கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது மனிதன் 1997.04-05

Page 1
amā-鼬°
ஓ! ஒ1 வண்டிக்காரா! ஒட்டு வண்டியை 6 போவோம் புதிய நகரம் நோக்கி பொழுது போகுமுன் ஒட்டு
-நீலாவாணன்
 
 
 


Page 2
7ー
lith/6t
AWMVA COMM
IDD G Z0CAL PHOTO COPES, CONNECTC
DEALERS OF NAT
fff A, 1ST DVIVISION, AMARADANA, COLOMBO 10. SRV ANKA,
TEL : 347510, 336540 AX 336613, Of 44808t
ܒܓܠ

Ashes SJ!ኅOዘገጌ
UNICATION
CAS, FAX, LAMINATING LLS, FTC. .
oNAL PANAsoNuc
BRANCAW :
135, MAINSTREET, AKKARAWPATTV
MOBILE 0722-46922, 0722-500 FAX 01 448081
مس

Page 3
படைப்புகள் விமர்சனங்கள் எதிர்பார்க்கப்ப(
 

(ன்றாவது In afges
நேர்காணல் - டொமினிக் ஜீவா கவிதைகள் - ஜெயசங்கர் (தமிழில்)
சேரன் ஆகர்ஷியா ஆண்டி மஜீத் றஷ்மி தேவஅபிரா பாறுக் கல்லூரன் சிறுகதை - சோமு (தமிழில்) கட்டுரை - மதுசூதனன்
யமுனா ராஜேந்திரன் சுசீந்திரன் எம்.கே.எம்.ஷகீப் அம்ரிதா மற்றும் ஆசிரியர் கருத்து, பைத்தியக்கார உலகம், புத்தகப் பக்கம், கருத்துப் பக்கம்
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது
-பிரமிள்
பக்கம் 20
டுகின்றன. உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.

Page 4
(Uன்றாவது மனிதன் O
சிங்கள பெளத்த இனவாதத்திற்கும் சிங்க குறுந் தேசியவாதத்திற்கும் எதிரா சிறுபான்மை மக்களின் போராட்டம் பல்வே வழிகளில் திசை திரும்பி பல வரலாற்றை தவறுகளிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிற திசை திரும்பல், தவறுகளிடைே பிரதானமாகக் கொள்ளப்படவேண்டியது தமி முஸ்லிம் மக்களின் பிரிவும் பிளவுமாகும். தமி முஸ்லிம் மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுவிட் இனவாத, அடக்குமுறை வெளிப்பாடுகள் இன் பேயாய் உலாவித் திரிகின்றன
இந்த நிலையானது சிறுபான்மை மக்களில் போராட்டத்தை முற்றிலும் தவறான பாதைக்கு பின்னடைவுக்கும் உட்படுத்தி இருக்கிறது என்பதே தமிழ் முஸ்லிம் முற்போக்கு சக்திகளின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இந்த நிலையை தோற்றுவித்தவர்கள் மீதும் அவர்களது சுயஇலாப அரசியல் வியாபாரத்தின் மீதும் எப்போதும் தமிழ் முஸ்லிம் முற்போக்கு சக்திகள் சமரசம் கொள்ளாத தங்களது எதிர்ப்புக் குரலை தீவிரமாக வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர் 1985களில் கிழக்கில் தோற்றம் பெற்ற வன்முறை மோதல்களும் அழிவுகளும் 1990களில் பாரிய இன அழிப்பு, இனச் சுத்திகரிப்பு வடிவமெடுத்து கொடுரமாக உச்சம் பெற்று கொதித்தெழுந்து, பின்னைய காலங்களில் தணிந்து வந்த நிலையில், 96இன் இறுதியிலும் 97இன் ஆரம்பத்திலும் மீண்டும் மருதமுனை, ஒட்டமாவடி இனக்கலவரம் இனப்படுகொலை என தனது கோர முகத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன
இதுவரை நடந்து முடிந்த இந்த அபாக்கிய நிகழ்வுகளானது உண்மையில் தமிழ்மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் தீர்வையும் விடுதலையும் தந்துவிடவில்லை. மாறாக பின்னடைவுகளும் தோல்விகளும் இழப்புகளுமாகத்தான் வெளிப்பட்டிருக்கின்றன. இவ் அனுபவத்தின் பின்னான உண்மையை தமிழர்களும் முஸ்லிம்களும் சதா கண்டுகொண்டிருக்கின்றனர்.
 

தங்களது குறுகிய நோக்கங்களை மக்கள் முன் தக்கவைத்துக் கொள்வதற்காக, மனிதப்படுகொலைகளையும் தமிழ் முஸ்லிம் உறவை சிதைப்பதையும் சித்தாந்தமாக்கிக் கொண்டுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், போராட்டக்காரர்கள் தங்களது வறட்டு சித்தாந்தங்கள் குறித்து மீள் பரிசீலணைக்கு தயாராவது தவிர்க்க முடியாததாக வேண்டும் ! இதனை சாத்தியமாக்குவது தமிழ் முஸ்லிம் முற்போக்கு சக்திகளின் கைகளிலும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஐக்கியப்பட்ட நிலையின் வெளிப்பாட்டிலும்தான் தங்கியுள்ளன.
தமிழ், முஸ்லிம் குறுகிய இனவாதிகளின் வன்முறை மோதல்களின் உணர்ச்சித் தீவிரம் இப்போது குறைந்துவிட்டதாக அரசியல்வாதிகள் போல் நாங்கள் சொல்லத் தயாராக இல்லாவிட்டாலும் கூட, வன்முறை மோதல்களின் பரிணாமமும் அதன் அழிவு விளைச்சல்களும் பெருமளவு வீழ்ச்சி கண்டிருப்பதைக் கண் கூடாக காண்கிறோம். இதில் முக்கிய இரு பெறுபேறுகள் வெளிப்பட்டிருக்கின்றன. எந்த கிராமத்தில் வன்முறை மோதல்கள். நடக்கிறதோ அக்கிராமத்தின் எல்லையை விட்டு மோதல்கள் விஸ்தரிக்கப்படவில்லை. மருதமுனை, ஒட்டமாவடிகளில் நடைபெற்ற குரூரமிக்க சம்பவங்கள் அக் கிராமங்களை அண்டியுள்ள ஏனைய தமிழ் முஸ்லிம் கிராமங்களுக்குக் கூட பரவவில்லை என்பது பிரதானமாகக் கொள்ளப்படவேண்டியது.
முதன் முதலாக 1990களின் பின், விடுதலைப்புலிகளும் முஸ்லிம்களும் நேரடியாக சந்திப்பில் ஈடுபட்டது. இவற்றை ஆரம்பமாக வைத்துக் கொண்டு நாம் ஐக்கியப்பட்ட போராட்டம், இனசெளஜன்யமிக்க வாழ்வு என்பவற்றை கட்டியெழுப்ப தீவிரமாக உழைக்க வேண்டும்!
- ஆசிரியர் -

Page 5
ضا لان سالها 1(†6%كالها لا
என்னுடன் எவருமற்றுத்த பயமேதுமின்றி உ இப்பொழுது வீட்டில், என் மிகுந்த பயத்து
விண்மீன்களா பயமேதுமின்றித் தை இந்தப் பெருந்தெருவின் கன இப்பொழுது மிகு
கண்ணைக் குருடா இலக்கற்றுத் திரிர் இப்பொழுது, சூரியன் அ தடுமாற்றமுறுகின்றேன், பயத்
பயமேதுமின்றித் தனியனாய்க்
பிறத்தலுக்காகச் இப்பொழுது வரல பிறப்பு ஊனமுற்றுச் சிதை
கன்னட மூலம்

னியனாய் இருந்தபொழுது லகில் திரிந்தேன் மக்களுடன் வாழ்கிறேன் டன் வாழ்கிறேன்.
லான உலகில் ரியனாய்த் திரிந்தேன் னக்கற்ற வாகன நெரிசலிடை தந்த பயத்துடன்.
"க்கும் தியொளியில் நதேன் தனிமையில் ஸ்தமிக்கும் வேளையில் தால் நிறைந்து போயுள்ளேன்.
கருவறையில் துயின்றிருந்தேன் $ காத்திருந்தேன் ாற்றில் வாழ்கிறேன். புமென்று பயப்படுகின்றேன்.
: சிவருத்ரப்பா . ஜெயசங்கர்.

Page 6
தமிழ் சிறுல்த வரலாற்றின் சாதனை "மல்லிகை" 1964களில் தொடங்கிய மல்லிகை 250க்கும் மேற்பட்ட இதழ் களை தமிழ் சிறுசஞ்சிகை வரலாற்றில் பதித்திருக்கிறது. இச் சாதனையை தனது அயராத உழைப்பினூடே சாதித்தவர்தான் டொமினிக் ஜீவா,
ஈழத்து தமிழ் இலக்கியச் சூழலுக்கு இவரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.
"தண்ணீரும் கண்ணீரும்" என்ற இவரது சிறுகதைத் தொகுதி சாகித்திய விருது பெற்றது. சிறு சஞ்சிகை ஆசிரியராக, சிறுக எழுத்தாளராக பதிப்ப â ffurfir வேறு தளங்களில் 35 as GOSB fås i 6 JAFTS & செயற்ப டொமினிக் ஜீவாவின் தேர்ந் கப்பட்ட டொமினிக் ஜீவா சிறுகதை 600 பக்கங்களுடன் இப்போது வெ வந்திருக்கிறது
'மல்லிகைப் பந்தல்' வெளியீடா இவரின் முயற்சியினால் பல நூல்க வெளியிடப்பட்டிருக்கின்றன.
நீங்கள் இலக்கிய உலகில் பிரவேசிக்கும் போது இருந்த எழுத்துச் சூழல் கோட்பாடுகள் என்ன? அப்படியொரு ஆரோக்கியமான சூழல் அன்று நிலவ வில்லை. வெறும் வார்த்தை ஜாலங்களும் அடுக்குச் சொற்களும் எதுகை மோனைத் தொடர்களும் கொண்ட எழுத்து நடைதான் அன்று தமிழாக நிலவி யது. அண்ணா, கருணாநிதி, கண்ணதாஸன் போன் றோர்களுடைய தமிழை மனப்பாடம் செய்து அதைப் பின்பற்றி எழுதுவதுதான் நவீன தமிழ் என மயங்கி யிருந்த ஓர் இளைஞர் கூட்டம் அன்று இந்த மண்ணில் பல்கிப் பெருகியிருந்தது. அந்த வழிகளில்தான் என் னைப் போன்ற இளம் எழுத்தாளர்களும் சிந்திக்கக் கற்றுக் கொண்டோம். ஓர் இலக்கிய மயக்கமான சூழல்தான் அன்று இங்கு நிலவி வந்தது. எழுத வேண் டும்; எங்களது பெயரும் பத்திரிகைகளில் அடிக்கடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"தலித் இலக்கியத்திற்கான
அத்திவாரம் ஈழத்தில் 50-605Gfiib BILLIG
slig'
இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர, கொள்கைக் கோட்பாடு என எதுவுமே அற்ற இளம்
பருவத்து ஆர்வ வேட்கைதான் எம்மை ஆட்சி கொண்
டிருந்த காலம் அந்தக் காலம்.
உங்கள் எழுத்து ஆளுமை சிறுகதைத் துறையில் அதிகம் வெளிப்பட்டிருக்கிறது. என சொல்லியிருக் கிறீர்கள் - உங்கள் முதல் சிறுகதை- பற்றி
‘சுதந்திரன்' என்ற வாரப் பத்திரிகை அந்தக் காலத்தில் கொழும்பிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது. அது தமிழரசுக் கட்சியின் அரசியல் பத்திரிகை. அதன் அரசியல் கோட்பாடுகளில் என்னைப் போன்றவர் களுக்கு அன்றும் நம்பிக்கை இருந்ததில்லை.இன்றும் நம்பிக்கை இல்லை. ஆனால் இளம் எழுத்தாளர் களுக்கு வளரும் படைப்பாளிகளுக்கும் 'சுதந்திரன்' பண்ணை தாராளமாகக் களம் அமைத்துத் தந்தது.

Page 7
அதன் ஆசிரியராக அப்பொழுது இருந்த திரு.எஸ்.ரி. சிவநாயகம் எம்மையெல்லாம் எழுத ஊக்குவித்தார். எனது மதிப்புக்குரிய அ.ந.கந்தசாமி, பிரேம்ஜி போன்றோர் சுதந்திரனில் உதவி ஆசிரியர்களாகக் கடமை புரிந்த காலத்தில் நாமும் உற்சாகமாக எழுத உந்துதல் பெற்றோம். உற்சாகமாகச் செயல்பட்டோம். எனது முதல் கதை எழுத்தாளன்' என்ற பெயரில் சுதந் திரனில்தான் அன்று பிரசுரமாகியது. சுருக்கமாகச் சொன்னால் திராவிடத் தாக்க எழுத்து நடையைக் கொண்ட வெறும் எழு த்துக் கூட்டம் தான் அக்கதையில் விரவி நின்றது. கதைக் கரு
-வுக்கு முக்கியத்துவம் கொடுத்ததை விட, அடுக்கு வசனங்கள் தான் அக்கதையில் அதிகம் இடம் பெற்றி
ருந்தன. , ,,,,, எழுத்தையும் அரசிய மார்க்ஸிய எழுத்தா & லையும் பிரித்துப் பார் அவதூறுகள் பரப்பப்ப க்காத அடிப்படை அறிவீர்கள். இந் க் குற் யில்; அனறு நீங்கள் நின்று பதில் சொல்லத் எழுதும் போது திரா விட சிந்தனையின் கருதுகி தாக்கம் உங்களில் எந்தளவு இருந்தது?
CTe தாக்கம் எனச் சொல்லிவிட இயலாது. ஒருவகை ஆர்வம்; ஆவேசம், வார்த்தைக் கூட்டங்களினால் ஒன்றுபட்ட ஈர்ப்பு சக்தி எனத்தான் இன்று சொல்லத் தோன்றுகின்றது. எவ்வளவு வேகமாக அந்த உணர்வுகளுக்கு உட்பட்டிருந்தேனோ அதே அளவு வேகத்துடன் அதிலிருந்து என்னை நானே விடுவித்துக் கொண்டு விட்டேன். இப்படித்தான் சொல்லத் தோன்றுகின்றது.
நீங்கள் எப்படி மார்க்ஸிச சிந்தனைக்குட்பட்டீர்கள்? அந்தக் காலத்தில் "மாஸ்டர் காத்திகேசன்’ என்றொ ருவர் யாழ். இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இருந் தார். அவர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். எனது வீட்டுக்குச் சமீபமாக 'விக்டோ ரியா றோட்டில்தான்' அவரது வீடு இருந்தது. நான் எனது தொழிலகத்திற்கு தினசரி போகும் வழி அது. அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை அரசியல் வாதியாக ஆரம்பத்தில் நான் இனங் காணவில்லை. எங்களைப் போன்ற மக்களது மனித உணர்வுகளைப் புரிந்து கொண்ட கல்விமான் என்றே கருதிப் பழகி
 
 
 
 

(Uன்றாவது மனிதன் -5
வந்தேன். அவரது எளிமை ஆரம்பத்தில் என்னைக் கவர்ந்தது. போகப் போக இளைஞர்கள் பலர் அவரது வீட்டில் அவரைச் சந்தித்துச் சம்பாஷிப்போம். எங்க ளது உணர்வுகளைச் சரிவரப் புரிந்து கொண்ட தனி பெரும் தலைவர் அவர் எங்களை எங்களையறி யாமலே நெறிப்படுத்தி வந்தார். அந்தக் காலத்தில் தமிழகத்தின் பிரபல கம்யூனிஸ்ட் தலைவரான் தோழர் ப.ஜீவானந்தம் தலைமறைவாகி யாழ்ப்பாணம் வந்திருந்தார். அது யுத்த பிற்காலம், ஐயம்பிள்ளை என்ற பெயரில்
ரேஸ்ன் காட் பதிவு
செய்து யாழ்ப்பாணத்
தானாக உருமாறி $TT ou fò y Toulom ss ால இலக்கிய போராட்ட உலா வந்து கொண்டி ள். அப் போராட்டங்களில் ருந்த அந்தக் காலம். '', கார்த்திகேசனது வீட் டில்தான் தங்கியிருந் லகம் பூராவுமே ۔ தார். அவரது பிரப :8 తళ్ల லம் அப்பொழுது
தாளர்களல்ல; அமைப்புச்
பின்னடைவு கண்டவர்கள்.
எமக்குத் தெரியாது. அவரது அரசியல் ஆளுமை எமக்கெல் லாம் விளங்காது. ஆனால் எல்லாம் தெரிந்த ஒரு பிரமுகர் என்ற எண்ணம்தான் எம்மிடம். அடிக்கடி அவரைச் சந்திப் போம் . திராவிட மாயையில் சிக்கித் திணறிப் போயிருந்த எம்மைப் போன்ற இளைஞர்களை அவர் மெல்ல மெல்ல அந்த மாயையில் இருந்து விடுவித்தார். தமிழகத்திலிருந்து வந்த ஒரு பெரிய மனுஷனே அந்தப் பாதையை ஆக்கபூர்வமாக விமர்சித்தபொழுது அதன் அவலமான பக்கங்களை நாம் சுலபமாகப் புரிந்து கொண்டோம். அத்துடன் நமது எதிர்கால இலக்கியங் கள் யாருக்காகப் படைக்கப்பட வேண்டும் என்ற ஞானத்தையும் மெல்ல மெல்லக் கற்றுத் தெளிகின் றோம்.
இலக்கிய உணர்ச்சி மூலம் சாதியக் கொடுமைகளுக் கெதிரான போராட்டத்தை முன்னிறுத்தி, சமத்துவ மானுட அமைப்பை தோற்றுவிப்பது மட்டும்தானா உங்கள் எழுத்தின் கொள்கையாகவிருந்தது? யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதிக் கொடுமைகளுக்கு எதிராகக் கலகக் குரல் கொடுத்து வந்த எம்மைப் போன்ற இளைஞர்கள் கட்டம் கட்டமாக வளர்ந்து சமூகத்தை உணர்ச்சிப் பார்வையில் பார்ப்பதை விடு த்து, விஞ்ஞான உற்றுநோக்கல் பார்வையில் பார்க்கத்

Page 8
(Uன்றாவது மனிதன் - 6
தொடங்கியதின் விளைவும், தோழர் கார்த்திகேசன் போன்றவர்களின் வழிநடத்தலும் தோழமை உணர்வும் இயல்பாகவே நாம் சென்றடைய வேண்டிய மார்க்கத் துக்கு வழி அமைத்துத் தந்துதவின. வெறும் சாதி எதிர்ப்புப் போராட்டம் மாத்திரம் எமது குறிக்கோளல்ல. ஆனால் ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை போன்ற தேசங்களில் சாதிய விஷ வேர்களை முற்று முழுதாகக் களந்தெறியாமல் வர்க்க விடுதலையை எண்ணிப் பார்க்கவே முடியாது. ஒரே தொழில், ஒரே வாழ்வு, ஒரே சூழலில் வாழ்வார்கள் பல சாதித் தொழிலாளர்கள். அதே சமயம் சுய பிரலாபம் வரும் சமயங்களில் 'நான் ஆர் தெரியுமாடா? -கர வெட்டியிலை சுண்டியெடுத்த வெள்ளாளனடா, நான்' எனத் தனது சுயசாதி உயர்வைச் சொல்லியே தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் தொழிலாளர்களை இன்னும் நிஜ வாழ்வில் நாம் பார்க்கின்றோம். அதற்கு உதாரணம் எனது பாத்திரம் ஷோக்கெல்லோ கந்தையா அலன். ஞானம்' என்ற கதையில் இவர்தான் கதாபாத்திரம். வெறும் சாதி விடுதலை மாத்திரம் எனது நோக்கமல்ல. விடுதலை பெற்ற சாதிகளே புதிய உயர்சாதி அகம் பாவத்துடன் செயல்பட்டு விடுவதை எதார்த்த வாழ் வில் நான் பார்த்து வருகின்றேன். எனவே சாதி விடுதலை ஊடாக இறுதியில் மனுக்குல விடுதலைதான் என்னைப் போன்றவர்களின் எழுத்தின் இறுதி இலட் சியமாகும். சிலர் திட்டமிட்டே எம் இலட்சியத்தைக் கொச்சைப்படுத்துகின்றனர். எமது ஆன்மாவையே காயப்படுத்துகின்றனர். இதற்காக நமது பாதையை நாம் மாற்றப் போவதில்லை. ஏனெனில் பயணப் பாதை எமக்குத் தெளிவாகத் தெரியும். நீண்டகாலமான சிங்களஆட்சியாளர்களின் அடக்கு முறைக்கெதிராக உங்கள் எழுத்து, அரசியலின் எதிர்க்குரல்கள்தான் என்ன? அன்றும் இன்றும் என்றுமே என்னைப் போன்றவர்கள் பேரினவாதிகளின் கருத்துகளுக்கு எதிராகவே குரல் கொடுத்து வந்துள்ளனர். 30 வருட மல்லிகை வர லாற்றில்- எந்த அரசாங்கம் பதவியில் இருந்தாலும் -எமது போராட்டத்தில் நாம் யாருடனுமே சமரசம் செய்து கொண்டது கிடையாது. அதற்கு எனது எழுத்து க்களே சாட்சி பகரும். மார்க்ஸிசம்மஸ்கோ சார்பு - பீகிங் சார்பு அணிகளாக பிளவுபட்டபோது நீங்கள் மஸ்கோசார்புநிலையிலி ருந்தீர்கள். ஈழத்து எழுத்தாளர்கள் படைப்பாளி களில் அதிகமானோர் பீகிங் சார்பு அணியிலேயே இருந்தார்கள். உங்கள் மஸ்கோ சார்பு நிலைப்பாட்டிற்கான காரணமென்ன?

எனக்கு எந்தச் சார்பு பற்றியும் கவலையில்லை. கட்சி மாறியும் அல்லநான். மாஸ்கோ - பீக்கிங் சார்பு பற்றிக் கேட்கிறீர்கள். காலம் அதற்குப் பதில் சொல்லி விட் டதே. இன்று இலங்கையில் இருக்கக் கூடிய ஒரேயொரு கட்சி இலங்கைக் கம்யூனிஸிஸ்ட் கட்சி ஒன்றுதான். அதில்தான் நான் இன்றும் இருக்கின்றேன். இப்படிச் சொல்வதில் இன்று நான் பெருமைப் படுகின்றேன். ஏனெனில் அன்று நான் சரியான தேர்வைத்தான் -கட்சி யைத்தான் தேர்ந்தெடுத்தேன் என்பதில் எனக்கு இன்று ஆத்ம திருப்தி உண்டு. அத்துடன் உங்களது வாதப்படி எழுத்தாளர் அத்தனை பேரும் எனக்கு எதிர் வரிசை யில் இருந்தார்கள் என்ற காலத்தில்தான் நான் மல் லிகைச் சஞ்சிகையை வெற்றிகரமாக நடத்தி வந்துள் ளேன் என்பதையும் நீங்கள் கவனிக்கத் தவறக் கூடாது. இது எனது அரசியல் தீர்க்க தரிசனத்திற்குப் பெரிய வெற்றியாகும்.
மல்லிகையின் தோற்றம் பற்றி. தனிமனித முயற்சி எத்தனையோ அவதூறுகள் அப வாதங்கள். இதையெல்லாம் கடந்து 1964ம் ஆண்டு தொடக்கம் மல்லிகையை நடத்தி வந்துள்ளேன். புலம் பெயர்ந்த சூழ்நிலையிலும் எனது நோக்கத்தை நான் கைவிடவில்லை. 'மல்லிகைப் பந்தல்' வேலை தொடர் கின்றது. கூடிய சீக்கிரம் மல்லிகை மலரும். அதற்காக உழைத்து வருகின்றேன். காலத்தின் மீள் பரிசீலனையோடு விமர்சனக் கண் ணோட்டத்தின் அடிப்படையில் நீங்கள் கைலாசபதி, சிவத்தம்பி, இளங்கீரன், மு.தளையசிங்கம் மகாகவி, நீலாவாணன், எஸ்.பொ, நுஃமான் போன்றவர்களை இன்று எப்படிப் பார்க்கிறீர்கள். கைலாசபதி அவர்கள் கடைசிவரையும் தடம் புரளாமல் நமது இலக்கியப் போராட்டத்தில் நிலைநின்று உழைத் தவர். சிவத்தம்பி அவர்களை அப்படிக் கூறிவிட இயலாது. சமீப காலங்களாக அவர் தத்துவார்த்த ரீதியில் தன்னைத் தானே குழப்பிக் கொள்வதுடன் எம்மையும் தலை குழம்ப வைத்து விடுபவர். இருந்தும் இன்று நான் மெய்யாகவே மதிக்கும் ஓர் இலக்கிய விமர்சகர் சிவத்தம்பிதான். யாழ்ப்பாண மண் உருவா க்கித் தந்த ஒரு முஸ்லிம் படைப்பாளி இளங்கீரன். அதில் எப்போதுமே எனக்குப் பெருமையுண்டு. தளை யசிங்கத்துடன் எனக்குக் கருத்து முரண்பாடு உண்டு. அதே சமயம் மானுட நேசிப்பு மிக்கவர் அவர் எழுத் தும் வாழ்க்கையும் ஒன்றென வாழ்ந்து வந்த அவர், நல்ல நண்பரும் கூட. மகாகவி மதிக்கத்தக்க கவிஞர் தான். நாம் நடத்திய எந்தவொரு இலக்கியப் போராட் டத்திலும் கலந்து கொள்ளாமலே ஒதுங்கி நிற்கப் பழகிக் கொண்டவர். எனவே நாமும் அவரை விட்டு ஒதுங்கி நின்றோம். நீலாவாணன் நான் மதிக்கும் ஒரு கவிஞன்.

