொது நிகழ்வின்
பாராட்டாகவே எப்பொழுதும் எடுத்துக் நிறைவு நாளில் அந் நிகழ்வின் கொள்வார். கார்த்தாவான கணேசலிங்கம் பேருரை
மே 2001 6 தாயகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னும்தலைப்பில் பெரிய எழுத்துக் களில் தலையங்கம் தீட்டி செய்தி வெளியாகியிருந்தது. தேனீரை ஒரிரு முறை உறிஞ்சி விட்டு, நெஞ்சம் பூரிக்க மேலே படிக்கின்றார்.
“அடி மட்டத்து மக்களின் பங்காளன், அவர்களின் ஊன்று கோல் கணேசலிங்கம் மாணவர்களை ஒன்று திரட்டி செயற்படுத்திய சமூகசேவை வாரம் சிறந்த பலனை அளித்துள்ளது. குளங்கள் துார்வை எடுக்கபபட்டன. வீதிகளும் விளையாட்டு மைதானங் களும் மற்றும் பொது இடங்களும் துT யப்  ைம யாக கப் பட் டுள் ளது. இப் பணிகளில் கணேசலிங்கமும் மாணவர்களுடன் இணைந்து உழைத் தார். இச் சமூக சேவை வாரத்தில் ஊரின் படித்த இளைஞர்களை உள்ளடக்கி கல்வி செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டது. இக் குழு தொடர்ந்து ஏழை மாணவர்களின் கல வி வளர்ச்சிக்காக உழைக்கும்” என செய்தி பிரசுரமாகி இருந்தது.
“சமூகசேவை வார நிறைவில் கணேசலிங்கம் உரையாற்றுகையில் இந்த சமூகசேவை வாரம் குறித்து நான எதுவும் கூற விரும்பவில்லை. இதன் பலன்களில் இருந்து மக்கள தீர்ப்பு கூறட்டும். இது ஒரு நிகழ்வல்ல தொடர் நிகழ்வாக அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன் மாணவர்களின் நலனுக்காக “கல்விச் செயற்பாட்டுக் குழு’ அமைக்கப்
பட்டுள்ளது. அது அர்ப்பணிப்புடன.
செயல்புரியும் என்பதை கூறி வைக்க விரும்புகிறேன்” என அவரது உரையும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
தாயகம்
கணேசலிங்கத்திற்கு தன்னைப் பற்றி, தன் சமூகசேவைகள் குறித்து புகழு ரைகள் பத்திரிகைகளில் வெளிவருவது பிடிக்கும், பிடிக்கும் என்ன புகழில் அப்படி ஓர் அலாதிப் பிரியம்.
கணேசலிங்கத்தைப் பற்றியும் அவர் சேவையைப் பற்றியும் அடிக்கடி பத்திரிகைகளில செய்திகள் வந்து கொண்டிருந்தன.
崇 姿 姿
கணேசலிங்கம் தன். ஊரில் நடக்கும் சகல பொது விடயங்களையும் முன்னின்று நடத்துபவர். தொடக்கி வைப்பவரும் அவரே தான். மெயப் வருத் தம் பாராது ஊருக்காக உழைப்பவர் ஆவர்.
கணேசலிங்கம் சமூகசேவைக் கென தன் முழு வாழ் வையும அர்ப்பணித்துக் கொண்டவர். அதனால் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்துவிட்டார். வயோதிபத்தாய் கனகம் தான் அவரின் துணை.
அவரது தாயப் கனக மி எந்நேரமும் வயது கடந்து விட்ட தன் மகனின் வாழ்வைப் பற்றிய தான பிரக்ஞையில் வாழ்பவள். அவளால் தன் மகனின் சமூகசேவையை பற்றி விளங்கிக் கொள்ளமுடியவில்லை. அவள் கண்ணில் தன் மகனின் “சமூக
சேவை’ வீண்தொல்லையாகப் பட்டது.
ஏனெனில் அதனை புரிந்து கொள்ளும் அறிவுப் பக்குவமோ, சிந்தனைப் பக்குவ மோ அவளிடம் இருக்கவில்லை. அவள் பழைய காலத்து மனுவழி. “கணேசு எழும்பன், பொழுது விடிஞ்சுவிட்டுது” கனகம் குரல் கொடுத்தாள்.
CD 2001

Page 11
“பாவம் பொடியன், நல்லாய் அலைஞ்சு போய்ச்சுது, எங்கையேனும் போகவேணுமோ தெரியாது. சொல்லிப் போட்டுப் படுக்கேல்லை. பிறகு எழுப்பாட்டிலும் பேசுவான் ஆ. கொஞ்சம் தூங்கட்டுமன்” மனதுக்குள் முணுமுணுத்தாள்.
ஆனாலும் கனகத்திற்கு மனம் கேட்கவில்லை. மீண்டும் ஒர் தடவை குரல் கொடுத்து விட்டு கொல்லைப் புறம் நோக்கிச் சென்றாள்.
கனகத்தின் உசுப்பலில் கணேசலிங்கம் விழித்துக் கொண்டார். கண் திறந்தால் பிறகு படுக்கையில் சோம்பிப் படுப்பவரல்ல அவர்.
படுக்கையை விட்டு எழுந்து முற்றத்துக்கு வந்தார். “தம்பி கணேசு” குரல் கேட்டு திரும்பினார். படலையில் முருகேசு வாத் தரியார் நரின் று கொண்டிருந்தார்.
“வாங்கோ வாத்தியார், என்ன விடிய வெள்ளண, ஏதிேனும் அலுவலோ” முருகேசு வாத்தியாரை வரவேற்ற வண்ணம் படலையை நோக்கிச் சென்றார் கணேசலிங்கம்.
“அலுவல் என்று ஒன்றும் இல்லை தம்பி. என்ரை தென்னம் காணிப்பக்கம் போறன், உன்ரை சமூகசேவை வாரத்தை புகழ்ந்து ஊரில எல்லோரும் கதைக்கினம். நானும் என்ரை சந்தோஷத்தை சொல்லிப் போட்டு போவம் என்று தான் வந்தனான் என்னட்டை படிச்சவன் என்றதாலை எனக்கும் பெருமை தானே தம்பி’
“என்ன வாத்தியார் என்னை
CD 2001 18
பெரிய மனிசனாக்கிறியள், ஏதோ என்னாலை ஆனதைத் தான்.”
“உன்னை நான் பெரிய மனிசனாக்கவில்லை. நீ உன் செயல் பாட்டினாலேயே பெரிய மனிசனாகி விட்டாயப் நினைச் சுப் பார்க்க சந்தோசமாய் இருக்குது. முருகேசர் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.
கணேசலிங்கத்திற்கு அதை கேட்க சந்தோஷமாய் இருந்தது. சிறிது நேரம் கதைத்து விட்டு முருகேசு வாத்தியார் தன் தென்னங் காணிக்குப் புறப்பட்டார். அப்பொழுது கொல்லையில் இருந்து வந்தாள் கனகம்.
“தம்பி கணேசு இண்டைக்கு நீ சந்தைக்கு போய் சாமான் வாங்கி வரவேணும்” கணேசலிங்கத்தின இயல்பு தெரிந்து கனகம் முந்திக் கொண்டு நேரத்துடனேயே அவருக்கு
வேலை கொடுத்தாள்.
“ஓமணை நான் போறன், நீ ஒன்றுக்கும் பயப்பிடாதை’ சிரித்துக் கொண்டே கணேசலிங்கம் கூறினார்.
அவருக்கு தன் தாயின் செயப் கைகள் புன் ன கையையே வரவழைக்கும். தாய் கனகம் வீட்டுக் காரியங்களில் தன்னை அக்கறை கொள்ள வைக்க எடுக்கும் முயற்சியை அவர் புரிந்து வைத்திருந்தார்.
கணேசலிங்கம் சந்தைக்குப் புறப்பட்டபொழுது மணி எட்டைக் கடந்து விட்டது. சந்தைக்குச் செல்லும் பலரை தற்செயலாக எதிர்கொள்ள நேர்ந்தது. எல்லோரும் அவர் செயற்பாட்டை
தாயகம்

புகழ்ந்துரைத்து ஓரிருவார்த்தை கூறவே செய்தார்கள்.
“நல்ல வேளை, நடையில் வெளிக்கிட்டது” தனக்குள் எண்ணிக் கொண்டார். கணேசலிங்கம்.
சந்தையை அண்மித்த பொழுது தான் கணேசலிங்கத்திற்கு சுந்தரத்தைப் பற்றிய நினைவு வந்தது. சுந்தரத்திடம் தான் கணேசலிங்கம் மரக்கறி வழமையாக வாங்குவார். அவரது வீட்டுக் வேலைகளிலும் உதவி புரிபவன் அவன். حنر به ۔۔۔۔۔
சுந்தரம் அவ்வூரின் சந்தையில் சிறு மரக்கறி வியாபாரி. மிகவும் இடைஞ்சல் பட்டவன். மூன்று ஆண் பிள்ளைகள் அவனுக்கு. வயதான தாய் தந்தையின் பொறுப்பு வேறு. தன் குடும்ப த்தை தாக்காட்ட மிகவும் சிரமப்பட்டான்.
சுந்தரத்தின் மூத்த பெடியன் கண்ணன் வலு கெட்டிக் காரன். உயர்தர வகுப்பில் படிக்கிறான். கணேசலிங்கம் செயற்படுத்தும் வேலைத் திட்டத்தில் ஆர்வத்துடனும் கடமை உணர்வுடனும் பங்குகொள்பவன். கண்ணனின் குண
நலன்கள் அவன் குறித்த உயர்வானு:
எண்ணங்களை கணேசலிங்கம் மனதில் பதிய வைத்தது. அவன் மேல் ஏற்பட்ட் நல் அபிப்பிராயமும் அவரை சுந்தரத்திட மும் நெருங்க வைத்ததில் வியப்பில்லை. சுந்தரமும் சூதுவாது அறியாதவன்.
சுந்தரம் கணேசலிங்கம் குறித்து எப்பொழுதும் உயர்வாகவே எண்ணுவான். கணேசலிங்கம் கண்ணனின் கல்வியில் கூடிய அக்கறை எடுத்துக் கொண்டார்.
தாயகம்
இச் செய்கை சுந்தரத்தின் மனதில் நன்றி உணர்வும் அவரிடம் அன்பும் தோன்றக் காரணமாயிருந்தது. கண்ணனுக்கு தேவையான உதவிகள் மட்டுமல்ல சுந்தரத்தின் குடும்பத்தின் மீதும் அவன் அக்கறை காட்டினார்.
சந்தைக் கட்டடத்தின் தெற்கு
பக்க மூலையில் தான் சுந்தரத்தின் வியாபாரம் வழமையாக நடைபெறும். கணேசலிங்கம் சுந்தரம் அமர்ந்திருக்கும்
பக்கத்தை நாடிச் சென்றார்.
கணேசலிங்கம் தொலைவில் வந்து கொண்டிருந்த போதே சுந்தரம் அவரைக் கண்டு கொண்டர்ன்
“வாங்கோ ஐயா கொஞ்ச நாளாய் இந்தப் பக்கம் உங்களை
காணக் கிடைக்கயில்லை” சுந்தரம் பணிவு காட்டி விசாரித்தான்.
“வாறத் துக்கு நேரம்
கிடைச்சால் தானே? என்ன செய்யிறது? சுந்தரம் நான் வராட்டால் நீ தான் வீட்டுக்கு மரக்கறி சாமானுகள் கொடுத்து அனுப்ப்' வேணும்” என்றார் கணேசலிங்கம்.
“ஐயா உங்களுக்கு இந்த உதவி கூட செய்யாமல் இருப்பனே? நீங்கள் செய்யிற உதவிக்கு.’ சுந்தரம்
நா தழு தழுக்கக் கூறினான். கணேசலிங்
கத்திற்கு உச்சி குளிர்ந்தது.
“எப்படி பெண்சாதி பெடியள் சுகமோ? உனக்கு காயப் சி சலி வந்ததென்று அறிந்தன். இப்ப எப்படி?”
19 (SD 2001

Page 12
* ஐயாவின் புண்ணியத்தாலை எல்லாம் சுகம்’ சுந்தரம் கூறிக் கொண்டே
அவருக்குத் தேவையான மரக்கறிகளை
நிறுக்கத் தொடங்கினான்.
சுந்தரம் அவரிடம் வேணும்” என்று கேள்வியைக் கேட்ப தில்லை. என்னென்ன அவருக்கு விருப்பம் என்பது அவனுக்குத் தெரியும்.
சுந்தரம் அவர் விரும்பும் மரக்கறிகளை நிறுத்தெடுத்து பையில் போட்டுக் கொடுத்தான். கணேசலிங்கம் சுந்தரத்திற்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டு,
"அப்ப நாளைக் கொருக்கால் வீட்டுப் பக்கம் வா கொஞ்சம் வேலை கிடக்குது” என்றார்.
“ஓம் ஐயா’ சுந் தரம் வெகுபணிவுடன் கூறினான். கணேசலிங்கம் வந்த வழியே திரும்பினார்.
கணேசலிங்கம் சென்றதன் பிறகு தான் சுந்தரத்திற்கு ஞாபகம் வந்தது. “ஐயா வாழைக்குலைக் காசு நுாறு ரூபா தர வேனும், இரண்டு கிழமைக்கு முன்னர் வேண்டினவர்” என்பது.
“ஐயா மறந்து போனார் போலை, இல்லாவிட்டால் தராமல் விட மாட்டார். ஐயா எனக்கு பார்த்துப் பாராமல் எவ்வளவு உதவி செய்யிறவர் அவர் இல்லாவிட்டால் கண்ணனை என்னால் படிப்பிக்கேலுமா? காசு தட்டுப்பாடு வந்தாலும் கேட்கக்கூடாது
ஐயா தனக்கு ஞாபகம் வரும் பொழுது தரட்டும்” என மனதில் எண்ணி திடசங்கற்பம் 60STLIT667.
CSD 2001
“என்ன
மரக்கறிகளை வாங்கிக் கொண்டு சிறிது துTரம் சென்று விட்டதன் பின் கணேசலிங்கத்திற்கு சுந்தரத்தின் கொடுக்குமதி நினைவுக்கு வந்தது.
அவரின் “சேட்” பொக்கற்றுக் குள் காசும் இருந்தது. ஆனால் அவருக்கு அதனைக் கொடுக்க மனமில்லை.
மனதின் நினைவுறுத்தலை ஒதுக்கி விட்டு நடநது கொண்டிருந்தவர் திடீரென ஏதோ நினைத்துக் கொண்ட வராக சுந்தரத்திடம் திரும்பி வந்தார்.
“என்ன ஐயா இன்னம் ஏதேனும் வேணுமே, இல்லா விட்டால் எதையேனும் விட்டிட்டு போட்டீங்களோ? திரும்ப வந்து நின்ற கணேசலிங்கத்தைக கண்டவுடன் சுந்தரம் பரபரத்தான்.
"அப்படி இல்லை சுந்தரம் கண் ணனை ஒருக் கால் பொழுது படேக்கை வீட்டுக்கு அனுப்பு, கொஞ்ச புத்தகங்கள் அவனுக்காக வேண்டி வைத்திருக்கிறன்” சொல்ல வந்ததை கூறி விட்டு திரும்பி நடந்தார் கணேசலிங் கம். அவர் நடையில் ஓர் உசார் இருந்தது.
“ஐயா என்ரை பிள்ளையின்ரை படிப் பிலை எவ்வளவு கரிசனை, அவனுக்காக புத்தகங்கள் வாங்கி இருக்கிறாரோ? எனக்கு தரவேண்டிய காசை மறந்துதான் போனார்’ என எண்ணி மனதுக்குள் கூறினான் சுந்தரம்.
கணேசலிங்கம் கண்ணனுக்குக் கொடுக்கப் போகும் புத்தகங்கள் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கென சில புத்தகவெளியீட்டு உரிமையாளர் கள் கணேசலிங்கத்திற்கு அன்பளிப்பு
தாயகம்

