கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1972.06

Page 1


Page 2

6 Y- 4) is a e ஆடுதல் பாருதல்கித்திரம்-கலி யாதியிண்கல்களில்-2ள்ளம் ffGbL-6)LSTBlf) sbLLU6)sf-Sigf ஈனநிஃகண்டுதுள்ளுவார்?
கொடி 7 மலர்: 50
ஜூன் 1972
அட்டைப் படம் ஜணுப் எம். சமீம்
60,35едели, *శ్య, ( ീ
W
i

Page 3
அள்ளித் தரும்
அன்புக் கரங்கள்
2.
ss vo 4 y 80 de O es 8 de 8 y 1 * 8
மல்லிகைப் பிரசுராலயம் தனது ஆரம்ப வேலைகளை ஆரம் டித்து விட்டது என அறிவித்ததின் பின்னர் இலங்கையின் ஏனைய பகுதிகளிலுமிருந்து ஆலோசனைக் கடிதங்களும் பாராட்டு முடங் கல்களும் வந்தவண்ணமேயிருந்தன.
தரமான வாசக நேயர்கள், ஆரோக்கியமான இலக்கிய ஆர்வலர்கள் இலங்கையின் எந்த ஒரு மூலை முடுக்குகளிலேனும் இலக்கிய சம்பந்தமானதும் ஆக்க பூர்வமானதுமான திட்டங்கள் தீட்டப்பட்டால் அதை நன்குணர்ந்து மோப்பம் பிடித்து விடு வார்கள் என்பதற்கு இதுவே சான்று.
நல்லெண்ணம் படைத்த வேறு சிலர் மல்லிகைக்குத் தாம் எந்தெந்த வழிகளில் உதவலாம் எனக் கேட்டெழுதியுள்ளனர். சந்தா சேர்க்கலாம், விளம்பரம் சேகரித்து உதவலாம்; தங்கள் தங்கள் பகுதிகளில் ஏஜன்ஸிகள் இல்லாதிருந்தால் ஏஜன்ஸிகளை ஏற்பாடு செய்யலாம்.
செய்வதற்குத்தான் எத்தனையோ வேலைகள் உண்டே
ஒரு புதிய இலக்கிய யுகத்தைச் சிருஷ்டிக்க விரும்பும் சகல இலக்கியச் சுவைஞர்களும் ஒன்றுபட்டு உழைப்போமானல் ஈழத்து இலக்கிய உலகில் மாபெரும் சாதனைகளை நிச்சயமாக வென்றெடுப்போம்.
- ஆசிரியர்
திரு. எஸ். சின்னத்துரை 100 - 00 * கல்கி பீடி’ யாழ்ப்பாணம்.
திரு ஆ. சிவநேசச்செல்வன் 30 - 00 அம்பனை, தெல்லிப்பழை

இனியொரு விதிசெய்வோம்!
இராஜதந்திரம் என்பது அரசியலுடன் பின்னிப் பிணைந்துள்ள தவிர்க்க முடியாத நுட்பமான ஓர் அம்சம்
ஓர் இனமோ அல்லது மக்களோ என்னதான் புத்திசாலித் தனமாகவும் விளங்கலாம். தங்களது புத்தி நுட்பத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கலாம், தமது நீண்ட நாளையப் பாரம்பரியத்தை எண்ணியெண்ணி இறும்பூதெய்தலாம். வீரத்தைப் பற்றிச் சந்து முனைச் சிந்து பாடலாம்.
இருந்தும் நாம் வாழும் இந்த யுகத்தில் சரியான இராஜ தந்திரம் கையாளப்படாது போனல் இவை அத்தனையுமே பயனற்ற வெற்று விருதுகளாகவே விளங்கும் என்பது திண்ணம்
சரியான சமயத்தில் முறையான இராஜதந்திரம் கையாளப் பட்டால் அதன் பெறுபேறே ஒரு தனிச் சரித்திரமாக அமைந்து விடும் என்பதை உலகச் சரித்திரங்கள் பலதடவை நிரூபித்துக் காட்டியுள்ளன.
இதை விடுத்து உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதாலோ, அல்லது மேடை வசனங்களை உரக்கப் பேசிவிடுவதாலோ பிரச்சினைகளைத் தீர்க்க முடியாததுடன் மட்டுமல்ல அப் பிரச்சினைகளைச் சிக்கல் படுத்திச் சீர்குலைத்தும்விடும்.
சந்தர்ப்பவாதம் என்பது வேறு-இராஜதந்திரம் என்பதுவேறு சாணக்கிய தந்திரம் எனவும் இதற்கொரு பெயருண்டு. சாணக்கியன் பெயரால் இதற்கொரு சாஸ்திரமும் உண்டு.
இராஜதந்திரம் செஸ் விளையாட்டைப் போன்றது. ஒருகாயை. நகர்த்தச் சில சமயங்களில் மூன்று நாட்கள் செல்லலாம். வேறு சில சமயங்களில் மூன்று மாதங்களும் ஆகலாம். மிகப் பொறுமை வேண்டும்; நிதானம் மிக மிகத் தேவை.
இன்று நாட்டில் பல குறைபாடுகள் பலவீனங்கள் உண்டு. அதன் எதிரொலி அரசியல் யாப்பிலும் இடம்பெற்றுள்ளது. உண்மை.
குடியரசு யாப்பிலுள்ள அமைப்பு விதிகள் திருத்தப்படவே முடி யாத தெய்வீகச்சட்டமுமல்ல.இந்திய அரசியல் சாஸனம் பலதடவை திருத்தப்பட்டுள்ளது. நல்லதைச் சாதிக்க முற்போக்கு இயக்கங்க ளின் கரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். புதிய இராஜதந்திரத் திற்கேற்ற கழகமான வழி இதுவே:

Page 4
ஒரு படைப்பாளியைப் பற்றி இன்னுெகு சிருஷ்டியாளனின் பார்வை
ミづう2回5GT5○○空
t
ஒரு படைப்பாளியைப் பற்றி இன்னுெரு சிருஷ்டியாளனின் பார்வை' என்ற கட்டுரைத் தொடரை ஆரம்பிப்பதற்கு முன்னரே "இப்படி ஒன்றை எழுதலாமா?? என்ற வாசக அபிப்பிராயத்தைக் கோரிப் பின்னர் எழுத ஆரம்பித்தமை கட்டுரை ஆசிரியரைப் பொறுத்தவரை தோல்வியின் முதற்படி. மக்கள் இலக்கியம் படைக் கின்ற சமுதாய நோக்குடைய முற்போக்குச் சிருஷ்டியாளன் வாச கர் விருப்பத்தை அறிந்துகொண்டு அதன்பின்னர் தன் "பார்வை' யைச் சொல்லத் துணிந்தமைக்கு இச் சிருஷ்டியாளனின் தடுமாற் றம் - தயக்கம் - தன்நம்பிக்கை இன்மை என்பனவே காரணங் கள். மக்கள் சமுதாயத்தை முன்கை எடுத்துச் சென்று புதுயுகம் காண விழைந்து நிற்கும் முற்போக்குச் சிருஷ்டியாளன், தன் கட மையிலிருந்து தவறி மக்கள் அபிப்பிராயம் என்ற மாயக் கயிற் றைப் பிடித்துக்கொண்டு வாசகர் பின் இழுபட்டமை - ஒருவேளை அந்த வாசகக் கூட்டத்திடம் ஆதரவைச் சம்பாதிக்கும் வழியாக அமையலாம்; அல்லது தற்பாதுகாப்பாகவும் இருக்கலாம். இந்த முன்னெச்சரிக்கையான அந்தரங்க எண்ணத்தை, "நாளுெரு விம ரிசகன் அல்ல" என ஆரம்பித்த முதற் கட்டுரையின் முதல் வாக் கியமே உறுதிப் படுத்துகின்றது.
இத்தொடரை ஆரம்பித்த கட்டுரை முதல் ஆருவது கட்டுரை வரை மாயவித்தைக்காரன்போல அற்புதம் நிகழ்த்தப் போவ தாக ஒரு மயக்கத்தை ஊட்டி - கனமான ஒன்றை வாசகர்களை எதிர்பார்க்கவைத்து - ஏழாவது கட்டுரையுடன் இத்தொடர் முற்றுப்பெறுகின்றதென்பதன் மூலம் ஏமாற்றத்தை அளித்துவிட்டு ஆசிரியர் விலகிக் கொள்ளுகிருர், "ஒரு படைப்பாளியைப்பற்றிய
 
 
 
 

பார்வை’ என்றதும், ஆரம்பம் முதல் இறுதிவரை வாச கன் * படைப்பாளி ஜெயகாந்தனை"க் காணவேண்டுமென ஆவலுடன் எதிர்பார்த்து 'விடாய்த்திருந்ததுதான் மிச்சம். வாச கனி ன் விடாய் தீர்க்கப்படவில்லை. படைப்பாளி ஜெயகாந்தனின் தற் போதைய வக்கரித்த உருவம் புலணுகித் தாகத்தைத் தணித்திருக்க வேண்டும்
ஒரு கலைஞனின் சிருஷ்டியை விமர்சனம் செய். ஆளை விமர் சிக்காதே" என்பது "அக் கலைஞனைச் சமுதாயக் கடமைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளச் செய்யவேண்டுமென்றே ஏற்படுத் தப்படும் கூப்பாடாகும்" என இக்கட்டுரைத் தொடரிற் குறிப் பிடப்பட்டுள்ளமையை ஆதாரமாகக் கொண்டு, இக்கருத்தின் மறு முனையை நோக்குங்கால் இக்கட்டுரையின் தோல்வி புலப்படும். "ஒரு கலைஞனை விமர்சி. அவன் சிருஷ்டிகளை விமர்சிக்காதே’ என்ற கோட்பாட்டின் அடிநாதத்திற்ருன் இத்தொடர் கட்டுரைகள் தோன்றியுள்ளனபோலத் தெரிகிறது. ஒரு படைப்பாளியை அவன் படைப்புக்களில் இருந்து பிரித்துவைத்து விமர்சிப்பது ஒரு சாதா ரண மனிதன் மேற்செய்யும் விமர்சனமாகும். தன்னை உருவாக்கிய தத்துவங்களைத் தூக்கி எறிந்துவிட்டுத் தனிமனித வாதம் பேசும் படைப்பாளியை கண அவன் படைப்புக்களை விமர்சிக்காது - அவனை மட்டும் விமர்சிப்பது, உலகத்தை வழிநடத்துகின்ற தத்துவங்க ளைப் பின்பற்றிய காலத்துப் படைப்புக்களையும், தனிமனித வாதம் பேசுகின்ற தற்போதைய படைப்புக்களையும் ஒப்புநோக்கிச் செய் யும் விமர்சனமே முழுமையானதும் பூரணத்துவமானதுமாகும். படைப்புக்களையும் சேர்த்து விமர்சிக்காது குட்டிக்கரணங்களைம்ாத் திரம் விமர்சிப்பது, "நான் அண்ணுத்துரையை விமர்சிக்கிறேன்" என்ற தொனியின் கெளரவமான கைங்கரியந்தான். "நான் திரு. ஜெயகாந்தன் அவர்களை விமர்சிக்கின்றேன்" என்று எழுதுவதற்கு ஒப்பானது.
அரசியற் பின்னணியில் ஒரு படைப்பாளியின் படைப்பை விமர்சிக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுச் செய்யவேண்டிய இடத் திற் பின்னணியை மட்டும் விமர்சித்து அமைந்தமை, சிருஷ்டியா ளனல்லாத ஒரு அரசியல்வாதிக்குத் திருப்தியைக் கொடுக்கலாம். நிச்சயம் வாசகர்களுக்கு ஏமாற்றந்தான். “இன்னெ சந்தர்ப்பத் தில் நிச்சயம் ஜெயகாந்தனின் படைப்புக்களை விமர்சிக்கத்தான் போகிறேன்" என்ற வாக்குறுதி இக் கட்டுரைத் தொடரை நிறை வுபடுத்த மாட்டாது. ஜெயகாந்தன் எந்தப்பக்கம் என்பது நியா யமான கேள்வி. ஆனல் அவருடைய படைப்புக்களை விமர்சிக்கா மற் தப்பிக்கொண்டமையாற்ருன் இக்கேள்விகூட நியாயமாகப்
படுகிறது.
சரவணு அரவிந்தன்

Page 5
இலங்கைப் பல்கலைக் கழகப் பட்ட தாரியான ஜனுப் சமீம் ஆரம்ப காலத்திலிருந்தே முற்போக்கு இலக்கிய அணியில் முன் நின்று உழைத்துவருபவர்,
படைப்பாளியாக ஆரம்பித்த இவ ரது இலக்கியப் பணி இன்று கட்டுரை இலக்கியத்தில் பிரகாசிக்கின்றது. ஆரம்ப காலத்திலிருந்து சரியான இலக்கியத் திசைவழியில் நடை போடும் இவர், இன்னும் தன்னை ஒர் எழுத்தாளன் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிருர். கிழக்குப்பிரதேச கல்விப்பணிப் பாளராகக் கடமை புரியும் அன்னு ரது உருவத்தை மல்லிகையில் அட்டைப்படமாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேம்.
- ஆசிரியர்
நல்லை அமிழ்தன்
அன்று நான் எஸ். எஸ். ஸி. படித்துக்கொண்டிருந்த வேளை, நல்லூர் சாதன பாடசாலையில் எங்கள் தலைமையாசிரியர் ‘விடி வெள்ளி? அவர்கள் தினம் கொண்டுவரும் இலங்கை, இந்தியப் பத்திரிகை களில் பார்த்து, வாசித்து, ரசித் துச் சிந்திக்க கூடியதாயிருந்தது. அன்று நான் மா ன வ ஞ ய் இருந்த நேரம். இவர்களையெல் காணவேண்டும், கதைக்கவேண் டுமென்று பேரவாக் கொண்டி ருந்தேன். படிப்பை முடித்து எழுத்துத் துறையுள் நுழைந்த வேளையில் எழுத்தாளர் ஜனுப்
கே. பி. முத்தையா
எம். சமீம் அவர்களைத் தவிர மற்ற அத்தனை எழுத்தாளர்களை யும் யாழ்ப்பாணத்தில் நடந்த இலக்கியக் கூட்டங்களில் சந்
டதித்து விட்டேன். ஆனல் ஜனப்
எம். சமீம் அவர்களைச் சந்திக்க வில்லையே என்ற சுமை மட்டும் நெஞ்சில் ஏதோ குயையாகத் தென்பட்டது.
1967-ம் ஆண்டு எழுதுவினை ஞனக நியமனம் பெற்று மட் டக்களப்புக் கல்வி அலுவலகத் திற்குச் சென்றேன். அடுத்தாண் டே ஜனப் எம். சமீம் அவர்க ளும் எமது அலுவலகத்திற்கு
 

பிரதம கல்வி அதிகாரியாக நிய மனம் பெற்று வந்துவிட்டார். நான் எழுத்தில் கண்ட - இது வரை கண்ணுல் காணுத -எழுத் தாளரே எனக்கு அதிகாரியாக வந்தது கண்டு என் சுமையை இறக்கி இரட்டிப்பு மகிழ்ச்சி
கொண்டேன்.
'தனி ஒருவனுக்கு உண வில்லையெனில் ஜகத்தினை அழித் திடுவோம்' எ ன்று மட்டக் களப்பு ஆசிரிய பயிற்சிக் கலா சாலையில் நடந்த தமிழ் விழா வில் தூய தமிழில் முற்போக்குக் கருத்துக்களைக் கொட்டிக்கொண் டிருந்தார். அங்கு குழுமியிருந்த பல்நூறு மக்களும் பெட்டிப் பாம்பாக அடங்கியிருந்தனர். இப்படி ஒரு சிறந்த தமிழ் பேச் சாளர் தமிழ் பேசும் மக்களி டையே இருக்கிருரே என அனை வரும் ஆச்சரியப்படும் வகையில் பாரதியார் கருத்துக்களை தர்க்க ரீதியாக விளக்கிக்கொண்டிருந் தார், ஜணுப் சமீம்.
அடுத்தநாள் காரியாலயத்
தில் அவரை நான் எப்படியும் .
சந்திக்க வேண்டுமென்று நான் காத்திருந்தேன். ஆனல் அலுவ லகத்திலோ டெலிபோன் அல றல் - இடமாற்றம் கோரும் ஆசிரியர்கள்-இலக்கிய கூட்டங் க்ளுக்கு அழைத்துச் செ ல் ல எழுத்தாளர்கள், பிரச்சனைகளு டன் எம். பிக்கள் - இத்தனைக் கும் மத்தியில் அமைதியாக அவ ரவர் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டிருந்தார். இந்த இளம் வயதில் கல்வித் திணைக்களத்தில் எந்தப் பெரிய பொறுப்பான வேலையை நிதானமும் அடக்க மும் அணிசெய்ய செய்துகொண் டிருக்கின்ருர். அ ப் படி யா ன எழுத்தாளரை காண மெல்ல அடிவைத்து அவரது அறையுள் நுழைகின்றேன். நான் கதை யைத் தொடக்கவில்லை.
"இந்தாரும் நான் மல்லி கைக்கு இப்பவே சந்தா தருகின்றேன். சந்தா பத்தி ரங்கள் எடுத்துத் தாரும் நானே மல்லிகைக்கு சந்தா சேர்த்துத் தருகின்றேன். ஜீவாவை இஞ்சாலுப்பக்கம் வரச்சொல்லும்!"
பணத்துடன் நான் திரும்பிவிட் டேன். ஜீவாதான் இ ன் னு ப் மட்டக்களப்பிற்கு வரவில்லை. எம்.பிக்கள், ஆசிரியர்கள், ஊழி யர்கள் மத்தியில் அதிக வேலை செய்துகொண்டிருந்த நேர ம், மல்லிகை என்றவுடன் மனம் திறந்து கதைத்து, சந்தா தந்து மகிழ்ந்தவர் ஜனுப் சமீம்.
மட்டக்களப்புகல்விஇலாகா கலை வட்டம் ந ட த் தி ய பல இலக்கியக் கருத்தரங்குகளில் அவரின் சுவை மிகுந்த தாக்க மான - முற்போக்கான பேச்சுக் களே கேட்க முடிந்தாலும் அவர் கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றதும் அவரின் சொற்பொழிவுகளை, பாடசாலை விளையாட்டுப் போட்டிகளிலும், பரிசளிப்பு விழாக்களிலும்தான்
காண முடிந்தது. சங்கீதமோ, விளையாட்டோ, இலக்கியமோ, விஞ்ஞானமோ, எந்த விடயத்
தையும் மக்களுக்கு விளக்கிப் பேசும் திறன்மிக்கவர் இ வ ர். கிழக்குப் பிராந்திய கல்விப் பிராந்தியத்தில் இவர் கல்விப் பணிப்பாளராக இருக்கும்போது தான் இருதடவைகள் பாடசாலை களின் அகில இலங்கை தமிழ்த் தின விழா மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் அரசாங்க முத்திரையுடன் நடந்தது. இலங் கையில் முதல்தடவையாக கல்வி அமைச்சர் டாக்டர் அல்ஹாஜ் பதியுதீன் முகமட் கடைசியாக நடைபெற்ற தமிழ்த்தின விழா வில் பங்குகொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது

Page 6
ஈழத்தின் பிரபல எழுத்தா ளரும், விமர்சகருமான ஜனப் எம். சமீம் 1971-ம் ஆண்டு முதல் ஈழத்திலேயே மிகப்பெரிய க்ல்விப் பிராந்தியமான கிழக்குப் பிராந்தியத்தின் கல்விப் பணிப் பாளராக ப்தவி உயர்ச்சி பெற் றது எழுத்தாளர் பெற்ற கெளரவமாகும். இலங்கையில் நான்கு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரேயொரு கல் விப் பிராந்தியம் இதுதான். மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கு கின்றன.
பட்ட தா ரி ஆசிரியராக தமதுபணியை ஆரம்பித்த ஜனப் ம்ே அவர்கள்” மிகக் குறுகிய காலத்தில் வட்டாரக் கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி ஆலோ சகர், பிரதம கல்வி அதிகாரி, முதலிய பதவிகளை வகித்து தற் போது கல்விப் பணிப்பாளராக உயர்ச்சி பெற்றிருப்பது மிகக்
கடுமையான உ ைழ ப் பின் வெற்றி என்பதில் சந்தேக Lidiah).
இலங்கை சர்வகலாசாலை
பட்டதாரிரான இவர் சர்வகலா சாலை மாணவனுய் இரு ந்த காலத்தில், எல்லா விளையாட்டு களிலும் பங்குபற்றி சிறந்த விளையாட்டு வீரனகத் திகழ்ந்த வர். . குறிப்பாக *ஹொக்கி" கோஷ்டிக்கு தலைவராக இருந்த தோடு நீச்சல், உதைபந்தாட் 'ம் ப்ோன்ற விளையாட்டுக்க வில் விசேட பத்திரங்களும் "கலர்ஸ்" கெளரவங்களும் பெற்
றவர். 象
விளையாட்டுத் துறையில் ஈடுபாடுள்ளவர்கள் எழுத்துத் துறையில் பிரகாசிப்பது மிக
அபூர்வம் - ஆனல் ஜனப் g Lib அவர்கள் எழுத்துத் துறையில்
ஈடுபட்டு பிரபல எழுத்தாளராக் வளர்ந்தது விந்தையே. இவரு டைய படைப்புகள் முற்போக் கான ஆழமான நோக்குடை யவை, அகலமான ப்ார்வையு டையவை - பல்வேறு புனை பெயர்களில் மணியான சிறு கதைகளை எழுதியுள்ள இவர் "இலங்கை முஸ்லீம்களின் திரு மறை சம்பிரதாயங்கள்" "வர லாறு கண்ட முஸ்லீம் பெரியார் கள்" "இலங்கை முஸ்லீம்களின் வரலாறு" போன்ற ஆராச்சிக் கட்டுரைகளையும் - மற்றும் பல இலக்கிய வரலாற்றுக் கட்டுரை களையும் எழுதியிருக்கிருர்.
இவர் கட்டுரைகள் 'தினக ரன்" பத்திரிகையில் தொடர் கட்டுரையாக வெளிவந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். இவர் எழுதிய "மதரசாக் கல்வி என்ற ஆய்வுக் கட்டுரை பாரிசி லுள்ள யுனெஸ்கோ’ஸ்தாபனத் தின் நிரந்தரக் கட்டுரைப் பட் டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிழக்கு மகாண முஸ் லீம்களை மையமாகவைத்து குறிப் பாக காத்தான்குடி முஸ்லீம்களை பின்னணியாகக் கொண்டு ஓர் ஆராய்ச்சி நடத்தி gf பொருளாதார காரணிகள் கல் வியை எவ்வாறு பாதிக்கின்றன?" என்ற பொருள் பற் ஒர் ஆய்வுக் கட்டுரை எழுதி முடித் திருக்கின்ருர். இவர் எழுதிய "இஸ்லாமிய கலாச்சாரம்" என்ற நூல் ஏற்கனவே வெளிவந்துள் வாது.
தமிழிலும், சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் சரளமாகப் பேசவும் - எழுதவும் - மொழி பெயர்க்கவும் வல்லவரான இவர் வீட்டில் நிறையக் இருப்பது புத்தகங்கள் - காரியாலயத்தில் நிறையக் கிடைப்பது ஆசிரியர் கள் பிரச்சனைகள் சம்ப்ந்தமான கடிதங்கள்!