Page 9
அவரது ஆளுமையைப் புரிந்து கொண்டதின் நிமித்த மாகத்தான் அவரது உருவத்தை மல்லிகை அட்டையில் 70-களில் பிரசுரித்தேன். எஸ்.பொ.அவர்களைப் பற்றி நான் கருத்துக் கூறுவதைத் தவிர்த்து விடுகின்றேன். நுஃமான் அவர்கள் ஆரம்ப காலங்களில் எம்முடன் இணைந்து பிணைந்து வந்தவர்தான். இன்றும் எனக்கு அவரிடம் மதிப்பு உண்டு. "உனது நண்பனைப் பற்றிச் சொல்லு; உன்னைப் பற்றிச் சொல்லி விடுகின்றேன்' என்பது யேசுவின் வாக்கு. இன்று அவரது இலக்கிய நண்பர்கள் எல்லாம் இந்த நாட்டைச் சேர்ந்தவர் களல்ல. குறிப்பாக நாகர் கோயிலைச் சேர்ந்தவர்கள். நட்பைக் குறுகிய வட்டத்திற்குள் அடக்கிக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்தல்ல. ஆனால் பாதத் தைச் சிக்காராக இந்த மண்ணில் மிதித்துக்கொண்டு தான் நாம் உலகத்தைப் பார்க்க வேண்டும். பாதமே இரவல் மண்ணில் பதிக்கப்பட்டு விட்டால் கருத்துக் களும் தடம் புரண்டு போய்விடும் என நியாயமாகவே பயப்படுபவன் நான். அவர் இப்பொழுதெல்லாம் எமக்காக எழுதுவதை விடுத்து, வேறு யாருக்காகவோ எழுதுகின்றாரோ என அடிக்கடியோசிப்பதுண்டு நான், ஈழத்தில் மார்க்ஸிச எழுத்தாளர்கள் தொடர்பாய் அவர்களின் இலக்கியத்தை இலக்கியத்தின் அரசி யலை நோக்கி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மார்க்ஸிச அணிசார்ந்த எஸ்.பொ போன்றவர்களா லும் முன்வைக்கப்பட்டிருக்கிறது -இது குறித்து?
நாம் வெறும் உதிரி எழுத்தாளர்களல்ல; அமைப்புச் சார்ந்தவர்கள் நீண்ட கால இலக்கிய போராட்ட அனு
 

(Uன்றாவது மனிதன் -7
பவம் கொண்டவர்கள். அப்போராட்டங்களில் வெற்றி
பெற்றவர்கள். சில பின்னடைவு கண்டவர்கள்.
இங்கல்ல, உலகம் பூராவுமே மார்க்ஸிய எழுத்தா ளர்கள் பற்றிப் பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டு வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு நாங்கள் நின்று பதில் சொல்லத் தேவை யில்லை என்றே கருதுகின்றேன். எங்களது செயல்பாடு கள் மூலமே இக்குற்றச் சாட்டுகளுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்புகின்றோம். இந்தக் கேள்விகளைக் கேட்டும் சஞ்சிகை ஆசிரியர் நீங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்களது சஞ்சிகை தோற் றத்திற்கு நாம் நமது உழைப்பால் உழுது இந்த மண்ணுக் குப் பசளை இட்டிருக்கின்றோமா, இல்லையா? குற்றஞ் சாட்டுபவர்கள் பற்றி நாம் எப்பொழுதுமே கவலைப் படுவது கிடையாது. அதே சமயம் காலத்திற்கு காலம் நாம் சுய விமரிசனம் செய்து செய்து நம்மை நாமே சீர்திருத்திக் கொள்வது வழக்கம். அதனால்தான் எம்மால் வளர்ச்சியடைய முடிகின்றது. தெ.மு.சி ரகுநாதன், சிவத்தம்பி, அ.மார்க்ஸ், நிறப் பிரிகை குழுவினர் போன்றவர்கள் நாம் சோசலிஸ யதார்த்தவாதம் பேசியிருக்கக் கூடாது விமர்சன யதார்த்தவாதம் தான் பேசியிருக்க வேண்டும் என் கிறார்கள்- இதுபற்றி அது அவரவர் கருத்து. அவர்களுக்கு அக் கருத்தைச் சொல்ல உரிமையுண்டு. அதே சமயம் நானொரு படை ப்பாளி. விமர்சகர்களின் பார்வையை என்னால் ஒத்துக் கொள்ள இயலாது. எட்ட முடியாத இலட்சியமாக நான் சோஸலிச எதார்த்தவாதப் போக்கைக் கருதவில்லை. அது நீண்ட தூர இலட்சியம். அந்த இலட்சியம் தான் என்னை வழிநடத்தி வந்திருக்கின்றது. அந்த இலட்சிய வேட்கை இல்லாது போயிருந்தால் என்னைப் போன் றவர்கள் ஒருவேளை உருவாகாமல் கூடப் போயிருக்க லாம். சோசலிஸம் தோற்றுப் போய்விட்டது எனச் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின்னர் சிலர் குதூகலி ப்பதைப் பார்க்கின்றோம். அது மனுக்குல விஞ்ஞான தத்துவம். வறட்டுச் சூத்திரமல்ல. அது தற்காலிகமாகப் பின்னடைந்திருக்கலாம். தோற்கடிக்கப்பட முடியாத

Page 10
(Uன்றாவது மனிதன் -8
தத்துவம் அது. அது போலவே வெறும் மண் புழுக் ளாக இருந்த என்னைப் போன்றவர்களை மனித களாக்கிப் பேனா பிடிக்க வைத்த 'கார்க்கி'யின் நம்பிக்கை தத்துவம் அது. அந்தத் தத்துவப் படை பாக்கங்களை நாங்கள் இது வரை படைக்க முடியா வர்களாக இருக்கலாம். நாளைய படைப்பாளி அந்த நோக்கத்தை நிறைவேற்றி முடிப்பான் என்பது எனது நம்பிக்கை. தலித் இலக்கியம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. தலித் இலக்கியத்தை நீங்கள் எப்படி நோக்கு கிறீர்கள்?
தலித் போராட்ட இலக்கிய அத்தி வாரம் 50-60களில் ஈழத்தில் சிக்கா ராகத் தளம் போடப்பட்டு விட்டது. அந்தக் காலத்திலேயே தம்மைப் படித் தவர்கள் எனச் சொல்லிக் கொண்ட மேட்டுக்குடிக் கூட்டத்தினர் எம்மைப் பார்த்து' எழியதுகள் எழுதுகின்றனர் இவை எழியதுகளுக்காக எழியதுகள் எழுதும் இழிசனர் இலக்கியம்' எனச் சொல்லி எமது ஆத்மாவையே சாகடி க்கப் பார்த்தனர். முடியவில்லை. அடி நிலை மக்களின் உணர்வுகளை அவர் களது பிரச்சினைகளை அவர்களின் புத்திரர்களாகிய நாம் எம்மவர்களது
66
பாஷையிலேயே எழுதி வந்தோம். நான் போர்த்துக்கீசனுக்குப் பின்னர் டச்சுக் 6τ(ιρίες காரனுக்கு அதன் பின்னர் வெள்ளைக் சஞ்சிகை காரனுக்குப் பந்தம் பிடித்து மதம், தலைமுை
மொழி மாறிய திருகுதாள கூடடத தினருள் நமது மக்கள்தான் தமது மொழியையும் பண்டைய கலாசாரத்தையும் பாது காத்து வந்தவர்கள். இன்றும் பாதுகாத்து வருகின்றனர். இந்த வரலாற்று உண்மை எமக்குத் தெளிவாகத் தெரி யும். அந்த மக்களின் வாரிசுகள் தான் நாம், அழியாமல் பாதுகாத்த எம்மவர்களுக்கு எமது மொழியையும் கலாசாரத்தையும் மதத்தையும் எப்படிப் பாதுகாக்க னேண்டுமென்பது நல்லாகவே தெரியும். நமது பரம் பரையின் சகல விடுதலையும் தான் தலித்துக்களுடைய பெரு நோக்கமென்றாலும் மனுக்குல விடுதலைதான் இறுதி நோக்கம். இந்த நாட்டுத் தலித் கலைஞர்கள் இதைத் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளனர். அனுபவம் எமக்கு இதைத்தான் கற்றுத் தந்துள்ளது. தமிழ் மக்களிடையே இன்று நடைபெறும் ஆயுதப் போராட்டம் சாதிய ஒடுக்குமுறையை முற்று முழுதாக இல்லாமலாக்கிவிட்டது என்று சொல்ல Փւգպաn? --

நீறுபூத்த நெருப்பாக இன்றும் கனன்று கொண்டுள்ளது. முற்றாகவே மறைந்து போய்விடவில்லை. அதே சம யம் இளந் தலைமுறையினரிடம் இது அறவே அண்ட வில்லை எனத் துணிந்து சொல்லலாம். சந்தர்ப்பம் வசதியானால் திரும்பவும் தலைதூக்கும் ஆபத்தும் உண்டு. உங்களுக்கும் சுந்தர ராமசாமிக்குமிடையே எழுந் துள்ள கருத்து முரண்பாடுகள் குறித்து சொல்லுங் களேன் (தாமரையில் எழுதியிருக்கிறீர்கள்) வர்த்தக நோக்கமற்றுப் பேனா பிடிக்கும் சகோதர எழுத்தாளன் சில அடிப்படை நோக்கங்களில் நேர்மை ரம்பியவனாக இருக்க வேண்டும் என பெரிதும்
என்றுமே மல்லிகையின் ஆசிரியன் தான்.
நாளனின் வளர்ச்சி தனிமனித வளர்ச்சிதான்.
ஆசிரியனின் உழைப்பு ஒரு சக்தி மிகுந்த இளந் றயை வளர்த்தெடுக்க முனையும் முயற்சியே’
விரும்புபவன் நான். அவரை அவதூறு செய்வது எனது நோக்கமல்ல. இவர் நேர்மைப் போலி. எழுத்து உபதே சம் செய்து தூய இலக்கியம் பேசும் சராசரித் தமிழன், தமிழனிடம் உள்ள உயர்சாதி அகம்பாவம் இவரிடம் நிறைய உண்டு எனத் தகவல் எனக்குக் கிடைத்தது. தலித் இலக்கியகாரர்களை மட்டம் தட்டுவதில் இவர் முன் நிற்பவர். இவர் எனது எதிரியல்ல. இவரது உயர்சாதி அகந்தையையும் அகம்பாவத்தையுமே நான் வெறுக்கின்றேன். இது தவிர, தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவித மான கோபதாபமுமில்லை. எழுத்தாளன் தனக்குத் தானே உண்மையுள்ளவனாக விளங்க வேண்டும் என விரும்புபவன் நான். மல்லிகையின் ஊடான அனுபவத்தில் இலக்கிய வளர்ச்சிக்கு சிறு சஞ்சிகைகளின் பங்களிப்பு எந்த வகையில் உள்ளது?

Page 11
புதுமைப் பித்தன் அந்தக் காலத்தில் எந்தவொரு பிரபல சஞ்சிகைகளிலும் எழுதிப் புகழ் பெற்றவரல்ல. இலக் கியச் சிற்றேடுகளிலில் எழுதித்தான் அவர் பல பரி சோதனைகளைச் செய்து நிமிர்ந்தவர். உண்மையைச் சொல்லப்போனால் எழுத்து' சரஸ்வதி சஞ்சிகை களுக்குப் பின்னர்தான் பல தரமான எழுத்தாளர்கள் இலக்கிய உலகில் பிரபலம் பெற்றுக் கனதியான சுவை ஞர்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்துக் கொண்டனர். துரதிர்ஷ்டம் என்னவென்றால் சிற்றேடுகளில் கால் ஊன்றி வளர்ந்தவர்கள் பின்னர் வியாபாரப் பத்திரிகை களுக்கு விலை பேசிப் போய் விடுகின்றனர். நமது பொருளாதாரச் சூழல் அப்படி. அவர்களைக் குற்றஞ் சொல்லியும் பயனில்லை. ஆனால் இன்றும், எழுத்து, சரஸ்வதி, மறுமலர்ச்சி, மல்லிகைப் பரம்பரை எனச் சொல்லித்தான் பல எழுத்தாளர் பெயர் சொல்லி நிலை க்க வேண்டியுள்ளது. இது சிற்றிலக்கிய ஏடுகளுக்கு நிரந்தரமாகவே நின்று நிலைக்கும் பெருமையாகும். இன்றைய உங்கள் அரசியல் குரல் என்ன? இந்த மண்ணுக்குச் சமாதானம் தேவை. யுத்தம் நிறுத்தப் பட வேண்டும். சிறுபான்மை இனங்களின் அடிப்படை உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும். நாடு பொருளாதாரச் சீர்குலைவிலிருந்து நிமிர்ந்து வர வேண்டும். இதுவே இன்றைய நிலையில் எனது அரசி யல் குரலாகும். மல்லிகையின் இன்றைய நிலை? நான் என்றுமே மல்லிகையின் ஆசிரியர் தான். எழுத் தாளனின் வளர்ச்சி தனிமனித வளர்ச்சிதான். சஞ்சிகை ஆசிரியனின் உழைப்பு ஒரு சக்தி மிகுந்த இளந்தலை முறையை வளர்த்தெடுக்க முனையும் முயற்சியே. தனிமரம் எத்தனை பருத்துச் செழித்தாலும் தனிமரம் தோப்பாகி விடாது. எனவே மல்லிகையின் பெறு மதியை வெறெந்தக் காலத்தையும் விட, இன்று தெளி வாகப் புரிந்து கொண்டுள்ளேன். ஒன்றை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். கட்சி பிரிந்து தோழர்கள் பிரிந்த சமயத்தில்தான் மல்லிகை தோன்றியது. ஒடுக் கப்பட்ட மக்களின் மனித உரிமைகளுக்காகப் போராடி வந்த சந்தர்ப்பத்தில் தான் மல்லிகை நடப்பட்டது. இதுகள் முறையாகப் படித்து வரவில்லை என எமது கல்வித் தராதரம் விமர்சிக்கப்பட்ட வேளையில்தான் ஈழத்தின் பிரபலமான கல்விமான்களின் கல்வித்தராதர ங்களைப் பயன்படுத்தாமல் அவர்களது நாமத்தை மாத்திரம் தாங்கி அவர்களது படைப்புக்கள், சிந்தனை கள் மல்லிகையில் பதிப்பிக்கப் பெற்று வெளிவரத் தொடங்கின. இவற்றுள் முக்கியமான ஒன்று சாதி எதிர்ப்புப் போராட்டம் சூடு பிடித்து எரிசரமாகக் கனன்ற சூழ்நிலையில்தான் ஒரு சலூனுக்குள் இருந்து, அங்கு தொழில் செய்து கொண்டிருந்த எனது பெயரை

(Uன்றாவது மனிதன் -9
ஆசிரியராகக் கொண்டுமல்லிகை வெளிவரத் தொடங் கியது. இது பாரிஸிலோ, லண்டனிலோ நடந்த சரித்தர நிகழ்வுகளல்ல. நமது யாழ்ப்பாணத்தில் நடந்த முக்கிய நிகழ்ச்சி இது. இது வரலாற்றுச் சம்பவமில்லையா? என்னை நானே புகழ்ந்து மார்பு தட்டுபவன் எனச் சிலர் இன்றும் குற்றஞ் சாட்டுகின்றனர். நீண்ட, அழகிய கூந்தலுள்ள சீமாட்டிதான் விதவிதமான கொண்டை போடுவாள். நான் எனது துறையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இடையறாது உழைக்கின்றேன். செயல் படுகின்றேன். என்னை விட அதிகமாக உழைப்ப வர்கள் என்னை விமர்சிக்கட்டும். என்னைத்துச்சமாக மதித்து எனது திறமையைக் கொச்சைப் படுத்தியவர் களுக்குத்தான் இத்தனை சவால்களையும் விடுகின் றேன். என்னைப் புரிந்து கொண்டவர்களுக்கு மனசார நேசிப்பவர்களுக்கு நான் என்றுமே நண்பன்தான். தெருக்களில் மல்லிகையைச் சுமந்து விற்றுத் திரியும் அதே ஜீவா தான்! நான் தலை கனத்தவனல்ல. தன்னம் பிக்கை நிரம்பியவன். அதுவேறு; இது வேறு இல்லாது போனால் என்னை நக்கல் பண்ணிச் சிறுமைப்படுத்திய கூட்டத்தினர் எப்போவோ என் ஆளுமையை விழுங்கி ஏப்பம் விட்டு விடுவார்கள் என்பது எனக்குத் துல்லிய மாகவே தெரியும். அதற்காகப் பலர் காத்துக்கொண்டி ருந்தனர். . . . . . இன்னொரு குற்றச்சாட்டும் உண்டு. தெருத் தெருவாக இன்றும் மல்லிகையைக் கொண்டு சென்று விற்று விடுவது ஒரு பெருமையா- வளர்ச்சியா? எனக் கேட்கி ன்றனர். இந்தியா இன்று உலக வல்லரசுகளில் ஒன்றா கத் தொழில் நுட்ப அறிவு பெற்றுத் திகழ்ந்து வருகின் றது. கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவு கணை களைச் சுயாதீனமாகத் தயாரிக்கும் நிலைக்கு உயர்ந் துள்ளது. இன்று கூட அரசாங்க அமைச்சர்கள், சாதனை செய்யும் பெரியவர்கள் ராட்டியில் கைகளால் நூற்ற கதராடையை உடுத்துகின்றனர். ஐரோப்பியன் இதைப் பார்த்துக் கிண்டல் பண்ணுகின்றானா? இந்தியாவின் பலத்தைக் குறைவாக மதிப்பிடுகின்றானா? கதர் சுதந் திரத்தின் ஒரு சின்னம்: குறியீடு நான் மல்லிகையைக் கொண்டு வீதியெங்கும் திரிந்து விற்று வருவது எனது இலக்கியப் போராட்டத்தின் ஒரு வடிவமே, காந்தி சுதந்திரம் பெற்ற பின்னரும் வெகு எளிமையாகவே காட்சி தந்தார். பிச்சைக்காரனும் எளிமையாகவே வலம் வருகின்றான். இரண்டு எளிமையும் ஒன்றா? ஈழத்து இலக்கிய உலகில் காந்திய எளிமையைக் கடைப்பிடித்து வருபவன் நான். இது சரித்திரத்தில் பேசப்படும் என்பது சும்மா வெறும் தற்பெருமைச் சொல்லாடல்களல்ல. இது தன்னம்பிக்கையின் ஆத்மக் குரல். காலம் இதை மெய்ப்பித்தே தீரும்.

Page 12
(Uன்றாவது மனிதன் - 10
இலைகளே ஆயிரம் தீநாக்குகள நெருப்பின் எண்ணற்ற நிறங்களுட புகை அவிழாது வெப்பம் கிளர்த்தாது பற்றி எரிகின்றன மரங்கள் மரங்களில் தி கொடிகளில் தீ செடிகளும் தீ
காலத்தீ
தீயின் வனப்பு மிக்க பரவசத்தில் காடுகளையும் புல்வெளிகளையும் ஊடறுத்துச் செல்லும்
தெருக்கள் தலை கிறங்கித் தொலைகின்றன.
காலத்தின் குளிர் மிகுந்த சுடருக்கு: காதலின் இலைகள் உதிர்கின்றன.
உதிர் இலைகளே அழகு, அவற்றின் வண்ணங்களும் பன்மை முழுமையை நோக்கிய நெடுநடைய முன் செல்வன அவை உயிர்க்கும் இலைகளோ பச்சை, அ6 பச்சையின் நிழல் - ஒருமை
உண்மை தான் அன்பே உதிரும் இலைகளில் எதிர்காலம் த புதிய இசையை மீட்டுகிறது என்கிறா
பனிப்பாறைத் தனித் தீவுக் குளிர் நாளில் எனக்கென்ன எதிர்காலம் ?
ဝ - ( ́႕rryre)
• سگے


Page 13
அவன் திரும்பி வந்தது
யாருக்காக? ஏன் அவன் Cata, வெகு
நாள் தங்கினான்? இள
மையின் கனவுகளைத்
துறக்கும்படி, அவனை
எது நிர்ப்பந்தித்தது?
ாருக்காக அவன் இதை
யெல்லாம் செய்திருந்
தான்?
தொலைே போலீஸ் டி.ஐ. அதிர்ந்தன.
''gigi), griff'u
'நீங்கள் உத்த கேன் சார், சவு நிறுத்தியிருக்ே எல்லாரும் ஆ ரிபோர்ட் என்
மேலும் பல காறாராகவும். அதிர்ந்தன.
பர்மனுக்கு வி பயங்கரவாதி குற்றங்களில் மிகுந்த சிரமத்தி வலையிலிருந் செய்யப்பட்டி இந்த சம்பவங் நாட்டின் எல் பெற்றிருப்பத கொண்டு வரு
'யெஸ் சார்' பர்மன் தனது கண்காணிப் ட அவருக்குத் ே வேகம் முய குறிக்கோள்க வேண்டும் எ அபாயங்கள் இ பர்மன் தன் பதி
'தேங்யு சார்'
 

(Uன்றாவது மனிதன் - 11
ဖွံ့ဖြိုး دی )
|-—
பசியின் ரிசீவரை பர்மன் கையில் எடுத்தார். மறுமுனையில் ஜி. ஹர்த்ததா. அவரது ஒவ்வொரு சொல்லும் பதற்றத்தில்
ர்மன் மரியாதையுடன் சொன்னார்.
ரவிட்டது போலவே எல்லா ஏற்பாடுகளும் செய்திருக் கிதிங்கி அவுட் போஸ்ட்டில் இரண்டு இன்ஸ்பெக்டர்களை கேன். சோதனை நடத்த நானே போகிறேன். போலீசார் யத்தமாக இருக்கிறார்கள். கடைசியாக வந்த ஐபி (IB) னிடம் இருக்கிறது.'
அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டன. சுருக்கமாகவும் தொலைபேசியின் கேபிள்கள் அந்த அறிவுறுத்தல்களில்
ஷயம் என்ன என்பது நன்றாகவே தெரியும், அவன் ஒரு புரட்சிகர குழுவின் தலைவன். தொடர்ச்சியான பல சம்பந்தப்பட்டு இருந்தான். ஏழு ஆண்டுகளுக்கு முன், நிற்கு பிறகு கைது செய்யப்பட்டான் என்றாலும் இவர்களது து அவன் தப்பிவிட்டான். அவன் நண்பர்களில் பலர் கைது ருந்தனர். குழுவின் முதுகெலும்பு உடைக்கப்பட்டிருந்தது. களால்தான், ஒருவேளை அவன் திரும்பி வருகின்றான். லைக்கு அப்பால் நவீன ஆயுதப் பயிற்சியை அவன் நாக மக்கள் பேசினார்கள் கொலை ஆயுதங்களைக் வதாகவும் சொன்னார்கள்.
பர்மன் தனிச் சொற்களாக பதில் சொன்னார். ஆனந்த
இளம் வயதிலேயே பலரை முந்திக் கொண்டு காவல் பாளராகி விட்டார். பதவி உயர்வுக்கான திறமைகள் தெரியும். வேட்டைநாயின் விசுவாசம், வேங்கையின் லின் தயார் நிலை; ஒநாய் போன்ற வேட்கை. அவரது ளுக்கு எல்லைகள் இல்லை. இனியும் பதவியில் உயர “ன்றால் இந்த நபரை பிடித்தாக வேண்டும். அதில் இருப்பினும் சரி. இந்த வாய்ப்பை இழந்து விடக்கூடாது. தவியைப் பற்றி அதிகம் நினைக்க வேண்டியிருந்தது.
ரிசீவரை மறுபடியும் அதன் இடத்திலேயே வைத்தார்.

