கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாவலர் சரித்திர தீபகம் 2

Page 1
ஆராய்ச்சிக்கு
L 155 Illi LIFT
கலாநிதி பொ. சிரேட்ட தமிழ்
கொழும்புப் பள்
கொழும்புத் த
57ஆம்
கொழு
19
 
 

ளே அவர்களின் த்திர தீபகம்
2
றிப்புகளுடன்
LIII :
பூலோகசிங்கம், விரிவுரையாளர்,
கலேக் கழகம்
மிழ்ச் சங்கம் ஒழுங்கை,

Page 2

கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு-3. . . . பாவலர் சரித்திர தீபகம் பகுதி 2
ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்
மூலநூல் ஆசிரியர் : அ. சதாசிவம்பிள்ளை அவர்கள்
:பாஜி கல்லூரித் தமிழ் ஆசிரியராகவும், உதயதாரனுகப் பத்திரிகை ஆசிரியராகவும் விளங்கியவர்)
பதிப்பாசிரியர்:
கலாநிதி பொ. பூலோகசிங்கம்
சிரேட்ட தமிழ் விரிவுரையாளர் கொழும்புப் பல்கலைக்கழகம்
வெளியீடு: கொழும்புத் தமிழ்ச் சங்கம் (வரைநிலைச் சபையாகப் பதிவு பெற்றது)
7, 57ஆம் ஒழுங்கை,
கொழும்பு - 6.
1979

Page 3
uர்ப்புரிமை கொழும்புத் தமிழ்ச் சங்கத்திற்கு உரியது
அச்சுப் பதிவு:
திருமகள் அழுத்தகம், பிரதான வீதி,
சுன்னுகம்.

J. R. ARNOLD'S
THE GALAXY OF TAM, POETS
PART
WITH COMMENTARIES
EDITED BY
P. POOLOGASINGAM, B.A. (Cey.), D. Phil, (Oxon) Senior Lecturer in Tamil University of Colombo.
PUBLISHED BY
COLOMEBO TAMIL SANGAM 7, 57th Lane, Colombo-6.
1979

Page 4
Copy Right: Colombo Tamil Sangam Ltd
Thirumakal Press, Main Road, Chunnakam.

வெளியீட்டுரை
** அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு." -திருக்குறள்
தமிழ்மொழிக்குத் தொண்டாற்றிய பேரறிஞர்களுட் பத்தொன் பதாம் நூற்றண்டில் இலங்கையில் வாழ்ந்த ஜே. ஆர். ஆணல்ட் சதாசிவம்பிள்ளை அவர்களும் ஒருவர். இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த பெருந்தமிழ்ப் புலவர்களின் வரலாற்றை அறிதற்கு உதவும் 'பாவலர் சரித்திர தீபகம்” என்னும் நூலை இவர் எழுதினர். தமிழ் மொழியை வளம்படுத்திய சிறந்த தமிழ்ப்புலவர்களின் வரலாற்றை அறிதற்குத் தகுந்த ஆராய்வோடு எழுதப்பெற்று வெளிவந்த முத லாவது நூல் இதுவாகும்.
இத்துணைச் சிறப்பு வாய்ந்த இந்நூல் இப்பொழுது கிடைத்தற்கு அரியது ஆயிற்று. ஆதலின் இந்நூல் குறிப்பிடும் தமிழ்ப்புலவர்களைப் பற்றிய தகுந்த பல கருத்துகளை விரிவாக அறிவுறுத்தும் ஆராய்ச்சிக் குறிப்புகளொடு மீள்பதிப்புச் செய்யக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் விரும்பியது. கொழும்புப் பல்கலைக் சழகத் தமிழ்த்துறைச் சிரேட்ட விரிவுரையாளர் கலாநிதி பொ. பூலோகசிங்கம் அவர்கள் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றற்காக அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளை எழுதி உதவினுர், ஆராய்ச்சிக் குறிப்புகள் பயனும் விரிவும் உள்ளனவாக இருந்தமையால் நூலைப் பாகம் பாக மாக வெளியிடச் சங்கம் தீர்மானித்தது.
சங்கத்தின் முயற்சியினுல் ஆராய்ச்சிக் குறிப்புகளொடு பாவலர் சரித்திர தீபக முதற்பாகம் 1975ஆம் ஆண்டில் வெளியாகியது. அதன் இரண்டாம் பாகம் இப்பொழுது வெளிவருகின்றது. இவ் இரண்டாம்பாக ஆராய்ச்சிக் குறிப்புகளை எழுதியும் அச்சுப் படி வங்களைப் பார்வையிட்டும் உதவியமைக்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கலாநிதி. பொ. பூலோகசிங்கம் அவர்களுக்கு மிக்க நன்றி யைத் தெரிவிக்கின்றது. அச்சுப்பதிவு முறை இவ் இரண்டாம் பாகத் திற் சிறப்பாக அமைந்தமை மகிழ்ச்சிக்கு உரியது. இந்நூல் சிறப்பாக வெளிவர உதவிய சுன்னகம் திருமகள் அழுத்தக உரிமையாளர் திரு. ச. க. பொன்னம்பலம் அவர்களுக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் மிக்க நன்றியத்ை தெரிவிக்கின்றது.

Page 5
Vi
தமிழ்மொழி வளர்ச்சிக்காகத் தமிழறிஞர்களின் முயற்சியினல் 1942ஆம் ஆண்டிற் கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஆரம்பமாகியது. அன்றுமுதல் பயன்தரு பணிகளை இச்சங்கம் செய்து வருகிறது. மேலும் பயன்தரு பல்துறைத் தமிழ் வளர்ச்சிப் பணிகளைச் செய் தற்குச் சங்கம் திட்டமிட்டுள்ளது. சங்கத்தின் தமிழ்ப்பணிகள் அனைத்தும் நிறைவேறு தற்குத் தமிழ் கூறும் நல்லுலகின் நல்லாதர வைக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வேண்டுகின்றது.
* வாழ்க தமிழ்மொழி வாழ்க நிரந்தரம்
வாழிய வாழிய வே." -LTT8um tř.
கலாநிதி க. செ. நடராசா க. இ. க. கந்தசுவாமி
தலைவர் பொதுச் செயலாளர்,
கொழும்புத் தமிழ்ச்சங்கம்
செயலகம்; 7, 57ஆம் ஒழுங்கை, கொழும்பு-6. 1 - 1 0-1979.

உள்ளடக்கம்
வெளியீட்டுரை கச்சபாலய ஐயர் கச்சியப்பர்
கச்சியப்ப முனிவர் 够资剑
கடவுள் மகாமுனிவர் 4x4 கடிகைமுத்துப் புலவர்
கணபதி ஐயர்
கணபதிக் குருக்கள்
கணபதி தாசர்
கண்ணுடைய வள்ளல்
கதிரவேற் கவிராயர்
கதிரேசுப் புலவர்
கந்தப்பிள்ளை
கந்தப்பையர்
கபிலதேவர்
הע$6 ו 9)
siste urf a கருணை ஐயர்
கருணைப்பிரகாச தேசிகர்
கருணையானந்த சுவாமி
கல்லா.ர்
கவிராச பண்டிதர் e y Y கவுணியர் & Awd களத்தூர்க் கிழார்
ö6ሀr ööFt ፡trዚና6h äm
காக்கைபாடினியார்'
காங்கேயர்
கவிநாதப்புலவர் as காசிவிசுவநாத முதலியார்
காரிக்கண்ணனர்
சு ஆம் காரியார்
உஆம் காரியார்
காரைக்காலம்மையார்
கார்த்திகேய ஐயர்
காளமேகம் 歌● 兹 காளிமுத்துப் புலவர் we கிருஷ்ஃணயர்
diab
V
09
l

Page 6
viii
கீரந்தையார்
குகை நமச்சிவாயர் OM O குணசாகரர் محمدبر
குணவீர பண்டிதர் குமரகுருபரதம்பிரான் o குமரகுருபர தேசிகர்
குமாரகுலசிங்க முதலியார்
குமாரசிங்க முதலியார்
குமாரசுவாமி தேசிகர் குமாரசுவாமிப் புலவர் o குமாரசுவாமி முதலியார் குருபாததாசர் y குலசேகரபாண்டியன்
குலசேகரப்பெருமாள் குலபதி நாயனர் ood குலோத்துங்க சோழன்
கூழங்கைத்தம்பிரான்
கொங்கணர் - கொடிஞாழன் மாணிபூதஞர்
கோதமனர்
கோபாலகிருஷ்ணதாசர்
கோபாலகிருஷ்ணையர் கோரக்கநாதர் ł we கோவூர்க்கிழார் SODO கோனேரியப்ப முதலியார் Ο சங்கரநமச்சிவாயர் -- W a சங்கரபண்டிதர் 0 at isgr rrafntinuri
சட்டைமுனி
சண்பகவடிவி
சண்முகச் சட்டம்பியார்
சண்முகஞானியார்
சத்திமுத்தப் புலவர்
சந்திரசேகரகவிராச பண்டிதர்
சந்திரசேகர பண்டிதர்
சந்திரசேகரமுதலியார்
சபாபதி முதலியார்
சமண முனிவர்
பக்கம்
2
3
1 14
9
丑24
24
25
26
27
27
30
31
32
134
I35
丑36
41
互42
43
145
43
45
46
47
48 150
53
星55
I56
60
62
互62
66
夏64
69
69
72

சம்பந்தசரணலய சுவாமி சம்பந்தமூர்த்தி சம்பந்தர் guburh சரவண தேசிகர் சரவணைப்பெருமாளையர் சரவணப்பெருமாள் கவிராயர் சரவணமுத்துப் புலவர் av til a Rop u l-GvGauri சவாதுப்புலவர் சவுந்தரநாயகம்பிள்ளை சாத்தனர் சாஸ்திரம்ஜயர் சாந்தகவிராயர் சாந்தலிங்க கவிராயர் சாந்தலிங்க தேசிகர் சாமிநாதபிள்ளை சிதம்பர தேசிகர் சிதம்பரப்பிள்ளை சித்துப் புலவர் சிவஞான தேசிகர் சிவஞான முனிவர் சிவபுரம்பிள்ளை சிவப்பிரகாச சுவாமிகள் சிவவாக்கியர் சிவாக்கிரயோகியர் சிறீநிவாச ஐயங்கார் சிறுமேதாவியார் சிற்றம்பலப் புலவர் சிஸ்றம்பல முதலியார் " . கணக்குட்டிப் புலவர் சின்னத்தம்பி சின்னத்தம்பிப் புலவர் ’க் கலைச்சாத்தனர்
" b) lau Prévoasrto "hsböréscspruf obseph சுப்பிரதீபக் கவிராயர் கப்பிரமணிய ஐயரி
se
。229,
fi 65b
179
73
77 179
83
80
84
፲ 87
188
90
9.
193
93
194
195
96
Ι99
99
2O2
203
204
207
2丑4 215. 222 224
226
226 227 227
228 23五
232
237
239 239, 240
驾44
244

Page 7
tu 5;ub
சுப்பிரமணிய தம்பிரான் e ve v 245 சுப்பிரமணிய தேசிகர் 2 ۔۔۔ ۔۔ a 6 சுப்பிரமணிய பண்டிதர் - - - 250 சுப்பிரமணிய முனிவர் ●廖冷 246 சுப்பிரமணிய வேதியர் 8 &48一 சுப்பையர் .. 250, 251 சுவாமிநாத தேசிகர் Og w 253 சுவாமிநாதர் 260 258 ... ۔ சுவாம்பிள்ளைப் புலவர் 88 260 சூடிக்கொடுத்த நாச்சியார் 26 செகராசசேகரன் 88 263 செங்குன்றுர்க்கிழார் 8 we 268 செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனூர் 268 சேக்கிழார் - ... 269 சேந்தனர் 8 273 சேரமான்பெருமான் a 275 சேஞதிராய முதலியார் 8 was ፵77 சேனமலையர் * r. w 280 சேணுவரையர் ... 28 சொக்கநாதப் புலவர் 28 ஞானக் கூத்தர் d 4 285 ஞானப்பிரகாச தேசிகர் is 286 தட்சணுமூர்த்தி 8 W. 289 தண்டியாசிரியர் 290 . தத்துவப்பிரகாசர் : A 293 தத்துவராயர் s 294 தன்வந்திரி w 298 தாண்டவமூர்த்தி 象 邸 > 299 srsi laptru (upgoslurrit 80gs «r 300 தாயுமான சுவாமி b> á 303 திருக்கடவூர் உய்யவந்ததேவஞர் 始&资 307 திருத்தேவர் so 308 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயஞர் & 34 திருப்பாணுழிவார் 8 w 35 திருப்பாற்கடனுதன் கவிராயர் sh a 36
திருமங்கையாழ்வார் 8፲ 6

ßojo otólao 7 Lurrub eaJ mrrio
திரு' நாயஞர்
திரு.சாளுவநாயனர்
திருவேங்கடசுவாமி
நிருவெங்கடையர்
y , வேற்காடு முத்தையாமுதலியார் து.ஃலநாயக சோதிஷர்
፺s! 'r ሓዐrff
தெய்வசிகாமணிப்பிள்ளை
தேரையர்
( 1.வராய சுவாமிகள் * ● ● (தணிக்குடிக்கீரஞர் se a தொடித்தலைவிழுத்தண்டிஞர் தொண்டரடிப்பொடியாழ்வார்
தொம் பிலிப்பு
தொல்காப்பியர்
பக்கம்
3 Ꭰ8
320 324 339 34夏
34罗 343 344 346
346
349
34纷
350
350
● 5 I る53

Page 8

, ബ ܗܶܳܶ d பாவலர் சரித்திர தீபகம். së FLIT6u egui. - Kachchapalaya Ayar.
காஞ்சிபுரம் வித்துவான் எனக் கூறப்படும் இப்புலவரைப் பற்றிய சரித்திரம் ஒன்றுந் தெரிந்திலது. இவர் பாடிய ஐந்து தனிப் பாக்களை மாத்திரங் கண்டிருக்கிருேம். ஐந்துஞ் சிற்றின்ப சாரத்தாற் தேங்கப் பெற்றன. விநாயகன் எனும் ஒருவன்மேல் ஒரு பெண் மோகித்த பாவனையாய் அவை பாடப்பட்டன. பாடல் மாதிரிக்காக அவற்று ளொன்றைத் தெரிவு செய்தனம். அது வருமாறு :
** அஞ்சனத்தை யணிவிழிமான் மயிலைவிநா
யகதுரைமே லாசை யாலே
நஞ்சனத்தை யும்விடுத்தா ணன்சமைத்துத்
தருமினிய நலத்த தீம்டால்
மிஞ்சனத்தை யும்வெறுத்தா ளவன்குவளைத்
தாரினையே வேண்டு கின்ருள்
கஞ்சனத்தை யலையில்வா றலையவமைத்
தானெனில் யான் கருத லென்னே."
குறிப்பு
* தமிழ் புளூராக் ' எனும் ஆங்கில நூலில் இடம்பெருத கச்ச பாலய ஐயரைப் பாவலர் சரித்திர தீபகத்திற் சதாசிவம்பிள்ளை, தனிப்பாடற்றிரட்டின் ஆதாரத்துடன் சேர்த்துக்கொண்டார். இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மனேசராக விளங்கிய பொன்னு சாமித் தேவரின் வேண்டுகோளின்படி, தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதரும் காஞ்சிபுரம் வித்துவான் கச்சபா லய ஐயரும் தொகுத்தளித்த தனிப்பாடற்றிரட்டு 1862ஆம் ஆண்டில் வெளி வந்தது. இத்தொகுப்புப் பல பதிப்புகளைக் கண்டதாகும். காஞ்சி புரம் விக் துவான் இராமசாமி நாயுடு, பேராசிரியர் கா. சுப்பிர மணியபிள்ளை முதலியோர் பொன்னுசாமித்தேவர் தொகுப்பித்த தனிப்பாடற்றிரட்டிற்கு உரை கண்டுள்ளனர். தனிப்பாடற்றிரட்டு என்ற பெயரில், வேறிரு வெளியீடுகளும் பதிப்பிக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சென்னை அரசினர் ஒலைச்சுவடி நிலையத்தின் பொறுப்பாளர் ரி. சந்திரசேகரன் 1960ஆம் ஆண்டிற் சென்னை அரசாங்கப் பதிப்பாகத் தனிப்பாடற்றிரட்டு ஒன்றினை வெளியிட் டார். பின்னர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்
1. உ. வே. சாமிநாதையர் : என் சரித்திரம், 1950, பக், 205.

Page 9
- 2 -
பதிப்புக் கழகத்தினர் சு. அ. இராமசாமிப்புலவரின் பார்வையிலே தனிப்பாடற்றிரட்டு ஒன்றினைப் பாகங்களாகப் பிரசுரித்தனர். தனிப் பாடற்றிரட்டு எனும் பெயரினைத் தாங்கும் முற்கிளந்த மூன்று தொகுப்புகளிலே பொன்னுசாமித்தேவர் தொகுப்பித்த நூலே பழமை மிக்கதும் பல பதிப்புகளைக் கண்ட பெருமை கொண்டது மாகும். இத் தொகுப்பிலே பின்வந்த பதிப்பாசிரியர்கள் புதிய பாடல்களைச் சேர்த்தும் பழைய பாடல்களை நீக்கியும் பலவாறு பதிப்பித்துள்ளனர். அமரம்பேடு இரங்கசாமி முதலியாரின் பூமகள் விலாச அச்சுக்கூடத்தில் 1895ஆம் ஆண்டு அச்சிடப்பெற்ற திருவா லங்காடு ஆறுமுகசுவாமிகள் பதிப்பினையும் 1939ஆம் ஆண்டில் வெளிவந்ததும் பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை உரையோடு கூடியதுமான பதிப்பினையும் ஒப்பிட்டு நோக்குமிடத்து முற்கிளந்த கருத்துத் தெளிவாகும். ஆறுமுகசுவாமிகள் பதிப்பிற் காணப்படும் காஞ்சிபுரம் வித்துவான் கச்சபாலய ஐயர் பாடிய ஐந்து செய்யுட் களைச் சுப்பிரமணியபிள்ளை பதிப்பிலே காணமுடியாது. பழைய பதிப்புகளிலே காணப்பெற்ற கச்சபா லய ஐயரின் ஐந்து பாடல் களில், மூன்ரும் பாடலைச் சதாசிவம்பிள்ளை எடுத்தாண்டுள்ளார்.
காஞ்சிபுரம் வித்துவான் கச்சபா லய ஐயர் பத்தொன்பதாம் நூற் முண்டின் நடுப்பகுதியிலே வாழ்ந்தவர். இவர் வல்லூர் தேவராச பிள்ளை பேரால் 1856ஆம் ஆண்டில் வெளிவந்த சூதசங்கிதைப் பதிப் புக்குச் சாற்றுகவி வழங்கியுள்ளார்.
கச்சியப்பர்.-Kachchiappa.
இவர் தொண்டை மண்டலத்துள்ள காஞ்சிபுரத்திலே, ஆதி சைவப் பிராமணர் குலத்திலே, அவதாரஞ் செய்தார். இவர் பிதா வுக்குக் காளத்தியப்பசிவாசாரியர் என்று பேர். ஐந்தாம் வயசிலே இவர் வித்தியாரம்பஞ் செய்து, ஏழாம் வயசிலே உபநயணந் தரித் துத், தமிழ், சமஸ்கிருதம் என்னும் இரு பாஷைகளையும் நன்கு கற்று, இலக்கண இலக்கிய வேதவேதாந்தங்களில் வல்ல பண்டித ராகிச், சுப்பிரமணிய ஸ்தானமாகிய குமரகோட்டத்திற்குப் பூசகரு மாயினர். வாய்மை, அருள், பொறை யாதியாஞ் சுகுண பூஷணம் பூண்ட இம் மகானே; தமிழ் நாடெங்குஞ் செறிந்திருக்கும் சைவர் பத்தி விசுவாசத்தோடு பூசித்துக் கொண்டாடுவதும் பதினெண் புராணங்களுள் ஒன்ருனதுமாகிய கந்தபுராணத்துக்கு ஆக்கியோன். ஆரிய பாஷையிலுள்ள சனற்குமாரசங்கிதை, சூதசங்கிதை, பிரம சங்கிதை, விட்டுணு சங்கிதை, சங்கரசங்கிதை, சூரசங்கிதை என்னும் ஆறு சங்கிதைகளுளொன்ரும் சங்கரசங்கிதையின் பன்னிரு கண்டங் களுள் முதலாவதும், பதின்மூவாயிரங் கிரந்த முடையதுமான

س-.3 جسم۔
சிவரகசிய கண்டத்தின் ஆறு காண்டங்களையும், இப் புராணம் அடக்குகின்றது. 'திகட சக்கரச் செம்முக மைந்துளான் ' என்று கந்தசுவாமியே அடியெடுத்துக் கொடுக்கத் தினந்தம் நூறு விருத் தங்களாக, கoாசசு விருத்தங்களையும் பாடி முடித்தனர்' என்ப. பாடும் பாட்டுக்களை நாடோறும் இராத்திரி காலத்தில், எழுத்தாணி யுடனே கோயிலுக்குள்ளே வைத்துச் செல்லச், சுவாமி அவற்றைத் திருத்தி வைப்பாராம்.
இவ்வாறு பாடித் திருத்தம்பெற்ற அப்புராணத்தை அரங் கேற்றற் பொருட்டுக் குமரகோட்டத்தின் கண்ணே, அரசர்கள், பிரபுக்கள், தேவார திருவாசகங்களில் வல்ல பெரியோர்கள், வேத பண்டிதர்கள், இலக்கண இலக்கிய விற்பன்னர்கள் கூடிய மகா சபையிற் கச்சியப்பர் அதன் காப்பு விருத்தத்தைப் படித்துப் பொருள் கூறலும், திகழ் + தசக்கரம், திகடசக்கரம் எனப் புணர்ந்ததற்கு இலக்கண விதியேது? தொல்காப்பிய மாதிய நூல்களிற் காண்கி லேமே !! விதி கூழுதிருப்பின், அரங்கேற்ற விடோமென்று சபை யாரி லொருவர் ஆட்சேபிக்க, இவர் உத்தரமாய், ** இம் முதலடி என் வாக்கன்று, சங்கப் புலவராகிய சுப்பிரமணியக் கடவுளது திருவாக்கு, அவரே எனக்கு இவ்வடியெடுத்துத் தந்தருளினர் ‘’ எனப், புலவர் ஒப்புக்கொள்ளாமையால் அவ்வரங்கேற்றம் அம் மாத்திரத்தில் அன்று நின்றுவிட, மற்றைநாள் ஆச்சரியமான வித மாய் ஓர் புலவர் சோழமண்டலத்திலிருந்து வீரசோழியத்தைக் கொண்டு வந்தார் என்பதும், சந்திப்படலத்திற் பதினெட்டாஞ் செய்யுளிலே, அப்புணர்ச்சிக்கு விதி கண்டு சபையார் திருத்தியுற்ருர் என்பதும் பரம்பரை. அதுமுதல் ஒரு வருடமாய்க் கச்சியப்பர் அப் புராணத்தைக் கிரமப்படி படித்துப் பொருள் சொல்லிய பின்னர் அரங்கேற்றம் முற்றுப்பெற்றது. புராண அரங்கேற்றத்துக்கு வந்தார் யாவர்க்கும் அங்குள்ள இருபத்து நான்கு கோட்டத்து வேளாளரே விருந்தூட்டி உபசாரஞ் செய்தனர். இப்புராண அரங்கேற்றத்தின் பேரில்,
வேதமொடு வேதாங்கம். பயின்று வல்லோன்
விரிந்தசிவா கமமுணர்ந்து மேன்மை பூண்டோன் போதநிறை சிவமறையோன் காஞ்சி வாழும் புனிதமிகு கச்சியப்ப குரவ னனேன் வாதமுறு புலவர்குழாம் மகிழ்ந்து போற்ற
மதிமலிமா டம்புடைசூழ் குமர கோட்டத் தேதமறு சகாப்தமெழு நூற்றின் மேலாய்
இலகுகந்த புராணமரங் கேற்றி னனே." என்று ஒரு வித்துவான் பாடினர். AV

Page 10
- 4.
**அந்தப் புரமு மறுநான்கு கோட்டகத் தாருமொன்ருய்க்
கந்தப் புராணம் பதின யிரஞ்சொன்ன கச்சியப்பர் தந்தப்பல் லக்குச் சிவிகையுந் தாங்கியச் சந்நிதிக்கே வந்தப் புராண மரங்கேற்றினர்தொண்டை மண்டலமே.”*
என்று படிக்க்ாசுப் புலவர் சொற்றனர்.
** வேதவே தாந்த மாகம தரும
நூலதாம் விரிந்திடு புராணம் - போதமார் முனிவ ரிசைத்திடு புராண மிருதிகள் சங்கிதை பொருந்து நாதமார் சடங்கம் ஸ்மிர்திகள் பிறவு நன்குணர் கச்சிமா முனிவ்ன் ஏதமில் சகாப்த மேழெனு நூற்றிற்
காந்தத்தைத் தமிழின லிசைத் தான்.'" என்று பரசிராம முதலியார் செய்த கந்தபுராண வாசகத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. கந்தபுராணஞ் செம்பாகமான உத்தம பாடலாயினும் பொருட்புதைவும், பொருண்மலைவும், ஆழமும், வர்ணனையும் மிகுதி ! மிகுதி ! இப்பெருங் காப்பியம் ஒன்றையே அன்றி வேறு பாடல்களை இவர் பாடியிருப்பதாய்க் காணுேம். இப் புராணத்தை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலரும் பிறரும் அச்சிட்டுப் பிரசுரித்தனர். இதில் ஆறு காண்டங்களுள. அவை முறையே, உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண் டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தகூடி காண்டம் என்பன. இவற்றைச் சேர்ந்ததாய் உபதேச காண்டம் ஒன்றிருப்பினும் அதனைக் கச்சியப்பர் பாடினரல்லர். கோனேரியப்ப முதலியார் என்னும் ஒருவர் அதனைப் பிற்காலத்துத் தமிழில் அருளிச்செய்தார். கந்தபுராணத்தைப் பரசிராம முதலியார் என்பார் சுமார் முப்பது வருஷங்களின் முன் வசனநடையிலே திருப்பினர். இவற்றை அவரவர் சரிதங்களிற் காண்க. பாடன் மாதிரிக்காகக் கடவுள் வாழ்த்து
- ம் விருத்தத்தைத் தருகின்ருேம். *
"திருவந்த தொல்லைப் புவனத்தொடு தேவர் போற்றிப்
பெருவந் தனைசெய் தறிதற்கரும் பெற்றி யெய்தி அருவந் தனையு முருவத்தையு மன்றி நின்றன் ஒருவன் றணது பதந்தன்னை யுளத்துள் வைப்பாம்."
இப்புலவர் இருந்த காலம் இற்றைக்கு முன்பின் ஆயிரத்தொரு நூறு வருடங்களின் முன்னகும்: ‘ஏதமில் சகாப்த மேழெனு நூற் றில்’ என்றது திருட்டாந்தமாகும். சகாப்தம் எ00= கி. பி. எஏஅ.

----س، 5 س--
குறிப்பு
கச்சியப்பசிவாசாரியர் காஞ்சிபுரம் ஏகாம்பேஸ்வரர் கோயிற் பூசகர் என்றும், கந்தபுராணத்தின் ஆறு காண்டங்களிலே 13,305 பாடல்களுள என்றும் ‘தமிழ் புளூராக்' ஆசிரியர் கூறுவன பொருத்த மாகத் தெரியவில்லை. ஆறுமுகநாவலர் சென்னை வர்த்தமான தரங்கிணி சாகை யச்சுக்கூடத்திற் சுக்கிலளுல சித்திரைமீ (1869) கந்தபுராணத்தைப் பதிப்பித்தார். இப் பதிப்பிலே நாவலரவர்கள் சிவபுராணபடனவிதி, கச்சியப்பசிவாசாரிய சுவாமிகள் சரித்திரச் சுருக்கம் என்பனவற்றையும் எழுதிச் சேர்த்துள்ளார். சதாசிவம் பிள்ளை தரும் கச்சியப்பர் வரலாறு நாவலரவர்களின் சரித்திரச் சுருக்கத்தினைத் தழுவி அமைக்கப்பட்டது என்று கருத இடமுண்டு. கந்தபுராண அரங்கேற்றத்தின் பேரில் ஒரு வித்துவான் பாடிய தாகச் சதாசிவம்பிள்ளை தரும் பாடலும் படிக்காசுப்புலவர் பாடலாக அவர் தரும் பாடலும் நாவலரவர்கள் பதிப்பில் எடுத்தாளப்படு வனவாம். படிக்காசுப்புலவர் பாடல் தொண்டை மண்டல சதகத்திற்குரியதாகும் (செய்யுள் 87).
சதாசிவம்பிள்ளை, தாம் குறிப்பிட்ட ஆரிய பாஷையிலுள்ள ஆறு சங்கிதைகளும் காந்தபுராணத்திற்குரியவை என்றும் சிவ ரகசிய கண்டத்தில் ஏழு காண்டங்களுள என்றும் குறிப்பிட்டிருத்தல் சாலும். சதாசிவம்பிள்ளை கந்தபுராணத்திலே 10,346 விருத்தங்க ளுள என்று ஆறுமுகநாவலரைப் பின்பற்றிக் கூறுகின்ருர், ஆயி னும் திருப்பனந்தாள் காசிமடத்தின் பதிப்பாக 1952 - 1953ஆம் ஆண்டுகளில் வெளிவந்த கந்தபுராணப் பதிப்பிலே 10,345 விருத் தங்களே காணப்படுகின்றன. பரசிராம முதலியார் சரிதத்திற் சதா சிவம்பிள்ளை கந்தபுராண வாசகம் பற்றித் தாம் குறிப்பிடுவதாக ஈண்டு கூறியபோதும் பரசிராமக் கவிராயர் சரிதத்தில் அந்நூலைப் பற்றி யாதும் கூருமல் விட்டுவிட்டார். கோனேரியப்ப முதலியார் சரித்திரத்தில் உபதேச காண்டம் பற்றி அவர் குறிப்பிடத் தவற
கச்சியப்பசிவாசாரியர் காலத்தினைக் குறிப்பிடுவதாகக் கந்த புராண வாசகத்திலிருந்து 'தமிழ் புளூராக் ஆசிரியர் எடுத்தாண்ட செய்யுளைச் சதாசிவம்பிள்ளையும் கால நிரூபணத்திற்குப் பயன் படுத்தியுள்ளார். கச்சியப்ப சிவாசாரியரின் காலம் கி. பி. எட்டாம் நூற்றண்டு என்று கூறல் பொருத்தமின்று; ஏனெனில், அவர் எட் டாம் நூற்ருண்டிற்குப் பின்னர் வாழ்ந்த மாணிக்க வரக iւն பாடியுள்ளார் (கடவுள் வாழ்த்து, 23). சகாப்தம் కథ ச. வையாபுரிப்பிள்ளை கொல்லம் ஆண்டெனக் கருதி *பதிஞரும்

Page 11
سی۔ 6 حساس۔
நூற்ருண்டிலே (700 + 825 க 1525) கந்தபுராணம் இயற்றப்பட்ட தாகக் கூறினர் 1. திருநெல்வேலிப் பகுதியில் வழங்கும் கொல்ல மாண்டினைக் காஞ்சிபுரத்தில் இயற்றப்பெற்ற நூலுக்குக் கொள்வது பொருத்தமாகத் தெரியவில்லை. தமிழ் நாவலர் சரிதையிற் கந்த புராணம் கச்சியப்பர் என்பவர் அந்தகக்கவி வீரராகவ முதலியாரைப் போற்றிப் பாடியதாக வழங்கும் செய்யுளை (241) ஆதாரமாகக் கொண்டு, சிலர் கந்தபுராண ஆசிரியர் பதினேழாம் நூற்றண்டில் வாழ்ந்த அந்தகக்கவி வீரராகவ முதலியார் காலத்தவர் என்பர்?. கந்தபுராணம் கச்சியப்பர் என்பவர்தாம், கந்தபுராணம் பாடிய கச்சியப்பசிவாசாரியர் என்று துணிவதற்குச் சான்றுகளில்லை; அவர் கந்தபுராண பிரசங்கியாகவும் இருக்கலாம். 'திகட சக்கரம்' என்ற தொடரின் புணர்ச்சி பற்றித் தோன்றிய கதை, கந்தபுராணம் வீரசோழியத்திற்குப் பின்பு இயற்றப்பட்டது என்ற கருத்தினைத் தோற்றுவிக்கின்றது. இப் புணர்ச்சி இடம்பெற்ற "முகிடரும்", "திகடரும்’ எனும் தொடர்கள் திருஞானசம்பந்தர் திருப்பாட லிலே காணப்படுகின்றன (3.86.10). −a
கச்சியப்ப சிவாசாரியரைப் பதினேழாம் நூற்றண்டினரான சம்பந்தசரணுலய முனிவர் (கந்தபுராணச் சுருக்கம்), படிக்காசுப் புலவர் (தொண்டை மண்டல சதகம்) போன்ருேர் போற்றியுள்ள னர். உபதேச காண்டத்தின் ஆசிரியர் ஞானவரோதயர்,
**காஞ்சிவளர் கச்சியப்பக் கற்பகத் தாருவை
இறைஞ்சிக் கருத்துள் வைப்பாம்.'
என்பர் ( கடவுள் வாழ்த்து, 13). தமிழ் நாவலர் சரிதையில், "ஞானவரோதயர் மதுரைக்குப் போனபோது காளமேகம் எழுதி யனுப்பின கவிதை' என்ற குறிப்புடன் செய்யுளொன்று (203) இடம்பெறுகின்றது. காளமேகப் புலவராற் போற்றப்பட்ட ஞான வரோதயர் உபதேச காண்டத்தின் ஆசிரியராக இருக்கலாம். காள மேகப் புலவர் கி. பி. பதினைந்தாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். உபதேச காண்டத்தில் ஞானவரோதயர் வயலூரில் உபதேசம் பெற்ற வொருவரை “எந்தை” என்று போற்றுகிருர் (கடவுள் வாழ்த்து, 6). ஈண்டு போற்றப்பட்டவர் அருணகிரிநாத ராகலாம். திருப்புகழில் இடம்பெறும் மேல்வரும் பகுதிகள் (சைவ சித்தாந்த மகா சமாஜப் பதிப்பு, செய். 525, 793) கந்தபுராண அரங்கேற்றத்தோடு தொடர்புடையன வாகலாம்:
1. தமிழ் இலக்கிய சரிதத்தில் காவியகாலம், 1987, பக். 91.
2. Tamil plutarch, Second Edition, 1946, Note by T. P. Meenakshisun
daram, p. 37.

- 7 -
"மருவு புலவனர் கவிக்கு ளேசிறு
வழுவ தறைமகா சபைக்கு ளேகியே வகைய பெயரதா இலக்களுவிதி மொழிவோனே"
""முற்பட்ட இலக்கண நூலிடை தப்புற்ற கவிக்கென வேஅவை முற்பட்டு புதுத்துறை மாறிய புலவோனே' அவ்வாருயின் பதினைந்தாம் நூற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அருணகிரிநாதருக்கு முற்பட்டவர் கச்சியப்பசிவாசாரியர். கந்த புராணத்தில் இடம்பெறும் சைவசித்தாந்தக் கருத்துக்களை நோக்கு பவர் கச்சியப்பசிவாசாரியரின் காலம் பதின்மூன்ரும் நூற்றண் டிற்கு முற்பட்டதாகாது என்பதை உணர்வர். எனவே கச்சியப்ப சிவா சாரியரின் காலம் கி. பி. பதின்மூன்ரும் நூற்றண்டிற்கும் பதினைந்தாம் நூற்ருண்டிற்கும் இடைப்பட்ட காலமாதல் வேண்டும்.
சிதம்பரம் கண் கட்டி மடம் மறைஞான தேசிகர் மரபில் வந்த வாமதேவ முருக பட்டாரகர் 173 பாடல்களைக் கொண்ட புராண மாகக் கச்சியப்ப சிவாசாரியரின் சரிதத்தைப் பாடினர். அப்புரா ணம் 1917ஆம் ஆண்டில் அச்சிடப்பெற்றது.
கந்தபுராணத்திற்குத் திருவோத்தூர் ம. தி. பானுதவி பொழிப் புரை கண்டார். ஈழத்தவர் பலர் கந்தபுராணத்திற்கு உரையெழு தும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்றனர். தும்பளை ச. சுப்பிரமணிய சாஸ்திரிகள் உற்பத்தி, அசுர, மகேந்திர காண்டங்களுக்கு உரை கண்டவர். இம் மூன்று காண்டங்களின் உரைகளும் முறையே 1926, 1928, 1929 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் பதிப்பு நிலையினை அடைந் தன. சுப்பிரமணிய சாஸ்திரிகள் யுத்த காண்டத்திற்கும் உர்ை யெழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். யுத்தகாண்டத்தின் முதலிரு படலங்களுக்கும் மூன்றும் படலமாகிய முதனுட் பானுகோபன் யுத்தப் படலப் பகுதிக்கும் அவர் இயற்றிய உரை முதலாஞ் சஞ் சிகையாக வெளிவந்தது. யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையார் கந்தபுராணம் முழுவதையும் உரையுடன் வெளியிடும் நோக்கத் துடன் முந்நூறு பாடல்களைக் கொண்ட முதலாவது சஞ்சிகையை வித்துவான் ந. சுப்பையபிள்ளை யுரையுடன் 1964ஆம் ஆண்டு வெளி யிட்டனர்; ஏனைய சஞ்சிகைகள் தொடர்ந்தமை அறியுமாறில்லை. அசுர காண்டத்தின் மார்க்கண்டேய படலத்திற்குச் சாவகச்சேரி ச. பொன்னம்பலபிள்ளையும் அண்டகோசப் படலத்திற்கு வல்வை ச. வயித்தியலிங்கபிள்ளை, கந்தரோடை வி. சிவசுப்பிரமணியையர் (1884) ஆகியோரும் உரையியற்றியுள்ளனர். மகேந்திர காண்டத் திற்குக் காரைதீவு கா. சிவசிதம்பரஐயர் உரையெழுதியுள்ளார். சுழிபுரம் க. கார்த்திகேசு யோகியார் யுத்த காண்டத்தின் சிங்க முகாசுரன் வதைப்படலம் முதல் மீட்சிப்படலம் வரை கண்ட உரை 1971ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலைப்புலோலி வே. சிதம்பரப்

Page 12
- 8 അ
பிள்ளை யுத்த காண்டத்தின் சூரபன்மன்வதைப் படலத்திற்கு இயற் றிய உரை 1938ஆம் ஆண்டில் வெளிவந்தது. வல்வை ச. வைத்திய லிங்கபிள்ளை சூரபன்மன்வதைப் படலத்திற்கு இயற்றியவுரை முற் றுப்பெறவில்லை என்பர் ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம் தந்த வித்துவான் சி. கணேசையர். தேவ காண்டத்தின் தெய்வயானை திருமணப் படலத்திற்கு வல்வை ச. வயித்தியலிங்கபிள்ளை உரை யுண்டு. தகூடி காண்டத்தின் வள்ளியம்மை திருமணப்படலத்திற்கு வல்வை ச. வயித்தியலிங்கபிள்ளை, உடுப்பிட்டி அ. சிவசம்புப்புலவர் (1901), பூரீநிவாஸ சிவசர்மா சோமசுந்தரேச சிவாசாரியர் (1930) முதலியோர் உரைகண்டுள்ளனர். கந்த விரதப் படலத்திற்கு நவிண் டில் சு. சிவாநந்ததேசிகர் கண்டவுரை சார் வரிஞர் மாசிமீ (1901) வெளிவந்தது. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை தக்ஷகாண்டத்திற்கு இயற்றிய உரையினை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை இந்து மாணவர் சங்கத்தினர் 1967ஆம் ஆண்டு வெளியிட்டனர். நவாலியூர் வை. நல்லையா கந்தபுராணம் முழுவதற்கும் உரை யெழுதி முற்றுவித்துள்ளார்.
毒
கோவிந்தப்ப முதலியார் குமாரர் பரசிராம முதலியார் கந்த புராண வசனத்தைப் பாகங்களாக எழுதி வெளியிட்டார். அவர் எழுதிய ‘கந்தர் புராண வாசகம்’ எனும் நூலின் ‘மூன்ருவது பொஸ்தகம் 1846ஆம் ஆண்டு வெளிவந்தது. ஆறுமுகநாவலர் அசுரகாண்டம் அசுரயாகப் படலம் வரையும் எழுதிய கந்தபுராண வசனத்தைத் துன்மதிடு) ஆவணிமீ (1861) சென்னை வாணி நிகேதன அச்சுக்கூடத்திற் பதிப்பித்தார். சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலைத் தருமபரிபாலகர் கோப்பாய் ச. பொன்னம்பல பிள்ளை நாவலரவர்கள் எழுதாமல் விட்ட எஞ்சிய பகுதிகளை எழுதி, நாவலரவர்கள் முன்னர் பதிப்பித்த பகுதியுடன் இணைத்துச் சாதா ரணடு பங்குனிமீ (1911) அச்சிட்டார். ஜகனதட்பிள்ளையும் (1889), திருமயிலை சண்முகம்பிள்ளையும் (1890) கந்த புராணத்தினை வசனநடையில் இயற்றியுள்ளதாக அறிகிருேம் 1. 戟
சம்பந்த சரணலய சுவாமிகள் கந்தபுராணத்தினைப் பதினேழாம் நூற்றண்டில் 1048 பாடல்களிலே சுருக்கிப் பாடியுள்ளார். அந் நூல் கந்தபுராணச் சுருக்கம் என வழங்குகின்றது. ஆனஐயர் எனவும் கவிக்குஞ்சர பாரதி எனவும் வழங்கும் பெருங்கரை கோடீசுர பாரதி (1810 - 1896) கந்தபுராணக் கீர்த்தனை பாடியுள்ளார்?. முத்துக்குமாரதாசர் பாடிய கந்தபுராண சதகம் எனும் நூலின் இயல்புகள் தெரியவில்லை8.
1. மயில் சீனி. வேங்கடசாமி : பத்தொன்பதாம் நூற்குண்டில் தமிழ் இலக்கியம், 1963, பக்கம்
.899 -ܝ 598
2. ந. சி. கந்தையாபின்னே: தமிழ்ப்புலவர் அகாதி, 1940, பக். 106.
. ந. வீ. செயராமன் : சதக இலக்கியங்கள். 1999, பக். 192- 181.

- 9 - së Sutju (Ly6jitali. - Kachchiappa. Munivar.
இவர் சுமார் கடுo வருஷங்களுக்கு முன்னே தொண்டை மண் டலத்திலே, திருத்தணிகையெணு மூரிலே, காஞ்சிபுரப் பரம்பரை வேளாளர் குலத்திலே, அபிஷிக்தர் மரபிலே பிறந்தவர். பாலியப் பிராயத்திலே வித்தியாரம்பஞ் செய்து, ஸ்தல யாத்திரையிற் காத லுற்றவராய்த் தொண்டை நாட்டிலுள்ள பல தலங்களையுந் தரி சித்துக்கொண்டு சிதம்பரத்துக்குச் சென்று, திருவாவடுதுறைக்கு ஏகி, அங்கிருந்த சிரேட்ட தம்பிரான் நமச்சிவாய மூர்த்தியைக் கண்டு அவரது அனுக்கிரகத்தோடு சின்னப்பட்டத்தில் இருந்த பின் வேலப்பதேசிகர் தீட்சை வைக்கப்பெற்று, அவரது மாணவகருட் சிரேட்டரும் திராவிட மகாபா ஷிய கர்த்தருமாகிய சிவஞான யோகீஸ்பரரைத் தமக்கு ஆசிரியராக்கி, அவரிடம் இலக்கணம், இலக்கியம், தருக்கம், பதிசாத்திரம் ஆதியவற்றிற் பாடங்கேட்டு வித்துவான் என்னும் பெரும் பேர் தாங்கினர். சிவஞானயோகீஸ் பரரிடம் பாடங்கேட்டார் எவர்க்கும் இவர் கிரீடமொப்பர். சென் னப்பன் பட்டினமென்று அழைக்கப்படுஞ் சென்னைபுரிக்கு இவர் போயிருந்தபோது, அங்குள்ளார் வேண்டுகோளின்படி, விநாயக புராணம், சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ் எனும் இரு கிரந் தங்கள் இயற்றி, அவர்கள் பரிசளித்த வராகன் ஈராயிரத்தாற் திருவரிவடுதுறையில் ஒரு சந்நிதி மண்டபப் பணி முற்றுவித்தனர். இவர் விநாயக புராணத்தை அரங்கேற்ற ஆரம்பித்தபோது, ஐயாப்பிள்ளை என்னும் ஒரு பிரபு அதற்கு வரப் பின்னிட்டு, நாம் இதற்குச் செல்ல இதென்ன இராமாயணமா என்று அவமதித்தத ஞல், இவர் அவ்வரங்கேற்றத்துக்கு முன்னர் இராமாயணத்திலே ஆறு ப்ாட்டில் நூறு குற்றங் காட்ட, மேற்படி பிரபு தாம் செய்த அபராதத்திற்கு மன்னிப்புக் கேட்டுப் பாதகாணிக்கை கொடுத்துச் சமாதானமாயினர்.
இவரது ஆசிரியராகிய சிவஞானயோகீஸ்வரர் காஞ்சியிலிருந்த போது அங்குள்ள வித்துவான்கள், அவர் இயற்றிய காஞ்சி மான் மியத்திற் துதிகவிகளை நிரை தவறி வைத்தாரென்று அவரிற் குற் றம் பாரிக்க, அவர் தம் சீஷராகிய இவர்க்கு அவ்விருத்தாந்தம் தெரியப்படுத்த, உடனே இவர் அங்கே சென்று விரோதிகள் தொடுத்த ஆட்சேபங்களைச் சண்டமாருத முன்னிலையிற் சிறு பூனை போலப் பறக்க அடித்துத் தம் ஆசிரியர் புகழோடு தம்புகழையும் நிறுவினர். பின்னர் இவர் காஞ்சியிற்முனே தங்கித் தம் வித்தியா குரவரது வேண்டுகோளின்படி காஞ்சிப்புராணம், 2-ம் காண்டத்தை இயற்றினரன்றிக் கச்சியானந்தருத்திரேசர் வண்டுவிடுதூது, கச்சி யானந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதி, பஞ்சாக்கா~தேர்தீஷ்

Page 13
---- 10 ---
யெனும் மூன்று பிரபந்தங்களையும் பாடிப் பின்னும் பெரும் புகழ் பெற்றுச் சாலிவாகன சகாப்தம் அஎகe க்குச் சரியான சாதாரணளு) சித்திரைமீ" கக வ. தே கவியோகமாயினர், இவர் திருவானைக்காவில் இருந்தபோது திருவானைக் காப் புராணம், பூவாளூர்ப் புராணங்களை யும், கொங்க நாட்டிலுள்ள திருப்பேரூரிலே இருந்தபோது பேரூர்ப் புராணத்தையும் மொழிபெயர்த்துப் பாடினர்.
இவர் திருத்தணிகையிற் போய் வசித்தபோது விசாகப் பெரு
மாள் ஐயர், சரவணப்பெருமாள் ஐயர் எனும் இரு பண்டிதர்களுக்
குந் தந்தையராகிய கந்தப்பையருக்கு ஆசிரியரானர். அங்கிருக்கும் போதே, சீவகசிந்தாமணிக்கு மேற்பட்ட காப்பிய முண்டா எனக் கூறி, அதில் அபிமானம் பூண்டு மருண்டிருந்தார் மனதைத் தெருட்டு தற்குத், தணிகைப் புராணமெனும் சொல்வளம் பொருள்வளம் ஓங்கிய காப்பியம் ஒன்றை இயற்றினர். இதிலே சுக படலங்களும் சு கசுக செய்யுள்களும் உள. இதனை யாழ்ப்பாணம் ம. ரா. ரா. சி. வை. தாமோதரம்பிள்ளை, வீ. ஏ., வீ. எல், பெரும் பிரயாசையெடுத்துப் பலவூர்ப் பிரதிகளைக் கொண்டு பரிசோதித்துத் திருத்திச் சுத்தமாத்க, மேற்படி ஊரிலுள்ள கொழும்புத்துறை வாசரான ம.ா. T. குமார சாமிச் செட்டியார் அச்சிடுவித்தார். இப்பாடல்களன்றித் தம் மாணவராகிய கந்தப்பையருக்குற்ற குன்மநோயைத் தணிக்கும் பொருட்டுத், தணிகையாற்றுப்படை எனும் பின்னுமோர் பாடலை யும் இயற்றினர். திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதிக்கும் இவரே ஆக்கியோனென்ப. இவர் புலவரன்றி வாசாலப் பிரவசனியுமாம். மாணவகர் பாடங்களை நெட்டுருப்பண்ணி ஆசிரியர்க்குச் சொல்லும் பாவனைபோலவும், அதிவிரைவில் ஆறுபாய்வதெனவும் கவிகளைப் பாடுந் திறமும் உடையர்.\ இவர் செய்த பாடல்களின் நாமங்கள் பின்வரும் பாட்டாலும் விளங்கும்.
**வேற்கரச்செவ் வேண்மருவுந் தணிகைமான் மியத்தமிழில் விளங்கச் செய்தான் பாற்கவ புராணமெழிற் றிருவானைக்
காவெனுஞ்சீர்ப் பதிப்பு ராணம் நாற்கயிலை சூழ்பேரூர்ப் புராணமொடு திருக்காஞ்சி நகர்ப்பு ராணம் ஏற்கவட மொழிபெயர்த்த கச்சியப்ப
முனிவனிருங் கவிஞ ரேறே. * இவரது பாடல் மாதிரிக்காகத் தணிகைப் புராணம் திருநாட்டுப் படலத்தில் க-ம் விருத்தந் தருகிருேம்.

- 1 -
'வட்டவாய்க் கமலத் தண்ணன்
மணிமுடி துளங்க வோச்சிக் குட்டிய குமரப் புத்தேள்
குலாவிய தணிகைக் குன்ற மட்டொளி மணியின் மோலி
யணிந்தெனத் தன்பாற் கொண்ட முட்டறு பாலி நாடு
முச்சகத் துயர்ந்த தொன்றே. *
குறிப்பு
"தமிழ் புளூராக்” ஆசிரியர் கச்சியப்ப முனிவரைப் பற்றிக் குறிப் பிடவில்லை. அவர் காலத்திற் கச்சியப்ப முனிவரின் நூலெதுவும் அச்சிடப்பெறவில்லைப் போலும். சதாசிவம்பிள்ளை காலத்திற் கச்சி யப்ப முனிவரின் நூல்களிற் சில பதிப்பிக்கப்பெற்றுள்ளன. இப் பதிப்புகள் சிலவற்றிற் கச்சியப்ப முனிவரின் சரிதம் இடம்பெற் மிருக்கின்றது. சி. வை. தாமோதரம்பிள்ளை சென்னை ஸ்கொட்டிஷ் பிரஸ்' எனும் அச்சகத்திற் பதிப்பித்துச் சுபானு (u) சித்திரை மீ" (1883) வெளியிட்ட தணிகைப் புராணத்திற் 'கச்சியப்ப முனிவர் சரித்திரம்’ இடம்பெறுகின்றது. சதாசிவம்பிள்ளை தரும் சரிதம் தாமோதரம்பிள்ளை தந்த சரித்திரத்தை யொட்டி அமைக்கப்பட்ட தாகத் தெரிகின்றது. கச்சியப்ப முனிவர் செய்த நூல்களின் பெயர் களைத் தரும் பாடலாகச் சதாசிவம்பிள்ளை எடுத்தாளும் பாடல் தாமோதரம்பிள்ளை பதிப்பிற் சிறப்புப்பாயிரமாகத் தரப்படுவதாகும்.
கச்சியப்ப முனிவர் நமச் சிவாய மூர்த்தியைக் கண்டு சின்னப் பட்டத்தில் இருந்த பின் வேலப்ப தேசிகரிடம் தீட்சைபெற்றவர் என்று தாமோதரம்பிள்ளையைப் பின்பற்றிச் சதாசிவம்பிள்ளை கூறி யுள்ளார். கச்சியப்ப முனிவர் பன்னிரண்டாம் பட்டத்தினரான திருச்சிற்றம்பல தேசிகர் காலத்திற் சின்னப்பட்டத்திலிருந்த கடைய நல்லூர் அம்பலவாண தேசிகரிடம் சைவ சந்நியாசமும் சிவஞானேப தேசமும் பெற்றவர். கச்சியப்ப முனிவர் கி. பி. 1790ஆம் ஆண்டு தேகவியோகமடைந்ததாகப் பழைய செய்யுளொன்று கூறுகின்றது.
பஞ்சாக்கரவந்தாதி எனச் சதாசிவம்பிள்ளை வழங்கும் பிரபந்தம் பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி என்றும் அழைக்கப்படும் 1 . கச்சியப்ப முனிவர் பிரமநகர்ப் பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதி, கச்சியானந்த (ருத்திரேசர் கழிநெடில் எனும் பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார். தணிகைப் புராணத்தினை சி. வை. தாமோதரம்பிள்ளை பரிசோதித் துத் தம் பெயரால் வெளியிடாது, குமாரசாமிச் செட்டியார் பேரால் வெளியிட்டார்.
பி. கலியபெருமாள் : அந்தாதி இலக்கியங்கள், 1967, பக். 9.

Page 14
མ་དང་གཡ-12 -ས་མ་
காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியார் 1929ஆம் ஆண்டில் வெளியிட்ட தணிகைப் புராணப் பதிப்பிலே சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங் கசுவாமிகளின் குறிப்புரை, பாலவநத்தம் பாண்டித்துரைத்தேவர் எழுதிய சிலேடைகளின் உரைக் குறிப்பு, சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்பு ஆகியன இடம்பெற்றன. தணிகைப் புராணத்தினைச் சு. பொன்னே துவஈமூர்த்திகளின் குறிப்புரையுடன் திருவாவடுதுறையாதீன வெளி யீடாகத் த. ச. மீனுட்சிசுந்தரம்பிள்ளை 1960ஆம் ஆண்டு பதிப்பித் தனர். பொன்னுேதுவார் தணிகைப் புராணத்தினை நல்லூர் வித்துவ சிரோமணி ச. பொன்னம்பலபிள்ளை, சேற்றுார் ரா. சுப்பிரமணியக் கவிராயர், திருவாவடுதுறை ஆறுமுகத்தம்பிரான் ஆகியோரிடம் பாடங்கேட்டவர். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் 1965ஆம் ஆண்டு வெளியிட்ட தணிகைப் புராணம் சோழவந்தான் கிண்ணிமடம் கந்தசாமியார் எழுதிய உரையையும் அவர் உரையெழுதாது விடுத்த பகுதிகளுக்கு செ. ரெ. இராமசாமிப்பிள்ளை, பொ. வே. சோமசுந்தரனர் எழுதிய உரைகளையும் கொண்டது. க்ந்தசாமியார் தணிகைப் புராணத் தினைச் சேற்றுார் ரா. சுப்பிரமணியக் கவிராயரிடம் பாடங் கேட்ட வர் என்பர். இணுவில் பொ. அம்பிகைடாக உபாத்தியாயர் தணி கைப் புராணத்திற்கு நக ரப்படலம் வரை உரையியற்றினர் என்பர். புரசை அட்டாவதானம் இ. சபாபதி முதலியார் தணிகை யாற்றுப்படைக்கு உரையெழுதியுள்ளார். திருத்தணிகைப் பதிற்றுப் பத்தந்தாதிக்குக் கந்தப்பையர் உரை இயற்றியதாகக் கூறுவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தினர் 1965ஆம் ஆண்டில் வெளியிட்ட தணிகைப் புராணப் பதிப் பிலே திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதிக்கு ஆ. பொன்னுசாமிப் பிள்ளை எழுதிய குறிப்புரை இடம்பெறுகின்றது.
இராமநாதபுரம் இராமசுவாமிப்பிள்ளை 1878ஆம் ஆண்டிற் காஞ்சிபுராணத்தின் இரு காண்டங்களையும், பிரமாதி ஞ) (1879) கச்சியானந்தருத்திரேசர் பதிற்றுப்பத்தந்தாதியையும் கழிநெடிலை யும் பதிப்பித்தார், புரசை அட்டாவதானம் இ. சபாபதி முதலி யார் பிரமநகர்ப் பிரமீசர் பதிற்றுப்பத்தந்தாதியை விஷ" ஞ) தநுர் மீ" (1882) வெளியிட்டார். உ. வே. சாமிநாதையர் கச்சி யானந்தருத்திரேசர் வண்டுவிடுதூதினை 1888ஆம் ஆண்டிற் பதிப் பித்தார். ـــــــــ۔ -
கச்சியப்ப முனிவர்மீது பாடப்பெற்ற நெஞ்சுவிடுதூது ஒன்று பதிப்பிக்கப்பெற்றுள்ளது. அப்பிரபந்தத்தின் ஆசிரியர் இன்னர் என்பது அறியுமாறில்லை.
1. பி. கலியபெருமாள் அந்தாதி இலக்கியங்கள், 1967, பக். 79.

- 13 - கடவுள் Los (p6faili. – Kadavul Maha Munivar.
இவர் கச்சியப்ப முனிவர் காலத்தில் இருந்த ஓர் மகான். மிக்க கல்விமானும் புலவருமாயிருந்த இவர் குரூர நோய்வாய்ப்பட்டு வருத்தம் உழந்ததைக் கச்சியப்ய் முனிவர் ஓர் தருணங் கண்ணுற் றுத், தம் உள்ளத்திற் கிளம்பிய பரிவால் இவரை நோக்கி: ஓய்! நீர் வாதவூரர் சரித்திரத்தைப் புராணமாய்ப் பாடுவீரேல் உமக் குற்ற ரோகஞ் சாந்தியாகும் என்று கூற, இவர், அவ்வாறு செய்து, நோய் நிவர்த்தி பெற்ருர் என்ப. இவர் பாடிய இப்புராணத்திலே ஏழு சுருக்கங்களும் டுசச விருத்தங்களும் உள. பாடன் மாதிரிக்காக அதன் காப்பை இவ்விடந் தரலுற்ருேம்.
“பவளமால் வரையி னிலவெறிப் பதுபோற்
பரந்தநீற் றழகுபச் சுடம்பிற் திவளமா துடணின் முடிய பரமன்
சிறுவனப் பாரதப் பெரும்போர் தவளமா மருப்பொன் ருெடித்தொரு கரத்திற்
றந்துயர் சிலைப்புறத் தெழுதும் கவளமா களிற்றின் றிருமுகம் படைத்த
கடவுளை நின்ைந்துகை தொழுவாம்.'
இப்புராணம் மாணிக்கவாசகர் எனு மறுநாமம் பெற்ற வாதவூரர் மேலது. இதற்குக் குமாரசுவாமி தேசிகர் என்பவர் உரை செய் திருக்கின்றர்.
குறிப்பு
சைமன் காசிச்செட்டி ருேயல் ஆசிய சங்கத்தின் இலங்கைக் கிளையின் சஞ்சிகையிலே (J.C. B. R. A. S. 1, 2, 63 - 83, 1846 - 1847) திருவாதவூரர் புராணத்தின் ஆரும் சருக்கத்தை ஆங்கிலத் தில் மொழிபெயர்த்து வெளியிட்ட போதும் தமிழ் புளூராக் எனும் நூலிலே கடவுண்மாமுனிவர் பற்றி யாதும் கூறவில்லை. சதா சிவம்பிள்ளை காலத்திலே திருவாதவூரர் புராணம் காஞ்சிபுரம் குமாரசுவாமி தேசிகர் உரையுடன் வெளிவந்துவிட்டது.
திருத்தணிகை கச்சியப்ப முனிவர் கி. பி. 1790ஆம் ஆண்டு சிவபரிபூரண மெய்தினர். பதினேழாம் நூற்றண்டில் வாழ்ந்த வெள்ளியம்பலவாணத் தம்பிரான் சுவாமிகள், ஞானவரண விளக் கத்தின் உரையிலே திருவாதவூரர் புராணத்தின் திருப்பெருந்துறைச் சருக்கம் 35ஆம், 36ஆம் பாடல்களை மேற்கோளாக எடுத்தாண்

Page 15
سس i4 سس
டுள்ளார். எனவே கச்சியப்ப முனிவரையும் கடவுண்மா முனி வரையும் இணைத்துக்கூறல் பொருத்தமில்லை. சிவஞான முனிவரின் மாணவகரும் கச்சியப்ப முனிவரோடு ஒருசாலை மாணவகராக விளங்கியவருமான காஞ்சிபுரம் சிதம்பர முனிவரே (சிதம்பரபத்தர்) கச்சியப்ப முனிவரின் தூண்டுதலாற் சுப்பிரமணியர் க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத்தமிழைப் பிணிகாரணமாகப் பாடியவர். காஞ்சி புரம் சிதம்பரமுனிவர் காஞ்சிகாமாசுழியம்மை பிள்ளைத்தமிழையும் பாடியுள்ளார். திருவாதவூரர் புராணத்தில இடம்பெறும் ‘என்ற ஆலுமே சிவமேது' என்ற பாடலில் மெய்கண்ட சிவாசாரியரின் சிவ ஞானபோதம் குறிப்பிடப்படுவதாற் கடவுண்மா முனிவர் காலம் பதின்மூன்ரும் நூற்ருண்டின் முற்பகுதிக்கு முற்பட்டதாகாது.
காஞ்சிபுரம் குமாரசுவாமி தேசிகர் மட்டுமன்றித் திருத்தணிகை கந்தசுவாமி ஐயர், விருத்தாசலம் குமாரதேவர்?, மட்டுவில் க. வேற்பிள்ளை உபாத்தியாயர், சுன்னகம் அ. குமாரசுவாமிப் புலவர் முதலியோரும் திருவாதவூரர் புராணத்திற்கு உரைகண்டுள்ளனர். மட்டுவில் க. வேற்பிள்ளை உபாத்தியாயர் கண்ட விருத்தியுரை 1895, 1915, 1939ஆம் ஆண்டுகளில் மும்முறை வெளிவந்தது. சுன்னகம் அ. குமாரசுவாமிப் புலவர் திருவாதவூரர் புராண மூலத் தினைத் திருத்திப் பதிப்பித்ததோடமையாது 3 , பின்னர் உரையுட னும் அதனை வெளியிட்டார் 4. இப் புராணத்தின் பெயர் திருவாத வூரடிகள் புராணமா அல்லது திருவாதவூரர் புராணமா என்ற விவாதம் இருபதாம் நூற்றண்டின் ஆரம்ப தசாப்தங்களிலே ஈழத் தில் இடம்பெற்றமையும் ஈண்டு சுட்டற்பாலது.
வாசுதேவமுதலியார் வாதவூரர் புராண வசனம் எழுதியுள்ளார் 5.
351-605(pâğiÜ L16ü6)i. - Kadikimuttu Pulavar.
வட திருநெல்வேலிச் சீமையிலுள்ள எட்டியாபுரத்திற் பிறந்து, அவ்வூர் அரசனகிய சகவீர ராம வேங்கடேசுவர எட்டப்ப நாயக்க னது சமஸ்தான வித்துவானுய் இருந்த இப் புலவர் காலம், ஓர் போது கஅ-ம் சதாப்தமாய் இருக்கலாம். இவரது பாடல்கள் மிகச் சிறந்த உருவகாலங்கார வர்ணனைகளாற் பெயர்பெற்றன. நூறு செய்யுட் கொண்ட கழிக்கரைப் புலம்பல் என்னும் சமுத்திர விலா
மூ. அருணுசலம் : தமிழ் இலக்கிய வரலாறு, 16ஆம் நூற்ருண்டு, 1989, பக். 1. ந. சி. கந்தையாபிள்ளை, தமிழ்ப்புலவர் அகராதி, 1900 பக். 8 162-18. கு. மூத்துக்குமாரசுவாமிப்பிள்ளே குமாரசுவாமிப் புலவர் வரலாறு, 1970, பக். 17, 224. A ui. 14, 222.
1. 2.
B. 4. 6. மயில் சீனி. வேங்கடசாமி பத்தொன்பதாம் நூற்குண்டில் தமிழ் இலக்கியம், 1992, பக். 401.

ہ۔ 15 سس۔
சத்துக்கு இவர் ஆக்கியோர். சமுத்திரத்தையும் அந்த இராசனையும் சிலேடை, மடக்கு முதலிய அலங்காரங்களால் வர்ணிக்கும் அவ் விலாசத்தையன்றி, கஉo செய்யுட் கொண்ட திக்குவிசயம் என்னும் ஓர் பாடலையும் இவர் பாடினர். இத் திக்குவிசயஞ் சிவகிரி ராசனகிய வரகுண ராம வன்னியனைப் பாட்டுடைத் தலைவனுக்கி, அவனது செல்வம், சிறப்பு, பராக்கிரமமாதிகளை விளக்கிப் பாடியது. இவை யன்றி, மடக்கலங்காரத்தோடு சிறந்த சத்தார்த்தங் கல்ந்த அநேக தனிச் செய்யுள்களையும் திருவிடை மருதூரந்தாதியையும் பாடினர். இவரது பாடல் மாதிரிக்காய் இங்ங்னம் ஓர் மடக்குக் கவி தருகிருேம்
* கருப்பஞ் சிலையு மோர்கரமே
கண்டே ஞனுஞ் சூகரமே காமப் பயிலு மூர்க்கரமே
கணையைத் தொடுத்தான் சீக்கரமே வருத்தம் புரிவா ரநேகரமே -
வல்லார் மடவார் நிசகரமே மாமால் வெங்க டேசுரட்டன்
வருவான் வருவா னென்றிருந்தேன் திருத்தும் படிக்கு மனேகரமே
செய்தா னினித் திவாகரமே திணியில் வருவா யெனக்கரமே
தெரிய வுதித்தான் சக்கரமே பொருத்தந் தருகண் ணுகரமே
போர்வேட் கிலைவீ ராகரமே பூவை மாருஞ் சேகரமே
புகழ்ந்தேன் ரத்தி னகரமே.”*
குறிப்பு "தமிழ் புளூராக் ஆசிரியர் கடிகைமுத்துப் புலவர் சரிதத்திலே அவருடைய காலத்தினையோ அன்றி அவர் இயற்றிய திருவிடை மருதூரந்தாதி, தனிச் செய்யுள்கள் ஆகியனவற்றையோ குறிப்பிட வில்லை. "தமிழ் புளூராக் ஆசிரியர் திக்குவிசயம் எனும் நூலிலே 325 பாடல்களுள என்பர். திருவாலங்காடு ஆறுமுகசுவாமிகளின் தனிப்பாடற்றிரட்டுப் பதிப்பிற் (1895) கடிகைமுத்துப் புலவர் இயற்றியனவாக 130 பாடல்கள் இடம்பெறுகின்றன. இவற்றிலே முதற் பாடலைச் சதாசிவம்பிள்ளை எடுத்தாண்டுள்ளார். கா. சுப்பிர் மணியபிள்ளை பதிப்பிலே (1939) கடிகைமுத்துப் புலவர் பாடிய

Page 16
தனிப்பாடல்களில் 107 செய்யுட்களே இடம்பெறுகின்றன. இவற் றிலே சதாசிவம்பிள்ளை தரும் பாடலும் இடம்பெறவில்லை.
எட்டையபுரம் கடிகைமுத்துப் புலவர் உமறுப் புலவரின் ஆசி ரியர் எனும் வழக்குப் பொருத்தமாயின் அவர் காலம் பதினேழாம் நூற்றண்டாதல் வேண்டும்.
கடிகைமுத்துப் புலவர் எட்டப்ப நாயக்கர் மீது சமுத்திர விலாசம் எனும் நூலோடு காமரச மஞ்சரியையும் பாடியுள்ளார். மேலும் அவர் ஊற்றுமலை ஜமீன்தார் மருதப்பதேவர் மீது மதன வித்தார மாலை எனும் பிரபந்தத்தையும் பாடினர். *a.
660'uğ gui. - Kanapathy Ayar.
இப் புலவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வசித்த ஓர் பிராமணர். இவர் தந்தையார் காஞ்சிபுரத்திலிருந்து வட்டுக் கோட்டைக்கு வந்து இல்லறம் பூண்டு, நல்லறஞ் செய்த வால கிருஷ்ண ஐயர். இவர் தஞ் சுற்றமித்திரரைப் பிரிந்து, வடதேசத் துள்ள திருவையாற்று வயிரவ சந்நிதியிலே ஒரிராத்திரி இளைத்துக் களைத்துத் தூக்கமற்ருேராய் இருந்தபோது சுயம்பாடும் சக்தி உண் டாக, உடனே அவ் வயிரவர் பேரிலே பதிகம் ஒன்றைப் பாடினர் என்ப. இவர் வடதேச யாத்திரை செய்து ஊர்க்குத் திரும்பின பின்பு தமது சுற்றத்தவருள் ஒருவராகிய சண்முக ஐயர் என்பவர் சில தருக்கள் கீர்த்தனைகளோடே தொடங்கியும் நிறைவேற்றச் சக்தியற்று விட்டிருந்த சுந்தரி நாடகத்தை வாளபிமன் நாடகம் என்று மாற்றி, எவரும் வியக்கப் பாடி முடித்தனர். இந் நாடகம் நாட்டு மாதிரியாயினும் மிகு பளபளப்பும் மளமளப்புங் கொண் டது. இஃதன்றி வயித்திலிங்கக் குறவஞ்சி, மலையகந்தினி நாட்கம், அலங்காரரூப நாடகம், அதிரூபவதி நாடகம் என்பவைகளோடு, வட்டுநகர்ப் பிட்டிவயற் பத்திரகாளி பேரிற் பதிகமும் ஊஞ்சற் பிரபந்தமும், பருத்தித்துறைக் கணேசர் பேரில் வெண்பா, ஆசிரி யம், கலி, வஞ்சி, மருள் என்னும் பாவிகற்பம் பெற்ற நூறு கவிதை களும் பாடினர்.
இவற்றுள் அபிமனடகம் பாரத சரித்திரத்தில் இருந்து எடுக்கப் பட்டது. குறவஞ்சி வண்ணுர்பண்ணை வயித்தீஸ்பரர் மேலது. மலை யகந்தினி நாடகம் காசி காண்டக் கதையில் இருந்தெடுத்துப் பாடி யது. அதிரூபவதி நாடகம் விக்கிரமாதித்தராசன் வனவாசத்தை அடுத்தது. அலங்காரரூப நாடகம், நவாலியிலிருந்த ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டும், இப் புலவராற் சிங்காரிக்கப்பட்டு முற்றுப் பெற்றது. இவைகளையன்றி வேறு சில தனிப்பாடல்களும் பாடினர். பிரமசாரி விரதம் பூண்ட இவர் இற்றைக்கு நூறு வருடங்களின் முன் எடு வயதிலே தேகவியோகமாயினர்.

17 -
5δύι. ------------
கணபதிஐயர் பற்றிச் சதாசிவம்பிள்ளை "தமிழ் புளூராக் ஆசிரி யரிலும் பார்க்க அதிகமான செய்திகளைத் தந்துள்ளார். வட்டுக் கோட்டையில் அன்னர் ஆசிரியர்ப்பணி புரிந்தமையால் அவற்றைப் பெற முடிந்தது போலும். ஆயினும் 'தமிழ் புளூராக்” ஆசிரியர் *"அவர் பிறந்த ஆண்டு தெரியவில்லை; ஆயினும் கி. பி. 1803ஆம் ஆண்டில் வியோகமடைந்தார்' என்று தெளிவாகக் குறிப்பிட் டிருக்கச் சதாசிவம்பிள்ளை 1786ஆம் ஆண்டுக்கு முன் வியோக மடைந்ததாகக் குறிப்பிட்டிருத்தல் விளங்குமாறில்லை. பாவலர் சரித்திர தீபகத்தில் இடம்பெறும் காசிகாண்டம் எனும் நூல் காசிகண்டம் என்றிருத்தல் வேண்டும்.
கா. சிவத்தம்பி கொழும்புப் பல்கலைக் கழகத்தின் வைத்தியப் பகுதி இந்து மாணவர் சங்க வெளியீடாக 1963ஆம் ஆண்டில் மார்க்கண்டன் நாடகத்துடன் இணைத்து வாளபிமன் நாடகமொன் றினைப் பதிப்பித்துள்ளார். சு. வித்தியானந்தன் இலங்கைக் கலைக் கழகத் தமிழ் நாடகக் குழுவினரின் வெளியீடாக 1962ஆம் ஆண் டில் அலங்கார்ரூபன் நாடகம் ஒன்றினைப் பதிப்பித்துள்ளார். அச் சிடப் பெற்றுள்ள வாளபிமனுடகம், அலங்காரரூபன் நாடகம் ஆகி யனவற்றின் ஆசிரியர் இன்னர் என்பது அறியுமாறில்லை. வட்டுக் கோட்டை சங்கரத்தை பிட்டிவயற் பத்திரகாளியம்மை மீது கணபதிஐயர் பாடிய ஊஞ்சற் பதிகம் சங்கரத்தை இந்து வாலிபர் சங்கத்தினரால் 1939ஆம் ஆண்டிற் பதிப்பிக்கப்பெற்றது.
866UOTU5Bôé €3b(5ö866ii . — Kanapathy Kurukal.
இந்தியாவிலுள்ள வேதாரணியத்தைச் சேர்ந்த சைவக் குரவ ராகிய இவர், பஞ்சலக்கண்ம் பழுதறக் கற்ற கலைஞராதலிற் "பஞ்சலக்கணக் கணபதிக் குருக்கள் ' எனும் விசிட்ட நாமம் பெற்றனர். இவரிடம் பாடங்கேட்ட மாணவகருட் சிரேட்டர், யாழ்ப்பாணம் மாதகற் சிற்றம்பலப் புலவர். கணபதிக் குருக்கள் வேதாரணியத்தை விட்டு யாழ்ப்பாணத்திலே தமது சீஷர்களைத் தரிசிக்க வருடந்தோறும் உருக்களில் வருபவராதலின் அப்படிப்பட்ட தருணங்களிற் தோணிக்காரருக்கு உபயோகமாகக் கப்பற்பாட்டுகள் சில பாடினர். அவற்றுள் ஸ்காந்தபுராண சரிதம் முற்றும் அடங்கி யிருக்கின்றது. இவர் காலம் இற்றைக்கு கடு0 வருடங்களின் முன்னம்.
Lunt - 2

Page 17
سے 8! --سی۔
-- ®ീ
* தமிழ் புளூராக் நூலிற் கணபதிக் குருக்களோ அல்லது அவ ருடைய மாணவகர் மாதகல் சிற்றம்பலப் புலவரோ இடம்பெற வில்லை. மாதகல் சிற்றம்பலப் புலவரின் மாணுக்கருள் ஒருவரான இருபாலை சேனதிராச முதலியார் சரிதத்திலும், சைமன் காசிச் செட்டி, அவர் ஆசிரியர் இன்னர் என்று கூறவில்லை.
சதாசிவம்பிள்ளை 1736ஆம் ஆண்டிற்கு முற்பட்டவர் கணபதிக் குருக்கள் என்று கூறல் பொருத்தமாகத் தெரியவில்லை; ஏனெனிற் சிற்றம்பலப் புலவர் 1815ஆம் ஆண்டிலே உயிருடனிருந்தார் என்று கருதச் சான்றுகளுள.
4,6jruggrafi. - Kanapathy Thasar.
இவர் நெஞ்சறி விளக்கம் எனும் நூல் செய்தவர். இதிலே நூறு செய்யுட்களுள. இதனை இவர் பாடிஞர் என்பதற்கு,
" வஞ்சக மனத்தி ஞசை மாற்றிய பெரியோர் தாளிற் கஞ்சமா மலரிட் டேத்துங் கணபதி தாச னன்பால் நெஞ்சறி விளக்க ஞான நீதிநூ னுாறும் பாடக் குஞ்சர முகத்து மூலக் குருபரன் காப்ப தாமே.”* என்னும் அதன் காப்புச் செய்யுளே திருட்டாந்தமாகும். 'நாகை நாதர் ' எனும் பேர் பூண்ட சிவனே பாட்டுடைத் தலைவர். நாகைநாதர் எனுஞ் சொல் அந்நூலிலுள்ள நூறு விருத்தத்திலும் வருகின்றது. பாடல் மாதிரிக்காகப் பின்வரும் விருத்தம் ஒன்றைத் தருகின்ருேம். *" தந்தைதாய் நிசமு மல்லச் சனங்களு நிசமு மல்ல
மைந்தரு நிசமு மல்ல மனையவ ணிசமு மல்ல இந்தமெய் நிசமு மல்ல வில்லற நிசமு மல்ல சுந்தர நாகை நாதர் துணையடி நிசம்பார் நெஞ்சே."
- குறிப்பு
* தமிழ் புளூராக்" நூலில் இடம்பெருத கணபதிதாசரைச் சதா சிவம்பிள்ளை நெஞ்சறிவிளக்கப் பதிப்பின் மூலம் பாவலர் சரித்திர தீபகத்திற் சேர்த்துக்கொண்டனர் போலும். நெஞ்சறிவிளக்கத்திற் காப்புச் செய்யுளும் நூற்பயன் கூறும் மூன்று பாடல்களும் நீங்கலாக நூறு செய்யுட்கள் இடம்பெறுகின்றன. மாங்காடு வடிவேலு முதலி யார் நெஞ்சறிவிளக்கத்திற்கு உரையெழுதியுள்ளார்1. கா. சுப்பிர மணியபிள்ளை பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதி கணபதிதாச ரின் காலம் என்று கூறுவதற்கு ஆதாரம் யாதென அறியுமாறில்லை? .
1. 5. A. கந்தையாபின்ன: தமிழ்ப்புலவர் அகராதி, 180 பக். .ே 2. இலக்கிய வரலாறு, 1958, பக். 42.

- 19 -
s6öT9IsoLu 66i 6n 6. Kannudia Vallal.
محصہ
இவர் * சீர்காழி திருஞானசம்பந்த சுவாமிகளது திருவருள் பெற்ற " ஓர் மகான், வேதாகம சாஸ்திரக் கடல்கட்கு ஒர் தெப்பம் போன்ற இவர் செய்த நூல் ஒழிவிலொடுக்கம். இதிலே வேதாகமப் பொதுவில் உபதேசம் முதல் நிலையியல்பு இறுதியாய்ப் பத்து அதிகாரங்களிலே உடுஈ வெண்பாக்கள் உண்டு. இந்நூற்குத் திருப்பேரூர்ச் சிதம்பர சுவாமிகளால் உரைசெய்யப்பட்டிருக்கின்றது. இந்நூற் சிறப்புப் பாயிரமாகிய,
*" வள்ளல் குருராயன் வாதுவென்ற சம்பந்தன்
வள்ளன் மலர்த்தாடலைமேல்வைத்துரைத்தான்-உள்ளத் தழிவிலடுக் குந்தேனை யன்பரெல்லா முண்ண ஒழிவி லொடுக்கநூ லோர்ந்து.' என்னும் வெண்பாவிற்குக் கருங்குழி இராமலிங்கபிள்ளை மிக விஸ்தீ ரணமான உரை எழுதினர். இந்நூலாசிரியர் பெயர், இவர் குரவரது பெயர், இந்நூற்கு உரை செய்தார் பெயர்கள் யாவும் பின்வரும் விருத்தத்தாற் தெரியவரும்.
" வஞ்சியர்மா மோகமுழு மாதவித்தோர் புகழும்
மாதேவ ன்ருள்விளங்கி வளருநிதிப் புதைபோல் விஞ்சியசம் பந்தனடித் துணையுளங்கொள் வள்ளல்
விளம்பியருள் ஒழிவிலொடுக் கப்பெயர்கொண் முறையும் அஞ்சனம்போற் றிருப்பேரூர்ச் சிதம்பரமா முனிவ
னருளுரையு மிராமலிங்க வருந்தவனுய்ந் துதவத் தஞ்சமுறு முலகுணர்வா னச்சிலியை வித்தான்
றஞ்சைநகர்க் கன்னைய சற்குணபூ பதியே.' இவர் ஒழிவிலொடுக்கத்தைத் தவிரக் 'கச்சிமாலை, Lח מruחrLל பிரலாபம் என்னும் பாடல்களையும் இயற்றினர். இவர் இருந்த காலம் கி. பி. க.அ-ம் சதாப்தம்.
குறிப்பு -- ஒழிவிலொடுக்கத்தினைத் திருப்போரூர் சிதம்பரசுவாமிகளின் உரையுடனும் தாமெழுதிய பாயிர விருத்தியுரையுடனும் கருங்குழி இராமலிங்கபிள்ளை 1851ஆம் ஆண்டிற் பதிப்பித்தபோதும் தமிழ் புளூராக் நூலிலே கண்ணுடைய வள்ளல் சரிதம் இடம்பெருமை விளங்குமாறில்லை. மேலும் சைமன் காசிச்செட்டி ஒழிவிலொடுக் கத்தின் ஆசிரியர் சாந்தலிங்கதேசிகர் என்று 1859ஆம் ஆண்டிற் குறிப்பிடுவதும் பொருத்தமாகவில்லை1.
/ --
1. Tamil Plutarch 1859, p. 86.

Page 18
- 20 -
திருப்பேரூர், சாந்தலிங்க சுவாமிகளுடைய ஊராகும். அவ ருடைய சீடர் குமாரதேவர் விருத்தாசலத்திலே திருமடம் நிறுவிய வர். அவர் சீடர் சிதம்பரசுவாமிகள் திருப்போரூர் முருகப்பெருமா னுடைய கோயிற்றிருப்பணியை மேற்கொண்டு அவ்விடத்திலே உறைந்தவர். திருப்பேரூர் கோயம்புத்தூருக்கு மேற்கே மூன்று மைல் தொலைவிலுள்ளது; திருப்போரூர் சென்னைக்கருகிலுள்ளது. சதாசிவம்பிள்ளை குறிப்பிடும் கச்சிமாலை சிவஞான வள்ளல் இயற்றிய சிவா கமக் கச்சிமாலை போலும்.
காழிக் கண்ணுடைய வள்ளல் சீகாழியில் நிறுவிய மடம் பூரீகாழி திருஞானசம்பந்தக் கண்ணுடைய வள்ளலார் ஆதீனம் எனவும் வள்ளலார் சந்தானம் எனவும் வழங்கப்பெறுவதாகும். வள்ளலார் சந்தானத்திலே தீட்சைபெற்றவர்கள் யாவரும் திரிபுண் டரம் தரிக்குமிடத்து முழங்கை, மணிக்கட்டு ஆகியவைகளை நீக்கிப் பன்னிரண்டு தானமே கொள்வர் என்பர். இவர்கள் வேதாந்த சித்தாந்தம் இரண்டையும் தம்முள் முரணுதவாறு அவ்விரண்டன் பொருள் பெரும்பான்மையான் ஒருமைப்படுத்தியுரைப்பர். இவர் களைச் சிவாத்துவித சைவர் என்பர். சிவாத்துவிதம் நிமித்த காரண பரிணும வாதமாகும். நிமித்த காரணணுகிய முதல்வன் மாயை யோடும் கூடி முதற் காரணமுமாய்ப்பரிணமிப்பன் என்பதே சிவாத் துவித சைவர் கொள்கையாம். *、
கண்ணுடைய வள்ளலைத் தொடர்ந்து சுயம்பிரகாசவள்ளல், சிவஞானவள்ளல், சட்டைநாதவள்ளல் முதலிய அறுபதிற்கு மேற் பட்டவர் வள்ள லார் சந்தானத்தின் ஆசாரியராக விளங்கினர்.
கண்ணுடைய வள்ளல் நியதிப்பயன், ஞானசாரம், பஞ்ச மலக்கழற்றி, திருஞானசம்பந்த சுவாமிகள் திருத்தாலாட்டு 1 முதலிய நூல்களையும் பாடியுள்ளார். சிலர், சோமசுந்தரதேசிகர், சித்தாந்தம் எனும் சஞ்சிகையில் 1932ஆம் ஆண்டில் வெளியிட்ட பஞ்சாக்கரமாலையின் ஆசிரியர், கண்ணுடைய வள்ளல் என்று கருதுவர். திருவாசகவுரையில் வள்ளலார் அருளியதாகக் காழித் தாண்டவராயர் சிவஞானபோதத்திற்கு விளக்கமான பன்னிரு விருத்தங்களை எடுத்தாண்டுள்ளார். அவர் குறிப்பிடும் வள்ளலார் யாரென்பதை அறியுமாறில்லை. திருஞானசம்பந்தமூர்த்திநாயனரின் திருவெழு கூற்றிருக்கைக்கும் ஏகபாத தேவாரத்திற்கும் கண் ணுடைய வள்ளல் உரை செய்ததாகக் காழித் தாண்டவராயர் திருவாசகவுரையிற் குறிப்பிட்டுள்ளார். 1962ஆம் ஆண்டில் மு. அருணுசலம் பதிப்பித்த திருக்களிற்றுப்படியாருரையின் ஆசிரியர் கண்ணுடைய வள்ளல் என்று துணிவதற்கு ஆதாரங்கள் போதா என்பது குறிப்பிடத்தக்கது. 1. செந்தமிழ்ச் செல்வி, 8.15-17 (10)

ميس 24 يوس.
.மபிரகாச வள்ளலின் சீடர் சிவஞான வள்ளல், வள்ளலார்
பாத்திரம் என்று தொகுத் தழைக்கப்படும் இருபது நூல்களை இயற்றி ஞர். இவற்றிலே சத்தியஞானபோதம், பதிபசுபாச விளக்கம் சித்தாந்த தரிசனம், உபதேச மாலை, சிவஞானப்பிரகாச வெண்பா, ஞான விளக்கம், அத்துவிதக் கலிவெண்பா, அதிரகசியம், சிவாக மக் கச்சிமாலை, கர்ணுமிர்தம், சுருதிசார விளக்கம், சிந்தனை வெண்பா, நிராமயவந்தாதி, திருமுகப்பாசுரம் என்பன செய்யுணுரல்கள் எஞ்சிய அறுபத்துநாலு சங்கை, தசவழக்குச் சிந்தனை, குருமரபு சிந்தனை, அனுபவ சந்திரிகை, அதிகாரப்பிள்ளை அட்டவணை மரபு அட்டவணை ஆகியன வசன நூல்கள். சிவஞானவள்ளலின் சீடராகக் கருதப்படும் சட்டைநாத வள்ளல் சதாசிவரூபம் (சதாசிவரூப அகவல்) எனும் நூலினை இயற்றினர்.
வேளூர் ஆத்மநாததேசிகர் சோழமண்டல சதகத்திற் கண் ணுடைய வள்ளலைப் போற்றியுள்ளார். இச்சதகம் தஞ்சாவூரினை மகாராட்டிர மன்னன் சகஜி ஆண்ட காலத்திலே இயற்றப்பெற்றது1. சகஜியின் ஆட்சிக்காலம் 1684-1711 ஆகும். எனவே இவரிருந்த காலம் பதினெட்டாம் நூற்றண்டிற்கு முற்பட்டதாகும்.
Ssg G36A jib assíîJeruu i. — Kadiravel Kavirayar.
தரங்கம்பாடியிலே, வேளாளர் மரபிலே பிறந்து, கலாவல் லவர் எனப் பெயர்பெற்றுச் சென்னபட்டணத்திலே ஸ்தாபிக்கப் பட்டிருந்த சதுர்வேத சித்தாந்த சபா பிரசங்கத் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திவந்த இவர் பெருங்கீர்த்தி வாங்கிய புலவர். இவர் பாடும் பாக்கள் மிகப் பளபளப்பும் இசைப் பொலிவும் இயைந்தவை. தனிப்பாக்கள் பல இசைத்தாரன்றிக், குடிவெறி யரைச் சிட்சித்துக் குடிகேடர் மாலை என்னும் ஒர் பாடலும் பாடி னர். அஷ்டாவதானியாய் இருந்தமைபற்றி அஷ்டாவதானக் கதிர வேற் கவிராயர் என்றும் இவர் அழைக்கப்பட்டார். கிறிஸ்து மார்க்கத்துக்கு விரோதமாய்க் கிறிஸ்துமத திமிர பானு எனும் ஓர் புத்தகம் எழுதினர். இதனை நிராகரித்துக் கிறிஸ்தவர்களாற் கண்டனம் ஒன்று எழுதப்பட்டது. இவர் சரம தசையடைந்து இப் போது சில கால மாத்திரமே. இவர் புத்திரர் ஒருவர் தரங்கம் பாடியில் இப்போதும் இருக்கின்ருர் என்று கேள்விப்பட்டோம்.
குறிப்பு
* தமிழ் புளூராக் நூலில் இடம்பெருதவர்களில் ஒருவர் கதிர வேற் கவிராயர். இவர் “ தமிழ் புளூராக் தோன்றிய காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தனர் போலும். 2. в. см. செயராமன் : சதக இலக்கியங்கள், 1999, பக். 58, - .ே

Page 19
22 س--
(p. SĝGGg JÜ L606ali. — Kaderachu Pulavar.
யாழ்ப்பாணம் அச்சுவேலிக் கோயிற்பற்றிலிருந்த சோதிட சாஸ்திரிகளுள் ஒருவராகிய இவர் முத்துக்குமாரு என்பார்க்குப் புத்திரர். இவர் பாடுஞ் சக்தியிற் சிறந்தவராதலிற், பதுமயூரணி நாடகம் என்னும் ஒரு பாடலுடன், அச்சுவேலி இறையிலுள்ள நெல்லி ஒடை அம்மன் பேரிற் பல விருத்தங்களும் பாடினர். பாடல் மாதிரிக்கு அம்மன் பேரில் விருத்தம் ஒன்றை இங்ஙனம் வரைவம்.
* முத்திக்கு வித்தான மோனத் தியானத்தி முப்புவன தாபனத்தி முப்புர மெரித்ததக னத்திமுக் கோணத்தி
மூலவோங் காரசித்தி துத்திப் பணுமுடிச் சுத்தவா பரணத்தி
துய்யவே காவடத்தி சூலத்தி திரிநேத்ர பாலத்தி கோலத்தி
சுமங்கள சோபனத்தி பத்தித்த வத்திபர மேதத்தி மெத்தன்பு
பாலித்த வுப்புக்கனப் பதிதங்கு நேசத்தி துத்தித்த வித்தகப்
பரமபா தாம்புயத்தி சத்தப்பிர கீதத்தி நாதத்தி வேதத்தி
சந்திரோ தயானனத்தி தத்துவவித் தகத்துவீரி நித்தநித் தனுக்கோர்பாரி
சத்திமுத்து மாரியம்மனே.”* இந்தக் கழிநெடில் இப்பாவலர் வித்தாண்மைக்குத் தகுந்த சாட்சியாகும். இவர் க.அச ச டு ச0 வயதில் அகால மரணி மடைந்தார்.
குறிப்பு * தமிழ் புளூராக் ஆசிரியர் தம் நூலிற் கதிரேசுப் புலவரைக் கூறத் தவறிவிட்டார்.
i U. 5jguainësn. - Kandapilly. இவர் முன்னர்க்கூறப்பட்ட ஆறுமுகநாவலர்க்குத் தந்தையார், நல்லூரில் இருந்த இலங்கைகாவல முதலியார் பரமாநந்தர்க்கு மைந்தர். தாயார் உலகாத்தையார். கனசுசு ஆம் ஆண்டு பிறந்து டு வயதிலே வித்தியாரம்பஞ் செய்து, சண்முகச் சட்டம்பியார்

- 23 അ
என்னும் ஒருவரிடங் கல்விகற்று, இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த கூழங்கைத் தம்பிரானிடம் இலக்கண இலக்கியம் வாசித்து வல்ல புலவராயினர். தமது சுயபாஷையை மாத்திரமல்லப் பறங்கித்தெருவிலிருந்த மெல்லோ பாதிரியாரிடம் உலாந்தா, போத்துக்கீஸ் என்னும் இரு பாஷைகளையும், சல்பேட் பறங்கியிடம் ஆங்கில பாஷையையுங் கற்றவர். பதினெட்டு வருஷங்களாக அரசாட்சியாரிடம் ஆராச்சி உத்தியோகத்திலிருந்து வழக்கமாய் ஆராச்சி கந்தர் என்னும் பெயரால் அறியப்பட்ட இவர்க்குத் திரு நெல்வேலியில் வதிந்த வேதவனத்தார் புத்திரி சிவகாமிப்பிள்ளை யிடத்திற் தியாகர், சின்னத்தம்பி, பூதத்தம்பி, பரமாநந்தர், தம்பு, ஆறுமுகவர் என்னும் ஆறு புத்திரரும் ஆறு புத்திரிகளும் பிறந்தார்கள். ஆராச்சி உத்தியோகத்தோடு வைத்தியமும் கல்வியறிவும் இவரில் விளங்கிய காரணத்தால், இவர் சென்றுNயெங்கும் கண்ணியமும் மரியாதையும் இவர்க்கிருந்தன. புருஷ லட்சணங்களிற் சிறந்த உத்தி யோகத்தைத் தாமாகவே இவர் விட்டபின்பு, தம் வாணுளை நாடகம் பாடுவதிலே போக்கினர். s
இவர் பாடிய நாடகங்கள் சந்திரகாச நாடகம், இராம விலாசம், நல்லைநகர்க் குறவஞ்சி, கண்டி நாடகம், ஏரோது நாடகம், சம் நீக்கிலார் நாடகம், இரத்தினவல்லி விலாசம் ஆதிய உக எனக் கேள்வி. இறுதியிற் சொல்லப்பட்டதே இவர் கடைசியாய்ப் பாடத் தொடங்கிய பாடல். அதனைப் பாடிக்கொண்டிருக்குந் தருணம் ச.அச2-ம் ஆண்டு ஆனிமீ" 2-ம் வ. புதன்கிழமை, எசு பிராயத்திலே சட்டென யாதோர் நோயும் இன்றி இறந்தனராம். அத்தருணம் கனிட்ட புத்திரராம் ஆறுமுகநாவலர் உடன் இருந்தாரென்ப. இவர் புத்திரர் ரா. ரா. தீம்பு என்பார் நெடுங்காலம் யாழ்ப்பாணங் கச்சேரி ஆராச்சியாயிருந்து இப்போது இளைப்பாறி இருக்கிருர், பரமாநந்தர் என்னும் மற்ருேர் மகன் நொத்தாரிசும் புலவருமா யிருந்து இறந்துவிட்டார். இவர் பாடத்தொடங்கி விட்டிருந்த இரத்தின வல்லி விலாசத்தை ஆறுமுகநாவலரே பாடி முடித்தனர். கையறம் பாடுவதிலும் அதிசூரர் என்றும், கண்டி நாடகம் பாடிக் கொண்டிருந்தபோது முற்றத்தில் நின்ற மாமரத்திற் காய்களை அரித்துக்கொண்டிருந்த அணிலுக்குக் கையறம் பாடச், சட்டென்று அது விழுந்து இறந்தது என்றும் சொல்லக் கேள்வி. வாலிபப் பிராயந் தொட்டு விருத்தாப்பியம் வரைக்கும் பூஞ்செடி வைப்பதும் இவர்க்கு உவந்த தொழிலாம். பாடல் மாதிரிக்கு இராம விலாச விருத்தம் ஒன்று தருவம்,

Page 20
- 24 -
தருவளர் வனஞ்சூ ழயோத்தியம் பதியிற்
றசரத னருள் பெறு ராமன் தகுகெள சியற்காய்த் தம்பிலட் சுமணன்
றன்னெடுந் தனிவனம் புகுந்து செருவளர் படைகள் செலுத்துதா டகையைச்
சிதைத்துயா கமுநிறை வேற்றித் திகழக லிகைதன் சிலையுரு வகற்றிச்
சீதையைக் கண்டுவின் முரித்து மருவளர் மிதிலை மணம்புரிந் தேதம்
வளநகர்க் கேகுமல் வழியில் * வரும்பர சிராமன் வலியொடும் வில்லு
வாங்கியே சென்றுவாழ்ந் திருந்த திருவளர் கதையை விலாசம தாகச்
செப்பினேன் பிழையிருந் தாலுஞ் செந்தமிழ்ப் புலவி ரவைபொறுத் தருள்வீர்
தேவசா ரித்திர மெனவே."
மேற்கூறப்பட்ட நாடகங்கள் அல்லாது தனிப்பாக்களும் பல பாடினர். உலாந்தா அரசாட்சியாரிடம் வைத்தியராக இருந்தா ரன்றிச் சில வைத்திய நூல்களுக்கு உரையும் இயற்றினர். இவரது தெளகித்திர பெளத்திரருள், ரா. ரா. பொன்னையாபிள்ளை, r. நா. கைலாசபிள்ளை என்பார் சிரேட்டர். சுற்றமித்திரர் அநேகர் சீர் சிறப்பாய் இருக்கின்ருர்கள்.
&մlմպ s * தமிழ் புளூராக் ஆசிரியர் தம் நூலிற் கந்தப்பிள்ளையைக் கூறத் தவறிவிட்டார்.
இலங்கை காவல முதலியாரின் தந்தை சோதிநாதர் என்றும் அவர் தந்தை மூத்ததம்பி முதலியார் என்றும் யாழ்ப்பாண வைபவ கெளமுதி கூறுகின்றது. கந்த்ப்பிள்ளைக்கு இலங்கையர் என்ற பேருடைய சகோதரர் ஒருவர் இருந்தார் எனவும் அவருக்கு மூத்த தம்பி, சின்னப்பு, சின்னத்தம்பி, சரவணமுத்து என்னும் நான்கு ஆண்மக்களும் மூன்று பெண் மக்களும் பிறந்தனர் என்றும் அறி கிருேம் 1. கந்தப்பிள்ளையின் ஆறு ஆண்மக்களிற் பூதத்தம்பியும் ஆறு பெண்மக்களில் மூவரும் சிறு வயசிலே வியோகமடைந்தனர்
1. க. வேலுப்பிள்: யாழ்ப்பாண வைபவ கெனழுதி, 1918, புக், 222-23.

- 25 -
போலும். ஏனெனில், கைலாசபிள்ளை "இவருக்குச் சிவகாமி என்னும் மனைவியாரிடம் ஐந்து ஆண் மக்களும் மூன்று பெண்மக்களும் பிறந்தார்கள். சிறுவயசிலே இறந்த பிள்ளைகளும் உண்டு ' என்பர் 1. சிவகாமியம்மையார் பிங்களஞல் மார்கழிமீ (1857) சிவபதமடைந் தார். நொத்தாரிசு தியாகராசர் நளஞ) ஐப்பசிமீ (1856) சிவபத மடைந்தார். தியாகராசரின் மகள் தையலம்மையை மணஞ்செய்த வர் நீர்வேலி ச. பீதாம்பரப்புலவர் 4. சின்னத்தம்பி உடையாரின் புதல்வர் இராமலிங்க உடையாரின் புதல்வி பொன்னம்மாளை வதுவை செய்தவர் சங்கரபண்டிதரின் புதல்வர் சிவகுருநாதபிள்ளை 5. ஆராச்சி தம்புவின் புதல்வர் கைலாசபிள்ளை (-1939).
ஆறுமுகநாவலரவர்களின் தாபனங்களுக்கு அதிபதியாகிய நல்லூர் க. சதாசிவப்பிள்ளையால் வண்ணை சைவப்பிரகாச வித்தியா சாலைக்குக் கடைசி மனேசராக நியமிக்கப்பட்டவர் கைலாசபிள்ளை. நாவலரவர்கள் முற்றுவிக்காதுவிட்டிருந்த திருவிளையாடற் புராண வசனத்தை முற்றுவித்தவர் கைலாசபிள்ளை , அதனை வண்ணை சி. சுவாமிநாத பண்டிதர் சாதாரணளுல் புரட்டாதிமீ (1910) பதிப் பித்து வெளியிட்டார். நாவலரவர்கள் பரிசோதித்து வைத்திருந்த சிவஞான முனிவரின் சிவஞான சித்தியார் சுபக்கவுரையினைச் சுபானுளு ஆனிமீ (1883) கைலாசபிள்ளை பதிப்பித்தார். நீர்வேலி சங்கரபண்டிதரின் ஏடுகளின் துணையோடு ஞானப்பிரகாச முனிவரின் சங்கத நூல்களையும் கைலாசபிள்ளை வெளியிட்டார். இந்துசாத னத்தில் வெளிவந்த காசிவாசி செந்திநாதையரின் கட்டுரைகள் சிலவற்றையும் ஏவிளம்பிளுல் சித்திரைமீ (1897) தொகுத்தளித்தவர் கைலாசபிள்ளை. ஆறுமுகநாவலர் சரித்திரம் (1916) எழுதியதோ டமையாது, கைலாசபிள்ளை அவருடைய சிறு பிரசுரங்கள் சிலவற்றை ஆறுமுகநாவலர் பிரபந்தத்திரட்டு என்ற பெயருடன் வெளியிட் டுள்ளார். உடுப்பிட்டி சி. ஆறுமுகப்பிள்ளையின் கிறித்தவ கண்டன நூல்கள் சிலவற்றை வெளியிட்ட கைலாசபிள்ளை, தாமாகவே சில கிறித்தவ கண்டன நூல்களையும் எழுதியுள்ளார். பாலர் பாட நூல் சிலவற்றை எழுதிய கைலாசபிள்ளை, வசனத்தொடை என்னும் இலக் கண நூலும் செய்தவர். இவர் சிலகாலம் இந்துச்ாதனம் எனும் பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இவருடைய முதற்ருரம் சித. மு. பசுபதிச்செட்டியாரின் தங்கையாகிய வள்ளியம்மையாவர்
. S. anos ao só dúas: gyps Sir Gwadi sfišš, Jü, 1919, uši. 4.
. A, uš. 83.
.ே டிெ, பக். 18. 4. ச. குமாரசாமிக் குருக்கள் : சிவசங்கரபண்டிதர் சரித்திரம், 1964, பக். 30.
Q, uš. 1.

Page 21
ー26 -
த கைலாசபிள்ளை, தந்தையார் வியோகமடைந்தபோது நாவல ரவர்களுக்கு வயது ஒன்பது என்று கூறியிருத்தல் பொருத்தமாகத் தெரியவில்லை, அப்பொழுது வயது இருபதாகும் 1. W
கந்தப்பிள்ளையின் தெளகித்திரர், பொன்னையாபிள்ளை என வழங்கப்பட்ட வித்துவசிரோமணி ச. பொன்னம்பலபிள்ளையாவர் (1837-1897). இவருடைய தந்தை சரவணமுத்துச் செட்டியார். நல்லூர் வே. கார்த்திகேய ஐயரிடம் இளமையிற் பயின்ற பொன் னம்பலபிள்ளையிடம் வண்ணை சி. சுவாமிநாத பண்டிதர், மட்டுவில் க. வேற்பிள்ளை, கொக்குவில் சு. சபாரத்தின முதலியார், தாவடி ஆ. மு. சோமாஸ்கந்தபிள்ளை, சாவகச்சேரி ச. பொன்னம்பலபிள்ளை, புன்னை சி. கணேசையர், புலோலி வ. குமாரசாமிப் புலவர் முதலிய ஈழத்தவரும், திருவாவடுதுறை சு. பொன்னேதுவாமூர்த்திகள், உரத்தூர் கோ. வைத்தியலிங்கபிள்ளை, காரைக்குடி சொக்கலிங்கச் செட்டியார் முதலிய தமிழ்நாட்டவரும் பயின்றனர். மயூரகிரி புராணத்தினை 1885ஆம் ஆண்டிற் பொழிப்புரையுடன் பதிப்பித்த பொன்னம்பலபிள்ளை, 1887ஆம் ஆண்டில் இரகுவம்சத்தின் மூலத் தினைப் பரிசோதித்து வெளியிட்டார். வில்லி பாரதம் ஆதி பருவத்திற் காண்டவத கனச் சருக்கம் 26ஆம் செய்யுள்வரை வித்துவசிரோமணி யவ்ர்களும் எஞ்சிய பாடல்களுக்குப் புலோலி வ. குமாரசுவாமிப் புலவரும் இயற்றிய உரை 1898ஆம் ஆண்டு வெளிவந்தது.
به مw
6%jöğsü6oplulu fi, — Kandappiar.
இவர் சென்னைபுரிக்குச் சமீபத்திலே கச்சிக்கு முக்காத தூரத் திலே உள்ள திருத்தணிகை என்னுந் தலத்திலே வசித்த ஓர் வித்து வாமிசர். முத்தையர் என்பார்க்குச் சுதணுகிய சாம்பசிவ ஐயர் என்பார் இவர்க்குத் தந்தையார். புலவர்குல திலகராகிய சரவணப் பெருமாளையர்க்கும் விசாகப்பெருமாளையர்க்கும் இவர் தந்தையார், * சித்தாந்த சைவ சிவஞானபோத திராவிட மகாபாஷிய கர்த்தரா யிருந்த சிவஞான யோகீஸ்வரர்க்கு மாணவகராகிய கச்சியப்ப முன்ரிவர்க்கு நன்மாணுக்கர். அம்முனிவர் திருத்தணிகை சென்று வசித்திருந்த காலத்தில், இவர் அவர்க்கு மானுக்கராகிப் பாண்டித் திய மடைந்தனர்.
திருத்தணிகாச லவனுபூதி, வேல்பத்து, முருகன் தாலாட்டு, தயாநிதிமாலை, பிள்ளைத்தமிழ், கலம்பகம், உலா, மாலைவெண்பா'
4. த. கைலாசபின்ன் ஆறுமுகதாவலச் சரித்திரம், 1919, பக் 5,

ཕ་དང་མཁན་ཞ27མ་པར་ག་
சிலேஷைவெண்பா, வெண்பாவந்தாதி, சந்நிதிமுறை, ஸ்தலபுராணம், வேலாயுதசதகம், சிலேஷையந்தாதி, அபிஷேகமாலை, பழமலையந்தாதி யுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை என்னும் பல நூதன பாடல்களுக்கும் உரைகளுக்கும் இவர் ஆக்கியோர். இவர் இருந்த காலம் கி. பி. க.அ-ம் சதாப்தம்.
குறிப்பு சரவணப்பெருமாளையர் பற்றி விதந்துகூறும் * தமிழ் புளூராக் ' ஆசிரியர் கந்தப்பையர் பற்றித் தனியே கூறவில்லை. கந்தப்பையர் பற்றி விதந்து கூறுவதற்குச் சதாசிவம்பில்ளைக்குக் கிடைத்த மூலா தாரங்கள் யாவை என்பது அறியுமாறில்லை. கடாவிடை உபதேசம் என்னுமொரு நூல் கந்தப்பையர் செய்ததென்றும்? கந்தாடையப்ப தேவர் செய்ததென்றும் 8 மாறுபட வழங்குகின்றது. கச்சியப்ப முனி வரின் திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதிக்குக் கந்தப்பையர் உரையெழுதியதாகவும் கூறுவர் 4,
36fa)(356A i. — Kapilathavar.
கி. பி. 34-ம் சதாப்தத்தில் இருந்தவர். மூத்தநாயனர் திரு விரட்டைமணிமாலை 5, சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை, சிவ பெருமான் திருவந்தாதி எனும் மூன்று பாடல்களை இவர் இயற்றினுர்,
qSSSiSSSAS குறிப்பு
தமிழ் புளூராக் என்னும் நூலில் இடம்பெருதவர்களிலே இவரும் ஒருவர். ஆறுமுகநாவலர் பதினேராம் திருமுறையைச் சென்னை வர்த்தமான தரங்கிணி சாகை யச்சுக்கூடத்திற் சுக்கிலD) வைகாசிமீ (1869) பதிப்பித்து வெளியிட்டார். பதினேராம் திரு முறையில் இடம்பெறும் பிரபந்தங்களில் &pgörsó&árri LJ Tцju JouСВИ கபிலதேவநாயனுர்.
சதாசிவம்பிள்ளை கபிலதேவ நாயனருக்குத் தரும் காலவரையறை பொருத்தமாகத் தெரியவில்லை. ' ஏனையந்தாதி சொன்னவன் கபிலன் ' எனுமிடத்திற்? சிவபெருமான் திருவந்தாதியின் ஆசிரிய ரையே குறிப்பிடுவதாகக் கருதின் பெரும்பற்றப்புலியூர் நம்பிக்குக்
. U. திருச்செந்தி நீரோட்டக பமகவந்தாதியுரை J. of. Gund: 9 a) 3аššuški, 1960, uš. 169. ந, சி. கந்தையபிள்ளே! தமிழ்ப்புலவர் அகராதி 1980, பக், 96, பி. கலிபப்பெருமாள் : அந்தாதி இலக்கியங்கள், 1947. பக், 7. து. பா. பிள்ளேபார் இரட்டைமணிமால். திருவாலவாயுடையார் திருவின்பாடல், 39.11.

Page 22
صدمه 28 س.
காலத்தால் முற்பட்டவர் கபிலதேவநாயனர் என்பது பெறப்படும். மூத்தநாயனர் திருவிரட்டைமணிமாலையிலிருந்து இரு பாடல்களை (6, 20) இளம்பூரணர் தொல்காப்பியம் செய்யுளியலின் 175ஆம் சூத்திரத்தினுரையில் எடுத்தாள்வதால் அவருக்கு முற்பட்டவர் கபில தேவநாயனர் என்பது தேற்றம், நம்பியாண்டார் நம்பியும் கபில தேவநாயனருக்குப் பிற்பட்டவர் என்று அனுமானஞ் செய்ய இட முண்டு. சுந்தரர், 'பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்” (7.39.7) என்று கூறினரேயொழிய, அவர்கள் இன்னர் என்று கூற வில்லை. ஆனல் நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந் தாதியிலே (செய், 49) கபிலர், பரணர், நக்கீரர் முதலிய நாற்பத் தொன்பதின்மரைப் பொய்யடிமையில்லாத புலவராகக் கூறியுள் ளார். கபிலதேவநாயனர், பரணதேவநாயனர், நக்கீரதேவநாயனர் முதலியோர் பாடிய பிரபந்தங்களை நோக்கியே நம்பியாண்டார் நம்பி அவ்வாறு கூறினர் போலும்.
சிவபெருமான் திருவந்தாதியில் இடம்பெறும் " களந்தைக்கோன்' (செய்யுள் 90) எனும் குறிப்பின் அடிப்படையிற் சிலர் கபிலதேவ நாயனர் திருக்களந்தை ஆதித்தேச்சரத்தைப் போற்றியுள்ளமையால் முதலாம் ஆதித்தசோழன் (871-907) காலத்திற்குப் பிற்பட்டவர் என்பர். கபிலதேவநாயனர் களந்தையெனப் பொதுப்படக் கூறி யமையாலும், அப்பெயராற் பல தலங்கள் வழங்குவதாலும், கரு வூர்த் தேவரின் திருவிசைப்பாவினைப் பெற்ற திருக்களந்தை ஆதித் தேச்சரமே எதுவெனத் துணிந்துரைக்க முடியாத நிலை இருப்பதா லும், அவர்களுடைய கூற்றினைச் சித்தாந்தமாகக் கொள்வதற் கில்லை. மூத்தநாயனர் திருவிரட்டைமணிமாலையின் அடிப்படையிற் சிலர் கபிலதேவநாயனர் கி. பி. ஏழாம் நூற்ருண்டிற்குப் பிற்பட் டவர் என்பர். திருச்செங்காட்டங்குடியிலுள்ள கணபதீச்சுரம் எனும் சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதியை வாதாபி விநாயகர் என வழங்குவதை ஆதாரமாகக் கொண்டு, திருச்செங் காட்டங்குடியினரான, பரஞ்சோதியார் (சிறுத்தொண்டநாயனர்) முதலாம் நரசிம்மவர்ம பல்லவனின் (630-668) படைத்தலைவராகச் சென்று இரண்டாம் புலிகேசியை கி. பி. 642இல் வெற்றிகொண்டு மீண்டபொழுது விநாயகர் படிமங்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் எழுந்தருளச் செய்தார் என்றும் அக்காலம் முதலே விநாயகர் வழி பாடு தமிழ்நாட்டில் வேரூன்றியது என்றும் அனுமானஞ் செய்துள் ளனர். தமிழ் இலக்கியத்திலும் கி. பி. ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய நாயன்மாரின் திருப் பாடல்களிலேயே விநாயகர் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன?
1. , வை. சதாசிவபண்டாத்தார்: இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும், 191, ui, 98-1. 2, 1.115.2, 1.117.8, 1,123.5, 1.126.6, 2.96.3, 4.2.5, 6.13.10, 6.74.7.

prvor 29 است.
ஆயினும் நரசிம்மவர்ம பல்லவன் காலத்திற்கு முற்பட்டனவும் பிள்ளையார்பட்டி, வல்லம் ஆகிய இடங்களிலுள்ளனவுமான குகைக் கோயில்களிற் காணப்படும் விநாயகர் படிமங்கள் முற்கிளந்த அனுமானம் பொருத்தமானதோ என்ற ஐயத்தினைத் தோற்றுவிக் கின்றன. ஆயினும் கபிலதேவநாயனர் காலம் கி. பி. ஏழாம் நூற் ருண்டிற்கு முற்பட்டதாகாது என்று கருத வேறு ஆதாரமுண்டு. சிராப்பள்ளிக் குன்றினைக் குடைவித்துச் சிவபெருமானுக்குத் திருக் கோயில் எடுப்பித்த முதலாம் மகேந்திரவர்மனுக்கு (610-630) முன்னர் சிராப்பள்ளிக் குன்றிலே சிவாலயம் இருக்கவில்லை எனும் கூற்றினை ஏற்பின் 2 சிராமலையானைப் பாடிய கபிலதேவநாயனர் கி. பி. ஏழாம் நூற்ருண்டிற்கு முற்பட்டவராகார்.
இன்ன நாற்பதின் ஏட்டுப்பிரதிகள் சிலவற்றிலே ஆசிரியர் பெயர் கபிலதேவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது 4. கபிலதேவரும் கபிலதேவநாயனரும் ஒருவரா அல்லது இருவரா எனத் துணிந் துரைக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்படுகின்றது. இன்னு நாற்பதின் தடவுள் வாழ்த்துப் பாடல் நூலாசிரியராற் பாடப்பட்ட தாயின், சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய நால்வரை யும் போற்றும் அவரிலும், தீவிரமான சிவபத்தியை வெளிப்படுத்தும் கபிலதேவநாயனர் வேருனவராவர் என்று கொள்ளலாம். ஆணுல், இன்னுநாற்பதின் கடவுள் வாழ்த்துப் பாடற்ருன், அந்நூலில் மேலதிகமாக இடம்பெறும் பாடல் என்று கருதுமிடத்து, அதனைப் பாடியவர் நூலாசிரியர்தாம் என்று துணிந்துரைத்தல் பொருத்த மாகுமா என்பது சிந்திக்கத்தக்கது. ஆயினும் கடவுள் வாழ்த்துப் பாடல் நூலின் பாடற்ருெ கைக்குப் புறமானதாக இருப்பினும், அதனை நூலாசிரியரின் ஏனைய பாடல்களின் அமைப்போடு ஒப்பிடும் போது காணப்பெறும் ஒத்த பண்புகளினல், அதனை நூலாசிரியர் பாடவில்லை என்று துணியலாகுமா என்பதுவும் கவனிக்கத்தக்கதாம்.
எட்டுத்தொகையில் இடம்பெறும் பாடல்களை இயற்றிய கபில ரிலும் இன்னு நாற்பதின் ஆசிரியர் வேருனவராவர். ** ஊனைத்தின் றுானைப் பெருக்குதல் இன்ன "" (22) எனவும் ** புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னு ' (12) எனவும் ' கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்ன '" (33) எனவும் பாடிய இன்னுநாற்பதின் ஆசிரியரும் அவற்றை இனியவையாகப் பாடிய கபிலரும் (புற, 14, 113, 119)
l. saw. Ganesan : Some Iconographic Concepts. Proceedings of the First International Conference Seminar of Tamil Studies, Vol. II. 1969. p. 406.
2. தி. வை. சதாசிவபண்டாரத்தார் : கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள், 1901, பக்.81-8
சிவபெருமான திருவந்தாதி, 42. w . J. Godou qfiúörk : gaišu un af Dray, 1967, u.ä. 88. ), Alan0u LD där dúcnol LD auf raw, 6

Page 23
- 30 ۔۔۔۔۔۔
ஒருவராக இருத்தல் சாலுமோ என்று சிந்தித்தல் இன்றியமையாத தாம். மேலும் அந்தணரை இழித்துரைப்பன போன்ற செய்திகள் இடம்பெறும் இன்ன நாற்பதின் ஆசிரியர் (1, 2, 21) "யானே, பரிசிலன் மன்னு மந்தணன் ‘’ (புற. 200) என்று பெருமைப்பட் டிருப்பாரா என்பதுவும் கருதத்தக்கதாம்.
இன்னுநாற்பதின் ஆசிரியர் காலத்தினை நிறுவுவதற்கு எடுக்கப் பட்ட முயற்சிகள் வெற்றியளித்திருப்பதாகக் கூறுவதற்கில்லை. மூவேந்தர் காலத்திற்குப் பின்னர் இன்னுநாற்பது தோன்றியது என்பது தெளிவாயினும் எந்நூற்றண்டிலே பாடப்பட்டது என்பது வரையறுக்கத்தக்கதரக அமையவில்லை. ‘இன்னுநாற்பது என்பதனை எடுத்தாண்டவர்களில் முற்பட்டவர், வீரசோழியத்தின் உரை யாசிரியர் பெருந்தேவனர் ஆவார்1.
கபிலர் குறிப்புக் காண்க.
sıî6bi. - Kapilar.
உக்கிரப்பெருவழுதி என்னும் பாண்டிய ராசன் காலத்திலே, சோழியப் பிராமணனுகிய பகவனுக்கும், ஆதி என்னும் புலைச்சிக்கும் திருவள்ளுவருடன் பிறந்த ஆண்மக்கள் மூவரில் இவரொருவர். இவர் வளர்ந்தவிடம் ஆரூர். ' பாரூர் நீர்நாட் டாரூர் தனிலே, அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன் ' எனத் தாம் பாடிய அகவலில் இவர் தாம் வளர்ந்தவிடத்தைத் தெரிவித்திருக்கிருர், இவ்வாறு இவர் பிதாவழியாற் பிராமணரும் மாதா வழியா ற் புலை ஞரும் ஆயினர். இவரது தந்தை, ஆதியை மனைவியாய் ஏற்றுக் கொள்ளாமுன்னர், 'ஈன்றிடு மகவெலா மீன்றுNயேவிடுத், தூன்றிய துணிவொடு முடன் வர வல்லையேல், வருகென ' ஒர் உடன்பாடு கேட்டதனல், ஆதி அதற்கிசைந்து பிள்ளைகளைப் பிறந்த பிறந்த விடந்தோறும் விட்டுத் திரியும்போது கடைப்பிள்ளையாகிய இந்தக் கபிலர் பிறந்தனர்.
பிறந்த இந்தப் பிள்ளையை விட்டுப்பிரியக் காலெழாது தாய் வருந்துழி இது அவளை விளித்து,
*" கெர்ப்பமுத லின்றளவுங் கேடுவரா மற்காத்து
அப்புடனே யன்னமளித் திட்டோன்-தப்பித்துப் போனனே கண்டுயிலப் புக்கானே நின்மனம்போல் ஆனனே வன்ன யறை.'"
1. தொகைப்படலம், நான்காம் குத்திரவுரை.

- 31 -
என்று சொல்லிற்றும். தாய் குழந்தையை விட்டுத் தணந்தபின் அங்குள்ள் பிராமணருட் பிள்ளைக்கலியால் வருந்தினு னெருவன், பார்ப்பையன் என்று பேருள்ளான், இப்பிள்ளையைப் புதையல் கண் டெடுத்த மிடியன்போல எடுத்துப் புள காங்கிதங் கொண்டு, கையி லேந்தி ** இந்தா விஃதோர் இளங்குழவி' என்று தன் பாரி கையிற் கொடுபோய்க் கொடுக்க, அவளதை அன்போடு அணைத்தெடுத்து ஆசையோடு வளர்த்தாள். இப்பிள்ளைக்கு ஏழுவயசு வந்துழி உப நயனக் கல்யாணஞ் செய்யும்படி வளர்த்த தாதையாகிய பார்ப் பையன் ஆரம்பித்துத், தன் சுற்றமித்திரரைச் சடங்கிற்குவர அழைக்க அவர்கள் இப்பிள்ளை நங்குலத்ததல்லவே, அப்படியிருக்கிறபோது யாம் ஒம்படல் எவ்வாறென மறுக்க, வளர்த்தவர்களாகிய தந்தை தாயர் இருபேரும் மனசு கலங்கி வருந்துவாராயினர். அப்போது இப் பிள்ளையார் தைரியசித்தராகிப் பிராமணர் கூட்டத்துட் சென்று, அவர்களைக் கூவி, ' ஒய் ! அந்தணரே. கன்மத்தால் அல்லது சென் மத்தாற் சாதியிலது ' எனக் கூறி, அவர் கோட்பாட்டை வல்ல நியாயங்கொண்டு நிராகரணஞ் செய்து, ஓர் அகவல் பாடி, அப் பிராமணரை உபநயனச் சடங்கிற்கு ஒருப்படுத்தினர். அவ்வகவல் ஆக்கியோராகிய இக் கபிலர் நாமப்படி கபிலரகவல் என்று அழைக்கப் படுகிறதன்றி, இந்நாட்காறும் நல்லாரால் நன்கு மதிக்கப்படுகின்றது. ரோபின்சன் (Rev. Mr. Robinson) என்னும் அங்கிலோ குரவரொரு வர் அதனை இங்கிலிஷ் பாஷையிற் பாஷாந்தரப்படுத்தி இருக்கிருர், இக்கபிலர் இன்னும் பாதாளலோகத்திற் தவம்புரிந்துகொண்டிருக் கின்றர் என்ப. இஃது இவ்வாறிருக்கக் கடைச்சங்கத்தார் நாற்பத் தொன்பதின்மருள் ஒருவராயிருந்து, திருவள்ளுவர் அரங்கேறிய போது, அதற்குப் புகழ்வெண்பாச் சொன்னரும் இவர்தாம் என்ற உத்தேசத்தாலுந் துணிவாலும் அப்பாட்டை இவர் நாமத்தின் கீழ்த் தருகின்ருேம்.
** தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தான்-மனையழகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனர் வெள்ளைக் குறட்பா விரி.'
குறிப்பு
அக்காரக்கனி நச்சுமஞர், அதிகமான் குறிப்புக்கள் காண்க, கபிலரகவலை அடிப்படையாகக் கொண்டு ' தமிழ் புளூராக் ஆசிரியர் தந்த சரிதத்தைத் திருக்குறட் பதிப்புகள் சிலவற்றில் இடம்பெற்ற திருவள்ளுவநாயனர் சரித்திரத்தின் உதவியுடன் சதாசிவம்பிள்ளை ஈண்டு விரித்துக் கபிலர் வரலாழுகத் தருகின்றர். கபிலரகவலில்

Page 24
- 32 -
உக்கிரப்பெருவழுதி பற்றிய குறிப்பெதுவும் இடம்பெறவில்லை என்பது ஈண்டு சுட்டற்பாலது.
பிள்ளையைப் பிரியத் தாய் வருந்தியபோது, பிள்ளை பாடிய பாடலாகச் சதாசிவம்பிள்ளை தரும் பாடல், பழைய ஆட்சியுடைய தாகத் தெரியவில்லை. சதாசிவம்பிள்ளை தமது நூலில் உப்பை பாடியதாகக் கொண்ட பாடலையே தனிப்பாடற்றிரட்டு கபிலரது பாட்டாகக் கருதுகின்றது. ** நீதிமா மதுரகநீழ னெட்டிலை யிருப்பை யென்றேர், காதல்கூர் பனுவல் பாடுங் கபிலனுர் ' என்று திருவாலவாயுடையார் திருவிளையாடல் (27,4) கூறும் பாடலைத் தமிழ் நாவலர் சரிதை (11) தருகின்றது.
சதாசிவம்பிள்ளை எடுத்துரைக்கும் வரலாற்றிற்குரிய கபிலரகவ லின் ஆசிரியருடைய காலத்தினை நிறுவுதல் அரிதாம். பத்திரகிரியார்,
" ஆதிகபி லர் சொன்ன வாகமத்தின் சொற்படியே
சாதிவகை யில்லாமற் சஞ்சரிப்ப தெக்காலம் ' என்றுரைத்திருக்கின்ருர் . பத்திரகிரியார் குறிப்பிடும் கபிலர் கபில ரகவலின் ஆசிரியர் என்று கருத இடமுண்டு. ஆயினும் பத்திரகிரி யார் என்பவர் கண்ணுடையவள்ளல், தாயுமானவர் ஆகியோருக்கு முற்பட்டவர் என்பது தெரிகின்றதேயொழிய இன்ன காலத்தவர் என்று வரையறுத்துக் கூறுவதற்கில்லை என்பது சுட்டற்பாலது. " ஞானத் திருவகவல் மொழிந்த கபிலர் ” எனச் சோழமண்டலச் சதகத்திலே குறிப்பிடும் வேளூர் ஆத்மநாததேசிகர் (செய். 12) அந்நூலின் இறுதிப் பாடலிலே ' சத்திரபதியாஞ் சகஜி மகாராசன் வாழி, தஞ்சைநகர் வாழி, சமஸ்தானம் வாழி' என்று போற்றுவ தால் தஞ்சை மகாராஷ்டிர சகஜியின் காலத்தவர் (1884-1711) என்பது புலணுகும். *
கபிலரகவலின் ஆசிரியர் " பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலே சாதிவேற்றுமையை வன்மை யாகக் கண்டித்தவர், சாதிவேற்றுமையை ஒத்துக்கொள்ளாத கபில ரகவலின் ஆசிரியர் குடிப்பிறப்பால் உயர்வு தாழ்வு உண்டென்னும் கருத்தினை ஏற்றுக்கொள்ளும் இன்னுநாற்பதின் (செய். 19) ஆசிரிய ராதல் சாலாது. பிராமணர் குலப்பிறப்பின ற் பெருமையெய்தியவர் மூவேந்தர் காலத்துக் கபிலர் (புற. 200, 201). கபிலரகவலின் ஆசிரியர் பிராமணர் பிறப்பால் உயர்ந்தவர் என்ற கொள்கையினைக் கண்டித்தவர். எனவே கபிலரகவலின் ஆசிரியர் மூவேந்தர் காலத்துக் கபிலர் ஆதலும் சாலாது. கபிலதேவநாயனுரோடு கபிலரகவலின்
1. மெய்ஞ்ஞானப் புலம்பல், 125,

naam 33. مخفیسسم
ஆபிரியரை இணைத்துக் காண்பதற்கு ஆதாரங்கள் இல்லை. கபிலரக வலின் ஆசிரியர்தாம் வள்ளுவமாலைப் பாடலைப் பாடிஞர் என்பதற்கும் ஆதாரமில்லை.
மூவேந்தர் காலத்திலே தொல்கயிலரிலும் வேருனவரொருவர் கபிலர் என்ற பெயருடன் விளங்கினர். அவரை நக்கீரர், பொருந்தி லிளங்கீரனர், மாருேக்கத்து நட்பசலையார் முதலியோர் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அவர் பறம்புமலை மன்னன் வேள்பாரியின் நண்ப ராக விளங்கி வர். தமிழ் வேந்தர் பறம்பினை முற்றுகையிட்ட போது அவர் அரணுள் இருந்தோர் உணவின்றி வருந்தாவாறு கிளிகளை வளர்த்துக் கதிர் கொண்டுவரவிட்ட வரலாற்றினை நக்கீர ரும் ஒளவையாரும் குறிப்பிட்டுள்ளனர்?. பாரி துஞ்சிய பின், பாரி மகளிரை அவர் மணஞ்செய்விக்க முயன்றும் வெற்றியடையாது, அவர்களைப் பார்ப்பார்ப்படுத்து, வடக்கிருந்தார் என்று புறநானூற் றின் அடிக்குறிப்புகள் கூறுவன8. கி. பி. 1012இல் வரையப்பட்ட திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோயிற் கல்வெட்டுக் கபிலர் பாரிதன் அடைக்கலப்பெண்ணை மலையமானுக்கு மணஞ்செய்வித்து விட்டுத் திருக்கோவலூரிலே பெண்ணை யாற்றங்கரையிலே தீப்பாய்ந் தார் என்று கூறுகின்றது.
வேள்பாரி, மலையமான் திருமுடிக்காரி, பேகன், விச்சிக்கோன், இருங்கோவேள், சேரமான் கடுங்கோ வாழியாதன், சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் முதலியோரைக் கபிலர் நேரிற் சென்று பாடியுள்ளார் என்பது புறநானூற்றற் புலனகும். ஒரி, நள்ளி, அகுதை என்னும் வள்ளல்களையும் கழாத்தலையார் என்னும் புலவ ரையும் கபிலர் தம் பாடல்களிலே போற்றியுள்ளார்.
பேகனின் புறவொழுக்கத்தினைத் துறக்கும்படி கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றுார்கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். கபிலர் பாடிய காரியை மாருேக்கத்து நப்பச்லையாரும் பாடியுள் ளார் 7. கபிலர் தம் காலத்தவஞன காரி, ஒரியைக் கொன்ற செய லைக் குறிப்பிட்டுள்ளார்; எனவே ஒரியைப் பாடிய வன்பரணரும் கழைதின்யானையாரும் கபிலர் காலத்தவராகலாம் 8. செல்வக்
1. அக. 78: புற,53, 174; பெருங்குன்றுர்கிழார் பெயரால் வழங்கும் பாடலொன்றிலும் (பதிற். 85)கபிலர்
போற்றப்பட்டுள்ளார்.
‚91ቇ, 78,303
13, 20020, 236
S. I. I. Vol. Wii, No. 863,
நற். 320: அக. 238; புற 347, 202
up. 143, 145, 146, 47
ap. 121, 126
தற் 320: புற. 152, 204
urt - 3

Page 25
حس- 34 -ص
கடுங்கோ வாழியாதனும் சிங்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனும் ஒருவரேயாயின் குண்டுகட்பாலியாதனரும் கபிலர் காலத்தவராகலாம்1. முற்கிளந்த எழுவரும் கபிலர் காலத்தவ ராயின் அவர்கள் காலத்தவரான ஏனைய புலவரும் கபிலர் காலத்தில் அல்லது அவர் காலத்தினை அடுத்து வாழ்ந்தவராதல் வேண்டும்.
பரணர் காலத்தவர் கழாத்தலையார், ஒளவையார், பெருஞ்சித் திரனர் என்னும் புலவர்கள். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலா தனையும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியையும் கழாத்தலையாரும் பரணரும் பாடியுள்ளனர்; அதிகமான் நெடுமா னஞ்சியைப் பாடுமிடத்து ஒளவையார் அவனுடைய கோவலூர் வெற்றியை 'இன்றும் பரணன் பாடினன்' என்று குறிப்பிடுவதாற் பரணர் காலத்தவர் ஒளவையார் எனல் தகும்; அதிகமான் நெடுமா னஞ்சியைப் பாடியவர் பெருஞ்சித்திரனர். அரிசில்கிழார் காலத் தவர் மோசிகீரனர் என்று கருத இடமுண்டு. அதிகமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாட, மோசிகீரனர் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறையைப் பாடியுள் ளார்?. பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்தினை அரிசில்கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை மீது பாடினர் என்ற மரபும் கவ னிக்கத்தக்கது. மாருேக்கத்து நப்பசலையார் பாடிய சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர்கிழார், வெள்ளைக் குடிநாகனர், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனர், கோவூர் கிழார், ஆடுதுறை மாசாத்தனர், ஐயூர் முடவனுர், நல்லிறையனர், எருக் காட்டூர்த் தாயங்கண்ணனர் ஆகியோர் பாடியுள்ளனர். சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவ னும் மதுரை அளக்கர் ஞாழார் மகனுர் மள்ளனரும் பாடியுள்ள னர் 5. சோழன் கரிகாற் பெருவளத்தானேடு பொருது புறப்புண் நாணி வடக்கிருந்த பெருஞ்சேரலாதனைக் கழாத்தலையார் பாடியுள் ளார்; கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார், கருங்குழ லாதனுர், முடத்தாமக்கண்ணியார், கடியலூர் உருத்திரங்கண்ண ஞர் ஆகியோர் பாடியுள்ளனர் 8. இரும்பிடர்த்தலையார் எனும் புலவர் கரிகாலனின் உறவினர்". ஒளவையார் பாடிய 367ஆம் புறப்பாட்டு சேரமான் மாரிவெண்கோவும் பாண்டியன் கானப்போர் தந்த உக் கிரப்பெருவழுதியும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்
... p. 14,387
ių p. 62, 63; p. 99; p. 208
up. 230, 50 up, 39, 34,35, 38, 42, 46,227, 228,393, 397, up. 173, 338 புற, 65; புற. 66, 224 பொகுநராற்றுப்படை பட்டினப்பாலே புற. 3; பழமொழி நானுறு 50
7"

--- 35 -ست.
ஒருங்கிருந்தபோது பாடப்பட்டது என்று அடிக்குறிப்புக் கூறு கின்றது. இம்மன்னருள் பாண்டியனை ஐயூர் மூலங்கிழாரும் சோழ னைப் பாண்டரங்கண்ணனர், உலோச்சனூர், வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனரும் பாடியுள்ளனர். பெருஞ்சித்திரனர் பாடிய குமணனை பெருந்தலைச் சாத்தனர் பாடியுள்ளார் 2. ஆலத்தூர்கிழார் பாடிய சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தன ரும் அவன் தம்பி மாவளத்தானைத் தாமப்பல் கண்ணனரும் பாடி யுள்ளனர்8. சோழன் நலங்கிள்ளியும் புலமையுடையவனேயாம்4. ஆவூர் மூலங்கிழாராற் பாடப்பட்ட பாண்டியன் இலவந்திகைப்பள் ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிளநாகனர், நக்கீரர். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணணுர், வடமவண்ணக்கன் பேரி சாத்தனர் ஆகியோர் பாடியுள்ளனர்9. ஐயூர் முடவனர் பாடல் பெற்ற பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை மருத ணிளநாகனரும் பாடியுள்ளார் 8 சேரமான் மாந்தரஞ் சேரல் இரும் பொறையை வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனரும் பொருந்திலிளங் கீரனரும் பாடியுள்ளனர்". நக்கீரர் நெடுநல்வாடையிற் போற்றிய பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை மாங்குடி மருதனுர், இடைக்குன்றுார்கிழார், கல்லாடனர், குட புலவியனர், மாங்குடிகிழார் ஆகியோர் பாடியுள்ளனர். முற்கிளந்த நெடுஞ்செழியனின் காலத்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங்கோழியூர் கிழாரும் கூடலூர் கிழாரும் பாடியுள்ளனர் 9. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் புலமையுடையவனேயாம் 10. நெடுஞ்செழியனின் காலத்தவனகிய எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியுள்ளார்11. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைக் காவி ரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனர், உறையூர் மருத்து வன் தாமோதரனர், கோனுட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனர் ஆகியோர் பாடியுள்ளனர் 12. பிட்டங்கொற்றனைக் காவிரிப்பூம்பட்டி னத்துக் காரிக்கண்ணனர், கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனர், வடம
up. 21, 16, 377, 125
up. 158, 164
up. 225, 27, 43
山』、ク3,75.
q. 196 55,56, 57, 198
国』、5I, 52
L.A. 125, 53
8. மதுரைக்காஞ்சி; புற, 76 23, 18, 24
9. p. 17, 229
10. կյ, 72
II. ss. 36, 126; p. 233
12. uይ. 58, 60, 197

Page 26
- 36 -
வண்ணக்கன் தாமோதரனர் ஆகியோர் போற்றியுள்ளனர்1. நாஞ் சில் வள்ளுவனை மருதனிளநாகனர், கருவூர்க் கதப்பிள்ளை, ஒரு சிறைப் பெரியனர் என்பவர்கள் பாடியுள்ளனர்?. கபிலர் காலத்தி லும் அவர் காலத்தையொட்டிய காலத்திலும் வாழ்ந்தவராகக் கபிலர் உட்பட ஐம்பத்தேழு புலவர்கள் ஈண்டு காட்டப்பட்டுள்ள னர். இவர்களிலே வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தஞர், வடம வண் ணக்கன் பேரிசாத்தனர், மதுரை மருதனிளநாகனூர், மருதனிள நாகனர், மாங்குடிமருதஞர், மாங்குடிகிழார், கருவூர்க் கதப்பிள் ளைச் சாத்தஞர். கருவூர்க் கதப்பிள்ளை எனும் பெயர்க்குரியோர் எண்மரா அல்லது நால்வரா என்பதிற் கருத்துவேறுபாடுண்டு. முற் கிளந்த ஐம்பத்தேழு புலவருள் நால்வர் அரச மரபினர் என்பது சுட்டத்தக்கது.
கபிலர் இயற்றியனவாக எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டி அலும் பல பாடல்கள் இடம்பெறுகின்றன. இவற்றிலே குறுந்தொகையி லுள்ள இருபத்தொன்பது பாடல்களும் நற்றிணையிலுள்ள இருபது பாடல்களும் " அகநானூற்றிலுள்ள பதினெட்டுப் பாடல்களும் 5 புறநானூற்றிலுள்ள இருபத்தெட்டுப் பாடல்களும்6 கபிலர் பாடி யவை என்பதிலே தமிழறிஞர் மாறுபடுவதில்லை. குறுந்தொகை 355ஆம் பாடலுக்குப் பரணரும் அகநானூறு 12ஆம் பாடலுக்குத் தொல் கபிலரும் பிரதிபேதமாகக் காணப்படும் பெயர்களாம். அகநானூறு 254ஆம் பாடலுக்குக் கபிலர் என்ற பிரதிபேதமுண்டு.
கலித்தொகையின் இரண்டாம் பிரிவாகிய குறிஞ்சிக்கலியைப் பாடியவர் கபிலர் என்று வெண்பாவொன்று கூறுகின்றது. அவ் வெண்பாவின் வரலாறு ஆசிரியர் நல்லந்துவஞர் குறிப்பிலே தரப் பட்டுள்ளது. நுட்பமாக அறியத்தகும் சிறப்பு வேறுபாடின்றிக் கூறியது கூறலாகவுள்ள வள்ளைப் பாடல்களும் கைக்கிளைப் பாடல் களும் வரைவுகடாதல் பற்றிய பாடல்களுமே குறிஞ்சிக்கலியில் அதிக மாகவுள்ளன. சொற்செறிவும் சொற்ற்ளர்வும் மிடுக்கான நடை யும் எளிய நடையும் பழைய கோட்பாடுகளும் புதிய கோட்பாடுக ளும் முரணிநிற்கும் இயல்பினைக்கொண்ட குறிஞ்சிக்கலிப் பாடல்களை ஒரே புலவர் பாடினர் என்பது பொருந்துவதாகத் தெரியவில்லை. அன்பினைந்திணைமரபு அடைந்த மாற்றத்தையும் கைக்கிளை, பெருந்
1. p. 109, 168, 172 2. up. 138, 380, 137 3., 13., 18, 25, 38., 42., 87., 95, 100, 106, 115., 121, 142 153, 187, 198, 208, 225, 241, 246,
249, 259: 264. 288, 29. 3 12, 355, 357, 361, 385 4. 1, 13, 32, 59, 65, 77, 217, 222, 225, 253,267, 291, 309, 320, 336, 353, 359,
368, 373, 376
5. 2, 12, 18, 42, 82, 118, 128. 158, 182,203, 218, 238, 248,278, 292, 318. 332, 382. 6. 8, 14, 105-111, 113-124 143 200-202 236, 337, 347

سس۔ 37 ۔۔۔۔
திணை ஆகியன பெறும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் குறிஞ்சிக் கலிப் பாடல்களைக் கபிலர் பாடினர் என்று துணிந்துரைத்தல் சாலாது.
ஐங்குறுநூற்றின் மூன்ரும் நூருகிய குறிஞ்சியைக் கபிலர் பாடிய் தாக வெண்பா வொன்று கூறுகின்றது. அவ்வெண்பாவின் கூற்றி னைச் சித்தாந்தமாகக் கொள்வது பொருத்தமாகுமா என்று சிந்திப் பது இன்றியமையாததாகும். காலம், இடம், சூழல், பாத்திரங்கள் முதலியனவற்றை ஆதாரமாகக் கொண்டு குறிப்பிட்ட ஒரு நிகழ்ச் சியை அல்லது பொருளை ஒரு செய்யுளில் அமைத்துக் காட்டும் மரபு பத்துப் பாடல்களிலே அமைத்துக் காட்டுவதாக மாறியிருக் கும் பண்பினை ஐங்குறுநூற்றிலே காணலாம். மேலும் இந்நூலிலே ஐவகை ஒழுக்கங்களும் ஐவகை நிலங்களிலும் கலந்து வருவதைக் காணலாம். எவ்வொழுக்கமும் எந்நிலத்திலும் உரியதாக வருதல் கூடும் எனும் மரபு இந்நூற் பாடல்களிலே பின்பற்றப்பட்டுள்ளது. முன்னைய புலவரிலும் இயற்கை வருணனையைப் பாத்திரங்களின் உணர்ச்சி பேதங்களை வெளிப்படுத்துவதற்குச் சிறந்த வகையில் ஐங்குறுநூற்றிற் பயன்படுத்தியுள்ளனர். ஐங்குறுநூறு ஐந்து புலவர் களின் பாடற்ருெகுதி என்ற கருத்து நூலமைப்பினை நோக்கு மிடத்து வலுவுடையதாகத் தெரியவில்லை. இன்னுேரன்ன காரணங்க ளால் ஐங்குறுநூற்றின் குறிஞ்சிப் பாடல்களைக் கபிலர்தாம் பாடி ஞர் என்று துணித்துரைக்க முடியவில்லை.
பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தினைக் கபிலர் பாடியதாகப் பதிகம் கூறுகின்றது. அப்பத்தின் பாட்டுடைத் தலைவனைக் கபிலர் 14ஆம் புறப்பாட்டிற் பாடியுள்ளார் என்பது தெளிவாயினும் ஏழாம் பத் தின் ஆசிரியர் விடயத்திலும் ஏனைய பத்துகளின் ஆசிரியர் விடயத்தும் கருத்து வேறுபாடுண்டு. பதிற்றுப்பத்துப் பாடல்களின் மொழிநடை சொல்லாட்சி, பொருளமைதி, அப்பொருளைக் கூறும்வகை, அதனுட் காணப்படும் செயற்கைத்தன்மை, அனுபவப்போலி என்பனவற்றின் அடிப்படையிற் பதிற்றுப்பத்துப் பாடல்கள் மூவேந்தர் காலப் புலவர் களால் இயற்றப்படவில்லை என்றும் பிற்காலத்துச் சேரமன்னர் தம் முன்னுேரைப் புகழ்ந்து போற்றும் நோக்கத்துடன் சில வரலாற்று நிகழ்ச்சிகளைக் கற்பனையாகக் கொண்டு உருவாக்கிய போலிப் படைப்புகள் என்றும் கருதுவோருளர் .
பத்துப்பாட்டில் இடம்பெறும் குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் கபிலர் என்பர்2 . "ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு’ என்பது குறிஞ்சிப்பாட்டின் அடிக் . V. Chelvanayakam: Tradition in Early Tamil Poetry. University of Ceylon
Review, Vol. 24, No. 1&2 (1966)
2. பரிமேலழகர் பரிபாடல் 19, 77 உரை; நச்சிகுர்க்கினியா, தொல்காப்பியம், அகத்திண்பியல் சூத், 19 உரை ܫ

Page 27
-- 38 -
குறிப்பு. ஆயினும் கபிலரது பாட்டு குறிஞ்சிப்பாட்டு என்ற கருத்தினை ஏற்றுக்கொள்வதிற் சில தடைகளுள. அறத்தொடு நிற்றல் எனும் துறையை மையமாகக் கொண்ட குறிஞ்சிப்பாட்டில், அந்நிகழ்ச் சிக்கு முன்னுள்ள நிகழ்ச்சிகள் கோவையாக அமைந்து, கோவைப் பிரபந்தத்தின் பண்பினை விளக்குவதாகக் காணப்படுதல் குறிப்பிடத் தக்கது. உண்மை பேசுவதாக அமையவேண்டிய அறத்தொடு நிற்றல், பிறர் துன்பம் கண்டு இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது, களிறுதரு புணர்ச்சி, ஆறுதரு புணர்ச்சி, மாலைப்பொழுது வருணனை இரவுக்குறித் தடைகளின் பட்டியல் முதலியன அகப்பொருள் இலக் கணத்தினை விளக்க எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சி குறிஞ்சிப் பாட்டு என்பதனைத் தெளிவாக்குகின்றன. குறிஞ்சிப்பாட்டின் செயற் கைப் பண்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைவது பல நிலப் பூக்களைக் குறிஞ்சியிற் காட்டுவதாகும்.
பன்னிரு பாட்டியலிற் கபிலர் என்பவரொருவர் இயற்றிய பாட் டியற் சூத்திரங்கள் சில எடுத்தாளப்பட்டுள்ளன. கபிலர் என்பவ ரொருவர் கபிலம் என்ற நூலொன்றினை இயற்றியுள்ளார். இளம் பூரணர் தொல்காப்பியத்திற் கபிலத்தைக் குறிப்பிடுவர்
பிலதேவர் குறிப்புக் காண்க:
suau i. -- Kambar.
தமிழ் நாட்டுப் புலவருள் அதுல்லியரான இவர் கம்பநாடு என்னும் ஒரூரிலிருந்து அரசாண்ட ஓர் அரசன் புதல்வர். இவருடைய அன்னை இவரைக் கருத்தரித்திருந்தபோது, கம்பநாட்டிலே கலக மொன்று கிளம்ப, அரசன் கலகக்காரர் கையால் மாண்டனன். ஆகவே இராணி தனது பிராணரட்சையின் பொருட்டுத் திருவழுந் தூர்க்கு ஓடி, அங்ங்னமொரு ஒச்சன் வீட்டில் அடைக்கலம் புக்கி ருந்து அவ்வீட்டிற்ருனே இவரைப் பிரசவித்தனள். இவ்வோச்சன் ஓர் பிடாரி பூசகனயிருந்தான். இவர் இராசபிறவியல்லர், சாதி யிலோ ஒச்சன் என்று சாதிப்பாருமுளர். ஏழு பிராயம் வரைக்கும் இப்பிள்ளையார் இந்த இடத்திற்ருனே வாசஞ் செய்து வளர்ந்தனர். பல வளங்களிலுஞ் சிறப்புற்ருேங்கிய வெண்ணெய் நல்லூரில் இருந்த வேளாளர் குலதிலகரும், மகா குபேரரும், கிராமாதிபதியுமாகிய சடையப்பவள்ளல் என்பவர் இவரது வரலாற்றைப் பற்றிக் கேள்வி யுற்றபோது, இவர் மீதும் இவருடைய அன்னையின் மீதுங் கருணை கர்ந்து, தாம் இருக்குமிடத்துக்கு இவ்விருவரையும் அழைப்பித்து, இவர்கட்கென்று திட்டஞ்செய்த வீட்டில் இவர்களை இருத்தி, அன்ன வஸ்திராதிகள் கொடுத்துச் சவரட்சணை செய்து வந்தார்.
இளமைப் பிராயத்திற்ருனே கம்பரது விவேகம் கொழுந்து விட்டெரிவதைக் கண்ட சடையப்ப வள்ளல், இவரது கல்வியிற்
1. சொல்லதிகாரம், வேற்றுமை மயங்கியல், 31

X.
حسس 39 سم
கருத்துச் செலுத்திப் பள்ளியில் வைத்து இவரைப் பயிற்றுவித்தனர். நாமகள் கடாட்சம் இவர்க்குக் கிடைத்ததனுல் இவர் தமக்கு முன் ஞவது பின்னவது இருந்த புலவர் எவரினும் மகா புகழ் படைத் தனர். இவ்வாறன்றி. இவர் தாய் சடையப்ப முதலியார் வீட்டிற் குற்றேவல் செய்துகொண்டிருக்குங் காலத்தில், தனது புத்திரனுகிய கம்பன் மாடு மேய்க்கிற பிள்ளைகளுடன் தோழமை பூண்டு விளை யாடிக்கொண்டு திரிவதைக் கண்டு, இவனைப் பிடித்துச் சடையப்ப ரது வீட்டுப் பிள்ளைகளினது ஏடுகளைச் சுமந்துகொண்டு பள்ளிக் குப் போகவிட்டாள் என்றும், ஒரு நாள் உபாத்தியாயர் வயிரபுரம் என்னும் கிராமத்தில் விதைத்திருந்த கம்பங்கொல்லைக்குக் காவலா யிருக்க இப்பையனை அனுப்பினர் என்றும், இவன் போய்க் காவல் பண்ணும்போது தூக்கங்கொண்டு காளி கோயில் ஒன்றிற் படுத்து உறங்கினுனென்றும், உறங்கும்போது கொல்லையைக் குதிரை ஒன்று தின்று அழிக்கிறதாகக் கணுக்கண்டு விழித்துக், கொல்லைக்கு ஒடிப் போய், மெய்யாகவே குதிரை மேய்கிறதைக்கண்டு கூக்குரலிட்டு அதட்டியும். அது போகாது நிற்கக் கண்டு, ஐயோ! உபாத்தியா யர்க்கு என்ன சொல்வேன் என்று அழக், காளி வந்து "அழாதே" என்று இவனைத் தேற்றி உன் நாவை நீட்டென்று சொல்லிப் பீஜா கூடிரத்தைப் பதித்துப் போயினள் என்றும், உடனே வாணி வரப் பிரசாதத்தால்,
"வாய்த்த வயிரபுர மாகாளி யம்மேகேள்
காய்த்த தினைப்புனத்திற் கால்வைத்துச்-சாய்த்துக்
கதிரைமா ளத்தின்ற காளிங்க ராயன் W
குதிரைமா ளக்கொண்டு போ'
என்று பாடக், குதிரை இறந்ததென்றும், அதனை உபாத்தியாயர் கேள்விப்பட்டு "ஐயையோ ஊர் அதிகாரியாகிய காளிங்கராயன் குதிரையல்லவா? அவன் இச் சங்கதியை அறிந்தால் மோசம் வருமோ? அறிகிலேன்" எனக் கலக்கமுறலும், கம்பன் முந்திப் பாடின வெண்பாவின் முதன் மூன்று அடியையும் மீளவும் படித்துக் ""குதிரைமீ ளக்கொண்டு வா" என நான்காம் அடியை மாற்றி விடக், குதிரை பிழைத்து எழுந்தது என்றும், இக் கதை எங்கும் பரம் பித் துங்கனெனுஞ் சோழராசன் காதிலும் விழ, அவன் இவனை அழைப்பிக்க, இப்பையன் கிளிகடிகோலோடு போய் நிற்க, 'இக் கம்பன அப் பையன்’ என்று வினவினன் என்றும், இவ் வினவா லும் கம்பங்கொல்லை காத்ததாலும் கம்பன் என்னு நாமம் உண் டாயது என்றும் 'நீ எவ்வூரினின்று வந்தனை? அவ்வூர் எத்தன்மையது" என்று அரசன் கேட்க

Page 28
- 40
"மோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே - நாட்டில்? அடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லும் உடையான் சடையன்ற னுார்'
என விடை சொன்னர் என்றுங் கதையுளது. இச் சமாசாரத்தைக் கேட்ட சடையப்பர் இவரது பூர்வோத்தரத்தை அரசனுக்குச் சொல்லி, இவரைக் கூட்டிப் போய் முன்னிலும் பன்மடங்கு அபி மானித்து ஆதரித்துத், தகுந்த பிராயம் வந்துழி விவாகமுஞ் செய்து வைத்தார். துங்கராசனைப் பார்க்கிலும் அவன் மகன் இவரை மிக மரியாதை பண்ணித் தனது ராசதானியாகிய உறையூர்க்கு அழைப் பித்துத் தன் வித்துவான்களுட் சிரேட்டராகிய ஒட்டக்கூத்தர்க்கு ஒப்ப இவரையுந் தன் வாசல் வித்துவான் ஆக்கிக்கொண்டான். இவரது அரிய கவித் திறமையையிட்டே 'கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்' என்றும் இவரது புத்தி நுட்பத்தையிட்டே 'இதென்ன கம்பகுத்திரமா' என்றும் முது மொழிகள் வழங்கலுற் றன. இத்தகைய மகா புலவரைக் கொண்டு, இராமாயணத்தைத் தமிழிற் பெருங் காப்பியமாகத் திருப்புவிக்கவேண்டும் என்று இவரது அன்னதாதாவாகிய சடையப்ப முதலியார் நினைந்து, தாம் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தை இவருக்கு அறிவிக்க, இவர் நல்லது அப்படியா கட்டும் என்று உரைத்துங் காலதாமதம் பண்ணி வருவதிற் பொருராகிய வள்ளலானவர் தமது பிரயத்தனத்தைச் சோழனுக்கறிவித்து, அவன் மூலமாய் இவரை அருட்டுவித்தனர். கம்பரை மாத்திரம் பாடும்படி தனியேவிட்டாற் பராக்காக இருந்து விடுவாரென்ற யோசனை கொண்டாராய், ஒட்டக்கூத்தரையும் அக் காவியத்தைத் தமிழிற் பாடும்படிக்குக் கேட்டனர். ஒட்டக்கூத்தர் ஆறு காண்டம் பாடியுங் கம்பர் தெய்வ வணக்கந்தானுஞ் செய்யா திருக்க, அரசன் ஒருநாள் அந்த இரு கவிகளையும் அழைப்பித்து, "எவ்வளவு பாடினீர்' என்று வினவ, ஒட்டக்கூத்தர் உத்தரமாக ஐந்து காண்டமும் பாடி ஆருவது காண்டத்திற் கடல் காண் படலம் வரையும் பாடினேன்" என்றனர். கம்பர் அது கேட்டுத் தாங் கூத்தரிலும் அதிகம் பாடினதாகக் காண்பிக்க விரும்பிச் "சேது பந்தனப் படலம் பாடுகின்றேன்' என்றனர். அது கேட்ட சோழன் "நீர் பாடிய பாடலைச் சற்றே பிரசங்கியும் கேட்போம்" என்ன இவர் உடனே அப்படலத்தைப் பாடி உபந்நியாசித்தார்.
**குமுத னிட்ட குலவரை கூத்தரிற்
திமுத* மிட்டுத் திரியுந் திரைகடற் துமித மூர்புக வானவர் துள்ளினர் அமுத மின்னு மெழுமெனு மாசையால்' 1. நூ. பா. முட்டவரால் − 2. நூ. பா. நாட்டம் 3. S. ur. ifs

- 4t
எனும் விருத்தத்தை இவர் சொல்லி உபந்நியாயஞ் செய்தகாலைத், *துமி" என்னும் பதத்திற்குப் பொருள் "துளி’ எனக் கம்பர் கூறியதற்கு, ஒட்டக்கூத்தர் ஆட்சேபனை செய்து, துமி துளிக்காதலை மெய்ப்பிக்க வேண்டும் என்று கேட்க, மற்றைநாட் கம்பர் அவ ரையுங் குலோத்துங்க சோழனையும் பிறரையும் ஆயர் வீதிக்குக் கூட் டிப் போய்ச், சரஸ்வதியின் அணுக்கிரகத்தால் ஆச்சரியமான வித மாக அதை மெய்ப்படுத்தினராம். இதனுற் கம்பர் பாடலுக்கு அதி மேன்மை பிறந்தது. இதையும், தமது பாடலில் இவரது பாடல் நயமெனப் பிறர் புகழ்வதையும் ஒட்டக்கூத்தர் கண்டும் கேட்டும் அதன் உண்மையைத் தாமே அறிந்தும், ஒருநாட் தாம் ஆறேழு மாசமாகப் பாடி வைத்திருந்த ஆறு காண்டங்களையும் கிழித்தெ றிந்து, ஏழாவதான உத்தர காண்டத்தைக் கிழிக்கத் தொடங்கும் போது, தற்செயலாய் அவரது வீட்டு வீதி மார்க்காேய்ப் போன கம்பர் உள்ளே சென்று 'உமது பாடல் ஏட்டையேன் கிழிக்கிறீர்" என்ன, அவர், "வரகவியே கவி மற்றைக்கவி என்ன கவி' என்று ஏழாங் காண்டத்தையுங் கிழிக்கத் துணிகையில், இவர் தமது பாட லுக்கும் அவரது பாடலுக்குமுள்ள வேற்றுமையை உலகம் அறிய வேண்டுமென்று எண்ணி 'நீர் பாடிய உத்தரகாண்டத்தை நாம் பாடிய மற்றைய ஆறுகாண்டங்களுடன் அமைத்துக்கொள்ளும்படி தருக" என்று கூறி, அக் காண்டத்தைத் தப்புவித்துத் தம் பாட லுடனே சேர்த்தனர். இராக்காலத்திற் சொற்ப நேரந் தவிர மற் றும்படி விழித்திருந்து வான்மீகம், வாசிஷ்டம், போதாயனம் முத லிய இராம சரித்திரங்களை வைதீகப்பிராமணர்களைக் கொண்டு ஆராய்வு செய்வித்துக் கதைகளைக் கேட்டிருந்து, பகலிலே கற்றுச் சொல்லிகளை வைத்துக்கொண்டு, ஒவ்வொருவருக்கு ஐம்பதறுபது வீதமாகக் கவிசொல்லி, நாளொன்றுக்கு எoo விருத்தங்களாக ஆறு காண்டங்களையும் ஒரு பகடித்துட் பாடி முடித்தனராம். சரஸ்வதி இவர் கண்ணுக்கு மாத்திரந் தோற்றிப் 'பொழுது முடிந்தது கம்பா" என்று சொல்ல, 'எழுதி முடிந்தது அம்பா" எனக் கம்பர் சொல்லுவார் எனவுங் கதையுளது. நாளொன்றுக்கு எ00 செய்யுள் இவராற் பாடப்பட்டன என்றதற்குப் பின்வருங் கவி திருட்டாந்த மாகும.
'கழுந்த ராயுன கழல்பணி யாதவர் கதிர்மணி முடிமீதே அழுந்த வாளிக டொடுசிலை ராகவ வபிநவ கவிநாதன்
விழுந்த ஞாயிறு வெழுவதன் முன்மறை வேதியருடனராய்ந் தெழுந்த ஞாயிறு விழுவதன் முன்கவிபாடினதெழுநூறே. *

