கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாளையான் சுவாமி

Page 1
ந
f
பிர
(தாளே
தாளே யான்
தசி
F
தாளேயா
பதிப்பி
S.
(எகானே
ஷெய்கு ெ
SጄmS›ኛm§ኛ፻፭m}
4.
*馬 「
|--|| |
.* |를 『』|雪青|| ||| |-|言|||||
|-"
 
 
 
 
 

ஒ జనాజికజకసెళ్ళి
-
W. T. H.
திருவடிவாழ்க!
ஹ்மபூரீ ய்னு முஹம்மது
பாரின் சுவாமி )
கர் அவர்களது
த்திரம்
ன் அச்சகத்தில் க்கப்பெற்றது
| 990
reis
ぐ。
لأيبي

Page 2

N. T. H.
தாளையான் திருவடிவாழ்க!
பிரஹ்மபூரீ ஷெய்கு நெய்னு முஹம்மது (தாளேயான் சுவாமி )
ஞானதேசிகர் அவர்களது சரித்திரம்
தாளையான் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றது
990
logo
SKSK)
یکینگ
{
oose pe)
šo

Page 3
முதற் பதிப்பு - 1963 1000 பிரதிகள்.
இரண்டாம் பதிப்பு - 1990 2000 பிரதிகள்.

பிரஹ்மபூரீ ஷெய்கு நெய்னு முஹம்மது (தாளேயான் சுவாமி) அவர்கள்

Page 4

786
N. T. H.
முகவுரை
பிரஹ்மபூரீ ஷெய்கு நெய்னு முஹம்மது (தாளேயான் சுவாமி)
அவர்களது சரித்திரச் சுருக்கம் தாளை யான் அச்சகத் தில் 1963-ம் ஆண்டு பதிப்பிக்கப்பெற்றது. அதனை அனேக பக்தர்களும் அன்பர்களும் வாசித்துச் சொல் லொணு இன்பமுஞ் சித்தத் தெளிவும் வாய்க்கப் பெற்றனர்.
தவத்திரு தாளையான் ஆண்டவர்களது சரித்திரச் சுருக்கத்தை விரிவான நூலாகப் பிரசுரிக்கும்படி பற்பல பக்தர்கள் ஓயாது வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்க ளுடைய வேண்டுகோளுக்கிணங்கி இந்த நூலைப் பல புலவர்களுடைய சகாயத்துடன் பிரசுரிக்கிருேம். அன்பர் கள் இனிதேற்று ஆத்மீக பாதையில் முன்னேறுவார்க ளாக தாளையான் திருவடி வாழ்க! அகண்ட வெளியில் அன்பர்களது தூய மனங் கரைந்து அவர்கள் ஆனந்த பரவசம் எய்துவார்களாக!
115, மெஸன்ஜர் வீதி, இங்ங்னம்,
கொழும்பு-12 S. அருளுணசலம்
1990 (தாளையான் ஆத்மார்த்த அந்தரங்கக்
கூட்டத்தவர்)

Page 5
a888aa888x. 3 శ్లో * கடவுள் ஒரு வஸ்துவோடுங் கலந்ததில்லை ଖୁଁ 醫 கடவுளோடு ஒரு வஸ்துவுங் கலந்ததில்லை ஜ் கடவுளைத் தவிர ஒன்றுமில்லை 3.
ந்த நிர்ணயம் உடையவரே என் கூட்டத்தவர். 3. பாடுபட்டேன் பரமறிந்தேன் 溪 3. பாடிழக்தேன் பரமானேன். ଖୁଁ 3. ஜ் தூண்டுகோ லில்லாத் துணையில்லாத் தூய்தானல் 3 வேண்டுவ தெல்லாங் கொடுக்கும் விண். 發
3. (பிரஹ்மழநீ தாளையான் சுவாமிகள்) * 器 繼 ဒွိ ဇွီးဝှိုနှိိ၊

N. T. H. நிராம்சமே நாம் ரீ சற்குரவே நம: தாளையான் திருவடி வாழ்க! கொழும்புமாநகர் கஞ்சத்தாளையான் மரபில் தோன்றிய திருவருட்பிரகாச வள்ளலும் தரீக்குஸ் ஸிர்ரியா என்ற ஆத்மார்த்த அந்தரங்க வழியின்
ஸ்தாபகருமான
பிரஹ்மபூரீ ஷெய்கு நெய்னு முஹம்மது தாளையான் பாவா (சுவாமி)
ஞானதேசிகர் அவர்களது சரித்திரச் சுருக்கம்.
சற்குருவணக்கம்
நேரிசை வெண்பா
அழியா அவித்தை அழிந்தொழிய ஞான விழியா லெரிக்கும் விமலன்-மொழியதனை நெஞ்சே நினைந்துருக நீங்காக் குருபரன்றன் கஞ்சமலர்த் தாளே கதி.
அறுசீர் ஆசிரிய விருத்தம் எப்பிழை செய்யினும் ஏதமறப்
பொறுத்தின் சொல்லா லென்றுஞ் செப்பி யினிப்பிழை யேதும்
வாராது காத்தருள் எந்தையே ஒப்பறு நிராம்சமே நாமெனும்
பெருவெளி தன்னை யுணர்த்தித் தப்பற நோக்க வுரைத்தான்
தயாபரன் எங்கள் குருபரனே.

Page 6
( 2 )
நம்புதாளையில் பிறப்பும் குழந்தைப் பருவமும்
ஆதியில் பஞ்சாப்பின் தலைநகராய் விளங்கிய லாகூர் என்னும் மாநகரின் பரம்பரைத் தொடர்பு உள்ளவரும் கொழும்பில் வர்த்தகஞ் செய்துகொண்டு ஆத்மீக சாதனை யில் மிக்க ஈடுபாடு கொண்டவருமாயிருந்த கனம் தங்கிய முஹியித்தீன் அப்துல் காதிர் அவர்கட்கும் இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த நம்பு தாளை யென்னும் ஊரில் வசித்த மீரா நாச்சியார் உம்மா அவர்கட்கும் சுமார் 1893-ம் ஆண்டளவில், அருந்தவப் புத்திர சிகாமணியாய் ஷெய்கு நெய்ன முஹம்மது அவர்கள் அவதரித் தார்கள்.
குழந்தை கர்ப்பத்திலிருந்த காலத் தில் அன்னரின் தந்தை முஹியித்தீன் அப்துல் காதிர் அவர்கள் கர்ப்பவதி யாயிருந்த தம் மனைவியை நோக்கி, உனக்குப் பிறக்கவிருக் கும் குழந்தை ஆணுக இருக்கும். அதற்கு ஷெய்கு நெய்ன முஹம்மது எனத் திருநாமம் சூட்டுவாயாக எனப் பகர்ந் தார்கள். இவ்வாறு முன்கூட்டியே தமது வாழ்வைத் தெரி வித்திருந்த முஹியித்தீன் அப்துல் காதிர் அவர்கள் சில மாதங்களுக்குப் பிறகு காலவியோகமடைந்துவிட்டார்கள். திருமணமாகிச் சில மாதங்களுள் தமது கணவரை இழந்த மீரா நாச்சி யார் உம் மா அவர்கள் சொல்லொணுத் துயரத்துக்கு உள்ளாகியவர்களாய் ஆண்டவனையும் பாசிப் பட்டணத்தில் சமாதி கொண் டி லங்கும் மேன் மை பொருந்திய நெய்ன முஹம்மது சாஹிப் ஆண்டகையை யும் நினைந்து கண்ணிர் உகுத்தவர்களாயிருந்தார்கள்.
இவ்வாறு சில தினங்கள் கழிந்தபின் ஒரு வயோதிகப் பெரியார் பக்கீர் (சன்னியர்சி) உடையில் வழிப் போக்கராய் வந்து மீரா நாச்சியார் உம்மா அவர்களது இல்லத்தின் வாயிலில் நின்றவர்களாய் அப் பெண்மணியை நோக்கி வயிற்றில் தரிபட்டிருக்கும் குழந்தை ஆணுகப் பிறக்கும். ஒன்றுக்கும் அஞ்சாதே. அக்குழந்தைக்கு ஷெய்கு நெய்ன முஹம்மது என்று பெயரிடுவாயாக எனப் பரிவோடு கூறி விட்டுப் போய்விட்டார்கள்.

( 3 )
இதன் பின் சிலநாட் கழித்து குழந்தை பிறக்கும் மாதம் வந்துவிட்டது. குழந்தை பிறக்கவில்லை. மீரா நாச்சியாருக்கு குழந்தை இல்லை. அது வெறுங் கட்டி என்றே சுற்றத்தவரும் மற்றயவர்களும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.
சரியான நாளில் நாச்சியார் உம்மாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டுச் சுகப் பிரசவம் ஆனது. அழகு நிறைந்த ஒரு ஆண்மகவு பிறந்தது. இரு பெரியார்கள் ஏற்கனவே சொல்லி வைத்ததற்கிணங்க அம்மகவுக்கு ஏழாம் நாளன்று ஷெய்கு நெய்னு முஹம்மது எனத் திருநாமஞ் சூட்டிச் சுற்றத்தார் மகிழ்வெய்தினர். தமது இன்னலின் நடுவே கிடைத்த அருமைக் குழந்தையைத் தாயார் தன் துயர் மறந்த நி லை யி ல் அளவிலா அன்புடன் வளர்த்து வரலானர்கள்.
இவ்விதந் தனது தாயாரின் அன்புக்கு உரித்தாகி, மழலைச் சொற்களோடு தாயின் மடிமீதேறிக் கொஞ்சிக் குலாவி அமுதருந்திவந்த இம்மகவு தனது இளம் பராயத்திலேயே ஏனையோர் விளங்க முடியாத தனி உணர்வு கொண்டதாய் வளர்ந்து வரலாயிற்று. இவ்விதம் சிறு குழந்தையாய் விளை யாடும் பருவத்திலும் தான் மட்டுந் தனித்திருக்கும் வேளை யில் தெருவிற் கிடக்கும் மண்ணைக் கிளறிக் கூட்டிக்கபுரைப் (சமாதியைப்) போன்ற ஒன்றை உருவாக்கி அதன் இரு மருங்கிலும் இரண்டு சிறு குச்சிகளை நாட்டி அதன் எதிரே தம் இரு கண்களையும் மூடியபடி மெளனமாய் யோகிகளைப் போல, கால்களை மடித்துக்கொண்டு வீற்றிருப்பார்களாம். இந்த நிலையைச் சில சமயங்களிற் கண்ணுற்ற தாயார் குழந் தையின் போக்கையுந் தன்மையையுங் கண்டு சினமுற்ற வராய் அந்நிலையைக் கலைத்துவிடுவார்களாம்.
வேறு சில சந்தர்ப்பங்களில் தம்மைப் போன்ற சிறர்க ளுடன் விளையாடும்போது அல்லாஹ" இங்கேதான் ‘இருக் கிருர்’ என்று சுட்டிக்காட்டி “லாயிலாஹ - இல்லல்லாஹ்" என்ற அரிய சுலோகங்களை (திக்ருகளே) சொல்லிக்கொண்டே அச்சிருர்களையும் சொல்லச் செய்வார்களாம். மற்றைய பிள் ளைகள் அவற்றைக்கூறத் தெரியாத நிலையில் விழிக்கும்போது அவர்களைத் தம் கரத்தால் அடித்துச் சொல்லச் செய்து அச் சுறுத்துவார்களாம். இதனுல் தமது பிள்ளைகள் அழுவதைக் கண்ணுற்ற தாய்மார்கள் இந்தப் பாலகரான ஷெய்கு நெய்னு முஹம்மது ஏனைய குழந்தைகளை விளையாட அழைக் கும்போது இவரை நோக்கி, நீர் அடிக்கடி அடிக்கின்றீர், இவர்கள் உ ம் மோ டு சேரக்கூடாதெனத் தடுத் து விடுவார்களாம். P

Page 7
( 4 ) பாட்டனுர் அருளிய ஆரம்ப உபதேசம்
ஷெய்கு நெய்ன முஹம்மது அவர்களின் தாயைப் பெற்ற பாட்டனர் அவர்கள் நல்லறிவும் நல்லொழுக்கமும் இறைபக்தியும் நிறைந்தவராயிருந்தார். அவர் அடிக்கடி இக் குழந்தையைத் தன் மடிமீது அணைத் து வைத்துக்கொண்டு ஏதோ சில ஆயத்துக்களை (வேதவாக்கியங்களை) ஒதியோதி இக்குழந்தையின் முகத்திலும் நெஞ்சிலும் ஊதுவாராம். இதன் காரணம் இன்ன தென அறியாத அக்குழந்தையின் தாயார் தமது தந்தையை நோக்கி, எதையெதையோ சொல்லி உங்கள் பேரனின் முகத்தில் ஊதுகிறீர்களே என்று வியப்போடு கேட்பார். அதற்குத் தந்தை யார் மகளை நோக்கி, இந்த இரகசியம் உனக்குத் தெரியாது. இக் குழந்தை எதிர்காலத்தில் ஆண்டவனின் அருள் பெற்றவ ராகவும் பெரிய மகானுகவுந் திகழ்வார் எனத் தெளிவுறச் சொல்லுவார்கள்.
இவ்வாருக அக்குழந்தை சுமார் ஐந்து வ ய தா ன போது அதனைத் திருக்குர்ஆன் ஒதுதற்கு அரபிப் பள்ளியில் சேர்ப்பித்தார்கள். அத்துடன் தமிழும் கற்பிக்க ஏற்பாடு செய்தனர். விதியின் பயனை யாராலுங்கூட்டிக் குறைக்க முடி யாதெனச் சொல்லப்படும் வாக்கிற்கொப்ப ஷெய்கு நெய்ன முஹம்மது அவர்கள் ஒழுங்காக ஒதவுமில்லை, தமிழை முறை யாகக் கற்கவுமில்லை. சிற்சில சமயங்களில் தன் தாயாரோடு எங்கேனும் செல்லும்போது இடையிடையிற் காணும் பக்கீர் களையுஞ் சாதுக்களையும் பார்த்து இவர்கள் யார் எனத் தன் தாயாரிடங் கேட்பார்கள். அதற்கு அம்மாது சிரோன்மணி இப்பெரியார்கள் அல்லாவின் சந்நிதியிலிருந்து வந்தவர்கள், பின்பு அங்கேயே போய்விடுவார்கள் என்று விடைபகர்வார். இவ்வார்த்தையைக் கேட்ட குழந்தை தன் பாட்டனரிடம் இச்சம்பவத்தைச்சொல்லித் தானும் (அல்லாஹ்விடம்) போக வேண்டுமெனக் கேட்டு நிற்க அதற்கு அப்பெரியார் புன் முறுவலோடு தன்பேரனை நோக்கி, “நான் சொல்லுகிற பணி விடைகளை ஒழுங்காகச் செய்து வந்த ர ல் அல்லாவிடம் போகும் வழிவகைகளை க் காட்டித் தருகிறேன்” எனச் சொன்னர்.
அவ்வாறே பாட்டனரின் பணிகளைத் தன் குழந்தைப் பருவத்திலேயே ஷெய்கு நெய்னு முஹம்மது குறைவின்றிச்

( 5
செய்து வந்தார்கள். இவ்விதம் எழுந்த இறை நாட்டத் தின் பயனய் பாட்டனராகிய அப்பெரியாரது பணிவிடை களைச் செய்து அவருக்கு மகிழ்வூட்டியவராய்ச் சில வருஷங் களைக்கழித்தார். இடையிடையே பேரப்பிள்ளையாகிய ஷெய்கு நெய்னு முஹம்மதுவினது காதுகளில், “உன் விருப்பம்போல் அல்லாஹ்வை அடைய வேண்டுமானல் விவாகம் செய்யும் எண்ணத்தையும் அதன் ஆசையையும் நீ மறந்துவிட வேண் டும், அதுதான் உன்னை மேம்பாடடையச் செய்யும்’ என்று உபதேசித்து வந்தார்களாம். அத்தோடு பாட்டனர் சிற்சில அரிய இரகசிய ஜெப தப முறை களையுஞ் சொல்லிக் கொடுத்து அவரினது மனே நிலை பக்குவமடைந்து உல கார்த்த இச்சைகளை விரும்பாதவண்ணம் ஆக்கிவிட்டார்கள்,
ஆண்டகையவர்கள் தமது இளமைப் பிராயத்தில் ஏற் பட்டு நின்ற மனே நிலையைக் கூறும்போது கீழ்க் கண்ட வார்த்தைகளை அடிக் கடி உபயோகிப்பார்கள். அதாவது, “என் உள்ளத்திலிருந்து எழும் எண்ணம் "துன்யா' என்னும் இவ்வுலகை வெறுத்து ‘ஆகிறம்’ என்னும் மறு உலகத்தை அடையச் சதா உணர்ச்சியூட்டிக் கொண்டிருந்தது" என்பதாகும்.

Page 8
( 6 ) கொழும்பில் வேலையும் பம்பாய் சாதுவின் வழிகாட்டலும்
ஆண்டகையவர்கள் மேலும் தமது இளம் பிராயம் பற்றிக் கூறிய சில குறிப்புகள் வருமாறு:-
* என் தந்தையவர்கள் நான்கர்ப்பத்திலிருக்கும் போதே காலகதியடைந்து விட்டார்கள். பிறகு எங்கள் குடும்பத்தின் நிதி நிலையைச் சமாளிக்க அருமைத் தாயாரவர்கள் மண் பாண்டம்போன்ற பொருட்களை வாங்கி விற்று வந்தார்கள். யான் சிறு பிள்ளையாயிருந்த வேளையில் தாயார் வெளியிற் செல்லும்போது யானும் அவர்களைத் தொடர்ந்து போய் வருவதுண்டு. இடையிடையே என் படிப்பிற்காக மதரசாவுக் குப் (ஆரம்பப் பள்ளிக்கூடற்திற்குப்) போய்வருவேன்.
இப்படியாகச் சில வருடங்கள் கழிந்த பின் எங்கள் ஊரார் சிலரைப் போன்று நானும் இலங்கைக்குப் போய்வர லாமென்ற எண்ணம் உதயமாயிற்று. அப்படியே என்தாய் மாமாவாகிய ச. பி. கோஸ் முகம்மது அவர்களுடன் முதல் முறையாகக் கொழும்பு வந்து சேர்ந்தேன். எனது பருவத் திற்கு ஏற்றவாறு எனது சிறிய தந்தை பெ. ரி. அ. மு. முஹி யித்தீன் பிள்ளை அவர்களின் ஜவுளிக் சடையில் சிற்றுாழியர் வேலையில் சில மாதங்கள் இருந்தேன். அக்காலத்தில் சில வேளைகளில் ச  ைம ய லே முடித்துக் கொண்டு கடையி லிருந்த பலருக்கும் அவரவர்களுக்கு வழக்கம்போல் சாப் பாட்டைக் காணுமான அளவு பாத்திரத்திற் போட்டுவைத்து விட்டு அவர்களிடம் நீங்கள் உங்களுக்குரிய சாப்பாட்டை எடுத்துக்கொண்டு போங்கள், எனக்கு உணவு வேண்டா மெனக் கையினல் சைகையினைக் காட்டிவிட்டு இரவும் இன் னும் மறுநாட்பகல் முழுவதும் வாய் பேசாமலும் சாப்பிடா மலும் நோன்பாகவே இருந்து, அன்று மாலையில் நோன்பாளி யைப்போல நோன்பு திறந்து உணவு அருந்திக்கொள்வேன். இச்செயல்களை யெல்லாம் விரும்பாத என்சிறிய தந்தை பெ.ரி. அவர்களுக்கும் எனக்கும் அபிப்பிராயபேதம் ஏற்பட்டது. அதுகாரணமாக அந்த ஜவுளிக் கடையை விட்டு விலகி ஒரு மளிகைக் கடையிலும் அதற்குப்பின் ஒரு தேநீர்க் கடை யிலும் வேலைசெய்து வந்தேன். இவ்விதம் பல மாதங்கள் கழிந்தன.”

( 7 )
யான் 12 வயதை அடைந்த பின் அல்லாஹ்வின் தன் மையை உணர்ந்த மகான்களைச் சந்தித்து அவர்களின் பணி விடைகளால் யானும் ஒரு ஞானவானக வேண்டும் என்ற அபிலாசை ஏற்பட்டது. இந்த எண்ணத்திற்கு இறைவன் செவிசாய்த்தாற்போல பம்பாய் மாகாணத் தி லிருந்து கொழும்பு வந்திருந்த பக்கீர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பெரியார் என்னைப் பார்க்குந் தோறும் என்னைக் கூப்பிட்டு அருகிலமர்த்தி புன் முறுவலோடும் முக மலர்ச்சியோடும் ஆத்மீக சம்பந்தமான விஷயங்களைப் பற்றி உரையாடுவார்கள். இப்படி அப்பெரியாருக்கும் எனக்கு மிடையில் நெருங்கிய உறவேற்பட்டது. அப்பெரியார் சரியை கிரியை யோக ஞானம் இவைகளின் விளக்க முறைகளை எனக்கு எடுத்துக்காட்டி ஆரம்பமாகச் செய்யவேண்டிய தவத்தின் ஒழுக்கங்களைக் கற்பித்தார்கள். அதுவரை எனது பள்ளிப்படிப்பில் திருக்குர்ஆனில் முதலாவது பகுதியாகிய அம்மயஜுஸ"சவும் தமிழில் மூன்ருவது வகுப்பு வரையுமே கற்றிருந்தேன். எனவே எனக்குக் கிடைத்தற்கரிய பெருநிதி யாய் இந்த ஞானசிரியரின் தொடர்பு அமைந்திருந்தது. மகான்களாகிய குணங்குடி மஸ்தான் சாகிபு, தாயுமான சுவா மிகள் ஆகியோரது பாடல்களும் என்னை வெகுவாகக் கவர்ந்து வரலாயின. மேற்கண்டவாறு அந்த ஞானசிரியரு டன் அவர்கள் காண்பித்த பிரகாரம் இரண்டு வருட காலம் எனது ஆத்மீக சாதனைகளை அனுஷ்டித்து வந்தேன். அவ் வேளை அன்னர்க்குத் தொண்டு செய்யும் பாக்கியமுங் கிடைத்தது.

Page 9
( 8 ) திட புத்தியும் தொழில் இயற்றலும்
பொருளுக்கு உழைப்பதைப் போல அருளைப் பெறுதற் கும் இன்னும் பன்மடங்கு கூடுதலாய் அதற்குரிய துறை களில் உழைக்கவே வேண்டும் என்பதைப் பலர் மறந்திடுவ துண்டு. திட புத்தியுங் கடின உழைப்புங் கொண்டே ஆன் மீகத்திலும் முன்னேற முடியும் என்பதைத் தாளையான் ஆண் டவர்களது வாழ்க்கைவரலாறு ஒவ்வெர்ரு கட்டத்திலும் உணர்த்தி நிற்பதைக் காணமுடிகிறது. குழந்தைப் பருவத் தில் தமது பாட்டனரின் ஆசியும் வழிகாட்டலும் கிடைக்கப் பெற்று அந்நெறிச் செல்லும்போது பம்பாய் பக்கீரது பேரன் பினுல் யோக மார்க்க விளக்கமும் வந்தமையப் பெற்றது. எவ்வுயிர்க்கும் அவ்வுயிராயிருந்து இரட்சி க்கும் பரம் பொருள் இந்த இளஞ் சாதகருக்கு மேலும் அருள் செய்தற் பொருட்டு தொண்டியில் நீண்ட காலம் மெளன விரதம் பூண்டு கடுந் தவம் இயற்றிவந்த மகான் மெளன குரு ஷெய்கு மஸ்தான் ஒவியுல்லாஹ் அவர்களது தேடற்கரிய தொடர்பையும் ஏற்படுத்தியது. அந்த மேலான தொடர்பைப் பக்தியோடு இவர்கள் பயன்படுத்தி வந் தார்கள். அந்த மகானத் தொண்டி சென்று தரிசித்து வருவதும், அவர்களுக்குத் தமது அன்புக் காணிக்கையாக இனிப்புப் பதார்த்தங்களையும் ஷர்பத் வகைகளையும் கொழும்பிலிருந்து இடையிடையே அனுப்புவதும் வழக்கமா யிருந்து வந்தது.
இவ்வித ஆன்மீக நாட்டத்தின் நடுவேயும் தமது உணவு முதலிய தேவைகளுக்காக உடலால் உழைக்கவும் இவர்கள் தயங்கியதில்லை. இதனுல் கொழும்புக் கடைத்தெருவில், அரிசிக் களஞ்சியத்தில் மூடை தூக்குதல் போன்ற வேலைகளி லும் இவர்கள் ஈடுபடுவதுண்டு. இவ்விதம் பகலில் வேலை செய்து கொண்டு இரவில் பெரும்பாகத்தை இறை வணக் கத்திலும் அந்தர்முகநாட்டத்திலும் கழிப்பார்கள்.
இவ்விடத்தில் மேலும் சில விபரங்களைக் கூறுவது பொருத்தமுடையதாகும். அக்காலத்தில் ஆரம்ப வாலிபத் தன்மையைப் பெற்றிருந்த இவர்கள் ஒரு பெரும் வீரனுக் கொப்பான சரீர அங்க அமைப்புக்களைப் பெற்றிருந்தார்கள்.

( 9 )
அத்துடன் கொழும்பிற் சிலரிடம் "சீனடி’ என்னும் விளை யாட்டும் மல்யுத்தம் என்னும் குஸ்தியும் கம்பு விளையாட்டும் சந்தர்ப்டம் பார்த்து எதிரிகளைத் தடுக்கும் வர்ம விளையாட் டும் அந்த இளமைப் பருவத்திற் படித்திருந்தார்கள். அவ் வேளை கொழும்புப் புறக்கோட்டைப் பகுதியிலுள்ள பலர் இவர்களை ஒரு சண்டியன் என்றே கருதி வந்தார்களாம்!
அந்நாட்களில்" ஹம்மாது’ என்ற பெயருடைய புஜ பராக்கிரமசாலி ஒருவர் இருந்தார். அவர் சண்டித்தனம் உடையவர். இவர்கள் இருவரும் தோற்றத்தில் சற்றேறக் குறைய ஒரேமாதிரியாக இருந்தார்கள். ஹம் மாது, தமக்குத் தேவைப் படும்போது இவர்களிடம் வந்து, அறிவுரைகளைப் பெறுவது வழக்கமாயிருந்தது. இது அனே கருக்குத் தெரிந்த விஷயம். அவர் இறந்தபின் “ஹம்மாது' என்ற புனைபெயரிட்டு இங்குள்ளோர், ஷெய்கு நெய்ன முஹம்மது தாளேயான் பாவா அவர்களை அழைத்து வருவது வழக்கமாயிற்று. இவ்விதம் தெளிவும் துணிவும் பூண்ட பாட்டாளியாகவுந் தமது அந்தர்முகநாட்ட நிலையை வெளியிற்காட்டாத தீவிர சாதகளுகவும் இவர்கள் இருந்து வந்தார்கள்.
இவ்விதமான தமது கொள்கைக் கேற்ப இவர்கள் பின் னர் ஒரு சிறு தேநீர்க் கடையை நடாத்தலாயினர். அவ் வேளையில் அங்கு பக்கீர்கள், சந்நியாசிகள் ஆகியோர் வரு, வது சகசமாய் விட்டது. அவர்களுக்கு உண்ணப் பருகக் கொடுத்து உபசரிப்பதும், அவர்கள் நல்லாசி கூறிச் செல், வதும் வழக்கமாய் நிகழ்ந்துகொண்டிருந்தன. . .

Page 10
( 10 )
தொண்டி மெளன குரு நாயகத்தின் தொடர்பு
எத்தொழிலைச் செய்த வேளையிலும் அதனைப் பற்றற்றுச் செய்யும் மனப்பாங்கு ஷெய்கு நெய்ஞ முஹம்மது பாவா அவர்களுக்கு இளம் வயதிலேயே பொருந்தியிருந்தது. கொழும்பில் தமது சாதனையின் நடுவே தேநீர்க் கடையை யும் நடாத்திக்கொண்டு சில மாதங்கள் சென்ற போது தமது அன்பான தாயாரவர்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே தமது தேநீர்க் கடையை நண் பர் ஒருவரிடம் எதுவும் பேசிக்கொள்ளாமலே ஒப்படைத்து விட்டுத் தமது பிறப்பிடமாகிய நம்புதாளைக்கு இவர்கள் போய்ச் சேர்ந்தார்கள்.
தனதுமகனைக் கண்ட அந்த அருமைத் தாயார் அன்புடன் மகனை முத்தமிட்டு இருக்கச்செய்து சின் ஞ ட் கழிந்தபின் மைந்தனுக்குத் திருமணஞ் செய்து பார்க்க வேண்டுமென்ற ஆவல் மேற்கொண்டவர்களாய் அந்த விருப்பத்தை அடிக்கடி அவரிடம் சொல்லி வந்தார். ஷெய்கு நெய்னு முஹம்மது அவர்களோ அந்த வாலிப வயதிலும் உலகத்தின் ஆசா பாசங்களை விரும்பாதவராகவும் துறவு நாட்டங் கொண்ட மனே நிலையை யுடையவராகவும் இருந்தபடியால் அன்னை யின் விருப்பத்தை நிறைவேற்ற மூடியாதவராய் ஒரு நாள் தன் தாயாரவர்களை நோக்கி அன்னையே, நான் திருமணஞ் செய்து கொள்ளக்கூடிய பருவத்தை இன்னும் அடையவில்லை யாதலால் மீண்டும் ஒரு முறை இலங்கைக்குப் போய்விட்டுத் திரும்பி வருகிறேன். அப்போது இறைவன் திருவருள் நாட் டம் அங்ங்ணமிருப்பின் தங்கள் விருப்பப்படி திருமணஞ் செய்து கொள்ளுகிறேன் என்று கூறி அன்னையிடம் அனுமதி வேண்டினர்கள். அச்சொற்களைச் செவியேற்ற தாயான வள் பரிவோடு தன் மகனுக்கு இலங்கை செல்ல விடை கொடுத்தார்கள். தன் தாயாரின் பாதங்களைத் தொட்டு முத்தமிட்டவராய் ஷெய்கு நெய்ன முஹம்மது அவர்களும் கொழும்புக்கு ஏகத் தயாராஞர்கள்,
அதற்கு முன் தம் இதயத்தில் ஏத்தி வந்த தொண்டி மெளன குரு நாய்கம் அவர்களைச் சந்திக்கப் போனர்கள். மெளன குரு அவர்களோ அவ்வேளை மிகவும் பலவீனமடைந்

( ll
தவர்களாய்த் தலையைக் கீழே வைத்த வண்ணம் உட்கார்ந் திருந்தார்கள். அந்தச் சந்நிதியை யடைந்த ஷெய்கு நெய்ன முஹம்மது அவர்கள் அம்மகானின் முன் கைகட்டி நிற்க, இவர்கள் யார் என்பதையும் வந்த பிரயான நோக்கம் யாது என்பதையும் புரிந்து கொண்ட அம்மகான் தனது குனிந்த தலையை ஒரு கையால் பிடித்து உயர்த்தி நிமிர்ந்து சூரியப் பிரகாசம் போல இலங்கிய தமது இரு கண்கொண்டு இவர் களை ஒரு கணம் நோக்கிய பின் தமது திருக்கரத்தால் நிலத் தில் * முடியாத காலம் ” என்று எழுதிக் காட்டினர்கள். இந்த வாக்கியத்தின் சா ராம் சத்தை அவ்வேளை தாம் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என ஆண்டகையவர்கள் பிற்காலத்தில் கூறுவதுண்டு. இவ்விதம் மெளனகுரு நாயகம் அவர்களைத் தரிசித்துவிட்டு இவர்கள் கொழும்பு நகர் சேர்ந்தார்கள்.
ஏதும் பாடுபட்டு உண்ண விரும்பிய அண்ணலவர்கள் கொழும்புக்கு வந்ததும், திரும்பவும் ஒரு சிறு தேநீர்க் கடையை அமைத்து அந்த வருவாயைக் கொண்டு புற வாழ்க்கையை நடத்தியவண்ணம் தாம் ஆசிபெற்று வந்த தொண்டி மெளனகுருநாதரை உள்ளத்தால் நினைத்தவராய் ஆன்மீக சாதனையில் ஈடுபடலானர்கள். அந்த மகானையே தமது குருவாகக் கொண்டு ஈடேற வேண்டுமென்பது இவர் களது இலட்சியமாயிருந்தது. இவ்வாறு சில மாதங்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு நாள் தொண்டியிலிருந்து தந்தியொன்று வந்தது. அதில் மெளன குரு மஸ்தான் நாய கம் அவர்கள் காலவியோகமடைந்துவிட்டார்கள் என்ற செய்தி பொறிக்கப்பட்டிருந்தது.
அந்த மகானைப் பல முறை சந்தித்தும் அவர்களிட மிருந்து உபதேசம் பெறும் பாக்கியம் இழந்து விட்டோமே, இனி யாரைக் குருவாக அடையப் போகிருேம் என்ற தாக் கம் மேலிட்டவர்களாய் ஷெய்கு நெய்னு முஹம்மது அவர் கள் அப்படியே பிரக்ஞையற்று நிலத்தில் வீழ்ந்துவிட்டார் கள். அருகிலிருந்தவர்கள் இதனைக் கண்டு கலக்கமுற்றவர்க ளாய் அன்னுரைச் சூழ்ந்து அவரைத் தூக்கியெடுத்து அவ ரது படுக்கையிற் கிடத்தினர். சற்று நேரத்துக்கப்பால் ஷெய்கு நெய்ன முஹம்மது அவர்கள் ஒரு காட்சி கண் டார்கள். அதில் தமக்கு முன்னுள்ள பூமியானது பிளந்து

Page 11
( 12 )
அதிலிருந்து மெளன குரு நாயகம் அவர்கள் இலங்கோடு அணித்தவர்களாய் இவர்கள் முன் காட்சியளித்து *நீ தற்போது செய்துவரும் சாதனை சரி. இதை நீ ஒழுங் காகக் கட்ைப்பிடித்து வருவாயாகில், உன் இலட்சியம் சம் பூரணமாக நிறைவேறும். எதற்கும் அஞ்சாதே" எனக் கூறி மறைந்தார்கள். இதன் பின் ஷெய்கு நெய்ணு முஹம்மது அவர்களுக்குத் தெளிவேற்பட்டு விழித்தெழுந்தார்கள். இவ்விதம் விழித்தெழுந்தபோது ஒரு பெருந் தாக்கம் நீங்கிய தெளிவும் புது ஒளியும் அகத்தே உண்டாயின.
* தாகங்கள் தீர்க்குநல் லமுதே சஞ்சீவியைத்
தந்துகதி யாக்கு சோதி
கதறித் தவிக்கும் அடி யேனுமுமை நம்பினேன்
கரமணைத் தாள் வதற்கே.”
என்பதும் அதே மெளனகுரு மகானின் Lint La 65, Gop?

