கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒரு டாக்டரின் டயரியில் இருந்து

Page 1


Page 2

ஒரு பாக்ட்ரின் Cധീേജു.
Dr. எம்.கே.முருகtடிந்தல்
@
nNATOdyILIPOVy
201-1/1, ரீகதிரேசன் வீதி, கொழும்பு - 13. தொலைபேசி: 2320721

Page 3
இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு
முதற் பதிப்பு : பெப்ரவரி - 2004
உரிமை ஆசிரியருக்கே
அட்டைப்படம் : அமுதோன் அட்டை வடிவமைப்பு : எஸ். திவாகரன்
கணினி அச்சமைப்பு : எஸ். லிகோரின் றோசி
dodiaFLOLT: u.Cs. LírfaürLjciu, 98A, விவேகானந்தா மேடு, கொழும்பு-12. தொலைபேசி: 2344046, 4-614153
a·

எழுது கணிப்பில் டாக்டரது இலக்கிலச் செலற்பாடுகள்
- டொமினிக் ஜீவா reR
டாக்டர் எம்.கே.முருகானந்தனிடம் பருத்தித்துறையில் இருந்த காலங்களில் நான் என் உடல் "சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை களுக்காக அவரிடம் சென்றதில்லை.
அதே சமயம் இலக்கிய உலகு சம்பந்தப்பட்டவர்களில் பலர் அவரது இல்லத்திற்கு அடிக்கடி வந்து கலந்து கொண்டுள்ளனர்.
நானும் 'அறிவோர் கூடல்' கூட்டங்கள் இவரது வீட்டில் நடைபெறும் சந்தர்ப்பங்களில் அதில் கலந்து கொண்டு இலக்கிய நண்பர்களுடன் உரையாடிக் களித்திருக்கிறேன்.
இவரது துணைவியாரின் அன்பு உபசரிப்பு, பலதடவைகளில் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு.
இலக்கியத்தையும் இலக்கியவாதிகளையும் புரிந்துணர்வுடன் நேசித்த குடும்பங்களில் டாக்டரது குடும்பமும் குறிப்பிடத்தக்க குடும்பங்களில் ஒன்றாகும்.
டாக்டர் எம்.கே. அவர்கள் எழுத்தாளர்களை எப்படியெல்லாம் நேசிக் கலாம் என்பதை என்னைப் போன்ற பலருக்குக் கற்றுத் தந்தவராவார்.
மல்லிகைப் பந்தல் மூலம் பல எழுத்தாளர்களினது படைப்புக்களை இதுவரை நூலுருவாக்கியுள்ளேன்.
அதனால் பல எதார்த்த அனுபவங்களையும் பெற்றுள்ளேன்.
அதே சமயம் என்னால் இலக்கிய பூர்வமாக நேசிக்கப்பட்ட டாக்டர் எம்.கே. அவர்களினது எழுத்து ஆக்கத்தை நூலுருவில் வெளிக் கொணர இயலவில்லையே என்ற மன ஆதங்கம் எனக்கு நீண்ட நாட்களாகவே உண்டு.
iii :

Page 4
மல்லிகைப் பந்தல் முத்திரைப் பதிவுடன் அவரது புத்தகம் ஒன்றாவது வெளிவர வேண்டும் என நான் மனசார விரும்பினேன்.
யாழ்ப்பாணத்தை விட்டு பெரும்பாலோர் இரவிரவாகவே அல்லோல கல்லோலமாக வெளியேறியபோது நானும் புலம்பெயர்ந்தேன். டாக்டர் குடும்பமும் வெளியேறியது.
அவர் மருத்துவத் தொழிலைத் தொடர்ந்தார். வெள்ளவத்தையில் டிஸ்பென்சரியை ஆரம்பித்தார்.
அந்தத் தொடக்க கால கொழும்புப் புலப்பெயர்வில் நான் தெருத் தெருவாக அலைந்து திரிந்தேன். தொடர்ந்து என்ன செய்வதென்றே புரியவில்லை.
சூழ்நிலை சற்று மட்டுப்பட்டதும் யாழ்ப்பாணம் திரும்பி விடுவோமா! என யோசித்தேன். திகைத்துப் போனேன். w
மீண்டும் யாழ்ப்பாணம் சென்று மல்லிகையைத் தொடர்ந்து நடத்த முடியுமா?’ எனத் தீவிரமாகச் சிந்தித்தேன்.
இந்தத் தள்ளாட்டமான பிற சூழ்நிலையில் இனிய நண்பர் துரை விசுவநாதனுடன் ஒருநாள் மாலைப் பொழுதில் உரையாடிக் கொண்டிருந்தேன்.
*ஜீவா, மல்லிகை ஆசிரியர் என்றுதான் உங்களை இன்றுவரை மதித்துக் கெளரவித்துக் கனம் பண்ணி வருகிறது. அந்த மல்லிகையை ஒதுக்கிவிட்டு உங்களால் நடமாடித் திரிய எப்படி மனசு வந்தது?” எனப் புத்திமதி சொல்வதுபோலக் கடிந்து கொண்டார், அவர்.
‘உங்களது திறமையை வீணடித்துக் கொண்டு கொழும்புத் தெருக்களில் நீங்கள் சும்மா திரியக் கூடாது. அது மல்லிகைக்குப் பெருத்த நஷ்டம்!’ எனச் சொல்லியவாறு ஐம்பதினாயிரம் ரூபாவை எடுத்து எண்ணி என் முன்னால் வைத்தார்.
இத்தனை பெரிய தொகையை ஒரே சமயத்தில் ஒன்றாகப் பார்த்தது எனது வாழ்க்கையில் இதுவே முதல் முறையாகும்.
நான் திகைத்துப் போய்விட்டேன். பின்னர் கொழும்பு மாநகரத்திலேயே வேரூன்றி விட்டேன். மல்லிகையுடன் மல்லிகைப் பந்தலும் கொடிவிட்டுப் படர்ந்து சடைத்து வளரத் தொடங்கிவிட்டது. w
அதன் பின்னர் நடந்ததுதான் உங்களுக்கெல்லாம் தெரிந்த
சங்கதியாச்சுே
1W

y
இந்தக் காலகட்டங்களில் எல்லாம் டாக்டர் எம்.கே. எனக்கு உந்து சக்தியாகத் திகழ்ந்து வந்தார்.
வெள்ளவத்தைக்குப் போகும் சமயங்களில் எல்லாம் இவரது இல்லத்திற்குப் போவதை ஒரு கட்டாயத் தேவையாக வரித்துக் கொண்டு செயல்பட்டு வந்தேன்.
என்னதான் மருத்துவராக, மக்களால் விரும்பப்பட்டு உத்வேக மூட்டப்பட்டு ஆதரிக்கப்படும் டாக்டராக இருந்தபோதிலும் கூட, முருகானந்தனின் கூரிய செயல்பாட்டுக்குள்ளே ஒரு எழுத்தாளன் எப்பொழுதுமே ஒளிந்து கொண்டிருப்பதைப் பல சந்தர்ப்பங்களில் தெளி வாகத் தெரிந்துகொண்டு எனக்குள் நானே மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள இரண்டு டயரிக் குறிப்புகளில் சிரித்திரன் டயரிகள் ஒன்றாகவும், அது யாழ்ப்பாண அநுபவங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது. கொழும்புக் குறிப்புகள் மல்லிகையில் வெளிவந்தவையாகவும் இது கொழும்பு அநுபவங்களைக் வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளன.
இந்த நூலின் அட்டையை வரைந்து உதவிய அமுதோன்’ தமிழகத்தின் பிரபல ஓவியர்களில் ஒருவர்.
கவிஞர் கண்ணதாசனின் ஆஸ்தான ஒவியர்களில் முதன்மை ஸ்தானம் வகித்தவர்.
சமீபத்தில் ‘தமிழ் இலக்கியம் 2004 10,11-1-2004இல் சென்னையில் நடைபெற்ற சமயம் நானும் இவ்விழாவில் கலந்து கொள்ள அழைக்கப் பட்டிருந்தேன்.
அந்தச் சந்தர்ப்பத்தில் ஓவியர் அமுதோனை அவசியம் காண வேண்டும் என விரும்பினேன். நீண்டகால நண்பர் இவர், கவிஞர் கண்ணதாசனே இவரை எனக்கு முதன் முதலில் சென்னையில் அறிமுகப்படுத்தி வைத்தது.
நான்கு புத்தக அட்டை ஓவியங்களைச் சில நாள் அவகாசத்தில் வரைந்து தந்தார், ஓவியர் அமுதோன். அதில் ஒன்றைத்தான் இந்த நூலின் அட்டையில் நீங்கள் பார்க்கின்றீர்கள்.
ஒவியர் அமுதோனுக்கும், இதை நூலுருவாக்கித் தந்த யு.கே. பிரிண்டர்ஸிற்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.
27.1-2004

Page 5
@ié)၅]©y)
இது எனது பத்தாவது நூல்.
இதுவரை வெளியான எனது நூல்கள் அனைத்துமே நலவியல் சார்ந்தவை. இது சற்று வித்தியாசமானது. இவை எனது அனுபவக் குறிப்புகள்.
ஒவ்வொரு டொக்டரும் தமது நாளாந்த கடமைகளின் போது, பல்வேறு விதமான நோயாளர்களைப் பார்க்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான இயல்புள்ள மனிதர்களோடு பழகுகிறார்கள். அவர்களது கதைகளைக் கேட்கிறார்கள். கேள்விகளை எழுப்புகிறார்கள், பரிசோதித்துப் பார்க்கிறார்கள். இதனால் பரந்துபட்ட அனுபவங்களையும் பெறுகிறார்கள். w
நானும் அவர்களில் ஒருவனே. அதிலும் குடும்ப வைத்தியன். அரசதுறை வைத்தியர்களைவிட முற்றிலும் மாறுபட்டது எனது துறை.
வைத்தியனான எனது தொழிலிலும், நாளாந்த வாழ்க்கையிலும் என் மனதைப் பாதித்த சம்பவங்களும் செய்திகளும் பல. சில சம்பவங்கள். என்னைக் கோபம் கொள்ளச் செய்திருக்கின்றன. சில மனதைக் கவ்விப் பிடித்து சோகத்தில் மூழ்கடித்திருக்கின்றன. வாய் திறந்து சிரிக்க வைத் தவையும் இருக்கின்றன. நோயாளிகள் சிலரின் தப்பான எண்ணங் களையும், தவறான செய்கைகளையும் பார்க்கும்போது, அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உணர்ந்திருக்கிறேன்.
நோயாளிகள் தமது நோய்களைப் பற்றி மாத்திரம் தமது குடும்ப வைத்தியர்களுடன் உரையாடுவதில்லை. தமது எண்ணங்களையும் ஆசைகளையும், வெற்றிகளையும் தோல்விகளையும், ஏக்கங்களையும் சுமைகளையும் கொட்டித் தீர்க்கிறார்கள். தமது குடும்பச் சூழலையும் சமூக உறவுகளையும் தெளிவுபடுத்துகிறார்கள்.
νi

தமது கணவன் மனைவிக்குத் தெரியாத பரம இரகசியங்களைக்கூட,
வைத்தியரின் காதில் போட்டு வைக்கிறார்கள். நோயாளியை மாத்திர மன்றி, நோயையும் அது வந்ததற்கான அடிப்படைக் காரணங்களையும் புரிந்து கொள்வதற்கு இவை வைத்தியர்களுக்கு அவசியமானதுதான். அவசியமற்றவைகளும் கூடச் சிலவேளைகளில் சொல்லப்படுகின்றன.
நோயாளிக்கும் வைத்தியருக்குமிடையே நிலவும் நல்லுறவும், ரகசியங்கள் நிச்சயம் காப்பாற்றப்படும் என்ற திடமான நம்பிக்கையும்தான் திறந்த மனதுடன் எல்லாம் சொல்லப்படுவதற்குக் காரணங்களாகும்.
இந்த அனுபவங்கள் வைத்தியர்களின் நெஞ்சத்திலே கீறல்களையும் கிறுக்கல்களையும் நெருடல்களையும் அடிக்கடி வரைந்து விடுகின்றன. அவை அவர்களது நெஞ்சத்திலே நீறுபூத்த நெருப்புக்களாக அடங்கிக் கிடப்பதுமுண்டு. ரணங்களாகி இரத்தம் கசியச் செய்வதுமுண்டு.
எனது அனுபவங்கள் என்னோடு மக்கி போகாது பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆதங்கம் நான் தொழில் ஆரம்பித்த காலத்திலிருந்து எனக்கு இருந்திருக்கிறது. அத்தகைய படைப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகிற்கு அந்நியமான புது வரவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். அத்துடன் பலருக்கு பிரயோசனமாக இருக்கக்கூடும் என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
ஆனால், அவற்றைப் பதிவு செய்வது சற்றுச் சிக்கலான காரியம். வைத்தியர்களான நாங்கள் இரகசியம் காப்பவர்கள். நோயாளிகளாக எம்மிடம் வருபவர்கள் நம்பிக்கையோடு சொல்லும் விடயங்களை பகிரங் கப்படுத்த முடியாது. எனவே இக்கட்டுரைகள் யாரையும் நேரடியாகச் சுட்டிக் காட்டுவதாக அமையாதவாறு அவற்றை பெயர் மாற்றம், ஊர் மாற்றம் மற்றும் உருமாற்றம் செய்து எழுதியுள்ளேன். : !
ஆயினும் இங்கு எழுதப்பட்ட அனைத்துமே உண்மையானவை, சத்தியமானவை. வெறும் கற்பனையில் பிறந்தவையல்ல. இருந்தபோதும் இங்கு குறிக்கப்படும் எந்தவொரு சம்பவமும் எந்தவொரு தனிமனிதரையும் குறிப்பவையாக அமையவில்லை. எந்த ஒருவரது வாழ்க்கையில் நடந்த வாழ்க்கையிம் இடம்பெற்ற தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. பொருள் ரீதியாக ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல சம்பவங்களை ஒன்று கூட்டி, பகுத்து வகுத்து, அங்கும் இங்கும் சில கற்பனை வர்ணங் களையும் கலந்து சித்திரங்களாகத் தர முயன்றிருக்கிறேன்.
நான் கற்றுக்கொண்ட பாடங்களும், சமூகம் பெற்றுக் கொள்ள வேண்டிய செய்திகளும் இவற்றுள் அடங்கும்.
vii

Page 6
இவை வெறும் கட்டுரைகள் அல்ல. அதே நேரம் சிறுகதைகளாகவும் அமையவில்லை. வடிவத்தைப் பற்றிச் சிந்திக்காது என் கருத்துக்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே முனைப்புற்றிருந்தது. இவை இலக்கியமா அல்லவா என்பதும் எனக்குத் தெரியாது. நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இதன் முற்பகுதி சிரித்திரன் சஞ்சிகையில் 1986-1987 காலப்பகுதியில் ‘ஒரு டாக்டரின் டயரியிலிருந்து.’ என்ற தொடராக வெளிவந்தது. மறைந்த சிரித்திரன் ஆசிரியர் சுந்தரும். அவரது மனைவியும் கொடுத்த ஆதரவும், தூண்டுதலுமே அன்றைய போர்ச் சூழலிலும் என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டியது. குடும்ப அங்கத்தவர்கள் போல, நெருங்கிப் பழகிய அவர்களது அன்பு இன்றும் என்னை நெகிழ வைக்கிறது. அவர்களுக்கு எனது அன்பும் நன்றிகளும் என்றும் உண்டு.
இதன் இரண்டாம் பகுதி நான் கொழும்புக்கு இடம்பெயர்ந்த பின், மல்லிகையில் ‘டொக்டரின் கிறுக்கல்கள்’ என்ற தொடராக எழுதப்பட்டது. மல்லிகையுடனான எனது தொடர்பு மிக நீண்டது. மல்லிகை ஆரம்பித்த காலத்தில் G.C.E, O/L மாணவனாக இருந்தபோதே அதனைப் படிக்க ஆரம்பித்தவன் நான். கல்கி, ஆனந்தவிகடன் வாசித்துக் கொண்டிருந்த எனக்கு முன் புதியதோர் உலகை அது. திறந்து வைத்தது. ஈழத்து இலக்கியம், தாழ்த்தப்பட்டோர் இலக்கியம் போன்றவற்றில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. மல்லிகை காட்டிய அடிப்படை இலக்கியக் கோட்பாடுகள் என்னை நெறிப்படுத்தின. அது சுட்டிய வழியில் சிந்தித்தவன், நான். அதில் எழுதவும் செய்தவன்.
அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா எனது மதிப்பிற்குரியவர். குடும்ப நண்பர் என்ற உரிமையோடு புழங்குபவர். வைத்தியத் தொழிலுடன் முடங்கிவிடாது இலக்கியத் துறையிலும் ஈடுபடவேண்டும், தொடர்ந்து எழுதவேண்டும் என அழுத்தம் கொடுப்பவர். இன்று மல்லிகைப் பந்தலூடாக எனது முதல் இலக்கிய நூல் வெளிவருவது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. அவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எம்.கே.முருகானந்தன் Dispensary & Surgery 348, Galle Road, WellaWatte.
Colombo 06. kathirmurugaCDhotmail.com 15.12004
viii

அம்மாவுக்கு.

Page 7
ფაიIყ2 Qაc(9gare.8° COvარ*
சிரித்திரன்
198é 一 1987 ട്ടത്ര പ്രെrber caീൺ@b8ാ
Χ
 

ஒரு டாக்டரின் டயரியிலிருந்து.
அது ஒரு அமைதியான வெள்ளிக்கிழமை; மாலை நேரம். பொதுவா கவே டிஸ்பென்சரியில் சனக்கூட்டம் குறைந்த ஆரவாரமில்லாத நாள்.
அப்பொழுது ஆச்சி ஒருத்தி, பரபரப்புடன் எனது அறைக்குள் நுழைந்தாள்.
“இப்படி இருங்கோ இருங்கோ ஆச்சி”, நான் சொல்ல -
அவளோ இருப்பதற்கு கூட அவகாசம் இல்லாததுபோல் பொரிந்து தள்ளினாள்.
‘செவ்வாய்க்கிழமை ஐயாட்டை இந்தப்பிள்ளைக்கு மருந்து எடுத்தனான், கொஞ்சம் கூடச் சுகமில்லை. அடிக்கொருதரம் வயித்தை முறுக்கிக் கொண்டு வயித்தாலை போகுது. இரத்தமும் சீதமாகவும் போகுது, பச்சை பச்சையாகவும் போகுது. ரா முழுக்க நாங்களும் கண் மூட வில்லை. பிள்ளையும் தூங்கயில்லை, பச்சைத்தண்ணி கூட குடியாதாம், துவண்டு போச்சுது”
எனக்கு வியப்பாக இருந்தது!

Page 8
இவ்வருடம் தொற்று நோயாகப் பரவிவரும் இந்த வயிற்றுளைவு நோய்க்கான மருந்து விஞ்ஞான பூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது அதுமட்டுமன்றி, நோயாளிகளுக்கும் வைத்தியம் செய்யப்பட்டு வெற்றியளித்துள்ளது. எனவே இக்குழந்தைக்கு நோய் குணமாகாதது எனக்கு வியப்பாக இருந்தது.
எனது வைத்தியம் எங்கே பிழைத்தது என யோசித்தேன்.
குழந்தையை மீண்டும் பரிசோதித்து, நோயை திரும்பவும் நிச்சயப் படுத்திக் கொண்டேன்.
பிள்ளையின் பொதுவான உடல் நிலையும் ஆபத்தான நிலையில் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டு ஆச்சியிடம் ‘அண்டைக்கு தந்த மருந்திலை ஏதும் மிச்சம் கிடக்கோ? பாப்பம்” என்று கேட்டேன்.
'இஞ்சார் அப்படியே கிடக்கு’ என்று சொல்லி பையுக்குள் கிடந்த வற்றை எடுத்து மேசை மேல் பரப்பினாள்.
மருந்துகளைப் பார்த்தபொழுது சரியான மருந்துகள்தான் கொடுக்கப் பட்டிருந்தது நிச்சயமாயிற்று. S
அப்பொழுதுதான் அந்த விசயம் பட்டென என் மனதுக்கு வெளித்தது. மருந்துகள் பிள்ளைக்கு ஒழுங்காக கொடுக்கப்படவில்லை. ஒரு நேர மருந்து மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. மிகுதி மருந்துகள் அப்படியே மீந்து கிடந்தன.
ஆச்சிமேல் எனக்கு கோபம் கோபமாக வந்தது.
'மருந்துகளை ஒழுங்காக் கொடுத்தாலல்லோ நோய் மாறும், ஒரு நேர மருந்து தானே குடுத்திருக்கிறியள் மிச்சமெல்லாம் அப்படியே கிடக்குது. பின்னை எப்படி பிள்ளைக்கு சுகமாகும் சூடாகக் கேட்டேன்.
ஆச்சி அமைதியாகச் சொன்னாள். “வழக்கமாக இப்படித்தானே, ஐயாட்டை மருந்தெடுத்து கொண்டுபோய், ஒரு நேரம் குடுத்தாலே சுக மாகிப் போகும். ஐயாடை கைராசி அப்படி. இந்தமுறையும் அப்படித்தான் ஒரு நேர மருந்து பருக்கினனான் ஆனால் சுகமாகவில்லை.”
கைராசியால் மட்டும் நோய் குணமாகுமா?
எனக்கு கோபமும், சிரிப்பும் கலந்து வந்தது. எனது தலையை எங்காவது கொண்டு போய் முட்டி உடைக்கலாம் போலிருந்தது.
2.

கரிசடிை
‘‘டொக்டர் ஆபத்தான கேஸ் , உடனை பார்க்கோணும்”
நம்பர் ஒழுங்கில் நின்றவர்களை விலக்கிக்கொண்டு விரைந்து முன்னுக்கு வந்த அவர் வாசலில் நின்று இரைந்து குரல் கொடுத்தார்.
நோயாளி ஒருவரைப் பரிசோதித்துக் கொண்டிருந்த நான் அவரது அவசரக் குரலால் கவனம் திரும்பினேன். ‘என்ன வருத்தம்? சரி சரி. கொண்டுவந்து கட்டில்லை கிடத்துங்கோ’ என்றேன்.
சுறுசுறுப்பான காலை நேரம், நோயாளர்கள் நிறையப்பேர் தங்களது நம்பர் எப்பொழுது கூப்பிடப்படும் என்ற ஆவலில் முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கிடையேதான் இந்த அவசரக்கோரிக்கை
G
‘ உள்ளை கொண்டரட்டாம்; டொக்டர் சொல்லுறார். இரண்டு பேர் கை குடுங்கோ, தூக்கிக் கொண்டு போய் கிடத்துவம்”
கட்டிலில் கிடத்தப்பட்ட அவரை மேலோட்டமாகப் பார்த்தேன்.
வயது எழுபத்தைந்திற்கு மேல் இருக்கும். காய்ந்த வேப்பமரப் பட்டைபோல் வரண்டு, சுருங்கி விட்ட தோல், முனை வெட்டப்பட்ட முட்டைக்கோதுக்குள் அடங்கிவிட்டது போல் இடுங்கிய கண்கள், பொக்கை வாய். ஆனாலும் இளமைக்கால உடல் உழைப்பால் திரண்ட தசைநார்கள் இன்னமும் எடுப்பாகத் தெரிந்தன.
‘அப்பு என்ன செய்யுது? சொல்லுங்கோ’ என்றபடி நோயாளியின் முகத்தைக் தட்டிப்பார்த்தேன்.
மறுமொழியில்லை; கேட்ட கேள்வியை விளங்கிக் கொண்டதாகவும் தெரியவில்லை.
கண் புருவங்களிடையே விரலால் ஊன்றி அழுத்திப் பார்த்தேன். அசையவில்லை!
மயக்கத்தில் கிடந்தார்.!!

Page 9
‘டொக்டர் ஆளுக்கு என்ன வருத்தம்? கடுவலே? இசகு பிசகாக ஏதென் செய்து போடுமே?’ என்ற கவலையுடன் கேள்விகளை அடுக்கினார், நோயாளியைக் கொண்டு வந்தவர்.
அந்தரப்படாதையுங்கோ சோதிச்சுப் பார்த்துத்தானே சொல்ல வேணும்”
நோயாளியின் அருகில் நெருங்கி, அவரது வாயைத் திறந்து பார்த்தேன். புளித்த கள்ளின் மணம் குப்பென வீச்சுடன் கிளம்பி வயிற்றைப் புரட்ட வைத்தது.
‘நல்லாக் குடிக்கிறவரே”
“ஓம் டொக்டர். மனிசியும் இல்லை. பிள்ளைகுட்டிகளும் இல்லை; சொத்துப்பத்தும் தாராளமாகக் கிடக்கு, பின்னை என்ன தாராளமாகப் பாவிப்பார். ஆளுக்கு நிலமை எப்படியிருக்கு டொக்டர்?’ கரினையுடன் (855ì LITĩ,
‘இண்டைக்கு இவருக்கு என்ன நடந்தது?" ‘நான் காலயிலைதான் பொழுது விடிஞ்சு எட்டு மணியாகியும் அங்கினை ஒரு சிலமனையும் காணவில்லை எண்டு எட்டிப்பார்த்தன். கட்டிலிலை கிடந்தார். கூப்பிட்டுப் பார்த்தன். எழும்பயில்லை. கிட்டப் போய் எழுப்பிப் பார்த்தும் எழும்பயில்லை. மூச்சிருப்பது தெரிஞ்சிது.”
அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே, நான் நோயாளியின் நாடித்துடிப்பு, பிரேஷர், கண், மற்றும் முக்கிய குணம் குறிகளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தேன்.
'. இனசனமில்லாத தனியாள். தானே சமைத்துத் தானே சாப்பிடு வார். வருத்தம் துன்பமெண்டாலும் பார்க்கிறதுக்கு நாதியில்லாத மனு ஷன். பரிதாபத்தைப் பார்த்துப்போட்டு நான்தான் தூக்கிக் கொண்டு வந்தனான்.”
` கிழவனுக்கு எப்படி? ஏதேன் ஆபத்தே? வடிவாய் பாாத்துச் சொல்லுங்கோ’ மிகுந்த கரிசனையும் இனம் புரியாத ஆர்வமும் அவரது குரலில் வெளிப்பட்டது.
அயல் வீட்டுக்காரனுக்கு இன்னொருவன் உதவுவது ஒன்றும் புதின மில்லைத்தான். ஆனாலும் நோயாளியின் உடல்நிலை பற்றித் திரும்பத் திரும்ப இவ்வளவு கரிசனையுடனும், கவலையுடனும், ஒரு வித பிடிபடாத ஆர்வத்துடனும் விசாரிக்கும் இம்மனிதனின் இயல்பு என் மனத்தை நெருடியது.
4.

‘பயப்பிடாதையுங்கோ, கொஞ்சம் கூடுதலாகக் குடிச்சிட்டார். சரி யாகச் சாப்பிடயில்லைப்போலை. அதால அவற்றை உடம்பில சீனிச் சத்து குறைஞ்சு, ஆளை மயக்கிப் போட்டுது. அல்கஹோலிக் ஹைப் போகிளை சீமியா என்று சொல்லிறது. ஒரு ஊசி அடிக்க எழும்பிடுவார்”
‘50cc of50 Dextrose” என நேர்சுக்கு ஊசி பற்றிக் கூறிவிட்டு, கதிரையில் அமர்ந்தேன்.
‘டொக்டர் மறைக்கிறார் போலை, உள்ளதைச் சொல்லுங்கோ, உயிருக்கு ஏதும் ஆபத்தே?. நாங்கள் பயப்படமாட்டம். மறைக்காமல் சொல்லுங்கோ’
இதென்ன எவ்வளவு சொல்லியும் கேளாமல் உயிருக்கு ஆபத்தோ என்று அரியண்டப்படுத்துகிறார் என எரிச்சல் வந்தது.
‘அப்படி ஒன்றுமில்லை. இன்ஜெக்ஷன் போட எழும்பி விடுவார். ஆனால் இனி இப்பிடிக் குடிக்க விடக் கூடாது” என எரிச்சலை மறைத்துக் கொண்டு சொன்னேன்.
‘இன்ஜெக்ஷன் ரெடி” நேர்ஸ்.
நேர்ஸ் தந்த ஊசியை, நோயாளியின் இரத்த நாளத்தில் நேரடி
யாக ஏற்றி, மருந்தை உட்செலுத்தத் தொடங்கினேன்.
திரும்பவும் அருகே வந்தார்.
‘டொக்டர் கோவிக்கக் கூடாது. மனுசன் பெரிய சொத்துக்காரன். இனசனம் கிடையாது பேசாமல் செத்துப்போனாரெண்டால் சொத் தெல்லாம் பாழாகிப் போகும்.”
“.அதுதான் உயிருக்கு ஆபத்தெண்டால் ஒரு பெருவிரல் அடை யாளத்தை எண்டாலும் எடுத்துப் போட்டனெண்டால் பயமில்லை. பிரச் சனையில்லாமல் சொத்துக்களை எல்லாம் என்ரை பேருக்கு மாத்திப் போடலாம்”
நான் பதில் சொல்லவில்லை. அதற்கான அவசியமும் ஏற்படப் போவதில்லை.
ஊசி ஏற்றி முடிந்தது.
கட்டிலில் கிடந்த கிழவன், அசதியுடன் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்.

Page 10
9லுளிநாட்டிற்கு ஓடித்தம்004மா?
அன்று ஒரு திருமண வைபவத்திற்குப் போயிருந்தேன்.
பொது வைபவங்களில் கலந்து கொள்ளும் எல்லா டாக்டர்களுமே எதிர்நோக்க வேண்டிய ஒரு விஷயம் - டாக்டர்களுக்கு மகிழ்ச்சி தராத, ஆனால் மற்றவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் விஷயம் - ஒன்று இருக்கிறது. அது?
எல்லோருமே, ஒரு டாக்டரை வெளியிடத்தில் கண்டுவிட்டால் அது கலியாண வீடாக இருந்தாலென்ன, மரண வீடாக இருந்தாலென்ன, பிறந்ததின விழாவாக இருந்தாலென்ன - அவருடன் அரசியல் பற்றிக் கதைக்கமாட்டார்கள். இலக்கியம் பற்றி உரையாட மாட்டார்கள். நாட்டு நடப்புப் பற்றிக் கூட விவாதிக்க மாட்டார்கள். ஏன் அன்று அவர்கள் கலந்து கொள்ளும் வைபவம் பற்றிகூடப் பேசமாட்டார்கள்.
ஆனால் மருத்துவம் சம்பந்தமான விஷயங்கள் பற்றியே பெரும் பாலும் கதைப்பார்கள். கதைக்க விரும்புவார்கள்!
6
 

தங்களுக்கு உள்ள வருத்தம் பற்றியோ, அல்லது தங்கள் உறவினர் குடும்பங்களினது நோய்கள் பற்றியோ அவற்றிற்கு என்ன வைத்தியம் செய்யலாம் என்பது பற்றியோ அல்லது அவற்றிற்கு எப்படியான உணவு வகைகள் சாப்பிடலாம் என்பது பற்றியோதான் பெரும்பாலும் கதை தொடரும்.
அதுவும் இல்லாவிட்டால் தங்களது சிறு குழந்தையைக் கூப்பிட்டு. ‘பார் இவர் ஒரு டொக்டர் மாமா. உன்னை நல்லாச் சாப்பிடவேணும் எண்டு சொல்லுறார். இல்லையெண்டால் பெரிய ஊசி ஏத்துவாராம் என்று சொல்லி டாக்டர்களைப் ‘பூச்சாண்டி’ ஆக்கிவிடுவார்கள்!
இதற்கு அவர்களைக் குற்றம் கூறுவது சரியில்லை!
இப்படிப்பட்ட தருணங்களில் தான் டாக்டர்மார் ஓய்வாக இருப்பார் கள். அவர்களுடன் ஆறுதலாகக் கதைக்கலாம், சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பு அவர்களுக்கு.
ஆனால் பெரும்பான்மையான டாக்டர்களின் எண்ணங்கள் எதிர்த் திசையில் இருக்கும், தொழில் நிமித்தம் எந்நேரமும் நோயாளிகளுடன் பிழங்கி, அவர்களைப் பற்றியும் அவர்களின் நோய்களைப் பற்றியுமே சதா சிந்தித்துக் கொண்டு இருக்கிறோமே, இப்படியே ஒரே துறை விஷயங்களைச் சதா சிந்தித்துக் கொண்டிருப்பதால், வாழ்க்கையே உப்புச்சப்பில்லாமல் சலித்து விடுகிறதேயென அலுத்துக் கொள்கிறார்கள்.
எனவே ஆஸ்பத்திரி தவிர்ந்த, ஏனைய இடங்களில் மனிதர்களைச் சந்திக்கும் போதாவது அவர்களை நோயாளிகளாக அல்லாது, சாதாரண மனிதர்களாகவே காண அவாவுகிறார்கள். தாங்களும் டாக்டர் என்ற உணர்வு இல்லாமல், சாதாரண மனிதர்களாக ஒரு சில கணங்க ளேனும், வாழவேண்டும் என்று ஏங்குவார்கள்.
ஆனால் டாக்டர்களின் இந்த ஏக்கம், என்றும் ஏக்கமாகவே இருக்கிறது. ஏக்கம் நீங்கிச் சந்தோஷமாகப் பல்வேறு விடயங்கள். பற்றி உரையாடக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.
அன்றைய திருமண வீட்டு உரையாடல், டாக்டர்களைப் பற்றி ஆரம்பித்தாலும், நோய்களையும் நோயாளிகளையும் பற்றித் தொடராதது எனக்கு வலு சந்தோஷமாக இருந்தது.
‘டொக்டர், Dr.ண்ரை டிஸ்பென்சரிக்குப் பக்கத்திலை செல் விழுந்து வெடிச்சதிலை, அவர் பயந்த போய், தன்ரை டிஸ்பென்சரியை வேறை பாதுகாப்பான உள்பகுதிக்கு மாத்திப் போட்டாராமே. உண்மை தானே’
7

Page 11
‘அப்படியே. நான் கேள்விப்படயில்லை. என்ன செய்யுறது. ஷெல் ஆளைப்பார்த்தே விழுகிறது. டொக்டரெண்டாலும் உயிருக்கு ஆபத் தெண்டால் பயந்தானே.
‘டொக்டர்மாரே உயிருக்குப் பயந்தால், எங்கடை கதியென்ன
‘எண்டாலும் அவர் செய்தது பரவாயில்லைத்தானே! வெளி நாட்டுக்கு ஓடாமல், இஞ்சைதானே வேறை இடம் மாறியிருக்கிறார்’
அதுவும் சரிதான். பிரச்சனையளுக்கை இருந்தால் கரைச்சல் எண்டு போட்டு, எத்தனை டொக்டர்மார் வெளிநாடுகளுக்குப் போட்டினை.
.முந்தி ஆமிக்காரன் அடி போட்டதிலை ஒரு பெரிய டாக்டர் வெளியாலை போட்டார். பிறகு கார்க் கடத்தல் பிரச்சனையாலை வேறை பெரிய டாக்டர் வெளி நாட்டுக்குப் போயிட்டாராம். என்ன உண்மைதானே?’ என்று கேட்டார்.
‘ஒமெண்டுதான் கதைக்கினம்
இப்படி எல்லா டாக்டர்மாரும், பயந்து பயந்து போனால் இஞ்சை இருக்கிற சனங்கள் என்ன செய்யுறது.
நீங்கள் சொல்லுறது சரிதான் எண்டாலும், டொக்டர்மார் மட்டுமே வெளிநாட்டுக்குப் போகினம். எஞ்சினியர் மார், எக்கவுண்டனுகள், அப்புக்காத்துமார், டெக்னிக்கல் வேலை செய்யுறவை - ஏன் தொழிலாளி கள் கூட வெளிநாட்டிற்குப் போகினைதானே.”
டொக்டர்மாரின்ரை வெளியேற்றம் பற்றி ஆரம்பித்த உரையாடல், மற்றப் புத்திஜீவிகளின் வெளியேற்றம் பற்றியும், தொடர்ந்து சுவாரஸ்ய மாக நடந்து கொண்டிருந்தது.
எனக்கு இந்த விஷயங்கள் பற்றிச் சில தீர்க்கமான கருத்துக்கள் உண்டு.
தமிழ்மக்கள் எல்லோருமே விரும்பியோ, விரும்பாமலோ போராட் டத்தின் எல்லை விளிம்புக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.
விழுந்துவிட்டால் மரணம் நிச்சயம்!
தளர்ந்து விட்டால் இன ஒழிப்பு சர்வ நிச்சயம்!
எதிர்த்து நின்றால், ஒரு சில தவிர்க்க முடியாத மரணங்கள் சம்ப வித்தாலும், இனத்தின் விடுதலை நிச்சயம்!

இப்படிப்பட்ட தருணத்தில், பேசாமல் ஒதுங்கியிருப்பதோ அல்லது வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று பாதுகாப்பாக வாழ்வதோ, அல்லது அங்கு சென்று உழைத்துப் பணம் சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ் வதோ, பச்சையான இனத்துரோகச் செயல் என நம்புகிறவன் நான்.
டாக்டராக இருந்தாலென்ன எஞ்சினியராக இருந்தாலென்ன இலக் கியவாதியாக இருந்தாலென்ன விரிவுரையாளனாக இருந்தாலென்ன, சாதாரண குடிமகனாக இருந்தாலென்ன, அரசாங்க உயர் அதிகாரி யாக இருந்தாலென்ன, தொழிலதிபராக இருந்தாலென்ன, தொழிலாளி யாக இருந்தாலென்ன, அரசியல்வாதியாக இருந்தாலென்ன சமய வாதியாக இருந்தாலென்ன.
சுயநலத்திற்காக வெளிநாடு ஒடித் தப்புவது படு கோழைத்தனமான செயல்.
இக்கட்டான இக்காலகட்டத்தில் மக்களை ஆபத்தில் தவிக்க விட்டு விட்டு வெளிநாட்டிற்கு ஒடிச்சென்றவர்களைப் பற்றி மக்கள் நிச்சயம் ஒரு சரியான கணிப்பு எடுத்திருப்பார்கள்.
அதே நேரத்தில், சுய இலாபத்திற்காக வெளிநாடு போகாமல், மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களது கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து, அவர்களது இன்னல்களை நீக்குவதற்கு, தமது படிப்பு, அனுபவத்திலான சேவைகளைச் செய்து கொண்டு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், இலட்சிய வேட்கையுடனும், இங்கு தங்கியிருக்கும் (டாக்டர்கள் அடங்கலான) புத்திஜீவிகள் பற்றி நிச்சயம் நன்றாகப் புரிந்திருப்பார்கள், அவர்களது தியாக உள்ளத்தை உணர்ந்து நன்கு மதிப்பார்கள் என எண்ணியிருந்தேன்!
எனவே நாட்டை விட்டு ஓடாத எனக்கும், என் போன்ற மற்றைய டாக்டர்களுக்கும், மக்களிடத்தில் நல்ல மதிப்பும், அபிமானமும் இருக்கும். எங்கள் சேவைக்கு பொதுமக்களிடம் நல்ல மரியாதை இருக்கும் என்ற ஒருவித பெருமையும் எனக்கிருந்தது.
உயிரைக் கூட மதியாது அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து அவர் களுக்கு சேவை செய்பவர்கள் நாங்கள் என்ற ஒருவித இறுமாப்பும் கூட இருந்தது.
எனது எண்ண ஓட்டம் இப்படியிருக்கையில் சம்பாஷணை மீண்டும் டாக்டர்கள் பக்கம் திரும்பியது.