Page 29
தாம் இராமாயணம் பாடி முடித்த சங்கதியைக் கம்பர் குலோத் துங்க சோழனுக்குஞ் சடையப்ப வள்ளலுக்குந் தெரிவித்து அவர் கள் அனுமதிபெற்று பூரீரங்கத்தில் அதை அரங்கேற்றப்போக, அங் குள்ள வைஷ்ணவப் பிராமணர் அழுக்காறுற்றுச் "சிதம்பர வாசிக ளாகும் தில்லை மூவாயிரரே தமிழ்ச் சிரேட்டராதலால் நீர் முதல் அவரிடத்திற் சென்று உமது நூலை அரங்கேற்றல் கடன்" என்று போக்குக் கூறினர். கம்பர் அப்படி ஆகட்டும் என்று தில்லைக்குச் சென்று, அவர்களுட் சிலரைக் கண்டு, தாம் வந்த கருத்தைப் பேச, அவர்களோ "நாங்கள் மூவாயிரரும் ஒருங்கு கூடினன்றி யாதொரு கருமமுஞ் செய்தல்கூடாது" என்று தனித்தனி ஒவ்வொருவருஞ் சொல்லப், புலவர் பெருமானம் இவர் விசாரமாய் இரு க் க, மற்றை நாளோ அப்பிராமணர் அத்தனைபேரும் ஓரிடங் கூடும்படி யான சம்பவம் ஒன்று நேரிட்டது. அவர்களுள் ஒருவரது பிள்ளைக்கு அரவந் தீண்டியதால் அப்பிள்ளை இறந்துவிடத், தில்லைமூவாயிரர் யாவரும் அவ்வீட்டிலே ஏககாலத்திற் கூடக், கம்பர் தம் கையி லிருந்த இராமாயணம் நாகபாசப்படலத்திற் சில பாட்டுகள் தெரிந்து படிக்க உடனே, உறங்கி விழித்தார் போல இறந்த பிள்ளை உயிர் கொண்டு எழுந்ததென்ப. இந்த ஆச்சரியங்கண்ட அப்பிராமணர் இவரை மெத்தவும் பாராட்டி உபசரணை செய்து தொல்காப்பிப்ரிடஞ் சில விஞக் கேட்ட அதங்கோட்டாசிரியர் போலக், கடமைக்காக இவரிடஞ் சில கேட்டு, அப்பால் இவர் திறமையை மெச்சித் துதி கவியுங் கையொப்பமுங் கொடுத்து அனுப்பினர்கள்.
இவர் பூரீரங்கத்திற்குத் திரும்பியபோது பிராமணர் பின்னுந் தம்மனத்துற்ற அசூயையை விடாராகி இவரை, நோக்கி: ஓய் புலவர் சிகாமணி! திருநறுங்கொண்டைத் தலத்துள்ள சைநர்கள் தமிழ் வல்லராய் இருத்தலின் நீர் அங்கேயும் போய் அவர்கள் கையொப்பம் வாங்கி வரல்வேண்டும், அதுவல்லவா உத்தமம்”* என்று பின்னும் போக்குக்கூற, இவர் "நல்லது' என்று அவ்வூர் தேடிச் செல்ல, அவர்கள் இவரை மரியாதையாய் அங்கீகரித்து வந்த காரணம் விஞவி இவரது பாடலை ஆராய்ந்து பார்த்து, ஒ! நம்மிடத்துள்ள சிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, மணி மேகலை, குண்டலகேசி என்னும் பஞ்ச காவியங்களிலும் இது அதி மாட்சிமையுற்றது என்று சொல்லித், தங் கையொப்பத்துடன் துதி கவியுங் கொடுத்தனர். அதையும் வாங்கி இவர் பூரீரங்கத்திற்குத் திரும்ப, அங்குள்ள பிராமணர் பின்னும் இவரை நோக்கி நீர் மாவண்டூருக்குப் போய் அங்குள்ள சிரேட்ட பண்டிதகிைய கருமா னுடைய அனுமதியும் வாங்கிவரல் வேண்டுமென, இவரும் அதற்கு இசைந்து அவனிடம் போக, அவன் இவர் வரவிற் சந்திரோதயங் 1. நூ. பா. திருநறுங்குண்டைத்

- 43 -
கண்ட ஆம்பல் மலர் போல முகமலர்ந்து அளவளாவி இவரை உபசரித்து, இவர் பாடலிற் சில விஞவி மனமகிழ்ந்து தன் கை யொப்பமுந் துதிகவியுங் கொடுத்தான்.
பூரீரங்கத்துப் பிராமணரோ அம்மட்டில் விடாது, இவரை விளித்துப் புலவர் பெருமானே! தஞ்சாவூரிலே அஞ்சனட்சி என் ருெரு தாசியுண்டே, அவள் பிரபல வித்துவாமிசையாய் இருக்கி ருளே, அவள் கையொப்பமும் வந்தாற் சரிதான் என்று கூறக் கம்பர் அவரை நோக்கி "ஆகட்டும்" என்று உத்தரஞ்சொல்லி, அவ ரிடத்துச் செல்ல அவர் இவர் வரவைக்கண்டு விம்மித்தராகித் தம் மிடஞ் சென்ற காரணத்தை வினவித், தேவரீர்! தாங்கள் இதற்காக இங்கு எழுந்தருளல் வேண்டுமா? அடியேனை அழைத்தாற் தங்கள் சமுகம் வரமாட்டேன என்று உபசாரவாக்குக் கூறிக், கையொப்பம் இட்டுத் துதிகவியுங் கொடுத்து அனுப்பினர். பிராமணரோ, இளகின இரும்பை அடிக்குங் கொல்லரெனப் பின்னும் மரியாதை யற்றவராய், வேறு சிலர் அனுமதியுந் துதிகவிகளும் வாங்குவித்த பின்னர், ஈற்றில், 'நும் புதல்வரான அம்பிகாபதியின் 0 அனுமதி யும் வந்தாற்ருன் பூரணம்" என்றனர்.
உடனே புலவர்பெருமான் தம் புத்திரரை அழைப்பிக்க அவர் வந்து தந்தையாரது உபய பாதங்களில் வீழ்ந்து தண்டன் செய்து, அடியேன அழைப்பித்தது என்ன? தந்தையே என, இவர்: "அப்பா மகனே, அம்பிகாபதி, நமது பாடலுக்கு உன் கையொப்பமும் வேண்டும்" என்று பூரீரங்கத்து வேதியர் ஆசித்தனர்; அது பற்றியே உன்னை இங்கு அழைப்பித்தேன் என, அவர் முகமலர்ந்து: "தந்தாய் அவர் விரும்பிய வண்ணம் தருகிறேன்" என்று கூறிப் புகழ்க் கவியுங் கைச்சாத்துங் கொடுத்தனர். இவற்றின் பின்பு கம்பர் சட கோபர் அந்தாதி என்னும் பாடலை நூறு கட்டளைக் கலித்துறை யிற் பாடி அரங்கேற்றத்தை ஆரம்பித்தனர். சடகோபர் என்ப்ார் விஷ்ணு சமயிகளுக்குரிய ஆழ்வார் பலருள் ஒருவர். விசாலமும் உன் னதமுமான ஆயிரக்கான் மண்டபத்தின் கண்ணே, வேதாகம சாஸ் திர பண்டிதர்கள், வடமொழிப் புலவர்கள், தென்மொழிப் புலவர் கள், அரசர்கள், பிரசைகள் ஆதிய பலர் சமுகத்திலே கம்பர் இரா மாயணத்தைப் பிரசங்கித்து அரங்கேற்றுஞ் சமயத்திலே வைஷ்ண வர்கள் இடைக்கிடை சிற்சில கவிகளில் வினவி ஆட்சேபங்கள் தொடுக்க அவர்களுக்குத் திருத்திவருமாறு இவர் சமாதானஞ் செய்தனீர்.
வைஷ்ணவச் சிரேஷ்டரான சீமந் நாதமுனிகள் இவர் அரங் கேற்றத்துக்கு அதி உச்சாகமாய்ச் சகாயஞ்செய்து, அரங்கேற்றஞ் சமாப்தியானவுடனே வித்துவ சிரோமணியாகிய இவரை நோக்கி : " "இத்தகைய மகாகாவியத்திலே நீர் நரஸ்துதி பண்ணியகார்ண்ம்

Page 30
سس۔ 44 ۔
யாது' என்று கேட்க இவர் பிரதியுத்தரமாகச், 'சுவாமிகளே! சடையப்பமுதலியார் எனது அன்னதாதாவாய் இக்காவியத்தைப் பாடும்படி என்னை ஏவினர் ஆதலாலும், என்மகன் அம்பிகாபதி யின் விவாகத்திற் பாதபூசை நடக்கும்போது அரசர்கள் பிரபுக்கள் நிறைந்திருந்த கலியாண மண்டபத்தின் வாசலில், மேற்படி வள்ள லானவர் வந்து தாமிருக்க இடங்காணுது நிற்கச், சிலர் எழுந்து "இங்கே வருக எனறு அவரை அழைக்கச், சிலர் "அங்கே வருக" என்று அழைக்க, அவர் யாவர்க்குங் கையமைத்து அங்கணத்தின் வரம்பிலே நிற்க, அதை என் பாரி கண்டு பொருளாகி வியசன முற்று: "இத்தனை சனங்கட்கும் இடமிருக்க எமது அண்ணு அவர் கட்டு மாத்திரமா அந்த அங்கணங் கிடைத்தது' என்று என்னைக் கேட்க, யான் உத்தரமாக: "உன் அண்ணனை இந்த விடத்திலா வைப் பது? யான் வைக்குமிடத்தில் வைக்கிறேன்" என்று சொன்னேன் ஆதலானும், அவர் பெயரைப் பலவிடங்களிலும், அவர் தம்பிமார் கண்ண முதலியார், சரராம முதலியார் என்பவர்கள் பெயர்களை இரண்டோர் இடத்திலும் வைத்தேன்' என்ருர்,
சீமந் நாதமுனிகள் அதைக் கேட்டு மகிழ்ந்து : அப்படியேல், அவர் நாமங்களை நூற்றுக்கொரு முறை வையாது ஆயிரத்திற் கொருமுறை வைத்தாற் போதுமே என்றனர். கம்பரோ அவ்வாக் கைச் சிந்தை வருந்தாது கேட்டு, மகாபாக்கியம் ஐயா! நான் அந்த வள்ளலின் குணதிசயங்களை விளங்காது நூற்றுக்கொன்ருக மதித் தேன். தாங்களோ ஆயிரத்துக்கொன்முக மதித்தீர்களே என்று சமாளித்து அவ்வாறு செய்கின் ருேம் என்றனர். அப்பொழுதே அம் முனிவர் இவர்க்குக் கவிச்சக்கரவர்த்தி, தெய்வக் கவிஞர், ஆழ்வார் என்னும் திருநாமங்களையிட்டுச், சங்கத்திருந்தார் பலரைக்கொண்டு சாத்துகவிகள் சாற்றுவித்து, வைஷ்ணவரைக்கொண்டு தக்க மரி யாதையுஞ் செய்வித்தார்.
இவ்வாறு பூரீரங்கத்திலே இராமாயணம் அரங்கேற்றமான பின்பு கம்பர் திருவெண்ணெய் நல்லூர்க்குச் சென்று, சடையப்ப முதலி யாரைக் கண்டு, அதுகாறும் நடந்த வர்த்தமானங்களைச் சொல்லி, உறையூர் சென்று குலோத்துங்க சோழனுக்கும் அவற்றைத் தெரி வித்தார். இவ் வர்த்தமானங்கள் எல்லாம் உமக்கும் உங்காவியத்துக் கும் கெளரவமேயென்று சோழன் கூறிப், பாண்டியராதி அரசரை யுஞ், சடையப்ப வள்ளல்ாதி பிரபுக்களையும், வித்துவசனர்களையும் அழைத்துச் சபைகூட்டி வைத்து இராமாயணப் பிரசங்கஞ் செய்வித் தான். இடைக்கிடை புவீசர்களும் கவீசர்சளும் சிற்சில வினக்களைக் கேட்டனர். ஒட்டக்கூத்தருஞ் சிலவற்றை வினவினர். யாவரும் பிர மிப்படையவும் சாந்தப்படவுந் தக்கதாக உத்தரங்கூறி உபநயித்து முடித்த பின், சேரராசன் கம்பநாட்டாழ்வாருக்கு விலை பெற்ற ஆடையாபரணங்களுடன் பூமிகளையும் வெகுமதி செய்து, -

-س- 45 ---
'தராதலத்தி னுள்ள தமிழ்க்குற்ற மெல்லாம்
அராவு மரமாயிற் றன்றே - இராவணன் மேல் அம்புநாட் டாழ்வா னடிபணியு மாதித்தன் கம்பநாட் டாழ்வான் கவி' எனத் துதிகவியும் பாடிக் கொடுத்தான். ஒளவையாராதி வித்துவ சனர்களும் புகழ்க்கவி கொடுத்தனர். குலோத்துங்க சோழன் இந்தக் கவிச்சக்கரவர்த்திக்கு உயர்ந்த பட்டாடை தரிப்பித்துச் சங்கு சக்கரக் கடுக்கன் பூட்டிப், பதக்கம் முத்துமாலை யாதிய கொடுத் துப் பொன்னம்பாரி கட்டிய பட்டத்து யானைமேலே ஏற்றிக் கிராமப் பிரதட்சணம் வருவித்துச் சத்திரமாதி விருதுகளோடு,
* வாழ்வார் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன்
வாழ்த்துபெறத் தாழ்வா ருயரப் புலவோ ரகவிரு டானகலப் போழ்வார் கதிரி னுதித்ததெய் வப்புல மைக்கம்பநாட் டாழ்வார் பதத்தைச்சிந் திப்பவர்க்கி? யாது மரியதன்றே"
எனுந் துதிகவியுங் கொடுத்தான். இவையன்றிக் கருணு கர பாண்டி யன் யானைத் தந்தத் தண்டிகையுடன் பற்பல வெகுமதிகள் ஈந்து,
* தரலாற்றுங் கவிச்சக்ர வர்த்திசெய்யுட்
டானழ முடைமை நோக்கி வரலாற்று முறையினியற் றமிழுணர்ந்த
முதியோரு மற்றுள் ளோரும் முரலாற்றுங் கடற்பாரிற் கம்பசூத்திர முதுசொன் மொழிப வன்னேற் கெரலாற்று மால்சங்க மொக்குமெனின் யான்வேருெப் பியம்ப லாமால்' எனத் துதி கவியுங் கொடுக்கக், குடகதேச ராசன் யானைகளும், மாறு வாடித் தேசத்தரசன் ஒட்டகங்களும், சிந்துதேச மன்னன் குதிரைகளும், பிறர் வெவ்வேறு பரிசுகளுங் கொடுத்தார்கள். இந்தப் புலவர் எங்கேனும் போம்போது முந்நூறு புலவர் தற்சூழ்ந்து வரத் தண்டிகை ஏறி இராச பவனியோடு செல்ல, வழிச் செலவுகள் அங்கங்கே அவ்வவ்வூர்ச் சனங்களால் இஷ்டமாய் இவர்க்குக் கொடுக்
1. நூ. பா. புலவோர் கவிஞர்க 2. நூ. பா. டாழ்வா ரடியைச்சிந் தீப்பர்க்கி

Page 31
- 46 -
கப்பட்டன. சனங்கள் கொடுத்தவற்றைத் துரைத்தனத்தார் தம் வருடவரியிற் கம்பர் போன வழிச் செலவிற்கென்று கழித்துவிடு வார்கள். இத்துணைய உபசரணை பெற்ற இப்புலவர் பெருமானுக் கும் இவரை உயர்த்திவைத்த சோழராசனுக்கும் பிற்காலத்தில் ஒவ்வாமை உண்டுபட்டது. இவர் " " இந்த இராச்சியம் உமக்கைக் கியம், நீரெமக்கைக்கியம்" என்று ஒருமுறை இராசாவோடு தம்மைச் சரிக்கட்டி ஒப்பிட்டுப் பேசியதால் அவன் யாதும் பேசாது கோபங்கொண்டு வீட்டிற் போய், அங்கே ஆகாரம் உண்ணுது பட் டினியாய் இருந்தனன். அரசி முகாந்தரத்தை அறிந்து அவனது தாசியாகிய பொன்னிக்கு உணர்த்த, அவள் : ஒ! யான் இந்தக் கணமே கம்பரிடஞ் சென்று அவரது அகம்பிரமத்தை அடக்கி அவரை எனக்கு அடிமையுமாக்கி வருகிறேன் பாரீர் என்று சபதஞ் சொல்லிப் போய், உபாய மாயமொன்ருற், 'தாசி பொன்னிக்குக் கம்பனடிமை" என்று ஓர் நறுக்கில் எழுதுவித்துக் கையொப்பமும் வாங்கி அரசனிடங் கொடுக்க, அரசன் மிக மகிழ்ந்து, மற்றைநாள் வித்துவான்கள் கூடியிருந்த சபையில் அந்நறுக்கை வாசித்துப் பகிடி பண்ணிக் கம்பரை நோக்கி ஓ! புலவரே இதை நீர்தானே எழுதினீர் என்ருன். இவர் அதற்கு உத்தரமாய்: நாம் எழுதியது மெய்யே, அதன் பொருள் அறியாதார்க்கு அது நகைப்பாய் இருக்கும், அல்லா தார்க்கு அப்படியிராது எனச் சொல்லித், 'தாய்" கடை குறைந்து 'தா' என்ருயது. 'சீ' குறுகிச் "சி" என்ருயது. ** பொன் " * பொன்னி " என இகரவிகுதி பெற்றுள்ளது. மொத்தம் பார்க் கில் உலக மாதாவான சிறீ லக்குமிக்குக் கம்பனடிமை யென்பது பொருள் என்று தாற்பரிக்க அரசன் கேட்டு வெட்கி, அம்மம்ம ! புலவர்களை ஒருநாளும் நம்பொனது என்று சினந்து,
'போற்றினும் போற்றுவர் பொருள்கொ டாவிடிற்
தூற்றினுந் தூற்றுவர் சொன்ன சொற்களை மாற்றினு மாற்றுவர் வன்க ளுளர்கள் கூற்றினும் பாவலர் கொடிய ராவரே" என்னும் இப் பாட்டைக் கூறிக் கோபதீரணுய் ' நான் கொடுத்த விருதுக்களை வைத்து நீ எங்கேனும் போகலாம் ?? என்றன். அது கேட்ட கம்பர், 3.
"காத மிருபத்து நான்கொழியக் காசினியை
ஒதக் கடல்கொண் டொளித்ததோ? - மேதினியிற் கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா நீழுனிந்தால் இல்லையோ வெங்கட் கிடம்" என்றும்,
1. நூ. பா. தாசிப் 2. நூ. பா. டொழித்ததோ

f
- 47 -
"மன்னவனு நீயோ வளநாடு முன்னதோ
உன்னையறிந் தோதமிழை யோதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ வுண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு’** என்றும் பாடி, வீட்டுக்குத்தானும் போகாது, மனைவிக்கும் அறி வியாது, செலவுக்குப் பணமும் எடாது உசு காததுார மாத்திரம் விஸ்தாரமுற்ற அரசன் சீமையை விட்டுப் போயினர். வழியிலே செலவுக்கு முட்டுப்பட்டு ஓரிடத்திலே ஓர் வீட்டுக்குச் சுவர் வைக்க ஏற்பட்டு, அதற்குச் சம்பளமாக வேலி என்பாளிடம் நெல் வாங்கு முன், அது முன்னரே பலருங் கட்டியபோது விழுந்தாற்போல அப்போதும் விழுந்துபோகக் (இதை ஓர் பேயின் விளையாட்டு என்பர்) கம்பர் மிக்க விசனம் உற்றவராய்,
"மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்தேன்
சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரிங்கில்லை விற்கொண்ட பிறைநுதலாள் வேலி தருங்கூலி நெற்கொண்டு போமளவு நில்லாய் நெடுஞ்சுவரே' என்று சுவரை விளித்து நிற்கச் செய்து, வேலி என்னும் அரசியிடங் கூலி நெற்பெற்று அப்புறம் போனர். வழியிலே பசி அதிகரித்த போது கோமுட்டி கடையிலே அவல் கேட்டுப் பெருமலும், செக் காட்டியிடம் பிண்ணுக்குக் கேட்டு அகப்படாமலும், பிராமணனிடத் திலே தாகந் தீர நீர் கேட்டு வாயாமலும், பின்னும் முன்னடந்து களைப்புற்று அப்பாற் போம்போது, உழுகிற வேளாளன் ஒருவனுக் குப் பழஞ்சோறு வரக் கண்டார். அவன் அதைக் குடிக்கப் போகிற போது இவர் முந்தி ஒடித் தம் கையை நீட்ட, அவன் தான் உண் முணுது இவர்க்கு முன் கொடுத்து, மீந்ததை உண்டனன். இவர் பசியாறி இளைப்புத் தீர்ந்தபின் இச் சம்பவங்களைச் சுட்டிச், 'செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே - முட்டிபுகும் பார்ப்பா ரகத்தையெட்டிப் பாரோமே யெந்நாளும் காப்பாரே வேளாளர் காண்”* மேழி பிடிக்குங்கை வேல்வேந்தர் நோக்குங்கை ஆழி தரித்தே யருளுங்கை - சூழ்வினையை நீக்குங்கை யென்று நிலைக்குங்கை நீடூழி காக்குங்கை காராளர் கை" என்று பாடினர்.
1. நூ. பா. கொப்பு

Page 32
- 48 -
மேற் குறித்த வேளாளன் போசனம் உண்டு பசியாறிப்போய் மறுபடியுங் கொல்லையில் உழவே, அவ்வுழவுசாலிற் தபலை ஒன்ருேடு புதையல் தோன்ற, அவன் மண்வெட்டி கொண்டு அதை வெட்டி எடுத்து, இப் புலவரது மங்கள வாழ்த்தினல் எனக்கிது அகப்பட்ட தென்று கூறிக், கம்பரைத் தன் வீட்டுக்குக் கூட்டிப்போய், இரண்டு மூன்று நாள் வைத்து உபசரித்து, நீர் எங்கே யாயினும் போகாது இங்கிரும் என்று மறிக்க, இவர் சம்மதியாமையால், அவன் 'இத் திரவியத்திலாயினும் பாதி கொடுபோம்" என, இவர் 'நந்நான்கு முழச் சீலை மாத்திரம் இரண்டு கொடு" என்று வாங்கிப்போய் ஓர் சீமான யடுத்து அவன் உதவியாற் சேரராசனுக்கு அடைப்பைக் காரணுயினர். இவர் அவ் இராசனுடன் இருக்கும்போது ஒருநாள் இராசசபையிற் புலவர்கள் இராமாயணப் பிரசங்கஞ் செய்ய, இவரதிற் சற்றே கருத்துந் திருத்தமுங் காட்டினதால் அரசன் இவரை நோக்கி, உனக்கு இப் பிரசங்கம் வருமா என்று கேட்க, இவர் உத்தரமாய் என் அரசனே, நான் கம்பருக்கு அடைப்பைக் காரணுய் இருந்த போது இதனைக் கேட்டிருந்தேன். ஆதலாற் சற்றே எனக்கு வரு மென. அரசன் அவ்வார்த்தையைக் கேட்டு, அப்படியானல் நல்லது, நீ சற்றே பிரசங்கி, கேட்போமென, இவர் நவரசாலங்காரத்தோடு பிரசங்கத்தைப் படித்து முழக்கிவிட்டனர். அரசன் இதைக் கண்டு சபையாருடன் அவருடைய வித்தாண்மையை மெச்சினணுய், அது முதல் இவரைத் தன் அடைப்பைக்கார வேலைய்ால் மாற்றித் தனது வித்துவான்களுட் சிரேட்டராக்கினதுமன்றித் தன் பந்தி போசனத் திலுஞ் சேர்த்துக்கொண்டனன்.
இதைக் கண்டு மற்றப் புலவர்கள் நிர்நிமித்தமாய் இவருடன் வெறுப்பாகி இவரை இழிகுலத்தானென அபவாதஞ் சொல்லி, இராசனின் நாவிதனுக்கு ஈராயிரம் வராகன் கொடுத்து, அப் புல வரை உன் சகோதரன் என்று சொல் எனத் தூண்டிவிட்டார்கள். ஒரு நாள் இவர் இராசாவுடன் சரியாசனத்தில் இருந்து இறங்கி வாசல் அண்டையிற் போக, நாவிதன் இவர் வரவைக் காத்து நின்று "என்னண்ணு' என்று யாவருங்காண இவரைக் கட்டி அழ, இவரும் நடந்த கற்பனையை அறிந்து வருவது வருக என்று நினைந்து அவனைக் கட்டிக்கொண்டு சாலமாய் அழுது, அடா! தம்பீ! நீ குடி இருப்பதெங்துன்? உன் பிள்ளைகளைக் காண வாஞ்சிக்கிறேன் என்று சொல்லிச், சும்மா செல்லப்படாது, தூக்குண்டானல் நோக்குண்டு என்ருற்போலக் கொஞ்சக் கடலை வாங்கிக்கொண்டு அவனுடன் போயினர். மைத்துனர் வந்தார் என்று அம்பட்டத்தி களித்துச் சாதங்கறி சமைத்து, மைத்துனரே! உண்ணவாரும் என்றழைக்க, இவரோ நல்லது, நான் உண்ணுமுன் என் தம்பி இடம் விசாரிக்க வேண்டிய சில உள என்று கூறி, அம்பட்டனை நோக்கித், தம்பீ!

- 49 -
நீயும் நானும் பிரிந்து இருபது வருடமாயிற்றே, நாங்கள் தாயபாகம் பிரிவிட்டதில்லையே; நீ இவ்வளவு நாளாக உழைத்ததிற் பாதியை எனக்குக் கொடு என்ருர், அவனே வித்துவான்களிடம் தான் வாங்கி வைத்திருந்த ஈராயிரம் வராகனையும் கொண்டுவந்து கொடுக்க இவரோ நல்லது தம்பி, நீ செளரஞ்செய்த நாளளவு நானும் இரா சாவுக்குச் செளரஞ் செய்ய வேண்டுமே, அதற்கு நீ சம்மதமாவென: ஆமாம், அண்ணு என, இவரோ அப்படியேல்; அரசனுக்கு இது காரியம் சம்மதமாகுமா? வா, கேட்போம் என்று கூறி, உபாயமாய் அவனை இராச சபைக்கு அழைத்துச் சென்ருர்,
இதற்கிடையில் நடந்த சங்கதிகளைத் தூதரால் அரசன் அறிந்து விசனக் கடலில் மூழ்க, எதிர்ப்பாவலர் குதூகலித்து, நம் எதிரி இன்று விழுந்தான் என்று மகிழ்ந்தார்கள். நாணத்தால் முகரூப மாறிய அரசன் கம்பரை நோக்கிச் சமாசாரம் ஏது என்று கேட்க, இவர் இராசனை நோக்கிச்: "சுவாமீ, தங்களுக்கு என். தம்பி செளரஞ் செய்த காலமளவு யானுஞ் செய்தற்பொருட்டுத் தங்கள் சம்மதங் கேட்க வந்தேன்' என்ருர். இச் சொல்லுடனே தங்காரியஞ் சித்தி யாயிற்று என்று பகைவர் கண்டு, நாவிதனைக் கூவி: " விடாதி எச் சங்கடம் வரினும் யாந்துணை செய்தும்' என்று அவனைக் கிளப்பி விட்டனர். அந்தச் சமையம் வாணி கடாட்சத்தாற் கம்பரது கையி லோர் சிலம்பு வந்ததாம். அதை இவர் அரசன் கையிற் கொடுத்து, 'இராசகெம்பீரரே யானும் என் கனிட்டனும் எம் முன்னேர் தேடி வைத்துப் போன வீட்டுத் தட்டு முட்டுகளைப் பங்கிட்டபோது இச் சிலம்பு என் பங்குக்கு வந்தது. இது போன்றது ஒன்று எனது தம்பி கையிலும் உண்டு, அதையும் வாங்கினற் தங்கள் நாயகி யார்க்கு உதவும்' என, இதைக் கேட்ட நாவிதன் திடுக்குற்ருன், யானையானது தன்னைக் கட்டச் சங்கிலி தானே எடுத்துக் கொடுத் தாற்போல, அம்பட்டன் எடுத்த துருவம் அவனுக்கே அநர்த்தம் ஆயிற்று.
அப்போது அந்த ஏழை அம்பட்டன் திகிலடைந்து அரசனைப் பார்த்து எனது ஆண்டவனே! என் வசஞ் சிலம்பு இல்லையென்று கூறக், கம்பர் அடா தம்பீ! உனக்கேன் அச்சிலம்பு ? என்போல் நீயும் அரசற்கு அதைக் கொடுத்துவிடு என்ருர், காரியம் வரவரத் தடித்தது, மயிர் வினைஞனே பின்னும் அரசனை நோக்கி என் வேந் தனே, அப்படியோர் பொருள் என்வசமில்லை என, அரசனுஞ் சபை யாரும் அவன் பேச்சை நம்பாது அவனைக் கட்டிப் புளியம் மிலாற்றற் சார்த்தும்படி ஏவற்காரரை ஏவ, அவர்கள் அவ்வாறு செய்ய, அவன், ஆண்டவனே உள்ள ன எல்லாஞ் சொல்லுகிறேன், கட்டவிழ்த்து விடுங்கள் என்றன். அரசன் அவ்வாறு செய்வித்த பின், தோரணிப்
unr - 4

Page 33
- 50 -
பொதியை அவிழ்த்து விட்டான். உடனே சேர மகாராசன் கண்கள் சிவப்பேறத் தலையாரிகளைக் கூவி அகோ! தலையாரிகாள்! இந்தத் திருட்டுப் புலவர்களைப் பிடித்துக் கழுவில் ஏற்றுங்கள் என்றன். இச் சங்கதி காதில் விழப்பெற்ற அவர்கள் பாரிகள் கம்பரிடம் ஒடி வந்து முன்ருனையை நீட்டி, நீரே எமக்கு மங்கிலியப் பிச்சை இடுமையா என்று கேட்க, இவர் மனதுருகி அரசனிடம் மனுப் பேசித் தம் பகைஞர் உயிரைப் பாதுகாத்தனர். h−
பின்பு, அரசன் நீர் யாவர்? உமது பூர்வோத்தரங்கள் யாவை? யதார்த்தமாய்க் கூறும் என்று கேட்கக், கவிச்சக்கரவர்த்தி தமது வரலாற்றில் எதையும் மறையாது கிரமமாய்க் கூறினர். கூறவே அரசன் தான் இவரை அடைப்பைக்காரணுய் வைத்திருந்ததை இட்டுத் துக்கித்துப், பண்டையிலும் பதின்மடங்கு கனம்பண்ணித் தன் வாசல் வித்துவானுக்கிக் கொண்டான்.
இது காரியம் இவ்வாறு நிற்க, முன் இவரோடு வெறுப்படைந்த சோழராசன் இவர் தன் சபையில் இல்லாததைப் பற்றித் துன்புற்றுக் கம்பரில்லாச் சபை சந்திரனில்லா வானம், தாமரையில்லாத் தடா கமே என்று உன்னிக் கன்றை நினைந்து உருகும் பசுப்போற் கரைந்து, இவர் உறைபதியைத் தூதரால் உணர்ந்து, இவர் திரும்பும்படிக் கும் இவரை அனுப்பும்படிக்கும் முறையே இவர்க்கும் அரசனுக்கும் நிருபம் போக்கினன். சோழராசன் விருப்பப்படி கம்பர் தன்னை விட்டுப் பிரியப்போகிருர் என்று சேரராசன் கண்டு துக்கமுற்றிருந்த போது, இவர் அவனை நோக்கி : என் வேந்தனே,
'பாலுக்குச் சர்க்கரை யில்லையென் பார்க்கும் பருக்கையற்ற கூழுக்குப் போடவுப் பில்லையென் பார்க்குங் குற்றித்தைத்த காலுக்குத் தோற்செருப்பில்லையென் பார்க்குங் கனகதண்டி மேலுக்குப் பஞ்சணை யில்லையென் பார்க்கும் விதனமொன்றே" என்று பாட்டிற் சொல்லி, அவனையாற்றி, இராச பவனியோடு அவனல் அனுப்பப்பட்டுச் சோணுடு சேர்ந்தனர். சேரனல் அனுப்பப் பட்டு யானைமேற் சென்ற கம்பரைச் சோழன் எதிர்வந்து அழைத் துப் போய்ச் சிங்காசனத்தில் இருத்தித், தன்னைவிட்டுப் பிரிந்த நாட் தொடங்கி இதுகாறு நடந்தவைகளைக் கேட்டுக் களித்து ஈற்றிற் பரிகாசமாய்: "எல்லாஞ் சரியே புலவரே. ஆயினும் இராசன் ஒரு வன் அடைப்பைக்காரணுய் உம்முடன் வரத்தக்க ஸ்திதியிற் திரும்பு வேன் என்று நீர் முன்சொன்ன பிரதிக்கினை ஒன்றுந் தவறினீரே" எனக், கம்பர் அரசனை நோக்கி: "அரசோத்தம! அதுவும் எட்டா நாண் நிறைவேற்றுகிறேன் பாரும்" என்று சொல்லி, முன்

எண்ணிப் பண்ணிய யோசனைப்படி சேரனுக்கோர் திருமுகம் விடுக்க, அவனும் ஒர் அடைப்பைக்காரன் வேடம் பூண்டு துரகாரூடனுய் இராசசபையின் கண்ணே வந்திருந்து, கம்பநாட்டாழ்வார்க்கு வெற் றிலை மடித்துக் கொடுத்து, மறுபடியும் இவரது சயிக்கினையின்படி சோழன் உணராதவண்ணம் விரைவிலே தன் நாட்டுக்கு ஓடினன். வந்த சேரன் திரும்பிய பின்பே வந்து போயினவன் இன்னன் என்று சோழனுக்குத் தெரிய வந்தது.
இவ்வாறு பிரஸ்தாபம் பெற்றிருந்த இப் புலவருக்குப் பிற்கால வாழ்நாள் நிம்பக் கனிபோற் கசப்பாயிருந்தது. இவரது புத்திரரும் வித்துவாழிசருமாகிய அம்பிகாபதி சோழனுடைய மகள்மீது கொண்ட மோக காரணத்தாற் கழுவிலே ஏற்றப்பட்டிறக்க, இவரும் அரசன் மன்றுக்குச் செல்லாது விட்டனர். இவர் ஒருநாட் தம் வீட்டி லிருக்கும்போது வித்தியாசாலையால் வீடு நோக்கிச் சென்ற இராச குமாரன் தெரு விதியிலே யானையொன்று செல்லக்கண்டு, அதற்குப் பயந்து இவரது அகத்துள் அடைக்கலம் புகத், தம்புத்திரரது மரணத்தாற் சோகித்து மதிமயங்கி இருந்த இவர், எழுத்தாணியி ஞல் பிள்ளையைக் குற்றிக் கொன்ருர், இஃதை அரசன் அறிந்து இவரை அழைப்பித்து இவர்மீதில் அம்பை எய்விக்க, இவர்,
**வில்லம்பு சொல்லம்பு மேதினியில் ரண்டம்பு
வில்லம்பு சொல்லம்பை வெல்லாதாம் - வில்லம்பு பட்டுதெடா வென்மார்பிற் பார்வேந்தே யுன்குலத்தைச் சுட்டுதெடா வென்வாயிற் சொல்’’
என்று பாடி, எவ்வாருே உயிர் தப்பிப் பாண்டிவளநாடு சென்று வறுமையால் நொந்திருந்தார் என்றும், இராமநாதபுரச் சீமையிலே நாட்டரசன் கோட்டையிலே அறுபது வயசில் இறந்து, வைஷ்ணவ மதாசாரப்படி சமாதி வைக்கப்பட்டார் என்றுஞ் சரித்திரமுளது. இச் சமாதி ஸ்தானத்தைக் கண்ணுரக் கண்டேன் என்றுஞ், சுக்கிர வாரந்தோறும் அதில் விளக்கு ஏற்றுகிறர்கள் என்றும், ஆண் பிள்ளை களைப் பள்ளிக்கு வைக்கும்போது அவ்விடத்திற் கூட்டிப்போய்க் கொஞ்சம் மண் கிள்ளிக் கரைத்துக் கல்வி வரும்படி அவர்களுக்குப் பருக்குவார்கள் என்றும், அப்படி மண்ணள்ளும் இடம் இந்நாளிலும் பதிவாயிருக்கிறது என்றும், இராமநாதபுரஞ் சென்ற எம் சிநேகிதர் ஒருவர் சொல்லக் கேட்டோம். கம்பர் இலங்கைக்கு வந்தார் என்று சிலர் சொல்லியிருப்பினும் அது நம்பப்படத்தக்கது என்று யாம் நினைக்கவில்லை. இவர் இறந்தார் என்ற சங்கதி காதில் விழுந்த போது, ஒட்டக்கூத்தர் துன்புற்று,

Page 34
جسس۔ 52 پتے
**இன்றைக்கோ கம்ப னிறந்தநா ளிப்புவியில்
இன்றைக்கோ வென்கவிதை யேற்குநாள்-இன்றைக்கோ பூமடந்தை வாழப் பொறைமடந்தை வீற்றிருக்க நாமடந்தை நூலிழந்த நாள்'
என்று பாடினர். இராமாயணம் அரங்கேற்றம் பெற்ற காலமாதி
வற்றைப் பற்றிப் பின்வருங் கவிகளிற் காண்க. سمى
'எண்ணிய சகாப்த மெண்ணுாற்
றேழின்மேற் சடையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லூர்
தன்னிலே கம்ப நாடன் பண்ணிய ராம காதை
பங்குனி யத்த நாளிற் கண்ணிய வரங்கர் முன்னே
கவியரங் கேற்றி னனே." இது பூரீரங்க வைஷ்ணவ ரொருவர் சொல்லியது.
**அம்பிலே சிலையை நாட்டி யமரர்க்கன் றமுத மீந்த
தம்பிரா னென்னத் தானுந் தமிழிலே தாலை நாட்டிக் கம்பநா டுடைய வள்ளல் கவிச்சக்ர வர்த்தி பார்மேல் நம்புபா மாலை யாலே நரருக்கின்* றமுத8 மீந்தான்'
இது பின்ஞெருவர் சொல்லியது.
இராமாயணத்தையும் சடகோபரந்தாதியையும் தவிரச் சரஸ்வதி மாலை, காஞ்சி புராணம், காஞ்சிப்பிள்ளைத்தமிழ், சோழக்குறவஞ்சி, சிலையெழுபதுக், ஏரெழுபது, திருக்கைவழக்கம் என்னும் பிற பாடல் களையும் கம்பர் பாடினர். இவற்றுள் ஏர் எழுபதும் திருக்கை வழக் கமுஞ் சோழ நாட்டில் இருந்த வேளாளரைப் புகழ்ந்து பாடப் பட்டன. சிலையெழுபது வன்னியரைப் புகழ்ந்து பாடியது. கம்பர் தென்மதுரையில் ஈ00 தமிழ்ப் புலவர்களோடு சங்கப்பலகை ஏறி இருந்தார் என்றும், விஷ்ணு சமயப் புலவர் ஒருவர் "கண்ணன் கழலிணை' என்னும் பாக்ரத்தை ஒரு முறியிலே எழுதி, அதைச் சங்கப் பலகையில் ஏற்றக்கொடுக்க, அது கம்பரையும் மற்றைப் புலவரையும் தள்ளி வீழ்த்தித் தன்ரியே பீடத்து வீற்றிருந்ததென்றும்,
1. g, u I. dů usů 2. நூ. பா. நரர்க்குமின் 3. நூ. பா. நிமிர்த 4. து. பா. சில்யெழுத்து

. . ... 53 س..
அதன்பின் கம்பர் "ஈயாடுவதுகோ " என்னும் விருத்தத்தாற் கண்ணனைப் புகழ்ந்தார் என்றும், மற்றைப் புலவரும் எழுந்து பாடித் துதித்தனர் என்றுங் கதையுளது. வான்மீக இருவி 24000 சுலோகத் திற் சொல்லிய இராமாயணத்தைக் கம்பர் 12000 செய்யுளுள் அடக்கினர். இராமாயணத்திலே பாலகாண்டம், அயோத்தியா காண்டம் , ஆரணிய காண்டம், கிஷ்கிந்தா காண்டம்?, சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் என்னும் ஏழு காண் டங்களுள. இவற்றுட் சில பகுதிகள், ஐரோப்பிய பாடைகளிலே பாஷாந்தரப்படுத்தப்பட்டிருக்கின்றன. கிறிஸ்தாப்தம் சஅசுக-ம் டு) 2.6*acjb (Mr. Tabboy Wheeler), 95ig (pair s-gos-b Gu மார்ஷ்மன், கேரி ( Marshman & Carey) என்பவர்களும் சிலவற்றை இங்கிலிஷில் மொழிபெயர்த்தனர். இ-ம், உ-ம் காண்டங்களைக் காசி நகர்க் கல்லூரித் தலைவராகிய கிறிவிது பண்டிதர் (Mr. Griffith, M.A.) மொழிபெயர்த்தனர். பாலகாண்டத்துக்குக் கிருஷ்ணசாமி முதலியார் உரைசெய்திருக்கிருர், இராமாயணத்தில் மொத்தம் கe,அoசு விருத்தங்களுள. **பரசமர் பத்து நான்கு படலநூற் றெண்பத் தொன்று கரைசெறி காண்ட மேழு கதைகளா யிரத்தெண் ணுாறு விரைசெறி விருத்தம் பன்னி ராயிரத் தெண்ணுரற் ருறு வரைசெறி கம்பன் சொன்ன வண்ணமுமெண்பத் தேழே’
என்ருர் ஒருவர். கம்பர் செழித்தோங்கி இருந்த காலம் சகாப்தம் அoன் என முன்னர் வந்த விருத்தங் கூறிற்று.
குறிப்பு
"தமிழ் புளூராக்" (1859) தந்த கம்பர் பற்றிய செய்திகளை மாற்றியும் விரித்தும் எழுதுவதற்குச் சதாசிவம் பிள்ளைக்கு விநோத ரசமஞ்சரி (1876) பெருமளவில் உதவியிருக்கின்றது. சதாசிவம் பிள்ளை தரும் கம்பர் சரிதத்தில் இரண்டாம் பந்தியில் இடம்பெறும் இராமாயணம் பாடுவிக்கச் சடையப்ப வள்ளல் முயலுதல் முதல் ஒன்பதாம் பந்தியாம் இராமாயணப் பிரசங்க விருத்தாந்தம் வரையி லான விடயங்களும் பதினேழாம் பந்தியில் இடம்பெறும் சங்கப் பலகை பற்றிய கதையும் கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றி யது எனும் பிரிவிலும் ஒன்பதாம் பந்தியில் இடம்பெறும் பொன்னி கதை, வேலிகதை, வேளாளன் கதை ஆதியன முதல் பதினைந் தாம் பந்தி வரையிலான விடயங்கள் கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி எனும் பிரிவிலும் விநோதரச மஞ்சரியிலும் இடம்பெறுவன. "தமிழ் புளூராக்” நூலிலும் விநோதரச மஞ்சரியிலும் காணப்
is 5. Luf- அயோத்தி காண்டம்
. நூ. பா. கிஷ்கிந்தை காண்உம்

Page 35
一 54一
பெருத சில செய்திகளையும் சதாசிவம்பிள்ளை தந்துள்ளார். முற் கிளந்த நூல்களில் மட்டுமன்றி புலவர் புராணத்திற்கூட இடம் பெருத குதிரைக்கதை பாவலர் சரித்திர தீபகத்தில் இடம்பெறு கின்றது. சதாசிவம்பிள்ளை தரும் "" மோட்டெருமை வாவிபுக" எனும் பாடல் தமிழ் நாவலர் சரிதையிலும் (77) தனிப்பாடற் றிரட்டிலும் இடம்பெற்றபோதும் காசிச்செட்டி யவர்களாலோ அல்லது வீராசாமி செட்டியாராலோ எடுத்தாளப்பெறவில்லை. "பொழுது முடிந்தது கம்பா; எழுதி முடிந்தது அம்பா" எனும் கூற்று விநோதரச மஞ்சரியின் பழைய பதிப்புகளில் இடம்பெற்றதோ என்பதை அறிதல் வேண்டும் தற்காலப் பதிப்புகளில் இக்கூற்றுக் காணப்பெறவில்லை. சோழன் சபையில் நடந்த இராமாயணப் பிர சங்கத்தின்போது சேர சோழ பாண்டியர் பாடியனவாகப் பாவலர் சரித்திர தீபகம் தரும் துதிகவிகள் விநோதரச மஞ்சரியின் ஆசிரிய ராலே தரப்படவில்லை: இப் பாடல்கள் இராமாயணத் தனியன்களாக வழங்குவன. வேளாளன் கதையிற் சதாசிவம்பிள்ளை தரும் " மேழி பிடிக்குங்கை ** எனும் பாடல் விநோதரச மஞ்சரியில் இடம்பெருதது; தனிப்பாடற்றிரட்டிற் காணப்பெறுவது. சதாசிவம்பிள்ளை புதிதாகத் தந்த செய்திகளுக்கு, அவர் காலத்தில் வெளிவந்த இராமாயணப் பதிப்புகளும் உதவியிருக்கலாம்.
கம்பர் வாழ்ந்த காலத்திலோ அன்றி அதனையடுத்த காலத் திலோ எழுந்த தமிழ் நூல்கள் கம்பர் வரலாறு பற்றிய செய்திகள் எவற்றையாவது உரைத்தமைக்குச் சான்றுகள் இருப்பதாகத் தெரிய வில்லை. கம்பர் வரலாற்றேடு தொடர்புடைய செய்திகள் சிலவற்றைத் தரும் இராமாயணத் தனியன்களும் தனிப் பாடல்களும் எக் காலத் திலே தோன்றின என்பதை அறுதியிட்டுக் கூறுதல் சாலாது. முற் கிளந்தவை நீங்கலாக, தொண்டைமண்டல சதகம், சோழ மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், செயங்கொண்டான் சதகம் முதலிய சதக நூல்களிலும் கொங்கு மண்டல சதகவுரை, புலவர் புராணம், விநோதரச மஞ்சரி, தமிழ் நாவலர் சரிதை, தனிப் பாடற்றிரட்டு முதலியனவற்றிலும் கம்பரின் வரலாற்றுச் செய்திகள் காணப்படுகின்றன. தொண்டை மண்டல சதகத்தின் ஆசிரியர் படிக் காசுப்புலவர் பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலும் பதினெட் டாம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர். வேளூர் ஆத்மநாத தேசிகர் கறுப்ப் முதலியார் வேண்டுகோளின்படி தொண்டை மண்டல சதகம் பாடப்பெற்றதென்று சோழ மண்டல சதகத்திற் குறிப்பிடுவ தாற் படிக்காசுப் புலவருக்கு முற்பட்டவராகார். கார்மேகக் கவிஞர் கொங்கு மண்டல சதகத்திற் (செய். 85) படிக்காகப் புலவருக்குக் கொங்கு நாட்டிற் கவசையெனும் ஊரில் மசக்காளி மன்ருடி சமூகத் தில் நிகழ்ந்த சம்பவமொன்றைக் குறிப்பிடுவதாற் படிக்காசுப்

- 55 -
புலவருக்கு முற்பட்டவராகார். பாண்டிமண்டல சதகத்தின் ஆசிரியர் ஐயம்பெருமாள் பிள்ளையைத் தொண்டைமண்டல சதகம் குறிப்பிடுவ தாகச் சிலர் கருதியபோதும் வேறு சிலர் அந்நூல் மிகவும் பிற்பட்ட தென்பர்1. செயங்கொண்டான் சதகத்தின் ஆசிரியர் முத்தப்பச் செட்டியார் கால்ம் பதினெட்டாம் நூற்ருண்டின் பிற்பகுதி யென வும் பத்தொன்பதாம் நூற்றண்டின் முற்பகுதியெனவும் கூறப்படு கின்றது?. புலவர் புராணத்தின் ஆசிரியர் தண்டபாணி சுவாமிகள் கி. பி. 1839ஆம் ஆண்டிலே பிறந்தவர்2 . விநோதரச மஞ்சரியின் ஆசிரியர் வீராசாமி செட்டியார் பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதி வரை வாழ்ந்தவர். தமிழ் நாவலர் சரிதையில் இடம் பெறும் பெயர் தெரிந்த புலவர்களில் அந்தகக்கவிவீரராகவ முதலி யார் தாம் காலத்தாற் பிற்பட்டவர் ஆதலாற் சிலர் அத்தொகுப்பு பதினேழாம் நூற்ருண்டிற்குரியதாகக் கருதுவர். ஆயினும் அக் கருத்தைச் சித்தாந்தமாகக் கொளல் பொருத்தமாகத் தெரியவில்லை. தனிப்பாடற்றிரட்டு தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதர் முதலானேராலே தொகுக்கப்பெற்று 1862ஆம் ஆண்டிலே வெளி யிடப்பெற்றதாம். இவ்விரு தொகுப்புகளிலும் இடம்பெறும் பாடல் களின் கால நிர்ணயம் செய்தற்கரிதாம். கம்பரின் வரலாற்றுச் செய்திகளைப் பதினேழாம் நூற்ருண்டினையொட்டி எழுந்த நூல்கள், கர்ணபரம்பரைக் கதைகளை ஆதாரமாகக் கொண்டு கூற முற்பட்டன என்று துணிந்துரைக்க முடியுமா என்பதே ஐயத்திற்குரியதாகக் காணப்பெறும் நிலையிற் பத்தொன்பதாம் நூற்றண்டினரான வீரா சாமி செட்டியார், தண்டபாணி சுவாமிகள் போன்றேர், முன்னைய நூல்களிலும் இடம்பெருத செய்திகளை முதன்முதலாக வழங்கும் போது, கர்ண பரம்பரைக் கதைகளை அடிப்படையாகக் கொண் டார்கள் என்று கூறல் பொருத்த முடைத்தோ என்பது சிந்திக்கத் தக்கது. இவர்கள் தரும் செய்திகள் நூலுக்கு நூல் வேறுபடுவதை நோக்குமிடத்து, இவர்கள் தம் சொத்தக் கற்பனைகளைப் புகுத்திப் பலவிதமான கதைகளைச் சிருஷ்டித்திருக்கிருர்கள் என்றுரைப்பதே பொருத்தமாகத் தெரிகின்றது.
சோழன் சபையிற் கம்பருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் இடையில் வாதம் ஏற்படுவதற்குக் காரணமாய சொல் "துமி " என்பர் வீரா சாமி செட்டியார்; ' திமுதம் ' என்பர் புலவர் புராணமுடையார். இராமாயணத் தனியன் ஒன்றினை ஆதாரமாகக் கொண்டு வீராசாமி செட்டியார் கம்பர் பகற்காலத்திலே நாளொன்றுக்கு எழுநூறு பாடல்களை இயற்றினர் என்பர். தமிழ் நாவலர் சரிதையில் இடம் 1. ந, சி. கந்தையபிள்ளே: தமிழ்ப் புலவர் அகராதி, 1960, ui. 75; 5. G. GUJUDair: #55
இலக்கியங்கள், 1966, பக் 26. 2. மயில் சீனி, வேங்கடசாமி பத்தொன்பதாம் நூற்குண்டில் தமிழ் இலக்கியம், பக். 185; சோமலெ:
செட்டிநாடும் தமிழும், 1960, பக். 11-113. 3. சு. அ. இராமசாமிப்புலவர்; தமிழ்ப்புலவர் வரிசை, ஐந்தாம் புத்தகம், 1953, பக். 108,

Page 36
سے 56 --سس۔
பெறும் "ஒற்றியூர்க் காக்க வுறைகின்ற காளியே' எனும் வெண்பா (செய், 96) கம்பர் ஒற்றியூரிலிருந்து இராக்காலங்களில் இராமா யணத்தைப் பாடியதாகக் கூறுகின்றது. இராமாயணத்திற்குத் தில்லை மூவாயிரவரிடம் கையொப்பம் வேண்டக் கம்பர் கஷ்ட முற்றபோது, தில்லை மூவாயிரவருடைய பிள்ளையொன்று விடந்தீண்டி இறந்து கிடக்கக் கம்பர் விடந்நீங்கப் பாடியதாக வீராசாமி செட்டியார் தரும் பாடல்களில் இரண்டு தமிழ் நாவலர் சரிதையில் இடம்பெறு கின்றன (செய், 78, 79). ஏரெழுபது பாடி அரங்கேற்றும்போது புதுவைச் சேதிராயனை விடந்தீண்ட அது தீரக் கம்பர் அவ்விரு பாடல்களையும் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதை அடிக்குறிப்புக் கூறுகின்றது. தொண்டை மண்டல சதகமும் (செய், 57) திருக்கை வழக்கமும் (60-70) விடந்தீண்டிய நிகழ்ச்சியை ஏரெழுபதுடன் தொடர்புறுத்திக் கூறல் குறிப்பிடத்தக்கது. இராமாயணத்தில் நரஸ்துதி செய்தமைக்குக் கம்பர் கூறிய காரணங்களில் ஒன்ருக, அவர் தம் மனைவிக்குக் கொடுத்த வாக்கு வீராசாமி செட்டியா ராலே தரப்பட்டுள்ளது. "தமிழ் புளூராக்" ஆசிரியர், இரத்தின சபாபதிமாலை 26ஆம் செய்யுளின் அடிப்படையிற் கம்பர் தம் தாயா ருடைய வேண்டுகோளின்படி இராமாயணத்தில் நூற்றுக்கொருமுறை சடையப்பரை வைத்துப் பாடியதாகக் கூறுவர். ‘காத மிருபத்து" என்னும் வெண்பாவும் * மன்னவனு நீயோ " என்னும் வெண்பாவும் ஒரே சந்தர்ப்பத்திற் பாடப்பெற்றவை என்ற கருத்து விநோதரச மஞ்சரியிலுண்டு. தமிழ் நாவலர் சரிதை "மன்னவனு நீயேயோ " (செய். 88) எனும் வெண்பா "கம்பர் பின்பொருகாற் சோழனுடனே கோபித்துக்கொண்டு சொன்ன பாட்டு" என்று கூறுகின்றது, "செட்டி மக்கள்" என்ற பாடலுக்கு விநோதரச மஞ்சரி தரும் சந்தர்ப்பத் திலும் தமிழ் நாவலர் சரிதை தரும் சந்தர்ப்பம் வேறுபடுகின்றது. தமிழ் நாவலர் சரிதை (செய். 82) "இஃது ஒரு வேளாளன் களத்தில் குறுணி நெல் வாங்கி வேலிக்காலில் இறைத்துக் கம்பர் பாடியது" என்று கூறுகின்றது. அடைப்பைக்காரன் கதையை வீராசாமி செட் டியார் சேரநாட்டோடு தொடர்புறுத்திக் கூறுவர்; தமிழ் நாவலர் சரிதை ஓரங்கல் நாட்டோடு தொடர்புறுத்திக் கூறுகின்றது; இந் நூலிலே பிரதாபருத்திரனிடத்திற் போய் அவன் அடைப்பை கட்டி வரக் கம்பர் பாடியதாக வெண்பா ஒன்று (செய். 89) இடம்பெறு கின்றது. "தமிழ் புளூராக்” ஆசிரியர் நாவிதன் மூலம் கம்பரிை அவ மானப்படுத்த முயன்ற கதை ஈழத்தில் நிகழ்ந்ததாகக் கூறும் மரபொன்றுண்டு என்பர். அம்மரபைச் சதாசிவம்பிள்ளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விநோதரச மஞ்சரி பொன்னி கதை, வேலி கதை, வேளாளன் கதை என்பவற்றிற்குத் தனிப்பாடல்கள் சிலவற்றை ஆதாரமாகக்

یہ 57: حسب۔
கொண்டபோதும் ஏனையவற்றிற்குப் பழைய ஆதாரம் கொண் டிருந்ததாகக் கூறுவதற்கில்லை. முற்கிளந்த மூன்று கதைகளிலும் வீராசாமி செட்டியார் எடுத்தாளும் பாடல்களாகச் சதாசிவம்பிள்ளை தந்த பாடல்கள் தனிப்பாடற்றிரட்டில் இடம்பெறுவன. இவ்வைந்து பாடல்களிலே தமிழ் நாவலர் சரிதையில் மூன்று பாடல்கள் காணப் படுகின்றன (செய், 85, 88, 82}. ஒட்டக்கூத்தருக்கும் கம்பருக்கும் இடையிலான பகைமையைப் புலவர் புராணமும் விநோதரச மஞ் சரியும் விரித்துரைக்கின்றன. தமிழ் புளூராக்" ஆசிரியரும் இப் பகைமையை அறிந்திருந்தார் என்று கருத ஒட்டக்கூத்தர் பற்றி அவர் கூறுவன சான்ரும். தமிழ் நாவலர் சரிதையும் தொண்டை மண்டல சதகமும் கம்பருக்கும் வாணியன்தாதனுக்கு மிடையிலான பகைமையைக் கூறுகின்றனவேயொழிய ஒட்டக்கூத்தர் பகைமையைக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாவலர் சரிதையில் இடம்பெறும் மூன்று பாடல்கள் (83, 84, 102) கம்பரும் வாணி யன்தாதனும் ஒருவர்மேல் ஒருவர் பகையாய் இருந்தனர் என்றும் பின்னர் உறவாயினர் என்றும் கருத இடமளிக்கின்றன. மும்மணிக் கோவை பாடிய கம்பநாடன் கைம்மணிச் சீரன்றிச் சீரறியான் என்று வாணியன்தாதனும் (செய். 102) கூளம் பிடித்து எள்ளின் கோதுவைப்பான் விருதுகாளம் ஊதுதல் குலக் கவிக்குச் சிறுமையை ஏற்படுத்தும் என்று கம்பனும் (செய், 83) ஒருவர்மீது ஒருவர் வசை பாடியுள்ளனர். ஆயினும் "தாதா வென்றலும்’ எனும் பாடலாற் (செய், 84) கம்பர் வாணியன்தாதன் மீது கொண்டிருந்த பகை நீங்கியமை அறியக்கிடக்கின்றது. தொண்டைமண்டல சதகம்,
'பேணிய செந்தமிழ்த் தாதனுக் கேயன்பு பெற்றமையால்
நாணிய கம்பன் சிவிகையுந் தாங்கி நயந்ததமிழ் பூணிய நின்றதும் பொச்சாப்பி லாது புகுந்துபின்னும் வாணியத் தாதற்குத் தாதா னதுந்தொண்டை மண்டலமே" எனும் பாடல் மூலம் தமிழ் நாவலர் சரிதை தந்த செய்திகளை ஆதரிக்கின்றது. சோழமண்டல சதகம் (செய். 80) உத்தரகாண்டத் தின் ஆசிரியராகக் கூறும் வாணிதாதன் என்பவர் தொண்டை மண்டல சதகமும் தமிழ் நாவலர் சரிதையும் கூறும் வாணியன் தாதனதலே பொருத்தமாகத் தெரிகின்றது. ஒட்டக்கூத்தர் வாணி யருள் பெற்றதால் வாணிதாதன் என்றழைக்கப்பட்டார் என்ற கூற்று பிற்காலத்து வழக்கினை ஆதரிக்க எடுக்கப்பட்ட முயற்சி யாகும். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் (பதிகம் 42) திக்குவிசயப் படலத்திலுள்ள "மக்கள் இழந்த இடும்பையினும்” (138) எனும் பாடலை எடுத்தாண்டுள்ளமையால் உத்தர காண்டத்தின் ஆசிரியர் காலம் மிகவும் பிற்பட்டதாகாது. "இன்றைக்கோ கம்ப

Page 37
- 58 -
னிறந்த நாள்' என்ற பாடல் பிரதிபேதங்களுடன் வாணியன்தாதன் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதையில் (செய். 103) இடம்பெறு கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தில்லைமூவாயிரவர், திருநறுங் கொண்டைச் சைனர், மாவண்டூர் கரும்ான், தஞ்சாவூர் அஞ்சனட்சி, அம்பிகாபதி முதலியோரிடம் பூரீரங்கத்து வேதியர் கம்பரைக் கையொப்பத்திற்காக ஏவிவிட்டமைக்கு விநோதரச மஞ்சரி ஆசிரி யருக்கு ஆதாரமான பழைய சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் அஞ்சட்ைசி, அம்பிகாபதி பாடியனவாகத் தரும் சாற்றுகவிகள் இராமாயணத் தனியன்களாம். சோழன் மகளைக் காதலிப்பதற்கு முன்னரே அம்பிகாபதி விவாகமானவர் என்ற விநோதரச மஞ்சரியின் கூற்று முன்னைய நூல்களால் ஆதரிக் கப்படவில்லை என்பதம் குறிப்பிடத்தக்கது. வீராசாமி செட்டியார் "எண்ணிய சகாப்தம்" எனும் செய்யுள் பூரீரங்க வைஷ்ணவர் சொல் லியது என்று கூறுவதற்கும் ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.
கம்பரைப் பற்றி வழங்கும் வரலாற்றிலே முதலிலிருந்து முடிவு வரை ஒவ்வொரு கூற்றுக்கும் முரண்பாடான கூற்றுகள் உள என்று உரைப்பதிலே தவறில்லை. உண்மையைப் பொய்ம்மையிடமிருந்து பிரித்தெடுத்தல் அரிதான நிலையிற் கம்பர் வரலாற்றினைச் சிறிதள வாவது திட்டவட்டமாய் அறிய முடியாமல் இருக்கிறது.
கம்பர் என்ற பெயரே பிரச்சினைக்குரியதாக அமைகின்றது. இப் பெயர் காரணப் பெயர் என்று சிலர் கருதியிருக்கிருர்கள். சதா சிவம்பிள்ளை இப்பெயருக்கான இரு காரணங்களைத் தந்துள்ளார். புலவர் புராணமுடையார் கம்பத்தினடியிற் கிடந்து எடுக்கப் பெற் றமையால் ஏற்பட்ட பெயர் என்ருர், வேறு சிலர் கம்பநாடுடைமை யாற் பெற்ற பெயரென்றும் திருவேகம்பநாதரின் திருநாமத்தாற் பெற்ற பெயரென்றும் கருதினர். கம்பன் அரையன், கம்பவர்மன், கம்பமணியன் என்ற பெயர்கள் சாசன வாயிலாய் அறியப்படுவதாற் கம்பன் என்ற பெயர் காரணப்பெயர் என்று கூறவேண்டுவதில்லை. கம்பருடைய தந்தை பெயர் ஆதித்தன் என்று சிலர் கூறுவர். ஆவின் கொடை, இம்பருமும்பர்தாமும், தராதலத்தினுள்ள என்ற தனி யன்களில் வரும் ஆதித்தன் எனும் சொல் கம்பரின் தந்தையைக் குறிப்பதெனத் துணிதல் பொருத்தமாகாது. ஆதவன் புதல்வன் என்ற தனியனும் காண்க. கம்பருக்கு அம்பிகாபதி என்ற மக ஞெருவர் இருந்தார் என்ற கதை வழக்கிலுண்டு. புலவர் புராணம் விரித்துரைக்கும் இக்கதைக்குரிய சில கூறுகள் செயங்கொண்டான் சதகம் (செய். 11, 20), தமிழ் நாவலர் சரிதை (செய். 99, 100), தனிப்பாடற்றிரட்டு முதலியனவற்றிலும் இடம் பெறுகின்றன. ஆயினும் இக்கதையை உண்மையென்று துணிந்து கூறுவதற்குப் போதிய ஆதாரமில்லை. அம்பிகாபதி குறிப்புக் காண்க.

- 59 -
கம்பநாடன், கம்பநாட்டாழ்வார் என இராமாயணத் தனியன்கள் சிலவற்றிலும் அரசகேசரியின் இரகுவம்மிசத்திலும் கண்ட வழக் குகளை ஆதாரமாகக் கொண்டு காசிச்செட்டி முதலியோர் கம்பர் அரச பிறவியினர் என்று கூற முற்பட்டனர். கம்பநாடு ஊர்ப்பெய ரென்று சதாசிவம்பிள்ளை கூறியபோதும் காசிச்செட்டி மாவட்டப் பெயர் என்று முன்னர் எழுதியமை கவனிக்கத்தக்கது. கம்பநாடு எனவொரு பிரிவு தமிழ்நாட்டில் இருந்தமைக்கு எவ்விதமான ஆதா ரமும் காணப்படவில்லை. கவிச்சக்கரவர்த்தியைப் புவிச்சக்கரவர்த்தி யாக்கி நிறைவு கண்டனர் போலும். நாரணன் விளையாட்டெல் லாம் என்ற தனியனில் வரும் 'திருவழுந்தூர் உவச்சன்" என்ற கூற்றையும் "கைம்மணிச் சீரன்றிச் சீரறியாக் கம்பநாடன்' என்ற வாணியன் தாதன் கூற்றையும் கம்பர் உவச்சர் குலத்தவர் என்ற கதைக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளனர். தனியனுக்கு "திருவழுந் தூருள் வாழ்வோன்" என்ற பாடபேதமுமுண்டு. வாணியன்தாதன் கூறும் கம்பன் ம்மணிக்கோவை பாடியவர்: இராமாயணக் கம்பன் மும்மணிக் கோவை பாடியதாக யாண்டும் கூறப்படவில்லை. அரசர் குலத்தவர், உவச்சர் குலத்தவர் என்ற இரு வேறுபட்ட கருத்துக ளிடையே அம்ைதிகாண முற்பட்ட கதையினைக் காசிச்செட்டியும் , சதாசிவம்பிள்ளையும் தந்துள்ளனர்.
சோழமண்டல சதகம் (செய். 77) திருவழுந்தூர்க் கம்பன்" என்று கூறுகின்றது. "சோழநாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்" என நாரணன் விளையாட்டெல்லாம் என்ற தனியன் கூறுகின்றது. திரு வழுந்தூரினர் தம்மூரிலுள்ள கம்பன்மேடு என்ற இடத்திலே கம்பர் வீடும் சமாதியும் இருந்ததாகக் கூறுவர். ஆனல் ஆவின் கொடை என்ற தனியன்,
**தேவன் றிருவழுந்தூர் நன்னட்டு - மூவலூர்ச் சீரார் குளுதித்தன் சேயமையப் பாடினன்' என்று கூறுகின்றது. கம்பர் நாட்டரசன் கோட்டையில் இறந்த தாகச் செட்டிநாட்டிலே வழங்குவர். இவ்வழக்கு பதினெட்டாம் நூற்ருண்டில் இயற்றப்பெற்றதாகக் கருதப்படும் கண்ணுடையம்மன் பள்ளிலே இடம்பெறுகின்றது?
திருவெண்ணெய் நல்லூர் சடையப்பவள்ளலைப் போன்று தம் காலத்தில் வாழ்ந்த யாரையும் கம்பர் தம் காவியத்திற் சிறப்பித்துக் கூறவில்லை. சடையப்பரின் புகழ் இராமாயணத்திற் பத்து இடங்
1. d raci saars, 102. 2. ச. வையாபுரிப்பிள்ளை கம்பன் காவியம், 1955, பக். 75

Page 38
一60一
களில் இடம்பெறுவதாகக் கூறுவர். சடையன் என்ற பெயரிலே பலர் வாழ்ந்திருந்தனர் என்று கருத இடமுண்டு. அயின்றைச் சடையன் என்பவனைத் தொண்டை மண்டல சதகமும் தமிழ்நாவலர் சரிதையும் குறிப்பிடுகின்றன?. தமிழ் நாவலர் சரிதையிற் புதுவைச் சடையன் என்பவனைக் கம்பர் பாடியதாக, மூவலூர் கல்வெட்டில் இடம்பெறும், வெண்பா வொன்று தரப்பட்டுள்ளது? . இவ்வழக்கு ஆராயத்தக்கதாம். ஏனெனில், புதுவைச் சடையனின் தந்தை சங் கரன் என்றும் சங்கரனுக்கு உதவித்தொழில் புரிந்தவர் ஒட்டக்கூத்தர் என்றும் சோழமண்டல சதகத்தில் வரும் மேற்கோள் கூறுகின்றது. கூத்தரின் முதுமையிற் கம்பர் இளம்பராயத்தினர் என்று கருத வைக்கும் புதுவைச் சடையன் பற்றிய செய்திகள் வேறு சில சான்று களால் வலுவிழந்து விடுகின்றன. கம்பர் தம் காவியத்திலே யாண்டும் சடையப்பரைப் புதுவைச் சடையன் என்ருே சங்கரன் புதல்வன் என்றே கூறவில்லை. மேலும் வெண்ணெய்நல்லூர் சடையப்பரின் தந்தை பெயர் கண்டன் என்பது தமிழ் நாவலர் சரிதையாற் புலன கின்றது5, மூன்ரும் நந்திவர்மன் (கி.பி. 846-869) காலத்தைத் தொடர்ந்து ஆட்சிபுரிந்த நிருபதுங்கன், அபராஜிதன், கம்பவர்மன் ஆகிய மூவரில் ஒருவரான கம்பவர்மன் காலத்தில் உக்கல் கிராமத் தினருக்கு உதவிய சடையன் ஒருவர் உக்கல் கல்வெட்டிற் குறிப்பி டப்படுகிறர். கம்பவர்மன் காலம் ஒன்பதாம் நூற்றண்டின் பிற்பகுதி யாதலாலும் எண்ணிய சகாத்தம் என்ற தனியனுக்குக் கொள்ளும் பாடாந்தரமொன்று அக்காலத்தைச் சுட்டுவதாலும் உக்கல் கல் வெட்டுக் கூறும் சடையனும் வெண்ணெய்நல்லூர் சடையனும் ஒருவரேயென ஏ. சி. பால் நாடார் முதலியோர் கருதினர். சடையன் என்ற பெயரொற்றுமையோ அல்லது தனியனுக்குக் கொள்ளும் பாடாந்தரமோ இருவரையும் ஒருவராக நிறுவப் போதிய ஆதார மாகக் கொள்வதற்கில்லை.
கம்பரின் ஆரம்பகாலக் கல்வி வளர்ச்சி பற்றி யாதும் கூறமுடி யாத நிலையில், அவர் வாணியருளாற் புலமைபெற்ருர் என்று கூற முற்பட்டனர். கம்பர் தெய்வீக அருள் பெற்றுப் பாடிய பாடலாகச் சதாசிவம்பிள்ளை எடுத்தாண்ட பாடல் பொய்யாமொழிப் புலவர் பாடலாகவும் வழங்குகின்றது. இவ்வுண்மையைச் சதாசிவம்பிள்ளையும் அறிந்திருந்தார். தமிழ் நாவலர் சரிதையும் (செய். 61) தனிப் பாடற்றிரட்டும் இப்பாடலைப் பொய்யாமொழிப் புலவர் பாட 1 ச. வையாபுரிப்பிள்ளே தமிழ்ச்சுடர் மணிகள், 1968.-பக், 13 2. செய், 33; செய், 160, 16 3. GSi. 80 4. செய். 93
, செய், 86

----۔ 61 سس۔
லாகவே குறிப்பிடுகின்றன. தமிழ் நாவலர் சரிதை "மோட்டெருமை" (செய். 77) எனும் பாடலை "இது கம்பர் தெய்வ வரத்தினற் கவிசொல்லிய நாளிற் பாடியது" என்று கூறுகின்றது.
"தமிழ் புளூராக்” ஆசிரியர் இராஜேந்திரசோழன் கம்பரை வாசல் வித்துவானுக்கினன் என்றும் அவனையடுத்து ஆட்சி புரிந்த குலோத் துங்கசோழன் முன்னிலையில் இராமாயணம் அரங்கேற்றப்பட்டது என்றும் கூறியுள்ளார். சதாசிவம்பிள்ளையும் குலோத்துங்கசோழனைக் கம்பர் கதையுடன் தொடர்புறுத்திக் கூறியுள்ளார். பிற்காலச் சோழர் அரியாசனத்தில் மூவர் இராஜேந்திரசோழன் என்ற பெயருடன் அரசுகட்டிலேறியுள்ளனர். அவர்களில் எவரையும் அடுத்துக் குலோத் துங்கசோழன் என்ற பெயருடையவர் யாரும் அரசனுகவில்லை. அதிராஜேந்திரனையடுத்து முதலாம் குலோத்துங்கசோழன் அரசு கட்டில் ஏறியுள்ளான். திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கண நூலிற் கால்டுவெல் அவர்கள் சகம் 807 எனும் காலத்தினை மறுத்துப் பதினேராம் நூற்ருண்டே கம்பருடைய காலம் என்று கூறியுள்ள தைக் காசிச்செட்டியவர்கள் ஆதரித்துள்ளார். சகம் 807 எனும் காலத்தினை ஆதரிக்கும் சதாசிவம்பிள்ளை குலோத்துங்கசோழனைக் கம்பர் கதையுடன் தொடர்புறுத்துவது பொருத்தமில்லை. ஏனெனில், முதலாம் குலோத்துங்க சோழனே பதினேராம் நூற்றண்டின் பிற் பகுதியிலேயே ஆட்சிபுரியத் தொடங்கியுள்ளான்; சதாசிவம்பிள்ளை ஏற்கும் காலத்திற்குரிய சோழ மன்னன் முதலாம் ஆதித்தனவான்.
கம்பர் பதின்மூன்ரும் நூற்ருண்டின் முற்பகுதிக்கு முன்னர் வாழ்ந்தார் என்பது தெளிவாகும். பதினரும் நூற்ருண்டின் பிற் பகுதியிலும் பதினேழாம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த அரசகேசரி 'கற்ருர் கலியிற் பெரிதாந் தமிழ்க் கம்பநாடன்' என்பர். கி. பி. 1543ஆம் ஆண்டில் இயற்றப்பெற்ற பாகவதத்தில் நெல்லிநகர் வரதராஜ ஐயங்கார் (அருளாளதாசர்) "தசரத ராமன் சரிதை, கம்பன் மொழி செந்தமிழின் கவித்திறத்தின் காட்சி கண்டும் . வாசுதேவ கதை சொல்லினனல்" என்பர்2. புக்கதேவராயர் காலத்தில் 1376ஆம் ஆண்டு பொறிக்கப்பெற்ற கன்னடக் கல்வெட்டு கம்பராமாயண நாராயணருடைய மக்கள் ராமாயணம் ராமப்பனையும் லசுஷ்மணனையும் குறிப்பிடுகின்றது 8. பெரியவாச்சான்பிள்ளை (1228-) "ஈக்கள் வண்டொடு மொய்ப்ப" எனுமடியை4 மஞ்சுலாஞ்சோலை என்ற பெரியதிருமொழியின் பாசுர வியாக்கியானத்தில் மேற் கோளாக எடுத்தாள்வார். . இரகுவம்சம், திருவவதரப்படலம், 56
திருவரங்கப்படலம், 154, 148 Epigraphia Carnatica, Vol. Vo கம் பராமாயணம், பாலகாண்டம், ஆற்றுப்படலம், 10.
;

Page 39
- 62 -
கம்பர் வாழ்ந்த காலத்தினை நிறுவப் பயன்படுத்தப்பட்ட சில் செய்யுட்கள் வலுவுள்ள ஆதாரங்களாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணிய சகாப்தம் எனும் தனியனில் இடம் பெறும் "எண்ணுாற்றேழின் மேல்’ எனும் பாடத்தினை ஆதாரமாகக் கொண்டு சிலர் கி.பி. 885ஆம் ஆண்டு இராமாயணம் அரங்கேற்றப் பட்டதாகவும் அதனற் கம்பர் ஒன்பதாம் நூற்றண்டில் வாழ்ந்தவர் என்றும் கூறுவர். ‘எண்ணுற்றேழின் மேல்" என்பது சகம் 808 (கி.பி. 886) என்பதையே குறிக்கும் என்பது ஈண்டு சுட்டற்பாலது. இப்பாடத்திற்கு முன்னுாற்றேழின்மேல் முதலிய பாடாந்தரங்களு முளவாயினும் கம்பர் காலத்திற்கு நெருங்கியதாகக் கருதப்பட்ட இப் பாடத்தினையே பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டனர். ரா. ராக வையங்கார் பேரெண்ணுகிய ஆயிரத்தை நீக்கி அப்தங்களைக் கூறுதல் வழக்காதலால், எண்ணுாற்றேழின் மேல் என்பதற்கு, ஆயிரத்தின் மேலெண்ணிய 107 எனக்கொண்டு, சகாப்தம் 1107 (கி. பி. 1185) என்று கொள்ளல் தக்கதென்று கூறினும்? அவ்வழக்கு எப்பொழுது இடம்பெறத் தொடங்கியது என்பதையோ அல்லது அவ்வழக்கினை யொட்டியே முற்கிளந்த தனியன் பாடப்பட்டது என்பதையோ துணிந் துரைத்ததாகக் கொள்ள முடியாதிருப்பதால் வலிந்துரையாகவே கொள்ளக்கிடக்கின்றது. மேலும் இத்தனியன் ஒன்பதாம் நூற்ருண் டிலே இயற்றப்பட்டதன்று என்பதை நிறுவ, ச. வையாபுரிப்பிள்ளை எடுத்துரைத்த கருத்துக்களிலே சகாப்தம் பற்றியவை நோக்கத் தக்கவை3. சமணராலே தென்னகத்திற்கு அறிமுகஞ் செய்யப்பட்ட சகாப்தம் எனும் வழக்கு கன்னட நாட்டிற் செல்வாக்கெய்திய பின்பே தமிழ் நாட்டிற் கால்கொள்ளத் தொடங்கியது. ஒன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் ஐவர் மலைக்கல்வெட்டு (சகம் 792), வாணராயர் கல்வெட்டு (சகம் 810) என்பனவற்றிலே அருகிய வழக்காகத் தமிழ்நாட்டில் இடம்பெறத் தொடங்கிய சகாப்தம் தமிழரசரிடம் செல்வாக்குப் பெற்ற பின் பே இலக்கிய ஆட்சி பெற்றிருக்கலாம். சகம் 808இல் இலக்கியத்தில் அவ்வாட்சி காணப் பெறுதல் பொருத்தமாகத் தெரியவில்லை. மேலும் கொல்லம் 753இல் (கி. பி. 1578) எழுதப்பெற்ற தென்திருப்பேரைப் பிரதியிலே இத் தனியன் இடம்பெருததால்4 அக்காலத்திற்கு முற்பட்ட சுவடிகளில் எக்காலத்திலே இடம்பெறத் தொடங்கியது என்பதையும் தமிழ் நாட்டிலும் பிறநாடுகளிலும் கிடைக்கும் சுவடிகளின் ஒப்பியல் ஆய்வின் மூலம் பதிப்பாசிரியர் தெளிவுபடுத்த வேண்டும். எனவே
1. ச. வையாபுரிப்பிள்னை: தமிழ்ச்சுடர்மணிகள், 1968, பக். 147 2. செந்தமிழ, தொகுதி 3, பகுதி 6 3. கம்பன்காவியம், 1955, பக். 83.84, 147-49 4. ச. வைபபுசிப்பிள்ளே கம்பன்காவியம், 1955, பக். 40

- 63 -
பிற ஆதாரங்கள் இன்றி முற்கிளந்த தனியனின் அடிப்படையிற் கால நிர்ணயம் செய்தல் பொருந்தாது.
முற்கிளந்த தனியன் சுட்டிய காலத்திலும் வேறுபட்ட காலமொன் றினை வேருெரு தனியன் தருகின்றது. சில இராமாயண ஏடுகளில் விடைகொடுத்த படலத்தின் பின் இடம்பெறுவதாக "ஆவின் கொடை என்ற தனியனை ரா. ராகவையங்கார் எடுத்துக்காட்டினர். இத் தனியனிற் குறிக்கப்பட்ட ஆண்டு சகம் 1100 எனக் கொண்டு கி. பி. 1178ஆம் ஆண்டு இராமாயணம் இயற்றி முடிக்கப்பட்டது என்று சிலர் கருதியபோதும்?, தனியன் 'சகரர் ஆயிரத்து நூறு ஒழித்து" என்று கூறுவதால், ஆங்கு சுட்டப்பட்டது சகம் 900 (கி. பி. 978) என்பதேயாகும்8. இதுவரை எடுத்துக்கொண்ட இரு தனியன்களில் எதனுள் இடம்பெறும் செய்தி சரியானது? مح۔
"புவி புகழ் சென்னி" என்ற பாடலிலே 4 "அமலன் என்ற பரியாய நாமத்தால் அழைக்கப்பட்டவன் உத்தமசோழன் (970-985) என்றுரைத்தார் சதாசிவபண்டாரத்தார். உலகம் முழு வ தும் போற்றும் அரசனுகவும் சிறந்த போர்வீரனுகவும் பெருங் கொடை வள்ளலாகவும் விளங்கியவனும் தம் காலத்தவனுமாகிய மன்னசீனக் கம்பர், அவனுடைய பெயராற் போற்ருது, பரியாய நாமத்தினற் போற்றினர் என்று கூறல் பொருத்தமாகத் தெரியவில்லை. மேலும் அமலன் என்ற பேரால் வேறு மன்னரும் சிறப்பிக்கப்பட்டிருக்கின் றனர் 8. எனவே பண்டாரத்தாரவர்கள் கூற்று கம்பரின் காலத்தைத் தெளிவுபடுத்துவதாகக் கூறுவதற்கில்லை. முற்கிளந்த பாடல் முதலாம் இராசராசன் (985-1016) முதலாகச் சோழர் புகழ் உச்சநிலையில் இருந்தபோதுதான் கம்பர் வாழ்ந்தார் என்பதற்குச் சான்றென்று வையாபுரிப்பிள்ளை கருதினர்". 'கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக் கின்ற பெருமான் காடவர் கோன் கழற்சிங்கன்" என்பது போலப் "புவிபுகழ் சென்னிப் பேரமலன்' என்ற தொடரும் கவிமரபாக இருக்கலாம் என்பதாற் பிள்ளையவர்களின் கூற்று ஏற்புடைத்தென்று கூறுவதற்கில்லை.
'வன்னி நாட்டிய' என்ற பாடலிலே8 தியாகவிநோதன் என்று குறிப்பிடப்பட்டவன் மூன்ரும் குலோத்துங்கசோழன் (1178-1216)
1. செந்தமிழ், தொகுதி 3, பக். 53 w
2. ச. வையாபுரிப்பிலளே! தமிழ்ச்சுடர் மணிகள், 1968, பக். 147
தி. வை. சதாசிவபண்டாரத்தார்: இலக்கிய ஆாய்ச்சியும் கல்வெட்டுக்களும், 1961, பக். 24
பிலநீங்கு படலம், 35
இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும், பக். 24-25
குலோத்துங்க சோழனுலா, 157
கம்பன்காவியம், பக். 85
புத்தகாண்டம், மருத்துமலேப்படலம், 58
9

Page 40
- 64 -
என்பர் மு. இராகவையங்கார்1. தியாகவிநோதன் எனும் சிறப்புப் பெயர் மூன்ரும் குலோத்துங்க சோழனுக்குரியது என்று நிறுவ இராகவையங்கார் எடுத்துக்கொண்ட முயற்சியை வையாபுரிப்பிள்ளை ஆதரித்து வேறுசான்றுகள் தேடமுற்பட்டார். அவர் திரைமூர் மூன்றம் குலோத்துங்கசோழன் காலத்திலே தியாக விநோதனுற்றுார் என்று பெயர் பெற்ற தா லே தியாக விநோதன் என்பது அவன் சிறப்புப்பெயர் என்ற கருத்து வலியுறுவதாகக் கருதுவர்?. ஏ.சி பால்நாடார் கொங்குச் சோழ மன்னன் விக்கிரமன் (1004-1041) காலத்திலே தியாகவிநோதபட்டன் விளக்கு வைத்தமையும் விக்கிரம சோழனின் (1118-1135) அதிகாரிகளில் இருவர் பதியிலார் தியாக விநோத தலைக்கோலி, திருமந்திரவோலை தியாகவிநோத பிரம்ம ராயன் என்ற பெயருடையவர்களாய் இருந்தமையும் சாசனவாயி லாற் புலனுகின்றது என்று எடுத்துக்காட்டியுள்ளமையில்? மூன்ரும் குலோத்துங்கனுக்குமட்டுமேயுரிய சிறப்புப்பெயராகத் தியாகவிநோ தன் எனும் பெயரைக் கூறல் பொருத்தமாகத் தெரியவில்லை. வையாபுரிப்பிள்ளை தமிழ் நாவலர் சரிதையில் ஒரங்கல் நாட்டினை ஆட்சிபுரிந்த பிரதாபருத்திரனைக் கம்பர் பாடியதாக இடம்பெறும் செய்யுளை (89) ஆதாரமாகக்கொண்டு, ஆங்கு குறிப்பிடப்பட்டவன் பன்னிரண்டாம் நூற்ருண்டின் பிற்பகுதியில் ஆட்சி புரிந்த முதலாம் பிரதாபருத்திரன் என்றும் ஆதலாற் கம்பர் காலமும் அதுவேயென்றும் கருதுவர் 4. பிரதாபருத்திரன் அடைப்பை கட்டிவரப் பாடியதாக இடம்பெறும் முற்கிளந்த வெண்பாவை வரலாற்று உண்மையாகக் கொளல் பொருத்தமுடைத்தோ என்பது சிந்திக்கத்தக்கது.
தமிழ்க் காவியகதியை நோக்குவார் சீவகசிந்தாமணி, சூளாமணி ஆகிய காவியங்களுக்குப் பின்பே கம்பராமாயணம் தோன்றியிருத்தல் வேண்டுமென்று கருதுவர். சீவ சிந்தாமணியிலும் சூளாமணியிலும் காணப்படும் காவியமரபு கம்பராமாயணத்திற் பெறும் பூரணத்துவ மும் அக்காவியங்களிலே பயன்படுத்தப்பட்ட பாவினங்கள் இரா மாயணத்தில் அடையும் செம்மையும் குறிப்பிடத்தக்கன. திருத் தேவர் குறிப்புக் காண்க. -
இராமாயண உத்தரகாண்டம் கம்பராமாயணச் சுவடிகளோடு ஒருசேர அமைந்திருத்தபோதிலும், சில சுவடிகள் படலப்பெயர் அட்டவணையில் அந்தக் காண்டத்துள்ள படலங்களையும் உடன் கொடுத்தபோதிலும், அது கம்பன் வாக்கு அன்று என்ற கருத்து நெடுங்காலமாக நிலவிவருகின்றது. பதினேழாம் நூற்றண்டின்
المســـسـبـسمـد،
1. சாஸனத் தமிழ்க்கவி சரிதம், 1961 பக். 83-8, 2. தமிழச்சுடர் மணிகள், பக். 145 3. Tamil Culture. Vol. VI. Nos. 1&2
4. தமிழ்ச்சுடர் மணிகள், பக். 137

- 65 -
கடைக்கூறில் வாழ்ந்த சோழமண்டல சதகமுடையார் வாணிதாதன் பாடியதென்ருர், பத்தொன்பதாம் நூற்ருண்டில் விநோதரசமான கதைகளை எழுதியவர்கள் ஒட்டக்கூத்தர் பாடியதென்றனர் கம்பன் காவியத்திலிருந்து உத்தரகாண்டத்தின் செய்யுள்நடை, கவிப்போக்கு கதை அமைப்பு முறைகள், வாக்கு, பாயிரம் ஆதியன வேறுபடு வதால், அதனைக் கம்பன் வாக்கு எனல் பொருத்தமாகத் தெரிய வில்லை.
கம்பராமாயணத்திற் காணப்படும் ஆறுகாண்டங்களையும் நோக்கு மிடத்து, காண்டப் பிரிவினை, படலப் பாகுபாடு என்பன ஆசிரியர் காலத்திற்குப் பின்பே எழுந்திருத்தல் கூடும் என்று ஐயுறவேண்டி யுள்ளது. காண்டப் பொருள்கள் ஒவ்வொரு காண்டத்திலும் முடிந்து வருங் காண்டத்திற் புதியதொரு தொடக்கத்தைப் பெருது பொருள் இடையறவு இன்றித் தொடர்ந்து செல்வதும் முந்திய காண்டத்தின் இறுதிச் செய்யுளும் அடுத்துவரும் காண்டத்தின் தொடக்கச் செய் யுளும் சந்த வேறுபாடின்றி இருத்தலும் சில காண்டங்களிடையே காணப்படும் குளகம் போன்ற இயைபும் காண்டப்பிரிவினை பற்றி ஐயங்களைத் தோற்றுவிக்கின்றன. ஒவ்வொரு காண்டத்திலும் அமைந் துள்ள படல எண்ணிக்கையும் படலப் பெயர்களும் படலத்தின் தொடக்கச்செய்யுள் முடிவுச்செய்யுள்களும் பெரும்பாலான பிரதி களில் வெவ்வேறு வசையில் உள்ளமை படலப் பாகுபாடு பற்றிய ஐயங்களை ஏற்படுத்துகின்றது.
பலதரத்திலுள்ள பலராலும் பல இடங்களிற் பிரதிசெய்யப் பெற்று, பல பிரதேசங்களிலும் பரவியிருந்த கம்பராமாயணத்திற் பாடபேதங்களும் இடைச்செருகல்களும் அதி க ம |ா க க் காணப் படுகின்றன. கம்பன் எத்தனை பாடல்களைப் பாடினன் என்று அறுதி யிட்டுக் கூறமுடியாத நிலைமை காணப்படுகின்றது. காசிச்செட்டி யவர்கள் 12016 என்ருர் சதாசிவம்பிள்ளை 12806 என்ருர். சதா சிவம்பிள்ளை எடுத்தாளும் காண்டம், படலம், செய்யுள் முதலியன வற்றின் அளவைக் கூறும் தனியனுக்குப் பாடபேதங்கள் பலவுள
சென்னைக் கல்விச் சங்கத் தமிழ்ப் புலவர் திரு. வேங்கடாசல முதலியார் 1840-1843 ஆண்டுகளிற் பிரசுரஞ்செய்த ஏழு காண்டங் களின் மூலப்பதிப்புகளே, இப்போது தெரிகின்றவரை, முதன் முதல் வெளிவந்த இராமாயணப் பதிப்புகளாம். மழவை மகாலிங்கையர் முதற் பலர் தனித்தனிக் காண்டங்களைப் பதிப்பித்துள்ளனர். அவர் பாலகாண்டத்தின் மூலத்தினை 1845ஆம் ஆண்டு பதிப்பித்தார். வித்து வான் ராமசாமிநாயுடு ஆறு காண்டங்களுக்கும் உரையெழுதியுள்ளார். வை. மு கோபாலகிருஷ்ணமாசாரியர் பால, அயோத்தியா, யுத்த
1. ச. வையாபுரிப்பிள்ளே நம்பன் காவியம், பக். 60, 159
un - 5
Y

Page 41
- 66 -
காண்டங்களுக்குத் தாமே உரையியற்றியதோடமையாது (1926, 1928, 1932) வை. மு. சடகோபராமாநுஜாசாரியர், சே. கிருஷ்ண மாச்சாரியார் ஆகியோருடன் சேர்ந்து கிட்கிந்தா, சுந்தர காண்டங் களுக்கு உரையெழுதியும் (1911, 1924) அவ்விருவரும் ஆரணிய காண்டத்திற்கு எழுதிய உரையைப் (1907) புதுக்கியுமுள்ளார்.
மாடம்பாக்கம் சு. கிருஷ்ணசாமி முதலியார் அவர்கள் காஞ்சீ புரம் சபாபதி முதலியார், கோமளபுரம் இராசகோபாலபிள்ளை ஆகியோருடைய உதவியைப் பெற்று 1861ஆம் ஆண்டில் வெளியிட்ட பாலகாண்ட உரைப்பதிப்பு சென்னை முத்தமிழ் விளக்க அச்சுக்கூடத்தி லிருந்து வெளிப்போந்தது. பாலகாண் டத்திற்கு டி. என். சேஷா சலமும் அயோத்தியா காண்டத்திற்குச் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் (சிலர் தக்கோலம் இராமசாமிநாயுடு என்பர்), திரு மயிலை சண்முகம்பிள்ளை, சேஷசாஸ்திரியாரும் ஆரணிய காண்டத் திற்கு உடுமலைப்பேட்டை மு. ரா. கந்தசாமிக்கவிராயர், எஸ். வெங்கட ராயலு நாயுடுவும் சுந்தர காண்டத்திற்குத் திரிசிரபுரம் கோவிந்த பிள்ள்ையும் உரையெழுதியுள்ளனர்.
சடகோபரந்தாதியைக் கம்பர் பாடியமைக்கு "நஞ்சடகோபனைப் பாடினையோ" என்ற பாடலன்றி வேருதாரமில்லை. இராமாயணம் பாடிய வைணவர் ஆழ்வார்களுள் முக்கியமானவரான நம்மாழ் வாரைப் பாடவில்லை என்ற அபவாதம் நீங்க அந்தாதியின் ஆக்கி யோர் என்று கூறினர் போலும். சரஸ்வதிமாலை எனச் சதாசிவம்பிள்ளை கூறும் நூலையே காசிச்செட்டியவர்கள் சரஸ்வதியந்தாதி என்பர். கம்பர் பேரால் வழங்கும் சரஸ்வதியந்தாதி முப்பது கட்டளைக் கலித் துறையாலானது. ஒட்டக்கூத்தர் சரஸ்வதியந்தாதி அல்லது சரஸ்வதி மாலை யெனவொரு பிரபந்தம் பாடியதாகவும் காளமேகப் புலவர் முப்பது வெண்பாக்களாலான சரஸ்வதிமாலையென வொரு பிரபந்தம் பாடியதாகவும் கூறல் மரபாம். காஞ்சிபுராணம், காஞ்சிப்பிள்ளைத் தமிழ், சோழக்குறவஞ்சி என்பனவற்றைக் கம்பர் இயற்றியதாகக் காசிச்செட்டியவர்களும் சதாசிவம்பிள்ளையும் கூறுவதற்கு ஆதார மில்லை. சிலையெழுபதினைக் கம்பர் பாடினர் எனும் வழக்கு ஆராயத் தக்கதாம். ஏரெழுபதினைக் கம்பர் பாடினர் என்பதனைத் தொண்டை மண்டல சதகமும் (57) திருக்கை வழக்கமும் (68-70) தமிழ் நாவலர் சரிதையும் (78) ஆதரிக்கின்றன. திருக்கை வழக்கம் கம்பரால் இயற் றப்பட்டதெனல் பொருந்தாது என்பதை அந்நூலின் 66-70 அடிகளை நோக்கிற் புலனுகும். ஏரெழுபதும் திருக்கை வழக்கமும் ஆறுமுக நாவலர், தொழுவூர் வேலாயுத முதலியார் முதலியோராற் பதிப் பிக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாவலர் சரிதையிற் கம்பர் இயற்றியனவாக இருபத்தாறு பாடல்கள் இடம் பெறுகின்றன. 1895ஆம் ஆண்டுத் தனிப்பாடற் றிரட்டுப் பதிப்பில் இவற்றில் எட்டுப் பாடல்கள் கம்பர் இயற்றியன வாகவும் ஏனைய இரு பாடல்களும் கம்பர் வீட்டு வெள்ளாட்டி,அம்பிகா பதி ஆகியோர் பாடியனவாகவும் தரப்பட்டுள்ளன?. கா. சுப்பிர மணியபிள்ளையின் உரைப்பதிப்பிலே தமிழ்நாவலர் சரிதையில் இடம் பெற்றனவற்றுள் முற்கிளந்த பாடல்களுடன் மேலும் ஆறுபாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன; ஆயினும் அவற்றுள் ஒரு பாடல் சுப்பிரதீபக் கவிராயர் பாடலாகத் தரப்பட்டுள்ளது 8. தனிப்பாடற்றிரட்டின் 1895ஆம் ஆண்டுப் பதிப்பில் கம்பர் பாடல்களாக 48 பாடல்களும் அம்பிகாபதியும் கம்பரும் சேர்ந்து பாடியனவாக இரு பாடல்களும் கம்பரும் ஒளவையாரும் பாடியதாக ஒரு பாடலும் காணப்படு கின்றன4. முற்கிளந்த 48 பாடல்களுள் எட்டுப் பாடல்கள் கம்பர் பாடல்களாகவும் எட்டுப் பாடல்கள் பிறர் பாடல்களாகவும் (74,121, 154-157, 178, 216) தமிழ் நாவலர் சரிதையில் இடம்பெறுகின்றன. சுப்பிரமணியபிள்ளை பதிப்பிலே மேலும் ஆறு பாடல்கள் கம்பர் பாடல்களாக இடம்பெறுகின்றன.
5(525)T gui. - Karuni Ayar.
துறைமங்கலஞ் சிவப்பிரகாச சுவாமிகள் பரம்பரையில் உதித்த ஒருவர் என்றதற்கு மேற்பட்ட இவர் சரிதம் ஏதுங் கண்டிலம். கசும் சதாப்தத்தில் இருந்த இவர் தகைமைகொண்ட புலவர் என்பதற்கு இவர் பாடிய சிதம்பரநாதர் பதிகமும் சிதம்பரநாதர் பஞ்சரத்தினத் துறையும் சான்ரும். முந்தினதிலே சக ஆசிரிய விருத்தங்களும் பிந்தினதில் ஐந்து கட்டளைக் கலித்துறைகளும் உள. மாதிரிக்காக இவ்விடம் ஒரு விருத்தம் தருவம். VM
1. G. 77-101, 104
. தமிழ் நாவலர் சரிதை, 77, 78, 79, 82, 85, 87, 83, 100; 98; 99 9. தமிழ் நாவலர் சரிதை 80, 90, 94, 96, 101; 9 4. அம்பிகாபதியும் கம்பரும் பாடியனவற்றில் ஒரு பாடல், "கரைக்கு வடக்கிருக்கும்" என்பது: பழைய பதிப்பிற் கம்பர் பாடலாகத் தரப்பட்டுள்ளது. மற்றது "இட்டடி நோவ" என்பதாகும். கம்பரும் ஒளவையாரும் பாடியதாக வழங்கும் "தண்ணீருங் காவிரியே" எனும் பாடல் பொய்யாமொழிப் புலவரும் ஒளவையாரும் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதையில் (25) இடம்பெறும். 9. தனிப்பாடற்றிரட்டு, முதற்uாகம்; 1953. பக். 79-96 பாடலெண் 24, 26, 38, 58 4ே, 65. வற்றிலே 24, 26, 38 ஆகியன பழைய பதிப்பில் அம்பிகாபதி பாடல்களாகத் தரப்பட்டவை.

Page 42
س- 63 س،
'உருவல்ல வருவல்ல வுருவருவ மல்லவிங்
கொருவிதத் தறிவதல்ல ஒன்றல விரண்டுமல வுள்ளல்ல வெளியல்ல
வொன்றினுந் தோய்வதல்ல இருளல்ல வொளியல்ல விலதல்ல வுளதல்ல
வின்பதுன் பங்களல்ல இங்குநிர்ச் சித்தல்ல வெங்குநிர சத்தல்ல
வீறுமுத லுடையதல்ல மருளுடன் பகலின்றி யிரவின்றி நின்றவர்கள் மாசற்ற மனவொளியெனு ܐ
மாகனக சபைநடுவி லேயென்று மொழியாக
மனேலயா னந்தமயமாய்த் தெருளென்று நின்றநின் குஞ்சித பதத்தையென்
சிந்தைமற வாதுகண்டாய் செகம்பணி திகம்பர சிதம்பர நடேசனே
சிற்சொரூ பானந்தனே."
- குறிப்பு "தமிழ் புளூராக்” எனும் நூலில் இடம்பெருதவர்களுள் ஒருவர் கருணை ஐயர்.
கருணைப்பிரகாசதேசிகர். -Karunaipprakasa Thasigar.
காஞ்சிபுரத்தில் வசித்த குமாரசுவாமி பண்டாரத்தின் கனிட்ட புத்திரரும், சிவப்பிரகாச தேசிகர், வேலைய சுவாமிகள் என்பார்க்குத் தம்பியரும், வீரசைவமதத்தைச் சார்ந்தவருமாகிய இவர், திருநெல் வேலியிலுள்ள சிந்து பூந்துறை மடத்திலிருந்து, பேர்பெற்ற அறிஞ ராகிய வெள்ளியம்பலத் தம்பிரானற் பாடமோதப்பெற்றுச், சிறு வயசிற்ருனே அதிபாண்டித்திய முற்றனர். இவர் வீரசைவர் அணியும் இலிங்கக் குறியின்பேரில் இஷ்டலிங்க அகவல் என்னும் ஒர் பாடலைப் பாடினரன்றிக்,காளத்தி மலையிலுள்ள சிவன்கோயிலின் பேரிற் காளத்தி புராணம் என்னும் ஓர் பாடலையும் பாடத் தொடங்கினர். ஆயிற் "சின்னுட் பல்பிணி'யே மனுஷராகிய நமக்குச் சுதந்திர ஆஸ்தியா தலிற் தொடங்கியதை முடியாது பதினெட்டு வயசிலே தேகவியோக மாயினர். இவர் இறந்தபோது வேலைய சுவாமிகள் சொல்லிப் புலம்பிய பாடல் வருமாறு:

حـــــ 69 نـ
"ஆண்டதன லெனயொவ்வாய் வித்தையினிற்
றமையனிலு மதிக மென்ருற்
பூண்டவுல கதனிலுள்ளோர் புகல்வதுகேட்
டிருந்துமென்ன புதுமை தானே
காண்டகுகண் மணியேநல் லிளங்கருணைப்
பிரகாசக் காளாய் நீதான்
மாண்டனையென் றறிந்திருந்து முயிர்தரித்தேன்
யானுமிகு வன்னெஞ் சேனே.”*
குறிப்பு "தமிழ் புளூராக்” ஆசிரியரைப் பின்பற்றிக் கருணைப்பிரகாசர் சரிதம் கூறும் சதாசிவம்பிள்ளை தனிப்பாடற்றிரட்டில் இடம்பெறும் வேலைய சுவாமிகள் பாடிய கையறத்தை எடுத்தாண்டுள்ளார்.
கருணைப்பிரகாசர் வெங்கனூரில் இல்லறம் நடாத்தி அவ்விடத் திலேயே வியோகமாயினர். இவருடைய சகோதரியை மணம்புரிந்து இல்லறம் நடத்தியவர் திருப்பேரூர் சாந்தலிங்க தேசிகராவர். இட்ட லிங்க அகவலில் 196 அடிகளுள. சீகாளத்தி புராணத்திற் கருணைப் பிரகாசர் சீகாளத்திச் சருக்கம் வரையிலான முதலாறு சருக்கங் களையும் பாடினர்; அடுத்துவரும் இரு சருக்கங்களாம் கண்ணப்பர் சருக்கத்திற்கும் நக்கீரர் சருக்கத்திற்கும் சிவப்பிரகாச சுவாமிகள் ஆக்கியோராவர்; ஒன்பதாம் கன்னியர் சருக்கத்திற்கும் பத்தாம் சிலந்தி முதல் முற்கதைச் சருக்கத்திற்கும் வேலைய சுவாமிகள் ஆசிரிய ராவர். சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள் (-1906) சீகாளத்திபுராணத்தை 1888ஆம் ஆண்டிற் பதிப்பித்துள்ளார். இட்டலிங்க அகவல் சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத்திரட்டில் இடம்பெறுவதாகும்.
சிவப்பிரகாச சுவாமிகள் பிரபுலிங்கலீலையைச் சகம் 1574ஆம் ஆண்டு (கி.பி. 1652) இயற்றினர் என்பது அந்நூற் பாயிரச் செய் யுளாற் புலனுகும். வெங்கனுரர் ஆலயத்தின் கோபுரத்திற் காணப் பெற்ற சாசனமொன்று சகம் 1545ஆம் ஆண்டில் (கி. பி. 1623) இலிங்க ரெட்டியார் அச்சிவாலயத்தை அமைத்துப் பிரதிட்டை செய்ததாகக் கூறுகின்றது. சிவப்பிரகாசர் திருவெங்கையுலாவில் (64-67) இலிங்கரெட்டியாரின் புதல்வர் அண்ணுமலை ரெட்டியார் அச்சிவாலயத்தை அமைத்ததாகக் கூறுவர். தந்தை நடாத்திய திருப் பணியை உடனிருந்து நிறைவேற்றியும் தந்தைக்குப் பின் அதனைச்

Page 43
- 70 -
சிறப்பித்தும் போந்தவர் அண்ணுமலை ரெட்டியார் என்று கருதிச் சிவப்பிரகாசர் அவ்வாறு கூறினர் போலும், சிவப்பிரகாசசுவாமி களின் காலம் பதினேழாம் நூற்ருண்டென்பது தெளிவாதலின் அவர் தம்பியர் காலமும் அந்நூற்ருண்டே என்பது கூருமலே போதரும்"
சிவப்பிரகாசர், வேலையர், கருணைப்பிரகாசர் முதலியோரின் ஆசிரியர் வெள்ளியம்பலவாணத் தம்பிரான் திருவாரூரைச் சேர்ந் தவர். கந்தபுராணச் சருக்கம் பாடிய சம்பந்தசரணுவய சுவாமிகளும் கமலை வெள்ளியம்பலவாணரின் மாணவகர் என்பர். வெள்ளியம்பல வாணர் தருமையாதீனக்ர்த்தர்களாக நான்காம் பட்டத்தில் வீற் றிருந்த மாசிலாமணிதேசிகசுவாமிகளிடம் சந்நியாசமும் ஐந்தாம் பட்டத்தில் வீற்றிருந்த ஞானசம்பந்ததேசிகசுவாமிகளிடம் ஞானேப தேசமும் பெற்றவர்; காசியம்பதியிலே குமரகுருபரசுவாமிகளிடம் பயின்றவர்; தருமை, காசி, புள்ளிருக்கு வேளுர், சிந்துபூந்துறை முதலிய இடங்களில் வாசஞ்செய்து சிதம்பரத்திலே பரிபூரண மெய்தியவர். தேவாரம், பெரியபுராணம் முதலியவற்றிலே இடம் பெறும் இடைச்செருகற் பாடல்களுக்கு வழங்கப்படும் வெள்ளிப் பாடல்கள் எனும் பெயருக்கு வெள்ளியம்பலவாணரே காரணகர்த்தர் என்பர். இவர் ஞானசம்பந்ததேசிகர் மீது சமூகமாலை, தாலாட்டு, திருப்பள்ளியெழுச்சி எனும் குரு தோத்திர நூல்களையும் முதுமொழி மேல் வைப்பு என்ற நூலையும் இயற்றியுள்ளார்; மிருகேந்திரம் வித்தியாபாதத்தினை மொழிபெயர்த்துள்ளார். த ரு மை யாதீனத் தாபகர் ஞானசம்பந்த தேசிகசுவாமிகள் பாடிய முத்திநிச்சயத்திற்கு வெள்ளியம்பலவாணர் இயற்றியதும் வெள்ளியம்பலவாண மாபாடியம் என வழங்கப்படுவதுமாகிய முத்திநிச்சயப் பேருரை வியடு) வைகாசிமீ (1946) இலக்கணம் முத்துக்குமாரத்தம்பிரான் சுவா மிகள் ஆதியோர் உதவியுடன் ச. தண்டபாணிதேசிகராற் பரிசோ இக்கப்பெற்றுத் தருமையாதீனத்தினரால் வெளியிடப்பெற்றது. தருமையாதீன வித்துவான் சுவாமிநாத பண்டிதர் முன்னர் பதிப்பித்த முத்திநிச்சயச் சிற்றுரையின் ஆசிரியரும் வெள்ளியம்பலவாணத் தம்பி ரானே என்பர்?. ஞானவரண விளக்கம் எனும் நூலொன்று தருமை யாதீனத் தாபகர் ஞானசம்பந்த தேசிகசுவாமிகள் பேராலும் வெள்ளி யம்பலவாணத் தம்பிரான் பேராலும் வழங்கப்படுகின்றது. ச. சோம சுந்தரதேசிகர் சிவஞானசித்தியாரின் மாபாடியமாம் ஞானபரண விளக்கம் வெள்ளியம்பலவாணத் தம்பிரான் இயற்றியதென்றே கூறுகிருர் 8; 1946ஆம் ஆண்டில் வெளிவந்த தருமையாதீனப் பதிப்பாம் முத்திநிச்சயப் பேருரையும் அவ்வாறே கூறுகின்றது. ஆயினும் தரும
1. மு, இராகவையங்கார்: சாஸனத் தமிழ்க்கவி சரிதம், பக். 194-196 2. ச. சோமசுந்தரதேசிகர்; தமிழ்ப்புலவர்கள் வரலாறு, பதினேழாம் நூற்ருண்டு, 1951, பக். 45 3. (λμ, μά. 46

- 7 -
புரம் பற்றிய கலைக்களஞ்சியக் கட்டுரையிலே ஞானவரண விளக்கம் சிவஞான சித்தியாருக்குக் குருஞானசம்பந்தர் செய்யுள் வடிவிலியற்றிய உரையென்றும் இவ்வுரைக்கு வெள்ளியம்பலவாணத் தம்பிரான் விருத்தியுரை கண்டுள்ளார் என்றும் கூறுப்பட்டுள்ளது1.
கருணையானந்தசுவாமி. - Karunaiananthaswamy.
இவர் தற்காலப் புலவர். குருநாதர் சதகம் என்னும் பாடல் செய்தார் இவரே. இதிலே சிவஸ்துதிய்ாக நூறு பாடல்களுள.
குறிப்பு ܗܝ "தமிழ் புளூராக்” நூலில் இடம்பெருதவர்களுள் இவருமொருவர்,
குருநாதர் சதகத்திற் காப்பு நேரிசை வென்பா இரண்டும் வாழிச்
செய்யுள் ஒன்றும் நீங்கலாக 102 கலிவிருத்தங்கள் இடம்பெறுகின்றன.
لاپ
66 6u) TIL T. - Kaladar. இப் புலவர் கடைச்சங்கத்தார் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவர். இவர் சரிதமும் மற்றைய அநேகரது சரிதங்கள் போலவே அந்தகாரப் போர்வையான் மூடப்பட்டிருப்பினும், இவரொரு அரிய நூலைச் செய்திருக்கின்ருர் என்று மாத்திரம் விளங்குகின்ருேம். அந் நூற்கு இவர் நாமகரணப்படி கல்லாடம் என்று பெயர். திருக் கோவையார் அரங்கேறினபோது அதிற்கண்ட துறைகள் நூற்றுக்குப் பொருள் இலக்கணம் இல்லை என்று சங்கத்தார் சாதிக்க, இவரே உண்டென்று ஆட்சேபித்து அதனை விளக்கவே இந்நூலைச் செய்தனர் என்ப. நூறு செய்யுட் கொண்ட இந்நூல் சங்கத்தில் அரங்கேறிய போது, மதுரேசன் மகிழ்ந்து நூறுதரஞ் சிரக்கம்பஞ் செய்தார் என்ப. இச்சம்பவம் பின் வரும் செய்யுளால் உணரப்படும்.
**கல்லாடர் செய்பனுவற் கல்லாட நூறுநூல்
வல்லார்சங் கத்தில் வதிந்தருளிச் - சொல்லாயும்? மாமதுரை யீசர் மனமுவந்து கேட்டுமுடி தாமசைத்தார் நூறு தரம்.' இவர் வள்ளுவர் நூற்குப் புகழாகச் சொல்லிய வெண்பா பின்வருவது.
ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின்
அன்றென்ப வாறு சமயத்தார் - நன்றென எப்பா லவரு மியைபவே வள்ளுவனுர் முப்பான் மொழிந்த மொழி.' 1. கலக்களஞ்சியம் தொகுதி ஐந்து, 1958 பக். 529 2. நூ. பா. சொல்லாயிம்

Page 44
- 72 -
குறிப்பு அக்காரக்கனி நச்சுமனர் குறிப்புக் காண்க.
கல்லாடர் பற்றித் "தமிழ் புளூராக்" கூறியனவற்றைச் சதாசிவம் பிள்ளை தம் காலத்தில் வெளிவந்திருந்த கல்லாடப் பதிப்புகளின் உதவியோடு திருத்தியமைத்துள்ளார்.
கல்லாடர் எனும் பெயர் இடுகுறிப்பெயர் என்பர் சிலர் ஊரைக் கொண்டு வந்த சிறப்புப் பெயர் என்பவர் திருவாசகத்திற் போற்றப் படும் கல்லாடம் எனும் திருப்பதியைச் சுட்டுவர்; இப்பதி பாண்டிய நாட்டுப் பழம்பதிகளுள் ஒன்று எனவும் மேற்குக் கடற்கரையிற் கொல்லத்திற்கு அருகிலிருந்த ஊர் என்றும் வேறுவேறு கூறுவர்; குடியைக் கொண்டு வந்த பெயர் என்பவர் வீரசைவ ஞானசிரியர் மரபுகளில் ஒன்ருன "ஹல்லட" என்பதோடு தொடர்புறுத்துவர். புலவர் புராணமுடையார் கல்வடிவாயமைந்த சோமசுந்தர இலிங்கம்
ஆடும்படி நூல் செய்தமையால் வந்த பெயர் என்ருர்.
மூவேந்தர் காலத்தவரான கல்லாடர் பாடிய பதி ஞ ன் கு பாடல்கள் புறநானூறு, குறுந்தொகை, அகநானூறு எனும் தொகை நூல்களில் இடம்பெறுகின்றுனர், அகநானூறு 274ஆம் பாடலுக்குக் கல்லாடர் இயற்றியதாகப் பிரதிபேதமுண்டு. இவர் அம்பர்கிழான் அருவந்தை, பொறையாற்றுகிழான், பாண்டியன் தலையாலங்கா னத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோரை நேர்முகமாகப் பாடியுள்ளார்2 . கபிலர் காலத்தையொட்டி வாழ்ந்தவர் கல்லாடர் என்பது கபிலர் குறிப்பின் மூலம் தெளிவாகும். காரி ஓரியைக் கொன்ற செய்தியைக் கபிலர் கூறக் கல்லாடர் ஒரியைக் கொன்று காரி கொல்லிமலையைச் சேரலருக்கு ஈந்த செய்தியைக் குறிப்பிடுவர் 8.
பதினேராம் திருமுறையிலே திருக்கண்ணப்பதேவர் திருமறம் எனும் முப்பத்தெட்டு அடிகளையுடைய அகவலின் ஆசிரியராகக் கல்லாட தேவநாயனர் சுட்டப்படுவர். மூவேந்தர் காலத்துப் பாடல் களில் இடம்பெருத கண்ணப்பர் வரலாற்றினை இவர் பாடுவதால், மூவேந்தர் காலத்தில் வாழ்ந்தவரிலும் இவர் வேருனவர் என்று கருதலாம். யாப்பருங்கால விருத்தியுரைகாரர் மூவேந்தர் காலத்தவ ரான கல்லாடரை இருடிகள் அல்லா ஏனையோருள் அடக்குதல் ஈண்டு சுட்டற்பா லது 4. கல்லாட தேவநாயனரும் கல்லாடம் எனும் அகப்பொருள் இலக்கியத்தின் ஆசிரியர் கல்லாடரும் ஒருவரே 1. 23 25, 371. 385, 391; 260, 269; 9, 83, 113, 171, 199, 209, 333. 2. p. 385, 391, 23
3. நற். 320; அக, 209 4. சென்னே அரசாங்கப் பதிப்பு, 1960, பக்.287

一73一
யாகலாம் என்று கா. சுப்பிரமணியபிள்ளை போன்ருேர் கருதினர்1. மதுரேசர் சிரக்கம்பஞ் செய்த பெருமையினுற் சமய வழியில் முக்கி யத்துவம் பெற்ற கல்லாடத்தினைக் கல்லாடதேவநாயனர் பாடி யிருப்பின் அந்நூலைத் திருமுறை தொகுத்தோர் பதினேராம் திரு முறையிலே தொகுத்தளிக்காமை ஏன் என்ற கேள்வி எழுகின்றது. மேலும்,
"பலவுடம் பழிக்கும் பழியூ னுணவினர்
தவமெனத் தேய்ந்தது துடியெனு நுசுப்பே'
(கல்லாடம் 1, 18-19)
என்று கூறும் கல்லாடர் கண்ணப்பதேவரைப் பாடியிருப்பாரா என் பதுவும் சிந்திக்கத்தக்கது. திருக்கண்ணப்பதேவர் திருமறம் பாடிய கல்லாடதேவநாயனரின் காலம் துணிதற்கரிதாம்.
கல்லாடத்தின் ஆசிரியர் துறவியென்று கருத "வாய்ந்த பொருட்கு ஒரு பொருளாய்" எனும் பாயிரச் செய்யுளில் இடம் பெறும் 'காய்ந்தபுலன் அடக்கியுயர் பெருஞானம் பழுத்தருள் கல்லாடனரே" என்ற அடி இடமளிக்கின்றது. கல்லாடம் கி. பி. ஆரும் நூற்ருண்டில் எழுந்ததென்பதற்குக் கா. சுப்பிரமணியபிள்ளை காட்டும் காரணங்கள் காலவரையறைக்கு உதவவில்லை?. கல்லா டத்தில் சே ர மா ன் பெருமாணயஞர் குறிப்பிட்டுள்ளதாக வழங்கும் கருத்தை8, மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் எழுதிய மறைமலையடிகள் போன்ருேர் மறுக்க முற்பட்டபோதும், அவர்கள் கூற்றினைப் பெரியபுராணம் ஆதரிப்பதாகத் தெரியவில்லை. கல்லாடம் "குடக்கோச்சேரன்" என்று குறிப்பிடும் மன்னனைச் சேக்கிழார் சேரமான் பெருமானுயனர் என்றே கூறுகின்ருர் 4. எனவே கல்லாடத் தின் ஆசிரியர் சுந்தரர், சேரமான் பெருமாள் ஆகியோருக்கு முற்பட் டவராகார். திருக்கோவையாரைத் தழுவி இயற்றப்பட்டது கல் லாடம் என்ற செய்தி பொருத்தமாகவே தெரிகின்றது. தருமி கதை அப்பர் காலத்திற்குப் பின்னர் அடைந்த வளர்ச்சியைக் கல்லாடத் திலே காணலாம் 5. காரைக்காலம்மையார் பற்றிக் கல்லாடத் தில் இடம்பெறும் செய்திகள் 8 சேக்கிழார் காலத்திற்கு முன்னர் வழங்கினவா என்பதை ஆராய்தல் கல்லாடத்தின் காலத்தை நிறுவ உதவலாம். திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், கந்த புராணம் ஆகியனவற்றிற்கு முற்பட்ட நூல்களில் இடம்பெருததும்
இலக்கிய வரலாறு, 1958, பக். 335 (λή με 296 கல்லாடம் செய். 12, 25-30 பெரியபுராணம், கழறிற்றறிவார் நாயனுர் புராணம், 26-28 1. 10-12 40 س-35 .63
:

Page 45
سے 74 حس۔
உருத்திரசன்மரை முருகப்பெருமானின் அவதாரமாகக் கூறுவது. மான கதை கல்லாடத்தில் இடம்பெறுகின்றது. களவியலுரை யாசிரியர், ஒட்டக்கூத்தர், சேக்கிழார், பெரும்பற்றப்புலியூர் நம்பி" பேராசிரியர் ஆகியோருக்கு முற்பட்டவர்கள் கூரு ததும் களவியலின் ஆசிரியராகச் சிவபெருமானைக் கூறுவதுமான கதை கல்லாடத்தில் இடம்பெறுகின்றது?. இடைக்காடர், நக்கீரர் ஆகியோர் பற்றிய புராணச் செய்திகளும் வள்ளுவருக்குப் புலவர் முன் முக்கட்பெருமான் முதற்கவி பாடிய செய்தியும் 3 கல்லாடத்தின் காலத்தினைப் பழையது என்று கருத இடம்தருவனவாக இல்லை. திருவிளையாடற் கதைகள் அறுபத்து நான்கு எனத் தொகுக்கப்பட்ட காலத்தினையொட்டி வாழ்ந்தவர் கல்லாடி. ஆசிரியர்க் , திருவாலவாயுடையார் புராணம், இறையனரகப்பொருளுரை என்பவற்றிற்குப் பின்னர் எழுந்த நூல் கல்லாடம் என்ற கருத்துப் பொருத்தமாகத் தெரிகின்றது5.
கல்லாடம் எனும் அகப்பொருள் இலக்கியத்தினை சைமன் காசிச் செட்டியவர்கள் (1859) இலக்கண நூலென்று கருதினர். பதினைந் தடிச் சிறுமையும் அறுபத்தாறு அடிப் பெருமையும் கொண்ட அகவல் களாலான கல்லாடத்தில் விநாயகர், முருகன் வணக்கச் செய்யுள்கள் இரண்டு நீங்கலாக, அகப்பொருள் சார்ந்த நூறு பாடல்களுள. "கல்லாடர் செய்பனுவல்’ எனும் பாடல் மூலம் கல்லாடத்திற்கு * கல்லாடநூறு” என்ற பெயரும் வழங்கியிருக்கலாம் என்று கருத இடமுண்டு.
திரிசிரபுரம் ச, மீனுட்சிசுந்தரம்பிள்ளை பரிசோதித்த கல்லாட மூலத்தினைப் பூவிருந்தவல்லி சு. கன்னியப்ப முதலியாரும் புங்கத்தூர் கந்தசாமி முதலியாரும் சென்னை மலைச்சாலையிலிருந்த "அத்திநீயம் அன்ட் டேலிநியூஸ் பிரான்ச் அச்சுக்கூடத்தில் விபவளுல் ஐப்பசிமீ” (1868) பதிப்பித்தனர். இப்பதிப்பில் காசிச்செட்டியவர்கள் எடுத் தாளும் "கல்லாடர் செய் பனுவல்" எனும் பாடல் இடம்பெறவில்லை புதுவை க. சுப்பராயமுதலியார் முப்பத்தேழு பாடல்களுக்கு மயிலேறும் பெருமாள்பிள்ளை எழுதியவுரையோடு மூன்று பாடல் நீங்க லாகத் தாம் எழுதிய உரையுடன் 1872ஆம் ஆண்டிற் கல்லாடத் தினைப் பதிப்பித்தார். காஞ்சீபுரம் இராமசாமிநாயுடு முன்னைய உரைசளுடன் அகலவுரையும் உரையெழுதப் பெருமல் இருந்த மூன்று பாடல்களுக்கு அரும்பதவுரையும் எழுதி 1911ஆம் ஆண்டிற் பதிப் பித்தார். எஸ். ராஜம் பள்ளியக்கிரகாரம் நீ. கந்தசாமிப்பிள்ளை ஆதியோர் உதவியுடன் மூலப்பதிப்பொன்றை 1957ஆம் ஆண்டில்
25-س66.16 16-س-3.10
52.28-29, 79.9; 14
99, 12-14 ஏ. வி. சுப்பிரமணிய ஐயர், தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, 1939 பக், 282

ح۔ 75 س-۔
வெளியிட்டார். திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தினர் பொ. வே. சோமசுந்தரஞர் முன்னைய உரைகளைத் தழுவித் தாம் கல்லாடம் முழுவதிற்கும் எழுதிய புத்துரையை 1963ஆம் ஆண்டு வெளியிட்டனர்.
அடையாறு உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடாக 1944இல் வெளிவந்த நவநீதப் பாட்டியலின் பழையவுரையொன்றிலே கல்லாடம், கல்லா டனர் கலாவியல், கல்லாடனர் வெண்பா என்ற் ஆட்சிகளோடு அவற்றிற்குரிய சில சூத்திரங்களும் எடுத்தாளப் பெற்றுள்ளன. ச. வையாபுரிப்பிள்ளை கலாவியல் என்பது கவியியல் என்றிருக்கவேண்டும் என்று கருதினர். பன்னிரு பாட்டியலின் மேற்கோட் சூத்திரங்களைப் பாடியவர்களின் பட்டியலிலே கல்லாடனர் என்ற பெயரும் இடம்பெறுகின்றது.
தொல்காப்பியத்தின் சொல்லதிகார உரையாசிரியருள் கல்லா டரும் ஒருவர். கல்லாடர் உரை இடையியல் பதின்மூன்ரும் சூத்திரம் வரை காணப்படுகின்றது. ஞானசம்பந்தம் என்ற சஞ்சிகையிலே முன்னர் கல்லாடருரையின் சில பகுதிகள் வெளிந்தபோதும் 1964ஆம் ஆண்டிலேயே அவ்வுரை நூலுருவாகப் பிரசுரமாகியது. நச்சினர்க் கினியருக்குப் பிற்பட்டவர் உரையாசிரியர் கல்லாடர் என்று கருதச் சான்றுகளுள1. பிரயோக விவேகவுரை உரையாசிரியர் கல்லாடரைக் குறிப்பிடுவதால் அவர் காலம் சுப்பிரமணிய தீகழிதரின் காலத்திற்கு முற்பட்டதாகும்?.
திருவள்ளுவமாலையில் இடம்பெறும் "ஒன்றே பொருளெனின், எனும் வெண்பா கல்லாடம் 14 20-22 அடிகளுடன் ஒப்பிடத்தக்கது.
Gifig T F U 6õøT Ląsi. - Kaviraja pandithar.
இவர் சோழமண்டலத்திலே வீரை என்னும் ஊரிலே பிறந்தவர். இவரது பூர்வோத்தரங்கள் தெரிந்திலவாயினும், இவர் திறமையுற்ற வித்துவான் என்பது வெளிப்படை. சங்கராசாரியரால் வடமொழியிற் செய்யப்பட்டிருந்த செளந்தரியலகரி என்னும் நூலை இவர் தமிழில் இறக்கிப் பாடல் செய்தனர். நூற்றுநான்கு செய்யுளுள்ள இந்தப் பாடலுக்குச் செளந்தரியலகரி என்பது பொதுப் பெயராயினும், முதல் நாற்பது பாக்களும் ஆனந்தலகரி என்று பெயர்ப்பட, எஞ்சியவை மாத்திரமே அப்பெயராற் கூறப்படுகின்றன. இவர் சத்தி 1. தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனுர் விருத்தியுரையும் பழையவுரையும் கு. சுந்தரமூர்த்
விளக்கவுரையும், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1964, காண்க 2. # LD I #ü u L Q)ib, 5 p L60oJ

Page 46
حسن 76 --
பூசைக்காரராய் இருந்தனர் போலும். இவரது பாடல் பார்வதி சத்தியைப் புகழும் பாடலாதலால் அப்பட்சத்தார் இதை மெத்தவும் மெய்ச்சுவர். சன்மார்க்கர் உவட்டும் பெண் பாலுக்கு உரிய உவமான உவமேயங்களைத் தவிர்த்துப் பார்க்கிற் பாடல்கள் மிக உசிதங் கொண்டவைகள் என்பதற்கு ஐயமில்லை. மாதிரிக்காய் ஓர் பாடல் இங்ஙனம் தருகின்ருேம்.
"மூலமணி பூரகத்தோ டிலிங்க மார்பு
முதுகளம்விற் புருவமொடு மொழிவ தாறு
ஞாலமுமென் புனலுமனற் பிழம்புங் காலு
நாதமுறு பெருவெளியு மனமு மாக
மேலணுகிக் குளபதத்தைப் பின்னிட் டப்பான்
மென்கமலத் தாயிரந்தோட் டருண பீடத்
தாலவிடம் பருகியதன் மகிழ்ந ரோடு
மானந்த முறும்பொருளை யறிய லாமே."
இவர் செய்த செளந்தரியலகரிக்குச் சைவ எல்லப்ப நாவலர் என்பார் உரை செய்தார். பின்வருங் கவியில் நூலாசிரியர், உரை யாசிரியர் இருவர் பெயருந் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அது
alco LDnip:
'பிறைபுனைந் தருளுஞ் சிவன்றன துவகைப்
பெருக்கென வடமொழி முனிவன்
அறைசெளந் தரிய லகரியைத் தமிழா லருள்கவி ராசபண் டிதன்றன்
நிறைமணங் கருதித் தாழைமா நகரி
னிலைபெற வாழ்கவி யெல்லன்
இறையள வெனினுந் தவறிலா துரைதேர்ந்
தெழுதின னெழில்விளக் கெனவே.”*
இந்நூலை ஆதியிலே சிவன் கயிலை வரையிலே வரைந்திருந்தார் என்றும், அப்பால் இருவழியொருவர் அதனை மகாமேருமலையிலே தீட்டினர் என்றும், அது சங்கராசாரியருக்கு உணர்த்தப்பட, அவர் அதனைச் சம்ஸ்கிருதத்திற் செய்ய அதிலிருந்தே இவர் மொழி பெயர்த்தனர் என்றும் பரம்பரையுளது.

- 77 -
குறிப்பு ஆறுமுகநாவலராற் பரிசோதிக்கப்பெற்றதும் சதுரங்க பட்டணம் அண்ணுமலை முதலியாராலே தமது சரஸ்வதீவிலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றதுமான செளந்தரியலகரியுரை செளமியடு கார்த்திகைமீ (1849) வெளிவந்தபோதும் தமிழ் புளூராக்" (1859) ஆசிரியர், அப்பதிப்பிலிருந்து எடுத்தாளாத சிலசெய்திகளைச் சதாசிவம் பிள்ளை மேலதிகமாகத் தந்துள்ளார். கவிராச பண்டிதரின் இயற்பெய" யாதெனத் துணியுமாறில்லை. இவர் பாண்டியநாட்டு வேம்பத்தூர் பிரி" மணர்குடும்பங்கள் ஒன்றிலே பாண்டியநாட்டு வீரசோழனுரிலே (வி"ை யிலே) பிறந்தவர். நெல்லை வருக்கக்கோவை பாடிய வீரை அம்பிகாபதி என்பவர் கவிராசபண்டிதரின் புதல்வர் என்பர். கவிராசபண்டிதர் ஆனந்தமாலை, வராகிமாலை என்பனவற்றையும் இயற்றியதாகக் கூறுவர் 1 . இவர் காலத்தினைச் சித்தாந்தமாகத் துணிவதற்கில்லே. செளந்தரியலகரியின் உரையாசிரியர் தாழைமாநகரில் நிலைபெற வாழ்கவி எல்லன்" என்பவர் உண்ணுமுலை எல்லப்பநயினர் எனச் ச. சோமசுந்தரதேசிகர் தமிழ்ப் புலவர்கள் வரலாறு, பதினரும் நூற்றண்டு என்ற நூலிற் கூறுவது பொருத்தமாயின் உரையாசிரியர் காலமாகிய பதினரும் நூற்ருண்டில் அல்லது அதற்கு முற்!-- காலத்திற் கவிராசபண்டிதர் வாழ்ந்தவராதல் வேண்டும். "தாழை எல்லன்" சைவ எல்லப்ப நாவலர் என்றே ஆறுமுகநாவலர் ஆதியாம் பதிப்பாசிரியர்கள் கருத்து என்பதும் ஈண்டு கவனித்தற்குரியது"
கொங்குநாட்டைச் சேர்ந்தவரும் திருச்செங்கோட்டுப் புராணம் பாடியவருமான ச. கவிராயபண்டிதர் ஒருவர் அறியப்படுகிருர்*
666Ooiului. - Kavuniar.
மதுரைக் கடைச்சங்கப்புலவர் சக பேருள் இவரும் ஒருவர். வள்ளுவமாலையில் இவரது பாட்டும் ஒன்றுண்டு என்றதற்கு அதிகமாய் இவரைப்பற்றி ஏதுந் தெரிந்திலது. அப்பாட்டு வருமாறு:
" சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த விருவினைக்கு மாமருந்து - முந்திய
நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனர்
பன்னிய வின் குறள்வெண் பா.* 1, s GirLIII u Gof சுவாமிகள்; புலவர் புராணம், 50, 13 2. கோவைகிழார் கொங்குப் புலவர்கள், 1950

Page 47
- 78 -
------ രൂി!! --
கவுணியஞர் எனத் 'தமிழ் புளூராக் ஆசிரியர் வழங்கச் சதாசிவம் பிள்ளை கவுணியர் என்று மாற்றியமைக்குக் காரணம் தெளிவாக வில்லை. இப்பெயருள்ளோர் பண்டைய தொகைநூற் பாடல்களைப் பாடியோர் பட்டியலில் இல்லை. அகநானுறு 74ஆம் பாடலைப் பாடி யவர் மதுரைக் கவுணியன் பூதத்தனர் அல்லது மதுரைக் கவுணியன் முத்தனர் என அழைக்கப்படுவர். அக்காரக்கனி நச்சு ம  ைர் குறிப்புக் காண்க.
களத்துர்க்கிழார். - Kalathurkkelar.
மதுரைக்கு அயலூராகிய களத்தூரே இப்புலவரது செனன ஊர் போலும். இவருஞ் சங்கப் புலவர் சக பேருள் ஒருவர். இவரது சரிதமும் அங்கவர் பலருடைய சரிதம் போல்வது. திருவள்ளுவர் நூல் அரங்கேறியபோது இவர் சொன்ன வெண்பா வருமாறு:
**ஒருவ ரிருகுறளே முப்பாலி னேதுந்
தரும முதனன்குஞ் சாலும் - அருமறைகள் ஐந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனர் புந்தி மொழிந்த பொருள்'
குறிப்பு
"தமிழ் புளூராக்" நூலில் இடம்பெறும் இப்பெயரும் பண்டைய
புலவர் பட்டியலிலே காணப் பெறவில்லை. குறுந்தொகையிற் கயத்தூர்
கிழார் என்ற பெயருண்டு2. அக்காரக்கனி நச்சுமஞர் குறிப்புக்
GESIT Saw 5.
56OTebago Lurufesion 26an. — Kamakasa papilly.
இவர் யாழ்ப்பாணம் மல்லாகக் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியிலே, வேளாளர் குலத்திலே, பின்னர்க் கூறப்படும் வைத்தியநாத தம்பிரான் மரபிலே, உவ வருடம் மாசி மாதம் கஉ ந் தேதி பிறந்தவர். வேலுப்பிள்ளை என்பவரின் சேட்ட புத்திரர். யாழ்ப்பாணத்தில் இருந்து போய்ச் சிதம்பரத்தில் வசித்த சுப்பிர மணிய தம்பிரான் இவர்க்குத் தாய்மாமனர். சிறுவயதிலேயே தமிழ் நன்குணர்ந்து பாடவும் அர்த்தம் சொல்லவும் பயின்றனர். பெற்ருேர் சைவராயினும் சமயாசாரத்தாற் புரோத்தெஸ்தன் கிறிஸ்தவர். இவர் வட்டுக்கோட்டைப் பழைய சாஸ்திரசாலையிலே இங்கிலீஷ் 1. 5. Lu I.• #GaotDLug5 2. செய்யுள் 354,

- 79 -
பாஷையோடு மேலும் தமிழ் கற்றுத் தேற்றமுற்று, அவ்விடம் இருந்த உவாட் (Dr. Ward) வைத்தியரிடம் ஐரோப்பிய வைத்தியங் கற்றனராயினும் பிதாத் தமிழ் வைத்தியராய் இருந்தாராதலால் அவரிடம் கற்ற தமிழ் வைத்தியமே இவருக்கு அதி சித்தியாக அதிலே இவர் பெருங் கீர்த்திபெற்றர். வைத்தியத்திலன்றி இலக்கண இலக்கியங்களில் மிக்க திறமையுற்ற புலவராதலிற். 'புலவன்", “ ‘புலவன் கனகசபை' என்னும் நாமங்களால் அழைக்கப்பட்டார்.
இவரது பாடல்கள் சொற்சுவை பொருட்சுவைகளாற் செறிந்தன. பற்பல தனிப்பாக்கள் அன்றித் திருவாக்குப் புராணம் எனப் பெயரிய புராணம் ஒன்றை இயற்றினர். இப் புராணத்திலே கிறிஸ்து வேதாக மத்தின் பாகங்கள் சில, சனன காண்டம், யாத்திரைக் காண்டம் எனும் இரு காண்டங்களில், உற்பத்திப்படலம், வினை சூழ்படலம் ஆதியாம் கக படலங்களிற் பாடப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு காண்டங்களிலே கடுஎக விருத்தங்களுள. வேதாகமம் முழுவதையும் பதிகப்படலத்திலே ககக செய்யுளிற் தொகுத்தாரன்றிச் சுவிசேட காண்டத்தையும் தொடங்கி அதிலேயும் சுஎ பாக்கள் செய்தார். மொத்தம் இப் புராணத்திலே கனடுக செய்யுட்களுள. இவையன்றி வருணனைப் பாக்களும் டுச இப்புராணத்துள. இப் புராணமல்லாது வீரமண்டலவரது நிகண்டு கக வதிற்குப் பதிலாக, டு அக செய்யுட் கொண்ட ஒரு நிகண்டும் பாடினர். இவரது பாடல், வருணனை சந்தம் ஆதியானவற்றிற் பூர்வீகப் பாடல்களுக்குத் தோலாது. இங்கிலீஷிலிருந்த கணக்குச் சாத்திரத்தின் சில கூறுகளையும் பாட் டாக்கிஞர். கோப்பாயில் இருந்த விறென் (ReV. Mr. Bren) தேசிகர் செய்து அச்சிடுவித்த சமய பரீட்சைக்கு இவரே முதற் கருவியுந் துணைக் கருவியுமாம். நம்மாற் செய்யப்பட்ட நன்னெறிக்கொத்து, மெய்வேதசாரம் எனும் பாடல்களுக்கும் உடுவிலில் இருந்த சந்திர சேகர பண்டிதர் இயற்றிய தமிழ் அகராதிக்கும், இவர் கொடுத்த சாற்றுகவிகள் தமக்குத் தாமே இணைகொண்டன. இவர் சென்னையிலே அமெரிக்க மிஷனரிமாரின் கீழ் அகராதிவேலையில் அன்றி, மானிப்பாய் அச்சியந்திரசாலையிலே விசாரணைகர்த்தராகவும், கோப்பாய்த் தமிழ் ン வித்தியாசாலையிலே உபாத்தியாயராகவும் இருந்தார்.
இவரது புத்திரர் இருவருள் ஒருவர் வைத்தியராகவும் மற்றவர் சுண்டிக்குளிச் சாத்திரசாலைச் சிரேட்ட ஆசிரியராகவும் இந்நிமிடம் வரையிலும் இருக்கின்ருர்கள். சம்பிரதாய விவேகப்பேச்சில் ஒருவ ருக்கும் தோல்விபோகா வீரராகிய இவருக்கும் பின் ஒருவருக்கும் ஒரு தருணம் ஏதோ சிறிய வாக்குவாதம் மூளக் கோபம் அணு வளவேனும் இயல்பில் இல்லாத இவர் ‘பேய்க்கூதி மகனே' என்று எதிரியை ஈனமாகப் பேச, எதிரி சினக்க, இவர் சிரித்து, ஏன் காணுங் கோபங் கொண்டீர்? உமது பிதா பேய்க்கு ஊதிப் பார்க்கிறவர் அல்லவா?