இளஞ ன்
நின் முன்பு ஆண்கள் வாடகைக்கு இருக்கும் அறைகள் உள்ள கட்டடமொன்றில் தங்கி யிருந்தேன். அங்கு வாழ்ந்தவர் கள் எல்லோருமே இளைஞர்கள். அவர்களிற் பலர் கொழும்பி லுள்ள காரியாலயங்களில் வேலை பார்க்கும் எழுதுவிளைஞர்களா வார்கள். பல்கலைக் கழகத்தி லும், வைத்தியக் கல்லூரியிலும் சட்டக்கல்லூரியிலும் படிக்கின்ற
பல மாணவர்களும் அங்கு தங்கி
யிருந்தார்கள். நான் சிறுவயதி லிருந்தே அதிகமான நண்பர் களை வைத்திருக்க விரும்பாத வன். ஒய்வு நேரங்களில் பிறரு டன் ஒன்றுகூடி பகிடி விளையாட் டுக்களில் ஈடுபட்டுச் சிரித்துப்
பொழுதுபோக்கும் பழக்கம் எப்
பொழுதுமே என்னிடமிருந்த தில்லை. நான் அவைகளை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. மற்றவர்களும் GT GóT&w ' ? Jfr லவே இருந்துவிட்டால் இந்த
சிங்களச் சிறுகதை
சிங்கள மூலம்:
ஜி. பீ. சேனநாயக்கா
தமிழாக்கம்: தம்பிஐயா தேவதாஸ்
உலகம் பகிடி விளையாட்டுப் பேச்சுக்களிலிருந்து விலகித் துக் கம் சூழ்ந்த நிலமாகிவிடும் என் பது உண்மையே, இத்தகைய குணத்தால் நீண்ட காலம்வரை அங்கு வாழ்ந்த அனேகருக்கும் எனக்கும்இடையில் அறிமுகமே ஏற்படாதிருந்தது.
னைப்போன்ற சிலரைத் தவிர ஏனையோரிடம் ஒரேவிதத்தில் நட்புக் கொண்ட இளைஞனெரு வன் அங்கு இருந்தான். மெல் லியவனுகவும் உயர்ந்த தோற் நிறமுடையவனுமான அவன் உள் ளத்தைக் கவரும் தன்மையுள்ள 6 6T, மெல்லிதாக fióir- நாசி யும் அழ கான விழிகளையும் உடைய அவன் முகத்தில் எந் நேரமும் புன்னகை தவழும். அடுத்தவர்களின் நட்பை பெறு வதில் வீ ர ன கிய அவனைப் போன்ற வேறு ஒருவனேயும் நான் இதற்குமுன் பார்த்ததே

Page 7
யில்லை: அவனுடைய அழகும் பெண்ணுெருத்தியின் குர லை ப் போன்ற மென்மையான குரலில் சொலலும் உள்ளத்தைக் கவரும் கதைகளுமே அவன் அடுத்தவர் களை அவ்வாறு கவருவதற்குக் காரணங்களாகும் என்று எண் ணுகிறேன். உருவ அழகையும் அவன் சொல்லும் கதைகளே யும் போலவே அவனது நல்ல பண் புள்ள குணங்களும் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் தன்மை யின என்று கூறமுடியும்.
அவன் அடுத்தவர்களின் அறைக்குட் சென்று பகிடிப் பேச்சுக்கள் பேசி ச் சிரிக்கும்
சத்தம் மாலை வேளையில் எப் பொழுதுமே கேட்கும். அவனது சிரிப்பொலி கன்னியொருத்தி மகிழ்ச்சியால் எழுப்பும் இனி மையான சிரிப்பைப் போன்ற தாகும். அந்தச் சிரிப்பொலி யைக் கேட்கும்பொழுது எனக் குப் பெண்ணுெருத்தியின் கைக ளில் அணியப்பட்ட மெல்லிய வெள்ளிக் காப்புகள் ஒன்றுட ஞென்று முட்டுப்படும்பொழுது எழுகின்ற சத்தம் வரும்.
மாலை வேளையில் ராசசிங் காவுடன் உலாவப் போவதற்கு ஆசை இல்லாத எவருமே அங்கு இல்லை. அவனுடைய பெயர் *ராசசிங்கா" என்று முன்பே கூற மறந்துவிட்டேன். ராசசிங் காவுடன் உண்டு குடித்துக் களிப்
படைவதற்கு எல்லோருமே விரும்பினுர்கள். கட்டடத்தில்
வாழ்ந்த எல்லோருமே தாங்கள் சந்தோஷத்தைப்  ெப ற் று க் கொள்ளும் ஊ ந் நூறு என்றே எண்ணிஞர்கள்.
ராசசிங்கா அந்தக் கூட்டத் தினின்றும் பிரிந்து போவதற்கு ஆயத்தமாகையில் எல்லோருமே துக்கத்தில் ஆழ்ந்தார்கள். அங்
10
நினைவில்
அவன்
டுப் போக டாலும், வேலையை விடவேண்
கிருந்த இளைஞர்கள் அவ ன் போவதை எண்ணிக் கண்ணிர் சொரித்து நின்றர்கள்.
"ராசசிங்கா, நீ போய்விட் டால் இந்த இடம் உண்மையா கவே பாழடைந்துவிடும். இன் னும் கொஞ்ச நாட்கள் இருக்க போட்டாயா?" இவ்வாறு பலர் அவனிடம் கேட்டார்கள். -
prm ggorig; tr. காரியாலயம் ஒன்றில் எழுது வினைஞணுகக் கடமையாற்றுகின்றன். கொ ழும்பில் வேலை செய்தாலும் அவன் தூரவுள்ள ஊரொன்றின் பணக்காரக் குடும்பமென்றைச்.
சேர்ந்தவன். அவன் வேலை செய்வது பணம் சம்பாதிக்க மட்டுமல்ல; ஊரில் சும்மா
இருப்பதைவிட ஏதாவது வேலை செய்தால் அழகாக இருக்கும்
என்பதினுலேயே. படிப்பதற்கா
கச் சிறு வயதுமுதல் கொழும் பிலிருந்து நகர வாழ்க்கையைப் பழகிக்கொண்ட அவன், தனது ஜலூரின் அமைதியான வாழ்க் கையை விரும்பவில்லை.
அவன் கொழும்பு வாழ்க் கையை விரும்பியது, கொழும் பில் வேலை பார்ப்பதற்கு மற் ருெரு காரணமாகும்.
அவன் கட்டடத்தை விட்
டுப் பிரிந்துபோவது வேலையை
விட்டுவிட்டு ஊரில் வந்து வாழ வேண்டுமென்ற தனது தாயின் கட்டளைக்கிணங்கவே. அவனு டைய தந்தை இறந்ததால் அவன் ஊரிலேயே பொருட்க ளைப் பார்த்துக் கொள்ள வேண் டிய அ வ சி யம் ஏற்பட்டது. அவனுக்கு வேலையை விட்டுவிட் விருப்பமில்லாவிட்
டிய நிர்ப்பந்தமே ஏற்பட்டு விட் * أقي سسكا

ராசசிங்கா கட்டடத்தி னின்றும் நீங்கிச் சென்றது நான் அங்கு வந்து சேர்ந்த இரண்டு மாதங்களுக்குப் பின்பாகும். நான் மற்றவர்களுடன் உட னேயே நட்பை ஏற்படுத்திக் கொள்ளுபவன் அல்லாததஞ லும், என்னுடைய ஒய்வு நேரங் களில் அதிக பகுதி புத்தகங் கள் வாசிப்பதஞறல் கழிந்து போவதனலும் எனக்கு ராசசிங் காவுடன் நட்பு ஏற்படவில்லை.
ராசசிங்கா சென்று - சிறிது காலம்வரை அவனைப்பற்றியே எல்லோரும் பேசிக்கொண்டார்
கள். அ வ ன் காசநோயாற் பீடிக்கப்பட்டு வைத்தியசாலை யிற் தங்கியிருக்கிருன் என்ற
செய்தி சில மாதங்களின் பின் தெரிய வந்தது. இதைக்கேட்ட அவனுடைய நண்பர்கள் துக்க மடைவார்கள் என்பதை நான் உங்களுக்குக் கூற வேண் டி.ய தேவையேயில்லை.
ஒருநாள் மா லை அந்தக்
கட்டடத்திற்கு ராசசிங்கா மீண்
டும் வந்தான். அவன் இங்கி ருந்து சென்று ஐந்து மாதங்க ளின் பின்பே மீண்டும் வந்திருந் தான். வைத்தியர் ஒருவரைப் பார்க்க மீண்டும் கொழும்பிற்கு
வந்த அவன் தன்னுடைய நண்
பர்களையும் பார்த்துவிட்டுச் செல்ல எண்ணிஞன். அவனது உடம்பு மெலிந்து பலவீனமான வணுகக்காணப்பட்டான். முன்பு உள்ளத்தைக் கவரும் தன்மை
யுடனிருந்த அவனது மேனி இப்பொழுது எலும்புக் கூடு என்றே கூறமுடியும். அவனது
அழகியவதனம் காய்ந்துபோய்க் கன்னங்களில் எலும்பு தெரிந் தன. முன்பு அழகுடன் பிரகா சித்த இரு விழிகளும் இருட்குளி யினுள் அமிழ்ந்து மறைந்திருந் தன. அவன் நடக்கக்கூட மிகக் கஷ்டப்பட்டான்.
முன்பு அவனை விரும்பிய நண்பர்கள் இப்பொழுது அவ னுக்கு அருகில் போகக்கூட விரும்பினர்களில்லை, ராசசிங் காவுக்கு இதை ஒரேமுறையில் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை நான் அறிந்துகொண் டேன். அவன் அறையினுள் வந்தபோது ஒர் இளைஞன் பயண மொன்று போவது போன்று ஆடையை அணிந்து கொண்டு உடனேயே வெளியேறினன் இன்னுமோர் இளைஞன் தூரத் தில் நின்றவாறே கைக்குட்டை யால் வாயையும் மூக்கையும் பொத்தியவாறு உரையாடி ஸ்ஞன், அவனுடன் பகிடிப் பேச் சுக்கள் பேசிச் சிரித்து மகிழ்வ தற்கு இப்ப்ொழுது ஒருவருமே இல்லை.
வந்த அவன் அரை மணித் தியாலத்தின் பின் மீண் டு ம் திரும்பிப் போவதை நான் கண் டேன்.
. அவன் வரும்பொழுது இல் லாத துக்கவுணர்ச்சி இப்பொ ழுது அவனது முகத்திற் தெரி கின்றது. அவனது இருகண்க ளிலும் முன்பு இல்லாத ஒரு விதப் பார்வை இப்பொழுது இருந்தது. மரணபயத்தால் பயந்தவர் பார்க்கும் பார்வை அது. மெதுவாகக் கால்களை ஊன்றியவாறு, பயத்தாலும் துன்பத்தாலும் பீடிக்கப்பட்ட ஒருவனைப்போன்று டோகும் அவனைப்பார்த்த எனக்கு மிகுந்த மனவேதனை உண்டாகியது
பிறருடன் எந்நேரமும் பகி டிச் சொல்பேசி மகிழ்ச்சியடை யாத ஒருவனுக நான் இருந்த போதிலும், ராசசிங்கா போவ தைக் கண்ட என் உள்ளத்தில் உண்மையாகவே அதிக துக்கம் உண்டாகியது, மனவேதனையால்
Z

Page 8
என் கண்களில் கண்ணிர் பெரு கும்போலிருந்தது. எனது அறை யின் கதவுக்கருகில் அதிர்ச்சிய டைந்தவன்போல் நினைவற்று நின்றிருந்தேன். அவன் என்னைத் தாண்டிச் சென்றுகொண்டிருந் தான்
நான் இதற்குமுன்பு ராச சிங்காவுடன் இரண்டு மூன்று
சொற்களுக்குமேல் கதைத்திருக்
கவில்லை. ஆனல் இப்பொழுது அவனை எனது அ  ைற க்கு அழைத்து அவனுடன் பகிடிப் பேச்சுக்கள் பேசி இன்புறவேண் டுமென்று எண்ணினேன். நான் எண்ணியது மகிழ்ச்சிச் செய்கை களினல் அவனை ஆறுதலடையச் செய்யும் கருத்துடனேயே.
அவனை அழைப்பதற்காகச் சற்றுமுற்றும் பார் த் தேன். 96) அங்கே காணமுடிய வில்லை. முற்றத்திற்கு இறங்கிப் பார்த்துவிட்டுத் மாக ஒடிச் சென்றேன். தெரு வின் இருமருங்கிலும் பார்தேன்.
தருப்பக்க
எனக்குத் தெரிந்தது. அவன் அதிதூரத்திற் சென்று மறையும் வரை நான் நின்ற இடத்தை விட்டு அசையாமலே பார்த்த வாறு நின்றிருந்தேன்.
அவன் சென்று மறைந்த பின் நான் மீண்டும் வந்து புத்தகங்களினலும் கட தாசிகளினலும் நிறைந்திருக் கின்ற எனது மேசைக்கருகில் அமர்ந்தேன். இரண்டு கண்களை யும்மூடியவாறு தலையை மேசைக் குப் பாரமாக வைத்துக் குனிந்த வாறிருந்தேன்.
அந்நேரத்தில் என் உள்ள்த்
'தில் பெரியதோர் பயம் உண்டா
கியது. அந்தப்பயம் மரணம் தன்னை நோக்கிவரும் ஒருவனின் உள்ளத்தில் உண்டாகும் பயத் திற்கொப்பானது என்றே எண் ணுகின்றேன். தூரத்தில் மெது வாக நடந்து செல்வது ராசசிங் காவல்ல, மரணமே என்று அந்த நேரத்திலேயே உணர்ந்து ,
தூரத்திற் சென்றுகொண்டிருக் கொள்கிறேன் கும் அவனது உயர்ந்த உருவம்
00LYLLL00L00YYeLLLLLLLL0L00L0LL0L0L00Y0LL00000L0L0000L00L00Y00Y0LY0L00LLLY00L000000L0LLL S
நாண வேண்டியதற்குத்தான் நாண
வேண்டுமே
தவிர, நாணத்தேவையில்லாததற்கு நாண வேண் டியதில்லை. வெட்கப்படத் தேவை இல்லாததற்கு
வெட்கப் படுபவன், Ganu" is 'LI L-LDnri-L-mt Gör .
வெட்கப்பட வேண்டியதற்கு
அறிவீனத்துள் பெரிய அறிவீனம் எது? அறிவாளி களான பெரியோருடைய கருத்தின் சிறப்புத் தெரிந்
தும்
அதைச் செயல்படுத்தக் கூச்சப்படுவதுதான்.
- டிமாக்டிரஸ்
080808088-88088-88000000008080808088088-888-808080800

சர்வதேச நோக்கில் தமிழ்ச் சினிமா
யாழ். இலக்கிய நண்பர் கழக ஆதரவில் ஒரு கலந்துரையாடல்.
■
(சமீபத்தில் யாழ். இலக்கிய நண்பர் கழகம் யாழ்ப்பாணத்தில் ஒரு கலந்துரையாடலை நடாத்தியது. இந் நிகழ்ச்சியின்போது கூறப்பட்டவற்றின் ஒரு தொகுப்பு இது.)
*சிளிமா, மக்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பலம் மிகுந்த சாதனம். ஆதலால் சினிமாவின் போக்கு, தரம் முதலி யனபற்றிய ஆய்வு மிகவும் முக்கியமானது."
- க. மயில்வாகனன்.
*அண்மைக் காலத்தில் இத்துறை எம்மிடையே அதிக கவன னத்தை ஈர்த்துள்ளது. தமிழ்ச் சினிமா பின்தங்கிய நிலையில் இருக்கிறது. சர்வதேசப் புகழ்பெற்ற சில படங்கள் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவற்றுடன் ஒப்பிட முடியாத அளவுக் குத் தமிழ்த் திரைப்படத்துறை தாழ்ந்துள்ளது. மிகவும் குறுகிய
வட்டத்துக்குள் அது அடங்கியுள்ளது."
- குப்பிளான் ஐ. சண்முகன்.
"திறமையான புலமையெல4ல் வெளிநாட்டார் வணக்கம் செய்வார்கள். பலரைச் சில விநாடிகளுக்குள் அடித்து வீழ்த்திடும் அதிமனிதர்களைக் காட்டுவது நல்ல கலையாகாது. கோயிலுக்குச் செல்வதுபோலப் பயபக்தியுடன் சிலவேளைகளில் தியேட்டருக்குச்
செல்லவும் நேர்கிறது சிலருக்கு."
- வ. பொன்னம்பலம்
"பழைய படங்கள் சிலவற்றில் நல்ல அம்சங்கள் தென்பட் L-607.'
- ஏ. ஜே. கனகரத்தினு
"தமிழ்ப் படங்களெல்லாம் தரமற்றவை என்று மொத்தமாக ஒதுக்க முடியாது. காட்டுப் புஷ்பங்கள் போலச் சில படங்கள் வெளிவந்தன. எஸ். வி. சகஸ்ரநாமம் பங்குகொண்ட படங்கள் நன்ருக இருந்தன. நாலுவேலி நிலம், மனிதன் போன்றவை
"குறிப்பிடத் தக்க படங்கள்."
-விஜயேந்திரன்

Page 9
*எல்லாப் படங்களும் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் ஒட்டப்படுகின்றன. ஏன் இப்படி? மற்ற நாடுகளிலென்ருல், இப் படி நீண்ட நேரம் இருந்துகொண்தி படம் பார்க்கமாட்டார்கள். அப்படிப் பார்த்து, அந்த நேரத்தில் உழைத்திருக்கக்கூடிய வரு வாயை இழந்துபோக அவர்கள் தயாரில்லை. சிங்களத்தில் ஜி. பி. சேனநாயக்காவின் சிறுகதையைப் படமாக்கினர்கள். தமிழில் சிறுகதைகளைப் படமாக்க மிகவும் தயங்குகிருர்கள்."
- டொமினிக் ஜீவா
"தமிழ்ச் சினிமா வியாபாரமாகத்தானே இருக்கிறது. சினிமா ஒரு கலை என்ற எண்ணமே தயாரிப்பாளர்களுக்கு இல்லை.
- க. மயில்வாகனம்
"தமிழ்ச் சினிமாதான் சினிமா என்று பெருந்தொகையான வர்கள் நினைத்துக் கொண்டிருக்கிருர்கள். தமிழ்ச் சினிமாவுக்கும் அப்பாலை, சர்வதேசச் சினிமாத் துறை தமிழ்ச் சினிமாவுடன் ஒப்பிடமுடியாத அளவுக்கு வளர்ச்சிபெற்று விளங்குகிறது என்ற செய்தி அவர்களுக்கு உண்மையிலேயே தெரியாது. தரமான திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பே அவர்களுக்கு இல்லை.
- மாவை நித்தியானந்தன்
"வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், மக்கள் நிச்சயமாக நல்ல திரைப்படங்களை இனம் கண்டு கொள்வ1ர்கள். திரைப் படக் கூட்டுத் தாபனம் இதில் உதவலாம்."
- ஏ. ஜே. கனகரத்தினு
‘சர்வதேசத் திரைப்பட விழாக்கள் முதலில் கொழும்பில் நடக்கின்றன. பிறகு கண்டியில் நடக்கின்றன. யாழ்ப்பாணப் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை."
- தில்லைக்கூத்தன்
'தரமான் சினிமாவைப் பற்றிய செய்தி பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இதுஒரு இயக்கமாக மக்களி டையே வளர வேண்டும்."
ጳ - மாவை நித்தியானந்தன்
*ஆனல், திரைப்பட இறக்குமதியைத் திடீரென்று தடை செய்யமுடியாது. தடைசெய்வதால் ஏற்படும் இடைவெளியை நிரப்ப உடனே ஈழத்துப் படங்கள் கிடையா. திரைப்பட இறக் குமதி, சஞ்சிகை இறக்குமதியைப் போன்றதல்ல. இது ஏராள மான தொழிலாளர்களையும், பெரும் முதலீட்டையும் உள்ளடக் கிய ஒரு தொழில். எச்சரிக்கையுடன் கையாளப்படவேண்டிய
துறை இது."
- ஏ. ஜே கனகரத்தினு
4