செய்தவை என்ற விஷயம் சுந்தரத்திற்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
சுந்தரம் தன் வீட்டு வளவுக்குள்
விறகு கொத்திக் கொண்டிருந்தான். அவனது தாயின் உடல் நிலை குறித்து
மனதில் அவனுக்கு பலவித யோசனைகள் இப்பொழுதுதான் கண்ணன் நூறு ரூபா காசு தனக்கு தேவைப்படுவதாகச் சொல்லி விட்டுப் போயிருக்கிறான்.
அவன் மனதை “இப்ப காசுக்கு என்ன செய்வது” என்ற வினா துளைத்துக் கொண்டிருந்தது.
“காலையிலை மரக்கறி விற்ற காசை காசி அண்ணையின் கடைக்கு கொடுத்தாச்சு. அவர் கேட்கும் பொழுது கொடுக்கா விட்டால் பிறகு கடன் வாங்க முடியாது. இருநூறு ரூபாய்க்கு மேல் கடன் தரவும் மாட்டார். என்னை நம்பி யார் அதிகம் கடன் தருவான்’ என எண்ணிக் குமைந்தான் சுந்தரம்.
“கணேசலிங்கம் ஐயாவிடம்
வாழைக் குலைக் காசை கேட்டு வாங்குவமோ” மின்னலென மனதில் ஓர் யோசனை உதித்தது. வேகமாக விறகை கொத்த தொடங்கினான் சுந்தரம்.
அப்பொழுது.
“கணேசலிங்கம் ஐயா உங்கடை
சேவை குறித்து எல்லோரும் பாராட்டுகினம்.
எனக்கும் சரியான சந்தோஷம்” என்னும்
பேச்சுக் குரல் வேலிக்கு அப்பால் இருந்து
வந்து சுந்தரத்தின் காதில் விழுந்தது.
" நான் ஐயாவை நினைக்க,
அவர் தெருவாலை வாறார் என்ன
தாயகம்
ஒற்றுமை’ சுந்தரம் மனதில் எண்ணி மகிழ்ந்தாள்.
“எனக்கென்றால் இதிலை
திருப்தி இல்லை இன்னும் நன்றாக
செய்திருக்கலாம் என நினைக்கிறேன்” கணேசலிங்கம் தான் கூறுகிறார்.
“ஐயாவுக்கு லேசிலை திருப்தி வராது என்பது என்ரை அபிப் பிராயம், ஆ. ஐயா நாளைக்கு சனசமூக நிலைய மாதாந்த கூட்டம் மறந்திடமல் வாருங் கோ’ இப்பொழுது சுந்தரம் ஐயாவுடன் கதைப்பது யார் என்பதை இனம் கண்டு கொண்டான். சுந்தரம் சனசமூக நிலையத் தலைவர் “ஒமோம் நான்கட்டாயம் வருவன்’ அப்பசரி ஐயா, நான் வாறன்’.
“ஒரு நிமிஷம் நில்லும் தம்பி சனசமூக நிலையக் காசுக் கணக்கிலை இரண்டு ரூபா தரவேணும், தீரமறந்து போனன், வயது போக இது ஒரு பிரச்சனை, இப்பதான் ஞாபகம் வருகுது இந்தாரும்”
“என்ன ஐயா, இரண் டு ரூபாவை பெரிய காசு போல தாறிங்கள்”
“தம் பி காசுக் கணக்கு கொஞ்சமும் பிசகக் கூடாது. இது என்ரை கொள்கை”
“ஐயா உங்கடை நாணயம் எல்லோரும் அறிஞ்சது தானே” என்றார் நெகிழ்வுடன் சனசமூக நிலையத் தலைவர்.
இந்த புகழுரையை எதிர் பார்த்து தானே கணேசலிங்கம் இரண்டு ரூபாவை பெரிதாக மதித்து எடுத்துக்
21 (SLD 2001

Page 13
(விடைவறாத வினாக்கள்`
அடிமைகளிடம் வினாக்களே இருந்தன ஆண்டோரிடம் விடைகளே இருந்தன
இருந்தம்
இவ்வாறு
இன்று
ܢܠ
கொடுத்தது என்பது சனசமூக நிலையத் தலைவருக்கு தெரிந்திருகக நியாய மில்லை. வளவுக்குள் வேலியின் மறைவில் நின்று இதைக் கேட்டுக் கொணி டிருந்த சுந் தரத் திற்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.
சுந்தரம் காணிக்குள் நின்று உள்ளம் மறுகினான் “என்ன சிறுமை
GD 2001
எல்லா வினாக்கட்கும் அனுமதி இருக்கவில்லை அனுமதித்த வினாக்கட்கும் விடைக்கும் உரிமையில்லை பெறப்பட்ட விடைகளெல்லாம் வினாவுக்கு உரித்தில்லை உரியவிடைகளிலும் உண்மை இருந்ததில்லை
நேற்றைய நாள் விடைகட்கு உரியோர்க்கு உரித்தானது
அனுமதித்தம் அல்லாதம் வினாக்கள் எழுங் காலம் கிடைக்கும் விடை ஒவ்வொன்றும் கேள்வி பால ஈனும் விடைகள் முடிந்தாலும் வினாக்கள் முடியாத இனி வரும் நாள் அத்தனையும் வினாக்கள் உடையோர்க்கு.
- LD60f
ン
செய்ய இருந்தேன். ஐயாவுக்கு இப்ப ஞாபாக மறதி அதிகம். ஞாபகம் வரேக்கை தரட்டும் என எண்ணிக் கொண்டான்.
“ஆணிடவா சிறுமை ச் செயலில் இருந்து காப்பாற்றிப் போட்டாய்’ சுந்தரம் எண்ணாமலேயே அவன் மனம் தன் னிச்சையாக பிரார்த்தித்துக் கொண்டது.
தாயகம்

ஒரு காதற் பாட்டு
• g"6öf (Gune Beer) நிக்கரா ஹீவா
காதற் பாட்டுப் பாடச் சொல்கிறாய் ~ ஒஸ்கார் நீ என்னை வியக்க வைக்கிறாய்
நாட்டுக்காகப் பாடல் இசைப்பேன் சின்ன நாடு, சோதிமிக்கத மக்களுக்கு நம்பிக்கை தரும்,
செல்வருக்கோ மண்டையிடிக்கும் - உலகில் செல்வரிலும் ஏழை அதிகம் ~ அனேகர் என்னுடைய நாட்டை நேசிப்பார்.
நிக்கராஹீவா என் நாட்டின் பேர் கறுப்பு, மிஸ்கிற்றோ
ஸிமு, ராமா, மெஸ்ற்றிஸோ' எல்லார் மீதம் நேசம் எனக்கு ~ என் காதற்பாட்டு முற்றுங் கண்டாயா - ஏனெனில் உன்னையும் நான் நேசிக்கின்றதால்
வானில் உள்ள அம்புலியையும் வெள்ளியையும் நீக்கக் கேளாதே
இவ் விடியல் தன்னைக் காத்திட ~ இரவு
சூழ்ந்திடாமல் நீ மறித்தமே உன் தொடைகள் தட்டி எழுந்தாய் ~ ஏனோ என் நினைவில் வருகின்றத.
ஒன்று மட்டும் நன்கு அறிவேன்
அம்புலிக்கும் வெள்ளிகட்கும் கீழ்
ஸான்டினோவின்**பிள்ளைகள் என
நிமிர்ந்து சுதத்திரத்துடன்
ஆறுதலாய் நாங்கள் கடக்க
நாளை மிக்க நேரம் இருக்கும் தமிழில் - சிவா
*நிக்கராஹீவாவின் தேசிய சிறுபான்மை இனங்கள் **ஸான்டினிஸ்ற்றார் விடுதலை இயக்கம்
தாயகம் 23 CD 2001

Page 14
வேலண்டும் புணர்வாழ்வு
அபீர்ராஜன்
போற்றிப் புகழ்ந்த மதிக்கப்படும்
போலிகளுக்கு வேண்டும் புனர்வாழ்வு நாற்ற மெடுத்த சமுதாயச் சிந்தனைகளுக்கு நலமளிக்க வேண்டும் புனர்வாழ்வு காற்றினில் பறக்கவிட்டதற் கருத்தக்களுக்கு
களமமைக்க வேண்டும் புனர்வாழ்வு ஏற்றத் தாழ்வுகளால் கிழிக்கப்பட்ட
கோடுகள்மறைய வேண்டும் புனர்வாழ்வு
பாசமுறிவுகளால் புரையோடிய புண்களை
குணமாக்க வேண்டும் புனர்வாழ்வு
வேசம் போட்டே குடும்பத்தைக் குலைத்திட்ட
வேடதாரிகளுக்கு வேண்டும் புனர்வாழ்வு
ஆசைகாட்டியே ஆயுள்முழுதும் உழைக்கும்
அபலை வாழ்வுக்கு வேண்டும் புனர்வாழ்வு
ஊனமுற்று உழுத்துப்போன உணர்வுகளுக்கு ஊக்கமூட்ட வேண்டும் புனர்வாழ்வு ஞானமற்ற இதயங்கள் நலிவினில் மீண்டிடவும்
வானபரன் வகுத்தவழி வேண்டும் புனர்வாழ்வு விண்ணதிரும் போர்நடுவே பிழைப்பூட்டும்
வீணர்களிடமிருந்து வேண்டும் புனர்வாழ்வு கண்ணிருந்தம் கபோதியாய்க் காலங்கழிக்கும்
கல்விச் சமூகத்தக்கு வேண்டும் புனர்வாழ்வு
(3D 2001 24 தாயகம்

போரின் அறுவடையாகக் கவிதை
‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல் கருணாகரன், மகிழ் வெளியீடு, 469 அக்கராயன் குளம், கிளிநொச்சி 1999 ஒக்ரோபர், ப. 72+Vi, ரூ70.00)
போராடும் மண்ணிலிருந்து வருகிற படைப்புக்கள் நாட்டின் பிறபகுதி களிலும் படிக்கக் கிடைக்கும் என்றால் ஈழத்துத் தமிழ்கக் கவிதைப் பரப்பில் அதிகங்கவணிப்பை பெறும் கவிஞர்களி டையே இயக்கச்சி கருணாகரனும் ஒருவராக இருப்பார்.
தொகுதியில் உள்ள முதலா வது கவிதையில் “உனது கனவுகளை நீயே வரைந்து கொள்,எனது வண்ணங் களை நானே குழைக்கிறேன்” என்று அவர் பிரகடனம் செய்கிறார். இக் கவிதை யும் மேற்கூறப்பட்ட பகுதியும் உணர்த்து கிற சிந்தனைப் போக்கும் யாதென்பதில் எவருக்கும் ஐயமிருக்காது, படைப்பாளி தன் தனி மனிதப் பண்பை வலியுறுத்து வதை அங்கு காணலாம். ஆனால் அவர் சொல்வது போல் “நான் நானாக இருப்ப திலும் நீ நீயாக இருப்பதிலும் என்ன பிணக்கு” என்பதல்ல இன்றைய கேள்வி, நான் வேண்டும் நானாக நானோ. நீ வேண்டும் நீயாக நீயோ இருக்கமுடி கிறத? நமது சூழலின் நெருக்குவாரங்கள் நம் ஒவ்வொருவர் மீதும் தமது
தாயகம்
சி. சிவசேகரம்
முத் திரைைையப் பதிக் கதி தவறுவதில்லை. நாம் எண்ணுவதும் எழுதுவதும் நாம் முகங்கொடுக்கும் நிலவரங்களிலும் அவற்றுக்கு முகங் கொடுக்க நாம் எவ்வாறு பயின்றும் பயிற்றப்பட்டு உள்ளோம் என்பதிலும் தங்கியுள்ளன. ஒருமனிதரை தீவிர இனவா தியாக்குகிற அதே சூழல், இன்னொரு வரைத் துறவியாக்கலாம். வேறொருவரை நியாயத்திற்கான போராளியாக்கலாம், இங்கெல்லாம் நானாக இருக்கிற நான் ஒரு சூழலினதும் ஒரு உலக நோக்கினதும் இடையறாத தாக்கங்களால்
உருவாகி மாறுகிற ஒரு மனிதப் பிறவியல்லாமல் வேறல்ல.
நானாக இருந்த நான் நாமாகலாம். தனக்காக அல்லது பிறற்காகப் போராடும் ஒருவராகலாம். நான் நானாக இருப்பது என்பது உண்மையின் ஒரு தோற்றப்பாடேயன்றி அதன் முழுமையல்ல. அதே வேளை, இந்தத் தனித்துவத்தை மிகையாக வலியுறுத்தும் போது “நான்” தனக்குச் சித்திக்கக்கூடிய ஆளுமைகளிற் பலவற்றை இழக்கவும் நேரலாம். இது தமிழ்ப் படைப்புலகத்தின் குறைபாடான ஒரு பக்கமாக இன்று உள்ளது. நாம் எல்லோரும் தனிமனித அனுபவங்களதும் உணர்வுகளதும்.
றே 2001

Page 15
வெளிப்பாடாகவே பெரும்பாலும் பேசியும் எழுதியும் வருகிறோம். ஆயினும் அவற்றிற் பொதுமைக்கு முக்கியமான ஒரு அம்சம் பகிர்வு எனலாம். பகிர்வை இயலுமாக்குகிற அளவிலேயே ஒரு படைப்பு வாசகனையோ பார்வையாள னையோ எட்டுகிறது. அதன் மூலமே அது பயனுள்ளதாகிறது.
கருணாகரன் வெளிவெளியாக எந்தச் சிந்தனைப் போக்குடனும் தன்னை அடையாளம் காட் டிக் கொள்ளாமல் இருக்கலாம். ஆயினும் அவரை அறியாமலே சில அனுகு முறைகள் அவரிடம் ஒட்டிக்கொள் கின்றன. ஒருவர் விடயங்களை நோக்கு கிற விதமும் பார்வை செல்கிற திசை களும் புறச்சூழல்களாலும் தீர்மானிக்கப் படுகின்றன. போர்கள் நியாயமான நிட்ைபாட்டை அனுமதிக்கலாம். அவை நடுநிலையை அனுமதிப்பதில்லை. சில திசைகளிற் சில விதங்களிலேயே ஒருவரது பார்வை ஏன் செல்கிறது. என்பதை நாம் ஆராயப் நீ தாலி அவர்களுடைய சிந்தனை யின் சமூகச் சார்பின் பல்வேறு அம்சங்களை நாம்
960)LuJIT6ITLb BIT600T6)|Tib.
இத் தொகுதியில் உள்ள தன்னுணர்வுசார்ந்த கவிதைகளிற் பலவற்றின் மீதும் போரின் நிழல் தெளி வாகப் படிந்துள்ளது. தமிழ்த் தேசியஇன விடுதலைக்கான போர் பற்றி அவரது நிபந்தனையற்ற அங்கீகாரம் அதை வழி நடத்தும் இயக்கத்திற்கும் அதன் போர் முறைகட்குங்கூட உள்ளது என்று கருத முடிகிறது. ஆயினும் பெரும்பாலான கவிதைகளிற் தொனிப்பது போரின் அவலங்கள் பற்றிய சித்தரிப்பே. அதில் அழிவுக்கும் சிதைவுக்கும் உள்ளாகி
(SD 2001
26
வரும் வாழ்க்கைமுறையொன்று பற்றிய ஏக்கமும் அது காக்கப்பட்டவேண்டும் என்ற தவிப்பும் தெளிவாகத் தென் படுகின்றன. இவை யாவும் நியாயத்தின் குரல்கள். போர்க்குணமிக்க எழுத்தைப் போரின் விளைவான துயரம் பொதுவாகவே மேவிநிற்பதை நாம் காணலாம். இத் துயரம் துரோகங்களின் மீதான கோபமாகவும் வெளிப்படுகிறது. எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை களைத் தாங்கியும் வருகிறது. அந்தள வில் இக் கவிதைகள் விரக்தியினதோ அவநம்பிக்கையினதோ குரல்களல்ல. ‘இனியொரு நிலை" என்ற ஒரு கவிதை போராட்டத்தின் சன்னமான குரலாக வருகிறது. முன்னுரையிற் புதுவை இரத் தரினதுரை இதற்கு தரும் முக்கியத்துவத்தின் விளைவாகக் கருண கர னின் கவிதைகளின் ஒட்டுமொத்தமான தொனிப்பைச் சிறிது தவறவிட்டுளார் என்றே சொல்வேன். வடபுலத்து மக்கள் அமைதிக்காகவும் நியாயமான ஒரு தீர்வுக்காகவும் ஏங்குகிறார் கருணாகரனின் கவிதை களில் அந்த ஏக்கமே மிகுதியாகத் தென்படுகின்றது. கருணாகரனின்
அதேவேளை தனது மணி னில் நிகழ்ந்துள்ள பொரிய கொடுமைகள் சில அவரது கவிதை களிற் பதிவாகவில்லை என்பதை இங்கு குறிப்பிடாமல் விட இயலாது. அவரது கவனம் குறிப்பிட்ட சில விடயங்களிற் குவிவதாலேயே இது என்று கொள்ள லாம். இதனாலேயே உலகு தழுவிய ஒரு பார்வையும் அவரது எழுத்தில் இல்லை எனலாம். எனினும் இவை பற்றிக்கருணாகரன் இனி வரும் காலங் களிற் கவனங் காட் டுவாரென எண் ணுகிறேன் . கருணாகரனின் கவித்துவ ஆளுமைக்கு நிறைய உதாரணங்கள் காட்ட முடியும்.
தாயகம்