Page 48
- 80 -
பின்னை நீர் பேய்க்கூதியின் மகன் அல்லவா என்று சமாளிக்க, மற்ற வரும் கெக்கட்டமிட்டுச் சிரித்து அப்புறம் இருபேரும் உடனே சமாதானமானர்கள். இவர் பூநகரிப் பகுதியில் வைத்தியஞ் செய்யப் போயிருந்தபொழுது கிறுதி உண்டாய்க் கேணியில் விழுந்து குளிர் தோஷங் கண்டு ஊர்க்குக் கொண்டுவரப்பட்டுச், சில தினங்களால் சஅஎகளுல் தை மீ" கூ ந் தேதியில் இறந்து உடுவில் மிஷன் சவக் காலையிற் சேமிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்திலே மிஷனரிமார் வருவ தற்கு முன்னே படித்திருந்த இரண்டு பெண்களுள் இவர் மாதா ஒருவர். இவரது பாடற் திறமை காட்டற்காக இவர் பாடிய திருவாக்குப்புராணத்தில் ஒரு விருத்தத்தை இவ்விடந் தருகின்ருேம்.
"அனைத்துலகுந் திருவாக்கா லளித்தகில சராசரமு மருட்சித் தத்தே நினைத்துளவப் படியமைத்துக் காத்தளிக்குந்
தனிமுதலா நிகரி லாதான் தனத்துதிசெய் தெண்ணுகின்ற தகுங்கருமஞ்
சித்திபெறத் தருக வென்றே இனத்தெனவொப் போதரிய விணைமலர்த்தாள்
சிரத்தேந்தி யிறைஞ்சு வாமே’’ ኣ
இவரது தேகவியோகத்தின் பேரில் சஅஎகளுல் தைமீ" சசுந் வ. பிரசுரஞ் செய்யப்பட்ட 'உதயதாரகை'ப் பத்திரிகையில் நாம் எழுதியிருந்தவற்றிற் சிலவரிகளை மாத்திரம் இவ்விடம் பெயர்த்து எழுதுகின்ருேம்.
'ஆ அளவையப் பதித் தமிழ்ப் புலவன்ா. ரா. வே. கனகசபா பிள்ளையின் மரணத்தால் யாழ்ப்பாணம் ஓர் சிரேட்ட அறிஞன், புலவன், வைத்தியன், வாசாலன், இலக்கண இலக்கியன், கனவான், தனவான இழந்ததென்று துன்புற்றுப் புலம்புகிருேம்: ஆ! மரணமே! நீ பெருங் கொடியன் எத்தனையோ பெயரை உன் வாயில் இருந்து இவர் தப்பவைத்தார் என்று வன்மஞ் சாதித்தா எத்தனையோ பேர் பிரலாபிக்க இவரை இத்தனை சீக்கிரத்தில் மடித்தாய்? கெட்டி கெட்டி! உன் கெட்டித்தனம் என்ன! நீ கொடியனே கொ டி யன்! ஆயிற் பிறந்தாருள் இறவாதார் யார்? நீ செய்ததில் "ஓர் திறமை இல்லை என்று எண்ணுகிருேம்." இவர் சென்னபட்டணத்தில் வசித்தபோது வேலூரிலிருந்த கண்டி இராசாவின் பெளத்திரன் அழகர்சாமி பேரிலே பிரபந்தம் ஒன்றைப் பாடிப் பின்வருஞ் சீட்டுக் கவிதையையும் அனுப்பினர்.
1. நூ. பா. காத்தழிக்குந்

- 8 -
** நிறைநிலவு பொழியமுத கிரணசந் திரனென்ன நின்றிலகு கின்ற தொடையாய்! நேரலர் படைக்கடலை வீரவே கங்கொண்டு
நிருமூல மாக்கு படையாய் நெடியதரு வைந்துமெழு முகிலுமிணை யல்லவென
நித்தமருள் கின்ற கொடையாய் நிலவலைய மெங்கணுஞ் சுலவிநிலை பெற்றிலகு
நிகரற்ற சீர்த்தி யுடையாய் திறைநிலவு தவழுமுயர் பொறைபலவு மென வெளவு
செங்கையுத் தண்ட தீரா செயமாது குடிகொண்ட திண்புயா (சலவுளந்
திருமா துவக்கு நெறியாய் தென்னிலங் கேசவெழின் மன்னுமங் கசரூப
திறலழகர் சாமி யென்னுஞ் சிங்கவே றனையவுத் துங்கவுள் ளக்களி
சிறந்திட மகிழ்ந்து காண்க துறைநிலவு கலைவாரி கரைகண் டுயர்ந்துநின் ருெல்குலத் தரசர் தம்பாற் ருேமிலா நண்புபெற் ருேங்குவைத் தியநாத
சுகுணன் குலத் துதித்தோன் றுகளற்ற* சீரளவை நகரத்து வருகனக
சபைமிக்க துன்று பத்தி தூண்டநின் மாபெருமை பூண்டசுமு கம்பெறச்
சோர்விலா தெழுது நிருபம் முறைநிலவு மிறைமைபெறு முடிமன்னர் திலகநீ
முகமலர்ந் தகமு வந்தே மூளுமன் பாலணிய நீளுமின் பானவிசை
மொய்த்தமடன் மாலை தரவும் முகதரிச னங்கண்டு மிகுகரிச னங்கொண்டு
முன்பெய்த வுங்கருதி நின் முன்னணுகு மென்றனக் கின்னருள் சுரந்தூழி
மூதுலகி னிவாழி யே." 1. Si , ur. கொடையப் 2. நூ. பா. துகழற்ற
6 - "חוL

Page 49
- 82 -
மேற்படி அழகர்சாமி மீது தாம் பாடிய அப் பிரபந்தத்தை இவர் வேலூருக்குக் கொண்டுபோய் அந்த இராசகுமாரன் சமுகத்திலே அரங்கேற்றித் திரும்பும்போது வழியிற் சந்தித்த புலவர் கூட்டத்தை நோக்கி : ** பூவின் மீதெவரு மெய்ச்சு பாவருளில்
புல்லர் மீதுசொலி நெஞ்சுகால் புண்கள் பட்டுவரு பாவ வீரெனையோர்
புரவ லன்கொலென வெண்ணிலீர் யாவின் மீதுமுய ரோவில் சீருறு
மிலங்கை நாடர சியற்றுபேர் இசைவி ளங்கழகர் சாமி யண்ணலரு
ளிகை பெற்றுவரு புலவன்யான் நாவின் மீதுலவு பாவி னத்தருமை
நன்கு ணர்ந்ததமி ழறிவினன் நாவ லார்க்குதவு வள்ளலங் கவனை நண்ணி லின்னபரி செய்துவீர் மாவின் மீதரச னந்த மத்திமிசை
மருவு பேரரச னந்தநீள் வைய மீதரச னந்த மென்றுமவன்
வாயின் முன்னரடை யாளமே'
என்னும் புலவர் ஆற்றுப்படையைச் சொற்றனர்.
இப்புலவர் எந்த வேளை, எந்த இடம் என்றில்லாது எந் நேர மும் பாடும் வரமும் சித்தியும் பெற்றவர். சென்னைபுரியிலே இருக்கும் போது இவருடன் அகராதி வேலையில் இருந்த வீராசாமிச் செட்டியா ருடைய நரைத்த குடுமியை ஒருவர் இவருக்குக் காட்டி, நல்லது, இதன்பேரில் ஒரு பாட்டுச் சொல்லும் என்று கேட்டவுடன், பின் வரும் பாட்டைப் பாடினர்.
" நாவலர் வியக்கப் பாவலர் நாவா
னன்கலை மதிவளர்ந் தோங்கிப்
பாவலர் முகஞ்செம் பதுமமாக் குவிக்கும் பான்மையோன் மாயனே டுளத்து
மாவலர் வீரா சாமிவேள் குஞ்சி
மலரயன் றேவிவெண் கஞ்சப்
பூவலர்ந் திருப்ப வதன்மிசை யிருந்த
பொற்பெனப் பொலிந்திலங் குறுமால்.
9 9
1 g ui. aiséala

- 83 -
குறிப்பு கனகசபைப் புலவர் பிறந்த வருடமாகச் சதாசிவம்பிள்ளை தரும் உவ வருடம் யுவ வருடமாயின் அவ் வருடம் 1816ஆம் ஆண்-T*பி வேண்டும். வித்துவான் சி. கணேசையர் ' இவர் . . . ஏறக்குறைய நூற்றுப்பத்து வருடங்களுக்கு முன்னே பிறந்தவர்" என்று கூறல் விட்ாருத்தமாகாது". வித்துவான் கணேசையரின் முற்கிளந்த கூற்றை ஆதாரமாகக்கொண்டு கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை தம் தந்தை அ. குமாரசுவாமிப்புலவரின் தமிழ்ப்புலவர் சரித்திரத்தின் இரண்டா? பதிப்பிற் கனகசபைப் புலவர் 1829ஆம் ஆண்டிற் பிறந்ததாகக் குறிப் பிட்டுள்ளார். கனகசபைப் புலவரின் தாயார் நாகமுத்தம்மாள் மல்லாகம் மநுநாயக முதலியாரின் மகளாவர்,
சுன்னகம் அ. குமாரசுவாமிப்புலவர் சிற்சில இலக்கண நூல்களைக் கனகசபைப் புலவரிடம் படித்தவர் என்பர் வித்துவான் கணேசையர்". ஆறுமுகநாவலரின் மறைவிற்கும் (1879) முருகேச பண்டிதரின் செல விற்கும் (1878) பின்னர் குமாரசுவாமிப் புலவர் இவருடன் தொடர்பு கொண்டார் என்று கருதுமாறு கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை வரைந்துள்ளது பொருந்தாது; ஏனெனில், கனகசபைப் புலவர் 1873ஆம் ஆண்டில் வியோகமடைந்துவிட்டார்.
1853ஆம் ஆண்டில் நிறுவப்பெற்ற கோப்பாய் சேர்ச்சு மிசன் சங்கத்தின் தமிழ் வித்தியாசாலையில் முன்னர் சி. வை. தாமோதரம் பிள்ளையும் பின்னர் நவாலி வி. வயிரமுத்துப்பிள்ளை (J. Homer). கனகசபைப் புலவர் (Ewarts) முதலியோரும் பணிபுரிந்தனர்உவின்ஸ்லோ பாதிரியார் வெளியிட்ட தமிழ்-ஆங்கில அகராதியின் முகவுரையிலே (1862} கனகசபைப் புலவர் ஆற்றிய உதவி குறிப்பிடப் . ע&669 - וון
திருவாக்குப்புராணம் யாழ்ப்பாணத்தில் றிப்ளி ஸ்திருங் என்ப வர்களின் இயந்திரசாலையில் (Ripley and Strong) 1866ஆம் ஆண்டு
Ddi 55ri ur5) fu ITUTsò (Rev. C. C, Macarthur, C. M. S.) U5) பிக்கப்பெற்றது. இப்பதிப்பிற் பாடல்களின் எண் வரிசை பிழையாக அச்சிடப்பெற்றுள்ளமையைச் சதாசிவம்பிள்ளை கவனத்திற் கொள்ளா மையினல், அவர் தரும் எண்ணிக்கை விபரங்கள் பிழையாக அமைந்து விட்டன. திருவாக்குப்புராணத்தின் முதற் காண்டமாம் ஜனன காண்டத்தின் முன்னர் காப்பு (1), கடவுள் வாழ்த்து (5). அவை யடக்கம் (2), பதிகம் (111) எனும் பிரிவுகள் இடம்பெறுகின்றன: இவற்றிலே 119 பாடல்களுள. ஜனன காண்டத்தில் உற்பத்திப்
1. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், 1939, பக், 61 2. A, uä. 141 3. குமாரசுவாமிப் புலவர் வரலாறு, 1970, பக். 14

Page 50
جسمہ 84 سس۔
படலம், வினைசூழ் படலம், மகப்பேற்றுப் படலம், குலமுறையுரைத்த படலம், சலப்பிரளயப் படலம், நோவாவின் வமிசப் படலம், தேவன் ஆபிரகாமை அழைத்த படலம், ஈசாக்குப் படலம், யாக்கோப்புப் படலம், ஏசாவின் மரபுரைத்த படலம், யோசேப்புப் படலம் எனும் ப்தினெரு படலங்களிலே 1075 பாடல்களுள. இவற்றிலே நாற்பது பாடல்கள் வருணனைப் பாக்களாகப் பதிப்பாசிரியரால் அடியிலே தரப்பட்டுள்ளன. இரண்டாம் யாத்திரைக் காண்டத்தில் சிறைபுரி படலம், மோசே அவதரித்த படலம், மோசே காட்சிபெற்ற படலம், மோசே தூதுசென்ற படலம், பஸ்கா விரதப் படலம், மீட்சிப் படலம், வணம்புகு படலம், பத்துக் கற்பனைப் படலம் என்னும் எட்டுப் படலங் களிலே 441 பாடல்களுள. இவற்றிலே இருபத்துமூன்று பாடல்கள் வருணனைப் பாக்களாக அடியிலே தரப்பட்டுள்ளன. எனவே முதலி( காண்டங்களில் 63 வருணனைப் பாக்கள் நீங்கலாக 1453 செய்யுட் ளுள. முற்றுப்பெருத மூன்ரும் சுவிசேட காண்டத்திற் சுவிசே! வரலாற்றுப் படலத்தில் இருபத்துநான்கு பாக்களும் முற்றுப்பெரு, யோவானுற்பவித்த படலத்தில் நாற்பத்துமூன்று பாக்களும் காணப் பெறுவன : மூன்ரும் காண்டத்தில் வருணனைப் பாக்களெனத் தனியே பாடல்கள் பிரித்துப் பதிப்பிக்கப்படவில்லை. எனவே 1866ஆம் ஆண்டுப் பதிப்பிலே 1702 பாடல்கள் காணப்படுகின்றன.கனகசபைப் புலவர் அழகர்சாமிமீது மடற் பிரபந்தமொன்று பாடியுள்ளதாகச் சதாசிவம்பிள்ளை எடுத்தாளும் சீட்டுக்கவியாற் புலனுகும். வித்து வான் கணேசையர் இவர் உலாப்பிரபந்தம் ஒன்றும் பாடியதாக அறியக்கிடக்கின்றது என்பர்.
சந்திரசேகர பண்டிதர் இயற்றிய தமிழ் அகராதி என்று கூறல் பொருத்தமின்று என்பது ஆதிமூல முதலியார் குறிப்பின்மூலம் தெளி வாகும். w
கனகசபைப் புலவர் "தமிழ் புளூராக்" வெளிவந்தபோது வாழ்ந்து கொண்டிருந்தமையால் அந்நூலில் இடம்பெறவில்லை.
3. ğá69) asU Tiq-6oñuu FT ri. — Kakkaipadiniar.
இவர் முன்னே நம்மாற் தெரிவிக்கப்பட்டிருக்கிறபடி அகஸ்திய மகா இருடியின் மாணுக்கர் பன்னிருவருள் ஒருவர். தொல்காப் பியரைப் போலவே முற்றக்கற்றுத் தேர்ச்சிகொண்ட ஒர் இலக்கண வித்துவாமிசை?. இவர் செய்த இலக்கண நூல், மற்றும் அநேக பண்டிதர் நூல்கள் போலவே ஆக்கியோர் பெயராற் காக்கை
1. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம், 1939, பக். 63 2. நூ. பா. வித்துவான்

مسس۔ 85 -۔
பாடினியம் எனப் பெயர் பெற்றது. இந்த யாப்புநூல் பெருங் காக்கைபாடினியம், சிறுகாக்கைபாடினியம் என இருபாற்று. பிற்கால வல்லோர் இதிலிருந்து தத்தம் நூல்களுக்கு மேற்கோள்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றர்கள். இந்நூல் சங்கத்தில் அரங்கேறியது. இதி லிருந்து எடுத்துக் காட்டப்பட்ட மேற்கோள்கள் காரிகையிலே பல al67 (6. m
*" வடதிசை மருங்கின் வடுகுவரம் பாக
தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு பொருது கிடந்த நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண் யாப்பின திலக்கண மறைகுவன் முறையே’’ என்று சிறுகாக்கைபாடினியார் சொன்னர் எனத் தொல்காப்பியப் பாயிர விருத்தியிற் சொல்லப்பட்டிருப்பதால், இந்த நாமம் பெற்ருர் இருவராய் இருத்தல் வேண்டும் என்று துணியவும் அயிர்க்கவும் இட மிருந்தும் அகத்தியர் செய்த நூல், பேரகத்தியம் சிற்றகத்தியம் என்றிருத்தல் போலக் காக்கை பாடினியார் ஒருவர் செய்த நூலே பெருங்காக்கை பாடினியம், சிறுகாக்கை பாடினியம் என இரு நாமம் பெற்றது என்றும், அது பற்றியே சிறுகாக்கை பாடினியார் என்று சொல்லப்படலாம் என்றும் நினைந்து இதன் பேரில் ஐயமும் வழக்கும் படவேண்டியதில்லை என முடிக்கின்ருேம்,
- குறிப்பு
சைமன் காசிச்செட்டியும் சதாசிவம்பிள்ளையும் காக்கைபாடினி
யாரை ஆண் பாலினர் என்றே கருதியுள்ளனர். இவரைக் காசிச் செட்டியவர்கள் காக்கைபாடினியனர் என்றே வழங்கியுள்ளார்.
* நல்யாப்புக் கற்ருர் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார்", * மாக்கவிப் புலவோர்" எனக் காக்கைபாடினியாரைப் போற்றும் மேற்கோட் பாடல்களை எடுத்தாளும் யாப்பருங்கல விருத்தியுரை யாசிரியர் தாமும் அவரைத் * தொல்லாசிரியர்", மாப்பெரும் புலவர் " எனப் புகழ்ந்துள்ளார்? ; அவரைக் குணசாகரரும் * தொல் லாசிரியர் " எனப் போற்றியுள்ளார்3.
களவியலுரைகாரர், பேராசிரியர், யாப்பருங்கல விருத்தியுரை காரர், குணசாகரர், வீரசோழியவுரைகாரர் பெருந்தேவனர், மயிலை
1, யாப்பருங்கலம், சென்ன அரசாங்கப் பதிப்பு, பக். 13, 333 2. Q, uš. 46, 80 3. பப்பருங்கலக் காரிகை உறுப்பியல், 5

Page 51
- 86 -
நாதர் முதலியோர் காக்கைபாடினியாரின் நூலிலிருந்து மேற்கோள் களை எடுத்தாண்டுள்ளனர். இளம்பூரணர் காக்கைபாடினியாரின் இலக்கண மதத்தை எடுத்துக் கூறிப்புள்ளார்.
காக்கைபாடினியார் இயற்றிய நூல் காக்கைபாடினியம் என்று வழங்கப்பட்டது". வேருெருவர் சிறுகாக்கைபாடினியார் என வழங்கப் பட்டார் என்பது பேராசிரியர், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் ஆகியோர் கூற்றுகளாற் புலணுகும்?. சிறுகாக்கை பாடினியாரின் நூற் பாக்களை யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் குணசாகரரும் எடுத் தாண்டுள்ளனர். யாப்பருங்கல விருத்தியுரையிற் சிறுகாக்கை பாடினியம் என்ற ஆட்சியும் இடம் பெறுகின்றது. எனவே சதாசிவம் பிள்ளை பெருங்காக்கை பாடினியம் சிறுகாக்கை பாடினியம் என்ற இருபாற்று காக்கைபாடினியம் என்று அறியாது கூறினர்.
கலிப்பாக்களின் உறுப்புகள் சிலவற்றினைக் காலாகக் கொண்டு சிலப்பதிகாரத்திலே தோற்றம்பெறத் தொடங்கிய பாவினங்கள் பத்தியிலக்கிய காலகட்டத்திற் பெருக்கமெய்தின5. பாவினங்களின் இலக்கணத்தினை விரித்துரைக்கும் காக்கைபாடினியாரும் சிறுகாக்கை பாடினியாரும் அவற்றைக் கூருத தொல்காப்பியர் காலத்தவரல்லர். காக்கைபாடினியம் சங்கத்தில் அரங்கேறியது எனும் பிள்ளையவர்கள் கூற்று போலியுரையாம். யாப்பருங்கல் விருத்தியுரைகாரரின் கூற்றினை ஏற்பின் காக்கைபாடினியாரும் சிறுகாக்கைபாடினியாரும் அமித சாகரருக்கு முற்பட்டவர் என்பது போதரும்7.
காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்பவர் பாடிய பாடல்கள்
புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து என்பவற்றில் இடம் பெறுகின்றன. அதங்கோட்டாசிரியர் குறிப்புக் காண்க.
ங்கேயர்-Kangkayar.
இவர் தொண்டைநாட்டிலுள்ள செங்கற்பேட்டையில் இருந்த ஓர் சைவச் சந்நியாசி அன்றி ஓர் புலவருமாய் இருந்தார். சாதியிற் கைக்கோளர் எனப்படும் இவர் இருந்த காலவரை தெள்ளிதிற் புலப்படாதபோதும், சூடாமணி நிகண்டின் ஆக்கியோராகும் மண்டல
1. தொல்காப்பியம், செய்யுளியல் 4 2. யாப்பருங்கலம், டிெ பதிப்பு, பக். 290, 335-336 3. தொல்காப்பியம், மரபியல், 95 : செப்யுளியல், 1; யாப்பருங்கலம், செய்யுளியல், 3
பப்பருங்கலம், டிெ பதிப்பு, பக். 22, 41, 42, 67, 75 ; பாப். காரிகை, செய்யுளியல் 9 பாப்பருங்கலம், டிெ பதிப்பு, பக். 336 A. C. Chettiyar : Advanced Studies in Tamil Prosody, 1943, p. 17 பாப்பகுங்கலம், டிெ பதிப்பு, பக். 175
ቇሉ
: 0

- 87 -
புருடருக்கு முன் இருந்தவர் என்று உத்தேசிக்கின்ருேம். இவரே உரிச்சொல் நிகண் டைப் பாடினவர். வெண்பாவிற் பாடப்பட்ட இவ் வுரிச்சொல் ச.அச0ஆம் டு புதுச்சேரியில் அச்சுப் பதிப்பிக்கப்பட்டது. ** உரிச்சொல் இருநூறு முதவு" என்று விநாயகர் காப்பிற் சொல் லப்பட்டிருப்பினும், அப்போது பதிப்பிக்கப்பட்ட பிரதியில் உeo செய்யுள்களுள. இவ்வூர் ஏட்டுப் பிரதிகளில் நாம் கண்டெடுத்துத் திருத்தி க.அடுஅ ஆம் (u) மானிப்பாய் அச்சியந்திரசாலையிற் பதிப்பித்த பிரதியிலோ ஈகO செய்யுள்களுள. காலாந்தரத்தில் அவை பிறராற் பாடப்பட்டுச் சேர்ந்தனபோலும். W
குறிப்பு w
காங்கேயர் செங்கற்பட்டில் இருந்தவர் என்றும் வேளாளர் என்றும் கூறுவர். கொங்குமண்டலச் சதகம் காங்கேயர் கொங்கு மண்டலத்திலுள்ள மோரூரினர் என்று கூறுகின்றது. ‘தமிழ் புளூராக்" ஆசிரியரும் சதாசிவம்பிள்ளையும் மண்டலபுருடருக்கு முன்னர் வாழ்ந் தவர் காங்கேயர் என்று கூறுவர். மண்டலபுருடர் கிருஷ்ண தேவ ராயர் (1509-1529) காலத்தவர். மதுரைச் சிவப்பிரகாசர் சகம் 1411இல் (கி. பி. 1489) இயற்றிய சிவப்பிரகாசவுரையில் உரிச்சொல் நிகண்டிலிருந்து ஒரு பாடலை நூற்பெயர் கூருது 38ஆம் பாடலுரை யிலே எடுத்தாண்டுள்ளார். எனவே மண்டலபுருடருக்கு முற்பட்டவர் காங்கேயர் என்ற கருத்துப் பொருத்தமாகத் தெரிகின்றது. அரு மருந்தைய தேசிகர் சகம் 1685இல் (கி. பி. 1763) அரங்கேற்றிய அரும்பொருள் விளக்க நிகண்டிற் சூடாமணி நிகண்டாசிரியருக்குப் பின்னர் காங்கேயர் குறிப்பிடப்படுவதாற் சிலர் மண்டலபுருடருக்குப் பிற்பட்டவர் காங்கேயர் என்று கூறுவது பொருத்தமாகத் தெரிய வில்லை. ஆசிரிய நிகண்டின் ஆசிரியர் சூடாமணி நிகண்டினைக் குறிப் பிடாது பிங்கலத்தையடுத்து உரிச்சொல் நிகண்டினைக் குறிப்பிடுதல் கவனித்தற்குரியது. வந்தனை காணல்" எனும் பாடலில் இடம் பெறும் " சலாம் " எனும் சொல் உரிச்சொல் நிகண்டு பதினன்காம் நூற்ருண்டின் ஆரம்ப சதாப்தங்களில் நிகழ்ந்த இசுலாமிய படை யெடுப்புகளுக்குப் பின்னர் தோன்றியிருத்தல்வேண்டும் என்று கருத வைக்கின்றது.
புதுவை அரசாங்க் அச்சுக்கூடத்திலே (குவெர்னமா அச்சுக் கூடத்தில்) துத்தென் துரையால் 1840ஆம் ஆண்டிற் பதிப்பிக்கப் பெற்றதும் சிற்றம்பல வுபாத்தியாயரின் உரையோடு கூடியதும் மழவை மகாலிங்கையர் ஆகியோராற் பார்வையிடப் பட்டதுமான உரிச்சொல் நிகண்டிலே பத்துத் தொகுதிகளுள. சதாசிவம்பிள்ளை பதிப்பிலும் (1858) 1890ஆம் ஆண்டிற் சிவன்பிள்னை வெளியிட்ட
1. செய்யுள் 9

Page 52
-سس 88 صدم
பதிப்பிலும் 1905ஆம் ஆண்டிற் சுன்ஞகம் அ. குமாரசுவாமிப்புலவர் வெளியிட்ட பதிப்பிலும் பன்னிரு தொகுதிகளுள. ஆயினும் கொல்லம் 950இல் (கி. பி. 1775) எழுதப்பட்ட ஆழ்வார்-திரு நகரித் தேவர் பிரான் கவிராயரின் ஏட்டுப்பிரதியிலுள்ள பாட லொன்று திருக்கான வாழும் வணிகன் பராக்ரம பாண்டிய தேவன் பத்துத் தொகுதிகளாக ஒழுங்கு செய்தான் என்று கூறுகின்றது. சிவன்பிள்ளை பதிப்பின் முன்னுரையில் ஒலிபற்றிய தொகுதியும் பல் பொருட் கூட்டத் தொருபெயர்த்தொகுதியும் வழங்காதொழிந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3, IT sàsfis, 6a, b 'ugbi (pġb66u T ii.l-Kasivisuvanatha Mudalliar.
இவர் சென்னபட்டணத்துக்கு ஆறுமைல் தூரத்துள்ள சைதா புரத்தில் இருந்தவர். இவர் தந்தையார் நாமம் தியாகராசமுதலியார். இவர் இலக்கண இலக்கியங்களில் வல்லுநராய் யாப்பிலக்கண விஞ விடை, வேதப்பொருள் விளக்கம் எனும் இரு நூல்களை யன்றி இடம்பாச்சாரி விலாசம், தாசில்தார் விலாசம் எனும் இரண்டு ' விலாசங்களையும் இயற்றினர். யாப்பிலக்கண விஞவிடையை இவர் புத்திரன் அச்சிடுவித்தார். வாசிப்பார் எவர்க்கும் வினுேதமும் மகிழ் வும் பயவா நின்ற இடம்பாசாரி விலாசத்துக்குப் பீடிகை, சென்னை யில் இருந்தார் ஒருவரது உண்மையாய் நடந்த சரிதமேயாம். மற்றைய தாசில்தார் விலாசம், அந்த உத்தியோகத்தில் அமர்ந் திருந்து அநியாயமாய் லஞ்சம் வாங்குவாரது செயலை விளக்குவது. இவர் சதர்பவுஸ்தாரி கோட்டுத் தெலுங்கு மொழிபெயர்ப்புக் காரராய் இருந்து கண்ணுரக்கண்ட அநியாயங்களையே இவ் விலாசத் துள் நுழைத்தனர். பாடல் மாதிரிக்காக இடம்பாசாரி விலாசத்தின் அவையடக்கத்தை இவ்விடம் வரைகின்ருேம்.
"மறுவகன்ற முத்தமிழாம் வாரிதன்னை வாய்மடுத்த
வல்லமையாற் புலவ ரானேர்
சிறுவருரைத் திடுமதலை செவிகொள்போதுஞ் சிரித்துமன
மகிழ்வதாற் சினங்கொள் வாரே
அறிவேது மிலாவடியே னசையாலே யறையுமிவ்
விலாசமதை யவர்கள் கேட்கிற்
கறுவுகொள்வதவர்கள்கன வினுமே யின்றிக்
கருணையுட னேயிதயங் களிகொள்வாரே."
1. ச. வையாபுரிப்பிள்னே இலக்கிய மணிமால், பக். 210

இப்புலவர் அப்பர்சுவாமிபேரிலும் ஒர் பதிகம் பாடியிருக்கின் ருர் அன்றித் தாலுகாமுனிச் சட்டம் எனும் பிரமாணமும் ஒன்றை இயற்றினர். இவையன்றிப் பாகசாஸ்திரமுஞ் செய்திருக்கிருர், இங்கிலீசில் மொழிபெயர்க்கப்பட்ட சதுர்வேத தாற்பரிய சங்கிர கத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார் என்றுங் கேள்வி. இவர் தற்காலத்தாரல்லாது தூரகாலத்தரல்லர்.
குறிப்பு
சைதாப்பேட்டை காசி விசுவநாத முதலியார் தமிழோடு ஆங்கில மும் நன்கு கற்றவர்; சங்கதமும் தெலுங்கும் பயின்றவர் ; தெலுங் கிற் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்று பேரெடுத்தவர். இவர் 1832இல் சித்தூர் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக அரசாங்க அலுவலிற் சேர்ந்தார். இவர் தமது உத்தியோக காலத்திற் பெரும் பகுதியை ஆந்திர மாவட்டங்களிலேயே கழிக்கநேர்ந்தது. தாசில்தார் நாடகத்தின் இரண்டாம் பதிப்பில் (1868) இவர் அப்பொழுது அரசாங்க உபகாரச் சம்பளம் பெற்றுவருவதாகவும் அந்நிலைக்கு முன்னர் கோயம்புத்தூர் ஜில்லா உடுமலைப்பேட்டை முன்சீபாகப் பணிபுரிந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரமசமாஜத்தின் தென்னுட்டுப் பிரிவிலே சேர்ந்திருந்த காசி விசுவநாத முதலியார் 1871ஆம் ஆண்டிற் சென்னையிற் பாரிஸ்டர் இராமசாமி ராஜூ என்பவருடன் சேர்ந்து பிரமதீழிகை என்னும் பத்திரிகையை நடத்தினுர்.
டம்பாச்சாரி விலாசத்தின் முதற்பதிப்பு 1872ஆம் ஆண்டில் வெளிவந்ததாகவும் அப்பதிப்பிற்குத் திருத்தணிகை விசாகப்பெருமா ளையர், அட்டாவதானம் வீராசாமி செட்டியார் முதலியோர் சாற்று கவி வழங்கியுள்ளதாகவும் அறியமுடிகின்றது2. தாசில்தார் நாட கத்தின் (விலாசமல்ல) முதற்பதிப்பு 1857ஆம் ஆண்டில் வெளி வந்தது. காசி விசுவநாத முதலியார் கூலிக்கு மாரடிக்கும் கூத்தா டிச்சிகள் நடிப்பு (1870/4 , பிரஹ்ம சமாஜ நாடகம் (1871) 5 என்னும் பிற நாடகங்களையும் இயற்றியுள்ளார். எடின்பார்க்கு பிரபு இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது முதலியாரவர்கள் கும்மிப்
1. மயில் சீனி. வெங்கடசாமி பத்தொன்பதாம் நூற்ருண்டில் தமிழ் இலக்கியம், 1962, பக். 139
2. தொ. மு. சிதம்பரரகுநாதன்; சமுதாய இலக்கியம், 1964 பக். 123, 26
3. அ. மு. பரமசிவானந்தம்: பத்தொன்பதாம் நூற்ருண்டின் தமிழ உரைநடை வளர்ச்சி, 1964, பக். 10
4. ந. சி. கந்தையாபிள்ளே: தமிழ் இலக்கிய அகராதி, 1952, பக். 38 மயில் சீனி. வெங்கடசாமி :
டிெ பக், 271, 406
5. O usia) fain. Qais sufi ; QA4, Lä. 271, 406

Page 53
- 90 -
பாட்டுப் பாடி வரவேற்றுள்ளார். புனர்விவாக விண்ணப்பம், டிஸ்கவுண்டு மாலை, பஞ்சச் சிந்து, பழனி வழிநடைப் பதம் என்பன வும் முதலியாரவர்கள் இயற்றிய நூல்க ளாம். முதலியாரவர்கள் தர்மம்பற்றி இயற்றியது தரும நூலாகும். சைவ உணவு பற்றிப் பாகசாஸ்திரம் எழுதியவர் அசைவ உணவுபற்றிப் புலவுநூலும் ஆக்கி யளித்துள்ளார். வைத்தியத்துறையில் மேகவெள்ளைக்கு மேலான பரிகாரம்2 முதலிய சிறுநூல்கள் பல இயற்றிய முதலியாரவர்கள் வைத்தியத் திரட்டு, வைத்திய அகராதி என்பனவற்றையும் தந் துள்ளார். இவர் ஆங்கிலத்திலும் சில நூல்களை எழுதியுள்ளார். இவர் புதல்வர் சோமசுந்தர முதலியார் சென்னையிலே தாம் நடாத்திய " ஸ்டார் ஆப் இந்தியா " எனும் அச்சுக்கூடத்தில் இவ ருடைய நூல்களை அச்சிட்டு வெளியிட்டனர்.
இவர் " தமிழ் புளூராக் வெளிவந்த காலை வாழ்ந்துகொண்டிருந் தமையால் அற்நுாலில் இடம்பெறவில்லை.
а тадњТ БU ц6) coli. – Kasinatha Pulavar.
இவர் யாழ்ப்பாணம் அச்சுவேலிக் கோயில்பற்றில் வசித்த சோதிட சாஸ்திரிகளுள் ஒருவர். நீலகண்டர் என்னும் ஒருவர்க்கு அன்பான புதல்வர். கிறிஸ்தாப்தம் கனகசு ஆம் ஹில் பிறந்து கஅடுச ஆம் ஞu) இறந்தனர். சோதிட சாஸ்திரந் தேர்ந்து அதில் வல்லவராம் இவர், இலக்கிய ஆராய்ச்சியும் உடையராய் வித்தாண்மைபூண்டு தாலபுராணம் எனும் ஒர் பாடல் இயற்றினர். அதைப் பனங்காய்ப் பாரதம் என வழக்கத்திற் கூறுவர். யாம் அதனைக் கண்ணுற்றிரா மையால் அதனது நயநட்டங் கூறுதல் கூடாதேனும், கற்பக விருட்சம் எனப் பெயரிய தெய்வ விருட்சத்திற்கு இலக்காய் எம்மூரி லிருக்கும் பனைமரப் பெருமையும் அவற்றின் பிரயோசன. நயங்களுமே அப்பாடற் பொருளாம் எனத் துணிகின்ருேம். பனைப்பெருமை கூறி னும், ஓர்போது ஒருவகைக் கேலிப் பாடலாகவும் இருக்கலாம். அப்புராணத்திற் சில விருத்தங்கள் கைக்கெட்டியும் கரலிகித ஏட்டுப் பிரதிகளில் நடபடியாய்ப் புகும் அபத்தங்களினலோ அன்றி வாய்ப் பாடத் தவழுலோ அசை சீர்கள் நேராய் ஒசை சிறப்பா யிராமை பற்றிப், பாடல் மாதிரிக்காகவேனும் அதனைத் தரா தொழிந்தோம். இப்பாடல் அல்லாது பல தனிப் பாக்களையும் இவர் பாடினர் என்று கேள்வி.
1. GA4, trä. 271 2. ந. சி. கந்தையபிள்ளே! டிெ, பக். 136, 1869ஆம் ஆண்டுப் பதிப்பினச் சுட்டுகின்றது 3. டிெ, பக். 148. 1870ஆம் ஆண்டுப் பதிப்பைச் சுட்டுகின்றது

குறிப்பு
* தமிழ் புளூராக்" நூலில் இடம்பெறத் தவறியவர்களுள் காசிநாதப் புலவரும் ஒருவர். ந. சி. கந்தையாபிள்ளை பதினெட்டாம் நூற்றண் டினரான கும்பகோணம் காசிநாதப்புலவர் என்பவர் கலிவெண்பா வில் இயற்றிய தால புராணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு தெனணட் பிரபு (Sir Emerson Tennant) எழுதிய "இலங்கை " எனும் ஆங்கில நூலின் இரண்டாம் பகுதியிற் காணப்படுவதாகக் கூறி யுள்ளார். அச்சுவேலி காசிநாதப்புலவர் இயற்றியது விருத்தப் பாவாலானது போலும் .
காரிக்கண்ணஞர். - Karikkannanar.
இவர் சோழநாட்டிலே காவிரிப்பூம் பட்டினத்திலே பிறந்தவர். காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணணுர் என்று வழக்கமாய்க் கூறப்படும் இப் புலவர், மதுரைக் கடைச்சங்கத்துப் புலவர் நாற்பத் தொன்பதின்மருள் ஒருவர் என்பதற்கு மேற்பட இவரைப்பற்றி யாதும் தெரிந்திலது. வள்ளுவர் நூலுக்குச் சிறப்புப் பாயிரமாக இவர் சொல்லிய வெண்பா பின்வருவது :
** ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது தந்தா னுலகிற்குத் தான்வள் ஞவராகும் அந்தா மரைமே லயன்.”
குறிப்பு சைமன் காசிச்செட்டியவர்கள் கூறியனவற்றைச் சதாசிவம் பிள்ளை வழிமொழித்துள்ளார். புறநானூறு, குறுந்தொகை, அகநானூறு ஆகியவற்றிற் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனர் பாடிய ஒன்பது செய்யுட்கள் இடம்பெறுகின்றன2. நற்றிணை 237ஆம் பாடல் காரிக் கண்ணனர். பாட்டெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனர் புறப்பாடல்களிலே பிட்டங்கொற்றன், பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன்,பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதி ஆகியோரைப் போற்றியுள்ளார் 8. காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனர், ஆவூர் மூலங்கிழார், மாருேக்கத்து நப்பசலையார், கபிலர் முதலியோர் சமகாலத்தவர் என்பது கபிலர் குறிப்பாற் புலனுகும் 4, அக்காரக்கனி நச்சுமனர் குறிப்புக் காண்க.
1. தமிழ்ப் புலவர் அகராதி. 1960, பக். 113 2. 57, 58, 169, 171, 353; 297; 107, 123, 285 3. p. 169, 57, 58 4. p. 57, 196, 38, 39, 126, 121

Page 54
- 92 -
S, gui si fu Yi.-Kariar I.
காரியார் என்னும் நாமம் பெற்ற வித்துவான்கள் இருவருளர். அவ்வவர் சரித்திரங்களை வெவ்வேருக இவ்விடம் கூறுவாம். முதலாங் காரியார் கணக்கதிகாரம் எனப்படும் நூலைப் பாடியவர். இந் நூலுக்குச் சம்ஸ்கிருதத்தில் முனிவர்கள் பலர் செய்திருந்த கணித சாஸ்திரம், அஞ்சனம், கோவிந்தனர் படிகம், கணிதரத்தினம், புவனதீபம் முதலிய பல நூல்கள் ஆதாரங்களாம். இந்நூற் பாயிரத் திற் சொல்லி இருக்கிறபடி, இவ்வாசிரியர் தாம்பிரவன் னி நதியின் வடகரையிலே, பூர்வீகபாண்டிய அரசர்கள் வாழ்ந்திருந்த கொற்கை யம்பதியிலே, அப்பாண்டியர்களின் வமிசத்திலே அவதாரஞ் செய்தவர். அதற்குப்,
* பொன்னி நாட்டுப் பொருந்திய புகழோன் மன்னர் கோமான் வழிமுத லுடையோன் முத்தமிழ் தெரிவோன் முகரியம் பெரும்பதி மத்தியத் தலத்தின் மறையவர் வாழுங் குற்றமில் காட்சிக் கொறுக்கையர் கோமான் புத்தன் புதல்வன் காரியென் பவனே ** என்றது தக்க சாட்சியாகும். இவர் செய்த கணக்கதிகாரம் மிகச் சிறந்த நூலானபோதும், "முன்பு வந்த செவியைப் பின்பு வந்த கொம்பு மறைத்தது' என்ருற்போலத் தற்கால இலங்கை இந்தியா தேசங்களுட் புகுந்த இங்கிலீஷிய கணித நூல்கள் மேலாட்டமாகி மறைக்க, அது எழுதப்பட்ட ஏடுகள் செல்களுக்கு உணவாகி அபா வனையில் வந்துவிட்டன. கணக்கதிகாரத்தை இவர் சூத்திரங்களாக வகுத்து வெண்பாவிற் பாடினர். பாடல் மாதிரிக்காக இவ்விடம் ஓர் வெண்பாத் தருவம். W
** பன்னு வடசொற் பனுவறனை யிப்போது
கன்னித் தமிழ்வாயாற் கட்டுரைத்தேன் - முன்ன மகிழ்கின்ற வெண்ணின்வழி வந்தகணக் கெல்லாம் இகழ்வின்றி யேயுரைப்பேன் யான்.”* இவர் செய்த கணித சாஸ்திர வினேதத்தை விளக்கற் பொருட்டுப் பின்வருவனவற்றைத் தெரிந்தோம்.
ஒருபடி நெல்லில் . 14,400 நெல் 象 魏 அரிசியில் . . 38,800 அரிசி 海魏 எள்ளில் ... l l 5, 200 6T6ir
மண் ses 17 Laotb

- 93 -
ஒருபடி மணல் . . 20 பலம் , , நெல் e a sa 6 , , அரிசி ab in w 98 0 蟒 参 2 - Lil H ... . . . l6 , ,
சூரியன் தூரம் பூமி நீளத்திலிருபங்கு சந்திரன் தூரம் சூரியத் தூரத்திலிருமடி
மனுடன் வயசு . . 1 00 மாட்டின் , , . 20 எருமை t e s 30 குதிரை , . 32 ஆடு A) I 2 நாய் . . . . . 15 ஒட்டை AP 3V - .73 په • . س
குறிப்பு
"தமிழ் புளூராக் ஆசிரியர் கணக்கதிகாரத்தின் மூலாதார நூல்க ளாகக் கணிதசாஸ்திர புவனதீபம் முதலான கணிதநூல்கள் எனக் கூறியதைச் சதாசிவம்பிள்ளை விரித்துரைத்துள்ளார். காசிச்செட்டி யவர்களும் சதாசிவம்பிள்ளையும் பாயிரத்தின் பொருளைத் தெளிவாக்க வில்லை. சோழநாட்டில் முகரியென்னும் ஊரிற் கொறுக்கையர் குடி யிற் புத்தன் என்பவனுடைய புதல்வராகக் காரியார் பிறந்தார் என்பதும் அவர் குடும்பம் சோழவம்சத்துடன் தொடர்புடையது என்பதும் பாயிரம் தரும் செய்திகளாம்.
கணக்கதிகாரம் சரவணபுரம் சண்முக முதலியாராற் பார்வை யிடப்பட்டுச் சென்னை விவேக விளக்க அச்சுக்கூடத்தில் ஆங்கீரச Su) (1872) பதிப்பிக்கப்பெற்றது. இப் பதிப்பிலே பாயிரச் செய்யுட்கள் பதினேழு நீங்கலாக, நூற்றுப்பத்துப் பாடல்களுள; வெண்பா, நூற்பா, கட்டளைக்கலித்துறை, விருத்தம் எனும் யாப்புவகைகளான பாடல்கள் இடம் பெறுகின்றன.
" . . . உ ஆம் காரியார்.-kariar I.
காரிநாயனர் என்னுஞ் சிறப்புப்பெயர் பொலிந்த இந்த இரண்டாங் காரியார், சோழநாட்டிலே காவேரிக்குத் தென்கரையிலே உள்ள திருக்கடவூரிலே பிறந்த ஒர் பிராமணர். சொல் விளங்கிநின்றும் பொருள் மறைந்து கிடக்குங் கோவைகள் பாடுவதில் இவர் மகா நிபுணர். இவர் தாம் பாடிய பாடல்களைத் தமிழ்நாட்டு மூவேந்தர்க ளாகிய சேர சோழ பாண்டியர்களது அவையத்திற் கொண்டு போய்ப் படித்து அருத்தஞ் சொல்லி, அவர்களிடம் பரிசாய்வாங்கும்

Page 55
பெருந் திரவியங்களைக் கொண்டுபோய்ச் சிவாலயத் 'திருப்பணி " களிலும் சமாராதனைகளிலுஞ் செலவிடுவதையே விநோதமாய் உள்ளவர். இவர் சீவித்த காலஞ் சமுச்சயத்திற்கு இடஞய் இருப் பினும், அறுபத்து மூன்று திருத்தொண்டர் என்னப்படுவாருள் இவரும் ஒருவராதலினலும் , அத் திருத்தொண்டர் புராணத்தை அநபாய சோழனது பரிபாலனத்தின் கீழாகச் சேக்கிழார் பாடினராதலாலும், அச் சோழன் காலத்திற்கு முன்னரே இவர் இருந்தவர் என்று உத்தேசித்தல் வேண்டும்.
குறிப்பு * தமிழ் புளூராக்" நூல் தந்த சரிதத்தையே சதாசிவம்பிள்ளை மொழிபெயர்த்துள்ளார். பெரியபுராணத்திற் சேக்கிழார் ஐந்து பாடல்களிற் காரிநாயனர் வரலாறு கூறுவர். காரிநாயனர் குலம் பெரியபுராணத்திற் குறிப்பிடப்படவில்லை என்பர். திருத்தொண்டத் தொகையிற் சுந்தரர் ** காரிக்கும் அடியேன்" என்று கூறுவதால், அவர் காலம் சுந்தரருக்கு முற்பட்டதாகும்?.
காரைக்காலம்மையார். - Karaikkalammar
இவர் சோழமண்டலத்திலே, காரைக்காலிலே, வைசியர் குலத்திலே பிறந்த ஒர் பெண் . திருத்தொண்டர் சுக வர் என்னப் படுவாருள் ஒருவர். இவர்க்குத் தந்தையால் இடப்பட்ட நாமம் புனித வதியார். இவரது தந்தைக்குத் தனதத்தன் என்று பேர். தம் பெற்ருருக்கு இவர் ஏக புத்திரி. நாகபட்டணத்திலுள்ள நிதிபதி என்னும் வணிகேசன் புத்திரன் பரமதத்தன் என்பவன் இவர்க்கு நாயகன். இப் புனிதவதியார் இல்லற நடாத்துவதிலும் பசித்து வந்தோர்க்கு அன்னம் வழங்கிச் * செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்து ** உபசரித்தலிலும் பெயர் பெற்றவர். இவருடைய கையில் அற்புதமாய் இரண்டு மாம்பழம் வந்திருந்த காரணத்தால், இவர் பத்தா இவரைத் தனது பெண்ணுகப் பாவிக்க அஞ்சித் தெய்வமாகப் பாவித்துச், சிலநாள் இவருடனே நாகபட்டினத்திலிருந்து, மறுபடி பாண்டிவளநாட்டிற்குச் சென்று, அங்கிருந்த வேருெரு வைசியப் பெண்ணை விவாகஞ் செய்து, அவளிடம் உற்பவித்த தன் மகளுக்குத் தன் முதல் மனைவியாகிய இவரது நாமாபிமானத்தின் பொருட்டுப் புனிதவதி என்று நாமகரணஞ் செய்து, அவ்வூரிற்ருனே திரவிய விருத்தி பண்ணிக்கொண்டிருந்தான். இங்கே புனிதவதியார் கற்பு நெறி விலகாது இல்லறம் அனுட்டித்திருந்தனர்.
1. கரைக்கண்டன் சருக்கம், 10一14 2. ஏழாத் திருமுறை, 39, 8

م۔م۔ 95 --۔
சிலகாலஞ் சென்றபின்பு அம்மையாரின் சுற்றத்தவர் பரமதத்தன் செய்த செய்கையைக் கேள்வியுற்று மனம் வருந்தியும், அவனுடன் இவரைச் சேர்த்துவிடுவதற்காகப் பாண்டிவளநாட்டிற்கு இவரை அழைத்துப் போனபோது, அப் பரமதத்தன் இவரது வரவைக் கண்ட மாத்திரத்திலே தன் மனைவியோடும் மகளோடும் வந்து இவரது பாதத்திற் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து வணங்கினன். ஆனது பற்றி இப் புனிதவதியார் இல்லறத்தை அம்மட்டில் நிறுத்தித் தம் அழகிய வடிவத்தை மாற்றிப் பேய் வடிவுகொண்டு, தவவேடம் பூண்டு, சிவ தொண்டருள் ஒருவராயினர். இவர் பாடிய பாடல்களுள் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை என்னும் இரண்டும் விசேஷ மானவைகள்,
இவர் கயிலையங்கிரிக்குச் சென்றபோது, காலால் நடப்பது தகாதெனத் தலையால் நடந்துபோனர் என்றும், சிவன் இவரைக் கண்டவுடன் அம்மையே! என்று அழைக்க, இவர் அவரை அப்பா ! என்று அழைத்தார் என்றும், இவர் உமாபதியாகிய உருத்திரனது பணியைச் சிரமேற்ருங்கித் திருவாலங்காட்டிற் சென்று அவரது நடனதரிசனஞ் செய்து அங்கே இருந்துகொண்டு இரண்டு பதிகங்கள் பாடினர் என்றும் புராணம் கூறும். இவரது பூரண சரிதம் பெரிய புராணத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது.
குறிப்பு * தமிழ் புளூராக் ஆசிரியர் தந்த சரிதத்தைச் சதாசிவம்பிள்ளை பெரியபுராணத்தின் உதவியுடன் விரித்துரைத்துள்ளார். அற்புதத் திருவந்தாதியில் நூற்ருெரு வெண்பாக்களும், கட்டளைக் கலித்துறை யும் வெண்பாவும் இடம்பெறும் இர்ட்டைமணி மாலையில் இருபது பாக்களுமுள. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டிலும் பதிகமொன்றிற்குப் பதினெரு விருத்தங்களுள.
யாப்பருங்கல விருத்தியுரைகாரர் " கறைப்பற் பெருமோட்டுக் காடு கிழவோட்டு ' எனும் செய்யுளை எடுத்தாண்டு " இது பூதத் தாரும் காரைக்காற் பேயாரும் பாடியது ' என்பர்?. ச. வையாபுரிப் பிள்ளை ஈண்டு சுட்டப்பட்ட பூதத்தாரைப் பூதத் தாழ்வாராகக் கொண்டு, அவரும் காரைக்காலம்மையாரும் சேர்ந்து இப் பாடலைப் பாடினர்கள் என்பதால் இருவரையும் சமகாலத்தவராகக் கருதி பூதத்தாழ்வார் மாமல்லையைக் குறிப்பிடுவதால்8 முதலாம் நரசிம்ம வர்மனுக்கு முற்பட்டவராகார் எனத் துணிந்து, காரைக்கா
1. திருநின்ற சருக்கம், 452-516 2. Gsü al|alfluu á), 40 p_oRoJ 3. இரண்டாம் திருவந்தாதி, 10

Page 56
- 96 -
லம்மையார் திருஞானசம்பந்தருக்குப் பிற்பட்டவர் என்று முடிவு செய்தார். வையாபுரிப்பிள்ளையின் கருத்தினை ஏற்பது பொருத்த மாகத் தெரியவில்லை. முற்கிளந்த பாடலையும் ** வஞ்சி வெளிய குருகெல்லாம் ' எனும் செய்யுளையும் நச்சினர்க்கினியர் ஒளவையும் காரைக்காலம்மையும் கூறியன என்பர் 2, ** வஞ்சி வெளிய குருகெல் லாம் ' எனும் பாடலைப் பொய்கையார் வாக்கென யாப்பருங்கல விருத்தியுரைகாரர் சுட்டியுள்ளார். பாடலாசிரியர் இன்னர் என் பதிலே கருத்தொற்றுமை நிலவாத பாடலொன்றின் அடிப்படையிற் காலவரையறை செய்வது பொருத்தமாகத் தெரியவில்லை. மேலும் முதலாழ்வார் மூவரிலும் சமரசப்பான்மை குறைந்தவராகக் காணப் படும் பூதத்தாழ்வார் சிவனடியாருடன் சேர்ந்து ஒரு பாடலைப் பாடியிருப்பாரா என்ற கேள்வியும் எழாமலில்லை. திருஞானசம்பந்த ருக்கு முற்பட்டவர் காரைக்காலம்மையார் என்பதைச் சேக்கிழார் ** இம்மையிலே புவியுள்ளோர் ' எனும் பாடலிற் கூறியுள்ளார். சேக்கிழாரின் கூற்றினை மறுத்துரைப்பதற்கு ஆதாரமிருப்பதாகத் தெரியவில்லை. காரைக்காலம்மையாரைத் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் குறிப்பிட்டுள்ளதாகக் கருதுவோருமுளர் கி. சுந்தரர் "" பேயார்க்கும் அடியேன்" என்பர் 5,
ஐயடிகள் காடவர்கோன் குறிப்புக் காண்க.
5 Tiğ5(35uU guJi. - Kartikaya Ayar. முன்னர்க் கூறப்பட்ட யாழ்ப்பாணம் நல்லூர் அப்புக்குட்டி ஐயர்க்குத் தம்பியாகிய வேங்கடாசல ஐயர்க்குப் புத்திரராம் இவர், இருபாலைச் சேணுதிராய முதலியார்க்கு மாணவகர். இலக்கண இலக்கி யங்கள் கசடறக் கற்றவர். தமிழ் சம்ஸ்கிருதம் எனும் இரு பாஷைக ளன்றி இங்கிலிஷ் பாஷையுந் தெரிந்தவர். வண்ணுர்பண்ணையிலே
ஆறுமுக நாவலரோடு கூடிச் சைவப்பிரசங்கஞ் செய்தவர்.
குறிப்பு - * தமிழ் புளூராக் நூல் வெளிவந்தபோது வாழ்ந்துகொண்டிருந்
தவர் கார்த்திகேய ஐயர். இவர் நல்லூர் ம. சரவணமுத்துப்
புலவரிடமும் பயின்றவர் என்பர் வித்துவான் கணேசையர் 8. வித்துவ
1. History of Tamil Language and Literature, 1956, pp. 107, 118-119 2. தொல்காப்பியம், செய்யுளியல், 72 உரை 婆
செய்யுளியல், 40 உரை
திருமுறை 4.95.4 1.45.1
திமுறை 7.39.4
ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், 1939, பக். 38.

- 97 -
சிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை மட்டுவில் க. வேற, ۰ساس شیر
உபாத்தியாயர் முதலியோர் ஐயரவர்களிடம் பயின்றவர்கள். வெஸ்லியன் மிசன் யாழ்ப்பாணத்திலே நடத்திய மத்திய பாடசாலை யிற் பயின்ற ஐயரவர்கள், இ. ஜே. ருெபின்சன் பாதிரியாரின் தமி ழாசிரியருமாவர். ருெபின்சன் பாதிரியார் தாம் எழுதிய ஆங்கில நூலிலே வண்ணையில் நாவலரவர்களோடு ஐயரவர்கள் செய்த சைவப் பிரசங்கங்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்1. ஐயரவர்கள் வேற்பிள்ளை உபாத்தியாயரின் புலியூரந்தாதியுரைக்கு வழங்கிய சிறப்புக் கவியுண்டு.
bft mGuDH üb. – Kalamagum,
புலவர் பெருமானகிய இவர் கி. பி. பதினைந்தாஞ் சகாப்தம் வரையில் இருந்து அரசியற்றிய திருமலைராயன் காலத்தில் இருந்தவர் சோழநாட்டிலே, காவேரி நதித் தென்கரையில் உள்ள திருக்குடந்தை யிலே, வடமன் என்னும் பேர் வகித்த ஓர் பகுதிப் பிராமணர் குலத்திற் பிறந்தவர். இவர் முதற் சிறீரங்கத்திலே பெருமாள் கோயிற் பரிசாரகராய் இருந்தும் பின்பு சம்புகேசுரர் கோயிற் தாசிகளுள் ஒருத்தியாகிய மோகனங்கி என்பவளுடைய மோகவலே யிற் சிக்கி, வைஷ்ணவ மதத்தைத் தணந்து சைவத்தைத் தழுவி அத்தாசி சேவை செய்துவந்த கோயிலிற்றனே தாமும் பரிசார* ராயினர். ஒருநாள் இராவேளையில் இவர் அக்கோவிலிற்றங்கி இருந்த போது சரஸ்வதி மானிட உருவில் உருக்கொண்டு வந்து பாக்குத் தம்பலத்தை இவர் வாய்க்கண் உமிழ்ந்தாளாதலில் உடனே கடல் மடை திறந்தாற்போல ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நான்குவிதக் கவிதைகளையும், பொருளாவது, அடியாவது, தொடை யாவது யாவர் கொடுப்பினும் அவ்வவற்றிற்கு ஏற்கப் பாடுந்திறமை இவர்க்கு உண்டாயிற்று என்ப. கருமுகில்கள் பெருமழை பொழிந்தா லொப்பக் கவிமழை பொழியுங் காரணத்தால் இவர்க்குக் காளமேகம் என்றுங் காரண நாமம் உண்டு. இவர் முதன்முதற் பாடிய பிரபந்தம் திருவானைக்காவுலா, இவர் ஓரிடம் தரியாது தமிழ்நாடெங்குஞ் சென்று, அங்கங்குள்ள கோயிற் சுவாமிகள் பேரில் ஸ்துதியாகவும் நிந்தாஸ்துதியாகவும் பல பாமாரி பொழிந்தார். இப் புலவர் திலகரது பாடல்கள் பளபளப்போடு சொற்சுவையும், பொருட்சுவையும் செறிந்தனவன்றி அதி விந்தையும் வினேதமுமானவை. மாதிரிக் காகச் சிலவற்றை இங்ங்னந் தருகுவம். இவர் திருச்செங்காட்டிற்குப் போய் அங்குள்ள சிவனைத் தரிசித்தபோது:
1. Rev. E. J. Robinson: Hindu Pastors: A Memorial, London, 1867, p. 122.
unr - 7

Page 57
-98 -
"காலனையுங் காமனையுங் காட்டுசிறுத் தொண்டர்தரும்
பாலனையுங் கொன்ற பழிபோமோ - சீலமுடன் நாட்டிலே வாழ்ந்திருக்கு நாதரே நீர்திருச்செங் காட்டிலே வந்திருந்தக் கால்’’ என்றும், காஞ்சிபுரத்தில் வரதராசர் கருடோற்சவங் கண்டபோது,
** பெருமாளு நல்ல பெருமா ளவர்தம்
திருநாளு நல்ல திருநாள் - பெருமாள் இருந்திடத்திற் சும்மா விராமையின லையோ பருந்தெடுத்துப் போகிறதே பார்' என்றும் பிராமணர்கள் முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என்னும் எட்டு இலக்கங்களையும் வைத்து ஏகாம்பரநாதர்மேற் பாடும் என்று கேட்க !
* முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி ஒருமாவின் கீழரையின் ருேது’’ என்றும், தில்லையிலே சிவனது பிச்சாடண உற்சவந் தரிசித்தபோது
'நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர்
பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் - உச்சிதமாங் காளமேன் குஞ்சரமேன் கார்க்கடலே போன்முழங்கும் மேளமேன் இராசாங்க மேன்' என்றும்,
'தாண்டி யொருத்தி தலையின்மே லேருளோ
பூண்டசெருப் பாலொருவன் போடானே - மீண்டொருவன் வையானே வின்முறிய மாட்டானே தென்புலியூர் ஐயாநி யேழையா ஞல் '
என்றும், திருவாரூரில், உற்சவத்துக்குச் சென்றபோது: * ஒருமாடு மில்லாமல் மைத்துனனர்
புவிமுழுது முழுதே யுண்டார்
நரைமாடொன் றுமக்கிருந்து முழுதுண்ண
மாட்டாம னஞ்சை யுண்டீர்
1. ஏ. பா. இருந்தடத்திற்

- 99 -
இருநாழி நெல்லுக்கா விரண்டுபிள்ளைக்
குந்தாய்க்கு மிரந்தீ ரின்று திருநாளு மாயிற்றே செங்கமலைப்
பதிவாழுந் தியாக ஞரே' என்றும் பற்பல விநோத நிந்தாஸ்துதிகளைப் பாடினர். இவர் கோயிலொன்றிலே விழாக்காட்சிக்குப் போய் நிற்கையிற் சிலர் இவரை நோக்கி : ஒய் புலவரே ! சுவாமி வீதிவரும் காட்சிச் சிறப்பை விளக்கி, ஒன்பது சாதிப் பேரும் வைத்து வர்ணித்து ஓர் பாட்டை நவிலுவிராக என்று கேட்டபோது இவர்:
"வாணியன் வாழ்த்திட வண்ணுன் சுமக்க வடுகன்செட்டி
சேணியன் போற்றத் திரைப்பள்ளி முன்செலத் தீங்கரும்பின் கோணியன் ருழக் கருமான் றுகிலினைக் கொண்டுடுத்து வேணிய னகிய தட்டான் புறப்படல் வேடிக்கையே' என்று அதிவிரைவிலே சற்றும் ஆலசியம் இன்றிப் பாடினர். ஒரு முறை துரைத்தன உத்தியோகத்தனன விகடராமையன் என்பவன், "இதோ சாகிறேன் விழுகிறேன் ' என மெலிந்த ஓர் குதிரைமீ தேறி, முன்னும் பின்னும் அதைப் பலர் தள்ளிவிட, அதன்மேற் சவாரி போவதைக் கண்டு பரிகாசமாய்
* முன்னே கடிவாள மூன்றுபேர் போட்டிழுக்கப் பின்னே யிருந்திரண்டு பேர்தள்ள - எந்நேரம் வேதம்போம் வாயான் விகடரா மன்குதிரை மாதம்போம் காத வழி' 1 என்று பாடினர். چه
இவ்வாறு கண்டபடி பாட வல்லவராகிய இப் பெரும் புலவர் பற்பல ஊர்கடோறும் திரிந்து ஈற்றிலே திருமலைராயன் பட்டினம் நோக்கிச் செல்கையில், அங்கே அரசனுடைய சமஸ்தானத்தில் அதி மதுரகவி என்னும் வித்துவான் ஒருவர் உளரெனவும், அவர் பக்கத் திற் கற்றுச்சொல்லிகளாக அகங்காரங்கொண்டு செல்லுவார் சுச புலவர்கள் எனவும் கேள்வியுற்று, அப்புலவர்களின் அகங்காரத்தைப் பறக்கடித்து அவர்களைத் தலைகவிழச் செய்வது கருத்தாய்ப் போகும் போது, மேற்படி புலவர் கோமான் யானைமீதேறினவராய் வேந்தனது சமஸ்தானத்தை நோக்கிச் செல்வது கண்டனர். நக்ஷத்திரங்கள் சந்திரனைச் சூழ்ந்து சென்ருற்போல அறுபத்து நான்கு புலவர்களும் தங்கத் தண்டிகைகள் மீதில் ஏறி அதிமதுரகவியை வளைந்து போகக், கட்டியகாரன்: ' சாமி, பராக்கு ' என்று கட்டியங் கூறிக்கொண்டு

Page 58
- 100 -
வந்தனன். இவரோ அப்புலவர்மார் ஏறிவந்த தண்டிகை மத்தியுட் போகக் கட்டியகாரன் அதிமதுரசிங்கம், பராக்கு, என்று உரத்துக் கூறி, இவரை நோக்கி : அடா, நீயும் இந்தப்படி சொல்லுவாயாக என்று கற்பித்தனன். இவரோ,
** அதிமதுர மென்றே யகில மறியத்
துதிமதுர மாயெடுத்துச் சொல்லும்,- புதினமென்
காட்டுச் சரக்குலகிற் காரமில் லாச்சரக்குக்
கூட்டுச் சரக்கதனைக் கூறு' என்று ஒரு வெண்பாவினுல் வினவினர். இப்பாடல் அப்புலவர் காதில் விழ அவர் அகங்கொதித்தும் அந்நேரம் யாதும் சொல்லாது போய் இராசசபையிற் சேர்ந்தவுடனே ஒரு சேர்வைக்காரனை அழைத்து, இன்னவிடத்தில் ஓர் பிராமணன் இருக்கின்றன். நீ போய் அவன் ஊர் பெயர் அறிந்து வாவென, அவன் போய் இவரைக் கண்டு ஐயா! நீரியாவர், என்று விசாரிக்க, இவர் :
தூதைந்து நாழிகையி லாறுநா ழிகைதனிற்
சொற்சந்த மாலைசொல்லத் V துகளிலா வந்தாதி யேழுநா ழிகைதனிற்
ருெகைபட விரித்துரைக்கப் பாதஞ்செய் மடல்கோவை பத்துநா ழிகைதனிற்
பரணியொரு நாண்முழுதுமே பாரகா வியமெலா மோரிரு தினத்திலே
பகரக் கொடிக்கட்டினேன் சீதஞ்செ யுந்திங்கள் மரபின னிடுபுகழ்
செய்யதிரு மலைராயன்முன் சீறுமா ருகவே தாறுமா றுகள்சொற்
றிருட்டுக் கவிப்புலவரைக் காதங் கறுத்துச் செருப்பிட் டடித்துக்
கதுப்பிற் புடைத்துவெற்றிக் கல்லணையி னெடுகொடிய கடிவாள மிட்டேறு
கவிகாள மேகநானே'
என்று விலாசமாய் ஏட்டில் வரைந்து அனுப்பினர். இதைக் கண்ட வுடனே நாகபாம்பு படம் எடுத்தாற்போல அப்புலவர் சீறி இராச னேடு யோசனை செய்து இவரைப் பிடித்துவரும்படி நான்கு சேவகரை அனுப்ப, இவரோ வந்தவர்களின் மன நிலைமையை உணர்ந்து, உபாயமாய் எலுமிச்சம்பழம் ஒன்றைக் கடையில் வாங்கிக்கொண்டு இராசசபை போயினர். இதற்கிடையிற் புலவர்மார் இராசாவுடனே

- 101 -
யோசித்து, அகோ ! இராசனே, காளமேகம் சபையிற் புகுங்கால் அவனுக்கு ஆசனங் கொடாமலுஞ் சம்மானஞ் செய்யாமலும் அவன் உட்புக வழிவிடாமலும் இருக்கவேண்டும் என்று எச்சரிக்கை செய்து இருந்தனர். இவரோ வாசலிற் சென்று அங்கு நிகழ்ந்த குதை மட்டிட்டுச் சம்ஸ்கிருத சுலோகமொன்று சொல்லி அரசனை ஆசீர் வதித்து எலுமிச்சம்பழத்தை நீட்ட, அரசனுக்கு நீட்டியதைப் பிறர் வேண்டல் கூடாதாதலின் முன்னே வழிமறித்திருந்தார், இப்போது இவர் முன் செல்ல இடங் கொடுக்க, இவர் கறங்கு எனக் கெதியாய் நடந்து, எலுமிச்சம்பழத்தை நீட்ட, அரசன் வாங்கியும் உட்கார இடங் கொடாமையால், இவர் நின்ற நிலையிலே சாரதையைத் தியானித்து அவள் பேரிலே சரஸ்வதிமாலை என்று பெயருள்ள முப்பது வெண்பாப் பாடினர் என்ப.
** வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை
அரியா சனத்தி னரசரோ டென்னச்
சரியா சனத்துவைத்த தாய் ' என்பது அம் முப்பதனுள் ஒன்ருகும். இதனைப் பாடி முடிக்கவே அரசன் வீற்றிருந்த சிங்காதனம் தெய்வாதீனமாய் விரிந்து இடங் கொடுக்க, அதிலே இவர் ஏறி இருந்தனர் என்ப. இவர் இவ்வா றிருந்ததைக் கண்ட புலவர்கள் பார்த்த கண்கள் பறிப்பரிதாய் இவரை நோக்க, இவரும் அவர்களை நோக்கி, மனம் புழுங்கி நீவிர் யாவர் என, அவர்கள் : "யாம் இவ்வரசனின் சமஸ்தான கவி ராசர் ' என, அப்படியானுல் :
*" வாலெங்கே நீண்டெழுந்த வல்லுகிரெங் கேநாலு
காலெங்கே யூன்வடிந்த கண்ணெங்கே-சாலப் புவிராயர் போற்றும் புலவீர்கா னிங்கள் கவிராய ரென்றிருந்தக் கால் ' என்று அவர்களுக்குக் குரக்கரசர்ப் பட்டங் கொடுத்து அவர்கள் அனைவரையும் உல்லங்கனப்படுத்தினர். அப்போது அதி மதுரகவி
இவரை நோக்கி : நீ யார் என்ன, இவர் "" யான் காளமேகம்" என்ருர், ஆகா 1 மேகமானுற் பொழிவாயா என்று அவர் கேட்க, இவர் : "ஆம் பொழியத்தான் வந்தேன் " என்ருர், அதுகேட்ட மதுரகவி:
**மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும்
ஆச்சென்ரு லைந்நூறு மாகாதா-பேச்சென்ன வெள்ளைக் கவிக்காள மேகமே யுன்னுடைய கள்ளக் கவிக்கடையைக் கட்டு '
என்று தன்னை வியந்து புகழக், காளமேகமோ மேலும் மேலாட்டமாய்:

Page 59
سنہ 102 سس۔
" இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணுரறும் அம்மென்ரு லாயிரம்பாட் டாகாதா - சும்மா இருந்தா விருப்பே னெழுந்தேனே யானுற் பெருந்தாரை மேகம் பிளாய் '
என்னும் பாட்டைப் பாடித் தமது திறமையைத் தெரிவித்தார். அவர்கள்; "நீ அரிகண்டம் பாடுவாயா " என்ன, இவர் " " அரி கண்டமாவதியாது ? கூறுதிர் "" என்ன, அவர்கள் : அரிகண்டமாவது கழுத்திற் கத்தி கட்டி எதிரி கொடுக்கும் சமுத்திக்கு இணங்கப் பாடுவது ; பாடத் தவறினுற் கத்தியால் வெட்டப்படுவது எனக், காளமேகம் சை மேற் கை தட்டிச் சிரித்துப் போ ! போ!! இதுவும் ஓர் அருமையா ? யம கண்டம் பாடுவீரா என, அவர்கள் அது யாதென்ன, இவர் அவர்களை நோக்கி : “ ‘பதினறடி நீளம் அகலம் ஆழத்திலோர் குழி வெட்டி, அதன் நான்கு மூலைகளிலும் பதினறடி இருப்புக் கம்பம் நாட்டிக் கம்பங்களின்மேல் நாலு சட்டமும் நடுவே ஒரு சட்டமும் பூட்டி, நடுச்சட்டத்திலே உறிகட்டிக், கழுத்தின் மேல் நான்கு, அரைமேல் நான்காய் எட்டுக் கத்தி பூட்டி, அவ் உறியின் மேலே புலவன் ஏறி இருத்தல் வேண்டும். குழியிலே கட்டை யிட்டு நெருப்பு மூட்டி அந் நெருப்பில் எண்ணெய்க் கொப்பரை வைத்து அதனுட் கந்தகம் சாம்பிராணி முதலிய சுவாலைப் பொருட்கள் போடவேண்டும். கத்திகளிற் கொழுக்கிகள் மாட்டி அவற்றிற் சங்கிலி கோத்து, அவற்றைக் கம்பங்கள் அருகே நிற்கும் நான்கு மதயானைகள் கையிற் கொடுக்க வேண்டும். என்னென்ன சமுத்தி கொடுத்தாலும் உறியிலிருந்தபடியே புலவன் பாடவேண்டும். சமுத் திக்கும் பொருளுக்கும் பின்னம் வரில், அவற்றைக் கொடுத்தோன் யானைப் பாகர்க்குச் சைகை காட்ட, அவர் அங்குசத்தால் யானையை ஒட்ட, யானை இழுக்கவே புலவனது தலையும் உடம்பும் கத்திகளால் வெட்டுண்டு கொப்பரையில் விழும். இதுவே யம கண்டம். நீவி ரிப்படிச் செய்து பாடுவீர்களா " என்ருர். அவர்கள் உத்தரமாய் நீதான் அவ்வாறு செய்குதி என்ன, இவர் : நீங்கள் சொற்றது சரியே. அதற்கு நீங்கள் ஆட்கள் அல்லத்தான் என்று தாமே அதற்கு இசைந்து, நெருப்புக் குழிமேற் கட்டப்பட்ட உறிமேல் இருந்து பாடி விசயமடைந்தார். முதலாவதாக அதிமதுரகவி இவரை நோக்கித், திருமால் அவதாரம் பத்தையும் ஒரு வெண்பாவிற் பாடும் என இவர் அப்படியன்று, அரைவெண்பாவிற்பாடுகிறேன் பாரீர் எனக் கூறி,
** மெச்சுபுகழ் வேங்கடவா வெண்பாவிற் பாதியிலென்
இச்சையிலுன் சன்ம மெடுக்கவா - மச்சாகூர் மாகோலா சிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய் ** ܗܝ என்று பாடினர். இதைப் பாடி முடிக்கவே மற்றைய புலவருள் ஒருவர் இராசித் தொகைமேல் ஒரு பாட்டுச் சொல்லுதிர்" என்று கேட்க, இவர் :

ཀས་མང་། 103 - ས་ཁམས་
' பகருங்கான் மேடமிட பம்மிதுனங் கற்க
டகஞ்சிங்கங் கன்னி துலாம்விர்ச் - சிகந்த
நுசுமகரங் கும்பமீ னம்பன்னி ரண்டும்
வசையறுமி ராசி வளம் * என்று பாடி முடிக் கப், பின்னெருவர் : திரிமூர்த்திகளின் இடம், பெயர், கறி, உணவு, ஆயுதம், பூஷணங்களாதியவற்றின் மேற் பாடுவீராக என்ன,
* சிறுவ னளைபயறு செந்நெற் கடுகு
மறிதிகிரி தண்டு மணிநூல் - பொறியரவம் வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக் கற்ருழம் பூவே கறி" என்று பாடினர். வேருெருவர் இவரை நோக்கி: ஈ ஏற மலை குலுங்கின தாக ஒரு பாட்டுப் பாடும் என, இவரோ மலை மாத்திரமா ? உலகம் முழுவதுங் குலுங்கினதாகப் பாடுகிறேன் கேளுங்கள் என்று கூறி :
*" வாரணங்க ளெட்டு மகமேரு வுங்கடலுந்
தாரணியு நின்று சிலித்தனவால் - நாரணனைப் பண்வா யிடைச்சி பருமத்தி னலடித்த புண்வாயி லீமொய்த்த போது ' என்று கணத்திற் பாடினர். ஒருவர் இவரை நோக்கிப் புலவரே : குடத்திலே கங்கை அடங்கியதாக ஓர் கவி பாடும் என, இவர் சற்றுந் தாமதியாது ;
** விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமன்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை இடத்திலே வைத்த விறைவர் சடாம குடத்திலே கங்கை யடங்கும் '
என்று பாடினர். இவ்வாறு மற்றையோரும் தத்தம் மனவிருப்பப்படி யாது கேட்டாலும் ஒன்றுந் தவருது பாடி முடித்து உறியால் இறங் கினர். ஆயினுமென்? அவர்களுடைய மனங்கள் பின்னும் உருகாமலும் இளகாமலும் இரும்பினுங் கடினமாய்ப் பிடித்ததே பிடியாய் இருக்க, அரசனும் இவர்மேல் அபிமானங் கொள்ளாது மனவசியமாகாது பரிதிமுன் கழிமண் என வரவர இறுகிக் கடின சித்தனுக இவர் மிக மனசு நொந்து :

Page 60
~_.
--بس۔ 104 حس۔
*" செய்யாத செய்த திருமலைரா யன்வரையில்
ஐயா வரனே யரைநொடியில் - வெய்யதழற்
கண்மாரி யான் மதனைக் கட்டழித்தாற் போற்றியோர்
மண்மாரி யாலழிய வாட்டு ' என்று ஒரு மறப்பாட்டைப் பாடி அப்பட்டினம் விட்டு மீண்டார். இவர் சொல்லிய வாக்குப்போல அந்நகரம் மண்மாரியால் மூடுண்டு அழிந்தது என்ப. மறுபடி இவர் அங்கங்கே யாத்திரை செய்து திரிந்து திருவாரூரில் வந்து இருச்கும்போது, அங்குள்ள புலவர் ஒருவர் சிலேடையாய் ஒரு கவி பாடவேண்டும் என்று நினைந்து,
** நாணென்ரு னஞ்சிருக்கு நற்சாபங் கற்சாபம் " என்று தொடங்கி மற்ற மூவடிகள் வராமையால் அதை மாத்திரம் சுவரில் எழுதிப் போய்விட்டனர் கோயிலுக்குச் சென்ற காளமேகம் மேற்படி தனி அடியைப் பார்த்து : -
* பாணந்தான் மண்டின்ற பாணமே- தாணுவே
சீராரூர் மேவுஞ் சிவனேநீ யெப்படியோ
நேரார் புரமெரித்த நேர் ' என்று மூன்று அடிகளையும் அதன் கீழ் வரைத்து விட மற்றநாள் முந்திய புலவர் அவற்றைக் கண்டு மகா சந்தோஷம் அடைந்தனராம். தேகவியோகமான பின் காளமேகப் புலவரது பிரேதம் மயானக் கட்டைமேற் கிடந்து எரியும்போது, முன்சொன்ன புலவர் உள்ளம் பரிந்து அதன் கிட்டப்போய்:
** ஆசு கவியா லகிலவுல கெங்கும் வீசு புகழ்காள மேகமே - பூசுரா விண்கொண்ட செந்தழல்வாய் வேகுதே யையையோ மண்டின்ற பாணமென்ற வாய் ' - என்று பாடிப் பிரலாபித்தார். இவ்விடஞ் சுட்டப்பட்ட புலவர் இரட்டையர் என்று சிலர் சொல்லிஇருக்கக் கண்டோம்,
காளமேகத்தை ஒத்த கவிமேகங்கள் அருமை ! அருமை !! இவர் பாடிய தனிப்பாக்கள் நூற்றைம்பதுக்கு மேலுண்டு. தெரிவு செய்து எழுதில் இப்புத்தகம் விரியுமென்று அஞ்சி விடுத்தோம். அவற்றுட் பல நூதனமன்றி 'வம்புந்தும்பும்" வசையுமே இவரைப் புகழ்ந்து :

---- 105 سه
" கம்பனென்று மம்பனென்றுங் காளியொட்டக் கூத்தனென்றும் கும்பனென் றும்பேர் கொடுப்பதுண்டோ-அம்புவியிற் கன்னவ தாரன் காளமே கப்புலவன் அந்நாளி லேபிறந்தக் கால் ’’
என்று புலவர் ஒருவர் பாடினர். இவரைப்பற்றிய நூதன கதைகளும் பல உள. இவர் ஒரு தருணங் கன்னபுரத்திலிருந்த கோயிலுக்குச் செல்ல அங்குள்ள வைஷ்ணவர் இவரை உட்புகாது தடுத்துக் கதவை
அடைக்க, இவர் குரோதங் கொண்டு :
"கன்னபுரங் கோயிற் கதவடைத்துத் தாழ்ப்பூட்டி
வெண்ணெயுண்ட மாயவனும் மண்ணையுண்டான்'
என்று பாட விஷ்ணு விக்கிரகந் தரையிற் சாய்ந்தது என்றும், மறுபடி அதற்குப் பரிகரிப்பாக :
"என்னையெனில் சிரக்கப் பறையேந்திச் செங்காட்டி லீசன் இரக்கப் புறப்பட்டா னென்று '
என்று பாட, அவ் விக்கிரகம் எழுந்துவிட்டது என்றுங் கூறுவர். இவர் தெரு மார்க்கம் ஒரு தருணம் போனபோது வீதியிற் பெருக்கிக் கொண்டிருந்த பிராமணப் பெண்கள் காளமேகம் என்கிற கட்டை விளக்குமாறு இவர்தான என்று பரிகசிக்க "ஆமாம், பெருக்கப் பெருக்கச் சொல்லிக்கொள்ளுவார்கள் ' என்று இவர் சொல்லவே, குப்பைகள் கூட்டக் கூட்ட ஒழியாது பெருகிக்கொண்டிருந்தன என்றும், அப் பெண்கள் மறுபடி இவரிடம் சென்று மன்ருடியதாற் பின்பு தொலைந்தன என்றும், ஆவிடையார் கோயிலின் சமீபத்திலே உள்ள கிராமமொன்றிற் பாம்புகள் மிகுந்து அநேகரைக் கடித்த தால் அந்தக் கிராமத்தார் இப்புலவரை நோக்கி ஐயா, நீர் இப் பாம்புகளை அகற்றிவிட வேண்டும் என்று பிரார்த்திக்க இவரோ ! "பன்னகம் பாய்சுருட்டி ஆச்சு, நீங்கள் போங்கள்" என்று சொல்ல அம் மொழிப்படி அவை தொலைந்தன என்றுங் கதைகள் உள.
குறிப்பு
காளமேகப் புலவர் காலத்திற்கும் " " கம்பனென்றும் " எனும் வெண்பாவுக்கும் "தமிழ் புளூராக் ஆசிரியருக்குக் கடமைப்பட்ட சதாசிவம்பிள்ளை விநோதரச மஞ்சரியையே பெருமளவிற்குப் பின் பற்றிக் காளமேகப்புலவர் சரித்திரத்தை அமைத்துள்ளார். சைமன் காசிச்செட்டி மேற்கோளாகத் தந்த காளமேகப்புலவரின் ஆறு பாடல்களிலே "தூதைந்து நாழிகையில் ' எனும் பாடலை மட்டுமே

Page 61
n 106 -
சதாசிவப் பிள்ளை எடுத்தாண்டுள்ளார். " கம்பனென்னும்' எனும் பாடலின் வேற்றுமை வடிவங்களை ஆரியப்பபுலவர் சரிதத்திலும் குறிப்பிலும் காணலாம் என்பது ஈண்டு குறிப்பிடத் தக்கது. 'நாணென்ருல் நஞ்சிருக்கும் ' எனும் பாடல் உட்படக் காளமேகப் புலவர் பாடல்களாக இருபதினைச் சதாசிவம்பிள்ளை புதிதாக எடுத் தாண்டுள்ளார். இவற்றிலே "கன்னபுரங் கோயில்" எனும் பாடல் ஒழிந்த ஏனைய பாடல்களும் அவற்றிற்கான சந்தர்ப்பங்களும் விநோதரச மஞ்சரியிலிருந்து பெறப்பட்டவை. 'ஒரு மாடுமில்லாமல்’ எனும் பாடல் சுப்பிரமணியபிள்ளையின் தனிப்பாடற்றிரட்டு உரைப் பதிப்பிற் சுப்பிரதீபக் கவிராயர் பாடலாகத் தரப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது. "* கன்னபுரங் கோயில் ' எனும் பாடல் முதலாகச் சதாசிவம்பிள்ளை தரும் கதைகளுக்கு அவருக்குக் கிடைத்த ஆதார நூல்கள் புலப்படுமாறில்லை.
கும்பகோணத்தை (குடந்தையை) அடுத்த நந்திபுரம் (நாதன் கோயில்) எனும் இடத்தைச் சேர்ந்தவர்,காளமேகப் புலவர் என்றும் அவருடைய இயற்பெயர் வரதன் என்றும் கருத இடமுண்டு. காளமேகப்புலவர் பாடிய 'இந்திரன் கலையாய் ' எனும் செய்யுள்? கோப்பயன் புதல்வன் சாளுவத் திருமலை ராயனைக் குறிப்பிடுகின்றது. விசயநகர மன்னன் மல்லிகார்க்சுனராயரின் (1449-1465) அரசப் பிரதிநிதியாக விளங்கிய சாளுவத் திருமலைராயனைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் சோழநாட்டிற் காணப்படுகின்றன9. இவற்றை ஆதாரமாகக் கொண்டு நோச்கின், காளமேகப் புலவரின் காலம் பதினைந்தாம் நூற்றண்டின் பிற்பகுதி என்பது புலணுகும். திருமலை ராயன் காளமேகப் புலவரைப் புறக்கணித்ததாகக் கூறப்படும் விநோதரச மஞ்சரியின் கதை பொருத்தமாகத் தெரியவில்லை. வறுமையாற்பீடிக்கப்பட்டு வருந்திக்கொண்டிருந்த தம்மைப் பெரிதும் ஆதரித்துக் குபேரன் போன்ற செல்வந்தனுகச் செய்தவன் திருமலை ராயன் என்று " இந்திரன் கலையாய்' எனும் பாடலிற் காளமேகப் புலவர் கூறியுள்ளார். மேலும் காளமேகப்புலவர் பாடிய வேறு தனிப்பாடல்களிலும் திருமலைராயன் குறிப்பிடப்பட்டுள்ளமை கவனிக் கத் தக்கது. காளமேகப்புலவர் பாடியதாகச் சதாசிவம் பிள்ளை குறிப் பிடும் மறப்பாட்டு விநோதரச மஞ்சரியில் இடம்பெறுவதேயாகும்; தமிழ் நாவலர் சரிதை, தமிழ் புளூராக் எனபனவற்றிலோ அல்லது பழைய தனிப்பாடற்றிரட்டுப் பதிப்புகளிலோ இடம்பெறுவதன்று. திருவாலங்காடு ஆறுமுகசுவாமி பதிப்பில் (1895) இடம்பெருத
1. தமிழ்நாவலர் சரிதை, 221.
2. தமிழ்நாவலர் சரிதை, 205,
3. மு. இராகவையங்கர்: சாசனத் தமிழ்க்கவி சரிதம், பக். 148-150; தி. வை. சதாசிவ பண்டரத்
தார்: தமிழ் இலக்கிய வரலாறு, 13, 14, 15ஆம் நூற்குண்டுகள், பக். 107-109.

- 107 -
முற்கிளந்த மறப்பாட்டு பின்வந்த சுப்பிரமணியபிள்ளை பதிப்பிலே இடம்பெறுகின்றது.
அதிமதுர கவிராயருக்கும் காளமேகப் புலவருக்குமிடையே பகைமை ஏற்பட்ட கதை விநோதரச மஞ்சரியிலே கூறப்பட் டுள்ளது. ** அதிமதுர மென்றே " எனக் காளமேகப்புலவர் அதிமதுர கவிமீது ஏளனமாகப் பாடியதாக வழங்கும் வெண்பா தமிழ் நாவலர் சரிதை, தமிழ் புளூராக் என்னும் நூல்களிலோ அல்லது தனிப்பாடற் றிரட்டின் பழைய பதிப்புகளிலோ இடம்பெறவில்லை. 'தூதைந்து நாழிகையில் ” எனும் பாடலுக்கு விநோதரச மஞ்சரி தரும் சந்தர்ப்பம் தமிழ் நாவலர் சரிதையிலோ (பாடல் 220) தமிழ் புளூராக் நூலிலோ தரப்படவில்லை. ' மூச்சுவிடு முன்னே" எனும் அதிமதுரகவி பாடலாக விநோதரச மஞ்சரி தரும் செய்யுள் தமிழ் நாவலர் சரிதை, தமிழ் புளூராக் என்னும் பழைய நூல்களில் இடம்பெறவில்லை. தமிழ் நாவலர் சரிதையில் அதிமதுரகவிராசன் பாடியனவாக இரு செய்யுட்கள் இடம்பெறுகின்றன. இவற்றில் ஒன்ருன "" நாணென்ருல் ' எனும் வெண்பாவிற்கு 1 மண்டின்ற பாணம்" எனும் சீர்களைக் காளமேகப்புலவர் எடுத்துக் கொடுத்த மையை அதிமதுரகவி பாடிய மற்ருெரு பாடலான காளமேகப் புலவர் மீதான கையறத்தில் எடுத்துப் போற்றியுள்ளார். அதிமதுர கவி பாடிய கையறம் 'ஆசுகவியால்" எனும் கையறப் பாடலோடு ஒப்பிடத்தக்கது. 'ஆசுகவியால் " எனும் கையறம் இரட்டையர்மீது தனிப்பாடற்றிரட்டுத் தொகுப்பாசிரியர்களாற் சுமத்தப்பட்டுள்ளது. இரட்டையர் காலம் பதினுன்காம் நூற்றண்டின் முற்பகுதி யாதலால் அவர்தம் செயல் பொருந்துவதாக வில்லை. காளமேகத்திற்கும் அதிமதுர கவிக்கும் இடையே நல்லுறவு நிலவியதாகத் தமிழ் நாவலர் சரிதை கருத வைக்கின்றது. " கோவல் மதுரா " என விளித்துக் காளமேகப்புலவர் அதிமதுரகவியின் குதிரையை வியந்து பாடியதாக ஒரு பாடலும் திருவாரூர்க் கோயிலில் அவர் வேண்டுகோளின்படி காளமேகம் பாடியதாக ஒரு பாடலும் தமிழ் நாவலர் சரிதையில் இடம் பெறுகின்றன.2
பூவை கலியாணசுந்தர முதலியாராலே திருவானைக்காவுலாவின் மூலம் 1890ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது; மு. அருணுசலம் அதனைக் குறிப்புரையுடன் 1940ஆம் ஆண்டில் வெளியிட்டார். காளமேகப் புலவர் பேராலே வழங்கும் பரப்பிரம விளக்கம் துன்மதிடு) புரட்டாதிமீ (1861) காஞ்சிபுரம் இராமலிங்க தேசிகராற் பதிப்பிக் கப்பெற்றது. பின்னர் திருவாவடுதுறையாதீன வித்துவான் சுப்பிர மணியக் கவிராயரும், மதுரை அரிகரமும் சேர்ந்து அதனை வெளி யிட்டனர். பரப்பிரம விளக்கத்தினையும் தர்க்ககுடா ரதாலுதாரி திருஞானசம்பந்தபிள்ளை இயற்றிய அரிகரதாரதம்மியத்தினையும் ஒரே
1. . 208, 221. 2. 206, 207.

Page 62
--سے۔ 108 -۔
பதிப்பாக விசயடு) புரட்டாதிமீ (1953) த. ச. மீனுட்சிசுந்தரம் பிள்ளை திருவாவடுதுறையாதீன வெளியீடாகத் தந்தார். பரப்பிரம விளக்கம் முழுநூலாகக் கிடைக்கப்பெறவில்லை. 1953ஆம் ஆண்டுப் பதிப்பில் நூலுக்குரியனவாக 51 பாடல்களும் சில தனிப்பாடல்கள் என்ற தலைப்பில் நான்கு பாடல்களும் காணப்படுகின்றன. பாவை என்னும் ஊரினரான தெய்வங்கள் பெருமாள் (தெய்வச்சிலைத்தாதா) என்னும் வள்ளல்மீது காளமேகப் புலவர் பாடியதாக வழங்கும் சித்திர மடற் பதிப்பொன்று 1905ஆம் ஆண்டில் வெளிவந்தது; பெ. தூரன் இதனை 1947இல் மீண்டும் பதிப்பித்தார். காளமேகப் புலவர் திரு வானைக்கா சம்புகேசுவரர் மீது அந்தாதியும் சித்திரமடலும் பாடிய தாகவும் கூறுவர். காளமேகப் புலவர் முப்பது வெண்பாக்களாலான சரஸ்வதிமாலை பாடினர் எனும் விநோதரச மஞ்சரியின் கூற்றிற்குரிய பழைய ஆதாரம் புலப்படுமாறில்லை. ஒட்டக்கூத்தர் சரஸ்வதிமாலை அல்லது சரஸ்வதியந்தாதி பாடினர் என்னும் செங்குந்தர் பிரபந்தத் திரட்டின் கூற்றும் கவனிக்கத்தக்கது. கம்பர் பாடியதாகச் சரஸ்வதி அந்தாதி ஒன்று பதிப்பிலுண்டு.
தமிழ் நாவலர் சரிதையிற் காளமேகப் புலவர் பாடியனவாக இருபது பாடல்கள் இடம்பெறுகின்றன. இவற்றிலே ஏழு பாடல்கள் மட்டும் தனிப்பாடற் றிரட்டிற் காளமேகப் புலவர் பாடல்களாகத் தொகுக்கப் பெற்றுள்ளன?. “ இந்திரன் கலையாய்" எனும் தமிழ் நாவலர் சரிதைப் பாடல் 8 திருவாலங்காடு ஆறுமுகசுவாமியின் தனிப் பாடற்றிரட்டுப் பதிப்பில் (1895) சொக்கநாதப் புலவர் பாடலாகத் தரப்பட்டுள்ளது. திருமலைராயனை வேறு பாடல்களிலும் காளமேகம் போற்றுவதால் இப்பாடல் அவர் பாடல் என்பதே பொருத்த மாகும். " கந்த மலர்' எனும் பாடல்க் பிரதிபேதங்களுடன் கம்பர் பாடலாக ஆறுமுகசுவாமியின் தனிப்பாடற்றிரட்டுப் பதிப்பில் இடம் பெறுகின்றது. தமிழ் நாவலர் சரிதை தில்லை நடேசச் செட்டியார், கோவை சி. கு. நாராயணசாமி முதலியார் (1916), திருகோண மலை த. கனகசுந்தரம்பிள்னை (1921 , ஒளவையார்குப்பம் சு. துரை சாமிப்பிள்ளை (1949) முதலியோராற் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் நாவலர் சரிதையில் இடம்பெறுவனவற்றுள் " விண்ணுக்கடங் காமல்" எனும் வெண்பாவும் "தூதைந்து நாழிகையில்" எனும் விருத்தமும் சதாசிவம்பிள்ளை தந்த மேற்கோட் பாடல்களுள் இடம் பெறுகின்றன. திருவாலங்காடு ஆறுமுகசுவாமியின் தனிப்பாடற் றிரட்டுப் பதிப்பில் 170 பாடல்கள் காளமேகப் புலவர் பாடியனவா கத் தரப்பட்டுள்ளன. இவற்றிலே "முன்னக நீரளக்கும்’ எனும் பாடல் சுப்பிரமணியபிள்ளையின் தனிப்பாடற்றிரட்டு உரைப்பதிப்பில் ------ 1. 200-07, 209-220. 2. p. 5. 5, 200-202, 204, 213, 214, 219, 3. 205. 4. s. 5. s. 216.

- 109 -
இடம்பெருததோடு இரு பாடல்கள் வெறிமங்கைபாகக் கவிராயர், சுந்தர கவிராயர் பாடல்களாகவும் தரப்பட்டுள்ளன. 5T 6Tf மேகப் புலவர் பாடல்களாகச் சுப்பிரமணியபிள்ளை பதிப்பில் மேலதிக மாகப் பத்தொன்பது பாடல்கள் தரப்பட்டுள்ளன2. திருவாலங் காடு ஆறுமுகசுவாமி பதிப்பிற் காளமேகப் புலவர் பாடல்களாக இடம்பெறும் மூன்று செய்யுட்கள் தமிழ் நாவலர் சரிதையிற் பொய்யாமொழிப் புலவர், இரட்டையர், புகழேந்திப்புலவர் ஆகி யோர் பாடியனவாகத் தரப்பட்டுள்ளன . கச்சபா லயஐயர் குறிப்பிற் தனிப்பாடற்றிரட்டுப் பதிப்புகள் பற்றிக் குறிப்பிடப்பட்டது. முறை யூர் சண்முகம் செட்டியாரின் வேண்டுகோளின்படி கொட்டாம்பட்டி கருப்பையாப் பாவலர் தொகுக்கத் தொடங்கியதும் மு. ரா. கந்த சாமிக் 8 விராயராற் பூர்த்தி செய்யப்பட்டு 1908ஆம் ஆண்டிலே வெளிவந்ததுமான தனிச் செய்யுட் சிந்தாமணியிலும் மு. இராக வையங்கார் 1936இல் தொகுத்தளித்த பெருந்தொகை (முதற் ருெகுதி யிலும் காளமேகப்புலவர் பாடல் இடம்பெறுகின்றன.
576if(pj5s I L6v6ui. - Kalimuttu Pulavar. பிறப்பிடம், இருப்பிடம், பிறந்த காலம், இறந்த காலம் ஏதும் இவரைப் பற்றிக் காணுேம். எனினும், இவர் பாடிய ஏழு தனிப் பாக்கள் கண்டோம். ஒவ்வொரு பாட்டும். 'வேலப்பன் மைந்தன் குருநாதன் ' என்று முடிகின்றது. கேலிப் புலவனே இலக்கண இலக்கியங்கள் நன்கு கற்றுச் சாலப் புகழ்பெற்று விளங்கிய புலவனே அறியோம். ஆனல் நாம் சுட்டிய பாடல் ஒவ்வொன்றுஞ் சிற்றின்ப சாரம் பொருந்தியது. ஆகவே மாதிரிக்காகவேனும் அவற்றை இங்ங்ணம் வரையாதுவிட்டோம்.
குறிப்பு
"தமிழ் புளூராக்" நூலில் இடம்பெருத காளிமுத்துப் புலவரைத் தனிப்பாடற்றிரட்டின் உதவியுடன் சதாசிவம்பிள்ளை சேர்த்துக் கொண்டார். ஆறுமுகசுவாமிகளின் தனிப்பாடற்றிரட்டுப் பதிப்பிற் (1895) "காளிமுத்து பாடிய ஏழு பாடல்களுள; இவை தமிழ் நாவலர் சரிதையில் இடம்பெறவில்லை. இவற்றுள் ஆறு பாடல்கள், பூம்பாவை வேலப்பன் மைந்தன் மயிலைக் குழந்தை மீது பாடப்பெற்றவை; ஏழாவது, தஞ்சி எனும் பெண் பற்றியது. ஒவ்வொரு பாட்டும் * வேலப்பன் மைந்தன் குருநாதன் " என்று முடிவதாய்ப் கூறல் பொருத்தமின்று.
காளிமுத்துப்புலவர் 'கடந்தூங்கு எனும் பாடலிற் பராக்கிரம பாண்டியனைப் (1422 - 1482) போற்றியதால் அப்பாண்டியன் காலத் 1. தனிப்பாடற்றிரட்டு, இரண்டாம் பாகம், 1955, பக். 68(3), பக். 47 (21). 2. தனிப்பாடற்றிரட்டு, முதற்பாகம், 1953, காளமேகப்புலவர் பாடல்கள், எண் 12, 26, 27, 80,
.175 ,174 171 ,157 ,148 ,136 ,114 ,100-س-94 3. தமிழ் நாவலர் சரிதை, 72, 108, 150.

Page 63
- 0 -
தவர் என்பர் கா. சுப்பிரமணியபிள்ளை 1. மு. இராகவையங்கார் "எண்ணிர்மை" எனும் தமிழ் நாவலர் சரிதைப் பாடல் அரிகேசரி பராக்கிரம பாண்டியனின் (1422 - 1462) புலமைத்திறம் பற்றிய தாய்த் தோன்றுகின்றது என்றுரைத்தார்?. இப்பாடலும் காளி முத்துப் புலவர் பாடலாகச் சுப்பிரமணியபிள்ளையாலே தனிப்பாடற் றிரட்டிற் கொள்ளப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. பராக்கிரம பாண்டியன் எனும் பெயரிற் பாண்டிய அரசர் பட்டியலிற் சிலர் இடம்பெறுவதால் ஈண்டு சுட்டப்பட்டவன் சடையவர்மன் பராக் கிரம பாண்டியன்தான் (1422 - 1463) என்று துணிந்துரைப்பதற்கு ஆதாரங்கள் போதாவென்பது கவனிக்கத்தக்கது. சுப்பிரமணிய பிள்ளையின் தனிப்பாடற்றிரட்டு உரைப்பதிப்பிலே, காளிமுத்து பாடியனவாய் முன்னைய பதிப்புகளில் இடம்பெற்ற ஏழு பாடல்க ளுடன், மேலும் பதின்மூன்று செய்யுட்கள் தரப்பட்டுள்ளன. இப் பதின்மூன்று பாடல்களும் ஆறுமுகசுவாமி பதிப்பிற் "பாண்டியன் கலித்துரை” பாடல்களாகத் தரப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது. இப் பதின்மூன்று பாடல்களுள் ஒன்று மட்டும் புகழேந்திப் புலவர் பாடலாகத் தமிழ் நாவலர் சரிதையில் (146) இடம்பெறு கின்றது. "பாண்டியன் கலித்துரை” பாடல்கள் எப்பொழுது "காளி முத்துப் புலவர் பாடல்களாகக் கருதப்பெறும் நிலைமையை அடைந் தன என்பது தெரியவில்லை.
மயிலைக் குழந்தைமீது காளிமுத்து பாடிய "நெல்லைச் சொன்ன பரணத்தை" என்ற பாடலை ந. சி. கந்தையாபிள்ளை தாசி காளி முத்து பாடலென்பர் 8. அவர் பள்ளிகொண்டான் மீது தாசி காளி முத்து பாடியதாய்த் தரும் "வள்ளி கொண்டான்" எனும் பாடல் ஆறுமுகசுவாமி பதிப்பிலும் சுப்பிரமணியபிள்ளை பதிப்பிலும் நையாண் டிப்புலவர் பாடலாகத் தரப்பட்டுள்ளது. ஆறுமுகசுவாமிகள் காளி முத்து எனவும், சுப்பிரமணியபிள்ளை காளிமுத்துப் புலவர் எனவும் சுட்டியவர், தாசி காளிமுத்து என எவ்வாறு துணியப்பட்டாரோ அறிகிலேம். வருணகுலாதித்தன் மடலைத் தாசி காளிமுத்து பாடிய தாக மு. சி. பூரணலிங்கம்பிள்ளையும் கா. சுப்பிரமணியபிள்ளையும் கூறியிருக்கின்றனர்4. முன்னேர் மொழிந்தவாறே தமிழ் இலக்கிய அகராதியிற் கூறிய ந. சி. கந்தையாபிள்ளை 5 தமிழ்ப் புலவர் அக ராதியில் அம்மைச்சி என்பவரை அதன் ஆசிரியராகக் கூறுவர் 6.
. Gaiau aijang, 1958, ui. 392.
சாஸனத் தமிழ்க்கவி சரிதம், 1961 பக். 142. தமிழ்ப்புலவர் அகராதி, 1960 பக். 120. Tamil Literature, p. 312; Gavišu ovog, uš. 417. - 1952, μά, 139, 174. --
με 19.

- 111 -
அந்தகக் கவிவீரராகவ முதலியார் சந்திரவாணன் கோவை அரங் கேற்றியபோது அம்மைச்சி கலந்துகொண்டதாகக் கூறுவர். அம்மைச்சி என்பவர் பாடிய இரு பாடல்கள் தமிழ் நாவலர் சரிதை யில் இடம்பெறுகின்றன?. 1899ஆம் ஆண்டில் வெளிவந்த வருண் குலாதித்தன் உலாமடற் பதிப்பின் பிரகாரம் அந்நூலுக்கு நீலாய தாகF பதிப்பாசிரியையாகவோ அல்லது நூலாசிரியையாகவோ இருந்திருக்க வேண்டும் என்பர் 8. வருண குலாதித்தன் மடல் சந்திர சேகரகவி என்பவரால் 1775ஆம் ஆண்டிற் பதிப்பிக்கப்பெற்றது என்பர் .
SC 623). Tuli. - Krishna Ayar.
இவர் மாயூரந் தாலுகாவிலுள்ளவர். சிதம்பரத்திலுள்ள சிவ காமியம்மை பிள்ளைத் தமிழ் பாடினர் இவரே.
. - குறிப்பு . . . . --
தமிழ் புளூராக் நூலில் இடம்பெருதவர் கிருஷ்ணையர். மாயூ ரம் அவையாம்பிகை சதகம் பாடியவரும் பத்தொன்பதாம் நூற் - ருண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராய்க் கருதப்படுபவருமான மாயூரத்தினை அடுத்த நல்லதுக்குடி கிருட்டிணையரும் 5, திருவையாறு முத்துசாமி பாரதியாரின் விசுவபுராணத்திற்கு உரைகண்ட மயிலாடு புரம் கிருட்டிணையரும் (1894), சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் பாடிய கிருஷ்ணையரும் ஒருவரா இருவரா அல்லது மூவரா என்று துணிவதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை.
g 6 Josuu Ti. — Keranthiar. மதுரைச் சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மருள் ஒருவராம் இவர் வள்ளுவர் நூற்குச் சொன்ன சிறப்புப் பாயிரக் கவி வருமாறு:
தப்பா முதற்பாவாற் ருமாண்ட பாடலினன். முப்பாலி னற்பான் மொழிந்தவர் - எப்பாலும் வைவைத்த கூர்வேல் வழுதி மனமகிழத் தெய்வத் திருவள்ளுவர்.' -
1. ச. சோமசுந்தரதேசிகர் தமிழ்ப்புலவர் வரலாறு, பதினேழாம் நூற்றண்டு, 156-57, 2, 198, 199. 3. கு. அழகிரிசாமி இலக்கிய விருந்து, 1958 பக். 125. 4. ந. சி. கந்தையபிள்ளே! தமிழ்ப்புலவர் அகராதி, பக். 19. 5. ந. வீ. செயராமன். சதக இலக்கியங்கள், 1966, பக்.141. 6. ந. சி. கந்தையாபிள்ளே தமிழப்புலவர் அகராதி, 1950 பக். 123.

Page 64
- 12 -
குறிப்பு
"தமிழ் புளூராக் நூலில் இடம்பெறுவனவற்றைச் சதாசிவம் பிள்ளை பெயர்த்தளித்துள்ளார். கீரந்தை என்பவரொருவர் இடைச் சங்கப் புலவராகக் களவியலுரையுட் குறிப்பிடப்பெற்றுள்ளார்: கீரந்தையார் என்பவர் ஒருவர் இரண்டாம் பரிபாட்டின் ஆசிரிய ராகப் பரிபாடலிற் கட்டப்பெற்றுள்ளார்; இளங்கீரந்தையார், பொதுக்கயத்துக் கீரந்தை என்ற பெயர்கள் குறுந்தொகைப் புலவர் வரிசையில் இடம்பெறுவன; கீரந்தை எனும் பெயர் சிலப்பதிகாரத் திலும் காணப்படுகின்றது. அக்காரக்கனி நச்சுமனுர் குறிப்புக்
夺mG向r矢,
gsb69)as, jbLDğt5faa) II uU i. — Kugainamachchivayar.
புலவரன்றி வேதாந்தியாயும் இருந்த இவர், இல்லாச்சிரமந் துறந்து சந்நியாசியாகிச் சிலகாலந் திருவண்ணமலையிலே வசித்தா " . ரேனும், மறுபடி அங்கிருந்து சிதம்பரஞ் சென்று அத்தலத்தையே தமது உத்தம வாசஸ்தானமாக்கி அவ்விடத்திற்ருனே தேகவியோக
ş.
மாயினர். காலம் கி. பி. க.அ -ம் சதாப்தம் என்று விளங்குகின்றது. இவர் பாடல்களுள் அருணகிரி யந்தாதி முக்கியம் பெற்றது. இது சிவன்மேற்று, என் உள்ளமே என்று ஆத்துமாவைக் கூவி அதனேடு சம்பாஷிக்கும் வகையாய் நூறு வெண்பாவிற் பாடப்பட்டது. இது உத்தமர்கள், தேவபத்தர்கள் யாவரும் ஒப்புக்கொண்டு நன்கு மதிக் கும் சிறந்த ஞானப்பாடல். இதில் ஒன்றை மாதிரிக்காய் இவ்விடந் தருகுவம்.
**காய நெகிழாமுன் கண்க ளிருளாமுன்
வாயி லுளபல்லு வழுவாமுன் - தாயம்பார்த் தோடிநமன் வாராமுன் னுள்ளமே சோணகிரி நாடிநம வென்றே நட',
இதனை இவர் திருவண்ணுமலைக் குகையில் இருந்தே பாடினர். குகை இடத்திருந்த காரணத்தால் இவர்க்குக் குகை நமச்சிவாய தேவர் என்னும் நாமமுற்றது. யாழ்ப்பாணத்து நல்லூர் சதாசிவம் பிள்ளை இதனைத் திருத்தி அச்சிடுவித்திருக்கிருர்,
1. 23. 42.

جسما۔ 13! ~س۔
ーー @jpH ー一 சதாசிவம்பிள்ளை குகை நமச்சிவாயருக்குத் தரும் காலவரையறை "தமிழ் புளூராக்" நூலில் இடம்பெறவில்லை. இவர் காலம் பதினரும் நூற்ருண்டு என்பது "முதலாம் ஆறுமுகசுவாமிகள்" குறிப்பாற் புல னகும். காசிச் செட்டியவர்கள் சோணகிரி மாலை என வழங்கிய அருணகிரியந்தாதியிற் காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு வெண்பா வுள. இவர் முப்பத்தைந்து பாடல் கொண்ட திருவருணைத் தனி வெண்பா எனும் பிரபந்தத்தையும் இயற்றியுள்ளார். நிஷ்டானுபூதி இயற்றிய ஆறுமுகசுவாமிகளும், அண்ணுமலை வெண்பா, சிதம்பர வெண்பா, பரமரகசிய மாலை, தமிழ் நாவலர் சரிதையின் 177ஆம் பாடல் என்பனவற்றை இயற்றிய சிதம்பரம் குரு நமச்சிவாய தேசி கரும் குகை நமச்சிவாயரின் சீடர்கள்.
(sb,5Jor3F (T 355 B i. - Kunasagarar.. கவிராசர் எனும் பெரும் பெயர்க்கு இலக்காகிய அமிர்தசாகர முனிவர் செய்த காரிகை இலக்கணத்திற்கு உரைசெய்தார் இவரே. அந்நூற் கலித்துறைகளிற் காணும் விதப்புச் சொற்களைத் தூக்கி இவர் செய்த தாற்பரிய உரை இவரது குசாக்கிர விவேகத்திற்குச் சான்ருகும். இவர் இயற்றிய நூல் "யாப்பருங்கலம்" எனப்படும். அதிலே கo ச் சொச்சச் சூத்திரமுள.
** யாப்பருங் கலனணி யாப்புற வகுத்தோன். தனக்குவரம் பாகிய தவத்தொடு புணர்ந்த குணகடற் பெயரோன் கொள்கையில் வளாத் துளக்கறு கேள்வித் துகடீர் காட்சி அளப்பறுங் கடற்பெய ரருந்தவத் தோனே' என்று யாப்பருங்கல முதற் சூத்திரத்திற் சொல்லப்பட்டதால் இவர் அதற்கு ஆக்கியோர் என விளங்கும்.
குறிப்பு
காசிச் செட்டியவர்கள் "அமிர்தசாகரர்" பற்றிக் கூறுமிடத்துக் குணசாகரரைக் குறிப்பிட்டுள்ளார். அமிதசாகரரின் ஆசிரியர் பெயர் குணசாகரர் என்பது யாப்பருங்கலத்தின் பாயிரம் மூலம் தெளிவா கும். கழுகுமலைக் கல்வெட்டுகளிற் குணசாகரபடாரர் என அறியப் பெறுபவரும் அமிதசாகரரின் ஆசிரியரும் ஒருவரோ என்பது தெளி வாகவில்லை. அமிதசாகரரின் ஆசிரியரிலும் காரிகை யுரையாசிரியர்
1. பாவலர் சரிந்திர தீபகம், பகுதி 1, 1975 பக். 74
unit - 8

Page 65
- 14 -
வேருவார். "அருந்தவத்துப் பெருந்தன்மை அமிர்தசாகரர் என்னும் ஆசிரியர்" எனக் காரிகையின் பாயிரவுரையில் வரும் பகுதி ஆசிரிய ரொருவர் தம் மாணவகரைப் புகழ்ந்து கூறும் பகுதி என்பது பொருந்துவதாய் இல்லை. காரிகையுரையாசிரியர் குணசாகரரை அமிதசாகரரின் மாணவகர் என்று கொள்வதற்கும் போதிய ஆதா ரங்கள் இல்லை; நூலாசிரியர் காலத்திலேயே காரிகையுரையும் தோன்றிய தென்பதற்கும் ஆதாரமில்லை. காரிகையுரையாசிரியர் குணசாகரரின் காலத்தைத் துணிவதற்குச் சான்றுகள் காணப்பெற வில்லை. குணசாகரர் யாப்பருங்கல விருத்தியுரைகாரர் அல்லர் என் பது முன்னர் கூறப்பட்டுள்ளது.
களத்தூர் வேதகிரி முதலியார் (1851), தில்லையம்பூர் சந்திர சேகர கவிராச பண்டிதர் (1853), உடுப்பிட்டி அ. சிவசம்புப்புலவர் (1893), கா. ர, கோவிந்தராச முதலியார் (1934), ந. மு. வேங் கடசாமி நாட்டார் (1940), மே. வி. வேணுகோபாலபிள்ளை (1968) முதலியோர் யாப்பருங்கலக் காரிகையைக் குணசாகரருரையுடன் பதிப்பித்துள்ளனர். யாப்பருங்கலத்தின் ஆசிரியர் அமிதசாகரர் என் பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது2.
Si6OOT 6J U6T lą-5 i. — Kunaveera Panditar.
இவர் சிங்களப் பேட்டைக்குச் சமீபமாயுள்ள கழுந்தையிற் பிறந்து ஆருக மதத்தவராய்ப் பெரும் புகழ் பெற்ற வித்வசனர் பெருமான். இவர் சீவித்த காலம் கி. பி. க9-ம் சதாப்தம். நேமி நாதம், வெண்பாப் பாட்டியல் என்னும் இரண்டு இலக்கணங்களுக்கு இவர் ஆக்கியோன் . இவ்விரண்டனுள் வெண்பாப் பாட்டியல் திருப் புவன தேவர் என்னும் இராசன் காலத்திலே வாக்கானந்தமுனி என்னும் மகாத்துமாவின் அருள் பெற்றுப் பாடியது. இதிலேநூறு செய்யுள்களுள. நேமிநாதம் தொண்ணுரற்ருறு செய்யுள் கொண்டது. நேமிநாதன் என்பது அருகனது அபிதானங்களுள் ஒன்ருதலின் அப் பெயர் இந்நூற்கு இடப்பட்டது. திருப்புவனதேவர் எனப்பட்டார் யாவர் என்று நிச்சயித்தல் கூடாதாயினும், ஓர்போது கிறிஸ்தாப்தம் ச,கooஆம் வருடத்தளவில் அனுமகுண்டத்தில் இருந்து அரசாண்ட திருப்புவனமல்லன் எனும் இராசராய் இருக்கலாம். நேமிநாதம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரு பிரிவினது. சொல் லதிகாரம் மொழியாக்கம், வேற்றுமை மரபு, உருபு மயங்கியல், விளி மரபு, பெயர் மரபு, வினை மரபு, இடைச்சொன் மரபு, உரிச்
1. பாவலர் சந்திர தீபகம், பகு 1, 1975, பக்.76-77 2. Q už 75 -

- 115 -
சொன் மரபு, எச்ச மரபு என்னும் ஒன்பது பாற்று. தொல்காப்பியக் கடலுக்கு இந்நூல் தெப்பம் எனுங் கருத்துப் பின்வரும் வெண்பாவில் விளங்கும். ܝ i
** தொல்காப் பியக்கடலிற் சொற்றீபச் சுற்றளக்கப்
பல்காற்கொண் டோடும் படகென்ப - பல்கோட்டுக் கோமிகா மற்புலனை வெல்லுங் குணவீரன் நேமிநா தத்தி னெறி.”* பாடல் மாதிரிக்கு இதிலுள்ள அவையடக்க வெண்பாவை இங்ங்ணம் தருவம்.
** உண்ண முடியாத வோதநீர் வான்வாய்ப்பட்
டெண்ண வமுதான தில்லையோ - மண்ணின் மேல் நல்லாரைச் சேர்தலா னன்சொன்ன புன்சொல்லும் எல்லாருங் கைக்கொள்வா ரீங்கு. *
®ി -------- * தமிழ் புளூராக்" நூலில் இடம்பெற்ற செங்கற்பட்டைச் சிங்களப்பேட்டை என்றும், களந்தையைக் கழுந்தை என்றும், திரி புவன தேவனைத் திருப்புவனதேவர் என்றும், வச்சணந்தி முனியை வாக்கானந்தமுனி என்றும், திரிபுவன மல்லனைத் திருப்புவன மல்லன் எனவும் சதாசிவம்பிள்ளை மொழிபெயர்த்துள்ளார்.
குணவீரபண்டிதரின் ஊர் களந்தை என்பது, வெண்பாப் பாட் டியலின் பாயிரவுரையாற் புலணுகும். ஆயினும் தமிழ்நாட்டிற் சில ஊர்கள் இப் பெயருடன் காணப்பெறுவதால் இவரூரைத் துணிதல் அரிதாகின்றது. இவரூர் தொண்டைமண்டலத்திற் காஞ்சிபுரத்திற்குத் தென்கிழக்கில் முப்பது மைல் தூரத்திலுள்ளதும் செங்கற்பட்டு ஜில்லா வில் இடம்பெறுவதுமான பொன்விளைந்த களத்தூர் அல்லது பொற்களந்தை என்பதே காசிச்செட்டியவர்கள் முதலானேர் கருத் தாகும். தொண்டைமண்டல சதகமும் * சின்னுரல் உரைத்த குணவீர பண்டிதர் சேர்பதி தொண்டை மண்டலம் '2 என்று கூறுகின்றது. ஆயினும் தொண்டைநாட்டுக் களந்தையிற் சைனசமயச் செல்வாக் கின் அறிகுறிகள் இன்மையால் அவ்வூரைக் குணவீரபண்டிதர் ஊராகக் கருதச் சிலர் தயங்குவர். கொங்குநாட்டுக் களந்தை சைனத்தலமாகக் கருதப்படுவதோடு அச்சமயச் சான்றுகள் கிடைக் கப்பெறும் இடமாயும் அமைகின்றது, களப்பாள் எனும் சோனட்டு ஊரொன்றும் களந்தை என மருவி வழங்கும். 1, ST- பா. படவென்ப 2. Gü. 82

Page 66
- 116 -
க்ளந்தை வச்சணத்தி முனிவர் குணவீரபண்டிதரின் குரு என்பது நேமிநாதத்தின் பாயிரவுரையாற் புலணுகும். வெண்பாப் பாட்டிய லின் அவையடக்கம் * தென்களந்தை மன் பெயரான் வன்புகழான் ?? என வச்சணந்தி முனிவரைப் போற்றும். இம் முனிவர் பெயரால் வழங்குவதே வச்சணந்திமாலை எனப்படும் வெண்பாப் பாட்டியல்
வெண்பாப் பாட்டியலின் உரைப்பாயிரம் அந்நூல் திரிபுவன தேவன் காலத்தில் இயற்றப்பட்டது என்று கூறுகின்றது. காசிச் செட்டியவர்கள் திரிபுவன தேவனையும் திரிபுவன மல்லனையும் ஒருவ ராகக் கருதிக் காலவரையறை செய்ய முற்பட்டார். அவர் கருத்துப் பொருத்தமாகத் தெரியவில்லை. ரா. ராகவையங்கார் மூன்ரும் குலோத்துங்க சோழனே (1178 - 1218) திரிபுவனதேவன் என்று கருதினர். மூன்ரும் குலோத்துங்க சோழனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று திரிபுவன வீரதேவன் என்பதாகும். திரிபுவன தேவனும் திரிபுவனவீரதேவனும் ஒருவரையே சுட்டும் பெயர் என்று கருத முடியுமா என்பது சிந்திக்கத்தக்கது. மேலும் திரிபுவனதேவன் எனும் பெயர், வேறு தமிழ் மன்னருக்கு, மூன்ரும் குலோத்துங்க சோழ னுக்கு முன்னர், சிறப்புப் பெயராக வழங்கவில்லையா என்பதுவும் கவனிக்கத்தக்கது. திரிபுவனதேவன் மூன்ரும் குலோத்துங்கனுக்கு மட்டும் உரிய சிறப்புப்பெயர் அன்று என நிறுவ முயன்ற க. ப. அறவாணன் அம் முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதாகக் கூறுவதற் கில்லை. முதற் பராந்தகனுக்குத் திரிபுவனதேவன் எனும் சிறப்புப் பெயர் இருந்ததென்பவர் அதனை வலியுறுத்தும் சாசன ஆதார மெதனையும் தரவில்லை ; முதலாம் இராசராசனுக்கே அச் சிறப்புப் பெயர் பொருந்துமென்று கூறியவர் அவ்வாறு வழங்கியமைக்குச் சான் றெதுவும் தரவில்லை; திரிபுவன மாதேவி, திரிபுவனதேவி என்ற பெயர் கள் மனைவியருக்கு வழங்கியதாற் கணவன்மாருக்குத் திரிபுவனதேவன் எனும் பெயர் வழங்கியதென்று ஆதாரமின்றித் துணியலாகுமா ?
முதலாம் இராசராசன் காலத்தவர் குணவீரபண்டிதர் என்ற கூற்றுப் பொருத்தமாகத் தெரியவில்லை?. வெண்பாப் பாட்டியலின் உரைப்பாயிரத்திற் கேட்டோராகக் குறிக்கப்படும் திருமலைப் பண்டிதர் என்னும் முனிவர் இன்னர் என்பது தெரியாத நிலையில், திருமலை புகழ் பெற்றிருந்த காலத்திலேயே அங்கு அரங்கேற்றம் நிகழ்ந்தது எனக் கருதி, அக்காலத்தை முதற் பராந்தகனுக்கும் முதல் இராசேந் திரனுக்கும் இடைப்பட்டதாக மதித்து, முதலாம் இராசராசன் சிற்பம் காணப்படுவதால் அவன் காலத்தவர் குணவீரபண்டிதர் என்று துணிந்துள்ளார் அறவாணன். திருமலையில் அருண்மொழியின்
சைனரின் தமிழிலக்கண நன்கொடை, 1974, பக்.27 - 278, 281-282 2. க. ப. அறவாணன் சைனரின் தமிழிலக்கண நன்கொடை, பக். 278-283

--محہ. 117 ستم۔۔۔
காலத்தில் வாழ்ந்த குணவீரமாமுனிவர் வெண்பாப் பாட்டியலின் ஆசிரியர்தான் என்பதற்குப் பெயரொற்றுமை மட்டுமே காரணமாக அமைகின்றது. பண்டித சோழன் எனும் சிறப்புப்பெயர் வேறு சோழ மன்னருக்கும் வழங்கியதாகத் தெரிகின்றது. மேலும் பண்டித வெற்சலன், இராசபண்டிதன் எனும் பெயர்கள் வழங்கப்பெற்ற மன்னர் களும் உளர் என்பதும் கவனிக்கத்தக்கது?. மெய்க்கீர்த்தி இலக்கணம் கூறியவர் இராசராசன் காலத்திற்குப் பின்னரும் வாழ்ந்திருக்கலா மன்ருே ?8 வெண்பாப் பாட்டியல் தரும் பரணி இலக்கணம் முழுமை பெற்றதன்று என்று கூறவோ அல்லது முமுமைபெற்றதாக அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ பொருத்தமாகத் தெரியவில்லை4. எனவே குணவீரபண்டிதர் காலம் மூன்ரும் குலோத்துங்கசோழன் ஆட்சிக்காலம் என்ற கருத்து மறுக்கப்பட்டதாகக் கூறுவதற்கில்லை.
ஒட்டக்கூத்தர் இரண்டாம் குலோத்துங்கசோழன் (1133-1150) மீது பாடிய பிள்ளைத்தமிழே இன்று கிடைக்கும் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களிற் காலத்தால் முற்பட்டதாகும். வெண்பாப்பாட்டியல் தரும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்தை நோக்கின் குணவீரபண்டிதர் காலம் முதலாம் இராசராசன் காலமன்று என்பது தெளிவாகும்.
* ஒட்டக்கூத்தர் உலாப் பாடியபோது பேராசிரியர் நேமிநாதர் பட்டோலை பிடிக்கப் பாடியது" என்ற குறிப்புடன் செய்யுளொன்று தமிழ் நாவலர் சரிதையில் இடம் பெறுகின்றது5. பேராசிரியர் நேமி நாதர் என்பவர் குணவீரபண்டிதர் என்றும், நேமிநாதம் பாடியதால் அவருக்கு இப்பெயர் வந்ததென்றும் ரா. ராகவையங்கார் கருதினர். அவர் கருத்தை ஆதரிப்பதற்கான சான்றுகள் எதுவுமில்2ல.
நேமிநாதத்தில், நூலுக்குப் புறம்பான சிறப்புப் பாயிரத்தில் இரு வெண்பாக்களும், நூலில் அருக வணக்கம், அவையடக்கம் கூறும் இரு வெண்பாக்களுடைய பாயிரமும் அதனைத் தொடர்ந்து 24 வெண்பாவுடையதும் உட்பிரிவற்றதுமான எழுத்ததிகாரமும் அதனைத் தொடர்ந்து தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தை ஒட்டிய ஒன்பது பிரிவுகளும் பெயர்களும் இடம்பெறும் சொல்லதி காரத்தில் அருக வணக்கம் கூறும் வெண்பாவை அடுத்து எழுபது வெண்பாக்களும் காணப்பெறுவன. வெண்பாப் பாட்டியலின் பாயிரவுரையிற் ' பண்பார் கவிஞர்" எனும் வெண்பா வொன்று அதன் சிறப்புப்பாயிரமாகத் தரப்பட்டுள்ளது. அருகவணக்கம் கூறும்
1 க. ப. அறவாணன் : சைனரின் தமிழிலக்கண நன்கொடை, 1974, பக்.280-281 2. O uš. 278, 281 - 282
3. Ο υε. 282 - 283
4. Mų, tuä. 283
5, Qij. 129

Page 67
س- 118 ستار
வெண்பாவினையுடைய பாயிரத்தைத் தொடர்ந்து, இருபத்தொரு வெண்பாக்களையுடைய முன்மொழியியல், நாற்பத்தெட்டு வெண் பாக்களையுடைய செய்யுளியல், முப்பது வெண்பாக்களையுடைய பொதுவியல் எனும் பிரிவுகளுடன் அவையடக்கம் கூறும் வெண்பாவும் வெண்பாப் பாட்டியலில் இடம்பெறுகின்றன.
சைனரின் இருபத்து நான்கு தீர்த்தங்கரருள் இருபத்திரண்டாம் தீர்த்தங்கரர் நேமிநாதர், நேமிநாதத்தின் உரைப்பாயிரம் சென்னை யைச் சார்ந்த மயிலாப்பூரிற் கோயில்கொண்ட நேமிநாதர் பேரால் நேமிநாதம் இயற்றப்பெற்றது என்று கூறுகின்றது. இலக்கணச் சுருக்கமான நேமிநாதத்திற்குச் சின்னுரல் என்ற பெயருமுண்டு. குணவீர பண்டிதர் தம் குரு வச்சணந்தி முனிவர் பேரால் இயற்றிய வச்சணந்திமாலைக்கு வெண்பாப் பாட்டியல் என்ற பெயருமுண்டு.
இந்திரகாளி எனும் பாட்டியல் வெண்பாப் பாட்டியலுக்கு முதனூல் என்று அந்நூற் பாயிரவுரை கூறும். வெண்பாப் பாட்டியலுரை இந்திரகாளியிலிருந்து சில மேற்கோள்களை எடுத் தாளுகின்றது?. இவற்றிற் சில இந்திரகாளியார் சூத்திரங்களாக உண்டி பற்றிக் கூறுமிடத்துப் பன்னிரு பாட்டியலில் மேற்கோளாக எடுத்தாளப்பெற்றுள்ளன. இந்திரகாளியார், இந்திரகாளியனர் இந்திரகாளியம் எனும் ஆட்சிகள் நவநீதப் பாட்டியலின் பழைய வுரையிலே காணப்படுகின்றன8. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைச் சிறப்புப்பாயிரத்திற் குறிப்பிடும் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியம் இசைத்தமிழ் நூலாகும்.
நேமிநாதத்திற்கும் வச்சணந்திமாலைக்கும் பழையவுரைகளுள. தக்கயாகப்பரணியின் 16ஆம் தாழிசையின் பழையவுரையில் வயிர மேக விருத்தி என்று சுட்டப்படுவது நேமிநாதவிருத்தியாதல் வேண் டும் எனவும் அவ்வுரையின் ஆசிரியர் பெயர் வயிரமேகன் ஆதல் வேண்டும் எனவும் மு. இராகவையங்கார் கருதுவர் 4. பதினுன்காம் நூற்ருண்டினரான அவிரோதியாழ்வார் பாடிய திருநூற்றந்தாதியின் 31ஆம் செய்யுளாம் முத்தனென்கோ " எனும் பாடலை எடுத் தாளும் நேமிநாதவுரை அந் நூற்ருண்டிற்கு முன்னர் எழுந்த தெனல் சாலாது. வச்சணந்திமாலையின் பழையவுரையிற் குறிப்பிடப் படும் கூர்மபுராணம் அதிவீரராம பாண்டியன் இயற்றியதாயின்
1. தொண்டைமண்டல சதகம், செய், 32; பதிற் 76 பழையவுரை 2. முதன்மொழியியல் 8. 17 3, நவநீதப் பட்டியல், அடையாறு, டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலைய வெளியீடு,
1944 பக். 8, 83, 20, 21 4. ஆராய்ச்சித் தொகுதி, 1964, பக், 459 - 461 5. இடைச்சொல் மரபு, 5 உரை செய்யுளியல், 45 உரை

سس. l19 :-------
அவ்வுரையாசிரியர் காலம் பதினரும் நூற்ருண்டின் பிற்பகுதிக்கு முற்பட்டதாகாது.
நேமிநாதத்தின் பழைய பதிப்புகள் பற்றிய விபரம் கிடைக்க வில்லை. ரா. ராகவையங்கார் பரிசோதித்த மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடு 1903ஆம், 1923ஆம் ஆண்டுகளிலே இருமுறை வெளி வந்தது. கா. ர. கோவிந்தராச முதலியார் பழையவுரைக்கு எழுதிய குறிப்புரைகளுடன் கூடிய திருநெல்வேலி தென்னிந்திய சைவசித் தாந்த நூற் பதிப்புக் கழக வெளியீடு 1945, 1956, 1964ஆம் ஆண்டுகளில் வெளிவந்தது. வச்சணந்தி மாலையும் வரையறுத்த பாட்டியலும் தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதராற் சென்னை வாணிநிகேதன அச்சுக் கூடத்திலே துந்துபி டு ஆவணி மீ" 1862) அச்சிடப்பெற்றன. சுன்னகம் அ. குமாரசுவாமிப்புலவர் யாப்பருங்கலத்தையும் வெண்பாப் பாட்டியலையும் பொழிப்புரை யுடன் யாழ்ப்பாணம் வித்தியாநுபாலன யந்திரசாலையிற் சார்வரி டு) ஆனி மீ" (1900) பதிப்பித்தனர். 1908ஆம் ஆண்டில் வெளி வந்த சென்னகேசவலு நாயுடுவின் பாட்டியற் கொத்துப் பதிப்பில், வெண்பாப் பாட்டியல், வரையறுத்த பாட்டியல், சிதம்பரப் பாட் டியலின் பொருத்தவியலும் மரபியலும், நவநீதப் பாட்டியலின் பகுதி என்பன இடம்பெற்றன. சென்னை கொ. இராமலிங்கத் . தம்பிரான் விளக்கவுரையுடன் கூடிய வெண்பாப் பாட்டியல் பழைய வுரையும் வரையறுத்த பாட்டியலும் 1936ஆம் ஆண்டில் வெளி வந்தன; 1964ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பாக மீண்டும் வெளி வந்தன.
(u5LDJ(5(5u J 5bli jTsö7. - Kumaraguruparathampiran.
இவர் இற்றைக்கு இருநூறு வருடங்களின் முன்னே, திருநெல் வேலியிலே, தாமிரபருணி நதியின் வளத்தாற் சிறப்புற்ற பூரீவைகுந்தம் என்னும் பதியிலே, வேளாளர் மரபிலே பிறந்தவர். ஐந்து வயது வரையில் ஊமையராய் இருந்து திருச்செந்தூர்க் கோயிலுக்குக் கொண்டு போகப்பட்டதனுல் வாய்திறந்து பேசினர் என்று சொல் வார். சிறுவயதிற்ருனே திருச்செந்தூர்க் கந்தசுவாமி பேரிற் குமார கலிவெண்பா எனப் பெயரிய ஒர் பாடல் செய்து கல்வியிற் தேர்ச்சி பெற்ற இம் மகான் பிரமசாரி விரதம் அனுட்டித்துச் சந்நியாச மடவாசராய் இருந்தார். திருச்செந்தூரில் இருக்கும்போதே மதுரை மீனுட்சி அம்பாள் பேரிற் பிள்ளைத்தமிழ் பாடி அப்புறந் திருப்பரங் குன்றஞ் சென்று வசித்தார். இவர் மீனுட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடி வைத்திருக்கின்ருர் என்ற வார்த்தை மதுரையை அரசாண்ட

Page 68
سسس 120 -س--
திருமலை நாயக்கன் காதில் விழ, அவன் அப்பாடலையும் இவரையும் மரியாதையாய் அழைத்து மதுரைக்குக் கொண்டுபோய் அங்கே அப் பாடலை அாங்கேற்றினன். மறுபடி இவர் அவ்வூர் விட்டுப் பல விடங்களுக்கும் யாத்திரை செய்து தமது கல்வித் திறமைகளைச் சென்ற வழியெல்லாங் காட்டிப் பரிசுபெற்றுத் தருமபுர ஆதீனத் திலே மாசிலாமணி ஞானசம்பந்தத் தம்பிரானைச் சந்தித்து அவருடன் அளவளாய்ச் சம்பாஷித்துப், பெரியபுராணத்திலே அவர் விஞவிய ஒரு செய்யுளுக்கு உரைகூற மாட்டாமல் மயங்கி, அவரைத் தமது ஞானசிரியராய்க் கொண்டு, மேலும் பலகலை வல்லவராகி அவர் மேற் பண்டார மும்மணிக்கோவை என்னும் பிரபந்தத்தைப் பாடினர். சிலகாலஞ் சென்றபின்னர் தில்லிப் பாஷாவைக் கண்டு அவனிடம் , உத்தரவு பெற்றுக் காசிப்பட்டணஞ் சென்று அங்கே ஒரு மடாலயம் கட்டித் தாம் அதுவரையுந் தேடி வைத்திருந்த திரவியங்களை அன்ன தானத்திற் செலவிட்டு யெளவன திசையிற்ருனே நிரியாணமாயினர்.
மேலே விளம்பிய பாடல்களன்றி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், சிதம்பரச் செய்யுட் கோவை, சிதம்பர மும்ம்னிக் கோவை, நீதிநெறி விளக்கம், காசிக்கலம்பகம் ஆதிய பத்துப் பன்னிரண்டு பாடல்கள் பாடினர். இவர் செய்த நூல்களுள், நீதிநெறி விளக்கம் விசேஷம் பெற்றது. நூற்றிரண்டு வெண்பாக்களுள்ள இப்பாடலைச் சென்னை அரசாட்சியைச் சார்ந்த ஸ்தோக்ஸ் (Mr. Stokes) துரை இங்கிலீஷிலே மொழிபெயர்த்துப் பல குறிப்புரைகளோடு பிரசுரித் தனர். அம்பலவாணக் கவிராயர், முத்துக்குமாரசுவாமிக் கவிராயர் முதலிய பலர் அம்மொழிபெயர்ப்புக்கு உபயோகிகளாய் இருந்தார்கள். இந் நீதிநெறி விளக்கத்திற்கு யாழ்ப்பாணம் ம, ன, எ. சி. வை. தாமோதரம்பிள்ளை, வீ. ஏ. வீ. எல்., காஞ்சிபுரம் சபாபதி முதலியார் என்பவர்கள் உரை இயற்றி அச்சிடுவித்திருக்கிருர்கள். பூரீமத் இராசகோபாலபிள்ளை என்பவரும் இதில் ஐம்பது செய்யுள் களுக்கு விரிவான இலக்கண விளக்க உரை எழுதிப் பாடசாலை மாணுக்கருக்கு உபயோகப்படுத்தற் பொருட்டு அச்சிடுவித்தார். ா. ரா. முத்தையாபிள்ளை என்பவரும் இலக்கணம் விரித்து எழுதிஞர். திருமலைநாயக்கனது தாட்சணியம் பெற்றே இந்நூலை இவர் பாடினர் என்ப. இவர் செய்த நூற்ருெகை, ** கலிவெண்பா முதற் கருதிய பன்மூன்-ருெலிபெறு பிரபந்த முரைத்தனன் பின்னர் " என்ருர் சொற்படி சக ஆயினும், சிலர் பதினன்குக்குக் கணக்குச் சொற்றனர்.
குமரகுருபரதேசிகர் என்னு நாமத்தாலும் அழைக்கப்படும் இந்த ஆசிரியர் தமிழிலன்றிச் சம்ஸ்கிருதத்திலும் லல்லவர். பதி சாஸ்திரத்திலும் மாசறக் கற்ற நிபுணர். இவரது பாடல் மாதிரிக் காய் மீனுட்சியம்மை பிள்ளைத்தமிழிற் கண்ட திருமால் துதியை இங்ங்ணம் வரைவம்.

---- {l2 س
** மணிகொண்ட நெடுநேமி வலயஞ் சுமந்தாற்று மாசுணச் சூட்டுமோட்டு மால்களிறு பிடர்வைத்த வளரொளி விமானத்து
வாலுளை மடங்களுக்கும் அணிகொண்ட பீடிகையி னம்பொன்முடி முடிவைத்தெ
மையனெடு வீற்றிருந்த அங்கயற் கண்ணமுதை மங்கையர்க் கரசியையெ
மம்மனையை யினிதுகாக்க கணிகொண்ட தண்டுழாய்க் காடலைத் தோடுதேங்
கலுழிபாய்ந் தளறுசெய்யக் கழனிபடு நடவையிற் கமலத் தணங்கரசொர்
கையணை முகந்துசெல்லப் பணிகொண்ட முடவுப் பணிப்பாய்ச் சுருட்டுப்
பணத்தோ ளெருத்தலைப்பப் பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே.' *ܢ
குறிப்பு
பூரீவைகுந்தத்திற் சைவர் கைலாசபுரம் என வழங்கும் பகுதியிற் சண்முகசிகாமணிக் கவிராயருக்கும் சிவகாமசுந்தரியம்மையாருக்கும் புதல்வராகக் குமரகுருபரர் அவதரித்தனர். கமலை ஞானப்பிரசு"* ரின் காலம் கி. பி. பதினரும் நூற்ருண்டின் பிற்பகுதி என்பதற் குச் சான்றுகளுள. இவருடைய சீடர் குருஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் எனப்படும் பூரீ வில்லிபுத்தூர் திருஞானசம்பந்த தேசிகர் அவர்களே தருமபுர வாதீனத்தை நிறுவியவராவர். எனவே தரும புரவாதீனம் கி. பி. பதினரும் நூற்றண்டின் பிற்பகுதியிலே நிறுவப் பெற்றதாதல் வேண்டும். குருஞானசம்பந்தரைத் தொடர்ந்து ஆனந்தபரவச தேசிகரும் சச்சிதானந்த தேசிகரும் பட்டத்திலிருந் தனர். இவர்களைத் தொடர்ந்து நான்காம் தலைவராகத் தருமபுர வாதீனத்தின் ஞான பீடத்தில் வீற்றிருந்த மாசிலாமணி தேசிகர் அவர்களே குமரகுருபரரின் ஞானசிரியராவர். எனவே குமரகுரு பரர் காலம் பதினேழாம் நூற்றண்டாதல் சாலும். பெரிய புராணத் தின் தடுத்தாட்கொண்ட புர்ாணத்தில் இடம்பெறும் " ஐந்துபே ரறிவும்" எனும் பாடலே குமரகுருபரர் உரை கூறமாட்டாமல் மயங்கிய பாடல் என்பர். காசியிலே குமரகுருபரர் நிறுவிய குமார சாமி மடத்திலே அவரைத் தொடர்ந்து நால்வர் பூரீகாசிவாசி
1. பி. பே. படப்பாய்ச்

Page 69
- 122 -
தில்லைநாயக சுவாமிகளுக்கு (-1756) முன்னர் தலைவர்களாக விளங் கினர். தில்லைநாயக சுவாமிகள் 1720ஆம் ஆண்டிலே திருப்பனந் தாளிலே காசி மடத்தை நிறுவியதைத் தொடர்ந்து, திருட் பனந் தாள் தலைமைப்பீடமாகவும் குமாரசாமி மடம் கிளையாகவும் வழங் கத் தலைப்பட்டன. ஆதி குமரகுருபரசுவாமிகளைத் தொடர்ந்து ஆரும் பட்டத்திலிருந்த தில்லைநாயக சுவாமிகள் பதினெட்டாம் நூற்றண்டின் முற்பகுதியிலே வாழ்ந்தவராதலாற் குமரகுருபரர் பதினேழாம் நூற்ருண்டில் வாழ்ந்தவர் என்பது பொருத்தமாகலாம். மதுரை மீனுட்சியம்மை குறத்தின் ஆசிரியர் குமரகுருபரர் எனும் கருத்துப் பொருத்தமாயின் அக்குறத்தின் வாழிப் பாடலிற் போற் றப்படும் ** திருமலை பூபதி ' ஆகிய திருமலை நாயக்கர் , 1623-1859) காலத்தவர் குமரகுருபரர் என்பது தெளிவாகும்.
சதாசிவம்பிள்ளை குமரகுருபரர் நூல்கள் பதின்மூன்று என்று வரையறுக்கும் மேற்கோளை எடுத்தாண்ட போதும் சிலர் பதினன்கு என்பர் எனவும் உரைத்தார். அவ்வாறு உரைத்தவர்களில் ஒருவர் "தமிழ் புளூராக்” ஆசிரியராவர். ஆயினும் இன்று பதினறு நூல்கள் குமரகுருபரர் பேரால் வழங்கப்பெறுகின்றன. சதாசிவம்பிள்ளை குமார கலிவெண்பா எனச் சுட்டும் நூல் கந்தர் கலிவெண்பாவாகும் இவர் எடுத்தாண்ட எட்டுப்பிரபந்தங்களுடன் மதுரைக் கலம்பகம், கைலைக் கலம்பகம், திருவாரூர் நான்மணிமாலை, சகலகலாவல்லி மாலை, காசித் துண்டி விநாயகர் பதிகம், மதுரை மீனுட்சியம்மை இரட்டைமணி மாலை, மதுரை மீனுட்சியம்மை குறம், தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணி மாலை ஆகியனவும் குமரகுருபரர் பேரால் வழங்கப்படுகின்றன. இவற்றிலே ஈற்றில் இடம்பெறும் மூன்று பிரபந்தங்களும் குமரகுருபரர் இயற்றியவையல்ல எனும் கருத்துச் சிலரிடையே நிலவுகின்றது. கைலைக் கலம்பகத்திற் சில பாடல்கள் கிடைக்கின்றன. காசித் துண்டி விநாயகர் பதிகம் கிடைக்கவில்லை என்பர் உ. வே. சாமிநாதையர்: அச்சிடப்பட்டுள்ளது என்பர் ச. சோமசுந்தரதேசிகர் 2.
குமரகுருபரரின் நூல்கள் தனித்தனியே பலரால் முன்னர் வெளியிடப்பெற்றபோதும் பொம்மபுரம் சிவஞானபாலைய தேசிகர் ஆதீனத்துச் சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகளாலேயே (-1906) அவை முதன் முதலாகத் தொகுக்கப்பட்டு ஒரே பதிப்பாக வெளியிடப்பெற்றன. அவர் விரோதி ஞu) (1889) குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டினை வெளியிட்டனர், இராமலிங்க
1. Ugi குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத்திாட்டு உ. வே. சாமிநாதையர் பதிப்பு, திருப்பனந்தாள் காசி
மடத்து வெளியீடு, மூன்ரும் பதிப்பு, 195, முகவுரை காண்க.
2. டிெ முகவுரை காண்க : தமிழ்ப் புலவர்கள் வரலாறு, பதினேழாம் நூற்றண்டு, 1^*1, பக். 44.

- 123 -
சுவாமிகளைத் தொடர்ந்து பலர் குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டினைப் பதிப்பித்துள்ளனர். திருப்பனந்தாள் காசிமடத் தலைவ ருடைய வேண்டுகோளின்படி உ. வே. சாமிநாதையர் 1939ஆம் ஆண்டிற் குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டைக் குறிப் புரையுடன் பதிப்பித்தார்; அப் பதிப்பு 1947, 1952ஆம் ஆண்டுக ளில் மீண்டும் வெளிவந்தது. ஆறுமுகநாவலர் குமரகுருபரர் நூல் களுள் ஒன்றன சிதம்பர மும்மணிக்கோவையைச் சென்னை கலாரத் நாகரம் அச்சுக்கூடத்திற் பிரபவளு) ஆனி மீ" (1867) பதிப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -
கந்தர் கலிவெண்பாவிற்கு மா. வடிவேலு முதலியார் (1927), கா. சுப்பிரமணியபிள்ளை, வட்டுக்கோட்டை பண்டிதர் நா. ஏகாம் பரம் (1955), தி. பட்டுச்சாமி ஒதுவார் முதலியோர் உரைகண்ட னர். மீனுட்சியம்மை பிள்ளைத்தமிழுக்குப் புரசை அட்டாவதானம் இ. சபாபதி முதலியார் உரை கண்டனர். முத்துக்குமாரசுவாமிபிள்ளைத் தமிழுக்குப் புலவர் சு. அரங்கசாமி (1970) உரை அளித்துள்ளார். மதுரைக் கலம்பகத்திற்கும் காசிக் கலம்பகத்திற்கும் வை, மு. சடகோபராமாநுஜாசாரியர் உரைகண்டுள்ளார். திருவாரூர் நான் மணிமாலைக்குத் தி. பட்டுச்சாமி ஒதுவார் (1962) உரையுண்டு. பண்டார மும்மணிக் கோவைக்குத் தருமபுரம் சட்டைநாதத் தம்பி ராணின் குறிப்புரை 1937) உண்டு. நீதிநெறி விளக்கத்திற்கு ஸ்தோக்ஸ் (H. Stokes) செய்த மொழிபெயர்ப்பு 1830ஆம் ஆண்டில் G66flaßgg: »-66ört fll - Luft Giflunrff (Rev. S. Winfred), T. B. கிருஷ்ணசாமி முதலியார் செய்த மொழி பெயர்ப்புகள் முறையே 1914, 1937ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன. நீதிநெறி விளக்கத் திற்குக் காஞ்சிபுரம் சபாபதி முதலியார் இயற்றிய உரை 1835ஆம் ஆண்டிலும் சி. வை. தாமோதரம்பிள்ளை கண்ட உரை 1854ஆம் ஆண்டிலும் சி. முத்தையபிள்ளை அளித்த உரை 1864ஆம் ஆண்டி லும் வெளிவந்தன. கோமளபுரம் இராசகோபாலபிள்ளை அவர் களின் உரைப்பதிப்பு விபரங்கள் கிடைக்கவில்லை. ஏ. எஸ். ஜெகராவ் முதலியாரும் (1895) வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரும் நீதிநெறி விளக்கத்தின் பகுதிக்கு உரைகண்டுள்ளனர். நீதிநெறி விளக்கத்திற்குச் சோடசாவதானம் வீ. சுப்பராய செட்டியார் (1869) திருமயிலை முருகேச முதலியார் (1886), சுன்னுகம் அ. குமார சுவாமிப் புலவர் (1902), இளவழகனர் (1939), காழி சிவ. கண்ணு சாமிபிள்ளை (1943) முதலியோரும் உரை இயற்றியுள்ளனர்.
குமரகுருபரசுவாமிகளின் மாணக்கரில் வெள்ளியம்பலவாணத் தம்பிரான் குறிப்பிடத்தக்கவர் கருணைப்பிரகாச தேசிகர் குறிப்புக்
காண்க.
1. (y). KR), jiisi : plejuifluis ir, 1968, ui. 458

Page 70
- 124 -
(subJeg5(5us (3g55si.- Kumaragurupara Desigar.
இவர் பின்னர்க் கூறப்படும் பரிமேலழகர் என்பாரது பதினைந்தாந் தலைமுறையான சான்ருரக் குருக்கள். ஆத்மராமாயணம், ஞானக் குறவஞ்சி என்னும் இரண்டு நூல்களை இவர் பாடினர்.
குறிப்பு
இவர் காலம் பதினெட்டாம் நூற்ருண்டின் முற்பகுதியெனக் கா. சுப்பிரமணியபிள்ளை கூறுவதற்கு ஆதாரம் யாதென அறியுமா றில்லை. பரிமேலழகர் குறிப்புக் காண்க. "தமிழ் புளூராக்" நூலில் இவர் இடம்பெறவில்லை
(E5LDT JG56-os iš 35(yp S56úMuun ữ.--Kumarakulasinka Mudeliar.
இவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலே வேளாளர் மரபிலே *அ2சு ஆம் டு புரட்டாதி மீ" பிறந்தவர். அமரிக்கமிஷன் பகுதியிலே உபதேசியாய் இருந்து காலஞ்சென்ற (ா. iா. சோடன் என்பவர் இவர்க்குத் தந்தை. இவர் வட்டுக்கோட்டைச் சாஸ்திரசாலையிலே கல்வி கற்று அரசாட்சியைச் சேர்ந்த எஞ்சினீர் பகுதியிலே நில அளவைச் சாஸ்திரந் தேர்ந்து, கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அதற்கேற்ற உத்தியோகத்தில் அமர்ந்து, மறுபடி மல்லாகம், யாழ்ப் பாணக் கோடுகளிற் சக்கிறுத்தேரியுந் துவிபாஷிகருமாய் இருந்தவர். சபா மத்தியில் நின்று அஞ்சாது பிரவசனஞ் செய்யும் வாசால சிங்க மாகிய இவரது நெடுங்கால உத்தியோகச் சேவையால் அரசாட்சி யார் இவர்க்குக் குமாரகுலசிங்கமுதலியார் என்னும் பட்டஞ் சூட்டி ஞர்கள். ஜெ. டபிள்யு. பார் (J. W. Baாா), அப்புக்குட்டி என்னும் நாமங்கள் சாஸ்திரசாலையாரும் பெற்ருரும் இட்டவைகள். கீர்த் தனங்கள், பதங்கள், தனிப்பாக்களாகிய பாடிப் புலவர் எனும் பேர் பெற்றவர். இவர் பாடிய பதிவிரதை விலாசம் இவரது வித்துவ சமார்த்தியத்தைத் தெளிவாய் விளக்கும். சங்கீத வித்தையும் நன்கு அறிந்த இவரது பாடல் மாதிரிக்கு அவ்விலாசத்தில் வித்து வாம்சர் தோற்ற விருத்தத்தைத் தருகின்ருேம், ** திவ்வியமெய்ஞ் ஞான மோங்கச் செறியுமஞ் ஞான நீங்க
அவ்விய மிலா மனத்த ஞகிய வித்து வாம்சன்
நவ்விநேர் விழியாள் பாரி நற்றவப் புதல்வன் கூடக்
செவ்விய சபையின் மீது சிறப்புடன் வருகின் ருனே."
1. இலக்கியவரலாறு, 1958 பக், 419

-- l25 -دس۔
சிலகால நோயாற் பிறகிட்ட சஅஅநஆம் டு ஆவணி மீ கசஆம் தேதி தேகவியோகமாயினர். சமயாசாரத்தாற் கிறிஸ்தவராகிய இவரது புத்திரரொருவர் மட்டக்களப்பிலே துவிபாஷிக உத்தியோ கத்தில் அமர்ந்திருக்கின்றர். இவரது குடும்பத்தாரும் சுற்றமித்திரரும் உடுவில், தெல்லிப்பழை ஆகிய இடங்களில் இருக்கின்ருர்கள்.
குறிப்பு
" தமிழ் புளூராக்" வெளிவந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருந் தவர் குமாரகுலசிங்கம். சோடன் சுப்பிரமணியத்தின் புதல்வராம் குமாரகுலசிங்கத்தின் மக்கள் இராசவாசல் முதலியார் கனகநாயகம் சாள்ஸ் பார் குமாரகுலசிங்கம், வலிகாமம் வடக்கு மணியகாரர் இராசநாய4 ம் றிசட் பார் குமாரகுலசிங்கம், சிங்கநாயகம் சாமுவேல்" பார் குமாரகுலசிங்கம், அரியநாயகம் பார் குமாரகுலசிங்கம், செல்வ நாயகம் பார் குமாரகுலசிங்கம், த. ஐசக் தம்பையாவின் பாரியார் மங்களநாயகம் முதலியோராவர். பதிவிரதை விலாசம் 1909ஆம் ஆண்டில் இராசநாயகம் றிசட் பார் குமாரகுலசிங்கத்தாற் பதிப்பிக்கப் பெற்றது.
SLIDT 3 SF išl36 (yPF56êului. — Kumarasinga Mudeliar.
இவர் மன்னர்ப் பகுதியைச் சேர்ந்த மாதோட்டத்திலே உள்ள நாவற்குளத்திலே பாக்கிய சலாக்கியம் பெற்ற வேளாளர் குலத்திலே பிறந்தவர். சமயாசாரத்தாற் கதலிக் கிறிஸ்தவரான இவர், பேர் பெற்ற புலவரும் மிகுந்ந அனுபவசாலியான ஆயுள் வேதியருமாய் இருந்தார். இதனுற் சனங்களுக்குள்ளே இவர்க்கு மிகச் செல்வாக் கிருந்தது. இவ்வாறு இருக்கு நாட்களிலே க.அ00ஆம் டு இலங்கா தீபத்தை அரசாட்சி செய்த நோர்து தேசாதிபதி (Governor North) பூணுரக் குத்தகை என்னும் அநியாய வரி ஒன்றைச் சனங்கள் மேல் ஏற்ற, அதனல் மாதோட்டப் பிரசைகள் அரசாட்சியாருக்கு விரோத மாய்க் கலிபிலி ஒன்றை ஆரம்பித்தார்கள். ஆகவே, தலையின்றி வாலாடுமா, இவரின்றிக் கலகம் நிகழுமா, என அரசாட்சியார் நினைந்து இவர்பேரிற் பிராது தொடங்கினர். நீதிவிசாரணையில் இவர் அபராதியென விளங்கியதால் அரசாட்சியார் இவரைப் பிடித்துக் கசையடியடிப்பிக்க, இவர் உள்ளம் சுரந்து தேவமாதா பேரிலே ஆசு கவியாய் அநேக பாடல்கள் பாடினர். இவர் பாடிய கீர்த்தனங்கள் பல இந்நாட்களிலும் மாதோட்டத்திற் கொண்டாடப்படும் பூசை வேளைகளிற் படிக்கப்படுகின்றன என்று அறியலுற்றேம்.

Page 71
نسس۔ 126، ۔۔۔ میری۔
குறிப்பு சதாசிவம்பிள்ளை எடுத்தாளும் * தமிழ் புளூராக் தரும் குமார
சிங்க முதலியார் சரிதத்தில் அவர் ஊர் நாவற்குளி என்று குறிப்
பிடப்பெற்றுள்ளது.
குமாரசுவாமி தேசிகர். - Kumaraswamy Desigar.
திருச்செந்தூர் ஆதீனத்தைச் சேர்ந்த, வீரவநல்லூரைச் செனன தேசமாகக்கொண்ட இப்புலவர். மாறியாடும் பெருமாள் சோதிஷரின் புத்திரர். இவர் செய்த கணிதநூல் இவர் நாமதேயப்படி குமார சுவாமீயம் என்று அழைக்கப்படுகின்றது. இதிலே மூலகாண்டம், சாதககாண்டம், முகூர்த்தகாண்டம், சிந்தனுகாண்டம் எனு நான்கு காண்டங்களிலே டுசபடலங்களும் சாகe செய்யுள்களும் அடங்கியிருக் இன்றன. இச் சோதிடநூலைச் சாஸ்திரிமார் உசிதம் எனக் கொண் டாடுகிருர்கள். இந்நூலுக்கு இவர் ஆக்கியோர் என்பதுடன் இவர் பாடல் மாதிரிவிளங்கப் பின்வரும் பாவைத் தருகின்ருேம்.
** போதிட மாகிய வேதிய
நாத புராதனன் மான்முதலோர் ஈதிட மாய்வரு வாரெனில்
யாவும் விடாதியல் பாகநவில் சோதிட மேதிட மகாநடாவு குமார சுவாமியம் யான் ஒதிட வேயென தோரகம்
வாழ்பவ ஞனைச கோதரனே."
இந்நூலைச் சிலர் உரையோடு அச்சிற் பதிப்பித்திருக்கிருர்கள். இதனை ஆதியிலே குமாரசுவாமி எனு நாமம் படைத்த கந்தசுவாமி அகஸ்திய இருவிக்கு அருளிச்செய்தனராம். அது சம்ஸ்கிருதத்தில் இருந்ததால் அதையும் அதிலிருந்து மற்ருேர் எடுத்துச் செய்த நூல் களையும் நிரையே முதனூல் வழிநூல்களாகக் கொண்டு இது இயற் றப்பட்டது. இந்நூலுக்கு ஆக்கியோர் இவர் என்றது பின்வரும் விருத்தத்தால் விளங்கும்.
** இயல்புளவிப் பலமுழுதுஞ் சேகரித்தொன் முக
வியம்புமதி சயமுளகு மாரசுவா மீயம் புயனெழுது மெழுத்துமவ னெழுத்துமியல் பாக
புகல்வதுகண் டதனியல்பிப் புவியிலுள்ளோ ரறியப்

- سد 127 س
பயமுளசந் தாசலசெந் திற்கதிபன் வீரைப்
பதிமாறி யாடுபெரு மாள்புதல்வ னன செயIமிகுபிர் பலசுகுண குமாரசுவா மிக்குந்
தெய்வமிரு தயத்திருந்து திருவுளம்பற் றியதே'
------------ രൂി ۔۔۔۔۔
* தமிழ் புளூராக் நூலில் இடம்பெருதவர் குமாரசுவாமி தேசிகர். குமாரசுவாமீயம் 1869ஆம் ஆண்டில் வெளிவந்ததென்பர் 1, கா. சுப்பிரமணியபிள்ளை பதினெட்டாம் நூற்ருண்டின் முற்பகுதியிற் குமாரசுவாமி தேசிகர் வாழ்ந்தார் என்பர்? வீரவநல்லூர் தென் பாண்டிநாட்டிலுள்ளது.
(SLDT J S, 6 TL fü Lou) au i. — Kumaraswamy Pulavar.
இவர் உடுப்பிட்டிக் கோவிற்பற்றிலே வல்லிபட்டியிலே வேளா ளர் மரபிலே சுமார் நூறு வருடங்களின் முன்னிருந்த வித்துவான். சந்திரசேகர முதலியார்க்குப் புத்திரர். முத்துக்குமாரு முதலியா ருக்குச் சகோதரர். இவர் புரந்தரனடகம் எனப் பெயரிய ஒர் நாட கத்தையும் அறுபத்துநான்கு அடிகொண்ட ஓர் சிந்துடன் பல பதங் களையும் பாடினர். ۔۔
குறிப்பு
* தமிழ் புளூராக் நூலில் இடம்பெருத ஈழத்தவர்களுள் ஒருவர் குமாரசுவாமிப் புலவர். சதாசிவம்பிள்ளை 1786 க்கு முன்னர் குமார சுவாமிப் புலவர் வாழ்ந்தார் என்றும் அவர் சகோதரர் முத்துக் குமார முதலியார் 1786 க்கு முன்னர் பிறந்தார் என்றும் கூறல் ஆராயத்தக்கது. இவ்விருவரின் மருகர் க. குமாரசுவாமி முதலியார் காலம் 1792-1874. சந்திரசேகர முதலியாரும் புலமையுடையவர்.
குமாரசுவாமி முதலியார். - Kumaraswamy Mudeliar.
இவர் கிறிஸ்தாப்தம் கணகூஉம் ஞ09த்திற்குச் சரியான பரிதாபி டு ஆவணி மீ" ககம் வ. உடுப்பிட்டிக் கோவிற்பற்றிலே, வல்லி பட்டிக் குறிச்சியிலே, வேளாளர் மரபிலே, கனந்தனங் காத்திரங் கொண்ட குடும்பத்திலே பிறந்தனர். இவர் தந்தை சந்திரசேகர
1. ந. சி. கந்தையபிள்ளே தமிழ்ப் புலவர் அகராதி, 1950 பக் , 13 2. Sao u au Jayug, 1958, u š. 419 3. us. sor as-ti (s

Page 72
سب 128 -۔
மாப்பாண முதலியார் கதிர்காமபூப முதலியார். தாய் சந்திரசேகர முதலியார் மகள் வள்ளியம்மை. இவர்க்கு ஆசிரியர் இவர் தாய் மாமனும் சந்திரசேகர முதலியார் புத்திரருமான முத்துக்குமார முதலியார். இலக்கணம், இலக்கியம், சங்கீத வித்தை முதலாய நாணு கல்வித் துறைகளிலுந் தம் மாமனுரிடம் பாடங் கேட்ட இப்புலவர் பன்னிரண்டு பிராயம் வரையிற் பாடுஞ் சக்தி உடையவராய்ச் சீவ பரியந்தம் அதிலே மனம் பதிந்து சுவையுஞ் சாதனையுங் கொண்டவ ராய், இந்திரகுமாரனுடகம், அருளம்பலக்கோவை என்னும் இரு பாடல்களோடு தத்திய பத கீர்த்தனம் என்னும் பல பதங்களும் ஊஞ்சல், பதிகம் ஆதிய வேறு பல பாக்களும் பாடினர். இந்திர குமாரனடகம் அருச்சுனராசன் சுபத்திரதேவியை மணமுடித்த சரித்திர மேலது. அருளம்பலக்கோவை உடுப்பிட்டியில் வசித்த அருளம்பலமுதலியார் மேலது. பாடல் மாதிரிக்காக இரண்டு கவிகளை இவ்விடந் தருவம், | $, ** திங்கா ரூடலகந் தேய்வுற மாய்வுறச் சித்திரைப்போற் தங்கா மலந்தர மார்க்கந் தவம்புரிந் தாலுந்தமிழ் மங்கா துடுவை வருமரு ளம்பல மன்னன்வரைக் கொங்கார் குழலி முகம்போன் மெனநினைக் கூறரிதே'
*" எழுத்தசை சீர்தளை பந்தத் தொடைபா வினமுதலாம் விழுப்பொருளாய்ந்துணராதவென் புன்சொற்கு மேலவர்கள் வழுச்சொல்வதென்மைந்தர் செய்தசிற்றிற்கு மரவினையோர் இழுக்குரை யாரிக ழார்மிக வுண்மகிழ் வெய்துவரே."
இவ்விரண்டனுள் முன்னையது கோவைத்துறை. மற்றது இந்திர குமாரனுடகத்தின் அவையடக்கம். இவைகளன்றித் தமது மனைவியா ருடைய பிணியை மாற்றிய திகாந்தம் புகழ்படைத்த இருபாலைச் செட்டியாரைப் புகழ்ந்தும், தம் புதல்வர் ஒருவருக்கு விருந்தூட்டிய சுப்பிரமணிய ஐயரென்பார் ஒருவரை வியந்தும், தேவதாசி ஒருத்தி யின் சங்கீதத்தை நயந்தும், தமது வளவொன்றை ஊடறுத்துப் போகத் தெருவெடுத்த ஒவசியர் ஒருவரைக் கடிந்தும் பல தனிப் பாக்கள் பாடினர். யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணையில் வசித்த சரவணமுத்துப் புலவரைக் காண விரும்பி அவருக்கு ஓர் விருத்தத் திலே திருமுகம் வரைந்தனர். அமெரிக்கமிஷன் வைத்தியராய் அட்ட திக்கெங்கும் புகழ் ஒளிவிட்டு விளங்கிய கிறீன் (Dr. S. F. Green) துரையைப் புகழ்ந்தும், சனங்களின் உள்ளங்களோடு உயிரைக் கொள்ளை கொண்ட கொள்ளைநோய் காலத்திற் பரிந்தும் பாடிய பதங்கள் பல "உதயதாரகை'ப்பத்திரத்திலே தோற்றி இருக்கின்றன.

தனிப்பாடல்களன்றி நோய்க்கிரங்கல் முதலிய சில நூல்களும் செய் தனர். இவரது கற்றமித்திரர்கள் இந் நிமிடமும் வல்லிபட்டியிலே தகுந்த நிலைமையில் இருக்கின்றனர்.
ஊர்காவற்றுறை நீதவான் ம. ரா. ரா. அத்வக்காத் உவைமன் கதிரவேற்பிள்ளை இப்புலவர்க்கு உ-ம் புத்திரர். இவர் பிறப்பாற் சைவராயினுங் கொள்கையில் அவ்வாறிருந்தவரல்லர். கடவுள் ஒருவர் என்னுங் கொள்கை பூண்ட இவர் கிறிஸ்து சமயத்தைத் தழுவாதிருந்தும் அதனை வெறுத்தவருமல்லர். கிறிஸ்த வேதோப தேசங்களை மெய்ச்சி அமரிக்க மிஷனரிமார் பேரில் அபிமானமுற்ரு ராய் அவர்க்குப் பலவாரு கச் சகாயித்து வந்தவர். விக்கிரக வணக்கம் சுபாபத்தே இவர்க்கு அரோசிகம். சிறுவராய்ப் பாடசாலைக்குப் போய்த் திரியுங் காலத்திலே வழியிலுள்ள கோயில் ஒன்றில் இருந்த ஒரு விக்கிரகத்தை எடுத்துக் கண்டதுண்டமாக்கினர் என்று கேள்விப் பட்டிருக்கிமுேம்,
பவ டு மார்கழிமீ" கள ஆம் தேதிக்குச் சரியான கஅஎசம்(u) மார்கழிமீ" EO ஆம் தேதி முன்பின் அக பிராயத்திற் தேகவியோக மாயினர். இரண்டோர்முறை இவரைக் கண்டிருக்கிருேம்.
-*~ குறிப்பு
"" தமிழ் புளூராக்" நூல் வெளிவந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர் குமாரசுவாமி முதலியார். இவர் தாய்வழிப் பாட்டனர் சந்திரசேகர முதலியாரும் மற்ருெரு மாமனரான குமார சுவாமிப் புலவரும் புலமை மிக்கோரேயாம். இவர் மனைவி சிவகாமிப் பிள்ளை (1800-1901) புண்ணிய மணியகாரரின் மகளாவார். இவருடைய சிரேட்ட புத்திரர் சபாபதி (-1884) யாழ்ப்பாணம் பிசுக்கால் கந்தோர் முதலியாராக விளங்கியவர் ; கனிட்ட புத்திரர் உவைமன் கதிரவேற்பிள்ளையின் காலம் 1829-1904,
குமாரசுவாமி முதலியார் இயற்றிய இந்திரகுமாரன் நாடகம் அச்சுவேலியாரால் நடிக்கப்பெற்றுப் பிரதியில்லாது அழிந்துபோ யிருந்தபோது வாய்ப்பாடமாயிருந்தோரிடம் கேட்டெழுதி மிகுதியை யும் தாமாக இயற்றி அச்சுவேலி ச. தம்பிமுத்துப்பிள்ளை அச்சிட்டு உபகரித்தார்". உடுப்பிட்டி சி. ஆறுமுகப்பிள்ளை, முதலியாரவர்களின் பிரபந்தங்கள் சிலவற்றையும் தனிப்பாடல்கள் சிலவற்றையும் தொகுத்து குமாரசாமி முதலியார் கவித்திரட்டு எனும் பேரில் வல்வை பாரதீ நிலைய முத்திராட்சர சாலையில் 1887ஆம் ஆண்டிற் பதிப்பித்தார். இத்தொகுப்பில் இடம்பெறுவனவற்றுள் நான்கு 1. பூரீ ச. தம்பிமுத்துப்பிள்ளேயின் சரித்திர சூசனம்: வயாவிளான், ஜயசிறீ சாரதா பீடேந்திரனால்,
1932, սե. 55-56: ܝ7 ܢܠ
unt - 9

Page 73
-- 130 -ت-
பாக்கள் அருளம்பலக் கோவைக்குரியன எட்டுப் பாக்கள் இந்திர குமாரனுடகத்திற்குரியவை. மேலும் இத்தொகுப்பிலே வல்வைத் தீரூவிற் சுப்பிரமணியர் பதிகம், வல்வை பெரியம்பன் கற்பகப் பிள்ளையார் பதிகமும் ஊஞ்சலும், மூளாய் சித்திவிநாயகர் ஊஞ்சல், கோப்பாய் பலானை சுப்பிரமணியர் ஊஞ்சல், பொலிகண்டி கந்தவன நாதர் ஊஞ்சல், நல்லைக் கலித்துறை முதலிய பிரபந்தங்களும் சேர்க் கப் பெற்றுள்ளன. இவற்றுள் பெரியம்பன் கற்பகப்பிள்ளையார் ஊஞ்சலிலும் பொலிகண்டி கந்தவனநாதர் ஊஞ்சலிலும் ஒவ்வொரு பாடலே காணப்படும். இவராற் கடிந்து பாடப்பெற்ற ஒவசியர் நல்லூர் வே. சம்பந்தப்புலவராவர்.
குமாரசுவாமி முதலியார் கிறித்தவ சமய சம்பந்தமாகப் பாடிய பாடல்கள் சில குமாரசாமி முதலியார் கவித்திரட்டில் இடம்பெறு வன. வல்வெட்டி ஊரிக்காடு எனும் பகுதியிலுள்ள தமது நிலத் தைக் குமாரசுவாமி முதலியார் அமெரிக்க மிஷனரிமாருக்கு வழங்கி யுள்ளார். முதலியாரவர்களின் ஐம்பத்தொரு தனிப்பாடல்கள் குமாரசாமி முதலியார் கவித்திரட்டில் இடம்பெறுகின்றன.
முதலியாரவர்களின் பாடல்களிற் சில, Literary Mirror அல்லது வித்தியாதர்ப்பணம் எனும் மாசிகையிலும் வெளிவந்தன.
குருபாததாசர். - Kurupathathasar.
இவரும் ஓர் பெரும் புலவர் என்றதற்கு எட்பிரமாணமாயினும் சந்தேகம் இன்ரும். எனினும் இவரது சரித்திர வரலாறு அந்த காரப்பட்டது. புல்வயலிற் பூசிக்கப்பட்ட கந்தசுவாமிக்குத் துதியாக நூறு விருத்தங் கொண்ட குமரேச சதகம் என்னும் பிரபந்தம் பாடினர் என்றதற்கு மேற்பட இவரைப்பற்றி ஒன்றும் விளங்கின தில்லை. இவருடைய பாக்கள் நல்ல சத்தமும் இசையும் பொருந்தி ஒவ்வொரு விருத்தத்தின் ஈற்றடியுங் குமரேசனே என்று முடிகின்றது. மாதிரி காட்டவேண்டி அவற்றுள் ஒன்றைப் பின் வரைகின்ருேம்.
'தங்கமா னது தழலி னின்றுருகி மறுகினுந்
தன்னெளி மழுங்கிடாது
சந்தனக் குறடுதான் மெலிந்துதேய்ந் தாலுமோ
தன் மணங் குன்றிடாது
பொங்குமிகு சங்குசெந் தழலில்வெந் தாலுமோ
பொலிவெண்மை குறைவுருது
போதவே காய்ந்துநன் பால்குறுகி ஞலும்
பொருந்துசுவை போய்விடாது
^X.

