கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கங்காகீதம்

Page 1
| galės
 
 


Page 2

கங்கா கீதம் (சிறுகதைத் தொகுப்பு)
ஈழத்து எழுத்தாளர் சி. வைத்தியலிங்கம்
锣
அன்னம் 2, சிவன் கோயில் தெற்குத் தெரு சிவகங்கை, 623 560

Page 3
அன்னம் -129
மதுரைக் கிளை முகவரி:
அன்னம் புத்தக மையம் 9, செளராஷ்டிரா சந்து (நியூ ஆரிய பவன் பைநைட் எதிர்ச் சந்து) மேலமாசி வீதி மதுரை-1
C சி. வைத்தியலிங்கம் கங்கா கீதம் / முதற்பதிப்பு- நவம்பர் 1990 அச்சாக்கம் அகரம் பிரிண்டர்ஸ் சிவகங்கை / வெளியீடு அன்னம் (பி) லிட். சிவகங்கை / அட்டை எம்.ஜி. ரபீக் / விலை e5ij stuif-20-00

முன்னுரை
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மணிக்கொடிக் குழுவைச் சேர்ந்த படைப்பாளிகளோடு ஈழத்துப் படைப்பாளி களும், யாழ்ப்பாணத்து ஈழகேசரிஇதழ் மூலம் சிறப்பான கதைகளை எழுதி வெளியிட்டது இலக்கிய வரலாற்றில் கவனிக்கப்பட வேண்டியதொன்று. ஏற்கெனவே ஆனந்த விகடன் மூலம் புதிய தமிழ் முழக்கத்தில் ஆசைகொண் டிருந்த ஈழத்தவர்களில், உயர்தர தமிழ்க் கல்வி கற்ற தமிழாசிரியர்களும் மற்றவர்களும், மணிக் கொடியின் தோற்றத்தைத் தொடர்ந்து. அந்த வழியில் புதிய வடிவம் பெற்ற ஈழகேசரியில், புதிய வகைச் சிறுகதை களை எழுதினார்கள். இவர்களில் இலங்கையர்கோன் என்ற சிவஞானசுந்தரம், சி. வைத்தியலிங்கம் , க. தி. சம்பந்தன் என்ற மூவரும் 'ஈழத்துச் சிறுகதை மூலவர்கள்’’ என்று மதிக்கப்பெற்றவர்கள் . ஈழகேசரி மூலம் பிறந்தஇவர்கள் தமதுகீர்த்தியை நிலைநாட்டியது தமிழ்நாட்டு சஞ்சிகைகள் மூலம்; முக்கியமாக கலை மகள் மூலந்தான்.
மணிக்கொடியின் கடைசிக்கால இதழ்களில் (1938-39) இலங்கையர்கோனின் சில கதைகள் வெளியிடப்பட்டன. பின்னர் கலைமகளில் பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப் பித்தன் முதலியோர் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த நாட்களில் மேற்சொன்ன ஈழத்துப் படைப்பாளர் மூவரது கதைகளும் அதே கலைமகளில் வெளிவந்தன என்பதைப் பார்க்கிறோம். பொதுவாக, ஈழத்து எழுத் தாளர் கையில் அந்த நாட்களில் பேச்சுத் தமிழ் அதிக மாக நடமாட்டத்தில் வரவில்லை. அந்த வகையில் கி.வா. ஜகந்நாதன் ஆசிரியராயிருந்து நடத்திய கலை மகளில் வைத்தியலிங்கத்தின் இனிய எளிய நடையில மைத்த கதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

Page 4
வைத்தியலிங்கம் தமது ஆதர்ச எழுத்தாளர் கு.ப.ரா. என்று சொல்லிக்கொள்வார். அந்தக் கூற்றின் உண்மையை அவரது கதைகளில் காணப்படும் பாத்திர வார்ப்புக்களில் காணலாம். வடமொழியில் காளிதாஸ் னை ஓரளவு அனுபவித்த வைத்தியலிங்கத்தின் சொல்லோவியங்களை அவர் கதைகள் எல்லா வற்றிலுமே காணலாம்.
1956க்குப் பிறகு ஈழத்தில் சிறுகதை படைத்தவர்கள் சிலரது கதைகள் தொகுப்பு நூல்களாக வெளிவந்திருக் கின்றன, ஆனால் மணிக்கொடி பரம்பரையைச் சேர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளின் சிறுகதைகள் தொகுத்து வெளியிடப்படாமல் பழைய சஞ்சிகைகளிலேயே பலருக் குப் பயன்படாது மறைந்துறைவது வருத்தத்துக்குரியது. இலங்கையர்கோனின் ஒரு தொகுப்பு அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்தது. சம்பந்தன் கதைகளும் வைத்தியலிங்கத்தின் கதைகளும் நூல் வடிவில் வரவில்லை. இலக்கிய வரலாற்றுக்கு இவர் களின் தொகுப்புக்கள் இல்லாதது பெருங்குறையென்ப தைக் கண்டு, ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டாலும், வரலாற்று முக்கியத்தை முன்னிட்டு, என்னுடைய பழைய சக எழுத்தாளரும் நண்பருமாகிய வைத்தியலிங் கத்தை ஊக்குவித்து, கிடைக்கக்கூடிய சில கதைகளைத் தேடியெடுத்து வெளியிட ஒப்புதல் பெற்று இந்தத் தொகுப்பை இலக்கிய வாசகர்கள் முன் வைக்கிறேன் தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஈழத்தின் பங்குக்கு முன் னோடிகளில் ஒருவரான வைத்தியலிங்கத்தின் படைப் புக்கள் முக்கியமானவை என்பதால் இலக்கிய அன்பர் கள் இதனை வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.
சோ. சிவபாதசுந்தரம்.

பொருளடக்கம்
ஏன் சிரித்தார்? மின்னல்
கழனிகங்கைக்கரையில்
பார்வதி தியாகம் நந்தகுமாரன் ஏமாளிகள்
பூதத்தம்பிக் கோட்டை விதவையின் இதயம்
மரணத்தின் நிழல் அழியாப் பொருள். மூன்றாம் பிறை நெடுவழி பைத்தியக்காரி கங்கா கீதம் சிருஷ்டி ரகசியம்
உள்ளப் பெருக்கு யூ
(கலைமகள் 1939)
(ஈழகேசரி 1939) (கலைமகள் 1939) (கலைமகள் 1989) (கலைமகள் 1940) (கலைமகள் 1940) (கலைமகள் 1941) (கலைமகள் 1941)
(ஈழகேசரி 1941)
(ஈழகேசரி 1941) (கலைமகள் 1941)
(கதைக்கோவை 1942)
(ஈழகேசரி 1942) (கலைமகள் 1942)
(கிராம ஊழியன் 1944)
(ஈழகேசரி 1948) (ஈழகேசரி 1956)
5 22 29 38 49 61 67 77 86 92 101. 113 126 134 145 54

Page 5
பதிப்புரை
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தணியாத ஆர்வம் கொண்ட ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் தரமான படைப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியத் துவம் பெறுவன . எனினும், தமிழக எழுத்தாளர் களின் படைப்புகள் ஈழத்தில் பிரபல்யமான அளவுக்கு ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகள் கூட தமிழக வாசகர் மத்தியில் அறிமுகமாகாதிருப்பது ஒரு பெருங்குறையே.
ஈழத்தமிழ் எழுத்தாளர்களை இனங்கண்டு தமிழ் கூறு நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தும் அரும் பணியில் அன்னம் அவ்வப்போது தன் பங்களிப்பைச் செய்து வருகிறது.
ஈழத்தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் முன்னோடியும், "ஈழத்துக் கு.ப. ரா. ' என்று பாராட்டப் பெறுபவரு மான சி. வைத்தியலிங்கத்தின் முதல் கதை வெளி யாகி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் இப்போது தான் அவரது கதைகள் முதல் முறை யாக நூல் வடிவம் பெறுகிறது.
இந்த நல்ல முயற்சிக்கு உறுதுணையாக இருந்து உதவிய சோ. சிவபாத சுந்தரம் அவர்களுக்கு அன்னம் நன்றி தெரிவிக்கிறது.

ஏன் சிரித்தார்?
அவர் ஏன் சிரித்தார்? அந்த நகை அறிமுகத்தினால் சாதாரணமாய் முகத்தில் பூக்கும் புன்னகை அல்ல அப்படி இருந்தால் அதைப்பற்றி யார்தாம் கவனிக்கப் போகிறார்கள். ஒருவேளை..? மனத்தில் ஏதேனும் வைத்துக் கொண்டு.? சிச்சீ அப்படியிருக்காது. அப்படி நினைத்தாலே பாவம். என் நெஞ்சுதான் பாழாய்ப் போன நெஞ்சு, ஆனால், அந்தக்கண்கள். அவைகளுமா பொய் சொல்லும்? கண்களின் கடையிலே ஒளிந்து நின்று குறும்பு செய்த பார்வை?
சின்னம்மா தோட்டத்திலே கீரைகொய்து தன் முன்றா னையில் போட்டுக் கொண்டிருந்தாள். கோபாலபிள்ளை வரப்பு வழியே தன் பயிர்களைப் பார்த்த வண்ணம் வந்தார். அப்பொழுது தான் சின்னம்மா தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அவர் சிரித்தார்.
சிரித்தது இதுதான் முதல் தடவை. இன்னும் வெவ்வேறு தருணங்களில் கோபாலபிள்ளை அவளை மேலும் பார்த்துச் சிரித்தார்,
சின்னம்மாவுக்கு இதுஒரு புரியாதபுதிர் போல்இருந்தது.

Page 6
தோட்டக் கிணற்று நீர் போல் தெளிவாக இருந்த அவள் உள்ளத்திலே சிற்றலைகள் தோன்றத் தொடங் கின அவர் ஏன் சிரித்தார்?
தோட்டத்திலிருந்து சின்னம்மாவின் குடிசையைப் பார்க்கலாம். கூப்பிடு தூரத்திலிருந்த பனந்தோப்பை வாரி அனைத்துக் கொண்டு செல்கிறது ஒரு வெள்ள வாய்க்கால். அதைக் கடக்க வேண்டியதுதான். அந்தப் பனந்தோப்பில் கீழே வீழ்ந்து கிடக்கும் காவோலை களுடன் ஒரு காவோலை போல் கீழே வீழ்ந்து கிடக் கிறது அவள் குடிசை. அவ்வளவு சிறிய எளிய குடிசை அது அதில் தான் சின்னம்மா தன் புருஷன் சின்னப்ப னுடன் குடித்தனம் செய்து வருகிறாள்.
கோபாலபிள்ளைக்கு நல்ல நிலபுலங்கள் இருந்தன. அவருடைய நிலங்களில் ஒன்றைக் குத்தகை எடுத்துச் சின்னப்பன் பயிர் செய்து வந்தான். சின்னம்மா கீரை, காய்கறி வகைகளை வீட்டுக்கு வீடு கொண்டுபோய் விற்று வருவாள். வரும்படியை பற்றிக் கேட்க வேண் டாம்- சின்னம்மாவின் கந்தல் புடவையும், சின்னப்ப னின் உருக்குலைந்த தேகமுமே பதில் சொல்லும்,
ஏழைமையில் கிடந்து உழல்பவர்கள் செய்யும் ஒருதொழி லும் உருப்படாது சீரழிந்து போய் விடுகிறது. இயற்கை யின் சக்திகளும் அவர்களுக்கு எதிராக செயல்பட்டு, இருப்பதையும் சூறையாடிக்கொண்டுபோய்விடுகின்றன. அவர்களின் மனக்குடம் நிறையாமல் வாழ்க்கை விரச மாகி வறண்டுபோய் விடுகிறது. இது உலக விசித்திரங் களுள் ஒன்று.
இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையிலே மலர்ச்சியும், பூரிப்பும் நிறைந்திருந்தன. சின்னம்மாவுக்கு அவள் ஏழைக் கணவனும், சிறிய குடிசையும் பனந்தோப்புமே அரும்பெருநிதியம். சின்னப்பனுக்குச் சின்னம்மாவே எல்லாம். அவர்களிடம் ஒன்றுமே இல்லாவிட்டாலும் எல்லாம் இருந்தது. இங்ங்ணம் நீர் ஊற்றுப்போல் தெளிவாய் ஓடிய அருவி யிலே யாரோஒருவன் ஒருகல்லை வீசி எறிந்துவிட்டான். குமுழிகளும், சிற்றலைகளும் எழுந்து கொண்டிருந்தன.
8 O கங்கா கீதம் O

கோபாலபிள்ளைக்கு நாற்பது வயசாகியும் இன்னும் கல்யாணமாகவில்லை. வாழ்க்கைப் புயலுக்கும், சுழலுக் கும் அஞ்சிவிவாகம் செய்யவில்லை என்று அவர் சினேகிதர்கள் கேலிபண்ணுவார்கள். அவர் அவைகளைப் பற்றிக் கவலைப்படமாட்டார், உண்மையில் அவர் வாழ்க்கையை மிகவும் நேசித்தார். திரைக்குப் பின்னால் இருந்து மதுவுண்ணும் அனுபவம் அவருக்கு நிறைய இருந்தது. சின்னம்மா அவர் வீட்டுக்கு அடிக்கடி காய் கறிச் சுமையோடு போவாள். அவருக்கு அவளைக் காணும்போது விவித உணர்ச்சிகள் வேகமாய் சிறகடித்து வெளியில் வரத் துடித்துக்கொண்டிருக்கும்.
கோபால் தம்பலகாமத்தில் உள்ள தம்வயல்களை மேற் பார்வை பார்த்து வர ஒர் ஆளைத் தேடிக்கொண்டிருந் தார். சின்னப்பன் தான் அதற்குத் தகுந்தவன் என்று அவர் ஏன் நினைத்தார்?
சின்னப்பன் பயந்து போனான். சின்னம்மாவின் வாய் ஒரு கேள்விக்குறிபோல் திறந்து நின்றது. ஒரு நாளும் வாராத கோபாலபிள்ளை, அவர்கள் குடிசையின் முன் வந்து நின்றார்.
**சின்னப்பா,நீயும் இரவும் பகலும் மண்ணைக் கிண்டிக் கொண்டிருக்கிறாய். ஒன்றையும் காணவில்லை. தம்பல காமத்திலே என் வயல்களைப் பார்க்க ஒருவருமில்லை. வருகிறவர்களும் பொய் புரட்டுக்காரராய் இருக்கிறார் கள். நீ போய் சில மாசங்களுக்கு அங்கே நின்றால் நல்லது. என்ன சொல்லுகிறாய்?
சின்னப்பனுக்கு "திக்’ என்றது. சின்னமாவைப் பார்த் தான். அவள் முகத்தைக் கவிழ்ந்து கொண்டு ஒரு சிதைந்த சித்திரம்போல் நின்றாள். கோபாலபிள்ளைக்கு விளங்கி விட்டது.
* அவளைப்பற்றி யோசிக்க வேண்டாம் சின்னப்பா. நான் இருக்கிறேன். ஏதேனும் மாசாமாசம் கொடுத்து விடுகிறேன். அவளும் கெட்டிக்காரி. சமர்த்தாய் எல்லாம் பார்த்துக் கொள்வாள்'
கோபால பிள்ளை போய்விட்டார். இது அவரது
O சி. வைத்தியலிங்கம் O 9

Page 7
கட்டளையா? இல்லை, சின்னப்பன் அப்படி நினைத் தான்.
ஊரிலே பெரிய பணக்காரர். அவர் வாக்கு எவ்விடத் திலும் செல்லும், குடியிருப்பது அவர் பனந்தோப்பில், தோட்டக் குத்தகைப் பணம் இரண்டு வருஷமாய் பாக்கி நிற்கிறது. அவரை எப்படிப் பகைப்பது?
சின்னப்பன தம்பலகாமத்துக்கு புறப்படும் போது * "சின்னம்மா’’ நீதானடி எனக்கு சகலமும். உன் நினைவே எளக்கு ஒல்வொரு நிமிஷமும் தாங்கமுடியாத வேதனை தரும். நீ என்னை மறந்திடுவாயா?" என்று கேட்டான்.
இந்தக் கேள்வி அவன் வாயிலிருந்து தவறி வந்து விட்டது. அதற்கு மறுமொழியை அவன் எதிர்பார்க்க வில்லை. போய்விட்டான். அத்தருணம் சின்னம்மா வினால் ஒன்றும் பேச முடியவில்லை. அவள் எலும்பும் தசையும் உருகித்தவித்தாள்.
பின்புதான் 'பாவி, கேட்ட கேள்விக்கு அவர் மனம் குளிர பேசாமல் இருந்து விட்டேனே' என்று நினைத்து நினைத்து மனம் கரைந்து போனாள்.
கோபால பிள்ளையின் விருப்பப்படி சின்னம்மா தினமும் அவர் வீட்டுக்கு காய்கறி வகைகள், மற்றும் சாமான்கள் யாவும் வாங்கிக் கொண்டுபோய் கொடுத்துவந்தாள். சின்னம்மாவை ஒரு நாளேனும் காணாமல் இருக்க அவரால் முடியவில்லை. அதற்கு இது தான் அவர் செய்த வழி.
அவர் அவளிடம் பணம் கொடுக்கும் போது சில வேளை களில் அவர் கை, அவள் கைகளின் மீது பட்டுவிடும். கோபாலபிள்ளை சிலிர்த்துப் போவார். அவளுடன் ஒரு பரிகாசப் பேச்சு, ஒரு புன்னகை, ஒரு கண் சிமிட்டு, பிள்ளையின் மனம் பூரித்துப் புளகாங்கிதமடையும்.
சின்னம்மாவுக்கு எரிச்சலாயிருக்கும், அவர் மேலும் பேச வேண்டும் போலவும் தோன்றும்.
10 O கங்கா கீதம் o

‘‘மூன்று மாதமாய்ப் போச்சு, போனவர் ஒரு கடித மாவது போட்டிருக்கலாம். காட்டூரிலே காய்ச்சலோ, என்ன கஷ்டமோ-பெருமூச்செறிவாள்.
சின்னப்பன் எழுதிய கடிதமெல்லாம், சாம்பலாகியதை, பாவம் சின்னம்மா எப்படி அறிவாள்?
தன் கணவன் கடிதம் போடவில்லையென்று சின்னம்மா பேசாமல் இருந்து விடவில்லை. யாரோ ஒருவரைக் கொண்டு இரண்டு மூன்று கடிதங்கள் எழுதி கோபாலபிள்ளையிடம் அவருடைய கடிதத்துடன் வைத்து அனுப்பும்படி கொடுத்திருந்தாள். ஆனால் அவர் அனுப்புவாரா?
‘போனாரே, அவளும் தனிச்சிருக்கிறாள். பெண் பிள்ளை, உற்றாரோ உறவினரோ, ஏதோ அள்ளிக் கொடுக்க வேண்டாம். எப்படி இருக்கிறாள் என்றொரு கடுதாசி போடலாமல்லவா? பிள்ளையவர்கள் இருக்கி றாரே,யாரோ பிறத்தியான். அவருக்கு என்ன கரிசனம், எவ்வளவு அன்பு? அதில் ஒரு பாதி இவருக்கு. இப்படிச் சின்னம்மாவின் மனம் அங்கும் இங்குமாய் ஊசலாடிக் கொண்டிருந்தது."
சின்னப்பன் போய் ஒரு வருஷமாகப் போகிறது. அவனைப் பற்றிய தகவல் இவளுக்கு ஒன்றும் தெரி யாது. தனிமையின் வெம்மை அவளைத் தாக்கியது. அவளால் எத்தனை நாட்களுக்கு இந்த ஏகாந்த வாழ் வின் கொடுமையைத் தாங்க முடியும்?
ஒரு நாள் கோபாலபிள்ளை அவளை அணுகி, சின்னம்மா நானும் இங்கே தனிமையில் கஷ்டப்படுகிறேன். நீயும் அங்கே உன்குடிசையில் தனிய எத்தனை நாட் களுக்கு இருக்கப்போகிறாய். என் வீட்டுக்காரியங்களுக் கும் துணையாய் இருக்கும். இங்கே வந்து விடேன்' என்று சாடையாய்க் கேட்டார். சின்னம்மா திடுக்கிடவில்லை. அவள் இதை எதிர்பார்த் திருந்தாள். ஒன்றும் பேசாமல் த்ன் குடிசைக்குப் போய் விட்டாள்.
o சி. வைத்தியலிங்கம் O 11

Page 8
தம்பலகாமத்துக்குப் போன சின்னப்பனுக்கு பெருந் திகிலைக் கொடுத்தது, சின்னம்மாவின் மெளனம். கோபாலபிள்ளை அவனுக்கு எழுதிய கடிதங்களும் அவ னுக்கு சமாதானம் கொடுக்கவில்லை.
"'நான் எழுதிய கடிதங்களுக்கு அவள் ஏன் மறுமொழி தரவில்லை. அவளைப் போய்க் காணலாமென்றால் கோபாலபிள்ளை இன்னும் சிலமாதங்கழித்து வரலாம். அவள் நல்ல சுகமாய் இருக்கிறாள் என்று ஏன் தடுக் கிறார். அவர் கட்டளையை எப்படி மீறுவது?அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இன்னும் ஒருவாரம் பொறுத்துப் பார்ப்பம் என்று மனசைத் தேற்றிச் சமாதானப் படுத்தி கொண்டான்.
"ஒரு நாளைக்கா,இரண்டு நாளைக்கா? எத்தனை நாட் களுக்கு நான் தனிமையில் திண்ட்ாடுகிறது. வருஷமும் ஒன்றாய்விட்டது. அவரைப்பற்றிய தகவல் ஒன்றுமே இல்லை. ஐயோ, அவர் எங்கே? கோபாலபிள்ளை தன் வீட்டில் வந்து இருக்கும்படி கேட்கிறார். அவருடன் நான் போய் இருந்தால் செல்வாக்கும், பவுசும்.ஆனால் ஊர் சிரிக்குமே? ஓ, என் வறுமைப்பிணி?
அந்த நள்ளிரவிலே சின்னம்மா தோட்ட வெளி ஊடாகப் போகும் பொழுது இந்த எண்ணங்களே அவள் மனத் தைக் கலைத்துக் கொண்டிருந்தன. அவள் கோபால பிள்ளையின் வீட்டை நோக்கிப் போகிறாள். அவருடன் இருக்க எண்ணித்தான் வெளிக்கிளம்பினாள்.
அவள் போகும் வழியிலே தங்கள் தோட்டத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும். தோட்டத்திலே முன்னர் சின்னப்பன் வழக்கமாய்க் கஞ்சி குடிக்கும் இடத்தைத்
தாண்டிக் கொண்டிருந்தாள். அத்தருணம் மெல்லிய தென்றல் வீசிக் கொண்டிருந்தது. சின்னம்மாவுக்கு அவள் கணவன் அங்கே நிற்பது போல் தோன்றியது. அவள் உடல் நடுக்க மெடுத்தது. தான் ஏதோ மகா பாவத்தைச் செய்வதாயும், உலகம் முழுவதுமே தன்னைத் தூற்றிக் கேலி செய்வதாயும் உணரலானாள். இந்த உணர்ச்சி கனவு போல் மறையவே, திரும்ப வும் கோபாலபிள்ளையின் தோற்றப் பொலிவு, பணம்
12 O கங்கா கீதம் O

சீர் சிறப்பு, புது வாழ்க்கை எல்லாம் கண் முன் வந்தன. தைரியங் கொண்டு மேலும் நடந்தாள்.
ஒரு கூடிணம் அவள் மனச்சாட்சி அவளைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கும். "துரோகமா, என்புருஷருக்கா, அவர் திரும்பி வருவாரா? சீ! மானங்கெட்டவளே, அவர் முகத்தில் முழிக்கமுடியுமா? பிறகு உயிர் வாழ்ந்து தான் என்ன?’ மறுகூடிணம், உலகம் என்ன சொன்னால் நமக்கென்ன. பயப்படவேண்டுமா, ஏன்? சில நாட்கள் வாயில் வந்தபடி பேசுவார்கள். நாளைக்கு எல்லாம் சரியாய்ப் போய்விடும். இதுதான் உலகம்., இங்ங்ணம் ஓர் அலைவர, எதிரே வேறோர் அலை வந்து அதையும் அடித்துக் கொண்டு போய்விடும்.
சின்னம்மா கோபாலபிள்ளையின் வீட்டை அடைந்த போது, தூரத்திலே ஒரு நாய் குரைப்பது கேட்டது. மெல்ல ஒசைப்படாமல் படலையைத் திறந்ததும்,படலை "கிரீச்” என்றது. சின்னம்மாவின் உடல் நடுக்க மெடுத் தது. யாரேனும் கண்டு விட்டால்..?இல்லை,யாரோ கூவி அழைப்பது போல் இருந்தது. ‘என்னை மறந்திடு வாயா?" என்று அவள் புருஷன் கேட்பது போல் உணர்ந் தாள.
சின்னம்மா அந்தக் கேள்விக்கு மறுமொழி கொடுக்க வில்லையே என்று முன்னொரு நாள் மறுகினாளல்லவா? அதே கேள்வி.
'இல்லை. என் உயிருள்ளவரையும் உன்னை மறக்க மாட்டேன், என் துரையே’’ என்று வாய் முணு முணுத்தது. இதுகாறும் கொந்தளித்துக் கொண்டிருந்த சின்னம்மா வின் உள்ளத்தில் இப்போ அலைப்பாய்ச்சல் இல்லை. மனம் தெளிந்து அமைதி பெற்றுவிட்டது.
கோபாலபிள்ளை பிடம் நேரே போனாள். 'எசமான்' நான் என் புருஷனுக்குத் துரோகஞ் செய்யமாட்டேன். அவர் என்னைத் தொட்டு தாலி கட்டியவர். தெய்வத் துக்கு சமானம். என்னை மன்னித்துவிடுங்கள்’’ என்று சொல்லிவிட்டுத் தன் குடிசையை நோக்கி ஓடினாள்.
O சி. வைத்தியலிங்கம் O 13

Page 9
கோபாலபிள்ளை ஒன்றும் தோன்றாமல் திகைத்து நின்றார்.
சின்னம்மா தன் குடிசையை அடைந்து கீழே வீழ்ந்து புரண்டு கதறினாள்.
பொழுது புலர்ந்தது. புஷ்பங்கள் குலுங்கிலா. "என் தாயே, பாவப்படுகுழியில் விழாமல் என்னைக்காப்பாற்றி னாய். என் கணவரை நான் மறக்கமாட்டேன். அவிர் சீக்கிரம் திரும்பிவர அருள் புரிவாய், அம்மா" என்று நிலத்தில் வீழ்ந்து வணங்கினாள் சின்னம்மா,
கலைமகள்-(1939)
A
14 O கங்கா கீதம் O

மின்னல்
நன்றாய் மலர்ந்த இல்வாழ்க்கையிலே அது ஒரு பெருங் குறையாயிருந்தது, முற்றிப்பழுத்த மாங்கனியிலே இருக்கும் புழுப்போல.
விசாலாட்சி தனது ஓய்வு நேரங்களிலெல்லாம் கிராமம் கிராமமாய்ச் சென்று தன்னைப் படைத்த இறைவனை நோக்கிக் கையெடுத்து வந்தாள். வாழ்க்கைப் பூங்கா விலே எல்லாமிருந்தும், அவளுக்கு எட்டாமல் எஞ்சி நின்றது ஒன்று. அவள் வீட்டின் முன்னால் நிற்கும் மயிர் மாணிக்கக் கொடி போல் அவள் மனம் அப்பொரு ளைத் தேடி அலைந்து கொண்டிருந்தது.
இல்வாழ்க்கையின் இன்ப ரசத்தைத் தன் கணவர் சின்னத்தம்பியுடன் சுவைத்து வந்தாள். ஆம், சின்னத் தம்பியை வரித்து பதினைந்து ஆண்டுகளாகின்றன. இப்பொழுது இருவரும் அந்தரங்கத்தில் ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள், ஒருகாதற் பண்போல் ஓடிய இல் வாழ்க்கையின் காலம் முறிந்து கவர்ச்சி குறைந்து வந்தது. ஆனால் ஏன்?