Page 14
(Uன்றாவது மனிதன் - 12
அவர் முகத்தில் வியர்வைத் துளிகள் வழிந்தன.
* 姆 鲁 முதல் பக்கச் செய்திகள் வடிவமைப்பு ஆசிரியருக்கு பிடித்திருப்பதாகத் தோன்றியது. கண்ணாடியை கழற் விட்டு சிறிது நேரம் யோசித்தார். பிறகு சொன்னார் "ஆமாம். அற்புதமான தலைப்பு. விலை போகும்.
ஆனால் அவனுடைய படம் வேண்டுமே. அது முக்கி யம்’ நிருபர் சொன்னார்: "சார், போட்டோ கிடைக் வழியே இல்லை. கோஸ்வாமியும் லாகரும் முடிந்த வரை முயற்சி செய்துவிட்டார்கள். போலீஸ் கோப்ட களில் கூட அவன் படம் இல்லை."
புதிய சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை ஆசிரியர் எடுத்தார். "அப்ப சரி, கோஸ்வாமி நீங்க தொடர்ந்து போலீஸ்ல தொடர்பு வச்சுக்கங்க. மற்றதை லாகர் தானே பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். நமக்கு அவனைப் பற்றி கிடைக்கிற எந்த செய்தியானா லும் அதைப் பெட்டிச் செய்தி யாக போடுங்கள். அவன் கைதானால் அவன் படத்தை போடுகிற முதல் பத்திரிகை நம் பத்திரிகையாக இருக்க வேண்டும். இந்த வழக்கின் எல்லா தகவல்களும் வாசகர் களுக்குத் தெரிய வேண்டும். இந்த மனிதனின் பெயருக் காக பேப்பர் விற்கும் என்பது நினைவிருக்கட்டும்." பக்கத்து அறையில் இருந்த டெலி பிரிண்டர் சொற்களை கொட்டிக் கொண்டிருந்தது. பல இடங்களிலிருந்து வந்த செய்திகளின் துண்டுகளும் காகிதங்களும் இறைந்தன. கீழே தெருவிலிருந்து இரைச் சல் கேட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு அறையில் தொலைபேசி ஒலித்தது. கோஸ்வாமியும் உதவி ஆசிரி
யரும் ஓடினார்கள்.
லாகர் தன் நாற்காலியை ஆசிரியருக்கு அருகில் போட் டுக் கொண்டான். கவனமாக சுற்றுமுற்றும் பார்த்து விட்டு சொன்னான். "ஒண்ணு பண்ணலாம் சார் . எனக்குத் தெரிந்தவரை அவனைச் சந்திக்கும் வாய் ப்பே நமக்கு இல்லை. போலீசாரிடமும் அவன் தடயங் கள் இல்லை. ஒரு பொய்யான பேட்டியை செட்-அப் பண்ணினால் எப்படி இருக்கும்?"
 

ஆஷ்ட்ரேயை எடுத்த ஆசிரியர் லாகரையே பார்த்தார். 'நீ சொல்வதாவது. நம்ம ஆள் ஒருத்தன் அவங்க முகாமுக்கு கண் கட்டப்பட்ட நிலையில் போகிறான். அங்கே அவனை சந்திக்கிறான். அவன் எதிர்கால திட்டம், எல்லைக்கு அப்பால் அவன் அனுபவம், அரசு பற்றிய அவன் கருத்து எல்லாம் கேட்கிறோம்.' "தெளிவில்லாத ஒரு புகைப்படத்தையும் பேட்டியுடன் போடலாம்" லாகர் ஆர்வத்துடன் சொன்னான். ஆசிரியர் சிகரெட் முனையை அணைத்தார். பல அனுப வம் முன்னெழ, "வேண்டாம்' என்றார். 'பிரச்சினை யாகிடும் லாகர், போலீஸ் விசாரணை, குறுக்கு விசா ரணை, பின்னால் இது வெறும் செட்-அப் என்று தெரிந்தால். பத்திரிகையின் இமேஜ் போயிடும். ஒன்றுமில்லாததற்குப் போய். வேண்டாம்'
* 督 骨
நீலா தலைமுடியை வாரிக் கொண்டிருந்தாள். அவள்
முன்னால் பெரிய டிரஸ்ஸிங் டேபிள். அது மதியநேரம். பின்னணியில் மெல்ல ஒலித்துக் கொண்டிருந்தது, இசை, கிளிப் ரிச்சர்ட்ஸின் பாட்டு. வேலைக்கார சிறுவன் பகல் காட்சிக்கு போவதாக சொல்லிவிட்டுப் போனான். அவள் கணவன் நீலம் மகந்தா மாலை 4 மணிக்குள் வீடு திரும்புவதற்கு சாத்தியமே இல்லை.
பெரிய வீட்டின் தனிமை அவளைச் சூழ்ந்தது. ஜன்னல் வழியாக பின்பகல் நேரத்து தெருவை பார்க்க முடிந் தது. ஆளரவமற்ற, எப்போதாகிலும் ஒரு வாகனம் கடந்து போகிற தெரு, கடிகாரம் பிற்பகல் நேரத்தை

Page 15
கடக்க விருப்பம் இல்லாமல் இயங்கியது. மெல்லிய தென்றலில் திரைச்சீலைகள் சலசலத்தன. தொலைபேசி யின் திடீர் ஒலிப்பு அவளை அதிர்ந்தெழச் செய்தது. அழுத்தமான, வறண்ட, நினைவில் நிற்கும் குரல். 'ஹலோ" அவளுக்கே அவள் குரல் அடையாளம் தெரியவில்லை.
'என்னாச்சு நீலா? உடம்புக்கு சுகமில்லையா என்ன?"
ஓ! அவள் கணவன்தான். இருந்தும் கூட அவள் இதயம் மேலும் சில கணங்களுக்கு வேகமாக அடித்துக் கொண்டது. 'நீலா, ஈஸ் சம்திங் ராங்?" "நத்திங், தூங்கிட்டேன். அவ்வளவுதான்' 'இன்றைக்கு சினிமாவுக்கு போவோம். ஸ்டீல்பர்க் படம். அலங்காரம் பண்ணிக்க. பதினைந்து நிமிஷத்தில் வந்திடுவேன். நாம பட் வீட்டுக்கு போகனும் இல் லையா! அவன் குழந்தைக்கு பிறந்த நாளாச்சே!' நீலா கண்களை மூடினாள். கணவனின் ஆறுதல் தொனி க்கும் குரலில் மூழ்கிட முயன்றாள். அது ஒன்றுதான் புகலிடமாகத் தோன்றியது. "இன்றைக்கு வேண்டாம்' என்றாள். 'சுநீல் எங்கேயோ வெளியே போயிருக் கான். நீங்க சீக்கிரமா வீடு வர முடியுமான்னு பாருங்க. இன்றைக்கு ரொம்ப தனிமையா இருக்கு' பெரிய அறையின் மேலும் கீழுமாக நீலா நடந்தாள். அவள் பாதங்களை ஏற்றுக் குவிகிற தரை விரிப்பு. பெருஞ் செலவிலான வீட்டுச் சாமான்கள். பெரிய பனிக் கட்டி போல மூலையில் நிற்கும் குளிர்பதன பெட்டி கலர் டி.வி. பெல்ஜியம் கண்ணாடி, நீலா திரைச்சீலையைத் தள்ளினாள். பசும்புல் தோட்டத் தையடுத்த கார் ஷெட்டை பார்க்க முடிந்தது. கம்பெனி யின் சிவப்பு நிற மாருதி காரை சிலமணிநேரங்களுக்கு முன்தான் அவள் கணவன் ஒட்டிச் சென்றிருந்தான். மறுபடியும் அவள் இதயத்தின் துடிப்பு அதிகரித்தது. இவை அனைத்தையும் எந்தத் துன்பமும் இல்லாமல் விட்டு விட முடியாதா என வியந்தாள். இத்தனை சவுகரியங்களுக்கு நடுவே அவளது "கேர்-பிரி' வாழ்க் கையை அவன் அனுமதிப்பானா? ஒருநாள், ஒரு பொழுதில் இதே போன்ற பகல்நேரத்தில் அழைப்பு மணியோசை கேட்டு கதவைத் திறப்பாள். அவன் நிற்பதைக் காண்பாள். ‘எப்படி இருக்கிறாய் நீலி?' கண்களில் அந்த குரூர மும் லேசான சிரிப்பும் கலந்த முகத்துடன் அவன் கேட்பான். கலைந்த முடி கரகரப்பான கன்னம். கசங் கிய உடை கைகளில் ரத்தச் சிவப்பாய்த் துடிக்கிற நரம்பு, ஒரு வேளை அவன் அவள் அறைக்குள் நுழை ந்து வீட்டின் வளத்தை கண் சுழற்றிப் பார்ப்பான்.

(Uன்றாவது மனிதன் - 13
ஒருவேளை, அவள் முகத்தை நேராக சில கணங்கள் பார்த்துவிட்டு சன்னமான குரலில் சொல்வான். 'வா நீலா, மீண்டும் என்னிடம் வந்துவிடு' என்று. நீலா பெருமூச்செறிந்தாள். ஒருநாள் அவன் திரும்ப வருவான். அது நிச்சயம். அவன் அவளை மறக்க மாட்டான். எதுவும் மரணம்கூட அவளை மறக்கும்படி செய்யாது, ஏழு ஆண்டுகளாய் காட்டு விலங்குகள் நடு வில், காட்டுமிராண்டித்தனமான மனிதர்களிடம் பழ கியபின்பு இன்னும் கூடுதலாகவே அச்சமற்று இருப்பான். நீலா தன்னை போலித்தனமாக உணர்ந்தாள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவன் மேல் அவளுக்கு காதல் இருந்தது. காதல். வார்த்தையே இப்போது கசக்கிறது. அவள் நீலம் மகந்தா மேல் காதல் கொண்டிருந்ததே இல்லை. ஆனாலும் சுற்றிலும் இருந்த பொருள்கள், குளிர்பதனபெட்டி, டிவி, கார், வீடு இவை சூழ இருந் தாள். போதுமான அளவு மகிழ்ச்சியான வாழ்க்கை. இப்போது அவன் திரும்பி வந்திருக்கிறான் என்றால் இவையாவும் இல்லாது போகும். கன்னத்தை ஜன்னல் கம்பிகளில் வைத்து தெருவைப் பார்த்தாள். ஆம். அவன் வருகின்றான்.
* 骨 普
புத்தம்புது விஸ்கி புட்டியை எவனோ ஒருவன் திறந் திருந்தான். ஒரு கண்ணாடிக் குப்பி தரையில் விழுந்து உருண்டு போனது. 'தண்ணி' ஊற்றுகிற சத்தம் எவனோ பாடுகிறான்: 'இது கடும்பகலின் இரவாக இருந்து வருது. நான் கட்டையைப் போல தூங்க வேணும்' அறை முழுதும் சிகரெட் புகை. இரவு விளக் கின் வெளிச்சத்தில் நாற்காலி, மேசை, படுக்கை, சில இளைஞர்கள் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது. பிபுல், அஜித், துல், பேகான், ரபியுல். அஜித் எழுந்து ஜன்னலைத் திறந்தான். அடைந்து கிடந்த அறைக்குள் இரவுத் தென்றல் நுழைந்தது. பாடிக் கொண்டு திரும்பி வந்தான்! இருளும் மதுவும் கலந்த விருந்தில்
இரவு முழுதும் நாம் குடிப்போம் நாளைய பொழுதை காணப் போவது
நாம்தான் என்றே குடிப்போம். வளரும் கவி என அஜித் கருதப்பட்டான். "மூடுடா, முட்டாள்' என்றான் பேகான் 'இதுதான் -ஒரு ஆபாச அசைவு காட்டி- உன் கவிதை'
துல் சிரித்த சிரிப்பில் அறையே ஆடுவது போல இருந் தது. 'அதை ஏன் சொல்கிறீர் தோழர்! இதுபோன்ற

Page 16
(Uன்றாவது மனிதன்
கவிதைகளால்தான் அவனுக்கு பெயர் கிடைக்கிறது. அழகான பெண்கள் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்கிறார்கள். இந்த கவிதைகள் அவனுக்கு உதவு கிறது. பெண்களைக். துல் வார்த்தைகள் தேய்ந்து மறைந்தன. 'என் கவிதை என்ன நல்லதைச் செய்யும்?' அஜித் தொய்வுடன் கேட்டான். 'நாசமாய் போகட்டும். என் கவிதைகளின் ஒவ்வொரு சொல்லும் எழுந்து என்னை கேலி செய்கின்றன. இந்த கவிதைகளுடன் எத்தனை நேர்காணல்களுக்கு போய் இருக்கிறேன். பிரசுரமான இதழ்களையும் காட்டியபடி விளம்பர அலுவலர் வேலைக்கு நான் ரொம்பவும் முயற்சி செய்தேன். ஆனால் என்னாச்சு? எவனோ ஒருத்தன் வந்தான். வேலையை வாங்கிட்டான்.' வாசலில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்துநின்றது. அது ஈஸ்வர் என்பது அவர்களுக்குத் தெரியும். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகை அவனுக்கு கிடைத்திருக்கிறது. அன்றைய பொழுதின் மதுவிருந்து அவன் கொடுத்ததுதான். "ஹலோ" சொன்னபடி ஈஸ்வர் நுழைந்தான். "எங்களை விட்டுப் போகிறாயா இளைஞனே' என் றான் ஒருவன். "நிச்சயமாக உங்களை விட்டுப் போகிறேன்' ஈஸ்வர் அறிவித்தான். ஒரு பெக் அடித்தபடி, "நீங்கள் எல்லா ரும் விமான நிலையத்துக்கு வரணும்.' ரபியுல் தள்ளாடி அவனிடம் வந்தான். ஈஸ்வரின் தோள்மீது கைபோட்டான்.
 

'அமெரிக்காவிலிருந்து என்ன அனுப்புவாய், எங்களுக்கு? நல்ல மது, சூரியக்குளியல் படங்கள், அமெரிக்க அழகிகள் கொஞ்சம் சூடேற்றுகிற ஆபாச.
'நல்ல ரசமான விஷயமாக' என்று அஜித் முடித்தான். 'சத்தியம் பண்ணுடா, தெவிடியாமவனே சத்தியம்' 'சத்தியமாக' என்றான் ஈஸ்வர்.
"போ, போ' துல் முணுமுணுத்தான். 'ஐந்து வருஷம் கழித்து நீ வரும்போது இங்கே எல்லாமும் மாறியிருப் பதை காண்பாய். குறைந்த விலையில் குவிண்டால் அரிசி, இலவசமான சிகரெட், எங்களைப் போன்ற வெட்டிப் பயல்களை மணக்க வரிசையில் நிற்கும் பெண்கள், காற்றில் புரளும் பணம். ராமராஜ்யம் தான். ஏன் என்றால் நான் கேள்விப்பட்ட.
'நல்லது. நான் கிளம்பறேன். இன்னும் இரண்டொரு இடங்கள் போக வேண்டும். இன்னும் நீலி வீட்டுக் குக்கூட போகல. விமான நிலையத்தில் காலையில் சந்திப்போம்'
"குட்டை இளைஞனே! எல்லாம் நலமாக என் வாழ்த் துகள்' இருட்டிலிருந்து ஒருவன் சொன்னான். 'உன் செலவில் ஜாலியாக இருந்தோம். அதை மறந்துவிடு. நீயும் அந்த களிப்பில் பங்குகொண்டாய் புரட்சி, இந்த அமைப்பையே மாற்றிவிடுதல். நீ பேசியது பற்றி யெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. அவர்களை சுடனும், விளக்கு கம்பத்தில் கட்டி தொங்கவிடணும். -எம்.எல்.ஏ. கருப்புச் சந்தைக்காரன், லஞ்சப் பேர்வழி, உண்மையில்லாத மனைவி இவர்களைப் பற்றி நீ சொன்னதுதான்.'

Page 17
ஈஸ்வர் மெதுவாக சிரித்தான். 'நான் நேற்றே கதவு களை சாத்திவிட்டு சாவியை தூர எறிந்துவிட்டேன். குட்நைட்' அவன் வெளியேறினான். மோட்டார் சைக்கிள் உயிர் த்து எழுந்தது. அதன் ஓசை தேய்த்து மறைவதைக் கேட்க முடிந்தது. பேகான் தள்ளாடி நடந்து ஜன்னல் பக்கம் போனான். கரகரத்த குரலில் பாடினான். 'எவனோ ஒருவன் கைகளில் விழுந்து.' திடுமென துல் கத்தினான். 'சரி நண்பா, நாம் அவர் களைச் சுடுவோம். அவர்கள் அனைவரையும் தூக்கி லிடுவோம். எம்.எல்.ஏ , கருப்புச் சந்தைக்காரன், அமைச்சர், லஞ்சம் வாங்கும் அதிகாரி எல்லாரை யும்.' ஜட்டியுடன், கை, கால்களால் தவழ்ந்து அறை யின் மையத்திற்குப் போனான். 'கவலைப்படாதே சகோதரா' என்றான். 'எல்லாம் நன்றாக இருக்கும். நாம் துப்பாக்கிகளையும் வெடி குண்டுகளையும் எடுப்போம். எவன் நமக்கு குடுப்பான் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கவலைப் படாதே நம்ம சமிரான் பரூவா திரும்ப வந்து கொண்டிருக்கிறான். தெரியுமா? அவன் நம்மை சொர்க் கத்துக்கு கூட்டிப் போவான்.' துல் வெடிச்சிரிப்பை அவிழ்த்து விட்டான். அப்படியே நிறுத்திவிட்டு படுத்தான்.
* * *
தழல் அலைகிற மண்ணெண்ணெய் விளக்கினால் வராந்தாவை வெளிச்சமாக்க முடியவில்லை. விளக்கை தாங்கி நின்ற பெண்மணி அந்த வெளிச்சத்தில் மேலும் ஒல்லியாகத் தெரிந்தாள். கேட் கதவினை அவர் திறந் தார். ஒன்றும் சொல்லாமல் வாசலைக் கடந்து வீட்டுக் குள் வந்தார். அவரது ஒவ்வொரு அசைவையும் விள க்கு தொடர்ந்தது. படியாத முடிகளின் நடுவே அசாதார ணமான அமைதி முகம். சட்டையை கழற்றி படுக்கை யில் வீசினார். பிறகு அவரே படுக்கையில் விழுந்தார்.
'அவன் வரான் போல இருக்கு எல்லாரும் சொல்றாங்க" விளக்கின் திரி கரகரத்தது- அவர் முகத்தில் விழந்த நிழலைப் போல. 'ஏன் வந்திருக்கிறான்' அவர் முணுமுணுத்தார். ஏதோ தனிவசனம் பேசுவதைப் போல. 'எனக்கு செத்தா நல்லது. இந்த வயதான அப்பனுக்கு ஒரு பைசா அனுப்பியிருக்கானா? மூன்று தங்கைகளை கல்யாணம் கட்டிக் கொடுக்கணும். அவன் வந்துட்டா இதெல்லாம் ஆயிடுமா? எத்தனை மிருகங்கள், துப் பாக்கிகள், வெடிகுண்டுகள். எப்படி பிழைத்து இருக்கிறான்'

(ன்றாவது மனிதன் - 15
அந்த பெண்மணி விளக்கை இறுக்கிப் பிடித்தாள். 'எனக்கு, தெரிஞ்சதெல்லாம் அவன் திரும்ப வரான் என்பதுதான்' என்றாள்.
* 督 *
அலங்கரிக்கப்பட்ட, பெரிய மேசையைச் சுற்றி 5 பேர் உட்கார்ந்து இருந்தனர். செய்தித்தாள்களும், வார மாத இதழ்களும் இறைந்து கிடந்தன. மேசையின் மேல் ஆஷ்ட்ரே, சிகரெட் பாக்கட், சர்பத் கிளாஸ் , ஒரு கனமான ஆசாமி கேட்டான். 'ஆக உனக்கு சமிரான் பரூவாவை நன்றாகத் தெரியும். இல்லையா புகந்தா?
"நிச்சயம். அவனை நல்லாத் தெரியும்’ ஒரு வயதான மனிதர் பதில் சொன்னார். அவர் ஒரு அனுபவம் மிக்க அரசியல்வாதி. நாற்காலியில் சவுகரியமாக சாய்ந் திருந்தார். வெள்ளி பிரேம் போட்ட கண்கண்ணாடி, குர்தாவில் தங்கப் பொத்தான்கள். கைத்தடி மேசைக்கு மேலாக தலைநீட்டிக் கொண்டிருந்தது. 'அவன் அப்பா வும் நானும் சிறையில் ஒன்றாக இருந்தோம். நாங்கள் நண்பர்கள். சுதந்திரம் அடைந்த பிறகு நான் அமைச்ச ரானேன். எங்கள் தொடர்பு விட்டுப்போனது. எங்கே போனார் என்று தெரியாது. ரொம்பவும் தற்சார்புள்ள மனுஷன், ரொம்ப கர்வம். அரசியலுக்கு அவர் லாயக் கில்லை. பல வருஷங்கள் கழித்து ஒரு கிராமத்தில் பேசுவதற்காக போனபோதுதான் அவரை சந்தித்தேன். அங்கே பள்ளித் தலைமையாசிரியராக இருந்தார். என்னை ரொம்பவும் பாராட்டினார். பக்கத்திலிருந்த சின்ன பையனை அறிமுகம் செய்து வைத்தார். அவர் வீட்டில் டீ சாப்பிட்டேன். அவனைத் தெரியும்.'
'புகந்தா, நீங்க ஏன் அவனிடம் எடுத்துச் சொல்லக்கூடாது? தற்போது அரசை எதிர்க்க நம் கட்சிதான் சரியான மேடையாக இருக்கும் என்பதை அவனுக்குப் புரிய வையுங்கள்.'
கிழவரின் உதடுகள் புன்னகையாய் மாறியது.
'அவனை நீங்க பிடிச்சாகணும் எப்படியாவது. அவனைப் பற்றிய அத்தனை தகவல்களையும் நாங்கள் கொண்டு வந்து தருகிறோம். நம் கட்சியின் இருப்பை இன்றைக்கு காட்ட வேண்டுமானால் இன்றைய தேதிக்கு இவன் மூலம்தான் அதைச் செய்ய முடியும். அவனை இழந்தால், பிறகு நம்பிக்கையே இல்லை." 'நான் சமாளிப்பேன். கொஞ்சம் விவேகமாய் பேசி, வற்புறுத்தணும். என்னால முடியும். என் சொந்த கவ லைகளை எல்லாம் விட்டு விடும் நிலைக்கு நான் வந் திருக்கிறேன். என் குரலே எனக்கு கேட்கவில்லை. என் விருப்பங்களைப் பார்த்துக் கொள்கிற தேவைகூட இல்லை'