- 31 -
துங்கமணி சாணையிற் றேய்ந்துவிட் டாலுந்
துலங்குகுண மொழியாதுபின் தொன்மைதரு பெரியோர் மடிந்தாலு மவர்களது
தூயநெறி தவருகுமோ மங்களகல் யாணகுற மங்கைசுர குஞ்சரியை
மருவுதிண் புயவரசனே மயிலேறி விளையாடு குகனேடல் வயனிடு
மலைமேவு குமரேசனே."
குறிப்பு "தமிழ் புளூராக்" தரும் செய்திகளைச் சதாசிவம்பிள்ளை வழி மொழிந்துள்ளார், குருபாததாசரின் இயற்பெயர் முத்துமினட்சிக் கவிராயர் என்றும் மீனட்சிசுந்தரக் கவிராயர் என்றும் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இவர் பதினெட்டாம் நூற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்பவர்கட்கு ஆதாரம் யாதென உணரு மாறில்லை?. காப்புச்செய்யுள் நீங்கலாக நூறு பாடல்களைக் கொண்ட குமரேச சதகம் சோணுட்டிற் புதுக்கோட்டையை அடுத்த திருப் Hல்வயல் எனும் திருப்பதியில் வீற்றிருக்கும் முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டதாகும்.
(356uGgasJ LIT sûTLqu657. - Kulasagarapandian. மதுராபுரியில் இருந்து செங்கோலோச்சிய இவ்வரசர் மற்றைய சில அரசர்கள் போலப் புலவராயும் இருந்தார். இவர் அம்பிகை மாலை எனப் பெயரிய ஓர் நூல் இயற்றினர். அதிலே முப்பது பாக்களுள.
குறிப்பு * தமிழ் புளூராக்" நூலில் இடம்பெருதவர்களில் ஒருவர் குலசேகரபாண்டியன். மதுரையிலும் தென்பாண்டி நாட்டிலுள்ள சில நகரங்களிலும் குலசேகர பாண்டியன் எனும் பெயருடையவர்கள் பலர் ஆட்சி புரிந்திருக்கிருர்கள் என்பது பாண்டியர் வரலாற்ருற் புலனுகும்?. இவர்களிலே அம்பிகைமாலையின் ஆசிரியர் இன்னர் என்று துணிதலரிது. "பாண்டிய குலசேகரன்" இலிங்கபுராணத்தை இயற்றியதாக அந்நூற் சிறப்புப் பாயிரம் கூறுகின்றது. வாயு சங்கிதையைக் குலசேகர வரகுணராம பாண்டியன் இயற்றியதாக அந்நூற் சிறப்புப் பாயிரம் கூறும். 1. ந. வீ. செயராமன் : சதக இலக்கியங்கள், 1988 பக். 115 : கலக்களஞ்சியம், தொகுதி நான்கு பக். ே 2. கா. சுப்பிரமணியபிள்ளை; இலக்கிய வரலாறு, 1958, பக், 421. 3. தி. வை. சதாசிவபண்டாரத்தார்; பாண்டியர் வரலாறு காண்க.
/-

Page 74
- 132 -
S55vGsævå GuGuds sir. – Kulasagaraperumal.
இவர் விஷ்ணு சமயத்தவரது துதியும் புகழும் பெற்ற ஆழ்வார் பன்னிருவருள் ஒருவர். கலியப்தம் இருபத்தெட்டிற் பிறந்தவர் என்ப. இவர் திருவாஞ்சியைத் தமது இராசதானியாக்கி மலையாளத்தி லிருந்து அரசு புரிந்த திருதராட்டிரராசன் புத்திரர். பிதாவின் பின் அரசுரிமை பெற்றுச் சேங்கோலோச்சியும் அந்தச் சிலாக்கியத்தை இகந்து வைஷ்ணவத் தவத்தியாகி விஷ்ணு ஆலயங்கள் எங்கும் யாத்திரை செய்து திரிந்தவர். பூரீரங்கம், காஞ்சிபுரம், திருப்பதி என்னுந் தலவிசேடங்களைக் கண்ணுற்று மன்னர்குடியிலே வந்திருந்த போது நிரியான தசை அடைந்தார். இவர் தம் பகவானுடன் கலந்துவிட்டாரென்பது வைஷ்ணவர் கொள்கை. இவர் ஆரியம், திராவிடம் என்னும் இரு பாஷைகளையுந் தேர்ந்த வித்துவசிரோமணி ஆதலால் ஆரியத்திலே முகுந்தமாலை என்னும் பிரபந்தத்தை இயற் றித் தமிழிலும் அதனை நூற்றைந்து செய்யுளிற் திருப்பினர். விஷ்ணு சமயிகள் கொண்டாடும் நாலாயிரப் பிரபந்தம் என்னும் பாடலுள் இதுவுமோர் கூருய் உள்ளது. t
குறிப்பு
* தமிழ் புளூராக் ** தந்த குலசேகரப்பெருமாள் சரிதத்தைச் சதாசிவம்பிள்ளை பெயர்த்தளித்துள்ளார். காசிச்செட்டி திருவஞ்சி, மன்னர்கோவில் எனவும் சதாசிவம்பிள்ளை திருவாஞ்சி, மன்னர் குடி எனவும் கூறும் இடங்கள் திருவஞ்சைக் களமும் காட்டுமன்னர் கோயிலும் போலும். குலசேகரர் தம்மைக் கொல்லிக் காவலன் என்று கூறல் கவனிக்கத்தக்கது. இவர்களாலே திருதராட்டிர ராசன் என்றழைக்கப்பட்டவர் திருடவிருதர், திடவிரத பூராஜதேவன் என் னும் பெயர்களால் வைணவ வரலாறுகளிற் குறிக்கப்படுகின்றர்.
குருபரம்பரை குலசேகரருக்குத் தரும் கலியப்தம் 28 (கி. மு. 3075) எனும் காலவரையறை பொருத்தமில்லை. இராமாநுசர் சகம் 939இல் (கி. பி. 1017/1018) அவதாரஞ் செய்தாரென்று பின்பழகிய ஜீயர் கூறுவர். இராமாநுசருக்கு அளிக்கப்பெற்றுள்ள சீவியகாலத் தின் அடிப்படையில், அவர் கி. பி. 1137இல் மண்ணக வாழ்வை நீத்ததாகக் கூறுவர். இராமாநுசர் பாடிய தனியனென்று பெருமாள் திருமொழிக்குண்டு. நாதமுனிகளின் பேரர் ஆளவந்தார் இராமாநு சரின் ஆசாரியர்கள் சிலருடைய ஆசானுக விளங்கியவர் ; அவருடைய ஆசான் மணக்கால் நம்பி பாடிய தனியனென்று பெருமாள் திருமொழிக்குண்டு. முதலாம் குலோத்துங்க சோழனின் (1070-1122) பதினெட்டாம் ஆட்சியாண்டிற் (கி. பி. 1088) பொறிக்கப்பட்ட சாசனமொன்று குலசேகரரின் தேட்டருந் திறல் " எனும்

- 133 -
திருமொழி பூரீரங்கத்தில் விண்ணப்பிக்கப் பெற்றதைக் கூறுகின் றது. பூரீரங்கம் கோயிலொழுகின் அடிப்படையில் நாதமுனிகளுக்கு 823-918 எனும் காலவரையறை அளிக்கப்பெற்றபோதும், அவ்ர் மாணக்கர் பரம்பரையின் அடிப்படையில் நோக்கும்போது, அக் காலவரையறை பொருந்துவதாகத் தெரியவில்லை; நாதமுனிகள் பத்தாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலும் பதினேராம் நூற்றண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் என்று கொள்ளுதல் பொருத்தமாகத் தெரிகின்றது. எனவே குலசேகரர் பத்தாம் நூற்றண்டின் பிற் பகுதிக்கு முற்பட்டவராதல் சாலும்.
முதலாழ்வார் மூவரும் ஏனைய ஆழ்வார்கள் யாவருக்கும் காலத் தால் முற்பட்டவர் என்ற மரபு பொருத்தமானதாகவே கொள்ளக் கிடக்கின்றது. முதலாழ்வார் காலம் முதலாம் நரசிம்மவர்மன் (630-668) காலத்திற்கு முற்பட்டது ஆதல் பொருந்தாது என்பது பின்னர் விளக்கப்படும். எனவே குலசேகரர் காலம் கி. பி. ஏழாம் நூற்றண்டிற்கும் கி. பி. பத்தாம் நூற்றண்டிற்கும் இடைப்பட்தாதல் வேண்டும். குலசேகரர் பயன்படுத்தும் * தொண்டரடிப் பொடி" எனும் தொடரை நோக்குமிடத்து", அவர் தொண்டரடிப் பொடியாழ்வாரை மனதிற் கொண்டு இத்தொடரை வழங்கியிருத்தல் வேண்டும். அல்லது குலசேகரர் வழங்கிய தொடரை விப்பிர நாராயணர் தம் தாஸ்ய நாமமாசத் தரித்திருத்தல் வேண்டும் என்று கருத இட முண்டு. ஆனல், திருவரங்கத்துத் திருமுற்றத்தடியார் குழுவிலே தொண்டரடிப் பொடிசளும் ஒருவராய் இருத்தலையும் அக் குழுவின் பெருமைகளையே "தேட்டருந் திறல்" எனும் திருமொழியிற் குலசேகரர் சிறப்பித்தலையும் நோக்குமிடத்து முன்னைய கருத்தே பொருத்தமாகத் தெரிகின்றது. தொண்டரடிப் பொடிகளும் திரு மங்கையாழ்வாரும் சமகாலத்தவர் என்பது வைணவ மரபாகும். திருமங்கையாழ்வார் தந்திவர்மன் (796-846) காலத்தவராதல் சாலும். எனவே எட்டாம் நூற்றண்டின் பிற்பகுதியும் ஒன்பதாம் நூற்ருண்டின் முற்பகுதியும் குலசேகரர் காலம் எனலாம்.
மு. இராகவையங்கார் "ஆழ்வார்கள் காலநிலை ” எனும் நூலிற் (1931) சேரமான் பெருமானுயனருக்கு முன் சேரநாட்டினை ஆட்சி புரிந்தவர் குலசேகரர் என்று கூறும் கருத்து வலுவுடைத்தன்று. சேக்கிழார் கூறும் " பொறையன்" குலசேகரர் என்று இராகவையங் கார் செய்யும் ஊகம் எவ்விதத்தாலும் உண்மையென நிறுவப்படுதல் அரிதாம். w
1. நாலாயிரத் நில்விய பிரபந்தம்: மயில் மாதவதாஸன் பதிப்பிற்கு (1962) மா. இராசமாணிக்கனும்
எழுதிய ஆழ்வார்கள் காலம்" காண்க, 2. பெருமாள் தீருமொழி, 2.2,

Page 75
- l34 -
பெரியவாச்சான்பிள்ளை குலசேகரரைப் பெருமாள், பூரீகுலசேகரப் பெருமாள் என்று கூறும் வழக்கும், பெருமாள் திருமொழியென்ற பெயரும், கேரளோத்பத்தி கூறும் பெருமாள்களிலே குலசேகரரும் ஒருவராயிருக்கலாம் என்று கருத இடமளிக்கின்றன. கேரளோத் பத்தியில் இருவர் குலசேகரர் என வழங்கப்பெறுவர். V.
குலசேகரரின் பெருமாள் திருமொழியில் அடங்கும் பத்துத் திருமொழிகளிலே பத்துத் திருநாமப் பாட்டுகள் உட்பட நூற்றைந்து பாசுரங்களுள. பெருமாள் திருமொழி முதலாயிரத்தில் இடம்பெறுவ தாகும். நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தை முடிச்சூர் அப்பாவு முதலியார் 1865ஆம் ஆண்டில் வெளியிட்டார். இவருக்கு முன்னர் வெளிவந்த பதிப்புகளின் விபரங்கள் தெரியவில்லை. பூரீ கூர்மாசாரியர் 1856ஆம் ஆண்டில் வெளியிட்ட பெரிய திருமொழிப் பிரசுரம் குறிப் பிடப்பட்டுள்ளது; அவர் முதலாயிரம், இயற்பா, திருவாய்மொழி எனும் பிரிவுகளையும் வெளியிட்டனரோ என்பதை அறிய முடியவில்லை. பொய்கையாழ்வார் குறிப்புக் காண்க,
@56m) ug650Tu(6Oñt. - Kulapathinayanar.
மதுரைக் கடைச்சங்கப் புலவர் சகன்மருள் இவரொருவர். சங்கப் புலவராய்த் திருவள்ளுவர் நூற்குச் சிறப்புப் பாயிரமாய்
இவர் சாற்றிய வெண்பாப் பின்வருவது. W
** உள்ளக் கமல மலர்த்தி யுளத்துள்ள
தள்ளற் கரியவிரு டஸ்ளுதலால் - வள்ளுவனர் வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரு மொக்குமெனக் கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு.”*
இக்குலபதி நாயனரே பெரியபுராணத்திற் சொல்லப்பட்டிருக்குங் குலச்சிறை நாயனர் எனச் சிலர் சாதிக்கின்றர். இக்கருத்து எவ்வாறு உண்மைப்படுமோ அறியோம். அது மெய்ப்படில், இவர் பாண்டி வளநாட்டிலே மணமேற்குடியிலே பிறந்து நெடுமாறன் எனும் பாண்டிய ராசனுக்கு முதன் மந்திரியானவரும், சோழராசன் புத்திரி யாகிய மங்கையர்க்கரசியை விவாகம் பண்ணின அப்பாண்டியன் சமணரது துர்ப்போதனையில் அகப்பட்டு அவருடைய மதத்தைத் தழுவினபோது, தாம் ' மன்னன் எப்படி மன்னுயிர் அப்படி ** என்னும் மூதுரைப்படி அரசனது முன்மாதிரியைக் கைக்கொள்ளாது, இராணியாகிய மங்கையர்க்கரசியின் மனவழிப்பட்டுப் பாம்பைக் கண்ணுறும் கருடனைப்போற் சமணரைப் பகைத்துச் சைவத்திலே

- 135ー
ஒழுகிச், சிவதொண்டருக்குத் தாமே தொண்டராகிச், சம்பந்தரை அழைப்பித்து அரசனது வெப்புநோயை மாற்றுவித்து அவனைப் பழையபடியே சைவனக்கி, எண்ணுயிரஞ் சமணரைக் கழுவில் ஏற்றி ஒழிந்தோரை ஊர் விட்டகற்றினவருமாய் இருத்தல் வேண்டும்.
குறிப்பு -
குலபதி நாயனரையும் குலச்சிறை நாயனரையும் ஒருவராகக் கருதியவர் ' தமிழ் புளூராக்" ஆசிரியராவர். குலச்சிறைநாயனர் திருஞானசம்பந்தர் காலத்தவர் என்பது பெரியபுராணத்தாற் புலணு கும். குலபதிநாயனர் திருவள்ளுவமாலையால் மட்டும் அறியப்படுபவர். இவரையும் ஒருவராகக் கருதுவதற்கு எவ்விதமான ஆதாரமுமில்லை. குறுந்தொகையிற் கிடங்கிற் குலபதி நக்கண்ணனர் என்பவருடைய பாடலுண்டு. குலபதிநாயனரின் பாடல் தண்டியலங்காரத்தில் வேற்றுமையணிக்கு எடுத்துக்காட்டாக அமையும் " ஓங்கலிடை வந்துயர்ந்தோர்’ எனும் வெண்பாவுடன் ஒத்ததாயிருத்தல் நோக்கத் தக்கது. அக்காரக்கனி நச்சுமனர் குறிப்புக் காண்க.
f
குலோத்துங்கசோழன். -Kulothungka Cholan,
இவர் தமிழ்நாட்டு மூவேந்தருள் ஒருவராய் உறை ஊரில் இருந்து செங்கோலோச்சிய இராசேந்திர சோழனது புத்திரர். ஒட்டக் கூத்தர் இவர்க்குச் சமஸ்தான வித்துவானும் நண்பருமாய் இருந்தார். இராசேந்திர சோழனுக்குப் பரலோகப் பிரயாணம் சமீபித்திருந்த போது அவன் ஒட்டக்கூத்தரை அழைப்பித்துத், தனது புதல்வராம் இவரை அவர் பொறுப்பில் விட்டு இவருக்குப் பாண்டியனது மகளை விவாகம்பண்ணி வைக்கும்படி சொல்லி இறந்துவிட்டான். அவ்வாறு இவர் ஒட்டக்கூத்தர் மூலமாகப் பாண்டியன் புதல்வியை வதுவை செய்து, புகழேந்திப் புலவரையுஞ் சீதனமாகப் பெற்றனர். கம்ப நாட்டாழ்வாரைப் பரிபாலனம் பண்ணினரும் இவரே. இவர் மூல மாகப் பாடப்பட்ட மகா காவியமாகிய கம்பராமாயணம் அரங்கேறிய சபையும் இவர் சபையே. ' கற்றரைக் கற்ருர் காமுறுவர்" எனும் ஆன்ருேர் வாக்குப்படி, இவர் தாமே கல்வி வல்லவராய் இருந்தத ஞற் தம்மை யடுத்த புலவரைச் சம்மானம் பண்ணி வித்துவ கோட்டி ஏற்படுத்தித் தமிழ்மாதை வளர்த்தனர். இவர் குறிக்கப் பட்ட யாதேனும் ஓர் நூல் செய்தார் என்று புலப்படாத போதும் பல தனிப்பாக்கள் பாடி இருக்கிருர். இராமாயணம் அரங்கேறிய போது வரகவியாகிய கம்பருக்கு இவர், சத்திரம், சாமரம் முதலிய விருதுகளுங் கொடுத்து அவரைப் பட்டத்து யானைமேல் ஏற்றி, மந்திரிமார் பிரதானிகள் சேவிக்கக் கிராமப் பிரதட்சணுஞ்கிகர்
イト

Page 76
ཕཡ- I36 ག---
வித்து. மிகப் பூச்சியப்படுத்தி ஒரு துதிகவியும் ஈந்தனர். அதனையே இவருடைய புலமைத் திறமைக்கும் மாதிரிக்கும் ஆக இங்ங்ணந் தருகின்ருேம்.
"வாழ்வார் திருவெண்ணெய் நல்லூர்ச்
சடையப்பன் வாழ்த்துபெறத்
தாழ்வா ருயரப் புலவோ
ரகவிரு டானகலப்
போழ்வார் கதிரி னுதித்ததெய்
வப்புல மைக்கம்பநாட்
டாழ்வா ரடியைச்சிந் திப்பவர்க்
கியாது மரியதன்றே. *
குறிப்பு குலோத்துங்க சோழன், கம்பராமாயணத் தனியன்களில் ஒன்முக வழங்கும் பாடலை, இயற்றியதாகச் சதாசிவம்பிள்ளை கூறுவதற்கு ஆதாரம் யாதென அறியுமாறில்லை. இக் கூற்றிற்கு விநோதரச மஞ்சரி யிற் கூட ஆதாரமில்லை. "தமிழ் புளூராக் " ஆசிரியர் குலோத்துங்க சோழனுக்குத் தனியிடம் கொடுக்கவில்லை.
பிற்காலச் சோழர் பட்டியலில் மூவர் குலோத்துங்க சோழன் என்னும் பெயரைத் தாங்கியுள்ளனர். இவர்களுள் யாரும் இராசேந்திர சோழனது புத்திரர் அல்லர் ; முதலாம் குலோத்துங்க சோழன் (1070-1122) முதலாம் இராசேந்திரனின் தெளகித்திரன். ஆனல் இவன் காலத்திலும் ஒட்டக்கூத்தர் வாழ்ந்தார் என்று கூறுவதற்கு எவ்விதமான ஆதாரமுமில்லை. ஒட்டக்கூத்தர் இரண்டாம் குலோத் துங்க சோழன் (1133-1150) காலத்திலும் அவன் தந்தை விக்கிரம சோழன் (1118-1135) காலத்திலும் அவன் மகன் இரண்டாம் இராசராசன் (1146-1173) காலத்திலும் வாழ்ந்தவர். ஒட்டக் கூத்தர், புகழேந்திப்புலவர், கம்பர் ஆகியோரை இணைத்துக் கூறும் கதைகள் விநோதரசமானவையே ஒழிய வரலாற்றுண்மை யுடையன அல்ல என்பது கவனிக்கத் தக்கது.
at.yprš6on5š5 5úbúl JT6šT. - Kulangkai Tampiran.
இவர் காஞ்சிபுரத்திற் பிறந்த மகாவித்துவான். கிறிஸ்தாப் தத்திற்கு முன்னே தொண்டைமண்டலத்திலே ஆதொண்டைச் சக்கர வர்த்தி காலத்திலே போய்க் குடியேறின ஆதி வேளாள குலமே இவரது தந்தை தாயரது குலம். இலக்கண இலக்கியக் கடற்கு ஓர் தெப்பமாய்த் தோன்றிய இக் கவீச்சுரர், வித்தாண்மையிலன்றிப்

سی۔ 137 -----۔
பதிசாஸ்திரங்களிலுங் கசடறத் தேறிய கலைஞானியாய் இருந்தவர். தென்மொழியாகிய தமிழிலன்றி வடமொழியாகிய ஆரியத்திலும் பாண்டித்தியம் பெற்ற இவர், முதன் முதல் ஒரு பாடசாலையிற் சாதாரண கல்வி கற்று வல்லவராகி, மறுபடி தஞ்சாவூர்க்குச் சென்று அங்கே அச்சமஸ்தானத்திலே உள்ள திருவத்தூர் மடத் தம்பிரான்மாரைத் தமக்கு ஆசிரியராகக் கொண்டு, அவரிடம் பதி சாஸ்திரங் கற்ருர். இவரது திறமையை நன்கு மதித்த அம்மடத் தம்பிரான்மார் இவரைத் தம்மடத்திற்ருனே நிறுத்தித் தம்பிரான் பட்டத்தை ஈந்து, அங்கு வரும் மாணவகர்க்குப் பாடம் ஒதும்படி இவரை ஆசாரியராக்கினர். ஆக்கியுமென்ன ? அழுக்காறு என்னும் பெரும் பாவியால் இவர்க்குப் பேர் இடையூறு நேரிட்டது. தம் மினும் இவர்க்குப் புகழும் பெருமையும் கிடைத்ததைக் கண்ட மாத்திரத்தில் அம் மடத்துச் சிரேட்ட தம்பிரான் இவர் மேற் பொருமை கொண்டு இவர்க்கு மோசம் செய்ய யோசித்தார். இவரது கல்வியிலும் பிரஸ்தாபத்திலும் கிளர்ந்த அழுக்காற்றினுல் இவர்மேற் சில அபராதங்களைச் சுமத்தினர். நம்மாற் சுட்டப் பெற்ற குற்றத்தை நீ செய்ததில்லையானல், அழலிற் காய்ந்து சிவந்த இரும்பை உன் வலக்கையிலே எடுத்து நின் நிரபராதத்தை ரூபித்து உன் குற்றத்தால் விலகு என்றனர். நெருப்புத் தன்னைத் தீண்டும் யாவரையும் சமமே சுடும் குற்றமுற்ருேரையும் அற்ருேரையும் சமமே சுடும். என்பதை உணராமலோ, காலகதியாலோ, இவர் அவ்வாறு செய்கிருேம் என்று உடன்பட்டு வலக்கையால் இரும்பைத் தூக்க அக்கை வெந்து கூழங்கையாயிற்று. அக்காலந் தொடங்கிக் கூழங்கையர் எனும் வக்கணப் பெயர் இவருக்காயிற்று. சுயநாமம் ஏதோ தெரிகிலம். இக் காரண நாமத்தை இட்டு அது வழங்காது போயினது போலும்,
இச் சம்பவத்தின் பின்பு இவர் யாழ்ப்பாணம் வர, இங்கே வண்ணுர்பண்ணையிலே வைத்தியலிங்கச் செட்டியார் என்னும் வணிகர் திலகர் இவர்க்கு நண்பராய் இவரைப் பரிபாலித்து வந்தனர். இவர் அவருடைய பிள்ளைகளுக்கும் பிறர்க்கும் பாடமோதிக் காலட்சேபஞ் செய்தனர். இவரது கல்வியினது ஆழமுந் திட்ப நுட்பமும் இலங்கை எங்கும் பிரசித்தமானதால், கொழும்பிலுள்ளார் பலர் இவரை அழைப்பித்துப் பாடங் கேட்டனர். இவருடைய உதவியாற் பாதிரியார் காபிரியேல் பச்சிக்கோ முதலாம் பலர் தமிழ் வல்லவ ராயினர். இவர் நல்ல இலக்கணக் களஞ்சியமாகையாற் பவணந்தி முனிவர் செய்த நன்னூலுக்கு வியாக்கியானம் எழுதினது மாத்திர மல்லாது, பற்பல புலமைகளையும் இயற்றிஞர். ஞான நூல் வல்லவ ராதலால் எம்மதத்துக்குஞ் சம்மதமான நடையினராகி யோசேப்புப் புராணம் என்னுங் காவியத்தை இருபத்தொரு படலத்தில் ஆயிரத்
l, i. பா என்டத்தில்

Page 77
--س۔ 138 سس۔
திருபத்து மூன்று விருத்தத்திற் பாடித் தமது நேசராகிய மெல்லோப் பாதிரியாருக்கு அதைப் பிரதிட்டை செய்தனர். மாதிரிக்காக அப் புராணம் ஆற்றுப்படலத்தில் இருந்து ஓர் விருத்தத்தை இவ்விடம் வரைகின்ருேம்.
* பயம்பு விக்கருள் பயோதர மியாவும்வெண் டிரையாற்
பயங்கொள் வேலையிற் பரந்துவா ரிதியிடை? படிந்து
பயங்க ளானவை பருகியப் பரவையின் வடிவாய்ப் பயங்கள் கோரகை கொண்டிடப் பரந்ததம் பரமேல்.’
இப்புராணமன்றி நல்லைக்கலிவெண்பா, கூழங்கையர் வண்ணம் ஆதியாம் பல பாடல்களை இவர் பாடி இருக்கின்ருர், பிற்காலத்திலே சுண்டிக்குழிக் கோயிற்பற்றைச் சார்ந்த சிவியாதெரு இவர்க்கு உறைவிடமாய் இருந்தது. மானிப்பாயிலுஞ் சில பிரபுக்களுக்கு அறிமுகமாகி இவ்விடம் வந்து கொண்டாடிப் போயினர் என்று கேள்வி. அதிவிருத்தாப்பிய வயசிற் தேகவியோகமாகி நல்லூரைச் சார்ந்த திருநெல்வேலியிற் சமாதியிருத்தப்பட்டார். ஆங்கிலேயர் கையில் யாழ்ப்பாணம் அகப்பட்ட காலத்திற் கிறிஸ்தாப்தம் க எகடும் டு இவரது மரணி சம்பவம் நடத்தது. சிறியோர் பெரியோர் என்ற பேதமின்றி யாவர்க்குஞ் சமமாய் நடந்தவராதலாற் சாதா ரணமாய் இவர் யாவராலும் நன்கு அபிமானிக்கப்பட்டவர். யாழ்ப்பாணத்துக்கு வந்த பின்பு உலாந்தா, போர்த்துக்கீஸ் என்னும் இரு பாடைகளையும் படித்தாராதலாற் "கொம்மிந்தான்" முதலாம் எந்த உத்தியோகஸ்தருடனுஞ் சம்பாஷிப்பார். மார்க்க விஷயத்தில் எவரையும் பொருட்பண்ணுது சுவாதீனமாய் நடப்பவர். தமக்கு அன்ன தாதாவாய் இருந்த வைத்தியலிங்கச் செட்டியார் கட்டிய சிவன்கோயிற் பிரதிட்டைக்குப் போயிருந்தபோது, பூசகர் கொடுத்த விபூதியை வாங்கிச் "சாதி சாதியோடே" என்று சொல்லித் தாம் மாட்டியிருந்த தொடுதோலிற் போட்டனர் என்ற கதை இந்நாளும் உளது. மெல்லோப் பாதிரியார் முதலிய குரவரின் கொண்டாட் டத்தாற் கிறிஸ்த வேதாகம அறிவில் நன்ருய்ப் பயின்றிருந்தார். இவரைப்பற்றிச் சிறு கதைகள் பல இருப்பினும், இரண்டை மாத்திரம். வரைவம். இவர்க்குங் " கோட்டு"த் துவிபாஷிதராகிய கோவிந்த முதலியார் என்பவர்க்கும் பாற்பசு ஒன்றையிட்டு விவாதம் உண்டான போது முதலியாரோடு நீர் பிணங்கல் நல்லதல்ல என்று சிலர் புத்தி சொல்லக் கேட்டு, ஒருநாள் அக்கறவையை அவிழ்த்து முதலியார் வீட்டிலிருக்கிற சமையம் பார்த்து அவரது படலையிற் கொண்டுபோய் நிறுத்திக்கொண்டு : "கோவிந்தா ! கோவிந்தா ! " என்று கூவினராம்.
1. நூ. பா. வுமந் திரையர் 2 நூ. பா, ரிதியிடைப்

- 139 -
* ஓ ! இதென்ன பாபம் 1 முதலியாரை இவ்வாருய் மரியாதைத் தப்பாய் நீர் அழைக்கலாமா” என்று உள்ளிருந்தார் சிலர் வெளி யிலே வந்து இவரைக் கேட்க, இவர் : ஒ ! இதிலென்ன மரியாதை யீனம் ? கோ  ைபசு ; இந்தா  ைவாங்கிப்போ, என்றல்லவோ சொன்னேன் என்று சமாளித்து முதலியாரோடே இணக்கமானர்.
இவர் ஒரு தருணம் நீதிக் ** கோட்டு"க்குப் போய்த் தாம் உளுக்கார நாற்காலி இல்லாதிருக்கக் கண்டு : கோவிந்த முதலி யாரைக் காணும்படி ஓராள் வந்து தேடிக்கொண்டு நிற்கிறதென்று ஓர் சேகவனிடஞ் சொல்லி அனுப்ப, முதலியார் தற்சணம் ஆசனம் விட்டெழுந்து ஒரு கதவாற் போக, இவர் மறுகதவாற் சென்று அவரது நாற்காலியில் உளுக்கார்ந்துகொண்டனர். தேடினவரைக் காணப்போன முதலியார் வெளியிலே ஒருவரையுங் காணுது தம் ஆசனத்திற்கு வந்து, இவர் அதிலே உளுக்கார்ந்திருக்கக் கண்டு, வெட்கித்து, உலாவிக்கொண்டு நின்றனர். இருவர்தம் செயலையும் நீதிபதி கண்டு : இக் கரிக்குரங்கு ஏன் மரத்தில் ஏறிற்று என்று முதலியாரை வினவ, இவர்: வெள்ளை நாயைக் கண்டதாற் குரங்கு ஏறிற்று என்றனராம். இவரிடம் இலக்கணம், பதிசாஸ்திரம் முதலா நூல்களிற் பாடங் கேட்டவர் பலருள் வைத்தியலிங்கச் செட்டியார் ஒருவர். தம்பிரான் ஒருக்காலுக்கு மேற்படப் பாடம் ஒதார் ஆத லாலும், செட்டியார் விரைவில் அதை மட்டிடல் பிரயாசமாய் இருந்ததாலும், மாதகல் மயில் வாகனப் புலவரே இவரிடம் பாடங் கேட்டுச் செட்டியார்க்குச் சொல்லிக்கொடுக்க இரண்டாம் உபாத்தி யாயராய் அழைக்கப்பட்டார் என்ப.
குறிப்பு எம். பி. ஜேர்கன் ஒந்தாச்சியுடைய உதவியுடன் காசிச் செட்டி யவர்கள் தந்த சரிதத்தைச் சதாசிவம்பிள்ளை மொழிபெயர்த்ததோ டமையாது சிற்சில செய்திகளைப் புதியனவாகவும் அளித்துள்ளார். கோவிந்த முதலியார் கதைகளும் நல்லைக்கவிவெண்பா, கூழங்கையர் வண்ணம் ஆகிய நூல்களும் வைத்தியலிங்கச் செட்டியாரின் இரண்டாம் உபாத்தியாயர் பற்றிய செய்தியும் புதியனவாய் இடம்பெறுவன. ஆற்றுப்படலத்தை இரண்டாம் காண்டம் எனத் 'தமிழ் புளூராக் * ஆசிரியர் கூறுவதால் யோசேப்பு புராணத்தில் இடம் பெறும் 21 பிரிவுகளும் படலங்கள் என்பது புலனுகும் : சதாசிவம் பிள்ளை பின்னர் மாதகல் மயில்வாகனப் புலவரைக் கூழங்கைத் தம்பிரானின் மாணவ ராகக் கூறுவதாலும் சிற்றம்பலப்புலவரின் ஆசிரியராக வேருெரு வரைக் கூறுவதாலும் வைத்தியலிங்கச் செட்டியாரின் இரண்டாம் உபாத்தியாயர் மயில்வாகனப்புலவர் என்பதே பொருத்தமாகும்.
l, S. uf. மாதகற் சிற்றம்பலப் புலவரே

Page 78
- 140 -
மட்டுவில் க. வேற்பிள்ளை உபாத்தியாயரின் புலியூரந்தாதி உரைப்பதிப்பில் இடம்பெறும் உடுப்பிட்டி அ. சிவசம்புப்புலவரின் சாற்றுகவியிற் குறிப்பிடப்பெறும் கனகசபாபதி யோகி என்பவரே கூழங்கைத் தம்பிரான் என வழங்கப்பெற்ருர் என்று கருத இடமுண்டு. கூழங்கைத் தம்பிரான் தமிழ்நாட்டிற் பயின்று பணிபுரிந்த மடம் Tiruvatur எனுமிடத்திலுள்ளதாகக் காசிச்செட்டியவ்ர்கள் கூறி ஞர்கள் : ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை திருப்பனந்தாள் என்றும் ந. சி. கந்தையாபிள்ளை திருவாரூர் என்றும் கூறியுள்ளனர். கூழங்கைத் தம்பிரான ஆதரித்த கோபாலச்செட்டியார் மகன் வைத்தியலிங்கச் செட்டியார் சகம் 1713 ஆகிய சாதாரணளுல சித்திரை மீ (1790) வண்ணை வைத்தீசுவரர் ஆலயத்தின் பிரதிட்டையை ஒப்பேற்றியவர்: பனங்காமம் பகுதியிலுள்ள தேருங்கண்டல் எனும் இடத்திலுள்ள நிலங்களையும் குளத்தினையும் ஒல்லாந்தரிடமிருந்து 1791ஆம் ஆண்டில் விலைக்குப் பெற்றவர்; 1805ஆம் ஆண்டில் உயில் பிறப்பித்தவர் • கூழங்கைத் தம்பிரான் யாழ்ப்பாணத்தை ஆங்கிலேயர் கைப்பற்றிச் சிறிது காலம் சென்ற பின்பு வியோகமடைந்தனர் என்பர் காசிச் செட்டியவர்கள். இருபாலை சேனதிராய முதலியார், மாதகல்மயில்வாகனப் புலவர், நல்லூர் ப. கந்தப்பிள்ளை முதலியோரும் கூழங்கைத்தம்பிரானின் மாணுக்கர் என்பது சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தால் உணரத்தக்கது. இருபாலை நெல்லைநாத முதலியாரும் கூழங்கைத் தம்பிரானின் மாணவகர் என்பது சுன்னகம் குமாரசுவாமிட்புலவரின் கருத்தாகும்?. கோவாவைச் சேர்ந்த கதலிக குருவாம் காபிரியேல் பச்சிக்கோ சுவாமிகள் தேவப்பிரசையின் திருக்கதை, யோசேவாஸ் முனிவர் சரித்திர மொழிபெயர்ப்பு, நவதின உற்சவம், தேவமாதா அழுகைக்குரவை முதலிய நூல்களை இயற்றி uqəsini 6-nırımtrir.
யோசேப்பு புராணத்திற் சார்புவகையாற் போற்றப்படும் பிலிப்பு த மெல்லோப் பாதிரியார் (1723-1790) 1754ஆம் ஆண்டி லிருந்து வடபகுதியிற் பணிபுரிந்தவர். காசிச்செட்டியவர்கள் ஆற்றுப் படலத்திலிருந்து எடுத்தாளும் ஐந்து பாடல்கள் மட்டுமே இன்று யோசேப்பு புராணத்திற்கு உரியனவாகக் கிடைக்கின்றன. கூழங் கைத் தம் பிரானின் நன்னூலுரையும் கூழங்கையர் வண்ணமும் கிடைக்கவில்லை. நெ. வை. செல்லையா, தமது நல்லைச் சண்முகமாலைப் பதிப்பின் (1924, 1926) பின்னிணைப்பாகத் தரப்பட்ட நல்லைக் கலிவெண்பா, கூழங்கைத் தம்பிரானுற் பாடப்பட்டதாயிருக்கலாம்
1. "ஈழமண்டலப் புலவர்', செந்தமிழ் தொகுதி 12, பகுதி 10 (1914); தமிழ்ப்புலவர் அகராதி, 1980,
ui. 138
4. தமிழ்ப் புலவர் சரித்திரம், 1916, பக் 11,

- 141 -
என்று கருதினர். இந் நல்லைக் கலிவெண்பாவினைத் தம் நல்லூர் கந்தசுவாமி எனும் நூலில் (1971) எடுத்தாளும் குல. சபாநாதன் அதனை இருபாலை சேனதிராய முதலியார் பாடியதாகச் சிலர் கருதுவர் என்று உரைத்துள்ளார். சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர் தமிழ்ப்புலவர் சரித்திரத்திற் கூழங்கைத் தம்பிரான் பாடிய சித்திவிநாயகர் திருவிரட்டை மணிமாலையிலிருந்து ஒரு செய்யுளையும் அவர் பாடிய தனிச் செய்யுள் ஒன்றினையும் எடுத்தாண்டுள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை ஈழமண்டலப் புலவர் எனும் கட்டுரையிலே மெல்லோப் பாதிரியார் பாடியதாகச் சொல்லப்படும் உவமான விளக்கம் கூழங்கைத் தம்பிரான் பாடியதாகச் சிலர் கூறுவர் என்பர்.
கொங்கணர் - Kongkanar.
ஞானியராயன்றி வைத்தியரும் புலவருமாய் இருந்த இவர் ஓர் போது தம் நாமகரணப்படி கொங்கண தேசத்தவராய் இருக்கலாம். கொங்கணத்துக்குத் தற்கால நாமதேயங் கோயம்புத்தூர். வாலிபப் பிராயத்திற்ருனே இவர் தவத்தியாய்ப் பொதியமலை வாசிகளாகும் முனீசுரர்களுடன் கூடி அவர்களிடம் நானவித கலைகளிலும் பாடங் கேட்டவர். சிலர் இவர் அகத்தியர் காலத்தில் இருந்தவர் என்றும் அவர் மாணவகருள் ஒருவரென்றுங் கூற வேறுசிலர் திருவள்ளுவர் காலத்தவர் என்பர். பல தேவாராதனைக்கு மாருக இவர் பாடிய ஞானநூல் இவர் நாமதேயப்படி கொங்கணர் ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. பாடல் மாதிரிக்கு அதில் ஓர் விருத்தம் தருகுவம்.
** கடவுளோ ஞெருவனுண் டேவேத மொன்றே
காரணசற் குருதீட்சை தானு மொன்றே
அடைவுடனே யவனருளும் பதவி யொன்றே
யம்புவியின் மனுப்பிறவி யான தொன்றே
நடைவழியும் பலமனுவோர்க் கொன்றே யல்லா
ஞல்வேத மறுசமய நடக்கை வேருத்
திடமுடைய தேவர்பல ருண்டென் போர்க
டீநரகுக் காளாவர் திண்ணந் தானே."
இஞ்ஞானநூலைவிடக் கடைக்காண்டம், குணவாகடம் என்னும் இரண்டு வைத்திய நூல்களையும் இவர் ஆக்கினர்.
1. செந்தமிழ், தொகுதி 12 பகுதி 19 (1914)

Page 79
- 140 -
மட்டுவில் க. வேற்பிள்ளை உபாத்தியாயரின் புலியூரந்தாதி உரைப்பதிப்பில் இடம்பெறும் உடுப்பிட்டி அ. சிவசம்புப்புலவரின் சாற்றுகவியிற் குறிப்பிடப்பெறும் கனகசபாபதி யோகி என்பவரே கூழங்கைத் தம்பிரான் என வழங்கப்பெற்ருர் என்று கருத இடமுண்டு. கூழங்கைத் தம்பிரான் தமிழ்நாட்டிற் பயின்று பணிபுரிந்த மடம் Tiruvatur எனுமிடத்திலுள்ளதாகக் காசிச்செட்டியவ்ர்கள் கூறி ஞர்கள் : ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை திருப்பனந்தாள் என்றும் ந. சி. கந்தையாபிள்ளை திருவாரூர் என்றும் கூறியுள்ளனர்1. கூழங்கைத் தம்பிரான ஆதரித்த கோபாலச்செட்டியார் மகன் வைத்தியலிங்கச் செட்டியார் சகம் 1713 ஆகிய சாதாரணளு) சித்திரை மீ (1790) வண்ணை வைத்தீசுவரர் ஆலயத்தின் பிரதிட்டையை ஒப்பேற்றியவர்: பனங்காமம் பகுதியிலுள்ள தேருங்கண்டல் எனும் இடத்திலுள்ள நிலங்களையும் குளத்தினையும் ஒல்லாந்தரிடமிருந்து 1791ஆம் ஆண்டில் விலைக்குப் பெற்றவர் ; 1805ஆம் ஆண்டில் உயில் பிறப்பித்தவர் : கூழங்கைத் தம்பிரான் யாழ்ப்பாணத்தை ஆங்கிலேயர் கைப்பற்றிச் சிறிது காலம் சென்ற பின்பு வியோகமடைந்தனர் என்பர் காசிச் செட்டியவர்கள். இருபாலை சேனதிராய முதலியார், மாதகல் மயில்வாகனப் புலவர், நல்லூர் ப. கந்தப்பிள்ளை முதலியோரும் கூழங்கைத்தம்பிரானின் மாணுக்கர் என்பது சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தால் உணரத்தக்கது. இருபாலை நெல்லைநாத முதலியாரும் கூழங்கைத் தம்பிரானின் மாணவகர் என்பது சுன்னகம் குமாரசுவாமிட்புலவரின் கருத்தாகும்?. கோவாவைச் சேர்ந்த கதலிக குருவாம் காபிரியேல் பச்சிக்கோ சுவாமிகள் தேவப்பிரசையின் திருக்கதை, யோசேவாஸ் முனிவர் சரித்திர மொழிபெயர்ப்பு, நவதின உற்சவம், தேவமாதா அழுகைக்குரவை முதலிய நூல்களை இயற்றி
புள்ளார்.
யோசேப்பு புராணத்திற் சார்புவகையாற் போற்றப்படும் பிலிப்பு த மெல்லோப் பாதிரியார் (1723-1790) 1754ஆம் ஆண்டி லிருந்து வடபகுதியிற் பணிபுரிந்தவர். காசிச்செட்டியவர்கள் ஆற்றுப் படலத்திலிருந்து எடுத்தாளும் ஐந்து பாடல்கள் மட்டுமே இன்று யோசேப்பு புராணத்திற்கு உரியனவாகக் கிடைக்கின்றன. கூழங் கைத் தம் பிரானின் நன்னூலுரையும் கூழங்கையர் வண்ணமும் கிடைக்கவில்லை. நெ. வை. செல்லையா, தமது நல்லைச் சண்முகமாலைப் பதிப்பின் (1924, 1926) பின்னிணைப்பாகத் தரப்பட்ட நல்லைக் கலிவெண்பா, கூழங்கைத் தம்பிரானுற் பாடப்பட்டதாயிருக்கலாம்
1. "ஈழமண்டலப் புலவர்', செந்தமிழ் தொகுதி 12, பகுதி 10 (1914); தமிழ்ப்புலவர் அகராதி, 1989,
பக். 138
;. தமிழ்ப் புலவர் சரித்திரம், 1918, பக் 11

- 4 -
என்று கருதினர். இந் நல்லைக் கலிவெண்பாவினைத் தம் நல்லூர் கந்தசுவாமி எனும் நூலில் (1971) எடுத்தாளும் குல. சபாநாதன் அதனை இருபாலை சேனதிராய முதலியார் பாடியதாகச் சிலர் கருதுவர் என்று உரைத்துள்ளார். சுன்னுகம் அ. குமாரசுவாமிப் புலவர் தமிழ்ப்புலவர் சரித்திரத்திற் கூழங்கைத் தம்பிரான் பாடிய சித்திவிநாயகர் திருவிரட்டை மணிமாலையிலிருந்து ஒரு செய்யுளையும் அவர் பாடிய தனிச் செய்யுள் ஒன்றினையும் எடுத்தாண்டுள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை ஈழமண்டலப் புலவர் எனும் கட்டுரையிலே மெல்லோப் பாதிரியார் பாடியதாகச் சொல்லப்படும் உவமான விளக்கம் கூழங்கைத் தம்பிரான் பாடியதாகச் சிலர் கூறுவர் என்பர்.
Glasmas6IITst. – Kongkanar.
ஞானியராயன்றி வைத்தியரும் புலவருமாய் இருந்த இவர் ஓர் போது தம் நாமகரணப்படி கொங்கண தேசத்தவராய் இருக்கலாம். கொங்கணத்துக்குத் தற்கால நாமதேயங் கோயம்புத்தூர். வாலிபப் பிராயத்திற்ருனே இவர் தவத்தியாய்ப் பொதியமலை வாசிகளாகும் முனீசுரர்களுடன் கூடி அவர்களிடம் நானவித கலைகளிலும் பாடங் கேட்டவர். சிலர் இவர் அகத்தியர் காலத்தில் இருந்தவர் என்றும் அவர் மாணவகருள் ஒருவரென்றுங் கூற வேறுசிலர் திருவள்ளுவர் காலத்தவர் என்பர். பல தேவாராதனைக்கு மாருக இவர் பாடிய ஞானநூல் இவர் நாமதேயப்படி கொங்கணர் ஞானம் என்று அழைக்கப்படுகின்றது. பாடல் மாதிரிக்கு அதில் ஓர் விருத்தம் தருகுவம்
** கடவுளோ னெருவனுண் டேவேத மொன்றே
காரண சற் குருதீட்சை தானு மொன்றே அடைவுடனே யவனருளும் பதவி யொன்றே
யம்புவியின் மனுப்பிறவி யான தொன்றே நடைவழியும் பலமனுவோர்க் கொன்றே யல்லா
னல் வேத மறுசமய நடக்கை வேரு த் திடமுடைய தேவர்பல ருண்டென் போர்க
டீநரகுக் காளாவர் திண்ணந் தானே."
இஞ்ஞானநூலைவிடக் கடைக்காண்டம், குணவாகடம் என்னும் இரண்டு வைத்திய நூல்களையும் இவர் ஆக்கினர்.
1. செந்தமிழ், தொகுதி 12 பகுதி 10 (1914)

Page 80
- 142 -
குறிப்பு கொங்கணச்சித்தர், கொங்கணதேவர், கொங்கணநாதர், கொங்கணநாயகர், கொங்கண நாயனர் என்ற பெயர்களால் அழைக் கப் பெறுபவர் ஒருவரா அல்லது ஒருவருக்கு மேற்பட்டவரா என்பது நோக்கத்தக்கது. கொங்கணர் கொங்குநாட்டைச் சேர்ந்தவர் என்று கொங்குமண்டல சதகம் கூறுகின்றது கொங்குநாட்டிலுள்ள ஊதியூர் மலையிற் கொங்கணர் வாழ்ந்தார் என்று வழங்குவர் ; ஊதியூர் மலையானது கொங்கணகிரி என்றும் அழைக்கப்பெறும். கொங்கணர் தஞ்சாவூரில் முத்தியடைந்தவர் என்று வழங்குவர்.
கொங்கணர் அகத்தியர் காலத்தவர் என்றும், திருவள்ளுவர் காலத்தவர் என்றும் வழங்கும் கருத்துக்களைக் காசிச்செட்டியவர்கள் தந்துள்ளார். ஒரு மரத்தின் கீழ்த் தங்கியிருந்தகாலை தம்மீது எச்ச மிட்ட கொக்கை விழித்துப்பார்த்து எரித்த கொங்கணவர், திருவள்ளுவர் மனைவி வாசுகி உணவிடத் தாமதித்தபோது, அவளை உற்று நோக்கியபோது, கொக்கெனவே நினைத்தனையோ கொங் கணவா என்று அவள் கூறியதாகக் கதையுண்டு. இக்கதை தண்டலை யார் சதகத்திலும் இடம் பெறுகின்றது?. திருமழிசையாழ்வார் பற்றிய குருபரம்பரைக் கதைகளிற் கொங்கணச்சித்தர் ஆகிய இரசவாதி ஒருவர் ரசகுளிகை கொடுக்க முயன்ற கதை வருகின்றது. கொங்கணர் திரிகாண்டமும் இயற்றியதாகச் சிலர் கூறுவர்3 கொங்கணதேவர், கொங்கணநாதர், கொங்கண நாயனர் என்னும் பெயருடையார் இயற்றியதாக வழங்கும் நூல்களையும் கொங்கணர் பேரால் வழங்கும் ஏனைய நூல்களையும் ந. சி. கந்தையாபிள்ளை தமிழ் இலக்கிய அகராதியிலே தந்துள்ளார்.
கொடிஞாழன் மாணி பூதனுர். -
Kodignalan mani Puthanar. இதிகாசம் உணர்த்தும் கடைச்சங்கப்புலவர் சக பேருள் இவரும் ஒருவர். திருவள்ளுவர் நூற்சிறப்புப் பாயிரமாய் இவர் பாடிய வெண்பா பின்வருவது :
" அறனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்
திறனறிந்தேம் வீடு தெளிந்தே - மறனெறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனர் தம்வாயாற்
கேளா தனவெல்லாங் கேட்டு.”*
1. செய், 37 2. செப். 6 3. கா. சுப்பிரமணியபிள்ளை, இலக்கியவரலாறு 1958 பக். 330

- 143 -
குறிப்பு
இப்பெயருடையார் பண்டைய புலவர் பட்டியலிலில்லை. காசிச் செட்டியவர்களும் சதாசிவம்பிள்ளையும் திருவள்ளுவமாலையின் அடிப் படையில் இவருக்கு இடமளித்துள்ளனர். அக்காரக்கனி நச்சுமனர் குறிப்புக் காண்க.
GassiguD(S)s. - Kothamanar.
மேற்கூறப்பட்ட புலவர்க்குச் சொன்னவையே இவர்க்கும் உரியன. இவர் திருவள்ளுவர் நூற்சிறப்புப் பாயிரமாய்ச் சொன்ன வெண்பா வருமாறு. Α
" ஆற்ற லழியுமென் றந்தணர்க ஞன்மறையைப்
போற்றியுரைத் தேட்டின் புறத்தெழுதார்-ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனர் முப்பாலைச் சொல்லிடினு மாற்றல்சோர் வின்று.”*
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்தனவற்றைச் சதாசிவம்பிள்ளை வழி மொழிந்துள்ளார். கோதமனர் என்பவர் தருமபுத்திரனைப் பாடிய தாக வழங்கும் புறப்பாட்டுண்டு. பதிற்றுப்பத்தின் மூன்ரும் பத்தி னைப் பாடியவர் பாலைக் கெளதமஞர் என்பவர். பாலைக் கெளத மஞர் செய்தி சிலப்பதிகாரத்திலும் பழமொழி நானுாற்றிலும் இடம் பெறுவதாகக் கூறுவர்?. அக்காரக்கனி நச்சுமனர் குறிப்புக் காண்க.
Gsmum su85625sur. - Kopalakrishna Ayer.
இவர் சோழநாட்டிலே, சீர்காழித் தாலுகாவிலே, ஆனைதாண்ட புரத்திலே, வடமப் பிராமண குலத்திலே, இற்றைக்கு ஏறக்குறைய எழுபது வருடங்களுக்கு முன் பிறந்தவர். " கல்லாமற் பாதி குல வித்தை" என்ருற்போற் தமது தந்தையாரை ஒப்பச் சங்கீத வித்துவானும் இலக்கண ஆராய்ச்சியுள்ளவருமாயிருந்த இவர், சிறந்த வித்துவ சிரேஷ்டர் என்பதற்குத் தென்றிசையிலே, சோழவள
1. p. 366 2. சிலப்பதிகாரம் 28, 137-138 பழமொழி நானுறு தொடுத்த பெரும்புலவன்’ எனும் பாடல்

Page 81
- 144 -
நாட்டிலே, ஆதனூரிலே அவதரித் த திருநாளைப்போவார் என்னும் நாமகரணம் இடப்பெற்ற நந்தன் என்பாரது சரித்திர கீர்த்தனை சாட்சி கூறும். சேற்றிலே செங்கமலம் உற்பத்தி செய்தா லொப்பப் புலைச்சி வயிற்றிற் பிறந்து, சிவதொண்டின் மேல் நாட்ட முற்று, ஸ்தல தரிசனஞ் செய்து, சிவதொண்டர் அறுபத்து மூவருள் ஒருவரான அந்த நந்தனரின் சரிதத்தை அதி சிங்காரமாக வசன
மாகவும், பதம், சிந்து, தரு, விருத்தம், நொண்டி, அகவல் ஆகிய பல இனப் பாக்களாகவும் அமைத்து இவர் பாடியிருக்கின்றனர். அப்பாடல்களை யொன்ருய்த் திரட்டிப் புத்தகமாய் அச்சிட்டிருக் கிருர்கள். பாடல் மாதிரிக்காக அவையடக்கப் பாட்டை இவ்விடந் தருகின்றேம்.
** சிற்பிகள் காண்போர் சிந்தையு முவக்கச்
செப்புநல் லின்புறத் தீட்டும் விற்பனங் கண்ட வறிவிலா னெழுதும்
விதமென முத்தமி ழென்னுஞ் சொற்புகழ் கல்வித் துறையெலாந் தெரிந்த
தூயநற் புலவர்முன் கருதிப் பொற்புற விசைக்குங் கீர்த்தன மிதனைப்
புவிடமிசை மதிப்பர்க ளம்மா."
இப்புலவர் அந்நந்தனரை அடிமைகொண்ட ஆண்டையின் வழித் தோன்றல் என்ப.
குறிப்பு
* தமிழ் புளூராக்" வெளிவந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருந் தவர் கோபாலகிருஷ்ணபாரதியார். இவர் நாகைக்கருகிலுள்ள நரி மணம் எனுமூரில் இராமசுவாமி பாரதியாரின் புதல்வராகப் பிறந் தவர் : முடிகொண்டான், ஆனதாண்டவயுரம், மாயூரம், திருவிடை மருதூர் முதலிய இடங்களில் வசித்தவர்; திருவையாறு தியாகராய சுவாமிகளிடம் பழகியவர். இவர் காரைக்காலம்மையார், இயற்பகை நாயனுர், திருநீலகண்டநாயனர் ஆகியோர் சரிதங்களைக் கீர்த்தனைக ளாகப் பாடியதோடமையாது சிதம்பரக்கும்மியும் இயற்றியவர் : பல தனிக் கீர்த்தனைகள் பாடியவர். இத் தனிக் கீர்த்தனைகளிற் சில, தம் ஞானசிரியர் கோவிந்தசிவனுர்மீது பாடப்பட்டவை.
நாகபட்டினம் கப்பல் வணிகர் கந்தப்பசெட்டியார் வேண்டு
கோளின்படி பாடப்பெற்ற திருநாளைப்போவார் சரித்திரக் கீர்த்தனை யைக் காரைக்கால் கலக்டர் ஸிஸே துரையின் உத்தரவின்படி

س- l45 -م
காரைக்கால் ஞானப்பிரகாசபிள்ளையும் பிட்டில் அருணசலப்பிள்ளை யும் பரிசோதிக்கப் புரசை க. குண்ணப்பமூர்த்தி கல்விவிளக்க அச்சுக்கூடத்திலே துன்மதிடு) ஐப்பசிமீ (1861) பதிப்பித்தார். இதனையும் சிதம்பரக் கும்மியையும் வீரப்ப செட்டியார் வேண்டு கோட்படி, திருவையாறு சாமிநாத தேசிகர் விவேகவிளக்க அச்சுக் கூடத்திலே துந்துபிடு) ஆவணிமீ (1862) பதிப்பித்தார்;
Gas Tum Gu6056b60T 57git. - Kopalakrishna Dasar.
மேற்படி புலவர் நாமத்துக்கு இயைவுற்ற இப்பெயருடையார் ஒருவரைக் காண்கிருேம். இருவரும் ஒருவரோ தேருேம். அல்ல வென்ற கருத்துற்றே இவர் நாமத்தை வேருய்த் தருகிருேம். இவர் எம்பிரான் சதகம் என்னும் பாடலுக்கு ஆக்கியோன்.
குறிப்பு -
வைணவ சமயத்தினரும் இடையர் மரபினரும் பூரீ பெரும் புதூரைச் சார்ந்தவருமான கோபாலகிருஷ்ணதாசர் கி. பி. பதினெட் டாம் நூற்றண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்பர். "தமிழ் புளூராக்" நூலில் இடம்பெறத் தவறியவர்களில் இவரும் ஒருவ ராவர். காஞ்சிபுரம் அத்தகிரிப் பெருமானை முன்னிலையாகக்கொண்டு பாடிப் பரவும் துதிநூல் எம்பிரான் சதகமாகும்.
கோரக்கநாதர். - Korakkanatha.
சத்தியநாதர், சகோதநாதர், ஆதிநாதர், அநாதிநாதர், வகுளி நாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்க நாதர் எனச் சித்தர் ஒன்பதின்மர் என்பர். இந்நவசித்தருள் ஒருவ ராம் இவர் தம் தபோபலத்தினுற் புலமை, வைத்தியம், இரச வாதம் என்னு மூன்றினும் பெயருடையார். இவர் பாடிய நூறு செய்யுள் அடங்கும் நூலுக்குக் கோரக்கர் வைப்பு என்று பெயர். கஞ்சாப் பூண்டை முதன்முதல் அவுடதப்ாவனையிற் கொண்டுவந் தார் இவர் என்ப. இவரைப்பற்றியே அப்பூண்டுக்குக் கோரக்கர் மூலி எனும் நாமதேயம் வந்திருக்கலாம்.
1. ந. வீ. செயராமன்: த இலக்கியங்கள்,1966 பக். 145
LunT - 0

Page 82
حس- 146 -س.
குறிப்பு
கி. பி. ஒன்பதாம் பத்தாம் நூற்ருண்டுகளிலே பீகார், அஸாம் முதலிய பிரதேசங்களிற் சிறப்புற்றிருந்த பெளத்த மதத்தின் வஜ்ரா யண சம்பிரதாயத்தைச் சார்ந்த 84 சித்தர்களின் ஆசாரியர்கள் நவ நாதசித்தர் எனப்படுவர். இவர்களிற் சைவத்தையும் பெளத்தத்தை யும் இணைக்கும் “நாதபந்த்” எனும் மார்க்கத்தைத் தொடங்கி, ஆன்மீக *ஹடயோக" சாதனையைக் கடைப்பிடித்து, பஞ்சாப், ரர்ஜபுதனம் முதலிய பகுதிகளிற் பிரசாரம் செய்தவரும் மச்சேந்திர நாதரின் மாணவகரும் சுமார் நாற்பது நூல்கள் வாை இயற்றியவருமாகிய கோரக்கநாதர் ஒருவர். வடநாட்டிற் கூறப்படும் கோரக்கநாதர் உட்பட்ட நவநாதசித்தர் பட்டியல் தென்னுட்டிலும் இடம்பெற்றுள் ளது. தாயுமானசுவாமிகள் நவநாத சித்தரைக் குறிப்பிடுகிருர் ; காசிச் செட்டியவர்கள் கோரக்கநாதருக்குத் தனியிடம் அளித்துள்ளார் ; கோரக்கர் வைப்பு எனும் தமிழ்நூலும் வழங்குகின்றது. பிரபுலிங்க லீலையில் அல்லமதேவர் காலத்தவராகக் கோரக்கநாதர் குறிப்பிடப் படுவதாக உரைப்பர். அல்லமதேவர் கி. பி. பன்னிரண்டாம் நூற்றண்டினைச் சேர்ந்தவர்.
கோவூர்க்கிழார். -Kovoorkkelar,
மதுரைக் கடைச்சங்கப் புலவர் சக பெயருட் பெரும்பான்மை யோர் சரிதம் போலவே இவரது சரிதமும் அந்தகாரப்பட்டது. வள்ளுவர் சிறப்புப் பாயிர மாலையுள் இவர் சொன்ன வெண்பா வுளது. அது வருமாறு :
** அறமுத னன்கு மகலிடத்தோ ரெல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப் பன்னிய வள்ளுவனர் பான்முறைநே ரொவ்வாதே முன்னை முதுவோர் மொழி.'
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்தனவற்றைச் சதாசிவம்பிள்ளை வழி மொழிந்துள்ளார். கோவூர்கிழார் என்பவர் பாடிய பதினேழு பாடல் கள் புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய தொகைநூல்களில் இடம்பெறுகின்றன. அவர் சோழன் நலங்கிள்ளி, சோழன் நெடுங் கிள்ளி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சோழன்
1. p. 31, 32, 33, 41, 44-47, 68, 70, 308, 373, 382, 386, 400; 65; 393.

حسن l47 --سس۔
குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் முதலியோரைப் பாடியுள்ளார். அவர் கபிலர் காலத்தவரான மாருேக்கத்து நப்பசலையார் காலத்தவர் என்பது கபிலர் குறிப்பாற் புலணுகும்.
கோவூர்கிழார் என்பவர் பாடிய சில நூற்பாக்கள் பன்னிரு பாட்டியலில் எடுத்தாளப்பட்டுள்ளன.
அக்காரக்கனி நச்சுமஞர் குறிப்புக் காண்க.
Gast, G6ơTíìuủu Qpg56ớìumm.- Konariappa Modeliar.
கந்தபுராணத்தின் ஏழாவது காண்டடிாகிய உபதேச காண்டத் தைச் செந்தமிழ்ப்பா நடையிற் செய்த மகள் வித்துவான் இவர். அப் புராணத்திலே பல படலங்களும் அநேக விருத்தங்களுமுள. பாடல் மாதிரிக்கு அரிபிரமாதியர் பூசை மான்மியப் படலத்தில் ஒரு விருத்தம் தருவம்.
** செய்ய தாமரை மடந்தைநா யகனமர்க் குடைந்தயல் சிதைந்தனன் வெய்ய வெம்புலி நிசாசரற் கமருடைந்து
வேதனு மறைந்தனன் வைய மெங்கணு மரந்தைகொண் டுறுபதந்
துறந்துயிர் வருந்தினர் தெய்வவெண் கயிலை சென்றிருந்து சிவனுக்
கருச்சனை திருத்தினர்."
- குறிப்பு ܠ
கோனேரியப்ப முதலியார் என வழங்கப்பெற்ற குகனேரியப்ப நாவலர் "தமிழ் புளூராக்" நூலில் இடம்பெறவில்லை. இவர் தொண்டைநாட்டுக் காஞ்சிபுரத்திற் பிள்ளைப்பாளையம் எனுமிடத் திற் செங்குந்தர் மரபிற் சிவானந்த முதலியார் புதல்வராகத் தோன் றிஞர் என்பர். தனிச் செய்யுட் சிந்தாமணியின் தொகுப்பாசிரியர் ஆழ்வார் திருநகரியிற் கோனேரியப்பர் பிறந்தார் என்பர். இவர் கச்சியப்ப சிவாசாரியாரைக் குருவாகக் கொண்டவர் என்றும் அவர் கட்டளைப்படி உபதேச காண்டத்தைப் பாடினர் என்றும் வழங்கும் செய்திகளுக்கு உபதேச காண்டத்தில் ஆதாரமில்லை. இவர் காலத்
l. up. 31, 44, 46. 373

Page 83
حسب 148 - شبسته
தைத் துணிவதற்கும் ஆதாரங்கள் இல்லை. கா. சுப்பிரமணியபிள்ளை அக்காலம் கி. பி. பதினெட்டாம் நூற்ருண்டின் முற்பகுதி என்று கூறுவதற்கு ஆதாரம் புலப்படவில்ல்ை,
குகனேரியப்ப நாவலரின் உபதேசகாண்ட மூலம் 1887ஆம் ஆண் டிற் சென்னை கலாரத்நாகரம் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது. ஈக்காடு இரத்தினவேல் முதலியாருரையோடு கூடிய மூலம் சஞ்சிகை வடிவில் முதலில் வெளிவந்து பின்னர் முழுநூலாக வல்லி ப. தெய்வ நாயக முதலியாராற் பரிதாபிளுல மகரரவிமீ (1913) சென்னை பிரஸிடென்ஸி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
விராலிமலையில் முருகனுக்குக் கோயிலெடுத்துப் பரிபாலித்தவரும் திருச்சியையடுத்த வயலூரினைச் சேர்ந்தவரும் காளமேகப் புலவர் காலத்தவர் என்று கருதத்தக்கவருமான? ஞானவரோதயர் அல்லது ஞானவரோத பண்டாரம் என்பவரும் உபதேச காண்டம் பாடியுள் ளார். ஞானவரோதயரின் உபதேச காண்டம் வ. சு. செங்கல்வராய பிள்ளையாற் பரிசோதிக்கப்பெற்று சென்னை அரசாங்க தொன்னுரல் நிலையத்தினரால் 1950ஆம் ஆண்டிற் பதிப்பிக்கப்பெற்றது.
குகனேரியப்பர் நூலில் 4348 செய்யுள்களும் ஞானவரோதயர் நூலில் 2602 பாடல்களுமுள.
ssä syysLD59a Tuis. - Changkara Namachchivayar.
திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டு மகா கல்விக் களஞ்சியமாகிய இவர் கும்பகோணத்துக்கும் மாயாபுரத்துக்கும் இடையில் உள்ள திருவாவடுதுறை மடத்தைச் சேர்ந்தவர். இவர் பிறந்த இறந்த ஆண்டு மாசங்கள் நுட்பமாய்த் தெரியாதபோதும், கிறிஸ்தாப்தம் க எஎ0 ம் (U) வரையிற் சீவித்தவர் என்பது யதார்த்தம். இலக்கணக்கொத்து என்னும் நூல் செய்த சுவாமிநாத தேசிகர்க்கு இவர் நன்மாணக்கர்.
** நன்னெறி பிறழா நற்றவத் தோர்பெறுந் தன்னடித் தாமரை தந்தெனை யாண்ட திருவாவடுதுறைத் தேசிக ஞகிய கருணையங் கடலையென் கண்ணைவிட் டகலாச் சுவாமி நாத குரவன யனுதினம் மனமொழி மெய்களிற் ருெழுதவ னருளால்" என்று நன்னூல் விருத்தியுரையில் இவர் கூறியது இதற்குச் சான்ருகும்.
. இலக்கிய வரலாறு, 1958, பக். 15 2. Séâuûu Âquis 1îui offùqé sa sirs

---- 149 حسب
மன்னிய வூற்று மலைமரு தப்பன்
நன்னூற் குரைநீ நவையறச் செய்து
பன்னுரற் புலவர்முன் பகர்தி** என்றபடியே, 'ஊற்றுமலை" மருதப்பன் என்னும் பாளையப்பட்டுக் காரனது வேண்டுகோளின்படி சனகாபுர வாசியாகும் பவணந்தி முனிவர் செய்த நன்னூலுக்கு இவர் விருத்தியுரை செய்தனர்: பவணந்தி முனிவரது மாணக்கரும் நன்னூற்குச் சிறப்புப் பாயிரஞ் சொன்னவருமாகிய சமணமுனிவர் செய்த உரையினின்று மிக்க மாண்பு செறிந்த இவ்வுரை மாட்சி தேரார், வேம்பு கரும்புகளுக் குள்ள வேற்றுமை உணராதாரே. இவர் நன்னூற்கு உரை செய்தார் என்பதற்குச் சாட்சி வருமாறு :
'முன்னுாற்கு மலயமுனி தன்னுாற்கும் புவியிடத்து
முதியோ ராற்சொல்
எந்நூற்குந் தமிழ்க்கடலு வினியியற்று நூற்கும்வகை
யிதனுற் காட்டி
நன்னுாற்கு விரித்துரைசெய்? தான்றிகாந் தத்தளவு
நடாத்துங் கீர்த்தித்
தென்னுாற்று மலைமருதப் பன்சொலச்சங் கரநமச்சி
வாயன் ருனே."
நன்னூல் விருத்தி உரையின்றி இப்புலவர் செய்த வேறு நூலா வது பாடிய பாடலாவது உண்டோ, கேட்டிரோம் கண்டிரோம்.
-- -- குறிப்பு
கி. பி. 1770ஆம் ஆண்டிற் சங்கரநமச்சிவாயர் வாழ்ந்துகொண் டிருந்தார் என்று காசிச்செட்டியவர்கள் கூறுவதற்கு ஆதாரம் யாதெனப் புலப்படவில்லை. இரேனியஸ் பாதிரியாரும் (Rev. C.T. B. Rhenius) தமது நூலில் 1770ஆம் ஆண்டளவிலே சங்கரநமச்சிவாயர் திருநெல்வேலியில் வசித்தார் என்று கூறியுள்ளார். சங்கரநமச்சி வாயரின் ஆசிரியர் சுவாமிநாததேகிகர் கி. பி. பதினேழாம் நூற் முண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். எனவே சங்கரநமச்சிவாயர் பதினெட்டாம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தார் என்று கூறலாம்.
1. இவ்வடியைத் தொடரும் இரு அடிகள் விடப்பட்டுள்ளன 2. து. ப. விருத்தியுரை செய் 3. A Grammar of the Tamil Language, 1836

Page 84
مست۔ 50[ ----
சங்கரநமச்சிவாயர் கண்ட நன்னூலுரையைச் சிவஞான முனிவர் திருத்தியமைத்தார். சங்கரநமச்சிவாயர் செய்ததும் சிவஞான முனிவர் திருத்தியதுமான உரையை ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணம் வித்தியானுபாலன யந்திரசாலையில் விரோதிகிருதுளு ஐப்பசிமீ" (1851) பதிப்பித்தார். சிவஞான முனிவரின் திருத்தங்களை நீக்கிச் சங்கரநமச்சிவாயர் உரையை உ. வே. சாமிநாதையர் 1925ஆம் ஆண்டிற் பதிப்பித்தார். சமணமுனிவர் குறிப்புக் காண்க.
சங்கர பண்டிதர். - Changkara Pandithar.
இவர் யாழ்ப்பாணம் உடுவிற் கோயிற்பற்றைச் சேர்ந்த சுன்னுகத்தில் வேளாளர் மரபிலே, விரோதி வருஷம் சித்திரை மீ” உக வட பிறந்தவர். இவர் தந்தையார் சிவகுருநாதர். நீர்வேலியே இவர் வசித்த ஊர். கந்தரோடையிலிருந்த அப்பாப்பிள்ளை என்ப வரே இவர்க்குத் தமிழ் ஆசிரியர். சம்ஸ்கிருத திராவிட விற்பன்ன ராகிய வேதாரணியம், சுவாமிநாத தேசிகரிடம் சித்தாந்த உபதேசம் பெற்றவராம். இவர் பிராமணரைப்போலச் சுதியோடு வேதமோத வல்லவராதலில், வேதாரணியத்திற் போயிருந்தபோது சிலர் வேண்டு கோளின்படி அவ்வாறு செய்தார் என்றும், அதனைக் கேட்ட பிராம ணர்கள் வெட்கமடைந்தும் இவரைப் பாராட்டினர்கள் என்றுங் கேள்வி. தமிழ் இலக்கண இலக்கியங்களிலன்றி ஆகமசாஸ்திரங்களி லும் மா நிபுணராம். இவர் இங்கிலிஷ் பாஷையுஞ் சற்றே அறிந் தவர் என்று நினைக்கிருேம். இவர் தமிழிலே சைவப்பிரகாசனம் என்னும் ஓர் நூல் செய்திருக்கின்ருர். அதற்குப் பலர் சிறப்புக் கவிகள் சாற்றினர். இஃதன்றிச் சம்ஸ்கிருத பாலபாடம், சம்ஸ்கிருத இலக்கணம் ஆதியாம் வேறு சில நூல்களோடு சிலவற்றுக்கு உரையுஞ் செய்தனர். கிறிஸ்துமதத்துக்கும் போவித் தெய்வ வணக்கத்துக்கும் விரோதமாக இவர் சில ஆட்சேபங்கள் எழுதினர். முந்தினதற்கு விரோதமாகக் கிறிஸ்து சமயிகள் பலர் மறுப்பு எழுதிப் பிரசரித் தனர். பிந்தினது இவரது நிரியாணத்தின் பின் " சைவ உதயபானு' பத்திரிகையிலே பிரசரிக்கப்பட்டிருக்கின்றது.
ஆறுமுகநாவலர் கத்தியரூபமாகச் செய்த பெரியபுராணத்துக்கு இவர் சிறப்புப் பாயிரம் பாடினர். இவரை நாம் பலதரமும் கண்டு சம்பாஷித்திருக்கிமுேம், வித்துவாமிசர்க்குப் பெரும்பாலுஞ் சம்பவிக் கும் அகால மரணமே இவர்க்கும் நேரிட்டது. வடதேச யாத்திரை செய்து திரும்பும்போது புதுச்சேரியிலே, இற்றைக்கு ஏறக்குறையப் பத்து வருடங்களின் முன், அதாவது பிரமோதுரத வருஷம்,

- 15 -
புரட்டாசி மீ" க உ வ ச உ வயசுவரையில் வைசூரி கண்டு தேகவியோக மாயினர். இவர் புத்திரர் சிவப்பிரகாச பண்டிதர் 'வாழையடி வாழையாய் ' வல்ல கல்விமானுய், இந்நிமிஷ வரையும் பல மாணுக் கருக்குப் பாடமோதி வருகின்ருர். இவரது தேகவியோகத்தின் பேரிற் பலர் சரமகவி பாடினர்.
குறிப்பு
"தமிழ் புளூராக்" நூல் வெளிவந்தபோது வாழ்ந்துகொண் டிருந்தவர் சங்கரபண்டிதர். இவர் காலம் 1829-1870, இவருடைய தாயார் நீர்வேலி தெய்வயானையம்மையார் மனைவி தங்கமுத்து அவர்கள், இவர்தம் மாதுலர் நீர்வேலி சின்னத்தம்பியின் புதல்வி யாவர். இவர் தமிழாசிரியர் அப்பாப்பிள்ளை என்றழைக்கப்பட்ட கந்தரோடை நாகநாத பண்டிதர் அவர்கள், இருபாலை சேனதி ராயரின் மாணவகராவர். இவர் வேதாரணியம் வை, சுவாமிநாத தேசிகரிடம் சங்கதக் கல்வியும் அவர்தம் சகோதரர் வை. முத்துச் சுவாமி தேசிகரிடம் நிருவாண தீட்சையும் அவர்தம் மைத்துனர் அ, சுவாமிநாத தேசிகரிடம் சித்தாந்த அறிவும் பெற்றவர் : சுன்னகம் அ. நாகநாதபண்டிதரிடமும் சங்கதம் கேட்டவர்.
சங்கரபண்டிதர் மிலேச்சமத விகற்பம் (1878), கிறிஸ்துமத கண்டனம் (1882), சிவதூஷண கண்டனம் (1878), அனுட்டான விதி, சிரார்த்த விதி, வருணுச்சிரம தருமம் முதலிய தமிழ் நூல் களையும் இயற்றியுள்ளார். நீர்வேலி வே. காராளபிள்ளை பதிப்பித்த சங்கரபண்டிதர் சற்பிரசங்கம் (1910) எனும் தொகுப்பில் முன்னர் வெளிவந்த சிவதூஷண கண்டனத்தோடு பண்டிதரவர்களின் பிர சங்கங்களுட் சிலவும் இடம்பெறுகின்றன. ஆறுமுகநாவலரின் சைவ தூஷண பரிகாரத்தின் உபோற்காதமும் பெரியபுராண சூசனத்தி லுள்ள மொழிபெயர்ப்புகளும் பண்டிதரவர்களுடையனவே என்று சங்கரபண்டிதர் சற்பிரசங்கம் கூறுகின்றது. சிவபூசையந்தாதிச்குப் பண்டிதரவர்கள் இயற்றிய விரிவுரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. நீர்வேலி பீதாம்பரப்புலவரின் மறைசைக் கலம்பகத்தின் காப்புக்குப் பண்டிதரவர்கள் விருத்தியுரை கண்டுள்ளார். இவர் கூர்மபுராணத் தையும் பரிசோதித்து வைத்திருந்தார் என்பர்.
சங்கதமொழிக் கல்வியின் பொருட்டுச் சங்கர பண்டிதர் பால சிகூைடி (1880), சம்ஸ்கிருத இரண்டாம் புத்தகம், தாதுமாலை (1909), சத்தசங்கிரகத்தின் பூர்வார்த்தம் (1890) முதலிய நூல்களை இயற்றி யுள்ளார் ; மேலும் பிரசாதசட்சுலோகி, சித்தாந்த சாராவளி, அக நிர்ணயம், அகபஞ்சசட்டி, வடமொழிச் சிவஞான போதம் என்பவற்

Page 85
- 52 -
றிற்குத் தமிழுரையும் கண்டனர். சுவாமிநாத பண்டிதரின் சிவஞான போத மாபாடியப் பதிப்பிற் சேர்க்கப்பட்டுள்ள வடமொழிச் சிவ ஞானபோதத் தமிழுரை சங்கரபண்டிதருடையதாகும். இவர் பரி சோதித்த அமரநிகண்டின் பிரதம காண்டம் சிவப்பிரகாச பண்டித ரால் வெளியிடப்பெற்றது. இவர் பரிசோதித்து வைத்திருந்த பெளஷ்கராகம விருத்தியும் அகோர சிவாசாரிய பத்ததி நிர்மலமணி வியாக்கியானமும் அம்பலவாண நாவலருக்கும் ஞானப்பிரகாச முனி வரின் சங்கத நூல்கள் கைலாசபிள்ளைக்கும் அவற்றைப் பதிப்பிக்க உதவின. மிருகேந்திர விருத்தி, தேவி காலோத்தர விருத்தி, சித் தாந்தப் பிரகாசிகை, தருக்க பரிபாஷை முதலியவற்றையும் பண்டித ரவர்கள் பரிசோதித்து வைத்திருந்தார்கள்.
கீரிமலை கா. சபாபதிக்குருக்கள், சுன்னகம் பூ. முருகேச பண் டிதர், மாதகல் சு. ஏரம்பையர், கோப்பாய் சு. சபாபதி நாவலர், ஆவரங்கால் சு. நமசிவாயப் புலவர், வடகோவை பீ. சபாபதிப் பிள்ளை முதலியோர் பண்டிதரவர்களிடம் பயின்றவர்களிற் குறிப்பிடத் தக்கவர்,
பண்டிதரவர்களின் சிரேட்ட புதல்வர் சிவப்பிரகாச பண்டிதர் தந்தையிடமும் அவர் மறைவின் பின் நல்லூர் வே. சம்பந்தப்புலவர், ஆறுமுகநாவலர் ஆகியோரிடமும் பயின்றவர் நீர்வேலி ச. பீதாம் பரப் புலவரின் மகளை மணந்து பண்டிதர் நடராஜப்பிள்ளையையும் தெய்வயானைப்பிள்ளையையும் மக்களாகப் பெற்றவர் ; நீர்வேலி சைவப்பிரகாச வித்தியாசாலையை (பின்னர் அத்தியார் இந்துக் கல்லூரி) நிறுவியவர்; வண்ணை காவிய பாடசாலையிற் சங்கத ஆசிரிய ராகத் திகழ்ந்தவர் ; அகராதித் தொகுப்பிற்கும் நூற் பரிசோதனைக் கும் உதவியவர். இவர் இயற்றிய இந்திரகீலபுரப்பெயர்த் திருக்கழிப் பாலைப் புராணம் 1954ஆம் ஆண்டிற் பதிப்பிக்கப்பெற்றது : பால பாட நூல்கள் சிலவற்றை இயற்றியதோடமையாது பாலாமிர்தம் எனும் வசனநூலையும் எழுதினர். 1903ஆம் ஆண்டில் வெளிவந்த பாலாமிர்தத்தில் ஆசிரியர் இயற்றிய இயற்றமிழ் இலக்கணசாரம், வாக்கிய நிரூபணம் எனும் இலக்கண நூல்கள் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. இவர் திருச்செந்தூர்ப் புராணத்திற்கும் வில்லி பாரதம் கிருட்டினன் தூதுச் சருக்கத்திற்கும் உரை கண்டுள்ளார் : சம்ஸ்கிருத முதற் புத்தகத்தோடு சிவானந்தலகரி நகுலேசுரமான் மியம், சைவாசெளசதீபிகை என்பவற்றிற்குத் தமிழுரையும் தந்துள் ளார்; தந்தையாரியற்றிய சைவப்பிரகாசனம், மிலேச்சமத விகற் பம், சிவதூஷண கண்டனம், சத்தசங்கிரகத்தின் பூர்வார்த்தம், சிராத்தவிதி, தாதுமாலை, அமரம் பிரதம காண்டம் முதலியவற்றைப் பதிப்பித்துள்ளார். இவர் ஆனந்த ஞ) மார்கழி மீ (1914) வேதாரண் யத்தில் மறைந்தார்

- 53 -
சங்கரபண்டிதரின் கனிஷ்ட புதல்வர் சிவகுருநாதபிள்ளை; இவர் தந்தையிடமும் வித்துவசிரோமணி ந. ச, பொன்னம்பலபிள்ளையிட மும் பயின்றவர்; ஆறுமுகநாவலர் தமையனுர் சின்னத்தம்பி உடை யாரின் பெளத்திரியும் இராமலிங்க உடையாரின் புத்திரியுமாம் பொன்னம்மாளை மணஞ்செய்தவர்; காஞ்சிபுரத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்; விஞ்ஞான வர்த்தினி எனும் பத்திரிகையை நடாத்திய வர்களில் ஒருவர்; வேதாரணியத்தில் மறைந்தவர்.
g Nhas Jr J Tfut, - Changkarasariar.
இவர் கும்பகோணத்திலேயுள்ள மாத்துவப்பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். இந்தியாவிலுள்ள குருக்கள்மார் எவர்க்குஞ் சிரேஷ்டர். கோவிந்த யோகிகள் என்பார் இவர் ஆசிரியர். இவர்க்கு இராச மானியங்களோடு பற்பல வரிசைகளையுந் தமிழ் அரசர் ஈந்திருக் கின்றர். இலக்கணம், இலக்கியம், சோதிடமாதிய சுச கலைஞானங் களின் எப்பகுதியிலும் தமக்குத்தாமே சமானங் கொண்ட இவர் பிரஸ்தானப்படும்போது அதிசம்பிரமத்தோடு அரசரொப்பவே பவனி போவார். இவர் நீலகண்ட சிவாசாரியரோடு தருக்கித்துத் தோற்ருர் என்றும், சைவத்தைச் சார்ந்தும் பழையபடியே விஷ்ணு சமயியாயினர் என்றுஞ் சொல்லப்பட்டிருக்கிறது. சிவானந்தலகரி என்னும் பாடலை இயற்றினுரன்றி அநேக உபநிடதங்களுக்கு வியாக் கியானமுஞ் செய்தனர். உடலறி விளக்கம் எனத் தமிழில் வழங்கும் பாடல் சம்ஸ்கிருதத்தில் இவர் செய்த நூலின் மொழிபெயர்ப்பு என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவர் செய்த பாடலென்றும் விளங்கு கிறது. நாதாந்த விளக்கம் எனும் நூல் செய்தாரும் இவரே. ஐம் பத்தைந்து வயசில் நிரியாணதசை அடைந்தார். இவர் பட்டத் துக்கு வருபவர் யார்க்கும் இந்தப் பெயரே பெயராகும். இப்போது இருப்பவர்க்கு இந்திய துரைத்தனத்தார் சில பிராதின் பெயரால் அபராதமிட்டனர். இவர் பாடல் மாதிரிக்காய் உடலறி விளக்கத்தி லிருந்து ஒரு விருத்தந் தருகின்ருேம்:
** திக்குமறை புகழுமனு சாத்தி ரங்கள்
சிறந்தசிதம் பரமேவு ஞான தேசி பக்கமிரு புறமுமா னக்கர் குழப்
பன்னிரண்டு சமயத்துப் பல்லோர் வந்து தக்கமிகுங் கனகசபை யருளு டையான் சங்கரா சாரியிரு பாதம் போற்றி மிக்ககுரு பரனேயைம் பூத மென்று
விளம்புவதை யடியார்க்கு விதிக்க வென்றர்." இப் பாடலில் நூறு விருத்தங்களுள8

Page 86
- 54 -
குறிப்பு
சதாசிவம்பிள்ளை தமது நூலிற் புதிதாய் விதந்து கூறும் சரிதத் தில் பூரீ ஆதி சங்கர பகவத் பாதாள் அவர்களைப் பற்றிய செய்திக ளோடு பின்வந்தோர் செய்திகளையும் இணைத்துள்ளார். இமயம் முதல் காஞ்சிவரை நிறுவப்பட்ட சங்கராசாரியர் மடங்களின் தலை வர்கள் யாவரும் சங்கரராக வழங்கப்படுவதால் இத்தகைய மயக்கம் ஏற்படுவதைத் தவிர்த்தல் சாலாது.
பூரீ ஆதிசங்கர பகவத் பாதாள் வட திருவிதாங்கூரிலுள்ள காலடி எனும் கிராமத்தினைச் சேர்ந்தவர் என்றும் நம்பூதிரி பிரா மணர் என்றும் ஆத்ரேய கோத்திரத்தினர் என்றும் கூறுவர். சதா சிவம், நாராயணர், பிரம்மா, வசிஷ்டர், அவர் மகன் சக்தி, அவர் மகன் பராசர், அவர் மகன் வேதவியாசர், அவர் மகன் சுகர் கெளடபாதர் ஆகியோர் வழிவந்த அத்வைத பரம்பரையில் அடுத்த வரான கோவிந்த பகவத் பாதர் என்பவர் ஆதிசங்கரரின் குரு வாவார். ஆதிசங்கரர் காலம் பற்றி வேறுபட்ட கருத்துகள் நிலவு கின்றன. நேபாள நாட்டு வரலாற்றுக் கால வரிசைநூல் ஒன்றின் மூலம் அவர்காலம் கி. மு. 509 முதல் கி. மு. 477 வரை என்று தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றது என்பர் சிலர். கெளதம புத்தருக்குப் பின்வந்தவராகக் கருதக்கூடிய ஆதி சங்கரர், அவர் நிர்வாணம் அடைந்த கி. மு. 473 க்கு முன்பே மறைந்துவிட்டதாகக் கூறல் பொருத்தமின்று. சிருங்ககிரி மடத்தின் குறிப்புகளின் உதவி வியுடன் சிலர் ஆதிசங்கரர் காலம் கி. பி. 788 முதல் கி. பி. 820 வரை என்று அறுதியிட்டுக் கூறியுள்ளனர். இக்குறிப்புகளால் அறியப் படுபவர் காஞ்சிபுரம் பூரீ சாரதா மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவர் என்றும் ஆதிசங்கரர் அல்லர் என்றும் கூறுபவர் உளர். செளந் தரியலகரியின் 75ஆம் பாடல் குறிப்பிடும் " திராவிடசிசு "திருஞான சம்பந்தநாயனுரே என்றும் அதனுல் அந்நூலின் ஆசிரியர் ஆதி சங்கரரின் காலம் ஏழாம் நூற்ருண்டிற்குப் பிற்பட்டது என்றும் சிலர் கூறுவர். ஆயினும் செளந்தரியலகரியின் ஆசிரியர் இன்னர்தாம் என்று துணிந்து கூறுவதற்கு ஆதாரமில்லை என்னும் கருத்தும் கவனித் தற்குரியது. சங்கரர் பெயரால் வழங்கும் சிவபுஜங்கஸ் தோத்திரத்திற் சுந்தரமூர்த்தி நாயனரும், சிறுத்தொண்ட நாயனரும் குறிப்பிடப் பட்டுள்ளதாகவும் கூறுவர்.
நீலகண்ட சிவாசாரியர் ஆதிசங்கரர் காலத்தவர் என்ற கருத்து தற்காலத்தில் இல்லை, அவர் பிரம சூத்திரத்திற்குச் சிவபரமாகப் பாடியம் செய்தவர். நீலகண்ட பாடியம் என வழங்கும் அப் பாடியத் தினைக் காசிவாசி செந்திநாதையர் தமிழில் மொழிபெயர்த்து வெளி

--سے 155. سس۔
யிட்டுள்ளார். நீலகண்ட சிவாசாரியர் காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டிற்கு முற்பட்டதன்று என்பர்.
பகவக்கீதை, பிரம்மசூத்திரம், உபநிடதங்கள் ஆகியவற்றிற் கான பாடியங்கள் ஆதிசங்கரரின் ஆக்கங்கள் என்பதிலே கருத்து வேறுபாடில்லை; அவர் பெயரால் வழங்கும் ஏனைய செய்யுணுால்கள் பற்றிக் கருத்துவேறுபாடுண்டு. அவற்றிலே சிவானந்தலகரியுமொன்று. ஆதிசங்கரர் தமிழில் இயற்றியதாக எந்நூல்களும் வழங்கவில்லை. உடலறி விளக்கம், நாதாந்தவிளக்கம் என்பன அவர் மரபில் வந்த வர்களால் இயற்றப்பட்டிருக்கலாம்.
ஆதிசங்கரர் துவாரகையிலே துவாரகா மடத்தினையும் பதரிகா சிரமத்தில் ஜோதிர் மடத்தையும் புரிஜகந்நாதத்திற் கோவர்த்தன மடத்தையும் சிருங்ககிரியிற் சிருங்ககிரி மடத்தையும் காஞ்சியில் பூரீ சாரதா மடத்தையும் நிறுவியதோடு வேறு பல மடங்களையும் நிறுவியதாக வழங்குவர்.
F’SIN Lypsos. — Chaddimuny.
இவர் மகா இருடி எனப் பெயர்படைத்த அகஸ்தியர் காலத்திலே இருந்த ஒரு தவத்தி, தவத்தாற் சிறந்த முனிவரும் கலைஞான வல்ல வராகிய புலவருமாய் இருந்தாரன்றி ஆயுணுரல் வல்ல வைத்தியரு மாய் இருந்தார். இவர் ஞானநூறு என்னும் வேதாந்த நூலோடு கல்ப்பநூறு, வ்ாதநிகண்டு என்னும் பிற நூல்களையும் இயற்றினர். இவ் வாதநிகண்டு இரசவாத வித்தைக்கு ஒர் திறவுகோலாம். சடாட்சரக் கோவைக்கும் இவர் ஆக்கியோர். சாதியாற் சேணியர் என்று இவர் கூறப்படுகின்ருர்,
குறிப்பு
" தமிழ் புளூராக்" நூலில் இடம்பெறும் செய்திகளோடு சட்டை முனியின் சாதியையும் சடாட்சரக் கோவையையும் புதிதாய்க் கூறு கின்ருர், பாவலர் சரித்திர தீபகமுடையார். உரோம முனி என்பவர் சட்டைமுனியின் காலத்தவர் என்று உரோமரிஷிநாயனர் வரலாற்ருற் புலனகும். சட்டை முனியின் ஆசிரியர் போகர் என்றும் அவர் மாண வகர் பாம்பாட்டிச் சித்தர் என்றும் சிலர் கூறுவர். இவற்றிற்குரிய
1. கா. சுப்பிரமணியபிள்ளே இலக்கியவரலாறு 1958, பக், 330-332

Page 87
- 156 -
ஆதாரம் யாதெனப் புலப்படவில்லை. சட்டைமுனி ஆயிரத்திரு நூறு, நவரத்தின வைப்பு என்னும் நூல்களையும் சட்டைமுனி இயற்றியனவென்று கா. சுப்பிரமணியபிள்ளை கூறுவர். ந. சி. கந்தை யாபிள்ளை சட்டைமுனி திரிகாண்டம், சரக்கு வைப்பு, வாதவைப்பு, சட்டைமுனி ஞானம் இருநூறு என்னும் நூல்களையும் இயற்றிஞ ரென்று கூறுவர்?. தமிழ் இலக்கிய அகராதியில் ந. சி. கந்தையா பிள்ளை சட்டை முனி நாயனர் நூல்களையும் சட்டை முனியின் ஏனை
நூல்களையும் தந்துள்ளார்."
8F6íöTLu 566hu q 6éA). — Chanpakavadivy"
விதூஷி, வித்துவாமிசை என்று சொல்லுதற்கு இலக்காயிருந்த இந்து அரிவையருள் இவரும் ஒருவர். இவர் உறையூர்ப்பதியில் இருந்து அரசியற்றிய கரிகால சோழராசாவின் அரமனை ஆலாத்திப் பெண்கள் பன்னிராயிரம் பேருக்குத் தலைவியாகிய மரகதவடிவி என் பாளது அருமைப்புதல்வியாம். இவருக்குத் தமிழறியும் பெருமாள் என்றும் பெயர். இவரது சரிதம் அநேகர் நம்பொணச்சரிதமாயினும் ஒரு புத்தகத்திற் கண்டபடி சுருக்கிச் சொல்லுவம். இவர் முற் செனனத்தில் அளகாபுரி எனும் பட்டணத்தில் இருந்து அரசு செய்த அளகேஸ்பரராசன் புத்திரி என்றும், ஏலங்குழலாள் என்பது இவர் நாமம் என்றும், பாடலிபுர இராசணுகிய பக்திரகிரி இராசாவின் புத்திரன் சந்தனகுமாரன் மேல் இச்சை கொண்டு உயிர் துறந்தார் என்றும், இவர் இறக்கவே இராசகுமாரனும் இறக்க இருவர் உயிரும் ஆவேசமாய் ஓர் சத்திரத்திற் தங்கின என்றும், அவ்விடம் ஒரு இராப் படுத்து உறங்கப்போன ஒளவையாரை நான்கு சாமங் களிலும் அந்த ஆவேசங்கள் சாடப்போனபோது அவர், சாமத்திற்கு ஒவ்வொன்ருய்
* வெண்பா விருகாலிற் கல்லான வெள்ளோலை
கண்பார்த்துக் கையா லெழுதானை-பெண்பாவி
பெற்ருளே பெற்ருர் பிறர்சிரிக்கப் பெற்ருளென்
றெற்ருேமற் றெற்ருேமற் றெற்று' என்றது முதலாம் நாலு வெண்பாக்களைப் பாட ஈற்றில் அவை
தஞ் சுய தோற்றத்தோடு ஒளவையார் முன்னர் வந்து தங்கள் வர லாற்றைச் சொல்ல, அவர் கருணைக்கண் வைத்து நீ போய் இன்ன
1. axiálu auga) g, 1958, tuš, 330 2. தமிழ்ப்புலவர் அகராதி, 1960 பக், 150 8. பக், 42

- 57 -
ஆலாத்திப் பெண் வயிற்றில் உற்பவிப்பாய் என்று பெண் ஆவேசத் துக்குச் சொல்லி, ஆண் ஆவேசத்தை நோக்கி, நீ விறகுதலையன் மகளுய்ப் பிறந்து இப்பெண்ணை விவாகஞ் செய் என்று சொன்னர் என்றுங் கதையுளது. மரகதவடிவி இவரைப் பெற்றபோது, பிரகு திகை எங்கும் சண்பகமலர் வாசனை உண்டுபட்டதாற் சண்பகவடிவி என்னுங் காரணநாமம் இவர்க்கு இடப்பட்டது அவர் பிரபலங் கொண்ட வித்துவாமிசையாய் இருந்து இளவயசிற்ருனே அரிய நூல் களைக் கற்றுப் பாண்டித்தியம் பெற்றிருந்த காரணத்தாற் தமிழறியும் பெருமாள் எனும் நாமத்தை அரசன் இவர்க்கு இட்டுப், புறம்பான மாட மாளிகைகளை இவர்க்காகக் கட்டிப் பல பெண்களைத் தோழி களாகக் கொடுத்துத் தன் கண்மணிபோல இவரைச் சம்ரட்சணை பண்ணி வந்தான்.
w
விவாகத்துக்குரிய பிராயம் நேரிட்டபோது அநேகர் இவர் மேல் மோகித்துப் பாணிக்கிரகணஞ் செய்ய வேண்டியும் இவர் உடன் படாது, எம்மோடு வித்தியாதருக்கமிட்டு வென்றவரையே யாம் மணம் புரிவம் எனச் சொல்லிக்கொண்டனர். ஆதலில் அநேகர்: எமக்கு எமக்கு என்று ஏமாந்திருந்தும், யாம் யாம் என்று எழுந்தும், இவரை வாதிற் கெலிக்காது தோல்வி போயினர். இதனல் இவர் இருபத்தைந்து பிராயமட்டும் பிரமசாரியாய் இருந்து, ஒரு நாட் தம் தாதிகளோடு வீதி போம்போது ஒளவையார் வாக்கின்படி பிறந்திருந்த விறகுதலையனைக் கண்டு, அவனது குரூப அலங்கோலத் தைப் பார்க்கப் பொருராகிக் காறித் துப்பி, இன்னுக்கும் ஒருத்தி வாழ்க்கைப்பட இருக்கின் ருளோ என்று பரிகாசித்துப் போயினர். இவ்வார்த்தை காதில் விழப்பெற்ற அவ் விறகுதலையன் இவரைத் தான் எதுவகையும் வதுவை செய்யவேண்டும் எனும் அபேட்சை யாற் பலவாறு முயன்றும் பிரதிகூலப்பட்டு, மதுரைச் சங்கத்தாரைக் கொண்டு உனது YMத்தியாகர்வம் அடக்குவிக்கிறேன் என்று சபதம் போட்டுப் போய், இவர்க்கு விரோதமாய்ச் சங்கத்தாரைக் கிளப்பி வைரியராக்கி விட, இவரோ சங்கத்தவரைத் தூவுத்துப் பாடல் ஒன்றனுப்பியதாற் சங்க நாயகராகிய நக்கீரர்; நாமே போய் அவளைச் சயித்து வருகிருேம் என்று எழுந்தனர். அப்போது, சங்கத் தார் நக்கீரரை நோக்கி, அந்தப் பெண் ஒளவையார் கருணைபெற்று இருக்கின்ருளாமே. அப்பெயர்ப்பட்டவளைத் தாங்கள் ஒன்றியாய்ப் போய்க் கெலிப்பது எங்ங்ண் என்று மன வருத்தத்தோடு நைந்து கூற, நக்கீரர் அவரைப் பார்த்து;
**சென்றுறையூர் புக்குச் சேயிழையை யான்கண்டு வென்று தமிழழித்து மீளேனேல் - மண்ணில் விருந்திருக்க வுண்ட வெறுவிலியோ டொப்பேன் வருந்துவரோ சங்கத் தவர் '

Page 88
- 158 -
என்று சபதங் கூறி அவ் விறகுதலையன் தம் நிழல்போற் பின்ருெ டர்ந்துவர நடந்து, சண்பகவடிவியின் கடைவாயிலிலே தன் உடுப்பை மாற்றி விறகுதலையன் வேஷம் பூண்டு, பசிய வாழைத் தண்டுகளைக் கட்டி விறகுசுமையாக்கிக்கொண்டு:
** வெய்யோன் கதிரெறிப்ப வேற்கண்ணுள் பின்ருெடரப்
பைய வருதென் பயனறியேன் - துய்ய மலர்த்தடங்கண் வாய்த்த மயிலனையீர் கொள்ளீர் விலைக்கு விறகோ விறகு '
என்று கூறித் திரிந்தனர். இதைத் தோழியர் கேட்டுப்போய்த் தம்
நாச்சியாராகிய இச் சண்பக வடிவிக்குச் சொல்ல இவரோ :
' உள்ளீரம் பச்சை புகையு மெரியாது
கொள்ளிர் விறகென்று கூறினீர் - மெள்ள வீணரோ போம்போம் வீணரோ நீரும் தாகரோ சங்கத் தவர் "
என்று பாடி அனுப்பினர். இவ்வாறு சிலநேரம் இருபேரும் தாதி மார் மூலமாகப் பாக்களிற் சம்பாஷித்து ஈற்றில் முகமுகமாய் முட்டிப், பாக்களின் பொருட்கேட்டுப் பொருட் சொல்லி நெடு நேரந் தருக்கித்தபின் சபதம் இட்டனர். யான் தோற்ருல் உனக்கு அடிமையாகுவன் என்றனர் நக்கீரர். நான் தோற்றற் தமிழறிவாள் என்னும் நாமத்தை மாற்றிச் சிரமொட்டை தட்டிக், கழுதைமேல் ஏற்றி, ஊரிலே ஒட்டிவிடும் என்ருர் சண்பகவடிவி. நக்கீரரோ அப்படியன்று. நான் சொல்லும் ஒருவனுக்கு நீ மனைவியாகுவை என்று சொல்லி நெடுநேரந் தருக்கித்து, இனி இவளை உபாயத்தால் அன்றி இலக்கண இலக்கியங்களால் வெல்லக்கூடாது என்று யோசித் துத் தாம் முன் வரும் வழியிலே ஆலமரத்தின் அடியிலே வேட னுெருவன் கட்டாப் பாரையால் வள்ளிக்கிழங்கு கிண்டிக்கொண் டிருந்த காட்சியைச் சுட்டி :
* நச்சுத் தேரேறி நடுக்காட்டில் வேடுவச்சி
பச்சைக் கொடியாட நின்ருளே - இச்சித்தே மேல வனங்கவர்ந்து மின்கொண்டு போகின்ற மூலபலன் கண்டாய் மொழி '
என்று பாடி இதன் கருத்தை விள் என்ருர், " அங்கே தப்பி இங்கே தப்பி அகப்பட்டுக் கொண்டார் தும்மட்டிப் பட்டர் " என்ருற்போல் இதுவரையும் அரிய பாக்களுக்குப் பொருள் சொல்லி வந்த இவ் வித்துவாமிசை இதன் பொருள் சற்றும் விளங்காது தடுமாற்ற

-- 159 -ست
முற்றுக், "கவரிமா வன்னர் உயிர்நீப்பர் மானம் விடின்" என நினைந்து நிலைக்கண்ணுடியை உடைத்து அதனல் வயிற்றைக் கீறித் தன் உயிர் துறந்தார். இம் மோசத்தைக் கண்ட தாதிமார் கூச்ச விட்டு மார்பிலடித்து நிலத்திற் புரண்டு அழ, அரசன் இச் சம்பவம் கேள்விப்பட்டு வந்து நக்கீரரை வேண்ட, நக்கீரர் இவரை எழுப்ப இவர் துயின்ருர் எழுந்தாற்போல விரைவில் உயிர்கொண்டு எழுந்து நக்கீரரைத் துதித்து ;
* பாதம் பணிந்தேன் பழையதமிழ் முனியே
ஏது மறியே னினியுரையேன் - பேதையேன் செய்தபிழை பொறுத்துத் திருவுளத்துக் கேற்கச் செய்வித்துக் கொள்ளு மினி'
என்று சொல்லி, அவர் சொற்படி விறகுதலையனை விவாகம் பண்ணி னர் எனக் கதையுளது. சண்பகவடிவியும் நக்கீரரும் ஒருவருக் கொருவர் சொல்லிப் பொருள் விடுத்த நொடிப் பாக்கள் சுமார் உடு உண்டு. மாதிரிக்காய் இத்தமிழறிவாள் பாக்களில் ஒன்று மாத்திரம் இங்ங்ணம் கூறுவம் -
** செந்திருக்கும் பூச்சூடிக் கனலு மேந்தித்
திருக்கரத்தில் மானுமொரு மழுவு மேந்தி விந்தைதனை யிடப்பாகந் தன்னில் வைத்த
விமலரது திருமகனர் விபரத் தோடு கந்தருக்கு முன்பிறந்த கங்கை மைந்தன் கடகரியாம் விகடதடக் கமல பாதன் ಶಿಶಿಷ್ಟ್ರಿಲ್ಲ:o சாளி யென்றே
தாரணியி லிவர்குலங்கள் சாற்ற லாமே"
தமிழ் சொரி சிந்தாமணி நாடகம் எனும் பெயருடன் இவ் ஆரில் ஆடப்படும் நாடகம் இப் பெண்ணினது சரிதமே.
குறிப்பு
யாப்பருங்கல விருத்தியுரையில் இடம்பெறும் நக்கீரர் வாக்காகிய * ஊசியறுகை" எனும் பாடல் தமிழறியும் பெருமாள் கதையிலும் சிறிது வேறுபாட்டுடன் நக்கீரர் கூறியதாய் அமைந்துள்ளது". சென்ன சாய்ப் பதிப்பு 1, ப. 12, ச. வையாபுரிப்பின், இலக்கிய தீபம், 15
ui. 2 - 22.

Page 89
தமிழறியும் பெருமாள் கதை பத்தொன்பதாம் நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தங்களிலேயே அச்சுவாகனம் ஏறிவிட்டது". ஒளவையார் தம்மைச் சாடவந்த ஆவேசங்களை நோக்கிப் பாடிய வெண்பாக்கள் தனிப்பாடற்றிரட்டிலும் இடம்பெறுவன. 1891 ஆம் ஆண்டில் வெளி வந்த விநோதரச மஞ்சரிப் பதிப்பில் இடம்பெறும் ஒளவையார் சரித்திரத்தில் அவருடன் தொடர்புறுத்தப்படும் கதைப்பகுதியும் அவர் பாடியனவாக வழங்கும் வெண்பாக்களும் காணப்படுவன. தமிழறியும் பெருமாள் கதையினை வரலாற்றுண்மையாகக் கொள் வதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை. கற்பனைப் பிறவியாம் சண்பகவடிவிக்குக் காசிச்செட்டியவர்களும் சதாசிவம்பிள்ளையும் இடமளித்துள்ளனர்.
a srpsă a Liblî un fr. – Chanmukachchaddambiar.
இவர் வாழையடி வாழையாய்ப் பிதா, பாட்டன், அப்பாட்டன், முப்பாட்டன் என மூன்று நான்கு தலைமுறைகளான வித்துவான்கள் வமிசத்தைச் சேர்ந்தவர். வடக்கராலியிற் செட்டிகள் பகுதியில் விவாகம் பண்ணியிருந்த, மு. சுவாமிநாதர்க்குப் புத்திரர். பிதா விடம் மாத்திரமல்லத் தெற்கு அராலியில் வசித்த ஆசையரிடத் திலும் இருபாலையிலிருந்த சேணுதிராய முதலியாரிடத்திலும் இலக்கண இலக்கியங்கள் வாசித்தவர். தாம் இவரது பிதாவிடத்திலே இரா மாயணப் பொருள் கேட்டதற்குக் கைம்மாருகவே சேனதிராய முதலியார் அதிகரிசனையோடு இவர்க்குக் கல்வி அமுதூட்டினராம். வஞ்சகம், கரவு என்பனவற்றின் மணந்தானும் தம்மனசிடைக் கிஞ்சித்தாயினுங் குடிபுகப்பெருத இப்பண்டிதர் அநேக ஆண்டுகளாக வட்டுக்கோட்டைப் பழைய சாஸ்திரசாலையிலே தமிழ் ஆசிரியரா யிருந்து சிலகாலம் எமக்கும் பாடமோதி வைத்தவர். சண்முகச் சட்டம்பியார் எனும் நாமத்தினலேதான் வழக்கமாய் அறியப் பட்டவர். சாஸ்திரசாலை ஆசிரியராய் மாத்திரமல்ல அங்கே வசித்த பல மிஷனுரிமார்களுக்கு ஆசானுமாய்க் கல்வி கற்பித்தவர். அக் காலத்தில் இவர் முதிர்ந்த சைவப் பழமாயிருந்தார். சாஸ்திர சாலையால் நிறுத்தப்பட்ட பின்பு மல்லாகம், அளவெட்டி முதலான ஊர்களிலே அநேகர் கேள்விப்படி பல மாணுக்கர்களைச் சேர்த்து வைத்துக் கற்பித்துக் காலம் போக்கினர்.
இவர் சைவாகம நூல்களை நன்முய்க் கற்றவராய் அச்சமயக் கோட்பாடுகளில் விடாப்பிடியுற்றவராய் இருந்தும், நோயுண்டான
1. அ. மூ, பரமசிவானதீதம்: பத்தொன்பதாம் நூற்றண்டின் 5 Sp Platovy OL al arjää, 1986, ui,
95, 20,

གང་ཡ- 161 ཕམ་ཁ་
காலத்துத் தம் சமயப் பிடிவாதம் ஈடாட, மனசு ஆழிவாய்த் துரும்பென அஃபவுகொள்ள, முன் மிஷனரிமாருடன் இருந்த காலத் திற் கேட்டிருந்த சத்தியவேத உணர்ச்சி மேலாட்டங் கொண்டதாற் தாயைத் தேடுங் கன்றென மிஷனரிமாரை அடுத்துக், கிறிஸ்தவனுக வேண்டும் என்று பேராசை காட்டி, அப்புறம் ஒருவருஷத்தாற் தம் மனைவி பிள்ளைகளோடு கிறிஸ்து மதந் தழுவி, அதற்கு முத்திரையான ஞானஸ்நானத்துடன் கரவிலி என்று அருத்தந்தரும் நதானியேல் என்னும் நாமத்தையும் பெற்று, மரணபரியந்தம் மெய்மை உள்ள கிறிஸ்தவராய் இருந்து கஅசகம் டு தை மீ" சுவ சனிக்கிழமை இடு பிராயத்திற் பரலோக பிராப்தி யுற்ருர்.
இவரது புத்திர புத்திரிகள் சிலர் பழையபடி மதபேதிகளாகத் திரும்பியும், மனைவியரும் இரண்டாம் புத்திரராகிய சுப்பிரமணியர் என்பவரும் இவ்வேளையிலும் கிறிஸ்தவர்களாய் இருக்கிருர்கள். மானிப்பாய்த் திருச்சபைப் போதகராய் மலைமேற்றிபம் எனப் பிரகாசிக்கும் உவாரன் பூர் நதானியேல் (Rev. W. P. Nathaniel) தேசிகரே அந்த இரண்டாம் புத்திரர். பிரதான கிரந்தங்கள் ஒன்றும் இயற்ருதபோதும் சில தனிப் பாக்கள பாடியிருக்கின்றர். சைவராய் இருந்தபோது சில்லாலையிலே வைத்தியர் சந்தியாப்பிள்ளையின் கேள்விப்படி இரட்சா மூர்த்தியின் தாயார் பேரிற் சொல்லிய இரண்டு மூன்று பாக்களுள் வெண்பா ஒன்றை இவ்விடந் தருவம்.
** நெல்லாலை போல்வளரு நீர்ப்பண்ணை சூழ்ந்திலங்கு
சில்லாலை யென்னுந் திருவூரில் - எல்லாரும் போற்றுசரு வேசுரன் ருய் பொற்பாத தாமரையைப் போற்று மனமே புகழ்ந்து. ’’
Z குறிப்பு 'தமிழ் புளூராக்” நூலில் இடம்பெருத ஈழத்தவர்களுள் ஒருவர் சண்முகச் சட்டம்பியார். இவர் ஆசிரியர்களில் ஒருவரான ஆசையர் என்பவர் அராலி தெற்கினைச் சேர்ந்த அருளுசலமாவர். இவர் பாட்டனர் வட்டுக்கேtட்டை கிழக்கு க. முத்துக்குமாரர் பற்றியும் தந்தை வடக்கராலி மு. சுவாமிநாதர் பற்றியும் சதாசிவம்பிள்ளை தனித்தனியே விதந்து கூறியுள்ளார், சண்முகச் சட்டம்பியார் 1847ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி புருேரடஸ்தாந்து கிறித்தவ ராஞர்" . 1849ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரும் தேதி வியோக மடையும்போது சண்முகச் செட்டியாருக்கு வயது 55 என்பர் சதாசிவம் பிள்ளை 62 என்பர் க. வேலுப்பிள்ளை ?.
1. உதயதாரகை 28-1-1841 2. யாழ்ப்பாண வைபவ கௌமுதி, 1918, பக். 247
unr - 1 1

Page 90
س- 162 --س--
ở6öI(Lpā (6576öflum ff. - Chanmugagnaniar.
கி. பி. க.அ ம் சதாப்த காலத்திலிருந்த இந்த ஞானியார் முருகர் அந்தாதி எனப் பெயரிய அந்தாதி ஒன்றைப் பாடினர். இம்மட்டுக்கு மேற்பட இவர் சரிதங் கிடைக்கவில்லை.
qSLLSLMSSSLSLSLLTS LLLLLSLLLSLL qqqqq qqqSAAAAASSS qqSqS SqSqAAA AAAA SLLSL S SSASSASSASSASSS குறிப்பு
திருக்கோவலூர் ஞானியார் மடாலயத்தின் இரண்டாம் ஞானி யார் சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் திருப்பாதிரிப் புலியூரில் மடம் நிறுவி அதில் தங்கி யிருந்தவர். திருப்பாதிரிப்புலியூர் சண்முகஞானியார் பாடிய முருகரந்தாதியில் முப்பது கலித்துறைப் பாக்களுள. இவர் விநாயகர்மாலை, சுப்பிரமணிய பரம்பரபதிகம், சிவகுரு லீலை முதலியனவற்றையும் இயற்றினர். இவர் 1832இல் மறைந்தபோதும், "" தமிழ் புளூராக் நூலில் இடம்பெறவில்லை.
gặ59ìQpặ55ùLị606uử. - Chaththimuththa Pulavar.
இவர் சத்திமுத்தம் என்னும் ஊரிலே வசித்த காரணத்தாற் சத்திமுத்தப்புலவர் என்று அழைக்கப்பட்டார். இவரது இயற்பெயர் யாதோ, இவரது செனன மரண காலம் எவையோ தெரிந்தில. இவர் கேவல ஸ்திதி யுற்றவராய்த் தென் மதுரைக்குப் போய் அங்கே மிக அந்தரமான நிலைமையிற் பசி பட்டினியோடு வருத்தமுற்றிருந்த ஒர் மாலைநேரத்திலே ஆகாய மீது பறந்தோடும் நாரைப்பட்சி ஒன்றைக் கண்டு அதனைக் கூவி: ஓ!
** நாராய் நாராய் செங்கா ஞராய்
பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கா ஞராய் நீயுநின் மனைவியுந் தென்திசைக் குமரியாடி வட திசைக் கேகுவீ ராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் டங்கி நனேசுவர்க் கூரைக் கனகுரற் பல்லி பாடுபடர்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதி கூடலில் ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் கா லது கொண்டு மேலது தழிஇப் பேழையு ளிருக்கும் பாம்பென வுயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டன மெனுமே **

مسسه 3 16 -س-
என்று தமது பரிதபிப்புக்கேற்ற நிலைமையைச் சுட்டிப் பாடினர். இப்பாடலானது அன்று தன் சபையில் வீற்றிருந்த புலவர்மாரை நோக்கிப், பனங்கிழங்கிற்கும் நாரைக்கும் பாட்டுச் சொல்லுங்கள் என்று கேட்க, அவர்கள் ஆற்ருமையால் நாளைச் சொல்லுவம் எனக் கெடுச் சொல்ல, அப்படி ஆகட்டும் என்று சொல்லி அரமனை சென்று மறுபடி மாலைநேரம் நகரிசோதனையில் வந்துநின்ற பாண்டியராசன் காதில் விழ, அவன் மிக மகிழ்ந்து, ஆ! தேடிய பூடு காலுக்குள் அகப்பட்டாற்போல நான் விரும்பினது காதில் விழுந்தாயிற்று என்று மனசோடு கூறித், தன் மேலங்கியைக் கழற்றி இவர் மேல் வீசிப் போய், மற்றைநாட் தன் ஏவலாளரால் இவரை அழைப்பித்து வேண்டுந் திரவியங்களை உபகரித்துச் சம்மானம் பண்ணினன். காலஞ் சில சென்ற பின்பு இப் பாண்டியராசன் இவரை ஒருமுறை சந்தித் துப் புலவரேறே, உம்முடைய யோககேஷமங்கள் எப்படியென்று கேட்கப், புலவர் பரிதியைக் கண்ட செங்கமலம் என முகம் மலர்ந்து ;
** வெறும்புற் கையுமரி தாற்கிள்ளை
சோருமென் வீட்டில் வரும் எறும்புக்கு மாற்பத மில்லைமுன்
ஞளென் னிருங்கலியாங் குறும்பைத் தவிர்த்த குடிதாங்கி
யைச்சென்று கூடியதால் தெறும்புற் கொள்யானை கவளங்கொள்
ளாமற் றெவிட்டியதே' என்று தமது க்ஷேமத்தை அவனுக்கு அறிவித்தார். இவரது புலமைத் திறமைக்கு மேற்கண்டவைகளே மாதிரிப் பாக்களாம்.
- குறிப்பு -ܔܔ * தமிழ் புளூராக்" நூலில் இடம் பெருத சத்திமுற்றப் புல வரைச் சதாசிவம்பிள்ளை தனிப்பாடற்றிரட்டின் உதவியுடன் ஈண்டு அமைத்துக் கொண்டார். திருச்சத்திமுற்றம் எனுமூர் கும்ப கோணத்தை அடுத்தது என்பர். சத்திமுற்றப்புலவர் காலத்தினைச் சிலர் பதினேராம் பன்னிரண்டாம் நூற்றண்டுவரை இட்டுச் சென் றுள்ளனர்; அன்னர் தம் கூற்றுக்கு ஆதாரமெதுவுந் தந்துதவவில்லை. வேளூர் ஆத்மநாததேசிகர் சோழமண்டலச் சதகத்திற் சத்திமுற்றப் புலவரின் செய்தியைக் கூறுவதால்?, அவர் காலத்திற்கு முற்பட்டவர் சத்திமுற்றப்புலவர் என்று துணியலாம். ஆத்மநாததேசிகர் தஞ்சை
1. க. கப்பிரமணியபிள்ளை; இலக்கிய வரலாறு, 1958 பக். 362 2. செப். 63

Page 91
- 164 -
மகாராஷ்டிர மன்னன் சகஜியின் (1884-1711) காலத்தவர். சதாசிவம்பிள்ளை எடுத்தாளும் இரண்டாம் பாடல் பெயரறியாப் புலவர் இயற்றியதாகத் தமிழ் நாவலர் சரிதையில் இடம்பெறும்; முதற்பாடல் சத்திமுற்றப் புலவன் பாடலாக ஆங்கு தரப்பட்டுள் ளது". இரண்டாம் பாடலாம் "வெறும் புற்கையும் "எனும் பாடலில் இடம்பெறும் குடிதாங்கி எனும் சொல் ஒரு வள்ளலின் பெயரென்று கருத வைக்கின்றது சோழமண்டல சதகம்' ; சதாசிவம்பிள்ளை போன்ருேர் குடியைத் தாங்கியவன் எனும் பொருளிற் பாண்டியனைக் குறிப்பாகக் கருதியுள்ளனர்.
spij5)JG886J u GööTL45st. -- Chandirachakara Pandithar.
இவர் யாழ்ப்பாணம் உடுவிற் கோயிற்பற்றிலே இற்றைக்கு எண்பத்தைந்து வருடங்களின் முன் பிறந்தவர். வட்டுக்கோட்டை யைச் சேர்ந்த இவரது தந்தையார் நாமம் அம்பலவாணர். இவர் சிறு பிராயத்திலே வித்தியாரம்பஞ் செய்து தமது பாட்டனர் சங்கர உடையார் என்றவரிடங் கல்வி கற்றுக் கேள்வி, விமரிசம், பாவனை எனும் மூன்றினலும் அதி தேற்றமுற்றுச் சபா தீபமாய் விளங்கி, அங்கிருந்த மிஷனரிமாருடைய பணிவிடையில் அநேக ஆண்டுகளாக அமர்ந்திருந்தார். சாதியில் வேளாளராகிய இவர் தம் முன்னேர் மதாசாரக் கொள்கையை விட்டுக் கிறிஸ்தவராகி நதானியேல் என்னும் நாமம் பெற்றுக் காலஞ் சென்றவரும் திகாந்தம் எட்டிய Srř53 a bp auguor6)u 6ňunrávu Š u skružstřáše5 (Rev. Dr. Spaulding) ஆசிரியராகி அநேக புத்தகங்களை மொழிபெயர்க்கவும் இயற்றவும் அப் பண்டிதருக்கு உதவிசெய்து வந்தாரன்றி, நல்லூரிலே நயிற் தேசிகர் (Rev. J. Knight) தமிழ் ஆங்கில அகராதி ஒன்று செய்ய முயன்ற போது அவர்க்கு உதவி செய்யப் போன பல சிரேட்டருள் ஒருவ ராயும் இருந்தார்.
மிஷனரிமாரால் மானிப்பாய் அச்சியந்திரசாலையில் அச்சடிப் பிக்கப்பட்ட சிறு புத்தகங்கள், வேத மொழிபெயர்ப்புகளுள் இவர் காலத்தில் இவர் கைபடாதன அருமை. சென்னையில் நடந்த வேதாகம மொழிபெயர்ப்புக்கு, க.அச.அ ம் டு ஸ்பால்டிங் பண்டிதருடன் இவரும் நாமும் போய் இருந்தோம். உடுவிலில் மிஷன் பெண்பாட சாலையில் நாம் ஆசிரியராய் அமர்ந்திருந்த பத்துப் பண்னிரண்டு
1. G. 190
3. Qsü. 82

-س- i65 عسسه
வருஷங்களிலன்றி அதற்கு முன்னும் பின்னும் இறக்கும் வரைக்கும் நம் நண்பராய் இருந்த இவர் வயோதிகராய் எக வயசில் க அஎகம் வu) ஐப்பசிமீ உக உ இறந்தும், இவர் செய்த தமிழ் அகராதிப் புத்தக மும் பிறவும் இவரை இன்னும் இறவாதார் போல வைத்துப் பாராட்டு கின்றன. இவரது பிரயாசத்தால் முற்றி அச்சிடப்பட்ட தமிழ் அகராதிச் சிறப்புப் பாயிரத்தில்:
**ஆக்கினன் பெயரக ராதியா மிதனைக்
கல்வியும் செல்வமும் காசினி யனைத்தினும் நல்லிட மிஃதென நயந்துறைந் திடுதகை எட்டுள திசையினும் எழில்மிகப் பெற்றிடும் வட்டுநன் னகரினன் வண்குண சாகரன் குசைநுனி தன்னினுங் கூர்மைகொண் மதியினன் இசைவற வளர்ந்துய ரிரும்புகழ் நிதியினன் முத்தமிழ்ப் புலமையன் மூதுணர் கலையினன் சத்தியத் தலைமையன் தருமநன் னிலைமையன் கங்கா குலத்தினன் கலைமகள் வலத்தினன் கொங்கார் குவளையங் கோதையக லத்தினன் மேழியம் பதாகை மேவிய செல்வன் ஆழிசூழ் புவிபுகழ் அம்பல வாணவேள் பொருவருந் தவத்தாற் புதல்வன யுதித்துமெய் அருமை யுடன் பல ஆகமங் கற்றேன் சுந்தர நாற்கவி சொலும் வல்லோன் சந்திர சேகரத் தமிழ்ப்புர வலனே' என்று இப் பண்டிதரைப் பற்றிக் கனகசபாபிள்ளைப் புலவர் சொல்லி இருக்கின்ருர். இவர் தமிழ் நன்குணர்ந்தவரன்றிச் சம்ஸ்கிருத பாடையிலுஞ் சிறுகத் தேர்ந்தவர். இவரது சிரேட்ட புத்திரர் டாக்தர் உவைமன் நதானியேல் சுவாமிநாதர் (Dr. Wyman Nathaniel) பாம்பனில் வயித்தியராகவும், மத்திய புத்திரராகிய ா. ரா. தில்லையம்பலம் நதானியேல் உவெஸ்லிய மிஷன் போதன சக்திப் பாடசாலைச் சிரேட்ட ஆசிரியராகவும், கனிட்ட புத்திரராகும் ா, T, அம்பலவாணர் நதானியேல் யாழ்ப்பாணம் பொலீஸ் *கோட்டு" உத்தியோகத்தராகவும் இருக்கிருர்கள். இப்பண்டிதரது புலமைத் திறமைக்குச் சாட்சியாக இவர் செய்த தமிழ் அகராதி அவையடக்க விருத்தங்களில் ஒன்றைத் தருவம். அது வருமாறு:

Page 92
„- 166 —
* உத்தமர்க ளெந்நூலு முற்ற வோர்ந்தே
யுறுகுறைகண் மறையவுண்மை யுகந்து கொள்வர்
மத்திமர்க ளவையிரண்டுஞ் சமமாய்க் கொள்வர்
மற்றையரா மத மருண்மை வகுக்க மாட்டார்
இத்தகையா லாய்ந்துணர்ந்த நல்லோர் கல்லா
னியற்றுமக ராதியென விகழா ரென்றே
சித்தமிசைக் கொண்டுதெளி வில்லாப் பேதைச்
சிற்றறிவே னறிவளவிற் சேர்த்திட் டேனே."
குறிப்பு
The Manual Dictionary of the Tamil Language 6T6ir so Guti (list-air ஸ்போல்டிங் பாதிரியாரால் 1842 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்கன் மிஷன் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்ற தமிழகராதி ஆதியனவற்றின் செய்திகள் ஆதிமூல முதலியார் குறிப்பிலே தரப்பட்டுள்ளன. மானிப்பாய் அகராதி என வழங்கும் தமிழகராதி யின் ஆக்கத்தில் இருபாலை சேனதிராய முதலியாருக்கும் நவாலி வி. வயிரமுத்துப்பிள்ளை ( Jonathan Homer) என்பவருக்கும் ஏனை யோருக்கும் பங்குண்டு. இத்தமிழ் அகராதியை உவின்சிலோ எனப் படும் தமிழ் அகராதி என்று மாறுபடவும் உரைத்துள்ளனர்1. உவின்ஸ்லோ பாதிரியார் பெயரால் வழங்குவது 1862 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் ஆங்கில அகராதியாகும், சந்திரசேகர பண்டிதர் * தமிழ் புளூராக்" வெளிவந்தபோது வாழ்ந்து கொண்டிருந்தவர்.
சந்திரசேகர கவிராச பண்டிதர். -- Chandirachakarakaviraja Pr.
இவர் சோணுட்டிலுள்ள தில்லையம்பூரிற் பிறந்து வளர்ந்தா ராதலில் வழக்கமாய்த் தில்லையம்பூர்ச் சந்திரசேகர கவிராச பண்டிதர் என்று அழைக்கப்பட்டிருக்கிறர். இவர் பற்பல புத்தகங்களைத் திருத்தி அச்சிடுவித்தார். தண்டியலங்காரம், தனிப்பாடற்றிரட்டு என்பன அவற்றுட் சில. சினேந்திரமாலை, குமாரசுவாமீயம், ஞானப் பிரகாச தீபிகை, காலப்பிரகாச தீபிகை, சாதக சிந்தாமணி, முகூர்த்த விதானம், மரண கண்டிகை, சாதகாலங்காரம், உள்ள முடையான் முதலிய பன்னூல்களைத் தொகுத்து வடித்தெடுத்து
1. சி. கணேசையர் : ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், 1939, பக். 216

---- 167 * --س--
வருஷாதி நூல் என்னும் முக்கிய நூலுமொன்றை இவர் இயற்றினர். இஃதன்றித் துலுக்காணத்தம்மை பதிகம் எனும் பாடலையும் செய்தார். இராமநாதபுர "மனேச'ராய் இருந்து இறந்துபோன பொன்னுச்சாமி தேவர் மேற் பல தனிப்பாக்கள் பாடினர். எமது காலப் புலவராம் இவர் பாடிய தனிப்பாக்களுள் ஒன்றை இவரது பாடற்றிறத்தைக் காட்டுதற் பொருட்டு ஈண்டுத் தருகின்ருேம்,
"இய்யூர்த கரவெடுத்த திருமான் மருகன் மையூர் குமரன் மலரடிக்கு - மெய்யூர் மனத்தை யளித்தபொன்னுச் சாமிக்கு மானே அனத்தை மறந்தாளென் றறை.'
குறிப்பு தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதரின் ஆசிரியர்கள் திருத்தணிகை விசாகப்பெருமாளையரும் சரவணப்பெருமாளை யருமாவர். பூவளூர் சி. தியாகராச செட்டியார் (-1888) லீவில் இருந்த சமயம் 1876 - 1877 ஆம் ஆண்டுகளிற் சில மாதங்களுக்குக் கும்பகோணம் கல்லூரியிலே கவிராசபண்டிதரவர்கள் தமிழ்ப் பண்டிதராகிக் கடமை புரிந்தார். இவர் சித்தூர் உயர்நிலைப் பள்ளியிலே தமிழ்ப்பண்டிதராக விளங்கியவருமாவர். இவர் 1883ஆம் ஆண்டு வியோக மடைந்தனர் என்பர்", "தமிழ் புளூராக்" நூல் வெளிவந்த காலத்திற் கவிராசபண்டிதரவர்கள் வாழ்ந்துகொண் டிருந்தமையால் அந்நூலில் இடம் பெறவில்லை. ノ
கவிராச பண்டிதரவர்கள் வருஷா திருநூல் (1868), மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் நான்மணிமாலை என்பனவற்றை இயற்றி யுள்ளார். மேலகரம் சுப்பிரமணியதேசிகர் மும்மணிக்கோவையின் ஆசிரியர் கவிராசபண்டிதரென்றும் பரமசிவத்தம்பிரான் என்றும் மாறுபட உரைப்பர் 8. பரமசிவத்தம்பிரான் இயற்றிய பிரபந்தத்தைக் கவிராசபண்டிதரவர்கள் பதிப்பித்தனர் என்பர். வாக்குண்டா முரை (1873) செய்தாரும் கவிராச பண்டிதரென்பர்.
1. து. பா. தகரமெடுத்த 2. நூ. பா. பளந்தபொன்னுச் 3. ந. சி. கந்தையபிள்ளே தமிழ்ப்புலவர் அகராதி, 1960 பக். 153. 4. த. சி. கந்தையாபிள்ளே தமிழ் இலக்கிய அகராதி, 1932. பக். 139 5, மயிலே சீனி. வேங்கடசாமி : பத்தொன்பதாம் நூற்குண்டில் தமிழ் இலக்கியம், 1962 பக். 218,
285,
5. மு. வை. அரவிந்தன் ; உரையசிரியர்கள், 1968, பக், 458

Page 93
- 68 -
கவிராச பண்டிதரவர்கள் திருவாவடுதுறையாதீன வித்துவான் தாண்டவராய சுவாமிகள், திருத்தணிகை GingFrtés'. GL (51Art & Turf ஆகியோர் முன்னிலையிற் பரிசோதித்துத் தண்டியலங்காரவுரையை 1838 ஆம் ஆண்டிலும், முற்கிளந்தவரோடு அட்டாவதானம் வீராசாமி செட்டியார் முன்னிலையிலும் பரிசோதித்து யாப்பருங் கலக்காரிகை குணசாகரருரையைச் சென்னை முத்தமிழ் விளக்க அச்சுக்கூடத்திற் பிரமாதீச ஞ) (1854) பங்குனி மாதத்திலும், வருஷாதி நூற் சித்தாந்த விளக்கமும் அறுபது வருஷ பலனும் எனும் பழைய நூலை 1875 ஆம் ஆண்டிலும், அரபத்த நாவலரின் பரத சாஸ்திரத்தினை உரையோடு 1876 ஆம் ஆண்டிலும், வச்சணந்தி மாலையையும் வரையறுத்த பாட்டியலையும் 1862 ஆம் ஆண்டிலும் பதிப்பித்தனர். இவர் ஆசாரக்கோவையைப் பதிப்பித்த ஆண்டு தெரியவில்லை. தம்மாசிரியர் இயற்றிய நன்னூற் காண்டிகையுரை, ஐந்திலக்கண வினவிடை, பாலபோத இலக்கணம் எனும் நூல்களையும் நன்னூல் விருத்தியுரை, செய்யுட்கோவை, பழமொழித்திரட்டு எனும் பழைய நூல்களையும் கவிராசபண்டிதரலர்கள் பதிப்பித் துள்ளார் என்று மயிலை சீனி வேங்கடசாமி கூறியுள்ளார் 8, 1858இல் வெளிவந்த தண்டியலங்கார உரைப்பதிப்பில் உரையாசிரியர் சுப்பிர மணிய தேசிகர் என்று குறிப்பிடப்பெற்றுள்ளது.
இராமநாதபுரம் பொன்னுசாமித்தேவர் வேண்டுகோளின்படி தொகுக்கப்பெற்ற தனிப்பாடற்றிரட்டு 1882இல் வெளிவந்தது 4. இத்தொகுப்பின் பதிப்பாசிரியர்கள் கவிராசபண்டிதரவர்களும் காஞ்சிபுரம் வித்துவான் கச்சபாலயஐயருமென்று பூரீ மஹாபாரத கீர்த்தனம் செய்த கோ." சபாபதி முதலியார் இயற்றிய சிறப்புப் பாயிரத்தாற் புலனுகும். திருத்தணிகை விசாகப்பெருமாளையர், காஞ்சிபுரம் கோ. சபாபதிமுதலியார், அட்டாவதானம் வீரசாமி செட்டியார் முதலியோர் இத்தொகுப்பிற்குச் சாற்றுகவிகள் வழங்கி யுள்ளனர். திருக்காட்டுப்பள்ளி இராமசாமி முதலியார் இத் தொகுப்பிற் பயன்படுத்திய தனிப்பாடற்ருெ குப்பொன்றின் ஏட்டுப் பிரதியைக் கொடுத்துதவியுள்ளார்
மயில் சீனி. வேங்கடசாமி : டிெ நூல், பக் 219
2. uDufay faf. (Goni šis L sus : Q4 lið, uši. 408; . . sjeo su idђи : sfij 3 gošću
usuri, L. i. 112
3. டிெ நூல் பக் 219
4. உ. வே. சாமிநாதையர் : என் சரித்திரம், 1950, பக். 205

اساس، i69 سست.
ởị59ợ Gaasợ (Ipg56ớìuIữi - Chandirachakara Modeliar.
இவர் உடுப்பிட்டிக் கோயிற்பற்றிலே "வல்லிபட்டிக் குறிச்சியிலே” வேளாளர் மரபிலே பிறத்தவர். யாவராலும் வியக்கப்பட்ட சிறந்த வித்துவசிரோமணி முத்துக்குமார முதலியார், குமாரசாமிப்புலவர் என்னும் இரு வித்துவ புருடர்க்குந் தந்தையராம் இவர், அஷ்டாவ தானியார் தூர்த்த வியாபாரத்தாற் கடைத்தேறின போது தம் அனுபவப் பிரயாசங்களை விறலிவிடு தூது எனும் பாடலால் உலகர்க்கு உணர்த்தியது போலத், தாமும் அவ்வியாபாரத்தில் அடைந்த பாடு கேடுகள் நஷ்ட துஷ்டங்களை எல்லாம் ஓர் நொண்டிப் பாடலில் விம்பித்தார். இவர் ஓர் சிரேஷ்ட புருடராயிருந்தமையால் வட தேசத்தால் வந்த புலவர் ஒருவர் இவர்மேற் சந்திரசேகரக் குறவஞ்சி எனும் பாமாலை ஒன்றைச் சூட்டினர். இவர் கசு பிராயத்தில் நிரியாண தசையடைந்தனர்.
குறிப்பு
" தமிழ் புளூராக்" நூலில் இடம்பெருத ஈழத்து அறிஞர்களில் ஒருவர் வல்வெட்டி சந்திரசேகர முதலியார். கப்டன் சந்திரசேகர முதலியார் ஒல்லாந்தர் ஆட்சியின் போது வன்னியில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை ஒடுக்கிப் பேரெடுத்தவர் என்பர்1. இவர் மகள் வள்ளி யம்மையின் புதல்வர் க. குமாரசுவாமி முதலியார் கி. பி. 1792ஆம் ஆண்டிற் பிறந்தவர். இவர் " குலவளம் * கூறும் சந்திரசேகரக் குறவஞ்சிப் பாடலொன்று உடுப்பிட்டி சி. ஆறுமுகப்பிள்ளை தொகுத்த குமாரசாமி முதலியார் கவித்திரட்டு (1887) எனும் தொகையில் இடம் பெறுகின்றது. இவர் மக்கள் முத்துக்குமார முதலியார், குமாரசுவாமிப் புலவர் ஆகியோரைச் சதாசிவம் பிள்ளை தனித்தனியே விதந்து கூறியுள்ளார்.
Jumu9ì (up956ớìu Tử. - Chapapathy Modelĩar.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவரும் முத்துராம முதலியாரது தமயன் மகனுமாகிய இந்த உசித வித்துவான் காஞ்சிபுரத்திலே பச்சையப்ப முதலியாரது பள்ளிக்கூடத்திற் தமிழ்த் தலைமை உபாத்தியாயராய் இருந்தவர். புரசை அட்டாவதானஞ் சபாபதி முதலியார் என்பார் இவர்க்கு நன்மாணக்கர். திருமுறையை முதன் முதல் அச்சிடுவித்தார் இவரே. சைவசமய விளக்க வினவிடை இவரால் இயற்றப்பட்டது. இவர் பாடிய தனிப்பாக்கள் பலவுள. வரதுங்கராம பாண்டியர் செய்த
1. J. H. Martyn The Life and Times of C. W. Katiravelpillai, 1904, p. 6.

Page 94
------۔ 170 ہے۔۔۔۔
பிரமோத்தர காண்டத்துக்கு இவர் பொழிப்புரை இயற்றினர் இவர் செய்த சைவசமய விளக்க விஞவிடையிலே சைவர் அறிதற் குரிய அநேக காரியங்கள் விளக்கமும் நுணுக்கமுமாய்ப் பேசப் பட்டிருக்கின்றன.
குறிப்பு
காஞ்சிபுரம் மகாவித்துவான் கோ. சபாபதிமுதலியார் "" தமிழ் புளூ ர க்" நூல் வெளிவந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தமை யால் அந்நூலில் இடம்பெறவில்லை. இவர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலே தமிழாசிரியராக இருந்தார் என்று சிலர் கூறியபோதும் சதாசிவம்பிள்ளை கூற்றும் பிழையானதன்று என்பது தனிப்பாடற் றிரட்டின் சாற்றுகவியாற் புலனகும். திரிசிரபுரம் சி. மீனுட் சிசுந்தரம் பிள்ளை, திருவாவடுதுறையாதீனம் தாண்டவராய சுவாமிகள், மயிலை மா. சுப்பராயமுதலியார், வடலூர் இராமலிங்கசுவாமிகள், அவர் தமையன் மார் சபாபதிப்பிள்ளை, பரசுராமப்பிள்ளை முதலியோரும் சபாபதி முதலிசாரிடம் பாடங் கேட்டவர்களாவர். இவர் மகன் நாகலிங்க முதலியாராவர்.
முதலியாரவர்களின் சைவசமய விளக்க விஞவிடைப் பதிப் பொன்று 1879ஆம் ஆண்டு வெளிவந்ததாக அறிகிருேம். இவர் திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா, அருணுசல சதகம் எனும் பிரபந்தங்களையும் பாடியுள்ளார். சிலேடைவெண்பா உ. வே. சாமி நாதையராற் பதிப்பிக்கப்பெற்றது : திருவண்ணுமலையிற் கோயில் கொண்ட சிவபிரான்மீது பாடப்பெற்ற அருணசலசதகமும் பதிப் பிக்கப் பெற்றுள்ளது. இவர் பெரியபுராணத்தை வசனமாக எழுதி யுள்ளார் என்பர்.
முதலியாரவர்கள் பிரமோத்தரகாண்டத்திற்கு எழுதிய பொழிப் புரை 1878ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1897ஆம் ஆண்டில் வெளி வந்த முற்கிளந்த உரையின் மறுபிரசுரத்தில் உரையாசிரியர் தில்லை யம்பூர் சந்திரசேகர கவிராசபண்டிதர் என்று பிழைபடக் குறிப்பிடப் பட்டுள்ளது. இவர் குமரகுருபரசுவாமிகளின் நீதிநெறி விளக்கத்திற்கு எழுதியவுரை 1835ஆம் ஆண்டிலும் அமிர்தலிங்கத் தம்பிரானின் திருமயிலைத் தல புராணத்திற்கு எழுதியவுரை 1893ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. பரிமேலழகருரையைத் தழுவி எழுதப்பெற்ற பதவுரை, கருத்துரை, விசேடவுரையுடன் திருக்குறளைச் சபாபதி முதலியார் 1856ஆம் ஆண்டிற் பதிப்பித்தார். சைவ எல்லப்பநாவலரின் திரு
1. ந, வீ. பெரமன் : சதக இலக்கியங்கள், 1966 பக், 138 - 139. 2. மயில் சீனி வேங்கடசாமி பத்தொன்பதாம் நூற்குண்டில் தமிழ் இலக்கியம், பக். 397

ہے۔ 71 حـ
விரிஞ்சைப் புராணத்திற்கு முதலியாரவர்கள் எழுதிய பொழிப்புரை ருதிரோற் காரி ஹில் கார்த்திகை மீ" (1863) சென்னை கலாநிதி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது. முதலியாரவர்களின் நீதி வெண்பாவுரை 1876ஆம் ஆண்டில் வெளிவந்ததென்றும் அவர் திருவிளையாடற் புராணத்திற்கும் உரை கண்டவர் என்றும் கூறுவர்' மாடம்பாக்கம் சு. கிருஷ்ணசுவாமி முதலியார் 1861ஆம் ஆண்டு வெளியிட்ட பாலகாண்டம் உரைப்பதிப்பிற்குக் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரும் கோமளேசுவரன் பேட்டை இராசகோபாலபிள்ளையும் உதவினர் என்பர்?.
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் 1864ஆம் ஆண்டிலே திருஞானசம்பந்த சுவாமிகளின் திருப்பதிகங்களையும் 1866ஆம் ஆண்டிற் சுந்தரமூர்த்திசுவாமிகளின் திருப்பதிகங்களையும் 1867ஆம் ஆண்டிலே திருநாவுக்கரசு நாயனர் திருப்பதிகங்களையும் பதிப்பித்தனர் என்பர் 3. திரிசிரபுரம் வி. கோவிந்தபிள்ளை 1865ஆம் ஆண்டிற் சுந்தரர் திருப்பதிகங்களைப் பதிப்பித்துள்ளார்?. மதுரை இராமசாமிப்பிள்ளையின் (திருஞானசம்பந்தம்பிள்ளை) தேவாரம் தலமுறைப் பதிப்பு விஷ" ஞ) மார்சழி மீ" (1881) வெளிவந்தது : திருமயிலை செந்தில்வேலு முதலியாரின் தேவாரம் தலமுறைப் பதிப்பு விஜய டு) சித்திரை மீ (1893) வெளிவந்தது : வண்ணுர்பண்ணை சி. சுவாமிநாதபண்டிதரின் தேவாரம் தலமுறைப் பதிப்பு சாதாரண u) (1911) வெளிவந்தது. சைவசித்தாந்த மகாசமாசம் சுந்தரர், அப்பர், சம்பந்தர் தேவாரங்களை முறையே 1929, 1930, 1931ஆம் ஆண்டுகளிலே வெளியிட்டது. காஞ்சி நாகலிங்கமுனிவர், கயப் பாக்கம் சதாசிவ செட்டியார் பதிப்புகளின் விபரங்கள் தெரிய வில்லை. சபாபதி முதலியார் 1859ஆம் ஆண்டிலும் 1870ஆம் ஆண் டிலும் பெரியபுராணத்தையும் பதிப்பித்துள்ளார். இவர் திரு வாசகத்தை 1871 இலே பதிப்பித்தனர்; سمبر
கோ. சபாபதிமுதலியார் காலத்திற் சபாபதி முதலியாரென்ற பேரில் வேறிருவரும் சிறப்புடன் விளங்கினர். இவர்களில் ஒருவர் சாஞ்சிபுரம் கோ. சபாபதி முதலியாரின் மாணவரும் சென் புரசவாக்கம் இரிசப்பமுதலியாரின் புதல் வருமாகிய அட்டாவதானம் சபாபதி முதலியார் ( - 1886)8 ; மற்றவர் மதுரை மகாவித்துவான் சு. சபாபதிமுதலியார் (-1898)".
1. மு. வை. அரவிந்தன் : உரையாசிரியர்கள், 1968, பக், 458, 544 2. F, Goo uusių flûtîdir? : ut s 6 Lu Luik, 38 - 39, 60-61 3, மயில் சீனி வெங்கடசாமி பத்தொன்பதாம் நூற்குண்டில் தமிழ் இலக்கியம். பக். 384 4, டிெ நூல், பக். 384 5. திரு. வி. கலியாணசுந்தரமுதலியர் : பெரியபுராணம், முன்னுரை, 1934 6. மயில் சீனி வெங்கடசாமி. டிெ நூல், பக், 205
7. டிெ நூல், பக், 227-228

Page 95
--س 72{ --س۔
3F LD6JOT (p6oîTAJň. — Chamana Munivar. இவர் உலகம் எங்கும் பெரும்புகழ் விடுத்த நன்னூல் ஆக்கியோ ராகிய சனகைப் பவணந்தி மாமுனிவரது மாணவகர். "மலர்தலை யுலகின் மல்கிரு ளகல ” எனுஞ் சிறப்புப்பாயிரம் பாடினர் இவரே. நன்னுாற்குச் சிறப்புப்பாயிரம் பாடியது மாத்திரமல்லத் தமது ஆசிரியர் செய்த அந்நூற்கு முதன் முதல் உரையும் எழுதினர். பாடல் மாதிரிக்கு நன்னூல் சிறப்புப் பாயிரத்தையே கொள்க.
குறிப்பு - சமண முனிவரின் இயற்பெயர் தெரியாமையால் அவரைக் காசிச்செட்டியவர்கள் தனியே விதந்து கூறவில்லைப் போலும். தமிழ் இலக்கணத்தை ஆங்கிலத்தில் எழுதிய ரேனியஸ் பாதிரியார் (ReV, C, T. E. Rhenius ) சைனர் ஒருவர் நன்னூலுக்கெழுதிய உரையைக் குறிப்பிடுகின் ருர் 1. தொல்காப்பிய நன்னுரலில் (1858) எஸ். சாமுவேல் பிள்ளை நன்னூலுக்ஈெழுந்த சமணமுனிவர் உரையைக் கறிப்பிடுவர். இவர்கள் சிறப்புப்பாயிரமும் இவராற் பாடப்பெற்றதென்று கருதினரோ அறிகிலேம்,
நன்னூற் சிறப்புப்பாயிரத்தை இயற்றியவர் இன்னர் என்று துணிவதற்கு எவ்விதமான சான்றுமில்லை. உரையாசிரியராக முன் இருந்தோர் கூறிய சமண முனிவர் என்பவர் மயிலைநாதர் என்று கருத இடமுண்டு. இவர் திருமயிலையில் எழுந்தருளியவரும் சைனரின் இருபத்திரண்டாம் தீர்த்தங்கரருமாம் நேமிநாதரின் பெயரைத் தாங்கியவராகக் காணப்படுவதாலும், அருகனைப் பலபடப் பாராட்டி புள்ளமையாலும், சைன சமய வழக்குகளையும் செய்யுள்களையும் தமதுரையில் எடுத்தாள்வதாலும் சைன சமயத்தவர் என்று கருதத்தக்கவர். நன்னுரலுக்குக் கிடைக்கும் உரைகளுட் பழமை யானது மயிலைநாதர் இயற்றியதாகும். ஆயினும் இவரைப் பவணந்தி முனிவரின் மாணவர் என்று கூறுவதற்கு எவ்விதமான ஆதாரங் களுமில்லை.
மயிலைநாதர் சிறப்புப்பாயிரத்தில் இடம்பெறும் சீயகங்கன் பற்றிய பகுதிக்கு எழுதும் உரையின் அடிப்படையிலும் * கங்கன் அகன் மார்பன்" என்னும் வெண்பா மேற்கோளின் அடிப்படையிலும் கங்கன் என்னும் பெயரை உதாரணம் தருவதன் அடிப்படையிலும் சீயகங்கள் மீது பெருமதிப்புக் கொண்டவர் என்று கருதிச் சிலர், அவர் சீயகங்கன் காலத்தவர் என்றும் வேறுசிலர் சீயகங்கன் பரம் பரையினர் காலத்தவர் என்றும் கூறிப்போந்தார். இக்கூற்றுகள் வலுவுடையனவல்ல என்.து கூருமலே போதரும். இளம்பூரணருக்குப்
A Grammar of the Tamil Language, 1836,

مس۔ 73 !.. -------
பின்பும் சங்கரநமச்சிவாயருக்கு முன்பும் வாழ்ந்தவர் மயிலைநாதர் என்பது தெளிவாகும்: பெயர்வினை என்னும் சூத்திரத்திற்கு (359) மயிலைநாதர் தரும் உரையாலும், சங்கர நமச்சி வாயர் நன்னுர லுரையில் மறுக்கும் இடங்களாலும் இவ்வுண்மை புலனுகும்,
மயிலைநாதர் சிற்சில இடங்களில் என்பாருமுளர், உரைப்பாரு முளர், சொல்லுவாருமுளர், முடிப்பாருமுளர், கொடுப்பாருமுளர் என்று கூறுவதை நோக்குமிடத்து, அவருக்கு முன்பும் நன்னூலுக்கு உரை கூறும் மரபு இருந்தது என்பது தெளிவாகின்றது. ஆயினும் அம்மரபு வாய்மொழி மரபினதோ அன்றி ஏட்டுவடிவினதோ என்பது துணிதற்கில்லை. உ. வே. சாமிநாதையர் 1918ஆம் ஆண்டில் மயிலைநாதருரையைப் பதிப்பித்தார்.
Jübu bg5 epň536, - Champanthamurthy.
சைவசமயக்குரவர் எனப்படுவார் நால்வருள் ஒருவராம் இவர் சோழமண்டலத்திலே, சிதம்பரத்துக்குத் தெற்கே உள்ள சீர்காழியிலே (இச் சீர்காழிக்குப் பிரமபுரம், வேணுபுரம், தோணிபுரம் ஆதிய பின்னும் கக நாமங்களுள.) கெளனியர் எனும் பிராமணர் கோத் திரத்திலே பிறந்தவர். சிவபாதவிருதையர் என்பார் இவருக்குத் தந்தையார். பகவதியார் என்பார் இவர் அன்னையார். இவர் மூன்று வயசிற் தம் பிதாவுடன் கூடித் தீர்த்தக் கரைக்குப் போய்ப் பிதா தீர்த்தத்துள் இறங்கி ஸ்நான ஞ் செய்துகொண்டிருக்கக் கரையி னின்று தோணிபுரச் சிகரத்தை நோக்கி, அம்மே, அப்பா என்று கூவியழப், பார்ப்பதி தேவி தம் நாயகரது அனுக்கிரகப்படி இப் பிள்ளை அண்டை வந்து, தன் தனப்பாலைக் கறந்து பொற்கிண்ணத் தில் விட்டு இவர்க்கு ஊட்டிப் போயினராம்.
இவர் பால் உண்டதைக் கண்ட சிவபாதவிருதயர் தீர்த்தக்கரை ஏறினவுடன், நீ யாரது எச்சிற்பாலை உண்டாய் என்று வினவிச் சீறி உறுக்க, இவரோ தற்சணம் " தோடுடைய செவியன்" என்று தொடங்கிப் பதிகமொன்று பாடி முடிக்கப், பிதாவானவர் இந்த ஆச்சரியத்தைக் கண்டு ஆனந்த நிருத்தன ஞ் செய்து இப்பிள்ளையைக் கொண்டாடினர் என்ப. சிவனும் பார்ப்பதியும் இவரை ஆண்டு கொண்ட காரணத்தினுல் இவர்க்கு ஆளுடைய பிள்ளையாரெனுங் காரண நாமமுளது. பதிகம் பாடத்தொடங்கியது முதல், யாவரா லும் அதிசயிக்கப்பட்ட இவர் ஊருக்கு ஊர் சென்று, சிவஸ்தலங் களைத் தரிசித்து அவ்வவற்றின்மேல் மதுரமான பாக்கள் பாடினர். குழந்தை வயசினராய் இருந்தமை பற்றி இவர் செல்லுமிடங்களுக் கெல்லாம் இவர் தந்தையாரே இவரைத் தம் தோள்மேல் ஏந்தி

Page 96
- 174 -
உடன் செல்வார். சில நாட்களுக்குள்ளாகச் சிவன் தாமே இவர் மேற் பரிவுகூர்ந்து முத்துச்சிவிகை முத்துக்குடை யாதிய அணுக்கிர கித்தனர் என்ப.
இவர் ஸ்தலதரிசனஞ் செய்து சீர்காழிக்குத் திரும்பினபோது அப்பர் வந்து இவரைத் தரிசித்து மிகப் பூச்சியமாய்க் கொண்டாடி னர். இவராற் செய்யப்பட்டனவாகத் கூறப்படும் அதிசயக் கிரிகை கள் ஒன்றிரண்டல்ல. இலர் மழவநாடு சென்றபோது கொல்லி மழவனுடைய புத்திரிக்கு உண்டுபட்டிருந்த முயலகன் எனும் வலியை மாற்றித் திருவாவடுதுறையில் இருந்தபோது தமது, தந்தை யார்க்கு உலவாப் பொற்கிழி யீந்து, வேதாரணியத்திலே நெடுங் காலமாய் அடைபட்டிருந்த கதவைப் பதிகம்பாடி அப்பர் திறக்க இவர் பதிகத்தால் அடைத்தனர் என்ப. இவ்வற்புதங்களன்றிப் பஞ்ச காலத்திலே சிவனடியாரை உபசரித்துக், கூன்பாண்டியனது மனைவியாகும் மங்கையர்க்கரசியும் அமச்சனுகிய குலச்சிறையும் அழைக்கப் பாண்டியநாட்டுட் புகுந்து சமணரை வாதில் வென்று, அவரில் எண்ணுயிரவரைக் கழுவேற்றுவித்துப் பாண்டியனைப் பீடித் திருந்த சுரத்தோடு அவன் கூனையும் மாற்றி, அக்கினியிற் போட்ட ஏடு எரியாதிருக்கவும், ஆற்றிலிட்ட ஏடு எதிரே ஓடவும், இறந்த வணிகன் ஒருவன் எழும்பவும், பாம்பினுற் கடியுண்டிறந்த கன்னிகை ஒருத்தி உயிர் பெறவும், தொண்டை மண்டலத்திலே ஆண் பனைகள் பெண்பனைகளாக வும் செய்தனர் என்ப. சமணரை மாத்திரமன்று, புத்தரையும் வாதில் வென்றனராம். திருநாவுக்கரசர் எனு மறுநாமம் பெற்ற அப்பர் மேலே கண்டபடி இவர்க்குத் தோழரும் ஏக காலத்தவருமாய் இருந் தார். இவர் நம்பாண்டார் நம்பியின் புத்திரியைத் தம் பெற்றேர் கருத்துக்கு இசைய மணஞ்செய்து அம் மணஞ் செய்த அன்றே மனைவியோடும், சடங்குக் காட்சி கண்ணுற வந்தார் அனைவரோடும் அந்தரத்தானமாயினர் என்ப. இவருடைய பதிகங்கள் பதினுயிரத்துள் முந்நூற்றெண்பத்துநான்கு மாத்திரமே தற்காலமுள. ஈழமண்டலத் திலே திருக்கோளுமலையிலுள்ள திருக்கோணேசர் மேலும், மன்னர் மாதோட்டத்திலுள்ள திருக்கேதீச்சரர்பேரிலும் பதிகங்கள் பாடினர் என்ப, இவர் தே கவியோகமானபோது இவர்க்கு வயசு பதினறு. இவர் சிவதொண்டர் அறுபத்து மூவரில் ஒருவராய் எண்ணப்படுகிருர். இவர் பாடும் பதிகங்களைத் திருநீலகண்ட யாழ்ப்பாணரும், விறலியும் யாழில் வாசித்துத் திரிந்தார்கள். இவர் இறந்தகாலம் தெரியாத போதும் வயசு பின் வரும் பாவால் விளங்கும்.
"அப்பருக் கெண்பத்தொன் றருள்வா த வூரருக்குச்
செப்பியநா லெட்டினிற் றெய்வீகம்-இப்புவியிற் சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க் கந்தம் பதினு றறி' ,م-
1. நூ. பா. நம்பியாண்டார் நம்பியின்

குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனர் சரிதத்தைச் சதாசிவம் பிள்ளை தம் காலத்தில் வெளிவந்திருந்த பெரியபுராணப் பதிப்புகளின் உதவியுடன் விரித்துரைத்துள்ளார்.
'திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்ருர்' (5. 50-8)
என்ற திருப்பாடலிலே திருமறைக்காட்டிலே தாமும் ஆளுடைய பிள்ளையாரும் நிகழ்த்திக் காட்டிய அற்புதத்தைக் கூறும் அப்பர் சுவாமிகள் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனரின் சமகாலத்தவர் என்பது வெள்ளிடைமலை, அப்பர் சுவாமிகள் முதலாம் மகேந்திர வர்மன் (610 - 630) என்னும் பல்லவ மன்னனை “விபகஷ விருத்தி யிலிருந்து மீட்டவர். திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர் சிறுத்தொண்டநாயனர் 1. * செருவடிதோட்" சிறுத்தொண்டர் வரலாறு பெரியபுராணத்திலுண்டு 2 . ஆங்கு சிறுத்தொண்டராகிய பரஞ்சோதியார் ‘மாமாத்திரர் குலம் பெருக வந்தவர் என்றும். ஏனைய கலைகளுடன் படைக்கலத்தொழிலும் துறைநிரம்பப் பயின்றவர் என்றும் மன்னவன் அணுக்கராய் அவற்காகப் பொருமரசர் தேசங்கள் பல கொண்டு சிறப்படைந்தவர் என்றும் 'மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித் தொன்னகரம் துகளாகச்' செய்தவர் என்றும் சேக்கிழார் கூறுவர். பெரியபுராணத்தில் வாதாபிகொண்ட வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளதை முதன் முதலாக எடுத்துக் காட்டியவர் வி. வெங்கையா என்பவராவர். இன்ன மன்னன் கீழ்ப் பரஞ்சோதியார் பணிபுரிந்தார் என்று சேக்கிழார் கூருதபோதும் வாதாபிப் போரின் அடிப்படையில் அம்மன்னன் முதலாம் நரசிம்ம வர்மன் (630 - 668) எனும் பல்லவன் என்று துணியப்பட்டுள்ளது வரலாற்றறிஞர் வாதாபிப்போர் கி. பி. 642 இல் நடைபெற்றது என்பர். சாளுக்கியரின் பட்டயங்கள் அவர் மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவர்களே பொறுப்பு என்று கூறுவதாலும் வாதா பியில் நரசிம்மவர்மனது பதின் மூன்ரும் ஆட்சியாண்டினைக் குறிப்பிடும் வெற்றித்துரண் காணப்படுவதாலும் வேலூர்ப் பாளையப் பட்டயம் அதற்கு ஆதரவு தருவதாலும் வரலாற்றறிஞர் கூற்றுப் பொருத்த மாகும். தெலுங்கிலுள்ள பசவபுராணம் சிறுத்தொண்டர் காஞ்சியில் வாழ்ந்ததாகக் கூறுதலும் கவனிக்கத்தக்கது."
1. 3.. 63. 11, 1 .. 61 .. 10 2. வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், 25 -
3. மா. இராசமாணிக்கர்ை : பெரியபுராண ஆராய்ச்சி, 1960 பக். 226 - 227 4. டிெ நூல், பக். 81

Page 97
- 176 -
சம்பந்தர் சிறுத்தொண்டரைச் சந்தித்தது, அவர் அரசசேவையில் இருந்து ஒய்வுபெற்று செங்காட்டங் குடியடைந்து சிவதொண்டில் ஈடு பட்டிருந்த காலத்திலென்று பெரியபுராணம் கூறுகின்றது. எனவே, சம்பந்தர் சிறுத்தொண்டரைச் சந்தித்தது கி. பி. 642க்குப் பின்ன ராதல் வேண்டும். சம்பந்தர் திருச்செங்காட்டங் குடியிலே சிறுத் தொண்டரைச் சந்தித்தபின்பு, திருமருகல் சென்று, திருப்புகலூ ரடைந்து, முருக நாயனுர் மடத்திலே தங்கியிருந்தகாலை அப்பர் திருப்புகலூர் வந்து சம்பந்தரையும் சந்தித்தார் என்று பெரிய புராணம் கூறுகின்றது". எனவே அப்பர் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சிக் காலத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும். ஆனல் சம்பந்தர் முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலும் வாழ்ந்தவர் என்று துணிந் துரைக்க முடியவில்லை.
சம்பந்தராற் சைனத்திலிருந்து திருப்பப்பெற்றவன் மாறவர்மன் அரிகேசரி (650 - 700) எனும் பாண்டியன் என்பர் வரலாற்றறிஞர். திருமறைக்காட்டில் அப்பரும் சம்பந்தரும் உடனிருந்த காலை பாண்டிய அரசியும் அமைச்சரும் தம் நாட்டை மீட்கவேண்டி நின்றதைப் பெரிய புராணம் கூறுவதால், அப்பர் மாறவர்மன் அரிகேசரி காலத் திலும் வாழ்ந்தவராதல் வேண்டும்?.
சுந்தரமூர்த்திநாயனர் சம்பந்தர் திருக்கோலக்காவிற் பொற் ருளம் பெற்றதையும் திருவிழிமிழலையிற் படிக்காசு பெற்றதையும் குறிப்பிட்டுள்ளார் 4, ** பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந் தளித்தான் " எனவும், " தக்க பூமனைச் சுற்றக் கருளொடே தார முய்த்தது பாணற் கருளொடே “ எனவும் சம்பந்தர் கூறுவன* பாணபத்திரரைக் குறிப்பனவாகச் சிலர் கருதியமை பொருத்த மின்று பாணபத்திரர் நிகழ்ச்சி சுந்தரர் காலத்தவரான கழறிற் றறிவாருடன் தொடர்புடையது ; சம்பந்தர் கூறுவன திருநீலகண்ட யாழ்ப்பாணநாயனர் தொடர்புடையவை. ' பண் சுமந்த பாடல் பரிசுபடைத் தருளும், பெண் சுமந்த பாகத்தன்' எனும் இடத்திலே சம்பந்தர் தம்பாடலுக்குப் பரிசிலாகப் பெற்றதை மாணிக்கவாசகர் குறிப்பிடுவதாகச் சிலர் கருதுவர்; இக்கருத்தினைச் சித்தாந்தமாகக் கொள்வது சாலாது. காரைக்காலம்மையார் காலம் அப்பர் சம்பந்த ருக்கு முற்பட்டதென்ற சேக்கிழார் கருத்தினை ஆதரிக்கும் குறிப்புகள்
வார்கொண்ட வன்முலேயாள் சுருக்கம் 31 - 48
வம்பருவரி வண்டுச் சருக்கம் 598.618 ஏழாந்திருமுறை. 62 . 8; 88 . 8
. 62.9 ; 3. 15. 6 திருவம்மானே, 8; சி. தேசிகவிநாயகம்பிள்ளை கவிமணியின் உரைமணிகள், 1956, பக். 85-86

- 177 -
தேவாரத்திலுள என்று கருத இடமுண்டு சம்பந்தர் திருமூல ருக்குப் பிற்பட்டவர் என்று கருத வைக்கும் கர்ணபரம்பரைக் கதைகள் வழங்குகின்றன".
காசிச்செட்டியவர்கள் சம்பந்தர் பாடியவை பதினருயிரம் பதிக மென்று கூறச் சதாசிவம்பிள்ளை பதிஞயிரம் என்று கூறியுள்ளார்; திருமுறை கண்ட புராணம் பதிஞருயிரம் பதிகமென்றே கூறு கின்றது. 8 நம்பியாண்டார் நம்பி " தமிழ்ப் பதினுழுயிர நற்பனுவல்" எனவும் "பச்சைப் பதிகத்துடன் பதினருயிரம்பா" எனவும் சம்பந்தர் தேவாரத் தொகை பற்றிக் கூறுவர்?. ஆயினும் திருமுறை கண்ட புராணத்தின் காலத்திலே 384 பதிகங்கள் கிடைத்தன. சம்பந்தர் தேவாரத்தின் பழைய பதிப்புகளிலே 383 பதிகங்களே இடம்பெற் றன. திருவிடைவாய்ப் பதிகம் 1918ஆம் ஆண்டிலே கல்வெட்டி லிருந்து பெறப்பட்டது. இன்று சம்பந்தர் தேவாரத்திலே 384 பதிகங்கள் இடம்பெறுகின்றன. காஞ்சிபுரம் மகாவித்துவான் கோ. சபாபதி முதலியார் சம்பந்தர் தேவாரத்தை 1864ஆம் ஆண்டிற் பதிப்பித்தார். சபாபதி முதலியார் குறிப்புக் காண்க.
KitKaixošEZYWARCKWAVES
3F títu 55ñř. - Champanthar,
இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நல்லூரில் இருந்த வேலாயுத முதலியாரது புத்திரர். நல்லூர் ஆறுமுகநாவலர்க்குச் சகபாடி, பெயர்பெற்ற சரவணமுத்துப் புலவரிடம் கல்விகற்றவர். இலக்கண இலக்கியங்களில் மாத்திரமல்ல ஆகமசாத்திரங்களிலும் கசடறத் தேர்ச்சி பெற்ற இவர் அரசாட்சியாரிடந் தெருப்பகுதி ஒவசீயர்* வேலையில் அநேக வருடங்களாக அமர்ந்திருந்து அகாலத்தில் இறந்து விட்டார். இவர் சுற்றமித் திரர் நல்லூரில் இந்த நிமிஷமும் இருக் கிருர்கள். இவர் எமது காலத்தர், உடுப்பிட்டியிலே தற்காலம் பிர தாபம் பெற்றிருச்கும் சிவசம்புப் புலவர், செந்திநாதையர் முதலா னேர் இவர்க்கு மாணுக்கர்.
குறிப்பு
நல்லூர்க் கோவிற் சட்டம்பு தெல்லிப்பழை தொம் பிலிப்பு வைசியர்கோன் முதலியார், நல்லூர் வேலாயுத முதலியார் மகன் சம்பந்தப்புலவரையும் மாதகல் தொம் அந்திரேசு மனப்புலி
1. பெரியபுராணம், வம்பருவfவண்டுச் சருக்கம், 1008 : தேவாரம் 1, 45 , 11, 4 .95. 4 2. தி. வை. சதாசிவ பண்டாரத்தார்: தமிழ் இலக்கிய வரலாறு ,ே பி. 250-600, 1951, பக்.78,83 3. Q&ii. ! 4, 25 4. ஆளுடைய பின்ளேயர் திருவுலாமால், 62; ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, 42 5 செய். 25 6. மயிலே சீனி. வேங்கடசாமி : பத்தொன்பதாம் நூற்றண்டில் தமிழ் இலக்கியம், பக். 384
Lunt - 12