Page 10
மணவாழ்க்கைக்கு மகுடம் வைப்பது குழந்தை குழந்தை ஒன்றுதானும் இல்லாவிடில் அக்குறை நிவர்த்தி செய்ய முடியாத பெருங்குறையே. விசாலாட்சியும் சின்னத் தம்பியும் எழுப்பிய வாழ்க்கைக்கோபுரமும் முடிவடை யாமல் நின்றது.
சுற்றிலும் கேட்டும் கேளாமலும் சாசுவதமாய் இசைத் துக் கொண்டிருக்கும் விவிதராகங்களெல்லாம் இறுதி யில் சோக ரசத்திலே போய் முடிவடைகிறதா? துக்கமே உலகத்தில் நிரந்தரமானது. இன்பமெல்லாம் வாழ்க் கைப் பாலைவனத்தில் தோன்றி ஏமாற்றும் கானல் நீரா? சின்னத்தம்பியின் எண்ணங்கள் இப்படி ஒட வில்லை. உண்மையில் அவனுக்கு இத்தத்துவங்களெல் லாம் என்றுமே புரியாது.
ஆனால் சின்னத்தம்பியின் மனவிருப்பம்நிறைவேறாமற் போகவே அவனுக்கு மூடநம்பிக்கையிலும் தெய்வபக்தி யிலும், ஒரு நம்பிக்கை பிறந்தது. வைதீகக் கொள்கை களும், குருட்டுப் பழக்க வழக்கங்களும் அவன் மனத் தராசிலே முன்னிருந்ததிலும் பார்க்க நிறையிலும் மதிப்பிலும் உயர்ந்துவிட்டன.
கணவனின் மனமாற்றம் தனிவழியிலே சென்று கொண் டிருந்த விசாலாட்சிக்கு. ஒரு துணை கிடைத்த மாதிரி. திடீரென அவர்கள் வீட்டிலே சோதிடர், ரேகை சாஸ்திரிகள், சந்நியாசிகளின் நடமாட்டம் கூடிவிட்டது. வழக்கத்துக்கு மாறாக இருவரும், தம்பதிகளாய் கோயில், குளமென்று போய்வரத் தொடங்கி விட்டனர். ஏழை எளியவர்களுக்கு தங்களாலானதை பொருளாயும், பணமாயும் வாரி வழங்கினர். மனசிலேயிருந்த ஆசை நிறைவேறாமல் போனாலும், ஒரு வகையில் இச்செயல் களால் அவர்கள் மனத்தில் ஆறுதலும் அமைதியும் பிறந்தது.
அன்று புதன்கிழமை. அயல் வீட்டுக் குழந்தைகளின் விளையாட்டும், கூத்தும், கும்மாளமும் காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தன. விசாலாட்சியும் புருஷனும் தங்கள் துர்ப்பாக்கியத்தை நினைத்துக் கொண்டு இரு வரும் ம்ெளனமாய் இருந்தார்கள். சட்டென குடு குடு
16 O கங்கா கீதம் O

குடு. குடுகுடு. என்ற சப்தம் வீதியில் இருந்து வந்தது. விசாலாட்சி வீட்டின் வாசலுக்கு ஓடினாள் அப்பொழுதுதான் கார்முகில் கூட்டங்களிலிருந்து விடு பட்ட சூரியன் வெளிக் கிளம்பிக் கொண்டிருந்தான். விசாலாட்சியின் வருங்கால வாழ்க்கையின் புலரிக் காலத்தை அறிவுறுத்தும் தேவதூதனா?
குடுகுடுப்பைக்காரன் பக்கத்துவீட்டிலிருந்து வெளியேறி வந்தான். குடு குடு . குடு குடு, அவன் விசாலாட்சி யைக் கண்டு கொண்டான். பிச்சைக்காரருக்கும் குறி சொல்வோருக்கும் மனிதரின் முகத்திலிருந்தே அவர் களின் மனதை வாசிக்கும் ஆற்றல் வந்து விடுகிறது. அது பலதரப்பட்ட மக்களுடன் பழகுவதாலும் நீண்ட அனுபவத்தாலும் வந்தது போலும்.
அவன் விசாலாட்சியைப் பர்ர்த்து "சலாமுங்காச்சி,
ஆச்சிக்கு நல்ல காலம் வருகுது. குடு குடு குடு . ஆச்சியின் மன வருத்தம் ஒரு பொருளைப்பற்றியல்ல,
பணத்தைப் பற்றியல்ல. குடு குடு . ஒரு உயிரைப் பற்றியது. ஆச்சியின்ஊட்டுக்கு மவராசன் வரப்போ றார். குடு குடு. ஆச்சி ஒங்க மனசிலே ஏதோ ஒரு
குறை நெடுநாளாயிருந்து வருதுங்க. அது ஒருநாளி லல்ல, ஒரு மாசத்திலல்ல, பத்து மாசத்தில் சரியாய்ப் போயிடுங்க . 'குடு குடு குடு. குடு குடு."
விசாலாட்சிக்கு அப்பொழுதிருந்த மனநிலையிலேஅவன் சொன்னதை தேவவாக்காகவே எடுத்துக கொண்டாள். அவள் அதை முற்றிலும் நம்பிவிட்டாள். இப்போது அவர்களுக்கு எட்டிப்பிடிக்க இருந்தது ஓர் ஊன்றுகோல் -நம்பிக்கை. அது நாளுக்கு நாள் உறுதிபெற்று, அதைச்சுற்றி இருவரும் மனோராஜ்யங்களைப் புனைந்து இன்பத்திலே ஊறிப்போனார்கள். ஆ, அந்த நம்பிக்கை-அதிலல்லவா மனித வர்க்கம் முழுவதுமே சுழன்று கொண்டிருக்கிறது. .
'அவன் சொன்னதில் எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் என்னத்தைத்தான் சொல்லுங் களேன், ஏதோ எங்களுக்கும் நன்மையான காரியம்வரப் போகிறதென்று என் மனம் சொல்கிறது’’ என்றாள் விசாலாட்சி ஒரு நாள்.
O சி. வைத்தியலிங்கம் O 17

Page 11
"மாதமும் எட்டாகப் போகிறது, இன்னும் அவன் சொன்னதை நம்பி இருக்கிறாய்? ஏதோ வாயில் வந்த தைச் சொன்னான். அவன் தான் என்ன செய்வான், இதுதானே அவன் பிழைப்பு. நாங்கள் அல்லோ இதற்குக் கொடுத்து வைக்க வேணும்.'"
அன்றிரவு காலை நாலரை மணி இருக்கும். ஆம், சற்று முன்னர் தானே பக்கத்துவீட்டில் கடிகாரம் நாலடித்தது. அவர்கள் வீட்டு வாசலில் 'குவா, குவா’ என்ற ஒரு குழந்தை கத்தும் சத்தம் கேட்டது. விசாலாட்சி திடுக்கிட் டெழுந்தாள். உற்றுக் கேட்டாள்.அது ஒரு குழந்தையின் அழுகுரல் தான் . சந்தேகமில்லை. எழுந்து பரபரப்புடன் ஓடினாள். அவர்கள் வீட்டு வாசலிலே ஒரு கந்தைத்துணி யால் சுற்றியபடி கிடந்தது, ஒரு ஆண் குழந்தை. பிறந்து மூன்று அல்லது நாலு மாதம் இருக்கலாம். விசாலாட்சி அதைத்தூக்கி அன்புடன் அணைத்துக் கொண்ட தும் அழுகை குறைந்துவிட்டது. சின்னத்தம்பிக்கு ஒன்றுமே விளங்க வில்லை. குழந்தையைக் கண்டதும் உள்ளம் குளிர்ந்து பூரித்துப் போனார். " " கடைசியாக எங்களுக்கும் ஒரு குழந்தை... . ஆனால் இது யாரு டைய குழந்தை?’’ யாராவது இருக்கிறார்களோ வென்று சுற்றிலும் பார்த்தார்கள். ஆனால் எங்கும் ஒரே அமைதியாய் இருந்தது.
‘எங்களுக்கில்லாவிட்டாலும், கடவுள் ஒரு குஞ்சைக் கொடுத்திருக்கார். இப்படி விட்டுவிட்டுப்போன பாவி யாரோ? நாங்கள் எங்கள் குழத்தைபோல் வைத்திருந்து வளர்ப்போம்' என்று உறுதிப்படுத்திக் கொண்டார்
56
விசாலாட்சிக்கு பிள்ளைகளை வளர்த்துப் பரிச்சியம் இல்லை. இது அவளுக்கு புது அநுபவம். குழந்தைக்கு வேண்டிய பால் அவளிடத்தில் ஏது?பசும்பால் கொடுத்து ஒருவாறு சமாளித்தாள் விசாலாட்சி. அவள் குழந்தை யைத் தொட்டாலே தேள் கொட்டியது போல் "வாள் வாள்' என்று கத்திப் பிடுங்கியது - குழந்தையை வைத்துப்பார்ப்பதற்கு ஒரு ஆயாவை தேடிக்கொண் டிருந்தார்கள். இரண்டு மூன்று தினங்களில் 'அம்மா, தர்மங் கொடுங் கம்மா. நாலு நாளாய்ப் பட்டினி பசிகாதை அடைக்குது.
18 O கங்கா கீதம் O

ஓங்களைக் கெஞ்சுறணம்மா. கோடி புண்ணியம் கிடைக்குமம்மா’’ என்று கேட்டுக் கொண்டு ஒரு பிச்சைக் காரி அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றாள். விசாலாட்சி குழந்தையை நித்திரையாக்க ஓராட்டிக் கொண்டிருந்தவள் குழந்தையையும் தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்தாள். குழந்தை நித்திரைகலைந்து கத்தத் தொடங்கியது. பிச்சைக்காரி "இப்படிக் கொடுங் கம்மா' என்று குழந்தையை வாங்கி பக்குவமாய் அனைத்துக் கொண்டாள். குழந்தையின் அழுகை ஓய்ந்து சிறிது நேரத்திலே நல்லாய்த் துரங்கத் தொடங்கியது.
விசாலாட்சிக்கு அந்தப்பிச்சைக்காரியைக் கண்ட துமே அவள் மேல் ஒரு விருப்பம் வந்தது. அவளை வீட்டில் வைத்திருந்தால் குழந்தையை வளர்க்க உதவியாயிருக் கும் என எண்ணலானாள். தன் விருப்பத்தைப் புருஷ னிடம் தெரிவித்து அவளைத் தங்களுடன் இருக்கும்படி கேட்டாள். அவளும் ஒரு பிரபுவின் வீட்டில் ஆயாவாக இருந்து பழக்கப்பட்டவள். உடனே ஒத்துக் கொண் LT6T.
அவர்கள் குழந்தையைச் சுவீகாரம் எடுத்தது நேற்றுப் போல் இருக்கிறது. ஆனால் பசுபதிக்கு (பசுபதி தான் குழந்தைக்கு அவர்கள் வைத்த பெயர்) பதினைந்து வயசாகப் போகிறது. சின்னத்தம்பி அவனை கொழும் பில் ஒரு கல்லூரியில் சேர்த்து உயர்தரக் கல்வி கொடுக்க விரும்பினார். விசாலாட்சிக்கு மகனைவிட்டுப் பிரியமனம் துணியவில்லை. 'அவன் பச்சைக் குழந்தை பாருங்கோ. கொழும்பூரிலே அவனுக்கு யார் துணை? உற்றார் உறவினரோ எவருமில்லை. ஏன் இங்கே படித்த எத்த னையோ பிள்ளைகள் உத்தியோகம் பார்க்கிறார்கள். அவன் இங்கே படித்துக் கொண்டு எங்கள் கண்முன்னே இருக்கட்டுமே" என்று வற்புறுத்திச் சொன்னாள். ஆயா வும் அம்மா சொன்னதைக் கேட்டு மனஅமைதி பெற் றாள். அவள் அவர்களிடம் ஒன்றும் சொல்லவில்லை.
சின்னத்தம்பி அவனை கொழும்புக்கு அனுப்பும் கதை யைத் திரும்பவும் எடுக்கவில்லை. உண்மையில் அவனுக் கும் பசுபதியைப் பிரிந்திருக்க முடியாது போல் தோன்றி
O சி. வைத்தியலிங்கம் O 19

Page 12
யது. ஆகவே பசுபதி ஊரில் ஒரு கல்லூரியில் தன் ம்ேற் படிப்பைத் தொடர்ந்து வந்தான்.
அன்று கல்லூரியின் விடுதலை நாட்கள் தொடங்கும் நாள். பகல் பத்து மணியிருக்கும். பசுபதி கூட்டாளிகள் இருவருடன் வீட்டுக்கு வந்தான். 'அம்மா, இன்றைக்கு கடற்கரையிலே ஒரே அமளியா இருக்கிறது. மாணவர்க ளெல்லாரும் கடவில் நீந்தி விளையாடப் போகிறார்கள். நானும் கோபாலனுடன் போய்வரப் போகிறேன்" என்றுதாயாரை அனுமதிகேட்டான்.
விசாலாட்சிக்கு அவனைத் தனிய அனுப்ப மனமில்லை. சின்னத்தம்பியும் வீட்டில் இல்லை. அவனைப் போக வேண்டாமென்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவன் ஒரே பிடிவாதமாய் நின்றான்.
விசாலாட்சியால் ஒன்றும் செய்யமுடியாமல் "சரி போயிட்டுவா ராசா, தம்பி கோபால், இவனைக் கவன மாய்க் கூட்டிட்டுப் போய் குளித்து விட்டு சீக்கிரம் வந்து விடுங்கள்’’ என்று கவனம் சொல்லி அனுப்பிவைத்தாள்.
பசுபதி கூட்டாளிகளுடன் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடினான். அவர்கள் போய் மறையுமளவும் பார்த்தபடி நின்றாள் விசாலாட்சி. அவளுக்கு மின்னல் மின்னி மறைந்தது போல் இருந்தது. ஏன் அவனை அனுப்பி னேனென்று தன்னையே கடிந்து கொண்டாள். -
இரண்டு மணிநேரம் கழிந்தது. பூம், பூம், பூம். விசாலாட்சியின் வீட்டுக்கு முன்னால் ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. விசாலாட்சி ஒடிப்போய்ப் பார்த்தாள். ஓவெனக் கத்திக் கொண்டு கீழே வீழ்ந்து விட்டாள். சின்னத்தம்பி அப்பொழுதுதான் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். தன் வீட்டுக்கு முன்னால் ஒரு ஜனக் கூட்டம் நிற்பதைப்பார்த்து ஓடி வந்தார். மோட்டாரில் ஒரு உருவம் கிடந்தது. ஆம் பசுபதியின் உடல்ஐயோ...!
பசுபதி எப்படி இறந்தான்? ஊர் முழுவதும் அன்று அதே பேச்சு-"அந்த இடத்திலே குளிக்கப்படாதென்று
20 O கங்கா கீதம் O

விளம்பரம் போட்டிருக்கிறார்களே! கடலின் கீழ் பயங்கர மான நீரோட்டம் இருக்கிறதென்று தெரிந்தும் இப் பிள்ளைகள் அங்கே போகலாமா? ஒன்றா, இரண்டா? எத்தனை உயிர்களைக் கவர்ந்து கொண்டான் இந்நீர் அரக்கன். ஆ,விசாலாட்சியும் சின்னத்தம்பியும் தான் பெரும்பாவிகள். கடவுள் கொடுத்த குஞ்சை அவரே எடுத்துக் கொண்டார். நாம் என் செய்வது' என்று பேசி மனசை ஆற்றிக் கொண்டார்கள்.
விசாலாட்சியையும் சின்னத்தம்பியையும் பற்றியே எல் லோரும் அநுதாபப் பட்டார்கள். ஆயா ஒருத்தி இருக்கி றாளே--இவனைப் பாலூட்டி வளர்த்தவள். அவளைப் பற்றிய பேச்சே இல்லை. அவள் ஒரு அனாதைப் பிச்சைக்காரிதானே. அவளுக்கும் இதயம் ஒன்று இருக் கிறதேயென்று எவரும் கவலைப்படவில்லை.
திரும்பவும் அந்த வீட்டில் கனத்த அந்தகாரம் சூழ்ந் திருந்தது-பசுபதியுடன் வந்த பிரகாசமும், விளையாட் டும், குதூகலமும் எங்கே?. கார்முகிலிலே ஓடிய மின்னல் போல் மின்னி மறைந்து விட்டது.
ஆயாவால் இன்னும் அந்த வீட்டில் இருக்க முடிய வில்லை. பசுபதியின் உடைகள், விளையாட்டுச் சாமான் கள், பள்ளிக்கூடப் புஸ்தகங்கள் எல்லாம் பசுபதியை நினைவூட்டிக் கொண்டிருந்தன. அவளைத் தங்களுடன் இருக்கும்படி விசாலாட்சி வற்புறுத்தியும் அவள் கேட்க வில்லை.
அவள் அவர்களை விட்டுப் பிரியும்போது கண்ணிரும் கம்பலையுமாய் விசாலாட்சியைப் பார்த்து, ‘‘அம்மா என்னை மன்னியுங்கள். உங்கள் குழந்தை பசுபதிக்காக என்னை மன்னித்து விடுங்கள். அவன் நான் பெற்ற குழந்தை' என்றாள். 'உன் குழந்தை?' இரண்டு குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன. w
ஈழகேசரி. (23-7-1939)
A
O சி.வைத்தியலிங்கம் O 21

Page 13
கழனி கங்கைக்கரையில்.
கழனி ஆற்றிலே ஒரு படகு சென்று கொண்டிருந்தது. படகோட்டியோ தொண்டு கிழவன். என்றாலும் படகு நிதானமாய்ப் போனது. அதிலே ஒரு கிழவி மாத்திரம் இருந்தாள். இருவரும் ஒன்றும் பேசவில்லை.படகு கரை யில் ஒதுங்கி நின்றது. பக்கத்தில் ஒரு சமாதி.
இருவரும் கரையை அடைந்தார்கள், அந்தி மயங்கும் சமயம் மாலைச் சூரியனின் கிரணங்கள் சமாதியின் மேல் வீழ்ந்து கொண்டிருந்தன. சமாதியைச் சுற்றி பல்வகைப் பூஞ்செடிகள் மலர் சுமந்து நின்றன. இருவரும் மலர் களைக் கொய்து சமாதி முன் அர்ச்சித்தார்கள். தீபம் ஏற்றி, கீழேவீழ்ந்து வணங்கினார்கள். எழுந்து
போனார்கள் படகை நோக்கி.
படகு மெல்ல மெல்ல அசைந்து சென்றது. O
கந்தையன் இருபத்தி ரண்டு வயசை எட்டிக் கொண்டி ருந்தான். நல்ல கறுவல். எண்ணெய்க் கறுப்பென்று சொல்வர்களே, அதே நல்லெண்ணைக் கறுவல், கழுத் துறை நகர சபையிலே அவன் ஒரு கூலி.

வழக்கமாய் மாலை நேரங்களிலே அவனைக் குமார வீதி யிலே காணலாம். சாலை ஓரத்திலே நிற்கும் தீபஸ் தம்பத்தண்டை நிற்பான். விளக்கேற்றிவிட்டு, அடுத்த விளக்கை நோக்கி நடப்பான். அவன் நடையிலே யெள வனம், தொங்கிக் கொண்டிருக்கும். அந்த வீதியிலே இருப்பவர்கள் எல்லோரையும் அவனுக்குத் தெரியும். அவ்னை எவனுக்கும் தெரியாது.அன்றாடம் உழைத்துத் தின்னும் தொழிலாளி, அவனை யார் கவனிக்கப் போகிறார்கள்?
அப்படிச்சொல்லாதீர்கள்-இரண்டு பெரிய கரிய விழி
கள் அவனை எதிர்பார்த்து நின்றன. அதோ பாருங்கள்
அந்தத்தீபஸ் தம்பத்தின் கீழ் அவள் நிற்பது நன்றாய்த் தெரிகிறது-கந்தையன் வரமுன்னரே அத்தீபஸ்தம்பத் தின் விளக்கை ஏற்றிப் போடுவாள். அதில் அவளுக்கு ஒரு தனி இன்பம். .
* பொன்னி, இன்னிக்கு என்ன கொண்டாந்தாய்’’ என்று வாயைத்திறப்பான் கந்தையன்,
*இல்லை, தரமாட்டன். என்ன சொல் பார்க்கலாம்' * 'ரம்புட்டான்'
‘‘இல்லை’ என்று வெற்றிப்பார்வை பார்ப்பாள். 'முந்திரி வத்தல்"
* 'இல்லை, இல்லை."
‘‘மாம்பழம்'
‘‘ஆமாம்' என்று அவள் வாய்க்குள் போட்டுவிடுவாள். ** என்ன சீனிவத்தாளைக் கிழங்கோல்லியோ?” **பெரிய கெட்டிக்காரன்" என்று குறும்புச் சிரிப்புடன் அவனைப் பார்ப்பாள். இருவரும் கலகலவென்று சிரித்துக் கொண்டு போவார்கள்.
நிதமும் அவள் அவனுக்கு ஏதேனும் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். கடலைச் சுண்டலோ, மாம்
O சி.வைத்தியலிங்கம் O 23

Page 14
பழமோ, வெற்றிலை பாக்கோ ஏதேனும் ஒன்று. இவை களைத்தான் அவளால் கொடுக்க முடிந்தது.
இருவரும் கொட்டி அளந்து கொண்டு சாலையின் ஒரத் திலே நிற்கும் ஏனைய விளக்குகளை ஏற்றப்போவார் கள். இந்தச் சாலையிலேதான் அவர்கள் காதல் வளர்ந் தது. ஆம், இந்தப் பிரசித்த வீதியில்தான். குருவிகள் ஜன நெருக்கமுள்ள இடங்களில் கொஞ்சிவிளையாடுவ தில்லையா? இவர்களும் இயற்கையின் குழந்தைகள் தாமே.
O
நாட்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. அன்று மாலைப் பொழுதிலே, பொன்னி வழக்கமாய் நிற்கும் தீபஸ்தம்பத் திலே சாய்ந்தபடி நின்றாள். வெகு நேரமாகியும் கந்தை யனைக் காணவில்லை. ‘ஒரு வேளை அந்த மனிதன் இன்று நண்பகல் சொன்னது உண்மையாக இருக் குமோ? அவன் ஏன் பொய் சொல்லப் போகிறான். ஆனால் அவர் நேற்றுத்தானே என்னைக் கண்டு கொண்டு போனார். எனக்கும் சொல்லாமலா போய் விடுவார். அவருக்கு ஒடம்புக்கு ஏதேஞ் சுகமில்லா LD6b. . . . . . இங்ங்னம் ஆயிரம் சிந்தனைகள் அவள் மனதை அலைத்துக்கொண்டிருந்தன.
டங் டங். டங்.
தூரத்து மணிக்கூண்டிலே மணி ஏழு அடித்தது" பொன்னியின் உடல் நடுங்கத் தொடங்கியது. அத் தருணத்தில்
அத்தருணம் கந்தையன் ஓடோடியும் வந்தான். ‘‘பொன்னி, ரேலுக்கு நேரமாயிடிச்சு. ஒடணும்.ஊரிலே யிருந்து கடுதாசி வந்திச்சு. அப்பாவுக்கு ஒடம்புக்குச் சொகமில்லையாம். அப்பாடா, லீவு எடுக்கப் பட்டபாடு. நான் கழனிக்கு போயிட்டுவாரேன்,' "இப்பவே போறயா?"
'உடனே போகணும்'
* ‘என்னையும் விட்டா'?
24 O கங்கா கீதம் O

புகைவண்டி ஸ்டேஷனில் வந்து ஊதும் சப்தம் காதைப் பிளந்து கொண்டுவந்தது.'' நேரமாச்சு, பொன்னு, உன்னை மறக்கவே மாட்டேன். இரண்டு நாளிலே வந்துடுறன். என் கண்ணல்லே,' என்று சொல்லிக் கொண்டு ஓடினான்.
பொன்னி, தினமும் அவன் வரவை எதிர்பார்த் திருந்தாள். கந்தையன் போனவன் போனவன்தான் வரவே இல்லை.
O அவன் பக்கத்தில் இருக்கும் வரைககும் பொன்னி மலர்ச்சி பெற்று பூரணப் பொலிவுடன் விளங்கினாள். ஆகாயத்தில் மிதந்து சென்று சந்திரனைத் துரத்திக் கொண்டிருப்பாள். ஆனால், இன்று கந்தையன் இல்லை—அவள் மனம் எண்ணாததெல்லாம் எண்ணி அழுது கொண்டிருந்தது. தானே க்ழன்ரிக்குப் போய் அவனைத்தேட வேண்டு மென்று மனத்திடம் கொண்டாள்.
இந்நாட்களில் பொன்னியின் தாயும் இறந்து போனாள். அவள் பாட்டி தினமும் வெயிலில் போய் ஏதாவது * தொட்டாட்டு வேலை செய்து கொஞ்சப் பணத்துடன் வந்தால் தான் அவர்கள் அடுப்பில் நெருப்பெரியும். அதுவும் இல்ல்ையென்றால் பட்டினிதான். அநாதை களை ஆதரிப்பார் எவருமில்லை.
அந்தப் பட்டணத்திலே பிச்சைக்காரர்கள் ஆயிரக்கணக் கில் இருந்தார்கள்-ஆனால் தர்மம் செய்வோர் இல்லை. பிரபுக்களிடம் எல்லாம் இருந்தது. நெஞ்சில் ஈரம் மாத்திரம் இல்லை. சமூக முன்னேற்றச் சங்கங்கள் இருந்தன என்றாலும் மிருகங்களிலும் கேடாக எளிய ஜனங்கள் நடத்தப்பட்டனர். "தனி ஒருவ்னுக்கு உண வில்லையெளில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடிக் கொண்டிருந்தார்கள். இருந்தும், ஆயிரக்கணக் கான வறிய ஜனங்கள் பரமதரித்திரர்களாய் உண வின்றித் திரிந்தார்கள்.
O
பொன்னிக்கு கழனிக் கிராமம் எந்தத் திசையில் இருக்கிறதென்றும் தெரியாது அது வெகுதூரத்தில்
O சி. வைத்தியலிங்கம் O 25

Page 15
இருக்கிறதென்று அறிந்திருந்தாள். கந்தையனை எப்படியும் சந்தித்து விட வேண்டுமென்ற பேராவல் அவளுக்குத் தைரியத்தையும் ஊக்கத்தையும் கொடுத் தது. அவனைத் தேடி ஊரார் சொன்ன திசையை நோக்கி மனம் போன போக்கிலே நடந்து சென்றாள்.
பாருங்கள், சில வேளைகளிலே ‘குருட்டு வாக்கில சில காரியங்கள் கைகூடி விடுகின்றன. அந்தத் தசை பொன்னிக்கும் அடித்தது.
அவள் கழனிக் கிராமத்தை அடைந்து விட்டாள். அது அவளுக்கே தெரியாது. கழனி கங்கை கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டு நெடுநேரமாய் நின்றாள்-அவளுக்குப் பசி எடுத்ததுசுற்று முற்றும் பார்த்தாள். சமீபத்தில் ஒரு குடிசையிலி ருந்து புகை கிளம்பிக் கொண்டிருந்தது தாகத்துக்குத் தண்ணீராவநு வாங்கிக் குடிக்கலாமென்ற எண்ணத் துடன் அந்தக் குடிலை அடைந்தாள்.
வெளியில் எவரும் தென்படவில்ல்ை. உள் அறையிலி ருந்து யாரோ இருவர் பேசும் அரவம் கேட்டது. பொன்னி உற்றுக் கேட்டாள். ஒன்று பொன்னிக்குப் பழக்கமான குரல், முன் எங்கோ கேட்ட ஆணின் குரல். மற்றது ஒரு பெண்ணின் குரல் .
**பொன்னி குடுப்பாள் வெத்திலை, சீனி வத்தாளை d5L6O)6) . . . . . S s
‘*ஊம், பொன்னியா அவள் பேரு. நன்றா வைத் தாங்கோ'
'ஆமடி,, அவள் மாயக்காரி. கம்பன் வெச்சிருந் தானே, தாசி பொன்னி, அவள் மாதிரி. "'
‘மயக்கிட்டாளே சிறுக்கி, இன்னும் எத்தனை பேரை மயக்கிட்டிருக்காளோ?...'
பொன்னி இந்த சம்பாஷனையைக் கேட்டதும் அதிர்ந்து போனாள். மேலும் அங்கே நிற்கவிரும்பாம்ல் "ஐயோ, அடபாவி, மோசம் போனேனே!" என்று கதறிக்
26 O கங்கா கீதம் O

கொண்டு கழனித்தாயை நோக்கி ஓடினாள். யாரோ நீரில் குதித்தது போன்ற சப்தம் எழுந்தது. ஒரு கூடிணம் கழனித்தாய் சீறி விழுந்தாள். அடுத்த கூடிணம் அடித்த கையாலே அந்த உருவத்தை அனைத்துக் கொண் டாள். யாரோ கூக்குரலிடுவதைக் கேட்டதும் குடிசையில் கதைத்துக் கொண்டிருந்த மனிதன் வெளியில் ஓடி வந்து சுற்றிலும் பார்த்தான். சட்டென ஆற்றுக்குள் குதித்து விட்டான். அந்த உடலை, ஆற்று நீர் வெகுதூரம் இழுத்துக் கொண்டு போய்விட்டது. துரிதமாய் நீந்திச் சென்று அவ்வுடலைத் தூக்கிக்கொண்டு கரையேறி னான். தேகம் முழுவதும் உஷ்ணம் கொடுத்து உயிர்ப்பிக்க பிரயத்தனஞ் செய்தார்கள். ஆனால் எல்லாம் வியர்த்தமாய் போயிற்று.
கந்தையன் வீட்டில் ஒரு சிறுகும்பல் கூடியிருந்தது. ஊர் பேர் தெரியாத பெண்ணொருத்தி, வந்த இடத்தில் இப்படி ஆற்றில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண் டாள். இதன் மர்மம் தெரியாமல் எல்லோரும் கூட்டம் கூட்டமாய் நின்று குசு குசுத்துக் கொண்டிருந்தனர். அத்தருணம், கந்தையன் தங்கள் வீட்டை நோக்கிவந்து கொண்டிருந்தான்.
வீட்டுக்கு முன்னால் ஜனக்கூட்டத்தைக் கண்டதும் அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. உள்ளே போக காலடி எடுத்து வைத்தவன், அப்படியே ஸ்தம்பித்து நின்று விட் டான். கட்டிலில் ஒரு உடல், வெள்ளைத் துணியால் மூடப்பட்டுக்கிடந்தது. அவன் மெல்லப் போய் நடுங்கும் கைகளுடன் முகத்தை மூடியிருந்த சீலையை அகற்றிப்
பார்த்தான்.
அதிர்ந்து போய், "ஐயோ, பொன்னி!' என்று அதிர்ச் சியில் அலறிக்கொண்டு கீழேவீழ்ந்து விட்டான். அவன் நெஞ்சம் உறைந்து மனமும் உறைந்து போய் விட்டது. அவன் மீண்டும் எழுந்திருக்கவில்லை.
கந்தையனின் பெற்றோர் இருவருக்கும் திகைப்பி லிருந்து மீள சில நிமிஷங்கள் எடுத்தன. கந்தையனின் தந்தை ஆழ்ந்து யோசித்த போது மெல்ல மெல்ல எல்லாம் புரியத் தொடங்கியது.
O சி. வைத்தியலிங்கம் O 27

Page 16
நானும் என் மனைவியும் பேசிக்கொண்டிருந்ததை பொன்னி வெளியில் நின்று கேட்டிருப்பாள். நாங்கள அவளை இகழ்ந்து 'ஏளனமாய்ப் பேசியதை அவள் கந்தையனும் புதுமண! பெண்ணும் பேசியதாகதவறாக நினைத்து விட்டாள். என் குரல் சில சமயங்களில் அவள் குரல் போலவே இருக்குமென்பதை அவள் அறிய மாட் ட்ாள். தன்னைக்கிந்தையன் ஏமாற்றி விட்டான் என்ற ஆத்திரத்தால் இங்ங்னி"பி விபரீதமாய் நடந்து கொண்
6
நாம் அவனுக்கு வேறோர் பெண்ணை ஒழுங்கு செய்து அவள்ையே கல்யாணம் செய்ய வேண்டுமென்று வற் புறுத்தி வந்தோம். அவன் அதை மறுத்துபொன்னி உயிருடன் இருக்கும்வரை வேறொரு பெண்ணை மனத்தாலும் தீண்டம்ாட்டேன் என்று சங்கற்பத்துடன் சொல்லி வந்ததை அவள ஏபுபடி அறிவாள்? அவன தன் வேலைக்குப் போவதில்லை; வீட்டில் தங்கு வதில்லை. எங்கோ போவான். வருவான். பித்துப் பிடித்தவன் போல் இரவோ பகலோ சுற்றிக் கொண்டு திரிவான்.
காதற் பிடத்திலே இரண்டு ஜீவன்கள் பலியாகினர். பெருவெள்ளத்திலே இன்னும் இரு துளிகள்.
Ο
காதலர் இருவரும் தகனம் செய்யப்பட்ட இடத்திலே ஒரு சமாதி எழுந்திருக்கிறது. கந்தையனின் பெற்றோர் தின்மும் அச்சம்ாதிக்குப் போய் விளக்கேற்றி வருகிறார் கள்.இச்சேவையர்ல் அவர்கள் மனம் சாந்தி பெறுகிறது. அந்திப் போது, இரவுடன் தழுவும் செக்கர் நேரம். சாயும் பொழுதின்"அமிர்த கிரணங்கள் கழனிகங்கை யில்’பிரதிபலித்துக் கொண்டிருந்தன. தூரத்திலே ஒரு படகு சமாதியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
கலைமகள் (1939)
28 O கங்கா கீதம் O

பார்வதி
வழக்கத்திற்கு மாறாக, உமாகாந்தன் அன்று தன் படகை வெகுதூரம் செலுத்திக் கொண்டு போய் விட்டான். மாலைவெயில் அவனுக்கு மோஹனராகம் போல் இருந்ததால், தன்னையே மறந்து விட்டான் போலும், அவன் கத்தாளந் தீவைச் சமீபித்தபோது, செக்கலாய் விட்டது. படகில் இருந்து இறங்கிக் கரை யிலே வெண் மணலிலே இளைப்பாறி இருந்தான்.
‘நான் சிங்கப்பூர் போயிருக்கக் கூடாது. நான் பிறந்த நயினாதீவில் இருந்திருந்தால், இப்படி என் வாழ்க்கை நாசமாய்ப் போயிருக்குமா? எல்லோரும் போகிறார் களென்று நானும் போனேன், என் மனம் நாய்போல் அலையுமென்று கண்டேனா நான். அதுதான் போனது போகட்டும். இப்பொழுதாவது மனதை அடக்கி, மனித னாய் வாழ்வமென்றால், மனம் கேட்கிறதா? என் நாக்கு 'குடி குடி’ என்று தூண்டிக்கொண்டு இருக்கிறது. சீ!
என்ன வாழ்க்கை!
`ப்படி ஓடிக் கொண்டி சந்த மனம் சட்டென ஓய்ந்து போயிற்று. எழுந்து ன்று சுற்று முற்றும் நோக்க