*சர்வதேசச் சினிமாவில், துண்டுப்படத்துறை மிகவும் ஓங்கி வளர்ந்துள்ளது. சிங்களத்திலும் சிறப்புமிக்க துண்டுப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. தமிழில் இத்துறையில் சிறிதளவு கவனம்கூட எடுக்கப்படவில்லை.")
- குப்பிளான் ஐ. சண்முகன்.
(at நாட்டில் தரமான தமிழ்ப் படங்களைத் தயாரிக்க வேண்டும் . சிங்களச் சினிமாத்துறையில் ஈடுபட்டிருக்கும் பணம் படைத்ததமிழர்கள், தமிழ்ச் சினிமாத்துறையில் ஈடுபட
முன்வருவதில்லை, )
- டொமினிக் ஜீவா
"அவர்கள் ஏன் முன்வரப் போகிருர்கள்? அது அவர்களுக் குத் தேவையில்லாத பிரச்சனை. அவர்களுக்குப் பணந்தானே நோக்கம்! தமிழ்ப் படங்களுக்குத் தான் தென்னிந்தியா இருக் கிறதே.
a- Lu 6)f
"நாங்கள் இங்கே தமிழ்ச் சினிமாவைச் சர்வதேச ரீதியில் நோக்கிச் சிந்தித்துக்கொண்டிருக்கிருேம். ஆனல் தமிழ்ச் சினிமாத் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்களுக்கோ இப்படிப்பட்ட முனைப்போ இந்தனைகளோ இல்லை. தென்னிந்தியாவின் தரமற்ற சினிமாவி ணுல் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பல்வகைப்பட்ட ஈழத்துக் கலைஞர்களுக்குக் கூட, இப் பிரச்சனையில் அக்கறை அதிகமிருப் பதாகத் தெரியவில்லை. எதற்கொடுத்தாலும் எழுத்தாளர்கள் தான் தனித்து நின்று குரல் கொடுக்கவேண்டியிருக்கிறது. ஏன்
இப்படி? இது நியாயமில்லை."
- டொமினிக் ஜீவா
"சிந்திக்கத் தெரிந்ததால்தானே அவர்கள் எழுத்தாளர்களா ஞர்கள்."
- தில்லைக் கூத்தன்
* பாதிக்கப்படும் எல்லோரும் இதில் பங்குகொள்ள வேண்டும் என்கிறேன். பலர் தூங்கி வழிகிருர்கள். சிலர் எம். ஜி. ஆர்.
சிவாஜி விழாக்கள் நடாத்துகிருர்கள்,
- டொமினிக் ஜீவா
"நம்நாட்டுத் தமிழ்ப்படத் துறையில் யார் எம். ஜி. ஆர்? - ஒரு குரல்
‘தென்னகப் பத்திரிகை இறக்குமதிக் கட்டுப்பாட்டினல் யார் யாரோவெல்லாம் பயனடைய முடிந்தது. உதாரணமாக, பெரிய பத்திரிகைகளின் விற்பனை ஆயிரக் கணக்கில் அதிகரித்தது.
ஆகையால், பிரச்சனைகளுக்குத் தெைகாடுப்பது எழுத்தாளன் மட்டுமே என்று இருக்கக் கூடாதென்றுதான் சொல்கிறேன்."
- டொமினிக் ஜீவா
5

Page 10
"இது உண்மையே. என்றலும் தரமற்ற சினிமாவை எதிர்க் கும் இயக்கம் ஆரம்ப நிலையில்தானே இருக்கிறது. எழுத்தாளர் களால் இதை விரிவுபடுத்தி, முன்னெடுக்க முடியும்."
- மாவை. நித்தியானந்தன்
"நம் நாட்டில் நல்ல தமிழ்ச் சினிமா வளர வேண்டும். தென்னிந்தியச் சினிமாத் தொழில் நுட்பத்தில் நன்கு முன்னேறி னலும், எடுத்துக்கொள்ளும் பொருளிலும், கலையம்சத்திலும் தோல்வி கண்டுவிட்டது. சினிமா, மக்களின் வாழ்க்கையுடன் ஒட்டியதாக இருக்கவேண்டும். மக்களுக்குப் பயன்படத்தக்கதாக இருக்கவேண்டும். யதார்த்தப்பண்புள்ளதாக இருக்கவேண்டும். ஈழத்துச் சினிமா இத்தகைய திசையில் வளரவேண்டும்."
- வ. பொன்னம்பலம்
நாடகத் துறையில் சாதிக்க முடியுமானல் ஏன் சினிமாவி லும் முடியாது? ஈழத்துத் தமிழ் நரடகத் துறை அண்மைக்காலத் தில் பல மிக உயர்ந்த படைப்புகளை உருவாக்கித் தந்திருக்கிறது. கடூழியம், சங்காரம், கோடை போன்ற நல்ல நாடகங்கள். உரியவர்கள் பங்குகொண்டால், சினிமாவிலும் நாம் நிச்சயம் உயரமுடியும்.'
GPL- - தில்லைக்கூத்தன்
"ஆனல் திரைப்படத் தயாரிப்புக்கு எத்தனையோ வசதிகள் தேவை.Tபெரிய மூலதனம் தேவை இதனல்தான், திரைப்படக் கூட்டுத்தாபனம் எமக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. நாங்கள் அதிகம் பேசிக்கொண்டிருக்கிருேம். பேச்சை நிறுத்த வேண்டும். செயலில் காட்டவேண்டிய காலம் வந்துவிட்டது. *
- டொமினிக் ஜீவா
"உண்மை ய. ஆனல் பேச்சும் ஒரு அங்கமாக இன்றைய நிலையில் தேவைப் படுகிறது. நாம் ஆரம்பக் கட்டத்தில்தானே இருக்கிருேம். பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தையே சொல்கி றேன். மக்களுக்கு நல்ல கலை பற்றிய உண்மை சரியானபடி விளங்கியாக வேண்டும். அல்லது தென்னிந்திய முதலாளித்துவத் திற்குப் பதிலாக, அல்லது அதனுடன் சேர்ந்து, உள்நாட்டு முதலாளித்துவத்தில் தமிழ்ச் சினிமா அகப்பட்டு, வியாபாரமா கவே தொடர்ந்திருக்க நேரும். இதை நாம் ஏற்கத் தயாரில்லை."
- மாவை. நித்தியானந்தன் இங்களச் சினிமாவின் சர்வதேச ரீதியான வளர்ச்சி எமது
விர கவனத்துக்கு உரியது."
- வ. பொன்னம்பலம்
"நம்மிடம் ஏற்கனவே சர்வதேசத் த" க்கம் இருக்கிறது. "குத்துவிளக்கில் வரும், செம்பினுள் கொதிநீர் ஊற்றித் துணி அழுத்தும் காட்சி ஒன்றே உதாரணத்துச்குப்போதும். 50 வரு

டங்களாகத் தென்னிந்தியச் சினிமா சாதிக்காததை நாம் விரை வில் சாதிப்போம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது."
- டொமினிக் ஜீவா
"உன்னதமான, கலையம்சம் பெ ருந்திய தமிழ்ச் சினிமாதான் குறிக்கோளாக இருக்கவேண்டும். 'நிதான ய’ படம் பற்றி இங்கு பேசப்பட்டது. இப் படத்திற்கான தேவை என்ன? அது ஏன் எடுக்கப்பட்டதென்று விளங்கவில்லை. 'செம்மீனை அதிகம் இங்கே பாராட்டினர்கள். எங்கள் இலக்கு என்ன என்ற கேள்வி இப்
பொழுது எழுகிறது."
- மாவை, நித்தியானந்தன்
* எடுத்த எடுப்பிலேயே மிக உயர்ந்த அளவுக்கு கலையம்சத்தை வலியுறுத்தக் கூடாது, கலேத்தரம் மிக்க படம் சிலவேளை மக்க ளிடம் உரிய வரவேற்பைப் பெருது போய்விடும். செம்மீன் போன்ற படங்கள் வந்தாலே ஆரம்பத்தில் போதும் "
- ஏ. ஜே. கனகரத்தினு
"அதை ஒரு படிக்கல்லாக ஏற்றுக்கொள்ளலாம். இன்னும் உயர்ந்த கலைப்படைப்பே இலக்காக இருக்கவேண்டும்."
- மாவை, நித்தியானந்தன் "படிப்படியான வளர்ச்சியின் மூலம் அந்த இலக்கை அடை ш6ртші).*
- ஏ. ஜே. கனகரத்தினு வெட்டி ஒட்டியவர்: நித்தியானந்தன்
ALS LALS AMLMS LMLL LAe S LLTLq LALA ALAqA SeA LA A AeLe eeLLeLee eLee LLLeee LLe LeeeL SAeLe eAee eqe eqeLe S ALASS SALLLS AAALS AAALS AAALS TALASSSLLSSLLS LSSLSSLLSYSL0SSSSAAAA S ***や●●************************る**ぐふふふふふふふふふふふふふぐぐ。
உண்மை இலக்கிய ரசி கர் க ரூ க்கு ਮੈ। பொறுப்பான கடமை கள் உண்டு நமது தேசிய இலக்கியம் தனக் குகந்த தகுந்த கெளர வத்தைப் பெற வேண் டும். இதைச் சாதனை யாக்க முனைந்து செய லாற்றி வெற்றி பெறும் நோக்கத்துடனேயே மல்லிகை ஆரம்பிக்கப் பட்டது. இதைச் சாதிக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்ந்து மல்லிகை யைப் படிக்கவும்.
ஆண்டுச்சந்தா 6.00 தனிப்பிரதி 40 ப
7
60േff് /സ്ത്രീ
daw a .....rssst & x... , --w-xxxiwww.uw&-w*** "*" *

Page 11
சிறுகதை
நற்சாட்சிப் பத்திரம்
த. தேவதாஸ்
அ ந் த க் கல்லூரியின் நுழைவாயிலைக் கண்டதும் எனக் குள்ளேயே சிரித்துக் கொள்கின்
றேன். நான் அதே கல்லுரரியின்
பழைய மாணவனுக இருந்த போதிலும் அந்தப் புனிதமான கல்விக்கூடத்தைக் ஏன் சிரிக்கின்றேன்? ஒரு மனி தன் தான் டித்த கல்லூரி
யையோ அல்லது பாடசாலை யையோ காண நேரிட்டால் அதன்மேல் 'அவனுள்ளத்தில்
ஒருவித பக்தி உண்டாவதே இயற்கை . ஆனல் எனக்குமட் டும் அந்தப் பக்தி இல்லையா?
கொட்டாஞ்சேனையிலிருந்து வெள்ளவத்தைக்குப் போகும்
பொழுதெல்லாம் இந்தக் கல் லூரியை அடி க் கடி காண நேரிடும்.
வீதியெங்கும் டஸ்களும்
கார்களும் ஒன்றன்பின் ஒன்ரு க ஓடிக்கொண்டிருக்கின்றன அந்த வாகனங்களைத் தொடர்ந்து செல்லும் டஸ்வண்டியொன்றின்
8
கண்டதும்
6 g) ,
மேற்தட்டில் இருத்தவாறு அந்
தக் கல்லூரியை நோக்குகின் றேன்.
JUJFrij J5š கல்லூரியல் லாத பிரத்தியேகக் கல்லூரி என்பதனலேயோ என்னவோ
அன்று முதல் இன்றுவரை அதன் பழைய தோற்றத்திலேயே காட் சியளித்தது. வகுப்பறைகளின் தகரத்திஞலான கூரைகள், ஒவ்வொரு வகுப்பறைகளுக்கும்
முன் வளர்ந்து நிற்கும் குரோட்
டன் செடிகள், பலநாட்களுக்கு வெள்ளை அடிக்கப்படாத அரை அளவு உயர்ந்த மதில், அதன் மேல் நிறுத்தி வைக்கப்பட்ட உடைந்த போத்தல் ஒடுகள், மதிலின் உட்புறத்தில் உயர்த்து நிற்கும் கல்லூரியின் பெயர்ப் இவை எ ல் ல | மே தோன்றி மறைகின்றன. கல்லுர ரியின் கேற்றுக்கருகில் நிற்கும் காவலன் இன்றும் அதே இடத் தில் நிற்கின்ருன். காக்கிச் சட் டையூம் காக்கிக் களிசானும்
அணிந்து நிற்கின்ற அந்தக்
 

கேற் காவலன்மீது எனது பாரி வை இறுதியாகப் பதிகின்றது. அவனேக் கண்டதுமே எனது சிரிப்பு அதிகமாகின்றது. அந்தக் கல்லூரியின் எனது இளமைக் கால நினைவுகள் திரும்புகின் றன. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக் கேற் காவலனுடன் எனக்குண்டான தொடர்பையும் அவன் எனக்குச் செய்த உதவி யையும் நினைத்துப் பார்க்கின் றேன்.
நான் படித்து முடித்துவிட்டு வேலையேதுமற்றிருந்த காலம் அது. அப்பொழுதெல்லாம் என் னைப்பற்றிச் சோம்பேறி என்ற பொருள்படப் பின் னு க் கு ப் பேசி முன்னுக்குப் புத்திமதிகள் கூறிய பெரிய மனிதர்கள்தான் எத்தனைபேர்? எனக்கு ஒரு வேலைதானும் எடுத்துத் தருவ தற்கு ஒடியாடித் திரிந்த கருணை வான்கள்தான் எத்தனைபேர்? அந்த இருள் சூழ்ந்த காலத்தை எண்ணி நாள் அடைந்த வேதன் கள்தான் எத்தனை? அதைவிட என்னைப்பெற்ற தாய் அடைந்த வேதனைகளுக்குத்தான் எல்லை யுண்டா? வாரா வாரம் அர சாங்கத்தால் வெளியிடப்படும் "வர்த்தமானி’ பத்திரிகையைப் படித்தவாறு எனது பொழுது போய்க்கொண்டிருந்தது. வாரம் தவருது அவைகளே வாங்கி வாசித்து அலுத்துப்போவதுடன் அப்பிளிக்கேசனுகள் அனுப்பி யும் நான் அடையும் ஏமாற்றங் கள்தான் எத்தனை?
நான் ஏமாற்றம் அடைந்த நாட்களுக்கு எண்ணிக்கை இல் லாவிட்டாலும் அன்றைய ஒரு தின வர்த்தமானியில் நான் எதிர்பார்க்கின்ற விரும்புகின்ற அறிவித்தலொன்று இருக்கக் கண்டேன். மிகுந்த ஆவலுடன் வாசித்துப்பார்த்தேன்.
"இலங்கை வங்கியில் எழுது வினைஞர்களுக்கான வெற்றிடங் $ଶir .. ''
"வேண்டிய தகமைகள் ஒவ்
வொன்ருக வரிசைப் படுத்தப் பட்டிருந்தன."
கேட்கப்பட்டிருந்த எல்
லாத் தகைமைகளும் என்னிடம் இருக்கின்றன. இங்கு சொல்லப் பட்டுள்ள தகமைகளைவிட அதிக மான தகமைகள் என்னிட முண்டு. அதாவது ஒரே முறை யில் ஏழு திறமைச் சித்திகளு டன் சித்தியெய்தியிருக்கிறேன். இதுமட்டுமல்ல சிங்களம் கூட திறமைச் சித்தியுடன் சித்தி யெய்தியிருக்கின்றேன். இவை களே நினைக்கும்பொழுது இந்தப் பதவிகளிலொன்று எனக்குத் தான் என்று எனக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன். அப்பி ளிக்கேசன் அனுப்ப முன்னமே கற்பனையில் ஒரு வித மனம கிழ்ச்சி.
தொடர்ந்து வர்த்தமானி யை வாசித்தேன். விண்ணப்ப தாரிகள் அனுப்பவேண்டிய பத் திரங்களின் தேவைகள் அதில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது
இவற்றுள் ஒன்றைத் தவிர மற்றைய எல்லா நற்சாட்சிப் பத்திரங்களும் என்னிடம் முன் னேற்பாடாகவே இருக்கின்றன. தனிமனிதர்களிடமிருந்து நான் பெற்ற நற்சாட்சிப் பத்திரங்கள் ஒன்று இரண்டாகப் பல இருந் தன. இலங்கையிலேயே அதிகப் படியான நாடாளுமன்ற உறுப் பினர்களைக் கொண்ட ஒரே ஒரு தேர்தற்ருெ குதி எனது தொகு தியேயாகும். அத்தனை நாடா ளுமன்ற உறுப்பினர்களிடமும் பெற்ற நற்சாட்சிப் பத்திரங்க ளும் என்னிடமிருக்கின்றன. இவைகளேவிட எனது பகுதி
9

Page 12
ஜே. பிக்களிடமிருந்து பெற்ற நற்சாட்சிப் பத்திரங்களுக்கும் அளவேயில்லை. நான் இறுதியா கப் படித்த கல்தூரியின் அதிப ரிடமிருந்து பெறும் நற்சாட்சிப்
பத்திரம் மட்டுமே இன்னும் பெருதிருந்தேன்.
அரசாங்கப் பாடசாலை
யொன்றிற் படித்து இரண்டு முறைகள் எழுதிய பரீட்சைகளி லும் நான் ஏளுே சித்தியெய்தத் தவறிவிட்டேன்? அரசாங்கக் கல்லூரியை விட்டுவிலகி பிரத் தியேகக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன். ஒருமுறை பரீட்சை எழுதிவிட்டுக் கல்லூ ரிக் கே போகாமல் நின்றுகொண்டேன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நான், வயது முதிர்ந்த தந்தை யிடமிருந்து பணம் பெறவேண் டியிருக்கின்றதே என்ற மன வேதனையும், அந்த ஆண்டு நிச் சயமாகப் பாஸ் பண்ணியே தீருவேன் என்ற தீர்க்கதரிசன மான எண்ணமுமே நான் கல் லூசிக்குப் போகாமல் நின்று விட்டதற்குக் காரணங்களா கும். அடுத்த ஆண்டு ஏப்பிரல் மாதத்திற்கு முன்பே நான் விழுதிய Tப்ரீட்சையின் பெறு பேறுகள் வந்துவிட்டன. நான் நினைத்திருந்தவை வீண்போக வில்லை. நல்ல திறமையாகச் சித்தி எய்தியிருந்தேன். பெறு பேறுகள் வந்த அடுத்தவாரமே வந்த வர்த்தமானி அறிவித்த லையும் காணுகின்றேன். மகிழ்ச் சிக்கு எல்லையும் வேண்டுமா?
அ றி வித் த லை க் கண்ட அடுத்த நிமிடமே கல்லூரியை நோக்கி விரைந்து சென்றேன், அதிபரின் நற்சாட்சிப் பத்திரத் தை அன்றே பெற்றுவிடவேண் டுமென்பது என் எண்ணம்.
கல்லூரியில் நிலவிய அமை தியைக் கண்டபின்பே அது ஏப்
20
பிரல்மாத விடுமுறை என்பது நினைவில் வந்தது. கல்லூரியின் காரியாலயம் மட்டும் திறந்தி ருப்பது எனது அதிஷ்டம்தானே என்னவோ? சன்னலினூடாக அதிபரின் ஆசனத்தை நோக்கி னேன். நான் அதிஷ்ட்க்காரனே தான். ஏனெனில் அந்த விடு முறை நாட்களில் கூட அதிபர் அங்கிருக்கிருரே! அதிபர் யாரு உரையாடிக்கொண்டிருந் 60.ق)-سL தார். அவர்களின் உரையா(ல் முடியும்வரை காரியாலயக் கத வருகில் நின்றிருந்தேன். கரி யாலயக் கிளாக் என்னை நோக் கினுன். என்ன வேண்டுமென் பது அவனின் பார்வையின் பொருள். நான் வந்த விஷ யத்தை அவனிடம் விபரமாகக் கூறினேன் கிளாக் என்னிடம் திருப்பிக் கேட்டான்.
"கல்லூரிப் ஃபீஸ் எல்லாம் கட்டிவிட்டீரா?"
இது என்ன நான் ஒன்றைப் பற்றிக் கேட்க அவன, வேறு எதைப்பற்றியோ கே ட் இ ன் ருனே? t
"அதெல்லாம் அப்ப வே கட்டி முடித்துவிட்டேனே நான் கல்லூரியிலிருந்து வி ல இ யே நாலு மாதத்திற்கு மேலாகி விட்டதே "நான் பொறுமை யுடன் கூறினேன். அவன் நம்ப வில்லைப்போலும், அலுமாரி யென்றைத் திறந்து பெரிய கொப்பியொன்றை எ டு த் து பூரட்டிப் பார்த்தான். எனது பெயரையும் படித்த ஆண்ட்ை யும் கூறினேன். அதிபர் கூட என்னையும் கிளா க் கை யும் இடைக் கி டை பார்த்துக்
கொண்டே உரை யாடிக்கொண்
டிருந்தார். கிளாக் தன் கை யில் வைத்திருந்த அந்தப் பழைய கொப்பியை மூடினன் ஃபீசிற்கு டிமிக்கி கொடுத்தவ

களின் பெயர்ப் பட்டியலில் எனது பெயர் இல்லைப்போலும், கிளாக் மீண்டும் என்னிடம் வினவினர்.
*போன வருஷம் கன்ரீன் உடைத்தவர்களில் நீரும் ஒரு வன்தானே?"
அவனது இந்தக் கேள்வி
எனக்குக்கோபத்தை உண்டாக் கியது.
"நீர் அப்படிச் செய்திருக்க மாட்டீர் என்று என்ன உறுதி"
"நான் அப்படிச் செய்தேன் என்பதற்கு என்ன உறு தி" என்று கேட்டுவிட வேண்டும் போலிருந்தது எனக்கு, ஆனல் நான் அப்படிக் கேட்கவில்லை ஏனெனில் அவன் கோபமடைந் கால் நற்சாட்சிப் பத்திரமே கிடைக்காதே நற்சாட்சிப்பத் திரத்தில் கையொப்பம் இடுவது அதிபராக இருந்தாலும் உண் மையில் நற்சாட்சிப் பத்திரத் தை எழுதுவது கிளாக்தான். இதுவே அக்கல்லூரியின் வழக் கமும்கூட
*உமக்கு அதிபரிடமிருந்து நற்சாட்சிப்பத்திரம் வேண்டு மென்ருல் உம்மைப் படிப்பித்த வகுப்பாசிரியரிடமிருந்து ஒரு கடிதம் வாங்கிவர வேண்டும்."
முன்பு மற்ற மாணவர்கள் நற்சாட்சிப்பத்திரம் கேட்டவுட னேயே தானே எழுதி அதிபரி டம் கையொப்பம் வாங்கி உட G36urG3u கொடுத்துவிடுவான். நான் கேட்கும்பொழுது கடிதம் வேண்டுமென்கிருனே! நான் எனக்குள்ளேயே நின் த் துக் கொண்டேன்.
* கல்லூரி விடுமுறை விட்டி ருக்கிருர்களே ஆசிரியர் எங்கு போயிருப்பாரோ? அவரின் வீடு
எனக்குத் தெரியாதே!" கவலையுடன்
கூட எங்கு இருக்கிறது என்று நான அவனை நோக்கி னேன்.
அதிபர்கூட எங்கள் ஆரை யாடலை நோக்குவது போல் தெரிந்தது. அதிபர் சிரித்தவாறு எங்களிருவரையும் நோக்கிக் கொண்டிருந்தார். அவர் சிரிப் பது கடமை உணர்வுடன் உரை யாடுகின்ற கிளாக்கைப் பார்த் தா? அல்லது வாடிய முகத்து டன் உரையாடுகின்ற அம்பாவி யாகிய என்னைப்பார்த்தா?
*உமது வகுப்பாசிரியரின்
பெயர் என்ன?" கிளாக் கேட்
TGT.
'தர்மலிங்கம்" "தர்மலிங்கம் மாஸ்டரின் வீடு வெள்ளவத்தையிலிருக்கு: காலி ருேட்டில பி ள ஈ சா த் தியேட்டருக்கு எதிர்ப்பக்கம்" கிளாக்கே கூறினன்.
அதற்குமேல் கிளாக்குடன் பேசுவதில் பயன் இல்லை என்று எண்ணினேன். கிளாக் சொல்லு வதைத்தான் அதிபர் அதிகமாக நம்புவார் என்பது உண்மையே. அதி ப ரி ன் பார்வையிலேயே கிளாக்கின் முடிவுதான் அவரின் முடிவும் என்று புரிந்துகொண் டேன். s
கிளாக் கூறிய அறை இலக் கத்தை மனப்பாடம் செய்த வாறே கல்லூரிக்கு வெளியே வந்தேன். தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு வந்த நான் "என்னதம்பி?" என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். கல்லூரிக் கேற்காவலன் என் னைப் பார்த்தவாறு நின்றன்.
"என்ன தம்பி முகம் வாடி யிருக்கே?' அவன் மீண்டும் கேட்