Page 98
--س۔ 178 ستہ
முதலியார் மகன் சரவணமுத்துப் புலவரையும் முறையே பெளத்திர ணுகவும் தெளகித்திரனுகவும் பெற்றுக்கொண்ட பெரும்பேறுடையவர் என்பர். ஆறுமுகநாவலரும் சம்பந்தப்புலவரும் வேலாயுத முதலியா ரிடமும் பயின்றவர்கள் ; இருபாலை சேணுதிராய முதலியாரிடமும் சம்பந்தப்புலவர் பயின்றவர் என்பர். உடுப்பிட்டி அ. சிவசம்புப் புலவர் (-1910), குப்பிழான் சி. செந்திநாதையர் (1848-1924), மாதகல் சு. ஏரம்பையர் (1848-1914) முதலானேர் சம்பந்தப் புலவரின் மாணுக்கர். "தமிழ் புளூராக்" வெளிவந்தபோது சம்பந்தர் வாழ்ந்துகொண்டிருந்தனர் போலும். இவர் கதிர்காமக்கந்தன் மீது பல கீர்த்தனைகள் பாடியுள்ளார் என்பர்.*
சம்பந்த சரணுலய சுவாமி.- Champantha Charanaliaswamy.
இவர் திருக்கைலாச பரம்பரைத் தருமபுர ஞானசம்பந்த தேசிக ரது ஆதீனத்தைச் சேர்ந்தவர். கச்சியப்ப சிவாசாரியர் அகலமாய்ச் செய்த கந்தபுராணத்தைச் சுருக்கிப் பாடிக் கந்தபுராணச் சுருக்கம் என்று அதற்குப் பெயர் இட்டனர். இவரது மரபிலே தற்காலம் வரைக்கும் ஆசாரி அபிஷேகம் பெற்றிருப்பார் நூற்றுப் பதினுல்வர் என்று சொல்லிஇருக்கக் கண்டோம்.
குறிப்பு
இவர் சரிதம் ** தமிழ் புளூராக்" நூலில் இடம்பெறவில்லை. சம்பந்த சரணுலயர் என்பது தீட்சாநாமம். இவரது இயற்பெயரோ அன்றிப் பிறப்பிடமோ இன்று அறிய முடியாதவை. இவர் தருமபுர வாதீனத்தின் ஆரும் பட்டத்தில் வீற்றிருந்த திருஞானசம்பந்த தேசிகர் காலத்தவர்; அக்காலம் பதினேழாம் நூற்ருண்டாகும். இவர் வெள்ளியம்பலவாணத் தம்பிரானின் மாணவர் என்பது கர்ணபரம்பரைச் செய்தி.
கந்தபுராணச் சுருக்கம் மைசூர் அரசர் வேண்டுகோளின்படி இயற்றப்பட்டது என்பர். சம்பந்தசரணுலயர் தம் ஞானகுரு திரு ஞானசம்பந்த தேசிகர் மீது சிகாரத்தினமாலை எனும் பதிகத்தையும் பாடியுள்ளார்.
1. க. வேலுப்பிள்கின: பாழ்ப்பாண வைபவ கௌமுதி, 1918, பக். 198 2. சி. கணேசையர் : ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், 1939, பக். 40 3. டிெ நூல் பக் 118 4. Aą i, Lä. 41

- 79 -
சந்தானஅகவலிற் களந்தை ஞானப்பிரகாசர் குறிப்பிடும் சம்பந்தீ சரணுலயர் என்பவரே மதுரைச் சிவப்பிரகாசர் கி. பி. 1489ஆம் ஆண்டில் எழுதிய சிவப்பிரகாசவுரையிற் குறிப்பிடும் தத்துவவிளக்கம் என்னும் நூலின் ஆசிரியரெனவும், அவர் சீகாழி சிற்றம்பலநாடி களின் சீடர் சீகாழி பழுதைகட்டி சம்பந்த முனிவரின் மாணவகர் எனவும், அவரே கண்ணுடைய வள்ளல் எனவும் சிலர் கருத்துத் தெரி வித்துள்ளனர். இக்கூறறுகள் மேலும் ஆராயப்பட வேண்டியவை. தத்துவவிளக்கம் உரையுடன் குப்பிழான் சி. செந்திநாதையரால் 1918ஆம் ஆண்டிற் பதிப்பிக்கப்பெற்றது;
கந்தபுராணச் சுருக்கத்திற்குத் தங்கவேலுச் சுவாமி தேவர்", வட்டுக்கோட்டை க. குருமூர்த்தி ஐயர் முதலானேர் வசனம் எழுதி யுள்ளனர்.
suttus. - Chayampar.
இவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரிக் கோயிற்பற்றைச் சேர்ந்த மறவன்புலத்திலே, வேளாளர் மரபிலே பிறந்தவர். கல்வி வல்லவர் எனப் பெரும் பெயர் பெற்ற இருபாலைச் சேனதிராய முதலியார்க்கு மாணவகராகிய இவரை நாம் க.அசச ம் ஞu) இரண்டொரு தருணங் கண்டு சம்பாஷித்திருக்கிருேம். நன்ருய் வாசித்தவராயினும், சொல் விளம்பியில் அதி பிரிதியுற்று அதற்குத் தம்மை அடிமையாக்கினவர். உமாபதி மாலை எனும் பெயரிய ஒர் பாடலைப் பாடினர். அதிலே கo ஆசிரிய விருத்தங்கள் உள. மாதிரிக்காய் அதில் ஒன்றை இவ் விடந் தருகின்ருேம். இவரது மகன் ஒருவரை அறிவோம். அவருஞ் சற்றே படித்தவர்.
"திருவருட் பரமா னந்தனை ஞானச்
செஞ்சுடர் விளக்கையென் னுளத்திற்
றெவிட்டாத தேனைக் கருணைவா ரிதியைத்
தில்லைமன் முடிய சிவனைக்
குருவருட் கோலா கலவுமா பதியைக்
கும்பிட்டேன் குறைமுறை யிட்டுக்
குளிர்புக ழருளா சிரியமை யாறு
பாமாலை வறியனேன் கூற
1. ந. சி. கந்தையபிள்ள்ே : தமிழ் இலக்கிய அகராதி, 1952 பக். 26,

Page 99
--- 180 --سس
அருவ்ருட் கருவா யிருவடி வாய்த்திரா
கப்பரா பரப்பெருஞ் சோதி யாதிநா தாந்தன னந்தவடி வுமைங் கரநால் வாய்முக் கண்ணும் இருவருட் செவியோர் மருப்புடன் புழைக்கை யேந்தியகூ ரியதிருக் கோட்டி யானைமா முகவ னேகனெம் பெருமா
னிணையடி யிறைஞ்சிவாழ் வாமே.”*
குறிப்பு
இவர் சரிதம் 'தமிழ் புளூராக்” நூலில் இடம்பெறவில்லை;
சரவணப்பெருமாளையர். - Charavanapperumal Ayar.
சென்னைமாபுரிக்குச் சமீபத்திலே உள்ள திருத்தணிகையிலே வீர சைவர் குலத்திலே தமிழ் மாதின் மங்கல சூத்திரஞ் சிறப்புற்று விளங்க இவர் பிறந்தார். இவர் பிதாவுக்குக் கந்தப்பையர் என்று நாமதேயம். அவர் கச்சியப்பமுனிவரைத் தம் ஆசிரியராகக்கொண்டு தமிழ் நன்குணர்ந்த கல்விமாளுதலின் அவரிடமே அவருக்கு இரண்டாம் புத்திரராம் இவர் வித்தியாரம்பஞ் செய்து தொன்னூல் பன்னுரல் கற்று மகா பண்டிதராஞர். இவரது சேட்டர் விசாகப் பெருமாளையர். இருவருங் கலைமாதின் இடக்கண் வலக்கண், இடப் புறம் வலப்புறம்போற் சிறந்து விளங்கினர். இவரிற் கண்ட அரிய கல்வி வல்லமையை இட்டே சென்னைச் சுதேச பிரபுக்கள் தாங்கள் கூடி ஸ்தாபித்த விவேகக் கல்விச்சாலை" என்னும் வித்தியா கோஷ்டிக்கு இவரைச் சபாநாயகமாக்கினர். பரிமேலழகரது உரையோடு தோன் றிய திருவள்ளுவரும் அதன் சிறப்புப் பாயிரமாகிய திருவள்ளுவ மாலைக்கு இவர் இயற்றிய உரையுமே இவர் முதன்முதற் பிரசரித் தவை. பரிமேலழகர் உரையை இவர் திருத்தியும் சுருக்கியுஞ் செய்தனர் என்பதற்குப் பின்வரும் பாட்டுச் சாட்சியாகும்.
**யாவருமெய்ப் புகழ்த்திருவள் ஞவர்நூற்கு
வண்பரிமே லழக ரென்பார் நாவருநல் லுரைசிலகற் றேர்க்கேயாம்
பரிசுதனை நாடி மற்றை
1. и. . விவேக விளக்கச்

سس l8|l عامه...
யாவருமங் கெளிதுணரு முறையதனைச்
சுருக்கிநல மமையச் செய்தான்
பூவருமொண் சீர்கொள்சர வணப்பெருமா
ளையனெனும் புலவன் ருனே."
இதனை கஅகoஆம் ஆண்டு அச்சிடுவித்து அதன் பின்னர்க் கரலிகிதங்களிற் கருத்தும் பதமுமாறி அபத்தப்பட்டுப் போயிருந்த பற்பல நூல்களைப் பரிசோதித்து அச்சிட்டார். அதிவீரராம பாண் டியர் செய்த நைடதத்துக்குக் கைக்கிளைப் படலம் வரைக்கும் உரை எழுதி அதனை முடிவு பெறுவிக்க முன்னே இவர்க்கு முடிவு நேரிட் -து. கைக்கிளைப் படலத்துக்கு அப்பால் இவர் புத்திரர் கந்தசுவாமி ஐயர்' அதற்கு உரை எழுதி முற்றுப்பெறச் செய்தனர். இவராற் பிழைதீர்ந்து பிறர்க்கு உபயோகப்பட்ட நூல்களுள், நாலடியார், திருவிளையாடற் புராணம், திருவாசகம் விசேஷம் பெற்றவை. அவ்வை பாடல்களுள் வாக்குண்டா முரை எனப் பெயரிய மூதுரைக் கும் நல்வழிக்கும், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த நன்னெறிக்கும் உரை எழுதிப் பிரசரித்தார். இயற்றமிழ்ச் சுருக்கம், அணியியல் விளக்கம் என்னும்இரண்டனேடு கோளதீபிகை, நான்மணிமாலை என்னும் இரண்டையும் நவமாய் இயற்றினர். கோள தீபிகையிற் பூமி கோளரூபம் என்றதை ஸ்தாபித்து, ஐரோப்பிய நூற்கருத்துடன் அதை முன் பின் இசைவித்தற்காக அதற்கேற்ற பற்பல திருட்டாந்தங்களைப் பல நூல்களிலும் தாமே சுளியோடி எடுத்து அதிற் காட்டினர். பிரபுலிங்கலீலைக்கு மாயையின் உற்பத்தி வரைக்கும் உரை எழுதினர். வெங்கைக் கோவைக்கும் உரைசெய்தா ரன்றிக் களத்தூர்ப் புராணத்தையும் பாடினர். இவ்வாறு உலகத் துக்கு உபயோகமாகப் பல அரிய காரியங்களிலே தலையிட்டுவரும் போது கற்ரு ரென்றுங் கல்வியற்றரென்றும் பேதம் பாரா மரண தர்மராசன் இவரது ஓட்டத்துக்கு முடிபு கட்டினன். காத்திராப் பிரகாரம் நோய்வாய்ப்பட்டு அகாலத்தே இவர் மரணமடைந்தார். இவர் தற்கால்ப் புலவ்ர்.
குறிப்பு
சரவணப்பெருமாளையர் சரிதம் *தமிழ் புளுராக்" நூலில் இடம்பெறுவதால், அவர் கி. பி. 1859ஆம் ஆண்டிற்கு முன்னர் வியோகமடைந்தவராகலாம். சதாசிவம்பிள்ளை சரவணப்பெருமா ளையர் நைடதத்திற்குக் கைக்கிளைப்படலம் வரைக்கும் உரையெழுதி, அதனை முற்றுவிக்கு முன்னே மறைந்தனர் என்று கூறுவர். சரவணப்
1. து. பா. கந்தப்பைபர் 2. நூ. பா. வேங்கைக் கோவைக்கும்

Page 100
ഷ് 182 -
பெருமாளையர் கைக்கிளைப் படலம் வரையும், அவர் மகன் கந்த சுவாமி ஐயர் மாலைப்படலம் முதல் இறுதிவரையும் நைடதத்திற்கு எழுதிய வுரை சென்னை கல்வி விளக்க அச்சுக்கூடத்திற் சுபகிருதுடு) வைகாசிமீ (1842) பதிப்பிக்கப்பெற்றதால், சரவணப் பெருமா ளையர் 1842ஆம் ஆண்டிற்கு முன்னர் இறையடி சேர்ந்திருக்கலாம். விசாகப்பெருமாளையரும் சரவணப்பெருமாளையரும் இரட்டைப் பிறவிகள் என்று சிலர் கூறுவதற்கு ஆதாரமிருப்பதாகத் தெரிய வில்லை" இருவரும் இருதாய் பிள்ளைகள் என்ற கருத்தும் கவனிக்கத் தக்கது. சரவணப்பெருமாளையர் அவர்கள், முகவை இரங்கைய கவிராயரின் குமாரர் இராமாநுசக் கவிராயரிடமும் பாடங் கேட் டவர். இவரிடம் பயின்றவர்களில் மழவை மகாலிங்கையர், தில்லை யம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதர், ஈசூர் சச்சிதானந்த சுவாமி கள் முதலானுேர் குறிப்பிடத்தக்கவர். இவர் தந்தையையும் தமை யனையும் சதாசிவம்பிள்ளை விதந்து தனித்தனியே கூறியுள்ளார்.
சரவ்ணப்பெருமாளையர் பாடிய நான்மணிமாலை குணங்குடி மஸ்தான் சாகிபுமேலதாம் *. இவர் பாடிய புராணத்தினைக் குளத் தூர்ப் புராண மெனவும் ஒருவர் அழைத்துள்ளார்?. இலக்கணச் சுருக்க வினவிடை எனும் நூலையும் பாலபோத இலக்கணவினவிடை என்ற நூலையும் சரவணப்பெருமாளையர் இயற்றியதாகச் சிலர் கூறி யுள்ளனர் 8. இக் கூற்றுப் பொருத்தமற்றதென்பது விசாகப் பெருமாளையர் குறிப்பாற் புலனுகும்.
சரவணப்பெருமாளையர் மாயையின் உற்பத்தி வரையும், அவர் மகன்கந்தசுவாமி ஐயர் மாயைபூசை கதி முதல் வசவண்ணர் வந்த கதி வரையும், பிரபுலிங்கலீலைக்கு உரையெழுதியுள்ளனர். பழமலை யந்தாதிக்கும் சரவணப்பெருமாளையர் உரை கண்டனர் என்பர். ஆறுமுகநாவலரின் பழைய உரைப்பதிப்பு 1860ஆம் ஆண்டு வெளிவந்தபின், சரவணப்பெருமாளையர் உரையோடு திருக்கோவை யார்ப் பதிப்பொன்று வெளிவந்ததாக சு. அநவரதவிநாயகம்பிள்ளை கூறுவர்; ஆனல் விசாகப்பெருமாளையர் திருக்கோவையாருக்கு உரையெழுதி 1897ஆம் ஆண்டில் அச்சிட்டதாக மயிலை சீனி
1. மயில் சீனி வேங்கடசாமி பத்தொன்பதாம் நூற்றண்டில் தமிழ் இலக்கியம், 1952 பக். 369 2. மு. வை. அரவிந்தன் உரையாசிரியர்கள், 1968, பக், 481 3. மயில் சீனி. வேங்கடசாமி. டிெ நூல், பக், 273-274
4. டிெ நூல், பக். 189
5. டிெ நூல், பக். 274 0S TL TTS LS000S LLLS TLLTtLLLLSSSTTTT TtS 0000S TS000 7. மயில் சீனி, வேங்கடசாமி : டிெ நூல், பக். 274-215 8. தமிழ்ப் பெருமக்கள் வரலாறு: மாணிக்கவாசகர் பட்டினத்துப்பிள்போர், 1934, பக். 108

མ- 183 -----
வேங்கடசாமி கூறுவர். நன்னூலுக்கு உரைகண்டவர் விசாகப்பெரு மாக்ளயர்; ஆனல் ஒருவர் சரவணப்பெருமாளையரும் உரைகண்டதாகக் கூறியுள்ளார். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை என்பனவற்றிற்கும் சரவணப்பெருமானையர் உரையெழுதியதாகச் சிலர் கூறுவர் 3. திருமுருகாற்றுப்படைக்குச் சரவணப்பெருமாளையர் இயற்றிய உரைப்பதிப்பு விபரங்கள் கிடைக்கவில்லை.
சரவணப்பெருமாளையர் பழமலையந்தாதியையும் திருச்செந்தி னிரோட்டக யமக அந்தாதியையும் ஒரே புத்தகமாக 1832 ஆம் ஆண்டிற் பதிப்பித்தார் *. இவர் தாயுமானசுவாமி பாடல் எனும் தொகுப்பை 1835 ஆம் ஆண்டிற் பதிப்பித்ததாகச் சிலர் கூறுவர்; சதாசிவம்பிள்ளை தாயுமான சுவாமி சரிதத்தில் 1836 ஆம் ஆண்டுப் பதிப்பொன்றினைச் சுட்டுகின்ருரேயொழியப் பதிப்பாசிரியரைச் சுட்டவில்லை. சரவணப்பெருமாளையரின் நாலடியார்ப் பதிப்பு மூலப் பதிப்பு என்று கருத்துப்பட சதாசிவம்பிள்ளை கூறுவர் ; சிலர் அப் பதிப்பு உரைப்பதிப்பு என்பர். சரவணப்பெருமாளையர் கந்த ரநுபூதி (1836), அருணகிரிநாதர் திருவகுப்பு (1838), வருண குலா தித்தன் மடல் (1838), கூளப்பநாயக்கன் விறலிவிடுதூது முதலிய நூல்களையும் பதிப்பித்துள்ளார்.
3 J 61 6JTNT Ĝĝ59ĥ36Đ. - Charavana Thasigar.
தேவிகாலோத்திரம், வீட்டுநெறியுண்மை எனும் இரண்டு கிரந்தங்களை இவர் இயற்றினர் என்பதற்கு மேற்பட இவரைப் பற்றிய சரிதம் வரைய வாய்க்கவில்லை. பாடல் மாதிரிக்குத் தேவிகா லோத்திரத்திலிருந்து ஓர் பாட்டுத் தருகுவம்.
**யோகி யாகி யொழுகு மியல்பினேன்
போக மாற்றிப் பொருண்மேற் பொறிகளை வேக மான பயமும் வியப்பும்போய் மாகர் காணுச் சுகத்தை மருவுவான்."
. மயில் சீவி. வேங்கடசாமி. டிெ நூல், பக். 296
மு. வை. அரவிந்தன்: உரையாசிரியர்கள், 1968, பக், 539 S. GůîJuo afluósi 2 : a) šálu o Jag, 1958, u k. 438 மயில் சீனி, வேங்கடசாமி டிெ நூல், பக். 111-112 டிெ நூல். பக். 380 6. டிெ நூல், பக். 275
s

Page 101
--صا۔ 184 سس۔
குறிப்பு به سبب -- میرسدس حسم مست. سه سیب.م.م. - مسعه مس......سسسسسسس. -
இவர் சரிதம் 'தமிழ் புளூராக்" நூலில் இடம்பெறவில்லை, சரவணதேசிகர் என்ற பெயரிற் பலர் வழங்கப்படுகின்னர் என்று கருத இடமுண்டு. தருமபுரம் ஆதீனத்தின் எட்டாம் தலைவரான அழகிய திருச்சிற்றம்பலதேசிகர் (1680-1700) மாணவகரும், அவர் மேற் கிள்ளை விடுதூது பாடியவருமான, அம்பர்மாகாளம் அழகிய திருச்சிற்றம் பல தேசிகரால் {-1748) நிறுவப்பட்ட சுவர்க்கபுரம் ஆதீனத்தில், வைத்திலிங்கதேசிகரை அடுத்து, மூன்ரும் தலைவராக விளங்கிய தவப்பிரகாசரின் சீடரும், நான்காம் தலைவராக விளங்கிய வருமான சரவணதேசிகர் ஒருவருளர்; திருவாவடுதுறையாதீனச் சிவஞானமுனிவரின் (-1785) மாணு க்கருள் ஒருவரான காஞ்சிபுரம் சரவணபத்தர் அல்லது சரவண தேசிகர் ஒருவருளர்; பொன்னம் பலசுவாமிகளின் சீடர் காஞ்சி சரவண தேசிகர் ஒருவருளர் 1; திருப் போரூர் சிதம்பரசுவாமிகளின் சீடர் சரவணதேசிகர் ஒருவருளர் *; ஆயினும் இவர்கள் பேரால் வழங்கும் நூல்களைப் பலரும் பலவாறு மாற்றி மாற்றி வெவ்வேறு பேருடன் வழங்கியுள்ளமையால், இன்ன நூலின் ஆசிரியர் இன்னர் என்று துணிந்து கூறமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சரவண தேசிகர் பேரால் ஆனந்தருத்திரேசர் பதிகம், உபதேச ஒருபாவொருபஃது, உபதேச சித்தாந்த விளக்கம், உபதேச சித்தாந்தம், ஒருபாவுண்மை உபதேசம், சிவஞானயோகிகள் தோத் திரம், தேவிகாலோத்திரம், பஞ்சாக்கரவநுபூதி, முத்தி முடிவு, வீட்டுநெறியுண்மை என்பன வழங்குவன8.
சரவணப்பெருமாள் கவிராயர். - Charavanapperumal Kavirayar. இவர் பாண்டிநாட்டிலுள்ள முதுகுளத்தூரிலே4 வேளாளர்
மரபிலே பிறந்து, சோமசுந்தர குரு என்பவரைத் தமக்குப் போத காசிரியராகக் கொண்டு கல்விகற்றுக் கவிராயர் என்னும் பெயர் வாங்கி, க எகடு ஆம் டு இராமநாதபுர இராசாவாகிய முத்துராம லிங்க சேதுபதிக்கு வாசல் வித்துவானுஞர் அட்டாவதானத்தில் வல்லவராதலால் அட்டாவதானியெனு நாமதேயமும் இவர்க்குளது. இவ் அவதான வித்தையில் இவர் காட்டிய சாமார்த்தியத்தை விடிந்து சென்னை நபாபு அமருதுல் அமரா, திருவாங்கூர் இராசா இராமவர்ம ராசா, தஞ்சாவூர் இராசா அமரசிங்க மகாராசா, கண்டி இராசா
1. ந. சி. கந்தையாபிள்ளை தமிழ் இலக்கிய அகராதி, 1952, ப. 20
2. ந. சி. கந்தையாபிள்ளை: தமிழ்ப் புலவர் அகராதி, 1960, பக். 157
0SS SSSS tLLLLtLLLLSS TT STTLLTt TYS LLS00S 00S0S 000S00S 00SS
தமிழ்ப் புலவர் அகராதி, பக். 157
4. நூ. பா. சோழநாட்டிலுள்ள நல்லூரிலே

سس 5 18 مسس
இராசாதி ராசசிங்கம் என்னும் சீமான்கள் இவர்க்குத் தகுந்த பரி சளித்தனர். மலையாள இராசாவிடம் பல்லாக்கும் சிவகங்கைக் கெளரி வல்லவராசரிடம் மானியங்களும் பெற்றவர். இவர் புதுக்கோட்டை இராசா விசய ரகுநாத தொண்டைமான் பேரிலும், சேதுபதி இராசாவின் அமைச்சராகிய முத்திருளப்பபிள்ளை 1 முதலாம் பல பெரி யோர்பேரிலும் பிரபந்தங்களோடு பற்பல சீட்டுக்கவிதைகளைப் பாடி, அவரவர் சமுகம் சென்றும், அனுப்பியும், அவரவர் கொடுத்த 19ரிசு பெற்றும் மகிமை உற்றனர். இவரது பாடல்கள் யாவும் சொற் சிறப்புப் பொருட் சிறப்புகளிலே வியப்புப் பெற்றன. மாதிரிக்காப் இவர் பாடிய பன்னிருசீர் இரட்டை ஆசிரிய விருத்தச் சீட்டுக் கவிதை யொன்றை இதன் கீழ்த் தருகின்ருேம்.
**மகபதி நராதிபதி மாதுபதி சேதுபதி
வாசற்பிர சண்டவாக்கி வடி தமிழ்ச் சோமசுந் தரகுரு சாமியடி
மைக்குமடி மைக்குமடிமை மயில்வா கனக்கடவு ளருளின லுபயசா மரைவிருது கொண்டதுல்லியன் மலையாள ராசனரு டந்தபல் லக்குவெகு
மதிபெற்ற சார்வபூமன் யுகமெலா மகிமைபெறு தஞ்சைமக ராசனையோ
ரெட்டடி யழைத்த நிபுண னுசிதனம ராநபா பிருகையாற் றரும்வரிசை
யொரு கையால் வாங்குகவிஞ னுற்றசிவ கங்கையிற் கவுரிவல் லவராச
னுதவுவள நாடுபெற்ருே னுயரிலங் கைப்பூமி ராசசமு கத்தினிலு
மொருகோடி வரிசை கொண்டோன் ககனமூ தண்டவே தண்டபிர மாண்டமுங் கனபுகழ் படைத்தவுர வோன் காசிமுத லாகரா மேசுரம் வரைக்குங்
கவித்துவசம் நாட்டும்விசையன் கற்றுச்சொ லிக்கும்வரு தானு பதிக்குமிரு
கனகதண் டிகைகொடுத்தோன் கவிமதக் குஞ்சரஞ் சரவணப் பெருமாள்
கவிச்சக்கர வர்த்தியோலை
1. மு. பா. முந்திருஎப்பின்

Page 102
ہے۔ 186 ست۔
புகழ்மேவு சிங்கநகர் வளருங் குமாரவேல்
பூபனெதிர் கொண்டுகாண்க
போர்வரா வேங்கைகை பாராத தாதுசெம்
புத்திர மிலாதசாமி
புவியிலிரு ளாவேம மூரலுண் ணுமாடு
பொங்கிவே காத கானம்
பூண்டொடி படாவத்த மறுபடா வுடலெழு
பொதிதந்து நீவாழியே,’’
குறிப்பு
"தமிழ் புளூராக்" நூல் தரும் செய்திகளைச் சதாசிவம்பிள்ளை சிறிது விரிவுபடுத்தி வழங்கியுள்ளார். சரவணப்பெருமாள் கவி ராயரின் ஆசிரியர் பற்றி முன்னர் கூறப்பட்டது. கவிராயரவர்கள் யாழ்ப்பாணம் வண்ண வைத்தியலிங்கச் செட்டியாருக்கும் சீட்டுக்கவி பாடினவர் என்பர்?. இவர் அசுவமேதயாக புராணம், விநாயகர் திருமுக விலாசம், பணவிடுதூது, முத்திருளப்பபிள்ளை மீது காதற் பிரபந்தம் முதலிய பிரபந்தங்களை இயற்றியவர். இவற்றிலே திருமுக விலாசமும் பணவிடுதூதும் மறைந்துவிட்டன என்பர். பணவிடுதூது மதுரைச் சொக்கநாதர் மீதென்றும் இராமேசுவரம் இராமலிங்கர் மீதென்றும் மாறுபடவுரைப்பர் 8.
அட்டாவதானம் பெரிய சரவணப்பெருமாள் கவிராயர் என வழங்கப்படும் இவரை விட வேருெருவர் துவாத்ரீம் சதாவதானம் சரவணப்பெருமாள் கவிராயர் என அழைக்கப்படுவர். சேதுபதி சமஸ்தான வித்துவானும் அருணுசலக்கவிராயரின் புதல்வரும் சிறிய சரவணப்பெருமாள் கவிராயர் எனப்படுபவருமாகிய அவர், அட்டா வதானம் பெரிய சரவணப்பெருமாள் கவிராயரின் பேரனர். அவர் சேதுபதி விறலிவிடுதூது, மகரவந்தாதி, பனசைத்திரிபந்தாதி, மதுரை யமகவந்தாதி, திருச்சுழியல் ஒரெழுத்தந்தாதி, கழுகுமலை ஒரெழுத்தந்தாதி, மதுரைச்சிலேடைவெண்பா, குன்றைச் சிலேடை வெண்பா, கந்தவருக்கச் சந்த வெண்பா, புவனேந்திரன் அம்மானை, கயற்கண்ணி மாலை முதலிய நூல்களை இயற்றியவர் *. பெரியசரவணப்
1. பாவலர் சரித்திர தீபகம், பகுதி -1, 1975, பக். 180 2. அ. குமாரசுவாமிப்புலவர் : தமிழ்ப்புலவர் சரித்திரம், 1916, பக். 76-77 3. த. வீ. செயராமன் : தூது இலக்கியங்கள், 1973, பக். 192-193; தொ. மூ. சிதம்பரகுநாதன்:
சமுதாய இலக்கியம், 1964, பக். (9 4. மயில் சீனி. வேங்கடசாமி : பத்தொன்பதாம் நூற்ருண்டில் தமிழ் இலக்கியம், 1962, பக்.220

سمص۔ 187 سس۔
பெருமாள் கவிராயரும் சிறிய சரவணப்பெருமாள் கவிராயரும் பாடிய தனிப் பாடல்கள் சில தனிப்பாடற்றிரட்டின் பிந்திய பதிப்புகளிற் சேர்க்கப்பட்டுள்ளன.
g Walsdðr(pgbgúL|6ðaust. - Charavanamuttu Pulavar.
இவர் யாழ்ப்பாணம் நல்லூரிலே இற்றைக்கு முன்பின் ச0 வருடங்களின் முன்னே இருந்தவர். மனப்புலி முதலியாருக்கு இரண்டாம் புத்திரராகிய இவர் இருபாலையில் வசித்த சேணுதிராய முதலியார் என்னும் வித்துவசிரோமணியைத் தம் ஆசிரியராகக் கொண்டு, சிறு பிராயத்திற்முனே அருங்கலை வினுேதராய்த் திகாந்தம் தம் புகழ் பரப்பினவர். இலக்கண இலக்கியக் களஞ்சியமாய்க் கற்ருேர் சபையில் மலை மேல் நகரம் என விளங்கிய இந்தப் புலவரேறு வேதாந்த சுயஞ் சோதி என்னும் நூலை இயற்றிஞரன்றி ஆத்மபோதப் பிரகாசிகை என்னும் பின்னேர் நூலைச் சம்ஸ்கிருதத்தி லிருந்து மொழிபெயர்த்தார். இவரிடம் பாடங்கேட்ட மாணுக்கர் பலருட் தமிழ்த் தேசம் எங்கும் புகழ்படைத்த நல்லூர் ஆறுமுக நாவலர் ஒருவர். இவரது கல்வி ஆழத்துக்கும் விவேகத்துக்கும் நைடதப் பாட்டொன்றினை இட்டுக் களத்தூர் வேதகிரி முதலி யார்க்கும் இவர்க்கும் இடையே உண்டுபட்ட தருக்கத்தில் மானிப் பாயில் க அசக ம் ஆண்டு தொடக்கமாய் இந்நாட் காறும் அச்சிடப் பட்டு வருவதும், பின்னிட்ட இருபத்தெட்டு வருடங்களாக எம்மால் நடத்தப்படுவதுமான "உதயதாரகை”ப் பத்திரிகையிற் தோற்றிய பற்பல கடிதங்கள் சாட்சிகூறும். இவர் யாழ்ப்பாணம் வடமாகாண மன்னவராகிய டயிக் துரையிடம் பல வருஷங்களாக உடையாரி உத்தி யோகத்தில் அமர்ந்திருந்தவர். இவ்வாறு இவர் கல்வியாலும் உத்தி யோகத்தாலும் தம் இசையைத் திசை எங்கும் பரப்பிவரவே, நவநீதம் வரும்பொழுது தாழியுடைந்த செயலென. க.அசடு ம் டு) தென் புலத்தார் கோவெனக் கூறப்படுங் காலன் இவர்க்கு மாற்ருனுய்க் கிளம்பினணுதலால் நடுவயசிற் தே கவியோகமாயினர். இவர்க்குப் புத்திரர் ஒருவருளர் எனினும் இவரது உத்தரீயம் அவரது தோளிற் பொறுக்கவில்லை. கல்வியால் மாத்திரமன்றி வாசாலப் பேச்சு அலங் காரத்தாலும் இவர் அதி கீர்த்திபெற்றவர். திருக்கோணேசர் மலைக் குறவஞ்சியொன்று பாடத் தொடங்கியும் முற்றுப் பெற்றதில்லை எனக் கேள்வி. மேற்படி பாக்களன்றித் தனிப்பாக்களுஞ் சில பாடினர் கனம்பொருந்திய பேர்சிவல் தேசிகர்க்கு இவர் சிலகால ஆசிரியராய் இருந்தவர்.
1. நூ. பா. ஆற்மயோதம்

Page 103
- 188 -
குறிப்பு காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தைச் சதாசிவம் பிள்ளை விரிவு படுத்தியுள்ளார். சரவணமுத்துப்புலவர் மாதகல் தொம் அந்திரேசு மணப்புலி முதலியாருக்கும் நல்லூர் கோயிற் சட்டம்பு தெல்லிப் பழை தொம் பிலிப்பு வைசிகர்கோன் முதலியார் மசளுக்கும் புத்திர ரா#த் தோன்றியவர். இவர் தாய்மாமன் நல்லூர் சம்பந்தப் புலவ ரின் தந்தை வேலாயுத முதலியார். இவர் மகள் மாணிக்கவல்லி யின் புதல்வரே சிற். கைலாசபிள்ளை (1856-1916) அவர்கள். இவர் வண்ணுர்பண்ணையில் வசித்ததாகச் சதாசிவம்பிள்ளை முன்னர் ஆறு முகநாவலர் சரிதத்திற் கூறியுள்ளார். நல்லூர் வே. சம்பந்தப்புலவர் உடுப்பிட்டி அ. சிவசம்புப்புலவர், நல்லூர் வே. கார்த்திகேடையர்* முதலியோரும் சரவணமுத்துப் புலவரின் மாணுக்கராவர். இவர் நல்லை வேலவருலா எனும் பிரபந்தத்தையும் பாடினர் என்பரி?. இவர் பாடிய தனிப்பாடல் ஒன்று சுன்ஞகம் குமாரசுவாமிப்புலவரின் தமிழ்ப்புலவர் சரித்திரத்தில் இடம்பெறுகிகின்றது. இவர் மாவைக் கந்தசுவாமி பேரிற் பாடிய ஊஞ்சல் இரா. சுந்தரராஜ சர்மாவின் கோவிற்கடவை எனும் நூலில் இணைக் சப்பட்டுள்ளது.
sň šassyn Jů L6u6uří. - Chargarai Pulavar.
இவர் தேவகோட்டையைச் சார்ந்த சிற்றுார் ஒன்றிலே பிறந் தவர். சாதியிலே துருக்கருஞ் சமயாசாரத்தால் மகமதியருமாகிய இவர் தமிழ் நன்கு கற்ற புலவரும் அலங்காரப் பேச்சில் வியப்புற் றவருமாய் இருந்தார். இவர் ஒருமுறை பள்ளிவாசலிலே தொழுது கொண்டிருக்கும்போது இவர்க்கு மைத்துனரும் இவரையொத்த புலவருமாகிய சவாதுப்புலவர் தற்செயலாய் அவ்விடம் வர, அங் கிருந்த கத்தீபு முதலானுேர் அவர்க்குக் கண்ணியமாய் இருக்கைவிட் டெழுந்து அவரை உபசரித்தழைத்தனர். இதுகண்ட சர்க்கரைப் புலவர் தம் மைத்துனர் நாமத்தில் விகடம் விளையாடக் கருதினராய், ஓ ! நம் மதநூற்படி தீண்டக்கூடாத ஆசௌசப் பொருளாகிய சவாது இங்கே வருதல் தக்கதன்றே என்றனர். அது கேட்ட சவாதுப் புலவர், கெட்டி ! சர்க்கரை கண்டங்கொண்டது. ஆணுற் சவாதோ காத்திரங்கொண்டதல்லவா ? ஈதறியீர் மெளனமாய் இருப்பதே யோக்கியம் என்றனராம். இவர் பாடிய பிரபந்தம் மதீனத் தந்தாதி. மதீனம் அரபியா தேசத்துள்ள ஒரு பிரதான நகரம்.
1. அ. குமாரசுவாமிப் புலவர் : தமிழ்ப்புலவர் சரித்திரம், 1916, பக். 83-84 2. சி. கணேசையர்: ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், 1939, பக், 38 3. Aų நூல், μά. 39 −

- 189 -
குறிப்பு இவர், காசிச் செட்டியவர்கள் நூலில் இடம்பெருதவர்களுள்
ஒருவர். சவாதுப் புலவர், திருச்சி ஆ. கா. பிச்சை இபுருகீம் புலவர்
என்போரும் மதீனத்தந்தாதிகள் பாடியுள்ளனர்.
சர்க்கரைப்புலவர் என்ற பெயர் சைவர்களிடையேயும் காணப் படுகின்றது. த. ச. மீளுறட்சிசுந்தரம்பிள்ளை திருவாவடுதுறையாதீன வெளியீடாக விரோதிஞல (1949) பதிப்பித்த சீனிப்புலவரின் திருச் சிற்றம்பலதேசிகர் கலம்பகத்தின் முகவுரையிலே பொன்னெட்டி மாலை சர்க்கரைப் புலவர் பரம்பரையின் செய்திகளைத் தந்துள்ளார். இராமநாதபுரம் கடாரம் எனும் ஊரைச் சேர்ந்தவரும் சாந்தா பிள்ளை என்பவரின் புதல்வரும் திருவாவடுதுறையாதீனத்தின் எட் டாம் பண்டார சந்நிதிகளாக வீற்றிருந்த மாசிலாமணி தேசிகரின் காலத்திற் சின்னப்பட்டத்திலிருந்த சிவக்கொழுந்து தேசிகரின் மாணவகரும் திருமலை சேதுபதிகளின் (1845-1670) ஆதரவைப் பெற்றவருமான பொன்னெட்டிமாலை சர்க்கரைப்புலவர் என்பவர் திருச்செந்தூர்க்கோவை, சேதுபதி அமைச்சர் தாமோதரன்மீது கேள்விக்கோவை, வேதாந்த சூடாமணி சித்தாந்த உரை என்பன வற்றை இயற்றியவர்: கி. பி. 1711ஆம் ஆண்டிலும் வாழ்ந்துகொண் டிருந்தவர். இவருடைய மூன்ருவது புத்திரரானவருக்கும் சர்க்கரைப் புலவர் என்பது பெயர். அவர் மிழலைச் சதகம், வண்டுவனப் பெரு மாள் ஊசல், திருவாடானை சித் திரகவி மஞ்சரி என்பனவற்றை இயற்றியவர் : சாந்துப்புலவர், சீனிச் சர்க்கரைப்புலவர், சீனிப் புலவர், முத்துமுருகப்புலவர் என்பவர்களுடைய தந்தையார் மிழலைச் சதகம் தஞ்சை மகாராட்டிர மன்னன் பிரதாப்சிங் (1739-1763) காலத்தில் அரங்கேற்றப்பட்டது. மயூரகிரிக்கோவை பாடி 1778ஆம் ஆண்டில் அரங்கேற்றிய சாந்துப்புலவர் 1801ஆம் ஆண்டிற் சிவ கங்கை மருதுபாண்டியன் பகைவர் கையிற் சிக்குண்ட தை அறிந்து, பிரிவாற்ருது வருந்தி, தமதுாராகிய சிறுகம் பையூரில் உயிர்நீத்தவர். புகையிலைவிடுதூது பாடிய சீனிச் சர்க்கரைப்புலவர் திருச்செந்தூர்ப் பரணியும் பாடியவர் என்பர். திருவாவடுதுறையாதீனத்தின் பன்னி ரண்டாம் பண்டார சந்நிதிகளும் தம் ஞாஞசிரியருமாகிய திருச் சிற்றம்பல தேசிகர் மீது கலம்பகம் (துறைசைக் கலம்பகம்) பாடிய வர் சீனிப்புலவர். முற்கிளந்தனவற்றுடன் மாறுபடும் செய்திகள் கலைக்களஞ்சியத்தில் இடம்பெறுகின்றன. பொன்னெட்டிமாலைச் சர்க்கரைப்புலவரின் பேரரும், சீனிப்புலவரின் புதல்வருமாகிய சிறு கம்பையூர் சர்க்கரைப்புலவர் என்பவர் தாண்டவராயபிள்ளை கோவை, தட்சிணுமூர்த்தி மும்மணிக்கோவை, திருப்புனவாயிற்
1. தொகுதி நான்கு, பக். 490-491 (1956)

Page 104
س- 190 -س-
பள்ளு, மண்டலகோட்டை வண்டுவனப்பெருமாள் ஊசல், கால சங்காரமூர்த்தி வெண்பா, காலசங்காரமூர்த்தி வண்ணம், புதுக் கோட்டை விசயரகுநாத தொண்டைமான் வண்ணம், அரசர்குளம் வணங்காமுடியார் வண்ணம், திருப்புத்தூர் வைரவரலங்காரம், திரு வாடானை ஆதிரத்தினேசுரர் சித்திரகவியலங்காரம், நட்சத்திரமாலை என்னும் பிரபந்தங்களை இயற்றியவர் என்றும் சாந்துப்புலவர், சீனிப்புலவர், சீனிச்சர்க்கரைப்புலவர், உய்யவந்தபுலவர், சர்க்கரை முத்துமுருகப்புலவர் என்பவர்களின் தந்தை என்றும் சர்க்கரை முத்துமுருகப்புலவர் (சர்க்கரைப் புலவர்) மிழலைச் சதகம், திவாகரம் பொருள் விளக்கம், உலாமாலை என்பவற்றை இயற்றியவர் என்றும் கலைக்களஞ்சியம் கூறுகின்றது.
56) migû Lyon) suff. - Chavathu Pulavar.
இவர் தேவகோட்டைப் பகுதியிலே வசித்த சர்க்கரைப் புல வர்க்கு மைத்துனர். சாதியாற் துருக்கரும் சமயாசாரத்தால் இஸ் லாமியருமாகிய இவர் தமிழ் நன்குணர்ந்த புலவர். இவர்க்கும் இவர் மைத்துனர்க்கும் இடையே நடந்த சம்பாஷணையை மேலே கூறி இருக்கின்ருேம். இவர் முகையித்தின் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் என்னும் பாடலொன்றை இசைத்தனர். அது முகம்மது நபிமேலதாம். இப் பிள்ளைத்தமிழ் அன்றிச் சில தனிப்பாக்களும் பாடினர். பாடல் மாதிரிக்காக எம் கைக்குக் கிட்டின ஐந்து தனிப்பாக்களுள் ஒன்றை இவ்விடந் தருகின் ருேம்.
*" செல்லப்பன் கச்சியிலே சேர்ந்ததற்பி னமணிகள்
நல்லதரு மேக நவநிதியம-சொல்லவே முட்டின்றி யொன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறேழ் எட்டொன்பான் பத்தான வே**
ஆ, க, உ மணி, க, ச, தரு, தி. சு. மேகம், எ, அ. நிதி. க. & O. செல்லப்பனைச் சேர்க்க ஆ முதலாய் எல்லாம் ஒவ்வொன்று கூடி விட்டன.
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் நூலில் இடம்பெருதவர்களில் ஒருவர் முகம்மது மீர் ஜவாது ஆகிய சவாதுப்புலவர். இவர் எமனேசுவரத் திற் பிறந்து பரமக்குடியில் அடக்கஞ் செய்யப்பட்டவர். இவர் காலம் கி. பி. 1745-1808 என்பர் 1. அராபியமொழியிற் சவாது என்பது
1. அப்துர் ரஹீம்: முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள், 1957, பக். 192

- 19 -
பெருங்கொடை வள்ளல் என்று பொருள்படும்; சவ்வாது என்பது ஒருவகைப் பூனையிலிருந்து பெறப்படும் வாசனைப்பொருள். இவர் நாகைக்கலம்பகம், மதீனத்தந்தாதி, திருப்புகழ் என்பனவற்றையும் பாடியுள்ளார். தனிப்பாடற்றிரட்டின் பழைய பதிப்புகளிலே சவ் வாதுப்புலவர் பாடிய ஐந்து பாடல்களுள. இவற்றிலே சதாசிவம் பிள்ளை மேற்கோள்தரும் பாடல் உட்பட்ட கடைசி இரு பாடல்களும் கா. சுப்பிரமணியபிள்ளை பதிப்பிலே இராமகவிராயர் இயற்றியன வாகத் தரப்பட்டுள்ளன. இராமநாதபுரம் அரசர்களால் ஆதரிக்கப் பட்டவரும் இராஜராஜேஸ்வரி பஞ்சரத்தினம் பாடியவருமான சவ்வாதுப்புலவர் என்பவரொருவரும் அறியப்படுகின்றர் ".
சவுந்தரநாயகம்பிள்ளை. - Chavundaranayagam Pily.
இவர் யாழ்ப்பாணத்திலே பழைய வட்டுக்கோட்டைச் சாஸ்திர சாலையில் இற்றைக்கு முன்பின் டுo வருடங்களின் முன்னே ஆசிரி யராய் இருந்து பெயர் படைத்த காபிரியேல் திசிரா என்பவரது கனிட்ட புத்திரர். இவரது சேட்டன் திருவனந்தபுரத்திலே இந் நிமிஷமும் சிரேட்ட நீதியரசராய் இருக்கிருர், சாதியிற் செட்டிப் பிள்ளையும், சமயாசாரத்தில் முந்திப் புரோத்தெஸ்தரும் பிந்திக் கதலிகருமாகிய இவர் முதல் வட்டுக்கோட்டைச் சாஸ்திரசாலையிற் படித்து மறுபடி சென்னை இராசதானி சென்று முற்றக் கற்று அரங்கேறி, வீ. ஏ., என்னும் பண்டிதப்பட்டமும், வி. எல்., என்னும் நியாய சாஸ்திரப்பட்டமும் பெற்று, அப் பகுதியிலே பிரபலிய நியாய துரந்தரராய் இருந்தவர். இவர் சிறந்த இலக்கண வித்துவான் என்ற தற்கு, இவரால் இயற்றப்பட்டு இப்போது ஏழாம் பதிப்பில் வந்திருக்கும் நன்னூற் சுருக்கம் சான்று கூறும். பவணந்தி முனிவர் செய்த நன்னூலிலே விசேஷமுற்ற இருநூற்றிருபது சூத்திரங்களைத் தெரிவுசெய்து மாணுக்கர்க்கு உபயோகமாகச் சிறந்த பயிற்சிப் பாடங்கள் கொடுத்துப் பதமுடித்துக் காட்டி இயற்றி இருக்கின்ரு ரன்றித் தெலிங்குப்பாஷா வல்லவராய் அதிலும் ஓர் இலக்கணஞ் செய்திருக்கின்ருர். தமிழ் தெலிங்கு இரண்டிலுமன்றி இங்கிலிஷிலும் சில புஸ்தகங்களுக்கு ஆக்கியோருமாயினர்.
சிலகாலம் ஆங்கிலேய புதினப்பத்திரிகையும் ஒன்றை நடத்தி வந்தவர். நல்ல வாசாலங்காரப் பிரசங்கியாகும் இவர் சென்னைச் சரிவகலாசாலையிலே வித்தியாபட்டம் பெறப்போகும் மாணுக்கரைப் பரீட்சிப்பாரில் ஒருவராய் அநேக ஆண்டுகளாக அரசாட்சியாராற்
1. M. S. Purnalingam Pillai : Tamil Literature, 1929, p. 319

Page 105
- 192 -
தெரிவுசெய்யப்பட்டிருந்தவர். புலவராய் மெய்ஞ்ஞானக் கீர்த்தனை எனும் பாடலை இயற்றி அச்சிடுவித்தவர். இவர் 67மது சாதியை உயர்த்தும் அணிகலமும், அரியரத்தினமும் போன்றிருப்பினும் தரும ஞயினும் சண்டனென்னப் பெயர்பெற்ற தென்றிசைக்கோன் அகா லத்தே, நடுப்பிராயத்தே, இவர் மேற் தன் கைப்பாசம் வீசினன். ஏறக்குறைய இரண்டு வருடங்களின் முன் வடகரையில் இருக்கும் போது சடுதியில் நோய்வாய்ப்பட்டுப் பரமபதமடைந்தனர். இவரது சமுசாரத்தார் தமது செனனதேசமாகும் யாழ்ப்பாணத்தில் வந் திருக்கிருர்கள். இவரது முதற் றரப் புத்திர ரொருவர் வீ. ஏ., வித்தியாபட்டம் பெற்றிருக்கிருர். இவரது தாயார் யாழ்ப்பாணத் தில் இருந்த ஒந்தாச்சியார் என்பாரது புத்திரி. தகப்பன் கொழும்பு இராசதானியிற் பிறந்தவர், பெற்ருர் இருவரையும் நாம் அறிவோம்,
குறிப்பு
"" தமிழ் புளூராக்' நூல் வெளிவந்தபோது ஜி. பி. சவுந்தர நாயகம்பிள்ளை வாழ்ந்துகொண்டிருந்தார். இவர் 1882ஆம் ஆண்டு வியோகமடைந்தார். இவர் தந்தை காபிரியேல் திசரா (18001838) கொழும்பைச் சேர்ந்த பிலிப்பு திசரா, மரியா எனும் கதலிக பெற்றேரின் புதல்வர் : இலங்கைக்கு வந்த முதல் அமெரிக்க மிஷனரி மாருக்குத் தமிழாசிரியராகி அவர்களுடன் யாழ்ப்பாணம் சென்று தானியேல் பூர் பாதிரியாரின் பிரதம உதவியாளராக விளங்கியவர்; 1819ஆம் ஆண்டு அக்தோபர் மாதம் அமெரிக்க மிஷன் திருக்கூட்டத் தைச் சேர்ந்து, 1821ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், போதக ராகப் பணிபுரிந்தவர்: செமிஞரியில் 1823 முதல் 1831 வரை கடமை செய்தவர். சவுந்தாநாயகம் பிள்ளையின் தாயார், சைமன் ஜகன் Fjög5rt & Fufer (Simon Jurgen Ondaatjie) LögSífuurt Gautif. Sosin &m யவர்களின் தமையன் திருவனந்தபுரம் நீதிபதி ஜி. எஸ். அரிய நாயகம் 1887ஆம் ஆண்டு வியோகமடைந்தார். யாழ்ப்பாணம் மோசஸ் சிந்தாமணி வேலுப்பிள்ளை யுடன் (J. M. S. Velupillai) சென்னைப் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வில் 1858ஆம் ஆண்டிற் சித்தியெய்திய சவுந்தரநாயகம் பிள்ளை பி. ஏ. பரீட்சையில் 1863ஆம் ஆண்டிலும் பி. எல். பரீட்சையில் 1867ஆம் ஆண்டிலும் சித்தி யடைந்து 1868ஆம் ஆண்டு முதல் வக்கீலாகப் பணிபுரிந்தவர். ஐந்து பிராமணர் மேலும் இராமலிங்கபிள்ளைமீதும் ஆறுமுகநாவலர் தனித்தனியே தாக்கல் செய்த வழக்குகளில், நாவலர வர்கள் சார் பில், 1869ஆம் ஆண்டு திசம்பர் மாதம் ருெபேட்ஸ் நீதிபதி முன் னிலையிற் கூடலூர் நீதிமன்றத்திலே தோன்றியவர்கள் சவுந்தர நாயகம்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

حـ- 193 حسب
s Tjög5(SDử. - Chattanar.
இவருங் கடைச்சங்கப் புலவர்மார் சக பதின்மருள் ஒருவராய்த் திருவள்ளுவர் குறண் மேற் சிறப்புப்பாயிரங் கூறினவர். செயிர்க் காவிரியார் மகனர் சாத்தனர் எனு நாமத்தால் இவர் அழைக்கப் படுகிறர். ஆதலிற் செயிர்க் காவிரியார் என்றது இவரது தந்தையார் பெயர். குறட்குச் சிறப்புக்கவியாய் இவர் சொன்ன வெண்பா வருமாறு:
**ஆவனவு மாகா தனவு மறிவுடையார்
யாவரும் வல்லா ரெடுத்தியம்பத்-தேவர் திருவள் ஞவர்தாமுஞ் செப்பியவே செய்வார் பொருவி லொழுக்கம்பூண் டார்."
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்த செய்திகளைச் சதாசிவம்பிள்ளை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். செயிர்க்காவிரியார் மகனர் சாத் தனர் எனும் பெயர் பண்டைய புலவர் பட்டியலிலில்லை. அக்காரக் கனி நச்சுமனர் குறிப்புக் காண்க
& T sigs Utd gust. - Chastiram Ayer.
இவர் சமண் சமயிகளுக்குள் இருந்த திறங்கொண்ட கல்விமான்: சென்னைமா புரியிலிருந்த பவுவர் தேசிகர்க்கு இருபது வருடம் போதகாசிரியராக இருந்து அவர்க்குத் தமிழ்க்கல்வி பயிற்றிரைன்றி அதற்கு முதற் துரு தேசிகர்க்கும் ஆசிரியராய் அவர்க்குந் தமிழோதி வைத்தனர். தமது சமயாசாரக் கோட்பாட்டிலே இவர் முற்றத் தேர்ந்த பண்டிதராய் இருந்தமை பற்றி பவுவர் தேசிகரது கேள்விக்கு ஒருப்பட்டுச் சைந சமய சித்தாந்த நூல் எனப் பெயரிய சிறு கிரந்தம் ஒன்றைக் கத்திய ரூபமாய் இயற்றிக்கொடுக்க, அவர் அதனை ஆங்கில பாஷையில் மொழிபெயர்த்து கஅசக ம் (U) தாம் அச்சிற் பதிப்பித்த வேத அகராதியோடு பிரசுரித்துப் பினபு வீ. ஏ. விததியாபட்டம் பெறுவார்க்கு உபயோகப்பட கஅசு அம் டு தாம் அச்சடிப்பித்த சிந்தாமணி எனுங் காவிய நூலுககுப் பாயிரமாகவும் அச்சடித்துப் பகிரங்கஞ் செய்தனர். இக் கிரந்தந் தவிர வேறேது நூல்களை இவர்
ւյm - 13

Page 106
حسن 194 است.
இயற்றினரெனத் தெரிந்ததே இல்லை. இற்றைக்கு உo வருடங்களின் முன், அதாவது கிறிஸ்தாப்தம் கஅசுசு ல் இவர் தேகவியோக மாயினர்.
குறிப்பு "தமிழ் புளூராக்" நூல் வெளிவந்த காலத்தில் வாழ்ந்துகொண் டிருந்த சைனசமயத்தவர் சாஸ்திரம் ஐயர். இவர் மாணுக்கர் துரு Lunt Siffluuntri (Rev. William Hoyles Drew, L. M. S.), Luarř ur gíflauiTriř (Rev. Henry Bower, S. P. G. 1813-1885) (psoCuntri glisplit 60of புரிந்த மேனுட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பவர் பாதிரியார் முத்தையாபிள்ளையின் உதவியுடன், நச்சினர்க்கினியர் உரையுடன், 1868ஆம் ஆண்டில் வேப்பேரியிற் பதிப்பித்தது, சிந்தாமணியின் நாமகள் இலம்பகம் மட்டுமேயாம். திருத்தேவர் குறிப்புக் காண்க.
சாந்தகவிராயர். - Chantha Kavirayar.
இவர் கிறிஸ்தாப்தம் கஅo O க் கடைசியில் இருந்தவர் எனக் காண்கிருேம். நீதிசூடாமணி என்று வழங்கும் இரங்கேசர் வெண் பாவுக்கு இக்கவிராயர் ஆக்கியோர். இரங்கேசர் எனப்படுவோர் சிறீரங்கத்திருப்பவர் எனக் கூறப்படும் விஷ்ணுவாதலில் அப்பாடல் அவர் மேற்று. அதில் ஒவ்வொரு வெண்பாவும் இரங்கேச என்று முடிகின்றது மாத்திரமன்றிப் பின்னே தோற்றும்,
* சீர்கொண்ட காவேரித் தென்னரங்கத் தெம்பெருமான்
பார்கொண்ட தாளைப் பரவியே-ஏர்கொண்ட ஓங்குபுகழ் வள்ளுவன ரோதுகுறண் முக்கதையைப் பாங்குபெறச் சொல்வேன் பரிந்து" என்று காப்பு வெண்பா சொல்லியபடி, ஒவ்வொரு வெண்பாவிலும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு குறளும் தெரிந்து சொல்லப்பட்டு இருக்கின்றன. பாடல்மாதிரிக்கு ஓர் வெண்பாத் தருவம்.
"சொன்னகம்பத் தேமடங்க ருேன்றுவதா லன்பருளத்
தின்னமிர்த மாகு மிரங்கேசா- மன்னும் அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு.""
-------------- 1. மயில் சினி. வேங்கடசாமி பத்தொன்பதாம் நூற்றண்டில் தமிழ் இலக்கியம், 1962 பக், 283 -
284, 287-288.

- 195 -
குறிப்பு காசிச்செட்டியவர்கள் விதந்துரையாதவர்களுள் ஒருவர் பிறைசை சாந்தகவிராயர். சினேந்திரவெண்பா, தினகரவெண்பா, வடமலை வெண்பா, திருமலைவெண்பா, சிவசிவவெண்பா, திருக்குறட் குமரேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா, முருகேசர் முதுநெறி வெண்பா, முதுமொழிமேல் வைப்பு, வள்ளுவர் நேரிசை, திருப் Hல்லாணிமாலை, திருத்தொண்டர் மாலை முதலியனவும் குறட்பாக் களேயும் அவற்றின் விளக்கமான வரலாறுகளையும் கூறும் பாடல் *ளயுடையன. இவற்றிலே வடமலை வெண்பா, திருமலை வெண்பா, சிவசிவவெண்பா, முருகேசர் முதுநெறிவெண்பா, திருப்புல்லாணி மாலை, சோமேசர் முதுமொழி வெண்பா ஆகியன இரங்கேசர் வெண்பாவினைப்போன்று 133 பாடல்களையுடையவை.
assor Axxiikssus
F17 556úš s 366îJ T uuử. -- Chanthalinga Kavirayar.
இவர் சோழ நாட்டிலே தண்டலைச் சேரி என்னும் ஊரிலே பிறந்த தகுந்த வித்துவான். இவர் செய்த பாடல் தண்டலையார் சதகம். காப்பும், அவை அடக்கமுஞ் சேரின் நூற்ருறு செய்யுள் அடங்கிய இப் பாடல் விருத்தங்கடோறும் பழமொழிகள் வைத்துப் பாடிய காரணத்தாற் பழமொழி விளக்கம் என்று மறு நாமம் இதற் குண்டு. மாதிரிக்காக இவ்விடம் ஒரு விருத்தந் தருகுவம்,
'சங்கையறப் படித்தாலுங் கேட்டாலும் பிறர்க்குறுதி
தனைச்சொற் றலும் அங்கணுல கினிற்சிறியோர் தாமடக்கி நடந்துகதி
uLu GODLuLu LDm7 L L Trif திங்களனி சடையாரே தண்டலையா ரேசொன்னேன்
சிறிது காலங் கங்கையிலே படிந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்லசுரைக் காயா காதே." r
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தண்டலையார் சதகம் பற்றிக் கூறிய வற்றைச் சிறிது விரிவுபடுத்தியிருக்கிருர் சதாசிவம்பிள்ளை. தண்டலை யார் சதகம் சோணுட்டுத் தண்டலைநீனெறி எனும் திருப்பதியில் எழுந்தருளிய நீணெறிநாதர் மீது பாடப்பட்டது. இச்சதகம் படிக்

Page 107
- 196 -
காசுப்புலவராற் பாடப்பட்டதென்று ரா. ராகவையங்கார் சேது நாடும் தமிழும் எனும் நூலிலும் சி. கு. நாராயணசாமி முதலியார் படிக்காசுப்புலவர் சரிதத்திலும் கூறியுள்ளனர். இவர்கள் இவ்வாறு கூறுவதற்குக் காரணமாயிருந்தது தண்டலையார் சதகத்தின் குஜிலிப் பதிப்பு என்பர் : காஞ்சி விகட சக்கர கணபதிமீது தண்டலையார் சதகத்திலும் தொண்டமண்டல சதகத்திலும் காப்பு இயற்றப்பட் டிருத்தலால் இரு நூல்களும் ஒருவருடைய ஆக்கங்களே என்னும் கருத்து? வலுவுடையது என்பதற்கில்லை, சைமன் காசிச்செட்டி, சதாசிவம்பிள்ளை, அ. குமாரசுவாமிப்புலவர், மு. சு. பூரணலிங்கம் பிள்ளை, கா. சுப்பிரமணியபிள்ளை, ச. சோமசுந்தரதேசிகர் முதலாம் இலக்கிய சரித ஆசிரியர்கள் தண்டலையார் சதகத்தின் ஆசிரியர் சாந்தலிங்க கவிராயர் என்று கூறுவதற்கு ஆதாரமாயமைவது யாதென்பதும் தெளிவாகவில்லை, சாந்தலிங்ககவிராயர் காலம் பதினெட்டாம் நூற்ருண்டின் முற்பகுதி என்பதற்கும் ஆதாரம் யாதென்பதும் கூறுவதற்கில்லை 3. தண்டலையார் சதகத்தில் 112 பாடல் கள் இடம்பெறுகின்றன.
3F (T 556účas Gg56à sử.-Chanthalinga Thasigar.
இவர் வீர சைவரைச் சேர்ந்த துறவி. திருத்துறை ஊரிற் பிறந்து வேதாந்த சித்தாந்த பதிநூற்றுறை கண்ட வித்துவானுகும் இவர் நெஞ்சுவிடு தூது, வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம் கொலை மறுத்தல், அவிரோத வுந்தியார் என்னும், ஐந்து நூல்களைச் செய்திருக்கின்ருர், இவ் வைந்தனுள் வைராக்கிய தீபஞ் சதகம் போலவே நூறு செய்யுட் கொண்டது. இந்த இருநூல்களுக்கும் இவர் மாணுக்கராகிய திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் உரை செய்திருக்கிருர். அவிரோத வுந்தியாரும் கo O செய்யுட் கொண்டது. அது மற்றையவை போலாகாது ஒவ்வொரு பாவும் மூன்றடியுற்று இறுதி இரண்டடிகளும் 'உந்தீபற" என்று முடிவது. மாதிரிக்காய் இவ்விடம் ஒருபாத் தருகுவம்,
"அறம்பொரு வின்பம் வீ டாயவோர் நான்கிற்
சிறந்த பயன் வீடென் றுந்தீபற தேரின் வீடே யெலா முந்தீபற’’
1. ச. சோமசுந்தரதேசிகர்: தமிழ்ப்புலவர்கள் வரலாறு, பதினேழாம் நூற்றண்டு, 1951, பக். 142.
2. ந. வீ, செயராமன் : சதக இலக்கியங்கள், 1936, பக், 92-93 3. &. &ủúJInowiuúảhu : Qayiêu Quang, 1958, uả. 420.

- 197 -
இந்நூற்கும் மேற்படி சிதம்பர சுவாமிகள் வெகு ஆராய்வாய் உரைசெய்தனர் அன்றி மேற்கோளாகப் பத்தொன்பது நூல்களில் இருந்து டுசுo பாடல்களைக் காட்டி இருக்கிருர், அவிரோதவுந்தி யாருக்கு இவர் ஆக்கியோர் என்றது பின்வருங் கவியாற் துலாம் i Drlott Stb.
"பன்னெறியி னிகல்விளைக்கும் பலசமயத்
தவருமுத்தி பதத்திற்கீது
நன்னெறியென் றுய்யவவி ரோதவுந்தி யாரெனுநூ னல்கினனல்
வென்னெறிநேர் மறைநெறியா கமநெறியொன்
றெனக்காட்டு வீரசைவத்
தொன்னெறிமா கேசனெங்கள் சாந்தலிங்க
தேசிகளுந் தூயன்றனே."
உஅ ஆகமங்களுள் ஒன்ருய்ச் சம்ஸ்கிருதத்திலிருந்த வீராக மத்தைத் தமிழில் மொழிபெயர்த்தாரும் இவரே (வீராகமம் = வீர சைவ ஒழுங்கு பகருநூல்) கொலை மறுத்தலைப் பலர் அச்சிட்டு இருக் கிருர்கள். இவர் காலம் கி. பி. க எ ம் சதாப்தம்.
குறிப்பு
கண்ணுடைய வள்ளலின் ஒழிவிலொடுக்கத்தைக் காசிச்செட்டி யவர்கள் சாந்தலிங்கதேசிகர் இயற்றினர் எனக் கூறிய தவற்றினைத் திருத்தி வீராகமத்தைப் புதிதாகக் கூறி, நூல்கள் பற்றிய சில விபரங்களைத் தந்து சதாசிவம்பிள்ளை சரிதமெழுதியுள்ளார். சாந்த லிங்கசுவாமிகள் பிறந்தவூர் திருத்துறையூரெனவும் துறையூரெனவும் ஆறுமுகநாவலர், சைமன் காசிச்செட்டி, சதாசிவம்பிள்ளை, குமார சுவாமிப்புலவர் முதலானேராற் கூறப்பட்டுள்ளது; தொண்டை நாட்டுப் பேரையூர் என்ருர் இலக்கிய வரலாறு தந்த சுப்பிரமணிய பிள்ளை பேரூர் என்ருர் இராமலிங்க அடிகள் அவிநாசி என்ருர் வேறு சிலர். மயிலம் பொம்மபுரம் சிவஞானபாலையரும் துறைமங் கலம் சிவப்பிரகாசரும் சாந்தலிங்கர் காலத்தில் வாழ்ந்த மூத்தோராவர், சிவஞானபாலையர் கருத்துப்படிச் சிவப்பிரகாசரின் சகோதரி ஞானம்பிகையை மணந்து இல்லறம் நடாத்திய பின்பே சாந்தலிங்கர் துறவு பூண்டார் என்னும் கதை நோக்குக. சிவப்பிர காசரின் தம்பி வேலையர் வீரசிங்காதன புராணத்தைக் கி. பி. 1719ஆம் ஆண்டிற் பாடிமுடித்ததாக அறியமுடிவதாற் சாந்தலிங்கரும் பதினெட்டாம் நூற்றண்டின் முற்பகுதிவரை வாழ்ந்தவர் என்று கருதலாம்.

Page 108
- 198 -
திருப்பேரூராதீனத்தினர் தம் தாபகர் சாந்தலிங்கசுவாமிகளின் உபதேச குரு துறையூர் சிவப்பிரகாசர் என்பர் 1. திருவாவடுதுறை ஆதீனத் தாபகர் நமச்சிவாயமூர்த்திகளின் சீடர் சித்தர் சிவப்பிரகாசர் கும்பகோணத்திற் பிறந்தமையாற் குடந்தை சிவப்பிரகாசர் என்றும், திருவாவடுதுறையாதீனத் தொடர்பாலே துறைசை சிவப்பிரகாசர் என்றும், திருவண்ணுமலையில் இலிங்கம நாயகரால் அமைக்கப்பட்ட மடத்திலே தங்கியிருந்து பணிபுரிந்தமையாலே திருவண்ணுமலை சிவப்பிரகாசர் என்றும், இலிங்கா ரெட்டியார் துறையூரில் அமைத்துக் கொடுத்த மடத்திலே தங்கி இருந்து பணியாற்றியமையாலே துறை யூர் சிவப்பிரகாசர் என்றும் பல பெயர் பெற்றர். இவர் திருக்கழுக் குன்றமாலை, அத்துவித வெண்பா, கணபாஷித ரத்தினமாலை, சதகத்திரயம், அனுபவ சட்ஸ்தலம், திருவாலந்துறைச் சிந்து என் பனவற்றின் ஆக்கியோர். இவருடைய வேருெரு சீடர் விருத்தாசல புராணம், திருவிடை மருதூர்ப்புராணம் என்பனவற்றை இயற்றிய துறையூர் ஞானக்கூத்தர். சாந்தலிங்கதேசிகர் திருப்பேரூரிலே ஆதீனம் நிறுவியவர்; திருப்பேரூர் கோயம்புத்தூருக்கு மேற்கே மூன்றுமைல் தொலைவில் உள்ளது. இவ்வூர் மேலைச் சிதம்பரம் எனவும் அழைக்கப்படும்.
திருப்பேரூர் சாந்தலிங்கதேசிகர் சீடரும் பூர்வாசிரமத்திற் கன்னட அரசராக இருந்தவராகக் கருதப்படுபவருமான குமாரதேவர் விருத்தாசலத்தில் எழுந்தருளி அத்துவித உண்மை, விஞ்ஞான சாரம், பிரமானுபூதி விளக்கம், மகாராசா துறவு, சுத்த சாதகம், சகசநிட்டை, ஞான அம்மானை, ஆகமநெறியகவல், பிரமானுபவ அகவல், பிரமசித்தியகவல், சிவதரிசன அகவல், சிவசமரசவாத அகவல், வேதநெறியகவல், தசாவத்தைக் கட்டளை, வேதாந்த தசகாரியக் கட்டளை, உபதேச சித்தாந்தக் கட்டளை என்னும் பதினறு நூல்களையும் திருவாதவூரர் புராணவுரையையும் இயற்றியவர்;
அவர் சீடருளொருவர் ரெட்டி சிதம்பரசுவாமிகள் நிறுவியதே விருத்தாசலம் குமாரதேவர் மடம் இப்பொழுது இம்மடம் துறை யூர் சிவப்பிரகாசதேசிகர் ஆதீனத்தின் ஆட்சியிலுள்ளது. குமார தேவரின் மற்ருெரு சீடர் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், அவரைச் சதாசிவம்பிள்ளை தனியே விதந்து கூறியுள்ளார். திருப் போரூர் சிதம்பரசுவாமிகள் கொலை மறுத்தலுக்கும் உரைகண்டுள் ளார். ஆறுமுகநாவலர் கொலைமறுத்தல் மூலத்தைச் சிதம்பர சுவாமிகள் உரையுடன் 1851 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வித்தி யானுபாலனயந்திரசாலையிற் பதிப்பித்துள்ளார்.
1. வ. சுப. மணிக்கம் (தொகு) தமிழியற் காட்சிகள், 1968, பக். 27-28

-- 199 س
சாந்தலிங்கதேசிகர் நெஞ்சுவிடுதூது செய்தமைக்குப் போதிய ஆதாரமில்லை என்பர் 1, வைராக்கிய தீபத்திற் காப்பு நீங்கலாக நூறு பாடல்களுள. கொலை மறுத்தலில் இருபத்திரண்டு பாடல்க ளுள. சுொலை மறுத்தல், வைராக்கிய தீபம், வைராக்கியசதகம் என்பவற்றை நல்லூர் க. சதாசிவப்பிள்ளை பதிப்பித்துள்ளார் 2.
& T flybirgssin2.T. - Chaminatha Pilly.
திரிசிரக் கோட்டை ஆண்டார் வீதி முத்துக்கறுப்பபிள்ளையின் புத்திரர். வேலாயுதக் கண்ணி என்னும் பாடலை இவர் இயற்றினர். இவையன்றி மேலதிகமாய் இவரைப் பற்றி யாதும் தெரிந்திலது.
- குறிப்பு இவர் காசிச்செட்டியவர்கள் நூலில் மட்டுமன்றி சதாசிவம் பிள்ளையின் நூலுக்குப் பின்வந்த புலவர் சரிதங்கள் பலவற்றிலும் இடம்பெழுதவர். சாமிநாதபிள்ளை என்ற பெயருடையோர் பலர் தமிழ்ப் புலவர் அகராதியில் இடம் பெறுவர்.
9g5 touJG598 ff. - Chithampara Thasigar.
சைவ சமய ஆசாரக் கொள்கையின் முதிர்ந்த துறவியாய்த் தேசிகர் என்றும் சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்ட இவர் திருத் துறையூரில் வசித்த சாந்தலிங்க தேசிகர்க்கு மாணுக்கர். இவர் தமது குரவரிடம் பதிசாஸ்திரங்கள் வாசித்துத் தேர்ச்சி பெற்று அவர் இயற்றிய ஐந்து நூற்களுக்குத் தகுந்த சிறந்த உரைகளை எழுதிக் கீர்த்தி பெற்று உரையாசிரியராஞர் அன்றித் தாமே வல்ல புலவருமானுர். இவர்: s
**ஆய்ந்த வின்பம் வாய்ந்துள நிறையச்
சாந்தையன் பதம் யாந்தொழு வோமே" என்று வைராக்கிய தீப உரையிலும்,
**போந்தே முயிர்க்குயி ராந்துணை யொத்த
சாந்தையர் தம்பத மேந்து கருத்தே'
1. ச. சோமசுந்தரதேசிகர்: தமிழ்ப்புலவர்கள் வரலாறு, பதினேழாம் நூற்குண்டு, 1951,பக். 127 2. வே. கனகரத்தீன உபாத்தியபர் : ஆறுமுகதவலர் சரித்திரம், 1968, பக். 93

Page 109
-- 200 سے
என்று வைராக்கிய சதக உரையிலும் தமக்குந் தம் ஆசிரியர்க்கு முற்ற நேசபந்தனத்தை விளக்கிப் பாராட்டினர். மேற்கூறலுற்ற நூலுரைகளன்றித் தோத்திரமாலை, உபதேசவுண்மை, உபதேச வுண்மைக் கட்டளை, நெஞ்சுவிடுதூது, பஞ்சதிகார விளக்கம் ! என்னும் பாடல்களை இவர் இயற்றினர். இவற்றுட் பஞ்சதிகார விளக்கம்? என்றது சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக் கிரகம் என்னும் பஞ்சகிருத்தியங்களையும் விளக்குவது. இந்நூலில் டு க செய்யுளுள. இதற்குச் சிதம்பர சுவாமிகள் உரையருளினர். சென்னைபுரிக்குத் தெற்கே உடு மைல் தூரத்திலுள்ள திருப்பே ரூர் மடத் தம்பிரானுய் இவர் இருந்தபோது அப்பதியிற் பூசிக்கப்படுங் கந்தசுவாமிக்குப் புகழாகத் திருப்போரூர்ச் சந்நிதி முறை என்னும் பாடலை இயற்றினுர். இவர் பிறந்த இறந்த காலங்கள் வரையறை யாய்த் தெரியாதபோதும், கி. பி. க.அ ம் சதாப்தத்தில் இருந்தவர் என்று உத்தேசிக்க இடமிருக்கிறது. இவரது பாடற் திறமைக்குப் பஞ்சதிகார விளக்கக் 3 காப்புச் செய்யுளைத் தருவம்,
* முகமதியுங் கட்கடுவுங் களவளையு
முத்தரிய முகப டாத்துப்
புகர்மதமா மழகளிறுங் கரமலர்க்கற்
பகதருவும் பொருவில் பாதத்
திகழுறுபங் கயநிதியுந் தோன்றுபரைப்
பாற்கடலிற் சிறந்து தோன்றும்
உகலருமைங் கரவமுதை யுளங்குளிரப்
பூரித்தே யுவகை பூப்பாம்."
இலக்கணஞ் சிதம்பரநாத முனிவர் என வழக்கமாய் அழைக்கப் படா நின்ற இவ் வித்துவான் சிவஞான யோ கீஸ்பர சுவாமிகளது பன்னிரு மாணவகருள் ஒருவர். தொட்டிக்கலைச் சுப்பிரமணியர், இராமநாதபுரம் சோமசுந்தரம்பிள்ளை என்பவர்களுக்குச் சகபாடியாம் இவர் திருப்பாதிரிப்புலியூர்ப் 4 புராணத்தை மொழிபெயர்த்தவர். இவர் இருந்த காலம் இவரது ஆசிரியர் காலமே.
1, பா, பஞ்சாதிகார விளக்கப் , பா. பஞ்சாதிகார விளக்கம்
பா. பஞ்சாதிகாரி விளக்கம்
பா. திருப்பாதிரியூர்ப்
:

- 201 -
குறிப்பு
திருப்போரூர் சிதம்பர தேசிகர் காசிச்செட்டியவர்கள் நூலிலும் இடம்பெறுகின்ருர், பூர்வாசிரமத்தில் மதுரை சிதம்பர கவிராசர் என்று பேர்பெற்ற சிதம்பர தேசிகர் திருப்பேரூராதீனத்தாபகர் திருத் துறையூர் சாந்தலிங்க தேசிகரின் சீடரல்லர்: அவர் சீடரும் விருத்தாசலத்திற் பணிபுரிந்தவருமான குமாரதேவரின் சீடராவர். இவர் சென்னையை அடுத்த திருப்போரூரில் மறைந்திருந்த குகால யத்தைப் புதுக்குவித்து மடமும் அமைத்துத் திருப்பணி செய்தவர் இவரை அடுத்து, திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் மடத்தில், இவர் சீடர் கோவூர் சிவசங்கரத்தம்பிரான் ஆசாரியராய் அமர்ந்தார் இவர் காலம் பதினெட்டாம் நூற்ருண்டின் முற்பகுதியாதல் சாலும்?
திருப்போரூர் சிதம்பரசுவாமிகள் காழிக் கண்ணுடையவள்ளலின் ஒழிவிலொடுக்கத்திற்கும் திருப்பேரூர் சாந்தலிங்கசுவாமிகளின் கொலைமறுத்தல், வைராக்கியதீபம், வைராக்கிய சதகம், அவிரோத வுந்தியார் என்னும் நூல்களுக்கும் "புணர்ப்பதொக்க" எனும் திருவாசகப் பாடலுக்கும் உரைகண்டவர். ஒழிவிலொடுக்கத்தினைத் திருப்போரூர் சிதம்பரசுவாமிகளின் உரையுடனும் தாமெழுதிய பாயிரவிருத்தியுரையுடனும் கருங்குழி இராமலிங்கபிள்ளை 1851 ஆம் ஆண்டிற் பதிப்பித்தார். திருப்போரூர் சிதம்பரசுவாமிகளுரையுடன் கொலைமறுத்தலை ஆறுமுகநாவலர் 1851 ஆம் ஆண்டிற் பதிப்பித்தார்:
சிதம்பரசுவ்ாமிகள் மதுரை மீனட்சியம்மை கலிவெண்பா, திருக் கழுக்குன்றம் வேதகிரீசுரர் பதிகம், குமாரதேவர் பதிகம், குமாரதேவர் நெஞ்சுவிடுதூது எனும் நூல்களையும் இயற்றி யுள்ளார். சதாசிவம்பிள்ளை நெஞ்சுவிடுதூது எனக் குறிப்பிடுவது குமாரதேவர் நெஞ்சுவிடுதூது போலும். சதாசிவம் பிள்ளை குறிப்பிடும் தோத்திரமாலை. உபதேசவுண்மை, உபதேசவுண்மைக் கட்டளை என்பன திருப்போரூர் சிதம்பரசுவாமிகளின் தனி வரலாறு களிலே இடம்பெற்றதாகத் தெரியவில்லை.
திருப்போரூர்ச் சந்நிதி முறையிற் பிள்ளைத் தமிழ், அலங்காரம் மாலை, தாலாட்டு, திருப்பள்ளியெழுச்சி, பெரியகட்டியம் (2), சின்ன கட்டியம் (2), எச்சரிக்கை, திருவடிப்பற்று, குயிற்பத்து, கிளிப்பத்து, வண்டுவிடுதூது, சித்தொளி, ஊசல், சிற்சுகம், அடைக்கலப்பத்து, விடுபாட்டுகள் என்பன இடம்பெறுகின்றன. காஞ்சி ஆலாலசுந்தரம் பிள்ளை சந்நிதி முறைக்கு உரைகண்டுள்ளார். சரவணதேசிகரின் குருவான திருப்போரூர் சிதம்பரசுவாமிசளும் திருப்போரூர் சரவண தேசிகரின் சீடரான சிதம்பரசுவாமிகளும் தமிழ்ப்புலவர் அகராதியில் இடம்பெறுகின்றனர். இவர்கள் பத்தொன்பதாம் நூற்றண்டினர் போலும்.
1. ந. சி. கந்தையபிள்ளே : தமிழ் இலக்கிய அகராதி, 1960 பக். 157, 164

Page 110
- 202 -
சதாசிவம்பிள்ளை சிதம்பரதேசிகர் எனும் தலைப்பின் கீழ் இலக் சணஞ் சிதம்பரநாத முனிவர் செய்திகளையும் தந்துள்ளார். சிதம்பர நாத முன்வர் எனும் தலைப்புத் தவறுதலாக விடுபட்டுள்ளது என்று கருத இடமுண்டு. ஏனெனில் சதாசிவம்பிள்ளை இருவரையும் நன்குணர்ந்து,தனித்தனியே செய்திகளைத் தெளிவாகத் தந்துள்ளார். திருவாவடுதுறையாதீனத்தின் பன்னிரண்டாம் பண்டாரசந்நிதிகள் திருச்சிற்றம்பல தேசிகரிடம் சைவசந்நியாசமும் சிவதீட்சையும் சிவ ஞானுேபதேசமும் பெற்ற இலக்கணம் சிதம்பரநாதமுனிவர் உமாபதி சிவாசாரியாரின் சிவப்பிரகாசத்திற்கும் உரைகண்டவர் திருப்பாதிரிப்புலியூர்ப்புராணம் துர்முகி ஞல் மேடரவியிற் (1896) பதிப்பிக்கப்பெற்றது. த. ச. மீனுட்சிசுந்தரம்பிள்ளை சிவப்பிரகாச வுரையைத் திருவாவடுதுறை ஆதீன வெளியீடாக 1953 ஆம் ஆண்டு பதிப்பித்தார். இவர் தந்தைக்கு மணிகண்டமுதலியார் என்பது பெயர் போலும் *. சிவஞானதேசிகர் குறிப்புக் காண்க.
Sg5údu JůsiTMT. -Chithamparap Pilly.
சேலந் தேசத்தைச் சேர்ந்தவரும் வீர சைவத்தைச் சார்ந்த வருமாகிய இவரது தந்தையார் நாமம் விசுவலிங்கன் 2. இவர் கயிலாய நாதர் சதகத்தைப் பாடினர். அது பாடப்பட்ட காலமும் இப்புலவர் பாடலின் மாதிரியும் அச்சதகத்தில் ஒன்முகும் பின்வரும் பாவினுற் தெரியப்படும்.
**ஆதிகவி நாலா யிரத்துத் தொளாயிரத்
தாகுமுப் பாணிரண்டி லாயிரத் தெழுநூற் றைம்பத்து மூன்றுவரு டஞ்சகாப் தம்விகுர்தியாம் நீதிசே ராண்டுமே டந்திங்கள் குருவார
நேர்ந்தபனி ரண்டாந்தின நிறைகன்னி திதியைந்தி ைேடமிர்த யோகமிவை
நீடிரே பதிநாளினில் சாதியினில் வீரசை வன்விசுவ லிங்கன்பர்
தருசிதம் பரவாணன்யான் சதகமெனு மிப்பனுவ னின்னடிக் கன்புகொடு
சாற்றின னுவந்தாளுவாய் காதலுட னடியர் தொழு கறைமிடற் றண்ணலே
கற்பக விராசமேவுங் கங்கைபுனை யீசனே மங்கைமகிழ் நேசனே
கயிலையங் கிரிவாசனே."
1. டிெ நூல், பக். 165 2. து. பா. விகவலிங்கன்பர்

- 203 -
குறிப்பு
"தமிழ் புளூராக்" எனும் நூலில் இடம் பெருதவர்களில் ஒருவரான இவர் பெயர் சிதம்பரவாணன் என்பது முற்கிளந்த பாடலாற் புலணுகும். இவர் சேலம் மாவட்டம் இராசிபுரத்திற் கோயில்கொண்ட கைலாசநாதர் மீது பாடிய சதகத்திற் காப்பு வெண்பா ஒன்றும் கடவுள் வாழ்த்துப் பாடலொன்றும் நீங்கலாக நூறு பாடல்களுள. முற்கிளந்த பாடலிற் குறிப்பிடப்படும் வருடம் கி. பி. 1753 என்பர் 1. ஆனல் கி. பி. 1753ஆம் வருடம் விகிர்தி வருடமன்று பூரீமுக வருடமாகும். மேலும் 4932 யாது, சகாப்தம் என்று குறிப்பிடப்படுவது யாது என்பன கி. பி. 1753 என்று கூறு பவர்களாற் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 4932 கலியப்த மாகவும் 1753 சாலிவாகன சகாப்தமாகவும் விகிர்திடு கி. பி. l 830-eb geocijew G6) JITLLLLLL - 6QIGU5.-GoLD6OW Gont lib.
955ûLys Ruff. - Chiththup Pulavar.
இவரது சுயநாமம் சிதம்பரப்பிள்ளை. இவர் உடுவிலைச் சேர்ந்த சுன்னக க் குறிச்சியிலே, வேளாளர் வருணத்திலே, சுமார் நூறு வருடங்களின் முன் பிறந்தவர். இவர் புலவரன்றி விஷ வைத்தி பருமாம். இவர் பற்பல தனிப்பாக்கள், பதிகங்கள், ஊஞ்சலிசைக ளாதிய பாடினர். பாடல் மாதிரிக்காகப் பின்வரும் பாவைத் தருகின்ருேம்
“கல்லாத புல்லர் மனையணு காமற் கவியவர்மேற்
சொல்லாம னல் குர வில்லாம னித்ததந் துயர்க்கடலுள் செல்லாம னல்ல வரந்தரு வாய்செந் திருமருவு நில்லாய் மயிலனி வாசா விசய நரசிங்கமே."
இது மயிலனி நரசிங்கர் மேற் பாடப்பட்டது. இவர் சுற்றத்தார் இக்காலத்திலும் இருக்கின்ருர்களாம்.
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் நூலில் மட்டுமன்றிப் பின்வந்த புலவர் சரிதங்களிலும் இடம் பெருதவர் சுன்ஞகம் சிதம்பரப்பிள்ளை
! . s. cử. QquJtụải ; tặa 6 aiêuủaả, 1966, uả. 164-165

Page 111
- 204 -
96j 65T SOTGA595i. - Chivagnana Thasigar.
இவர் காசியில் எழுந்தளி இருந்தவரும், தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்தவருமாகிய சிறந்த வித்துவான். காசித்துண்டி விநாயகர் திருவருட்பா என நாமந்தாங்கிய பத்துக் கழிநெடில் விருத்தங்களை இவர் பாடி இருக்கிருர். இவற்றை யாழ்ப்பாணத்து நல்லூர்ச் சதாசிவம் பிள்ளை அச்சிற் பதிப்பித்தார். நற்சந்தமும் பொருளுங் கொண்ட இவ்விருத்தங்களுள் ஒன்றை மாதிரிக்காக இவ்விடந்தருவம்
"ஓங்கார வடிவான வுன்பாத தாமரையும்
உபயபரி புரமறைகளு முதிக்கின்ற செங்கதிர்க ளொருகோடி நிகரொளியு
முத்தூள நீற்றினுெளியும் - பாங்கார் கசானனமு முக்கரமும் வளர்புயப்
பவளா சலங்களுன்கும் பாசமுட னங்குசக் கொம்போரி லட்டுகம்
பட்சமொடு வைத்தகரமும் நீங்காத வருண்மாரி பொழியுந்த்ரி யம்பகமு நிறையுமும் மதமாரியு நீள்சடா டவியும்வெண் பிறையுமொரு தொந்தியு
நெஞ்சிலொரு நாளுமறவேன் காங்கேயன் மகிழ்தமைய னேகங்கை நதிபெருகு
காசிவாழ் துண்டிராச கணபதி யெனும்பெரிய குணமேரு வேயருட்
கருஞநிதிக் கடவுளே.' 若
இவ்விருத்தங்கள் பத்துமல்லாது காசிச் கதிர்காமவேலர்
திருவருட்பா என்னும் வேறு பத்து விருத்தங்களுஞ் செய்தனர். அவை களும் ஒன்றுக்கொன்று அதிகஞ் சிறந்தவைகளே.
குறிப்பு காசிச்செட்டியவர்கள் நூலில் இடம்பெருதவர்களில் ஒருவர் தருமையாதீன மகாசந்நிதானம் சிவஞானதேசிகர்.
நந்தியருள் பெற்ற சனகர், சனற்குமாரர், சனந்தனர், சஞதனர், சிவயோக மாமுனி, பதஞ்சலி, வியாக்கிரபாதர், திருமூலர் (சதாசிவ முனிவர்) எனும் எண்மர் நந்திகேசுரசந்தானத்தவராகக் கருதப் பெறுவர். இவர்களுட் சனற்குமாரரால் ஏற்பட்டனவே விஞ்ஞான தேவர் சந்தானமும் மெய்கண்டதேவர் சந்தானமுமாம், மெய்கண்ட

- 205 -
தேவர் சந்தானம் சத்தியஞானதரிசினிகள், பரஞ்சோதி முனிவர், மெய்கண்டார், அருணந்தி சிவாசாரியர், மறைஞானசம்பந்தர் வழி யில் வந்து பின்னர் கிளைக்கின்றது. மறைஞானசம்பந்தர் பால் அருள் பெற்ற மச்சுச் செட்டியார் தருமையாதீன மூலவராகக் கருதப்படுவர். மச்சுச் செட்டியார், காழிக்கங்கை மெய்கண்டார், காழிப்பழுதை கட்டி சிற்றம்பலநாடிகள், பழுதைகட்டி சம்பந்தமுனிவர், சிவபுரம் ஞானப்பிரகாசர், சிவபுரம் தத்துவப்பிரகாசர், திருவாரூர் செட்டித் தெரு பழுதை கட்டி ஞானப்பிரகாசர், வழிவந்த சிதம்பரநாத மாசிலா மணியாம் கமலை ஞானப்பிரகாசரே தருமையாதீனத் தாபகர் குரு ஞானசம்பந்தரின் ஞானகுருவாவர்.
கமலை ஞானப்பிரகாசரின் காலம் கி. பி. பதினரும் நூற்ருண்டின் நடுப்பகுதியாதல் தகும். சதாசிவ மகாராயர் காலத்திலே தஞ்சைப் பிரதிநிதியான கிருஷ்ணமாராசையன் ஆணைப்படி சகாப்தம் 1482இன் மேல் செல்லாநின்ற ரெளத்திரிடு) ஆனிமீ (1560) வெட்டப் பட்ட சிக்கல் நவநீதப்பெருமாள் கோயிற் கல்வெட்டு திருவாரூர் ஞானப்பிரகாச பண்டாரத்தைச் சிக்கல், வடகுடி, ஓடாச்சேரி முதலிய தேவஸ்தானங்களுக்குப் பரதேசி முத்திரையும் கணக்கு எழுத்தும் அடைத்துக்கொள்ளும்படி உத்தரமளிக்கின்றது. மேலும் கமலை ஞானப்பிரகாசர் மழுவாடிப்புராணம் பாடியது சகம் 1488க்குச் சரியான குரோதன ளுல் மாசிமீ (1566) என்று பாயிரச்செய்யுள் கூறுகின்றது. கமலை ஞானப்பிரகாசர் சிவானந்த போதம், அத்துவாக்கட்டளை, புட்பவிதி ", சிவபூசையகவல்", அனுட்டான அகவல் , பிராசாதமாலை". பூமாலை " முதலியன வற்றையும் இயற்றியுள்ளார் என்பர். திருவாரூர்ப்பள்ளின் ஆசிரியர் கமலை ஞானப்பிரகாசர் எனும் கூற்று ஆராயத்தக்கது. சோழமண்டலச் சதகம் கமலை ஞானப்பிரகாசர் "ஆயிரப்ரபந்தம்" இயற்றியதாகக் கூறுவதன் அடிப்படையிற் சிலர் ஆயிரப்பாடல் எனும் ஒரு நூலையும் ஞானப்பிரகாசர் இயற்றியதாகக் கருதுவர்; அத்தகைய நூலெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஞானப்பிரகாசர் பாடிய அண்ணுமலைக் கோவை மறைந்துபோன நூல்களிலொன்ருகக் கருதப்படுகின்றது. தத்துவார்த்தமுடையதாக இயற்றப்பட்ட ஞானப்பள்ளின் ஆசிரியர் சிதம்பரநாத ஞானப்பிரகாசர் என்பவர், கமல் ஞானப்பிரகாசர் என்பர் 8. குருஞானசம்பந்தர் நீங்கலாக மூவர் கமலை ஞானப்பிர
1. மு. இராகவையங்கர் : சாஸனத் தமிழ்க்கவி சரிதம், 1961, பக். 170 2. கா. சுப்பிரமணியபிள்ளை; இலக்கிய வரலாறு, 1958 பக். 384 3 தெ. பொ. மீனுட்சிசுந்தரம்பிள்ளை குறிப்பு: தமிழ் புளுராக், 1946 பக். 29 0S q T TS LS 00 S LLLS TTtTTTtLLL LLLLLLTTLTT SL TT TTTtLLL TTTLS 5. ந. சி. கந்தையபிள்ள தமிழ்ப்புலவர் அகராதி 1900, பக். 97 6. சிவானந்தபோதசாரவுரை, முகவுரை, தருமையாதீனப்பதிப்பு, 1931

Page 112
- 206 -
காசரின் மாணுக்கருள் விதந்து கூறத்தக்கவராவர். இவர்சளுள் ஒருவரான நிரம்பவழகிய தேசிகர் சதாசிலம்பிள்ளையால் விதந்து கூறப்பட்டுள்ளார். ஏனையோருள் ஒருவர் உத்தரகோசமங்கைப் புராணம் பாடிய மாசிலாமணிச் சம்பந்தர்; மற்றவர் திருவொற்றியூர் தத்துவப்பிரகாசரின் ஆசிரியரும் திருவொற்றியூர் புராணம், சிவஞானசித்தியார் பரபக்கவுரை, சங்கற்ப நிராகரணவுரை என்பன வற்றின் ஆக்கியோருமாகிய திருவொற்றியூர் ஞானப்பிரகாசராவர்.
தருமையாதீனத் தாபகர் குரு ஞானசம்பந்தர் தென்பாண்டி நாட்டு பூரீ வில்லிபுத்தூரில் வேளாண் மரபிற் சுப்பிரமணியபிள்ளைக்கும் மீனுட்சியம்மைக்கும் மகவாக அவதரித்தவர்; நவரத்தினமாலை, சொக்கநாதவெண்பா, சொக்கநாதக் கலித்துறை, u67 LITprés கலித்துறை, சிவபோகசாரம், சோடசகலாப் பிராசாத சட்கம், திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல், முத்தி நிச்சயம், ஞான வரண விளக்கம், பிராசாத விருத்தம் என்பனவற்றை இயற்றியவர்* இவரையடுத்து இரண்டாம் மூன்றம் மகாசந்நிதானங்களாக விளங்கியவர்கள் ஆனந்த பரவச தேசிகரும் சச்சிதானந்த தேசிகரு மாவர் நான்காம் மகாசந்நிதானம் மாசிலாமணிதேசிகர் காலத்திற் பேரெடுத்தவர்கள் குமரகுருபரசுவாமிகளும் வெள்ளியம்பலவாணத் தம்பிரானுமாவர்; ஐந்தாம் மகாசந்நிதானம் ஞானசம்பந்த தேசிகரையடுத்துவந்த திருஞானசம்பந்த தேசிகர் காலத்தவர் சம்பந்தசரணுலயரும் தமிழாகர முனிவருமாவர்; வருணுச்சிரம சந்திரிகையின் ஆசிரியர் ஏழாம் மகாசந்நிதானம் திருவம்பலதேசிகர்; அறிவானந்த சமுத்திரம், அருட்பாமாலை என்பனவற்றின் ஆசிரியரும் சுவர்க்கபுரம் ஆதீனத்தாபகர் அம்பர்மாகாவும் அழகிய திருச்சிற்றம் பல தேசிகரின் குருவுமாகியவர் எட்டாம் மகாசந்நிதானம் அழகிய திருச்சிற்றம்பலதேசிகர்; சித்தாந்த நிச்சயம் எழுதியவரும் படிக் காசருக்குச் சந்நியாசம் வழங்கியவரும் ஒன்பதாம் மகாசந்நிதானம் திருநாவுக்கரசுதேசிகர்.
சதாசிவம்பிள்ளை விதந்து கூறும் சிவஞானதேசிகர் தருமை யாதீனத்தின் பத்தாம் மகாசந்நிதான மாவர். இவருடைய அருளாட்சிக்காலம் 1715-1780 என்பர். காசியாத்திரை செய்த சிவஞானதேசிகர் காசி விசுவநாதர் திருவருட்பா, காசி அன்ன பூரணியம்மை திருவருட்பா, காசி காலவைரவர் திருவருட்பா, திருவாலங்குடி தகFணமூர்த்தி திருவருட்பா, புள்ளிருக்குவேளூர் முத்துக்குமாரசுவாமி திருவருட்பா என்பனவற்றையும் இயற்றி யுள்ளார். காசிக்கதிர்காம வேலர் திருவருட்பாவுக்கு மட்டுவில்
1. பரமானந்தவிளக்கம், போானந்தசித்தியார், ஞானப்பிரகாச மாலே என்பனவும் குருஞானசம்பந்தர்
இயற்றியனவாகச் சிலராற் குறிப்பிடப்பட்டுள்ளன .

- 207 -
வே. திருஞானசம்பந்தப்பிள்ளை கண்டவுரை ஜயஞ) ஐப்பசி மீ" (1954) வெளிவந்தது. சிவஞானதேசிகரின் மாணுக்கர் சிவப்பிரகாசக்கட்டளை இயற்றிய புன்கூர் சிவப்பிரகாசர், திருக்கருப்பறியலூர்த் தலபுராணம் (1912) இயற்றிய மருதூர் அம்பலவாணர், நித்தியான்மநெறி, சிவஞானதேசிகசுவாமி திருப்பதிகம் என்பனவற்றை இயற்றிய சிதம்பரநாதமுனிவர் என்பவராவர். 1946இல் தருமபுர ஆதீனத்தார் பதிப்பித்த நடராச சதகத்தின் ஆசிரியர் சிதம்பரமுனிவர் முற்கிளந்த சிதம்பரநாத முனிவரோ அல்லது வேருெருவரோ அறியோம்.
தருமையாதீனத்தின் பதினெட்டாம் பட்டத்திலும் (1889-1906) இருபதாம் பட்டத்திலும் (1914-1918) இருந்தவர்களும் சிவஞான தேசிகர் என்ற பெயரையே குடியவர்களாவர். சேவூர்ப்புராணம் பாடிய கொடுமுடி சிவஞான தேசிகர் என்பவரும் அறியப்படுகின்றர்.
96) 65T 601(p6öî6) fil. - Chivagnana Munivar.
சிவ்ஞானயோ கீஸ்பரர் என்னும் மறுநாமமுற்ற இம் முனிவர்
பாண்டிவளநாட்டிலே, பொதியமலைச்சாரலிலே, பாவநாசம் எனும் திருப்பதியைச் சேர்ந்த விக்ரமசிங்கபுரம் என்னும் ஊரிலே, ஏழு தலைமுறைகளாக அகஸ்திய இருவியின் அருள் பெற்று விளங்கிய வேளாளர் மரபிலே பிறந்தவர் என்ப. இவர்க்குப் பாண்டி வேளாள குலதிலகராகிக் கல்வி ஒழுக்கங்களாற் சிறந்த ஆனந்தக்கூத்தர் எனப்படுவார் தந்தையார். கற்பு ஒழுக்கங்களிற் சிறந்த மயிலம்மை யார் தாயார். முக்களாலிங்கர் என்றது பெற்றரால் இவர்க்கு இடப்பட்ட நாமதேயம். இவர் ஐந்து வயசிலே பாடசாலையால் வீட்டுக்குத் திரும்பினபோது வீதியிலே திருவாவடுதுறையைச் சேர்ந்த முனிவர் சிலர் செல்லக்கண்டு அவர்களை நோக்கி: நீங்கள் அடியே னுடைய கிரகத்துக்கு வந்து அமுது செய்து போங்கள் என்று அழைத்துப்போக, வருவிருந்துக்கு எதிர்பார்த்திருந்த இவரது தாயார் அவர்க்குப் பரிவோடு அன்னம் படைத்ததை இவர் கண்டு உள்ளம் பூரித்து:
"அருந்ததியென் னம்மை யடியவர்கட் கென்றுந்
திருந்த வமுதளிக்குஞ் செல்வி-பொருந்தவே
ஆனந்தக் கூத்த ரகமகிழத் தொண்டுசெய்த
மானந் தவாத மயில்"
1. து. பா. அம்பலக்கூத்தர்

Page 113
- 208 -
என்று ஒருவெண்பாச் சொற்றனர். இந்தவண்ணம் பாலியப் பிராயத்திலே பேரறிவுங் கல்வித் திறமும் உற்ற இவர் தம் தந்தை யாரின் அனுமதிபெற்று மேற்படி முனிவருடன் கூடிச் சோழ நாட்டிலுள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று, அங்கிருந்த சிரேஷ்ட குரவராகிய நமச்சிவாய மூர்த்தியின் கடாட்சம்பெற்று, இரண்டாவது பட்டத்திருந்த பின் வேலப்ப தேசிகரிடம் தீட்சை கேட்டு, மெய்கண்ட சாஸ்திரங்களோடு பண்டார சாஸ்திரங்கள் கற்று அம் மடாதீனத்துக்குத் தம்பிரானும் ஆயினர். இவர்க்கு ஞானசிரியர் வேலப்பதேசிகர் என்றது:
"எவ்வெவர்கோட் படுபொருளு மஞ்செழுத்தி
னடக்கியவற் றியல்பு காட்டி
மெய்வகையஞ் சவத்தையினு நிற்குமுறை யோதுமுறை
விளங்கத் தேற்றி
அவ்வெழுத்தி னுள்ளீடு மறிவித்துச் சிவபோகத்
தழுத்தி நாயேன்
செய்வினையுங் கைக்கொண்ட வேலப்ப தேசிகன்ருள்
சென்னி சேர்ப்பாம்"
என்று காஞ்சிபுராணம் கடவுள் வாழ்த்து கஅ ம் பாட்டில் இவர் சொல்லியதால் விளங்கலாகும். நமச்சிவாய மூர்த்தி இவர்க்குக் குரு என்றதற்கு
**பண்ணிசைவெம் பரிதிமதி திலதயிலந் தீயிரும்பு
பாணி யுப்பு
விண்ணனில முடலுயிர்நீர் நிழலுச்சிப் பளிங்குமகல்
விளக்குப் பானிர்
கண்ணிரவி யுணர்வொளிபோற் பிரிவரிய வத்துவிதக்
கல்வி காட்டித்
தண்ணளிவைத் தெனையாண்ட துறைசைநமச் சிவாயகுரு
சரணம் போற்றி"
என்று சித்தியாருரையிலே சொல்லிய குருவணக்கத்தால் விளங்கும். இவர்க்குத் தந்தையார் இட்ட முக்களாலிங்கர் என்னும் நாமதேயத்தை வேலப்ப தேசிகர் தாமே மாற்றிச் சிவஞான யோகிகள் என்று நாமகரணஞ் செய்தனர். வட தென் மொழிகளில் வல்லுநராகிய இந்த மகான் ஆகமசாஸ்திரங்களில் மாத்திரமல்ல,

- 209 -
இலக்கண இலக்கியங்களிலும் மேற்பட்ட அறிஞராய் இருந்தனர் ஆதலிற் சுவாமிநாத தேசிகரது மாணுக்கராகிய திருநெல்வேலிப் புலவர் பெருமான் சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு எழுதிய விருத்தியுரையைத் திருத்திப் புத்தம் புத்துரை என்னுமோர் புதிய வுரையும் எழுதினர். நன்னூல் விருத்தியுரை இவரது திருத்தம் பெற்றது என்றதற்குச்:
'சிவஞான முனிவனற் றிருத்திடப் பட்ட
விருத்தி யுரைதனை வெளிப்படச் சுருக்கி"
என்று நன்னூற் காண்டிகை உரைப் பாயிரத்திற் சொல்லப் பட்டிருப்பது சாட்சியாகும். இவர் தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கணவிளக்கச் சூருவளி என்னும் இரண்டு இலக்கண நூல் களையும் செய்தனர். முந்தினது திரணதுரமாக்கினி என மறுநாமம் பெற்ற தொல்காப்பியர் செய்த தொல்காப்பியப் பாயிரத்திலும் முதற் சூத்திரத்திலும் உள்ள ஆசங்கைகள் சிலவற்றை எடுத்துப் பேசித் தெளிவிப்பது. மற்றது வைத்தியநாத நாவலர் செய்த இலக்கண விளக்கத்துக்கு மாறனது.
இவ்விரு நூல்களன்றித், தருக்கசங்கிரகம், தருக்கசங்கிரக தீபிகை அவ்லது அன்னம்பட்டீயம் 1, காஞ்சிபுராணம் முதலirங்காண்டம், சோமேசர் முதுமொழி வெண்பா, திருவேகம்பர் ஆனந்தக்களிப்பு செப்பறைப்பதி அகிலாண்டேஸ்வரி பதிகம், திருத்தொண்டர் திரு நாமக்கோவை, பஞ்சாக்கரதேசிகர் மாலை 2, திராவிடமகாபாஷியம் முதலாய் வேறும் பலவற்றையும் இயற்றினர். இவற்றுட் பிந்தினது மெய்கண்டதேவர் மொழிபெயர்த்த வார்த்திகப் பொழிப்பாகிய சிவஞானபோத மெய்ப்பொருள் விளங்குதற் பொருட்டுச் செய்யப் பட்ட அகலவுரை. சிவஞான சித்தியார் சுபட்சத்துக்குப் பொழிப் புரையும் ஒன்று செய்தாரல்லாமல், சுலோகபஞ்சகத்தின் 3 மொழி பெயர்ப்பு முதலாம் பற்பல மொழிபெயர்ப்புகளையுஞ் செய்தனர். பஞ்சாக்கரதேசிகர் மாலை* நமச்சிவாயமூர்த்தி மேலது.
திருவாவடுதுறை யாதீனத்தார் எழுதிய மரபட்டவணைக்கு விரோதமாய்த் தருமபுரவாதீனத்தார் எழுதிய மறுப்பிற்கு மறுப்பின் மேன் மறுப்பு என்னும் ஓர் நிராகரிப்பை இவர் எழுதினரன்றிச் சிவஞான சித்தியார்க்கு ஞானப்பிரகாசர் எழுதின உரை போலி உரை 1, и. பா, அன்னம்பட்டியம் 2. r. u. u ësä 6. JUDrða) 3. து. பா, சுலோகபஞ்சாக்கரத்தின் 4. து. பா. பஞ்சாக்கரமால்
unr - l4

Page 114
- 210 -
என்று விளங்கச் செய்யச் சிவசமவாத மறுப்புரையையும் எழுதினர். இம் மறுப்பை ஆட்சேபனை செய்து ஞானப்பிரகாசருடைய மானக் கரில் ஒருவர் மறுப்பின் மேற் கண்டனம் அல்லது வச்சிரதண்டம் எனும் பெயரிய பின்னேர் மறுப்புரை எழுதினர். நூறு செய்யுட் கொண்ட திருவேகம்பரந்தாதியையும் இவர் பாடினர். அருமையாய் அர்த்தம் பண்ணப்படும் இவ் அந்தாதிக்கு இராமநாதபுரம் இராம சாமிப்பிள்ளை உரை செய்தனர். பாடல் மாதிரிக்காக இவ் அந் தாதியிலோர் கவி தருவம்:
**கருமங்கை யார மருமத்த ரேத்துசெங் காந்தளைநி
கருமங்கை யார மருமத்தர் வாழ்கச்சி போலவெப்பாங் கருமங்கை யார மருமத்தர் வாய்மை கதிர்ப்பச்சென்ற கருமங்கை யார மருமத்த முங்கடந் தெய்தவென்றே."
தருக்கசங்கிரகமும் அதனுரையாகிய தருக்கசங்கிரக தீபிகை அல்லது அன்னம்பட்டீயமுஞ் சம்ஸ்கிருதத்திலிருந்து இவரான் மொழி பெயர்க்கப்பட்டன. தருக்கசங்கிரக தீபிகையில் கடுo கிரந்தமுள. சம்ஸ்கிருதத்தில் இவற்றைச் செய்தவர் ஏறக்குறைய இருநூற்றிருபது வருடங்களின் முன்னிருந்த அன்னம்பட்டர் என்னும் ஓர் தெலுங்கர். இவற்றை ஆறுமுகநாவலர் இராமநாதபுரம் சமிந்தாரான பொன்னுச் சாமி தேவர்களது வேண்டுகோளின்படி அச்சிடுவித்தார். இத் தருக்க சங்கிரகம் கத்தியரூபமானது. சர்வாத்ம சம்பு சிவாசாரியர் செய்த கத்தியரூப சித்தாந்தப் பிரகாசிகை 1 எனும் நூலையும் இவர் மொழி பெயர்த்தார். இப்புலவர் காலத்திலே பெப்பிரிசியு (Rev. Mr. Fabrecius) தேசிகரும் இருந்தாராதலால் அவர் தமது ஆசிரியராகிய முத்தையா முதலியார் மூலமாக இவருடன் சினேகமாய் இருந்தார்; பெப்பிரிசியு தேசிகரின் வேத மொழிபெயர்ப்புக்கு இம்முனிவர் உபயோகியாயுமிருந்தனர். இவர் இருந்த காலம் கிறிஸ்தாப்தம் க என O ம் ஆண்டு வரையில் இருக்கவேண்டும். அதாவது சுமார் ககடு வருடங்களின் முன். அதுவே பெப்பிரிசியு க்ாலம், சிவதத்துவ விவேகம் எனும் மொழிபெயர்ப்புச் செய்தாரும் இவரே. இதிலே பாயிரப்பாக்கள் பத்தையுஞ் சேர்த்தால் எo பாக்களுள. யாழ்ப்பாணம் நல்லூர்ச் சதாசிவம்பிள்ளை இதனை அச்சிடுவித்தார். இச் சிவஞான முனிவரது மாணக்கருள் அதி கீர்த்திபெற்ருர் கச்சியப்பமுனிவர் அவரே அன்றி, இலக்கணம் சிதம்பரநாத முனிவர், தொட்டிக்கலைச் சுப்பிரமணியர், காஞ்சிபுரம் சரவணபத்தர், சிதம்பரபத்தர், இராம நாதபுரம் சோமசுந்தரம்பிள்ளை என்பவர்களும் இவர்க்கு மாணுக்கராய் இருந்தார்கள். இவ்வாறு மகா கல்விமானுய்ப், பரோபகாரியாய்ப்,
1. 5. ப. சித்தாந்தப் பிரகாசியை

- 21 -
பல நூல்களோடு பல உரைகளைச் செய்து பல கண்டனங்கள் வரைந்த இந்த மகான் பின்வரும் கவிசொல்லும் ஆண்டு தேதிகளிற் தேகவியோக Lomu960Tff.
"மன்னும் விசுவா வசுவருட மேடமதி
உன்னிரவி 1 நாட்பகலோ? தாயிலியம்-மன்னும் திருவாழ னெங்கோன் சிவஞான தேவன் திருமேனி நீங்கு தினம்.'
ヘ குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தரும் செய்திகளிலிருந்து சிவஞானமுனிவர் சரிதம் பற்றி அவர் நன்கு அறிந்திருக்கவில்லை என்பது தெளிவாகும். சதாசிவம்பிள்ளை தம் காலத்தில் வெளிவந்திருந்த முனிவரின் நூல் களின் அடிப்படையிற் காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தைத் திருத்தியும் புதுக்கியும் எழுதியுள்ளார்.
சிவஞான முனிவர் சகம் 1708 க்குச் சரியான விசுவாவசுளுல சித்திரைமீ (1785) சிவபரிபூரணமெய்திஞர் என்பர். இவர் சங்கர நாராயணர் கோயிலிற் சிவபரிபூரணமானவரும் திருவாவடுதுறை ஆதீனத்தின் பத்தாம் பண்டார சந்நிதிகளானவருமான முன் வேலப்பதே சிகர் காலத்திற் பஞ்சாக்கரப் பஃருெடை இயற்றியவரும் சின்னப்பட்டத்திற் பேரூரிலே சிவபரிபூரணமானவருமான பேரூர் வேலப்பதேசிகரிடம் சைவசந்நியாசமும் சிவதீட்சையும் சிவஞானுேப தேசமும் பெற்றவர். பேரூர் வேலப்பதேசிகர் சிவபரிபூரணமெய்திய பின்னர், வேருேர் வேலப்பதம்பிரான் சின்னப்பட்டமெய்தி, பின்னர் பதினேராம் பண்டாரசந்நிதிகளாகப் பின் வேலப்பதேசிகர் எனப் பேர்பெற்ருர் என்பது கவனிக்கத்தக்கது. முனிவரவர்களைப் பெப்பிரிசியு பாதிரியாருடன் (Rev. J. P. Fabricius 1710-1791) தொடர்புறுத் துவதற்குச் சதாசிவம்பிள்ளை க்குக் கிடைத்த சான்றுகள் யாவை யென்பது புலப்படுமாறில்லை; அத்தகைய சான்றுகள் இருப்பதாக வும் கூறுவதற்கில்லை.
சதாசிவம் பிள்ளை கூறும் முனிவரவர்களுடைய நூல்களிலே திருவேகம்பரந்தாதியானது கம்பரந்தாதி, ஏகம்பரந்தாதி, ஏகாம்ப ரந்தாதி எனப் பலவாறு வழங்கப்பெறும்; சித்தாந்தப் பிரகாசிகை வசனத்திலும் சுலோகபஞ்சகம் அகவற்பாவிலும் அமைவன,
1. து, பா. உன்னிரவு 2. B. Gur. yst "lly & Ga) 3. பி. பே. யன்னும் 4. பி. பே. திருவான

Page 115
- 212 -
சிவஞானமுனிவர் வடதிருமுல்லைவாயிலந்தாதி, கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி, இளைசைப் பதிற்றுப்பத்தந்தாதி, குளத்தூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி, கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், கச்சியானந்தருத்திரேசர் பதிகம் எனும் பிரபந்தங்களையும் சிவஞானபோதச் சிற்றுரை, கம்ப ராமாயணம் முதற் செய்யுட் சங்கோத்தர விருத்தி எனும் நூல் களையும் இயற்றியுள்ளார். தொட்டிக்கலை, இளங்காடு, காஞ்சிபுரம் என்பனவற்றின் மரூஉ கலைசை, இளைசை, கச்சி என்பன. இராம நாதபுரம் இராமசுவாமிப்பிள்ளை வடதிருமுல்லைவாயிலந்தாதிக்கும் உரைகண்டுள்ளார்.
சங்கரநமச்சிவாயர் எழுதியதும் சிவஞானமுனிவர் திருத்தியது மான நன்னூல் விருத்தியுரையை விரோதிகிருதுளு ஐப்பசிமீ” (1851) யாழ்ப்பாணம் வித்தியானுப்ாலன யந்திரசாலையிலும் திருவாவடுதுறையாதீனம் சுப்பிரமணியதேசிகர் விருப்பப்படி தொல் காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூருவளி எனும் வசனநூல்களைச் சுவாமிநாததேசிகரின் இலக்கணக்கொத்துடன் அக்ஷயஞல் கார்த்திகைமீ (1866) சென்னை கலாரத்நாகரம் அச்சுக் கூடத்திலும் தருக்கசங்கிரகத்தையும் அன்னம்பட்டீயத்தையும் துன்மதிஞல் வைகாசிமீ (1861) சென்னை வாணிநிகேதன அச்சுக் கூடத்திலும் ஆறுமுகநாவலர் பதிப்பித்தார். சிவஞானபோத மூலமும் சிவஞானயோகிகள் இயற்றியருளிய திராவிடமகாபாடியமென்னும் சிவஞான பாஷ்யமும் மதுரைத் திருஞானசம்பந்தசுவாமிகள் ஆதீன வித்துவான் சுப்பிரமணியபிள்ளையாற் பராபவளுல் ஆவணிமீ (1906) மதுரை விவேகபாது அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பெற்றன. இப்பதிப்பில் முகவுரையும் முதலாம் சூத்திரத்து இரண்டாம் அதிகரணம் வரையிலான உரையும் ஆரும் சூத்திரம் முதல் பன்னிரண்டாம் சூத்திரம் வரையிலான உரையும் சில குறை உரைப் பகுதிகளும் பாடியத்திலிருந்து பெறப்பட்டவை முனிவரவர்களின் சிற்றுரை தேவையான இடங்களில் இணைக் கப்பட்டுள்ளது: யாழ்ப்பாணம் வண்ணை சி. சுவாமிநாதபண்டிதர் பராபவளுப் (1907) சிவஞான போதச் சிற்றுரை மாபாடியக் குறிப்புகளுடன் கூடிய பகுதிகள் அடங்கிய பதிப்பினை வெளியிட்டார். இவர் 1916இலே வெளியிட்ட சிவாக்கிரபாடிய முதற்குத்திர மொழிபெயர்ப்புடன், அண்டங்களின் பிரிவு எனும் சிவஞானமாபாடியத்தின் 2ம் சூத்திர 3ம் அதிகரணத்தின் இறுதிப் பகுதியைச் சேர்த்து வெளியிட்டனர். சூரியஞர் கோயிலாதீனகர்த்தர் முத்துக்குமாரசுவாமி தேசிகர் ஆணைப்படி 1921ஆம் ஆண்டு இலக்கணச் சுவாமிகள் எனப்படும் வண்ணை முத்துக்குமாரத்தம்பிரான் சுவாமிகள் பெருமுயற்சியினலே திராவிட மாபாடியம் முழுவதும் வெளிவந்தது. திருநெல்வேலி

- 213 -
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் இலக்கணச் சுவாமிகள், செப்பறை சிதம்பரசுவாமிகள் ஆகிய ஈழத்துப் பெரியார் உதவியுடன் 1936, 1952ஆம் ஆண்டுகளிற் பாடியத்தை இருமுறை பதிப்பித்தனர்; சைவசித்தாந்த மகாசமாசம் 1936இல் ஒரு பதிப்பினை வெளியிட்டது. சிவஞானபோதச் சிற்றுரையை 1885இல் நல்லூர் க. சதாசிவப்பிள்ளையும் சிவஞானசித்தியார் சுபக்கம் பொழிப் புரையைச் சுபானுளு ஆனிமீ (1883) நல்லூர் த. கைலாசபிள்ளையும் வெளியிட்டனர்.
சதாசிவம்பிள்ளை சிவசமவாத மறுப்புரை என்றுரைத்தவை சிவசமவாதகண்டனம் என்னும் சிவசமவாதவுரை மறுப்பு, எடுத்து என்னும் சொல்லுக்கிட்ட வயிரக்குப்பாயம், சிவசமவாதவுரைமறுப்பு எனும் மூன்று கண்டனங்களாம். அவர் மறுப்பின்மேன் மறுப்பு என்று கூறுவது சித்தாந்த மரபு கண்டன கண்டனமாகும். இது தருமை சிதம்பரநாத தம்பிரான் எழுதிய சித்தாந்த மரபு கண்டனத்திற்கு மறுப்பாகும். மரபட்டவணை அல்லது சித்தாந்த மரபு எனும் நூலுக்கு மறுப்பாக எழுந்தது கித்தாந்த மரபு கண்டனம். திருவாவடுதுறை யாதீனத்தார் மரபட்டவணையைத் தம் சம்பிரதாயம் என்று ஏற்ப தில்லை. ஞானப்பிரகாச முனிவருரைக் கெதிரான மூன்று கண்டனங் களும் சித்தாந்தமரபு கண்டன கண்டனமும் வடகோவை சு. சபாபதி நாவலரால் விஜயடு) கார்த்திகைமீ" (1893) பதிப்பிக்கப்பெற்றன.
குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் ஆறுமுகநாவலராற் பதிப்பிக்கப்பெற்றது என்பர். LDS/6OLr இராமசுவாமிப்பிள்ளை சிவஞான யோகிகள் பிரபந்தத் திரட்டினை விரோதிடு (1889), நந்தன ளுல் (1892) ஆகிய இரு வருடங்களில் இருமுறை வெளியிட்டார்" திரிசிரபுரம் மீனுட்சிசுந்தரம்பிள்ளை காஞ்சிபுராணம் முதற் காண் டத்தை முதன்முதல் வெளியிட்டனர் என்பர். இராமநாதபுரம் இராமசுவாமிப்பிள்ளை 1878ஆம் ஆண்டு காஞ்சிபுராணத்தின் இரு காண்டங்களையும் வெளியிட்டார்; காஞ்சி ஆலாலசுந்தரம்பிள்ளையின் காஞ்சிபுராணம் உரைப்பதிப்பு 1899ஆம் ஆண்டிலும் காஞ்சி நாகலிங்கமுதலியாரின் காஞ்சிபுராணம் மூலப்பதிப்பு சாதாரண வருஷத்திலும் (1910) வெளிவந்தன. சோடசாவதானம் சுப்பராயச் செட்டியாரும் காஞ்சிபுராணத்திற்கு உரைகண்டுள்ளார் என்பர் கனகசபைநாயகர் காஞ்சிபுராண வசனம் (1883) எழுதியுள்ளார்.
சிவஞானமுனிவருக்குப் பன்னிரு மாணுக்கர் இருந்தனர் என்பர்: ஆயினும் பதின்மூன்று மாணுக்கரை இன்று அறியமுடிகின்றது? இவர்களிலே திருத்தணிகை கச்சியப்பமுனிவரும் தொட்டிக்கல சுப்பிரமணிய முனிவரும் சதாசிவம்பிள்ளையாலே தனித்தனியே விதந்து கூறப்பட்டுள்ளனர்; இராமநாதபுரம் சோமசுந்தரம்பிள்ளை, தெம்பரபத்தர், காஞ்சிபுரம் சரவணபத்தர், இலக்கணம் சிதம்பர நாகமுனிவர் ஆகியோர் முறையே இராமாநுசக் கவிராயர், கடவுள் மகாமுனிவர், சரவணதேசிகர், சிதம்பரதேசிகர் குறிப்புகi ல
adh

Page 116
- 24 -
எடுத்துரைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களிலே, காஞ்சிபுரம் முத்துக்குமாரசுவாமி தேசிகர் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், திருவேகம்பர் வெண்பாவந்தாதி, திருவேகம்பர் பதிற்றுப்பத்தந் தாதி பாடியவர்; திருமுக்கூடல் சந்திரசேகர முதலியர்ர் கடம்பர் கோயில் மீது புராணம், மாலை, கலம்பகம் இயற்றியவர் காவாத் தண்டலம் அடைக்கலங்காத்த முதலியார் மாகறலந்தாதி, இளைய நாயனர் வேலூர் வெண்பாவந்தாதி. கடம்பர்கோயில் பதிற்றுப் பத்தந்தாதி ஆக்கியவர்: இராமநாதபுரம் இராசபாளையம் சங்கர மூர்த்திக் கவிராயர் கன்னிவாரி பாளையக்காரர் மீது கோவை, சேற்றுார் பாளையக்காரர் மீது பள்ளு என்பன தந்தவர்; கடம்பர் கோயில் ஸ்தானிகர் கலியாணசுந்தர உபாத்தியாயர், மதுரை யாதீனம் வேலாயுததேசிகர், திருவாவடுதுறையாதீனம் பன்னி ரண்டாம் பண்டாரசந்நிதிகள், அரும்பாக்கம் திருச்சிற்றம்பல தேசிகர் என்பவர்களுடைய ஆக்கங்களை அறியுமாறில்லை. ஆதி கைலாச மான்மியம் அல்லது திருப்பெருந்துறைப்புராணம் பாடிய சுந்தரலிங்கமுனிவர், பவானி கூடற் புராணம் இயற்றிய வாசு தேவமுதலியார், திருச்சிற்றம்பல தேசிகர் கலம்பகம் தந்த சீனிப் புலவர் முதலியோர் அரும்பாக்கம் திருச்சிற்றம்பல தேசிகரின் டேர் என்பது குறிப்பிடத்தக்கது. s
36u Lubllsitar. – Chivapuram Pilly.
இவர் சோழநாட்டிலே காவேரிக்குத் தென்கரையிலுள்ள விசேஷ தலங்கள் நூற்றிருபத்தேழுள் ஒன்ருகிய திருவ்ாவடுதுறையில் இருந்த அம்பலவாண தேசிகர்க்குச் சீஷர். அவரிடம் தீக்கை பெற்றுச் இத்தாந்தோபதேசங் கேட்ட கலைஞர். இவர் தம் ஆசிரியராம் அம்பலவாணதேசிகர் மீது மிகுந்த சிரத்தை பூண்டு அவர்க்குத் தோத்திரமாகப் பத்து வெண்பாக்கள் பாடினர். மாதிரிக்காக அவற் றுள் ஒன்றை இதன் கீழ்த் தருகின்ருேம்:
"அந்தமலத் தத்துவித மானபணி யாலகற்றி
வந்தமலத் தத்துவிதம் வைத்தாயே-யெந்தாய் திருவாவடுதுறைவாழ் தேசிகா பொய்யின் மருவாத வம்பலவா ன."
σδύει --------------- கி. பி. பதினரும் நூற்றண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதத்தக்க திருவாவடுதுறை யாதீனத்தின் மூன்ரும் பண்டாரசந் நிதிகளாம் அம்பலவாணதேசிகரின் சீடர் சிவபுரம்பிள்ளை சரிதம் காசிச்செட்டியவர்கள் நூலில் இடம்பெறவில்லை,

حب- 215 --سم۔
சிவப்பிரகாச சுவாமிகள். - Chivapprakacha Chuwamikal.
இவர் சாலிவாகன சகாப்தம் கடுoo ற்றுச் சொச்சத்துக்குச் சரியான கி. பி. கள ம் சதாப்தத்திலே காஞ்சிமாபுரத்திலே வசித்த சங்கமக் குருக்களாகிய குமாரசுவாமிப் பண்டாரத்தின் குமாரர். இவருக்குக் கருணைப்பிரகாச தேசிகர், வேலப்ப தேசிகர் என்னும் இரு சகோதரருளர். பொம்மைய பாளையத்தில் இருந்த சிவஞான பாலைய சுவாமிகள் இவர்க்கு ஞானசாரியர். இவர் வித்தியாரம்பஞ் செய்து கல்வி கற்றுவரும் இளம் பிராயத்திற்ருனே தந்தையார் நிரியானதசை அடைந்தாராதலால், இவர் தம் அன்னையாரோடு தம்பிமார் இருபேரையுங் கூட்டிக்கொண்டு திருவண்ணுமலைக்குப் போய் அதைத் தம் குடிபதியாக்கியும், கொஞ்சக்காலத்துள் அல் விடத்தை விட்டு மேலும் இலக்கண இலக்கியங்களிலே ஆராய்வு செய்வது கருதித் திருநெல்வேலிக்குப் பிரயாணப்பட்டார். போகும் வழியிலே துறைமங்கலத்திலே 1 அண்ணுமலை ரெட்டியெனுங் கிராமாதிபதி இவரைத் தடுத்துத் தான் கட்டின மடத்தில் இருக்கும் படி கேட்டுக்கொண்டதினுல் இவர் இசைந்து அவ்விடஞ் சிலகாலம் வதிந்து, பின்னர் மேலுங் கலாமுயற்சியிற் பேராசை தூண்டக் கிராமாதிபதியின் அனுமதி பெற்று. அவர் கொடுத்த முந்நூறு பொன் (ரூபாய் ருஉரு) னேடு தம் இரு கண்மணி நேருந் தம்பிமார் இருவரையும் உடன்கொண்டு திருநெல்வேலி சேர்ந்து அங்கே தாம்பிரவன்னிக்கரையிலே சிந்துபூந்துறையிற் கட்டப்பட்டிருந்த மடத்தில் வசித்த வெள்ளியம்பலத் தம்பிரானைக் கண்டு, தாஞ் சென்ற அபிப்பிராயத்தை அவர்க்கு உணர்த்தினர்,
அவர் இவரது கல்வியறிவைப் பரீட்சித்தற்காகக் கு என்னும் அட்சரத்துடன் தொட்ங்கவும் முடியவுஞ் சிவனைப்பற்றி ஊருடையான் எனப் பொருளமையவும் ஓர் பாட்டுச் சொல்லும் என்று கேட்க, உடனே இவர்;
"குடக்கோடு வானெயிறு கொண்டார்க்குக் கேழன்
முடக்கோடு முன்னமணி வார்க்கு-வடக்கோடு,
தேருடையான் றெள்வுக்குத் தில்லைத்தோன் மேற்கொள்ளல்
ஊருடையா னென்னு முலகு” என்னும் வெண்பாவைச் சொற்றனர்; அத் தம்பிரான் இதில் மிக மகிழ்ந்து இவரைத் தழுவித் தமக்கு இவர் மேலுற்ற பிரீதியைக் காண்பித்து, உமக்கு யாங் கற்பிப்பதற்கு அவசியமன்முதலால், உம் தம்பியர்க்குக் கற்பிப்பம் எனக் கூறி அவர்க்குப் பாடஞ் 1. நூ. பா. திருமங்கலத்திலே

Page 117
சொல்லி அவரைத் தேறச் செய்தனர். இந்த உதவிக்குக் கைம் மாருய், இவர் தங்கையிலிருந்த பொன் முந்நூற்றையுங் கொடுக்க அவர் மறுத்து அதை வாங்காராகி, இவரை நோக்கித் திருச்செந் தூரிலே எமக்கொரு பகைவனுளன். அவன் நம்மைப் பரிகாசித்து நம்மேல் நிந்தைப் பாக்களைப் பாடுகின்றன். அவனைத் தோற்கடித்து வருவதே நீர் நமக்குத்தருந் தக்கணை என, இவர் அவர் வேண்டு கோளுக்கு இசைந்து அவ்வூர் சென் ருர்,
இவர் போய்ச் சேருமுன் இவர் போகு நோக்கம் அப்புலவனுக்கு அறிவிக்கப்பட, அவன் இவரைக் கண்டவுடன், நல்லது நாம் இருபேரும் நேரங் குறித்து ஆளுக்கு முப்பது யமகம் பாடுவம், குறித்த நேரத்துட் பாடி முடியாது தோற்றவன் வென்றவனுக்கு அடிமை என்ருன் இவரோ, ஒ1 ஒருவ்ன் தேடிப்போகும் பொருள் அவனைத் தேடிவந்தாலென நாம் வந்த நோக்கம் யாதோர் தடையு மின்றி இலகுவில் நிறைவேறுமென்று கண்டு மகிழ்ந்து, அப்படி யாகட்டும் என்று உடன்பட்டுத், திருச்செந்தினிரோட்ட யமக வந்தாதி எனும் கO கலித்துறையைப் பாடி முடிக்க, அப்புலவனுக்கு ஒர் பாட்டும் போகாமையால் அவன் தற்சணம் கெலிக்கப்பட்டு இவர்க்கடிமையாக, அவனை இவர் அழைத்துப்போய்ச் சிந்துபூந்துறை சேர்ந்து தம் ஆசிரியர்க்குத் தண்டன் சமர்ப்பித்து, இதோ அடி யேனிடம் தாங்கள் கேட்ட குரு தக்கணை என்ருர், வலைத்தலை மான் எனத் தம் பகைவனைக் கண்டவுடன் தம்பிரான் களித்து இவர் மேல் இன்புற்று, இன்று தொடக்கம் எம்மடக் கண்காணியாய் நீர் இருத்தல் வேண்டும் என்று கேட்க, இவர் அக்கேள்வியை அங்கி கரியாது சுவாமீ, ஏகாந்தமே இனிது என்ருர் போல அவர் உத்தரவு பெற்றுத், தாம் முன் தங்கின துறைமங்கல மடத்திற்போய் வாசம் பண்ண, இவருடைய கீர்த்தி பரிமளம் போல எங்கும் பரம்பினதால் அநேகர் இவரிடஞ் சென்று பாடங் கேட்டார்கள். இவர் சீவிய பரியந்தம் இல்லாச்சிரம விரதம் அனுட்டித்து வந்தார். ஒருமுறை இவர் நேசனகிய அண்ணமலைரெட்டி இவரை நோக்கி நீர் இல் வாழ்க்கையில் அமையவேண்டும் என்று சொன்னதற்கு, இவர் ஓர் மனைவியிலும் ஒர் பிடாரியே உத்தமம் என்ருர், விசேஷமாய்ப் பதிசாஸ்திரங்களில் மிகுந்த உழைப்பாளியான இவர் உலோ கோபகாரங் கருதி அந்நிரையிலும் பிறவகையிலுமாய்ப்,
பிரபுலிங்கலீல் நிருக்கூவப்புராணம் இத்தாந்த சிகாமணி வேதாந்த சூடாமணி
--- --rܡܫ-ܡܗܿ ܕܚܫ
. . ப su

- 27 -
&frannu'r 19pr&5nreyFef?esnrefath *
சிவநாம மகிமை
தர்க்கபாஷை
சோணசைலமாலை
வெங்கையுலா 2
வெங்கையலங்காரம் 3
திருச்செந்திலந்தாதி
சதமணிமாலை
நால்வர் நான்மணிமாலை
நிரஞ்சனமாலை
கைத்தலமாலை
இஷ்டலிங்கப் பெருங்கழிநெடில் விருத்தம்
இஷ்டலிங்கக் குறுங்கழிநெடில் விருத்தம்
அபிஷேகமாலை
வெங்கைக்கோவை 4
வெங்கைக்கலம்பகம்*
நன்னெறி என்னும் இருபத்தொருபாடல்களை இயற்றினர். முன்னைய இரண்டுங் காப்பியங்கள். அவற்றுள் முந்தினது அல்லமாபிரபு என்னுஞ் சங்க மத் தலைவரையும் மற்றது திருக்கூவை என்னுஞ் சிவஸ்தலத்தையும் பற்றியன. ஏனைய நான்கும். பதிசாஸ்திரங்கள். அடுத்த தர்க்க பாஷையானது தர்க்கபரிபாஷை என்றும் தர்க்க சூடாமணி என்றுஞ் சொல்லப்படும். இதனை ஆதியிலே சிவகேசவமிசிரர் 8 என்பவர் சம்ஸ்கிருதத்தில் இயற்றினர். அதனை இவ்வாசிரியர் தமிழில் மொழி பெயர்த்தார். அதனை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிபதியும் உடுப்பிட்டியிலிருந்த குமாரசாமி முதலியார் புத்திரருமாகிய ரா. 1ா. கதிரவேற்பிள்ளை பல கர லிகிதப் பிரதிகளைக் கொண்டு பிழை தீரப் பரிசோதித்து அச்சிடுவித்தார். ஒழிந்த பதின்மூன்றுஞ் சிவஸ்துதிகள். இறுதியானது நீதிநூற்றிரட்டு இதில் நாற்பது பாக்களுள. இந்தப் பாடல்களன்றித் தமது ஞாஞதேசிகராகிய பாலையானந்த சுவாமிகள் மேற் பிள்ளைத்தமிழ் முதலாகிய புகழ்ப்பாக்களுஞ் சொற்றனர்: தமது சகோதரராகிய கருணைப்பிரகாச தேசிகர் தொடங்கியும் மாரண காரணத்தால் முடியாதுவிட்ட காளத்தி புராணத்தை
1. நூ, பா. சிவப்பிரகாச வியாசம் 2. T. us. Calie&G 3. நூ. பா. வேங்கையலங்காரம் 4. நூ. பா. வேங்கைக்கோவை 5. து. பா. வேங்கைக்கலம்பகம் 6. து. பா. சிவகேசவமிரர்

Page 118
- 28 -
முடிக்க நினைத்து, கண்ணப்பசருக்கம், நக்கீரர் சருக்கம் என்னும் இரண்டு சருக்கங்களைப் பாடவே மிர்த்தியு அகாலத்தே இவர்க்குச் சத்துருவானதாற் கேட்டோர் கண்கலுழப் பொம்மையபாளையத் துக்குச் சமீபமான நல்லாற்றுாரிலே 1 த உ பிராயத்திற் தேகவியோக மாயினர். திருச்செந்திலந்தாதி அல்லது திருச்செந்தினிரோட்டயமக அந்தாதி முப்பதிற்கும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர் உரை செய்தனர். அவர் உரைப் புத்தகத்திற் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்றிருக்கிறது. திருமங்கலமெனப் பின் ைெருவர் அச்சிட்டனர். எது சரியோ ஐயமுற்ருேம். நிரோட்டயமகம் பாடல் அருமையாதலால் அஃது காண்டற்காகவும் இவர் பாடல் மாதிரிக்காகவும் அதிலோர் பாட்டை இங்ங்ணம் தந்தோம். அது வருமாறு:
'தனத்தலங் கார நிறைநா ரியரந் தரத்தசைகே
தனத்தலங் கார நிகழரங் காடச்செய் தன்னினையத் தனத்தலங் கார தராயியங் கத்தக்க தண்செந்திற்கந் தனத்தலங் காரனே யாணய னேத்திடத் தங்கினனே."
நால்வர் நான்மணிமாலையானது, சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனும் நால்வர் பேரிலும் முறையே வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் எனும் நான்கு பாவிலும் பாடப்பட்டன. பாடற் தொகை சo. மேற் கூறப்பட்டன அன்றிப் பெரியநாயகி விருத்தம் *, பெரியநாயகி கலித்துறை, பிக்ஷாடன நவமணிமாலை எனும் வேறு மூன்று பாடல்களும் இயற்றினர். முந்தினதின் தொகை பத்து. மற்றதன் தொகை பத்தொன்பது: மூன் ருவதான பழமலைநாதர் பிக்ஷாடன நவமணிமாலைப் பாத்தொகை ஒன்பது. இம்மூன்றையும் ஆறுமுகநாவலர் அச்சிடுவித்தார். துறைசை வெண்பாவையும் இவர் பாடினர்.
இவர் இறந்தபோது இவர் சகோதரர் வேலைய சுவாமிகள் சொன்ன வெண்பாப் பின்வருவது;
**அல்லிமலர்ப் பண்ணவனு மாராய்ந் தறிகவிதை
சொல்லு மிருவரிடைத் தோன்றியயான்-முல்லை அரும்பிற் பொலியு மணிமுறுவ னல்லாய் கரும்பிற் கணுநிகர்த்தேன் காண்."
1. நூ. பா. நல்லாத்துரிலே 2. இந்நூல் விடுபட்டுள்ளது

- 29 -
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தையே சதாசிவம்பிள்ளை பெருமளவிற் றழுவியுள்ளார். கருணைப்பிரகாசரின் காளத்தி புராணத்தை முற்றுவிக்க முயன்று முற்றுவிக்காது மரணித்தவர் என்றும், அப்பர் சுந்தரர் சம்பந்தராற் பாடப்பெற்ற சிவதலங்கள் ஒவ்வொன்றின் மேலும் ஒரு வெண்பா பாடியவர் என்றும், தம் ஞானகுரு பாலையானந்தசுவாமி மீது மூன்று பிரபந்தங்களை இயற் றியவர் என்றும் கூறும் காசிச்செட்டியவர்கள் பழமலையந்தாதி, விருத்தகிரி பழமலைநாதர் பிச்சாடன நவமணிமாலை, விருத்தகிரி பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடிலாசிரிய விருத்தம், விருத்தகிரி பெரியநாயகியம்மை கலித்துறை, கொச்சகக்கலிப்பா, ஏசுமத நிராகரணம் என்பன நீங்கலாக இருபத்தொரு நூல்களின் பெயர் களைத் தந்துள்ளார். சதாசிவம்பிள்ளை குறிப்பிடும் பிள்ளைத்தமிழ் நீங்கலாகச் சிவஞானபாலேயர் மீது தாலாட்டு, திருப்பள்ளியெழுச்சி, நெஞ்சுவிடுதூது, கலம்பகம் எனும் நான்கு பிரபந்தங்களையும் சிவப்பிரகாசர் பாடியுள்ளார். காசிச்செட்டியவர்கள் குறிப்பிடும் சிவதலங்கள் மீதான பாடல்கள் தலவெண்பா என்று வழங்குவது போலும். ஆறுமுகநாவலர் பதிப்பித்த நூல்களின் உதவியுடன் சதாசிவம்பிள்ளை புதிதாக மூன்று நூல்களைக் குறிப்பிட்டார். ஆயினும் சதாசிவம்பிள்ளை கூறும் துறைசை வெண்பா யாதென அறியுமாறில்லை; சிவப்பிரகாசர் வரலாறுகளில் இப்பெயர் காணப் பெறவில்லை.
கருணைப்பிரகாசர், சாந்தலிங்கதேசிகர் குறிப்புகளிற் சிவப்பிர காசரின் காலம், வெள்ளியம்பலவானத் தம்பிரான், சீகாளத்தி புராணம், சாந்தலிங்கதேசிகர் தொடர்பு பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
கைலாயத்தில் மேற்குவாயிற் காவலராகவும் கணத்தலைவராகவும் விளங்கிய சங்குகன்னர், சிவன் ஆணைப்படி, மயிலத்திற்கு நேர்க் கீழைக்கடலிலே தோன்றி, பாலவடிவுடன் விபூதி உருத்திராக்கம் இட்ட லிங்கத்துடன் பொம்மயபாளையத்திற் கரையேறி, மயிலமலை செஞ்சிமலை பெருமுக்கல்மலை முதலிய இடங்களிற் பல சித்துகளைச் செய்து பாலசித்தர் எனப் பேர்பெற்ருர். இவ்ரை மயிலம் பொம்மபுரம் சிவஞானபால்யதேசிகர் ஆதீனத்தின் ஆதிகுருவாகக் கொள்வர் பாலசித்தருக்குப் பணிபுரிந்து, அவர் விருப்பப்படி முருகப்பெரு மானுல் இலிங்கதாரணமும் வீரசைவமுறைப்படி ஆசாரிய அபிடேக மும் சிவஞானபாலையர் என்ற தீட்சாநாமமும் பெற்ற முதலாம் சிவஞானபாலையதேசிக சுவாமிகளே சிவப்பிரகாசரின் குரு என்பர் இரண்டாம் சிவஞானபாலைய தேசிக சுவாமிகளும் சிவப்பிரகாசர் காலத்தவர் என்பர்

Page 119
مسلسد 220 ـ
சாமரசர் கன்னடத்தில் இயற்றியதும் பன்னிரண்டாம் நூற்றண்டில் வாழ்ந்த வீரசைவப் பெரியார் அல்லாமபிரபு சரிதத்தைக் கூறுவதுமான பிரபுலிங்கலீலை செய்யுளானியன்ற மொழிபெயர்ப் பாகும். சித்தாந்த சிகாகமணியும் வீரசைவத்தைப்பற்றிய மொழி பெயர்ப்புச் செய்யுணுாலாகும் நிரஞ்சனமாலை, கைத்தலமாலை, இட்டலிங்கவயிடேகமாலை, இட்டலிங்கப்பெருங்கழிநெடில் விருத்தம், இட்டலிங்கக் குறுங்கழிநெடில் விருத்தம் எனும் ஐந்து செய்யுணுரல் களும் வீரசைவத்தில் முக்கியமான ஆன்மலிங்கத்தைப் பரவும் நூல்களாம். நிசகுணயோகி கன்னடத்தில் மொழிபெயர்த்த விவேகசிந்தாமணியின் வேதாந்தபரிச்சேதம் என்னும் பகுதியின் செய்யுள் மொழிபெயர்ப்பு வேதாந்தசூடாமணியாகும். சிவப்பிரகாச விகாசமும் சதமணிமாலையும் சைவசித்தாந்த விளக்கமான செய்யு ணுரல்களாம். சிவ எனும் சொல்லின் பெருமையைக் கூறும் செய்யுணுரல் சிவநாமமகிமையாகும். தர்க்கபரிபாஷை வசன மொழிபெயர்ப் பாகும். திருவிற்கோலம் பற்றிய தலபுராணம் திருக்கூவப்புராணம்; திருவண்ணுமலையிற் கோயில் கொண்ட சிவபிரான்மீது பாடப்பெற்ற பிரபந்தம் சோணசைலமாலை; வெங்கனூர் பழமலைநாதர் ஆகிய சிவன் மீது பாடப்பெற்றவை திருவெங்கைக்கலம்பகம், கோவை, உலா, அலங்காரம் திருச்செந்தூர் முருகன் மீது பாடப்பெற்றது திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதி; விருத்தாசலம் பழமலைநாதர் மீது பாடப்பெற்றவை பழமலையந்தாதியும் பிச்சாடன நவமணி மாலையும்; விருத்தாசலம் இறைவி பெரியநாயகியம்மைமீது பாடப் பெற்றவை நெடுங்கழிநெடிலாசிரிய விருத்தமும் கலித்துறையும்; கொச்சகக்கலிப்பா கிடைக்கவில்லை! ஏசுமத நிராகரணத்திற்குரிய சில பாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன.
பிரபுலிங்கலீலையின் பகுதிக்குத் திருத்தணிகை éFb761600T L. பெருமாளையரும் அவர் மகன் கந்தசுவாமிஜயரும் உரைகண்டுள்ளனர். ஈசூர் சச்சிதானந்தசுவாமிகள் பிரபுலிங்கலீலைக்கு விருத்தியுரை கண்டவர். காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு பிரபுலிங்கலீலை வசனம் எழுதியுள்ளார். திருத்தணிகை சரவணப்பெருமாளையர் திருவெங்கைக் கோவைக்கும் பழமலையந்தாதிக்கும் உரையியற்றியுள்ளார் என்பர் சிதம்பரம் ஈசானியமடம் இராமலிங்கசுவாமிகள் பழமலையந்தாதி, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதி, நால்வர் நான்மணிமாலை, பிச்சாடன நவமணிமாலை என்பனவற்றிற்கு உரை தந்துள்ளார். ஆறுமுகநாவலர் திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதிக்கு உரை யியற்றி சாதாரண ஞ) பங்குனிமீ (1851) யாழ்ப்பாணம் வித்தி யானுபாலனயந்திரசாலையிற் பதிப்பித்தார். நால்வர் நான்மணி மாலைக்குப் பு. சி. புன்னைவனநாத முதலியாரும் பிச்சாடனநவமணி மாலைக்குத் திருமயிலை சண்முகம்பிள்ளையும் உரை எழுதியுள்ளனர்:

- 22 -
க. வ. திருவேங்கடநாயுடுவின் சோணசைலமாலை, சிவநாமமகிமை உரைப்பதிப்பு 1899இல் வெளிவந்தது. சோணசைலமாலைக்குக் கொ. இராமலிங்கத்தம்பிரானும் உரைகண்டுள்ளார். வேதாந்த சூடாமணிக்குப் பிறைசை அருணுசலசுவாமிகளும் ஈசூர் சச்சிதானந்த சுவாமிகளும் சிதம்பரம் கோ-சித மடம் பொன்னம்பலசுவாமிகளும் உரையியற்றியுள்ளனர்,
திருத்தணிகை சரவணப்பெருமாளையர் திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியையும் பழமலையந்தாதியையும் 1832ஆம் ஆண்டிற் பதிப்பித்தார். ஆறுமுகநாவலர் நால்வர் நான்மணிமாலை, விருத் தாசலம் பழமலைநாதர் பிச்சாடன நவமணிமாலை, விருத்தாசலம் பெரியநாயகியம்மை நெடுங்கழிநெடிலாசிரிய விருத்தம், விருத் தாசலம் பெரியநாயகியம்மை கலித்துறை என்பனவற்றை ஒரே பதிப்பாக வெளியிட்டார். இப்பதிப்பின் இரண்டாம் பிரசுரம் ஆங்கீரசளுல் பங்குனிமீ (1873) சென்னை வித்தியாதுபாலனயந்திர சாலையில் அவரால் மீண்டும் வெளியிடப்பெற்றது. வைமன் கதிரை வேற்பிள்ளை 1862ஆம் ஆண்டு தர்க்கபாஷையைப் பதிப்பித்தார். திருக்கூவப்புராணம் சிதம்பரம் ஈசானியமடம் இராமலிங்கசுவாமி களாலே தாரணளு) ஆனிமீ (1884) பதிப்பிக்கப்பெற்றது. சிதம்பரம் ஈசானியமடம் இராமலிங்கசுவாமிகள் சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தத்திரட்டினை முதன் முதலாக வெளியிட்டார்.
சிவப்பிரகாசர் என்ற பெயரிற் பலர் வாழ்ந்திருக்கின்றனர். திருவாரூர் சிவப்பிரகாசர் கோவர்த்தத்திலே தத்துவராயரின் ஞானகுரு சொரூபானந்தருக்கு உபதேசம் செய்தவர். மதுரைச் சிவப்பிரகாசர் என்பவர் சத்தியஞானபண்டாரத்தின் சீடர் மதுரை ஞானப்பிரகாசர் என்பவரின் சீடராவர்; ஓதுபுகழ் சகாத்தம் ஆயிரத்து நானூற்று ஒருபதின்மேற் செல்கின்ற காலம் தன்னிற் (1411+78 = 1489) சிவப்பிரகாசத்திற்கு உரைகண்டவர்; இவ்வுரை 1872 இல் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது. இவர் இருபா விரு பஃது எனும் சித்தாந்த நூலுக்கும் உரைதந்தவர். அருணமச்சி வாயரின் சீடரும் வேதாரணியம், திருவாவடுதுறை ஆகிய இடங் களில் வாழ்ந்தவரும் திருவாவடுதுறை ஆதீனத் தாபகர் நமச்சிவாய மூர்த்திகளின் குருவுமானவர் சித்தர் சிவப்பிரகாசர். நமச்சிவாய மூர்த்திகளின் சீடர் சித்தர் சிவ்ப்பிரகாசர் பற்றிச் சாந்தலிங்கதேசிகர் குறிப்பிற் குறிப்பிடப்பட்டுள்ளது. சிதம்பரம் பச்சைக் கந்த தேசிகர் திருவடிமரபில் வந்தவரும் அரும்பொருள்விளக்க நிகண்டின் ஆசிரியர் அருமருந்தையதேசிகர் தந்தையுமான வீரசைவர் சிதம்பரம் சிவப் பிரகாசர், அரும்பொருள் விளக்க நிகண்டு 1763இல் அரங்கேற்றப் பெற்றது. புன்கூர் சிவப்பிரகாசர் பற்றிச் சிவஞானதேசிகர்

Page 120
- 222 -
குறிப்பிலே தரப்பட்டுள்ளது. திருப்போரூர் கரபாத்திரம் சிவப் பிரகாச அடிகள் இருபதாம் நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தங்கள் வரை வாழ்ந்தவர். தில்லைச் சிற்றம்பலவர் எனும் சிவப்பிரகாசர் திருவுந்தியாருக்கும் திருக்களிற்றுப்படியாருக்கும் உரைகண்டவர்.
Gà Snu Snu TäsSuJử. — Chivavakkiar.
இவர் ஞானியன்றிப் புலவருமாய் இருந்தார். கடவுள் ஏக ரென்பது இவரது கோட்பாடாதலாற் பலர் தேவர் வணக்கத்தைத் தம் பாடலால் நிராகரித்தார். இவர் செய்த பாடல் இவரது நாம தேயப்படி சிவவாக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சிவ சிவ என்று சொல்லிக்கொண்டு இவர் பிறந்த காரணததால் இவர்க்குச் சிவவாக்கியர் என்று பெயரிடப்பட்டதெனச் சொல்வர். துருக்கர் இந்து தேசத்துக்கு விரோதமாய்ப் படையெடுத்து வந்த காலத்தின் பின் இவர் இருந்திருக்கலாம். இவர் பாடல் சிலவற்றை எல்லிஸ்துரை இங்கிலிஷில் மொழிபெயர்த்திருக்கிருர், மாதிரிக்காய் ஒரு பாட்டை இவ்விடந் தருகிருேம்.
*"அரியுமல்ல வரனுமல்ல வயனுமல்ல வப்புறம்
கருமைசெம்மை வெண்மையுங் கடந்துநின்ற காரணம் பெரியதல்லச் சிறியதல்லப் பெண்ணுமாணு மல்லவே துரியமுங் கடந்துநின்ற தூரதூர தூரமே."
மறுபிறப்பில்லை என்றதும் இந்த ஞானியாருடைய கோட்பாடு. அக்கருத்தைப் பின் வரும் பாவிற் பட்டப்பகல் போலத் துலாம் பரமாய் விளங்கச் செய்தனர்.
**கறந்தபான் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா
உடைந்தசங்கி னேசையு முயிர்களு முடல்புகா வடிந்தவோர டையினே டுதிர்ந்தபூ மரம்புகா இறந்துபோன மானிட ரினிப்பிறப்ப தில்லையே."
குறிப்பு
சதாசிவம்பிள்ளை தரும் பெயர்க்காரணம் ஒழிந்தவை காசிச் செட்டியவர்கள் நூலிலிருந்து பெறப்பட்டவை: 'அரியதோர் நமச்சிவாய" எனும் முதற் பாடலிற் சிவவாக்கியர் தம் நூலுக்குச் சிவவாக்கியம் என்ற பெயரைத் தருகிருர், தத்துவராயரின் பெருந்
1. ந. சி. கந்தையபிள்ளே: தமிழ்ப்புலவர் அகராதி, 1960 பக். 114
\

- 223 -
திரட்டில் அருமையுரைத்தல் எனும் பிரிவில் மூன்று பாடல்களும் முத்திக்கேது என்னும் பிரிவில் ஒரு பாடலும் சிவவாக்கியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இவை சிவவாக்கியர் பாடற் பதிப்புகளில் இடம்பெறவில்லை. இவை பதிப்பாசிரியருக்குக் கிடையாமற் போயிருக் கலாம் அல்லது தத்துவராயரே இவற்றைப் பாடிச் சிவவாக்கியம் என்ற பெயரைத் தாமே அளித்திருக்கலாம். எவ்வாருயினும் தத்துவ ராயர் காலத்திற் சிவவாக்கியம் என்ற பெயரைப் பெற்ற நூலொன் றிருந்தது என்று கருதலாம்.
தாயுமானவர் *, சிவஞானவள்ளல்", பட்டினத்தடிகள் " ஆகியோர் கிவவாக்கியரைப் போற்றியுள்ளனர். கி. பி. பதினரும் நூற் முண்டினரான சிதம்பரம் கண்கட்டி மறைஞானசம்பந்தர் சீடரான சீகாழி மறைஞானசம்பந்தர் சிவஞானசித்தியார் சுபக்கம் 298ஆம் பாடலுரையில் 'நவ்விரண்டு காலதாய்" எனும் சிவவாக்கியப்பாடலை மேற்கோள் தருகின்றர். பட்டினத்தடிகள், தத்துவராயர், சிவஞான வள்ளல், சீகாழி மறைஞானசம்பந்தர், தாயுமானவர் ஆகியோர் சுட்டும் சிவவாக்கியரும் சிவவாக்கியமும் ஒருவரே யாகவும் ஒரே நூலாகவும் இருப்பின் சிவவாக்கியர் காலம் பதினுேராம் திருமுறையில் இடம்பெறும் பட்டினத்தடிகளுக்கு முற்பட்டதாதல் வேண்டும்.
சிவவாக்கியரும் ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த திருமழிசை யாழ்வாரும் ஒருவரே என்ற கதையும் நிலவுகின்றது. திருமழிசையிற் பிருகுமுனிவர் நெடுங்காலஞ் செய்துவந்த தவத்தினைக் கலைக்கத் தேவேந்திரன் தேவமங்கை ஒருத்தியை அனுப்ப, அவள் தவத்தைக் கெடுத்து மகவொன்றையும் பெற்றுவிட்டுத் தேவலோகம் செல்ல, அப்பிள்ளைக்குத் திருமழிசையான் என்ற பெயர்சூட்டித் திருவாளன் எனும் வேடன் வளர்க்க, வளர்ப்புத் தந்தையின் வைணவமதத்தைத் தழுவித் திருமழிசையாழ்வார் என்று பேர்பெற்றிருந்தவர் பினபு சைவராகிச் சிவவாக்கியர் ஆஞர் என்பது சைவர் கருத்து. பார்க்கவ முனிவருக்குப் பிண்டமாகப் பிறந்து, பின்பு பரிபூரணமாகித் திருவாளன் எனும் குறவணுல் வளர்க்கப்பட்டுப் பல்வேறு சமயங் களிலும் புகுந்து பேயாழ்வாரால் மீட்கப்பட்டவர் பத்திசாரர் (திருமழிசையாழ்வார்) என்பது வைணவர் கருத்து. குருபரம்பரை பிரபாவம் பன்னீராயிரம் சிவவாக்கியர்தான் திருமழிசை யாழ்வார் என்று கூறுவது முன்னைய குருபரம்பரைப் பிரபாவம் ஆருயிரம் எனும் நூலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திரு மழிசையாழ்வாரின் திருச்சந்தவிருத்தப் பாடல்களின் யாப்பிலே
1. எந்நாட்கண்ணி, 9. U ni al a Ti. Súh, 6 2, சித்தாந்த தரிசனம், பாயிரம், 8 9. திருவிடை மருதுர் மும்மணிக்கேrவை, 28 . 32-33