( ᏗᎩ ) .
தாயாரது மறைவு
கனவுகள் தோன்றுகின்ற வகை யிலேயே அவைகள் மறைந்து விடலாம், ஆனல் அருட்பெருக்கின் பயணுய்க் கிடைக்குங் காட்சிகளோ தம்முடைய பலா பல ன் களை அதற்குரிய உள்ளங்களில் ஏற்படுத்திவிட்டே அகல்கின் றன. இனி யேது செய்வோமென ஏங்கி நின்ற வேளையில் அருட்பெருக்கான தொண்டி மெளனகுரு பாவா அவர்களது காட்சியை ஷெய்கு நெய்ன முஹம்மது அவர்கள் கண்டார் கள். அக்காட்சியானது இவர்களை இறைநாட்டப் பாதை யிலே மேலும் உறுதிப்படுத்தலாயிற்று. அதற்கேற்ப மீண் டும் தொண்டி சென்று மெளன குரு மஸ்தான் அவர்களது ஜியாரத்தைத் (சமாதியைத்) தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்து வலுப்பெற்றது. அதன்படியே தமது தொழில் நிலையத்தை யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டுக் கப்பல் மார்க்கமாகத் தொண்டி வந்து சேர்ந்து மெளனகுரு மஸ்தான் அவர்களது மேன்மைமிகு தர்ஹா ஷரீபுக்குச் சென்று அங்கு அப்பள்ளிவாசலின் முகப்பிலமர்ந்து தியானத் தில் ஈடுபடலாஞர். தியானத்தில் தம்மை மறந்திருந்த வேளை யில் “உன் தாயார் சந்தூக்கில் (பா டையில்) கொண்டு வரப்படுகிருர், நீ எழுந்து ஒடு’ எனவோர் அசரீரி பிறந்தது. அதைச் செவியுற்றுஞ் ஷெய்கு நெய்னு முஹம்மது அவர்கள் சும்மா இருந்தார்கள். மீண்டும் சற்று உரத்த தொனியில் *உன் தாயாரின் சந்தூக்கு நெருங்கிவிட்டது' என்ற அதே அசரீரி கேட்டது. அதை யும் பொருட்படுத்தாது மெளன மாக இருக்கவே மூன்ரும் முறையாக “உன் தாயாரின் சடலம் கப்ரை (அடக்கஸ்தலத்தை) நெருங்கிவிட்டது, சீக்கிரம் ஒடடா” என்று உரத்த தொனியுடன் கன்னத்தில் ஓர் அடி யும் விழுந்தது. உடனே சுய நினைவு பெற்றவர்களாய் ஷெய்கு நெய்ஞ முஹம்மது அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சுமார் ஒரு மைல் தூரத்திலுள்ள நம்பு தாளை கப்ருஸ்தானை ஓடி வந்தடைந்தார்கள்.
அங்கு, இவரது அருமைத் தாயாரது சடலத்தை ஊரார் புடைசூழக் கப்ரு அறையில் உண்மையிலேயே வைத்து விட்ட சோகக் காட்சி எதிர்கொண்டு நின்றது. எனினும்

Page 12
( 14 )
கப்ரு அறையுள் மண்ணைத் தள்ளுவதற்கு முன் னரே வந்து சேர்ந்த மகன் அப்படி யே பிரக்ஞை"பற்றவர் களாய் க ப்ரினுள் விழுந்து விட்டார்கள். உள்ளத்தை உருக்கி நின்ற இச் சம்பவத்தினிடையே சிலர் இவரை மெதுவாக வெளியில் தூக்கி ஆறுதற்படுத்திய வண்ணம் கப்ரை மூடிப் பாத்திஹா துவா ஆகியவற்றை நிறைவேற்றி விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
திருமணத்தை ஒதுக்கிப் பிரமசரியத்தில் நிலைபெறல்
தமது தாயாரது நிலை பற்றியும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சில சம்பவங்கள் பற்றியும் ஆண்டகையவர்கள் கூறிய குறிப்புகளாவன :- “அருமை அன்னை மறைந்த சில நாட்களுள் என் வீட்டில் வேறு யாருமில்லாமல் நான் மட்டுந் தனியே இருந்து வந்தேன், வீட்டில் இருப்பிலிருந்த உணவுப் பதார்த்தங்களை யானே முடிந்தவரை சமைத் தெடுத்துக் காலவரையறையின்றி அருந்திக்கொண்டேன். இப்படியாகச் சிலநாட்கள் கழிந்தன. என்னை அரும்பாடுபட்டு வளர்த்த தாயார் மறைந்துபோய்விட்ட துயரமும் வேதனை யும் என் மனதை விட்டகலாமல் இருந்தன. இக் காரணங்க ளால் என்னிலைதடுமாறிச் சித்தப்பிரமை கொண்டவன் போல யாதொரு தொழிலுஞ் செய்யமுடியாமல் வீட்டிலிருந்த பொருட்களுங் காலியாகிவிட்ட நிலையில் எனது சுற்றத்தார் களும் என்னை ஆதரிக்காமலும் என்னிடம் நெருங்காமலும் ஒரு தெருச்சுற்றும் பைத்தியக்காரனைப் போன்று என்னை வெறுத்தொதுக்கித் தள்ளிவிட்டார்கள். அப் பொழு து நான் பசியாலும் பட்டி னியாலும் மனம் வெதும்பி விரத்தியுற்ற நிலை யில் நம்புதாளையை விட்டெங்கேனும் போய்விடுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
இந்நிலையில் எனது தாய் மாமனர் ஒரு நாள் என் னைச் சந்தித்து எனக்குப் பரிவு காட்டி ** உனக்குத் திரு மணஞ் செய்துவைக்க வேண்டுமென்று நமது சுற்றத்தார் கள் வலியுறுத்துகிருர்கள். ஆனபடியால், ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு, அவளை உனக்குத் திருமணஞ் செய்து வைக் கிறேன்’ என்று கூறினர்கள். அது கேட்ட நான் ஒரு பதிலுஞ்

( 15 ) சொல்லாதிருந்தேன். எனது பாட்டனரின் உபதேசத்தி லிருந்து ஒவ்வொரு சொல்லும் நினைவில் எழுந்தது.
இவ்வாறிருக்க அன்றிரவு அயர்ந்து தூங்கிக்கொண்டி ருக்கு போது ஒரு காட்சி கண்டேன். அதில், என் முன்
ஒரு கறுத்த பருத்த உருவம் தன் கையில் பிடித்திருந்த
பாசக் கயிற்றினல் என்னை ப் பிடித்துக் கட்டுவதற்காக
நெருங்கி வந்துகொண்டிருந்தது. நான் அலறி ஓடினேன்.
அவ்வேளை பக்கீர் ஒருவர் சிறிது தூரத்தில் வீற்றிருப்பதைக்
கண்டு அவரிடம் ஒடிச்சென்று என்னைக் காப்பாற்றுமாறு வேண்டினேன். அதற்கு அப்பெரியார் 'கலியாணஞ் செய்ப
வர்களைக் காப்பாற்றுபவன் நானல்ல. விவா கஞ்செய்துகொள் :
வதில்லையென நீ சத்தியஞ் செய்து கொடுத்தால் உன்னேக் காப்பாற்றுவேன்” என் ருர்கள். நான் அவ்விதமே சத்தியஞ் செய்தேன். உடனே அவர் என்னை நோக்கி 'இவ்வண்ணம் அந்த உருவத்தைப் டார்" என உரத் துக் கூறினர்கள். அவர் சொன்ன முறைப்படி நானும் அந்தக் கறுத்த உரு வத்தை உ ற் று ப் பார்த்தேன். பார்த்துக்கொண்டிருக்க அவ்வுருவம் அக்கினிச் சுவாலைக்கு இலக் காகி வெந்து சாம்பலாகியது.
அத்துடன் விழித்தெழுந்த நான் வியர்வையால் என் சரீரம் முழுவதும் நனைந்திருப்பதைக் கண்டு அருகிற் கிடந்த அங்க வஸ்திரத்தை யெடுத்து வியர்வையைத் துடைத்தபடி அங்குமிங்கும் பார்க்கும்போது என் னருகில் எவரும் இல்லை
யென்பதைத் தெரிந்து கொண்டவனுய் அதிவேகமாக ஒடி
னேன். ஒரு மைல் தூரத்தைக் கடந்து திரும்பிப் பார்த் தேன்.ஒருவரும் என் பின்னல் தொடர்ந்து வரவில்லை. அதன் பின் சற்று இளைப்பாறிக் கொஞ்சந் தைரிய முற்றவணுய்
சூரியன் உதயமாகுமுன் காளை யார் கோவில் என்னும் ஊரை வந்து சேர்ந்தேன். அங்கிருந்து வெகு தூரத்திலிருக் கும் மதுரையைச் சென்றடைந்தேன், இக் காட்சிக்குப் பின்னர் எனது பாட்டனரின் உபதேசத்துக்கிணங்க விவாகஞ் செய்யா திருப்பதே எனக்குச் சாலச் சிறந்த காரியமெனத்
தீர்மானத்துக்கு வந்துவிட்டேன்’. ஷெய்கு நெய்னு முஹம்'
மது அவர்கள் அவ்வாறே தே கவியோ கம் வரைக்கும் பிரமசரிய விரதத்தில் நிலைபெற்றிருந்தார்கள்.

Page 13
, 16 ) மதுரைப் புகையிரத நிலையத்தில்
பிரம்பு சுமத்தல்
சாதாரணமான பசி தாகம் என்பவை தோன்றி மறை யக் கூடியவைகளே. ஆனல் ஆத்மீகத் தாகம் ஒன்றிருக் கிறதே, அது இலேசில் தோன்றுவதுமில்லை, தோன்றியபின் கலபத்தில் ஒருவரை விட்டுநீங்குவதுமில்லை. அந்நிலைக்கு உள் ளானவர்களது அனுபவம் விசித்திரமானது; ஆரம்பக் கட் டத்தில் அளவு கடந்த வேதனை க்கும் உரித்தானது. அவற்றையெல்லாந் தாண்டிய வண்ணம் தனது கடின மான பயணத்தை இடைய முது மேற்கொள்பவனே உண் மையான சாதகன் ஆகிருன்.
அவ்வாறு உரம் பெற்று வந்த ஷெய்கு நெய்னு முஹம் மது அவர்கள் மதுரைக்கு வந்தார்கள். நீண்ட நடையினல் ஏற்பட்ட உடற்களைப்பும் தமது தாயாரின் மறை வும் அதைத் தொடர்ந்து எழு ந் த அனுபவமும் உள்ளத்திற் படிந்து நிற்பினும் இவற்றையும் மீறி ஒர் உள்ளுணர்வு எழுந்து செயற்படுகிறது; சாதகனுக்கு அது பலமூட்டி வழிகாட்டு கிறது. மதுரையின் பல தெருக்களைக் கடந்து இப்போது அங் குள்ள புகையிரத நிலையத்தை வந்தடைகிருர்கள். அங்கு ஒரு பகுதியில் ஏராளமான பிரப்பங் கட்டுகளைக் கூலியாட்கள் ஏற்றி இறக்கிக்கொண்டிருக்கிறர்கள்.
எவ்வளவுதான் பசியுடனிருப்பினும் எ வரிடமு ங் கேட்டு வாங்குவதில்லை; தொழில் செய்து வரும் ஊதியத் தைக் கொண்டே உண்பது என்னுங் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த நம் ஆண்டகையவர்களுக்கு மேற் கூறிய காட்சி கருத்தொன்றைக் கூறி நிற்கிறது. சில நிமிடங்களுள் கூலி ஆட்களுள் ஒருவராய் அவருஞ் சேர்ந்து பிரப்பங் கட்டுகளைச்சுமந்து ஏற்றுந் தொழிலில் ஈடுபடுகிறர் பிரப்பங் கட்டுகள் ஓரளவு சுமையானவை. அவற்றை ஒவ் வொன்முக எடுத்து ஏற்றுவதுதான் அங்குள்ள ஆட்கள் இது வரை கடைப்பிடித்துவந்த முறை. ஆனல் புதிதாகச் சேர்ந்த அந்தத் தடித்த இளைஞர் இரண்டு மூன்று கட்டுகளை ஒரே தடவையில் எடுத்து ஏற்றிக் கொண்டிருந்தார். வேலை சுறு சுறுப்பாகப் போய்க்கொண்டிருந்தது. இது ஏனைய கூலி

( 7 )
யாட்களிடையே பரபரப்பை ஏற்படுத்திற்று. “எங்கள் பிழைப்பைக் கெடுக்க வந்தவன்" என்ற குரல் எழத் தொடங்கி அது ரகளையின் வடிவை எட்டிப் பிடித்தது. அந் தக் கம்பீர இளைஞருடன் கைகலக்க எவரும் துணியவில்லை யாயினும் அந்த ஆட்களின் எதிர்ப்புக் குரல் அதிகரித்துக் கொண்டே போயிற்று. அதன் எதிரொலி புகையிரத நிலைய அதிபரையே அந்த இடத்துக்கு வரச்செய்தது. {
*புதிதாக வந்த ஊமையன் எங்கள் வேலையைக் குழப் புகிருன்” இதுதான் பழைய வேலையாட்களின் ஏகோபித்த குரலாயிருந்தது. அந்த வேலையாட்களுடன் ஆண்டகையவர் கள் கதையாதிருந்ததும் உண்மையே! எனினும் நிலையத்தின் அதிகாரி அங்கு நடந்ததை ஒரளவு ஊகிக்க வல்லவரா யிருந்தார். அவர் சற்று வயதிலும் முதிர்ந்தவர். "விசாரிக் கிறேன்’ என்று மற்றைய வேலையாட்களிடங் கூறிவிட்டு இவரை மாத்திரந் தமது அறைக்குக் கூட்டிச் சென்ருர். அது ரயில் வண்டி வராத ஓய்வு நேரம், ஏதோ ஒரு தன்மையை அந்தப் பெரியார் உணர்ந்திருக்க வேண்டும். "நீங்கள் யார்?" என அவர் விசாரிக்கத் தொடங்கினர். அவரது உணர்வின் தன்மையைத் தெரிந்துகொண்ட ஆண்டகை யவர்கள், 'யான் ஒரு யோகி. என் போக்கில் இவ்விதம் அலைந்து திரிகின்றேன். எவரிடமும் யான் கேட்பதில்லை. உழைத்துச் சாப்பிடுவது எனது கொள்கை. அதனுல் இங்கும் வேலை செய்தேன்" என்ருர்கள்.
அந்த அதிகாரி உடனே எழுந்து வணங்கி "தாங்கள் இவ்விடத்திலேயே இருந்து கொள்ளுங்கள். வீட்டிலிருந்து உணவு கொண்டுவந்து தருகிறேன். தாங்கள் இங்கேயே படுத்திருங்கள், நான் காலையில் வந்ததும் போகலாம்" எனக் கூறித் தமது வீட்டிலிருந்து உணவு கொண்டுவந்து இவர்களை உணவருந்தச் செய்து நிலையத்தில் படுக்கவும் ஒழுங்குசெய்து மறுநாட் காலையிலும் வந்து மரியாதையுடன் உணவு அருந் தச் செய்து, காசுகொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தார் கள். இதுவே ஆண்டவன் சங்கைப் படுத்திய விதம், அல்ஹம்து லில்லா! (புகழ் அனைத்தும் அந்தக் கருணை உள்ளவனுக்கே உரித்தாகுக!)

Page 14
( 18 )
கப்ருஸ்தானில் (அடக்க ஸ்தலத்தில்) காவல்
நில்லாதவற்றை நிலையெனக் கொள்ளும் இம்மாநிலத் தில் ஆத்மீகமென்ற அரும் பொருளில் நாட்டங்கொண்ட சாதகனது பயணமானது ஒர் அர்த்த மற்ற அலைச்ச லாகவும் நிதானமிழந்த போக்காகவும் வாழத் தெரியாத வகையாகவுமே சாதாரண மக்களுக்குப் புலப்படுகிறது. அத்தகைய அனுபவம் பலவற்றுக்கு உள்ளாகி, எண்ணரிய இடர்களை அனுபவித்து, தனது இலக்கை மனதிற் கொண்டு ஒடத்தைச் செலுத்தும் மாலுமிபோலச் சாதகன் என்பவனுந் தனது நிலை தவழுது மேற்சென்று கொண்டிருக்கவேண்டி யது மிகவும் அவசியம், ஆரம்பத்திற் கஷ்டங்கள் பல எழவே செய்கின்றன.
மதுரைப் புகையிரத நிலையத்திற் பிரப்பங் கட்டுகளைச் சுமக்குந் தொழிலாளியாகி வேலையாட்களின் பொருமையி ஞல் அவர்களது எதிர்ப்புக்கும் ஏச்சுக்குமுள்ளாகிப் பின்னர் எதிர்பாராத விதமாய் நிலையத்தின் அதிபரது அன்பையும் உபசாரத்தையும் பெற்ற ஷெய்கு நெய்னு முஹம்மது அவர் கள் தொடர்ந்து நடக்கலானர். அசற் கூலியாட்களின் கோலத்தில் இடுப்பைச் சுற்றி ஒரு துண்டுந் தோளில் இன் ஞெரு சிறு துண்டும் உடுத்தியபடி அவர் தெருவாற் போய்க் கொண்டிருந்தார். அவரது தோற்றத்தைக் கவனித்த மணி தரொருவர் அன்னுரை நெருங்கி “ஏ மஸ்தான்! இங்கு ஒரு வேலை இருக்கிறது. அதைச் செய்ய முடியுமா?’ எனக் கேட் டார். உடன் விபரம் எதுவுங் கேளாமலே சரியென இவர் கள் பதிலளித்தார்கள்.
“உமது தோற்றத்துக்குப் பொருத்தமான வேலைதான். அதாவது கப்ருஸ்தான் என்னும் தோப்பில் இன்றிரவு காவல் புரிய வேண்டும் . எனது பேத்தி ஒரு தலைப் பிள்ளை, அவளைச் சற்று முன்புதான் அடக் கஞ் செய்திருக் கிருேம். நம் நாட்டின் வழக்கத்தில் இருப்பதற்கேற்ப அச் சிறுமியின் சிரசை மந்திரவாதிகள் எடுத்துச் சென்று விட லாம். இதைத் தடுக்க நீர் இன்றிரவு காவல் செய்ய வேண் டுமெனச் சொன்னர் அந்த மனிதர்.
* எனக்கொரு வேளைச் சாப்பாடும், ஒரு கட்டுச் சுருட் டும் நெருப்புப் பெட்டியும் முக்கால் ரூபாயுங் கொடும்’

( 19 )
என்ருர்கள் மஸ்தான். சரியென ஒப்புக்கொண்டு அவ்வாறே ஆகவேண்டியவற்றை யெல்லாஞ் செய்து கொடுத் து விட்டுக் கப்ரையுங் காட்டி விட்டு அவர் போய்விட்டார். அவற்றைப் பெற்றுக்கொண்டு அக் குழந்தையை யாருந் தோண்டி யெடுக்காமல் ஒப்பந்தப்படி கா வ ல் செய்து கொண்டே ஆண்டகையவர்கள் இருந்தார்கள், இரவு நடுச் சாமம்ஆயிற்று. இவர்கள் தமக்குரிய வகையில் உரத்துப் பாடிக்கொண்டே இருந்தார்கள். அத்தனையுந் தாயுமான சுவாமிகளது பாடல்கள். பாடியபின் சற்று நேரம் ஒய்ந்து மெளனமா யிருக்கும் பொழுது அந்த நிசப்த நடுநிசியில் யாரோ விரல் கொண்டு சுண்டுஞ் சத்தம் எழுந்தது. எது வாயிருக்குமென அந்தச் சத்தம் ஒலித்த இடத்தை நோக்கி ஞர்கள் அங்கு எதுவுந் தெரியவில்லை. சில கணம் பொறுத்து "தொடர்ந்து படி’ எனக் கூறுவதைப்போல அந்த விரற் சுண்டுதலின்ஒலி மீண்டும் எழுந்தது. சரி என்பதுபோல இவ ரும் படிக்கலானர். படித்தபின் சிறிது ஓய்ந்திட அதேசத்தத்து டன் ஓர் உருவம் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. வருவது பிசாசா, மனிதரா? எதுவோ சோதிக்க வருகிறது போலும் எனத் தைரியம் இழக் காது அவசியமேற்படின் பாவிப்பதற்கு ஆயத்தமாகக் கையிலிருந்த கோலையுமெடுத் தவாறு இவர் தயாரானர். பிசா செனிற் பூமியிற் பாதங்கள் படாதென்ற ஐதீகம் உண்டல்லவா ? வந்த உருவமோ நன் முகப் பூமியில் அடியெடுத்து வைத்துக்கொண்டு வந்தது! சமீபத்தில் வந்த உருவம் ஒரு பெரியார் என்பதும் அவ் வேளை கம்பளியாற்போர்த்திருந்தார் என்பதும் புலனுயிற்று. * மீண்டும் படித்ததைப் படியடா’ என உரத்த தொனியிற் கூறிக்கொண்டே அவர் அருகில் வந்து அமர்ந்து கொண்டார். இவரும் நம்மைப்போன்ற ஒருவர்தான் என்ற உற்சாகமெழ ஷெய்கு நெய்னு முஹம்மது அவர்கள் தாயுமான சுவாமி கள் பாடல்களைத் திறம்படப் பாடினர்கள். பாடலைக்கேட்டுப் பரவச நிலையிலிருந்த அப்பெரியார் ஒரு மகானுயிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு இவர்கள் தம் நிலையைப் பற்றி “நான் சில சாதனைகளைச் செய்து வருகிறேன். இருந் தும் என்னிலையைச் சீர்படுத்திக் கொள்ளக்கூடிய ஆற்றலில் லாது அலைந்து திரிகிறேன். அத்துடன் வறுமைப் பிணியா லும் பீடிக்கப்பட்டிருக்கிறேன். என்னதான் செய்வதென்று தெரியவில்லையே’யென விபரித்துக் கூறினர்கள்.

Page 15
( 20 )
இவ்வார்த்தைகளைப் பரிவோடு கேட்டுக்கொண்டிருந்த அப்பெரியார் இவர்களைப் பார்த்து “நீர் இப்படியே திரிந் தலைய வேண்டாம். நீர் வரும் பொழுது எல்லாங் கொண்டு வந்த மனிதராக இருக்கின்றீர். ஆகை யினுல் இனி யெங்கேனும் ஓரிடத்தில் இருந்து சாதனை செய்யும். அப்ப டிச் செய்யும்போது உமக்குரிய இருவுலகப் பாக்கியங்களும் உம்மைத் தேடிவந்து குவியும். அதன் பிறகு அள்ளியள்ளிக் கொடுக்கும் மகாபுருஷராகி விடுவீர். உம்மிடத்தில் ஞான மார்க்கத்தைத் தேடியும் உலகவின்பத்தைத் தேடியும் மக்கள் திரள் திரளாகவருவார்கள்"என மிக்க அழுத்தமாகக்கூறிவிட் டுப்போய்விட்டார். அத்தோடு பொழுது விடிந்து விட்டது.
இவர்களும் தம் ஒப்பந்தப்படி கப்ருஸ்தான (அடக்க ஸ்தலத்தை) விட்டு வெளியேறிக் கையில் இருந்த காசை யொரு ஓட்டல்காரரிடங் கொடுத்துப் பசியாறிவிட்டு ஓரிடத்தில் தனித்திருந்தவராய் யாது செய்வதெனப் பல வாருய்ச் சிந்திக்கலாஞர்கள். அதன் அனுபவம் பற்றி ஆண்டகையவர்கள் சிலவேளையிற் குறிப்பிடுவதுண்டு , அஃதாவது:- . . ;
“அந்தச் சிந்தனையின் பயனுய்க் கீழ்க்கண்டவாறு வருங் காலம் பற்றிய முடிவுகள் கிடைத்தன. அதாவது என் போக்கில் இப்படியே போய் எங்கேனும் இருந்துவிடாமல், மீண்டும் கொழும்பு சேன்று வர்த்தகஞ் செய்து பொருளிட்டி எம்மிடம் உதவி தேடி வருவோருக்கு உற்ருர், அந்நியர் என்ற பாகுபாடில்லாமல் அப்பெரியார் சொல்லியபடி அள்ளி யள்ளிக் கொடுக்கும் ஒரு வளமான நிலையை ஏற்படுத்திய பின்னர் அதையும் உதறித் தள்ளிவிட்டுச் சுத்தத் துறவு பூண்டவனய் எங்கேனும் ஒரு மகானின் சந்நிதியை அடைந்து அதில் நிலைத்திருந்து தவஞ்செய்து பூரண ஆத்மீகப் பேற்றினை அடைய வேண்டும் என்பதாம்’.
இந்த முடிவோடு பாண்டியம்பதியின் தலைநகரான மது ரையை விட்டு வெளியேறிக் கொழும்புக்குப் போகும் நோக் கத்துடன் ஷெய்கு நெய்ன முஹம்மது அவர்கள் தொண்டி வந்து சேர்ந்தார்கள்.

( 21 )
கப்பலில் வேலையும் கொழும்பு திரும்பலும்
கூலித் தொழில், காவற் தொழிலென எதைச் செய்த வேளையிலும் ஷெய்கு நெட்ன முஹம்மது அவர்கள் தமது சாதனையைக் கைவிட்டதில்லை. உள்ளுணர்வு மேலோங்கி அதுவே நிலைத்து நின்றது. அதனல் அச்சமோ ஆசையின் விளை வான ஏனைய பலவீனங்களோ அவரை அணுகாது நின்றன.
மதுரையை விட்டுத் தொண்டிக்கு வந்து சேர்ந்த இவர்க ளிடம் பணமில்லை. உதவி புரியவும் எவருமில்லை. இவற்றைப் பொருட்படுத்தாது இவர்கள் தொண்டித் துறைமுகத்தில் நின்ற பண்டைக் காலக் காற்ருடிக் கப்பலொன்றில் சிப்பந்தி யாக வேலை செய்துகொண்டிருந்தார். அவ்விதம் ஒருநாள் கப்பல் அமைதியாகக் கடலிற் சென்று கொண்டிருந்த வேளை யில் அதன் தலைவரானவர் மேலே தமது பகுதியிலிருந்து கொண்டு தாயுமான சுவாமிகளது பாடலைப் பாடிக்கொண் டிருந்தார். தமது வேலையைச் செய்தபடி ஷெய்கு நெய்ன முஹம்மது அவர்கள் அப்பாடலையுற்றுக் கேட்டுக்கொண்டி ருந்தபோது அவர்களுக்கு மேலதிகாரி பர் டிய விதத்தில் பல பிழைசள் இருப்பதாய்த் தெரிந்தன. உடனே "அடே, நீ பாடு வது பிழையடா’ எனத் திரும்பத் திரும்ப இவர்கள் தமது போக்கில் இவ்வார்த்தைகளைப் பிரயோகித்துச்கொண்டிருந் தார்கள்! அது மேலதிகாரியின் செவிக்கும் எட்டுவதாயிற்று. அவர் மற்ருெரு சிப்பந்தியை விசாரித்தபொழுது இவ்விதங் கூறுவது புதிதாகச் சேர்ந்த வாலிடனே யென அறிந்து இவரை அழைப்பித்துப் பாடலைச் சரியாகப் பாடுமாறு கேட்டார். ஷெய்கு நெய்னு முஹம்மது அவர்கள் அச்சமோ துக்கமோ இன்றித் தம்மை மறந்து பாடலானர். அது ஒரு பேரதிர்ச் சியையும் புத்துணர்வையும் அக் கப்பல் தலைவரிடம் புகுத்தவே அவர் உவகையுற்று அதன் பின் இவருக்குக் கூலி வேலை எதுவுங் கொடாது பெரும்பாலும் தம்மோடு வைத்து நடத்தி வரலாஞர்.
இவ்வாறிருக்கும்போது ஒருநாள் தமக்கு யோகசாதனை முறைகளைச் சொல்லித் தருமாறு அவர் கேட்டு நிற்கவே அதற்கு ஆண்டகையவர்கள் “நீர் தவங் கிடந்து படிக்க

Page 16
( 22 )
வேண்டிய சாதனை சிலவற்றை இப்போது சொல்லித் தரு கின்றேன். அவற்றை ஒழுங்காகச் செய்து வரவும்” எனக் கூறிச் சில அரிய முறைகளைக் கற்றுக் கொடுத்தார்கள். அதனற் பூரிப்படைந்த அதிகாரி இவர்களை மேலுஞ் சிலநாள் தம்மோடு இருப் பின் நலமாயிருக்குமென 5ே ன்டினர். அதற்கு இவர்களோ அப்படி எதுவுமில்லை. யான் போதித் திருப்பதை ஒழுங்காக முறையோடு செய்து வந்தால் நீர் ஒரு யோகியாகி விடுவீர்” எனச் சொன்னர்கள். அதனல் மகிழ் வெய்திய அதிகாரி தாம் சிறிதளவேனும் . பிரதியுபகாரமாக எது செய்யலாமெனக் கேட்க இவர்கள் தம்மைக் கொழும் புக்கு அனுப்பி வைத்தாற் போதுமென மொழிந்தார்கள். அவ்விதமே கொழும்புக்கு இவர்களை முறையாக அக்கப்பல் அதிகாரி அனுப்பி வைத்தார்.
புனித நோன் பு கப்பலில் வேலைசெய்த ஷெய்கு நெய் ஞ முஹம்மது அவர்கள் பின்னர் தொண்டியிலிருந்து கொழும்பு வந்து சேர்ந்தார்கள். அடுத்ததாகச் செய்வதென்ன என்ற சிந்தனை எழுந்தது. மதுரை கப்ருஸ்தானில் அப்பெரியார் கூறிய வார்தைகளும் அவை தொடர்பாக எழுந்த தீர்மானங்களும் எதையோ நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தன.
அதற்கேற்பக் கொழும்பு வந்ததும் தமக்குத் தெரிந்த ஒருவரிடமிருந்து இரண்டு வருட ஒப்பந்தத்தில் ஒரு சில்ல றைக் கடையைக் கையேற்றர். மூலதனம் இல்லாத கார ணத்தால் அக்கடை வெறிச்சோடி இருந்தது. எனினும் ஆரம்பத்தில் கைமாற்ருகக் கொள்வனவு செய்து இரண் டொரு மாதத்தில் நல்ல நிலைக்கு அக்கடையைக் கொண்டு வந்தார்கள். கடை பே அலும் முன்னேறுவதாயிற்று. இதைக் கண்டு ஆசைக்குள்ளான அக் கடைச் சொந்தக்காரர் மீண்டும் தம்மிடங் கடையைத் தருமாறு கோரவே, ஒப்பந்தம் முடிவ தற்கு இன்னும் காலம் இருந்தும், இவர்கள் “இதோ உனது கடை" என மறுபேச்சின்றி வெளியேறினர்கள். அதன் பின்பு புனித நோன்பு நோற்கும் மாதம் ஆரம்பமாயிற்று.