மாதிரிக்கு ஒரு சிலவற்றை தருகிறேன்.
“கண்முன்னால் வேலிகளைப் பற்றைகள் தின்கின்றன புற்றெழுந்த வீடுகளும் நொருங்கிய மாடங்களுமாய் தீயெழுந்த தெருவெங்கும் காற்றின்அழுகுரலே கேட்கிறது”
“எனது முற்றத்தில் செவ்வரத்தை பூக்க வேண்டும் எனது புல்வெளியில் சற்று நான் காலாற வேண்டும் உமது பீடங்களைப் பற்றி எமக்குக் கவலையில்லை கர்த்தரே?
(1990 மார்கழி 25)
"அன்பின் சிறு பூவே அவர்களின் பாத்திரங்களைத் தயவுசெய்து தொடாதே கிணற்றடியில் தண்ணீரை ஊற்ற வேண்டாம்
காலம் சுருக்கு கயிறான பின் கண்டதுக்கும் மறுப்பைக் காட்டளையிடும் உறவாயிற்று நமக்கு”
(புதிய விதிமுறை)
“பசித்த வயிற்றுடன் பனையிலிருந்து விழுந்தாய்
உன் சிறு குழந்தை விஞ்ஞானம் பற்றியும் மனித வளர்ச்சி பற்றியும் அறிகையில் உன்மரணம் பற்றி வியக்கும் மனமழிந்து துன்புறும்’
(துயர் மனிதரும் துணை நடத்தலும்)
தாயகம்
மேற் குறிப் பிட்டவற்றுக் கு விளக்கங்கள் தேவையில்லை. ஒவ்வொரு கவிதையும் சித்தரிக்கும் சூழலும் ஒலிக்கும் ஏக்கமும் நெஞ்சில் ஆழப் பதிகின்றன.
*காட்சி’ ‘திசைவெளியில் துளிர்கின்றது மரம்’ போன்ற பல கவிதைகளில் இயற்கையில் திளைத்து எழுகிற கவிதைமனத்தை நாம் காணலாம். அதே வேளை பல நல்ல கவிதைகளைப் பலவீனப்படுத்துமாறான சொற்பிரயோகங்
களையும் காணநேருகிறது. உதாரணமாக
27
முன்னுரையிற் கூட “இக் கவிதைகள் குறித்து எனக் குப் பெருமையோ ஆட்சேபனையோ இல்லை” என எழுதும் இடத்து தான் எழுவதைப் பற்றியே அவர் ஆட்சேபிப்பது எப்படி என்ற பிரச்சினை மனதில் எழுகிறது. ‘நீழல்’ கவிதையில் வருகிற “இன்னும் ஞானம் பெற வேண்டிய எல்லை” எனும் சொற்றொடர் சற்றுக் குழப்பமானது. ஒருவரது ஞானம் எட்ட ஒரு எல்லை இருந்தாலும், ஞானம் “பெற வேண்டிய” எல்லை என ஒன்று இருக்க முடியாதே. முதற் தடவை வாசிக்கும் போது அதிகம் இடறாத இச் சொற்பிரயோகம் மீள வாசிக்கையில் பெரிதும் இடறுகிறது. “நூறாயிரம் ஆண்டுகள் தொன்மம் கொண்ட தெங்கள் வாழ்வு’ என்பதில் தென்மை என்பதற்குப் பதிலாகத் தொன்மம் என்று (இத் தொன்மை தமிழருக்கன்றி முழு மனித இனத்துக்கும் உரியதென எண்ணுகிறேன்) இவ்வாறான சொற் பரிரயோகக் குறைபாடுகள் கருணாகரன் போன்ற தேர்ந்த கவிஞர்களிடம் இருக்கத் தகாதன என்ற காரணத்தாலேயே இங்கு சிலவற்றை அடையாளங் காட்டினேன்.
GD 2001

Page 16
இவ றி றையொத தளவு முக்கியமானவை எளிய தமிழ்ச் சொற்களிருக்க வலிந்து வடசொற்களைத் தேடும் முனைப்பு மரபுக்கவிதையில் எதுகை மோனை சந்தம் போன்ற தேவைகள் சொற் தெரிவில் சில கட்டாயங்களை ஏற்படுத்தலாம். நம் வழக்கில் இல்லாத வடசொற்களின் பிரயோகம் ஒரளவுக்குத் தமிழகத்துக் கவிதைகளின் பாதிப்பின் விளைவாக இருக்கலாம் . என் ஆட்சேபனை வடமொழிச் சொற்கள் பற்றிய ஒன்றல்ல. வழக்கிலுள்ள தமிழ்ச் சொல்லொன்றின் வலிமையை வலிந்து புகுத்தப்படும் சொல்லால் ஈடுசெய்ய இயலவில்லை. என்பது தான் என் முறைப்பாடு.
1. எனக்குள் பீதி வளர்கிறது (ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்) பயம் அச்சம் என்பன கூடப் பொருத்தமான சொற்கள்.
11. என்பால்யம் இருளடைகிறது (ஊர் இழந்தவர்களின் குரல்) பால்யம் என்பது இளமையைக் குறிக்கிறதா பிள்ளைப் பருவத்தைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை.
III.பிறகவிதைகளில் வரும் உஷணம் வஸ்து, நிமித்தம், சகி வஸிகரம், சப்திக்கிறது, ஷணம் (க்ஷணம் கணம்) போன்ற சொற்கள் தேவை கருத வருவன எனத் தோன்றவில்லை. வர்ண வஸ்திரம் சர்ப்பாஸ்திரம் என்று அடுத்தடுத்த வரிகளில் வரும் சொற்றொடர்கள் (ஆயிரந் தலைகளின் உண்மைச்சாபம்) ஓசை நயமோ பொருள் நயமோ கொண்ட னவாக எனக்குத் தோன்றவில்லை.
GUD 2001 28
கவனயீனமான சொற்பிரயோ கங்கள் வேறும் பல உள்ளன. ஆயினும் அவற்றை மீறிக் கருணாகரனின் கவிதைகள் நிமிர்ந்து நிற்கின்றன எனில், அது அவரது கவித்துவத்தின் சிறப்பாலேயே, எனினும் கருணாகரனின் ஒரு கவிதையில் “அரசியின் விழிகளில் இருந்து ஊனம் வடிந்தது” “வடதிசையிலிருந்து நகைப் பொலிகேட்டது.” என்று வரும் வரிகள் எதைக் குறிப்பன என்ற ஊகத்தின் பேரிற் சொல்கிறேன். தமிழின விடுதலை போராட்டத்துக்குக் களங்கம் தந்த செயல்களில் ஒன்றைப் போற்றுகிற வரிகள் இவை. எதைப் பற்றி பெருமை கொள்ளலாம் என்பது பற்றித் தெரியாமல் கருணாகரனின் கவிதை கால் இடறுகிற ஒரு சந்தர்ப்பம் இது. புரட்சிகர வன்முறைக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான வேறுபாட்டை விளங்காமை தமிழ் இனவிடுதலைப் போரட்டத்தின் பாரிய ஒரு பலவீனம் என் பேன். கருணாகரனின் நூலுக்கு இவ்வாறான வரிகள் நன்மை செய்யவில்லை. இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். பாறையின் சிதைவு என்ற கவிதையில் மரங்களின் வேர்களில் அதன் (புலயின்) கால்கள் பிணைந்திருக்கின்றன. என்று அவர் எழுதியுள்ளதை ஒருவர் எவ்வாறு வாசிக்கக் கூடும்.
படிமங்களின் பிரயோகம் அவற்றின் சொல் நேர்த் தியரிலும் தங்கியுள்ளமை பற்றிக் கருணாகரன் கவனம் காட்டுவாராயின் அவர் ஈழத்துத் தமிழ்க் கவிதையின் சிறப்புக்குச் சான்று கூறும் ஒரு கவிஞராக உயர்வார் என்பதில் எனக்கு ஐயமில்லை.
தாயகம்

தாயகத்தப் பெட்டியில்
போடுகின்ற மா மடல்
மீசாலையூர் கமலா
கண்டி வீதியோடு அண்டியே என் வீடு மா மரச் சோலைகளோடு. பலாமரங்களும் போட்டியிட தென்னைகளும் பனைகளும், நாமுமிங்கே, என்று கண்ணசைக்க வீரசிங்க அறிவாலயம், ஊரையே அலங்கரிக்க, நித்தமும் கரம் குவித்திட்டு, நாம் கூறும் கதைகள் கேட்கும், இராமாவில் கந்தனுமென்று, அன்றைய வாழ்வுக்காய், மனம் அடம்பிடிக்கிறது.
பெற்றெடுத்த என்னூரோ! நாற்புறமும் முழங்கிக் கொள்ள, ஒடுங்களென்று பதைபதைத்த, விரட்டியத, நீதானம்மா. யாக்கரைத் தரைதனிலே, கால்கடுக்க சோதனை முடித்த எங்கு போவதென்று, விழித்தக் கொண்டே வந்திட பழகிய ஊரில் வாழ்வு இலக்கியத் தாயினது. அரவணைப்பென்ற சீரான வாழ்வுதான். ஆனாலும், மாஞ்சோலைத் தாயே! உன் மடிச் சுகத்தக்கு ஈடாகுமோ..? வீசி வருகின்ற
தாயகம் 29 GD 2001

Page 17
CD 200
அனற் காற்று விளம்பிக் கொள்கிறது ஆசாரம் மிக்கதான உன் மனையில் பதிந்த ஊத்தைப் பாதங்கள் கொஞ்சமல்ல உடமைகளே கொள்ளையாகி. கேட்டு உள்ளம் அழுகிறது.
திரைப் படக் காட்சிகளாய் எண்ணங்கள் விரிகின்றன. வரிசை வரிசையாய் நான் வைத்த வளர்த்த குறோட்டன்களைத் தாங்கிய, பூச்சாடிகளே இல்ல்ையாமே. ஓ இராப் பொழுதுகளில் என் பூஞ்சோலைக்குள் நித்தம் வந்தே
தயில் கொள்ளுகின்ற,
ஜோடிக் குருவிகளும் இடம் பெயர்ந்தே போயிருக்கும் காற்றின் கதைகளால், விழிகள் நனைகின்றன, பகற் பொழுதுகளைத், தாக்காட்டி விடலாம். என்னூரே, இரவுகள் உன் நினைவில் தவிக்கிறது. அதனால்தான் இந்தப் பா மடலை
தாயகத்த சஞ்சிகைப் பெட்டியில் போட்டு நிற்கிறேன் உன் கரங்களுக்குக் கிடைத்தால் கண்ணீருடே பாப்பாய்தானே!
SO தாயகம்

கம்பவாரிதியும் மாக்சிச எதிர்ப்பும்
கம் பராமாயணம் பற்றி பட்டிமன்றமும் பிரசங்கமும் நடத்தும் கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களுக்கும் மாக்சிசத்துக்கும் என்ன சம்பந்தம். அவர் அரசியல் வாதியா அல்லது அமெரிக்க ஆதரவாளரா? என்று எவரும் எண்ணலாம். ஏனோ அவர் தம்மை ஒரு மாக்சிய எதிர்ப்பாளராகக் காட்டிக் கொள்வதில் முனைப்புடையவராகவே இருந்து வருகிறார்.
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே' என எமது பழைய மரபின் வழியிலேயே மாறுதல்களை மனங்கொண்டு ஏற்கும் மனப்பக்குவம் இருந்து வருகிறது. அதுவும் பல்லாயிரம் ஆண்டு பழைய க்மைகள் மக்களின் பின் முதுகை மட்டுமல்ல அவர்களது ஆழ்மனங் களையும், உயிர் வாழ்வையுமே அழுத்தி நிற்கும் இக் கணனி யுகத்தில் கவிஞர் முருகையன் அவர்களின் கவிதை வரிகளைப் போல மூட்டையை இறக்கி “கொட்டிஉதறி குவிகின்ற கூழத்துள், குப்பை விலக்கி மணிபொறுக் கி அப்பாலே செல்லும் அறிவு” எவ்வளவு அவசியமாகிறது.
ஜெயராஜ் அவர்களோ அவரது பட்டிமன்ற பகிடிவார்த்தையில் கூறுவத னால் பழமையின் காவலனாக தன்னைக் கருதி, பழமையை அப்படியே கட்டிக் காப்பேன் என தனது குடுமியைஅடிக்கடி வாரி இறுகக் கட்டிக் கொள்கிறார். இதனால்த் தான் மக்களின் நல்வாழ்வுக் கான சமூக மாற்றம் , சமுதாய விழிப்புணர்வு பற்றி அக்கறை
தாயகம்
களுக்கும் பின்னால் ஏதாவத ஒரு
Lif f J ir حساس
கொள்ளும் மாக்சிசம் இவருக்கு சிம்ம சொற்பனமாகப்படுகிறது. இவரது கருத்துப்படி “காலாவதியாகிவிட்ட மாக்சிசத்தின்’ மீதும் தனது எதிர்ப்புக் குரலை நிறுத்த முடியவில்லை. வாய்ப்புக்கள் வரும் போதெல்லாம் உரத்து ஒலித்து வருகிறார். இந்த வகையில் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களின் மணிவிழா வாழ்த்துக் கட்டுரையையும் இதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியுள்ளார்.
அறிவியல், சமயம், அரசியல், சமூகம் இவை சம்பந்தப்பட்ட எல்லா வாசகங்
வர்க்கத்தின் நலன்கள் இருக்கும். இதைக் கண்டுபிடிகக் கற்றுக் கொள்ளும் வரையில் அரசியலில் மக்கள் மோசடிக்கும், சுய மோசடிக்கும் எப்பொழுதம் பலியானார்கள். இனியும் பலியாவார்கள்
- லெனின்
இக் கட்டுரை Lyp 6ò Ď உண்மைக்கு முரணான பல கருத்துக் களை வெளியிட்டுள்ளார்.
1) மாக்சிஸ்டுகளை மத எதிர்ப்பாளர் களாக காட்டமுனைவது 2) மாக்சிஸ்டு களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் இடையேயுள்ள உடன்பாடான அம்சங் களைக் காணத்தவறுவது. 3) பல் கலைக்கழக கல்விபற்றி தவறான எண்ணக்கருத்தை வலியுறுத்துவது 4) பொது விளைவு களைக் கருத்திற் கொள்ளாது தனிமனித நடத்தைகளின் அடிப் படையில் தத் துவங்களை விமர்சிப்பது
மே 2001