Page 121
- 224 -
சிவவாக்கியர் பாடல்கள் அமைவதால் இருவரையும் தொடர்புறுத் தும் கதை உருவாகியிருக்கலாம் என்பர்.
சிவவாக்கியத்தில் இடம்பெறும் பல பாடல்கள் மெய்கண்ட சாத்திர காலத்திற்குப் பிற்பட்டவை என்று கருத இடமளிக்கின்றன. இஸ்லாம் மதத்தைப் பற்றிய செய்திகள் பல சிவவாக்கியத்திலுள1. மேலும் அடிமைத் தொழில் புரிதல், அடிமையாய் இருத்தல், போலிச்சடங்குகளுக்கு அடிமையாய் இருத்தல் எனும் பொருள்களிற் குலாமர் எனும் அராபியமொழிச் சொல் சிவவாக்கியத்தில் இடம் பெறுகின்றது 2.
பதினேராம் திருமுறையில் இடம்பெறும் பட்டினத்தடிகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று புறச்செய்திகள் மூலம் கருதத்தக்கவர் பதினன்காம் நூற்றண்டில் அல்லது அதற்குப் பிற்பட்ட காலத்தில் இருந்தவர் என்று அகச்செய்திகளின் அடிப்படையிற் கருதவேண்டிய வராக அமைகிருர், சிவவாக்கியத்தில் இடம்பெறும் பாடல்கள் யாவும் சிவவாக்கியர் வாக்கு என்று துணியலாகுமோ என்பது சந்தேகத்திற்குரியது. சிவவாக்கியத்தில் இடைச்செருகல்கள் பல இடம்பெற்றிருக்கலாம்.
பெரிய சிவவாக்கியர் பாடல் மூலமும் மா. வடிவேலு முதலியா ருரையும் கூடிய பூவிருந்தவல்லி சுந்தரவிலாச அச்சுக்கூடப் பதிப்பில் (1904) 518 பாடல்களுள அரு. ராமநாதனின் சித்தர் பாடல்கள் எனும் பதிப்பில் (1959) 526 பாடல்களுள
நாடிப்பரீட்சை எனும் நூலையும் சிவவாக்கியர் இயற்றியதாகக் கூறுவர் *.
Schum isSJ Guum Suust. - Chivakkira Yokiar,
இவர் பெயர்பெற்ற வித்துவசிரோமணியும் பிரதாபமுற்ற ஆக்கி யோனுமாய் இருந்தார். இவர் தஞ்சாவூரிலே சைவப்பிரசங்கஞ் செய்து வருகையில், விஷ்ணுசமயியும் பாஞ்சராத்திர மதத்தவருமாகிய மணவாளமாமுனி பதினெட்டு நாளாகச் சரபோஜிராசா முன்னிலையில்
1. சித்தர் பாடல்கள், அரு. ராமநாதன் பதிப்பு 1959, சிவவாக்கியர் பாடல்: 245, 323, 328,
334, 335, 337, 338, 344, 355, 358. 23 டிெ பதிப்பு: 1233; இச்சொல் பட்டினத்துப்பிள்ளேயரின் தீருவேகம்பமாலயிலும் (7) இடம்
பெறுகின்றது. 3. ந, சி. கந்தையபிள்:ை தமிழ்ப்புலவர் அகராதி, 1960 பக். 176

- 225 -
இவரோடு தருக்கமாட ஏற்பட்டுப், பதினேழாம் நாள் வரையிற் தோல்வி போகு நிலைமையிலிருக்க, இதனைக் கண்ட அவரது கூட் டாளிகள் அன்றிரா இவர் இருந்த மடத்திற் தீக்கொழுத்தினர் என்றும், தீ மடத்தை எரித்தும் இவரோ எரியாதிருக்க, அடுத்தநாட் தருக்கமண்டபத்தில் இவர் வராததைக் கண்ட அரசன் நடந்தி வர்த்தமானத்தைக் கேள்விஉற்றுத் தானே இவரைப்போய்க்கண்டு பிரமிப்புக் கொண்டவனுய் இவரை மிகத் துதித்து, எதிரிகளை ஓர் வீட்டிற் சேரச் செய்து வீட்டுடன் எரித்துவிட்டனன் என்றுங் கதை உளது. கதை எவ்வாருயினும் ஆகுக', இவர் ஓர் மகான் என்ற தில் மயக்கமின்று. சிவஞான சித்தியார் சுபட்சத்துக்கு இவர் உரை எழுதினரன்றிச் சித்தாந்த தீபிகை, மணிப்பிரவாள வியாக் கியானம், வேதாந்த தீபிகை, தத்துவதரிசனம், பாஞ்சராத்திரமத சபேடிகை எனுஞ் சில நூல்களையும் இயற்றினர்.
குறிப்பு
காசிச்செட்டியவர்களின் நூலில் இடம் பெருதவர் அதிவர்ணுச்சிரம ஆசாரிய வரிய சைவசமயபரிபாலக சிவாக்கிரயோ கீந்திர ஞான சிவா சாரிய சுவாமிகள். சிவாக்கிரயோகிகள் சூரியனுர்கோயிலாதீனத்தின் தாபகர் சிவக்கொழுந்த சிவாசாரியராம் சிவாக்கிரயோகிகளை யடுத்துத் தலைவராக விளங்கியவர். திருவிழிமிழலையில் எழுந்தருளி யிருந்தவராதலின் வீழிச் சிவாக்கிரயோகிகள் எனவும் அழைக்கப் பெற்றவர். வீழிச் சிவாக்கிரயோகிகளையும் (கி, பி 1564) மணவாள மாமுனிகளையும் (கி. பி. 1370-1443) சரபோஜி மன்னனையும் (1712-1728) இணைத்துக் கூறும் கதை பொருத்தமாகத் தெரியவில்லை. சைவசந்நியாசபத்ததி உபோத்காதம் ஐந்தாம் ஆரும் சுலோகங்களில் விசயநகர மன்னன் சதாசிவராயர் ஆட்சியிலே தஞ்சையை ஆண்ட சின்ன செவ்வா ச் சுதநாயக் கர் அவையிற் சகம் 1486இல் (கி. பி. 1564) அந்நூல் அரங்கேற்றப்பட்டது எனும் செய்தி பெறப் படுவதாகக் கருதுவர். சிவாக்கிரயோகிகள் கிரியா தீபிகை எனப்படும். கிவாக்கிர பத்ததி, சைவ சந்நியாச பத்ததி, வடமொழிச் சிவஞான போதம் சங்கிரக வியாக்கியானம், வடமொழிச் சிவஞானபோதம் சிவாக்கிர பாஷ்யம், சைவ பரிபாஷை எனும் சங்கத நூல்களை இயற்றி யவர்: சர்வஞ்ஞானுேத்தரம், தேவிகாலோத்தரம், சுருதி சூக்திமாலே என்பனவற்றிற்குத் தமிழுரை கண்டவர்; சிவஞான சித் தயார் பர பக்கத்திற்கும் சுபக்கத்திற்கும் உரைதந்தவர். பரபக்கவுரை மறைந்து விட்டது; சுபக்கவுரைப் பதிப்புகள் பற்றி அருணந்திசிவாசாரியர் குறிப்பிலே கூறப்பட்டுள்ளது. சிவாக்கிரயோகிகள் இயற்றிய 215 செய்யுளாலான சிவநெறிப்பிரகாசத்தை யாழ்ப்பாணம் வேலணை சைவசூக்குமார்த்த போதிணிப் பத்திரிகாசிரியர் செ. கனகசபாபதிப்
ւյm - 15

Page 122
- 226 -
பிள்ளை பாட்டனர் கந்தப்பிள்ளை உதவியுடன் பரிசோதித்துத் தமது நடராஜ அச்சியந்திரசாலையிற் பிங்களஞ்ல ஆடிமீ (1917) பதிப் பித்தார்; நந்தி சிவாக்கிரயோகிகள் உரையுடன் சென்னைப் பல்கலைக் கழக வெளியீடாக 1936இல் S. அநவரதவிநாயகம்பிள்ளை பதிப் பித்தார்.
சதாசிவம்பிள்ளை மணிப்பிரவாள வியாக்கியானம் என்றுரைப்பது யாதெனத் தெரியவில்லை. அவர் கூறும் பாஞ்சராத்திரமத சபேடிகை எனும் நூலின் ஆசிரியர் பற்றியும் ஐயமுண்டு. சூளை சோமசுந்தர நாயக்கர் (1846-1901) எழுதிய பாஞ்சராத்திரமதசபேடிகை அல்லது சைவசூளாமணி 1883 இல் வெளிவந்தது. இவர்தம் ஆதீன வரலாறு களிலே சித்தாந்ததீபிகை, வேதாந்ததீபிகை, தத்துவதரிசனம் என்பன இடம்பெறவில்லை.
சிறீநிவாச ஐயங்கார். --Chrinevasa Ayankar.
சிங்களப்பேட்டையிலே கி. பி. க.அ ம் சதாப்த காலத்தில் இருந்த இப்பண்டிதர் பாகவதபுராணத்தை வசனநடை யாக்கினரன்றி, சுo வருடங்களின்முன் எழுதப்பட்டிருந்த விஷ்ணுபுராண வசனத்தைச் சுருக்கி அதிலே நான்காம் வருணத்தாரான சூத்திரர் வாசித்தல் தோஷமெனத் தாம் நினைத்த சில பகுதிகளைத் தள்ளிவிட்டனர். வசன நடை கொண்ட இந்த இரண்டு கிரந்தங்கள் அன்றி இராமாயண ஏலப்பாட்டு, பாலகவித்திரட்டு எனும் இரு பாடல் களையும் இயற்றினர்.
3ìgọiGtog5Tofiumữ”. - Chirumadaviar.
இவருங் கடைச்சங்கப் புலவர் மார் சக பதின்மருள் ஒருவர். மற்றையோர் சரிதம் போலவே இவரது சரிதமும் அந்தகாரத்திருப் பதால், இவர் குறள் மேற் சொற்ற பாவொன்றையுமே இங்ஙனம் தருவம். அது வருமாறு:
**வீடொன்று பாயிர நான்கு விளங்கற
நாடிய முப்பத்து மூன்றென்றுாழ்- கூடுபொருள் எள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம் m வள்ளுவர் சொன்ன வகை."
تھی...............بسببـ
1. தமிழ் புளுராக் ஆசிரியர் மட்டுமன்றி பின்வந்த புலவர்சரிதகாரரும் மறந்துவிட்டவர். 2. நூ, பா. சிறுமேதவியார்

- 227 -
குறிப்பு
காசிச்செட்டியவர்களாலும் கூறப்பெற்ற சிறுமேதாவியார் பெயர் பண்டைய புலவர் பட்டியலிலில்லை; நன்பலூர்ச் சிறுமேதாவியா" நல்லூர்ச் சிறுமேதாவியார் இடம்பெறுவர். அக்காரக்கனி நச்சுமனர் குறிப்புக் காண்க.
Sâsbpidusuù Lysvaart. — Chittampalap Pulavar.
இவர் பண்டத்தரிப்புக் கோயிற்பற்றைச் சேர்ந்த மாதகற் குறிச்சியில் வாசஞ் செய்த சைவ வேளாளர். இவரது ஆசிரியர் வேதாரணியக் குருக்கள் வகுப் பை ச் சேர்ந்த பஞ்சலக்கணக் கணபதி ஐயர். இவர் வடகரை சென்று முன்பின் பதினன்கு வருடங் களாக இக் குருக்களிடம் பாடங் கேட்டு மிகு பாண்டித்தியம் அடைந்து யாழ்ப்பாணந் திரும்பினர். இவரிடம் பாடங்கேட்மாணக்கர் இருபாலைச் சேனதிராயமுதலியார், அராலி அருணசலம் முதலானேர். இவர் கண்டி இராசாவின் மேற் கிள்ளை விடுதூது என்னும் பிரபந்தம் ஒன்று பாடி அதை அரங்கேற்றற்காகக் கண்டிக்குப் பிரயாணப்பட்டுப் போம் வழியில் இராசன் அங்கிலேயர்கையில் அகப்பட்டான் என்ற மாற்றங் கேட்டுத் தம் ஊர்க்குத் திரும்பினர் இவர் இற்றைக்கு ஏறத்தாழ எழுபது வருடங்களின் முன் இருந்தார் என்று உத்தேசிக்கிருேம்,
குறிப்பு
* தமிழ் புளூராக்" கூருதுவிட்ட மாதகல் சிற்றம்பலப்புலவர் மாதகல் மயில்வாகனப்புலவரின் தாய்மாமனர். மாவை சிண்னக் குட்டிப்புலவரும் இவருடைய மாணவகராவர். ஆங்கிலேயராற் கண்டியரசன் 1815ஆம் ஆண்டிற் கைப்பற்றப்பட்டான்.
BịbpứucủQp956ớlum ff. - Chittampala Mudeliar.
இவர் சைதாபுரத்திலே இருந்த ஆண்டியப்ப முதலியார்க்குப் பெளத்திரர் ஐய! சுவாமி முதலியார்க்குப் புத்திரர். இவர்க்கு உமாபதி முதலியார், பென்னம்பல முதலியார் என்பார் சகோதரர். காயை முருகலிங்கையரைத் தமிழ் ஆசிரியராய்க் கொண்ட இவ் வித்துவான் சுச கலைஞானங்களுள் ஒன்ருகிய சோதிட சாஸ்திரத்தில் மிகத் தேர்ச்சி உற்றவர் ஆதலில் ஐயாசுவாமீயம் எனப் பெயர்

Page 123
- 228 -
வகித்த ஓர் சோதிடக் கிரந்தஞ் செய்தார். இதிலே காப்பும் வாழ்த்தும் பிற நீங்கலாக கoடு வெண்பாக்கள் உள. "ஐயாசுவாமிமா லறைந்தனனுக” என்று சிறப்புப் பாயிரஞ் சொல்லியபடி தம் தந்தையார் வேண்டுகோளுக்கு இசைந்து இச்சோதிடநூலை இவர் செய்தனராதலிற் * செய்வித்தோன்" பெயர் "நூற்கெய்தும்" என்ற இலக்கணப்படி தன் பிதாவின் நாமத்தைச் சற்றே திரிபாக்கி ஐயாசுவாமீயம் எனும் நாமத்தை அதற்கு இட்டனர். அந்நூலைப் புகழ்ந்து காயை முருகலிங்கையர், இயற்றமிழ் ஆசிரியராகிய இராமாநுச கவிராயர், சென்னை நயனப்ப முதலியார் ஆதியர் புகழ்க்கவி கொடுத்திருக்கிருர்கள். அம்மணியம் என்னும் பின்னுமோர் பாடலையும் அவர் இயற்றினர். அது இவர் பாட்டியார் மேற்று என்று சொல்லப்பட்டிருக்கக் கண்டோம். பாடல் மாதிரிக்கு, அவையடக்க வெண்பாவை இவ்விடந் தருகின்ருேம்.
**ஆர்ந்தறிவோர் முன்னேயா னையாச் சுவாமீயந்
தேர்ந்தபுன்சொல் வெண்பாவிற் செப்பவே-சேர்ந்தநீர்ச் சேற்றில் விளைந்தநறுஞ் செங்கழுநீர்ப் புஷ்பமென மாற்றிநல மாக்கொள்ளு வார்."
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் நூலில் இடம்பெருதவர் சிற்றம்பல முதலியார். சாற்றுகவி கொடுத்தோர் பட்டியலை நோக்கும்போது, இவர் பத்தொன்பதாம் நூற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்று கருதலாம். ஐயாசுவாமீயம் அம்மணியம் பதிப்பொன்று 1883 இல் வெளிவந்ததென்பர் 1.
S6öI GOTš5Ůů suvaust. — Chinnakkuttip Pulavar.
முன் சொல்லப்பட்ட சிற்றம்பலப் புலவரது மாணுக்கராகிய இவர் தெல்லிப்பழையில் இருந்தவர். இவர் நாமஞ் சின்னக்குட்டிப் புலவ்ர் என்றிருப்பினும் சின்னப் புலவரும், குட்டிப்புலவரும் ஆகாது மகா சிறந்த புலவராயிருந்தவர். இவர் சந்ததியார் மாவிட்டபுரத்தில் இன்றும் இருக்கின்ருர்: メ
இப்புலவரால் பாடப்பெற்ற பிரபந்தம் கனகதண்டிகைக் கணக ராயன் பள்ளாம். அது கனகதண்டிகைக் கனகராய முதலியார் எனும் பெயரோடு அப்பகுதியில் இருந்த சிரேட்டப் பிரபு ஒருவர் மேலது. இப்புலவர் காலம் சிற்றம்பலப் புலவர் காலமே அதாவது இற்றைக்கு எ0 வருஷங்களின் முன்னகும்.
1. ந, சி. கந்தையாபிள்ளே; தமிழ்ப்புலவர் அகராதி, 1960, பக். 179

سسه 229 -س
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் குறிப்பிடத் தவறிய மாவைச் சின்னக் குட்டிப்புலவர் பாடிய தண்டிகைக் கனகராயன் பள்ளு யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தினரால் 1932இல் சென்னை சாது அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
9.sisorg55bîl. – Chinnattamby.
வழக்கமாய்ச் சின்னப்பு என்று அழைக்கப்பட்ட இவர் கிறிஸ் தாப்தம் 1831 ம் ஞலக்குச் சரியான கரவருஷம், சித்திரைமீ" ச வ. உடுப்பிட்டிக் கோயிற்பற்றைச் சேர்ந்த தனக்காரக் குறிச்சி யிலே, கல்வி செல்வங்களாற் சிறப்புற்று விளங்கிய வீரகத்தி மணிய காரன் வழித் தோன்றலாய்ப் பிறந்தவர். இவர் பிதா தாமோதரம் பிள்ளை; தாய் விதானை சுவாமிநாதர் புத்திரி வீரகத்தி மணிய காரன் பெளத்திரி. இப்போது இருப்பவர்களும் இறந்து போனவர் களுமான பல உடையார்மார் விதானமார்களை நெருங்கிய சுற்றத் தவராய்க் கொண்ட இவர், சிறுபிராயத்திலே அருளம்பல முதலி யாரால் ஸ்தாபகம் பெற்றிருந்த பிரபல தமிழ் வித்தியாசாலையிலே மூலாதாரக் கல்வி கற்று, இலக்கண இலக்கியங்களை நன்கு தேர்ந்து, தியாகராச பண்டிதரிடம் அரிய நூல்களை வாசித்துப் பாண்டித்தியம் அடைந்தனர். இலக்கண இலக்கியங்களில் மாத்திரமல்லத் தமிழ்க் கணித சாஸ்திரத்திலும் தேற்றம் பெற்று, அத்துடன் திருத்திப் பட்டிராது வட்டுநகர்ச் சாஸ்திர சாலையிற் கற்றவரும் தமது சுற்றத் தவருமாகிய வீரகத்தி (Mr. Kepler) உடையாரிடம் இங்கிலிஷ் நில அளவைச் சாஸ்திரம் கற்று, அச்சாஸ்திர அறிவுற்றவராற் பெரிதும் பாராட்டப்பட்டவராகிப் பற்பல கிரந்தங்களுக்கு ஆக்கியோனும் ஆயினர். தாங் கற்ற நில அளவைச் சாஸ்திரம் யாவர்க்கும் உப யோகப்படவேண்டும் எனும் அபிப்பிராயங்கொண்டு அதனைச் செய்யுளாக்கி அதற்கு நில அளவைச் சூத்திரம் என்று பேரிட்டார். சோதிட சாஸ்திரத்தில் நிபுணத்துவம் அடைந்து அப்பகுதியிற் பரந்து கிடந்தனவற்றைச் சுருக்கிச் சோதிடச் சுருக்கம் என்னும் ஓர் நூலை இயற்றினர். இவ் இரண்டோடும் நின்றுவிடாது,
வீரபத்திரர் சதகம் விக்கிநேசுரர் பதிகம் வீரபத்திரர் பதிகம் வீரமா காளியம்மன் பதிகம் வீரபத்திரஈஞ்சல் சிவதோத்திர கீர்த்தனை புதுச்சந்நிதி முருகையன் பதிகம் மதனவல்லி விலாசம்
இராமவிலாசம்
, . ur. 1830

Page 124
- 230 -
என்னும் பாடல்களன்றி பல தனிப்பாக்களும் பாடினர். பாடும் வித்தையிலன்றி இராக தாளங்களிலும் வல்லவராகிய இவரது பாடல்கள் சொற்சுவை பொருட்சுவைகளாற் சிாந்திருந்தன. இவர் சரஸ்வதி கடாட்சம் அன்றி இலக்குமி கடாட்சமும் பெற்ருராய்த் தனதானிய சம்பத்துக்காரணுய் இருந்தபோதும், இல்லாச்சிரமத்துட் புகாது பிரமசரிய விரதத்தை அனுட்டித்துத் தாம் உடுப்பிட்டியிலே தாபித்த ஒர் பாரிய தமிழ் வித்தியாசாலையைத் தமது சீவாந்தம் வரைக்கும் நடாத்தி வேதனம் பெருது வித்தியாதான ஞ் செய்து வந்தார். இவரிடங் கற்ற மாணுக்கர் இலக்கண இலக்கியங் களிலன்றிக் கணக்குச் சாஸ்திரத்திலும் மிகச் சிறப்புற்றவர்கள். நூலாசிரியரும் தற்காலம் மூளாய்ச் சபைத்தலைவருமாய் இருக்கம் ஜோன் போதகர் (Rev. S. John) இவரது நன் மாணுக்கர் பலருள் ஒருவர்.
கலா முயற்சியிற் காலங் கழித்து வந்தாரன்றித், தரும சிந்தை யிலும் தெய்வ பத்தியிலும் பழுத்துக் கோயில், குளங்கள், கேணிகளைப் புதுக்கி, யாத்திரை செய்து, தமது நிண்ணபத்தையும் விரதத்தையும் வழுவ விடாது, தாம் ஸ்தாபித்த பாடசாலையை அரசாட்சிச் சகாயப் பாடசாலையாக்கக் கேட்டபோதும் இணங்காது மரண பரியந்தம் அதனேடு சம்பந்தப்பட்டிருந்தார் என்ப.
இவர் தாம் இயற்றிய நூல்களைத் திரட்டி அச்சிடுவிக்கப் பிரயத் தனப்பட்டிருக்கும்போது, சொற்பகாலச் சுரத்தால் சடு பிராயத்தில் கஅஎசும் D க்குச் சரியான உவ வருஷம் பங்குனி மீ" ரு வ சுற்ற மித்திர மாணுக்கர் எவரும் புலம்ப இக வாழ்வை ஒருவினர். "பாலியர் நேசன்" பத்திரா திபராகிய, மெஸ். உ வில்லியம் சின்னத்தம்பி இவரது நெருங்கிய கிளைஞர். இவர் பாடல் மாதிரிக்கு இவ்விடம் ஓர் விருத்தம் தருவம்.
**ஏரேறு பரிதியுட னெழிலேறு மமரர்களு
மேழேறு முனிவருமலா தியலேறு மதிமுதலா யிவரேறு துதிகள் செய
வினிதேறு கயிலைமலையில் வாரேறு தனயதனின் மணியேறு பணியணியும்
வகையேறு மலைமகளுடன் வயமேறு முலகதனி னயமேறு முயிர்கணிதம்
வாழ்வேற வீற்றிருக்கும்
1. St, Lirr. 3 ay6tay

ممس 231 مسـ
காரேறு கடுமிடருெ டேறேறு கடவுளது
கண்ணேறி வந்தபுலவர் கழலேறு பதமதெனு நிழலேறி யெனதுதுயர்
கரையேற வருடருகுவாய் தாரேறு கன்னலொடு செந்நெல்விளை நெல்வயற்
றங்குடுப் பிட்டிநகரிற் சந்திர குளத்திலம ரெந்தையே வந்துனரு
டருவீர பத்ரதேவே."
சின்னத்தம்பி. -- Chinnattamby.
யாழ்ப்பாணம் உடுவிற் கோயிற்பற்றைச் சேர்ந்த இணுவிற் குறிச்சியிலே, வேளாளர் மரபிலே, பேராயிரமுடையான் எனும் வமிசத்திலே, சிதம்பரநாதர் என்பார்க்குப் புத்திரராய் உதித்த இவர்க்குக் கதிர்காமசேகர மானமுதலியார் என்று பட்டப்பேராம் சிறு பிராயத்திற்ருனே கவி பாடும் வரம் இவரிற் கண்டிருந்தது. மற்றைய பையல்களோடு இவர் கம்பங் கூத்துப் பார்க்கப் புறப்பட்ட ஓர் தருணம் இவரது தந்தையார் தடைசெய்ய இவர் அத்தடையில் நில்லாது ஒட அரிவாள் ஒன்று காலை அறுக்க, அதனுலயே நோவையுங் காயத்தையும் பார்த்தவுடன், ஆரை நாகுேக அரிவாளை நோகட்டோ? கால நோவேனே? கம்பத்தை நோவேனே? எனப் பாவினத்திற் றம்நோவைக் கூறினராம். இவர் அரசாட்சியாரிடம் கோயிற் சட்டம்பி உத்தியோகத்திலிருந்து ஏதோ பிழையாற் சிறைச்சாலை சென்று அங்கே சிவகாமி அம்மன் பேரிற் பதிகம் பாடினர்; மாதிரிக்காக அதில் ஒன்றைத் தருகின்ருேம்.
"பெற்றவணி யானுனது பிள்ளையுல கோரறிய
அற்றமிலாச் செல்வம் அருளிவளர்த் தன்புதந்தாய் இற்றைவரை யுந்தனியே யான்வருந்த வெங்கொளித்தாய் சிற்றிடைமி னன்னை கிவகாம சுந்தரியே."
இப்பதிகத்தோடு பல தனிப்பாக்களையும். கிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், நொண்டிநாடகம், கோவலனுடகம், அனிருத்தனுடகம் என்னும் நான் (, பாடல்களையும் பாடினர். இலக்கண வித்துவானல்லா திருந்தும் வித ஆவானே. இவர் காலம் நூறு வருடங்களுக்கு மேற் பட்டது என்று கேள்வி. யாழ்ப்பானத்தை உலாந்தர் அரசாண்ட SSM-6ásffsvåg. Dastoßsffff stevwovmb,

Page 125
-سه 232 سس
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் குறிப்பிடாத இணுவில் சின்னத்தம்பிப் புலவர் ஒல்லாந்த அரசமந்திரி கலிங்கராயன் மகன் கயிலாயநாதன் மீது பஞ்சவன்னத்தூது பாடியுள்ளார் 1; இளந்தாரி புராணம் என ஒரு நூல் செய்ததாகவும் அறிய வருகின்றது. கயிலாயநாதன் ஆகிய இளந்தாரிக்கு எடுக்கப்பெற்ற கோயில் இணுவிலிலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் கயிலாயநாதன் பள்ளினை யும் இணுவிற் சிவகாமியம்மை மீது ஊஞ்சல், இரட்டைமணிமாலை, சதகம் எனும் பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார் என்பர் 3. மட்டக் களப்பு பிரதேச கலா மன்றத்தினருக்காக 1969 ஆம் ஆண்டில் வி. சீ. கந்தையா பதிப்பித்த அனுவுருத்திரநாடகத்தின் ஆசிரியர் இன்னரென்பது தெரியவில்லை,
சின்னத்தம்பிப் புலவர். - Chinnatambip Pulavar.
யாழ்ப்பாணப் புலவருக்குள்ளே திலதம் போல் விளங்கிய இவர், நல்லூரில் இருந்தவரும், இற்றைக்கு முன்பின் கஅ0 ஞலங்களின் முன்னே இலங்காதிபதியாய் இருந்த சைமொன்ஸ் என்னும் உலாந்தா மன்னனுற் சேர்க்கப்பட்ட தேசவழமை 4 என்னும் யாழ்ப்பாண நியாயப்பிரமானத்தைப் பரிசோதனை பண்ணித் திருத்தும் பொருட்டு நியோகிக்கப்பட்ட பல பிரபுக்களுள் ஒருவருமாகிய வில்லவராய முதலியாரது புத்திரர். இப் புலவர் பாலியப் பிராயத்தே பாடும் வரம் பெற்றிருந்தார் என்று சொல்லுவர். வடகரை வித்துவான் ஒருவர் முதலியார்மேற் பிரபந்தம் ஒன்று பாடிக்கொண்டு அவர் உறைவிடந்தேடி வந்து விசாரணை செய்தபோது, தெருவிற் பிள்ளைக ளோடு பாக்குக்கட்டி விளையாடிக்கொண்டு நின்ற இப்பாலியப் புலவா:
பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலா-மின்பிரபை வீசுபுகழ் நல்லூரன் வில் லவரா யன்கணக வாசலிடைக் கொன்றை மரம்"
1. சி கணேசையர் : ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், 1939, பக், 28; கணேசையர் பஞ்சவர்ணத்
துது என்பர் 2. ந. சி. கந்தையாபிள்ள தமிழ்ப்புலவர் அகராதி, 1960, பக். 180 3. ஆ. சி. நாகலிங்கம்பிள்ளை; செந்தமிழ்ப் பூம்பெய்கை, முனரும் பாகம், 1949, பக். 67-68 4. J. u. 65 la Re

-سس. 233 --
என்று தம் பிதா வீட்டுக்குக் குறிப்புச் சொற்றனராம். இவர் பாடிய அந்தாதிகள் இரண்டுள. ஒன்று மறைசை அந்தாதி எனப் பேர்பெறும் நூறு செய்யுட்கொண்ட இது வேதாரணிய ஈசன்மேலது.
**செந்தாதி யன்மணிப் பூண்புலி யூரற்குச் சேர்ந்தளித்த சிந்தாத் தியானஞ்செய் வில்லவ ராசன் றிருப்புதல்வன் நந்தா வளந்திகழ் நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர் அந்தாதி மாலையை வேதாட வீசற் கணிந்தனனே"
என்றதஞல் அவ் அந்தாதிக்கு இவர் ஆக்கியோன் எனல் விளங்கும் மற்றது கல்வளை அந்தாதி. இது சண்டிருப்பாயிலுள்ள கல்வளைப் பிள்ளையார் மேலது. முந்தினதில் நின்று சற்றே கருகல் கொண்டது. மாதிரிக்காய் அதிலொன்றை இவ்விடந் தருவம்.
"கல்வளை யாத விரும்புநெஞ் சேகைய ரோடுறவா
கல்வளை யார் சுனை வாயரக் காம்பல்செங் காவியின்பக் கல்வளை யார நிலாவீச விள்ளுங் கழனிசுற்றுங் கல்வளை யானங் குசபாச மேந்துங் கரன்புகழே."
இவ்விரண்டு அந்தாதிகளுள் மறைசை அந்தாதிக்கு உடுப்பிட்டி, ா. சா. அ. சிவசம்புப்புலவர் உரை இயற்றி அச்சிடுவித் திருக்கிருர். இந்த உரை நயப்பையும் வியப்பையும் 'உதயதாரகை”ப் பத்திரி கையிற் பேசி இருக்கிருேம்.
ஒரு முறை யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணையிற் கணேசையர் வீட்டில் அநேக வித்துவசனர் சபை கூடி இராமாயணத்துக்கு அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்குஞ் சமையம், அவர் சொல்லமுடியாது மலைத்த ஓர் பாட்டிற்கு இளைஞராதலில் ஒர் கோணத்தில் உளுக்கார்ந்திருந்த இப் புலவர் அர்த்தஞ் சொன்ன திறமைக்காக மகா கனவானன அவ் ஐயர் பண்டாரக்குளம் என்னும் ஓர் வயல் இவர்க்கு வெகுமதி கொடுத்தனர் சின்னத் தம்பிப்புலவர் என்ற சொற்பொருட்படி சின்னப் பையலாய் இருந்தபோதே சரஸ்வதியின் கடாட்ச வீட்சணம் இவருக்கு அகப்பட்டது என்றதற்குப் பின்வருங் கதை சாட்சியாகும்.
இவர் சிறுமையிலே பாடசாலைக்குச் செல்லாது கல்வியை அசட்டை செய்து மாடு மேய்க்கும் பிள்ஃகளோடு பிளேயாடித் திரிபவராதவிற் தந்தையார் இவரைக் ககஸ் டி. க்க, 2வர் அவர் கண்ணுக்குத் தென்படாது ஒளித்துப் போய்த் தாயாரிடம் அன்னம் வாங்கி உண்டு கட்டாக்காலி போல் மறுபடி பாய்ந்துவிடல் வழக்கம். இப்படித் திரியும்போது ஓர் நாள் வழக்கம் போலப் பிதா இல்லாத நேரம்

Page 126
- 234 -
வீட்டுக்கு வந்து போசனம் உண்டு, அவர் முதல் அடி எடுத்து எழுதி வைத்துவிட்டுப் போன ஒர் அந்தாதிப்பாட்டை இறப்பிலிருக்கக் கண்டு எடுத்து, அதின் உம் B ம் சம் அடிகளை எழுதி வைத்துத் தன்பாட்டிற் போயினராம். பிதா வீட்டுக்கு வந்து முன் தொடங்கி விட்டுப்போன பாட்டை முடிக்கும்படி ஒலையைத் தேடி எடுத்துப் பாட்டு முடிந்திருக்கக் கண்டு, இங்கே வந்து போனது யாரென்று மனைவியிடம் கேட்க, அவள் அச்சங்கொண்டு மறைத்தும், பின் நாயகன் நெருக்கத்தால் அந்தப் பேய்ப் பையல்தான் உங்கே வந்தானென்று கூறப், பிதா மகிழ்ந்து இவரைத் தேடி அழைத்து நேசம் பாராட்ட, அப்புறம் இவர் அந்தாதி பாடிமுடித்தனர் என்ப. இவரது சுற்றத்தார் நல்லூரிலும் சண்டிருப்பாயிலும் இருக்கிருர்கள்: மானிப்பாய் அச்சியந்திரசாலைத் தலைவருள் ஒருவரான ரா. ரா. அ. சிற்றம்பலம் ஸ்திருேங் என்பவரும் இப்புலவர் வமிசத்தவரே.
རྒྱplat-4ཐག་ཡ་ང་ཡ --ཡང་མཁས་ལ་ཡང་མ་ - தேசாதிபதி சீமோன் 1 1706 இல் இட்ட கட்டளைக்கிணங்கத் திசாவை கிளாஸ் ஐசாக்ஸ் 2 டச்சுமொழியில் 1707இல் தேச வழமையை 3த் தொகுத்தார். இதற்கு ஜான் பைரஸ் * செய்த தமிழ் மொழிபெயர்ப்பைப் பார்வையிட்ட பன்னிரு தலைவருள் ஒருவர் தொன் பிலிப் வில்லவராய முதலியார், இப்பன்னிருவரும் தமிழ் மொழிபெயர்ப்புச் சரியானது என்று கையொப்பமிட்ட பின்னர் தேசவழமைப் பிரதிகள் 1707ஆம் ஆண்டு ஜுன் மாதம் நாலாம் தேதி சிவில் நீதிமன்றங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. எனவே, தொன் பிலிப் வில்லவராய முதலியார் பதினெட்டாம் நூற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்பது புலணுகும்.
மறைசையந்தாதிச் சிறப்புப் பாயிரம் 'வில்லவராசன் திருப் புதல்வன்...நல்லைச் சின்னத்தம்பி’ என்று கூறுகின்றது. சின்னத் தம்பிப்புலவர் பாடியதாக வழங்கும் "பொன்பூச்சொரியும்" எனும் வெண்பா "வீசுபுகழ் நல்லூரான் வில்லவராயன்' என்று உரைக் கின்றது. தொன் பிலிப் வில்லவராய முதலியாரும் சின்னத்தம்பிப் புலவரின் தந்தையாம் வில்லவராய முதலியாரும் ஒருவரே என்பது காசிச்செட்டியவர்கள் முதலானேர் கருத்தாகும்.
கரவைவேலன் கோவைப் பதிப்பாசிரியர் தி. சதாசிவஐயர்
அந்நூலின் பாட்டுடைத்தலைவன் அடிப்படையிலும், பண்டாரக்குளம் எனும் காணியின் அடிப்படையிலும், சின்னத்தம்பிப்புலவர் காலம்
l. Governor Cornelis Joan Simons 1703-1707 2. Dissava Claas saaksz 3. Codex Jaffanensis
4. Jan Pirus

سس- 235 سس
பதினெட்டாம் நூற்ருண்டு என்பதை வற்புறுத்தியுள்ளார். கரவை வேலன் ஆகிய கரவெட்டி சேதுநிலையிட்ட மாப்பாணமுதலியார் வேலாயுதபிள்ளை பெயரிற் கரவெட்டி வென்றியாகுதேவன் குறிச்சிக் குரிய காணித்தோம்பிற் சில நிலங்கள் பதியப்பட்டிருப்பதாகவும் ஒல்லாந்தர் கடைசி முறையாக கி. பி. 1754இல் காணித்தோம் பினைத் திருத்தியமையால் அவ்வாண்டில் அவர் வாழ்ந்துகொண் டிருந்ததாகவும் கருதுவர். புலவரவர்களுக்கு வழங்சுப்பட்ட பண்டாரக்குளம் நல்லூரிறைக் காணித்தோம்புகளை 1787ஆம் ஆண்டினை ஒட்டித் திருத்தியபோது செயதுங்க மாப்பாண முதலியார் தாமோதரம்பிள்ளை பேரிற் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதனுற் புலவரவர்களுக்கு செயதுங்க மாப்பாண முதலியார் என்ற பெயரு முண்டு என்றும், தாமோதரம்பிள்ளை அவர் புதல்வர் என்றும் கூறுவர்.
சின்னத்தம்பிப்புலவர், வரத பண்டிதர், மயில்வாகனப்புலவர் ஆகியோர் சமகாலத்தவர் என்ற கூற்று ஆய்வுக்குரியது. இக் கூற்றுக்கு அடிப்படையாய் அமைவன சில சிறப்புப்பாயிரங்களேயாம் யாழ்ப்பாண வைபவமாலையின் சிறப்புப்பாயிரமாக வழங்கும் இரு செய்யுள்களையும் வரதபண்டிதரும் சின்னத்தம்பிப்புலவரும் பாடினர் என்று வ. குமாரசுவாமி முதலானேர் கூறுவதற்கு எவ்விதமான ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. புலியூரந்தாதியின் சிறப்புப் பாயிரம் வரதபண்டிதருடையதென்றும் கல்வளை யந்தாதியின் சிறப்புப் பாயிரம் மயில்வாகனப்புலவருடையதென்றும் கூறப்படும் கருத்து களுக்குப் பழைய ஆட்சி இாப்பதாகத் தெரியவில்லை. மறைசை யந்தாதியின் சிறப்புப்பாயிரம் ஆக்கியோன் பெயரின்றியும் வரத பண்டிதர் பேராலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ஆயினும் வரணி சித்தாந்தசரபம் வேதாரண்யாதீன வித்துவான் சொக்கலிங்கதேசிகர் பாடினர் என்ற வழக்கும் நிலவுகின்றது. சிவராத்திரி புராணத்தின் சிறப்புப்பாயிரப் பாடலிரண்டும் 1893ஆம் ஆண்டுப் பதிப்பில் மயில் வாகனப்புலவர், சின்னத்தம்பிப்புலவர் பேரால் வழங்குகின்றன: முன்னைய பதிப்புத் தரும் விபரம் அறியமுடியவில்லை. மயில்வாகனப் புலவர், வரத பண்டிதர் குறிப்புகள் காண்க.
கல்வளையந்தாதியை வல்வை ச . லயித்தியலிங்கபிள்ளையுரையுடன் வல்வை ச. நமச்சிவசாயபிள்ளை வல்வை பாரதீநிலையமுத்திராக்ஷர சாலையிற் சர்வசித்து ஞல ஆவணிமீ (1887) பதிப்பித்தார். இவ்வுரை யினைப் பழையவுரை என்ற பெயரோடு எஸ். அநவரதவிநாயகம்பிள்ளை சென்னை ரிப்பன் அச்சியந்திரசாலையில் மீண்டும் 1913 இற் பதிப் பித்தார். சி. தம்பையாபிள்ளை (வண்ண சுவாமிநாதபண்டிதர்) சென்னை ஆறுமுகவிலாச யந்திரசாலையில் ஜய டு கார்த்திகைமீ (1895) கல்வளையந்தாதியைப் பதிப்பித்துள்ளார். சிவசங்கரன்
1. ஆ. முத்துத்தம்பிப்பிள் ஈழமண்டலப்புலவர்

Page 127
\ - 236 -
செட்டி வெளியீடாக 1913 இல் சென்னை ஆறுமுகவிலாச யத்திர சாலையிலிருந்து கல்வளையந்தாதிப் பதிப்பொன்று வெளிவந்தது. மட்டுவில் வே. திருஞானசம்பந்தபிள்ளையுடன் பவளும் வைகாசிமீ (1934) கல்வளை யந்தாதிப் பதிப்பொன்று யாழ்ப்பாணம் சைவப் பிரகாச யந்திரசாலையிலிருந்து வெளிவந்தது. மறைசையந்தாதியை ஆறுமுகநாவலர் முதன்முதலாகப் பதிப்பித்தனர் என்பர். உடுப்பிட்டி அ. சிவசம்புப்புலவர் உரையுடன் பதிப்பித்த மறைசையந்தாதியுரைப் பதிப்பினை யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினர் 1905, 1934, 1939ஆம் ஆண்டுகளில் மும்முறை வெளியிட்டனர். சுன்னகம் அ. குமாரசுவாமிப்புலவரின் அரும்பதவுரையுடன் கூடிய மறசையந் தாதியைக் கொக்குவில் ச. இ. சிவராமலிங்கையர் விரோதிகிருது ளு) கார்த்திகை மீ (1911) கொக்குவில் சோதிடப் பிரகாச யந்திர சாலையிற் பதிப்பித்தார். மதுரை மகாவித்துவான் சு. சபாபதி முதலியாரும் மறைசையந்தாதிக்கு உரைகண்டுள்ளார். காப்புச் செய்யுள் நீங்கலாக 252 முழுப்பாடல்களும் ஒரு குறைப்பாடலும் கொண்டதாகக் கரவைவேலன் கோவையை முகாந்திரம் தி. சதாசிவ ஐயர் யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்திற் காக அரும்பதவுரையுடன் கரணவாய் செவ்வந்திநாத தேசிகர், வித்துவான் கணேசையர், க. சு. நவநீதகிருஷ்ணபாரதியார் பண்டிதர் வே. மகாலிங்கசிவம் ஆகியோர் உதவியுடன் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலையில் 1935இற் பதிப்பித்தார். கரணவாய் தெற்கு சி. ஆழ்வார்ப்பிள்ளை தும்பளை கலாநிதி யந்திரசாலையில் உரையுடன் 1956இல் கரவை வேலன் கோவையை மீண்டும் பதிப் பித்தார். சுழிபுரம் பருளாய் விநாயகப்பெருமான் மீது 130 பாடல் களால் யாக்கப்பெற்ற பருளை விநாயர் பள்ளினைச் சுழிபுரம் ச. சிவப்பிரகாசபண்டிதர் சென்னை சித்தாந்த வித்தியாதுபாலன யந்திரசாலையில் விரோதிஞல சித்திரைமீ (1889) பதிப்பித்தார். இதனைத் திருமயிலை சே. வெ. ஜம்புலிங்கம்பிள்ளை மீண்டும் 1932, 1956 ஆம் ஆண்டுகளில் இருமுறை பதிப்பித்தார். சின்னத்தம்பிப் புலவர் இயற்றியதாக நாலுமந்திரி கும்மி எனும் நூலொன்று சண்டிருப்பாய் எம். வேலுப்பிள்ளையாற் கரவெட்டி ஞானசித்தி யந்திரசாலையில் 1934இற் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.
கொச்சிக்கணேசையர் மீது பாடிய தனிப்பாடல் ஒன்று காசிச் செட்டி யவர்களாலும் கரவை வேலாயுதபிள்ளையின் உபசாரம்பற்றி ஒரு பாடலும் சீட்டுக்கவிப் பாகமொன்றும் கரவைவேலன் கோவைப் பதிப்பாசிரியராலும் சின்னத்தம்பிப்புலவர் பாடல்களாகத் தரப் பட்டுள்ளன. . .س ... .

- 237 -
சீத்தலைச் சாத்தனுர், - Cheettaichchattanar.
இவர் கடைச்சங்கப் புலவர்மார் சக பதின்மருள் ஒருவர், சங்கத்தில் அரங்கேற்றப்படும் பொருட்டு வரும் புலமைகளில் அபத் தங்கள் காணுந்தோறும் மனந் தாங்காதவராய்த் தம் எழுத் தாணியினலே தம் தலையின்மேல் அடித்துக்கொள்வாராதல் பற்றி இந் நாமம் இவர்க்கு இடப்பட்டதாம். வள்ளுவர் குறள் அரங்கேற வந்த போது தலையை அடித்துக்கொள்வதற்கு ஏதுவான காரணம் ஏதும் அதிற் காணப்படாமையால் இவருடைய நண்பருள் ஒருவராய் அச் சங்கப் பல கைமீது ஏறி இருந்த மருத்துவன் ருமோதரனர் :
** மலைக்குத்து மால்யானை வள்ளுவர்முப் பாலாற்
றலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு '
என்று இவரைச் சுட்டிப் பாடினர். இச் சாத்தனர் திருவள்ளுவர் நூற்குப் புகழ்மாலையாய்ச் சாற்றிய வெண்பா வருமாறு :
** மும்மலையு முந்நாடு முந்நதியு முப்பதியும்
மும்முரசு முத்தமிழு முக்கொடியு - மும்மாவும் தாமுடைய மன்னர் தடமுடிமேற் றரன்ருே பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்."
மும்மலை 3 கொல்லி, நேரி, பொதியம் முந்நாடு = சேரம், சோழம், பாண்டியம் முந்நதி க பொருநை, காவேரி, வையை முப்பதி ய காரூர், உறையூர், மதுரை மும்முரசு  ைமங்களமுரசு, வெற்றிமுரசு, கொடிமுரசு முத்தமிழ் = இயல் இசை, நாடகம் முக்கொடி = விற்கொடி, புலிக்கொடி, மீன்கொடி மும்மா = s6Talib, untlabuh, Gastrib
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தைச் சதாசிவம்பிள்னை தமிழ்ப் படுத்தியுள்ளார். சாத்தனர், சீத்தலைச் சாத்தனர், மதுரைச் சீத் தலைச் சாத்தனர், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் எனும் பெயர்கள் பண்டைய புலவர் பட்டியலிலே இடம்பெறுகின்றன.

Page 128
- 238 -
உரையாசிரியர் பேராசிரியர் மணிமேகலை பாடியவர் சித்த2லச் சாத்தனர் என்பர். மணிமேகலையின் பதிகம் கூலவாணிகன் சாத்தன் என்று கூறும். சிலப்பதிகாரத்தின் பதிகம் குறிப்பிடும் மதுரைக் கூலவாணிகன் சாத்தன் மணிமேகலைப் பதிகம் கூறும் கூலவாணிகன் சாத்தணுதல் பொருந்தும். மணிமேகலை ஆசிரியரும் எட்டுத்தொகையில் இடம்பெறும் பாடல்களை இயற்றியவரும் ஒருவரேயென்று கூறல் தமிழ் மொழியின் சரிதத்தோடு பெரிதும் முரண்படுவதாகும்?. தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதையிற் சாத்தனர் தரும் தருக்கப்பகுதிகள் கி. பி. நான்காம் அல்லது ஐந்தாம் நூற் ருண்டில் வாழ்ந்த திங்நாகரின் நியாயப்பிரவேசத்திலிருந்து பெறப்
பட்டவை என்ற கருத்து மனங்கொளத்தக்கது? .
சீத்தலை என்பது சினைப்பெயர் என்றும் ஊர்ப்பெயர் என்றும் இருவகைக் கருத்துள. திருவள்ளுவ மாலையிலுள்ள மருத்துவன் தாமோதரஞர் பாடலும் சீத்தலைச் சாத்தன், சினைப்பெயரோடு தொடர்ந்துவரும் முதற் பெயர் எனும் இளம்பூரணர் கூற்றும் * சினைப்பெயர் என்று கருத வைப்பன. சீத்தலை என்ற பெயருடன் மலே நாட்டிலும் திருச்சி மா வட் டம் பெருமளூர் தாலுகா விலும் இரு ஊர்களுள ஊர்ப்பெயர் என்பதே பொருத்தமான கருத்தாகும்.
பன்னிருபாட்டியல் மேற்கோள் சூத்திரங்களிற் சில, சீத்தலையார் என்பவர் பேரால் வழங்குகின்றன. திருமயிலை மகாவித்துவான் சண்முகம்பிள்ளை மணிமேகலையை முதன் முதலாகப் பதிப்பித்தார் இப்பதிப்பு 1891இல் வெளிவந்ததென்று உ. வே. சாமிநாதையரும் 1894 இல் வெளிவந்ததென்று மயிலை சீனி. வேங்கடசாமியும் ? எழுதியுள்ளனர். உ. வே. சாமிநாதையர் மணிமேகலையை அரும் பதவுரையுடன் சென்னை வெ. நா. ஜுபிலி அச்சுக்கூடத்தில் 1898இற் பதிப்பித்தார். பாகனேரி காசிவிசுவநாதன் செட்டியார் மணிமேகலையை ந. மு. வேங்கடசாமி நாட் டா ர், ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை ஆகியோர் உரையுடன் 1946இல் வெளி all-rrif.
1. தொல், செய்யு 240 உரை 2. சோ. ந. கந்தசாமி : மணிமேகல் பின் காலம், 1951 பக். 14-26 3. О уš, u š. 100 4. தொல்காப்பியம், தொல்ல தீகாரம், பெபரியல் சூத். 20
I, III a. Bandi : caso sfigub. Is iš 118 SS S LLLLL LLLLLLLLSttt LLLLLLLT TTTTT T TT T T TTTTT 000S TTS 000S

--س۔ 239 سس۔
9*ị66ungăử. - Cheenivasakar,
இவர் இராமநாதபுரத்தில் வசித்த பிராமணர். க.அoகம் ஞ) ஆங்கிலோ துரைத்தனத்தாருக்கு விரோதமாய்க் கலகஞ் செய்து தூக்கப்பட்ட வெள்ளை மருதப்ப பொலிகார் இவர்க்குத் தாதாலாய் இவரைப் பரிபாலனம் பண்ணி வந்தார். சிற்றின்ப கீதங்கள் பாடுவதிற் கீர்த்தியுற்ற இவரது பாடல்கள் மிக மதுரமானவைகள் எனப் பேர்பெறும். அவற்றுள் ஒன்றேனும் கண்ணுக்குத் தென்பட வில்லை. இவர் இற்றைக்குச் சுமார் நூறுவருஷங்களின்முன்னிருந்தவர்.
குறிப்பு காசிச்செட்டியவர்களின் நூலில் சீநிவாசர் சதிராட்டத்திற்குரிய பாடற்ருெ குதி ஒன்றினை இயற்றியதாகவும், பத்தொன்பதாம் நூற்ருண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்துகொண்டிருந்ததாகவும் கூறப் பட்டுள்ளன. காசிச்செட்டியவர்கள், வெள்ளை மருது சிறுவயலின் பொலிகார் என்பர். வெள்ளை மருது எனும் பெரிய மருது அல்லது மருதுபாண்டியனின் தலைநகர் சிறுவயல் என்பர். மருது பாண்டியன் சிவகங்கைப் பாளையத்தின் சேனைத் தலைவனகத் திசழ்ந்து, வேலு நாச்சியை மறுமணம் செய்து, சிவகங்கை அரசனுக விளங்கியவன். இவன் 1801ஆம் ஆண்டு அக்தோபர் மாதம் திருப்பத்தூர் கோட்டையிலே தூக்கிலிடப்பட்டான்'
3í jiss Jš 36 síJ Tuň. - Chundarak Kavirayar.
இவரது சரிதம் ஓரிடத்தும் அகப்படாத போதும் இவர் பாடிஞர் எனச் சொல்லப்பட்ட நாலைந்து விருத்தங்கள் கண்டோம். மாதிரிக்காக அவற்றுள் ஒன்று தருவம். அது வருமாறு:-
"ஒருகோட்டுக் கலைமுனியு மொளிதிகழும்
புலியாடை யுடுத்தகோவும்
மருமலர்வாழ் திசைமுகனும் வானவர்க
ணுயகனு மயிடன்ருனும்
கரியநிறத் திருமாலும் வாலியும்ப ரரசனுமே காமனம்பாற்
பெருமையிழந் தனரென்றற் சிறுமனிதர்க்
கெப்படியோ பேசுங்காலே."
1. b. சஞ்சீவி : வனங்காத்த மருதுயாண்டியர், 1955 பக். 85 95

Page 129
མ-240 --
குறிப்பு ܌ - காசிச்செட்டியவர்கள் நூலில் இடம்பெழுத சுந்தரகவிராயரைச் சதாசிவம் பிள்ளை தனிப்பாடற்றிரட்டின் உதவியுடன் சேர்த்துக் கொண்டார். தனிப்பாடற்றிரட்டின் பழைய பதிப்புகளிற் சுந்தர கவிராயரின் ஐந்து செய்யுட்கள் இடம்பெறுவன. இவற்றிலே முதற்பாடலே பாவலர் சரித்திர தீபகத்தில் இடம்பெறுகின்றது. இவர் இயற்றியனவாக மேலும் இருபத்தொரு பாடல்கள் கா. சுப்பிர மணியபிள்ளை பதிப்பில் முற்கிளந்த பாடலுக்கு முன், புதிதாக இடம்பெறுகின்றன. இவை சுந்தரகவிராயர் வாக்கு என்பதற்கு ஆதாரம் யாதெனப் புலப்படவில்லை.
3ij5g Jelprij55). - Chundaramurthy.
சைவசமயக் குரவர் எனப் பெயரிய நால்வருள் ஒருவராகும் இவரது சரிதம் அதி விஸ்தாரமாய்ப் பெரியபுராணத்திற் கூறப்பட் டிருப்பதால் இவ்விடத்தில் அதனைச் சுருக்கிச் சொல்வம். இவர் பூர்வ செனனத்திலே கைலையங்கிரியில் வசித்த சிவனடியார் கூட்டத்துள் ஒருவராய் ஆலாலசுந்தரர் என்னும் பெயர் வகித்துப் பார்வதி தேவியின் சேடிகளான கமலினி, அனிந்திதை எனும் இருமாதர்கள் மேல் மோகித்ததால் மானுடச் செனமம் எடுத்துப் புண்ணிய பூமியாகிய பரதகண்டத்திலே, தமிழ் வழங்குந் தேயமாகிய தென்னுட்டிலே, திருநாவலூர் எனும் பதியிலே, அந்தணர் வருணத்திலே, சடையஞர், இசைஞானியார் எனும் இருவரைத் தநதையும் தாயுமாய்க் கொண்டு அவதரித்தனர் என்ப. இவருக்குப் பெற்ருர் இட்ட நம்பியாரூரர் எனும் நாமதேயமன்றி வன்ருெண்டர் எனுங் காரண நாயதேயமும் ஒன்றுளது. இவர் மானுடப்பிறப்பிற் சென்மிக்கவே, இவரால் இச்சிக்கப்பட்ட சேடியர் இருவருள், ஒருத்தி பரவையெனும் நாமத்துடன் திருவாரூரிலே உருத்திர கணிகையர் குலத்திலே பிறக்க, மற்றவள் சங்கிலி எனும் நாமத்தோடு ஞாயிறுாரிலே, வேளாளர் மரபிலே, ஞாயிறுகிழவர் என்பார்க்குப் புத்திரியாய்ப் பிறந்தாள் என்ப.
சுந்தரமூர்த்தி பாலணுய்த் தெருவிலே சிறுதேருருட்டி விளையாடிக் கொண்டிருந்த ஓர் தினத்திற், திருமுனைப்பாடிநாட் டரசனகிய நரசிங்கமுனையார் இவரைக் கண்டு இவர் பேரில் அன்பு வைத்து, இவர் தநதையாரிடம் சென்று ஓ ! நீர் உமது புத்திரரை எமக்குக் கொடும் எனக் கேட்டுப் பெற்றுப் போய் அபிமான புத்திரராக்கி வளர்த்தான். அரசன் வளர்த்தும் இவர் தம் மரபிற்கு உரிய ஆசா ரங்கள் ஒன்றுங் குறையாது உபநயனம் பூண்டு வேதாத்தியாபனஞ் செய்து சகலகலா வல்லரானுர், இவர்க்கு விவாக வயதானபோது

----سه 24l --
தந்தையார் தத்துவாய்ப் புத்தூரிலே தஞ் சுற்றத்தவருள் ஒருவரான சடங்கவி2 சிவாச்சாரியார் மகளுக்கு மணம் பேசி முகூர்த்தம் வைத்துத் தஞ் சுற்றமித்திரரையும் அழைத்துக்கொண்டு, ஆடை யா பரண அலங்கிருதராய்த் துரகமீதேறிய தம் புத்திரருடன் சென்றனர்:
மணமகன் குதிரையால் இறங்கிப்போய் ஆசனத்தில் உளுக் காரச், சிவன், பூர்வத்திலே உன்னை யான் அடிமை கொள்வேன் என்ற வாக்குப் பிசகாது ஓர் வார்த்திகப் பிராமண ரூபங்கொண்டு கலியாண மண்டபத்தினுள்ளே சென்று வழக்காடி, அ டி  ைம ஆவணங். காட்டி, இவரைத் தன் அடிமை என்று ருசுப்படுத்தித் தரிசனங் கொடுத்தார் என்ப. இதனுல் இவர் விவாகத்தை அந்தமட்டில் நிறுத்திச் சிவ பத்தியில் முதிர்ந்து திருவதிகை, சிதம்பரம், திருவிடை மருதூர், திருவாவடுதுறை, கும்பகோணம் ஆதியாம் பல இடங்களி லுள்ள சிவஸ்தலங்களைத் தரிசித்துப் பற்பல பதிகங்களைப் பாடினர்
சேர 3 மண்டலத்திலே கொடுங்கே ரூரிலே செங்கோலோச்சிய
சேரமான் பெருமாள் இவர்மேல் அத்தியந்த விநய சிரத்தை கொண்டதனுல் இவர் அவருக்குப் பிராண நேசருமாயிர்ை. இக் காரணத்தால் இவருக்குச் சேரமான் ருேழர் என்றும் பின்னும் ஓர் காரண நாமம் உண்டாயிற்று. சோழநாடு பாண்டியணுடு முதலாம் பல நாடுகளில் உள்ள ஸ்தலங்கள் மேல் இவர் பதிகங்களைப் பாடினது மாத்திரமல்லச் சேரமான்பெருமாளோடு இராமேச்சுரத்துக்குப் போய் இருந்தபோது ஈழமண்டலத்திலுள்ள மாதோட்டத்துத் திருக் கேதீச்சர 4 ஸ்தலத்தின் பேரிலும் பதிகம் பாடினர். இவர் கொங்க தேசத்திலே திருப்புக்கொளியூர் அவிநாசியில் இருந்தபோது முதலையாற் கொலையுண்ட ஒர் பிராமணப் பிள்ளையைப் பதிகம்பாடி எழுப்பினர் என்ப. இது சரிதம்:
"வறந்திடு பொய்கைமுன் னிரம்ப மற்றவண் உறைந்திடு முதலைவந் துதிப்ப வன்னதால் இறந்திடு மகன்வளர்ந் தெய்தப் பாடலொன் றறைந்திடு சுந்தர னடிகள் போற்றுவாம்" என்று கந்தபுர:ணத்திலுள்ள ஓர் பாட்டி ரூலும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த அற்புதமல்லாது இன்றும் பல செய்தார் என்ப.
1. பி. பே. புத்துரிலே 2. S. Lu I. L- il Safi 3. து. பா. சோழ
4. நூ. பா. திருக்கேச்சர
5. J. us. 8 (eitā Qasi as askfi)
Lufr – 16

Page 130
- 242 -
இவர் தமது பிதாப் பேசி ஒழுங்குபண்ணி வைத்த பெண்ணை விவாகஞ் செய்யாது விட்டும், பரவை, சங்கிலி என்னும் இருவரையும் ஒருவர் பின் ஞெருவராய் விவாகம் பண்ணினுர், சங்கிலியை விவாகஞ் செய்ததன் பொருட்டுப் பரவை இவர் பேரில் மனத்தாக்கங் கொண்டு இவரைத் தம்வீடு வர ஒட்டாது தடுக்கச் சிவன் அவளிடம் இவர்க் காய்த் துரது போய் அவள் கொண்ட ஊடலை மாற்றினர் என்ப. ஆற்றிலே இட்டுக் குளத்திலே தடவுகிறீரா என்று இவரிடம் பரவைப் பெண் பன்னீராயிரம் பொன்னையிட்டுக் கேட்ட கேள்வி இந்நாளும் எம் ஊரிலே பழமொழியாய் நடக்கின்றது. இம் மகானது பாக்கள் மிக்க மதுரமுங் கனிவும் உற்றவைகளாய்த் தெய்வ சிந்தையையும் பத்தியையும் எழுப்பி விடுவன. இவராற் பாடப்பட்ட பதிகங்கள் முப்பத்தெண்ணுயிரம் 2 என்ப.
சேர நாட்டிலே திருவஞ்சைக்களத்திலே இருந்து வெள்ளை யானைமீது ஏறிக் கைலாசஞ் சென்ருர் என்று இவரைப்பற்றிப் புராணங் கூறும். இவரது தோழனுகிய சேரமான் பெருமாள் காலம் சோழபூர்வப் பட்டயக் கணக்கின்படி கி. பி. ஐந்தாஞ் சதாப்தத் துக்குச் சரியாகும் ஆதலால், இவர் காலம் அஃது என்றே உத் தேசித்தல் வேண்டும் பதினெட்டு வயசில் நிரியான தசை அடைந்தார். வயசையும், இவர் இறந்த மாசந் தேதி ஆதியவற்றை யும் பின்வரும் வெண்பாவிலுங் கலித்துறையிலும் காண்க;
"அப்பருக் கெண்பத்தொன் றருள்வாத வூரருக்குச் செப்பியநா லெட்டினிற் றெய்வீகம்-இப்புவியிற் சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க் கந்தம் பதின றறி.'
"பாடிய சம்பந்தர் வைகாசி மூலம் பயிலுமப்பர்
நீடிய சித்திரை மாதச் சதைய நிறைவன்ருெண்டர் ஆடியிற் சோதி திருவாத வூரர்நல் லானிமகம் தேடிய சேக்கிழார் வைகாசிப் பூசஞ் சிறந்தனரே."
இவரது பாடல் மாதிரிக்காகத் திருவெண்ணெய் நல்லூர்த் தேவாரம் க ம் பாட்டை இங்கே தருகின்ருேம்
1. J. LJ 1. Popup ö
து. பா. முப்பத்தேழாயிரம்
, ul. Nyųjů

س- 243 --سن
**பித்தாபிறை குடிபெரு மானேயரு ளாளாய்
எத்தான் மற வாதே நினைக் கின்றேன் மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட்டுறையுள் அத்தாவுனக் காளாயினி யல்லேனென லாமே.”*
குறிப்பு
சுந்தரமூர்த்திநாயஞர் பல்லவர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர் என்பதில் ஐயமின்று; அப்பர், சம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோருக்குப் பிற்பட்டவர் 2; இரண்டாம் நரசிம்மவர்மன் (690-729), தந்திவர்மன் (796-846) அல்லது மூன்ரும் நந்திவர்மன் (846-869) காலத்திலே வாழ்ந்தவர் என்று ஆய்வாளர் கருதுவர்.
கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவ்ர் கோன் கழற்சிங்கன்" (7*399) இரண்டn ம் நரசிம்மவர்மன் பெயரிலே காணப்படுகிறன். பல்லவர்க்குத் திறைகொடா மன்னர் நிலவிய கட்டம் (7,904) நரசிம்மவர்மன் காலத்திற்குரியதன்று என்று துணியவோ மறுக்கவோ ஆதாரமில்லை. நாயன்மார்களில் ஒருவ ராகப் போற்றப்பெறத்தக்க நிலையில் நரசிம்மவர்மன் இருந்தான். பரமேச்சுரனே இராசசிங்க பல்லவனுக அவதரித்ததாகக் காசாக்குடிச் செப்பேடுகள் கூறுவன; சிவசூடாமணி, சங்கரடக் தன் ஈசுவர பக்தன். பரம மாகேச்சுர என்று சாசனங்களிலே போற்றப்பெற்றவன்; கைலாயத்தை ஒத்த கோயிலைக் காஞ்சியிலே கட்டிப் புகழ் பெற்றவன் மாமல்லையிலும் பனைமலையிலும் திருப்பணி செய்தவன்,
பிறிதாதாரம் கிடைக்கும்வரை சுந்தரர் குறித்த கழற்சிங்கன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்று கொள்வதே பொருத்தமாகத் தெரிகிறது.
காஞ்சிபுரம் மகாவித்துவான் கோ. சபாபதிமுதலியார் 1866ஆம் ஆண்டிற் சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்பதிகங்களை அச்சிட்டார் என்பர்". ஏனைய பதிப்பு விபரங்களைச் சபாபதி முதலியார் குறிப்பிற் காண்க. சுந்தரர் தேவாரத்தைக் கி. வா. ஜகந்நாதன் குறிப்புரையுடன் 1949இல் திருப்பனந்தாள் காசி மடத்தினரும், சி. அருணைவடிவேல் முதலியார் பொழிப்புரை, குறிப்புரையுடன் 1964இல் தருமையா தீனத்தினரும் வெளியிடடுள்ளனர். திருமுறைகண்ட புராணம் சுந்தரர் முப்பத்தெண்ணுயிரம் பதிகங்களைப பாடிஞர் என்றும் (செய்யுள் 16) நூறு பதிகங்களே கிடைத்துள்ளன என்றும் (செய்யுள் 25) கூறுகின்றது; கிடைத்துள்ள பதிகங்கள் யாவும் அச்சாகியுள்ளன.
1, ஏழாம திருமுறை, 21 10, 39 9, 90 ° 4 2. ஏழாம் திருமுறை 39 - 4, 39 - 5. 39 - 7, 55 - 4, 62 8, 65 2, 67 °5,78*10, 97 - 9. 3. மயில் சீனி. வேங்கடசாமி பத்தொன்பதாம் நூற்குண்டில் தமிழ் இலக்கியம், 1962, பக். 384

Page 131
ج۔ 244 بسیس۔
siůîg guš, as 6 í Ja uuff. — Chuppradipak Kavirayar.
சாதியிற் கருமானும் சமயாசாரத்திற் கதலிகருமாகிய இவர் இற்றைக்கு ஏறக்குறைய கடு 0 வருடங்களின் முன்னே இருந்தவர். தேம்பாவணி என்னும் பிரதாப காவியத்திற்கு ஆக்கியோராகிய வீரமாமுனிவர் (Beschi) க்கு ஆசிரியரும் அதனை அவர் இயற்றுதற்குத் துணைக்காரணராய் இருந்தாரும் இவரே. இவர் முன்பு சைவரா யிருந்தும் பின்பு வீரமாமுனிவரது பிரயாசத்தாற் கதலிக கிறிஸ்து மதந் தழுவினர். மதுரையில் இருந்த கூளப்ப நாயக்கன் பேரில் அவன் நாமகரணப்படி கூளப்ப நாயக்கன் காதல் எனும் பாடல் செய்தார் இவரேயாம்.
குறிப் 내 HSTTT ALSASieqeeqeTTqq qTTTT SSLSSSSSM SSAA AASqqSqASLSSA AAAAS SASLSSLSLSALSLS EEESSq qSAM
அஷ்டாவதாணியை விதந்து கூறும் காசிச்செட்டியவர்கள் தமது நூலிற் சுப்பிரதீபக் கவிராயரைத் தனியே கூறவில்லை. அஷ்டா வதானியார் குறிப்புக் காண்க,
siúil y Darflu guñ.- Chuppramania Ayer.
இவர் மதுரைக்குக் கிழக்கே இருகாத தூரத்திலே உள்ள மழவா புரியில் வாசஞ் செய்த சுந்தர ஐயர் என்னும் ஒரு பிராமணனது புத்திரர். மகா கவியாகிய பரஞ்சோதித் தம்பிரான் புராணமாய் இயற்றிய சிவனது திருவிளையாடல் க ச யும் திருவிளையாடற் கீர்த்தனை எனப் பெயரிட்டு இவர் பாடினர். இதில் வெண்பா ரு, கலித்துறை ச, கொச்சகம் சு, விருத்தம் ருoச, பதம் நஎஎ என ஆகக் கவிதைகள் அகக உண்டு. இத் திருவிளையாடற் கீர்த்தனைகளை வியந்து, விசாகப் பெருமாளையர், தாண்டவராய சுவாமிகள் ஆதியாம் பத்துப் பதினெருபேர் சாற்றுகவி கொடுத்திருக்கிருர்கள். இது சாலிவாகன சகாப்தம் களனசி க்குச் சரியான கலியுகாப்தம் சகருச ம் ஆண்டு பரிதாபி டு ஆவணி மீ" உச வ. சுக்கிரவாரத்தன்று மதுரை மீனட்சி யம்மை கோயிலில் அரங்கேறியது மாதிரிக்காய் இவர் கவிதைகளில் ஓர் விருத்தந் தருகின்ருேம்.
l, y, un DJ Guilló

....... 245 موسس.
**வெள்ளிவெற்புஞ் சடைமுடியுங் கொன்றைமா
லையும்பாம்பும் விடையு நீக்கிக்
கொள்ளுமது ராபுரியு மணிமுடியுந்
தொடைவேம்புங் கோலப் பூணுந்
துள்ளுமீ னக்கொடியு நாட்டமீ
னக்கொடியுந் தோய்ந்து மேலோர்
விள்ளுமுல காண்டசுந்த ரேசாநின்
கவிக்குநின்ருள் வேண்டி னேனே."
குறிப்பு
மழவை சுப்பிரமணிய பாரதியார் "தமிழ் புளூராக்" வெளிவந்த காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவர்; இலக்குமிபுரத் தலபுராணம் 1882இல் அரங்கேற்றப்பெற்றது. அதனலேயே அந் நூலில் அவர் இடம்பெறவில்லை. இவர் புதுக்கோட்டைக்கருகிலுள்ள இராசமாணிக்க நல்லூரில் வாழ்ந்தவர். 1852இல் அரங்கேற்றப்பெற்ற திருவிளையாடற் கீர்த்தனை 1854இற் பதிப்பிக்கப்பெற்றது என்பர். இவர் இலக்குமி புரத் தலபுராணம், மயில்மலைப் பிள்ளைத்தமிழ், கூடல் திருவிளையாடல் யமகவந்தாதி, திருவிளையாடல் சுந்தரமாலைச் சந்தவிருத்தம், திருமெய்யம் ஈசுவரன் கோயில் தலபுராணக் கீர்த்தனை, திருமெய்யம் விஷ்ணு கோயில் தலபுராணக் கீர்த்தனை முதலியனவற்றையும் பாடியுள்ளார்.
a y Adoonu is to JT6öT. - Chuppamania Thampiran,
இவர் யாழ்ப்பாணம் மல்லாகக் கோயிற்பற்றைச் சேர்ந்த அளவெட்டியிலே பிறந்து இவ்வூரில் இருக்கும்போதே தம்பிரான் பட்டம் பெற்றுச், சிதம்பரஞ் சென்று, அங்கேயே தேகவியோக மாயினர். முன்னர்க் கூறப்பட்ட கனகசபாபிள்ளைக்குத் தாய்மாம ஞராகும் இவரும் சரஸ்வதி வாழப்பெற்ற நாவுடையராதலிற் தசவாயு, தசநாடிகளைப் பற்றிப் பத்துப்பாக்கள் பாடினர் எனக் Ojialrasadboogib.
1. Ia di Aub, sig 10, 1968, ui. 268 2. புளுராக் நூலிலோ பின்வந்த சரிதங்களிலோ இடம்பெறத் தவறியவர்.

Page 132
--- 246 س--
sů tí JLD65ifu Gg59)asň. - Chuppramania Thasogar.
தண்டியாசிரியர் இயற்றிய அலங்காரத்துக்கு உரை செய்தார் இவரே. இவர் உரையாசிரியராய் இருந்தாரல்லாது நூலாசிரியராய் இந்திரவிமானமாலை எனும் ஒரு நூலையும் பாடினர். அது இந்திரன் சுப்பிரமணியருக்குக் கொடுத்த விமானத்தின் மேற்று.
குறிப்பு காசிச்செட்டியவர்கள் விதந்து கூருதவர்களிற் சுப்பிரமணிய தேசிகரும் ஒருவர். தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதர் 1858 இற் பதிப்பித்த தண்டியலங்காரவுரைப் பதிப்பில் அவ்வுரை யாசிரியர் சுப்பிரமணியதேசிகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்ருண்டிலே திருவாவடுதுறையாதீனத்தில் இருவர் சுப்பிரமணியதேசிகர் எனும் பெயரிற் பண்டாரசந்நிதிகளாக வீற்றிருந்தனர். திருவாவடுதுறையாதீனத் தொடர்பு மிக்க உ. வே. சாமிநாதையர் தண்டியலங்காரவுரையாசிரியர் இன்னர் என்பது விளங்கவில்லை என்பதால் இவ்விருவரில் யாரும் தண்டியலங்கார வுரையாசிரியர் அல்லர் என்று கருதலாம்.
கந்தசுவாமியம் எனும் நிகண்டு நூலை இயற்றிய கீழ்வேளூர் சுப்பிரமணியதேசிகர் என்பவரொருவரும் அறியப்படுகின் ருர், கந்த சுவாமியத்தின் முதலிரு பகுதிகளும் ஆசிரியரால் 1844இற் பதிப் பிக்கப்பெற்றன.
5ù îJLDaviflu (upsoïauff. - Chuppramania Munivar.
தொட்டிக்கலைச் சுப்பிரமணியர் என்று வழக்கமாய் அழைக்கப் பட்ட இவர் சிவஞான முனிவருடைய பன்னிரண்டு மாணுக்கருள் ஒருவர். இவர் செய்த பிரபந்தங்கள்:- துறைசைக் கோவை கலைசைக் கோவை கலைசைச் சிலேடைவெண்பா திருக்கலைசைச் சிதம்பரேசர் வண்ணம்? திருக்கலைசைச் சிதம்பரேசர் பஞ்சரத்தினம் திருக்குற்ருலச் சித்திரசபைத் திருவிருத்தம் திருச்சிற்றம்பல தேசிகர் சிந்து
1. சங்கத்தமிழ்ம் பிற்காலத் தமிழும், 1957 பக். 162 2. . u. 4 Ai u C3 i AlainTaoTih 3, . u. U bo v 10 ha)

موسس 247 -سسس
அம்பலவாணதேசிகர் ஆனந்தக்களிப்பு
திருத்தணிகைத் திருவிருத்தம்
சுப்பிரமணியர் திருவிருத்தம் முதலானவையாம். மேற்கூறிய பத்தினுட், சுப்பிரமணியர் திருவிருத்தம் குஷ்டரோகி ஒருவன் மூலமாகவும், திருத்தணிகைத் திருவிருத்தம் குருடனுெருவன் நிமித்தமாகவும் பாடப்பட்டனவாம். அவ்விருபாடலையும் அவ்விருபேருங் கிரமந்தவருது ஒதி நிரையே ரோகமும் அந்தகத் தன்மையும் நீங்கப்பெற்றனர் என்ப. இவர் சீவித்தகாலம் இவரது குரவராகிய சிவஞான முனிவர் காலமே.
குறிப்பு
காசிச்செட்டியவர்களாற் குறிக்கப்படாதவர்களுள் ஒருவர் மதுரகவி சுப்பிரமணிய முனிவர். இவர் சிதம்பரத்தைச் சார்ந்த காட்டுமன்னர் கோயிலிற் பிறந்தவர். தொட்டிக்கலையிற் பெரும் பாலும் இருந்தமையின் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் அல்லது தம்பிரான் என்று அழைக்கப்படுவர். இவர் ஆவினன்குடிக் கைலாயநாதர் பதிற்றுப்பத்தந்தாதியை சகம் 1711க்குச் சரியான கீலகளுல் தைமீ (1789) அரங்கேற்றினர். முனிவரவர்கள் திரு:ொவடுதுறை யாதீனத்தின் பன்னிரண்டாம் பண்டாரசந்நிதிகள் திருச்சிற்றம்பலதேசிகர் காலத்திற் சின்னப்பட்டத்திலிருந்த அம்பல வாணதேசிகரிடம் சைவசந்நியாசமும் சிவஞானுேபதேசமும் பெற்றவர்.
சுப்பிரமணியமுனிவர் வடதிருமுல்லைவாயிற் கொடியிடையம்மை பிள்ளைத்தமிழ், ஆயலூர் முருகர் பிள்ளைத்தமிழ், ஆவினன்குடிக் கைலாயநாதர் பதிற்றுப்பந்தாதி, பழநிக் குழந்தைவேலர் பஞ்ச ரத்தினமாலை, அம்பலவாணதேசிகர் பஞ்சரத்தினமாலை, அம்பல வாணதேசிகர் வண்ணம், திருச்செந்திற் சந்தவிருத்தம், திருச் சிற்றம்பலதேசிகர் சந்தவிருத்தம், இலக்குமி தோத்திரப் பதிகம் முதலியனவற்றைப் பாடியுள்ளார். இவருடைய திருக்கலைசைச் சிதம்பரேசர் சந்நிதிமுறையிற் பத்தொன்பது பிரபந்தங்கள் இடம் பெறுவதாகக் கூறுவர். திருக்கலைசைச் சிவகாமியம்மை பஞ்சரத்தினம், திருக்கலைசைச் சிதம்பரேசர் பரணி, திருக்கலைசைச் சிதம்பரேசர் கட்டியம் என்பன அவற்றுட் சிலபோலும், கேசவப்பெருமாள் இரட்ட்ை மணிமாலையும் பூவனுார்ச் சிலேடை வெண்பாவும் முனிவரவர்களால் இயற்றப்பெற்றவை என்பர் 1; குலசையுலாவும் இவர் பாடியதென்பர். பூரீ ஞானமாநடராஜர் மீது இருபாடல் கொண்ட கட்டியமும் முனிவ
1. ந. சி. கந்தையபிள்ளை; தமிழ்ப்புலவர் அகராதி. பக். 189

Page 133
سنہ 248 س
preyri sørnríð Lint-t't Ju" (FIsð6irg1. மேலும் முனிவரவர்கள் திரு மாளிகைத் தேவர் மீது திருவிருத்தங்களும் சிவஞானமுனிவர்மீது துதிவிருத்தங்களும் கீர்த்தனையும் பாடியுள்ளார். சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவர் திருக்கலைசைச் சிலேடை வெண்பாவிற்கு அரும்பதவுரை கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
sÚúl Judsoílu Gishi Sulit. - Chuppramania Vathiar.
இவர் தென்றிசையிலே ஆழ்வார் திருநெல்வேலியைச் சார்ந்த குருகூரில் வசித்த ஒர் பார்ப்பார். சுவாமிநாத தேசிகருடைய சகபாடி, இருவருங் கூடியே கனகசபாபதி ஐயரிடம் சம்ஸ்கிருதங் கற்றனர். சுவாமிநாததேசிகருடைய வேண்டுகோளின்படியே பிரயோகவிவேகம் என்னும் ஓர் நூலைத் தமிழ் இலக்கணங் கற்பார்க்கு உபயோகமாகச் சம்ஸ்கிருதத்தை ஆதாரமாகக்கொண்டு இவர் இயற்றினர். இரசப் பொருட்களினின்று தைலம் இறக்குவார் தன்மை போலச் சம்ஸ்கிருத லக்கண சாரத்தை முற்ருய் இதில் இறக்கிஞர். இதிலே, காரக படலம், சமாசபடலம், தத்திதபடலம், திங்கப்படலம் எனும் நான்கு படலங்களில் ருக கலித்துறை அடங்கியிருக்கின்றன. வடநூல் செய்வோர் தாஞ் செய்தவற்றிற்குத் தாமே உரை எழுதுகின்ருர் எனு நியாயத்தால் நாமே நமது நூற்கு உரை எழுதுகின்ருேம் எனச் சொல்லி அதற்குத் தாமே உரையும் எழுதினர். இதைச் சுட்டியே இலக்கணக்கொத்து எழுதிய சுவாமிநாத ஜ்ே சிகர் அந்நூற் பாயிரத்திலேே
'அன்றியுந் தென்றிசை யாழ்வார் திருநக
ரப்பதி வாழுஞ் சுப்பிர மணிய வேதியன் றமிழ்ப்பிர யோக விவேக முரைத்துரை யெழுதினன்’’ என்று சொற்றனர். பதினேழாம் சதாப்த ஈற்றில் இவர் இருந்தவர் என்றது உத்தேசம். இவையன்றி இவரைப்பற்றி மேலறியப்பட்டன சொற்பமேயாம். இந் நூலை இவரே செய்தார் என்றதற்கு:
'உம்பர்க் குரிய பிரயோக விவேகத்தை
ஐம்பத் தொருகவிதை யாலுரைத்தான்-செம்பொற்சீர் மன்னு மதிற்குருகூர் வாழ்சுப் பிரமணியன் என்னு மொருவே தியன்’
U. o pai

- 249 -
எனும் பாட்டுத் திருட்டாந்தமாம். இவரது பாடல் மாதிரிக்காகத் தாமே இந் நூல் செய்தவர் என்று விளக்கும்பொருட்டு இவர் சொல்லிய கலித்துறையை இவ்விடம் தருகின்ருேம்.
**பெரும்புங் கவர்புகழ் போதா யனிசுப் பிரமணியன்
அரும்புங் குருகையிற் கோதில் குலோத்துங்க னரிடமாய் விரும்பும் பொருளைத் தரும்பிர யோக விவேகவுரை கரும்புங் கனியு மெனப்பாடி னன்றமிழ் கற்பவர்க்கே."
இவர் இருந்த காலம் இற்றைக்கு முன்பின் கஎo வருடங்களின் முன் என்று உத்தேசிக்கிருேம்,
குறிப்பு
குருகூர்ச் சுப்பிரமணிய தீட்சிதர் சுவாமிநாததேசிகரின் சமகாலத் தவர் என்று காசிச்செட்டியவர்கள் கூறுகின்ருரேயொழிய அவருடன் சேர்ந்து கனகசபாபதி சிவாச ”ரியரிடம் சங்கதம் கற்ற சகபாடி யென் ருரில்லை. இருவரும் ஒருவரிடமே சங்கதம் பயின்றனர் என்ப திற்கும் சுவாமிநாத தேசிகரின் வேண்டுகோளின் படியே பிரயோக விவேகம் இயற்றப்பட்டது என்பதற்கும் சதாசிவம்:ள்ளைக்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை, ஆழ்வார் திருநகரியே திருக்குருகூர் எனப்படுவதாகும்.
பிரயோக விவேகம் இராமபத்திர தீட்சிதர் முன்னிலையில் அரங் கேற்றப்பட்டதென்று நூலின் புறவுறுப்பான இரு வெண்பாக்களுள் ஒன்று குறிப்பிடுகின்றது. அவரைப் போற்றும் பாடலொன்று திங்கப்படல ஈற்றிலும் காணப்படுகின்றது. ஜான கீபரியணம் எனும் சங்கத நாடகத்தை இபற்றிய இராமபத்திர தீட்சிதருக்குத் தஞ்சை சசஜி மன்னர் (1684-1712) 1693 இலே தானசாசனம் செய்துள்ளான். எனவே சுப்பிரமணிய தீட்சிதர் காலம் பதினேழாம் நூற்ருண்டின் பிற்பகுதியாதல் சாலும், சுவாமிநாத தேசிகர் இலக் கணக்கொத்தின் பாயிரத்தில் வரும் ஏழாம் நூற்பாவில் இடம் பெறும் உரைச் சூத்திரத்திலே தம் கண்காண வைத்தியநாத நாவலரும் சுப்பிரமணிய தீட்சிதரும் நூலியற்றி அவற்றிற்கு உரையும் எழுதியதாகக் கூறுவர்.
ஆறுமுகநாவலர் பரிசோதித்த பிரயோகவிவேகவுரையின் பதிப் பொன்று சென்னை வித்தியானுபாலன யந்திரசாலையில் விஷ"ஹல் தைமீ (1882) அச்சிடப்பெற்றுள்ளது.

Page 134
- 250 -
3Gů îJ Lc6Tofu Lu GřTL 5ử.—Chuppramania Pandithar.
இவர் சிதம்பரந் தளவரிசை முத்தையஞானியார் புத்திரர் தென் மொழியிலன்றி வடமொழியிலும் வல்லவராதலால் வடமொழி யிலே முனீசுரர் செய்து வைத்திருந்த சீவரட்சாவமிர்தம் என்னும் அரிய வைத்திய நூலொன்றை இவர் தமிழில் மொழிபெயர்த்து அச்சிடுவித்தார். இது வைத்தியங் கற்கும் மாணவகர்க்கு மிக உப யோகமான நூல். இந்த நூலன்றித் தேரையர் மொழிந்த பதார்த்த குண சிந்தாமணி ஆதியாம் பற்பல வைத்திய நூல்களையும் இவர் திருத்தி அச்சிடுவித்தார். இவராற் பாடப்பட்ட பிரதான பாடல்களை நாஞ் சந்திக்கவில்லையாதலிற் திருவிளையாடற் கீர்த்தனைக்கு இவர் சொன்ன சாற்றுகவியைப் பாடல் மாதிரிக்காய் இவ்விடத் தருகின் ருேம் .
"சீர்கொண்ட பரஞ்சோதி முனிவர்முன மியற்றுஞ்
செய்யதிரு விளையாட லெனும்பெருங் காப்பியத்தைப் பார்கொண்ட கீர்த்தனமா கச்சுருக்கி யுரைத்தான் பகர்மழவைப் பதியுறைவிப் பிரகுலமா மணியாம் ஏர்கொண்ட கலையுணர்சுப் பிரமணியக் கவிஞ
னிருநிலமுய்ந் திடவதனை யழகப்ப மகிபன் பேர்கொண்ட கேசவமா லச்சுக்கூ டத்திற்
பிழையறவச் சிற்பதித்துப் பெரும்புகழ்பெற் றனனே.
குறிப்பு *தமிழ் புளூராக்” நூல் வெளிவந்தபோது சுப்பிரமணிய பண்டிதர் வாழ்ந்துகொண்டிருந்தவர் போ லும். காசிச்செட்டியவர்கள்
தேரையர் பற்றிக் கூறுமிடத்து, இவருடைய பதார்த்த குண சிந்தாமணிப் பதிப்பிலே ஏனையோர் கூற்றுகளும் இடம்பெறுவதாகக் கூறுவர். சீவரட்சாமிர்தத்தின் ஆசிரியர் சிறீகந்த பண்டிதர் என்பர்1. இவர் தைலவருக்கச் சுருக்கம், தைலவருக்க சிந்தாமணி என்பன வற்றையும் பதிப்பித்தனர்.
சுப்பையர். - Chuppaiar.
இவர் யாழ்ப்பாணம் மானிப்பாயிலே க அஉ0ம் ஆண்டுக்கு முன் பிறந்த ஒர் பிராமணர். இவர் தந்தையார் நாமம் கதிரேசையர். அன்னயார் நாமம் அன்னப்பிள்ளை அம்மாள். குணக்குன்று எனப் பாராட்டற்கு இலக்காம் இப் புருடோத்தமர்க்குத் தம்பையர் எனு 'ற'நாமமுளது. சம்ஸ்கிருதத்திலன்றித் தமிழிலும் நன்கு ஒதியுணரப் பெற அவர்க்குக் காரிகை, சோதிடம் எனும் இரண்டிற்கும் நவாலி,
. . கந்தையின்: தமிழ்ப்புலவர் அகராதி, 1960, பக், 187

- 251 -
கா. தம்பையர் என்பவர் ஆசிரியர். இவ்விரண்டிலும் மிக்க பாண்டித்தியம் அடைந்த இவர் அடியேனது உள்ளக் கமலத்தை வீடுகொண்டருளிக் காரிகை, காந்தபுராணம், சம்ஸ் கிருதம் என் பவற்றிற்கு எம் ஆசிரியராயினர். காந்தம் ஆதிய புராண காவியங் களுக்குப் பொருள் சொல்வதில் இவர்க்கு மிக்கார் இலர் என்ருலு ந் தக்கதே. சோதிடத்திலோ கொழும்பு ராசதானியாம் இடங்களுக்கு எட்டிய கீர்த்தியினர். அங்குள்ள சைவாலயங்கள் ஒன்றிற் பல்லாண்டு களாக அர்ச்சகராயும் இருந்தவர். சீல்ாந்தம் தெக்கண மானிப்பாய் வேரகப்பிள்ளையார் கோயிற் பூசகராயிருந்த இவரால் பாடப்பெற்ற தனிப்பாச் சள் பலவுள. க.அசக ம் ஆண்டு வரையில் மானிப்பாயிலே சிறுவர் ஆடிய அரிச்சந்திர நாடகத்திற்குப் பல தருக்கள் பதங்க ளா திய பாடினரன்றி யாம் செய்த நன்னெறிக்கொத்து எனு நூலுக்குச் சாத்துகவியுந் தந்திருக்கின் ருர், புத்திரசந்தானம் அற்ற வராய் அகாலத்தே டுo வயசிற் தே கவியோகமாயினர். சுகுணசீலராம் இவரை "நிலமலை நின்ற கோன் மலர்' எனும் உவமான இலக்கணம் எனலாம்;
குறிப்பு
"தமிழ் புளூராக்" நூல் வெளிவந்தபோதுமானிப்பாய் க. சுப்பையர் வாழ்ந்துகொண்டிருந்தார். இவர் 1875இல் வியோகமடைந்தனர் என்பர் ". நவாலி தம்பையர் என்பவர் முத்துக்குமாரர் எனவும் வழங்கப்படுவர்.
збошufi. – Chuрpaiar.
யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை மேளகாரப் பகுதியைச் சேர்ந்த இவர் தஞ் சுயசாதித் தொழிலிற் பயின்றிராதபோதும் வழக்கமாய் "நட்டுவச் சுப்பையன்' என்றே அழைக்கப்பட்டார். சிறு வயசிலே இவர் தெல்லிப்பழையிலே இருந்த அமரிக்க மிஷனரிமாரைச் சேர்ந்து கிறிஸ்துமதானுசாரியாய் நடந்தும், மறுபடி அம் மதம் விட்டுப் பதிதராகி மல்லாகக் கோயிற்பற்றைச் சேர்ந்த ஏழாலைக் குறிச்சியிலே விவாகஞ் செய்து அவ்வூரைத் தம் உறைபதியாக்கினர். இவரை நாம் கண்டிருந்தும் இவரது கல்விச் சாமார்த்தியங்களைக் குறித்து யாதும் உணரோம், இலக்கண இலக்கியங்களிற் பயின்றவரோ, அன்றி வாணி வாக்கில் உறையப்பெற்றவரோ யாதும் அறியோ மாயினும், வண்ணுர்பண்ணைச் சிவன்கோயிற் தாசிசளுள் ஒருத்தியும் இற்றை4 குச் சிலநாட்களின் முன் இறந்தவளுமாகிய கனகி என்பவள் (பரிம் காகி சயமரம் எனப் பாடிய ஓர் பாடலால் நல்ல சமாளமான
J, l, Martyn Notes on Jaffna, P. 37

Page 135
ー252 -
புலவராய் இருந்தார் என்று அறிகிருேம். அப்பாடலில் முன்பின் நானூறு விருத்தங்கள் உண்டென்று கேள்விப்பட்டோம். விருத்தங்கள் ஒவ்வொன்றும் பாரதகாவியந் திரெளபதி மாலையிட்ட சருக்க விருத் தங்கள் போல்வது. பாடல் மாதிரிக்கு எமது ஞாபகத்திலிருக்கும் ஓர் விருத்தந் தருகின்ருேம்,
* காட்டுக் குயிலைக் கடிதோட்டிக் கனத்த நாவி னெய்தடவி மாட்டு மினிய சொல்லாளே மானே தேனே கனகமின்னே ஒட்டைக் காதினுடனிருந்திங்கு வந்தே புடைவை விற்கின்ற
நாட்டுக் கோட்டைச் செட்டிகளி னல்லாண் டப்பணிவன்கானே?"
கிறிஸ்தாப்தம் கஅகசு ம் ஆண்டே அமரிக்க மிஷனுரிமார் யாழ்ப்பாணம் வந்த காலமாதலாலும் இவர் மகனுெருவன் வேலணையில் விவாகஞ்செய்திருந்து சிலகாலத்துள் இறந்தனணுத லாலும் காலம் தற்காலந்தான். இப்பாடலன்றிப் பின்னும் ஏதும் பாடியிருந்தனரோ தெரிந்ததில்லை.
குறிப்பு
*தமிழ் புளூராக்" நூல் வெளிவந்தபோது நட்டுவச் சுப்பையனர் வாழ்ந்துகொணடிருந்தவர் போலும். நீர்வேலி சி. சிற்சபேசன் தமது ஞாபகத்திலிருந்து எழுதியளித்ததாகக் கனகி புராணம் தெரிகவிகள் எனும் தொகுப்பைச் சென்னை ஒற்றுமை ஆபீஸ் வெளியீடாகச் சென்னை சத்தியநேசன் பிரஸ்ஸில் 1937இல் நவாலி சி. கந்தையாபிள்ளை பதிப்பித்தார். இத்தொகுப்பிற் கப்புச் செய்யுள் நீங்கலாக நாட்டுப்படலம் (16}, சுயம்வரபடலம் (11), வெட்டை காண்படலம் (1; எனும் உட்பிரிவுகளில் இருபத்தெட்டுப் பாடல்க ளுள படலப்பிரிவுகள் நூலாசிரியருடையனவோ அல்லது பதிப் பாசிரியருடையனவோ என்பது அறிதற்கில்லை. வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் 1961 இற் சிவங். கருணுலய பாண்டியனர் உரை யுடன் கொழும்பு சுதந்திரன் அச்சகத்திற் பதிப்பித்த கனகிபுராணத் தின் முன்னுரையிற் க. ச. அருள்நந்தி அவர்கள் கந்தையாபிள்ளை யின் பதிப்பில் நாட்டுப்பாடலத்தி லிடம்பெறும் பதினறுபாடல் களும் நீர்வேலி சி. சிற்சபேசன் இயற்றியவையே என்பதை வெளி யிடடார். எனவே கந்தையா பிள்ளை பதிப்பிற் காணப்படுவன மற்றுள் பதின் மூன்று பாடல்களே நட்டுவச் சுப்பையனர் வாக்கு 1ாது புலனுகும். கந்தையாபிள்ளை பதிப்பிற் சுயம்வரபடலத்தின்
திச் செய்யுள் குறையாகவே பதிப்பிக்கப்பட்டுள்ளது. இப்பாடலின் புவடிவமும் கணக. செந்திநாதன் 1960 ஆண்டு ஆணி மாதம் - செல்வி கூறும் சஞ்சிகையில் எழுதிய கனகிபுராணத்தில் சில
ல்கள் எறும் கட்டுரையில் இடம்பெறுகின்றது. இராமலிங்கம்

--سے 253 سس۔
பதிப்பிற் காப்புச் செய்யுள் நீங்கலாக நாட்டுப்படலம் {2}, சுயம் வரபடலம் (19}, வெட்டைகாண்படலம் (3) எனும் உட்பிரிவுகளில் இருபத்துநான்கு பாடல்களுள. கந்தையாபிள்ளை பதிப்பில் முகவுரை யிற் காணப்பட்டனவும் இராமலிங்கம் பதிப்பில் நாட்டுப்படலத்தில் இடம்பெறுவனவுமாம் இருபாடல்களில் முதற்பாடல் கனகி பற்றிய தாயின் நாட்டுப்படலத்துக்கன்றி வேருெரு படலத்திற்குரியதாதல் சாலும் தனிப்பாடற்றிரட்டி லிடம்பெறும் மற்றைய பாடல் கனகி புராணத்திற்குரியதென்று துணிதலரிது. கனகி புராணத்திற்குரிய பாடல்களைத் தந்த இரு பதிப்புகளையும் ஆதாரமாகக் கொண்டு நாட்டுப்படலமென ஓர் உட் பிரிவு ஆங்கிருந்ததெனச் சித்தாந்த மாகக் கூறமுடியாது. இராமலிங்கம் பதிப்பிற் சுயம்வரபடலத்தில் முன்னைய பதிப்பிற் கண்டனவற்றுட் பத்தும் புதிதாக மேலும் ஒன்பது பாடல்களும் இடம்பெறுவன. இப்பதிப்பில் வெட்டைகாண் படலத்தில் முன்னைய பாடல் நீங்கலாக இடம்பெறும் இரு செய்யுள் களிற் பின்னையது வெண்பாவாயமைவதோடு வேதநாயகம்பிள்ளை பாடலாகத் தனிப்பாடற்றிரட்டில் வழங்குவதுமாகும். எனவே இராமலிங்கம் பதிப்பு மூலம் சுயம்வரபடலத்திலும் வெட்டைகாண் படலத்திலும் பத்துப் பாடல்கள் புதிதாக வெளிப்பட்டுள்ளன எனலாம். கனகிபுராணத்திற்குரியனவாகக் கொள்ளத்தக்க முற் கிளந்த இருபத்துமூன்று பாடல்களுடன் வேறு சில பாடல்களும் அந்நூலுக்குரியனவாக வழங்கிவருகின்றன.
giar55rg5 Gg568Sf. - Chuvaminatha Thasigar.
ஈசானதேசிகர் எனும் மறு நாமதேயமுற்ற இவர் சுமார் நூற் றெழுபது வருடங்களின் முன்னே கி. பி. பதினெட்டாம் சதாப்த முற்கூற்றிலே பிறந்து இளமைப் பிராயத்தே திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று, அங்கே அம்பலவாண தேசிகரிடந் தீட்சை பெற்றுத், துறவறம் பூண்டு அவர்க்குத் தொண்டராகி அவரிடம் பல நூல்களை வாசித்துக்கொண்டிருந்தனர். இவ்வாறு அங்கு இவர் இருக்கும் நாட்களில் மேற்படி ஆதீனத்தாருடைய சிஷ்ய வர்க்கத் தாருள் ஒருவரும், திருநெல்வேலிச் சைவ வேளாளர் குலத்தவரும், தாண்டவமூர்த்திப் பிள்ளையின் புத்திரரும், கல்வி வல்லவரும், குரு லிங்க சங்கம பத்தியில் முதிர்ந்தவருமாகிய மயிலேறும் பெருமாள் பிள்ளை என்பவர் ஒரு நாள் அம் மடத்திற்கு வந்து, இவரது குணுதி சயங்களைக் கண்டமாத்திரத்தில் இவரிற் பிரிதியுற்ருராய், ஓ! நாம் அறிந்திருக்குங் கல்வியை இவர்க்குப் புகட்டிகுல் எத்துணை லோகோப காரமாம் என்று உள்ளத்துன்னி, அங்கிருந்த ஞான தேசிகரது அனுமதிப்படி இவரை அழைத்துப்போய்த் தம் கிரகத்தில் இருத்தித்

Page 136
' حسی۔ 254 سس۔
திரணதூமாக்கினி எனும் மறுநாமமுற்ற தொல்காப்பிய முனிவர் செய்த தொல்காப்பியத்துக்கு உரையாசிரியர் எனும் சிறப்புப்பெயர் பெற்ற இளம்பூரணர், நச்சிஞர்க்கினியர், சேனவரையர் எனும் மூவரும், இயற்ற அவ்வவர் நாமத்தால் விளங்கும் இளம்பூரணம், நச்சினர்க்கினியம், சேனவரையம் என்னும் மூவுரைகளையும் பற்பல தரம் கசடறக் கற்பித்தாரல்லாமல், மற்றும் அக்காலத்துள்ள பிற இலக்கணங்களையும், திருவள்ளுவர் பரிமேலழகர் உரை, திருச் சிற்றம்பலக்கோவை பேராசிரியர் உரைகளையும், சமணர் நூல்க ளாகிய சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்னும் பஞ்சகாவியங்களோடு சங்கச் செய்யுள்களையுங் கற்பித்தார்.
இவ்வாறு செந்தமிழ் நூல்களிலன்றி, வட நூல்களிலேயும் இவரைப் பயிற்றி வல்லராக்க அபிப்பிராயமுற்றுச் சம்ஸ்கிருத பண்டிதருஞ் சிவப்பிராமணர்களுள் ஒருவருமாகிய கனகசபாபதி சிவாசாரியர்* என்பவரை அழைப்பித்து அவரைக்கொண்டு வடமொழி வியாகரணங் கற்பித்தார். இவர் பன்னிராண்டு தம்மோடு வசித்துத் தென்மொழி வடமொழி எனும் இரண்டிலும் பாண்டித்தியம் அடைந்த பின்னர் அவரது நல்லுபகாரியுங் குரவருமாகிய அம் மயிலேறும் பெருமாள்பிள்ளை இவரை அவ் ஆதீனத்துக்கு அழைத்துப்போய், ஞானதேசிகர் முன்னிலையிற் பரீட்சித்துத் திறமை காட்டி, இவரை எதுவகையும் இவ்வாதீனத் தம் பிரானுககி வைப்பது உம் கடமையும் பொறுப்பும் எனச் சொல்லி இருவர் விடையும் பெற்றுத் தம் வீடு சென்றனர். இப்பாற் கலாவல்லவராகிய இவர் அவ் ஆதீனத திருந்து சிவஞானபோதஞ், சிவஞான சித்தியார் என்னும் நூல்களைத் தேர்ந் தாரன்றி, முன்னமே தாம் இலக்கணங் கற்குந்தோறும் சந்தித்த அரிய இலக்கண விதிகளைக் கோவை செய்து ஓர் நூலாக்கி அதற்கு இலக்கணக்கொத்து எனு நாமஞ் சூட்டித் தாமே அதற்கு உரையும் எழுதினர். அந் நூலுக்கு இவர் இசைத்த பாயிரத்தில்:
'திருநெல் வேலி யெனுஞ்சிவ புரத்தன்
தாண்டவ மூர்த்தி தந்த,செந் தமிழ்க்கடல் வாழ்மயி லேறும் பெருமாள் மகிபதி இருபத கமல மென்றலை மேற்கொண் டிலக்கணக் கொத்தெனு நூலியம் புவனே' என்று சொல்லியதனுற் தமக்குத் தென்மொழி வித்தியா குரு மயிலேறும் பெருமாள்பிள்ளை என்றும்;
і. ک . u". bildiyi ādamui 2. 5. Lu T. (Bui

- 255 -
**செப்பறைப் பதியின் வாழ்சிவத் துவிசன்
கனக சபாபதி கருதுவட நூற்கடல் தபோதனர் புகழுஞ் சைவாதி ராசன் உபய பதங்களை யுண்மையொடு பணிவாம்'
என்றதனற் தமக்கு வடமொழி வித்தியாகுரு கனகசபாபதி சிவா சாரியர் 1 என்றும் ;
'ஊரும் பேரு முருவு மில்லான்
ஆயினுந் திருவா வடுதுறை யூரணைந் தம்பல வாண னெனும்பே ராதரித்
தறிவே யுருவா* யமர்ந்த குரு ராயனை'
என்று சொல்லியவதனற் தம் தீட்சாகுரவர் அம்பலவான தம்பிரான் என்றுந் தெரியப்படுத்தினர். இவர் அந்த மடத்தோடு சேர்ந்திருக்குங் காலத்தில் ஒருநாட் திருவாரூரிலே பரம்பரைச் சைவாசாரியர் குலத்திலே சென்மித்து இலக்கண விளக்க முதலிய சில நூல்களை இயற்றிய வைக்தியநாத நாவலர் அவ் ஆதீனத்திற்கு வந்து ஞானதேசிகருடன் சம்பாஷணைசெய்து, போசன வேளையில் அவருடன கூடி அசனம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, தேசிகர் அவரைக் கூவி 'வந்த இளைப்பாற் போச ைஞ் செவ்வையாகச் செய்தற்கு இசையவில்லையோ' என்று வினவ, அவர் வயசுக் கிரமப்படி கடைப்பந்தியில் உளுக்கார்ந்திருந்த பண்டிதர் சிரோமணியாகிய இச் சுவாமிநாத தேசிகர்மேற் கண்பரப்பினர்.
இவர் தற்சணம் நாவலர் விசாரணைக்கு உத்தரங்கூறித், தாமுஞ் சில கடாப் பொறிக்க, அப்போது வைத்தியநாத நாவலர்: ஒ! தொல்காப்பியம் முதலிய நூல்களை எழுத்தெண்ணிப் படித்த சுவாமிநாத மூர்த்தியா? தேவரீர் இவ்விடம் இருந்தது எனக்குத் கெரியாதே என்று இவரது கல்வி வல்லமையைப் பாராட்டிப் பின்னுஞ் சிலநாள் அங்கிருந்து, இவர் செய்த இலக்கணக்கொத்தையும் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்து, அதன் அரும் விதிகளைப் புகழ்ந்து பின்பு தமது ஆதீனஞ் சென்றனர். இந்த ஆசிரியர் காலத்திலே இவ் வைத்தியநாத தம்பிரான் மாத்திரமல்லத் தமிழ்ப் பிரயோக விவே அஞ் செய்த சுப்பிரமணிய தீட்சிதரும் இருந்தார். இவர் தாம் செய்த இலக்கணக் கொத்துக்குத் தாமே உரை எழுதல் வழுவல சான்று காட்டற்பொருட்டு:
ம
. து. ப. ஐயர்
l, L. 9 y Alf

Page 137
- 256 -
'நூல்செய் தவனந் நூற்குரை யெழுதல் முறையோ வெனிலே யறையக் கேணி முன்பின் பலரே யென்கண் காணத் திருவா ரூரிற் றிருக்கூட் டத்திற் தமிழ்க்கிலக் காகிய வைத்திய நாதன் இலக்கண விளக்கம் வகுத்துரை யெழுதினன் அன்றியுந் தென்றிசை யாழ்வார் திருநகர் அப்பதி வாழுஞ் சுப்பிர மணிய வேதியன் றமிழ்ப்பிர யோக விவேகம் உரைத்துரை யெழுதின னென்றே பலவே'
என்று பிறரைச் சாட்சிக்கு இழுத்தனர். இவர் செய்த இலக்கணக் கொத்திலே வேற்றுமையியல், வினையியல், ஒழிபியல் எனும் மூன்றி லும், கடுக சூத்திரங்கள் உள. இம் மகா பண்டிதர்க்கு அம்பலவான தேசிகர் சங்காபிஷேகஞ்செய்து ஈசான தேசிகர் எனும் பின்னுெரு நாமதேயஞ் சூட்டித் திருநெல்வேலியிலே ஈசான மடாதீனத்தில் இவரை இருத்தினர் அங்கிருக்கும் போதே சங்கரநமச்சிவாயர் எனும் உரையாசிரியர் இவர்க்கு மாணுக்கராஞர். இவ் ஆசிரியருடன் வைத்தியநாத நாவலர் முன் சில தினந் தங்கியிருந்தபோது தமிழ்ப் பாடையின் உற்பத்தி வரலாற்றைப் பற்றி நீர் பிரசங்கம் பண்ண வேண்டும் என்று கேட்க, இவர் அக் கேள்விக்கு இசைந்து வடமொழி யாகிய சம்ஸ்கிருதத்திலிருந்தே தென்மொழியாகிய தமிழ் பிறந்தது என ருசுக்காட்டிப் பிரசங்கஞ் செய்தார் என்றது பரம்பரை, தச காரியம் எனும் ஞானநூலையும் இவர் இயற்றினர்.
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தை விரித்துக்கூற முற்படும் சதாசிவம் பிள்ளை, அவர் பதினெட்டாம் சதாப்தத்தின் முற்கூறிலே வாழ்ந்தவர் என்று கூறத் தாம் அந் நூற்ருண்டின் முற்கூறிற் பிறந் தார் என்று கூறியுள்ளமை பொருந்தாது. இலக்கணக்கொத்தை ஆறுமுகநாவலர் இலக்கணவிளக்கச் சூ ரு வளி, தொல்காப்பியச் குத்திர விருத்தி என்பனவற்ருேடு சென்னை கலாரத்நாகரம் அச்சுக் கூட , தில் அக்ஷயடு) கார்த்திகை மீ" (1866) திருவாவடுதுறை ஆதீன கர்தy.f சுப்பிரமணியதேசிகர் வேண்டுகேட்படி பரிசோதித்துப் பதிப்பித்தார். இப்பதிப்பிலே இடம்பெறும் சுவாமிநாததேசிகர் சரித்திரச் சுருக்கம் சதாசிவம்பிள்ளைக்கு உதவியிருக்கின்றது. மணி மேகலையும், குண்டலகேசியும் பெளத்த மதத்தினர் நூல்கள்

- 257 -
திருநெல்வேலியைச் சேர்ந்த சுவாமிநாததேசிகர் திருவாவடு துறை ஆதீனத்தின் ஏழாம் பண்டாரசந்நிதிகள் பிற்குமாரசாமி தேசிகர் காலத்திற் சுசீந்திரத்திற் சின்னப்பட்டத்தில் எழுந்தருளி யிருந்த திருவெண்காடு மாசிலாமணி தேசிகரிடம் தீட்சைபெற்ருர், இவர் திருவாவடுதுறை யாதீனத்தின் எட்டாம் பண்டாரசந்நிதிகள் மாசிலாமணிதேசிகர் அருளாட்சியிற் சின்னப்பட்டம் சிவக்கொழுந்து தேசிகர் காலத்திற் சங்காபிஷேகம் பெற்று ஈசானதேசிகர் எனும் பெயருடன் இரண்டாம் சின்னப்பட்டத்திலே திருநெல்வேலி ஈசான மடத்தில் எழுந்தருளினர். சுவாமிநாததேசிகர் பின்னர் திருவண்ணு மலை ஈசானமடத்திலே தொண்ணுரறு பிராயம்வரை வாழ்ந்து சிவபரி பூரணமெய்தினர். இவருடைய ஆசிரியர் மயிலேறும்பெருமாள் பிள்ளை கல்லாடத்திற் சில பாடல்களுக்கு உரைகண்டவர் என்பது கல்லாடர் குறிப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இலக்கணக்கொத்துப் பாயிரத்தின் ஏழாம் நூற்பாவில் இடம் பெறும் உரைச்சூத்திரம் மூலம் வைத்தியநாத நாவலரும் சுப்பிர மணிய தீட்சிதரும் சுவாமிநாததேசிகர் காலத்தவர் என்பது புலனுகும். திருமலை நாயக்கர் காலத்திற் (1623-1659) கயத்தாற்றுச் சீமை யைப் பரிபாலனஞ்செய்த மாதைத் திருவேங்கடநாதரால் ஆதரிக்கப் பட்டவர் வைத்தியநாத நாவலர். மாதைத் திருவேங்கடநாதர் புண்ணியமாகக் கொல்லம் 858 இற் (கி. பி. 1683) பூதானம் செய்யப்பட்டதாகச் செப்பேடு கூறுவதால், அவ்வாண்டிற்கு முன்னர் திருவேங்கடநாதர் வியோகமடைந்தார்1. சுப்பிரமணியதீட்சிதர் 1693இலே தஞ்சை சகஜி மன்னனம் (1684-1712) சன்மானிக்கப் பெற்ற இராமபத்திர தீட்சிதர் காலத்தவர். எனவே, சுவாமிநாத தேசிகர் பதினேழாம் நூற்றண்டின் கடைக்கூறிலும் பதினெட்டாம் நூற்றண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவராதல் வேண்டும்.
இலக்கணக்கொத்திலே ஒரு நூற்பாவாலமைந்த தற்சிறப்புப் பாயிரமும் பன்னிரு நூற்பாக் கொண்ட பாயிரமும் நீங்கலாக முப்
பிரிவிலே 119 நூற்பாக்களுள. தசகாரியம் எனும் நூல் திருவண்ணு
மஃபார் தசகாரியம் எனவும் அழைக்கப்படும். சுவாமிநாததேசிகர்
திருச்செ ம்ெ கலம்பகத்தினையும் இயற்றியுள்ளார். சிவஞானபோதச்
and 'At day இவரால் இயற்றப்பட்டது என்பர்
S S 0SS tLLLLALLSS LLLLLL LLLLLLLLS LLTTL T TTTTT 000S tLLS00S
ዜሓዘr = 1 7 pi

Page 138
- 258 -
சுவாமிநா தர். - Chuvaminathar.
இவர் யாழ்ப்பாணம் மானிப்பாயிலே, வேளாளர் மரபிலே, செல்வாக்குற்ற குடும்பத்திலே, இற்றைக்கு முன்பின் கஉ0 வருடங் களின் முன் பிறந்தவர். இவர் தந்தையார் நாமம் அருணுசலம். இவர் தம்பியார் கொழும்பு இராசதானியிலே அதி பிரதாபத்தோடு வாழ்ந்து சலாபக் குத்தகை கொண்டதால் இலங்கை, இந்தியா எங்கும் பேரெடுப்புற்ற முத்துச்சாமியாபிள்ளை. இப்புலவரது புத்திரர் இலங்கைச் சட்டநிரூபண சபையில் அநேக ஆண்டுகளாகப் பிரதி நிதியாய் இருந்த எதிர்மன்னசிங்க முதலியார். இவர் சங்கீத சாஸ் திரத்தில் மிக்க பேர்பெற்றுக், கேட்பார் செவிகள் விருந்தருந்தச் சந்தமும் இன்பமுமாய்க் கோவைத்துறை படிக்கும் காரணத்தாற் கோவைத்துறைச் சுவாமிநாதர் என்றும், நாடகம் பாடுங் காரணத் தால் நாடகச் சுவாமிநாதர் என்றும் இரு மறுநாமங்கள் வாங்கினவர்
இவர் வால வயசில் மானிப்பாய் வேரகப்பிள்ளையார் கோயிலிலே காந்தபுராணம் வாசித்துக்கொண்டிருந்தபோது தவருய் வாசித்த காரணத்தால் அர்த்தஞ் சொல்லிக்கொண்டிருந்தவர் சற்றே இவரை இழித்துக்கூற, "நன்மாட்டுக்கொரு சூடாய்" உடனே இவர் இவ்வூர் விட்டு வடகரை சென்று அங்கே சங்கீத வித்துவான் களுடன் சகவாசம்பண்ணி, இராகப் பரீட்சைக்கு இருப்பிடம் இவர் தான் என்று அட்ட திக்கெங்குங் கீர்த்தித் தொனி பிறக்கச், சங்கீத சாஸ்திரத்தில் மிகக் கீர்த்திபெற்றுப் பல வருடங்களின் பின் ஊர்க்குத் திரும்பினர். யாழ்ப்பாணத்திலே இராகத்தாற் சிறந்தது மானிப்பா யென இசைப்பெயர் நாட்டினர். பேர்வகித்த நட்டுவர் தாமும் இவர் சமுகத்தில் நாயகசுரம் எடுத்து ஊத அஞ்சுவர். இவரது கீதங் காதிற் கேட்டுப் போகப் பெரியோர் சிறியோர் அநேகர் வந்து கூடுவர். இராகத்தாலன்றி நாடகம் பாடுந் திறமையாலும் இவர் பேர் பெற்றர். நாட்டு நாடகங்கள் விலாசங்களுள் இவர் பாடப்பெற்ற இராமநாடகம், தருமபுத்திர நாடகம் இரண்டிற்கும் மேற்பட்டனவில்லை. இவற்றை யாழ்ப்பாணம் பல இடங்களிலும் படித்து ஆடினர். நாடகங்களன்றிப் பதிகங்கள் ஊஞ்சலிசை காதிய பல பாடினர். இவரது பாடல்கள் பளபளப்புஞ் சந்த இன்பமுய் கொண்டன. தருமபுத்திரநாடகம் முழுவதும் பழமொழி காக்கமே. இவரது பாடல் மாதிரிக்காகத் தொண்டைமானுற்றுக் கோயிலின் மேற் பாடிய ஆசிரியவிருத்தங்களுள் ஒன்றை இங்கினந் øQyfor Oyub.

- نشت 259 ----
"ஆண்டுகொண் டவனிமுத லன்றிலங் கையிலுறையு
மரியரா வணநிசிசரன் அழகுசெறி சீதையைச் சிறைவைக்க ராமன
யவதரித் திடுமாயவன் தூண்டவனு மான்சென் றறிந்துவந் தேசொலத்
தொடுகடலை யணைகட்டியே சுக்கிரிப னெடுசேனை சூழ்ந்திட விலங்கையிற்
ருெகுதியொடு போயடைந்து வேண்டியம ருக்குவரு தம்பியும் பிள்ளைகளும்
வெகுமூல பலமுமழிய விறலிரா வணன்மடிய நொடியிலே சிறைமீட்ட
வீரரா கவன்மருகனே நீண்டவன் பிலையெனினு மாண்டுகொண் டிடுமடிமை
நீயருளெ னக்குதவுவாய் நிகரில்தொண் டமனற்றில் நிலவுசந் நிதிமேவு
நிமலகுரு பரமுருகனே."
குறிப்பு "தமிழ் புளூராக்" நூலில் இடம்பெழுத ஈழத்தவர்களில் ஒருவர் மானிப்பாய் அ. சுவாமிநாதர். இவர் கொழும்பு முத்துவிநாயக சுவாமிபேரிற் பாடிய கலிவெண்பாவில் முத்துச்சாமிப்பிள்ளை கர இல் கார்த்திகை மீ" (1831) செய்த திருப்பணியைச் சுட்டுவதால் அவ் வாண்டிலும் வாழ்ந்தவராதல் வேண்டும். இவர் தம்பியார் முத்துச் சாமிப்பிள்ளை 1846இல் வியோகமடைந்தார். சுவாமிநாதர் கொழும்பு முத்துவிநாயகசுவாமி பேரில் கலிவெண்பாவும் ஊஞ்சலும் பாடியுள்ளார். முன்னர் பீ முத்துக்குமாரு என்பவராற் பதிப்பிக்கப் பெற்ற இவ்விரு பிரபந்தங்களையும் பின்னர் அவர் மருகர் ம. மூத்த தம்பி 1931ஆம் ஆண்டிற் கொழும்பு "ஸ்டான்லி பிரஸ்" எனும் அச்சகத்திற் பதிப்பித்தனர். அச்சுவேலி ச. தம்பிமுத்துப்பிள்ளை இராமநாடகத்தையும் தருமபுத்திர நாடகத்தையும் பதிப்பித்தனர்; சண்டிருப்பாய் முருகேச உபாததியாயர் தருமபுத்திர நாடகத்தைப் பரிசோதித்தனர் 1. மட்டக்களப்பு பிரதேச கலாமன்றத்தினர் 1969இல் இராமநாடகம் ஒன்றினைப் பதிப்பித்துள்ளனர். அதன் பதிப்பாசிரியர், முன்னர் தம்பிமுத்துப்பிள்ளை பதிப்பித்த இராம நா. சுத்துடன் தமது பிரதியையும் ஒப்பிட்டு ஆய்ந்துரையாது விட்ட மைக்கான காரணங்கள் புலப்படுமாறில்லை.
1. தடிமபுத்நாடகம் 1890இலும் இராமநாடகம் 1896இலும் பதிப்பிக்கப்பெற்றன என்பர். | த . கந்தை பின்னே : தமிழ்ப்புலவர் அகராதி 1960. பக். 162, 361; தமிழ் இலக்கிய - I, 1952, uă, 72.

Page 139
- 260 -
sĩaunưĐị5795ữ. - Chuvaminathar '.
இலக்கண இலக்கியங்களில் மாத்திரமல்லச் சோதிடசாஸ்திரத் திலும் வல்லவராகிய இவர் வட்டுக்கிழக்கிலிருந்த வித்துவான் க. முத்துக்குமாரருக்குப் புத்திரர். சாதியிற் குமாரமடப்பளியார். இவர் வடக்கு அராலியிற் செட்டிகள் பகுதியிலே சம்பந்தம் பண்ணினவர். முன்னர்க்கூறிய சண்முகச்சட்டம்பியார்க்குத் தந்தை யார், இருபாலைச் சேனதிராயமுதலியார் இவரிடம் இராமாயணத் துக்குப் பொருள் கேட்டவராம். நூல்கள் செய்யாதபோதும் தனிப் பாக்கள் சில இயற்றினர், நவாலியிலே களையோடைக் கண்ணகை அம்மாள் கோயிலிலே கந்தபுராண படனத்துக்குப் போயிருந்தபோது அங்குள்ள பற்றைக்குச் சமீபத்திற் கீரியும் பாம்பும் எலியும் கூடி விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்டு,
** மலியா ணவமலி மாய்கையை நீக்கி மலர்ப்பதத்தைத் துளியா தரவொடு தோத்திரஞ் செய்யச் சுகந்தருவாய் எலியா டரவொடு கீரியொன் முகி யினிதிசைந்து கலியாணமாயுறை யுங்களை யோடையிற் கண்ணகையே"
என்று பாடினர் என்ப. தனிப் பாக்களோடு ஊஞ்சல் இசையுஞ் சில பாடினர் என்று சொல்லக் கேள்வியுற்றேம்.
asismum Dísir.Tü Ludmist. - Chuvampillaip Pulavar.
இவர் பண்டத்தரிப்புக் கோயிற்பற்றிலுள்ள விளான் எனுங் கிராமத்தில் வதிந்த பேதுருப்பிள்ளை என்பார்க்குப் புத்திரர். சமயாசாரத்தாற் கதலிக கிறிஸ்தவராம். இவர் கிறிஸ்தாப்தம் கஎஅசிம் ஞ) பிறந்து க அசச ம் டு இறந்தார் என்றது உத்தேசம். கடவுண்மணிமாலை, வெல்லைமணிமாலை, கணக்கதிகாரம் முதலிய சில கிரந்தங்களுக்கு இவர் ஆக்கியோராய் இருந்தார் அன்றி உரிச்சொல், திவாகரம், நிகண்டு, நீதிவெண்பாக்களிற் பரசமயத் தேவர்கள்மேல் அவ்வவற்றின் ஆக்கியோர் பாடிய காப்புகளைத் தம் சமய கடவுளுக்கேற்ற காப்புகளாக்கித் தம் சமயச் சிறுவரும் படித்தற்கு உபயோகப்படுத்தினர். அக் காப்புகளில் ஒன்றை இவர் பாடல்மாதிரிக்காக இவ்விடந் தரலுற்ருேம்.
'மூவுலகை யும்படைத்துக் கீர்த்திபெற்று
முதல்வனுக்கேற் றிடுசேத்தோன் முனிமுன்னுளிற்
தேவபரன் றனைமனுவோர் புகழ்தற்கெண்ணித்
தீட்டுகல்விச் சாஸ்திரத்திற் செகத்தையாண்ட
l, 'if' de Lib Gugsai.

سسه 26l --س--
காவலர்கள் காவலஞஞ் சலோமோன்செப்புங் கலைதனிலுந் தமிழதனற் கற்கவெண்ணி
ஆவலுடன் பொருணிகண்டு படிக்கத்தானப்
அடிமுடிவில் லாதபர னடிகாப்பாமே."
குறிப்பு
"தமிழ் புளூராக் கூருத விளான் சுவாம்பிள்ளைப் புலவர் இயற்றிய கணக்கதிகாரம் 1844 இல் வெளிவந்ததென்பர் ・。
சூடிக்கொடுத்த நாச்சியார்". --
Chudikkodutta Nachchiar.
ரேது, சாதி ஏது, அன்னை தந்தையர் யாவர் என்று உணரப் படா இம்மாதரசியார், வைஷ்ணவர்க்குள்ளே பெரும் பெயர் தாங்கிய ஓர் வித்துவ சிரேட்டர். இவர்க்கு ஆண்டாள் என்னும் மறுநாமமுளது. வில்லிபுத்தூரில் வசித்த வைஷ்ணவ சமயி ஒருவன்" இவரை வளர்த்தான். தம்மை எடுத்து வளர்த்து ஆதரித்த தாதாவின் சமயமே தஞ் சமயம் எனக் கொண்ட இச்சுகுண சீலி விஷ்ணு ஸ்தலமாகிய திருப்பதியைத் தமக்கு உறைவிடமாக்கி அக் கோயிற் பணிவிடைகளை அதி சிரத்தையோடு செய்து வந்தனர் அன்றிக் கல்வியாற் சிறந்தவராதலிற் திருப்பாவை, திருமொழி என்னும் இரண்டு பாடல்களையும் இயற்றினர். இவற்றுட் திருமொழி கசB2 செய்யுட் கொண்டது. இவை இரண்டும் வைஷ்ணவ சமயிகளாற் போற்றிப் பாராட்டப்படுவதாகிய நாலாயிரப் பிரபந்தத்துட் சேர்ந்திருக்கின்றன.
குறிப்பு
காசிச் செட்டியவர்கள் தந்த சரிதத்தை மொழிபெயர்க்கும் சதாசிவம்பிள்ளை, அவர் ஆண்டாளின் இரு பிரபந்தங்களிலும் 173 பாடல்களுள என்று கூற, நாச்சியார் திருமொழியில் மட்டும் 173 பாடல்களுள என்று சதாசிவம்பிள்ளை பிழையாகக் கூறியுள் ளார். நாச்சியார் திருமொழியில் 143 பாடல்களும் திருப்பாவையில் 30 பாடல்களுமுள. இவ்விரு பிரபந்தங்களும் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் முதலாயிரத்தில் இடம்பெறுவன. ༡.
1. g. u r. u išsauri 2. git. Uir. 45 678

Page 140
سس۔ 262 سے
வில்லிபுத்தூரில், விஷ்ணு சித்தர், பட்டர்பிரான் என்று அழைக்கப் படும் பெரியாழ்வாரால் நந்தவனத்திற் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர் கோதை எனும் ஆண்டாள் என்று குருபரம்பரைக் கதைகள் கூறுவன. வைஷ்ணவர் ஆண்டாள் பூமாதேவியின் அம்சம் என்பர். ஆண்டாள் சரிதம் அவரைத் திருவரங்கத்தோடே தொடர்பு படுத்திக் கூறுகின்றதேயொழியத் திருப்பதியுடனன்று.
பெரியாழ்வார் தம் காலத்து மன்னனைக் கோனெடுமாறன் என்று கூறுவர். இப்பாண்டியன் மாறவர்மன் முதலாம் இராசசிம்மன் (730-1765) என்பர் ஆழ்வார்கள் காலநிலையின் ஆசிரியர் மு. இராக வையங்கார். இவனுக்கு மாறவர்மன் எனும் பட்டப்பெயர் இருப் பதாலும், இவன் மந்திரி மாறன் காரி வைணவ சமயத்தவராகக் கருதத்தக்கவராதலாலும், இவன் மகன் பாமவைஷ்ணவன் என்று போற்றப்படுவதாலும், பெரியாழ்வர் கூறும் நெடுமாறன் முதலாம் இராசசிம்மன் என்று கருத இடமுண்டாயினும் குருபரம்பரை பெரி யாழ்வார் காலத்து மன்னன் பூரீவல்லபதேவன் என்று கூறுவதாலும், அப்பெயர் முதலாம் இராசசிம்மனுக்கு உரியதன்று என்பதாலும் இராகவையங்கார் கூற்றினை ஏற்பதிற் கருத்துவேறுபாடு உண்டு. பெரியாழ்வார் கூறும் நெடுமாறன், நெடுஞ்சடையன் பராந்தகன் 765.790) என்று தமிழ் வரலாறு ஆசிரியர் K.S. பூரீநிவாசபிள்ளையும் பாண்டியர் வரலாறு ஆசிரியர் T. W. சதாசிவபண்டாரத்தாரும் கருதுவர். இம்மன்னன் பரம வைஷ்ணவன் எனப் போற்றப்படினும் இவனுடைய பட்டப்பெயர் சடையவர்மன் என்பதாலும், பூரீவல்லப தேவன் எனும் குருபரம்பரைப் பெயர் இவனுக்குரியதன்று என்ப தாலும் இவர்களுடைய முடிபிக்னயும் ஏற்பதிற் கருத்து வேறு பாடு உண்டு, பூரீவைஷ்ணவர் வரலாறு எனும் ஆங்கிலநூலின் ஆசிரியர் T A. கோபிநாதராயர் பெரியாழ்வார் கூறும் நெடுமாறன் என்பவன் பூரீமாறயூரீவல்லபன் (835-882) என்று கருதுவர். இவனுக்கு மாறன் எனும் பெயரும் குருபரம்பரை கூறும் பூரீவல்லபதேவன் எனும் பெயரும் உண்மையாற் கோபிநாதராயர் கூற்றுப் பொருத்த மாகத் தெரிகின்றது;
*வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிய காலங்களாகக் கி. பி. 600, 731, 885, 886 எனும் நான்கினத் தந்து, திருப்பாவை 13ம் பாடல் சுட்டும் காலம் கி பி. 731 திசம்பர் மாதம் 18ஆம் தேதி என ஆழ்வார்கள் காலநிலையின் ஆசிரியர் கருதினர். K. G. சங்கர் கி. பி. 600, 6 24, 648, 731, 850, 874 ஆகிய ஆறு ஆண்டுகளைத் தந்து, திருப்பாவை குறிப்பிடும் காலம் கி. பி. 850 நவம்பர் மாதம்
1. பெரியாழ்வர் தீருமொழி 4 2* 7.

---- 263 ----
23ஆம் தேதியெனத் துணிந்தார் 1. பெரியாழ்வார் பூரீமாற பூரீவல்லபன் காலத்தவராயின் சங்கர் குறிப்பிட்ட காலம் பொருந்துவ 5ntasountab. நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தின் முதற் பதிப்புகள் பற்றிக் குலசேகரப் பெருமாள் குறிப்பிற் கூறப்பட்டது. பொய்கை யாழ்வார் குறிப்புக் காண்க:
Clss JITsős susöT - Chekarajachakaran,
இவர் யாழ்ப்பாணத்திலிருந்து செங்கோலோச்சி அரசாண்ட கனகசூரிய சிங்கையாரிய இராசாவின் இரண்டாங் குமாரர். இவரது சேட்டராகிய பரராசசேகரன் அரசாட்சி விநோதனய் ஊர்க் காரியங் களேப் பார்த்துவர, இவரோ வித்தியா விநோதராய்க் கலா முயற் சியிற் பிரீதியுற்று, வட தென் இந்திய இராச்சியங்களில் நின்று புலவர் பலரோடு சம்ஸ்கிருத கிரந்தங்களையும், தமிழ்க் கிரந்தங் களையும் அழைப்பித்து, நல்லூரிலே வித்துவ சபை ஒன்று ஸ்தாபித்தா ரன்றிச், சில கலா விஷயங்களின் பேரில் மதுரையில் இருந்த கல்விமான்களோடு உசாவுதற்காகச் சேதுபரியந்தம் போய் வந்தார். அங்கங்கே தங்கி இருக்கும்போது, பலர்க்குப் படிசம்பளங் கட்டி அரிய நூல்களை எழுதுவித்து யாழ்ப்பாணங் கொண்டுவந்து விருத்தி செய்தனர்,
இவரது தமயன் பரராசசேகரராசன் சபைக்கு அகஸ்தியர் புத்திரராகிய சித்தமுனியின் புத்திரர் சுபதிட்ட முனிவர் வந்து, அரசாட்சிக்குரித்தான பிற்கால தீர்க்கதரிசனங்கள் சில சொல்லிப் போயினர் என்று பரம்பரை உண்டு. இவர் செகராசசேகரம் என்னும் ஒர் அரிய வைத்திய நூலையன்றிச் சோதிட நூலும் ஒன்றை இயற்றினர். செகராசசேகரத்திலே சடு 0 0 விருத்தங்களுள. இவ் வைத்தியநூல் எம்மூர்ப் பகுதிகளிலே தற்காலபரியந்தம் புழங்கி வருகின்றது. இவர் இற்றைக்கு சி00 வருஷங்களின் முன் இருந்தார் எனலாம். சிங்கையாரியன் எனும் பட்டப்பேர் சுருங்கி இவரது நாமத்தோடு சேர்க்கப்பட்டதால் இவர்க்குச் சிங்கைச் செகராச சேகரர் என்று மறுநாமமுமுளது.
குறிப்பு "தமிழ் புளூராக்" செகராசசேகரனுக்குத் தனியிடம் அளிக்க
வில்லை; தாம் முன்னர் உதயதாரகையில் அச்சிட்ட யாழ்ப்பாண வைபவமாலைப் பகுதிகளின் அடிப்படையிலும் வட்டுக்கோட்டை
1. Journal of Oriental Reserch, Madras, Wol, . No, 2, April 1927.

Page 141
سی۔ 264 سست
V. V. சதாசிவப்பிள்ளை 1884ஆம் ஆண்டிற் பதிப்பித்த யாழ்ப்பாண வைபவமாலை முழுநூலின் உதவியுடனும் சதாசிவம்பிள்ளை தணியிடம் கொடுத்துள்ளார். செகராசசேகரன் 'சோதிடம், செகராசசேகரம் முதலிய சில நூல்களைச் செய்தான்" என்று யாழ்ப்பாண வைபவ மாலை கூறுகின்றது.
செகராசசேகரனும் பரராசசேகரனும் தம்பியுதமையனுமென யாழ்ப்பாண வைபவமாலை ஆசிரியர் எண்ணியுள்ளார். இவ்விரு பெயர் 8ளும் அரசுகட்டில் ஏறும்போது ஆரியச்சக்கரவர்த்திகள் பூண்ட பெயர்கள் என்பதை H. W. கொட்றிங்ரன் (oெdrington) எடுத்துக்காட்டிஞர். கனகசூரிய சிங்கையாரியன் ஆரும் செகராச சேகரன் எனவும் அவன் மகன் வரராசசேகரன் ஆரும் பரராச சேகரன் எனவும் சுவாமி ஞானப்பிரகாசர் யாழ்ப்பாண வைபவ விமர்சனத்தில் விளக்கியுள்ளார். எனவே செகராசசேகரன் என்பது ஒருவனுடைய இயற்பெயரன்று என்பது மனங்கொளத்தக்கது.
வைபவமாலை சோதிடம் எனவும், தீபகம் சோதிடநூல் எனவும் கூறுவது, செகராசசேகரமால் போலும். செகராசசேகரமாலையின்
சிறப்புப்பாயிரத்தின் ஈற்றுச்செய்யுள் மூலம், "இராமேசனருள் சோமனெனும் சுருதியோன்" நூலாசிரியர் என்பது புலகுைம். செகராசசேகரத்திற் செகராசசேகரன் போற்றப்படுவதால்2,
அந்நூல் செகராசசேகரன் எனும் சிம்மாசனப் பெயருடையோன் ஒருவன் காலத்தில் இயற்றப்பெற்றது என்று கருத இடமுண்டு. செகராசசேகரமாலையிற் பதின்மூன்று இடங்களிற் செகராசசேகரன் போற்றப்படுவதாலும் நூற் பெயராலும் அந்நூலும் செகராச சேகரன் எனும் சிம்மாசனப்பெயர் பூண்ட ஒருவன் காலத்தில் இயற்றப்பெற்றது என்பது புலனுகும். ஆயினும் இவ்விரு நூல் களும் செகராசசேகரன் பேர் பூண்டவர்களாக அறிஞராற் குறிக்கப் படுபவருள் இன்னர் காலத்தன என்று துணிதலரிது, சுவாமி ஞானப்பிரகாசர் செயவீரசிங்கையாரியனும் ஐந்தாம் செகராச சேகரன் என் ருர்; சு. நடேசபிள்ளை வரோதய சிங்கையாரியனும் மூன் மும் செகராசசேகரன் என்ருர் . "செயம் பெறு சிங்கைநாடன் செகராசசேகரன்' , 'சேவணி துவசன் சிங்கையெங் கோமான்
, a. பநாதன் ušů, 2ů užů. 1953, uši, 49
ஆ. சதாசிவம் (தொகு.); ஈழத்துத் தமிழ்க்கவிதைக் களஞ்சியம், 1966 பக். 19-20. Qadi, 6, 76,86, 117. 118, 144, 157, 158, 173, 204, 269, 270, 286. atsspúu sem saual citðisæIú, 1928, uä. 90, 91, 97, 110 a do Buna u avi, 1959. uš, 79-80 செகராசசேகர வைத்தியம், அங்காதியதம், செங் 5

- 265 -
செயசெகராச சேகரமன்" 1 எனும் தொடர்களிற் செயவீரசிங்கை யாரியனும் செகராசசேகரனையோ "மன்னர் மன்னு செகராசசேகர மன் மணவையாரிய வரோதயன்' எனும் தொடரில் வரோதய சிங்கையாரியளும் செகராசசேகரனையோ இனங்காண முடியுமா என்பது சிந்தித்தற்குரியது. "வரோதயன்' என்பது வரத்தாற் பிறந்தவன் எனும் பொருள் தருவது; பாண்டிக்கோவையிற் பல பாடல்களில் இடம்பெறுவது; இயற்பெயர் என ஐயுற மணவை ஆரிய' எனும் அடைமொழிகள் இடமளிப்பதாகத் தெரியவில்லை. கி. பி. 1310இல் அரங்கேற்றப்பெற்ற சரசோதிமாலைக்குப் பிற்பட்டது செகராசசேகரமாலை என்று இ. சி. இரகுநாதையர் 1942இல் வெளி வந்த செகராசசேகரமாலையுரைப் பதிப்பின் முகவுரையிற் காரணங் காட்டி விளக்கியுள்ளார். செகராசசேகரமாலையிற் பதினெட்டுப் பாடல் கொண்ட பாயிரம் நீங்கலாக, ஒன்பது படலங்களில் 284 செய்யுளுள. செகராசசேகரம் அந்தாதித் தொடையில் இயற்றப் பெற்றதென்று அந்நாற் செய்யுள் கூறியபோதும் செகராசசேகர வைத்தியம் எனும் பதிப்பிற் பற்பல இடங்களில் அந்தாதித்தொடை அற்றிருத்தலேக் காணலாம். எனவே பல செய்யுள்கள் மறைந்து போயின என்று கருதவேண்டியுள்ளது: சதாசிவம்பிள்ளை செகராச சேகர திதில் 1500 விருத்தமுள என்ருர், செகராசசேகர வைத்தியத் தில் ஏறக்குறைய 1576 செய்யுள் வரையுள. (பதிப்பின் பக்க எண்களும் பாடலெண்களும் பற்பல இடங்களிற் பிழைபட அச்சிடப்பெற்றுள் ளமையாற் பாடலெண் துணிதலரிதாகின்றது.) மேலும் செகராச சேகரத்தில் உட்பிரிவுகள் அமைந்திருந்தனவோ என்பதையும் முற்கிளந்த பதிப்புத் தெளிவாக்குவதாகக் கூறுவதற்கில்லை,
செகராசசேகரமாலை மூலத்தையும் பழைய உரையையும் வண்ணை வி. சபாபதிஐயர் சு:பகிருது இu) ஆனி மீ" (1902) யாழ்ப்பாணம் பூg பாஸ்கர யந்திரசாலையிற் பதிப்பித்தார். சந். இரகுநாதையர் பரிசோதித்த மூலத்தினை, அவர் மகன் ச. இ. சிவராமலிங்கையர் விசுவாவசு ஞ) ஆவணி மீ" (1905) கொக்குவில் சோதிடப்பிரகாச யந்திரசாலையிற் பதிப்பித்தார். இ. சி. இரதேநாதையர் புத்துரையுடன், செகராசசேகரமாலையைச் சித்தி சபானு டு புரட்டாதி மீ" (1942) கொக்குவில் சோதிடப்பிரகாச யந்திரசாலையிற் பதிப்பித்தார். செகராசசேகரத்தின் கிடைத்த பகுதிகளைச் செகராசசேகர வைத்தி யம் என்ற பெயரில் அச்சுவேலி ச. தம்பிமுத்துப்பிள்ளை அச்சுவேலி ஞானப்பிரகாச யந்திரசாலையில் 1932 இற் பதிப்பித்தார்.
சென்னை கலாரத்நாகரம் அச்சுக்கூடத்தில் 1887ஆம் ஆண்டு தக்ஷண கைலாசபுராணத்தைத் தம்தந்தை மு. கார்த்திகேயையரைக்
76 2. Gossgos eta 35 gudua), 158

Page 142
سیسہ 266 -------
கொண்டு பரிசோதித்துப் பதிப்பித்த காரைதீவு சிவசிதம்பரஐயர் அந்நூல் "யாழ்ப்பாணத்து நல்லூர் ஹ*வித்துவான் சிங்கைச் செகராசசேகரன்" பாடியதென்ருர், சிறப்புப்பாயிரமும், அதனை அடுத்த "தேவரும் புகழ்" எனும் செய்யுளும், பாயிரத்தில் இடம் பெறும் "பாரிலங்கு" எனும் பாடலும் அவர் கூற்றிற்கு ஆதாரங் களாம். ஆயினும், பருத்தித்துறை (தும்பளை கலாநிதியந்திரசாலையிற் கோணேசர் கல்வெட்டுடன் 1916ஆம் ஆண்டு தகதிணகைலாச புராணத்தைப் பதிப்பித்த புலோலி பொ. வைத்தியலிங்கதேசிகர் "பிரமயூரீ பண்டிதராசரருளிச் செய்த பூரீ தகழிணகைலாசபுராணம்" என்றர். இவர் பதிப்பில் முன்னர் கூறப்பட்ட சிறப்புப் பாயிரம் பல பேதங்களைப் பெறுவதையும் "தேவரும் புகழ்" எனும் பாடலுக்குப் பதிலாகக் "கவிராஜர்" என்பவரும் வேருெருவரும் பண்டிதராசரை ஆசிரியராகக் கூறும் இரு புதிய செய்யுள்களையும், "பாரிலங்கு" எனும் செய்யுளின் ஈற்றடி செகராசசேகரன நீக்கி வேறுருப் பெறுவதையும் காணலாம். இரு பதிப்பாசிரியரும், தாம் நூலாசிரியர்பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கிணங்கத் தகரின கைலாசபுராணத்தைப் பதிப்பித்துள்ளனர். இவர்களுக்குக் கிடைக்காத ஏட்டுப்பிரதிகள் கிடைக்கப்பெற்ருலன்றி நூலாசிரியர் பற்றித் தெளிவு ஏற்படுவதற்கில்லை;
தகதிணகைலாசபுராண ஆசிரியர் யாராயினும் அவர் செகராச சேகரன் ஒருவன் காலத்தவர் என்று கருத இடமுண்டு; இதற்கு நூலாசிரியர் பண்டிதராசர் என்று கூறும் வைத்தியலிங்கதேசிகர் பதிப்பிலே திருநகரச்சருக்கத்தில் இடம்பெறும் 107-112, 116 ஆகிய பாடல்கள் சான்ரும், இப்பாடல்கள் செகராசசேகரன் காலத்துச் சைவசமய நிலையை விதந்து கூறுவதையும் அவனை ஆக்கு வித்தோனுக்குவதையும் காண்க. இப்பாடல்கள் சிவசிதம்பரஐயர் பதிப்பில் இடம்பெழுதவை என் பது குறிப்பிடத்தக்கது. ஈண்டு குறிப்பிட்ட செகராசசேகரன் செயவீரசிங்கையாரியனும் ஐந்தாம் செகராசசேகரன் என்பர் சுவாமி ஞானப்பிரகாசர் 1; தக்ஷண கைலாசபுராணத்தின் ஆசிரியர் வரோதய சிங்கையாரியன் என்பது சு. நடேசபிள்ளை கருத்தாகும்.? இவ்வாறு கூறுவதற்கு இருவருக்கும் அகச்சான்றுகள் இருப்பதாகக் கூறுவதற்கில்லை.
கோணேசப்பெருமானையும் மாதுமையம்மையாரையும் போற்றும் திருகோணமலைத் தலபுராணமாகிய தகழிணகைலாசபுராணத்திற் காப்புச் செய்யுளும் பதினைந்து பாடல் கொண்ட பாயிரமும் நீங்கலாக ஏழு சருக்கமுள. இரு பதிப்புகளிலும் முதலாறு சருக்கங்களிலும்
1. upüu 18r AuG Dia, 1928, 1, 97 2. Ribê fui all Roi, 1959, uã, 79-80

س- 267 س
501 பாடலுள; ஏழாம் திருநகரச் சருக்கத்தில் 1887ஆம் ஆண்டுப் பதிப்பிலுள்ள 116 பாடல்களில் 15ஆம் செய்யுள்முதல் 18ஆம் செய்யுள் வரை 1916ஆம் ஆண்டுப் பதிப்பிலில்லை; 1916ஆம் ஆண்டுப் பகிப்பிலுள்ள 119 பாடல்களில் 107ஆம் செய்யுள் முதல் 112ஆம் செய்யுள் வரையிலான பாடல்களும் 116ஆம் பாடலும் 1887ஆம் ஆண்டுப் பதிப்பிலில்லை.
தகதிணகைலாச புராணத்திற்குச் சிறப்புப்பாயிரம் பாடிய கவிராசர் தாம், கோணேசர் கல்வெட்டு இயற்றிய திருகோணமலை கவிராசர் (கவிராஜவரோதயன் என்ற கருத்திற்கு எவ்விதமான ஆதாரமுமில்லை. சிறப்புப்பெயர் போலமையும் கவிராசர் எனும் பெயரின் அடிப்படையில் இருவரையும் ஒருவராகக் கொள்வது பொருத்தமென்பதற்கில்லை. புலோலி பொ. வைத்தியலிங்கதேசிகரும் திருகோணமலை வே. அகிலேசபிள்ளையும் கோணேசர் கல்வெட்டைப் பதிப்பித்துள்ளனர்.
வையாபாடல் இயற்றிய 'வையாவென விசைக்கு நாதன்" செகராசசேகரனின் அவைப்புலவர் என்று, யாழ்ப்பாண வைபவ மாலையில் இடம்பெறும் "ஒண்ணலங்கொள்' எனும் சிறப்புப்பாயிரச் செய்யுளும் வையாபாடல் ஏட்டுப்பிரதிகளும் அச்சுப்பதிப்புகளும் கூறுவன. ஆயினும் புலியூரந்தாதிச் சிறப்புப்பாயிரச் செய்யுள் "நெய்யார்ந்த வாட்கைப் பரராசசேகரன் பேர்நிறுவியவராக வையாவைக் குறிப்பிடுகின்றது. இக் கூற்று வையாபாடலாலும் ஆதரிக்கப்படுகின்றது என்பது 81 முதல் 101 வரையிலான பாடல்கள் மூலம் தெளிவாம். மேலும் இவர் பரராசசேகரன் உலா, பரராச சேகரன் இராசமுறை என்பனவற்றையும் பாடியவர் என்ற கருத்தும் கவனிக்கத்தக்கது. வையாபா ல் பரராசசேகரன், தன் இளவல் செகராசசேகரனை யாழ்ப்பாணத்திலும் (செய் 96), இளவல் சங்கி லியை வாவெட்டியிலும் (செய். 99) இருக்கச் செய்து, தான் முள்ளிய வளையில் வாழ்ந்தான் என்று கூறுகின்றது (செய். 96, 97, 99) கனகசூரியசிங்கையாரியனின் மக்கள் பரராசசேகரன், செகராச சேகரன் என்ற யாழ்ப்பாண வைபவ மாலயின் பிழையான கூற்றுக்கு வையாபாடல் strfreðruntralsos R'•ds () ast svor avirtb. ""gypruh செகராசசேகரன்" ஆகிய சங்கிலி, கனகசூரிய சிங்கையாரியனின் மகனன ஆழும் பரராசசேகரனின் தம்பியன்று: எதிர்மன்னசிங்கை யாரியனும் 'ஒன்பதாம் பரராசசேகரஃன" அடுத்தாண்ட சங்கிலி குமாரனும் அவனுடைய தம்பியன் n. இம்முரண்பாடுகளால் வையாபாடல் தோன்றிய காலம் பிற்பட்டது என்பது தெளிவாகும், செட்டிகுளத்திற் பறங்கியர் ஆட்சியை வையாபாடல் குறிப்பிடுவதால்
1. வையாபாடல், 7.

Page 143
۱۰ ۔ سس۔ 268 -۔
(செய். 33) அதன் காலம் கி. பி. பதினேழாம் நூற்ருண்டிற்கு முற்பட்டதெனல் பொருத்தமின்று. வையாபாடல் ஆசிரியர் மல்லி காவனத்துறை தேவனை வணங்குவதாலும், வன்னியர் வரலாற்றிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தாலும் அவரைச் சித்தன்கேணியைச் சேர்ந்தவர் என்று ஈழமண்டலப்புலவர் எழுதிய ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையின் கூற்று பரிசீலனைக்குரியதாகின்றது. 104 பாடல்கொண்ட வையாபாடலை J. W. அருட்பிரகாசம் 1921ஆம் ஆண்டிலும், இ. து" சிவானந்தன் 1922ஆம் ஆண்டிலும் பதிப்பித்தனர். வையாபாடலின் வசனமாம் 'வையா எனும் யாழ்ப்பாண நாட்டு வளப்பம்" எனும் நூலைச் சுவாமி ஞானப்பிரகாசர் 1921 இலே பதிப்பித்தனர்.
செகராசசேகரன் மீது பாடப்பெற்ற இரு பாடல்களை மு. இராக விையங்கார் பெருந்தொகையிலே சேர்த்துள்ளார்.
செங்குன்றுார்க்கிழார். - Chengkoontoorkilar. மதுரைக் கடைச்சங்கப் புலவர் சக ன்மரில் ஒருவராம் இவர் தமிழிற் பிரபலம் பெற்ருராதலால் "மதுரைத் தமிழாசிரியர்* என்னுஞ் சிறப்புப்பெயர் இவர் நாமத்தோடு சேர்த்துச் சொல்லப் படுகின்றது. வள்ளுவர் நூற்கு இவர் சொன்ன புகழ்ப்பா வருமாறு:-
* புலவர் திருவள் ரூவரன்றிப் பூமேற்
சில வர் புலவரெனச் செப்பல் - நிலவு பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும் கறங்கிருண்மா லைக்கும் பேர்."
குறிப் t CLL LAL LLLLSS SLLLLL LSLAL0 LSLCLLCCLLSLSLLSLLSLLAAAAALLAALLAAAALL LLLLAALLLLLAASASAAALLLLSALAqAASASALALALLSSLS AA SAAALSLALASS SAqMSMSALTTSeeSMqTTTTTMkLS
காசிச்செட்டியவர்கள் தந்தனவற்றைச் சதாசிவம்பிள்ளை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இப்பெயரினர் பண்டைய புலவர் பட்டியலில் இடம்பெறவில்லை. அக்காரக்கனி நச்சுமஞர் குறிப்புக் 岛n Görö。
செயலூர்க் கொடுஞ்செங்கண்ணணுர். -
Ch. Chengkannanar. இவரும் முன் சொன்ன சங்கப் புலவர் சக பேருள் ஒருவர். இவர் வள்ளுவர் நூற்குச் சிறப்புப் பாயிரமாய்ச் சொன்ன வெண்பா வருமாறு:
1. பாடலெண் 1212, 1213

- 269 -
"வேதப் பொருளை விரகால் விரித்துலகோர் ஒதத் தமிழா லுரைசெய்தார் - ஆதலால் உள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு.”*
- രൂ காசிச்செட்டியவர்கள் தந்தனவற்றையே சதாசிவம்பிள்ளை வழிமொழிந்துள்ளார். செல்லூர்க் கோசிகன் கண்ணனர் அல்லது செயலூர்க் கோசங் கண்ணனர் எனும் பெயர் அகநானூறு 66ஆம் பாடலின் ஆசிரியராகக் குறிக்கப்படுகின்றது. அக்காரக்கனி நச்சுமனர் குறிப்புக் காண்க.
Cểgẳ8ựpmữ. - Chekkilar.
இவர் தொண்டைமண்டலத்திலே, புலியூர்க் கோட்டம் என்னும் பகுதியிலே, குன்றத்தூர்க் கிராமத்திலே, வேளாளர் குலத்திலே சேக்கிழார் மரபிலே, செனணஞ்செய்தவர். இவர்க்கு அருண்மொPத் தேவர் எனும் அபிதானம் ஒன்றுளது. தென்மொழியிற் தேர்ச்சி பெற்ருேராய் அதிவிவேகியும் புலவருமான இவர்க்குப் பாலருவாயர் என்னும் ஒருவர் கனிட்டர். சேக்கிழார் மரபிற் பிறந்து அம் மரபை விளங்கச்செய்த காரணத்தாற் சேக்கிழார் என்னும் மறு நாமந் தாங்கிய இந்த அருண்மொழித் தேவரது புகழ் அநபாயசோழ ராசன் காதிலே எட்டியபோது, அவன் இவரை அழைப்பித்துத் தனக்குச் சிரேஷ்ட அமைச்சராக்கி, உத்தம சோழப்பல்லவர் என்னு நாமதேயத்தை இவர்க்கு ஈந்தான். இவர் அமைச்சியல் நடாத்தச் செவ்வே அரசுபுரிந்து ஒழுகுநாளிற், பிரசைகள் அநேகரைப்போலவே தம் அரசனும் ஆருக சமயப் பாடலாகிய சீவக சிந்தாமணிமேல் அதி மானமுஞ் சிரத்தையுமுற்று, அதை மெய்நூலென வாசித்தும் கேட்டும் விநோதம் பண்ணிக்கொண்டிருப்பதைக் கண்டு மனசு பொழுராகி, ஒருநாள் அரசனை நோக்கி, ஒ இராசேந்திரரே, நீர் மத பேதிகளும் நமது சமயத்தை நிதிப்பவர்களுமாகிய சமண மதத்தாருடைய நூலிலே பிரீதி கொள்வதும் அதைக் கொண்டாடு வதும் யுக்தமன்று என ஆட்சேபிக்க, அரசன் இவர்மேற் சினங் கொள்ளாது இவரது பேச்சை அன்போடு சாந்தமாய் அங்கீகரித்து இவரை நோக்கி ஓ! மந்திரி சிரேட்டரே, இச் சிந்தாமணியினின்றும் உத்தமமான ஓர் சைவ நூல் கூறுவீரா என இவர் உத்தரமாய்; எம்
1 நூ. வா. அநபயசோழராசன்

Page 144
سس۔ 270 ۔۔۔
அரசரே, சுந்தரமூர்த்தி நாயனர் திருத்தொண்டர் சரித்திரத்தைப் பதினெரு பாடலிற் சொல்லி அதற்குத் திருத்தொண்டத்தொகை என்று பெயர் தந்தார். அப் பதிகத்தைப் பொல்லாப்பிள்ளையார் மாணுக்கராகிய நம்பியாண்டார் நம்பி கட்டளைக் கலித்துறைச் செய்யுளில் அந்தாதியாய்ப் பாடி இருக்கின்றனர். அத் திருத் தொண்டர் அந்தாதி நூறு பாட்டும் மிக மாட்சிமையும் அழகும் உற்றன என்று கூற, அவன் கேட்டு உவப்புற அதைப் படித்துப் பொருள் சொல்லிக் காட்டினர்.
அரசன் அதன்மேல் மிக மன மகிழ்ந்து குழைந்து இது மிகச் சுருக்கமாய் இருப்பதால், இதனை நீர் விரித்துக் காவியமாய்ச் செய்குதிரென, இவர் அக்கேள்வியை மருது சிதம்பரஞ் சென்று. அங்கே ஒரு மடத்தைத் தமக்கு உறைவிடமாக்கிச் சில காலத்தால் அதைப் பாடிமுடித்தனர். "உலகெலா முணர்ந் தோதற் கரியவன்" என்றதை முதலாக வைத்துப் பாடுக என்று அசரீரி வாக்கிலே உத்தரவு பிறக்கவே அவ்வண்ணம் பாடத்தொடங்கி முடித்தனர் என்ப, புராணம் முடிந்த செய்தி காதில் எட்டியவுடன், அரசன் தானே அவ்விடஞ் சென்று, அங்கு கூடிய காவிய விற்பத்திமான்கள், இலக்கண வித்துவான்களாதியர் சபையில் அதை அரங்கேற்றி, அப்பாடல் வரைந்த முறையையும், அதனைப் பாடிய இப்புலவரையும் யானைமேல் ஏற்றித், தானும் உடன் ஏறி இவர்க்குச் சாமரம் இரட்டி வீதி வலம் வந்து, அப் புராணத்தோடு இம் மந்திரியாரை மிக்க கணிசப்படுத்தித், தொண்டர் புராணம் பாடிய காரணத்தாற் தொண்டர் சீர் பரவுவார் எனும் பெயரை இவர்க்கு இட்டனர்.
திருத்தொண்டர் புராணம் எனப்படும் இப் பெரியபுராணம் எஉ காண்டத்தில் கBBB செய்யுட்கொண்டது, சோழ ராசன் இப் புராணத்தைச் செப்பேட்டில் வரைவித்தனன் என்ப, கொற்றவன் குடியிலே இருந்த உமாபதி சிவாசா ரியர் இப் புராணத்தைச் சுருக்கி எo செய்யுளாகப் பாடித் திருத்தொண்டர் புராணசாரம் என்று அதற்குப் பெயர் வழங்கினர். யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் அதனைக் கத்திய ரூபமாக்கி அச்சிடுவித்தார். இக் காவியம் அரங்கேற்றமான பின் சேக்கிழார் மந்திரித்துவத்தை விட்டுச் சிதம் பாத்திற்றனே தங்கித் துறவறம் பூண்டிருந்து இகவாழ்வை ஒரு பனt . இவர் மந்திராதிகாரத்தை விட்டுவிடவே இவர்க்குத் தம் பியாகிய பாலருவாயரை அரசன் அழைத்து முதன் மந்திரியாக்கித் கொள்.ான் என்னு நாமத்தை அவர்க்கு வழங்கினன். இச் சேக்கி புது சரிதத்தை உமாபதிசிவாசாரியர் புராணமாய்ப் பாடினர். துவது பாடல் மாதிரிக்குப் பெரியபுராணக் காப்புச் செய்யுளை ()a oli ly Patty autb.