Page 17
லானான். சமீபத்திலிருந்து வருவது போல் ஒரு மணி ஓசை; தொடர்ந்து யாரோ பாடுவது மெல்லிதாய்க் கேட்டது. உமாகாந்தன், மரங்கள் ஊடாக ஊன்றிக் கவனித்தான். எவரையும் காணவில்லை. கடற்கரை யிலிருந்து ஊருக்குள் சென்று கொண்டிருந்த ஒற்றை
யடிப்பாதை வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.
அவன் வெகுதூரம் போயிருக்க மாட்டான், வழியிலே ஒரு கோயில் தென் பட்டது. பாழடைந்த சிறிய கோவில் அது உள்ளே அம்பாள் சந்நிதி வாயிலிலே ஒரு பெண் பாடிக்கொண்டு நின்றாள். கொடி போன்ற ஒரு கிராமப் புறப்பெண், ஒசிந்து வீழ்ந்து விடுவாள் போல் நின்றாள். அவள் கையில் தீபத்துடன் வெளியிலே வந்த போது, தீபத்தின் ஒளியிலே அவள் முகம் அவனுக்கு நன்றாய்த் தெரிந்தது. அவள் முகத்திலே விவரிக்கமுடியாத ஒரு சோகத்தின் நிழல் வீழ்ந்திருந்தது. கண்களிலே ஒரு பிரகாசம் ஆடவரின் உணர்வழிக்கும் கண்களல்ல; அவைகளிலே ஒரு தெய்வீக சோபை சுடர் விட்டுப் பிரகாசித்தது-உமாகாந்தனைக் கண்டதும் நாணத் தினால் தலையைக் குனிந்தவண்ணம் ஒரு ஓரத்தில் போய்நின்றாள்.
'நான் இப்படி என் படகிலே மீன் பிடித்துக் கொண்டு வந்தேன். உங்கள் பாட்டைக் கேட்டு, யார் இவ்வளவு இனிமையாகப் பாடுகிறார்களென்று பார்க்கலாமென வந்தேன். நீங்கள் பூஜை செய்யும் வேளையில் வந்து தொந்தரவு கொடுத்து விட்டேன். மன்னிக்க வேணும் அம்மா’’ என்று அவளைப் பார்த்துச் சொன்னான்.
'நீங்கள் ஏன் வருந்த வேண்டும். இது பொதுஸ்தலம். கண்ணகி அம்பாள் எனக்கு மாத்திரம் உரியவள் அல்லவே. தாராளமாய் யாரும் எப்பவும் வரலாம். ம். என் பாட்டி காத்துக்கொண்டிருப்பாள் - நான் வருகி றேன்' என்று சொல்லிக் கொண்டுபோய் விட்டாள்.
உமாகாந்தன் சிங்கப்பூருக்குப் போனபோது பதினைந்து வயசுதான் இருக்கும், சென்ற இருபது வருஷமாக அந்த அரசின் கீழ் உத்தியோகத்திலிருந்தும், மலாய் நாட்டில் பிறக்கவில்லை என்றகாரணத்தினால் அவனைவேலையி
30 O கங்கா கீதம் O

லிருந்து நீக்கிவிட்டார்கள். அவ்விடத்திலே வேறு தொழில் செய்து பொருள் சம்பாதிக்கலாமென்றால் அவனுக்கென்ன, மனைவியா, குழந்தைகளா? ஒரு சொற்பத்தொகையை மாதந்தோறும் பென்ஷன் பண மாய்க் கொடுத்தார்கள். அவன் தன் தாய் நாட்டிற்கே திரும்பிவிட்டான்.
சிங்கப்பூரின் ஈயங்கலந்த தண்ணிர் அவனை மாற்றி விட்டது. தோற்றத்தில் மாத்திரமல்ல, குணத்திலும் மாறிப் போனான். இப்பொழுது நயினாதீவிலே வாழ்க் கை அவனுக்கு உப்புச் சப்பில்லாமல் இருந்தது. அவனிடம் , உண்மையில் சில உயர்ந்த லட்சியங்கள் இருந்தன; ஆனால் விடாமுயற்சியும் திடசித்தமும் இல்லை. அவனை ஊக்குவித்து அவ்வழியில் கொண்டு போவதற்கு அத்தீவில் எவருமில்லை, மனம் போனபடி குடிப்பான். தன் படகிலே போய் யாழ்ப்பாணக் குடா கடலிலே சிதறிக்கிடக்கும் சிறுசிறு தீவுகளைத் தொட்டுக் கொண்டு வருவான்.
ஆனால், அன்று அவளைக் கத்தாளத் தீவில் கண்டதும் அவன் எதையோ அவளிடம் கண்டான். தனது வாழ்க் கை முன்னேறுவதற்கு ஒரு கொள்கொம்பு இருப்பது போல் உணரலானான்.
உமாகாந்தன் தினமும் வந்து கண்ணகி அம்மனைத் தரிசித்துக் கொண்டு போவது வழக்கமாய்விட்டது. கண்ணகி அம்மனுக்கும் மேலாக அந்தப் பெண்பால் அவன் மனம் சென்று கொண்டிருந்தது. அவள் பூசை செய்து கொண்டிருக்கும் பொழுது அவன் பக்கத்தில் நின்று சிறுசிறு உதவிகள் செய்து கொண்டுவருவான். இந்தச் சிறு சேவைகள் அவனுக்கு மனநிறைவைக் கொடுத்தன.
அவன் பயபக்தியைக் கண்டு அவள் மனதிற்குள்ளே அவனை மெச்சிக் கொள்வாள். அவளை அறியாமல் அவள் மனம் அவன் மேல் லயித்துவிட்டது.
ஒரு நாள் அவன் அவளைப் பார்த்து 'பார்வதி நான் முதன் முதலாகக் கண்டு பல நாட்களாய்விட்டன. இருந்தும், உன் பெயரைத்தவிர உன்னைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. உன் பாட்டியுடன் இருப்ப
O சி. வைத்தியலிங்கம் O 31

Page 18
தாகச் சொன்னாய். ஏன் உனக்கு இன்னும் விவாகமாக வில்லையா? என்று கேட்டான்.
பார்வதி ஒன்றும் பேசாமல் மெளனமாய் இருந்தாள். 'ஏன் மெளனமாய் இருக்கிறாய்?" s
என்ன சொல்வதென்று அவளுக்கு தோன்றவில்லை. "ஆம், விவாகமாகிவிட்டது" என்று சொல்ல வாயெடுத் தவள், தயங்கிக் கொண்டு 'இல்லை' என்றாள். இதைச் சொல்லும்போது அவள் நாத்தழுதழுத்தது. மேலும் அவ்விடத்தில் நின்றால் பேச்சு வளர்ந்து கொண்டு போகுமெனப் பயந்து, பேசாமல் எழுந்து நடந்தாள் வீட்டுக்கு. உமாகாந்தன், ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டேன்?" என்று வருந்தலானான் .
நான் 'இல்லை" என்றா சொன்னேன். என் கணவர் உயிருடன் இருக்கிறார் அவரை மணந்து பலவருஷங்க ளாகின்றன. என் உள்ளத்தை நான் நன்றாய் அறிந் திருந்தும். பொய்தானே சொன்னேன். ஒரு வேளை இந்த அந்நியன் மேல். சீ, நாய் மனம்' . இங்ங்ணம் பார்வதி யின் மனம் அலைந்து கொண்டிருந் 25gs.
O உமாகாந்தன் இடைக்கிடை பார்வதியைச் சந்தித்துக் கொண்டுவந்தான். அவனை வரவேண்டாமென்று
சொல்லவும் அவளுக்கு தைரியமில்லை. தன் மனதை அடக்கிச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள். அவனது பேச்சும், செய்கைகளும் வரவர வேறுவித மாய்ப் போய்க்கொண்டிருப்பதையும் அவள் கவனிக்காம லில்லை. ஒரு நாள் அவன் பார்வதியை நேரே கேட்டு விட்டான்.
**ஐயையோ, எனக்கு விவாகமாகி விட்டதே? என்று கத்திக் கொண்டு ஓடி விட்டாள்' 'நான் திமிலிச்சி, இவரும் திமிலர், ஆம் அப்படித் தானே அன்று சொன்னார்? நான் இவரை மணந்து கொண்டால்...? ஆனால் அது எப்படி? என் மனம், ஏன் இப்படிக் கலைந்து போய்விட்டது. நான் மனத்திடமே இல்லாதவளா? நான் சென்ற பல வருஷங்களாக என் புருஷரை' என்னுடன் சேர்த்து
32 O கங்கா கீதம் O

வை என்றுதான் அல்லும் பகலும் கண்ணகித்தாயை இறைஞ்சிக் கொண்டிருக்கிறேன்.
இவரைக் கண்டதும் மனம் அலைபாய்கிறது. இவரு Tன் பேச வெட்கப்பட்டாலும், மனம் மேலும் பேச
ஆசை கொள்கிறது. ஆனால்.
சிச்சி, இந்த எண்ணத்தையே வேரோடு பிடுங்கி எறிந்து விடவேணும் என் 'கணவர்’ அதோ நிற்கி றார். அவரை நான் 11 ர்த்து பல வருஷங்களாகின்றன. ஆனால் அச்சம்பவம் நேற்று நடந்தது போல் இருக் கிறது.
'ஒரே வகுப்பில்தான் நாங்கள் வாசித்துக் கொண்டிருந் தோம். என் பக்கத்தில் தான் அவர் எப்போதும் இருப் பார். எனது சதியைப் பற்றி எவர் கேலி செய்தாலும், எனக்காகப் பரிந்து பேசுவார். ஒரு நாள் -அந்த நாளை எப்படி மறப்பேன்? நாங்கள் ஓடி ஆடி விளை ui Tl is கொண்டிருந்தோம். நான் அவர் கையில் தட்டி விட்டு ஓடினேன். அவர் என்னைப் பிடிக்கத் துரத்திக் கொண்டு வந்தார். ஆனால் முடியவில்லை. தம் சால் வையை என் தோளில் எறிந்து கழுத்தைக் சுற்றிப் பிடித்து விட்டார்.
"ஆம், எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. நான் உடனே திரும்பினேன். அவர், தன் சால்வையால் என் கழுத்தைச் சுற்றிப்பிடித்தபடி நின்றார். மாணவர் எல்லோரும், "பார்வதிக்கு மணமாலை போட்டு விட்டான்” என்று கத்திக் கேலி செய்தார்கள் ஆனால், என் மனம், என் குழந்தை உள்ளம், அதை வேறு வித மாக நினைத்து விட்டது. உண்மையில் அவர் என்னை விவாகஞ் செய்து கொண்டதாக நினைத்தேன்!
*அவர்கள் விளையாட்டாய்ச் சொன்ன அந்த வார்த்தை கள் என் குழந்தை மனசிலே பதிந்து விட்டன. சிறு பிள்ளை நேசாக ஆரம்பித்த அந்த அன்பு மனதில் வளர்ந்து நிலைத்து விட்டது. அவரை என் மனசில் இருத்தி பூஜை செய்து வந்தேன். ஆனால் அவரை நான் விவாகஞ் செய்ய எங்கள் சமூகமே எதிர்த்துக்
0 சி. வைத்தியலிங்கம் 0 83

Page 19
கிளம்பும். ஜாதிவேற்றுமை எங்களுக்கிடையில் குறுக்கே வந்து நிற்கும்.
என்ன இருந்தாலும் அவரையின்றி வேறெவரையும் மணப்பதில்லை என்ற திட சங்கற்பத்துடன் இருந்தேன். இப்பிறவியில் முடியாவிட்டால் இன்னும் ஒரு பிறப்பி லாவது, என்னை அவருடன் சேர்த்து வைக்கும்படி கண்ணகித்தாயை நம்பி இருக்கிறேன்.
அவர் மேல் வகுப்புக்குப் போனபின் வேறு ஆங்கிலப் பள்ளிக்குப் போய்விட்டார். அவரை நான் மீண்டும் சந்திக்கவில்லை. இந்தியாவுக்கோ; சிங்கப்பூருக்கோ போனதாகப் பின்னர் அறிந்தேன். அவர் எங்கிருந்தா லும். அவர் என் கணவர், கணவரே'
உமாகாந்தனுக்கு, பார்வதியின் போக்கு புரியாத புதிராக இருந்தது. அவளைத் தன் மனைவியாய் அடையாவிட்டால் தன் வாழ்க்கையே அஸ்தமித்து விட்டதாக உணரலானான். சில நாட்களாய் குடிவகை களை மறந்திருந்தவன். கவலைகளும், யோசனைகளும் வந்துமோத அவைகளைத் திரும்பவும் குடியிலே மறக்க முயன்றான்.
"தாயே, இந்த அபலையை ஏன் இப்படிச் சோதிக் கிறாய்? உன் சந்நிதியில்தானே அவரை என்னுடன் சேர்த்து அறிமுகஞ் செய்து வைத்தாய். அவரை முன் எப்பொழுதோ எங்கோபார்த்திருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. தெய்வமே, என்னைக் காப்பாற்று, நான் வழிகாணாமல் தத்தளிக்கிறேன்’ என்று மாலைப் பொழுதில் கண்ணகித்தாயின் சிலைக்கு முன் வீழ்ந்து கதறினாள்.
அப்பொழுது உமாகாந்தன் வந்து அவளைக் கூப்பிட்டு ‘'நீ சொன்னது உண்மையா, பார்வதி. உனக்குவிவாக மாகி விட்டதா' என்று கேட்டான். 'ஆம், அது பலவருஷங்களுக்கு முன்னர் நடந்தது. என் கணவர் உயிருடன் இருக்கிறார். ஆனால், அம்பா,
தாயே, அவர் எங்கே?' என்று கேட்ட வண்ணம் அவள்
34 O கங்கா கீதம் O

ஓடிப்போய் அம்பாள் சிலையின் கீழிருந்து ஏதோ எடுத்து வந்தாள்.
இதைப்பாருங்கள், இது தான் என் கணவர். இதன் ஒவ் வொரு இதழிலும் அவருடைய சுவாசம், ஸ்பர்சம் உணர்ச்சி எல்லாம் இருக்கின்றன. நாங்கள் நாலாம் வகுப்பில் இருந்த போது அவர் எனக்கு இதைக் கொடுத் தார். அம்பிகையின் பாதங்களிலே இதை வைத்துப் பூசித்து வருகிறேன்.'"
உமாகாந்தன் அதைவாங்கிப் பார்த்தான். ஒரு நான்காந் தர வாசக புஸ்தகம். அதன் முகப்பில் உமாகாந்தன் -பார்வதி' என்று அவனுடைய கையெழுத்தில் இருந் தது. அவன் பள்ளியில் எழுதிய அதே எழுத்து.
இருவரும் பிரமித்துப் போனார்கள். "ஐயோ என் பார்வதி, ஆம் நீ தான், நீ தான். அந்த மாலை
போட்ட சம்பவம்.
மேலும் பேச அவனால் முடியவில்லை. பார்வதி அவனை யே பார்த்தபடி நின்றாள். 'பார்வ ..." அவன் குரல் கம்மிக்கொண்டது. 'பார்வதி நீ நம்பமாட்டாய். அவ்வளவு குணத்திலும் தோற்றத்திலும் மாறிப் போனேன். ஆனால் சில சமயங் களில், உன்னை எங்கோ பார்த்திருப்பது போல் என் மனம் எண்ணிச் சஞ்சலப்படும். பின்னர், அந்த எண்ண மே மெல்ல மனதிலிருந்து அழிந்து போகும்.'
பார்வதி மலைத்து நிலைகவிழ்ந்து போனாள். தான் இருப்பதே உண்மைதானா என்று கூட ஐயப்பட்டாள். ஓவெனக் கதறிக் கொண்டு அவன் பாதங்களிலேவீழ்ந்து விட்டாள். தாயைப் பார்க்கும் குழந்தை போல் எழுந்து நின்று அம்பாளையே பார்த்த வண்ணம் நின்றாள். ‘'என் உள் மனம் ஏற்கெனவே அவரை அறிந்து கொண்டது. நான் தான் அவரை அறியாமல் இருந்து விட்டேன்'
ஆனால் பார்வதியின் முகம்சட்டென கருத்துஇருண்டது.
O சி. வைத்தியலிங்கம் O 35

Page 20
'பார்வதி, என்ன யோசிக்கிறாய்?’’
'ஒன்றுமில்லை. ஆனால் என் கணவர் வேற்று ஜாதியல்லவா?’’
**ஆம், நான் வேளாளன்தான். மீன்பிடித்துக் கொண்டு திரிவதாக உனக்குச் சொல்லியிருந்தேன். பொழுது போக்காக ஆதில் ஈடுபட்டிருந்தேனேயொழிய, அது என் தொழிலல்ல. பார்வதி, இப்பொழுது உன் கல்யாணத்தைப் பற்றி என்ன நினைத்திருக்கிறாய்?
‘‘அவரை நான் விவாகஞ் செய்துகொள்ள முடியாது-"'
ஏன்?’’
'ஆம் அது எப்படி முடியும்?'
"ஐயோ, கொஞ்சம் விளக்கமாய் சொல்லேன்'
'நாங்கள் வேற்று ஜாதிக்காரர், எங்கள் சமுதாயம் அதை அனுமதிக்காது. ’’ உமாகாந்தனுக்கு அவள் திமிலிச்சி என்பது ஞாபகத் துக்கு வந்தது- ஆனால் அவன் சிங்கப்பூர் போனதும் அவனுக்கு சாதியிலும், சமயத்திலும் இருந்த நம்பிக்கை அற்றுப் போயிருந்தது.
ஆனால் அவள் விரும்பினால்’’’
‘'என்றாலும் என்ன, அவர் அப்புனித மேடையிலே இருக்கட்டும். அவர் கீழே இறங்க வேண்டாம். என்னை மணந்து அவர் சமூகத்தின் தீராப்பகைக்கு ஆளாவதை நான் சகிக்கமாட்டேன். நான் அவரைத் தீண்டுவதற்கு என்னைப் பக்குவமாக்கிக் கொண்டு வருவேன். ஆம் , அது என்னால் முடியும்.' 'பார்வதி உன் நனவிலல்லவா நான் உயர்ந்த பீடத் தில் இருக்கிறேன். நாளுக்கு நாள்" நான் கீழே வீழ்ந்து சாக்கடையில் போய்க் கொண்டிருக்கிறேன்.'
"ஆ, அப்படிச் சொல்லாதீர்கள்'
36 O கங்கா கீதம் O

'உண்மையைத்தான் சொல்கிறேன். எல்லாம் சகவாச தோஷம். என் வாழ்க்கையே பாழாய்ப்போய் விட்டது. ஆனால் பார்வதி, என்னை இன்னும் காப்பாற்ற உன்னால் முடியும்'
‘'என்னாலா, இந்த ஏழைய்ாலா?? ‘‘ஆம் , என் பாருக்குட்டியால் முடியும். என்னைப் புது மனிதனாக மாற்ற அவள் ஒருத்தியே போதும். அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு.
"இருவரும் தவறி வீழ்ந்தால்?"
* 'இல்லை ஒரு போதும் அப்படி நடக்காது. அவளுடைய கண்களிலே ஜவலிக்கும் தெய்வீக ஒளியே என்றும் எங்களைக் காத்துவரும்'
பார்வதி ஆழ்ந்த யோசனையிலிருந்தாள். அவன் கெட் டழிந்து போனால், அவள் பின் வாழ்ந்துதான் என்ன?
‘'தேவி, நீயே அவரை என்னுடன் கொண்டு வந்து சேர்த்தாய். அவரை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது உனது ஆணை போலும். '
அன்று சனிக்கிழமை. மேலே வான வீதியிலேநிறைமதி. கீழே கத்தாளந்தீவை நோக்கி ஒரு படகு சென்றுகொண் டிருக்கிறது. அதில் உமாகாந்தனும் பார்வதியும் இருந் தார்கள். படகிலே வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், இளநீர்க்குலை, பாற்குடம் எல்லாம் நிறைந்துகிடந்தன. கண்ணகி, அம்மன் கோயிலிலே புதிதாய் அமைந்த கண்டாமணி 'டாங் டாங்’ என்று ஒலிக்குக் கொண் 牛@厄西@·
கலைமகள் (1939)
A
O சி. வைத்தியலிங்கம் O 37

Page 21
தியாகம்
அநுராதபுரத்தில் செங்கோலோச்சி ஆண்டு வந்த தமிழ் மன்னனாகிய ஏலாளன் என்பவனைக் கொன்று சிங்கள இராச்சியத்தை மீண்டும் இலங்கையில் நிறுவிய துட்ட கைமுனு என்னும் அரசன் ஆண்டகாலம் கி.மு. 3-ம் நூற்றாண்டாகும். அக்காலத்தில் லங்காத்வீபம் தனிச் சிறப்புடன் விளங்கியது. தர்மசாலைகளும், விஹாரை களும், தாது கோபங்களும் சிற்பச் செல்வங்களாய் விளங் கின, கழனிகளில் விளையும் தானிய வகைகளை ஏற்றிக் கொண்டு மரக்கலங்கள் துறைமுகங்களிலே வேற்றுநாடு களுக்குச் செல்லத் தயார் நிலையில் நின்றன. புத்த பகவானின் அறவுரைகளும், தர்மோபதேசங்களும் நாடெங்கும் பரவி சண்டைகளும் சச்சரவுகளும் மறைந்து சீருக்கும் சிறப்புக்கும் இடம் கொடுத்திருந்தன.
தமிழ் மன்னர்களைப் போரில் வெற்றி சண்டு, சிங்கள ஆட்சியை மீண்டும் இலங்கையில் நிலை நிறுத்திய பெருமை துட்டகைமுனுவுக்கு உரியது. ஆனால் அவன் பெயர் இன்றும் இம்மலைப் பிரதேசத்தில் பேசப் படுவதற்கு காரணமாயிருப்பவன் சாலி என்னும் அவன் புதல்வனே. சாலி யானை ஏற்றம், குதிரையேற்றம்,

வில்வித்தை முதலியவைகளில் நிபுணனாய் விளங்கி னான். அவன் மகாவீரனாய் இருந்ததல்லாமல் பெரிய கலா வினோதனாகவும் துலங்கினான். புத்தபகவானின் போதனைகளால் கவரப்பட்டு புத்த தர்மத்தைத் தானே படிப்பதிலும், அதை மக்கள் மத்தியில் பிரசாரஞ் செய்வ திலும் கண்ணுங்கருத்துமாயிருந்தான்.
கலை உள்ளம் படைத்த இந்த இராஜ குமாரனுக்கு அரசாங்க விவகாரங்களிலே மனம் செல்லவில்லை. நீரோடைகளும், சிற்றாறுகளும், புல்வெளிகளும், நிறைந்த கிராமப்புறங்களிலே யதேச்சையாய் அலைந்து திரிவான். ஒரு நாள் அரண்மனைக்கு வெகு தூரத்தில் இருந்த சோலை ஒன்றில் அவன் மனம் போல் சுற்றி வரும் போது, வெகு தொலைவில் பூங்கொடிகளுடன் ஒரு கொடி போல் ஒரு பெண் அசோகமலர்களைக் கொய்து தன் கூந்தலிலே சூடிக் கொண்டு நிற்பதைக் கண்டு விட்டான். அவள் வாலை இளங்குமரி. வயசு பதினேழு பதினெட்டு இருக்கலாம். அவள் இடையைச் சுற்றி நாலுமுழத்துண்டு. மேலே அவள் மார்பைக் கச்சி னால் இறுகக்கட்டி இருந்தாள்.
சாலி அவளைக் கண்டதும் பார்த்த கண் எடுக்கவில்லை. ஸ்தம்பித்து நின்றான். அவன் உள்ள வீணையில் கேட் டும் கேளாமலும் விசித்திரமான உணர்ச்சி அலைகள் மிதந்து வருவது போல் உணரலானான். முன்னொரு பொழுதும் அநுபவியாத மன எழுச்சி, புளகாங்கிதம், அவனைத் திக்குமுக்காடச் செய்தன.
அத்தருணம் அவள் திரும்பி தன் குடிசைக்குப் போகஅடி எடுத்துவைத்தாளோ இல்லையோ, தன் முன்னால், தன்னையே பார்த்த வண்ணம் நிற்கும் சாலியைக்கண்டு கொண்டாள். இருவர் கண்களும் சந்தித்தன, கலந்தன v B அவள் தலை கவிழ்ந்து கொண்டது. அவள் மேனி யிலிருந்து யெளவன லீலைகள் சொரிந்த வண்ண மிருந்தன. -
சாலி மெல்ல அவளை நெருங்கி மிக மிக மென்மையாய் 'வனதேவதையே, நீ யார்? எவ்விடத்தில் இருக்கி
றாய்" என்று வாத்சல்யத்துடன் வினவினான்.
O சி. வைத்தியலிங்கம் O 39

Page 22
‘'சுவாமி, நான் தேவதையுமல்ல, பூதகணத்தைச் சேர்ந்தவளுமல்ல. அதோ, தெரிகிறதே அந்தக் குக் கிராமத்தில் வசிக்கும் ஓர் ஏழைப் பெண். என்னை
அசோகமாலா' என அழைப்பார்கள் .'
"அசோகமாலா, அசோகமாலா'' என்று ஜபித்துக் கொண்டான் சாலி.
"அசோகமாலா' என்ன அழகான பெயர்! அவளுக்கு எவ்வளவு பொருத்தமான பெயருங்கூட'
'அந்த வனமல்லிகைக் கொடிகளுக்கு மத்தியில் நிற்கும் போது, நீயும் ஒரு கொடி போல் என் கண்களுக்குகாட்சி தருகிறாய். சிறிது நேரம் அப்படியே நில் பார்க்கலாம். நான் உன்னை என் நெஞ்சில் நிலை நிறுத்திக் கொள் கிறேன் .'
வேண்டாம் சாமி. என் அண்ணா என்னை எதிர் பார்த்த வண்ணம் குடிசையில் இருக்கிறார். என்னைத் தேடிக் கொண்டு அவர் இங்கே வந்தால் இருவரையும் கொன்று விடுவார். மன்னியுங்கள் சாமி, நான் வருகி றேன்' என்று அடி எடுத்து வைத்தாள்.
** சற்று நில், உன் அண்ணன் வேண்டாம். உன்கண் களே என்னைக் கொன்று விடும் போல் தெரிகிறது. என்னைக் கண்டதும் இப்படிப்பயந்து ஏன் ஓடுகிறாய்? எனக்கோ உன்னுடன் பேச வேண்டுமென்று ஆவலா யிருக்கிறது. அந்தக் கொடி வீட்டில் நாம் சிறிது நேரம் உல்லாசமாய்ப் பொழுதைக் கழித்து விட்டு.
‘'வேண்டாம் சாமி, வேண்டாம். நான் இப்பொழுதே என் குடிசைக்குப் போக வேணும். என் அண்ணா என்னை இப்பவே தேடிக்கொண்டு வரப்போகிறார்'
சாலியால் ஒன்றும் பேசமுடியவில்லை. அவள் போகும் போது அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் போனாள்.
சாலி மறுநாள் அதிகாலையிலேயே அவ்விடத்திற்கு
வந்து விட்டான். அவள் கட்டாயம் வருவாளென்று
40 O கங்கா கீதம் O

அவன் மனத்தில் ஒரு நம்பிக்கை . சிறிது நேரத்தில் அவள் அவனை நோக்கி வந்து கொணடிருந்தாள்! அவன் உள்ளம் இன்பப்பெருக்கால் துள்ளிக் குதித்தது.
சாலி அவளை வாஞ்சையுடன் பார்த்து ‘மாலா, நீ மீண்டும் என்னிடம் வருவாய் என்று என் உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது. என் வாழ்வில் நான் எத்தனை ரூபவதிகளைப் பார்த்திருக்கிறேன். என் மனம் ஜீவசக்தி அற்றுத் தூங்கிக்கிடந்தது. இன்று ஒரு புதிய உலகில் நான் உலாவி வருவதாக உணர்கிறேன். உன்னைப் பார்க்குந் தோறும் என் உள்ளம் கிளர்ந் தெழுந்து ஆரவாரிக்கிறது. வா, அந்தக் கொடி வீட்டில் சற்று பேசிக் கொண்டிருப்போம்.'" என்று அவன் முன் செல்ல அவளும் அவனைப் பின் தொடர்ந் தாள .
அவர்கள் கொடி வீட்டை அடைந்த போது இளஞ்சூரிய னின் கிரணங்கள் அந்த லதா கிருகத்தின் இலை, கொடி கள் ஊடாக வடிந்து சென்று வண்ணக் கோலங்களைத் தரையிலே வரைந்து கொண்டிருந்தன. இதையே பார்த்து வியந்து நின்ற சாலியைப் பார்த்துக் கேட்டாள்.
* ‘சாமி, காணாததைக் கண்டவர் போல் இந்தக் கோலங்களைப் பார்ப்பதற்காகவா இங்கே வந்தீர்கள்?"
* 'இல்லை மாலா. அழகை எங்கு கண்டாலும் நான் அதை ஆராதிக்கிறேன். பார், இந்த வனப் பிரதேசம் எவ்வளவு மனோரம்மியமாயிருக்கிறது. தூரத்தில் நீர் நிலைகளில் பட்சிக்கூட்டம் உல்லாசமாய் நீங்குகின்றன. மான் கூட்டங்கள் குளங்களிலே பயம் தெரியாமல் நீர் அருந்துகின்றன. பரந்த புல் வெளிகளிலே மாட்டு மந்தைகள் மேய்ந்து வருகின்றன. மெல்லிய இளந் தென்றல்காட்டு மலர்களின் சுகந்த மணத்தை சுமந்து வந்துமேனியை வருடி இன்பத்தில் ஆழ்த்துகிறது.'
"இவைகளையே தினமும் பார்த்துப் பழகிய என் கண் களுக்கு ஒன்றும் புதுமையாயில்லை'
"'என்றும் நீ என் பக்கத்தில் இருக்க வேணும். காதோடு காது வைத்து நீ என்னுடன் பேச வேணும். சின்னச்
0 சி. வைத்தியலிங்கம் O 41

Page 23
சின்ன கதைகள் நீ எனக்குச் சொல்லவேணும். நான் அதைக் கேட்டுச் சிரிக்க, நீயும் என்னுடன் சேர்ந்து சிரிக்க வேணும் . . உனக்கு இவைகளில் புதுமை ஒன்றும் இல்லையா மாலா?"
‘‘இதெல்லாம் உங்கள் கற்பனையில் தானே. நாங்கள் இருவரும் இங்கே சேர்ந்திருக்க முடியுமா? இப்பவே உங்கள் இல்லத்தை நோக்கித் திரும்பி விடுவீர்களே, ਸi ' '
**ஆகவே நான் இங்கே உங்கள் இனத்தவர்களுடன் தங்கிவிட வேணுமென்று தானே விரும்புகிறாய்'
‘சுவாமி, வனமிருகங்கள் திரியும் காட்டுப் பிரதேசம் இது, நாங்கள் இழிகுலத்தவர்: வனவாசிகள். இக் கூட்டத்தினருக்கு என் தந்தை முடியப்பனே தலைவன். இங்கே அவர் இட்டது சட்டம். ஆதிவாசிகளின் வாழ்க்கை போன்றது எங்கள் வாழ்க்கை முறை , வன விலங்குகளை வேட்டை ஆடிப் புசித்து வருகிறோம். உங்களால் இந்த இழிந்த சூழலில் வாழ முடியுமா?’’
'ஏன் முடியாது மாலா? நீயும், நானும் உன் தந்தை, தமையன், இனசனத்தார் சுற்றத்தார் யாபேரும், சேர்ந்து முயற்சித்தால் இந்த இடத்தை ஒரு அழகிய கிராமமாக்கி விட முடியும்'
**நீங்கள் நகர்ப்புறத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவர் கள். அங்கே உள்ள வசதிகள் இங்கே கிடைக்குமா?"
'அதெல்லாம் கிடைக்கும். அதற்காகத்தான் என்னை உன் தந்தையிடம் அழைத்துப் போகும்படி கேட்கிறேன். நான் அவருடன் பேசவேண்டும். என் நோக்கங்களை அவருக்குத் தெரிவிக்க வேண்டும்.'
'நீங்கள் விரும்பினால் நான் மறுக்கமாட்டேன். அவரோ முன் கோபி, உங்களை உதாசீனம் செய்து விட்டால், அதை என் மனம் பொறுக்காது, இறந்தே போவேன்' "
42 O கங்கா கீதம் O