Page 13
டான் அவன் கேட்ட கேள்வி எனக்கு ஒருவிதத்தில் ஆறுத லாகவும் இருந்தது. சுருட்டிற்கு அல்லது பீடிக்கு ஒரு சதம் இரண் டுசதம் குறைந்தால் என்னிடம் தான் கேட்டு வாங்குவான். நான் இங்குபடிக்கும் பொழுது இப்படியாய் இவனுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது.
கல்லூரியை விட்டு விலகி நான்கு மாதங்களின் பின்பே அவனைச் சற்திக்கின்றேன். அவ னுடைய சுகதுக்கங்களை விசா ரித்துவிட்டு எனது கதையை அவனிடம் கூறினேன். தர்மலிங் கம் மாஸ்டரிடம் கடிதம் வாங்
குவதற்காக வெள்ளவத்தைக் குப் போகின்றேன் என்பதை யும் கூறினேன்.
"நான் உமக்கு பிறின்ஸிய விடம் கரெக்டர் சேட்டிபிக்கற் வாங்கித் தரட்டுமா, தம்பி?"
அவன் சான்மேல் இரக்கப் பட்டான்போலும்.
"எப்படி உன்னுல் முடியும்?" நான் ஆச்சரியத்துடன் அவனை நோக்கினேன்.
"அதெல்லாம் நான் செய்து
தருகிறேன். ஆணு ல் ó了夺 கொஞ்சம் கையில வைக்க வேண்டும்."
ஆருடைய கையில வைக்க வேண்டும். நான் ஆச்சரியத்து டன் அவனை தோக்கினேன்.
"எவ்வளவு கொடுக்க வேண் @ዚb?”
கிளாக்து  ைரக் குத் தா ன்.
ஐஞ்சு ரூபா மட்டில் கொ டுத்தால் போதும் நல்லா எழு தித் தருவான், ---
"என்னிடம் இப்போ முது as traiyapG.'
"என்னிடம் கூடக்காசில்லை யே தம்பி; இருந்தா அதையா வது கொடுத்து உமக்குச் சேட் பிக்கற் வாங்கித் தந்திடுவன்’
"புதுச்செட்டித் தெருவி லுள்ள எனது வீட்டிற்குப்போய் காசு எடுத்து வரட்டுமா?"
"ஒம்தம்பி; உமது பெயரை யும் பாஸ் பண்ணின வருசத் தையும் ஒரு துண்டில எழுதித் தந்திட்டுப் போம் நான் போய் கிளாக்கிடம் சொல்லுறன்"
ஒரு சில மணித்தியால்ங்க ளின் பின் மீண்டும் அந்தக் கேற் காவலனிடம் சென்றேன் வீட் டில் வாங்கி வந்த ஐந்து ரூபா வை அவனிடம் கொடுத்தேன்.
நாங்கள் இருவரும் ஒன்ருக நிற் ப ைத கண்ட கிளாக் வெளிக்கேற்றுக்கே வந்து விட் டான் கேற்காவலன் சுற்றுமுற்று பார்த்து விட்டு அந்த ஐந்து ரூபாவையும் கிளாக்கின் கையி னுள் செலுத்தினன். கிளாக் எந்தவிதபயமும் இல்லாமலே அவன் கொடுத்த ஐந்து ரூபா வை லோங்ஸ் பையிலுள் செலு த்திவிட்டு சேட்பையினுள் இரு ந்த நற்சாட்சிப் பத்திரத்தை என்னிடம் தந்தான் சற்று முன் தான் அதிபர் கல்லூரியை விட் டுப்போன தைரியம் போலும்
நற்சாட்சிப் பத்திரத்தை நான் வாசித்துப் பார்த்தேன் இதைத்தவிர்ந்த என்னிடமுள்ள வேறு எந்த நற்சாட்சிப் பத்தி ரத்திலும் என்னைப்பற்றி இவ்வ ளவு திறமாக எழுதியிருக்க வில்லை என்று எண்ணுகிறேன்
கிளாக் "எல்லாம்சரிதானே" என்று சொல்லிவிட்டு காரியா லத்தை நோக்கி நடக்கின்றன்.
பெரிய மனிதர்களின் வேலை யைப் பார்த்தாயா தம்பி? காசு

என்று சொன்ன உடனேயே சேட்பிக்கற் தந்துவிட்டான்! கோட்டும் சூட்டும் போட்டுக் கொள்ளுவாங்கள். பேச்சை மட்டும் உயர்வாக்க இங்கிலீசிலை கதைச்சுக் கொள்ளுவாங்கள். செய்யிறதெல்லாம் பெரிய மோசடி. வேண்டிறதெல்லாம் லஞ்சம். அவனுக்கு ஐஞ்சு ரூபா கொடுக்காவிட்டால், நீர் உம் முடைய விகுப்பாசிரியரிடம் கடி தம் வாங்கிக்கொண்டு வந்தா லும்கூடத் தந்திருக்க மாட் டான். ஏ தா வது சாக்குப் போக்குச் சொல்லித் திருப்பி அனுப்பி விடுவான். பிறின்ஸிப லுக்கு முன்னுக்கு மட்டும் நல்ல வன் மாதிரிக் கதைப்பான். க ட  ைம உணர்ச்சியுள்ளவன் மாதிரி நடிப்பான். பிறின்ஸி பலும் நம்மளப்போல அப்பாவி. இவன்ற நடிப்பில மயங்கிவிடு
6 T ti ”
என்னைப் போறுத்தவரை மனச்சாட்சி உறுத்துவதுண்டு. இப்படிக் குறுக்கு வழிகளால் காரியம் சாதிப்பது அயோக்கி யத்தனம் என்பதும் எனக்குத்
தெரியும். ஆனல் என்ன செய் வது? நாறிப்போன இந்தச் சமு தாய அமைப்பை மாற்றினுல் தான் இது தீரும் என்பதும் எனக்குத் தெரியும்.
அவன் அன்று கூறியவை இன்னும் என் காதுகளில் ஒலிக் கின்றன. பஸ் வண்டியில் இருந் தவாறே கேற்காவலன் இருக் கின்ற கூடாரத்தை நோக்குகின் றேன். அன்று எனக்கு நற் சாட் சிப்பத்திரம் வாங்கித்தந்தவன் அங்கு இல்லை. அந்த இடத்தில் வேருெருவன் புதியவன்.
அன்று அவன் வாங்கித் தந்த நற்சாட்சிப் பத்திரத்தின் மூலம் அந்த வங்கி வேலை எனக் குக் கிடைக்கா விட்டாலும், இன்று நான் நல்ல அரசாங்க உத்தியோகமொன்றில் இருக் கின்றபொழுதிலும் இந்த இடத்
தில் வரும்பொழுது எல்லாம் எனக்கு அதுதான் ஞாபகம் வந்துவிடும்.
பஸ் ஒ டி. க் கொண்டிருக் கிறது. 女
பொன்னைக் காட்டிலும்
குணமே உயர்ந்தது.
கோடீசுவரன் என்று அழைக்கப்படுவதை விட நல்லவன் என்று அழைக்கப்படுவதையே நான்
விரும்புகிறேன்.
ஒரு பொய்யைச்
சொல்வி
him frust)
எக்கச்சக்கமான
நெருக்கடியிலிருந்து தப்புவது எளிது. ஆயினும்,
பொய்யை விடுத்து, நெருக்கடியில்
உண்மையைச் சொல்லி, அகப்பட்டுக் ஆனந்தத்தின் அழகே தனி.
கொள்வதிலுள்ள
மாண்டேகு
23

Page 14
மலையக இலக்கியக் கடிதம் நாவல் நகர், பி. மகாலிங்கம்
களின் பிறப்பிடமான மலையகத்தில் சலசலப்போடு பிரச்சனைகள் தலைதூக்குவதும் அதுசட்டென்று அடங்கிவிடுவதும் சர்வசாதாரன்? நிகழ்ச்சிகளாகிவிட்டன. இலக்கியப்பிரச்சனையிலும் கூட இதே அரிசி நிலைதான், கடந்த சிலவாரங்களாக மலையகத் தின் எல்லா இலக்கிய அபிமானிகளும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் குறிதி துப்பேசினர். இந்தப்பேச்சுக்களுக்குத் துரண்டுகோலாக இருந்தவர் திரு. ஏ. பி. வி, கோமஸ் அவர்கள்தான், ‘சிந்தா மணி” வார இதழில் அவா கிளப்பிய கருத்துக்களால் ஒருசர்ச்சை யே ஏற்பட்டுவிட்டதெனலாம். பலர்பலகோணங்களில் தெரிவித்த கருத்துக்களை சி' நோக்குமிடத்து சங்கம் ஒரு குறிப்பிட்ட குழு ଘy $(ଓ5 மாத்திரம் சொந்தமாகிவிட்டது என்று கருதுவது கூடப்பொ ருந்தும். னெனில் அத்தனைபேருடைய கருத்துகளும் அத்தகைய ரீதியிலேயே அமைதது விட்டிருக்கிறது. எத்தனையோ வருடங்க (o Si உத்தி(3யாகஸ்தர் தெரிவே இல்லாமல் சங்கம் இயங்கிவருவ திலேயே சங்கிரி ஏதோ ஒரு ஏதேச்சாதிகாரரீதியில் இயங்குகின்றது என்பதை புலப்படுத்தியிருக்கின்றது. சங்கத்தின் பொறுப்பான பதவி வ்கிப்!ே!! இலக்கியத்திற்கு வரம்புகட்டி மலையகம்" என்ற முத்திரை குத்திக்கொண்டு அதற்கு மீறி இலக்கியம் படைக்கக் கூடாது என் 2 தோரணையில் வேலி போட்டதே முற்றுகப்பிழை என்பதை Lெ'சி. 80சத் விகிதமானேர் எதிர்க்கின்றனர்.
பிரச்சனை
ளன் என்பதே ஒரு சங்கம்; இகற்குப் புறம்பாக சங்கம் எதற்கு? ஒன்று கேட்போரும் கூட இருக்கத்தான் செய்கின்றனர் இருந்தாலும் எழுத" சம்பந்தப்பட்டபிரச்சனைகள் குறிப்பிடும் போது சங்கரி ஒன்றின்மூலம் பிரச்சனைகளுக்கு முடிவுகாணவிழைய வேண்டிய சமுயங்களில் சங்கம எனபது இன்றியமையாததாகக்கரு தவும் இடம் ஏற்பட்டு விடுகின்றது. எப்படியோ இந்த சர்ச்சைக்கு காரணகர்த்தாககளான பொறுப்பானவர்கள் இனியும் தொடர் ந்து வாழாவிருப்பதை விட்டுவிட்டு சங்க வளர்ச்சிக்கு வழி கோ லும் முற்சிகளில் ஈடுபட வேண்டும். இது இன்றைய விழிப்புமிக்க மலையக இலக்கியக்கர்த்தாக்களின் ஆவலாகும்.
எழுத்தா
இப்போதெல்லாம் மலேயகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. மலையகத்தில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெறவும் மலையக பாரம்பரிய கலைகள் மீண்டும் புத்துயிர் பெறவும் வாய்ப்பு ஏற்படுக்தொண்டிருக்கிறது. இந்த விழிப்புணர்ச்சிகளுக்கு தூண் டுகோலாக திரு இரா. சிவலிங்கத்தை பொதுச் செயலாளராகக்
ாண்டு இயங்கிவரும் மலையக முன்னனியின் இளைஞர்கள் செயல் பட்டு வருவதி குறிப்பிடத்தக்கதாகும்.
2●

அறிமுகச் சுருள்
திக்குவல்லை கமால்'
*எனது தகப்பன் பள்ளி வாசலின் தர்ம கர்த்தா: சமாதான நீதவான்; மூத்த அண்ணன் பட்டதாரி; மற்றவர் மத்திய வங்கியில் இலிகிதர். இப்படியாக அந்த இளைஞன்
தன்னை, رஅறிமுகம் செய்து கொண்டான். புதியவரான அவரைச் சூழ்ந்து நாங்கள் * .
கதைகள் கேட்டு களிப்புற்றிருந்தோம்.
தேனீர் வந்தது
குடித்து மகிழ்ந்தோம். எங்களுக்கெல்லாம் தகப்பனே போன்ற எங்களுள் முதியவர், சிகரட் பெட்டியை எடுத்து விரித்து மெல்ல நீட்டினர். 'சடக் கென ஒன்றை இழுத்து. உதட்டுக் கிடையில் பதித்து. பற்றவைத்து. சுருள் சுருளாக புகையை ஊதித் தொடர்ந்து கதைத்தார், அந்த இளைஞன்!
அக்கணந்தான்
அவர் எனக்குச் சரியாய் அறிமுகமானுர் ,
$5

Page 15
ஏட்டுச் சுரைக்காய்
அல்வையூர் விதுரன்
36
பந்தலில் பாம்பினை தொங்கவிட்டேயதை
பன்மலர் மாலையென்ருர் - அதை
நம்பிட நாமென்ன ஞாலத்தில் மூடரோ
நாகத்தைக் கொன்று விட்டோம்.
வேசியின் தோற்றத்தை கூசாமலேயவர்
வீதியிற் கீறி வைத்தார் - அதை
கூசிடப் பார்த்திட்டு கோபமடைந்த நாம்
சாண மெறிந்த விட்டோம்.
நல்லதோர் ஊரினில் நாற்பெரும் சந்தியில்
நன்னரும் சிற்பமென்றே - சீலை
யில்லாததோர் சிற்ப மிங்கிவர் வைத்திட
இல்லாமற் செய்து விட்டோம்.
கன்னற் கவிதைகள் செய்கின்றே னென்றெமை காமாந்து செய்ய நின்ருர் - பொன்
கிண்ணத்தில் நஞ்சென உள்ள கவிதையைக்
கீழேயே சிந்தி விட்டோம்.
ஆவியைப் போக்கிடும் ஆலமே நிந்தனின்
ஆயாசந் தீர்க்கு மென்று - அவர்
கூவியழைத்தெமை தீமை புகல்கையில்
காறியு மிழ்ந்து விட்டோம்.
வீட்டிலே தோட்டத்தில் தானும் கனிந்தங்கே
விருப்புப் பேசுகின்ற - இந்த
ஏட்டுச்சுரைக் காயுமின்கனி தானென்று
ஈனம் மொழிகிறதே.

அந்த றயில் போகிறது
- வதிரி சி. ரவீந்திரன்
கோட்டை ரயில் நிலையம் குழுமியுள்ள மக்கள் கூட்டம் நாட்டை விட்டேகுதற்கு நாற்புறமும் சன நெருக்கம் தலைமன்னர் புகைவண்டி தயங்கி அழுதழுது நிலையத்துள் அசைந்து வந்து நின்றவுடன் சோக கானம் பாடுபட்டு உழைத்ததனுல் பச்சை இரத்தம் செத்ததன்றி பலனென்ன கண்டோ மென்று நாடுவிட்டு அகதிகளாய் நம்மிதயத் தொழிலாளன் நாவசைக்க ஈரமின்றி நல்லிதயம் குமுறுகிருன். காதலனைப் பிரிந்து செல்லும் காதலின் உயிர்த்துடிப்பு தலைமகனைப் புதைத்த மண்ணை தடவி முகர்ந்து விட்டு மதலை மொழிக் குழந்தையழ மார்பனைக்துப் பால் கொடுக்கும் அபலைப் பெண் அழுதழுது ஏறுகிருள் ரயில் தனிலே! உள்ளும் நிறைந்த இருள் எதிர்கால உலகு மிருள் கள்ளமிலா துழைத்தவர்கள் கலங்கி மனம் புழுங்க அந்த ரயில் போகிறது மனப் புகையை கக்கிறது
7

Page 16
எஸ். ராஜகோபாலன்
ஸ்டேசன் விளக்குகள் மின்ன ஆரம்பித்த மாலை நேரக் கருக்கலில், L%arm' '-C3. Hr LÉlsi) "கச கச வென நின்ற ஜனச் சிதறலை உசார்ப்படுத்தியவாறு வந்து நின்ற அளுத்கம ரயிலி அவதியோடு இறங்கிய
ருந்து d கும்பலின் பின் ஞ ல், ஒரிரு பொறுமைசாலிகளோடு இவ
னும் ஒருவனுக இறங்கினன் .
வாசலில் சிரத்தையில்லா மல் நின்றுகொண்டிருந்த காக் கில் சட்டைக்காரனின் கையில், வலியச் சென்று தன் டிக்கட் டைக் திணித்துவிட்டு வெறுங் கைகளை வீசியபடி எதிர்ப்புற ரயில்வே லயினேடு ஒட்டிய பிளாட்போமுக்கு வந்தான்.
அது ஒரு சின்ன ஸ்டேசன் எதிரும் புதிருமாக நிமிடத்துக் கொருமுறை ஓடும் 'டீசல்" களுக்காக நீண்டுகிடந்த தண்ட
வாளங்களுக்கிடையே அந்த ஸ்டேசன் இறுக்கிப் பொருத் தப்பட்டதுபோல் கிடந்தது.
இதன் முன்புற வாசலோடு சங் கமிக்கிற ஸ்டேசன் ருே?ட்டால் வந்து, அதன் அந்தலையிலுள்ள ஒரு மரப் பாலத்தில் ஏறி இந் தப்பக்கம் இறங்கிவிட்டால் ஸ்டேசனுக்குள் நுழைந்துவிட
28
லாம். இது டிக்கட் எடுத்துப் பிரயாணம் செய்பவர்களுக்குரிய வழி. மற்றவகையான பேர்வ ழிகளின் வசதியை முன்னிட்டு ஸ்டேசனின் எல்லாப் பக்கங் களிலும் வாசல்கள் இருந்தன.
ஸ்டேசனென்ருல், எப்பொ ழுதும் சளசளவென்று கொட் டிக்கொண்டிருக்கும் அல்லது ஒருபோதுமே கொட்டாத தண் ணிர்க் குழாய், நாற்றமெடுக் கும் கக்கூஸ்கள், றேஸ் பத்திரி கைகளிலேயே முழு நேர அக் கறை கொண்ட உத்தியோகத் தர்கள், வாங்குகளில் மூட்டைப் பூச்சிகளின் ஏகபோகம் என்னும் பொதுவான லட்சணங்களுக்கு முரணுகாமல் இருந்தது அது - ஸ்டேசனுக்கு மேற்கே அமைதி யான கடற்பரப்பு. கரையோ ரமெங்கும் தாழைப் புதர்கள்உள்ளே கொலை விழுந்தாலும் வெளியிலிருந்து தெரிந்துகொள் ளமுடியாத அளவுக்கு அல்லது உள்ளேயிருந்து வெளியே பார்த் துப் பயப்படமுடியாத அளவுக்கு - மண்டிப்போய்க் கிடந்தன. தண்டவாளத்தின் ஒரமா க நிலத்தை மண்ணரிப்பிலிருந்து பாதுகாக்கவேன்று இங்கிலீசுக் காரன் காலத்தில் போட்ட கருங்கற் பாறைகள் மண்ணிலே
 
 

அரைகுறையாகப் புதையுண்டு
போய்க் கிடந்தன.
காற்று ஒழுங்கு பிசகாமல் வீசிக்கொண்டிருந்தது.
இவனுக்கு இவையெல்லாம் தற்செயலான புதிய காட்சிகள் போல் தோன்றின. எனவே இவன் அங்கேயே நின்றுகொண் டிருந்தான்.
இவன் அந்த ரயிலில் ஏறி இங்கே வந்து இறங்கியதே ஒரு தற்செயலானசம்பவம். இவனே ஒரு தற்செயலான பிற வி. இதைத்தவிர இவனை அப்படி விசேடமாக எந்தச் சொல்லா லும் அடையாளம் சாட்டிவிட (pig-turgil. தற்செயல்களுக்கு வியாக்கியானம் ஏது?
இ வ ன், தான் இனிப் போய்ச் சேரவேண்டிய இடம் அவ்வளவு முக்கியமான இட மில்லைப் போலவும், அந்தச் சூழ்நிலையில் கொஞ்சநேரம் நின்
றுவிட்டுப் போவதால் அப்படி
ஒன்றும் குடிமுழுகிப் போவதில் லையெனப்போலவும் அங்கேயே
நின்றுகொண்டிருந்தான்.
சிறிது நேரம் அப்படியே
நின்றுவிட்டுத் தலையைத் தூக் கித் தண்டவாளத்தின் மேலாக
வுள்ள மர ப் பாலத்தையும் அதனுள் கவியும் இருட்கூடலில் கதைபேசும் ஜோடியையும் வெறி த் து நோக்கிவிட்டுப் பிளாட்போமில் பார்வையை ஒடவிட்டான்.
அப்போது அவர் களை க் salar Lmr 6ir .
அவர்கள் தினசரி "யாருக் smrs Gaunt” காத்துக்கொண்டு நி ன் று பழக்கப்பட்டவர்கள் போல் நின்றுகொண்டிருந்தார் as sir.
வனும் அப்படியே நின்
முன
அவர்கள் தோற்றத்தில் தாயும் மகளும் போலவும், நெருக்கத்தில் மாமியாரும் மரு மகளும் போலவும், வேண்டிய போது சொற்களையும் சைகை களையும் கலந்து பேசிக்கொண் டிருந்தனர். இப்படிப் பேசிக் கொள்ளாத சந்தர்ப்பங்களில் மகள்போல் தோன்றியவள், ஸ்டேசன் கூரையில் மின்னிக் கொண்டிருக்கும் விளக்குகளை எண்ணுவதுபோல 6 IT ge) அசைத்தும், விளம்பரப் பலகை களில் உதிர்ந்துபோன எழுத்துக் களை வாசிக்க முனைந்தும், பிட ரியில் தொங்கிய பின்னலை முன் ஞல் விட்டு ஒருமுறை ஒழுங்கு செய்தும் தனக்குப் பொழுது போகவில்லையே என்ற கஷ் டத்தை வெளிப்படையாகவே சமாளித்துக் கொண்டிருந்தாள். மற்றவள், அதிமுக்கியமான காரியத்தை எதிர்நோக்கிப் பிர யாணம் செய்ய வேண்டியவள் போல் ரயில் வரவேண்டிய திக் கில் நோக்குவதும், உதட்டைப் பிதுக்குவதும், உடைந்துபோன நெருப்புக் குச்சியால் பல்லிடுக் குகளில் இறுகிப்போன பாக்குத் துகள்களை வெளியேற்றி மறுப டியும் பற்களால் அரைப்பதும் இடையில் இந்தப் புதியவனைக் கவனிப்பதுமாக நின்ருள்.
ஒரு கணிசமான நேர ம்
கடந்தது. ஆயினும் ரயில் எது வும் வந்தபாடில்லை.
இவன், மரப்பாலத்தின் மேலே கதைபேசும் ஜோடியைத் திரும்பவும் பார்வையால் வெ றித்துவிட்டு அவர்கள் பக்கமாக வந்தான். அவர்களை விட்டால் அந்தப் பிளாட்போமில் அங்
29