( 29 )
எந்தக் கடினமான வேலையைச் செய்த வேளையிலும் சரி, அல்லது வேலைசெய்யாது பட்டினியாயிருந்த நாளிலும் சரி, ஷெய்கு நெய்னு முஹம்மது அவர்கள் சமய ஒழுக்கங்க ளிலிருந்து தவறியது கிடையாது. தொண்டி மெளனகுரு பாவா அவர்கள் சரியெனக் கூறிய பிராணுயாம சாதனையை யும் இவர்கள் இடையருது செய்து வந்தார்கள். இவற்றுடன் தியான முறையையும் விடாது சாதனை செய்து வந்த காலம் அதுவாகும். இதில் விசேடம் யாதெனில் ஏனைய தொழில் களே இரண்டாவதாகவும் இறை வழிபாட்டையே முதலாவ தாகவும் இவர்கள் கைக்கொண்டு வந்ததே யாகும். எனவே இவர்கள் ஆத்மீக சாதனு முன்னேற்றமும் அதற்கேற்ப வளர்வதாயிற்று. இவை வெளிப் பார்வைக்குத் தெரியாத வகையில் அந்த இளஞ் சாதகரிடம் உறுதிபெறலாயின.
இந்த நிலையில் புனித நோன்டை அனுட்டிப்பதில் எது வித தடைகளும் ஏற்படவில்லை. ஆயினும் நோன்பிற்காக எழும் ஆகாரச் செலவுக்கு என்ன செய்வது? அதற்காக வியாபாரக் கடையில் அரிசி மூடை சுமக்குந் தொழிலில் இவர்கள் ஈடுபடலாஞர்கள். இவ்விதம் புனித நோன்பை அனுட்டித்தலும் அதே வேளையில் கடைத் தெருவில் மூடை சுமக்கும் தொழிலும் ஒருங்கே நடைபெறலாயின. இவ்விதம் கஷ்டத்தைப் பெரிதெனக் கருதாது ஆத்மீகத்தையே பொரு ளென மதித்து முன்னேறும் தீரமே ஆத்மீக சாதகர்களின் பண்பாடாகும்.
இப்படிச் சில தினங்கள் கழிந்தன. அவ்வேளை இவரது ஆரம்ப வேலைக்காலத்திற் கடை முதலாளியாக இருந்தவரும் இவரது இனத்தவருமான ஒருவர் அவரைச் சந்தித்தார். அன்னுர் இவரது களைப்புற்ற முகத்தைப் பரிவோடு நோக் கியவாறு 'தம்பி, நீ நோன்பும் பிடித்துக்கொண்டு கூலிக்கு அரிசி மூடையையுஞ் சுமக்கிருயாமே ? வேதனையாயிருக் கிறதே. நேரன் போடு இந்தக் கடின வேலையையும் நீ செய்ய வேண்டாம். எங்கேனும் ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்கிறேன் நோன்பு முடியும் வரை நீ அங்கு சாப்பிட்டுக் கொள்ளலாம். அதன் செலவை நான் கொடுத்து விடுகி றேன் " என்ருர். இவர்கள் சிரித்துக்கொண்டே “எத்தனை நாளைக்கு எவ்வளவு ரூபா கொடுப்பீர்கள்?’ என்று கேட் டார்கள். இந்த முப்பது நாளைக்குமாக முப்பது ரூபா கொடுப்பேன்’ என்ருர் அப்பெரியார்.

Page 17
( 24 )
“அப்படியானுல் அந்த முப்பது ரூபாயையும் இன்றே என்னிடம் தந்து விடுங்கள்’ என இவர்களது பதில் எழுந் தது. அதற்கு இசைந்து அந்த முப்பது ரூபாயையும் இவ ரிடம் அந்தப் பெரியவர் கொடுக்கவே அதைப் பெற்றவராய் இவர் தனி இடம் ஏகிநோன்பையும் நோற்றுக் கொண்டு மறுநாட் காலை புறக்கோட்டைச் சந்தையில் அந்தக் காசுக் குக் குத்தரிசி கொள்முதல் செய்து அதை மாலைக்கு முன் விற்று முடித்துக்கொண்டு புனிதமிக்க நோன்பையும் முடித் துக்கொண்டு சிறிது ஆகாரம் அருந்தி விட்டு ஒரிடத்திலி ருந்து கணக்குப் பார்த்தார்கள். அங்கு ஏறக்குறைய தாம் கொள்வனவு செய்த அளவு இலாபம் இருப்பது தெரிந்தது. இவ்விதமே மறுநாளும் அதற்கு அடுத்த நாளும் குத்தரிசி வியாபாரஞ் செய்து அதஞற் கிடைத்த இலாபத்தை ஒதுக் கிக் கொண்டு ஆரம்ப முதலாயிருந்த அந்த ரூபாவையும் அதைக் கொடுத்த பெரியாரிடந் திருப்பிக் கொடுத்தார் கள்.அக்காசைப் பெற அவர் வெகுவாக மறுத்தார்களாம். இவ்விதம் நோன்பு நாட்களும் கடின சாதனையின் வழியே பூர்த்தியாயின.

( 25 ) கொழும்பிலிருந்து யாத்திரையாகி இந்தியா செல்லல்
பல வருஷங்கள் கொழும்பில் தங்கியிருந்து வர்த்தகத் தில் ஈடுபட்டு முன்னேறிக்கொண்டிருக்கும் பொழுது, ஞானமார்க்கத்தில் உய்யவேண்டுமென்று அந்தரங்கத்தில் இருந்த பெரியதோர் ஆர்வம் மிகவும் மோலோங்கியது. அப்பால் எங்கேனும் ஒரு மஹா னின் சன்னிதானத்தை யடைந்து தனித்திருந்து தவஞ் செய்ய வேண்டுமென்ற எண் னமும் அடிக்கடி வருவதுண்டு. இவ்விரு அருட்பண்புகள் அளவுமீறி அதிகரிக்க, அதிகரிக்க, ஆர்வத்துடனும் ஊக்கத் துடனும் வர்த்தகத் தொடர்புகள் யாவற்றையும் வெறுத்துத் தள்ளிவிட்டுக் கொழும்பிலிருந்து யாத்திரையாகி இந்தியா வுக்கு ஷெய்கு நெய்னு முஹம்மது பாவா அவர்கள் சென்ருர்கள்.
அங்கு ஆத்மீகத்தில் மேலோங்கிய பல்லாக்குஒலிநாயகம் அவர்களைச் சத்திக்க நேர்ந்தது. அவர்கள் முன்னிலையில் மவுனமாகவிருந்து பற்பல உபதேச மொழிகளைச் செவிமடுத் துக்கொண்டிருந்த சமயம், “நான் கலியாணஞ் செய்யா திருக்கலாமா?’ என்று பாவா அவர்கள் மனதில் நினைக்க “நீர் கலியாணஞ் செய்யாதிருக்கலாம்" எனவும் மீண்டும் "சமாதிகளிற் சிரந்தாழ்ந்து வணங்கலாமா” என்று நினைக்க 'நீர் அப்படிச் செய்யலாம்' எனவும் பகர்ந்தார்கள்.
இவ்விரு விஷயங்களும் ஷரீஅத் கோட்பாட்டுக்குச் சற்று முரணுகத் தோன்றுவதால், தன்னிலையை ஸ்திரப் படுத்திக்கொள்வதற்கு மகான் பல்லா க்கு ஒலிநாயகம் அவர்கள் புகழ்பெற்ற ஆலிமாக இருந்தமையாலும், அவர்க ளிடங் கேட்காமற் கேட்டுத் தெளிந்து தன் சந்தேகத்தை நிவிர்த்தி செய்துகொண்டு, நிர்மதியுடன் முத்துப்பேட்டை ஹக்கீமுல் ஹ"க்கமா ஷெய்கு தாவூத் ஒலிநாயகம் அவர் களது திருச் சன்னிதானத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
பாவா அவர்கள் பிற்காலத்தில் பல்லாக்கு ஹஸ்ரத் என்று கூறியே அன் ஞரது உயர் நிலை களைப் பற்றி ப் புகழ்ந்துரைப்பதுண்டு,

Page 18
( 26 )
அக்கரை இராவுத்தரைச்
சந்தித்தல்
முத்துப்பேட்டை தாவூது ஆண் டகை அவர்களது சன்னிதானத்தில் அக்கரை இராவுத்தர் என்னும் பெரியா ரைச் சந்தித்து உரையாடுஞ் சந்தர்ப்பங் கிட்டியது. அவ்வம யம் இராவுத்தர் அவர்கள் பாவாவை ஆதரித்துத் தமது ஆண்டகை அவர்களது முன் அறிவிப்பின்படி “என்னுடைய அந்தியகாலம் நெருங்கிவிட்டது. நீங்களும் வந்துவிட்டீர்கள். அடுத்து வரும் ஜமாதுல் அவ்வல் பிறை ஒன்றில் ஆண்டகை அவர்களது கந்தூரி ஆரம்ப நாளன்று நான் தேகவியோக மாகி விடுவேள் நாமிருவரும் ஒரே நோக்கமுடையோராக இருப்பதால் நீங்கள் என்னேடு இருந்து என் மரணச் சடங்கு களே நிறைவேற்றிவிட்டு, இந்தக் குடிசையிலேயே தங்கி யிருந்து மேன்மைதங்கிய ஆண்டகை அவர்களின் 67 unr கடாட்சங்களைப்பெற்று ஆனந்த நிலையை யடைவீராக’ என்று கூறி மஹான் ஷெய்கு தாவூத் ஆண்டகை அவர்களது மகத்துவத்தைப் பற்றியும் அங்கு தாமடைந்துள்ள பாக்கி யங்களைப்பற்றியும் எடுத்துக்கூறி இருவரும் நீண்ட eFlħ ur ஷணை செய்தவர்
மேலே கூறப்பட்டுள்ளபடி ஜமாதுல் அவ்வல் பிறை ஒன்றில் இராவுத்தர் அவர்கள் தேகவியோகமடைந்துவிட் டார்கள். அவர்களுக்குரிய மரணச் சடங்குகளைக் குறைவின் றிச் செய்து நல்லடக்கஞ் செய்தபின், அதே குடிசையில் திரு ஷெய்கு நெய்ஞ முஹம்மது மஸ் தான் பாவா அவர்கள் பன்னிரண்டு வருஷகாலம்வரை தங்கியிருந்து ஐங்காலத் தொழுகை, நோன்பு போன்ற ஷரீஅத் விதிகளை வழுவாது அனுஷ்டித்தவர்களாய் வாய்பேசர்து மெளன யோகியாகவே யிருந்து தவமியற்றினர்கள். அப்பன்னிரண்டு வருஷ காலங் களுக்கிடையில் தமக்கும் மேன்மைக்குரிய குத்துபு நாதர் ஷெய்கு தாவூது ஆண்டகை அவர்கட்கும் இடையில் நிகழ்ந் துள்ள அற்புதக் காரணுதிகளைப்பற்றிய அவர்களது திரு வாய்மொழிகளிற் சிற்சில நிகழ்ச்சிகளை மீண்டுங் கீழே விப ரிக்கின்முேம்,

( 27 )
கண்ணியமிக்க ஷெய்கு நெய்னு முஹம்மது மஸ்தான் அவர்கள் தவத்தில் ஸ்திர நிலைபெறப் பகலெல்லாம் நோன்பும், இரவெல்லாம் வணக்கமும் புரிபவர்களாகவும் மக்களெல் லாம் அயர்ந்து நித்திரை போனபின் அர்த்த சாமத்தில் ஆண் டகை அவர்களது தர்கா திருவாயில்முன்பு அமர்ந்திருந்தவர் களாகவும், நின்றவர்களாகவும் இரவு பூராவையுங் கழிப்பார் கள். இடையிடையே தன்னை அறியாமல் நித்திரை வந்து மயக்கும்போது சன்னிதியினுள்ளிருந்து அடே! என்ற சத்தம் கேட்குமாம். அதைக் கேட்டு மீண்டுந் தவநிலையிலிருக்குஞ் சமயம் இரண்டாம் முறையாகத் தூக்கம் வந்தமுக்கும்போது முன்போன்றே அடே! என்ருெரு அசரீரி கேட்டதும் திடுக்குற்றவர்களாய்த் தெளிவடைந்து நிலை யைச் சீர் படுத்தியிருக்குங்கால் மறுபடியும் அப்படியே உறக்கம் வந் தாழ்த்துந்தறுவாயில் மூன்ரும் முறையாக அடே! என்ற அதட்டலோடு கன்னத்தில் ஓர் அறையும் விழுமாம். இவ் வாக்கினைக்குப்பிறகு தலைவிரிகோலமாய் ஓடோடி எதிரி லிருக்கும் ஷிபாகுண்டாவென்ற திருக்குளத்தில் விழுந்து நீராடித் தூக்கத்தைப் போக்கிவிட்டுச் சன்னிதியில் வந்திருப் பார்கள். இப்படியே பல்லாண்டுகளாக ஊண் உறக்கம் உல கத்தின் வேறு சுகபோகங்கள் யாவையும் வெறுத்தொதுக்கி விட்டு ஹஸ்ரத் ஆண்டகை அவர்களது திருவடியே தஞ்ச மென நாடிக்கிடந்தார்கள்.
முஹிய்யித்தீன் ஆண்டவர்களது தரிசனம்
ஷெய்கு நெய்ன முஹம்மது பாவா அவர்கள் தனது சிறிய வயதிலேயே முஹிய்யித்தீன் அப்துல் காதர் ஜெய் லானி அவர்கள்மீது அளவு கடந்த அன்பு வைத்தவர்களா யும் தன்னை ஈடேற்றிக் கரைசேர்க்கக்கூடிய காரணக் குரு வாகவும் எண்ணி வந்தார்கள். குணங்குடி நாயகம் திரு வாய் மலர்ந்தருளிய * குணங்குடி மஸ்தான் பாடல் , என்ற நூலை ஷெய்கு நாயகம் கெளதில் அஃலம் அவர்களை முன்னிட்டு முற்றிலும் பூரணவன்புடன் பாடியிருத்தலாலும்” அத்தகைய நூலைத் தனது குருநூலாக ஏற்றுப் பாராயணஞ் செய்து வந்தார்கள். அந்நூலில் காணப்படும் யோக முறை

Page 19
(28 )
களை விதிதவமுது அனுஷ்டித்து வந்தமையால் முஹிய்யித் தீன் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்கள்மீது அளவற்ற அன்பு பூண்டு பக்திபரவசமாகி அன்னரது சமாதிக்குச் செல்லவேண்டுமென்று உறுதிபூண்டு கனம்மிக்க ஷெய்கு தாவூது ஆண்டகையிடம் “நான் பகுதாதுக்குச் செல்ல வேண்டும்" என்று இரந்து அல்லும் பகலும் உத்தரவை நாடி நின்றர்கள்.
ஒரிரவு "பகுதாதைக் காட்டுவோம்" என்ருெரு தொனி கேட்டது. சிலநாட்களுக்குப் பின் ஷெய்கு நெய்னு முஹம் மது பாவா அவர்கள் அறிதுயிலில் சயனித்திருக்கும் போது "இதோ பகுதாதைப் பாரும்’ என்ருெரு வாக்குக் கேட்டது. அவ்வமயம் அவர்களது குடிசைக்கு மேற்புறத்தில் ஒர் ஒற்றைக்கால் மண்டபம் காணப்பட்டது. சோதிமய மாய் விளங்கிய அம்மண்டபத்தின் நடுவில் பல பெரியோர் கள் மத்தியில் வடிவழகு மிகுந்த கெம்பீர தோற்றத்துடன் அமர்ந்திருந்த நாயகம் அவர்கள்தான் கெளதுல் அஃலம் முஹிய்யித்தீன் ஆண்டகை என்று உள்ளுணர்வு உணர்த் தியது, “ஆண்டகையே! அடியேனும் தங்கள் திருச்சமூ கம் வரவேண்டும். அதற்குத் தாங்கள் அருள்புரியவேண்டும்" என்று இரந்து நின்ருர்கள். அதற்கு அக்கருணை வள்ளல் **இதோ பக்கத்திற் காலியாக இருக்கும் ஆசனம் உமக்குரி யதுதான்; என்ருலும் வருடம் பன்னிரண்டாக வேண்டும்" என மறுமொழி பகர்ந்தார்கள்.
இதைக் கேட்ட பாவா அவர்கள் ஆனந் த க் களிப் படைந்து ஷெய்கு தாவூது ஆண்டகையவர்களுக்கு நன்றி கூறி அல்ஹம்து லில்லாஹ் (புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே) என்று இறைவனைத் துதிசெய்தார்கள். அன்று முதல் 12 வருடங்கள் எப்போது கழியுமென்ற எண்ணத் துடன் தனது அனுஷ்டான விதி முறை களிற் குறைவின்றித் தவமியற்றிஞர்கள்.

( 29 )
நாகூர் ஆண்டவர்களது தரிசனம் பாவா அவர்கள் நாகூர் ஆண்டவர்களைத் தரிசிக்க வேண்டுமென்று முத்துப் பேட்டை ஷெய்கு தாவூது ஆண்டவர்களிடம் முறையிடுபவர்களாகவே சில நாட் களைக் கழித்தார்கள். நாகூருக்குக் கூட்டிச் செல்வோம் என்ற உத்தரவு கிடைத்தது.
ஒருநாள் இரவு முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது ஆண் டவர்கள் கனவில் தோன்றி “ வாரும்" என்று அழைத்துச் செல்ல, பாவா அவர்கள் தொடர்ந்து பின் சென்றர்கள். ஆங்கு ஒரு திட்டி நிலம் தென்பட்டது. அந்நிலத்தை ஆண்ட வர்கள் தனது பிறங் காலால் மூன்று முறை தட்டிஞர்கள். பூமி பிளந்தது; ஆங்கு ஒரு மாளிகையின் தலைவாயில் காணப் பட்டது. கதவைத் தட்டினர்கள், கதவு திறக்கப்பட்டது. பாவா அவர்களை உள்ளே போகும்படி அனுப்பிவிட்டுத் தான் வெளி வாசலிற் காத்து நின்றர்கள். கதவும் மூடப்பட்டது. ஷெய்கு நெய்னு முஹம்மது பாவா அவர்கள் ஆங்கு அமர்ந்திருந்த அழகுமிகுந்த சோதிமயமான ஒரு வெருந் தகையைக் கண்டார்கள். அந்தப் பெருந்தகையார் பாவா அவர்களைக் கண்டதும் “ஆகா! இவனுக்கு இன்னும் துனியா வாடை (உலக வாசனை) விட்டு நீங்கவில்லையே. முதலில் இவனைக் குளிக்கச் செய்யுங்கள்” என்று சொல்லிக் குளித்த பின் அணிவதற்கு ஒரு வெள்ளை வேட்டியைக் கொடுத்து, அங்கு வெண்ணிறமான துகில் அணிந்திருந்த ஒரு அம்மை யாரிடம் பாவா அவர்களை ஒப்படைத்தார்கள். அம்மையார் பாவா அவர்களை அங்கிருக்கும் ஒரு பெரிய தடாகத்தில் குளிப்பாட்டி மேன்மைமிகுநாகூர் பாத்துவுா ஆண்டவர் களது திருச்சமுகத்திற்கு அனுப்பிவைத்தார்கள்.
பெருந்தகையான நாகூர் பாத்துவுா ஆண்டவர்கள் மஸ்தான் பவா அவர்களை ஆதரவுடனும் அன்புடனும் அழைத்து இரண்டு ரக்கஆத் தொழவைத்துத் தனதருகில் அமரச் செய்து ஞானுேபதேசமும் அதற்குரிய தீட்சை யும் (பைஅத்தையும்) செய்து சிர்ருல் கதீர் என்ற அல்லா ஹ"வுடைய இரகசியத்தையும் தன்னுடைய இரகசியத்தை யும் பூரணமாக விளக்கி வைத்து, தங்களுடைய சிரேஷ்ட சீஷர்களில் ஒருவராக நியமித்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய அருட்கொடை அத்தனையையும் தாராளமாக வழங்கி அனுப்பிவிட்டார்கள்.

Page 20
( 30 )
வாயிற் கதவு திறக்க ஆணையிடப்பட்டது. கதவு திறந் ததும் பாவா அவர்கள் வெளியே வந்தார்கள். ஷெய்கு தாவுது ஒலி நாயகம் அவர்கள் பாவா அவர்களை முத்துப் பேட்டைக்கு அழைத்துக்கொண்டு சென்ருர்கள். சமாதி யைக் கிட்டியவுடன் பாவா அவர்கள் நித்திரை தெளிந்து கண்விழித்துவிட்டார்கள். அக்காட்சிக்குப் பின்பு அவர் களுக்கு அனேக அஞ்ஞானத் திரைகள் நீங்கித் தவஞ் செய்வதற்கு மிக்க ஆர்வம் உண்டானது.
கத்வத்து நாயகமவர்களைக் கண்டு தரிசித்தல்
மேலுஞ் சிலநாட்கள் செல்ல, தற்சமயம் வாழ்ந்துகொண் டிருக்கும் மஹான்களைக் கண்டு தரிசிக்கவேண்டுமென்னும் ஆர்வம் பாவா அவர்களுக்கு உண்டானது. சமாதியில் அதைப் பற்றி முறையிட்டுக்கொண்டிருந்தரர்கள். "ஆம், உம்மை அனுப்பி வைக்கிருேம்' என்னும் அசரீரி வாக்குக் கேட்டது. எவ்விடத்திற் பெரியோர்கள் இருக்கிருர்கள்? எப்பொழுது உத்தரவு பிறக்குமென்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார் கள். “நீர், கீழக்கரையில் ஷெய்க் அப்துல் காதிர் என்பவர் கல்வத்திருக்கின்றர். அவரைத் தரிசித்து வாரும்' என்று ஒரு நாள் உ த் தரவு உண்டானது. உத்தரவாகியதும் போக்குவரத்துக்காகிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டு கீழக்கரைக்குப் பாவா அவர்கள் பிரயாணமாஞர்கள். கீழக் கரையில் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களது இளைய மகளுகிய கல்வத்து நாயகம் என்று அழைக்கப்படும் கண் படைத்த ஒரு பெரியார் இருந்தார்கள். பாவா அவர்கள் தன்னிடம் வருவதை ஞானதிருஷ்டியால் முன்னமே அறிந்து தனது மகளே அழைத்து, “லங்கோடு கட்டிய ஒரு பக்கீர் என் னைக் தேடி வருவார், அவரை என்னிடம் அனுப்பவும். மற்ற வர்கள் எவரையும் உள்ளே அனுப்பவேண்டாம்' என்று கட்டளையிட்டார்கள். சொற்ப நேரத்துக்குப்பின் லங்கோடு கட்டிய பாவா அவர்கள் அந்த வீட்டு வாசலில் வந்து நின் ருர்கள். "நீங்கள் உள்ளே வரலாம், உங்களை விடும்படி எனது பிதாவின் உத்தரவு" என்று அந்த அம்மை யார் தெரிவித்தார்கள். உடனே பாவா அவர்கள் உள்ளே சென்று

( 3Ꮧ )
கண் படைத்த வள்ளலாகிய கல்வத்து நாயகத்தைக் கண் டார்கள். அப்பொழுது பாவா அவர்கள் வாய்பேசாத மெளன யோகியாக இருந்ததையும் அவர்களது அந்தஸ்தை யும் ஆத்மீக நிலையையும் பூரணமாக உணர்ந்து, மஸ்தான் பாவா அவர்கள் அதுவரையுங் கண்டுங் கேட்டும் அறியாத ஒலுவின் இரகசியத்தைக் கல் வத்து நாயகம் என்று அழைக்கப்படும் ஆண் டவர் க ள் உபதேசிக்கத் திருவுளங்
கொண்டார்கள்.
தன்னுடைய மகளை அழைத்து ஒரு (சம்சா) மேசைக் கரண்டியில் தண்ணிர் கொண்டுவரச் சொல்லி அதை மஸ் தான் பாவாவிடங் கொடுத்து அல்லாஹ" சொன் ன படி ஒலு செய்யும் என்று சொன்னர்கள். (ஒலு என்பது இஸ்லா மியர்கள் தங்களது சட்ட ஒழுங்கின்படி, அல்லாஹ"வைத் தொழுமுன், தங்களது முகம், கை, கால் முதலியவற்றைக் கழுவுதல்). இவ்வளவு காலமும் எவ்வளவோ தண்ணிரால் எவ்வளவோ தரம் ஒலு செய்தோமே ! ஒரு சம்சாத் தண்ணி ரைத் தந்து அல்லா ஹ" சொன்னபடி ஒலு செய்யச் சொல்லு கிருர்களே! விளங்கவில்லையே யென்று திகில்கொண்டு ஆண் டவர்களே! ஒன்றுந் தெரியவில்லை, நீங்களே செய்து காட்ட வேண்டுமென்று உள்ளத்தில் பிரார்த்தித்துக் காலில் விழுந்து வணங்கினர்கள். வணங்கிய மஸ்தான் பாவா அவர்களை ஆண்டவர்கள் அன்புடன் தனது திருக்கரங்களினுல் தடவி எழச் செய்து மனமுவந்து ஒலு வின் அந்தரங்கத்தை முறைப்படி உபதேசித்து பாவா அவர்களைக் கொண்டு ஒலு செய்வித்தார்கள். பின்பு மஸ்தான் பாவா அவர்கள் ஆத் மீகத் துறையில் உயர் நிலையடையும் பொருட்டு ஞானுேப தேசங்களையுஞ் செய்து வைத்தார்கள். கத்வத்து ஆண்டவர் களது பூரண துஆபற க்க த்தை யும் நல்லாசியையும் பெற்றுக்கொண்டு முகமலர்ச்சியுடன் முத்துப்பேட்டையைச் சென்றடைந்தார்கள்.
h

Page 21
( 3.2 )
நெய்னு முஹம்மது லெப்பை அப்பா அவர்களது தரிசனம்
மேன்மைமிகு கல்வத்து நாயகம் அவர்களைக் கண்டு தரி சித்தபின், வேறு மஹான்கள் யாராவது தனது சீவிய காலத் தில் வாழ்ந்து கொண்டிருக்கிருர்களா? அங்ங்ணமாயின் அவர்களையுங் காணவேண்டுமென்று திரு தாளையான் பாவா அவர்கள் விரு ப் பங்கொண்டு ஆண்டவர்களது சமாதி யில் வேண்டுதல் செய்தார்கள்.
திரு நெய்ன முஹம்மது லெப்பை அப்பா (சுருக்கமாக நெய்ணுமலை அப்பா) என்றழைக்கப்படும் ஒரு பெரியாரை அதிராம் பட்டணத்திற்குப் போய்க் கண்டுவருமாறு அசரீரி கேட்டது. அப்பெரியார் மற்றவர்களால் அறிந்து கொள்ளப் படாதவராயும், தன்னைக் காட்டிக்கொள்ளாது மறைந்து வாழ்பவராயும் இருந்தார்கள்.
முத்துப்பேட்டைக்குப் பக்கத்திலிருக்கும் அதிராம் பட் டணத்தைப் பாவா அவர்கள் அடைந்து அங்குள்ளவர்களிடம் நெய்னு முஹம்மது லெப்பை அப்பா என்னும் மஹான் (அவுலியா) இங்கு இருக்கிருர்களாமே? அவர்கள் எங்கே இருக்கிறர்கள்? எப்படிச் சந்திக்கலாமென வினவினர்கள். அப்படி அவுலியா எவருமிங்கில்லை. அதோ பள்ளக் குடியை அடுத்துக் காடொன்று உண்டு. அதிலும் மற்றப் பள்ளக் குடிப் பகுதிகளிலுஞ் சுற்றித்திரியும் ஒர் வயோதிடர்தான் அப்பெயருடையவர். அவர் யார்?. எங்கிருப்பவர்? எவ்வூரைச் சேர்ந்தவர்? என்று இதுவரையும் யாருக்குந் தெரியாது. இவ் வூரில் வயது முதிர்ந்தவர்களுங்கூட இவரைத் தங்கள் சின் னஞ்சிறுவயதிலேயே இவ்வாறே கண்டோமென்று சொல்லுகி ருர்களென்றங்குள்ள வயோதிபப்பெரியாரொருவர் கூறிஞர்.
இதைக் கேட்ட பாவா அவர்கள் அங்கு தேடிச் சென் றர்கள். அங்கே அவ்வயோதிபர் கூறிய குறிப்புப்படி ஓர் வயது முதிர்ந்த மெலிந்த தோற்றமுடையவர் கந் தைத் துண்டொன்ற்ை அணிந்தவர்களாகவும், ஒரு துண்டைத் தோளிற் போட்டவர்களாகவும், மேற்கு முகம் நோக்கி நின்றவாறு சிறுநீர் கழிப்பவர்களாகவுங் காணப்பட் டார்கள். " ஆகா என்ன ஆச்சரியம்! மேற்குப் பக்கம்

( 33 )
பார்த்து நின்று சிறுநீர் கழிக்கிருர்களே! நான் தேடிவந்தவர் கள் இவர்களாக இருக்கமுடியாது. எனினும் எனது பெயரைச் சொல்லி அழைத்தால் இவர்களை அணுகுவோம் என்று மனதில் நினைக்க, அடே! ஷெய்கு நெய்னு முஹம்மது. உன்னதான் இருபத்தொரு வருட காலமாகப் பார்த் துக்கொண்டிருக்கிறேன். வந்துவிட்டாயா? நல்லது வா” என்று இனிமையாக அழைத்தார்கள். (அப்போது கனம் பாவா அவர்களுக்கு வயது 21).
பாவா அவர்களது கையைத் தனது வலது கக்கத்தில் இடுக்கியவண்ணம் அக்காட்டுப் பக்கத்தில் ஒடிக்கொண்டிருக் கும் ஓர் ஒடைப் பக்கம் அப்பா அவர்கள் சென்றர்கள். அப் போது அப்பா அவர்கள் வெறுங்காலுடன் நடக்கத் தான்மிதி யடிக் கட்டையுடன் நடக்கலாமாவென்று நினைத்துத் தனது மிதியடிக்கட்டையைப் பாவா அவர்கள் நழுவவிட்டு விட்டார் கள். சிறிது தூரஞ் செல்ல அங்கு ஒரு கடையிருந்தது; அக் கடையில் (மஸ்கத்) இனிப்புப்பதார்த்தம் வாங்கச் சொன் ஞர்கள். அதைப் பாவா அவர்கள் வாங்கிக் கொடுக்கத் தனது அங்கியாகிய அக் கந்தையில் முடிந்து கொண்டு சிறிது தூரம்போய் அதை அப்படியே அவிழ்த்துவிட்டார்கள். மேலும் சுமார் இரு பர்லாங்கு தூரஞ்போய் அக்கடைக்கார னிடம் மூக்குத்தூள்ப் பட்டை ஒன்றை வாங்கிக்கொண்டு வர ச் சொன்ஞர்கள். பாவா அவர் க ள் விரைந்து சென்று தூள்ப்பட்டையைக் கேட்க, கடைக்காரன் கடை மூடும் நேரமாதலால் கொடுக்கமுடியாதென மறுத்தான். கோபங்கொண்ட பாவா அவர்கள் அக்கடைக்காரனை அடிப்ப தற்குத் தனது கையை ஓங்க, அத்தருணமே அப்பா அவர்கள் *அடே! இது தான்டா உன்னை விட்டுப் போகவேண்டும்" என்று சொல்லிப் பின்னின்று கையைப் பிடித்தார்கள். பாவா அவர் கள் திடுக்கிட்டு, இர ண் டு பர்லாங்கு தூரத்தில் நின்றவர்களல்லவா, எங்ங்ணம் எனது கையைப் பிடிக்க முடியும் என்று ஆச்சரிய முற்றுச் செ ய ல ற் று நின்றர்கள். கடைக்காரன் அப்பா அவர்களைக் கண்டதும் கடையைத் திறந்து தூள்ப்பட்டை ஒன்றை எடுத்துக் கொடுத்தான். வாங்கிக்கொண்டு மீண்டும் இரு வரும் நடந்தார்கள், நடக்கும் வழியில் மூக்குத்தூளிற் கொஞ்

Page 22
( 84 )
சத்தை எடுத்து மூக்கால் உறுஞ்சிக்கொண்டு பட்டையை இரண்டாய்க் கிழித்து எறிந்துவிட்டு 'நமக்கெனச் சொந்த மாக எதுவுமிருக்கக்கூடாது’ என்று அப்பா அவர்கள் கூறிக் கொண்டே நடந்தார்கள்.
பாவா : “நான் கலியாணங் கட்டாதிருக்கலாமா”
என்று நினைக்க அப்பா: “இவரும் அப்படியானவர்தானே’
பாவா தமிழ்ப் படித்திருப்பார்களா?” என்று நினைக்க,
அப்பா : “வெம்புவாள் லிழுவாள் பொய்யே, மேல்விழுந்
தழுவாள் பொய்யே-”
பாவா : ‘ஒதியிருப்பார்களா?" என்று நினைக்க
அப்பா : அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் அர்ரஹ்மா னிர்ரஹீம்-என்று புன்முறுவலுடன் கூறினர்கள்.
அப்பா அவர்கள் மீண்டும் நடந்தவாறே சிறுநீர், மலங் கழித்தவர்களாக நடக்க, பாவா அவர்களும் அவ்வாறே செய்து இருவரும் அவ்வோடை வ்ேகமாக ஓடும் இடத்தில் இறங்கி, அற்புதமிகு (கராமாத்துடைய) அப்பா அவர்கள் அசையாமல் நின்ருர்கள். வேகமாக ஒடும் தண்ணிர் பாவா அவர்களை இழுக்க அப்பா அவர்கள் திரும்பி அடே! நான் செய்ததெல்லாஞ் செய்து வந்தாயே, ஏன் தண்ணிர் உன்னை இழுக்கிறது என்று வினவி 'நில்’ என்று ஒரு சத்தமிட் டார்கள். தண்ணிர் ஒடும் வேகம் உடனே குறைந்தது. ஷெய்கு நெய்னு முஹம்மது பாவா அவர்கள் குளத்தில் நிற்பதுபோல் அசைவற்று நின்றர்கள்.
இதைக்கண்ட அப்பா அவர்கள் புன் முறு வலுடன் “அடேயப்பா, பல வருடங்களுக்குப்பின் இன்ருெரு குளிப் படா! என் குறுக்கும் ஒடிந்ததடா!!” என்று சொல்லிக் கொண்டு, இருவரும் நீராடிக் கரை ஏறினவுட்ன் "அதோ பக்கத்திலிருக்கும் இடையர் குடிக்குச் சென்று பால் வாங்கிவா” என்று பணித்தார்கள். உடனே பாவா அவர் கள் ஓடோடிச் சென்று பார்க்க அக்குடிசையில் ஒருவன் பால்