Page 18
(Uன்றாவது மனிதன் - 16
“ஐந்து வருஷம் இங்கே எல்லாமும் மாறியிருப் குவிண்டால் அரிசி, இலவசமான சிகெ மணக்க வரிசையில் நிற்கும் (
ராமராஜ்யம்தான். ஏன் எ
'முட்டாள் கிழம் ரொம்ப குடிச்சிட்டிருக்கு"
"நான் அவனிடம் பேசுவேன். அவன் தோள்களில் .ை போட்டு பாசத்துடனும் வேதனையுடனும் சொல்வேன் சமீர் நீ சாதாரண வாழ்க்கைக்கு திரும்பு. இதனாலெல் லாம் நீஅடையப் போவது என்ன? நீ தேர்ந்தெடுத்திரு க்கும் பாதை நம் உலகைச் சார்ந்தவர்களுக்கு பொருத்த மானது அல்ல. விட்டுவிடு மகனே! என்னுடன் வா எங்கள் கட்சியில் நீ மக்களுக்காக பாடுபடலாம். சமீர் என்னுடனேயே தங்கியிரு. உனக்குத் தெரியும். நானும்
உன் தந்தையும் எத்தனைக் காலமாய்.
骨骨普
நாற்சந்தியில் நின்ற திரையரங்கம் முன்பாக அவன் வந்து சேர்ந்தான். அது ஒரு பெரிய கட்டிடம்- புதிதாக அடிக்கப்பட்ட பெயின்ட் சுவர்களில் மின்னியது. சமிரான் இந்த இடத்தை நினைவுப் படுத்தினான். இங்கேதான் ஆசிரியர் குஷாவின் வீடு இருந்தது. மற்ற வீடுகள் எங்கே? அதில் இருந்த மனிதர்கள் எங்கே? மிஞ்சியது எல்லாம் இந்த ராட்சஷ திரையரங்கம்.
பல ஆண்டுகள் கழித்து, இரண்டு தினங்களுக்கு முன்தான் அவன் நகருக்குள் வந்திருந்தான். எல்லா இடங்களிலும் மாற்றங்கள். பழகிய தெருக்கள் ஒன்று கூட இல்லை இதே மூலையில்தான் பெரியதொரு ஆலமரம் இருந்தது. அது வெட்டி வீழ்த்தப்பட் டிருக்கும் இப்போது நிறைய கடைகள் இருந்தன. நிறைய கார்கள், பேருந்துகள். காரியங்களில் முனைப் பாய் இருக்கிற நூற்றுக்கணக்கான மக்கள் தெருக்களில் இருந்தார்கள். லாரி டிரைவர்கள் மற்றவர்களோடு போடும் சத்தமும், பேருந்துகளில் அலறுகிற ஒலிப் பானும் ஓய்வில்லாது ஓசையும் இயக்கமுமாய் இருக் கிற காட்சியுடன் கூடிநின்றான். பக்கத்திலிருந்த தேநீர் கடைக்குள் சமீர் போனான். உள்ளே புலப்படாதபடி கடையின் மூலையில் தெருவைப் பார்த்தபடி உட்கார் ந்தான். கடந்த இரண்டு இரவுகளையும் ஏதாவது ஒரு ஒட்டலில் கழிக்க அவன் துணிந்திருக்கவில்லை. அவன் சொந்த வீடு பற்றி கேட்கவே வேண்டாம். யாராகிலும் பழைய நண்பர்களுடன் தங்குதற்கும் தைரியம் இருக்கவில்லை. அவன் நகருக்குள் இருப்பது
 
 
 
 
 
 
 

A ழித்து நீ வரும்போது தை காண்பாய். குறைந்த விலையில் -, எங்களைப் போன்ற வெட்டிப்பயல்களை பண்கள், காற்றில் புரளும் பணம்.
எறால் நான் கேள்விப்பட்ட.
போலிசுக்குத் தெரியும் என்பதை உணர்ந்து இருந்தான். சவுகீதின் நகரில் போலிசார் கண்காணிப்பிலிருந்து தப்ப முடிந்தது. லம்டிங் ரயில் நிலையத்திலும் சந்தேகம் கொடுக்கும் வகையில் நிறைய பேர் இருந்தனர். ஐ.பி.யாக இருக்கும். தீயணைப்பு வண்டிகள் சைரன் ஒலித்து பறந்து கடந் தன. சுண்டியது போல, எழுந்து சுற்று முற்றும் பார்த்தான். இல்லை பாத்திரங்கள் மோதிக்கொண்ட சத்தம். கடைக்காரரின் உரத்த குரலும், டேப்ரெக்கார் டரிலிருந்து வரும் ஹிந்திப் பாடலும்தான் கேட்டன. சத்தத்தில் மற்ற யாவும் மூழ்கி மறைந்தன. ஆக, அவன் திரும்பி வந்துவிட்டான். வெறுங்கை யுடன், அவனிடம் இருந்த பணமும் ஏறத்தாழ காலியாகிக் கொண்டிருந்தது. ஓரளவு ஆயுதங்கள் கிடைக்கும்படி செய்ய முடிந்திருந்தது- ஆனால் அது முழுக்க முழுக்க நம்பிக்கை சார்ந்தது. சீக்கிரத்தில் நொறுங்கிப் போகும் ஒன்றினை சார்ந்து கொண்டு இருக்க முடியுமா என்று சந்தேகிக்கத் தொடங்கினான். அவன் இதுவரை பார்த்திலிருந்து பல தோழர்கள் ஓசையும் ஒளியும் சாலையில் நிறைந்தன. ஒரு பீடாக் கடை முன்பாக குறிக்கோளின்றி குழுமி நின்ற இளைஞர்கள் கூட்டம் ஒன்றினை சமிரான் கடந்தான். இளைஞர்கள் தங்களை கடந்து போகும் பெண்களைப் பார்த்து ஆபாசக் குறிப்புகள் சொல்லி சத்தமிட்டனர். ஒரு கடையின் ஷோ - ரூம் முன்பாக ஒரு கூட்டம் டிவி பார்க்க நெருங்கியடித்துச் சிரமப்பட்டது. டிவியில் கிரிக்கெட் ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. கூட்டத்திலிருந்து வர்ணனை கேட்டது. மற்றொரு விக்கட் வீழ்ந்தது. ரவி சாஸ்திரி அற்புதமாக பந்து வீசுகின்றார்.' ஆமாம், நிச்சயமாக நகரத்துக்கு திரும்பி விட்டோம்சமிரான் நினைத்தான். திரையரங்கிலிருந்து புற்றீசல் போல மக்கள் கூட்டம் வெளிவந்தது. ஒரு காட்சி முடிந்திருக்க வேண்டும். அவன் முன்பாக இருந்த சுவரில் அடர்வண்ணத்தில் சுவரொட்டிகள். நாயகியின் கால் தரைபடாமல் தூக்குகின்றான் நாயகன். ஒரு சிகரெட் கம்பனி ஆதரவிலான இசை இரவு குடும்பக்

Page 19
கட்டுப்பாடு விளம்பரம் ; ரம் லால் ஸ் வத்தா துணிக்கடையின் ஜட்டிகளை புகழ்கிற விளம்பரப்பலகை, நகரம் கவனிப்பாரற்று அவன் முன் விரிந்தது. அதில் இருந்தவர்கள் திரும்பிக் கூட பார்க்காமல் கடந்து போனார்கள். திடீரென ஒரு சப்தம் சமிரானை அடைந்தது. இளைஞர்கள் நிறைந்த இரண்டு பேருந்துகளில் அலறுகிற ஒலிபெருக்கியால் வந்த சப்தம். ஒருவேளை உல்லாச பயணமாக இருக்கும். இந்த கூச்சல்களிலிருந்து விலகி தளர்வுடன் நடை போட்டான். முடிதிருத்தகம் அருகில் ஒருவன் நிலக்கடலை விற்றுக் கொண்டிருந்தான். சமிரான் நின்றான். இரண்டு ரூபாய்க்கு கடலை வாங்கினான். ஒரு சந்தேக நோட்டம் -இல்லை, அவனை கண்காணிப்பதாய் யாருமே இல்லை. பிறகு அங்கேயே நின்றான். கடலையை உரித்து ஒவ்வொன்றாய் சாப்பிட்டான், கணத்துக்கு கணம் சத்தம் , ஒளி, சாலையிலிருந்து தூசு பறந்தது. முடிதிருத்தகத்தின் கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்தான் - சுத்தமாய் மழிக்கப்பட்ட கன்னம், நீள்முடி, கண்கண்ணாடி, ஒல்லியான தேகம், சோர்வு தட்டிய முகம், கன்னத்தின் எலும்புகள் எம்பியிருப்பது தெரிகிறது. அவன் திரும்பி வந்தது யாருக்காக? ஏன் அவன் வெளியிலேயே வெகுநாள் தங்கினான்? இளமையின் கனவுகளைத் துறக்கும் படி, அவனை எது நிர்ப்பந்தித்தது? யாருக்காக அவ்ன் இதையெல்லாம் செய்திருந்தான்? இந்த மனிதர்கள் -இவர்கள் கூடுதலாக எதையாவது கேட்டார்களா? மக்கள் அவனுக்காக காத்திருப்பார்கள் என்று எண்ணியிருந்தான் - ஒரு ரயில் விபத்தில் பெட்டிக்கு இடையில் சிக்கிக்கிடக்கும்போது ரட்சகனை எதிர் பார்ப்பது போல. ஆனால் அவன் யாருக்கும் அவசியமாகப் படவில்லை. எல்லாமும் சுலபமாகவும் முனைப் பின்றியும் ஏராளமான பணமும் மகிழ்ச்சியுமாய் காணப்பட்டன. இவற்றினிடையே அவனுக்கு ஏதாவது ஒரு தொடர்பு இருக்கிறதா? இந்த தெரு முனையில் நின்று "நான்தான் சமீரான் பரூவா' என அறிவித்தான் என்றால் யாராகிலும் அவன் பக்கம் நெருங்குவார்களா- போலீசை தவிர 'இன்னும் கொஞ்சம் குடுக்கட்டுங்களா?' நிலக்கடலை விற்கும் பெரியவர் கேட்டார். அவரது நடுங்கும் விரல்கள் கடலையை தேய்த்துக் கொண்டிருந்தது. தள்ளுவண்டியின் மேல் ஸ் டவ் எரிந்து கொண்டிருந்தது. அதன் திரியில் வரும் இளஞ்சூடு அந்தக் குளிர் காற்றில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தவில்லை. வறுபட்ட கடலையின் வாசம்
காற்றில் மிதந்தது. சமிரான் இன்னும் கொஞ்சம்

(Uன்றாவது மனிதன் - 17 -
வாங்கினான். 'போதுமான அளவு வித்தீங்களா?" பொட்டலத்தை வாங்கியபோது கேட்டான். பற்கள் இல்லாத தாடையைக் காட்டிச் சிரித்த கிழவர். 'ஏதோ போதுமானது ஏதோ போதுமானது' என்றார். 'எல்லா நாளும் இதேதான்' சமிரான் அங்கேயே தொடர்ந்து நின்றான். அவன் எங்கிருந்து வந்தானோ அங்கேயே போக வேண்டுமா? அல்லது அவனது தாயிடமா? போலீசில் சரணடைந்து விடலாமா? அல்லது எங்காவது ஒரு தொலை தூர நகருக்குப் போய், பாதுகாப்பான, சட்டத்திற்கு கட்டுப்பட்ட குடிமகனாய் மீண்டும் வாழ்க்கையை தொடங்குவதா? சமிரான் மெதுவாக நடந்தான். நகரம் இன்னும் உயிர்ப்புடன் விரைந்துகொண்டிருந்தது. விளம்பரங்களின் எண்ணற்ற விளக்குகளின் ஒளியும் ஓசையுகளுமாய் தெரு விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் தன் பொட்டலத்திலிருந்த கடைசி பருப்பை எடுத்தான். காகிதத்தை தூக்கிப் போடும் நேரத்தில் அந்த துண்டு செய்தித்தாளில் ஏதோ ஒன்று அவன் கண்களில் பட்டது. கொட்டை எழுத்துக்களில் தலைப்பு அச்சாகியிருந்தது: “சமிரான் பரூவா திரும்புகிறார்' உள்ளுக்குள் உறைந்து, அதை இறுக்கிப் பிடித்தபடி நின்றான். தொடர்ச்சியாக வாகனங்களும் மக்களும் கடந்து போனார்கள். சிரிப்பு, குதூகல இசை, வண்ண ஆடைகளுடன் இளம் பெண்கள் நடந்து போனார்கள். தொடர்ந்து சிலவயதான பெண்கள். குழந்தைகளின் கூட்டம், வயதான ஆண்கள், பீடா கடையில் வம் பளந்து நின்ற கூட்டம் சிதைந்திருந்தது. இளைஞர்கள் சாலையில் நடந்து வருவதைப் பார்க்க முடிந்தது.
காகிதத்தை நழுவ விட்டான்.
'சமீரான் பரூவா திரும்புகிறார்’ இந்த முக்கியமான சிறிய செய்தி காற்றினால் அள்ளப்பட்டு, நகரக் கூட்டத்தின் அவசர கால்களில் மிதிபடுவதெள்கென தூற்றிவிடப்பட்டது.
ತಿರುಗಿ 94ல் பரிசு பெற்ற கதை இது
மனோஜ்குமார் கோஸ்வாமி
ங்கில வழி தமிழில் சோமு

Page 20
S Fryrijaj i 勒
தமிழ்ச் கவிதை வரலாற்றில் "சுவை புதிது சொல் புதிது பொருள் புதிது" என்று கவிதைக்கு புதிய இலக்கணம் G( வகுத்து புத்தெழுச்சியுடன் புதுமெருகுடன் வளர்த்தெடுத்து புதுப்பாதை வகுத்தார் பாரதி இப்பாதையில் பலர் பயணம் செய்து கடுமையான எதிர்ப்புகளுக்கு முகம் இல கொடுத்து வளர்ந்து வந்துள்ளபாதை அதன் பயணம் நீண்டது.
குறிப்பாக, சி. சு. செல்லப்பா, இன்னும் குறிப்பிடக் கூடியவர்களின் பங்களிப் பின் பயனாக தமிழ்க் கவிதையின் ஆரே போக்கு மாற்ற முற்று புதுப்போக்கு. டன் வளர்ச்சியடைந்தது, "எழுத்து" மதிப் என்ற பத்திரிகை மூலமே இது
சாத்திய மாயிற்று. இவர்களுள் பசுவய்யா, தருமுசிவராமு (பிரேமிள்), உட்படு வி. மணி வைத்தீஸ்வரன் ஆகியோர் O குறிப்பிடக் கூடியவர்கள். வேண் குறிப்பாக பகவய்யாவின் கவிதை வெளிப்பாட்டு முறைமை புதிய பரிமாணத்தை கவிதைக்கு வழங்கின. சி. சு. செல்லப்பாவின் கவிதை மதுகு
பிரஞ்ஞையின் தொடர்ச்சியின் இன்னொரு கிளைவிட்ட பரிமாணமாக பசு வயப் யாவைப் பா ர்க்கலாம் வாழ்க்கையின் அர்த்தத்தை அறியும் தேடல உணர்வை இவரது கவிதைகள் வெளிப்படுத்தின. இத்தேடலானது பன்முகப்பாங்கான வெளிப்பாட்டு நிலைசார்ந்தது.
- 〜/ இதேவீச்சுடன் இன்னொரு கிளையின் \ |Sسسج
பரிமாணமாக எழுந் தவர்தானி ジン பிரேமிள். இவரது கவிதைப் பிரவாகம் ஏனைய கவிதைப் போக்கிலிருந்து ނީ\"%, வேறுபட்டது. வாழ் கி கையை حصیر - விமர்சனமாக்கி வெளிப்படுத்தும் ()
ளின்
கவிதையில் நவீனத்துவம் மிக்க வெளிப்பாட்டு முறைமைகளினாலும் \ விதி தியாசமான கவிதை உள்ளடக்கத்தினாலும் புதியவற்றை தேடித்தேடி கொண்டுவந்ததாலும் V எழுத்துக் கவிதைகள் என 〉།། அடையாளப்படுத்தப்பட்டோரில. பிரேமிள் நான் வசித்தவர்களுள் குறிப்பிடக் கூடியவர்
 
 
 
 
 
 
 
 
 
 

கியமான
|ட்டிற்கு த்தப்பட
டியவர்
தனன்
போக்கொன்று பிரேமிள், அப்துல் ரகுமான், அபி. வைத்தீஸ்வரன் போன்றோர் இதில் குறிப்பிடக் கூடியவர்கள், இவர்கள்
கவிஞர்கள்
நவீன கவிதை வரலாற்றில
படிமங்களை சிறப்பாகக் கையாளும் காணப்படுகிறது.
அனைவரும் ஒரேவிதமான படிமக் கவிஞர்கள் எனவும் கூற முடியாது ! படிமக் கவிஞர்கள் என அடையாளப் படுத்திபுரிந்து கொள்வதற்காகக் மாத்திரமே இவர்களது பெயர்களைக் கூறலாம். :
கவிதையில் படிமங்களை பயன்
படுத்தும் அனைவரும் வெற்றிகரமாக
அல்லது சாத்தியமாக படிமங்களை
கையாண்டனர் என கூறமுடியாது: படிமங்களை கையாள்வதன் ஊடாக கவிதையின் அர்த்தத்தினையும் சிதைத்து, வெறும் சொற்களாக கவிதையை மாற்றுபவர்களும் உண்டு.
இந்தவகையில் மிகத் தனித் துவத்துடன் படிமக் கையாள்கையில்
வெளிப்படும் ஒருவரே பிரமின், ஏலவே
நடைமுறையவற்றை மரபான படிமங்:
களை தவிர்த் து நடைமுறை வாழ்விலிருந்து பெற்ற படிமங்களைக் கொண்டு கவிதையை ஆரோக்கிய மானதாக வெளிப் படுத்தியவர் எனலாம். ஆனால் இன்றைய எமது Łu 6Nomfuð ւ գտ5 கையாள்கை என்பது ஒரு தோல்வி. யுற்ற முயற்சியாகவுள்ளது படிமங்: களை வெறும் அலங்காரமாக பயன்படுத்தும் போக்கு காணப். படுகிறது ஆனாலும் சிறந்த கவிஞர்களால் படிமத்தை குறம்படக் கையாள முடியும். படிமத்தின் பணி சிக்கலானது கற்பனையை எழுப்புகிற அதே நேரத்தில் அது அறிவின் விசாரணையையும் அழைக்கிறது. எனவே தானி சுய வரிளைச் சல் இவ் வாதங் களிடம் ņof தோற்றுவிடுகிறது. இதற்கு பிரேமிள் கூட விதிவிலக்காக முடியாது! இருப்பினும் தமிழ்க் கவிதைப் பரப்பில் மிகவும் தனித் துவத்துடன் கணிப்பிடக்ககூடியவர் பிரேமிள் E=MC26T of p as of 60 g epaulis விஞ்ஞானம் சொல்லப்படும் போக்கை யும் தமிழ்க் கவிதைக்குள் கொண்டு வந்தார். ಘ್ವಿ

Page 21
பிரேமிள் ஆழ்ந்த படைப்பாளியாக தேடல் உள்ளவராக கவிஞராக, ஒவியராக, விமர்சகராக பல முகங்களை கொண்டிருந்தார். குறிப்பாக இவரது சிந்தனைகளில் மிக, கிருஷ்ண மூர்த்தியின் தாக்கம் அதிகம், இவர் வாழ்ந்த போதே பலரது தூற்றுதல்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் ஆளாகியவர். அதே போல் இவரது பாராட்டுதல்களுக்கும் துாற்றுதல்களுக்கும் ஆளாக்கப்பட்டோரும் அதிகம், எவ்வாறாயினும் ஒரு விசித்திரமான பார்வைப்புல வெளிப்பாட்டின் அதிரடிப் பேர்வழியாகவும் இருந்தார், ஒரு தனித்தீவாக தானே ஒரு பெரும் இயக்கமாக இருந்தார். பிரேமிள் வாசிப்பதையும் எழுதுவதையும் தவிர வேறு எந்த வேலையிலும் ஈடுபடாதவர், தனக் கு சரியானப்படுவதை எந்தவிடத்திலும் வெளிப்படுத்துபவர், ஆயினும் விமர்சனத் துறையில் இவரது விமர்சனப் பார்வைகள் குறிப்பாக படைப்பு முயற்சிகள் குறித்த புதிய தெளிவான பார்வைகளுக்கு எந்த விதத்தில் பங்களிப்பாற்றியது என்பது கேள்வியே.
பிரேமிள் என்ற தளங்களைக் கொண்ட படைப்பாளி நம்மை விட்டு மறைந்துபோய் விட்டான், பிரேமிளிடமிருந்து தமிழ் இலக்கியப்பரப்பு எந்தளவு ஆழங்களையும் அகலங்களையும் கண்டது என்பதை இனியாவது நாம் மதிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். எழுத்துலகில் இவரது சிந்தனைத் தளத்தில் ஒரு வித பூரிப்பு அல்லது கூர்மைப் போக்குடன் கூடிய அல்லது அநேகர் நினைக்குமளவிற்கு தோற்றம் கொடுக்கும் ஒரு புனைவு இருந்த அளவுக்கு பெரும் தாக்கம் ஒன்றினையும் இவர் நிகழ்த்தவில்லை என்ற குற்றச்சாட்டையும் சில விமர்சகர்கள் முன் வைக் கின்றனர். ஒருவித சித்துவிளையாடினார் என்கின்றனர்.
எவ்வாறாயினும் கயமை நிறைந்த இன்றைய தமிழ் எழுத்துலகில் துணிந்து நின்று போலிகளையும் பொய்மைகளையும் அம்பலப்படுத்தினார். இதன் மூலம் தனிப்பட்ட காரணங்களை விடுத்து இவரது எழுத்துத் துணிவு தமிழ் இலக்கியப் பரப்பில் சில ஆரோக்கியமான சாதகங்களையும் பெற்றது எனலாம்.
ஒருவர் இறந்தபின் தான் அவரைப்பற்றிய மதிப்பீடுகள் தமிழ்ச்சூழலில் வர ஆரம்பிக்கும், குறிப்பாக அம் மதிப்பீடுகள் மிகவும் புனைவு கொண்டதாகவும் இருப்பது உண்டு, அல்லது பாராமுகத்துடன் ஒரங்கட்டப்படுவதும் உண்டு, எவ்வாறாயினும் பழைய நிலைமைகளிலிருந்து ஒரு மாற்றத்திற்கான சூழலின் ஆரம்பம் வெளிப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது, கருத்து சூழல் மதிப்பீடுகள் ஓரளவு துணிந்து முன்வைக்கப்படுகிறது, கா.நா.சு, மெளனி, புதுமைப்பித்தன் என்று பலரது பார்வைகள் கருத்துக்கள் மதிப்பீடுகள் தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பதோடு இன்று அவற்றை தொகுத்து நூல்களாகவும் வெளிவருகின்றன,
ஆகவே பிரேமிள் குறித்தும் ஆரோக்கியமான மதிப்பீடுகள்

(Uன்றாவது மனிதன் - 19
இனி வெளிவர வேண்டும், குறிப்பாக பிரேமிள் இலங்கையைச் சேர்ந்தவராக இருந்தாலும் (திருகோணமலை) ஈழத்து கலை இலக்கியச் சூழலில் இவரது பாத்திரம் குறிப்பிடும் வகையில் அமையவில்லை தமிழக இலக்கியச் சூழலில் இவர் பேசப்பட்ட அளவுக்கு இங்கு இவர் பேசப்படவில்லை, இத்துடன் இவரை தமிழகத்தை சேர்ந்தவராக பலர் கருதக் கூடியளவுக்கு இவரது இருப்பிடமும் சிந்தனையும் இருந்தது.
தமிழ் இலக்கியச் சூழலில் பிரேமிளை நியாயமான மதிப்பீட்டுக்கு நாம் உட்படுத்தும் போது புனைவுகளை அல்லது புறக்கணிப்புகளை தவிர்த்துவிட்டு நிதானமான, ஆரோக்கியமான மதிப்பீட்டை மேற்க்கொள்வோம்.
உறைந்த இருள் இது இருட்டு எல்லைகளில் லாத இருட்டு கொடுர இருட்டு தொடர்கையில் ஓடு ஒடு ஒழி! வெளிச்சத்துள் வெளிச்சமாய் ஒழி தாயின் முந்தானையுள் பதுங்கு முடிந்தால் முட்டையுள் இறங்கு கண்ணை மூடு உள்ளே வரும் மங்கலிருட்டுள் ஊன்றிப் புதைந்து கொள் மேலும் இதுவே இருட்டுராவின் மந்திரமென ஆழப்பதிந்துறையும் வானத்தை இழுத்து மூடு நெலவை கசக்கி குப்பையில்போடு நட்சத்திரங்களை கோப்பையிலிட்டு கலக்கிக்கரை வரண்டு பொறுக்கும் தொண்டையுள் ஊத்து இப்போதைக்கு இங்கே எதுவும் பிரயோசனமுமில்லை

Page 22
(Uன்றாவது மனிதன் -20
(ો ഴ്ന്ന
1. நினைவுக்குறிப்புகளைப்
புரட்டித்தேடுகிறேன் உன்னோடு பேசிய நினைவில் அடங்காத
கணங்களைத் தேடி .
இன்னும் சிதைந்த எழுத்துக்களில் வழித்தெடுத்த உன்முகத்ை முத்தமிட அவாக்கொள்கிறேன். ஒருகணமேனும் வாழ்வின் கடந்த யுகம் என்மீதுபடிய
2. மழைகுளித்த மரங்கள்
வெயில் சூட்டுக்கு இதமாய் முதுகு திருப்பும் முப்பத்தோராவது தடவைய மேய்ந்து முடிந்த உன் காகித முகம் . பூட்டியகதவுகளை நிமிர்ந்து நோக்கும் நாய்க்குட்டி மனசுக்கு சமாதானம் சொல்வதாய் வார்த்தைகள் ஏதுமில்லை என்னிடம் !
3. "ஷெல்களிலும், 'சொல்களி சிதறிப் போகின்ற வாழ்க்ை குனிந்து தடவுகின்றேன்

டஆகர்ஷ்யா
பிரிவுசொல்லிப் போனது பஸ்' வண்டி காதிற்குள் குடைந்தன துயர ஒலங்கள் இருப்பென்றும், இறப்பென்றும் பச்சோந்தி முகம் காட்டும் நாட்களின்
த மார்பில் உதைந்து
அடிமரம் பற்றி அழுகிறேன் தழுவி அணைப்பனவோ வேட்டொலிகள்!
ઉી t
4. எழுதுவதற்காய்
பிரியப்பட்டுச் சேகரித்த வார்த்தைகளெல்லாம் காணாமல் போயின இருள் பிரிந்த
காலை நேரத்து மணிஓசை உன்னைச் சலனப்படுத்தியிராதா நண்ப .? இருப்பின் என்னையும் நினைவுகொள் ஒருகணமேனும் !
5. மரங்கள் முறிந்து வீழ்ந்தன
அபசகுணத்தின் அறிகுறி லும் ஒவ்வொரு மரத்தினுள்ளும் 50DU ஒவ்வொரு வாழ்க்கை,
ஒவ்வொரு முகம்,

Page 23
3
ஒவ்வொரு நினைவுகள். யாவும் களையப்பட்டு தெருவில் கிடந்தன சிறு துகள்களாய்! மரங்களிலும் பலவகை உண்டெல்லோ? வைர மரங்கள் பற்றிய துயரம் சிறிது அதிகந்தான் எனினும் மரங்கள் போயிற்று மழை பற்றிய நம்பிக்கை இனிஇல்லை.
அமைதிகலைந்தது மண்டபம் ஈக்கள் கலைக்கப்படும் புனிதப் பெட்டிகளைநோக்கி நெரிந்து வந்தனர் ஒவ்வொருவாயிலிருந்தும் வீனியுடன் கசிந்தது அழுகை . நண்பி! தடைப்பட்ட உன் பயணம் பற்றி பெருங்குரலுடன் அழுகின்றனர் மக்கள் கேட்கிறதா உனக்கு ?
கால் அழுக்கலிலும் கைப் பரிவிலும் என்னைப் புரிந்து கொள்கிறாயா?
 