Page 18
கட்டுரையில் 9|6)j fÍ குறிப்பிடுவது போன்ற மாக்சிய வாதிகள் மக்களின் மத நம்பிக்கைகளை மறுப்பவர்கள் அல்ல கம்பவாரிதியின் இராமபக்தர்கள் பாபர்மசூதியை பக்தி வெறிகொண்டு இடித்து தகர்த்தது போல தலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ் தானில் புத்தர் சிலைகளை தகர்த்து அழித்தது போல, தமிழகத்தில் ஈ.வே.ரா. பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைத்தது போல, மாக்சிஸ்டுகள் எங்கும் நடந்துகொள்ளவில்லை. பழமைவாதிகளின் சாதிய வெறிக்கும், ஒடுக் குமுறைகளுக் கெதிராகவும் மாவிட்டபுரம் போன்ற வடபகுதி ஆலயங் களுக்குள் கடவுளின் பத்தர்களை கடவுளை வழிபடவிடுங்கள், மத வழிபாட்டுரிமையை அங்கிகரியுங்கள் என்று தான் வேண்டி நின்றார்கள். சீனா, ரூஷியா போன்ற நாடுகளில் பாரம்பரிய கலாச்சாரச் சின்னங்களாக வழிபாட்டு தலங்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டன.
மாக்சியவாதிகளை மத எதிர்ப் பாளர்களாக அடையாளங் காட்டுவது ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்களது கருத்துக்களை முறியடிப்பதற்கு ஆளும் வர்ககம் இலகுவாக எடுத்தாளும் ஒரு தந்திர வார்த்தை இதை ஏன் அடிக்கடி ஜெயராஜ் அவர்கள் தூக்குகிறார். இதனால் யாருக்கு? இவர் உதவுகிறார்
காலம் காலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டலுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் உள்ளாகும் மக்களின் துன்ப துயரங்களுக்கு அவை களிலிருந்து விடுபடும் மார்க்கத்ததைக் காட்டுவது மாத்சிசம் விதி, வினைப் பயனென்று முக்தியடைய மார்க்கம் காட்டுவது மதம் மனிதத் துயர்களுக்கு தற்காலிகத் தேறுதல்தந்து
CD 2001
உளவியல் வடிகாலாக அமைவது மதம். துயர்தோய்ந்த அவ் ஒடுக்குமுறை களுக்கு எதிரான மனிதனின் வரலாற்று அநுபவங்களை மானுட நேயத்துடன் சமூக விஞ்ஞான நோக்கில் ஆய்ந் தறிந்து மானுடத்தின் விடுதலைத் தத்து வமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது LDTaisdeff.
ஆள்பவர் ஆளப்படுபவுர் என சாதி, இன, மத, பால், வர்க்க ரீதியாக பிளவுபட்ட ஒரு சமூகத்தில் ஒடுக்கப்படு பவர்களை தமது சமூக பொருளாதார அரசியல் அடிமைத்தனங்களின் வேர் களை விழுதுகளை புரிந்து கொள்ள மல் தடுப்பதற்கு ஆளும் வர்க்கம் மக்களின் மதநம்பிக்கையையும் ஒரு கேடயாமாக, உளவியல் பாதுகாப்பு அரணாக பாவித்து வருகிறது.
இவ் உண்மையைப் புரிந்து கொண்ட மனிதநேயம் மிக்க ஆன்மீக வாதிகள் பலர் தனிமனித ஈடேற்றம் என்ற ஆளும் வார்க்க கருத்தினை ஏற்று ஆன்ம விசாரத்துடன் நின்றுவிடாமல் அடக்கி ஒடுக்கப்படும் மக்களின்விடுதலை யிலும் நல்வாழ்விலும் அக்கறை கொண்டவர்களாக தம்மை மாற்றிக் கொள்கின்றனர். இத்தகைய ஆன்மீக வாதிகள், அறிஞர்கள், கல்வி மான்கள் பலர் தத்தமது நிலைகளில் நின்றே மாக்சிஸ்டுகளின் சமுதாய அக்கறை கொண்ட செயற்பாடுகளில் தாமும் இணைந்து செயற்பட்டு வந்துள்ளனர்.
மக்சிசம் காட்டும் வரலாற்று அனுபவம் எமது மண்ணின் மரபுகளுக்கு அந்நிய மானதல்ல. வேதகாலம் சங்ககாலம், நாயன்மார்காலம் என சித்தர்களுக் கூடாக பாரதி, குன்றக்குடி அடிகள் வரை இது நீண்டு வருகிறது. மாக்சிசத்தை ஏற்பவர்கள் கூட பிறக்கும் பொழுதே மாக்சிய போதம் பெற்றுவந்த
தாயகம்

வர்கள் அல்ல. ஆன்மீகத்தில் ஊறித் திளைத்திருந்த பலர் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிரான சிந்தனை செயற்பாட்டு உந்தலால் மாக்சிஸ்டு களாக மாறியுள்ளனர். சீனதேசத்தின் விடுதலை நட்சத்திரமான மாஒசேதுங் அவர்கள் கூட தனது இளமைக் காலத்தில் தாயாரின் சுகயினத்துக்காக புத் தபெருமானிடம் வேண் டுதல் செய்ததை நினைவு படுத்தியுள்ளார். எனவே மாக்சிஸ்டுகளை மத எதிர்ப்பாளர் களாகக் காட்டுவது தவறாகும்.
யாழ் கல்விச் சமூகத்தை மாக்சிசவாதிகளிடமிருந்து காப்பாற்றிய வராக கம்பவாரிதியால் புகழப்படும் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் கூட மேற் கூறிய மரபரின் மாக்சிஸ்டுகளுடன் இணைந்த ஒரு ஆன்மீக வாதியாகவே தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். சங்க காலச் சமூகம் பற்றி வடபகுதி தீண்டாமை ஒழிப்புப்போராட்டங்களில் பங்கு கொண்ட கட்சிஉறுப்பினர்களுக்கு பாடம் எடுத்தவர். அவர் தாயகம் சஞ்சிகையின் முதல் இதழ் வெளியீட்டிலேயே பங்கு கொண்ட துடன் தேசியகலை இலக்கிய பேரவை யின் நூல் வெளியீடுகள், விமர்சன அரங்குகள் பலவற்றை பல்கலைக் கழகத்தில் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கியவர். டானியல் அவர்களின் தண்ணீர், கானல் போன்ற நாவல்களை பல்கலைக்கழக பாட நூலாக்குவதில் முன்நின்று பங்களித்தவர் அவர் டானியல் குறுநாவல்கள் என்ற புத்தகத்தை தானே நிதி உதவி பெற்று அச்சுப் பதிப்பித்தவர். ஆண்டு தோறும் டானியல் நினைவு கருத்தரங்குகளை ஒழுங்கு செய்து வருபவர். எண் பதுகளுக்குப் பின் சர்வதேச ரீதியாக மாக்சிசத்துக்கு
தயாகம்
வழிவந்த
ஏற்பட்ட தற்காலிக பின்னடைவை மனத்திற் கொண்டு கருத்தரங்க மேடைகளில் மாக்சிஸ்டுகள் மீது எவராவது குறைகூறிய போதெல்லாம் மாக்சிஸ்டுகளுள் ஒருவர் போலவே தம்மைக்கருதி ஆவேசத்துடன்பதிலளித்த சம்பவங்கள் பலரும் அறிந்ததே. இத்தகைய ஒரு பேராசிரியரை மாக்சிசத் துக்கு ஏதிரானவராக கம்பவாரிதி எப்படி அடையாளம் காட்ட முடியும்.
பின்தங்கிய ஒரு பொருளாதார கல்விச் சூழலில் இருந்து தனது அயராத உழைப்பால் உயர்ந்திருக்கும் பேராசிரியர் அடிக்கடி தான் நடந்து வந்த பாதையை பகிரங்க மாகவே நினைவு படுத்திக் கொள்வதைப் பலராலும் அவதானித் திருக்க முடியும். அதே உணர்வோடு அநாதைச் சிறுவர்களின் நலன்களில் அக்கறையுள்ளவராக இருந்து வரும் பேராசிரியருக்கு இப்படிப் பட்ட சிறுவர்களே உருவாகாத ஆரோக் கியமான சமூகம் பற்றிய கனவு இல்லாமல் இருக்குமா? “எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுவ தேயல்லால் வேறொன்றியேன் பராபரமே” என மக்களின் நல்வாழ்வுக்காக உழைப்பவர் களும் மாக்சிஸ்டுகளும் எப் பொழுதும் உடன்பாடுள்ளவர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
கம் பவாரி தி ஜெயராஜ் குறிப்பிடுவது போன்று மாக்சிச அறிஞர்களால் “கடவுளை அடைவதே கல்வியின் நோக்கம் என்ற வள்ளுவன் நையாண்டி செய்யப்பட்டான், கம்பனும் சேக் கிழாரும் பிற்போக்காளராகப் பிரகடனப்படுத்தப்பட்டனர்’ என்ற கூற்று மிகத்தவறானது. காலம், இடம், சூழலில் வைத்து அவர்களது படைப்பினை ஆய்வு செய்வதும், அதற்கூடாக அன்றைய சமூக முரண்பாடுகளையும் முடிமன்னர் முதல் சாதாரண குடிமகன் வரை பெற்றிருந்த
(SD 2001

Page 19
உரிமைகள் பேணி வந்த வாழ்க்கை முறைகள், பண்பாட்டு விழுமியங்கள் யாவையும் வெளிகொணர்வது இன்றைய
சமூக வாழ்வை செழுமையாக்க
அவசியமானவை பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடமும் நாட்டுமக்களிடமும் விஞ்ஞான பூர்வமான ஆய்வறிவியல் நோக்கை வளர்ப்பதற்கு உருவாக்கப் பட்டவை. ஆய்வறிவதலுக்கு உட்படாத எந்தப் புனிதப் பொருளும் அங்கு இருக்க முடியாது. அவ்வாறு புனிதப் பொருட் களாக் பேணப்படுவதற்கும் மனனம் செய்து ஒப்புவித்து வியாக்கியானம் செய்வதற்கும் தான் பல்கலைக்கழகம் என்றால் சங்கரர் மடங்களாகத்தான் அவை மாற்றப்பட வேண்டும். பேராசிரியர் கைலாசபதி போன்ற பலர் இதில் தெளிவாக இருந்த தற்காகவே ஜெயராஜ் அவர்களால் குற்றம் சுமத்தப்படுகினறனர்.
இன்று தமிழகத்தில் ஒழுக்கம், பண்பாடு என்பவைகளையே அதிகாரத் தின் அம்சங்களாக மறைகரங்களாக நோக்கி கேள்விக்குள்ள்ாகும பின் நவீனத்துவ தலித்திய விமர்சன முறைகள் பல வெளிவந்துள்ளன. இச்சூழலில் மிக நிதானமாக இயங்கியல் கண்ணோட்டத் தில் யதார்த்தத்தை அணுகுமி மாகி சிய விமர்சன முறைமைக்கு எதிராக குமுறுகிறார் கம்பவாரிதி.
இயங்கியல் பொருளாதார நோக்கில் உலகை விளக்கும் மாக்சிசத் தத்துவம் தன்னியல்பாகவே விமர்சனங் களையும் மாற்றங்களையும் ஏற்கும் தன்மை உடையது. மர்க்சிஸ்டு களும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட புனிதர்கள் அல்ல. விமர்சன சுயவிமர்சன முறைமையை மனப்பூர்வாமாக ஏற்கும் ஒருவரே மாக்சிஸ்ட்டாக தன்னை வளர்த்தெடுக்க முடியும்.
மே 2001
தனிமனித நடத்தைகளை மட்டும் வைத்து தத்துவங்களின் தன்மை
களை எடைபோட முடியாது. ரூஷ்யாவின்
ரஸ்புடின் முதல் இந்திய ரஜனிஸ் சுவாமி,
பிரேமானந்தா என மதத்தின் பெயரால்,
மன்மதலீலைகள் புரியும் பல்லாயிரக் கணக்கானோரை காலம் காலமாக மக்கள் அடையாளம் கண்டு வருகின் றனர். இவைகளை வைத்து மதத் தத்து வங்களை எவரும் விமர்சிக்க முற்படுவது தவறு. சுயநல நோக்கில் அதுபோன்ற' மாக்சிஸ்டுகள் எனக்கூறிக் கொண்டு அத்தத்துவத்திலிருந்து வழித வறும் தனி மனிதர்களின் நடத்தைகளை வைத்து அத்தத்துவத்தை எடைபோடுவது தவறு.
ரூஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் சோசலிச அரசுகள் வீழ்ச்சி அடைந்திருக்கலாம் இத்துடன் வரலாற்றுச் சக்கரம் தனது, சுழற்சியை நிறுத்திவிடவில்லை. மாக்சிசம் உலகில் தோன்றி 150 ஆண்டுகளுக்குள் ஒடுக்குமுறையிலும் அறியாமையிலும் அடிமைத்தனங்களிலும் மூழ்கியிருந்த மனிதகுலத்தை விடுவிப்ப தில் அதன் வரலாற்றுப் பங்களிப்பு உலகில் இதுவரை தோன்றிய அனைத்து தத்துவ தரிசனங் களையும் விட அளப்பரியது. வரலாற்றுப் பாடத்தில் நுனிப்புல் மேய்பவர்கள் கூட இவ் உண்மையை புரிந்து கொள்ள முடியும். சாதி, இன, மத, பால், நிற, வர்க்க வேறுபாடுகள் யாவற்றையும் கடந்து மனிதர்களை மனிதர்களாகக் நேசிப்ப துடன் சமத்துவமான அவர்களது வாழ்வுரிமைகளுக்காக போராடவும் வலுச்சேர்ப்பது மாக்சிசம் இத்தகைய மானுட நாகரிகத்துக்கு வித்தாக அமையும் மாக்சிசம் பற்றிய விமர்சனங் களை முன்வைப்போர் அது பற்றிய புரிதலோடு அதனை விமர்சிக்கமுற்பட வேண்டும் . கம் பரிரிதி ஜெயராஜ் அவர்களுக்கும் இதி பொருந்தும். 0
தாயகம்

போராளித் தந்தையின் நினைவாக.
- வெனோ ரோபசுவர் (யூகோஸ்லாவியா)
பிரகாசமாய்த் தெளிவான காலடிகளின் ஆழ்ந்த நினைவுகளை எம்மில் விட்டு அவர்கள் போயினர் தம் குருதியால் சுட்ட கல்லினை முதசமாய் எமக்கு
அவர்கள் தந்தனர் எமது புதிய வீட்டுக்காக.
எமத ஆண்மாவில் அந்தக் கல்லினை நிறுத்தினோம்
அதனத உயர்ந்த வெள்ளைச் சுவரருகில் எம் கனவின் பிணையாளிகள்
வீழ்ந்தனர்
கடைசிப் பிணையாளியின் “ரவை’யுடன் நாங்கள் கூட
வீழ்ந்துபடுவோம் விசுவாசமான மரணத்தின் தாய - கசப்பு மகிழ்வுடன்
ஆங்கிலம் வழி, தமிழில் : கடலோடி
தாயகம் 35 GD 2001