( 35 )
கறந்து கொண்டிருப்பதைக் கண்டு விஷயத்தைச் சயிக்கினை யாற் கூற அவ்விடையன் ஒர் செம்பிற் பால் கொடுத்தான். அதைக் கொண்டுவந்து அப்பா அவர்களிடம் பணிவுடன் கொடுத்தார்கள். அப்பா அவர்கள் நின்றவாறே அப்பாலைக் குடிக்க பாவா அவர்கள் எனக்குக் கொஞ்சங் கிடைக்காதா வென்று நினைக்க 'உனக்காகத்தாண்ட்ா கொண்டுவரச் சொன்னேன்" என்று மிஞ்சிய பாலை பாவா அவர்களுக்குப் புகட்டினர்கள். (இது (பைஅத்) தீட்சை செய்வதற்கு முன் நடக்குங் கிரிகையின் முதற் பகுதியாகும்.)
பின்னென்ன நடந்தது ?-சுப்ஹானல்லாஹ்-ஒடைக் குப் பக்கத்தில் ஒரு திட்டு, தாங்க முடியாத கடும் உச்சி வெய்யில், அத்திட்டிற் காருண்ணியமிகுந்த அப்பா அவர்கள் இருந்து, பாவா அவர்களையும் இருக்கச் செய்து பாவா அவர் களுடைய இரு முழந்தாள்களையுந் தனது முழந்தாள்களு டன் சேர்த்து, இறுகக்கட்டி முத்தமிடச் சம்பூரண ஞான மஸ்துடைய தவத்திரு அப்பா அவர்கள் (லிசானுல் ஹக் என்ற) தனது நாவை பாவா அவர்களது வலக் கண்ணுக் குட் செலுத்திச் சுற்றுவதுபோலும் இரண்டா முறையாக முத்தமிடத் தனது இடக் கண்ணுக்குள் நுளைத்துச் சுற்று வது போலும் - உண ர - அக்கணமே மே ன்  ைம மிகு ஷெய்கு நெய்னு முஹம்மது பாவா அவர்களுக்கு ஞான போதை என்னும் மஸ்து உதயமானது. "என்னுடைய வேலை முடிந்துவிட்டது வாழை சும்மா சாவதில்லை, குட்டி கள் போட்டொழிய" எ ன் று தனது உடல் நிலையைச் சயிக்கினையாகக் கூறி, எழுந்து இருவரும் பள்ளக்குடிசைகளை நோக்கிச் சென்ழுர்கள்.
அவர்களைக் கண்ட அக் குடிமக்கள் ஓடோடித் தங்கள் தங்கள் குடிசைக்குச் சென்று கஞ்சிச் சட்டியைக் கையிலேந்தி வந்து 'அப்பா தங்களை மூன்று நாளாக எதிர்பார்த் திருக்கிருேம்-என்னிடம் வாருங்கள், என்னிடம் வாருங் கள்’ எனக் கூவி அழைத்தார்கள். இதைச் செவிமடுத்த மேன்மையுங், காருண்ணியமுமிக்க தவசிரேஷ்ட அப்பா அவர் கள் “போங்கடி-குறுக்கு விளப்பமில்லாதாக்குபவன் வந்து விட்டான்' என்று சொல்லிக்கொண்டே, சிற்ருேடையை ஏதண்டுமூலந் தாண்டி ஓர் குடி ைசக் குச் சென்று, இரு

Page 23
( 36 )
கையையும் நீட்ட, அம்மாது தன்னிடமுள்ள கூழை ஊற் றினுள். பாவா அவர்களும் அவ்வாறே செய்ததைக் கண்ட அப்பா அவர்கள் இருகரத்திலுள்ளதை, தனது இடக்கரத்தி லாக்கி வலக்கையால், பாவா அவர்கள் வைத்திருந்த கூழு டன் சேர்த்து நெஞ்சில் ஒர் (அறை) அடி அடித்து “அடேட் என் விதி இது. உனக்கு மச்சு மாளிகை, மனிதர் மக்கள் கார் கடைகள், முதலிய ராஜயோகம் உன்விதி' என்று உணர்ச்சி ததும்பியவர்களாய் பாவாவை ஆசீர்வதித்து அனுப்பிவிட்ட்ார்கள், ஞானனுபூதிகாரணமாக ஏற்படும் மஸ்தென்னுங்ஹாலை (நிலையை)ப் பெற்று பாவா அவர்கள் பூரண திரு ப் தி யு டன் முத்துப் பே ட் டை  ைய ச் சென்றடைந்தார்கள்.
இவ்விஷயத்தைப் பற்றி எடுத்துக்கூறும் பொழுது வயோதிபத்திலும் வயோதிபமாய் மெலிந்து வாடிய அப்பா அவர்கள் தனது நெஞ்சிற் கைவீசி யடித்தது இடியிடித்த மாதிரியிருந்ததென்று பாவா அவர்கள் பலதடவை கூறுவ துண்டு. பிற்காலங்களிற் பல வியாபாரங்களில் மிகுந்த லாபங் கிடைத்தது. அன்பர்கள் பாலுந் தேனும் பிரியாணி யும் உண்டு மகிழும்போது “இவையெல்லாம் எனது நஸி பில் (பிராரத்தத்தில்) இருக்கவில்லை. அப்பா அவர்கள் தந்த வரப்பிரசாதம். அனுபவிக்கவந்த நீங்கள் அனுபவிக் கிறீர்கள்" என்று சொல்லிக் காருண்ணிய மிகுந்த அப்பா அவர்களைத் துதிப்பார்கள். می
பிற்காலத்தில் தவத்திரு ஷெய்கு நெய்னு முஹம்மது மஸ்தான் பாவா அவர்கள் இலங்கையில் சிலாபமென்னும் ஊரில் பாய்சாமி என்றழைக்கப்பெற்ற செ. மு. முஹம்மது அலி சாஹிபும், அவர்களது பாரியார் சல்ஹா உம்மா அவர்க ளும், மிக்க அன்புடனும், ஆதரவுடனுஞ் சோனகத் தெருவி லுள்ள தங்களது வீட்டில் வைத்து பல மாதங்கள் உபசரித்து வந்தார்கள். அச்சமயம், தான் கடற்கரை ஓரம் நிற்ப தாகவும், ஓர் மரக்கலந் தன்னை நோக்கி வருவதாகவுங் காட்சி கண்டார்கள். அம்மரக்கலம் கரையை வந்தடைந் ததும், அதைச் செலுத் தி வந்தவர் “இதோ கனமிக்க நெய்னு முஹம்மது லெப்பை அப்பா அவர்கள் தங்களிடம் ஒப்படைக்குமாறு பணித்த-ஜுப்பாவும்-கூஜாவும்" என்று

( 8ሃ )
சொல்லி அவ்விரண்டையும் பாவா அவர்களிடம் ஒப் படைத்தவுடன் மரக்கலம் திரும்பிவிட்டது.
இக் காட்சியைக் கண்ட பாவா அவர்கள் மேன்மைமிகு தனது குரு மஹான் அவர்கள் மறைந்துவிட்டார்களோ வென்று, மனம் வருந்தியவர்களாக, அதிராம் பட்டணத்தி லுள்ள பிரமுகர் ஒருவருக்குத் தந்தி சொல் லி க் கேட்க, இல்லையென மறுமொழி வந்தது. மீண்டும் நாற்பதாம் நாள் கருணையும், கராமத்தும் (அற்புதமும்) மிக்க நெய்னு முஹம் மது லெப்பை அப்பா அவர்கள் பரிபூரண நிலையென்னும் மஹா சமாதியையடைந்துவிட்டார்களெனத் தந்தி கிடைத் தது. (இன்னலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்.)
தவ முடிந்த காட்சி
தவத்திரு ஷெய்கு நெய்னு முஹம்மது பாவா அவர்கள் பன்னிரண்டு வருடங்களாக வாய்பேசாது தவத்திலிருக்குங் கால், ஒரு நாளி ரவு அவர்கள் துயில் கொண்டிருக்கும் போது, பெரியார் ஒருவர் இவர்களது காட்சியில் தோன்றி இவர்களை அழைத்தவர்களாய், அப்பெரியார் முன்னடக்க, இவர்கள் பின் தொடர்ந்து சிலதூரம் போனதும், பெரியார் நடையை இவர்கள் தொடர முடியாமல் அவர்களுக்குப் பின்னல் ஒடிக்கொண்டிருந்தார்கள். இப்படியே சிலதூரஞ் சென்றபின், ஓடிவந்த மஸ்தான் பாவா அவர்கள் களைத்து வாடிவிட்டதைக் கிருபையோடு கவனித்த அப்பெரியார் தமது சோழியப் பையிலிருந்த குடுக்கை ஒன்றைத் திறந்து, அதனுள்ளிருந்த ஒப்புவமை கூறமுடியாத பானத்தை இவர் கள் வாயினுள் ஊற்றினர்கள். அதைப்பருகி, ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியவர்களாய் அதிவிரைவோடு நடந்தார் கள். ஆரம்பத்தில் இவர்கட்குமுன் வழிகாட்டியாக நடந்து சென்று ஷர்பத்தை நல்கிய அந்தப் பூமான், இவர்களுக்குப் பின்னுல் நடந்தார்களெனினும், முன்போகும் வாலிபரைத் தொடர முடியாமல் அப்பெரியார் ஒடிச் செல்ல வேண்டிய தாயிற்று. இவ்வாறன காட்சிக்குப் பின் மஸ்தான் பாவா அவர்களுக்குப் பெரியதோர் சக்தியும் இன்ப நிலையும் உண்டாயின.

Page 24
( 38 )
இம்மாதிரியான எண்ணற்ற அற்புதக் காட்சிகளைக் கண்டு தெளிந்து, பன்னிரண்டாம் ஆண்டி ன் இறுதியில் தமது காட்சியிற் கம்பீர தோற்றமும் அழகும்மிக்க பக்கீர் (சன்னியாசி) ஒருவர் தோன்றி இவர்களை நோக்கி 'உமது தவம் முடிந்துவிட்டது எனவே இதோ குவிக்கப்பட்டிருக் கும் பொற்குவியலை அள்ளிக்கொண்டு போகலாம்’ என் றுரைத்தார்கள். அவ்வசனத்தைக் கேட்ட இவர் கட் கு வெறுப்புங் கோபமும் உண்டாகி, ‘இவ்வுலகப் பொருள் அனைத்துந் துச்சம்; எனக்குத் தேவையில்லை” என்று அலட் சியமாக மறுமொழி கூறிவிட்டார்கள். உடனே அப்பெரி யார் இவர்களைக்கட்டி அணைத்து முத்தமிட்டுத் தேவாமிர் தம் போன்ற குடிப்பைப் புகட்டியதோடு பற்பல இரகசிய அறிவுரைகளையும் போதித்து மறைந்தார்கள்.
நாகூர் தலத்தில் தங்கிய இருவருடங்கள்
ஷெய்கு நெய்னு முஹம்மது மஸ்தான் பாவா அவர்கள் முத்துப்பேட்டையிற் பன்னிரண்டு வருடங்கள் தவத்திற் கழித்து, எண்ணற்ற காட்சிகளைக் கண்டு, பற்பல உப தேசங்களைப் பெற்று, உன்னத நிலையை அடைந்து, ஹக்கீ முல் ஹ"க்கமா ஷெய்கு தாவூது ஆண்டவர்களது பூரண திருப்தியுடனும், பொருத்தத்துடனும், நல்லாசியுடனும், விடைபெற்று, ஷெய்குனு முரப்பீனு, ஹாதீன ஷெய்குல் காமில் காதிர்ஒலி கஞ்சசவாயி, கஞ்சபக்ஷ் என்று அழைக் கப்படும் நாகூர் ஆண்டகை அவர்களது சன்னிதானத்துக்கு, லங்கோடுகட்டி, ஒரு வெண்ணிறத் துண்டை அணிந்தும் இன்னெரு துண்டைத் தோளிற் போட்டும்  ைகயிற் தடி யொன்றைப் பிடித்தவர்களாகவும் வந்து சேர்ந்தார்கள்.
கட்டுக் குலையாத கம்பீரத் தோற்றத்துடனிருந்த பாவா அவர்கள் யாரிடமுங் கேட்டு வாங்கி உணவருந்தாதிருப்பதே தமது தவத் திட்டங்களில் ஒன்ருதலால், எவரிடமுங் கேட் காது தலைவாயிலிலே நின்றுகொண்டிருந்தார்கள். நாள் ஏழாகியும் எவரும் உண்ணவோ, பருகவோ கொடுக்கவில்லை, வெறுந் தண்ணிரை மட்டுந்தான் ஆகாரமாக உட்கொண்டு சபூருடன் (பொறுமையுடன்) இருந்தார்கள். எட்டாம்

( 39 ) :
நாட்காலைவேளையில் தலைவாயிலில் நின்றுகொண்டு* தங்கள் ? கருணையின் அருட்கொடை இதுதாஞ?’ என்று சற்று மனங் கசிந்தவர்களாக எண்ணிவிட்டு, அன்றிரவும் வழமைபோல ஆண்கள் மலங்கழிக்குங் கடற்கரை ஒரப்பகுதியிற் படுத் துக்கொண்டார்கள்.
அக்காலத்தில் நாகூர் ஆண்டவர்களது சமாதி மரைக் கார்மரர்களுடைய பரிபாலனத்துக்குள்ளிருந்தது. (மர்ஹூம் கலீபா மஸ்தான் சாஹிப் அவர்கள் காலத்தில் கோட்டில் வழக்குத் தாக்கல் செய்து சாஹிபுமார்கள் பரிபா லனத்துக்கு உரிமை பெற்றர்கள்.) அச்சமயம் டிரஸ்டியாக நியமிக்கப்பெற்றிருந்த நாகூர் எம். கே. முஹம்மது மீரான் சாஹிப் மரைக்கார் அவர்கள் ஆண்டவர்களிடத்திற் பேரன்பு கொண்டவர்களாக இருந்து காலை மாலை ஜியாரத் துச் செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் ஜியாரத்துச் செய் யும் போதெல்லாம் ஆண்டவர்களே! எனக்கு ஒர் காமி லான (சம்பூரணமான) குருவைக் காண்பியுங்களென்று பிரார்த்திப்பது வழக்கம்.
காலையும் மாலையும் ஆண்டவர்களது தலைவாயிலில் பாவா அவர்களைக் கண்ணுற்ற மரைக்கார் அவர்கள் பாவா அவர்களைக் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. எத்தனையோ பக்கீர்கள் சன்னியாசிகள் தரிசனைக்காக வந்து போகிறவர் கள்தானே, அவா களில் இவரும் ஒருவர்தானே! என்று கணித்து உதாசீனமாக இருந்துவிட்டார்கள்.
பின் என்ன நடந்ததென்பதைக் கனம் மரைக்கார் அவர்களது வாய்மொழியிற் கேட்போம் :-
எம். கே. முஹம்மது மீரான் சாஹிப் (மீராசாகாக்கா வென்று கனமிக்க பாவா அவர்களாற் பின்பு அழைக்கப் பெற்ற) அவர்களது சொப்பனத்தில், முன்சொன்ன எட்டா வது நாளிரவில் மேன்மைமிகு நாகூர் பாத்துஷா காதர் ஒலி ஆண்டகை அவர்கள் தோன்றி “ஒய் மீரானே! நீர் என் னிடம் பல ஆண்டுகளாக வேண்டுதல் செய்த காமிலான ஷெய்கு (குரு) கையில் தடி பிடித்தவராயும், வாய்பேசாத மெளனியாகவுமிருக்கும் மஸ்தானைப் பின்பற்றிக்கொள்ளும்”

Page 25
( 40 )
என்று உத்தரவிட்டார்கள். இதை க் கேட்ட மீராசா காக்கா அவர்கள் “ஆண்டவர்களே! அப்படியாஞல் அவர் கள் எனக்கு என்ன சொல்லித் தருவார்கள், என்ன செய்து வைப்பார்கள்" என்றுகேட்க அந்த உபதேசத்தையுங் கூறி மறைந்தார்கள்.
“திடுக்கிட்டு எழும்பிய நான் தவத்திரு பாவா மஸ் தானத் தேட ஆரம்பித்தேன். கையில் ஹரிக்கன் லாம் புடன் இன்னெரு வேலையாளையுங் கூட்டிக்கொண்டு தர்ஹா ஷரீபைச் சுற்றியுள்ள மண்டபங்கள், பள்ளிவாயில்கள், தர் ஹாக்கள் தெருக்களிலுள்ள ஒவ்வொரு வெளித் திண்ணை கள் முழுவதுந் தேடிப்பார்த்துங் காணவில்லை. கடைசியாக இறந்தவர்கள் அடக்க ஸ்தலம் (கபுருஸ்தான்) போய்ச் சுற் றிப்பார்த்தும் அங்கேயுங் காணவில்லை. இனிப்பார்க்க நாகூரில் இடமில்லையே! வெளியூர் சென்றுவிட்டார்களோ? அப்படியர்னல் நான் எப்படித் தேடிப்பிடிப்பேன். ஆண்ட வர் சொன்ன அடையாளப்படி ஒர் பக்கீர் பலநாட்கள் தலை வாயிலில் நின்றுகொண்டிருந்தாரே, அவர்தானே? இன்னும், இன்னும் என்னென்னவோ எல்லாம் எண்ணி எண்ணி நானடைந்த துக்கத்திற்கோ அளவேயில்லை. மீண்டும் என்னு டன் வந்த ஆளிடம் நாம் தேடாதவிடம் இந்த ஊரில் எங் கேயாவது உண்டாவென அளவிலாத் துக்கத்துடன் விசாரித் தேன்." “அதற்குஅவன் ஆகக் குறைந்த துப்பரவற்ற இடம் ஒன்றுதான் மீதமுண்டு. அதுதான் மலங் கழிக்குங் கடற் கரையோரமுள்ள இடம், என்று சொன்னுன். ஆ, அப்படியா! அதையும் போய்ப் பார்த்து விடுவோமே என்று இருவரும் அங்கு சென்ருேம். ஹா! என்ன ஆச்சரியம். மேன்மைமிகு மஸ்தான் பாவா அவர்கள் த டி யை யொருபக்கத்தில் வைத்துவிட்டு, வலது கையை மடித்துக் கன்னத்தின்கீழ் வைத்துக்கொண்டு மிக்க அமைதியாகச் சயனித்துக்கொண் டிருந்தார்கள்.
நான் பக்கத்தில் நின்று கைவிரல்களாற் சுண்ட, கண் விழித்தார்கள். வீட்டுக்கு வாருங்கள் என்று மிகமிகப் பணிந்து அன்புடன் இரந்து கூப்பிட, ஏன்? அவர்கள் வரச் சொன்னர்களா வென்று சன்னிதானத்தைச் சுட்டிக் காட்டி (மெளன பாஷையில்) சயிக்கினையாகக் கேட்டார்கள். ஆம் என்று சொன்னேன். அப்படியானுல் வருகிறேன் என்று

( 41 )
தலையை அசைத்துச் சம்மதந் தெரிவித்து என்னுடன் வீட் டுக்கு வந்தார்கள். வெந்நீர் வைத்துக் குளிக்கவார்த்து வேஷ்டி கொடுத்து உடுக்கச் செய்து, எனது மெத்தையில் அமரச் செய்தேன்.
“உடனே எனது வலது கையைப் பிடித்துத் தனது துடையில் வைத்து, உபதேசித்து - “அவர்கள் சொன்னது சரிதான" என்று சைக் கினை யாற் கேட்க, நாகூர் பாத்துவுா ஆண்டவர்கள் சொல்லி வைத்த உபதேச மொழியில் எந்தவொரு அட்சரமும் விடாதிருந்தமையால் நான் அவர்களது பாதத்தைத் தொட்டு முத்த மிட்டு அவர்களை எனது குருவாக ஏற்றுக்கொண்டேன். இங்கே (பைஅத்) தீட்சை குருமார்களுக்கெல்லாம் நாயகமவர்கள் உத்தரவின் பேரில் உபதேசிக்கப்படுகிறது”
*சொற்பநாள் என் வீட்டிலிருந்தார்கள். பின் சின்ன எஜமான் என்றழைக்கப்படும் செய்யதினு தாதா செய்யிது முஹம்மது யூசுபு ஆரிபுபில்லா அவர்கள் கல்வத் (தனித்) திருந்த அறையில் (குளிர்ந்த மண்டபத்துக்குப் பின்புறம் இன்றும் காணப்படுகிறது) தனித்திருக்க நாடினர்கள். நான் அவர்களை மெத்தை போட்டு இருக்கச் செய்து அவர்களுக்கு வேண்டியவாறு என் மனப்பூர்வமாக உபசரித்து வந்தேன். இவ்வாறு சுமார் இரண்டு வருடங்கள் அங்கு தங்கி இருந் தார்கள். இவ்விரண்டு வருடங்களுள் என்னிடம் எழுதிக் காட்டிப் பேசிய ஆத்மார்த்த விஷயங்களை எழுதுவதாளுல் பல நூல்களாகத் திரண்டுவிடும். இதை அவர்கள் விரும்ப வில்லை; குணங்குடியார் நூலுக்குப் பின்னும் ஓர் நூலா வேண்டும் ? என்று உதாசீனமாகப் பேசிவிடுவார்கள். மேலும் எத்தனையோ அற்புத நிகழ்ச்சிகளுள் ஒன்றைமட் டும் குறிப்பாக ஞாபகத்திலுள்ளதைச் சொல்லுகிறேன்" என்று கீழ்வருங் குறிப்பைச் சொன்னுர்கள்.
ஒருநாள் ஷெய்கு மஸ்தான் பாவா அவர் கள் என் வீட்டிலிருந்த சமயம், காலையில் இருவர் என்னைத் தேடி வந்தார்கள். தாங்கள் யார்? எந்தவூர்? என்னைத் தேடி வந்த விஷயமென்ன? என்று வினவினேன். அதற்குள்

Page 26
( 4.2 )
அவர்கள் பாவா அவர்களைப் பார்த்துவிட்டார்கள். ஒ மஸ் தான்! நீங்களும் வந்துவிட்டீர்களா! எப்படி வந்தீர்கள் என்று கேட்க, நானும் சற்று முன்புதான் வந்தேன் என்று சொன்னதை நான் கேட்டுக்கொண்டு நின்றேன்.
என் வீட்டுக்கு வந்த அவ்விருவரும் மலேசியா போக டிக்கட் வாங்க வந்தவர்கள். எனது மைத்துனர் கப்பல் கம்பெனி ஏஜன்டு. அவர் வீட்டுக்குப் பதிலாக யாரோ என்வீட்டைக் காட்டியிருக்கிருர்கள். நான் அவர்களை முன் வாயிலாக அனுப்பிவிட்டு, பின் வாயிலாக ஓடோடிப்போய், அவர்களிடம் மஸ்தானை எங்கே கண்டீர்கள் என்று கேட்க, அவர்கள் "எங்கள் ஊர் நம்புதாளை, இராம ஞ த புரம் தாலுகா. மஸ்தான் அவர்கள் தங்கள் வீட்டு வெளித் திண் ணையில் இருந்தார்கள். அவர்களிடம் நாங்கள் மலேசியா போகிருேம். துஆச் செய்யுங்கள் என்று கூறி ஆசிபெற்று வந்தோம். நாங்கள் வந்த இரயிலிலே இங்கு வந்திருக்க வேண்டும் என்று கூறினர்கள், அப்படியாவென்று, நான் அவர்களிடம் எதுவுங் கூருமல், வீட்டுக்கு வந்து கண்ணிய மிக்க பாவா அவர்களிடம் அவர் க ள் சொன்னதைச் சொல்லி வினவ ஆமாம்! என் தமையன் ஒருவர் என் னைப் போலவே இருக்கிருர். அவராக என்னை நினைத்து அப் படிச் சொல்லி இருக்கிருர்கள் என்று அலட்சியமாகச் சொல்லி முடித்தார்கள்.
என்ன ஆச்சரியம்! காலை, பகல், மாலை, இரவு நான்கு வேளையும் நானே உணவு வழங்கி நானே பரிமாறி உண்ண வைக்கிறேன். நம்புதாளை எங்கே நாகூர் எங்கே? அங்கே கண்ட மஸ்தானை இங்கேயுங் கண்டால் ஆச்சரியமல்லவா! அற்புதக் காட்சி யல்லவா’ என்று புகழ்ந்து கூறினர்கள்.
பின்பொருநாள் நான் காலை உணவெடுத்துக்கொண்டு போக ஏதோ வெறுப்புணர்ச்சியுடன் இருப்பவர்களைப் போலக் காணப்பட்டார்கள். என் மனம் பயந்து நடுங்கி ஏதோ எனது பணிவிடையில் குறை ஏற்பட்டுவிட்டதோ வென எண்ணி, பாவா அவர்களே! நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென மிக்க பணிவுடனும் அன்புடனும் கேட்டேன். அதற்குக் கண்ணிய மிகு பாவா அவர்கள்

( 4.3 )
*நான் கொழும்பு போக வேண்டும். அதற்குரிய ஏற்பாடு களைச் செய்து அனுப்பிவிடுங்கள் என்று எழுதிப் பணித் தார்கள். உடனே அதற்குரியவைகளை எனது மனப்பூர்வ மாக ஏற்பாடு செய்து, பாவா அவர்களது மனத்திருப் தியுடனும் ஆசீர்வாதத்துடனும் எனது நன்றியைத் தெரி வித்து மிக்க சங்கையாக அனுப்பி வைத்தேன்’ என்ருர்கள்.
கொழும்புக்கு வருதல்
தாளையான் பாவா அவர்கள் நாகூர் ஷரீபை விட்டுக் கொழும்பு வந்து கிராண் ட் பாஸ் பகுதியிலிருக்கும் கிராட்ன்பாஸ் ருேட்டில் தெரிந்தவொருவர் வீட்டில் தங்கி யிருந்தார்கள், பாவா நாகூரில் இருந்த காலத்தில் அவர் கள் அறிமுகமானவர்கள். அவர்கள் கனம் மிக்க பாவாவை மிகக் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் உபசரித்து வந்தார்கள். அக்காலத்தில் அச்சகம் ஒன்றை யன்பர்கள் உத வியைக் கொண்டு நிறுவி அதற்குத் தாளையான் அச்சகம் என்று நாமஞ் சூட்டிஞர்கள். அவ்வச்சகம் இன்றுவரையும் மேற்படி பெயரால் நடந்து வருகிறது. இதைத் தன்னு டைய நண்பரும் தவசியுமான பீர் பாவா திரு. கா. பீர் முஹம்மது (முத்துப்பேட்டை) மஸ்தான் அவர்களும் மற் றும் அன்பர்களும் நடத்தி வந்தார்கள். "ஆஹா 1 அக் காலத்திற் பட்ட கஷ்டத்துக்கோ அளவில்லை’ என்று தாளையான் பாவா அவர்கள் பலமுறை சொல்லியிருக்கிருர் கள். கிராண்ட்பாஸ் ருேட்டிலுள்ள அச்சகத்தை லேயாட்ஸ் பிராட்வேயில் ஒரு வீட்டுக்கும் அதன்பின் இரண்டாவதாக நிர். 252, லேயாட்ஸ் பிராட்வே இல்லத்திற்கும் மாற்றி விட்டார்கள். ஆரம்ப காலத்திலிருந்தே சிலாபம் எஸ். எம். முஹம்மதலி சாஹிப் அவர்கள் திரு. தாளையான் பாவா அவர்களைத் தரிசித்து உபதேசம் பெற்றுப்போவது வழக்கம். பாபா அவர்கள் சிலாபத்திற்குப் போனுல் எஸ். எம். முஹம் மதலி சாஹிப் அவர்கள் வீட்டில் அல்லது கனம் எஸ். எம். ஜமால்தீன் என்பவர் வீட்டில் தங்கியிருப்பார்கள்.
அக்காலத்தில் முன்னேஸ்வர ஆலயத்தைப் புதுப்பித் துக் கட்டிய சிற்ப சாஸ்திரியான பூரீ முத்துராக்காசாரிய சுவாமிகளிடம் சிலாபம் அமிர்த லிங்க சுவாமியும்,

Page 27
44 )
தப்பொவ மாதம்பையிலிருந்த யாழ்ப்பாணம் காை நகரைச் சேர்ந்த பொன்னம்பலச் சுவாமியும் வேதாந்தட பாடங்கள் கேட்டுப் படித்து வந்தார்கள். இவர்கள் இருவரும் ஆசாரிய சுவாமிகளுடன் தாளை யான் பாவா அவர்களைத் தரிசிக்கச் சென்ருர்கள். திரு ஆசாரிய சுவாமி கள் தாளையான் ஆண்டவர்களிடம் பற்பல விஷயங்களைப் பேசித் தெளிந்தபின் திரும் பித் தன்னில்லம் போகும் போது தாளையான் ஆண்டவர்கள் ஒரொப்பற்ற சித்தரென் றும், நீங்கள் இருவரும் அன்னுரைப் பின்பற்றிக்கொள்ளுங்க ளென்றும் உத்தரவிட்டார்கள். அப்படியே தங்கள் முதற் குருலினது ஆணையைச் சிரமேற்கொண்டு திரு தாளை யான் ஆண்டவர்களை அவ்விருவரும் பின்பற்றிக்கொண்டார்கள். அவர்களை எந்தை யாண்டவர்களும் தமது சீட்ர்களாக ஏற்றுக்கொண்டார்கள்.
ஒருநாள் சிலாபத்திலிருந்து கொழும்பு வருஞ் சமயம் தப்பொவ இரயில் நிலையத்தில் இறங்கிப் பொன்னம் பலச் சுவாமியிருக்குங் கடைக்குச் சென்று அவர்களையுங் கூட்டிக்கொண்டு அச்சகத்துக்குப் போய் அதனைக் கண் காணிக்க வுத்தரவிட்டார்கள். அக்காலந் தொடங்கி அச் சகம் இலாபகரமாக இயங்கவாரம்பித்தது. அவர்கட்குப் பக்கபலமாக பற்பல அன்பர்கள் உதவி செய்தார்கள். உதவிசெய்வதில் சிரேஷ்ட மானவரே ஏ. ஜே. எம். அன்வர் என்பவர். அக்காலத்தில்தான் திரு ஆசைப்பிள்ளை யென்று சொல்லப்படும் வீம சுவாமி, திரு. பெருமாள் சுவாமி திரு. அருணுசல சுவாமி, அப்துல் கரீம் சாஹிப் முதலியோர் கள் சீடராக வந்து சேர்ந்தார்கள்.
இவ்வில்லத்தில் அச்சாபீஸ் பல வருடங்கள் இருந்த படியால் அங்கு தாளையான் ஆண்டவர்களைத் தரிசிக்க வந்த சாதுக்கள், சந்நியாசிகள், பக்கீர்கள், இஸ்லாமிய பெரிய
வர்கள், உலமாக்கள், பாதிரிமார்கள், புத்த பிக்கு கள்
முதலியவர்களுக்கோ அளவில்லை. பொதுமக்கள் கூட்டங் கூட்டமாக விந்து தரிசித்தனர், அவர்கள் தங்கள் தங்கள் சந்தேகங்களையுங் குறைபாடுகளையும் நி விர்த் தி செய்து கொண்டு சென்றனர்.