(Uன்றாவது மனிதன் -21
பெறமுடியாத அதிசயப் பொருளல்ல நீ விரல்களின் சரிவில் ஆனாலும் எனதன்பு ஒட்டிக் கொண்டுதாணிருக்கிறது இனியும் படிமங்களாய் என்னைச் சிறைவைத்துக் கொல்லாதே p
அறிந்திருக்கக் கூடும் வேப்பம் பிசினைப்பற்றி அவை ஒருபோதும் உரிந்தபின் ஒட்டிக்கொள்வதில்லை.
தீடீரென்று போல அது நிகழவில்லை எல்லா மாற்றங்களும் படிப்படியானதே!
கழுத்தை வலிந்த புத்தகங்களிலிருந்து நிமிர்ந்த போது மரங்கள் மங்கின பறவைகள், அணில்கள், மனிதர்கள் கண்களிலும் கருமேகம் ஒன்று ஊர்ந்து சென்றது - கலையாத மேகங்களிடை பார்வையின் சிறுபகுதி தொலைந்துவிட்டது மீண்டும் பெறமுடியாத
என் வாழ்க்கையும் தான்!

Page 24
(ன்றாவது மனிதன் -22
உங்களுடனும் உங்களுள் ஒருத்தியுடனும்
காற்றில்லை, கரையோர நாணல்கள் ஆடவில்லை, ஆற்றின் கண்ணிர் மெல்லிய கோடாய் வழிகிற நேசத்தை இழந்த குயிலோ நீள் துயரம் பாடு நேற்றுவரை என்னருகில் எத்தனை விழிகள்! அவளும் இருந்தாள்.
அவளாக இருந்தாள். நேசத்தின் உச்சமோ .? நிர்மலமான நாட்கலே சொற்களின் எல்லைக்குள் அடங்காத சுருதியே உயிர்ப்புறும் ஆத்மா என்றிருந்தேன் எத்தனை திங்கள், எத்தகை நிலவு எங்கள் பாடலில் செம்மண் சுடர சேர்ந்து நடந்
முற்றிலும் பொய்யோ? மூச்செறிந்து நடக்கின்றேன். ஈரமற்ற மணலில் கால்கள் புதையும், ஈரமற்ற மடிகளில் புதையுமோ முகம்,
பரவைக்கடல் மீது, படகேறிப்பாடியதோர் நாள் . இரவுகளிலிருந்து வாதம் புரிந்தது பலநாள் . ஆழ்தியானப்பயில்வுகளில் எத்தனை நாள் .? கைபற்றிக் கண்ணிர் துடைத்து, - முடிகோதி முத்தமிட்டு, பெய்யன்றி புரிதலின் ஆழமேன்றிருந்தேன் ஐயோ ! அனலெரி நெஞ்சும் ஆற்றொணாத்துயரமும் புனல்வற்றிப்போயழும் ஆற்றின் கரையில் ஆறு
பொய்மையின் முகந்தெரியப் போயழமடியுமில்ை
அவளும் இருந்தாள். சொல்லே விளங்காத மனங்களில் சுருதியறைய வில்லேற்றி நாண் பூட்டி விரையும் அம்புச் சொற்கள் அவளும் பேசினாள்.

ான என் காதல் .
மோ?

Page 25
வி
அழி
வசையன்றி
இருளின்
ST6
நீண்ட தெருச்
கண்மூடிக்
'நெஞ்ச
இறுதிப்பிரிதலுக்
 

(Uன்றாவது மனிதன் -23
நேசமொன்றை நெஞ்சில் சுமந்ததற்காய்
நீயும் எய்யடி ܗܝ
சாகவே நான். அற்றகுளத்தில் அறும் பறவைக்கூட்டம் உற்ற இடத்தில் உறையும் விழிகள். ரையும் வழியில் நசியும் மனங்களை நானறிவேன். ஆறியிருந்தொருகால் அழவும் கூடும் நீங்கள், யா மனமொன்று அன்றேனும் இருக்குமென்றால். காதல் மறக்கலாம், கனவுகள் துறக்கலாம், வாழ்தல் என்னும் இருப்பிற்காய் வேறறியாச் சமூகத்தின் வேர்கள் அறுமென்றால் வெஞ்சமர் ஒன்றில் மெய்யுமாகுதி ஆகலாம் கிளைவெட்டி விதைகளை மனத்துான்றி எழும் விருட்சத்தின் பொய்நிழலில் போய்ச்சுகம் கொள்ள, நான் மாட்டேன்.
போங்கள் நீங்கள்.
நன்றி உங்கள் சொற்களுக்கு நன்றி நில்லாதலையும் அவள் விழிகளுக்கும் நானறியாப் பொழுதில் நீ சுடர நீயறியாப் பொழுதில் நான் தளர புலத்திருந்து சுடர்ந்த உன் விழிகள் சாரமிழந்தன )மதன் துயரப்படிவுகளிலொன்றாய் கணக்கிடவோ? 5களில் விழிவழிய நான் போன நாட்கள் போயின நெஞ்செங்கும் புண்ணென்றும் நீ மயிர்ப்பீலி கொணர்வாயென்றும் கனவுகாணும் முட்டாள் கவிஞன் என்றிருப்பாயோ? மென்னெஞ்சம் மன்றாடும் புழு என்றிருப்பாயோ?
நானறியேன் நேசத்தின் முன்னால் த்துமான மெதற்கென்று நீயொருகால் உணர்வாய் மென்மையும் வன்மையும் மென்மைகொள் ஆத்மாவுமாய் நான் நிமிர்கையில் நீயும் உணர்வாய்.
وتترك நான் விடைபெற விரும்புகிறேன் நண்பர்களே ! கு முத்தங்களோ கைலாகுகளோ வார்த்தைகளோ தேவை இல்லை. கடந்த கால அனுபவங்களே போதும் !
தேவஅபிரா

Page 26
(Uன்றாவது மனிதன் -24
6
G SS
Lண்டிட் குயின்" திரைப்படத்தை பலருடனான சேகர்கபூரின் இயக்கத்தில் பூலான் தேவியாக வரு குயின் ” திரைப்படத்தின் கதை நிகழ்காலத்தி வெற்றி. பூலான் தாழ்த்தப்பட்ட பழிவாங்கப்பட்ட பெண்ணின் போது ஒரு பெண் எப்படியெல்லாம் துன்பப்பட்டாள் என்பதுதான் மேலோட்டமான திரைப்படந்தரும் :ெ செய்தியை மட்டும் பார்வையாளர்களுக்கு வழங்கு வகையில் "பண்டிட் குயின்" இன்று பல்வேறு தள ஜனநாயக கோஷங்களை நோக்கி பாரிய வினாத் தூண்டும் ஒரு திரைப்படம். பூலான் - இன்று இந்தியப் பாராளுமன்றத்தில் மக்க ஒன்று பூலானின் மீது காட்டமான விமர்சனங்களை சமூக அமைப்புகளின் மீது விமர்சனங்களை வை: ஆனால் அன்று இத் திரைப்படத்தை பார்த்தவர்க தரிசிக்க நமது பலவீனங்களால் தவறி விடுகிறோ பூலான் தேவி சரியா? பிழையா? என்பதல்ல விட கனவுகளினதும் நம்பிக்கைகளினதும் மீது பிழைய வருகை என்பதே உண்மை. இந்தியாவில் பூலான்தேவியை கைது செய்ய இந் அவர் பெயரை நோபல் பரிசுக்காக சிபார்சுசெய்ய பூலான் இந்திய அரசுக்கு சொன்ன செய்தி "என்ன விடாதீர்கள்” என்பதே !
来 LDTர்ச் 08 பெண்கள் தினம்!
அன்றைய தினத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங் "நாற்று நடும் பெண்களின் செவ்வாழை தண்டுக்க சாரார் இது அபத்தமான கற்பனை என்றும், பெண்க இதுபற்றி கவிஞர் ஜெயபாலனிடம் கேட்டபோது
“பெண்கள் நேசம்தான் என்னை மனித நேசனாக்கி உள்ளனர். எனது தாயின் மூலைக்காம்பையும் முத மனித நேயம் என்னுள் இறங்கியது" என்று நான் என்னைப் பொறுத்தவரையில் பெண்கள் இல்லாத பெண்கள் இல்லாத ஒரு மண்டபம் . கல்லறை
எனது கண்களுக்கு பெண்கள் ஆளுமையும் அழகும் நான் எழுதக்கூடும் என்றார். "
 

கலந்துரையாடலுடன் பார்க்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. ம் சீமா பிஸ்வாசின் நடிப்பு - சோடை போகவில்லை. "பண்டிட் ம் நம்மை தொடர்ந்து வருகிறது என்பதுதான் இப்படத்தின்
கதையாகி, அவ் அநீதிகளுக்கெதிராக போராட நிர்ப்பந்திக்கப்படும் . பேராடினாள் பின் எப்படி பொது வாழ்க்கைக்கு திரும்புகிறாள் ய்தி. வதுதான் - காத்திரமான சினிமாவின பங்களிப்பு இல்லை. அந்த ங்களில் நின்று எமது சமூக அமைப்புகளை நோக்கி, எங்கள் தொடுக்க, அதன் விளைவுகள் பற்றிசிந்திக்க வைக்க எம்மை
5ள் பிரதிநிதியாக இருக்கும்போது - இப்படத்தை பார்ப்பவர்கள் வைக்க முடியும். அல்லது பூலானை இப்படி வாழ நிர்ப்பந்தித்த க்க முடியும். இது அவரவர் பார்வையை பொறுத்ததே ! ரிடைய எழுந்த விவாதங்களானது இன்னும் நாம் யதார்த்தை ம் என்பதைக் காட்டியது. பம் - எமது சமூக அமைப்புகளின் கட்டுமானாங்கள் புராதன ாக இடப்பட்டிருக்கும் வரை பூலான் தேவி தவிர்க்க முடியாத
நியப் பொலிஸார் தேடிக் கொண்டிருந்த போது வெளிநாட்டில் பட்டிருந்தது.
ன மீண்டும் சாம்பல் பள்ளத் தாக்கிற்கு செல்ல நிர்ப்பந்தித்து
கில் வாசிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் கவிஞர் ஜெயபாலன் ல்கள்” என எழுதியிருப்பது பற்றி விவாதம் எழுந்தது. ஒரு ளை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்றும் விவாதித்தனர்.
து. பெண்களே எனது உலகத்தை உயிர்ப்பிக்கும் அழகாக } காதலியின் விரல்களையும் முதல் முதலில் தொட்டபோதே ழுதியது பொய்யல்ல.
}ரு தெருவில் நடப்பது மரண ஊர்வலம்!
அர்த்தமும் அன்பும் மிக்கவர்களாகவே உள்ளனர் இப்படித்தான்

Page 27
அண்மையில் மலையாள நடிகர் மம்முட்டி தமி ரசிகர்கள் கவனத்திற்கு கொள்க! (அதன் சாராம்ச இந்தியாச் சினிமாவில் தரமான படங்களைத் தர "அவுகளுடைய ராவு” போன்ற மலினப் படங்களும் மம்மூட்டி ஆச்சரியமாக மலையாளத்தில் அப்படிய விட்டு, உண்மையைச் சொல்வதானால் இப்படியா6 நோக்கத்திற்காக தமிழ் இரசிகர்களுக்காக எடுக் திரையரங்குகளில் திரையிட்டாலே அதை எரித்து இதுதானா தமிழ்ச் சினிமா?
கொழும்பிலிருந்து வரும் மாற்று தமிழ் பத் சென்றிருக்கிறார். பத்திரிகை ஆசிரியரைக் கண்டவுடன் பத்திரிகைக் "ஓங்கட பேப்பர் அதிகம் விக்கல்ல" "ஏன் உங்கட பேப்பர்ல நடிகைகளின் படங்கள் ே பத்திரிகை ஆசிரியர் சிரித்துக் கொண்டு பத்திரிை "எந்த நடிகையின் படத்தை போடனும்” "குஷபூ” குஷபூவை சொல்லிவிட்டு ஒரு கணம்தானும் தாமத வேண்டாம்” அதுபழசு, ரம்பாட படத்த போடுங்கோ
செத்து விடாது
எனக்குள் .
வண்ணங்கள் ப
நாளை மலரும்
இப்போ. பிரதிநிதியாய், நான் அதிகம் கூறமுடியாது காலூன்றுவதற் நாளை! யாவும் ஒருவேளை எனக்குள் மறைந்தன அமிழ்ந்துள்ள போதை, ஆடைகள். யாவற்றையும் நிர்வாணப்படுத்தி களையப்பட்டுக் அழுகையின் நீட்சியில், யாவரையும் நிர் நேற்றைய கண்டதில், முடிச்சுக்களை கட்டிவிடும் சகிக்க முடியாத பொறுத்திருப்போம். அதோடு சந்தே அதற்குள், ஒரு புறம். எனக்குள்ளிருக்கும் மனிதம் செத்துவிடாது.
ஆண்டி - மீள்
இந்த நூற்றாண் என் பாதையில் முடியும் தறுவாய் மலர்களைத் துவுவதும், ச் நினைத்துப் பார்
இல்லை, இல்6ை
திரும்பிப் பார்க்

(Uன்றாவது மனிதன் -25
ழ் சஞ்சிகைக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றை தமிழ் சினிமா ம் இதுதான்)
ந்ததில் மலையாளத்திற்கு அதிக பங்குஉள்ளது. ஆனாலும் வந்திருக்கின்றனவே என மம்மூட்டியிடம் கேட்கப்பட்ட போது ான படங்கள் வந்திருக்கின்றனவா என ஆச்சரியமாக கேட்டு எ படங்கள் தமிழகத்தில் இருந்து வந்தவர்களினால் வர்த்தக கப்படும் படங்கள்தான். இப்படியான படங்களை மலையாள விடுவார்கள் என்றிருக்கிறார்.
திரிகையொன்றின் ஆசிரியர் பத்திரிகைக் கடையொன்றிற்கு
கடைக்காரர் சொன்னார்!
பாடல்ல”
க கடைக்காரரிடம் கேட்டார்.
நிக்காது மீண்டும் பத்திரிகைக் கடைக்காரர் சொன்னார் “குஷ்பூ , இப்ப எல்லாரும் அதைத்தான் கேட்கிறாங்க”
என் காலடியில்
ல அடித்து, புதுயுகத்தின் யாரோ தனது கவிதைகளை
இரத்தத்தில் தோய்த்து எடுத்து கு முன், அடுக்கிக் கொண்டிருப்பதை
ஒரு நாளும் ஒவ்வொரு . நாளும் கொண்டிருந்தன நீந்திக் கடந்து விட்டேன் வாணமாய் ஆனால்
மரத்துப் போன உணர்வுகள் த, அருவெறுப்பு, விரக்தியின் கோரம் ாசமும், கலந்த சாம்பராய்
எப்படியோ - ஆண்டி - கழிகிறது
வாழககை
நினைத்துப் பார்க்கிறேன் இல்லை, இல்லை PCB திரும்பிப் பார்க்கிறேன். பில் க்கிறேன் - ஆண்டி -
ᏁᏇ
கிறேன்

Page 28
(Uன்றாவது மனிதன் 26
உலக அளவில் அரசியலில் பாதிப்புச் செலுத்திய ஆசியத் தலைவர்களில் முதன்ைைமயான மூவர் காந்தி, மாவோ,ஹேசிமின். இவர்களுக்கு அடுத்ததாக வந்த தலைவர்களில் கடைசி முக்கியமான தலைவராக இருந்த டெங்ஸியாவோ பிங் 1997 பெப்ரவரி 19ம்திகதி மரண மெய்திவிட்டார்!
தனது 92ம் வயதில் மரணமுற்றிருக்கும் நவீன சீன வரலாற்றின் முக்கியமான பிரதிநிதி இவர். மார்க்ஸிய இயக்கங்களின் தோற்றம், எழுச்சி, வளர்ச்சி, தேக்கம் என்பதை இவர் வாழ்ந்ததன் மூலம் அவதானிக்க முடியும். 1927 - 35 காலகட்டங்களில் மாவோவின் மிகப்பலமான ஆதரவாளான அரசியல் துறைக்குப் பொறுப்பாளராக இருந்தார். மாவோவின் நீண்ட பயணத்தில் பங்குபற்றினர். 1958இல் மாபெரும் பாய் ச் சல சேதங்கள் விமர்சிக்கப்பட்டபோது மாவோவின் பகைக்கு ஆளாகினார்.
1966-76 பத்தாண்டு கலாச்சாரப் புரட்சியின் காலகட்டத்தில் பலமுறை கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டார். 73இல் அதிகாரத்திற்கு “சூசன்லாய்” ஆதரவில் வந்த இவர், அவரது மரணத்தின் பின் மறுபடி 76இல் நால்வர் குழுவினால் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். அதே ஆண்டில் பிற்பகுதியில் 1976 மாவோவின் மரணத்தின் பின் நால்வர் குழுவை கைது செய்து விட்டு மறுபடி பதவியேற்றார்.
1978-79 காலகட்டத்தில் நவீனப்படுத்தல், பொருளாதார சீர்திருத் தம் போன்றவற்றைத் துவக் கரினார். அமெரிக்காவுடனும் மேற்குலகுடனும் ஒத்துழைப்பை வேண்டி சீனாவை திறந்து விட்டார்.
டெங்ஸியாவோ யிங் மாவோவின் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து அவரது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஆதரவாளராக இருந்தார். இருவருமே மிகக் கடுமையான தேசியவாதிகள், சோவியத்யூனியன், ஹிட்லர் பற்றிய விமர்சனம் போன்றவற்றில் உடன்பட்டனர். மாபெரும் பாய்ச்சல், கலாச்சாரப் புரட்சி போன்றவற்றில் மாவோவோடு உடன்படவில்லை. ஆயினும் கலாச்சாரப்புரட்சிக்கு முந்திய
 

மக்கள் இராணுவம் Inătians||Iă blăniang 6Teğio 2 órgrijă 59Tenslu உடைத்தவர்
பூர்வாங்க காலகட்டத்தில் அறிவு ஜீவிகளுக்கெதிராக நிலைப்பாட்டையே இவரும் கொண்டிருந்தார்.
இவரது காலத்தின் தான் இரண்டு அவக்கேடான காரியங்கள் நடைபெற்றன
1 வியட்னாம் மீதான படையெடுப்புக்கு காரணம் எல்லைத் தகராரே எனச் சொல்லப்பட்டபோதும் வியட்னாம் . கோட்பாட்டை தூக்கியெறிந்தது.
2 நிராயுதபாணியான பல்லாயிரக் கணக்கான மாணவர்களை டாங்கிகளின் சக்கரத்தால் நசுக்கி கொன்றமை,
டெங்குக்கு மார்க்ஸியம் என்றால் என்னவென்றே தெரியாது என்று கூட மாவோ குறிப்பிட்டிருக்கிறார். “பூனை கறுப்பா வெள்ளையா என்பதல்ல பிரச்சனை பூனை எலி பிடித்தால் சரி” என்பதுதான் அவரது கோட்பாடாக இருந்தது. பொருளாதார வளர்ச்சி தொடர்பான விடயத்தில் சோசலிய பொருளாதாரம், முதலாளித்துவப் பொருளாதாரம் என வீணாக விவாதத்தில் ஈடுபடுவதை கட்சிக்குள் நிராகரித்தார்.
பல்வேறு விமர்சகர்கள் சொல்கிறபடி டெங்ஸியாவோ பிங்குக்கு அரசியல் சிந்தாந்தம் என்று ஏதும் இல்லை. எதைச் செய்தேனும் காரியம் சாதிப்பதென்பதும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது என்பதும்தான் அவரது சிந்தாந்தமாக இருந்தது. கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுயவிமர்சனம் செய்து கொண்டவராக இருந்த அவர். அவர் அவ்வாறு செய்து கொண்ட தெல்லாம் பின் நாட்களில் அதிகாரத்திற்கு வந்து அதே விசயங்களை மறுபடி செய்வதற்கான அவகாசத்தை ஏற்படுத்திக்கொள்ளத்தான் என்பதை வரலாறு நிருபிக்கிறது.
ஒரு சோசலிஸ் சமூகத்தில் புரட்சிகர கட்சியின் அங்கமாகச் செயற்படும் மக்கள் இராணுவம் மக்களைக்கோலை செய்யாது என்ற உன்னதக் கனவை உடைத்த பெருமை டெங்சியாவிற்கும் அவர் காலத்தைய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குமே உரியது.
- யமுனா ரஜேந்திரன் -

Page 29
சிங்களத் தீவு
பஞ்சுப் பொதியிறுகிப்
பாறையென்றாகுக-மனமும் பாறையென்றாகுக.
தசையின் நார்களெலாம் விறைத்தே கல்லென்றாகி 6
வரண்டே-நீரிழந்து கண் நீர்ச்சுரப்பியெல்லாம் பயனற் பதாங்க அங்கமென்றாகி அ
அச்சத்தில் உறைகிற ஆத் பயத்தில், வெல வெலத்தே -நடுங்கி உதறுங் காலுங் கையும் யார்க்கும் ே
முட்கம்பி முறுக்குகள் உள் நோவெடுக்குங் குதவழியே யார்க்கும் வாய்க்குமிங்கு.
கொச்சிக்காய்ப் புகைக்கெ முகஞ்சிவத்து வீங்கி நரம்பெழும்பத் தும்மு துன்புறலும் புதிதல்ல.
வெட்ட வெட்டத் தளைக்கி குறியொடு ஆண்களும், பெண் மகவெலாம்ஒரே போது நாலைந்து பேர் புணர ஒருங் வன் புணர்ச்சிக்கியைபான ( இனியெழுக.
இருளில் ,
ஆரத்தழுவி இறுக்கியெலாம் முத்தமிட்ட உங்கள் காதல் உணர்வெ6 மரத்தே அழியட்டும். யாரிலும் யாரும் அதிகம் அ யாரும் யாரிலும்,
அன்னையே பிதாவே, கண்ணின் கரு மணிக்குள் ை உள்ளதும் ஒன்றைஅருமந்த மகவென்னைத் திரும்பச் செய்யுங்கள். அப்படியே திரும்ப.
றவுமி
19970226 gy 61 lipsoof