سی۔ 271 --سست
"உலக லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதிய னம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்."
குறிப்பு - --
காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தைச் சிற்சில புதிய செய்தி களுடன் சதாசிவம்பிள்ளை மொழிபெயர்த்து அளித்துள்ளார். சேக்கிழார் புராணம் அல்லது திருத்தொண்டர் புராண வரலாறு சேக்கிழார் வரலாற்றிற்கு மூல நூலாக அமைகின்றது. இதனைக் கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியர் இயற்றியதாகக் கூறல் மரபு.
சேக்கிழார் முதலாம் இராஜேந்திரன் (1012-1044) காலத்தவர் என்றும் இரண்டாம் இராஜராஜன் (1146-1173) காலத்தவர் என்றும் கூறுவாருக்கு ஆதாரம் இருப்பதாகக் கூறுவதற்கில்லை. தம் காலத்து மன்னனைக் குலோத்துங்க சோழன் என்று சேக்கிழாரே கூறியுள்ளார்?. குலோத்துங்கசோழன் பெயர் பூண்ட மூவரில் ஒவ் வொருவரையும் வெவ்வேறு அறிஞர் சேக்கிழார் காலத்து மன்ன ணுகக் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும் குலோத்துங்கனை இனங்காணச் சேக்கிழார் இரு முக்கிய குறிப்புக்களை அளித்துள்ளார். அவை அநபாயன் எனும் சிறப்புப்பெயரும் பேரம்பலம் பொன்வேய்ந்தமையு மாம். சேக்கிழார் பத்திடங்களில் அனபாயன் எனக் குறிப்பிடும் சோழன் இரண்டாம் குலோத்துங்கசோழன் (1133-1150) என்று கருத இடமுண்டு. அனபாயன் எனும் சிறப்புப்பெயர் இரண்டாம் குலோத்துங்கனுக்கு இருந்தமை குலோத்துங்க சோழனுலாவாலும் சாசனங்களாலும் உறுதிப்படுகின்றது. இச்சிறப்புப்பெயர் முதலாம் குலோத்துங்கனுக்கோ (1070-1122) அல்லது மூன்றம் குலோத் துங்கனுக்கோ (1178-1218) இருந்ததாகக் கூறுவதற்குச் சான்றில்லை அனபாயன் பேரம்பலம் பொன்வேய்ந்தவன் எனும் சேக்கிழார் கூற்று இரண்டாம் குலோத்துங்கன் திருப்பணியாகக் குலோத்துங்கசோழ னுலாவாலும் இராசராசசோழனுலாவாலும் சாசனங்களாலும் உறுதிப்படுகின்றது. எனவே சேக்கிழார் பெரியபுராணத்தை இரண்டாம் குலோத்துங்கன் (1133-1150) காலத்திற் பாடினர் எனலாம்.
1. உமாபதி சிவசாரியர் குறிப்புக் காண்க
2. பெரியபுராணம். சண்டேகரநாயர்ை புராணம், 8
3. திருத்தொண்டர் புராணம், சைவசித்தாந்த மகாசமசப்பதிப்பு, 1950, செய். 8 , 22, 85, 98,
404, 552, 1218, 2750, 3954, 4215
4. LDD. 3513. In 163flä& 2 is Quâu JiaOT 34Jüää, 1960, uá. 24
5. QufluuITüb, unüb, 8.
6. கண்ணிகள் 46-48; கண்ணிகன் 30-34; பெரியபுராண ஆராய்ச்சி, பக், 23

Page 145
- 272 -
சோணுட்டுத் திருமழபாடி சிவாலயத்தில் இராஜராஜதேவன் என்ற சோழனின் பதினேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிற் குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனுன உத்தம சோழப்பல்லவராயன் என்பவர் குறிப்பிடப்படுகிருர் என்பதையும் அவர் பெரியபுராணத்தின் ஆசிரியர்தாம் என்றும் மு. இராக வையங்கார் எடுத்துக்காட்டியுள்ளார். ஈண்டு குறிப்பிடப்படும் சோழன் இரண்டாம் இராஜராஜன் (1146-1173) ஆயின் சேக்கிழார் 1163க்குப் பின்னரும் வாழ்ந்தவராவர். சேக்கிழார் புராணம் பெரியபுராணத்தின் இரு காண்டங்களிலும் பதின்மூன்று சருக்கங் களும் 4253 பாடல்களுமுள என்று கூறும் *. பெரும்பான்மையான பெரியபுராணப் பதிப்புகள் 4286 பாடலுடையனவாக வெளி வந்துள்ளன. மேலும் பல பாடல்கள் ஏட்டுச்சுவடிகளிற் காணப் பெறுவதாகக் கூறுவர்.
பெரியபுராணத்தைத் திருக்குறிப்புத் தொண்டர்புராணம் வரை 1843இல் மழவை மகா லிங்கையர் பதிப்பித்து வெளியிட்டனர். காஞ்சிபுரம் மகாவித்துவான் கோ. சபாபதி முதலியார் 1859, 1870 ஆண்டுகளிற் பெரியபுராணம் மூலம் முழுவதையும் இருமுறை பதிப் பித்தனர். சிதம்பரம் உபாத்தியாயர் பே. இராமலிங்கம்பிள்ளை 1879இலும், நல்லூர் க. சதாசிவப்பிள்ளை 1884இலும், சென்னை சைவசித்தாந்த மகாசமாசத்தினர் 1934 இலும், திருப்பனந்தாள் காசி மடத்தினர் 1964இலும் பெரியபுராண மூலத்தினை வெளியிட்
6 I -
மழவை மகாலிங்கையர் பெரியபுராணத்தின் பகுதிக்கு முதன் முதலிற் பொழிப்புரை கண்டனர். திருவண்ணுமலையாதீன வித்துவான் யாழ்ப்பாணம் ஆறுமுகத்தம்பிரான் ஏயர்கோன் கலிக்காமநாயனர் புராணம் 234ஆம் செய்யுள்வரை பெரியபுராணத்திற்கு உரை யெழுதியுள்ளார். இவருரையின் முற்பகுதி சென்னை ஜீவரக்ஷா மிர்த அச்சுக்கூடத்திற் பார்த்திப டு மேடரவியில் (1885) அச்சிடப்பெற் றது, இவருரையின் பிற்பகுதி பொம்மபுரம் சிவஞான பாலையதேசிகர் ஆதீனம் சிதம்பரம் இராமலிங்கசுவாமிகள் முற்றுவித்த உரையுடன் சென்னை பூரீ நிகேதன அச்சுக்கூடத்திற் பையூர்க்கோட்டம் பெரு வாயில் சுந்தரமுதலியார் மகன் கிருஷ்ணசாமி முதலியாரால் விளம்பி (.) (1898) பதிப்பிக்கப்பெற்றது. சென்னை சுப்பராயலு நாயகரும் ( lயபுராணத்திற்குப் பொழிப்புரை கண்டுள்ளார். காஞ்சி ஆலால |hநuhபிள்ளை பெரியபுராணத்தின் சில சருக்கங்கங்களுக்கு உரை
1. und als das süb, 1961, uä. 71–7 l, 944), S.

- 273 -
எழுதியுள்ளார்: திருவாரூர் வி. கலியாணசுந்தர முதலியார் (திரு வி. க.) பெரியபுராணத்திற்கு 1910 இலே தந்த உரை 1934இல் மீண்டும் திருத்தமுடன் வெளிவந்தது. பெரியபுராணத்திற்கு C. K. சுப்பிரமணிய முதலியார் விரிவான உரை எழுதி 1937 முதற் பகுதி பகுதியாக வெளியிட்டனர்.
பெரியபுராணத்தைச் சங்கதத்திற் கூற எழுந்தவை அகத்திய பக்த விலாசமும் உபமன்னியு பக்த விலாசமுமாம். கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியர் பெரியபுராணத்தின் சாரத்தினைத் திருத் தொண்டர் புராணசாரமாகத் தந்துள்ளார். வையைச்சேரி இராமசாமி சிவன் பெரியபுராணக் கீர்த்தனம் பாடியுள்ளார். ஆறுமுகநாவலர், காஞ்சிபுரம் மகாவித்துவான் கோ. சபாபதி முதலியார், தொழுவூர் வேலாயுத முதலியார், திருவாரூர் வி. கலியாணசுந்தரமுதலியார் (திரு. வி. க.) முதலியோர் பெரிய புராணத்தை வசனமாக அளித்துள்ளனர். நாவலரவர்களின் திருத் தொண்டர் புராணம் (வசனம்) யாழ்ப்பாணம் வித்தியா நுபாலன யந்திரசாலையிற் பரிதாபிளுல சித்திரை மீ" (1852) பதிப்பிக்கப் பெற்றது. நாவலரவர்களின் பெரியபுராண வசனத்தை ஊ, புஷ்பரதச் செட்டியாரும் வேறுசிலரும் நாவலரவர்களின் பெயரின்றியே பதிப் பித்துள்ளனர். புஷ்பரதச் செட்டியார் பதிப்பு 1864இல் வெளி வநதது. திரு. வி. க. வின் நாயன்மார் வரலாறு 1937இல் வெளி வந்தது. அண்மையிற் திருப்பனந்தாள் காசிமடத்தினர் திருத் தொண்டர்புராண உரைநடை வெளியிட்டுள்ளனர். ஆறுமுகநாவலர் எழுதிய பெரியபுராண சூசனம் முற்றுப்பெறவில்லை என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
திருத்தொண்டர் புராண வரலாரும் சேக்கிழார் புராணமும் திரிசிரபுரம் மீனட்சிசுந்தரம்பிள்ளை பாடிய சேக்கிழார் பிள்ளைத்தமிழும் சேக்கிழார் பெருமை கூறுவன.
Gas 5g5(SDữ. -- Chenthanar.
இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த அரிசில் ஆற்றங்கரையிலுள்ள அம்பர் 2 ஊரிற பிறந்த பிராமணர், தென்மொழித் தமிழிலும் வடமொழி ஆரியத்திலும் வல்லவராதலால் இவர்க்கு உபயகவி எனு நாமமுளது. தச நிகண்டுள் ஒன்முகிய திவாகரம் பாடுவித்த
1. F. u. Gruff 2. S. , u. 91 tiu ô
Lurri - 18

Page 146
- 274 -
வித்துவசிரேட்டர் இவரே. இவரே அதைப் பாடினர் எனச் சிலர் பேசி இருக்கின் ருர், அந்த எண்ணம் தவறு என்றே எண்ணுகிருேம். திவாகரம் இவர் பாடியதல்ல. இவராற் பாடுவிக்கப்பட்டதாதலால், இவர் நாமதேயப்படி சேந்தன் திவாகரம் எனும் பெயரியது என்று உத்தேசித்தல் வேண்டும். உ.உ.அசு சூத்திரங்களுள்ள அத் திவாகரஞ் செய்தார். "செங்கதிர் வரத்திற் ருேன்றுந் திவாகரர்" என்று மண்டலபுருடர் சூடாமணி நிகண்டிற் பாடிஇருப்பதாற் திவாகரர் என்பவராய் இருத்தல் வேண்டும். மண்டலபுருடர் பதினருஞ் சதாப் தத்திலிருந்தவர் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதால், இச் சேந்தனர் அவர்க்கு முன் இருந்தவர் என்று ஒப்புக்கொள்ளவேண்டும்: திவாகரர் ஓர்போது இச் சேந்தனுர்க்கு நன்மாணக்கராயிருக்கலாம்.
குறிப்பு S^____
காசிச்செட்டியவர்கள் திவாகரத்தின் ஆசிரியர் சேந்தரூர் என்று கூறிய கருத்தை மறுத்து, அவர் தந்த ஏனைய செய்திகளைச் சதாசிவம் பிள்ளை ஆதரித்தெழுதியுள்ளார். சோணுட்டு அரிசிலாற்றங்கரையி லுள்ள அம்பர் எனுமூரினணுன அருவந்தை சேந்தன் என்பவன் திவாகரரை ஆதரித்துத் தன் பெயரை நிறுத்தியுள்ளான். சேந்தன் திவாகரரின் ஆசிரியராகலாம் என்ற கருத்திற்கு ஆதாரமில்லை. திவாகரர் காலத்துச் சேந்தனின் முன்னேஞன அருவந்தையைக் கல்லாடனர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் கூறும் சேந்தனரும் 2 நம்பியாண்டார் நம்பி கூறும் பறைச்சேந்தனும் ஒருவரென்று கருத இடமுண்டு. பட்டினத்தடிகளின் சீடரான சேந்தனர் "மத்தளை தயிருண்டானும்" எனும் பட்டினத்தடிகள் பாடியதாக வழங்கும் செய்யுள் மூலம் "நாங்கூர்ச் சேந்தன்” என்பது தெளிவாகும். ஒன்பதாம் திருமுறையில் இடம்பெறும் திருவிழிமிழலை, திருவாவடு துறை, திருவிடைக்கழி எனும் மூன்று திருவிசைப்பாப் பதிகங்களையும் திருப்பல்லாண்டையும் பாடிய சேந்தனர் என்பவர் செப்புறைச் சேந்தனர் என்பது அவர்தம் வாக்காற் புலணுகும் *. பறைச்சேந் தனையும் நாங்கூர்ச் சேந்தனையும் செப்புறைச் சேந்தனையும் ஒருவராகக் கொண்டு பட்டினத்துப்பிள்ளையார் புராணம், தொழுவூர் வேலாயுத முதலியாரின் திருவெண்காடர் சரித்திரம், தண்டபாணி சுவாமி களின் புலவர் புராணம் ஆகியன கதை கூறுவன.
ιιρό, 185
(Á A was ng i hii." 53 4ே1 நிருப்பண்ணியர் விருத்தம், 26 திருவ படக் கழித் திருவிசைப்பா, 11 தீநப்பல்லாண்டு, 13

- 275 -
து. அ. கோபிநாதராயர், முதலாம் இராஜராஜன் காலத்திலே திருவிழிமிழலைக் கோயிலில் வெட்டப்பட்ட கல்வெட்டின் அடிப் படையிலே, திருமாளிகைத்தேவரும் சேந்தனரும் ஒருவரே என்று கருதினர். மு. இராகவையங்கார் சிவஞானியும் திருமாளிகைத் தேவர் என்று வழங்கப்பெற்றவருமான ஐயந்தன் என்ற பெரியாரே, திருவிசைப்பாவிற சேந்தனர் எனவும் திருமாளிகைத்தேவர் எனவும் வழங்கப்படுகின்றர் என்ற கோபிநாதராயரின் கருத்தை வற்புறுத்து வதற்காகத் தரும் காரணங்கள் *, இருவரும் ஒருவரல்லர் என்ற வழக்கினை மாற்றவேண்டிய நிலைமையை உருவாக்கியுள்ளன என்பதற்கில்லை. திருமாளிகைத்தேவர் காலம் முதலாம் இராஜ ராஜனுக்கு (985-1014) முற்பட்டதாதல் சாலும். ஏனெனில், இராஜ ராஜன் கட்டிய தஞ்சைப் பெருங்கோயில் தனிச்சேரிப் பெண்டுகளில் ஒருத்தியின் பெயரான "நீறணி பவளக்குன்றம்" என்பது? திருமாளிகைத் தேவரின் கோயில் பற்றிய முதற் பதிகத்தின் ஆரும் பாடலில் இடம் பெறுவதாகும். திவாகரர் குறிப்புக் காண்க.
Gs-JLDIT6öT Gu(5id T6öT. – Cheramanperuman.
இவர் செங்கோலோச்சி அரசு புரிந்த ஓர் அரசரன்றித் தெய்வ பத்திக்கு இருப்பிடமான ஓர் சற்புருடராயும், வாணி தம் நாவிற் பதியப்பெற்றமையாற் சிறந்த வித்துவ சிரேட்டராயும் இருந்தார். சிலர் இவரைச் சங்கரநாத சேரராசாவின் புத்திரர் என்றும், வேறு சிலர் செங்கோற் பொறையன் என்னுஞ் சேரன் புத்திரர் என்றுஞ் சொல்வர். பெரிய புராணச் சரிதப்படி இவர் திருவஞ்சைக்களத்திலே, சேரர் குடியிலே பிறந்தவர். இவர்க்கு பெருமாக்கோதையார் * என்னும் ஓர் நாமதேயம் உளது. பாலியப்பிராயத்திலே இவர் தவ வேடம் பூண்டு திருவஞ்சைக் களத்தில் உள்ள சிவாலயத்தில் வசித்துக் கோயிற்றெண் டு செய்து வருங்காலத்திற் செங்கோற் பொறையன் சிம்மாசனத்தைத் துறந்து தபோவனமடைந்தனணுதலில், மந்திரிமார் இவரிடஞ் சென்று, நீர் நகர்க்கு வந்து முடிகவித்து நம் நாட்டை ஆளவேணடும் என்று வேண்ட இவர் அவ் வேண்டுகோளுக்கு இசைந்து இராசமாபுரஞ் சென்று சிம்மாசன பதியாய்ச் செங்கோல் ஒச்சினர். இவர் கலாபிமானியாதலால் இராச சபையைப் புலவர் சபையாக்கிப் புலவர்க்கு வெகுமதி ஈந்து, அவரைச் சம்மானம் பண்ணியும், சைவ சமயத்திற் பழுத்தவராதலாற் சிவஸ்தல தரிசனஞ்
1. செந்தமிழ், தொகுதி 3 2. சாசனத் தமிழ்க்கவி சரிதம், 1961, பக். 36 3. S. I. I, Vo. I. No. 66 4. து. பா. கொடுங்கோளுரீலே 5. நூ. பா. மக்கோதையர்

Page 147
- 276 -
செய்தும், செல்வத்தைப் பொருட்பண்ணுதவர் ஆதலாற் சிவவேடம் பூண்டோர்க்குத் திரவியங்களை அள்ளி வாரி வெள்ளம்போல் இறைத்துங் காலசுேஷபம் பண்ணிவந்தார். சமயகுரவர் நான்குபேரில் ஒருவரான சுந்தரமூர்த்திக்கு இவர் பிரியாத் தோழராகி அவருடன் கூடித் தலதரிசனஞ் செய்தார்.
இவர் இராச பட்டம் பெற்று நகர் வலம் போகும்போது உவர்ப்பொதி சுமத்துபோன வண்ணுன் ஒருவனது மேனியில் மழைபட்டு நனைந்திருந்த உவர்மண்ணைக் கண்டு, விபூதி தரித்த சிவதொண்டர் இவர் என நினைந்து, சட்டென யானையால் இறங்கி ஓடி விழுந்து அவனை நமஸ்கரிக்க, அவன் கலங்கி "அடியேன் அடி வண்ணுன்" என, இவர் "அடியேன் அடிச் சேரன்", தேவரீர் திருநீற்று வேடத்தை நினைப்பூட்டினிர், போய்வாரும் என்றனராம். இவ் அரசர் அதி பக்திமான் என்று புகழ்பெற்றுப், புளியோடும் பழமும் என உலகத் தோடொழுகி, ஆரியக் கூத்தாடினுங் காரியத்தின்மேற் கண் என்ருற் போல அரசராயிருந்தும் வித்தாண்மையை மறவாது, திருவாரூர் மும்மணிக்கோவை, பொன்வண்ணத்தந்தாதி, திருவந்தாதி, திருக் கைலாச ஞானவுலா என்னு நான்கு பாடல்களை இயற்றினர் இவற்றுட் பொன்வண்ணத் தந்தாதியைச் சிதம்பரத்திலும், மும்மணிக் கோவையைத் திருவாரூரிலும், திருவந்தாதியை வேதாரணியத்திலும், கைலாசவுலாவைக் கைலைமலையிலும் பாடினர் என்பர். சுந்தரமூர்த்தி வெள்ளை யானைமீது கைலை செல்ல இவர் வெள்ளைக் குதிரைமீது உடன் சென்ருர் என்றும், சிவகணங்களுக்குத் தலைவராய் இருக்கிருர் என்றும் புராணங்கள் கூறும். சோழ பூர்வ பட்டையத்திற் காண் கிறபடி, இவர் கலியப்தம் B, கடுஅ ற் பட்டாபிஷேகம் பெற்ருர் என்று இருப்பதால் இவர் காலம் கி. பி. சநஎ ம் (u) வரையில் இருக்கலாம். இவர் தனித்தொண்டர் அறுபத்து மூவருள் ஒருவர் மிருகபாஷை முதலாய்ச் சர்வபாஷைகளும் இவர்க்குத் தெரியும் என்பது
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தோடு வண்ணுனைக் கும்பிட்ட கதையையும் திருவந்தாதியென நான்காவதாக ஒரு நூலையும் சதாசிவம்பிள்ளை புதியனவாகத் தருகிருர். பெரியபுராணத்தின்மூலம் தாம் முன்னர் பாடிய பொன்வண்ணத்தந்தாதியையே கழறிற் றறிவார் மீண்டும் திருமறைக்காட்டிலோதினர் என்பது புலப் படுதலின் சதாசிவம்பிள்ளை வேதாரணியத்திலே திருவந்தாதி ஒன்று புதிதாகப் பாடப்பெற்றது எனல் பொருந்தாது. சேரமான் பெருமாளுக்குக் காசிச்செட்டியவர்களும் சதாசிவம்பிள்ளையும் தந்த காலவரையறை பொருந்தாது என்பது சுந்தரமூர்த்தி குறிப்பாற்
1. கழறிற்றறிவர் புராணம், 87

مسس۔ 277 سس۔
புலனம். இவர் பாடிய உலா, அந்தாதி, மும்மணிக்கோவை ஆகியன பதினேராம் திருமுறையில் இடம்பெறுவன. இத்திருமுறையின் முதற் பதிப்பு விபரம் ஐயடிகள் காடவர்கோன் குறிப்பிலே தரப்பட்டது. சேரமான் பெருமாள் பாடிய மூன்று பிரபந்தங்களுக்கும் திருமயிலை சண்முகம்பிள்ளை உரைகண்டுள்ளார்.
GoGo$JTu Qpg56ớìumữ. - Chenathiraya Mudeliar.
யாழ்ப்பாணத்திலே இலக்கண இலக்கியங்களிற் தேற்றம் பெற்றிருந்த புலவர் பலருள் இவர் சிரேட்டர் எனப்பட்டார். தெல்லிப்பழைப் பூர்வீக வேளாளர் குலத்திலே சிறப்புற்றிருந்த நெல்லைநாதமுதலியார் இவர்க்குத் தந்தையார். கோப்பாயைச் சேர்ந்த இருபாலைக் கிராமத்திற் பிறந்தவர். இலக்கண நூல்களுக்குக் கூழங்கைத் தம்பிரானும், இலக்கிய நூல்களுக்கு மாதகலில் இருந்த சிற்றம்பலப் புலவரும் இவருக்கு ஆசிரியர்கள். இந்த இருவரிடமும் இலக்கண இலக்கியக் கடல்களைக் குடித்து ஏப்பமிட்ட இவர் அவற்றில் மாத்திரமன்று அக்காலத்துக்குரிய அரசியல் நியாயப் பிரமாணங்களிலும் வல்லவராய் மாகாண நியாயஸ்தலங்களில் நின்று நியாயதுரந்தரர்க்குரிய கடமையையும் நடத்தினவர், நமது வாலை வயசில் நியாயத்தலக் காட்சி பார்க்கப்போன முதற் தருணத்தில் இவரைக் கண்டிருக்கிருேம். இவர்க்கு மாணக்கராகிப் பொருளும் நிழலும் போல இவரை விட்டகலாது இவரிடம் பாடம் கேட்டார் அநேகர். ஐரோப்பிய மிஷனரிமாரும் இவரிடங் கல்வி கற்றனர். தமிழ் அகராதி வேலையில் ஏற்பட்டிருந்த நைற் தேசிகருக்கு (Rev. Mr. Knight) இவர் அதி உபயோகியாய் இருந்தார். மானிப்பாய் இயந்திரசாலையில் அச்சடிக்கப்பட்ட தமிழ் அகராதிச் சாத்துகவியில் 'தெல்லியம் பதியில்வரு நெல்லைநாதக் குரிசில் செய்தவ மெனவுதித்த, சேணுதி ராசகலை ஞானதி ராசனெடு" என்று பாடப்பட்டார் இச் சேன திராய முதலியாரே. இவர் புத்திரர் ஒருவரோடு இவரது பெளத்திர பெளத்திரிகள் பலர் இப்போதுங் கோப்பாய் இருபாலையில் வசிக்கிருர்கள். இவர் நல்லூர்க் கந்தசுவாமி பேரில் நல்ல வெண்பா எனப் பேர்பெறும் நூறு "செய்யுட் கொண்ட ஒர் பிரபந்தம்" பாடினர் பொருட்சிறப்புச் சொற்சிறப்புகளில் இப்பாடல் பேர் பெற்றது. ஞாபகத்தில் இவர்க்கு மிஞ்சிஞர் இலரென்று கேள்விப் பட்டோம்.
வண்ணுர்பண்ணையிலுள்ள சிவன்கோயில் அதிகாரியும் ஆதீனரு மாகிய வைத்திலிங்கச் செட்டியார்மேல் வடதேசப் புலவர்மார் சிலர் பிரபந்தம் பாடி அரங்கேற்றக் கொண்டுவந்தபோது, செட்டியார் மற்றைய பிரபுக்கள் பண்டிதர்களுடன் இவர்க்கும் ஆளனுப்பினராம்:

Page 148
- 278 -
இவர் சபைக்குச் செல்லவே, வடதேசப் புலவர் இவரைச் சற்றும் மதியாது இறுமாப்போடு இருக்க, உள்ளிருந்து வந்த வணிகேயர் இவரைக் கண்டு மிகப் பூச்சியப்படுத்திப் பாராட்ட, அதைக்கண்ட Rலவர்கள் சற்றே தியக்கமுற்றும் அகப்பிரமம் விடாராகித் தாம் கொண்டுவந்த பாட்டுகளைப் படித்து அரங்கேற்ற ஆரம்பித்தனர். இவரோ இரண்டுமுறை வாசிப்போடு அவற்றை மனனம் பண்ணிக் கொண்டிருக்க, முடிவிலே செட்டியார் இவரை நோக்கி: முதலியாரே, போட்டுக்கள் எப்படி என்று கேட்க, இவர் உத்தரமாக, ஐயா, பாட்டுக்கென்ன, ஆரோ பாடின பழம்பாட்டுகளை, இவர்கள் எழுதிக் கொண்டுவந்து விட்டார்கள். எனக்கும் இவை ஞாபகந்தான்; வேண்டுமானுற் சொல்லுகிறேன் கேளுங்கள் என்ற அத்தனை பாட்டு களையும் படித்தார் என்றும், புலவர்கள் அகமுகங் கருகிக் குறு வேர்வை கொள்ளவே. இவர் உள்ளத்தைச் சொல்லி. வந்த புலவர்க்குத் இயாகம் ஈயச் செய்தனர் என்றுஞ் சில நாளைக்குமுன் கோப்பாய்க்குப் போனபோது கேள்வியுற்ருேம், பவணந்தி முனிவர் செய்த நன்னூலை இவர் சிo நாளிற் படித்து முடித்தார் என்றுஞ் சொற்றனர். இத்துணை ஞாபகசாலிக்கு இதோர் அருமையல்லத்தான். இவர் பாடிய தனிப் பாக்களும் பல காதில் விழுந்தன. நல்லை வெண்பாவன்றி மாவிட்டபுரம் கோயில் மீது ஊஞ்சல் இசையும் நல்லைக்குறவஞ்சியும் பாடினர். பாடல் மாதிரிக்காக நல்லைக் குறவஞ்சியிற் கண்ட ஒர் விருத்தத்தை இவ்விடம் தருகின்ருேம்.
"கொடிவளரு மணிமாடக் கோபுரஞ்சூழ் நல்லூரிற்
குமர மூர்த்தி
அடியரகத் திருளகல வமரர்முக மலரவர
வணிமா னீன்ற
கொடியினெடும் பிடியினெடுங் குலவுமுடம் பிடியொடுங்கோ
தண்ட மேந்தி
மிடியகல மயிலேறி விடியவந்த தினகரன் போன்
மேவி னனே."
சார்வரி வருஷத்துக்குச் சரியான சஅச0 ம் ஞu) (அதாவது வட்டுநகர்ச் சாஸ்திரசாகியில் நாம் அரங்கேறிய அவ்வாண்டே) கo பிராயத்தில் இவர் தேகவியோகமாயினர். இவரது மரண சமாசாரங் காதில் விழப்பெற்ற வல்லிபட்டிக்குறிச்சி குமாரசுவாமி முதலியார் சொல்லிய கவி பின்வருவது:
"நாணு திராவிடமு நன்னிலக்க ளுறுறச்செய்
சேன திராயனையோ செத்ததென்றீர் வானதி பொன் னிலத்து முண்மை புசனுா லுரைப்பதற்காய் இந்நிலத்து விட்டெடுத்த தே."

سمس 279 ست
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தைச் சதாசிவம்பிள்ளை விரித்து எழுதியுள்ளார்.தெல்லிப்பழைஎதிர்வன்னியசிங்கமுதலியாரின் மூன்று பிள்ளைகளுள் மூத்தவரும், இருபாலை மண்ணுடுகொண்ட முதலியார் மரபில் மணஞ் செய்தவருமான நெல்லைநாதரின் மூன்று பிள்ளைகளுட் கடைசியிற் பிறந்தவர் சேனதிராயர். உத்தியோகர் லட்சணக் கும்மியில் நெல்லிநாதர் எனும் தரணியொருவர் குறிப்பிடப் படுகிருர், அவரும் சேணுதிராயரின் தந்தையும் ஒருவரா என்பது அறியுமாறில்லை. சேனதிராயருக்குப் பர்வதவர்த்தனி எனும் மகளும் இராமலிங்கபிள்ளை என்ற மகனும் இருந்தனர். இராமலிங்கபிள்ளே ஆறுமுகநாவலருடைய முதற் பிரசங்கத்தில் அக்கிராசனதிபதியாய் இருந்தவர் என்று கூறுவர் 1. இருபாலை இராமநாதபிள்ளையை மணஞ் செய்த பர்வதவர்த்தனி அம்மையாரின் புதல்வர் கந்தப்பிள்ளையின் ஏழு பெண்மக்களில் ஒருவரின் புதல்வரே வித்தகம் பத்திராதிபர் சபாபதி கந்தையாபிள்ளை.
சேனதிராயர் இராமாயணத்திற்கு வட்டுக்கோட்டை கிழக்கூரினர் மு. சுவாமிநாதரிடம் பொருள் கேட்டவர். நல்லூர் ம. சரவ* முத்துப்புலவர், தென்கோவை அ. அம்பலவாண பண்டிதர், ஆறுமுகநாவல்ர், வல்வெட்டித்துறை க. ஏகாம்பரம் நீர்வேலி ச. பீதாம்பரப்புலவர், நல்லூர் வே. கார்த்திகேயஐயர், வட்டுக் கோட்டை க. சண்முகச்சட்டம்பியார், மறவன்புலம் சயம்பர் நல்லூர் வே. சம்பந்தப்புலவர் 2, காரைதீவு மு. கார்த்திகேய ஐயர்* கந்தரோடை அப்பாப்பிள்ளை (நாகநாதபண்டிதர்)* முதலியோர் சேணுதிராயமுதலியாரின் மாணுக்கராவர்,
சேனதிராயரின் ஞாபகசக்தியை எடுத்துக்காட்டச் சதாசிவம்
பிள்ளை கூறும் வடதேயப்புலவர் கதை ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையால் யாழ்ப்பாணச் சரித்திரத்திலும் (1912), க. வேலுப்பிள்ளையால் யாழ்ப்பாண வைபவ கௌமுதியிலும் (1918) நெல்லைநாதர் மீது ஏற்றிக்கூறப்பட்டது. தமிழ்ப்புலவர் சரித்திரத்தில் (1916) அ. குமா சுவாமிப்புலவர் முன்னர் சதாசிவம்பிள்ளை தந்த கூற்றினையே ஏற்றுச் சிலர் தந்தைமீது ஏற்றிக்கூறுவதையும் குறிப்பிட்டார். ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதத்தில் (1939) சி. கணேசையர் நெல்லை நாதருக்கு உரியதாகவே கூறியுள்ளார்.
1. சி, கணேசையர்: ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், 1939 பக், 34 * - 4 டிெ துல். யக் 40, 41 - 42, 60

Page 149
-- 280 --س
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் முதலிற் புராணப் பிரசங்கம் செய்தவர் சேஞதிராய முதலியாரே என்பர் சி. கணேசையர் 1: சேஞதிராயர் 1840இல் மறைந்தபோது அவருக்கு வயது 90 என்று கூறுவது பொருத்தமின்று".
நல்லூர் முருகன்மீது பாடப்பெற்றதும் 102 பாடற்கொண்டது மான நல்லைவெண்பாவையும் சேனதிராயர் வண்ணை நீராவி விநாயகப் பெருமான் மீது பாடிய நீராவிக் கலிவெண்பாவையும் தென்கோவை அ. அம்பலவாணபண்டிதர் 1878இற் சென்னை “ஸ்கொட்டிஷ் பிரஸ்"ஸிற் பதிப்பித்தார். நல்லைவெண்பா புலோலி க. முருகேசபிள்ளை குறிப்புரையுடன் 1942இல் யாழ்ப்பாணம் சைவப்பிரகாசயந்திர சாலையிற் பதிப்பிக்கப்பெற்றது. சேஞதிராயரின் கோவைப்பதி கண்ணகைபேரிலூஞ்சலைக் க. சிவகுமாரன் பிலவளுப் பங்குனிமீ” (1962) சுன்னுகம் திருமகள் அழுத்தகத்திற் பதிப்பித்தார். சேனதி ராயரின் நல்லைக்குறவஞ்சிக்கு உரியதாகப் பிறிதொரு பாடலைத் தமிழ்ப்புலவர் சரித்திரத்திற் குமாரசுவாமிப்புலவர் தந்துள்ளார். சேனதிராயர் நல்லையந்தாதி பாடியதாகக் குமாரசுவாமிப்புலவ்ரின் தமிழ்ப்புலவர் சரித்திரமும் நல்லைக்கலிவெண்பா, நல்லையூஞ்சற் பதிகம் என்பனவற்றைப் பாடியதாக முருகேசபிள்ளையின் நல்லைவெண்பாக் குறிப்புரைப் பதிப்பும் கூறுவன.
Gs (so LD2) us. - Chenamaliar.
இ. பி. க.அ ம் சதாப்தக் கடைசியில் இவர் இருந்தவர். சிவசிவ வெண்பா என்னும் பாடலுக்கு இவர் ஆக்கியோர். பாடல் மாதிரிக்கு அதில் ஒன்றை இங்கே தருகின்ருேம்.
* நங்கையுமை சொல்லா னடுவிகந்த மாலொருவு
செங்கணர வானன் சிவசிவா - எங்கும் சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற்? கோடாமை சான்றேர்க் கணி."
1. ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், 1939, பக். 32 2. பொ. பூலோகசிங்கம் : தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள், 1970 பக். 139 - 141. 3. நா. பா. லொருபாற்

- 281 -
குறிப்பு சென்னமல்லையர் "தமிழ் புளூராக்" நூலில் இடம்பெருதவர். இவர் சிதம்பரம் பச்சைக்கந்தையர் மடத்தைச் சேர்ந்த வீரசைவராவர்? சிவசிவ வெண்பா சகம் 1690 இல் (கி. பி. 1767-1768) அரங்கேற்றப் பட்டதென்று சிறப்புப்பாயிரம் கூறுவதாற் சென்னமல்லையர் காலம் கி. பி. பதினெட்டாம் நூற்றண்டின் பிற்பகுதியாகும்.
சிவசிவ வெண்பா திருக்குறட் பாக்களுக்கு உதாரணமோ விளக்கமோ கூறி, அதனேடு குறளையும் கொண்டு அமைக்கப்பட்ட செய்யுட்களையுடையது. காப்பு, அவையடக்கம், உதாரணங்கள் கூறவேண்டும் எனும் வெண்பா ஆகிய மூன்றும் நீங்கலாகத் திருக் குறளின் 133 அதிகாரங்களில் ஒவ்வொன்றிலுமிருந்து ஒவ்வொரு குறள் கொண்ட 133 வெண்பாக்களையுடையது சிவசிவ வெண்பா. சிவசிவ வெண்பாவிற்கு 98ஆம் செய்யுள் வரை பழையவுரை உண்டு. இவ்வுரை எடுத்தாளும் சதகண்ட சரித்திரம், தண்டகாரணிய மகிமை, புதுமொழி, யாளி சரித்திரம் என்பன இப்போது கிடைக்க வில்லை. சிவசிவ வெண்பா மூலம் சோமேசர் முதுமொழி வெண்பாவுடன் 1901 இலே சிதம்பரம் அ. இரத்தினசபாபதி முதலி யாராற் பதிப்பிக்கப் பெற்றது. கலைமகள் வெளியீடாக உ. வே. சாமிநாதையர் பரிசோதித்த மூலம் 98ஆம் பாடல்வரை பழைய வுரையும் எஞ்சியவற்றில்குப் பதிப்பாசிரியரின் குறிப்புரையும் கொண்டதாக ஈசுவரஞல மாசிமீ (1938) சென்னை லா ஜர்னல் அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
சேஞவரையர். - Chenavaraiar.
இவர் வடநூலில் வல்ல வித்துவசிரேட்டர். சாதியிற் பிராமணர். தொல்காப்பியத்துக்கு உரை எழுதின ஆசிரியர் மூவருள் இவர் ஒருவர். இவரது உரை இவர் நாமப்படியே சேஞவரையம் எனப் பெயர்பெறும். சொல்லதிகாரத்துக்கு மாத்திரமே இவர் உரை எழுதினர்.
("bմուկ
காசிச்செட்டியவர்கள் தொல்காப்பியஞர் சரிதத்திற் சேன வரையரைக் குறிப்பிட்டபோதும் அவரைத் தனியே விதந்து கூறவில்லை ஆறமுகநாவலர் பரிசோதிக்கதும் சி. வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்ததுமான தொல் காப்பியம் சொல்லதிகாரம் சேனவரையம் விபவ ஞல் புரட்டாதி மீ" (1888) சென்னை கலாரத்நாகரம் அச்சுக் கூடத்தில் அச்சிடப்பெற்றது.

Page 150
- 282 -
உரையாசிரியர் சேஞவரையர் படைத்தலைவர் என்று கொள் வதற்குச் சான்றெதுவும் இல்லை. திசைச்சொற்களை விளக்குமிடத்து ஏனைய நாட்டு வழக்குகளைச் சுட்டாது, பெற்றம், தந்துவை எனும் தென் பாண்டி நாட்டு வழக்குகளை மட்டும் விதந்தோதுவதாலும் புறத்தப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலாரைப் பெண்மகன் என்று வழங்குப" என்று இளம்பூரணர் இடஞ்சுட்டாது உரைக்கச் சேனவரையர் மாருேக்கத்தார் தம் காலத்தும் அவ்வாறு வழங்கவத"க எடுத்துக் கூறுவதாலும் சேஞவரையர் தென்பாண்டி நாட்டினைச் சேர்ந்தவர் என்று கருத இடமேற்படுகின்றது. மாருேக்கம் கொற்கை சூழ்ந்த நாடு என்பர் கல்லாடஞர் 1.
சாசன ஆராய்ச்சியாளர் 1930ஆம் ஆண்டிற் சாசனத்தால் அறியப்பட். ஆற்றுார்ச் சேனவரையனும் தொல்காப்பிய உரை ஆசிரியர் சேனவரையரும் ஒருவரோ என்று ஐயுற்றனர்". அவர் களுடைய ஐயத்தினை உண்மையாகக் கருதி மு. இராகவையங்கார் ஆதாரங்காட்ட முற்பட்டனர் 8. தென்பாண்டிநாட்டுக் கொற்கையை அடுத்த ஆற்றுாரினரான சேஞவரையரே, Dapprent Siluri சேணுவரைகர் என்பதற்குச் சேனவரையர் தென்பாண்டிநாட்டினர் என்று கருத இடமளிக்கும் முற்கூறிய இரு உரைக்குறிப்புகளையும் ஆதாரமாகக் கொண்ட இராகவையங்கார், ஆற்றுரர் சேஞவரையன் ஆசிரியர் மாணுக்கர் முறையிலே தம்முன்னேரிடமிருந்து தமக்குக் கிடைத்த நிலம் மனை சளைத் தம்மூர்ச் சிவன்கோயிலுக்கு வழங்கிய தாகக் கூறப்படும் சாசனச் செய்திமூலம் அவர் பரம்பரையே புலமை வாய்ந்த குடும்பத்தினர் என்பதும் அப்புலமைத் திறம்பற்றி நில மனைகள் கிடைத்தன என்பதும் பெறப்படுவதாகக் கருதி அவரே உரையாசிரியர் என அனுமானஞ் செய்துள்ளார். உரையாசிரியர் சேஞவரையர் தென்பாண்டிநாட்டினர் என்பதை ஏற்பினும் அவரே தென்பாண்டிநாட்டு ஆற்றுார்ச் சேனவரையர் என்பது நிறுவப் பட்டுள்ளது எனல் சாலுமோ என்பது சிந்திக்கத்தக்கது. எனவே மாறவர்மன் குலசேகரபாண்டியனது (1268-1311) ஏழாம் ஆட்சி யாண்டாம் கி. பி. 1275 இல் ஜ ரையாசிரியர் சேனவரையர் இருந் தார் என்பது துணிந்த முடியென்று கூறுவதற்கில்லை,
சேஞவரையர் உரையாசிரியர் சுற்றுகளாக எடுத்துரைப்பன வற்றிலே பல இளம்பூரணத்திலுள4; சில இல்லை". அடியார்க்கு
தொல்காப்பியம், சொல்லதிகாரம், கல்லாடனுருரை, சூத், 167
1.
2. Madras in graphical Reports 1929-1930, p. 78 3. JMKY A fås i flúð, u.ä. Il 15-120 4. தொல், சொல். சேவைரையம், சூத். 1, 4, 5, 29, 35 முதலியன 3. டிெ ரூத், 17, 68, 114, 161, 174, 187 உரைகளிற் சேருவரையர் மறுக்கும் சில பகுதிகள்

- 288 -
நல்லார் கடற்கோள் வாலாற்றிற்கு ஆதாரமாகக் கூறும் "உரை ஆசிரியராகிய இளம் பூரண வடிகள் முகவுரை' யாகிய தொல்காப்பியப் பாயிரவுரையில் அவர் ஆதாரமாகக் கொண்ட பகுதி காணப் பெருமையாலும் 1, சேனவரையர் 161, 174, 187ஆம் சூத்திரங் களிலே தந்த உ  ைர யே சொல்லகிகாரம் இளம்பூரணத்தில் 158, 171, 184 ஆம் குத்திரங்களில் இடம்பெற்று, அவர் உரை ஆசிரியர் கூற்றுகளாக மறுப்பன அவற்றிற் காணப்பெருமையாலும் இளம்பூரணத்திற் சிற்சில பகுதிகள் விடுபட்டுப்போயிருத்தல் வேண்டும் என்று கருத இடமுண்டு. எனவே இளம்பூரணருக்குப் பிற்பட்டவர் சேனவரையர் என்ற கருத்துப் பொருத்தமாகவே தெரிகின்றது.
பவணந்தி முனிவருக்குப் பிற்பட்டவரி சேனவரையர் என்று கொள்ள இடமுண்டு என்பர் பின்னங் குடி சா. சுப்பிரமணிய சாஸ்திரி? உண்கின்றனம், உண்கின்ருேம் எனும் உதாரணங்களும் உண்பாக்கு, வேபாக்கு எனும் உதாரணங்களும் அளபெடை தன்னியல்பு மாத்திரையில் மிக்கு நான்கும் ஐந்தும் மாத்திரை பெற்று நிற்கும் எனும் கூற்றும் நன்னூலார் கருத்துகளாகத் தெரி வதாற் சுப்பிரமணிய சாஸ்திரி அவ்வாறு கூறினர். சேஞவரையர் எல்லாம் என்பது எஞ்சாப்பொருட்டாய் வருவதோர் உரிச்சொல் என்பாரும் உளர் என்ருர் * திருக்கோவையாரின் உரையாசிரியர் பேராசிரியர் எல்லாம் முழுதும் என்னும் பொருள் படுவதோர் உரிச்சொல் என்ருர் *.
நச்சிஞர்க்கினியர் சேனவரையரைப் பெயர் குறித்து உரைப் பதால், அவருக்கு முற்பட்டவர் சேனவரையர் என்பது தேற்றம் . பரிமேலழகர் 542ஆம் குறளுக்குச் சேஞவரையரின் உரையைத் தழுவி (குத். 93) பொருள் கூறுவதாகவும் சொல்லெச்சத்திற்குச் சேன வரையர் கொண்ட கருத்தையே (சூத். 441) தழுவி 10ஆம், 37ஆம் குறள்களுக்கு உரை சொல்வதாகவும் கருதுவர்"
சிவஞானமுனிவர் தொல்காப்பிய முதற்குத்திர விருத்தியில் நெடுங்கணக்கில் அகரமுதல் ளகரவிறுவாய்க் கிடக்கை முறையா தற்குக் காரணம் கூறுமிடத்து ஐகாரம் ஒளகாரம் பற்றிய இடத்துச்
1. சிலப்பதிகாரம், வேனிற் ஃதை, 1 = 2உரை 2. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு 1930, முகவுாை யக், 25 3. சேணுவரையம், சூத். 202, 229, 212
4. சூத். 185
5. திருக்கோவையார், 51ஆம் பாடலுரை 6. தொல், சொல், தச்சிஞர்க்கினியம், சூத், 83. 184, 445, 440, 455, 414 7. மு. இராகவையங்கார் : சாஸனத் தமிழ்க்கவி சரிதம், 1961 பக். 125

Page 151
- 284 -
சேஞவரையர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரை எழுத வில்லை என்று கூறினர். பின்னங்குடி சா. சுப்பிரமணியசாஸ்திரி தமது தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பின் முகவுரையிலும் சொல்லதிகார ஆங்கிலவுரையின் முன்னுரையிலும் சேனவரையர் எழுத்ததிகாரத்திற்கும் உரைகண்டுள்ளார் என்று கருத இடமுண்டு என்பதற்கான காரணங்களைக் காட்டியுள்ளார். சேனவரையரின் 250ஆம், 420ஆம் சூத்திரங்களின் உரை மூலம் தமது கருத்துப் பெறப்படுவதாகச் சாஸ்திரியவர்கள் கூறுவது வலுவுடைத்தன்று. சேனவரையர் குலம் யாதெனத் துணிய ஆதாரமில்லை.
புன்னலைக்கட்டுவன் வித்துவான் சி. கணேசையர் எழுதிய விளக்கக் குறிப்புகளுடன் சேனவரையத்தை ஈழகேசரி நா. பொன்னையா 1938இலே பதிப்பித்தார். இப்பதிப்பின் மறுபிரசுரம் 1955இல் வெளிவந்தது. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் சழகத்தினர் கிண்ணிமடம் கந்தசாமியர், ஞா. தேவநேயப் பாவாணர் ஆகியோர் திருத்தங்களுடனும் குறிப்புரையு-அ? பின்னர் ஆ பூவராகம்பிள்ளையின் விளக்கவுரையுடனும் சேன வரையத்தை 1923, 1946, 1952, 1956, 1959, 1962 ஆம் ஆண்டு களிற் பதிப்பித்தனர். தி. சு. பாலசுந்தரம்பிள்ளையும் (இளவழகனர் கு. சுந்தரமூர்த்தியும் (1966) சேனவரையத்திற்குக் குறிப்புரை எழுதியுள்ளனர்.
சி. வை. தாமோதரம்பிள்ளையின் சேனவரையப் பதிப்பினை அடுத்து விபவ ஞல கார்த்திகை மீ (1868) கோமளபுரம் இராச கோபாலபிள்ளையின் சேனவரையப் பதிப்பொன்று வெளிவந்தது. இப்பதிப்பின் தாற்பரியங்களை ஆரியப்பபுலவர் குறிப்பிற் காண்க. முற்கிளந்த பதிப்புகள் நீங்கலாக 1941 இலே பவானந்தர் கழகப் பதிப்பொன்றும் வெளிவந்தது.
Gos Tås35 575Ů LH6u6au ff. -- Chokkanathap Pulavar.
இப் பெயர் தாங்கின புலவர் பின்னும் ஒருவர் உளர். அவர்க்குப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் என அடைகொடுத்துப் பேசியிருப்பதால் அவரை அவ் அட்சர நிரையிற் பின்னர் வைத்து இவரைப்பற்றி இவ்விடம் இரண்டோர் சொல் சொல்வம். இவர் செனன மரண காலம் இடங்கள் வெளிப்படாதபோதும் இவர் பாடிஞர் என்று தெரிவிக்கப்பட்ட நாற்பத்து மூன்று கவிகளுள் மாதிரிக்காய் ஒன்றை இங்ங்ணம் தருவம்; அதாவது:

سی۔ 285 سس۔
"சீர்கறுத்த முகிற்கரத்தான் கஸ்தூரி
பூபனருள் சேயாவென்றும்
ஒர்கறுப்பு மில்லாத தொண்டைவள
நாட்டிருக்கு முசிதவேளே
ஆர்கறுப்ப னென்றுசொல்லி யழைத்தாலு
நாமுன்னை யன்பினலே
பேர்கறுப்ப னிறஞ்சிவப்பன் கீர்த்தியினல் வெளுப்பனெனப் பேசுவோமே.”*
குறிப்பு
"தமிழ் புளூராக்" நூலில் இடம்பெருத சொக்கநாதப்புலவரைச் சதாசிவம்பிள்ளை தனிப்பாடற்றிரட்டின் உதவியுடன் அமைத்துக் கொண்டார். சதாசிவம்பிள்ளை சுட்டும் 43 பாடல்களை அடுத்து திருவாலங்காடு ஆறுமுகசுவாமிகளின் பதிப்பில் (1895) 86 அம்மானைப் பாடல்கள் இடம்பெறுகின்றன. இவை சொக்கநாதப்புலவரின் பாடல்களைத் தொடர்வதாலும், ஆசிரியர் பெயர் சுட்டப்பெருமை யாலும் அடுத்துவரும் காஞ்சிபுரம் வித்துவான் கச்சபாலஐயர் பாடல்களுக்கு முன்னர் அமைவதாலும் சொக்கநாதப்புலவர் பாடியனவோ என்று ஐயுற இடமுண்டு. சதாசிவம்பிள்ளை சுட்டும் 43 பாடல்களுள் மூனறு பாடல்களும் முற்கிளந்த அம்மானைப் பாடல்களும் கா. சுப்பிரமணியபிள்ளை பதிப்பிலில்லை. தனிப்பாடற் றிரட்டு சொக்கநாதப் புலவர் பாடலாகச் சுட்டும் 'இந்திரன் கலையாய்" எனும் பாடல் தமிழ் நாவலர் சரிதையிற் காளமேகப் புலவர் பாடலாக இடம் பெறுகின்றது; காளமேகப் புலவர் பாடல் என்பதே பொருத்தமாகும்,
ஞானக் 3a55ñ , -- Gnanakkuthther.
இவர் சிவன்பாக்கம் என்னும் இடத்திலே வசித்த ஓர் சைவ சமயச் சந்நியாசி. ஒழுக்கத்தாற் சந்நியாசியாயினும் பண்டித ஒரோமணியாய் இலக்கண இலக்கியக் கரை கண்ட வியப்புற்ற புலவராய் இருந்தமையால், விருத்தாசலமலையிலுள்ள சிவாலய மகிமையை விளக்காநின்ற விருத்தாசல புராணத்தை இவர் பாடினர். இதிலே சகஅ விருத்தங்களுள*. பாக்கள் அதி சிறப்புற்றன. பாடல் மாதிரிக்கு அப் புராணத்திற் சிவ பூசைச் சருக்கத்தில் ஒரு விருத்தந் தரலுற்ருேம்.
1. து. ப. சிரோன்மணிபாப் 2. து. பா. சகடு விருத்தங்களுள

Page 152
- 286 -
** அஞ்சினன் மழைக்குச் சென்ரு
ஞடல்பா டற்காச் சென்ருன்
விஞ்சிய விமலற் காணின்
மெய்ஞ்ஞான ந் தவங்க ளுண்டாம்
வஞ்சக மனத்தன் முனும்
வந்திக்கப் பிரதோ டத்திற்
செஞ்சவே பாவ நீங்குந்
தீண்டிற்சா ரூபஞ் சேர்வான்."
காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தை மொழிபெயர்க்கும் சதாசிவம்பிள்ளை மேற்கோட் பாடலைப் புதிதாக வழங்கியுள்ளார். ஞானக்கூத்த சிவப்பிரகாசதேசிகர் எனப்படும் ஞானக்கூத்தரின் குருவாம் துறையூர் சிவப்பிரகாசர் பற்றிச் சாந்தலிங்கதேசிகர், அம்பலவாண தேசிகர் குறிப்புகளிற் கூறப்பட்டது, உபதேசகுருவினப் போன்று வீரசைவரான ஞானக்கூத்தர் அவரை அடுத்துத் துறையூர் மடத்தின் அதிபதியாய் விளங்கினர். இவர் காலம் கி பி. பதினேழாம் நூற்ருண்டாகலாம். விருத்தாசல புராணத்திற் பாயிரம் நீங்கலாகப் பதினெட்டுச் சருக்கமுள. இவர் திருவிடைமருதுப் புராணமும் Lui"Tıq-Gitar fi 676örLuri*.
தொண்டைநாட்டு வெண்பாக்கத்திற் பிறந்தவரும் நிரம்பவழகிய தேசிகரின் மாணவகரும் திருவையாற்றுப்புராணம் அல்லது செப்பேச புராணம் அல்லது பஞ்சநதிப்புராணம் என வழங்கப்படும் புராணத்தை இயற்றியவருமான ஞானக்கூத்தர் வேருெருவருளர்.
sarrow
SIT GOTü îJGT 3F GT59Asst. - Gnanapprakasa Thasigar.
இவர் யாழ்ப்பாணத்திலே உள்ள திருநெல்வேலியிற் பிறந்து, சிறுபிராயத்திற் தென் இந்து தேசஞ் சென்று, அங்கே பற்பல பண்டிதர் உதவி பெற்று, இலக்கண இலக்கியக் கடல்களை அள்ளித் தெவிட்டக் குடித்த வித்துவ சிரேட்டர். நல்லூர் ஆறுமுகநாவலர் இவர் மரபினர் என்ப. பறங்கிக்காரர் காலத்திலே, அதிகாரி ஒருவனுக்கு உணவாகப் பசு ஒன்றைக் கொடுக்க நேரிட்ட பாதகத்திற்கு விலகுதல் காரண

- 287 -
மாகவே இவர் இவ்வூர் வீட்டு ஒளித்தோடினராம். இவர் முதன் முதற் சிதம்பரஞ்சென்று, மறுபடி அங்கிருந்து ஆகம சாஸ்திரங்களைக் கற்பதற்கு ஆதாரமாய்ச் சம்ஸ்கிருதம் படிக்கவேண்டும் என்ற அபிப் பிராயமாய்க் கவுடதேயம் போய், அங்கே ஒரு வேதியன் சில மாணவகர்க்குக் தர்க்க சாஸ்திரம் முதலானவற்றைப் படிப்பிக்கக் கண்டு, தாம் அவருடன் கூடிப் படிக்க இடம் பெருமையாற் தூரத்தே நின்று கிரமமாய் அவற்றைக் கேட்டு மனனம் பண்ணி வந்தனர். ஒரு நாள் அந்த உபாத்தியார் தாம் கற்பித்த மாணவகரைப் பரீட்சை செய்து பார்த்த மாத்திரத்தில் அவர்கள் தகும் விடை கொடாதிருக்க, அவர், இவரைக் கூவி, அப்பா! நீ தினந்தோறும் இவ்விடம் வந்து நின்றையே, நமது விளுக்களுக்கு உத்தரங் கூறுவாயா என்று கேட்க, இவரோ அவர் விஞவிய ஒவ்வொன்றுக்கும் சரியாய் உத்தரங் கூறினர். ஆதலால் அவர் மகிழ்ந்து, அது முதல் லியாகரணம் முதலியவற்றை இவர்க்குக் கற்பித்தனர். அதனுல் இவர் சகல கலை ஞான பண்டிதராய் அவ்வூர் விட்டுத் திரும்பி அண்ணுமலை மடத்துக்கு வந்து, தம்பிரான் பட்டம் டெற்று அங்கு உள்ளார்க்கு உபகாரமாகச் சம்ஸ்கிருத்ததிற் சித்தாந்த சிகாமணி, பிரமாண தீபிகை யாதியாம் பற்பல கிரந்த நூல்கள் செய்தனரன்றிச் சம்ஸ்கிருதத்திலுள்ள பெளஷ்கராகமம் 1, சிவஞானபோதம் முதலிய வற்றிற்கு உரையுஞ் செய்தனர்.
இவரது கல்விப் பேரறிவைக் கண்டு அழுக்காறுற்றர் பலர். இவர் ஆரியத்திலன்றித் தமிழில் வல்லரல்லர் என்று இகழ்ந்து சொல்லியதை இவர் கேள்வியுற்று, அவர் கொண்ட கர்வத்தை அடக்கற்காகச் சிவஞானசித்தியார் சுபட்சத்துக்கு உரை எழுதினர். மற்றைய சிலரது உரையினின்று இவர் செய்த உரை மிகப் புகழ்பெற்றதும் ஆழமுற்றதுமாம். இந்த உரைக்கு விரோதமாய்ச் சிவஞான தம்பிரான் என்பவர் சிவசமவாத மறுப்பு எனப் பெயரிய ஓர் மதுப்புரையை எழுத, அதற்கு மாருக இவரது மாளுக்கருள் ஒருவர் மறுப்பின்மேற் கண்டனம் அல்லது வச்சிரதண்டம் எனும் ஒரு மறுப்பு எழுதினர். சிதம்பரத்திலே உள்ள ஞானப்பிரகாசம் எனும் தீர்த்தக்குளத்தை வெட்டினரும் இம் மகானே. இவர் யாழ்ப்பாணியாதலால் இவரது நாமத்தில் நாமும் பெருமை கொள்ளலாம். இவர் காலம் பறங்கிக் காரர் காலமாதலால் இற்றைக்கு இருநூற்றுச் சொச்ச வருடங்களின் முன் இவர் இருந்தார் எவல் வேண்டும். சிதம்பரத்திலேயே இவர் இறந்து விட்டனர்.
1. 5. ur. Qua i k I Jó

Page 153
- 288 -
குறிப்பு காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தைச் சதாசிவம் பிள்ளை விரிவு படுத்தி அளித்துள்ளார்.ஞானப்பிரகாசர்,யாழ்ப்பாணம் திருநெல்வேலி காராளபிள்ளையின் புதல்வராகத் தோன்றியவர் என்றும் திருப்புகலூர் ஆதிசைவர் பெரிய அண்ணுசாமிக் குருக்களிடம் சிவதீட்சைபெற்றவர். என்றும் கூறுவர். சோழ மண்டலத்தின்கணிருந்த ஆதிசைவர்க ளுள்ளும் சைவப்பண்டாரங்களுள்ளும் திருவண்ணுமலை யாதீனத்துத் தம்பிரான்களுள்ளும் பலருக்குச் சைவாகமோபதேசம் செய்தருளினவர் ஞானப்பிரகாச முனிவர். இவர் யாழ்ப்பாணத்தைப் போர்த்துக் கேயர் ஆட்சிசெய்த (1621-1658) காலத்திலிருந்தவர். ஞானப் பிரகாசமுனிவர் பிராசாத தீபிகை, அஞ்ஞான விவேசனம், சிவயோக சாரம், சிவயோகரத்நம், சிவாகமாதி மாகான்மிய சங்கிரகம் என்னும் சங்கதறுரல்களையும் இயற்றினர். நீர்வேலி சி. சங்கரபண்டிதர் பரிசோதித்து வைத்திருந்த ஞானப்பிரகாசரின் சங்கதநுால்களின் ஏடுகளுடைய உதவியோடு நல்லூர் த. கைலாசபிள்ளை ஞானப்பிரகாச முனிவரின் சங்கத நூல்களைப் பதிப்பித்துள்ளனர். இப்பதிப்பு 1928ஆம் ஆண்டில் வெளிவந்ததென்பர் 3. இணுவில் நடராசையர் ஞானப்பிரகாசர் சுபக்கவுரையை 1888ஆம் ஆண்டிற் பதிப்பித்தனர்", சிவஞானசித்தியார் சுபக்கம் அறு வ ரு  ைர ப் பதிப்புகளிலும் (1888-1889, 1895) இவருரை இடம்பெறுகின்றது. அருணந்தி சிவாசாரியர் குறிப்புக்காண்க. இவருரையைச் சிவசமவாதவுரையென மறுத்துச் சிவஞான முனிவர் இயற்றிய சிவசமவாதவுரை மறுப்பு, எடுத்து என்னுஞ் சொல்லுக்கிட்ட வைரக்குப்பாயம், சிவசமவாத கண்டனம் என்னும் சிவசமவாதவுரை மறுப்பு எனும் மூன்று கண்டனங்களையும் வடகோவை சு. சபாபதிநாவலர் விஜய ஞல கார்த்திகை மீ (1893) பதிப்பித்தார்.
தமிழ்ப்பணி புரிந்த ஞானப்ரகாசர் எனும் பெயர் பூண்ட தவத்தர் பலருளர். சிவஞானசித்தியார் பரபக்கததிற்கும் சிவப் பிரகாசத்திற்கும் உரைகண்டவர், மதுரை சிவப்பிரகாசரின் (கி. பி. 1489) ஆசிரியர் மதுரை ஞானப்பிரகாசர். இவருடைய ஒரு சாலை மாணுக்கர் களந்தை ஞானப்பிரகாசர் தசகாரியம், அட்டாங்கயோகக் குறள், சந்தான அகவல், சகலாகமசாரம்,
1. த. கைலாசபின்ன் (தொகு.) ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு, முதற்பாகம், 1954, நல்லறிவுச்
சுடர் கொளுத்தம், பக். 25 - 126 2. த. கைலசபிள்ளை ஆறுமுகநாவலர் சரித்திரம், 1919, பக். 2 - 3 3. K, Kanapathi Pillai : Tamil 'ublications in Ceylon, University of Ceylon
Review, Vol. XVI, Nos. 1 - 2 , iy58) ந. சி. கந்தையபிள்ளே : தமிழப்புலவர் அகராதி, 1960, பக். 247 5. கலக்களஞ்சியம், தொகுதி 10, 1968, பக், 284
4.

س- 289 س--
அளவையிலக்கணம் என்பனவற்றை இயற்றினர் என்பர், தச காரியத்தைப் பன்னலை ச. சிவாநந்தையரும் (1911) அட்டாங்க யோகக் குறளைச் சேற்றுார் சுப்பிர:ணிய கவிராயரும் திருவாவடு துறையாதீனத்தாரும் பதிப்பித்துள்ளனர். விசயநகர மன்னன் கிருஷ்ணதேவராயர் (1509-1529) காலத்தவரான ஞானப்பிரகாசர் கச்சிக்கலம்பகத்தையும் கிருஷ்ணதேவராயர் மஞ்சரிப்பாவையும் பாடி யுள்ளார். திருச்சேய்நலூர் நாவினுல் மழுவெடுத்த ஞானப்பிரகாச தேசிகர் செங்குந்தர் புராணம், வீரநாராயணர் விசயம் என்பன வற்றை இயற்றியவர். வீரநாராயணர் விசயம் 1898 இலே பதிப் பிக்கப்பெற்றது. திருவாரூர் ஞானப்பிரகாச பட்டாரகர் புட்பவிதி பாடியுள்ளார். இதனை ஆறுமுகநாவலர் பதிப்பித்துள்ளார். கமலை ஞானப்பிரகாசர், திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் பற்றிச் சிவஞான தேசிகர் குறிப்பிற் கூறப்பெற்றது. சைவராகப் பிறந்து கதலிக மதத்தைத் தழுவிக் குருவான நல்லூர் சுவாமி சா. ஞானப்பிரகாசர் (1875-1947) கதலிகமத சம்பந்தமான செயறுரல்கள், சமய விளக்க நூல்கள், சமயச் சான்ருேர் வரலாற்று நூல்கள், சமய வரலாற்று நூல்கள், தல வரலாற்று நூல்கள், பயண நூல் என்பனவற்றையும் புருேடெஸ்தாந்தர், பெளத்தர், சைவர் ஆகியோருடைய சமயங்களை மறுத்துக் கண்டனநூல்களையும் இயற்றியதோடு, ஏனைய கதலிகர் எழுதிய நூல்கள் பலவற்றைத் திருத்திப் பதிப்பித்தும் உள்ளார். இவர் பண்டைய இந்திய நாகரிகத்திலும், யாழ்ப்பாண வரலாற் றிலும் தமிழ்மொழி ஆய்விலும் ஈடுபாடு மிக்கவராகத் திகழ்ந்தார். India's Ancient Civilisation and Chronology (1921), su9yprit gria ay isgip (ypth sur uypub (1920). The Origin of Caste Among the Tamils ( 1920), The Kings of Jaffna during the Portuguese Period of Ceylon History {1920), turf blin 6007 at 6: Lian as Lois 687 th (1928), தமிழ் அமைப்புற்ற வரலாறு (1927), தமிழ்ச் சொற்பிறப்பு ஆராய்ச்சி (1932), சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி (1938-1946 ) என்பனவும் கட்டுரைகளும் முற்கிளந்த துறைகளிலே அவர் கொண்ட ஈடுபாட்டினை எடுத்துக்காட்டுவன. சொற்றப்பு ஒப்பியல் தமிழ் அகராதி முற்றுப்பெறவில்லை. இவர் கதை ஞம் நகைச்சுவைச் சம்பவங்களும்கொண்ட கதாவினுேத பூங்கொத்து (1904) எனும் நூலைத் தொகுத்து வெளியிட்டதோடு வரலாற்று நாவல் ஒன்றினை யும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
g53(2) ps355. --Thakchanamurthy. இவர் திருவாவடுதுறையில் இருந்த நமச்சிவாய தேசிகரிடம் சித்தாந்த சாத்திர உபதேசம் பெற்றுப் பதிசாஸ்திரத்திற் தேர்ச்சி பெற்றிருந்தாரன்றிப் புலவருமாஞர். இவர் செய்த நூல்கள் தச
unt on 9

Page 154
- 290 -
காரியம், உபதேசப்பஃருெடை என்னும் இரண்டுமாம். இவ்விரண்டும் மெய்கண்ட சாஸ்திரக் கருத்தை அடக்குவன. இவர் திருவாவடு துறையிற் சின்னப்பட்டத்தில் அமர்ந்திருந்த போதே ஓர் மாசிமீ” சித்திரை நட்சத்திரத்திற் பிராண தசை அடைந்தனர்.
குறிப்பு - காசிச்செட்டியவர்கள் குறிப்பிடாத தட்சணுமூர்த்தி தேசிகர் திருவாவடுதுறையாதீனத் தாபகர் நமச்சிவாய மூர்த்திகளின் சீடர்; மூன்றும் பண்டாரசந்நிதிகள் அம்பலவாண தேசிகர் காலத்தவர். அம்பலவாண தேசிகர் குறிப்புக் காண்க.
ğ56íbTLq uLu (19fA rfu) fy. — Thandi Asiriar.
இவர் கி. பி. பன்னிரண்டாஞ் சதாப்தத்திலே தாராபுரத்தில் இருந்து அரசுபுரிந்த போசராசாவின் பரிபாலனத்தின் கீழ்ச் செழித்து உன்னதமடைந்த ஒன்பது வித்துவாமிசருள் ஒருவர் என்றும் சம்ஸ்கிருதந் தமிழ் எனும் துவித பாடைகளிலும் கல்விமானனதால் இவர்க்கு உபயகவி என்னும் காரண நாமம் உண்டு என்றும், காளிதாசப் புலவரைத் தவிர்த்தால் இவர்காலப் புலவருள் இவரே அதுல்லியர் என்றும், சம்ஸ்கிருதத்திற் காவிய தரிசனத்தையும் தமிழ் அலங்காரத்தையும் இவர் செய்தார் என்றும் ஒரு சாரார் கூறுவர் பின்னுெரு சாராரோ இக்கூற்று அபத்தம் என்றும், தண்டி என்று பெயர்ப்பட்டார் இருவர் என்றும், சம்ஸ்கிருதத்திற் காவிய தரிசனஞ் செய்த தண்டி ஓர் சமணர் என்றும், வீரசோழியத்தில் ஐந்தாவதான அலங்காரப்படலத்தில் 'தரைமலி மானிடர் தம்மலங் காரங்க டண்டி சொன்ன-உரைமலி நூலின் படியே உரைப்பன்' என்று புத்த மித்திரர் சொன்னதும் அவரையே என்றும், தமிழ் அலங்காரஞ் செய்த தண்டி சம்பர் புத்திரராகிய அம்பிகாபதி புத்திரர் என்றும், ஓர் சைவர் என்றுஞ் சொல்வர். "பண்டிதர் விகாதப்படில் மாணுக்கன் யாது செய்வன்' எனும் ஆங்கில பழமொழிப்படி இவ்வாறு கற்ருர் இருபாற்பட்டுத் தண்டி எனப்பட்டார் இருவர் என்றும் ஒருவர் என்றும் தண்டு மிண்டில் உரைக்கில் யாம் யாது சொல்லலாம் ? எவராயினும் சரி தண்டியாசிரியர் செய்த அலங்காரம் மிகு மாட்சியும் சிறப்பும் பெற்றது. அதற்குச் சுப்பிரமணிய தேசிகர் உரை செய் திருக்கிருர். இவ்வுரையை மூல பாடத்துடன் தில்லையம்பூர்ச் சந்திர சேகர கவிராச பண்டிதர், திருவாவடுதுறை யாதீன வித்துவான் தாண்டவராய சுவாமிகள், இயற்றமிழ் ஆசிரியராகிய திருத்தணிகை carnrsúGLucy pr&ruñ இவர்கள் முன்னிலையிற் பரிசோதித்து அச்சிட்டனர் பொதுவனியியல், பொருளணியியல், சொல்லணியியல் சான்றும் மூன்று இயல்களில் நூற்றிருபத்துமூன்று சூத்திரங்கள்
"pyar.

- 291 -
குறிப்பு
காவியாதர்சம் இயற்றிய ஆசார்ய தண்டியும் தண்டியலங்காரம் தந்த தண்டியும் ஒருவரென்னும், காசிச்செட்டியவர்கள் முதலானேர், கருத்திற்கு ஆதாரம் இருப்பதாகக் கூறுவதற்கில்லை. தண்டியலங் காரம் காவியம்பற்றிக் கூறும் பொதுவியல்புகளிற் காணப்படும் சில குறைபாடுகள் காவியாதர்சத்தில் இல்லை என்னும் கூற்றுக் கவனிக்கத் தக்கது. இருவரும் ஒரே பெயரினையுடையவர்களாகப் பிற்காலத்திற் காணப்பெற்றமையால் ஒருவரென்னும் கருத்துத் தோன்றியது போலும். சண்டீசநாயனர் தண்டி என வழங்கப்பெறுவதாலும் தண்டிநாயனர் எனும் பெயராலும், தண்டி தமிழ் நாட்டின் இயற் பெயர் எனக் கருதத் தக்கதாயினும், காவியாதர்சத்தினை மொழி பெயர்த்தமையாலே தண்டியலங்கார ஆசிரியருக்கு மூலநூலாசிரி யரின் பெயர் சிறப்புப்பெயராக அமைந்திருக்கலாம் எனவும் கொள்ள இடமுண்டு.
தண்டியலங்காரத்தின் சிறப்புப்பாயிரமாகச் சிலராற் கருதப்படும் "வடதிசையிருந்து" எனும் செய்யுள் சோணுட்டு அம்பிகாபதியின் புதல்வர் தண்டி என்று கூறுகின்றது. அம்பிகாபதியின் தந்தை இன்னர் என்று செய்யுள் கூரு திருக்கச் சிலர் அவர் கம்பர் என்று கருதித் தண்டியின் காலநிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளனர். காவியாதர்சத்தின் மொழிபெயர்ப்பு என்பதைக் கூருததாலும், நூலாசிரியர் பெயராகத் தரப்பட்டது சிறப்புப்பெயர் என்று கருதக் கிடப்பதாலும், சில ஏட்டுப்பிரதிகளில் மட்டுமே காணப்பெறுவதாலும் பிறகாலத்தில் ஒருவரால் இச்செய்யுள் இயற்றப்பெற்ற தென்று கருதுவர்".
தண்டியலங்காரத்தின் கால நிர்ணயம் 'தண்டியாசிரியர் மூலோ தாரணங் காட்டினுற்போல யாமும் உரையெழுதியதல்லது மூலோ தாரணமுங் காட்டினம்’ எனும் பிரயோகவிவேக ஆசிரியரின் கூற்றின் அடிப்படையிற் செய்யப்பட்டு வருகின்றது. பிரயோக விவேகம் சுட்டிய 'தண்டியா சிரியர்" தடிையலங்கார ஆசிரியர் என்னும் கூற்றுப் பொருத்தமாகத் தெரியவில்லை. முற்கிளந்த சூத்திர வுரையிற் சுப்பிரமணிய தீட்சிதர் சங்கத ஆட்சிகளைக் கூறிவிட்டுப் பின் னர் தமிழ் ஆட்சிகளைத தனியே பிரித்துக் கூறியுள்ளமை கவனிக்கத் தக்கது, ஆசார்ய தண்டி காவியாதர்சததை இலக்கணம், உதாரணம் பொருத்தல் முதலிய விசேடங்களோடு அமைத்துள்ளார் என்பது சங்கத நூலார் கருத்து; தண்டியலங்காரம் உதாரணங்களுடன்
1. ச. வையாபுரிப்பிள்ளை தமிழ் இலக்கிய சரிதத்தில் காவியகலம், 1957, பக். 263 - 265, الم. في 2. கி. வா. ஜகந்நாதன்: தமிழ்க்கப்பியங்கள், 1955, பக் 49 3. Si sul Goti, 3

Page 155
- 292 -
நூலாசிரியராலேயே அமைக்கப்பட்டது என்பதற்கு ஆட்சியில்லை. மேலும் தண்டியலங்காரத்தில் இடம்பெறும் உதாரணங்களிலே இன்ன நூலுக்குரியவை என்ருே, இன்னுரால் முன்னர் எடுத்தாளப்பெற்றன வென்ருே சுட்டமுடியாதனவற்றைத் தண்டியலங்காரத்தின் ஆசிரியரே பாடினர் என்று துணிவதற்கும் ஆதாரமில்லை. சிலர் மேற்கோள் பாடல்களைத் தண்டியலங்கார ஆசிரியர் பாடவில்லை என்று கருதி யுள்ளனர் என்பது நோக்கத்தக்கது. இப்பாடல்களிலே எட்டுப் பாடல்களில் வரும் அனபாயன் எனும் பெயரின் அடிப்படையிலே தான் தண்டியலங்கார ஆசிரியர் இரண்டாம் குலோத்துங்கசோழன் (1133-1150) காலத்தவர் என்று கருதப்படுகிருர் என்பது நோக்கத் தக்கது.
ஆயினும், தண்டியலங்காரம் வீரசோழியத்திற்குப் பிற்பட்ட தென்றும் அடியார்க்குநல்லாருக்கு முற்பட்டதென்றும் கருத இடமுண்டு. காவியாதர்சத்தின் மொழிபெயர்ப்பாக அமையும் வீரசோழியத்தின் அலங்காரப்படலத்தோடு ஒப்பிட்டு நோக்கு மிடத்துக் காணப்பெறும் சிறப்பியல்புகள் தண்டியலங்காரம் வீரசோழி யத்திற்குப் பிற்பட்டதென்பதை வற்புறுத்துவன. வீரசோழியம் வீரராஜேந்திரசோழன் (1083-1070) காலத்ததாகும். அடியார்க்கு நல்லார் "அணியியல்" எனும் பெயரால் எடுத்தாளும் மேற்கோள்கள் தண்டியலங்காரத்திலுள?. சிலப்பதிகாரத்தின் இந்திரவிழவூரெடுத்த காதையில் முதலாம் குலோத்துங்கசோழன் (1070-1120) மீது பாடப்பெற்ற கலிங்கத்துப்பரணியிலிருந்து சில தாழிசைகளை எடுத்தாள்வதாலும், சிலப்பதிகாரவுரையின் சிறப்புப்பாயிரப் பாடல் மூலம் அடியார்க்குநல்லாரை ஆதரிந்த பொப்பண்ண காங்கேயர் கோன் கன்னட தேசத்துக் கங்கவம்சத்துச் சைன சமயத்தவனும், கி. பி. 1137 இலே பரமபதம் அடைந்த இராமாநுசரால் வைணவத் திற்கு மாற்றப்பட்ட போசள விஷ்ணுவர்த்தன மன்னனின் மந்திரியும், படைத்தலைவனுமாகிய கங்கராசனின் புதல்வன் என்பது தெளி வாதலாலும், அடியார்க்குநல்லார் காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டு என்பர் 8 . ஆயினும் Aணியியல் எனப் பிறிதொரு நூல் இருந்ததாகவும் அறியக்கிடக்கின்றது . தண்டியலங்கார ஆசிரியர் அந்நூலிலிருந்து அடியார்க்குநல்லாரும் மாறனலங்கார உரை ஆசிரியரும் * குறிப்பிடும் நூற்பாக்களைத் தமது நூலில் எடுத்திணைத்
1. உ. வே. சாமிநாதையர்: சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும், 1937 பக். 162
2. சிலப்பதிகாரம், உரைபெறுகட்டுரை, 4; 2.26 - 27
3. மு. அருளுசலம் : தமிழ் இலக்கிய வரலாறு, 12ம் நூற்குண்டு, இரண்டாம் பாகம், 1973;
உபேத்கீராசிரியர் குறிப்பும் காண்க.
4. மயில் சீனி, வேங்கடசாமி : மறைந்துபோன தமிழ்நூல்கள், 1957, பக். 240-242
5. 25 a.-evoj.

س- 293 سسسه
தனரோ என ஐயுறவும் இடமுண்டு. தண்டியலங்காரத்திலே தற்சிறப்புப்பாயிரமும் காப்பும் நீங்கலாக 124 சூத்திரமுள. அது 35 அணிகளைக் கூறுவதாகும். அதன் பழையவுரையாசிரியர் இன்ஞர் என்பது தெரியவில்லை. "சுப்பிரமணியதேசிகர்" எனப் பெயரிட்ட வருக்கு ஆதாரமிருப்பதாகக் கூறுவதற்கில்லை. கப்பிரமணியதேசிகர் குறிப்புக் காண்க.
நரசிங்கபுரம் வீராசாமி முதலியார் ஆனந்த ஞ புரட்டாதி மீ" {1854) ஏனைய ஐந்து இலக்கண நூல்களுடன் தண்டியலங்காரம் மூலத்தைப் பதிப்பித்தார். தில்லையம்பூர் சந்திரசேகரகவிராச பண்டிதரின் பழையவுரைப்பதிப்பு 1858இல் வெளிவந்தது. பழைய உரையின் முதலிரு இயல்களுக்கு வை. மு. சடகோபராமாநுஜசார்யர் எழுதிய குறிப்புரையுடன் கூடிய பதிப்பு 1901இல் வெளிவந்தது. சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவரின் புத்துரை சென்னை வித்தியாது பாலன யந்திரசாலேயிற் சோபஇருது டு ஐப்பசி மீ" (1903) அச்சிடப் பெற்றது. பழையவுரைக்குச் செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகம் சேர்ஐை எழுதிய குறிப்புரைப்பதிப்பு 1920 இலும் கொ. இராம லிங்கத்தம்பிரான் எழுதிய குறிப்புரையுடன் கூடிய திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு 1938 இலும் திருப்பனந்தாள் சுந்தரமூர்த்தியின் பதிப்பு 1967 இலும் வெளிவந்தன. சடகோபராமாநுஜசார்யர் குறிப்புரை எழுதாத சொல்லணியியலுக்கு சி. ஜெகந்நாதாசார்பர் எழுதிய குறிப்புரை யுடன் கூடிய முழுநூற் குறிப்புரைப்பதிப்பு 1962இல் வெளிவந்தது.
பத்தொன்பதாம் நூற்றண்டின் கடைக்கூறிலே தி. ஈ. பூஜீநிவாச ராகவாசாரியர் காவியாதர்சத்தினைச் சுருக்கி உரைநடையிலே தண்டியலங்காரசாரம் என அளித்துள்ளார்.
55guay à î Jastaff. - Thaththuvapprakasar.
இவர் திருவொற்றியூர் ஞானப்பிரகாசதேசிகர்க்கு மாளுக்கர். சித்தியார் பரபட்சத்துக்கு உரை எழுதின மகாபண்டிதருள் ஒருவர்.
குறிப்பு திருவொற்றியூர் தத்துவப்பிரகாசரைக் காசிச்செட்டியவர்கள் குறிப்பிடவில்லை. கொன்றைமாநரம் சண்முகசுந்தரமுதலியாரின் சிவஞானசித்தியார் பரபக்கவுரைப் பதிப்பின் அடிப்படையிற் சதாசிவம்பிள்ளை இவரைப் புதிதாகச் சேர்த்துக்கொண்டார்.
1. மயில் சீனி. வேங்கடசாமி :பத்தொன்றுதாம் நூற்குண்டில் தமிழ் இலக்கியம் 1962, பக். 151 2. Mų u.ä. 219

Page 156
- 294 -
திருவொற்றியூர் ஞானப்பிரகாசரின் ஆசிரியர் கமலை ஞானப் பிரகாசரின் காலம் கி. பி. பதினரும் நூற்ருண்டின் நடுப்பகுதியாதல் தகுமென்பது சிவஞானதேசிகர் குறிப்பாற் புலனுகும். அருணந்தி சிவாசாரியர் குறிப்பிலே தத்துவப்பிரகாசரின் பரபக்கவுரைப் பதிப்புகள் பற்றிய விபரங்கள் இடம்பெறுவன.
தத்துவப்பிரகாசர் எனும் பெயரில் வேறு"சிலரும் காணப்படுவர். சீகாழி தத்துவப்பிரகாசர் தத்துவப் பிரகாசம் இயற்றியவர்; சீகாழி பழுதைகட்டி சிற்றம்பலநாடிகளின் சீடர்; மதுரைச் சிவப் பிரகாசரின் சிவப்பிரகாசவுரையில் (கி. பி. 1489) தத்துவப்பிரகாசப் பாடல் எழுத்தாளப்பெறுவதால், அவ்வுரையின் காலத்திற்குமுன்னர் வாழ்ந்தவர். தத்துவப்பிரகாசத்தை வேலணை வி, கந்தப்பிள்ளை பழையவுரையுடன் நந்தன ளு மாசி மீ (1893) அச்சிட்டார், சிவபுரம் தத்துவப்பிரகாசர் என்பவர் சீகாழி தத்துவப்பிரகாசரின் ஒரு சாலை மாணுக்கரின் சீடரின் சீடராவர். விசயநகரமன்னன் கிருட்டின தேவராயர் (1509-1529) காலத்திலே திருவாரூரிலே வாழ்ந்த தத்துவப்பிரகாசர் என்பவர் பாடியனவாகத் தமிழ் நாவலர் சரிதையிற் பத்துப்பாடலுள1. இவர் மாணவகர் திருத்தோணியப்பர் பாடிய மூன்று பாடல்களும் இந்நூலிலுள*. இவற்றில் "குட்டுதற்கோ" எனும் பாடல் தனிப்பாடற்றிரட்டிற் படிக்காசுப்புலவர் பாடலாகத் தரப்பட்டுள்ளது. சீகாழித் தத்துவப்பிரகாசரையும் சிவபுரம் தத்துவப் பிரகாசரையும் திருவாரூர் தத்துவப்பிரகாசரையும் ஒருவராகக் கொண்டெழுதியவருமுளர்.
5jg ni JT uử. — Thaththuvarayer.
இவர் கி. பி. பதினெராஞ் சதாப்தத்திலே சோழநாட்டிலே, வீரை என்னும் ஊரிலே, மாதவாசாரியர் கோத்திரத்திலே பிறந்த ஓர் பிராமணர். பாலிய வயசிலே தமிழ் சம்ஸ்கிருதம் இரண்டிலும் பயின்று வல்லவரான இவரது சுற்றத்தாருள் இவருடன் கூடிக் கல்வி கற்ற சொரூபாநந்தர் என்னும் ஒருவருளர். இந்த இருபேருந் துறவிகளாய்ச் சைவ ஆகமங்களின் உட்டுறையுள் நுழையக் கருதிக், குருவில்லா வித்தை என்ன வித்தை என்பார் போல, மேலான ஒர் குருவைத் தரிசனஞ் செய்தற் பொருட்டுப் பிரஸ்தானப்படுகையில், ஆர் முதற் குருவைக் காண்பானே அவன் மற்றவனுக்குக் குரு என்று பிரமாணிக்கம் பண்ணிக்கொண்டு, ஒருவர் வட நாட்டுக்கும், மற்றவர் தென்நாட்டுக்கும் போ னு ர் கள். தென்நாட்டுக்குப் போன
1. 224 - 227, 231 - 236 2. 228 - 230

حسس۔ 295 س~
சொரூபாநந்தர் கோவத்தம் என்னும் வனத்திற் சஞ்சரித்த சிவப் பிரகாசர் என்றவரை முதற் கண்டார்; ஆதலால், முன் பண்ணின நிண்ணயப்படி இத் தத்துவராயர் மற்றவர்க்கு மாணவகராஞர் ஆயினும், செய்யுள் இயற்றுந் திறமை இவரிற் சிறந்திருந்தது பற்றி மற்றவர் வேண்டுமையின்படி தாங் கற்றுணர்ந்த வேதாந்த சித்தாந்த சாஸ்திரங்களைப் பாடல் மாதிரியாகப் பொழிந்தனர்.
இவர் செய்த நூல்களாவன:
8alilor artar Qasirurt 2. Gf
தத்வாமிர்தம் சிலேடையுலா திருத்தாலாட்டு நெஞ்சுவிடுதூது பிள்ளைத்திருநாமம் கலிமடல் வெண்பாவந்தாதி அஞ்ளுைவதைப்பரணி கலித்துறை யந்தாதி மோகவதைப்பரணி சின்னப்பூவெண்பா அமிர்தசாரவெண்பா தசாங்கம் * திருவருட்கழன்மாலை இரட்டைமணிமாலை போற்றிமாலை மும்மணிக்கோவை புகழ்ச்சிமாலை நான்மணிமாலை சசிவர்னபோதம் திருவடிமாலை பெருந்திரட்டு ஞானவினுேதன் கலம்பகம் குறுந்திரட்டு
இவற்றுட் சசிவர்ணபோதம் என்பது சசிவர்ணன் என்னும் பேருடைய ஒரு மாணுக்கனுக்குப் போதித்ததால் அப் பெயரியது: அம் மாணுக்கன் வரலாழுவது விருத்தாரணியம் என்னும் நாட்டில் வசித்த சாந்தசிலன் என்னும் வேதியனுக்கு விரதசிலை என்னும் அவள் மனைவி ஒர் புத்திரனைப் பிரசவித்தாள். அவன் பிறந்தபோது சந்திரனை ஒத்த வெண் குட்டம் உடையணுய் இருந்தாணுதலால் அப் பெயர் அவனுக்கு இடப்பட்டது. இப்புத்திரன் இவரை ஆசிரியணுய்க் கொள்ளவே அவன் பொருட்டு இந்நூல் இயற்றப் பட்டது. இதற்குத் தாயுமான சுவாமிகள் மரபிலே தோற்றிய அருணுசலநாவலர் என்பவர் உரை செய்தனர். இதிலே நூற்றுப் பத்துச் செய்யுள் உள. மேற் கூறப்பட்ட நூல்களுக்கு மாத்திரமல்லப் பாடுதுறை எனும் பாடலுக்கும் இவர் ஆக்கியோர். இப்புலவரது பாடல் மாதிரிக்குத் தத்துவாமிர்தம் அதிகாரபத்ததியில்? இருந்து ஒரு பாட்டுத் தருவம்.
1, 3. u s . Əhali üğ6 iyi Q.Qlier ut 2. நூ. பா. அதிகாரபத்திரத்தில்

Page 157
سست 296 سس۔
"நித்த சுத்த புத்த நிட்க ளத்த தெத்தை யத்தையே
பத்தி யுற்ற சித்த மத்தின் மெய்ப்ப தெத்தை யத்தையே முத்த பெத்த முற்று மற்ற முத்த மெத்தை யத்தையே மெத்த தத்து னற்ப தத்தை யுச்சி வைத்த னத்தமே.”*
குறிப்பு
வீரமாநகரில் மாத்துவப் பிராமணர் கோத்திரத்திற் பிறந்து இயற்பெயரைச் சிறப்புப்பெயரால் இழந்த தத்துவராய சுவாமி களின் தாய்மா னரே சொரூபானந்தசுவாமிகள். கோவர்த்தத்திற் சொரூபானந்தருக்கு ஞானேபதேசம் செய்தவர் திருவாரூர் சிவப் பிரகாசசுவாமிகள்
தத்துவராயரர் காலம் பதினரும் நாற்ருண்டு என்பர் காசிச் செட்டியவர்கள் பதினைந்தாம் நூற்ருண்டு என்பர் சுப்பிரமணிய பிள்ளை . ஆயினும் இருவரும் காரணமெதுவும் கூறவில்லை. ஞான மிர்தம், திருநூற்றந்தாதி என்பனவற்றிலிருந்து சிவப்பிரகாசப் பெருந்திரட்டிற் பாடல்கள் தொகுக்கப்பெற்றுள்ளமையாலே தத்துவ ராயர் காலம் பதினேராம் நூற்ருண்டென்று சதாசிவம்பிள்ளை கூறுவது பொருந்தாது. ஞானமிர்தத்தின் காலம் பன்னிரண்டாம் நூற்ருண்டு என்பர் 2; திருநூற்றந்தாதியின் காலம் பதினன்காம் நூற்ருண்டு என்பர் 8. பெருந்திரட்டிற் சங்கற்பநிராகரணம் எனும் நூற்பெயரும் எடுத்தாளப்பெற்றுள்ளது: apuDrr u.igô) 8faa)J fTaFuriti ayurf இயற்றிய சங்கற்ப நிராகரணமே பழமை உடையதாகக் கருதப் படுவதாகும். இந்நூல் கி. பி. 1313இல் இயற்றப்பெற்றது. சிவஞான சித்தியாரின் சுபக்கவுரைகாரர் மறைஞானதேசிகர் 'சிவனையவன் திருவடிஞானத்தால்’ என்ற 294ஆம் பாடலுரையில் அஞ்ஞை வதைப் பரணிப் பாடலொன்றை மேற் கோள் தருவதாற் பதினரும் நூற்ருண்டில் வாழ்ந்த மறைஞானதேசிகரின் காலத்திற்கு முற் பட்டவர் சுத்தாத்வைதவேதாந்தாசாரியர் தத்துவராயர் எனலாம். விருத்தகிரிக்கும் சிதம்பரத்திற்கும் இடையிலுள்ள இறும்பூதூர் எனும் எறும்பூரிலே தத்துவராயர் சமாதியுண் டென்பர்.
சதாசிவம்பிள்ளை குறிப்பிடும் திருத்தாலாட்டு முதல் அமிர்தசார .ெ கண்பா அல்லது அமிர்தசாரம் வரையிலான பதினெட்டு நூல் கடி )ே, திருவடிமாலை நீங்கலானவை, தத்துவராயர் அடங்கன் முறை ராமணத் தொகுத்து வழங்கப்படும். திருவடிமாலைக்குப் பதிலாகக் கலிப்பா காறும் பிரபந்தம் அடங்கன் முறையிற் பத்தாம் நூலாக
1. Gan ddim? Mong, 1958, Lui. 378 2, p. , I AP ab II d'Al : 0 GTO GP iš šif jis í sálů, 1961, uši. 78-81 3. Bhd Aloys à OAU of 1, uä 236

ܝܗܣܘ- 297 -ܚܗ.
இடம்பெறுகின்றது. திருவடிமாலே தத்துவராயர் பாடுதுறையிற் பதினெட்டாம் பிரிவாக இடம்பெறும் சொரூபாணந்த சுவாமிகள் திருவடிமாலை போலும், அஞ்ளுைவதைப்பரணி தத்துவராயரின் சீடர் சோதிப்பிரகாசராலும் மோகவதைப்பரணி சொரூபானந்தராலும் இயற்றப்பட்டவை என்பாருமுளர். திருவருட்கழன்மாலை, போற்றி மாலை, புகழ்ச்சிமாலை என்பன தத்துவராயர் பாடுதுறையில் முதலாம், பத்தொன்பதாம், இருபதாம் பிரிவுகளாக இடம்பெறுவனவாம். காசிச்செட்டியவர்கள் விதந்தோதாத பாடுதுறையைச் சதாசிவம் பிள்ளை குறிப்பிட்டபோதும் அதனுள் அடங்கும் நூல்களையோ பிரிவுகளையோ அறிந்திருக்கவில்லை என்று கருத இடமுண்டு. ஏனெனில் அதனுள் இடம்பெறும் நான்கு நூல்களைக் குறிப்பிடும் பிள்ளை அவர்கள் அவை பாடுதுறையில் இடம்பெறுவன என்பதைச் சுட்ட வில்லை. தத்துவராயர் பாடுதுறையில் 38 பிரிவுகளுள. மோகவதைப் பரணியிற் பேய்களுக்குத் தேவி கூறியதாகவுள்ள 110 தாழிசைகள் சசிவன்னபோதம் எனும் பெயரோடு தனிநூலாகவும் வழங்குகின்றது. பிறைசை அருணசலசுவாமிகள், சென்னை கோ. வடிவேல் செட்டியார் காஞ்சிபுரம் செங்கல்வராய முதலியார், திருப்பூவணம் காசிகாநந்த சுவாமிகள் ஆகியோரும் இதற்கு உரைகண்டுள்ளனர். சிவப்பிரகாசப் பெருந்திரட்டு எனப்படும் பெருந்திரட்டும் சிவப்பிரகாசக் குறுந்திரட்டு எனப்படும் குறுந்திரட்டும் வேறு நூல்களிலிருந்து தத்துவராயராலே திரட்டப்பட்ட பாடல்களையுடையன என்பர். ஆயினும் சில பாடல்கள் வேறு நூல்களின் பெயருடன் தொகுப்பாசிரியராலேயே பாடப் பெற்றன என்று கருதவும் இடமுண்டு. சிவப்பிரகாசம் எனப்படும் ஈசுரகீதையையும் சொருபானந்த சித்தி எனப்படும் பிரமகீதை யையும் தத்துவராயர் இயற்றினூர் என்பர்
சிவப்பிரகாசவெண்பாவையும் தத்துவாமிர்தத்தையும் கொன்றை மாநகரம் அருணுசலமுதலியார் 1841 இலே பதிப்பித்தார். தத்துவ ராயர் அடங்கன்முறைப் பதிப்பொன்று இரத்தாகூரி டு) (1924) வெளிவந்துள்ளது. பாசவதைப்பரணியை உ. வே. சாமிநாதையர் 1933இலே பதிப்பித்துள்ளார். கொன்றைமாநகரம் அருளுசல முதலியாரின் பாடுதுறைப்பதிப்பு விபரங்கள் தெரியவில்லை. 1904ஆம் ஆண்டிலும் பாடுதுறைப் பதிப்பொன்று வெளிவந்தது. காஞ்சிபுரம் அருணுசலதேசிகர் பரிசோதித்த பாடுதுறையை கொ லோகநாத முதலியார் 1917 இல் மனேன் மணிவிலாச அச்சுக்கூடத்திற் பதிப் பித்தார். கோயிலுர் அ. ராமசாமி 1888இலே சிவப்பிரகாசக் குறுந்திரட்டைப் பதிப்பித்தார். பெருந்திரட்டையும் குறுந் திரட்டையும் கோ. வடிவேல் செட்டியாரும் மங்கலம் சண்முக முதலியாரும் பரிசோதித்து 1912இல் அச்சிட்டனர். வித்தியா ரணிய சுவாழிகள் செய்த வட நூல் வியாக்கியானத்துக்கியையத்

Page 158
سست 298 سیس۔
திருநெல்வேலி கோடக நல்லூர் சுந்தரசுவாமிகள் இயற்றிய உரை யுடன் பிரமகீதை பிரசோற்பத்திD) மார்கழிமீ (1871) வெளி வந்தது. சிதம்பரம் கோ. சித. மடம் பொன்னம்பலசுவாமிகள் செய்த குறிப்புரையுடன் பிரமகீதையை முள்ளங்குடி நாராயணசுவாமி 1912 இல் ரிப்பன் அச்சியந்திரசாலையிற் பதிப்பித்தார். இவர் ஈசர கீதையையும் மேற்படி பொன்னம்பலசுவாமிகளைக்கொண்டு பரி சோதித்து 1912இல் மேற்படி அச்சகத்தில் அச்சிட்டார்.
56ör om hlíf. - Thanvanthiry.
ஆயுள் வேதங் கரைகண்ட இவர் முற்செனனத்திலே திருப்பாற் கடலிற் பிறந்து தேவலோக வைத்தியராய் இருந்து, இரண்டாஞ் செனனத்திற் தீர்க்கதர்மன் என்பார்க்குப் புத்திரராய்ப் பிறந்தனர் என்ப. இவர் பாடியதும், இவர் நாமதேயம் சேர்த்துச் சொல்லப் படுவதுமான நிகண்டிலே இoஉ பாட்டுகளும், வைத்தியசிந்தாமணியில் க உoo ம், சிமிட்டு ரத்தின ச் சுருக்கத்தில் கசு 0 ம், கலைக்ஞானத்தில் டுooம் உள. இவர் தமது சீஷன் சுசறுத்தர் என்பவனுக்கு வைத்திய நூல் ஒதிவைத்தார். உலக வழக்கில், நீ என்ன தன்வந்திரி ஒத்த வைத்தியனே என்று வைத்தியர் வினவும் வழக்க வினவினல், இவர் வைத்தியத்தில் அதுல்லியர் என்பது போதருகின்றது. இவரது பாடல் மாதிரிக்காய் இவர் செய்த நிகண்டின் இறுதிப்பாட்டை இவ்விடந் தருகின்ருேம். அது வருமாறு:
**ஆமப்பா விந்நூலைப் பதனம்பண்ணு
அப்பனே நல்லோர்கள் பதனஞ்செய்வார்
வாமப்பா விந்நூலை யெடுத்துக்கொண்டு வளமாக நீயெடுத்துப் பூசைபண்ணு
காமப்பா கல்வியறி வெல்லாந்தோன்றுங்
கனமான விந்நூலைக் கைவிடாதே
நாமப்பா முந்நூறும் பாருபாரு
நலமான கருக்கிடைநிகண்டிதுதான் முற்றே.'
குறிப்பு
தன்வந்திரி "தமிழ் புளூராக்" நூலில் இடம்பெருதவர். சங்கத நூல்களிலும் தன்வந்திரி எனும் பெயர் காணப்படுகின்றது. ஈழத்தில் எழுந்த பரராசசேகரம், சங்கதத்தில் இயற்றப்பெற்ற தன்வந்திரியின் வாகடத்தை, தழுவித் தோன்றியதாகக் கடவுள் வணக்கச் சிெப்புள் ஒன்று கூறுகின்றது. சதாசிவம்பிள்ளை குறிப்பிடும் கலைஞானமும்

- 299 -
தன்வந்திரி நாயனர் கலைஞானம் 500 என்பதும் ஒரே நூலா அல்லது இரு நூல்களா என்பது தெரியவில்லை. செயநிர், வாகடம், கருக்கிடை வைத்தியம் ( தன்வந்திரி கருக்கிடை 200), கருக்கிடை. நிகண்டு (? தன் வந்திரி கருக்கிடை நிகண்டு 100), தன்வந்திரி நாடிச் சாத்திரம், தன்வந்திரி வாலை சாத்திரம் என்பனவும் தன்வந்திரி பெயரால் வழங்குவன. ஏழாலை ஐ. பொன்னையா அவர்கள் தன்வந்திரி பச்சைவெட்டு எனும் நூலொன்றினைப் பதிப்பித்துள்ளார்.
g5 (T68for Ll6au eu prif 355. - Thandavamurthy.
நாராயண குருவின் நன் மாணுக்கராகும் இவர் பதிசாஸ்திரங் களிலே மிகத் தேற்றம் பெற்ற ஒரு துறவி. தமிழிலன்றி ஆரியத்திலும் வல்லவராகிய இவர் செய்த நூல் கைவல்ய நவநீதம் எனும் பெயர் பெறும். அஃது ஒரு குருவுஞ் சீடனும் பசு பதி பாச லக்ஷணங்களின் மேற் சம்பாஷித்த பாவனையாக இரண்டு அதிகாரத்தில் இயற்றப் பட்டது. அதிகாரங்கள் இரண்டுக்குங் கூடிய செய்யுள்கள் உகE. இதற்குப் பிறைசை2 அருணசல சுவாமி உரை எழுதினர். மாதிரிக்காய் இதில் ஒரு பாடல் வரைவம்:
* பொன்னில மாத ராசை
பொருந்தினர் பொருந்தா ருள்ளந் தன்னிலந் தரத்திற் சீவ
சாட்சிமாத் திரமாய் நிற்கும் எந்நிலங் களினு மிக்க
வெழுநில மவற்றின் மேலாம் நன்னில மருவு மேக
நாயகன் பதங்கள் போற்றி."
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் கூறியனவற்றை அான சலசுவாமிகளின் உரைப்பதிப்பின் துணையுடன் சதாசிவம்பிள்ளை விரிவுபடுத்தியுள்ளார்: நன்னிலம் தாண்டவமூர்த்திசுவாமிகள் சோணுட்டு நன்னிலம் நாராயணசாமி தேசிகரின் சீடராவர் இவர் காலம் கி. பி. பதினெட்டாம் நூற்ருண்டின் முற்பகுதி எனும் கா. சுப்பிரமணிய பிள்ளை, தம்கூற்றிற்கு ஆதாரமான காரணமெதுவும் சுட்டவில்லை 8.
1. ந. சி. கந்தையபிள்ளே தமிழ்ப் புலவர் அகராதி, 1960, பக். 215; தமிழ் இலக்கிய அகராதி.
1952. Li. 28, 73
2. g. u. 6
3, இலக்கிய வரலாறு, 1958 பக். 420

Page 159
سست 300 س.
உபநிடத சூத்திரபாடிய வார்த்திக சாரமாகக் கருதப்படும் கைவல்லிய நவநீதத்தில் 7 பாடல்கொண்ட பாயிரமும், 10 1 பாடல்கொண்ட தத்துவவிளக்கப்படலமும், 185 பாடல்கொண்ட சந்தேகந்தெளிதற் படலமுமுள. இவ்வேதாந்த நூலைச் சங்குகவி என்பவர் சங்கதத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
கைவல்லிய நவநீதத்திற்குத் திருத்துருத்தி இந்திரபீடம் கரபாத்திர சுவாமிகள் ஆதீனத்து, திருநாகை அருணசலகவாமிகளின் பிரதம சீடரும் பத்தொன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்தவருமான பிறையாறு அருணசலசுவாமிகளும், அவர் சீடர் ஈசூர் சச்சிதானந்த சுவாமிகளும் (1889), சிதம்பரம் கோ. சித மடம் பொன்னம்பலசுவாமிகளும் {1831-1904) உரைகண்டுள்ளனர்.
warseerwass: taxiwack
š576šT.6), Jau (upg6ölun sr. - Thandavaraya Mudeliar.
சென்னபட்டணத்தில் இருந்த கல்விமான்கள் பலருன் ஒருவ ராகும் இலர், முதல் அங்குள்ள கல்லூரி ஒன்றில் மாணுக்கராய் இருந்து பாண்டித்தியம் பெற்று, மறுபடி அதிலே ஆசிரியருமாயிஞர் தமிழ்ப் பாஷையில் அன்றி மராட்டிய பாஷையிலும் மிக வல்லவர். க அ2 டு ம் டு அங்குள்ள கல்விச் சங்கத்தார் கேள்விப்படி இலக்கண வினவிடை என்னும் நூலொன்றை இயற்றிஞர் அன்றி விஷ்ணுசர்மன் என்பவர் சம்ஸ்கிருதத்திற் செய்ய அதிணின்று கி. பி. ருருo-ருகக ஆண்டு வரையிற் பார்சியம் ஆதியாம் பல பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருந்த பஞ்சதந்திரக்கதையை மராட்டியத்தினின்று தமிழில் மொழிபெயர்த்தார். வாசிப்பார்க்கு இன்பம் பக்கும் பற்பல கதைகளைத் திரட்டிக் கதாமஞ்சரி என்னும் பெயரிட்டுப் புத்தகம் ஆக்கினவரும் இவரே. வீரமாமுனிவர் செய்த சதுரகராதியின் முதல் மூன்று பாகங்களுடன், சூடாமணி நிகண்டு பத்துத்தொகுதி களையும், திவாகரத்தின் முதல் எட்டுத்தொகுதிகளே அம் இவர் திருத்தி அச்சிடுவித்தார்.
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தைச் சதாசிவம்பிள்ளை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். தாண்டவராய முதலியார் கொண்டை நாட்டுச் செங்கற்பட்டு மாவட்டத்து வில்லிநல்லூர் ஆகிய வில்லியம்பாக்கம் என்ற ஊரிற் கந்தசாமி முதலியாரின் கல்வராகத் தோன்றினர். தந்தையை இளமையில் இழந்த பின்னர், வர் பொன்விளந்த களத்தூரில் மாமனர் குமாரசாமி உபாத்தி

- 301 -
யாயரின் ஆதரவில் வளர்ந்தார். ஆங்கு உழலூர் வேலப்பதேசிகரிடம் பயின்ற பின்பு, சென்னையை அடைந்து புதுவை விசுவநாதபிள்ளை வித்துவான் இராமாநுச முதலியார் ஆகியோரிடம் தம் கல்வியை விருத்தி செய்தார். இவர் தொல்காப்பியம் வரதப்பமுதலியார், சீகாழி வடுகநாத தம்பிரான் ஆகியோரிடம் தொல்காப்பியத்தைப் பயின்றவர். இவருக்குச் சங்கதம், தெலுங்கு கன்னடம் இந்துஸ்தானி, மராட்டி, ஆங்கிலம் எனும் மொழிகளிலும் பயிற்சி உண்டு. சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைமைத் தமிழ்ப்புலவராகப் பணிபுரிந்துவிட்டு 1843இலே செங்கற்பட்டு மாவட்ட நீதிமன்றத்தின் தலைவராகத் தாண்டவராயர் விளங்கினர். இவரிடம் பயின்ற மாணுக்கருள் ஒருவர் சென்னை புரசவாக்கம் "வெண்ணெய்க்கார” இரிசப்பமுதலியார் மகன் அட்டாவதானம் சபாபதி முதலியார் {- 1886) என்பவராவர். இவர் முகவை இ. இராமாநுசக்கவிராய ருடனும் திருத்தணிகை க, சரவணப்பெருமாளேயருடனும் இலக்கண இலக்கிய விடயமாக வாதஞ்செய்தவர் என்பர். இவர் 1850ஆம் ஆண்டு மறைந்தனர் என்பர் ?.
தாண்டவராயமுதலியார் திருத்தணிகைமாலை, திருப்போரூர்ப் பதிகம் எனும் செய்யுணுரல்களைப் பாடியுள்ளார் 8. இவர் அகப் பொருள்பற்றி எழுதிய சிறுநூல்கள் யாவை என்பது தெரியவில்லை* இவருடைய இலக்கண விணுவிடை சகம் 1746க்கு மேற்செல்லா நின்ற பார்த்திப வூலத்திற்குச் சரியான கி. பி. 1825 இலே செய்து முற்றுப்பெற்றது. எனவே 1820இல் எழுதினுர் எனவும் 1820இல் பதிப்பித்தார் எனவும் இடம்பெறும் கூற்றுகள் அச்சுப்பிழைகளாம். இஃது 1828இலே பதிப்பிக்கப்பெற்றது என்றும் கூறப்பட்டுள்ளது?. ஆயினும், இந்நூற் பதிப்பு முதன்முதலாக 1826 இலே வெளிவந்தது போலும். கிளாக் துரையின் (Richard Clarke) உத்தரவுப்படி சகம் 1746க்கு மேற்செல்லாநின்ற பார்த்திப (uலத்திற்குச் சரியான கி. பி. 1825இலே மொழிபெயர்த்து முடிந்த பஞ்சதந்திரக்கதை சகம் 1747க்கு மேற்செல்லா நின்ற விய ஞலத்திற்குச் சரியான கி. பி. 1828இலே சென்னைக் கல்விச் சங்கத்து அச்சுட் பதிப்பிக்கப்
The College of Fort St. George V. S. Chengalvaraya Pillai: History of the Tamil Prose literature, 1966, P. 59 மேற்படி நூல், பக். 58,
மேற்படி நூல், யக் 59 மயில். சீனி. வேங்கடசாமி : பத்தொன்பதாம் நூற்குண்டில் தமிழ் இலக்கிபம், 1962, 148ஆம் பக்கத்தை அடுத்துவரும் படப்பிரதி
டிெ நூல், பக். 131, 148, 149, 201
7. டிெ நூல், பக். 345, 348, 312
:
6.

Page 160
- 302 -
பெற்றது . கிளாக் துரையின் உத்தரவுப்படி தொகுக்கப்பெற்ற கதாமஞ்சரி சகம் 1748க்கு மேற்செல்லாநின்ற விய ஞலத்திற்குச் சரியான கி. பி. 1826 இலே சென்னைக் கல்விச்சங்கத்து அச்சுட் பதிப்பிக்கப்பெற்றது ?. இந்நூல் பிற்காலத்திற் கதாசிந்தாமணி எனும் பெயருடனும் பதிப்பிக்கப்பெற்றது போலும் 8.
சதுரகராதியின் இரண்டாம் பகுதியாகிய பொருளகராதி மட்டும் திருச்சிற்றம்பல ஐயர் உதவியுடன் எல்லிஸ் (F. W. Elis) அவர்களால் 1819இலே பதிபயிக்கப்பெற்றது. கிளாக் துரையின் உத்தரவுப்படி பெயர், தொகை, தொடை எனும் ஏனைய முப்பிரிவுகளைத் தாண்டவராய முதலியாரும் இராசநல்லூர் இராமச்சந்திர கவி ராயரும் பரிசோதித்துச் செப்பஞ் செய்தனர். இவர்கள் நான்கு பிரிவுகளுக்கும் பிற்சேர்க்கையாகப் பல சொற்களைத் தொகுத்து ஒரு பிரிவாக அளித்தனர். சென்னைக் கல்விச் சங்கத்தினர் இவர்கள் பரிசோதித்த பகுதிகளையும் முன்னர் வெளிவந்த பகுதியையும் இவர் களுடைய பிற்சேர்க்கையையும் சகம் 1746இல் நிகழாநின்ற தாரண டு (1824) பதிப்பித்தனர் 4, 1835இல் வெளிவந்த ஸ்மித் பாதிரி யாரின் (Rew, J. Smith) சதுரகராதிப் பதிப்பிலே தாண்டவராய முதலியாரும் இராமச்சந்திரகவிராயரும் தொகுத் தளித்த பிற் சேர்க்கை ஒவ்வொரு பிரிவிலும் பிரித்துச் சேர்க்கப்படடுள்ளது
சென்னைக் கல்விச் சங்கத்தின் நூல்நிலையத் தலைவராக விளங்கிய கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளை சகம் 1762க்குச் சரியான விகாரி டு) (1839) சென்னை தி. விசாகப்பெருமாளையரது கல்வி விளக்க அச்சுக்கூடத்தில் சேந்தன்றிவாகரத்தைப் பதிப்பித்தார். இப்பதிப்பில் இடம்பெறும் பத்துத் தொகுதிகளில் முதலெட்டும் தாண்டவராய முதலியாராலும் ஏனைய இரு தொகுதிகளும் புதுவை நயனப்பமுதலியாராலும் வழுவறுத்துப் புதுக்கப்பட்டவை. "தமிழ் லெக்சிகன்” (Tamil Lexicon) எனும் அகராதியில் இடம்பெறும் தமிழ் அகராதிக்கலையின் வரலாற்றிலே 1835ஆம் ஆண்டிலே தாண்ட வராய முதலியாரின் முதற்பதிப்பு வந்ததெனவும் அதனுட் பத்துத் தொகுதிகளுள எனவும் கூறப்பட்டுள்ளது. 1839ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒரு பதிப்பு வெளிவந்ததென்றே, அதனுட் பத்துத் தொகுதிகள் இருந்தன என்ருே துணிந்து கூறுவதற்கில்லை.
1. மயில் சீனி. லெங்கடசாமி பத்தொவ்பதாம் நூற்ருண்டில் தமிழ் இலக்கியம், பக். 23-34, 393,395 2. டிெ நூல், பக், 24 25, 393
3. டிெ நூல், பக். 395
4. டிெ நூல், 201, 265-266

-س- 303 --سه
தாண்டவராய முதலியார் 1831ஆம் ஆண்டிலே திருக்குறள், நாலடியார் என்பனவற்றின் மூலத்தைப் பதிப்பித்தார் . இவர் 1835இல் இலக்கண பஞ்சகம் எனும் தொகுப்பிலே நன்னூல், நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியனவற்றின் மூலத்தைத் தொகுத்துப் பதிப்பித்தார் 2. 1916இல் வெளிவந்த பவாநந்தம்பிள்ளையின் யாப்பருங்கல விருத்திப் பதிப்பில் இடம் பெறும் குறிப்பிலே தாண்டவராயர் யாப்பருங்கலத்தின் நூற்பாக்களை முன்னர் பிரசுரித்தார் என்ற செய்தி இடம்பெறுகின்றது.
தாயுமான சுவாமி.-Thayumanaswamy.
இவர் சுமார் நூற்றைம்பது வருடங்களின் முன்னே திருச்சிராப் பள்ளியிலே, வேளாளர் மரபிலே பிறந்தவர். திருச்சிராப்பள்ளியில் இருந்து செங்கோலோச்சிய விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கருக்குச் சம்பிரதியாய் இருந்த கேடிலியப்பபிள்ளை இவர்க்கு அன்புற்ற தந்தை யார். புத்திரன் "சவையகத்து முந்தி இருக்கச் செயல்" பிதாவின் கடமை என்பதைச் சிரமேற்கொண்ட தம் தந்தையாரது பிரயத் தனத்திலே இவர் இளவயசில் வடதென்மொழிகள் இரண்டிலுந் தேறிய பின்னர்ப் பதிநூல் கற்கும் பெரும் அவாவினலே தூண்டப் பட்டு மெளன தேசிகர் என்னுங் குரு முன்னிலையில் அதனைக் கற்ருர்: வைதீக நூலின் உழைப்பே பாலியந் தொடங்கி இவர்க்கு மனச் சார்பாய் இருந்தும், தந்தையார் இறந்த பின்பு இராசாவின் வேண்டுகோளின் படி சம்பிரதி உத்தியோகப் பொறுப்பை அங்கி கரித்தும் மறுபடி அவன் சம்மதப்படி அவ் உத்தியோகம் விட்டு இளைப்பாறி இருந்தார்.
இராசன் இறந்தபின் அவன் மனைவி இவரை அழைப்பித்து இவரது பேரழகைக் கண்டு, நீர் என்னெடு என் அரசுப் பொறுப் பையும் ஏற்றருளும் என்று வேண்டுமையாய்க் கேட்க, இவரோ பாம்பினுக்கு அஞ்சி ஒடுந் தேரைபோல, அவள் சமூகத்தை விட் டோடி இராமநாதபுரஞ் சென்று அங்கே தம் மரபிற் தb சேட்டனது விருப்பிற்கு இசைந்து ஓர் பெண்ணைப் பாணிக்கிரகணம் பண்ணினர். அந்தப் பெண் பிரதம பிரசூதிகையிற்ருளே இறந்துவிட்டாள். ஆதலில் இவர் மறு விவாகத்தை நிறுத்திக், கெளசீன சந்நியாசக் கோலந்தாங்கி, மரணு ந்தம் வ ை.(குந் தெக்கிண தேசச் சிவாலயங் களைத் தரிசித்து அவயறின் மேல் உச்சித பாடல்கள் பாடினர். இவரது பாடற்தொகை கசருக ம் ஒருங்கு சேர்த்து க அகசு ம் இல் அச்சுப்
2. மயில் சீனி, வெங்கடசாமி பத்தொன்யநாம் துர்குண்டில் தமிழ் இலக்கியம், 1962 பக். 149,
201. 380

Page 161
. 34 -
பதிப்பிக்கப்பட்டது. மனுே தியானத்தோடு தெய்வவழிபாட்டுக்கு ஏற்ற சிந்தையை எழுப்பிவிட. இவற்றிற்கு மேற்பட்ட பாடல்கள் இல்லை எனலாம். மாதிரிக்காக அவற்றுள் ஒன்றை இவ்விடம் தருவம்:
"ஊரநந் தம்பெற்ற பேரநந் தஞ்சுற்று
முறவநந் தம்வினையினல் உடலநந் தஞ்செயும் வினையநந் தங்கருத்
தோவநந் தம்பெற்றபேர் சீரநந் தஞ்சொர்க்க நரகமு மநந்தநற்
றெப்வமு மநந்தபேதம் திகழ்கின்ற சமையமு மநந்தமத னன்ஞான
சிற்சத்தி யாலுணர்ந்து காரநந் தங்கோடி வருவதித்த தெனவன்பர் கண்ணும்விண் ணுந்தேங்கவே கருதரிய வாநந்த மழைபொழியு முகிலைநம்
கடவுளைத் துரியவடிவைப் பேரநந் தம்பேசி மறையநந் தஞ்சொலும்
பெரியமெள னத்தின்வைப்பைப் பேசரு மநந்தபத ஞாநவா நந்தமாம்
பெரியபொரு ளைப்பணிகுவாம்."
இவ் விருத்த வகையிலன்றி, இவரது பாடல் பல பகுப்புற்றிருப்பது. பராபரக்கண்ணி என்ற பகுதியில் ந அக கண்ணிகள் உள. பைங்கிளிக் கண்ணி, எந்நாட் கண்ணி, ஆகாதோவென் கண்ணி வகைகளிற் பலவுள. இவருடைய தந்தையுந் தாயும் வேதாரணியத்திற் பிறந்த வர்கள். தந்தை வேதாரணியக் கோயிற் கணக்குப்பிள்ளையாய் இருக்கையில் அவருடைய திறமையைக் கேள்வியுற்றே அரசன் தன்னிடம் அவரை அழைத்துக்கொண்டான். தாயுமான சுவாமி களுக்கு மூத்த சகோதரன் சிவசிதம்பரப்பிள்ளை என்பவர். இப் பு, இரனைக் கேடிலியப்ப பிள்ளையின் சகோதரன் சுவிகார புத்திர ஞக்கிக் கொண்டனணுதலின் பறுபடி அவர் தாயுமானேசுவர சுவாமியைப் பிரார்த்தித்தே இவரைப் பெற்றனர் என்ப. தாயுமான சுவாமியுசா டய அருளாற் பிறந்தவர் என்ற கார ண த் தா ற் தாயுமா கெவர் என்னு நாமம் இவர்க்கு இடப்பட்டது. இவர் தந்தையாt வைத்திருந்த கணக்கேடுகள் இன்னும் வேதாரணியத்தில் உளவாம். இவரது புத்திரன் கனகசபாபதிப்பிள்ளை. இவர்சகுச் சீடின் சிறியதாய் மகனகிய அருளையபிள்ளை. இவர் மரபினர் சிலர்

س- 305 س
இந் நாளிலும் தஞ்சாவூர்க்குக் கிழக்கே உள்ள ஓர் ஊரில் இருக் கின்றனராம். ஐரோப்பியர் சிலர் இவரது சுகுணங்களைப் பாராட்டிப் பேசி இவர் பாக்களிலுஞ் சிலவற்றைத் தம் பாஷையில் மொழி பெயர்த்திருக்கிருர்கள்.
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தைச் சதாசிவம்பிள்ளை விரித்து எழுதியுள்ளார். இருவரும் தாயுமானவர் கி.பி. பதினெட்டாம் நூற்ருண்டில் வாழ்ந்தவர் என்று கருதியுள்ளனர் இக்காலவரையறை தாயுமான சுவாமி பாடற்றிரட்டில் இடம்பெறும் சரித்திரத்தாலும் வலியுறுகின்றது. சரித்திரம் கூறும் மீனுட்சியம்மையார் 1732-1736 இலே ஆண்ட இராணி மீனுட்சியாவர். ஆனல் தாயுமானவர் சீடர் கோடிக்கரை ஞானியார் பாடலாக வழங்கும் செய்யுளொன்று சுவாமிகள் சாலிவாகன சகாப்தம் 1583 இனத் தொடரும் சுபகிருது டு தை மீ (1863) சிவத்திற் கலந்தார் என்று கூறுகின்றது. ஆயினும் இலட்சுமிபுரத்திலுள்ள சுவாமிகளின் சமாதியிற் கி. பி. 1661ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் ஒன்பதாம் தேதி தாயுமானவர் ழுத்தியடைந்த காலம் என்று வரையப்பட்டுள்ளதாகக் கூறுவர். சீ. பி. ராமசாமி ஐயர் 1705இலே பிறந்து 1742இலே தாயுமானவர் மறைந்ததாகக் கணக்கிட்டுக் கூறியுள்ளார். மெளனகுரு திருச்சி மலக்கோட்டைச் சாரமாமுனிவர் மடத்தைச் (மெளனமடம்) சேர்ந்தவர் என்பர், அருளையரிடம் உபதேசம் பெற்றுக் கனகசபாபதிப் பிளளே தஞ்சையை அடுத்த அன்னப்பன் பேட்டையில் மடம் நிறுவினுர்,
காசிச்செட்டியவர்களும் சதாசிவம் பிள்ளையும் பதிப்பாசிரியர் பெயரினைச் சுட்டாது, 1836இல் வெளிவந்த தாயுமான சுவாமி பாடற் பதிபயினேக குறிப்பிடடுள்ளனர். மயிலை சீனி. வேங்கடசாமி 1835 இலே திருத்தணிகை சரவணப் பெருமாளையர் பதிப்பித்த தாகத் தாயுமானசுவாமி பாடற் பதிப்பொன்றினைக் குறிப்பிட் (G6ix Garmr ri* . இவர்கள் ஒரே பதிப்பினையோ அல்லது இரு பதிப் புகளையோ சுட்டுகின்ருர்கள் என்பது தெரியவில்லை. கருணுனந்த சுவாமி (1851) ஆதிமூல முதலியார் (1885), கல்யாணசுந்தர முதலியார் (1899), கே. குப்புசாமி முதலியார் (1905), கே. நாகலிங்க முதலியார் (1906) முதலியோர் தாயுமான சுவாமி பாடலைப் பதிப்
1. கலக்களஞ்சியம், தொகுதி 5, 1958, பக், 581-582 2. பத்தொன்பதாம் நூற்குண்டில் தமிழ் இலக்கியம், 1962, பக். 380
unr - 20

Page 162
است 306 سیس
பித்துள்ளனர். ரி. சம்பந்தமுதலியார் வித்தியா வினேதினி வெளி யீடாக 1891ஆம் ஆண்டிலும், பார்த்த சாரதி நாயுடு 1910 ஆம் ஆண்டிலும் உரையுடன் வெளியிட்டுள்ளனர். பூவை கல்யாணசுந்தர முதலியார் உரையுடன் சென்னை கே. எம். சுவாமி அன் கோ தாபனத தினர் 1909ஆம் ஆண்டிலும் பி. இரத்தினநாயகர் சன்ஸ் தாபனத் தினர் 1957ஆம் ஆண்டிலும் வெளியிட்டுள்ளனர். கே. குப்புசாமி முதலியார் முதல் மூன்று பாடல்களுக்குக்கண்ட விருத்தியுரையும் ஏனைய பாடல்களுக்கு இராமயோகி எழுதிய குறிப்புரையும் கூடிய பதிப்பு 1912இல் வெளிவந்தது. திருப்பனந்தாள் காசிமடத்தினர் 1952, 1963ஆம் ஆண்டுகளிற் குறிப்புரையுடன் பதிப்பித்துள்ளனர். சுவாமி சித்பவானந்தர் சில பகுதிகளைத் தனித்தனியே விரிவுரையுடன் திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண தபோவன வெளியீடுகளாகத் தந்துள்ளார்.
தாயுமானவர் பாடல்களிற் சிலவற்றை டாக்டர் கிருல் (Dr. Graul), GassmrŮLIGår Lunt@fiunt tř (Rev. G. Mc Kenzie Cobban), சேர். பொன்னம்பலம் அருளுசலம், ஜி. இ. பிலிப்ஸ் பாதிரியார், ஆனந்த கே. குமாரசுவாமி முதலியோர் சஞ்சிகைகளில் மொழி பெயர்த்துத்தந்துள்ளனர்?. L-irdini 6r6i. g... Lq 600 TL - (Barnett நூலொன்றிலே ஆனந்தக்களிப்பின் வசன மொழிபெயர்ப்பு இடம் பெறுகின்றது. சேலம் ஆர். சண்முகமுதலியார் 1897இலே சித்தாந்த தீபிகையில் வெளியிட்ட தாயுமானவர் பாடல்களின் மொழி பெயர்ப்புத் தனிநூலாகவும் வெளிவந்தது. பொன்னை மாதரை, ஆனந்தக் களிப்பு என்பவற்றை மொழிபெயர்த்து 1919ஆம் ஆண்டில் வழங்கிய ரி. ஐசாக் தம்பையா 3. 1925ஆம் ஆண்டிலே முன்னவரிலும் அதிகமான பாடல்களைத் தேர்ந்தெடுத்துச் சிறப்பான முறையில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் 3 இப்பகுதியில் இடம்பெறும் நீண்ட முன்னுரை தமிழ் இலக்கிய சரிதத்திற்கு இன்றியமையாததாகும்.
1. 1844, 1887ஆம் ஆண்டுகளிலும் தாயுமானவர் பாடல் பதிப்பிக்கப்பெற்றதென்பர் மயில் சீனி.
வேங்கடசாமி (பத்தொன்பதாம் நூற்குண்டில் தமிழ் இலக்கியம், 1962, பக். 380).
2, inclian Antiquary, 1876; Madras Christian College Magazine, July 1884; Sillhil Inta Deepikai, Vol. I; Madras Christian College Magazine, April, | v10; Prabuddha Bharata, 1913-1915
'The part of India, 1908
4, 't'ha ohla Neophical Poem of the Saint Thayumanavar, 1897
A " ! Mytic, 1919
*An Inn of a Niva Saint, 1925

حـ 307 ۔س۔
தாயுமானவர் பாடல்கள் ஜெர்மன் மொழியிலும் கலாநிதி லெமான் (Dr. At no Lehmann) gly alii set tail 1935-eth ஆண்டில் மொழி பெயர்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
திருக்கடவூர் உய்யவந்த தேவனுர்,- The. Uyavanthathavanar.
திருக்கடவூரிலே அவதரித்த காரணத்தாற் திருக்கடவூர் உய்ய வந்த தேவனர் எனுங் காரண அபிதானம் பெற்ற இவர், திருவுந் தியார் இயற்றிய உய்யவந்த தேவனர்க்கு மாணுக்கராகிய திருவியலூர் ஆளவந்த தேவனுர்க்கு மாணவகர். தம் ஆசிரியர் தமக்குப் போதித்த திருவுந்தியார் எனுஞ் சைவ சித்தாந்த நூலை இவர் பெரும்பற்றப் புலியூரில் இருந்தபோது தமக்குச் சீஷணுய் ஏற்பட்ட பரிபக்குவர் ஒருவர்க்கு விரித்துரைத்து, அதை ஓர் நூலாக்கி, அதன் மகிமையை வின் க்கற் பொருட்டுத் திருவம்பலகதிற்குப் போய்த் திருக்களிற்றுப் படியில் வைக்க, அதனை அத் திருக்களிறு தன் கையை நீட்டி எடுத்துச் சபாநாயகர் அடியில் வைத்தது என்ப. இக்காரணம் பற்றி அந் நூலுக்குத் திருக்களிற்றுப்படி எனு நாமதேயம் ஆயிற்று. தொழிலால் இவர் ஆட்டு வாணிபர் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிருேம். திருக்கடவூர் சிவன் இயமன உதைத்த ஸ்தலம் என்பர்.
குறிப்பு ܫܘܚܣܢ ܫ .ܢ
காசிச்செட்டியவர்களின் நூலில் இடம்பெருதவர் திருக்கடவூர் உய்யவந்ததேவநாயனர் சதாசிவம்பிள்ளை தம் காலத்தில் வெளிவந்த திருக்களிற்றுப்படியார் பதிப்புகளின் அடிப்படையில் இவரைத் தம் நூலில் விதந்து கூறினர். இவர் காலம் பற்றி உய்யவந்த தேவ நாயனர் குறிப்பிற் கூறப்பட்டுள்ளது. இவர் ஆசிரியர் திருவியலூர் ஆளுடைய தேவநாயனர் எனப்படுவர். சதாசிவம்பிள்ளை கூறும் கல்லானை வரலாறு தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளையின் புலியூரி வெண்பாவிலும் காணப்படுகின்றது.
திருக்களிற்றுப்படியார் உள்ளிட்ட பதின்ைகு சைவசித்தாந்த சாத்திரங்களின் மூலப்பதிப்பு விபரங்கள் அருணந்தி சிவாசாரியர் குறிப்பிலே தரப்பட்டன. அவற்றுடன் கொன்றைமாநகரம் சண்முக சுந்தரமுதலியார் 1871, 1875ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட மூலப் பதிப்புகள் இரண்டும் சேர்க்கப்படல் வேண்டும். கொன்றைமா நகரம் சண்முகசுந்தர முதலியார் வெளியிட்ட திருக்களிற்றுப்படியார்
1. Qðü, 78

Page 163
-- 308 -س-
உரை தில்லை திருச்சிற்றம்பலவர் எனும் சிவப்பிரகாசஞர் உரை ஆகும். காஞ்சி நாகலிங்கமுதலியார் (1897), கன்னிகைப்பேர் முருகேச முதலியார் (1898), சைவசித்தாந்த மகாசமாசத்தினர் (1934) வெளியிட்ட சாத்திர உரைப்பதிப்புகளிலும் இவ்வுரையே இடம்பெறுகின்றது. இவ்வுரையைத் திருவாவடுதுறை ஆதீனத்தார் கர ஹில புரட்டாதி மீ" (1951) மீண்டும் பதிப்பித்துள்ளனர்" திருக்களிற்றுப்படியாருக்கு எழுந்த பழைய உரையொன்றை மு. அருணுசலம் சைவசித்தாந்த மகாசமாசத்தினரின் பதினுன்கின் உரைப்பதிப்பினுடைய இரண்டாம் பிரசுரத்திற் (1940) பதிப்பித் துள்ளனர். இலக்கணம் முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் வைத்திருந்த திருக்களிற்றுப்படியாரின் பிறிதொரு பழையவுரை 1951இல் வெளிவந்தது. மு அருளுணசலம் திருக்களிற்றுப்படியாருக்கு எழுந்த பிறிதொரு பழைய உரையினை 1962இல் வெளியிட்டார். இவ்வுரையாசிரியர் காழிக்கண்ணுடைய வள்ளல் எனும் கருத்து ஆராயப்படவேண்டியதொன் ருகும். திருவாவடுதுறை யாதீனத்தார் 1954இலே திருக்களிற்றுப்படி விளக்கக் கட்டுரை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.
திருத்தேவர். - Theruththavar.
திருத்தக்க தேவர் எனும் மறுநாமம் பெற்ற இப் புலவர் திருவள்ளுவர் பிறந்து வளர்ந்த இடமாகிய மயிலாப்பூரைத் தமது செனன தேசமாய்க் கொண்டவர். சமயாசாரத்தாற் சமணராகிய இவர் இருந்த காலம் சிலர் கருதுகிறபடி இற்றைக்கு எழுநூறு எண்ணுாறு வருஷங்க ளின் முன்னும். அருக சமயத்தவருள் மிக்க பிரதாபமுற்றிருந்த சிந்தாமணி, சிலப்பதிகாரம், குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை எனும் பஞ்சகாவியங்களுட் சிரேட்டமுற்ற சிந்தாமணிக்கு இம் மகானே ஆக்கியோர். சமணரது மகா புராண சரிதங்களுள் ஒன்ருகி ஆதியிலே சம்ஸ்கிருதத்தில் இருந்த இக் காவியத்தை இப்புலவர் தென்மொழியிற் திருப்பினர். திரண தூமாக்கினி முனிவர் இயற்றிய தொல்காப்பியத்துக்கு உரை எழுதி முச்சுடர் என விளங்கிய மூவருள் ஒருவராம் நச்சினர்க்கினியார் என்னும் மகா கல்விமான் இக்காவியத்திற்கு உரை எழுதிப் பதப் பொருள் செய்து இலக்கண நுணுக்கங்களை விளக்கித் தொல்காப்பியம் முதலாம் மேற்கோள்களுங் காட்டினர் இந்த வியாக்கியானியார் இக்காவியத்திற்கு இரண்டுமுறை உரை எழுதினர் என்ப. முதல் எழுதிய உரையை வித்துவாமிசர் ஏற்றுக்கொள்ளாது எள்ளவே, மறுபடி அவர் சமணர் நூல்களை மிக ஆராய்வு செய்து விளங்கி அவற்றின் சாரம் ஊட்டி, இரண்டாந்தரம் உரை செய்தபோது

---- 309 س
யாவரும் நன்று நன்று என்று ஒப்புக்கொண்டனர். உரையாசிரியர் இப்புலவரைப் பாராட்டி, ஆசிரியர், தேவர், குரு எனும் பல அபிதானங்களால் வியந்து பேசினர் தொன்னூல் விளக்கம் இயற்றிய வீரமாமுனிவரும் இவரது காவியத்தோடு இவரது திறமையைப் புகழ்ந்து தமிழ் வல்ல புலவர்க்கு இவரே சிகாமணி என்றனர்.
இக் காவிய சரித்திரம் சத்தியம் அன்று, கற்பிதம் என்றும், வாசிப்பார் மனசை மருட்டி எடுத்து அவருடைய உள்ளத்திற் சமண மதப் போதனையைப் பதியச் செய்யும் அபிப்பிராயங் கொண்டே ஆதியில் இஃது இயற்றப்பட்டிருக்க :ேண்டும் என்றும் பலருங் கருதுகின்றனர். இக் காவியத்தில் வரும் பற்பல நாமங்கள் பயக்கும் அர்த்தங்களும் அக் கருத்தைப் பசுமரத்து ஆணி போல உரப்பியாதிரா. விசையை, ஏமாங்கதம், இராசமாபுரம் ஆதிய பல பதங்கள் இதற்குச் சான்ருகும். இக்காவியத்திற்குச் சீவகன் எனும் இராசகுமாரனே பாட்டுடைத் தலைவன். இவனது தாயாகிய விசையை ராணி இவனைக் கருத்தரிக் திருந்த போது மந்திரி துராலோசனை! செய்து இராசணுகிய சச்சந்தனைக் கொன்று, சிம்மாசன பதியாக, விசையை ஊர் விட்டு ஒடிச் சுடுகாட்டிலே பிரசவ வேதனைப்பட்டுச் சீவகனைப் பிரசவித்துச் சந்நியாச வேடங்கொண்டு அயலூர்க்கேகத், தனவந்த ஞன வணிகன் ஒருவன் காட்டிலே அப் பிள்ளையைக் கண்டு எடுத்துப் போய்த் தன் புத்திரனுக வளர்க்க, அவன் :3ராயமடைந்து, பற்பல வீரதீரக் கிரியைகள் புரிந்து பல மனைவியரைக் கலியாணஞ்செய்து, தாயைச் சந்தித்துத் தன் பிதாவின் இராச்சியஞ் சேர்ந்து, பட்டத் திருந்து செங்கோல் ஒச்சிய அமச்சனைச் சயித்துத், "தந்தவன் வாங்கின தன்மை" யென இராசாங்கத்தை ஒப்புக்கொண்டு ஆஞ்ஞா சக்கரஞ் செலுத்தினுன்.
இந்தக் காப்பியக் கதையைக் காலஞ் சென்ற பேர்சிவல் தேசிகர் சுருக்கி ஆங்கில பாஷையில் மொழிபெயர்த்தார். சம்ஸ்கிருத மொழி பெயர்ப்புக்காரரும் ஆக்கியோரும் ஆகிய இந்தத் திருத்தேவர் அக்காதையை மிகச் சிறப்பான காவியமாக்கி விருத்தப் பாவில் அமைத்தனர். சிந்தாமணியிலே நாமகள் இலம்பகம், கோவிந் தையார்? இலம்பகம், கந்தர்வதத்தையார் இலம்பகம், குணமாலையார் இலம்பகம் முதலாய பதின்மூன்று இலம்பகங்களுள. இலம்பகம் உ4 க்கும் க, க சடு விருத்தங்களுள, முதலாவதான நாமகள் இலம் பகத்தைப் பவுவர் தேசிகர் (Rev. H Bower), திருநெல்வேலியிலிருந்த இ. முத்தையாபிள்ளை, சமண சமயியாகிய சாஸ்திரம் ஐயர், இவர்
, , ur. M J CarstaT 2 y, u, Gs figui

Page 164
- 310 -
களின் சகாயம் பெற்று வீ. ஏ. வித்தியாபரீட்சைப் பட்டக்காரருக்கு உபயோகப்பட ஆங்கில பாஷைக் குறிப்புரை, அரும்பொருள் விளக்கங்களோடு அச்சிடுவித்தனர். சிந்தாமணி என்றது சிந்தாக விருப்பம் + மணி =இரத்தினம் என்னும் இரண்டு ஆரிய பதங்கள் புணர்ந்தானது. இப்புலவர் பாடல்மாதிரிக்கு, நாமகள் இலம்பகம் நாட்டுவளம் உoம் விருத்தத்தை இங்ங்னந் தருவம்.
"வளமுடி நடுபவர் வரம்பில் கம்பலை
இளமழை முழக்கென மஞ்ஞை யேங்கலின் அளமரு குயிலின மழுங்கிப் பூம்பொழில் உளமெலி மகளிரி னெடுங்கு மென்பவே.”*
குறிப்பு
திருத்தக்கதேவர் சரிதம் காசிச்செட்டியவர்கள் நூலில் இடம் பெறவில்லை. பவுவர் பாதிரியார் 1868 இல் நாமகள் இலம்பகத்தை நச்சினர்க்கினியர் உரையுடன் வேப்பேரியில் அச்சிடுவித்தனர். பின்னர் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் முதன் மூன்று இலம்பகங்களை நச்சினர்க்கினியர் உரையுடனும் பதவுரையுடனும் பதிப்பித்தனர். பனையஞ் சேரி அரங்கசாமிப்பிள்ளை முதலைந்து இலம் பகம் வரையிலான மூலப்பகுதியைச் சென்னை அஷ்டலட்சுமிவிலாச அச்சுக்கூடத்திற் சித்திரபானு ஞல பங்குனி மீ (1883) அச்சிட்டார். இப்பதிப்புகளின் அடிப்படையிற் சதாசிவம்பிள்ளை திருத்தக்க தேவரையும் தீபகத்திற் சேர்த்துக்கொண்டனர்.
திருத்தக்கதேவர் மயிலாப்பூரிற் பிறந்தார் என்பதற்கு ஆதார மில்லை. நச்சிஞர்க்கினியர் காலத்திலே தேவர் சோழர் குலத்திலே தோன்றியவர் என்ற கருத்து நிலவியதாகத் தெரிகின்றது. இக் கருத்தினை ஆதரிக்கத்தக்க சான்றெதுவும் புலணுகவில்லை. தேவரின் காலத்தினைத் துணிந்துரைத்தலும் அரிதாம். அரிஞ்சயன்குலத்துள் தோன்றி பவள் சீவகன் தாய் விசையை* என்ற கூற்றின் அடிப் படையிற் சிலர் பரகேசரி அரிஞ்சய சோழன் (956-957) காலத்தவர் தேவர் என்பர் 3. அரிஞ்சய சோழன் காலத்தில் வாழ்ந்த தேவர் தம் கதைத் தலைவனின் தாயும் அரிஞ்சயன் ஒருவன் மரபினள் என்பதை நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளனர் என்பது அவர்கள் வாதமாகும், ஆயினும் சைன புராணக் கதைகளில் அரிஞ்சயர் பலர் வருவதை
1. சீவகசிந்தாமணி, உ. வே. சாமிநாதையர் பதிப்பு, செப். 3143 உரை 2, GA, Csu, 70 3. இ. எஸ். வரதராஜ அப்பர்: தமிழ் இலக்கிய வரலாறு 1987, ப்க். 43

一3月1一
நோக்கும்போது தேவர் வரலாற்றுத் தொடர்புள்ள சோழனை மனதிற் கொண்டே இவ்வாறு கூறினர் எனல் பொருத்தமாகுமா என்பது சிந்திக்கத்தக்கது. மேலும் பாண்டியனையும் பல்லவனையும் பலவிடங்களிலே தேவ்ர் குறிப்பிட்டபோதும் சோழமன்னனை யாண்டும் குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. காந்தருவதத்தையார் இலம்பகத்தின் இரு செய்யுள்களிற் குறிப்பிடப்படும் காலங்களையும் அவ்விலம்பகத்தின் முதற் செய்யுளுரையில் நச்சினர்க்கினியர் குறிப் பிடும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டு எல். டி. சுவாமிக் கண்ணுப் பிள்ளை சிந்தாமணி கி. பி. 813இல் இயற்றப்பெற்றது என்பர். சீவகனும் தத்தையும் மணம்புரிந்த காலம் சிந்தாமணி இயற்றப்பட்ட காலமாகுமா? திதி வார நட்சத்திரங்கள் ஒருவகை யாய்க் கூடுவது மேலும் மேலும் நிசுழ்வதாகும்.
*பாற்கடல் போல’ எனும் சிந்தாமணி உரைச்சிறப்புப் பாயிர அகவலில், 'வண்பெரு வஞ்சிப், பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித் திருத்தகு முனிவன்" எனுமிடத்துத் தேவரைப் புகழ்ந்த பொய்யாமொழி என்பவர் கங்கமன்னன் சத்தியவாக்கியன் என்று து. அ. கோபிநாதராயர் கருதினர்2. ராயரவர்களின் கூற்றைச் ச. வையாபுரிப்பிள்ளையும் ஏற்று கி. பி. 908 முதல் 950 வரை ஆட்சிபுரிந்த சத்தியவாக்கிய கொங்குணி வர்ம பூதுகப்பெருமானடியே பொய்யாமொழி என்ருர் சி. தளவனபுரத்தை (தலைக்காட்டை)த் தலைநகராகக் கொண்டு ஆண்ட கங்கரில் முதலாம் ரசமல்லன் சத்தியவாக்கியன் (818-837) முதலாகப் பலர் "சத்தியவாக்கிய" எனும் பட்டத்தினைத் தம் பெயருடன் இணைத்திருப்பதை வரலாறு கூறும் *. எனவே “சத்தியவாக்கிய" எனும் பெயரைக் குறிப்பாக ஒரு கங்கமன்னனுக்கு ஏற்றி, அவன் சமகாலத்தவர் தேவர் எனல் பொருத்தமாகத் தெரியவில்லை. கங்கர் பதினுேராம் நூற்ருண்டின் ஆரம்ப தசாப்தத்திலே தமது தனியுரிமையை இழந்துவிட்டனர். மேலும் ‘வஞ்சி" எனும் அடைமொழியின் தாற்பரியமும் விளங்கு மாறில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீவகசிந்தாமணியின் முதனூலாக வாதீபசிம்மனின் கூடித்திர சூடாமணியைச் சமணர் கருதுவர் என்பர் பதிப்பாசிரியர் உ. வே சாமிநாதையர், ஆஞல் வாதீபசிம்மன் முற்கிளந்த நூலையும் கத்திய சிந்தாமணியையும் தேவரின் சிந்தாமணியைப் பின்பற்றி எழுதினன்
1. An T ndian Ephemeris : Vol I. Part II. Appendix III, 1922, PP. 469 -470 2. O asb. 05.
3. Alfij Saldij lajši sati sroji, 1957, Ljš. 174 4, M. V. Krishint Rao: The Gangas of Talkad, 1936,

Page 165
۔۔ 312 سست۔
எனச் சிலர் நிறுவுவர் ". வாதீபசிம்மன் காலம் கி. பி, எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்ருண்டு எனும் கூற்றும் சித்தாந்தமாகாது 2. இவனை ஆதரித்த இராசராசன் எனும் சோழமன்னன் முதலாம் இராசராசனயின், அவன் காலம் கி. பி. 985-1014க்கு உட்பட்ட தாகும் ?
ரி. எஸ். குப்புசாமி சாஸ்திரியார் குணபத்திராசாரியரின் மகாபுராண உத்தரபாகமே சிந்தாமணியின் மூலநூல் என்று நிறுவ முயன்றுள்ளார். ஆயினும் சிலர் உத்தரபுராணத்திற்கும் சிந்தா மணிக்கும் கதை ஒற்றுமை காணப்பெற்றபோதும் கதைப்போக்கிற் குறிப்பிடத்தக்க வேற்றுமை தெரிகின்றது என்பர். கதைப்போக்கிற் காணப்பெறும் வேறுபாடுகள் பிறிதொரு மூலாதாரத்தால் ஏற் பட்டனவோ அல்லது நூலாசிரியரின் இயல்புகளாலும் காவிய அமைப்பாலும் ஏற்பட்டனவோ என்பது துணிதலரிது. சைனச் சான்ருேர் சரிதங்களின் தொகுப்பு முயற்சியை அடுத்து அச்சரிதங்கள் இலக்கியப் பொருளாக அமைதல் எதிர்பார்க்கக் கூடிய நியதியாகும்* அவ்வாழுயின் மகாபுராணத்தின் பூர்வபாகமும் உத்தரபாகமும் முறையே ஜினசேனசாசியராலும் அவர் சீடர் குணபத்திராசாரிய ராலும் தொகுக்கப்பெற்ற பின்னர் சிந்தாமணி முதலானவை தோன்றல் பொருத்தமாகலாம். உத்தரபுராணம் கி. பி. 898இல் இயற்றப்பட்டது என்பர் 8. ஆயினும் குணபத்திரருக்குப்பின் குமார சேனரும், அவருக்குப்பின் சிந்தாமணி ஆசாரியரும், அவருக்குப்பின் பூரீவர்த்ததேவரும் இருந்தார்கள் எனும் கோபிநாதராயரின் கூற்றிற்குச் சிரவணபெல்கோலா மல்லி சேஷணப் பிரசஸ்தியிலோ அல்லது திருமுக்கூடலு நரசிப்பூர் தாலுகா சாசனத்திலோ ஆதார மிருப்பதாகக் கூறுவதற்கில்லை". இவற்றிலே குணபத்திரர் குறிப்பிடப் ulcaiah).
யாப்பருங்கலவிருத்தியுரைகாரர், குணசாகரர், இளம்பூரணர், அடியார்க்கு நல்லார் முதலியோருக்கு முன்னர் வாழ்ந்தவர் தேவர் என்று கூறலாம். சூளாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம் என்பனவற்றிற்கு முன்னேன்றியது சிந்தாமணி என்றும் கூறலாம்.
t. T. E. Gnanamurthy: A Critical Study of Civaka Cintamani, 1966, P. 32 2. தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம், பக். 175 3. T. E Gnanamurthy ; A Critical Study of Civaka Cintamani 1966, P. 3 4. தமிழகம், தொகுதி ! 0S S ttO LL0LGTLLL S TT TTTTT LLTT LLL LTT0LtTTS 000S LS 00S 6 கே. எஸ். பூந்நிவாஸ்பிள்ங்: தமிழ் வரலாறு, பிற்பாகம், முற்பகுதி, 1960 பக். 187; சில
கி.பி 897 என்பர் 7. செந்தமிழ், தொகுதி 5 8, சூத். 95 உரை : பாப்பருங்கலக்காரிகை, ஒழிபியல் 6 உரை; தொல்காப்பியம், செய்புளியல்,
98 உரை; சிலப்பதிகாரம், களுத்திறம் உரைத்த காதை, 12 உை

- 313 =
எனவே திருத்தக்கதேவர் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டிற்குப் பின்னரும் பன்னிரண்டாம் நூற்ருண்டிற்கு முன்னரும் வாழ்ந்தவ ராதல் சாலும்.
மணநூலென்னும் பிறிதொரு பெயருள்ள சிந்தாமணியைத் தேவர் எத்தனை பாடல்களிற் பாடிஞர் என்பது தெரியவில்லை. நச்சிஞர்க்கினியர் தேவர் பாடியது 270 0 என்பர் 1. பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் தாம் பதிப்பித்த 3145 பாடல்களில் நச்சினர்க்கினியர் குறிப்பிடும் தொகை ஒழிந்த 445 பாடல்களும் கந்தியார் பாடியவை யென்றும் அவை இன்னவை என்பது புலப் படவில்லை என்றும் கூறுவர், சாமிநாதையர் பதிப்பித்தன நீங்கலாக வேறுபாடல்களும் சிந்தாமணிக்குரியனவாக வழங்கிவந்துள்ளன. நச்சிஞர்க்கினியர் 442ஆம் பாடலின் பின் இரு பாடல்களைச் சுட்டி, அவை பயிலவழங்கா என்பர். புறத்திரட்டிற் சிந்தாமணிப் பாடல் களாகத் தரப்படும் 142 பாடல்களில் இரண்டு (315, 164) சாமி நாதையர் பதிப்பில் இடம்பெறவில்லை. சைவசித் தTந்த மகாசமாசப் பதிப்பிலே சிந்தாமணிப் பாடல்கள் 3154 உள. தனிப்பாடலொன்று சிந்தாமணியில் 3315 பாடலுள என்று கூறும்,
நச்சினர்க்கினியருக்கு முன்பும் சிந்தாமணிக்கு உரையிருந்தது என்று கருதச் சான்றுகளுள 2. நச்சிஞர்க்கினியர் உரையைத் தழுவிப் புலவர் "அரசு" விளக்கவுரையும் பொ. வே. சோமசுந்தரஞர் குறிப் புரையும் எழுதியுள்ளனர்.
உ. வே. சாமிநாதையர் 1887 இலே சென்னை த. கோவிந்த ஆசாரியாரது திராவிட ரத்நாகர அச்சுக்கூடத்தில் நச்சினர்க்கினியர் உரையுடன் முதன்முதலாகச் சீவகசிந்தாமணி முழுவதையும் பதிப் பித்துள்ளார். இப்பதிப்பிலுள்ள பிழைகளை எடுத்துக்காட்டிச் சுன்னகம் பூ. முருகேசபண்டிதர் சீவகசிந்தாமணி வழுப்பிரகரணம் எனும் கண்டனத்தையும் சுன்னுகம் அ. குமாரசுவாமிப்புலவர் சீவகசிந்தாமணிப் பிழைகள் எனும் கண்டனத்தையும் எழுதியுள்ளனர். சைவசித்தாந்த மகாசமாசம் 1941 இலே ச. வையாபுரிப்பிள்ளை umrtřGM) di u "L- சீவகசிந்தாமணி மூலத்தின் வெளியிட்டது. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாநீக நாற்பதிப்புக்கழகத்தினர் சிந்தாமணியை நச்சினர்க்கினியர் உரையைத் தழுவிப் புலவர் *அரசு" எழுதிய விளக்கவுரையுடனும் பொ. வே. சோமசுந்தரஞர் குறிப்புரையுடனும் இருபாகங்களாக 1959இல் வெளியிட்டனர். சாமிநாதையர் பதிப்பின் மறு பிரசுரங்கள் 1907, 1922, 1942 1949, 1957ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன.
1. சீவகசிந்தாமணி, உ. வே. சாமிநாதையர் பதிப்பு 343 உரை. 2. A ušůy. 260, 366, 1454, 1793, 1870, 9:3, 2705 a svairs.

Page 166
- 314 -
திருத்தக்கதேவர் காப்புச்செய்யுள் நீங்கலாக 50 பாடல் கொண்ட நரிவிருத்தமும் பாடியுள்ளார். இந்நூல் சிந்தாமணிக்கு முன்னர் இயற்றப்பட்டதெனக் %ர்ணபரம்பரைச் செய்தி கூறும். அப்பர் சுட்டும் நரிவிருத்தம் இஃதெனல் பொருந்தாது". வீரசோழிய உரைகாரர் பெருந்தேவனுர் கலித்துறைகளும் இடம்பெறும் நரிவிருத்தம் ஒன்றினையும் சுட்டல் ஈண்டு மனங்கொளத்தக்கது. மு. இராகவையங்கார் அரும்பதவுரையுடன் தேவரின் நரி விருத்தத்தை 1907இலே பதிப்பிப்பதற்கு முன்னர் மூலப்பதிப்பு ஒன்று வெளிவந்ததென்பர் தருமசீலன் எனும் பத்திரிகையில் மே மாதம் 1918ஆம் ஆண்டு முதல் நவம்பர் மாதம் 1922ஆம் ஆண்டுவரை வெளிவந்த செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகஞ் சேர்வையின் உரையோடு கூடிய மூலத்தைத் தருமசீலன் அதிபர் தி. ஆதிநைஞர் 1923இலே தனி நூலாக வெளியிட்டனர். இவ்வுரைப் பதிப்பினைச் சென்னை சைன இளைஞர் மன்றத்தினர் 1975இல் மறு பிரசுரம் செய்துள்ளனர்.
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் ஆசிரியரும், சேதுநாடு சன்னசிக் கிராமத்தவரும், வைணவரான தர்ப்பாசனரின் புதல்வருமான பகழிக் கூத்தர் சிந்தாமணி விளக்கம் எனும் சீவகசிந்தாமணிச் சுருக்கம் பாடியுள்ளார். பதிப்பாசிரியர் சாமிநாதையர் குறிப்பிடும் சிந்தாமணி மாலை பிறிதொரு நூல்போலும். சீவகசிந்தாமணி வசனம் (1893), சீவகசிந்தாமணி வசன கா. வியம் (1907) எனும் நூல்களும் அறியப் படுகின்றன 3.
திருநீலகண்ட யாழ்ப்பாணநாயஞர். --
Theru, Yalpana Nayanar.
இவர் சுங் தொண்டர் எனப்பட்ட வருள் ஒருவர். குணபாண்டியன் காலத்திலே திருவெருக்கத்தம்புலி ஊரிலே பிறந்தவர். தொழிலால் யாழ்ப்பாடி. சிவதொண்டிற் கருத்தாய்ச் சிவ ஸ்தலங்களைத் தரிசித்து அவ்வவ் இடங்களுக்கு ஏற்ற பாட்டுகளைப் பாடி யாழில் வாசித்துக் காலங்கழிப்பவர். பாண்டிய நாட்டின் இராசதானியாகிய மதுரைக்குச் சென்றபோது அங்குள்ள பிராமணர் முதல் இவரை அலட்சியம் பண்ணியும் மறுபடி இவரது மான்மியத்தை உணர்ந்தபின் மிகப் பூச்சியப்படுத்தி, இவர் உளுக்கார்ந்திருந்து யாழ்வாசித்தற்
1. ஐந்தாம் திருமுறை 100*7. 戀
2. Růů u Lah, 21
3. மயில் சீனி. வேங்கடசாமி : பத்தென்பதாம் நூற்ருண்டில் தமீழ் இலக்கியம், 1962 பக். 399;
ந. சி. கததைபாபிள்ளே தமிழ் இலக்கிய அகராதி, 1952, பக்.56 .