‘'என்னைத்தானே அவர் உதாசீனம் செய்வார்.அதற்கு நீ ஏன் இறக்க வேண்டும் மாலா??
அசோக மாலாவினால் என்ன சொல்வதென்று தெரிய வில்லை. பின்னர் ‘நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேணுமா சாமி? என் வாயை ஏன் இப்படிக்கிளறு கிறீர்கள். நான் உங்களைக் கண்டதும் . *" மேலும் அவளால் பேச முடியாதபடி நாணிச்சிவந்து போனாள்.
சாலி, அவளைக் கனிவுடன் பார்த்து அவளை அணைத்த வண்ணம் வாஞ்சையுடன் 'இதை உன் வாயிலிருந்து அறிந்துவிட வேணுமென்று ஆசைப் பட்டேன். வா மாலா, நாங்கள் உன் குடிசைக்குப் போகலாம்' என்று இருவரும் நடக்கலானார்கள். அவர் கள் மேலும் பேசவில்லை. இருவர் உள்ளமும் அந்தரங்க மாய், மிக நெருக்கமாய், உறவாடிக் கொண்டிருந்தன.
C
அசோக மாலாவுடன் ஒரு அந்நியன் அளவளாவிக் கொண்டு வருவதைக் கண்டதும் முடியப்பன் ஆச்சரியத் துடனும் வியப்புடனும் பார்த்துக் கொண்டு நின்றான். அயல் குடிசைகளிலிருந்து வெளிவந்த வனவாசிகள் சாலியைக் கண்டதும் யாரோ தேவ லோகத்திலிருந்து குதித்தவன் போல் அவனையே பார்த்த கண் வாங்கா மல் பார்த்துக்கொண்டு நின்றனர்.
மாலா திடீரெனப் பாய்ந்து சென்று தன் தந்தையின் பாதங்களில் வீழ்ந்து கால்களைக் கட்டிக் கொண்டாள். பின்னர் எழுந்து சாலியைத் தன் தந்தைக்கு அறிமுகஞ் செய்து வைத்துத் தங்களை ஆசீர்வதிக்கும்படி பயத் துடன் வேண்டினாள்.
முடியப்பன் பிரமித்துப் போனான். அவன் என்ன சொல்வதென்று தோன்றாமல் வாயடைத்து நின்றான்.
நல்ல யௌவன வாலிபன், வசீகரமான முகம்; கம்பீரத் தோற்றம். இவன் ஒரு சண்டாளகுலப் பெண்ணை விரும்புவதென்றால் உடனே நம்பிவிடுவார்களா?தந்தை
O சி. வைத்தியலிங்கம் O 43

Page 24
தமையன், சுற்றத்தார், அயலவர் எல்லோருக்கும் ஏதோ கனவு காண்பது போல் இருந்தது. எல்லோரும் அவர்களைச் சூழ்ந்து நின்று-எத்தனை கேள்விகள், எத்தனை குறுக்கு விசாரணைகள்,பரிகாசங்கள், கிண்டல் வார்த்தைகள். சாலி கிலுங்கவில்லை, எல்லாவற்றை யும் ஆராய்ந்து விளக்கம் அளித்துவந்தான். இவைகளை உன்னிப்பாய் கவனித்து வந்த முடியப்பன் எல்லோரை யும் ஒரு புறம் ஒதுக்கிவிட்டு, முன்னே வந்து ‘நீங்கள் என் பெண்ணை விரும்புவதாகச் சொல்கிறீர்கள். சாதிக் கட்டுப்பாடு பற்றி துச்சமாய் எறிந்து பேசுகிறீர்கள். நீங்கள் பேசுவதைக் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. கண்டதும் காதல் என்ற கதையாய் இருக் கிறது. இது பருவக் கவர்ச்சியினால் ஏற்பட்ட மோக மென நான் கருதுகிறேன். சும்மாவ்ா, நம்மவர் மோகம் முப்பது நாள் என்று சொல்வார்கள். நீங்கள் மோகம் தணிந்ததும் அவளை நிராகரித்து விடுவீர்கள்.’’ என்று நிமிர்ந்து நின்று கம்பீரமாய்ச் சொன்னான்.
சாலி சிரிப்புடன் 'தலைவரே, ஜாதிக் கட்டுப்பாட்டைப் பற்றி பேசினீர்கள். சமூக வழக்கங்கள் ஜாதிக் கட்டுப் பாடுகள் யாவும் யாரோ சிலரால் தம் சுய நலத்துக்காக வகுத்துக்கொண்ட அரண்கள். இவைகளை உடைத் தெறிவது வீரர்களின் கடமை. உண்மைக் காதல் மனித சம்பிரதாயங்களுக்கு அப்பாற்பட்டது. மனிதன் உள்ளத்தி லிருந்து பாயும் இந்த ஆகர்ஷண சக்தியின் மூல காரணமே பரம ரகசியமாயிருக்கிறது. என் உள்ளத்தில் மாலாவைக் கண்டதும் எப்படியோ உதித்ததுஇக்காதல். இதை எங்கள் பொரியோர், ஏழேழு பிறவிகளாக வந்த தொடர்பு என்று சொல்வார்கள். இந்தக் காதல் கருகி விடாமல் வளர்ப்பதற்கு ஏற்ற சக்தியும் என்னிடம் உண்டு. இதை நான் உறுதியாய் நம்புகிறேன். இது இல்லாவிடில் பிரபஞ்சமே குலைந்து சூன்யமாய்விடும். பிற வஸ்துக்களால் இதை ஆக்கவும் முடியாது, அழிக்க ஆடியாது, ஜாதியும், மோகமுமா எங்களைப் பிரித்து
LbA
அக்கூட்டத்தினர் யோசித்தவண்ணம் ஒன்றும் தோன்றா மல் முடியப்பாவைப் பார்த்தபடி நின்றார்கள். எல்லோ ரும் சாலியின் வார்த்தைகளில் தொனித்த மன உறுதி
44 O கங்கா கீதம் O

யையும், தன்னம்பிக்கையையும் கண்டு பிரமித்துப் போ னார்கள். அவன் வாக்கில் தெரிந்த நேர்மையும் மனோ திடமும் அவர்கள் மனதில் தோன்றிய பயத்தையோ சந்தேகத்தையோ எரித்துச் சாம்பலாக்கி விட்டன.
சில தினங்களில் அவர்கள் குலமுறைப்படி இருவருக்கும் விவாகம் நடந்தேறியது.
O
இப்படி இருக்கையில், அநுராதபுரத்திலே சாஜகுமாரன் காணாமற் போன விஷயம் ஒவ்வொருவர் வாயிலும்அடி பட்டது. ஒவ்வொருவரும் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டனர். நாலு திசையும் குதிரை வீரர், ஒற்றர் முதலியோர் பறந்த வண்ணமிருந்தனர். துட்டகைமுனு வின் மனம் ஆறுதலின்றி தவித்துக் கொண்டிருந்தது. ராஜகுமாரனை நினைத்து நினைத்து மனம் கரைந்து உருகிப் போனான்.
ஒரு நாள் ஒற்றர் சிலர் ஒருவனத்துள் புகுந்து ராஜ குமாரனைத் தேடலானார்கள். ஓரிடத்தில் காட்டை அழித்து புதிய ஒரு கிராமமும் பல குடிகைகளும்தோன்றி வருவதைக் கண்டனர். அங்கு நேரில் போய் பார்த்த போது சாலியைக் கண்டு விட்டார்கள். ஒடிப்போய்அவர் பாதங்களில் வீழ்ந்து 'ராஜகுமாரரே, சென்ற பல மாதங்களாய் உங்களை எங்கெல்லாம் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம். மகாராஜா தங்களைக் காணாமல் மனம் உடைந்து, ராஜாங்க விஷயங்களைக் கவனிக் காமல் அலட்சியப்படுத்தி வருகிறார். அரண்மனைக்கு எழுந்தருள வேண்டும் பிரபு' என்று மன்றாடினர்.
அசோகம்ாலாவுக்கு உலகமே கவிழ்ந்து விட்டது போல் இருந்தது. சாலி ஒரு ராஜகுமாரன்! அவள் தலை கிறு கிறுத்தது. புயலில் ஆடும் தளிர் போல் மனம் பதறியது. சாலியின் பாதங்களில் வீழ்ந்து 'பிரபுவே என்ன காரியஞ் செய்து விட்டீர்கள். இப்பொழுதே தாங்கள் அரண்மணைக்குச் சென்றுவிடுங்கள். என்னைப் பற்றிய யோசனையே வேண்டாம். கரட்டில் மலர்ந்த 'முல்லை மலர் வாடிப்போனா யர்ருக்கென்ன? நான் உயிருடன்
O சி. வைத்தியலிங்கம் O 45

Page 25
இருப்பதில் தங்க்ளுக்கு ஏதேனும் ஆபத்தென்றால் என் உயிரையே விடத்தயாராகியிருக்கிறேன்’’
ஆனால் ராஜகுமாரனின் மனத்திடம் குலையவில்லை. அவளை அணைத்தவண்ணம் ‘மாலா நீ வாயில் வந்த தெல்லாம் பேசுகிறாய். என் வாழ்க்கைத் தெய்வமாகிய உன் முன்னிலையில் ராஜபோகமும், செல்வச்சிறப்பு களும், புகழும் எம்மாத்திரம். நீ அநாதையாய் ஏழ்மை யில் அலைந்துதிரிவது. ஆனால் நான். நினைக்கும் போதே என் தலை வெடித்து விடும். முடியவே முடி யாது’ என்று கூறி ஒற்றரைத் திருப்பி அனுப்பிவைத்
தான்.
இந்தச் செய்தி மகாராஜாவுக்கு ஒற்றர்களால் தெரி விக்கப் பட்டது. இதைக் கேட்டதும் அவன் அதிர்ந்து போனான். மாசு மறுவற்றிருந்த தன்வம்சத்துக்கு களங் கம் உண்டாவதற்கு தன் உதிரத்தில் தோன்றிய குமாரனே காரணமாயிருந்தான் என்ற பழிச்சொல்லை அவனால் நினைக்கவும் முடியவில்லை. கோபா வேசனாகி இருவரையும் கொலை செய்து விடுவதென வனத்தை நோக்கிப் புறப்பட்டான்.
துட்டகைமுனு குடிசையை அடைந்த சமயத்தில் அசோகமாலா தங்கள் வயல்பரப்பில் வேலை செய்த வண்ணம் நின்றாள். சாலி ஓரிடத்திலும் ஒய்ந்து நில்லாமல் வயல் எங்கும் பம்பரமாய்ச் சுற்றிவந்து வனவாசிகளைத் தங்கள் கருமத்தில் உற்சாகப்படுத்தி ஊக்குவித்துக் கொண்டிருந்தான், சிலமாசங்களுக்குமுன் காட்டுப் பகுதியாயிருந்த பகுதியில் மரங்கள் யாவும் அழிக்கப்பட்டு நிலம் உழுது செப்பனிடப்பட்டிருந்தது, ஆதிவாசிகள் பண்படுத்திய நிலத்தில் தானிய வகை களையும், காய்கறிவகைகளையும் புதிதாய் நாட்டியிருந் தனர், வயல்களில் நெல்வயல்கள் புதுமண்ணில் ஓங்கி வளர்ந்தன. மக்கள் கூட்டம் தேனீக்கள் போல் சுறு சுறுப்புடன் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். பசுக்கூட் டங்கள் புல்வெளியிலே மேய்ந்து வந்தன. சாலியின் ஓயாத உழைப்பினால் அவ்வளவும் ஒரு அழகிய கிராம மாக மாறியிருந்தது.
46 O கங்கா கீதம் O

தூரத்திலிருந்தே, சாலி தந்தையை அடையாளம் கண்டு கொண்டான், சாலி-மாலா இருவரும் மகாராஜாவை எதிர்பார்த்திருந்தவர்கள். என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் ஓடோடி வந்து, அவர்பாதங்களில் வீழ்ந்து விட்டார்கள். அரசன் நெகிழ்ந்து போனான். சாலி தந்தையைப் பார்த்த வண்ணம் அமைதியாய்நின்றான். அவன் பார்வை தந்தையின் அந்தக்கரணங்களைத் துடிக்கச் செய்து விட்டன.
மாலா எழுந்து நின்று, “ ‘பிரபு, எங்களை மன்னிக்க வேணும். நானோ ஏழை. சண்டாள குலப்பெண். நான் செய்திருக்கும் குற்றத்துக்கு மன்னிப்பே கிடையாது. இராசகுமாரரின் நெஞ்சைக் கவர்வதென்றால் பாரதூர மான குற்றமே. ஆனால் பிரபு, அவர் ஒரு ராசகுமார னென்று தெரிந்திருந்தால், உயிர் போவதானாலும் இந்த விவாகத்துக்கு இசைந்திருக்க மாட்டேன். இந்தக் கணமே அவரை அழைத்துச் செல்லுங்கள் சாமி' எனறாள.
'முடியாது. அரசும் வேண்டாம். மணிமுடியும் வேண் டாம்.’’ அவன் மனோதிடம் முகத்திலே பிரதிபலித்தது.
துட்டகைமுனு நீண்டநேரம் ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்தான். தன் யெளவனப் பிராயத்தில் "கலு மெனிக்கா" என்ற குடியானப் பெண்ணுடன் தான் நடத்திய காதல் வாழ்க்கை அவன் நினைவுக்குவந்தது. ஒரு பெருமூச்சுடன் தன் குதிரையில் ஏறிக் கொண்டான். போகும் போது தன் குமாரனைப் பார்த்து 'மகனே, உங்கள் காதலின் ஆழத்தையும், அசோகமாலாவின் பொருட்டு நீ செய்யும் தியாகத்தின் மாண்பையும் நினைத்து நான் பெருமை அடைகிறேன்.’’ என்று சொல்லும் போது அவன் நெஞ்சம் உடைந்து கண்ணி ராய்ப் பெருகத் தொடங்கிவிட்டது.
அந்தி மயங்கும் சமயம்.
பண்ணையிலிருந்து வீடுதிரும்பும் அக்கிராம வாசிகள் சிலர் ஒரு நாட்டுப் பாடலைப் பாடியவண்ணம் தம்
O சி. வைத்தியலிங்கம் O 47

Page 26
குடிசைகளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். பசுக் கூட்டங்கள் தம் தொழுவத்தை நோக்கி மெல்ல அசைந்து வரும்போது கழுத்தின் மணியோசைமெல்லிய தாய் ஒலிக்கின்றது. சாலியின் குடிசையில் அசோகமாலா ஏற்றிய தீபம் சுடர் பரப்பி எரிந்துகொண்டிருக்கிறது. அதன் பின்னர் இரவு வந்தது.
கலைமகள் 1940
48 O கங்கா கீதம் O

நந்தகுமாரன்
அரண் மனையைவிட்டுப் பூங்காவனத்திற்கு வந்திருந்த இளவரசன் நந்தகுமாரன் விளையாட்டுக்களையும் கேளிக்கைகளையும் வெறுத்து இன்று ஆழ்ந்த யோசனையில் இருந்தான். நடனமாடி அவனை இன்ப வெள்ளத்தில் முழுக்காட்டி வரும் நாட்டிய மாதரும் ஒய்ந்து மாந்தோப்பிலே தூங்கிக் கிடந்தார்கள். அவன் தன் பணியாட்களை அமைதியாயிருக்கும்படி முன் னொரு போதும் பணித்ததில்லை. ஆனால் இன்றோ, அப்படி ஆணையிட்டிருந்தான்.
அச்சமயம், சமீபத்தில் இருந்த கபிலவஸ்து நகரத்தில் இளவரசனின் விவாகத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் வெகுமும்மரமாய் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அரண்மனை எங்கும் சோகத்தின் கரிய நிழல் பூரண மாய் வீழ்ந்திருந்தது, மணி முடியையும், செங்கோலை யும் துறந்து, கையில் பிக்ஷாபாத்திரம் ஏந்திய வண்ணம் சித்தார்த்த குமாரர் தவக்கோலம் பூண்டுவிட்டார் என்று அறிந்து கொண்ட அன்றே, கிழ அரசராகிய சுத் தோதனருடைய நெஞ்சம் அதிர்ந்து போயிற்று. அதன் அதிர்ச்சி இன்றும் குறையாமல், சுத்தோதனர், துக்கத் தின் எல்லையைக் கண்டு கொண்டிருந்தார்.

Page 27
இந்தத் துக்கத்தைப் போக்கடிக்க எண்ணிப் போலும், நந்தகுமாரனுடைய விவாஹத்தை அதிவிமரிசையாய்க் கொண்டாட வேண்டுமென்று எண்ணினார் அவர். கலங்கிப் போயிருந்த தேச மக்களின் மனத்திலே திரும்ப வும் குதூகலத்தைக் கொண்டுவந்து விடலாமென்று நினைக்கலானார். முன்னர் சித்தார்த்தரை மக்கள் எவ்வளவு தூரம் நேசித்தார்களோ, எவ்வளவு தூரம் அவரைநம்பிக்கையுடனும் பயபக்தியுடனும்எதிர்நோக்கி இருந்தார்களோ அதற்கு ஈடாக நந்தகுமாரனையும் ஜனங்கள் வரவேற்க வேண்டுமென்பது சுத்தோதனரின் பெரும் விருப்பம். ஆனால் அது முடியாத காரியமென்ப தும் அவருக்கே தெரியும். இந்த நினைவே அவருக்கு இளைப்பையும், கிலேசத்தையும் கொடுத்தது.
நந்தகுமாரன் பூங்காவனத்தில் நிறுவியிருந்த லதா கிருகத்தில் இருந்து கனவுலகத்திலே சஞ்சாரஞ் செய்து கொண்டிருந்தான். அவனுடைய போக்கு முன் எப் போதும் இல்லாதபடி புதுமையாய் இருந்ததால் நாட்டிய வனிதையர்க்கு விசித்திரமாய்ப்பட்டது. திகைத்துப் பயந்தே போனார்கள். அவர்கள் என்ன பிழையைச் செய்து விட்டார்கள்? நாட்டியத்தை நிறுத்தும்படி அவன் ஏன் கட்டளை கொடுத்தான்?
ஆனால் இருவாலிபர், கை கோத்தவண்ணம் புன்னகை யுடன் இளவரசனிடம் போய், தாழ்ந்த குரலிலே அந் நியோந்நியமாய்ப் பேசத் தொடங்கினர். இவர்களைக் கண்டதும் இளவரசனின் மனம் இளகி பிரகாசிக்கத் தொடங்கியது. ஆனால் ஒருகூடினம்தான். புஷ்பித்திருந்த மாந்தோப்பிலே காற்று சலசலத்தது. பூவின் பொன் இதழ்கள் நடன மாதர் மேல் வீழ்ந்து கொண்டிருந்தன. செண்பகப் பட்சிகள் மேலே சில்லென்று பறந்தன. நந்தகுமாரன் அவர்களை விறைத்துப் பார்த்து விட்டு அப்புறம் போகும்படி கட்டளை கொடுத்தான்.
'பாவம் வேணுவும், சுமதி பாலனும் . அவர்கள் மனம் எப்படித் தாங்கும்' என்று சொல்லிக் கொண்டார்கள் நாட்டியப் பெண்கள். எங்கும் அமைதி நிலவியது.
ராஜகுமாரன் யோசனையில் ஆழ்ந்திருந்தான். மரங்
50 O ag iarsis áfagth O

களின் நிழல் நீண்டு கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல சூரிய கிரணங்களின் உக்கிரம் தணிந்துவர எல்லோர் மனசிலும் இருந்த இறுக்கம் குறைந்து மன மும் இலேசாகியது. அவர்கள் ஒரு பிழையும் செய்ய வில்லை. ராஜகுமாரனை ஏதோ ஒர் சோகம் வாட்டி வருகிறதென உணரலானார்கள். மாந்தோப்பிலே இருந்த நடன மாதர் பகற்கனவு காணத் தொடங்கி னர். பணியாட்கள் தாழ்ந்த குரலிலே பேச்சுக் கொடுத் தனர். "ராஜகுமாரனின் வியாகுலத்துக்கும், யோசனைக் கும் காரணம் என்ன? அன்று சுயம்வரத்திலே கண்ட இளவரசியின் எண்ணமாயிருக்குமோ?.
வேணுவும் சுமதிபாலனும் அவ்விடத்திலிருந்து நழுவிச் சாலமரங்கள் அடர்ந்த தோப்பிலே அலைந்து திரிந்த தனர். நந்தகுமாரன் சிந்தனை கலைந்து சுற்றிலும் பார்க்கலானான். எல்லோரும் உறங்கிக் கொண்டிருந் தார்கள். அரைத் தூக்கத்திலே இருந்த சிலர் விரைவாய் எழுந்திருந்து ராஜகுமாரனுக்குப் பாலும் பழமும் கொண்டு வந்து வைத்தனர். அவைகளை அவன் மன மார உண்டதும் மனம் ஆயாசம் தீர்ந்து உற்சாகமாய் இருந்தது. வேணுவையும் சுமதிபாலனையும் கூப்பிட்டுப் பார்த்தான். அவர்களை விரட்டியதற்காக இப்போது துக்கப்பட்டான். ஆனால் அவ்விடத்தில் அவர்களைக் காணவில்லை. நாட்டியப் பெண்கள் பயத்துடன் தங்கள் மருண்ட கண்களால் ஒருவரை ஒருவர் பார்த்து விழித் தனர். அப்பொழுது அவர்களில் ஒருத்தி ‘இன்னிசை யுடன் நடனம் செய்வோமானால் வீணையின் கம்பீர நாதத்தையும், புல்லாங்குழலின் மனோஹர ஓசையை யும், மிருதங்கத்தின் முழக்கத்தையும் கேட்டு அவர்கள் ஓடி வருவார்கள்’’ என்று சொன்னாள். அவள் சொன்னதை ஆமோதிப்பது போல் ராஜகுமாரனின் முகமும் மலர்ந்தது.
உடனே இன்னிசைக் கருவிகளின் நரம்புகள் தெறித் தன. நடனம் ஆரம்பமானது, இளவேனிலுக்குரிய நடனம் அது. பரவசமூட்டும் கீதங்களுடன் காமவேட்கை யை எழுப்பும் அபிநயமும் கலந்திருந்தது. இந்த அற் புத நடனம் தொடங்கிய சில நிமிஷங்களில் வேணுவும், சுமதிபாலனும் ஓடி வந்தார்கள்.
O சி. வைத்தியலிங்கம் O 51

Page 28
அவர்களைக் கண்டதும் நந்தகுமாரன் கலங்கியகண் களுடன் அவர்களைத் தழுவித் தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான்.அவர்கள் என்னசொல்வதென்று தோன்றாமல் ஆச்சர்யத்துடனும் பயத்துடனும் அவனைப் பார்த்துத் தாழ்மையாய் இனிய குரலிலே, ‘ராஜகுமாரனே! தாங்கள் எங்களை அவமதித்து ஒதுக்கிய போதிலும் தங்களைத் தேவலோகத்து இந்திர
னாகவே என்றும் மதிப்போம்" என்று சொன்னார்கள்.
ராஜகுமாரன் சிரித்துக் கொண்டு 'தேவர்கோனாகிய இந்திரன் துக்கம் என்பது இன்னதென்று அறியாதவன். அவன் சதா இன்பசாகரத்திலே மூழ்கியிருக்கிறான். அவனது இன்பலீலைகளே ஆகாயம் போல் பரந்தவை, நக்ஷத்திரக்கூட்டங்களைப் போல் கணக்கற்றவை. என் னுடைய முழுவாழ்வும் அவனுடைய சுவர்க்கானுபவ வாழ்க்கையின் ஒருகூடிணப் பொழுதென்று சொல்லலாம். அவனுடைய உலகத்தில் வாழும் தேவ கன்னியர் மானிடப் பெண்களிலும் பேரெழில் வாய்த்தவர்களாம். மாளிகைகள் கண்கொள்ளா வனப்பு வாய்ந்தவையாம். நத்தவனங்களும், சங்கீதமும் -ஆ, அவைகளின் இனிமையை எப்படியென்று வர்ணிக்கவே முடியா தாம்'
அப்பொழுது சுமதிபாலன் ' ராஜகுமாரனே, அன்று சுயம்வரத்தில் ஜனபத கல்யாணியைக் கண்ட பின்புமா இப்படிப் பேசுகிறீர்கள்? அவளின் ரூப செளந்தர்யத்துக்கு இணையானவர்களை இந்த உலகத்தில் அல்ல, தேவ லோகத்திலும் காணமுடியுமா? நான் அவளை அன்று பார்த்தபோது பொறி கலங்கி உணர்வழிந்து போனேன். உண்மையைச் சொல்லுகிறேன். உங்களைப் போல் பாக்கியசாலி உலகில் எங்கும் இருக்கமாட்டார்' எனறான.
ாாஜகுமாரன், அவனைப் பார்த்துச் சிரித்த வண்ணம் ‘'என் நண்பா, நீ தெரியாமல் பேசுகிறாய். நான் அதற் காக உன் மேல் இரக்கப்படுகிறேன். நீ தேவேந்திர னுடைய சுவர்க்க பூமிக்குப் போயிருக்கிறாயா?" என்று கேட்டான். உடனேவேணு 'சுமதிபாலன் உண்மையை யே சொல்லுகிறான். எங்கள் பிரபுவாகிய தாங்கள்
52 O கங்கா கீதம் O

அனுபவிக்கும் இன்பவாழ்க்கையை விட மேலான சுவர்க் கானுபவம் இருக்குமென நான் நினைக்கவில்லை.”*
**உங்களுக்குப் புத்திபுகட்டி, நல்வழிப்படுத்த என் அண்ணன்...' நந்தகுமாரன் சட்டென மெளன LDT 60rs'6ör.
சித்தார்த்தரை நினைத்துவிட்டால் ஒரு விசிந்திரமான மனோ சஞ்சலம் அவனுடைய மனத்திலே தோன்றி விடும். அவன் வெகுநேரம் ஒன்றும் பேசாமல் தூரத்திலே அடர்ந்து வளர்ந்திருந்த வனத்தைப் பார்த்த வண்ணம் நின்றான்.
சுமதிபாலன் வெறுப்புடன் தன் நெஞ்சோடு சொல்லிக் கொண்டான். "ஐயோ, சித்தார்த்த குமாரரைப் பற்றித் தான் சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார். சித்தார்த்தர் போகுமிடமெல்லாம் மனோசஞ்சலத்தையே விதைத்துக் கொண்டு போகிறார். ஜனங்கள் சந்தோஷத்துடனும், மன நிறைவுடனும் இருப்பதைப் பார்க்க அவர் நெஞ்சம் பொறுக்குதில்லை. அரண்மனை முழுவதையும் துக்கத் தில் ஆழ்த்தியது போதாமல் அவர் பாக்கியவானாகிய நந்தகுமாரையும் கலக்கி வெற்றி கொண்டு விட்டார் போல் தெரிகிறது. அவர் உலகத்தைத் துறந்தபின்னர் ராஜகுமாரன் அவரைக் காணாமலே இருந்திருக்கக் கூடாதா?’
O
கபிலவஸ்து நகரத்தில் நந்தகுமாரனின் விவாகத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் இன்னும் முடியவில்லை. சுற்றிலுமுள்ள கிராமங்களிலிருந்து சந்நியாசிகள், பிராமணோத்தமர், கண்கட்டி வித்தைக்காரர் முதலி யோர் நகரத்துக்கு பெருந்தொகையாய் வந்து கொண்டி ருந்தனர். ராஜகுமாரியின் கண் கொளா வனப்பும், கல்யாண வைபவத்தின் ஆடம்பரமும், கோலாகலமும் ஜனக்கூட்டத்தை நகருக்கு இழுத்துக் கொண்டிருந்தன.
சாக்கிய வம்சத்தைச் சேர்ந்த ராஜாக்கள், பிரபுக்கள், குறுநில மன்னர் யாவரும் பவனி வந்து கொண்டிருந் தனர். வரும்பொழுது வெண்ணிறம் வாய்ந்த குதிரை
O சி. வைத்தியலிங்கம் O 53

Page 29
கள், யானைகள், காசி தேசப் புடவைகள், வாசனைத் திரவியங்கள், கங்காநதியின் ஜலம், மாணிக்கங்கள் எல்லாவற்றையும் வெகுமதியாய்க் கொண்டுவந்தனர்
இங்ங்ணம் கபிலவஸ்து நகரம் பொன் கொழிக்கும் தேவேந்திர லோகம் போல் காட்சி அளித்தது.
இப்பேராரவாரம் சமுத்திரத்தின் பேரலை போல் அரண் மனையைத் தாக்க வந்து கொண்டிருந்தது. ஆனால் அவ்விடத்தில் பல கற்பாறைகள் போல் உயர்ந்து நின்ற துக்க சிகரத்தில் பட்டதும் சிதறி மடிந்துபோய் விட்டது.
கிழ அரசராகிய சுத்தோதனர் தம்முடைய அரண்மனைச் சயன அறையில் ஒடுங்கிப்படுத்திருந்தார். முகத்திலே காலம் வரைந்த கோடுகளும், தளர்ச்சியும் கலந்து காணப்பட்டன. வெளியே கொந்தளிக்கும் பிரஜைகளின் ஆரவாரம் செவிகளில் விழவே சித்தார்த்த குமாரன் அரண்மனையைவிட்டு ரதத்தில் போன அந்தச் சம்பவம் நினைவில் வந்தது. அவர் கட்டியிருந்த மனக்கோட்டை கள் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டதை நினைக்கும் போது மனசில் வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் அவரால் தம்மையே நம்பமுடியவில்லை. ‘சித்தார்த்தன் வலிமை யும் பெருமையுமுடையவன். மனிதருக்குள்ளே அவன் அமரன். அவனே பகவான். என்று எல்லோரும் நம்பு கிறார்கள். அவனைப் பார்க்கும்போது ஈஸ்வரனைப் போல் விளங்குகிறான். எவ்வளவு ஆச்சரியமான மாற்றம்! ஜனங்கள் அவனைக் கண்டால் பயபக்தியுடன் பணிகிறார்கள். ராஜாக்களும், போர்வீரர்களும் அவனைப் போற்றுகிறார்கள். அவனுக்குப் பித்தம் தலைக்கேறி விட்டதா? எவரையும் மதியாமல் எழுந்த மாத்திரத்தில் நடந்து சென்றானா? ஆனால் அவன் வாய் திறந்து விட்டால் அழிந்து போகும் அற்ப மனிதனைப் போலவா பேசுகிறான்? அவன் தனது கொள்கைகளை விஸ்தரிக்கும் பொழுது தேவர்களும், அந்த அறவுரைகளை கேட்க வந்து விடுகிறார்களாமே!
சுத்தோதனர் இங்ங்னம் யோசித்துக் கொண்டு ஆயாச மிகுதியால் எழுந்து மாளிகையின் அந்தப்புரத்தையும் கடந்து வெளிமண்டபத்தை அடைந்தார். பணியாட்கள், நடனமாதர், ராஜபுத்திரர் குறுநிலமன்னர் யாவரும்
54 O கங்கா கீதம் O