.2 /
வன்மங்கொள்க.
றுப் அழிக.
மாவும்,
வண்டாமினி.
எரிறங்கிப் புண்ணாக்க
ான்றும் சா நேரா.
}தலும் தும்மித்
கிசைவெய்தி யோனியொடே
. காதற் பெண்பற்றியதான υπτιο
ன்பு செலுத்தேல்
வைத்தே காத்த உங்கள்

Page 30
(Uன்றாவது மனிதன் -28
புகலிட இலக்கியத்தை நாம் ஒரு இயக்கமாக வளர்ந்தெடுக்க வேண்டும், அதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். பல்லின கலாச்சார சூழல் நிலவும் விப ஐரோப்பிய சூழலில் பல வேறு இலக்கியங்களைக் கற்று முனைப்போடு குலந் துை செயற்படும் நிலமையுள்ளது. ஆனால் நம் பரிக் கைக் குரியதாக இவப் இலக்கியங்கள் இல்லை. இன்று புகலிட இந்தியப் பத்திரிகைகள் புகலிட இலக் கியங்களுக்கு முதன்மை கொடுத்து பிரசுரிக்கிறது. ஐரோப்பியாவிலும் இன்று இந்த நிலைமையுள்ளது இது வணிக நோக்கமானதாகவே உள்ளது.
இப்போது அந்தந்த நாடுகளில் புகலிடம் கோரியவர்கள் அந்தந்த மொழிகளில் எழுதுகிறார்கள். ஜேர்மனியில் புகலிட இலக்கியத்தைப் பற்றி நான் பேசிய போது தமிழில் புகலிட இலக்கியம் ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினால் புகலிட இலக்கியத்தின் தன் மைகளை வைத்து புகலிட இலக் கரியம் என அடையாளப் - படுத்துவதா அல்லது இலக்கியங்களை வைத்து புகலிட இலக்கியம் என அடையாளப் படுத் துவதா என்ற பிரச்சினை எழுகிறது.
தமிழின் முதலாவது புகலிட இலக்கியவாதி பாரதிதான். அரசியல் காரணங்களுக்காக வேண்டி அன்று இந்தியாவில் இருந்து பிரஞ்சுக்காரர்களின் கொலணியாகவிருந்த பாண்டிச்சேரிக்கு சென்று "குயில் பாட்டுப்” போன்ற அற்புதமான கவிதைகளை எழுதியவன் பாரதிதான். நான் தேடிப் பார்த்தது வரை அவன்தான் தமிழின் முதல் புகலிட இலக்கியவாதி. ஜேர்மனியில் 1933 - 1944 வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட இலக்கியங்கள் அங்கு புகலிட இலக்கியம் எனப்படுகிறது. புகலிட இலக்கியம் என்பது பல வருடங்களுக்கு முன்பே தோன்றியது. ஆனால் இன்றைய தமிழ் புகலிட இலக்கியத்தில் அதன் அனுபவம் புதிது. தமிழ் இலக்கியத்திற்கும் புதிது, இவ்வனுபவங்கள் முழுமையாக சொல்லப்படாவிட்டாலும் கூட, இந்த அனுபவங்கள் மாற்றப்படமுடியாது! இவ்வாறான புகலிட இலக்கியத் தன்மைகள், அனுபவங்கள் இலக்கியங்கள் ஊடாக வெளிப்படுகின்றன.
அரசியல் காரணங்களுக்காக ஐரோப்பியாவை நோக்கி அதிகமாக எம்மவர்கள் சென்ற ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் 23 சிறுபத்திரிகைகள் வந்தன, தூண்டில், அஆஇ, நான்காவது பரிமாணம், பனிமலர், மனிதம் என பல்வேறு பெய்ர்களில், ஆனால் இன்று ஒரு பத்திரிகையும் இல்லையென்ற நிலையுள்ளது. உலகில் பல்வேறுப்பட்ட
 

புகலிட இலக்கியவாதிகள் படைத்த புகலிட இலக்கியங்களை பார்க்கும் O போது அது எதிர்ப்புகுரல்களாகவே பியின் இருந்திருக்கின்றன. ஆனால் இங்கிருந்து வந்தவர்களில் பெரும்பாலானோர் O
ரயாடலில் எழுதுவது தங்களது பிரிவைப்பற்றியும் தங்களது துயரங்களைப் பற்றியுமே
லக்கியம், அதிகமாக இருக்கிறது.
ஐரோப் பியாவில் இலக் கரியச் முல் பற்றி செயற்பாடுகள் மிகவும் சிறு பகுதியாக மேற்கொள்ளப்பட்டாலும் மிகவும் காத்திரமாக நடைபெற்றுவருகிறது. இலக்கியச் சந்திப்புகள் இதில் முக்கியமானது. இரவு பகலென வேலைக்குப் போய் வருபவர்கள். 15, 20 பேர் சந்திப்பது என்பது . மிகவும் முக்கியமானதுதான். இச்சந்திப்பை ஏற்படுத்தி தருவது அங்கு நடைபெறும் இலக்கியச் சந்திப்புகள்தான், உலக இலக்கியத்தில் தொடங்கி, மேற்கத்திய எழுத்தாளர்கள், ஈழத்து இலக்கியம், மலையக இலக்கியம், முஸ்லிம்கள் பற்றி, அலசுவதற்கு கருத்துப் பரிமாறுவதற்கு வாய்ப் புதருவது
இலக்கிய சந்திப்புகளே.
புகலிடச் சூழலில் பெண்ணிலைவாத செயற்பாடுகள் மிகவும் ஆழமாக முன்வைக்கப்படுகின்றன, செயற்படுத்தப்படுகின்றன, மிகவும் ஆணித்தரமாக கருத்துக்களை முன் வைக்கக் கூடிய தமிழ் பெண்களை காணக்கூடியதாக இருக்கிறது. பெண் நிலைவாத, பெண் எழுதி தாளர்களின் எழுத்துக் களை தொகுத் து பத்திரிகைகளாக வெளியிடும் நிலை அங்கு இப்போது தோன்றியுள்ளது. புகலிடச் சூழலில் மாற்றுக் கருத்துக்கான சுதந்திரத்தை உலுப்பிய நிகழ்வு சபாலிங்கம் படுகொலை, சபாலிங்கம் போராட்டம் தொடர்பான, அங்குள்ள புகலிட சூழல் தொடர்பான ஆவணப்படுத்தலில் ஈடுபட்டு வந்தவர். அவரின் உழைப்பு முக்கியமானதாகவிருந்தது. ஆனால் அவரின் மறைவுக்குப்பின் இவற்றை முன்னெடுப்பதில் அதிக அக்கறையை யாரும் காட்டவில்லை, இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள், பத்திரிகைகள் அங்கு கிடைப்பது மிகவும் குறைவு, இலங்கையிலிருந்து ஐரோப்பியாவுக்கான கலாச்சாரப்படையெடுப்பு மிகவும் குறைவானதே, ஆனால் அவ்வப்போது இந்தியாவிலிருந்து தொழில் முறை சார்ந்த கலைஞர்கள் வந்து போகிறார்கள்.
அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் (சீதனம்) அடக்கப்பட்டவர்கள் அதன் கொடுமைகளுக்கெதிராக குரல் எழுப்ப நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அந்தக் குரல்கள் தான் புகலிட இலக்கியமாகும். ஆனால் தொழில் நிமித்தமாகவோ,

Page 31
பொருளாதார நிமித்தமாகவோ அல்லது அரசாங்கத்தின் அல்லது அமைப்புகளின் நிமித்தமாகவோ செல்பவர்கள் எழுதுவது புகலிட இலக்கியமாகாது. '
தங்களுடைய அரசியல் சமூக பொருளாதார நெருக்கடிகளின் ஊடாக தனித்தோ, கூட்டாகவோ வாழ முடியாது தங்களுடைய நாட்டிலிருந்து இடம் பெயர்ந்து இன்னொரு நாட்டில் வாழ்ந்து கொண்டு அந்த விசயங்களை தனது எழுத்தின் ஊடாக வெளிப்படுத்துவதைத்தான் புகலிட இலக்கியம் பிரதிபலிக்கும்.
நூல் - எரி நெருப்பிலிருந்து (கவிதைத் தொகுதி) ஆசிரியர் :- ஒட்டமாவடி அறபாத்
90களில் அதிமாக எழுதத் தொடங்கியவர் அறபாத், சமகால மானிட அவலங்களிலிருந்து பிறந்த அவரது கவிதைகளில் அதிகம் வெளிப்படுவது மானிட துயர்களும் அடக்குமுறைக் கெதிரான எதிர்ப்புக் குரல்களும்தான் - இன்று அதிகம் பேர் கவிதை எழுதுவதாக பிரகடனம் செய்தாலும் எவ்வித பிரகடனங்களும் இல்லாமல் கவிதை, சிறுகதை என எழுத்துலகில் வளர்ந்துவரும் நம்பிக்கை தரக்கூடிய ஒரு படைப்பாளியின் போக்கு நீண்டகாலமாய் இவர்மேல் அவதானித்திற்குட்பட்டிருக்கிறது. தேடலும் வாசிப்பும் பயணமும் உள்ளவர் என்பது இவரது படைப்பின் பார்வையிலிருந்து வெளிப்படுகிறது. இவரது கவிதைகளில் தமிழகப் படைப்பாளிகளின் தாக்கம் இல்லை, ஆனால் பலஸ்தீனக் கவிஞர்கள், பப்லோ நெருடா போன்ற எதிர்க்குரல் கவிஞர்களின் தாக்கம் அதிகம்
 

(ன்றாவது மனிதன் -29
அங்கு எமது புகலிட இலக்கியம் பெரிதாய் ஒன்றையும் சாதிக்கவில்லைதான். ஏனைய பிற மொழி புகலிட இலக்கியங்களுடன் ஒப்பிடும் போது அநேக புகலிட இலக்கியகாரர்கள் கூட நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள் இது ஜேர்மனியிலும் நடந்திருக்கிறது. ஆகக் குறைந்தது, இங்கு வந்த நாவல்களான "புதியதோர் உலகம்", "லங்கா ராணி’ போன்ற நாவல்கள் கூட அச்சூழலில் எழுதப்பட முயற்சி எடுக்கப்படவில்லை.
始
இருக்கிறது. இது இவரின் பலத்துடன் சம்பந்தப்பட்டதா அல்லது இன்றைய எமது சமூக அமைப்பின் பலவீனத்துடன் சம்பந்தப்பட்டதா என்பது கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய ତୁର୍ଦiy].
ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் மற்றொரு வளர்ச்சியான "இளம் படைப் பாளிகள்” பற்றிய மதிப் பீட்டில் தவறவிடப்படாதவராக அறபாத் வெளிப்படுகிறார். ஆனால் கவிதைகளில் உள்ள இவரது அக்கறை கவிதைத் தொகுதியை அச்சிட்டதில் இல்லாதது பெரும் குறையே 1
- மர்லினா
நூல் :- திறனாய்வுப் பார்வைகள்
ஆசிரியர் :- கே. எஸ். சிவகுமாரன்.
ஈழத்தின் பத்தி எழுத்து வடிவத்தின் முன்னோடி, கே.எஸ். சிவகுமாரன், நாற்பது வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய துறையில் செயற்பட்டு வருபவர். இவரது எழுத்துக்களை திறனாய்வு என்பதை விடுத்து மதிப்புரை என்றே கூறலாம். இவரும் உடன்பாடு தெரிவித்துள்ளார்
1962-1991 வரையான இவரது கலை இலக்கியப் பார்வைகளும் அதன் ஊடான தமிழ்ச் சூழலும் ஒரு காலகட்டத்தின் தொகுப்பாக இவரின் உழைப்பின் மூலம் தமிழ் ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கிடைத்துள்ளது. இந்நூல் ஒரு காலகட்டத்தின் எழுதப்பட்ட வரலாறு.
விபுலானந்தர், பாரதி, மெளனி, சுந்தர ராமசாமி, இலங்கையர்கோன், சுபைபர் இளங்கீரன், செ. கணேசலிங்கம்

Page 32
(Uன்றாவது மனிதன் -30
எஸ். பொன்னுத்துரை, அ. ஸ. அப்துல்ஸமது, தொனியான், காவலூர் இராசதுரை, நீர்வைபொன்னையன், வ.அ. இராசரத்தினம், டொமினிக் ஜீவா, வரதர் போன்ற தமிழ்ச் சூழலின் படைப்பாளிகளின் படைப்புகள் இவரது மதிப்புரைகளின் ஊடாக நாம் தரிசிக்கிறோம்.
மெளனி, சுந்தர ராமசாமி. எஸ். பொ. போன்ற தமிழில் குறிப்பிடக் கூடிய படைப்பாளிகளின் படைப்புகளை இருட்டடிப்புச் செய்யப்பட்ட காலகட்டத்தில் இப்படை ப்பாளிகள் பற்றிய இவரது பார்வை அன்று முன் வைக்கப்பட்டது ஒரு துணிவுதான் - ஆனாலும் இவரது மதிப்புரைகளில் ஒரு அணிசார்ந்த பார்வையின் ஊடாக நின்று - சில படைப்பாளிகளின் படைப்புகளை இவர் முன் வந்திருப்பதும் வெளிப்படுகிறது.
இந்த நூலில் உள்ள பத்தி எழுத்துக்கள் ஒரு நடுநிலையான பார்வைக் காண்ணோட்டத்துடன் அணுகப்படவில்லை என்ற வாதம் மேலோங்கினாலும் இன்றைய காலகட்டத்தில் அவர் ஈழத்தில் இருந்த புனைவு விமர்சகர்களுடன் ஒப்பிடும் போது நடுநிலைமையை ஓரளவு பேண எத்தனித்தவர் என்பது புலப்படுகிறது. எதிர்காலத்தில் நவீன தமிழ் இலக்கியத்தை குறிப்பாக ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்ய வரும் ஒரு இளம் ஆய்வாளனுக்கு கே. எஸ். சிவகுமாரனின் இந்நூல் ஒரு முக்கிய ஆவணமாகும்.
- ஆர். குணசீலன்
நூல் :- மீறல்கள்
(சிறுகதைத் தொகுதி) ஆசிரியர் : - (Մ). பவர். மல்லிகைப்பந்தல் வெளியீடாக வெளிவந்துள்ள மு. பவரின் "மீறல்கள்” ஈழத்துச் சிறுகதைகளின் வடிவ அமைப்பையும் மீறி பொதுவாக தமிழ் சிறுகதைகளின் வடிவ அமைப்புக்குள் பார்க்கப்பட வேண்டியது. இவரது கதைகளில் மொழியின் கையாள்கை அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது. இது மு. பவரின் எழுத்தின் தனித்துவம் எனலாம். ஈழத்துச் சிறுகதைகளின் பிரதான பலவீனங் களில் கரு, மொழியாள்கை மிகவும் பின்தங்கி இருப்பது என்பது இன்னும்
 

தீர்ந்தபாடில்லை. அக் குற்றச்சாட்டை மு. பவரின் மீது வாசகர்களாலும், விமர்சகர்களாலும் வைக்கமுடியாது!
மு. பஷீர் அவரது உரையில் சொல்வது போல் "கதைசொல்லும் நுட்பத்தை அடைய நான், பல தசாப்தங்களாக தேடல் சுமந்த நதியாய் நீண்ட யாத்திரை செய்திருக்கிறேன் அகவயப்பட்ட வாழ்வின் தாக்கங்கள் என்னை வீழ்த்திட முனைந்த போது இந்த எழுத்து ஒன்றுதான் தலைநிமிர்ந்து செயற்படவைத்தது” என்கிறார். இதனை அவர் பொய்ப்பிக்கவில்லை.
கதை மாந்தர்களை கற்பனையில் சிருஷ்டிக்காது, தன்னிலிருந்து, தன்வாழ்வின் அனுபவத்திலிருந்து தானாக வெளிப் படும் இவரது சிருஷ டிப்பு மிகவும் அதிர்ச்சிதருவனவாக இருக்கின்றன. உண்மையில் அதீத வங்கிரங்களுடன் வாழும், வாழத் தலைப்படும் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் ஊடே தங்களை சித்தரிக்கும் போது தங்களை மகாத்மாக்களாக காட்ட முற்படும் இன்றைய போனப்படைப்புகளில் இவர் தனது சகல பலவீனங்களையும் திறந்து காட்டி இருப்பது உண்மைப் படைப்பாளியின் தீர்க்கமான வெளிப்பாட்டுக்கு தலைகுனிவு எதுவுமில்லை என்பதில் மு. பவர் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இத் தொகுதியில் உள்ள "சிதைவு” என்ற கதை தமிழ்ச்சிறுகதைகளில் நிராகரிக்க முடியாத கதைகளில் ஒன்று. பலத்த சர்ச்சையான விவாதங்களில் ஒன்றான பிரதேச, மண்வாசனை எழுத்துச் சூழல் பற்றிய குறுகிய மதிப் பரீடுகளுக்கு அப் பால இவரது கதைகள் பார்க்கப்படுமானால் (ராஜநாரயணனை)புறக்கணிக்க முடியாத போது நிச்சயம் இவருக்கு ஒரு இடமுண்டு.
- சுபாஷினி சிவஞானம்
நூல் - வாழ்தல் என்பது (சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர் - திருக்கோயில் கவியுவன்
1980க்குப்பின் நவீன தீமிழ் சிறுகதைகளில் ஏற்பட்ட உள்வாங்குதல்களின் கர்ரணமாக தமிழ் சிறுகதை பழைய வடிவங்களிலிருந்து மாறி புதுஉருக்கொண்டு வருவதன்

Page 33
ஊடாக, தமிழ். இலக்கிய உலகில் புது எழுத்தாளர்கள் தமது படைப்பாற்றல்களின் ஊடாக வருகின்றனர் தமிழ் நாட்டில் கோணங்கி, ராம் முருகன், ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன், ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகளின் வருகையோடு அல்லது அதையொட்டிய காலச்சூழலில் ஈழத்திலும் ஒரு புதிய பரம்பரையின் அடையாளம் இனம் காணப்படுகிறது. அதில் கவியுவனும் ஒருவர்.
இருப்புகள் அச்சுறுத்தப்பட்டு வாழ்தல் கேள்விக்குள்ளான ஒரு சமூகத்தின் போராட்டத்தின், அதன் பலத்தில் அதன் பலவீனத்தில் எழுந்த நிகழ்வுகளின் பின்புலத்தை கவியுவனின் “வாழ்தல் என்பது” என்ற சிறுகதைத் தொகுதி அடிநாதமாகக் கொண்டிருக்கின்றது. பெரும்பாலான படைப்பாளிகளை இச்சூழல் பாதித்திருந்தாலும், கவியுவன் இவற்றை தனது அனுபவமாகக் கொண்டு, ஆவேசமாக, கணிணிராக, ஆற்றாமையாக இக் கதைகளில் வெளிப்படுத்துகிறார்.
ஈழத்தில் குறிப்பிடக் கூடிய சிறுகதை எழுத்தாளர்களான உமாவரதராஜன், ரஞ்சகுமார் போன்றோர் கூட சமகால அரசியல், ஆயுத நிகழ்வுகளின் ஊடே நீண்ட மெளனம் கொண்டிருக்கும் நிலையில் (உமாவின் அரசனின் வருகை தவிர்த்து) கவியுவன் துணிவோடு சொல்ல வந்தது. விசேட தளத்தில் பார்க்கப்பட வேண்டியது.
இத் தொகுப்பில் உள்ள கதைகள் தொடர்பாய் கவியுவன் தனது உரையில் சொல்வதுபோல் 94 ஜனவரி தொடக்கம் 96 ஜனவரி எழுதப்பட்ட கதைகள் என்கிறார். இருந்தாலும் கூட இக்காலக்கட்டத்திலிருந்து ஒரு தசாப்தத்திற்கும் கீழான அனுபவங்களின் கிடங்கிலிருந்து எழுந்த உணர்வின் வெளிப்பாட்டை இக்கதைகள் உணர்த்தி நிற்பதால் இக் கதைகளின் காலம் 94க்கு முன்பிருந்த காலகட்டத்திற்கு எம்மை இட்டுச் செல்கிறது. உணர்வின் வெளிப்பாட்டை இவரது கதைகள் உணர்த்தி நிற்பதால், நனவோடை உத்தி இவரது கதைகளில் அதிகம் கையாளப்படுவதால் அதிகமான பாத்திர எண்ணிக்கை சித்தரிப்பை காண முடியாது (இது நவீன சிறுகதைக்குரிய சிறந்த இயல்புகளில் ஒன்று)
கவியுவனின் கதைகள் சமூக அவலங்களைச் சாடி எதிர்ப்புக்குரல் எழுப்ப நினைக்கும் யதார்த்த வாதத்தை இக்கதைகள் பிரதிபலித்தாலும் பிரச்சினைகளுக்கான சகல பரிமாணத்தையும் இக்கதைகள் காட்டத் தவறிவிடுகின்றன. இதனால் நிகழ்வுகளைப்பற்றி மட்டுமே பேசத் துணிகிறது.
- அ.ஜெகநாதன்
காதல்
ஒரு ரோஜா மலர்ச் செடி! நெருங்கி ரசித்தால் பூக்கள் அனுபவித்தால் அத்தனையும் முட்கள்
வி. சுதாகர்.

(Uன்றாவது மனிதன் -31
நூல் - இஸ்லாமிய இலக்கிய நோக்கு ஆசிரியர் - அஸ. அப்துஸ் ஸமத்
தமிழ் இலக்கியப் பரப்பில் இஸ்லாமிய இலக்கியம் என்ற தனித்த அடையாளத்துடன் கூடிய ஒரு பார்வை இருப்பதை நிராகரிக்க முடியாது! 400 வருடத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இலக்கியப் பாரம்பரியத்தின் ஊடே தமிழுக்கு நிறைய பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தில் இஸ்லாமிய இலக்கியம் தொடர்பாக அதிகமான ஆய்வுகளை மேற்கொண்டு உழைத்தவர் மறைந்த பேராசிரியர் உவைஸ் அவர்கள், இத் துறையில் நீண்டகாலமாய் உழைத்து வருபவர் அ.ஸ். அப்துல் ஸ்மத் அவர்கள்.
"தமிழ் இலக்கியப் பரவையுள் இஸ்லாமிய இலக்கியங்கள் பெறுமிடம் பற்றி ஆயப்புகுவோர் இவ்விலக்கியப் பேராறு அப்பரவையினுள் ஒரழகிய கழிமுகத்தை தோற்றுவித்து நிற்றலையும் அது தமிழனங்கிற்கு பெருமைதரும் ஒரு ஆபரணமாக விளங்குவதையும் மனமார ஏற்றுக் கொள்வர். முஸ்லிம் கள் சமணர் போல இலட்சியவாத நோக்குடையவர்களாக தமிழ்க் தொண்டாற்றிய போதும் தமிழோடு இணைந்து கொள்வதில் உண்மையான நேசம் காட்டினர். தாம் பேசும் மொழியினது மரபுகளையும் உடன் வாழும் மக்களது ஆசார சீலங்களையும் அளவறிந்து நிலையுணர்ந்து தமதாக்கிக் கொண்டிருப்பது தக்க சான்றாகும்.” என ஒரு கட்டுரையில் நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
15 கட்டுரைகள் இடம் பெற்றுள்ள இவ் ஆய்வுத் தொகுப்பில் "சித்தர்களும் சூபிக் கவிஞர்களும்" என்ற கட்டுரை புதிதொரு பார்வையை எமக்குத் தருகிறது, ஆய்வாளர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் பயன் தரும் முயற்சியாக இந்நூல் விளங்குகிறத.
எம். ஏ. றபீக்

Page 34
(Uன்றாவது மனிதன் -32
- பாலமுனை C
மெளனம். மடையர்களின் இராச்சியத்தில் மெளனம் ஒரு தவமே.
மெளனத்தைக் கலைத்து விட முந்தாதே உறங்கத் துடிக்கிறது
2 6T LD608i, குழப்பாதே!
குப்பைகளை நீ கிளறு குளித் தெழும்பு சாக்கடையில் சிரங்குகளை நகங்களினால் சுரண்டி விட்டு முகர்ந்தே பார்.
இருப்பியலும் கருப்பியலும் இருட்டில் இருந்தபடி உன் தேடல் நடக்கட்டும்!
உடுப்புகளைக் கழற்றி யெறி இடுப்புக்குக் கீழும் "இருப்ப" தனால் தூக்கி யெடு! நடந்து திரி1 நவீனந்தான் !
மேலை - வேசிகளே பாய் விரிக்க விருந்தோம்பு புதுமை தான் !