Page 17
கொன்றும் இங்கொங் DYLAND FTAs ஒரு சிலர்தான் ஆகதுே சம்பி TAG TEE FTF விசாரிப்பதற்கு
வேறு எவரும் அருகில் இவ்வே என்ற நியாயமான காரனத் விதித் தனக்குச் சாதகமாக உருவாக்கிவிட்டுத் தாப்போல் தோன்றியவளின் அருகே வந் தான்
"இங்கை, உங்களத்தான். ஒரு விஷயம்." அவள் அப்போதுதான் அவனேக்": டவள்போல் திரும்பிஞள்.
பாமின்கடைக்கு இங்கை பிருந்து ஏப்பிடிப் போக்வேணு மெண்டு சொன்னுல் நல்லம்
"ஓ பாமன் சபையோ அவள் விழிகளும் வாயும் அகல விரிந்தன. சித்து கிட்டத் தானே குறுக்கே போளுல் நடத்துகூடப் போகலாம். பின் தான் இருக்கே, டூ மினிட்டில்ே GLTEGurh,
இவன், அவளுடைய சொல் ஒழுங்கிலும் அபிநய பாவங்க விலும் கிராமப்புற நடனத்தின் di rita air di sar dari Giri தோன்றிஞன்.
"இங்கை இருக்கே வில்வி அவெனியூ இதிலே இறங்கி, டு மினிட் நேரர்க நடந்தால் கால் ருேட்டிய ஏறலாம். அப்புறம் அதைக் கடந்து மென்ரிங் பிள்ே சிலே திரும்பிவிட்டால் பேன் மென் ட் பக்கத்திலே ரண்டு ஆண்டு பஸ் நிற்கும். முந்திய்ே வெளிக்கிடுற பஸ்வில்ே 'ஓடிப் போய் ஏறவேண்டியதுதான். அது மெனிங் பிளேஸ் கடந்து "திறம்டன் லேனில் பூந்து புறப் பட்டுப் பிறகு "ஹை ஸ்டிரீட் டில்" அள்ளிக்கொண்டுபோய்ச் "சபையர் எல்லாம் தாண்டி பாமன்கடை ஜங்ஷனிலே வல்ப் பக்க மாகத் திரும்புவான்.
፵ዕ
அதுக்கு முன்னுல் பாமன்னடை பிளாட்விலே நிற்பாட்டுவான் பாதங்கோ, அங்கை இறங்கி பிட்டால் விரும்பின் இடத்துக் (ōjāi G375 L " (5) # Ĝin TeĤrG3" (La
ாம். இது என்ன பெரிய தூரம் இப்ப பஸ்வெல்லும் என்னமாய்ப் பறக்குது தெரி யுமோர்
"ஒ. மிச்சம் நல்லது" என்று கடறிவிட்டு, இனித் திரும்ப் வேண்டியதுதான்' என இவன் நினத்து முடிக்கவும், அவள்ட "நீங்க இந்தப் பக்கம் முன் ரே வரேல்ஃபார்
"வரேவ்லே கோச்சியிதே பலதரம் காலி, களுத்துறை யைப் பார்த்துப் போயிருக்கி றேன். இந்த ஸ்டேசனுக்கு வந்தது சரியாக நினேவில்&ல. ஏனென்கு இந்த லேனிலே எல்லா ஸ்டேசனும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கு."
"நாங்களும் பாமன்கடைப் பக்கம் இருந்துதான் வாருேம், இந்தக் கோச்சிக்காகக் காத்துக் கொண்டு நிண்டு பாதி உயிரே போயிட்டுது."
"இ ரி க் கோச்சியிலேயும்
ஏறிவிட்டால் மிச்சமாய் இருக் கிற பாதி உயிரும் போய்விடும் தெரியுமே?" என்று கூறிவிட்டு இவன் மெல்லச் சிரித்தான். நகைச்சுவையை விரும்பி ரசிக் கும் ஒருவரிடமிருந்து பிறக்கும் ஆண்மையான சிரிப்பு அந்தப் பெண்ணிடமிருந்து எழுந்தது. தாயும் வேண்டியதற்கு மேலா கச் சிரித்தாள். 'பிளாட்ரா மெங்கும் கலகலப்பு நிறைந்தது. கந்தோருக்கிள்ளிடுந்து ஒரு காக் கிச் சட்டைக்காரன் புதினம் பார்ப்பதுபோல் இந்தப்பக்கம் எட்டிப் பார்த்தான்.

இவனுக்கு இன்னும் கொஞ் சம் நின்று ப்ேசலாம் போல் தோன்றியது.
"நாங்கள் இங்கை வந்து தான் எம்மளவு நேரமாய்ப் போச்சு நேரம்' என் தென்றுசொல்லுங்க பார்ப்பு:
இவன் இடக்கையை நெற் றிக்குமேல் உயர்த்தி, மாணிக் சட்டைக் கூர்ந்து கவனித்து விட்டுச்சொன்ஞன் 'ஏழு பத்து" இத்தனேக்கிTைபில் இ வ் ஆறு விடய_அங்க அசைவுகளின் அமைதியான் ஒழுங்கை அந்தப் பெண் விழிகள்ே அகவளைந்து நோக்கினுள். இவன் ஆ இ இடைக்கிடை கவனித்ததுபோ வவும் அவள் தின்மீது வீசும் பார்வைக்கு நன்றிக்கடஞகத் தான் புன்னகை புரிவதுபோல் னும் காட்டிக் கொண்டான்
'அம்மாடி எம்மளவு வேகா பாய்ப் போச்சு பிள்ளே பார்த் தியோ, இனி எப்பிடித்தான் விட்டுக்குப் போவே இங்தை பாரும், இவள் மார்க்கட்வரைக்
麗 இான்கூட வந்திட்டு அப்புறம்
ங்கேயும் வந்து என்கிக் கோச்சியி:ே அனுப்பிவிட்டுத் தான் த ரிை யே வீட்டுக்குப் போவேனென்று அடம்பிடிச்
சின்னு வந்தான். இங்கை வித் தால் எம்மளவு நேரமாயிட்டுது இப்படி வருமென்று தெரிஞ்சு தான் நான் முன்னமே செர்ன் னேன் வராதே நில்லென்னு. நீங்களே சொல்லுங்க, - ) யிருந்தாலும் எங்கேயும் விருப் LL; போய்வாறதென்கு நேர காலம் வேண்ட்: இவனுக் 燃 மகளுக்குமிடையே தனது பேச்சினூடே கச்சிதமாக $for [] பாலத்தையிண்ேப்பதோடு Luigj வா 'நிலமையையும் விதி விஞள்
"கிடங்க விடும் Effigiris பக்கம் என்றுதானே ெ இங்கP தனக்குக் கொஞ்சப் பிடி கிடைத்ததைக் காட்டிக்கொள் எாமல், அவர்கள் விரும்பிஞல் தனது துனே கிட்டு3ெ ணும்படி வெகு சாதாரணமா சுவே கேட்ட்ரிங் இவனுக்குப் பிடிகொடுத்து வேண்டுமென்று தான் அவள் ப்ேபடிப் பேசினுள் 'ன்பது இவனுக்குத் தெரி: சந்தர்ப்பம் 'டுே கிட்டி = آئین الL
5 Gill'ali IT LI LI Gir- போரு இடம் for:Lá.5L.L. ஒண்ணுயி ருந்தா இவளோ.ே நீங்களும் போகலாமே, ஆளுக்கு ஆள் துண்யாயும் இ ருக்கு ம் இல் Gö? Lurr?"
瞄
இப்போ பார் யாருக்குத் துணேயென்றுதான் தெரியாம இருக்கு -"*" YAPILA. Fis77 Ly. இம்முறை கீாக்கிச் சட்டு ' காரன் எட்டிப் பார்க்கவில்:
பிள்ளை, வீட்டுக்குப் போன
தும் பிறந்துவிடாதே) கொடு போட்டிருக்கிற ஆடு (a) Il figurirth
பத்திரமாய் எடுத்து உள்ளே போடவேணும், இராவோடு தொ லே த்து நான்க்கு நிதான் கவலேப்படும் சொல்லியிட்டேன்;
"AF" Ff7! Lf Lif, r, rr அந்த ஒரு
சொல்லில் பூரணமாக சம்மதம் நொந்தி நின்றது.
இவன் அவளோடு I LI LI I rrin.
இருவரும் LGT TIL "CEL mr. பயின் முடிவின் சரி இறங்கி நந்தனர்.
EM TIL

Page 18
முன்னே சென்றவனை அப் பெண் முழுமையாக அளந்தாள். இருளிலும் நிதானமாகவும், நேரே கோடு கீறியது போன்ற ஒழுங்கிலும், நிமிர்ந்து நடக் கின்ற இவனைப் பின்தொடர்கின் றபோது, நாளாந்தம் கடைப் பிடித்து மனப்பாட மாக்கிவிட்ட சங்கதிகள் ஏதோ பழைய கதை கள் போலவும், தன் மனத்தின் அடித்தளத்தில் நெடு நாளாய்க் குறுகுறுக்கும் ஒரு இனந்தெரி யாத கேள்வி தனக்குரிய பரி பூரண விடையைத் தேடி விரை வதுபோலவும் சில புதுமையான சலனங்கள் அவளை ஆட்கொண் L6.
நேற்றுவரை அரங்கேறிய காட்சிகளிலெல்லாம், திடீரெ னத் தோன்றி உறவுகொண்டா டும் ஒரு அந்நியனுடன், ஒரு வார்த்தையே இனிமையாகப் பேசத் தெரியாத, அப்படிப் பேசும் அவகாசத்தை விரும் பாத, அப்பொழுதைய தாழாத தற்குறியுடன், அவன் இழுத்த திசையெல்லாம் ஓடி, இருளில் மறைந்தும் மறைவில் நுழைந் தும் இரு என இருந்து, நில் லென நின்று, மிக்க நெருக்கத் தில் அவனின் உடல் வெக்கை யில் தவித்து, அவன் மூச்சின் நெருப்பைச் சகிக்கமுடியாமல் திணறி, அவனின் வியர்வை மணத்தை மு க ர முடியாமல் தவித்து, அவனின் ஒரு நிமிட வெறி அடங்குவதற்குள் ஆறு கடந்து வந்ததுபோன்ற சலிப் பை அடைந்து. (ஓ! அந்த வேத னேதான் என்ன..) அப்போ தெல்லாம் வெறும் கட்டளையை நிறைவேற்றுகின்ற பொம்மை யைப்போல் இ யங் கி ய தன் மனம், இப்போது மாத்திரம் ஏனே தெறித்துக்கொண்டு திரும் பிவிட முயல்வதும், ஓய்வதும்
2
மீ ண் டு ம் போராடுவதுமாக அலைக்கழிவதை உணர்ந்தாள்.
நான் இன்றைக்கென்று இப் படி ஆளாகின்றேனே, இதுவரை எத்தனைபேரைப் பின்தொடர்ந் தி ஈப்பேன். அப்படி வந்தவர் களில் இவனும் ஒருவன்தானே! என்ருலும் இவன் நடந்துகொள் ளும் முறையில் வழக்கத்துக்கு விரோதமான ஏதோ ஒன்று. என் உணர்ச்சிக்கு மதிப்பளிப்ப தைப்போல, தன் விருப்பத்தைச் சொல்லத் தயங்குவதுபோல, செயல்களால் அதன் ஆரம்பத் தைப் புரியவைக்கத் தெரியாத துபோல ஒரு புதுமை தோன்ற வில்லையா? இன்றைக்கு இது ஒரு மாற்றந்தான். ஆனலும் நோக்கம் எதுவோ அது முடி வில் நிறைவேறியே தீரவேண்டும் என்ற எண்ணம் இருப்பதில் இவனும் பழையவன்தானே! என்ருலும் முடிவுக்காக அவசரப் படாதவன் போலவும் இருக்கி முன், இன்றுவரை எவனுக்குமே விட்டுக்கொடாமல் அவ ன து அவசரத்தனத்தை எனக்குச் சாதகம்ாக்கிச் சமாளித்துப் பழக்கப்பட்ட எனக்கு இவன் ஒரு சவாலாக இருந்துவிடு வானே?
"கொஞ்சநேரம் இந் த க் க ட. லே ரா ர ம் நின்றுவிட்டுப் போகலாமா? இவன் நடப்பதை நிறுத்தித், திரும்பிப் தலைகு னிந்து அவளை நோக்கி மிகவும் அமைதியாகக் கேட்டான்.
"நேரமாயிட்டுதே! கொஞ் சம் நிற்கலாந்தான், எம்மளவு வேளைக்குத் திரும்புருேமே அம் மளவுக்கு நல்லதுதானே!" என்று இவன் முகத்தைத் தன் விழிகளை மாத்திரம் மேலுயர்த்திப் பார்த் தபடி சொன்னுள்

நாட்டுப்புற சிங்களப் பெண் களுக்கேயுரிய மிகவும் அகன்ற கண்கள் அவளுக்கு. அவற்றை இன்னும் கிறிது உற்று நோக்கி ஞல் விழிகள் பி துங்கு வ து போலவும் இருக்கும். பரந்த மேடான நெற்றி. தசைப்பிடிப் பான கன்னங்கள். இடையை இறுக்கியபடி சிவப்பும் பச்சை யுமான பூக்கள் சிதறிப்போய்க் கிடக்கும் - வெண்ணிற பிளவு சுக்குப் பொருத்தமான அரைப் பாவாடை, மற்றும் வழக்கம் போல ஒரு பதிஞறு வயதுப் பெண்ணுக்குரிய லட்சணங்கள். என்ருலும் அ ந் த ஸ்டேசன் விளக்கின் ஒளியிலும் அவள்
சாதாரண ஒரு ழகியாகத் தான் தோன்றிஞள்.
இருவரும் ரயில்வே லயி
னின் ஒரமாகச் சிறிது தூரம் நடந்து பிறகு "லயினைக் கடந்து மணற்பரப்பில் இறங்கினர்கள்.
கடக்கும்போது அவளுடைய கையை இவன் மெ ல் ல ப் பற்றினுன்.
"எனக்கு முன்னே யெல்லாம் நல்ல பழக்கம். கோச்சி பக் கத்தே வர்ரபோது கூடப் பய மில்லாமல் கிடப்பேன்" என்று அவள் கூறிஞளாயினும் துணை யை விரும்புவதைத் தெரிவிப்ப துபோல அவளுடைய பிடியும் சிறிது இறுகியது.
'நீ பயப்படாதவள்தானே. எனக்குத்தான் ஆரம்பத்திலே ரொம்பப் பயமாய் இருந்தது. அப்புறம் இந்தக்  ைக  ைய ப் பிடிச்சதும் எல்லாம் தெளிஞ் சிட்டுது. இப்பவும் என்னவோ விட மனம்வரேல்லை. இப்பிடியே இருக்கலாம்போலத் தோணுது. இம்மளவுக்கு நீ மிச்சம் அதிசய மான பெண்ணுய் இருக்கிருயே! இனிமே பொல்லாதவளா ஆக மாட்டாயே?’
பதிலுக்கு அவள் இவன் கையை இன்னும் இறுகப் பற்றி ணுள். அப்படிச் சொல்லக்கூடிய அளவுக்குத் தான் "பொல்லாத வளாக" ஆகமாட்டாள் எனக் கூறுவிதுபோல் இருந்தது அது. இவன் தன் கைகளால் அவளின் இடையை வளைத்துக் கற்பாறை களினுாடே ஓடி ய வழியாக அவளை நடத்தி வந்தான். இரு வரும் கடலலைகளை நோக்கிய படி சிறிது நேரம் நின்ருர்கள்.
"இங்கேயே ஒரு கல்லிலே இருப்போமா?"
"இருப்போம், நான்தான் சொன்னேனே! வேளைக்குத்
திரும்பிவிட வேணும் என்று. அங்கே அம்மா காத்திருப்பாள்" அவளுடைய மெல்லிய சிரிப்பிலே இவனும் கலந்துகொண்டான்.
இருவரும் ஒரு கல்லில் தட்டையான மேற்பகுதியில் அருகரு காய் அமர்ந்தனர். அவ ளின் இடையில் பதித்திருந்த தன் கையை விட்டுவிட்டால் அவள் விழுந்துவிடலாம் என்று எண்ணியவன் போல் தா ன் நகர்ந்து அவளுக்கு இன்னும் இடமளித்தான், அவளோ, இவனேடு இன்னும் நெருக்க மாய் அமர்ந்து இவன் விழுந்து விடலாம் என்று தான் எண்ணு வதைத் தன் கைகளின் அணைப் பினல் பிரதிபலித்தாள்.
"எனக்கு நல்லாய்த் தெரி
யும், உன்னுடைய அம்மா எங்
கேயும் போயிட மாட்டாள். நீ போய்ச் சேர்றவரை அவள் காத்திருக்கத்தானே வேண்டும்" 'இல்லை, வீட்டுக்குப் போய் விடுவாள்.'
"அப்படியானு, நீ உண்மை யிலே தனியாத்தான் வீட்டுக் குப் போகணுமா?"
33

Page 19
"இல்லையில்லை, எ ன க் கு இப்போ ஒரு துணை இருக்கு."
இவனுக்குப் பதில் தோன்ற வில்லை.
"ஒ ன் று கேட்கட்டுமா? இதோபார் அவளின் கன்னத் தைக் கிள்ளி முகத்தைத் தன் பக்கம் உயர்த்தினன். "நீ வர்ற போது எதையோ மறந்திட வேணும் என்று உன் அம்மா கட்டாயப்படுத்தினளே!"
*ஒ, அதுவா? நான் "பத் தி ர மா ய் த் திரும்பவேணும் என்ற கவலை அவளுக்கு. அதைத் தான இப்படி எதையேனும் சொல்லி ஞாபகப்படுத்துவாள்,
"நீ தொலைந்து போகக்கூடி யவளைப்போலத் தெரியல்லையே?
இல்லே, இல்லே, நான் என்னைத் தொலைத்துவிடுவேன் போலேயிருக்கு. அப்படித் தொலைந்துபோனுலும் பாதக மில்லைப்போலேயும் இருக்கு”. அவள் தாபத்தோடு அவனே நோக்கினுள். "உங்களிடமே நான். எனக்குச் சொல்லவே தெரியல்லே . . அவள் மூர்க் கத்தோடு அவனை அணைத்தாள். "இப்படி அமைதியா சந்தோ ஷமா ஒரு நிமிஷம் வாழ்ந்ததாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி வாழ்றதுக்கு எவரும் என்னை விட்டுவைக்கவும் இல்லே. என் னைப் பார்த்தா நீங்களே என் னைத் தப்பாகப் புரிஞ்சிடுவீங்க போலப் பயமா வும் இருக்கு. ஐயோ நீங்க அப்பிடிப் புரிஞ் சிக்கக் கூடாது. நான் சந்திச்சி ஆண்களெல்லாம் மிருக ஜாதி கள். பெண்ணுடைய உணர்ச் சிகளை மதிக்கத் தெரியாத பிசா சுகள்! நீங்கள் மாத்திரம் அப் படி இல்லெயெண்ணு நினைக்கிற
34
போது எம்மளவு சந்தோஷப் படுறேன் தெரியுமா?". அவளின் இதழ்களை மேலும் அசையவிடா மல் இவன் விரல்கள் தடுத்தது.
அசைவற்று மெளன நிலை யில் இருவரும் எதையோ புரிந் துகொண்டவர்கள்போல் தோன்
றினர்.
சந்தர்ப்பம் கிடைக்கும்போ தெல்லாம் தாய் தன் காதிலே ஒதுகின்ற மந்திரத்தை அப் போது அவள் நினைத் து க் கொண்டாள்.
"பிள்ளை, இதையெல்லாம் நான் உனக்குத் திரும்பத் திரும் பச் சொல்லக்கூடாது. நீயா கவே விளங் கி க் கொள்ள வேணும்."
*அதுதான் எத்தனையோ முறை சொல்லிட்டியே அம்மா ?
என்மேலே கோபிக்காதே பிள்ளை. நான் என்னத்தைச் சொல்வேன். என்ருலும் பெத்த ம ன ம்பொறுத்துக் கொள்ளு றதா? இன்னைக்கில்லாட்டாலும் நாளைக்கு அப்படி ஏதேனும் பிசகாக நடந்துவிட்டா வீனன கஷ்டம் அல்லவோ வந்திடும். அதுதான் எப்பவும் உன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரி யவேணுமென்று தி ரு ம் பத் திரும்பச் சொல்கிறேன்."
மகள் பேசாமல் இருப்பாள்.
"எங்களை இப்படித் தேடி வர்ற வங்க ஒரு சதத்துக்கேனும் பொறுமை இல்லாதவங்க . நீ புத்திசாலித்தனமா ந ட ந் து வந்தா தொந்தரவு இல்லாமேத் தப்பிக்கொள்ளலாம். நா ன் சொல்லுறது விளங்குதுதானே!"
\. இதற்கும் அவள் மெளன மாக இருக்கிருள்.