--نس۔ 315 حس۔
பொருட்டுப் பொற்பலகை கொடுத்து மரியாதை பண்ணினர்கள். பின் நாட்களில் இவர் திருவாரூர் சென்று, மறுபடி அங்கிருந்து சீகாழிக்குப் போய், அங்கே சம்பந்தருடன் சேர்ந்து அவர் பாடும் பதிகங்களை யாழில் வாசித்துத் திரிந்து, அவருடனே ஏக காலத்திற் ருனே திருநல்லூரில் இறந்துவிட்டார்.
குறிப்பு காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தைச் சதாசிவம்பிள்ளை பெரியபுராணத்தின் ஆதரவுடன் சிறிது விரித்துள்ளார். நாயனரின் வரலாற்றைச் சேக்கிழார் பதினுெரு பாடல்களிற் கூறியுள்ளார். இவரைத் திருஞானசம்பந்தர் புகழ்ந்துரைத்துள்ளார். "சம்பந்த மூர்த்தி குறிப்புக் காண்க. திருநீலகண்டநாயனர் இவரிலும் வேருனவர் என்பது நோக்கத்தக்கது.
9Đ(U5ủum (609ựp6u Tử. - Therupan Alvar •
இவர் விஷ்ணு சமயிகளாகிய ஆழ்வார் பன்னிருவருள் ஒருவர். இவர் தாய் இவரைப் பிரசவித்து உறையூர் வயல்வெளியில் வீசி விட்டுப் போகப் பாணன் ஒருவன் கண்டு எடுத்து வளர்த்தான் என்றும், தன்னை வளர்த்தவனைப் போலவே பாணனகி மறுபடி வைஷ்ணவத் தொண்டில் முதிர்ந்தார் என்றுஞ் சொல்வர். இவர் பெரும் பெயர் தாங்கிய புலவராதலில் விஷ்ணுவின் அவயவங்களைக் கேசாதிபாதம் வரையில் வர்ணித்துப் பாடினர். இவருடைய பாடல் மற்றைய ஆழ்வார் பாடல்கள் போல நாலாயிரப் பிரபந்தத்துடன் சேர்ந்திருக்கின்றது.
குறிப்பு காசிச்செட்டியவர்கள் அளித்த சரிதத்தைச் சதாசிவம் பிள்ளை மொழிபெயர்த்துத் தந்துள்ளார். பாண் பெருமாள் தாய்வயிற்றில் இருந்து பிறவாதவர் என்பது மரபு 2. இவர் காலத்தை அறியச் சான் றுகள் கிடைக்கவில்லை. முதலாழ்வாருக்குப் பின்னரும் நாதமுனிக ளுக்கு முன்னரும் வாழ்ந்தவராதல் சாலும்'.பாண் பெருமாள் வரலாற் றைத் தொண்டரடிப்பொடியாழ்வார் தம் முள்ளத்திற் கொண்டே திருமாலையின் 42ஆம் 43ஆம் பாடல்களைப் பாடியுள்ளார் எனச் சிலர் கருதுவர்?. இக்கருத்தைச் சித்தாந்தமாகக் கொள்வதற்காதாரமில்லை. திருப்பாணழ்வார் பாடிய "அமலனதிபிரான்" எனும் பத்துத் திருப்
1 - 629, 3 - 1156 பி. பூநீ. தொண்டச்குலமே தொழுகுலம், 1957, பக் 150 குலசேகரப்பெருமாள் குறிப்புக் காண்க
1. 2. 3. 4. மு. இராகவையங்கர் : ஆழ்வார்கன் காலநில்

Page 167
- 36 -
பாசுரங்கள் கொண்ட பதிகம் நாலாயிரப்பிரபந்தத்தின் முதலாயிரத் தில் இடம்பெறுகின்றது. குலசேகரப்பெருமாள், பொய்கையர்ழ்வார் குறிப்புகள் காண்க.
திருப்பாற்கடினுதன் கவிராயர். - Therupparkkadanathan.
á9g Gf5& Gall 60u9á 3]gifig g) Gtir Ghulia) gruft (Rev. Mr. Rhenius) என்னுஞ் சுவிசேஷக் குரவருக்குப் பதினன்கு வருடம் ஆசிரியராய் இருந்த இவர், அம்பலவாணக் கவிராயரது மாணுக்கர். இரேணி யுசையர் காலஞ்சென்றபோது இவர் பாடிய சில விருத்தங்களன்றி, இவரது பாடல்கள் பிறவற்றை நாம் கண்டிலம். பாடல் மாதிரிக்காக அவற்றுள் ஒன்றை இவ்விடந் தருவம்:
**சரணமென் றடைந்தோர் தங்களுக் கிரங்கித்
தமனிய மீந்துமூ வகையாம் கரணமென் பவையாற் றீங்குரு வண்ணங்
காசினி தன்னிலா தித்தன் கிரணம்போ லறிவைப் பரப்பிய விரேனி
யூசெனுங் குரவனைச் சார்ந்த மரணமே நினக்கு மரணம்வந் துருதேல்
மனத்துய ரருதுநல் லோர்க்கே’’
குறிப்பு திருப்பாற்கடனுதன் 3 விராயர் சரிதம் 'தமிழ் புளூராக்" நூலில் இடம்பெறவில்லை. C, T, E. இரேனியுஸ் பாதிரியார் (1790-1838) மட்டுமன்றி இரட்சணிய யாத்திரிகம் பாடிய H. A. கிருஷ்ணபிள்ளையும் கவிராயரவர்களின் மாணவ கரேயாவர். கவிராயரவர்கள் தம் நண்பர் உறையூர் முத்துவீர உபாத்தியாயர் இயற்றிய முத்துவீரியம் எனும் இலக்கண நூலுக்கு உரை கண்டதோடு அமையாது, அந்நூலுக்கு இரு சிறப்புப்பாயிரங்களும் பாடியவராவர்.
9q5 tDü65n36uII (b6umữ. - Therumangai Alvar.
வைஷ்ணவ சமயத்தாருட் பெயர்பெற்று ஓங்கிய ஆழ்வார் பன்னிருவருள் இவரும் ஒருவர். இவர் பிறப்பிடந் திருக்குறையலூர், சோழராசாவின் சேஞதிபதியாகிய நீல்ன் என்பவன் இவர்க்குத் தந்தை. இவர் சோழராசாவுக்குக் கீழ்ச் சிற்றரசராய்ப் பின் ஒரு
l. து. ப. திருவாரூர்

- 37
ஊரில் வதிந்து திறை கொடுத்து ஆளும்படி சங்கேதம் பண்ணி இருந்தும் பண்ணின உடன்பாட்டின்படி திறை கொடாமையாலும், இராசனுற் கடமை தண்டும்படி அனுப்பப்பட்டாரை விரோதித்துச் சேனையோடு எதிர்த்ததனுலும், தன் அதிகாரத்தை இழந்து வறுமை வாய்ப்பட்டுக், கொள்ளை எடுப்பதே தொழிலாய் ஆறலைக் கள்வராய்த் திரிந்து, நெற்றியில் வைஷ்ணவக் குறியிடாதாரை ஒடுக்கி அவரிடம் பொருள் அபகரித்துச் சீவித்தவர். ஆனல் இக் குரூரத் தொழில் இவர் எவ்வாறு விட்டாரோ அறியோம். இவர் கல்வியிலே மகா வல்லவராகி ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் எனும் நான்கு வகைக் கவிகளையும் பாடுந் திராணியுற்றவராய் இருந்ததனுல் இவர்க்கு நாற்கவிப் பெருமாள் எனுஞ் சிறப்புப்பெயர் இடப்பட்டது. இவர் சைவம், ஆருகம் என்னும் பிற மதங்களோடு மல்லுக்கட்டிப் பர சமய கோளரியாய்த் தம் மதத்தையே மேலாட்டம் ஆக்கப் பிரயாசப் பட்டவர். நாற்கவிப்பெருமாள் எனுங் கவிப்பட்டத்துக்கு நீ தகுந்தவ னல்ல என்று சம்பந்தமூர்த்தி இவரோடு வாதிட்டபோது அப்பெயர் தமக்குத் தகும் என்று திருட்டாந்த பூர்வங் காட்டினர். இவர் பாடிய பாக்கள் ககங்எ' ந11 லாயிரப் பிரபந்தம் எனும் வைஷ்ணவப் பாடலோடு சேர்ந்திருக்கின்றன. பாடல் மாதிரிக்காக இவ்விடம் ஒரு தனிப்பாத் தருகின்ருேம்.
** வருக்கைநறுங் கணிசிதறிச் செந்தேன் பொங்கி
மடுக்கரையிற் குளக்கரையின் மதகி லோடிப்
பெருக்கெடுத்து வண்டோலஞ் செய்யுங் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமான் கேளிர்
அருட்குலவு மயிலைதனில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை யாக்கி னேமென்
றிருக்குமது தகவன்று நிலவால் வெந்த
இவளையுமோர் பெண்ணுக்க லியல்பு தானே."
குறிப்பு
பிறப்பிடமும் மேற்கோட்பாடலும் நீங்கலாகக் காசிச்செட்டி யவர்கள் தந்த சரிதமே தீபகத்தில் இடம்பெறுகின்றது. திருக் குறையலூர் சோழமண்டலத்துத் திருவாலிநாட்டுக் கண்ணதாகும். இவர் திருஞானசம்பந்தருக்குக் காலத்தாற் பிற்பட்டவர் தொண்டரடிப்பொடியாழ்வாரும் இவரும் சமகாலத்தவர் என்பது பின்பழகிய ஜீயர் கருத்தாகும்.
1. நூ. பாக, உடுக

Page 168
- 318 -
திருமங்கையாழ்வார் இரண்டாம் நந்திவர்மன் (731-798)
காலத்திற்குப் பிற்பட்டவர் என்பது பரமேச்சுர விண்ணகரம் (பெரிய திருமொழி, 2, 9. 1-10) பற்றிய பாசுரங்களாலே தெளிவாகும். மேலும் இவர் வைரமேகன் எனும் மன்னன் காலத்தவர் என்று கருத இடமுண்டு. இம்மன்னன் இரட்டவேந்தன் தந்திதுர்க்கன் (752-756) என்று ஆழ்வார்கள் காலநி%லயின் ஆசிரியர் மு. இராகவையங்கார் கருதினர். ஆழ்வார் தந்திதுர்க்கனைப் போற்றிஞர் எனல் பொருத்தமாகத தெரியவில்லை?. து. அ. கோபிநாதராயர் வைரமேகன் என்பவன் தந்திவர்மன் (798-846) எனும் பல்லவ மன்னன் என்று கருதினர். இவனுக்கு வைரமேகன் எனும் பெயர் வழங்கியமை சாசனங்களாற் புலணுகும். பல்லவர் பெருமையையே ஆழ்வார் கூறுவதாலும் தந்திவர்மன் ஆட்சியில் வலிகுன்றிய பல்லவர் நிலையைக் குறிப்பிடாததாலும் தந்திவர்மனுக்குப் பிற்பட்டவர் என்று பூரீநிவாசபிள்ளை கூறுவது பொருத்தமாகத் தெரிந்தபோதும், ஆழ்வர் கவிமரபாகக் கூறியதை வரலாற்று உண்மையாகக் கொண்டு கால ஆராய்ச்சி செய்வதிலும் வைர மேகன் எனும் பெயர் ஆட்சியின் அடிப்படையிலே துணிதல் பொருத்தமாகலாம் பூரீநிவாசபிள்ளை மூன்றம் நந்திவர்மனே (846 - 869) வைர மேகன் என்று கருதிய போதும் அவனுக்கு அப்பட்டம் இருந்தமைக்கு ஆதாரமில்லை என்பது நோக்கத்தக கது. எனவே இரணடாம் நந்திவர்மனைப் போற்றும் ஆழ்வார், அவன் மகன் தந்திவர்மன் காலத்தில் இருந்தவர் என்பது பொருத்தமாகலாம்,
திருமங்கையாழ்வார் பாடிய பெரிய திருமொழி (1084), திருக் குறுந்தாண்டகம் (20), திருநெடுந் தாண்டகம் (30) என்பன பெரிய திருமொழிப் பிரிவிலும் சிறிய திருமடல், பெரிய திருமடல் திருவெழு கூற்றிருக்கை என்பன இயற்பாப் பிரிவிலும் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் இடம் பெறுவன. குலசேகரப்பெருமாள், பொய்கை யாழ்வார் குறிப்புகள் காண்க. சதாசிவம்பிள்ளை தரும் மேற் கோட்பாடல் தனிப்பாடற்றிரட்டிற்குரியது.
திருமழிசையாழ்வார். -- Therumalisi Alvar.
சிேற் கூறப்பட்ட திருமங்கை ஆழ்வாரைப் போலவே இவரும் பன்னிய கண்டு ஆழ்வாருள் ஒருவர். திருமழிசை என்னும் ஊரிலே இவர் வளர்ந்தார் எனபதே இவரைக் குறித்து நாம் எழுதக் கூடிய இதிகாசம்.
1. Qudi (40 km , 2, 8, 10 2. கே. எஸ் யங் நிலlள்ளே! தமிழ் வரலாறு, பிற்பாகம், முற்பகுதி, 1960, பக். 134 - 13 7. GAą, ul. l..d6

حسس 319 سحس.
இவர் வாலிபப் பிராயந் தொடங்கி வைஷ்ணவக் கோட்பாட்டில் அதிபிடிவாதக்காரராய்ச் சைவருக்குக் கூற்றுவராய் அவரை எதிர்த்து வாதிற் பறக்கடித்து, அவருள் அநேகரைத் தம் மதப்படுத்தினர். புலமையாலும் இவர் ஒருவர்க்குத் தோற்றவர் அல்லர், விஷ்ணுவுக்குப் புகழாகப் பாடிய இவர் பாக்கள் உக சு' ந"லாயிரப் பிரபந்தத்தோடு சேர்ந்திருக்கின்றன. இவர் பாடிய திருவந்தாதி இவர் நாமப்படி திருமழிசையாழ்வார் திருவந்தாதி எனும் பெயர் பெறும். அதி லிருந்து இவர் பாடல் மாதிரிக்காக ஒன்றை எடுத்து இவ்விடந் தருகின்ருேம்.
"நான்முகனை நாரா யணன்படைத்தா னன்முகனுந்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்ப.ைத்தான்-யான்முகமாய் அந்தாதி மேலிட் டறிவித்தே ஞழ்பொருளைச் சிந்தாமற் கேண்மினீர் தேர்ந்து.'
குறிப்பு ۔ســــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــ
காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தோடு திருமழிசையாழ்வார் திருவந்தாதி எனும் பெயரும் மேற்கோளுப் புதியனவாகத் தீபகத்தில் இடம்பெறுகின்றன. இவ்வந்தாதி இயற்பாப்பிரிவில் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் இடம்பெறுவதும் 96 பாடலுடையதுமான நான்முகன் திருவந்தாதியாகும். இவர் முதலாயிரம் எனும் பிரிவில் இடம்பெறும் திருச்சந்தவிருத்தம் எனும் 120 பாடல் கொண்ட பிரபந்தத்தையும் பாடியுள்ளார்.
பக்திசாரர் எனப்படும் திருமழிசையார் பிறப்புப்பற்றிய கதை சிவவாக்கியர் குறிப்பில் இடம்பெறுகின்றது. இவரும் சிவவாக்கியரும் ஒருவரென்னும் கூற்றுக்குப் போதிய ஆதாரமில்லை என்பதும் ஆங்கு காட்டப்பெற்றது". இவருக்குக் கணிகண்ணான் எனும் சீடரொருவரும் இருந்தாரென்று வைணவர் சரிதம் கூறும்.
மகாமல்லனுண முதலாம் நரசிம்மவர்மன் (630-668) காலத்திலோ அல்லது அவன் காலத்திற்குப் பின்போ, சமகாலத்தில் வாழ்ந்த முதலாழ்வார் மூவரிற் பேயாழ்வாரின் சீடர் திருமழிசையார் என்பது வைணவர் சரிதக் கூற்ருகும். இந்நால்வரும் ஏனைய ஆழ்வாருக்கு முற்பட்டவரி.
யாப்பருங்கல விருத்தியுரை 3 குறிப்பிடும் " குடமூக்கிற் பகவர்" என்பவர் திருமழிசையார் என்றும், அவர் இயற்றியதாகக் கூறப்படும் "வாசுதேவஞர் சித்தம்" திருமழிசையாரின் திருச்சந்த விருத்தம் என்றும் மு. இராகவையங்கார் அனுமானஞ் செய்துள்ளார். குலசேகரப்பெருமாள், பொய்கையாழ்வார் குறிப்புகள் காண்க.
1. Sf. u, soap 2. கொங்கணர் குறிப்பும் காண்க 3. செய்யுளியல், 40 உரை (சென்ன அரசாங்கப்பதிப்பு, 1960 பக். 286)

Page 169
- 320
Scepsb. Tua (soff. - Therumula Nayanar.
இவரைப் பற்றிய சரித்திரம் மிக நூதனமானது. சாத்தன் ஊரிலே இருந்த மூலன் எனும் இடையன் ஒருவனுடைய தேகமும், கைலாச மலையிலே வசித்த சிவயோகி ஒருவர் உயி குங் கூடவே திருமூல நாயனுர் ஆயினர் என்று கூறல்வேண்டும். இவரைப் பற்றித் தொண்டர் புராணங் கூறுமாறே யாமுங் கூறுவம். கைலாச மலேயைக் காவல் காக்கும் நந்திதேவர் மாணவகர்களான சிவயோகிகளில் ஒருவர் அகஸ்தியர் மேற் சிரத்தை கொண்டவராய் அவருடன் சிலகாலம் பொதியமலையிலே தங்கவேண்டும் எனும் பேராசையாற் தூண்டப் பட்டுக், கைலாசம் விட்டு வந்து திருக்கேதாரம் ஆதியாம நான ஸ்தலங்களைத் தரிசித்துத் திருவாவடுதுறையிற் சிலநாட் தங்கின பின்பு, காவேரி ஆற்றங் கரைவழியாய்ப் போயினர். இவர் போன மார்க்கத்திலே சாத்தனுாரில் இடையன் ஒருவன், மூலன் என்பவன் இறந்து பிரேதமாய்க கிடக்க, அவன் கொண்டுவந்து மேய்த்த மாடுகள் அவனச் சுற்றிச் சுற்றி மோந்தும் நக்கியும் நின்று அழும் பரிதாபத்தைக் கண்டு இரங்கி, அறுபத்து நான்து கலைஞானங்களுள் ஒன்ருகிய பரகாயப் பிரவேச வல்லராதலாற் தம் உடலை விட்டு அவனுடைய உடலிற் புகுந்து, மாடுகளை மேய்த்துப் பொழுது சாயுத் தருணம் அவற்றை ஊர்க்குக் கொண்டுபோனுர்,
நாயகன் நேரத்துக்குத் திரும்பாதது கண்டு பரிதபித் திருந்த மூலன் மனைவி இவரைக் கண்டவுடன் தன் கணவன் என்று நினைந்து அன்பின் ஈட்டததால் இவரை ஆலிங்கனம் பண்ணும்படி சமீபிக்க, இவரோ உனக்கும் எனக்குஞ் சம்பந்தம் இல்லை, என்னைத் தீண்டாதே என்று சொல்லிப் போய் மடம் ஒன்றிற் தங்கி, மற்றைநாட் தம் உடலைத் தேடிப்போய்க் காணுததனுற் திருவாடுதுறை சென்று அங்கே ஓர் அரசமரத்தின் கீழ்த் தங்கி, மூவாயிரம் வருஷம் யோகத்திருத்து வருடம் ஒன்ருக மூவாயிரம் பாடல் பாடிப் பின்பு கைலை போயினர் என்ப. இவர் பாடிய பாடலுக்குத் திருமூலமந்திரம் என்று பேர். இது சரியை 1. கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு பாதங்களையும் உணர்த்துவது. அதில் ஒரு பாவை இவ்விடங் கூறுவம்
'அன்புஞ் சிவமு? மிரண்டென்ப ரறிவிலார்
அன்பே சிவமாவ தியாரு மறிகிலார் அன்பே சிவமாவ தியாரு மறிந்தால் அன்பே சிவமா யறிந்திருப் பாரே." முரண நூலன்றி வாகட நூல்களையும் இவர் பாடி இருக்கின்ருர், இவயh ப்பட்ட குணவாகட நூலிலே கஉசு பாக்களுள.
. na 2. W. WA Awap

ܝܚܪܝ 321 -
குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தை ஆசிரியர் பெரிய புராணத்தின் அடிப்படையில் விரித்துள்ளார். திருமந்திரத்திற் கிடைப்பதாகக் கருதப்பெறும் திருமூலர் சரித்ச் சான்றுகள் வரலாற் றுண்மைகளாகக் கொள்ளத் தக்கனவா என்பது ஆய்வுக்குரியது. நந்திகேசுர சந்தானம் எனப்படுபவரும், சீகணட உருத்திரராம் நந்தியின் அருள் பெற்றவருமான எண்மருள் ஒருவர் திருமூலர் என்றும், அவருக்குச் கீடர் எழுவர் என்றும் திருமந்திரம் கூறுகின்றது. இவ் வெழுவர் பெயரிற் கருத்து வேறுபாடுமுண்டு, துடிசைக்கிழார் அ. சிதம்பரனர் "மந்திரம் பெற்ற வழிமுறை" எனும் பாடலிற் "காலாங்கி கஞ்சமலையன் எனும் தொடர் ஒருவரையே சுட்டும் என்பர் ; முற்கிளந்த பாடலற் சோமனை நீக்கும் முத்திநிச்சயப் பேருரை காலாங்கனும் கஞ்சமலையமானும் என இருவராகக் கொள்ளுகின்றது". திருமூலர் திருவாவடுதுறையிற் போதியி ைகீழ்த் தங்கியிருந்ததாகத் திருமந்திரம் கூறுகின்றது 3. நம்பியாண்டார் நம்பிகள் சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்க செய்தியைக் கூறியுள்ளார் *.
திருமூலர் காலத்தினைத் தெளிவாக நிறுவுவதில் இடர்ப்பாடுக ளுள. "நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்" என்னும் சுந்தரமூர்த்திநாயனருக்கு முற்பட்டவர் திருமூலர். திருஞானசமபந் தர் திருவாவடுதுறைக்குச் சென்றகாலை பலிபீடத்தின் அருகில் மணங்கமழ்ந்த தென்றும். அகழ்ந்தபோது திருமந்திரம் கிடைத்த தென்றும் கர்ணபரம்பரை உண்டென்று தேவாரப் பதிப்புகள் சில குறிப்பிடுகின்றன. இச் செய்தி பெரியபுராணத்திலோ சாஸ்திரம் சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகளின் திருவாவடுதுறைப் புராணத் திலோ காணப்பெருமையாற் கர்ணபரம்பரை எனல் பொருத்தமா குமா என்பது சிந்திக்கத்தக்கது. தில்லையிற் பொன்னம்பலம்" அமைந்த பின்னர் வாழ்ந்தவர் திருமூலர் 6 , இரணியவர்மன் (சிம்மவர்மன்) தில்லைத் திருக்குளத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றமையாற் சிற்றம் பலத்தைப் பொன்வேய்ந்தான் என்று கோபிற்புராணம், சிதம்பர மான்மியம் ஆகியன கூறுவன. இம்மன்னனுக்கு முன்னர் பொன்
1. திருமந்திரம், சைவசித்தாந்த சமாஜம் பதிப்பு: 1933, செப். 67, 69; சிவஞாளதேசிகர் குறிப்புக்
காண்க,
2. தருமபுரவாதீனப் பத்ப்பு, 1946, பக். 58 3. திருமந்திரம், 78, 79, 82 4. திருத்தொண்டர் திருவந்தாதி, 36 5. ஏழாம் திருமுறை 39, 5 6. திருமந்திரம் 2740, 2777
unt-2

Page 170
- 322 -
வேய்ந்த செய்தி அறியுமாறில்லை. சிம்மவர்மன் எனும் பெயரில் பல்லவர் மூவர் ஏழாம் நூற்ருண்டிற்கு முன்பு காணப்பெறுவர். இரண்டாம் சிம்மவர்மன் வைணவச் சார்புமிக்கவன். முதலாம் சிம்மவர்மன் ஆட்சிக்காலம் கி. பி. 436 - 458 எனவும் மூன்ரும் சிம்மவர்மன் ஆட்சிக்காலம் கி. பி. 580-586 எனவும் கூறுவர். எனவே பொன்னம்பலத்தைக் குறிப்பிடும் திருமூலர் கி. பி. ஐந் தாம் நூற்ருண்டிற்கு முற்பட்டவராகார். மல்லாக்கத்தள்ளி, வட்டி, தாவடி, ஒலக்கம், ஒட்டியாணம், கடுக்கன், ஆடம்பரம், கண்காணி, திண்டாடி, பொதுக்கென முதலிய வழக்குகள் இடைச்செருகல் என வற்புறுத்தாவிடத்து, முற்கிளந்த காலமேலெல்லை மேலும் ஆதரிக்கப் பெறுதல் கவனிக்கத்தக்கது
திருமந்திரமாலை, திருமந்திரம் மூவாயிரம் என்றும் வழங்கப் பெறும் திருமந்திரம் ஆகிய பத்தாம் திருமுறையிலே மூவாயிரம் திருப்பாடல்களுள என்று திருமந்திரப் பாடல்களாலும் பெரிய புராணத்தாலும் அறியலாம்?. ஆயினும் காப்புச்செய்யுள் உட்பட 3048 திருப்பாடல்கள் பெரும்பாலான பதிப்புக்களிற் காணப்பெறுவன. சேக்கிழார் " ஒன்றவன்தான்" என எடுத்துத் திருமந்திரமாலை பாடப் பெற்றது என்று கூறுவதாற் காப்புச் செய்யுளும் " போற்றிசைத் தின்னுயிர்” எனும் பாடலும் திருமூலர் வாக்கல்ல என்று துணிய வேண்டும் 9. ஐந்து பாடல்களின் அமைப்பு முறை, அவை மூலர் வாக்கல்ல என்பதை வற்புறுத்தும் 4. திருமந்திரத்தினைப் பாகுபாடு செய்தவர்கள் இரு பாடல்களை மும்முறையும், 48 பாடல்களை இரு முறையும், ஒன்றிற்கு மேற்பட்ட அதிகாரங்களிற் பொருத்தம் நோக்கி வைத்துள்ளமையால், 52 பாடல்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன. எனவே திருமந்திரப் பதிப்புகளில் 2989 பாடல்கள் திருமூலர் வாக்காக எஞ்சுவன. இவற்றுள்ளும் இடைச்செருகல் இருக்கலாம் என்று கருத இடமுண்டு. சிவப்பிரகாசப் பெருந்திரட்டு, குறுந் திரட்டு, வைராக்கிய தீவுரை, நிட்டானுபூதியுரை, அவிரோதி யுந்தியாருரை, முத்திநிச்சயப் பேருரை, திருமந்திரம் கயிலாய சித்தருரை ஆகியவற்றிலே திருமந்திரத்திற்கு உரியனவாக 47 பாடல் கள் தரப்பட்டுள்ளன ?. இவை திருமந்திரப் பதிப்புகளில் இடம் பெழுதவை. சைவசித்தாந்த மகாசமாஜப் பதிப்பில் (1933) ஏட்டுப் பிரதிகளிற் கண்ட புதிய பாடல்களாகப் பதினேழு பாடல்கள் அடிக்
1. As to frt, 199, 260, 376, 5.0, 818, 1424. 1635, 2067, 2779, 2950 0S Sttt 00S LL00S 000S 0000 S TLLT LS STTTTTTT CLLLLL SS00
3. Quis I || IV Ivri, Typ GDF au si qiaoTi, 26
, ) (), ()f(6
3. திருமந்தியம், நிடிப்பனந்தாள் காசிமடப் பதிப்பு: 1960, பக். 490- 496

- 323 -
குறிப்புக் களிற் காட்டப்பெற்றுள்ளன. திருமந்திரத்திற் i. பேதங்கள் ஆயிரக்கணக்கிலுள என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமந்திரத்திற்குக் கயிலாபச்சித்தர் கண்ட உரையினைத் திருவாவடு துறை யாதீனத்தார் பதிப்பித்துள்ளனர். திரிசிரபுரம் அ. சிவானந்த சாகர யோகீசுவரரும் திருமந்திரத்துக்கு உரைகண்டனர் என்பர் . திருமத்திரத்தினை யாழ்ப்பாணம் ம வை வே. விசுவநாதபிள்ளை குறிப்புரையோடும் வேதாரணியம் வை. வே. ரமண சாஸ்திரியாரின் ஆாாய்ச்சி முன்னுரை:ோடும் 1912ஆம் ஆண்டிற் பதிப்பித்துள்ளார் 2. சேற்றுார் ரா. சுப்பிரமணிய கவிராயர் செய்த திருமந்திர நூறு பாட்டுக்குரை 1913ஆம் ஆண்டில் வெளிவந்தது. கோயமுத்தூரை யடுத்த புதுமதுரை சி. எஸ். சுந்தரமுதலியார் முதல் தந்திரம் முதல் தலைப்பு உபதேசப்பகுதி முப்பது பாடல்களுக்கு கண்டவுரை 1923இலே வெளிவந்தது. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிபுக் கழகத்தினர் திருமந்திரத்தினை 1942ஆம் ஆண்டிலே துடிசைக் கிழார் அ. சிதம்பரனர் குறிப்புரையோடும் 1957, 1962ஆம் ஆண்டு களிலே ப. இராமநாதபிள்ளையின் விளக்கவுரையோடும் பதிப்பித் துள்ளனர்.
திருமந்திரத்தினைச் சைவசித்தாந்த மகாசமாஜம் ச. வையாபுரிப் பிள்ளை, சு, அனவரது விநாயஃம்பிள்ளை ஆகியோர் உதவியுடன் பூரீமுக ளுல் ஐப்பசி மீ" (1933) பல்வேறு பிரதிபேதங்கள் கொண்ட மூலப்பதிப்பாக வெளியிட்டனர். திருப்பனந்தாள் காசிமடத்தினர் திருமந்திர மூலத்தினை 1951, 1956, 1960ஆம் ஆண்டுகளில் மும் முறை லெளியிட்டுள்ளனர்.
* மூவாயிரம் தமிழ், முந்நூறு மந்திரம், முப்பதுபதேசம்" என் பதன் அடிப்படையில் (திருமந்திரம் 3046) சிலர் திருமூலர் மூன்று நூல்களை இயற்றினர் என்பர். இக்கூற்று பெரியபுராணம் பே: ன்ற முன்னைய நூல்களால் ஆதரிக்கப்படவில்லை. மாவை வே. விசுவ நாதபிள்ளை முந்நூறு மந்திரத்தை நான்காம் தத்திரத்திலும், முப்பதுபதேசத்தை முதலாம் தந்திரத்திலும் காட்ட முற்பட்டார். அவர் முடிபுக்குப் போதிய ஆதாரமில்லை.
திருமந்கிர ஆசிரியரும் வாகட நூல்களின் ஆசிரியரும் ஒருவரென் பதற்குப் பெயரொற்றுமை யன்றி வேருதாரமில்லை.
1. மு. வை. அரவிந்தன் உரையாசிரியர்கள், 1968, பக். 407 2. சிலர் 1911ஆம் ஆண்டிர் **பிக்கப்பெற்றது எனபர்.

Page 171
حس- 324 -س Sctsal it as alsTutoff.-Theruvalluva Nayanar.
தெய்வப்புலவர், மாதானுபங்கி, செந்நாப்போதார், பெரு நாவலர், முதற்பாவலர் ஆதியாம் பற்பல விசேஷ நாமதேயங்களைப் பெற்ற இம்மகான்
*" கலையுணர் புலமையிற் தலைமையோ னகி விதிமுறை வழாது முதுநிலம் புரக்கும் பெருந்தகை யுக்கிரப் பெருவழுதி யென்னுந் தன்னிக ரில்லா மன்னவர் பெருமான் **
எனக் கூறப்பட்ட உக்கிரப்பெருவழுதி எனும் பாண்டியன் மதுரா புரியில் இருந்து அரசாண்ட காலத்திலே, ஓர்போது கிறிஸ்தாப்தம் ஒன்பதாம் சதாப்தத்திலே, சென்னைபுரிக்குத் தென்பால் உள்ள மயிலாப்பூரிலே பிறந்து, அங்கே ஒரு வள்ளுவன் வீட்டிலே வளர்ந் தார். இவர் தாய் கருவூரைச் சேர்ந்த ஓர் புலைச்சி எனச் சாதாரண மாய்க் கூறப்படினும், அது தவறு என்றும், பிரம குலத்திற் பிறந்த தவமுனி என்பவருக்கு அருண்மங்கை எனும் பார்ப்பிணி இவ் ஆதியைப் பெற்ருள் என்றும், அவளை முந்தி உறையூர்ப் பறையனும் பிந்தி நீதியையன் என்னும் பிராமணனும் வளர்த்தார்கள் என்றும், நீதியையன் வீட்டுச் சத்திரத்தில் அவள் இருக்கும் போதே வேதாகம கலைஞானங்களை நன்கு கற்றுணர்ந்தி சோழதேசப் பிராமணனுகிய பகவன் என்பவன், தன் தந்தையைத் தேடித் திரியும்போது, அவளைக் கண்டு மையல் பூண்டு தன் பெண்டாக்கினன் என்றும், இப் பகவன் பிறப்பாற் திருவாரூர்ப் புலைச்சி புத்திரன் என்றுஞ் சொல்வர்.
ஆதி முன்னே அப் பகவனக் கண்டு கூடியும் அவன் கற்கொண்டு எறிந்து தன் நெற்றியில் வடுப்படுத்தியதாற் பிரிந்துபோய் மறுபடி அவனைச் சந்திக்க, அவன் நெற்றியிற் சிலைவடு நேரினேக்கி" நீ ஆதியளல்லவா என்று சொல்லியதால் அந் நாமம் அவட்கு ஆயிற்று என்ப. இவ்வாறு இரண்டாந்தரம் இருவருஞ் சந்தித்தபோது: * நீ யின்றிடு மகவெலாம் ஈன்றுNயே விடுத் - தூான்றிய துணிபொடு முடன்வர வவ்லையேல் - வருகென "ப் பகவன் சொல்ல, அச் சொல்லுக்கு அவள் உடன்பட்டு, அவன் பின் திரியும்போது அவளிடம் நான்கு புத்திரரும், மூன்று புத்திரிகளும் பிறந்தனர். அவருட் புலவர் பெருமாளுகிய இந் நாயஞரோ "மைப்புய லணிபொழின் மயிலாப்பூரில் - வள்ளுவர் மனையிடை வளர்ந்தனர்." இவர் பிறப் adui uubusab

- 325 -
"தொண்டைமண் டலத்தில் வண்டமிழ் மயிலைப்
பறைய ரிடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்' என்ருர் அவரது சகோதரராகிய கபிலர். இவர் பிறந்தபோது தாயாகிய ஆதி தன் புருஷனுக்குக் கொடுத்த வாக்குப்படி இவரை விட்டுப் பிரியக் கால் எழாது வருந்த இக் குழந்தையார் தாயாரை நோக்கி:
*"கருப்பைக்குண் முட்டைக்குங் கல்லினுட் டேரைக்கும்
விருப்புற் றமுதளிக்கு மெய்யன் - உருப்பெற்றல் ஊட்டி வளர்க்கானே வோகெடுவா யன்னய்கேள் வாட்ட முனக்கேன் மகிழ்"
என்றனராம். "சதுர்முகன் றிருவவதாரம் " எனக் கூறப்பட்ட இவர் பிறந்த இடம் இலுப்பை மர நிழல் என்றும், முதன் முதற் பிள்ளைக் கலியால் வருந்தின ஒரு வேளாள ஸ்திரி இவரை எடுத்துத் தன் வீட்டிலே வளர்த்தும், பின்பு சுற்ற மித்திரர் நிந்தைக்கு அஞ்சி ஓர் தொழுவத்திலே பண்ணைக்காரரது காவற் பொறுப்பில் வளர்த் தாள் என்றும், ஓர் வள்ளுவப் புரோகிதன் வீட்டில் இருந்து வளர்ந்தார் என்றும் பலவகைக் கதைகள் உள.
கதைகள் எவ்வாறிருப்பினும், "தாமரை, பொன், முத்து, சவரம், கோரோசனை" யாதிய எவ்விடத்து உற்பத்தி பெறினும், தத்தம் அருமை பெருமையால் நன்கு மதிக்கப்பட்டாற் போல, இவர் பெற்ருர் ஆராயிருந்தாலும் சரி, தம்மிடத்துள்ள அறிவாலுங் கலையாலும் நன்மதிப்புப் பெற்ருர், காவிரிப்பூம் பட்டணத்தில் இருந்து ஆயிரம் ஏர் வைத்துக் கிருஷி செய்த வேளாளர் திலகராகிய மார்க்கசகாயர் என்பவர் இவருடைய கல்வி, அறிவு, சுசீலம், ஒழுக்கங்களைக் கேள்வியுற்ற போது 'நல்லோரெங்கே பிறந்தாலு மென்" என நினைந்து, தனக்கு ஏக புத்திரியும் சுகுண சீலியுமாகிய வாசுகி என்பவளை இவர்க்கு வதுவை செய்து கொடுக்க, அவளுடன் கூடி இல்லாச்சிரம விரதம் அனுட்டித்தனர். விளை பயிர்களுக்கும் உயிர்களுக்கும் இறுதி செய்த வேதாளம் ஒன்றை இவர் துரத்தியதே அவ் வேளாளர் பெருமான் இவர்க்குத் தம் புதல்வியைக் கொடுக்க ஏவப்பட்டதற்குக் காரணம் என்ப.
இவர் தம் பெயர் நாட்டற்குப் புத்திரசந்தான சலாக்கியம் பெருதபோதும், சோமசூரியர் உள்ளமட்டும் மங்காது பொங்குங் கீர்த்திபெற்றதும், 'ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்"
1. து. பா. பிறந்தனர்

Page 172
- 326 -
அடங்கி, உத்தரவேதம், தெய்வநால், பொய்யாமொழி, தமிழ்மறை, பொதுமறை என்னும் பலநாமந் தாங்கியதும், தம் நாமதேயப்படி திருவள்ளுவர் எனப் பெயரியதுமான ஒர் திவ்விய நூலை இயற்றி *முதுமறையாகம முத்தமிழ்’க் கடலை வெட்டிப் பிரித்து மாந்தர் மனசிற் பாய்ச்சினர். தம் நேசரும் மாணவகருமாகிய ஏலேலசிங் கத்தின் மைத்தஞன அழகானந்தன் முதலிய பல்லோர் கேள்விப் படி அந்நூலே இவர் பாடி முடித்தபின்பு, அதனே அரங்கேற்றற்காய் மதுரைச் சங்கத்துக்குக் கொண்டுபோக, அங்கிருந்த கர்வரூபிக ளாகிய சங்கக் கவிஞர் நீர் எந்த ஊர் என்று வினவ, இவர் :
** எந்தவூ ரென்றீ ரிருந்தவூர் நீர்கேளிர்
அந்தவூர்ச் செய்தி யறியீரோ - வந்தவூர்
முப்பாலும் பாழாய் முடிலிலொரு சூனியமாய்
அப்பாலும் பாழா யறும்' என்று சொன்னர் என்றும், நீர் யார் என்று அவர் வினவ, வள்ளுவன் என்ருர் என்றும், வள் என்ருற் குலைக்குமா என்ன: ஆம், சந்தேக மின்றிக் குலைக்குந்தான் என்று இவர் சொல்ல, அப்புறம் அவர் நமது சங்கப்பலகை உமது நூலை ஒப்புக்கொண்டால் யாமும் ஒப்புக் கொள்வம் என்று கூற, இவர் தாம் சுமந்துகொண்டுபோன ஏட்டைச் சங்கப்பீட மீது வைக்க, அது அவ்ஒன்றினை மாத்திரஞ் சுமந்து சுருங்க, அதில் இருந்தார் அனைவரும் பொற்ருமரை வாவியில் விழுந்து நாணினர் என்றும்,
** திருத்தகு தெய்வத் திருவள் ஞவரோ
டுருத்தகு நற்பலகை யொக்க - இருக்க
உருத்திர சன்ம ரெனவுரைத்து வானில்
ஒருக்கவோ வென்றதோர் சொல் ' என்று அசரீரி சொல்லிற்று என்றுங் கதை. திருக்குறள் அரங்கேறின போது இவருடைய சகோதரியாகிய ஒளவையே அன்றி இடைக்காடர் முதலாம் வித்துவான்களும் சமுகமாயிருந்தனர். இடைக்காடர் அதனைப் புகழ்ந்து அதற்குச் சாற்றுகவியாகக்
"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்’’ என்ருர், இடைக்காடர் சொன்னதனை ஒளவை சற்றே விகார ரூபமாக்கி அவரிலும் நுணுக்கமாய் :
'அனணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்"

- 327 -
என்ருர், சங்கப்புலவர் அனைவரும் அத் திவ்விய நூலில் மகிழ்ந்து அதனைப் புகழ்ந்து தனித்தனியே ஒவ்வோர் சிறப்புக்கவி சாற்றினர்: அவ்வவர் நாமங்களின் கீழ் அவரவர் பாக்சளைக் காண்க. சங்கப் புலவர்களிடம் அன்றித் தாம் பாடிய நூலைப் பொதிய மலைக்குக் கொண்டுபோய் அகஸ்திய மகா முனிவரிடங் காண்பித்துப் புகழ்ப்பாப் பெற்ருர் என்றும் பரம்பரையுளது. இவர் தம் பாடலை அரங்கேற்றிக் கொண்டு மதுரையாற் திரும்பிய பின், இவர் உயிர்த்தேவியாகிய வாசுகி தேகவியோகமாயினள். ஆதலில் இவர் மனநொந்து இனம் பிரிந்த அன்றில் போல வருந்தி அவள் பிரிந்த அன்று இரவில்:
"அடிசிற் கினியாளே யன்புடைய மாதே
படிசொற் றவருத பாவ்ாய்-அடிவருடிப்
பின்தூங்கி முன்னெழுந்த பேதையே போதியோ
என்துரங்கு மென்க ணரா" என்று பாடித் துன்புற்று, அது முதல் ஓர் துறவி போலக் காலம் விட்டனர். எந்தத் துறைகளிலும் நெசவு பாவமற்ற தொழில் எனுங் கருத்தாற் தாம் இருந்து வளர்ந்த தம் இனபந்துக்களின் சாதித் தொழிலாகிய நெசவு தொழிலையே சீவஞர்த்தப் பொருட்டுப் பயின்றுவந்தார். ஒரு தருணத்தில்:
** இழைநக்கி நூனெருடு மேழை யறிவேனே
குழைநக்கும் பிஞ்ஞகன்றன் கூத்து" என இவர் சொற்றனராதலில், இவரது தொழில் யாதென விளங் கிற்று. நெசவு தொழிற்கு உபயோகமான பஞ்சி நூலை இவர் நேயனும் மாணவசனும் ஆகிய ஏலேலசிங்கமே இவர்க்குக் கொடுத்து உதவிவந்தார். ஏலேலசிங்கம் அன்றிக் கொங்கணசித்தர் என்பரும் இவர்க்கு மாணவகராம். ஏலேலசிங்கத்துக்கும் இவர்க்கும் இடையே நடந்தனவாகச் சொல்லப்பட்ட பல சங்கதிகளுள. ஒருமுறை ஏலேலசிங்கத்தின் கப்பலொன்று பாரிற் பொறுத்து யார் இழுப்பினும் தரை விட்டுக் கிளம்பாதாகவே அதனைச் சிலர் சென்று இவருக்கு உரைக்க, இவர் போய்க் கயிற்றிற்பிடித்து, நல்லது இனி ஏலையா என்று சொல்லி நீங்கள் இழுங்கள் எனக் கற்பிக்க, அவ்வாறு செய்ய, அது கிளம்பிற்ரும். இக்காலத்துங் கூலியாட்கள் பாரங்கொண்ட பொருட்களை அசைத்து இழுக்கும்போது ஏலையா என்பதும், தோணிக் காரர் தண்டு வலிக்கும்போதும், நங்கூரம் இழுக்கும்போதும் அவ் வாறு சொல்வதும் இத் திருவள்ளுவர் பாவனை போலும் "ஏலேல சிங்கத்தின் பொருள் தானேபோய்த் தானேவரும்" என்னுந் தமிழ் நாட்டுப் பழமொழியும் இந்த ஏலேலசிங்கத்தையே குறிக் கும். அதிருக்க, இந்த ஏலேலசிங்கம், ஓர் ஆர்மீனியதேசக் கிறிஸ்தவன்

Page 173
- 328 -
என்றும், இவரது நாமம் மார்க்கு தோமாஸ் 1 (Mark Thomas) என்றும், அவர் முதல் மலையாளம் வந்து அங்கிருந்து மயிலாப்பூர் வந்தவர் என்றுங் கதை கண்டோம். வள்ளுவர் பாடிய குறள் அக் காலச் சங்கத்தவரான் மாத்திரமன்றி மற்றும் எக்காலத்து வித்து வாமிசர்களாலும் பிறபாஷைக்காரராலும் வியந்து போற்றப்பட்டது.
பிறபாஷைக்காரராகிய ஐரோப்பியருக்குள், தேலர், உவாட், பேர்சிவல், துறுநூஸ், கோல்ட்வெல், எல்லிஸ் (Messrs, Taylor, Ward, Percival, Drew2, Caldwell & Ellis) Grsằ Spitäi &ả síệunn Görosir gì36ẳr பல பாகங்களை ஆங்கில பாஷையில் மொழிபெயர்த்து அவற்றில் உள்ள பொருட்களை அபிமானித்துப் புகழ்ந்து எழுதி இருக்கிருர்கள். ஆங்கில பாஷையிலன்றி, லத்தீன், சர்மனிய பாஷைகளிலும் அதன் கூறுகள் சிலவற்றைச் சிலர் மொழிபெயர்த்தார்கள். வீரம7 முனிவருந் தாம் செய்த செந்தமிழ் இலக்கணத்தில் அதனை வியந்து எழுதி இருக்கின்றனர். அறம், பொருள், காமம் எனு முப்பாலிலும், நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களாக இயற்றப்பட்ட இம் மகா நூலுக்கு உரை செய்தார் பதின்மர். அவர் நாமதேயங்களைப் பின் வரும் வெண்பாவிற் காண்க. அது வருமாறு:
"" தருமர் மணக்குடையர்* தாமத்தர் நச்சர்
பரிமே லழகர் பரிதி - திருமலையர் மல்லர் கவிப்பெருமாள் 4 காளிங்கர் வள்ளுவர்துற் கெல்லையுரை செய்தா ரிவர்."
இப்பதின்மர் செய்த உரைகளுட்
** பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ -நூலிற் பரித்தவுரை யெல்லாம் பரிமே லழகன் தெரித்தவுரை யாமோ தெளி **
என்று சொல்லப்பட்டபடி ** பரிமேலழகர் செய்யுரை மற்றெவற்றி லுஞ் " சிறந்ததாயிருத்தல் பற்றி அதனையே தற்காலத்தார் திருத்தி அச்சிட்டு வழங்குகின்றர். குறளன்றி ஞானவெட்டியான் என்னும் ஒரு பாடலையும் இவர் பாடினர் என்ப. இக் கருத்துத் தவறு என்றும்,
1. S. us. மார்க்கு G51 DI 2. T. J. Drews 3. பி. யே. மனக்குடியர், மணக்குடவர் 4, பி. யே. பரிப்பெருமாள் 5. பி. யே. கலிங்கர்

- 329
** அகமகிழு மம்பிகைப்பெண் ணருளி னலே
யவனிதனில் ஞானவெட்டி யருள யானும் நிகழ்திருவள் ஞவநாய னுரைத்த வேத நிரஞ்சனமா நிலவுபொழி ரவிகாப் பாமே '
என்று அதன் காப்பிற் சொல்லப்பட்டிருப்பதால் அதனைப் பாடினர் பிறர் என்றுஞ் சிலர் சாதித்தாலும், ஞானவெட்டியான் க சுகசு ம் விருத்தத்தின் கம் அடியில் 'அம்புவியிற் குறளடியேன் பாடு நாளில் அநேகம்பே ரெனையெதிர்த்து உரைதான் கேட்க" என்று சொல்லி இருப்பதால், அவர் சாதனை அபத்தம் என்றும், அதனைப் பாடினர் இவர்தாம் என்றுந் துணிய நியாயமுண்டு. இந்நூலிலே விருத்தம், கொச்சகம், வெண்பா, தரு ஆதிய பல இனங்களிலே கஅஅக பாட்டுக ளுள. முற்பகுதியிலே உடற்கூருதிகளையும் பிற்பகுதியிலே வைத்திய முறைகளையும் பாராட்டியிருக்கின்றர். இவ் இருநூல்களன்றிச் சில தனிப்பாக்களும் இவராற் பாடப்பட்டிருக்கின்றன. புகழேந்தி, ஒட்டக்கூத்தர் சரிதங்களோடு ஒளவை சரிதங் கலந்திருப்பதால் இவர்காலமும் முன்பின் அவர் காலமேயாம். கி. பி. மூன்ரும், நான்காம், எட்டாம், ஒன்பதாஞ் சதாப்தங்களே இவர் இருந்த காலம் எனப் பலரும் பலவாறு உத்தேசித்தனர். இறக்குந் தருணம் , தமது பிரேதத்தைக் காக்கைகளுக்கு உணவாய் வெளியில் விட்டு விடுங்கள் என்று சொல்லி இறந்தார் என்றும், இவர் விருப்பத்தை இவர் நேசன் ஏலேலசிங்கம் நிறைவேற்றிர்ை என்றும், இவரது தசையை உண்ட காகங்கள் பொன் நிறமாயின என்றுங் கதை. இவையன்றி இவரைப் பற்றிய கதைகள் பின்னும் பலவுளவாயினுஞ் சரித விரிவிற்கு அஞ்சி நிறுத்தினம் வள்ளுவர் இருந்த நாட்டரசன் அச்சுதராசன் என்று சொல்லப்படுகிருன். திருவள்ளுவர் தமது குறளை எம் மதத்தார்க்குஞ் சம்மதமாய்ப் பாடிய காரணத்தாற் சைவர் இவரைத் தம் மதத்தினர் என்று கூற, அருகர், ஆ! அவர் எம்மதத்தர் என்பர். இவரது பாடல் மாதிரிக்காக மேற்கண்டவை சளை விட ஞானவெட்டியானிலிருந்தும் ஒர் பாட்டை எடுத்துக் காட்டுதும்,
"தூராத கும்பிற் ருெலையாத பாண்டமெனும்
வீருக வீற்றிருந்தேன் மேல்வீடு - நேராக வண்டனுகாக் கந்தமலர் வாவிக் கமலத்தில் ஒன்ருகப் பூத்தென்கா ணேங்கி."
குறிப்பு w
கபிலரகவலில் இடம்பெற்ற கதையையும், திருவள்ளுவமாலைப் பாடல்களையும், கர்ணபரம்பரைச் செய்திசளையும் துணைகொண்டு திருக்குறட் பதிப்புகள் தந்த திருவள்ளுவநாயனர் சரித்திரத்தின்

Page 174
- 330 -
அடிப்படையிலே காசிச்செட்டியவர்களும் சதாசிவம் பிள்ளையும் திருவள்ளுவர் சரிதம் எழுதியுள்ளனர்.
சேஞவரையரும் நச்சினுர்க்கினியரும் திருவள்ளுவன் என்பது இயற்பெயர் என்று கருதினர் 2; வள்ளுவர் என்பது வண்மையுடை யார் என்று வள்ளுவமாலை உரைகாரர் திருத்தணிகை சரவணப் பெருமாளையரும் வல்லபர் என்பதன் திரிபென்று மு. இராகவையங் காரும் கூறினர் 8: சாதியாற் பெற்ற பெயர் என்பர் பலர். அரசாணையை யானை மேற் பறைசாற்றி ஊராருக்குத் தெரிவிக்கும் தொழில் புரியும் குடியொன்று வள்ளுவர்குடி என வழங்கியுள்ளது. செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் எனும் பண்டைய புலவர் பெயர் ஈண்டு நோக்கத்தக்கது, திவாகரமும் பிங்கலமும் உள்படுகருமத் தலைவனுக்கும், சூடாமணி நிகண்டு நிமித்திகனுக்கும் வள்ளுவன் என்ற பெயரை வழங்குவன.
திருவள்ளுவர் மயிலாப்பூரில் வளர்ந்தவர் எனும் கபிலரகவலின் கூற்றைக் கர்ணபரம்பரைச் செய்திகளும் ஆதரிக்கின்றன. ஆயினும் நல்கூர்வேள்வியார் பெயரால் வழங்கும் வள்ளுவமாலைப் பாடல் அவரை மதுரையுடன் தொடர்புறுத்துகின்றது. வள்ளுவபாடி நாடு எனும் பகுதி திருச்சி மாவட்டத்திலும், வள்ளுவநாடு எனும் பகுதிகள் சேரநாட்டிலும் இருந்தன என்பர் *.
வள்ளுவர் என்ற பெயர் புலைச்சிமகன் என்ற கதைக்கு வித் திட்டது போலும். மாமூலனூர் பெயர் வழங்கும் வள்ளுவமாலைப் பாடலில் இழிகுலத்தவர் என்ற கருத்துத் தோன்றுகின்றது. சோமேசர் முதுமொழி வெண்பாவிற் சிவஞான முனிவரும் அதனை மறந்துவிடவில்லை. இழிகுலத்திற் பிரந்தவராகக் கருதப்பட்டவருக்கு இவ்வளவு கல்வியும் அறிவும் எவ்வாறு உண்டாகக் கூடும் எனும் ஐயத்தாற் பிறப்பைப் பற்றிப் பல்வேறு கதைகள் கிளைத்தன; ஞானமிர்தத்தில் இடம்பெறும் யாளிதத்தன் கதையும் 6 கபிலரகவலின் கதையும் தந்தையைப் பிராமணனுக்கி அமைதி கூற முற்படுவதற்கு முற்கிளந்த ஐயமே காரணம் போலும். அதிகமான் பாடலாக முன்னர் தந்த பாடலையே சதாசிவம்பிள்ளை மீண்டும் வள்ளுவர் பாடலாகத் தருகின்ருர் ; இவர் ஒளவையார் பாடலாகத் தந்த எவ்வுயிருங் காப்பதற்கோ " என்பதே வள்ளுவர் பாடலாக வழங்குவதாம்:
1. அதிகமான். கபிலதேவர் குறிப்புகள் காண்க.
2. தொல்காப்பியம், சொல்லதிகாரம், கிளவியாக்கம், சூத், 41 உரை
3. I disi (0, s. 196f, u š. 20 -209
4. II (Ak Aage A. 2. 2.32 —
SSS S S LS 0LtSLLL LLLLLLLLSSTTS T TTTTT TLLLLS 0LS CT 00T CLTTT TTTTTS
1V 47, IA. It
6, 40, 20-2)

----س- 331 --
வள்ளுவரை இழிவாக்கும் கதைகளுக்கு மாருக, அவரை வேளாளர் குலத்தோடு தொடர்புறுத்தும் கதை வாசுகி கதை யாகும். வாசுகியம்மையாரும் குறளாசிரியரின் இல்லத்தலைவியின் கற்பின் மாட்சிக்குரியவராக வியத்தகு செயல்களோடு புனையப் பட்டுள்ளார். "அடிசிற் கினியாளே” எனும் பாடல் நச்சிஞர்க்கினி யாரால் எடுத்தாளப் பெற்றபோதும் வள்ளுவர் வாக்கன்று என்று கருதுவதற்குத 'தூங்குதல்" என்ற சொல் காரணமாகின்றது என்பர்". "கொக்கெனவே நினைத்தனேயோ கொங்கணவா" என்று வாசுகி யம்மையார் கூறுவது தண்டலையார் சதகத்திலும் காணப்பெறுவ தாம் 3. இந்நிகழ்ச்சி கொங்கணச் சித்தரையும் வள்ளுவரின் சீடராக் கியது போலும்,
தமிழ் நாவலர் சரிதை தரும் "பூவிலயனும்" எனும் பாடலும் * ஏலேலசிங்கன், அழகானந்தன் என்போர் தொடர்பும் வள்ளுவரின் நெசவுத் தொழிலை வற்புறுத்திய போதும் குறளில் உழவும் வணிகமும் அரசும் அமைச்சுமே சொல்லியிருக்க நெய்தற்ருெழில் கூறப்பெருமை கவனிக்கத்தக்கது,
பிரமனின் அவதாரம் வள்ளுவர் என்ற கதை உக்கிரப்பெருவழுதி, காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனர் ஆகியோர் பேரால்
வழங்கும் வள்ளுவமாஃலப் பாடல்களிற் காணப்பெறுகின்றது.
காசிச்செட்டியவர்கள், சதாசிவம்பிள்ளை முதலியோர் காலத் திலும் திருவள்ளுவர் காலம் பலவாறு கூறப்பட்டு வந்தது என்பது தெரிகின்றது. இன்றும் அந்நிலைமை மாறிவிட்ட தென்பதற்கில்லை. திருக்குறளின் பழமையிலேயே அதன் பெருமை தங்கியிருப்பதாகக் கருதும் ஆர்வலர் இந் நிலைமைக்கு ஓரளவு காரணமாகலாம்.
திருக்குறள் எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் எடுத்தாளப் பெறுவதால் அவற்றிற்கு முன்னர் குறள் எழுந்ததென்பர் ஒரு சாரார் 5. புலவர் அறநூலிலிருந்து கருத்துக்களை எடுத்துத் தம் பாக்களிலே பயன்படுத்தலே பெருவழக்கு என்றும், அறநூல் மேற் கோளை அப்படியே கையாளலும் அதனை விரித்துக் கூறலுமாகிய இயல்பு தொகை நூல்களில் இடம் பெறுகின்றது என்றும் அவர்கள்
1. தொல்காப்பியம் பொருள8%ாரம், சூத். 153 உரை
2. ச. வையாபுரிப்பிள்ளை; தமிழ்ச்சுடர் மணிகள், 1968, பக். 71
3. Qiuqi, 6
4. Qiu aqir, 19
5, திரு. பொ. பழனியப்பபிள்ளே; திருக்குறள், பொருட்பால், காலிங்கர்-பசிப்பெருமாளுரை, 1948, முகவுரை: மா. இராசமாணிக்கர்ை; திருவள்ளுவர் காலம் பாது?, 1954 பக், 19-29,

Page 175
س--- 332 -س--
கருதுவர். இவர்கள் சுருத்தினை ஏற்பின் திருக்குறளுக்கு முன்னர் அறநூல்கள் இருக்கவில்லை என்றும் பண்டைய பாடல்களிற் கூறப் பெற்ற அறக்கருத்துகளை வள்ளுவர் தொகுத்துக் கூறவில்லை என்றும் துணியவேண்டும். இவ்வாறு துணிதல் சாலுமா என்பது சிந்திக்கத் தக்கது.
வள்ளுவமாலைப் பாடல்களிற் சில, திருக்குறள் வழிநூல் என்று கருத வைக்கின்றன. பரிமேலழகர் சங்கதநாற் கருத்துகள் குறளில் இடம்பெறுவதாக எண்ணினர். மு. இராகவையங்கார் திருக்குறள் எங்கும் சங்கதநாற் கருத்துகள் விரவியுள்ளன எனச் ‘செந்தமிழ்" முதலாம் தொகுதியில் நிலைநிறுத்த முயன்றனர். இவ்வழியிலே ச. வையாபுரிப்பிள்ளை மனு ஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம், காமாந்தகம் காமசூத்திரம் என்பனவற்றிற்கு எவ்வாறு திருக்குறள் கடமைப் பட்டது என்பதை நிறுவ முயன்று அவற்றின் அடிப்படையிற் கால நிர்ணயம் செய்ய முற்பட்டனர். சங்கதநாற் கருத்துகளோடு தமிழ் நூற் கருத்துகள் ஒத்திருப்பதன் அடிப்படையிற் காலவரையறை செய்தல் பயன்தருவதாயில்லை. கருத்துக்கள் பல மொழிக்கும் பொதுவானவை; ஒருநாட்டின் இரு மொழிகளில், ஒத்த கருத்து இடம்பெறல் அருமையன்று. சங்கத நூல்களின் காலத்தை வரை யறை செய்தலோடு, அவற்றில் வரும் கருத்துகளின் காலங்களையும் வரையறுத்தாலன்றித் திருக்குறளின் கருத்துகள் பிற்பட்டவை எனல் சாலாது.
திருவள்ளுவர் சங்கதச் சொற்களை எடுத்தாள்வதில் விரிந்த மனப் பான்மையுடையவர் என்றும் இம்மனப்பான்மை மூவேந்தர் காலத்திலன்றிப் பிற்காலத்திலே தோன்றியதாகும் என்றும் நிறுவ முற்பட்டுள்ளனர் 2. வையாபுரிப்பிள்ளை 137 சொற்களை வடசொற் களாகத் தந்துள்ளார் 3. இவற்றில் அவலம், இசை, இரா, உறு, ஏர், கணிச்சி, கதம், கழகம், கூர், கோட்டம், தகர், திண்மை, தொடி, தோட்டி, தோள், நத்தம், நயம், நுதுப்பேம், பகுதி, பதம், பயன், பேடி, பேய், மடமை, மதலை, மயிர், மா, மாடு, வளை என்னும் 29 சொற்களும் தமிழ் மொழிச் சொற்களாம் ; ஆனி, இமை, கஃசு, கலுமும், கவரி, கவுள், களம், களன், கானம், குடங்கர், குடி, குவளை, கொக்கு, தாமரை, துகில், நீர், மயில், மீன், முகம், வள்ளி ானும் 20 சொற்கள் சங்கதத்திற் காணப்பெறினும், அவை வேற்று மொழியிலிருந்து தமிழிற்கு வந்தவை என்று துணிவதற்கு இடமளிப்
I. Außb dA i N fad, 1968, uši. 89—93: History of Tamil Language and Literature”
1936 ), 82.84: தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம், 1957, பக். 53-56, 2. J. seu sûr : 2 av kåULD FYof Dav, 1957, uš. 94-95. 3. ali i t. i parad, 1968, ud. 87-88,

- 333 -
பணவல்ல என மொழியியலாளர் கருதுவர். இவர்கள் அரங்கு, உரு, உருவு என்பன சங்கதத்திலிருந்து பெறப்பட்டன ஆகலாம் என்றும் “கனம்" சங்கதச் சொல் லா ற் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறுவர். எஞ்சிய 84 சொற்களில் அச்சு, அமர், அமரர், அமிழ்தம், அரசர் (அரசு), அரண், அவி, அவை, இந்திரன் (இந்திரர்), இலக்கம், உலகம், உலகு, ஏமம், கந்து, காலம், கோடி, சுதை, தவம், திரு, தூது, தேயம் (தேஎம்), தோணி, நாகம், நாவாய், நிச்சம், படாம், படிவத்தர் (படிவம்), பண்டம், பள்ளி, பூதங்கள் (பூதம்), மங்கலம், மணி, யாமம், வண்ணம் என்பனவும் 2, பரத்தன், பளிங்கு, புருவம் என்பனவும்", காமம், குணம் (குணன்), தெய்வம், பக்கம், மதி, மனம் என்பனவும் 4, நாகரிகம் (நாகரிகர்) என்பதுவும் *, ஆயிரம், சலம், சூதர், மானம் என்பனவும் 8, உல்கு என்பதுவும் 7 எட்டுத் தொகையிலும் பத்துப்பாட்டிலும் இடம்பெறும் பழைய நூல்களில் ஆளப்பெற்றுள்ளன. எஞ்சிய 35 சொற்களில் ஆகுலம், ஆதி, காமன், காரணம், காரிகை, சமன், பாகம், வஞ்சம் என்பன கலித்தொகை யிலும் சிவிகை, நாமம், வித்தகர் (வித்தகம்) என்பன பரிபாடலிலும் 9 அகரம், அந்தம், உவமை, தேவர் என்பன தொல்காப்பியத்திலும் இடம்பெறுவன. எனவே திருக்குறளில் இருபதிற்குட்பட்ட புதிய ஆட்சிகளே இடம்பெறுகின்றன என்பது மனங்கொளத் தக்கது. வையாபுரிப்பிள்ளை பண்டைய பாடல்களில் வடசொற்ருெடர்களும், கலவைச்சொற்களும், மொழிபெயர்ப்புசஞம் காணப்படுமாறில்லை என்று கூறல் பொருத்தமாகத் தெரியவில்லை 10. இந்திரரIமிழ்தம், தென்றிசை மாதிரம் எனும் வடசொற்ருெடர்களும், தசநான்கு, ஒரு திசை, நாற்றிசை எனும் கலவைச்சொற்களும், முத்தீ, நால் வேதம், மணிமிடைபவளம், மணிமண்டு பவளம் எனும் மொழி பெயர்ப்புகளும் எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் காணப் பெறுவன .
1. T. Burrow, M. B. Emeneau : A Dravidian Etymological Dictionary &rar a
2. upsugg. 90, 62, 99, 182, 73, 9, 377, 283, 182, 4, 182, 182, 3, 93, 56, 18, 378. 358, 358. 28 6, 299, 37, 66, 360, 145, 349, 90, 33, 369, 332, 50, 37, 32.
3. அகநானூறு. 146, 108, 39.
4. (sg.sas, 99, 206, 263, 129, 400, 400,
5. நற்றின, 355.
6. மதுரைக்காஞ்சி:11, 112, 670, 344
7. Questburgobgútil el Sl
8, 65, 96, 84, 60. 27.97, 86, 89
9. 10, 15, 9
00STTLLLLLLL LTLLtlS 000S LS 00 S0S T TTtLtTT TTTL TTTTTtLLT 0000SS LLS
51-52
11. புற. 182, அக, 284, நெடுநல். 115. புதி. 121, புற, 12. புற. 2. புதி. 15, அக, 304. அக. 374

Page 176
- 334 -
ஈவயாபுரிப்பிள்ளை திருக்குறளிற் காணப்பெறும் சில மொழி வழக்காறுகள் பிற்பட்ட மொழிநிலையைச்சுட்டுவன என்பதை எடுத்துக் காட்டியுள்ளார் 1 . இவ்வழக்காறுகள் மொழிவரலாற்றிற் குறிப்பிடத் தக்கனவாகக் காணப்பெறுவதாற் காலநிர்ணயத்தில் இவற்றை ஒதுக்கிவிடுதல் பொருத்தமின்று. (1) பண்டைய பாடல்களிற் பெரும்பான்மையாக "ஆயின்" அல்லது. 'இன்' எனும் வடிவங்களையும், சிறுபான்வையாக "இல்" எனும் வடிவத்தையும் பின்னிணைத்து நிபந்தனை வினை வடிவங்கள் ஆக்கப்பெற்றன. கலித்தொகையில் முதன்முதலாக "ஆல்" "ஏல்’ எனும் வடிவங்கள் நிபந்தனைவினை ஆக்கத்திற்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளன. 2. திருக்குறளில் அற்ருல், அல்லனேல், இன்றேல், உண்டேல், செய்வானேல், வல்லையேல் எனும் வடிவங்சளுள8 (2) "ஆணுல்" எனும் நிபந் தனை வடிவம் கலித்தொகையிலும் திருக்குறளிலும் புதிதாக இடம்பெறுகின்றது. (3) பண்டைய பாடல்களில் * அது" எனும் வடிவத்தை வினையடியுடன் இணைத்து எதிர்மறை வினையெச்சம் ஆக்கப் பெற்றது. ஆனல் " ஆமல்" இணைக்கப்பெற்ற புதிய வடி வங்கள் மலைபடுகடாம், பரிபாடல் நீங்கலாகக் கலித்தொகையில் குறிப்பிடத்தக்களவு இடம்பெறுகின்றன. இவவடிவங்கள் திருக்குற ளிலும் காணப்பெறுவன8. (4) " அன்றி", " அல்லது " என்பன பழைய வழக்காறு +ளாக அமையக் கலித்தொகையிலும் திருக்குற ளிலும் " அல்லால் குறிப்புவினை எச்சமாக ஆட்சிபெற்றுள்ளது". (5) காலமுணர்த்தும் வினையெச்ச வடிவமாகக் "கடை" என்பது கலித் தொகையிலும் பரிபா. லிலும் திருக்குறளிலும் இடம்பெறுகின்றது. (6) பண்டைய பாடல்களில் உயர்திணைப் பன்மை உணர்த்தப் பயன் பெருத "கள்" எனும் விகுதி தொகாப்பியத்திலும் கலித்தொகை யிலும் திருக்குறளிலும் இடம்பெறுதல் தோக்கத்தக்கது?. முற்கிளந்தன வற்றை நோக்கும்போது திருக்குறளும் கலித்தொகையும் முன்னைய மொழியில் இடம்பெருத சில வழக்காறுகளைப் புதியனவாகப் பயன் படுத்தியுள்ளமை தெளிவாகும். கலிப்பாடல்கள் செந்துறை மார்க்க
SS S S TG TtL LTTTSS000SLSS00S 00SSSgLLLLTLTS SS00SSS00S S LLLLL
afhýsi streitustra út, u á. 45-48; History of Tamil Language and literatre, 1956. PP. 84-85 2. ?5, 101 : 3. 9t , 93 112, ! 32, 144. 14ገ 3, 94; 386; 556, 573, 575, 996, 1014, 1144; 368, 1075, 1151; 655; 1118
, It'', 1.80; 53. 3. ( தெப்படமல்; 20.74-நாளுமல்; 1, 4, 19, 38, 39, 65, 77, 109, 12, 145
(), (), 024 7, 14, 67, 82, 83, 88, 102, 109. 142, 48; 7, 8, 16, 233. 235.
77, it is 497, 55, 762, 1095, 188 , 9, 15, H 7 47; 7: 76, 53, 230, 315, 372 锡,4004,1039,2},26,100,145,149;263。919。1075。

- 335 -
மாம் இசை வழியைப் பின்பற்றியமையாலும் வள்ளுவர் தம் நூலைப் புது நூலாக எல்லோரும் ஓதி உணர எழுதியமையாலும் செய்யுள் வழக்கினை மட்டும் பின்பற்ருது பேச்சுவழக்கினையும் பின்பற்றியமை யால் வேற்றுநடை பின்பற்றப் பெற்றதாகத் தோன்றுகின்றது என்பர் சிலர்', கலித்தொகையிற் பேச்சுவழக்கும் பின்பற்றப்பட் டுள்ளது என்பதை ஏற்பவர்களும் ஈண்டு காட்டப்பெற்ற வழக்காறுகள் மொழியின் வளர்ச்சிக் கிரமத்தில் ஏற்பட்ட மாற்று வடி&ங்கள் என்பதை மறுத்தலரிது. இம் மாற்றுவடிவங்கள் இலக்கிய வழக்கிற் குரியவையல்ல என்று துணிந்துரைத்தல் சாலாது. திருக்குறள் குடி மக்கள் இலச்கியம் அன்று என்பதை மறந்துவிடுதல் கூடாது. அற நெறியின் அடிப்படையிலே திரிவர்க்கங்களையும் சுத்திகரித்துத் தந்த வள்ளுவர் தெளிவின் பொருட்டுச் செல்மொழிக்கு அளித்துள்ள முக்கியத்துவம் மனங்கோளத் தக்கது. எனவே மூவேந்தர் காலத் திற்குப் பிற்பட்ட மொழிவழக்கு திருக்குறளில் இடம் பெறுகின்றது என்பதை மறுத்தலரிது. எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் இடம்பெறும் பாடல்களும் நூல்களும் ஒரே காலத்திற்குரியனவல்ல என்பதை நினைவுகூரல் ஆவசியகம்,
திருக்குறள் மூவேந்தர் காலத்தினை அடுத்துத் தோன்றியது என்னும் வையாபுரிப்பிள்ளையின் கருத்தை மொழிவழக்காறுகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வது பொருத்தமாகத் தோன்றுகின்றது. ஆயினும் பிள்ளேயவர்கள் தரும் கி. பி. ஆரும் நூற்ருண்டு எனும் கால வரையறையை ஆதரிப்பதற்குப் போதிய ஆதாரம் காட்டப் பெற்றிருப்பதாகக் கூறுவதற்கில்லை : கி. பி. நான்காம் நூற்றண்டிலே குறள் எழுந்திருக்க முடி:து என்று மறுப்பதற்குச் சான்றுகளில்லை. காசிச்செட்டியவர்களும் சதாசிவம்பிள்ளையும் தரும் காலவரையறை பொருத்தமற்றது. மேலும் வள்ளுவமாலையில் இடம்பெறும் பாடல் களைப் பாடியோரும் மூவேந்தர் காலத்தவர் அல்லர் என்பது உறுதி யாகின்றமை முற்கிளந்தனவற்ரும் கூருமலே போதரும்.
திருக்குறளின் மூலத்தினை அம்பலவாணக் கவிராயர் (1811), வில்லிவாக்கம் தாண்டவராய முதலியார் (1831), புஷ்பரதச் செட்டியார் (1859) முதலியோர் பத்தொன்பதாம் நூற்ருண்டிற் பதிப்பித்தனர்; யாழ்ப்பாணம் வண்ணை சி. சுவாமிநாதபண்டிதர் (1908), வா. மார்க்கசகாய செட்டியார் (1924), திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் (1924) முதலியோர் இருபதாம் நூற்ருண்டில் வெளியிட்டனர்.
1. தெ. பொ. மீனுட்சிசுந்தரம்பிள்ளே: சமணத் தமிழ் இலக்கிய வரலாறு, 1961 பக். 35

Page 177
حس- 336 -سه
பரிமேலழகர் குறளுக்குக்கண்ட வுரையும் முகவை இராமாநுசக் கவிராயரின் விருத்தியுரையும் துரு பாதிரியாரின் (Rev. W. H. Drew) ஆங்கிலமொழிபெயர்ப்பும் கொண்ட திருக்குறளின் முதல் 63 அதிகாரங் களும் இருபாகங்களாக முறையே 1840ஆம் 1852ஆம் ஆண்டு களில் வெளிவந்தன. ஆறுமுகநாவலர் திருக்குறளுக்குப் பரிமேலழகர் கண்ட உரை முழுவதையும் சென்னை வாணிநிகேதன அச்சுச்சுடத்திலே துன்மதி டு வைகாசி மீ" (1861) பதிப்பித்தார். திருமயிலை முருகேச முதலியார் பரிமேலழகர் உரை, பதவுரை, லாசறஸ் பாதிரியாரின் (Rev , Lazarus) மொழிபெயர்ப்பு என்பனவற்றுடன் 1885இலே திருக்குறளைப் பதிப்பித்தனர். இவ்வாண்டிலே புஷ்பரதச் செட்டி யாரின் பரிமேலழகருரைப் பதிப்பும் வெளிவந்தது. கோ. வடிவேலு செட்டியார் (1904, 1919 , மு. இராகவையங்கார் (1910), செ. மு. வேலு முதலியார் (1920), மணி. திருநாவுக்கரசு முதலியார் (1928) முதலியோரும் பரிமேலழகருரையைப் பதிப்பித்துள்ளனர். கி. குப்புசாமி முதலியார் பரிமேலழகருரையை விளக்கத்துடன் 1926இலே பதிப்பித்தார். வை. மு. சடகோபராமாநுஜாசார்யர் குறிப்புரையுடனும் அவ்ர் எழுதாது விட்ட பகுதிகளுக்குத் தாம் எழுதிய குறிப்புரையுடனும் வை. மு. கோபாலகிருஷ்ணமாசார்யர் பரிமேலழகர் உரையைப் பதிப்பித்துள்ளார்.
திருத்தணிகை சரவணப் பெருமாளையர் (1830), களத்தூர் வேதகிரி முதலியார் (1849), காஞ்சிபுரம் கோ. சபாபதிமுதலியார்
(1856) முதலியோர் பரிமேலழகருரையைத் தழுவித் திருக்குறளுக்கு உரைகண்டுள்ளனர்.
சதாசிவம்பிள்ளை விதந்து கூருத மணக்குடவர் இயற்றிய உரையின் முதற் பகுதியாகிய அறத்துப்பால் உரையை வ. உ. சிதம்பரம்பிள்ளை 1917ஆம் ஆண்டில் முதன் முதலாக வெளியிட்டார். 1925 இலே கா. பொன்னுசாமி நாட்டார் மணக்குடவருரை முழுவதையும் வெளியிட்டார். சென்னை மலர் நிலையத்தினர் இதனை மீண்டும் பதிப்பித்தனர். மணக்குடையர், மணக்குடியார் எனவும் வழங்கப்பெறும் மணக்குடவர் சைனர் என்பதற்கு மேல் யாதும் கூறுவதற்கில்லை 1.
சதாசிவம்பிள்ளை விதந்துரையாத காலிங்கர், பரிப்பெருமாள் உரையு.ண் காமத்துப்பாலே 1945ஆம் ஆண்டிலும், அவர்கள் உரையுடன் பொருட்பாலையும் காலிங்கரின் அறத்துப்பால் உரையிற் கிடைக்கப்பெற்ற 31ஆம் அதிகாரமாகிய வெகுளாமையின் கடைசி ஜர் து பாடல்களுக்கும் எஞ்சிய ஏழு அதிகாரங்களுக்கும் உரிய
1. allt sm í Ssú lá sárs

- 337 - خسر
உரையையும் 1948ஆம் ஆண்டிலும் தி. பொ. பழனியப்பபிள்ளை திருப்பதி வேங்கடேசுவரன் கீழ்க்கலை ஆராய்ச்சிக்கழக வெளியீடாகத் தந்தனர், பரிப்பெருமாளின் அறத்துப்பாலுரையைத் தனியே வெளியிட அவர் கருதியிருந்தனர். கவிப்பெருமாள் எனவும் பெயர் பெறும் பரிப்பெருமாள் சேது நாட்டுச் செழுவை எனுமூரினர். மாளவநாட்டு இரண்டாம் வாக்பதிராசன் (974-995) காலத்தவரான தனஞ்சயகவி காலத்தில் ஏற்பட்ட, காமப்புணர்ச்சியை மூவகையெ னும் சங்கதமரபு, பரிப்பெருமாளாற் கூறப்பெறுவதால், அவர்காலம் கி. பி பத்தாம் நூற்றண்டிற்குப் பிற்பட்டதாகலாம், காலிங்கர் அல்லது காளிங்கர் சைனர் என்பதற்கு மேல் யாதும் கூறவதற்கில்லை.
துடிசைக்கிழார் அ. சிதம்பரஞர் 1948இலே பரிதியார் உரையை வெளியிட்டார். பருதியார் எனவும் அழைக்கப்பெறும் பரிதியார் சைவர் என்பதற்குமேல் யாதும் கூறுவதற்கில்லை. தருமர், தாமத்தர், நச்சர் என்பவர்கள் கடவுள் வாழ்த்து ஐந்தாம், ஆரும் பாடல்களுக்கு எழுதிய உரைகள் மட்டுமே கிடைத்துள்ளன. நாலடியாரின் உரை யாசிரியர் தருமரும் திரு க் குறள் உரையாசிரியரும் ஒருவரோ இருவரோ அறிகிலேம்1. திருமலையர், மல்லர் பற்றியோ அன்றி அவர்கள் உரைகள்பற்றியோ யாதும் தெரிவதற்கில்லை. தொண்டை மண்டலச் சதகம் (41) தந்த " தருமர் மணக்குடையர் " எனும் மேற்கோட் பாடல் சுட்டாத இரு பழைய உரைகள் கிடைத்துள்ளன. இவற்றில் ஒன்றினை அடையாறு உ வே. சாமிநாதையர் நூல்நிலையம் 1961இலே வெளியிட்டது.
திருக்குறளின் பழைய உரைகளைத் தொகுத்துச் ச. தண்டபாணி தேசிகர் திருக்குறள் உரைவளம் எனும் பேராலே தருமையாதீன வெளியீடாக அளித்துள்ளார். முப்பாலும் முறையே 1950, 1951, 1952ஆம் ஆண்டுகளிலே தேசிகரவர்களாற் பதிப்பிக்கப்பெற்றன. தி. பட்டுச்சாமி ஒதுவார் திருக்குறள் உரைக்கொத்து எனும் பேராற் பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், காலிங்கர் உரையுடன் திருப்பனந்த7ள் காசிமட வெளியீடாகத் தந்தார். இவர் முப் பாலையும் 1957, 1959, 1958ஆம் ஆண்டுகளிற் பதிப்பித்தார். கோவை மாவட்டம் இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயத்தின் வெளியீடாக 1963 இலே கி. வா. ஜகந்நாதன் பரிமேலழகருரை யையும் அவர் உரையிலிருந்து மணக்குடவர், பரிதியார், பரிப்பெரு மாள், காலிங்கர், கவிராஜபண்டிதர், எல்லிஸ் என்பவர்கள் வேறு படும் பகுதிகளையும் தொகுத்து வெளியிட்டனர்.
திருக்குறளுக்குப் பலர் புத்துரை கண்டுள்ளனர். சுகாத்தியரின் (T. M. Scott) உரைப்பதிப்பு 1889 இலே வெளிவந்தது. மயிலை 1. குக்கினிப் důųä Gairs :
Unr - 22

Page 178
- 338 -
வி. சுந்தரமுதலியாரின் பொழிப்புரைப் பதிப்பு 1893இல் வெளி வந்தது. குருசரணு லயர் (டி. ஆர். திருவேங்கடம்பிள்ளை) பொழிப் புரையை த. கனகசுந்தரம்பிள்ளை 1922இல் வெளியிட்டார். அறத்துப்பாலுக்குக் காயா மொழி குமரகுருபரர் கண்ட உண்மையுரை 1926 இலும் நாகை சொ. தண்டபாணிப்பிள்ளை கண்ட விருத்தி யுரை 1933இலும் பதிப்பிக்கப்பெற்றன. வ. உ. சிதம்பரம்பிள்ளை திருக்குறளுக்குக் கண்ட புத்துரையில் அறத் துப் பா ல் உரை 1935இல் வெளிவந்தத. இவர் பொருட்பால் முதல் 23 அதிகாரங் களுக்கும் 24ஆம் அதிகாரத்தில் முதலேழுபாடல்களுக்கும் இயற்றிய உரையும் அச்சிடப்பெற்றுள்ளது என்பர். திரு. வி. கலியாணசுந்தர முதலியார் முதல் 40 பாடல்களுக்குக் கண்ட விரிவுரை 1939இலும் அடுத்த 60 பாடல்களுக்கு உரிய விரிவுரை 1941இலும் வெளியாயின. அ. சக்கரவர்த்திநயிஞர் 1949இலே கவிராஜபண்டிதர் உரையினை வெளியிட்டார். 1949இலே பதிப்பிக்கப்பெற்ற புலவர் குழந்தையின் உரையும் 1954இலே வெளிவந்த நாமக்கல் வே. இராமலிங்கபிள்ளையின் புத்துரையும் பழைய உரைகளை மறுத்துத் தமிழ் மதம் நிறுவ முற்படுவன. கா. சுப்பிரமணியபிள்ளை (1920), காஞ்சிபுரம் கி. வீரராகவன் (1829), ந, சி. கந்தையாபிள்ளை (1949), திருச்சி ஜி. வரதராசன் (1954), மு. வரதராசன் (1959) முதலியோரும் மாணுக்கர் தேவையை நோக்காகக் கொண்டு திருக்குறளுக்கு உரை தந்துள்ளனர்.
சதாசிவம்பிள்ளை கூறும் ஆங்கிலம், இலத்தீன், ஜேர்மன் மொழிகள் நீங்கலாகத் திருக்குறள் பிரஞ்சு, போலிஷ், உரூசிய, பர்மிய, மலாய் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . இந்திய மொழி களிலே சங்கதம், உருது, இந்தி, மராத்தி, வங்காளம், கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது2. கனுப்பர்த்தி வேங்கடராம பூg வைத்தியநாத நாதர் தெலுங்கிற் செய்த குறள் மொழிபெயர்ப்பு 1887 இலே வெளிவந்தது,
ஞானவெட்டியான் திருவள்ளுவர் வாக்கன்று எனும் காசிச் செட்டியவர்கள் கருத்தே பொருத்தமாகும். காப்புச் செய்யுளிற் கூறியதை மறந்து, வள்ளுவரை நூலாசிரியராகக் கூற முயன்றுள்ளார் ஞானவெட்டியான் ஆசிரியர். கம்பரையும் அதிவீரராமபாண்டியனையும் இழித்துரைக்கும் ஞானவெட்டியான் (579) வள்ளுவர் படைப்பாதல் சாலாது 8. -
l. Xavier S. Thani Nayagam : A Referance Guide To Tamil Studies: Books,
l'if(b. pp. 6 — 8 м»
2. ို;yJcl;- Thani Nayagam (Ed.) : Tamil Studies Abroad, 1968. pp.
3. M. S. Purnalingam Pillai : Tamili Literature, 1929, p. 89

- 339 -
9Đq5(ể6uü%L.sĩsum tổì, - Theruvangada Swamy.
காவேரி ஆற்றின் வளத்தினுலே, வாழை பும், தாழையும், கமுகும், செந்நெலும், கன்னலும் தழைத்து ஓங்குஞ் சோழநாட்டிலே, ஏழ்நிலை மாட கூடங்களும் நெடு மதில்களும் வெண்ணிலா அரமியங் களும் விளங்கும் மாதை எனும் ஒரு நகரம் உளது. அதில் இருந்து அரசு புரிந்த ராசனுக்கு வேங்கடேந்திரன் என்று பெயர். சாதி யாசாரத்தால் வேதியரும், கல்வியறிவால் மகா வல்லவரும், ஞான அறிவு முற்றிப் பழுத்தவரும், இல்லறத்தில் இருந்தாரேனும் தாமரை இலையும் நீரும் போல உலகத்தோடு சம்பந்தப்படாதவருமாய் இருந்த இந்த அரசர் ஒருநாள், இராகவானந்தர் எனுஞ் சற்குரு ஒருவரைக் கண்டு அவர்க்குத் தெண்டன் சமர்ப்பித்து நிறக, அவர் இவரை நோக்கி; ஒய்! அரசனே நீர் லோகோபகாரங்கருதி ஞானநூல் ஒன்றை இயற்றுதிர் என்றனர். இவர் அதற்குப் பிரதியுத்தரமாகச் சுவாமீ! துறவறம் பூண்டிருக்குந் தத்துவ ஞானிகளுக்கன்றி இல்லறம் பூண்டு அல்லற்பட்டு உழலும் எம்மனுேர்க்கு அது கூடுமா என்று உரைக்க, இராகவானந்த யோகியர் திரும்பவும் இவரை நோக்கி: ஞான அறிவொழுக்கங்களை உடையார் வீட்டில் இருந்துந் தோஷ மின்று. அவ்வாறில்லாதார் விக்னமிருகங்கள் சஞ்சரியா நின்ற காட்டில் இருந்தும் கந்தமூலம் அயின்று உடம்பை ஒறுத்தும் பயனின்று. ஆகவே நீர் ஒருநூல் செய்வதிலே யாதொரு தோஷ நஷ்டங்கள் வரா என்று சொல்ல, அம்மாற்றத்தை அங்கிகரித்துப் புளகம் அரும்ப உள்ளக் களிப்புக் கொண்டு "வேதாந்தப் பாலாழியைத் தனது புத்தி மத்தினுல் உழக்கி" ஞானசாரமாய்த் திரட்டிப், பிரபோ தசந்தி ரோதயம் என வழங்காநின்ற மெய்ஞ்ஞான விளக்கம் என்னும் அருமையான சாஸ்திரம் ஒன்றை இபற்றினர். பிரபோத சந்திரோ தயம் என்பது சம்ஸ்கிருதத்திலே நாடகரூபமாகக் கிஷ்ணமிச்சிரன் என்பவராற் செய்யப்பட்டது. இவரோ வடமொழியிலேயும் தென் மொழியிலேயுங் காவியமாக இயற்றினர். மதாசாரததாற் "கோபால மூர்த்தியைப் பூசண் நாடொறும் புரியும் பத்தியா" ஞகிய இவர் செய்த இந்நூலிலே உற்பத்திச்சருக்கம், மோகன் அரசாட்சிச் சருக்கம், அவித்தியாபுரச்சருக்கம் முதலாகப் பிரயோதன் முடிசூட்டுச் சருக்கம் ஈருக நாற்பத்தெட்டுச் சருக்கங்கள் உள. பாயிரமுட்பட ச அச் சருக்கங்களிலும் உo கஉ விருத்தம் உண்டு, மாயை என்பவள் பிரமசந்நிதியில் விகாரம்புரிந்து குன்முற்றி மானதன் என்னுமோர் மகவையின, அவன் பிரவிர்த்தி, நிவிர்த்தி என்னும் இருவரை மணம் முடிக்க அவருள் மூத்தாளிடம் மோகனன், ஆங்காரன், மதனன் ஆதியாம் பல புத்திரரோடு, தீவினை, கபடி எனும் இரு புத்திரிகள் பிறக்க, இளையாளிடம் விவேகன், நிரூபகன், பொறை முதலாம் பல புத்திரரோடு மயித்திரி, கருணை முதலாம் சில புத்திரிகளும்

Page 179
- 34) -
பிறக்க, இவ் இருபகுதிப் பிள்ளைகளுக்கும் பாட்டியாகிய மாயை அவரவர்க்குத் தக்கபடி கலியாணம் செய்து வைக்க, அவ் இருகட்சிப் பிள்ளைகளுஞ் சுராசுரர் போல் வளர, மோகன் அரசாள, விவேகன் வனம் புக, மறுபடி சண்டை நிகழ்ந்ததாய், முடி சூட்டியதாய், இராமாயணத்தில் இராமராவண யுத்தக்கதையை ரூபகாலங்காரம் ஆக்கினுற்போல இந்நூல் முடிகின்றது. இப் பெயர்ப்பட்ட சிரேட்ட ஞானநூல் செய்த இப் புலவரது பாடல்ம? திரிக்கு உற்பத்திச் சருக்கத்தின் முதல் விருத்தத்தை இவ்விடந் தருகின்ருேம்.
*"நீர்கொண்ட பெருக்கினைவெங் கானலிற் கண்டாற்போ
னெடுவிசும்பு முதனிலநீ ரொன்றினிடத் தொன்று வேர்கொண்ட மூவுலகு மதுதேரா தார்க்கு
மெய்யாகித் தேர்ந்தளவின் மீண்டுமவை பொய்யாம் தார்கொண்ட பணியுருப்போ லன்னிபிடா னந்தத்
தாணுகி நிருமலமாய்த் தழைத்தோங்கு மொளியாய் ஏர்கொண்ட வாத்துமபோ தந்தனையே வணங்கி
யிதயகம லத்திருத்தி யெப்போதும் வாழ்வாம்.'
இந்நூலை இம் மகான் செய்தார் என்றதற்குப் பின்வரும் விருத்தஞ் சாட்சி பகரும்.
**போதத் தமிழ்க்கும் வடகலைக்கும்
புலவோர் தமக்கும் பொருள் விரித்துச்
சீதைக் கிறைவ னெனநீதிச்
செங்கோல் செலுத்தித் திசைபுரந்து
வேதப் பனுவன் மெய்ஞ்ஞான
விளக்கா லுலகை விளக்குமெங்கள்
மாதைத் திருவேங் கடநாத
மறையோன் வாழி வாழியவே."
குறிப்பு
காசிச் செட்டியவர்கள் தந்த சரிதத்தைச் சதாசிவம்பிள்ளை விரித்துரைத்துள்ளார். மாதை என்பது மாத்தூர் என்பதன் மரூஉ: சுமார்த்தப் பிராமண குடும்பத்திற் பெருமாளையர் புதல்வராகத் தோழிய திருவேங்கடநாதருக்கு ஆறு ஆண்மக்களுளர் என்பது புதல்வர் வேங்கடேசையர் மீது பாடப்பெற்ற பணவிடுதூதாற் புலகுைம். 'வர் மதுரை நாயக்கர் ஆட்சியிலே திருமலைநாயக்கர் (1623-183), இரண்டாம் முத்துவீரப்பநாயக்கர் (1659), சொக்க நாத நாயக்கர் (1859-1682) ஆகியோரின் கீழ் திருநெல்வேலி

- 34l ---
மாவட்டத்திலுள்ள கயத்தாற்றுச் சீமையின் காரியகர்த்தராக விளங்கினர் கொல்ல மாண்டு 858க்கு (கி. பி. 1683) உரிய செப்பேடு இவர் புண்ணியமாகப் பூதானம் செய்ததைக் குறிப்பிடுகின்றது. இவருடைய ஆதரவினைப் பெற்றவர்களிலே திருவாரூர் வைத்திய நாத தேசிகர், அந்தகக்கவி வீரராகவ முதலியார் ஆகியோர் குறிப் பிடத்தக்கவர். அந்தகக் கவி பாடிய கயத்தாற்றரசனுலா இவர்மேற்ரும்:
பிரபோதசந்திரோதயத்தை அதன் ஆசிரியர் முதலிற் சங்கதத்திலே இயற்றியதாகப் பாயிரம் கூறுகின்றது. தமிழ்ப் பிரபோத சந்திரோ தயத்தில் 2019 பாடல்களுள என்பர் 2. பிரபோதசந்திரோதயத்தை இயற்றியவர் திருவேங்கடநாதர் அல்லர் என்றும் திருவாரூர் வைத்திய நாத தேசிகரே என்றும் கருதுவர் 3. திருவேங்கடநாதர் ஞான சோபனம், கீதாசாரத் தாலாட்டு எனும் நூல்களையும் இயற்றினர் 676ă Luri 4.
பிரபோதசந்திரோதயத்தை மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையும் (1889), காஞ்சிபுரம் இராமயோகியும் (1902) வசனமாக்கி புள்ளனர்.
sobGuissouñ. - Theruvangada Ayer.
இவர் வில்லிபுத்தூரிலே பிறந்த பிராமணர். பெண்களின் அவயவ அலங்கார வர்ணனைகளின் பேரில் உவமான சங்கிரகம் என்னுஞ் சிறு பாடலைச் செய்தார். வர்ணனைப் பாக்கள் பாடு வார்க்கு இது மிக உபயோகமானது. இவர் இருந்த காலம் கி. பி. க ச ஆம் சதாப்தம்.
குறிப்பு
காசிச் செட்டியவர்கள் தந்த செய்திகளுடன் காலவரையறை யையும் சேர்த்துச் சதாசிவம்பிள்ளை வழங்கியுள்ளார். இக்காலவரை பறையத் துணியச் சான்றுகளில்லை. உவமான சங்கிரகத்தையும் இரத்தினச் சுருக்சுத்தையும் ஆறுமுகநாவலர் சென்னை கலாரத்நாகரம் அச்சுக்கூடத்தில் அக்ஷயடு ஐப்பசிமீ (1866) பதிப்பித்தார். இவ ருடைய உவமான சங்கிரகப் பதிப்பிலே காப்பு நீங்கலாகப் பதி னைந்து வ்ெண்பாவுள. இவ்வுவமான சங்கிரகத்தின் ஆசிரியர் "திருமேனி குருகை இரத்தின கவிராயர்" எனச் சடகோபராமாநுசாசார்யர்
1. ச. சோமசுந்தரதேசிகர்; தமிழ்ப்புலவர்கள் வரலாறு, பதினேழாம் நூற்ருண்டு, 1951 பக். 55 2. A ti. 54 0S TS ttS TTTCLLC L 0TTTLLLL 0 ttt TtT TLttttS 000S tSS 00S000S 4. J. CfID sis) is ki: A ui, 54

Page 180
- - - 42 3 سسسس
"செந்தமிழ் பதினன்காம் தொகுதியிலே தமக்குக் கிடைத்த ஏட்டுப் பிரதியிற் பதினேழாம் செய்யுளாகக் காணப்பெற்ற நூலா சிரியரைக் குறிப்பிடும் பாடலின் அடிப்படையிலே துணிவர். இஃது ஆய்விற்குரியது. உவமான சங்கிரகத்திற்குக் காஞ்சிபுரம் இராம யோகிகள் இயற்றிய உரை 1914ல் வெளிவந்தது என்பர்.
நாவலரவர்கள் பதிப்பித்த சங்கிரகம் நீங்கலாக வேறிரு உவ மான சங்கிரகங்களுள. இவற்றில் ஒன்று சே. ரா. சுப்பிரமணியக் கவிராயராற் பரிசோதிக்கப்பெற்றுச் செந்தமிழ் பதினன்காம் தொகுதியிலும், 1914இலே தனிநூலாகவும் வெளிவந்தது. இதனுள் காப்பு நீங்கலாக 36 பாடலுள. ஏனையது கொங்குநாட்டுப் புலவர் ஒருவர் ஆசிரிய விருத்தத்தாற் பாடியது என்பர்".
திருவேற்காடு முத்தையா முதலியார்.-- Theru. Muttiah Mudalear.
இவர் கி. பி. க எசுகஆம் D) பிறந்தவர். திருவேற்காடு என்னும் ஊரிலே பிறந்த காரணத்தாற் திருவேற்காடு முத்தையா முதலியார் என வழக்கமாய் அழைக்கப்படுகிருர், இவர் தம்மைப் பற்றிய சரித்திரத்தைத் தாமே எழுதினர். ஐந்து வயதினிலே வித்தியாரம்பஞ் செய்து, இருபத்தொரு பிராயத்திற் தமிழ், சம்ஸ் கிருதம், இங்கிலிஷ், தெலுங்கு, மராட்டியம் பாரிசா, லத்தீன் பாஷைகளிலே பாண்டித்தியம் பெற்றுப் பதி சாஸ்திரங்களிலும் கரைகண்டு வல்லவரானர். இவரது பாஷா அருமையையுந் திறமையையுங் கேள்வியுற்ற சென்னைத் தேசாதிபதியாகிய ஹோ LLLLLLLLST TTTTTTT SLLLLLLLL LLLLLLLLSSSTTTTY S TT TTT TTTTTLLLLL கத்தில் ஏற்படுத்தினர். இலங்கைத்தீவை ஆங்கிலேயர் தம் வசப் படுத்தினபோது இவர் சென்னையிலிருந்து கொழும்புக்குத் துவிபாஷிக ராய் வந்தார். மதுரை அரசரைப்பற்றிய இதிகாசம் ஒன்றுக்கு இவர் ஆக்கியோன். உவில்சன் ஆசிரியர் (Prof. Wilson) பாண்டிய ராச்சியத்தைப்பற்றி எழுதிய சரித்திரத்தில் இவ் வித்துவானப்பற்றி யும் எழுதினர். சிற்சில தனிப்பாக்களே அல்லாது ஏதுந் தொகை கொண்ட பாடல்களே இவர் இயற்றவில்லை. தனக்கு அனுசாரியும் உபகாரியுமாகிய ஹோபாட் தேசாதிபதி பேரிற் சிற்சில சித்திர
1. Gy. ou. Hefjáá. : e ouréfiuisá, 1968, uä. 537 - 2. Aų, ui, 538
3. Q, uš. 537
42 தர பா. துருக்கு

- 343 -
கவிகள் பாடினர். அவற்றின் ஒவ்வொரு வரியின் முதல் அட்சரங் களை எடுத்து இசைத்தால் இவர் நாமமும் கடைசி அட்சரங்களை எடுத்து இசைத்தால் அத் தேசாதிபதியின் நாமமும் வரும். இவர் இறந்தகாலந் தெரிந்ததில்லை.
குறிப்பு - –m-- காசிச் செட்டியவர்களின் நூலில் இடம்பெறுவதன் மொழி பெயர்ப்பு ஈண்டு சதாசிவம்பிள்ளையாலே தரப்பட்டுள்ளது.
Sóiv&sub Tuus Gs IT SEGþử.--Thillainayaga Chothishar.
இவர் தொண்டைவள நாட்டிலே உள்ள சம்புகேச்சரம் என் னும் ஊரிலே இருந்தவர். கணிதநூற் துறை கண்டோராய் வட மொழியிலிருந்த யோகமஞ்சரி என்னு நூலைத் தமிழில் மொழி பெயர்த்து அதற்குச் சாதக சிந்தாமணி எனப் பெயரிட்டனர். இவ்வரலாறு: ** நறைகமழ் கமலப் பொகுட்டில் வீற் றிருக்கு
நான்முகக் கடவுடான் படைத்த நிறைவுள மாந்தர் வினைப்பய னதன
னிலைபெறு யோகமஞ் சரியாம் துறையென வழங்கும் வடமொழி யதனைத் தூயசெந் தமிழினுற் செய்தான் திறைகொடா வழுதிப் புகழ்தொண்டை நாடன்
றில்லைநா யகமகி பதியே ' என்னும் பாடலாற் திருட்டாந்தமாகும். இவர் செய்த சாதக சிந்தாமணியிலே உ,கசுஅ பாட்டுகளுள. மாதிரிக்காய் ஒர் பாட்டைத் தருகின்ருேம். அது வருமாறு: ** நிலைகொண்ட மகமேரு வரையடுத்த காகமும்
பொன்னிறம் பெற்ருற்போல் அலைகொண்ட பாற்கடலைச் சார்ந்தநதி யெல்லாம்
பாலாகி ஞற்போற் கலைகொண்ட பெரியர்குழாத் தடைதலுங் கட்கடை
படுமக் காட்சியாலென் தலைகொண்ட புன்சொல்லு நன்சொல்லாப் பிறங்ககிற்கத்
தக்க தாமால் '
1. “புளுராக்" நூலில் இடம்பெருதவர்

Page 181
--عہ 344 مس۔
56. Ta5J ii. - Thevagarar.
தச நிகண்டுள் ஒன்ருகிய திவாகரம் எனும் உரைநூல் இயற்றி னேர் இப்புலவர் சிகாமணியே. " செங்கதிர் வரத்திற் முேன்றுந் திவாகரர்" என்று சூடாமணி நிகண்டுப் பாயிரத்தில் இவர் பேசப் படுகின் ருர். பிங் கலந்தை செய்த பிங்கலர் எனும் ஆசிரியர்க்கு இவர் தந்தையார். இவர் தாம் பாடிய நூலைச் சேந்தனுர் என் பார்க்குப் பிரதிஷ்டை செய்ததால் அவர் நாமப்படி சேந்தன் திவா கரம் என்று அது அழைக்கப்படுகின்றது. அதிலே பத்துத் தொகுதி களிலும் உ,உடுக சூத்திரங்களுள
குறிப்பு - -
காசிச்செட்டியவர்கள் திவாகரம் இயற்றியவர் சேந்தனர் என்று கருதியமையாலே திவாகரருக்குத் தனியிடம் அளிக்கவில்லை. "திவா கரன் பயந்த பிங்கலமுணி ' என்பது பிங்கலத்தின் சிறப்புப் பாயிரம்; ஆயினும் சேந்தன் றிவாகரத்தின் ஆசிரியரைத் தாம் குறிப்பிடுகின் றது என்று துணியலாகுமா ? சோணுட்டு அம்பர் அருவந்தை சேந்தன் என்பவனுல் ஆதரிக்கப்பெற்றவர் திவாகரர். திவாகரர் தெய்வப் பெயர்த் தொகுதியைச் சிவனுடன் தொடங்குவதாலும், சிவனுக்கு 64 பெயர்களும் அருகனுக்கு 43 பெயர்சளும் தருவதாலும், உமையின் பெயர்களைச் சிறப்பாகக் கூறுவதாலும், அருகன் பெய ராகச் சைனர் கூறும் ஈசானன், தற்புருடன், அகோரன், fò தேவன், சத்கியோசாதனன் என்பனவற்றை ஈசனுக்குரிய ஐம் முகங்களெனச் சைவ மரபை ஒட்டிக் கூறுவதாலும், சைவ சித் தாந்திகளையொட்டித் தத்துவம் 25 என்பதாலும், ஊர்தி, படை, கொடி கூறும் இடங்களிலும் சிவனையே முன்வைப்பதனலும், சாணம் புண்ணிய சாந்தம் என உரைப்பதாலும் சிலர் அவரைச் சைவர் என்பர்.
சளுக்குவேந்தர், அரட்டர் எனும் பிரயோகங்களின் அடிப்படை யில் ச. வையாபுரிப்பிள்ளை திவாகரரின் காலத்தை நிறவ முற்பட் னர். அவர் சளுக்கரைப் பெருவேந்தராகவும், கி. பி. 750 முதல் 950 வரை பிரபலராய் விளங்கிய அரட்டரைக் குறுநில வேந்தராக வும் திவாகரர் கூறுவதாற் சளுக்கர் பிரபலராய் விளங்கிய இரண் டாம் காலப் பிரிவாம் கி. பி. பத்தாம் முதல் பன்னிரண்டாம் நூற் முரண் (Sவரையிலான பகுதியிலே திவாகரம் தோன்றியதாதல் வேண்டும் எk ". கெ. பொ. மீஞட்சிசுந்தரம்பிள்ளை அரட்டர் தம் சாம் ராஜ்யத்தை எட்டாம் நூற்ருண்டில் நிறுவுவதற்கு முன்னர் திவாகரம்
1. அwமம் : தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்ருண்டு முதல் பாகம், 1975 காண்க 2, ()aAdu u 9 M, 1957, uš. 211-212

- 345 -
தோன்றியது என்று கருதினர். சளுக்கர் சிறப்பாக ஆண்ட கி. பி. 500-750க்குப் பின்னர், அரட்டர் சிறப்பாக ஆண்ட கி. பி. 725-912 காலகட்டத்தில், ஒன்பதாம் நூற்ருண்டிலே, திவாகரர் வாழ்ந்தவ ராகலாம் என்பர் மு. அருணுசலம் 2. அரட்டர் பிரபல மன்னராய் விளங்கிய காலத்திலே திவாகரர் வாழ்ந்தபோதும் அவர்களைப் பெரு வேந்தராகக் கூறவில்லை என்பர் அருஞசலம் இவர் கருத்து நிருப துங்காரம், பாகவதர் எனும் ஆட்சிகனாலும், பல்லவர் பற்றிய கருத் தாலும் ஆதரிக்கத்தக்கதாய் அமைகின்றது, சோணுட்டவராகிய திவாகரர் ஆதித்த சோழனுக்குத் திருப்புறம்பயப் போரிலே உதவிய நிருபதுங்க வர்மன் எனும் பல்லவன் பெயரை ஒரு ராகத்திற்குச் சூட்டினர் என்ருே அல்லது அருமையாக வழங்கிய பெயரை ஞாப கார்த்தமாக அமைத்துக்கொண்டார் என்ருே கருத இடமுண்டு. நம்மாழ்வாருக்கு முன்னர் ஆட்சிக்கு வராததாகவும் நாதமுனிகள் காலம் முதற் பிரபல்லியமானதுமான பாகவதர் எனும் பெயர் திவா கரத்தில் இடம்பெறுகின்றது. சோளுட்டின் சக்கரவர்த்திகளாகப் பல்லவர் தம்காலத்தில் விளக்கியதாற் சோணுட்டுப் பற்றுமிக்க திவாகரர் அவர்களைக் குறிப்பிடவில்லைப்போலும்.
எட்டுத்தொகுதிகள் தாண்டவராய முதலியராலும் மேலிரண்டு தொகுதிகள் புதுவை நயனப்ப முதலியாராலும் வழுவறுத்துப் புதுக்கப்பட்டு, சேந்தன்றிவாகரம் கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளையாற் சகம் 1762, விகாரி ஞ) (1839) சென்னை தி. விசாகப் பெருமாளையர் கல்விவிளக்க அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது; பன்னிரு தொகுதிகளிற் பத்துத் தொகுதிகள் மட்டும் அடங்கிய இப்பதிப்பு மூலவடிவம் உணரமுடியா வகையிற் சூத்திர வைப்பு முறை மாற்றப்பெற்றும் இடைச்செருகல் இடம்பெற்றும் பதிப் பாசிரியர்களின் புதுச்சூத்திரங்கள் உடுக்குறியுடன் சேர்க்கப்பெற்றும் வெளிவந்தது. பின்வந்த பதிப்புகளில் உடுக்குறி நீக்கப்பெற்றது. பூவிருந்தவல்லி பார்த்தசாரதி நாயகர், திருமழிசை முத்துசாமி முதலியார் (1886), கொ. லோகநாத முதலியார் (1917), திருநெல் வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்: திப்புக் கழகத்தினர் (1958) முதலியோரும் திவாகரத்தைப் பதிப்பித்துள்ளனர்.
சதாசிவம்பிள்ளை முன்னர் சேந்தனர் பற்றியவிடத்துக் காசிச் செட்டியவர்களைப் பின்பற்றி 2286 சூத்திரங்கள் என்று கூறிஞர்: திவாகரர் தமது நிகண்டை எத்தனை சூத்திரங்களிற் பாடினர் என்று துணிதல் சாலாது.
I. Tani Plutarch, 1946, p. 102 2. தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்குண்டு, முதல்பாகம், யக், 138-155

Page 182
一346一
GgüGı9smıd67îü ı?sit 27.-Theyvasigamanip Pillai.
இவர் க.அoசம் ஞல சித்திரைமீ" 10வ. திண்டுக்கல் சீமையிலே பிறந்தவர். சாதியிலே வேளாளருஞ் சமயாசாரத்திலே கதலிக கிறிஸ்தவருமாகிய இவர் பிதா ஒரு வேத தேசிகர். அவர்க்கு அந்தோணிமுத்து என்று நாமதேயம். பாலிய வயசிற்ருனே புலமை யில் அதி வாஞ்சையும் ருசியுங் கொண்டவராய் இன்பமணிமாலை, ஸ்தோத்திரக்கும்மி என்னும் இரு பாடல்களை இவர் இயற்றிஞர். கொழும்பிலே சீமான் காசிச்செட்டித் துரையினுல் அச்சடித்துப் பிர சுரம்பெற்ற "உதயாதித்தன் " என்னும் பத்திரிகை வாயிலாக இவை தோற்றஞ்செய்திருக்கின்றன. கள்ளிக்கோட்டைக் கச்சேரியிலே தலைமைச் சிரஸ்ததார் உத்தியோகத்தில் அமர்ந்திருந்து, க அசசும் ஞ) கார்த்திகை மீ" கo வ. இவர் இக வாழ்வை ஒருவினர்.
-- ജൂി
1804ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி பிறந்து 1846ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முப்பதாம் தேதி மறைந்த தெய்வ சிகாமணிப்பிள்ளை பற்றி ஆசிரியர் கூறுவன காசிச்செட்டியவர்களின் நூலில் இடம்பெறுவனவாம்:
Gg569n Just. -- Tharaiar.
இவர் அகஸ்திய மகா இருடியின் வைத்திய மாணுக்கர் பலருள் ஒருவர். இவர்க்குத் தேரர் என்றும் பேர். ஆயுள்வேதக் கரை கண்டவராகிய இவருடன் இவரது ஆசிரியர் ஒருபோது விகாதங் கொண்டு இவர் செய்யும் அவுடதம் பலியாது சாபமிட்டார் என்று கதை உளது. இலக்கணங் கற்ற மாணுக்கருட் சிரேட்டராகிய தொல்காப்பியருடன் அகஸ்தியர் பிணங்கினற்போலவே, வைத்திய மாணவகச் சிரேட்டராகிய இவருடனும் பிணங்கினர் போலும், இவர் ஒருமுறை ஒருவனுடைய கபாலத்தைக் கழற்றி அதன் உள்ளே "ாயில் இருந்து உணவுசெய்த தேரை ஒன்றைக் கிண்ணியில் வார்த் p , ம்க கண்ணிர் அரவங்கேட்டு அதிற் பாயச்செய்து, அவனை பிப்படுத்திய வருத்தத்தில் நின்று நீக்கிய காரணத்தால், இவர்க் தக் தோையர் எனும் காரண நாமம் வந்ததென்று கதை உளது. ( புகழ் இவரிக்கு வந்தது கண்டுதான் அகஸ்தியர் அழுக்காறுற் முtய 4தை 'படியாயினு மாகுக. இவர் தகுந்த வைத்திய புருடர் என்பது. அணுவளவேனும் மயக்கமில்லை.

- 347 -
இவர் செய்த வைத்திய நூல்கள் பலவெனினும், சிகாமணி வெண்பா, நாடிக்கொத்து, நோயனுகாவிதி எனு மூன்றும் அவற் றுள் மிக விசேடமுற்றவை. இவை இந்நாட்காறும் வழங்கி வரு கின்றன. இவை அன்றிப் பதார்த்தகுண சிந்தாமணி எனும் பாடலும் இவராற் பாடப்பட்டது. அதிலே, க, அCச பாக்கள் உள. இதனைச் சுப்பிரமணிய பண்டிதர் அச்சிட்டனர். நோய் அணுகாமல் மாந்தர் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றதையிட்டுப் பூர்வீக இந்துக்களுக்குள் இருந்த அறிவும், கருத்தும் அளவிடற்கு அரிய கல்வியாற் சிறந்த தற்கால ஐரோப்பிய அமரிக்க வைத்திய சிகாமணிகள் தாமும் தகும் தகும் என்று அங்கீகரித்து ஒப்புக் கொள்ளுதற்கு ஏற்றன என்பதை விளக்குதற்காகவும், இவர் பாடல் மாதிரிக்காகவும் இவ் ஆயுள் வேதியர் இயற்றிய நோயனுகா விதியிற் கண்ட பின்வரும் விருத்தத்தைத் தெரிந்தெடுத்துத் தருகின்ருேம்.
** உண்பதிரு பொழுதொழிய முப்பொழுது முண்ணுே முறங்குவ திராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம் பெண்கடமைத் திங்களுக்கோர் காலன்றி மருவோம்
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீ ரருந்தோம் மண்பரவு கிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்
வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம் நண்புபெற வுண்டபின்பு குறுநடையுங் கொள்வோம்
நமஞர்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே.”*
மேற் சொல்லப்பட்ட நூல்களன்றி நோயின்சாரம், கரிசல் எனும் வேறு வைத்திய நூல்களையும் இயற்றினர். முந்தினதிலே கAக செய்யுளும், பிந்தினதிலே கo o செய்யுளும் உள.
இவர் வைத்திய வித்தையில் மாத்திரமல்ல, இரசவாத வித்தை யிலும் மிக்க சாதனை உடையவராய்ப் பெயர்பெற்றிருக்கவே, இவர்க்கு ஆசிரியர3 கிய அகஸ்திய மா இருஷி ஆ ! நம் மாணவகன் வாதத்தால் உலகத்தைக் கெடுக்கிருன், இவனை உயிருடன் வைத்திருத்தல் தோஷம் என்று கூறி, இவரைக் கொன்றுவிட, இவர் சொல்லிக்கொடுத்த வித்தை ஒன்றை முன்னமே நன்கு பயின்றிருந்த இவரது மாணுக்கன் இவர் உயிரை வர அழைத்தான் என்றும், அப்புறம் இவர் இராமதேவர் என்னும் பெயரோடு நெடுங்காலம் சீவித்துப் பதினன்கு சாஸ்திரங்களைப் பாடிப், பின்பு பொதிய மலைக்குப் போயினர் என்றும் கதை உளது:
V− குறிப்பு
காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தைச் சதாசிவம்பிள்ளை விரித் துரைக்கின்ருர், யமகவெண்பா, கரிசல், மருத்துப் பாரதம் முதலிய

Page 183
سسس- 348 س- "
நூல்களிலே தம் பெயரைத் தாமே தேரன் என்பர் ஆசிரியர்; இதனுல் இவர் பெயர் தேரன் என்றும், இப் பெயர் தேரர், தேரஞர், தேரையன், தேரையர் என வழங்கலாயிற்று என்றும் கருத இடமுண்டு. தேரைக் கதை பெயர்க்குக் காரணம் கற்பித்த பிற்காலத்தில் எழுந்தது போலும். உள்ளிடற்று வெறுங்காயாய் இருத்தலைத் தேரைபாய்தல் என்பது மரபு, தேரையர் என்ற பெயர் மண்டூக மகரிஷி எனச் சங்கதத்திலே மொழிபெயர்க்கப்பெற்றுள்ளது.
தேரையர் தயிலவருக்கச் சுருக்கத்திலும் மகாமகிமைக் கரிசலி லும் தருமசவுமியரைத் தம்மாசிரியர் என்பர். தயிலவருக்கச் சுருக்கம் சிவபெருமான், உமாதேவியார், நந்தி, தன்வந்திரி, அச்சுவினி தேவன், அகத்தியர், புலத்தியர், தருமசவுமியர் என்று தேரையரின் வைத்திய பரம்பரையைக் கூறுகின்றது. முற்கிளந்த வைத்திய பரம் பரையிலே தருமசவுமியரைத் தவிர்த்து சிந்தாமணி 800 எனும் நூலிலே தேரையரைத் தம் ஆசிரியராகக் கொள்ளும் யூகி முனிவர் கூறுவர். யூகிமுனிவர் தேரையரின் ஆசிரியர் புலத்தியர் என்பர். இதனுற் சிலர் தருமசவுமியர் சீடர் தேரையர் வ்ேறு என்றும் யூகிமுனி வர் ஆசிரியர் தேரையர் வேறு என்றும் கருதுவர்.
தேரையர்தாம், இராமதேவர் என்ற கதைக்கு ஆதாரம் யாதெனப் புலப்படுமாறில்லை. இராமதேவர் மக்கா சென்று இஸ்லாத் தைத் தழுவி யாக்கூப் எனும் பெயர் பெற்றுச் சதுரகிரி மலையில் வந்து வாழ்ந்தனர் எனவும் இவ் வரலரறு யாகோபு வைத்திய சிந்தாமணியிற் காணப்பெறுவதாகவும் கூறுவர்.
கரிசலில் 'வேமனர் வடுகிலுரைத்தல் போல " என்ற இடத்தில் (துர்க்கி வணக்கம்) குறிப்பிடப்பட்டவர் வேமன்ன யோகீஸ்வரர் என்றும் அவர் காலம் கி. பி. 1386-1505க்கு இடைப்பட்டது என்றும் கூறுவர்.
சிகாமணிவெண்பா, நிகண்டு. சேகரப்பா, காப்பியம், தரு, நாடகம், அந்தாதி, மிகாவண்ணம், நாண்மாலை, யமகவெண்பா, எதுகைப்பா, கரிசல் எனும் பன்னிரு நூல்களே தேரையர் இயற் றியவை என்பர் சிலர். இவற்றுடன் நீர்நிறக்குறி, நீர்நெய்க்குறி, தயிலவருக்கச் சுருக்கம், தினக்கிரமாலங்காரம், சிகிச்சைக்கிரமம், நோய் மருந்தளவை, பிரதானகுண மூலித்தரு, வயித்திய பள்ளு நாடகம், மருந்துப் பாரதம் எனும் ஒன்பது நூல்களையும் சேர்த்து 21 நூல்கள் தேரையரால் இயற்றப்பெற்றன என்பர் வேறு சிலர். இவ்வொன்பது நூல்களுள் முதலாறும் காப்பியத்துள்ளும், பிரதான குண மூலித்தரு என்பது தருவிலும், ஏனைய இரு நூல்களும் நாடகத்துள்ளும் அடங்குவதாற் பன்னிரு நூல்கள் என்பதே
1. அப்துர் றஹீம் : முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள், 1957 பக், 10

-س- 349 --س-
பொருத்தம் என்பர் முற்கூறப்பட்டோர். யமகவெண்பா வை வைத்திய யமகவெண்பா என்றும், கரிசலை வைத்தியக் கரிசல்கள் என்றும், சிகிச்சைக் கிரமத்தை சிகிச்சையாயிரம் என்றும் வழங்குவர் போலும், மகாமகிமைக் கரிசல் கரிசல்களுள் ஒன்று போலும், நாடிக்கொத்து, நோயனுகாவிதி, நோயின்சாரம் என்பன முற்கிளந்த பன்னிரு அல்லது இருபத்தொரு நூல்களுள் அடங்குவனவோ அல்லது வேறு நூல்களோ என்பது தெரியவில்லை". பதார்த்தகுண சிந்தாமணியில் இடம்பெறும் பாடல்களிற் பலவற்றைப் பாடியவர் தேரையர் என்று காசிச்செட்டியவர்கள் கூறுவதே பொருத்தமாகும். மேலும் அவர் பதார்த்தகுணசிந்தாமணியில் 1504 பாடலுள என்பர். தேரையர் பேராற் பிற நூல்களும் வழங்குகின்றன".
G56A U Tuu si au a L656îT. — Thevaraya Swamigal.
கந்தஷஷ்டி கவசம் செய்த மகான் இவரே. இவரது பாடல் கந்தசுவாமி மேற் துதியாய்ச் சொல்லப்பட்டது.
குறிப்பு
காசிச்செட்டியவர்களின் நூலில் இடம்பெருத தேவராய சுவாமிகள் பத்தொன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்தவர் என்பர் 3. காப்பு வெண்பா இரண்டினையும் 238 அடிகளைக் கொண்ட நில மண்டில ஆசிரியப்பாவினையும் உடைய கந்தசஷ்டி கவசத்திற்கு சக்காடு இரத்தினவேல் முதலியார் மகன் சபாபதி முதலியார் விருத்தியுரை தந்துள்ளார்.
G56î š5 Lägg (Goor. - Themikkudikkeeranar.
இவரும் கடைச் சங்கப் புலவர் சக பேர்களுள் ஒருவர். வள்ளுவர் நூற்குச் சிறப்புப் பாயிரமாக இவர் சொன்ன வெண்பா வருமாறு: **பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலிற் தெய்வத் திருவள் ஞவ்ர்செப் பியகுறளால் * வையத்து வாழ்வார் மனத்து.'
1, மணிவெண்பாவும் இத்தகையதே 2. தேரையர் 100, டிெ 500, டிெ 1001, டிெ 1500, தேரையர் வைத்தியம், தேரையர் குணவாகடம்,
3. கா. கப்பிரமணியபிள்ளை; இலக்கிய வரலாறு, 1958, பக். 456 4. நூ. பா. பியகுறளில்

Page 184
حس۔ 350 -----۔
- குறிப்பு காசிச்செட்டியவர்கள் கூறியனவற்றைச் சுருக்கித் தந்துள்ளார்
ஆசிரியர். இப்பெயர் பண்டைய புலவர் பட்டியலில் இடம்பெறவில்லை.
அக்காரக்கனி நச்சுமனர் குறிப்புக் காண்க.
தொடித்தலை விழுத்தண்டினுர்.-- Tho dittalaiveluththandinar. இவருங் கடைச் சங்கத்தார் சக பேருள் ஒருவர். வள்ளுவர் நூற்குச் சாற்று கவியாக இவர் ஒரு வெண்பாப் பாடினர். அது வருமாறு :
** அறநான் கறிபொரு ளேழொன்று காமத் திறமூன் றெனப்பகுதி செய்து-பெறலரிய நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார் போலு மொழிந்த பொருள்."
محی
ཞུ5J004 མཐའ་མ་ཡས་ལ་མཁས་───མ་ཕམ་ཁ་ -ས་ཡ--- ཡ─-ཡས་མས་ཡ───காசிச்செட்டியவர்கள் கூற்றினை ஆசிரியர் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இப்பெயருடன் புறப்பாட்டைப் பாடியவரொருவர் காணப்பெறுவர் . அக்காரக்சனி நச்சுமஞர் குறிப்புக் காண்க.
தொண்டரடிப்பொடியாழ்வார்.- Thondaradippodialvar.
விஷ்ணு பக்தரான ஆழ்வார் பன்னிருவருள் இவர் ஒருவர். இவர்க்கு விப்பிரநாராயணர் என வேறும் ஓர் நாமம் உளது திரு மண்டங்கு டி2 என்னும் ஊரிலே பிராமணர் குடும்பத்திற் பிறந்த இவர், வேதபாராயணஞ் செய்து அதில் மாநிபுணராகிதி, துறவறம் பூண்டு, சிறீரங்கம் என்னும் விஷ்ணு ஸ்தலத்தில் வசித்தவர். இவர் செய்த பாடல்கள் திருமால் திருப்பள்ளியெழுச்சி எனப் பெயர்பெறும். அதில் ஐம்பது செய்யுள் அடங்கும். விஷ்ணுவின் மேற் பாடப்பட்ட தும் மிகச் சிறந்ததுமான இப்பாடலில் உள்ள பாக்கள் நாலாயிரப் பிரபந்தத்தோடு சேர்ந்திருக்கின்றன.
1. JhtgplJ 243 2., g.. uil. Miotail'irl.tigh

حس۔ 351 ------۔
குறிப்பு காசிச்செட்டியவர்கள் தந்த சரிதத்தை மொழிபெயர்க்கும் ஆசிரியர், அவர் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என இரு பிரபந் தங்களாகக் கூற, இவர் ஒரே பிரபந்தமாகக் கருதித் திருமால் திருப் பள்ளியெழுச்சி என்று கூறியுள்ளார். நாலாயிரத் திவ்விய பிரபந்தத் தின் முதலாயிரத்தில் இடம்பெறும் திருமாலையில் 45 திருப்பாசுரங் களும், திருப்பள்ளியெழுச்சியிற் பத்துத் திருப்பாசுரங்களுமுள.
பின்பழகிய ஜியர் கருத்துப்படி இவர் திருமங்கையாழ்வார் காலத்தவராவர். திருவரங்கத் திருமதிலைத் திருமங்கையாழ்வார் கட்டும்போது, தொண்டரடிப்பொடியாழ்வாரின் துளசி நந்தவனம் இடையிட்டதாக, ஆழ்வார் அந்த இடத்தைத் தவிர்த்து மதிலை அமைத்தார் என்பது குருபரம்பரை. திருமங்கையாழ்வார் தந்திவர் மன் (796-846) காலத்தவர் என்பது முன்னர் விளக்கப்பெற்றது: குலசேகரவாழ்வார் "தொண்டரடிப்பொடி’ என்றுரைத்தல் தொண்டரடிப்பொடி யாழ்வாரை மனதிற் கொண்டே என்று கருத இடமுண்டு. குலசேகரப்பெருமாள், பொய்கையாழ்வார் குறிப்புகள் காண்க,
cosm to 1966), L. - Thom Philip.
இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பழையிலே வசித்த சோழ வேளாள குலோத்துங்கர். சமயாசாரத்தாற் கதலிக கிறிஸ்த வராம் இவர், இலக்கண இலக்கிய வல்லவரும் வேதநூல் விற் பன்னருமாயிருந்தார். ஆதலிற் குரு குல திலகராய் விளங்கிய தொம் தியோகு முதலியின் விருப்பப்படி விசுவாச விளக்கமாகிய ஞானனந்த புராணம் எனும் ஒரு காவியத்தை ககoச விருத்தப்பாவில் அதிக வியப்புப் பெற இயற்றினர். இப் புராணம் சத்திய வேதாகமத்தின் சுருக்கம். அதிலே உற்பத்தி காண்டம், உபத்திரவ காண்டம், உத்தான காண்டம் எனும் மூன்று காண்டங்களிலே பாயிரச் சருக் கத்தை ஒழித்துப் பிரதம ஆரம்பச் சருக்கம், பரிசுத்த மாதாவின் திரு அவதாரச் சருக்கம் முதலாம் இருபத்துமூன்று சருக்கங்களுள. இப்புராணம் பாடினேர் பாடுவித்தோர் யாரெனல் பின் வரும் பாவி ஞல் விளங்கும். 'அல்லலுறு மஞ்ஞானத் திமிரந் தேய
வ்ருள்ஞான விசுவாச விளக்க முந்நூற் புல்லியசொற் சிறிதெடுத்து விருத்தப் பாவாய்ப்
போந்தவுரோ மாபுரியின் சங்கத் தோராற்
1. பெருமாள் திருமொழி 2 2.

Page 185
- 352 -
தொல்லுலகி லுயர்ந்தகுரு குலத்து மன்னன்
ருெந்தியோ கெனுமுதலி முயற்சி யாலே தெல்லிநகர் வேளாளன் தொம்பி லிப்புச்
செந்தமிழிற் காப்பியமாய்ச் செய்தான் மன்னுே."
இப் புலவராற் பாடப்பெற்ற இக் காவியத்தைச் சென்னைபுரியை அடுத்த இரசயபுரம், அ. சவரியப்ப முதலியார் குமாரராகிய ஜெகராவுமுதலியார் பல பிரதிகளைக் கொண்டு குரு, சந். தே. மரி. ஞானப்பிரகாசதாத சுவாமிகள் முன்னிலையிற் பரிசோதித்து அவர் உத்தரவுப்படி கஅஎசிஆம் ஞ) அச்சிடுவித்தார். இதற்கு இயற்றமிழ் ஆசிரியராம், தி. விசாகப்பெருமாள் ஐயர் முதற் பல புலவர்கள் சாத்துகவி சொற்றிருக்கிருர்கள். இப் புராணப் பாக்கள் மற்றைய தமிழ்ப் புராணப் பாக்களுக்கு எவ்வகையேனுந் தோல்விபோகா. பாடன் மாதிரிக்காக வழிப்படு புலம்பற் சருக்கம், க ஆம் விருத் தத்தை இவ்விடந் தருகின்ருேம்.
*" என்றினைய நிகழ்ந்தவண்ண மருளப்ப
னன்னைதன்பா லிசைப்ப வெய்திப் பொன்னுடலம் வெயர்பொடிப்பப் பொருமியுள்ளம்
பறையடிப்பப் புலன்வாய் விம்ம நின்றனன் மெய் தள்ளாடி நெடுந்தாரை
கண்பனிப்ப நிலத்தில் வீழ்ந்து துன்றுமல ரடியிறைஞ்சித் தோன்றல்படுந்
துயரமெலாஞ் சொல்ல லுற்றன்." ஆக்கியோனது செனண் மரண காலம் தெரிந்தில.
குறிப்பு −−−
காசிச்செட்டியவர்களின் நூலில் இடம்பெருதவர் தெல்லிப்பழை தொம் பிலிப்பு. இவர் சுண்டிக்குழியில் வசித்தவர். இவர்மீது 1841இல் இவர் மாணவகர் மாதோட்டம் காலிங்கராயர் குருவணக்கம் பாடி புள்ளார். தொம் தியோகு முதலியாரின் முழுப்பெயர் தொம் தியோகு வர்ணகுலசூரிய அரசு நிலையிட்ட முதலியார் என்பதாகும். முதலியாரவர்கள் ஒல்லாந்தர் ஆட்சியில் இறைசுவதோர் (Respadore) வேல் புரிந்தவர். முதலியாரவர்கள் 92ஆம் வயதில் 1825ஆம் ஆண்டில் மறைந்தார் எனும் கூற்று ஏற்றுக்கொள்ளத்தக்கதாயின், 1783ஆம் ஆண்டளவிற் பிறந்தவராதல் வேண்டும். இவர்
1. க. வேலுப்பின்:ே யாழ்ப்பாண வைபவ கௌமுதி, 1918 பக். 180 2. James H. Martyn : Notes on Jaffna, 1923, p. 173

- 353 -
பேரஞரும் யாழ்ப்பாணம் மணியகாரர் தொம் நீக்கிலாஸ் அரசு நிலையிட்ட முதலியாரின் புதல்வருமான யாழ்ப்பாணம் மணியகாரர் அரசுநிலையிட்ட முதலியார் சந்தியாகுப்பிள்ளை 1816இலே பிறந்தனர் என்பர் 1 . யாழ்ப்பாண மீசாமின் குருவாக வண. சுவா பப்ரிஸ்ரா சுவாமிகள் (Fr. Joa Baptista) 1823இலே விளங்கிய காலத்தில் ஞானனந்த புராணம் பாடப்பெற்றது என்பதைத் தற்சிறப்புப் பாயிரம் ஏழாம் செய்யுள் காட்டுகின்றது2. யாழ்ப்பாண வைபவ கெளமுதி ஆசிரியரும் ஞானனந்த புராணம் ஆங்கிலேயர் காலத்திற் பாடப்பெற்றது என்று குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது. யாழ்ப்பாண வைபவ கெளமுதி ஞானனந்த புராணத்தில் 1084 பாடல்களுள என்று கூறுகின்றது.
G5m südası II'ü suff. — Tholkappiar.
கி. பி. அம் சதாப்தத்திலே, மதுரைக்குத் தென்பாலுள்ள தொல்காப்பியக்குடி என்னும் ஊரிலே, பிராமணர் குலத்திலே, சமதக்கிணி முனிவர்க்குப் புத்திரராய் அவதரித்த இவர், அகத்திய முனிவரது மாணக்கர் பன்னிருவருள் ஒருவர். தொல்காப்பியன், அதங்கோட்டாசான், துராலிங்கன். செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பியன், பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கை பாடினியார், நற்றத்தன், வாமனன் என்னும் பன்னிருவருள் இவரே மா சிரேட்டர். இவர்க்குத் திரண தூமாக்கினி என்னுஞ் சிறப்புப் பெயர் உளதாயினும் இவரது செனன ஊரையிட்டே தொல்காப்பியர் எனுங் காரண நாமம் இடப்பட்டது. இவர் இலக்கணத்தில் முற்றத் தேர்ந்த கல்விமானகித் தம் நாம காரணப்படி தொல்காப்பியம் எனப் பெயர்பெற்றுத் தற்காலத்திலும் பெரு மான்மியத்தோடு விளங்காநின்ற அரிய இலக்கணம் ஒன்றை இயற் றினரி. அதில் மூன்று பிரிவுகளுள. பிரிவுகள் மூன்றுக்குஞ் சூத்திரத் தொகை ஆயிரத்திருநூற்றெழுபத்தாறு. இவ் இலக்கண நூலுக்கு, இளம்பூரணர், சேனவரையர், நச்சினர்க்கினியர் எனும் மூன்று உரையாசிரியர் தனித்தனி வியாக்கியானம் செய்திருக்கின் ருர்கள். அம் மூன்றும் முறையே அவ்வவ் ஆசிரியர் நாமப்படி இளம்பூரணம்,
1. க. ரத்தினசாமியர் : மேன்மக்கள் சரித்திரம், 1930, பக். 288-290.
2. James H. Martyn: Notes on Jaffna, 1923, p. 172
3. ui. 180
4, ui, 180
5. . u. 1äelu audi.
unt - 23

Page 186
- 354 -
சேஞவரையம், நச்சினர்க்கினியம் என்னும் காரண நாமம் பெற்றன. இம் மூன்றனுள் உரை ஆசிரியர் எனுஞ் சிறப்புப்பெயர் வகித்த இளம்பூரணர் செய்த உரையோடு இவ் இலக்கணத்தின் முதற்பகுதி யாகிய எழுத்ததிகாரம் " சென்னைக் கவர்ண் மேண்டு நார்மல் பாடசாலைத் தமிழ்ப்புலவர் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரால் "* அச்சிடப்பட்டிருக்கின்றது. எழுத்து அதிகாரத்தில், நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புண ரியல் எனும் ஒன்பது பங்குகளுள. ** மதுரை ஆசிரியர், பாரத்துவாசி நச்சினர்க்கினிய"ராற் செய்யப்பட்ட உரையைச் சென்னையிலே கம்பேனியாரது சகல சாஸ்திரசாலைத் தமிழ்த் தலைமைப் புலமை நடாத்திய மழவை மகாலிங்கையர் பரிசோதித்து அச்சிடுவித்தனர்.
தம் ஆசிரியராகிய் அகத்தியருடன் தொல்காப்பியர் விரோதம் கொண்டு அவர் செய்த அகத்தியத்திற்கு மாருக இதனைச் செய்தது மாத்திரமல்ல, அவர் ஸ்தாபித்த கழகத்திற்கு 1 மாருகவும் இவர் புறம்பாய் ஓர் கழகத்தை 2 ஸ்தாபித்தார் என்று கதை உளது. தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் பாடினேர் இவருடன் கற்ற மாணுக்கருள் ஒருவரான பனம்பாரனர் என்பார். தொல் காப்பியத்துக்கு முதனூல் அகத்தியம் என்று ஒரு சாரார் சாதிக்க, அதை மறுத்து, இந்திரன் செய்த ஐந்திர வியாகரணமே முதனூல் என்று பின் ஒரு சாரார் சாதிப்பர் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில்: "மல்குநீர் வரைப்பினைந்திர நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் நிறுத்திய பல்புகழ் நிறுத்த படிமை யோனே" என்றிருப்பதாற் தொல்காப்பியத்திற்கு ஐந்திர வியாகரணம் முதனூ லாயினும், ஐந்திரம் அகத்தியத்துட் கலந்திருப்பதாலும், இவர் அகத்தியர்க்கு மானக் கராதலாலும், அகத்தியம் நிறைந்திருப்பது எல்லார்க்கும் விளங்கியதாய் இருக்க, வடநூலிலும் வல்லார் இவர் என்றது விளங்கவே அப்படிச் சொல்லப்பட்டதெனத் தொல் காப்பியச் சூத்திர விருத்தி செய்த திருவாவடுதுறை ஆதீனத்துச் சிவஞானசுவாமி பேசியிருக்கின்றர். அத் தொல்காப்பியச் சூத்திர விருத்தியை எம்மூர் ஆறுமுக நாவலர் அச்சிடுவித்தனர். தொல் காப்பியத்திற்கு அகத்தியமே முதனூல் என்பது எவ்வகையும் நிச்சயமே. இந்நூல் முதற் சங்கத்தில் அரங்கேறியபோது அச் சங்கத்திருந்த அகத்தியர், விரிசடையத்தனர் முதலிய ஐந்நூற்று நாற்பத்தொன்பது புலவருள் இவரும் ஒருவர். இவர் முதற் சங்கத்தில் மாத்திரமன்று, இடைச்சங்கத்திலும் கடைச்சங்கத்திலும் இருந்தவர்
1. . II • களத்திற்கு 2. . Lit, sa aias

- 355 -
என்று செல்வாருளர். ஆயினும் திருட்டாந்தம் இன்மையால் அது நிச்சயம் அstது.
அகத்தியர்க்கும் இவர்க்கும் ஒவ்வாமை உண்டானதற்கும் இவர் அவரையும் அவர் இவரையும் சபித்தார்கள் என்றதற்கும் ஆதார மாக ஓர் கதையைப் பரம்பரையாகக் கூறுவர். அதனை யாமும் இவ்விடந் தருகுவம். அகத்தியர் பொதியமலைக்குப் பிரயாணப்பட்ட போது தம் சீடருட் சிரேஷ்டராகிய இவரை நோக்கி : நீர் நமக்குப் பின் நின்று நம் பாரியாரை அழைத்துவாரும் என்று கூற, இவர் : நாம் எவ்வாறு கொண்டுவருவது என்ன, அவர் : நீர் முன்னும் நம் பாரி பின்னுமாக உம் இருவர்க்கும் நாற்கோல் நீளம் இடைவிட்டு அழைத்துவ்ாரும் என்றனர். தம் ஆசிரியர் வார்த்தைப் பிரகாரமே கூட்டி வரும்போது வைகை ஆற்று நீர் குமரியாரைக் கடுகி இழுக்க இவர் அவரை இரட்சித்திற் பொருட்டு ஆசிரியர் உரைகடந்து ஒர் மூங்கிற் தடியை முரித்து அவர்க்கு நீட்ட அவர் அதிற் பிடித்துக் கரைசேர்ந்தார் என்ப இதன்பொருட்டு அகத்தியர் சீற்றங்கொண்டு நம் மொழி கடந்து நடந்ததஞல் நீங்கள் இருபேரும் மோட்சம் போகாதிர் என்று சபிக்கத் தொல்காப்பியர் சினந்து: குற்றமற்ற ந: மை நீர் சபித்ததனல், எம்பெருமானே ! நீரும் மோட்சம் போகாதிர் என்று அவரைச் சபித்தார். இது காரணம் பற்றியே அகத்தியர் விரோதம் சாதித்துத் தொல் காப்பியம் அரங்கேருது செய்தற்பொருட்டுத் தம் மாணவராம் அதங்கோட்டாசிரியரை அதற்கு இடையூருக நிற்கும்படி ஏவினர். தொல்காப்பியரோ அதங் கோட்டாசிரியரைச் சிநேகமாக்கினதாலும் அவர் இவர்க்குச் சக பாடியாய் இருந்தனர் ஆதலாலும் இருவரும் தம்மோடு வெறுப்புக் கொள்ளாதபடி நடுநிலையில் நிற்க உள்ளத்தில் எண்ணி, அந்நூலிற் குற்றங்காட்டுவார்போல அபிநயித்துச், சில கடாக்களைப் பொறிக்க அவற்றிற்கு இவர் உத்தரஞ் சொன்னதால் அந்நூல் எளிதில் அரங் கேறிற்று.
"அறங்கரை நாவினன் மறைமுற்றிய அதங்கோட்டாசாற் கரிறபத் தெரித்து" என்று தொல்காப்பியச் சூத்திர விருத்தியிற் சொல்லப்பட்டு இருப்பது இதற்குப் பிரமாணமாம். தொல்காப்பிய ரைப் பற்றிய பிற வரலாறு பாதும் விளங்காது
குறிப்பு தொல்காப்பியர் காலம் பற்றிய ஆய்வுகள், வரலாற்று ஆய்வுகள்
தாமோ என்று ஐயுறுமளவிற்கு அமைந்துவிட்டன. தமிழினத்தின்
பண்பாட்டுக் கருவூலமாகக் கருதப்படும் தொல்காப்பியத்தின் பழமை
யிலேயே தமிழினத்தின் பெருமை அடங்கியிருப்பதாக எண்ணி,
24 - חנL

Page 187
سے 356 ۔
வரலாற்று நெறியைத் தவறவிட்டுவிட்டார்கள் பலர். தமிழுணர்ச் சிக்கு ஈடுசெய்யுமாறு பிறமொழிப் பற்றும் தொல்காப்பிய ஆய்வில் இடம்பெற்றுள்ளது. வரலாற்றுணர்வோடு தொல்காப்பியத்தை அணுக முற்பட்டோரும் அதனை முழுநூலாகக் கொண்டு ஆராய்ந் திருப்பதாகக் கூறுவதற்கில்லை.
தொல்காப்பியத்தின் கால ஆய்விற் பாயிரம் முக்கியத்துவம் வகிக்கின்றது, உரையாசிரியர் இப்பாயிரம் தொல்காப்பியருடன் கற்ற பனம்பாரனர் என்பவரால் இயற்றப்பட்டதாகக் கருதினர் பாயிரம் பாடுதற்குரியார் இன்னுர் என்ற மரபின் அடிப்படையிற் பனம்பாரஞர் சமகாலத்தவர் ஆணுரேயன்றி வேறு சான்றுகளாலன்று. இப்பாயிரத்தின் காலவரையறை துணிதற்கரிதாம். இப்பாயிரம் கூறும் "குமரி", "ஐந்திரம்" என்பன கால ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளன. குமரி என்பது குமரிமுனையன்று. குமரியாறு என்பதற்கு உரையாசிரியர் கொண்ட காரணம் நுட்பமானது. ஆயினும் உரை யாசிரியர் கொண்ட காரணம்தான் பாயிர ஆசிரியர் கொண்ட காரணம் என்று துணியலாகுமா? இத்தகைய மரபொன்று நிலவிய தென்று நிறுவுதல் சாலுமா? குணக்கும் குடக்கும் கடலை எல்லையாகக் கூறும் இலக்கியச் சான்றுகளும் இலக்கணச் சூத்திரங்களும் காணப் பெறுகின்றன, எனவே உரையாசிரியர் தொல்காப்பியத்திற்கு வலிந்து பழமையளிக்கும் முயற்சியைத் தோற்றுவித்தனர் என ஐயுற இடமேற்படுகின்றது. ஐந்திர மரபு பாணினியத்திற்கு முற்பட்ட தாயினும், பாணினியம் வழக்கிற்கு வந்ததற்பின் செல்வாக்கினை இழந்துவிட்டது என்று கருதல் பொருத்தமின்று என்பது நன்கு நிறுவப் பெற்றதொன்ருகும்.
பாணினி, பதஞ்சலி, மனு, கெளடில்யர், பரதர், வத்சாயனர் எனும் சங்கத நூலாசிரியர் கருத்துகள் தொல்காப்பியத்தில் இடம் பெறுவதாகக் கருதித் தொல்காப்பியர் காலத்தினை வரையறை செய்யச் சிலர் முற்பட்டனர். சங்கத நூற் கருத்துகளோடு தமிழ் நூற் கருத்துகள் ஒத்திருப்பது கொண்டு காலவரையறை செய்யும் முயற்சி பயன்தருவதில்லை. கருத்துகள் பல மொழிக்கும் பொது வானவை. ஒரு நாட்டின் இரு மொழிகளில் ஒத்த கருத்து வருவது அருமையன்று. சங்கத நூல்களின் காலத்தை வரையறை செய்தாலன்றி, தொல்காப்பியத்தின் கருத்துகள் பிற்பட்டன எனல் சாலாது. தொல்காப்பியம் முற்கூறிய சங்கத நூலாசிரியருக்குப் பிற்பட்டது எனும் கருத்து நுட்பமாக மறுக்கப்பட்டுள்ளது.
S S 0SS LLLLLLTTTLS S TTTLLL LtTTTS 0000S GS00SS 00 S S S 0S S CS TLLLTTTLTLLLLS
Alth, 1974 2. W. ann av II i súdu : Sıf þšGLi Dowfasi, 1968, uä. 4ć-53 0S S LS LLLLLLLL ST STTTtTT TLLLLS TTTTTTTS LS 0000AS00

- :357 ܚ
தொல்காப்பியம் எட்டுத்தொகையிலும், பத்துப்பாட்டிலும் இடம்பெறும் மூவேந்தர் காலத்து நூல்களுக்குக் காலத்தால் முற் பட்டது எனும் கருத்து இலக்கண விதிகளின் அடிப்படையில் தோன்றியதாகும். தொல்காப்பியர் கூறியுள்ள இலக்கண விதிக ளுக்கு இலக்கியங் காட்டுதல் இயலாமை, தொல்காப்பியம் முற்பட்ட தென்பதற்கு ஆதாரமாகாது. இலக்கண ஆசிரியர் தம் காலத்திற்கு முன் வழங்கிய இலக்கணக் கருத்துகளையும் போற்றிப் பேணுவது மரபாகும். பவணந்தி முனிவர் நன்னுரலிலே தம் காலத்தில் வழங் காத இலக்கண வழக்குகள் பலவற்றைப் போற்றிக் கூறியுள்ளமை நினைவுகூரற்பாலதாகும்.
இலக்கணகாரர் தம் காலத்தில் மொழியில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவற்றிற்கும் வழிசெய்வதை எதிர்பார்த்தல் பொருந்தாது. மாற் றங்கள் பரவலாகிப் பொது வழக்காகக் காலம் செல்லவேண்டும். அத்தகைய பொது வழக்குகளையே இலக்கணகாரர் ஏற்றுக்கொள் வதை எதிர்பார்க்கலாம். ஏனெனில் மாற்றங்கள் அடைகின்ற கட்டத்திலும் அவையில்லாத மொழியின் கட்டத்தை விபரணம் செய்வதே இலகுவாகும். இதனுல் இலக்கணகாரர் பொதுவாக மாற்றத்தை விரும்பாத மனநிலை யுடையராகக் காணப்பெறுவர். எனவே, முரணுன இலக்கணச் செய்திகளின் அடிப்படையிற் செய்யும் காலவரையறை சித்தாந்தமாகக் கொள்ளத்தக்கதா என்பது சிந்தித்தற்குரியதாகும்?.
தொல்காப்பிய விதிகளுக்கும் "சங்க இலக்கிய ” வழக்குகளுக்கும் வேறுபாட்டைக் காட்டிச் "சங்க இலக்கிய'த்திலும் முற்பட்டதாகத் தொல்காப்பியத்தைக் காலவரையறை செய்பவர்கள், தொல்காப்பிய விதிகளுக்கு மாறுபாடாக உள்ள தொல்காப்பிய வழக்குகளை எவ்வாறு விளக்குவர் என்பது தெரியவில்லை?. இத்தகைய வழக்குகள் தொல் காப்பியர் காலத்து வழக்குகள் என்றும், அவற்றிற்கு முரணுன விதிகள் முன்னூல்களிலிருந்து அநுவதிக்கப்பெற்றவை என்றும் கருதலாம்.
மொழிவரலாற்றிற் பிற்காலத்தியன எனக் கூறத்தக்க நிலையிலே தொல்காப்பியத்திற் சில வழக்குகளுள என்று சிலர் கருதுவர் *. இக்
S S S CLLSLLLLLLTLTTLTLG TT TLLLLS 0000S LS S 000SSS TSTTTLLK SL TTTCT
uJari, u š. 172-173
0S S CS LLLLLLTTTTLLLLSS S TT T LCS LS 000S000S S TSLLLTTTTTLtG S STLLLLLTTTT
தொகுதி, 1964, பக். 101-120: வே. வேங்கடராஜுலு ரெட்டியர்: பரணர், கபிலர்: க. வெள்ளே
வாரணன்: தமிழ் இலக்கிய வரலாது, தொல்காப்பியம்
ப. அருணுசலம் : தொல்காப்பியர், 1975 பக். 19-23
GA. Lä. 23-25

Page 188
سس- 358 --
கருத்து மொழியியலாரும் ஏற்கத்தக்கதொன் ருகும் 1 முற்பட்ட காலநிலைகளை எவ்வளவுதான் எதிரொலித்தாலும், ஒருவர் நூலிற் பிற்பட்ட காலநிலைக்குத் தெளிவான சான்றுகள் கிடைக்குமே யானுல் அவரைப் பிற்பட்ட காலத்தவராகவே கருதமுடியும்.
தொல் காப்பியத்திற் காணப்பெறும் இலக்கிய மரபு மூவேந்தர் பாடல் சுட்டும் இலக்கிய மரபின் வளர்ச்சிக் கிரமத்தைக் காட்டுவ தாகக் கருதச் சான்றுகளுள 2.
எனவே, தொல்காப்பியத்தின் காலம் மூவேந்தர் இலக்கிய கால மான கிறிஸ்தாப்தத்தின் முதல் மூன்று நூற்ருண்டுகளை அடுத்த தாகவே அமைதல் பொருத்தமாகின்றது. ஆயினும் இக்காலம் சதாசிவம்பிள்ளை போன்றேர் கூறுமாறு மிகவும் பிற்பட்டதாதல் சாலாது. பல்லவர் காலத்துப் பத்தி இலக்கியத்தின் மொழியும் மரபும் மிக்க வேறுபாடுடையன வாயிருத்தல் மனங்கொளத்தக்கது மூவேந்தர் காலத்தையடுத்த அந்நியராட்சியில் ஏற்பட்ட பண்டைய நாகரிகத்தின் சிதைவு தோற்றுவித்த பாரம்பரிய உணர்ச்சி தொல் காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் எழுவதற்குக் காலாக அமைந்திருக்கலாம்.
தொல்காப்பியரின் இயற்பெயர் திரணதுரமாக்கினி என்றும் அவர் சமதக்கினி முனிவரின் புதல்வர் என்றும் தரப்பட்டுள்ள செய்திகளுக்கு நச்சினுர்க்கினியரன்றி ஆதாரம் வேறில்லை. காப்பியக் குடியிலே தோன்றியமையாலே தொல்காப்பியர் அப்பெயர் பெற்ருர் என்று நச்சினர்க்கினியர் கருதுவர். சங்கதத்தில் காப்யகுலம் எனப்படுவதே காப்பியக்குடி என்பர் 8; வேறு சிலர் காப்பியக்குடி எனும் ஊராற் பெற்ற பெயர் என்பர். அகத்தியருக்கும் தொல் காப்பியருக்கும் இடையிலேற்பட்ட கோபத்திற்கும் நச்சினர்க்கினிய ரன்றி வேரு தாரமில்லை. அகத்தியர் மாணுக்கர் பற்றிய விளக்கம் அகஸ்தியர், அதங்கோட்டாசிரியர் குறிப்புக்களிலே இடம்பெற்றது: தொல்காப்பியர் வேதவழக்கொடு பட்ட நெறியினராதல் ஒருதலை என்பர் ரா. ராகவையங்கார் 4; சித்தாந்தசைவர் என்ருர் சிதம்பர ராமலிங்கபிள்ளை 5 சைனர் என்ருர் வையாபுரிப்பிள்ளை 8.
1. T. P. Meenadchisundaram Pillai: A History of Tamil Language, 1965, p. 52 2. V Chclvanayagam : Some Problems in the Study of Tolkappiyam in relation to Sangam Poetry. Proceedings of the First International Conference Senminar of Tamil Studies, Kula Lumpur. Vol. II. 1969, pp. 38-44
I, Praapati si : suf ay gaog, 1941, ui. 255 al al a. 1941, ui. 274-280 QA A M I di i II i NA QI rrje tijë, 1914 Ali A I Lund, 1968, ui. 2341
:

حے 359 سس۔
சதாசிவம் பிள்ளை காசிச்செட்டியவர்களைப் பின்பற்றிக் கூறும் சூத்திரத்தொகை பொருந்தாது. 1858இல் எஸ். சாமுவேல்பிள்ளை வெளியிட்ட தொல்காப்பிய நன்னூல் " மூலப்பதிப்பிலே தொல் காப்பியத்திற்குரியனவாக 1583 சூத்திரங்களுள. இளம்பூரணத்தில் மூவதிகாரத்திற்கும் 1595 சூத்திரங்களுள. நச்சினர்க்கினியத்தைப் பேராசிரியரின் பொருளதிகாரம் பின்னுன் கியலுடன் சேர்த்து நோக்கின் 1611 சூத்திரங்களுள. சிற்சில சூத்திரங்களை ஒன்ரு கவும் இரண்டாகவும் உரையாசிரியர்கள் கொண்டமையால் எண்தொகை வேறுபடுகின்றது. பொருளதிகாரத்திற் குத்திரப் பிறழ்ச்சியும் இ.ை யீடும் காணப்பெறுவதால் மொத்தச் சூத்திரத் தொகையினை அறுதியிட்டுக் கூறல் சாலாது.
தொல்காப்பியத்தின் பழைய உரையாசிரியர்களான G3urr63faurř, தெய்வச்சிலையார், கல்லாடர் என்போரைச் சதாசிவம்பிள்ளை அறியாமைக்குரிய காரணங்கள் இளம்பூரணர் குறிப்பிலே எடுத்துக் கூறப்பெற்றன. பேராசிரியர் உரை பொருளதிகாரத்தின் கடை நான்கு இயல்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதேனும், அவர் பொரு ளதிகாரம் முழுவதற்கும் உரை கண்டவர் என்று அவர் கூற்றுகள் மூலம் கூறலாம் 2. இவர் எழுத்திற்கும் சொல்லிற்கும் உரை செய்தார் எனும் கருத்திற்குப் போதிய ஆதார&ல்லை. திருக்கோவையாரின் உரைகாரர் பேராசிரியரும் தொல்காப்பிய உரைகாரர் பேராசிரியரும் ஒருவரல்லர் என்று கருத இடமுண்டு3. குறுந்தொகையில் 380 பாடல்களுக்கு உரை கண்டவராக நச்சினர்க்கினியர் உரைப்பாயிரம் கூறும். "பேராசான் " தொல்காப்பிய உரைகாரர் பேராசிரியர் என்று கருத நச்சினுர்க்கினியர் கூற்று இடமளிக்கின்றது * ஆத்திரை பன் பேராசிரியன், பேராசிரியர் நேமிநாதர், பேராசிரியர் மயேச் சுவரர் என்பவர்கள் தொல்காப்பிய உரையாசிரியரிலும் வேருவார்?. தொல்காப்பிய உரைகாரர் பேராசிரியர் காலம் இளம்பூரணருக்குப் பிற்பட்டது என்றும் நச்சினர்க்கினியருக்கு முற்பட்டது என்றும் துணியலாம், பேராசிரியர் இன்னர் கூற்று என்று உரையாமலே தரும் செய்திகளிற் சில இளம்பூரணத்திற் காணப்பெறுவன
1. தொல், பொருள், இளம்பூரணம், சூத். 45 உரை; பப்பருங்கலவிருத்தீயுரை, சென்னே அரசாங்கப்
uă. 1960, uă. 105
2. தொல். பொருள். பேராசிரியம், மெய்ப். 18, 19; செப்பு. 1,80, 188, 190
3. சோம. இளவரசு: இலக்கண வரலாறு, 1963, பக்.56-57
4. தொல். பொருள். நச்சிர்ைக்கினியம், அகத். 46
5. தொல், பொருள். பேராசிரியம், மாபியல் 98; தமிழ் நாவலர் சரிதை, 129; மயில் சீனி, வேங்கடசாமி
மறைந்துபோன தமிழ் நூல்கள், 1967, பக். 349-326
6. பாவலர் சரித்திர தீபகம் பகுதி 1, 1975, பக். 185

Page 189
- 360 -
நச்சினர்க்கினியர் பேராசிரியரைப் பெயர் சுட்டிக் கூறுவர். பேராசிரியர் பவணந்தி முனிவருக்குப் பிற்பட்டவர் என்றும் அடியார்க்கு நல்லாருக்கு முற்பட்டவர் என்றும் கூறல்2 பொருத்த மாகத் தெரியவில்லை. ஏனெனில் அடியார்க்கு நல்லார் காலம் பவணந்தி முனிவருக்கு முற்பட்டதாகும்
பேராசிரியருரையைச் சி. வை. தாமோதரம்பிள்ளை பார்த்திபடு ஆவணிமீ (1885) முதன்முதலாக நச்சிஞர்க்கினியர் உரையென, நச்சினர்க்கினியரின் முன்னைந்தியல் பொருளதிகார உரையுடன் சேர்த்துப் பதிப்பித்தார். ச. பவானந்தம்பிள்ளை (1917), திரிசிரபுரம் எஸ். கனகசபாபதிப்பிள்ளை (1935), ஈழகேசரி நா. பொன்னேயா (1943), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் (1951) ஆகியோரும் இவ்வுரையைப் பதிப்பித்துள்ளனர்.
சொல்லதிகாரத்திற்கு உரைகண்ட தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோர் வரலாருே காலமோ புலப்படவில்லை. இவர்களுடைய உரையின் முதற் பதிப்பு விபரம் இளம் பூரணர் குறிப்பிலே தரப் பட்டது. தெய்வச் சிலையார் உரை 1953இலும் கல்லாடர் உரை 1964 இலும் கு. சுந்தரமூர்த்தியின் விளக்கவுரையுடன் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் வெளியிடப்பெற்றன.
சிவஞானமுனிவர் (-1785) தொல்காப்பியம் பாயிரத்திற்கும் முதற்குத்திரத்திற்கும் கண்ட விருத்தியுரை ஆறுமுகநாவலரால் அக்ஷயஞல கார்த்திகைமீ (1866) பதிப்பிக்கப்பெற்றது. சோழ வந்தான் அரசஞ்சண்முகனர் (1868-1915) எழுதிய தொல்காப்பியப் பாயிரவிருத்தி 1905இலே வெளிவந்தது. எழுத்திலக்கண ஒப்பியல் உரையாகக் க. வெள்ளைவாரணன் வழங்கிய தொல்காப்பியம் நன்னூல் எழுத்ததிகாரத்தை 1962இலே அண்ணுமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டது. பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாஸ்திரி தொல்காப்பியம் எழுத்ததிகாரம் குறிப்புரை (1937), தொல்காப்பியம் சொல்லதிகாரக் குறிப்பு (1930) எனும் உரைநூல்களை அளித் துள்ளார். இவ்விரு அதிகாரங்களுக்கு இவர் ஆங்கிலத்திலும் உரை எழுதியுள்ளார். ச. சோமசுந்தரபாரதியார் (1879-1959) அகத்திணை. புறத்திணை, மெய்ப்பாடு எனும் இயல்களுக்குக் கண்ட புத்துரை தனித்தனி நூல்களாக 1942இலே வெளிவந்தன. புலவர் குழந்தை பொருளதிகாரம் முழுவதற்கும் புத்துரை எழுதியுள்ளார். இ. எஸ் வரதராஜ ஐயர் பொருளுக்கு ஆங்கிலவுரை தந்துள்ளார். "புலியூர்க்
1. நெல், பொருள், அகத். 46, களவியல் $, பொருளியல் 44 2, A, V, i ij in Gulu Jiuji; if p gri if aidi, Qi aii, 1959, ui. 299-300

- 361 -
கேசிகன்" தொல்காப்பியம் முழுவதற்கும் 1961இலே தெளிவுரை வெளியிட்டனர்.
தொல்காப்பியத்தின் பழைய உரைகளைத் தெளிவுபடுத்தப் பலர் குறிப்புகளும் விளக்கங்களும் தந்துள்ளனர் 1 . இளம்பூரணரின் எழுத்ததிகாரவுரைக்கு ஞா. தேவநேயப்பாவாணர் வழங்கிய குறிப்பு களுடன் கூடிய பதிப்பினை 1955இலும், கு. சுந்தரமூர்த்தியின் விளக்கங்களுடன் கூடிய பதிப்பினை 1969இலும், சொல்லதிகார வுரைக்குச் சுந்தரமூர்த்தி எழுதிய விளக்கங்களுடன் கூடிய பதிப்பினை 1963இலும் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டனர். புன்னலைக்கட்டுவன் வித்துவான் சி. கணேசையர் பேராசிரியருரைக்கு எழுதிய விளக்கக் குறிப்புகள் 1943இல் வெளிவந்த ஈழகேசரி பொன்னையா பதிப்பில் இடம் பெறுவன.
தாண்டவராய முதலியார் 1835இலே தொல்காப்பியத்தின் அகத்திணை, புறத்திணை இயல்களை வெளியிட்டதாகச் சாமுவேல் பிள்ளை தம் பதிப்பிற் கூறுவர் 2. தொல்காப்பியத்தின் பழைய உரைப் பதிப்பு விபரங்கள் ஈண்டும், இளம்பூரணர், சேனவரையர், கல்லாடர், நச்சிஞர்க்கினியர் குறிப்புகளிலும் இடம் பெறுவன. எஸ். சாமுவேல் பிள்ளைக்குப் பின்னர் பு. சி. புன்னைவனநாத முதலியார், கா. நமசிவாய முதலியார், எஸ். ராஜம் முதலியோர் இருபதாம் நூற்றண்டிலே தொல்காப்பிய மூலத்தினை வெளியிட்டுள்ளனர்.
தொல்காப்பியரிலும் வேருனவர் தொல்காப்பியதேவர் என்பவர். அவர் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் பாடியுள்ளார். அவர் காலம் இரட்டையருக்கு முற்பட்டது,
1. சேகுவரையர், நச்சினுக்கினியர் குறிப்புகள் காண்க. தெப்வச்சிலேயார், கல்லாட உரை விளக்கம்
முன்னர் கூறப்பெற்றன, 2. க. ப அறவாணன், தாயம் யாள் அறவாணன்! நொல்காப்பியக் களஞ்சியம் 1975, பக். 119,

Page 190

பக்கம்
10
13
34
34
36
49
77
89
9.
97
10.
05
112
15
125
49
153
157
186
200
206
236
240
256
263
287
320
8 2 1
333
934
வரி
30
39
39
28
32
38
33
17
32
33
23
l
10
33
21
20
8 ፲ 29
33
30
24
36
32
24
36
24
30
l4
பிழை திருத்தம்
பிழை
முந்நூறு கந்தையாபின்னை
அகரசதி மியத்தமிழில் சுருக்கங்களும் கானப்போர் 338
109 விடாதி தண்டா பாணி 1964
வழிமொழித்துள்ளார்
சகாப்தம்
உட்கார
மண்னை கட்டப்பெற்றுள்ளார் சோணுட்டு
மிகுந்ந
உரையின்றி
குழப்
தூவீத்துப்
1975
விளக்கப்
அம்பர் மாகாவும் பிள்ளையுடன் வேதாத்தியாபனஞ் வேண்டுகேட்படி சருoo ' பெளஷ் காரம் திருவாடுதுறை கீடர்
28
eggst
திருத்தம்
(LPg560IT01 கந்தையாபிள்ளை அகராதி மியந்தமிழில் சருக்கங்களும் கானப்பேர் 388
169 விடாதே
தண்டபாணி 1966 வழிமொழிந்துள்ளார் சதாப்தம் உளுக்கார மண்ணை சுட்டப்பெற்றுள்ளார் சோணுட்டு மிகுந்த உரையன்றி குழப் தூஷித்துப் 1965
* விளக்கம்
அம்பர் மாகாளம் பிள்ள்ையுரையுடன் வேதாத்தியாயனஞ் வேண்டுகோட்படி கருoo
பெளஷ்காம் திருவாவடுதுறை சீடர்
2&4
s3.gif