ாறுாக்கின் கவிதை -
சுடலையிலே போய்க் குந்து சுதந்திரம் தான். பிணங்களினைக் கீறிப் பார் பேயே தலை விரிக்கப் பேன் பாரு ! கூச்சலிடு ! களிப்பில்லை,
களைப்பு மனச் சோர்வு ! விளக்க மில்லை விரக்தி வெறுமை ! "களிப்பா கலை ? விளங்க எழுதுவதா வேலை..? வினாக்கள் தொடுத்தவரை விரட்டி விடு!” "அருவருக்கும் சொற்கள் தான் ஆக்க இலக்கியத்தின் உச்சம்” அறிந்தவன் நீ ! ஆதலினால் - வார்த்தைகளில் மலம் பூசு
வாழ்த்துக்கள், புதுமை வாணன் நீ ! பிரம்மா தான் !
ஆளை விடும், உறங்கத் துடிக்கிறது உள் மனசு, குழப்பாதே !

Page 35
4r
மிக அண்மையில் எழுந்த இதழாக இருந்தாலும்,
துணிவும் மேற் கிளம்புதலும் புதிய வீரியத்தை கொண்டுவருகின்றது.
நடுநிலைமையும், உண்மைத்தனமும், நேர்மையும், வியாபார நோக்கின்றிய தன்மை கொண்ட இதழ்கள், பத்திரிகைகள் இலங்கையில் மிகக்குறைவு. அதாவது இல்லை என்றே கூறலாம். ஏதாவது பத்திரிகை, இதழை எடுத்தால் அவரவர் கொள்கைகளையும், வெற்றிகளையும் குழிபறிப்புகளையும் வெளித் தள்ளும், முடிமறைக்கும் பிரச்சார ஊது குழல்களாகவே இருந்துவருகின்றன. நேர்மையான பத்திரிகைகள் மிகச் சொற்பம். மனிதத்துவத்தைப்பாடும், நேசிக்கும் எங்களைப் போன்ற ஒரு சிலருக்காகவது ஆன்ம பலனை கொடுக்க கூடியதாக மூன்றாவது மனிதன் இருக்கும் என நம்புகிறோம். மனிதன் மனிதனாக சுய இச்சைகளோடு வாழமுடியாதது இலங்கைத்தீவு ஆகும். சுதந்திரம், தேசியம் இவற்றின் பெயரில் மனிதக் கொலைகளே எஞ்சிக் கிடக்கின்றது. துப்பாக்கியில் இருக்கும் விரலையும், வெறித்து நோக்கும் கண்ணையும், இரும்பு வெறிமனதை மாற்ற யாருக்கும் விருப்பமில்லை. யாழ்ப்பாணத்தின் உண்மை நிலை உலகிற்கு தெரியும் தெரிந்தும் விழிமூடிய நிலை. தங்களின் ஆசிரியத் தலையங்கம் பகிரங்கமானது, உண்மையானது. உண்மைத்தன்மையை அப்பட்டமாக கூறுகின்றது. "முகப்புப்படம்” அரசியலினை முகம் கிழித்த படம். இது ஏன் என்பதற்கு யுத்தத்தை விரும்புவர்கள் நவீன சித்தாந்தங்களை காரணம் காட்டுவார்கள் என்பது கேவலமான வறட்டுவாதம்.
சமாதான யாழில் நடந்த கொடுரங்கள். இது மறக்கமுடியாத நிகழ்வு. ஆனால் குற்றவாளிகள் தப்பி விட்டார்கள் என்பது வேதனைக்குரியது. எனினும் ஆட்கடத்தல், கொலை யாழில் புதிது அல்ல. அதுதான் மண்ணின் கலாச்சாரம்
இது மாறவேண்டும்.
எனது மக்கள் மீண்டும் வரவேண்டும்.
மூடிக்கிடக்கும் வீடுகளும், விதிகளும்
திறக்கப்பட வேண்டும்
கடலும்
காற்றும் எமது கால்களில்
படவேண்டும்.
ஒரு சுதந்திரக் குருவி போல
வீதி யெங்கும்
 

(Uன்றாவது மனிதன் -33
தாவித்திரிய வேண்டும்.
தயவு செய்து உங்கள் இதழை பன்முகப்படுத்துங்கள். இந்த இதழில் இரண்டு பெரிய பேட்டிகளை போட்டு நிரப்பி விட்டீர்கள். சிறு சஞ்சிகைக்கு இது பாரம் என்றே நினைக்கின்றேன். “சிப்பாயின் மனைவி ஒலமிடுகிறாள்" கவிஞர் வில்வரத்தினத்தின் கட்டுரை மற்றும் சண்முகம் சிவலிங்கத்தின் சிறுகதை போன்றவை தரமானவை ஏனையவையும் அவ்வாறே.
உங்களிடம் பணிவாக கேட்பது எந்த அரசியல் பின்புலத்தையும், கோசத்தையும், இனமத மட்டத்தையும் வைத்து எழுத்தை விற்காதீர்கள். உங்கள் இதழ் மனிதத்துவம் பேசும் இதழாக இறுதிவரை இருக்கட்டும்.
ஜி.கெனத் குருநகர்
é.
(UOன்றாவது மனிதன்' சஞ்சிகையின் மூன்றாவது இதழ் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் நேர்காணலை உள்ளடக்கி வெளிவந்திருந்தது. இந்நேர்காணல் இன்று பேராசிரியரின் பல வேறுபட்ட கருத்துக் களை சிந்தனைகளை முன்வைத்திருந்தது. இந்தவகையில் ஜெயமோகனின் நாவல் குறித்த கருத்துப்பற்றி பேராசிரியர் வழங்கியுள்ள பதில் சுருக்கமானதொரு குறிப்பெழுத என்னை நிர்ப்பந்தித்துள்ளது.
முதலில் ஜெயமோகனின் இலக்கிய சிந்தனை பற்றி நோக்குதல் பயன்மிக்க ஒன்றாகும். யதார்த்தம் நேரடியாக இலக்கியமகா என்பதே அவரது இலக்கிய கோட்பாடாகும். "எழுதும் போது அழகியல் உணர்வே பிரதானமானது. படைப்பாளி எந்த இயக்கத்திற்கும் சித்தாந்தத்திற்கும் கட்டுப்பட்டவனாக இருக்க முடியாது” என்ற ஜெயமோகனின் பிரகடனம் என்ன எழுதப்படுகின்றது என்பதை விட எப்படி எழுதப்படுகின்றது என்பதையே வெளிப்படுத்துகின்றது. இவர்கள் இவ்வாறு கூறுவது உண்மையை அறியாமல் அன்று. மாறாக தனது தத்துவத்திற்கும், வர்க்கச் சார்பிற்கும் ஒவ்வாத தேசிய, ஜனநாயக, முற்போக்கு சக்திகளை தாக்குவதற்கும் மட்டந்தட்டுவதற்குமே இவ்வாறான கோட்பாட்டுத் தளத்தை இவர்கள் அமைத்துக் கொள்கின்றனர்.
இத்தகைய தளத்தில் நின்று ஜெயமோகன் நாவல் பற்றிய தனது சிற்றாய்வை செய்துள்ளார். இவரது தத்துவத்தை, வர்க்கச் சார்பை ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் புலப்படுத்தி நிற்கின்ற சுந்தர ராமசாமியின் “ஒரு புளிய மரத்தின் கதை", "ஜே. ஜே. சில குறிப்புகள்” ஆகிய நாவல்களே தமிழ் நாவலுக்கான முயற்சிகள் என்பதை மிக்க வலியுறுத்தியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் பல்வேறு எழுச்சியினையும், இயக்கங்களையும் பொருளாகவும் பின்னணனியாகவும் கொண்ட நாவல்கள் அனைத்தையும் நீள்கதைகள் என நிராகரிக்கின்றனர். சமூகவியல் நோக்கில் பார்க்கின்ற எழுத்தாளர்களின் படைப்புகளை நிராகரிப்பது வர்க்க முரண்பாட்டின் பிரதிபலிப்பே ஆகும்.

Page 36
இச்சந்தர்ப்பத்தில் இத்துாய கலைவாதிக்கு எதிரா கோட்பாட்டு போராட்டத்தை முன்வைப்பதை விடுத் ஜெயமோகன் கருத்து முக்கியமான ஒன்றாக பேராசிரிய கா. சிவத்தம்பி கூறியிருப்பது வியப்பிற்குரிய ஒன்றல்ல.
காரணம், பேராசிரியர் அவர்கள் ஜெயமோகனை விட ஒருப மேலே சென்று தமிழிலே சிறந்த நாவல்கள் இல்லை என்று அதற்கு கைலாசபதியின் விமர்சன கொடுங்கோண்மையே காரணம் என்ற அரிய கண்டு பிடிப்பை அண்மைக்கால கண்டுபிடித்திருந்தார். இந்த சிந்தனையையே இந்த நேர்காணலிலும் வெளிப்படுத்தியுள்ளார். இவ்வம்சம் எதனை வெளிப்படுத்துகின்றது?
இன்று இலக்கியத்தில் சமூகவியல் போக்கு வேண்டாத அளவு மிகைப்படுத்தப்பட்டு விட்டது எனவும், மீண்டும் அழகியலுக்கு திரும்ப வேணி டும் என்ற குரலி ஓங்கியொலிப்பதை காணலாம். தூய கலைவாதிகள் இன்று ஒய்வெடுக்கலாம். காரணம் ஒரு காலத்தில் சமூகவியல் பார்வை எழுச்சியில் கொடிகட்டி பறந்த இலக்கிய கர்த்தாக்கள் இன்று இந்த அதியுன்னத பணியினை முன்னெடுத்துள்ளனர். எனினும் ஒரு புதிய விழிப்பு தோன்றுவதை மட்டும் இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது.
லெனின் மதிவானம்
ஹட்டன்
ஆழியாளின் மொழிபெயர்ப்பு - "சிப்பாயின் ஒருபக்கம்” கவிதை என்னை அதிகமாக அழுத்திற்று, இங்கு அப்படியுள்ள அநேகரின் பக்கங்களை யார் சொல்வது? இதையொத்த ஏக்கத்தினை காட்ட சக்தியற்ற நிலையில் அதன் சமாதிகளில் ஏறிநின்று இன்று . என்னின அபலைகளை என்ன சொல்வது? "முதலில் பெண்களுக்குள்ளே பெண்ணுரிமை என்றால் என்ன என்ற அர்த்த புஷ்டியான விழிப்பின் உணர்நிலை எய்தப்படாவிட்டால் அடுத்து வரும் கோஷம் அர்த்தமற்ற கூக்குரல் என்பதை வெளிக்காட்டிய பேராசிரியர், கா. சிவத்தம்பியின் கூற்று உண்மையே.
இதழ் மூன்றின் அமைப்பும், அட்டைப்படக் கவிதையும் என்னை பாதித்தது.
செல்வி த. உருத்திரா
மண்டூர்
என்னுயிர் பெளஸருக்கு,
காலம் கடந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். என்மீது கோபமிகு கொண்டிருப்பாய் ! ‘மூன்றாவது மனிதன் முதல் இதழைப்படித்ததும் உடன் எழுதவேண்டும் போல் அவசரப்பட்டேன். அடுத்த கணமே மறந்து போனேன்.
 

இப்போதெல்லாம் மறதி தான் உற்றதோழன். பின்னர் மூன்றாவது மனிதன் இதழ் 2ல் உனது கவிதைகண்டு மிரண்ட சேதிகள் பத்திரிகையில் படித்து அதை விட மகிழ்ச்சி அடைந்தேன்
பூட்ஸ்கால்களுக்கு எப்போதுமே பத்திரிகைக்காரர்கள் என்றால் அலர்ஜியும் மறுபக்கம் அவர்களைப் போட்டு உதைப்பதில் ஆனந்தமும். நாம் அறிந்த சங்கதி - வரலாறு இதற்கு இவர்கள் மட்டும் என்னவாம்? சித்தார்த்தார்களா? பேராசிரியருடன் (கா. சிவத்தம்பி) மொத்தமாக நான்கு பொழுதுகள் களிக்கக் கிடைத்தது பாக்கியம் தான். மிகவும் நிறைவாகப் பேசுகிறார். முற்போக்குக் காரருக்குக் காட்டப்பிடிக்காத லா. ச. ரா. வுடன் நான் கண்ட அமைதியும் அடக்கமும் தெளிவும் இங்கு பேராசிரியரிடமும் காணக்கூடியதாகயிருந்தது. மனசு நான்கு தினங்களை களிகொண்டாடியது.
எழுத்தாளர்களையெல்லாம் ரவுண்டப்பில் கொண்டு வந்து ஆக்கபூர்வமான செயல்திட்டங்களைத் தயாரித்து எடுத்துக் கொண்ட வடகிழக்கு மாகாண கல்விச் செயலாளர் சுந்தரம் டிவகலா மிகவும் உன்னதமான ஒரு செயலாளர்.
ஜபாரும் படுசுட்டியாகக் காரியங்களை முன்னெடுத்துச் செல்வது மனசுக்கு ஆறுதலாக இருந்தது. அடுத்த தலைமுறையினர் சகல கலைகளிலும் ஜமாய்த்து விடுவார்கள்.
மூன்றாவது மனிதனில் சோலைக்கிளியின் "பாம்பு நரம்பு மனிதன்” பற்றிய கட்டுரை படித்தேன். பலே ஜோர்! மு. பொ சரிநிகளில் ஒரு அதிரடித்தாக்குதலை மேற்கொண்டிருந்தார். இந்த உடலுக்குள் அப்படியொரு தாக்குதல் எப்படிச்சாத்தியமானது. “பெளசர்” பற்றி சோலைக்கிளிக்கு ஏனோ கோபம்? அப்படியிருந்தும் தங்களின் "மூன்றாவது மனிதனி"ல் அதுவும் சோலைக்கிளிக்கு ஒரு பக்கம் தேசிய விருதும் மறுபக்கம் மு.பொ. வின் அதிரடித்தாக்குதலும் கிட்டியுள்ள இந்தத் தருணத்தில், ந. ரவீந்திரனின் பார்வை குளுமையானது. மூன்றாவது மனிதனின் மனிதம் பூசிக்கத்தக்கது. திருகோணமலையில் மு. பொவிடம் "ஏனப்பா? இந்த வேகம். பாய்ச்சல் கூடிவிட்டது." என்றேன். அதற்கு மு.பொ. "எஸ். எல். எம்.” சோலைக் கிளியின் எட்டாவது நரகம் வெளியானபோது அது பற்றி மிகவும் சிலாகித்து 'அலை 28ல் எழுதியவன் நான், என்னை அது பற்றி எழுதத் தூண்டியவன் சு. வில்வரத்தினம் இருவரும் தான் எழுதினோம்.
“எனக்கு சோலைக்கிளியின் மீது வேறு என்னகோபம்? ஒரேபாணியில் சோப்பிஸ் பேக் போல சோலைக்கிளியின் கவிதைகள் தொடரக்கூடாது என்பது தான் எனது பயம் என்றார். உண்மையில் மு.பொ. கவலை நம் எல்லோருக்கும் உண்டு!
உங்கள் தேடல் தொடரட்டும்! நிச்சயம் அடுத்த இதழுக்கு எப்படியும் நான் கதை அனுப்புவேன்.
எஸ். எல். எம். ஹனிபா

Page 37
சிற்றிதழ்களின் வரவுகள் புதிய சமூக இயக்கத்தின் இயங்குநிலையையும் அதன் செல்வழியையும் அகன்ற பார்வையும் வாழ்க்கை பற்றிய மேலதிக தேடல்களையும் உள்ளடக்கியே வந்துள்ளன. இயந்திர மயமாதலும் தொழிநுட்பத்தின் எண்ணற்ற சாத்தியங்கள் வழங்கும் இன்றைய வாழ்வுமுறையிலும் தொடர்புசாதனங்கள் வகிக்கும் முன்னணிப் பாத்திரத்தில் சிற்றிதழ்கள் மிகுந்த போராட்டத்துக்குள்ளாகியே வருகின்றன. வளர்ந்துவரும் தொழிநுட்ப யுகம் சிற்றதழ்களின் தேவையை இன்றும் மூடிவிடாதிருப்பதே ஆச்சரியமானது. மனிதனின் மனம் சார்ந்த ஒரு நிலைப்பாட்டுடனேயே இந்தச் சிற்றிதழ்களின் வாழ்வையும் இணைந்து யோசிக்கமுடிகிறது.
சிற்றிதழ் வெளியாகும் சூழல், அதை வெளிக்கொணருவோர், அதில் பங்கேற்போர், எழுதுவோர், படிப்போர் எல்லோராலும் இந்த மன அடையாளத்தைக் காணலாம். மனதை வளர்த்தெடுக்கவும் அந்த மன அடையாளத்தை பேணிவிடவுமென மிகப்பெரிய பாடுகளின் பின்னேயே சிறு சாத்தியத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. சிறுசஞ்சிகையின் வாழ்வு அதன் பரவலாக்கத்திலும் படைப்பு நிலையை இனங்காண்பதிலுமே தங்கியுள்ளது. வடபகுதியில் பார்க்கக் கிடைக்காமற்போனவையின் பட்டியல் கள் தடைசெய்யப் பட்டவற்றுடனும் , தடுக்கப்பட்டவற்றுடனும் துயரங்களும் இழப்புகளும் பெருகினவே தவிர புதிதாக எவையும் சாதிக்கப் பெறவில்லை. பிரதானமாக பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கருத்துக்கள் இன்று என்ன சார்போடு உள்ளன என்பதை அறிய ஆவல்.
புதிய படைப்பாளிகளும் புதிய படைப்புகளும் ஒரு வாசலுடு வெளிவர "மூன்றாவது மனிதன்” உதவும் என நம்புகின்றேன். விதுல்யன்
அக்கராயன் குளம்
கிளிநொச்சி.
அன்பின் ஆசிரியருக்கு, “மூன்றாவது மனிதன்” இதழ் மூன்று வாசித்தேன். சமகால ஈழத்து நவீன இலக்கியம் தொடர்பாகவும். ஆழமான வினாக்களுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் காத்திரமான விடைகளும், மற்றும், சண்முகம் சிவலிங்கம், சு.வி. போன்றவர்களது கருத்துக்களும் இதன் தரத்துக்கு அணிசேர்த்து நிற்கின்றன. வாசுகி ஜெய்சங்கரின் பின் அட்டைப்படம் சிறப்பான கைவண்ணம் ஆக உள்ளது. இவ் இலக்கிய ஏடு ஈழத்தின் ஒவ்வோரு புத்திஜீவியும் நிச்சயம் வாசிக்க வேண்டிய தேவைப்பாடு உடையதாக விளங்குகிறது. என்பது எனது நம்பிக்கை.
நயினை ஆனந்தன் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகம் வவுனியா.

(Uன்றாவது மனிதன் -35

Page 38
(Uன்றாவது மனிதன் -36
மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்தால் வெளி எதிர்காலமும்' நூல் அறிமுக விழா அக்கரைப்ப அவ்விழாவிற்கு தலைமை வகித்த அ.ஸ.அப்துல்ஸ! மூன்றாவது மனிதன் ஆசிரியர் எம்.பௌசர் ஆகியோ
Teach us to
And not to
கரையொதுங்கி மனிதப்பிண்டங் என் தலைகளை அதிர்ந்து கொ6 அழுது கண்ணிர்
பின்னர்,
நீயும் நின் தலை அதிர்ந்து கொல் கண்ணி சிந்தி நொந்து கொள்
எங்கு நான் கற்று நண்பனே,
என் பேரன்பைச் அப்பேரன்பை ம.
அல்லது அப்படியே ஒரு கி கிடக்கவும்.
 
 

யிடப்பட்ட 'விக்ரர்' எழுதிய முஸ்லிம் தேசமும் ற்று அஸ்-ஸிறாஜ் மண்டபத்தில் நடைபெற்றபோது மது, விமர்சன உரையாற்றிய கலாநிதி எம்.ஏ.நுஃமான், τή. (1202.1997)
D. Cae
Calae
-T. S. Eliot
lib கள் தலைகளின்றி: ாப் பொருத்தி ர்வதும்
வடிப்பதும்,
)களைப்பொருத்தி ர்வதும்
என்னை
வதும்.
றுக் கொள்வது
செலுத்தவும் றைக்கவும்
கல்லைப்போல

Page 39
எதார்த்தங்க
 

స్ట్ (Uன்றாவது மனிதன் -37
AA நான் எவ்வாறு எழுதுகிறேன். ளைத தேடி என் கதைகளில் வார்த்தைகள் AMRA A O எவ்வாறு வந்து விழுகின்றன முலக ராஜஆனநத எ ன் ப ைத ெய ல லா ம
பின்னோக்கிப் பார்க்கிறேன். தொடர்புகொள்ளப்படவும், விளங்கிக்கொள்ளப்படவும் எல்லாவற்றுக்கும் மேலாக விரும்பப்படவுமான ஆழ மான தூண்டுதல்கள் என்னில் இருந்ததாய் உணர்கிறேன். அன்பும் காதலும்தான் ஒரு கவிஞனின் கவிதைகளின் பின்னாலிருக்கிற, ஒரு எழுத் தாளனின் எழுத்துக்களின் பின்னாலிருக்கிற உந்து சக்தியென்றால் அது உண் மையில் இதயத்திலிருந்து வந்ததாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும். அந்த இதயம் அந்தப் பாசத்திற்காய் உணர்ந்தூறித்திளைக்கவேண் டும். அதற்கான அனுபவங் களில் முக்குளித்து எழவேண் டும். (பலர் எதுவென்று தெரி யாமலே, தங்களை நோவினப்படுத்தும் காரணியை அறியாமலேயே வேதனையில் சிக்கித்தவிக்கிறார்கள்.) அதன்பின் இரக்கத்தின் சுமையைத் தாங்கிக்கொள்கிற எம்மைப்போல் சிலர் அந்த இரக்கத்தின் அன்பின் தூய் மையில் விழுந்து விடுகிறோம்.
உபநிஷத்தில் ஒரு கதை. பக்தன் ஞானியிடத்தில் கேட்கிறான். என் வாழ்க்கை(யை)யில் என்ன செய்ய லாம்? என்று. ஞானி கூறுகிறார்: "நான் யார்? , ‘எங்கிருந்து வந்திருக்கிறேன்?', 'எங்கே போய்க்கொண் டிருக்கிறேன்?' என்று உன்னை நீயே கேட்டுக்கொள் என்கிறார்.
அல்லாமா இக்பாலும், தான் தன்னுடைய நீண்ட கவிதையான “அஸ்ராரேகுதி'யில் மனநீதிபற்றி இவ்வாறு எழுதியுள்ளதாக என்னிடம் கூறினார்'- ஒருவன் தனது தீய செயல்களான பொய் சொல்லுதல், பாவமான காரியங்கள் செய்தல், நயவஞ்சகத்தனம் என்பற்றிலிருந்து விடுபடாதவரை யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளாதவரை தன்னை நல்லவனாக மாற்றிக்கொள்ள முடியாது.'
நான் யதார்த்தங்களைத் தேடி எங்கெல்லாமோ அலைந்தேன். இந்த அலைச்சல் என்னை மேற்கிற்கு இட்டுச் சென்றது. மேற்கின் அமைப்பு முறைகளை