Page 20
99
՞fful ul եւ յ........ என்ற நிலக்கறையானின் தொடர்ச்சியான ஒலி எழுப்புகை ‘ரீங், ரீங், ரீங்..” என்ற பெயர்தெரியாத ஏதோவொரு பூச்சியின் ஒலி எழுப்புகைகள். இவற்றை விட இன்னும் பல பூச்சிகளின் ஒலி எழுப்புகைகள். எல்லாம் சேர்நது அந்த இரவில் என்னைப் பயமுறுத்தின முற்றத்துப்பலா மரத்தில் இருந்து அவ்வப்போது விழும் பழுத்தல்கள் இன்னும் தேவையற்ற சிந்தனைகளையும், பயத்தையும் உருவாக்கின மேசை விளக்கு உற்சாகமாக இல்லாமல் எரிந்து கொண்டிருந்தது. நான் வெளிச்சூழலின் ஒவ்வொரு ஒலிக்கும் சத்தத்திற்கும் அர்த் தம் கற் பரிக்க முயன்று கொண்டிருந்தேன். வாசுகி மீது அடங்காத கோபம் எழுந்தது. “சரியான பேய்ச்சி வீட்டைபோப் போறனென்டு காலம சொல்லி இருந்தால் நான் கெளசியின்ர றுTமரில் போய் நிணி டிருப் பன்” திரும்பத்திரும்ப பல தடவைகள் எனக்கு நானே சொல்லிக் கொண்டிருந்தேன். அம்மம்மாவின் குறட்டை தெளிவாகக் காதில் கேட்டது அவவுக்கென்ன கவலை
(SD 2001
ருப்பு
- சித்திரா
அவுக் கென்ன பயம். கிழவிதானே? தோல் சுருங்கி, கண் ஒடுங்கி, முலைகள் வற்றிக் கவர்ச்சியற்றதாகி, கால்களில் பொருக்கு வெடித்து, தலைமயிர் கொட்டப்பட்டு வெள்ளையாகி. ஆனால் நான்; வாசுகி, கெளசி, நித்தியா, சத்தியவாணி, இன்னும் எங்கடை பச்சல இருக்கிற கேர்ள்ஸ். எந்தநேரமும் பய அமிலம் சுரக்கும் பொருட்களாக பாடத் தில் கவனம் செலுத்த முனைந்தேன். “தகவல் முறைமை என்பது நிறுவனத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் இன்றியமை யாததாகும்’ விரிவுரைக் குறிப்புக்களைக் கண்கள் மேயத் தொடங்கின.
C 99
ULof என்றசத்ததுடன் ஏதோவொரு பொருள் கூரைமேல் விழுந்து என்னை நிலைகுலையச் செய்தது. சிறிது நேரம் எதுவும் சிந்திக்க முடியாத வளாகவும், எதுவும் செய்யத் தோன்றாத வளாகவும் கல்லானேன். மளவென்று வியாக்கத் தொடங்கியது. அம்மம்மாஇந்தச்சத்தத்தைக்கேட்டுவிழிப்
தாயகம்
 

படைத் தோ எண் னவோ இரு மிக்கொண்டிருந்தா “படக். பக்” என்று சிறகடிக்கும் சத்தம் கேட்டது அது “காகவெளவாலு’க்குரிய சிறகடிப்பு “மூதேசி வெளவால்” மாம்பழம் கொந்த வந்தவெளவாலை திட்டியது மனம் வெளவால் பயந்தரும் பிராணி. அதன் நிறம், எலிமூஞ்சை, ரீவிங்ருவிங்என்னும் சத்தம், நீட்டிக் கொண்டிருக்கும் பற்கள், சகித்துக்கொள்ள முடியாத மனம், தலைகீழான தொங்குகை இவை யெல்லாம் மனத்திற்கு பயந் தரக் கூடியவை வெளவால் பேய், பிசாசுகளின் சேவகர்கள் வைத்திருந்தாள் அம்மா. அதனால் நான் வெளவால்கள் குறித்தும் பயப்பட வேண்டியவளாக இருந்தேன்.
சிறிது மனந்தெளிந்தவளாய் கொப்பியின் பக்கங்களைப் புரட்டினேன் அந்தப்புகைப்படம் ஒருசில பக்கங்களைப் புரட்டியபோது என் கவனத்திற்கு வந்தது புகைப்படத்தில் நானும் வாசுகியும் நெருக்கமாக நின்றிருந்தோம் . நான்சிரிக்கவில்லை. அவள் தன்னை மறந்து சிரித்திருந்தாள் “சிரியடி சிரி நல்லாச்சிரி! நீ பாக்கிற வேலையளுக்கு உன் னைக் கொஞ சதி தான மனமாக்கிடக்குது. அடிக்கடி அம்மாட்டப் பால்குடிக்கத் தவனம் வந்து ஒடுறா. நான் தனிய இருந்து அனுபவிக்கிற வேதனை எனக்கெல்லோதெரியும்’ அவளைப் பார்த்து மனதாரத் திட்டினேன்.
வாசு கிமீது மட்டுமல ல அம்மம்மா மீதும் என்கோபம் திரும்பியது. “சரியான மூதேசிக்கிழவி எக்சாமுக்கு படிக்கிற நேரங்கள் எங்களுக்கு முன்னால்
வந்திருந்து தேவையில்லாமல் இரவிரவா 8 அலட்டும், பாவபுண்ணியம் மறுப்பிறப்
தாயகம்
என்று பயமுறுத் தி
உனக் கும் பச்பெட்டையஞக்கு இப்ப குமரிப் பருவம்
பெண்டெல்லாம் விசர்க்கதையள் கதைக்கும். இருந்திருந்திட்டு “புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி வல்ல சுரராகி முனிவராயப் த் தேவராயப்” சிவ புராணத்தை மேற்கோள் காட்டிக் கதைக்கும் தன்ரமணிசனை இராம னாக்கும் தன்னைச் சீதையாக்கும். இப்ப மாடுமாதிரி கொர். கொர். எண்டு குறட்டையடிச்சு நித்திரை கொள்ளுது எடியே விசர்க்கிழவியே! எழும்பிவாடி வந்து எனக்கு முன்னால் இருந்து ஏதாவது அலட்டு இந்தநிசப்தத்தைக்
குறை. நான் பயத்தில் செத்துப்போவன்
போலகிடக்கடி என்மனம் ஆவேசத்துடன் குமுறியது.
W “தவ் வலாயப் சிறுமியாயப் முலைபெருத்த பருவக் குமரியாயப் முதிர் கன்னியாகி தலைநரைத்த கிழவியாய்.” அழயே வாக்கி எனக் குத் எங் கடை
இனி முதிர்கன்னிகளாகி தலை நரைத்த கிழவிகளாகி. அதற்குள்? நான்யார்? அம்மம் மா அடிக்கடி சொல்லும் வன்னியில் இருந்து வந்த பொடிச்சி, நீ
செல்லமாக அடிக்கடி கோகி என்று
அழைக்கின்ற கோகிலா அம்மா, அப்பா, அக்கா, அத்தான், தம்பி, அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, மாமா, மாமி, மூத்தமச்சான், இளையமச்சான், சித்தப்பா, சித்தி இந்த நெருக்கமான உறவுகளையெல்லாம் விட்டுவந்து யாழ்ப்பாணம் வந்தவள். இப்போது தனியாக மேசையில் உட் காந்து உற்சாகமில்லாமல், எரியும் மேசை விளக்கை வெறித்தபடி சிந்தனை வயப்பட்டுபயத்தினால் அணுஅணுவாகச் செத்துக் கொண்டிருப்பவள். ஏனிப்படி என்னைச் சித்திரவதை செய்து விட்டுப்
போனாய் என்வேதனைஉனக்குப்புரியாதடி
CD 2001

Page 21
ஏனென்றால் உன்னால் வன்னியில்
பொடிச் சியாக இருக்கமுடியாது. .
அவ்விதம் உன்னால் இருக்க முடிந்தால் எடியே வடமராட்சிப் பொடிச்சியே! அப் போது புரியுமெடி எவ்வாறு அணுஅணுவாகப் பயத்தினால் செத்துப் போவது என்பதைப் பற்றி? இந்த நேரத்தில் எனக்கு ஆபத்து விளைவிப் தாய் எதுவும் நடக்கலாம். அவ்விதம் ஏதேனும் நடந்தால் யாருக்குத் தெரியும் எனக்கு நடந்ததைப் பற்றி?
“மியாவ். 2 மியாவ்” கடுவன் பூனையொன்று இனிட்விட்டு இடைவிட்டுக் கத்திக் கொண்டிருந்தது. அது இரைதேடி அலைகிறதா அல்லது? “எடியே வாசுகி இந்தபூனையின் கத்தல் என்னை எவ்வளவு தூரம் பயமடையச் செய்கின் றது என்பதை நீயறிவாயா? பேய் பிசாசு களைப் பற்றி கதைகளிலெல்லாம் தவறாமல் ஒரு பூனை கத்திக் கொண்டிரு க்கும், நீ கேள்விப் படவில்லையா?”
“கஃச் சு. கச் சு......” தவளைக்குஞ் சொன்று கத்தியது. அந்தக்கீச்சலில் அது உயிருக்காகப் பேராடுவது தெரிந்தது. அநேகமாக அந்தகடுவன் பூனைதான் தவளைக் குஞ்சைப்பிடித்திருக்க வேண்டும் பாவம் தவளைக்குஞ்சு அதன் அம்மாத்தவளை, அப்பாத்தவளை, சகோதாரத்தவளைகள் பிற உறவுக் காரத் தவளைகள் எல்லாவற்றையும் பிரிந்துவந்து பூனையிடம் மாட்டிக்கொண்டுவிட்டது.
பூனைகளுக்கு தாங்கள் எலிகைளைத்தான் பிடிக்கவேண்டுமென்ப தில்லை. எந்தப் பிராணியையும் பிடித்துக் கொள்ளமுடியும். ஆனால் தாங்கள் எலிகளையே பிடித்து
(SD 2001
சமாதானப்பட்டுக் கொள்கின்றன. நியாயப்படுத்திக் கொள்கின்றன.
உணி மையரில் பூனைக் களுக்கு
எலிகளைப் பற்றிச் சரியாகத்தெரியாது.
அம்மம்மா இருமினாள். இருமல் சில கணங்கள் நீடித்தது. நான் ஏணிப்படி அனுவனுவாகச் சர்க வேண்டும்? சோகிலா எங்கட பச்சில் நீ தானடி நல்ல வடிவு. “சத்தியவாணியின் குரல். எடியே! வாணி நீ இப்ப என்ன செய்து கொண்டிருப்பாய்? நித்தியா, சந்தியா இவகளோட சேர்ந்து பகிடிவிட்டுக் கொண்டிருப்பாய் நான் அணுவணுவாய்
செத்துக் கொண்டிருக்கிறன்” குரலெ டுத்து அழத் தோன்றியது.
“9ịLô LDLô LDII...” 8ìụp.6,ỉì60)uu
துணைக்கு அழைத்தேன். கிழவியிட மிருந்து பதிலில்லை. நான் அழைத்த குரலே வீடெங்கும் எதிரொலித்து பயத்தை அதிகரித்தது. “பொடிச்சியள் கறிவைக்கப் போறன் . தேங்காய் துருவித்தாறியளே’ என்று எத்தனை நாள் கேட்டிருக்கிறாய். நானும் எத்தனை நாள் துருவித் தந்திருக் கிறேன். அதுக்காகவாவது எழுந்து வந்து எனக்கு நித்திரை வரும்வரை எதாவது கதைத்து என்னைக் காப்பாற்றமாட்டாயா கிழவி?” மனம் கிழவியை மன்றாடியது நாய்கள் கடுமையாக இடைவிடாது குரைக் கின்றன. “டொக். டொக்” கதவு தட்டப்படுவது போல இருக்கிறது. அது மனப்பிரமையா? நிஜமா? பிரித்தறிய முடியாதவளாக நான் விளக்கொளி படிப்படியாக மங்கிக் கொண்டிருக்கிறது. என்னுடல் படிப்படியாக விறைக்க ஆரம்பிக்கிறது.
விட்டதாகச். .
தாயகம்

தாயகம்’ ஒன்று கூடல்
“ஒரு படைப் பாளி தனது பார்வையை விரிவுபடுத்தி ஆழமாக்கிக் கொண்டு படைக்கும் படைப்புக்களே சமூகப் பயன்பாடுடைய கலை, இலக் கியங்கள் ஆகின்றன. அவை மக்களை மேம்படுத்துகின்றன. ஆழமான கருத்துக் கள் பொதிந்திருந்தாலும் கலைத்துவமற்ற படைப்புக்கள் வெற்றுக் கோஷங்கள் ஆவது போல, கருத்தற்ற வெறும் உணர் வின் வெளிப்பாடாக வரும் கலைத்துவம் மிக்க படைப்புக்களும் உணர்வுத் தூண்டிகளாகவே செயற்படுகின்றன’
கடந்த மாதம் (18-03-2001) பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்ற தாயகம் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் இது போன்ற பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கல்வயல் குமாரசுவாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரை யாடலில் எழுதி தாளர்கள் , கலைஞர்கள் , விமர்சகர்கள் உற்சாகமாக தமது கருத்துக் களை முன்வைத்தனர். தாயகத்தில் வெளி வந்த சிறுகதைகள் பற்றிய விமர்சனம் படைப்பாளிகள் முன்நிலையிலேயே முன்வைக்கப்பட்டது. அங்கு வெளிவந்த கருத்துக்களின் சாரங்கள் சில.
“பல்வேறு ஒடுக்குமுறைகள் நிலவும் ஒரு சமூகத் தில் ஒரு ஒடுக்குதலுக்கு எதிரான போராட்டம் கூர்மையடைந்து முன்னெடுக்கப்படும் போது ஏனையவை களை மூடிமறைப்பதோ கவனத்திற் கொள்ளாது விடுவதோ தவறு. இன ஒடுக்குதலுகெதிரான போரட்டம் முன்னெடுக்கப்படும் போது சாதிய, வர்க்க, பால் ஒடுக்குமுறைகளை மூடி மறைக்க வேண்டும் என்பதல்ல. அடிநிலை மக்களின் விடுதலை என்ற தளத்தில் இருந்து வர்க்க பார்வையில் இருந்து இன ஒடுக்குதலுக் கெதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் போது தன்னியல்பாகவே ஏனைய ஒடுக்கு முறைகளும் வலுவிழந்து போகக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே இலக்கியத் திலும் பிரதான போராட்டத்துக்கு ஊறுவிழைவிக்காத வகையில் ஏனைய
தாயகம்
ஒடுக்குமுறைகளையும் படைப்புக்களில் வெளிப் படுத் துவது தவறல் ல. இரண்டுக்கும் இடையே சரியான எல்லைக் கோட்டை வகுத்துக் கொள்ளவேண்டும்” “மக்கள் மீது திணிக்ப்படும் எத்தகைய ஒடுக் குமுறைகளும் மனிதாபிமானமற்றவை. எனவே அவ் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங் களும் மனிதாபிமானத் துக் கான போராட்டங் களகவே அமைகின்றன. ஒரு விடுதலைப்போராட்டமும் இயல்பாகவே மனிதாபிமானத்துடன் தான் முன்னெடுக் கப்பட வேண்டும். ஒடுக்குமுறையாளரிட மல்ல அவனது கருவியாகச் செயற்படு பவர்கள் பெரும்பாலாரிடம் மனிதாபிமானம் உண்டு. அதனை அங்கீகரிப்பதும் ஒடுக்குமுறையாளரை தனிமைப்படுத்த உதவும்.”
“தொலைக்காட்சி ஊடகங் களின் வளர்ச்சியால் இன்று வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது தரான கலை, இலக்கிய, சமூக அரசியற் சஞ்சிகைகளை வாங்கிப் படிப்போர் மிகக் குறைவாகவே உள்ளனர். மக்கள் இலக்கியம் என்பது வளர்நிலையிலேயே இன்னும் இருந்து வருகின்றது. எனவே இந்த இடை வெளியை நிரப்புவது பற்றி ஆழாமாகச் சிந்திக்க வேண்டும்.”
இது போன்ற பல கருத்தாடல் களுடன் அவ்இலக்கிய ஒன்று கூடல் பயனுள்ளதாக அமைந்தது.
- உலகன்
(SD 2001