*பிள்ளை, இப்படி எப்பவும் 'உம்' மென்னு முகத்தை நீட்
டிக்கொண்டு இருக்காதேடி. எப்பவும் முகம் சி ரிச் ச படி இருக்கவேணும். மருந்தாலே
செய்யாத மாயத்தைச் சிரிப் பாலே செய்யலாமடி. எம்ம ளவு காலத்துக்குத்தான் இப்படி
நான் உன்னைத் தொந்தரவு படுத்துவேன். எப்போ ஒரு நாளைக்கு எங்களுக்கும் வழி
தெரியாமல) போயிடும்?"
*ஏனம்மா, இப்போ மாத் திரம் வழிதெரியாமலா இருக்கு? எப்பவும், இத்த இருட்டிலேயே
போய்க்கொண்டிருந்தா, எப்ப டித்தான் எங்களுக்கு 4ಿ: யப்போறது?" S. '
"ஒரு நாளைக்கு விடியத் தானே வேணும்!"
"எத்தனையோமுறை விடியி றது. உனக்குத்தான் விடியிற தைக் காண ஆசை இல்லையே அம்மா!"
என்னமோ, எங்க நிலைவ ரத்தை நினைத் து இப்படிச் சொன்னேன்" தாய் இன்னெரு பக்கம் திரும்பிவிடுவாள்.
பக ல் கள் மெளனத்தில் கரையும்.
தன் தாயோடு பேசுவதை இப்போது நினைத்துக்கொண்ட போது தான் எவ்வளவு பெல வீனமானவள் என்பது தெளி
வானபோதிலும் ஒரு பெண் என்ற முறையில், தனக்குரிமை யான ஒரு அனுபவத்தை நுகர விடாமல், பலாத்காரமாக இன்னெருவர் பிடுங்குவதை olu 6öre) Loturta எதிர்க்கவேண்டு மென்ன உணர்வு அ வ ளு ஸ் மேலோங்கியது. தாய் எதை வேண்டாம் வேண்டாம் என்று
பயந்து நாளெல்லாம் மறுதலிப்
பாளோ அந்த ஆழ்ந்த இரகசி யத்தின் யதார்த்தமான இனி மையை இதோ உணரவேண்டு
மென்ற வெறி தன் உடல் நடுங்கவைத்துக் கிளர்ந்தெழு வதை அவள் படிப்படியாக உணர்ந்தாள்.
அவளின் அணைப்பு மேலும் பன்மடங்காய் இறுகியது. அவள் வெகுநாளாய் எதிர்பார்த்த
அந்த இனிமை ஒரு மனிதனி
டமிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உருவானது அது.
அன்றைக்கு மட்டும் அவள் என்ன அழகாக நடந்து வீட் டுக்கு வந்தாள்.
கையில் பிடித்த போத்தல் விளக்கின் ஒளியில் தன் மகளின் முகத்தைக் கூர்ந்து நோக்கினள் தாய்.
"ஐயோ! இவள் ஏன் இன்னைக்குச் சிரிச்சபடி வர்ருள்?"
நாம் எவ்வளவு செய்யப் போகிருேம் என்பது
முக்கியமல்ல. எவ்வாறு செய்யப்
என்பதே முக்கியம்.
போகிருேம்
அதிகமாக செய்வதைக்
காட்டிலும், செய்வதை இன்லும் திருத்தமாகச்
செய்வதே சிறப்பு.
tysissir
ತಿ5

Page 20
நீக்ரோ இசைமரபும்
மேனுட்டுப்
பொப் மியூசிக்கும்
கே. எஸ். சிவகுமாரன்
இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபன ஆங்கில சே  ைவ இரண்டின் நிகழ்ச்சிகளை கேட்டுக் கொண்டிருந்தேன். ‘ஹிற்பரேட் ஒவ் த பாஸ்ற் நிகழ்ச்சி ஒலி பரப் பா கி க் கொண்டிருந்தது. முன்னைய ஆண்டுகளில் மக்களி டையே பிரபல்யம் அ ைட ந் த ஜனரஞ்சகப் பாடல்கள் அந் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
"இப்பொழுது பெல்ஜியத் தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாடிய டொமினிக் என்ற பாடலை நேயர்கள் கேட்கலாம்" அறிவிப்பாளர் கூறியதும் கவர்ச் சியான மெட்டுடன் பிரெஞ்சு மொழியில் ஒரு பாடல் ஒலிபரப் பாகியது. உண்மையிலே நான் பரவசமானேன். இசை என்பது மொழி, இனம், தேசம், காலம் கடந்த ஒர் இன்ப வெள்ளந் தான் என்பது பொய் இல்லை.
இந்தப் பாடலை அடுத்து கியோ சக்கமோட்டோ என்ற ஜப்பானியர் பாடிய சுகுயாணி யும் அணிக்க க்ரொண்டோ என்ற இந்தோனிஷியப் பெண்பாடிய "பூறுன் கக்கா துவா" என்ற பாடலும் மற்றும் பல ஜனரஞ்
சகப் பாடல்களும் வானெலியில் ஒலிபரப்பாகின.
இந்தப் பாடல்களில் மெட் டுகளும் மொழியும், பா டு ம் முறையும் சிறிது வேறுபட்டா லும் அவற்றை நுணுகிக் கேட் டால் ஏ தோ ஒரு விதத்தில் ஆபிரிக்க மக்களின் இசை மரபு தழுவியிருப்பதை அவதானிக்க லாம். ஆம். மேனுட்டுப் பொப் மிவூஸிக்" எனப்படும் ஜனரஞ்ச க இசைக்கு அடிநாதமாக இருப் பது நீக்ரோ மக்களின் இசை மரபு தான்,
மே ஞ ட் டு பொமிமூஸிக் என்று கூறப்படும் இசை வடி வங்கள் எவை? ராக் வைரம் கேக் வோல்க் - பொக்ஸ்ரொட் சுவிங் - ஜா ஸ் - ஸில்பிலி லத்தீன் அமெரிக்க இசை (ரம் பா, மம்போ, ரங்கோ, கொங் கோ,) ரொக் அன்ட் ரோல், கலிப்ஸோ - சாச்சா - ருவிஸ்ற் பச்சாங்கோ சொல் இவை எல் லாம் மேனுட்டு ஜனரஞ்சக இசை யில் அடங்கும்.
இவற்றின் தோற்றங்களை ஆராய்ந்த கொலின்ஸிகி வோ,

டர்மென் என்ற இசை அறிஞர் கள், இவைமேற்கு ஆரிபிக்கா வில் இருந்து அடிமைகளாக 300 வருடங்களுக்கு முன் அமெரிக்கா விற்கு கொண்டுவரப்பட்ட நீக் ரோ மக்களின் இசை வடிவங்க ளே என்று கூறுகிருர்கள்,
ஆபிரிக்க இசைக்கும் ஐரோப் பிய இசைக்கும் இடையே தொ டர்பு இருக்கிறது, உதாரணமாக "டயற்ருேனிக் ஸ்கேல் முறை குறிப்பிடலாம். என்ற ஒத்திகையும் இரு வித இசைக்கும் பொது வானது. ஆயினும், ஆபிரிக்க இசைக்கும் ஐரோப்பிய இசைக்கும் இடை யில் ஒரு வேறுபாடு உண்டு. ஐரோப்பிய இசையில் வெவ் வேறு ஒலிநயங்கள் ஒரேபாடலில் அமைவதில்லை, அடுத்தடுத்து வர லாம். ஆனல், ஆபிரிக்க இசை யில் ஒரே நேரத்தில் பல்வேறு ஒலிநயங்கள் இடம் பெறுவதை அவதானிக்கலாம். உதாரண மாக "பட்டாபட்டா' மக்காபே) என்ற பாடலைக் காட் i ..........6.) Пl ().
எனவே மேஞட்டு ஜனரஞ் சக இசையில் நீக்ரோ மரபின் செல்வாக்கை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. அமெ ரிக்காவில் நீக்ரோ இசை மரபு இருதுறைகளில் வளர்ந்த து. ஒன்று ஸ்காட்டிஷ், சுவிடிஸ், இங்கிலீஷ், ஜேர்மன், பிரெஞ்சு
ஹார்பணி"
(மீரியம்
பாடலுடன் இணைந்து வளர்ந் தது. ஜாஸ் இசையில் இந் து வளர்ச்சியைக் காணலாம். ராக் ரைம், ஜாஸ் என்று வளர்ந்து இப்பொழுது கூல்ஜான் என மெருகு பெற்றிருக்கிறது . இரண்டு சமயப்படங்களின் அடிப் பயிைடல்வளர்ந்தது பிரிச்சுவல் கொஸ்பல் ருெக் அன்ட் ருேல் இந்தப் பிரிவில் அடங்கும்.
தெ ன் அமெரிக்காவிலும் சுரிபிய தீவுகளிலும் (குறிப்பாக கியூபா, ஜமெக்கா) உதித்த லத் தீன் அமெரிக்க சங்கீதமும் நீக் ரோ இசை மரபு கொண்டது தான். ஆபிரிக்க ஸ்பானிய போர்த்துக்கேய இசைக்கலப்பை கொண்டது லத்தீன் அமெரிக்க சங்கீதம்.
மேனட்டு ஜனரஞ்சக இசை என்ருல் அது அத்தியாவசிமாக அமெரிக்க இசை தான். அமெ ரிக்க இசை என்ருல் நீக்ரோ மக்களின் இசைதான். ஆனல் ஐரோாப்பாவிலும் அமெரிக்கா விலும் அவுஸ்ரேலியாவிலும் கன டாவிலும் பொ ப் மியூ ஸி க் என்று கொண்டாடப் படுவது ஹைபை என்ற வாத்திய இசை யுடன் கூடிய நீ க் ரோ இசை மரபுதான் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ்ப்படப் பாட்டுக் களில் மேனுட்டு பொப் மியூஸிக் கின் தாக்கத்தை ஆராய்வதே ருசிகரகமன அனுபவமாக அமை ԱյւD.
வாழ்த்துகிருேம்
தாமரை ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரும் ஆசி
ரியருமான திரு.
ஆ. பழநியப்பன் அவர்களுக்கும்
செல்வி இலக்குமிக்கும் 17-5-72ல் சேலம் அம்மாப் பேட்டை கு மர கி ரி தி ரு ம ன கூட்டத்தில்
திரு. எம். கே. இராமசாமி எம். எஸ்ஸி
தலை
மையில் திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு ம ல் லி கை யின் மனங்கனிந்த
வாழ்த்துக்கள்.
- ஆசிரியர்

Page 21
நொறுங்குண்ட இருதயம்
கதையும் கதைப்பண்பும்
இருபதாம் நூற்றண்டின் முதல் மூன்று தசாப்தங்களில் ஈழத்தில் வெளியாகிய இலக்கிய ஆக்கங்களைக் குறிப்பாக அவ தானிக்கும் பொழுது சில தனிப் பண்புகளை நாம் வ ைக ந் து கொள்ளலாம்; சமுதாய சீர் திருத்தக் கருத்துக்களும் சமூக விழிப்புணர்ச்சியும் ஈழத்தின் பல வேறுபகுதிகளுலும் பல வேறு உருவங்களிற் காணப் பட்டன. சமூகத்தின் போக்கிற் கிணங்க காலத்தின் குரலாக பன்முகப்பட்ட உணர்வுகளை யும், காலத்தின் தேவைகளையும் உணர்த்தும் இலக்கிய வடிவங் கள் தோன்ற ஆரம்பித்தன.
19-ம் நூற்ருண்டின் முற் பகுதியிலிருந்து படிப்படியாக உருவாகிய ஆங்கிலக் கல்வி வளர்ச்சியின் தாக்கம் சமூகத் திற் பரவலாக பல விளைவுகளை ஏற்படுத்தியது. கிறித்துவ மிச னறிமாரின் சமய இயக்கங்களும் அவற்றின் காரண காரியத் தொடர்பான கல்விச்சாலைகளும் பல்வேறு கிராமங்களிலும் ஆங் கில் மத்தியதர வகுப்பை பொ
8
துவாக ஏற்படுத்தியது. பரந்து பட்ட நூற் கல்வியும் விரிந்த சிந்தனை வளர்ச்சியும் பெற்றமை பலரையும் சமுதாயப் புரட்சி யையும் மாற்றங்களையும் அவா விச் செல்லும் நிலைக்கு இட்டுச் சென்றன. தாம் மனங்கொண்ட சமூக சீர்திருத்தக் கருத்துக்களை மக்கள் மத்தியிற் பரவச் செய் யப் பல வழிகளைக் கையாண் டனர். சாதாரண மக் கண் நோக்கிப் பிரசார நோக்கிலே எழுத ஆரம்பித்தமை எளிமை யாக எழுதவேண்டியதேவையை ஏற்படுத்தியது. வசன ரூபத்தி லும், கவிதை ரூபத்திலும் கருத் துக்கள் வெளியாயின.
சமூக சீர்திருத்த அடிப்ப டையிலும் றித்துவ சமயப்
பிரச்சார நோக்கிலும் தமது
இரு நாவல்களையும் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்ட
மங்களநாயகம் தம்பையா, அக்
கால சமூக பொருளாதாரப் பின்னணியில் ஆய்வு செய்யப் பட வேண்டியவர் . தெல்லிப் பழை என்ற சிறிய கிராமத்தில் ஏற்பட்ட சமூக மாற்றம், சீர்
 

திருத்த இயக்கம் ஆதியன உரு வாக்கிய சிந்தனைத் தாக்கம் ஆசிரியையின் இலக்கிய முயற் சிக்கு விளைநிலமாக அமைந்தது 6 reor Gorf b.
மக்களின் அகநிலையிலும், புறநிலையிலும் பரவ லா க க் காணப்பட்ட போஜி உணர்வு களைக் தமது / கட்டுரைகளின் மூலமும் கவிதைகளின் மூலமும் பரவலாகக் கண்டித்த பாவலர் தெ. அ. துரையப்டாபிள்ளையவர் கள் இதே காலத்தவர். பன்மு கப்பட்ட உணர்வுகளோடு பாவலர் அவர்கள் வெளிப்படுத் தய கருத்துக்களின் தாக்கம் சமூகத்திற் புத்துணர்ச்சியை
ஏற்படுத்தியது. பழம் பெருமை
பேசி வாழும் யாழ்ப்பாணச் சமூகத்தைத் திருத்தும் பணியில் அமைந்த பாவலர் அவர்களின் பா ட ல் கள் அக்காலத்தில் மிகுந்த செல்வாக்கை ஏற்படுத்
ன. ஐசாக் தம்பையா அவர் களின் குடும்பத்தோடு பாவலர் அவர்கள் கொண்டிருந்த தொ டர்பும் கருத்துப்பரிமாறல்களும் மங்களநாயகம் த ம் பை யா அவர்களின் இலக்கிய ஆக்கத் திற்கு ஒரு காலாக விளங்கியது எனலாம். ஆங்கில போலி நாக ரீகத்தின் வெறுமையினலே தன் னிலை இழந்து வெற்று வாழ்க் கையை அவாவும் மத்தியதர வர்க்க மக்களை வழிப்ப்டுத்த முனைந்த பாவலர் துரையப்பா பிள்ளையவர்களின் போ க்கு மங்களநாயகம் த ம்  ைப யா அவர்களைக் கவர்ந்ததில் வியப் பில்லை. பாவலர் அவர்களைப் போலவே மங்களநாயகம் தம் பையாவும் சீ த ன வழக்கம், பொருளாசை, தெய்வ பக்தி யின்மை போ ன்ற வற் றை நொறுங்குண்ட இருதயம் என்ற நாவலிற் குறிப்பாக அலசு கின்ருர்.
எமது ஆய்வைக், கதை, பாத்திரப்படைப்பு நடை மூன்று பகுதிகளாகப் பிரித்துச் சுருக்க மாக நோக்குவது பல பண்புக னையும் விளக்கிக் கொள்ளத் துணையாக அமையும். கதையைச் சுருக்கமாக நோக்குவோம்.
- சுப்பிரமணியருக்குள்ள பிள்ளைகளிற் கண்மணி பொன் னுத்துரை ஆகிய இருவரும் மூத்தவர்கள். கண்மணியின் அயல் வீட்டுக்காரி பொன்மணி அவளின் சிநேகிதி. பொன்னுத் துரை பொன்மணியைக் காத லிக்கிருன், கல்கத்தாவிற் படித் துக் குழப்பிய அருளப்பா கண் மணியைக் காதலிக்கிருன், அப் பாத்துரை அரு ள ப் பா வி ன் தம்பி. அருளப்பா மணமற்ற பெற்ரு ரை இணங்கச் செய்து கண்மணியை விவாகஞ் செய் கிருன். பொன்னுத்துரையின் காதலை அறிந்தும் பொன்மணி யின் பெற்ருர் அவளை அப்பாத் துரைக்கு விவாகம் பேசுகின்ற னர். பொன்மணி பொன்னுத் துரையை மணமுடிப்பதாக வாக்களித்துப் பெற்ருர் முடிவை எதிர்க்கிருள்.
கண்மணி தன் கணவனுக்கு வந்த கல்கத்தாக் கடிதமொன் றை அவன் உடன்பாடின்றிப் படித்து அவனது கல்கத்தா வாழ்வில் ஒரு பெண் சம்பந்தப் பட்டதை அறிகிருள். கடிதம் வாசித்த உண்மையைக் கணவ னுக்குக் கூறி அவன் தண்டனைக் கும் வெறுப்புக்கும் ஆளாகிருள். கணவன் பையிற் பணம் களவு போக அதுவும் கண்மணிமேற் சுமத்தப்படுகின்றது. வே ண் டாப் பெண்டாட்டியாகத் தாய் வீடு செல்லவும் அனுமதிக்கப் படாமல், இரு குழந்தையும் பெற்று விடுகிருள் கண்மணி. கற்புச் செல்வியாகிக் கணவன்
39

Page 22
உவப்பன செய்து பொறுமை வகித்து வாழ்கிருள் கண்மணி.
அப்பாத்துரைக்கும் பொன் மணிக்கும் விவாகப் பதிவு நிகழும் நாளிற் தப்பியோடும் ஒழுங்கிலிருந்தும், வாய்க் கப் ப்ெருத கண்மணி சபையோருக் குத்தான் பலவந்தப் படுத்தப் பட்டதால் கலியாணப் பதிவுக் கையெழுத்திடுவதாகக் dia- றி இடுகிருள். தன் திருமணத்திற் குத் தடையாக நிற் பவன் பொன்னுத்துரையென அறிந்து அவன்மீது குரோதம் கொள்கி முன் அப்பாத்துரை. கண்மணி வின் நலிவு காண ஆங்கு சென்ற பொன்னுத்துரையை அருளப பாவும், அப்பாத்துரையும் கட்டி அடிக்கின்றனர். நவரத்தினம் பொன்னுத்துரையின் நண்பன். அவன் இரகசியமாய் வந்து அப்பாத்துரையைக் காயப்படுத் துகிருன். அக்காயம் பொன் னுத்துரை செய்ததென்று வழக் குத் தொடரப்படுகிறது. வழக் 6ல் பொன்னுத்துரை விடுதலை யாகிருன்.
பொன்மணியின் கலியாண ஆரவாரம் நடக்கிறது அப்பத் துரை வீட்டிற் சிறுபிள்ளையின் காப்பு களவாடப்படுகிறது. அக்களவு கண்மணிமேற் சுமத் தப்பட்டுக் கணவனல் தண்டிக் கப்படுகிருள். சில நாளாகக் கண்மணி பாதிரியார் ஒருவரின் சமயப் பிரசங்கத்தை வீட்டிலே கேட்டுக் கிறித்து மதச் சார்பு டையவளாகிருள். தண்டிக்கப் பட்ட கண்மணி வீட்டின் ஒரு புற த் தே நோய்வாய்பட்டுக் கிடக்கிருள்.
விவாக தினத்தன்று மாப் பிள்ளை வந்த வேளையில் பொன் மணி தப்பி ஓடிப் பொன்னுத் துரை கொணர்ந்த கரத்தையில்
40
நடைபெறுகிறது.
வேலைக்காரியிடம்
ஏறி மண்டைதீவிற்குப் போகி ருள். கண்மணியையும் அவன் அழைத்துச் சென்று விடுகிருண். ஏ மாந்த மாப்பிள்ளையாகிய அப்பாத்துரை பொன்மணியின் தங்கையை மணந்து கொள்கி
ருன். மணவாழ்விற் பிடிப்பில் லாமல் கொழும்பு சென்று கடனளியாகினன். அருளப்பா
கண்மணியின்றி பிள்ளைகளோடு
இருக்கிருன். மண்மணி பொன்
னுத்துரை முதலியோர்வீடு சேர்
கின்றனர். கண்மணிக்கு நோய் படிப்படியாக ஏறுகிறது. அரு ளப்பா குழந்தைகளைத் தாயி டம் அனுப்பிவிட்டான். கண் மணி இறக்குமுன் பொன்மணிபொன்னுத்துரை வி வா கம் அருளப்பா வீட்டில் களவுபோன பொருட் களெல்லாம் பூரணம் எனும் அகப்படக் கண்மணியின் தூய்மையை அரு ளப்பா உணர்கிருன். கண்மணி யைத் தே டி ச் செல்கிருன். அவனை வரவேற்றுப் பேசிய வாறே கண்மணியின் ஆவி பிரி கிறது. தன் கொடுமையை உணர்ந்த அருளப்பா பரதேசம் சென்று முதுமையில் மீண்டு வந்து மணமுடித்து வாழும் தன் மக்களுடன் இருந்து இறுதி நாளைக் கழிக்கின்றன்
கண்மணியின் வாழ்க்கை யில் ஏற்படும் சிக்கல்களும் அவளைச் சூழவுள்ள சமூகத்தின் அபிலாசைகளும் யதார்த்தமா கச் சித்திரிக்கப் படுகின்றன. நாவலில் வரும் பல பாத்திரங் களும் பல குழப்பமான நிலைக ளிற்குட் சித்திரிக்கப் படுகின் றன. கண்மணி ஆரம்பம் முதல் இறுதிவரை மன உணர்வுகளுக் குட் சிக்கித் தவிக்கும் லட்சிய பாத்திரமாக வளர்க்கப்படுகின் ருள். அருளப்பா தீய பண்பு கள் கொண்ட எதிர்நிலைப் பாத்