அவரைக் கண்டதும் வணக்கம் செய்தனர். ஆனால் அவர்களைச் சஞ்சலம் நிறைந்த கண்களுடன் பார்த்து விட்டுப் பார்க்காதவர் போல் போய்க் கொண்டிருந்தார். நேரே, ராஜசபை மண்டபத்துக்குப் போனார். அப் பொழுது அந்திநேரம். ஆகாயம் வர்ணவிசித்திரத்துடன் அஸ்தமிக்கும் சூரியனுக்கு விடை கொடுத்துக் கொண் டிருந்தது, அப்பெரிய நகரத்திலிருந்து வந்த ஆரவாரம் காதில் மென்மையாய் விழவே அவருக்குக் களைப்பாய்
இருந்தது.
O
நந்தகுமாரன் தனது பூஞ்சோலையிலே தங்கி உலக ராஜ்யங்களிலே காணமுடியாத இன்பங்களைச் சுவைத் துக் கொண்டிருந்தான். அற்புதலாவண்யம் பொருந்திய கன்னியர் அவனைச் சூழ்ந்திருந்தனர். இன்னிசை விற்பனர் இசையமுதத்தை வாரி வழங்கிக் கொண்டிருந் தார்கள். அழகும் வனப்பும் வாய்ந்த இடங்களிலே அவன் தன் காலத்தைக் கழித்து வந்தான். அவனுடைய உத்தி யான வனத்திலே இருந்த நீர் நிலைகளும், கமலமலர்ப் பொய்கைகளும் அந்நாட்டிற்கே ஒரு அதிசயம். நந்த குமாரனின் வாழ்க்கை ஒர் இன்பக் கனவு போல் தான்
இருந்தது.
இளவேனிற் காலத்தின் உஷ்ணமான நாட்களிலும், சந்திரிகையும், விண்மீள்களும் வேறுபாடில்லாமல் ஒரே பொருளாகத் தோன்றின. அவற்றால் அவன் மனசும் இளைத்துவிட்டது. புதுப்புது இன்பங்களைச் சுவைக்க வேண்டுமென்று இதயத்திலே தீராத விடாய் தோன்ற லாயிற்று. தெய்வீகமான இன்பங்களைப் பற்றியும் அங்கே நடமாடும் அப்ஸர ஸ்திரீகளைப் பற்றியும் எண்ணிஎண்ணி அவன் மனம் அலையலாயிற்று.
சுவர்க்கத்திலே அனுபவிக்க முடியாத இன்பங்கள் வேறெங்கே இருக்கப்போகின்றன. உலகத்திலே அவன் சுவைக்கக் கூடிய மதுமுற்றிலும் வற்றிப் போய்விட்டது. ஆனால் சுமதிபாலன் அப்படி நினைத்தானா? ஜனபத கல்யாணியின் நிகரற்ற அழகு தேவருலகத்திலும் கிட் டாது என்று சொல்லிக் கொண்டு வந்தான். நந்தகுமார
O சி. வைத்தியலிங்கம் O 55

Page 30
னும் அவன் சொல்வதை அலட்சியஞ் செய்யாமல் கேட்டுக் கொண்டிருந்தான். நாளடைவில் அவன் சொல்வதில் உண்மையிருக்கலாமென நம்பலானாள். ஈற்றில் அவள் கை புனைந்தியற்றாக்கவின்பெறு வனப் பினள் எனக் கருதி தனது கல்யாண வைபவத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தான்.
சித்தார்த்தருக்கு நேர்ந்த கதி இவனுக்கும் நேர்ந்து
விடுமோ என்று அஞ்சி, வேண்டிய பாதுகாப்புகளை ஏற்படுத்தி வந்தான் சுமதிபாலன். அவனுடைய கண் களுக்கு ஒரு பேராபத்து தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது; கெளதமமுனிவர்,- ஆம் அவரிடமிருந்து வரக்கூடிய பேராபத்து. ஆகவே அவன் புதுப்புது வேடிக்கைகளையும், விளையாட்டுக் களையும் கண்டுபிடித்து அவைகளிலே ராஜகுமாரனை லயித்திருக்கும்படி செய்யலானான்.தன்னுடைய தமைய
னாராகிய கெளதமரைக் காண வேண்டுமென்று நந்த குமாரன் சொல்லும்போது சுமதிபாலன் நடுங்கிப் போவான்.
மனிதன் தன்மனத்தையே கட்டாமுடியாமல் சிலவேளை களில் தவிக்கிறான். அப்படியிருக்க ஒருவன் மற்றொரு வனுடைய மனோவேகத்தைக் கட்டுவதென்பது சாத்திய மான காரியமா? வேணுவும் சுமதி பாலனும் கையாண்ட வழிகளெல்லாம் நந்த குமாரனின் மனதை அடியோடு கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டன. கல்யாண நாளுக்கு முதல் நாள் ராஜகுமாரன் எங்கோ மறைந்து
- list GOT.
அன்று யாவரும் பூர்ணசந்திரனுடன் கூடிய இரவில் சந்திரிகையின் ஒளியிலே நந்தவனத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள் ஏரிக்கரையில் நின்ற மூங்கில் மரங்கள் சினேகிதர்மூவரையும் மயக்கிஇழுத்தன. பற்பல கதைகளைச் சொல்லிக் கொண்டு வேறு வேறு விஷயங் களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தவர்கள் அந்த இடத் திலேயே அயர்ந்து தூங்கிவிட்டார்கள். வேணுதான் முதன் முதல் எழுந்திருந்தவன். கிழக்கு வெளுத்து மரங்களும் கொடிகளும் பனிநீரிலே தோய்ந்து கிடந்தன. எங்கும் ஆழ்ந்த அமைதி.
56 O கங்கா கீதம் 0

வேணுவுக்கு வியப்பாய் இருந்தது. நாம் எங்கே இருக கிறோமென்று ஆச்சர்யப் பட்டான். இரவில் நடந்த காரியங்கள் யாவும் நினைவில் வர குதித்தெழுந்து அங்கும் இங்கும் ஓடினான். சுமதிபாலன் மாத்திரம் மூங்கில் தோப்பில் தூங்கிக் கொண்டிருந்தான். நந்த குமாரன் எங்கே?
வேணு, சுமதிபாலனை எழுப்பினான். இருவரும் இராச குமாரனைத் தேடினார்கள். சூரியன் உதித்து அநேக நாழிகை தேடியும் அவன் அகப்படவில்லை. அவர்கள் பயந்து கொண்டிருந்த சமயத்தில் தூாத்திலே ஒரு அசோகவனத்தில், காவியுடை தரித்த சில துறவிகள் நிஷ்டையிலே இருப்பது தெரிந்தது. அப்பொழுது சுமதி பாலன் "ஐயோ வேணு, நான் இறந்து போனால் நல்லது போல் தோன்றுகிறது. நம் ராஜகுமாரர் சித்தார்த்தரைக் கண்டு விட்டார் என நினைக்கிறேன்' என்றான்"
‘‘நண்பா, தைரியமாயிரு, அவர் வெகுதூரம் போயிருக்க மாட்டார். இன்னும், நாம் அவரைக் காப்பாற்றி விட லாம்.’’ இப்படிச் சொல்லிக் கொண்டு இருவரும் துறவி கள் இருந்த இடத்தை நோக்கி ஓடினார்கள். சமீபத்தில் இருந்த ஒரு சந்நியாசியை நெருங்கி கெளதமருடைய ஆசிரமம் எங்கே இருக்கிறதென்று கேட்டனர்.
‘‘அதோ, அந்த ஆசிரமத்தில் இருக்கிறார். ஆனால் நந்தகுமாரன் இப்போ அவருடன் இல்லை’’ என்றார் துறவி.
"அப்படியானால் அவர் எங்கே?'
"அவர் தம் அரண்மனைக்குத் திரும்பி விட்டார். நந்தவனத்தின் ஊடாகச் சென்றிருக்க வேண்டும்.' இருவரும் திரும்பித் துரிதமாய் ஓடலானார்கள். வழி யெங்கும் தூதுவர் ராஜகுமாரனைத் தேடிக் கொண்டி ருந்தனர்.
C
அரண்மனை மஹாமண்டபத்தில் சாக்கிய வம்ச ராஜாக்
O சி. வைத்தியலிங்கம் O 57

Page 31
களும்,சேனாபதிகளும், சூழ்ந்து நிற்க ஜனபத கல்யாணி நந்தகுமாரனை எதிர்பார்த்துக் கொண்டு நின்றாள். ராஜ கன்னியர் அவளுக்குப் பக்கத்தில் சாமரை வீசிக் கொண்டு நின்றனர். கிழ ராஜாவாகிய சுத்தோதனர் மெல்ல மெல்ல நடந்துவந்து தமது சிங்காசனத்தில் வீற்றிருந்தார். ராஜதானியின் மந்திரிகள், பிரபுக்கள், முதலியோர் தம் தம் மனைவியருடன் மண்டபத்தின் இருபுறங்களிலும் நின்று கொண்டிருந்தனர்.
அங்கே கூடியிருந்த ஜனங்கள் ஒரு மணி நேரமாய் எதிர் பார்த்த வண்ணம் அமைதியாய் நின்றனர். புஷ்பங் களின் சுகந்தமும், அகிலின் நறுமணமும் எங்கும் பரந்து கொண்டுவந்தன. ஓயாமல் வீசிக்கொண்டிருந்த சாமரை ராஜகுமாரியின் எரிச்சலைக் கிளப்பியது. எத்திசையை நோக்கினும்,அத்திசையில் நின்ற ஜனங்கள் அவளையே உற்று நோக்கிய வண்ணமாய் நின்றனர். அவள் ஒரு தந்தவிக்கிரகம் போல் அசைவற்று நின்றாள்.
சுத்தோதன மஹாராஜா ஏதோ கனவு காண்பதுபோல் ஒன்றும் அவருக்குத் தோன்ற வில்லை. சித்தார்த்த குமாரரின் கல்யாணவைபவத்தில் நடந்த சம்பவங்கள் மனத்திரையில் நிழல் போல் வந்து போயின. அவர் நெஞ்சத்தில் புதைத்து வைத்திருந்த உன்னதமான எண்ணங்களும், மனோராஜ்யங்களும் எவ்வாறு சிதறிப் போயின. ஆனால் இந்த எண்ணங்கள் ஒரு கூடிணம் தான். திடீரென தாம் மிகவும் கிழப்பருவத்தை அடைந்து விட்டதாக உணரலானார். ‘சித்தார்த்த குமாரன், என் செல்லப்புத்திரன், மக்களுள் ஒருபெரும்கன். அவன் போதித்து வருவதே சாசுவத மானவை. சூழ்ந்திருக்கும் ஏனைய பொருள் யாவும் கனவு போன்றவையே இங்ங்னம் யோசித்த வண்ணம் ஆயாச மிகுதியால் இளைத்துத்தோன்றலானார்.
அரசிளங்குமாரியாகிய ஜனபத கல்யாணி எதிர் பார்த்து எதிர் பார்த்து ஏமாந்து போனாள்-அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. தன் பாதங்களையே பார்த்த வண்ணம் எவ்வளவு நேரம்தான் அவள் நிற்பாள்? இளவரசர்களும் பிரதானிகளும் ஒருவரை ஒருவர் பார்த்து ''ராஜகுமாரன் எங்கே? இவ்வளவு தாமதம் ஏன்?' என்று மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டனர்.
58 O கங்கா கீதம் O

மண்டபத்தின் இருமருங்கிலும் நின்ற பொது மக்களும் பொறுமை இழந்து முணுமுணுத்துக் கொண்டு நின்ற
s
அச்சமயம், திடீரென பேராரவர்ரம் எங்கும் எழுந்தது, மேளங்கள் முழங்கின, சங்கநாதம் வானைப் பிளந்தது; முரசுகள் அதிர்ந்தன. ராஜகுமாரன் மஹாமண்ட பத்தை நோக்கிவந்து கொண்டிருந்தான்!
இளவரசர்களும், பிரதானிகளும் எழுந்து நின்றனர். வரிசை வரிசையாக நின்ற நாட்டு மக்கள் பேரலைகள் போல் ஆரவாரித்தனர். ராஜகுமாரியைச் சூழ்ந்து நின்ற
தோழிப் பெண்கள் சாமரைகளை வேகமாய் வீசினர்.
ராஜகுமாரியின் முகம், குங்குமம் சிந்தி மலர்ந்து விளங்கி யது. அவளுக்கு இன்பவேதனை, மூச்சு விரைவாய் வரத் தொடங்கியது. ராஜகுமாரன் வரும் திசையைத் திறந்தவாய் மூடாமல் நோக்கி நின்றாள்.
ஆனால் அவன் எங்கே? திடீரென எங்கும் பேரமைதி. மயான அமைதி.
சுத்தோதனர் சிங்காசனத்திலிருந்து மெல்ல எழுந்து நின்றார்.
மஹாமண்டபத்தை நோக்கி வரும் போது சித்தார்த்தர் பிக்ஷாபாத்திரம் ஏந்திய வண்ணம், ராஜகுமாரன் முன் தோன்றினாராம் என்ற வதந்தி ஒரு வாயிலிருந்து மற் றொரு வாயாகப் பரந்து கொண்டிருந்தது.
சுமதிபாலன் ஜனக்கூட்டத்தை விலக்கிக் கொண்டு மகாராஜாவிடம் பாய்ந்து ஓடினான். அவருடைய பாதங்களில் வீழ்ந்து நரபதி, பிச்சைப்பாத்திரத்தை ஏந்திக் கொண்டு நந்தகுமாரர் கெளதமரைப் பின்
09
தொடர்ந்து போகிறார்' என்று உரக்கச் சொன்னான். ಕ್ಲಿಕ್ಹ சொல்லிக் கொண்டு வேகமாய் ராஜகுமாரி
பிடம் போய், 'வாருங்கள், சீக்கிரமாய் வாருங்கள்
ராஜகுமாரி. கீழக்கோடியில் இருக்கும் உப்பரிகைக்கு
O சி. வைத்தியலிங்கம் O 59

Page 32
நீங்கள் என்னுடன் உடனே வரவேண்டும். உங்கள் செளந்தர்யத்தைக் கண்டதும் ராஜகுமாரர் திரும்பி வந்துவிடுவார் ராணி''
தோழிகள் பின் தொடர ஆச்சர்யத்துடனும் திகைப்புட னும் அரசகுமாரி உப்பரிகைக்கு ஓடினாள். அவளுடைய தலை சுழன்றது. நெஞ்சுபடபடத்தது. கால்கள் நடுங் கின. அதில் நின்று தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தாள். அலைபோல் அவள் மார்பு மேல் எழுந்து வீழ்ந்து கொண்டிருந்தது.
கீழே புத்தபெருமான் சாந்த சொரூபியாய்ப் போய்க் கொண்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை. அவரைத் தொடர்ந்து கொண்டிருந்தான் நந்தகுமாரன். சட்டென நின்று ஒரு கணம் மேலே பார்த்தான்.
'ஓ, ராஜகுமாரி அவரைக் கூப்பிடு. உன்னுடைய அழகிலே அவர் மயங்கிப்போனார். இதுதான் தருணம் கூப்பிடு' என்றான் சுமதிபாலன்.
அவள் மெல்ல அவரை நோக்கி 'பிரபுவே, உடனே திரும்பிவந்து விடுங்கள். நம் விவாக வைபவத்தைப் பார்க்க எங்கள் ராஜதானியே காத்துக் கிடக்கிறது' என்றாள்.
ஆனால்.
நந்தகுமாரன் பிக்ஷாபாத்திரத்தை கையில் ஏந்திய வண்ணம் சித்தார்த்தரை தொடர்ந்து போய்க் கொண் டிருந்தான். ராஜகுமாரியின் முன்னால் பனிப்படலம். மேலே கருமேகங்கள். கை கால்கள் குளிர்ந்து சோர்ந்து அவள் கீழே வீழ்ந்திருப்பாள். ஆனால் அவளைத் தோழிமார் அணைத்துக் கொண்டனர்.
கலைமகள் (அக்டோபர் 1940.)
A
60 O கங்கா கீதம் O

ஏமாளிகள்
எங்கள் ஊர் முச்சந்தியிலே ஒரு ஆலமரம் நிற்கிறது. அந்த மரத்தை நாடிப் பட்சிகள் ஓடிவரும். மாலைக் காலத்திலே பிச்சைக்காரரும் அதன் கீழே தங்குவதற் காகவந்து கூடிவிடுவார்கள். அவர்களில் கைக்குழந்தை முதல் குடு குடு கிழவன் வரையில் இருப்பார்கள். நான் அறிந்த நாள் தொட்டு அவர்கள் அந்த மரத்தின் கீழ் தான் தங்கிவருகிறார்கள். மழை காற்று முதலியவை களுக்கும் அவர்கள் வேறிடங்களுக்குப் போவதை நான் காணவில்லை. பலபலவென்று விடிந்ததும் இரைதேடிப் பறந்து போகும் குருவிகளுடன் அவர்களும் வெளிக் கிளம்பி விடுவார்கள்.
எனக்குப் பிச்சைக்காரரென்றால் பிடிக்கிறதில்லை. ஆனால் அவர்கள் வீட்டுக்கு வந்து விட்டால் ஒரு பிடி அரிசியாவது கொடுத்து அனுப்பிவைப்பேன். எப்படி என்பது தெரியாது. அவர்களைக் கண்டதும் என் மனம் மாறிவிடுகிறது. அவர்களுடைய கந்தல் துணிகளும், வரண்டு இருண்ட தோற்றங்களும் எனக்குப் பார்த்துப் பார்த்து சர்வ சாதாரணமாய் போய்விட்டது. ஆனால், அவர்கள் 'அம்மா, புண்ணியம் உண்டு, பிச்சை

Page 33
போடுங்கள் 'தாயே" என்று இரந்து நிற்கும் பொழுது என் கல் மனமும் உருகிவிடுகிறது. பிச்சைக்காரர் "ஐயா, கொஞ்சம்பிச்சை போடுங்கோ’’ என்று கேட்பது மிகக்குறைவு. அவர்கள் பிச்சை கேட்கும் போது ‘அம்மா’’ என்று தொடங்கிவிடவே என்னை அறியாமல் என் மனதில் பல வருஷங்களுக்கு முன் மறைந்த என் அன்னையின் நினைவு வரும். அந்த 'அம்மா’’ என்ற சொல் நெஞ்சிலே பாய்ந்து நரம்பு களைப் பற்றி இழுத்து விடும். அதனாலே அவர்களை ஏசித்துரத்தவும் எனக்குத் தைரியம் வருவதில்லை.
இன்னும் ஒருவகையான பிச்சைக்காரர்கள் இருக்கிறார் கள். இவர்களைத்தான் நான் மனமார வெறுக்கிறேன். எங்கள் ஊரிலே ஆவணி, புரட்டாசி மாதங்களில் அறுவடைக்குப்பின் தானியவகைகள் நிறைய இருக்கும். அயல் கிராமங்களிலிருந்து வேலையில்லாதவர்கள் மாத்திரமல்ல, வேலையுற்றவர்களும் எங்கள் ஊருக்கு வந்து விடுவார்கள். இவர்களைக் கண்டால் நல்ல செருப்படி கொடுத்து அனுப்ப வேண்டுமென்று துடிப் பேன். நல்ல திட காத்திரமான தேகத்துடன் இருபது முப்பது வயது வரையுள்ள வாலிபர்கள் எல்லாம் பிச்சைக்கு வந்தால் யாருக்குத் தான் ஆத்திரம்வராது?
பலதடவைகளில் இவர்களுக்கு ஒன்றுமே கொடாது துரத்திவிட வேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன். ஆனால் அதற்கெல்லாம் எதிரியாக என் பாட்டி வந்து விடுவாள். 'தம்பி, வீட்டுக்குப் பிச்சைக்கென்று வருகிற வர் மனசை நோவப்பண்ணக் கூடாது'. ஏதோ ராம் கொடுப்பது ஒருபிடி அரிசி" என்று என்னுடன் மன் றாடத் தொடங்கி விடுவாள். என்னால் இந்த மூடப் பழக்கங்களை எதிர்த்து நிற்க முடியாமல் அடங்கி விடுவேன்.
நமது பழைய பழக்கவழக்கங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமென்று நான் சொல்லவில்லை. அவைகளில் நம்பிக்கை உள்ளவர்களை மூடர் என்றும் சொல்லமாட்டேன். ஆனால் ‘பாத்திரம் அறிந்து பிச்சை இடு "என்ற நீதிமொழியை நான் எடுத்துச் சொல்லியும், அவர்கள் உதாசீனம் செய்யும்போது எங்கள் சமூகத்
62 O கங்கா கீதம் O

தாரின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிவ தில்லை’
இன்னும் ஒரு வகையான பிச்சையெடுக்கும் கூட்டம் என் நினைவுக்கு வருகிறது. அவர்களே இந்நாட்களில் வீட்டுக்கு வீடு போய் யாசிக்கும் சந்நியாசிகள்’. அவர் களிலும் திடகாத்திரமான தேகத்துடன் கூடிய வாலிபரே அனேகம். இந்துமத சந்நியாசிகளுக்குரிய காவி உடை களைத் தரித்துக்கொண்டு உலகத்தைத் துறந்த அடியார் கூட்டத்துடன் தாங்களும் சேர்ந்து கொள்கிறார்கள். மற்றைய மதங்களைப்போல் எங்கள் இந்து மதத்தில் கட்டுப்பாடுகள் கிடையாது. எவனும் காவிவஸ்திரமும், ருத்திராகூடிமும், கமண்டலமும் தரிக்கலாம். இவர் களுக்கு சுகஜீவனம் நடாத்துவதற்கு இதைப் போல் இலேசான தொழில் வேறென்ன இருக்கப் போகிறது. இவர்களுடைய கூட்டமும் பெருகிக் கொண்டுவருகிறது.
இந்தக் கபட சந்நியாசிகளே பிச்சைக்காரரைப் பற்றித் தீர யோசிக்கும்படி என்னைத் தூண்டியவர்கள். இவர் கள் செய்யும் சமூக துரோகத்தைப் பற்றி என் நண்பர் களுடன் வாதாடி வந்தேன். இந்நாட்களில் நான் நகரத் தில் குடியேறினேன். அதன்பின்னர், நான் பிச்சைக் காரர் பற்றி வைத்திருந்த அபிப்ராயத்தை மாற்ற வேண்டி வந்தது. "அவர்கள் சோம்பேறிகள் அல்ல, பாடு பட்டு உழைத்து ஜீவனம் செய்யப் பயந்தவர்களல்ல,
என்று இப்போ எண்ணத் துண்டுகிறது.
பிச்சைக்காரர்கள் உலகம் தொடங்கிய காலம் முதல் இருந்துவருகிறார்களென சமூகவியலாளர் கருதுகிறார் கள். பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏழைகள், பணக்காரர் காலப் போக்கில் சமூகத்தில் தோன்றியது போல் பிச்சைக்காரரும் தோன்றி ஏழைகள் கூட்டத் துடன் கலந்து வந்திருக்கிறார்கள் என்றும்கொள்ளலாம். பட்டணத்திலே நான் கண்ட பிச்சைக்காரர் உண்மையி லே தங்கள் தொழிலில் அநுபவமும் நல்ல தேர்ச்சியும் அடைந்தவர்கள். அவர்கள் உடைகள் முகபாவங்களை யும் கண்டால் ஒரு சதமாகிலும் வீசாமல் வர மனம் வராது. அவர்கள் மனிதரையும், அவர் தம் உள்ளப் பாங்கினையும் நன்றாக அறிந்திருக்கிறார்கள். மனித இருதயத்தின் நரம்புகளில் எந்த நரம்பைத் தெறிக்க
O சி. வைத்தியலிங்கம் O 63

Page 34
வேண்டுமென்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.
நான் காரியாலயத்துக்குப் போகும் வழியிலே ஒரு பிச்சைக்காரக் கிழவன் எப்பொழுதும் இருப்பான். நான் அவனைச் சந்தித்த முதல் நாள் என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டினான். ஒரு சதம் எறிந்து விட்டுச் சென்றேன். இப்படித் தினமும் பல்லைக் காட்டிக் கொண்டு நிற்பான். இடைக்கிடை ஏதாவது கொடுத்து வந்தேன். சில சமயம் வேறுபக்கம் திரும்பிப் பார்க்காத வன் போல் போய்விடுவேன். கடைசியில் அவனுக்கு இனிமேல் ஒன்றுமே கொடுப்பதில்லையென்று உறுதி கொண்டு சில நாட்களாய் ஒன்றுமே நான் கொடுக்க வில்லை. ஆனால் ஒரு நாள் நான் போகும் போது என்னை ஒரு பார்வை பார்த்தான். வேறொன்றுமில்லை ஒரு பார்வை! என் மனப்பாறை உருகிக் கரைந்துபோய் விட்டது. அவனுடைய தோற்றம் தரித்திரத்தின் சித்திரம் போல் என்னை உலுக்கிவிட்டது. அவன் ஒன்று மே பேசாவிட்டாலும் அந்தப் பேச்சற்ற வேதனையும் இரக்கமும் தோய்ந்த முகம் என்னைப் பார்த்ததுஇல்லை என் இருதயத்துடன் பேசியது. உடனே என் ‘மணிப்பேர்ஸை"எடுத்து ஒருரூபா கொடுத்துவிட்டேன்.
இந்தச் செய்கையைப் பற்றி நான் நினைத்து மனம் வருந்தாமல் இருந்து விடவில்லை. ஆனால் என் மனம் இரங்கும்படி உணர்ச்சிப் பெருக்குடன் நடிக்க அவன் எங்கே கற்றுக் கொண்டான்? அவன் தன்னுடைய தொழிலிலே அடைந்திருந்த தேர்ச்சியைக் கண்டபின், எனக்குஅவன் மேல் ஒருதனி மதிப்பே ஏற்பட்டுவிட்டது.
இவனைப் போல் பட்டணத்தின் வீதிகளிலே அனேக ரைச் சந்திக்கலாம். அவர்களுடைய நடிப்பு வசியத்திலே என்னைப்போல் ஏமாந்தபலரை நான் கண்டிருக்கிறேன்.
ஒரு குரங்கை வைத்துக் கொண்டு அதற்குஎத்தனையோ வித்தைகளைக் கற்பித்துப் பிச்சை வாங்கும் பிச்சைக் காரர் இருக்கிறார்களே, அவர்களுடைய புத்திக்கூர்மை யையும், வாக்கு வன்மையையும் கண்டு நாம் பிரமித்துப் போகிறோம். இவர்கள் தங்கள் குரங்குகளுடன் சேர்ந்து செய்யும் விளையாட்டுக்களையும், சாகசங்களையும் அனு
64 o கங்கா கீதம் O

பவிப்பதற்கு நம் சமூகத்தில் பலர் இருக்கிறார்கள். இவர்களைப் பிச்சைக்காரர் கூட்டத்திலே சேர்க்க என் மனம் மறுக்கிறது. சமூகத்தில் ஏதோ பயன் தரும் சேவை செய்பவர்களாகக் கொள்ளலாம் ,
ஒரு நாள் நான் வாசிக சாலைக்குச் சென்று கொண்டி ருந்தேன். அப்போ என்னை ஒருவன் சந்தித்தான். நல்லகட்டமைந்த தேகம். கால் சட்டை, ‘டை, மூக்குக் கண்ணாடி எல்லாம் அணிந்திருந்தான். பார்ப்பதற்கு ஒரு செல்வந்தர் வீட்டுப் பிள்ளை போல் தோன்றியது, என்னைக் கண்டதும் 'குட்மார்னிங்' என்று என்னைப் பார்த்து முறுவலித்தான். நானும் "குட்மார்னிங்’ என்று சொல்லிக் கொண்டு என்ன விசேஷம் என்று கேட்பது போல் அவனைப் பார்த்தேன். அவன் கொஞ்சம் நிமிர்ந்து என்னைப் பார்த்து 'நான் களுத்துறையில் இருப்பவன். விசாகப் பெருநாள் கொண்டாட்டத்திற்கு கொழும்பு வந்திருந்தேன். சனக் கூட்டத்தில் என் ‘மணி பiஸ் களவு போய் விட்டது. இவ்விடத்தில் எனக்குத் தெரிந்தவர் எவருமில்லை. உங்களைப் பார்த்தால் எங் கோ கண்ட முகம் போல் தெரிகிறது. நான் திரும்பிப் போவதற்கு ‘பஸ்" பணம் கொஞ்சம் உதவினால்என்றும். நன்றியுள்ளவனாயிருப்பேன் சார்’ என்று ஆங்கிலத்தில் சொன்னான். −
நான் திகைத்துப் போனேன். அவனுடைய நாகரிகமான உடையையும், தோற்றத்தையும், முகபாவத்தையும் கண்டபோது அவன் சொல்வது உண்மைபோல் எனக்குப் பட்டது. உடனே என் சட்டைப் பையைத் துளாவி இருந் ததை அவனிடம் கொடுத்துவிட்டு மேலும் நடந்தேன்.
அப்பொழுது என்னைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு பிக்ஷாக்காரன் என்னிடம் ஓடிவந்து 'அந்த ஐயா, என்ன கேட்டாங்க சாமி' என்று புன்னகைத்த வண்ணம் கேட்டான். நான் நடந்ததைச் சொன்னேன்.
அவன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கி விட்டான். 'ஏன் சாமி, ஒங்களை ஏச்சுப்பிட்டானே களவாணிப் பயல், அவங்க தொழிலே அதுதான் சாமி. அவன் தினமும் மணிபேர்சை தொலைச்சுட்டேன்,கதிரமலைக்கு நேத்தி, அது இதென்று சொல்லி, ஏமாத்தி. p.
O சி. வைத்தியலிங்கம் O 65

Page 35
எனக்கு அங்கே நிற்கவே வெட்கமாயிருந்தது - விரை வாக மறைந்துவிட்டேன்.
ஒரு பிச்சைக்காரன் என்னை ஏமாற்றி விட்டானே என்று நினைக்கையில் எனக்கு வெட்கமாய்த்தான் இருந்தது. ஆனால் பின்னர் நான் இதைப் பற்றித் தீர யோசனை செய்ததில் இதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று எனக்குத் தோன்றியது.அவன் தன் தொழிலை வெகு சாமர்த்தியமாகச் செய்திருக்கிறான். கடைக்காரர் தங்கள் வியாபாரத் தொழிலில் என்னைப் பல தடவை களில் ஏமாற்றியிருக்கிறார்கள். நான் அதைப் பற்றி கவலைப்படவோ, வெட்கிக்கவோ இல்லை. இந்தப் பிச்சைக்காரனும் தன் தொழிலைத் திறம்படச் செய்திருக் கிறான்-அவ்வளவே.
இப்போதெல்லாம் பிச்சைக்காரரைக் கண்டால் அவர் களை மதிப்புடன் நோக்குகிறேன். பிச்சை எடுப்பதும் ஒரு தனிக்கலை. அது எவருக்கும் இலேசில் வந்து விடாது. சிறிது கற்பனையும், புத்தி சாதுர்யமும், வாசாலகமும் வேண்டும். இவைகள் இருக்குமாயின் நானும் ஒரு பிச்சைக்காரனாய்த்தான் வர விரும்புவேன்.
கலைமகள், (சித்திரை 1941 ..)
A.
66 O கங்கா கீதம் O

பூதத்தம்பிக் கோட்டை
"அதோ தெரிகிறதே, பாழடைந்த ஒரு கட்டிடம் , அது என்னவாயிருக்கும்? என்று சுட்டிக் கேட்டார் எங்களுடன் வந்த நண்பர். நானும் தோணிக்காரனும் திரும்பி அத்திசையை நோக்கினோம். தூரத்திலே கடலின் மத்தியில், அடிவானம் சமுத்திரத்தைத் தழுவும் இடத்தில் பிடுங்கி எறியப்பட்ட குன்று போல் ஒரு கட்டிடம் நிமிர்ந்து நின்றது. அவன் பேசாமல் ஆச்சரி யத்துடன் என்னைப் பார்த்துவிட்டு 'இதுதான் தம்பி எங்கள் பூதத்தம்பி முதலியாரின் கோட்டை’’ என்று சொன்னான். பூதத்தம்பியின் கோட்டையா? அப்படி யானால் அவ்விடத்திற்கு தோணியைக் கொண்டு போ' என்றேன். தோணி கடல் அலைகளையும் கிழித்துக் கொண்டு அன்னம் போல் உல்லாசமாய் அத்திசையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
தோணிக்காரன் 'தம்பி இது உங்களுக்குத் தெரியாததே பெரும் புதுமை. இப் பிராந்தியத்தில் எந்தச் சிறுவ னைக் கேட்டாலும் சொல்லுவான். இக்கோட்டைக்குப் பக்கத்திலே போகவும் இத் தீவுப்பகுதியிலுள்ளவர்கள் பயப்படுகிறார்கள். இரவானதும் இங்கே அழுகையும்
s
கூக்குரலும் கேட்டவண்ணமிருக்குமாம்' .