Page 22
நிர்வாண்ம்
அந்த மனிதன் நிர்வாணமாக வந்துகொண்டு இருந்தான். அவன் வரும் வீதி திருநெல்வேலியை அண்டிய பலாலி வீதி ஒரு கணக்கான மாலைப் பொழுது.
வீதியிலி பலதரப்பட்ட பிரயாணங்கள் நடந்தன. இராணுவ வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் போய் வந்தன. அனேகர் சயிக்கிளில் திரிந்தனர்; இடையிடையே படையினர் சயிக்கிளில் திரிந்தனர்.
திகைப்படைந்தனர்;
மின்சார இலாக்காவின் நீண்ட வாகனம் ஒன்று ‘லயிற் போஸ்ருகளை ஏற்றிய படி உறுமிக் கொண்டு சென்றது. அந்த நிர்வாண மனிதன் ஆறுதலாக வந்து கொண்டிருக்கிறான். வீதியில் போய் வந்தோர் நிர்வாண மனிதனைக் கண்டு '
பரபரப்படைந்தனர்; பயந்தனர். பல முடிச்சுகளைக் காட்டினார் முன்பு ஒரு இடத்தில, ஒரு முறை சிகரட்டுக்கு பந்தயம் கட்டி சனநடமாட்டம் உள்ள வீதியில் ஒருவர் நிர்வாணமாய் நடந்துவிட்டு மீண்டும் ஓடிவந்து தன் உடுப் புகளை போட்டதோடு பந்தயத் திற்கான சிகரட் பெட்டியையும் பெற்றுக் கொண்டார். அன்று முதல் அவருக்கு "போறஸஸ் புண் ணியம் ' என்று பட்ட பெயர் வழங்கப்பட்டது. ஆனால் இந்த நிர்வாண மனிதன் அப்படிபட்டவனல்ல. . .
உயரமானவன் கறுப்பானவன் மேனியின் பலபாகங்களிலும் உரோமம் மிக்கவன் நீளத்தாடி, காதைமூடிக் கீழிறங்கி வளர்ந்த, ஒட்டுப்பட்டு காயப்களாய் இருக்கும் தலைமயிர், பார்த்தால் பயங்கரம்; எனவே பயங்கர வாதி தூரத்தே வரும். போது பார்த்தால் நிர்வாணத்தவசி போலவும் இருக்கும்.
திடீரென ஒரு மோட்டார் சயிக்கிளும் சயிக்கிளும் மோதி தலை அடிபட்டு சயிக்கிள் காரன் கீழே விழமோட்டார் சயிக்கிள்காரன் நிறுத் தாது சென்று விடுகிறான். தலை அடி பட்டு இரத்தம் ஊற்றியது. பலர் பார்த்த படி தமது அலுவல்களுக்கு அவசர மாய்ச் சென்றனர். எனினும் சில ஒடிச் சென்று கீழே விழுந்தவனைத் தூக்கி காயத்திற்கு கட்டுப்போட்டு ஓட்டோவில் ஏற்றி முன்பின் தெரியாத அந்த ஆளை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர்.
GD 2001
பிரதான வீதியின் இடையி டையே காவலிற்கு நிற்கும் ஒரு ஆமிக்காரன் நிர்வாண மனிதனைக் கண்டு விட்டான் “அடோவ். அடோவ்.” எனக் கத்திவிட்டு தன்னிடத்தை விட்டு நகர முடியாது என்பதால் அவ்வீதியால் போன பெண்களுக்கு நிர்வாண மனிதனைக் காட்டிவிட்டு ஏதோ சிங்களத்தில் சொல்லிச் சிரித்தான்.
நிர்வாண மனிதன் நிதானமாய் நடந்து சென்றான். சோதனைச்சாவடி
தாயகம்
 

நெருங்கிக் கொண்டிருந்தது. இதற்கிடை யில் ஒரு பிரேத ஊர்வலம் பலாலி வீதியை கடக்க முனைந்த சமயம் குறுக் கு மறுக் காயப் நிர்வான மனிதனைக் காண நோந்தது. மிகுந்த சோகத்துடன் கொள்ளிக்குடம் காவிச் சென்றவர் நிர்வான மனிதனைக் கண்ட மறுகணம் சிரிக்கவே. கொள்ளிக்குடம் ஆடி அதனுள் இருந்த தண்ணிர் அவர் மேலில் ஊற்றுப்பட்டது. சிரிப்பை நிறுத்தி மீண்டும் மிகுந்த சோகத்துடன் சென்றார்.
குறித்த 6 Ulu gbi 60). Ulu சிறுவர்கள் சிலர், நிர்வாண மனிதனை நோக்கி கல்லெறிந்து பகிடிவிட்டுச் சிரித்தனர். அவர்களது பகிடிரியில் எதோ ஒன்றில் அனுபவ முதிர்ச்சி இருப்பது தெரிந்தது. இளம் பெண்கள் கடைக்குள் மெதுவாக நழுவினர், சயிக்கிளில் சென்ற பெண்கள் தலையை மறுபக்கம் திருப்பிச் சென்றனர் இளைஞர்கள் சயிக் கிளை நிறுத்திப் புதினம் பார்த்தனர். சோதனைச் சாவடிக்கு இன்னும் சற்றுத் தூரம் இருந்தது. நிர்வாண மனிதன் நிதானமாகச் சென்று கொண்டிருந்தான்.
வீதியின் ஒரு ஓரத்தில் ஒரு மனுசி கீழே விழுந்த தனது பொருட்களை ஒன்றாக்கிக் கொண்டிருந் தாள். விழுந்தது ஒரு சாப்பாட்டு பார்சல் வெள்ளைச் சோறும் சம்பலும் அதற்குள் இருந்தது. வெகுசிரத்தை யோடு மீண்டும் அந்த சாட்பட்டு பார்சலை கட்டும் போது நிர்வாண மனிதன் அவளெதிரே எதிர்பாப்ட்டான். அவள் அஞ்சவில்லை. நிமிர்ந்து பார்த்தாள் - நிர்வாண மனிதன் போகிறான். ஆஸ்பத்திரிக்கோ அல்லது வேலைத்ஸ்தலத்திற்கோ கொண்டு
தாயகம்
செல்லும் உணவை பாதுகாப்பாக எடுத்துச் சுருட்டி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சென்றாள். விறகு காலை ஒன்றில் நின்ற நபர் ஒருவருக்கு நிர்வாண மனிதனைக் கண்டதும் அடக்க முடியாத கோபம் வந்துவிட்டது. (“டேய்.றோட்டால போகாத உள் ஒழுங்கையால போ..!”) சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதாய் நிர்வாண மனிதன் போனானி நபருக்கோ கோபம் மேலோங்கியது ("சனியன்! போறியோ இல்லையோ?”) (“உனக்கே னண்ணை கோபம் வருகுது”) என்றார் அருகில் நின்றவர் (“பெம் பிளைப் பிள்ளையஸ் போய் வாறதFல்லை!?”) “பொம்பிளைப் பிளையஞம் அவனுக்கும் என்ன சம்பந்தம் ?”) "அங் கா. பெம்பிளையஸ் தலைகுனிந்து போகுது. நான் விடன். நில்லடா இஞ்ச!” என்றபடி ஒரு விறகு கட்டையை எடுத்துக் கொண்டு ஒட மற்றவர் தடுக்க, கேட்காது ஓடிச்சென்று நிர்வாண மனிதனின் பிடரிக்கு குறிபார்த்தது அடிக்க, அடி தோளில் விழுந்தது.
“ஐயோ..!!” என்ற பெரும் அலறலோடு நிர்வாண மனிதன் பரிதாபகரமான முறையில் பயத்துடன் ஓடினான். தோள்பட்டையில் இருந்து சிந்திய இரத்தம் வீதியில் சொட்டுச் சொட்டாய் சிந்த அவன் பயந்தோடினான். அதில் நின்ற ஆட்கள் அடித்தவனை தாறுமாறாய்ப் பேசினர். இடைவிடாது “ஐயோ. ஐயோ.” என்று கத்தியபடி ஓடும் போது ஒரு காலைக் கெந்திக்கெந்தி ஓடினான்: அதில் ஏதாவது பழைய காயம் இருக்கக் கூடும்.
வீதியில் போவோர் வருவோர் ’ சிந்திக் கிடந்த இரத்தம தமது காலில் படாதவாறும் , சயிக் கிள் சில் லில் படாதவாறும் விலகி விலகிப் போயினர்.
41 (3D 2001

Page 23
அவ்விடம் புதிதாக வந்தோர். இரத்தம் கண்டு பயந்தனர். ஏதாவது துப்பாக்கிச் சண்டைகள் நடந்ததோ என்று.தூரத்தே நிர்வாண மனிதன் சத்தமேதுமின்றி குப்புற விழுவது தெரிந்தது.
இங்கிருந்து ஆட்கள் அங்கு ஓடினர் சனம் போய்க் குவிந்தது. வாகனங்கள் ஒரமாய் விலகிச் சென்றன. வாகனக்காரர்கள் வீதியில் நிற்போரை பேசிப்பேசிச் சென்றனர். யார் நிர்வாண மனிதனைத் துாக் கரிக் கரையிலி கிடத்துவது என்று பிரச்சனை நடந்தது. தூரத்தே இராணுவ கவச வண்டி ஒன்று வருவது தெரிந்தது. முதலில் விறகு கட்டையால் அடித்தவன் போய் நிர்வாண மனிதனை நேராகப் புரட்டிவிட்டு காலில் பிடித்து தூக்குவதற்கு கேட்டான். ஒருவன் தான் வருவதாக கூறிவிட்டு அருகிலுள்ள கடைக்கு ஓடிப் போய் இரண்டு சொப்பிங்பைகளை வாங்கி தனது இரு கைகளிலும் மாட்டிக் கொண்டான்.
6) Tuů திறவுணி டபடி *மல்லாக்காக் கிடக்கும் நிர்வான மனிதனின் மூக்கில் இரத்தம் வழிந்தது மீசை, வாய், தாடிப்பகுதிகளில் இரத்தக் கறைகள் இருந்தன. தோள்பட்டையில் இரத்தம் வருவது நின்றிருந்தது. அவனது உடலில் இருந்து புளித்த மணமும் இரத்த நெடிலும் அவ்விடத்தில் மணத்தது.
செப்பிங்பைகளை கைகளுக்கு போட்டபடி வந்தவன் நிர்வாண மனிதனின் கால்களில் புண்கள் இருப்பதைக் கண்டான். ஒரு காலில் நாய் கடித்த அடையாளமும் மறுகாலில் எக்ஸிமா போன்ற குவியல் புண்களும் இருந்தன. அவருத்தபடி ஒரு மாதிரியாக வீதிக்
CSD 2001
42
கரையில் கிடத்தும் போது இராணுவ வாகனம் இரைச்சலுடன் வந்து சடுதியாய் அவ்விடத்தில் நின்றது. ஒரு ஆமி கீழே இறங்கும் போது அங்கு நின்ற ஒருவர் தனது கை சுட்டுவிரலால் நிர்வான மனிதனை சுட்டிக் காட்டிவிட்டு பின் அதே சுட்டுவிரலை தன் தலையின் நெற்றிக் கரையில் தொட்டு விட்டு, அதே கையை எடுத்து விரித்து காட்டினார்.
அவரது உடல்மொழி விளக்கம் ஆமிக்கு வேறு அர்த்தத்தை கொடுத்தது அதாவது கன்னத்தில் சுட்டு உயிர் போய் விட்டது என்று, எல்லா ஆமிக்காரர்களும் கீழிறங் ககும் தறுவாயில் ஒரு சிங்களம் தெரிந்தவர் மிகவும் இலாவகமாக சிரித்துக் கொண்டு சாதாரணமாக நிலைமையை விளக்கவே ஆமிக்காரரும் சிரித்தும் முறைத்தும் பார்த்தபடியே கவசவாகனம் போய் விட்டது. யாரோ ஒருவன் ஒரு சாரத்தை நிலத்தில் விரித்து விட தூக்கிய இருவரும், நிர்வாண மனிதனை விரித்த சாரத்தின் மேல் உருட்டிவிட்டு, இடுப்பில் குறுக்காக அந்த சாரத்தை இழுத்து மடித்து ஒன்றின் மேல் ஒன்றாய் செருகி விட்டனர். நிர்வாண மனிதன், சாரம் கட்டிய மனிதனானான். ஆட்கள் சுற்றிவர நின்று மிகவும் சுவாரஸ்யமாக புதினம் பார்த்தனர். சாரம் கட்டப்பட்ட பின் அவ்விடத்திற்கு பிந்தி வந்த ஒருவருக்கு முந்தி வந்த ஒருவர் கீழ்வருமாறு பேசினார். “ஏன் பிந்தி வந்தனி? முதலெல்லோ வந்திருக்வேணும். அருமருந்த காட்சியை விட்டிட்டியே.”
அதில் நின்ற ஒருவன் செம்பில் தண்ணிர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தான். ம்ஹிம். எதுவித அசைவும் இல்லை. பின்னர் ஒரு வாளி தண்ணிரைக்
தாயகம்

கொண்டுவந்து உடல் பூராகவும் படும் படி ஊற்றி விட்டான்.
கண்கள் திறந்தன; வானத்தைப்,
s:
ག
பார்த்தான்; ஆட்கள் பயத்தில் சற்று விலகினர்; 'பக்கென எழுந்த வேகத்திற்கு ஒடும் போதே"ஐயோ. ஐயோ..” என்று கத்திக் கொண்டோடினான்.குறுக்காக இடுப்பில் கட்டியிருந்த சாரம் கழன்று கீழே விழுவது தூரத்தில் தெரிந்தது. சாரம் கட்டிய மனிதன் மீண்டும் நிர்வாண மனிதனானான். நிர்வாண மனிதன் ஓட்டத்திலேயே சோதனைச் சாவடியை நெருங்கினான்.
அடையாள அட்டைகளைப் பார்ப்போரும், அடையாள அட்டை களைக் காட் டியோரும் நிர்வாண மனிதனைக் கண்டு அதிர்வுற்று நின்றனர். அவர்கள் முகத்திலுள்ள அதிர்வு மெதுமெதுவாய்ச்சிரிப்பாகியது. ஓடிவந்த நிர்வாண மனிதனை ஆமிக்காரன் தன்துப்பாக்கியைக் காட்டி நிற்குமாறு பணித்தான்; அவன் நிற்கவில்லை. மறித்த ஆமிக்கு ஒரு மாதிரியாகி விட்டதால் பின்னால் வலுவேகமாக ஓடிச் சென்று நிர்வாணமனிதனின் கையைப்பிடித்து முறுக்கி பிற்பக்கமாக மடக்கிப் பிடித்தபடி ஏதோ சொன்னான். சனங்கள் பலவாறு தமக்குள் கதைத்தனர். அடையாள அட்டை, ஆமி அடையாள அட்டை, குடும்பவிவரப்பதிவு எதுவுமே நிர்வாண மனிதனுக்கு இருக்கவில் லை. மனோகராத்தியேட்டருக்கு அருகில் இடப்பெயர்வின் பின் கையேற்கப்படாத ஒரு கடையில் காலத்தைப் போக்குகிறான் எனக் கதைத் தார்கள். அத்தோடு அமாவாசை, பெளர்ணமி போன்ற கனத்த நாட்களில் இவ்விதம் நடப்பது வழமை என்றும் கதைத் தனர். இவனது சொந்தக்காரர்கள் யாழ்ப்பாணத்தில் தான்
தாயகம்
ஏதோ ஒரு ஊரில் இருக்கிறார்கள். குறைபீடி பற்றுவது எங்காவது சாப்பாடு வாங்கி உண்பது அவனது சாதாரண நடத்தைதான் என்றும் கதைத்தனர்.
கைமடக்கப்பட்டு, ஆமிக்காரன் கையில் அகப்பட்ட நிர்வாண மனிதன் “ஐயோ.. ஐயோ...” எனத் திரும்பத்திரும்ப ஒரே மாதிரி ஒலமிட்டான்.
நிர்வாண மனிதனின் கண்கள் செம்மஞ்சள் நிறம் கலந்திருந்தன. வாயின் இருமருங்கிலுமுள்ள தாடிகளில் கடவாய் வழிந்து படிந்து போயிருந்தது. மூக் கடியரில் இரத் தம் வழிந்து காய்ந்திருந்தது.
ஆமிக்கரானுக்கு நிர்வாண மனிதன் மேல் சந்தேகம் மேலிட்டு புலனாய்வுப் பார்வை பார்த்தான். அதில் அடையாள அட்டைகளைக் காட்டிக் கொண்டு நிரையாக நின்ற ஆட்களிடம் நிர்வாண மனிதனைப்பற்றி ஆமிக்காரன் தீவிர விசாரணை மேற்கொண்டான். நிர்வாண மனிதன் நடிக்கிறான் என்று ஆமிக்காரன் சந்தேகம் கொண்டான். பின்னர் ஆமிக்காரனே நிலைமைகளை விளங்கிக் கொண்டான். அருகிலுள்ள கடைக் காரன் ஒருவன் தையல் செய்யப்படாத புதுச்சாரத்தை ஆமிக் காரனிடம் கொடுக்க அதனை ஆமிக் காரன் வேட்டியைப் போல கட்டிவிடும் பொழுது புளித்தமணம் மணத்தது. அவ்வேளை நல்லூர்த் திருவிழாவிற்காகச் செல்லும் பெண்கள் கூட்டத் திலிருந்து
'சென்ற் வாசமும், புதுச்சேலை மணமும்,
43
பவுடர் மணமும் மணத்தது. தாடி, தலை முடி வெட்டுவதற்காக ஆமிக்காரனால் நிர்வான D6sgb6f அருகில்
மே 2001