( 45)
இதில் முக்கியத்தில் முக்கியமான விஷய மென்னவென் முல் தரிசிக்க வருகிறவர்கள் தங்கள் தங்கள் தேவைகளை மனம் நெகிழ்ந்து சொல்லமுன் தவத்திரு பாவா அவர்களே அவர்கள் தன்னிடங் கேட்கவிருக்கும் விடயங்கட்கும், அல் லது தேவைகட்கும் அவர்களைக் கண்ட மாத்திரத்திலேயே அல்லது அவர்கள் அமர்ந்தவுடனேயே மறுமொழி பகர்ந்து விடுவார்கள். “கராமத்து கெளனி, கராமத்துல் இல்ம்' (அபாரமான சித்தும் நன்னிலைபெற்ற வித்தகர் அறிவும்) ஆகியவிரு தன்மையான அருட்கொடைகளைத் தாளையான் ஆண்டவர்கள் பெற்றிருந்தார்கள். சாதாரன மக்களுக் கும் அறிஞர்கட்கும் அருமருந்தாகத் திகழ்ந்தார்கள். அக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை எழுதுவதானல் இச்சிறிய சரித்திரச் சுருக்கம் மிகவும் விரிவடைந்துவிடுமென அஞ்சி விட்டுவிடுகிருேம். என்ருலும் சில நிகழ்ச்சிகளைக் கீழே தருகிறேம்.
லேயாட்ஸ் பிராட்வேப் பகுதியிலுள்ள மாதர்கள் பிர சிவ வேதனையால் அவதிப்படும்போது அவர்கள் தங்களா லியன்ற வைத்தியங்கள் அத்தனையுஞ் செய்வித்தும் பலனற் றுப் பிள்ளை பிறக்காது வேதனையடையுந் தருணம் அம். மாதர்களின் சொந்தக்காரர்கள் ஒடோடி தவத்திரு பாவா அவர்களிடம் வருவார்கள். வந்து முறையிடுவார்கள். வந்த வர்களிடம் 6 (ஆறு) நரம்யுள்ள ஒரு வெற்றி லே  ைய க் கொண்டுவரச் செய்து அதைக் கூர்ந்து நோக்கியபின் அதை வேதனைப்படும் மாதை யருந்தும்படிச் சொல்லி யனுப்புவார்கள். அங்ங்னஞ் செய்தவுடன் சுகப் பிரசவம் உண்டாகும். சில சமயங்களில் வெள்ளைக் கோப்பையில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி யதில் தனது ரஹ்மத் தான கலிமா (ஆட்காட்டி) விரலை வைத்தும் நோக்கியுஞ் சிலசமயம் அத் தண்ணீரில் ஒருமிடக்கெடுத்து வாயிற் சற்று நேரம் வைத்துவிட்டு அதை மறுபடியும் அக் கோப்பைக் குள் கொப்பளித்து அனுப்புவார்கள். அத் தண்ணிரைப் பிரசவ வேதனைப்படும் மாது குடித்தவுடன் வேதனையற்ற சுகப் பிரசவமுண்டாகும். இப்படியான பல சம்பவங்களைக் கண்ணுற்ற அடியேன் சில வருடங்களுக்குப் பிறகு ஒருநாள்

Page 28
( 46 )
இத்தகைய நிகழ்ச்சி நடக்கும்போது மூன்று விதஞ் செய்கி நீர்களே யென்று மனதில் நினைத்துப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். உடனே ஆண்டவர்கள் “ஓ! அதுவா? அவர்கள் தன்மைக்குத் தக்கவாறு’ என்று அ ன் புட் ன் பகர்ந்தார்கள். ஒதுவதோ அல்லது சூசூ என்று ஊது வதோ இவ்விடத்திற் கிடையாது. இம்மூன்று விதங்களில் தகுந்தவொன்றைப் பிரசவ வேத னை யு று ம் மாதுக்குக் கொடுக்க உடனே சுகப் பிரசவம் உண்டாகிவிடும். இதை யாண்டவர்கள் கையால் வாங்கிக்கொண்டு போனவர்கள் திரும்பி வருவார்கள். என்ன நடந்தது என்று கேட்க மஸ்தான் பாவா அவர்கள் துஆ பறக்கத்தால் எக்குறையு மின்றிக் குழந்தை பிறந்து விட்டதென்று கூறி நன்றி தெரி வித்துக்கொள்வார்கள்.
தன்னை அறிவித்தல்
தாளையான் பிரிண்டிங் வோர்க்ஸ் நிர். 252, லேயாட்ஸ் புருேட்வேயில் இருந்த காலத்தில் பின்வருஞ் சம்பவம் நிகழ்ந்தது. அதைப்பற்றித் தாளையான் ஆண்டவர்களது சீடர்களில் ஒருவரான அப்துல் கரீம் சாஹிப் அவர்கள் கூறுவதைக் கவனிப்போம்.
இரவு சுமார் இரண்டு மணியிருக்கும்; தாளை யான் ஆண்டவர்கள் அறிதுயிலில் நிலைத்துச் சயனித்திருந்தார்கள். அந்நேரம் திடீரென எழுந்து படுக்கையறையின் கதவைத் திறக்கும்படி அவர்கள் உத்தரவிட்டார்கள். கதவு திறக் கப்பட்டது, என் கையைப் பிடித்தவாறே வெளிவாயிற் கதவண்டை வந்து நின்று அதையுந் திறக்கும்படி சொன் னர்கள். அக் கதவுந் திறக்கப்பட்டது. அப்பொழுது சுமார் அறுபது வயதுள்ள ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருந்தார். அவர் கையைப் பிடித்தவாறே “என்னை யோடா பார்க்க வந்தாய்?” என்று அந்த மனிதரைக் கேட்டார்கள். அதற்க வர் ‘என்னையல்லோ பார்க்க வந்தேன்" என்று உரத்த குரலில் மறுமொழி சொன்னர். "அப்படியா? உன்னைக் காட்டுகிறேன் வா” என்று அவன் கையைப் பிடித்தவாறே தன்னறைக்குட் சென்று, அவரை

( 47 )
யொருபுறத்தில் இருத்திவிட்டு ஆண்டவர்கள் மறுபடியுந் தனது படுக்கையிற் படுத்துக்கொண்டார்கள். கதவைச்
சாத்திவிட்டு வெளியே படுத்துக்கொள்ளும்படி என் னேப் பணித்தார்கள். நானும் அவ்வண்ணமே செய்தேன்.
காலை சுமார் நான்கு மணியளவில் இருவரும் வெளியில் வந்தார்கள். ** உன்னைக் கண்டுகொண்ட்ாயா?’ என்று ஆண்டவர்கள் அம்மனிதரைக் கேட்டார்கள். அதற்கவர் “ஓம் சுவாமி” என்று சொல்லிக் காலில் விழுந்து வணங்கி ஞன், அப்போதுதான் அவரொரு இந்துசமயத்தினரெனவறிந் தேன். ‘சிவனடியாரைக் காண்பவனைக் காண்பவனைக் காண்ப வனுஞ் சிவமே” என்று கூறி நீ உணர்ந்ததை விட்டுவிடாது நிதமும் உற்று நோக்க ஏகவெளியொளியாய் நிறைந்து நின்று சுவானுபூதியையடையக் கடவாய் என்று ஆசீர் வதித்து அவரைக் கூட்டிக்கொண்டுபோய் அனுப்புமாறு கட் டளையிட்டார்கள். யானும் அவ்வண்ணமே செய்தேன். அம் மனிதர் யார், பெயர் யாது, எங்கிருந்து வந்தவர், எப்ப டிப்பட்டவர் என்பனவெனக்குத் தெரியா, அத்தருணம் அவரை விசாரித்தறியவுமில்லை.
தேறித் தெளிந்து நிலைபெற்ற மாதவர்க்கே பரிபாகி களது அஞ்ஞானத்தை நீக்கி அவர்களைச் சிவானுபூதியில் திளைக்கச் செய்ய முடியும். அத்தகைய மாதவத்தையுடை யவரே நமது குருபிரான் தாளையான் ஆண்டவர்கள். இத் தகைய ஆத்மீக வல்லமை பற்றித் "தாளையான் சற்குரு நாதன் தோத்திரத்தில்" கூறப்பட்டிருக்கிறது.
*கார்மேகந் தன்னலனைக் கண்டிடாத் தன்மைபோற் சீர்மேவு சிந்தனையான் சிற்பரணைச்-சார்புணர்ந்து சார்புகெடத் தானுக்குந் தாளேயான் சற்குருவின் வார்கழலை நித்த நீ வாழ்த்து."
என்று தன்னைச் சரணுக வந்தடைந்த சாதுக்களைத்
தானே தாணுக்குந்தம்மையைப் போற்றுகின்ருர் அவர் களது சீடர்களில் ஒருவரான பூரீலபூரீ அருணுசல சுவாமிகள்.

Page 29
( 48 )
*நீக்கி மலக் கட்டறுத்து நேரே வெளியி லெம்மைத் தூக்கி வைக்குந் தாளைத் தொழுதிடுநாள் எந்நாளோ’ என்பது அருள்வள்ளல் தாயுமான சுவாமிகள் திருவாக்கு. மேலும் ைெடி சுவாமிகளது சீடன் அருளேயர் சுவானுபூதி நிலையைப் பின்வருமாறு போற்றித் துதிக்கின்றர்.
"பரவெளி தன்னிற் பதிந்தவென் னுளத்தின் விரவி விரவி மேற்கொளும் வெள்ளம் சுட்டுக் கடங்காச் சோதி யடியார் மட்டுக் கடங்கும் வான்பெருங் கருணை எல்லேக் கடங்கா ஏகப் பெருவெளி தில்லைப் பொதுவில் திருநடத் தெய்வம்."
メ சுவானுபூதி நிலையை விரும்பும் மெய்யடியார்கள் மேற்கூறிய பாக்களின் கருத்தைச் சீருற விளங்கிச் சாதனை செய்து வருவது சாலச் சிறந்தது.
மேமன் பாயின் ஆத்மீகத் தாகம்
பின்வரும் நிகழ்ச்சி சிலாபம் எஸ். எம். முஹம்மதலி சாஹிப் அவர்களால் கூறப்பட்டது.
ஒரிரவு கடும் மழை பெய்துகொண்டிருந்த சமயம் மேமன்பாய் வர்க்கத்தைச் சேர்ந்த வ ய து முதிர்ந்த வொருவர் மழையில் நனைந்து குளிர் தாங்க முடியாது நடுங்கிக்கொண்டு வந்து வெளிக்கதவண்டையில் நின்று கொண்டிருந்தார். அவர் பாகிஸ்தான் ஊரைச் சேர்ந்தவர், அவரோர் இஸ்லாமிய ஷெய்கும் (குருவும்) மத போதகருமாவார். கற்றுணர்ந்த ஆலிமாகவும் பல தரப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கும் விசேஷமாக மேமன் பாய்மார்கட்கும் உபதேசியாராகவுங் காணப்பட்டார்.
கொழும்பில் இருக்கும்போது பகற்காலத்தில் எச். ஏ. கே. ஹாஜி அப்துல் கரீம் என்ற பிரபல பிடவைக் கடையில் தங்கியிருப்பார். அக் கடைக்கார முதலாளி அவரை மிகக் கண்ணியத்துடனும் மரியா  ைதயுடனுங் கவனித்து

( 49 )
அன்புடன் உபசரித்து வந்தார். அந்த ஷெய்கு அவர்கள் தன்னை இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் எவரும் தேடக்கூடாது என்று கட்டளையிட்டிருந்தார். அப்படியாளுல் அவர்எங்கே செல்கிருர்? அவர் எந்த, எந்த ஊருக்குப் போகி ருரோ அங்கங்கெல்லாம் அதே உத்தரவுதான் கொடுப்பார். ஏனென்ருல் அவர் இரவில் எந்தெந்த ஊரில் தங்கிஞலும், அந்தந்த ஊரிலுள்ள கராமாத்துடைய, ஹயாத்துப்பெற்ற சமாதிகளில் தனித்துத் தங்கி, அங்கு பள்ளிகொண்டிருக்கும் தாதாக்களிடம் தனக் கொரு காமிலான ஷெய்கைக் காண்பிக்கு மாறு முறையிட்டு வேண்டுதல் செய்து கொண்டே இருப்பார்.
அதேபோல், கொழும்பில் தங்கி இருந்த காலை, பேரும், பெருமையும், கராமாத்து நிறைந்தவர்களும், சர்வ மதஸ்தவர்களும் சென்று தங்கள், தங்கள் தேவைகளை பூரணமாகப் பெற்றுச் செல்லும் தெவட்டமரத்தடி பள்ளி யில் ஹயாத்துடன் இலங்குஞ் செய்யதின சித்தீக் இடினு ஷெய்கு உதுமான் (ரலி) அவர்கள் ஜியாரத்திலும் தங்கி வேண்டுதல் செய்துகொண்டிருந்தார்.
அவுலியா ஷெய்கு உதுமான் (ரலி) அவர்கள் அன்றிரவு கனவில் தோன்றி நீர் பலாமரத்தடி என்று அழைக்கப்படும் லேயாட்ஸ் பிராட்வேயிலிருக்கும் மஸ்தான் ஷெய்கு நெய் ஞ முஹம்மதுவைப் பின்பற்றிக்கொள்ளும் என்று கூறிஞர்கள். அவுலியா அவர்களை மிக்க தாழ்மை யுடனும் வணக்கத்துடனும் நோக்கி, “ஆண்டவர்களே! அவ்விடம் எனக்குத் தெரியாதே. நான் அங்கு எப் படிச் செல்வேன் என்று கூற "நான் முன் போகிறேன் என்னுடன் பின் தொடர்ந்து வாரும்” என்று கூறி மறைந் தார்கள். உட்னே கண்விழித்துப் பார்க்க ஓர் பிரகாச வட்டம் அவர் முன்னின்றது. அங்கவிரகாசம் முன்போக அந்த மேமன் ஷெய்கு பின்தொடர்ந்து செல்ல 252, லேயாட்ஸ் பிராட்வே வீட்டு வெளிக்க த வண்டை அப்பிரகாசம் மறைந்து விட்டது. அல்ஹம்துலில்லா - என்னே ஒலிநாதர் அவர்களின் மகத்துவம். இது வே ஹயாத்துப்பெற்ற ஒலிமார்களின் மகத்துவம். இப்பேர்ப்பட்டவர்களைத்தான்

Page 30
( 50 J
இறைவன் வேதத்தில் என்றும் ஜீவிதமுள்ள வர்களென்றும் அச்சந் தீர்ந்தவர்களென்றும் வர்ணிக்கிருன்.
அத்தருணத்திற் கண்படைத்த நாதா, காமில் முகம்மல் நம் குருநாதர் ஷெய்கு நெய்னு முஹம்மது மஸ்தான் பாவா அவர்கள் நடுநிசியில், தன் படுக்கையை விட்டு வந்து, கதவைத் திறந்து, அவரை வெகு அன்புடனும் ஆதரவுட னும் அழைத்துச் சென்று, அவரைத் துடைக்கச் செய்து இருக்கச் சொல்லி, “ அவர்கள் அனுப்பி வைத்தார்களா?” என்று கேட்க, மனமுருகியவராக கண் கலங்கி ‘ஆம்” என்றுரைத்தார். அவருக்குத் தேநீர் கொடுத்து மழை விட் டதும், " மற்ற யாவும் நாளைக்கு’ என்று கூறி விடிந்ததும் அனுப்பிவிட்டார்கள்.
மறுநாட் காலை சுபுஹில் (உதயத்தில்) அவர் நிர். 252, லேயாட்ஸ் பிராட்வே அச்சகத்துக்குப் போய்ச் சேர்ந்தார். எச். ஏ. கே. கடையில் தான் இன்ன இடத்தில், இன்னுருடன் தங்கி இருக்கப் போவதாகச் சொல்லி விட்டார். அதன் பின் பாய்மார்கள் வியாபாரிகள் பல பேர் பாவா அவர்களைச் சந்தித்து பறக்கத்துப் பெற்றுச் சென்ருர்கள். தங்கள் கடைகளுக்குத் தேவையான அச்சுப் புஸ்தகங்களையும் பிரதிகளையுஞ் செய்து தரும்படி வேண்டிக்கொண்டார்கள். இன்றும் அவ்வாடிக்கைக்காரர்கள் விடாது தாளையான் அச்சகத்துடன் தொடர்புகொண்டிருக்கிறர்கள்.
அன்றுமுதல் அந்த மேமன் பாய்க்கு பற்பல அகமியங் களைக் கூறி, குர்ஆனிலுள்ள முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டி யும் ஒலிமார்களுடைய அந்தரங்கங்களைத் தெளிவுபடுத்தி உபதேசித்தும் வந்தார்கள். எந்தை தாளையான் பாவா அவர்கள் அவ்வயோதிபர் தான் பூரணத்துவம் அடையாது மற்றவர்களுக்கு உபதேசிக்கப் போனதற்காகவும், அவரில் அடங்கிக் கிடந்த குறைபாடுகளை எ டு த் து க் காட்டியும் அவைகளை அடியோடு நீ க் கும் பொருட்டு அவருக்குக் கொடுத்த துன்பத்துக்கும், கஷ்டத்துக்கும் அளவே இல்லை. எக்கஷ்டத்தையும் பொறுமையோடு சகித்துத் தன் குற்றங் களை உணர்ந்தவராக- * ஷெய்க், ஷெய்க்” என்ற ஒரு வசன

( 51 )
மட்டுமே உரைப்பார்-மற்ற நேரங்களில் தன்னை நினைந்து அழுது, அழுது சலித்தவராக இருந்தார். (ஹா பாவா அவர் கள் தன் சிஷ்யர்களது குறைகளைக் களையும் பொருட்டு அவர் களை வதைக்க ஆரம்பித்தால் அம்மம்மா - உள்ளமும் உயி ரும் எதை உருசிக்கும் என்று அவர்களது சிஷ்யர்கள் மட்டுமே உணர்வார்கள். எழுதியோ சொல்லியோ காட்ட முடியாது. இத்தகைய அருட்செயல்கள் நம்மனேர் கணிப்புக் கெட்டாதன. அவர்கள் நினைத்தால் சீடரை ஒரு கூடிணத்தில் யாவற்றையும் மறக்கச் செய்து உள்ளங்குளிர வைத்துவிடு வர்ர்கள். இது அவர்களடைந்த பிரத்தியேக வரப்பிரசாதம். தன்னிடஞ் சரணுகதியடைந்த அந்த மேமன் பெரியா ரைக் கல்வத்தில் (தனிமையில் ) இரு த்தி ஆத்மீகத் தனிநிலையை உணர்த்தத் தாளையான் சற்குருநாதர் திருவுளங்கொண்டார்கள்.
சில நாட்கள் சென்றதும், முதற் பத்துநாள், உண்ண வும், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக்கான உப தேசித்தும், இரண்டாம் பத்துநாள் சோறுங் கீரையுங் கொடுத்தும், மூன்ரும் பத்துநாள் பசுப்பால் மட்டுங் கொடுத் தும், நாலாம் பத்துநாள் எதுவுமே கொடாது ஓரறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டார்கள். இரவு சுமார் 1 மணியளவில் கதவைத் திறந்து அந்தப் பெரியாரை வெளியில் வரச் செய்து கையைப் பிடித்துக்கொண்டு, சற்று அங்கு மிங்கும் உலாத் தினபின்பு மீண்டும் அறையில் வைத்துப் பூட்டி விடுவார்கள். சரியாக நாற்பதாம் நாள் கழிந்ததும் வெளியில் வரச்செய்து குளிப்பாட்டித் தன்கையாற் சமைத்த ஒருவகைப் பாற் சாதத்தை உண்ணக் கொடுத்தார்கள். அதன்பின் அவரைப் பார்த்தால் ஓர் பிரகாசப் பிளம்பாகவே தோற்றமளித்தார். பின் சொற்பநாள் தன்னுடன் வைத்திருந்து அப் பெரி யாருக்கு வஸ்து நிலை காண்பித்து, அந்நிலையில் சந்தேகம், விபரீதமற இருத்தி, ஆத்மீக நிலைகளையும், படித்தரங்கங்களே யும், அனுபவ நிலைகளையும் உணர்த்தி தான் இந்நாற்பது நாளைக்குள் அடைந்த நிலை விபரங்களையும், அவர் கூற அவைகளை விரிவாக விளக்கி, தன் நிறைவு பெற்றிலங்க, அருள்பாலித்து ( துஆ செய்து), மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்கள். அப் பெரியா ரும் தானடைந்த பேரின்ப அனுபூதி நிலைகட்காக நன்றிகூறி, மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்ருர்கள். "y

Page 31
( 52 )
திரு. தாளேயான் பாவா அவர்களைத் திரு. முத்துராக்காசாரிய சுவாமிகள்
சந்தித்தல் திரு. தாளையான் பாவா அவர்களைச் சிலாபத்திலமைந்த முன்னேஸ்வரர் ஆலயத்தைச் சீர்திருத்திய சிற்பசாஸ்திரியும், ஞானசாஸ்திரங்களைக் கற்றுணர்ந்த திருவாளருமாகிய முத்துராக்காசாரிய சுவாமி அவர்கள் சந்திக்க ஏற்பாடு நடந்தது.
திரு. ஆசாரிய சுவாமிகள் தமது குடும்பத்துடன் முன்னேஸ்வரத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் முன் னேஸ்வர ஆலயச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டுக்கொண் டிருந்த காலத்திலே, அவர்கள் கல்வித்திறனும், பூஜாவிதிக ளும், யோகானுஷ்டான முறைகளும் வாய்க்கப்பெற்ற ஞானசாஸ்திர வள்ளலாகத் திகழ்ந்ததைக் கண்ட பல பெரி யார் க ள் அவர்களிடத்துச் சென்று, வேதாந்த சித்தாந்த நூல்களுக்குப் பாடங் கேட்டுப் பய்ன் பெற்று வந்தார்கள்.
அக்காலத்தில் சிலாபத்தில் தொழில் செய்துகொண் டிருந்த திரு.அமிர்தலிங்க சுவாமி அவர்களும், மாதம்பையை அடுத்த தப்பவ என்ற ஊரில் தொழில் புரிந்த திரு. பொன் னம்பல சுவாமிகளும் திரு. ஆசாரிய சுவாமிகளிடம் மோட்ச சாதனத்துக்குரிய பாடங்களைச் சிரவணஞ் செய்து வந்தார்கள்.
அப்பொழுது திரு. தாளையான் பாவா அவர்கள் சிலா பத்தில் செ. மு. முஹம்மதலி சாஹிப் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். கனம் பாவா அவர்களையும் சமயப் பெரியார்கள் பலர் வந்து சந்திப்பதுண்டு. மேலும் சில பெரி யார்கள் பலமணி நேர காலமாக அவர்களது உரையைக் கேட்டுக்கொண்டிருப்பதுவுமுண்டு. அவர்களுள் ஒருவர்தான் பாக்குக்கடை அபுல் காஸிம் ஆலீம் சாஹிப் அவர்களாவர். அவர்கள் திரு. பாவா அவர்களிடம் மிக்க ஈடுபாடும், பேணுதலும் உடையவர்கள். சி. மு. ஜமால்தீன் அவர்களது

( 53 )
வீட்டாருக்குத் திரு. பாவா அவர்களை அறிமுகப்படுத்தியதும் அவர்களே. அதன்பின்பு பலமாதங்கள் சீ. மு, ஜமால்தீன் அவர்களது வீட்டிலே கனம் பாவா அவர்கள் தங்கினூர்கள், சீ. மு. ஜமால்தீன் அவர்களும் திரு. பாவா அவர்களை எக்குறையுமின்றி உபசரித்து வந்தார்கள். , , .
அக்காலத்தில் திரு. பாவா அவர்களை இரவு பகலாக உபசரித்து, அவர்களுக்குப் பணிந்து, தொண்டூழியஞ் செய்த வர்கள் அமத்த ரஹ்மாபீவி என்ற ராஜம்மா. இவர்கள் சீ. மு. ஜமால்தீன் அவர்களது சகோதரியினது மகளாவர். அவர்கள் பிற்காலத்தில் தென்னிந்தியாவிலே தங்கச்சி மடத் துக்குச் சென்று ஏ. எஸ். ஜெய்னுலாப்தீன் அவர்களைத் திருமணஞ் செய்து சிறப்புடன் வாழ்ந்தார்கள்.
ஓர் ஆரிபுபில்லாவைப் புகழ்ந்து பாராட்டிக் கெளர வித்துத் தன்னுடனிருத்தி, வேண்டிய வசதிகளளித்து, உணவும் உடையும் வழங்கியவர்களது மகிமைதான் என்னே! பிற்காலத்தில் ஆண்டவர்கள், “ஜமால்தீனைப்போல என்னை ஆதரித்தவர்கள் என் ஜீவிய காலத்தில் எவருமில்லை, அவன் எப்படி இருந்தாலும் அவனுக்கு என் தவத் தில் பங்கு கொடுப்பேன்’ என்று பல தடவைகள் சொல்லுவரர்கள்.
கனம் அபுல்காஸிம் சாஹிப்வர்கள் தவத்திரு ஆசா ரிய சுவாமிகளிடத்திலும் பல விடயங்களைப் பற்றிச் சம்பா ஷித்தலுமுண்டு. அவர்கள் திரு. ஆசாரிய சுவாமிகளும் திரு. தாளையான் பாவா அவர்களும் சந்தித்தால் நலமாக விருக்குமே; ஞான மேதைகள் இருவருஞ் சந்தித்துப் பேசும் ஞானமிர்தத்தில் நாமும் சற்றுப் பருகலாமே" என்ற அவா மேலீட்டால், இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்தார்கள். இருவரது அனுமதியையும் பெற்றுக்கொண்டார்கள். கனம் பொன்னம்பல சுவாமிகளும், கனம் அமிர்தலிங்க சுவாமிக ளும் இச் சந்திப்பிற் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்கள், ஒற்றை மாட்டு வண்டியில் திரு. ஆசாரிய சுவாமிகளை ஏற்றிக்கொண்டு சிலாபம் செ. மு. முஹம்ம தலி சாஹிப் அவர்களது வீட்டை அடைந்தார்கள்.

Page 32
( 54 ) திரு. தாளையான் பாவா அவர்களும், வீட்டிலுள்ளவர் களும் வந்தவர்களை உபசரித்து, அமர ச் செய்தார்கள். திரு. பாவா அவர்களோ திரு. ஆசாரிய சுவாமிகளோ மெளனமாகவே இருந்தார்கள். சற்று நேரங் கழிந்ததும் ஆலிம் சாஹிப்பவர்கள், இரு மேதைகளும் ஏதும் சம்பா ஷித்தால் இவ்வடியேன் சிந்தும் துளிகளை அள்ளிப் பருகிடக் காத்திருக்கிறேன்’ என்று பணிவுடன் கூறினர்கள்.
உடனே ஆசாரிய சுவாமிகள், * பொன்னம்பலம், ஒரு சிலேற் பலகையையும், கற்கூரையும் எடு” என்று சொல்லி, தாம் புறப்பட்ட நாழிகையையும், பாவா அவர் களைச் சந்தித்த நாழிகையையும் ஏதோ ஒரு முறையில் கணக்கிட்டு, "இதைக் கூட்டு-பெருக்கு-கழி’ என்றவாறு கணித்துக்கொண்டிருந்தபோது, திரு. பாவா அவர்கள் ஒரு கரித்துண்டைக் கொண்டுவரச் சொல்லி,
*நல்லன நூல்பல கற்பினும் காண்பரிதே
எல்லை யிலாத சிவம்."
என்று சுவரில் எழுதினர்கள்.
ஆனல், ஆசாரிய சுவாமிகளோ, மிஞ்சிய எண் எது?" என்று கேட்டார்கள். கனம் பொன்னம்பல சுவாமிகள், * ஒன்று” எனப் பதிலளித்தார்கள். உடனே, திரு. ஆசா ரிய சுவாமிகள் திரு. தாளையான் பாவா அவ்ர்களை வீட்டுக் குள் அழைத்துச் சென்று சற்றுநேரம் தனிமையில் உரையா டிவிட்டு வந்ததும், "பொன்னம்பலம், வண்டியைத் திருப்பு" என்று சொல்லி, முன்னேஸ்வரத்துக்குத் திரும்பினர்கள். அவர்கள் போகும் வழியிலே, “அவர் ஒரு ஞான சித்தர். நீங்களிருவரும் அவரைப் பின்பற்றிக் கொள்ளுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள்.
அவ்விருவரும் அவ்வுத்தரவைச் சிரமேற்கொண்டு, திரு. தாளையான் பாவா அவர்களைப் பணிந்து வணங்கித் தங்களுடைய ஞானகுருவாக ஏற்றுக்கொண்டனர். ஆண்ட வர்களது கிருபையைப் பெற்று, வஸ்து நிச்சயம் விளங்கி, நிஷ்டானுபூதி அடைந்து திகழ்ந்தார்கள்.

( 55 ) தெய்வக் கந்தோர் மனேஜர் திரு, பொன்னம்பல சுவாமிகள்
திரு. தாளையான் பாவா அவர்கள் கொழும்பில் தங்கி யிருந்த காலத்தில் தமது குருநாதர் கல்வத் நாயகம் அவர் கள் கந்தூரி (குருபூசை) வழக்கமாகக் கொடுத்து வந்தார் கள். அவ்வாறன வருடாந்த வைபவம் ஒன்றினை ஒட்டித் தாம் வெளியிட்ட ஒர் இதழில் தமது குருவைக் “காத்தமுல் அவுலியா” வென்று வர்ணித்திருந்தார்கள். அக்காலத்து உலமாக்களும், பிரமுகர்களும் இச்சொற் பிரயோகத்தின் பேரில் தர்க்கித்து வாதஞ் செய்தனர். திரு. பாவா அவர்கள் அன்னவர்களது வாதம் பிழையானதெனக் கண்டித்து மறு
\ மொழி பகன்றர்கள். பேச்சுவார்த்தைகள் முற்றி, எழுத்து
வடிவில் நோட்டீசுகளாக உருவெடுத்துத் தர்க்கங்கள் உச்சக் கட்டத்தை அடைந்தன. மறுதரப்பாரது பின்னணியில் பணம்படைத்தோர் நின்றமையால் அவர்களது நோட்டீசு கள் உடனுக்குடன் வெளிவந்துவிடும். திரு. பாவா அவர் களோ பணவசதியற்ற பக்கீராக இருந்தமையால் அவர்க ளது நோட்டீசுகள் வெளிவரக் கால தாமதமாயின.
ஆதலால் எவ்வாறேனும் ஓர் அச்சகத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணம் திரு. பாவா அவர்களுக்குத் தோன்றிவிட்டது. தம்முடனிருந்த நண்பர்கள் சிலரது உத வியால் ஒரு பிரிண்டிங் மெஷின், ஒரு கட்டிங் மெஷின் முத லாகச் சொற்பமான உபகரணங்களை வாங்கினுர்கள். இதற்கு எஸ். எல். எம். முஹியதீன் அவர்கள் பெரிதும் உதவிஞர்கள்.
இவ்வச்சகத்தைத் தம்முடனிருந்த சுற்றத்தாரதும் அன் பரதும் உதவி கொண்டு நடத்தினர்கள். அது எவ்வித முன் னேற்றத்தையுங் காணவில்லை. எனினும், விரிவான கருத் துட்ைய நோட்டீசுகள் உடனுக்குடன் வெளியாகி முன் தர்க்கித்தோர் தமது வாதம் பிழையானதெனத் தெரிந்து நேரிலேயே மன்னிப்புக் கோரித் தமது வாதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
நாளாக நாளாக அச்சகத்தை முறையாக நடாத்த முடி யாமல் சங்கடப்பட்டார்கள். இவ்வவல நிலையைக் கண் ணுற்று ஒரு நல்ல திறமை சா லி யின் பொறுப்பிலே நடாத்த எண்ணினர்கள்.

Page 33
( 56 )
அக்காலத்தில் எஸ். எம். முஹம்மதலி சாஹிபு அவர் களதும், சீ. மு. ஜமால்தீன் அவர்களதும் அழைப்பின் பேரில் சிலாபத்துக்குச் சென்றுவருவது வழக்கம். அப் போது அங்குள்ள பெரியார்கள் திரு. பாவா அவர்களைத் தரிசித்து நல்லுபதேசங்களைப் பெறுவார்கள். இவர்கள் வாய்பேசா மெளனியாக இருந்ததால் தம்மிடம் விடுக்கப் படும் விஞக்களுக்கு எழுத்திலேயே பதில் தருவார்கள். அவ் விடத்தும் ஒரு பேரற்புதம்! பெ. ரி. முஹம்மது ஹனிபா. பாவா அவர்களுடைய இனத்தவர்; கனம் சீ. மு. ஜமால்தீன் அவர்களது புடவைக் கடையில் மனேஜராக விருந்தார். திரு, தாளையான் பாவா அவர்கள் இவரது முதுகிலோ அல்லது வான்வெளியிலோ எதையாவது எழுத இவர்அதை அப்ப டியே வாசித்துவிடுவார். இது பல மணி நேரம் தொடரும். இவ்வாறனதொரு வாசிப்பாற்றலை ஹனிபா அவர்களுக்குத் திரு. தாளையான் பாவா காமில் முகம்மல் (சம்பூரணமான) அவர்கள் ஏற்படுத்தியிருந்தார்கள். திரு. தாளையான் பாவா அவர்கள் தாம் சிலாபத்திலிருந்து கொழும்புக்கு மீண்ட ஒரு சந்தர்ப்பத்தில், தப்பவ என்னுமிடத்திலிருந்த பொன் னம் பல சுவாமிகளை உடன் அழைத்து வந்து அச்சகப் பொறுப் பேற்று நடாத்துமாறு பணித்தார்கள். அவர்களும் அதை மிகுந்த பிரயாசையுடன் பல பேர்களது உதவி கொண்டு சிறப்பாக நட்ாத் தி வந்தார்கள்.
கொழும்பிலும், வெளியூர்களிலும் இருந்த வியாபாரிக ளும், முஸ்லீம்-தமிழ்ப் பெருமக்களும் திரு. தாளையான் பாவா அவர்களது பெருமையைக் கண்டு தத்தமது அச்சு வேலைத் தே  ைவ களை அன்னரின் அச்சகத்தில் ஒப் படைத்து உதவினர்கள்.
திரு. தாளை யான் பாவா அவர் க ள் பொன்னம்பல சுவாமிகளுக்கு அச்சாபீஸ் தொழிலை மட்டுங் கற்பிற்க வில்லை; ஆத்மீகத் துறையிலும் முன்னேற்றி, மிக்க சிறப் புடைய அந்தரங்கத்தை உபதேசித்து, வஸ்து நிச்சயங் காண் பித்துத் தாயினும் மேலான அன்பைக் காட்டி ஆதரித்து வந்தார்கள். பொன்னம்பல சுவாமிகள் ஆத்மீகத் துறை யில் முற்றிய பழமாகினர்கள்; அவர்களது உடம்பும் பிரகாச மடைந்தது. இக்காலத்தில் அச்சாபீஸ் மிகவும் உன்னதமான நி2லயை எய்தித் தொழிலில் நற்பெயருடன் விளங்கியது. பசியும், பஞ்சமும் ஓரளவு குறைந்தது. அல் ஹம்து லில்லாஹ்.

( 57 ) திருநெல்வேலி, திருக்குற்ருலம், நெல்லே டவுன், மேலப்பாளையம் ஆகியவிடங்களுக்கு விஜயம்
திரு தாளையான் பாவா அவர்கள் திரு பொன்னம் பல சுவாமிகளைத் திருநெல்வேலி மாவட்டத்தில் திருக்கும் ருலத்திலே நிலையாகத் தங்கி இருப்பதற்குச் செய்திருந்த ஏற்பாடுகளை முன்னிட்டு, அங்கு பல தடவைகள் செல்ல நேரிட்டது. அங்கிருந்து அன்பர் பலர் பாவா அவர்களைத் தத்தமது இல்லங்களில் தங்கும்படி மன்ருடினர்கள். ஆனல் அவர்களோ குற்றலத்தில் இருக்கும் மடத்தில்தான் தங்கி யிருந்தார்கள். அப்போது குற்ருலத்து அன்பர்களைப் போலவே மேலப்பாளையத்தார்களும் பாவா அவர்களைத் தங் களது இல்லங்களுக்கு வருந்தி அழைத்து நின்றர்கள். ஆனல் பாவா அவர்களது அருள்நிறைந்த மனம் செ. மு. முஹம்மது ஹனிபா அவர்களது வேண்டுகோளுக்கு மட்டுமே கனிவா னது. அதனல், ஹாஜாநாயகம் என்னும் தெருவிலே "சாந்து வீடு” என அழைக்கப்படும் அன்னவர்களது வீட்டுக்கு எழுந்த ருளிஞர்கள். அக்காலை அல்லும் பகலும் அங்கு திரண்ட பன் மதப் பிரமுகர்களும் அறிஞர் பெருமக்களும் சித்தர்களும் ஞானிகளும் (அரபி கற்றுணர்ந்த) உலமாப் பெருமக்களும் ஆன்மீகபோதனைகளையும் அனுபவ நிலைகளையுங் கலந்துரை யாடித் தத்தமது ஐயங்களை நிவிர்த்திசெய்து ஞானவிழிப் புடன் மீளலாயினர்.
அவ்வமயம் ஒரு சந்தர்ப்பத்தில், ஆத்மீக ஞானியா கப் பெயர்கொண்டிருந்த போதிலும், உண்மையில் முற்று ணராத் தன்மையுடைய ஒருவர், “மஸ்தான் பாவா" அவர் களே! தங்கள் ஞானம் எத்தகையது? எனப் பணிவுடன் வினவிஞர். அதற்கு பாவா அவர்கள், 'அறிவு மயமாகி, அண்டமெலாந் தாணுகி, ஒன்றுமிலாது, ஒடுங்குவதே எனது ஞானம்' எனப் பகர்ந்தார்கள். தேறித்தெளிந்த மகான் களே பன்றிப் பிறர் இதன் தாற்பரியத்தை விளங்குவது மிக அரிது.