திரமாகக் காட்டப்படுகின்றன். சகோதரங்களாகிய அப்பாற் துரை அருளப்பா ஆகிய இரு வரும் தீய பண்புகளின் பிறப் பிடமாகக் காட்டப்படுகின்ற னர். பாத்திரச் சித்திரிப்பில் ஆசிரியை குறிப்பாகக் கவனம் செலுத்தியுள்ளார்.
கதையை வளர்த்துச் செல் லும் பண்பில் ஆசிரியை வெற்றி யடைந்துள்ளார் என்றே கூற வேண்டும். இயல்பான யாழ்ப் பாணப் பேச்சு வழக்கு நடை யைப் பரவலாகக் கையாண்டுள் ளார். ஆங்கில அறிவின் பய ஞக வசன நடையில் நெகிழ்வு
காணப்படுகின்றது. ஆற்றெழுக்
குப் போன்ற வசன நடையும் கதைப்போக்கில் விறுவிறுப்பினை ஏற்படுத்துகின்றது. மண் வாச னைவீசும் சொற்களை இடையி டையே பெய்துள்ளமை ஆசிரி யையின் நடைக்கு மெருகூட்டி யுள்ளது. குறிப்பாக ஆரம்ப
கால நாவலாசிரியர்களின் பண்பு
கதையை வளர்த்துச் செல்லும் Gurrj6 dij தொனிக்கின்றது. கதை முழுமையாகத் தானே எடுத்து மொழியும் நிலையாகவே காணப்படுகின்றது. பாத்திரங் களின் உரையாடல்கள் கதை யில் யதார்த்தமாக அமையாது
இடையிடையே செயற்கைப் பண்புகளுடன் காணப்படுகின் றன. சுருங்கக் கூறின் கதை
இலட்சியப் போக்குடன் நீதி,
நேர்மை, கடவுள் விசுவாசம் என்ற கோட்பாடுகளின் பின்ன ணியில் வளர்ந்து செல்கின்றது. இடையிடையே அமையும் கிறித் துவ பிரச்சாரக் கருத்துக்கள் கதைப்போக்குடன் இணையாது குத்திட்டு நிற்கின்றன.
ஒட்டு மொத்தமாகப் பார்க் கும்போது நொறுங்குண்ட இரு தயத்தில் வரும் பாத்திரங்களின் தொகை கதையைச் சிக்கல் நிறைந்ததாக்குகின்றது. காலத் தின் ஒளியில் நோக்கும்போது மங்களநாயகம் தம்பையாவின் முயற்சி முழுமையடைகின்றது. நொறுங்குண்ட இருதயத்திலும் Urišs "அரியமலர்" என்ற இரண்டாவது நாவலின் நடை யும், கதைப்போக்கும் முதிர்ச்சி யடைந்த நிலையில் உள்ளதையும் குறிப்பிடலாம். இரு நாவல்களி லும் உள்ள பாத்திரங்களின் பெயர் ஒற்றுமையும், கதைப் பின்னணியும், ஒன்றுக் கொன்று
வளர்ச்சியும் தொடர்ச்சியும் ஆக உள்ளமையும் அவதானிக் கக் கூடியது. தமது நோக்
கத்தை நிறைவேற்றும் போக் கில் ஆசிரியை பெறும் வெற்றி நாவலின் வெற்றியாக அமை கின்றது. நல்ல நாவலைப் படித் தோம் என்ற நிறைவையும்
ஏற்படுத்துகின்றது.
ኣ (வளரும்)
பேசுவதில் பேராற்றல் பெற்றவன் மனிதன்; ஆனல் அவனுடைய பேச்சில் அதிக பாகம் உபயோகமற்றது. முறையற்றது. மிருகங்களுக்குப் பேசும் ஆற் ற ல் குறைவு ஆயினும், குறைவான அதுவே உபயோக
LDfr Gðrg1•
சத்தியமானது.
సై**
- வியஞர்டோ டாவின்சி
41

Page 23
திக்குவலைக் கமால்
இந்தப் பதினெரு வரு டகாலமாக அவனுடைய கால் களுக்கும் நிலமகளுக்கும் இடை யில் நிலவிவந்த தொடர்பு தற் பொழுது ஒருமணி நேரத்துக்கு முன்பிருந்து அறுந்துவிட்டது. கழுத்தை வளைத்து, கீழே கால்களை ஒருமுறை பார்த்துக் கொண்டான் அழகான செருப் புக்கள். பளிரென்று வெள்ளை
நிற அடித்தட்டு. . அதிலே கறுப்புநிறப் பட்டிகள்...!
மாறுதலான சுவாத்தியம் ,
சூழ்நிலைகளைச் சமாளிக்கத்தக்க புதுரக ஆடைகளை அணிந்த வண்ணம் விண்வெளி வீரர்கள் விண்வெளியிலே மிதப்பதுபோல
கால்களே நிலத்தில் படாத வண்ணம் அந்த றப்பர் செருப்
பின் மென்மைச் சுகானுபவத் தில் நடந்து கொண்டிருந்தான் அவன.
பள்ளிவாசலை நெருங்கிய தும் அவனது கண்கள் அகலித்து விரிந்து நின்றன. இன்று அங்கு வருடாந்தக் கந்தூரி அல்லவா?
4&,
செருப்பு, அவையெல்லாவற்றிலும் தனது
அந்தப் பள்ளிவாசல் மின் விளக்கலங்காரத்தால் ஒளிப் பிரவாகம் பெற்றுக் காட்சிய ளித்ததுபோல அவனது உள்ள மும் வாழ்க்கையிலேயே முதன் முறையாகச் செருப்பெனும் விளக்கு ஏற்றப்பட்டதால் பிர, காசித்துக்கொண்டிருந்தது.
அநேகமாகக் கல்யாண விழாக்களுக்குச் செல்வதற்கா கத்தான் பலரும் புத்தாடை, புதுக் காலணிகள் அணிந்து கொள்வது வழக்கம். அவனுக் கோ. அதிலும் ஒருபடி மேலாக இறைவனின் இல் லத் துக் கு முதன் முதல் புதுச்செருப்பு அணிந்துகொண்டுவர வாய்த்து விட்டதேயென்ற அலாதியான தொரு பெருமிதம்!
பள்ளிவாசல் முன்விராந் தையை அடைந்ததும் அங்கே கண்கொள்ளாக் காட்சி. எத் தனே ரகமான, எத்தனை வித மான, எத்தனை நிற மா ன சப்பாத்துக்கள்!
செருப்புத்தான் 昂 ரகத்திலும், விதத்திலும், நிறத்திலும் நிறை
 
 

வானது 67 air 607 16
அவனுக்கு
உள்ளேயிருந்து ஒதல் ஒலி களும், "கந்தூரி மணமும் பர விக்கொண்டிருந்தது. தானும் உள்ளேபோய் அமர்ந்துகொள்ள வேண்டுமே என்பதால் செருப் பை எங்கே வைத்துவிட்டுப் போவதென்பதே அ வணு க் கெழுந்த பிரச்சினை
“இங்கேயே வைத்துவிட்டுச் சென்ருல் இத்தனைக்குள்ளும் மாறிப்போய்விடாதோ? அல் லது உள்ளேயுள்ள அத்தனை பேரும் ஒரேயடியாக வரும் போது எங்காவது வீசுப்பட்டுப் போய்விடாதோ??
அவனுக்குத் தனது செருப் புக்களைப் பாதுகாப்பாக வைக் கப் பிரத்தியேகமான தொரு இடம் தேவைப்பட்டது. அதற் காக அவனது கண்கள் நாற்புற மும் சுழன்றுகொண்டிருந்தன.
முன் விரு ந்  ைத க் கும் ஹவுலு" (நீர்த்தொட்டி) க்கும் இடைச்சுவர். அந்தச் சுவரின் கீழ்பகுதியில் வரிசையாகச் சதுர அமைப்பில் வெட்டப்பட்டுள்ள இடைவெளிகள். அந்த இடை வெளிகளில் ஆகக்கடைசி இடை வெளி அவன் கண்களில் நல்ல தொரு பாதுகாப்பான இட மாகத் தெரிந்தது.
அடுத்த கணம் இர ண் டு செருப்புக்களையும் காலிலிருந்து கழற்றியெடுத்து அடிப்பக்கங் களே ஒன்றின்மேலொன்முக இணைத்து அந்த இடைவெளிக் குள் வைத்துவிட்டு, இரண்டு மூன்றடி பின்னே வந்து இலே சாக அப்பக்கமாகப் பார்த் தால் கொஞ்சம்கூட அவனுக்கே தெரியவில்லை; பிறகு வேறு யாருக்குத்தான் தெரியப்போகி ADg5I !
என்ற
அநத த திருப்தியில் கால்க ளேக் கழுவி, தலையில் "லேஞ்சி" (கைக்குட்டை) யைக் கட்டிக் கொண்டு பள்ளிவாசலுக்குள்ளே
போய் ஆளோ டு ஆளாக அமர்ந்துகொண்டான்.
ஒதல்கள், பிரசங்கம் எல்
லாம் தொடர்ந்து நடைபெற் றுக்கொண்டிருந்தன. அதில் ஈடு பாடு கொண்டிருந்தனர் அநே கர். சிலர் சிலர் ஆங்காங்கே மெதுமெதுவாகக் கதையளந்து "சாப்பாட்டை எதிர்பார்த்த வண்ணமிருந்தனர். அவனுடைய நினைவும் இன்ஞெரு பக்கமாகச் சுரந்தோடியது.
அவனுக்கு நன்ருக ஞாபக மிருக்கிறது. சென்ற நோன்புப் பெருநாளன்று வாப்பா வாங்கி வந்திருந்த கட்டைக் களிசாஜன் யூம் சேட்டையும் அணிந்து கொண்டு மகிழ்ச்சியோடு துள் ளிக் குதித்தபடி மற்றச் சிருர் களை எதிர்பார்த்து வெளியே வந்தபோது, வந்த மகிழ்ச்சி சில தொடிகளில் ஒடிமறைந்து போய்விட்டது.
காரணம். அவனது கால் கள் மாத்திரம்தான் வெறுமை யாக இருந்தன. அந்த வெறு மை அவன் அறிந்தது முதல் இருந்து வந்தபோதிலும் அன்று Lor59prth அவனுக்கு அழுகை
வந்ததேனென்ருல். இதுவரை அவனைப்போன்றே வெறுமை யாக அலைந்து கொண்டிருந்த
அவனுடைய நண்பர்கள் பலர் அன்றைக்கென்றே செருப்புகள் போட்டுக்கொண்டு வந்திருந் ததுதான்.
"எகுமகன் நல்ல நாளேல கண்கலங்கிக்கொண்டு நிக்கிய?" வாப்பாதான் இப்படி அவனி டம் கேட்டார்
雷

Page 24
இந்த வினயமான வினவல் அவனுக்கு இன்னும் கொஞ்சம்
ஆத்திரத்தை வரவழைத்து விட்டது.
"Girl Lunt ... ... எனக்கு..
செருப்புவாங்கித் தாங்கொ'
*அழவான மகன். இந்தப் பைனம் வாங்கித்தர வசதில் லாமல் பெய்த்து. இதுபாருங்க எனக்கு ஒரு சாரம் மட்டுந்தான் வாங்கின. உம்மாக்கு ஒன்டுமே வாங்கல்ல? w
மற்ற வர் களை ப் போல் தானும் இருக்கவேண்டுமென்று நினைக்கும் அந்தப் பருவத்தில் இந்தச் சமாதானங்களெல்லாம் எடுபடுமா?"
"வாப்பா..! அப்ப எனக்கு எப்பவன் வாங்கித்தார" இந் தக் கேள்வியில் ஒருவித கம்
'உம்மயா பள்ளிக் கந்தி ரிக்கி வாங்கித்தாரன் புள்ள" வாப்பாவின் வாக்குறுதி இது,
அந்த உறுதி அவரின் வாயி லிருந்து வெளிவந்தது முதல் "பள்ளிக் கந்திரி, பள்ளிக் கந் திரி" என்ற நினைவில், அது சீக் கிரமே வந்துவிடவேண்டும் என்ற
பிரார்த்தனையிலும்தான் அவ
னது நாளும் நொடியும் நகர்ந்
துகொண்டிருந்தது.
நேற்று. . .
ஸாரத்தை உயர்த்திக் கட் டியபடி, மூட்டை சுமந்ததால்
மேலெல்லாம் படிந்திருந்த தூசி ,
துணிக்கைகளுடன் ஐக்கியமா கிக் கசிந்துகொண்டிருந்த வியர் வையைத் துடைத்தபடி வந்து கொண்டிருத்த வாப்பாவை ஓடிப்போய் என்றுமில்லாதபடி கட்டியனைத்துக் கொண்டான் அவன்
did
*வாப்பா. , வாப்பா.. நாளக்கிப் பள்ளிக் கந்திரி. செருப்பு வாங்கித் தாங்கொ
அவருக்கு "திக்" கென்றது. அன்று கொடுத்த வாக்குறுதி நினைவில் பளிச்சிட, இனி என்ன செய்வதென்ற சிந்தனை. . .
அவரது கையில் அன்றைய தேவைக்கே பற்றக் குறையா கத்தான் காசிருக்கும்போது. அந்த நிலைமையை உணர்ந்து கொள்ளும் அளவுக்குச் சிந்தனை au6Tyrr 5 upsä0T 6Tululg-d &Fudrt ளிப்பதென்றே தெரியவில்லை.
"மகன். நான் வாங்கிக் கொண்டு வரப்பாத்த. பொறகு நாளக்கி ஒங்களேம் கூட்டிக் கொண்டுபோஞ. ஒங்களுக்கே புரியமானத்தால பாத்து வாங் கித்தரேலுமெண்டு வந்திட்டன்" அதைத்தவிர வேறு பொருத்த மான பொய்கள் அவருக்குப் பட்டவில்லைப்போலும்!
அவனுக்கோ இன்னும் ஒரு படி மகிழ்ச்சி! அவனுக்கு ஏற் றதை அவனுகவே போய் வாங் குவதென்ருல் மகிழ்ச்சி இருக் காதா?
"மஜிதின் செருப்பைப்போல் வாங்கிறதா? மஹ்ரூபின் செருப் பைப்போல் வாங் கிற தா? வெள்ளை நிறத்தில் வாங்கிறதா? பச்சை நிறத்தில் வாங்கிறதா? இரவு கண்ணிமைகள் ஒன்றை யொன்று தழுவிக் கொள்ளும் இறுதி ப் பொழுதுவரையும் இதே பிரச்சினைதான் அவனுக்கு
இன்று. .
வேலைமுடிந்துவந்து வாப்பா அவனையும் அழைத்துக்கொண்டு சென்றபோது அவனது நிலையை
இனி எப்படிச் சொல்வது.

கடைக்குள் பிரவேசித்தால் மடித்து வைத்திருந்த கதிரை யொன்றை விரித்து. அதில் அவனை இருக்கச் செய்து ஒவ் வொரு வகையான செருப்பை விற்பனையாளர் எடுத்துக்காட்ட எல்லாமே வாங்கிவிட வேண்டு மென்ற எண்ணமும் எதைத் தா ன் தெரிவுசெய்வதென்ற சிக்கலுமே அவனை ஆக்கிரமித் தன.
இறுதியில் எப்படியோ ஒன் றைத் தெரிவுசெய்து கொண் டான். அந்த மனிதன் ஐந்து ரூபா ஐம்பது சதத்தை எங்கி ருந்துதான் கடன்வாங்கிவந் தாரோ தெரியாது; அவனு டைய நீண்டகால ஆவல் நிறை வேறிவிட்டது.
கடையிலிருந்தே கால்களில் மாட்டிக்கொண்டுவரத் தயாரா னவன் "இல்ல மகன். ஊட் டுக்குப் பெய்த்து காலக் கீழு கிப்போட்டுக்கோங்கொ" என்று ஒருவாறு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.
*ஆ. . . சோறுவெக்கப் போற. . சரியா இருங்கோ' பரிசாரகர் ஒருவரின் இக்குரல் அவனது சிந்தனையைத் தடுத் AB •
ஆருறு பேராக வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டி ருந்தபோதிலும் அவனுக்கோ தனது சருப்பைப் பற்றிய நினைவு! அது வைத்த இடத்தில் இருக்கிறதோ இல்லையோ என்று.
சாப்பிட்டு முடிந்தாகி எல் லோரும் முட்டி யடித் துக் கொண்டு வெளியேறிக் கொண் டிருந்தார்கள்) அவனும் எலிக் குஞ்சுபோல் வளைந்து நெளிந்து வெளியே வந்துவிட்டான்,
நிறைத்திருந்த
அங்கே. செருப்புக்களெல் லாம் வீசுப்பட்டு அங்குமிங்கு மாக இருந்தன. பலர் செருப் புக்களைத் தேடுவதிலும், இன் னும் சிலர் தங்கள் செருப்புக் க3ளக் காணவில்லையே என்றும் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
"ஐயோ. ஏன்ட செருப்பு"
பிரார்த்தனைகள் சகிதம், அந்த நடுச்சுவரின் மூலைப்பக்க சதுர
இடைவெளியை அண்மி எட் டிப் பார்த்தபோது. செருப்பு இருந்தது!
எடுத்து மாட்டிக்கொண்டு பின்புற 'கேற் ருல் வெளிக்கி டச் செல்கையில், தண்ணிர் *ஹவுலை"க் கண்
டதும், கு னிந்து கைகளால்
தண்ணீர் அள்ளிக் கால்களைக் கழுவிக்கொண்டு வெளியேறி
பலமுறை அவன், மற்ற வர்கள் ஈரக் காலுடன் றப்பர் செருப்பணிந்துகொண்டு செல் கையில் எழும்பும் “ச்சிலிக். ச்சிலிக் என்ற ஒலியைக் கேட்டு ரசித்துள்ளான். இன்று- அவ
னுடைய கால்களும், செருப் பும் சேர்ந்தெழுப்பும் அதே ஒலியைக் கேட் டு ரசித்துக்
கொண்டே நடந்தான்
பள்ளிவாசலைச் சுற்றிவர ஆண் களு ம் பெண்களுமாக நிறைந்திருந்ததோடு ஆங்காங் கே பல நிகழ்ச்சிகளும் நடை பெற்று க் கொண்டிருந்தன. பாவாக்களின் பாட்டு, சீனடி சிலம்படி, இத்தியாதி!
இவற்றையெல்லாம் னித்தபடி அவன் சுற்றிக்கொண் டிருந்தபோதிலும் இடைக்கி டையே தனது செருப்பைப் பற்றிய எண்ணங்கள். ஒவ்
45

Page 25
வொரு நாளும் கழுகவேண்டும்: கிழ  ைமக் கொருமுறையாவது சவர்க்காரம் போட்டுக் கழுக வேண்டும் என்று!
"சாப்பாடு திண்டியாடா?* முதுகைத் தொட்டுக் கேட் டான் நண்பனுெருவன்.
"ஒ. இப்பதான் திண்ட"
'ஹ. எப்படா செருப்பு
வாங்கின. வாயைப் பிளந்து அதிசயமாகக் கேட்டான்.
"இண்டக்கித் தாண்டா. aunišer”
"கொஞ்சம் நில்லுடா துரக் கம் வருது. மொகத்தக் கொஞ் சம் கழுகிக்கொண்டு வாரன்" எ ன் ற படி பள்ளி "ஹவுலை" நோக்கி நடந்தான் அவன்.
"டேய். நில்லுடா" கோ பாவேசத்துடன் எழு ந் த து அக்குரல் திரும்பிப் பார்த்தான் வாசற்படியில் மத்திச்சம் (பரி பாலகர்) நின்று கொண்டிருந் தார். அவரது கையைப் பிடித் தபடி அவரது இளைய மகன்!
"வாப்பா. வாப்பா. அது தான் ஏண்ட செருப்பு" அந்தச் சிறுவன் சொன்ஞன்.
Joy au sir நின்றன்.
இல்லை. இல்லை. இது
ஏண்ட அவன் நடுநடுங்கியபடி சொன்ஞன்.
அதிர்ந்துபோய்
"பொய் வாப்பா. நான் இவடத்திலதான் வெச்சிட்டுப் பள்ளிக்குள்ள போன. <到点
இவன் எடுத்தீக்கி’ எவ்வித சல னமுமின்றி அது தன்னுடையது தான் என்று மெய்ப்பித்தான் அச்சிறுவன்,
*அடேய். கழட்டிக் குடுடா புள்ளேட செருப்ப. இடியெ
னக் குமுறிய அவரது முகம் கரு மேகம்போல் காட்சிதந்தது.
"சத்தியமா இது ஏண்ட" அரைகுறையாக வார்த்தைகள் வெளிவந்ததோடு அவனது கண் களும் பணித்தன,
*பொத்துடா வாய. நீ எப் பசரி செருப்புப் போட்டவ (69-ft. . . . .
"இந்தா பாருங்க.. நான் பிளேட்டால 'எம்' வெட்டீக்கி" என்று செருப்பைத் தூக்கி, மாறிப்போனலும் தேடிக்கொள் ளத்தக்கதாக அவன் பொறித்த குறியைக் காட்டினன்.
அடே கள்ளனுக்கு கள்ளப் புத்தி தெரியாமலீக்குமா... எடுத்துக்கொண்டுபோய் வெட் டிக்கொண்டு வந்திருப்பாய். கணக்குக்கு மிச்சம் பேசாத . செருப்ப கழட்டிக் கன்னங்கன் னமெண்டு அடிப்பன்"
இனியும் கதைத்தால் அடி தான் இடைக்குமென்று அவ னுக்குப் புரிந்துவிட்டது. செருப் புக்களைக் கழற்றிக் கொடுத்து விட்டு வந்த நோக்கத்தையும் மறந்து மெதுவாகத் திரும்பி நடத்தான்.
இனி அவன் எப்படித்தான் வீட்டுக்குப் போவான்.? அங்கு செருப்பைப் பற்றிக் கேட்டால் என்னபதில் சொல்வான்?
நிலமகள், மூன்று மணிநேர இடைவெளிக்குப்பின்பு மீண்டும் அவனுடைய கால் களு டன் தொடர்பை ஏற்படுத் தி க் கொண்டாள்.