Page 24
உள்ள ஒரு சலூனுக்கு இழுத்துச் செல்லப்பட்டான். இருமருங்கிலும் கண்ணாடி உள்ள சலூனிற்குள் ஒரு மூலையில் இருத்துவதற்காக பலர் முயற்சி செய்தனர். அரைகுறையில் தலைமயிர் வெட்டியவர், சவரம் செய்வதற்கு சவர்காரம் பூசியவர் அரைவாசி தாடி எடுத்த நிலையிலு ள்ளவர், சிகை அலங்கரிப் பாளர்கள் எல்லோரும் சேர்ந்து உதவினர். கிட்டத்தட்ட ஒரு ஏழுெட்டுப்பேர் வரையிலிருக்கும். கத்தரிக்கோல் மயிர்களை கத்தரிக்கத் தயாராகியது. மறு கனம் ......... 69 (5 மூச்சிறுகிய முக்கல் சத்தம் கேட்டது!! அவ்வளவு பேரும் உதறித்தள்ளப் பட்டனர். ஆமிக்காரரின் துப்பாக்கிகூட கீழே வீழந்துவிட்டது. ஒரு கணப்பொழுதில் அவன் எழுந்து நின்றான். இடுப்பில் வேட்டி போல கட்டியிருந்த புதுச் சாரம் மீண்டும் காணாமல் போயிருந்தது. இருமருங்கிலு முள்ள சலூன் கண்ணாடிகளில் ஏராளம் நிர்வாண மனிதர்களின் விம்பங்கள் தெரிந்தன. ஆமிக்காரன் கீழே விழுந்த தனது துப்பாக்கியை அவசரமாகப் பாய்ந்து எடுத்தான். சில மாதங்களுக்கு முன்னர் கிளைமோர் வெடித்த போது எவ்வாறு பரபரப்படைந்து இருந்தானோ அவ்வாறே இக்கணம் பரபரப்படைந்து இருந்தான். எனினும் பயனில்லை. நிர்வாண மனிதன் சலுனைவிட்டு வெளியேறி மறுபடியும் “ஐயோ. ஐயோ..” என ஒரே மாதிரி திரும்பதிரும்ப சொல்லியபடி ஓடினான். ஆமிக்கு ஆத்திரம் பொங்கியது. சுடுவதற்காக துப்பாக்கியை இழுத்து ஆயத்தம் செய்யும் போதே சுடுவதில் அர்த்தமில்லை என்பதும் அவனுக்குப் புலனாகத் தொடங்க U60)puJ LJlg
CD 2001
44
துப்பாக்கி தோளில் இருந்தது. நிர்வான மனிதன் ஓடிவிட்டான்.
கந்தர்மடத்தடியில் உள்ள ஒரு வெறும் வீட்டருகில் சனக்கூட்டமும், சில ஆமிக்காரரும் நின்றனர். காலடி ஓசை கேட்டு சனக்கூட்டம் திரும்பிப்பார்த்தது. ஒரு நிர்வாண மனிதன் ஓடிவந்து கொண்டிருந்தான். சனக்கூட்டத்தில் நின்ற ஒரு பெண் அருவருத்தபடி சொன்னாள் “சிக். சவத்தை, எல்லாம் கெட்டுப் போச் சு. அந்த நாயை அடிச்சுச் சாக்கொல்லுங்கோ’ என்று விட:டு ஓடி மறைந்தாள். இளஞரின் பலத்த மிரட்டல் சத்தத்தினால் திகைத்த நிர்வாண மனிதன் அப்படியே நின்றான். சிறுவன் ஒருவன். “என்ர ஐயோ அம்மா.கடவுளே முருகா!”என்று கத்தி, பயந்தடித்து ஏறமுடியாத மதிலை ஏறிக் கடந்து பறந்தான். வேலி ஓரமாக நிர்வாண மனிதனைப் பார்த்து ஒரு நாயப் இடைவிடாது “வள் வள்” என்று குரைத்தபடி நின்றது. சனக்கூட்டத்திற்கு நடுவே ஒரு பச்சிளங் குழந்தை வீரிட்டுக்கத்துவது கேட்டது. ஆட்கள் தங்களுக்குள் கீழ்வருமாறு கதைத்துக் கொண்டனர். “எல்லாம் தலைகீழ், இங்கே யாரோ ஒருத்தி பிள்ளையைப் பெத்திட்டு வெறும் வீட்டுக்கை போட்டுட்டு போட்டாள்” “அது காணாது எண்டு இவன் வேற உரிஞ்சுவிடடுட்டு நிற்கிறான்” “உந்த பிரமசத்தியை கலையுங்கோடா. அல்லாட்டி வெட்டித் தாளுங்கோடா” “பேசாமல் விடுங்கோ குழந்தைப் பிள்ளையும் உரிஞ்சுவிட்டுட்டுத்தானே நிக் கிது. அதுபோல இதையும் எடுங்கோவன்’ கைக் குழந்தையை ஆமியின் வேண்டுதலின்படி இரண்டு பெண்கள் யாழ்ப்பாணம் பெரியாஸ்
தாயகம்

பத்திரிக்கு ஒட்டோவில் கொண்டு சென்றனர்.
நல்லூர்க் கோயில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. ரக்ரர் ஒன்றில் பக்திப்பாடலுடன் வந்த பறவைக்காவடி குறுக்குமறுக்காக நிர்வாண மனிதனுடன் எதிர்ப்பட்டது. காவடியில் மேலும் கீழும் ஆடுபவர் நிர்வாண மனிதனை உற்றுப்பார்த்தார். ரக்ரர் நின்றது. ஆட்கள் வேடிக்கை பார்த்தனர். நிர்வாண மனிதன் எதனையுமே பொருட்படுத்த வில்லை. பறவைக்காவடிக் காரன் தன்வேப்பிலையை நீரில் நனைத்து நிர்வாண மனிதனை நோக்கி தெளித்தான் தெளிக்கும் போது வாயில் வேல் குத்தப்பட்டமையால் தொண்டையால் ஒரு சத்தமும் போட்டான். மறு நிமிடம் நிர்வாண மனிதன் ஒடத் தொடங்கினான். வழமை போல் “ஐயோ. ஐயோ..” என்ற படியே.
நல்லூர் கந்தனை நோக்கிப் போகும் பக்தர்களை ஊடுருவிக்கொண்டு நிர்வாண மனிதன் ஓடும் போது பக்தர்கள் திகைத்தனர்; ஒதுங்கினர்; வழிவிட்டனர்; சிலர் கண்களை மூடினர்; சிலர் பேசினர்; சிலர் துப்பினர்.
வீதி நெடுங்கிலும் சைக்கிள் பாக்குகளை அமைத்துவிட்டு தமது நிறுத்துமிடங்களில் இரண்டு ரூபாய் வாங்கி சைக்கிள்களை உள் 9|600plugie "guilt அண்ணா அக்கா அம்மா - எல்லோரும் எங்கடபாக்கில் சைக்கிளை விடுங்கோ. விடுங்கோ. ” என்று கூறியபடி நின்றவர்கள் வாய்பொத்தி மெளனித்து நின்றனர்.
இறுதியில் நிர்வாண மனிதன் ஒரு கூட்டம் பக்த இளைஞர்களிடம் முறையாக மாட்டிக்கொண்டான். வேட்டி கட்டி, சால்வை மூடி மேனியை மறைத்து வெண்பற்களால்
தாயகம்
சிரித்து வெண்ணிறும் பூசியிருந்தனர். இளைஞர்களின் கண்களில் ஒரு வித பரவச உணர்ச்சி எழுந்தது. கைதட்டிச் சிரித்தனர்; வெடித்துச் சரித்தனர்; ஒருவரில் ஒருவர் தொட்டுச் சிரித்தனர்; எக்கி எக்கிச் சிரித்தனர்; சிரித்த சிரிப்பில் சிலர் இருமினர். சேலை அணிந்த இளம்பெண்கள் அவ்விடத்திற்கு வரவே நிர்வாணமனிதனைக்காட்டி ஏதோதோ சொல்லினர். இளம் பெண்கள் தலை குனிந்து நடந்தனர், ஓடினர். ஒரு இளம் வேட்டிப்பக்தன் தான் அண்மையில் பார்த்த நீலப்படத்துடன் நிர்வான மனிதனை ஒப்பிட்டு ஏதோ அபிப்பிராயம் சொன்னான்.
இன்னோர் போர்வை மூடிய இளம் பக்தர் கூட்டம் அவ்விடம் வந்தது. இருபகுதியினருக்கும் நிர்வாண மனிதனை வைத்தான பகிடிப் பகிர்தல்கள் நடந்தது. அது வாக்குவாதமாய் மாறி அடிதடியை நோக்கி நகர முதல் வந்த பக்தர் குழாம் மெதுவாக நழுவியது. பின்னர் வந்த பக்தர் குழாம் உரையாடத் தொடங்கியது. உரையாடல் கீழ்வருமாறு அமைந்தன. “இவன் மனோகராத்தியேட்டரடியில் இருக்கிறவன், இண் டைக் கெண்டு உரிஞ்சுபோட்டு நிற்கிறான்” “இப்படியான வங்களைப் பராமரிக்கிறதுக்கு N.G.O.S சோ ஏதேன் நிறுவனங்களோ இன்னும் உருவாகேலை, ஆஸ் பத் தரியும் இவங்களை ஏற்காது” “அண்டைக்கு இராமேஸ்வரக்கடலில் கப்பல் தாண்டு எவ்வளவு செத்தது. அதைவிட இவன் செத்திட்டா நல்லம்” “எல்லாருக்கும் சாக்காட்டி கிடங்குக்கை தாக்கத்தான் விருப்பம்” “செம்மணிக்கை கிடக்கிறது காணா தெண்டு இவனையும் சேக்கப் போறியளோஎல்லோரும்பழுதாயப்போறம்” “இவனிட்ட ஒண்டுமில்லை ஆகஉயிர்
45 CD 2001

Page 25
மட்டும் தான் இருக்கு அதில எப்பவும் கவனமிருக்கும்.” என்று விட்டு ஒரு கல்லை எடுத்து படாதவாறு எறிகிறான். மற்றவன் தடுத்தபடி கூறினான். “டேய் எறியாத நீ எங்களுக்கு பரிசோதனை நடத்திக்காட்டவேண்டாம்” கல்லுக் காலருகே விழுவதைக் கண்ட நிர்வாண மனிதன் திரும்பவும் "ஐயோ. ஐயோ.” என்ற படி ஒடத்தொடங்கினான்.
ஏற்கனவே பகிடிசேட்டைகள் விட்டவர்கள் தங்களைத்தான் நிர்வான மனிதன் துரத்தி வருகிறான் என நினைத்து அவர்களும் அலறி அடித்துக கொண்டு சால்வைகள் கீழ் விழ பயந்து கத்தி ஒட, அந்த வீதி காரணம் புரியாத ஒரு வகை பயங்கர நிலைக்கு மாற்றமடைந்தது. நிர்வான மனிதன் சனங்களுக்குள் நுழைந்து ஓடினாள் ஐனத்திரள் ஒதுங்கி நிர்வாண மனிதன் ஒட ஒரு நீள் பாதையை விட்டது. பூங்காவன திருவிழாவிற்கு வந்தவர்கள் கதிகலங்கினர். தேர்த்திரு விழாவிற்கு ஒரு ஹெலிக்கொப்டர் வானிலிருந்து பூமழைபொழிந்தபோது கூட பெரும் அசை விற்குட்படாதவர்கள் நிர்வாண மனிதனின் ஓட்டத்தினால் கதிகலங்கினர். முருகனின் திருக்கலியாணக் காட்சி கோயில் வாயிலில் நடந்தது. பக்தர்கள் எதிரே நிலத்தில் இருந்தபடிபார்த்து வணங்கிக் கொண்டிருந்தனர். பூசைகள் நடந்தன.
வானில் இருந்து நல்லூர் ஆலயத்தைப் பார்த்தல் ஒரு காட்சி புலனாகும். அதாவது நல்லூர் ஆலய முன்றிலில் ஒரு பகுதியினர் நின்றும், இருந்தும் வணங்கிக் கொண்டிருக்கிற பக்தர்களின் பல தலைகள் தெரிந்தன. ஆனால் கோயில் கட்டிடத்தின் பின்புற பகுதிகளில் பல தலைகள் (அல்லது
മേ 2001 6
நோபல் பரிசு டைனமற் வெடிமருந்தை கண்டுபிடித்த ஆல்பேர்ட் நோபல் என்ற மனிதனை நான் மன்னிக்கின்றேன். ஆனால் அந்த மனிதன் தோற்றுவித்த நோபல் பரிசு என்ற பிசாசினைமன்னிக்க தயாராக இல்லை.
- அறஞர் பேர்னாட்சா
இன்புறுவோர்) அங்குமிங்கும் அசைவது தெரிகிறது. வானிலிருந்து பார்க்கும் பொழுது பல கறுப்புத் தலைகள் தெரிந்தது. அப்போது நிர்வாண மனிதன் எங்கே? பலுTன் விற்பவனைத் தெரிகிறது! ஒரு பொடியன் ஒரு பெட்டைக்கு முழங்கையால் இடிப்பது தெரிகின்றது. கற்பூரச்சுவாலை எரிவது தெரிகிறது அந்த நிர்வாண மனிதனை மட்டும் தெரியவில்லை. அவனைக் காணவில்லை. சிலவேளை அவன் திரும்பியிருக்கக் கூடும் அல்லது கோயிற் தொண்டர்கள் திருவிழா முடியுமட்டு மாவது எங்காவது பிடித்து அடைத்து வைத்திருக்கக்கூடும்.
முருகன் மணவாளக் கோலத்துடன் வருவதை வானிலிருந்து முழுமையாகப் பார்க்க முடியவில்லை. சுவாமி ஊர்வலம் பல தலைகள் புடை சூழ, பல தலைகள் பின் தொடர எல்லாத்தலைகளோடும் அசைந்தது வானிலிருந்து பார்க்கும்போது பவனி வரும் சுவாமிக்கு மேலுள்ள குடை மட்டுமி தெரிந்தது. கீழுள்ள பகதர்களுக்கு முருகனின் திருக்
‘கோலமும் தங்கச் சோடனைகளும்
மிளிர்ந்து பரவச மூட்ட, கரங்களை மேலுயர்த்தி வண்ங்கினர். பெரிதாய்
பெய்வதற்கான மழை சாதுவாய்
தூறத்தொடங்கியது. திருவிழாவும் முடிந்துவிட்டது.
தாயகம்