Page 12
‘மற்றவையள் வெளிநாடு போனாலும் பரவாயில்லை. ஏனெண்டால் இண்டைய போராட்ட சூழ்நிலையில் அவையளின்ரை சேவைகளை தள்ளிப்போடலாம். அபிவிருத்திக்கு ஏற்ற சூழ்நிலை இல்லைத்தானே?
ஆனால் செல் அடி, ஹெலிச் சூடு, பொம்பர் குண்டு எண்டு எங்கேயும் காயங்களும், சுகயினங்களும், நிரம்பியிருக்கைக்கை டாக்டர் மார் வெளியிலை போனால் சனங்களுக்கு உதவி செய்யுறது ஆரெண்டு சொல்லுங்கோ..?
மனிதாபிமானத்திற்காக எண்டாலும் எங்கடை டொக்டர்மார் இஞ்சை தங்கியிருந்து சனங்களுக்கு உதவத்தானே வேணும்”
எண்டு நீண்ட லெக்சர் அடித்த அவர், ஒசிச் சுருட்டு வாயால் கரி எஞ்சின் போல பெருமூச்சு விட்டார்.
‘இந்தக் காலகட்டத்திற்கு அபிவிருத்தி தேவையில்லை எண்ட உங்கடை கருத்தை நான் ஒத்துக் கொள்ளயில்லை. அதுகிடக்க, டாக்டர்களைப் பற்றி நீங்கள் சொல்லிறது சரிதான். ஆனால் ஒண்டு சொல்லவேணும், வெளிநாட்டுக்கு போக வேண்டிய டாக்டர்மார் எல்லாம் வெளியாலை போட்டினம். இனி இஞ்சை இருக்கிறவையள் கெதியிலே வெளிநாட்டுக்குப் போக மாட்டினம்’ என்றேன்.
'மிச்சம் இருக்கிறவையள் என்ன வந்தாலும் எது நடந்தாலும் எங்கடை சமுதாயத்துக்காக இனத்துக்காக வாழவேண்டும் எண்ட உணர் விலே இருக்கிறபடியால் இஞ்சை தான் இருப்பினம், போகமாட்டினம் என்று சொல்ல நினைத்தேன்.
ஆனால் அதற்கிடையில் அவர் குறுக்கிட்டார்.
‘‘கெட்டிக்கார டாக்டர்மார் எல்லாம் நல்லவேலை எடுத்துக் கொண்டு வெளியிலே போட்டினம். இஞ்சை மிஞ்சி இருக்கிறவையஞக்கு கெட்டித் தனம் காணாது எண்டு போலை, வெளிநாட்டுக்காரங்கள் அவையஞக்கு வேலை குடுக்கையில்லை. வெளிநாட்டுக்கு போக தகுதியில்லாதவை, வேறை என்ன செய்யிறது? இஞ்சைதானே இருக்க வேணும்”
எங்களைப் பற்றி இப்படியும் ஒரு மதிப்பீடா? என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என் முகத்தில் ஈயாடவில்லை.
O

இறைவன் சிரிக்கின்றனன்
அது ஒர் அமைதியான ஞாயிறுமாலை குண்டடிப்புச் சத்தங்களும் ஷெல்லடி ஓசைகளும் ஹெலி வட்டமிடல்களும் கேட்காத ஒர் அதிசய நாளின் அந்திமாலைப்பொழுது. கொத்து கொத்தாகப் பூத்திருந்த வெண் அலரிப்பூவின் அடக்கமான மென்வாசனை கிழக்குபுற ஜன்னலூடாக காற்றுடன் கலந்துவந்து மனதை நிறைத்தது.
டிஸ்பென்சரியில் கூட்டம் அடங்கிவிட்டது நோயாளர்கள் ஓரிருவராக வந்து கொண்டிருந்தனர். இலங்கை வானொலியில் செய்தி முடிந்ததற்கு அடையாளமாக டிங் டிங்கு. டிங் டிங்கு. இசை எங்கோ தூரத்திலிருந்து மெதுவாக இசைத்து வந்தது.
அப்பொழுதுதான் அந்த ஐயர் எனது டிஸ்பென்சரி அறைக்குள் நுழைந்தார். ‘வாங்கோ ஐயா, இப்படி இருங்கோ’
நடுத்தர வயது. அரைகுறையாக நரைத்த தலைமுடி. சிறு பின் குடுமி. நெற்றியிலும் திறந்த மேனியிலும் பட்டை பட்டையாகத் திரு நீற்றுப் பூச்சு. அகண்ட சந்தனப்பொட்டின் மத்தியில் சிவந்த குங்குமப் பதிப்பு.
தோய்த்துக் கட்டினாலும் யாழ்ப்பாண மண்ணின் பழுப்பு நிறம் விட்டுப் போகாமல் ஒட்டிக் கொண்ட அகலக்கரை இந்தியா வேட்டி. 'ஓம் முருகா' எழுத்துப் பொறித்த மஞ்சள் சால்வை.
11

Page 13
சாவதானமாக வந்த அவர் அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தார்.
“இப்பதான் அர்த்தசாமப் பூசையை முடிச்சுப்போட்டு கோயிலைப் பூட்டிக் கொண்டு வீட்டை போய்த் தேத்தண்ணி குடிச்சிட்டு இப்படி வந்தனான்’
நேரத்தைப் பார்த்தேன். 6.15 அதற்கிடையில் அர்த்தசாமப் பூசையா?
எனது எண்ணப் போக்கைப் புரிந்து கொண்டது போல் அவர் சொன்னார்.
“இப்ப சனப் பிழக்கமும் நேரத்தோடை அடங்கிப் போகும். அதுதான் அர்த்தசாமப் பூசையை பின்னேரம் அஞ்சு மணிக்கே வைத்துக் கோயிலைப் பூட்டிப் போடுவம்'.
பல பெயர் பெற்ற இந்துக் கோயில்களும் கிறிஸ்தவ தேவாலயங் களும் கலாசார அமைச்சின் எதிர்கால அகழ்வாராய்ச்சி வேலைகளுக் கென ஒதுக்கப்படுவதற்காக இடித்துச் சிதைத்துத் தயார்படுத்தப்பட்டு வரும் இன்றைய தர்மிஷ்ட யுகத்தில், அர்த்தசாமப் பூசை 5 மணிக்கே நடைபெறுவது அவ்வளவு மோசமான விடயமாக எனக்குப் படவில்லை!
‘அப்ப கோயில் காரியமெல்லாம் எப்படிப் போகுது” கதையை மாற்றினேன். 'எல்லாம் கொமிட்டி நிர்வாகம்தான். எனக்கு மாதச் சம்பளம்தான். மாசம் இருநூற்றி ஐம்பதுதான். பிள்ளை குட்டிகளோடை பெரிய கஸ்டம்’.
“ஏன் அர்ச்சனைக் காசுகள் வரும்தானே?”
‘அர்ச்சனை எல்லாம் ரிக்கெற்றுக்கு. கொமிட்டி எடுத்துப்போடும்.”
‘அப்ப எப்படிச் சமாளிக்கிறியள்?”
"மோதகப்பூசை, வடைப்பூசை எண்டு வாறதிலையும், அந்திரட்டி,
துவஷம், கலியாணம் அதுகளில கிடைக்கிறதையும் வைத்து ஒரு மாதிரிக் காலத்தைப் போக்காட்டிறம்.”
பிராமண ஆதிக்கமும் அதற்கு எதிரான போராட்டங்களும் கோஷங் களும் இன்னும்கூடத் தமிழ்நாட்டில் அடங்கிவிடாத போதும் இங்கு நிலைமை எதிர்மாறாக இருக்கிறது.
வெற்று பெருங்காய டப்பாபோல் உயர்ந்த சாதிக்காரர் என்ற வரட்டுப் பெருமையும், வரண்டுவிட்ட பொருளாதார நிலையும்தான் இங்கு அவர்களுக்கு மிஞ்சிக் கிடக்கின்றன.
12

கோயில் தர்மகர்த்தாக்களாலும் நிர்வாகக் கொமிட்டிக்காரர்களாலும் பொருளாதார ரீதியாகச் சுரண்டப்படும் இந்த இந்துமதப் பூசகர்கள் விரைவிலேயே தொழிற்சங்கம் அமைத்துப் போராடப் புறப்பட்டாலும் ஆச்சரியமில்லை எனத் தோன்றியது.
பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், சமூக ரீதியில்கூட அவர் களுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் இந்து மக்களால் கொடுக்கப்படுவதில்லை.
கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கும், பெளத்த பிக்குமார்களுக்கும் அந்தந்த மதத்தினரால் அளிக்கப்படும் கெளரவம் இந்து மதத்தினரால் தமது மதகுருமாருக்குக் கொடுக்கப்படுவதில்லை. உதாரணமாக, ஒரு பாதிரியாரோ அன்றிப் பிக்குவோ பஸ் ஒன்றில் ஏறினால், அவர்கள் மரியாதையுடன் அமர இடங்கொடுப்பதற்கு, அந்தந்த மதத்தினர் மாத்திர மன்றி ஏனைய மதத்தவர்கள்கூடப் பின் நிற்பதில்லை.
ஆனால் இந்துமத ஐயரோ அன்றிப் பூசகரோ பஸ்சில் ஏறினால், இந்துக்கள்கூட அவரை மதித்து அமர இடங்கொடுப்பதில்லை என்பது நாம் தினந்தோறும் காணும் - வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்.
ஆயினும், பரம்பரை பரம்பரையாகத் தாங்கள் பெறும் கேள்விவழி சமய அறிவில் திருப்தி அடைந்துகொண்டு, அதில் போதிய மேலதிக அறிவையும், பயிற்சியையும் ஸ்தாபன ரீதியான சமயநெறிப் பயிற்சிக் கூடங்கள் மூலம் பெற முடியாமலும், பெற முயற்சிக்காமலும் இருக்கிறார்கள். இதனால் அவர் களது சமய அறிவு மாத்திரமன்றி பொது அறிவுகூட ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கிவிடுவது, இவர் களது இன்றைய பரிதாப நிலைமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது.
"டொக்டர். எனக்கு இண்டைக்கு நாய் கடிச்சுப் போட்டுது, அதான் உங்களட்டை காட்டிப் போட்டுப் போகலாம் எண்டு வந்தன்’.
தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்த எனது எண்ணக்குதிரையை, ஐயரின் பேச்சு கடிவாளமாக நிதானத்திற்குக் கொண்டுவந்தது.
‘நாய் கடிச்சதோ? எப்ப கடிச்சது? எங்கத்தைய நாய்? நல்ல நாயோ, விசர் நாயோ?’ அவரின் பதிலை எதிர்பார்க்காமல் கேள்விகளை நீட்டிக் கொண்டு போனேன்.
3

Page 14
“நல்ல நாய்தான்! கோயிலுக்குப் பக்கத்துவிட்டு நாய். தெரியாமல் வாலை மிதிச்சுப் போட்டன். அது கடிச்சுப் போட்டுது’
‘நல்ல நாய் எண்டு நிச்சயம் தெரிந்தால் ஏற்புத்தடை ஊசி போட்டு, மருந்து கட்டிவிட்டால் போதும். விசர் நாய்க்கடித் தடுப்பூசி தேவைப்படாது”.
'பத்தியம் என்ன டொக்டர்?”
‘பத்தியம் எண்டு ஒண்டும் உங்களுக்கு இல்லை. உங்களைக் கவனிக்கிறதைவிட உங்களைக் கடிச்ச அந்த நாயைத்தான் கவனமாகப் பராமரிக்க வேணும்'.
‘என்ன டொக்டர் பகிடியோ?” என்று கேட்டுக்கொண்டு அசட்டுச் சிரிப்புடன் என்னைப் பார்த்தார்.
“பகிடியில்லை! நாய்க்குச் சிலவேளை விசர் நோயிருந்தாலும் வெளியால தெரியாமல் உள்ளடங்கிக் கிடக்கும். விசர் நோய் ஆரம்ப மெண்டால், பத்து நாளைக்குள்ள நோய் வந்து அது செத்துப் போகும். செத்துப் போச்செண்டால் பிறகு உங்களுக்கு விசர் நாய்க்கடித் தடுப்பூசி கட்டாயம் போடவேணும். அதுதான் அந்தப் பத்து நாள் வரைக்கும் அதை அடிச்சுக் சொல்லாமல், கட்டிப்போட்டுக் கவனமாகப் பார்க்க வேணும்”.
‘நாய் துலைஞ்சு போச்செண்டால்.”
‘துலைங்சு போச்செண்டாலும் ஊசி போடத்தான் வேணும். ஏனெண் டால் அது ஒரு சமயம் விசர் நாயெண்டால், கடிபட்ட ஆளுக்கு பிறகு அந்த நோய் கட்டாயம் வரத்தான் செய்யும். மனுசருக்கு அந்த நோய் வந்திடுத்தெண்டால் அவரை ஒரு வழியாலையும் காப்பாற்ற ஏலாது. அநியாயமாகச் சாக வேணும்.”
....அதுதான் நாயைச் சாக்கொல்லாமல் ஓட விடாமல் கவனமாகக் கட்டி வைச்சுப் பத்து நாளைக்குப் பாக்கவேணும் எண்டு சொன்னனான்’.
‘அப்ப. நீங்கள் இப்ப மருந்தைக் கட்டி ஏற்புத் தடை ஊசியைப் போட்டு விடுங்கோ. வீட்டுக்காரரட்டை நாயைக் கவனமாகப் பார்க்கச் சொல்லுறன். நாய்க்கு ஏதேன் வித்தியாசம் எண்டால் உடனே உங்க ளட்டை வாறன். நீங்கள் அப்ப பாத்துத் தேவையெண்டால் விசர் நாய்த் தடுப்பூசியையும் போடுங்கோ’.
அவருடைய மறுமொழியில் இருந்து பிரச்சனையின் தாக்கத்தை அவர் விளங்கிக் கொண்டது தெரிந்தது.
4

‘விசர் நாய்த் தடுப்பூசி என்றது ஒரு ஊசி இல்லை. பதினேழு ஊசி. இப்ப அதைப் பற்றி என்ன?. தேவைப்பட்டால் பிறகு சொல்லுறன்’ என்று கூறிய நான் தொடர்ந்து -
‘எங்கை காயத்தைக் காட்டுங்கோ, மருந்தைக் கட்டிப்போட்டு, ஏற்புத்தடை ஊசியை இப்போதைக்குப் போட்டுவிடுவம்” என்றேன்.
காயத்தைக் காட்டினார். மிகச் சிறிய மேற்படையான காயம். சரியாகத் துப்பரவு செய்துவிட்டால் போதும். மருந்து கட்டத் தேவை யில்லை எனத் தோன்றியது.
'சினக் காயம்தானே! மருந்து கட்டத் தேவையில்லை. ஏற்புத்தடை ஊசியைப் போட்டால் போதும்”.
“இல்லை டொக்டர், மருந்தையும் கட்டிவிடுங்கோ’
‘வலு சின்னக் காயம்தானே. நல்லாக கிளின் பண்ணி விடுறம், தன்பாட்டிலை காய்ஞ்சு போகும். மருந்து கட்டத் தேவையில்லை’ என விளக்கிக் கூறினேன்.
‘இல்லை டொக்டர், கட்டாயம் கட்டிவிடுங்கோ’
ஏன் இப்படி வற்புறுத்தினார் என யோசித்தேன்.
“மருந்து கட்டாவிட்டால் சின்னக் காயம்தானே எண்டு சொல்லிக் கொமிட்டிக்காரர் லீவு தரமாட்டினம். அடிக்கடி கோயில் பூசைக்காக குளிக்கிறது எனக்குக் கஷ்டமாக இருக்கும்.
.மருந்தைக் கட்டிவிட்டால், பெரிய காயம் எண்டு நினைச்சு ரண்டு, மூண்டு நாள் லீவு தருவினம். தற்காலிகமாக வேறை ஆரையெண்டாலும் இப்போதைக்கு கோயில் பூசைக்குப் போடுவினம்.
நானும் அந்த இரண்டு, மூன்று நாளும் ஆறி, அமர்ந்து இருக்கலாம்” என்றார்.
போகிற போக்கைப் பார்த்தால், விரைவில் கோயில் ஐயர்மாருக்கு, மெடிக்கல் சேர்டிபிக்கட் கொடுத்தால்தான் லீவு எடுக்கலாம் என்ற நிலைமை வரும் போல் தெரிகிறது என எண்ணிக் கொண்டேன்.
அவரின் சிறிய காயத்திற்கு, பெரிய மருந்துக் கட்டுப் போட்டு அனுப்பி வைத்தேன்.
பிற்குறிப்பு : இப்பொழுது நாய்க்கடிக்கான சிகிச்சை முறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
15

Page 15
%ტრf அழைப்பார்கள்
டாக் டர் கள் பல வகைப்
UL6 is 356f
வள்’ என்று அடிக்காத குறையாகப் பாயுற டாக்குத்தர்.
‘சுள்' என்று மூக்கு நுனியில் கோபத்தைத் தூக்கித் திரியிற டாக்குத்தர்.
பய ந தா ங் கொ ள ளரி டாக்குத்தர் - தானும் பயந்து நோயாளியையும் வெருட்டி விடுகிறவர்.
காசைக் காட்டினால் காரியத்தை முடிக்கிற 'கைலஞ்ச டாக்குத்தர்.
கறைபடாத கைகொண்ட சுத்தமான டாக்குத்தர். கைபட்டாலே நோய் மாறுகிற 'கைராசிக்காரர் டாக்குத்தர்.
தலைக்கணம் பிடிச்ச டாக்குத்தர்.
ஆறுதலாய்க் கதைச்சு மருந்துதாற குணமான டாக்குத்தர்’ என்பது போல் மக்களே டாக்டர்களைப் பல வகைகளாகக் கணித்துப், பகுத்து வைத்திருக்கிறார்கள்.
ஆயினும் ஒரு உதாரண குணமுள்ள டாக்டர் என்பவர் இப்பிடித்தான் இருப்பார் என்றோ, அல்லது இப்படித்தான் இருக்க வேண்டும் என்றோ, ஒரு கற்பனை உருவகம் அவர்கள் மனதில் பதிந்து இருக்கும்.
16
 

நரைத்த தலையும், எடுப்பான மூக்குக் கண்ணாடியும், புஸ்டியான உடம்பும், தூய வெண்மையான மடிப்புக் கலையாத மேல்நாட்டு உடை யும், கழுத்தில் ஸ்ரெதஸ் கோப்பும், அமைதியும் கருணையும் சாந்தமும் நிரம்பிய முகமும், மெதுமையான குரலும், பண்பாக உரையாடும் தன் மையுமாக நவராத்திரி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வாழ்ந்து காட்டியது போன்ற ஒரு உருவமே பெரும்பான்மையான மக்களின் கற்பனை டாக்டர் உருவமாக இருக்கிறது.
ஆனால் திரைப்படங்களிலும், பழையகால நாவல்களிலும் வரும் இலட்சிய கதாநாயகர்கள் போல் அவர்கள் எப்போதும் இருக்க முடியாது.
நல்லதும் கெட்டதும் கலந்த சாதாரண மனிதர்களாகத்தான் எந்த டாக்டரும் இருக்க முடியும்,
ஆயினும் நோயாலும், பிணியாலும், வேதனையாலும் துடித்துக் கொண்டு, அதைத் தீர்த்து வைப்பவர் என்ற நம்பிக்கையில் ஓடிவரும் நோயாளிகளுடன் பிழங்குவதால் அவர்களது மனங்கோணாதவாறு அமைதியாக ஆத்திரப்படாமல் அவர்களது நோயைப்பற்றிக் கேட்டறிந்து கருணையுடன் அவர்களது பிரச்சனையை அணுகி வைத்தியம் செய்வது அவசியம்.
என்றாலும் எடுத்ததற்கெல்லாம் ஆத்திரப்படாமல் அமைதியாக இருப்பது எல்லோருக்குமே இயற்கையில் அமையக்கூடிய குணாம்சம் அல்ல.
என்னுடைய இனிய நண்பன் ஒருவன் இருந்தான். பாடசாலைப் பருவம் (முதல் மருத்துவக் கல்லூரிவரை என்னுடன் கூடப் படித்தவன். சிறுவயதிலேயே பெரிய முற்கோபி, சிறு சிறு விஷயங்களுக்குக் கூட தேவையில்லாமல் ஆத்திரப்பட்டுப் பெரிய குரலில் சத்தமிட்டுச் சண்டை பிடிப்பான்.
' கொதி தண்ணிக்குள்ளை காலை வைச்சவன்போலை துள்ளி விழுவான்’ என்று அவனது தாயே அவனைப்பற்றி அடிக்கடி கூறுவாள்.
அண்மையில் அவனைச் சந்தித்தபோது அதிசயித்தேன்! மிக அமைதி யாக, ஆறுதலாகப் பொறுமையுடன் அளவளாவிக் கொண்டிருந்தான்.
‘போனமுறை, உங்களிட்டைக் காட்டி மருந்துதெடுத்தும் காய்ச்சல்
விடயில்லை, பிறகு Dr. காட்டித்தான் சுகம் வந்தது. இந்த முறை
யெண்டாலும் வடிவாகச் சோதித்துப் பார்த்து மருந்து தாருங்கோ,
என்னை அலைக்கழிய விடக்கூடாது” என்று நோயாளி எரிச்சலடைந்த
குரலில் குற்றம் சாட்டியபோதும் -
1 7

Page 16
- அவன் கோபப்படவில்லை! தனது தொழிற் திறமையைத் தன் எதிரிலேயே, எள்ளிநகையாடுவது போல் குறையாகப் பேசிய போதும் எரிச்சலடையாமல் அமைதியாக -
‘அப்பிடியே, கவலைப்படாதையுங்கோ, இப்ப நான் கவனமாகப் பார்த்து நல்ல மருந்தாகத்தாறன். இரண்டு நாளிலை நல்ல சுகமாகிப் போடும்” என்று புன்னகையுடன் பதிலளித்தான்.
பிறகு ஒரு நாள் அவனது வீட்டுக்குப் போயிருந்தபோது, அவனது மனைவி இவருக்கு விடிஞ்சால் பொழுது பட்டால் டிஸ்பென்சரியும், நோயாளிகளும்தான் சிந்தனை. அங்கை சிரிச்சுக் கதைச்சுக் கொண்டி ருப்பார். இஞ்சை எங்கடை அலுவல் ஒண்டும் கவனிக்கிறதில்லை. நான் கேட்டாலும் வேலைப்பழுவாலை எரிச்சலும் கோபமும்தான் அவருக்கு வரும். கொஞ்சம் அவருக்குப் புத்தி சொல்லுங்கோ’ என்று பரிதாபமாகக் கேட்டாள்.
நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!
டாக்டர் தொழிலுக்காக, தனது தொழிலின் மேன்மையைக் காக்க வேண்டும் என்பதற்காக, தனது இயல்பான குணஇயல்புகளைக் கூட முயற்சி செய்து மாற்றியிருந்த அவனுக்கு, தான் அடக்கி வைத்திருந்த உணர்வுகளைச் சுதந்திரமாக வெளியிட்டு உணர்வு அமுக்கத்திலிருந்து தப்பிக்க ஒரு இடம் வேண்டியிருந்தது. பரிதாபத்துக்கு உரிய ஒரு குடும்பம்!
இவனையும், இவனைப் போன்ற பெரும்பாலான டாக்டர்களுக்கும் எதிர்மாறாக, எடுத்ததற்கெல்லாம் நோயாளிகளில் பிழை கண்டு பிடித்து, அவர்களைப் பேசி, எரிந்து விழும் டாக்டர்களும் இல்லாமல் இல்லை.
மிக அமைதியான டாக்டர்களைக் கூட சிலநோயாளிகள், தமது அறியாமையாலோ, அல்லது நிறைவேற்றி வைக்க முடியாத தமது சில எதிர்ப்புக்களை விடாப்பிடியாக வேண்டி நிற்பதாலோ, அல்லது தமது சில பண்பற்ற பேச்சுக்களாலோ கோபமடையச் செய்வதுண்டு.
அது யாழ்ப்பாணத்தின் அமைதியான, நினைத்தாலே இனிக்கும் அன்றைய காலகட்டம். செக்கண்ட் ஷோ படம் பார்த்து விட்டு ரொட்டிக் கடையில் கொத்து ரொட்டி சாப்பிட்டு விட்டு எந்தவித பயமுமில்லாமல் ஆறுதலாக வீடு திரும்பக் கூடிய நேரம்.
அரை மைல் தூரத்திலிருந்த தியேட்டரில் Jungle Book சிறுவர் கார்ட்டுன் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.
8

தனியார்துறை வைத்தியனான பின் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது என்பது இயலாத காரியமாகி விட்டது. இரவு எட்டு ஒன்பது மணிவரை நோயாளிகளைப் பார்த்து விட்டு, அதன் பின் ஆறிக்கிடக்கும் உணவை ஏதோ விழுங்கி விட்டு நாளாந்தக் கணக்கு வழக்குகளைக் கவனித்து முடித்து இரவு பதினொரு மணிக்குப் படுத்தால், காலை எழும்புவதற்கிடையில் மேலும் நாலைந்து தடவை அவசர நோயாளர் களைப் பார்ப்பதற்காக எழும்ப வேண்டியிருக்கும். அந்தக் காலத்தில் படம் பார்ப்பது எப்படி?
சிறு குழந்தையாக இருந்த எனது மகனுக்கு அந்த அற்புதமான படத்தை எப்படியாவது காட்டி மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, நித்திரையாக இருந்த அவனை எழுப்பி செக்கண்ட் ஷோவிற்குப் போயிருந்தோம். வெளியில் எங்காவது போக வேண்டியிருந்தால் பெரும் பாலும் இரவு நேரத்திலேயே நாங்கள் போவதால், நித்திரையைத் திடீரென முறித்துக் கொண்டு புறப்படுவதற்கு அவன் ஏற்கனவே பழக்கப்பட்டிருந்ததால் உடனேயே கரைச்சல் கொடுக்காமல் புறப்பட்டு விட்டான்.
படம் ஆரம்பித்து அரைமணி நேரம்கூட ஆகியிருக்காது. இருட்டினுள் தட்டத் தடுமாறி ‘பென்டோச் ஒளியில் வந்த தியேட்டர் மனேச்சர் என்னை அணுகினார்.
டொக்டர் உங்களை ஆரோ அவசரமாகத் தேடுகினம்
எரிச்சலாக வந்தது. எவ்வளவோ நீண்டகால இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்திற்கு, அதுவும் செக்கண் ஷோ படத்திற்கு, பிள்ளைக்கு அப்படத்தை விளங்கப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற ஆவலில் வந்தால் கூட, விடாமல் விட்டுக் கலைத்து வருகிறார்களே என்று கோபமும் வந்தது.
ஆயினும் என்ன கஷ்டமான வருத்தத்திற்காக இந்த நேரம் வந்தார் களோ தெரியவில்லை என்ற டாக்டரின் அனுதாப மனநிலை, சாதாரண மனிதனின் எரிச்சல் மனேநிலையை அடக்க அவசர அவசரமாக வெளியே வந்தேன்.
"டொக்டர் பிள்ளைக்கு சுகமில்லை, அவசரமாகக் கொண்டு வந்தனாங்கள் சிரமத்துக்கு மன்னிக்கவேணும் என்று வெளியே காத்து நின்றவர் சொன்னார்.
'பிள்ளை எங்கை?
19

Page 17
உங்கடை டிஸ்பென்சரியிலை பிள்ளையை விட்டுப் போட்டு உங்களைக் கூட்டிக் கொண்டு போக வந்தனான்.
டிஸ்பென்சரிக்குப் போன போது பிள்ளை சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது.
'பிள்ளைக்கு என்ன சுகயினம் தாயைக் கேட்டேன்.
"ஒண்டுமில்லை டாக்டர். பிள்ளைக்கு இரண்ட நாளாகத் தடிமன் காய்ச்சல் இண்டைக்குக் கொஞ்சம் சுகம்.
‘பின்னை ஏன் கொண்டு வந்தியள் இடைமறித்தேன்.
'டி.வி பாக்கிறதுக்கு வந்திருந்த பக்கத்து வீட்டு மாமி சொன்னா, இப்பிடித்தான் அங்கை ஒரு பிள்ளைக்குச் சும்மா காச்சல் எண்டு சொல்லி நாலைஞ்சுநாள் பாத்தினமாம், பிறகு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக மூளைக்காச்சல் மாதிரிக் கிடக்கு எண்டு, நரம்பெல்லாம் குத்தி இரத்தம் எடுத்து எல்லாச் சித்திரவதையும் செய்தும் பிள்ளையைக் காப்பாற்ற முடியவில்லையாம். அதுதான் நாங்களும் பயந்து போய் பிள்ளையைக் கொண்டு வந்தனாங்கள்.
நான் பரிசோதித்துப் பார்த்த போது குழந்தை எந்தவித உடல்நலக் குறைவுமில்லாமல் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது.
நிம்மதியாக இருந்த பெற்றோர்களின் மனநிலையைக் குலைத்து, ஒன்றுமில்லாத சிறு விஷயத்திற்கு அவர்களைப் பயப்படச் செய்து அர்த்த சாமத்தில் அவர்களை என்னிடம் அனுப்பி வைத்த அந்தப் பக்கத்து வீட்டு மாமியில் கோபப்படுவதா?
அல்லது மற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களைச் கேட்டு, நிதானம் கெட்டு, பயப்பிட்டு இந்த இரவு நேரத்தில் ஆறு, ஏழு மைல். தூரத்தில் உள்ள எனது டிஸ்பென்சரிக்கு இரட்டை மடங்கு கார்க்கூலி கொடுத்து வந்த அவர்களது வெகுளித் தன்மையைக் கண்டு பரிதாபப் படுவதா.
அல்லது சிறிதளவு நேரத்தையாவது குடும்பத்திற்கென்று பிரத்தியேக மாக ஒதுக்க முடியாத இந்த டாக்டர் தொழிலின் மேல் வெறுப்படைவதா என்று புரியவில்லை.
'பிள்ள்ைக்கு ஒரு சுகயினமும் இல்லை. நீங்கள் நிம்மதியாகப் பிள்ளையை வீட்டுக்குக் கொண்டு போகலாம்
20

நரிக்கொத்தன் வெரிட்டியது போல் குழந்தை நித்திரையில் அழகாகச் சிரித்தது!
DDD
எந்த இக்கட்டான நேரத்திலும், அர்த்த சாமத்தில் அலுத்துக் களைத் துத் தூங்கிக் கொண்டிருந்தாலும், வேலைப் பளுவால் களைத்துக் காலங்கடந்த நேரத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்தாலும், ஆபத்தான அவசர நோயாளிகள் வந்தால், பார்த்துக் கொண்டிருந்த அலுவலை அப்படியே விட்டு விட்டு, நோயாளியை உடனே கவனித்து வைத்தியம் செய்வது அவசியம் என்பது மறுக்க முடியாதது.
அதிகமான எந்த ஒரு டாக்டருமே தனது தூய்மையான தொழிலின் இந்தப் பொறுப்பான, பெறுமதியான கடமைகளைச் சரியான நேரத்தில் அளிப்பதற்குப் பின்நிற்பதில்லை. Y
அதே போல் சிந்திக்கத் தெரிந்த பல நோயாளர்கள் கூட, நேரங்கெட்ட வேளைகளில் டாக்டர்களை அவசரமும் அவசியமும் அற்ற சிறு விஷயங்களுக்கு அணுகித் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று எண்ணி நடக்கிறார்கள்.
ஆனால் வேறு சிலரோ டாக்டர்களை - உணவு அவசியமற்ற, ஓய்வு தேவையற்ற, நித்திரை வேண்டாத முறுக்கி விடப்பட்ட மெஷின் என எண்ணுகிறார்கள்.
இரவு பத்து மணிக்கு மெடிக்கல் சேட்டிபிக்கட் வாங்குவதற்காக டாக்டரை சர்வசாதாரனமாக அணுகுபவர்களும் இருக்கிறார்கள்! நடுச் சாமத்தில் கூ தமது அவசியமற்ற சிறு தேவைகளைக் பூர்த்தி செய்ய, டாக்டர்கள் நித்திரை கொள்ளாமல் தெரு வாசலில் காத்து நிற்க வேண்டும் என்று எண்ணுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.!
அன்று இரவுக் காவலாளி அடித்த அழைப்புமணியின் சத்தங் கேட்டு எழும்பிய நான் நேரத்தைப் பார்த்தேன்.
இரவு 12.30 மணி! அருட்டினாலும் எழும்ப முடியாத அலுப்புத் தீர்க்கும் முன் நித்திரை. அது கலைந்த சோம்பல்!
வலிப்போ, ஆஸ்மாவோ, ஹாட் அட்டாக்கோ, வேறு என்ன அவசர வருத்தமோ தெரியவில்லை; இந்த நேரத்தில் வந்திருக்கிறார்கள் என்ற கடமை உணர்வில் சேட்டை மாட்டிக் கொண்டு தலையைக்கூட சீவாமல் டிஸ்பென்சரிக்குள் அவசரமாக நுழைந்தேன்.
21

Page 18
எனக்கு அறிமுகமான, எனது டிஸ்பென்சரிக்கு அண்மையில் வசிக் கும் பெண்மணி ஒருத்தி, இரவு உடையுடன் புன்னகை போர்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
“என்ன விஷயம் இந்த நேரத்திலை?”
“இரவு சலம் விட வெளியிலை போகயிக்கை காலிலை கிளுவம்
முள்ளு ஆழமாக குத்திப் போட்டுது. உடனே இழுத்து எடுத்துப் போட்டன். உங்களிட்டைக் காட்டி என்ன செய்யிறது எண்டு கேட்க வந்தன்”
‘இதென்ன சின்ன விஷயம் தானே. மருந்தைக் கட்டிப் போட்டு ஏற்புத்தடை ஊசி போடுவம் வலியிருந்தால் உங்களுக்கு மருந்தும்' தாறன்’
‘ஏற்பு ஊசி ஒண்டு போதுமே?”
“இண்டைக்கு ஒரு ஊசி போட்டால், ஒரு மாதத்துக்குப் பிறகு இரண்டாம் ஊசியும், ஆறுமாதத்திற்குப் பிறகு மூண்டாம் ஊசியும் போட வேணும்” என்று கூறிய நான் -
` அந்த மருந்து கட்டிற வாங்கிலை இருங்கோ, முதலிலை மருந்தைக் கட்டுவம்’ என்றேன்.
‘இல்லை டொக்டர், எனக்கு அரசாங்க ஆஸ்பத்திரி D.M.O. நல்ல பழக்கம். நாளைக்கு காலமை அவரிட்டைக் காட்டி மருந்து கட்டிவிச்சு ஊசி போடுகிறன்’.
'..... இப்ப சும்மா உங்களிட்டை என்ன செய்ய வேணும் என்று கேட்டுக் கொண்டு போகவந்தனான். GOODNIGHT” என்றாள்.
எனக்கு வந்த கோபத்தில் போற வழியிலை அவவிற்கு இன்னும் நாலு முள்ளுக் குத்தவேணும் என்று சபிக்க வேண்டும் போலிருந்தது.
‘இல்லை நீ ஒரு டாக்டர்’ என உள்மனம் சாந்தப்படுத்தியது.
GOOD NIGHT 616örg LD6 off bgs (p55g.JL6 infu g5 T65, அடுத்த நோயாளி வந்து என்னைக் குழப்புவதற்கிடையில் சிறு நித்திரை கொள்ளலாம் என்ற ஆவலில் கட்டிலை நோக்கி விரைந்தேன்.
22

மனிதர்களுடன் கூடவே பிறப்பது மறதி
பச்சிளம் பாலகன் முதல், பல் விழுந்த பாட்டாக்கள் வரை எவருமே மறதிக்கு ஆளாகாமல் தப்ப முடிவதில்லை.
தாலியைச் செய்ய மறந்து விட்டு, தாலி கட்ட மணவறை ஏறிய மணவாளன் பற்றியும்,
புது மனைவியை விட்டுவிட்டுத் தன்னந்தனியே, இன்பக் கனவு களுடன், தேன்நிலவைக் கொண்டாடச் சென்ற புதுமாப்பிள்ளை பற்றியும்,
சவரக்கத்தியை மறந்து விட்டு ‘ஷேவ் எடுக்கச் சென்ற சவரத் தொழிலாளி பற்றியும்,
பூவையும் கற்பூரத்தையும் மறந்து விட்டுப் பூசை செய்யக் கோயிலுக்குப் போன ஐயர் பற்றியும்,
பாஸ்போட்டையும், விஸாவையும் வீட்டில் பத்திரமாகப் பூட்டி வைத்து
விட்டு, வெளிநாடு பறப்பதற்காக விமானநிலையம் சென்ற நவயுக
மறதி நாயகர்கள் பற்றியும் பல நகைச்சுவைக் கதைகளையும், சிரிப்புத் துணுக்குகளையும் அடிக்கடி படித்து ரசிக்கிறோம்.
23

Page 19
இவை எல்லாமே கற்பனைச் சம்பவங்கள் என்று லேசாக ஒதுக்கி விட முடியாது. நாளாந்த வாழ்க்கையில் இப்படியான பல சுவையான மறதிச் சம்பவங்களையும், "மறதி மகாலிங்கங்களையும்', 'அறணை மறதிக்காரர்களையும் அடிக்கடி சந்திக்கவே செய்கிறோம்.
விஞ்ஞானிகளும் மறதிக்குப் பெயர் போனவர்கள். அவர்கள் பலரது நடவடிக்கைகளும், செயல்களும் பல சந்தர்ப்பங்களில் கிறுக்குத்தனமாக அமைவதுண்டு.
பிரபல விஞ்ஞானி ஒருவர் ரயிலில் பிரயாணம் செய்த கொண்டிருந்த போது, ரிக்கற் பரிசோதகர் வந்து, அவரிடம் ரிக்கற்றைக் கேட்டார். சேட்பொக்கற், கறிசான் பொக்கற், பர்ஸ், கைப்பை எல்லாம் தேடினார். காணவில்லை!
இதற்கிடையில் அந்த விஞ்ஞானியை அடையாளம் கண்டுவிட்ட ரிக்கற் பரிசோதகர், ‘பரவாயில்லை ஐயா, தேடி மினக்கெட வேண்டாம், எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கோ. வேறு ரிக்கற் தருவதற்கு ஒழுங்கு செய்கிறேன்’ என்றார்.
G
‘எங்கு போக வேண்டுமா? மறந்து விட்டேன். ரிக்கற்றைப் பார்த்துத் தானே அதை நான் அறிந்து கொள்ள வேண்டும்” என்று சொல்லிக் கொண்டு மும்மரமாகத் தொடர்ந்தும் தேடிக் கொண்டிருந்தார்.
மறதிகள் பல காரணங்களால் ஏற்படலாம்.
சிறு குழந்தைகளுக்கும், சில பெரியவர்களுக்கும் கவலையீனத் தினாலோ, அசட்டையினாலோ, அல்லது விஷயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொள்ளாமை யினாலோ மறதி ஏற்படுகிறது.
சிலர் விஷயங்களைக் கவனத்திற்கு எடுத்தாலும் வேலைப்பளுவால் சிலவற்றை மறந்து விடுவார்கள்.
சுயநல காரணங்களுக்காகச் சில விஷயங்களை மறப்பவர்கள் சிலர். மறந்து விட்டதாகப் பாவனை பண்ணுவர்கள் இவர்களிற் பலர்!
கடன் வாங்கிய பணத்தைச் சுலபமாக' மறந்து விட்டு, கடன் கொடுத்தவர் விசாரித்தால், நான் சரியான மறதிக்காரன்' என்று அசட்டுச் சிரிப்புடன் தலையைச் சொறிவார்கள்.
வேறு சிலர் காரியக்காரரான மறதிக்காரர்கள், அரிய புத்தகங்களை இரவல் வாங்கிவிட்டு, அவற்றைத் திருப்பிக் கொடுப்பதை 'வசதியாக மறந்துவிட்டு, சொந்த நூலகத்தையே உண்டாக்கி விடுவார்கள்.
24

வயதானவர்களின் மறதி வித்தியாசமானது.
காலையில் அவர்களுடன் சாப்பிட்ட சாப்பாடு பற்றியோ, அல்லது அவர்களது பேரப்பிள்ளையின் பெயர் என்ன என்றோ விசாரித்தால் 'திரு திருவென முழிப்பார்கள்! ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த சிறு விஷயங்களைப் பற்றிக்கூட திகதி, கிழமை, நேரம் போன்ற விபரங்களுடன் விஸ்தாரமாக உற்சாகத்துடன் விளக்குவார்கள்.
தலையில் அடிபட்டவர்களுக்குச் சில வேளைகளில் ஒரு புதுமை யான மறதி ஏற்படுவதுண்டு. அடிபட்ட அந்தச் சம்பவம் பற்றியும், அதற்குமுன் நடந்த சம்பவம் பற்றியும் மாத்திரம் எதுவும் நினைவில்லாமல் பேய் அடித்தவன் போல விழிப்பார்கள். :
'டாக்டரின் டயறி பகுதிக்கு இம்முறை எழுதுவதற்கான குறிப்புக்கள் எழுதி வைத்திருந்த டயறியை மறதியில் எங்கோ தவற விட்டுவிட்டதால், மறதியைப் பற்றித் திடீர் ஞானோதயம்' வந்தது. எனவே வைத்தியத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட சில மறதிச் சம்பவங்கள் பற்றி அதுவும் மறக்காமல் இருப்பவற்றை எழுதி உங்களைக் கொஞ்சம் அறுக்கலாம் என்றிருக்கின்றேன்.
3.
மறதி 1 ፥A
ஆறுவயது மதிக்கத்தக்க சிறுவனைக் கூட்டிக் கொண்டு, அந்த இளம் தம்பதிகள் எனது அறைக்குள் நுழைந்ததும், குப்பென ஓர் துர் நாற்றம் அறையெங்கும் நிலவியது. மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்த மின்சார விசிறியை, விசையாகச் சுழல விட்டுவிட்டு அவர்களை விசாரித் தேன்.
சென்ற மூன்று மாதகாலமாக அவர்களின் பிள்ளையின் மூக்கி லிருந்து சகிக்க முடியாத துர்நாற்றத்துடன் சளிவடிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வேலை செய்யும் அந்த வெளி மாகாணப் பிரதான நகரின் பிரபல டாக்டரிடம் காட்டித் தொடர்ந்து வைத்தியம் செய்து கொண்டிருக் கிறார்கள்.
பக்ரிம், அம்பிசிலின், எரிதிரோமைசீன், கெப்போரெக்ஸ், என்று எல்லாக் காரமான நுண்ணுயிர் கொல்லி மருந்துகளையும் பாவித்து விட்டார்கள். ஆனால் ஒரு வித பிரயோசனமுமில்லை! மணம் அடங்க வில்லை!
25

Page 20
மருந்து கொடுத்துப் பெற்றோர்களும், மருந்து குடித்து பிள்ளையும் அலுத்துக் களைத்து விட்டார்கள். தொடர்ந்து வைத்தியம் செய்த டாக்டரும் களைத்துப் போய் “பிள்ளையைக் கொழும்புக்குக் கொண்டு போய் ENT ஸ்பெசலிஸ்டிடம் காட்ட வேணும்” என்று சொல்லிக் கடிதமும் கொடுத்து விட்டார். As
கொழும்புக்குப் போய் நின்று வைத்தியம் செய்விப்பதற்கான ஆயத்தங்கள் செய்வதற்காக ஊர் வந்திருந்த அவர்கள் கடைசி முயற்சி யாக என்னிடமும் வந்திருந்தார்கள்.
இவ்வளவு மருந்து கொடுத்தும் மாறவில்லை என்பதால் ஏதோ ஒரு முக்கிய விசயம் கவனிக்கப்படாமல் தப்ப விடப்பட்டு விட்டது என மனதுக்குப்பட்டது.
ஒடிக்கொண்டிருந்த துர்நாற்றச் சளியைப் பஞ்சினால் துடைத்துச் சுத்தப்படுத்திவிட்டு, கூரிய ஒளியின் உதவியுடன் மூக்கை ஆராய்ந்தேன். இடது மூக்குத் துவாரத்தின் ஆழத்தில் ஏதோ இருப்பதுபோலத் தோன்றியது.
பிள்ளையைப் படுக்க வைத்துவிட்டு சிறு மருத்துவ உபகரணங் களுடன் அதை எடுக்க முயன்ற போது, துள்ளி வெளியே விழுந்தது சளியால் மூடப்பட்ட பொருளொன்று
எடுத்துத் துடைத்துப் பார்த்தபொழுது - அது ஒரு ரப்பர்த்துண்டு - இரேசர்!!
எப்பொழுதோ அந்தப் பிள்ளை மூக்கினுள் விளையாட்டாக வைத்து மறந்துவிட்ட அந்த ரப்பர் துண்டு எவ்வளவோ வீண் அலைச்சல்களுக்கும், சஞ்சலத்திற்கும், பணச் செலவிற்கும் பிறகு அப்பாவி போல் அமைதி யாகக் கிடந்தது. மறதி 2
* சரியான வருத்தம் மேனை. வெளியிலை சொல்லச் சங்கயினப்பட்டு இவ்வளவு நாளும் இருந்திட்டன். இனித் தாங்கேலாது” என்று சொல்லிய அவள், மெல்லிய, அடங்கிய குரலில் இரகசியம் சொல்வது போல் “சரியா வெள்ளை படுகுது மேனை, ஒரே வெடுக்கு, சில நேரத்திலை செங்கல் மங்கலாயும் படுகுது” என்றாள்.
"ஆச்சிக்கு வயசு எத்தினை? பிள்ளையஸ் எத்தனை? மாசச் சுகயினம் நிண்டு எவ்வளவு காலம்? கேள்விகளை அடுக்கினேன்.
26

“வயசு அறுபது வரும், நாலு பொடியள். இளையவனுக்கே வயசு 25 வரும். மனுசனும் போயிட்டார். மாசச் சுகயினம் நிண்டு 15-20 வருஷம் வரும்”
‘மாசச் சுகயினம் நிண்ட பிறகு செங்கல் மங்கலாகப் படுகிறதோ, ரத்தம் படுகிறதோ அவ்வளவு நல்லதில்லை. சும்மா சின்னச் சுகயினத் துக்கும் படலாம். ஆனால் கான்சர் போலை கடும் வருத்தங்களுக்கும் படலாம். எண்டபடியால் நான் ஒருக்கால் கர்ப்பப்பையை சோதிச்சுப் பார்க்க வேணும்” என்று விளக்கினேன்.
அவளது மிகுந்த வெட்கத்திற்கும், வெட்கத்துடன் கூடிய எதிர்ப் பிற்கும் மத்தியில் தாதியின் உதவியுடன் அவளது உள்ளுறுப்புக்களைச் சோதித்துப் பார்த்த போது கான்ஸர் நோயிற்கான அறிகுறி தென்படாதது நிம்மதியளித்தது.
என்னவாயிருக்கும்? என யோசித்த போது அந்த நூல் தட்டுப்பட்டது.
ஓ’ லூப் போட்டிருக்கிறாள்.
லூப் என்பது கர்ப்பம் தங்காமல் இருப்பதற்காகப் போடப்படும். பழக்கப்பட்ட, பாதுகாப்பான குடும்பக் கட்டுப்பாட்டு முறை.
ஆனால் ஆச்சிக்கு ஏன் லூப்?
நீண்டகாலமாகக் கிடந்ததால் இறுகிப் போயிருந்த அதை மிகுந்த பிரயாசையின் பின் எடுத்து அவளுக்குக் காட்டினேன்.
“ஓம் மேனை, கடைசி மேன் பிறக்கையுக்கை பெரியாஸ்பத்திரி டாக்குத்தர் வைச்சு விட்டவர். மறந்து போனன்.”
அடுத்த வாரம் மகிழ்ச்சியுடன் வந்த ஆச்சி
'இப்ப எல்லாம் நல்ல சுகம்; ஐயாட்டைச் சொல்லிப் போட்டு போக வந்தனான்’ என்றாள்.
மறதி 3
கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளே வந்த அந்த நடுத்தர வயது மாது அருகில் அமர்ந்தபடி சொன்னாள்.
‘இந்தக் காது கொஞ்சம் கொஞ்சமா அடைச்சு இப்ப ஒண்டுமே கேக்குதில்லை. கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு நாள் காதுக்குத்து வந்திது. கைவைத்தியத்திலை மாறிப் போச்சு. அதுக்குப் பிறகுதான்
இந்த அடைப்பு.
27

Page 21
காதினுள் கட்டுக்கட்டி செவிப்பறையை உடைத்ததால்தான் காது கேட்காமல் விட்டு விட்டதோ என யோசித்தேன்.
‘காதாலை சீழ் வடியிறதே அம்மா” 'இல்லை ஐயா, வெறும் அடைப்புத்தான்”
நீர் வடியவில்லை என்பதால் செவிப்பறை தப்பி விட்டது என எண்ணினேன். காதுக்குடுமி இறுகி அடைத்திருக்க வேண்டும்.
காது சோதிக்கும் கருவியின் ஒளியில் காதைப் பார்த்தபோது, எண்ணெய் வடிந்த காதினுள் கறுப்பாக ஏதோ தெரிந்தது.
‘காதுக்கை என்ன விட்டனியள்’
‘பரியாரியார் தந்த எண்ணை விட்டும் சுகமில்லை.”
காதுக்குள்ளை இருக்கும் அப்பொருளை எடுக்க முயற்சித்தேன்.
காதுக்குள் இருக்கும் அந்நியப் பொருளை நோயாளிகளோ, அல்லது உறவினர்களோ எடுக்க முயல்வது ஆபத்தானது. தற்செயலாக செவிப்பறையை புண்படுத்திவிட்டால் நிரந்தரமாகச் செவிப்புலனை இழந்து விடலாம். எனவே பயிற்சி பெற்ற டாக்டரே இதைச் செய்வது உசிதமானது. பல சந்தர்ப்பங்களில் நோயாளியை மயங்க வைத்தே இதை எடுக்க நேரிடலாம்.
அந்தப் பொருள் காதினுள் அவ்வளவு ஆழத்தில் இல்லாததாலும், அந்தப் பெண்மணி ஒத்தாசையாக இருந்தாலும் சுலபமாக எடுக்க
முடிந்தது.
எடுத்துப் பார்த்தபோது அது காதுக் குடுமி அல்ல உள்ளி! எண்ணெய்க்குள் விழுந்த எலிபோல், ஊறி உப்பிக் கிடந்தது.
‘என்னம்மா, காதக்குள்ளை உள்ளி’
‘ஐயையோ, காதுக்குத்துக்கு எண்டு உள்ளி சுட்டு வச்சனான் எடுக்க மறந்து போனேன்’ என்றாள்.
‘நல்ல காலம் இப்பெண்டாலும் எடுத்தது, இல்லையெண்டால் காது அவிஞ்சு அழுகியிருக்கும்” என்று வெருட்டு விட்டேன்.
28

மறதி 4
காயம்பட்ட நோயாளிக்குத் தையல் போட்டு மருந்து கட்டிவிட்டு, அடுத்த நோயாளியைப் பார்க்கத் தயாரானபோது, எனது ஸ்ரெதஸ் கோப்பைக் காணவில்லை!
மேசை மேலும் காணவில்லை, மேசை லாச்சிக்குள் எழந்து போய்ப் பார்த்தால் அங்கும் காணவில்லை!
தையல் போட்ட கட்டிலில் இருக்கலாம், எனப் போய்ப்பார்த்தால் அங்கும் காணவில்லை!
டாக்டரைத் தவிர மற்றவர்களுக்குப் பிரயோசனப்படாத பொருள் என்றபடியால் களவு போயிருக்காது என்பது நிச்சயம். யாராவது வம்புக்கு எடுத்து ஒழித்திருப்பார்களோ?
‘ரீ குடிக்கப் போனபோது பக்கத்து அறையில் வைத்து விட்டேனோ எனப் போய்ப் பார்த்தேன். அங்கும் இல்லை!
‘எங்கே போயிருக்கும்?
‘என்ன டொக்டர் தேடுறியள்? அருகில் நின்ற நோயாளி விசாரித்தார்.
‘என்ரை ஸ்ரெதஸ் கோப்பைக் காணவில்லை’
அவர் முகத்திலை ஓர் ஏளனமும், பரிதாபமும் கலந்த சிரிப்பு! விநோதமாக என்னைப் பார்த்தார்!! A
‘என்ன டொக்டர். கழுத்திலை தொங்குது. நீங்கள் உலக மெல்லாம் தேடுறியள்
அசடு வழியச் சிரித்தேன்.
எனது ஸ்ரெதஸ்கோப் கொஞ்சம் நீளம் கூட, நானும் உயரம் குறைவு என்றபடியால் அது நீளமாகத் தொங்கிக் கொண்டிருக்கும். இது ஊசி போடுதல், தையல் போடுதல் போன்ற நின்று வேலை செய்யும் வேலைகளின் போது இடைஞ்சலாக இருப்பதால் அதன் தொங்கும் முனையை களிசான் பொக்கற்றுக்குள் வைப்பது வழக்கம்.
இன்று அப்பிடித்தான். தையல் போடும் போது ஸ்ரெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி அதன் தொங்கும் முனையைப் பொக்கற்றுக்குள் வைத்திருந்தேன். மறந்து விட்டேன். V.
29

Page 22
f Ο Ο \சவுைக்காதவர்கள்
அன்று ஒரு நோயாளியை அவரது வீட்டிலேயே சென்று பார்க்க வேண்டியிருந்தது.
நோயாளிகளை அவர்களது வீடுகளுக்குச் சென்று பார்ப்பது எனக்குப் பொதுவாக பிடிக்காத விஷயம்!
கண் எதிரே எனக்காக காத்து நிற்கும் நோயாளிகளை 'அம்போ' என விட்டுவிட்டு, எங்கோ தூரத்தில் ஒரு வீட்டில் ‘ஹாயாகச் சாய்ந் திருக்கும் நோயாளியைச் சென்று பார்க்க என் மனம் ஒப்புவதில்லை.
அத்துடன் என் டிஸ்பென்சரியில் சகல உபகரண வசதிகளுடனும் சோதிப்பது போல வீடுகளில் பூரண பரிசோதனை செய்ய முடியாது.
வேறொரு முக்கிய காரணமும் உண்டு.
வீட்டிலிருந்து கொண்டு அவசர அழைப்பு அனுப்பும் இந்த நோயாளிகள் பெரும்பாலும் எல்லா டாக்டர்களும் கைவிட்டபின் கடைசி மூச்சை நிறுத்துவதற்கு எருமை வாகனத்தானின் சுருக்குக் கயிறு இறுகுவதற்கு காத்திருப்பவர்களே!
சிலவேளைகளில் நான் போவதற்கிடையிலேயே அவர் கதை முடிந்திருக்கும். அல்லது எனது வரவிற்காகக் காத்திருப்பவர் போல நான் போன கைகளோடு தலையைப் போட்டு விடுவார்.
30
 

மறு உலகிற்கு வழி அனுப்பி வைக்கும் டாக்டராக இருக்க நான் விரும்புவதில்லை.
ஆனால் இன்று தவிர்க்க முடியவில்லை.
அவர் எனது நீண்ட காலப் பேஷன்ட் தொடர்ந்து என்னிடம் வைத்தியத்திற்கு வருபவர். ஆனால் இப்போ பாரிச வாதத்தால் பாதிக்கப் பட்டிருப்பதால் அவரால் வர முடியாது! நான் சென்று பார்க்க வேண்டிய தாயிற்று.
அவர் ஒரு புகழ்பெற்ற வர்த்தகர். வெறும் கையோடு வாழ்க்கையை ஆரம்பித்து, உள்ளுரிலும், வெளியூரிலும் பல வர்த்தக ஸ்தாபனங்களை வெற்றியுடன் நடத்தி, ‘ஏழு தலைமுறைக்கு வேண்டிய சொத்துக்களை சேர்த்து விட்டவர். இப்பொழுது உடல்நிலை காரணமாக அடங்கி விட்டதால், பிள்ளைகள் அவரது தொழில் ஸ்தாபனங்களைத் தொடர்ந்து வெற்றியுடன் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது சொகுசான ஆடம்பரக் கார் என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தது.
அகண்ட ஆடம்பரமான வாயிற்கேற்றைத் தாண்டி கொத்துக் கொத் தாகப் பூத்துக் குலுங்கும் போஹன்வில்லாக்களும், முசண்டாக்களும், பிறைட் ஒவ் ஜப்பான்களும், ரோசாச் செடிகளும் நிறைந்த தோட்டத் தினூடே வழுக்கிச் சென்ற கார், விசாலமான போட்டிக்கோவினுள் சென்று அலுங்காமல், குலுங்காமல் நின்றது.
‘ உள்ளை வாங்கோ டாக்டர்’ அவரது மகன் மரியாதையுடன் அழைத்தார்.
ஆடம்பர டெரோஷா பதித்த நீண்ட விசாலமான தரை, அலங்கார ஷோபாக்கள், உயர்ந்த பரந்த ஷோகேஸ்கள், அதி அலங்கார மின்சார லையிட்டுக்கள், TV, வீடியோ, ஓடியோ நிறைந்த வரவேற்பறையைத் தாண்டி ஆடம்பர அறைகளைத் தாண்டி, நவீன சமையலறை, ஸ்ரோர்ஸ் அறைகளையும் தாண்டி வீட்டின் பிற்பகுதியை அடைந்தோம்.
விசாலமான வீட்டின், ஒதுக்குப் புறமான பின் வராந்தையை அரைச் சுவராலும், இரும்புக்கம்பி வலைகளாலும் அவசரமாக அடைத்துத் தயாராக்கிய அறை அது.
மூத்திர நாற்றம், மூக்கினைத் தாக்க முதியவர் அறையினுள் தயங்கியே நுழைந்தோம்.
31

Page 23
பழைய பலகைக் கட்டிலில் குறண்டியபடி கிடந்தார் அவர். அந்த முன்னைய நாள் மதிப்புக்குரிய பெரிய மனிதர்!
தலையணையைத் தவிர படுக்கை விரிப்புகளோ மெத்தையோ எதுவும் இல்லை. கட்டிலின் கீழே ஊறித் தெப்பிக் கிடந்த சாக்கு, மூத்திர நாற்றத்தை வஞ்சகமின்றிப் பரப்பிக் கொண்டிருந்தது!
அறை நிறைய இலையான்கள். அவரையும் கீழே கிடந்த சாக்கையும் மாறி மாறிச் சுவைத்து, மகிழ்ந்து பறந்து திரிந்தன.
கொசுக்கள் உற்சாகமாகக் கலைந்து கலைந்து மொய்த்தன! அறைக்குள் நுழையவே கால்கூசியது!
மனம் தயங்கியது. ஆயினும் கடமை உணர்வுடன் அவரருகில் சென்றேன். நோயின் வேதனையிலும் மனத் துயரிலும் மூழ்கிக் கிடந்த முகத்தில், என்னைக் கண்டதும் சோகம் கலந்த புன்னகை கோடி கோடியாகச் சம்பாதித்த நான், இப்போ ஒதுக்கித் தள்ளப்பட்டுக் கிடக்கும் நிலையைப் பாருங்கள் என்று சொல்வது போலிருந்தது.
கனத்த மனதுடன் அவரைப் பரிசோதித்து மருந்துகைளக் கொடுத்து, ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்ட நான், மகனிடம் அவரை ஒதுக்குப்புறமாக, ஒதுக்கி விட்டதற்கான காரணத்தை விசாரித்தேன்.
'ஐயாவுக்கு சலம், மலம் போறது தெரியாது. பெரிய மணிசர் வந்து பிழங்கிற இடத்திலை அவரை எப்படி வைச்சிருக்கிறது. வெக்கந் தானே. பின் விறாந்தை எண்டால் ஆக்களின்ரை கண்ணிலை படாது. சலம் மலம் போனாலும் அப்படியே வெளியிலை கழுவி விட்டிடலாம்” என்றார்.
‘பெத்து வளத்து ஆளாக்கி, உயர்ந்த நிலையில் உங்களை வைச்சிருக்கிற ஐயாவை வீட்டுக்கை வைச்சிருக்கிறது வெக்கமோ? எனக் கேட்க வேண்டும் போலிருந்தது.
DDD
வயதானவர்கள் உதாசீனப்படுத்தப்படுவதை வேறு பல சந்தர்ப் பங்களிலும் கண்டிருக்கிறன்.
'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்றும், தாயிற் சிறந்த ஒரு கோவிலுமில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
32

என்றும் பெற்றோர்களுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுத்த தமிழ் சமுதாயம் இன்றும் அதே மரியாதையைக் கொடுக்கிறதா?
வயது முதிர்ந்தவர்களைப் பார்த்துக் காவோலை விழக் குருத் தோலை சிரிப்பது போல.
G
'வயசு போட்டுது, ஒண்டும் விளங்காது சும்மா பழங் கதைகளை வழவழக்கினம்’ என்றும்,
'உங்கடை பழங்கால மோட்டு நம்பிக்கைகளை இந்தக் காலத்திலை ஆர் கேட்டு நடக்கிறது” என்றும்
‘வயசு போனால் பேசாமல் மூலையில் முடங்கிக் கிடக்கிறதுக்கு
ஏன் எழும்பித் திரிஞ்சு, விழுந்து முறியிறியள்” என்றும், எடுத்தெறிந்து இழக்கமாகப் பேசுவதைக் கேட்கிறோம்.
சிலவேளைகளில் நிர்த்தாட்சண்யமாகக், கொடுர மனோபாவத்துடன், வயது போனால் செத்துத் துலையிறதுக்கு ஏன் இன்னும் இருந்து கழுத்தறுக்கிறியள்’, என்று பேசுவதைக்கூட என் காதால் கேட்டு மனம் வெதும்பியிருக்கிறேன்.
&
வயது போனவர்கள் வெறும் மரக்கட்டைகள் அல்ல!
அவர்களுக்கு ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும். உணர்வு களும் உணர்ச்சிகளும் மரத்துவிடுவதில்லை என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.
ஒரு நாள் என்னிடம் வந்த முதியவரொருவர் மிகுந்த கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தார்.
'தலைச்சுத்து, எழும்பி நடக்க முடியாமல் விழுத்தப் பாக்குது, கை, கால் உழைவு, நடந்தால் இளைப்புக் களைப்பு.’ என்று வயோதி பத்தின் காரணமாக ஏற்படும் இயலாமைகள் பற்றி விரிவாகக் கூறிக் கொண்டிருந்தார்.
திடீரெனக் கூட வந்த மகள் பக்கம் திரும்பி, 'பிள்ளை பேர்சை பையோடை வெளியிலை விட்டிட்டின், ஒருக்கால் போய் பார்மேனை’ என்றார். அவளை வெளியில் அனுப்பி என்னுடன் தனியே பேசும் ஆதங்கம்.
மகள் வெளியேறிய மறுகணமே, - “எனக்குச் சாக ஏதும் மருந்து தாங்கோ’ என்று பரிதாபமாகக் கேட்டார்.
‘ஏன் அப்பு?”
33

Page 24
“என்னாலை ஒரு வேலையும் செய்ய முடியுதில்லை. எல்லாத்துக்கும் மற்றவையளின்ரை உதவி தேவையாக கிடக்கு, கிணத்திலை அள்ள ஏலாது. மகள் தான் குளிக்க தண்ணி அள்ளித் தாறவா. அவவுக்கும் சரியான வேலை.
...நான் குளிச்சுப் பத்து நாளாய்ப் போச் செண்டால் பாருங்களேன். செத்துப் போனால் எனக்கும் கஷ்டம் இல்லை, மற்றவையஞக்கும் கரைச்சல் இல்லை” என்றார். தனக்கு குளிக்க உதவுவதுகூட மகளின் அக்கறைக்குரிய விஷயமாக இல்லை என்பதை சொல்லாமல் சொல் கிறாரா?
பரிதாபமாக இருந்தது.
வயதானவர்களுக்கும் நேரத்திற்கு நேரம் பசிக்கும். தூக்கம் வரும். குளித்துச் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும். அவர்களும் ஆசாபாசங்கள் நிறைந்த மனித ஜன்மங்கள் தானே!
எமக்குத் தலைநிறைய வேலை இருக்கிறது என்பதற்காக அவர்களைக் கவனியாமல் விடுவது எந்த வகையில் நியாயம்?
வயதானவர்களை வீடுகளில் வைத்துப் பராமரிக்க முடியாதவர்கள், வயோதிபர் இல்லங்களில் அவர்களை வாழவிட மேற்கத்தைய நாடுகளில் போதிய வசதியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் கூட, சில கிறிஸ்தவ மிஷன்களும், சில இந்து ஆச்சிரமங்களும் இத்தகைய போற்றத்தக்க பணியில் ஈடுபட்டிருக்கின்றன் எனினும் இலைமறை காயாக பலரது கவனத்தையும் பெறாமல் இருக்கிறது. ٠ له
தமிழர்களாகிய நாம் நீண்ட கலாச்சார பாரம்பரியத்தில் வந்தவர்கள். பெற்றோரையும், முதியவர்களையும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து, அவர்களை அன்புடன் பேணிப் பாதுகாப்பவர்கள் என்று பெருமைப் படுகிறோம். காசியப்பனைப் போல் பெற்ற தந்தையையே சுயலாபத் திற்காக, சுற்றவரச் சுவர் எழுப்பி, உயிரோடு மூடிக் கட்டிக் கொன்ற வர்கள் எமது பரம்பரையில் கிடையாது என்று சரித்திரச் சான்றுகளில் சமாதானம் அடைகிறோம்.
ஆனால் பெற்றோர்களைச் சரியாகப் பேணிப் பாதுகாக்காமல் விடுவதாலோ, அல்லது உரிய காலத்தில் உரிய வைத்திய வசதிகளைக் கொடுக்காமல் விடுவதாலோ, அநியாயமாகச் சாகவிடுபவர்களை பற்றி என்ன சொவ்வது?
34

‘ஐயாவுக்கு வாயிக்கை ஒரு புண். ஒரு மாதமா நாட்டு வைத்தியம் செய்விச்சனாங்கள். தான் மாத்தித்தாறன் எண்டு அவர் சொன்னவர். மாறயில்லை. வரவரப் பெருக்குது. உங்களிட்டைக் காட்டிப் பார்க்கலாம் என்று கூட்டிக் கொண்ட வந்தனான்’ என்று அந்த வயோதிபரோடு வந்த, அவரது நடுத்தர வயதுடைய மகன் கூறினார்.
‘வாயை திறவுங்கோ பாப்பம்”
“வாயுக்குள்ளை வெத்திலை கொப்புளிச்சுப் போட்டு வர்றன்’
டாக்டரிடம் வாயைக் காட்ட வரும்போது கூட வெற்றிலை போட்டுக் கொண்டு வருமளவிற்கு வெற்றிலைக்கு அவர் அடிமையாய் இருக்கிறார்!
வெற்றிலை போடுபவராக இருப்பதால், அந்தப் புண் புற்று நோயாக இருக்குமோ எனச் சந்தேகம் வந்தது.
வாயைப் பரிசோதித்துப் பார்த்தபோது, அது புற்று நோய் தான் என்பது நிச்சயமாயிற்று.
வெற்றிலை, புகையிலை சப்புவர்கள், புகை பிடிப்பவர்கள், பழுதடைந்த பற்களைப் பிடுங்காது இருப்பவர்கள் ஆகியோரே பெரும் பாலும் வாய்ப் புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.
* கனகாலமாக சொக்கின்ரை உள்பக்கத்திலை பால் ஆடை படர்ந்த மாதிரி வெள்ளையாகக் கிடந்தது. பிறகுதான் புண்ணாகினது. நோ வலி ஒண்டும் இருக்காத படியால் கவனியாமல் விட்டிட்டின். பெருகத் தொடங்கத்தான் நாட்டு வைத்தியரட்டைக் காட்டினம்’.
உட்தோல் வெண்மையாக மாறியதும், நோ அற்ற புண் என்பதும் புற்று நோயைக் குறிக்கும் என்பதை அறியாதது அவர்கள் குற்றம் என்று சொல்ல முடியாது. ஆனால் இதை அறிந்திருக்க வேண்டிய அந்த வைத்தியர், நோயாளிக்கு நோயின் தன்மை பற்றிக்கூறாது ஒரு மாதத்தைக் கடத்தியது மன்னிக்க முடியாத குற்றமென என் மனம் கொதித்தது.
ஆயினும் காலங்கடந்து விடவில்லை. கரண்ட் பிடிக்கிறது என்று பொதுவாகச் சொல்லப்படும் (ரேடியக் கதிர்ச் சிகிச்சை) செய்தால் நோயைக் குணமாக்கலாம் என என் மனம் கூறியது.
நோயைப் பற்றி அவர்களுக்கு விளங்கப்படுத்தி சிகிச்சையின், அதுவும் உடனடிச் சிகிச்சையின் அவசியம் பற்றி அவர்களுக்குப் புரிய வைத்தேன். அறிமுகக் கடிதங்களையும், வைத்திய அறிக்கைகளையும்
35

Page 25
**گی
வைத்தியம் செய்ய முயற்சிக்காமல் அவர்களை நோயினால் துடித்து,
கொடுத்து மஹரகம புற்றுநோய் வைத்திய நிபுணரிடம் செல்ல வேண்டிய ஒழுங்குகளையும் செய்து கொடுத்து விட்டு நிம்மதியாகப் பெருமூச்சு விட்டேன்.
ஒரு சில மாதங்களின் பின் உப்பி ஊதி ஒரு பக்கம் அழுகிய பூசணிக்காய் போன்ற முகத்துடன் வந்த அவரை அடையாளங் காண எனக்கு வெகு நேரம் பிடித்தது
‘ஐயா, சரியான வேதினை, தாங்க முடியவில்லை. புண் பெருத்துச் சொக்கு ஒட்டையாய் போச்சு. சாப்பிட முடியல்ல. சாப்பிட்டால் தண்ணீர் குடிச்சால் புண்ணுக்காலை வெளியிலை வருகுது.” அனுக்கத்துடன் கூறினார்.
பசித்தும் சாப்பிட விடாத புண்ணாலும், நோயின் உடல் உருக்கும் தன்மையினாலும் ஒட்டி உலர்ந்து எலும்புந் தோலுமாக மாறிவிட்டார்.
அருகில் சென்று புண்ணைக் கூர்ந்து பார்த்தேன். ஏதோ நெளிவது போலிருந்தது.
புழுக்கள்!!!
புண்ணைக் கவனியாது விட்டபடியால் ஈக்கள் மொய்த்துப் புழுப்பிடித்து விட்டது.
நெளிந்து நெளிந்து புண்ணைக் குடைந்து கொண்டிருந்தன. வயோதிபர் வேதனையில் துடித்தார் என்மனம் கொதித்தது. ‘ஐயாவை மஹரகமைக்கு கொண்டுபோய் வைத்தியம் செய்ய இல்லையே? நான் கடிதம் தந்தனான்தானே.”
'இப்பத்தைய நிலைமையிலை மஹரகமைக்கு எப்படிப் போறது. இளம் ஆள் எண்டாலும் பரவாயில்லை. வயது போனவர்தானே. வைத்தியம் செய்தும் என்னத்தைப் பெரிசாகக் காணப் போறம் என்டு பேசாமல் விட்டிட்டம்”
ஹ' வயது போனால், கஷடப்பட்டு, வேதினைப்பட்டு சாக விட்டிடுறதே” பொறுக்க முடியாமல் கோபத்தில் வெடித்தேன்.
வயது போனவர்தானே என்ற காரணத்தால், நோய்க்கு வேண்டிய
வருந்தி, அணு அணுவாகச் சாகவிடும் இவர்கள் காசியப்பனுக்கு எந்த விதத்தில் சளைத்தவர்கள்.
36

நூேலை மாற்றது நூேலfலை 0ால்க்கும்
சுலவைத்தலம்
‘ஐயோ! என்ரை மனுஷன் பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார். வழியை விடுங்கோ, டொக்டரிட்டை அவசரமாகக் காட்டவேணும்.”
பெண்ணின் பதற்றமான ஒலக் குரல் கேட்டு வாசற் பக்கம் நான் திரும்பவும், மயக்கமாகக் கிடந்த ஒருவரைத் தூக்கிக் கொண்டு அவசரமாக அவர்கள் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
பரிசோதனைக் கட்டிலில் அவரைக் கிடத்தினார்கள்.
‘என்ன நடந்தது?”
“தலையிடி எண்டு சொன்னவர். கோப்பி போட்டுக் குடுத்திட்டு, கிணத்தடிக்கு நான் குளிக்கப்போட்டன்.
.திரும்பி வந்து பார்க்கக்குள்ள அவர் பேச்சு மூச்சில்லாமல், ஈஸிச் செயரில் சரிஞ்சு போய்க் கிடந்தார். அதுதான் கொண்டோடி வாறம். எப்படி எண்டாலும் அவரைக் காப்பாற்றிப் போடுங்கோ டொக்டர்’ அவள் தேம்பித் தேம்பி அழுதாள். ’பயப்படாதையுங்கோ. நான் என்னெண்டு பார்க்கிறன்’. και και
பார்த்தபோது -
ܢ ܨܐܕ•
வெண்மையான அவர் உடல் முழுவதும் சிவந்து ஆஷனதீ
தடிப்பான்’ போல் தடித்துக் கிடந்தது! -
37

Page 26
உடல் ஐஸ்கட்டி போல் குளிர்ந்து கிடந்தது! பிரஷர் பார்த்தபோது மிகவும் இறங்கிப் போய்க் கிடந்தது!
ஆபத்தான நிலை!!
ஏதோ கடுமையான ‘அலர்ஜிக் ரியக்ஷன்' எனப் புரிந்தது. துரிதமாகச் செயற்பட்டேன்.
தசையில் போடும் ஊசி, இரத்தக்குழாயில் நேரடியாகச் செலுத்தும் ஊசி, ‘சேலையின் டிரிப்' என அடுக்கடுக்காக ஏற்றினேன்.
சிறிது சிறிதாக அவர் நினைவு திரும்பியது.
அப்பொழுதுதான் அந்த முகமும், அந்த விஷயமும் ஞாபகத்திற்கு வந்தன!
அவருக்கு "அஸ்பிரின் குளிசை ஒத்துக் கொள்வதில்லை. அதைப் பாவித்தால் அவருக்கு அலர்ஜிக் ரியக்ஷன் ஏற்படுவதுண்டு. அஸ்பிரின் குளிசையையோ அல்லது "அஸ்பிரின் கலந்த வேறு குளிசைகளையோ எக்காரணம் கொண்டும் பாவிக்கக்கூடாது என அவருக்கு எச்சரிக்கை செய்திருந்தேன். அத்துடன் எங்கு மருந்துக்குச் சென்றாலும் காட்டும்படி, இது விஷயமாக மருத்துவ அறிவிப்பு மட்டையும் கொடுத்திருந்தேன். எனவே இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது என்று ஆச்சரியமாக இருந்தது. விசாரித்தேன்.
‘சரியான தலையிடியாக இருந்தது. அஸ்பிரின்', எனக்கு ஒத்துக் கொள்ளாது எண்டு தெரியும்தானே. அதுதான் “கோடிஸ்' குளிசை வாங்கிப் போட்டனான்.” என்று முனகலுடன் கூறினார்.
'கோடிஸ்' குளிசையில் `அஸ்பிரின் கலந்திருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. மருந்துக் கடைக்காரருக்கும் விஷயம் புரியவில்லைப் போலும்,
தனது தலைவலிக்கு, தானாகவே மருந்து சாப்பிட்ட அவரின் தலைக்கு வந்த ஆபத்து. நல்ல வேளையாகத் தலைப்பாகையுடன் போய்விட்டது! ஆனால் அதிர்ஷ்டம் என்றும் அவர் பக்கம் இருக்கும் என்று சொல்ல முடியாது.
தனக்குத் தானே சுய வைத்தியம் செய்ய முற்படும் போது இத்தகைய சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
வைத்திய அறிவை, கேள்வி ஞானத்தால் பெற்று விட முடியாது! கடுமையான ஐந்து வருடப் படிப்பும், பயிற்சியும் பின் ஒரு வருட 38

காலம் ஒய்வேயற்ற தீவிர ‘ஹவுஸ் ஒபீசர் நேரடி ஆஸ்பத்திரிப் பயிற்சியும் பெற்றுங்கூட, இன்றைய டாக்டர்களால் படுவேகமாக முன்னேறி வரும் நவீன மருத்துவத் துறையைப் பூரணமாக அறிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாதிருக்கிறது.
ஆராய்ச்சிகளின் பலனாகத் தினசரி புதுப்புது மருந்துகள் பாவனைக்கு வருகின்றன. அதே ஆராய்ச்சிகளின் பயனாக பல மருந்து கள் பாவனைக்கு ஏற்றதல்ல என அடிக்கடி ஒதுக்கப்படுகின்றன. புதுப்புது சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் நமது நேரடி அனுபவங்களாலும், மருத்துவக் கூட்டங் களில் கலந்து கொள்வதாலும், மருத்துவச் சஞ்சிகைகளைத் தொடர்ந்து படித்துவருவதினாலும் தமது மருத்துவ அறிவைக் கறள்கட்ட விடாமல், பட்டை தீட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் இன்றைய டாக்டர்கள்.
எனவே எந்தவித வைத்தியமும் கற்காது கேள்வி ஞானத்தை மட்டும் வைத்துக் கொண்டு சுய வைத்தியம் செய்ய முற்படுவது முறை யற்றது மாத்திரமன்றி உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.
() () ()
உடலியக்கம் குறைந்தவராக மிகுந்த சோர்வுடன், மேலெல்லாம் சாம்பல் பூசியது போன்ற அசாதாரண தோற்றத்துடனும் கவலையும், விரக்தியும் நிறைந்த முகத்துடனும் வந்த அவரைப் பார்த்த உடனேயே அவர் ஏதோ கடுமையான உள்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனப் புரிந்தது.
‘டொக்டர் உடம்பிலை தென்பே இல்லை. அடிக்கடி தடிமன், காய்ச்சல், வயிற்றோட்டம் எண்டு ஏதாவது வருத்தம் வந்து கொண்டே யிருக்குது. பசியில்லை உடம்பும் மெலிஞ்சு கொண்டே போகுது.” என்றார்.
‘சலரோகமாக இருக்குமோ?
சலத்தைச் சோதித்துப் பார்த்த போது சலத்தில் சீனிச்சத்து இருக்கவில்லை.
இரத்தப் பரிசோதனைகளில் அது தெரிய வந்தது!
அவரது இரத்தத்தில் வெண்குருதிக் கலங்கள் மிக மிகக் குறை வாகவே இருந்தன.
39

Page 27
மனித உடலில் இரத்தக் கலங்கள் நாளாந்தம் அழிந்து கொண்டே இருக்க, அதேயளவு புதுக்கலங்கள் நாளாந்தம் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன.
இவருக்கு இப்புதிய உற்பத்தி அருகி விட்டதால், இரத்தத்தில் வெண்குருதிக் கலங்களின் அளவு மிகவும் குறைந்து விட்டது.
இதனால் நோயை எதிர்க்கும் சக்தி குறைந்து, அடிக்கடி பல்வேறு நோய்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்.
இதற்கான காரணம் நீண்ட விசாரணையின் பின்தான் பிடிபட்டது?
அவருக்கு முன்பொருமுறை வயிற்றோட்டம் வந்தபோது, ஒரு டாக்டர் அவருக்கு 'குளோரம் பெனிக்கோல்’ என்ற மருந்தைக் கொடுத்திருந்தார்.
அதில் சுகம் கிடைத்த காரணத்தால், பிறகு வயிற்றோட்டம் வந்த போதெல்லாம், எந்த டாக்டரின் ஆலோசனையுமின்றி, தானாகவே அந்த மருந்தை வாங்கிப் பாவித்து வந்தார்.
குளோரம் பெனிக்கோல்' என்ற இந்த மருந்து நெருப்புக்காய்ச்சல், குக்கல், வயிற்றுளைவு போன்ற நோய்களுக்கு பாவிக்கப்படுவதாகும். குறிப்பிட்ட அளவை மீறாமல், குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் பாவிக்கப்பட வேண்டும். இல்லையேல் ஆபத்தைக் கொண்டு வரலாம்.
வீண் அலைச்சல்களைக் குறைப்பதற்காகவோ, அல்லது மருத்துவச் செலவைக் குறைப்பதற்காகவோ அல்லது தனது பெருமையைக் காட்டு வதற்காகவோ அவர் செய்த சுய வைத்தியத்தால் தேடிக் கொண்ட நோய்க்கு மாற்று வைத்தியம் செய்ய என்னிடம் வந்த போது, என்னால் உதவ முடியவில்லை.
என்னால் மாத்திரமென்ன, எந்த டாக்டராலுமே குணப்படுத்த முடியாத நோய் இது.
அவர் அணு அணுவாகச் சாக, நாங்கள் எதுவும் செய்ய (plqujTLD6) கவலையுடன் கையைப் பிசைந்து கொண்டிருக்க வேண்டியதாயிற்று.
வைத்தியம் என்பது நோயைச் சரியாகக் கணிப்பது மாத்திரமல்ல.
நோய்க்கான மருந்தென்ன? அதை எந்த அளவில் பாவிக்க வேண்டும்?
எவ்வளவு காலம் பாவிக்க வேண்டும். அந்த மருந்துகளால் எதாவது
பக்க விளைவுகள் ஏற்படுமா? அப்படி ஏற்படுமாயின் அதை ஆரம்பத்தி
லேயே அறிந்து கொள்வது எப்படி? போன்ற பலதரப்பட்ட விஷயங் 40

களையும் உள்ளடக்கியது. சுயவைத்தியம் செய்ய முனையும் சாதாரண மனிதர்களால் எப்படி இவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
பாமர மக்கள் பொதுவாக இப்படியான சுயவைத்தியப் பரிசோதனை களில் ஈடுபடுவதில்லை. காய்ச்சல் வந்தால் ‘பனடோல் குளிசை பாவிக்கக் கூடப் பயப்படுபவர்கள் அவர்கள்.
மருந்து பாவிப்பதற்கு மாத்திரமன்றி சாப்பிடுவது, குளிப்பது, முழுகுவது எல்லாமே டாக்டரின் புத்திமதிப்படியே செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். சிலவேளைகளில் முகம் கழுவுவது சுடுதண்ணிரிலா என்று கேட்பதற்கு நாலு ஐந்து மைல் பிரயாணம் செய்து டாக்டரிடம் வரும் வெகுளித்தனமான பாமர மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அசாதாரண துணிச்சலுடன் மூடத்தனமாகச் சுய வைத்தியத்தில் ஈடுபடுவது பொதுவாக ஒரளவு படித்தவர்களே. மருந்துக் கடைக்காரர், ஆசிரியர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், டாக்டர்களின் உறவினர் ஆகியோர் சுயவைத்தியத்திற்குப் பெயர் போனவர்கள்.
ஒரு நண்பர் கூறிய கதை ஞாபகத்திற்கு வருகிறது.
சுய வைத்தியம் செய்வதில் பெருமை கொள்ளும், அதைப்பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் விஞ்ஞானப்பட்டதாரி ஒருவர் இருந்தார். அவரது பிள்ளைக்கு அடிக்கடி தலைவலி வருவதுண்டு. "சைனசயிட்டில்’ வருத்தமாக இருக்கலாம் என்றெண்ணி பல காரமான நுண்ணுயிர் கொல்லி மருந்துகளையும் கடுமையான வலி நிவாரணிகளையும் கொடுத்துப் பார்த்தார். எதுவித சுகமுமில்லை. தலையிடி அடிக்கடி வரத்தொடங்கியது.
பயந்து போன அவர், நரம்புத்துறை வைத்திய நிபுணரிடம் சென்றி ருக்கிறார். கண்ட கண்ட மருந்துகளைப் பாவிப்பதற்காக அவரைக் கடிந்த வைத்திய நிபுணர், தலையிடிக்கான காரணம் கண்பார்வைக் கோளாறுதான் என்று கூறி கண் வைத்திய நிபுணரிடம் அனுப்பி வைத்தார்.
கண் வைத்திய நிபுணர் சிபார்சு செய்து மூக்குக்கண்ணாடியை அணியத் தொடங்கியதும், எந்த வித மருந்துகளுமின்றியே அவரின் பிள்ளையின் தலையிடி மறைந்து விட்டது!
சுயவைத்தியம் என்பது சாதாரண மக்களுக்குத் தான் ஆபத்தானது என்பதில்லை. டாக்டர்களும் இதற்கு விதிவிலக்காக முடியாது.
41

Page 28
ஒதுக்குப் புறமான காட்டுப் பிரதேசத்தில் தனியே வேலை செய்து வந்த டாக்டர் ஒருவருக்கு திடீரென ஒருநாள் சலப்பையில் கல் அடைசல் என்று சொல்லப்படும் ‘ரீனல் கொலிக் வயிறுவலி வந்து விட்டது. வலியால் மிகவும் கஷ்டப்பட்ட அவர், வேறு எந்த டாக்டரையும் கலந் தாலோசிக்க முடியாத சூழ்நிலையில் தனக்குத்தானே ‘பெத்திடீன்’ என்ற ஊசி மருந்தை ஏற்றும்படியாயிற்று. சுகம் வந்தது.
இதன் பின் அவருக்கு அடிக்கடி அந்த நோய் ஏற்படத் தொடங்கியது. அடிக்கடி தனக்குத் தானே ஊசி ஏற்றிக் கொண்டார். உண்மையில் அடிக்கடி வலி ஏற்பட்டதா, அல்லது வலி ஏற்பட்டதாகப் பாவனை செய்தாரா தெரியாது. ஏனெனில் ‘பெத்திடீன்' என்ற அந்த மருந்து சிறந்த வலி நிவாரணி மாத்திரமன்றி ஓரளவு போதையையும் கொடுக்கக்
ՑռtԳԱ 15l.
ஆஸ்பத்திரியில் இருந்த ‘பெத்திடீன் ஊசிக் குப்பிகள் மாயமாக மறையத் தொடங்கின. அவரால் கணக்குக் காட்ட முடியவில்லை!
பிறகு ஆஸ்பத்திரியில் பணமும் காரணமின்றிக் கரையத் தொடங் கியது. ஊசி மருந்து வெளியே வாங்குவதற்காக!
விசாரணையின் பின் வேலையை இழந்தார்.
போதை ஊசிக்கு அடிமையான அவரால் இன்றும் அதிலிருந்து விடுபட முடியவில்லை.
தன்னை அறியாத புது டாக்டர்களைக் கண்டு விட்டால் ஏதாவது சாக்குப் போக்குக் கூறி ஒரு பெத்திடீன் ஊசி ஏற்றுவித்துக் கொள்வார். தன்னைப் பற்றி அறிந்த டாக்டர்களைக் கண்டால் ஏதாவது பொய்சாட்டுக் சொல்லிச் சிறிது பணம் கறந்து கொண்டு ஊசி மருந்து வாங்குவதற்காக மருந்துக் கடைக்கு ஒடுவார்.
அவரை அறிந்த டாக்டர்களும் மற்றவர்களும் அவரின் தலையைக் கண்டாலே ஒடி ஒளிந்து கொள்ளும் அளவிற்கு இழி நிலைக்கு வந்து விட்டார்.
மக்கள் மத்தியில் பெருமையுடனும், புகழுடனும் வாழவேண்டிய டாக்டர் இன்று பிச்சைக்காரனைப் போல் போதை ஊசிக்காக இரந்து திரிய வேண்டி வந்ததற்கு காரணம் இந்தச் சுயவைத்தியம் தானே!
சுய வைத்தியம் ஜீவநாசினி.
42

. سه " rk يح أو بأجمل
Сека is . . . .
്.
இழப்qக்களை ஈடுகட்டுவோம்
மேகம் கறுத்துப் போய், கொட்டித் தீர்க்கலாமா எனக் கனத்து
நின்றது.
வடக்குப் பக்க ஜன்னலூடாக மெல்லென வீசிய குளிர்காற்று, விறைத்துக் கிடந்த உடலின் ரோமங்களைச் சிலிர்த்து நிமிர வைத்தது.
மனமும் சோகத்தில் கனத்துச் சோர்ந்துகிடந்தது.
டிஸ்பென்சரியில் சனக்கூட்டம் இல்லை! தெருவும் வெறிச்சோடிக்
கிடந்தது!!
தை மாதத்தின் குளிரும் மழை மூட்டமும்தான் சனங்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறது என்று சொல்லமுடியாது.
நேற்று மாலை நடந்த பிரளயம்.?
43

Page 29
அதிகாலை ஐந்தரை மணிக்கே, எங்களைக் கதி கலங்கித் துயில் கலைய வைத்தது முதல் ஷெல் அடி. தொடர்ந்து நாலா பக்கமும் மாறி மாறி ஷெல் அடி. அந்தக் காம்பின் நாலு மைல் சுற்றாடலில் உள்ள அனைத்துக் கிராமங்களுமே கதி கலங்கிப் பயந்து அடங்கிக் கிடந்தன.
எங்கும் அமைதி! இடையிடையே குண்டு வெடிச் சத்தங்கள்: அதனிடையே காயம் பட்டவர்களை ஏற்றிக் கொண்டு விரைந்து செல்லும் வாகனங்களின் இரைச்சல்கள்.
ஷெல் அடி சிறிது குறைகிறதே என மனம் ஆற.
.இராட்சத அலுமீனியக் கழுகுகள் இரைச்சலோடு வந்து குண்டு களையும், துப்பாக்கி ரவைகளையும் மாறி மாறி உமிழ்ந்து.
ஓ! அன்று எமது மண்ணில் எத்தனை இழப்புக்களோ?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக. எனது குடும்பத்துக்கும் எனது டிஸ்பென்சரிக்கும் வேண்டிய பெண் ஒருத்தியின் ஒரே தம்பி, ஷெல் அடியில் அதே இடத்தில். அதே கணத்தில்.
என்ன பரிதாபம். ஐந்து மணமாகாத பெண்களுக்கு ஒரே தம்பி; குடும்பத்தின் நிரந்தர வைப்புப் பணம் என நம்பினார்கள்!
ஆனால் அவனோ..? வீட்டைவிட நாட்டிற்குத் தனது சேவை அதிகம் தேவை என நம்பினான், செயற்பட்டான்.
அந்தப் பணிக்காகவே தனது உதிரத்தைக் கொட்டிவிட்டான். உயிரையும் கொடுத்துவிட்டான்.
ஒரு வருடத்துக்கு முன் கூட, எங்களுக்கு முருங்கைக் காயும், தூதுவளம் இலையும் அன்போடு கொண்டுவந்து கொடுத்த மீசை கூட அரும்பாத அந்தப் பால் வடியும் முகத்தை என்னால் எப்படி மறக்க முடியும்.?
இப்படி எத்தனை இழப்புக்கள். ஒவ்வொரு வீட்டிலும். ஒவ்வொரு ஊரிலும். ஒவ்வொரு பிரதேசத்திலும்.
உயிரின் இழப்புக்கள். அங்கத்தின் சிதைவுகள்.
எத்தனை இழப்புக்கள் வந்தாலும், எமது மக்கள் இன்னமும் நம்பிக்கையை இழக்கவில்லை!
44

எத்தனை தடங்கல்கள் வந்தாலும் தயங்காது தாண்டிப் பாயும் மன உறுதியை இழக்கவில்லை.
இந்த நம்பிக்கைகளும், மனஉறுதியும் இழக்கப்படாமல் இருக்கும் வரை - ஷெல் அடியும், பொம்மர் குண்டும், எரிபொருள் தடையும், பொருளாதாரத் தடையும், ஏன் தடம் புரளும் மத்தியஸ்தங்களும் கூட எம்மை உசுப்பமுடியாது.
‘டொக்டர். டொக்டர்’
சிந்தனை கலைந்து தலை நிமிர்ந்தபோது, ஒரு இளந் தம்பதிகள் குழப்பம் நிறைந்த முகத்துடன் நின்றிருந்தனர். அவள் நிறைமாத வயிற்றுடன் கூட.
"உங்களோடை ஒரு விஷயம் கதைக்கவேணும்.”
‘சொல்லுங்கோ’
‘எங்களுக்கு ரெண்டு பிள்ளையஸ், அடுத்தடுத்துப் பெத்துப் போட்டம். மூண்டாவது வயித்திலை, பிள்ளையஞக்கு மூண்டு வயதும், ஒரு வயதும்தான்.
இதுக்குமேலை பெத்தால் எங்களாலை வளத்து ஆளாக்க ஏலாது.
இந்தப் பிள்ளை பிறந்த கையோடை தடை ஒப்பிரேஷன் அவவுக்குச் செய்விக்க வேணும். நீங்கள்தான் இந்த ஒப்பிரேஷனை ஒழுங்கு செய்து, செய்விச்சுத் தரவேணும்” எனக் கணவன் ஒரே மூச்சில் கொட்டித் தீர்த்தான்.
அவர்கள் கேள்வி நியாயமானதுதான்.
அளவானதும், குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி விட்டதுமான குடும்பம், ஆரோக்கியமான மகிழ்ச்சிகரமான குடும்பமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியாததும் அல்ல.
ஆனால்..?
நான் ஒரு சாதாரணமான, வருவாய்களுக்காக மட்டும் தொழில் பார்க்கும் டொக்டர் அல்ல!
இனப்படுகொலைகள் தயவு தாட்சண்யமின்றி நடக்கும் ஒரு போராட்ட சூழ்நிலையில், சங்கமித்து வாழ்பவன். எனவே நாம் ஏற்கனவே
45

Page 30
மருத்துவ ரீதியாகக் கற்றுக் கொண்டவைகளையும், சரியெனப் பூரணமாக நம்பியவைகளையும் காலத்தின் தேவையை ஒட்டி மீள் பரிசீலனை செய்து பார்க்கவேண்டியது அவசியம் என்று நம்புபவன்.
எனவே அந்தத் தம்பதிகளின் கேரிக்கையை எப்படி என்னால் மனப்பூர்வமாக நிறைவேற்ற முடியும்?
கொக்கட்டிச் சோலையில் இருநூறு பேரும், மன்னாரில் ஐம்பது பேரும், கிளிநொச்சியில் முப்பது பேரும், யாழ்ப்பாணத்தில் தினமும் நாலைந்து பேருமாக, எமது இனம் தினம் தினம் ஆரவாரமின்றி அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கையில் குடும்பக்கட்டுப்பாடு பற்றி போதிப்பதோ, வலியுறுத்துவதோ அல்லது அதற்கு அனுசரணையாக நிற்பதோ எப்படி நியாயமாகும்?
அதேபோல், இந்தச் சூழ்நிலையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய நினைப்பது, எமது இனத்துக்கு நாமே குழிபறிப்பது போலாகாதா?
ஒவ்வொருவரும் தம்மால் எத்தனை குழந்தைகளைப் பெற்று, முறை யாக வளர்த்து ஆளாக்க முடியுமோ, அத்தனை குழந்தைகளைப் பெறு வது நியாயமானதே. தமது அற்ப சுகங்களுக்கும், செளகரிய வாழ்க்கைக்
குமாக ஒன்று இரண்டோடு குடும்பக் கட்டுப்பாட்டில் இறங்குவது இன்றைய சூழ்நிலையில் சரியாகுமா?
அதிக குழந்தைகளைப் பெறுவதன் மூலம், எமது இனத்தின் தொகையைப் பெருக்கி, இனமேலாதிக்கம் பெறவேண்டும் என்பது என் எண்ணமில்லை. அது எனக்கு உடன்பாடானதும் அல்ல.
ஆனால். சிறுக சிறுக அழிந்து கொண்டிருக்கும் எமது இனத்தைப் பூரண அழிவிலிருந்து காக்க வேண்டும்! இல்லையேல் சரித்திரப் புத்தகத்தில்தான் எமது இனத்தின் பெயர் இருக்கும்.
எத்தனையோ பேரை ஏற்கனவே இழந்துவிட்டோம்!
எமது இலட்சியம் நிறைவேறுவதற்கிடையில் இன்னமும் எத்தனை பேரை இழக்கப் போகிறோமோ தெரியாது!
எமது இழப்புக்களை ஈடு செய்ய வேண்டாமா?
எனது எண்ணங்களை அவர்களுக்கு விளக்கினேன்.
‘'நீங்கள் சொல்கிறது சரிதான். ஆனால் நாங்கள் எங்கட
குடும்பத்தைப் பற்றியும் யோசிக்க வேணும்தானே! நான் ஒரு கவர்ண்
மென்ட் சேர்வன்ட். எனக்கு வாற மட்டுமட்டான சம்பளத்திலை வீட்டுச் 46

செலவைப் பாக்கவேணும். பிள்ளையஞக்கு உடுப்பு, பென்சில், பேனை வாங்க வேணும். பிறக்கப் போறதுக்கு பால்மா எப்பிடி வாங்கப் போறன் எண்டு இப்பவே யோசிக்க வேண்டிக் கிடக்கு.
.அதுக்கிடையிலை நாலாவது பிள்ளையைப் பற்றி நினைக்க ஏலுமே?”
அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
‘ஆனால் நீங்கள் கேக்கிறது கருத்தடை ஒப்பிறேசன். அது நிரந்தரமானது பிறகு மாத்த முடியாது.
.இண்டைய நிலைமையில ஆருக்கு எப்ப என்ன நடக்கும் எண்டு சொல்ல ஏலாது. நிரந்தரமான ஒப்பிரேசனை விட்டிட்டு ஏதாவது தற்காலிக முறைகளை இப்போதைக்குப் பாவிக்கலாம்தானே..?”
புரிந்து கொண்டார்கள்.
ஒப்புக் கொண்டார்கள்.
பின்னொரு நாளில் வந்தவரின் கதை சற்று வித்தியாசமானது!
“உங்களைத்தான் நம்பி வந்திருக்கிறன் டொக்டர். எப்பிடியாவது உதவி செய்யுங்கோ’
எல்லாவற்றையும் இழந்து சலித்து நிற்பது போன்ற தோற்றம்! ஆனால்...! ஏதாவது நம்பிக்கைக் கீற்று தெரிகிறதா என அவாவுறும் கண்கள்!
‘என்ன விஷயம். அமைதியாகச் சொல்லுங்கோ’
‘அமைதியா. எனக்கா..?’ சோகப் புன்னகை சிந்தினார்.
“மூண்டு வருஷத்துக்கு முந்தி, எனக்குக் கருத்தடை ஒப்பிறேசன் செய்விச்சுப் போட்டன்.
..இப்ப. இப்ப. எனக்கு மாற்று ஒப்பிறேசன் செய்ய ஏலுமே?”
'எதுக்காக மாற்று ஒப்பிறேசன்? இரண்டாம் கலியாணம் கட்டியிருப் பாரோ? இல்லாவிட்டால் வைப்பாட்டி வைச்சிருக்கிறாரோ?. அவள் பிள்ளை வேணும் எண்டு நச்சரிக்கிறாளோ? எனக் குருட்டு யோசனை வந்தது.
47.

Page 31
‘மாற்று ஒப்பறேசன் செய்யலாம்தான். ஆனால் அது அவ்வளவா சரிவாறத்தில்லை. ஒப்பறேசன் செய்தாலும் பிள்ளை உண்டாகிறது
நிச்சயம் இல்லை. *
.அதுசரி உங்களுக்கு ஏன் மாற்று ஒப்பரேஷன்”
“எனக்கு இரண்டு பிள்ளையஸ். அதுகளை ஒரு குறையுமில்லாமல்
வளர்த்து, நல்லாப் படிப்பிச்சு ஆளாக்க வேணும் எண்டு நினைச்சு, எனக்குத் தடை ஒப்பிரேசன் செய்விச்சனான்.
.போன வரியம், இளையவள் ஷெல் அடிச்சு, என்ரை கண் முன்னாலேயே துடிச்சுச் செத்துப் போனாள்.
பிறகு போன மாதம் ஷேல் அடிக்குப் பயந்து, மூத்தவனைத் தூக்கிக் கொண்டு நான் ஓடயிக்கை, ஹெலி சுட்டு, வயித்தில சன்னம் பட்டு. பத்து நாளா ஆஸ்பத்திரியிலை கிடந்து. அவனும் போட்டான்” கண் கலங்குவதைத் தடுக்க முடியாமல் அவர் விசும்பினார்.
ஓ! இப்படியும் ஒரு கஷ்டமா. துன்பமா. சோதனையா.
இன்னல்களும் தொற்று நோய்போல் ஒரே குடும்பத்தை இப்படிச் சிதைக்குமா.
இன்னமும் எத்தனை உயிர்களை, குஞ்சு குருமான் என வித்தி யாசம் இல்லாமல் இழக்கப் போகிறோம்?
‘என்ரை பேரைச் சொல்ல.
எனக்குக் கொள்ளி வைக்க.
என்ரை பரம்பரை அழிஞ்சு போகாமல் இருக்க. எனக்கு ஒரு பிள்ளை வேணும்” என அவர் உருக்கமாகக் கேட்டார்.
'உன்னுடைய பரம்பரை மாத்திரமில்லை, எங்கடை தமிழ்ச் சமு தாயமே அழிஞ்சுபோகாமல் இருக்கவேணும் என்றால், இனி இங்கே ஒரு கருத்தடை ஒப்பரேஷன் கூட நடக்கக்கூடாது' என எண்ணிக் கொண்டேன்.
48

கலாச்சர சீரழிவுகள்
“வீட்டிலை உதவிக்கு ஆம்பிளைப் பொடியன் ஒருத்தரும் இல்லை. சந்தைக்கும் போறதெண்டால் என்ன, கடைக்குப் போறதெண்டால் என்ன நான்தான் போக வேண்டிக் கிடக்கு”
இதுதான் இன்றைய தமிழத் தாய்மார் பலரினதும் முறைப்பாடாக இருக்கிறது. ஏன்! இன்னமும் ஒருபடி மேலே போய் -
....அவரும் ஊரிலை இல்ல. பாங்கிக்குக் கூட நான்தான் அலைய வேண்டிக்கிடக்கு..” என்று முனகுபவர்கள் பலர் இருக்கத்தான் செய் கிறார்கள்.
எங்கே போய்விட்டார்கள் இந்த இளைஞர்கள் எல்லாம். இந்த ஆடவர்கள் எல்லாம்.?
விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்துவிட்டதால், இவர்கள் எல்லாம் வீட்டைத் துறந்து, தமது பங்களிப்பை அளிக்கக் களம் புகுந்து விட்டார்களா?
இல்லவே இல்லை!
“பிள்ளையளை இஞ்சை வச்சிருந்தால், இயக்கத்தில சேர்த்துப் போடுவாங்கள்!” என்று அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள் ઈી6ofાં.
49

Page 32
“பொடியள் இருக்கிறார்கள்தானே, போராடிச் சுதந்திரம் பெற்றுத்தர, அதுமட்டும் எங்கட பிள்ளையளை பாதுகாப்பாக வெளிநாட்டில இருக்கட்டும்”, என்று செயற்படுகிறார்கள் வேறு சிலர்
“பொம்பிளைப் பிள்ளையஞக்குச் சீதனம் தேடவேணும்” என்று ஓடுபவர்கள் இன்னும் சிலர்.
சொகுசான வாழ்க்கை தேடி ஓடுபவர்கள் பலர். இந்தச் சுயநலக்காரக் கும்பல்களின் நோக்கம் என்ன? அவர்கள் போராடிச் சுதந்திரம் பெறட்டும், நிலைமை சீர்திருந்
தட்டும், அமைதி வரட்டும், அதன்பிறகு நாங்கள் நாடு திரும்பி, நிம்மதி யாக, ஆடம்பரமாக, செல்வாக்குடன் வாழ நினைக்கிறார்கள்.
பிழைக்க வழி தெரிந்தவர்கள் - ஆனால் முன்னைய பண்டா போல், இன்றைய அதி உத்தமர் போல் முதுகெலும்பு இல்லாத கோழைகள்!
மற்றவர்களது உழைப்பில், தாம் ஆதாயம் தேட முயலும் ந வஞ்சகர்கள்!
ஆனால்.
ஒரேயடியாக மறுக்கப்பட்ட அரசாங்க வேலை வாய்ப்புக்கள், பயந்து பயந்து குறைக்கப்பட்ட தனியார்துறை வேலை வாய்ப்புக்கள், தமிழரது பொருளாதார வளங்கள் முயற்சிகள் மீது திட்டமிட்டுத் தொடுக்கப்பட்ட
நயவஞ்சகத் தாக்குதல்கள், புதிய எரிபொருள், பொருளாதாரத் தடைகள்.
இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, எமது பொருளாதாரம் ஒரேயடியாகச் சாய்ந்துவிடாமல், முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பது இவர்களது இந்த வெளிநாட்டு உழைப்புத்தான் என்பதும் உண்மை.
குடிசைகள் அழகான வீடுகளாகக் கோலங்கொள்கின்றன.
கந்தல் துணிகள், நேரமொரு நவீன ஆடைகளாகச் சோபனம் கொள்கின்றன.
ஒரு நேரச் சோறு கூடக் கிடைக்காதவர்கள், கேக்கும் ஐஸ்கிறீமும் தெவிட்டுகிறது என்கிறார்கள்.
இவையெல்லாம் தேவையான வளர்ச்சிதான். காலமாற்றத்தின் நியதிதான்.
50

ஆனால் இதைப் பெறுவதற்காக நாம் எதை, எதையெல்லாம் இழக்க வேண்டியதாயிற்று.
மூன்று சிறு சம்பவங்களைக் கூறுகின்றேன். உங்களுக்கே புரியும். அவனின் சீரழிவு
என்னுடன் தனிமையில் அந்தரங்க விஷயங்களைப் பற்றிக் கதைக்கவெனத் தயங்கியபடி வந்தான்.
புதிதாக மணமானவன், மாலை சூட்டி மாதம் ஒன்று கூட ஆக வில்லை. அதற்கிடையில் இந்தச் சிக்கல்.
ஏமாற்றம் தரும் உறவு! புது வாழ்க்கை ஒட்டாமலே பிரிந்து விடக்கூடிய நிலை!!
தனிமையில், மங்கிய ஒளியில் அவளை அணுகியவுடனேயே அவன் சோர்ந்து விடுகிறான். அவனால் முடியவில்லை.
இயலாமை. ஏமாற்றம். சலிப்பு. அவள் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறாள். ஏமாற்றம். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் தொடர்கிறது. ஒரு நாளா?. இரண்டு நாளா?. மாதம் ஒன்று கழியப் போகிறது.
இனியும் முடியாது. அவள் பொறுமை இழந்து விட்டாள். உறவை முறித்து ஒரேயடியாகப் பிரித்து விடலாமா என்ற தனது எண்ணத்தை அவனுக்குக் கோடி காட்டி விட்டாள்.
‘அப்படி நேர்ந்தால் அந்த அவமானத்துடன் உயிர் வாழ முடியுமா? என்ற ஏக்கம் அவனுக்கு. என்னிடம் ஓடி வந்தான்.
பொறுமையுடன், பூரணமாக அவனைப் பரிசோதித்தேன். அவனது உறுப்புகளில் எந்தக் குறையும் இல்லை.
ஏதோ மனோவியல் சிக்கலாகத் தான் இருக்க வேண்டும்.
நிதானமாகப், புரிந்துணர்வுடன் அவனுடன் நீண்ட நேரம் உரை யாடினேன். அவனது கடந்த கால வாழ்க்கையை பற்றி விசாரித்தேன்.
மூன்று வருடங்களாக, மத்திய கிழக்கு நாடொன்றில் பெரும்
முதலாளி ஒருவனின் தனிப்பட்ட டிரைவராக கடமையாற்றினான். கை
நிறையச் சம்பளம். வயிறு நிறையச் சாப்பாடு, நிம்மதியான வாழ்க்கை. 51

Page 33
அப்பொழுதுதான் அந்த பங்காளாவில் கடமையாற்றிய ஒரு சிங்களப் பணிப்பெண்ணின் நட்புக் கிடைத்தது.
நட்பு நெருங்கியது. மேலும் இறுகியது. படுக்கையறை வரை சென்று விட்டது.
அப்பொழுது அவனுக்கு எல்லாமே நிறைவாக முடிந்தது! எந்த இயலாமையும் இருக்கவில்லை!
எனக்குத் துரும்பு கிடைத்து விட்டது! அதை வைத்துக் கொண்டு, மனோதத்துவ ரீதியில் அவனை மேலும் நெருங்கி விசாரித்த போது, அந்த உறவு அவனது மனத்தை மிக ஆழமாகப் பாதித்து விட்டது! தான் ஒரு பெரிய குற்றத்தைச் செய்து விட்டதாகத் தன் மனதுக் குள்ளேயே மறுகினான்.
பழைய சுகங்கள் மலர் மணமாக தென்றலோடு கூடிக்குலாவி மனத்தை நிறைக்கின்றன.
பழையவளை மறக்க முடியவில்லை. அந்த நேரத்தில் புதிய வளுக்குத் துரோகம் இழைத்ததாக மனம் கோணுகிறது.
இதனால் இவளை நெருங்கும் போதெல்லாம், குற்ற உணர்விற்கு ஆளாகி மனந்தத்தளித்து இயலாமைக்கு ஆட்பட்டான்.
அவன் முன்பு செய்தது பிழையென்ற போதும், அந்தக் குடும்பம் விவகாரத்து வரை சென்று பிரித்து விடாமல் இருப்பதற்கு, என்னால் ஆகக்கூடியதைச் செய்ய வேண்டும்.
அவனுக்கும் பல விஷயங்களைப் புரிய வைத்தேன். பல சம்பவங் களை உதாரணம் காட்டினேன். குற்ற உணர்வை இழக்க வைத்து, நம்பிக்கையை அவன் மனதில் வளர வைத்தேன். சில மருந்துகளும் உதவின.
அண்மையில் பை நிறைய கற்கண்டுடன் முகம் நிறைந்த சிரிப்பு டனும் என்னிடம் வந்தபோது, என்னால் கூட மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை.
இன்னுமொரு சீரழிவு
அவனை இழுத்து வராத குறையாக என்னிடம் அழைத்து வந்தனர்.
மொட்டைத் தலை! நிர்ச்சிந்தையாக எதையோ எங்கோ தூரத்தில் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தான்.
52

கேட்ட கேள்விக்குப் பதிலில்லை. தட்டிப் பார்த்த போதும், உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை!
கூட்டிக்கொண்டு வந்த அவனது மனைவியும் உறவினர்களும் ஏக்கம் தெளியாமல் கவலை வழிய நிற்கிறார்கள்.
சவூதி அரேபியாவிற்கு அவன் போய் ஆறு மாதம் கூட இருக்கா தாம். திடீரென ஒரு நாள் கட்டுநாயக்காவில் வந்து இறங்கியிருக்கிறான். இவர்களுக்குத் தெரியாது. அவன் அறிவிக்கவில்லை. அறிவிக்கக்கூடிய மனத்தெளிவுடன் இருக்கவில்லை.
கட்டுநாயக்காவில் இவன் வெறித்த பார்வையுடன் நிற்கையில், முடிச்சு மாறிகள் இவன் உடமைகளைச் சுருட்டி விட்டனர் போலும், வெறுங்கையுடன் நின்ற இவனைக் கண்ட ஒரு உறவினர் விசாரித்தபோது இவன் வாயே திறக்கவில்லை. மிகுந்த கஷ்டத்துடன் இவனை ஊருக்கு கூட்டி வந்து மனைவியிடம் ஒப்படைத்து விட்டான்.
வீட்டிற்கு வந்ததும் எதுவும் பேசவில்லை! கேட்ட கேள்விகளுக்கு மறுமொழி எதுவுமில்லை. சிரிக்கவும் இல்லை, அழவும் இல்லை. ஊட்டினான் உண்கிறான். பருகினால் குடிக்கிறான். உடையைக் கொடுத்தால் மாற்றுகிறான். எந்தவித உணர்வோ உணர்ச்சியோ இல்லை. எல்லாம் மறந்து, மரத்து மரக்கட்டையாக நிற்கிறான். ஏதோ திடீர் அதிர்ச்சியால் மனம் பேதலித்து விட்டது! ஏன் எப்படிப் பேதலித்தது. எப்படி கொழும்பு வந்து சேர்ந்தான். ஒன்றுமே அவர்களுக்குப் புரியவில்லை எனக்கும் தான்.
மனோதத்துவ வைத்திய நிபுணரிடம் அனுப்பி வைத்தேன்.
அப்பொழுது அவனது சவூதி அறை நண்பரின் கடிதம் அவர் களுக்குக் கிடைத்தது.
‘ஊரிலிருந்து வந்த ஒரு கடிதத்தைப் பார்த்தபின் தான் இப்படியாகி விட்டான். வெறுமையான பார்வையுடன் திரிந்தான். வைத்தியரிடம் செல்ல மறுத்து விட்டான். வேலைத்தளத்தில் ஏற்பட்ட ஏதோ தகராறில் குற்றம் விசாரிக்கப்பட்டு அந்த நாட்டு வழக்கப்படி மொட்டையடிக்கப் பட்டான். பிறகு ஊருக்கு அனுப்பப்பட்டான் என எழுதியிருந்தான்.
பிறகுதான் அவனுக்கு வந்தது என்ன கடிதம் என்று தேடிப்பிடித்து பார்த்திருக்கிறான்.
53

Page 34
மொட்டைக் கடிதம்' - நீ உங்கு உழைத்து வாடுகிறாய். இங்கு உனது மனைவி தனது பழைய காதலனுடன் உனது உழைப்பில் உல்லாசம் காண்கிறாள்' என்று கருத்துப்பட எழுதியிருந்தது.
உடனே உறவினர்கள் இங்கு விசாரித்துப் பார்த்திருக்கின்றனர். அவள் ஒழுக்கமான அடக்கமான பெண். ஒருவரையும் காதலித்திருக்க வில்லை. எப்பொழுதும் எந்தக் காதலுடனும் உல்லாசமாகக் கொண்டாட வில்லை.
யார் இந்த இழிந்த நாகரீகமற்ற மொட்டைக் கடிதத்தில் எழுதியது? துருவித் துருவி ஆராய்ந்ததில் அது வெளிப்பட்டது.
அவளை முன்பு மாணவப் பருவத்தில் ஒருவன் விரும்பி இருக்கிறான். ஒரு தலைக்காதல். பின் அவளை மணமுடிக்கவும் காத்திருக்கிறான். அதுவும் முடியவில்லை.
விரக்தியடைந்த அவன் கோரமான பழி வாங்கலில் இறங்கினான். விஷயம் புரிந்ததும் வைத்தியம் இலகுவாயிற்று.
அவர்களின் சீரழிவு
புத்தம் புதிய சேலை, பளபளக்கும் தாலி, மஞ்சள் பூசியதும் பளிச்செனத் தெரியும் கன்னம், அழகான பெரிய குங்குமப்பொட்டு, நாணமும் பூரிப்பும் பொலியும் முகம்.
புதிய சேட், இவள் என் மனைவி, இவளை நான் காப்பேன் என்ற உறுதியும் பொறுமையும் காட்டும் கம்பீர முகம்.
பார்த்தவுடனேயே புதுமணத் தம்பதிகள் எனப் புரிந்தது. தமது புது வாழ்க்கையை ஒழுங்காகத் திட்டமிட்டு அமைக்க என்னிடம் ஆலோசனை பெற வந்திருப்பார்கள் என நினைத்தேன்.
“தாங்கள் வெளிநாட்டிற்குப் போகப் போறம், பிளைட் இன்னும் சில நாட்களில் கிடைச்சிடும் போலையிருக்கு.
.ஆனால் இவவிற்கு மாதச் சுகயினம் வரப்பிந்திவிட்டது”
பிரயாணம் பண்ணினால் கரு அழிந்து விடும் என்று பயப்ப கிறார்கள் போலும்! vn
‘பயப்பட ஒன்றும் இல்லை. கொழும்பு போகும் வரைக்கும் தான் பிரயாணம் கொஞ்சம் கஷ்டம். ஆனால் ஒன்றும் நடக்காது. பிறகு சொகுசான பிளேன் பிரயாணம்தானே.
54

..அங்கை போனால் நல்ல சுவாத்தியம் சத்தான சாப்பாடு நல்ல மருத்துவ வசதி ஆரோக்கியமான வாழ்க்கை. எந்தப் பயமும் இல்லாமல் துணிந்து பிரயாணம் செய்யலாம்” என்றேன்.
‘அதில்லை டொக்டர்.” அவன் தயங்கினான்.
"...அங்கை போன உடனை கர்ப்பம், பிரசவம் என்றால் கஷ்டம் சமாளிக்க ஏலாது. இரண்டு பேரும் வேலை செய்தால் தான் உழைச்சு சுகமாக இருக்கலாம். நாலு காசு சேர்க்கலாம் என்றபடியால் இப்ப பிள்ளை வேண்டாம். இதை அழிக்க வேணும்.”
எனக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
எத்தனை பேர் பிள்ளை இல்லை என்ற கவலையில் ஏங்கித் திரி கிறார்கள். எத்தனை நேர்த்திக்கடன் வைத்தும் எவ்வளவோ வைத்தியம் செய்தும் பலன் இல்லாமல் வாடுகிறார்கள்.
ஒன்றை ஆக்குவது கஷ்டம். ஆனால் அழிப்பது சுலபம் என்பதைப் புரியாமல் இருக்கிறார்களே.
பல பிள்ளைகளைப் பெற்றவர்கள் என்றால் ஒரு வேளை அவர்களது குடும்பக் கஷ்டத்தை எண்ணியாவது மன்னிக்கலாம்.
ஆனால் இது இவர்களின் முதல்க் கர்ப்பம். இவர்களின் இணைவின் முதல் அறுவடை எத்தனை அரியது. எத்தகைய மகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்தக் கூடியது.
இதை அழிக்க முயல்கிறார்கள். இதை அழித்து விட்டால் இதன் பிறகு குழந்தை பிறக்கும் பாக்கியம் இவர்களுக்கு இல்லாமலேயே போகலாம். தங்களது சொகுசான் வாழ்விற்காகவும் பண ஆசையாலும் இப்படி ஒரு முடிவிற்கு வந்தார்களே எனக் கோபம் வந்தது.
ஆனால் அவர்கள் பிரச்சினை அவர்களுக்குத்தான் தெளிவாகத் தெரியும் என்பதும் புரிந்தது. ஆனால் அழிக்கவா முடியும் சட்டம் இடங்கொடுக்காது. மனச்சாட்சியும் விடாது.
A மறுத்து அனுப்பி வைத்தேன்.
வெளிநாட்டுப் பணம் வேண்டுமென்று சொல்லி இத்தகைய கலாச்சாரச் சீரழிவுக்கு இடமளிக்கத்தான் வேண்டுமா?
55.

Page 35
அmறிற்கு மிஞ்சீடில்
நான் சிறுவனாக இருந்த பொழுதே அறிமுகமான உறவுக்காறப் பெண்ணொருத்தி அவள். எதையுமே வீணாக்கமாட்டாள். எதையுமே வீசி எறியமாட்டாள். எல்லாவற்றையும் பாதுகாத்து வைப்பாள். வலு சிக்கனம்!
பழைய பத்திரிகைகளை சஞ்சிகைகளை எல்லாம் சேர்த்துக் கட்டி வைத்திருப்பாள். பழைய பேப்பர்க்காரனுக்கு விற்பதற்காக. இது சகஜ மானதுதானே என்று யோசிக்கிறீர்கள், இல்லையா?
..உண்மைதான். ஆனால் அவள் அத்துடன் நின்று விட மாட்டாள். பொருட்களை சுற்றி வரும் கசங்கிச் சுருங்கிய கடதாசிகளைக்கூட சுருக்கு நீக்கிப் பேப்பருடன் சேர்த்து கட்டி வைத்து விற்று விடுவாள். காரியக்காரி!
கலண்டரில் தினமும் கிழித்து எறியும் கடதாசியைக் கூட எறிய மாட்டாள். ஒரு கம்பியில் சேர்த்துக் குத்திக் கவனமாக வைத்திருப்பாள். அவசரத்திற்கு ஏதாவது குறிப்புகள் எழுத உதவும் என்று!
56
 

கிழிந்த சிறு கடதாசித் துண்டுகளை கூட வீசமாட்டாள். கூடையில் சேர்த்து வைத்திருப்பாள். அடுப்பு மூட்ட உதவும் என்று!
கடையிலிருந்து பொருட்களைச் சுற்றிக் கட்டிவரும் சிறு சிறு சணல் துண்டுகளைக் கூட எறிய மாட்டாள். பந்து பந்தாகச் சுற்றிக் கட்டி வைத்திருப்பாள். ஏதாவது அவசரத்திற்கு உதவும் என்பதற்காக!
எதிலுமே அதீத அக்கறை, கவனம். சிக்கனம்.
புளி கரைத்த கையைக் கூட வெளியே கழுவமாட்டாள். கறிச் சட்டிக்குள்ளேயே கழுவி விடுவாள் என அவளைப் பற்றி கேலியாகச் சொல்வார்கள்! இப்படியும் ஒரு நப்பியா’ எனச் சிரிப்பார்கள்.
ஆனால் அவளின் எதையும் விரயமாக்காத வீணாக்காத தன்மையைப் போற்றாதவர்கள் இல்லை. இதற்கிடையில் நான் கொழும்பு சென்று படித்து டொக்டராகி விட்டன். ஊவாவின் ஒரு மூலையில் வேலை. நீண்ட நாட்களின் பின் ஊருக்கு வந்திருந்தபோது அவளைக் கண்டதும் அதிர்ச்சியாக இருந்தது.
முன்பு நான் பார்த்த உடல் சிறுத்து, இடை மெலிந்த அழகிய இளந் தாயா இவள்.?
ஈரல் அழற்சிக்காரன் போல் உப்பி ஊதிய முகம். வண்டி வரும் முன்னே மாமி வருவாள் பின்னே என்பது போல் பருத்த வயிறு. தொடை போல் கைகள், தென்னங் குத்திபோல் தொடைகள்.
‘பூதக்கிடாய் போல் வந்தாள்!
‘என்ன மாமி இப்பிடி உடம்பு வைச்சிடுது”
“ஓம் தம்பி உடம்பு வர வரப்பெருக்குது. முன்னைப் போலை
வேலை செய்ய முடியவில்லை. களையாக் கிடக்கு முழங்கால் முட்டுக்களும் உழையுது.” என்று மூச்சு முட்டச் சொன்னாள்.
` உடம்பு கூடினால் இப்பிடித்தான். பாரம் தாங்கேலாமல் காலிலை வாதம் வரப்பாக்கும். பிரஷர் வரும்.
. இருதயத்திற்கு வேலை கூடி இளைப்புக் களைப்பு வரப்பாக்கும். இருதயநோயும் வரலாம். எண்டபடியால் நீங்கள் தெண்டிச்சு உங்கடை உடம்பை நல்லாக் குறைக்க வேணும்.”
'தம்பி என்னெண்டாலும் மருந்து எழுதித் தாவன் இந்த உடம்பைக் குறைக்க”
57

Page 36
'இல்லை மாமி, மருந்து சாப்பிட்டு உடம்பைக் குறைக்க ஏலாது. முந்தி அப்பிடிப்பட்ட மருந்துகள் பாவிச்சவைதான். அதுகள் உடம்புக்குக் கூடாது எண்டு இப்ப பாவிக்கிறது இல்லை.
சாப்பாட்டாலைதான் உடம்பைக் குறைக்க வேணும்.” “என்ன சாப்பிடலாம் சொல்லு”
‘எல்லா இனிப்பையும் நிப்பாட்டுங்கோ. சீனி சர்க்கரை ஏன் பனங் கட்டியையுந்தான். இடை நேரத்திலை நொட்டு நொறுக்குகள் சாப்பாட்டு களும் நல்லாக் குறைக்க வேணும்.
...சோறு ஒரு நேரம் அளவாகத்தான் சாப்பிடவேணும். இடியப்பம் புட்டு போன்ற மாச் சாப்பாடுகளையும் குறைச்சுத்தான் சாப்பிட வேணும்.”
“என்ன தம்பி நீ சொல்லிறதைப் பார்த்தால் ஒண்டும் சாப்பிட ஏலாது போல, பட்டினிதான் கிடக்க வேணும்”
“பட்டினி கிடக்கத் தேவையில்லை உங்கடை சாப்பாட்டு முறை யிலை மாற்றம் தான் தேவை.
.கறிவகைகளைக் கூடச் சாப்பிடுங்கோ. மரக்கறியள் கீரை, இலைக்கறிகளை அதிகம் சாப்பிடுங்கோ. மீன் நல்லது. கூடுதலாகச் சாப்பிடலாம். பயறு, பருப்பு, சோயா வகைகளும் நல்லது” என்று விளக்கினேன்.
புரிந்து கொண்டர்ளோ, கடைப்பிடிச்சாளோ தெரியாது. நான் போய்விட்டேன்.
அடுத்த முறை நான் அவளைக் கண்டபோது அவளின் நிலைமை மேலும் மோசமாகிவிட்டிருந்தது.
உடம்பு இன்னமும் ஊதிவிட்டது. முகத்திலும் கால்களிலும் சரியான வீக்கம். நடந்தால் இளைப்பு. கதைத்தால் இளைப்பு. படுத்தால் முட்டு.
பிரஷர் கூடி விட்டது. இருதயத்தின் தொழிற்பாடு குறைய (Heart Failure) ஆரம்பித்து விட்டது.
வேண்டிய மருந்துகளைக் கொடுத்தேன். அதை நேரந் தவறாமல்
தொடர்ந்து சாப்பிடவேணும் என இடித்து அறிவுறுத்தினேன்.
58

நான் முன்பு கூறிய உணவுக் கட்டுப்பாடுகளை அவள் கவனித்த தாகத் தெரியவில்லை. எனவே மாமாவிடம் அவளது கவலைக்கிடமான நிலைபற்றியும், உணவுக் கட்டுப்பாடுகளை கவனிக்க வேண்டியதின் அவசியத்தையும் விளக்கினேன்.
அடுத்த முறை அவளை நான் சந்திக்கவேயில்லை.
செய்தி கிடைத்துச் சென்ற போது அவளது உடலைத்தான் காணக் கூடியதாக இருந்தது.
காற்றைக் குடித்து உப்பி ஊதிக் குடல் வெடித்துச் செத்த தவளை போல் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு 'பூதம் போல் ஊதி இருதயத்தின் இரத்தக்குழாய் வெடித்து ‘ஹார்ட் அட்டக்கில் அவக்கென்று போய் விட்டாள். ሰ
எனக்கு கவலைக்கு மேல் ஒரே கோபம். எனது சொல்லைக் கேட்டு நடக்கவில்லையே என்று. அவள்தான் போய் விட்டாளே. மாமாவைக் கடிந்து கொண்டேன்.
‘என்ன மாமா, அவளின் ரை சாப்பாட்டைக் கட்டுப்படுத்தி உடம்பைக் குறைக்கச் சொல்லி எவ்வளவு சொன்னான். அவள் தான் கவனிக்க இல்லையெண்டால் படிச்ச நீங்களும் அவளுக்குச் சொல்லி கட்டுப்படுத்த இல்லை. அநியாயமாக இந்த வயதிலை செத்துப் போனாளே.”
‘நான் எவ்வளவு சொல்லிப் பார்த்தனான். அவள் கேட்டால் தானே.
உனக்கு அவளின்ரை குணம் தெரியும் தானே. ஒண்டையும் வீணாக்க மாட்டாள். சாப்பாட்டு விஷயத்திலையும் அப்பிடித்தான்.
சாப்பாடுகள் கொஞ்சமும் மிஞ்சக் கூடாது. மிஞ்சினால் எறிய மாட்டாள். தானே சாப்பிடுவாள். முடியாவிட்டால் கூட முக்கித் தக்கி எல்லாவற்றையும் எப்படியாவது சாப்பிட்டு முடிப்பாள்.”
அவளின் சாப்பாடே அவளுக்கு எமனாகிவிட்டது எதையும் வீணாக் கக் கூடாதுதான். ஆனால் அதற்காக இப்படியா?
தமிழர்களே சிக்கனத்திற்குப் பெயர் போனவர்கள். எதையுமே வீண் போக விட மாட்டார்கள். அதிலும் யாழ்ப்பாணத்தவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
59

Page 37
ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்ற மொழி வழி நடப்பவர்கள் அல்லவா!
முன்பு எம்மவர்கள் பெண் பார்க்கப் போவார்கள். அவர்களுக்குச் சீதனமும் வேணும் சிங்கார நாச்சியும் வேணும். சிங்காரநாச்சி சிக்க மானவளாயும் இருக்க வேண்டும்.
பெண்ணைக் குத்துவிளக்கு ஏற்றும்படி கண்ணியமாகக் கேட்டுவிட்டு, ஒரு நெருப்புக் குச்சியில் சிக்கனமாக ஏற்றுகிறாளா அல்லது பல குச்சிகளை விரயமாக்கிறாளா என்று கடைக்கண்ணால் கவனிப்பார்கள்.
பெண் சாப்பிட்ட பின் கைகழுவச் செம்பில் தண்ணிர் கொடுப்பார்கள். முழுச் செம்புத் தண்ணிரையும் செலவழித்துக் கைகழுவினால் என்றாள் அவளைத் தட்டிக் கழித்து விடுவார்கள். சிக்கனம் காணாது என்று காரணம் காட்டி!
சிக்கனம் சிறப்பானது தான்.
வீண் விரயம் விரும்பத்தகாதது தான்.
ஆனால். ‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் மறக்கக் கூடாது!
DDD
எனது நீண்ட நாள் எழுத்தாள நண்பர் ஒரு நாள் என்னிடம் வந்தார். படித்தவர். பட்டம் பெற்றவர். பண்பானவர். பெரிய பதவியில் இருப்பவர்.
‘டொக்டர் என்னட்டை கொஞ்சம் இப்பரோன் ஊசி மருந்து இருக்கு. முந்தி ஏதோ தேவைக்கு வாங்கினது. இப்ப பிரயோசனம் இல்லாமல் சும்மா கிடக்கு. இதை என்ன செய்யலாம்”
இப்பரோன் (Imteron) இரும்புச்சத்து. நல் இரத்தத்தை அதிகரிப் பதற்காக போடுவார்கள்.
நண்பர் எழுத்தாளர் அல்லவா? ஊசி மருந்தை வீணாக்காது ஏதாவது நல்ல காரியத்திற்குக் கொடுத்து உதவலாம் என்ற சமூக நோக்கில் வந்திருக்கிறார் என எண்ணினேன்.
C
‘அகதி முகாமிலை திருகோணமலைப் பகுதியிலை பாதிக்கப்பட்ட சில குடும்பங்கள் இருக்கினை. அதிலை சிலருக்குச் சரியான ரத்தச் சோகை. அவையஞக்குப் போடலாம்.
60

இல்லாட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்திலை குடுத்தால் அவர்கள் தேவையாளர்களுக்குப் பிரயோகப்படுத்துவினம்.”
'இல்லை டொக்டர். ஏன் வீணாகக் கொடுப்பான்?”
நல் இரத்த ஊசி தானே?. எனக்கே போட்டால் என்ன?.”
எனக்குக் கோபம்தான் வந்தது!
அவர் நல்ல ஆரோக்கியமானவர். பலருக்கு இரத்த தானம் செய்யக் கூடிய அளவிற்கு நல் இரத்தம் உள்ளவர் இந்த கஷடமான கால கட்டத்திலை மனமுவந்து இரத்த தானம் செய்வதை விட்டு விட்டு தனக்கு இன்னமும் இரத்த உசி போடச் சொல்கிறாரே!
இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள். மக்கள் படும் இன்னல்களை. அவலங்களை. இழப்புக்களைப் புரியாமல் தந்தக் கோபுரத்தில் தங்களுக்குத் தாங்களாகவே தனி வாழ்க்கை வாழ்கிறார்களா?
இரும்புச்சத்து ஊசியைத் தேவையின்றி அளவிற்கு அதிகமாக ஏற்றினால் ஈரலைப் பாதித்து பாரிய தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரிந்திருக்க முடியாது.
மருந்துகள் எவையென்றாலும் தேவைக்கு ஏற்பட அளவுடன்தான் பாவிக்க வேண்டும். தேவையின்றி பாவித்தாலோ மிதமிஞ்சிப் பாவித் தாலோ உடலுக்கு நிச்சயம் தீங்குகள் விளைவிக்கும்.
நான் கோபிக்கவில்லை. இந்த ஊசி அவருக்கு அனாவசியமானது என்பதை அமைதியாகப் புரியவைத்தேன்.
OO
அவள் ஒரு சலரோக நோயாளி. டயபிற்றிஸ் என்று பொதுவாகக் கூறுவார்கள்.
இந்நோய் ஏற்பட்டவர்கள் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளை அனுசரிக்க வேண்டியிருக்கும். உடம்பு மெலிவதற்காகச் செய்ய வேண்டிய உணவுக் கட்டுப்பாடுகளைப் போல் அல்லது அதற்கும் மேல் கடைப் பிடிக்க வேண்டியிருக்கும். இதற்கும் கட்டுப்படாவிட்டால் தினசரி ‘இன்சுலின் ஊசி போட வேண்டியிருக்கும்.
61

Page 38
இவளது நோய் உணவுக்கட்டுப்பாட்டிலும் மருந்துக் குளிசைகளிலும் கட்டுப்பட்டு விட்டது. அவள் பிரயாணக் கஷ்டம் உள்ள தூர இடத்தில் வசிப்பதால் அடிக்கடி என்னிடம் வைத்தியத்திற்கு வர முடியாது.
எனவே நோயைப் பற்றியும் உணவுக்கட்டுப்பாடுகள் பற்றியும் குளிசை சாப்பிடவேண்டிய விதம் பற்றியும் விபரமாகக் கூறி ‘நோய் விபரண அட்டையையும் கொடுத்தேன். மருந்துக்கடையில் மருந்து வாங்குவதற்காக பிரிஸ்கிரிப்ஷனும் கொடுத்து வசதியான போது என்னிடம் வந்து காட்டும்படி கூறி அனுப்பி வைத்தேன்.
‘சலரோகம் கட்டுப்பாட்டிலை மட்டும் வைத்திருக்கக்கூடிய நோய் அடியோடு மாற்ற முடியாது எண்டபடியால் மருந்துகளைத் தப்பாமல் தொடர்ந்து சாப்பிட வேணும்.
.கைவிட்டீங்கள் என்றால் நோய் திரும்பவும் கூடி விடும். கூடினால் கண்பார்வை போகலாம். சிறுநீரக அழற்சி வரலாம். இருதயநோய் வரலாம். பாரிசவாதம் வரலாம். மாறாதபுண்கள் ஏற்படலாம். கோமாவும் வரலாம்” என எச்சரித்து அனுப்பி வைத்தேன்.
நீண்ட நாட்களின் பின் அவள் வந்தாள். உடல் மிகவும் கேவலமாக இருந்தது. அரைவாசியாக மெலிந்து விட்டாள். சகிக்க முடியாத துர்நாற்றம் வலதுகாற் பெருவிரலில் புண்!
‘என்ன அம்மா மருந்தைக் கைவிட்டீங்களா?”
‘எந்த நாளும் மருந்து சாப்பிட்டு அலுத்துப் போச்சு. இரண்டு மூன்று மாசமாக மருந்து சாப்பிடாமல் விட்டிட்டன்.
என்ர மோன் வெளிநாட்டிலை இருக்கிறான். அவன் தைரியத்துக்கு ‘டொனிக் மருந்து நிறைய அனுப்பியிருக்கிறான். பெலயினமாகக் கிடக் கெண்டு அந்த டொனிக்தான் இப்ப குடிக்கிறன்.”
'அந்த மருந்துப் போத்தல் கொண்டந்தனிங்களோ?” அவள் காட்டிய மருந்துப் போத்தலைப் பார்த்தன்.
நிறைய இனிப்பு அடங்கிய விற்றமின் டொனிக். பொதுவாக எல்லா டொனிக் மருந்துகளிலும் இனிப்புக் கலந்திருக்கும். இதிலும் அப்பிடித்தான். எனவே சலரோக நோயாளிகளுக்குப் பொருத்தமானதல்ல.
‘ஒரு நாளைக்கு எவ்வளவு மருந்து குடிப்பியள்”
62

'நல்ல ருசியான மருந்து. அளவு பாக்கிறதில்லை. கூடக் குறையக் குடிச்சுப் போடுவா’ கூட வந்தவர் சொன்னார்.
கலரோகத்திற்கான மருந்துகளும் குடிப்பதில்லை. இனிப்பு டொனிக்கையும் அளவிற்கு அதிகமாகக் குடித்திருக்கிறாள். எனவே சாலரோகம் அதிகரிக்காமல் என்ன செய்யும்.
சுற்றியுள்ள கட்டுகளை அவிழ்த்துப் புண்ணைப் பார்த்தேன்.
மூக்கைப் பொத்த வேண்டும் போலிருந்தது. துர்நாற்றம்.
பழுப்பு நிறமாகப் நிணம் கசிந்து கொண்டிருந்தது. ஓரங்கள்
கறுத்துச் சாம்பல் பூத்தது போலிருந்தது. உற்றுப் பார்த்தபோது புண்ணில் காற்றுக் குமிழ்கள்.
புண் அழுகலாகிவிட்டது.
மிகவும் ஆபத்தானது. உடனடி வைத்தியம் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்தாகலாம்.
உடனடியாகப் பெரியாஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டிய ஒழுங்கு களைச் செய்தேன். அங்கு சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.
பெருவிரல் அகற்றப்பட்டது.
தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டது. உயிருக்கு வந்த ஆபத்து காற்பெருவிரலை மாத்திரம் கொண்டு போவதுடன் நின்றுவிட்டது.
அளவிற்கு அதிகமாக டொனிக் குடித்ததால் வந்த வினை இது.
63

Page 39
ཆང་《
கொற்qைலர்கள்+கொலைஞர்கள் = ?
நித்திரையிலிருந்து அவள் திடுக்கிட்டு விழித்து, தான் ஏன் விழித் தேன் எனச் சிந்திப்பதற்கிடையில் குழந்தையின் அனுக்கம் தெளிவாகக் காதில் விழுந்தது. பதற்றத்துடன் இருட்டில் கையைத் துளாவிக் குழந்தையை அணைத்தாள். அதனுடல் அனலாகத் தகிப்பது புரிந்தது.
குழந்தையைத் தூக்கி மடியில் கிடத்திக் கொண்டே, கணவனை அருட்டுவித்து, நெருப்பெட்டியைத் தடவி எடுத்து, தேங்காயெண்ணெய் விளக்கை ஏற்றுவித்தாள். நேரத்தைப் பார்த்தபோது இரண்டு கம்பிகளும் இரண்டுக்கு எதிரே குலவிக் கொண்டு நின்றன.
உதடுகளைத் தனது நாவால் தடவி ஈரலிப்பாக்கிக் கொண்டே, தலையை அசைத்து உடலைக் குறட்டி நடுங்கியது குழந்தை. இன்னமும் ஒரு வயதாகவில்லை. வாற கிழமைதான் முதலாவது பிறந்த தினம்; அதற்கிடையில் இந்தக் காய்ச்சல்,
‘பனடோல் கிடக்கோ லாச்சியிக்கை பாருங்கோ’
‘பனடோலோ.” அவனது குரலில் சலிப்புக் கலந்த ஏளனம்!
9 é.
. பனடோல் இப்ப எங்கை கிடைக்குது. மூண்டு வரியம் கரண்டும் இல்லை, மண்ணெண்ணையும் இல்லை, மருந்தும் இல்லை. நோய் காரராக்கியாவது எங்களை அடக்கலாம் எண்டு பார்க்கிறான் போலை.”
குளிசை கிடைக்கவில்லை. குழந்தையின் காய்ச்சலோ ஏறிக் கொண்டு போகிறது. வலித்து விடுமோ என்ற பயம் வேறு டொக்டர் 64

சிவலிங்கத்தட்டை போகலாமெண்டால் இந்த இருட்டுக்கை டோர்ச் லைட்டும் இல்லாமல், சைக்கிளுக்கு டைனமோவும் இல்லாமல் எப்படிப் போவது?
அவளுக்குத்தான் யோசனை உதித்தது.
‘சந்தியிலை மருந்துக் கடைக்காரத் தம்பிக்கு, கடையோடைதானே வீடு, போய்க் கோளுங்கோவன். ஏதேனும் மருந்து தருவான்!”
மருந்துக் கடைக்காரத் தம்பி அந்த அகால நேரத்திலும் அலுக் காமல், சினக்காமல் எழுந்தான். அனுதாபத்துடன் கதையைக் கேட்டான். கரிசனையுடன் மருந்தைக் கொடுத்தான்.
‘’வெள்ளைக் குளிசையிலையும், மூடிக் குளிசையிலும் பாதிபாதி, ஆறுமணித்தியாலத்திற்கு ஒருக்கால் குடுங்கோ.”
'இரண்டு நேர மருந்து போதும் தம்பி, காலமை டொக்டரிட்டை காட்டிறதுதானே’
“உங்களுக்கென்ன விசரே! நேரத்தையும் வீணாக்கி, காசையும் செலவழிச்சு டொக்டரட்டை காட்டப் போறியளோ? பேசாமை இதைக் கொண்டுபோய்க் குடுங்கோ, இரண்டு நாளிலை சுகமாகிப் போய்விடும்.”
அவன் கேட்ட காசைக் கொடுக்கும் போதுதான், தனது இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி கூடுதலாகக் காசைக் கறந்து விட்டானோ என்ற எண்ணம் மனதின் ஓர் மூலையில் எட்டிப் பார்த்தது. ஆபத்தில் உதவியவனைப் பற்றி அப்படி எண்ணக் கூடாது என்று தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.
இரண்டு நாளாகியும் காய்ச்சல் விடவில்லை. குழந்தையின் உடல் சோர்ந்து, முகம் சினந்து விட்டது. வாய் அவிந்து அக்கரம் போட்டது போல் பால் குடிக்கக் கூட முடியாது தவித்தது.
டொக்டரிடம் ஓடினார்கள். அமைதியாக, நிதானமாகக் குழந்தையைப் பரிசோதித்தார்.
'பயப்பட ஒன்றுமில்லை. சின்னமுத்துக் போடப்போகிறது. மருந் தொன்றும் வேண்டாம். பனடோல் மாத்திரம் குடுங்கோ. ஆனால் ஏன் இந்த வாயவிச்சல் ஏதாவது கடுமையான மருந்து கொடுத்தீர்களா?” என விசாரித்தார்.
இவர்கள் விசயத்தைக் கூறி மிச் சக் குளிசைகளையும் காட்டினார்கள்.
65

Page 40
பதைபதைத்துப் போனார் டொக்டர்.
அந்தக் குளிசைகளைக் கண்டதும், “இவ்வளவு கடுமையான மருந்துகளை இந்தக் குழந்தைக்குக் கொடுத்த மடையன் யார்?”
மடையர்கள் அல்ல கபடர்கள்.
அது 'குளோரம்பெனிக்கால்' என்ற மருந்து. பொதுவாக வெள்ளையும் பச்சையும் கலந்த கூட்டுக் குளிசை (Capsule)யாகவோ அல்லது தனி வெள்ளை நிறமான கூட்டுக் குளிசையாகவோ கிடைக்கும்.
மிக வீரியமான நுண்ணுயிர்க் கொல்லி மருந்து. ஆனால் பல ஆபத்தான பக்க விளைவுகளை அதன் துஷபிரயோகம் கொண்டு வரலாம். இரத்தத்தில் வெண்குருதிக் கலன்களின் எண்ணிக்கையைக் குறைத்து மரணத்தைக்கூடக் கொண்டுவரலாம். எனவேதான் நெருப்புக் காய்ச்சல், மூளைக்காய்ச்சல் போன்ற மிக ஆபத்தான நோய்களுக்கு மாத்திரம் அதன் பாவனையைக் கட்டுப்படுத்தியுள்ளார்கள். அதுவும் இரத்தப் பரிசோதனைகளின் அடிப்படையிலேயேதான் கொடுப்பார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலகர்களுக்கும் கொடுப்பதேயில்லை. அந்த மருந்தைத்தான், மருந்தே தேவைப்படாத இந்தக் குழந்தைக்குக் கொடுத்திருக்கிறான்.
ஈவிரக்கமற்ற மனிதர்கள். இரும்புப் பெட்டிபோல இருதயமும் இரும்பு ஆனதோ!
ஐந்து வருட படிப்பும், ஓரிரண்டு வருடம் உள்ளக வைத்தியப் பயிற்சியும் பெற்ற டொக்டர்கள் மிகுந்த அவதானத்துடனும், நிதானத் துடனும், ஏன் பயத்துடன்கூட உபயோகிக்கும் இந்த மருந்தையும், இதுபோன்ற இன்னும் எத்தனையோ மருந்துகளையும் மருந்துக் கடைக் காரர்கள் தாராளமாக, எந்த மருத்துவரின் மருந்துச் சிட்டையும் இன்றி கட்டுப்பாடின்றி விற்பனை செய்கிறார்கள். வெறும் விற்பனை மாத்திர மல்ல வைத்தியம் கூடச் செய்கிறார்கள்.
தடிமன், காய்ச்சல், சாதாரண வயிற்றோட்டம் போன்ற அறிகுறி களைக் கூறியதும் மருந்து கொடுக்கிறார்கள், கேள்வியோ, பரி சோதனையோ, மருந்து அறிவோ இன்றி நுண்ணுயிர் கொல்லி மருந்து தேவைப்டாத நோய்களுக்குக் கூட அவற்றை கண்டபடி கொடுக்கிறார்கள். இதனால் பல வீரிய மருந்துகள், நுண்ணங்கிகளுக்கு எதிரான தமது செயற்திறனை இழந்து விட்டன.
ஏன் வைத்தியம் செய்கிறார்கள்?
66

மருந்துச் சிட்டைக்கு மருந்து கொடுக்கும் போது குளிசைக்கான பணத்தை மாத்திரம் வாங்கலாம். கூட வாங்கினால் தமது நோயாளர்கள் மற்றக் கடைகளில் விசாரித்தறிந்து இவரது கொள்ளை விலையை அறிந்து, தமது வாடிக்கைக்கடையை மாற்றி விடுவார்கள் என்ற பயம்.
ஆனால் நாரிக்குத்து, காய்ச்சல், இருமல் என்று ஏதாவது ஒரு நோய்க்கு மருந்து கேட்கும் மக்களை, அவர்களது அறியாமையைப் பயன்படுத்தி இரண்டு மூன்று வெவ்வேறு ரக மாத்திரைகளைக் கொடுத்து அதிக பணத்தை அறவிட்டு விடுவார்கள்.
கொள்ளையர்கள்! பகற் கொள்ளையர்கள்!!
போரினாலும், குண்டு வீச்சினாலும், உணவு மருந்துத் தட்டுப் பாட்டினாலும் வாடிக் கிடக்கும் மக்களை, உழைப்பின்றி வாடும் மக்களை எந்தவிதச் சமுதாயப் பொறுப்பும் இன்றிக் கண்மூடிக் கொள்ளை அடிக்கிறார்கள், இந்த மருத்துக் கடைக்காரர்கள்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் சோற்றுக்கு லாட்டரி அடித்த இவர்களில் பலர், இன்று தங்கச் சங்கிலிகளுடன் மோட்டார் சைக்கிளில் பவனி வருவதை நீங்கள் நிச்சயம் கண்டிருப்பீர்கள். சிலர் இரண்டு மூன்று லொறிகள் கூட அதற்கிடையில் வாங்கி விட்டார்கள். சீமேந்து இல்லை. இருந்தால் பல மாடிவீடுகளைக் கூடக் கட்டியிருப்பார்கள்! பாவிகள்.
வெறும் கொள்ளையர்கள் மாத்திரமல்ல, கொலைஞர்களும் கூட!
மிக ஆபத்தான மனநோய் மருத்துகளை எந்தவிதக் கேள்வியும் இன்றி விற்பனை செய்கிறார்கள். எத்தனை தற்கொலைகளுக்கும், இழப்புக்களுக்கும் இவர்கள் காரணமாயிருந்தார்களோ? யார் அறிவார்.
விற்பனைக் காலம் முடிந்துவிட்ட (Expiry date) பல மருந்துகளை சந்தடியின்றி விற்று விடுவார்கள். நோயாளிகளுக்கு ஏற்படப் போகும் பக்கவிளைவுகளையும், ஆபத்துக்களையும் பற்றி இவர்களுக்கு அக்கறையே கிடையாது. பணப்பெட்டி நிரம்பினால் போதும்!
மிக ஆபத்தான மருந்துகள் என உலக நாடுகளால் தடை செய்யப் பட்ட பல மருந்துகளை (உதா பியூடாசொலிடீன், கியூமாரிட்) இவர்களிடம் தாராளமாக வாங்கலாம்.
கியூமாரிட் மருந்து பற்றி ஒரு வார்த்தை.
கருஅழிப்பு மாத்திரை!
67

Page 41
அப்படி நினைத்துத்தான் வாங்குகிறார்கள், விற்கிறார்கள்.
ஆனால் உண்மையில் கரு அழிப்பு மருந்துகூட அல்ல. பரிசோதனை மருந்து. முன் எப்பொழுதோ பாவிக்கப்பட்ட, ஆனால் நீண்ட நெடுங் காலமாத் தடை செய்யப்பட்ட மருந்து. ஏனெனில் கருவுற்றிருக்கும்போது இதனை உபயோகித்தால், கூன், குருடு, செவிடு, மனவளர்ச்சியின்மை போன்ற குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கலாம். அவ்வாறானால் அக்குடும்பத்திற்கு எவ்வளவு சுமை வேதனை!
அதனால்தான் இந்த மருந்து தடைசெய்யப்பட்டது. முறையாக மருத்துவம் படித்த எந்த வைத்தியனுமே உபயோகிக்க மறுக்கும் மருந்து இது.
ஆனால் மருந்துக் கடைகளில் இது சர்வசாதாரணமாக விற்பனை யாகின்றது. கேட்டவுடன் மறுகேள்வியின்றி விற்பனையாகின்றது. மலரப் போகும் சுதந்திர தேசத்தில் அங்கயீனர்களையும், மனவளர்ச்சி குன்றிய வர்களையும் உருவாக்கி குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் சுமையை ஏற்றப் போவதுதான் இவர்களது நோக்கமா?
இன்னமும் எத்தனை தில்லுமுல்லுகள்!
புரோகேன் பெனிசில் ஊசி மருந்து 5-6 மாதங்களுக்கு முன் 1CRC உதவியுடன் கப்பலில் கொண்டு வந்து விநியோகிக்கப்பட்ட போது அதன் விலை குப்பிக்கு ஏழு ரூபா மட்டுமே. இது பல்லாயிரக் கணக்கில் வைத்தியர்களுக்குத் தேவைப்படும். ஆனால் கொடுக்கப்பட்டதோ நூறு, இருநூறுதான். ஆறு மாதங்களின் பின் இன்று அதில் ஆயிரம் ஊசி மருந்துகளை வேறு வழிகளில் வாங்க முடிகிறது. அதே கொம்பனி தயாரித்த அதே ஊசி மருந்து! அதே தொடரிலக்கம் கொண்டது! ஆனால் விலை மாத்திரம் குப்பி இருபத்தி மூன்று ரூபாய்!
இதேபோல்தான் ஏனைய மருந்துகளும். இரண்டரை ரூபாவிற்கு விற்ற எரிதிரோமைசின் இப்போ ஒன்பது ரூபா. பத்து சதத்திற்கு விற்ற விற்றமின் குளிசை நாற்பது சதம். 300% - 400% கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
அண்மையில் ஒரு பெண், இளம்பெண், மூன்று சிறு குழந்தைகளின் தாயார், ஒரு சிறு முதலாளியின் அன்பு மனைவி அநியாயமாக மரணித்து விட்டாள்.
நோயினால் அவள் மரணிக்கவில்லை. மருந்து கிடைக்காததினால் அவள் மரணிக்கவில்லை. சரியான மருந்து, சரியான தருணத்தில் கிடைத்துக்கூட அவள் மரணித்து விட்டாள்.
68

நம்பமுடியாத மரணம்! பரிதாபகரமான மரணம்! சுலபமாகத் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய மரணம்.
அநியாயமாக ஒரு உயிர் பிறபோவதற்கு மருந்துக் கடைக்காரர்கள் காரணமாயிருந்திருக்கிறார்கள்.
அவள் ஒரு ஆஸ்த்மா நோயாளி. கடுமையான ஆஸ்த்மா நோயாளி.
நேரத்திற்கு நேரம் மாத்திரைகள்; அதிகமானால் ஊசி, அதற்கும் அதிகமானால் வாட்டில் அனுமதித்து மருந்து கலந்த குளுக்கோஸ் ஏற்றுவார்கள்.
இது குடும்பத்தினருக்கு ஒரே தொல்லை.
ஊசியை நாங்களே போட்டால் என்ன எனச் சிந்தித்தார்கள். ஆனால் அது ஒரு ஆபத்தான ஊசி. அட்ரீனலின் எனச் சொல்வார்கள். நோயாளியின் நாடித்துடிப்பு, சுவாசம் போன்றவற்றை நுணுக்கமாக அவதானித்துப் போடவேண்டிய ஊசி. ஊசி போடும்போது கூட, மிக்க கவனமாக அநுபவப்பட்டவர்கள் போட வேண்டிய ஊசி. ஏற்றிய ஊசி சிறு ரத்த நாளங்களைத் தாக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி அவதானித்து, கவனமாக சிறிது சிறிதாக ஏற்ற வேண்டிய ஊசி.
முறையாகப் பயிற்சி பெற்ற வைத்தியர்களால் ஏற்ற வேண்டிய ஊசி.
எனவே கடைகளில் தனிப்பட்டவர்களுக்கு விற்கப்படுவதில்லை. அதுவும் டொக்டரின் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் ஒருபோதும் விற்கக் கூடாத ஊசி மருந்து.
ஆனால் அவர்களுக்கு எந்தவிதத் தடையுமின்றி கிடைத்தது. பணம் பாதாளம் வரை பாயும்தானே.
கடும் மருந்துத் தட்டுப்பாடான இந்தக் காலத்தில் கூடத் தாராளமாக அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால் அதற்கேற்ற கொள்ளை விலையில்
அன்று!
அவளுக்குத் தொய்வு இழுக்கத் தொடங்கியது. குளிசைகளுக்குப் பணிய மறுத்தது.
அலுமாரிக்குள் இருந்த ஊசி மருந்தையும், அதை ஏற்றும் குழாயை யும் எடுத்தாள். கொதிக்க வைப்பது, கிருமி நீக்குவது போன்ற நேரம் எடுக்கும் சடங்குகளில் அவர்கள் மினக்கெடுவதில்லை.
69

Page 42
குப்பியை உடைத்தாள். குழாயில் மருந்தை எடுத்தாள். தானே தனது தொடைக்குள் ஊசியைச் சடுதியாகச் செலுத்தி, விரைவாக மருந்தைப் பாய்ச்சினாள்.
விரைவாக, மிக விரைவாக
ஆனால் ஆஸ்த்துமா அடங்கவில்லை.
‘இன்னுமொரு ஊசி போட்டு விடுங்கோ’ அருகே வந்த கணவனிடம் கேட்டாள்.
முதல் ஊசி போட்ட ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே அடுத்த ஊசி!
முன்பு போலவே எந்தவித பாதுகாப்போ, நிதானமோ இன்றி, அவசர அவசரமாக ஊசி ஏற்றப்பட்டது.
ஏற்றிய ஊசியை, இழுத்து வெளியே எடுப்பதற்கிடையில் அவள் சரிந்துவிட்டாள்.
நெஞ்சம் LILLILgbbgbl.
இருதயம் தாறுமாறாக அடித்தது.
மூச்சுத் திணறியது. உடல் வியர்த்தது, பின் குளிர்ந்தது. வாயால்
நுரை கக்கியது. கண்கள் மேலே செருகின. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவதற்கிடையில் அவள் ஆவி பிரிந்துவிட்டது.
இத்தகைய மரணங்களுக்கு, இவர்கள் என்ன நியாயம் கூறப் போகிறார்கள்.
எமது நாடு ஒரு சுதந்திரப் போரில் ஈடுபட்டுள்ளது. எமது மக்கள் உறுதியோடு பல சவால்களை எதிர்நோக்குகிறார்கள். பசி, பட்டினி, மருந்துத் தட்டுப்பாடு, உழைப்பின்மை, பிரிந்த குடும்பங்கள், இழந்த உறவினர்கள், உளவியல் தாக்கங்கள். இன்னும் எத்தனை எத்தனையோ சுமைகள்.
ஆனால் மருந்துக் கடைக்காரர்களை மட்டும் இவற்றிக்கு முற்றும் முழுதாக குறை கூற முடியாது.
அரசாங்கத்தினால் திட்டமிட்டு தடைகளும், கபடத்தனமான கட்டுப் பாடுகளும் அழுலுக்கு வருவதற்கு முன் யாழ்ப்பாணக் குடாநாட்டில்தான் மருந்துகள் மலிவாக இருந்தன. கொழும்பை விட மலிவாக இருந்தன. மருந்துக் கொம்பனிகளால், கடைக்காரருக்குக் கொடுக்கப்பட்ட போனஸ் லாபங்களைக்கூட பாவனையாளர்களுடன் பகிர்ந்து, மருந்தின் விலையை லேபலில் இருக்கும் விலையைவிடக் குறைத்து விற்றனர்.
7 O

இன்று கட்டுப்பாட்டினால் விளைந்த தட்டுப்பாடு காரணமாக, மருந்து விற்பனை 'கள்ளச் சந்தை வியாபாரமாகி விட்டது.
மருந்துக் கடைக்காரரைத் தவிர வேறு பலரும் இன்று மருந்து வியாபாரத்தில் இறங்கி விட்டனர். லொறிச் சாரதிகளும், தனிப்பட்ட கொழும்பு வியாபாரிகளும், வவுனியாவிற்கு அப்பால் செல்லும் அரசாங்க உத்தியோகத்தர்களும்கூட மருந்து வியாபாரிகளாகி விட்டார்கள். அவர் கள் கூறுவதுதான் விலை. (அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் வேறு கதை.) இந்த விலைகள் மனித நேயத்தைக் கடந்தவை.
இத்தகைய விலைகளில் மருந்தை வாங்கினால், மருந்தினால் நோயாளி குணமாவதைவிட, அதன் விலையைக் கேட்டு அவன் மரணிப்பதே அதிகமாகப் போகிறது.
ஆனால் எம்மிடையே இருந்து எமது மக்களையே உறிஞ்சிக் குடிக்கும் இந்தப் புல்லுருவிகளிடமிருந்து மக்களை காப்பாற்ற கடவுளாலும் முடியுமோ தெரியவில்லை.
முன்பு மருந்துக் கடை வைப்பவர்களுக்கு ஒரு தகமை வேண்டியி ருந்தது. ‘பார்மஸிட்’ படிப்புப் படித்த ஒருவரே மருந்துக் கடைக்குப் பொறுப்பாக இருக்க முடியும். ஏனெனில் அவர்களுக்கு மருந்துகள் பற்றிய நுண்ணறிவு வேண்டும்.
ஆனால். இன்று.
எவருமே மருந்துக் கடை போட்டு விடலாம். வேறெந்தத் தொழி லிற்கும் லாயக்கற்றவர்கள் கூட, பசப்பு வார்த்தை பேசி விற்கத் தெரிந்தால் போதும்.
இன்று. மண்ணெண்ணைக் கடைகளில் கூட மருந்துகள் விற்பனை யாகின்றன.
அமோகமாக கூவிக் கூவி விற்பனை செய்கிறார்கள்.
ஏனென்றால் மண்ணெண்ணையை வியாபாரத்தை விட மருந்து வியாபாரம் லாபகரமானதாகி விட்டது.
எனவேதான் கேட்கிறேன்.
மருந்து வியாபாரிகளிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற கடவுளாலும் முடியுமா?
71

Page 43
ଓଗଞgଔC C-COf.
*४४° ×পূঃ
※
線 %து 哆 く
യ്ക്കേങ്ങൽ
1997 - 1999 Cශc>arකීර්ගිණි හිg)හීකණිකෙir)
72
 
 
 
 
 

அலங்கரப் பொம்மைகள்
அது ஒரு இனிய காலைப் பொழுதாக இருந்திருக்க வேண்டும்.
மனதில்தான்.
வெளியே எப்படியோ தெரியாது. எனது டிஸ்பென்சரி கூடு போன்ற ஒரு அறை. ஜன்னல்கள் கிடையாது. எனது மருத்துவ ஆலோசனை அறையைத் திறந்தால், நோயாளர்கள் காத்திருக்கும் குறுகிய பகுதி. அதற்கும் வெளியே எதிர்க் கட்டிடச் சுவர். அவ்வளவுதான். இதற்குள் இனிமையை எங்கே வெளியே தேடுவது?
பார்த்து முடித்த நோயாளி வெளியேறுவதற்கிடையில், இடித்துப் பிடித்துக் கொண்டு ஒரு பெண். உள்ளே நுழைந்த அவள் இழுக்காத (குறையாக ஒரு முதிர்ந்த அம்மாளை கூட்டி வந்திருந்தாள்.
‘இருங்கோ’ நான்.
அம்மா கதிரையில் அமர்ந்து முடிவதற்கிடையில், 'இவவுக்கு ஒரு குளுக்கோஸ் ஏத்த வேணும் டொக்டர்” என்றாள் அந்தப் பெண்.
73

Page 44
எனக்குக் கோபம் ஜிவ்வென்று மூக்கு நுனியில் ஏறியது. நான் இன்னமும் நோயாளியோடு பேசவில்லை. நோயாளியைப் பரிசோதிக்க வில்லை. நோயை நிர்ணயிக்கவும் இல்லை. அதற்கிடையில் என்ன வைத்தியம் செய்வது என்று இவள் எனக்குக் கட்டளையிடுகிறாள் என்ற தொழில் ரீதியான கோபம்.
ஆனால் முகத்தில்கூட கோபத்தை வெளிப்படுத்தவில்லை. பதிலும் கூறவில்லை. நோயாளியை நிதானமாகக் கூர்ந்து அவதானித்தேன்.
வயது அறுபது இருக்கும். கறுத்து மெலிந்த தேகம். களைத்துச் சோர்ந்த உடல். சாதாரண சேலைதான். அதையுங்கூட ஒழுங்காகக் கட்டவேண்டும் என்று அக்கறை எடுத்ததாகத் தெரியவில்லை. தலைமுடியையும் ஏதோ இழுத்துக் அவசரக் கோலத்தில் முடித்துக் கொண்டது மாதிரி இருந்தது.
முகத்தைப் பார்த்தேன். பொட்டில்லை. குழி விழுந்த கண்களில் ஆழ்ந்த சோகம். சுருக்கம் விழந்த நெற்றி. தனக்கும் தான் இங்கு வந்ததற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பது போன்ற விடுபட்ட போக்கு.
கூட்டிக்கொண்டு வந்த பெண் ஏதோ சொல்ல முனைவது தெரிந்தது. அவளை முந்திக்கொண்டு அம்மாவுடன் கதைக்க ஆரம்பித்தேன்.
பெயர், வயது போன்ற மாமூலான கேள்விகளுக்கு மெல்லிய தொனியில் பதில் சொன்னாள் அம்மா.
‘அம்மா உங்களுக்கு என்ன சுகமில்லை?” என மிகுந்த பரிவோடு கேட்டேன்.
f
’ எனக்கு ஒண்டுமில்லை’ நறுக்காக வெட்டியது.
‘உவ இப்பிடித்தான் சொல்லுவா. சரியான பெலயினப்பட்டுப் போய்க் கிடக்கிறா. ஒழுங்கா சாப்பிடுறதுமில்லை. சத்தாகக் குடிக்கிறது மில்லை. இப்பிடிக் கிடந்தால் இவவை நான் எப்படி வாற கிழமை லண்டனுக்குக் கூட்டிக்கொண்டு போறது? அதுதான் ஒரு குளுக்கோஸ் ஏத்திவிட்டால், நான் ஒரு மாதிரிச் சமாளிச்சு இவவைக் கூட்டிக்கொண்டு போடுவன்’
உண்மையில் அம்மா பெலவீனப்பட்டுத்தான் கிடந்தாள். நாக்கு வரண்டு கிடந்தது. உடலில் நீர்ப்பற்றுக் குறைந்து வதங்கி விட்டாள்.
அவளை ஒருவாறு சமாதானப்படுத்தி, கட்டிலில் கிடத்தி, தாதிமார் உதவியுடன் குளுக்கோஸ் செலுத்த ஆரம்பித்தேன்.
74

மகளின் முகத்தில் திருப்தி. ‘நான் ஒருக்கால் கடைக்குப் போக வேணும். குளுக்கோஸ் முடியிறத்துக்கிடையில வந்திடுவன். அவ்வளவுக் கும் பார்த்துக் கொள்ளுங்கோ’ அவள் வெளியேறினாள்.
இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்குத்தானே காத்திருந்தேன்! இனி அம்மாளை மனந்திறந்து பேசவைக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். அவ பேசினால்தான் என்னால் நோயை நிர்ணயிக்க முடியும். குணமாக்க (Մlգայլb.
‘ஏனம்மா ஒழுங்காகச் சாப்பிடுறியள் இல்லை? உங்களுக்கு என்ன கஷ்டம்?” ஆதரவாகத் தோள்மூட்டில் தட்டிக் கேட்டேன்.
“எனக்கு ஒண்டுமே பிடிக்குதில்லை”
‘மகள் வந்து நிக்கிறா. உங்களையும் தன்னோடு கூட்டிக் கொண்டு போகப் போகிறா. பிறகென்ன கவலை?”
அம்மாவின் கண்களில் நீர் முத்துக்கள். 'எனக்கு லண்டனுக்குப் போக விருப்பமில்லை”
‘ஏனம்மா?”
‘நான் ஊருக்குப் போகவேணும். மகளிட்ட சொல்லுங்கோ ஐயா’ கண்ணிர் ஓடக் கையெடுத்துக் கும்பிட்டாள்.
கையை ஆதரவோடு பற்றிக் கட்டிலில் மீண்டும் வைத்தேன். குளுக்கோஸ் ஏறுகிறது அல்லவா? r
அம்மா இவ்வளவு காலமும் ஊரிலதான் இருந்தவவாம். கணவன் செத்து ஒரு வருஷம் கூட ஆகவில்லை. ஆறு பிள்ளைகள். மூத்த மகள் மனிசனிட்ட கனடாவுக்குப் போறதற்காக ஒரு வருஷமா கொழும்பில விசாவிற்காக தவம் கிடக்கிறாள்.
மிச்சம் ஐந்தும் கண்டத்துக்கு ஒண்டொண்டாய்ப் பரந்து கிடக்குது கள். நடுத்தியாள் ஐந்து வருடங்களாக லண்டனிலை இருந்தாள். அம்மாவைப் பார்க்க ஆசைப்பட்டுக் கொழும்புக்கு வர இருந்ததால் அம்மாவையும் கொழும்புக்கு வரச் சொல்லி எழுதினாள். அவளை எதிர்பார்த்து அம்மா நாலு மாசமாகக் கொழும்பில மூத்தவளோட நிக்கிறாள். அவளுக்கு கொழும்பே பிடிக்கவில்லை. லண்டன் வேண்டவே வேண்டாமாம்.
ஊரில எண்டால் எவ்வளவு நிம்மதி. பக்கத்தில மருதடிப் பிள்ளை யார் கோயில். ஒவ்வொரு நாளும் காலையில போய்க் கும்பிட்டுட்டு 75

Page 45
வந்தால் தான் அம்மாவுக்கு தேத்தண்ணியே உள்ளிறங்கும். காலாற நடக்கலாம். கடை தெருவுக்குத் தனியப் போகலாம். அக்கம் பக்கத்தில் சகோதரர்களும், இனசனங்களும் இருக்கினை. மனமாறக் கதைக்கலாம். இஞ்சை என்ன கிடக்கு?
G
‘அதோட சொந்த வீட்டில இருக்கிறது போல வருமே. நான் சாகிற தெண்டாலும் சொந்த வீட்டிலதான் சாக வேணும். இதுகள் லண்டனுக்கு வா வா எண்டு அழுங்குப் பிடியாய்ப் பிடிக்குதுகள். எனக்குப் போகக் கொஞ்சமும் விருப்பமில்லை. மகளுக்குக் கொஞ்சம் சொல்லுங்கோ ஜயா’ என்றாள். M−
குளுக்கோஸ் ஏற்றி முடியவும் மகள் வந்து சேரவும் சரியாக இருந்தது. இவளுக்கு எப்படி அம்மாவின் நிலையைப் புரிய வைப்பது? நாசூக்காக ஆரம்பித்தேன்.
G
“உங்கட அம்மாவுக்கு மனம் சோர்ந்துபோய்க் கிடக்கு. அதாலதான் இப்படி வெறுத்துப் போய்க் கிடக்கிறா. குளிசை தாரன். ஒவ்வொரு நாளும் பொழுதுபட ஆறு மணிபோல ஒன்று கொடுங்கோ. கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிவிடுவா. ஒரு கிழமையால திரும்ப கொண்டு வந்து காட்டுங்கோ’ என்றேன்.
‘அதுக்கிடையில் போயிடுவம் போல இருக்கு” என்றாள்.
“பிரச்சனையே அங்கதானே. அம்மாவுக்கு வெளிநாடு போறதில கொஞ்சம் கூட விருப்பமில்லைப் போல இருக்கு. அவவைக் கட்டாயம் கூட்டிக் கொண்டுதான் போக வேணுமோ?’ என நான் மெதுவாக ஆரம்பித்தேன்! வந்ததே கோபம் அவளுக்கு.
‘’ என்ன டொக்டர் இப்பிடிச் சொல்லுறியள்! எல்லாப் பிள்ளையஞம் வெளிநாட்டில. அக்காவோடைதான் இஞ்சை இருந்தவ. அக்காவுக்கும் பிள்ளையஞக்கும் கனடாவுக்கு விசா கிடைச்சிடுத்து. அவையஞம் பத்துப் பதினைஞ்சு நாளைக்குள்ள போயிடுவின. பிறகு ஆர் இவவைப் பாக்கிறது?”
‘அம்மாவுக்கு கொழும்பு வாழ்க்கையும் பிடிக்கவில்லையாம். தான் ஊருக்குத்தான் போகவேனும் எண்டு சொல்லுறா. சில வயதானவை யளுக்கு புதிய சூழ்நிலைகளுக்கு அட்ஜஸ்ட் பண்றது கஷ்டம்தானே. அவவின்ர விருப்பப்படியே விடுங்கோவன். ஊரிர எண்டால் சகோதரம் இனசனம் எல்லாழ் இருக்காம். தான் சந்தோஷமாக இருப்பாவாம். அதுகளும் இவவை அன்பாப் பாப்பினமாம்” என்றேன்.
76

அவள் முகம் சிவந்தது. அவமானப்பட்டது போல வெகுண்டாள்.
“நல்ல கதை கதைக்கிறியள். இவவை ஊரில விட்டுட்டுப் போனால் ஊர் என்ன சொல்லும். எல்லாரும் வெளிநாட்டில சொகுசா இருந்து கொண்டு தாயைக் கைவிட்டிட்டினம் எண்டுதானே சொல்லுவினம். எங்களுக்குத்தானே வெக்கக்கேடு”
6
‘அப்பிடி ஏன் நினைக்கிறியள். அம்மாவின்ர சந்தோஷம்தானே பிள்ளையஞக்கு முக்கியம்”.
‘அம்மாவுக்கு இனி என்ன? வயது போனவதானே. என்னோட வந்து லண்டனில பொம்மைபோல இருக்க வேண்டியதுதானே. எங்களுக்கு எங்கட மானமும் மரியாதையும்தான் முக்கியம். அவ என்ன நினைச்சாலும் பரவாயில்லை’ கோபத்துடன் தாயை இழுத்துக் கொண்டு வெளி யேறினாள்.
அவர்களின் மானம் மரியாதைக்கு முன்னால் அம்மாவின் மனத்தைப் பற்றி யாருக்கு அக்கறை?
அடுத்த வாரம் மருந்திற்கு அவர்கள் வரவில்லை. லண்டனுக்குப் போய்விட்டதாக எதிர்வீட்டுக்காரர் சொன்னார்.
மகளின் லண்டன் அப்பார்ட்மெண்ட் வரவேற்பறையில் சோகம் கவிழ்ந்த முகத்துடன் அலங்காரப் பொம்மை ஒன்று வீற்றிருக்கும்.
77

Page 46
དེ་
ܥܶ
W
རྗེ་
s
\ ነ ነ \ o 0 'S oldbleybo)
‘இரண்டாயிரம் ஆண்டுச் சுமை எமக்கு’ எனப் பாடினார் எமது மூத்த கவிஞர். இரண்டாயிரம் என்ன, ஐயாயிரம் ஆண்டு என எமது கலாசாரப் பெருமையைப் பறையடித்து சங்கு ஊதி மேலும் சுமை ஏற்றத் தயங்காதவர்கள் நாம். எமது சுமை கலாசாரத்தில் மட்டுமல்ல. விஞ்ஞானம் சுகாதாரம் என மேலும் பல துறைகளுக்கும் விஸ்தரிக்கிறது.
இல்லாத சுமைகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து எம்மினத்தின் முதுகெலும்பை ஒடிக்க எம்மில் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒளவையார் காலத்திலேயே அணுவைப் பிளந்து ஏழ் கடலைப் புகுத்தியவர்கள் நாம் எனப் பெருமையடித்துக் கொள்கிறோம். ஆனால் அவர் பாடிய காலத்தில் அணு என்ற சொல்லின் அர்த்தம் என்ன? இன்று அதன் புதிய அர்த்தம் என்ன? எனச் சிந்திக்கிறோமா?
அப்படியான நாம் சுகாதாரத் துறையை மட்டும் விட்டு வைப்போமா?
தமிழர்களாகிய நாம் சங்க காலத்திலேயே சுத்தத்தைக் கடைப் பிடித்தவர்கள், சுகாதாரத்தைப் பேணியவர்கள் என்று பெருமை அடித்துக் கொள்வோம். ‘அன்றே ஆசாரக்கோவை எழுதப்பட்டுள்ளமை அதற்குச் சான்று எனப் பழம் பண்டிதர்கள் ஆதாரம் தேடுவார்கள்.
78
 
 
 

‘அதிகாலை நித்திரை விட்டெழுந்து கடற்கரை ஓரமாக அல்லது நீர் நிலையை அண்மித்த இடங்களில் தெற்குத் திசையை நோக்கி மூக்கு நுனியைப் பார்த்தபடி மலசலம் கழிக்கவேண்டும், என்று எனக்குச் சைவ வினாவிடையில் போதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீர் நிலைகள் குன்றிவிட்ட காரணத்தால், நாம் வடலிகளுக்கும், ஈச்சம் பற்றைகளுக்கும், வயல்களுக்கும் மனித எருக்களைப் பசளையிட்டு காடு வளர்த்துச் சூழலைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்?
அதன்பின் குளக்கரையில் அடிக்கழுவி, அதே நீரால் வாய் கொப் பளித்து, முகம் கழுவி, தலைக்கு நீராடி, ஆடை துவைத்துச் சுத்தமாக ஆலயம் சென்று தரிசனம் செய்யச் சொன்ன எமது கலாசாரப் பாரம்பரியம் போற்றுதற்குரியது.
இராமன் லிங்கத்தை வைத்துப் பூசித்த புண்ணிய ஸ்தலத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன் கிடைத்தது. அதிகாலை யிலேயே பொழுது புலருமுன் அரையிருட்டில் எம்மை புண்ணிய தீர்த்தத் திற்கு அழைத்துச் சென்றார் எமது கைட்.
கடற்கரையில் நாற்றம் தாங்க முடியவில்லை. சேற்று நாற்றமாக்கும் என மூக்கைப் பிடித்துக் கொண்டு நீரினுள் மூழ்கிவிட்டுத் தலையை வெளியே எடுத்தால் லேசான வெளிச்சத்தில் லட்டு மாதிரி ஏதோ மிதந்து வருகிறது. கடவுளின் அருட்பிரசாதமாக்கும் எனப் பக்தியோடு கையை நீட்டினால் அருகிலிருந்தவர் நமுட்டுச் சிரிப்போடு லுங்கியை உயர்த்திக் கொண்டு பாரம் கழிந்து விட்ட திருப்தியோடு காலை அகட்டி வைத்து நடந்து செல்கிறார்.
நாவலர் பெருமான் அருளிய சைவ வினா விடையின் தாக்கம் தமிழ் நாட்டிலும் பரவியிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தபோதும், அவர் சொற்படி அவர்களும் "காலைக்கடன் கழிப்பது கண்டு பெருமை யடைந்தேன்.
e&? ex ex?
சிறுவயது ஞாபகம் வருகிறது. எனது மாமாவிற்கு என்னிலும் ஒருசில வயதுகளே அதிகம். அதனால் அவர் எனது விளையாட்டுத் தோழனும் கூட.
அவருக்குக் கிரந்தி உடம்பு என்று பாட்டி அடிக்கடி சொல்லுவா. சிறு காயமானாலும் புண் அவியத் தொடங்கிவிடும். அவரின் ஐயா, எனது பாட்டானாருக்கு பட்டணத்தில் வேலை. ஞாயிற்றுக்கிழமைகளில்
79

Page 47
தான் வீட்டுக்கு வருவார். வந்ததும் இவரது புண் அவரது கண்ணைக் குத்தும். உடனடியாகவே அதனைச் சுத்தம் செய்யச் சித்தமாவார்.
மாட்டுக் கொட்டிலுக்குப் போய் புதுச்சாணமாக எடுத்து, ஒரு உருண்டையாக உருட்டி ஆடுகால் மரத்தடி ஈரலிப்பு மண்ணில் மறைத்து வைப்பார். பின்புதான் மாமனை கிணத்தடிக்கு இழுத்துக் கொண்டு போய் சோப் போட்டுக் குளிக்க வார்க்கும் சடங்கு தொடங்கும். அதனைத் தொடர்வதுதான் உச்சக்கட்டம்.
கண்ணுக்குப் சோப் போட்டுவிட்டு பொடிப்பிள்ளை கண் திறக்க முடியாது அந்தரித்து நிற்கும் நேரம் பார்த்து மறைத்து வைத்திருந்த சாணிக்கட்டியை எடுக்க மெல்ல நழுவுவார். புண்ணில் தேய்த்துச் சுத்தப் படுத்துவதற்காக. மாமனுக்குத் தெரியாதா இவர் செய்யப் போவது. சோப் கண்ணைத் துடைத்துவிட்டுப் பிடிப்பார் ஓட்டம்.
இவர் விட்டுக் கலைப்பார்.
அவர் தப்பியோடுவார்.
கிணற்றுக்கட்டைச் சுற்றி, வீட்டைச் சுற்றி, பாட்டியைச் சுற்றி என ஓட்டப்போட்டி தொடரும். ஓடிக் களைத்துப்போன பாட்டா, தப்பிப் போட்டாய் என்ன, அடுத்த கிழமை பார்க்கிறேன் என பல்லில்லாத வாயால் கறுவுவார்.
அன்று ஒடித் தப்பியதால்தான் ஏற்புவலியால் சாகாமல் இன்று தலைநரைத்தும், இறைசேவை செய்து கொண்டு உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் மாமா.
பசுச் சாணியில் ஏற்புவலிக் கிருமிகள் நிறைய இருப்பது இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தானே. அவரது காலத்திலும் தெரிந்து தான் இருந்தது. ஆயினும் பாட்டா மூதறிஞர் ராஜாஜியின் விசிறி. கசத் தடுப்பு ஊசியான பி.சி.ஜி. போடக்கூடாது எனப் போராட்டம் நடத்தியரல்லவா அந்த மூதறிஞர். தினமும் கைராட்ணம் சுத்துமளவிற்கு அவர் சொற்கேட்டு நடந்த சீடப்பிள்ளையான பாட்டா சாணியைத் தேடாமல் வேறு என்ன செய்திருப்பார்.
படித்தவர்கள் கூட அறிவியலை விட வாழையடி வாழையாக வந்த பழக்கவழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் நம்பிக் கடைப் பிடித்து வந்த காலம் அது. பாட்டாவும் எப்படி விதிவிலக்காக முடியும்.
முன்பெல்லாம் பிறந்த சில நாட்களுக்குள்ளேயே குழந்தைகள் ஏற்புவலியால் துடித்துச் சாவது சர்வசாதாரணம். பிறந்தவுடன் பொக்குள்
80

புண்ணுக்குச் சாணி வைத்து மருந்து கட்டும் வழக்கம் அப்போதிருந்தது தான் காரணம். இன்றும்கூட சாணியால் குழந்தைகளின் உயிர் குடிக்கும் கைங்களியம் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நடக்கவே செய்கிறது.
நாம் என்ன குறைந்தவர்களா?
இன்னமும் பசும்சாணி எமக்குப் புனிதமானதாகத்தான் இருக்கிறது.
வீட்டைப் பசுஞ்சாணியால் மெழுகித் தான் புனிதப்படுத்துவோம்.
பிள்ளையார் பிடிப்பதும் சாணியால்தான். சுளகைச் சாணியால் மெழுகி அதில் உணவு தயாரித்து உண்ணும் மலந்தின்னிகள் நாம்.
மனித மலத்தைக் கண்டாலே மூக்கைப் பொத்தி மறுபக்கம் திரும்பும் நாம் மாட்டின் மலத்தைப் புனிதமாக, பெருமையாக கையால் தொட்டு அளையவும் தயங்காத ‘புதுமை மனிதர்களாக இருக்கிறோம்.
கைப்புண்ணோடு சாணியைக் கையளைந்து கதிமோட்சம் அடைந்த கோடானுகோடி முன்னோர்கள் இறந்தும் பிறவா வரம் பெற்றனரோ?
இவ்வளவு செய்தும் எமது முன்னோர்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக திடகாத்திரமாக நீண்ட நாள் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு ‘கடவுள் அருளன்றி வேறு காரணம் எதுவும் இருக்க முடியுமா?
எமது சுகாதாரப் பாரம்பரியங்களும் அதனால் நாம் பெற்ற உடல் ஆரோக்கியங்களும் தார்மீக அமைதிப் புறா அரசாங்கங்களுக்கெல்லாம் அத்துபடி.
அதனால்தான் முன்பு யாழ்ப்பாணத்துக்கும் இப்பொழுது வன்னிக்கும் கக்கூஸ் கட்டுவதற்குக்கூட சீமெந்து அனுப்புவதில்லை. பாரம்பரிய முறைகளைக் கைவிட்டால் அநியாயமாக நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவார்களே என்ற அதீத அக்கறை போலும்!
ஆசாரக்கோவைகளும் சைவ வினாவிடைகளும் பாரம்பரியமாக நாம் பேணி வந்த சுகாதாரப் பண்புகளைக் காட்டுகிறதா அல்லது கேடுகெட்ட சனங்கள் இவற்றைப் படித்தாவது திருந்தாதா என்ற தமிழறிஞர்களின் அங்கலாய்ப்பைக் காட்டுகிறதா?
எனது பாட்டியும் சுத்தத்தில் சற்றும் குறைந்தவரல்ல. அவ எப்பவாவது ஆஸ்பத்திரிக்குப் போய் வந்தாவென்றால் பெரும் எடுப்புகள் எடுக்க வேண்டியிருக்கும். தலைவாசலிலேயே வாளியில் தண்ணீர் வைத் திருக்க வேண்டும். வந்ததும் அவ கூப்பாடு போடுவா. அம்மா வாசலுக்கு ஓடிப்போய் தலையில் நீருற்றுவா. பிள்ளைகளாகிய நாங்கள் முன்னே
81

Page 48
போனால் செப்பல் பேச்சுத்தான் கிடைக்கும். உடுப்பையும் கழற்றி வாளியில் போட்டுவிட்டு கிணத்தடியில் போய் முழுகிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலடி வைப்பா. செத்த வீட்டுக்குப் போய்வந்தால் சொல்லவே தேவையில்லை. இரண்டும் தீட்டுத்தான் அவவுக்கு.
கண்ட கண்ட சனங்களெல்லாம் பிளங்கிற இடத்துக்குப் போட்டு வந்ததால சாதித் திமிரில் குளிப்பாவோ அல்லது ஆஸ்பத்திரி அசுத்தம், கிருமிகள் தொற்றுமிடம் என்று உணர்ந்துதான் குளிப்பாவோ எனக்குத் தெரியாது.
எப்படியிருந்த போதும் எமது மூதாதையரின் நல்ல புத்திசாலித்தன மான பழக்கம் அது என்றுதான் சொல்ல வேண்டும். ஆஸ்பத்திரிகளுக்கு பல்வேறு விதமான நோய்களுடன் பலரும் வருவார்கள். அவற்றில் பல தொற்று நோய்களாக இருக்கும். காய்ச்சல், இருமல், வயிற்றோட்டம், நெருப்புக்காச்சல், செங்கண்மாரி என இப்படி எத்தனையோ இலகுவில் தொற்றக்கூடியன. அதுவும் ஹொஸ்பிட்டல் இன்பெக்சன் என்பது அதி தீவிரமானது. கடுமையாகத் தாக்கக்கூடியது என்பது மருத்துவ உலகில் நன்கு அறியப்பட்டதே. எனவே வைத்திய சாலைக்குப் போய்வந்தால் குளிப்பது நல்ல பழக்கம்தான்.
டொக்டருடைய கைபட்டாலும் குளித்து முழுகுபவர்கள் இருக்கவே செய்வார்கள். கிருமி பரவிவிடும் என எண்ணி நாடி பார்க்க கையைக் கொடுக்கப் பயப்படுகிறவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
‘டொக்டர்களே கேடுகெட்டவர்கள் அருவருப்பு என்பதே கிடையாது. பார்த்தாலே சத்தி எடுக்க வரும் அசிங்கங்களுக்குள் எல்லாம் கையை அசூசையின்றி நுழைப்பார்கள். அழுகிச் சீழ் வடியும் புண்களை மூக்குச் சுழிக்காமல் சுத்தம் செய்வார்கள். குருதி சிந்தும் உறுப்புகளுக்குள் கையை நுழைப் பார்கள். நாற்றமடிக்கும் வாய்களுக்குள் விரலைச் சொருகுவார்கள். பிறகு நாடியைப் பார்க்கிறோம் என்று எமது கையையும் பிடிப்பார்கள் என்பது பலரின் அங்கலாய்ப்பு, நாங்கள் கையுறைகளை எல்லாம் உபயோகிப்பதும், இல்லாவிடில் ஒவ்வொரு தடவையும் கைகழுவிக் கழுவி எமது கைகள் சுருங்கிவிட்டதும் ஒருவர் கண்களிலும் படுவதில்லை.
எங்களுடைய பாரம்பரியத்தில் வந்த இன்னுமொரு அரிய பழக் கத்தையும் இங்கு ஞாபகப்படுத்தலாம். அது இளகிய மனம் பற்றியதும் கூட. நாங்கள் மனிதர்களில் மாத்திரம் அன்பு கொண்டவர்களல்ல. விலங்குகளுக்கும், மரஞ்செடி கொடிகளுக்கும் எமது அன்பு வட்டம் விரிகிறது.
82

தெருவோரம் வேலிகளுக்கு ஊன்று கோலாக நாட்டப்பட்டுள்ள பூவரசு, கிளிசெறியா, கிளுவைக் கதியால்களும் எமது அன்பைப் பெறத் தயங்குவதில்லை. அதுவும் எமது விட்டுக் கதியால்களுக்கு என்றில்லை. அக்கம்பக்கத்து விட்டுக்காரரின் கதியால்களுக்கும், நாம் நடந்து செல்லும் விதிகளின் முகமறியாதவர்களின் வீட்டுக் கதியால்களுக்கும் எமது வற்றாத அன்பு ஊற்றெடுத்துப் பாய்கிறது. 'ஊரான் வீட்டுப் கதியாலுக்கு மாற்றி வளர்த் தால் தன் வீட்டுக் கதியால் தானே வளரும்' என்ற பழமொழியை அச்சொட்டாகக் கடைப்பிடிப்பவர்களல்லவா நாம்?
கதியால்கள் நீரின்றி வாடியும் போஷாக்கின்றி வெளிறியும் கிடப்பதைக் கண்டால் எம் மனது தாங்கவே தாங்காது. உடனடியாகவே யூறியா கலந்த நீரூற்றி உதவிடுவோம். இதற்காக நாலு பேர் பார்க்கும் விதியில் நின்று கோவணத்தைக் கழற்றக்கூட நாங்கள் தயங்குவதில்லை.
இயற்கை நமக்கு எவ்வளவோ கற்றுக் கொடுத்திருக்கிறது. நாய் களும்தான். லைட் போஸ்டைக் கண்டதும் மூன்று காலில் நின்று மோனத் தவம் செய்து அவை தீர்த்தம் தெளிப்பது எம் சிந்தையைக் கவர்ந்ததால்தான் நாமும் கதியால்களைக் குளிர்விக்கிறோம் போலும்.
இரண்டாயிரம் ஆண்டு காலப் பழமை வாய்ந்த இனமாயிருந்தாலும் எங்களை நவீன காலத்திற்கும் நாகரீகத்திற்கும் ஏற்ப மாறாத பழமை விரும்பிகள் என எவரும் எம்மைக் குறைகூறவும் நாம் இடமளிப்பதில்லை.
கொழும்பில் கதியாலைக் காணமுடியாது என்பதால் துவண்டுவிடுவ தில்லை. காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப எம்மை மாற்றிக் கொள்ளும் மனவிரிவு கொண்டவர்கள். இதனால் லைட் போஸ்டுகளையும் மதில் களையும் சிறுநீர் கொண்டு அடியோடு பிரட்டி வீழ்த்த முக்கி முயல்வோம்! இதைப் பார்த்து சகோதர இனத்தவர்கள் மூக்கில் கைவைத்து ஆச்சரியப் படுவதுண்டு. சிலவேளை சேர்ந்து முயற்சிப்பதும் உண்டு.
மரங்களையும் மதில்களையும் குளிர்விக்கும் ஆர்வத்தில் அந்த விட்டில் வதிபவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வீதியைப் பயன்படுத்து பவர்களுக்கும் நோய்களைப் பரப்புகின்றோமே என்ற கவலை கிஞ்சித்தும் எமக்குக் கிடையாது.
தீர்த்தம் என்றதும் இன்னுமொரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.
அன்று ஒரு குழந்தையை அம்மம்மாக்காரி தூக்கிக் கொண்டு வந்திருந்தா. கூட அம்மா. அவள் கைகள் இரண்டும் போதாத அளவிற்கு கூடைகள், பைகள். அவற்றை குழந்தையின் பொருட்கள் நிறைத் திருந்தன. அவசரத் தேவைக்கானதாம். பாவம்! தூக்க முடியாமல்
83

Page 49
தூக்கிக் கொண்டு வந்திருந்தாள். போத்தல், பிளாஸ்க், சீனி, கரண்டி, பிரஸ் இத்தியாதி. பாரத்தை அருகிலிருந்த மேசையில் பொத்தென இறக்கினாள்.
நல்ல வேளையாக காஸ் குக்கரைக் காணாதது நிம்மதியளித்தது. அதுவும் இருந்திருந்தால் அதிலேயே அடுப்பை மூட்டி தண்ணியைக் கொதிக்க வைத்துப் புட்டிப்பால் தயாரித்திருப்பாள்!
குழந்தைக்கு இரண்டு நாட்களாக வயிற்றோட்டமாம். குழந்தை அம்மம்மாவின் மடியில் வாடிக்கிடந்தது.
நோயின் விபரத்தை அவர்களிடம் கேட்டுக் கொண்டே குழந்தையைப் பரிசோதிக்க ஆரம்பித்தேன். மேலோட்டமான பரிசோ தனையை முடித்துக் கொண்டு வயிற்றுப் பக்கம் மெதுவாகக் கையை வைத்தேன்.
திடீரென முகத்தில் இளஞ்சூட்டு நீரினால் அபிஷேகம். என்ன எது என்று நிதானிப்பதற்கிடையில் அம்மம்மாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘பிள்ளை டொக்டருக்குத் தீர்த்தம் கொடுத்துவிட்டது” என மனம் நிறைந்து முறுவலித்தாள்.
நல்லகாலம் 'சந்தனமும் சேர்த்துத் தரவில்லை.
தீர்த்தத்தால் புனிதம் பெற்ற முகத்தைக் கழுவ நான் வாஷ் பேசினை நோக்கி ஓடினேன்.
இப்பொழுதெல்லாம் யாராவது குழந்தையைக் கொண்டுவந்தால் நான் முதலில் அதன் முகத்தைப் பார்ப்பது கிடையாது.
கண்கள் தன்னையறியாமல் கீழேதான் போகும். ஆனா? பெண்ணா? எனப் பார்க்கிறார் எனத்தான் பெற்றோர்கள் நினைப்பார்கள்.
நப்பின் துணி கட்டிக் கொண்டு வராவிட்டால் ஒரு சிறு முன்னேற் பாடு. குழந்தையின் தலையை எனது பக்கமும் காலை கூட வந்தவரின் பக்கமும் இருக்குமாறு கிடத்திய பின்னர்தான் எந்தக் கதை காரியமும் நடக்கும்.
தீர்த்தம் கிடைக்கும் பாக்கியம் கூட வந்தவருக்குக் கிடைக்கட்டுமே!
OOO
84

வெள்ளவத்தைக்குப் புதிதாக வந்த நாட்களில் ஒருநாள் மாலை . காலி வீதியால் வந்து மூர் ரோடிற்குத் திரும்புகிறேன். முடக்கில் பேவ் மென்டால் இறங்கி வீதியில் வைத்த கால் தன்னையறியாமல் தயங்கிப் பின்வாங்குகிறது. திட்டு திட்டாக இரத்தம். ஒரு கணம் பயந்து திடுக்கிட்டு விட்டேன். ஒரு கணம்தான். சாதாரண மனிதனின் பயம் அடங்க, வைத்திய மூளையும் கைகளும் துருதுருக்கின்றன. இரத்தத்திற்குக் காரணமானவர் யார்? எப்படிச் சிந்தியது? முதலுதவி தேவைப்படுமா? போன்ற கேள்விகள் சிந்தனையில் எழக் கண்கள் அலைபாய்கின்றன.
திடீரென இன்னும் சில இரத்தத் துளிகள் பீச்சியடித்துக் கொண்டு சற்றுத் தள்ளி விழுகின்றன.
ஆச்சரியம் அடங்குவதற்கிடையில் ஒரமாக நின்ற ஒட்டோவின் சாரதி வெளியே தலையை நீட்டி 'மாத்தயா டாக்ஸி ஒனதஎன்கிறார். சொதப்பிக் கொண்டிருந்த அவரின் கடைவாயிலிருந்து "இரத்தம் வழிகிறது. வாயெல்லாம் கூட ‘இரத்தம்'
இலங்காபுரியின் இன ஒருமைப்பாட்டைக் கட்டிக் காத்து, வெளிப் படுத்துகிற ஒரே சாதனமாக இன்னும் திகழ்வது வெற்றிலை போடுதல் தான். சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் என எல்லோரையும் இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது. இன ஒற்றுமைக்காகக் கலப்புத் திருமணங்களை ஒரு காலத்திவல் வற்புறுத்தியவர்களின் காதில் இது விழுந்துவிட்டால் நாடு முழுவதும் வெற்றியை வளர்த்து, 'இரத்தக்கறை தான் சிந்தப் போகிறது.
துப்புவதில்தான் எத்தனை வகைகள். அதிலும் வீதியில் துப்பும் கலை என்பது அதி விசேடமானதாகும். அதனைத்தான் எத்தனை வகை களாக பயிற்சித்து செழுமைப்படுத்துகிறோம்.
கொர் என்ற சத்தத்துடன் தொண்டைக்குள் இருப்பதை காறி யெடுத்து நுனி நாக்கிற்குக் கொண்டுவந்து ஆரவாரமாகத் துப்புவது
ஒரு வகை.
துப் துப்பென அடுக்கடுக்கான தொடர் செய்கைகளாக அலட்டாமல் துப்புவது இன்னுமொரு வகை.
அசிங்கத்தைப் பார்த்தும், அசிங்கத்தைப் போல் வெறுக்கும் ஒருவரைக் கண்டும் முகம் கோணி வன்மத்துடன் துப்புவது விசேட ரகம்,
85

Page 50
ரஜனியின் சிகரட் ஸ்டைல் போல ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் உதடுகளின் நடுவே வைத்து இடைவெளிக்குள்ளால் நசுக் கிடாமல் துப்புவது மன்மத ரகம்.
பட்டப்படிப்பிற்கான ஒரு அலகாக எமது பல்கலைக்கழகத்தில் வைக்க ஏற்றது துப்பல்கலை என்று துணிந்து சொல்லலாம்.
பட்ட மேற்படிப்பிற்கான ஆய்விற்காக 'தமிழர் வாழ்வில் துப்பல் சங்ககாலம் முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலான ஆய்வின் முதற் படி’ எனப் பேராசிரியர் ஒருவரின் வழிகாட்டலில் இளம் பட்டதாரி பதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.
நான் வழமையாகப் பிரயாணம் செய்யும் ஒட்டோவின் சாரதி துப்பும் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது.
வாகனம் நேர்பாதையில் ஒடும்போது முதுகை வளைத்து, வாகனத் தின் இடது பக்கமாகத் தலையை வெளியே நீட்டி, வாயைக் குவித்துத் துப்புவார். துப்புவது காற்றில் சிதறி பின்னே இருப்பவருக்குத் தெறித்து விடாமல் துப்பும் அழகே அழகு. குனிந்து துப்பினாலும் வாகனம் கயிறு கட்டியது போல் நேர் பாதையில் சென்றுகொண்டே இருக்கும். இந்த அழகைக் கண்டுதான் அவரது மனைவி அவரைக் காதலித்தது, கலியாணம் செய்தது, பிள்ளை பெத்தது எல்லாம்.
எமது தேசம் புண்ணிய தேசம்.
ஆனாலும் இந்தப் புண்ணிய பூமியில் நாங்கள் அகலக்கால் வைத்து அலட்சியமாக நடக்க முடியாது. அச்சம், மடம், நாணம் நிறைந்த பெண்கள் போல நிலம் பார்த்துத்தான் நடக்க வேண்டியுள்ளது. இன்றைய புதுமைப் பெண்கள் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையுமாக நடக்க என் போன்ற ஒரு சிலருக்கு மட்டும் குனிந்த தலையும் நிலம் பார்த்த பார்வையும் தலைவிதி என்றாகிவிட்டது.
"டொக்டருக்குக் கழுத்து உழுக்கிப் போட்டுது போல”.
‘நிமிர்ந்து பார்த்தால் வீதியில் வைத்தே இலவச கொன்சல்டேசன் கேட்டுவிடுவார்களோ என்ற கஞ்சத்தனம்’
“அவருக்கு முகங்களிலை நாட்டம் இல்லை எதிரே வருகிற பெட்டைகளின் தொடைகளில்தான் நோட்டம்’
'வயது போட்டுதில்லே அக்கம் பக்கத்திலை நடக்கிற ஒன்றும் அந்தாளின்ரை மூளையிலை விழுகிறதில்லை”
86

இப்படி எத்தனை கொடுக்குக் கேள்விகளும் விமர்சனங்களும் என்ரை காதில் பட்டும் படாமலும் வீசப்படுகின்றன.
ஆனால் என்ரை கவலை எனக்கு! விதிகளெங்கும் துப்பல்கள் விதைத்திருக்க, நிலம் பார்க்காமல் கால் வைக்க முடியுதே?
ஏன் சப்பாத்துப் போடுறதில்லையோ என நீங்கள் அடிக்கிற நக்கலும் காதில் விழுகிறது. சப்பாத்தைக் கழுவிப்போட்டே வீட்டுக்குள்ளையும் டிஸ்பென்சரிக்குள்ளையும் கால் வைக்க முடியும். ஊரிலை உள்ளவன்ரை எச்சில் எல்லாம், தவண்டு திரிகிற பேரப்பிள்ளையின்ரை கையிலை பட்டும், மற்றவர்களை முட்டியும் கண்ட கண்ட நோயெல்லாம் தொற்றி விடுமே என்ற மருத்துவனின் ஆதங்கம் எனக்கு.
ஒருநாள் வைத்தியசாலைக்குப் பொடிநடையில் போய்க் கொண்டி ருக்கிறேன். உயர்ந்து நிற்கும் ஹோட்டலுக்கு முன்னே கட்டெறும்பு போல நகர்ந்து கொண்டிருக்கும் எனது தலையிைல் 'டொச் என எதுவோ விழுகிறது. மழைத்துளியாக இருக்குமா என நிமிர்ந்து பார்த்தேன். மொட்டை மாடியில் நின்ற தலையொன்று பக்கென உள்ளிழுத்தது. வீதியில் உமிழும் அவருக்கு அன்று எனது தலை கிடைத்த சந்தோஷத்தை அடக்க முடியவில்லை.
நல்லவேளை மொட்டைத்தலை என்பதால் தப்பித்தேன்.
பிரச்சனையின்றி தலையை ஈரத் துணியால் ‘மொப்' பண்ணிவிட்டு வேலையைத் தொடரலாம். தலை நிறைய முடியெனில் வீடு திரும்பி முழுகிவிட்டல்லவா வேலைக்குச் செல்ல வேண்டியிருந்திருக்கும்.
‘வீதியெங்கும் துப்பல் செய்யும் எம் பாரம்பரியம் வாழ்க!
87

Page 51
தொல்லை வைத்தலம்
லாஸ் ஏஞ்சலில் பேராசிரியர் டேவிற்சன் தனது கம்பியூட்டரைத் திறந்து அன்றைய ஈ மெயிலை ஆராய ஆரம்பித்தார். பரிச்சயமில்லாத புதிய குரல் சவுன்ட் பொக்ஸ்க்கு ஊடாக ஒலித்தது.
ஆபிரிக்காவின் சிம்பாவே நாட்டின் ஒதுக்குப்புறக் கிராமத்தின் இளம் சத்திரசிகிச்சை நிபுணர் எனக் குரலுக்குரியவர் தன்னை அறிமுகப் படுத்துகிறார். வயிற்றுக்குற்றுடன் சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும் நோயாளி ஒருவரை பல விதத்தில் பரிசோதித்தும் நோயை நிர்ணயிக்க முடியவில்லையாம். பேராசிரியரை ஆலோசனை கேட்கிறார்.
பேராசிரியர் டேவிட்சன் லாஸ் ஏஞ்சலின் பிரபல வைத்தியசாலை ஒன்றில் சிறுநீரகத்துறை சத்திர சிகிச்சை நிபுணர். புதிய நவீன முறைச் சத்திர சிகிச்சைகளுக்குப் பேர் போனவர். அவரை நேரில் சந்திப்பதாயின் அப்பொயின்ட்மென்ட் நாள் பெறவே பல நாட்களுக்குக் காத்திருக்க வேண்டும். இங்கு வொயிஸ் மெயில் உடனடித் தொடர்பை ஏற்படுத்தி விட்டது.
டேவிற்சனின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப சிறுநீரக வாயிலூடாக ஒரு
அகநோக்கிக் கருவி உட்செலுத்தப்படுகிறது. சிம்பாவேயில் கருவியினூ
டாக இளம் டாக்டர் பார்ப்பது டேவிற்சனின் கம்பியூட்டர் திரையில் 88
 

விழுகிறது. பேராசிரியர் டேவிற்சன் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள கருவியைத் தனது தேவைக்கு ஏற்ப துல்லியமாக நெறிப்படுத்தி நோயை நிர்ணயிக்கிறார். செய்யப்பட வேண்டிய சத்திர சிகிச்சை சிம்பாவே டொக்டருக்குப் பரிச்சயமில்லாதது. சிகிச்சை முறைகளை நுணுக்கமாகக் கூறி சத்திர சிகிச்சையையும் படிப்படியாக வழி நடாத்தினார். நோயாளி குணமாகி வீடு திரும்பினார்.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் நோயாளியை நேரில் பார்க்காமல், நாடி பிடிக்காமல், கைகளால் தொட்டுப் பார்க்காமல் சிகிச்சை செய்யக்கூடிய காலம் இது. தொலை வைத்தியம் (Tele medicine) என இதைத்தான் சொல்கிறார்கள்.
தொலைத்தொடர்பு அவ்வளவு வேகமாக வளர்ந்துவிட்ட காலம் இது. எமது நாட்டில் அவ்வளவு தூரம் வளரவில்லை. வளர்ந்தாலும் நாடு முழுவதும் சமசீராக வளரவில்லை எனலாம். வன்னிப்பகுதியில் அடக்கப்பட்டுக் கிட்க்கிறது. நெருப்புக் காய்ச்சலாலும், மலேரியாவாலும், செங்கண் மாரியாலும், ஷெல் காயங்களாலும் பலர் தினமும் அங்கு முடமாகிறார்கள். மரணிக்கிறார்கள்.
அவர்களுக்கு தொலை வைத்தியம் செய்யும் வாய்ப்புக் கிடைத்திருந் தால் தெற்கிலுள்ள மனிதாப உணர்வுள்ள வைத்திய நிபுணர்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று நலம் அடைந்திருக்கலாம்.
கொழும்பிலுள்ள வைத்தியர்களாகிய நாமும் சிலவேளைகளில் தொலை வைத்தியம் செய்வதுண்டுதான். வன்னியிலும் கிழக்கிலும் வைத்திய வசதியின்றி துன்பப்பட்டு வாடும் மக்களுக்கல்ல! கொழும்பில் உல்லாசமாக பங்களாக்களில் வாழ்ந்து கொண்டு வைத்தியரிடம் சென்று காட்ட நேரமும் பொறுமையும் இல்லாதவர்களுக்கு.
அன்று வந்த திடீர் தொலைபேசி அழைப்பு இது. 'டொக்டர் நான் டின்னர் ஒன்றிற்குப் போக ஆயத்தம் பண்ணிக் கொண்டு இருக் கிறேன். இவன் எனது மகன் திடீரென தனக்கு வயிற்றோட்டம் என்கிறான். இப்ப உங்களிட்டை வந்து காத்துக் கொண்டிருக்க எனக்கேலாது. நேரமுமில்லை. ஏதாவது மருந்து சொல்லுங்கோ. மருந்தைப் போட்டிட்டுப் பேசாமல் படுத்துக் கிடக்கட்டும். நாளைக்கு நாளையின்றைக்கு கொண்டு வந்து காட்டிறன்”.
அவ நாளைக்கும் வரமாட்டா, நாளையின்றைக்கும் வரமாட்டா. காரணம் மகனுக்குக் குணமான பின் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் என்ன? நான்தான் போனிலேயே மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும் கூறிவிட்டேனே!
89

Page 52
|
அம்மாவிற்கு டின்னருக்குப் பிந்தாமல் போவதற்கு நேரம் முக்கியம்.
மகனின் வருத்தம் இரண்டாம் பட்சம்.
டொக்டர் போனில் பேசும்போது, ஏற்கனவே டாக்டருக்கு அருகில் காத்துக் கொண்டிருக்கும் அப்பாவி நோயாளியின் நேரம் அவர்களுக்கு மூன்றாம் பட்சம்!
டொக்டரின் நேரம் கணக்கிலேயே சேராது
ஐந்து ரூபா டெலிபோன் பணத்தில் அம்மாவின் கொன்ஸ்சல்டேசன் முடிந்து விட்டது. டொக்டருக்கு கொன்சல்டேசன் காசு டெலிபோன் ஊடாகக் கொட்டும் என்ற எண்ணம்!
இன்றைய உலகில் டெலிபோன் என்பது மிகவும் அத்தியாவசிய மான சாதனம் ஆகிவிட்டது. ஒரு சின்னஞ்சிறு செய்தியைத் தெரிவிப்பதற் காக பருத்தித்துறையிலிருந்து 21 மைல் பிரயாணம் செய்து யாழ் செல்ல வேண்டிய காலம் அண்மைக்காலம்வரை இருந்ததை மறக்க முடியாது. அங்குகூட ICRCயிடம் தவம் கிடக்க வேண்டும்.
இன்று பருத்தித்துறையில் இருந்து கனடா, அவுஸ்திரேலியா, லண்டன் எல்லாம் கணப்பொழுதில் காதுக்குள் வருகிறது. கண்ணுக்குள் வரும் காலமும் வெகுதொலைவில் இல்லை.
ஆனால் நவீன வசதிகளை துஸ்பிரயோகம் செய்பவர்களும் ஏராளம் என்பதையும் நாம் நினைக்கத்தான் வேண்டும்.
அன்று இரவு நேரம் 7.45 இருக்கும். டெலிபோன் மணி கணிரிட்டது. ‘டொக்டர் உங்களை அவசரமாகக் காண வேண்டும், இப்ப வந்தால் காணலாம் தானே?”
“இப்ப வந்தால் காணலாம், கொஞ்ச நேரத்திற்குப் பிறகு ஏலாது. 8 மணிக்குப் பூட்டிப் போடுவோம்.”
‘உடனே வாறன்’
எப்படி வருவார்? அவர் இருப்பது மூன்று மைல் தொலைவில், பத்து நிமிடத்தில் வர முடியுமா? விசாரித்தேன்.
‘எப்படியும் வந்து விடுவேன். ஒரு ஐந்து பத்து நிமிடம் பிந்தினால் பூட்டிப் போடாதீர்கள். ப்ளிஸ் மிகவும் அவசரம்” என்றார்.
காரில் வந்து விடுவாராக்கும் என எண்ணிக் கொண்டேன்.
90

இத்தகைய டெலிபோன் அழைப்புக்கள் எனக்கு வழமையானதுதான். தினமும் 7.45ல் இருந்து 8 மணிக்குள் இத்தகைய அழைப்புக்கள் ஒன்று இரண்டு நிச்சயம் வரும். கடைசி நிமிடத்தில் டொக்டரை இழுத்துப் பிடிக்கும் பிஸியானவர்களிடமிருந்துதான். “சரி வாங்கோ’ என்றேன்.
நோயாளிகள் மேலும் பலர் காத்திருந்ததால் நேரம் போனது தெரியவில்லை. மீண்டும் டெலிபோன் கிணுகினுத்தது. நேரத்தைப் பார்த்தேன். 8.20 ஆகிவிட்டது. ரிசீவரைத் தூக்கினேன். மணி நின்றிடக் குரல் ஒலித்தது.
'டொக்டர் கொஞ்சம் பிந்தி விட்டது. வாகனம் பஞ்சர். இப்ப சரி. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கோ. உடனே வந்திடுவன்.” எஞ்சி யிருந்த ஓரிரு நோயாளர்களையும் பார்த்து முடிக்க நேரம் 8.30 ஆகிவிட்டது. போன் பண்ணியவரைக் காணவில்லை.
நேர்ஸ்களுக்கும் வீடு போகும் அவசரம். எனக்கும் அப்பிடித்தான். ஆயினும் என்ன அவசரத்திற்காக தேடி வருகிறாரோ என்று அனுதாபம். இன்னமும் சிறிது நேரம் பொறுத்துப் பார்க்க தீர்மானித்தேன். மேலும் 15 நிமிடங்கள் காத்திருந்து பார்த்தேன். காணவில்லை. பொறுமை கடந்து விட்டது.
டிஸ்பென்சரியைப் பூட்டி, வெளி கேற்றையும் பூட்டிக் கொண்டு விதியில் இறங்கினோம். நர்ஸ்களும் விடை பெற்றுக் கொண்டு பிரிந்தனர். அப்பொழுதுதான் ஒட்டமும் நடையுமாக பூனையாக குறுக்கே வந்தார்.
“பூட்டிப்போட்டியளோ? நான்தான் போன் பண்ணியது”
'நீங்கள் போன் பண்ணியபடியால்தான் எட்டு மணிக்குப் பூட்ட வேண்டிய நான் இதுவரை காத்திருந்தேன்’
'சொறி டொக்டர் வந்த மினிபஸ் பஞ்சராகி நின்றதால் வேறு பஸ் பிடித்துவர நேரமாகிவிட்டது.”
ஒகோ! ஆடிப்பாடி பஸ்சில் வந்திருக்கிறார். இவரது வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு வரவே பத்து நிமிடங்கள் வேண்டும். பிறகு காத்திருந்து பஸ் பிடித்து இங்கு வந்து சேர எப்படியும் குறைந்தது ஒரு மணித்தியால மாவது வேண்டும். அப்படி இருக்க பத்து நிமிடங்களில் வந்து சேர்வேன் என என்னை முழுமடையனாக்கி விட்டாரே என்று மனம் குமுறியது.
`பிளிஸ் டொக்டர்” எனக் கெஞ்சினார். ‘என்ன வருத்தமோ!' குமுறிய நெஞ்சு இளகியது. “சரி வாங்கோ’ எனத் திரும்பி நடந்தேன். பின் தொடர்ந்தார்.
91

Page 53
பூட்டிய கதவுகளைத் திறந்து டிஸ்பென்சரிக்குள் நுழைந்து எனது கதிரையில் அமர்ந்து கொண்டேன். அவர் சொகுசாகக் கதிரையில் சாய்ந்து கொண்டார்.
தான் வரப் பிந்துவதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக அடுக்கத் தொடங்கினார். தினசரி கடுமையான ஒபிஸ் வேலை, வேலையால் வர தாமதமாவது. அடுத்த நாளைக்கான உடைகளைத் துவைத்தல், சமையலுக்கு மரக்கறி வாங்கப் போக வேண்டியமை, இப்படிப் பல சோலிகள். அதுதான் லேட், “உங்கட குணம் எனக்குத் தெரியும்தானே டொக்டர். நோயாளிகளின் துன்பம் தெரிந்தவர். பாவம் பார்க்கிறவர். எப்படியும் காத்திருப்பியள் என்று தெரியும்.”
ஜஸ் அடிப்பதுடன் ஏமாந்த சோணாகிரிப் பட்டத்தையும் எனக்குச் சூட்டுகிறார்.
லேசாக 'கையைத் திருப்பினேன். கைக்கடிகாரத்தைப் பார்க்கும்
தோரணையில்.
‘டொக்டருக்கு நேரம் போட்டுதோ? இந்த நேரத்திலை வந்தால்தான் உங்களோடை ஆறுதலாகக் கதைக்கலாம். இல்லாவிட்டால் சனம் விடுமே? மற்ற நேரம் என்றால் சனமாயிருக்கும்; எப்படிக் கதைக்கிறது. உங்களுக்கும் எங்களைப் போலை சிலரோடை கதைச்சால் தானே மனம் ஆறும். எந்த நேரமும் நோயாளிகளின் குறைகளைக் கேட்டால் சலிப்புத்தானே வரும்.”
என்னிலை இவருக்கு எவ்வளவு கரிசனை! அதுதான் இந்த அரைச் சாமத்திலை வந்து கழுத்தறுக்கிறார். விட்டால் நடுச்சாமம் வரை இருப்பார். கதையை மாற்றி நேரடியாக விடயத்திற்கு வந்தேன்.
'இப்ப உங்களுக்கு என்ன வருத்தம்”
'எனக்கோ! வருத்தமோ? ஒன்றும் கிடையாது!”
‘அப்ப ஏன் இந்த நேரத்திலை?”
“இரண்டு நாட்களாக வேலைக்குப் போகவில்லை. வீட்டிலை வேலை இருந்தது. நாளைக்குப் போக வேணும். அதுதான் ஒரு மெடிக்கல் சேர்ட்டிபிக்கற் வாங்க வந்தனான்.”
தொலைபேசி எனக்குத் தொல்லைபேசி ஆனாது.
92

சாதாரண தொலைபேசிகளால்தான் இத்தனை தொல்லை என்றால் இப்பொழுது செல்லுலர் தொலைபேசிகள் வேறு வந்து விட்டன.
எவரது கைகளைப் பார்த்தாலும் கம்பி நீட்டிய கைக்குண்டுகளுடன் வீரநடை போடுகிறார்கள். அது கையில் இருக்கும் இல்லாவிட்டால் ஷேட் பொக் கற்றுக்குள்ளால் எட்டிப் பார்க்கும். அல்லது இடுப்பில் தொங்கும்.
இதன் பயன்பாடு அதிகம் தான். எங்கிருந்தாலும் முழு உலகத்தை யும் உள்ளங்கைக்குள் கொண்டு வரக்கூடிய சாதனம் அல்லவா? ஆனால் அதற்க மேலாக அந்தஸ்தின் அடையாளச் சின்னமாகவும் மாறி விட்டதுபோல தெரிகிறது.
வாங்கும் போது ‘ஆக எட்டாயிரம்தானே' என எண்ணத் தூண்டும். வசதி அதிகம். இணைப்பும் உடனடியாகவே கிடைக்கும். தொழிலுக்கும் உதவியாயிருக்கும் என எண்ணிப் பூரிக்கும்.
பெரும்பாலானவருக்கு இந்த உற்சாகம் பூரிப்பு எல்லாம் சில மாதங்களுக்குத்தான். பில் வர கண்கள் பிதுங்கும். வாறகோல், போற கோல் எல்லாவற்றிற்கும் காசு. நாள் போகப்போக அழைப்பு எடுக்கவும் மனம் வராது! அழைப்பு வந்தாலும் மனம் கலங்கும். வரப்போகும் பில்லை நினைத்து உடல் சோரும்!!!
ஆனால் கையில் இருக்கும் மட்டும் ஷோ காட்டாமல் விடவும் மனம் விடாது. இதை எங்கு கொண்டு போகலாம். எங்கு கொண்டு போகக் கூடாது எப்போது கதைப்பது என்பவற்றில் எந்தவித சுயகட்டுப்பாடுகளும் சுட்டுப் போட்டாலும் வராது.
மேலைநாடுகளில் ஆஸ்பத்திரி, அலுவலகங்கள், ரயில், பஸ் போன்ற பொது போக்குவரத்துகளில் இவை தடைசெய்யப்பட்டுள்ளன. இங்கு திறந்த பொருளாதாரம் போல், இதன் பாவனையும் எங்கும் அம்மணமாக நிற்கிறது.
வேகமாக கார் பறக்கும் போது ஒரு கையில் ஸ்டயிரிங், மறுகையில் செல்போன் பேசும். பாதசாரியின் உயிர்தான் அம்பேலாகும்.
காதலியுடன் தனிமையில் இருக்கும் போது திரைப்படங்களில் வருவது போன்று இச் என்ற சப்தத்துடன் முத்தம் வரும் என காதலி ஆசையுடன் அணைப்பாள். இச்சுக்குப் பதில் கிணிர்தான் வரும்.
கோவிலில் அமைதியாகத் தியானம் பண்ணும்போது அருகில் இருப்பவரின் செல்போன் இறைவனுக்காக அருள்பாலிக்கும்!
93

Page 54
ஒரு நாள் இப்பிடித்தான், ஒரு நோயாளியின் வேதனைகளுக்கு செவிமடுத்துக் கொண்டிருந்தேன். மணியடித்தது. அந்த நோயாளி சொல்வதைக் கேட்டுக் கொண்டே ரிசீவரை எடுத்து “ஹலோ” என்றேன்.
மறுமொழி போனுக்குள் இருந்து வரவில்லை! எதிர்ப்புறத்திலிருந்து வந்தது.
“அது எனக்கு வந்த கோல்” நோயாளியுடன் வந்தவர் பெருமை யடித்தார். போனைக் கீழே வைத்தேன். வழிந்த அசடை கைக்குட்டை துடைத்தேன். எங்கேயிருக்கிறோம் என்ன செய்கிறோம் யார் யாருக்கு இடைஞ்சல் கொடுக்கிறோம் போன்ற எதுவித யோசனைகள் இல்லாமல் போனுக்குள் அலட்டத் தொடங்கினார்.
மற்றொருநாள். சளி காய்ச்சலுடன் ஒரு பெண் நோயாளி வந்திருந் தார். நோய் பற்றி விசாரித்து முடிந்தபின், நெஞ்சில் சளி எப்படி இருக்கிறது என அறிவதற்காக குனிந்து ஸ்டெதஸ்கோப்பினால் மார்பைப் பரிசோதித்துக் கொண்டிருந்தேன்.
போன் மணி அடித்தது. சூடு கண்ட பூனையல்லவா? போனை எடுக்கக் கையை நீட்டுமுன் நிதானித்தேன். ஒலித்தது எனது போன் அல்ல. நோயாளியுடன் கூட வந்திருந்த கணவரினது. இவர் போனில் வளவளா எனக் கதைத்துக் கொண்டிருந்தால் நான் நோயாளியைப் பரிசோதிப்பது எப்படி என்ற கவலை முளைத்தது.
ஹலோ”
அவரது உரத்த குரல் மனைவியில் முட்டி மோதி அவளையும் ஊடுருவி, கடுரம் தணிந்து ஸ்டெதஸ்கோப் ஊடாக காதில் விழுந்தது. பின் சத்தம் நின்றது. மனிசன் மனேர்ஸ் தெரிந்தவர் போலும், கதையைக் கட் பண்ணிவிட்டார் என அமைதியடைந்தேன்.
திடீரென கடாமுடாவென வெண்கலக் கடைக்குள் யானை புகுந்தது போன்ற சப்தம், ஸ்டெத் குழாயைக் கிழித்துக் கொண்டு வந்து செவிப் பறையை உடைத்தது. பொறுக்கமுடியாமல் பிடுங்கி மேசையில் எறிந்தேன்.
கணவன் தனது போனை மனைவியின் வாய்க்கு நேரே பிடித்துக் கொண்டு நிற்க அவள் தனது சினேகிதியுடன் அரட்டையை ஆரம்பித்து விட்டாள்.
94

DO DI ] ]
உள்ளே வந்தவரின் குட்மோர்னிங் முகமன்கள் வழமையான விசாரிப்புகள் யாவும் முடிய ஆரம்பித்தார். “டொக்டர் நீங்கள் ஒரு முக்கியமான நபர். உங்களோடு தொடர்பு கொள்ள ஒவ்வொரு நிமிடமும் பலர் ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்களை நீங்கள் ஏமாற்றக்
(in L. T...
நான் அவ்வளவு முக்கியமான நபரா? கோடை வெயிலில் ஐஸ்கட்டியைத் தூக்கி தலையில் வைத்தது போல இளகினேன். ஆனாலும் சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதும் எனக்குத் தெரியும். வந்தவரைப் பார்வையால் குடைந்தேன்.
வாலிபர், வயது இருபத்தைந்து இருக்கும். விலையுயர்ந்த கவர்ச்சி யான நீளக்கை சேட் அணிந்திருந்தார். அதற்கேற்ற ஆடம்பர டை, நேர்த்தியான ட்றவுசர். பளபளக்கும் சப்பாத்து. வசீகரமான பேச்சு.
மெடிக்கல் ரெப' மருந்துக் கொம்பனிகள் தமது மருந்துகளை வைத்தியர்களுக்கு அறிமுகப்படுத்தி அவற்றை நோயாளிகள் தலையில் கட்டுவதற்காக அனுப்பப்படுபவர்கள். எமது வேலை கடுமையாக இருக்கும் நேரங்களில்கூட தமது பிரசாரத்திற்குத் தயங்காதவர்கள். பொறுமையைச் சோதிப்பவர்கள். ஆனால் பேனை, எழுதும் நோட் புக், சாம்பிள் என லஞ்சம் கொடுத்து வைத்தியர்களை அடக்கிவிடுவதில் வல்லவர்கள்.
'.அவர்களுக்கு உங்கள் தொடர்பு கிடைக்காவிட்டால் மிகுந்த மனக்கஷடம். அதே நேரத்தில் உங்களுக்கும் தொழில் ரீதியான இழப்பு. எனவே உங்களுக்கு ஒரு செலுலர் போன் அவசியம்’ விடயத்துக்கு வந்தார் மிக நிதானமாக.
மெடிக்கல் ரெப் அல்ல ரெலிபோன் கொம்பனியிலிருந்து வந்திருக் கிறார்.
தான் பிரதிநிதித்துவம் வகிக்கும் கொம்பனியின் பெருமை, அவர்களது தொலைபேசிச் சேவையின் சிறப்பம்சங்கள், பாவனையாளர் களுக்குக் கிடைக்கும் நன்மைகள், வைத்தியர்களுக்கான விசேட விலை கழிப்பு என அடுக்கிக் கொண்டே போனார்.
கொட்டாவிகளைக் கஷ்டப்பட்டு அடக்கவேண்டியதாயிற்று.
95

Page 55
“நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனாலும் எனக்கு இப்பொழுது செல்லுலர் போன் தேவையில்லை” என்றேன்.
'நீங்கள் எங்கிருந்தாலும் எவரும் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இந்த வசதியைக் குறைந்த விலையில் தருகிறோம். கூட்டத்தில், தியேட்டரில், கோயிலில் எங்கிருந்தாலும் நோயாளர்கள் மாத்திரமன்றி ஏனையவர்களும் உங்களை உடனடியாக நாடலாம் அல்லவா?”
‘அதே காரணத்தால்தான் எனக்கு வேண்டாம் என்கிறேன்’.
'வீட்டிலும் வைத்தியசாலையிலும் இருக்கிற போன்களால் வருகின்ற தொல்லைகளே போதும். எனக்கென்று சில நிமிடங்களாவது தனிமை தேவை. அமைதி தேவை. சில கணங்களாவது இசையில் மூழ்க வேண்டும். இலக்கியத்தில் அமிழ வெண்டும். சிரித்து மகிழ்ந்து நண்பர் களோடு அளவளாவ வேண்டும். வெளியே செல்கின்ற சில தருணங் களில்தான் இது எப்போதாவது கிடைக்கிறது. அதை இழக்க நான் தயாராக இல்லை. சொறி சென்று வாருங்கள்” என விடையளித்தேன்.
‘சரி உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் முயற்சிக்கிறேன்” நம்பிக்கையைக் கை விடாமல் ஆனால் தொங்கிய முகத்துடன் வெளியேறினார்.
அடுத்த நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் அது பார்வையில் விழுந்தது. தனது சிறுகைப்பையை அருகிலுள்ள மேசையில் மறந்துபோய் விட்டுவிட்டு அவர் சென்றுவிட்டார்.
பாவம். ஏதாவது முக்கிய ஆவணங்களை கைப்பையில் விட்டுவிட்டு அவசரத்தில் சென்றிருப்பார். இப்பொழுது அவசிய தேவைக்காகத் தேடிக் கொண்டிருக்கக்கூடும் என எண்ணினேன். நல்லவேளையாக கைப்பையின் வெளிப்புறத்தே அவரது பெயரும் தொலைபேசி இலக்கமும் கிடைத்தன. தாமதிக்காது அவரது இலக்கத்தை டயல் பண்ணினேன்.
அவரது கைப்பை கிணுகினுத்தது!
96

மரத்துள் மறைந்த
மUதல4டிை
மனிதர்கள் தான் எத்தனை ரகமானவர்கள்.
வசந்த காலத்தில் ஹக்கல மலர் வனத்தில் மொட்டவிழ்த்து மணம் வீசி, பனித்துளி மின்னச் சிரித்து நிற்குமே பல வண்ணப் பூக்கள், அதேபோலத்தான்!
எத்தனை நிறங்களில், எத்தனை வடிவங்களில் எத்தனை குணங்களில் - மனிதர்கள்!
மலர்களைப் பார்த்தால் கண்கள் குளிர்ந்து நயக்கும். நாசி நுகர்ந்து களிக்கும். உள்ளம் உவகையால் இராகம் பாடும். ஆனால் மனிதர்களைப்
பார்த்தால். ஆசையும் வரும் அருவருப்பும் வரும், ஆனந்தமும் வரும் அழுகையும் வரும், பாசமும் வரும் துவேசமும் வரும்.
பார்ப்பவரின் மனநிலையிலும் பார்க்கப்படுபவரின் குணஇயல்பிலும் w இவையெல்லாம் தங்கியிருக்கின்றன.
அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவர்களது இயல்பு கள் எம்மிடையே எதிர்த் தாக்கங்களை எழுப்பினும், அவர்களை அவர் களது இயல்புகளுக்காகவே இரசிக்கத் தெரிய வேண்டும்.
கோபக்காரர்கள், சாந்த சொரூபிகள், அவசரக்காரர்கள், அழுது வடிபவர்கள், நிதானமானவர்கள், துள்ளிக் கு(கொ)திப்பவர்கள் என எத்தனையோ வகையினரை வைத்தியர்களாகிய நாம் தினமும் காணக்கிறோம்.
97

Page 56
எத்தகைய குணமுடையவர்களாயினும் அவர்களை அன்புடனும் அனுதாபத்துடனும் நிதானமாக அணுகுவதற்கு வைத்தியர்கள் பயிற்று விக்கப்படுகிறார்கள். ஆனால் எத்தனை பேர் அவற்றை இதய சுத்தியோடு பழக்கத்தில் கொண்டு வருகிறார்கள் என்பது வேறு விடயம்!!
நான் இரசித்த கரெக்டர்களில் இவரும் ஒருவர்.
“குட் மோர்னிங் டொக்டர். என்ரை பிளட் சுகரை பார்க்க வேணும்' கணிரென ஒலித்த அதிகாரக் குரல் அடங்கவும், அவர் கதிரையில் உட்காரவும் சரியாக இருந்தது.
தெரிந்த மனிதர்தான். ஆயினும் பார்வையால் அளந்தேன். நோயை நிர்ணயிப்பதில் முதல்படி நிதானமான அவதானிப்புத்தான்.
நெடிதுயர்ந்த உருவம், நொச்சிக் கம்பு போல் மெலிந்த நீண்ட வலிச்ச உடம்பு, புடைத்து நிற்கும் இரத்த நாளங்கள், விலையுயர்ந்த பிரேமிட்ட பிளாஸ்டிக் கண்ணாடி, அதற்கப் பின்னே ஒளிந்து நின்று கொண்டு நட்புறவுடன் சிரிக்க முயலும் கண்கள். அதை அடக்கி வைக்கும் அதிகாரப் பார்வை, தூய வெண்ணிற ஆடை
இளைப்பாறிய அதிபரல்லவா? மாணவர்களையும் சில பல வேளை களில் ஆசிரியர்களையும் அதிகாரக் குரலினாலும், துளைத்தெடுக்கும் பார்வையினாலும் கைகட்டி நிற்க வைத்த பழக்கம் இலேசில் விட்டுப் போகுமா? சுடுகாடு மட்டும் தொடரவே செய்யுமோ?
‘அதற்கென்ன சேர் செய்து பார்ப்பம். இப்ப உங்களுக்கு என்ன வருத்தம்?”
“எனக்கு வருத்தமோ! நோய்நொடி என்னை அண்டாது. ஸ்போர்ட்ஸ் செய்த உடம்பு. இப்பவும் தினமும் வோக்கிங் போறனான். நல்ல திட காத்திரமாகத்தான் இருக்கு” தனது உடல்நிலை பற்றித் தனக்குத்தானே ஒரு சேர்டிபிக்கட் கொடுத்தார்.
‘.எண்டாலும். இண்டைக்குக் காலமை லேசான ஒரு தலை ஆய்ச்சல். அதுதான் இரத்தத்தில் சீனி எவ்வளவு எண்டு பார்க்க வந்தனான்.”
அவருக்கு நீரழிவு இல்லை. பலமுறை பார்த்துவிட்டேன். இது அவருக்கும் நன்கு தெரியும்.
“உங்களுக்குத்தான் நீரழிவு இல்லையே?.” என நான் ஆரம்பிக்க
இடைமறித்தார்.
98

y
'இல்லைத்தான் எண்டாலும் கட்டாயம் பார்க்க வேண்டும்’ தீர்க்கமாகச் சொன்னார்.
அவர் ஒரு அழுங்குப் பிடியர்; நினைத்ததை விடமாட்டார். இது என் நீண்ட நாள் அனுபவம். நேரத்தை வீணாக்காது நேர்சை அழைத்து "பிளட் சுகர்’ செய்ய வேண்டும் என்றேன்.
நேர்ஸ் ஸ்பிரிட் நனைந்த பஞ்சினால் அவரது வலது கையின் ஆள்காட்டி விரல்நுனியைச் சுத்தப்படுத்தினாள். நான் இரத்தத்தில் சீனியின் அளவை அளக்கும் குளுக்கோமீட்டர் கருவியை வெளியே எடுத்து அதனுள் லன்ஸட் என்று சொல்லப்படும் ஊசி போன்ற குத்தும் பகுதியை செருகினேன். பின் குருதியில் உள்ள சீனியை நிர்ணயிக்கும் ஸ்ரிப்ஸ் என்ற பகுதியைப் பொருத்தினேன்.
சுத்தம் செய்த அவரது விரலில் கருவியை அழுத்திப் பிடித்தபடி ஸ்விட்சைத் தட்டினேன். பக்கென ஊசி பாய்ந்து விரலில் தைத்தது. எதிர்பாராத சிறு வலியினால் அவரது கை தானாகவே பின்னுக்கு இழுத்துக் கொண்டபோது, அவரை அறியாமல் 'ஆ' என எழுந்த ஒலியை வலிந்து அடக்கிக் கொண்டார். பிரின்சிப்பல் அழலாமா?
செந்நிற முத்தென விரல் நுனியில் அரும்பிய இரத்தத் துளியை ஸ்ரிப்ஸின் நடுப்பகுதியில் சொட்டாக விழ வைத்தேன். கீக் என்று கணக்கிட ஆரம்பித்த கருவி சில செக்கண்டுகள் கழித்து இன்னுமொரு கீக் ஒலி கிளம்பி மீட்டரில் 110 mg/1 எனக் காட்டியது. இதுதான் அவரது தற்போதைய இரத்த குளுக்கோசின் நிலை. அவர் காலைச் சாப்பாட்டின் பின்னர் வந்திருந்தார். எனவே இது சாதாரண அளவுதான். நீரழிவு இல்லை.
“எனக்குத் தெரியும் எனக்கு சலரோகம் கிடையாது. அவளுக்குத் தான் அந்த நசல் வியாதி. சொன்னாலும் கேட்கமாட்டாள். வாயை வயித்தைக் கட்டத் தெரியாது. கண்டதையும் தின்ன ஆலாய்ப் பறப்பாள்”. பிரின்சிப்பல் குறிப்பிட்ட அவள் அவரது சகதர்மிணி. அவளென்ற ஒருமை, தனது தேவைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்கும் மனித யந்திரத்துக்குக் கொடுக்கும் மரியாதை!! அவள் ஆலாய்ப் பறப்பவள் அல்ல என்பதும் சலரோகம் நசல் வியாதி அல்ல என்பதும் அவர் புரிய மறுக்கும் விடயங்கள்.
‘சேர் வலது கையை மேசையில் வையுங்கோ, பிரசரைப் பார்ப்பம்’
“எனக்குப் பிரசர் கிடையாது”. அழுத்தமாக மறுத்தார். அவரது பதிவுகளைத் தட்டிப் பார்த்தேன். 'போனமுறை, அதுக்கு முந்தின 99

Page 57
முறை எல்லாம் பிரசர் கூடத்தானே நின்றது. அப்ப நீங்கள் மருந்து சாப்பிட மறுத்திட்டியள்.”
‘ஓட்டமும் நடையுமாக வந்த உடனே அண்டைக்கு பாத்திட்டியள். அதுதான் கொஞ்சம் கூடக் காட்டியிருக்கும்.”
'பரவாயில்லை கட்டாயம் பார்க்க வேண்டும்’. குரலில் கடுமையைச் சற்று அதிகரித்தேன்.
அரை மனத்தோடு மேசையில் கையை வைத்தார். அவரது புஜங்கையில் ‘கவ்’ என்ற பகுதியைச் சுற்றி பல்ப் என்ற நீள்வட்டப் பந்து போன்ற பகுதியை அழுத்திக் காற்றை உட்செலுத்திக் கொண்டே மறுகையால் நாடித் துடிப்புபை அளவிட்டேன். அது மறையும் அளவைக் கவனித்துக் கொண்டேன். காதினுள் ஸ்டெதஸ்கோப்பின் ஒரு பகுதியைச் செருகி மறுமுனையை முழங்கையின் உட்புறத்தில் வைத்துப் பின் மெதுவாக காற்றை வெளியேறச் செய்து கவனமாக அவதானித்தேன். பிரசர் 180/100 எனக் காட்டியது.
அதிகம்தான். அவரிடம் கூறினேன்.
"சீ எனக்குப் பிரசர் கிடையாது. நேற்று முழுகிப்போட்டு தயிர் சாப்பிட்டனான். அதுதான் கொஞ்சம் கூடக் காட்டுது போல’ எனத் தட்டிக் கழித்துப் பார்த்தார்.
முழுகுவதாலோ தயிர் சாப்பிடுவதாலோ பிரசர் திடீரென ஏறுவ தில்லை. இதை அவருக்கு எடுத்துக் கூறினேன். பிரசர் உள்ள ஒருவர் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும். இல்லையென்றால் இருதய நோய்கள் வரலாம். சிறுநீரகமும் பாதிப்படையும். பாரிசவாதமும் வரக் கூடும். கண்பார்வையும் பறி போகலாம். இவ்வாறு எல்லா உறுப்புக் களுமே பாதிப்படையலாம் என்பதை பக்குவமாக எடுத்துக் கூறினேன்.
எனவே அவர் மாதமொரு முறையாவது பிரசரை அவதானிப்பதுடன் மருந்துகளையும் ஒழுங்காகச் சாப்பிட வேண்டும் என்பதைப் புரிய வைக்க முயன்றேன். ‘மாத்திரையின் பெயரை எழுதித் தாறேன். தினமும் ஒவ்வொன்று காலையில் சாப்பிட்டு வாருங்கள். பிரசர் குறையும்’ என்றேன்.
எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்.
தனக்குப் பிரசரே கிடையாது என அடம் பிடித்தார். கொழும்பில் உள்ள சில பிரபல வைத்திய நிபுணர்களின் பெயர்களைச் சாட்சிக்கு இழுத்தார். உண்மையில் அவர்களைச் சந்தித்தாரோ என்பது கடவுளுக்
100

குத்தான் வெளிச்சம்! சந்தித்திருந்தாலும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பது இவருக்கு மட்டும்தான் வெளிச்சம்!
மற்ராஸ், அப்பலோ ஹொஸ்பிட்டலையும் இழுத்தார். 'எனக்குப் பிரசர் என்று முதலில் சொன்னார். மருந்து தந்தார், மூன்றாம் நாள் திரும்பிப் போக நோமல் என்று கூறிவிட்டார்’ என்பது இவரது வாக்கு.
“பிரசர் குறைஞ்சிருக்கு என்று சொன்னது சரி. மருந்தை நிற்பாட்டச் சொன்னவரோ” என மடக்கினேன். அசட்டுச் சிரிப்புத்தான் மறுமொழியாக வந்தது. 'மருந்து சாப்பிட்டதால்தான் முன்பு குறைந்திருந்தது. கைவிட்டதால் மீண்டும் அதிகரித்துவிட்டது” என விளக்கினேன்.
எவ்வளவு சொல்லியும் அவர் தனக்குப் பிரசர் இருப்பதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. ... அடுத்த கிழமை வாறன். பிரசரை செக் பண்ணுங்கோ, கூட இருந்தால் மருந்து சாப்பிடுகிறேன்’ என முற்றுப்புள்ளி வைத்தார்.
அடுத்த கிழமை அவர் வரவில்லை. வரமாட்டார் என்பது தெரிந்தது தானே! கொஞ்ச நாட்களுக்குப் பின் இரத்தத்திலை சீனியின் அளவைப் பார்க்கவென மீண்டும் வந்து நிற்பார்.
அவரின் குண இயல்பை எப்படி விபரிப்பது? அழுங்குப் பிடியன் என்றா, விடாக்கண்டன் என்றா, படித்த முட்டாள் என்றா?
சுவாரஸ்யமான கரெக்டர்தான்.
தனக்கு நோய் இல்லை என்று பெருமை அடித்துக் கொள்வதில் திருப்தி கொள்பவர். பிரசர் இருந்தபோதும் அது கிடையாது என சாதிப்பார். கூட இருந்த நேரத்தில் ஏதாவது சாக்குப் போக்குகளைக் கூறி மறுப்பார். பிரசரை அளந்து பார்க்க விரும்பமாட்டார். ஆனால் தனக்கு இல்லாத நீரிழிவு நோயைச் சோதிக்க நாண்டு கொண்டு நிற்பார். நீரிழிவு இல்லாததை மீண்டும் மீண்டும் பறையடித்து முழங்கு வார். மனைவிக்குத்தான் நோய் தனக்குக் கிடையாது என பீற்றிக் கொள்வார். அவளை அசடாகக் காட்டுவதில் பெரும் திருப்தி அடைவார்.
‘இந்த மனுஷனுக்கு நெடுகத்தான் பிரசர் கிடக்குது. மருந்து சாப்பிடாது. பத்தியமும் காக்காது. அடம் பிடிக்கும். ஆனால்1. உனக்கு டயபற்றிஸ். சீனி சாப்பிடாதை, கிழங்கு சாப்பிடாதை அது கூடாது இது வேண்டாம் என்று என்னை வறுத்தெடுக்கும். இந்தாளோடை கொண்டு இழுக்கேலாது” இது அவளின் கவலை.
101

Page 58
அடுத்தமுறை அவரைப் பார்த்தபோது நிலைமை பரிதாபகரமா யிருந்தது. வீட்டில்தான் சென்று பார்த்தேன்! படுக்கையில் கிழிந்த நாராகக் கிடந்தார். வலது கையையும் காலையும் இழுத்துவிட்டது. பக்கவாதம்!
முரட்டுப் பிடிவாதத்தால் தானே தேடிக் கொண்டது.
“பார்த்தியளோ சேர், நீங்கள் பிரசரைக் கணக்கிலெடுக்காததால் தானே இது வந்தது”.
காட்டமாக மறுத்தார். 'எனக்கெங்கை பிரசர். ஒருநாளும் கிடை யாது. அண்டைக்கு ஒரு பேய் வேலை செய்துபோட்டன். முழுகிப் போட்டு வெய்யிலிக்கை அலைஞ்சு போட்டன். போதாக்குறைக்கு ஊறு காயோடு சாப்பிட்டும் விட்டன். அதாலைதான் இப்படியாச்சு”.
அவை காரணங்கள் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனால் இப்ப சொல்லிப் பிரயோசனமில்லை. இந்த நேரத்தில் சொல்லி அவரது மனத்தை வேதனைப் படுத்துவது நாகரீகமுமில்லை. அவரைப் பூரணமாகப் பரிசோதிக்கும்போது பிரசரையும் பார்த்தேன். 190/110 காட்டிற்று. குற்றம் சாட்டும் தோரணையின்றி அவரிடமும் சொல்லி வைத்தேன்.
‘காலமை உப்புகஞ்சி குடிச்சனான். அதுதான் கூடக் காட்டுது போல’ அனங்கல் குரலில் கூறினார்.
அறப்படிச்சவன் கூழ்க் குண்டானுக்கை விழுந்தது போல என்பதா? மண்ணில் வீழ்ந்தவர் மீசையில் மண் படவில்லை என முறுக்கிக் கொண்ட தைப் போல என்பதா?
G
"சுடுகாட்டுக்குப் போனால்தான் இவரது குணம் மாறும்” என எண்ணிக் கொண்டேன். ‘அடுத்த பிறவியிலும் இந்த மனுஷனை மாற்ற முடியாது’ என அவரது மனைவி மனம் நோவது போலிருந்தது.
பிரின்ஸிபல் தனது நோயை ஏற்காத ரகம் என்றால் அடுத்தவர் நோயை மறைக்கும் ரகம்,
அவருக்கு நீரிழிவு இருப்பதை நான் கண்டுபிடித்தபோது அவருக்கு வயது நாற்பது. மனிசன் அதிர்ந்துவிட்டார்.
எவருக்கும் அதிர்ச்சி வருவது இயற்கைதான். அதிர்ச்சி அடங்கியதும் அவரது எண்ணம் திசைமாறி ஓடியது.
102

“எனக்கு ஏன் இந்த வருத்தம் வந்தது? நான் குடிக்கிறது இல்லை, புகைக்கிறதும் இல்லை, வேறை கெட்ட பழக்கங்களும் கிடையாது. இந்த கிலிசைகேடான நோய் எனக்கு எப்படி வந்தது. இனி ஆக்களிலை எப்படி முழிக்கிறது. வெக்கமாகக் கிடக்கு’ எனச் சொல்லிச் சொல்லி மாய்ந்தார்.
‘'நீரிழிவு கெட்ட பழக்கங்களாலை வரயில்லை. அதிலை வெக்கப் படுகிறதுக்கு எதுவும் கிடையாது. இப்ப உலகத்திலை கால்வாசிப் பேருக்கு இதுதானே வருத்தம்” என நான் விளக்கியும் திருப்திப் UL6.h6)606).
‘ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதையுங்கோ! வெளியிலை தெரிஞ்சால் ஒருதரும் மதியாங்கள். தலை நிமித்த முடியாது.”
&
வைத்தியர்கள் வங்கிக் கணக்கு மாதிரி. நீங்கள் போட்டதை நீங்கள்தான் வெளியிலை எடுக்கலாம். மற்றவர்களுக்குச் சொல்வ தில்லை” என ஆறுதல்படுத்தினேன்.
“நல்ல காலமாக மனிசி இண்டைக்கு என்னோடை கூட வர யில்லை. அவவுக்கும் சொல்லிப்போடாதையுங்கோ’.
“உங்கட மனைவிக்கு நிச்சயம் தெரிய வேணும்”.
“இல்லை டொக்டர். பிறகு அவ வருத்தக்காரன் என்று மதிக்க uDTLLIT'.
“எந்த மனைவியும் தன்ரை கணவனை வருத்தக்காரன் என்று மதிக்காமல் விடமாட்டா. அவருக்கு அனுசரணையாக இருக்கத்தான் முயல்வா. உங்களுக்கு நீரிழிவு இருப்பது தெரிந்தால்தானே அவ பத்தியமாகச் சாப்பாடு தருவா. இனிப்புச் சாப்பிடக்கூடாது; கொழுப்புச் சாப்பாடுகளை நல்லாக் குறைக்கவேணும். மாச்சத்தையும் குறைத்து, மரக்கறி, மீன் வகைகளைக் கூடச் சாப்பிடவேணும் என்றபடியால் அவவுக்கு விஷயம் தெரிந்தால்தான், உங்களுக்கு ஏற்ற சாப்பாடு தருவா”
‘சரி மனைவிக்குச் சொல்லுவம். மற்றவையஞக்குத் தெரியவேண் டாம்” எனச் சமரசம் செய்துகொண்டார்.
“உங்கட மனைவிக்கும் நீங்கள்தான் சொல்ல வேண்டும். மற்றவை யளுக்குச் சொல்லுவதும் விடுவதும் உங்களைப் பொறுத்தது. ஆனால் அவையஞக்கும் தேவையேற்படும் போது சொல்லத்தான் வேணும். உங்கட நண்பர் வீட்டை அல்லது உறவினர் வீட்டை போறியள் என
103

Page 59
வைச்சுக் கொள்ளுங்கோ. உங்களுக்கு நீரிழிவு இருப்பது தெரியாவிட்டால் கேக், வடை, பிஸ்கட் என்று கண்டதையும் குடுத்து உபசரிப்பினம். வெளிப்படையாகச் சொல்லி வைச்சாத்தான் சீனியில்லாத தேநீர் தருவீனம் என்றபடியால் நோயை மறைக்கத் தெண்டியாதேங்கோ’ என விளக்கிக் கூறினேன்.
அவரது முகத்தில் நம்பிக்கை ஏற்பட்ட அறிகுறி தென்படவில்லை. அதன்பின் அவர் இடமாற்றம் பெற்று வேறுார் சென்றுவிட்டார். நீண்ட காலத்தின் பின் அவரைக் கண்டபோது மட்டுக்கட்ட முடியவில்லை. அவர்தான் தன்னை எனக்கு அறிமுகப்படுத்த வேண்டியதாயிற்று. அவ் வளவு மெலிந்து, கறுத்துக் காய்ந்து வரண்டு உருமாறியிருந்தார்.
'ஏன் இப்படி உங்கடை உடம்பு பழுதாய்ப்போய்க் கிடக்கு?” என்றேன்.
‘நீங்கள் சொன்னதைக் கேட்காததால் வந்த வினை’
'ஏன் என்ன நடந்தது?”
“எனக்கு நீரிழிவு வந்ததை மறைத்துப் போட்டன். போற வாற இடத்திலை உபசாரம் செய்யிறதை மறுக்க முடியவில்லை. f, கேக், ஐஸ்கிறீம், புடிங் என்று எதைத் தந்தாலும் மறுக்காமல் சாப்பிட்டன். வெளியிலை சொன்னால் வெட்கம் என்று நினைத்து நோய் பெருகி யிட்டுது.”
‘சரி இனியாவது கவனமாக இருங்கோ’
`இருக்கத்தானே வேணும் வேறை வழியில்லை. பார்க்கிறவன்கள் என்ரை உடம்பைப் பாத்திட்டு உனக்குக் கசமோ, எயிட்சோ எண்டில்ல கேட்கிறான்கள். கேவலமாகக் கிடக்கு”.
அவமானம் வந்துவிடுமோ எனப் பயந்து தேவையற்றதை ஒளித்தார். இப்ப அதைவிடப் படுகேவலமாய் அவமானப்பட்டுப் பாடம் படித் திருக்கிறார்.
சில விடயங்களை மற்றவர்களிடமிருந்து ஒளிப்பதும் மறைப்பதும் தவிர்க்க முடியாதுதான். ஆனால் ஒளிக்கக் கூடாததை ஒளித்தால் ஒளிப்பவர்தான் ஒழிவார்.
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்துள் மறைந்தது மாமத யானை என்ற கதைதான்.
104

குண்டால் தொலைந்தவர்கள்
அது ஒரு சனிக்கிழமை!
தனியார் வைத்தியசாலைகளுக்கு வேலைப்பளு அதிகமான நாள். எமது வைத்தியசாலையும் விதிவிலக்கு அல்ல.
வேதனைக் குரல்களையும், அணுக்கங்களையும், துன்பங் கலந்த குறைகளையும், கவலையில் தோய்ந்த முகங்களையும் தொடர்ந்து பார்த்து, கேட்டு ஸ்பரிசித்து, மனமும் உடலும் களைத்துவிட்டது. வேதனையோடு வந்தவர்கள் திருப்தியோடு திரும்பும்போது அவர்கள் இறக்கிவிட்ட பாரங்கள் என் மனத்தை அழுத்த சுழல் நாற்காலியில் அமிழ்ந்து கிடந்தேன்.
நேரமோ எட்டுமணியைத் தாண்டி வெகு நேரமாகிவிட்டது. இன்னமும் ஒரு சில நோயாளர்கள் காத்திருந்தார்கள். பொறுமையோடு அவர்களையும் கவனித்துவிட்டு வீடு செல்ல வேண்டும் என்ற அவசரம் எனககு.
மேசையில் இருந்த டெலிபோனும் களைத்துவிட்ட பாவனையில், அடங்கிய தொனியில் இசைத்தது. இனிய நாதம்தான். ஆயினும் அப்பொழுதிருந்த அலுப்பில் நாராசமாகக் காதைக் கிழித்தது.
“ஹலோ” என்றேன் சலிப்புடன்.
105

Page 60
‘ஐயோ டொக்டர்! நான் பாத்ரூமுக்குள்ளை விழுந்திட்டன். பலமாக அடிபட்டு வலது முழங்கால் வீங்கியிட்டுது. வலி தாங்க முடியவில்லை’ வேதனைச் சாறாக டெலிபோன் சிந்தியது. “வீட்டில உதவிக்கு இருக்கிற பிள்ளையும் பக்கத்து வீட்டுக்காரருமாகத்தான் தூக்கிக் கொண்டு வந்து கட்டிலிலை போட்டவை. என்னாலை அசையக்கூட முடியவில்லை. என்னை ஒருக்கால் வந்து பாருங்கோ பிளிஸ்!” எனத் தொடர்ந்தாள்.
டெலிபோனில் பேசியது நான் முன்னர் வசித்த நகரப் பிரமுகர் ஒருவரின் மனைவி. எனக்கு மிகவும் வேண்டிய குடும்பம். கணவர் காலமாகிவிட்டார். இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில். இவ கொழும்புக்கு வந்து வருடங்கள் பலவாகிவிட்டது. நான் கொழும்பிற்கு வந்து சில மாதங்கள்தான். அதன்பின் இன்னமும் நேரில் சந்திக்க வில்லை.
கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண் டேன். வேண்டிய நபர் என்பதற்காக மட்டுமல்ல. விழுந்து அடிபட்டு விட்டதால் எலும்பு முறிந்திருக்கலாம். என்னைக் காண வருவதற்கு அவர் முனைந்தால் காலை அசைப்பதால் நிலைமை மோசமாகக்கூடும்.
வேலையை முடித்துக் கொண்டு வருவதாகக் கூறி, விலாசத்தைப் பெற்றுக் கொண்டேன்.
வீட்டிற்குப் போய்ப் பார்த்தபோது, அவள் வேதனையில் முனகிக் கொண்டிருந்தாள். பிள்ளைகளைப் பற்றி விசாரித்துக் கொண்டே அவளது காலை நிதானமாகப் பரிசோதித்துப் பார்த்தேன். நல்ல வேளையாக முறிவு எதுவுமின்றித் தப்பிவிட்டாள்.
ஆனால், வலது கால் சுளுக்கி, முழங்காலுக்குள் நீர் நிறைந்து விக்கத்தினால் மினுமினுத்துக் கொண்டிருந்தது. அசைக்கமுடியாத வேதனை.
அவளது கவலைக்குக் காரணம் அவளது வலது கால் மட்டுமல்ல. இரண்டு முழங்கால்களும்தான். ஏற்கனவே பல காலங்களாக இடது முழங்கால் நோய்வாய்ப்பட்டு இயங்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பொழுது வலது காலையும் அசைக்கமுடியாத நிலை. இனி எப்படி எழுந்து நடமாடித் தனது நாளாந்தக் கடமைகளையேனும் நிறைவேற்றப் போகிறேனோ என்ற கலக்கம்.
தேறுதல் கூறிக் கொண்டே வலது முழங்கால் மூட்டினுள் இருந்த நீரை ஊசியினால் உறிஞ்சி வெளியேற்றி, மருந்துகளை உள்ளே 106

செலுத்தி, பன்டேஜ் போட்டேன். வலி தணிய மாத்திரைகளும் கொடுத் தேன். அப்பொழுது ஏற்கனவே நோயுற்றிருந்த இடது முழங்கால் பற்றி விசாரித்தேன்.
'அது கனகாலமாகவே கரைச்சல் குடுக்குது. செய்யாத வைத்திய மில்லை. குளிசைகள் கொடுத்தினம். முழங்காலுக்கை ஊசி போட்டினம். ஆனால் ஒரு சுகமும் இல்லை. அக்யூபங்சரும், ஆயுர்வேத மும் கைகொடுக்கவில்லை. வைத்தியம் செய்தே சலிச்சுப் போச்சு. இது என்ன வருத்தம் டொக்டர்?.”
'உங்கட இடது முழங்கால் மூட்டுத் தேய்ஞ்சு போச்சு. ஒஸ்டியோ ஆத்திரைடிஸ் என்று சொல்லுறவையள்”
'இது ஏன் வாறது டொக்டர்?”
'வயது போகப்போக எலும்புகள் தேயுறது வழமைதானே. அதோடை நீங்கள் சரியான மொத்தம். எடை கூடினபடியால் பாரம் தாங்கேலாது முழங்கால் மூட்டுப் பழுதாய்ப் போட்டுது”
y
** இரண்டு முழங்காலுக்கும் ஒரே வயதுதானே.” நக்கலாக ஆரம்பித்தாள். ‘.அதோட இரண்டு முழங்காலும் ஒரேயளவு பாரத்தைத் தானே சுமக்குது. அப்ப ஏன் ஒரு காலிலை மட்டும் வருத்தம்”
நியாயமான கேள்வி போலத் தோன்றினாலும், பழைய காலத்து ஆனந்தவிகடன் பகிடிகளை வாசித்த அசட்டுத்தனம் அவளது கிண்டல் தொனியில் வெளிப்பட்டது.
ஆனாலும் பொறுமையோடு விளக்கினேன்.
மூட்டு எலும்பு தேய்வதற்குக் காரணங்கள் பல. எடை, வயது, ஹோர்மோன்களின் குறைபாடு, வாழ்க்கை முறை, பிறவியிலேயே இருக்கும் சில வேறுபாடுகள், பரம்பரை அலகு எனப் பல என்பதை விளக்கினேன்.
“முழங்கால் மூட்டுக்கள் எடையைத் தாங்குபவை. எடை அதிகரிப்பு அவற்றைப் பாதிக்கின்றன. உங்களது எடை 75 கிலோவைத் தாண்டி விட்டது. உங்களது உயரத்திற்கு நீங்கள் 52 கிலோதான் இருக்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கு அதிகமாக இருக்கிறீர்கள். இதனால் உங்களது ஒரு முழங்கால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கிறது. எடையைக் கட்டுப்படுத்தாவிடில் வேறு மூட்டுக்களையும் பாதிக்கக்கூடும். எடை அதிகமானால் பிரஷர், நீரிழிவு போன்ற நோய்களும் வரலாம். இருதயம் கூடப் பாதிப்படையலாம்” என விளக்கினேன்.
107

Page 61
சற்று ஆர்வமும் நம்பிக்கையும் அவளது முகத்தில் நிழலாடின.
“மெலியுறதற்கு என்ன செய்ய வேணும்?”
உணவுமுறைகள் உடற்பயிற்சிகள் பற்றி விபரமாகக் கூறினேன்.
ஆறுமாதத்திற்குப் பின் வைத்தியசாலைக்கு வந்த அப்பெண்மணியை மட்டுக்கட்ட எனக்குச் சில கணங்கள் தேவப்பட்டது. தேர் அசைந்தது போலிருக்கும் அரங்கல் நடையைக் காணவில்லை. துள்ளல் நடையோடு வந்தாள். அறுபத்தைந்து வயது நாற்பதாகக் குறைந்து விட்டது போன்று புதிய தோற்றம். ஆள் அரைவாசியாகக் குறைந்து விட்டதுதான் காரணம்.
நடந்துவந்த இளைப்பும் இல்லை.
“எனக்கு இப்ப எல்லாமே சுகம். உடம்பு லேசா இருக்கு. லிப்ட் தேவையில்லை. மாடிப்படியில் ஏறியே வீட்டிற்குப் போறன். முழங்காலும் நல்ல திருத்தம். வலிக் குளிசைகள் போடுறதில்லை” திருப்தியோடு கூறினாள்.
இருபத்தைந்து கிலோ குறைய வேண்டும் எனக் கூறியிருந்தேன். ஏற்கனவே பதினெட்டுக் கிலோ குறைந்து விட்டது. மிகுதியும் குறைய மேலும் சுகம் தெரியுமென்பதை எடுத்துக் கூறினேன்.
மகிழ்ச்சியோடு வெளியேறினாள்.
இந்தப் பெண்மணி விதிவிலக்கான ஓர் உதாரணம். முழுமுயற்சி எடுத்து எடையைக் குறைத்தாள் இவள்.
ஆனால் பெரும்பாலானவர்களுக்கு எடையைப் பற்றிய எந்தவித அக்கறையும் கிடையாது.
எடையைக் குறையுங்கள் என ஆலோசனை கூறினால் அடுத்த முறை வரும் போது இன்னும் இரண்டு கிலோ அதிகரித்திருக்கும். ஏன் எனக் கேட்டால் அசட்டுச் சிரிப்புடன், ‘நான் எவ்வளவோ தெண்டிச்சுப் பார்த்தேன். ஆனால் குறையுதில்லை” என்பார்கள்.
சாய்வு நாற்காலியில் சரிந்து கொண்டு, கடையில் வாங்கி வந்த மிக்சர் பைக்கற்றுக்களை அரைத்து உள்ளே தள்ளிக் கொண்டே ரீ.வி பார்ப்பார்கள். அப்பொழுது டொக்டர் எடையைக் குறைக்க வேணும் என்று சொன்னவர் என்ற நினைவு கனவு போல வந்து மறையும்.
அதுதான் அவர்களின் தெண்டிப்பு.
108

பரந்த காணிகளில் நடந்து, விரிந்த வீதிகளில் சைக்கிளில் ஒடி, வரண்ட பூமிகளில் உழைத்தவர்கள் இப்பொழுது நகரத்தின் பன்னிரண்டு அடி அறைக்குள் ஒடுங்கிவிட்டார்கள். சுழன்றடிக்கும் மின்விசிறியின் வெக்கைக் காற்றுக்குள் சுருண்டு கிடக்கிறார்கள். பவுண்டும், டொலரும், பிராங்கும் டெலிபோனிலிருந்து கொட்டுகிறது. ஆனந்தமாகச் சாப்பிட்டுப் படம் பார்த்துத், தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றிலிருந்து ஓய்வு கிடைத்தால் ஆட்டோவில் கோயிலுக்கும் போய் ஓர் அர்ச்சனை செய் வார்கள். அவ்வளவுதான்!
எடை கூடாமல் வேறு என்ன நடக்கும்?
இவர்களின் எடை ஏறினால் வெளிநாட்டில் வசிக்கும் இவர்களின் பிள்ளை குட்டிகளுக்குத்தான் நிம்மதி!
கணகணவென்று காதைக் குடைகின்ற பூரீலங்கன் கோல்களிலி ருந்து விடுதலை.
மாதா மாதம் காசு அனுப்புகிற தொல்லையுமில்லை!
லட்சக்கணக்கில் காசைக் கொட்டி வெளிநாட்டுக்குக் கூப்பிடுகிற தேவையுமிருக்காது!
ஊதி வீங்கிய பலூன் போல வீங்கிக் கொழுத்தவர்களின் இருதய நாடிகள் படீரென வெடிக்க, திடீரென ஹார்ட் அட்டக்கில் சுவர்க்கம் சேர்ந்து விடுவார்கள். செத்தவீட்டுச் செலவோடை முடிந்துவிடும்தானே!
ஆனால் கொழுப்பதில் மாத்திரம் சாதனை புரிவதற்கு இவர்களை மாத்திரம் குறை கூறமுடியாது.!
'உடம்புக்கு வேலை வேணும். தினமும் ஒன்றிரண்டு மைல் தூரமா வது நடை போக வேணும்” என மருத்துவ ஆலோசனை கொடுத்தால்,
‘விடியக்காலை கோயிலுக்குப் போறவையளை மேளதாளத்தோடு அள்ளிக் கொண்டுப் போறாங்கள். அறுபது வயதுகளைக் கூட ஏன் எதுக்கென்று கேட்காமல் ஆறேழு நாட்கள் உள்ளே தள்ளுறாங்கள். இந்த நிலைமையிலை எப்படி வோக் போறது?’ என அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது.
O
எடையைக் குறைக்க வேண்டும் என முயற்சி செய்தும் எடை குறையாதவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
109

Page 62
அது எப்படி என்கிறீர்களா?
அந்தக் குடும்பமே பூசுணிக் காய்க் குடும்பம்தான். உருவத்தில்! அப்பா, அம்மா, மகன் மூவருமே கட்டையாக, உருளையாக, குண்டாக உயரத்திற்கும் சுற்றளவிற்கும் வித்தியாசம் இல்லாதவர்கள். அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்தது. ஆசிரி, நவலோக வைத்திய சாலைகளை வலம் வந்து இறுதியில் இந்தியாவில் பைபாஸ் சத்திர சிகிச்சையில் முடிந்தது. பல லகரகங்களை இளக்கியும் நல்ல சுகமில்லை.
அம்மாவிற்கு பிரஷர், நீரிழிவு, கொலஸ்ரோல், என மருத்துவ அகராதியிலுள்ள அவ்வளவு நோய்களும் அடைக்கலம்.
முப்பது வயதை எட்டாத மகனுக்கும் பிரஷர்.
உணவுக்கட்டுப்பாடு, உணவுக்கட்டுப்பாடு, உணவுக்கட்டுப்பாடு! இதுதான் வைத்தியர் முழுக்குடும்பத்திற்கும் விதித்த கட்டளை.
அம்மா டொக்டரின் கட்டளையை அக்கறையோடு அமுல் நடத்த ஆரம்பித்தாள்; சற்று அதி தீவிரத்துடன்.
கேக், புடிங், ஐஸ்கிறீம், சொக்கிலற் யாவும் வீட்டிலிருந்து நிரந்தர விடை பெற்றன.
சமையலில் எண்ணெய், வதக்கல், தாளித்தல், பொரியல் எதுவும் கிடையாது.
இறைச்சி, நண்டு, இறால், முட்டை எதுவும் சமையலறைக்குள் நுழைய முடியாது. அப்பில் அற்ற தடை.
சிவத்தப்பச்சை அரிசி, ஆட்டாமா, குரக்கன்மா, தவிட்டுப்பாண் ஆகியன அரசேறின. இடியப்பம், புட்டிற்கு மா குழைக்கும்போது தவிடும் சேர்த்துக் குழைப்பாள் என்றால் பாருங்களேன்.
கீரை மசியல் முருங்கையிலைச் சுண்டல், அகத்திக் குழம்பு எனத் தினசரி இரண்டு மூன்று இலை வகைகள் தப்பாது. அதுவும் கொழுப்பு நீக்கிய பால்மாவில், சாம்பிராணிப் புகை பிடிக்கக்கூட தேங்காய் சிரட்டை வீட்டில் கிடைக்காது!
அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் கொஞ்சமாக இளைக்கத் தொடங்கினார்கள். ஆனால் மகனில் எந்த மாற்றமும் கிடையாது.
அம்மாதான் எனக்கு இந்த விபரங்களைத் தந்தார்.
110

‘இவன் சாப்பிடுகிறதே கொஞ்சம். சில வேளைகளில் பசிக்கவில்லை எனச் சாப்பிடாமலும் விட்டுவிடுவான். ஆனால் கொஞ்சங்கூட மெலியிறான் இல்லை” என ஆதங்கப்பட்டாள்.
அவளுக்குக் காரணம் புரியவில்லை. எனக்குப் புரிவது போலி ருந்தது! ஆனால் எதுவும் பேசவில்லை.
அடுத்தமுறை மகன் தனிய வந்தபோது விசாரித்தேன்.
‘அம்மாவின்ரை சாப்பாட்டை எப்பிடிச் சாப்பிடுகிறது? ஆடு மாடு களுக்குத்தான் சரி! நான் ஹோட்டல்களிலை முடிச்சிடுவன். வீட்டிலை அம்மாவிற்குக் கொஞ்சம் சாக்குப் போக்குக் காட்டிறதோடை சரி”.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு புதிய அர்த்தங் களும் இருக்கும் என்பதை விளங்கிக் கொண்டேன்.
என்றாலும் இன்னுமொரு ஹார்ட் அட்டார்க்கை விரைவில் அந்தக் குடும்பத்தில் எதிர்பார்க்க வேண்டும் என்பதை விசனத்தோடு புரிந்து கொண்டேன்.
இவ்வாறு குண்டால் தொலைபவர்கள் எத்தனை ரகம்.
1 11

Page 63

இலும் நடத்தைகளி
இம் மிக * எப்பொழுதுமே : :
oż೬ಐಗೆ