Page 34
( 58 )
பாடுபட்டுப் பரமறிந்து, பாடிழந்து, பரமானேர் வார்த்தைகளை அறிதல் எளிதாமோ? பின்வருமாறு தாயு மான சுவாமிகள் அருணகிரிநாத சுவாமிகளை வியந் து போற்றுகிருர்கள்:-
“கந்தரனு பூதிபெற்றுக் கந்தரனு பூதிசொன்ன
எந்தை யருணடி யிருக்குநா ளெந்நாளோ!" கந்தரனுபூதியைப் பெற்ற பின்புதான் அருணகிரிநாத சுவாமிகள் அதுமயமாயிருந்து கந்தரனுபூதி என்னும் நூலைத் திருவாய் மலர்ந்தருளிஞர்கள். அத்தகைய ஞானனுபூதி பெற்ற மகான்களது கருத்துக்களைச் சாமானிய மக்கள் விளங்குவது எளிதல்ல.
அங்ங்னமே திரு த்ாளையான் பாவா அவர்களது ஞாணு னந்த அனுபூதி வாக்கையும் அறிந்து தெளிதல் மிக வும் அரிது. / ፩
பின்னும் ஒருகாலை, “மஸ்தான் என்ருெருவர் இங்கு வந்து இந்து ஆத்மீக ம் இஸ்லாமிய ஞானம் என்று பல விஷயங் களைப் பேசுகிருராம்: அவற்றை ஆலீம்களுஞ் செவிமடுக்கின்ற னராம்; அவரோ ஒரு வேளைதானுந் தொழுவதில்லையாம் இது வென்ன இஸ்லாமிய ஞானமோ ! எப்படியாவது ஹதீஸ், தலில் ஆதாரங்களுடன் உரையாடித் தர்க்கித்து அவரை மடக்கி விடவேண்டும்; தொழப்பண்ண வேண் டும்" என்று ஆங்காங்கே கூட்டங் கூட்டமாகப் பேசித் திரிந்தார்கள் திரு தாளையான் பாவா அவர்களை ஒரு போதுங் கண்ணுரக் கண்டிராத உலமாப் பெருமக்கள். அப்படியானவர்கள் ஒரு சபையைக் கூட்டி பாவா அவர்களு டன் வாதம்புரிய இஸ்லாமிய உயர் கலைகற்ற மூன்று ஆலீம் பெரியார்களைத் தம்முள் தேர்ந்து, அவர்களுடன் வரத் தாமுஞ் சேர்ந்து முஹம்மது ஹனிபா அவர்களது வீட் டுக்குச் சமுகமளித்தனர்; ஹனிபா அவர்களிடமும் அவர்க ளது தம்பிமார்களிடமும் தாம் வந்த நோக்கத்தைத் தெளிவுபடுத்தினர். W
அப்போது திரு தாளையான் பாவா அவர்கள் மாடியில் வீற்றிருந்தார்கள். அவர்களது உத்தரவின்பேரில் உலமாக்கள்

( 59 )
மூவர் மட்டுமே மேலே சென்றனர். கணம் செ. மு.அவர்கள் உலமாக்கள் சபையினர் கீழே நிற்பதாயும், அவர்கள் தங் களுடன் வாதுபுரியத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரே மேலே வந்திருப்பதாயுந் தெரிவித்தார்கள்.
இதனைக் கேட்ட திரு தாளையான் பாவா அவர்கள் தமது வழமையான புன்முறுவலுடன் அவர்களை அமரச் செய் தார்கள். பின்னர் அவ்வுலமாப் பெருமக்களைப் பற்றித் தாம் பேசத் தொடங்கினர்கள், முதலாமவர் ஆற்றிய பிழை யொன்று நிகழ்ந்த நேரகால சகிதம் முதலில் வெளிப்பட்டது: வெட்கித் தலைகுனிந்து மெளனியாஞர். இரண்டாமவரை பற்றிப் பேசத் தொடங்கலுமே அன் ன வ ர் வாய்விட் டலறத் தொடங்கினர். மூன்றமவரோ தம்மைப்பற்றிப் பேசத் தொடங்குவதற்கு முன்னமே "நாயகமே ! என்னைக் காப்பாற்றுங்கள்!" என்றபடி, பாவா அவர்களது இரு கால்களையும் பற்றிப்பிடித்து, அழுது மன்னிப்புக் கோரினர் இச் சம்பவத்துக்கு கனம் செ. மு. அவர்களும், அவர்களுனிருந்த அவர்களது மக்களும் இன்னும் சாட்சிகளாவர்.
இவ்வுலமாக்கள் யார்? அவர்களைக் குறித்துக் கூறப்பட் டவை என்ன? என்பதை யாமறிவோம். ஆனல் அவிை உலமாக்களை ஒட்டிய சங்கதிகள், ஆதலால் அவற்றை இங்கு எழுதுவதைத் தவிர்க்கிருேம். எனினும் எந்திை ஆண்டவர்கள் பூர்ண கஷ்புடையவர்கள் (ஞான திருஷ்டி படைத்தவர்கள்) என்பதற்கு இது சான்று பகர்கிறதல்லவா?
இன்னல்லாஹ அலீமுன் பிதாதுஸ் ஸ"தூர். (3/II8)ー
நிச்சயமாக அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களிலுள்ள இரகசியங்களை) எல்லாம் நன்கறிபவன் (31118) என்பசிை நாம் நன்ருகச் சிந்திக்க வேண்டும்,
இம்மூவரும் கீழே இறங்கி வந்ததும் ஏனைய உலமாக்க ளிடம், “மஸ்தான் பாவா அவர்கள் அல்லாஹ்வினது ஞான மஸ்துக் கடலில் மூழ்கியவர்களாக இருக்கின்றர்கள். அவர் கள் தொழாதிருப்பது தவறல்ல" என்று தெரிவித்துத் g5nT Lb

Page 35
( 60 )
வந்த வேலையை வெகு மரியாதையுடன் முடித்துச் சென் Caprřes 6řr. ; ఛళ్ల
செ. மு. முஹம்மது ஹனிபா அவர்களும் தம்பிமார்
அவர்கள் அங்கிருந்து பாவா அவர்களைச் சந்திக்க வருவதும், பாவா அவர்கள் கடைக்குச் சென்று தங்கியிருப்பதும் வழக் கம். தாளையான் அச்சகம் உருவாக உறுதுணையாக நின்ற துடன், சிலபல அச்சுத் தளபாடங்களைக் கொள்முதல் செய் யப் பொருளுதவியுஞ் செய்தார்கள் அப் பெருமக்கள்.
அக்காலத்திற்றன் கண்ணியமிகு காமில் முகம்மல் (சம் பூரணமான) கல்வத்து நாயகம் அவர்களது அருள்வழியில் ஆலீம் பெருமகளுர் கனம் யூசுப் லெப்பை ஆலிம் அவர்கள் திகழ்ந்தார்கள். மேன்மைமிகு கல்வத்து நாயகம் அவர்க ளைத் தமது ஞான குருவாக ஏற்றர்கள்; கல்வத்து நாயகம் அவர்கள் அரு O ய ஞானவெளிப்பாடலிலுள்ள திரு ஜெபங்களை (10 விருதுகளை) முறைப்படி செய்து வந்தார்கள். கல்வத்து ஆண்டவர்களது மறைவுக்குப்பின் நாயகம் அவர் களது சிஷ்யர்களும், பந்துக்களும் கனம் யூசுபுலெப்பை ஆலீம் அவர்களைக் கல்வத்துநாயகம் அவர்களது.பிரதிநிதியாக ஏற்று யூசுபு நாயகமென அழைக்கவுந் தொடங்கிஞர்கள். அன்று முதல் அவர்களுக்கு யூசுபு நாயகம் என்ற பெயரே வழங்கலா யிற்று. திரு தாளையான் பாவா அவர்களும் கல்வத்துநாயகம் அவர்களைக் குருவாக ஏற்றுக்கொண்டோருள் ஒருவராவார் கள், எனவே பாவா அவர்கள் செ. மு. முஹம்மது ஹனிபா அவர்களது குடும்பத்தார்களிடம் மேன்மைமிகு யூசுபு நாய கம் அவர்களைப் பின்பற்றிச் செல்லுமாறு பணித்தார்கள். அவர்களும் எந்தை தாளையான் பாவா ஆண்டவர்கள் உத்தர வுக்கிணங்கி யூசுபு நாயகம் அவர்களையே தமது குரு (ஷெய்கு) வாக ஏற்று இன்றுவரை த ரீக் குல் இலாஹியா வென்ற மரபைப் பின்பற்றி வருகின்றர்கள்.

( 6 )
திரு தாளையசன் பாவா அவர்கள் மேலும் பல பெரி யார்களையும், உலமாக்களையுஞ் சந்தித்து, கல்வத்து நாயகம் அவர்களது மகத்துவத்திை மிகவும் விரிவாக எடுத்துரைத்து நாயகமவர்களால் நிறுவப்பெற்ற தரீக்கு ல் இலா ஹிய்யா என்ற தரீக்காவின் வழிமுறையைப் பின்பற்ற ஆர் வத்தோன்றும் வகையில் உப தே ச ஞ் செய்து விட்டுச் கொழும்பு மீண்டார்கள். இவ்வாறு கனம் யூசுபு நாயகம் அவர்களது பெயரும், புகழும் ஓங்கி வளர்ந்தன.
பாவா அவர்கள் மேலப்பாளையத்தில் தங்கியிருந்த காலத்தில் உலமாப் பெருமக்கள் மட்டுமன்றிச் சாதாரண மக்களும் இடையிடையே வந்து மரியாதை செலுத்தி ஆசீர் வாதம் (துஆபரக்கத்) பெற்றுச் செல்வதுண்டு. இப்படியாக வந்த ஒருவரை ஒருநாள் பாவா அவர்கள் நோக்கி "ஒய் இத் தெருவில் யாராவது பைசாசத்தன்மையினுல் (ஷைத்தான் கோளாறினல்) பீடிக்கப்பட்டு அவதியுறுகிறர்களா" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஆம், நாயகமே! முடியவில்லை. நெஞ்சு வலியாலும் பேயாட்டத்தாலுந் தாங்கொணுத அவதியுறுகி முள்’ என்று சொன்ஞர். அதைக் கேட்ட திரு தாளையான் பாவா அவர்களும் மனமிரங்கி அவளை அழைத்து வரச் சொன்னர்கள்.
அவ்விளம் பெண்ணின் தாயார் மேலும் இரு சுற்றத்த வர்களுடன் அவளே அழைத்துவந்து, எ ந் தை பாவா அவர்கள் முன்னிலையில் நிறுத்தினர். பாவா அவர்கள் அவ் விளம் பெண்ணை அமரச் செய்தார்கள். பின்பு பாவா அவர் கள் தமது பாத அணியை அவளது முகத்துக்கு எதிரே தூக்கிக் காட்டிய பின் மீண்டும் அதைக் கீழே போட்டு விட்டு, ஒடடா என்று சொல்லி அவள் அணிந்திருந்த ஜாக் கெட்டைக் (இரவிக்கையைக்) கிழித்துவிட, அவள் மயங்கிக் ேேழ சாய்ந்தாள்; பின் சொற்ப நேரத்தில் மயக்க ந் தெளிந்து எழுத்தாள்.
இதற்கு இடைப்பட்ட பெண்ணின் தாயாரிடம் அவளைப்பற்றிய விவரங்களைக் கேக்

Page 36
( 6.2 )
டார்கள். பாவா அவர்கள், அவ்விளம் பெண்ணுக்குச் சிறு வயது முதல் புஷ்பவதியாகுமட்டும் ஒதிக் கொடுத்தவனது அங்க அடையாளங்களைச் சொல்லி அவை சரிதான என்று கேட்டார்கள். தாயாரும் அதை ஏற்றுக்கொண்டு அழுதுகுள றிஞர். “அவன் இறந்து போனன் அல்லவா’ என்று கேட்டதற்கும் "ஆம்" என்று பதில் சொன்னர். தொடர்ந்து பேசிய எந்தை பாவா அவர்கள், "கவலைப்படாதே. அவன் இன்றேடு ஒழிந்தான். அவன் இவளுக்கு ஒதிக்கொடுத்த காலத்தில் இவளது மார்பகத்திற் பேராசை கொண்டிருந் தான். ஆதலால், அவன் தான் இறந்தபின் அவளது மர்ர் பகத்தைச் சூட்சுமமாகப் பற்றிப் பிடித்தான். அவ்வேளை களிலேயே அவளுக்கு நெஞ்சுவலி கண்டு மயக்குற்ருள். இக் காலத்தில் அவன் இவளை விட்டுப் பிரிந்து விட்டான், இனி மேல் இவளுக்கு எத்தொல்லையுமிராது’ என்று கூறினர்கள். மகளின் விவரத்தைத் தெரிந்த தாயார் மனமகிழ்ந்தார். தாயாரும், மகளும் ஆண்டவர்களைப் பணிந்து வணங்கி நன்றி கூறிச் சென்றர்கள்.
பேயோட்டுவதில் ஆண்டவர்களது ஆற்றல்தான் என்னே! நம் நாட்டில் கையிற் பிரம்பை ஏந்தி, தலையில் அடியடியென அடித் துப் பேயோட்டும் பாங்கை என்ன வென்று சொல்வது! அப்படி அடித்துந்தான் பேய்கள் ஓடினவா? என்ன கைசேதம்! என்ன கைசேதம்! என்ணே கயவர்கள்தம் ஆட்டம் ! கஷ்புடைய வள்ளல்கட்கு (கண் படைத்த ஞானிகட்கு) கண்கெட்ட மூடர்கள் சமமாவரோ? என்னே மூடர்களது அறியாமை !
எந்தை ஆண்டவர்கள் நடாத்திக் காண்பித்த இத் தகைய அற்புதங்கள் அனந்தம்; அனந்தம்.

( 63 )
அன்பர்க்கு அன்பனும் குருபரனுக்கு அருந் தொண்டனுமாகிய திரு பெருமாள் சுவாமியவர்கள் திரு தாளையான் ஆண்டவர்களே ஞானகுருவாக ஏற்றல். (திரு பெருமாள் சுவாமியவர்கள் மொழிந்தவாறே தருகின்ருேம்)
தென்னிந்தியாவிலே தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் சிதம்பரபுரத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி யான திருமலை ஆழ்வார் எனது தகப்பஞர். எனது பாட்டஞர் ஆசைவார்ண நாடார். அக்காலத்தில் ஒரு ஜமீன்தாராக இருந்தார். அவரே பிற்காலத்தில் மகேந்திர மலையில் பல்லாண்டுகள் தவமியற்றிச் சீவன்முத்தராஞர்.
சிதம்பரபுரத்தில் எனது தகப்பனுடன் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த நான் இலங்கைக்கு வந்தபோது எனக்கு இருபது வயதிருக்கும். கொழும்புக்கு நான் வந்த வருட மும், மாதமும் சரியாக நினைவில் இல்லை. கொழும்பிற் பலகடைகளில் ஊழியம் புரிந்த எனக்கு, சிதம்பரபுரத்துக்குச் செல்வதும், அங்கே சொற்பநாள் தங்குவதும், கொழும் புக்கு மீள்வதும் வழக்கமாய் விட்டது. அக்காலத்தில் நான் சாப்பாட்டுக் கடைகளுக்கு வாழையிலை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடத் தொடங்கினேன். அத்தொழில் எனக்கு நல்ல வருவாயைத் தேடித் தந்தது. இவ்வேளை சிதம்பர புரம் சென்ற நான் மணமுடித்தபின் கொழும்பு திரும் பினேன். வாழையிலை விற்குந் தொழிலையே தொடர்ந்து செய்தேன். இந்தியாவில் எனக்குப் புத்திரபாக்கியமுஞ் சேர்ந்தது.
ஒருநாட் காலை லேயாட்ஸ் பிராட்வே வழியாக, நடைபாதையில் சென்றுகொண்டிருந்தேன். “பெருமாள்!" என்று ஒரு பெரிய சத்தம்; திரும்பிப் பார்த்தேன்; ஒரு வீட்டுக்குள்ளிருந்தே அச் சத் தம் வெளிப்பட்டமையை உணர்ந்தேன். திரும்பிய நான், அவ்வீட்டு வாசலருகே செல்ல, “வாடா! உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டி

Page 37
(64)
ருக்கிறேன்” என்று அழகுமிகுந்த சாது ஒருவர் கூறினர் கள். நான் தயங்காது உள்ளே சென்றேன். அவர்கள் என் கையைப்பற்றி, அருகமர்த்தி, "படியடா’ என்று பகர்ந்தார்கள். உடனே நான் பாடிய பாக்கள்:-
(1) கண்டபோதே களிகூர்ந்தனன் . . . கனவினைக் கசடறுத் தனை
அண்டர் புகழும் பொற்பாதமே
அடியேன் பணியத் தவங்கள் தந்தனை தொண்ட னிவணுமென வெண்ணிச் சொல்லும் , பெரிய கோவே.
(2) ஆதரவா யுன்னைக் கண்டேன் அகவிருள் அகலக் கண்டேன் சீதவா துளசிமார்பா - கிருஷ்ணனே
வைகுண்டஞ் சேர்ந்தேன் நானே !
(8) எண்ணிலாத் தவம் யாகமென்னதான்
செய்திடினும் மற்றும் ஈஸ்வர விஷ்ணுவாலயம் வணங்கினும் பண்ணுடைக் கவிதை பாடினுமென்ன!
பாரினில் வரும்பலன் யாதுமுண்டோ? கண்ணுலாவிய நற்சுருதி மெய்ப்பொருளைக்
கண்ட அரனடியாற்கு உண்ணலாமென அமுதமளித்தவன் பலனை
உரைக்கவு முடியுமோ?
"அடே! உன்னப்பன் இருந்த நேரம் நல்ல நேரமடா! என்று கூறிய சாது, என் கையைப்பற்றிய வாறே வீட்டுக்குள் அழைத் துச் சென்றர்கள். இத்துடனே நான், எனது வியாபாரத்துக்கும், வெளி விவகாரங்களுக்கும், குடும்ப வாழ்வுக்கும், விவசாயத் துக்கும் மூ டு விழா க் கொண்டாடிவிட்டேன், என வுணர்ந்தேன்! " s

( 65 )
தன்மனம் தனக்கே சாகூரி மன்னருள் வடிவ மான சின்மயக் குருவா மீசன் என்னையு மீடேற்றக் கண்டேன்.
சிலகாலம் எந்தை யாண்டவர்கள் தாளையான் குரு பரனுடனிருந்து, என்னுலான தொண்டுகளை ஆற்றி வந்தேன். அவர்கள் ஒருநாள், என்னை வைத்து இழுக் கிருயா? என்று வினவினர்கள். உடனே ஆறு பெருக் கெடுத்தாற் போலக் கண் ணிர் மல்க, அப்பனே! ஆண்டவனே !! இது அ டி யே ன் செய்த தவமா ? அன்றி எனது மூதாதையர் ஆற்றிய தவமா? யாதொன் றும் அறிகிலேன். இவ்வடியேனுக்குத் தாங்கள் ஆனே யிடுங்கள் எனக்கெஞ்சி இரந்தேன்.
உடனே ஆண்டவர்கள் அங்கே வீற்றிருந்த ஓர் அன் பரிடம், ஒரு ரிக்ஷா வண்டியை வாங்கிவருமாறு உத்தர விட்டார்கள். அவரும் ஓடோடிச் சென்று ஒரு புதிய ரிக்ஷாவை வாங்கி வந்தார். ஆண்டவர்கள் தாம் முதல் முதலாக அவ்வண்டியிற் காலடி வைத்தபோது, “அடே! அவன் அவனில் ஏறுகிருன்; உனக்கும் வேலையில்லை; எனக்கும் வேலையில்லை!!” என்று பகர்ந்தார்கள்.
காலஞ் சிறிது கடந்தது. நாங்கள் குடியிருந்த 238-ஆம் இலக்க வீட்டுக்காரனுக்குப் பற்பல தொல்லைகளும் தொந் தரவுகளும் ஏற்படவே, நாம் அவ்வீட்டைக் காலிபண்ணி, அதே வீதியில் 252-ஆம் இலக்க வீட்டுக்குக் குடி புகுந் தோம். அக்காலத்திலேயே பல்வேறு சமயத்தவர்களும், கற்றுணர்ந்தோர்களும், உலமாப் பெருமக்களும் திரு தாளையான் ஆண்டவர்களை வந்து வந்து தரிசனஞ் செய்து திரும்புவது வழக்கமாய் விட்டது. அவர்களுள் இந்தியாவிலுள்ள மடங்களுக்குச் சென்று ஞானுேபதே சஞ் செய்பவரான நித்தியானந்த சரஸ்வதி என்ற சந்நி யாசியு மொருவராவர்.

Page 38
அக்காலத்தில் திரு பொன்னம்பல சுவாமி அவர் களும் தெய்வக் கந்தோருக்கு வந்து வந்து செல்வார்கள். ஆண்டவர்கள் அவர்களைக் கந்தோரிலேயே நிரந்தரமா கத் தங்கி, அச்சு வேலைகளைக் கவனித்து வரும் படி வேண்டினர்கள். திரு பொன்னம்பல சுவாமி அவர்களும் அதற்கு இசைந்தார்கள். அதற்கு முன் எந்தை ஆண்ட வர்களுடைய சொந்தக்காரர்களும், மற்றும் அன்பர் களுமே, அச்சுக் கந்தோரை நடாத்தி வந்தார்கள்.
டாகவில்லை.
திரு பென்னம்பல சுவாமி அவர்கள் பொறுப்பேற்ற பின், அச்சடித்த பில் புத்தகங்கள் முதலியவற்றை ரிக்ஷா வில் ஏற்றிச் சென்று கடைகளுக்கு வழங்கினர்கள். சுவாமி
போய்வர விரும்பினர்கள். ரிக்ஷா இழுக்கும் எனது பொறுப்பை திரு ஆண்டவர்கள் விடுவித்து, அதற்கென வேருெருத்தனைச் சம்பளத்துக்கு அமர்த்தினர்கள். அவனே முறைப்படி பொன்னம்பல சுவாமி அவர்களை ஏற்றிச் சென்று திரும்ப அழைத்து வரலாஞன்.
அக்காலத்தில் அடியேன் பட்ட துயரும், பாடுஞ் சொல்லுந் தரமன்று: எ முதி ன ல் அவை பல நூற் கணக்கில் விரியும். குருபரனையும் திருவருளையும் முன் னிட்டு, வந்த வந்த துயரனைத்தையும் பொறுமையுடன் சகித்தவாறு பணிவிடையில் நான் ஈடுபட்டபடியால் அவை எனக்கு ஒரு பொருட்டாகப் புலப்படவில்லை. பூரீமத் தாயுமான சுவாமிகள் பின்வருமாறு கூறுகிறர்கள்:-
* அன்பர் பணி செய்யவென ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே!’
அன்னருடைய பாக்களை நினைக்க நினைக்க, சிந்திக்கச் சிந்திக்க, அடியேனுடைய கஷ்டமெல்லாம் தூசாகப் பறந்தன; அவை யாவுந் திருத் தொண்டாக நிறைவுற்றன.

( 67 )
அச்சுக்கந்தோரில் நடந்தது சொற்ப தொழிலே, ஆதாயமுஞ் சொற்பம். சம்பளக்காரர்களுக்கு எக் குறையுமின்றிக் கொடுத்தது போக, மிஞ்சிய ைத க் கொண்டு கீரையுஞ் சோறும் உண்டோம்; வேறேதுங் கண்டறியோம், படுக்கப் பாயோ, தலையணையோ கிடையா. திரு ஆண்டவர்களுடைய உறவோரும் ஒரு வர் பின் ஒருவராக நீங்கிக் கொண்டார்கள்.
எனக்கோ, திரு ஆண்டவர்களுக்கோ அச்சுக்கந் தோர் சம்பந்தப்பட்ட வேலையேதும் விளங்காது. அக் காலத்திற்ருன் திரு பொன்னம்பல சுவாமி அவர்கள் கந் தோரில் நிரந்தரமாகத் தங்கி அச்சு வேலைகளைக் கண் காணித்து வந்தார்கள். ஆண்டவா அவர்கள் பட்ட
மாகவே பட்டன. ஏனெனில் அவை யனைத்தையுங் குருபரனுக்குத் திருத்தொண்டாகவே கருதிச் செய் தோம். ஆன்ம ஈடேற்றத்துக்காக இத்தகைய கஷ்டங் களைச் சம் பூ ர ண மாக ப் பொறுத்துக் கருமங்களை ஆற்றினுேம்.
திரு பொன்னம்பல சுவாமிகளாவது கைவல்லிய நவ
ஆனல் இந்தப் பெருமாளோ ஏதுமறியாத ஒரு மூடன். ரிக்ஷா இழுப்பதே எனது தொழில். முத்திப்பேறைத் தவருது அடைவதே அடியேனது பேரவா. இதற்காகவே ரிக்ஷா இழுத்தேன். இரவு பகலென்று பாராமல், எனக் குத் தெரிந்த சாதனைகளைச் செய்து வந்தேன். என்னை ஆட்கொண்ட சற் குரு நாதனை என்று கண்டேனே, அன்றே அனைத்தும் நீங்கி, ஆனந்தமயமான பரநிலை சித்தித்தது. கண்ணுரக் கண்டேன்; களிகூர்ந்தேன்; என் னென்று சொல்வேன் யான்? ஞானக் கண்கொண்டு கண்டோர்தம் பெருமையை அவர்களே அறிவார்கள்: அவர்களே அனுபூதி நிலையினை உணர்வார்கள்.
இவை இங்ங்ணமிருக்க, ஆன்ம ஈடேற்றத்துக்காக இரவு பகலாக இடைய ருது நாங்கள் உழைத்த காலத்தில் பண்பற்ற சில பொதுமக்கள் எங்களை

Page 39
( 68 )
விட்டு வைக்கவில் அடடர் அவர்கள் செய்த இடை யூறுகள், இம்சைகள், இன்னல்கள், தொல்லைகள் சகிக்க முடியுமா? இந்தப் பெருமாள் அவற்றையெல்லாஞ் சகித்து முன் நின்றவனல்லவா! சொல்லாலும், கல்லா லும், பொல்லாலும், அடிதடியாலும், கைவரிசை காட்ட வந்தோர் எத்தனே எத்தனை பேர்!! இத்தகைய அநி யாயக்காரர்கள் ஆத்மஞானங் கேட்க வருவார்போல நடித்தார்கள். இவர் கள் அனைவருமே வாசலுக்கு வெளியே நின்று கூக்குரலிட்டுக் கூத்தாடுவார்களே ஒழிய உள்ளே வரமாட்டார்கள். இந்தப் பெருமாள் கையில் ஒரு விறகு க் கட்டையை வைத்துக்கொண்டு வாசல் காப்பவனுக நின்றன்.
திரு பொன்னம்பலசுவாமி அவர்கள் அச்சுக்கந்தோ ருக்கு வந்ததும், ஆரம்பத்தில் கொழும்பிலுள்ள கடை களுக்கு அவரை பில் முதலானவற்றை அச்சிட்டு வழங்கு வதற்கான ஆடர்களைச் சேகரித்து வரமாறு திரு ஆண் டவர்கள் அனுப்பினர்கள்.
முதலில் ஒருவருமே ஆடர் கொடுக்கவில்லை. முடிவில் சுவாமிகள் தாம் பஜாருக்குப் போவதிற் பயனேது மில்லையென மறுத்து விட்டார்கள், 'அப்படியானல் எனது முன்னிலையில் மூன்று நாட்கள் இரு; அதன்பின் போய்ப் பார்’ என்றர்கள். சுவாமிகள் அவ்விதமே இருந்தார்கள். மூன்ரும் நாள் கழிந்தது. “பஜாருக்குப் போய்வா’ என்று உத்தரவிட்டார்கள். திரு பொன் னம்பல சுவாமி அவர்களும் அவ்வுத்தரவைச் சிரமேற் கொண்டு, பஜாருக்குப் போஞர்கள். சென்ற விடமெல் லாம் அவர்களை வருக வருகவென மரியா  ைத யு டன் அழைத்து, ஆடர்களையுங் கொடுத்தனுப்பினர்கள்.
இக்கட்டத்திற்ருன் திரு இராமசாமிப் பிள்ளை என் பவர் திரு பொன்னம்பல சுவாமி அவர்களுக்கு ஆப்த நண்பரானர். பின்பு இவர் திரு ஆண்டவர்களுடைய சிரேஷ்ட சீடர்களில் ஒருவராகச் சிறந்து விளங்கி வருகி ருர், ஆழ்வார் திருநகரில் இப்பொழுதும்(1989-ம் வருஷம்) குறையேதுமின்றிச் சுேஷ்மமாக இருந்து வருகிருர்,

( 69 )
திரு பொன்னம்பல சுவாமி அவர்களது காலத்தில் அச்சுக்கந்தோர் நாளுக்குநாள் விருத் தி யடைந்து முன்னேறிக்கொண்டிருந்தது.
முன்பு குறிப்பிட்டவர்களான உறவினரும், நண்பர் களுஞ் சாதுக்களுஞ் சன்னஞ் சன்னமாக விலகிவிட்டனர். அவர்களுள் கனம் சூபி பீர்பாவா, கனம் ஷரீபு (கண்டி), சாது வீமன் சுவாமி முதலியோர் குறிப்பிடத் தக்கோராவர். பின்பு அச்சு வேலைக்கு வெளியிலிருந்து ஆட்கள் அமர்த்தப்பட்டனர்.
கந்தோர் நாளுக்கு நாள் நல்ல முன்னேற்றத்துடன்
இயங்கத் தொடங்கியது. அச்சடிக்கத் தாள் முதலானவை வாங்கப் பணமுந் தாராளமாகச் சேர்ந்தது.
அக்காலத்திற்ருன் "டாக்டர் சுவாமி" என்றழைக் கப்படும் திரு அருணுசல சுவாமியவர்களும், பின் பு நீங்களும் (அப்துல் கரீம் சாஹிபு) வந்தீர்கள்.
அச்சுக்கோர்க்கும் பகுதியில் அந்தோனிப்பிள்ளை திறம்படச் செயலாற்றினர். அவர் பிற்காலத்தில், யாழ்ப்பாணத்திலிருக்குங் கரம்பனென்ற வூரில் குருமடம் என்று அழைக்கப்படும் ஒரு ஆத்மீக மடத்தைப் பாடு பட்டுச் சிரத்தையுடன் தன் சொந்தச் செலவில் அமைத் தார். அது மிகவுஞ் சிறப்புற்று இன்றும் நடந்துவருகிறது,
அக்காலகட்டத்திற் சில சமயங்களிற் திரு ஆண்டவர் களுக்கும் திரு பொன்னம்பல சுவாமி யவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதுமுண்டு.
அச்சுக் கந்தோர் நல்ல முறையில் நடந்துவந்த அக் காலத்தில் திரு தாளையான் ஆண்டவர்கள் இந்தியாவுக் குப் போய்வருவார்கள். பலதடவை என்னையுந் தன்னு டன் அழைத்துச் சென்றர்கள். பின்னர் என்னை அச்சுக் கந்தோரைக் கவனித்துக் கொள்ளும்படி கூறி வெவ் வேறு பேர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்ருர்கள்.