20-ம் நூற்ருண்டின் முதல் பகுதியிலே புகழ்பெற்ற தலே சிறந்த ஒவியர்களில் ஒருவரான ஆட்டோ டிக்ஸ் அவர்களின் 80-வது பிறந்தநாள் விழா அண் மையில் கொண்டாப் பட்டது. 1969 ஜ"ன் 25-ல் அவர் இயற் கையெய்திஞர்.
அவரது கலைவளர்ச்சியின் பல படிகளில் மிக முக்கியமா னது- மிக வெற்றிகரமானதுங் கூட-முதல் உலகப்போர் முடிந் ததற்கும் பாசிஸம் ஆட்சிக்கு வந்ததற்கும் இடையிட்டகாலந் தான். அக்காலத்தில் டிரெஸ் டனில் வாழ்கையில் அவர் தொழிலாளி வர்க்கத்தின் ஒரு குழந்தையாக வளர்ந்த அணுப வத்தையும் (அவர் தகப்பனர் கெரா நகரில் ஒரு பட்டறையில் மோல்டராக இருந்தார்) முதல் உலகப் பெரும் போரில் பட்டா ளத்தானக இருந்த அனுபவத் தையும் தமது ஓவியங்களில் சித்திரித்தார். வேலையில்லாக் கொடுமை (1940), தீப்பெட்டி விற்பவன். (1920), ஒரு ஒட்ட லிலே (1922)-எனும் ஓவியங்
ஆட்டோ டிக்ஸ்
கள் பிறந்தன. 1923-ல் போர் முனைக் குழிகளைச் சித்திரிக்கும் ஓவியம் வந்தது. பாசிஸ்டுகள் **நசிவுப் போக்குக் கலை" என்று வர்ணித்துக் காட்டிய கண் காட்சியில் இதையும் சேர்த் தார்கள். ஆனல் பார்வையா ளர்கள் இது ஒரு மகத்தான போர் எதிர்ப்புக் கலைப்படை பல் என்று கொண்டாடினர்.
டிக்ஸ் ஓவியங்கள் அன்று டிரெஸ்டனிலிருந்த முற்போக் கான இளம் கலைஞர்களை ஆட் கொண்டது. அவரது படைப்பு களைக் கண்ணுற்ற லீ குருண்டிக் ". "போர்" எனும் ஓவிய த் தொகுதி நுட் ப நயத்துடன் ஒரு மாபெரும் உண்மையை உணர்த்தியது- ஏகாதிபத்தியப் G3 lu mir rif மிருகத்தனமானது. பைத்தியக்காரத் த ன மா ன கொலை வெறியாட்டம் என்று கண்காட்சியைக் கண்டபின் நான் மாறிவிட்டேன்" என்று கூறு கிருர்,
1926-ல் டிக்ஸ் டிரெஸ்டன் கலைகள் அகாதெமியில் ஒவியத்
47

Page 26
துறைப் பேராசிரியர் ஆனர். அவரது படைப்புகளின் பேராற் றலும்காலப்பிரக்ஞையும் மாண வர்களைக் கவர்ந்தன. அவரது
சிறந்த மாணக்கர் ருடோல்ப் Goo u_urio 495 m 6āTu_ _rio சொல்கிருர்: * கருத்துக்களை ஒவியங்களாக உருமாற்றும் உத்வேகத்தை
எங்களுக்கு அளித்தார். திரைச் சீலையிலே மனம்போன போக்கில் சோதனை முறையில் தீட்டி உரு வாக்கும் முறையில் செல்லாமல் வரையப்போவதை மனக்கண்ணில் உ ரு வா க் கி நிறுத்திக்கொண்டு - தொடங் குமாறு ஊக்குவித்தார்’
அவரை பாசிஸ்டுகள் நஞ் சென்று வெறுத்தார்கள். 1933 செப்டம்பர் 23-ல் டிரெஸ்டன் அன்ஸிகர்’ எனும் பத்திரிகை யில் "இந்த ஆசாமி பல ஆண் டுகளாக இளைஞர்களைக் கெடுத் துவருகிருரர். இவ்வாண்டு வசந்த காலத்தில் அவரைப் பேராசிரி யர் பதவியிலிருந்து நீக்கியதால் இந்தக் கேடான நடவடிக்கை களுக்கு முடிவு கிடைத்துவிட் டது" என்று ஒரு க ட் டு  ைர கூறியது. V
அவர் வீடு பல தடவை சோதனையிடப்பட்டது - இரு தடவை சிறையில் தள்ளப்பட் டார். கான்ஸ்யின்ஸ் ஏரிக்கு அருகாமையில் ஒரு சிறு குடி
தார்.
முன்னரே
லில் வாழ்ந்து வரலாஞர். எனி னும் தமது டிரெஸ்டன் ஸ்டூடி யோவுக்கு அடிக்கடி போய்வந் 1945-ல் பாசிஸ் ஆட்சி நொறுங்கி வீழ்ந்தபின் டிரெஸ் டன் திரும்பிஞர். அவர் கலை வளர்த்த மானுடப் பண்பிலே ஒரு ஜெர்மன் அரசு உதயமா யிற்று. அவரது, "போர்’ எனும் ஒவியத்தொகை (1929 - 33) பல ஆண்டுகளாக டிரெஸ்டன் கலைக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. "இந்த ஒவியத்தின் உண்மைப் பொருளை இந்நகர மக்கள் தாம் நன்கு புரிந்து கொள்கிருர்கள். இங் கேதான் அது உதயமானதுங் எனவேதான் இந்தக் به حسا وارث கலைக் கூடத்திற்கு அதை இரவ லாகக் கொடுக்கவும் விற்கவும் இசைந்தேன். பல முதலாளித்வ நாடுகள் பெரும் விலை க்கு வாங்கிக் கொள்ள முன் வந்த தை நிராகரித்தேன்" என்று 1968-ல் கூறிஞர்.
புரட்சிகரமான தொழிலா ளிவர்க்கக் கலையில் ஆட்டோ டிக்ஸ் ஓவியங்கள் முக்கியமான இடம் பிடித்துள்ளன.
சம்பவங்கள் உன்பக்கம் இருந்தால் ஜூரியைப்
பார்த்துக் கர்ஜனை
Lífl;
சட்டம் உன் பக்கம்
இருந்தால் ஜட்ஜைப் பார்த்துக் கோஷம் இடு:
இரண்டும்
இல்லை என்ருல்,
உன் முன்னுள்ள
மேஜைமீது ஒங்கி ஒரு குத்து விடு.
- ஸாமர்ஸெட் மாம்
48

மூன்று நாட்களாக ஓயாத காய்ச்சல் . சோடாவையும் தேநீரையும் தவிர வேறு உணவே கிடையாது.
வழக்கமாக கொழும்பில் தங்கும் நண்பரது கடையின் மேல் மாடியில் இரவாகப் பக லாகப் படுத்துக் கிடந்த எனக்கு காய்ச்சல் வேகத்தில் இரண்டு கண்களிலுமிருந்து நீர் பெருகிய வண்ணமிருந்தது.
சென்ற மாதத்தின் கடை.
சிப் பகுதியில் கொழும்பில் எனக்கேற்பட்ட இந்த மூன்று நாள் கட்டாய ஓய்வு என்ன நானே மறுபரிசீலனை செய்ய உதவியது.
சிந்திப்பதற்குரிய நேரம்,
ஓய்வு, வசதி, சூழ்நிலை எல்லா மாகச் சேர்ந்து என்னைச் சூழ்ந்து (ossfir 6:or L-GOT.
எனது இலக்கியப் பயணத் தில் குற்றங் குறைகள் உண்டா?
நான் ஏதாவது சாதிக்கத்தான்
முயன்று கொண்டிருக்கிறேஞ? அல்லது எல்லாமே அர்த்தமற்ற செயல்கள்தான? மல்லிகையின் எதிர்கால வளர்ச்சியின் கட்டங்கள் சரியாகவே திட்ட மிடப்பட்டபடி செயல்படுத்தப்
படுகின்றதா? அல்லது வெறும் பிரசார ஆரவாரந்தாளு?
இப்படி இப்படி . . Լp oձIւD
போன போக்கெல்லாம் பல கோணங்களில் பான்னை ஒரு அந் நியணுக நிறுத்தி ஆத்ம விசா ரணை செய்து பார்த்துக் கொண் டேன். -
ஓர் ஆண்டிற்கு முன்னர் ஒரு ரஸிகை எனக்கெழுதிய கடிதம் ஞாபகம் வந்தது.
*உங்களை ஆரம்பத்தில் இலக்கிய நெஞ்சம் படைத்தவர் எனத்தான் தெரிந்து கொண் டேன். ஆனல் காலஞ் செல்லச் செல்ல நீங்கள் ஒரு தலைக்கணம்
49
Ꭿ5frᎧbᎠ .
'

Page 27
பிடித்தவர் என்பதையும் கிறுக் குக் குணம் கொண்டவர் என் பதையும் யாரையுமே மதிக்கா மல் எடுத்தெறிந்து பே சும் இயல்பினர் என்பதையும் போ கப் போகத் தெரிந்து கொண் டேன். எனவே இப்படியான வரின் மல்லிகை இதழைப் படிப் பதை இப்போது நிறுத்திக் கொண்டுவிட்டேன்" என எழுதி யிருந்தார் அவர்.
திம்பிரிகசயாவைச் சேர்த்த இன்னெரு ரஸிகர் வேருெரு கடிதம் எழுதியிருந்தார். "ஆரம் பத்தில் உங்களைப் பற்றியும் மல்லிகையைப் பற்றியும் ரொம் பவும் முரண்பாடான கருத்துக் களே எனக்குச் சொல்லப்பட் டிருந்தன. ஆனல் காலப்போக்
கில் நான் எனது பழைய கருத்
து க் களை மாற்றியமைத்துக் கொண்டேன். நான் இந்தியா விலுள்ள பேணு நண்பர்களுக்கு மல்லிகையை மாதா மாதம் அனுப்புவது வழக்கம். அவர் கள் மல்லிகை தமக்குக் கிடைக் கச் சுணங்கும்பொழுது காட்
டிய தார்மீக கோபத்தைக் கண்டு எனக்கு மல்லிகை மீது உண்மையிலேயே பெருமை பிறந்தது"
இப்படியாகப் பல கடித வாசகங்களை நான் படுக்கையில் இருந்தபடி அசைபோட்டேன்"
தலைக்கணம் என்பது வேறு. தன்னம்பிக்கை என்பது வேறு. இதைச் சரி யாக ப் புரிந்து கொள்ள வேண்டும்? இதைச் சரியாகப் புரிந்து கொண்டால் தான் என்னையும் எ ன் னை ப் போலப் புரிந்து கொள்ள முடி யும். சரியாகவோ பிழையா கவோ அசாதாரண தன்னம் பிக்கை கொண்டவன் நான். இது யாரையும் புண்படுத்தா தது. யாருடனும் விரோதம்
59
பாராட்டாதது. ரனெனில்
“மனித குலமே தன்னம்பிக்கை
யுடன் முன்னேறிச் செல்ல வேண்டுமென எண்ணிக் கரும மாற்றுபவன் நான்.
இத் த த் தன்னம்பிக்கை என்னுள்ளத்திலே ஒருவித வித் வச் செருக்கை ஏற்படுத்தியுள் ளது. இது உண்மை. கலைஞன் எனப்படுபவனுக்கு வேறெதை யும்விட, அசாதாரணமான தன் னம்பிக்கை இருக்க வேண்டும். துணிச்சல் நிரம்பிய வாழ்வு வாழ வேண்டும். அப்பொழுது தான் அவனிடத்தில் மற்றவர் களிடம் காணமுடியாத புது மையும்_த னித் தன்மையும் முதிர்ச்சிபெறும். இது தான் எனது கருத்து; என்னைப்பற்றிய எனது மதிப்பீடு.
வேறு ஏதோ காரணங்களுக் காக - அரசியல் கருத்து முரண் பாடுகளை மனதில் வைத்துக் கொண்டு - மல்லிகையை விமர் சிப்பவர்களை நான் பல ஊர்க ளில் சந்தித்திருக்கிறேன். நிச்சய மாக இவர்கள் சொல்லும் குற் றச் சாட்டு இவர்களது மனச் சாட்சியே ஒப்புக்கொள்ளாத ஒன்ருகும்.
எனக்கென ஓர் அரசியல் சித்தாந்தம், நோக்கு, போக்கு உண்டு. இதை எந்தச் சந்தர்ப் பத்திலும் நான் மறுப்பவனல்ல.
மறுப்பேனஞல் தா ன் 5 it 965. C5
ஆனல், எனது அரசியல்
கருத்துக்களை வலிந்து நா ன் மல்லிகையில் திணிப்பதில்லை. திணிப்பது எனது நோக்கமு மில்லை. ஏனென்ருல் இன்றைய நமது இலக்கியப் போராட்டம் நமது தேசிய கலை இலக்கியங் களை - கலைஞர்களை - மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல் வதே தவிர, தமது தனிப்பட்ட

விருப்பு வெறுப்புக்களைத் திணிப் பதற்காக நமது சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற தெளிவான இலக்கியப் பிரச்சி னேயுடன்தான் கடந்த காலத் தில் நான் மல் லி கை  ையப் பொறுப்பேற்று நடத்திவருகின் றேன்.
அதற்காக நச்சு இலக்கிய வளர்ச்சியைப் பார்த்துக் கை கட்டிக் கொண்டிருப்பேன் என் பதும் இதற்கு அர்த்தமல்ல கட ர் த ஏழு ஆண்டுகளாக\ வெளிவந்துள்ள சகல இதழ்களை யும் இக் கட்டுரை எழுதுவதற்கு முன்பாக ஆற அமரப் புரட்டிப் பார்த்தேன்.
அட்டைப்படமாகப் போட் டுக் கெளரவிக்கப் பட்டுள்ள அநேக கலைஞர்கள் எனது அர சியல் கருத்துக்களுக்கு முரண் பட்டவர்கள். இருந்தும் அவர் கள் கெளரவிக்கத்தக்க கலைஞர் கள். மல்லிகை தனது கடமை யைத் துணிச்சலாகச் செய்துள் துெ. −
இத்தனை கலைஞர்களே-பல் வேறு கருத்துக்களைக் கொண்ட நமது நாட்டுக் கலைஞர்களை - தனது அட்டையில் போட்ட ஒரேயொரு சஞ்சிகை மல்லிகை யைத் தவிர வேறெதுவுமில்லை என நியாய பூர்வமாகப் பெரு மிதம்கொள்ள முடியும். ஆனல் அதுவல்ல ந ம து நோக்கம் நமது ஜனநாயகக் கடமையைச் செய்துள்ளோம் என்ற மனத் திருப்தி ஒன்றே போது ம் எமக்கு.
ቃኝህወቇ]
கதையோ கட்டு
soprGurr asaseGrossGuurr 06iv Glaes -
us பிரசுரிக்கப் படவில்லை என்ற வெப்பிசாரத்தால் குற் றங் குறை சொல்லும் ஒரு
சாராரி வெற்து கொண்டிருக்
கின்றர்கள் என்ற உண்மையும் எனக்குத் தெரியாததல்ல!
நான் என்ன செய்வது? தரமற்றவையைத் துணிந்து நிராகரிக்கின்றேன். மற்றவற் றைப் போடலாம் என்ருல் எத் தனையென்று போடுவது? மாத இதழ், ஓர் ஆண்டில் 80 - 90 விஷயங்களைத்தான் போடலாம். மற்றவற்றை என்ன செய்வது? இது ஒரு பெரிய பிரச்சினை.
இந்த நெருக்கடிகளுக்குள் ளும் ஆசிரியன் என்கின்ற முறை யில் பரம திருப்திப்பட முடிகி ADğ5l •
மூன்று நாட்களாக ஏற்ப டிருந்த மன உளைச்சலை இலக்கிய ஆத்மப் பரிசோதனையாக ஆக்கி என்னை நானே கேள்வித்தீயில் புடம்போட்டு எடுத்துக் கொண் டேன்.
இருந்தும் நெஞ்சின் எங்கோ ஒரு மூலையில் திருப்தியற்ற மணக் கு ர ல் எதிரொலிக்கத்தான் செய்தது.
ரெயிலிலும் டாக்ஸியிலும் பஸ்ஸிலும் ஸைக்கிளிலும் நடை யாகவும் இத்தனை சிரமங்களே வலிந்து விலக்கு வாம் கி க் கடந்த ஏழு ஆண்டுகளாக அலைநீ தலைந்து நோயைக் கூட விலை கொடுத்து வாங்கிக் கட்டிக்
கொள்கின்றேனே, இதற்குப் பிரதிப் பிரயோசனமென்ன?
ஒன்றுமேயில்லை!
அப்படியானல் எதற்காக இத்தனை சிரமப்படவேண்டும்?
இப்படிச் சிரமப்படாமல் என்னுல் இருக்க முடியவில்லையே வாய்க்கு வந்தபடி குற்றஞ் சாட்டுகிருர்களே இக் குற்றச் சாட்டுகளில் உண்மை எந்தளவு alar GP
序及

Page 28
காற்திஜி சாபங்காலங்க ல் உலாவப் போ வா ச். போகும் போது தமது பேரக் குழந்தைகளையும் அழைப்பார். நடக்கும் சிரமத்தைக் குறைப் பதற்காக அந்த இரு யுவதிக ளின் தோள்களிலும் கைகளைப் போட்டுக் கொண்டு நடப்பார்.
இதைப் படமெடுத்து அப் பொழுது கராய்ச்சியிலிருந்து வெளிவந்த "டான்" என்னும் பத்திரிகை மிக மட்டரகமாகப் பாலியல் தலைப்பிட்டுப் பிரசுரித் திருந்தது. இதைக் காந்திஜியின் கவனத்திற்குக் கொண்டு வந் தார்கள். காந்திஜி சிரித்துவிட் டுப் பேசாமல் இருந்து விட் Li tirrirlbl
பொது வாழ்க்கையில் ஈடு பட்ட ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் எதிரிகள் இப்படியான அவதூறுகளை அள்ளிச் சொரி வது வழக்கம். நமது மனம், செயல் உயர்ந்ததாக இருந் தால் "பூமரங்’ என்ற ஆயுதத் தைப் போல, அவதூறு ரவி விட்டவர்களையே தி ரு ம் பித் தாக்கிவிடும்.
காய்ச்சல் ஒயும் பாடாகக் காணவில்லை. நாளுக்கு நாள் பலவீனம் உடலை வாட்டுகின் றது. ஊருக்குப் போய்விடுவது தான் புத்திசலித்தனம் என ந ண் பர் கள் சொன்னர்கள்.
செய்ய முற்பட்டார்.
வெசாக் லீவு. ‘உறங்க ல் இருக்கை ஆசனத்திற்கு டிக்கட் எடுக்க இரண்டு நாட்கள் ஆட் களைவிட்டு முயன்றேன். கிடைக் கவில்லை. é)
கடைசி நாள். எனது நண் பன் நற்குணம் என்பவர் இருக் கையைப் பதிவு செய்து தருவ தாகச் சொல்லிப் போனர். எப்படியோ சிரமப்பட்டு டிக்கட் எடுத்து இருக்கையைப் பதிவு பதிவு செய்பவர் பிரயாணியின் பெயர் முகவரியை விசாரித்தார். நண் பர் எனது பெயரைச் சொன் னராம். உடனே துள்ளியெ ழுந்து "ஓ! அந்த எழுத்தாளரா?
அவசியம் ந ல் ல இடமாகப் பார்த்து ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்" என உற்சாகத்து
டன்எனது நண்பருக்குச்சொல்வி விட்டுப் பதிவுப் பகு தி யி ல் இருந்த சிங்கள நண்பருக்கு என்னைப் பற்றி ஒரு பெரிய புராணமே பாடி முடித்தாராம்! எனது மனதில் எங்கோ ஒரு மூலயில் நெருடிக் கொண் டிருந்த விரக்தி உணர்வு இதைக் கேட்டதும் முற்று முழுதாக மனதைவிட்டகன்றது.
எனது பிரயாண வரலாற் நறிலேயே அன்றுதான் நான் மிக மிக நிம்மதியாகப் பிரயா ணம் செய்தேன்.
இருபதாம் நூற்றண்டின் முதல் மூன்று தசாப்தங்களில்
சமுதாயப் பார்வையுடன்
பாடிய முற்போக்குக்
கவியாகத்
திகழ்ந்தவர் பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை அவர்கள். ஜூன் மாதம் 22, 23, 24-ம் திகதிகளில் பாவலர் அவர்களின் நூற்றண்டு விழா தெல்லிப்பழை மகாஜனுக் கல்லூரியில் சிறப்பாக நடைபெறும், இலக்கிய கர்த்தாக்களும் பல்கலைக்
கழக பேராசிரியர்களும் விழாவிற்
5名
கலந்துகொள்வார்கள்.
- விழாக்குழுவினர்


Page 29
| uji i ITT i
MALLIKA
Registralia Ni
լ է:
ஜூன்
עפ"י
குே լ եք:
E. '
:്
அலுமினியம், செம்பு,
உற்பத்தி ெ
தங்கம், வெள்ளி, குரோ
முலாம் பூ
UITp GLD) Dé
250一°54,、
பாழ்ப்
கொழும்புக்கிளை= 63, ப
50, சுய்து ரியார் வீதி, யாழ்ப்பாணம்
வெளியிடுபவருமான டொமினிக் ஜீப்
களுடன் யாழ்ப்பாணம் பரீலங்கா அச்ச
 

JUNE 1972
Hispapur in UEFlori
பித்தளப் பாத்திரங்கள்
LLGi5Gi
மியம் முதலியவற்றிற்கு
சுபவர்கள்
*
கே. எஸ். விதி
I TIDIEL.
ாங்ஸால் ஸ்ரீட் கொழும்பு-11.
--
F 26 1 51)
முகவரியில் வசிப்பவரும் ஆசிரியரும் ா அர்சுருக்காக மள்ளின்சு சாதனங் நந்நிங் ஆக்சிடப்பெற்றது.