அந்தி
என்னடா: அத அந்தவண்ணங்களை கொட்டியது யார்?
சூரியக்குழந்தையின் விளையாட்டா?
இல்லை பூமி கட்டிக்கொள்ள வானம் தரும் சேலைகளின் சிறகடிப்பா?
நிலவு சுமக்கும் வானமே! தாவணிபோர்க்கும் மேகமே
9. அந்திக்குமாரி வந்துவிட்டாளா?
இத்தனை வண்ணச் சேலைகளையும் உடுக்கப்போவத யார்? இரவுக்கன்னி கறுப்புத்தானே உடுக்கிறாள்.
ஏ! மனிதா: இயந்திரவாழ்வில் சுழன்று கொண்டிருப்பவனே! இங்கே வா!
கணனிகளோடு கைகுலுக்கியத போதும் உன்
கண்களில் படிந்த கணனித் திரைகளை அகற்று
நிஜவாழ்வுக்கு வா!
தாயகம்
7
- கிராமத்துக்குயில் ஒவியா
உள்ளத்தின் ஜன்னல்களைத் திற அந்தியை வாசி அதன் அழகைக்குடி அடிமனசின் அந்தரங்கமெல்லாம் �05 இனம்புரியாத
சுலையத்தில் மிதக்கும்
எந்திரமனிதா
காதலின் முதற்பார்வைபோல் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் அந்தியின் மயக்கத்தை கற்றுக்கொள்!
தேன்நிலவு செல்லும் இருகிளிகள் போல் அந்தி சிவந்திருக்கிறத.
பனித்தளியைத் தீண்டும் சந்தணத் தென்றலாய் கிராமங்களில். அந்தி ஆசை நெய்கிறது. #?"č
வண்ணங்களின் கலவி அந்தி வாழ்க்கையின் கனிவு
CSD 2001

Page 26
அந்தி
இளமை கிள்ளும் எண்ணங்களின் வார்ப்பு அந்தியை முத்தமிடு அந்தி அங்கே M மனிதனே வானத்தில் எத்தனை Ljó06 flgsbb வண்ணவிளையாட்டு ரோஜாக்கள் பறிப்பதை அத நிறத்தது. சேலைதொங்கும்
ஆடைக்கடையா? உனது பூமிக்கு இமைச்சாளரங்களின் மஞ்சள் தெளிக்கிறது நாகரித்திரைவிலக்கி அந்தி அந்தி வானத்தைப் பார்:
யுகங்களாய் வண்ணங்களின் விளையாட்டில் வந்தது போகிற சூரியன்கூட 曾, 德 அந்தியின் அழகை சின்னதாகிவிட்டான் வருணிக்க
இன்னும் தமிழுக்குள் ஈரவலியெடுக்கும் வார்த்தைகள் சிக்கவில்லை.
காதல் நினைவுகள் போல்
7
N
அறிவியலும் அதிகாரமும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களே செல் வாக்கு மிக்கதாகவும் ஆளுமைக் கருத்துக்களாகவும் விளங்கும். அதவாது எந்த வர்க்கம் சமுதாயத்தின் பொருளியல் சக்திகளை ஆளுமைபுரிந்துகொண்டிருக்கின்றதோ அதுதான் அறிவார்ந்த சக்திகள் மீதும் ஆட்சி செலுத்தும். பொருளியல் உற்பத்தி சாதனங்களை தம்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வர்க்கமே அறிவார்ந்த படைப்புச் சாதனங்களையும் தம்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எனலாம். பொதுவாகச் சொல்லப்போனால் பொருளியல் உற்பத்திச் சாதன வசதிகள் குறைவாக உள்ளவர்களின் கருத்துக்கள் அதற்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்கும். செல்வாக்கு மிக்க பொருளியல் உறவுமுறைகளின் மிகச்சரியான வெளிப்பாடுதான் ஆளும் கருத்துகள் என்பதாகும். ட கால் மார்க்ஸ்ン ܢܠ
GD 2001 r 48 தாயகம்

இவர்:
மேசை அருகில் (நாடகக் குஞ்சு)
‘ஓட்டைக்கூத்தர்’
DD.....L.D ஞென்ன? ஞங்ங்னி மேனுமோ? சங்கிலி தர ஏலாது.
FrigouTG6) BL-6)Tib.
அற நிர்ணய நியமம்?
தரநிர்ணய கமிஷன். பிறகு யோசிப்பம். மற்றது. பூணை இறகை விடமாட்டம்
சேணை முதுகு? போனால் போகுது, பரவாயில்லை. தெளிவான திட்டம், நேர்மை, கூர்மை, சீர்மை, தார்மை.
நல்லெண்ணம்? நல்லெண்ணெய் ஒத்துக்கொள்ளாது தேங்காய்ப்பூ! கேட்டுதா காணும்? தெங்கெண்ணெய் இல்லாட்டாலும் பரவாயில்லை; தேங்காய்ப் பூ உ. ஓமோம்; தேங்காய்ப் பூ உ!
புளிஞ்ச பூவா? வறுத்த பூவா?
கச்சத்தப்பர்ற
கசடதபற? சீச்சு நுஞணநமண!
நுஞணிநிமினி
யரலவழள
உதென்ன கதை? யிரிவிழிளி அதெல்லாம் சரி வராது. முறையான நேரசூசி காத்தி
சின்னத்தம்பியர் மூலம் அனுப்பிவையும் பதிவுத் தபாலில்
(சட்டைப் பையைத் துழாவி ஒரு தாளை எடுத்து) நேரசூசி இங்கே இருக்கு 635 Ljub! (இவர் கொடுக்க அவர் வாங்கி, அதைத் தும்பு தும்பாய் கிழித்துக் காற்றிலே ஊதிவிட்டு வெளியேறுகிறார்)
(மலைத்துப்போய் நிற்கிறார் பின்னர்) இவரைப்பிறகு சந்திப்பம் எதுக்கும், கைகாவலாய் வைச்சிருப்பம். ஒரு நேரத்திலெ உதவும் (கிழித்த கடதாசித் துண்டுகளை ஒவ்வொன்றாய் பொறுக்கிக், காற்சட்டைப் பொக்கெற்றில அடைந்து கொள்கிறார்)
- திரை.
தாயகம் 49 CSD 2001

Page 27
சுருங் கும் ඉ_'6xOෂ්ඛිම්
நம் நாட்டின் போர்ச் செய்தி மின்காந்த அலையாகி
மேலெழும்பிக் கோள் மோதி வீட்டுக்குள் வருகிறது. குஜராத் நிலநடுக்கம், சுமத்ராவின் எரிமலையின் கோபம் கொலைவெறிகள் கண்முன்னே தெரிகிறது அமெரிக்கத் தேர்தல் இழுபறிகள், ஒலிம்பிக்கின் ஓட்டம், பெரும் பாய்ச்சல் காண முடிகின்றது. தென்னகத்துச் சினிநடிகர் லண்டனிலே நேர்காணல் தமிழரெலாம் வாய்பிளந்து டுபாயில் பார்த்திருப்பர் நியூசிலாந்து அண்ணரும் நியூயோர்க்கு மைத்துனரும் பாரிஸ் வாழ் அக்காவும் தொடர்பறுந்து போகாமல் தொலைபேசி வழியாக மாதாந்த மாநாடு, மின்னஞ்சல் தொடர்பாடல் தவறாமற் செய்கின்றார் இணையத் தளத்தமர்ந்து காசுபணம் பரிமாறிக் கடைவரையும் போகாமல் பொருள்வாங்கிப் பெறுகின்றார். உலகம் சுருங்கித்தான் வருகிறது - நான்வாழும் நெடுமாடித் தொடரின்மேலே முன்வீட்டில் வாழ்ந்திருந்த முதியவரும் பலகாலம் நோய்ப்பட்டு இருந்த கதைமுழுதும், இருவாரம் முன்னர் அவர் இறந்த கதையோடு சாவீட்டு விவரமெலாம் இன்றைக்குத் தானெனக்கு ஈமெயிலில் சொன்னார்கள் உலகம் சுருங்கித்தான் வருகிறது.
(ELD 29). 50 தாயகல்
 

- திரைப்பட விமர்சனம்
இதுவரை, சிறுகதை, நாவலாசியராக அறிந்து கொண்ட பூமணியை திரைப்பட இயக்குனராக கருவேலம் பூக்களில் சந்திக்கிறோம். சிவகாசியில் வெடிமருந்துகளுடன் போராடும் இளம் சிறுவர், சிறுமியரின் துயரங்களையும் கொடுமைகளையும் வெகு இயல்பாக பகிர முடிகின்றது. குடும்ப பொருளாதாரத்தை இளம் வயதில் சுமக்க வேண்டிய சூழ்நிலைக்கு எப்படி சிறுவர், சிறுமியர் தள்ளப்படுகின்றனர் என்பதை திரைப்படம் இயல்பாக சித்தரிக்கின்றது இவற்றை சொல்ல வேண்டிய உத்திகளுடன் திரைப்படம் நகர்கின்றது. முதலாளித்துவம் எப்படி கிராமத்தானை சுரண்ட நெருங்குகிறது என்பதை சார்லி - தீப்பெட்டி முதலாளி சந்திக்கும் சந்திப்பில் உணர்கிறோம்.
கல்வியறிவு" பெறவேண்டிய வயதில் சிறுவர் - சிறுமியர் கந்தகத்துடன் ஏன் இப்படி போராடவேண்டும்? என்ற கேள்வியை வாத்தியார் மூலம் பூமணி கேட்கும் இடம் கவனிக்கத்தக்கதாகவே இருக்கிறது. தீப்பெட்டி செய்யும் இடத்தில் தோன்றும் காதல் விரசம் இல்லாமல் அவர்கள் ஓடிப்போகும் வரை தொடர்கின்றது. ஆனால் சாதித்துவம் அதனை தடுக்கும் போது தற்கொலைதான் முடிவு என்று சொல்லும் இடத்தில் பூமணியும் நாமும் முரண்படுகின்றோம். பாரிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் போது பெண்கள் தற்கொலை செய்ய வேண்டுமா, என்பதும் ராதிகாவின் முடிவின் போது கேள்வியாக மனதை நெருடப் பண்ணுகின்றது.
இவை இரண்டையும் நீக்கிப் பார்த்தால் நீண்ட காலத்திற்கு பிறகு, அற்புதமான கலையம்சம் பொருந்திய திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் அருமருந்தாகக் கிடைத்திருக்கிறது. இதுவரை நகைச்சுவை என்று ஏதோ பண்ணிக்கொண்டு திரிந்த சார்லி என்ற நடிகன் அற்புத நடிப்பை வழங்கி இருப்பதை காண்கின்றோம்.
tg
நடிப்பில் புதியதொரு ஆளுமையையும் பின்பற்றும் சோம்பேறித் தகப்பனாக வரும் நாசர் "அவ இங்க வரக்கூடாது’ என்னும் இடத்தில் அசல் பழைய கிராமத்தானாகின்றார் மற்றும் ராதிகா உயிரை கொடுத்தே, நடித்து விடுகின்றார் ஏக்கப் பெருவிழிகளில் எம்மை கலங்க வைக்கின்றார். மேலும் வாத்தியாராக வரும் தலைவாசல் விஜய், பாலாசிங்கத்தின் மகள் சோனாலி, தம்பிப்பையன், உட்பட பிறபாத்திரங்களின் நடிபங்கு அற்புதமாகவே இருக்கின்றது. இளையராஜாவின் இசை மனதை தொடுகின்றது. "காலையில் கண் விழிச்சு” பாடல் தாய்மையை உயர்த்துகின்றது. தங்கர் பச்சானின் ஒளிப்பதிவு கிராமத்தை, கிராமமாகவே காட்டுகின்றது. இறுதியாக, தீர்க்க முடியாத ஏக்கங்களுடன் குழந்தைகள் இரண்டும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு போவதையும் தகப்பன் புரண்டு படுப்பதையும் காண்கின்றோம். மொத்தத்தில் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். பார்ப்பீர்களா?
- பனை கோகுலராகவண்
தாயகம் 5. (SID 2001

Page 28
ஆச்சி என்றொரு புள்ளி
மாசி மூன்றாந் தேதி செண்பகன் மணி மூன்றான போத மூச்சு நிண்ட தோணை எங்கள் முழு மதி மறைந்ததோணை!
கண்ட போதெல்லாம் தேவுக்கள் என்ன “திண்டனி மேனை” எண்ட வாஞ்சையை எப்ப இனிக் கேப்போமணை ஆச்சி
“சிவன் கோவில் பனை ஓலை வெட்டிப் போட்டாளா மவள் போய் ஒருக்கால் கேள்” கடைசியாய் கண்ட நாளில் கரகரத்த நீ மொழிந்தாய்!
ஓமணை ஆச்சி உண்ரை வயல்வெளி உன்ரை பனைவெளி அந்நியாள் ஒருத்தி ஆளுவத கண்டு மூளும் உன் கோபம் உன் விழியை மூடியதோ? உலக வெளியுடன் உன் வெளியும் ஒன்றாய்த்தான் கலந்ததுவோ?
ஆச்சி நீ மண்திண்ணைக் குந்திலே கடகமும் வெங்காயம் ஆயவெண்டு வெள்ளண வெளிக்கிட்டு “எடி, தங்கம் மங்கிலியம் வெளிக்கிடுங்கோவன் விடிஞ்சு போச்சுதல்லே, விளக்கை கொழுத்தடி பிள்ளை” எண்டு நீ, நள்ளிரவு நேரமதில் தெகிவளை வீட்டிலே லைற் சுவிற்சைப் போட்டதும் புறப்பட்டு நிண்டதவும் உன் உழைப்புத்தானோ உன் மூளையிலும் இறுதி மூச்சு விட்டத தானோ?
ஆச்சி என்றொரு புள்ளி அழிஞ்சுத என்று சொல்லி அணைவரும் ஒன்றாய் கேவி அழுவதில் என்ன கண்டோம்?
ஆச்சி எங்கள் உள்ளொளி
அகிலம் எங்கள்
அடிபணியும் என்றெண்ணி அனைவரும் ஆச்சி தாள் பணிவோம் அநியாயம் சாய்க்கத் தான் எழுவோம்.
GD 2001 52 தாயகம்

st v. -R (NAVA - 1 fi 4:1RIC CáIN:S
OPTICAL, d. DENTAL
WORKS. 566, 6ospital 2oad, SVaffna.
6 fä கணேசஷ் மூக்குக்கண்ணாடி அகம்
4. SK•
D3372 L55@gaు. ଅଷ୍ - ク % ாப்பாணம் 9 རི《་དེ་
3ronch: 91 கே.கே.எஸ் வீதி, 91, Kokuvi upetion), கொக்குவில். Kokuvit.
கண் பரிசோதித்த கண்ணாடி வழங்குபவர்கள்
预观殴份D河E狐区露莺MG
“බ්,
544, ஆஸ்பத்திரி வீதி, 544, Hospital Road, ருழ்ப்பாணம். தொலைபேசி: 021.246| Jafை للر
N

Page 29
Registeted is Newspaper in Triliili இலங்கையில் செயதிப் பத்திரிகையாக பதிவு
விரியும் அறிவு நிலை வீழும் சிறுமைகளை
புதிய வெளியீடுகளான.
இலங்கை, இந்தியா
அறிவியல், விஞ்ஞான
LITLEFITG3) GAU |
405, எல்ரா யாழ்ப்
இச்சஞ்சிகை 405, ஸ்ரான்லி வீதி வசந்தந்நில் இவ: 107 ப்ரான் விதியில் உள்ள யாழ்ப்பான
 

செய்யப்பட்டது.
காட்டுவீர் - அங்கு ஒட்டுவீர்.
பாரதி
கலைஇலக்கிய நால்களுக்கும் நூல்களுக்கும்
ான்லி வீதி, ானம்.
வரிக்கும் க. தணிகாசலம் வேர்களால்
அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது