கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கிய நினைவுகள்

Page 1
வ. அ.இரா
 


Page 2

இலக்கிய நினைவுகள்
வ. அ. இராசரத்தினம்
அன்பர் நிதியம் இலக்கம் : 371/5
திருஞானசம்பந்தர் வீதி திருக்கோணமலை.

Page 3
தலைப்பு
618s
ஆசிரியர்
முதற்பதிப்பு
பக்கங்கள்
உரிமை
வெளியீடு
பிரதிகள்
அச்சுப் பதிவு
இலக்கிய நினைவுகள்
நினைவுக் கட்டுரைகள்
வ. அ. இராசரத்தினம்,
1995 தை மாதம்
(i-xiv) + 203)
வெளியீட்டு நிதியத்திற்கு
அன்பர் நிதியம்: திருக்கோணமலை.
1000
புனித செபத்தியார் அச்சகம் 65, லேடி மனிங் டிறைவ்,
மட்டக்களப்பு
ii

காணிக்கை
என்பின்னே வாருங்கள். இன்று தொடக்கம் உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன்" என்ற இறைமகனின் வார்த்தைகளைக் கேட்டு அவரைப் பின் சென்ற மீனவனின் பாதையிற் செல்ல மனங் கொண்ட என் மைந்தன்
அகுஸ்தீன் நவரத்தினம் குருவாகத் திருநிலைப்படுத்தப்படும் இனிய நினைவுகளுக்கு என் இலக்கிய நினைவுகள்:
காணிக்கை
24·08 ·夏994
iii

Page 4
முன்னுரை
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஒரு நாள் நண்பர் ராஜ்கபூர் என்னைத் தற்செயலாகத் திருக்கோணமலைப் பெருந்தெருவிற் சந்தித்தார். அவர் என்னைக் கண்டதும் "உங்களைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன ஆறுதலாகக் கதைக்க வேண் டும். வாருங்கள்" என்று அழைத்துக் கொண்டே அரு கிலுள்ள யாழ் கபேக்குச் சென்றார்.
இருவரும் "பிளேன்ரீ குடித்தபடி பேசிக் கொண் டிருந்தோம். பேச்சினுாடே “உங்களுக்கு எழுபது வய தாகி விட்டதாகச் சொல்கிறீர்கள். நீங்கள் சேர்த்து வைத்திருந்த உங்கள் எழுத்தாக்கங்கள் எல்லாமே தீக் கிரையாகிவிட்டன என்பதை நானறிவேன். புத்தகமாக வெளிவந்தவை கூட வெகு சிலரிடந்தான் உண்டு; இன்றைய இளம் சந்ததியினர் பலருக்கு உங்களைப் பற்றி அதிகம் தெரியாது. இந்த நிலையில் உங்கள் இலக்கிய நினைவுகளையாவது எங்களுக்குத் தந்து விட்டுச் செல்லக் கூடாதா?’ என்று கேட்டார்,
'தரலாம். ஆனால் யார் அதைப் புத்தகமாக்கு வார்கள்? என்னிடம் பணமில்லையே' என்றேன் நான்.
"அது வேறு விடயம். ஆனால் அரை நூற்றாண் டுகளாக நீங்கள் இலக்கிய உலகிற் பல சாதனைகள் புரிந்திருக்கிறீர்கள், நமது திருக்கோணமலை மாவட் டத்திலே உங்கள் அளவிற்கு இலக்கியச் சாதனை புரிந்தவர்கள் எவரும் இல்லை. உங்கள் எழுத்துக்கள் எல்லாமே இளைய சந்ததியினருக்குக் கிடைக்கா விட் டாலும் நினைவுகளையாவது உருப்படியாக விட்டுச் செல்லுங்கள். அதற்காக இலக்கிய நினைவுகளை எழு
V

துங்கள் எழுதி வைத்தால் யாராவது என்றைக்காவது அதைப் பிரசுரிக்கலாம். இன்றைக்கே எழுதத் தொடங் குங்கள்" என்று வற்புறுத்தினார்:
'பார்க்கலாம்" என்றேன் நான்; "அப்படிச் சொல்லாதீர்கள். அவசியம் எழுதுங் கள். இன்றைக்கே தொடங்குங்கள் என்று என்கைக ளைப்பிடித்துக் கொண்டு வேண்டுகோள் விடுத்தார்."
அவர் வேண்டுகோளில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணிக் கொண்டு என் மகள் வீட்டை அடைந்த நான், அங்கிருந்து என் முதற்கதை யும், கவிதையும் அச்சிலே வெளிவந்த சம்பவங்களை நினைவுக்குக் கொண் டு வந்து இருகட்டுரைகளை எழுதினேன். மீண்டும் அவைகளை வாசித்துப் பார்த்த போது தொடர்ந்து எழுதிதத்தான் வேண்டும் என்ற எண்ணம் என்னுள் கெட்டித்தது.
அடுத்த நாளே திருக்கோணமலை நகரசபை நூல் நிலையத்தின் மேன் மாடியில் இருந்து கொண்டு எழு தத் தொடங்கினேன்.
எழுதிக் கொண்டிருக்கையில் திருக்கோணமலை மாவட்ட இந்து வாலிபர் சங்கத்தின் மதிப்பார்ந்த செயலாளர் திரு. செ. சிவபாதசுந்தரம் அவர்கள் "என்ன எழுதுகிறீர்கள்?, என்று விசாரித்தார். நான் சொன்னேன்.
"அப்படியா? எழுதுங்கள், எழுதுங்கள் நூலைப் புத்தகமாக்கடி எங்கள் அன்பு இல்ல அமைப்பு உதவி செய்யும்' என்று ஊக்கினார். எனக்குப் புதிய உற்சா கம் பிறந்தது. ஒருநாளைக்கு நான்கு மணித்தியாலங் களாக ஆறு நாட்களில் வாசிகசாலையிலிருந்தே நூலை எழுதி முடித்தேன்

Page 5
நூலை எழுதுகையில் நான் உதவிக்காக எந்த நூ லை யு மே புரட்டவில்லை. பத்திரிகைகளையும் பார்க்கவில்லை. எவரிடமும் எதையும் கேட்கவுமில்லை.
"கற்பவைகளையெல்லாம் கற்ற பின்னர், நினை வில் மீந்திருப்பதே கல்வி" என்றானாம் ஒரு கல்வி யியல் விற்பன்னன். என் இலக்கியப் பயணத்திலும் மீதியாக நினைவில் நிற்பவையே நிலைக்கட்டும்’ என்ற எண்ணம் மீதூர நினைவில் நின்றவற்றையே எழுதி னேன். சில இதழ்களின் பெயர் நினைவுக்கு வரவில்லை; சிலரது பெயரும் நினைவுக்குவரவில்லை. யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் அதைச் செய்ய விரும்பவில்லை. என் நினைவுகளை, நினைத்து நினைத்து எழுதினேன். அதனால் இந்நினைவுகளில் வரும் ஆண்டுகள் சற்று முன் பின்னாக இருக்கலாம். ஆனால் நினைவுகளிற் சத்தியம் இருக்கிறது
இத் தருணத்திற்காலஞ் சென்ற என் மனைவியை நினைக்கிறேன். செம்மீனை எழுதிய தகழி சிவசங்கரப் பிள்ளையிடம் "இத்தனை பேரும் புகழும் பெற்று விட் டீர்களே. இன்னமும் உங்களது ஆசை என்ன? என்று கேட்டாராம் ஒரு இலக்கிய அன்பர்."
வலது கையிற் கள்ளுக் கோப்பையைப் பிடித்தபடி இடது கைவிரல்களாற் தன் தலைச்சிகையைப்பின்னுக்கு கோதிய படியே தகழி அமைதியாகச் சொன்னாராம் * என்ர கறுத்தம்மை மரிக்கு முதல் ஞான் மரிக்கணும்"
பாட்டுக் கலந்திடப் பத்திணிப் பெண் கேட்டான் பாரதி, ஒரு எழுத்தாளனுக்கு மனைவியின் தேவை
யைச் சரியாக அளந்தறிந்துதான் தகழியும் சொல்லி யிருக்கிறார். என் மனைவி மட்டும் இருந்திருந்தால்
vi

என் கட்டுரைகளில் ஆண்டுகள் சரியாக அமைந்திருக் கும், ஏன் மாதம் தேதி கூட சொல்லியிருப்பார். அத னால் என்ன? சத்தியம் இருக்கிறது. அது போதும்.
இந்நூலை எழுதத் தூண்டிய நண்பர் ராஜ்கபூர் அவர்களுக்கும் புத்தகத்தை அச்சிடப் பொருளுதவி செய்த நண்பர் சிவபாதசுந்தரம் அவர்களுக்கும் அன் பர் நிதியத்தக்கும் நூலுக்கு அணிந்துரைதந்த கிழக் குப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடாதிபதி கலாநிதி சி. மெளனகுரு அவர்களுக்கும் என் நன்றி
இந் நூலை அழகுற அச்சிற் கொணர்ந்த மட்டக்களப்பு புனித செபத்தியார் அச்சக அதிபர் நண்பர் சிவதாசன் அவர்களுக்கும் , ஊழியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. w
வணக்கிம்:
திரிகூடம் அன்புடன், மூதூர் வ. அ.இராசரெத்தினம். 2 - 1 1 - 94

Page 6
முன்னுரை
கலாநிதி. சி; மெளனகுரு பீடாதிபதி, கலைப்பீடம் , கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு
வ அ. என எழுத்துலகில் பலராலும் அழைக்கப் படுபவர் திரு. வ. அ. இராசரத்தினம் அவர்கள் மூத்த எழுத்தாளரான அவர் இலக்கிய நினைவுகள் என்ற இந்நூலில் தமது நினைவுக்கு வந்தவை சில வற் றைப் பதிவு செய்துள்ளார். நினைவுகளை அசை போட்டு எழுதியதிற் தமக்கு ஏற்பட்ட ஆத்ம திருப்தியே இந்நூலின் பயன் என நூலை முடிக்கும் போது வ. அ. கூறுகிறார்.
அறுபது ஆண்டுகளே மனிதர் வாழ்வின் சராசரி வயதெனக் கொண்டால்; அவர்களது அறுபதாவது ஆண்டில் எஞ்சி நிற்பவை அவர்கள் ஆற்றிய செயல் களும், அதற்கும் மேலாக அச் செயல்களால் அவர்கள் பெற்ற அனுபவங்களுமே. இந்த அனுபவங்களே வாழ்க்கை பற்றிய கருத்துரு ஒன்றை அவர்களுக்குள் தோற்றுவிக்கின்றன.
நீண்ட கால இலக்கிய வாழ்வு ஒன்றை வாழ்ந்து, முதிர்ந்து, கனிந்து நிற்கும் வ. அ. வின்செயல்கள், அனு பவங்கள் அவை பற்றிய விமர்சனங்கள் இதிற் பதியப் பட்டுள்ளன. -
மகாகவி பாரதி தமது வாழ்க்கைப் பதிவுகளை சுய சரிதை என்ற பெயரில் பாடி வைத்திருப்பது இவ் விடத்திற்கு ஞாபகம் வருகிறது. சுயசரிதை என்ற பெயர் அதற்கு இடப்பட்டிருப்பினும் அது சுயசரிதை அன்று. வாழ்க்கையில் அவர் மனதிற் பதிந்த நிகழ்ச் சிகளும், அவை பற்றிய அவரது விமர்சனங்கள், அல் லது அபிப்பிராயங்களுமே அதில் இடம் பெற்றுள்ளன
viii

இவை தவிர்க்க முடியாததும் கூட பாரதிமேல் ஈடு பாடு மிக்கவரான வ. அ. அவர் வழியைப் பின்பற்றி யதில் ஆச்சரியமில்லை.
இத்தகைய சுயவரலாற்று நூல்கள் தமிழில் வெகு குறைவாகவே வெளிவந்துள்ளன. உ. வே. சாமிநாதை யரின் "என் சரித்திரம்", டி. கே. சண்முகத்தின் “எனது நா ட க வாழ்க்கை" கலையரசு சொர்ணலிங்கத்தின் "ஈழத்தில் நாடகமும் நானும்" என்பன இவற்றுட் சில இந்நூல்கள் மூலமாக நூலாசிரியர்களைப் பற்றி மாத் திரமன்றி அவர்களின் காலச் சூழலையும் அவர் கால நிகழ்வுகளையும், ஆட்களையும், அதிகார பூர்வமாக அறிந்து விடுகிறோம். ஓர் உண்மைத் தன்மையும் இந் நால்களிலுண்டு, புதுமைப்பித்தனைப் பற்றிக் கூட நாம் அதிகம் அறிவது ரகுநாதன் புதுமைப்பித்தன் பற்றி எழு திய புதுமைப்பித்தன் வரலாறு மூலமாகத் தானே?
இவ் வரிசையில் இந்நூல் முக்கியமானது மாத்திர மன்று, ஈழத்து இலக்கிய உலகின் ஒரு கால கட்டத் தையும், ஒரு பக்கத்தையும் அறியும் ஒரு முக்கிய ஆவ ணமாகவுமுள்ளது. w
வ. அ. வாழ் காலம் மிக முக்கியமான ஒரு காலமாகும். 1946 இல் இலங்கை சுதந்திரம் பெறுவ தற்கு ஒர் ஆண்டுக்கு முன்னர் வ. அ. தமது கிராமத் தைவிட்டு முதன் முதலாக வெளிப்பிரதேசம் ஒன்றுக்கு (மட்டக்களப்புக்கு) வருகிறார். மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில், மீசை அரும்பாத இளைஞ னாக அவரது இலக்கிய வாழ்க்கை ஆரம்பிக்கிறது. 1946 தொடக்கம் 1995 வரை ஈழத்தின் இலக்கிய வரலாறு மாத்திரமல்ல, அரசியல் வரலாறும் மிக முக் கியமானது சண்ட மாருதம் என மிண்டி எழுந்த இந்த
ix

Page 7
அரசியல், இலக்கியச் சூறாவளிக்குள் அகப்பட்டு விழுப் புண்களைத் தாங்கியவராக வ. அ காட்சிதருகிறார்.
1946 இல் சொந்த ஊரான கூட்டை விட்டு சிறகு முளைத்த ஓர் பறவை புறப்படுகிறது. எங்கெங்கோ சுற்றி அது சிறகு முதிர்ந்த பறவையாக 1990களில் தன்னுாருக்கே வருகிறது.
"எத்தனை வசதிகள் இருந்தாலும் பிறந்த மண்ணை மறக்க முடியுமா? நான் எந்த மண் ணில் பிறந்தேனோ அந்த மண்ணிலே தான் மடியவும் வேண்டும் என்பதுதான் ந ம் ஒவ் வொரு வரதும் ஆசை. ஆகவே நான் மீண்டுப் மூதூருக்கே வந்து விட்டேன்."
என்று முடிக்கிறார். வ. அ. வளமான வாழ்வு தேடி பிறந்த மண்விட்டு வேற்றுப் புலங்களை நாடுவோர் மிகுந்த இன்றைய சூழலில் வ. அ. வின் மண் பற்று சில செய்திகளை எமக்குத் தருகின்றன. வ. அ. வின் வாழ்வு பற்றிய அவர் நோக்கை, அனுபவ பூர்வமாக அவர் பெற்ற கருத்துருவை அவ்வரிகள் எமக்குணர்த்துகின் றன.
1946ல் ஊரை விட்டுப் புறப்பட்ட காலத்திலி ருந்து 1990 களில் மூதூருக்கு நிரந்தரமாகத் திரும்பி யது வரை அவரது இலக்கிய வாழ்வு, இலக்கியங்கள் பாற் கொண்ட ஈடுபாடு, அவர் வாசித்த அந்நியமொழி நூல்கள், அவரை நெறிப்படுத்திய ஆசான்கள், குரு நாதர்கள், அவர் வளர்ச்சிக்குதவிய நண்பர்கள், அவர் உருவான விதம் அவரது எழுத்துக்கள், அவர் இணைந்து செயலாற்றிய அமைப் புக ள், அவரது நண்பர்கள், ஏனையோர், அமைப்புகள் பற்றிய அவரது கணிப்பீடு கள் என்பன இதிற் பதியப்பட்டுள்ளன.
X

இலக்கிய உலகில் இதுவரை தெரியப்படாத பல விடயங்கள் தெரியப்படுத்தப்படுகின்றன. (வ. அ. கவி தைகள், நாடகங்கள் எழுதியதுட்பட)
மூதூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த ஒர் இளைஞன் வெளியுலக அனுபவங்களும், ஆங்கில அறிவும், தமிழ் நூல்களோடும் அறிஞர்களோடும் எழுத்தாளர்களோ டும் பரிச்சயமும் பெற்று வளர்ந்து ஆளுமைமிக்க இலக் கியகாரனாக ஆகிய ஒரு வரலாற்றைப் படித்து முடித்த உணர்வே இதைப் படித்ததும் எனக்கு ஏற்பட்டது.
வ. அ. வின் எளிமையானதும் சுவையானதுமான வசன நடையும், புனைகதை ஆற்றலும் "என் நினைவு கள்' என்ற இந்நூலை சுவாரஸ்யத்துடன் படிக்கும் ஒரு நூலாக ஆக்கியுள்ளன.
இந்நூல் வ. அ. வையும் அவர் எழுத்துக்களை யும் மேலும் புரிந்து கொள்ள உதவுவதுடன் ஈழத்து நவீன இலக்கியம் பற்றி அறிய விளைவோர்க்கும், ஆராய விரும்புவோர்க்கும் ஒரு துணை நூலாகவும் பயன்படும் என்று நம்புகிறேன்;
தன்னைப் பற்றித் தானே எழுதுவதென்பது கத்தி மேல் நடப்பதற்குச் சமன். ஒன்றில் அது சுயபுளுகாக விரிந்து விடும். அல்லது தன்னடக்கமாகச் சுருங்கி விடும். வ. அ. கத்திமேல் நடக்கும் இப்பரீட்சையில் வெற்றியடைந்துள்ளார். புறநிலை நின்று தன்னைப் பார்க்கும் பக்குவம் பெற்ற பின்னர் எழுதியதனாலேயே அவருக்கு இவ்வெற்றி சாத்தியமாயிற்று.
வ. அ. புனைகதைத் துறையில் ஈடுபாடு கொண்டு இன்றுவரை எழுதிவருபவர். எழுதாமல் இரு ப் ப தென்பது அவரால் இயலாத காரியம். தோணி என்ற
xi.

Page 8
தமது சிறுகதைத் தொகுதிக்கு அன்றே சாஹித்திய மண்டலப் பரிசு பெற்றவர். மூதூர் ம க் களின் வாழ்க்கை அனுபவங்களை எழுத்திற் கொணர்ந்த முன்னோடி. இத்தனைக்கும் மேலாக நேர்மையும் உண் மையும் மனிதாபிமானமும் மிக்க ஒரு படைப்பாளி. அவரது எழுத்துலக அனுபவங்களடங்கிய நூலுக்கு முகவுரை தருதல் மகிழ்ச்சிகரமான ஒரு விடயம்.
வ. அ. வாழ்ந்து, வளர்ந்த காலத்தில்தான் நானும் வாழ்ந்தேன்; வாழ்கிறேன். என்னோடொத்த பல எழுத் தாளர்கள் அவரது நினைவுக் குறிப்புக்களில் இடம் பெறுகின்றனர். அவர் குறிப்பிடும் சில கூட்டங்கள், நிகழ்வுகளில் நானும் பங்கு கொண்டுள்ளமை ஞாபகத் திற்கு வருகிறது. எனினும் அவர் நினைவுக் குறிப்புக ளில் நான் இடம் பெறவில்லை நினைவில் இடம் பெறா அளவு நெருங்கவில்லைப் போலும். நினைவில் நிறைந்தோரிடம் முன்னுரை வாங்காது என்னிடம் முன் னுரை ஒன்றினை வ. அ. கேட்டது எனக்கு வியப்பைத் தரவில்லை. ஏனெனில் அதுதான் வ: அ. வின் குணா திசயம்;
03-0 l 1995

பதிப்புரை திருக்கோணமலை மாவட்டத்தில் வறுமையால் அல்லற்படும் அன்பர்களுக்குக் கைகொடுத்துதவுகின்ற அமைப்பே அன்பர் நிதியமாகும்;
இவ்வமைப்பின் மூலம் உதவி பெற்றோர் பலர். இவ்வமைப்பு 1986ம் ஆண்டில் "உலகப் பொரு ள்ாதார அமைப்புகளும் அவற்றின் தன்மைகளும்" என்ற திரு. து. இ. செல்வராசாவின் நூலுக்கு உதவி நல்கி அதனை மீளப் பெற்றுக் கொண்டது.
1992ம் ஆண்டில் கவிஞர் தாமரைத் தீவானின் 'பிள்ளை மொழி என்ற குழந்தைகளுக்கான கவிதை நூலை வெளியிட்டுப் பெருமை பெற்றது.
தற்போது ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளரும் எமது மண்ணின் மூத்த எழுத் தா ள ரு ம், இலக் கிய கர்த்தாவுமான பெரியார், தமிழ் ஒளி திரு. வ. அ. இராசரெத்தினம் அவர்களின் அரிய ஆக்க மான "இலக்கிய நினைவுகள்’ என்ற நூலை வெளி யிடுவதிற் பெருமைப்படுகின்றது. பூரிப்படைகின்றது. இந்நூலைத் தமிழ் கூறும் நல்லுலகம் வரவேற்று ஆத ரிக்கும் என நம்புகிறோம்.
இந்நூலுக்கு அணிந்துரை நல்கிய கிழக்குப் பல்க லைக்கழக நுண்கலைப் பீடாதிபதி கலாநிதி. சி. மெளனகுரு அவர்களுக்கும், அழகாக அச்சிட்டு வழங் கிய அன்பர் சிவதாசன் அவர்களுக்கும் எமது மேலான நன்றியை நவில்கின்றோம்.
அன்பர் நிதியம் செல்லப்பா சிவபாதசுந்தரம் இலக்கம் 371/5, இயக்குனர். திருஞானசம்பந்தர் வீதி, திருக்கோணமலை
994 1 1 1 ص 5 0
xiii

Page 9
நினைவுகளின் நிரல். 1 சிறுகதை எழுதினேன் 2. முதற்கவிதை 3. நான் கண்ட முதற்கவிஞன் 4. மகாகவிகள் தரிசனம் 5. குருநாதர் தரிசனம் 6. தென்பாண்டிச்சீமை 7. உலக இலக்கியம் 8. கொழும்பு தந்த இலக்கிய நண்பர் 8. வானொலியும் நானும் 10 1.1 வியலும் நானும்
12. அண்ணலைக் கண்டேன் 13. ஒரு அமெரிக்க இலக்கிய நண்பர் 14. நாவல் எழுதினேன் 15. கலைப்புலவரும் நானும் 16. கரவைக் கவிகந்தப்பனார் 17. எஸ். பொவைச் சந்தித்தேன் 18. இரண்டு மூதூர்ப் புலவர்கள் 19. கல்முனைக் கவிஞர்கள் 20. சிறுகதைத் தொகுதி 21. கவிஞர் கற்கையாளன் 22. மூதூர்த் தமிழ்விழா 23. இளம்பிறையும் நானும் 24. தென்னிந்தியக் குப்பைகள்?
25. திருக்கோணமலையில் ஒரு புதிய"
26 கவிஞன் கனகசிங்கம் 27. 'ஆலம்கீர் ஜவாஹர்' 28. தமிழ்த்தின விழா மலர் 29. அச்சகம் தொடங்கினேன் 30. இரு நண்பர்கள் 31 , என் இலக்கிய மாணவன் 32. திருக்கோணமலை 33. பிற்சேர்க்கை
xiv
... 35
4
... 47 ... 52
... 57
... 68 ... 74
80
... 86 92 ... 101 107 ... 1 I 4
... 21
30
37 ... 1 4 3 147 154
16 O 67
175
I 81 ... 88 。, 9釜
300

1. சிறுகதை எழுதினேன்
வ. அ. இராசரத்தினம் திரிகூடம், மூதூர்
1946ம் ஆண்டு முதலாந்தவணையில் மட்டக்களப்பு ஆரிசியப் பயிற்சிக்கலாசாலைக்குச் சென்றேன்.
அதுவரை என்கிராமமான மூதூரை விட்டு நான் வெறெங்குமே போகவில்லை. ஒரிரு தடவைகள் பரீட்சை எழுதுவதற்காகத் திருகோணமலைப் பட் டி ன த் தி ற் குச் சென்றிருக்கிறேன். அவ்வளவே என் வெளியூர்ப் பயணம். எனவே என் மட்டக்களப்புப் பிர வே சம் அமெரிக்காவிற் கால்வைத்த கொலம்பஸின் மனமகிழ் வையும் புத் தூக்கத்தையும் எனக்குத் தந்தது:
பயிற்சிக்கல்லூரி அப்போதுதான் அட்டாளைச்சே னையிலிருந்து பிய்த்துக் கொண்டு மட்டக்களப்பிற்கு வந்திருந்தது. இரண்டே இரண்டு பயிற்சி ஆசிரியர்கள். காலையில் அதிபர் துர்ைசிங்கம் அவர்களும் மதியத் தின்பின் பண்டிதர் பூபரfலபிள்ளை அவர்களும் பாடம் நடத்தினார்கள்.
ஆனால் இந்த : நான் என் வாச கப் பரப்பை விசாலித்துக் கொண்டேன்;
O

Page 10
மூதூரிலே ஆநந்த போதினியும் பிரசண்ட விகட னும்தான் நான் தொடர்ந்து படித்த இலக்கியப் பத் திரிகைகள். மூதூர் புனித அந்தோனியார் பாடசா லையின் ஆசிரியர் திரு. வே. கிருஷ்ணபிள்ளை அவற்றை வரவழைத்தார். எப்போதாவது ஆநந்த விகடனும் , கலைமகளும் எனக்குக் கிடைத்தன. நாவல் என்ற வகையில் கருங்குயில் குன்றத்துக் கொலை, பாசங்கீர்த் தன ரகசியப்பலி ஆகியவைகளையும் வை. மு. கோதை நாயகி அம்மாள் எழுதிய இர ண் டு நாவல்களையும் வாசித்திருந்தேன். இவைகளைவிட அப்போது வீரகே சரி ஆசிரியராக இருந்த H. நெல்லையா அவர் க ள் வீரகேசரியிற் தொடர்ந்து எழுதிய பத்மாவதி அல்லது காதலின் சோதனை, சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு என்ற நாவல்களையும் தொடர் ந் து படித்திருந்தேன். இந்த "மோடேர்ன்' இலக்கியங்க ளோடு பாடசாலையிற் படித்த மயானகாண்டம், நள வெண்பா, நைடதம், இராமாயணம், பாரதம் ஆகிய காவியங்களிற் சிலபகுதிகளும் கற்றிருந்தேன். திருக்கு றளும் நாலடியாரும் கொஞ்சம்படித்திருந்தேன். பால்ய வயதிலே என் தந்தையிடம் சூடாமணி நிகண்டு மன னம் பண்ணி ஒப்புவித்திருக்கிறேன். இவையே என
குள்ள இலக்கிய அறிவு. \ A
GhLorr i; இதியைத் தீர்ப்பத
மாததமாக என சியைத் தீர்ப்பதற்கு
வசதியாக மூதூரிலே எனக்குப் புத்தகங்கள் கிடைக்க வில்லை.
அந்தக்குறை மட்டக்களப்பில் எ ன க்கு இல்லா தொழிந்தது.
திருகோணமலை வீதியிலிருந்த சக்தி நூல் நிலையம் என்ற புத்தகக் கடையில் எல்லா இந்தியச் சஞ்சிகைக ளும் இருந்தன. புத்தக அலுமாரியில் வெ. சாமிநாதசர் மாவின் நூல்கள் இருந்தன. நானும் காய்ந்த மாடு கம் பிலே விழுந்ததுபோல அப்புத்தகக் கடையிலிருந்த
02

புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் மேயத்தொடங் கினேன். சக்தி வெளியீடுகளும், பிரபஞ்ச ஜோதிப் பிரசுராலய வெளியீடுகளும் என்னைக் கவர்ந்தன. சில மாதங்களில் கல்லூரி வாசிகசாலையை நடத்தும் பொறுப்பு எனக்குத்தரப்பட்டது.
இவைகளுக்கு மேலாகக் கலாசாலையிலே சித்தி வினாயகம் என்ற மாணவர் ஒருவர் எனக்கு அறிமுக மானார். அவரின் மூதாதையர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். பண்டிதமகாலிங்கசிவம் அவர்களின் உறவினர் அப்போது மட்டக்களப்புச் சிங்களவாடியிலே வாழ்ந்தார். அவருடைய சகோதரர் சிவசுப்பிரமணி யம் அவர்கள் தனது வீட்டில் ஒரு நூலகமே வைத்தி ருந்தார். அவரைப்போலக் காசுகொடுத்துப் புத்தகங் கள் வாங்கி அடுக்கிவைத்திருக்கும் ஒரு தமிழாசிரியரை என்வாழ்விலேயே நான் கண்டதில்லை.
நண்பர் சித்திவினாயகம் மூலமாக, அவரது சகோ தரர் வாங்கி வைத்திருந்த நூல்களை எல்லாம் படித் தேன். டி. கே. சியின் இதய ஒலியும், இளவயதிலேயே காலஞ் சென்ற அவரது மகன் ‘தீபன்' என்ற தீத்தா ரப்பனின் ‘அரும்பிய முல்லை" என்ற நூலும் என் னைக் கிறங்க வைத்தன. பிற்காலத்தில் நான் ஓர் எழுத்தாளன் ஆவதற்குச் சிவசுப்பிரமணியம் அவர்க ளின் நூல் நிலையமே முதற்காரணமாக இருந்தது. என்பதையே இப்போதும் நினைவு கூருகிறேன்.
ஆசிரிய கலாசாலையிலே என்னைப் போல அசுர வாசகர்களாக இன்னும் இருவர் இருந்தனர். ஒருவர் மட்டக்களப்புக் காரைதீவைச் சேர்ந்த சிவசுப்பிர மணியம், மற்றவர் திருகோணமலையைச் சேர்ந்த (பண்டிதர்) சி. வைரமுத்து.
அவர்கள் இருவரும் வகுப்பில் எனக்குச் சீனியர்" ஆனாலும் நாம் நண்பர்களானோம்.
03

Page 11
அப்போதெல்லாம் நான் அதிகமாகப் படித்தவை அரசியல் நூல்களே. வெ. சாமிநாதசர்மா என்னைக் கவர்ந்தார்,
அந்தக் காலத்தில் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்தியத் தேசிய இராணுவம் பற்றிய செய் திகளை மிக்க ஆவலுடன் படித்தேன். அவரின் தள பதிகளான கப்ரன் லெட்சுமி, ஷாநவாஸ் ஆகியவர்க ளும் இன்னும் பலரும் ஆங்கிலேயராற் பிடிக்கப்பட்டு டெல்லி செங்கோட்டையில் விசாரிக்கப்பட்டார்கள் . தேசாய், நேருஜி போன்றவர்கள் தாம் கழற்றி ஒரு புறம் தள்ளி விட்ட கறுப்புக்கோட்டை மீண்டும் எடுத்து அணிந்து கொண்டு நீதிமன்றத்தில் அவர்களுக்காக வழக்குப் பேசினார்கள். அந்த வழக்குகள் சம்பந்த மான செய்திகளையும் வெளிவந்த நூல்களையும் மிக்க ஆவலோடு படித்தேன்.
அப்போதெல்லாம் நான் கதை எழுத வேண்டும் என்று எண்ணியதே இல்லை. மாறாகக் கவிதையில் நாட்டம் இருந்தது. ஆனந்த விகடன் தீபாவளி மலர் ஒன்றிலே கொத்த மங்கலம் சுப்பு எழுதிய வேட்டை முடிஞ்சு போச்சு தம்பி
வீட்டுக்கு வாங்க காட்டை உழுது கஞ்சி வார்க்க
வீட்டுக்கு வாங்க என்ற பாடலும் அதே பாணியிற் சுரபி எழுதிய
படிச்ச படிப்புப் போதும் தம்பி
மடிச்சு வையுங்க பரீட்சை முடிஞ்சு போச்சு தம்பி
மடிச்சு வையுங்க பாடலும் என்னை மிகவும் கவர்ந்தன. அப்பாடல் களை வாய்விட்டுப் பாடிக் கொண்டேயிருப்பேன்.
பயிற்சிக் கல்லூரியை விட்டுப் பிரியாவிடை பெறு கையில் நடந்த விழாவில் அதே பாணியில் நானும்
04

ஒரு கவிதை எழுதிப் படித்தேன். அது எல்லாருமே மறந்து போனாலும்
தொத்து வச்ச பின்னலிலே சொக்கிப் போனிங்க தொந்தரவு வேணாம் தம்பி வீட்டுக்குப் போங்க ன்ற இரண்டு வரிகள் ஞாபகத்திலிருக்கின்றன.
அந்தப் பாடலோடு வேறு சில கவிதைகளையும் கலிங்கத்துப் பரணி கடைதிறப்புப் பாடல்களுக்கு டி. கே. சி. பாணியில் எழுதிய ரசனைக் கட்டுரையும். பயிற்சிக் காலத்தில் கொலை பண்ணப்பட்ட மகாத்மா காந்தியின் மரணம் கேட்டு என் மனம் அடைந்த சலனங்களை வைத்து ஒரு கட்டுரையும் எழுதிய பின் என் "ஆக்கப்பாட்டு' நூலைப் பெருப்பிக்க வேண்டி மேலும் இரண்டு சிறுகதைகளையும் எழுதினேன்.
அப்போது மட்டக்களப்பிலே "உதயம்" என்ற மாத சஞ்சிகை வெளிவந்து கொண்டிருந்தது. என்கிதை ஒன்றைப் பிரதி எடுத்துக் கொண்டு உதயம் ஆசிரிய ரிடம் சென்றேன்.
நல்ல உயரம் தீர்க்கமான மூக்கு, துருவி ஆராயும் கண்கள், நறுக்கி கத்தரிக்கப்பட்ட மீசை, அந்தக் காலத்திலே ஆசிரியர்களின் "டிரேட் மாக்" ஆகிவிட்ட "கல்கி நேஷனல் அள்ளிப் போட்ட சால்வை. இப் படித்தான் உதயம் ஆசிரியர் S. D. சிவநாயகம் அவர் களைக் கண்டேன். இத்தனைக்கும் அவர் பாடசாலை ஆசிரியரல்ல
பவ்வியமாகக் கதையை நீட்டினேன் என்வலப் போடு.
என்வலப்பைத் திறந்து கதையைப் படித்தார்3 படித்து முடிந்ததும் 'நன்றாக இருக்கிறது அடுத்த இதழிற் பிரசுரிப்பேன்’ என்றார்;
05

Page 12
நான் மூதூரான் எனத் தெரிந்து கொண்ட போது மகிழ்ந்தார். பிரதேச உணர்வு! அவர் திரு கோணமலையைச் சேர்ந்தவர் என்பது எனக்கு அப் போது தெரியாது.
நான் மகிழ்வோடு திரும்பினேன். ஆனால் அடுத்த உதயம் இதழ் வெளிவரவேயில்லை!
ஆனால் நான் எதிர் பாராதிருக்கையில் 1948 செப்டம்பரில் அக்கதை தினகரனில் வெளியாயிற்று. அப்போது S. D. சிவநாயகம் அவர்கள் தினகரனில் உதவி ஆசிரியர்! w
தினகரனிற் பிரசுரமான மழையால் இழந்த காதல்" என்ற சிறுகதைதான் அச்சில் வெளிவந்த என் முதற் சிருஷ்டி திரு. எஸ். டி. அவர்களை இன் றும் நன்றியோடு நினைவு கூருகிறேன்ரி
06

2. முதற்கவிதை
1948 ம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியபயிற்சியின் கடைசி பரீட்சையை எழுதிவிட்டு வீட்டுக்கு வந்தேன்:
அந்தக்காலத்தில் எஸ். எஸ். சி. சிந்தியடைந்த பின் ஆசிரியகலாசாலைப் பிரவேசத்திற்காக ஒருபோட் டிப் பரீட்சை எழுத வேண்டும். போட்டிப் பரீட்சை யிற் தெ ரி வு செய்யப்பட்டால் பயிற்சிக்காலத்தில் மாதம் இருபது ரூபா அரசாங்கம் உபகாரப் பணம் வழங்கும் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்தால் உடனடியாக உத்தியோகம் கிடைக்காது. சில மாதங்கள் காத்திருக்கவேண்டும். -
நான் பயிற்சி முடித்து வெளியேறுகையில் என்னிற் பெருமதிப்பு வைத்திருந்த கலாசாலை அதிபர் சி. கந்த சாமி அவர்கள் ஊரோடு உத்தியோகம் கிடைத்தாற் போதும் என்றிராதே, கொழும்பிலோ, கண்டியிலோ, ஒரு, ஓர் ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரி ய னா கச் சேர்ந்துகொள். அதற்கு நானும் என்னால் முடிந்த தைச் செய்வேன். அங்கிருந்து ஆங்கிலம்படி, உனக்கு, மிக நல்ல எதிர்காலம் உள்ளது' என்று குருபுத்தி சொன்னார். சில கல்லூரிகளுக்கு அவரே எழுதினார்.
ஊருக்கு மீண்ட பின்னர் நான் உத்தியோகத்திற் காகக் காத்திருந்தேன்.
07

Page 13
அதிபர் எழுதிய கல்லூரிகளிலிருந்து காலிஇடம் வந்ததும் உத்தியோகம் தருவோம் எனக் கடிதங்கள்
டைத்தன.
மாதங்கள் கடந்தன. உத்தியோகம் கிடைக்கவில்லை.
ஆசிரிய பயிற்சிக்கல்லூரிக்கு செல்ல முன் உள்ளூர்ப் பாடசாலையிற்படிப்பை முடித்த இடைக்காலத்தில் நான் பல தொழில்களைச்செய்தேன். செங்கற் சூளை யில் வேலை செய்திருக்கிறேன். புகையிலைத் தோட் டம் செய்திருக்கிறேன்.
ஆனால் ஆசிரியப்பயிற்சியை முடித்து வந்ததும் அத் தொழில்களைச் செய்ய வீட்டார் விடவில்லை. அத் தொழில்கள் எல்லாம் கெளரவக் குறைவு என எண் ணும் வரட்டுக்கெளரவம் அவர்களுக்கு. என்னிடமும் அது இல்லை என்று சொல்ல முடியாது.
முடிபாக வேலையில்லை கையிலே காசில்லை.
ஆசிரிய கலாசாலையில் இருந்த வரை அம்மா எப் படியோ என் செலவுகளுக்கு - சஞ்சிகைகளும், புத்தகங் களும் வாங்கும் செலவுகளுக்கும் - பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்.கவலையற்ற வாழ்வு அங்கே வாழ்ந்து கொண்டிருந்தேன்.
இங்கே அந்தச் செளகரியம் இல்லை, மனங்கு மைந் துபோனேன்.
என்பொருளாதார நிலை உயரா விட்டாலும் சமூக அந்தஸ்து உயர்ந்து விட்டது! ஊரவர் கண்களில் மாப் பிள்ளைக் காளையாகக் கருதப்பட்ட என்மனதில் எத் தனையோ குமுறல்கள்!
ஒரு நாள் திருகோணமலைக்குச் சென்று வந்த ஆசிரியர் ஒருவர் "எரிமலை’ என்றபத்திரிகையை என் னிடம் தந்தார்.
தற்போதய மித்திரன் சைஸில் எட்டுப்பக்கங்க ளைக்கொண்ட அப்பத்திரிகை திருக்கோணமலையிலி
08

ருந்து வெளிவந்திருந்தது. அதன் ஆசிரியர் அ. செ. முருகானந்தன் அவர்கள். எனக்குத் தெரிந்தவரையில் திருக்கோணமலையிலிருந்து வெளிவந்த முதற் செய்திப் பத்திரிகை அதுதான்!
‘எரிமலை’ என்ற பேரைக் கண்டதும் , எனக்கு வீர சவர்க்கார் எழுதிய "எரிமலை’ என்ற நூல்தான் ஞாபகம் வந்தது. 1857ல் ஆங்கிலருக்கு எதிராக நடந்த இந்தியாவின் முதலாவது சுதந்திரப்போரை, ஆங்கிலச் சரித்திராசிரியர்கள் “சிப்பாய்க்கலகம்” என்றுதான் குறிப்பிட்டிருந்தார்கள். (துப்பாக்கித்தோட்டாவிற்பன் நிக் கொழுப்புப் பூசப்பட்டிருக்கிறது எனக்கேள்வியுற்ற இஸ்லாமியச் சிப்பாய்களும் , மாட்டுக் கொழுப்புப் பூசியிருப்பதாகக் கேள்விப்பட்ட இந்துச் சிப்பாய்களும் விளைவித்த கலகம் என்றுதான் அச்சரித்திராரியர்கள் எழுதியிருந்தார்கள். பாடசாலைச் சரித்திர நூல்களி லும் அப்படித்தான் படித்தேன்)
ஆனால் அது வெறும் சிப்பாய்க்கல கமல்ல. முஸ் லிம்களும் இந்துக்களும் சேர்ந்து, ஆங்கில ஆட்சியை இந்தியாவில் இருந்து தொலைப்பதற்காகச் செய்த நாடளாவிய முதலாவது இந்திய சுதந்திரயுத்தம் என் றார் வீரசவர்க்கார், ஆதாரங்களோடு அந்த மகத் தான சுதந்திரப்போர் ஆரம்பத்தில் இந்தியாவில் பிரிட் டிஷ் ஆட்சியை அஸ்தமிக்கவைத்துவிடும்போன்றேதோன் றினும் , காலகதியில் ஆங்கில ஆட்சி வெற்றிகண்டது. மராட்டியரான லீரசவர்க்கார் எழுதிய அந்த வரலாற்று நூலை நான் ரசித்துப்படித்திருந்தேன். '.
சவர்க்காரின் எரிமலையைப் போலவே அ.செ.மு வின் எரிமலையும் எதையாவது புரட்சிகரமாகச் சொல் லும் என்ற எண்ணத்தோடுதான் நான் எரிமலையைப் படித்தேன் நான் எண்ணியதைப்போலவே பத்திரிகை யும் இருந்தது;
09.

Page 14
ஒருகவிதை எழுதவேண்டும் என்ற ஆசை, என்னுள் எழுந்தது.
இரண்டாவது உலகயுத்தத்தின்போது திருகோண மலை நேசநாடுகளின் கேந்திரத்தானமாக இருந்தது. பல் வேறு கட்டுமானப் பணிகள் யுத்தங்காரணமாக நடை பெற்றன. பல்வேறு ஊர்களிலும் இருந்து ஆயிரக்கணக் கானவர்கள் வேலைதேடி இங்கே வந்தனர். சனத் தொகையை அனுசரித்துப் பல்வேறு உப தொழில் க ளும் கிளைத்தன.
தற்போது சண்டை முடிவடைந்திருந்தது. பலர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள். பலர் சொந்தஊர், திரும்பவேண்டியிருந்தது. இதனைக்கருவாக வைத்துக் கொண்டு கொத்த மங்கலம் சுப்பு, சுரபி ஆகியோரது பாணியிற் கவிதை ஒன்று எழுதினேன். சுமார் நாற் பது வரிகளைக்கொண்ட அக்கவிதையில் எனக்கு இப் போது நினைவிலுள்ளவை இவைதான்.
நேவி வேல முடிஞ்சு போச்சு வீட்டுக்குவாங்க - உங்க சேவையினித் தேவல்லியாம் வீட்டுக்கு வாங்க கந்தளாய்க் குளத்தில நீர் கரைபுரளுது கங்கை மகாவேலி நதி பொங்கி வருகுது வந்தனை நாம் செய்வோம் கோஷம் வானிற்
கேட்குது - கவி வாக்குப் பலிக்கும் காலமப்பா வீட்டுக்கு வாங்க. கவிதையை எடுத்துக் கொண்டு திருக்கோணமலைப் பட்டினத்திற்குப் போனேன். மெயின் வீதியில் அ. செ மு.வைச் சந்தித்துக்கவிதையை அவனிடம்கொடுத்தேன். அரைக்கைக் காமராசர் சட்டை, நாலுமுழத்துண்டு அருவிவெட்டிய வயலில் ஒட்டுத்தாளாய்த் துருத்திக் கொண்டு நிற்கும் தாடி, ஆஸ்த்மா வியாதியாற்துன் புற்ற அம்முன்னோடி இலக்கிய கர்த்தாவை, யாழ்ப் பாண மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்து புகையிற்
10

தெரிந்தமுகம், வண்டிற்சவாரி ஆகிய குறுநாவல்களை எழுதிய அந்த அளவெட்டியூர் இலக்கியக் காரனைப் பலர் இன்று மறந்தே விட்டார்கள்!
அவர் திருகோணமலையிலிருந்து எரிமலை என்ற பத்திரிகையை நடத்தினார் என்ற சங்கதியே திருக் கோணமலையிற் பலருக்குத் தெரியாது.
1948ம் ஆண்டு ஆனி மாதம் என்று நினைக்கிறேன். என் கவிதை எரிமலையிற் பிரசுரமாயிற்று. நான் ஆசிரிய கலாசாலையிற் பல கவிதைகள் எழுதியிருந்தாலும் அச் வில் வெளிவந்த என் முதற் 7 கவிதை எரிமலையில் வத் ததுதான்.
1990ம் ஆண்டு ஆனிமாதம் வரை என் கவிதை பிரசுரமாகிய எரிமலை இதழ் என்னிடம் இருந்தது: அதன்பின்னர் தீயின் செந்நாக்குகள் அதைப் பட்சித்து விட்டன.
திருக்கோணமலையில் யாரிடமாவது எரிமலை இதழ்கள் உள்ளனவோ என்னவோ எனக்குத்தெரியாது.
என் முதற்கவிதையைப் பிரசுரித்த எனக்கும் மூத்த எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் அவர்களின் நினைவு என் செஞ்சில் இன்றும் பசுமையாக இருக்கிறது.
t

Page 15
3. நான் கண்ட முதற்கவிஞன்
ஒரு நாள் பிற்பகல் பண்டிதர் செ. பூபாலப்பிள்ளை அவர்கள் வழக்கம் போல வகுப்பிற்கு வந்தார். 1ம் வருடப் பயிற்சி மாணவர்களாகிய எங்களிடம் "நாங் கள் எல்லோருமே தான் நடத்தப் போகும் பண்டித வகுப்பிற் சேர்ந்து படிக்க வேண்டும். கலாசாலையை விட்டு வெளியேறும் போது பாலபண்டித பரீட்சை யாவது சித்தியடைந்து செல்ல வேண்டும்" என்ற தன் ஆசையை வெளியிட்டார்.
** திருநெல்வேலிச் சைவ ஆசிரிய கலாசாலையில் இப்படியான பண்டித வகுப்பு ந.க்கிறது. இங்கேயும் நான் அதை ஆாம்பிக்கப் போகிறேன்' என்ற அவர் பண்டித வகுப்புக்களிற் சேர்ந்து கொள்ளும்படி நய மாகவும் பயமுறுத்தியும் கேட்டார். இறுதியில் பண் டித வகுப்பில் சேர்ந்து கொள்பவர்கள் கையைத் தூக்கிக் காட்டுங்கள் என்று கேட்டுத் தன் சொற் பொழிவை முடித்தார்.
வகுப்பிலுள்ள எல்லோருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கம்மென்று இருந்து விட்டோம். கோட்டைக் கல்லாற்றைச் சேர்ந்த செல்லையா என்ற ஒரே ஒருவர் மட்டும் கை உயர்த்தினார்.
f2

பண்டிதருக்கு அசாத்தியக் கோபம் வந்து விட்டது. வகுப்பை விட்டு வெளியேறினார். அவர் என்னதான் கோபித்தாலும் நாங்கள் நாற்பத்தொன்பது பேரும் அசையாமல் இருந்து விட்டோம். பண்டித வகுப்பு நடைபெறவேயில்லை.
திரு . க. செல்லையா அவர்கள் பிற்காலத்திற் பண் டிதரானாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனா லும் நொத்தாரிஸ் ஆகிப் பாண்டிருப்பிற் புகழுடனும் செயலுடனும் வாழ்ந்தார்.
பண்டித வகுப்பில் நாங்கள் சேர்ந்து கொள்ளா விட்டாலும் பண்டிதர் பூபாலப்பிள்ளை அவர்கள் எங்களைக் கவிதை எழுதும்படி தூண்டினார்.
தமிழைத் தவிர அவர் எங்களுக்குச் சுகாதாரமும் படிப்பித்தார். சுகாதாரப் பாடத்திலும் கூட அவர் கவி எழுதும்படி வினாக்கள் தருவார்.
அவர் கேட்டதுமே நான் கவிதை எழுதி விடுவேன். ஆனால் என்னை விடவும் வேகமாக இன்னொருவர் கவிதை எழுதி விடுவார். அவர்தான் பிற்காலத்திற் பிரபல கவிஞராக விளங்கிய இராஜ பாரதி” என்ற வி. கி. இராசதுரை! அப்போதே இம்மென்னுமுன்னே எழுநூறும் எண்ணுரறும் எழுதும் திறமை பெற்றிருந் தார். அப்போது எனக்கோ வி. கி. க்கோ கருவிளங் காய் கூவிளங்காய் என்ற இலக்கண விவகாரம் தெரி யவே தெரியாது. ஆனால் அகவல்வா, வெண்பாவா, கலிவெண்பாவா, விருத்தப்பாவா , எல்லாமே எழுது வோம். பண்டிதர் அவர்கள் எம்மிருவரையும் மிகவும் பாராட்டுவார். எழுதும் கவிதைகளை அன்போடு திருத்தித் தருவார். எங்களைக் கவிதை இலக்கணம் கற்கும்படி வற்புறுத்துவார். ነ
கவிதைக் கலையால் நானும் இராஜபாரதியும் நண்பர்களானோம். ஆசிரிய கலாசாலையிற்தொடங்கிய
13

Page 16
எங்கள் நட்பு இரண்டோ மூன்று ஆண்டுகளுக்கு முன்னே அவன் இறக்கும் வரை நீடித்தது.
முதற் தவணை முடிந்து அடுத்த தவணைக்கு வந்த போது நானும் இராஜபாரதியும் அருகருகாகக் கட்டில்கள் ‘பிடித்துக் கொண்டோம். அது மட்டு மல்ல; மாதம் ஒரு தடவை அல்லது தேவையேற் படின் வாரக் கடைசியில் அவன் தன் ஊரான பெரிய கல்லாற்றுக்குப் போகும் போதெல்லாம் நானும் அவ னுடன் போவேன். இரண்டு நாள் விடுதலையில் என்னாலும் மூதூர் சென்று திரும்ப முடியாதல்லவா?
அடிக்கடி அவன் வீட்டுக்குச் சென்றதன் காரண மாக நானும் அவன் குடும்பத்தில் ஒருவனாகி விட் டேன். அவனது படிப்புச் செலவுகளைக் கவனித்துக் கொள்ளும் அவனது அக்கா எனக்கும் 'அக்கா" ஆனாள். அவனுக்கு ஏதும் தீன் பண்டம் வீட்டிலிருந்து வந்தால் நிச்சயமாக எனக்கும் வரும், கல்லாற்றுக் கூனி இறால் கட்லற்றின் சுவையை என்றைக்குமே மறக்க முடியாது.
வி. கி. என்னை விடச் சிறிது குள்ளமானவன், நிறமும் கறுப்பு, வயதிலும் இளையவன். ஆனாலும் உருண்டையான அழகான முகம் , செதுக்கி வைத்தது போன்ற உதடுகள். சுருண்ட தன் கேசத்தைப் பின் னால் வாரி நடு உச்சி வகிர்ந்திருப்பான் "மேக் கப்" செய்து கொள்வதற்கு அவனுக்கும் பெண்களைப் போல நேரம் எடுக்கும்.
தெருவிலோ வேறெங்கோ பெண்களை அழகான பெண்களைக் கண்டாற் பார்த்து ரசிப்பான். 'அழ கான எதுவுமே பார்த்து ரசிக்கப்பட வேண்டியவை கள்’ என்பது அவனது சித்தாந்தம்.
1 4

தெருவிலே சென்று கொண்டிருந்த ஒருத்தியை என்னிடம் விமர்சித்தான் மெருகு குலையாத தாஜ் மஹால் போல இருக்குடா"
ஒருநாள் அதிபர் ஒரு கடிதம் தந்து பெண்கள் பயிற்சிக் கல்லூரி அதிபரிடம் கொடுத்து விடும் படிப ணித்தார். நான்போனேன்.
வந்ததும் வி. சி; கேட்டான் ‘அங்கு என்ன மச் சான் விசேஷம்???
'விசேஷம் என்ன இருக்கு? அதிபரின் கடிதத்தை "பிரிபெக்ற் மூலம் அதிபருக்கு அனுப்பினேன், அதிபர் என்னை அழைத்து ஒர் கடிதம் தந்து விட்டார் அதை நம் அதிபரிடம் கொடுத்தேன். அவ்வளவுதான்'
**பிரிபெக்ரின் பேரென்ன? “ ‘தனலெட்சுமி? * சுற்றளவு எத்தனை அங்குலம்? அவன் என்ன கேட்கிறான் என்றே எனக்கு விளங் கவில்லை. சில வினாடிகளின் பின்னர், அவன் எதற்குச் சுற்றளவு கேட்கிறான் என்பது எனக்கு விளங்கிற்று. உங்களுக்கும் இப்போது விளங்கியிருக்கும்.
இப்படியான ரசிகன்தான் வி. கி. இப்படியான ரசிகனாக இருந்தானே ஒழிய அவன் எந்தப்புத்தகத் தையும் அமைதியாகப் படித்ததை நான்காணவில்லை. வாசிக்கும் பழக்கத்தில் எனக்கு நேர்விரோதமானவன்!
ஆனாற் பாடசாலைப் புத்தகங்களை நெட்டுருப் பண்ணாமலிருந்ததிலும் ,'கற்றலும் கற்பித்தலும் என்ற வறியூஸ் சகோதர்கள் எழுதிய நூலை யாரோ தமிழில் மொழிபெயர்த்ததை மற்றெல்லாரையும் போலச் சிர மப்பட்டுப் பிரதி பண்ணாமலிருந்ததிலும் எனக்கும் அவனுக்கும் மிகுந்த ஒற்றுமை இருந்தது.
15.

Page 17
விரிவுரைகளைக்கூர்ந்து செவிமடுப்பதோடு எங்க ளின் கற்றல் முடிவடையும். ஆயினும் பரீட்சைகளில் நாங்கள் இருவருமே ஐந்தாம் இடத்திற்குள்தான் வரு வோம்.
சிறந்த ரசிகனான வி. கி. க்கு அந்த வயதிலேயே "காதலி இருந்தாள். பேரழகி. ஆனால் அவளை மணம் முடிக்கவில்லை!
ஆசிரியப்பயிற்சி முடிந்தபின்னர் வி. கி. ஹற்றன் "கைலண்டஸ்' கல்லூரிக்குச் சென்றான். அங்கிருந்து டெனியாயா புனித மத்தியூஸ் கல்லூரிலிருந்த எனக்குக் கடிதங்கள் எழுதுவான். நானும் எழுதுவேன் வாரத் திற்கு இரண்டு நீண்ட கடிதங்கள் இருவருமே பரிமா றிக்கொள்வோம்.
அக்கடிதங்கள் மூலம் அவன் தன் மனதிலிருந்த ஒரு ஆசையை வெளியிட்டான். நானும் அதற்கு இணக் கம் தெரிவித்தேன். ஆனாற் காரியமாகவில்லை.
‘தீயுண்ட வீரமுனை’ என்ற குறுங்காவிய நூல் ஒன்று பாடியுள்ளான். கவிதைப்போட்டிகளிற் பல பரி சில்கள் பெற்றான். தமிழ்க்கவிஞர்களின் வரிசையில் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் அவன் புகைப்பட மும் வெளிவந்தது.
ஆனாலும் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க வில்லை. அக்கவிஞன், இத்தனைக்கும் கொழுத்த சீத னத்தோடுதான் குருமன் வெளியில் மணம்முடித்தான் ஒரே ஒருமகள்!
அப்படியிருந்தும் வீடுவளவை, எல்லாவற்றையுமே விற்று விட்டுக் கல்லடியிற்குடியேறினான்.
6

அவன் சாவதற்குச் சில மாதங்களுக்கு முன் என் னைத்தேடி மூதூருக்கு வந்தான். தன் பிரயாணப்பை யினுள்ளே சாராயப் போத்தலைக் கொண்டுதிரியுமள வுக்குக் குடிகாரனாக மாறியிருந்தான். அவன் நிலை யைக் கண்டு நான்கலங்கிப் போனேன்.
அக்கவிஞனின் முடிவும் மிகவும்சோகமானது. மட்டக்க ளப்பு வாவியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட அவனது சடலம் இரண்டு நாட்களின் பின்னர் அமிர்த கழியிற் தன் வீட்டுக்கு அருகாமையில் மிதந்ததாக அரசடியில் அவனது மாணவனாக இருந்த கவிஞர் செ. குணரத்தினம் அவர்கள் எனக்குக் கடிதம் எழுதி யிருந்தார்.
அவன் முடிவைக்கேள்விப்பட்டு நான் அழுதேன். வி. கி. இராசதுரை என்ற கவிஞனை, எனது ஆசிரிய கலாசாலை நண்பனை என்னால் என்றைக்குமே மறக்க
(LPlgul Tg5!
sl:7

Page 18
4. மகாகவிகள் தரிசனம்
ஆசிரிய கலாசாலைக்குப் போன புதிதில் எனக்குப் பாரதியாரின் ஒடிவிளையாடு பாப்பா, செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற இருபாடல்கள் மட்டுந் தான் தெரியும். பாரதியாரைப்பற்றி ஏதுமே தெரியாது.
ஆசிரிய பயிற்சிக்குக் கல்லடி, நாவற்குடா, மஞ் சந்தொடுவாய் ஆகிய இடங்களிலிருந்து வந்த வேலுப் பிள்ளை, வினாயகமூர்த்தி, சிவநேசன், பூபாலரத்தி னம், இராசதுரை ஆகியோருக்கு பாரதியைப்பற்றி நிறையத் தெரிந்திருந்தது. பாரதிபாடல்கள் பலவும் தெரிந்திருந்தன. அது மட்டுமல்ல சுவாமி விவேகானந்த ரைப் பற்றியும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அவரின் கையடக்கமான சிறுநூல்களை எல்லோருமே வைத்தி ருந்தார்கள். அத்தோடு யோகாசனமும், சாண்டோ வேலைகளும் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. சுவாமி விபுலானந்தரின் நிறுவனம் இவர்களுக்கு இக்கொடை களையளித்திருக்கும்.
அக்கூட்டத்தில் ஒருவரும், தற்போது இலங்கையில் சிறந்த வில்லிசைக் கலைஞராக விளங்கும் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் மூத்த சகோதரர் இராசதுரை அவர்களிடமிருந்து பாரதி பாடலைப் பெற்றுக் கொண்டேன்.
18

ஒவ்வோர் கவிதையாக ஆர்வத்தோடு படிக்கத் தொடங்கினேன். கண்ணன் பாட்டுக்களும், குயிற் பாட்டும், என்னை விசேடமாகக் கவர்ந்தன. காட்டு வெளியிடைக் கண்ணம்மா, காணி நிலம் வேண்டும், பாயுமொளி நீயெனக்கு என்ற பாடல்களை வாய் விட்டுப் பலமுறை பாடுவேன்.
அகவற் சீரிலமைந்த நீண்ட குயிற் பாட்டில் குரங் கைப் பாரதி வர்ணித்திருப்பதை அடிக்கடி படிப்பேன் ‘வானரர் தம் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ? எனக் கேட்டு மாந்தர் வாலுக்குப் போவதெங்கே?" என வினவுவது அருமையான சித்திரம்.
அந்தக் காலத்தில் பாரதி மகா கவிஞனா? என்ற சர்ச்சை தமிழ் நாட்டில் எழுந்தது. சிலர் வரிந்து கட்டிக் கொண்டு அவன் மகா கவியில்லை என வாதித் தார்கள். ஆனால் அவர் தம் வாதங்களைப் பெயர்த் தெறிந்து பாரதி மகாகவிதான் என்று நிலை நாட்டி னார்கள் வ. ரா. போன்றோர்.
பாரதியின் பாடல்கள் எல்லாவற்றையும் படித்து
முடித்த பின் பாரதி மகாகவிதான் என்று நானும் முடிவு கட்டினேன்.
பாரதி தன்னை மகாகவி என்றே நம்பினான். அவன் பராசக்தியிடம் ‘என் பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப் பாலித்திட வேண்டும்’ என்று வரங் கேட்கிறான். வேறேந்தக் கவிஞனாவது இப்ப டிக் கேட்டிருக்கிறானா?
ஆம். மகாகவி ஆவதற்கு மாகாவியம் எழுதத் தேவையில்லை. சீவகசிந்தாமணியும், கொங்குவேளிர் மாக்கதை என்ற உதயணன் காவியமும் பெரிய காவி யங்கள்தான். ஆனால் அவற்றைச் செய்த புலவர் களை நாம் மகாகவி என்கிறோமா?
ஆனாற் பாரதியை மகாகவி என்று சொல்ல அவ னது குயிற்பாட்டு ஒன்றே போதும்!
9

Page 19
ஆனாலும் ஆசிரிய பயிற்சிக் காலத்தில் நான் பாரதியை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை. அவனது வசன நூல்களையும், பத்திரிகைக் கட்டுரை களையும் அதற்குப் பின்னர்தான் படித்தேன். பாரதி யின் நண்பர்களும், பேத்தி தங்கம்மாள் பாரதியும் பிறரும் எழுதிய பாரதியார் பற்றிய நூல்களைப் படித்து அவனை ஒரளவு முழுமையாக அறிந்து கொண்டேன். பாரதியைப் பற்றி சுமார் எண்பது நூல்களைப் படித்திருப்பேன் என நினைக்கிறேன். என் புத்தகசாலையிலே அவனைப் பற்றி முப்பதுக்கு மேற்பட்ட நூல்கள் இருந்தன.
பாரதியைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் களிற் சுவாமி விபுலாநந்தரும் ஒருவர். ஆனால் எனது ஆசிரியப் பயிற்சிக் காலத்தில் எனக்குச் சுவாமி விபு லாநந்தர் பற்றி ஏதுமே தெரியாது.
அன்று ஆடிமாதம். மட்டக்களப்பு நகரம் முழுமை யுமே பரபரப்புடன் இருந்தது. காண்பவர் முகங்களில் எல்லாம் ஒரு சோகம் கவிந்திருந்தது. சுவாமி விபுலா நந்த்ர் கொழும்பிலே மரணமானார் என்று வந்த செய்திதான் அப்பரபரப்பிற்கு ம் , சோகத்திற்கும் கார ணம். அடுத்த நாள் அதிகாலையில் மட்டக்களப்பு ரயில் நிலையம் சனசமுத்திரமாகக் காட்சியளித்தது. கலாசாலை மாணவராய நாங்களும் எமது கலாசாலைக் கருகே திருகோணமலை வீதியில் அணிவகுத்து நின் றோம்.
அடிகளாரின் சடலம் மட்டக்களப்பை அடைந்த தும் சிவபுராணப் பாராயணத்துடன் ஆனைப்பந்திப் பெண்கள் பாடசாலைக்குக் கொண்டு போகப்பட்டது. ஜனசமுத்திரத்தோடு நாங்களும் சென்றோம்.
"இமயம் சேர்ந்த காக்கை’ என்ற தன் கட்டுரை யில் அடிகளார் தம்மைத் தாமே ? கரிய திருமேனி யர்' என்று எழுதியிருக்கிறாரல்லவா? அந்தக் கரிய
20

திருமேனியரை - இல்லை இல்லை - அவரின் கரியத் திருமேனியைத்தான் ஆனைப்பந்திப் பெண்கள் பாட சாலையிற் கண்டேன்!
ஏற்கனவே நான் தரிசித்த மகாகவி பாரதிக்கும் விபுலாநந்த அடிகளாருக்கும் எத்தனையோ வேறுபாடு.
பாரதியின் கவிதைகளையோ, கட்டுரைகளையோ சாதாரண தமிழறிவுள்ள எவரும் படித்துத் தெரிந்து கொள்ளலாம். எளிய பதம், எளிய நடை, எளியசந்தம் இவைகளில் நூல் செய்பவன் ‘தமிழுக்குத் தொண்டு செய்தவனாகின்றான்" என்ற கொள்கையோடு எழுதி யவன் பாரதி.
ஆனால் விபுலாநந்தரின் பல கட்டுரைகளையும் கவிதைகளையும் ரசிப்பதற்கு ஆழ்ந்த தமிழ்ப் புல மையும் கூரிய அறிவுத் திறனும் வேண்டும். சாதாரண மானவர்களால் அவர் எழுதிய எல்லாவற்றையும் விளங்கிக் கொள்ளமுடியாது.
அவரது கட்டுரைத் தொகுதியிலுள்ள சில கட்டு ரைகள் இன்னமும் எனக்கு விளங்காமலேயுள்ளன. 1974ல் சேனையூர் மகாவித்தியாலயத்தில் பல்கலைக் கழகப் புகு முக வகுப்பு மாணர்களுக்குத் தமிழ் படிப் பிக்கையில் அவரது கட்டுரை நூலொன்றிலிருந்து சில கட்டுரைகள் அவர்களுக்குப் பாடமாக இருந்தன. நான் அக்கட்டுரைகளைப்படிப்பிக்காமல் அதனிடமாக வேறு நூல்களைப் படிப்பித்தேன்.
அவரது யாழ் நூலையும் என்னால் முற்றாக விளங் கிக் கொள்ள முடியவில்லை. இந்தநிலையில் அடிகளா ரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இன்றைய கால கட்டத்தில் 6ம் வருட மாணவர்கள் கூட யாழ் நூல் பற்றிச் சொற்பெருக்காற்றுவது இந்த நூற்றாண் டின் மிகச் சிறந்த நகைச் சுவை என எனக்குத் தோன் றுகிறது!
யாழ்நூல் பற்றி ஆசிரியர்களும் எழுத்தாளர்க ளும் கவிஞர்களும் பேசித்தமக்குப்பெருமை தேடிக்
2 I

Page 20
கொள்கிறார்கள், என இலக்கிய நண்பன் எஸ். பொ நகைச்சுைையுடன் சமிகரணம் சொன்னான். A little bit of Bhysies -- Some Tamil Panditness Yarl nool. ,
சுவாமி விபுலானந்தரைப் பற்றி நான் விளங்கிக் கொண்டது அவர் இளங்கோ அடிகளின் மறு அவதா ரம் என்பதுதான். அவரது பாடல்கள் பலவற்றில் இளங்கோ அடிகளின் செல்வாக்கைத் தரிசிக்கிறேன்.
"அவரது இமயஞ்சேர்ந்த காக்கை' என்ற கட்டு ரையும் "கங்கையில் விடுத்த ஒலை என்ற கவிதையும் என்னை வெகுவாகக் கவர்ந்தவை, இவையிரண்டும் இன்றைய மறுமலர்ச்சித்தமிழிலக்கியத்திற்கு இரண் அருநிதியங்கள்! རུ་
1954ல் நான் ஈழகேசரியிற் தொடர் கதையா க எழுதிப் பின்னர் நூலாக வெளிவந்த எனது முதல் நாவலான கொழு கொம்பின் கதாநாயகன் நடராஜன் மட்டக்களப்பிலிருந்து கல்முனை செல்கிறான். அவ்வி டத்தில் கல்லடி சிவானந்த வித்தியாலயத்திற்கருகாமை யில் கிழக்கிலங்கை மறுமலர்ச்சி இலக்கியத்தின் பிதா மகரா ன விபுலாநந்த அடிகளாரின் சமாதியருகில் அவன் தலை சாய்ந்தது என எழுதியுள்ளேன் அல்லவா?
ஆனால்இன்று சொல்வேன் அடிகளார் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கே பலதுறைகளிற் பிதாமகர்.
அதேபோல "உயர் கம்பன் பிறந்த தமிழ் நாடு’ என்று பாரதி பெருமைப்பட்டானல்லவா? “பாரதி பிறந்த தமிழ்நாடு’ என்று நாமும் பாடிப் பெருமை கொள்ளும் அளவிற்குப் பாரதி உன்னதமான கவி.
இவ்விருவரதும் தரிசனம் எனக்கேற்பட்ட 1947ஐ என்னால் மறக்கவே முடியாது
22

5. குருநாதர் தரிசனம்
1947 செப்டெம்பர் மாதத்தில் ஒரு நாள் அந்த வருட ஆகஸ்ட் மாதக் கலைமகள் இதழைப் படித்துக் கொண்டிருந்தேன். ஏழு கணவன்மாரைக் கொன்ற இலங் கையின் முதல் அரசி எனச் சரித்திர நூல்கள் குறிப்பி டும் அனுலா என்ற சிங்கள இராணியின் கதை அதில் வெளியாகியிருந்தது.
தந்தை மகனை முன்னே வைத்துக்கொண்டு கதை சொல்லும் உத்தியில் அக்கதை எழுதப்பட்டிருந்தது. அதன் அலங்காரமான தமிழ் நடையும் வர்ணாலங்கா ரங்களும் என்னைக் கவர்ந்தன.
மகாவம்சம், சூலவம் சம், ராஜாவலிய ஆகிய நூல் களை மூல நூலாகக் கொண்டு, யாழ்ப்பாணம் கத்தோ லிக்க அச்சகத்தார் அச்சேற்றியிருந்த **இலங்கைச் சரித்திரம்' என்ற நூலில் நான் அனுலாவின் கதை யைப் படித்திருந்தேன். அதிற்குறிப்பிடப்பட்டிருந்த பலாத்தி சிவன்,இக்கதையிற் சிவபாலனாக இருந்தான். அவர் கதை சொன்ன உத்தியும், தேய்த்து மினுக்கிய வெள்ளித்தட்டுப்போலப் பூரணச் சந்திரன்வானத்திற் தொங்கிக் கொண்டிருந்தது போன்ற வருணனைகளும் என்னை ஆட்கொண்டன. எல்லாவற்றிற்கும் மேலாக "இலங்கையர் கோன்’ என்ற பெயர் என்னை மிகவும் கவர்ந்தது.
23

Page 21
பிற்காலத்தில் நான் புதுமைப்பித்தனைப் படித்த போது அவன் எழுதிய வரி ஒன்று என் நினைவுக்கு வரு றது. ‘புதுமைப்பித்தன் என்ற பேரிலேயே ஒரு அமெ விளம்பரத்தன்மை இருந்தது" என்பது தான் அந்த GJill.
இலங்கையர்கோன் என்ற புனைபெயரிலும் அப் படி ஒரு விளம்பரத்தன்மை இருப்பதாகவே எனக்குப் பட்டது. அவர் இலங்கையராகத் தான் இருக்க வேண் டும் என ஊகித்துக்கொண்டாலும் அவர் யார்? எவர்? என்ற விவகாரம் எனக்குத்தெரியவே தெரியாது.
நான் தவித்துக் கொண்டிருந்தபோது நண்பர் சித்திவினாயகம் அவர்கள்தான் விடுகதையை அவிழ்த் தார். இலங்கையர்கோன் உம் ஊரிற்தான் D. R. O வாக இரு க் கி றார். ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர் இயற்பெயர் சிவஞானசுந்தரம்.
நான் மகிழ்ச்சியடைந்தேன், ஊருக்குச்சென்றதும் முதல் வேலையாக அவரைச்சந்திக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டே கதையை மீண்டும் மீண்டும் படி த் தே ன். அ டு த் த ந |ா ள் அனுலாவின் பாணியிலேயே பந்துகாபயன் என்ற அரசனை வைத் துக்கொண்டு ஒரு சிறு கதையையும் எழுதினேன். அக் கதை பின்னர் தினகரனில் வெளிவந்தது.
மார்கழி விடுதலையில் ஊருக்கு மீண்டதும் அன் றிரவே என் சிறுகதையையும் எடுத்துக்கொண்டு அவ ரைச் சந்திக்க ஆயத்தமானேன். . . .
என்வீட்டிலிருந்து பார்த்தால் அவருடைய காரியா லயமும், அவரது இல்லமும் அமைந்திருக்கும் அந்தப் பெரியவீடு தெரியும். அந்த வீட்டின் முன் மண்டபத் தில், பிரகாசமாக எரியும் "அலடின் விளக்கிற்கு முன் னால் ஒருவர் அமர்ந்திருந்து வாசிப்பது தெரிந்தது, அவர் இலங்கையர் கோனாகத்தான் இருப்பார் என எண்ணிக் கொண்டு நான் சென்றேன்.
24

மண்டபத்தின் வாயிலை அடைந்து, படித்துக் கொண்டிருந்தவருக்கு என் வருகையைத் தெருவிக்கச் செருமி காலைத்தும்புத்துடைப்பத்தில் த ட் டி த் து டைத்து அவர் நிமிர்ந்ததும் அவரை அண்மித்தேன். அவர் முன்பின் தெரியாத என்னை ஏற இறங்கப் பார்த்தார், சதைப்பிடிப்பான கன்னங்கள், உருண் டைமுகம், ஏறுநெற்றி, மூக்குக் கண்ணாடிக்குள்ளே மினுங்கும் ஒளிமிக்க கண்கள், கட்டுமஸ்தான உடலில் ஒரு ஆமஸ்கட் வெணியன் கழுத்திலே தங்கச்சங்கிலி, புனைபெயருக்கேற்ப அவர் ராஜரீகமாகவே தோன்றி னார். வயதும் முப்பதுதான் மதிக்கலாம், கூடவும் இருக்கலாம். அவரிடம் என் கதையை நீட்டி ‘ஐயா நானும் சிறுகதை ஒன்று எழுதியிருக்கிறேன், தயவு செய்து படித்துப் பாருங்கள் திருத்தங்களைச் சொல் லுங்கள்' என்றேன் பணிவாக,
அவர் கதையைப் பெற்றுக் கொண்டு அருகிலிருந்த நாற்காலி ஒன்றைக்காட்டி 'இரும் என்றுவிட்டுக்கதை யைப் படிக்கத் தொடங்கினார்.
நான் அவர் காட்டிய கதிரையில் அடக்க ஒடுக்க மாக அமர்ந்து கொண்டேன்.
கதையைப்படித்த அவர் “ ‘என்னைப்போலவே எழுதியிருக்கிறீர்' என்றார்.
'தங்களின் அனுலாவைப் பின்பற்றி எழுதினேன்’’ என்றேன் நான்.
தொடர்ந்து அவர் என்னைப்பற்றி விசாரித்தார், என்னைப் பற்றி ஒரளவு தெரிந்து கொன்டதும் 'தமி ழில் என்னபடித்திருக்கிறீர்? என்றார்; ”
பால்ய வயதிலேயே சூடாமணி நிகண்டை மனனம் பண்ணியிருக்கிறேன், பாடசாலைப்பரீட்சைகளுக்காக திருக்குறள், நாலடியார் சில அதிகாரங்களும் கம்பரா மாயணம், வில்லிபாரதம், நைடதம் குசேலோபாக்
25

Page 22
யானம் ஆகியவற்றிற் சில பகுதிகளையும் நளவெண் பாவையும் மயானகாண்டத்தையும் 'படித்துள்ளேன், பாரதியார் கவிதைகளை ஆசிரியகலாசாலை சென்ற பின்னர்தான் படித்தேன்’ என்றேன் நான். '
'சங்க நூல்கள் படித்திருக்கிறீரா?' “இன்னமும் இல்லை படிக்க விரும்புகிறேன்' "நல்லது தமிழ் எழுத்தாளராக வர விரும்புபவர் கள் நமது பழைய இலக்கியங்களையும் படிக்க வேண் டும் ஆநந்தவிகடனையும் கல்கியையும் படித்து விட்டுக் கதை எழுதத்தான் பலர் முயற்சிக்கிறார்கள், ஆனாற் சிறுகதை எழுதுபவர்கள் ஐங்குறுநூறை அவ சி யம் படிக்கவேண்டும். அதிலுள்ள ஐஞ்ஞாறு பாடல்களும், ஐஞ்ஞாறு சிறுகதைகள்’’ என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார்.
பிற்காலத்தில் நான் குருநாதராக வரித்துக்கொண்ட இலங்கையர்கோன் அவர்களின் முதற் குரூபதேசமே இதுதான்!
மேசையின் மேலிருந்த மணிக்கூடு அவர் அனுலா கதையில் எழுதியிருந்தது போல நிசப்தமான அவ்விர வைக் காலத்துண்டுகளாகத் தன் டிக்டிக் ஓசையால் வெட்டி வெட்டி வைத்துக்கொண்டிருந்தது. எட்டரை மணியாகிவிட்டது, m
அவர் மேசைக்கடியிலிருந்த பிரம்புக்கூடைக்குள்ளி ருந்து மதுப்புட்டியையும் சோடாவையும் எடுத்து கிளா சில் ஊற்றிக் கலந்து ‘‘கொஞ்சம் குடியும்’ என்றார். நான்வெருண்டு "ஐயா நான் இன்னமும் மாண வன் இன்னமும் பழகிக்கொள்ளவில்லை. பழகவிரும்ப வுமில்லை' என்று குழறினேன்.
"சரிதான் வாழ்க்கையில் மூன்றில் ஒருபங்கு இன் பத்தை இழந்து விட்டீர் என்று ஆங்கிலத்தில்,
26

A book of verse, a Flask of wine and Thou Beaside me singing in the wilderness and wilderness is Paradise now.
என்ற உமர் கயாமின் ஆங்கிலமொழி பெயர்ப்பைச் சொல்லி, மது, மங்கை, இலக்கியம் இவை மூன்றுத் தான் வாழ்வின் இன்பங்கள் என்றார்.
(அந்நேரம் தேசிகவினாயகம்பிள்ளையின் உமர்க யாம் மொழிபெயர்ப்பு வரவில்லைப்போலும், வந்திருந் தாற் கையிற் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மது வுண்டு என்று பாடியிருப்பாரே)
நான் ஏதுமே கூறாது மெளனமாக இருந்தேன்.
எழுந்து பின் கதவு வழியாக உள்ளே சென்றவர் இரண்டு ஈழகேசரி இதழ்கள், தேனி என்ற இந்திய மாசிகை ஆகியவற்றை என்னிடம் கொடுத்து “ ‘உமது கதையை மீண்டும் ஒருதரம் பிரதி பண்ணும், அப்போது சேர்க்க வேண்டிய சொற்களும் விடவேண்டியவைகளும் திருத்த வேண்டியவைகளும் உமக்கே தெரிய வரும். பிரதி பண்ணிப்பத்திரிகைக்கு அனுப்பும்' என்று என் கதையையும் கொடுத்தார். கொடுத்தபின்னரும் ‘*உம க்கு நேரமிருக்கும் போதெல்லாம் என்னை வந்து சந் திக்கலாம், பேசலாம் வாரும்' என்று வழியனுப்பி GoTrTri .
அவர் காட்டிய அன்பும் பரிவும் என்னைச் சிலிர்க்க வைத்தன. 1948ம் ஆண்டு சித்திரை தொடக்கம் புரட்டாதிக் கடைசியில் நான் டெனியாயா புறப்படும் வரை ஒவ்வொரு மாலையும் அவரோடு கழித்தேன்.
27

Page 23
அவரோடு சேர்ந்து "டூரிங் டாக்கீசில் ஒசிப் படம் பார்த்தேன்.
நேருஜி தன் சுயசரிதையிற் தன் தந்தையைச் * சற்று உல்லாசப் பிரியர் வாழ்க்கையை அனுபவிப்பவர் என்று எழுதியிருக்கிறார் அல்லவா? அந்த மோதிலால் நேருபோல இலங்கையர் கோனும் உல்லாசி. வாழ்வை ரசித்த ஒரு உன்னதமான மனிதர். அவர் உறவு ஏற் பட்டது என் பாக்கியமே இளம் வயதிலேயே மறைந்து போன அந்த ஈழத்துச் சிறுகதை மூலவரை நினைக் கையில் என் மனம் புல்லரிக்கின்றது.

6. தென்பாண்டிச்சீமை
1948ம் ஆண்டு செப்டம்பர் மாதமுற்பகுதியில் எனக் குப் பெரிய கிண்ணியா அரசினர் பாடசாலைக்கு உத்தி யோக நியமனக்கடிதம் கிடைத்தது. அம்மாவும் குடும் பத்திலுள்ளமற்றவர்களும் அ  ைத ஏற்றுக்கொண்டு போகும்படி கேட்டார்கள். சிலர் வற்புறுத்தினார்கள். நான் மூர்க்கமாக மறுத்து ஆங்கிலப்பாடசாலை ஒன்றி லிருந்து வரும் நியமனக் கடிதத்திற்காகக் காத்திருந் தேன். கடைசியாய் அம்மாதப்பிற்பகுதியில் டெனியா யா புனித மத்தியூஸ் ஆங்கிலப் பாடசாலையிலிருந்து நியமனக்கடிதம் கிடைத்தது. பத்திரிகை விளம்பரத் தைக் கண்டு நான் அப்பாடசாலைக்கு விண்ணப்பித் திருந்தேன்.
மிக்க மகிழ்வோடு நான் புறப்பட்டேன். இரவு ரயில் மூலம் கொழும்பை அடைந்தேன். மருதானையில் ஒரு கொட்டலில் றுரம் எடுத்துக்கொண்டு எல்பின்ஸ் டன் தியேட்டரிற் சந்திரலேகா படம்பார்த்தேன். அடு த்த நாள் கா  ைல கொழும்பிலிருந்து காலிக்கு பஸ் ஏறினேன். காலியில் இறங்கி வேறோர் பஸ் மூலம் டெனியாயாவை பிற்பகல் ஒரு மணியளவில் அடைந் G56ir
அங்கு எனக்கு எல்லாமே புதுமையாக இருந்தது. கடலையும், வயலையும் காட்டையுமே கண்ட என்
29

Page 24
கண்கள் இப்போதுதான் குறிஞ்சி நிலத்தை முதன் முறை யாகப் பார்க்கின்றன. முகில் தவழும் மலைகள், மலை முகடுகளிலிருந்து உருக்கிய வெள்ளியாய் ஒழுகும் அருவி கள் பள்ளத்தாக்கிலே படிப்படியாய்க்கிடக்கும் கைய கலமான வயல்கள், அவற்றினருகே தோன்றும் குடியி ருப்புகள், மலைச்சரிவுகளையும் மலைமுகடுகளையும் பசுந்தளிர்களால் மூடிப்போர்த்தியிருக்கும் தேயிலைச் செடிகள், அத்தேயிலைப்புதர்களிடையே அணி அணி யாக நின்று கொழுந்து கிள்ளும் பெண்கள், நினைத்த போதெல்லாம் கொட்டும் மழை, எல்லாமே எனக்குப் புதுமையாகத்தான், இருந்தன. மலைக்கன்னி "நான் அழகாகத்தான் இருப்பேன்" என்று அடம்பிடித்து நிற்பது போலத்தோன்றியது.
டெனியாயா பஸ் நிலையத்தில் இருந்த ஒரு கடை யில் மத்தியானச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, அக்கடையிலேயே என் பெட்டியை வைத்து விட்டு மேலே மலையுச்சியிற் தோன்றும் மாதா கோயிலை நோக்கி ஒற்றையடிப்பாதையில் ஏறத்தொடங்கினேன்.
எஸ். எஸ். சி. வகுப்பில் இலக்கிய பாடமாகக்கிரா தார்ச்சுனியம் என்ற வசன நூலையும் படித்தேன். அந்நூலிலிருந்த உடல் வலியும், உள்ளத்தெழுச்சியும் கணக்கிலாற்றலுமுடைய காண்டீபன், கலுழன் மேற் திருமால் என இந்திர கீலத்தில் ஏறத்தொடங்கினான்’ என்ற வரிகள் நான் மலையேறுகையில் என்நினைவில் வந்தன.
செங்குத்தாகச் செல்லும் ஒற்றையடிப் பாதையில் வழியாககோயிலின் அருகமைந்தமிஷன்வீட்டைஅடைந்த போது எனக்கு வெயர்த்துக்கொட்டியது. மூச்சுவாங் கியது.
குரு மனையிலிருந்த அருட்திரு ஜெயவர்த்தனா அடி கள் என்னை இன்முகம் காட்டி வரவேற்றார். நான் தன்னுடனேயே போடராக இருக்கலாம் என்று சொல்லி
30

என்னை ஒரு அறைக்குட் கொண்டு சென்றார். கட்டில் ஒன்றும் மேசை கதிரையும் உடனடியாக வந்தன. நான் கட்டிலில் சாய்ந்தபோது பஸ் ராண்டில் விட்டுவந்திரு ந்த என் பெட்டியும் வந்து சேர்ந்தது.
அன்றும் அடுத்த நாளும் ஓய்வு எடுத்துக்கொண் டேன். டெனியாயா "ரவுனுக்கு இறங்கிச் சென்று அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களை வாங்கினேன். அந்தக்காலத்தில் பர்ட்டா செருப்பில்லை. எல்லார் கால்களிலும் மிதியடிக்கட்டைகள் நானும் வாங்கிக் கொண்டேன்.
அதற்கும் அடுத்த நாளான ஒக்டோபர் மாதம் முத லாந்திகதி பாடசாலையிற் கடமை ஏற்றேன். 5ம் வகுப் பிற்கு மேலுள்ள தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் கற் பிப்பது தான் என்வேலை. அவ்வகுப்புக்களில் ஏறத் காழ அறுபது மாணவர்கள் இருந்தனர். அவர்களிற் பெரும்பான்மையினர் கடைத்தெருவிலுள்ள வியாபாரி களின் புதல்வர்கள் ஓரிரண்டு 'பெண்களும் இருந்த்ார் கள். தோட்டங்களிலிருந்த ரீமேக்கர், கிளாக்கர், ஹெட் கங்காணி, கணக்கப்பிள்ளை ஆகியோரின் பிள்ளைகளும் அவ்வகுப்புகளில் இருந்தார்கள். ஆங்கில மொழி மூலம் மற்றப்பாடங்களைக் கற்கும் அவர்களுக்கு நான் தமிழ் மட்டும் படிப்பித்தேன்.
ஒரு வாரத்துள் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் இராமசாமி என்ற மாணவன் என்னைக் கவர்ந்தான். அவன் தமிழ் அறிவு என்னைக் கவர்ந்தது. கட்டுரை ஒன்றிலே ‘கத்தி சுத்திக் கொடியைக் கண்ட கத்தோ லிக்கக் குருவைப் போலத் திகைத்து நின்றேன்’ என்று அவன் எழுதியது எனக்குப் புதுமையாகவும் வியப்பா கவும் இருந்தது. . . .
அம்மாணவன் பெற்றார்க்கு ஒரே பிள்ளை. வியா பாரம் மூலம் அவன் தந்தை சுமாராகச் சம்பாதித்
st

Page 25
தார். அவர் உழைப்பின் கணிசமான பங்கை என் மாணவன் புத்தகங்கள் வாங்குவதிற் செலவிட்டான். அவன் தந்தையார் தென்பாண்டி நாட்டுத் திரு நெல்வேலிச் சீமைக்காரர். இராமசாமி இலங்கையிலே பிறந்தவன் என்றாலும் தந்தையார் பிறந்த திருநெல் வேலிச் சீமையில் பற்று மிக்கவனாக இருந்தான்! பேராசிரியர் சுந்தரம்பிள்ளை,பாரதி, புதுமைப்பித்தன் சிதம்பர ரகுநாதன், வல்லிக்கண்ணன், ஆர். பி. சேதுப் பிள்ளை, வ. உ. சி. எல்லாருமே திருநெல்வேலிக்கா ரர்தான் சார். பெருமிதத்தோடும் உணர்ச்சியோடும் சொன்னான்! அந்த மாணவன்தான் எனக்குப் புதுமைப் பித்தனையும், சிதம்பர ரகுநாதனையும், வல்லிக்கண் ணனையும் அறிமுகப்படுத்தினான்.
இத்தனைக்கும் அவன் அரசியல் ரீதியாக அறிஞர் அண்ணாத்துரை அவர்களின் பரமபக்தன்! அண்ணாத் துரையின் திராவிட நாடு என்ற வார இதழைத் தவ றாது படிப்பான். அண்ணாத்துரையின் அடுக்குத் தொடரும், அவரது அறிவுத் திறனும் அவன் கட்டு ரைகளிலும் இருந்தன.
அவன் மூலமாக நான் தென்பாண்டி நாட்டு திரு நெல்வேலிச் சீமைக்காரர்களான புதுமைப்பித்தன் ரகுநாதன், வல்லிக்கண்ணன், ஆகியோரின் கதைக ளைப் படிக்கத் தொடங்கினேன். ‘புதுமைப்பித்தன் கதைகள்' என்ற நூலைக் கரைத்துக் குடித்தேன். அந்நூலிலுள்ள கதைகள் எனக்கு மனனமாகி விட்டன. புதுமைப்பித்தன் கதைகளில் வரும் தாமிரவர்ணி ஆறு என்னுள்ளும் ஓடத் தொடங்கியது. டெனியாயாவை ஊடறுத்தோடும் ஜின் கங்கையிற் குளிக்கையில் எனக் குத் தாமிரவர்ணியிற் குளிப்பது போன்ற உணர்வு தோன்றும்.
அது மட்டுமல்ல. மூதூரில் உள்ள என் சமுதாயத் தினர் தாங்கள் எல்லாருமே தென்பாண்டி நாட்டுத்
32

திருநெல்வேலிச் சீமையின் தூத்துக்குடியிலிருந்து வந்த வர்கள் எனப் பெருமையுடன் சொல்வார்கள். ஆகவே நானும் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவன்தான் கான்ற உணர்வு என்னுள்ளும் ஏற்பட்டது. ・
(சமீபத்தில் மட்டக்களப்பிலிருந்து வெளியாகும் "வெட்டாப்பு’ என்ற பத்திரிகையில் திருகோணமலை மறைமாவட்டத்தின் சரித்திரத்தை எழுதிக் கொண் டிருக்கும் அருட்திரு டொமினிக் சாமிநாதன் அடிக ளார் 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசுரிமைப் போரிற் தோல்விகண்டு தம்மைச் சரணடைந்த கொட்டி யாபுரத்து வன்னியனுக்கு அனுசரணையாக தூத்துக் குடியிலிருந்துவந்த பரவர்களும், படையாச்சிகளுமான ஆயிரம்பேர் கொட்டியார் திருகோணமலையிற் குடி யேறினார்கள் என்பதைச் சரித்திர ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டினார்.)
திருநெல்வேலிச் சீமைக்காரர்களை விழுந்துவிழுந்து படித்ததினால் என் கதைகளில் அவர்களின் தாக்கம், என்னையறியாமலே ஏற்பட்டது. சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற எனது "தோணி சிறுகதைத் தொகுதி யின் கடைசியாக உள்ள ‘ஏமாற்றம்’ என்பதிலுள்ள நான்கு சிறுகதைகளும், புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுதியின் கடைசியில் வரும் 'மனக்கு கை ஒவியங்கள்’ என்ற கதைகளைப் போன்றவை. "குடி மகன்' என்ற சிறுகதையைத் 'தம்பலகாமம் இரண்டு விஷயங்களிற் புகழுடையது. கோணேசர் என்னும் பிறவாத பெம்மான் கோயில் கொண்டது. இங்கு குளக் கோட்டன் கட்டிய கந்தளாய்க் குளத்து நீர்பாய்வதும் இங்குதான். இந்த இரண்டு பெருமைகளிலும் மெய் மறந்து தம்பலகாமம் நீண்டகாலம் தூ ங் கி ற் று. ஊருக்கு மேற்கே ஒன்றே முக்கால் மைல் தூரத்தில் ஒடும் வெள்ளைக்காரன் புகைவண்டி கூட அதன் நீண்ட தூக்கத்தைக் கலைக்கவில்லை என்று ஆரம்பித்திருக்கி
33

Page 26
றேனல்லவா? புதுமைப்பித்தன் ஏதோ ஒரு கதையை திருநெல்வேலி பல விடயங்களிற் பெருமை பெற்றது. தென்றல் பிறந்தது இங்கு. தமிழ் பிறந்தது இங்கு என்று தொடங்கியிருப்பதன் தாக்கந்தான் அது. அத் தொகுதியில் அன்னையிட்ட தீ என்ற பட்டினத்தார் கதை, ரகுநாதனின் ஞானோதயம் என்ற அரு னகிரி நாதரின் கதையை ரசித்துப் படித்த தாக்கந்தான்.
m இப்படியாக நான் என்னையறியாமலே திருநெல் வேலிக்காரனானேன். திருநெல்வேலிக்காரர்கள் தங்கள் வட்டார மக்கள் வாழ்வையும் தாமிரவர்ணியையும் தங்கள் கதைகளிற் கொண்டு வந்தது போல் நானும் என் கதைகளில் எனது வட்டார மக்கள் வாழ்வையும் மகாவலி நதியையும் கொண்டுவர முயன்றேன். முற் போக்கு எழுத்தாளர்கள் மண்வாசனை தேசிய இலக் கியம் என்று பேசும் முன்னரே அத்தகைய கதைகளை எழுதினேன்,
பாரதியும், புதுமைப்பித்தனும், ஆர். பி. சேதுப் பிள்ளையும், அழகிரிசாமியும், வல்லிக்கண்ணனும் சுபபூரீயும் பிறந்த திருநெல்வேலிச் சீமைக்குச் சென்று அக்கரிசற் காடுகளில் சுற்றித்திரிய வேண்டும் என்ற ஆசை எனக்கு இன்று வரை தித்திக்கவில்லை! இனி மேலும் தித்திக்குமோ என்னவோ.
ஆனால் என்னை உருவாக்கிய திருநெல்வேலிச் ஒமை எழுத்தாளர்களை என்னால் மறக்கவே சி+"சி"
34

7. உலக இலக்கியம்
··
நான் டெனியாயா சென்ற ஆறுமாதங்களில் கல் லூரியின் லோக்கல் மனேஜராக இருந்த அருட்திரு ஜெயவர்த்தனா அவர்கள் மாற்றம்பெற்று வேறிடம் போனார். கல்லூரி அதிபரும் மாற்றம் பெற்று யட் டியாந்தோட்டை சென்றார். நானும் குருமனையை விட்டு வேறிடம் மாறினேன்.
பாடசாலைக்குப் புதிதாக வந்த அதிபர் ஜாஎல யைச் சேர்ந்தவர். சிங்கள, ஆங்கில இலக்கியங்களில் நன்கு பரிச்சயமானவர். பிரபல சிங் கள க் கவிஞர் ஹியூபேட் டிசநாயக்கா அவர்களின் இளைய சகோத ரர். அவர் தமிழ் படிக்க மிகவும் ஆசைப்பட்டார் நான் அவரு க் குத் தமிழ் கற்பித்தேன். அவர் எனக்கு அங்கிலம் கற்பித்தார்.
நாங்கள் இருவருமே. மணமாகாதவர்கள் கிராம முமில்லாமற், பட்டினமுமில்லாமற் கோமுட்டி கண்ட குதிரைபோல இருந்த அவ்வூரில் சினி மா போன்ற பொழுதுபோக்குகளும் கிடையாது. எனவே இருவரும் மாலை ஐந்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவ ரையும் ஒருவருக்கு ஒருவர் ஆசிரியராகப் படிப்பித்துக் கொண்டும் இருந்தோம். வாத்ஸாயனாரின் " காம
சூத்ரா " என்ற ஆங்கில நூல் அவரிடம் இருந்தது. அவ்விடயமாகவும் பேசுவோம்.
35

Page 27
ஏற்கனவே எனக்கு ஆங்கிலம் சிறிது தெரியும். மூதூர்ப் புனித அந்தோனியார் பாடசாலையில் New Method Readers No 4. 61 60 g u b Luigj 6(5jë G3 gj6ër. டெனியாயாவில் பைபிளின் தமிழ், ஆங்கிலமொழி பெயர்ப்புக்களையும், பிரார்த்தனைகளின் தமிழ் ஆங் கில மொழிபெயர்ப்புக்களையும் பக் கம் பக்கமாக வைத்து வாசித்து என் ஆங்கிலச் சொற்களின் அர்த் தத்தைப் புரிந்துகொண்டேன். ஆங்கிலச் சொற்கள் ஒரளவு தாராளமாகவே தெரிந்திருந்தன. ஆனால் அவற்றைச் ச ரி யா க உச்சரிக்கவோ இலக்கணவழு இல்லாமல் எழுதவோ என்னால் முடியாமல் இருந் தது. ஆசிரியர் திசநாயக்கா அக்குறைகளை என்னிட மிருந்து நீக்கினார். இலக்கண சுத்தமாக ஆங்கி லம் எழுதக் கற்பித்தார்.
அவருக்கும் தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் தெரிந் திருந்தன. சுமாராக வாசிக்கவும் தெரிந்திருந்தது. அவ ருக்கு இலக்கணசுத்தமாக எழுதவும் பேசவும் கற்பித் தேன். பின் னா ல் அவர் சுதந்தரன் பத்திரிகையில் இலங்கைப் பிரஜாவுரிமைச் சட்டத்தை எதிர்த்து எழு துமளவுக்கு அவர் தமிழைக் கற்றார்.
1950 ம் ஆண்டு மார்கழியில் இருவரும் மொற வாக்க பரீட்சை நிலையத்தில் S. S. E பரீட்சை எழு தினோம். அவர் தமிழ் மூலத்திலும் "நான் ஆங்கில மூலத்திலும் பாடங்களை எழுதினோம். இருவருமே சித்தியடைந்தோம் .
நாங்கள் இருவரும் இலக்கியம் பற்றியும் பேசு வோம். அந்தநாட்களில் கோயமுத்தூரில் இரு ந் து வெளிவந்த வசந்தம் மாத இதழ்களில் நான் தொட ர்ந்து கவிதை எழு தி னே ன். காவேரி, மாதமணி, பொன்னி என்ற இந்திய சஞ்சிகைகளிலும் சுதந்தரனி லும் என்கதைகள் பிரசுரமாகிக்கொண்டிருந்தன. என் ஒவ்வொரு படைப்பையும் அவர் படிப்பார் நானும்
36

விளக்கம் கொடுப்பேன். விளங்கிக் கொண்டதும் அவர் விமர்சிப்பார் . w
நான் "கலாகாரயா" என்பதில் மகிழ்ச்சியடைந்த அவர் எனக்கு மேனாட்டு இலக்கியங்களை அறிமுகப் படுத்தினார். பாடசாலை நூல் நிலையத்திற் சுருக்கப் பதிப்புக்களாக இருந்த ஆங்கில ஐரோப்பிய எழுத்தா ளர்களின் அத்தனை நூல்களையும் படிக்குமாறு செய் 35 Tri . g5 T 3. i Gör 35 GofGoat5nT uiù356iv . “ Fruit gethering” என்ற கவிதை நூலையும், வேறுபல ஆங்கிலக் கவி தைகளையும் ஷேக்ஸ்பியரின் மாக்பெத், ஹாம்லெற் ஆகிய நாடகங்களையும் அவர் எனக்குப் படிப்பித்தார். நான் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற் காக நேருஜி. தன் மகளுக்குக் கடிதமாக எழுதிய Glimp ses of world History 676ôt p 3Ffl,55)J 15/T 60) G) L’i Luq-5 கும்படி கேட்டார்.
நான் அந்நூலை வாங்கிப் படித்தேன். பிரான்சிய அரசியற்புரட்சிக்கான காரணங்களை நேருஜி அச்சரி திர நூலில் எழுதிய பகுதி இன்றும் எனக்கு மனப் பாடமாகியிருக்கிறது! V
அவர் எனக்கு அறிமுகப்படுத்திய இ ன் னோ ர் இந்திய எழுத்தாளர் D. R. கரக்கா அவர்கள். அவ ரின் Out of Dust என்ற நூலை ரசித்துப் படித்தேன். அந்நூலின் முகப்பில் மகாத்மா காந்தியின் படம். படத்தின் மேலே Out of Dust என்ற வார்த்தைகளும், yug u?Ga) He made us unto men GTairp Gutia 6955 ளும் இருந்தன. ་་་་་་་་་
அவர் குறிப்பிட்ட புத்தகங்களை எல்லாம் கொழும்பிலுள்ள தபாற்திணைக்கள நூலகத்திலிருந்து பெற் றேன். அப் போது டெனியாயாத் தபாற்கந்தோரில் உதவித் தபாலதிகாரிகளாக இரு ந் த திருநெல்வேலி தியாகராசாவும், கோப்பாய் பூதத்தம்பியும் நூல்களை நூலகத்திலிருந்து பெற்றுத் தந்தார்கள்.
37

Page 28
இப்படியாக எனக்கு உலக இலக்கியங்களை அறி
முகப்படுத்திய டிசநாயக்கா அவர் க ள் இப்போதும் * குறணை யில் வாழ்கிறார். நான் கொழும்பு செல் லும்வேளைகளில் அவரையும், அன்னாரின் சொந்த ஊரான வெலிகம்பிட்டியாவிலுள்ள புனித ஆன ஈ ஸ் கோயிலையும் தரிசிப்பதில் மனநிறைவடைகின்றேன்.
டெனியாயாவின் இதமான சுவாத்தியத்தில் அம்ை தியான இரவுகளில் இரவு ஒரு மணிவரை கூட விழித் திருந்து எழுதுவேன். படிப்பேன். பல இந்தியச் சஞ்சி கைகளில் என் படைப்புக்கள் வெளியாகினாலும் ஈழ கேசரியில் ஏதுமே வெளிவரவில்லை. அது எனக்குப் பெரிய குறையாகவே இருந்தது. நான் அதற்கு எழு திய கவிதைகள் எதுவுமே பிரசுரிக்கப்படாதது எனக்கு வேதனையாகவும் இருந்தது. ャ
கடைசியாய் ஆங்கிலக்கவி பிரவுண்றிக்கின் கல்
என்ற கவிதையைச் சிறுகதையாக்கி ஈழகேசரிக்கு அனுப்பினேன். இரண்டு வாரங்களில் அது ஈழகேசரி யிற் பிரசுரமாகியது. ஆசிரியர் திரு. இராஜ அரிய ரெத்தினம் அவர்கள் * கவிதைகள் வேண்டாம். கதையே எழுதும் உமக்கு நன்றாக வரும்’ எனக் கடிதமும் எழுதியிருந்தார்.
பின்னர் டெனிசனின் Begger Maid என்ற கவிதை யைப் பிச்சைக்காரி என்ற சிறுகதையாக்கினேன். சரோ ஜினி நாயுடுவின் கவிதை ஒன்றைச் சக்களத்தி என வானொலி நாடகமாக்கினேன். பிச்சைக்காரி வீரகேச ரியில் வெளிவந்தது. *சக்களத்தி டெல்லி அகில இந் திய வானொலியின் கிழக்காசியாவுக்கான தமிழ் ஒலி பரப்பில் ஒலிபரப்பப்பட்டது.
1950ன் பிற்பகுதி என எண்ணுகிறேன். டைம்ஸ் ஆங்கில வாரப்பதிப்பில் தன் இயற்பெயரில் இலங்கை யர்கோன் அவர்கள் Gambl&S சூதாடி என்ற சிறுகதை
38

ஒன்று எழுதியிருந்தார். அது மூதூர்க்கதை மூதூர் மீன்பிடிகாரன் ஒருவன் தன்தொழிலில் வருவாய் இல் லாததால் அலுப்படைந்து 'உள்ளது உடையது' களை விற்றுவிட்டு வேளாண்மை செய்கிறான். விளைந்த தரு ணத்தில் மாவலியில் வெள்ளம் வந்து வேளாண்மையை அழிக்கிறது என்பதுதான் கதைச்சுருக்கம். இக்கதையில் மீன்பிடிகாரன் மகளின் ருதுச் சடங்கையும், மாவலி யின் வெள்ளத்தையும் தமக்கேயுரிய பாணியில் வர்ணித் திருந்தார். a
கதையை ஆர்வத்தோடு படித்தபின்னர், இதிலே இரண்டுகதைகள் இருக்கின்றன. மீன்பிடிகாரன், விவ சாயி இருவருமே இருகதைகளுக்கான பாத்திரங்கள் என்று இலங்கையர்கோனுக்குக் கடிதம் எழுதினேன்.
விடுதலைக்கு ஊருக்கு வந்து அவரைச் சந்தித்த போதும் அதையே வலியுறுத்திச் சொன்னேன்.
இலங்கையர்கோன் சற்றுக்கோபமாக 'உம்மூர்க் கதைதானே நீர் எழுதுமன்' என்றார்.
*எழுதலாம் என்றுதான் எண்ணுகிறேன்" என்ற நான் அக்கதையின் கருக்களை நான்கு , வருடங்கள் என்மனதிற்க மந்து 1954ல் ஈழகேசரியிற் தோணி"யை எழுதினேன். பின்னர் ஈழகேசரியிலேயே அறுவடை என்ற கதையையும் எழுதினேன். தோணி மூதூர் மீன்பிடி காரணின் கதை, அறுவடை கண்டக்காட்டில் விவசாயம் செய்த ஆலங்கேணி விவசாயின் கதை, இரண்டுமே பின்னர் தோணி சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றன.
தோணி ஈழகேசரியிற் பிரசுரமாகி நான்குநாட்க ளில் இலங்கையர் கோன் வவுனியாவில் இருந்து எனக் குக் கடிதம் எழுதினார். கடிதத்தில் முதல் வாக்கியமே 'ராசா நீர் என்னை வென்றுவிட்டீர்" என்றிருந்தது. தோணியை வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
39

Page 29
அக்கடிதத்தை இப்போது நினைத்தாலும் எனக் குப் புல் அரிக்கிறது! என் தோணிக்குச் சாகித்ய மண் டலப் பரிசு கிடைத்தபோது, சென்ற ஆண்டு இந்துக் கலாச்சார அமைச்சு எனக்குத் 'தமிழ் ஒளி' என்ற பட்டமளித்துக்கெளரவித்தபோதும் உண்டான மகிழ்ச் சியைவிட, மிக்க மேலான மகிழ்ச்சியை இலங்கையர் கோனின் கடிதத்தை வாசித்தபோது அடைந்தேன். அந்தப்பண்பாளனை இளவயதில் இழந்தது ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத நட்டந்தான்! 'வசிட்டர் வாயாற் பிரம்மரிஷி' என்று கூறவைத்த தோணி, மஞ்சரியில் மறு பிரசுரமானது. ஈழத்துச் சிறுகதைகள், அக்கரை இலக்கியம் என்ற தொகுப்பு களிற் சேர்க்கப்பட்டது. A. . கனகரத்னா அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒப்சேவர் பத்திரிகை யிற்பிரசுரித்தார். ரஷ்ய மொழியிலும் மலையாளத் திலும் அக்கதை மொழிபெயர்க்கப்பட்டது. த. கனக ரத்தினம் அவர்கள் சிங்களத்தில் மொழிபெயர்த்து ஒருசிறுகதைத் தொகுதியிற் சேர்த்தார்.
40

8. கொழும்பு தந்த இலக்கிய
நண்பர்
1951ம் ஆண்டின் இரண்டாந் தவணைக் காலத் தில் ஆங்கிலத்தில் எஸ். எஸ். சி. சித்தியடைந்த 'றிசல்ட்" எனக்குக் கிடைத்தது. அதையொன்றும் பெரிய சாதனையாக நான் கருதா விட்டாலும் திரு. திசநாயக்கா அவர்கள், நான் மேற்படிப்புப் படித்துப் பட்டதாரியாக வேண்டும் என்று வற்புறுத்தினார்.
எனக்கோ அடங்காத இலக்கியத் தாகம், உலக இலக்கியங்களை எல்லாம் வாசித்து விளங்கிக் கொள் ளக் கூடிய அளவிற்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. அதற்கு மேலே நான் படித்துப்பட்டதாரியாக வேண் டும் என்பதில் எனக்கு நாட்டமில்லை. "எந்தன் பாட் டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண் டும்' என்று பாடிய பாரதியைப் போல என் எழுத் துக்களால் உலகை அளக்க வேண்டும். என்றுதான் ஆசைப்பட்டேன்.
புதுமைப்பித்தன் எழுதியது போலப் பேனா பிடித் துக் கோனாகி விட முடியாது. எனத் தெளிவாகவே நான் அறிந்திருந்தேன். பணக்காரனாகா விட்டாலும் பிச்சை எடுக்கமாட்டேன் என எண்ணினேன். ஏனென்
றால் எனக்கென்று ஒரு உத்தியோகம் இருக்கிறது. உயிர் வாழலாம் என்று எண்ணினேன். M
41

Page 30
ஆனால் திசநாயக்கா அவர்கள் மேற்படிப்புப் படிக்கத்தான் வேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்கு டெனியாயா வாய்ப்பான இடம் இல்லை. கொழும்புக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தி தாமாகவே முயன்று எனக்கு மொறட்டுவ புனித செபஸ்தியார் கல்லூரிக்கு மாற்றம் பெற்றுத் தந்தார். 1951ம் ஆண்டின் மூன்றாந் தவணைத் தொடக் கத்தில் நான் மொறட்டுவாவில் ஆசிரியனானேன். ஆறாம் வகுப்புகளுக்கு மேல் தமிழ் கற்பிக்க வேண் டிய அதே பணிதான்!
மொறட்டுவாவில் இராமசாமி போன்ற மாணவர் களை நான் காணவில்லை. வேண்டா வெறுப்பாகத் தான் தமிழைப் படித்தார்கள். நீர்கொழும்பு கருக் குப்பனையைச் சேர்ந்த ஒரு தமிழாசிரியரின் மகனாக அன்ரனி பெர்னாண்டோ என்பவன் மட்டுமே விதி விலக்காக இருந்தான். தற்போது அவன் ஏதோ ஒரு அயல் நாட்டுத் தூதரகத்தில் நல்ல உத்தியோகத்தில் அமர்ந்துள்ளான். பல பத்திரிகைகளில் விஞ்ஞானம், உலகின் அதிசயங்கள் ஆகிய துறைகளிற் கட்டுரைகள் எழுதிக் கொண்டுமிருக்கிறான்.
மொறட்டுவைக்கு வந்த புதிதில் அவனோடு கிரு லப்பனையில் சில நாட்கள் இருந்து பின்னர் மருதா னையில் விடுதி ஒன்றில் இடம் பிடித்துக் கொண்டேன். அங்கிருந்து ஒவ்வொரு நாளும் பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்தேன்.
கொழும்பிலே ஒரு செளகரியம் இருந்தது. பென் குவின் பதிப்பு ஆங்கில நூல்களை இரண்டு ரூபாவுக்கு வாங்கலாம். நடைபாதைகளில் இருக்கும் பழைய புத்தகக் கடைகளில் அருமையான படைப்புக்களைத் தேடி எடுத்து மிகக் குறைந்த விலைக்கே வாங்கலாம். ஒவ்வொரு மாதமும் இருபது இருபத்தைந்து ரூபா விற்குப் புத்தகங்கள் வாங்குவேன். புகையிரதத்திற்
42

செல்கையிலும் இரவுகளிலும் படிப்பேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் சுதந்திரன் காரியாலயம் சென்று திரு. சிவநாயகத்துடன் பேசிக் கொண்டிருப்பேன்.
கூட்டங்களுக்கோ பேச்சுக்களுக்கோ சென்றது மிக மிகக் குறைவு. அவைகள் எனக்குப் பிடிக்கவில்லை. கொழும்பு நகரின் சந்தடி என் எழுத்து வேலைக ரூக்கும் வாசிப்புக்கும் பொருத்தமாக இல்லாததினால் 1952ம் ஆண்டின் தொடக்கத்தில் மொறட்டுவாவில், எனது பாடசாலைக் கருகில் ஒரு வீட்டில் போடரா னேன்.
நான் இருந்த இடம் மொறட்டுவாவின் "கருவாக் காடு அமைதியான சூழல் ,பெரிய வீடும் விசாலமான வளவும். சிலாபத்தைச் சேர்ந்த இளந் தம்பதிகளின் வாடகை இல்லத்தில் வீட்டுக்காரியின் தம்பியும் நானும் போடர்கள். போடர்கள் இருவருக்குமே தனித்தனி அறைகள்.
என் அறையில் இருந்து கொண்டு வழக்கம் போல இரவு ஒரு மணி வரையும் விழித்திருந்து எமுதுவேன். படிப்பேன்.
இந்தக் காலத்தில் நான் மாப்பசான் அனத்தோல் பிரான்ஸ், பால்ஸாக், ஆகிய பிரஞ்சுக்காரர்களின் கதைகளையும் ஜேம்ஸ் ஜோய்ஸ் தோமாஸ் ஹார்டி ஒஸ்கார் வைல்ட் ஆகிய ஆங்கில ஐரிஷ் எழுத்தாளர் களின் கதைகளையும் அன்ரன்செக்கோவ், லேயேர் ரோல்ஸ்ரோய், இல்யா இல்விச் + யூஜின் பெட்டோவ் என்ற ரஷ்ய எழுத்தாளர்களது கதைகளையும் மொழி பெயர்தேன். தோமாஸ் ஹார்டியின் கதை ஒன்றைப் பாரதியையும், பாரதியின் பாடல்களையும் புகுத்தி வானொலி நாடகமாக்கினேன். அது ஒலிபரப்பப்பட்ட போது திரு. சோ. சிவபாதசுந்தரம் அவர்கள் அதற்கு மிகவும் காரசாரமான கண்டன விமர்சனம் எழுதி
43

Page 31
னார். பரவாயில்லை மோதிரகையாற்றான் குட்டுப் பட்டேன் என்ற பெருமைப்பட்டேன். என் துரதிஷ்டம்! கொழும்பிலிருந்த வரையோ அதற்குப் பின்னரோ எனக்கு அந்த மூத்த எழுத்தாளரான அவரைச் சந் திக்கவே சந்தர்ப்பம் வரவில்லை! என் மொழிபெயர்ப் புக் கதைகள் சுதந்திரனிலும் வீரகேசரியிலும் பிரசுர மாயின.
ஒருநாள் மொறட்டுவாப் பட்டினசபை நூல் நிலை யத்திலிருந்து தாகூரின் நாடகங்கள் அடங்கிய நூல் ஒன்றை எடுத்து வந்தேன் அதிலிருந்து (Sacrifice ) பலி என்ற நாடகம் என்னைக் கவர்ந்தது. அந்நாடகம் முழுவதுமே ஒரு காளி சிலையின் முன்னேதான் நடை பெறுவது அதன் விசேடங்களில் ஒன்று. அத்தோடு கதாநாயகனாக ஜெய்சிங் என்ற பாத்திரம் காளியைத் திட்டிச் சிலையை உடைத்துப் பேசிய பேச்சுக்கள் கருணாநிதியின் பராசக்திக் கதாநாயகன் காளியைத் திட்டிப் பேசிய பேச்சுக்களைப் போல இருந்தது. கலை ஞர் கருணாநிதி அவர்கள் அவ்வசனங்களைத் தாகூ ரிடமிருந்து கடன் பெற்றதாகவோ அல்லது கொப்பி யடித்ததாகவோ எனக்குப்பட்டது:
எனக்குத் தி. மு. க. எழுத்தாளர்களின் எழுத்துக் களைப் பிடிக்காது. அவர்களின் அடுக்கு மொழியிலும் எனக்கு உடன் பாடில்லை. எதுகைமோனைக்காகப் பொருளைச் சிதைப்பவன் சரஸ்வதியின் முகத்தைக் கரித்துணியால் மூடுகிறான்' என்று பாரதி எழுதியி ருக்கிறானல்லவா? தி. மு. க கூட்டத்தினரில் "தில்லை வில்லாளன்' என்ற ஒருவர்தான் சில நல்ல சிறுகதை களை எழுதியுள்ளார் என்பது என் அப்போதய அபிப் பிராயம்.
எனவே கருணாநிதியின் “குட்டை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலியை மொ ழி பெயர்க்கத் தொடங்கினேன். மொ ழி பெயர் த்து
44

முடித்து மீண்டும் அதை அச்சுக்கு அனுப்பத் தெளி வாகத்திருப்பி எழுதிய போது விடிந்தே விட்டது! அன்று சனிக்கிழமை . நான்குளித்து விட்டு நாடகத் தோடு சுதந்தரன் காரியாலயம் சென்றேன். 'பலி’ அடுத் த வாரமே சுதந்திரனில் வெளியாகியது. தொடர்ந்து ஐந்து வாரங்கள் பிரசுரமாகி முற்றுப் பெற்றது.
சுதந்தரன் தொடர்பால் எனக்கு அறிமுகமானவர் தான் திரு. அ. ந. கந்தசாமி அவர்கள். அ. செ. முரு கானந்தனையும், மகாகவி ருத்திர மூர்த்தியையும் தந்த அளவெட்டிதான் ந ம க் கு அ. ந. கந்தசா மி  ைய யும் தந்தது.
அவரோடு பேசிக் கொண்டிருந்தால் பொழுது போவதே தெரியாது. எந்த விஷயமாயினும் சளைக் காமற் பேசுவார். கேட்பவருக்கு அலுப்பே வராது.
பல சிறுகதைகளையும் நாவல்களையும் கவிதைக ளையும் அவர் எழிதியிருக்கிறார். யாழ்ப்பாணத்திலி ருந்து வெளிவந்த ஒரு சிறுசஞ்சிகையில் (மறுமலர்ச்சி என எண்ணுகிறேன்) அவர் எழுதிய "ஒரேரத்தம்" என்ற சிறுகதை பிரசித்திபெற்றது. சிங்களவனுக்கும் தமிழனுக்கும் இரத்தம் ஒன்றுதான் என்பதை அழகா கச் சொல்லிற்று அக்கதை.
சுதந்திரனில் அவர் பிரான்சியரான எமிலிசோலா வின், நானா என்ற நாவலை மொழிபெயர்த்துப் LSudrijs, Tii. D. H. G.) (TG) gairafaāt Sons and Loves என்ற நாவலையும் மொழி பெயர்த்துக் கொண்டிருந் தார். அது பத்திரிகைகளிற் பிரசுரமானதாக ஞாபக
6ᏓᏪ 6ᏈᎠ 6bᎧ .
பின்னாட்களில் "மதமாற்றம்’ என்ற நாடகத்தை எழுதிப் புகழ் பெற்றார்.
45

Page 32
சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான அவர் கரப்பன் போன்ற சருமவியாதியால் மிகவும் துன்புற் றார். அந்த நோய்க்குப் பரிகாரஞ்செய்ய ஒரு சிங் கள "வெதமாத்தயா" விடம் சென்றபோது நானும் அவருடன் கூடப்போனேன். அந்த வைத்தியர் மீன் , கருவாடுசாப்பிட வேண்டாம் என்றார். மீன் கரு வாட்டை தொட்டேயறியாத பிராமணர்களுக்கும் இந்நோய் உள்ளதே என்று வைத்தியரோடு தர்க்கம் பண்ணி மருந்து வாங்காமலே திரும்பினார். அ. ந. க.
பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒன்றை அமைக்கக் கொழும்பு மேட்டுத்தெரு விவேகானந்தசபை மண்டபத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்திற்கு வந்திருந்த பிரமுகர்களையும் பண்டிதர்களையும் வித்வான்களை யும் பார்த்து ‘நீங்கள் எல்லாம் எழுத்தாளரா?' என்ன எழுதியிருக்கிறீர்கள்? என்று கேட்டு அக்கூட்டத் தையே குழப்பியடித்தார். அப்போது நானும் அவரு டன் இருந்தேன்.
சருமநோயால் மிக மிகத் துன்பம் அனுபவித்துக் காலமில்லாக் காலத்திலேயே கருகி மறைந்தது அந்த இலக்கியமலர், அது நமது அவப்பேறு.
46

9. வானொலியும் நானும்
மொறட்டுவாவிற்கு வந்தபின்னர் நான் பிரெஞ்சு எழுத்தாளரான “கைடி மாப்பஸான்' என்பவரின் சிறு கதைகளையும் சில நாவல்களையும் படித்தேன்.ஆனால் அவரது சிறுகதைகள் என்னைக் கவர்ந்த அளவிற்கு நாவல்கள் என்னைக் கவரவில்லை.
அவருடைய சிறுகதைகளில் பிரான்ஸ் நாட்டின் அக்காலச் சூழ்நிலையிலிருந்த விபச்சாரம் நெளியும், மது வாடைவீசும், இவைகளையும் மீறிக் கொண்டு பிரான்ஸ் நாட்டின் வடபுலத்திலுள்ள "நார்மண்டி’ பிராந்தியத்தின் சூழலும் அப்பிராந்திய மக்களின் மனித உணர்வுகளும் பளிச் சி டு ம். அவன்சிறுகதைகளை ரசித்துப் படித்த நான் அவனைப்பற்றி ஒரு கட்டுரை எழுதி வானொலிக்கு அனுப்பிவைத்தேன்.
சிலவாரங்களில் நேரில் வந்து அக்கட்டுரையைப் 'பேசும்படி இலங்கை வானொலியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. திகதி ஞாபகத்திலில்லை. பி. ப 3.30க்குப் பேச வேண்டும். சற்று முன்னதாகவே வந்து ஒத்திகை பார்க்க வேண்டும் எனவும் கடிதத்திற் கண்டிருந்தது.
அப்போதெல்லாம் வானொலியில் பேச்சுக்கள் ஒலிப் பதிவு செய்யப்படாமல் நேரடியாகவே ஒலிபரப்பப்
l - L- GRT,
47

Page 33
நான் இரண்டுமணிக்கே போய் ஒத்திகைநடத்தி பி. ப. 3.30 மணிக்குக் கட்டுரையைப் படித்தேன். அதாவது பேசினேன்.
நான் இன்ன நாளில் வானொலியிற் பேசப்போ வதாக அம்மாவிற்கும் தம்பிமாருக்கும் அறிவித்திருந் தேன். மூதூரில் இன்றைக்குப் போல ஐம்பதுகளின் முற்பகுயில் மின்சாரமுமில்லை. வீட்டுக்கு வீடு வானொ லிப் பெட்டிகளுமில்லை, மூதூர் கிராமசபையினரின் சன சமூக நிலையத்தில் அரசாங்க வானொலிப் பெட்டி ஒன்று இருந்தது, அந்தப் பெட்டிக்கு முன்னால் அமர்ந்து கொண்டு என் உறவினர்களும் ஊரவர்களும் என் வானொலிப் பேச்சைக்கேட்டதாகப் பின்னர் எனக்கு வந்த கடிதங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.
பரவாயில்லையே நான் எழுத்தாளன் என்பதில் உறவினர்கள் பெருமைப் படுகிறார்கள் போல இருக்கி றதே என எண்ணிக்கொண்டேன்.
அதற்குப்பின்னால் எனக்கும் இலங்கை வானொலிக் கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பல வானொலி நாடகங்களை எழுதினேன். வானொலியிற்சிறுகதைக ளும் படித்தேன். ஆண்சிங்கம் என்ற நாடகத்தில் கலா நிதி கா. சிவத்தம்பி அவர்கள் நடித்தார், அவர் அப் போது மாணவராக இருந்திருக்க வேண்டும்.
எனது முதல் நாவலான கொழுகொம்பு பின்னர் வானொலி நாடகமாக்கப்பட்டு ஒருமணித்தியால நாட கமாக ஒலிபரப்பப்பட்டது.
வானொலியில் ஒலிபரப்பப்பட்ட சிறந்த நாடகங்க ளுள் ஒன்றான இதயக்கல் பூரீலங்கா என்ற அரசாங் கச்சஞ்சிகையிற் பிரசுரிக்கப்பட்டது. தாஜ்மஹாலை நிர்மாணித்த பிரதமசிற்பி அதன்கதாநாயகன், பின்னர் அந்த நாடகம் ஏதோ ஒரு பாடசாலைகளுக்கான போட்டியில் கிண்ணியா மகாவித்தியாலய மாணவர்
A 8

களால் மேடையில் நடிக்கப்பட்டு முதற்பரிசைப்பெற் றது.
*கணி’ என்ற தலைப்பில் ஒலிபரப்பப்பட்ட என் சிறந்த சிறுகதைகளில் ஒன்று வானொலியினர் நடத் திய 'வானொலி" என்ற இதழிற்பிரசுரமாகியது.
என் வானொலி நாடகங்களுள் வானம் பாடியும் றோசாப் “பூவும்' என்ற நாடகம் என இப்போதும் நான் கருதுகிறேன், ஒஸ்கார் வைல்டின் "The Nigh tingale and the Rose” GitaốTp 35 305 GN)Luj 35 IT Gör Gnu IT GOTLb பாடியும் றோசாப்பூவும் என்று நாடகமாக்கினேன். அந்நாடகத்தில் இசைப்பாடல்களும் எழுதினேன்.
ஈழத்துச் சிறுகதை மூலவர்களில் ஒருவரான க.தி சம்பந்தன் அவர்களின் ‘புத்தரின் கண்கள்' என்ற சிறுகதையையும் வானொலி நாடகமாக்கினேன். அத் துடன்
நாரதன் வீணை நயந்தெரிபாடலும் தேரிய மடந்தையர் வாரம்பாடலும் ஆயிரங்கண்ணான் செவியகம் நிறைய நாடகம் உருப்பசி நல் காளாகி மங்கலமிழப்ப வீணை மண்மிசைத் தங்குக இவளெனச் சாபம்பெற்ற.
எனவரும் சிலப்பதிகார வரிகளின் பின்னால் இருந்த கதையை ஊர்வசி, அர்ச்சுனன், இந்திரன், ஆகியோ ரைப் பாத்திரங்களாகக் கொண்டு "தந்தையின் காதலி" என்ற நாடகத்தை எழுதினேன். அதுவும் மிகச்சிறந்த வானொலி நாடகமாகும். ஒலிபரப்பாகிய பின்னர் அந்நாடகம் சுதந்திரன் இதழிலும் பிரசுரமாகியது.
சமீபத்தில் மீள் ஒலிபரப்புச் செய்யப்பட்ட "செய் யுந்தொழிலே தெய்வம்' என்ற நாடகம் 1689 put தலைமுறை ஆசிரியருக்கும் புதிய தலைமுறை ஆசிரிய
、49

Page 34
ருக்குமிடையிலான தலைமுறை இடைவெளியைக் காட்டிய நல்ல நாடகமாகும்.
அறுபதுகளின் பிற்பகுதி என எண்ணுகிறேன். கொழும்பு றோயல் கல்லூரியில் நாடகங்கள் பற்றிய கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. பல்வேறு நாடகங் களைப் பற்றிப் பலர் கட்டுரை படித்தார்கள். நான் * வானொலி நாடகங்கள்" என்ற தலைப்பிற் கட்டுரை படித்தேன்.
கருத்தரங்கிற்குத் தலைமை வகித்தவர் ஈழத்தின் மிகச் சிறந்த கவிஞரும் வானொலியின் தமிழ்ப் பிரி வுப் பணியாளருமான நாவற்குழியூர் நடராஜன். அவர், 'வானொலிக்குச் சிறந்த நாடகங்களை எழுதி, எமக்கும் தமக்கும் பெருமை சேர்த்த வ. அ. இராசரெத்தினம் அவர்கள் இப்போது ‘வானொலி நாடகங்கள்’ என்ற "கட்டுரையைப் படிப்பார்” என்று அறிவித்து என்னை மேடைக்கழைத்தது இன்னும் என்நினைவில் இனிக்கிறது அந்தக் காலத்தை வானொலி நாடகங்களை ஒலி பரப்பும் முன்னால் நாமனுப்பும் கையெழுத்துப் பிர தியை ரைப் செய்து அதன் ஒரு பிரதியை எழுத்தா ளருக்கும் அனுப்பினார்கள். அப்படியாக எனக்கு வந்த பிரதிகளை எல்லாம் சேர்த்துக் கோவைப்படுத்தி நான்கு கோப்புக்கள் வைத்திருந்தேன். நான்கு நூல் களாக எனது வானொலி நாடகங்களை எனது அச்ச கத்திலேயே பிரசுரிக்க வைத்திருந்தேன். இப்போது என்னிடம் நாடகங்களுமில்லை அச்சமுமில்லை.
தொண்ணுாற்றிற்குப் பின்னர் "அகதி யாகத் திருகோணமலையிலிருந்த நாட்களிற் சில இலக்கிய நாடகங்களை எழுதினேன். ஒலிபரப்பப்பட்டது.
இப்போது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினர் நாடகத்தைத் தட்டச்சு செய்து எழுத்தாளர்களுக்குப் பிரதி அனுப்புவதில்லை. நாடகம் ஒலிபரப்பான பின்
50

னர் அனுப்பப்படும் ‘வவுக்சர்’களை நாடகத்தைத் தயாரித்தவருக்கே அனுப்ப வேண்டும். அவர் கணக் (குக் கிளைக்கு அதை அனுப்புகிறார். அது அங்கே கிடந்து விடுகிறது. தயாரிப்பாளர் தெண்டித்து எடுத் தனுப்பினால் உண்டு. இல்லாவிட்டால் அங்கேயே கிடக்கும். பணம் கிடைக்க எட்டு ஒன்பது மாதங்க ளும் செல்லும், கிடைக்காமலும் கிடந்து விடும்.
இப்போதெல்லாம் கொழும்பை வதிவிடமாகக் கொண்டவர்கள் மட்டுமே வானொலி நாடகம் எழு தினால் சன்மானத்தை இலகுவாக அவர்கள் பெற் றுக் கொள்ளலாம். வெளியிலுள்ளவர்களுக்கு அது செளகரியமாக இராது என எனக்கு எண்ணத் தோன் றுகிறது.
எனது வானெலி நாடகங்களைப் பற்றி நினைக் கையில் நாடகத் தயாரிப்பாளர் 'சானா" என்ற சண்முகநாதனின் நினைவு வருகிறது. பழகுவதற்கு மிக இனியவர். பிறவி நடிகர். ஈழகேசரியில் அவர் எழுதிய நடைச் சித்திரங்கள் வ. ரா. தி. ஜ. ர. போன்ற சிறந்த எழுத்தாளர்களின் அந்தஸ்துக்கு அவரை உயர்த்தின. அவருடன் சேர்ந்து பம்பலப்பிட்டி "கிரீன்லான்டில்" கொட்டிலிற்கும்மாள மடித்த நாட் கள் என் நினைவில் நீங்காமலே இருக்கின்றன,
என் மனைவியோடு கொழும்புக்குப் போயிருந்த போதெல்லாம் அவர் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். என் மனைவியும் அவர் மனைவியும் கூடச் சிறந்த நண்பர்கள்.
அமரராகி விட்ட 'சானா இப்போதும் என் நெஞ் சில் நிறைந்திருக்கிறார்.
5.

Page 35
10. டானியலும் நானும்
1952ல் என்று நினைக்கிறேன். சுதந்திரன் பத்திரிகை ஒரு சிறுகதைப் போட்டி நடத்தியது. அப்போட்டி யின் விபரங்கள் சுதந்திரனில் வெளியாகியிருந்தன. நடுவர்கள் பிரதேசவாரியாக ஐவர். அவர்களில் ஒரு வன் நான் (திருகோணமலை), மற்றவர் பித்தன்(மட் டக்களப்பு) சுதந்திரன் ஆசிரியர் இன்னொருவர். மலைநாடு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களின் நடுவர் களின் பெயர் இப்போது நினைவில் இல்லை,
நடுவராக வ. அ. இராசரெத்தினம் (திருகோண மலை) என்ற என் பெயரைக் கண்டதும் நான் அதிர்ந்து போனேன். இப்போது தானே எழுதத் தொடங்கியிருக்கிறேன். அதற்குள் நடுவராக இருக்கும் தகுதி எனக்கு வந்து விட்டதா? என்று மலைத்தேன். சுதந்திரன் அலுவலகத்திலேயே அப்பத்திரிகையைப் பார்த்தேன். சிவநாயகம் அவர்களிடம் என் கவலை யைத் தெரிவித்தேன்.
திரு. சிவநாயகம் அவர்கள் குறுஞ்சிரிப்புச் சிரித்து விட்டுச் சொன்னார். "நீர் இப்படிச் சொல்வீர் என்று எனக்குத் தெரியும். கிழக்கு மாகாணத்திலே இன்று நல்ல சிறுகதை ஆசிரியர்கள் நீரும் பித்தனும்தான். உம்மை விடத் தகுதியானவர் திருகோணமலையில்
52

இல்லை. பித்தனை விடத் தகுதியானவர் மட்டக்க ளப்பில் இல்லை. இதனாற் தான் உங்கள் இருவரை யும் கேட்காமலே நடுவர்களாக உங்களை நியமித்தேன். நீர் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்'
என் மெளனம் சம்மதத்திற்கான பதிலாயிற்று.
போட்டி முடிவுத் திகதி நெருங்க நெருங்க சுதந் திரன் காரியாலயத்திற் கதைகள் வந்து குவியத் தொடங்கின.
கதைகள் வரத் தொடங்கியதுமே கதைகளைப் படிக்கும் படி சிவநாயகம் கேட்டார். நான் படிக்கத் தொடங்கினேன். அவர் கேட்டுக் கொண்டது போல கதைகளை A, B.C. எனத் தரம் பிரித்தேன்.
போட்டி முடிவுத் தேதிக்குள் சுமார் நானூற்றி ஜம்பது கதைகள் போட்டிக்கு வந்தன. அவைகளிற் பல கதைகள் கதைகளாகவே இருக்கவில்லை. சில வற்றை வாசித்த போது பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது. சிலவற்றை வாசித்துச் சிரித்தேன். கதைகளா அவை? கழுத்தறுப்பு!
என்றாலும் மிக்க பொறுமையோடு எல்லாக் கதைகளையும் படித்து A பிரிவில் சுமார் ஜம்பது கதை களையும் B பிரிவில் சுமார் ஐம்பது கதைகளையும் சேர்த்தேன். மீதியான C பிரிவு கதைகள் கதைகளே ᏓᎥ Ꭵ 6u) ᎧhᏪ .
திரு. சிவநாயகம் நான் A பிரிவிற் தெரிந்து கொடுத்த சுமார் ஐம்பது கதைகளையும் மீண்டும் படித்தார். அவற்றில் முப்பது கதைகளைத் தேர்ந் தெடுத்தார். அந்த முப்பது கதைகளையுமே மற்ற மூவரும் பரிசீலித் 8560тпт”.
போட்டிக்கு வந்த கதைகளில் 'அமர காவியம்’ என்ற கதை எனக்குப் பிடித்திருந்தது, அதற்குப்
53

Page 36
பரிசு கிடைக்கும் என நம்பினேன். எழுதியவர் பெயர் தெரியாது. சுதந்திரனில் வெளியான கூப்பனிற்தான். கதை எழுதுபவரின் பெயரும் விலாசமும் எழுதப் பட்டு இணைக்கப்பட வேண்டும் என்பது போட்டி நிபந்தனைகளில் ஒன்று. அந்தக் கூப்பனைக் கழற்றிக் கொண்டுதான் கதைகள் எனக்குத் தரப்பட்டன. ஆகவே எழுதியவரின் பெயர் எனக்குத் தெரியாது. ஆனாலும் 'அமர காவியம்" என்ற தலைப்பு நினைவில் இருந்தது.
அமரகாவியத்துக்குப் பரிசு கிடைக்கும் என்ற நம்பி க்கை வீண்போகவில்லை. சிவநாயகம் அவர்களின் பரிசீ லனையிலும் தேர்ந்து மற்ற மூன்று நடுவர்களின் பரி சீலனையிலும் தேர்ந்து அமரகாவியம் பரிசைப்பெற் ያሸጋò!.
அமரகாவியத்தை எழுதியவர் திரு. K. டானியல் தல்லாலை; யாழ்ப்பாணம் என்பது அவர் விலாசம்
போட்டிமுடிவுகள் சுதந்திரனிற் பிரசுரிக்கப்பட்டுக் கதையும் வெளியான பின்னர் நான் டானியலுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினேன். யாழ்ப்பாணம் வந் தாற்சந்திப்பதாகவும் அக்கடிதத்திற் குறிப்பிட்டிருந் தேன்!
ஆனால் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மண்டபத் தில் 1963ல் நடந்த ஸாகித்ய விழாவில் முற்போக்கா கள் முட்டையெறிந்துவிட்டுப்போனபின்னர், மேடை யேறிய எஸ். பொ. அவர்கள், எழுத்துலகில் நான் இரண்டு ஆண்டுகள் "அஞ்ஞாதவாசம்" செய்த காலத் தில் கதைகளை எழுதி என் நண்பர்களான டானியல், டொமினிக் ஜீவா ஆகியவர்களுக்குக் கொடுத்தேன். டானியனுக்கு எழுதிக்கொடுத்த 'அமர காவியம்" என்ற கதைதான் சுதந்திரன் சிறுகதைப்போட்டிற் பரிசு பெற்றது என்று பகிரங்கமாகவே கூறினர்.
54

என் பாராட்டுக்கடிதத்துக்கு டானியல் அவர்கள் பதில் எழுதியிருந்தார். பின்னர் சில கதைகளையும் எனக் கனுப்பி அவற்றை ஏதாவது பத்திரிகைகளுக்குச் சிபார்சுடன் அனுப்பிவைக்கும்படியும் கேட்டிருந்தார்.
எங்களிடையே கடிதத் தொடர்பு இருந்ததே தவிர 1856ல் நான் யாழ்ப்பாணம் முதற்தடவையாகச்செல் லும் வரை ஒருவரையொருவர் நேரிற்சந்திக்கவில்லை.
யாழ்ப்பாணம் சென்றிருந்த போது நான் கடிதம் எழுதிக் கேட்டுக்கொண்டிருந்தபடி டானியல் அவர்கள் என்னை ஈழகேசரிக் காரியாலயதிற் சந்தித்தார். மிக வும் * அடக்க ஒடுக்கமாக',
இந்த அடக்க ஒடுக்கத்திற்கான காரணம் பின்னர் தான் எனக்கு விளங்கியது. யாழ்ப்பாணத்து உ ய ர் சாதிக்காரர்கள் பஞ்சமர் எ ன் ற கீழ்சாதி மக்களை ஒதுக்கியே வாழ்ந்தார்கள். மூதூரிற் பிறந்த என்னை கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க முடியாத அளவுக் குப் பஞ்சமர்கள் ஒதுக்கப்பட்டும் ஒடுக் க ப் பட் டு ம் வாழ்ந்தார்கள். அ ர சி ய லி ற் கொம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அவர்களைச் சேர்த்துப் பிடித்தது. கொம்யூ னிஸ்ட் கட்சியிற் சேர்ந்து கொண் ட பஞ்சமர்கள் ரிலர் இலக்கிய நாட்டங் கொண்டு தம் எழுத்துக்களிற் சாதித்திமிரைச் சாடினார்கள். அப்படியாக வந்த பல எழுத்தாளர்களில் டானியலும் ஒருவர்.
நான் அவரை முதலிற் சந்தித்தபோது அவர் சுமை ஏற்றும் சைக்கிளில் முன்னும் பின்னும் சோடாப் போத்தல்களை அடுக்கித் தெருவெல்லாம் தி ரி ந் து விற்பனைசெய்து கொண்டிருந்தார். தன் உழைப்பின் மூலம் முன்னேறிப் பின்னர் ஸ்டார் கரேஜ் என்ற ஸ்தாபனத்தின் முதலாளி ஆனார்.
ஆனாலும் என்றுமவர் பழை ய டானியலாகவே இருந்தார். எல்லாருடனும் அன்னியோன்யமாகப் பழ கினார். எ ல் லா எழுத்தாளர்களையும். பேராசுரியர்
55

Page 37
களையும் அவருடைய க ரா ஜில் சந்திக்கக்கூடியதா: இருந்தது.
டானியல் அவர் க ள் ஐந்தாம் வகுப்புவரையுபே படித்தவர். ஆனால் நிறையக் கொம்யூனிஸ இலக்கி யங்கள் படித்திருக்கிறார். அதைவிட 'நான் மக்கனி டம் படிக்கிறேன் அவர்களிடம் படித்ததை அவர்களு க்கே திருப்பித் தருகிறேன்" என அவர் எழுதியது போல மக்களிடமிருந்து நிறையப் படித்தார். அத ந் காக மக்களோடு மக்களாக வாழ்ந்தார்.
யாழ்ப்பாணத்துப் பாவ ப் பட்ட பஞ்சமர்களின் வாழ்க்கையை நாம் அறிய வேண்டின் டானியல் அவர் களது பஞ்சமர், கோவிந்தன் ஆகிய நாவல்களையும் அவரின் மற்றைய எழுத்துக்களையும் படித்தாக வேண் டும்.
எழுத்தாளராக மட்டுமல்ல, ஒரு பேராசிரியராக வும் அவர் வாழ்ந்தார். 1971 ல் ஷேகுவரா கலகத் தின்போது அவர் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலே துன்புற்றார். அந்த அனுபவங்களை என்னிடம் கதை கதையாகச் சொல்லியிருக்கிறார்.
எவ்வளவுதான் கருத்து வேற்றுமை இருந்தாலும் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி முட்டையெறிக்குப் பின் னரும் அவர் என்னோடு மிகுந்த நட்புடன் இருந்தார். யாழ்ப்பாணம் சென்ற வேளைகளில் எல்லாம் அவர் எனக்கு ஒரு சத்திரம் போலவே இருந்தார். 1982 ல் ந ட ந் த மூத்த மகளின் திருமணத்திற்குக் கடனாகப் பண உதவி செய்தார்.
யாழ்ப்பாணத்துப் பாவப்பட்ட பஞ்சமர் க ளி ன் வாழ்க்கையோடு ஒன்றி ணை ந் து, அவர்களுக்காகப் போராடி, அவர்கள் வாழ்க்கையையே இலக்கியமாக் கிய அந்த இனிய நண்பனை இப்போது நினைத்தா லும் என் நெஞ்சம் பூரிக்கிறது.
5f

11. வீரகேசரிப் பிரவேசம்
1952ல் என்று நினைக்கிறேன். ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை நான் மொறட்டுவாவிலிருந்து நாணி ருந்த வீட்டுக்காரருடன் புனித செபஸ்தியார் ஆலயத் திற் பூசை கண்டு, திரும்பிக் கொண்டிருக்கையில் வழக்கம் போல ஞாயிறு வாரப் பத்திரிகைகளை வாங்கிக் கொண்டேன். வீரகேசரியைப் புரட்டியபோது எனது சிறுகதை ஒன்று பிரசுரமாயிருந்ததைக் கண்டு தெருவிலேயே நின்று பரபரப்போடு அதைப் படித்தேன், அக்கதையின் தலைப்பு “பிரிவு” என்பதாக என் ஞாபகம். அந்தக் கதை மீண்டும் என் உணர்வுகளைக் கிளறிற்று.
டெனியாயாவில் என்னோடு ஒரு ஆசிரியையும் இருந்தாள். அவளுக்கு ஆங்கிலம் தெரியாது, சிங்கள மும் தெரியாது. ஆகவே அவள் பாடசாலை சம்பந் தப்பட்ட எந்த விஷயத்தையும் என் மூலமாகத்தான் அறிய வேண்டும். அதிபரோடுகூட என்மூலமாகத் தான் பேசவேண்டும்.
இப்படியாகச் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் என்னோடிருந்தவள் திடீரென மாற்றம் பெற்றுக் கொண்டு கொழும்புக்கு வந்தாள், அவள் பிரிவு எனக்கு மிக்க வேதனையைக் கொடுத்தது. பழகிய வகையும் பிரிவில் இன்னாது அல்லவா?

Page 38
அந்த ‘இன்னாத பிரிவைத்தான் என் கற்பனை யையும் சேர்த்துக் கதையாக்கினேன்.
என் கதைகள் ஏற்கனவே தினகரன், சுதந்திரன், ஈழகேசரி ஆகிய இலங்கைப் பத்திரிகைகளில் பிரசுர மாயிருந்தன. வீரகேசரியில் ஏதுமே பிரசுரமாகவில்லை.
நான் பதின்மூன்று வயது மாணவனாக இருக்கை யிலே வீரகேசரி வாசகன். வீரகேசரியிற் தொடர்ந்து வெளிவந்த பத்மாவதி, சோமாவதி என்ற நாவல் களை ஆர்வத்தோடு தொடர்ந்து படித்தவன். அந்த வகையில் என்னை எழுத்தாளனாக உருவாக்கியதில் வீரகேசரிக்கும் பங்குண்டு. அந்த வீரகேசரியில் இன் னமும் எழுதவில்லையே என்றகுறை என் மனதில் இருந்தது. எனவே “பிரிவு கதையை டெனியாயாவில் இருந்து வீரகேசரிக்கு அனுப்பினேன்.
சுமார் ஒராண்டு ஆகியும் அக்கதை பிரசுரமாக வில்லை. அது பிரசுரமாகும் என்ற நம்பிக்கையும் அற்றுப் போய் அந்த விவகாரத்தை நான் மறந்தும் போனேன். இப்போது நான் எதிர்பார்க்காமலேயே கதை பிரசுரமாகியிருந்தது. அக்கதையின் சில வரிகள் இன்னமும் என் நினைவில் இருக்கின்றன.
"இதயத்தை பொசுக்கி நின்ற ஏக்கத்தின் சுவா லையை, உன்மத்தம் பிடிக்கச் செய்யும் உள்ளத் துடிப்போடு சேர்த்துச் சிந்தனையைச் சுட்டெரித்த தீக்குழம்பின் புகையாய்ப் பெருமூச்செறிந்தேன்'
என்பவைதான் அந்த வரிகள். இன்றைத்கு இதைப் போல உணர்ச்சி வசப்பட்டு எழுதுவேனோ என்னவோ!
இந்தப் பிரவேசத்தின் பின்னால் வீரகேசரியோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. கல்கி அவர்களால், *அவரது பேனா அமெரிக்க டாங்கி போன்றது' எனச் சிலாகித்துச் சொல்லப்பட்ட வீரகேசரி ஆசிரியர்
58

திரு. K.V.S. வாஸ் அவர்களை ஒரு முறை சந்தித்தேன். தாம்பூலத்தைச் சுவைத்த படியே உள்ளந் திறந்து அவர் சொன்னார்.
‘எழுதுவது எனது தொழில் சார். அதுதான் எனக்குச் சோறு போடுகிறது. அதற்காக எழுதுகிறே னேயொழிய நான் ஒன்றும் தமிழைத் தூக்கி நிறுத்தி உத்தாரணம் பண்ணப் பிறந்தவனல்ல சார்’.
அவர் சரித்திர நாவல்களையும் மர்ம நாவல்களை பும் வீரகேசரியில் எழுதிக் குவித்தார். அவைகளின் இலக்கியத் தரம் எப்படியிருந்தாலும் ஏராளமான வாசகர்கள் அவர் சிருட்டிகளை ஆர்வத்தோடு படித் தனர். தமிழ் நாட்டிலே தன் எழுத்துக்களால் ஒரு பெரிய வாசகர் கூட்டத்தை உருவாக்கிய கல்கியைப் போல, ஈழத்தில் ஒரு பெரிய வாசகர் கூட்டத்தை உருவாக்கியவர் திரு. K.V.S. வாஸ் அவர்கள்.
பின்னர் எஸ். டி. சிவநாயகம் அவர்களும் வீரகே சரியிற் பணிபுரிந்தார். 1964ம் ஆண்டு நான் மூதூரிலே ஈழத்தின் இலக்கியச் சரித்திரத்தில் இடம்பெற்ற பென்னம் பெரிய தமிழ்விழா ஒன்றை நடத்தியபோது விழா நடந்த ஆவணி மூன்றாம் வார வெள்ளி, சனி, (ஞாயிறு ஆகிய மூன்று தினங்களிலும் அவ்விழாவிற்கு விசேட முக்கியத்துவம் அளித்துச்செய்திகளை வெளி பிட்டார் எஸ். டி. சிவநாயகம். ஞாயிறன்று விழா மலரே வெளியிட்டார். அம்மலரில் நான் எழுதிய "சுடலை ஞானம்’ என்ற சிறுகதையை இன்றைக்கும் கூட வீரகேசரி ஞாயிறுபதிப்பு ஆசிரியர் திரு இராச கோபால் அவர்கள் நாவலித்துப் புகழ்வார்.
இப்போது நான் கொழும்புக்குப் போகும் வேளை களில் திரு இராஜகோபால் அவர்களைச் சந்திக்கத் கவறுவதேயில்லை. கடிதங்களிற் கண்ணோட்டம் விட் படி 'சொல்லுங்க சொல்லுங்க" என்று நேரம்போ வதே தெரியாமற் பேசிக்கொண்டிருப்பார்.
59

Page 39
1975 செப்டம்பரில் என் மனைவியை இழந்தேன். இழந்த நான்காம் நாளிலேயே, எ ன் அ ள ப் பரிய சோகத்தை "ஒருகாவியம் நிறைவு பெறுகிறது’ என்ற குறு நாவலாக எழுதி என் துயருக்கு வடிகால் சமைத் தேன். அக்கதை வீரகேசரியிற் தொடர்ந்து பிரசுர மாகிச் சூடாறு முன்னரே நூலுருப் பெற்றது.
நூலுக்கு என் குடும்ப நண்பராகிவிட்ட வீரகேசரி சைத்ரீகர் அகுஸ்தீன் மொறாயிஸ் அவர்கள் அட்டைப் படம் வரைந்தார்.
எந்தப் பத்திரிகையிலுமே பிரசுரமாகாத 'கிரெள ஞ்சப் பறவைகள்' என்ற சரித்திர நாவலை வீரகே சரி நிறுவனம் புத்தகமாக்கியது.
ஆனாலும் நான் எழுதி அனுப்பிய எல்லாவற்றையுமே வீரகேசரி பிரசுரித்தது என்று சொல்ல முடியாது. அவர் களுக்கும் சில பொறுப்புக்கள் இருந்தன. விற்பனை பாதிக்கப்படாமற் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சமுகத்தவர்கள், குறிப்பிட்ட மதத்தவர் கள் மனம் புண்படாமலும் பார்த்துக் கொள்ள வேண் டும்.
தேய்பிறை என்ற என் குறுநாவல் ஒன்றை வீரகே சரிக்கு அனுப்பினேன். என்னைப் பெற்றெடுத்த மூதூர்க் கத்தோலிக்க சமுதாயத்தின் கதை. அவர்கள் தூத்துக் குடியிலிருந்து வந்ததாகப் பெருமைப்படுவார்கள். ஆனால் தூத்துக்குடியுடன் இப்போது எந்தத் தொடர் புமில்லை. கொழும்பு, நீர் கொழும்பு, மன்னாரிலுள் ளவர்களோடும் கூடத் தொட்ர்பு இல்லை. மதம் காரணமாக மூதூரின் அயற் சைவக்கிராமங்களோடு கூடத் தொடர்பில்லை. அச்சமுதாயம் தனித்து நின்று தேய்கிறது என்ற ஆதங்கத்திற் பிறந்த கதை. நையாண் டியும் குத்தலுமாக அக்கதையை எழுதியிருந்தேன்.
அக்கதை நீண்டகாலமாக வீரகேசரியிற் கிடந்தது. அக்கதையிற் சில மாற்றங்களைச் செய்து தாருங்கள்.
60

பிரசுரிக்கிறேன் என்று சொன்னார் இராஜகோபால் அவர்கள்.
நான் அவரிடம் சொன்னேன். "யேசுநாதரைச் சிலுவையிலறைந்த பின்னர் ‘யேசு நசரேனு யூதருக்கு ராசா' என்ற பட்டயத்தையும் சிலுவையிலறையும்படி சொன்னான் பிலாத்து. சிலுவையிலறைந்த யூதர்களே "யேசு நசரேனு யூதருக்கு இராசா என்று சொன்னான்’ என்றுதான் எழுத வேண்டும் என்றார்களாம். அதற் குப் பிலாத்து "நான் எழுதியது எழுதியதுதான். அப் படியே இருக்கட்டும்’ என்று முடிபாகச் சொன்னானாம். பிலாத்துவைப் போலத்தான் நானும் சொல்கிறேன். நான் எழுதியது எழுதியதுதான். அப்படியே இருக் கட்டும் ,
அக் குறுநாவலை மிக்க துயரத்தோடுதான் என்னி டம் திருப்பித் தந்தார் இராசகோபால். பின்னர் அக் குறுநாவல் "செம்பியன் செல்வன்' என்ற இன்னோர் இராசகோபாலினால் யாழ்ப்பாணம் ஆசீர்வாதம் அச் சகத்திலிருந்து வெளியான விவேகி என்ற மாத இத ழிற் பிரசுரிக்கப்பட்டது. பாலை என்று இன்னோர் குறுநாவலும் விவேகியிற் பிரசுரமாயிற்று.
தேய்பிறையும், வீரகேசரியின் துணை இதழான மித்திரன் வாரமலரில் 1972ல் வெளியான ‘சந்தானாள் புரவி' என்ற குறுநாவலுந்தான் என்னைப் பெற்றெ (டுத்த மூதூர்க் கத்தோலிக்க சமுதாயத்திற்கு நான் விட்டுக் செல்ல இருக்கும் சொத்து.
நான் இறந்த பின்னர் எனக்கு ஆடம்பரமான அடக்கம் செய்யாமல் அடக்கிய பின்னர், ஆடம்பரச் 1 டங்குகளைச் செய்யாமல் அந்தப் பணத்தில் இந்தக் குறுநாவல்களை எங்கேயாவது தேடி எடுத்துப் புத்த கமாக்குங்கள் என்று என் பிள்ளைகளை இப்போதே கேட்டு வைக்கிறேன்
6.

Page 40
12. அண்ணலைக் கண்டேன்
R
மொறட்டுவாவில் ஆசிரியனாக இருந்த காலத்தில் நான் மணம் முடித்துக் கொண்டேன். நான் ஒரு கதை யில் (தேய்பிறையாக இருக்கலாம்) என்னுர வார் ஒரு வரின் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிடுகையில்
"எஸ். எஸ் சி சித்தியடையும் வரையில் உள்ளூர்ப் பாடசாலையிற் கற்பது பின்னர் ஆசிரிய கலாசாலைப் பிரவேசத்திற்கான போர். ஆசிரிய பயிற்சியை முடித் துக் கொண்டு விட்டால் பொன்காய்த்த மரமாக வரும் பெண்ணை மணந்து கொள்வது. அதன் பின்னர் ஊரோடு மாற்றம் என்ற ஜீவன் முக்தியை அடைந்து விட்டால் அத்தோடு அவன் வாழ்க்கை சமாப்தி
என்று எழுதியிருந்தேனல்லவா? இப்போது நானும் ஊரோடு மாற்றம் என்ற 'ஜீவன்’ முக்திக்காக மொறட்டுவாவிலிருந்து ஏங்கினேன். மூதூரிலிருந்த அமெரிக்கக் குருவின் உதவியால் எனக்குத் திருகோண மலை புனித சூசையப்பர் கல்லூரிக்கு மாற்றம் கிடைத்தது.
என் மனைவி கிண்ணியா, குட்டிக்கரச்சி அரசினர் முஸ்லீம் பாடசாலையில் ஆசிரியராக இருந்தாள். எனவே அங்கிருந்து நாளாந்தம் திருகோணமலைப் பாடசாலைக்கு வந்து கொண்டிருந்தேன்.
62

அந்தக் காலத்தில் நான் பெரிய கிறுக்கு. எவரோ (டும் பேசமாட்டேன். வாசிப்பது எழுதுவது இரண் படையும் தவிர எவரோடும் அதிகம் பேசமாட்டேன். இலக்கியக் கூட்டங்களுக்கும் போகமாட்டேன். "தலைக் கனம் பிடித்தவன்' என்றே என்னை கணக்கெடுத்தி ருந்தார்கள்.
குட்டிக்கரச்சியிலிருந்து இரண்டு மைல்கள் சைக்கி ளில் வந்து கிண்ணியாத் துறையடியில் சைக்கிளைப் பூட்டி வைத்து விட்டு, துறையைக் கடந்து பஸ் ஏறித் திருகோணமலைக்குச் செல்வது சிரமமானதாகத் தோன்றவே சில மாதங்களின் பின்னர் நான் திருகோணமலையிலேயே குடியேறினேன்.
தற்போது சமூக சேவை நிலையக் கட்டிடம் அமைந்துள்ள வளவில் அன்று ஒரு சிறிய மிஷன் வீடு இருந்தது. அதன் அறை ஒன்றிற்தான் வாசம். திங் கட் கிழமை காலையில் வந்து வெள்ளிக்கிழமை பின் னேரம் மீண்டும் கிண்ணியா போய்விடுவேன்.
இந்தக் காலப்பகுதியிற்தான் (1954ல்) ஆஜானு பாகுவான ஒருவர் என்னைத் தேடிக் கொண்டு குட்டிக் கரச்சிக்கு வந்தார்.
என்னைப் போலவே நெடுவல். ஆனாற் சற்றுச் சதைப்பிடிப்பான உடற்கட்டு “ஆஜானுபாகு என நான் குறிப்பிட்டதற்கு ஏற்றாற் போல் நீண்ட வலி மையான கைகள். முகத்தில் மண்நிற அரும்பு மீசை தீட்சண்யமான கண்கள்.
வந்தவர் 'என் பெயர் சாலிஹ் , ஆசிரியர் என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மடித்து விடப் பட்ட வெள்ளை முழுக்கைச் சேட்டின் கீழே பச்சைக் கரை மல்வேட்டி கட்டியிருந்தார். அதுதான் என் ஆச் சரியத்துக்குக் காரணம். இப்பிராந்தியத்தில் வேட்டி
63

Page 41
கட்டிய எந்த முஸ்லீமையும் இதுவரை நான் கண்ட தேயில்லை!
அவர் மேலும் தொடர்ந்தார். உங்களைப் பற்றி நிறைய வி. கி. இராசதுரை சொன்னார். தங்களை அவசியம் சந்திக்கும் படியும் குட்டிக்கரச்சியில்தான் நீங்கள் இருப்பதாகவும் அவர்தான் சொன்னார்.
நான் அவரை வரவேற்று நீண்ட நேரம் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அவருக்குச் செய்யுள் இலக் கணம் தெரிந்திருந்தது. தான் எழுதிக் கொண்டு வந் திருந்த கவிதையை என்னிடம் காட்டினார். நான் அதைப் படித்தேன். அற்புதமான ஓசை நயத்துடன் எழுதப்பட்டிருந்தது.
அந்தக் கவிதையில் எந்தத் திருத்தமும் செய்யா மலே அதை அன்றையத் தபாலிலேயே சுதந்திரனுக்கு அனுப்பினேன். எஸ். டி. சிவநாயகம் அவர்களுக்கு ஒரு கடிதமும் அக்கவிதையோடு இணைத்திருந்தேன்"
அக்கவிதையின் பெயர் இப்போது நினைவிலில்லை. அக்கவிதை சுதந்திரனில் விரைவிலேயே வெளியாயிற்று. முகம்மது சாலிஹ் என்ற இயற்பெயர் கொண்ட அவர் கவிதைகளில் ‘அண்ணல்" ஆனார். தன் முதற் கவிதையை பத்திரிகையிற் கண்டு மகிழ்ந்த அவரின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொண்டேன்.
அதற்குப்பின் நானும் அண்ணலும் வாரா வாரம் சந்தித்துக் கொண்டோம். கிண்ணியாக் கிராமசபைக்கு முன்னாற் பரந்து கிடந்த வெண்மணலில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று இரவுகளிலும் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்போம். அருகாமையிலிருந்த அவர் வீட்டில் அதிகமாக அம்மூன்று இரவுகளிலும் நான் சாப்பிடுவேன். இடைக்கிடை என் வீட்டிலும் அவர் சாப்பிடுவார்.
6 4.

எங்கள் நீண்ட சம்பாஷணைகளைக் கண்டு கிண்ணி யாக்காரர்கள் எம் இருவரையும் "பைத்தியக்காரர்கள்" என்று கூடச்சொன்னார்கள்!
இந்தக் காலகட்டத்திற்தான் மகாகவி அல் லாமா இக்பாலின் "துன்யாசேதீன்’ என்றகவிதைகளின் ஆங்கிலமொழி பெயர்ப்பை திருகோணமலை யேசு சபைக் குருமாரின் நூலகத்திலிருந்து எடுத்துப்படித் தேன். ஆங்கிலத்திற்படித்து அவற்றின் மொழிபெயர் ப்பை அண்ணலுக்குச் சொல்வேன். கேட்டுக்கொண்டி ருந்த அண்ணல் அடுத்த கவிதையைக் கவிதையாகவே மொழிபெயர்த்து எழுதும்படிகேட்டார். நானும் சில நிமிடங்களில்
எரியும் நெருப்பில் வீழ்ந்திட்ட
ஈசல் சொல்லும் கதையைக் கேள் ஒரு கணந்தான் என்றாலும்
உலகவாழ்வில் விருப்பைத்தா கருகும் எனது புன்சடலம்
காலையரும்பும் போதெனினும் இரவு முழுதும் போராட
இறைவா எனக்கு வலியைத்தா என்று மரபுக் கவிதையாகவே அதைப் பாடினேன். மகிழ்ச்சியடைந்த அண்ணல் நூல் முழுவதையுமே அப் படிப்பாடும்படி வற்புறுத்தினர். நான் பா டி னேன், பூவரசம்பூ என்ற கவிதை நூல் 1977ம் ஆண்டு மார் கழியில் என் அச்சகத்தின் முதன் நூலாக வெளிவந்தது. அது வெளி வந்தபோது அண்ணலும் இவ்வுலகில் இல்லை. என் மனைவியும் இல்லை. எனது திருமணத் தின் இருபத்தைந்தாம் ஆண்டு நினைவாக அந்நூலை
காசு கழஞ்சைக் கேட்காமல்
கழனி தோட்டம் சேர்க்காமல் ஆசையாகக் கம்பனொடும்
அமரன் புதுமைப் பித்தனொடும்
65

Page 42
பேசும்படிக்கு எனை விட்டுப்
பெரிய குடும்பம் தனைத்தாங்கும்
ஆசை மனைவிலில்லிக்கு
அளிக்க வேறொன்றிலையாமால்.
m என்ற சமர்ப்பணப்பாடலுடன் வெளியிட்டேன். எஸ். எம். கமாலுத்தீன் அவர்கள் அந்நூலுக்கு முன் னுரை எழுதினார்.
நட்புக்கு இனியவர் அண்ணல் "உயிர்காப்பான் தோழன்’ என்ற தொடருக்கு இலக்கணமானவர்.
ஒரு தடவை நானும் அண்ணலும் யாழ்ப்பாணம் சென்றிருந்தோம். சுப்பிரமணியம் பூங்காவிற்கு அண் மையில் என்னிடம் ஒரு முற்போக்கு எழுத்தாளர் கொஞ் சம் தடியர்- வலுச்சண்டைக்கு வந்தார். அண்ணல் தன் கிண்ணியாச் சீனடி விளையாட்டோடு பாய்ந்து அவரை ஓட ஓட விரட்டினார். (எழுத்தாளர் பெயரைக்குறிப் பிடவிரும்பவில்லை.)
அத்தகைய தீரரான அண்ணல், கிண்ணியா யாகு வப்பள்ளியிலிருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்டுப் பாக்கியமான மரணமடைந்தார்! அவர் மரணச் செய்தி அன்றிரவுதான் மூதூரிலிருந்த எனக்குக்கிடைத்தது. நான் துடித்துப்போனேன்.
நான் அச்சகம் தொடங்கி அதைப்பெருப்பித்த பின் னர், கிண்ணியாவிற்குச்சென்று, அவர் வீட்டில், ஆசிரி யையாயிருக்கும் அவரது மகளின்துணையோடு அவர் பெட்டிகளை எல்லாம் துழாவி ஆராய்ந்து அவர் எழு திய கவிதைகள், சிறு கதைகள், கட்டுரைகள் ஆகியவற் றின் பத்திரிகை நறுக்குகளை எடுத்துக் கொண்டுவந் தேன். அவற்றைத்தொகுத்து நாற்பது பக்கங்கள் அச் சிட்டும் விட்டேன். அதற்குட் கலவரம் வந்து என் அச் சகம் எரிக்கப்பட்டது. அண்ணலின் அச்சிட்டபக்கங்க
66

ளும், பத்திரிகை நறுக்குகளும் கூடத்தீயில கருகிவிட் டன! அதை நினைத்தால் என் இருதயம் இரத்தம் வடிக்கிறது.
ஆனாலும் தோழா நீ பாக்கியமான மரணத்தை அடைத்துவிட்டாய். உன் கபுறு' க்குழியில் முக்கர், நக் கீர், என்ற தேவதூதர்கள் பாவபுண்ணியக்கணக்குக ளைக் காட்டிய பின்னர் நீ நேரே சுவர்க்கம் சென்றி ருப்பாய்.
எனக்கும் உனக்குப் போன்ற பாக்கியமான மரணம் வரட்டும். மரணத்தின் பின்னர் என் தனித்தீர்வை முடிந் ததும் நானும் நீயிருக்கும் இடத்திற்கு வரவே ஆசைப் படுகின்றேன். அதற்கு, எனக்காக இறைவனிடம் "துஆ, க்கேள், அங்கே வந்து கிண்ணியா வெண் மணலிலிருந்து நடத்திய சம்பாஷணையை மீண்டும் தொடர்வோம்.
67

Page 43
13. ஒரு அமெரிக்க இலக்கிய
நண்பர்
திருகோணமலையில் ஆசிரியராக இருந்த கால த் தில் நான் அண்ணலைத் தவிர வேறு எவருடனும் சரளமாகப் பேசியது கிடையாது. அந்தக் காலப் பகுதியில் திரு. செ. கணேசலிங்கன், மகாகவி ஆகிய இருவரும் திருகோணமலையிலிருந்ததாக அறிகிறேன். ஆனால் அவர்களுடன் எனக்கு எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை. திருகோணமலைக் கவிராயர் என்ப வரும் இருந்தார். அவரோடும் எனக்குத் தொடர் பில்லை. காலஞ் சென்றவர்களான திரு. அரியநாயகம் திரு. இராயப்பு என்ற இருவரும் தி. மு. க. பாணியில் "நோட்டீஸ்” எழுதினார்களேயன்றிக் கலைஞர்களாக நான் கருதியதில்லை.
திருகோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்ற ஒன்று இருந்ததாம். ஒருநாள் சிலர் என்னிடம் வந்து 'எமது சங்கம் மலர் ஒன்று வெளியிடவுள்ளது. நீங்களும் ஒரு கதை தாருங்கள்’’ என்று கேட்டார்கள். * அப்படியா? திருகோணமலையில் யார் எழுத் தாளர்கள் இருக்கிறார்கள்?" என்று அலட்சியமாகக் கேட்டேன்.
'மகாகவி, கணேசலிங்கம்' என்று அடுக்கினார்கள்
68

ம கா க வி யும் கணேசலிங்கமும் யாழ்ப்பாணத்த வர்கள். பண்டிதர் வடிவேலு மட்டக்களப்பு. புலவர் சிவசேகரத்தையும் தம்பலகாமத்துப் பண்டிதர் சரவண முத்துவையும் தவிரத் திருகோணமலையில் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை."
வந்தவர்களுக்குக் கோபம் வந்து விட்டது. ւյց) புறுத்துக் கொண்டு போய்விட்டார்கள். மலர் வந்தது. ஆனால் அதில் நான் மட்டும் 'விஷயதானம் செய்ய வில்லை.
இப்படியாகக் கர்வப்பட்டுக் கொண் டி ரு ந் த என்னை ஒரு அமெரிக்கர் கவர்ந்தார். திருகோண மலை புனித சூசையப்பர் கல்லூரியில் ஆசிரியராக வும், பின்னர் அதிபராகவும் இருந்த அருட்திரு.ஹினி S. T. என்ற அமெரிக்கர்தான் அவர்.
முன்னை நாட் பாடசாலைப் பரிசோதகராகவும், பின்னர் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லுர ரியில் ஆசிரியராகவும் இருந்த திரு. விஜயரத்தினம் என்பவர் ஈழகேசரியின் நிரந்தரவாசகர். அவர்தான் என்னை அருட்திரு. ஹீனி அவர்களுக்கு எழுத்தாளன் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் மிக்க அன் புடன் என்னுடன் உரையாடினார். அவருடைய (ஆங் கில) வானொலி நாடகங்கள் அமெரிக்காவில் ஒலி பரப்பப்பட்டிருந்தன. அவர் தன் நாடகங்களின் தட் டச்சுப் பிரதிகள் சிலவற்றை என்னிடம் தந்தார். கிறிஸ்துநாதரின் உயிர்ப்பைக் கருவாக வைத்து அவர் எழுதியிருந்த வானொலி நாடகம் என்னைக் கவர்ந்தது.
அவர் மூலந்தான் யேசுசபைக் குரவர்களின் நூல் நிலையத்திலிருந்து முல்க்ராஜ் ஆனந்தின் கூலி, தீண்டா தார் என்ற கதை நூல்களையும், இக்பாலின் பூவரசம் பூவையும் எடுத்துப் படித்தேன்.
69

Page 44
ஒருநாட் சம்பாஷனையின் போது அவர் சொன் னார். "எனக்குத் தமிழ் தெரியாது. தமிழ் இலக்கிய மும் தெரியாது. ஆனால் தமிழ் இலக்கியம் இரண் டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனத் தெரி யும். ஆனால் எங்கள் இலக்கியத்திற்கு இன்னமும் இருநூறு வயதுகள் கூட ஆகவில்லை' என்றார்.
"ஆங்கில இலக்கியத்திற்கு இருநூறு வயதுகள் கூட இல்லையா?, என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.
**ஆங்கில இலக்கியத்தை நான் சொல்லவில்லை. அமெரிக்க இலக்கியத்தையே சொல்கிறேன். நாங்கள் ஆங்கிலத்தில் எழுதினாலும் எங்கள் இலக்கியம் அமெ ரிக்க இலக்கியம். ஜெப்பர்சனின் சுதந்தரப் பிரகட னம்தான் எங்களது மிகப் பழைய இலக்கியம்' என்றார்.
அவர் பேச்சால் "ஈழத்து இலக்கியம்" என்ற கோட் பாடு என்னுள் வலுவடைந்தது. "தேசிய இலக்கியம்" என்ற கோட்பாட்டை முதன் முதலில் எனக்குத் தத் தவர் அருட்திரு. ஹினி அவர்கள்தான். சற்றுக் குள்ள மானவர். செக்கச் சிவந்த முகத்தில் எப்போதுமே புன்சிரிப்புத் தவழும் அக்குரவரின் நினைவு இன்றைக் கும் எனக்கு இன்பமாகவேயுள்ளது.
திருகோணமலை நான் நெருங்கிப் பழகிய இன் னொருத்தர் அருணாசலம் நாயர் என்ற மலையாளி. திருகோணமலை ஏகாம்பரம் முற்றவெளிக்கு முன்னால் இருந்த சந்தியில் தையற்கடை ஒன்று நடத்தினார். அவரது தையல் நிலையத்தில் நாலைந்து தையற்காரர் கள் இருந்தார்கள். அருணாசலம்நாயர் முதலாளி. தையல் வேலையும் செய்தார்.
அருணாசலம்நாயர் அருமையான எளிமையான மனிதர். அடிக்கடி சாயா (தேநீர்) குடிப்பதைவிட
70

வேறு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர். தீவிர கொம்யூனிஸ்ற் மனிதாபிமானி. நிறைய வாசிப்பவர். இன்ரர் படித்த அவர் பிழைப்புத் தேடி இலங்கை வந்தவர்.
மலையாள எழுத்தாளர்களைப் பற்றியும் அவர் களது சிருட்டிகளைப் பற்றியும் எனக்குச் சொல்வார். இரவின் அமைதியில் மாத்ரு பூமியையோ அல்லது வேறு மலையாள சஞ்சிகைகளையோ நூல்களையோ எனக்காக வாய்விட்டுப் படிப்பார். நான் கேட்டு விளங் கிக் கொள்வேன். அவரால் எனக்கு மலையாள மொழி யிலேயே ஒரு பற்று ஏற்பட்டது. :
தமிழ் இனிமையான மென்மையான மொழி என் கிறோம். தமிழின் மெல்லின எழுத்துக்கள் அதற்கு அவைகளைத் தருகின்றன என்கிறோம். ஆனால் மலை யாள மொழிக்குள்ள மிருதுவும் மென்மையும் இனிமை யும் தமிழுக்கு இல்லை என்பேன்நான். இப்போதுங் கூட நான் மலையாள வானொலியிற் கதைகளையும், நாடகங்களையும், பேச்சுக்களையும், கவிதைகளையும் விருப்போடு கேட்கின்றேன். மலையாள மொழியின் மென்மையை அனுபவிக்கின்றேன், நமக்கு மிகவும் நெருங்கிய மொழியானதினால் எனக்கு அர்த்தம் இலகு வாகவே பிடிபடுகிறது.
திருவனந்த புரத்து எழுத்தாளர்களான சுந்தரரா மசாமி மாதவன், நீலபத்மநாபன் ஆகியோரின் தமிழ்க் கதைகளில் மலையாளத்துப்பேச்சை அனுபவித்துப் படிக்கிறேன். மலையாள எழுத்துக்களை அருணாசல நாயரிடம் படித்த நான் மலையாளமொழியில் வாசிக் கும் அளவுக்கு விருத்தியாக்கிக் கொள்ளவில்லையே என்று இப்போது மனவருத்தப்படுகின்றேன்.
இந்தக் காலப்பகுதியில் ஈழநாகன் என்ற புனை பெயரில் தேசீய இலக்கியம், முற்போக்கு இலக்கியம்
汉及

Page 45
மண்வாசனை, பிராந்திய இலக்கியம், உருவும் உள்ள டக்கமும் என்ற தலைப்புகளில் ஈழகேசரியில் இரண்டு "கலங்களில் அரைப்பக்கம் வரும்படியாகச் சிறிய சிறிய கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தேன். அந்தக்காலத் தில் (1955 என எண்ணுகிறேன், திரு.சிதம்பர ரகு நாதன் அவர்கள் இலங்கைக்கு வத்திருந்தார். கொழும் பில் வைத்து யார் இந்த ஈழநாகன் என்று அவர் கேட் டதாக ஈழகேசரிப் பத்திரிகை மூலமாக அறிந்தேன்.
பிராந்திய இலக்கியமாகப் புது  ைம ப் பித்தனின் மொழி நடையையும் திருநெல்வேலி வட்டாரத்து பாத் திரங்களை அவர் வார்த்திருப்பதையும், மாப்பசான் நார்மண்டிப்பிரதேசத்தைத் தன்கதைகளில் கொண்டு வந்ததையும் நான் மூதூரை என்கதைகளிற் கொண்டு வந்ததையும் குறிப்பிட்டேன். அக்கட்டுரை ஒன்றி ல் கொம்யூனிஸ்ற்றுகள் மட்டும் முற்போக்கு இலக்கியம் படைக்க வில்லை. "ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே' என்று பாடிய தேவாரகாரரும் முற்போக்கு இலக்கியக் காரர்தான் என எழுதியிருந்தேன்,சுமார் இருபது வாரங் கள் இத்தொடரை எழுதினேன்.
** யார் இந்த ஈழநாகன்? என்று கொழும்பிற்கேட்ட சிதம்பர ரகுநாதன் திருக்கோணமலைக்கும் வந்திருந் தார். வித்தியாலயம் ஒழுங்கையில், பீடிசுற்றும் மலை யாளிகளோடு அவர் இருந்தபோது அருணாசலம் நாய ரோடு சேர்ந்துசென்று அவரைச்சந்தித்தேன்.
நான்தான் ஈழநாகன் என்பதை அவர் அப்போது அறிந்திருந்தார். அவரோடு பேசினேன், அவருடைய ரகு நாதன்கதைகள், முதலிரவு, கன்னிகா, இலக்கிய விமர் சனம் ஆகிய நூல்கள் பற்றி அவரோடு பேசினேன். ரஷ்யமொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சில கதைகளுக்
72

காகக் கிடைத்த வருமானத்தில் ‘காலாட்சேபம் நடத்து வதாக அவர் சொன்னார்.
அன்றிரவு நெல்சன்தியேட்டரில் ஏதோ ஒரு ஆங் கிலப்படம் பார்த்தோம். அடுத்த நாள் மதியம் அவ ருடன் சேர்ந்து பற்றிமா வீதியில் இருந்த ஒரு இலங்கை யர் வீட்டில் அவர்சாப்பிட்டார். நானும் அழைக்கப் பட்டுப்போயிருந்தேன்.
அவர் எந்த இலக்கியக்கூட்டத்திலும் அவர் பேச வில்லை. திரும்பிப்போய் விட்டார்.
எட்டுமுழவேட்டியையும் இரண்டாகமடித்து நான்கு முழம்போலவே கட்டினார். தொளதொளத்த ஜிப்பா சற்றுச்சிவலை, மூக்குக்கண்ணாடி, புதுமைப்பித்தன் பாய்ந்து பாய்ந்து நடப்பதாக எழுதியிருந்தார் அல் லவா? அதே நடைதான் அவருக்கும் ஏறத்தாழ நமது டானியல் போல அவர் தோற்றம். அழகான வெள்ளி வெற்றிலைப்பெட்டி திருநெல்வேலிப் பாஷையில் "வெற் றிலைச் செல்லம்' வைத்திருந்தார். நிறையக்கொழுந்து வெற்றிலை அதில் இருந்தது. அ டி க் க டி வெற்றிலை போட்டுக்கொண்டார்.
அதைப்பார்த்தபோது புதுமைப்பித்தனின் பாத்தி ரம் ஒன்று வெற்றிலை போட்ட ஞாபகம் எனக்குவந் தது. ஆனால் சுண்ணாம்பு காய்ந்திருக்கவில்லை.
நான் சந்தித்த முதல் இந்தியத் தமிழ் எழுத்தா ளர் அவர்தான். அவரைச்சந்தித்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கிறது: ܫ

Page 46
14. நாவல் எழுதினேன்
திருகோணமலையில் ஆசிரியனாக இருந்த காலத் தில் ஈழகேசரி ஆசிரியர் இராஜ அரியரத்தினம் அவர் கள் ஈழகேசரிக்கு நாவல் ஒன்று எழுதும்படி கடிதம் மூலம் கேட்டார். நாவல் முழுவதையும் ஒரேயடியாக எழுதியனுப்ப முடியாது. பகுதி பகுதியாக அனுப்பு வேன் என அவருக்குக் கடிதம் எழுதினேன்.
அரியரத்தினம் அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டு நாவலின் பெயரை அறிவிக்குமாறு கேட்டார்
முதற் கடிதத்தோடு நாவலை மனதுள் உருவாக் கிக் கொண்டிருந்தேன். மூதூர்க் கதாபாத்திரங்களைக் கதையில் உலவவிட வேண்டும். மூதூர்ப் பிராந்தியக் கிராமத்து மக்கள் எல்லோருமே ஒன்று கூடும் திருவிழா வான வெருகற் சித்திரவேலாயுதர் திருவிழா கதையில் வரவேண்டும். மலைநாட்டின் அழகு கதையிற் கொண்டு வரப்ப்ட வேண்டும். நானும் கவிஞர் வி. இ இராச துரையும் இளமைச் சேஷ்டைகளோடு “மேய்ந்து' திரிந்த கல்முனைப் பட்டினம் கதையில் வரவேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தேன்.
ஆனால் இரண்டாவது கடிதம் என்னைக் குழப்பி யது. கதையின் பேரென்ன?
74

ஆமாம். கதையின் பேரென்ன?
இதுவரை சிறுகதைகள்தான் எழுதினேன். ஒரு சிறுகதையை எழுதி முடித்த பின்னரே அக்கதைக்கு பேர் சூட்டினேன். ஆனால் இப்போது பிள்ளை பிறக்கு முன்னரே அதற்கு ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்! என்ன பெயர் வைப்பது?
புதுமைப்பித் தனிடம் ஒர் ஆசிரியர் தம் சஞ்சிகைக் குக் கதை கேட்டாராம். அவர் தருகிறேன் தருகிறேன் என்று சொல்லிக் காலங்கடத்தியிருக்கிறார். ஆசிரியர் நெருங்கிய போது இதோ எழுதி விட்டேன், தருகி றேன் என்றாராம். கதையின் பெயரைச் சொல்லுங் கள் இந்த வார இதழில் விளம்பரம் கொடுக்க வேண் டும் என்று கேட்டார். ஆசிரியர் "நாசகாரக்கும்பல்” என்று பெயர் கொடுத்தாராம் புதுமைப்பித்தன். இத்தனைக்கும் அவர் கதையை இன்னமும் எழுதத் தொடங்கவேயில்லை!
*அந்த நாசகாரக்கும்பல் முப்பத்து முக்கோடி தேவர்களா? அல்லது அதற்கும் சற்று எண்ணிக்கைக் குறைவான அசுரர்களா என்று எனக்கே தெரியாது நான் உதவி ஆசிரியராக இருந்த பத்திரிகையில் ஒரு கவிதை பிரசுரமாயிற்று. அக் கவிதையில் வந்த ‘நாட் டினுடை நலங்கெடுக்கும் நாசகாரக் கும்பல்" என்று ஒரு வரி, அதிலேயுள்ள "நாசகாரக்கும்பல்" என்ற சொற் சேர்க்கை எனக்குப் பிடித்திருந்தது. கதை கேட்டு நெருங்கிய ஆசிரியரிடம் அத்தொடரையே கதையின் தலைப்பு எனச் சொல்லித் தப்பித்துக் கொண்டேன். என்று புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார் அல்லவா?
நான் தங்கியிருந்த விடுதியில் வேறு சில ஆசிரி யர்களும் இருந்தனர். மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு ஆசிரியரின் காதலி திடீரெனத் தன் காதலனைத் தேடி 'ஒடி' வந்து விட்டாள். அவளைத் தொடர்ந்து அவள்
75

Page 47
தாயும் உறவினர்களும் தேடிக் கொண்டு வந்தார்கள் வந்தவர்களது பேச்சிலே "கொழுகொம்பு’ என்ற வார்த்தை ஒரு கிழவர் வாயிலிருந்து வந்தது. அந்தச் சொல் எனக்குப் பிடித்திருந்தது. கதையின் பெயர் "கொழுகொம்பு’ என்று ஈழகேசரிக்கு அறிவித்தேன்.
ஈழகேசரியில் விளம்பரமும் வெளியாயிற்று.
நான் கொழுகொம்பை எழுதத் தொடங்கினேன். மூதூரிலிருந்து தொடங்கிக் கதையை எழுத ஆரம்பித் துக் கதையை நகர்த்தினேன். ஒரு இரவிற் தொடர்ந்து நான்கு அத்தியாயங்கள் எழுதி ஈழகேசரிக்கு அனுப்பி விட்டு வெள்ளிக்கிழமை குட்டிக்கரச்சிக்குப் போனேன்.
என் மனைவியிடமும் அண்ணலிடமும் எனது நாவல் பற்றிச் சொன்னேன். அவர்கள் இருவரும் ஆனந்தப்பட்டார்களேயொழிய உருப்படியாக எந்த யோசனையையும் சொல்லவில்லை.
ஆனால் நாவலை எழுதத் தொடங்கி விட்டால் அதன் பின் கதாபாத்திரங்களே கதையை நகர்த்திச் செல்லும் என்றது உண்மையாகத் தான் இருந்தது. திருகோணமலைக்கு வந்து திங்கட்கிழமை இரவு கதையை எழுதினேன். கதை வெருகல் சென்று, பின் னர் நான் முன்னர் தங்கியிருந்த கொழும்பு மருதானை விடுதிக்குச் சென்றது.
செவ்வாய்க்கிழமை இரவும் எழுதிவிட்டு எழுதிய வைகளை மீண்டும் ஈழகேசரிக்கு அனுப்பினேன். கதா பாத்திரங்களின் பெயர்களை மறந்து விடாமல் இருப் பதற்காக அதுவரை எழுதியதில் வந்த கதாபாத்தி ரங்களை ஒரு தாளில் நாடகங்களின் முன்னால் நாடக பாத்திரங்களின் பெயரை எழுதி வைக்கும் பாணியிற் குறித்து வைத்துக் கொண்டேன். ஆனாற் பின்னர் அக்குறிப்புத் தேவையில்லாமல் இருந்தது. கதை பிர
76

சுரமாகத் தொடங்கியதும் அதைப்படித்தே பாத்திரங் கள் மாறுபட்டுப் போகாமலும் தொடர்பு விட்டுப் போகாமலும் எழுதக் கூடியதாக இருந்தது. ஆறு, ஏழு வாரங்களில் ஒவ்வொரு வாரத்திலும் திங்களும் செவ்வாயும் எழுதி நாவலை முடித்தேன். நாவல் தொடர்ந்தும் பிரசுரமாகியது.
கொழுகொம்பைப் பிரமாதமான நாவல் எனச் சொல்ல மாட்டேன், என் கிராமத்து மாந்தர்கள் கதா பாத்திரமாக வரும் முதல் நாவல் அதுதான். அதுவே அதன் பெருமை , நாவல் கவிதைமிடுக்குடன் கூடிய நடையோடு உணர்ச்சிகள் கொப்புளிக்க எழுதப்பட்ட தாகவே இப்போது எனக்குப்படுகிறது. நாவலின் கடை சிப்பகுதியில் கதாநாயகி, கதாநாயகனுக்கு எழுதிய கடி தத்தை இப்போது படித்தாலும் எனக்குப் புல்லரிக்கி றது. அந்நாவலின் கதாநாயகி என் மனைவிதான்.அவ ளைத் ‘தங்கம்' என்றுதான் வீட்டில் அழைப்பார்கள். அந்தத் தங்கத்தைத்தான் நான் கனகம் ஆக்கினேன். தங்கம், கனகம் என்ற இரண்டுமேஓரு பொருட் சொற்க ளல்லவா?
நாவல் பிரசுரமாகியபின் 1956ல் நான் யாழ்ப்பா ணம் சென்றேன். பொன்னையா நினைவு மன்றத்தி னர் கொழுகொம்பை நூலாக்க என்னிடம் அனுமதி கேட்டார்கள். நான்கொடுத்தேன். அவர்கள் ஐஞ்ஞாறு ரூபா பணம் தந்தார்கள். அக்காலத்தில் அது பெரிய தொகைதான், நான் எழுதி 'உழைத்த பெரியதொகை யும் அதுவேதான்!
கொழுகொம்புக்குப்பின்னால் நான் எழுதிய துறைக் காரன், கிரெளஞ்சப் பறவைகள் இரண்டுமே ஈழத்து நாவல் உலகில் இரண்டு மைற்கற்கள்!
நான் திருக்கோணமலையிலிருந்து மாற்றம் பெற் றுச் சென்ற இடம் ஆலங்கேணி, ஆலங்கேணிக்கு மூதூ
77

Page 48
ரிலிருந்து வருகையில் மகாவலிகங்கையை வள்ளம் மூலம் கடக்கவேண்டும்.
மூதூரிலிருந்து ஆசிரியர்கள், தந்திக்கம்பி திருத்து பவர்கள், வியாபாரிகள், மாட்டுக்காரர்கள் ஆகிய பல ரும் கிண்ணியாப் பக்கமாக இருந்து காய்கறிவியாபா ரிகள், விவசாயிகள், தயிர்க்காரர்கள் என்றபலரும் நாளாந்தம் மகாவலிகங்கையைக்கடப்பார்கள். அதிகா லையிலிருந்து இரவு எட்டு ஒன்பது மணி வரையும் துறைவள்ளம் இவர்களை ஏற்றிக்கொண்டு அக்கர்ைக் கும் இக்கரைக்கும் செல்லும், ஏறத்தாழ நான்கு ஆண் டுகளாக இதைக் கூர்ந்து அவதானித்திருக்கிறேன். அத் தச்சாதாரண மக்களோடு பழகியிருக்கிறேன்.
ஈழகேசரியை அதன் புதிய நிர்வாகிகள் கழுத்தை நெரித்துக் கொன்றபின்னர் இராஜ அரியரத்தினம் அவர் கள் ஈழநாடு பத்திரிகை ஆசிரியரானார், ஈழநாட்டுக்கு அவர் நாவல் கேட்டார். துறைக்காரனை ஈழநாட் டிற் தான் எழுதினேன்.
வேலாயுதம் என்றதுறை வள்ளக்காரன்தான் அக் கரைப்படுத்தும் ஒவ்வொரு வரைப்பற்றி வள்ளத்தைச் செலுத்திக் கொண்டே தன் அறிவுக்கெட்டியவரையிற் சிந்திக்கிறான். அவன் இரவிலே வள்ளத்தைக்கட்டி விட்டுப் படுக்கையில் கதையும் முடிகிறது. ஈழத்தமிழ் இலக்கியத்தில் இது ஒர் புதியசிருட்டிதான் ஆனால் இன்னமும் நூலாக வெளிவரவில்லை!
கிரெளஞ்சப்பறவைகள் இலங்கையில் வெளி வந்த ஒரு கைவிரல்களுக்கும் குறைந்த சரித்திர நாவல்களில் மிகச்சிறந்தது.
தேவ நம்பிய தீசன் காலம் தொடக்கம் அசேலன் வரையுள்ள காலம் வரையும் நாட்டிலே பல விகாரங் களும் தாது கோபங்களும் கட்டப்பட்டன. (எந்தக் குளமும் கட்டப்பட்டிருப்பதாக இல்லை.)
78

அசேலன் காலத்தில் பஞ்சம் ஏற்பட்டது.
சேனன் கூந்திகன் என்ற இரண்டு குதிரை வியா பாரிகள் அசேலனைக் கொன்று ஆட்சியைக்கைப்பற்றி னர்.
மகாவம்சம்தரும் இந்த உண்மைகளின் இடைவெளி களைக் கற்பனை கொண்டு நிரப்பியதுதான் கிரெளஞ் சப் பறவைகள்.
இக்கதையை இலங்கையின் முதல் அரசியற்புரட்சி என்ற அர்த்தம் தொனிக்க ‘முதல்முழக்கம்' என்ற சரி த்திர நாடகமாக சம்பூர் பாடசாலையில் 1963ல் மேடை யேற்றினேன். 1975ல் தான் கிரெளஞ்சப் பறவைகள் என்ற நாவலாக்கினேன். செ. குணசிங்கம் அவர்களின் கோணேஸ்வரமும் ராகுல் சாங்கிருத்தியாயரின் "வெஸ் காவிலிருந்து கங்கை வரை" என்ற சரித்திர நூலும் எனக்குதவின. நாவலின் கதை நிகழிடங்களை நேரிற் காண அநுராதபுரத்திலும் வடமத்திய மாகாணக்கிரா மங்களிலும் பலமுறை அலைந்திருக்கிறேன். அந்நாவல் பத்திரிகை எதிலும் வெளிவராமற் புத்தகமாகவே வீரேகசரி வெளியீடாக வந்தது.
அது புத்தகமாகிய காலத்தை நினைக்கையில் என் கண்கள் கலங்குகின்றன. என் மனைவி இறந்த சில மாதங்களில் அது புத்தகமாகியது. அது என் "அதிஷ் டங்கெட்ட குழந்தை!
1991ல் வீரக்ேசரியில் வெளிவந்த ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது என்ற நா வல் சென்ற ஆண்டு உதயம் வெளியீடாக நூலுருப்பெற் f0g.

Page 49
15. கலைப்புலவரும் நானும்
என் சரித்திர நாவலான கிரெளஞ்சப் பறவை களைப் பற்றி ஏற்கனவே சொன்னேன் அல்லவா? சரித்திர நாவல் எழுதவேண்டும் என்ற ஆசை எனக் குத் தொடக்க காலத்திலேயே இருந்தது. அதற்கா கச் சரித்திர கால மாந்தரின் உடைகள், அணிகள். ஆயுதங்கள் ஆகியவற்றைச் சரிவர அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். கம்பராமாயணத்திற் பலவிதமான ஆயுதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன ஆனால் அந்த ஆயுதங்களில் சிலவற்றின் உருவம் எனக்குத் தெரியாது
ஈழகேசரி ஆசிரியர் கலைப்புலவர் க. நவரத்தி னம் அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் . நான் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையிலிருந்த கலைப்புலவர் இல்லத்திற்குச் சென்று ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலமோ அல்லது அதற்குக் கூடுதலா கவோ அவரிடம் பாடங்கேட்டேன். ஒரு வாரகாலம் இது நடந்தது.
கலைப்புலவர் பழக மிக இனியவர். அப்போது அவருக்கு வயது ஏறத்தாழ அறுபது இருக்கும். ஆனால் வாலிப மிடுக்கோடுதான் பழகினார். சற்றும் மனஞ் சுளிக்காமல் எனக்குத் தேவையான விளக்கங்களைத்
80

தந்தார். ஆசாரசீலரான அவர் முன்னால் மறந்தும் சிகரட் புகைத்து விடாதே என்று அரியரத்தினம் என்னை ஏற்கனவே எச்சரித்திருந்தார். நான் கலைப் புலவரிடம் பணிவுள்ள மாணவனாகவே பழகினேன். அந்த முறை யாழ்ப்பாணத்தில் கலைப் புலவரின் "ஈழத்திற் கலைவளர்ச்சி தென்னிந்தியக் கலைகள் என்ற இரண்டு நூல்களையும் வாங்கிக் கொண்டேன்.
ஆனாற் சரித்திர நாவல்களை எழுதும் எண்ணம்' என்னுட் படிப்படியாக அருகிக் கொண்டு வந்தது. *அதற்குச் சரித்திர நூல்களைப் படிக்க வேண்டும். சரித்திர சம்பந்தமான இடங்களைப் பார்க்க வேண் , டும். கதை நிகழ்காலத்து மாந்தரின் வாழ்க்கையைத் துல்லியமாக அறிந்திருக்க வேண்டும். இவைகளுக்குப் பணம் வேண்டும். இவைகளுக்கெல்லாம் இங்கு வாய்ப் புக் குறைவாகவே இருந்தது".
வேங்கையின் மைந்தன் என்ற நாவலை, அகிலன் அவர்கள் கல்கியில் எழுத முன்னர் "இலங்கைக்கு வந்து இலங்கையைச் சுற்றிப் பார்க்க கல்கி நிறுவனம் அவ ருக்குத் தாராளமாகப் பணம் செலவழித்தது. கல்கி யிற் கதை வெளியாகிய போது அதற்கு வாராவாரம் சன்மானமும் நிறையக் கிடைத்தது. இதைப் பின்னர் ஒருதடவை வந்த அகிலனே என்னிடம் சொன்னார். குள்ளமான, எளிமையான அந்த மனிதரை நானும் சானாவும் கிறீன்லான்ட் கொட்டலிற் சந்தித்தோம். கல்கி நிறுவனம் அத்தனை வசதிகளைச் செய்து கொடுத்திருந்த போதும், அகிலன் வேங்கையின் மைந் தனைக் கல்கியில் எழுதுகையில் “சோழப்படை திருக் கேதீஸ்வரத்துக்கு அண்மையிற் கப்பலிறங்கி மகாகலி கங்கைக்கரையோரமாக ரோகணையை நோக்கிச் சென் றது" என்று எழுதியிருந்தார்.
கல்கியில் அதைப் படித்த நான் அதிர்ந்து போனேன் திருக்கேதீஸ்வரத்துக்கு அண்மையிலிறங்கினால் அருவி
81

Page 50
யாறு என்ற ஆற்றங்கரை வழியாகத்தான் செல்ல வேண்டும். அருவியாற்றைக் கடம்பநதி என்று மகா வம்சம் சொல்கிறது. திருகோணமலைக்குச் சமீபத்தில் இருப்பது மகாவலிகங்கை' என்று அகிலனுக்குக் கடி தம் எழுதினேன். விளக்கத்திற்காக இலங்கைப் படத் தில் திருக்கேதீஸ்வரத்தையும் திருகோணமலையையும் அருவியாற்றையும் மகாவலிகங்கையையும் குறிப்பிட் டுக் காட்டியிருந்தேன்.
அகிலனிடமிருந்து எனக்கு ஒரு போஸ்ற்காட் விரை வாகவே கிடைத்தது. அதில் தன் தவறை ஒப்புக் கொள்ளாமல் மழுப்பியிருந்தார்.
வேங்கையின் மைந்தன் இலங்கையோடு தொடர் புடைய நாவல் என்பதால் நான் அதைத் தொடர்ந்து படித்தேன். அதில் அவர் மகிந்தனின் மகன் மறைந்து வாழ்ந்ததாகக் குறிப்பிடும் இடம் டம்புல்லக் குகைக் கோயில். ஆனால் அவர் காட்டும் அகழிகள் முதலை கள் எல்லாம் வெறும் கற்பனை. அகழி ஒன்றிருந்த தடந்தானும் டம்புலவில் இல்லை!
தமிழ்நாட்டுச் சரித்திர நாவலாசிரியர்கள் தம் கற் பனையில் அகழிகளைச்சிருட்டிக்கிறார்கள். அவர்கள் வர்ணிக்கும் மாடமாளிகைகளையும் இரகசிய அறைக ளையும் எந்தக்கட்டிடக்கலை என்ஜினியராலும் யதார்த் தமாக நிர்மாணிக்க முடியாது. ஒரே குழப்பமாக இருக் கின்றன. வாசகர்களும் கதாசுவாரஸ்யத்தில் அவ்வர் ணனைகளைத் தவித்து மேலே வாசிக்கிறார்கள். டெக் கிலே படம் பார்ப்பவர்கள் படத்தின் விருப்மில்லாத பகுதியை ஒடவிடுவது" போல!
கதையையும் "தட்டி நீட்டுகிறார்கள்.இதைச் சாண் டில்யனே தன்நாவலின் முன்னுரை ஒன்றில் (கடற்புறா என்று நினைக்கிறேன்) தன் நாவலை நீட்டியிருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
82

சமீபத்தில் இலங்கைவந்த எழுத்தாளரும் படநட் டுவாங்கருமான கோமல் சுவாமிநாதன் திருகோண மலையிற் பேசுகையில் இருநூறு ஆண்டுகள் மட்டுமே இலக்கிய வயதுள்ள அமெரிக்கர்கள் தம்படங்களுக்காக ஒரு அமெரிக்க "மித்’தை உருவாக்கினார்கள். "கெள போய்' படங்கள் அப்படிப்பட்டவை என்று சொன்னார்.
தமிழ்நாட்டுச் சரித்திர நாவலாசிரியர்களும் குளறு படியான குகைகளையும் அரண்மனைகளையும் தம் கதை களிற் சிருட்டித்து தமிழ் நாட்டிலும் ஒரு புதுவகை மித்'தைச்சிருட்டித்திருக்கிறார்கள் என்றே நான் எண் ணுகிறேன்.
ஆனாலும் அரு. ராமனாதன் எழுதிய வீரபாண்டி யன் மனைவியும், ஜெகசிற்பியனின்' 'நந்திவர்மன் காதலி" யும் சிறந்த சரித்திர நாவல்கள்.
சரித்திர நாவல்களைப்பற்றி நினைக்கையில் சமீ பத்தில் வாசித்த செங்கை ஆழியானின் கந்தகோட்டம் நினைவு வருகிறது.
செங்கை ஆழியான் அவர்கள் அருமையான கருவை இக்காலகட்டத்தில் எழுதவே வேண்டிய கருவை எடுத்து ளார். ஆனால் நூற்றுக் கண்கான ஆண்டுகளில் நடந்த கதையைத் தொட்டற் தொட்டமாகச் சொல்கையில் கதையின் சரடு விட்டுப்போவதாக எனக்குப்படுகிறது. "அந்த நல்லூர் இராசதானிக்கதையை, சுந்தரராம சாமியின் ஒரு புளியமரத்தின் கதைப்பாணியிற் சொல்லி யிருந்தால் வெற்றியடைந்திருக்கும் என நான் எண்ணு கிறேன். இலங்கையின் மகோன்னத சரித்திர நாவலாக இருந்திருக்கும், என நினைத்துக் கொண்டேன்.
சரித்திர நாவல்களை நினைக்கையில் இன்னமும் ஒன்று எனக்குப் படுகின்றது. கல்கி அவர்களின் சரித் திரநாவலை மக்கள் விழுந்து விழுந்து படித்தார்கள்.
8

Page 51
இப்போதும் படிக்கின்றார்கள் நானுங்கூட அவரின் சிவகாமியின் சபதம் என்ற நாவலை ஆர்வத்தோடு படித்திருக்கிறேன். தனது சரித்திர நாவல்களின் மூலம் ஒரு வாசக பரம்பரையைச் சிருட்டித்தவர் கல்கி. அதற் காகத் தமிழ் நாடு அவருக்குக் கடமைப்பட்டுள்ளது.
கலைப்புலவரின் மாணவனாக இருந்த அதே சித் திரை மாதத்தில் நான் சந்தித்த இன்னோர் யாழ்ப் பாணத்து அன்பர் சமூகத்தொண்டன் க. பே. முத் தையா அவர்கள் ஆகும்.
கிறீஸ்தவரான அவர் சிறந்த பக்திமான் வடமராட் சியைச் சேர்ந்தவர். அவர் என்னைச்சந்தித்ததும் அடுத் தநாள் தான்சுண்ணாகம் வருவதாகவும் தம்மோடு வந்து இரண்டு மூன்றுதினங்கள் தங்கியிருக்கும் படியும் கேட்டுக் கொண்டார். அடுத்தநாட்காலை சுண்ணாகத்திற்குவந்து சுண்டிக்குழி யிலுள்ள தன் வீட்டிற்குக்குக் கூட்டிச் சென்றார்.
எளிமையானவர். படாடோபம் சற்றுமே இல்லா தவர்" குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எழுத்தாளர் என்பதற்கில்லையாயினும் "சமூகத் தொண்டன். என்ற சிறிய மாதசஞ்சிகையை நெடுங்காலம் நடத்தி வந்தார். அதற்கு எழுதும்படி என்னைக் கேட்டார்.
மத சம்பந்தமான நூல்களை அவர் வைத்திருந் தார். கிறிஸ்தவர்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டு பற்றிப் பல செய்திகள் அவர் மூலமா? எனக்குத் தெரிந்தன.
அவரது சுண்டிக்குழி வீட்டில் இரண்டு நாட்கள் அவரது விருந்தினனாக தங்கியிருந்தேன். மூதூருக்கு வந்த பி ன் னர் அவர் கேட்டுக் கொண்டபடி சமூகத் தொண்டன் இதழ்களுக்கும் எழுதினேன். சமு
84

கத் தொண்டன் பெரிதாக வெளியிட்ட மலர் ஒன் றிலே எனது சிறந்த சிறுகதை ஒன்று வெளியாகியுள்
து. பெயரை மறந்து போனேன்.
சற்றுக் கறுப்பாய் உதாரமாய்ச் சதைப் பிடிப் பாய் இருந்த தன் உடலில் எப்போதுமே முழுக்கை ஆவாரம் அணிந்திருந்த அந்த மனிதரை நினைக்கி றேன்.
* உப்பிட்டவரை உள்ளளவும் நினை" என்பது பழ மொழி. அவர் வீட்டு உப்புத் தண்ணீரை (சவர் அல்ல கடலுப்பு)யும் என்றைக்குமே மறக்க முடியாது.
85

Page 52
16. கரவைக்கவிகந்தப்பனார்
கரவைக்கந்தப்பனாரை உங்களுக்குத் தெரியுமா? இளம் இலக்கியத் தலை முறையினருக்குத் தெரிந்திராது.
புதுமைப்பித்தன் கவிதைகள் எழுதுகையில் தமக்கு வேளூர் வெ. கந்தசாமிப்பிள்ளை என்று பேர்வைத்துக் கொண்டார். அவரது வாரிசான சிதம்பரரகுநாதன் கவிதைகளிற் த ம்  ைம த் திருச்சிற்றம்பலக்கவிராயர் என்று அழைத்துக் கொண்டார். அதேபாணியில் 'ஈழ த்துப்பேனா மன்னர்கள்’ என்ற வரிசையில் ஈழத்து எழுத்தாளர்களைப்பற்றி எழுதுகையில் ஒரு பிரபல ஈழ த்து எழுத்தாளர் தமக்குத் தாமே 'கரவைக் கவி கந்த ப் பனார்’ என்று பெயர் சூட்டிக்கொண்டார்.
ஈழகேசரியில், ஈழத்துப் பேனா மன்னர்கள் என்ற வரிசையில் அவர் என்னைப்பற்றியும் எழுதினார். அப் போதுங்கூட எனக்கு இந்தக் கரவைக்கவிகந்தப்னார் யாரெனத் தெரியாது.
நான் 1956ல் முதற்தடவையாக யாழ்ப்பாணம் சென்ற அடுத்த நாட்காலை ஈழகேசரிக் காரியாலயம் சென்றேன். திரு. இராஜ அரியரத்தினம் அவர்கள் என்னை அன்புடன் வரவேற்று இலங்கையர் கோனுக் குப்போன்செய்தார். சில நிமிடங்களில் இலங்கையர் கோன் தன் காரில் அங்குவந்தார் என்னைக்காரில் ஏற்
86

றிக்கொண்டு வீட்டுக்குப் போனார். அவரோடு சேர்ந்து யாழ்ப்பாணத்துப் பனங்கள்ளை என் வாழ்வின் முதற் தடவையாகச்சுவைத்தேன். “சிறிய கட்பெறினே எமக் கியூமன்னே" என ஒளவையார் புறநானூற்றிற் குறிப் பிட்டிருப்பது பனங்கள்ளைத்தானோ என்னவோ?
யாழ்ப்பாணம் எனக்குப் புதுமையாகவே இருந்தது. பனைமரச்சோலைகளும், கலட்டித்தரையைக் கிளறிக் கல்லைப் பெயர்த்து மண்ணைக்கிண்டி பதப்படுத்தி ஆழக்கிணறுகளிலிருந்து நீரிறைத்து மண்ணைப்பொன் னாக்கும் யாழ்ப்பாண விவசாயின் உழைப்பும் என்னைக் கிறங்கச் செய்தன. அந்த யாழ்ப்பாணத்து விவசாயியை தொடங்கும் மிடுக்கு" என்ற தன் பாடலில் மகாகவி * மீண்டும் எவ்வளவு சோக்காகப் படம்பிடித்திருக் கிறார்.
நானும் பண்டிதர் நாகலிங்கம் அவர்களின் மகன் சோதியும் (அப்போது அவன் ஸ் கந் த வ ரே ரா தயாக் கல்லூரி மாணவன்) துவிச்சக்கரவண்டிகளில் யாழ்ப் பாணக் குடாநாடு முழுமையும் சுற்றினோம்.
கீரிமலைக் கேணியருகில் அண்மையிற் கனடாவிற் காலமான திரு. V. பொன்னம்பலம் அவர்களைச் சந் தித்தேன். அப்போது அவர் ஒரு மாத இதழை நடத் திக் கொண்டார். அதன் பெயர் நினைவுக்கு வரமாட் டேன் என்கிறது.
யாழ்ப்பாணம் சென்று தி. ச. வரதராசன் அவர் களைச் சந்தித்தேன். ஏற்கனவே அவருடன் எனக்குக் கடிதத் தொடர்பிருந்தது. அவரின் மாத இதழ்களில் எழுதியிருக்கிறேன். தி. ச, வரதராசன் எழுத்தாளர் , பத்திரிகையாசிரியர் என்று நிறையப் புகழ் பெற்றவர் . அவருடைய சிறுகதைகளிற் சிறிது தி.மு.க. வாடை அடிக்கிறது. என அவரிடம் சொல்லிய போது அவர் புன்னகை செய்தார். مر
t
87

Page 53
மறுமலர்ச்சி, ஆனந்தன், வெள்ளிமணி எனப் பல சஞ்சிகைகளை வெளியிட்டு இலக்கியப்பணி புரிந்தவர். நீண்ட ஒல்லியான தோற்றத்தையுடைய வரதராசன் அவர்கள் கைச் சட்டையின் நீளக் கையை முழங்கை வரை மடித்து விட்டுக் கொள்வார். அடிக்கடி பொடி போட்டுக் கொள்வார். மென்குரலிற் பேசுவார். நீண்ட "கொரிடோரில் அமைந்துள்ள அவரது ஆநந்தா அச் சகத்தின் இரைச்சலுக்கிடையில் இருந்து கொண்டு அந்த மனிதர் எப்படி எழுதுகிறார் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அரசாங்கம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு மதிய உணவாகக் கொடுத்த 'பணிசை” திடீரென நிறுத்திய போது ஆசிரியத் தலையங்கமாக அவர் எழுதிய "வாத்தியார் அழுதார்’ என்ற சிறுகதை இன்றைக்கும் என் நெஞ்சிற் பசுமையாக இருக்கும். அருமையான சிருஷ்டி! அன்னாரது சிறுகதைகளில் வரும் "வாத்தியார் ஈழத்து இலக்கியத்தில் நித்தியத் துவம் பெறுவார் என்றே இப்போதும் நம்புகிறேன். இப்போது அவர் பேனா ஓய்ந்து விட்டதே! ஏன்?
ஆனந்தா அச்சகத்திற் கல்கி சிறு கதைப்போட்டி யில் வெற்றி பெற்ற தாழையடி சபாரத்தினம் அவர் களையும் சந்தித்தேன்.
அதன் பின்னர் நான் சந்தித்த எழுத்தாளர் கண்க செந்திநாதன் அவர்கள்.
இரண்டு மூன்று நாட்களாக யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதும் துவிசக்கர வண்டியிற் சுற்றிக்களைத்து விட்டேன். சுண்ணாகம் சந்திக்கருகாமையில் பொலிஸ் நிலையத்துக்கு மூன்னால் இருந்த பண்டிதர் நாகலிங் கம் அவர்கள் இல்லத்தில் , எ ன க் கு ஒதுக்கித்தந்த மேலமாடி அறையில் ஒய்வெடுத்துக் கொண்டேன். பண்டிதர் அவர்களின் பழந்தமிழ் இலக்கிய நூல்களை மேய்ந்தேன். மீண்டும் ஒரு நாள் ஈழசேரிக்காரியால
88

யம் சென்றபோது தான் அங்கு கனக செந்தி நாதன் அவர்களைக் கண்டேன். கண்டதும் அவர் சொன்னார். ""நாளைக்கு நீர் என் வீட்டுவிகுந்தினர். நாளைக் காலை ஒன்பது மணிக்கு வருகிறேன் அழைத்துப்போக’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
சொல்லியது போல அடுத்த நாள்வந்தார். காரில் ஏற்றிக் கொண்டு தன் ஊ ரா ன குரும்பசிட்டிக்குக் கொண்டு சென்றார். மலைக்கவேண்டாம்! வாடகைக் காரிற்தான். தமிழ் ஆசிரியரும் இலக்கிய காரருமாகிய கனக செந்தினாதனாவது கார் வாங்குவதாவது?
கனகசெந்திநாதனின் அமைதியும் குளுமையுமான வீட்டிலே அவரது புத்தக அறையைக் கண்டபோது நான் மலைத்துப்போனேன். ஏராளமான நூல்களைத் தரம் பிரித்து அடுக்கிவைத்திருந்தார், பல்வேறு சஞ்சி கைகளில் வந்த நாவல்கள் பிரித்தெடுக்கப்பட்டு அரு மையாக "பைன்ட் செய்து வைக்கப்பட்டிருந்தன ஏராளமான ஒட்டுப்புத்தகங்கள் இருந்தன. ஒரு ஒட்டுப் புத்தகத்தை என்னிடம் தந்தார். ஒரு நீளமான சீ. ஆர். கொப்பி, கொப்பியின் அட்டையில் வ. அ. இராசரத் தினம் என்றபெயர் ஏதோ பத்திரிகையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. பிரித்து பார்த் தேன். பத்திரிகைகளிற்பிரசுரமாய என்கதைகள் பல வெட்டி ஒட்டப்பட்டிருந்தன. மகிழ்ச்சியிலும் ஆச்சரித் திலும் நான் வாயடைத்துப்போனேன்.
"ஏனப்பா பேசாமலிருக்கிறீர். இப்ப இந்த நாட் டில் நீர் ஒரு நல்ல கதாசிரியன் என்பது என்ர முடிவு. இலங்கையர்கோனும் சொல்வார். அரியமுஞ் சொல் லும். அதுதான் உரை கதைகளை ஒட்டி வைத்திருக் கிறன்' என்றார்.
அன்று மதியம் சாப்பாடானதும் படுக்கையிற் சரிந்து கொண்டே இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்
89

Page 54
நாலரை மணிபோற் தேனீரையும் முடித்தானதும் கனகசெந்தி மீண்டும் வாடகைக் காரிற் சுண்ணாகம் கொண்டு வந்துவிட்டார். நான் எவ்வளவோ தெண் டித்தும் பஸ்ஸில் வர அவர் விடவேயில்லை.
பின்னர் நான் யாழ்ப்பாணம் போகும் போதெல் லாம் கனகசெந்திநாதனைச் சந்திக்கத் தவறுவதே பில்லை. அவரைச் சந்திக்க என்றே நான் யாழ்ப்பா னம் போவேன்.
பின்னால் இரசிகமணி எனப் பட்டமளித்துக் கெயரவிக்கப்பட்டவரும், "கரவைக்கவிகந்தப்பனார்’ என அவதாரம் எடுத்தவருமாகிய கனகசெந்திநாதன் ஒரு அற்புதமான மனிதர், எல்லா "இழவை'யும் படிப்பார். அதே நேரத்தில் யாழ்ப்பாண முற்றவெளி யில் நடக்கும் உதை பந்தாட்டப் போட்டிகளையும் அக்கறையோடு பார்ப்பார். தாவடிப்புகையிலையைக் கிழித்துக் தன் கையாலேயே சுருட்டுச் சுற்றி அந்த "சுத்தைப் புகைப்பார். சிலவேளை சிகரெட்டும் புகைப்பார். அந்த ஒல்லியான மனிதர் மிதித்த புல் லுச் சாகாமல் நடப்பார். ஆனாற் கெக்கட்டமிட் டும் சிரிப்பார்.
1972 அகில இலங்கைப் பாடசாலைத் தமிழ்த்தின விழா திருகோணமைையில் நடந்தது. விழாவிற் புத்த கக் கண்காட்சி நடத்துவதற்குத் திருகோணமலைக் கல்விக் கந்தோரைச் சேர்ந்த (யாழ்ப்பாணத்தவரான) மேலதிகாரி ஒருவர் கணகச்ெதிநாதனிடம் சென்று புத்தகங்கள் கேட்டிருக்கிறார். அவர் கொடுக்க விரும்ப வில்லை. அதே தமிழ்த்தின விழா மலரைப் பதிப்பித் துக் கொண்டிருந்த நான் போய்க் கேட்டேன். "புத்த கங்கள் பத்திரம்' என்று சொல்லித் தந்தவர் "எல்லா ரிட்டையும் புத்தகங்களைக் கொடுத்க ஏலுமே. நீர் வராட்டித் தந்திருக்கமாட்டன்' என்றார்.
90

ஒரு தடவை யாழ்ப்பாணம் சென்றிருந்த போது யாழ்ப்பாணம் 'றிம்மர் மண்டபத்தில் கம்பன்விழா நடந்தது. கனகசெந்தியும் நானும் பார்வையாளராகப் போனோம். நிகழ்ச்சி நிரலில் கம்பன் கழகம் நடத்தும் 2ம் கம்பன்விழா என்றிருந்தது. அதைக் கண்ட செந்தி 5ம் ஜோர்ஜ் 6ம் ஜோர்ஜ் போல 2ம் கம்பன் 3ம் கம்பன் என்றெல்லாம் கம்பர்கள் இருக்கிறார்களோ என்று நக்கலடித்தார்.
நான் எமுதியவைகள் எல்லாம் எரிந்து போன போது குரும்பசிட்டிக்குப் போனால் செந்தியின் வீட் டிலோ அல்லது குரும்பசிட்டி சன் மார்க்க சபையிலோ என் எழுத்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என ஆறுதலோடிருந்தேன். ஆனால் "சமீபத்தில் நான் எழு திய ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக் கிறது.’ என்ற நாவலைப் படித்து விட்டு எனக்கு நன்கு பரிச்சயமான ஆலங்கேணிக் கிராமத்தை வெகு அழகாகக் கதையிற் சொல்லியிருக்கிறீர்கள். இன்ன மும் எழுதுங்கள். ஆலங்கேணியைப் போலவே யாழ்ப் பாணத்திலும் பல கிராமங்கள் அழிந்து விட்டன. பலாலிக்குப் பக்கலில் அமைந்த கணகசெந்திநாதனின் குரும்பசிட்டிக் கிராமமும் அவைகளில் ஒன்று' என்று செங்கைஆழியான் எனக்கு எழுதியிருந்தார்,
நான் கண்ணிர் விட்டேன்.
91

Page 55
7. எஸ். பொவைச் சந்தித்தேன்
நான் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது சரவண "பவன் என்ற "சிற்பி கலைச் செல்வி என்ற மா த இதழை நடத்திக் கொண்டிருந்தார். கந்தரோடையில் இருந்த இல்லத்தில் மிகவும் அமைதியான சூழலில் நான் அவரைச் சந்தித்தேன்.
சரவணபவன் அவர்கள் குலத்தால் பூசகர், ஐயர்
பரமசாது மிக இனிமையாகப் பேசுவார், பட்டதாரி
யான அவர் அப்போது செங்குத்தா இந்துக்கல்லூரி யில் ஆசிரியராக இருந்திருக்க வேண்டும்.
நாங்கள் சம்பாஷித்துக் கொண்டிருந்தபோது சர வணபவன் அவர் ஒரு கையெழுத்துப்பிரதியை என் னிடம் தந்து இக்கதையைப்படித்துப்பாருங்கள் என்றார் கதை சற்று நீளமானது முப்பது பக்கங்களுக்கு மேல் ஒடியது கதையில் எழுதியவர் பெயர் இருக்கவில்லை.
நான் கதையை வாசிக்கத் தொடங்கினேன். சரவ ணபவன் அவர்கள் ஒரு டம்ளரில் மோர் கொண்டுவந்து தந்தார். அதைக் கொஞ்சங்கொஞ்சமாகப்பருகியபடி கதையைப் படித்தேன். கதைமிக்க சுவாரஸ்யமாகவும் புதுமையானதாகவும் இருந்தது, கதையை ஒரே மூச்சிற் படித்து முடித்துவிட்டுக் கதையைச் சரவணபவனிடம்திரு
92

ப்பிக் கொடுத்துவிட்டுச் சில நிமிடங்கள் ஏதுமேபேசாமக் கதையைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
கதையை யார் எழுதியிருக்கலாம்?
என் சிந்தனையைக்குழப்பிக் கொண்டு சரவணப வன் கேட்டார். 'கதை எப்படி இருக்கிறது?
'யார் எழுதிய கதை?
'அது இருக்கட்டும். கதை எப்படியிருக்கிறது?என்று மீண்டும் கேட்டார் சரணபவன்.
'இக்கதையைச் சிற்பிதான் எழுதினாரா? இல்லை அப்படியிருக்காது" என்று நான் எண்ணிக் கொண்டி ருந்த போது சிற்பி மீண்டும் கேட்டார், 'கதை எப் படியிருக்கிறது?
'அருமையான கதை, புதுமைப் பித்தனின் கபாட, புரத்திற்கு நிகராக இருக்கிறது." என்று என் அபிப்பி ராயத்தை வெளியிட்டு 'யார் இக்கதையை எழுதி னார்? என மீண்டும் கேட்டேன்.
* 'இக்கதையை எஸ். பொன்னுத்ரை என்பவர் மட் டக்களப்பிலிருந்து எழுதியிருக்கிறார் அவரைத் தெரி யுமா? உங்கள் பிரதேசத்தவர்தானே? என்று கேட்டார் சிற்பி.
'இல்லையே தெரியாது, நீங்க ள் நினைப்பது போல மட்டக்களப்பு எமக்கு அண்மையிலுமில்லை. மூதூரிலிருந்து மட்டக்களப்பு அறுபத்தேழுமைல்கள், மூன்று துறைகள் கடக்கவேண்டும். ஒருநாட்பயணம். நாங்கள் திருக்கோணமலை யார்' என்று விளக்கி எஸ். பொவின் விலாசத்தைக் கேட்டேன்;
சிற்பி விலாசத்தைத் தந்தார், கந்தரோடையிலி ருந்து சுன்னாகம் திரும்பியதும் முதல் வேலையாக
93

Page 56
எஸ். பொவிற்கு ஒரு பாராட்டுக்கடிதம் எழுதினேன், அவரின் 'குமிழி"யை நான் புதுமைப்பித்தனின் கபாட புரத்திற்கு நிகரானது எனக்குறிப்பிட்டேன். மூதூருக்கு மீண்டதும் மட்டக்களப்பிற்கு வந்து அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் எழுதினேன்.
சித்திரை விடுதலை முடிந்து மூதூருக்கு வந்தேன். ஆனிமாதத்தில் மட்டக்களப்பு போக வேண்டிய தேவை ஏற்பட்டது. மூதூரிலிருந்து மட்டக்களப்பிற்கு பஸ்ஸில் செல்வதுதான் இலகுவானது. ஆனால் நான் புகையிர தமூலம் திருக்கோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்றேன். அதற்கான காரணம் நினைவில் இல்லை. சிலவேளை ரெயில்வேவறன்ற் காரணமாக இருக்கலாம். மனைவி அரசாங்கப்பாடசாலை ஆசிரியர். ஆகவே அவள் கணக்கில் எனக்கும் வறன்ற் இருந்தது.
எஸ். பொவை எனக்கு முன் பின் தெரியாது அவ ரைத் தேடிக்கொண்டு வீட்டுக்குப்போவதா? நான் எஸ். பொவிற்கு ஒரு கடிதம் எழுதினேன், புகையிரத மூலம் வருவதாகவும் புகையிரத நிலையத்தில் முடிந் தாற்சந்திக்கும்படியும், அடையாளம் கண்டு கொள் வதற்காக்கையில் ஒரு பழையகலைமகள் இதழ் வைத் துக் கொண்டிருக்கும் படியும் கடிதத்திற் கேட்டிருந் தேன்.
மட்டக்களப்புப் புகையிரதம் ஊரை நெருங்கிக் கொண்டிருக்கையில் நான் ஜன்னலூடே தலையை நீட்டி வெளியே பார்த்துக் கொண்டேவந்தேன். பிளாட் பாரத்தில் ரயில் ஒடிக்கொண்டிருக்கையில், கையிலே கலைமகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டுநின்ற குள் ளமான உருவந்தான் எஸ். பொ எனத் தெரிந்து கொண்டேன். கையை அசைத்தேன். அவரும் புரிந்து கொண்டார்.
94

ரயில் நின்றதும் இறங்கி, அவரை நோக்கி நடந் தேன். அவரும் என்னை நோக்கிவந்துகொண்டிருந்தார். இருவரும் சந்தித்ததும் எஸ். பொ. என்னை கட்டித் தழுவின்ார். நானும் அவரைக் கட்டித் தழுவினேன்.
இருவரும் பேசிக் கொண்டேநடந்தோம். இந்தி யாவிற் தான் படிக்கும் காலத்திலேயே எழுதத் தொ டங்கியதாகவும், இங்குவந்ததன் பின்னர் சில காலம் எழுத்துலகில் "அஞ்ஞாதவாசம் புரிந்து பல ரு க் கும் தான் எழுதியவைகளைக் கொடுத்து அவர்கள் பெயரிற் பிரசுரித்ததாகவும் தற்போது தன் பெரிலேயே எழுது வதாகவும் சொன்னார்.
பேசிக்கொண்டே இருவரும் அவர் வீட்டுக்குச் சென்றோம். அப்போது அவர் கோட்டைமுனை சிவா நந்தா நூலகத்தின் பின்னால் ஒரு ஒழுங்கையில் வாசம் பண்ணினார்.
சிறிய வீடு. முன்வராந்தாவில்லிருந்த மேசையிற் சில புக்தகங்களும் எழுதும் கடதாசிகளும் குழம்பிக் கிடந்தன. "மகாவம்சம் ஒன்றும் மேசையிலிருந்தது.
அந்நாட்களில் எழுத்தைப் போலவே அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார். தீவிர கொம்யூனிஸ்ட் ஆன அவர் அப்போது மட்டக்களப்பிற் பிரசித்தி பெற்ற பேச்சாளரும் எம்பியுமான திரு. செ. இராசதுரை அவர்களதும் , தமிழரசுக் கட்சியினரதும் ஒண்ணாம் நம்பர் விரோதி. இந்தியாவிற் படிக்கையிலே பல்கலைக் கழகங்களுக்கிடையிலான "சீனிவாச சாஸ்திரி ஞாப கார்த்தப் பேச்சுப் போட்டியில் முதற்பரிசு பெற்றவர். அப்பரிசைப் பெற்ற ஒரே ஒரு இலங்கையர். அந்த நாவலர் மேடையில் ஏறினால் தமிழரசுக் கட்சியின ரைக் கிழி கிழி’ என்று கிழிப்பார். எழுத்துத் துறை யில் கல்கி பாணியில் எழுதும் "ஆவாரம் போட்ட
95

Page 57
மட்டக்களப்பு எழுத்தாளர்களையும் சாடுவார். இதன் காரணமாக மட்டக்களப்பில் அவருக்கு எதிரிகள் பலர் இருந்தனர். ஆனால் அவருக்கு மனைவியின் சகோதரர் களின் பாதுகாப்பு இருந்தது!
கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் நடைபெற்ற முற்போக்கு எழுத்தாளர்களின் தேசிய எழுத்தாளர் மகாநாட்டிற்குப் போயிருந்தோம். மண்டப வாசலில் வைத்தே மகாநாட்டு மலரை விற்றார்கள். அதை வாங்கியவர்களைத்தான் மகாநாட்டு மண்டபத்துள் விட்டார்கள்.
"மலர் வாங்கியவர்கள் எல்லாம் எழுத்தாளர்களா? என்று நான் கேட்டேன். கொம்யூனிஸ்ட் தொண்டர் கள் முறைத்துப் பார்த்தார்கள். கூட்டம் தொடங்கிய போது எஸ். பொ. "எழுத்தாளர்கள் கொம்யூனிஸ்ட் ஆக இருக்கலாம். ஆனால் கொம்யூனிஸ்ட் எல்லாருமே எழுத்தாளர் அல்ல" என்று சொன்ன போது கொம் யூனிஸ்ட் தொண்டர்கள், கதிரைகளைத் தூக்கிக் கொண்டு எஸ். பொ வை அடித்து நொறுக்க முனைந் தனர். திரு ஆ. குருசாமி அவர்கள் அவரை காப்பாற்றி வெளியே கொண்டுவந்தார். அவரோடு நானும் கனக செந்தியும், வித்வான் F.X.C. நடராசா அவர்களும் மண்டபத்தை விட்டு வெளியெறினோம்;
எஸ். பொ.வும் நாங்களும் எம். ஏ. ரகுமானின் றெயின்போ அச்சகத்தில் கூடினோம். அன்றிரவே அவர வர் ஊருக்குத்திரும்பினோம்.
அதுவரை காலமும் நானும் முற்போக்கு' எழுத் தாளன். முற்போக்கு எழுத்தாளர்சங்கத் திருக்கோண மலக்கிளையின் தலைவாராக என்னை நியமிக்தூகடிதம் எழுதியிருந்தார்கள். ஆனால் நான் கூட்டம் கூட்டியது மில்லை கூட்டங்களில் கலந்துகொண்டதுமில்லை.சோஷ
96

லிச சித்தாந்தத்தை நேசிக்கிறேன். இன்றும் நேசிக்கி றேன், எழுதுகிறேன். அவ்வளவுதான்!
ஸாகிராக் கல்லூரி விவகாரத்தின் பின்னர் முற் போக்கு எழுத்தாளர்களோடு எனக்கு எந்தத் தொடர் புமில்லை. காலகதியில் ஜனாப். H. M. P. முகைதீன், சில்லையூர் செல்வராசன், கே. டானியல் ஆகியோருங் கூட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை விட்டு வில கினார்கள். ஆனால் அன்றைக்கிருந்த அதே நபர் இன்றைக்கும் மு. போ. சங்கக் காரியதரிசியாக இருக் கிறார்!
ஸாகிறாக் கல்லூரி விவகாரத்தைத் தொடர்ந்து எஸ். பொ. தலைமையில் ஒரு அணி திரண்டது. அந்த அணியினர் பழந்தமிழ் இலக்கிய அறிவு எழுத்தாளர் களுக்கு வேண்டும் என்றனர். புது இலக்கியத்தில் * கிளசிக் காக எழுதுபவர்களாகவும் இருந்தனர்.
ஸாகிராக் கல்லூரி விவகாரத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1963ல் நடந்த ஸாகித்ய விழாவில் முட்டை எறி நடத்தினர். முற் போக்கு எழுத்தாளர்கள்!
அந்த ஆண்டு புனைகதையில் எனக்கும், கவிதை யில் பண்டிதர் பெரியதம்பிப்பிள்ளைக்கும், ஆராய்ச்சி யில் "மட்டக்களப்பு மான்மியம்’ என்ற நூலை எழு திய F.x.C. நடராசா அவர்களுக்கும், பல்கலைக்கழக சமஸ்கிருத பேராசிரியர் கலாநிதி கைலாசநாதக் குருக் கள் அவர்களுக்கும், மட்டக்களப்பு அக்கரைப்பற்றைச் சேர்ந்த சலீம் அவர்களுக்கும் பரிசில்கள் கிடைத்தன.
முற்போக்கர்களைப் பொறுத்தவரையில் இவர்கள் எல்லோருமே "இலக்கியச்சனாதனிகள்’ ஆகத்தோற்ற மளித்தனர். அந்த ஆண்டுப்போட்டிக்கு இளங்கீரன் அவர்களின் ‘நீதியே நீ கேள்’ என்ற நாவலும் வந்தி
97

Page 58
திருந்ததாம். அதற்குப் பரிசு கிடைக்கலாம் என நம்பி னார்கள்முற்போக்கர்கள்.இளங்கீரன் அவர்களும் நிறை யப்பணச் செலவு செய்து அந்தப்பென்னம் பெ ரி ய நாவலைப்புத்தகமாக்கியிருந்தார்.
நடுவர்களில் மலைநாட்டைச் சேர்ந்த இரா. சிவ லிங்கமும் ஒருவராம். (எனக்கு அவரை அப்போது தெரி யாது) அடுத்தவர் இலங்கைச் சிறுகதை மூலவர்களில் ஒருவரான சி. வைத்தியலிங்கம் அவர்களாம்.
அவர்களிற் சிவலிங்கம் அவர்கள்,இறாத்தல் கணக் கில் நிறுத்துப்பார்த்தால் இளங்கீரனின் நாவலுக்குப் பரிசு கொடுக்கலாம்.ஆனால் இலக்கியரீதியாகத்தோணி தான் பரிசுக்குத் தகுதியானது என்றாராம். (இவற்றை யெல்லாம் பின்னர் நான் செவியுற்றேன்).
"நீதியே நீகேள்’ நாவலுக்குப் பரிசு கிடைக்காதது முற்போக்கர்களுக்கு ஆத்திரமாக இருந்தது. எல்லா ருமே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்திற்கு வந்துவிட்டார்கள்.
பரிசுபெற்றவர்கள் எல்லாரும் சிவன்கோயிலிருந்து கே. கே. எஸ். வீதிவழியாக இந்துக்கல்லூரி மண்டபத்
திற்கு நாதஸ்வர இசையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டோம்.
மேடையில் அமர்ந்தோம். கூட்டம் ஆரம்பமாக இருந்தது. தலைவராகத் தமிழறிஞர் சு. நடேசபிள்ளை அவர்கள் இருந்தார். சாகித்ய மண்டலத் தமிழ்ப்பிரி வுத்தலைவர் கலாநிதி ஆ. சதாசிவமும் மேடையில் அமர்ந்திருந்தார்.
தலைவர் திரு. சு. நடேசபிள்ளை அவர்கள் தன் தலைமையுரையை ஆரம்பித்த சில வினாடிகளிலே சபை யின் அந்தத்தில் இருந்து எழுந்த எம். எம். சமீம் அவர்
98

கள் (அவர் என் மிகச்சிறந்த நண்பர் மூதூரில் வித்தி யாதிகாரியாகவும் இருந்தவர்)எழுந்து ஏதோகேட்டார். அதைத்தொடர்ந்து அவர் அணியில் இருந்தவர் பலர் எழுந்து ஏதோ கூச்சலிட்டார்கள். மேடையை நோக்கி முட்டைகள் வீசப்பட்டன. கலாநிதி ஆ. சதாசிவம், F. X. C. நடராசா, பண்டிதர் பெரிய தம்பி அவர்க ளுக்கு முட்டையெறிபட்டு உடைகளில் வழிந்து கொண் டிருந்தது!
ஒரே களபரம்!
யாழ். இந்துக்கல்லூரி சைவப்பாடசாலை. மச்சம் மாமிசம் அங்கு புழங்குவதேயில்லை. அதன் புனிதத் தைக் களங்கப்படுத்தியதாகப்பலருக்கு ஆத்திரம் அந்த ஆத்திரத்தை வெளியே காட்டினார் ஒருவர். பூரீநிவா சன் அவர் பெயர். எனக்கு நன்கு தெரிந்தவர். மூதூ ரில் இலங்கையர் கோனுக்குப்பின்னால் டி. ஆர். ஒ. வாக இருந்தவர்.
அவர் தலைமையிற் திரண்ட குழு மண்டபத்தை அமைதிப்படுத்தி கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த உதவினர். முற்போக்காளர்கள் முட்டையெறிந்ததும் ஓடிவிட்டனர்.
பத்துநிமிட இடைவெளியின் பின்னர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தன் தலைமையுரையில் சு. நடேசபிள்ளை அவர்கள் ‘இலக்கியம் முற்போக்கோ அஃதில்லையோ; ஆனால் அது எப்போக்காக இருந் தாலும், நற்போக்காக இருக்க வேண்டும் எனத் தலைமையுரையிற் குறிப்பிட்டார்.
மதிய உணவுக்குப் பின்னர் நடைபெற்ற கூட்டத் தில் எஸ். பொ, முற்போக்கு எழுத்தாளர் பலருக்குத்
99

Page 59
தான் கதைகள் எழுதிக்கொடுத்ததாகவும் அவைகளில் பரிசு பெற்ற கதைகளும் இரு ந் த ன, என்றும் பகிரங்கமாகவே சொன்னார்.
எஸ். பொ. வை முதன் முதலிற் சந்தித்து இன்று ஏறத்தாழ முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது முதல் யாழ்ப்பாண விஜயம் எனக்குத் தந்த இரண்டு இலக்கிய சகாக்கள் கணகசெந்திநாதனும், எஸ். பொ. வும்.
விதியின் கை என்ற நாவலையும், ஈழம் தந்த கேசரி என்ற வாழ்க்கை வரலாற்று நூலையும் இன்னும் பல நூல்களையும் எழுதிய கனக செந்திநாதனுடன் அவர் இறக்கும் வரை நண்பனாகவே இருந்தேன்.
எஸ். பொ. இப்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரோடு இன்னமும் இலக்கியத் தொடர்போடுதான் இருக்கின்றேன்.
எஸ். பொ. வும் கனகசெந்திநாதனும் என் இலக்
கியப் பயணத்தில் உடன் வந்த சகாக்கள். அவர்களை என்னால் மறக்கவே முடியாது.
00

18. இரண்டு மூதூர்ப் புலவர்கள்
خمسيس.
நான் எழுதியவைகளையெல்லாம் படித்து ரசித்த வர்களில் மூதூரைச் சேர்ந்தவரும் எனது மாமன் முறை யினருமான பண்டிதர் அ. சவரிமுத்து குரூஸ் அவர்கள் முதன்மையானவர். நான் எஸ். எஸ். சி. படித்துக் கொண்டிருக்கையிலேயே அவர் ஆசிரி ய ர |ா ன ஈ ர் எஸ். எஸ். சி. வகுப்புக்கான இலக்கியப் பாடநூல்
முழுவதையும் அவர் எனக்கு ஒரே ஒரு மாதத்திற்குட் படிப்பித்தார்.
அவரில் உள்ள குறிப்பிடத்தக்க விசேடம் என்ன வென்றால் அவர் பத்தாம் பசலிப் பண்டிதர் அல்ல. அகநானூறையும் படிப்பார், அதே நேரத்தில் ஆனந்த விகடனையும் படிப்பார். ஆனந்த விகடனிற் தேவன் எழுதிய "துப்பறியும் சாம்பு’ என்ற நாவலை மிகவும் ரசித்துப் படித்தார். எல்லாத் துப்பும் சாதாரணமா னதாக எதிர்பாராத வகையிற் கண்டு பிடிக்கப்பட் டது போல எழுதப்பட்டிருப்பதுதான் தே வ ணி ன் திறமை. அந்தப்பாணி புதியது. அற்புதமானது என்று என்னிடம் புகழ்ந்தார்.
இலங்கையர் கோனிடமும் அவர் நெருங்கிப் பழகி கினார். இலங்கையர் கோனின் யாழ்பாடி என்ற நாட
0.

Page 60
கத்திற்கு, இலங்கையர் கோன் கேட்டுக் கொண்டபடி அவர் சில பாடல்கள் எழுதிக் கொடுத்தார்.
நான் டெணியாயாவிலும் மொறட்டுவாவிலும் ஆசிரியனாக இருந்த காலத்தில் எழுதியவைகளை எல் லாம் ஒவ்வோர் விடுமுறையும் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு வாசித்து காட்ட வேண்டும். அதுவும் நான் உரத்துப் படிக்க அவர் கேட்க வேண்டும் என் பது அவர் ஆசை.
எனக்கு எப்போதுமே உரத்து வாசிக்கப் பிடிக் காது. என் வாசிப்பெல்லாம் உதடுகள் அசையாமலே bL-åGlb. D. Tåg HJrr6LLIGOg "Barking at the print' அச்சைப் பார்த்துக் குரைத்தல் என்று யாரோ எழுதி யிருக்கிறான்.
ஆனாலும் என்ன செய்வது? நான் அவருக்காக உரத்து வாசிப்பேன். அவர் என் கதைகளை ஆர்வத் தோடு கேட்டு ரசிப்பார்.
நான் மாப்பஸான் பற்றி வானொலியில் நிகழ்த் திய பேச்சுக்குப் பின்னால் என்னை 'மாப்பஸான் என்றே அவர் அழைப்பார் . என் வீட்டில் எல்லாருமே அவரை ரசிகர் என்றே அழைப்பார்கள்.
நான் மூதூரில் விடுதலைக்கு வரும் காலங்களில் எல்லாம் அவரோடுதான் என் பெரும் பொழுது கழியும்.
அவர் என்னைச் செய்யுள் இலக்கணம் கற்கும்படி மிகவும் வற்புறுத்தினார். நானும் அவரிடம் அதைப் படித்தேன், ஆனால் அதில் அத்தனை சிரத்தை காட் டவில்லை. இது அவருக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்தது.
02

என்னில் ஏமாந்த அவர், தன் அண்ணன் மகள் வயி ற்று மகனைப் பிடித்து இழுத்து வைத்துச் செய்யுள் இலக் கணம் கற்பித்தார். பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரிய னான ஜெகதீசன் குரூஸ் என்ற அவர் பேரன் இப்போது தமிழ்க் கவிதைகள் எழுதிக் கொண் டி ரு க் கி ற ர ன்' என் பெருமகனாகிய அவனாவது கவிஞனாகப் பிரபலம் பெற்று அவரது ஆசையை நிறைவேற்றட்டும்!
அவர் கிண்ணியாவைச் சேர்ந்த தாமரைவில் என்ற ஊரில் ஆசிரியனாக இருந்த பொழுது, அப்பகு தியில் உதவி ஆசிரியராக இருந்த ஜனாப் M.A. நுஃ மான் அவர்கள் அவரோடு நெருங்கிப் பழகினார். இப்போது நுஃமான் அவர்கள் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார். எந்த விடயத்தையும் வாய் ஓயாமற் பேசுவதில் வல்லவரான அவர் என் எழுத்துலக வாழ்வில் எனக்கொரு தூண்டு கோலாக இருந்தார். அவரை நினைக்கையில் என் நெஞ்சம் நிறைகிறது.
என் மாமனாரான சவரிமுத்து குரூஸ் அவர்க ளோடு சேர்ந்து நான்கண்ட இனோர் மூதூர்ப்புலவுர் உமறு நெய்னா அவர்கள் ஆகும். நிரம்பிய தமிழ்ப் புலமை உள்ளவர். இலக்கணப்புலி, தராதரப்பந்திர மற்ற தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
பண்டிதர் சவரிமுத்தும் அவரும் நண்பர்கள், disir றாலும் அவர்கள் இருவருக்குமிடையிற் பலத்த வேறு பாடு. மாமனார் என் புதிய இலக்கியங்களையும் ரசித் துப்படிப்பார் ஆனாற் புலவர் உமறு நெய்னா பழமை வாதி. இலக்கியங்கள் என்றால் அவை சங்க இலக்கியங் களும் கம்பராமாயணமும் சீறாப்புராணமுந்தான் என்று எண்ணுபவர். கதை அவருக்குச் சென்மசத்துரு அதைத் தீண்டவே மாட்டார். . . . .
05

Page 61
ஆனால் எப்போதும் ஏதாவதொரு பாட்டைப் பாடி அதைப் "பிடுங்கிக் கொண்டிருப்பார், 18ம் 19ம் நூற்றாண்டுகளின் யமகம், மடக்கை, இரட்சாடநாக பந்தம் என்ற பொருள் விளங்காச் செய்யுள்களைப் பாடிப் பொருள் சொல்வதில் அலாதியான ஆசை.
அப்படியான பல பாடல்களுக்கு நான் அவரிடம் பொருள் தெரிந்து கொண்டேன். அந்தப்புலவரை அந்தத் தளைகளினின்றும் விடுவித்து ஒரு "தற்காலப் புலவர் ஆக்க நான்முயற்சித்தேன். ஆனால் அவர் மசியவில்லை;
இந்த நிலையிற்தான் சீறாப்புராணத்தின் பதுறுப்ப டலம் க. பொ. த முஸ்லீம் மாணவர்களுக்கான இலக் கிய பாடமாக நியமிக்கப்பட்டது. இதை அறிந்த நான் அவரிடம் சென்று விடயத்தைச் சொல்லிப் பதுறுப் படலத்திற்கு உடனடியாக உரை எழுதித்தர வேண்டும் என்று கேட்டேன். என் வற்புறுத்தலினால் அவர் உரை சொல்லச் சொல்ல நான் எழுதினேன், ஒரு வாரத்துள் முடித்துவிட்டோம்,
பின்னர் உரை நடையின் கையெழுத்துப்பிரதியை எடுத்துக்கொண்டு அவரையும் கூட்டிக்கொண்டு கண்டிக் குச் சென்றேன். கண்டி, கலைவாணி புத்தகசாலையி னர் அவ்வுரையை நூலாக வெளியிடமுன் வந்தார்கள்: க ண ச மா ன பணத்தையும் உரையாசிரியர் உமறு நெய்னா அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
அந்த நூல் ஒன்றுதான். உமறு நெய்னா அவர்க ளின் அச்சில் வெளிவந்த ஒரே நூல்!
மிக மிக மெல்லிய குரலிற் பேசும் குள்ளமான மனிதர் உமறு நெய்னா அவர்கள். அவரைப்போலவே
104

குள்ளமான "குள்ளநரி பீடியைக் கட்டுக் கட்டாகப் புகைப்பார், கவிதையைப் பற்றிப் பேசத் தொடங்கி னால் சோறு, தண்ணீர் ஏதுமே அவருக்கு வேண்டாம்;
தமிழ்க்கவிதையையே மூச்சாகக் கொண்ட அவர். தான் மூதூரில் வாழ்ந்த கடற்கரைப்பிரதேசத்திற்கு நெய்தல் நகர் எனப்பேரிட்டார். அந்த அழகான தமிழ்ப் பெயர் இன்றும் அப்பிராந்தியத்திற்கு நிலவிவ ருகிறது.
அந்த நெய்தல் நகரில் ஒரு பாடசாலையை அமைக்க வேண்டி அப்போது மூதூர் பகுதிக் காரியாதிகாரியாக இருந்த இலங்கையர்கோன் அவர்களுக்குக் கவிதை ரூப மாகவே கோரிக்கை விடுத்தார்.
'கலை வாணி புத்தகசாலையிலிருந்து ஊர்திரும்பும் வழியில் இருவரும் குருநாகலை பஸ்ஸில் வந்து கொண் டிருந்தோம். அப்போது கூட அவர் எனக்குச் சில செய்யுட்களைப் பாடிப் பொருள் சொல்லிக் கொண் டேவந்தார். எம் ஆசனத்துப்பின்னாலிருந்து பேராத னைப் பல்கலைக் கழகமாணவர் இருவர் அதனைச்செவி மடுத்துக்கொண்டே வந்தனர்.
குருநாகல் புகையிரத நிலையத்தில் இறங்கிப்புகை வண்டிக்காகக்காத்துக் கொண்டிருந்த போது தான் அவர்கள் இதை எம்மிடம் சொன்னார்கள். அவ்விளை ஞர்களில் ஒருவர் பெயர் இராசகோபால், மற்றவர் பெயர் குணராசா பிற்காலத்தில் அவர்கள்தான் செம் பியன் செல்வன், செங்கை ஆழியான் என்ற பெயர்க ளிற் புகழ்பெற்ற எழுத்தாளர்கள்!
அந்தச் சந்திப்பிற்குப்பின்னால் பேராதனைப் பல் கலைக்கழக மாணவர்களால் காலத்தின் குரல்கள் என்ற
105

Page 62
சிறுகதைத் தொகுதி ஒன்று வெளியிடப்பட்டது.அதனை வெளியிட்டுவைக்க என்னை அழைத்திருந்தார். நான் மூதூரிலிருந்து போனேன். குணராசாவும் இராசகோபா லும் நான் கேட்டுக் கொண்டபடி கண்டி கலைவாணி புத்தகசாலையிற் சந்தித்துப் பேராதனை பல்கலைக் கழகத்திற்கு அழைத்துச் சென்றார்கள்,
காலத்தின் குரலில் நான் முதலிற் குறிப்பிட்ட இரு வரோடு முத்து சிவஞானம், யோகநாதன், சிவநேசச் செல்வன், கதிர்காமநாதன் ஆகியோரதும் இன்னும் சிலரது கதைகளும் இருந்ததாக நினைக்கிறேன்.
அப்போது திரு கைலாசபதியும் விரிவுரையாளராக அங்கிருந்தார். அவர் என்னைத்தன்னுடன் வந்து தங்கி யிருக்குமாறு மிக்க அன்போடு அழைத்தார், அப்போது நான் அவரிடம் சொன்னேன், "நான் பல்கலைக்கழக மாணவனாக வர இருந்த வாய்ப்பை வேண்டுமென்றே அலட்சியம் பண்ணிவிட்டேன். போகட்டும் பர வா யில்லை. சில இரவுகளாவது பல்கலைக்கழக மாணவர் விடுதியிற் தங்கி அவ்வாழ்க்கையை அனுபவிக்கிறேன்' என்று சொன்னேன்.
மூன்று நாட்கள் பல்கலைக்கழக விடுதியில் மாண வர்களோடு மாணவர்களாகத் தங்கினேன்.
அந்த மூன்று இரவுகளையும் என்னால் மறக்கவே முடியாது! பல்கலைக் கழகப் படியிலேயே கால் வைத் திராத சவரிமுத்து மாமா உமறுப்புலவர் ஆகியோர் களை நினைக்கையில் “காட்டிலே அநேகமலர்கள் மலர் கின்றன. தங்கள் மணத்தை வெளிவீசாமலே கருகி மடிகின்றன’
என்ற ஆங்கிலக்கவிதை வரிகளே என் நினைவுக்கு வருகின்றன
106

19. கல்முனைக் கவிஞர்கள்
னெது யாழ்ப்பாண விஜயத்தின் பின்னர் எனது இலக்கியக் களம் அகலித்தது. அந்தப் பயணத்தின் பின் னரும் அதிகமாக ஒவ்வொரு சித்திரை மாத விடுமு றையையும் யாழ்ப்பாணத்திலேயே கழிப்பேன். எஸ். பொவும் தன் மனைவி சகிதம் அங்கு வருவார். ஒவ்வொரு ஆவணி விடுமுறையிலும் கொழும்புக்குப் போவேன், ۔
எஸ். பொவும். நானும் அடிக்கடி மூதூரிலும் மட்டக் களப்பிலும் சந்திப்போம். மட்டக்களப்பு மத்திய கல் லூரியில் எஸ். பொ. விடம் படித்த மாணவர்கள் பலர் மூதூர்ப் பகுதியில் இருந்தார்கள்.
யாழ்ப்பாணத்துச் சுன்னாகத்தைச் சேர்ந்த சண் முகம் என்பவர் கிண்ணியாவில் என் மனைவியோடு படிப்பித்தார். நான் யாழ்ப்பாணம் சென்றால் அவ ரது வீட்டில் அதாவது அவரது தங்கையின் கணவர் பண்டிதர் நாகலிங்கம் அவர்கள் வீட்டிலோ அல்லது சங்கானையில் அவரது மனைவியின் வீட்டிலேயேதான் தங்குவேன்; மாதக் கணக்காக என்றாலும்தான்
107

Page 63
ஒருநாள் கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்கத்தி டமிருந்து ஒரு கடிதம் கிடைத்தது! கலைக்கழகம் நடத்திய நாடக (எழுத்துப்) போட்டியில் பரிசு பெற்ற எஸ். பொன்னுத்துரை அவர்களைப் பாராட்டி ஒரு விழா எடுக்கிறோம். அவ்விழாவில் நீங்களும் பேச்சாளனாக வாருங்கள் என அக்கடிதம் கேட்டது:
எனது நண்பன் வி. கி. இராசதுரையோடு நான் பல தடவைகள் கல்முனைக்குச் சென்றிருந்தேன். கல்முனை வீதிகளிற் சுற்றியிருக்கிறேன். அதன் எழி லார்ந்த கடற்கரையை அனுபவித்திருக்கிறேன்.
ஆனால் இப்போது ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் கல்முனைக்கு அழைக்கப்பட்டிருந் தேன்.
மூதூரிலிருந்து மட்டக்களப்பிற்குச் சென்று அடுத்த நாள் எஸ். பொவின் குடும்பத்தினரோடு கல்முனைக் குப் போனேன். கவிஞர் நீலாவணன் வீட்டில் விருந் தினர் எல்லோரும். அன்று சாயந்திரம் கல்முனை வெஸ்லி மண்டபத்தில் பாராட்டு விழா நடந்தது. மட்டக்களப்பிற்கு வெளியிலிருந்து சென்ற ஒரே ஒருவர் நான்தான். மற்றவர்கள் உள்ளூர்ப் பேச்சாளர்கள் தான். கூட்டம் முடிந்த போது ஏறத்தாழ இரவு எட்டுமணியாகி விட்டது.
கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் என்பது தான் பெயர். ஆனால் அதன் அங்கத்தவர்கள் எல் லோருமே முக்காலே மூணு வீசம் பேருக்கு மேலும் கவிஞர்கள் நீலாவணனைத் தலைவராகக் கொண்டு சங்கம் இயங்கியது. சண்முகம் சிவலிங்கம், நுஃமான் , ம்ருதூர்க் கொத்தன், ஜீவா ஜீவரத்தினம், சடாட்சரம், மருதூர்வாணன், மருதூர்க்கணி என்ற எல்லா அங்
08

கத்தவர்களுமே கவிஞர்கள்தான்.நீலாவணன் தலைமை யில் அக்கவிதா மண்டலம் இயங்கிற்று. இவர்களுக் கெல்லாம் பிதா மகராக அல்ஹாஜ் ஷரிபுத்தீன் அவர் கள் இருந்தார்.
நீலாவணன் உணர்ச்சிப் பிழம்பாகக் காணப்பட் டார். எதிலும் பதட்டமும் அவசரம். கிராமியமாகச் சொன்னால் "நெருப்பிலே மூத்திரம் பேய்ந்தவன் போல இருந்தார். எழுத்தாளர்களை உபசரிப்பதிற் தன்னிகரற்றவராக விளங்கினார். மட்டக்களப்புப் பேச்சு வழக்குச் சொற்களைத்தன் கவி  ைத க ளி ற் கொண்டு அவ்வார்த்தைகளுக்கு வலிவும் வனப்பும் சேர்த்தவர். அவர் காலமில்லாக் காலத்தில் இறந்த பின்னர் அவருடைய "வேளாண்மை" என்ற குறுங் காவியத்தைப் பதிப்பித்து அதற்கு முன்னுரை எழுது கையில் * மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்ச் சொற்கள் அவருக்குக் கைகட்டி சேவகம் புரிகின்றன. கம்பகாம் பீர்யத்தோடு பாடுகிறார்' என்று எழுதினேன்.
இப்படியாகப் பேச்சுத் தமிழ்ச் சொற்களுக்கு உயிரூட்டி கவிதையிற் கொண்டு மாயம் புரிந்தவர்க ளில் நீலாவணனோடு வேறு இருவரைக் குறிப்பிட லாம். ஒருவர் மகாகவி மற்றவர் முருகையன்.
நீலாவணனுக்கு மனதிற் கவிதை ஊற்றுப்பெருகு கின்றது. எழுதத் தொடங்குகிறார். மனைவி, இறாலோ டுசேர்த்துக் குழம்பு வைக்க முருங்கைக்காயைப் பறித் துத் தாருங்கள் என்கிறாள். கவிஞர் முருங்கையில் ஏறி விழுகிறார். மனதில் ஊற்றெடுத்த கவிதையூற்று அடைத்துக் கொண்டு விட்டது என்று சொல்லும். அவர்கவிதை அற்புதமான கவிதை வழி என்ற அவரது கவிதைக் தொகுப்பில் வாத்தியாருக்கு ஏதிராகப் பிட் டிசம் எழுதிய கவிதையில் பொக்கன் கணபதி, பொருக்
09

Page 64
கன். என்ற பல்வேறு பட்டப் பெயர்களோடு வரும் மாந்தர்களை ஈழத்தில் வேறெந்தக் கவிஞரது கவி தைகளிலும் நான் காண வில்லை. அசல் மட்டக்களப் பார் வருபவரெல்லாம் மலையாளக் கதைகளிற்தான் இப்படிப்பட்ட பெயர்களை கான் கண்டிருக்கிறேன்:
நீலாவணன் பாடும் மீன் எ ன் ற மாத இதழை யும் வெளியிட்டார். இரண்டே இரண்டு இதழ்களே வந்தன. புறப்பொருள் வெண்பா மாலையிலுள்ள ஒரு பாட்டை அடிப்படையாக வைத்து அவசரம் என்ற கதை ஒன்று நான் பாடும் மீனில் எழுதினேன்,
நீலாவணனுக்கு அடுத்ததாக என்னைக் கவர்ந்த வர் மருதூர்க் கொத்தன், “எங்கள் கந்தோர்ச் சிற்று ண்டிச்சாலையின் கதவுகள் அகலத்திறந்தேயுள்ளன என்ற அவரது க வி ைத இன்னமும் என் நினைவில் நிற்கிறது. அவர் பல அருமையான சிறுகதைகளும் எழுதினார். அவர் கதை சிறுகதைப் போட்டியிற் பரி சும் பெற்றது. அவரது கதைகள் சிலவற்றைக் கையெ ழுத்துப் பிரதியாகப் படித்து விட்டு நான் அவரிடம் சொன்னேன். "இக்கதைகளை எங்கும் அனுப்பிப் பத் திரிகைகளிற் பிரசுரிக்க வேண்டாம். தீடீரென ஒரு சிறு கதைத் தொகுதியை வெளியிடுங்கள். இலக்கிய உலகை ஒரு கலக்குக் கலக்கும்,'
கிண்ணியாவில் "டைனமைற்" வெடிவைத்து மீன் பிடிக்கும் முஸ்லீம் மீனவனின் வாழ்க்கையை வைத்து அவர் எழுதிய 'ஒளி' என்ற கதை மிகவும் நேர்த்தி யானது. வி. எம். இஸ்மாயில் என்ற மருதூர்க் கொத் தன் இன்னும் என் இலக்கிய நண்பர் : கல்முனைப் பக் கம் சென்றால் அவரைச் சந்தியாமல் நான் வந்த தேயில்லை. அவரின் மகனான றவூப் பின் 'கனவும் மனிதன்' என்று சிறுகதைத் தொகுதியைப் படித்த
I 10

போது "அப்பனுக்குப் பிள்ளை தப்பாமற் பிறந்திருக்கி றான், என்று எண்ணிக் கொண்டேன்.
நான்பிதாமகர் எனக் குறிப்பிட்ட மூத்த கவிஞர் ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்கள் மகனும், அவன் டாக் குத்தர்’ ஆக இருந்தாலும் கவிதை எழுதுகிறான். அவ ரது மஹ்ஜயீன் ' என்ற காவியத்தைச் சமீபத்திற் படித்துப் பெருமகிழ்வடைந்தேன். ஜின்னா சரிபுத்தீன் அவர்கள் இன்றைய கால கட்டத்தின் முதற்தர மர புக் கவிஞர். ஆனால் அவரை எனக்குத் தெரியாது. ஆ. மு. ஷரிபுத்தீன் அவர்களை சென்ற ஆண் டு கொழும்பில் நடந்த ஸாகித்திய விழாவில் சந்தித்து அளவளாவினேன். என்னேடு சேர்த்து அவருக் கும் * தமிழ் ஒளி" பட்டம் வழங்கப்பட்டது.
நுஃமான் அவர்கள் இன்று பேராதனைப் பல்க லைக் கழக விரிவுரையாளர். பல மொழிபெயர்ப்புக் கதைகளையும் விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள் ளார் சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றைப் படித்தேன். தி. ஜானகிராமனின் மரப் பசு என்ற நாவல் மாப்பசானின் நாவல் ஒன்றைப் போல அதே அச்சொட்டில் எழுதப்பட்டதாக ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். உ ன்  ைம தா ன். * காவேரி ' என்ற லட்சிமி கண்ணன் அவர்கள் மரப்ப சுவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலத் திற் படித்தவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ?
சண்முகம் சிவலிங்கம் அவர்களின் 'என்ன சுகம்? என்ன சுகம்? இவள் ஏன் எழுப்புகிறாள்' என்ற பாடல்
வரிகள் இன்றைக்கு ஞாபகமிருக்கின்றன.
இப்படியாகக் கல்முனையில் அத்தனை எழுத்தா ளர்களும் கவிஞர்களே! எனது முதலாவது நாவல்
1

Page 65
கொழுகொம்பில்' கல்முனை அழகான சிறிய நகரம். மட் டக்களப்பின் ஏடறியாக் கவிஞர்கள் பலரையும் தன் னயலிற் கொண்ட அந்நகரம் அழகாக இல்லாமல் வேறெப்படியிருக்கும்? என எழுதியிருந்தேன் அல்லவா? இன்று கல்முனை முழுக்க ஏடறிந்த கவிஞர்கள்தான். புதுக்கவிதையிலும் கூட அவர்கள் முன்னணியிற்தான் திகழ்கிறார்கள். 'எட்டாவது நரகம்’ என்றசோலைக்கி ளியின் கவிதை நூல் இதற்குச் சான்று சோலைக் கிளியை எனக்கு இன்னமும் தெரியாது!
கல்முனையில் நான் சந்தித்த ஒரு மறக்க முடியாத இலக்கிய ரசிகர் டக்ரர் சண்முகம்பிள்ளை அவர்கள். அவர் எழுத்தாளரல்ல. ஆனால் நல்ல இலக்கிய ரசிகர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவர் தொழிலால் வைத் தியர். கல்முனையிற் 'பிறைவேற் பிரக்டீஸ்" செய்கி றார். நீண்ட காலமாக அங்கே குடியும் குடித்தனமு மாக வாழ்கிறார்.
பகல் முழுக்கத் தன் பிரத்தியேக வைத்தியசாலை யிற் தன் தொழிலை நடத்திவிட்டு இர வு வீட்டுக்கு வந்தால், அசுரனுக்குப் பலம் வருவது போல அவருக்கு இலக்கியத்தாகம் வந்துவிடும். மது  ைவ ச் சுவைத்த படியே இலக்கிய சம்வாதம் புரிவார். சங்கீதஞானமு முள்ளவர். நிறைய வாசிப்பார். இலக்கியக் கூட்டங்க ளுக்கும் எழுத்தாளர்களுக்கும் தாராளமாகப் பண உதவி செய்வார்.
ஞாயிறுதினத்திலாவது தொழிலை விட்டு ஒய்வாக இருக்க வேண்டும் என எண்ணுபவர். கல்முனையில் இருந்தால் அது முடியவே முடியாது என்று தெரிந்து கொண்டு சனிக்கிழமை பின்னேரமே காரை எடுத்துக் கொண்டு தெற்கே அறுகம் வேக்கோ, வடக்கேபாசிக் குடாவுக்கோ ஓய்வுக்கு வந்து விடுவார். ஞாயிறு
12

இரவு நெடுநேரத்தின் பின்னரே வீட்டுக்கு வருவார் அப்படி இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளை அவரோடும் எஸ். பொவோடும் பாசிக்குடாவிற் களித்த அந்த நாட் களை' என்னால் மறக்கவே முடியாது;
இன் னோர் காரணத்திற்காகவும் நான் கல்மு னையை மறக்கவே முடியாது. கல்முனையிற்தான் நான் முதன்முதலாக நீலாவணன் வீட்டில் வைத்து இளம் பிறை எம். ஏ. றகுமானைச் சந்தித்தேன். அங்கேதான் தான் நூல்கள் வெளியிட இருப்பதாக அவர் சொன் னார். அப்போதுதான் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் களும் எஸ். பொவும் கிழக்கிலங்கையின் மூத்த எழுத் தாளனாகிய எனது சிறுகதைகளை முதலாவதாக வெளி யிடும்படி வற்புறுத்தினார்கள்.
அப்போது எனது விசிறியும், நீலாவணனின் மனைவி யின் மூத்த சகோதரரும், ஆசிரிய கலாசாலைச் சகா வுமான கிருபைராசா அவர்கள் என் கதைகளிற் சில பகுதிகளை மனப்பாடம் செய்திருந்தபடி ஒப்புவித்தார்.
* தோணி நூல் கல்முனையிற்தான் கருக்கொண் டது. அதை ம்றக்கத்தான் முடியுமா?
113

Page 66
20: சிறுகதைத் தொகுதி
sa
*ல்முனையிலிருந்து மூதூருக்கு மீண்ட நான் என் கதைகள் சிலவற்றைத்தேடி எடுத்தேன். என் கதைகள் பலவற்றை என்தம்பி தந்தான். கனக.செந்திநாதனைச் சந்தித்த பின்னர் "ஒட்டுப்புத்தகம் தயாரிக்க முனைந் தாலும் அந்த "மெனக்கெட்ட" வேலை எ ன க்கு ப் பிடிக்கவில்லை, இடையிலே விட்டுவிட்டேன்.
சில கதைகளை எடுத்துக்கொண்டு கொழும்புக்குப் போனேன். மட்டக்களப்பிலிருந்து எஸ். பொவும் வந் திருந்தார். இருவரும் சேர்ந்து கதைகளைத் தொகுத் துக் கொடுத்தோம். எல்லாமாகப் பதினைந்து சிறுக தைகள் "தோணி சிறுகதைத் தொகுதியில் இருந்தன" சுதந்திரன், ஈழகேசரி, வீரகேசரி இதழ்களில் எழுதிய கதைகளையே தேர்ந்தெடுத்தோம். இந்திய சஞ்சிகை களில் எழுதிய கதைகளை வேண்டும் என்றே சேர்க்க வில்லை!
கதைகள் எம். ஏ. ரகுமானின் அச் ச க த் தி ல் நூலுருவம் பெற்றுக்கொண்டிருந்தன. இந்தக்காலத்தில் நானும் அடிக்கடி கொழும்புக்குப் போனேன்.
4

இந்தக் காலகட்டத்தில்தான் திரு A : கனகரத் தினா அவர்களைக் கொழும்பிற் சந்தித் தேன். தற் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கி ல விரிவுரையாளராக இருக்கும் ஏ. ஜே. அவர்கள், அப் போது டெயிலி நியூஸ் பத்திரிகையில் உ த வி ஆசிரிய ராக இருந்தார். சற்றுக் குட்டையான உருவம், மன தைக் கவரும் சிவப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அகரவாசகன். பல்வேறுவகைப்பட்ட ஆங்கில நூல்க வின் சாரத்தை மத்து" என்ற நூலாக்கித்தந்துள்ளார்: எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவின் தனிச் சிங்களச்சட்டந்தான், ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தி லேயே சிந்தித்து, ஆங்கிலத்திலேயே எழுதிய என்னை தமிழ் படிக்கவும் தமிழில் எழுதவும் தூண்டிற்று என * மத்து வின் முன்னுரையிற் குறுப்பிட்டுள்ளார்.
மாக்சீயக் கண்ணோட்ட விமர்சகராக இருந்த அவர், அக்கண்ணோட்டத்திற்கு எதிரான விமர்சன 1bTôñ) 4565)6T uqub Luuq. ği 5IT ff. I Shaht giv3 it up I should. give it up என்று ஆங்கிலத்திற் சொல்லிக்கொண்டே திடீரென மதுவருந்தும் பழக்கத்தை விட்டுவிடுவார். இரண்டு அல்லது மூன்று மாதங்களின் பின்னால் மீண் டும் தொடங்கிவிடுவார். எந்தக்கவலையுமே இல்லாத சுதந்திர மனிதனாக, பிரம்மச்சாரியாக அவர் கொழும் பில் வாழ்ந்தார். ஓரிர வு கொழும்பில் அவருடன் சுற்றிவிட்டுவந்து சிலநாட்களின்பின் "கொழும்பு இரவு கள்" என்ற சிறுகதையை எழுதினேன். கொழும்பு சந்திப்புக்குப் பின்னர் பலதடவைகள் அவரை யாழ்ப் பாணத்திற் சந்தித்திருக்கிறேன். அவரோடு பேசி க் கொண்டிருப்பதே ஒரு சுகானுபவம்!
சிறுகதைத் தொகுதி தயாராகிக் கொண்டிருக்கை கையில் அந்நூலுக்கு யாரிடமிருந்தாவது முன்னுரை
வாங்கவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டார், என
115

Page 67
க்கு அது விருப்பமாக இல்லை. ஏ ஜே: யும், எஸ். பொவும் கூட என்னை ஆதரித்தார்கள். கடைசியாக என் தோணி எந்த வெளியாகினதும் பாயிரம் இல்லாத பனுவலாக , என் முன்னுரையுடனேயே வெளிவந்தது: முதற்பிரதியை ஏ. ஜே. தான் வாங்கினார்.
புத்தகத்துக்கு எவரிடமும் முன்னுரை வாங்கமாட் டேன் எ ன்று உறுதியாகச் சொன்னது போலவே, நூல் வெளியீட்டுவிழாவை மூதூரிற்தான் நடத்த வேண்டும் என்பதிலும் மிக்க உறுதியாக இருந்தேன். வைக்கலில வெளஞ்சத வைக்கலிலதான் கட்டியடிக்க வேணும்" என்பது எம்மூர்ப் பழமொழி. இது வும் வைக்கோலில் விளைந்ததுதான். விளைந்த இடத்திற் தான் சூடடிப்பும் நடக்கவேண்டும் என்று உறுதியா கக் கூறினேன்!
கொழும்பு ஸாகிறாக் கல்லூரியில் நடை பெற்ற அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மகா நாட்டுக் குப் பின்னால் எஸ். பொ. முற்போக்கு என்ற வார்த் தைக்கு எதிராக நற்போக்கு" என்று சொன்னார்: எவ்வளவுதான் எஸ். பொ. வோடு நான் ஒத்திருந்தா லும், நற்போக்கு என்ற பதச் சேர்க்கையை முழுமை யாக ஆதரிக்கவில்லை. புது இலக்கியத்திற் 'கிளசிக்” ஆக இருப்பதினால் மரபு' என்ற வார்த்  ைத யே எனக்குப்பிடித்திருந்தது. தோணி சிறுகதைத் தொகுதி யின் முன்னுரையில் "தேசீய இலக்கியம், மண்வளம், யதார்த்தம் எ ன் ற கோஷங்களை முற்போக்கர்கள் எழுப்புவதன்முன்னரே அக்கோஷங்களுக்கு இலக்கண மான கதைகளை எழுதினேன். எந்தக்கோஷத்தினரோ டு ம் 'எடுபட நான் விரும்பவில்லை. ஏனென்றால் என்னை ஈழத்துப் பூதந்தேவனாரின் தம்பி என்று சொல்லிக்கொள்வதிற் தான் நான் பெருமைப்படுகி றேன்’ என்று எழுதினேன் ஆம் இரண்டாயிரம் ஆண்
16

டுகள் பழமையான செழுமையான இலக்கியம் நம்முடை
யது. அந்த மரபிற் காலூன்றி நின்று தான் நாம் புது
மையைச் சிருட்டிக்க வேண்டும். 'பழமையை அறியாத
வனுக்குப் புதுமையைச் சிருட்டிக்க உரிமையில்லை” என்பதுதான் என்றென்றைக்கும் எ ன் இலக்கியக் கோட்பாடு!
நான் விரும்பியது போலவே தோணிவெளியீட்டு விழா 1962ல் மூதூரில் நடந்தது. எனது தந்தை வழி
மைத்துனன் ம.செ.குரூஸ் என் உறவினர்கள் பதினைந்து
பேரைச்சேர்த்துப் பணம் பிரித்து வெளியீட்டுவிழாவை ஒரு பெருஞ்சடங்காகவே நடத்தினான்.எம். ஏ. ரகு மான்,கவிஞர் அண்ணல், எஸ். பொன்னுத்துரை ஆகி யோர் பேச்சாளராக இருந்தனர். எஸ். பொ, வின் பேச் சுக்குத்தான் 'மவுசு’!
எனது இலக்கிய நண்பர் அருணாசலம் நாயரும் வெளியீட்டுவிழாவிற்குப் பார்வையாளனாக வந்திருந்
தார். ஆனால் அவனுக்கு இவ்வெளியீட்டு விழா பிடிக்க
வில்லை என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன். கொம்யூனிசம், சோஷலிஸம் பேசும் எவருமே மது வருந் தக்கூடாது என்பதில் அவன் மிக மிகக்கண்டிப்பானவன்!
நூல் வெயிட்டுவிழா மூதூருக்கே புதியது. நான் அறிந்த வரையில் அதுதான் மூதூரின் முதல் நூல் வெளி யீட்டுவிழா. புனித அந்தோனியார் பாடசாலை மண்ட பம் நிறைய மக்கள் இருந்தார்கள். விழாவில் நான் உரை நிகழ்த்திய போது பால்யவயதிலே எனக்குச் சூடாமணிநிகண்டை மனனம் பண்ணுவித்த என் தத் தையாரை நினைத்துக் கண்கலங்கினேன்.
மூதூர் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து மட்டக்
களப்பு ஆசிரிய கலாசாலையிலும், கல்முனையிலும்
I 7

Page 68
வெளியீட்டுவிழாக்கள் நடந்தன எவ்வளவுதான் அபிப் பிராய பேதம் இருப்பினும் கொழும்பில் ஆசிரியப்பணி புரிந்த என். கே. ரகுநாதன் அவர்கள் கணிசமான பிர திகளை அங்கு விற்றுப்பணம் தந்தார்.
சில மாதங்களுள் ஆயிரம் பிரதிகளுமே விற்பனையா கிவிட்டன. சம்பூர், சேனையூர், மூதூர் ,ஆலங்கேணி, கிண்ணியா ஆகிய எனது பிராந்தியத்தில் மட்டும் சுமார் அறுநூறு பிரதிகள் விற்பனையாயின. சுதந்தரன் தொடக்கம் "மட்றாஸ் வதிண்டு வரை அந்நூலுக்கு விமர்சனம் எழுதின. நூல்வெளியானதும் மஞ் ச ரி "தோணி சிறு கதையை மறுபிரசுரம் செய்தது.
ஓராண்டின் பின்னர், சென்ற ஆண்டுக்கான தமிழ் நூல்களுக்கான சாகித்திய மண்டலப்பரிசு வெளியாகியி ருப்பதாக இலங்கை வானொலி காலைச் செய்தியில் அறிவித்தது. ஆனால் எந்தெந்த நூல்கள் பரிசு பெற் றன என்று அறிவிக்கவில்லை. நான் பரபரப்படைந் தேன்.
திருக்கோணமலையிலிருந்து முதலில் வரும் லாஞ்சிற் காலைப்பத்திரிகையைப் பார்க்கவேண்டும் என்று ஜெற் றிக்கு ஓடினேன். முதல் படகிலிருந்து இறங்கியவர்கள் என்னைப் பாராட்டி விஷயத்தைத் தெளிவாக்கினார் கள். அப்படியாக முதலில் என்னைப் பாராட்டியவர் புரொக்டர் கே. செல்லராஜா என்பதாக ஞாபகம்!
அன்றையப் பத்திரிகையையும் வாங்கிப்படித்தேன். அப்போது என் பக்கலில் திருக்கோணமலைக்குச்செல்ல வந்திருந்த என்நண்பரும், சம்பூர் கிராமசபைத் தலை வருமான நா, சி. சரவணமுத்து அவர்களும் நின்று கொண்டிருந்தார். செய்தி தெரிந்ததும் அவர் தன் திருக்கோணமலைப் பயணத்தைக் கைவிட்டுவிட்டு தன்
18

ஆஊருக்குச் செய்தி அனுப்பினார்; அப்போது நான் அங்கேதான் ஆசிரியனாக இருந்தேன்
முதல்வேலையாக மூதூரிலிருந்து ஆறுமைல்களுக் கப்பால் 'முன்னம் போடிவட்டை" என்ற ஊருக்குத் துவிச்சக்கர வண்டியிற்சென்று எ ன் ம  ைன விக் குச் செய்தியைத்தெரிவித்தேன். என்னோடு நண்பர் சரவண முத்துவும் வந்திருந்தார். மீண்டும் இருவரும் மூதூருக்கு வந்து காலை பத்து மணிக்குப் பின்பாகச் சம்பூரை அடைந்தோம்:
ஊரின் வாயிலிலேயே எனது பாடசாலை மாணவர் களும் ஆசிரியர்களும் ஊரவர்களும் குழுமி நின்று எனக்கு மாலையணிவித்து வரவேற்று வெடிகளை வெடிக்கவை த்து ஊர்வலமாகச் சம்பூர்ப்பத்திரகாளி கோயிலுக்குக் கூட்டிச்சென்றார்கள். அங்கே அர்ச்சனை செய்தபின் னர், அங்கிருந்து சம்பூர் க் கி ரா மத்தின் தெருக்களி லும் குச்சொழுங்கைகளிலும் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.ஒவ்வொரு வீட்டுவாயிலிலும் நிறைகுடம், எனக்கு ஆலத்தி சுற்றினார்கள் பொட்டிட்டார்கள். சம்பூரைப்பற்றி ஒரு கதையுண்டு. கோணேசர் கோயி லுக்காக மக்களைத் தன் நாட்டிலிருந்து கொண்டு வந்து குடியேற்றிய குளக்கோட்டன், பல்வேறு மக்களையும் பல இடங்களிற் குடியேற்றிய பின்னர், புலவன் குடியினரைக் குடியேற்ற எண்ணி, ஒரு ஊரைக்காட்டி' எப்படிஊர்?" என்று கேட்டாராம். அதற்குப் புலவன் ‘எல்லாம் சம் பூர்ணம்' என்றானாம். சம்பூர்ணம் தான் பின்னர் சம்பூர் ஆகிற்றாம்
பின்னால் என் தோணிக்கதையைப்படித்த "சாத்தி ரியார்” எ ன எல்லாராலும் அழைக்கப்படும் சம்பூர் வயோதிபர் , நான் கதையில் வரும் கனகத்தை 'நீரில் நெளிந்தோடும் செம்மீனைப்போல அழகாக இருப்பாள்,
9

Page 69
நீரின் இடைமட்டத்தில் நெளியும் பாசியைப் போல அசைந்து நடப்பாள். வண்டலில் மின்னும் கிளிஞ்சல் கள்போல இருக்கும் அவள் கண்களை என்றைக்குமே பார்த்துக்கொண்டிருக்கலாம்" என வர்ணித்திருப்பதை வெகுவாகப் பாராட்டினார். மீனவப்பெண்ணை கடல் படு பொருட்களைக்கொண்டே வர்ணித்திருப்பது தான் அழகு என்று வியந்து சொன்னார்.
அந்தப்புலவன் குடி மக்கள் நான் இலக்கியப்பரிசு பெற்ற செய்தியில் மகிழ்ந்து எனக்களித்த வரவேற்பை என்னால் என்றைக்குமே மறக்கமுடியாது!
அன்று நண்பர் நா. சி. சரவணமுத்து அவர்கள்
வீட்டில் விருந்தயர்ந்து பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர்தான் அவரோடு வீட்டுக்குவந்தேன்?
H 20

21. கவிஞர் கற்கையாளன்
தோணி வெளியீட்டு விழாவின் பின்னர் ஒருநாள் திருகோணமலையைச் சேர்ந்தவரும் பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்தவருமான திரு தவராசா அவர்கள் என்னிடம் ஒருவரைக் கொண்டு வந்து "மாஸ்டர் இவன் என் தம்பி, சேனையூரில் இவருக்கு ஆசிரிய நியமனம் கிடைத்துள்ளது. ஆள் சற்றுக் குழப் படி, இவனை உங்களோடேயே வைத்திருந்து நீங்கள் பாடசாலைக்குப் போகும் போது கூட்டிப் போய்க் கூட்டி வாருங்கள் சிலநாட்களுக்கு" என்று கேட்டுக் கொண்டார்.
தவராசாவை என் மனைவிக்கும் நன்கு தெரியும் : எனவே அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டோம். தவரத்தினம் என்ற அவரது தம்பி எம்முடனே எம் குடும்பத்தில் ஒருவரானார்,
அண்ணன் சொல்லியது போல தவரத்தினம் குழப்படிகாரனல்ல. ஆனாற் குழந்தை பாடசாலை முடிந்த பின்னர் சின்னஞ் சிறு பிள்ளைகளின் கையிற் கயிற்றைக் கட்டி அவர்களை மாடு துரத்தும் அள
விற்குக் குழந்தை! அந்தக் குழந்தை எம்மோடு வளர லாயிற்று,
I 2 Ι

Page 70
ஒருநாள் அவன், எப்போதுமே விரிந்து திறந்து கிடக்கும் தன் பெட்டிக்குள்ளிருந்து ஒரு சிறு நூலை எடுத்தான். இதைப் பாருங்கள் என்று என்னிடம் நீட்டினான்.
அது ஒரு இரங்கற் பாடல் நூல். கல்வெட்டு! மூதூரின் முன்னைநாட் பாராளுமன்ற அங்கத்தவர் காலஞ் சென்ற ஏகாம்பரம் அவர்களுக்குப் பாடப் பட்ட இரங்கற் பாடல்கள் எழுதப்பட்ட கல்வெட்டு பாடியவர் "கற்கையாளன்' என்றிருந்தது.
நான் பாடல்களைப் படித்துப் பார்த்தேன், நன் றாகவே இருந்தது. "யார் இதை எழுதியது?’ என்று கேட்டேன். -
"நான் தான் பாடினேன். ஏகாம்பரம் என்ர சொந் தக்காரன். அவரும் கற்கோவளத்தான்; அதற்காக நான்தான் பாடினேன்" என்றான் தவரெத்தினம்.
என்னால் அதை நம்ப முடியாமல் இருந்தது. இல்லை பொய் சொல்கிறீர். உன் தந்தையார் பண் டிதர் சரவணமுத்து பாடியிருப்பார்" என்றேன்.
தவரெத்தினத்திற்கு அசாத்திய கோபம் வந்து விட்டது. "மொக்கரே நான் பாடமாட்டேன் என்று நினைத்தீரோ?' என்று ஆத்திரத்துடன் கேட்டான்.
கடந்த சில நாட்களாக அவனது குழந்தைத் தனத்தை அவதானித்திருக்கிறேன். ஆள் ஒரு "எக்சென் றிக் என்றும் தீர்மானித்திருந்தேன். ஆகவே நான் கோபிக்கவில்லை, வேறென்ன பாடியிருக்கிறீர்? என்று கேட்டேன் ;

இதுதான் முதன் முதலில் பாடியது' என்றான் தவம்,
சரிதான், போயும் போயும் கல்வெட்டுத்தானா முதலிற் பாடினீர்?"
ஏன் கல்வெட்டுப் பாட்டில்லையா? எங்கட ஊரில கல்வெட்டு பாடத் தெரிந்தவனைத் தேடிக் கொண்டு எத்தனை பேர் வருவினம் தெரியுமே. பெரிய பெரிய கொம்பன் எல்லாம் வந்து கல்வெட்டுப் பாடிறவனிட் டக் கால்உரசி நிற்பினம் உமக்கு எங்கே அது தெரியும்?
எங்கள் ஊரில் கல் வெட்டுப் பாடுற வழக்க மில்லை. உமக்குக் கவிதை எழுதத் தெரிந்திருக்கையில் கல்வெட்டை மட்டும் ஏன் எழுத வேண்டும்?
அப்பதான் பெரிய பெரிய ஆட்களெல்லாம் வரு வினம். இந்தக் கல்வெட்டைப் பார்த்த பிறகு இரண்டு பெரிய உத்தியோகத்தர் என்னிடம் வந்து கல்வெட் டுப் பாடக்கேட்டினம். நான் எழுதிக் கொடுத்தேன். பத்திரிகையிற் பாட்டு எழுதினால் எவன் படிச்சு நமக்கு மரியாதை தரப்போறான்?
பிறகு எழுதிய கல்வெட்டுக்கள் எங்கே?
அந்தக் கல்வெட்டில எழுதப்பட்டவர்கள் எனக்குச் சொந்தக்காரரில்லை. அதனால் பாடிக் கொடுத்த தோடு சரி. அந்தியேட்டிக்குக் கப்பிட்டாங்க நான் போகல்ல ஏகாம்பரம் என்ர சொந்தக்காரர் ஆனதால அவர்ர கல்வெட்டை மட்டும் எடுத்து வைத்திருக்கி றன்". t
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இழிந்துக் மும், உள்ளத்தில் நினைப்பதை அப்படியே பேசிவிடும்
12S

Page 71
வெகுளித்தனமும் கொண்ட இந்த இளைஞன் ஒரு நல்ல கவிஞன். எதிர்காலம் இவனுக்கு இருக்கிறது, என்று எண்ணிய நான் அவனை இலக்கிய உலகிற்குக் கொண்டுவர முயன்றேன்.
அவனோ அதைப் பொருட்படுத்தவில்லை. வானொ லியிற் செய்திகளைக் கேட்க மாட்டான். ஆனாற் செய்திகளுக்குப் பின்னால் வாசிக்கப்படும் மரண அறி வித்தல்களைக் கூர்ந்து கேட்பான். திருகோணமலை யிலோ யாழ்ப்பாணத்திலோ யாரும் உறவினர்கள் செத்ததாகத் தெரிந்தால் உடனே கல்வெட்டுப் பாடி அனுப்பி விடுவான்.
ஒருநாள் பருத்தித்துறையிலிருந்த யாரோ ஒருவ ரின் இறப்புச் செய்தியை வானொலியிற் கேட்டான். உடனேயே கல்வெட்டுப் பாடத் தொடங்கி விட்டான். ஒரே மேசையில் எதிர் அந்தத்திலிருந்து நான் வாசித் துக் கொண்டிருந்தேன்;
கல்வெட்டில் "மனைவி புலம்பல்” என்ற தலைப் பில் அவன் சத்தமாகப் பாடிப்பாடி எழுதிக் கொண் டிருந்தான். செய்யுளின் நான்காம் அடியை உந்தனுக் கழகோ ஐயா என்று சப்தமிட்டுச் சொல்லி அதை எழுதுகையில் நான் குறும்புத்தனமாக இங்கே எழுத முடியாத வார்த்தையோடு என்ன செய்வேன் என்ற சொற்களையும் சேர்த்துப் பாடி அந்த அடியை முடித்தேன்.
அதை அப்படியே எழுதிவிட்டான் கற்கையாளன்: மீண்டும் படித்த போது மிக்க கோபத்துடன் "மொக் கரே, தூஷணமா எழுதச் சொல்றீர்’ என்றான்.
互24

ஊனாவிற்கு இன எழுத்து ஓவன்னாவும்தான் மோனைப் பொருத்தமுள்ள சொல். அதுதான் என்று சொல்லிச் சிரித்தேன்.
கற்கையாளனுக்கு அடங்காத கோபம் வந்து விட்டது. 'மயிர் உம்முட இனனழுத்தும் பணியாரமும்' என்று பொரிந்து இதுவரை தான் எழுதிய பாடல்க ளையெல்லாம் சுக்கு நூறாகக் கிழித்தெறிந்தான். அப்படியும் அவன் கோபம் அடங்காமல் நான் படித் துக் கொண்டிருந்த புத்தகத்தை இழுத்துப் பறித்து மூடிவைத்தான். மேசையிலிருந்த விளக்கையும் அனைத் தான். நெருப்புப் பெட்டியைத் தூக்கி எறிந்தான். *நீர் படிச்சது போதும் பேசாமப்படும். நாளைக்குச் சனிக்கிழமைதான். கல்வெட்ட நான் எழுதிக் கொள் றன் படும் படும் என்று சொல்லிக் கொண்டே பாயை விரித்துப் படுத்தான்.
நேரம் பத்து மணிதான். வழக்கமாக நான் இன் னமும் ஒரு மணித்தியாலமாவது இருந்து படிப்பேன்: ஆனால் வேறொன்றும் செய்ய முடியாமல் நானும் பாயை விரித்துப் படுத்தேன்.
சற்று நேரத்தில் எனக்குக் கொஞ்சம் தூரமாகப் படுத்திருந்த கற்கையாளன் தன்பாயை இழுத்துக் கொண்டு வந்து என் அருகிற் போட்டுப் படுத்தபடி "மொக்கரே நித்திரை கொண்டிருந்தீரோ?” என்று கேட்டான்.
"பேசாமற் படுக்கிறாயா, இல்லாட்டி நான் எழும்பி எங்கெண்டான போகவா? என்று நான் எரிந்து விழுந்
தேன்.
எங்கள் சண்டையைக் கேட்டு வீ ட் டி னு ஸ் ளே படுத்திருந்தவர்கள் சிரிப்பது கேட்டது
125

Page 72
கற்கையாளன் அதற்கு மேல் ஏதும் சொல்லாமற் படுத்து விட்டான். சில நிமிடங்களில் அவன் குறட்டை ஒலி கேட்டது. குறட்டை வி டு ம் என் குழந்தையை அணைத்துக் கொண்டே நானும் நித்திரையாகி விட் டேன்.
அவனுக்குத்தான் குருகுலக்கரையான் என்று சொல் வதில் ஒரு கிறுக்கு. யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப் பிலும் கொழும்பிலும் வதியும் பெரிய உத்தியோகத் தர்கள் தொழிலதிபர்களின் பெயர்களைச் சுருக்கி இவர் கள் எல்லாமே கரையார் என்று சொல்லிக் கொள்வ தில் ஒருபெருமை. யாழ்ப்பாணத்திலிருந்து எவரும் புதிதாக உத்தியோகத்துக்கு வந்துவிட்டால் எப்படியோ அவர்களை ஆராய்ந்து அவர்கள் இன்னசாதி என்று சொல்லிவிடுவான். இப்படிக்குணம் இருந்ததேயொழிய எல்லாருடனும் சமமாகப் பழகுவான்.
ஒருநாள் எங்களிடையே ஒரு சாவீடு, செத்தவரின் மகனின் மனைவி ஆலங்கேணியைச் சேர்ந்தவர்.எனவே ஆலங்கேணிக்குச் சேதி அனுப்பவேண்டும். ஐந்து மைல் தூரத்திற்தான் ஆலங்கேணி என்றாலும் மூன்று துறைகளைக் கடந்து செல்ல வேண்டும். தந்தி வசதி இல்லாததால் நேரிற்போயே செல்ல வேண்டும். கற் கையாளான் நான் போய்ச் சொல்லிவிட்டு வருகிறேன் என்று தானாகவே சைக்கிளை எடுத்துக் கொண்டு போனான். பதினொரு மணிக்குத் திரும்பியும் வந்துவிட்
I-fT6ð •
அவன் சாதித்திமிரை மட்டந்தட்ட எண்ணிய ஒரு
வர் அவனைக் கண்டதும் “கோவியப்பிள்ளை சா விச
ளம் சொல்லிட்டு வந்திருக்கு' என்றார்.
கற்கையாளனுக்கு வந்ததே ஆத்திரம்! ஒருபெரிய கல்லைத்தூக்கி அவர் மேல் எறிந்தான்; அதுபடாமல்
126

விலகிக்கொண்ட அவர் "யாழ்ப்பாணத்திலே கோவி யப்பிள்ளைதானே சாச் செய் தி கொண்டுபோகிற தென்று நீர்தானே சொல்வீர். இங்கே நீர்தானே சாச் செய்தி கொண்டு போனீர், என்றுவிட்டு அவ்விடத்தை விட்டுப்போய் விட்டார்.
கற்கையாளன் அழவே தொடங்கிவிட்டான். தன் னைக் கோவியன் எ ன் று சொன்னதை அவனாற் பொறுக்கவே முடியவில்லை. தேம்பித் தேம்பி அழுது கொண்டே ‘செல்லையா அண்ணை இங்க மறுபடி வரட்டும் காலைமுறிக்காம விடேன்' என்று வஞ்சினம் கூறினான் நான் அவனைத் தேற்றினேன்.
1964ல் மூதூரில் நான் நடத்திய தமிழ் விழாவிற்கு எழுத்தாளர் பலரும் மூதூருக்கு வந்திருந்தனர். கற்கை யாளன் ‘தேவன்" இடம் கேட்டான் 'என்னைத் தெரியுமா உமக்கு"
"தெரியாதே தம்பி’ என்றார் தேவன்.
'மயிர் என்னைத் தெரியாட்டி நீர் என்ன எழுத் தாளன்?" என்றான் கற்கையாளன். தேவன் திகைத் தார், ஆனால் விழா முடிந்து மூன்று நாட்களின் பின் னால் தேவன் செல்கையில் அவரது மிகச்சிறந்த நண் பன் கற்கையாளன்தான். அன்பின் தேவனுக்கு அடிக் கடி கடிதம் எழுதுவான். யாழ்ப்பாணம் சென்றால் அவரைச் சென்று சந்திப்பான்.
மூதூர்த் தமிழ் விழாவிலே காலஞ் சென்ற நாவற் குழியூர் நடராஜன் அவர்கள் தலைமையில் பிரபல கவிஞர்கள் கவியரங்கிற் கலந்து கொண்டனர். கற்கை யாளனும் அக்கவியரங்கில் மேடையேறினான்.
இரண்டு வருடங்களுக்கு மேலாக என்பிள்ளைகளோடு பிள்ளையாக வாழ்ந்தவன் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்
127

Page 73
சிக்கல்லூரிக்குச் சென்றான். ஒவ்வொரு விடுமுறைக்கும் மூதூருக்குவந்தே அங்கிருந்து யாழ்ப்பாணம் செல்வான்.
ஆசிரியகலாசாலையின் இறுதிப் பருவத்தில் அவ னது தந்தையார் அவனுக்கும் அவனுடைய தங்கைக் கும் மாற்றுச்சம்பந்தம் பேசினார். தங்கையின் கணவ ராக வர இருப்பவர் ஒரு டக்ரர். ‘ஒருடக்ரரின் தங் கையை நான் கட்டமாட்டன். எனக்கு அவள் அடங் காள்" என்று கற்கையாளன் என்னிடம் சொன்னான்
ஆனால் அவனை எப்படியும் இக்கல்யாணத்திற் குச்சம்மதிக்க வைக்க வேண்டும்.நான் சொன்னால் மகன் கேட்பான் என்றும் அவன் தந்தை எனக்குக் கடிதம் எழுதிக்கேட்டிருந்தார்; நானும் என் மனைவியும் விசே டமாக அவள்தான் - அவனை இம்மாற்றுக்கல்யாணத் திற்குச் சம்மதிக்கச் செய்தாள்.
'ፉ ஆவணிமாத விடுமுறையில் மூதூரில் வந்து நின்ற வன் யாழ்ப்பாணம் புறப்படுகையில் “நீர் சொல்ற படியாத்தான் சம்மதிக்கிறன். போய்க் கடிதம் எழுதி றன் கல்யாணத்திற்கு வாரும்’ என்று சொல்லிவிட் டுப் புறப்பட்டான்.
இரண்டு நாட்களில் விபத்தில் இறந்து விட்டதா கத் தந்திகிடைத்தது.
கல்யாண உடுப்புக்கள் தைப்பதற்காக யாழ்ப்பா ணம் சென்றிருக்கிறார்கள். தங்கையின் மாப்பிள்ளையே கார் ஒட்டிச் சென்றிருக்கிறார். கற்கையாளன், தவ ராசாவுடன் இன்னும் இருவர் காரிற் சென்றனர். தையற்காரரிடம் உடுப்பு அளவுகள் கொடுத்துவிட்டுப் பருத்தித்துறை திரும்புகையில் வல்லை வெளியில் கார் விபத்துக்குள்ளாகியது கற்கையாளன் அவ்விடத்திலேயே
28

இறந்துவிட்டானாம்: யாழ்ப்பாணம் பட்டினத்திற் தற் செயலாகச் சந்தித்து அவர்களோடு காரில் வந்த மட் டக்களப்பு ஆசிரியர் ஒருவரும் இறந்தாராம்.
தந்தி காலை பத்து மணியளவில் மூதூரிற்கிடைத் தது. அன்றிரவு பதினொருமணிக்கு நானும் மனைவியும் கொடிகாமத்தூடாகப் பருதித்துறையை அடைந்தோம். வழி நெடுக மனைவி அழுது கொண்டே வந்தாள். அவன் கட்டையைக் கண்டதும் சூழ இருந்த உறவினர் கள் "உன்ர அப்பாவும் அம்மாவும் வந்திற்றாங்க மகனே' என்று அழுதார்கள். நானும் விம்மிவெடித்து அழுதேன். பிற்காலத்தில் என் மூத்த மகன் இளவயதில் இறந்தபோது கூட நான் அ வ் வ ள வு அழவில்லை .
அடுத் த ந T ஸ் பிரேதத்தைச் சவக்குழிக்குக் கொண்டுபோக முன்னர் வீட்டிலே இறுதிச் சொற் பொழிவு பலர் நிகழ்த்தினர். நான் சில சொற்கள் பேசுகையிலே அழத் தொடங்கிவிட்டேன்.
jo அந்த இளங்கவிஞனை நினைத்தால் இப்போதும்
அழுகை தான் வருகிறது, -
29

Page 74
22. மூதூர்த் தமிழ்விழா
அறுபதுகளின் தொடக்கத்தில் எஸ். பொ: அவர் கள் மட்டக்களப்பிற் பிரம்மாண்டமான தமிழ் விழா ஒன்று நடத்தினார். அதனைப் போன்ற விழாவை மூதூரிலும் நடத்தவேண்டும் என நான் விரும்பினேன்.
என்ன இருந்தாலும் மட்டக்களப்பு பட்டினம். மின் சாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருந்தன. பாட சாலை மண்டபங்கள் கூட இருந்தன. ஆனால் மூதூரில் மின்சாரம் இல்லை. வெளிய்ே இருந்து அழைக்கப்படு பவர்கள் தங்குவதற்கான எந்த வசதிகளும் விழா நடத்தக்கூடிய பெரிய மண்டபங்களும் இல்லை. இந்த நிலையிலும் விழா நடத்தவேண்டும் என நான் விரும் பினேன்.
விழாவிற்கு எனக்குத்தெரிந்த எழுத்தாளர்களை பும், பேராசிரியர்களையும், கவிஞர்களையும் அழைத் தால் நிச்சயமாக வருவார்கள் என நம்பினேன். என் றாலும் விழா நடத்தப் பணம் வேண்டுமே!
என் ஆசையைத் தம்பலகாமத்தைச் சேர்ந்தவரும் மூதூரில் உதவி வைத்திய அதிகாரியாகவும் இருந்த
I 30

(காலஞ்சென்ற) நல்லலிங்கம் அவர்களிடம் வெளியிட் டேன். அவர் என்னையும் சேர்த்துக்கொண்டு மூதூரில் பகிரங்க வேலைப்பகுதி மேற்பார்வையாளராக இருந்த திரு. நவரத்தினம் அவர்களிடம் சென்று கதைத்தார். திரு. நவரத்தினம் அவர்கள் விழா நடப்பதை வர வேற்று அதற்குச் சகல உதவிகளும் செய்து தருவதாக வாக்களித்தார். எல்லா அரசாங்க உத்தியோகத்தர் களும் ஆதரவு தந்தார்கள். சுற்றுப்புறக் கிராமங்களி லுள்ள பிரமுகர்களும் கிராமசபைத் தலைவர்களும் ஆதரவளித்தார்கள், ஒரு விழாக்குழு முளைத்தது. நான் காரியதரிசி, எனக்கு உதவியாக செ. கதிர்காமத் தம்பி அவர்களைச் சேர்த்துக்கொண்டேன். நல்லலிங் கம் பொருளாளர். எந்கச் சோலி சுரட்டுக்கும் போகா மல் எங்கள் உளரிலேயே நல்லவர் என்றும் எம்மக்கள் எல்லாராலும் "கோபாலையா" என்று அழைக்கப்படும் ஒய்வுபெற்ற தலைமையாசிரியர் அவர்களைத் தலை வராகவும் தேர்ந்கெடுத்தோம். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் "கோபாலையா" கூட்டத் திற்கே வரவில்லை. அவரை நாடிலும் நல்லலிங்கமும் கதிர்காமத்தம்பியும் தலைவராக்கி, விஷயத்தை அவ ரிடம் சென்று சொன்னோம். அவர் தமிழ் விழாதானே எடுக்கப்போகிறீர்கள் நான் சம்மதிக்கிறேன் என்றார்:
அவரை நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தது எங்கள் பாதுகாப்புக்கே, அவர் ஊரிலே மதிப்புள்ளவர் முன்னைநாள் கொட்டியாபுரப்பற்று வன்னிமையாக இருந்த வைரமுத்து அவர்களின் மருகர், அவர் நாவ சைந்தால் நாடசையும்' என்பது எங்களுக்குத் தெரியும்.
எங்கள் நால்வரோடு மூதூரில் இன்னோர் உதவி வைத்திய அதிகாரியாக இருந்த வல்வெட்டித்துறைச் சிதம்பரநாதனையும் சேர்த்துக்கொண்டோம். கொமிற் றியில் மற்றவர்கள், கட்டைபPச்சான், சம்பூர், மல்
3.

Page 75
லிகைத்தீவு, கிளிவெட்டி, ஈச்சிலம்பற்றைக் கிராம சபைத் தலைவர்களை நியமித்தோம். ஆம், நியமித் தோம். அவர்கள் சகலருமே எங்களுக்குப் பூரண சம் மதம் தந்தார்கள். விழாவிற்காக உழைத்தார்கள்,
ஆனாலும் நல்லலிங்கமும், உ ற வு முறையால் எனக்கு "மச்சான்' ஆன கதிர்காமத்தம்பியும், வல் வெட்டித்துறை சிதம்பரநாதனும், நானும் தான் விழா வின் சூத்திரதாரிகள்!
நல்ல லிங்கம் அவர் க ஸ் கொட்டியாபுரப்பற்றின் பிரமுகர்களிடம் பணம் தெண்டினார். அது அவர் பொறுப்பு! அதிலே எவருமே தலையிடவில்லை. அவர் கச்சிதமாகச் செய்வார் என்பது எனக்குத் தெரியும்! செய்தார். எங்கள் நால்வருக்கும் பின்னணியில் நவ ரத்தினம் ஒவசியர் அவர்களின் ‘அசுரபலம் இருந்தது.
ஆனாலும் என்னைத்தவிர மற்றெல்லார்க்கும் விழ! விற்கு யாழ்ப்பாணத்திலிருந்து பிரபல நாதஸ்வர வித் வான்களைத் தருவிக்கவேண்டும், கொழும்பிலிருந்து நாடகம் வரவேண்டும், மட்டக்களப்பிலிருந்து வில்லுப் பாட்டு வரவேண்டும், சிறந்த பரதநாட்டியம் மேடை யேறவேண்டும் என்றுதான் விரும்பினார்கள். அவை களையெல்லாம் உங்களிஷ் டம்போலச் செய்து கொள் ளுங்கள். இரவிலே இவைகளையெல்லாம் திறந்தவெளி யரங்கிலே நடத்திக்கொள்ளுங்கள். ஆனால் வெள்ளி பிற்பகலிலும் சனி ஞாயிறு இரண்டு நாட்களிலும் பாடசாலை மண்டபத்தில் நடைபெற இருக்கும் நான்கு உரையரங்கங்களையும் கவியரங்கையும் என்பொறுப்பில் விட்டு விடுங்கள் அவற்றிற்கான பேச்சாளர்களையும் கவிஞர்களையும் நான் அழைத்துக்கொள்கிறேன்.அதி:ே எவருமே தலையிடவேண்டாம் என்றேன் நான்.
32

சி பேச்சாளராக யார் யாரைக் கொண்டு வருவீர்? என அவர்கள் கேட்டார்கள். பேராதனைப் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், இலங்கை வானொலியினர், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மலை நாடுகளிலிருந்து எழுத்தாளர்கள் எனச் சுமார் ஐம்பது பேர்களின் பெரைச் சொன்னேன்.
என் சகாக்களுக்கு இவர்கள் எல்லாம் வருவார் களா? என்பது சந்தேகமாகவே இருந்தது. ஆனாலும் அது என்னவோ உம்பாடு, நாங்கள் அதிற் தலையிட
உடோம் என்று சொன்னார்கள்.
அந்தே னியார் பாடசாலைக்கு முன்னாலுள்ள திறந்த வெளியில் மேடை ஒன்று உருவாகியது. நவ ரெத்தினம் ஒவசியரின் லொறி மேடை சமைக்கும் பணியில் அங்குமிங்கும் ஓடித்திரிந்தது.
நான் கண்டி கொழும்பு, யாழ்ப்பாணம் என்று ஒடிக்கொண்டிருந்தேன் மட்டக்களப்பை எஸ் பொ, கவனித்துக்கொண்டார்.
எனக்காக மூதூர்த் தமிழ்விழா என்ற தலைப்பிட்டு მა(ს கடிதத்தலைப்புகள் அச்சிட்டுக்கொண்டேன். அதி லேயே நான் பலருக்கும் கடிதம் எழுதினேன்.
திட்டமிட்டபடி வேலைகள் துரிதமாக நடைபெற் றன. என்றாலும் நான் குறிப்பிடும் பேராசிரியர்களும் எழுத்தாளர்களும் வருவார்களா? என்பது என் சகாக் களுக்குச் சந்தேகமாகவே இருந்தது.
விழாத் தொடக்க நாளுக்கு முன்னாள் வியாழக்
கிழமை நான் விழாவிற்கு வருபவர்களை அழைத்து வர்த் திருக்கோணமலைக்குச் சென்றேன்;
. 33

Page 76
வியாழக்கிழமை இரவே விழாமண்டபமும் திறந்த வெளி அரங்கும் ஜெனரேட்டர்களின் உதவியால் ஒளி வெள்ளத்திலாழ்ந்தன.
வெள்ளிக்கிழமை காலைப் புகையிரதத்தில் பேரா விரியர் ஆ. சதாசிவம், விரிவுரையாளர் தனஞ்செய ராசசிங்கம், எம். ஏ. ரகுமான், மகாகவி, இலங்கை வானொலியிலிருந்து அருள். தியாகராசா ஆகியோர் வந்தி ருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து பண்டிதர் துரைசிங் கம், கனக.செந்திநாதன், தேவன், இ. நாகராஜன் ஆகி யோரும் அவர்களைத் தொடர்ந்து வந்தனர். வெள்ளிக் கிழமை மாலை பேச இருப்பவர்கள் எல்லாருமே வந்து விட்டார்கள் என்ற மனநிறைவு எனக்கு ஏற் பட்டது.
வந்தவர்கள் பெருந்தெரு மெ. மி. பாடசாலை யில் சிரமபரிகாரங்களை முடித்துக் கொண்டனர். காலை பதினொருமணியளவில் மூதூருக்கு அவர்களோடு வந்தேன். மூதூர் இறங்குதுறையிலே நல்லலிங்கமும் நவரத்தினம் ஒவசியரும் தங்கள் கார்களோடு காத்தி ருந்தார்கள். மட்டக்களப்பிலிருந்து எஸ். பொ. வும், F, X C. நடராசா அவர்களும் வந்திருந்தார்கள்.
விழாவிற்கு வருகை தந்தவர்களை நினைத்துப் பார்க்கிறேன். நான் ஏற்கனவே குறிப்பிட்டவர்களோடு மலையகத்திலிருந்து கவிஞர் சக்தி பாலையா, ஏ. வி. பி. கோமாஸ், கொழும்பிலிருந்து நாவற்குழியூர் நடரா ஜன், வீ. ஏ. சிவஞானம் மாத்தளையிலிருந்து கவிஞர் சொக்கநாதன் ஆகியோரும் வத்திருந்தனர். மட்டக் களப்பு எம். பி. செ. இராசதுரையும், மூதூர் இரண் டாவது எம் பி. ஏ. எல். ஏ. மஜீத்தும், திறந்த வெளி யரங்கிற் பேச அழைக்கப்பட்டிருந்தார்கள். மூதூரின் முன்னைநாட் காரியாதிகாரிகளான திரு, நவரத்தின
34

ராசா அவர்கள் திருகோணமலையிலிருந்தும், திரு. செல்வரத்தினம் அவர்கள் மட்டக் களப்பிலிருந்தும் வந் திருந்தனர்.
ஊரிலே சலசலப்பு ஏற்பட்டது, நான் மூதூரின் முதலாவது பாராளுமன்ற அங்கத்தவரை வேண்டு மென்றே அழைக்காமலிருந்ததாகத் தமிழரசுக் கட்சி யினர் குற்றஞ் சாட்டினார்கள். 'இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட இராசதுரையை அழைத்திருக்கிறேன். அவர் தமிழரசுக் கட்சிக்காரர்தானே' என நான் பதில் சொன்னேன். ஆனால் என் பேச்சை அவர்கள் கேட்கவில்லை - தலைவர் “கோபாலையா? உடனே கிண்ணியா சென்று மூதூர் முதலாவது எம் பியான ஜனாப். M. B. H. முகமதலி அவர்களை அழைத்து வந்தார். அவர் விழாவைத் தொடக்கி வைத்தார்.
முதலாவது நாள் ஜனாப். எம். ஈ. எச். முகமதவி அவர்கள் விழாவிற்கு வருகையில் தமிழரசுக் கட்சியி னர் ஊர்வலம் வந்து சீன வெடிகள் கொளுத்தி ஆர்ப் பரித்தார்கள். இரண்டாம் நாளின் போது பூரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் காலஞ் சென்ற ஏ. எல். ஏ. மஜீத் அவர்களை சீலடி சிலம் படிகளோடு ஊர்வலமாக அழைத்து வந்து மேடையேற்றினார்கள். பேச்சாளர்களில் ஒருவராகச் சிறந்த தமிழறிஞரான சங்கைக்குரிய தம்மரத்தினதேரர் என்ற பெளத்த பிக்குவை அழைத்திருந்ததைத் தமிழரசுக்கட்சியினர் குறை சொன்னார்கள். இந்த மூன்று விஷயங்களும் அவ்விழாவின் திருஷ்டிக் கழிப்பாக அமைந்திருந்தன;
விழா நடந்த நாட்களில் விழா நிகழ்ச்சி நிரலை , வீரகேசரி ஒவ்வோர் நாளும் வெளி யி ட் டது. ஞாயிற்றுக் கிழமையன்று விழாமலர் ஒன்  ைற யும் வெளியிட்டது. நாவலர், விபுலானந்தர், இலங்கையா கோன், சாங்கோபாங்க அடிகள் ஆகிய நால்வர் பேரி
185

Page 77
லும் நான்கு பேச்சரங்குகள் அவைகளில் மதங்கள் வளர்த்த தமிழ், பிராந்தியப் பேச்சுத் தமிழ், நாடக மும் தமிழும், என்பன பற்றிப் பேசப்பட்டது. நாவற் குழியூர் நடராஜன் அவர்கள் தலைமையிற் கங்காதீரம் என்ற பொருளிற் கவியரங்கு நடைபெற்றது; சக்தி பாலையா சொக்கநாதன் இ. நாகராஜன், மஹாகவி அண்ணல், கற்கையாளன், ஆகிய கவிஞர்கள் மகா வலி கங்கையின் உற்பத்தி தொடக்கம் சங்கமம் வரை தொடர்பாகக் கவிதைகளைப் பாடினார்கள், மகாவலி கங்கைக்கு கிடைத்த அந்தக் காவியத்தின் பிரதிகள் தற்போது யாரிடமாவது இருக்கிறதோ என்னவோ?
திறந்த வெளியரங்கில் வேல் ஆனந்தன் கோஷ்டி யினரின் பரத நாட்டியங்கள், மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் வில்லுப்பாட்டு, கொழும்பிலிருந்து வாட கைவீடு என்ற நாடகம், யாழ்ப்பாணம் பத்மநாதன் கோஷ்டியினரின் நாதஸ்வரக் கச்சேரி என்பன மேடை யேறின.
விழாவில் நாட்டுப் பாடல்களைச் சேகரித்துத் தமிழ்த் தொண்டு புரிந்த வட்டுக்கோட்டை இராமலிங் கம் அவர்கள் "மக்கள் கவிமணி என்ற பட்டமளிக்கப் பட்டுப் பொன்னாடை போர்த்திப் பதக்கமணிந்து கெளரவிக்கப்பட்டார்.
விழாவில் சாங்கோபாங்க அடிகளார் என்ற "யக் கோமே கொன்சால் வெஸ்" என்ற கத்தோலிக்கக் குரு அவர்களின் தமிழ்த் தொண்டு விரிவாக ஆராயப்பட் டது. 18ம் நூற்றாண்டில் ஆரம்பத்திலேயே அவர் ஈழத்திற் தமிழ் வசன நடையைத் தொடக்கி வைத்த லைப் பற்றிய ஒர் ஆராய்ச்சிக் கட்டுரையை வீரகேசரி விழா மலரில் நான் எழுதினேன். .
இப்படியாக மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த கோலகலமான விழாவின் உணவுப் பகுதிக்குப் பொறுப் பாக இருந்த ஜனாப் எஸ். எம். அபூபக்கர் அவர்க ளையும் என்னால் மறக்கவே முடியாது;
136

23. இளம் பிறையும் நானும்
எம் ஏ. ரகுமானைச் சந்தித்த பின்னர் நான் அடிக் கடி கொழும்புக்குப் போனேன். அதிகமாக ஆவணிமாத விடுமுறைகளைக் கொழும்பிலே தான் கழித்தேன். ரகு மானின் அச்சகத்திலும் நீர்கொழும்பிலிருந்த என் உற வினர் இல்லத்திலுமாக அந்நாட்களைக் கழித்தேன்.
அரசு வெளியீட்டின் மூலம் சுமார் இருபது நூல் களை வெளிக்கொணர்ந்தார் ஏம். ஏ. ரகுமான். அதன் மூலம் இலங்கையில் மிகச் சிறந்த நூல்வெளியீட்டாள ரானார். நூல்கள் பல பாராட்டைப்பெற்றன.
"ஞானப்பள்ளு என்ற பிரபந்த நூலை பேராசிரி யர் ஆ சதாசிவம் அவர்கள் அரசு வெளியீடாக வெளி யிட்டார். வித்வான் F. X C. நடராசா அவர்களும் அந்நூலை வெளியிடுவதில் அவருக்கு உதவியாக இருந் தார். நூல் வெளியானதும் ஒரு பிரதியை யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் வந்தனைக்குரிய தீயோகுப் பிள்ளை அவர்களுக்கு அனுப்பினோம். அவர் அந்நூலின் பதிப்பிலுள்ள பல்வேறு பிழைகளைச் சுட்டிக்காட்டி நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தைக் கண்டு நாங்கள் எல்லோருமே அதிர்ந்துபோனோம்!
37

Page 78
இந்தக் காலப்பகுதியில் திரு. ரகுமான் அவர் க. இளம்பிறை என்ற மாதப்பத்திரிகை ஒன்றையும் வெளி யிட்டார் அதில் மட்டக்களப்புத் தமிழகம் என்ற நூலை எழுதிய பண்டிதர் வீ. சி. கந்தையா அவர்களை விமர் சித்து எஸ். பொ. அவர்கள் கட்டுரைகள் எழுதினர். "கொண்டோடி சுப்பர்" என்ற புனைபெயரில் அவர் இளம்பிறையில் எழுதிய நையாண்டிக் கட்டுரைகள் வெளியாயின.
அந்தக்காலப்பகுதியில் எஸ். பொ.அவர்கள் வித்தியா பகுதியில் 'கறிக்குலம்' கிளையில்வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆகவே அவர் கொழும்பின் நிரந்தர
வாசர் ஆனார். நான் வந்தேறுகுடி, "கறிக்குலம்’ எஸ்
பொ. கேட்டுக்கொண்டதற்காகப் பாடப்புத்தக நூல் களுக்கு இரண்டு பாடங்கள் எழுதினேன். தமிழ்மொழி பாடப்புத்தகத்தில் (வகுப்புக்கள் நினைவிலில்லை) வழி கோலிகள் மீன்பிடிக்கிறார்கள், "கந்தளாயிலிருந்து கன் னியா வரை" என்ற இருடாடங்களும் நான் எழுதியவை a Gar!
இளம்பிறை சிறிய பத்திரிகை. ஆனாலும் மிகவும் இலக்கியத்தரம் வாய்ந்த கதைகளைப் பிரசுரித்தது. இளம் எழுத்தாளர்களுக்கும் இடம் அளித்தது. பாணந் துறை மொயின்சமீம், கிண்ணியாவைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்கள் சிலர் இளம்பிறையில் எழுதினார்கள். கவிஞர் அண்ணல் அவர்கள், முகம்மது நபி அவர்க ளின் சரிதையைக் குறுங்காவியமாக எளிய இனிய நடையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.
நானும் என் சிறந்த சிறுகதைகள் சிலவற்றை இளம்பிறையில் எழுதினேன். இரசிகன், வென்றிலன் என்றபோதும், பங்கம் a+a:23; ஆனா ற் கதை+ கதைா ஒரு கதை, என்ற கதையும் எழுதினேன்,
38

'கடைசிய்ா ச்ே ·ଙ#ffc; ot; ... &&), மிகவும் கCார ஸ்கி யமானது. ‘கல்முனையிலிருந்து ஒருகிளாக்கர் தம்பல காமத்திற்கு மாற்றம் பெறுகிறார். அவர் மாற்றம் எதிர்பார்க்கப்பட்டது. மாற்றத்திற்காக அவர் பெயர் மினிற் பண்ணப்பட்டபோது கிளாக்கர் தாமாகவே தம்பலகாமத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். கல்முனையில் இருந்த வீட்டை விட்டுவிட்டு, தம்பல காமத்தில் வசதியான வீடு பார்த்துக்கொண்டு தன் வீட்டுப்பாவனைப் பொருட்களுடனும் முழுக் குடும் பத்துடனும் தம்பலகாமத்திற்கு வருகிறார்.
ஆசிரியரின் மாற்றம் எதிர்பாராதது. தம்பலகா மத்துக்கு மாற்றம் கிடைத்ததும் ஆசிரியர் இது எம்.பி. யின் வேலைதான் எ ன் று குமுறிப் "புறெட்டெஸ்ற் பண்ணுகிறார். மாற்றத்தைக் கான்சலாக்க கொழும் புக்கு ஒடுகிறார். பணம்தான் செலவே ஒளியக் காரி யம் ஆக வில் லை. இப்படியாக நாட்கள் கழிந்ததால் அந்த மாதம் அவருக்குக் கல்முனையிலும் சம்பளம் இல்லை. தம்பலகாமத்திலும் சம்பளம் இல்லை. இப் படியாகக் கஷ்டப்பட்டுக் கடைசியாய் வேண்டா வெறுப்பாய்த் தன்னந் தனியனாகத் தம்பலகாமம் வருகிறார். த ம் பல கா ம த் தலைமை ஆசிரியர் த ன் பா ட சா  ைல க்கு ஒரு வாச்சரும் கிடைத்து விட்டதாக மகிழ்கிறார். ஆசிரியர் கோயிலடியிலிருந்த மலையாளத்தான் க  ைட யி ற் சாப்பிட்டு விட்டுப் பாடசாலை டெஸ்குகளை இணைத்து விட்டுப் படுக் கிறார். அவர் மனது அடுத்து வெள்ளிக்கிழமைக ளோடு வர இருக்கும் அரசாங்க விடுமுறை நாட்களை நினைக்கிறது.
இதில் வரும் கிளாக்கரின் கதையைக் கொஞ்சம் சொல்லிப் பின்னர் ஆசிரியரின் கதையைச் சொல்லி
19

Page 79
இப்படியே மாற்றி மாற்றிச் சொல்லிச் கதை முடிந்த பின் வாசித்தேன்.
இருவரது கதைகளும் சேர்ந்து ஒரே கதையாக உருவம் எடுக்கும் வரையில் திருப்பித்திருப்பி கதையை எழுதினேன். ஒரே கதைதான் அந்தக் கதையை ஆசிரி யரின் கதையைத் த டி த் த எழுத்திலும் கிளாக்கரின் கதையைச் சாதாரண எழுத்திலும் நான் கே ட் டு க் கொண்டபடி ரகுமான் பிரசுரித்தார். இந்த இருவர தும் கதைகளைத் தனித்தனியே படிக்கையில் இரண்டு கதைகள். சேர்த்துப் படிக்கையில் ஒரு கதை! இதுதான் அக்கதையின் சிறப்பு.
பொறிகாணலவனோடு மீன முங்குறையாச் செறிமாண்கழிசூழ் புளியந்துருத்தி மட்டக்களப்பு
எனப் புலவர் பாடிய மட்டக்களப்பின் அவாசிக் கண்ணதாயுள்ள கல் மு  ைன க் கிளாக்கருக்கு அதே புலவரால்
நிரைகழலரவ நிறைமொழி பெறீஇக்
கோணாதோங்கிய கோணமாமலையின்
குணதிசைக் கண் ண த ன தம்பலகாமத்திற்கு மாற்றம் கிடைத்தது என்ற வலுத்த ஆர்ப்பாட்டத் தோடுதான் கதை தொடங்குகிறது,
இளம்பிறை ஆறு அல்லது ஏழு வருடங்களே வெளி வந்தாலும் ஈழத்தின் அதன் இலக்கியப் பங்களிப்பு காத்திரமானது. எஸ். பொ. வின் "பந்த நூல் மூலமும் நச்சாதார்க்கு மினியனார் உரையும்' எனற அங்கத நூலின் ஒரு பகுதி வெளியாயிற்று அந்நூலுக்கு முன னுரை எழுதியவர் வெள்ளங்காடு வி.வியாகேச தேசிகர்
40

எங்களுக்கு வேண்டாத எழுத தாளர்களையும் பேராசிரியர்களையும் நையாண்டி பண்ணியிருந்தோம். அந்த நூலில் ஈழத்தில் அங்கதச் சுவைக்கு அதை யொத்த நூல் இதுவரை வெளிவந்ததேயில்லை!
இந்தக் காலகட்டத்தில் நாடகத் தயாரிப்பாள ரான சுகைர் ஹமீட் அவர்கள் என் நண்பரானார். இலங்கை வானொலியைச் சேர்ந்த இர்பான், அசன் குத்தூஸ் ஆகியோரும் வேலணையைச் சேர்ந்தவரும் "தமிழமுது" என்ற இதழின் ஆசிரியருமான மணிசேக ரனும் எனக்கு நண்பர்களானார்கள்,
இந்தக்கால கட்டத்திற்தான் மகாத்மா காந்தி யாரின் நூறாவது பிறந்த தினம் வந்தது. அதையொட்டி இந்தியரான எம். ஏ. றகுமான் ஐந்து நூல்களை வெளியிட்டார். பல்வேறு கவிஞர்களிடமிருந்து கவிதை களைப் பெற்று அண்ணல் காந்தி பாமாலை என்ற கவிதை நூலின் தொகுப்பாசிரியரானார். மகாத்மா காந்தியைப் பற்றி உலகப் பேரறிஞர்கள் சொன் னவைகளிற் கொச்சத் தமிழ்மொழி பெயர் த் து எஸ். பொ. தொகுத்தார். காந்தியக் கதைகள் என்ற சிறுகதை நூலும் வெளியாயிற்று. (மற்ற இரண்டு நூல்களின் பெயர்கள் நினைவில்லை.)
மகாத்மாகாந்தியையிட்டுச் சிறுகதை எழுதுவதற்காக நான் மீண்டும் மகாத்மா காந்தி பற்றிய நூல்களைப் புரட்டினேன். ஐரிஷ் ஆசிரியை வின்சென்ற் ஷின் அவர் கள் ள்முதிய நூலொன்று என்னை மிகவும் கவர்ந்தது. நான் "காந்தி மீண்டும் பிறப்பார்", என்ற சிறுகதையை தொகுதிக்காக எழுதினேன் அக்கதையிற் காந்திஜியின் பிரதம சீடர்களில் ஒருவரான ஜோசப் கொர் நீலியஸ் குமரப்பா அவர்கள் குறிப்பிடப்படுகின்றார். உடலு ழைப்பின் மேன் மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்
14

Page 80
படடு ஆசிரியை வின்சன்ற வீன் அவர்களின் நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில வாக்கியங்களோடு கதை முடிகிறது.
ஈழத்து இலக்கிய உலகிலே எம். ஏ. ரகுமான் அவர்களின் சாதனை அபாரமானது. இந்தியப் பிரஜா உரிமையை வைத்திருந்த அவர் இங்கு மேலும் தங்கியி ருக்க அனுமதிக்கப்படவில்லை. தன் அச்சகத்தை விற்றுவிட்டு இந்தியாவிற்குப் போய்விட்டார்!
அங்கேயும் அவர் அச்சகந்தான் நடத்துகிறார்.
அவர் நினைவு என்னுள் என்றைக்குமே இனிமையா னதுதான்.
42

24. தென்னிந்தியக் குப்பைகள்:
சிழுபதுகளில் ஆட்சி செலுத்திய அரசாங்கத்திற் கொம்யூனிஸ்ற்றுகளும் வேறு இடதுசாரிகளும் கூட்டுச் சேர்ந்திருந்தனர். அரசாங்கம் தங்கள் கையிலிருந்த தை ஆதாரமாக வைத்துக்கொண்டு தென்னிந்தியாவி லிருந்து இறக்குமதியாகும் சில “குப்பைகளை இலக் கியத்தரமற்ற சஞ்சிகைகளைத் தடைசெய்ய முற்போக் காளர்கள் முயன்றனர்.இந்தக் கோஷத்தை தேசாபிமானி என்ற பத்திரிகையின் முன்னை நாள் 9.Siuri H. M. P முகைத்தீன் அவர்கள் முன்வைத்தார். மல்லிகை ஆசி ரியர் ஒத்தூதினார். விஷயம் நாடு முழுவதும் பரவலா கப் பேசப் பட்டுப் பத்திரிகைகள் திடைபண்ணப்பட்டு விடும்போலத் தோன்றியது.
மஞ்சட்பத்திரிகைகள் சில இருக்கத்தான் செய்தன. ஆனால் அவை தமிழில் மட்டும் இருக்கவில்லை. ஆங்கி லத்தில் ஏராளமான மஞ்சட்பத்திரிகைளும், "திரைம்? எழுதும் பத்திரிகைளும் இறக்குமதியாகிக் கொண்டிருந் தன. அவற்றைத் தடைசெய்யும்படி எவருமே ே வில்லை. ஆனாற் தமிழ்ப் பத்திரிகைகளைத்தான் தடை செய்யும்படி கேட்கிறார்கள். இது எனக்கு ஆத்திரமாக இருந்தது.
1 4 3

Page 81
ஆநந்த விகடன், குமுதம் போன்ற பத்திரிகைக ளும் இலக்கியத்தர மற்றவை அவைகளையும் தடை செய்ய வேண்டும் என பல முற்போக்கு எழுத்தாளர் கள் எழுதினர்.
இலக்கியத் தரத்தைத் தீர்மானிப்பது யார்? எவை எவை ஆபாஸம் கூறும் மஞ்சட்பத்திரிகைள்? இவைக ளைத் தரம்பிரிப்பது யார்?
எவ்வளவுதான் சித்தாந்தம் பேசினாலும் பேரினத் தைச் சார்ந்த அரசியற்தலைவர்களை என்னால் நம்ப முடியவில்லை. படிப்படியாக இந்தியாவிலிருந்து தமிழ்ச் சஞ்சிகைகளையும் நூல்களையும் தடைபண்ணி விட இந்தப் பத்திரிகை இறக்குமதி தடைவழி வகுத் து விடுமோ என நான் பயந்தேன். கொழும்பு சென்ற போது, அப்போது சுதந்திரன் ஆசிரியராக இருந்த சங்கர் இந்தக் கோஷத்திற்கு எதிராக ஒரு கட்டுரைத் தொடரைச் சுத்ந்திரனில் எழுதவேண்டும் எனறு கேட்
f
நான் ஒப்புக்கொண்டேன். இந்தியச் சஞ்சிகைகளை இறக்குமதி செய் யு ம் நிறுவனங்களிடமிருந்து எ ன் னென்ன பத்திரிகைகள் எத்தனை பிரதிகள் இறக்குமதி செய்யப படுகின்றன என்ற புள்ளிவிபரங்களைத் திரட் டினேன்.
1950ம் ஆண்டளவில் போட்டோப் படங்களோடு சேர்த்துக் கதைகளைப் பிரசுரிக்கும் ஆபாஸப் பத்திரி கைகஃ வந்தன. ஆனால் அப்பத்திரிகைகள் தாமாகவே அழிந்து விட்டன என்ற உண்மை நான் திரட்டிய புள்ளி விபரங்களிலிருந்து தெரியவந்தது.
புள்ளி விபரங்களை அடிப்படையாக வைத்துக் கா ண்டு ஆபாஸம் என்றால் என்ன? என்று கட்டுரையை
144

ஆரம்பித்தேன்; வயது வந்தவர்களுக்கு மட்டும் காட் டப்படும் சில ஆங்கிலப் படங்களைக் குறிப்பிட்டு இவை களை ஏன் தடைசெய்யவில்லை எனக் கேள்வி எழுப்பி னேன். பாலியற்கல்வி ஆபாஸ்மா? எனக்கேட்டேன். ஹவலொக் எல்லீஸ், டி. எச். லாரென்ஸ் ஆகியோரின் ஆங்கில நூல்கள் ஏன் தடைசெய்யப்படவில்லை எனக் கேட்டேன். தமிழில் மட்டும்தானா ஆபாஸ் நூல்கள் இருக்கின்றன. ஆபாஸம் என்று சொல்லி அரக்கு மங் கையர் மலரடி வருடியும் கருத்தறிந்த பின் அரைத னிலுடைதனை, உரித்து மந்குள அரசிலை தடவியும் எனபது போன்ற பாடல்கள் வரும்திருப்புகழைத் தடை செய்யப்போகிறார்களா? ஞானி சலமோனின் உன்ன தப் பாடல்களில் ஆபாசம் உள்ளது எனச் சொல்லி தென்னிந்தியாவிலிருந்து அச்சாகிவரும் பைபிளையே தடைசெய்து விடுவார்களா? என்றெல்லாம் க ள் வி எழுப்பி, அந்த ‘தென்னிந்தியக் குப்பை” களுக்குத் தடைவிதிக்கும் விவகாரம் பற்றி ‘ஈழநாதன்" என்ற புனை பெயரில் ஐந்து வாரங்கள் தொடர்ந்து எழுதி
னேன்.
இலக்கிய உலகில் பெரிய குழப்பங்களை அக்கட் டுரைகள் உண்டாக்கின கொம்யூனிஸ்ட் அல்லாத தமி ழர்கள் அத்தனை பேரும் பத்திரிகைத் தடையை எதிர்ப்பதாகத் தோன்றியது. எனவே முற்போக்கர் களின் எண்ணம் அரசாங்கத்துக்கு எட்டு முன்னரே அவர்களின் நினைப்பு சிசுஹத்தி செய்யப்பட்டு விட்டது.
இந்தக் காலகட்டத்திற்தான் சங்கர் என் நண்ப ரானார். சைவ போசன காரர் சுதந்திரனில் ஆசிரிய ராக இருப்பினும் கட்சி பேதம் பாராது எழுத்தாளர் களைக் கெளரவிப்பவர். ஆங்கிலத்திலிருப்பதைத் தமி ழிற்கு இயந்திர வேகத்தில் மொழி பெயர்ப்பார் தற்போது யாழ்ப்பாணம் செட்டியார் அச்சக உரிமை
卫45

Page 82
ாளராக இருக்கும் ஆrரைத் தொண்ணுறாம் ஆர். டின் பின்னர் சந்திக்கவில்லை.
சங்கர் தான் எஸ் டொ வின் சடங்கைச் சுதந்திர னில் தொடர்ந்து வெளியிட்டார்
என் கட்டுரைத் தொடர் முடிந்த பின்னர் நானும் எஸ். பொ. வும் கூடிப்பேசிய போது "எந்த இந்தியப் பத்திரிகையையும் தடை செய்யக் கூடாது. ஆனால் இந்தக் கலாசாரத் தொடர்பு ஒருவழிப் பயணமாக வும் இருக்கக் கூடாது. இலங்கையிலிருந்து வெளியா கும் சஞ்சிகைகளையும் நூல்களையும் கொள்வனவு செய்ய இந்தியாவை நிர்ப்பந்திக்க வேண்டும். கலாச் சாரத் தொடர்பு இருவழிப் பயணமாக இருந்தால் தென்னிந்தியப் பத்திரிகைகளைத் தடைசெய்ய வேண் டும் என்ற கோஷமே எழாது என முடிவெடுத்தோம்
இது சம்பந்தமாக எஸ் பொ. அவர்கள் விரிவாக ஒரு அறிக்கை எழுதினார். அதனை நூலாக வெளியிட் டார், எஸ். பொ. அறிக்கை என்ற நூலை மூதூர் இலக்கிய வட்டத்தின் சார்பில் நானும் , கிண்ணியா இலக்கிய வட்டத்தின் சார்பில் அண்ணலும் முறையே முன்மொழிந்தும், வழிமொழிந்தும் ஹொட்டல் தாப்ர போனில் நடந்த கூட்டத்தில் அன்றைய பூரீலங்கா சுதந் திரக்கட்சி மந்திரியாக இருந்த திரு. செ. குமாரசூரிய ரிடம் கொடுத்தோம்.
அவர் என்ன நடவடிக்கை எடுத்தாரோ ஆனால் தென்னிந்தியப் பத்திரிகைகளைத் தடைபண்ண வேண் டும் என நினைத்தவர்களின் திட்டம் நடைபெறவே யில்லை.
l46

25. திருக்கோணமலையில்
ஒரு புதிய எழுத்தாளர்
இரா. நாகலிங்கம் என்ற 'அன்புமணி’ அவர்கள் மட்டக்களப்பிலிருந்து மலர் என்ற சஞ்சிகையை நட த்தி வந்தார். அவர் மட்டக்களப்பு கல்விக் கந்தோரில் அப்போது கடமையாற்றினார். காரியாலயம் தொடர் பாக அவரோடு பழகவேண்டியிருந்தது.
பழகுவதற்கு இனியவராக இருந்த அவர் சிறந்த வாசகர். மாமாங்கத் தீர்த்தத்துக்குப் போகவிரும்பிய சைக்கிள்கடைச் சிறுவனைப்பற்றி அவர் எழுதிய அழ கான சிறுகதை ஒன்று வெளிவந்தது. அக்கதை என்னைக் கவர்ந்தது. ஆனால் அவரது ஏனைய கதைகள் "கல்கி" பாணிச் சிறுகதைகளாகவே அமைந்திருந்தன க  ைத பண்ணும் கலை கைவந்திருந்தது அவருக்கு, ஆனால் யதார்த்தம், மண்வாசனை என்ற விவகாரங்களை இட்டு அவர் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. நிறைய எழுதுகிறார். மட்டக்களப்புத் தமிழ் எழுத்தாளர் சங் கத் தலைவராகவும் இருந்தார். அவருடைய ம ல ர் என்ற சஞ்சிகையில் நான் "காட்டுப்பூ" என்ற கதையை எழுதினேன்.
47

Page 83
மலர் மூலம் எனக்கு அறிமுகமானவர்தான் திருக் கோணமலையைச் சேர்ந்த அருள் சுப்பிரமணியம் அவர்கள். அவர் அப்போது மட்டக்களப்பு கல்வி அலு வலகத்தில் எழுதுவினைஞராக இருந்தார்.
அவரது எழுத்துக்கள் என்னைக் கவர்ந்தன அவ ரது சமூகப் பார்வை மிகவும் கூர்மையானதாக இருந் தது. நறுக்கித் தெறித்ததுபோன்ற வசனங்கள். கிண் டலும் நகைக்சுவையும் இழையோடிய நடை. திருக் கோணமலை இலக்கியவானில் புதிய நம் பி க்  ைக நட்சத்திரமாக அவர் எனக்குத் தோன்றினார்.
அவர் திருக்கோணமலைக் கல்வியலுவலகத்திற்கு மாற்றலாகி வந்தபோது நேர டி யா க த் தொடர்பு கெண்டேன். அவர் என் இனிய நண்பரானார்.
தி டீ  ெர ன அவர் கொழும்புக்கு மாற்றலாகிச் சென்றார். அங்கிருந்து அவர் எனக்குக் கடிதம் எழுதி னார். "அவர்களுக்கு வயது வந்துவிட்டது" என்ற நாவல் புத் தி க ம |ாக வெளிவர இருக்கிறது. அதன் வெளியீட்டு விழா மார்கழிமாதக் கடைசியில் கொழும் பில் நடக்கவுள்ளது. அவ்விழாவில் தாங்களும் அவசி யம் கலந்துகொள்ள வேண்டும் என அக்கடிதத்திற் கோரியிருந்தார்.
எனக்கு நத்தார் புதுவருடக் கெடுபிடி ஆனாலும் நான் வெளியீட்டு விழாவிற்கு வருவதாகச் சம்மதம் தெரிவித்தேன். மார்கழிமாதக் கடைசி நா ள ன்று கொழும்பை அடைந்தேன்.
அருள் சுப்பிரமணியம் அவர் க  ைள ச் சந்தித்த போது ‘நீங்கள் வந்தவுடன் எ ன்  ைன ச் சந்திக்கச்
சொல்லுங்கள்’’ என்று வெளியீட்டு விழாவிற்குத்
48

தலைமை தாங்க இரு 4 கும் கி. இலட்சுமன் ஐயர் கேட்டுக் கொண்டதாகச் சொன்னார்.
நான் மலே வீதியில் இருந்த கல்வி அலுவலகத் தின் தமிழ்ப் பிரிவிற்குச் சென்று ஐயரைச் சந்தித்தேன்.
கி. இலட்சுமண ஐயர் அவர்கள் ஏற்கனவே எனக்கு நன்கு பரிச்ச்யமானவர். சாகித்ய மண்டலத்தின் தமிழ் இலக்கியக் குழுவில் இருவருமே அங்கத்தவராக இருந்தோம்.
என்னை வரவேற்று அமரச் செய்த ஐயர் நூல் எப்படி இருக்கிறது? என்று கேட்டார்.
* அதில் திருக்கோணமலைப் பட்டினத்து மக்களின் வாழ்க்கை யதார்த்தமாக உள்ளது" என்றேன் நான்
* சில இடங்கள் ஆபாசமாக இல்லையா?*அருவருக்கத் தக்க அளவுக்கு விரசமாக இல்லை' 'எனக்குச் சில இடங்கள் ஆபாசமாகத்தான் படுகிறது. அது இருக்கட்டும் முன்னுரையைப் பற்றி என்ன சொல்கிறீர்?
கட்டோடு பிடிக்கவில்லை எனக்கு. முற்போக்கு வாதிகள் மக்களிடையே வர்க்க பேதம் ஒழிந்து சமத் துவம் ஏற்பட்டால் இன ஒற்றுமை ஏற்படும் என்று நேற்று வரை சொன்னார்கள். இப்போது சிங்கள தமிழ்க் கலப்பு மனத்தால் இன ஒற்றுமை ஏற்படும் என்கிறார்கள். இது வேடிக்கையாக இருக்கிறது" என் றேன் நான்.
*சரிதான் வெளியீட்டு விழாவிலே தங்களின் முன் னுரை பற்றிய கருத்தை வலியுறுத்திச் சொல்லுங்கள். உங்களைத்தான் முதலிற் பேச அழைப்பேன்" என்றார் ஐயர். . . . . . . . .
49