Page 36
தோணிக்காரன் சொல்லிக் கொண்டு வந்த விபரங்களில் என் மனம் செல்லவில்லை. என் மனம் பின்னே முந்நூறு வருஷங்களுக்கு சென்று கொண்டிருந்தது. குழந்தைப் பருவத்தில் நாட்டுப் பாடலிலும், கூத்திலும் நான் அறிந்த, பூதத்தம்பி முதலியாரை இத்தனை வருஷங் களுக்குப் பின்னர், நேருக்குநேர் பார்க்கப் போவது போன்ற பிரமை என் மனசிலே கிளர்ச்சியையும், ஆவலையும் ஏற்படுத்திவிட்டது.
தோணி கோட்டையைச் சமீபித்ததும் என் நெஞ்சம் துரிதமாய் அடிக்கத் தொடங்கியது. ஓங்கி உயர்ந்து நின்ற அக்கோட்டை பழமையிலே ஒரு உன்னதம் பெற்று மனத்திலே பயத்தையும், திகிலையும் உண்டு பண்ணியது. கோட்டையில் கால் அடி எடுத்து வைத் தோமோ இல்லையோ, வெளவால்களும், ஆந்தை களும் எங்களை வரவேற்பது போல் பயங்கர ஒலி யெழுப்பியவண்ணம் அங்கும் இங்கும் பறந்து கொண் டிருந்தன.
நாங்கள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அங்கே நிலவிய மெல்லிய ஒளியில் பல பகுதிகளையும் சுற்றிப் பார்த்துக்கொண்டு வருகையில், இக்கோட்டையுடன் சம்பந்தப்பட்ட அபூர்வமான நாடகம் ஒன்று என் மனத் திரையிலே நடப்பது போல் இருந்தது. கி.பி 1658 டச்சுக்காரர் யாழ்ப்பாணக் கோட்டையை முற்றுகை இட்டு, போர்த்துக் கீசரிடமிருந்து, கைப்பற்றிக் கொண்டார்கள். தேசத் துரோகிகளும், சுயநலப்பிரியர் களும் மலிந்து நாட்டின் பரிபாலனம், தளர்ந்து விடவே சூழ்ச்சிகளும், கொலைகளும், குழப்பங்களும் யாழ்ப் பாண வாசிகளைக் கலக்கிக் கொண்டிருந்தன. இந்தப் பதினேழாம் நூற்றாண்டின் மத்திய பகுதி யாழ்ப்பாண சரித்திரத்தில் மிகப் பயங்கரமான காலமென்று சொல்ல லாம்.
அப்பொழுது ‘வான்டர் மெய்டீன்" என்பவன், டச்சுக் கவர்னராய் இருந்தான். புதிதாய்க் கவர்ந்து கொண்ட இப்பகுதியில் தங்கள் அதிகாரம் ஸ்திரமாய் நிலை நாட்டப்பட வேண்டுமென்று நினைத்து அதற்கு வேண் டியவைகளைச் செய்யும்படி 'அந்தோனியோ அமரல் மென்சீஸ்' என்பவனை 'கொம்மாந்தனாக நியமித்
68 O கங்கா கீதம் O

திருந்தான். அத்துடன் ‘அந்திராசிமுதலி' என்ற ஒரு சிங்களப்பிரபுவை அவனுக்குக் கீழ் பிரதமகாரியதரிசி யாக நியமிக்கும்படி பணித்திருந்தான்.
ஆன்ால் 'அந்தோனிய அமரால் வேறுவிதமாக நினைத் தான். அவன் அப்படி நினைத்ததற்கும் போதிய காரணம் இருந்தது. அந்தப் பெரிய பதவிக்குப் பூதத் தம்பி முதலியாரே தகுதி வாய்ந்தவர் என்று எண்ணி, அவரையே பிரதமகாரியதரிசியாக நியமித்துவிட்டான்.
பூதத்தம்பி முதலியார் வேளாள குலத்தவரின் பெருந் தலைவர். ஒரு புராதனமான பிரசித்திபெற்ற வம்சத்தி லிருந்து தோன்றியவர். அவருடைய முன்னோர்களில் ஒருவராகிய பொன்பற்றியூர்ப்பாண்டிய அரசகேசரி மழவராயன் என்பவனே சிங்கை ஆரியன் கூழங்கைச் சக்கரவர்த்தியை இந்தியாவிலிருந்து பலவருஷங்களுக்கு முன் கொண்டு வந்து யாழ்ப்பாணத்தில் தமிழர் ராஜ்யத் தை நிலைநிறுத்தியவன். அன்று தொடங்கிய ராஜ வம்சம் யாழ்ப்பாணத்தில் கடைசியாக ஆண்ட பர ராஜ சேகரன் வரைக்கும் அழியாமல் தொடர்ந்து ராஜ்யபரி பாலனம் செய்து வந்திருக்கிறது.
இவை மாத்திரமா? அந்த நாள் தொடங்கி பல தலை முறைகளாய் அவருடைய குடும்பத்தினர் ராஜாங்கத்தில் அதி உன்னத பதவிகள் வகித்து வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் இடையிடையே ராஜவம்சத்தில் விவாகஞ்செய்து ராஜ்யபாரம் தாங்கி, யாழ்ப்பாணச் சிங்கா சனத்தில் வீற்றிருந்ததும் உண்டு.
ஆனால், பூதத்தம்பி முதலியார் பிரதமகாரியதரிசியாக நியமனம் பெற்றதற்கு வேறொரு முக்கியகாரணமு மிருந்தது. சிங்கள நாட்டிற்கும் யாழ்ப்பாண ராஜ்யத் திற்கும் இடையே கிடந்தது . வன்னி என்றஒரு நிலப் பிரதேசம். இப்பகுதியை ஆண்டுவந்த ராஜகுடும்பத்தின ருடன் பூதத்தம்பி முதலியாருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. இந்த எல்லைப்புற மாகாணம் எப்பொழுதும் கலகங்களுடனும். சண்டைகளுடனும் கொந்தளித்துக் கொண்டிருக்கும். வன்னியர்கள் போர்த்துக்கீசரை வெட்ட வெளிச்சமாய் போருக்கு அறைகூவி அழைத்துப் பயமுறுத்திக் கொண்டிருந்தனர். இப்பொழுது எந் நேரத்திலும் டச்சுக்காரரை முறியடிக்க வெளிக்கிளம்பி
O சி. வைத்தியலிங்கம் O 69

Page 37
விடுவார்கள் என்றபயமும் அந்தோனியோ அமராலுக்கு இல்லாமல் இல்லை.
ஆகவே, அந்தோனியோ அமரால் இவைகளெல்லா வற்றையும் யோசித்தே பூதத்தம்பி முதலியாருக்கு அப்பதவியைக் கொடுக்க உறுதி கொண்டான். அவரு டைய செல்வாக்கையும் பூரண ஆதரவையும் பெற்று கொந்தளித்துக் கொண்டிருந்த இப்பகுதியிலே தங்க ளுடைய ஆட்சியைச் சீராய் அமைத்து விடலாமென்று நினைத்தான் அவன் . ஆனால் அந்திராசி முதலிக்கு இவ்வித சிறப்புக்கள் எதுவும் இருக்கவில்லை. அவன் யாழ்ப்பாணத்தவருக்கு அந்நியன் . அவனுக்கும் பூதத் தம்பி முதலியாருக்கும் இடையில் மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் இருப்பதை அந்தோனியோ அமரால் கண்டான். எனவே அந்திராசியைத் தான் பிரத்தியேக காரியதரிசியாக வைத்துக் கொண்டான். ஆனால் பேராசை கொண்ட அந்திராசியின் மனம் இச்சிறுபதவியுடன் நிறைவு பெற வில்லை.
வாய்க்குக் கொண்டுபோன பழத்தை அந்தோனியோ அமரால் தட்டிப் பறித்து வேறொருவருக்குக் கொடுத்து விட்டான் என்று நினைக்கவே அந்திராசியின் மனம் புகைந்தது. உடனே கொழும்பிலிருந்த "கவர்னர் அவர் களுக்கு ரகசியமாய் ஒரு கடிதம் அனுப்பினான். ‘'நான் தங்களுக்கு முறையிட்டுக் கொள்வதற்கு ஒரே ஒரு காரியம் தான் இருக்கிறது. மாட்சிமைதங்கிய தாங்கள் யாழ்ப் பாணத்தின் பிரதம காரியதரிசியாக என்னை நியமிக்கும்படி பணித்திருந்தீர்கள். ஆனால் "கொம்மான்டன்' அவர்கள் எனக்குப்பதிலாக வேறொரு ‘பிராமணனை' நியமித்திருக்கிறார். அவன் சகோ தரன் ஒருவன் கண்டிராஜாவின் அரண்மனையில் இருக் கிறான். ’’ அக்கடிதத்தில் 'பிராமணன்' என்றது பூதத்தம்பி முதலியாரையே! அந்நாட்களில் கண்டியை அரசாண்டு வந்தவன் ராஜசிங்கன் என்ற சிங்களஅரசன். அவன் அந்நாட்களில் டச்சுக்காரருடன் பகைத்திருந் தான.
இக்கடிதத்தைப்பற்றி பூதத்தம்பி முதலியாருக்கு
70 0 கங்கா கீதம் O

ஒன்றுமே தெரியாது. அந்திராசி தன் மனத்துள் வளர்த்து வரும் பொறாமையையும், மனக்குறையையும் அவர் அறியவில்லை. அந்திராசி எல்லாவற்றையும் மறைத்து அவருடன் சினேகபான்மையாய் நடந்து கொண்டான். நாளடைவில் பூதத்தம்பி முதலியார் அந்திராசியைத்தம் ஆப்த நண்பனாகக் கருதி வந்தார்.
ஒருநாள் பூதத்தம்பி முதலியாரின் மாளிகையில் ஒரு பெரிய விருந்து நடந்தது. அவருடைய மாளிகை இன்றும் நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்கருகில் பாழ டைந்து கிடக்கிறது. அந்த விருந்துக்கு அந்திராசியும்
அழைக்கப்பட்டான்.
அந்திராசி முதலி வேறு ஜாதியைச் சேர்ந்தவர் ஆகை யால் அக்கால வழக்கப்படி அவனுக்குப் பிரத்தியேக மான ஓர் அறையில் உணவு பரிமாறப்பட்டது. ஏனைய விருந்தினர் மாளிகையின் போசன மண்டபத்தில் சாப் பிட்டுக் கொண்டிருந்தனர். அந்திராசி முதலிக்கு இரு வேலையாட்கள் பணிவிடை செய்து கொண்டு நின்றார் கள். பூதத்தம்பி முதலியாரே தம் நண்பனுக்கு
வேண்டியபடி உபசரிக்கலானார் .
சிறிது நேரத்திலே, அவர் வேறு விருந்தினரிடம் போய்
விட்டார்.
அந்த வேளையில் பூதத்தம்பி முதலியாரின் மனைவி யாகிய அழகவல்லி நாச்சியார் விருந்தினர்களிடம் போய்ப் பேசி அளவளாவிக் கொண்டு வந்தாள். அவள் ஆடவரின் உணர்வழிக்கும் வனப்பு வாய்ந்தவள். காற்றி னிலே ஒசிந்தாடும் மல்லிகைக் கொடிபோல் சுற்றிக் கொண்டு வந்தவள், அந்திராசி சாப்பிட்டுக் கொண்டி ருந்த அறையின் வாசலை அடைந்ததும், சிறிது தயங்கி அறைக்குள் பிரவேசித்தாள். அந்திராசியைப் பார்த்து இன்சொலால் வந்தனம் கூறி, அன்புடன் புன்னகை செய்து விட்டு சட்டெனப் போவிட்டாள்.
அந்திராசி அவளுடைய பேரெழிலிலே மயங்கிப் போனான். அவள் அறையில் தோன்றியதும், மின்னல் கொடிபோல் திடீரென மறைந்ததும் அதி துரிதமாய் நடந்துவிட்டதே என்று ஏங்கினான். அவளை அடைய
O சி. வைத்தியலிங்கம் O 71

Page 38
வேண்டுமென்று ஒர் ஆசை நெஞ்சிலே தோன்றி அவனுடைய காமவேட்கையைக் கொழுந்து விட்டெரியச் செய்தது. அவள் இன்னும் சில நிமிஷங்கள் தாமதித் திருக்கக் கூடாதா? அவளை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும், அளவளாவ வேண்டுமென்று அவன் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்து போயிற்று. − w
இப்போ அவன் மனம் சாப்பாட்டில் செல்லவில்லை. ஏதோ சாக்குச் சொல்லிவிட்டு உடனே மாளிகையி லிருந்து போய்விட்டான், பூதத்தம்பி முதலியார் அவன் திடீரெனப் போனதைப்பற்றி வித்தியாசமாய் ஒன்றும் நினைக்கவில்லை.
தன் மாளிகையை அடைந்தும், மனத்தில் மூண்ட காம வெறி அவனைப் பித்தனாக்கி விட்டது. சில நாட்கள் கழிந்தன.
காமப்பித்துக் கொண்டவர்கள் தாங்கள் நினைத்த காரி யத்தை உடனே செய்ய வேண்டுமென்று துடிப்பார்கள். அவர்களால் ஆற அமர யோசித்து கருமம் ஆற்ற முடிவ தில்லை. அந்திராசி தன் இச்சையைப் பூர்த்தி செய்ய உடனே வழிதேடினான். தன் பணியாட்களில் நம்பிக்கை யான ஒருவனை அழைத்து அவனிடம் பொன்னும் ஆபரணங்களும் கொடுத்து அவைகளை அழகவல்லி நாச்சியாரிடம் கொடுத்து விட்டு, அவளைத் தனிமையில் ரகசியமாய் எப்போ, எவ்விடத்தில் சந்திக்கலாம் என்று அறிந்து வரும்படி அனுப்பி வைத்தான்.
அழகவல்லி நாச்சியார் வன்னிப் பகுதியை ஆண்டு வந்த ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவள். கைலாய குமாரவன்னி யரின் சகோதரி. அந்த ராஜகுடும்பத்தினர் அதிபராக் கிரம சாலிகள். அகந்தையும் கர்வமும் இறுமாப்பும்
கொண்டவர்கள்.
அந்திராசி முதலியாரின் பணியாளரிடமிருந்து இந்த அருவருப்பான விஷயத்தை அறிந்ததும் தன் மனதில்ே மூண்டெழுந்த கோபாக்கினியைத் தாங்கமுடியாது. அவளே நடுங்கலானாள். அகங்காரமும் ஆத்திரமும் நிறைந்த வார்த்தைகளினால் அவனைத் தூவித்து, பொன் ஆபரணங்களையும் திருப்பிக் கொடுத்து, ஒரு ஜோடி செருப்பையும், ஒரு விளக்குமாறையும் சேர்த்துக்
72 O கங்கா கீதம் O

கட்டி, அந்திராசியிடம் கொடுக்கும்படி ஆக்ஞை
t'. LT6r.
இதனால் என்ன தீங்குகள் விளையுமோ என்று பயந்து இந்தச் சம்பவத்தைப்பற்றி தன் கணவரிடம் அவள் மூச்சும் விடவில்லை,
தனது வேண்டுகோளை மறுத்து மிகவும் கேவலமாய் தன்னை அவமதித்து விட்டாள் என்று அந்திராசி அறிந்தபோது அந்திராசியின் மனம் வெகுண்டெழுந் தது. உடனே அவன் பழிவாங்கத்தீர்மானித்தான்.
அந்தச் சமயமும் காலமும் சூழ்ச்சி செய்வதற்கு அந்தி ராசிக்கு அனுசரணையாயிருந்தது. நாட்டிலே கலகங் களும், ராஜ துரோகமான காரியங்களும் மும்மரமாய்ப் பரவிக் கொண்டிருந்தன.
பூதத்தம்பி முதலியாரின் செல்வாக்குள்ள நெருங்கிய நண்பர்களுள் அந்தோனியோ அமராலின் சகோதரனும் ஒருவன். அவனும், யாழ்ப்பாணக் கோட்டைத் தளபதி யாகிய சின்ன உலகநாதரும் நெடுந்தீவிலே எழுந்து கொண்டிருந்த கடற் கோட்டையை மேற் பார்வை பார்க் கப் போய் விட்டார்கள். (இக்கோட்டையிலே தான் நான் இப்போ நிற்கிறேன். இதைத் தான் பூதத்தம்பி கோட்டை என்று சொல்லிக் கொள்கிறார்கள்)
இந்தக் கோட்டையைக் கட்டுவதற்கு மரங்கள்தேவையா யிருந்தன. கடிதம் எழுதி அவைகளை வரவழைப்பதற்கு பூதத்தம்பி முதலியாரின் கைச்சாத்து வேண்டியிருந்தது. அந்திராசி ஒரு வெள்ளைக் காகிதத்தைக் கொண்டு போய் பூதத்தம்பி முதலியாரிடம் நீட்டி 'கச்சாயத் துறையிலிருந்து நெடுந்தீவுக்கு மரங்கள் வரவேண்டும். எவ்வளவு மரத்துண்டுகள் தேவைப்படுமென்று எனக்குத் தெரியாது. நான் எல்லாவற்றையும் அறிந்து பின்னர் கடிதத்தை நிரப்பிக் கொள்கிறேன். நீங்கள் கீழே கைச் சாத்திட்டுக் கொடுத்து விடுங்கள்’’ என்று கேட்டான். பூதத்தம்பி முதலியாரின் ஆப்த நண்பராகிய அந்தி ராசியே இங்ங்னம் கேட்டார். அவரும் கைச் சாத்திட்டுக் கொடுத்து விட்டார்.
O சி. வைத்தியலிங்கம் O 73

Page 39
பூதத்தம்பி முதலியார் தமது நண்பனை நம்பி, தனது மரணத்திற்கே கையொப்பம் வைத்துக் கொடுத்து விட்டார்!
அந்திராசி அந்த வெற்றுக் கடிதத்த்ை ராஜதுரோகமான விஷயங்களால் நிரப்பி பூதத்தம்பி முதலியார் கண்டி அரசனாகிய ராஜசிங்கனுக்கு எழுதிய ஒரு கடிதம் போல் ஆக்கிவிட்டான். சின்ன உலகநாதருடனும் சில் போர்த் துக் கீசருடனும் சேர்ந்து யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றுவதற்குத் தாம் உதவி செய்வதாகவும் உடனே டச்சுக்காரரைத் துரத்துவதற்கு ஒரு படை சேனைப் போர் வீரர்களை அனுப்பும்படி கேட்பதாகவும் அக்கடி தம் அமைந்திருந்தது,
அக்கடிதத்தைக் கொண்டு சென்ற தூதன் காவற்கார ரால் பிடிக்கப்பட்டு கவர்னரிடம் கொண்டுவரப்பட்டான். முன்னரே ஒழுங்கு செய்து வைத்திருந்தபடி தூதன் தன் பகுதியை அழகாக நடித்தான். இந்நாடகத்திலே பங்கு கொண்ட ஏனைய பாத்திரங்களும் தங்கள் பகுதியைச் சிறப்பாய் நடித்துவிட்டார்கள்.
அப்பொழுது தேசம் இருந்த நிலைமையும் நடந்து கொண்டிருந்த சூழ்ச்சிகளும் பூதத்தம்பி முதலியாருக்கும், அவர் சிநேகிதர்களுக்கும் பாதகமாயிருந்தன.
நாடு முழுவதும் கலகங்கள் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு வந்தன. ஒரு சிறிய சந்தேகம் இருந்தாலும் நாட்டில் உள்ள ஜனங்களைச் சிரச்சேதம் செய்தனர். டச்சுக்காரர் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்த டச்சுப் போர் வீரர்களிற் பெரும்பாலோர் நாகபட்டணத்துக்குப் போய்விட்டார்கள். எல்லைப் புறத்துக்கு அப்பால் கூட்டில் அடைபட்ட சிங்கம் டோல் ராஜசிங்கன் டச்சுக் காரரைப் பழிவாங்கக் கர்ஜித்துக் கொண்டிருந்தான். இவைகளுடன் பூதத்தம்பி முதலியாரின் சகோதரன் ஒருவன் ராஜசிங்கனின் அரண்மனையில் இருப்பதாக ஒரு வதந்தியும் உலாவியது.
அந்தக் கபட நாடகம், அந்திராசி முதலியாரின் தூண்டு தல், எல்லாம் சேர்ந்து பூதத்தம்பி முதலியார் ராஜ துரோகி என உறுதிப்படுத்தி விட்டன. கவர்னரும் அதை நம்பி விட்டார். அந்தக் கடிதத்தைத் தமக்குப் பல
74 O கங்கா கீதம் O

மாக வைத்துக் கொண்டு பூதத்தம்பி முதலியாரைச் சிரச் சேதம் செய்யும்படி கட்டளை கொடுத்து விட்டார். என்ன அநியாயமான கட்டளை, என்றாலும் அவ்வாணையின் படி பூதத்தம்பி முதலியார் கொல்லப்பட்டார். அழகவல்லி நாச்சியார் இந்த அநியாயத்தைப் பொறுக்கமாட்டாது நஞ்சுண்டு உயிர் நீத்தாள்.
பூதத்தம்பி முதலியாருக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையை, நெடுந்தீவுக் கோட்டையிலிருந்த சின்ன
உலகநாதர் கேள்வியுற்று தமக்கும் இங்ங்னம் நேர்ந்து
விடுமோவென்று பயந்து தற்கொலை செய்து
கொண்டாராம்.
நான் நின்று கொண்டிருந்த அந்தக் கோட்டையிலே சின்ன உலகநாதர் தற்கொலை செய்து கொண்டா ரென்று நினைக்கவே என் உரோமங்கள் குத்திட்டு நின்றன. அந்தக் கோட்டையின் உட்புறத்தில் ஓர் மூலையில், தூண் மறைவில் நின்று யாரோ பல்லைக் காட்டுவது போலவும் எங்கிருந்தோ மணி ஓசையும், கூக் குரலும் சிரிப்பும் அழுகையும் கலந்து அதிபயங்கரமாய் ஒலிப்பது போலவும் உணரலானேன். அப்பொழுது அந்தி ராசி முதலிபோன்ற ஒரு தோற்றம் தூரத்திலே நின்று என்னைப் பார்த்து என்னமாய்க் கெக் கலி விட்டுச் சிரிப் பதுபோல் தோன்றியது- ஆத்திரமும் எரிச்சலும் மேலிட்டு கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து எறியப் போனேன். 'நல்லாய் இருண்டு விட்டது-வா, படகுக்குப் போக லாம்’’ என்று கையைப் பிடித்து இழுத்தான் என் நணபன. ஆம், நன்றாக இருட்டி விட்டது. கனத்த அந்தகாரம் உலகத்தைத் தன் போர்வையால் மூடிக் கொண்டது. வானத்திலே நட்சத்திரங்கள் நிறையப் பூத்திருந்தன. அம்புலியின் இளம் பிறை ஒன்று முகிற் கூட்டத்திலே தொங்கிக் கொண்டு நின்றது. நாங்கள். மெளனமாய் தோணியிலே உட்கார்ந்திருந்தோம்.
நான் என் நண்பனைப் பார்த்துச் சொன்னேன். 'அந்தி ராசி விரித்த வலையிலே பூதத்தம்பி அகப்பட்டுக் கொண் டார் என்று பரம்பரையாகக் கதை இருந்து வருகிறது. ஆனால் இலங்கைச் சரித்திரம் என்ன சொல்கிறது பார். 1658-ல் பூதத்தம்பி முதலியாரும் சில போர்த்துக்
O சி. வைத்தியலிங்கம் O 75

Page 40
கீசரும் இரண்டாம் ராஜசிங்கனுடன் சேர்ந்து டச்சுக்கார ருக்கு எதிராக ஒரு சூழ்ச்சி செய்தார்கள். தெய்வச் செய லாக அந்திராசி முதலியர் என்ற சிங்களப் பிரபு ஒரு வராலே அது கண்டுபிடிக்கப்பட்டது. துரோகிகள் எல் லோரும் கொல்லப்பட்டனர்" என்றல்லவா கூறுகிறது"
நாங்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு நின்ற தோணிக்காரன் 'அப்படியாதம்பி எழுதியிருக்கிறான் வெள்ளைக்காரன். ஏன் பூதத்தம்பி முதலியார் கொல்லப் பட்டதை அறிந்தவுடன் எங்கள் அழகவல்லிநாச்சியாரின் அண்ணன் 656) st குமாரவன்னியர் உடனே கொழும்புக்குச் சென்று கவர்னரைக் கண்டு இவ்விஷயத் தைப் பற்றித் தீர விசாரிக்கும்படி கேட்டாராம். அவர் விருப்பப்படி மீண்டும் தீர விசாரித்த போது அந்திராசி முதலி செய்த சூழ்ச்சிகள் யாவும் வெளிவந்து விட்டன வாம். உடனே கொழும்புக்கு வரும்படி அந்திராசி முதலிக்கு கட்டளை வந்ததும், அவன் கொழும்புக்குப் போகும் வழியிலே யானை அடித்துச் செத்துப் போனா னாம். இந்த உண்மை அந்தப் புஸ்தகத்தை எழுதிய வெள்ளைக்காரனுக்கு தெரியாதா, தம்பி' என்று கேட் டான். தொடர்ந்து 'ஏன் தம்பி தெரியாமலிருக்கப் போகிறது? இக்கதை பரம்பரை பரம்பரையாக வந்து சமீப காலம்வரை யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வன்னிப் பிரதேசத்திலும் கிராமப் புறங்களிலும் நகர்ப் புறங்களிலும் பாட்டிலும் கூத்திலும் மக்களை மிகவும் கவர்ந்து வந்திருக்கிறது. கதையில் உண்மை இருந்தபடி யால் அல்லவா பாமர மக்களும் அதை நினைவு கூர்ந்து தம் சந்ததியினரின் ஞாபகத்தில் இருக்கச் செய்தார்கள். இந்த வெள்ளைக்காரன்கள் சிலர், புத்தகங்களில் உண்மையையே எழுதுவதில்லையாமே'
என் நண்பனும் நானும் மெளனமாய் இருந்தோம். தோணிக்காரன் சொன்னதில் எவ்வளவோ உண்மை யிருந்தது. எங்கள் தோணி பாயை விரித்து யாழ்ப்பாணத் துறை முகத்தை நோக்கித் துரிதமாய்ச் சென்று கொண்டி ருந்தது.
கலைமகள். (1941)
A
76 O கங்கா கீதம் O

விதவையின் இதயம்
**சீ, நான் எவ்வளவு குரூரமாய் நடந்து கொண்டேன். அவள் என் வயிற்றில் பிறக்கவில்லை யென்பது உண்மை. அதற்காக அவளும் என்னைப்போல் சுக போகங்களை அனுபவியாமல் வாழவேண்டுமா? என் மனம் போல் அவள் வாழ்க்கையும் சுடுகாடுபோல் வறண்டு போக வேண்டுமா? நான் அன்று நடந்து கொண்டது எவ்வளவு அரக்கத்தனமானது; துரோக LDT60Tg5...... ) 39
விசாலாட்சியின் மனம் இங்ங்ணம் புலம்பிக் கொண்டிருந் தது.மூன்று நாட்களுக்கு முன் நடந்த கல்யாண ஆரவாரங் கள் குறைந்து வீடு வெறித்துப் போய் கிடந்தது. அன்று நித்தியலக்ஷமிக்கு கல்யாணம் நடந்து கணவனுடன் போய்விட்டாள். அவள் பக்கத்தில் இருந்தால், தன் மன விகாரங்களை அவளுக்குச் சொல்லி மனம் ஆறி யிருப்பாள் விசாலம். அல்லது அவளை வாயில் வந்த படி ஏசியாவது மனம் ஆறியிருப்பாள். இப்போ தனிமை மையில் இருந்து தன்னையே நொந்து, தான் விபரீத மாய் நடந்து கொண்டதை நினைத்து கூசிக்குறுகிப் போனாள்.