Page 40
( 70 )
அதிகமாக “டாக்டர் சுவாமி அவர்களை அழைத்துச் செல்வது வழக்கம்.
திரு ஆண்டவர்களது சொந்த ஊர் நம்புதாளை. அங்கு அவர்களது பக்கத்து வீட்டுக்காரரான கா. சி. வா. காதர் மஸ்தான் என்பவர்களது வீட்டிலேயே தங்குவது வழக்கம். திரு ஆண்டவர்கள் ஆத்மீகப் பாதையில் விருப் புற்று ஈடுபட்ட ஆரம்ப காலத்தில் அவர்களைப் பய முறுத்திவந்த சிற்சில உறவினர்கள் திரு ஆண்டவர்களது சொந்தவீட்டில் வசித்து வந்ததாற்ரூன் அங்கு தங்குவ தற்கு திரு ஆண்டவர்கள் விரும்பவில்லை. எனினும் அத் தகைய உறவினருட் பலர்கூட வந்து பணிந்து உதவி ஒத்தாசைகளைக் கோரியபோது சென்றது கருதாமலும் மனங் கோணுமலும் வாரி வழங்கினர்கள்.
நம்புதாளையை அடுத்த தொண்டியைச் சேர்ந்த தூ, மு. முஹம்மது நூர்தீன் என்பவர்கள் ஆரம்பத்தில் கொழும்பிற் கடை வைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் ஆண்டவர்களது நண்பராயும், சிறந்த சீடரா யும் விளங்கினர்கள். பிற்காலத்தில் அவர்கள் கொழும் புத் தொடர்பை விட்டு, தொண்டிக்குத் திரும்பி, ஒரு மளிகைக் கடையை ஆரம்பித்து நடாத்தலானர்கள். எனி னும், அவர்கள் ஆண்டவர்களது தொடர்பைக் கைவிடா மல், ஆண்டவர்கள் தொண்டிக்குச் செல்லும் போதெல் லாம் தவருது அவர்களுடன் தங்கி, இரவு பகல் பாராது பணிவிடை பல புரிந்து வந்தார்கள். தமது சொந்தக் காரியங்களைக் கூடக் கவனியாமல், இவ்வாறு திரு தாளையான் குருபரனது தொண்டே மேலான காரியமென அயராதுழைத்த சீடர்களுள் இவரும் ஒருவராவர்.
தொண்டியில் கக்கிலான் குளமொன்று உண்டு. அதற்குச் சமீபமாக ஒரு நல்ல இடம் உண்டு. மேன்மை
தான் அவர்களது குடும்பத்துக்குரிய நிலமான அவ்விடத் திற்ருன் குணங்குடி மஸ்தான் அவர்கள் சிறிதுகாலம்

( 71 )
இருந்து தவமியற்றினர்கள். அந்நிலத்தைக் குணங்குடி மஸ்தான் அவர் களது உறவினர்களிடமிருந்து விலை கேட்டு வாங்குமாறு மேற்சொன்ன கனம் நூர்தீன் அவர்களுக்கு திரு ஆண்டவர்கள் உத்தரவிட்டார்கள். அதற்கமைய கனம் நூர்தீன் அவர்களும் நிலத்தின் சொந் தக்காரர்கள் யாவர் என விசாரித்து, அவர்களிடமிருந்து அதை விலைக்கு வாங்கினர்கள். அங்கு ஒரு வீட்டைக் கட் டும்படி திரு ஆண்டவர்கள் உத்தரவிட்டார்கள். உத்தர வுப் பிரகாரம் வீடு கட்டப்பட்டது. அதன் புறச் சுவர்கள் களிமண்ணுல் அமைந்தன. திரு தாளை யான் ஆண்டவர் கள் அங்கே தங்கத் தொடங்கினர்கள். அந்த வீட்டுக்குத் * தாளை யான் யாகசாலை’ என்ற திரு நா மஞ் சூட் டப்பட்டது.
அங்கு சில நாட்கள் தங்கியபின் திரு ஆண்டவர்கள் கொழும் பு திரும்பிவிட்டார்கள். பின்னெருமுறை, தமது இந்தியாப் பயணத்தின்போது திரு ஆண்டவர் கள் என்னையும் சுவாமி அருணுசலம் அவர்களையும் தன் னுடன் அழைத்துச் சென்றர்கள். இந்தியாவில் இறங்கி யதும் நாங்கள் நேரே “தொண்டி தாளையான் யாக சாலை' க்குச் சென்ருேம்.
தாளையான் யாகசாலைக்குப் பற்பல இந்துக்களும்,
இஸ்லாமியப் பெரியார்களும், தொழிலாளர்களும் பொது மக்களும் திரு ஆண்டவர்களைத் தரிசிப்பதற்கா கத் திரண்டு வந்தார்கள். பள்ளித்தெருவார் மீன் பிடிப்பவர்களது சங்கத்தலைவரான ஆறுமுகம் அவர் களும் திரு ஆண்டவர்களைத் தரிசிப்பதற்காக வந்த ஒருவராவர்; நற்குணமிக்கவர்.
திரு தாளையான் ஆண்டவர்கள் ஆறுமுகத்திடம், “நான் பெருமாளை இந்த யாகசாலையில் இருத்திவிட்டுச் செல்கிறேன். நீ அவனுக்குத் தேவையானவற்றைச் செய்து, அவனைக் கண்போலக் கவனித்துக் கொள்வா யாக” என்று பரிவுடன் சொன்னர்கள். அவரும் திரு ஆண்டவர்களை நமஸ்கரித்து அன்புடன் அப்பணியை ஏற்றுக்கொண்டார்.
فه

Page 41
( 72 )
பீர் முதலாளி என்றழைக்கப்படும் கே. என். கே. பீர்முஹம்மது அவர்கள் மதுரையில் நியூ பரிஸ் ஹால் (New Paris Hall") 67657/D LyL606)Jö 660L- 686ût 69 pâ5 திறந்து சிறப்பாக வியாபாரஞ் செய்து வந்தார்கள். அவர்களது வியாபாரத்தின் சிறப்புக்குக் காரணகர்த்தா திரு தாளையான் ஆண்டவர்களே. மதுரை சென்ருல் திரு ஆண்டவர்கள் அப்புடவைக் கடையிற்ருன் தங்குவார் கள், பீர்முதலாளியும் அவர்களுக்குப் பணிவிடை செய் வார்கள். மாதாமாதம் எனது செலவுக்கு ரூபாய் அனுப்பு மாறு அந்தக் கடையில் திரு ஆண்டவர்கள் ஏற் பாடு செய்தார்கள். அன்று முதல் இன்று வரை நான் இந்த யாகசாலையிலேயே இருந்து வருகிறேன், அப்பனே!
சக்கரம்போல என் காலம் எப்படியோ உருண்டோ டியது. ஒருநாள் எப்படியாவது கொழும்புக்குப் போக வேண்டுமென்ற பேரவாத் தோன்றியது. அது நாளுக்கு நாள் வளர்ந்து என்னை ஒரு பித்தளுக ஆட்டத்தொடங் கியது. எப்படியாவது எனது எசமான் ஆண்டவர்களைப்
என்னிடம் கொழும்பு சென்றுவரப் பாஸ்போட்டோ, வேறு எதுவித ஆதாரமோ இல்லவேயில்லை. மேலிடத் துக்கு எழுதிக் கேட்டாலும் அது நடவாத காரியம் என் பது அடியேனுக்கு நன்ருகத் தெரியும். இவ்வாறன ஒரு கஷ்ட நிலையில் எனக்குத் தெரிந்த ஒரு தோணிக்காரணி டம், "கொழும்புக்குப்போவதெப்படி யெனக் கேட்டேன். *சுவாமி! நீங்கள் விரும்பினுல் நாளையே நான் தங்களைக் கொழும்பில் கொண்டுபோய் விட்டு வருகிறேன்” என்று அவன் சொன்னன். எனக்கேற்பட்ட ஆனந்தத்தைச் சொல்ல முடியுமா? எழுத முடியுமா? "அப்படியானுல் ஆயத்தஞ் செய். எனக்கு எதுவும் நடக்கட்டும், இன்னும் இரண்டு நாட் களி ல் என்னை வந்து காண். நானும்
அவனும் இரண்டு நாட்கள் சென்றபின் வந்து, சுவாமி1 நாளை உதயத்தில் ஆயத்தமாக இருங்கள், நான் வந்து

( 78 )
என்னையும் வேறு சிலரையும் அழைத்துக்கொண்டு போய் மன்னுர்க்கரையில் இறக்கிவிட்டான். பின்பு கொழும்புக்கு டிக்கட் வாங்கி, என்னைத் தன்னுடன் மருதானைக் குக் கூட்டிவந்தான். வந்தபின், “சுவாமி, ஆண்டவர் கள் இருக்குமிடம் போக வழி தெரியுமா? தெரியாவிட் டால் நான் உங்களுடன் வந்து வழியைக் காட்டுகிறேன்’ என்று பரிவுடன் சொன்னன். “ எனக்கு வழி தெரியும்’ என்று சொல்லி நான், அவன் செய்த கைங்கரியத்துக்கு நன்றி கூறிவிட்டு, திரு ஆண்டவர்கள் சந்நிதானம் போய்ச் சேர்ந்தேன்.
அடியேனத் தடுத்தாட்கொண்ட குருநாதன் திரு மேனியைக் கண்டதும் மனங்கசிந்துருகி வணங்கினேன். “வந்து விட்டாயா? மிகவும் நல்லது, என்னைப் பயணம் அனுப்பிவிட்டுப் போ’ என்று கூறிச் சொல்லொணு அன் புடன் என்னைத் தடவி, இருக்கச் செய்தார்கள்.
நானே ஒருமுழு மூடன், அவர்களுடைய வார்த்தை களை விளங்குஞ் சக்தி எனக்கில்லை. ஏதோ ஓரிடத்துக்குத் தான் பயணஞ் செய்யப் போகிருரர்கள் என்று எண்ணி னேன். குருநாதன் சமாதியடைந்த பின்புதான் உண்மை யான கருத்தை விளங்கினேன். என்னே அடியேன் அறி வீனம்! கைவண்டிக்காரனுக்கு என்ன தத்துவம்விளங்கும்?
நானும் என்னலியன்ற திருத்தொண்டுகளை வழமை
போல ஆற்றி வந்தேன். இரவு வேளைகளில் தமது சமு கத்திலிருந்து, “ படியடா’ என்பார்கள். நானும்
பூரீமத் தாயுமான சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய
பாடல்களைப் படிப்பேன். அவர்கள் அவற்றுட் சிலவற் றின் பொருள்களை விளக்கஞ் செய்வார்கள்.
முடிவாக, 1955-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ஆம் திகதி புதன்கிழமை காலை சுமார் 9 மணி இருக்கும், சற்குருநாதன் தமக்குத் தலை சற்று வலிப்பதாகக் கூறி ஞர்கள். ஒத்தணம் போட வெந்நீர் வைக்கச் சொன்ஞர் கள். நானும், திரு அருணுசல சுவாமியும் எஜமான் அறைக்குப் பக்கத்திலிருந்த குக்கரில் வெந்நீர் வைக்கத்

Page 42
( 74 )
திரும்பியதும், திரு தாளையான் ஆண்டவர்கள் தமது மெத்தையில் சுகாசனத்தில் வீற்று, மேற்குப் பக்கம் (கிபுலாவை) நோக்கியவண்ணம் மஹா சமாதி அடைந் தார்கள். என்னே எனது துரதிருஷ்டம்! திரு ஆண்ட வர்கள் சமாதியடைய முன் நானன்ருே சமாதி அடைந் திருக்க வேண்டும்! அப்பொழுதுதானே திரு ஆண்டவர் கள் தமது திருக்கரங்களால் என்னை அடக்கஞ் செய்திருப் பார்கள்! நான் கொடுத்து வைக்கவில்லையே. என்னே யெனது துர்ப்பாக்கியம் !
தொடர்ந்து சிறிது காலம் ஆண்டவர்களது சமாதி பீடத்திலும் தாளை யான் அச்சகத்திலும் நான் தங்கி யிருந்து ஆண்டவர்களது முன்னுத் தரவுப் பிரகாரம் தொண்டி யாகசாலைக்கே திரும்பிவிட்டேன்.
ஆண்டவர்கள் சமாதியடைந்த பின்பு, மதுரை நியூ பரிஸ் ஹாலின் புதிய மனேஜர் எனக்குச் செலவுக்குப் பணந் தர மறுத்தார், நான் அதனைத் தங்களுக்கு (அப்துல் கரீம் சாஹிபு அவர்களுக்கு) அறிவித்தேன். தங்களின் உத்தரவுப் பிரகாரம் அந்த மனேஜர் மாதா மாதம் மீண்டுஞ் செலவு க்குப் பணம் கொடுத் துக்கொண்டிருக்கிருர் . திரு ஆண்டவர்களது கிருபை யாலும் தங்களது உத்தரவினலும் அது இன்றுவரை நடக்கிறது.
சற்குரு தாளையான் ஆண்டவர்கள்
திருவடி என்றும் வாழ்க! திரு தாளையான் திருநாமஞ் சிறந்து
என்றும் வளர்ந் தோங்க ! மெய்யடியார் அனைவரும் என்றும் துயர்நீங்கி இனிது வாழ்க! சற்குரு நாதன் தாளையான் சேத்திரம்
என்றுஞ் செழித் தோங்க !

( 75 )
* இராமையா அண்ணச்சி" எனத் திரு தாளேயான் ஆண்டவர்கள்
அன்புடன் அழைத்த w t திரு இராமசாமிப் பிள்ளை யவர்கள் மொழிந்தவையும், திரு ஆண்டவர்களது மறைவைப்பற்றி முன்னறிவித்தலும்.
எஸ். இராமசாமிப் பிள்ஃாயாகிய ராணக்குப் பூர்வீகம் தென்னிந்தியாவிலே, திருநெல்வேலி பட்ைடக் ,ல் ஆழ்வார் திருநகரில் முத்தாரம்மன் கோயில் தெருவா கும். நான் ஆத்மீகத் துறையில் முன்னேற்றங் காணவும், சித்துக்கள் நடத்தவும், ரசவாதம் கற்கவும் தீவியமான ஈடுபாடு உள்ளவஞக இருந்தேன்.
எனக்கு இருபது வயதிருக்கும்போது, இலங்கையில் ஒரு மளிகைக் கடையில் கணக்குப் பதிவாளராகப் பணியாற்றினேன். தாளை யான் அச்சுக்கூடத்துக்கு திரு பொன்னம்பல சுவாமி அவர்கள் ஆடர்கள் தேடித் திரட் டிய காலம் அது. அப்போது எனது ஆத்மீக நாட்டத்தை அறிந்து அவர்கள், திரு தாளை யான் சுவாமி அவர்களது மகத்துவத்தை எடுத்துரைத்து “ஒப்பற்றி) சித்துப்புருடர்' அவர்களே யெனத் திட்டவட்டமாகக் கூறினர்கள், விக ஞல் திரு பொன்னம்பல சுவாமி அவர்களது வாகவை எதிர்நோக்கி யிருப்பதும், அவர்கள் வந்ததும் அளவள11 வுவதும் எனது வழக்கமாகியது. அச்சுக் கந்தோருக்கு ஆடர்கள் வாங்குவதிலும், பண ம் வசூலிப் ,y ம் அவர்களுக்கு நான் உறுதுணையானேன்.
திரு தாளை யான் ஆண்டவர்களே நேரே கரிவிக்க வேண்டுமென்ற ஆவல் நாளுக்கு நாள் வேறுபாது, ஸ் மேலோங்கியது. முடிவில் நான் ஒருநாள் லேயாட்ஸ்

Page 43
( 76 )
புரோட்வே பலாமரத்தடிச் சந்திக்கே போய்விட்டேன். திரு தாளையான் பாவா அவர்கள் அப்பகுதியிற்றணிருக் கிருர்களென்பதைக் கேட்டறிந்து இருந்தேனே தவிர அன்னவர்களுடைய சரியான விலாசத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. ஆதலால் நான் திக்குத் தெரி யாமல் அங்குமிங்கும் பார்த்த வண்ண ம் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
பாவா அவர்கள் இதனைத் தமது ஞானத்தால் உணர்ந்து ஒர் ஆளைச் சந்திக்கு அனுப்பி, ' இராமையா பிள்ளை என்று கூப்பிடு, ஒரு பையன் ஏனென்று கேட்பான், அவனை யுன்ளுேடு கூட்டிக்கொண்டு வா” என்று கூறிஞர்கள். அவரும் உடனே ஓடோடி வந்து, இராமையாபிள்ளை ' என்று அழைத்தார். "ஏன்" என நான் குரலெழுப்பினேன். “உம்மைத் தாளை யான் பாவா அழைத்துவரச் சொன்னர்கள். ஆதலால் என்னுடன் நீர் இப்போது வாரும்” என்று அவர் கூற, எனது உள்ளம் பூரிப்படைந்தது.
*ஆண்டவர்கள் என்னே ஏற்றுக் கொண்டார்கள். இவர்களல்லவா பாவா பூரண குரு நாதர் கண் படைத்த மஹான்". என்றெல்லாம் எண்ணியவாறு ஆண்டவர்கள் சன்னிதானத்துக்கு அழைத்துச் செல்ல வந்தவருடன் போய்ச் சேர்ந்தேன். என்னைக் கண்ணுற் றதும் ஆண்டவர்கள், "அடே இராமையா! வெகு நாளாக உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இப்போது தான் வந்தாயா? நல்லது, வா' வென்று சொல்வி அன்புடன் அருகமர்த்தி, “உனக்கு ரசவாதம் செய்ய ஆசையோ?" எனக் கேட்டார்கள். அதற்கு நான் "ஆம்" எனப் பதில் சொன்னேன், 'பொறுத்திரு அம் முறையை நான் கற்றுத் தருகிறேன். ஆனல் நீ இங்கு தினமும் வந்து போகவேண்டும்’ என்று உத்தரவி. டார்கள். அன்றுமுதல் தினசரி எனது ஒய்வு நேரங்களில் ஆண் டவர்களை வழமையாகத் தரிசித்து வந்தேன். நான் போகுந் தினமெல்லாம் சிறிது நேரம் என்னைப் பக்கத்தில் அமரச் செய்து, அதன் பின்பு, ‘போய் வா'

( ፖ7 )
என்று சொல்வார்கள். நானும் உடனே புறப்பட்டுச் சென்று விடுவேன்.
இப்படியாக நடந்துவரும் நாட்களில் ஒருநாட் காலையில் எனக்கு ஆண்டவர்களைப் போய்த் தரிசிக்க வேண்டுமென்னும் நாட்டமுண்டானது. உடனே முறை யாக நீராடி ஆண்டவர்களைத் தரிசிக்கச் சென்றேன். அப்போது அங்கே கொக்குவில் ஆயுள்வேத வைத்தியர் நடராசா என்பவர் சுவாமிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். ஆண்டவர்களைக் குருவாக ஏற் றுக் கொண்டவர்களுள் அவரும் ஒருவர் என்பதைப்
துண்டைக் கொண்டுவரும்படி என்னிடம் சொன்னுர் கள். அப்படியே நான் செம்புத்துண்டைக் கொடுத்ததும், அதை அவர்கள் தமது வாய்க்குள் போட்டு, உடனே எடுத்துக் காட்டிஞர்கள். அது பத்தரை மாற்றுத் தங்க மாக மாறியிருந்தது. ஆண்டவர்கள் அதைக் கடையில் விற்றுவரும்படி தந்தார்கள். நானும் கடைக்குச் சென் றேன். கடைக்காரன் அதைக் கண்டதும் ஆச்சரியப் பட்டு அது என் கைக்கெட்டியது எப்படியெனத் துருவி விசாரித்தான். நான் மறுமொழி ஏதுங் கூறவில்லை. அதன் பெறுமதியை இம்மியளவுங் குறைக்காமல் தரும் படி அவனிடம் பணிவுடன் வேண்டினேன். அவ்வாறே அவன் பணத்தைத் தந்துதவினன். அப் பணத்தைச் சுவாமிகள் முன்னிலையில் இருந்த வைத்தியர் நடராசா அவர்களிடங் கொடுத்து எ ன் னி ப் பார்க்கும்படி வேண்டினேன். பணம் சரியாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தார்கள். திரு தாளையான் சுவாமிகள் எனது உள்ளக் கிடைக்கைக்கு அமைவாகவே இவ் விரசவாத வித்தையை ஒரு முன்னுேடியாகச் செய்து காட்டினர்கள்
அதை அவதானித் திருந்து மிகவும் வியப்புற்றுப் போஞர்கள். மேலும், திரு தாளை யான் சுவாமிகள் பாதரசத்தைத் தங்கள் உள்ளங் கையில் ஊற்றி மணி யாக்கிக் காட்டிஞர்கள்.

Page 44
( 78 )
அப்பொழுதுதான் அவர்கள் "அடிே. ராமையா? என என்னை விளித்து,
"தான் ஊறல் அற்முல்
தாம்பிரமும் ஊறல் அறும்" என்று பகர்ந்தார்கள். (நாம்பிரம் - செம்பு ஊறல்- களிம்பு) திரு தாளை யான் சுவாமிகள் மேற்கண்டவாறு செய்து காட்டிய வித்தைகளும், திருவாய் மலர்ந்தஅருள் மொழிகளும் அநந்தம்.
சுவாமிகள் வைத்தியர் அவர்களுக்கும் பற் பல மருந்துச் சுண்ணங்களையும், நீற்றுமானங்களையும்,செய்யும் முறைகளையுங் காண்பித்ததாக வைத்தியர் அவர்கள் என் னிடஞ் சொல்லியிருக்கிருர்கள். அத்தகைய மருந்து வகை களைக் கொண்டே அவர்கள் மிகவும் பிரபல்யமடைந்தார் கள். தற்பொழுது அவர்களுடைய புத்திரர்களும் சிறந்த வைத்தியர்களாக விளங்குகின்றனர். அவர்கள் வசித்துவரும் வீட்டுக்கு எதிரே செல்லும் தெருவுக்கு "நடராசா தெரு’ என்ற நாமஞ் சூட்டி நகர சபை அவரைக் கெளரவித்துள்ளது.
எனது எஜமானகிய திரு தாளையான் சுவாமி சற்குரு நாதனைத் தவிர எனக்கு வேறு ஒன்றுந் தெரியாது. அவர்களே எல்லாமாய் அல்லதுமாய் விளங்கி வருகிருர்க ளென்பது எனது உள்ளக் கருத்தாகும். மேலே குறிப் பிட்டது போன்ற அநேக உபதேசங்களையும், அனுபவரீதி யான வைத்திய முறைகளையும் அடியேனுக்கும் எடுத் தெடுத்து விளக்கி வைப்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு வளங்க வந்த வர்களே யன்றி மற்றவர்களிடமிருந்து எதையும் வாங்க வந்தவர்க ளல்ல; உண்மையான சந்நியாசிகளையும் பக்கீர்களையும் படைக்க வந்தவர்களேயாவார்கள்.
செம்பைத் தங்கமாக மாற்றியதுபோல என்னையும் புடம் போட்டு எடுத்த வர் கள் திரு தாளையான் ஆண்டவர்கள். கொழும்பு மூன்ருங் குறுக்குத் தெருவி லிருந்த மு. யூ. மு. சு. புடவைக் கடையிலும் பாவா அவர்கள் தங்கி இருப்பது வழக்கம். திரு தாளையான்

( 79 )
பாவா அவர்களிடம் நல்லுபதேசங் கேட்க வந்தவர்கள் அநேகர். காலதாமதமாகில் இரவு காலத்தில் அன்னவர் கள் அந்தவிடத்திலேயே படுத்துக் காலையில் எழும்பித் தங் கள் தங்கள் கடைகளுக்குச் சென்றுவிடுவார்கள். ஒருநாள நானும் அவ்வாறு அங்கு உறங்கிவிட்டேன். இரவு சுமார் மணியிருக்கும் திரு ஆண்டவர்கள் என்ன யெழுப்பி ஒரு ரிக்சோ கொண்டுவரும்படி உத்தரவிட்டார்கள். நான் உடனே ரிக்சோவொன்றைக் கொண்டு வந்தேன். அதில் அவர்கள் ஏறிக்கொண்டு பலாமரச் சந்திக்குப் போகச் சொன்ஞர்கள். நானும் அந்த ரிக்சோவைத் தொடர்ந்து ஓடோடிச் சென்றேன். ஆட்டுப்பட்டித் தெருவழியாக வந்து, திவுல்கஹா (விளாமரச் சந்திக்கு வந்ததும், கெயிட்டி தியேட்டர் பக்கத்திலிருந்து வந்த சுமார் 15 அல்லது 20 பேர் கொண்ட காடையர் கூட்ட மொன்று ரிக்சோ வைக் சுற்றி நின்று வழி மறித்தது. எந்தை ஆண்டவர்கள் “அடியடா’ வென்று சொன்னுர் கள். உடனே நான் வர்ம, சீனடி அடிக்கத் தொடங்கி னேன். பொறி பறந்தது. காடையர்கள் போன சுவடு கூடத் தெரியாமல் ஓடி மறைந்தனர். மறுநாளே என்னிடமிருந்த மிருகக் குணங்களை எப்படியோ மாற்றி பாவா அவர்கள் என்னை ஒரு செத்த சவம்போல ஆக்கி விட்டார்கள். என் னிலிருந்த செயல்கள் யாவும் எப்படியோ மறைந்து விட்டன. வர்ம வைத்திய சாஸ் திரத்தையும் மறந்து விட்டேன். ஆகா! என்னே ஆண்ட வர்களது தவத்தின் வலிமையும் மகிமையும்.
எனக்கு மேன்மையான ஓர் அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்தவர்கள் பாவா அவர்களே. லேயாட்ஸ் புருேட்வே தெரு, வீட்டின் முன் விருந்தையில் ஒருநாள் இரவு சுமார் இரண்டு மணி அளவில் திரு பொன்னம்பல சுவாமி, வீமன் சுவாமி திரு சுகர் சுவாமி முதலானேர் காகிதப்பை ஒட்டிக்கொண்டிருந்தனர். அப்போது திரு பொன்னம்பல சுவாமி என்னிடம், “பெரியவர்களைத் தெரிசிக்கவும் அவர்
வேண்டும்" என்றர்கள். அவ்வீட்டின் கடைசி அறையிலே உறங்கிக்கொண்டிருந்த பாவா அவர்கள், திடீரெனத்

Page 45
(80 )
தலைவிரிகோலமாக எழுந்தோடிவந்து, திரு பொன்னம்பல சுவாமியை நோக்கி, இராமையாவுக்குப் பாடம் வைக் கிறதற்கு நீ யாரடா? யாருக்கடா பிராரத்துவம், பிரா ரத்துவம் எங்கேயடா இருக்கிறது? எங்களுக்கு ஏதடா பிராரத்துவம்? நாங்க ள் பிராரத்துவத்தை அழிக்க வந்தவர்கள். எங்களது மயிரில் கூடப் பிராரத்துவங் கிடையாது" என்று சொன்னுர்கள். அன்று முதல்
சொல்லமாட்டார்கள். 'பாவா உன்னை ஒப்புக்கொண்டு விட்டார்கள் உன்னைத் தூய்மையாக்கி விண்ணில் பறக்க வைப்பார்கள், விண்ணில் கலக்க வைப்பார்கள்' என்று சொன்னர்கள்.
'அடே இராமையா! நீ எதையுங் கற்பனை பண்ணிப் பாராதே. எதையுஞ் சிந்தனை செய்யாதிரு. அது அதுவாக விளங்குமடா. எது நடக்க இருக்கிறதோ அது நடக்கும். விடுகிற காலத்தில் விடும். பட் டப்பகல் விளக்காக நாம் நிற்கும் நிலை திகழவேண் டும், இருள் நீங்கிப் போகும். நிறைந்த அறிவும் பூரண ஞான மஸ்தும் வேண்டும் என்று நோக்கு, எல்லாம்
*நீ பழுத்தால் எல்லாம் பழுக்கும். இராமையர் எல்லாஞ் செய்யக்கூடியவன். ஆஞற் செய்யமாட்டான்? எனச் சுவாமி அவர்கள் அறிந்திருந்தார்கள். வெள்ளாளன் போன விடமும் வெள்ளாடு போன விடமும் பாழ் பாழ் பாழ்? என்று கூறிய சுவாமி அவர்கள் "எல்லாம் பாழாய்ப் போன விடத்தில் எது மிஞ்சும்? அது அதுவாக இருக்கும். கப்பலை ஒட்டு” என்று சொன்னுர்கள்.
* யாருக்கும் இது வெளியிடுதற்குரிய விஷயமல்ல. இருக்க வேண்டிய மாதிரியிரு. நான் உன்னைக் கொண்டு நடத்துவேன். நீ நினைப்பதுபோல நடவாது, நான் நினைத் ததை உன்னைக் கொண்டு செய்விப்பேன். காட்டிற் கிடக் கும் புலி, வீட்டுக்கு வந்தால் அது தன்னை ஒரு பூனை யென்று நினைத்தா நடக்கிறது? ஒருவனுடைய கத்தி ஒரு பக்கம் வெட்டும், என் கத்தியோ தொட்ட தொட்ட

( . )
விடமெல்லாம் பட்ட பட்ட விடமெல்லாம் வெட்டும் என்ருர்கள்.
"ஒரு பெரிய எஜமானுடைய தோட்டத்தில் அநேக விதமான விருட்சங்கள் உண்டுபண்ணப்பட்டன. ஒரு பெரிய புயற்காற்றினுல் டெலவீனமான விருட்சங்கள் பல விழுந்து விட்டன. நல்ல வைரம் வாய்ந்த சில மரங் களே நின்று பிடித்தன. கோடானு கோடிப் பறவைகள், மிருகங்கள் முதலியனவற்றை வளர்க்கிறேன். அவை அதிதூரஞ் சென்று உணவைத் தேடி உண்ணும். பார்க் கிற மாதிரிப் பார்த்து வா. அப்போது எல்லாம் ஒருங்கே உனக்கு வந்து விடும். தெருவிற் போகும்போது புயற் காற்று வீசுகிறது. நல்லவனையோ கெட்டவனையோ அதற் குத் தெரியாது. தூசைத் துடைத்துவிட்டுப் போக வேண் டியதுதான், எதற்கும் மனம் அசையப்படாது. மர்க் கடம் டோலப் பிடித்த பிடி வழுவாதிருந்தால் எல்லாஞ் சரியாகும்.” என்று வற்புறுத்தித் தைரியமூட்டுவார்கள்.
திரு தாளை யான் ஆண்டவர்களது புகழ் கடல் கடந்து மேலோங்கக் கண்டேன். மேலப்பாளையத்திலிருந்து பாவா குற்ருலஞ் செல்லும்போது ஓர் அருவிக்கரையில் திரு பேப்பர் சுவாமி நின் ருர்கள். பாவா அவர்கள் குதிரை வண்டியிற் போவதைக் கண்டு, தண்ணிரைக் கைகளால் அள்ளியள்ளிக் கண்களிற் தெளித்தவாறே, "என் கண் குளிர்கிறது! என் கண் குளிர்கிறது” என்று சொல்லிக் கொண்டார்கள். பாவா அவர்களது குதிரை வண்டி கடந்து அப்பாற் சென்றதும் திரு பேப்பர் சுவாமி இலஞ் சிப் பண்ணையார் வீட்டிற்குப்போய் “பாசிப்பட்டணத்துக் கூட்டம் வருகிறது. வாய்க்குருசியாகச்சாப்பாடுபண்ணும் என்று கேட்டிருக்கிருர்கள், பண்ணையாரும் பாவா அவர் களை வரவேற்று உபசரித்தார்கள். பின்பு பாவா அவர்கள் குற்ருலம் போய்விட்டார்கள். அங்கே திரு பொன்னம்பல சுவாமி தங்கியிருந்த சத்திரத்தில் பாவா அவர்களுந்தங்கி ஞர்கள். திரு பேப்பர் சுவாமி தன் சிஷ்யர்சளை அழைத்து, “குற்ருலச் சத்திரத்தில் அருள்மாரி பொழிகிறது. எல்லோ ரும் போய் மூழ்கி முழுகுங்கள்" என்று சொல்லி அனுப்பி, னர்கள். சிஷ்யர்கள் பூமாலைகளுடன் அங்கே சென்ழுர்கள்.