Page 84
"ஐயா, முன்னுரை எழுதியவர் சரிவகலாசாலைப் பேராசிரியர். அவரோடு இன்னோர் கலாநிதியும் பின் னாற் பேசவுள்ளார், அடுத்துப் பேச உள்ளவரும் அதே குழுவினைச் சேர்ந்தவர். ஏற்கனவே அவர்க ளோடு எனக்கு நல்லுறவு இல்லை. இந்த நிலையில் முதலிலேயே நான் முன்னுரையைத் தாக்கிப் பேசினால் அதற்குப் பின்னாற் பேச இருக்கும் அக்குழுவினர் எல் லோருமே என்னைச் சல்லடையாகக் கிழிப்பார்கள். என்னால் அவர்களுக்குப் பதிலுரைக்க அவகாசமுமில் லாமல் இருக்கும் எனக்குப் பின்னால் எஸ். பொ. வோ கனக. செந்திநாதனோ பேச இருந்தால் எனக்காகப் பதில் சொல்வார்கள்" என்று சொல்லித் தயங்கினேன் நான.
"அந்தப் பயம் உமக்கு வேண்டாம். அதை நான் கவனித்துக் கொள்வேன். என்னை நீர் நம்பலாம்" என்றார் ஐயர்.
நான் சரி என்று கூறி வி ட் டு த் திரும்பினேன். ஆனாலும் சற்றுப் பதட்டமாகவே இருந்தது.
மாலை ஆறுமணிக்குக் கொள்ளுப்பிட்டித் தேயி கலைப் பிரசார சபை மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழாக் கூட்டம் நடைபெற இருந்தது. அருளும் நானும் கொம்பணித் தெருவிலிருந்து ஐந்தரை மணிக்குப் புறப்பட்டோம்.
கூட்டம் ஆறேகால் மணிக்குத் தான் ஆரம்பமாகி யது. தலைமை தாங்கிய இ. இலட்சுமண ஐயர், தலைமையுரையைச் சுருக்கமாக நிகழ்த்திய பின்னர், ' நூலை விமர்சிக்க வந்தவர்களில் வயதில் மூத்தவராக இருப்பதாலும், நூலாசிரியரின் ஊரான திருக்கோண மலையைச் சேர்ந்தவராக இருப்பதாலும், நிகழ்ச்சி
150

நிரலில் நான்காவதாக இடம் பெறுபவரான வ. அ. இராசரெத்தினம் அவர்களை முதலிற் பேச அழைக்கி றேன் என்று சொல்லி என்னை அழைத்தார்,
நான் சில நொடிகள் சபையை நோட்டம் விட்டேன். சபையில் முற்போக்காளர்கள் இருந்தார்கள். முற்போக் கர்களுடன் அண்மையில் மாறுபட்டுக் கொண்டவரான எச். எம். பி. முகைதீனும் அவர் கோஷடியினரும் இருந் தனர். ஈழவேந்தன் தலைமையிலான தமிழரசுக் குழு வினர்களும் இருந்தார்கள். எனவே கூட்டத்தில் மூன்றி லிருபங்கினர் என்பக்கம் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது.
நான் அருள் சுப்பிரமணியம் அவர்களின் வசன நடை, நூலிலே அச்சொட்டாகத் திருக்கோணமலை யைக்கொண்டு வந்திருக்கும் யதார்த்தம் கதைப்போக்கு இவைகளைச் சிலாகித்துச் சொல்லிவிட்டு கலாநிதி கா. சிவத்தம்பி அவர்கள் நூலுக்கு எழுதிய முன் னு ரையை விமர்சிக்கத் தொடங்கினேன். வர்க்கபேதம் ஒழிந்தால் இனப்பிரச்சனை தீரும் என்று சொல்லிய முற் போக்குக் கலாநிதி இன்று இனப்பிரச்சனை தீருவதற் குப் புதிய வழிசொல்கிறார். விஜயன் தொடக்கம் இன் றைய உதவிப்பிரதமர் மைத்ரிபால சேனநாயக்கா வரை கலப்பு மணம் செய்தார்கள். ஆனால் இனப் பிரச்சனை தீரவேயில்லை. சிறுபான்மையினரான நாம் கலப்பு மணம் மூலம் பெரும்பான்மையினரோடு இணைந்து விட்டால் நாம் கடலிற் கரைத்த பெருங்காயமாக இல் லாமலே போய்விடுவோம். நம் இனமே அழிந்துவிடும் என்று சொல்லி என் பேச்சை முடித்தேன்.
நான் சுமார் ஐம்பது நிமிடங்கள் பேசினேன் பேச்சின் முடிவிற் சபை விசிலடித்து நீண்டகரகோஷம் செய்தது.
虚5码

Page 85
கரகோஷ்ம் அட்ங்கியதும் தின்லவ்ர் எழுந்து ந்ேரீம் இன்னமும் அரைமணித்தியாலங்களுக்கும் குறைவாக வேயுள்ளது. ஏழு முப்பது மணிக்கு இம்மண்டபத்தில் இன்னோர் கூட்டம் நடைபெறவுள்ளது. அவர்களுக்கு மண்டபத்தைக் கையளிக்க வேண்டும். ஆகவே இனிமேற் பேச இருப்பவர்கள் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேச லாம் என்று சொல்லிக் கலாநிதி கைலாசபதி அவர்களை அழைத்தார்.அவரைத்தொடர்ந்து கலாநிதி சிவத்தம்பி அவர்களும், திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்களும் பேசினார்கள். அவர்கள் என் முன்னுரைபற்றிய விமர் சனத்திற்குப் பதில் சொல்ல நேர்ந்ததால் நூலைப்பற் றிப் பேச அவர் களு க் கு நேரமே கிடைக்கவில்லை. அவர்கள் பேச்சையும் இலட்சுமண ஐயர் ஒருவர் பின் மற்றவரை அழைத்தபோது கட்டுபடுத்தினார்.
பதிலுரை சொல்ல அருள் சுப்பிரமணியம் எழுந் தார். அவர் என்ன பேசப்போகிறாரோ என்று குழம்பிக் கொண்டிருக்கையில் "நான் இன ஒற்றுமைபற்றி இக் கதை எழுதும் பொழுது நினைத்துக் கூடப்பார்க்க வில்லை. ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். அப்படத் திலே நீக்ரோவரான ஒரு விரிவுரையாளர், அமெரிக்க வெள்ளைக் காரியைக் காதலிக்கிறார். அதைப்போல ஒரு நாவல் எழுதத்தான் விரும்பினேன் என்று ஒரு போடு Glurt-Trř.
கூட்டம் மீண்டும் ‘விசிலடித்துக் கரகோஷம் செய் £5.5
அவர்களுக்கு வயது வந்து விட்டது என்ற நாவலுக்கு சாகித்ய மண்லடப் பரிசு கிடைத்தது. எனக் கு ப் பின்னர் அப்பரிசைப் பெற்ற திருக்கோணமலையான் அருள் சுப்பிரமணியந்தான்!
I 52

அந்த நாவலுக்குப் பின் நான் கெடமாட்டேன், அக்கரைப் பச்சை என்ற நாவல்களை எழுதினார். அவைகள் எனக்குப் பிடிக்காவிட்டாலும் அக்கரைப் பச்சை என்ற நாவலின் அதே (ரைப் செய்யப்பட்ட) பிரதி ஆனந்த விகடன் பொன்விழாப் போட்டிக்கு அனுப்பப்பட்டு மர்ம நாவலுக்கான முதற் பரிசைப் பெற்றது. அவரின் எழுத்துத் திறமைக்கு ஒரு சான்று! அவருக்கு அப்பரிசு கிடைத்ததும் நான்மகிழ்ச்சி மேலிட்டு விபுலானந்தர் பாணியில் அவருக்கு ஒரு நீண் ட கவிதை பாடி அனுப்பினேன். பரிசித்துறை தழுவிய பாணன் பாட்டு அது, சுவாமி விபுலாநந்தர் லட்சுமி பேரிற் பாடிய பாட்டைத் தழுவியே அதை எழுதினேன். என் பாடல்கள் நினைவில்லை. ஆனால் நான் தழுவிய விபுலாநந்தரின் பாடலில்,
"கூழுடையார் கூழனிப்பர் கோமக்கள் வாழ்வளிப்பர் ஆழிமுடி மணிவேந்தர் அகல்நிலத்தை எமக்களிப்பர்" என்ற வரிகள் என் நினைவிலுள்ளன.
சமீபத்தில் உதயம் வெளியீடாக ஒரு நாவல் வந்தது. விமானக் கடத்தல் பற்றிய நாவல் அது. அதன் வெளியீடு திருக்கோணமலை பூரீ சண்முக வித்தியாலயத்தில் நடை பெற்றபோது நான் அதற்குத் தலைமை வகித்தேன்.
*அவர்களுக்கு வயது வந்து விட்டது. என்ற அரு மையான நாவலை எழுதிய என் அன்புக்குரிய நண்பர் அருள் சுப்பிரமணியம் அதற்குப் பின்னால் மர்மநாவல் கள் எழுத முன் வந்தது திருக்கோணமலையின் அவப் பேறே. தற்போது மத்திய ஆசிய நாடொன்றில் வேலை பார்க்கும் அவர் நாடு திரும்பியதும் மீண்டும் எழுது வார். அப்போது மர்ம நாவல்களை எழுதமாட்டார் என நம்புகிறேன். −
53

Page 86
26. கவிஞன் கனகசிங்கம்
விழுபதுக்குப் பின்னர் என்னோடு நெருங்கிப் பழகி யவர்களில் கட்டை பறிச்சானைச் சேர்ந்த இளங்கவி ஞர் ஒருவர் குறிப்பிடத்தக்கவர், அவர் ஆசிரியர் என் மனைவியின் பாடசாலையிலே உதவி ஆசிரியர். அரசி பலில் மிகத்தீவிரமான தமிழரசுக் கட்சிக்காரர்.
அரசியல் ரீதியாக எனக்கு அவரைப்பிடிக்கா விட் டாலும் அவர் என் மிகச்சிறந்த நண்பர், கற்கையாள னுக்குப் பின்னால் அவரிடந்தான் மிக்க அன்பு கொண் டிருந்தேன்.
காலையில் கட்டைபநிச்சானை விட்டு மூதூருக்குப் பாடசாலைக்கென்று புறப்பட்டால் மீண்டும் அவர் ஊர் போய்ச் சேர நள்ளிரவாகும். ஊர் வேலைகளையெல் லாம் தன்தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டு செய் வார். ஆனாலும் நன்கு கவிதை எழுதுவார். அது ஒன்றினாற்தான் அவரை எனக்குப்பிடித்திருந்தது,
புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தில் அதி பராக இருந்த என்மனைவிக்கு மிகவும் உதவியாக இருந்தார். அவர் 'அந்தரங்கக் காரியதரிசி" என்று
丑54

சொல்லும் அளவுக்கு மிகவும் நெருங்கிப் பழகினார். அதிகமாக என் வீட்டில்தான் அவருக்கு மத்தியானச் சாப்பாடு!
கல்முனை ஸாகிறா வித்தியாலயத்தில் நடைபெற்ற சாகித்ய மண்டலத் தமிழ் விழாக் கவியரங்கில் மிகச் சிரமப்பட்டுப் போராடி அ வ  ைர ப் பாடவைத்தேன். அவர் கவித்துவத்தில் எனக்கு நம்பிக்கை இருந்தது,
ஆனால் அவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் சென்றதும் கவிதை எழுதுவதை விட்டுவிட்டார். பட் டதாரியாகி, ஒருபட்டதாரி ஆசிரியையை ம ன ம் முடித்துக் கொண்டு யாழ்ப்பாணப் பாடசாலை ஒன் றிலே அதிபராகப் பணிபுரிகிறார். யாழ்பாணம் திரு நெல்வேலியில் தற்போது வசிக்கும் கனகசிங்கம் என்ற அக்கவிஞனின் (தற்போது முன்னை நாட்கவிஞன் என்று குறுப்பிடுவது தான் பொருத்தம்) கல்யாணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு சுதந்திரன் சங்கரையும் கண் டேன். அவர் சங்கருக்கும் நெருங்கிய நண்பராக இருக்கிறார். VA
எண்பத்தொன்பதிற்குப் பின்  ைர் அவரோடு தொடர்புகள் விட்டுப் போயிற்று. ஆனாலும் அவர் நினைவுகள் இன்னமும் பசுமையாக இருக்கிறது.
1975ம் ஆண்டு ஆனிமாதம் 5ம் நாள் எனக்கு ஐம்பது வயது பூர்த்தியானது. அப்போது நான் சேனை யூர் மகாவித்தியாலயத்தில் உதவி அதிபராக இருந் தேன். அன்றைய அசெம்பிளியில் மாணவர்களுக்கு நான் "நற்சிந்தனை புகட்ட வேண்டும்,
நான் சொன்னேன். இன்று ஆனிமாதம் ஐந்தாத் திகதி, இன்று இலங்கையின் சரித்திரத்தில் மிகவும் முக்
55

Page 87
கியமான தினம், இன்றுதான் 1947ல் மாபெரும் வேலை நிறுத்தம் ஒன்றை அரசாங்க ஊழியர்கள் நடத்தினர். கந்தசாமி எ ன் ற இலிகிதர் சுட்டுக் கொல்லப்பட் டார். அந்தக் கொலை காரணமாக யாழ்ப்பாணத்து அரசியல் ஆதிக்கம் ஒரு கூட்டத்தினரிடமிருந்து இன் னொரு கூட்டத்தினரின் கைக்கு மாறியது, 1956 ஆணி மாதம் ஐந்தாந்திகதியிற்தான் இலங்கைப் பாராளு மன்றத்தில் தனிச்சிங்களச் சட்டம்நிறைவேற்றப்பட்டது, பாராளுமன்றத்திற்கு முன்னால் தமிழ் அரசியல்வாதி கள் சத்தியாக்கிரகம் பண்ணினார்கள் இந்த ஆண்டு ஆனிமாதம் ஐந்தாந்திகதி நான் வாழ்க்கைக் கிரிக் கெட்டில் அரைச் சதம் அடித்திருக்கிறேன்" என்று சொன்னேன்.
பாடசாலை அதிபரும் , ஆசிரியரும், மாணவர்களும் எனக்குப் பல்லாண்டு வாழ ஆசி கூறி வாழ்த்தினார்கள். அன்று மாலை வீட்டிற்கு வந்த கனகசிங்கமும் என்னை வாழ்த்தி "ஐம்பதாண்டு விழாவை எப்படிக் கொண் டாடப் போகிறீர்கள்? எனக்கேட்டார்.
i. "ஐந்து நூல்கள் எழுதிக் கொண்டாட எண்ணி யிருக்கிறேன்" என்றேன் நான்.
"எழுதுங்கள் எழுதுங்கள்" என்று அவரும் வாழ்த் SIGNITITri
நான் திருக்கரசைப் புராணம் என்ற எம் மூர்த் தல புராணம் ஒன்றை ஏட்டுப் பிரதிகளிலிருந்து பார்த் தெழுதினேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் வே. அகி லேசபிள்ளை அவர்கள் இந்நூலைப் பதிப்பித்திருந்தா ராயினும் அதன் பிரதிகள் கிடைக்கவில்லை. ஆகவே ஏட்டுப் பிரதிகளிலிருந்த அதனை நூலுருவாக்க எண் ணினேன். அந்நூலுக்கு உரையும் எழுதினேன்.
156

கட்டை பறிச்சான் இந்து வாலிபர் சங்கத்தின் சார்பிற் கனகசிங்கம் அந்நூலைப் பதிப்பித்தார்.
எனக்குக் கொழும்பிலே அறிமுகமான சரவணை (வேலணையூர்) மணிசேகரன் அவர்கள் தம்மூரில் அச்சகம் ஒன்று நடத்தினார், அவரது தாரிணி அச்ச கத்தில் அந்நூல் பதிப்பிக்கப்பட்டது.
அதே ஆண்டு ஆடி அமாவாசைத் தினத்தன்று அப்புராணம் பாடும் தலமான அகத்தியர் தாபனத் தீர்த்தக் கரையில் அந்நூல் வெளியீட்டு விழா நடந் தது. கனகசிங்கம் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளரான "முல்லைமணி அவர்களை வெளி யீட்டு விழாவுக்கு அழைத்திருந்தார். அவ்விழாவிற்கு என் மனைவியும் வந்திருந்தாள்.
அன்றுதான் எனக்கு 'முல்லைமணி" என்ற வே. சுப்பிரமணியம் அறிமுகமானார். நல்ல சிறுகதை எழுத் தாளர். நாடகாசிரியர். மட்டக்களப்பிற்கு அதன் பின் னர் சென்ற போதெல்லாம் அவரோடு உரையாடுவேன்.
அந்த ஆண்டு ஆவணி மாதத்திலேயே 'கிரெளஞ் சப் பறவைகள்' என்ற சரித்திர நாவலையும் எழுதி முடித்திருந்தேன். ஆனால் செப்டம்பர் மாதம் இரண் டாம் நாள் என் மனைவி காலமானார். ஐந்து நூல் களை வெளியிடவிருந்த என் எண்ணம் தவிடுபொடி யானது!
மனைவி இருந்தவரை நான் 'அரிசி விலை தெரி யாத இலக்கியக்காரன். நான் எனக்கென்று உடுதுணு கள் வாங்கி அறியமாட்டேன். எல்லாமே என் மனை வியின் கைங்கரியங்கள்தான்! மனைவி இறந்துபோன பொழுது கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்ட
157

Page 88
குழந்தையாகத் தடுமாறிக் கலங்கினேன்; ஆனால் அவள் இறந்த நான்காம் நாளே என் மனையின் நினை வுகளை ஒரு குறு நாவலாக எழுதி என் சோகத்திற்கு வடிகால் அமைத்தேன். ‘ஒரு காவியம் நிறைவு பெறு கிறது” என்ற குறுநாவல் வீரகேசரியில் தொடர்ந்து வெளிவந்தது. சரவணையூர் மணிசேகரனின் தாரணி அச்சகம் அந்நூலையும் வெளியிட்டது.
அந்தக் குறுநாவலை ஒரு இரவிற் சில மணித்தி யாலங்களில் எப்படி எழுதினேன் என்பது எனக்கே இப்போது ஆச்சரியமாக இருக்கிறது. அத்தனை அசுர  ே கத்தோடு என் வாழ்வில் என்றைக்குமே எழுதிய தில்லை. "துன்ப நினைவுகளிலிருந்துதான் அமர இலக் கியம் பிறக்கிறது . என மேனாட்டுக் கவி ஒருவன் பாடியது உண்மையிலும் உண்மை!
அக் குறுநாவலுக்கு டெல்லிப் பேராசிரியர் சாலை இளந்திரையன் அவர்கள் சுதந்திரன் காரியாலயத்தி லிருந்து வெளிவந்த மாத சஞ்சிகையில் (அதன் பெயர் நினைவிலில்லை) விமர்சனம் எழுதினார். அக்குறு நாவலை அவர் வெகுவாகப் பாராட்டி எழுதியிருந் தார்!
அதற்கு இரண்டு மாதங்களின் பின்னர்தான் கிரெளஞ்சப் பறவைகள்" என்ற சரித்திர நாவல் வீர கேசரி வெளியீடாக வந்தது. ஐந்து நூல்கள் வெளி யிட்டு என் ஐம்பது ஆண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடுவேன். என்று சொன்னதில் அறுபது வீதமே எனக்கு வெற்றி. திருக்கரசைப் புராணம், ஒரு காவியம் நிறைவு பெறுகிறது. சிரெளஞ்சப் பறவைகள் என்ற மூன்று நூல்கள் மட்டுமே வெளியாயிற்று;
58

மனைவியை இழந்த அந்த நாட்களில் எனக்குப் பல வழிகளிலும் உதவி செய்து ஆறுதலளித்த மூதூர் உதவி அரசாச்க அதிபர் சு. காங்கேசன் அவர்களை இங்கே நினைவு கூருகிறேன்.
எனக்கு ஆறுதல் சொல்லிக் கடிதம் எழுதிய இன் னொருவர் காலஞ் சென்ற கலாநிதி. க. கைலாசபதி. என் மனைவியின் பிரிவைத் தொடர்ந்து எனக்கு மூன்று நீண்ட கடிதங்கள் எழுதினார்.
அந்த மனிதாபிமானியை பிறர் சோகத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வந்த அந்தப் பெருமகனை அவரின் நாற்பதுகளிலேயே இழந்தது நமது துரதிஷ் டமே! ஆனால் அவர் சாகவில்லை. அவர் எழுத்துக் கள் சிதம்பர ரகுநாதன், புதுமைப்பித்தன் என்ற வரலாற்று நூலில் எழுதியது போல அவர் எழுத்துக் கள் காலத்தாற் சாகாது காலத்தின் ஏலத்தால் மலி Ամո 51.
159

Page 89
27. 'ஆலம்கீர் ஜவாஹர்
1971 ஆண்டிலே நான் ஸாகித்ய மண்டலத்தின் தமிழ் இலக்கியக்குழுவில் அங்கத்துவம் பெறுவதற்குக் காலாக இருந்தவர் எனது நண்பன் ஏ. எல். ஏ. மஜீத் அவர்கள். அப்போதைய சுதந்தரக்கட்சி அரசாங்கத் தில் தகவல் ஒலிபரப்புத்துறை உதவி மந்திரியாகவும், திருக்கோணமலை மாவட்ட அரசியல் அதிகாரியாகவும் இருந்தார்.
கிண்ணியாவைப் பிறப்பிடமாகக்கொண்ட அவரை 1953ம் ஆண்டிலிருந்தே நான் அறிவேன். என்னைவிட ஏழு ஆண்டுகள் இளையவர். திருக்கோணமலை இந்துக் கல்லூரியிலும் மட்டக்களப்பு சிவானந்த வித்தியால யத்திலும் கற்றுத் தன் படிப்பை முடித்துக்கொண்டு கிண்ணியா வந்திருந்தார். ܫ
துடிப்பான அந்த இளைஞர் சிறந்த மேடைப் பேச் சாளராகவும் அப்போது விளங்கினார். அடிக்கடி என் னைச் சந்தித்து இலக்கியம்பற்றிபேசுவார். சிறந்த இலக் கியக்காரராக வரக்கூடிய அறிகுறிகளை நான் அவரிடம் கண்டேன். அவர் மேலே படித்துப் பட்டதாரியாக விரும்பினார்:
60

அவருடைய தந்தையார் கிராமத்தலைமைக்காரர். பரம்பரை விதானையார் அவர் தன் மகனையும் தன் னைப் போல விதானையாராக்கிக் குடும்பமாகக் கிண் ணியாவிலே வாழ வைக்கவேண்டும் என்று விரும்பினார்.
இதனால் அவருக்கும் தந்தைக்குமிடையிற் பிணக்கு!
நானும் அப்துல் லத்தீப் என்ற விதானையாரிடம் அவர் மகன் மஜிதுக்காகப் பரிந்து பேசினேன்.மேற்படிப் புக்காக மகனை இந்தியாவிற்கனுப்ப அவர் கடைசி யாகச் சம்மதித்தார். ஆனால் ஒரு நிபந்தனை, தான் "கட்டிவைக்கும் பெண்ணைக் கல்யாணஞ் செய்தபின் னரே இந்தியாவிற்கனுப்புவேன் என்றார்.
தந்தையின் விருப்பப்படி மகன் இன்னோர் விதா னையாரின் மகளை மணஞ்செய்து கொண்டார்.
பின்னர் மேற்படிப்புக்காக இந்தியா சென்றார். அவரை வழியனுப்பி வைத்தவர்களில் நானும் ஒருவன்.
இந்தியா சென்ற மஜீத் சென்னை பச்சையப்பர் கல்லூரியிலும் பின்னர் பூனாவிலும் கற்றுப் பொருளா தாரத்தில் B. A. பட்டம் பெற்று நாடு திரும்பினார், கிண்ணியாவின் முதற் பட்டதாரி அவர்தான்!
ஊருக்குத் திரும்பிய அதே 1959ம் ஆண்டில் கிண் ணியா மகாவித்தியாலயத்தின் தற்காலிக அதிபரானார். அவர் அரசியலிலிறங்காதிருக்கச் செய்யவே அவர் அதி Lu T mrej 35' LULLITriř.
1960ம் ஆண்டு தேர்தல் வந்தது. அத்தேர்தலில் மூதூர்த்தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதி ஆக் கப்பட்டது.
16

Page 90
மஜீத் அவர்களின் உறவினர்கள் அவரைத்தேர்த லிற்குதிக்கும்படி வற்புறுத்தினார்கள். கடந்த எட்டாண் டுகளாக மூதூர்த்தொகுதிப்பாராளுமன்ற அங்கத்தவ ராக இருந்தவரிடம் அவர்களுக்கு அலுப்பும் களைப்பும் ஏற்பட்டுவிட்டது.
மஜீத் அவர்கள் தேர்தலிற்குதித்தார். மூதூர்த் தொகுதியிற் சுயேச்சை அங்கத்தவராகப் போட்டியிட் டார். நானும் அவரை ஆதரித்தேன். என்கிராமமான மூதூரிலும் அயற்கிராமமான தோப்பூரிலும் அவரை அக்கிராம மக்களுக்கு அறிமுகப்கடுத்தி முதன் முதலிற் தேர்தற் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்துப்பேசினேன். நான்பேசிய பின்னர் மஜீத் பேசினார்.
அவரது மேடைப்பேச்சின் பின்னர் மாணவர்களை பும், இளைஞர்களையும், சில பெரியவர்களையும் கொண்ட அணி ஒன்று அவர் பின்னாற்திரண்டது. ஆன லும் 1960, மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் 7600 வாக்குகள் வரை பெற்று அவர் மூன்றாமிடத் திற்கே வந்தார்,
ஆனால் விரைவிலேயே பாராளுமன்றம் கலைக்கப் பட்டது. அதே ஆண்டு ஜூலை மாதத்தில் மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் மஜீத் அவர்கள் பூணிலங்கா சுதந்தரக்கட்சி அங்கத்ததராகப் போட்டியிட்டார்.
அவரை பூரீலங்கா சுதந்திரக்கட்சி அபேட்சகராக நிறுத்தும் முயற்சியில் மூதூர் கிராமசபையின் முன்னை நாட்தலைவர் எஸ்.எம்.ஜமால்தீன் அவர்களும், நானும் இன்னும் சிலரும் கலாநிதி பதியுத்தீன் முகம்மத் அவர் களிடம் சென்றிருந்தோம். கலாநிதி பதியுத்தீன் அவர்கள் மூலம், மஜீத் சுதந்திரக்கட்சி “ரிக்கற் பெற்றார்.
162

"மார்ச் மாதத்தேர்தலில் அவர் பெற்ற 7600 வாக் குகளும், பூரீலங்கா சுதந்திரக்கட்சி அபேட்சகரான சிங்களவர் பெற்ற ஆறாயிரம் வாக்குகளும் சேர்ந்து 13,500 வாக்குகளுக்கு மேலே கிடைக்கும். மஜீத் நிச் சயம் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையோடு தேர் தற் பிரசாரத்திலிறங்கினோம். நம்பியபடியே வெற்றி யும் பெற்றோம். முதல் இடத்தைப் பெற்ற தமிழர சுக்கட்சியைச் சேர்ந்த திரு. ஏகாம்பரத்தைவிட ஐம்பத் தேழுவாக்குகள் குறைவாகப்பெற்று மூதூரின் இரண் டாவது பாராளுமன்ற அங்கத்தவரானார் மஜீத் அன்றி லிருந்து 1977 வரை அவர் மூதூர்த்தொகுதி அங்கத்த தவராக இருந்தார். மாக்ஸியக்கொள்கைகளை ஆதரி த்த நானும் சுதந்திரக்கட்சியை ஆதரித்த மாக்ளியக் கட்சிகளோடு சேர்ந்து அக்கட்சியையும் மஜீத்தையும் ஆதரித்தேன். ஆனால் 1973ல் கொல்வின் ஆர். டி. சில்வா புதிய அரசியல் யாப்பு எழுதினார். அதில் சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையினருக்குப்பா துகாப்பாக இருந்த 296 பிரிவும் கைவிடப்பட்டது.இடது சாரிகளில் எனக்கிருந்த நம்பிக்கை முற்றாக அற்றுத் தனித் தமிழ்நாட்டுக் கொள்கையினரை ஆதரித்தேன்.
எவ்வளவுதான் நண்பனாக இருந்தாலும் நான் மஜீத் அவர்களிடம் எந்தச்சலுகையையும் எந்த உதவி யையும் எனக்காகக்கேட்கவில்லை. உத்தியோக உயர்வு பெற வேண்டும். அதிபராக ஆக வேண்டும் என்ற ஆசை எந்தக்காலத்திலும் என்னிடம் இருந்ததில்லை. பிள்ளை களுக்கும் உத்தியோகம் கேட்கவில்லை. ஏனென்றால் அவர்கள் சின்னஞ்சிறியவர்களாக இருந்தார்கள்.
இப்படியான தேவை எதுவுமே அவரிடம் எனக்கு இல்லாததினால், மஜீத் அவர்கள் ஏதாவது பிழை விடும் போதெல்லாம் நான் அந்தரங்கக்தில் உரிமை யோடு கண்டிப்பேன். அவரும் ஏதும் பேசாமல்தலை
63

Page 91
கவிழ்ந்து கேட்டுக் கொண்டிருந்து விட்டுப் பேச்சை வேறு விடயமாகத் திருப்புவார்.
அவரது ஆதரவாளர்கள் எல்லாருக்குமே அவரை நேரடியாகக் கண்டிக்கப் பயம்! விஷயங்களை என்னி டம் சொல்லி அவரைக் கண்டிக்கும் படி என்னையே Gil urrigar.
1965ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது நிலை சற்று அதைரியப் படவேண்டும் போல எனக்குத் தோன்றிற்று. கந்தளாய்ச் சிங்கள மக்கள் கட்சியைப் பொருட் படுத்தாமல் சிங்கள அபேட்சகருக்கே வாக் களிப்பார்கள் எனப் புலப்பட்டது. எனவே சில தமிழ் வாக்குகள் இல்லாவிட்டால் மஜீத் தோற்றுப் போய் விடுவார் என்று நான் ஊகித்தேன்.
தமிழ் வாக்குகளைப் பொறுத்தவரை அவை யெல் லாம் தந்தை செல்வநாயகம் அவர்களது பக்கைற்றில் இருந்தது!
என்றாலும் அவருக்குத் தமிழ் வாக்குகளைச் சேர்க்கும் ஒரே எண்ணத்தோடு நான் சம்பூர் பாட சாலைக்கு 1963ல் மாற்றம் பெற்றுக் கொண்டு சென் றேன். அவ்வூர்க் கிராமசபைத் தலைவரும் என் நண் பருமான நா. சி. சரவணமுத்து அவர்களைப் பிடித் தேன். மஜீத்தின் துணை கொண்டு சம்பூர் பாடசா லையை மகாவித்தியாலயம் ஆக்கினேன் மூதூர்ப் பிராந்தியத்தின் முதலாவது தமிழ் மகாவித்தியாலயமே அதுதான்.
மஜீத் அடிக்கடி சம்பூருக்கு வந்து மக்களைக் கவர்ந்தார். முடிவாக 1956ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலிற் சம்பூர்க் கிராமத்தின் வாக்காளர்
164

கள் அனைவருமே மஜீதை ஆதரித்தார்கள். மஜீத் அவர்களும் மீண்டும் இரண்டாவது பிரதிநிதியாக வெற்றியடைந்தார்!
ஆனால் 1970 நடைபெற்ற தேர்தலில் வெற்றி எங்களுக்குச் சுலபமாகவே இருந்தது. மஜீத் மூதூரின் முதலாவது பிரதிநிதி ஆனார். உதவி மந்திரியுமானார். நான் கேட்காமலே என்னைச் சாகித்ய மண்டலத்தின் தமிழ் இலக்கியக்குழு உறுப்பினராக்கினார். கலாநிதி கைலாசபதி அவர்கள் குழுவின் தலைவர். கலாநிதி சிவத்தம்பி, கி லட்சுணஐயர், எஸ். எம். கமாலுத் தின், டொமினிக் ஜீவா ஆகியோரும் இன்னும் ஓரிரு வரும் உறுப்பினர்கள்,
73ல் என எண்ணுகிறேன். நான் ரகுமானின் இளம்பிறை அச்சகத்தில் இருந்தேன். திடீரென மஜீத் அவர்கள் அங்கு வந்தார். மூதூரில் அவர் நடத்த இருந்த இஸ்லாமியக் கலாச்சார விழாவுக்கான மலர் ஒன்று அங்கு அச்சாகிக் கொண்டிருந்தது. அதற்காக வந்தவர் என்னைக் கண்டதும் 'என்னைப் பற்றி ஒரு வரலாற்று நூலை நீர் எழுதித் தரவேண்டும். கலா சார விழாவில் அதையும் வெளியிட வேண்டும் என்றார்.
எனக்கோ அடுத்த நாளே பாடசாலை திரும்ப வேண்டியிருந்தது. அதனால் 'இப்போது முடியாது’ என்றேன். அவர் விடவில்லை. எழுதியே ஆக வேண் டும் என உரிமையோடு வற்புறுத்தினார். நீண்ட தயக் கத்தின் பின்னர் நானும் சம்மதித்தேன்.
பாடசாலை அதிபருக்கு விடுதலை கோரித் தந்தி கொடுத்து விட்டு அச்சகத்திலிருந்தே "மக்கள் தலை வர் மஜீத்" என்ற நூலை எழுதத் தொடங்கினேன்.
65

Page 92
மஜீதிடம் அதைப் படித்துக் காட்டித் திருத்தங்களைச் செய்து கொண்டு மீண்டும் அச்சுக்குக் கொடுக்கும் படி யாக இரண்டாம் பிரதியை எழுதினேன். ஆனால் புத்தகத்தை என் சொந்தப் பெயரில் வெளியிடவில்லை , இராசரெத்தினம் என்ற என் பெயரை உருதுமொழிக் குத் திருப்பி எழுதியவர் 'ஆலம்கீர் ஜவாகர்’ எனக் குறிப்பிட்டேன். மூதூரில் நடந்த கலாசார விழாவில் அந்நூல் வெளியிடப்பட்டது. நூலை எழுதிய ஆலம் கீர் ஜவாகரை அநேகம் பேருக்குத் தெரியாது.
1975ல் என் மனைவி இறந்தாள். போன் மூலம் இச்செய்தி இரவோடிரவாக மஜீத் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக ரகுமானி டம் சென்று ரகுமானையும் எஸ். பொ வையும் தன் காரிலேயே ஏற்றிக் கொண்டு விடியுமுன் மூதூருக்கு வந்து விட்டார்!
அந்த நல்ல நண்பன் கொலை கெய்யப்பட்டதை அறிந்து நான் பதறிக் கொண்டு கிண்ணியாவிற்குப் போனேன். இடைவழியில் என் முஸ்லீம் நண்பர்கள் “இக்கொலை செய்தவர்கள் தமிழராகவும் இருக்கலாம் என்ற எண்ணத்தில் கிண்ணியா முஸ்லிம் மக்கள் குழம் பலாம். எதற்கும் நீங்கள் வராமல் ஊரூக்குத் திரும் புங்கள்" என வற்புறுத்தினார்கள். நான் எவ்வளவு முயன்றும் அவர்கள் என்னை மேலே போக விட வில்லை. நான் கவலைப்பட்டுக் கொண்டே மூதூர் திரும்பினேன்.
ஆனால் அவர் நினைவு என்றுமே நெஞ்சை விட் டகலாது எனக்கு மட்டுமல்ல மூதூர் மக்கள் எல்லா ரது நெஞ்சிலுந்தான் அவர் நினைவு என்றென்றைக் கும் இருக்கும்,
166

28. தமிழ்த்தின விழா மலர்
1972ல் அகில இலங்கைத் தமிழ் மொழிப் பாட சாலைகளின் தமிழ்த்தின விழா திருக்கோணமலையில் நடைபெற்றது. அப்போது கல்வி மந்திரியாக இருந்த கலாநிதி பதியுத்தீன் முகம்மது அவர்கள் அவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்
தமிழ்த்தின விழா பாடசாலைகளோடு சம்பந்தப் பட்ட விவகாரம். கல்விப் பகுதியினரும் ஆசிரியர்களும் அந்த விழாவைத்திறம்பட நடத்த ஒழுங்குகள் செய்து கொண்டிருந்தார்கள்.
விழாவையொட்டி ஒரு மலர் வெளியிட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அம்மலரைத் தயாரிக்க ஒரு குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. பண்டிதர் இ. வடிவேல், பண்டிதர் சி. வைரமுத்து, தாபி சுப்பிரமணியம், செல்வி செல்வமணி வடிவேல் ஆகியவர்களோடு நானும் அக்குழுவில் இடம்பெற்றேன். அப்போது சேனையூர் மகாவித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராக இருந்த விழிசிட்டியைச் சேர்ந்த க உமா மகேஸ்வரன் அவர்க ளது பெயரை நானே சிபார்சு செய்து அக்குழுவில் சேர்த்துக்கொண்டோம், திருகோண மாவட்டக் கல்விப் பணிப்பாளர் மலர்க்குழுத் தலைவர்,
67

Page 93
தலைவர் கூட்டிய கூட்டத்தில் மலரின் ஆசிரியராக என்னை எல்லோரும் ஏகமனதாக நியமித்தார்கள்,நான் எனக்குத் துணையாக உமா மகேஸ்வரன் அவர்களைச் சேர்த்துக்கொண்டேன். இருவரும் இணை ஆசிரியர்கள் ஆனோம்.
விழாவிற்கு இன்னமும் பதினெட்டே நாட்கள்தான் இருந்தன. இதற்குள் இந்நாட்டின் பல்வேறு திக்குகளி லுமுள்ள தமிழறிஞர்களிடமிருந்து கட்டு  ைர க ள் பெறவேண்டும். அச்சேற்றவேண்டும். மிகச் சிரமமான பணிதான்! என்றாலும் நான் ஏற்றுக் கொண்டேன்.
எனக்கும் உமா மகேஸ்வரன் அவர்களுக்கும் கடமை லீவு வழங்கப்பட்டது. இருவருமே யாழ்ப்பாணம் சென் றோம்.
கலாநிதி பதியுத்தீன் அவர்களைத் திருக்கோணம லையில் வரவேற்க மஜீத் அவர்கள் பிரமாண்டமான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். வழக்கம் போல அவரது "சகாக்கள்' அவரைச் சுற்றிக் கொண்டு திரிந்தார்கள். அப்படித்திரியும் அவர்களிற் பலர் சுத்த *விதம்பக்” , தங்கள் சுயதேவைகளைப் பூர்த்தி செய் யவே அவரைச் சுற்றிக் கொண்டுதிரிந்தார்கள். 'அத் திருக்கூட்டத்தை" எனக்குக் கட்டோடு பிடிக்காது. ஆனால் என்ன செய்யலாம்? கலாநிதி பதியுத்தின் அவர் களின் வரவேற்புக்குழுவில் அவர்களும் இடம்பெற்று விட்டார்கள்!
நாம் யாழ்ப்பாணம் புறப்படுகையில் இத்திருக் கூட்டம் என்னைச் சந்தித்து வரவேற்புக் கமிட்டியில் இருக்கும் தங்கள் பெயரையும் படங்களையும் விழா மலரிலே வரச் செய்ய வேண்டும் எனக் கேட்டு, அவர் களது பெயர்கள் அடங்கிய பட்டியலையும் விலாசத் தையும் தந்தார்கள்
68

எனக்கு அவர்களோடு . வாயாடிக் கொண்டிருக்க நேரமில்லை. "செய்கிறேன்" என்று சொல்லி அந்த நேரத்திற்குத் தப்பித்துக் கொண்டு உமா மகேஸ்வரனு டன் யாழ்பாணம் வந்தேன்.
யாழ்ப்பாணம் சேர்ந்ததும் நான் வழக்கம் போல சுன்னாகம் பண்டிதர் நாகலிங்கம் அவர்கள் வீட்டிற் குச் சென்றேன். உமா மகேஸ்வரன் விழிசிட்டிக்குச் சென்றார்.
அடுத்த நாட்காலை இருவரும் சுன்னாகம் திருமகள் அழுத்தகம் சென்றோம். மலர் பற்றிக் கதைத்து உட னடியாக வேலை செய்யத் தொடங்கினோம், அன்றே நான் வண்ணார் பண்ணைக்குச் சென்று, திரு. ச. அம்பிகைபாகன் அவர்களிடமிருந்து. சுவாமி விபுலா னந்தரின் இலங்கையில் வெளிவராத கட்டுரை ஒன் றைப் பெற்றேன். கனக.செந்திநாதன் மூலமாகப் பண் டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களிடமிருந்து கட் டுரைபெற்றேன். ஜனாப் A. M. A அசீஸ் அவர்களின் அறபுத்தமிழ் என்ற நூலிலிருந்து ஒரு பகுதியை எடுத்து அச்சுக்குக் கொடித்தேன். நான் ஏற்கனவே கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டபடி ஈழகேசரிக் காரியாலயத் திற்குக் கட்டுரைகள் வந்து கொண்டிருந்தன. பேராத னையிலிருந்து கலாநிதி கைலாசபதி அவர்கள் கட்டுரை அனுப்பியிருந்தார். மட்டக்களப்பிலிருந்தும் கட்டுரை கள் வந்தன. கனக, செந்திநாதன், கலாகேசரி ஆ தம் பித்துரை ஆகியோரிடம் கட்டுரைகள் பெற்றேன் கிறீ ஸ்தவமும் தமிழும்" என்ற தலைப்பில் நானும் ஒரு கட்டுரை எழுதினேன்.
அக்கட்டுரையை எழுதுவதற்காக யாழ்ப்பாண நூலகம் சென்றிருந்தேன் அங்கே தமிழிலே, ஏன் இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சேறிய
69

Page 94
நூலின் புகைப்படப் பிரதியைப் பார்த்தேன். ஹென் றிக்கஸ் என்ற யேசு சபைக்குரு ம  ைல ய ா ள த் துக் கொல்லத்திலிருந்து தம்பிரான் வணக்கம் என்ற தலைப்பிற் 'பரமண்டல மந்திரம்" என்ற செபத்தை அச்சிட்டிருந்தார். மெய்யெழுத்துகளுக்குக் குற்றில்லா மலும் உயிர் மெய்யெழுத்துக்களுக்கு கொம்பும் சுழி யுமில்லாமல் இருந்த வீரமாமுனிவர் காலத்திற்கு முந் திய தமிழ் எழுத்துக்களில் அப்பிரதி இருந்தது!
தமிழராய் நாம் இனப்பிரச்சனை காரணமாக எவ் வளவோ இழந்து விட்டோம். ஆனால் அந்த இழப் புக்களில் எல்லாம் மேலான இழப்பு யாழ்ப்பாண நூல் நிலையம் எரிந்ததே. அந்த நூலகம் எரிந்து விட் டது எனக் கேள்விப் பட்டதுமே, சுவாமி ஞானப்பிர காசரின் அடிச் சுவட்டில் மொழியாராய்ச்சி செய்து கொண்டிருந்த அருட் திரு. டேவிட் அடிகளார் சிவப் பதிகாரத்துப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் போல சொற்செவியில் உண்டனவே உயிர் தோற்றார்! சுமார் இருபத்தைந்து ஆண்டுகள், ஒவ்வொரு சித்திரை விடு முறையிலும் நான் சேத்திராடனம் செய்த அந்தத் திருக்கோயிலை நினைத்தால் இப்போதும் கண்ணிர் வருகிறது!
திருக்கோணமலையிலிருந்து பண் டி த ர் இ. வடி வேல் அவர்களும் சிறந்த கட்டுரை அனுப்பியிருந்தார்
ஒவ்வொரு கட்ரையும் முடிவுற்றபோது, அப்பக்கத் தில் மிஞ்சும் வெற்றிடத்தை, உமா மகேஸ்வரன் -9յ6ՀյրՒ கள் தான் படித்த நூல்களிலிருந்து பொருத்தமான பகுதிகளை எடுத்து நிரப்பினார். நான் பயந் த து போலன்றி மலர் துரிதமாகத் தயாராகிக் கொண் ருந்தது. கல்விப் பணிப்பாளர்கள், கலாநிதி பதியுத்தீன் முகம்மத், உதவி அமைச்சர் A. L. A. மஜீத் ஆகி யோரிடமிருந்து ஆசிச் செய்திகளும் கிடைத்தன.
70

அத்துடன் திருக்கோணமலை வரவேற்புக் குழுவி னரிடமிருந்தும் கடிதங்கள் வரத்தொடங்கின. தங்கள் பெயரை அவசியம் மலரிற் சேர்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தினார்கள்.
நான் அவர்களின் கடிதங்களை அலட்சியப் படுத்தி விட்டு மலர் வேலைகளைக் கவனித்தேன். அது கல் விப் பகுதியினர் வெளியிடும் இலக்கிய மலராக இருக் கவேண்டும் என்பதில் மட்டும் கருத்துடைய வனாக இருந்தேன். வேறு எவரைப் பற்றியும் கவலைப் பட வில்லை.
மலர் வேலை முடிவடைந்து "பைன்ட்' பண்ணப் பட்டுக்கொண்டிருந்தது ‘புத்தகக் கண் காட்சிக்கும் நீரே புத்தகங்களை எடுத்து வரவேண்டும் மலரோடு கண்காட்சிக்கான புத்தகங்களையும் கொண்டு வாரும். கல்விப்பகுதி 'வான்' இங்கிருந்து வருகிறது எனத் திருக்கோணமலைக் கல்வி அலுவலகத்திலிருந்து போன் செய்தி கிடைத்தது.
செய்தி கிடைத்த அன்று சாயந்தரமே திருக்கோ ணமலையிலிருந்து "வான்’ வந்தது. அப்போகைய விஞ்ஞானக் கல்விப் பரிசோதகரான D. J. தங்கராசா அவர்கள் திருக்கோணமலையிலிருந்து வந்திருந்தார்.
அடுத்த நாட்காலை கனக. செந்திநாதன் வீட்டிற் குச் சென்று கண்காட்சிக்கான நூல்களைப் பெற்றுக் கொண்டு சுன்னாகம் வந்து மலரையும் ஏ ற் றி க் கொண்டு புறப்பட்டோம். மலருக்கான சிட்டையைத் திருமகள் அழுத்தகத்தினர் எ , னிடம் தந்தார்க ! பணம் கொடுக்கப்பட வில்லை. என்னிடம் பணம் தரப்படவுமில்லை!
Ꭵ 7 Ꭵ

Page 95
திருக்கோணமலைக்கு வழி கொள்கையில் ஒரு சிக் கல் ஏற்பட்டது. அப்போது சிங்கள இளைஞர்கள் *சேகுவாரா" புரட்சி நடத்திக் கொண்டிருந்த காலம். நாட்டிலே அவசரகாலச் சட்டம் இருந்தது. ஆகவே பிரசுரமாகும் எதையும் தகுதி வாய்ந்த அதிக ஈ ரி பார்த்த பின்னரே வெளியிட வேண்டும். என்றார்கள்.
சரிதான்! தகுதிவாய்ந்த அதிகாரி மலரை வாசித்து ஒப்புதல் தருவதற்குள் த மிழ் த் தி ன விழா நடை பெற்று முடிந்துவிடுமோ என்றெண்ணிக் கொண்டே யாழ்ப்பாணம் கச்சேரிக்கு 'வானை விட்டோம்.
கச்சேரியிற் திரு. த ங் க ராசா அவர்கள் தகுதி வாய்ந்த அதிகாரியோடு கதைத்தார். நானும் அருகி லிருந்தேன். தகுதி வாய்த அதிகாரி ஒப்புதல்தந்தார்.
அங்கிருந்து நேரே திருக்கோணமலை வந்தடையும் போது இரவு பத்து மணியாகி விட்டது! விடிந்தால் விழா.
நாங்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற இருந்த புனித சூசையப்பர் கல்லூரிக்கே சென்றோம். அங்கே கண்காட்சிக்காகப் புத்தகங்களை ஒழுங்கு ப டு த்தி வைத்து முடித்தபோது நான்கு மணியாகிவிட்டது. அதன் பின்னர் பெருந் தெரு மெ. பி. பாடசாலைக்கு வந்து மலர்களை இறக்கிவைத்துவிட்டு அங்கேயே நித்திரைக்காகச் சாய்ந்தேன்.
காலையிற் குளித்து உடைமாற்றிக் கொண்டேன். காலை எட்டுமணியளவில் வரவேற்புத் திருக் கூட்டம் வந்தது. என் அனுமதியின்றியே மலரை எடுத்துப் பார்த்தது. முதலாம் டக்கத்தில் மலர்க் குழுத்தலைவர் M, ஷரிப் மாவட்டக் கல்விப் பணிப்பாளர் எனப்
72

பெரிய எழுத்திலும் அதன் கீழ் மலர்க்குழு உறுப்பினர் கள் என்ற தலைப்பின் கீழ் உறுப்பினர் பெயர்களும் மலராசிரியர்களாக என்னுடையதும் உமா ம கே ஸ் வரன் அவர்கள் பெயரும் இருந்தன.
அடுத்த பக்கத்திலும் அந்தத்'திருக் கூட்டத்தின்" பெயர் இல்லை. மலரில் எவ்விடத்திலுமே இல்லை.
'இராசரட்ணம் செய்யமாட்டார் என்பது எங்க ளுக்குத் தெரியுமே" என்றார் கூட்டத்தில் ஒருவர்
இன்னொருவர் ம ல  ைர க் கோபத்தோடு வீசி எறிந்து 'இப்போதே திருக்கோணமலையில் உள்ள அச்ச கத்தில் எங்கள் பெயரை யெல்லாம் அச்சடித்து முன் பக்கத்தில் ஒட்டவேண்டும். அதைச் செய்யும். அதைச் செய்யாவிட்டால் மலரை வெளியிட முடியாது. பண முந்தர முடியாது' என்றார். "'என்னையா செய்யச்
சொல்கிறீர்? அது நடக்காது" என்றேன் நான்.
அந்தக் கூட்டம் என்னை ஒரு வித அச்சுறுத்தலுடன் பார்த்து விட்டுத் தம் கார்களில் ஏறிக் கொண்டு போயிற்று.
இவற்றையெல்லாம் பக்கத்தில் நின்று மெளன மாகப் பார்த்துக் கொண்டிருந்தார் திருக்கோணமலை மாவட்டக் கல்விப் பணிப்பாளர் M. ஷெரிப் அவர்கள்.
அத்திருக் கூட்டம் சென்றதும் அவர் என் தோளிற் தட்டி 'வானா ஆனா. நீர் மிகச் சரியாகத்தான் அலுவல் பார்த்திருக்கிறீர். அவர்கள் பேச்சை விடும். அவர்கள் பணம் தராவிட்டால் என் சொந்தப் பணத் திலிருந்து நான் மலருக்கான செலவைத் தருவேன்"
73

Page 96
என்று சொல்லி மலர்களைத் தன் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு என்னையும் ஏற்றிக் கொண்டு விழா நடக்க இருக்கும் மக்கெய்சர் ஸ்ரேடியத்துக்குச் சென்றார்.
மலர் விழாவிலே வெளியிடப் பட்டது.
அதன் பிறகு நடைபெற்ற பல தமிழ்த்தின விழாக் களில் நான் போட்டி நடுவராகக் கலந்து கொண்டேன். ஒருதடவை திருக்கோணமலையில் நடந்த விழாவில் சொக்கன், முருகையன், இ. அம்பிகைபாகன் ஆ கி யோர் நடுவர்களாக வந்தனர். அவர்களோடு சல்லா பிப்பதற்காக நானும் அவர்களோடு இந்துக் கல்லூரி யில் இரவு தங்கினேன்.
வடகிழக்கு மாகாண சபையினர் நடத்திய தமிழ்த் தின விழாக்களிலும் நடுவராகக் கலந்து கொள்வேன். அப்படிக் கலந்து கொண்டதன் நோக்கமே இலக்கிய நண்பர்களைச் சந்திப்பது தான். அந்தச் ச ந் தி ப் பு களை என்னால் மறக்கவே முடியாது.
174

29. அச்சகம் தொடங்கினேன்
மனைவியின் இறப்பைத் தொடர்ந்து எஸ். பொ. நைஜீரியா சென்றார். ரகுமான் சொந்த நாடான இந்தியாவிற்குச் சென்று விட்டார். கனக.செந்திநாத ணும் காலமானார். நான் தனிந்து விடப்பட்டது போன்ற உணர்வு என்னுள்ளே.
இவ்வுணர்வுக்கு மேலாற் குடும்ப வருமானம் அரைவாசியாகக் குறைந்து விட்டது. மூத்த மகள் க. பொ. த. உயர் வகுப்பிற் படித்துக் கொண்டிருந் தாள். அடுத்த ஆண்டு பரீட்சை எழுத வேண்டும். இரண்டு மக்களில் ஒருவர் திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் இளைய மகன் இளவாலை புனித என்றிபரசர் கல்லூரியிலும் இளைய மகள் யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர் மடத்திலும் படித்துக் கொண்டிருந்தனர், மற்றவர்கள் சின்னஞ் சிறியவர்கள்.
தாயின் இழப்பால் மூத்த மக்கள் மூவரும் நேரடி யாகவே பாதிக்கப்பட்டார்கள். இழப்பின் கடுமையை
உணரக் கூடிய வயது அவர்களுக்கு!
175

Page 97
உச்சாணிக் கொழும்பிலிருந்து அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்ட நான் என் வருவாயை எப்படியாவது பெருக்கிக் கொள்ள வேண்டிய நிலையிலிருந்தேன். குடிப்பதில்லை புகைப்பதில்லை எனத் தீர்மானித் தேன். ஆறுமாதங்கள் அப்படி இருந்தேன்.
என் மனைவி சீதனமாகக் கொண்டு வந்த இரண் டரை ஏக்கர் நீர்ப்பாய்ச்சற் காணி மல்லிகைத் தீவிலி ருந்தது. கடந்த இருபத்திமூன்று ஆண்டுகளாக அந்தக் காணி எங்கேயிருக்கிறது. அதனைச் செய்கை பண்ணு வது யார்? என்ற விவகாரமே எனக்குத் தெரியாது. அதெல்லாமே எனக்குத் தேவையற்ற விவகாரம் என் பதே என் கருத்து.
குத்தகைக்குக் கொடுத்திருந்த அந்த வயலைச் சொந்தமாகவே செய்யும்படி யோசனை கூறினார்கள்
பலர்.
நான் செய்வித்தேன். நட்டம் எந்தக் காலத்தி லும் வரவில்லை. ஆனால் பிரமாதமான லாபமும் கிட்டவில்லை!
இந்த நிலையிற்தான் 1977ம் ஆண்டு சித்திரை மாதத்தில் சாகித்ய மண்டலக் கூட்டத்திற்குச் சென் றிருந்தேன். வெள்ளிக்கிழமை சாயந்திரம் கூட்டம் முடிந்ததும் கோட்டைப் புகையிரத நிலையம் வந்தேன்.
புகையிரத நிலையத்தில் புதுமைப் பித்தனின் கந்தசாமிப்பிள்ளை காப்பி குடித்து விட்டு டிராம்கார னிடம் ரிக்கற் வாங்காமல் ஏமாற்றி டிராமிலே வீட் டுக்குச் செல்வோமா அல்லது காப்பி குடித்து விட்டு நடந்தே வீட்டுக்குப் போவோமா என்று யோசித் தைப் போல நானும் திருக்கோணமலை சென்று
76