Page 41
நித்தியலக்ஷமியின் தந்தை, விசாலாட்சியை இரண்டாந் தாரமாக விவாகஞ் செய்து கொண்டார். அவள் அந் நாட்களில் இந்த வீட்டில் ராணி போல் நடை போட்டுக் கொண்டிருந்தாள். அவள்தான் வீட்டு எஜமானி. அவள் இட்டதுதான் சட்டம். இதெல்லாம் ஐந்து வருஷங்களுக்கு முன்னர்,
தன் ஒரே குழந்தைக்காக, இரண்டாந்தாரமாக விவாகஞ் செய்து கொண்ட அவள் தந்தை, இரண்டு வருஷங் களில் தன் குழந்தையுடன் இன்னும் ஒரு பெண்ணை, விதவையாய்ப் பதைக்க விட்டுச் செல்வாரென்று கனவி லும் எண்ணியிருக்க மாட்டாள். ஆனால் விதி அப்படி இருந்தது. அவர் விவாகஞ் செய்த இரண்டு ஆண்டு களில் இறந்து போனார்.
இப்பொழுது விசாலாட்சி ஒரு விதவை. ஹிந்து தர்மத் தின்படி வெறுத்து ஒதுக்கப்பட்டவள். மலரையும் மாலை யையும் இழந்தவள். ஆனால் யெளவனம் அவளை விட்டுப் பிரியவில்லை. அதை மறப்பதற்குச் சமூகம் கொடிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மாரிக் காலத்து நிலாப் போல் சோபை குன்றி இருந்தாள்.
பூரணமாய் விகாசமடைந்த யௌவனத்துக்கு சுதந்தரம் கொடுத்து விட்டால், அதில் மென்மையும் இனிமையும் தோன்றிக் கொண்டிருக்கும். மனோரஞ்சித மலர்போல் விரும்பிய சுகத்தை வாரி வழங்கி வரும். ஆனால் கூண்டுக் கிளிபோல் சிறைப்பட்டுக் கிடந்தால் அது கொடிய பாஷாணமாய் மாறிவிடும்.
விசாலத்தைப் பாருங்கள். அவள் மனசை ஏதோ ஒரு புழு அரித்துக் கொண்டுவந்தது. அவள் வயதை ஒத்த பெண்கள் வாழ்க்கையின் இன்பங்களைச் சுவைத்து வருவதை அவள் எங்ங்ணம் சகிப்பாள்? காட்டு நிலாப் போல் பொங்கி வழிந்து கொண்டிருந்த அவள் யெள வனம் எவரும் அனுபவிக்க முடியாமல் நெஞ்சில் உறைந்து போய்க் கிடந்தது. அவள் உள்ளத்திலே எரிச்சலையும் ,பொறாமையையும் வளர்த்து வந்தது.தன் ஆத்திரம் முழுவதையும் தீர்ப்பதற்கு அவளுக்கு வேறு
78 O கங்கா கீதம் O

வடிகால் கிடைக்கவில்லை. நித்தியலக்ஷமிதான் கண்ணுக்கு முன்னால் ஒயிலாய் நடந்து வருவாள்.
நித்தியலஷ்மிக்கு வயது பதினேழு-ஒன்றிரண்டு கூடியோ அல்லது குறைந்தோ இருக்கலாம். நாட்டுப்புறங்களிலே ஆடி அசையும் குமுதம் போல், எவரும் தொடாத நறுமணமலர் அவள். இளமையின் பூரிப்பிலே யெளவன லீலைகளை உதிர்த்து நிற்கிறாள். அவளைக் காணும் போதெல்லாம் விசாலம் காரணமில்லாமல் கோபித்துப் பேசுவாள். எதிரியைக் கண்டது போல் எரிந்து விழுவாள்.
வாழ்க்கை மஞ்சளும் குங்குமமும் ஏந்தி நித்தியத்தை வரவேற்றுக் கொண்டு நின்றது. அவள் பாக்கியவதிஅவளுடைய மாமன் மகன் நடனசபாபதி அவளை விவாகஞ் செய்வதாக நிச்சயமாகி இருந்தது. அவள் தான் இனிமேல் இந்த வீட்டு லஷ்மி, விசாலாட்சிக்கு இனி இந்த வீட்டில் அதிகாரம் இல்லை. தான் ஆட்சி செலுத்தி வந்த இடத்தை வேறொருவருக்கு விட்டுவிட அவள் நெஞ்சு பொறுக்கவில்லை.
நித்தியம் இனிமையான சுபாவமுடையவள். ஸ்படிகம்
போல்,தெளிந்த நீரில் பிரதிபலிக்கும் மதிபோல் அமைதி
யானவள். எவர் மனமும் நோகாமல், சகித்து நடக்கும்
இயல்பினள். விசாலத்தை நினைத்து, அவள் தன்னைச்
சிங்காரித்துக் கொள்வதில்லை. பாட்டிசைப்பதுமில்லை. கெக்கலி விட்டுச் சிரிப்பதுமில்லை. புஷ்பம் ஒன்றைக்
கொய்துதான் கூந்தலில் சூடிக்கொண்டு போவாள்.
சட்டெனத் தூர வீசி விடுவாள். விசாலத்தின் மனம்
நோகுமோ வென்று இவைகளைத் துறந்து வந்தாள்.
ஆனால் அன்று அவளுக்கு பெருநாள் போன்ற ஒரு திருநாள். அப்படியான நாள் திரும்பவும் அவள் வாழ்க் கையில் வருமோ, என்னவோ? நித்தியம் தூண்டிவிட்ட விளக்குப்போல், அன்று புதுச்சோபையுடன் விளங்கி னாள். கூந்தலிலே வாசனைத் தைலத்தைப் பூசி, கண்ணாடியின் முன் மணிக்கணக்காய் நின்று, கூந்தலை வாரிப்பின்னி, திரும்பத்திரும்பக் குலைத்து, மீண்டும் பின்னிக் கொண்டாள். நெற்றியிலே அவள் கண்களிலும் பெரிய ஒரு கருந்திலகம், அழகுக்கு அழகு செய்தது.
O சி. வைத்தியலிங்கம் O 79

Page 42
கண்களிலே காந்தச் சுழல் போல் ஒரு வீச்சு. நடையிலே ஒரு ஒய்யாரம்.
வைகளை விசாலம் கவனித்தாள். மனப்புகைச்சலுடன் ‘'நித்தியம் கொஞ்சம் மெல்லம்ாய் நடவடி நடக்கிற நடையிலே வீடே அதிர்ந்து வீழ்ந்து விடும் போல் இருக்கே’’ என்று குத்தலாய்ச் சொன்னாள்.
வழக்கத்திலேயே அவள் விசாலத்தின் மேல் கோபித்துக் கொள்வதில்லை. ஆனால் இன்றோ, நடன சபாபதி வீட்டுக்கு வரப் போகிறான். அவன் வரும் சுபநாளிலே அவளுக்குக் கோபம் எங்கே வரப்போகிறது? விசாலத்தை அன்புடன் பார்த்துக் கொண்டு ‘அத்தான் இன்னும் சில நிமிஷங்களில் வந்துவிடுவார். இங்கே பாருங்கோ, இந்தச் சேலை நல்லாயில்லை. அந்த மேகவர்ணச் சேலையை எடுத்துக் கட்டப் போகிறேன். எனக்கு அது வடிவா யிருக்குந்தானே அம்மா?' என்று கேட்டாள்.
'ஓ, இன்று ஏதோ நாட்டியத்துக்கு ஆயத்தம் போல இருக்கு. அவன் வந்தால் வந்து விட்டுப் போகட்டுமே. அதற்காக இந்த அலங்காரங்களெல்லாம். சீ, நீயும் ஒரு குமர்ப்பெண்ணா? உனக்கு வெட்கம் இல்லை?'
*அவர் தினமும் வரப்போகிறாரா? இன்று ஒரு பொழு தாவது, ஆ, இங்கே பாருங்கோ, சின்னம்மா நான் தலையை கோணலாக வகிடு கிழித்துப் பின்னிப் போட் டேனே! அதைப் பார்த்தால் என்னைக் கேலி பண்ணப் போகிறாரே. '' என்று உரக்கச் சிரித்தாள்.
‘‘மூடடி வாயை, வயது வந்த பெண். அடக்க ஒடுக்க மில்லாமல் தேவடியாள் மாதிரி தலைப்பின்னல் என்ன, சிரிப்பென்ன, சேலைக்கட்டென்ன?"
அத்தருணம் வெளியிலிருந்து யாரோ வரும் அரவங் கேட்டது. நித்தியம் ஓடோடியும் போய் -இல்லை, ஓடிப் போனவள் நடன சபாபதியைக் கண்டதும் வெட்கத்தால் அறைக்குள் ஒடி ஒளிந்து கொண்டாள். நாணத்தால் முகஞ்சிவக்க ஓடி,மின்னலென மறைவதை நடனசபாபதி பார்த்து உள்ளக்கிளர்ச்சியுடன் வீட்டுள் பிரவேசித்தான். சற்று முன்னர் ஓடி ஒளிந்த நித்தியம் சிறிது நேரத்தில்
80 O கங்கா கீதம் O

முகத்தில் புன்னகை தவழ கையில் சிற்றுண்டித் தட்டை ஏந்தியபடி, அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.
விசாலம் அவர்களைக் கடைக் கண்ணால் நோட்டம் விட்டுக் கொண்டு அங்கும் இங்கும் போவதும் வருவதுமாயிருந்தாள்.
விசாலாட்சிக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவனிடம்
ஏதோ குற்றம் குறை கண்டல்ல. யெளவனமும் அழகும் நிறைந்த ஒரு வாலிபன் நித்தியத்துக்குக் கணவனாய்
வாய்த்ததை அழுக்காறு கொண்ட அவள் நெஞ்சம்
விரும்பவில்லை. அதோடு வேறு காரணமுமிருந்தது.
நடனசபாபதியை அவள் விவாகஞ் செய்து கொண்டால்,
அவளுக்கு அந்த வீட்டிலே இருக்கும் அதிகாரம் இல்லா
மல் போய்விடும். அவன் யாரோ அந்நியன்; அவளை
நாயென்றும் மதிக்கமாட்டான் என்று எண்ணினாள் .
சில தினங்கள் கழித்து, அவள் நித்தியத்தை அழைத்து 'நித்தியம், என் குஞ்சு, நீ கல்யாணம் செய்து கொண்டுபோய் விட்டால், நீ இல்லாமல் நான் எப்படி யடி தணிய இந்த வீட்டில் இருப்பேன். வீடே இருண்டு போய் விடுமே, எங்கே அந்நிய ஊரிலே உன்னை யார் கவனிக்கப் போகிறார்கள்?' என்று மில்லாத வாஞ்சை யுடன் அவளைக் கேட்டாள்.
‘'சின்னம்மா, நான் ஒருவருக்கு வாழ்க்கைப் பட்டால் அவர் போகும் இடமெல்லாம் போகத்தானே வேணும். காடாயிருந்தாலென்ன, வனாந்தரமாயிருந்தாலென்ன?”
'அப்படிச் சொல்லாதே, இங்கே பார், நான் சொல் வதைக் கவனமாய்க் கேள். எனது அண்ணன் மகள் செல்வநாயகம் இருக்கிறான், தெரியும் தானே. அவனுக்கு ஊரிலேயே உத்தியோகம். நல்ல குணமும் அழகும் உள்ளவன். இந்த வீட்டிலே உன் அம்மா, அப்பா இருந்த வீட்டிலேயே நீங்கள் இருந்து. 9 தெரிகிறதா, என்ன சொல்கிறாய்?
நித்தியலசஷ்மி திகைத்துப் போனாள். ஆச்சர்யத்துடன் அவளைப்பார்த்து ‘அதெப்படிச் சின்னம்மா, எல்லாம்
O சி. வைத்தியலிங்கம் O 81

Page 43
எல்லாம் நிச்சயமாய் விட்டது. நாங்கள் விருப்பமில்லை யென்று சொன்னால் கெளரவமாயிருக்குமா?"
'உனக்கு விருப்பமில்லையென்று சொன்னால் எல்லாம் முடிந்தது -இதற்கு கெளரவமும் அகெளரவமும் எங்கே வரப் போகிறது? அன்று அவன் வந்தானே, அவன் தோற்றத்தையும், கால்சட்டை தொப்பியையும் பார்த் தாயே, உன் கண்ணால், தோட்டத்து வெருளி மாதிரி ...'
“ ‘அப்படிச் சொல்லாதேங்கோ, சின்னம்மா. நான் தானே அவரை மணக்கப் போகிறேன்.நீங்கள் அல்லவே.
வரையே மணப்பதாக நிச்சயஞ் செய்துவிட்டேன். இனி வேறு ஒருவர் மேல் என் மனசைத் திரியவிடுவது நல்லாயிருக்குமா?’’
சீ, என்ன அசடு மாதிரிப் பேசுகிறாய். அவனிடம் நீ என்னத்தைக் கண்டுவிட்டாய். இது தான் குமர்ப் பெண் கள் பிற புருஷருடன் பேசக் கூடாதென்று பெரியோர் சொல்வார்கள். அவனைக் கண்டு பேசியமாத்திரத்தில் ஏமாறிப்போனாய்."
'இல்லை சின்னம்மா . ஏன் என்னை இப்படி பாவஞ் செய்ய வற்புறுத்துகிறீர்கள். நீங்களும் அவரை அன்று பார்த்தீர்கள். அவர் எவ்வளவு கண்ணியமாய் நடந்து கொண்டார். அவர்மேல் ஏன் வீண் பழி சுமத்துகிறீர்
ssir?'''
'சரி உன்னால் முடியாது? நான் சொல்ல வேண்டிய தைச் சொல்லிவிட்டேன்.இனி உன் விருப்பம். குழந்ண்த நீ, என்னத்தைக் கண்டு கொண்டாய்,அவசரப் படாதே இரண்டொரு நாட்களில் நல்லாய் யோசித்துச்சொல்லு” என்று கூறிய வண்ணம் எழுந்து போய்விட்டாள். நித்தியம் நிலை குலைந்து போனாள். அவள் இதை யாரிடம் போய்ச் சொல்லி மனம் ஆறுவாள். ஒன்றும் தோன்றாமல் மனம்குழம்பி குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
விவாக நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. நித்தியத்
82 0 சுங்கா கீதம் 0

தின் மனதை மாற்றுவதற்குத் தன்னாலான தந்திரங் களைக் கையாண்டு பார்க்கலானாள். அவள் மேல் இப்போ புதிய அன்பு பிறந்து விட்டது, விசாலத்தின் மனதில், நித்தியத்தின் கூந்தலை வாரிப் பின்னி விடு வாள், பூவைக் கொய்து அவள் கூந்தலில் தன் கையா லேயே சூடிவிடுவாள். வீட்டில் வேலைகள் ஒன்றும்செய்ய விடமாட்டாள். நித்தியம் மெல்ல மெல்ல விசாலத்தின் பாசாங்கைப் புரிந்து கொண்டாள். அவளை எதிர்த்து நின்று போராடித்தன் விருப்பத்தைச் சந்திக்க வேண்டு மென்று, மனத்திடத்துடன் அவள் மனசிலே தைரியம் பிறந்தது. 德
விவாகத்துக்கு ஒரு வாரத்திற்கு முன் ஒருநாள் விசாலம் அவளை அன்புடன் அனைத்து, "இங்கேயார், நித்திக் கண்ணு, நாங்கள் இன்னும் பேசாமலிருப்பது சரியில்லை. நான் நாளைக்கே உனக்கு இந்த கல்யாணத்தில் சம்மத மில்லையென்று ஓராளிடம் சொல்லி அனுப்பி விடு கிறேன். சரி தானே' என்று கேட்டாள்.
நித்தியலக்ஷமி நிமிர்ந்து அவளைப் பார்த்தாள். ஆ, அந்தப்பார்வை கண்களிலே தீவிரமான ஒளி வீசிக் கொண்டிருந்தது. சரீரமீ மாந்தளிர்போல் ஆடியது. ‘'சின்னம்மா, நான் அவரையே விவாகஞ் செய்து கொள்வேன். இதைப்பற்றி நீங்கள் ஒரு பேச்சும் எடுக்க கூடாது, தெரிகிறதா?" என்று சொன்னாள்.
விசாலாட்சி திகைத்து வெலவெலத்துப் போனாள். அவள் இதை எதிர்பார்க்கவில்லை. நித்தியத்தைப் பார்க்க அவள் கண்கள் கூசின. “முடியாது?நான் சொல் வதை நீ கேட்க மாட்டாய்?ஒ ,நான் ஒருவிதவை தானே, ஒன்றுக்கும் உதவாதவள். சரி, நான் இதைப்பற்றி உன்னுடன் இனிப் பேசவே மாட்டேன்" என்று மட்டும் சொன்னாள்.
முன் நிச்சயித்தபடி விவாகம் நடந்து கொண்டிருந்தது. வீடு முழுவதும் இன பந்துக்களும், நண்பர்களும், அயலவரும் நிறைந்திருந்தனர். மணவறையின் முன் னால் பிராமனோத்தமர்கள் ஹோமம் வளர்த்து நெய்யை ஊற்றி மந்திரங்களை உச்சாடனஞ் செய்து கொண்டி
O சி. வைத்தியலிங்கம் 0 83

Page 44
ருந்தனர். விசாலாட்சி விதவை. அவள் நிழலும் அத் திசையில் விழப்படாது. அவள் ஒரு அறையில் கிடந்து புழுங்கி வெதும்பிக் கொண்டிருந்தாள்.
‘‘அடிசிறுக்கி, நான் சொன்னதைக் கேட்க மாட்டாயா? இந்த தைரியம் எப்படியடி உனக்கு வந்தது? என்னைக் கேவலம் விதவையென்று தானே நினைத்தாய்? ஆம், ஆம், நான் ஒரு விதவை. எனக்கு அலங்காரம் இல்லை, ஆபரணம் இல்லை, பூவில்லை, பொட்டில்லை- ஐயோ எனக்கு ஒன்றுமே இல்லை, அப்படியானால் நான் யார்? அடி நித்தியம், உன் தலையிலே இடி விழ, என்னையா உதாசீனம் பண்ணினாய்? உன் கொழுப்பை அடக்கு கிறேன், பார். எனக்கேன் இந்த வாழ்க்கை, எனக்கு உலகத்திலே என்ன இருக்கிறது? வேண்டாம், வேண் டவே வேண்டாம். .’’ இப்படி யோசனைச் சுழல் கள் சூழ்ந்து வர, மெல்ல எழுந்து வெளியே நடக்க
லானாள்.
கல்யாணப் பந்தலிலே சபையோர் மாங்கல்யத்தையும், கூறையையும் ஆசீர்வதித்துக் கொண்டிருந்தனர். குருக்கள் மாங்கல்யத்தை எடுத்து மாப்பிள்ளையின் கையில் கொடுக்கப் போனார். நாதஸ்வரத்தின் மங்கள ஒலி மேளதாளத்துடன் கலந்து ஆகாயத்தில் பரவிக் கொண்டிருந்தது. அத்தருணம் வெளியிலிருந்து "ஐயோ, ஐயோ! விளக்கைக் கொண்டு வாருங்கள்--
ஓடிவாருங்கள்' என்ற ஒலி கிளம்பியது.
மாங்கல்யம் குருக்களின் கையில் இருந்தது. மண மகனும், மணமகளும் ஸ்தம்பித்துப் போயினர். ஜனங் கள் கிணத்தைச் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றனர். விளக்கின் ஒளியிலே கிணற்றுக்குள் ஒரு உருவம் தெரிந் தது. சட்டென ஒருவன் குதித்து அந்த உருவத்தை மேலே கொண்டுவந்தான். விளக்கொளியிலே முகத் தைப் பார்த்தார்கள்-விசாலாட்சி!
‘‘அடி பாவி, என்ன காரியஞ் செய்து விட்டாய்?’’ என்று எல்லோரும் பிரமித்துப் போனார்கள். உடலை எடுத்துக் கொண்டுபோய் உஷ்ணம் கொடுத்து நெஞ்சில் கைவைத்துப் பார்த்தனர். இருதயம் உறைந்து போய்க்
84 O கங்கா கீதம் O.

கிடந்தது. மீண்டும் உஷ்ணம் ஏற்றி வேண்டிய சிகிச்சை செய்து பார்த்தனர். சிறிது நேரத்தில் இதயம் மெல்ல மெல்ல இயங்கத் தொடங்கியது. கண்கள் இலேசாய்த் திறந்தன. பக்கலில் நின்றவர்களிடமிருந்து ஆசுவாசப் பெருமூச்சு ஒரே சமயத்தில் வெளிவந்தது.
நித்தியலக்ஷ்மியின் கல்யாணம் தொடர்ந்து நிறை வேறியது. விசாலத்தின் மனோரதம் கை கூட்ாமல் போய்விட்டது அவள் எப்படிக் கிணற்றுள் வீழ்ந்தாள், ஏன் வீழ்த்தாள்? என்று தெரியாமல் எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கிஇருந்தனர். நித்தியம் ஒன்றும் தெரியாதவள் போல் மெளனமாயிருந்தாள்.
கல்யாணம் நடந்து மூன்றாவது நாள் விசாலாட்சிக்கு எல்லாம் வெட்டவெளிச்சமாய் நினைவுக்கு வந்தன, தான் செய்த கொடியபாவத்தை நினைத்து, இப்போ அவள் மனசில் பச்சாத்தாபம் மேலிட்டு அவளை வாட்டிவதைத்தது. அவள் நெஞ்சிலே அம்புகள் வந்து பாய்ந்து அவயவங்கள் ஒவ்வொன்றையும் துளைப்ப தாக உணரலானாள். தான் இறந்து போகாமல் பிழைத்துக் கொண்டதே தன் தீச் செயலுக்கு விதிக்கப் பட்ட தண்டனை யென்று அவளுக்குள் தோன்றியது. நெடுநேரமாய் அழுது கொண்டிருந்தாள்.
அன்று பிற்பகல், நித்தியம் கணவருடன் தன் வீட்டுக்கு வந்திருந்தாள். அவர்களைக் கண்டதும் விசாலம் கதறிக் கொண்டு 'நித்தியா, மன்னித்து விடடி ‘'என்று அவள் கால்களைக் கட்டிக் கொண்டாள். நித்தியம் தேம்பித் தேம்பி அழுத வண்ணம் அவளைத் தூக்கி நிறுத்தி ஆதரவுடன் அவள் கண்ணிரைத் துடைக்க
bu)i 60 T fT6IT .
ஈழகேசரி (16-3-1941)
A
சி. வைத்தியலிங்கம் 85

Page 45
மரணத்தின் நிழல்
மாலை, வீட்டின் வெளி முற்றத்திலே நாலு குழந்தை கள்-என் சிற்றப்பாவின் குழந்தைகள்-மண்வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். ஒரு பெண் குழந்தை: மூன்று பையன்கள். பெண் குழந்தை ஒரு புறத்தில் மண்ணில் அப்பஞ்சுட்டுக் கொண்டிருந்தாள். பையன்கள் மரச்சுள்ளி பொறுக்கி வந்து வீடொன்று கட்டினார்கள். நான் போய் அவர்களிடம் 'இந்த வீட்டில் எனக்கும் இருக்க இடம் தருவீர்களா' என்று கேட்டேன்.
அப்பொழுது மூத்த பையன் ‘சச்சே, முடியாது. எனக்கு, அக்காவுக்கு, அம்மாவுக்கு, தம்பி இரண்டு பேருக்கு மாத்திரம்தான்' என்று சொன்னான்.
‘‘அப்படியானால் உங்கள் அப்பா எங்கையடா இருக் கிறது?" என்று கேட்டேன்.
**அவருக்குத் தான் பெரிய வீடு கட்டியிருக்கிறாரே, இங்கை இடமில்லை இப்ப, அவர் எங்களுடன் பேசுவது மில்லை. அந்த வீட்டிலேயே இருக்கட்டும்'
எந்த வீட்டிலடா?’’

'ஏன் உங்களுக்குத் தெரியாதா? இங்கை வாருங்கோ' என்று என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் வீட்டின் ஓர் அறையிலே விட்டான்.
O
அந்த அறையிலே தான் என் சிற்றப்பா படுத்தபடுக்கை யாய்க் கிடந்தார். எலும்பும் தோலும் தான் அங்கே கிடந்தது. அவர் இல்லை.
சோர்வு, அயர்ச்சி, தளர்வு, ஆயாசம் அவரை இறுகப் பிணைத்துக் கட்டிலிலே போட்டுவிட்டன. ஏதோ ஒரு கொடிய நோய் அவரைச் சென்ற நாற்பது நாட்களாய் போஷித்து வளர்த்து வருகிறது-அவர் என்னைக் கண்டதும் **உவன் என்னவாம்' என்றார். 'அவன் வீடு கட்டப் போறானாம்; உங்களுக்கு அதில் இட
மில்லையாம்' .
அவர் சிரித்தார்-இல்லை, அது பயங்கரமாய் இருந் ததே. திரும்பவும் சோர்வினால் அயர்ந்து போனார்.
நான் அவர் அருகாமையில் ஒரு நாற்காலியை இழுத் துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தேன். பற் பல எண்ணங்கள் இறகு முளைத்து வந்து போயின. மாலையும் மறைந்தது .
அன்றைய இரவும் வந்தது. அது புத்தம் புதிய இரவு. கருந்தீந்தை மேனியெல்லாம் பூசிப் பயங்கரமான தோற்றத்துடன் வந்தது. வான மும் பூமியும் இந்த மை இருளிலே ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டிருந்தன. இந்த விநோதத்தைக் கண்டு, கச்சான் காற்று சீற்றங் கொண்டு ஊழிக் கூத்து ஆடத்தொடங்கியது. இலைகள் இவர்களுடன் கலகலத்தன. மணல் மணலுடன் எழுந்தது.
டங், டங். மணி பன்னிரண்டு அடித்தது. ஊரார் தூங்கிவிட்டனர். நான் மட்டும் தூங்கவில்லை. அந்த அறையின் ஓர் மூலையில் ஒரு பெண்- என் சித்தி - அவள் தூங்கவில்லை. ஏங்கி, எல்லாம் இழந்தவள் போல் இருந்தாள், பக்கத்தில் கட்டிலிலே என்
O சி. வைத்தியலிங்கம் O 87

Page 46
சிற்றப்பா, அவர் தூங்கவில்லை. விழிப்பு மில்லை. நான் ஒரு சாய்மான நாற்காலியிலே படுத்திருந்தேன். மூத்த பையன் சொன்ன வார்த்தைகள் ‘'எனக்கு, அக்காவுக்கு, அம்மாவுக்கு தம்பி இரண்டு பேருக்கும் மாத்திரம்தான். ‘’ என்ற வார்த்தைகள் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தன. '' ஒருவேளை. சீ, குழந்தை யின் வார்த்தைகள் என்று தள்ளி விட்டேன். ஆனால் மனம்? அது அலைந்தது.
என் மனம் சோர்ந்து போய்விட்டது. வெளியிலிருந்து வந்த காற்று மேனியிற் படவே நடுங்கலானேன். எழுந்திருந்து பயந் தெளிவதற்காகப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினேன்.
'சித்தி, அவருக்குக் களைப்பு அதிகம். இன்றுடன் நாற்பது நாள் அன்னாகாரம் ஒன்றுமில்லை. களைப்பி னால் உண்டான அயர்ச்சிதான். வேறொன்றுமில்லை’’ சித்தி ஒ, ஓ, என்று மாத்திரம் த லயாட்டினாள். அதன் கருத்து என்னவோ?
திரும்பிச் சிற்றப்பாவைப் பார்த்தேன். அவர் கண்
திறந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அன்பு
கனியப் பார்க்கும் அவர் கண்களை இன்று பார்க்கப்
பயமாயிருந்தது. என் இதயத்தை ஊடுருவிப் பார்ப்பது போல் இருந்தது. அப்பொழுது அந்தக் கண்கள்
சொல்லின. 'என் கடி முடிந்தது. ஐயோ, என்
பெண்டில் பிள்ளைகள், வீடுவாசல், தோட் டந்துரவு."
கண்கள் மூடிக் கொண்டன.
நான் சித்தியைப் பார்த்து 'இடைக்கிடை நல்ல தெளிவு இருக்கிறது. நல்லறிவுடன் பேசுகிறார். இன்று காலை யில் தானே தன் தோட்டத்து வாழைக்குட்டிகளையும், மாடு கன்றுகளையும் பார்க்க வேண்டுமென்று சொன் னார். நாளைக்கு பரிகாரியாரிடம் சொல்லி இந்தச் சோர்வுக்கு ஏதேன் மருந்து கொடுக்கச் சொல்ல வேணும்.'' என்று சொன்னேன்.
அவள் ஒன்றுமே பேசவில்லை. கட்டில் அருகே போய் இருந்து கால்களை வருடத் தொடங்கினாள் அவர்
88 O கங்கா கீதம் O

காலை மேலே இழுத்துக் கொண்டார். அந்தக்கால்அது காலல்ல, மரக்கட்டை. அது சொல்லியது: “ஒ,
எல்லாம் மாயை. மாயை ... வேண்டாம் பஞ்சணையும் வேண்டாம், படுக்கையும் வேண்டாம். பிள்ளைகுட்டி, பெண்டில். எல்லாம் பிசாசுகள்". சீச்சீ.உங்கள்
வாசனையே வேண்டாம்.'
எங்கோ, மணிமூன்றடித்தது. காற்றின் கூக்குரல் ஓய்ந்து விட்டது. உலகம் ஆழ்ந்த உறக்கத்திலே இன்பக் கனவுகள் கண்டு கொண்டிருந்தது. நித்திராதேவி என்மேல் இரங்கி என்னைத் தழுவ வந்தாள். 'சீ.' என்று எழுந்து வீட்டு விறாந்தையிலே உலாவினேன்.
வெளியிலே இருள், காரிருள், எங்கும். அமைதி, மயான அமைதி, வெளியை ஊன்றிப்பார்த்தேன் கரும்படலம், கருமை. கருமை, அப்படலத்திலே பயங்கரமான உருவங்கள் தோன்றின, மறைந்தன, சில ஆடின. சில சிரித்தன, சில பல்லைக்காட்டின. .
திரும்பவும் அறைக்குப் போனேன்.என் சித்தி. கட்டிலில் தலை வைத்தபடி, கணவனின் கால்களை மெல்லத் தடவிக் கொண்டிருந்தாள். நானும் அவர் பக்கத்தி லிருந்து கைகளைப்பிடித்து விரல்களை மெல்ல தடவி உருவி வருடி விட்டேன். அவர் தன் கையை எடுத்து
என் மடிமேல் வைத்தார். அது சொல்லியது:
"ஆ, உலகமே, நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய். வாழ்வே, புதுப்பெண் மாதிரி-மயங்குகிறேன். வா, என் கிட்ட வந்து விடு. என் ஆசைதீரக் கட்டித்தழுவு கிறேன். மேல் வானம் நீலச் சிற்றாடை கட்டி நிற்கிறது. சந்தியா காலம்- சந்திரன் உதயமாகிறான், தென்றல் மென்மையாய் என்னை தொடுகிறாள். பெண்கள்-வாலை இளம் பெண்கள் சிரிக்கிறார்கள் - என்னை மயக்குகிறது. என் குழந்தைகள், என் செல்லக் குழந்தைகளே, அவர்களின் மழலை. வாருங்கள், எல்லாரும் ஓடிவந்து விடுங்கள் .
நான் ஒன்றுமே பேசாமல் அவரைப் பார்த்துக் கொண்
O சி. வைத்தியலிங்கம் O 789

Page 47
டிருந்தேன். முகத்திலே வேறு வேறு உணர்ச்சிகள் வெவ்வேறு படங்களாய்-கோரமாயும், அழகாயும், அலங்கோலமாயும்- வரைந்து கொண்டு இருந்தன. சில சமயம் அவரைப் பார்க்க என் தந்தையின் சாயல் கண்டு. என்னையும் மீறி. நெஞ்சு கரைந்து அவரு டைய ஒவ்வொரு அங்கங்களையும் அன்புடன் தொட்டு, தடவி என்னைத் தேற்றிக்கொண்டேன். ஆம், ஸ்பரிசம், அது பட்ட செடியையும் துளிர்க்கச் செய்துவிடும்.
Ο
ஒரு கோழி கூவிற்று --மற்றொன்று. வேறொன்று. இவைகளைத் தொடர்ந்து இன்னும் எத்தனை கோழி கள் கூவியதோ? மேசைமேல் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். மணிஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
திடீரென்று என்ன நினைத்தாளோ சித்தி 'இந்த இரவு கழியட்டும். அவருக்கு நல்ல சுகம் வந்திடும்" என்று என்னைப் பார்த்துச் சொன்னாள்
"ஆம், ஆம், வருத்தம் குறைந்து வருகிறது. எங்கள் டாக்டர் கெட்டிக்காரன் என்னவோ அம்பாள் இருக்கி றாள் ஆயிரம் தண்ணிர் வார்ப்பதாக நேத்திக்கடன் செய்திருக்கிறேன்."
எனக்கு கால் கை எல்லாம் உளைந்து, வலித்துக் கொண்டு எழுந்து நடக்கவும் முடியவில்லை. நித்திரை யில் தள்ளாடிக் கொண்டிருந்தேன். 'ஏன், சித்தி விடியப்போகிறது. நீ போய் கொஞ்ச நேரம் தூங்கன்' என்றேன். அப்பொழுது சிற்றப்பா கனவில் பேசுவது
போல் "ஆம், விடிய. அவர் அதற்குமேல் பேச வில்லை. திரும்பவும் அயர்வு.
நான் அந்த அறையின் யன்னலைத்திறந்து வெளியில் பார்த்தேன். இருட்டுக் கலைந்து கொண்டிருந்தது. பக்கத்து ஒழுங்கையிலே தோட்டம் நோக்கி, பாடிக் கொண்டு கமக்காரர் போய்க்கொண்டிருந்தார்கள். பாட்டு-சுமையைக் குறைக்க பாட்டுத்தான் அவர்கள் வாழ்க்கையை இனிக்கவைக்கிறது.
90 O கங்கா கீதம் O

திரும்பி வந்து என் சிற்றப்பாவின் கட்டிலில் இருந்து அவருடைய மேனியைத் தடவிக் கொண்டிருந்தேன். நெஞ்சில் கையை வைத்து ‘சித்தப்பா" என்று கூப்பிட் டுப்பார்த்தேன். கண்களை இலேசாய்த் திறந்து பார்த்து விட்டு திரும்பவும் மூடிக் கொண்டார். ஆனால் நெஞ்சம் சொன்னது.
'ஆனந்தம், ஆனந்தம், விடுதலை. செடி கொடிகள் பொன்பூச் சொரிந்து நிற்கின்றன. சிட்டுக்குருவி போல் பறந்து திரிகிறேன். எங்கும் அன்பு, குதுகலம், சாந்தி. . வாழ்க்கையே, மாய உலகமே, நன்றிகெட்ட உலகமே,
து .
அவர் முகம் நல்ல தெளிவு பெற்று சோபையுடன் விளங் கியது. அவரை மீண்டும். கூப்பிட்டுப் பார்த்தேன். * 'தம்பி" என்று சொல்லிய வண்ணம் என் கையை இறுகப் பற்றிக் கொண்டார். அந்த'தம்பி என்ற சொல் என்னை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. அன்பும் வாஞ்சையும் சேர்ந்து வந்த அந்த தேன் சொல் என் நரம்புகள் ஒவ்வொன்றிலும் செறிந்து சென்று என்னை உருக்கிவிட்டது. நான் அன்புடன், ‘‘கொஞ்சம் நோய் படிந்து வருகிறது சித்தப்பா'என்று அவரை ஆதரவுடன் அணைத்துக்கொண்டு அவர் முகத்தைக் கவனித்தேன். அவருடைய இதழ்களிலே ஒரு மெல்லிய பூஞ்சிரிப்பு, ஒரு குழந்தையின் சிரிப்பு போல.
நெஞ்சு என்ன நினைத்ததோ, என் கண்கள் கசிந்து கண்ணிர் பெருக்கெடுத்தது- அவர் முகம், அமைதி பெற்று ஒளி வீசியது-பக்கத்தில் இருந்த குத்துவிளக்கின் நெய்வற்றி ஒளி அணையும் தறுவாயில். ஒரு விக்கல்! ஐயையோ, மூச்சு நின்று விட்டது. அவருக்கு வயசு நாற்பத்தாறு. அப்பொழுது காலை ஐந்தரை மணி. பலபலவென்று விடிந்து விட்டது.
ஈழகேசரி (27-7-1941)
A.
O சி. வைத்தியலிங்கம் O 91

Page 48
அழியாப் பொருள்
என்னைத்தன் குழந்தைபோல் வளர்த்து வந்த எனது வீட்டின் முன் அறையிலிருந்து லண்டன் ஸர்வ
கலாசாலைப் பிரவேச பரீகூைடிக்கு ஆயத்தஞ் செய்து
கொண்டிருந்தேன். இரவு பத்துமணி இருக்கும். வெளி
யிலே இரவையும் பகலாக்கி எறித்துக் கொண்டிருந்தது
பால் நிலா. அதன் மோஹன ஒளியிலே மயங்கிப் பனை
களும், தென்னைகளும், மாமரங்களும் ஆடாமல் அசை
யாமல் நின்றன. ஊர் அடங்கி எங்கும் பேரமைதி
உலகத்தைப் போர்த்தியிருந்தது.
அப்பொழுது நான் மஹாகவி ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோவும், ஜூலியட்டும், என்ற நாடகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். ரோமியோ அன்றைய தினம் போல் நிலாவுடன் கூடிய ஒரு இரவிலே கரந்து சென்று ஜூலியெட்டைச் சந்திக்கும் பாகம் வந்தது. என் அறையில் யன்னல் ஊடாக வெளியே பொழிந்து கொண்டிருக்கும் நிலா வொளியைப் பார்த்த வண்ணம் அந்தப் பாகத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்.
சற்று நேரத்தில், எங்கள் நாய் குரைக்கத்தொடங்கியது.