Page 40
(Uன்றாவது மனிதன் -36
விளங்கிக்கொள்ள பிரயத்தனம் எடுத்தேன். பிளா ட்டோ, புளூடினஸ், கான்ட், ஹெகல், டெஸ்கார்டஸ் என்பவர்களெல்லாம் மனித நிலைகளை தொட்டுச் செல்லாத செய்திகளை, நுட்பமான உண்மைகள்கருத்துக் களைச் சொல்வதாக எனக்குப்பட்டது. 'கொதே'யின் Faust உம் இவ்வுலகத்தைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவர முடியாது போனால் தன் ஆத்மாவை சாத்தானுக்கு விற்றுவிடுவதற்குத் தயாராகவே இருந்தான். நான் என்னை நானே அனுபவித்துக் கொள்வதற்கு ஆசைப்படவில்லை; மாயைகளுக்குள் நான் தொலைந்து போகவும் விரும்பவில்லை. தற்புகழ்ச்சியாளனாகவும் நானிருக்க விரும்பவில்லை. இதற்கு மாறாகவும் நான் பிறரின் நாளாந்த வாழ்வொழுங்குகளில் தலையிட்டு மூழ்கிப்போ னேனா?
சிக்கலும் குழப்பமும் இருத்தலியல் பற்றிய ஏமாற்றமும் அடைந்த ஒரு கலவை நிலையிலேயே "காணாமல் போன சிறுவன்' கதையை எழுதினேன். அப்போது என்னை நானே கண்டுகொள்கிற வழிகளைக் காட்டுகிற இழப்பினை நானுணர்ந்தேன். நான் காணாமல் போயி ருந்தேன். அறியாமையிலிருந்து அனுபவங்களை நோக்கிய வளர்ச்சி முனைப்புக்களை அறிந்துணர்ந்து கொள்ள இவ்வாறான ஞாபகங்கள் உதவுகின்றன என நினைக்கிறேன்.
உபநிஷத்தின் அந்த ஞானியின் அறிவுரையை நான் அடிக்கடி ஞாபகப்படுத்தி என்னைப்பற்றி அறிந்து கொள்ளும் எழுத்துக்களை எழுத ஆரம்பித்தேன். 'நான் யார்?', 'எங்கிருந்து வந்தேன்?', 'எங்கே சென்று கொண்டிருக்கிறேன்?'
இந்தக் கேள்விக்கான விடை ஏழேழு கோடைகளும், ஏழேழு குளிர்கரிலமுமாய் என்னை வளர்த்து ஆளாக்கி இந்த உலகத்துக்குதள்ளிவிட்ட அம்மாவும், அப்பாவும் ஆகத்தான் இருக்கிறது. என் மிக மிக சின்னகாலத்து ஞாபகம் தாயின் மார்புகளைப் பற்றியிருந்ததாகத்தான் இருக்கிறது. அதிலிருந்து சின்னப்பிள்ளைகளின் முனைப்பாய் தந்தையின் "வேண்டாம்'களுக்கு எதி ராய் செய்தவைகளும் ஞாபகப்படுகின்றன.
எல்லாவற்றையும் துணிந்து தள்ளியெறிந்து கொண்டு சாஹிப்களின் தோட்டத்துக்குச் சென்றேன். ரோஜா முள் பறித்து என் விரல்கள் காயம்பட்டன. நான் அழுதேன். என்னைத்தேற்றுவதற்காய் படையினர் குடியிருப்புத்தோட்டத்து'மாளிஅங்கிள் கரட்ஒன்றைத் தந்தார்.
வளர்ந்த பையன்கள் எல்லாம் என்னை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். அவர்களின் ‘வெல் வதற்கான சண்டையில் நான் காயம் பட்டு

விடுவேனாம்!எனவே நாம் அம்மா கூறுகிற நாட்டுப்புற கதைகளில் வருகிற சின்ன இளவரசன் 'ராஜா ரசாலுவாய் மாறினேன். தன் வெள்ளைக் குதிரையில் ஏறி உலகத்தினை ஆளுவதற்காய் அவன் சென்றானாம் என அம்மா கதையில் கூறுவார். என்னால் ஒரு மரக்குதி ரையிலேயே ஆட முடிந்தது.
நான் இருப்பதை விட பெரியாளாக மாறவேண்டும் என்கிற முனைப்பு பயிற்சிகளின் போது சிப்பாய்கள் நிகழ்த்துகிறதுப்பாக்கிவேட்டுக்களின் பயங்கரங்களால் தடைப்பட்டுப்போனது. இதுதவிரவும்,
செத்துப்போன ஆண்களும், பெண்களும் ஆவிகளாயும் பேய்களுமாயும் அலைந்து திரிவதாய் அம்மா கதைகள் சொல்லியும் என்னைப் பயமுறுத்தியிருந்தாள். கொடூரமிகு 'வெள்ளைத் தோள் பெரியாட்களின்' புறக்கணிப்பாலும், துன்புறுத்தல்களாலுமே இவர்கள் மரணித்ததாகவும், அவர்களை பழிவாங்கவே ஆவிகளாய் உலாவுவதாகவும்நிறையக்கூறியிருந்தாள். இந்த 'ராட்ஷசிகள்' அவர்களின் குஞ்சுப்பேய்கள் 'கோரஸ்' எல்லாம் என்னில் நிரம்பியிருந்தன. கடும் பயமுற்றவனாயிருந்தேன். பகலில் கூட இந்தப்பயம் என்னை விட்டுவைக்கவில்லை.
ஐந்துவயதில் "அதிகாலை மினுக்க முகத்துடன்' பள்ளிக்குச் செல்லலானேன். எங்கள் வகுப்பாசிரியர் "இறுகிய மண்டைகளில்" பாடங்கள் புகட்டுவதற்காக 'பிரம்படி வித்தை காட்டுவார். இதில் கூடுதலாக ஏழைகளின் பிள்ளைகளே பாதிக்கப்படுவர். அவர்களில்தான் இறுகிய மண்டைகள் இருப்பதாக ஆசிரியர் கருதுவார். நானும் பாபுவின் மகனும் 'சுவரே ஜோ கல்..' கவிதையை மனனமிட்டிருந்தோம். பாடம் ஏறாத 'மரமண்டைகளுக்கு' பிரம்படி வழங்குமாறு ஆசிரியர் என்னைப்பணித்தார்.நான் எவ்வளவுக்கு மிக மெதுவாய் அடிக்க முடியுமோ அப்படி அடித்தேன். ஆசிரியருக்கு திருப்தியில்லை. என்கையில் அடித்துக் காட்டினார். பெடியன்கள் பின்னர் வராந்தாவில் ஒளிந்திருந்து என் மேல் பாய்ந்து தாக்கினார்கள். நான் மயக்கமாகும் வரை அவர்கள் ‘வீரவிளையாட்டு'க் களைக் காட்டினார்கள்.
Folowers Laneஐச் சேர்ந்த 'பெரிய பொடியன்களும் என்னை விளையாடச் சேர்க்கமாட்டார்கள். சேரப் போனால் தள்ளியெறிந்து விடுவார்கள். இப்படி விளையாட்டில் சேர்க்கப்படாத பலர் இருந்தார்கள். அவர்களுடன் நான் நட்பாயிருந்தேன், 'பகா' ள்ன்பவனும் அவர்களில் தான் இருந்தான். கூட்டுகிற பொடியன். தீண்டத்தகாதவன்.இவனை விளையாட்டில் சேர்ப்பதென்றால், யாரையும் தொடக் கூடாது என்று நிபந்தனை விதிப்பார்கள். இவனும்நிபந்தனையை ஏற்று விளையாடப்போவான். குழுவை வெற்றிக்கு

Page 41
இவன்தான் இட்டுச் செல்வான். நான் அவனுடன் ஆற்றங்கரைக்கு மீன்பிடிக்கச் செல்வேன். போகிற வழியில் இருக்கிற அடர்ந்த மாங்காய் மரங்களிலிருந்து மாங்காய் பிய்த்துப் போடுவான். நான் மடியில் சேர்த்து வைத்திருப்பேன். அவனுக்கு பஞ்சாபிய நாட்டுப் பாடல்கள் தெரிந்திருந்தது. அவனுடைய தாய் கற்றுக் கொடுத்ததாம். அவனிடமிருந்து நானும் கற்றுக்கொண்டேன். ஒரு நாள் பெடியன்களிடையில் சண்டையேற்பட்டு எனக்குத் தலையில் காயம். கூரான கல்லொன்றால் யாரோ அடித்தான். இரத்தம் வழிந்தோடியது. 'பகா'தான் என்னை வீட்டுக்கு கூட்டிவந்தான். என் னைத்தொட்டு அழைத்து வந்த அவனைக்கண்டு அம்மா முகம் சுளித்து ஏசினார். அவனால் தீட்டாக்கப்பட்ட என்னைக் குளிப்பாட்டினாள். அவனுக்கு அழுகை வந்து விட்டது. கண்நிறையக் கண்ணீரையே அங்கிருந்து எடுத்துப் போனான். இந்த அநீதியான நிராகரிப்பு என்னில் பதிந்துவிட்டது. தீண்டத்தகாதவர்கள்' என்ற முதல்நாவலில் இந்தப் 'பகா'வைத்தான் எதிர்ப்புணர்வு கொண்ட ஹீரோ' வாக்கினேன்.
உயர்சாதி வெள்ளையர்கள் ஏனைய குறைநிறத்துக் காரர்களில் காட்டிய பாகுபாடு, பெரிய முதலாளிகள் ஆபிஸர்கள் வேலையாட்கள் நடத்தும் முறை, படித்தவர்கள் படிக்காதவர்களை படுத்தும்பாடு, என்தந் தையே தன் படிப்பால் ஊர் உறவுகளிலிருந்து ஏற்படுத்திக்கொண்ட மாற்றம் - இவையெல்லாவற் றையும் கண்டும் கேட்டும் உணர்ந்தும் எனக்குள்ளே ஓர் எதிர்ப்புணர்வு தோன்றிற்று. 'பெரிய கைகள்' பெரிய சத்தங்கள்', 'பெரிய தலைகளையெல்லாம் எதிர்க்கலா னேன். நானொரு கலகக்காரனாக மாறினேன்.
Hot mardan லிலுள்ள'பதான்'களின் 'ஜிர்கா'வை சுட்டுத்தள்ளும்படி படையினர் குடியிருப்பைச் சேர்ந்த Jarnai Sahab சிப்பாய்களுக்கு உத்தரவிட்டார். அந்த சூட்டுச் சம்பவத்திற்குப் பிறகு பல சடலங்கள் வண்டிகளில் ஏற்றிச்செல்லப்படுவதை நான் பார்த்தேன். அம்மா சொன்னாள்! அப்பா சாஹிப்களின் வேளை யாளாக இருப்பதால் இறந்தவர்களின் ஆவிகள் எங்களிடமும் வந்து எம்மை இம்சிக்கும்' அப்போது எனக்கு அம்மா சொன்னது உள்ளூற ஒரு பதிவாக விழுந்தது விட்டது.
1919ல் 'அமிர்தசரஸ் பொலிஸாரிடமிருந்து ஏழு பிரம் படிகள் பட்டதும் இந்தப் பதிவு என்னுள்ளே நிரந்தரமானதாகிவிட்டது. பின்னர் நிலைமைகளை அறிவதற்காய் வீட்டைவிட்டுப் புறப்பட்டேன்.
‘லாலா கெதர் நாத்' என்பவர் என் வாலிபப் பருவத்து அறிவுரையாளராக இருந்தார். அவர் லாலா ராஜ்பாட் ரா'யின் சீடர் அவர் என்னை ராஜதுரோக பாடசா

(Uன்றாவது மனிதன் -39
லைக்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் வெடிகுண்டு செய்வதைக்கற்றுக்கொண்டேன். ஆனால் எனது படித்தமாமா தேவ்தத்' 'யாரும் தாக்குதல் களுக்குள்ளாகக் கூடாது' என்று மகாத்மா காந்தி சொல்லியிருப்பதாகச் சொன்னார்.
எப்படியோநான் வன்முறையற்றவனாகவே இருந்தேன். ஒருநாள் நாம் ஒரு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டோம். 'அன்னிபெசன்ட் அம்மையாரை விரிவுரை நிகழ்த்த அழைத்ததற்காக எமது ஆங்கில அதிபரை இடை நிறுத்தம் செய்திருந்தார்கள். அதை எதிர்த்தே நாம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டோம் . அன்னிபெசன்ட் காந்தியின் அஹிம்மை பற்றியும், தன்னாட்சி பற்றியும் பேசினார். பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதற்காக எல்லோ ரையும் ஒரு மாதம் சிறையிலடைத்தார்கள். நான் வெளியே வந்த பிறகு என்னில் அதிகம் செல்லம்' காட்டுவற்தகாக அப்பா அம்மாவில் பாய்ந்தார்.
நான் வீட்டை விட்டு புறப்பட்டு கவிஞர் இக்பாலிடம்
ஆலோசனை கேட்கச் சென்றேன்.தன்னால் என்ன
ஆகவேண்டுமென்று அவர் கேட்டார். நான்
சொன்னேன், 'உங்கள் அடிச் சுவட்டில் நடக்க விரும்பு கிறேன். ஜேர்மனிக்குப் போய் தத்துவம் படிப்பதாய்
உத்தேசம்,' அதற்கு அவர் 'சரி என் சுவடு உன்னை
ஜேர்மனிக்கு கூட்டிச் செல்லும், முதலில் லண்டனுக்கு போ. அங்குள்ள என்நண்பர்களுக்கு கடிதம்தருகிறேன். ஜேர்மனை உனக்கு தெரியாதுதானே' என்று கூறி நூறு ரூபாய் அன்பளிப்பும் தந்தார். அவர் தந்ததையும் அம்மா,வீட்டுச் செலவையும் கட்டுப்படுத்தி, மிச்சப் படுத்தி வைத்ததிலிருந்து முந்நூறு ரூபாயையும் எடுத்துக் கொண்டு அப்பாவிடம் சொல்லாமல் பம்பாயிலிருந்து இத்தாலிய படகொன்றில் புறப்பட்டேன். அம்மா அழுதுகொண்டு நின்றாள்.
பேராசிரியர் 'டேவ்ஸ் ஹிக்சிங்கின் கருத்தரங்கில் பங்குபற்றினேன். அதில் யாரோ விஞ்ஞானி ஹெய் ங்ஸ்பெர்க் இன்கூற்றொன்றை சொன்னார்கள். 'குறித்த சில அணுக்கள் தாமாகவே பறக்கின்றன' என்று. பெளதீகமோ, உயர் கணிதமோ பெரிதாக தெரியாத நிலையில் அதை நான் உள்ளூர உணர்ந்தேன். விஞ்ஞானத்தின் விமர்சனமாகவே தத்துவம் இருப்பதாக எனக்குத் தோன்றியது.
ஒழுங்குப்படுத்தப்பட்ட ஆய்வுகள் எழுதுவதைத் தவிர்த்து சின்னக்காலத்துப் பதிவுகளையெல்லாம் எழுதத்தொடங்கினேன். முழு உலகையும் என்னுள் கொண்டு வர முயற்சித்தேன். இதனால் எனது எழுத்துக்கள் வரட்சி மிகு எழுத்துக்களாய் மிக மிக நீண்டு போனது. ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதியி ருப்பேன். இதையெல்லாம் பார்த்த சிலர் "இப்படி எழுதுவதை விட்டு விட்டு ஒரு சின்ன நாவலை

Page 42
(Uன்றாவது மனிதன் -40
எழுதலாமே...!" என்றார்கள். அது நல்லதாக பட்டது. தீண்டத்தகாத பகா'வைப்பற்றி எழுத்தொடங்கினேன். "வேர்ஜினியா வூல்ப் பின் படிப்பறையில் வைத்து எட்வர்ட் சக்வில் வெட்ஸ் கேட்டார். 'என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?' என்று 'தாழ்த்தப்பட்ட ஜாதியைப் பற்றி ஒரு நாவலை எழுதிக்கொண் டிருக்கிறேன் என்றேன். 'சார்ள்ஸ் டிக்கன்ஸ் செய்ததைப்போல இந்த லண்டன்நகரத்தான் சிரிப்பான் என்றார்.
இதை நான் அயர்லாந்து போனபோது கவிஞர் ஏ.ஈ.ஜோர்ச் ரஸ்ஸலிடம் சொன்னேன். அதற்கு அவர் 'உண்மைதான் தாழ்த்தப்பட்ட ஏழைகளுக்கு Bloomsburyநகரத்தில் இடமில்லைதான். நீகாந்தியிடம் செல். அவர்தான் சுதந்திரப் போராட்டத்தையும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தையும் சமமாகப் பார்’ப்பவர் என்றார்.
நான்காந்தியிடம் 'வரவா?' என்று கேட்டெழுதினேன். "1927ல் இலையுதிர்காலத்தில் வா' என்றுதபாலட்டை யில் பதில் எழுதியனுப்பினார்.
சபர் மதி ஆச்சிரமம். 'Bloomsbury நகரத்து பிறவுன் நிறத்து புத்திஜீவி சாஹிப் நிலையிலிருந்து தன்னடக்கம், வாய் மை பலம் வாய்ந்த சர்காருக்கு எதிரான அஹிம்சைக்கொண்ட - நான் பழக்கப்பட்டிராத ஒன்று - ஒருவனாக மாற்றம் கண்டேன். என்நாவலை மகாத்மா காந்தியிடம் காட்டினேன். அவர் சில பக்கங்களை வாசித்து நான் பாவித்திருந்த சில பெரிய சொற்கள், சிலேடைகளைக் கண்டுகொண்டார். 'ஹரிஜனர்கள் அழுதுகொண்டும், புலம்பிக்கொண்டும், வேதனைப் பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் வாயில் இவ்வாறு பெரிய பெரிய வார்த்தைளைப் போடுகி றாயே, அவர்களின் மொழியிலேயே எழுது' என்று சொன்னார். அப்போதுநான் ஜேம்ஸ் ஜோஸியின் எழுத் துக்களால் தாக்கம் உற்று இருப்பதைக் கண்டுகொண் டேன். பின்னர் நான் நாவலை திருப்பி எழுதினேன்.
லண்டனிலுள்ள 19 பதிப்பகங்கள் அடுத்த நான்கு ஆண்டுகள் வரை என் நாவலை வெளியிட முடியாது என்று சொல்லி விட்டார்கள். எனக்கு விரக்தி ஏற்பட்டு விட்டது. தற்கொலை செய்யலாமா என்று கூட நினைத்தேன். வாழ்வின் மீதான துடிப்பும் அதல்லாமல் செய்யவேண்டி இருக்கிற கருமங்களும் அந்த எண்ணத்தைக் கைவிடச் செய்தது.
எனது அந்தநாவலை என்கவிஞனான நண்பர் ஒருவன் ஈ.எம். பொஸ்டரிடம் கொண்டு சென்று காட்டினான். வீதியின் மறுபக்கத்திலிருக்கும் தாழ்த்தப்பட்ட வாலிப னின்கதை அவரை ஈர்த்தது. இந்தியாவில்இருந்தபோது அவர் எங்குமே சுற்றித்திரியவில்லை. நாவலுக்கான ஓர் அணிந்துரை எழுதித் தந்தார். ஒரு சிறிய பதிப்பகம்

அதை வெளியிட்டது. அந்நாவல் மிகுந்த வரவேற்பை பெற்றது. என்னுடைய எல்லா நாவல்களும் வாழ்வில் நான் அனுபவித்து உணர்ந்த சுயஉண்மைகள் அடியாக எழுந்தவை. இந்த உய்த்துணர்வுகள் மதம் மீதான கோபமாக, சடங்குகள், சம்பிரதாயங்கள், பழமைக்கெ திரான கோபமாக "உயர்ந்தவர்களது', தாழ்ந்தவர்களது மீதான செயல்களுக்கெதிரான கோபமாக, இளைய தலைமுறையினர் மீதான கோபமாக அனைத்து அசாதாரணங்களுக்கெதிரான தளைகளுக்கெதிரான கோபமாக பிறந்தவை. அரசியல் உட்பட அனைத்துவித சுதந்திரத்துக்காக போராடி பிறந்தவைதான் என் நாவல்கள்.
'ஹம்லட்' டைப் போல் 'இருப்பதா, இல்லாமலி ருப்பதா.?' என்றும் என்னுள் பலமுறை கேள்விகள் எழுந்திருக்கின்றன.
அஹிம்சாவாதியாக மாறியது மனித நிலைமைகளில் தாக்கம் விளைவிக்கக்கூடியதான ஒரு கடமை உணர்வைத் தந்தது. செத்துக் கொண்டே வாழ்கின்ற, பண்டிட்களின் அநியாயங்களுக்குள் சீவிக்கின்ற, பலவீனமடைந்த மனிதர்களுக்கோர் உந்துதலை அளித்தது எனலாம்.
'செயற்பாட்டோடு வாழ்தல்' இதுதான் காந்தி கற்றுத்தந்த பாடம். அப்படி என்றால் என்ன? மனிதர் களோடு தானும் ஒரு மனிதனாய் இருப்பதற்கான வீரத்தினையும், துணிவினையும் விதைத்தல். உலகத்துப் பிரஜைகளோடு ஒன்றாகக் கலத்தல், ஏமாற்றப் பட்டவனை தோற்றவனை வீரனாக மதிப்பதை அவசியமாக்கல். இதை ஜவஹர்லால் நேரு காட்டித்தந்திருக்கிறார். தோற்பவன் போராட்டத்தில் பிடிவாதத்துடன்தன்னை ஈடுபடுத்துகிறான். துணிவுடன் எதிர்கொள்ள எமக்கு சந்தர்ப்பத்தையும் அளிக்கிறான். அந்தத் துணிவு எம்மை இரக்கம், கருணை யுள்ளவர்களாக மாற்றுகிறது.
எமது புராணங்களும், மனிதர்கள் தம்மை விபரிக்க முடியாத உலகின் விதிகளுக்குஅர்ப்பணித்துவிடுவதாக அறிகிறோம். காந்தி, 'கடவுள் ஏழைகளிடத்தில் ரொட்டித்துண்டாக வருகையில் தெய்வீக அருளையும் பூமிக்கு கொண்டு வந்தார்' என்பார். தத்துவம் , ஒழுக்கவியலானது.
மனித விதிகள் பற்றிய இந்தப் புதிய நோக்குத்தான் எம் எழுத்துக்களில் குறிப்பால் உணர்த்தப்படுகிறது என நம்புகிறேன். மனித செயற்பாட்டின் தடைகளிலிருந்து மனித உரிமைகளுக்கு சென்றிருக்கிறோம். இன்றைய கவிதை வீரமுள்ளதாக மாறவேண்டும்.
எம்.கே.எம் ஷகீப்.

Page 43
S
N (
K A L M

G
E
R
U IN A II

Page 44
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வே பின்வரும் தொழி
கொம்பியூட்டர் வகுப்புகள்
செட்டிபிகற் இன் கொம்பியூட்டம் அப்ளிகேசன்ஸ் டிப்ளோமா இன் கொம்பியூட்டர் ஸ்ரடீஸ் டிப்ளோமா இன் கொம்பியூட்டர் சிஸ்ரம்ஸ் என்ஜினியரிங்
தொழில்நுட்ப பாடநெறிகள்
டிப்ளோமா இன் எயார் கண்டிசனிங் ரெப்ரிஜிறேசன் டிப்ளோமா இன் ரிவி நேரடியோ ஒடியோ சேர்விசிங் நீர்க்குழாய் இனைப்பு மின்னி:3ாப்பு ஒட்டோ பேய்ரிங் தட்டச்சு சுருக்கெழுத்து (தமிழ்'
தட்டச்சு சுருக்கெழுத்து (ஆங்கிலம்)
ஆங்கிலப் பயிற்சி நெறிகள்
அடிப்படை ஆங்கிலப் பயிற்சி நெறிகள் ஆங்கிலத்தில் பிறி (Pre) டிப்ளோமா ஆங்கிலத்தில் டிப்ளோமா ஸ்டோகன் இங்கிலிஸ்
Director, HICMA INSTITUT Main Street,
sa Akkaraipatu
 
 
 
 
 
 

லை வாய்ப்பை இலகுவாகப் பெற்றுத்தரும் ல்நுட்ப பயிற்சிநெறிகள் *:ගිං
8 மாதம்
Ճ Լr:T&ւr 6 மாதம்  ேமாதம் 3 மாதம் 6 மாதம் 6 மாதம்
8 LETEE. மாதம் 1 பேருடம் 8 மாதம்
E OF TECHNOLOGY