Page 46
( 82 )
பாவா அவர்கள் புஷ் கோட்டும் சிலிப்பரும் அணிந்து கையில் குடையும் பிடித்த வண்ணம் சத்திரத்துக்குள் உலாவிக்கொண்டிருந்தார்கள். அங்குவந்த திரு பேப்பர் சுவாமி அவர்களது சிஷ்யர்களிடம் பாவா அவர்கள் ‘ என்னைப் பார்த்து வரும்படி பேப்பர் சுவாமி சொன்
தாங்கள் கொண்டுவந்த மலர்மாலைகளைப் பாவா அவர்க ளது சழுத்தில் அணிந்து, பாதத்திலுங்குவித்துத் தெண்ட னிட்டு வணங்கிஞர்கள். "பேப்பர் சுவாமி பூமாலைதான் போ டச் சொன் ஞரோ? பூமாலை வாடிப் போகுமே! பாமாலை சூடினுல் ஆகாதோ ?” என்று பாவா அவர்கள்? திரு பாவா அவர்கள் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பி விட்டார்கள். சிஷ்யர்கள் பேப்பர் சுவாமி அவர்களைத் தெரிசித்து நடந்தவற்றைக் கூறிஞர்களாம். அப்போது திரு பேப்பர் சுவாமி அவர்கள் அடே! என் குதிரை ஒரு வினுடிக்கு 60 ஆயிரம் மைல் ஓட்டம் ஓடுகிறது, கொழும் பார் நிற்கின்ற எல்லேயைக் கண்டுகொள்ளலாமென்று பார்த்தால், கொழும்பார் நிற்கின்ற எல்லையை என்னுற் காண முடியவில்லையே யென்று சொன்னர்களாம்.
மறுநாள் பேப்பர் சுவாமி அவர்களது சிஷ்யர்கள் எஜமான் பாவா அவர்களைப் பார்க்க வந்தார்கள். அவ்வமயம் பாவா அவர்கள் பட்டப்பகல் சுமார் 11 மணி அளவில் கடும் வெயிலில் சத்திரத்துக்கு வெளியே முன்போலப் புஷ்கோட்டும், சிலிப்பரும் அணிந்து கையில் விரித்த குடையுடன் உலாவிக்கொண்டிருந்தார்கள். அவர் களது நிழல் கீழே விழவில்லை. திரு பேப்பர் சுவாமி அவர் களது சிஷ்யர்களைக் கண்டதும், ' எங்களைக் கண்டு கொள்ள என்ன இருக்கிறது? எங்கள் நிழலைக்கூடக் கண்டு கொள்ள முடியுமோ என்றதும் வந்தவர்கள் யாவரும், ஆண்டவர்களது நிழல் குடையுடன் காணுது ஆச்சரிய முற்று வணங்கினுர்கள்.
பாவா அவர்கள் சுவாமிமலையிலிருந்து குதிரைவண்டி யில் வந்துகொண்டிருக்கும்போது மதம் பிடித்த யானை யொன்று எதிரே வந்தது. பா வா வைத்

( 83 )
தவிர ஏனையோர் ஓடிவிட்டார்கள். யானை தனது துதிக் கையைப் பாவாவை நோக்கி நீட்டியது. அவர்கள் வண் டியிலிருந்த மிட்டாய், பழம் யாவற்றையும் அதற்குத் தூக்கிக் கொடுத்துப் போவென்று சொல்லவும், அது போய்விட்டது. அதன் பின்பே ஏனையவர்கள் வண்டியை
நோக்கி வந்தார்கள். பெரிய சாதுக்களாலும், மகான்
களாலும் போற்றப்பட்டவர்கள் நமது பாவா அவர்கள் மோன நிலையை எய்தியவர்கள். அவர்களை யாரோடும் ஒப்பிட முடியாது. அவர்கள் மேலான நிலையை அடைந்து
வஸ்துவோடு கலந்து, சர்வவியாபக விளக்கமாகவிருந்து
யாருமறியாவண்ணம் உலகத்தைக் கொண்டு நடாத்து கிருர்கள். அல்லா வுக்கு 100 மணிகள். அவற்றுள் 99 மணிகள் மகான்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன எஞ்சிய ஒரு மணியே அது வாக இருந்து ஆக்கல், காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களால் உல
கத்தை நடாத்துகிறது. இவ்விதம் ஆற்றல் படைத்த மகான்களுக்கு மகான் ஆகிய பாவா அவர்கள் யாவை
யும் அறிந்து விளங்கினர்கள்.
ஒரு முறை பாவா அவர்கள் வெயாங்கொடை திம் புல் வத்தை ஒயில் மில் என்ற தேங்காய் எண்ணெய் ஆலையின் பங்காளி கா.சி. வா. முஹம்மது அப்துல்காதர் அவர்களது நேஷ் காரில் இந்தியாவுக்குப் புறப்பட்டுப் போனர்கள். மன்னர் புகையிரதநிலை அதிகாரியுடன் அவ ரது அறையில் தங்கினர்கள். மறுநாட் காலையில் கப்பலுக்
குப்போக வேண்டும். ஆனல், அடே கங்காணி ஆபத்தி
லிருக்கிருன் என்று கூறிவிட்டுக் கொழும்புக்குத் திரும்பி வந்து தாவூது மாமன் கற்குளி கங்காணி பாரிசவாதத்
தால் கஷ்டப்பட்டு மரணத்தருவாயிலிருந்தவரைக் காப் பாற்றிவிட்டு, மீண்டும் மறுநாட்காலையில் அக்காரிலேயே
மன்னருக்குப் போய் முன்போல் இரவு தங்கி, காலையில்
தலைமன்னர் போய், கப்பலேறி இந்தியாவுக்குப் பிரயாண
மானுர்கள்.
திரு தாளையான் ஆண்டவர்களது சீவிய காலத்தில்
ஒரு நாள் அடியேன், யாழ்ப்பாணத்துக்கு வியாபார
நோக்கமாகச் சென்றிருந்தேன். அப்போது கொழும்புத்

Page 47
( 84 )
துறையில் வசித்த திரு யோக சுவாமிகளைத் தரிசிக்கச் சித்தமுண்டாயி hறு.\ அவர்கள் அவ்வேளையில் அள வெட்டி கணபதிப்பிள்ளை மாஸ்டர் அவர்கள் வீட்டில் இருந்ததாக அறிந்தேன். அங்கே போகுமுன், அம் பலவி மாம்பழம் ஒரு டசின், மாதுளம்பழம் ஒரு டசின், வை. சி.சி கு. சுருட்டுக் கட்டு இரண்டு டசின், தீப்பெட்டி ஒரு டசின் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வெள்ளிக்
அங்கே தவத்திரு யோக சுவாமிகள் வீற்றிருந்தார் கள். அவர்கள் சமுகத்தில் சுமார் ஐம்பது ஆண்களும் பெண்களும இருந்தனர். நான் கீழே விழுந்து வணங்கி னேன் சுவாமியவர்கள் எனது கைகளைப் பற்றித் தூக்கி, அருகமர்த்தி, "மகனே! நீர் வியாபாரத்துக்காக வந் திருக்கிறீர், நாட்டுக்கோட்டைச் செட்டியிடம் வேலை பார்க்கிறீர். நீர் ஒரு சைவப்பிள்ளை. உம்மை இாா மையாப்பிள்ளை என்று அழைப்பார்கள். உம்முடைய பெயர் இராமசாமி. நீர் என்னிடம் எதையும் விரும்பி வரவில்லை. என்னைக் காணவேண்டுமென்றே அன்புடன் வந்திருக்கின்றீர். நீர் நல்ல தேவேந்திர முகூர்த்தத்தில் வந்திருக்கிறீர். என் கண்கள் குளிர்கின்றன காணும்; குளிர்கின்றன காணும், மெத்த நல்லவர் ஐயாயிரம் வருடத்துக்கு முன் சண்ட காட்சியாகத் தெரிகிறது காணும். அவர் என்னைப் பார்க்கும்படி சொன்னவரோ? என்று திரு தாளை யான் ஆண்டவர்களை மனதிற் கொண்டு திரும்பத் திரும்பக் கேட்டார்கள். " ஆம் ஆப் " என்று சொன்னேன். “நீர் எதைக் கேட்டாலும் தரச் சித்தமாயிருக்கிறேன், கேளும்” என்ற ர்கள். தங்களைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆசையிருந்தது, அது பூர்த்தியானது.” என்று சொன்னேன். “உமக்கு யாதொரு குறைவுமில்ல்ை. எல்லாம் நிறைவாக விளங்கு கிறது.” என்று பலதடவை சொன் ஞர்கள், “நீர் இருக்கு மிடஞ் சரி. அதில் முங்கி முழுகும்”என்று சொல்லிவிட்டு, * கூடையில் என்ன கொண்டுவந்தீர்? எடும் என்று உத்தரவிட்டார்கள். கூடையிலிருந்த பழங்களோடு

( 85 )
தம்மிடமிருந்த பழங்களையுங் கொண்டுவரச் சொல்லி யாவற்றையும் பகிர்ந்தளித்தார்கள். மேலும், "இது வென்னகாணும்? அதை எடும்!" என்று சொல்ல நானும் எடுத்துக்கொடுத்தேன். சுருட்டுக்கட்டுகளையும் தீப்பெட்டி
களையுங் கண்டதும், “வடக்கிலிருந்து வந்தவர் எம்மிட
முள்ள பலவீனத்தைக் கண்டுகொண்டார்” இரண்டு சுருட்டுக்களைப் பற்றவைத்தார்கள். "நீர் என்னைப் பார்க்க வேண்டியவர்தான் காணும் !" என்று கூறி, விபூதி தந்து ஆசீர்வதித்தார்கள். நான் விடைபெற்று புறப்பட்டபோது, சுவாமியவர்கள் என் கையைப் பற்றி அமர்த்தி "சாப்பிட்ட பின்புதான் நீர் போகவேண்டும்’ என உத்தரவிட்டார்கள்; என் னை த் தன்னருகமர்த்தி வயிருர உணவு படைத்தார்கள். சாப்பாடு முடிந்ததும் அவர்களிடம் விடை கூறிக் கொழும்புக்கு மீண்டேன். பின்பு வழமைபோலவே திரு தாளை யான் ஆண்டவர்களைச் சந்திக்கச் சென்றேன். என்னைக் கண்டதும், “அவரைப் பார்த்தாயே, அவர் என்ன சொன்னர்?" என்று கேட்டார் கள். நான் நடந்தவற்றை விவரமாக எடுத்துரைத்தேன். அவற்றைச் செவிமடுத்துப் புன்முறுவல் செய்தார்கள்.
பாவா அவர்கள் சமாதியடையும் அந்தியகாலம் அணுகிவிட்டால் எத்தகைய தோற்றக் காட்சி தெரியு மென்பதைப் பொதுவாகப் பலரிடஞ் சொல்லி வைத் திருந்தார்கள். 1955-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் முத லாந் தேதி காலையில் அடியேன் ஆண்டவர்களைத் தரி சிக்கச் சென்றேன். அப்பொழுது அவர்கள், "நேற்றிரவு நீ என்ன சொப்பனம் கண்டாய்?" என்று கேட்டார்கள். நான் கண்ட சொப்பணத்தை விவரித்தேன். “ஆகாயத் திலே ஒரு கட்டிலில் உறங்கிக்கொண்டிருக்கிறேன். ஒரு நாகபாம்பு எனது கழுத்தைச் சுற்றி வளைக்கிறது. இது என்னைத் தீர்த்துவிடும் போலிருக்கிறதே என்று பயந்து கீழே விழுகிறேன். நாகசர்ப்பம் முன் செல்கிறது. நான் பின் தொடர்கிறேன். ஒரு குருத்து மணற் பாங்கான இடம்; பட்டப்பகல் போல வெளிச்சமான இடம். அங்கே நான் நிற்கிறேன். ஒரு பெரிய பீரங்கி அதிர்ந்தாற்போல பெருமுழக்கங் கேட்கிறது. பூமி இரண்டாகப் பிளக்கிறது.

Page 48
( 86 )
அங்கிருந்து ஒரு பெரிய சோதிப் பிழம்பு கிளம்பி ஆகா யத்தை நோக்கிச் செல்கிறது. அச்சோதிப் பிழம்பின் பிரகாசத்தைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. சற்று நேரஞ் சென்றதுங் கடையில் உள்ளவர்கள் என்னை எழுப்பித் தண்ணிர் அருந்த வைத்தோமென்றர்கள்’.
எனது சொப்பனக் காட்சியைக் கேட்டதும் பாவா அவர்கள் திரு அருணு சல சுவாமியை அழைத்துத் தமது பெட்டிக்குள்ளிருந்த ஒரு தினக் குறிப்பேட்டை (டயறியை) எடுத்துவரச் சொன்னர்கள். நான் கண்ட அதே தோற்றம் முப்பது வருடங்களுக்கு முந்திய அந்த டயறியில் குறித்து வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், “இக் காட்சியைத் தமிழனுெருவன் காண்பான், நான் அவனுக விருப்பேன்; அவன் நாளுக விருப்பான். இதுவே எனது அத் தி யந்த முடிவு” என்றுங் குறிப்பிடப் பட்டிருந்தது.
பாவா அவர்கள் என்னிடம், “இன்னும் மூன்று நாட்களே மிஞ்சியுள்ளன. காலையும் மாலை யும் வந்து போ. புதன்கிழமை காலை எனது பாஸ்துண்டு வெட்டப்பட்டுவிடும். அருந்தவேண்டிய அனைத்தையும், அணிய வேண்டிய அனைத்தை யும் அனுபவித்து விட்டேன்." என்று கூறிஞர்கள். நான் தே ம் பித் தேம்பி அழுதேன். எனது நெஞ்சிற் தட்டிவிட்டு, * அழாதே சந்தோஷமாக இரு, எனக்கு ஏதடா மெளத்து (இறப்பு), நான் என்றும் வியாபக விளக்கமாக இருப்பவனல்லவா? சட்டை கிழிந்துவிட்டது. அதைக் கழற்றப் போகிறேன். நீ வந்து முப்பத்தைந்து வரு டங்களாகிவிட்டன. அநேக கப்பல்களை நிறுத்தி வைத் திருக்கிறேன். நீ உனக்கு வேண்டியதைக் கேள். எதைக் கேட்டாலுந் தரச் சித்தமாயிருக்கிறேன்' என்று சொன் ஞர்கள். உடனே நான், “எதையுங் கேட்டு வாங்கும் நிலையில் இல்லை. எனக் குத் தேவை தாங்கள்தான்” என்றேன். அதற்கு அவர்கள், "உனது அஞ்ஞானத் திரையைக் கிழித் துக் காற்றில் எறிந்துவிட்டேன்.

( 87 )
உனக்கு யாதொரு குறைவுமில்லை. நிரப்பமாக இருக் கின்றாய். வைக்கவேண்டிய அத்தனையும் வைத்து முடித்துவிட்டேன். மேலும் வைக்க விடமில்லை. பூரண மாக முங்கி மூழ்கு. நான் அதுவாய் இருக்கிறேன். உடல் அளவாய் என்னைப் பாராதே. அதுவாகப் பார்' என்று கூறிவிட்டு, "யாதொரு குறையும் உனக்கு வராது” என்று அன்பொழுகப் பல தடவைகள் கூறிஞர்கள். இன் றும் அம்மொழிகள் எனதுள்ளத்திற் பதிந்து கண்முன் காட்சியளிக்கின்றன. 'உன்னை உனக்கு விளங்காது. உன் பூரண நிறைவை நீ உணரமாட்டாய், இவ்வழி நடப்பவரிடஞ் சென்ருல் உன்னைப்பற்றிக் கூறுவார்கள்" என்று சொல்லி அவர்கள் தெளிவுபடுத்தினர்கள்.
ஆண்டவர்கள் குறித்த மூன்ரும் நாள், அதாவது 1955-ஆம் வருடம், ஆகஸ்ட் மாதம், 3-ந் திகதி, புதன் கிழமை காலை, ஒன்பதரை மணியளவில் மஹா சமாதி அடைந்தார்கள்.
திருமேனி மறைந்துவிட்டது. ஆனல் அவர்கள் தோன்ருத் துணையாக இன்றும், என்றும் இருந்து வருகி றர்கள் என்பதற்கு ஐயமில்லை, எள்ளவும் ஐயமில்லை.
சற்குருநாதன் திருவடி வாழ்க!
அடியார்கள் இனிது வாழ்க !
சற்குருநாதன் சந்நிதானம் என்றும் வாழ்க வாழ்கவே!

Page 49
( 88 )
திரு. தாளையான் (பாவா) சுவாமி
அவர்களைப் பற்றிக் கட்டுவாகொட வெயாங்கொடையில் வசிக்கும் மாலிகாதென்ன மொரகல்பேடிகே
சேதரிஸ் (சேதாபாஸ்)
என்றவர் சிங்கள மொழியில் கூறிய விஷயத்தின் தமிழாக்கம்.
நின் பல வருடங்களாக வெயாங்கொடை திம்புள் வத்தை ஆலையென்றழைக்கப்படும் தேங்காய் எண்ணெய் ஆலையில் மேசன் வேலையையும், மற்றுமுள்ள வேலைகளை யுஞ் செய்து வந்தேன். இவ்வாலைக்குச் சொந்தக்காரரான K. M. பிச்சை ராவுத்தர் அவர்களும் நானுஞ் சேர்ந்து தான் அஸ்திவாரக்கல் வைத்தோம். காலஞ் செல்லச் செல்ல அவர்கள் மருமகன் அதிபதியாக வந்தார். அக் காலத்திற்ருன் தாளையான் சுவாமி அவர்கள் ஆலைக்கு வந்து தங்கி இருந்தார்கள். நான் பகல் நேரங்களில் தூரத்தில் நின்று வணங்கிச் செல்வது வழக்கம். ஒருநாள் என்னைக் கூப்பிட்டு ஒரு குலை திராட்சுைஷப் பழத்தைத் தந்து, நீ மிக்க நல்லவன், நீ இங்கு வேலையை விட்டு விடாதே என்று பகர்ந்தார்கள். சில காலஞ் சென்றதும் இவ்வாலையை நடாத்திய முதலாளி காலமானர். தன் மகனும், K. M. P. முதலாளி அவர்களது மக்களும் சிறிய வர்களாக இருந்தபடியால் K. M. P, முதலாளி அவர்களது அண்ணன் மக்கள் ஆலையை நடாத்தலாஞர்கள். அக்காலத் திற்ருன் திரு தாளையான் சுவாமி அவர்களுஞ் சமாதி யானுர்கள்.
அவர்களே ரத்மலானையில் நல்லடக்கஞ் செய்து, முதல் முதல் ஒலையாலும், மூங்கிலாலும் சுவாமி அவர்களது அச்சுயந்திர சாலை முதலாளியினது உத்தரவின் பேரில் சமாதிக் கட்டிடம் கட் டினேன். அத ந் கு ப் பி ன் வெயாங்கொடை K. M. P. பிச்சை ராவுத்தர் முதலாளி

( 89 )
குடும்பத்தினர் செலவில் அஸ்பெஸ்டோ (Asbestos)
கூரைத்தகடு போட்டுச் சமாதியைக் கல்லாற் கட்டினேன்.
அக் கட்டிடத்திற்கு முன்பக்கத்தில் தென்ளுேலையால் ஓர்
கட்டிடம் அமைத்து, அங்கு ஆண்களும், பெண்களும்,
குருபூசை (கந்தூரி) காலத்தில் உணவருந்த ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அக் காலத்தில் தாளையான் அச்சக முதலாளிக்கு தாளை வா ன் சுவாமிகளது சொந்தக்காரர்களென்றும் பக்தர்களென்றுங் கூறிச் சிலர் தாளை யான் சுவாமிகளது சமாதி பீடத்தைத் தாங்களே நடாத்த வேண்டுமென்றும் பல தொல்லைகள் செய்தார்கள். அதன் பின் தாளையான் அச்சக முதலாளிமீது வழக்குத் தாக்கல் செய்தார்கள். அக் காரணங்கள் பற்றி மேற் கூறிய முதலாளி சமாதி பீடத்துக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார்.
ஆண்களும், பெண்களும் ஒரே கொட்டகையில் தங்குவதையும், உணவருந்துவதையும், இராக்காலங் களில் உறங்குவதையுந் தெரிந்த தாளையான் அச்ச கத்தவர்கள் விரும்பவில்லை. K. N. K. பீர்முஹம்மது முதலாளி அவர்களிடம் பெண்களுக்குத் தனியாகவோம் இடவசதிசெய்து கொடுக்கத் தாங்கள் பொருளுதவி செய் வதாகக் கூறி, அம்மடுவங்கட்டவென்னை (சேதாபாஸைக்) கூட்டிக்கொண்டு போஞர்கள்.
அங்கு சமாதி பீடத்துக்குப் பக்கத்தில், இடவசதி அமைக்கவும், அளவு நிர்ணயிக்கவுங் கயிறு கட்டிவிட் டேன். தாங்கள்தான் உண்மையான சொந்தக்காரர்கள், பக்தர்கள், அன்பர்கள் என்று சொல்லி ஒன்று சேர்ந்து சிலர் வந்து என்னைத் தடுத்து விட்டார்கள். முன்னிருந்த ஒலைக் கட்டிடத்திற் சாய்ந்து கொண்டு சமாதியைப் பார்த்த வண்ணமாக, இதென்ன கோலம்! நல்ல காரியங்களைக் கூடச் செய்ய விடுகிருர்களில்லையே என்று கவலையுடன் முறையிட்டேன். எனக்கு ஓர் நினைவிழந்த நிலை வந்தது. தூக்கமுமில்லை, விழிப்புமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்போது தாளையான் சுவாமி அவர்கள்

Page 50
( 90 )
என் முன்தோன்றி, "அடோ சேதா, இப்போது இவர்கள் சரிவர மாட்டார்கள். இன்னும் ஒரு வாரத்தில் உன்னைக் கூப்பிட வருவார்கள், அப்போது வந்து கட்டு. உனக்கு ஊருக்குப் போகப் பஸ் வண்டிச் செலவுக்கு அதோ விருக்கும் மழைத் தண்ணீர் ஓடும் குழாய்க்குக் கீழே ஐம்பது (50) சதம் வைத்திருக்கிறேன். எடுத்துக்கொண்டு போவென்று சிங் கள மொழியில் சொன்ஞர்கள்." உடனே அன்னிலை தெளிந்தது. சுவாமி கிணற்றுப் பக்கம் போஞர்கள். நானும் பின் தொடர்ந்தேன். அவர்கள் மறைந்து விட்டார்கள். ஆஹா என்னே அவர்களது இலட்சணம், என்ன அழகு, என் கண்முன் இன்றுஞ் ஜொலிக்கிறது.
உடனே நான் திரு தாளை யான் சுவாமி அவர்கள் சொன்னவிடத்தில் தோண்டிப் பார்த்தேன். அங்கு அரை ரூபாய் (50 சதம்) வெள்ளி நாணயம் இருந்தது. ( இது முன் வழக்கத்திலிருந்தது ) அதை எடுத்துக் கொண்டு பீர் முதலாளி அவர்களிடம் ஏதும் பேசாது ஊருக்குப் போக விடைபெற்றுக் கொண்டு போய்விட் டேன். ر• }
திரு தாளையான் சுவாமி அவர்கள் சொன்னபடி pGU5 வாரத்தில் என்னைக் கூப்பிட்டு முன் விடுபட்ட கட் டிடத்தை நான் குறிப்பிட்ட இடத்திலேயே கட்டச் சொன்ஞர்கள். நான் கண்ட தோற்றத்தைத் தெரிந்து கொண்ட K. N. K. பீர் முஹம்மது முதலாளி அவர்கள் முழுச் செலவுந் தாங்களே செய்தார்கள். அக் கட்டிடந் தான் இப்போது சமாதிக்கும், கொடிமரத்துக்கும் நடு விற் காணப்படுகிறது. இப்போது அவ் வெள்ளி நாணயம் எனது பூசை அறையில் இருக்கிறது. திரு தாளையான் சுவாமியை வணங்குவதற்கு அஃதோர் ஞாபகச் சின்ன மாக விளங்குகின்றது.
திரு தாளையான் சுவாமி அவர்களது சீவிய காலத் தில் எனது மகன், ஈளை, இழுப்பு நோய்களால் மிகவுங் கஷ்டப்பட்டார். அதைப் பற்றிச் சுவாமி அவர்களிடம்

91 )
முறையிட்டேன். அவர்கள் கோ அமுரியில் கடுக்காய் சேர்த்து ஒர் பாகஞ் செய்து கொடு வெனச் சொல்லி அதைச் செய்யும் பாக முறையையும் விபரமாகச் சொல் லிக் கொடுத்தார்கள். நான் அம் முறைப்படி என் மக னுக்குக் கொடுக்க, வியாதி நீங்கிப் பூரண குணமடைந் தான். மீண்டும் அவ்வியாதி இன்றுவரை வரவில்லை.
அம் மருந்து என் மகனுக்குப் பூரண சுகமளித் ததைக் கண்டு மனமகிழ்ந்து சுவாமி அவர்களிடஞ்சென்று அதற்காக நன்றி கூறி, வணங்கி, சுவாமி இம் மருந்தை நான் வேறு யாருக்குங் கொடுக்கலாமா வென்று கேட் டேன். அதற்கவர்கள் தாராளமாகக் கொடு வென்று உரிமை வாக்களித்தார்கள். சிறியவர் முதல் பெரி யோரீருக இதைக் கேள்விப்பட்டு என்னிடம் வந்தவர். களுக்கு நான் கொடுக்கிறேன். அவர்கள் யாவரும் பூரண குணமடைந்தார்கள். என்னே! சுவாமி அவர்களது வாக்கு மகிமை! அவர்களது பெருங் கருணையும் ஜீவோபகாரமும்
ஆதலால், எவருஞ் சுவாமி அவர்கள் இறந்து மண் ளுேடு மண்ணுகி விட்டார்களென்று எண்ண வேண் டாம். அவர்கள் இன்றும், என்றும், உயிருடன் இருக் கிருர்கள். நல்ல பக்தர்கட்கு தோன்ருத் துணையாக இருந்து செயற்கரிய உதவிகளைச் செய்து கொண்டிருக் கிருர்கள் என்பது எனது பூரண நம்பிக்கை, நாம் பூரண மாக அன்பு கூர்ந்து வணங்கி வந்தால் அவர்கள் எனக்கு முன் தோன்றியது போலப், பேரன்பர்கள் முன்னிலையி லுந் தோன்றுவார்கள் என்பது எனது திடமான பூரண நம்பிக்கை,
சாது, சாது, சாது சங்கஞ் சிறப்புடன் வாழ்க! சாது தெரிசனம் பாவ விமோசனம்! ۔۔۔۔ சாது தெரிசனம் எமக்கும், பக்தர்கட்கும் என்றுங் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.
இங்ங்ணம்,
அன்பு மறவாத , , சேதரிஸ் (சேதாபாஸ்)

Page 51
( 92 )
தவத்திரு தாளேயான் ஆண்டவர்களது பேரருட்கருணை
தாளேயான் ஆண்டவர்கள் பல வருடங்கள் சொல்லரிய நிஷ்காமிய தவஞ்செய்த பேற்றினுல் பக்குவமுள்ள தமது சீடர்களுக்கும் மற்றுமுள்ள அன்பர்களுக்கும் படிப்படி யாக மெய்ஞ்ஞானத்தையும் சுகானுபூதிச்செல்வத்தையுங் கருணையிஞல் அருளிஞர்கள். அச்சுக்கந்தோரை முறை யாக நடாத்திவந்த அப்துல் கரீம் சாஹிப் அவர்களுக் கும் அப்பாக்கியங் கிடைத்தது. அச்சுவேலை யெல்லாந் தனது குருபரனுடைய பணியென்றே கருதிச் சீராகச் செய்து வந்தார்.
1948-ம் ஆண்டளவில் லேயாட்ஸ் பிராட்வேயிலி ருந்த தாளையான் அச்சகம் கொழும்பு டாம் வீதியிற் புதி தாக விலைக்கு வாங்கப்பட்ட மாடிக் கட்டிடத்திற்கு இடமாற்றஞ் செய்யப்பட்டது. அங்கு அச்சகஞ் சீராக வளர்ந்து செழிப்புற்றது. டாம் வீதியிலுள்ள கட்டிடமும் ஆத்மீக பக்தர்களது வளாகமாகவே காட்சி யளித்தது. அங்கு அனேகர் தாளையான் ஆண்டவர்களைத் தரிசனஞ் செய்து தங்கள் தங்கள் குற்றங் குறைகளை நிவிர்த்தி செய்து பெறுதற்கரிய பலனையடிைந்தார்கள்.
பிரஹ்ம பூநீ தாளேயான் ஆண்டவர்கள் மகா சமாதியை அடைதல்
பிரஹ்ம பூg தாளையான் ஆண்டவர்கள் முன் பலருக் கும் அறிவித்தல் செய்திருந்ததிற்கேற்ப 1955-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றந் தேதி புதன்கிழமை காலை 9-30 மணியளவில் ( 8-8-1955 ) பரிபூரண நிலை யென்னும் மகா சமாதியை அடைந்தார்கள். சீடர்களும் பக்தர் களும் மற்றுமுள்ள அன்பர்களும் சாற்ற ரிய துன்ப சாகரத்தில் மூழ்கிஞர்கள்.
இறுதிக் கிரியைகளை முறைப்படி செய்து முடித்த பின்னர் பல நூற்றுக்கணக்கான பக்தர்களும் அன்பர்

( 93 )
களும் மற்றவர்களும் புடைசூழக் கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள கூந்தஃைா யென்னும் பூங்காவில் ஆண்டவர்களது புனித அ ட ஸ் சிறப்பாக நல்லடக்கஞ் செய்யப்பட்டது. அவர்களது சமாதி பீடம் வரவரச் சிறப்புற்றுக் காட்சியளிக் து அன்பர்கள் பலர் தினமும் அங்கு சென்று ஆண்டவர்க ளது சந்நிதானத்தில் தங்கள் குறைகளைக்கூறி 'வி  ெ பெறுகிறர்கள். ஆண்டவர்களது சமாதி பீடததில் - கு டாந்தக் கந்தூரி 14 நாட்களைக் கொண்ட கண்கொள் ளாக் காட்சியாக விளங்கி வருகிறது. ஆங்கு நிகழும் சற் தனப் பூச்சு வைபவத்திற்குச் சில சமயங்களில் நாகூர் சந்நிதானத்திற்குச் சந்தனம் பூசும் நாகூர் கலிபா அவர் கள் இலங்கைக்கு வந்து பங்குபற்றியதுமுண்டு. இப்பாரிய பணிகளைக் கவனிக்க அன்பர்களைக்கொண்ட கந்தூரிக் கமிட்டியொன்றுண்டு. அதன் போஷகர் அப்துல் கரிம் சாஹிப் அவர்களே.
ஞானசற்குருவினது முன்னிலையிற் செய்யும் ஆத்மீக விசாரணையால் தத்துவ ஞானம் உதயமாகிச் சகல சந் தேகங்களும் விபரீதங்களும் நீங்கி அத்துவித அநுபவத் தால் பரமுத்தி சித்திப்பதன்றி வேறென்றினல் அன் றென ஜீ சங்கராசாரிய சுவாமியவர்கள் திருவாய்மலர்ந் தருளிய விவேக சூடாமணி யென்னும் நூல் தெளிவாகக் கூறுகிறது. சில பாக்கள் பின்வருமாறு:-
(1) ஆதலா லான்ம ரூப மறியவிச்
சித்த தீரன்
காதறிர் பிரம வித்தாய்க் கருணைவா
flgun uonrsonsör
பாதமே யனுசரித்துப் பரமமாம்
ஆன்மாத் தன்னின்
கோதிலா நல்வி சாரங் குறைவறச்
செய்ய வேண்டும்,

Page 52
(2)
(3)
(4)
யாதுதான் புத்தி யாதி யாவுமே
( V e V
திரிவித அவத்தை கட்குந் திருந்திய
சாட்சி பாகி விரிவுறு பஞ்ச கோச விலட்சண
மாகி யாது ; மருவிய மனவி ருத்தி மற்றதின்
பாவ மியாவுங் கருதிய அவத்தை மூன்றிற் கண்டிடு
மஃதே போன்மா.
யாதனைத் தினையுங் காணு மியாதினை
யனைத்துங் கான
சித்தாய்ச் செய்யும் யாதினைப் புத்தி யாதி யாவுமே
சித்தாய்ச் செய்யா தோதிய வதுதா னேயுன் னுடையவான்,
மாவா மைந்தா,
...」 \
}
விரிவுறு பஞ்ச கோச விலட்சண
வுருவ மாகிக்
கருதிய அவத்தை மூன்றின் கரியதாய்
(5)
நிருவி கார நிருமல போதா னந்த நிலைமையா
மிவ்வான் மாவை அரியனே விவேகி யானேன் அகமென
வறிய வேண்டும்.
நித்தமுந் தன்ஞன் மாவை நிலைமையா
யறிந்த சிவன் சுத்திய பாவ மன்றேன் சுழலறு -
விகாரம் விட்டோன் மெத்திய துயர மற்ருேன் u556|| Lost
னந்தம் பெற்றேன் ; : . எத்தினும் பயமி றந்தோ னேகமாம்
பதம டைத்தோன்.

95 )
(6) மிகவுமே விரத்த குஞேன் மேவுவன்
(ሃ)
சமாதி தன்னைப் புகழ்சமா தியைய டைந்தோன் பொருந்து
வன்றிட போதத்தை யிகழ்விலாப் போத முற்ருே னெய்துவன்
முத்தி தன்னைத் தகமைசேர் முத்த னென்றுந் தடையிலா
னந்த முண்பன். நிலைபெறு ஞான முற்று நிரந்தர
வின்பம் பெற்று வலைவுறு சகம றந்திங் கமர்ந்தவன்
சீவன் முத்தன் சலமன விருத்தி கெட்டுஞ் சாக்கிர
முற்றே னு கி V யிலகுசாக் கிரமு மின்றியிருப்ப்வன்
சீவன் முத்தன்.
ஆத்மீக பாதையில் முன்னேற விரும்பும் அன்பர்கள்
அண்வருக்குஞ் சாதிமத பேதமற்ற நல் வணக்கத்தை அறிவிக்கிருேம். தாளையான் ஆண்டவர்களது சரித்திரச் சுருக்கத்தை முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது ஆண்டகை அவர்களது-கஷ்புல் கரு மாத்து என்ற Ցո Մ6007
சரித்திரத்திலுங் காணலாம்.
எங்கு மிருப்ப திறையருள் பூரணம் அங்கு தங்கிட வானது மங்களம் பொங்கி விளைந்தது பூரண மங்களம் எங்குங் தங்குக வெய்துமங் களமே.
பிரஹ்ம பூரீ தாளையான் ஆண்டவர்களது
N. சரித்திரம் முற்றிற்று.

Page 53
(l)
(2)
(3)
( 96 )
வஸ்து நிச்சயமும் சாதனை செய்யும் முறையும்
உள்ளும் புறம்பும் ஒழியா
வெளியன்றி யொன்றுமில்லை உள்ளும் புறம்பெனச் சொல்லாத தெப்பொருள் ஒன்றுமில்லை உள்ளும் புறம்பெனச் சொல்லல் வெளிபற்றி யோர்ந்திலமோ உள்ளும் புறம்பும் வெளிநாட்டங்
கொண்டுப்பம்மின் உத்தமரே,
வியாபக மான விளக்கத்தை
யன்றி விடயமிலை வியாபக நாட்டம் நிலைக்கில்
நிலைக்கும் விளக்கமுந்தான்' வியாபக மான விளக்கம . . . " தாயிடின் மெய்யறிவாம் , வியாபக மான விளக்கம்
நமதுரு வேறில்லையே.
இந்நிலை போனிலை யெங்கணு
மில்லை யிதுசத்தியம் இந்நிலை யெல்லாக் கவலையும்
போக்கிடற் கேற்றநிலை இந்நிலை யெல்லாஞ் சுகமாய்
விளங்கிடற் கேற்றநிலை இந்நிலை வந்திடில் அன்னிய
மின்றி யிலகுமதே.
( )
(பிரத்தியட்சானுபூதி விளக்கம். ஈசூர்-பூரீ சச்சிதானந்த சுவாமி அவர்களால்
அருளப்பட்டது.)