லாஞ்சில் வீட்டுக்குப் போவோமா? அல்லது மட்டக் களப்பு சென்று பஸ்ஸில் வரும் வழியில் வாகரையிற் தங்கையையும் சந்தித்து விட்டுப் போவோமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
கந்தசாமிப் பிள்ளைக்குக் கடவுள் வந்து கை கொடுத்தது போல எனக்கும் ஒரு ஆசிரியர் கை கொடுத்தார். "மாஸ்டர் பேசாம மட்டக்களப்புக்கு வாங்க நாளை இரவு தேற்றாத்தீவு யூதாதேயு கோயிற் திருவிழா வாருங்கள் போவோம்" என்றார்.
நான் அவருடன் மட்டக்களப்பிற்கே போனேன். செட்டிபாளையத்தைச் சேர்ந்த சபாரெத்தினம் ஆசிரி யர் வீட்டிற்குக் காலையிற் சென்று அங்கேயே மத்தி யான உணவையும் முடித்துக் கொண்டு கோயிலுக்குச் சென்றேன்,
ஆராதனைகள் தொடங்க இன்னமும் அதிக நேரம் இருந்தது. நா ன் ஆசிரியகலாசாலையில் இருந்த பொழுது எனக்கு ஒரு வருடம் பிந்தியவராக இருந்த செல்வராஜ கோபால் வீட்டிற்குச் சென்றேன்.
செல்வராஜ கோபால் சிறந்த வாசகர், தம் வீட் டிலே ஒரு நூல் நிலையமே வைத்திருந்தார். சில நூல்களை அவரே எழுதித் தனது "மனோகரா அச்ச கத்திற் பதிப்பித்தும் இருந்தார். அந்நூல்களிற் சில வற்றை நான் படித்திருந்தேன்,
செல்வராசகோபால் என்னை வரவேற்று, மனைவி இறந்த பின்னர் என் குடும்ப நிலைபற்றி விசாரித்தார். நான் சொன்னேன். கேட்டு விட்டு "உங்கள் மூத்த மகனை என்னிடம் அனுப்புங்கள். இரண்டு மாதங்க ளில் நான் அச்சக வேலைகளைப் படிப்பித்து அனுப்பு
177

Page 98
வேன். நான் ஆரம்பத்தில் உபயோகித்த சிறிய மெஷின் ஒன்று என்னிடம் இருக்கிறது? பல பேர் கேட்டும் நான் கொடுக்காமல் அதைக் காட்சிப் பொருளாக வீட்டி லேயே வைத்துக் கொண்டிருக்கிறேன், அதை உங்கட்கு விலைக்குத் தருகிறேன்" என்றார்.
‘மூதூர் சென்றதும் நானே மகனைக் கூட்டி வருகிறேன்" என்றேன் நான்.
* ஆனால் ஒரு விடயம். மகனுக்குத் தங்குமிட வசதி மற்ற எல்லாச் செளகரியங்களுமே செய்து கொடுப்பேன். ஆனாற் சாப்பாடு கொடுக்க முடியாது: நானும் மனைவியும் ஆசிரியர்கள். அந்தக் கஷ்டம் உங்களுக்குத் தெரியும்" என்றார் ராஜகோபால்.
மகன் அவனை நினைத்தால் மீண்டும் அழுகை வருகிறது. தனது முப்பத்தோராம் வயதில் திடீரென மரணமானான், "செரிபெரல் திறம் போஸிஸ்" என்ற வியாதி அவனுக்கு என்று இறந்ததற்கான காரணத்தை சொன்னார்கள் வைத்தியர்கள். சா ட் டி ல் லா மற் சாவில்லையல்லவா? தனது பத்தொன்பதாம் வயதி லேயே என் குடும்பச் சுமைக்குத் தோள் கொடுத்த என் மூத்த மகனின் இறப்பு என் இதயத்தில் இந்திர தனுசால் அடிபட்ட வேதனையைத் தந்தது!
தேற்றாத்தீவுக்கு மகன் சென்ற ஒன்றரை மாதங் களிலேயே "நான் எதிர் பார்த்ததை விட மிகவும் விரைவாகவே உங்கள் மகன் வேலை பழகிக் கொண் டான். நீங்கள் வந்து அச்சியந்திரத்தையும் மகனை யும் கொண்டு போகலாம் எனச் செல்வராஜ கோபால் கடிதம் எழுதினார்.
நான் தேற்றாத்தீவு சென்றேன். கோயிலுக்குச் சென்று புதிய வழியைக் காட்டிய புனிதருக்கு நன்றி
78

செலுத்தினேன். மெஷினையும் வாங்கிக் கொண்டு, மகனையும் அழைத்துக் கொண்டு பஸ்ஸில் வீடு வந் தேன். பஸ்ஸிலேயே கொண்டு வரக் கூடிய சின்னஞ் சிறிய அச்சியந்திரம்!
மூதூருக்கு வந்ததும் கொழும்புக்குப் போனேன். மட்டக்களப்பிலிருந்து செல்வராசகோபாலும் கொழும்பு வந்தார். அச்சகத்துக்கான பொருட்கள் விற்கும் கடை களை அறிமுகப்படுத்தி அச்சகத்துக்கு அத்தியாவசிய மான எழுத்துக்கள், புளொக்குகள், கடதாசிகள் என்ற பல பொருட்களையும் அவராகவே வாங்கித் தந்தார். என்னோடு மூதூருக்கும் வந்தார்.
1977ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி அவரே அச்சியந்திரத்தை இயக்கி வைத்தார். முதன் முதல் தமிழில் அச்சில் வெளியான பரமண்டல மந்திரம் என ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா? என் அச் சகமும் "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே! என்ற செபத்தைத்தான் முதலில் அச்சடித்தது.
அச்சியந்திரம் மிக மிகச் சிறியது தான் ஒரு டெமி சைஸ்” புத்தகத்தின் ஒரே பக்கந்தான் ஒரு தடவையில் அச்சிடலாம். ஆனாலும் என்மகன் மிக்க பொறுமை யோடும் கலையழகோடும் அதைச் செய்தான். எனது , பூவரசம்பூ” என்ற மொழி பெயர்ப்புக் கவிதையும் நீலாவணனின் "வேளாண்மை’ என்ற குறுங்காவியமும் அந்த்ச் சிறிய அச்சியந்திரமே பதிப்பித்தது!
வருவாயும் கூட நன்றாகவேயிருந்தது. என் மனை வியின் சம்பளத்தை விட அது கூடுதலாகவே உழைத் துத் தந்தது. மூதூரின் முதலாவது அச்சகமான "அமுதா அச்சகம்’ என் கலைப் பசியையும் வயிற்றுப் பசியையும் ஒருங்கே தீர்த்தது.
நான் பெரிய அச்சியந்திரம் ஒன்றைவாங்க விரும் பினேன். திரு செல்வராசகோபால் எனக்காகச் சில இயந்திரங்களைக் கொழும்பிற் பார்த்தார். அவருக்குத் திருப்தியாகவில்லை. எண்பத்தி நான்காம் ஆண்டு என
79

Page 99
நினைக்கிறேன். அவர் குடும்பத்தோடு கனடாவிற் குடியேறினார். அப்படிப்போகையில் தனது மனோகரா அச்சகத்தைச் சகலபொருட்களுடனும் எனக்கு விலைக் குத்தந்தார். வேறுயாருக்கும் அவர் விற்றிருந்தால் பல ஆயிரக்கணக்கான ரூபாய்கள் அவருக்கு அதிகமாகக் கிடைத்திருக்கும்!
தேற்றாத்தீவு மனேகரா அச்சகம் மூதூர் அமுதா அச்சகமாக மாறிய பின்னர் என் பொருளாதார நிலை புேம் கணிசமாக உயர்ந்தது. ஒரு வருடம் எனது ஒரு நூலையும் கிழக்குமாகாண எழுத்தாளர்களது நூல்கள் மூன்றையும் வெளியிடவேண்டும் எனத்திட்டமிட்டேன். "தராசு" என்ற சஞ்சிகையையும் வெளியிட எண்ணி னேன். ஆனாலும் நாட்டுநிலைகளால் அது கைகூடு வது கஷ்டமாக இருந்தது.
எனினும் எவருக்குமே தெரியாதவரான, எந்த பத்திரிகையிலேயும் எழுதாதவருமான திருக்கோண மலையைச் சேர்ந்த அ. ஜெயராசா அவர்களின் சேகு வாரா என்ற நூலையும், அமிர்தகழி கவிஞர் செ. குண ரத்தினம் அவர்களின் "நெஞ்சில் ஒரு மலர்" என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டேன்.
காலஞ் சென்ற கவிஞர் அண்ணல் அவர்களின் கவிதை, கதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலை அச்சேற்றிக் கொண்டிந்தேன். நாற்பது பக்கங் கள் அடித்து முடிந்திருந்தன. சில பக்கங்கள் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. பத் தி ரி  ைக நறுக்குகளாக இருந்த "விஷயம்' பைலிலே இருந்தது. அந்த வேளை 1988ம் ஆண்டு என் அச்சகம் முழுவதும் தீக்கிரையாக் கப்பட்டது.
என் வீடும் புத்தகங்களும் தப்பிப் பிழைத்தாலும் நான் மீண்டும் ஒட்டாண்டியானேன்.
180

30. இரு நண்பர்கள்
நினைவுகளும் கழுதையைப் போலப் பின்னங்கா லால் உதைக்கின்றன. 1970களில் எனக்கு இலக்கிய நண்பனாகக் கிடைத்த ஒருவர் எங்களூரைச் சேர்ந்தவர் மஷ"ர் ஆலிம் அவர்கள்.
அவர் ஏற்கனவே எனக்கு நன்கு தெரிந்தவர் தான். அவரது முன்னோர் மன்னாரைப் பிறப்பிடமாகக்கொண் டவர்கள். 1956ம் ஆண்டளவிலேயே மூதூர் புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் மெளலவி ஆசிரி யராகப் பணிபுரியத் தொடங்கினார். தமிழரசுக் கட்சி அனுதாபி. 1956ற்குப் பின் நமது சுதந்திரதினத்தைத் துக்கதினமாக அனுஷ்டிக்கத்தொடங்கியபோது அதற்கு மூதூரிற் தலைமை தாங்கியவர் மஷ"ர் ஆலீம் அவர்கள். சிறந்த மேடைப் பேச்சாளர். அரபு மொழியிற் சிறந்த புலமையுள்ளவர்.
என் மனைவி புனித அந்தோனியார் பாடசாலை அதிபராகியதும் அவரோடும் மிக நெருக்கமாகப் பழகி னார், அப்போது தான் என்னோடும் இலக்கியத் தொட ர்பு கொண்டார். ஏற்கனவே அவருடைய கதைகள் சில சுதந்திரனில் வெளியாகியிருந்தன.
181

Page 100
என்னுடன் தொடர்பு கொண்டது சில குட்டிக் கதைகள் மூலமாகவே. பத்துக் குட்டிக் கதைகளை எழு திக் கொண்டுவந்து என்னிடம் வாசிக்கக் கொடுத்து அபிப்பிராயம் கேட்டார்.
கதைகளை வாசித்துப்பார்த்தேன். அருமையான கதைகள், கலீல்கிப்ரானின் கதைகள் போல இருந்தன. அவரிடம் இருந்த அறபுப்புலமை கதைகளிற் பளிச்சிட் l-gilo
கதைகளை அன்றே சிந்தாமணிக்கு அனுப்விபிட்டுத் தொடர்ந்து எழுதுங்கள் என்று உற்சாகப்படுத்தினேன். அவருடைய கதைகள் சிந்தாமணியில் வெளிவரத் தொடங்கின. அவரும் மிகுந்த உற்சாகத்துடன் குட் டிக் கதைகளை எழுதினார்.
மிகவும் அடக்கமானவர். எளிமையானவர். ஆனால்
இனிமையானவர். அவர் பேச்சு சகலருக்குமே இனிக்
கும் கோபம் என்பதே அவருக்கு வராதுபோலும். அதி கமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் என் வீட்டு விறாந்தை மூலையிலுள்ள ஒரு பெரிய கைக் கதிரையில் அமர்ந்து கொண்டு என்னுடன் பேசிக் கொண்டிருப்பார், அவ ரோடு பேசிக்கொண்டிருப்பது எனக்கும் இன்பமாகவே இருந்தது.
சிந்தாமணி, சுதந்திரன், தினகரன் ஆகிய பத்திரி கைகளில் நூற்றுக்கு மேற்பட்ட குட்டிக்கதைகள் எழு தினார். கொழும்பிற்கு வானொலியில் இஸ்லாமிய நற்சிந்தனைகள் சிலவற்றை ஒலிப்பதிவு செய்யச் சென் றிருந்த வேளையில் திடீரென மரணமானார். அவர் இழப்பினால் ஒரு இனிய இலக்கிய நண்பர் என்னை விட்டகன்றார்
182

s96ưQ56ồL-ữu பத்திரிகைகளிற் பிரசுரமான கதைகளை மீண்டும் தன்கைகளால் எழுதி ஒவ்வொரு கதையின் கீழும் அது பிரசுரமான பத்திரிகையின் பெயரையும், திகதியையும் குறிப்பிட்டிருந்த ஒரு “மொனிட்டர்ஸ், கொப்பியை கவிஞர் மூதூர் முகைதீன் அவர்கள் என் னிடம் தந்தார். அக்கொப்பியில் முன்னால் நான்கு பக்கங்கள் வெறுமையாக விடப்பட்டிருந்தன. முற்பக் கத்தில் வ. அ இராசரத்தினம் அவர்களின் முன்னுரை என்று எழுதப்பட்டிருந்தது.
அந்தக்கொப்பியில் இருக்கும் ஐம்பத்தொருகதைக ளில் நாற்பதைத்தெரிவு செய்து குறுங்கதை நாற்பது என்ற பெயரிற் புத்தகமாக வெளியிட வேண்டும்! என் அச்சகம் இருக்கையில் அந்தக்கொப்பி எனக்குக்கிடைத் திருந்தால் அது அப்போதே புத்தகமாகியிருக்கும்:
ஒருநாள் ஒர் ஆசிரியர் என்னைத்தேடிக் கொண்டுவந் தார். எனக்குப் புதுமுகம். தான் மூதூர் மகாவித்தி dாலயத்தில் ஆங்கில ஆசிரியராக இருப்பதாகவும், கதைகள் எழுத விரும்புவதாகவும் என்னிடம் சொன் 6ortrff,
கதை ஏதும் எழுதிக்கொண்டு வந்திருக்கிறீர்களா? என்று கேட்டேன்.
* 'இல்லை இன்னமும் எழுதவில்லை. இனித்தான் எழுதப்போகிறேன்" என்றார்.
பால மனோகரன் என்ற அந்த ஆசிரியர் வவுனியா முள்ளியவளையைச்சேர்ந்தவர். கொஞ்சம் பசையுள்ள வர். 2ம் வகுப்பிலிருந்து எஸ். எஸ். சி. வகுப்பு வரை யும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியிற் கற்ற வர். சரளமாக ஆங்கிலம் பேசினார். ஆங்கிலத்திலேயே
183

Page 101
சிந்திக்கிறார் போலவும் எனக்குப்பட்டது. உருவத்தாற் பெரியவராக இருப்பினும் பெண் குரல் போன்ற கீச் சுக்குரல். அவரும் நானும் சிறு கதைகள் பற்றிப்பேசி னோம். போகும்போது அவர் என்னிடமிருந்த புதுமை ப்பித்தன் கதைகள், ரகுநாதன் கதைகள் ஆகியவற்றை யும் சில ஆங்கில நூல்களையும் கொண்டு சென்றார்.
மூன்று நாட்களில் மீண்டும் வந்தார். ஒரு சிறு கதை யையும் எழுதிக் கொண்டுவந்தார்.
யாழ்ப்பாணத்தைவிட மட்டக்களப்பைவிட வன்னி நாட்டு வாழ்க்கை முறையிலும், பூகோள ரீதியிலும் வேறுபட்டது. அந்தப் பகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இலக்கியங்கள். அதாவது வன்னிப்பிராந்திய இலக்கியங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. அந்தக் குறையை அவர் நீத்குவார் என எனக்குத்தோன்றியது:
அவருடைய முதற் சிறு கதை சிந்தாமணியில் வெளி வந்தது. அதனைத்தொடர்ந்து பலகதைகள் சிந்தாமணி யில் வெளிவந்தன. அவை வன்னிப்பிரதேச மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தன.
பால மனோகரன் சிறந்த வாசகராகவும் இருந் தார். ஒருநாளைக்குச் சுமார் ஆயிரம் பக்கங்கள் ஆங் கிலத்தில் வாசிப்பார். மூதூருக்கு வந்தபின்னரே தமி ழில் வாசிக்கத் தொடங்கினார்.
மூன்று ஆண்டுகள் அவர் மூதூரில் என் இலக்கிய நண்பனாக இருந்தார். பின்னர் மாற்றம் எடுத்துக் கொண்டு வன்னிப்பக்கம் சென்றவர் திடீரென ஒரு நாள் மூதூருக்கு என்னைத் தேடிவந்தார். வந்தவர் சொன்னார் 'நிலக்கிளி' என்ற நாவல் புத்தகமாக மாக வெளிவரவுள்ளது. இன்னும் இரண்டு வாரங்க
84

ளில் முள்ளியவளையில் வெளியீட்டு விழா நடக்கவும் இருக்கிறது. அவ்விழாவிற்குத் தாங்கள் அவசியம் வர வேண்டும் என்றார்.
* 'இன்னமும் காலம் இருக்கிறதுதானே. நான் வரு கிறேன்" என்றேன்.
**அவசியம் வரவேண்டும். உங்களைச் சந்தித்த பின்னர்தான் கதைகளே எழுதினேன். நிலக்கிளி முன் னுரையில் அதை எழுதியும் உள்ளேன். அவசியம் நீங் கள் வரத்தான் வேண்டும்" என்றார்.
"நம்பிக்கையாக இருங்கள் நான் வருவேன்" என உறுதியளித்தபின்னர் அவர் ஊருக்குப்போய்விட்டார். சில தினங்களிற் புத்தக வெளியீட்டிற்காக அழைப்பி தழ் வந்தது.
நான் புறப்பட்டேன். வவுனியா சென்று இன் னொரு பஸ் ஏறி புதுக்குடியிருப்பை அடைந்தபோது சாயந்தரம் நான்கு மணிக்கு மேலாகிவிட்டது. அந்தப் பிரதேசத்திற்கு நான் இதுவரை போயிருக்கவில்லை!
புத்தக வெளியீட்டுவிழா முள்ளியவளை மகாவித்தி யாலயத்தில் நடைபெற்றது. நான்தான் பிரதம பேச் சாளர். அந்த விழாவிற்தான் நான் முதற்தடவையாக நா. சுப்பிரமணிய ஐயர் அவர்களைச் சந்தித்தேன்.
நிலக்கிளி ஒரு உருவகமாக இருந்தது. அந் நாவ லில் வன்னிப்பிரதேச மக்களின் வாழ்வு நன்கு சித்தரிக் கப்பட்டிருந்தது. அந்த வகையில் அதையொத்த நாவல் ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பில் அதுவரை வெளிவந் ததே இல்லை.
85

Page 102
கிராமமாதலால் நூ ல் வெளியீட்டு விழாவிற்கு ஏராளமான மக்கள் வந்திருந்தனர். வெளியீட்டுவிழா திறந்தமேடையிலேயே நடைபெற்றது. மக்கள் மிகப் பொறுமையுடனும் உற்சாகத்துடனும் பேச்சைக் கேட் டார்கள். ஒருநூல் வெளியீட்டு விழாவிற்கு அப்படி பல நூற்றுக்கணக்கானவர்கள் வந்ததை நான் எங் குமே கண்டதில்லை. நூல்வெளியீட்டு விழா  ைவ த் தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். புகழ்பெற்ற முல்லைச்சகோதரிகள் கலையரங்கிற் பாடினார். கலை நிகழ்ச்சிகள் முடிவடைய நள்ளிரவிக்கு மேலாயிற்று!
நான் மேலும் சில நாட்கள் தங் கி வன்னிப்பிர தேசம் முழுவதையும் பார்க்க விரும்பினேன். இயந்தி ரக் கலப்பையில் ஏறிக்கொண்டு வன்னிக்காடெல்லாம் சுற்றினோம். நாயாறு, கொக்கிளாய் ஆகிய இடங்க ளுக்கெல்லாம் சென்றோம். கலப்பையும் இ ல் லா த வெறும் இயந்திரத்தில் பதினைந்து பேருக்குமேல் ஏறிக் கொண்டு பயணித்தது எனக்கு ஆச்சரியமாக இருந் தது. கட்டுமஸ்தான தேகமுடைய வன்னிக்கமக்காரர் கள் அரைப்போத்தல் சாராயத்தை ஒரே மூ ச் சி ல் அனாயாசமாகக் குடித்தார்கள். காட்டைவெட்டி எனது பிராந்தியத்தைப்போலச் சோழம் விதையாமல் வாழை மரம் நாட்டினார்கள். எத்தனை பிரயாசைப்பட்டா லும் அவர்கள் சுரண்டப்பட்டார்கள். அங் கி ரு ந் து மூதூர் வந்த நான் ‘முதலைகள்" என்ற சிறுகதையை எழுதினேன். பால மனோகரன் அவர் கள் நிலக்கிளி யைத் தொடர்ந்து குமாரபுரம் என்ற நாவலை எழு தினார். அந்நாவலும் வன் னி ப் பிரதேசத்தையே பகைப்புலமாகக் கொண்டிருந்தது.
மீண்டும் 1978ல் நான் பால மனோகரன் அவர் G56ð)Gff யாழ்ப்பாணத்திற் சந்தி த்தே ன். அப்
18 6

போது தமிழ் நாவலின் நூற்றாண்டு விழாக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அ ப் போது நான் இடதுசாரிகளிடம் நம்பிக்கையிழந்து விட்டிருந்தேன். தனித்தமிழ் நாட்டைத்தவிர வேறு வழியே நமக்கி ல்லை என நம்பினேன். எனவே தமிழ் நாவல் நூற் றாண்டு விழாவில் தமிழ் மக்களின் போராட்ட சரித் திரத்தை ரா. சு. நல்லபெருமாளின் கல்லுக்குள் ஈரம் போன்ற நாவல் மாதிரியோ அல்லது வேறு எந்த உரு வத்திலேயோ எழுதப்படவேண்டும் என்று வலியுறுத் திப் பேசினேன்.
அந்த மூன்று நாட்களிலும் நான் பால மனோகரனு டனேதான் தங்கியிருந்தேன். பால மனோகரன் இப் போது எங்கேயிருக்கிறார் எ ன் பது தெரியாது. சில வேளை புலம்பெயர்ந்து வெளிநாடு சென்றிருக்கலாம். ஆனாற் பால மனோகரனைப் பற்றிய நினைவுகள் என் னுட் பசுமையாகவே உள்ளன.
H 8 7

Page 103
31. என் இலக்கிய மாணவன்
•ه
1971ம் ஆண்டு சேனையூர் மகாவித்தியாலயத்திற்கு உதவி ஆசிரியராக மாறிச் சென்றேன். அங்கு எனக்கு ஒர் இனிய நண்பர் கிடைத்தார்.
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரான அவர் ஒரு கலைப்பட்டதாரி. ஆனால் ஆங்கில ஆசிரியராகத்தான் அவருக்கு நியமனம் கிடைத் தது. புலோலியைச் சேர்ந்தவர். எழுத்தாளர் அல்ல. ஆனாலும் சிறந்த விமர்சகர். ஈழத்தமிழ் எழுத்தா ளர்கள் எல்லோரது எழுத்துக்களையுமே அவர் படித் திருந்தார். சர்வகலாசாலை நாட்களில் நாடகம் எழுதி அரங்கேற்றிப் பரிசு பெற்றவர்.
பாடசாலைச் சரஸ்வதி பூஜைக் கலைவிழாவில் அரங்கேற்றுவதற்காக "காட்டுப் பூக்கள் வாடுகின்றன’ என்ற நாடகத்தை நான் எழுதினேன் அவர் காகிதப் பூக்கள் சிரிக்கின்றன’ என்ற நாடகத்தை எழுதினார்.
நான் எழுதிய நாடகத்திலும் நண்பர் ஜெயவீர சிங்கம் எழுதிய நாடகத்திலும் முக்கிய பாத்திரமாகப் பாலசுகுமார் நடித்தார், இரண்மே 'அரசியல்'
| 88

நாடகங்கள்! அங்கக்சுவையை வெளிப்படுத்திய அந்த நாடகங்கள் இரண்டுமே பிரமாதமான வெற்றிபெற்றன . அந்நாடகங்களில் நடித்த பாலசுகுமார், சமீபத்தில் பாலசுகுமார் நாடகங்கள் என்ற நாடக நூலை வெளி யிட்டார். தற்போது மட்டக்களப்புப் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்கும் பாலசுகுமார் எமது மாணவர் என்பது எமக்குப் பெருமையாக இருக்கிறது! அவரது நாடக நூல் வெளியீட்டு விழா திருக்கோண் மலையில் நடந்த போது எனக்கு "வாரிசு' தோன்றி விட்டார் என நான் பெருமையோடு சொன்னேன்! ஏழாம் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழகம் செல் லும் நாள்வரை அவனது தமிழாசான் நான். ஒரு காலத்தில் அவன் என்னிடத்தைப் பிடிப்பான் என நான் அறிந்தே வைத்திருந்தேன்!
ஜெயவீரசிங்கம் அவர்களும் சோஷலிசக் கொள்கை யிற் பற்றுள்ளவராகவே இருந்தார். தென்னிலங்கை யிற் சிங்கள இளைஞர்கள் புரட்சி செய்த காலம் அது. அந்த ஷேகுவரா இயக்கம் பற்றிய வரலாற்றையே எனக்கு ஆதியோடந்தமாக விளக்கியவர் அவரே அதன் தலைவர்களிற் சிலர் சர்வகலாசாலையில் அவ ரது உடன் மாணவர்களாக இருந்தார்களாம்.
என்னதான் சோஷலிச வாதம் பேசினாலும் நான் இடதுசாரிகளை விட்டுத் தூரமாகப் போய்க் கொண் டிருந்தேன். இந்தக் காலத்தில் எனது நண்பர் மஜீத் அவர்களைக் கேலிசெய்து "சாயங்கால மயக்கம்’ என்ற கதையை எழுதினேன். சுதந்திரன் காரியாலயத் திலிருந்து வெளிவந்த மாதப் பத்திரிகையில் அது வெளிவந்தது!
இந்தக் காலகட்டத்தில் நள்ளிரவிற் சுதந்திரம், பரீஸ் எரிகிறதா? என்ற நூல்களை வாசித்தேன்:
189

Page 104
அந்த ஆங்கில நூல்களைத் திரு. ஜெயவீரசிங்கமே எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வந்து தந்தார்;
நள்ளிரவிற் சுதந்திரம் என்ற நூல் இந்தியாவுக் குச் சுதந்திரம் கொடுப்பதற்காக மவுண்ட் பேட்டன் பிரபு இந்தியத் தேசப் படத்தில் அடிமட்டத்தை வைத் துப் பாகிஸ்தானைச் சிருட்டித்த வரலாறு சொல்லப் பட்டிருந்தது. பிரிவினைக்குப் பின்னர் நடந்த படு கொலைகளும் சித்தரிக்கப்பட்டிருந்தன. அந்த வர லாற்று நூல் ஒரு நாவலின் சுவையோடு இருந்தது. வாசிப்பவரை வேகமாக இழுத்தும் சென்றது.
பரீஸ் எரிகிறதா? என்ற நூல் இரண்டாம் மகா யுத்த காலத்தில் ஹிட்லர் பிரான்சிற்குப் படையெடுத் துச் சென்று பரீஸ் நகரைப் பிடித்த செய்தி சித்தரிக் கப்பட்டிருந்தது. இரு நூல்களையும் இரண்டு ஆசிரி யர்கள் இணை சேர்ந்து எழுதியிருந்தார்கள்,
அடுத்ததாக ஜெயவீரசிங்கத்திடமிருந்து நான் பெற்றுப் படித்த நூல் (யாத்திரை) Exodus என்ற நாவ லாகும். உலகெங்கும் சிதறிக் கிடந்த யூதமக்கள் எப் படி மீண்டும் ஒன்று சேர்ந்து இஸ்ரவேல் என்ற தங் கள் தாய்நாட்டை மீண்டும் புதிதாகச் சிருட்டித்த வரலாறு அந்நாவலிற் சொல்லப்பட்டிருந்தது.
இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழர்க ளால் நாம் புறக்கணிக்கப்படுகிறோம். இலங்கை பிரஜா உரிமைச் சட்டம் முதலடியை நமக்குத் தந்தது. அன்று தொட்டு இன்று வரை நாம் புறக்கணிக்கப் பட்டே வந்திருக்கிறோம். ஆளப்படும் இனம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இனங்களுக்கிடை யிலான இந்தப் பிளவு பிரிவினையிற்தான் முடியும்
90'

என்பதைச் சிங்களத் தலைவர்களே சொல்கிறார்கள். இந்த நிலையில் பிரஜா உரிமைச் சட்டம் இயற்றப் பட்ட 49ம் ஆண்டிலிருந்து இன்று வரையுள்ள தமிழ் மக்களின் போராட்டச் சரித்திரத்தை நாவலாக எழுத வேண்டும் என்ற அவாவை யாத்திரை என்ற நாவல் என்னுள் மூட்டியது. ஜெயவீரசிங்கமும் தூண்டிக் கொண்டிருந்தார்.
ஆனால் அந்த நாவலை எழுதுவதற்குப் பழைய ஹன்சாட்டுக்களையும் பிற ஆதாரங்களையும் நிறையப் படிக்க வேண்டியிருக்கும். மனைவியை இழந்த பின்னர் எனக்கு அந்த வசதிகள் குறைந்து விட்டன. வீட்டை விட்டுப்போக முடியாது. ஆகவே அந்த நாவலை நான் எழுதவேயில்லை, வேறு எவருமே எழுதவில்லை! ஆயி னும் நாவண்ணன் எழுதிய "பயணங்கள் தொடரட் டும்" என்ற நாவல் ஒரளவு அதைச் செய்திருக்கிறது!
1983ல் கலவரம் நாடு முழுவதுமே வெடித்தது. அதன் தாக்கம் மூதாரிற் குறைவாக இருப்பினும் இரண்டு வருடங்களில் மூதூரிலும் கண்ணி வெடி கள் முழங்கின. படுகொலைகளும் தீவைப்பும் நாளாந் தச் சம்பவங்களாயின.
இந்தச்சம்பவங்கள் நடைபெறுவதற்குச் சற்று முன் னால் திருக்கோணமலையில் கல்விக்கந்தோரில் எழுத் தாளராக இருந்த நல்லை அமிழ்தன் அவர்கள் "முன் னோடிகள்" என்ற ஒரு இலக்கிய அமைப்பை ஏற்படுத் தியிருந்தார்.
**தமிழே நான் உன்னைப்பாடமாட்டேன் ஏனென் றல் என்னை எம். பி. யாக்கிவிடுவாய்' என்று அவர்
இரண்டு வசனம் எழுதி அதைப்பாட்டென்றார், தன்
9.

Page 105
னைக் கவிஞன் என்றார். இவருடைய வசன கவிதை களில் எனக்கு பிடிப்பில்லாமலிருந்தும் அவர் என் நண் பரானார். திருக்கோணமலையில அவரது அமைப்பு அடிக்கடி கூட்டங்கள் நடத்தியது. நான் மூதூரிலிருந்து அக்கூட்டங்களுக்கு வந்தேன். டானியலும், சில்லையூர் செல்வராசனும், புதுவை இரத்தினதுரையும் அடிக்கடி அவரது கூட்டங்களுக்கு வந்தார்கள். சில்லையூர் செல் வராசன் அவர்களை ஏற்கனவே எனக்குத் தெரிந்திருந் தாலும் திருக்கோணமலையில் வைத்துத்தான் அ வ ரோடு நெருங்கிப்பழக முடிந்தது. தான்தோன்றிக் கவி ராயர் என்ற புனைபெயரில் அவர் “தலைவர்கள் வாழ்க மாதோ என்ற தலைப்பில் அருமையான பாடல்களை எழுதியிருக்கிறார். சிறுகதைகள், விமர்சனக்கட்டுரை கள் நாடகங்கள் ஆகிய எல்லாதுறைகளிலுமே கை வந்த பல்கலைக் க  ைல ளு ர் அ வர் டா னி ய லின் * பஞ்சமர் நாவல் விமர்சனக் கூட்டம் ஒன்றை முன் னோடிகள் திருமலை இந்துக்கல்லூரியில் நடத்தினர்
கனல்கக்கக் கவிதைபாடும் கலைஞர் வி. புதுவை இரத்தினதுரை ஆகியோர் அடிக்கடி முன்னோடிகளின் கூட்டங்களில் கலந்துகொண்டார். அவர் ஒரு ஸ்தபதி யும்கூட. முன்னோடிகள் ந - த் தி ய ஒரு கூட்டத்தில் ஏன் எழுதினேன் என்ற கட்டுரை ஒன்றுநான் படித்தேன்;
l -- 1 all
1-1 as 2
என்ற தலைப்பிலான ஒரு சிறுகதையையும் படித் தேன். அக்கதை பின் ன ர் யாழ்ப்பாணத்து அலை
என்ற சஞ்சிகையில் பிரசுரமாயிற்று.
படுகொலைகள், தேடுதல் வேட்டை, ஷெல்வீச்சு என்பன் மூதூர்ப் பிராந்தியத்தில் நடைபெற்று அயற்
H 92

கிராமத்து மக்கள் மூதூருக்கு அகதிகளாக வந்தனர். இந்தக் குழப்பங்களினால் என் பேனா ஸ்தம்பித்துப் போயிற்று. மனத்திலிருப்பதை எழுத் தி ற் கொண்டு வரப் பயமாக இருந்தது. இந்தக்கால கட்டத்திற்தான் 89ல் என நினைக்கிறேன். ஆறு பழைய இலக்கியக் காரர்களுக்கு இந்துக்கலாச்சார அமைச்சு பண முடிப்பு தந்து கெளரவித்தது. அதில் நானும் ஒருவன். பித்தன், ஏ. வி. பி3கோமஸ் ஆகிய இருவருரோடு இன்னமும் என் நினைவிலில்லாத மூவரும் அந்தப் பணமுடிப்பைப் பெற் றனா.
உரியகாலத்தில் எனக்கு அதுபற்றிய கடிதம் கிடைக் கவில்லை. சில நாட்களின் பின்னர் சென்று அப்பணத் தைப் பெற்றுக்கொண்டேன். அங்கு ஏ. வி. பி. கோமஸ் அவர்களும் வந்திருந்தார். மூதூரிலிருந்து என்னோடு என் இலக்கிய நண்பர் ஏ. எஸ். உபையத்துல்லா அவர்களும் வந்திருந்தார்கள். இராஜாங்க அமைச்சரிட மிருந்து காசோலையைப்பெற்றுக் கொண்டதும் நான் ஒர் உரை நிகழ்த்தினேன். அந்த உரையில் "எழுத்துப் பைத்தியம் எனக்குப்பிடிக்காமல் இருந்தால் நான் மிக இலகுவாகவே பட்டதாரியாகி, ஒரு முதலாந்தர அதி பராகவோ அல்லது ஒரு கல்வியதிகாரியாகவோ உயந் திருக்கலாம். ஆனால் அதைப்பற்றி நான் என்றைக்குமே துக்கப்பட்டதில்லை. ஏனென்றால் இந்த நாட்டிலே ஆயிரம் ஆயிரம் பட்டதாரிகள் இருக்கிறார்கள். நூற் றுக் கணக்கான அதிபர்களும், கல்வியதிகாரிகளும் இருக் கிறார்கள். ஆனால் ஒரேஒரு வானா ஆனாதான் இருக் கிறான். அதை நினைத்து மனநிறைவுகொள்கிறேன்' என்று குறிப்பிட்டேன்.
፲ 98

Page 106
32. திருக்கோணமலை
நினைவுகள்
‘கெட்டும் பட்டினம் சேர்’ என்பது பழமொழி: நான் கெட்டுத்தான் பட்டினம் சேர்ந்தேன்.
1990 ஆண்டு யூன்மாதம் 13ந்திகதி. என்றைக்குமே யூன் 13ந்திகதி மூதூரில் முக்கியமான நாள்தான். ஏனென்றால் அத்தினம் மூதூரிற் கோயில் கொண்டி ருக்கும் புனித அந்தோனியார் திருநாள் ! அன்றுதான்
ஊரைவிட்டு ஓடினேன்.
என்மகள் ஆசிரிய கலாசாலையில் இருந்தாள். அவளுடைய குழந்தைகளான மூவர் என் பாதுகாப்பில் இருந்தனர். இளையவன் அப்போது ஒன்பது மாதக் குழந்தை, நான் உடுத்த உடையோடு அவனைத் தூக்
கிக் கொண்டு தான் ஓடினேன்,
ஒடி எங்கெங்கோ அ  ைல ந் து அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ந்திகதி திருக்கோணமலையை அடைந்தேன். ஆம் கெட்டுத்தான் பட்டினம் வந்தேன்.
94

வீடு தேடிக்கொள்வது கஸ்டமாக இருந்தது. எனது பிராந்தியத்திலிருந்தும், ஆலங்கேணி, தம்பலகாமம். நிலாவெளி, குச்சவெளி ஆகிய கிராமங்களிலிருந்தும் பலர் திருக்கோணமலைக்கு வந்திருந்தார்கள். பலர் வந்து கொண்டிருந்தார்கள். அதனால் வீடு கிடைப் பது கஸ்டமாக இருந்தது என்றாலும் சில நண்பர்க ளின் உதவியால் சிறு வீடுஒன்று எடுத்துக் கொண் டேன்.
மூதூரில் வீட்டைவிட்டு ஓடிய இரண்டு நாட்களில் சமையலுக்கான சில அத்தியாவசிய பண்டங்களை எடுக்க வீடுதிரும்பிய நான், என் புத்தக அறையிலிருந்து உரையுடன் கூடிய அகநாநூறு (மூன்று புத்தகங்கள்) உ. வே. சாமிநாதையர் உரையுடனே சிலப்பதிகாரம், குற்குலக்குறவஞ்சி ஆகியவைகள் மட்டும் எடுத்துப் போனேன். இவைதான் நான் "காப்பாற்றிய" புத்த கங்கள்! திருக்கோணமலைக்கு வரும் போதும் அவற்றை என்னுடன் கொண்டுவந்தேன்.
திருக்கோணமலையிற் குழப்பங்களின்றி அமைதி காணப்பட்டாலும் பதட்டம் இன்னமும் நீங்கவில்லை. வெளியிலே போகப் பயமாக இருந்தது. கையோடு கொண்டுவந்திருந்த புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தேன் எழுதலாம் எனத் தோன் றினாலும் கதை எழுதப்பயமாக இருந்தது.
எதை எழுதுவது? நடைமுறை வாழ்க்கையைத் தானே எழுதவேண்டும். எழுத என்று நீனைத்தாலே அந்த அவல வாழ்வுதான் முன்னால் தெரிகிறது, அதை எழுதினால் 'உள்ளே” போகவேண்டியிருக்குமே, நான் எழுதாமலே இருந்தேன் சில மாதங்கள்.
195

Page 107
கட்டுரை எழுதலாம் போலத் தோன்றிற்று. திருக் கோணமலையில் வீடு தேடிய படலம் தான் கட்டு ரைக்குப் பொருளாயிற்று. தங்கள் உடமைகளை எல் லாமே இழந்து அகதிகளாக வந்திருப்பவர்களிடம் வீட்டுச் சொந்தக்காரர்கள் அரக்கத்தனமாக முற் பணம் கேட்பது தான் கட்டுரைக்குப் பொருளாயிற்று.
கவிமணி தேசிக வினாயகம்பிள்ளை. தன் ஆறு என்ற மொழிபெயர்ப்புப் பாடலில் "நெஞ்சம் உலர்ந்த நெடுநகர்" எனப் பாடியிருக்கிறார். திருக்கோணம லைப் பட்டினத்தை அக்கட்டுரையில் 'நெஞ்சமலர்ந்த நெடுநகர்' என்றே குறிப்பிட்டேன். வீரகேசரியின் வெளியான அக்கட்டுரை பலரின் கவனத்தைக் கவர்ந் 凸莎、列·
ஆனாலும் கதை எழுத வேண்டும் என்ற உணர்வு என்னுள் சற்றுப் பல மாகவே உருக்கொண்டது. தம் கணவரை இழந்த இளம் பெண்கள் பலரைத் திருக் கோணமலையிற் கண்டேன். கணவனைப் பார்ப்பதற் காக நாளாந்தம் சோகமே உருக் கொண்ட பெண்கள் "பிளானரன் பொயின்ற் இல் உள்ள படையினர் பாச றைக்குச் செல்வதைக் கண்ணுற்றேன். அவர்கள் கண் னிர் என்நெஞ்சை உறுத்தியது. அவர்களைப் பற்றிக் கதை எழுதாவிட்டால் நான் கதாசிரியனா?
ஆனாலும் பயமாயிருக்கின்றதே.
நான் 'நெஞ்சம் உலர்ந்த நெடுநகர்” என எழுதி யதே என் மகளுக்குப் பிடிக்கவில்லை. ‘அப்பா நீங்கள் எதையுமே எழுத வேண்டாம்" என்று அவள் அழுதாள்.
ஆனால் இன்றைய பெண்களின் ஒலம் என் நெஞ் சைத் தொட்டது. சங்க இலக்கியங்களிலே வெள்ளி
19 6.

வீதியார் என்ற ஒரு பெண்புலவர் காணப்படுகின்றார். அவருடைய பாடல்கள் எல்லாம் கணவனைப் பறி கொடுத்த பெண்ணின் புலம்பலாகவே இருக்கும். அந்தப் புலவரும் நிச்சயமாகத் தமது இளமைப் பரு வத்திலேயே கணவனைப் பறிகொடுத்திருக்க வேண்டும். அப்புலவரின் கணவன் இயற்கையாகவே இறந்தாரோ அல்லது கொலை செய்யப்பட்டாரோ!
குழப்பங்கள் காரணமாகக் க ண வ  ைன ப் பறி கொடுத்த பெண்களைக் காணும் போதெல்லாம் எனக்கு வெள்ளிவீதியார் பாடல்களே நினைவுக்கு வந்தன. அவரது பாடல்களை எல்லாம் தொகுத்து தற்காலக் கைம்பெண்களை மனதில் நினைத்துக் கொண்டு "வெள்ளிவீதியார் கதை’ என்ற சிறுகதை யையும் வீரகேசரியில் எழுதினேன். நீண்ட இடை வெளிக்குப் பின்னர் நான் எழுதிய சிறுகதை இது.
பயமும், பதட்டமும் நகரிலே கொஞ்சங் கொஞ்ச மாக நீங்கிக் கொண்டு வந்தன. நான் வாசிகசாலைக் குப் போகத் தொடங்கினேன். அசுர வேகத்தோடு வாசித்தேன். இந்தக் காலகட்ட த் தி ற் தா ன் என் வாழ்க்கையிலேயே மிகவும் அதிகமான நாவல்களைப் படித்திருப்பேன் என எண்ணுகிறேன்;
சாயந்தர வேளைகளில் என் பேரப்பிள்ளைகளை யும் கூட்டிக் கொண்டு பத்தாம் நம்பர் கடற்கரைக் குப் போவேன். அப்பிராந்தியத்திலிருந்து என் உறவி னர்களான பலர் இந் தி யா வில் குடியிருந்தார் கள். அவர்களை வைத்துக் கொண்டு "கடலின் அக் கரை போனோரே' என்ற சிறுகதையை எழுதினேன்; பலரின் பாராட்டை அக்கதை பெற்றது. வாசிப்பதும், எழுது வது மா க மீண்டும் என் வாழ்க்கை ஒடத் தொடங்கியது.
197

Page 108
நெய்தல் நிலச் சிறுவன் ஒருவன் வலை வீசிக், கொக்கொன்றைப் பிடித்ததாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது. அதிகாலையில் மீன் பிடிக்கச் சென்ற மீனவன் ஒரு வலையும் யாரோ பிடித்துக் கொண் டார்கள். ஆணைப் பிடிகொடுத்த பெண் கொக்கு அகநானூற்றிற் செட்டையை அடித்துக் குமுறுவது போலக் கணவனைப் பறிகொடுத்த மீனவப் பெண் ணும் கதறிக் குமுறுகிறாள் திருகோணமலையிலிருந்து எழுதிய "வலை" என்ற கதை அகநானூறு தழுவிய கதை
பலஸ்தீனப் பயணங்கள் என்ற பிரயாண நூலைப் படித்த பின்னர் குருடன் என்ற கதையை எழுதினேன். அக்கதை 92ம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு அன்று வீர கேசரியில் வெளியாகியது.
தமிழ்த்தினவிழா மலர் ஒன்றிலே ‘ரியூசன்' என்ற விவகாரத்தை வைத்துக்கொண்டு 'ஓர் ஆசிரியர் திரும் பிப் பார்கிறார்" என்ற கதையை எழுதினேன்.
திருக்கோணமலைக்கு வந்திருந்த வானொலியைச் சேர்ந்த மயில்வாகனம் அவர்கள் வானொலி நாடகங் கள் எழுதும்படி என்னைக்கேட்டார். திருக்கோண மலைக் காலத்திற் பல வானெலி நாடகங்களையும் எழுதினேன்.
கதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் என்று மீண்டும் எழுதத்தொடங்கிய நான் 'மூதூர் அழிந்தே விட்டது! ஆனாலும் அங்கு தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு ஒரு ஆவணமாக ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற நினைவு பிறந்தது. "மண் ணிற் சமைந்த மனிதர்கள்" என்ற நாவலை எழுதினேன். அது இன்னமும் என்னிடம் இருக்கிறது! அதன் பின் னர்தான் ‘ஒரு வெண்மணற்கிராமம் காத்திருக்கிறது’
98
 

என்ற நாவலை வீரகேசரியிற் தொடர்ந்து எழுதினேன் அது சென்ற ஆண்டு நூலுருவம் பெற்றது:
பல இலக்கிய அமைப்புக்கள் என்னைக் கூட்டங்க ளிற் பேச அழைத்தன தாகம் என்ற இலக்கிய அமைப்பு என்னையும் அருள் சுப்ரமணியம் அவர்களையும் தாம ரைத்தீவான் என்ற கவிஞர் இராசேந்திரம் அவர்களை யும் பாராட்டிக் கெளரவித்தது.
பல இளைஞர்கள் சேர்ந்து ஒரு சிறுகதைத் தொகு தியை வெளியிட்டார்கள். அக்கதைத் தொகுதிக்கு முன் னுரை எழுதித்தரும்படி கேட்டார்கள். எழுதினேன் அதிலே புஷ்பராசா என்ற ஆங்கில ஆசிரியர் எழுதிய "பெரிய மனிதன்' என்ற சிறுகதை எனக்குப்பிடித்தது. ஒரு அ ன் பர் திருக்குறளிலுள்ள ஆர்வத்தால் மாதா மாதம் திருக்கோணமலைப்பாடசாலை மாண வர்களுக்குத் திருக்குறள் மனனப்போட்டி ஒன்று நடத் தி னார். இன்னமும் நடத்தித் கொண்டிருக்கிறார் போலும், அப்போட்டியில் நடுவராக இருக்கும் சிரம மானபணிக்கு வரும்படி என்னைச் "சிக்கெனப் பிடித் து க் கொண்டார். தவறாமல் ஒவ்வொருமாதமும் போனேன்.
இப்படியாகத் திருக்கோண்மலையிலிருந்த இரண்டு வருடங்களும் முழுநேர இலக்கியகாரனாகவே இருந் தேன்.
மூதூரில் நிலைமைகள் சற்றுச்சீரடைந்தன. என் னதான் பட்டினமாக இருந்தாலும் அங்கே எத்தனே தான் வசதிகள் இருந்தாலும் பிறந்த மண்ணை மறக் கமுடியுமா? நான் எந்த மண்ணில் பிறந்தேனோ அந்த மண்ணிலேதான் நான் மடியவும் வேண்டும் என்பது தான் நம் ஒவ்வொருவரதும் ஆசை,
ஆகவே நான் மீண்டும் மூதூருக்கே வந்துவிட்டேன்.
99

Page 109
33. பிற்சேர்க்கை
1946ம் ஆண்டிலிருந்து 1994ம் ஆண்டு வரையுள்ள என் இலக்கிய நினைவுகளை அடக்கிய 33 கட்டுரை களையும் திருப்பிப்படித்தேன். ஓரிரு விஷயங்களை இன் னமும் சேர்க்கவேண்டும் போல இருக்கிறது.
அறுபத்திமூன்றில் யாழ் இந்துக்கல்லூரியில் நடை பெற்ற சாகித்ய மண்டல விழாவின் பின்னர் வித்வான் F. X, C. நடராசா அவர்கள் காரை நகரிலுள்ள தன் பிறந்த வீட்டுக்கு எம்மையெல்லாம் அழைத்தார். புலவர் மணிபெரியதம்பிப்பிள்ளை அவர்களும், எஸ். பொவும், நானும் அவருடன் சென்றோம்:
அன்றிரவு அவரின் பிறந்த வீட்டில் தங்கியிருக்கை யில் நால்வரும் பேசிக்கொண்டிருத்தோம். அன்றுதான் நான்புலவர் மணியிடம் மனம்விட்டுப்பேசினேன்.
புலவர் மணி அவர்களின் புதல்வர் சமீபத்தில் கொழும்பில் விபத்தில் மரணமடைந்த தருமலிங்கம் மூதூரிற் கூட்டுறவுப் பரிசோதகராக இருந்த காலத் தில் என் வீட்டுக்கு மிகவும் அருகாமையிற்தான் வசித் தார். புலவர் மணி அடிக்கடி தன் மகனிடம் வருவார்.
200

அப்போது அவரிடம் பேசியிருந்தாலும் இன்றைக்கு நான் மிகவும் காத்திரமான விடயத்தைப் புலவர்மணியிடம் சொன்னேன்.
'ஐயா, கீதைக்கு எத்தனையோ பேர் பாஷ்யங்க ளும் விரிவுரைகளும் எழுதியுள்ளார்கள். நீங்களும் அதனை வெண்பாவாக எழுதினிர்கள். ஆனால் மட் டக்களப்பின் இந்தக்கால கட்டத்தின் மிகச் சிறந்த புல வரான தங்களிடமிருந்து நான் இ த ற்கு மேலான ஒன்றை எதிர்பார்க்கிறேன். மட்டக்களப்பு மக்களின் வாழ்க்கையை நீங்கள் ஒரு காவியமாகப் பாடியிருக்க லாம். பாடவேண்டும். என்னைப்பொறுத்த அளவில் தங்கள் பகவத்கீதை வெண்பா ச்ெத்தபாம்படித்த மாதிரித்தான்'
புலவர் தமக்கே உரிய பண்போடு என்வார்த்தை களை அமைதியாகக் கேட்டார். ஆனால் ஒன்றுமே பதில் கூறவில்லை.
புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை நமக்கு ஒரு காவியத்தைத்தராமற் போனது நமது துரதிஷ்டந்தான் என இன்னும் நான் எண்ணுகிறேன்.
டொமினிக் ஜீவா அவர்களை 1960ல் இருந்தே எனக்குத் தெரியும். அவருடைய கஸ்தூரியார் வீதிக் கடையில் எத்தனையோ இலக்கிய சம்வாதங்கள் நடத்தியிருக்கிறோம். இலக்கிய விஷயங்களையும் ஆக் ரோஷத்தோடு பேசும் அவரது கணிர் என்ற குரல் மறக்க முடியாது. கால் நூற்றாண்டுகளாக மல்லிகை இதழை நடத்திய சாதனையைப் பாராட்டாமலிருக்க முடியாது. கொழும்பிற் சாகித்ய மண்டல இலக்கியக் குழுக் கூட்டத்திற்கு வரும் போதெல்லாம் "மல்லிகை எழுதன்டாப்பா? எனக் கேட்பார், ஆனால் நான்
201

Page 110
எழுதுவதில்லை. என்றாலும் மல்லிகையின் அட்டைப் படத்தில் என்னை பிரசுரித்து கெளரவித்ததை என் னால் மறக்கத்தான் முடியுமா?
1970 களில் என்னோடு பழகிய இன்னொரு எழுத்தாளர் கே. ஆர். டேவிற் அவர்களாகும். அவரு டைய வரலாறு அவளைத் தோற்று விட்டது என்ற நாவலுக்கு மூதூர் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியீட்டு விழா நடத்தினோம். அப்போது அவர் என் மனைவியின் பாடசாலையில் உதவி ஆசிரியராக இருந்தார்,
எண்பதுகளின் பின்னர் என்னோடு அறிமுகமானவர் கள் ஒட்டமாவடியைச் சேர்ந்த எஸ்.எல்.எம். ஹனிபா அவர்களும், வை. அகமத் அவர்களுமாவர். பொன்னுத் துரையே எனக்கு எஸ். எல். எம். ஹனிபா அவர்களை அறிமுகப்படுத்தினார். மிகச் சொற்பமாகவே எழுதியி ருந்தாலும் ம ணி யா ன சிறுகதைகளை எழுதினார். ஈழத்தமிழ் இலக்கியத்தில் அ வ ர து ஒட்டமாவடிக் கதைகள் புதிய பரிமாணத்தைச் சேர்த்தன. சமீபத் தில் வெளியான அவரது மக்கத்துச் சால்வை என்ற சிறுகதைத்தொகுதி காத்திரமான தொகுதியே. சமீப த்திற் தமிழகம் சென்று வந்தவர் லா. ச. ராவின் புகழ்பாடுவதில் நேரத்தை சுவமாக்குகிறார்.
வை. அகமத் அவர்கள் மூதூரில் கல்வியதிகாரியா கவுமிருந்தவர் அதற்கு முன்பே வீரகேசரி வெளியீடாக வந்த அவரது நாவல் ஒன்றின் வெளியீட்டு விழாவிற் காக ஒட்டமாவடிக்குச் சென்றிருந்தேன். பட்டதாரி யான அவர் வாழ்க்கையைத் துருவிப்பார்ப்பவர். சிற ந்த மனிதாபிமானி. பி ன் ன ர் அவர் மட்டக்களப்பு மேலதிக உதவி அரசாங்க அதிபராகவும் உயர் வு பெற்றார். அவரின் அகாலமரணம் இலக்கிய உலகிற் குப் பேரிழப்பே.
202

திருகோணமலையிலிருந்த காலத்தில் தொண்ணுர றுகளின் பின்னர் அறிமுகமானவர் அகளங்கன் ஆவார். ஏற்கனவே அவர் சிறுகதை, நாடகம், ரசனைக் கட் டுரைகள் என்று எவ்வளவோ எழுதியிருக்கிறார். ஒரு நாள் அவர் திருகோணமலையில் என்னை வீடு தேடிக் கொண்டுவந்தார். B. Sc; பட்டதாரியான அவர் மிகக் சிறந்த பே ச் சா ள ரு ம் கூட சமீபத்தில் அவரது வானொலி நாடகத் தொகுதி புத்தகமாக வெளிவந் தது. பழந்தமிழ் இலக்கியத்திலும் நன்கு பரிச்சயமான அவருக்கு மிக வளமான எதிர்காலம் இருக்கிறது.
கடைசியாக, என் நினைவுகள் என்ற இக்கட்டுரைக ளில், என் நினைவுக்கு வராதவை சிலவும் இன்னமும் இருக்கலாம். அவைகள் இனிவராமலே இருக்கலாம். ஆனால் என் நினைவுகளை அசைபோட்டு எழுதியதில் எனக்கேற்பட்ட ஆத்மதிருப்தியே இந்நூலின் பயனாக எனக்கு அமைகின்றது. வாசகர்களுக்கு எவ்விதம் இது பயன் படுமோ. வாசகர்கள் இ  ைத ச் சுயசரித்திரம் எனச் சொன்னாலும் சுயதிருப்திக்காக எழுதப்பட்ட அலம்பல் என்றாலும் எனக்கு இரண்டுமே ஒன்றுதான்.
- முற்றும் -
203

Page 111
நூலாசிரிய6
பிறப்பு
பிறந்த இடம் :
கல்வி :
எழுதத்
இதாடங்கியது :
புனைபெயர்கள் :
சிவளிவந்த
நூல்கள் :
Ա5-I
U)
தாம புனி
மட்
1ցdք
#|
6flu
கொ
சிவிர
፵ኗÜ
$ხლქს
விகாக
தோன்
பூவர
ԱբցեII பூர்னி

ரைப் பற்றி . .
- 1925
Ti ரைவில் றோ, க. த. பாடசாலை மூதூர் த அந்தோனியார் பாடசாலை, டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கல்லூரி
ாகன், கீழைக்கரை தேவநேயப் பானா ாகேச தேசிகர்,
ழபிகாம்பு நானல்) எஞ்சுப் பறவைகள் (நாவல்) காவியம் நிறைவு பெறுகிறது (நாவலி வினைன் மணற் pılığı f: காத்துக் 3ன்டிருக்கிறது (நாவல்) 5ரி (சிறுகதைத் தொகுதி)
சம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை) ர் புனித அந்தோனிபார் கோயிலின் க வரலாறு (சரித்திரம்)
St. Sebastian Printern. Batticaloi.