என் அறை வாசலின் முன் முக்காடுடன் ஒரு சிறுமி வந்து நின்று கொண்டிருந்தாள். முதலில் நான் திடுக் கிட்டுப் பயந்துபோனேன். நிதானமாய் அச்சிறுமியைப் பார்த்த பொழுது தெரிந்தது. பக்கத்து வீட்டில் இருக் கும் என் மாமன் மகள் மனேருன்மணரிதான் வந்திருந் தாள். இந்த அகால நேரத்தில் பத்து வ்யது நிர்ம்பாத இச்சிறுமி தன்னந்தனிய வந்திருப்பதைக் காண எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. "ஆ, மனோவா, நான் என்னவோ வென்று பயந்து விட்டேன். ஏன் இந்நேரத் தில் தனிய வந்திருக்கிறாய்' என்று கேட்டேன். அவள் ஒன்றும் பேசாமல், விக்கி விக்கி அழுது கொண்டு நின்றாள்.
நான் மறுபடியும் ‘என்ன மனோ, நடந்தது என்ன, ஏன் அழுகிறாய்?' என்றேன்.
அவள் அதற்கும் பேசாமல் குருவிக் குஞ்சு போல் நின் றாள். அவளைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது. நீ சொல்ல விருப்பமில்லா விட்டால், காரியமில்லை. வா, உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விடு கிறேன்' என்று சொன்னேன். அவள் மேலும் விக்கி விக்கி அழுது கொண்டு, ‘‘இல்லை, நான் அங்கே போகவில்லை'
*ஏன் உன் அம்மா அடித்தாரா?'
‘*அதொன்றும் இல்லை. இன்று நான் அங்கு போக மாட்டேன். இங்கேயே தூங்கப் போகிறேன்.'"
எனக்கு அவள் பிடிவாதக்காரி என்பது முன்னரே தெரிந் திருந்தது. 'சரி, போய்த் தூங்கு, காலையில் எல்லாம் விசாரித்துக் கொள்ளலாம்" என்று ஒரு பாயை எடுத்து விரித்து விட்டேன். அவள் தூங்கினாளா, அல்லது அழுது கொண்டிருந்தாளா என்பது எனக்குத் தெரி யாது. நான் மீண்டும் நாடகத்தை எடுத்து படிக்கத் தொடங்கினேன்.
காலையில் இருவருமாக அவள் வீட்டுக்குப் போனோம்; எங்களைக் கண்டதும் அவள் தமையன் ‘அம்மா
O சி. வைத்தியலிங்கம் O 93

Page 49
அம்மா, இங்கே வந்து பார் அம்மா. மச்சானையும் கையோடு கூட்டிக் கொண்டு தான் வந்திருக்கிறாள்.'" என்று குழறிவிட்டு எங்களைப் பார்த்துச் சிரித்தான். அவன் குறும்புப்பயல்’’ என்னடா இளிக்கிறாய், என்ன நடந்தது, சொல்லேன்' என்றேன்.
* 'ஏன், அவள் தான் சொல்லியிருப்பாளே” ‘*அவள் சொல்லியிருந்தால் உன்னை ஏன் கேட்கப் போறேன். சரி, நீ சொல்லாவிட்டால், எங்கே.
அப்பொழுது குசினியிலிருந்து வந்த அவர்கள் தாய் * 'இராத்திரி அண்ணனுக்கும், தங்கைக்கும் சண்டை. என் பக்கத்தில் படுக்க வேண்டுமென்று நின்று கொண் டான் இவன். மனோ தான் தான் என்னுடன் பக்கத்தில் தூங்க வேண்டுமென்று பிடிவாதம் செய்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் வழக்கந்தானே கிடையாது. கடைசியில் அவன் அவளை அடித்துப் போட்டான். அவள் அழுது கொண்டு உங்கள் படலைக்குள் வந்து விட்டாள். நானும் அவளைத் திருப்பிக் கூட்டிக் கொண்டு போகலாமென்று எவ் வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் கேட்க
வில்லை.’’ என்று சொன்னாள். 'தம்பி, நீ என்னடா இன்னும் குழந்தையா? வளர்ந்தும் இன்னும் அம்மா வுடன் தூங்கவேண்டுமானால் உனக்கு வெட்க மில்லையா’’
'ஆ அப்படியா னால் அவளுக்கு உங்கள் வீட்டில் வந்து தூங்க வெட்கமில்லையா?’ அவளைப் பார்த்துக் கேலியாய்ச் சொன்னான். மனோன்மணிக்கு வெட்கம் பிடுங்கியது. 'அம்மா, இப்படியெல்லாம் இவன் சொன்னால் நான் இனி இங்கே இருக்கவே மாட்டேன்’ 'ஓ, அப்படியா? நல்லது. உனக்குத்தான் மச்சான் வீடிருக்கு. அங்கே போகப் போகிறாயாக்கும்’’ இப்படி அவன் சொன்னது, அவளை முள்போல் குத்தியது. அவள் தாயைப் பார்த்து விம்மி, விம்மி அழத் தொடங்கவே, நான் அவளைத் தாயுடன் விட்டு, எங்கள் வீட்டுக்கு திரும்பி விட்டேன்.
எனக்கு அப்போ பதினேழுவயசு நடந்து கொண்டிருந்
94 O கங்கா கீதம் O

தது. என்படிப்பையும் வீட்டையும் தவிர வேறு விஷயங் களில் என் மனம் செல்லாத காலம். என் அன்னை இறந்து போய் விட்டதால், என் அன்பு முழுவதையும், அன்னையினும் தயையுடைய என் தந்தைமேல் செலுத்தியிருந்தேன். அவர் என் கண்களுக்கு கம்பீரமும், பொலிவும் நிறைந்த பெருந்தோற்றத்துடன் காணப் பட்டார். அவரைக் காணும்போதும், அவருடன் பேசும் போதும் இன்னும் இரவு பகலாய் அவருடன் பக்கத் தில் இருந்து பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்று ஆசைப்படுவேன்.
ஆனால் அன்று மனோன்மணி என் அறைக்குள் பிரவே சித்த நாள், அமிர்தம் நிறைந்த என் மனப்பாத்திரத்தில் விஷம் கலந்த நாள்.
வேறெவரிடமும் போக நினையாமல், அந்த ராத்திரி வேளையில் அவள் என்னிடம் மாத்திரம் வந்ததை நினைத்து நான் அதிகம் யோசனை செய்துவிட்டேன்.
அவள் ஏன் என்னிடம் வர வேண்டும்? தாய், தமையன், எல்லோரிலும் மேலாக அவள் என்னிடம் என்னத்தைக் கண்டாள்.என்னைக் கண்டதும் விக்கி விக்கி அழுதாளே. ஏன்.? நான் அவளைக் காப்பாற்ற முடியுமென்று நம்பிவந்தாளா? அப்படியானால், அந்த நம்பிக்கை எப்படி அவள் மனதில் உதித்தது?. எவ்வளவோ நான் யோசித்தும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒன்று, அவள் மேல், என்னை அறியாமல் என் மன நிழல் வீழ்ந்து கொண்டிருப்பதாக உணர லானேன்.
என் தந்தைக்கும் எனக்கும் இடையில் முன் இருந்த நெருக்கம், இப்பொழுது கொஞ்சம் தொய்யத்தொடங்கி யது. நான் முன் போல் அவருடன் நெருங்கிப்பழக, இப்போ என் மனத்தில் உறைந்த ஏதோ ஒன்று குறுக்கே நின்றது. அவரைப் பார்க்கவும், அவருக்கு முன்னே வரவும் என் மனம் கூசியது. அவர் என்னுடன் ஏதாவது பேச்செடுத்தால் அலகூழியமாய் மறுமொழி கொடுத்து விட்டு, ஒதுங்கி விடுவேன்.
எனக்கோ ஒவ்வொரு கூடிணமும் மனோவைக் காண
O சி. வைத்தியலிங்கம் O 95

Page 50
வேண்டு மென்ற ஆசை. அடிக்கடி அவள் வீட்டுக்குப் போய் மணிக்கணக்காய் அவளுடன் பேசிக்கொண்டி
ந்து விட்டு வீடு திரும்புவேன். என் படிப்பிலும் மனம் 器鯊蠶 என் தந்தை என் மேல் வைத்திருந்த பேரன்பினால் போலும், என் மனம் நோக என்றும் கண்டித்ததில்லை.
நான் இருமுறை பரிகூைடிக்குச் சென்று இருமுறையும் ஒரே விதமாய் முடிந்தது. ஊரில் இருந்து எங்காவது கல்லூரியில் உபாத்தியாயர் வேலை கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருந்தேன். இப்படி இரண்டு மூன்று வருஷங்கள் கழிந்து விட்டன.
மனோன்மணிக்கு வயது பதின் மூன்றாகி விட்டது. இந்த வயசில் பெண்களுக்கு மேனியிலே ஒரு மினு மினுப்பும், முகத்திலே ஒரு சாந்தியும் எங்கிருந்து வருகிறதோ தெரியாது, மனோ, திங்களின் ஒரு ரேகை போல் வளர்ந்து கொண்டிருந்தாள். கண்கள் மருட்சியின் புதுமையிலே மருண்டு கொண்டிருந்தன. அவள் என்னு டன் இப்பெல்லாம் முன்போல் அனாயாசமாய், செல்ல மாய் கொஞ்சிக் கொஞ்சி பேச மாட்டாள். பார்வையில் ஒரு வெருட்சியும், பேச்சில் ஓர் அடக்கமும்; நடையில் ஒரு மென்மையும் தோன்றி விட்டன. எனக்கு அவளுடன் பக்கத்தில் இருந்து, மணிக்கணக்காய் பேசவேண்டு மென்று ஆசை மேலோங்கும். ஆனால் அதிகம் பேச மாட்டேன்....
இந்த நாட்களில்தான் மனோவுக்கு சுரம் வந்தது. படுக்கையிலே சிலைபோல் படுத்து விட்டாள் அவள் நிராதரவாய், எலும்புந்தோலுமாய், உருக்குலைந்து நோயின் தீவிரத்திலே ஏதோ எல்லாம் பேசிக் கொண்டு கிடந்த காட்சியை இன்று நினைத்தாலும் நெஞ்சம் கரைந்து விடுகிறது. அவளைப் பார்த்து மனம் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவள் எட்டாப் பொருள் போல் உணரலானேன்.
கடைசியில் என் உணர்ச்சி உண்மையாகவே முடிந்து விட்டது. சில தினங்களில் அவள் இறந்து போனாள்.
எனக்கு அவள் என்றும் தெய்வீகமும் பவித்திரமும் குடி
96 O கங்கா கீதம் O

கொண்ட ஒரு கனவுப் டெண் . உலகத்தின் பாசமும், விஷமும், அழுக்காறும் அவள் நெஞ்சில் கலக்கவில்லை. தெய்வக் குழந்தையாக வந்து தேவகன்னியாகவே மறைந்து விட்டாள்.
இப்படியெல்லாம் நினைத்து என்னை நானே ஏமாற்றப் பார்த்தேன். ஆனால் எனக்கும் அவளுக்கும் இடையில் உள்ள தொடர்பு,-எனக்கு அவள் ஒரு கனவுப் பெண் மாத்திரம் அல்ல,-அதற்கும் மேல் ஏழேழ் பிறவி களிலும் என் இரத்தத்துடனும், ஆத்மாவுடனும் கலந்து தொடர்ந்து வரும் உறவு-அழியாமல் என்னைச் சுற்றிப் பின்னிக் கொண்டிருப்பதாக உணரலானேன்
நான் வேலை தேடிக் கொண்டு கண்டிக்குப்போய் அவ் விடத்தில் ஒரு உத்தியோகத்தில் அமர்ந்தேன். பத்து வருஷங்கள கழிந்து விட்டன. ஆனால் மனோவின் நினைவு வாடா மல்லிகை மலர் போல் என் நெஞ்சில் இருந்தது.
மனிதனுடைய சாந்தியைக் கெடுக்க என்றும் எப்பொழு தும் உலகத்தில் ஏதோ ஒன்று தோன்றிவிடுகிறது. எனக்கு விவாகப்பேச்சு நடந்து நிச்சயமாகியிருந்தது.
எனக்கு விவாகஞ் செய்து கொள்ள விருப்பமில்லை யென்று சொன்னால் இன பந்துக்கள் விட்டுவிட மாட்டார்கள். என் மன நிலையை எடுத்துச் சொன்னா லும் அது அவர்களுக்கு விளங்காது. கடைசியில் நடப்பது நடக்கட்டும் என்று லீவெடுத்துக் கொண்டு
ஊருக்கும் போனேன்.
O
என் வீட்டு முன் அறை. மனோன்மணி முன்னொரு ராத்திரியில் தஞ்சமென்று அடைக்கலம் புகுந்த அதே அறை பால் நிலாவுடன் கூடிய இரவு பத்து மணி இருக்கும். எனக்குத் தூக்கம் வரவில்லை. அந்த அறை யில் இருந்த என் புஸ்தகங்களைக் கிளறிக் கொண்டு, ஏதாவது வாசிப்பதற்கு நல்ல புஸ்தகமாய் கிடைக்குமா வென்று தேடிக் கொண்டிருந்தேன். 'ரோமியோவும்
O சி. வைத்தியலிங்கம் о 97

Page 51
ஜூலியெட்டும்' என்ற நாடக நூல் என் கைக்கு வந்தது. அதை விரித்தபோது, காதலர் இருவரும் கள்ளமாய் சந்திக்கும் பகுதிதான் வந்தது. அதை வாசித்த வண்ணம் வெளியிலிருந்து வந்த இளந் தென்றலை அநுபவித்துக் கொண்டிருந்தேன்.
என் அறை வாசலிலே ஏதோ அரவங் கேட்டுத் திரும்பிப்பார்த்தேன். ஒரு சிறுமி தலையில் முக்காடுடன் நிற்பது போல் தோன்றியது- எனக்கு நடுக்கம் எடுக்கத் தொடங்கிவிட்டது. என் சட்டை முழுவதும் வேர்வை யால் நனைந்து போயிற்று. அந்தச் சிறுமி என்னை வரும்படி தன் கையால் சைகை காட்டியிருக்க வேணும். நான் பேசாமல் கனவில் நடப்பவனைப்போல அவளைப் பின் தொடர்ந்தேன். அவள் என்னை நேரே ‘மனோன் மணி" யின் வீட்டுக்கு அழைத்துப் போனாள். எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. சிறுமியையும் காண வில்லை. சட்டென அந்த வீடு முழுவதும் ஒளிமய மாகியது. ኣ
வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கப்பயம். இருந்தும் என்னை அறியாமல் ஒரு சக்தி உள்ளே. இழுத்துக் கொண்டு போயிற்று. வீடு முழுவதும் நறுமணம் பரந்து என்னை வசீகரித்தது-தைரியத்துடன் மேலும் சென்று ஒரு அறையின் வாசலை எட்டிப் பார்த்தேன். ஸ்தம் பித்து அப்படியே நின்று விட்டேன்.
அந்த அறையில் பூரணகும்பம் ஒன்று வைக்கப்பட்டு அதைச் சுற்றி குத்துவிளக்குகள் எரிந்து கொண்டிருந் தன. இரு யெளவனப் பெண்கள், ஸ"மங்கலிகள் கையில் ஆரத்தியுடன் என்னை வரவேற்கத் தயாராய் நின்றனர். அறையின் மூலையில் ஒரு இளம் பெண், குனிந்ததலை நிமிராமல் கீழே பாதங்களைப் பார்த்த வண்ணம் நிற்பது போல் ஒரு தோற்றம், அவளை முன் எங்கோ கண்டது போல் இருந்தது-தேகம் நடுங்க, கால் கள் ஒன்றோடொன்று பின்ன . உள் பிரவேசித்தேனோ இல்லையோ, அறை முழுவதும் இருள் சூழ்ந்து கொண்டது-வாய்விட்டுக் கத்தவும் என்னால் முடிய வில்லை. அப்படியே சிறிது நேரம் நின்றேன்.
98 O கங்கா கீதம் O

இப்பொழுது எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எங்கே நிற்கிறேன் என்பதையும் உணரமுடியவில்லை. எங் கிருந்தோ பெண்கள் மெல்லிய குரலில் பேசுவது போல வும், இடைக்கிடை சிரிப்பது போலவும், அவர்கள் அணிந்திருக்கும் நூபுரங்கள் மென்மையாய் சப்திப்பது போலவும் இருந்தது. நான் மெல்ல வெளியே வந் தேன். வீடு முழுவதும் மீண்டும் ஒளி வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது.
வீட்டை விட்டு ஓடியிருப்பேன். ஆனால் அந்த வீடு என்னை மயக்கி, எனக்கே சொந்தமானது போல் உணர்ந்தேன். அதன் ஒவ்வொரு பாகத்தையும் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். உள்ளே போய் பார்த் துக் கொண்டு வரும்போது, ஓர் அறையிலிருந்து யாரோ பாடுவது பாதாளத்திலிருந்து வருவதுபோல் என் காதுகளில் படவே, அந்தப்பாட்டின் இனிமையில் லயித்து அவ்விடம் போனேன். அது ஒரு விசாலமான அறை. தரை முழுவதும் அழகாய் மெழுகிக் கோலமிடப் பட்டிருந்தது. மங்கல விளக்குகள் நிரை நிரையாய் நின்று ஒளியைக் கக்கின. ஊதுவத்தியின் ஸ70 கந்த வாசனை, மல்லிகை, முல்லை, சண்பகம் முதலிய மலர்களுடன் சேர்ந்து ஒரு கதம்ப வாசனையை எழுப்பியது மனசுக்கு, ரம்மியமாயிருந்தது. அறையின் மத்தியில் ஒரு படம். யாருடைய சித்திரமோ, தெரிய வில்லை. அதற்கு மலர் மாலை சூட்டிக்கொண்டு நின்றாள் ஒரு இளநங்கை. அவளுடைய உருவம், முன் நான் பார்த்த பெண்ணின் சாயல் போல் இருந்தாலும், இவள் வெண்பட்டு அணிந்திருந்தாள். இவள் கைகளி லும், கழுத்திலும் உருத்திராகூடிமாலை. ‘நெற்றியில் திரு நீற்றின் ஒளி பிரகாசித்தது. உண்மையில் எனக்கு அவள் ஒரு தபஸ்வினிபோல் தோன்றினாள்.
எனக்கு இப்போ அவளுடைய முகம் நன்றாய்த் தெரிந் தது. விளக்குகளை நெய் ஊற்றி ஏற்றிவிட்டு, ஒரு தட்டிலே இருந்த மலர்களை ஒவ்வொன்றாய் எடுத்து அப்படத்தின் மேல் அர்ச்சித்துக் கொண்டு நின்றாள். அவளை நன்றாய் உற்றுக் கவனித்தேன். அவளுடைய ஒவ்வொரு சொல்லும், கையின் ஒவ்வோர் அசைவும் என் நரம்புகளைப் பற்றி இழுத்தன. நான் முன்னர்
O சி. வைத்தியலிங்கம் O 99

Page 52
அவளை எங்கோ கண்டது போலவும் அவளுக்கும் எனக் கும் ஏதோ தொடர்பு இருப்பது போலவும், உணர லானேன்,
தைரியத்துடன் அறைக்குள் ஓர் அடி எடுத்து வைத் தேன். என் வரவுக்காக அவள் தவம் கிடந்திருக்க வேண்டும். என்னைப் பயபக்தியுடன் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப்பார்வையை என் உயிருள்ளளவும், நான் இனிமேல் எடுக்கப்போகும் பிறவிகளிலும் நான் மறக்கவே மாட்டேன். அதில் மனோன்மணியின் நிஷ் களங்கமான முகம் தெரிந்தது. ஆவேசத்துடன் அவளை அணைக்க ஓடினேன். சட்டென்று அறை முழுவதும் கனத்த காரிருள் மூடிக் கொண்டது. t
‘'ஐயோ, நீயா மனோ...' என்று அலறிக் கொண்டு கீழே வீழ்ந்து விட்டேன். என்னை யாரோ அணைப்பது போல் உணரலானேன்.
அவ்விடத்தில் வீழ்ந்தபடியே நான் இரவுமுழுதும் தூங்கியிருக்கவேண்டும். காலையில் எழுந்து பார்த் தேன். அறைமுழுவதும் சிலந்தி வலைகள் பின்னி இருந் தன. மூலை முடுக்குகள் எல்லாம் வெளவால்கள் "கீச் கீச்" என்று பறந்து கொண்டிருந்தன.
அன்று மாலையே, நான் என் தந்தைக்கும் தெரியாமல் கண்டிக்குப் பிரயாணமானேன். அங்கிருந்து என் தந்தைக்கு 'எனக்கு முன்னரே விவாகமாகி விட்டது. என்னை மன்னியுங்கள், அப்பா’’ என்று எழுதி விட்டேன்.
அவர் என்னைப் பற்றி என்ன நினைத்தாரோ, தெரியாது.
எனக்கு இப்போ ஐம்பது வயசாகிறது. இப்பொழுதும் என் உள்ளத்தின் அந்தரங்கத்திலே மனோ இருப்பதை உணர்கிறேன். அவள் என் இதயத்தில் ஏற்றிவிட்ட சுடர் சாசுவதமாய் எரிந்து கொண்டிருக்கிறது.
கலைமகள் (1941)
100 0 கங்கா கீதம் 0

மூன்றாம் பிறை
டாங். டாங்ங். . டாங்ங். அவர்கள் திடுக்கிட் டார்கள். ராமேஸ்வரத்தில் எழுந்து நிற்கும் தேவமாளி கையிலிருந்து கிளம்பிய அந்தக் கம்பீரநாதம் ஜனங் களை அந்திக்காலப் பூஜைக்கு அழைத்துக் கொண்டி ருந்தது. மணியோசை கேட்டதும் தாயின் குரல் கேட்ட குழந்தைபோல் துள்ளிக் குதித்தோடிப் பாலும் மலரும் கொண்டு தேவதேவனைச் சேவிக்கும் அவர்கள் அன்று அந்த மாலை வேளையில் ஓர் ஆலவிருகூடித்தில் கீழ் ஒரு
வரை ஒருவர் பார்த்த வண்ணம் நின்றார்கள்.
மணியோசை மீண்டும் கேட்டது. ஆனால் அவர்கள் அசைய வில்லை. இன்று ஒருவர்க்கு மற்றவர் ஆதாரம் நாளைக்கோ. ?பிரிவு
ஆம், பிரிவு, மூன்று எழுத்துக்களாலான இந்தச் சின்னஞ் சிறிய சொல் அவர்கள் இருதயங்களை வாள் கொண்டு அறுப்பது போல் அறுத்துக் கொண்டிருந்தது.
அவன்-அவள் கோபாலன் - அம்புலி. டாங். டாங்ங் இருவரும் நடுங்கினார்கள். கோவில் பூஜைக்குப்

Page 53
போகவில்லையே என்று நினைக்க அம்புலிக்கு பயமாக இருந்தது. அவள் பதறிக்கொண்டு 'கோபு, வாயேன் போ கலாம் கோயிலுக்கு-எனக்கென்னவோ பயமா யிருக்கு. ஆரோ என் நெஞ்சில் அடிப்பதுபோல் இருக்கு' என்றாள்.
‘‘அம்பு, ஏன் வீணாய் பயப்படுகிறாய்?நாம் இன்றைக் காரு நாள் போகலையென்று சாமி கோபிச்சுடுவாரா? நிதமுந்தானே பாலும் பூவுங் கொண்டு கும்பிட்டிட்டு
வர்றோம்.?
‘'நீ என்னதான் சொல்லேன் கோபு, என் மனம் பத றிட்டே இருக்கு, கோயிலுக்குப் போ காட்டா , இன்னும் கொஞ்சம் பேசிட்டிருப்போம். நாளைக்கு நீ கொழும் புக்குப் போயிடுவாயே’’ நீர் நிறைந்து கொண்டிருந்த கண்களால் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கோபாலன் அவள் கைகளை எடுத்துத் தன் மார் புடன் அணைத்துக்கொண்டு சொன்னான் 'அம்பு, ஒன்னைப் பார்க்கவே என்நெஞ்சம் பெறுக்குதிலலையே நான் கொழும்புக்குப் போனா, அங்கிட்டே இருந்திடப் போறனா? சீக்கிரம் வந்திடுவனே."
'சீக்கிரம் னா? அ. .எத்தனை நாட்களில் திரும்பிடு 6hu mruiü?ʼ ʼ
g
"" அதோபாரு, மூன்றாம் பிறை. இராச கோபுரத்துக்கு மேலே வந்திண்டிருக்கு. இன்னும் பத்தே பத்துப் பிறை கள் பொறுத்துண்டிரு; அம்பு, பதினொண்ணாவது முறைவரும் மூன்றாம் பிறை அன்று இதே இடத்தில் இதே வேளையில் சந்திச்சுடுறேன்.
டாங்... டாங்ங்.. , . . மீண்டும் அந்த மணி யோசை, இந்த மணியோசையைக் கேட்டு என் மனசு ஒரு நாளும் இல்லாதபடி கலங்கிக்கிட்டிருக்கு, இங்கிட்டு என் கையைத் தொட்டுப் பாரு கோபு, குளிர்ந்திட்டிருக்கு நெஞ்சைத் தொட்டுப்பாரு, பட படன்னு அடிச்சிண்டி ருக்கு.' -
102 O கங்கா கீதம் O

'ஏன் உன்னை இப்படியெல்லாம் வதைச்சுப்பிடுறாய். ஒண்ணு மில்லை அம்பு, சும்மா மனசைக் கட்டிக்கிட்டு,
கொஞ்சம் தைரியமாயிரு. எல்லாம் நல்லாய்வரு மென்று நினைச்சுக்கோ மனசு, இலேசாயிடும். கொஞ்சம் சிரி பார்க்கலாம், ஆங். . . . . அப்படித்தான்
என் அம்புவின் பல்லு முத்துப்போல், நீ எம்புட்டு, அழகா யிருக்கிறாயடி அம்பு'
அந்த இரவு முழுவதும் இருவரும் நித்திரையையும் மறந்து பேசிக்கொண்டிருந்தார்கள், காதலர் இருவரும் அப்படி என்னபேசிக் கொண்டிருந்தார்கள். அப்பப்பா, அது சொல்லமுடியாது.
ஏதாவது ஒரு வேலையில் அமர்ந்து சிறிதுபணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் தான் கோபாலன் கொழும்புக்குப் போனான். அந்தப் பணத்தைக்கொண்டு நல்ல ஜாதிப் பசுக்களாய் ஐந்தாறு வாங்கி தன் குலத் தொழிலிலே நிலைத்திருக்க வேண்டு மென்பது அவன் விருப்பம், அப்போதான், அம்புலியின் கைபற்றுவதற்கு தான் தகுதிவாய்ந்தவன் என்று எண்ணினான். அதற் காகச் சிலகாலம் அவளை பிரிந்திருக்க அவன் மனம் சம்மதித்தது.
கொழும்புக்குச் சென்ற சில நாட்களில் அவனுக்கு ஒரு பங்களாவில் 'பொடியன்' வேலை கிடைத்தது. அவன் பாக்கியசாலிதான்.இல்லாவிடில் கடவுள் ஏன் அவனுக்கு கருங்காலி போன்ற வலிமையும், உறுதியும் உள்ள தேகக்கட்டை கொடுத்திருந்தார். அவன் இடையர் குலப்பையன் அந்தச் சாதியாரைப்போல் அவனிடத்தில் விடா முயற்சியும் சுறுசுறுப்பும் நேர்மையும் இருந்தன. அவன் வேலை பார்த்து வந்த பங்களா, கருவாத் தோட்டத்தில் 'விக்டோரியா'நந்தவனத்துக்கு அண்மை யில் அழகாய் அமைந்திருந்தது,
அந்தப் பங்களாவிலிருந்து வேலைபார்த்துக் கொண் டிருக்கும் பொழுதெல்லாம் தான் பிறந்து வளர்ந்த பொன்னாட்டின் நினைவு வந்து விடும். ராமேஸ்வரக் கோயிலின் உயர்ந்த கோபுரத்தையும் அகன்று பரந்து கிடந்த மணல் வெளிகளையும், தன்னுடைய மாடு
O சி. வைத்தியலிங்கம் O 103

Page 54
கன்றுகளையும் அவன் மறந்து விடச் சித்தமாயிருந்தான், ஆனால் அம்புலியை மறப்பதென்றால், அவன் மனிதன் அல்லவா, உணர்ச்சியற்ற வெறும் சடப் பொருளா?
சில நாட்களாயிலும் அவளை மறந்து விடா விட்டால் மன நிம்மதி கிடையாதென்பது அவனுக்குத் தெரியும். மன ஆறுதலுக்காக, தன் மனசில் உள்ளதை கடுதாசி யில் கொட்டி கடிதத்திற்குப்பின் கடிதமாக அம்புலிக்கு எழுதி வந்தான். என்றாலும் அவள் நினைவு வரவர அவனை வாட்டிக் கொண்டு வந்தது. அவனால் அவளை மறக்கவேமுடியவில்லை.
பருவங்கள் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. ஐந்தாறு மாசங்கள் ஓடிக் கழிந்து விட்டன. காலதேவன் கொடுத்த மருந்து வீண் போகவில்லை. அம்புலியின் உருவம் புகைபடர்ந்த சித்திரம்போல் மெல்ல மறைந்து கொண்டு வந்தது. கொழும்பு நகரத்தில் ஒரு தனிக் கவர்ச்சி ஏற்பட்டு வார்ந்து வருவதையும் தன் மனப் போக்கு மாறி வருவதையும் அவன் அறியவில்லை. தன் வேலைகள் முடிந்ததும் அந்தி நேரங்களில் விக்டோரியா நந்தவனத்தில் போய் சுற்றித் திரிந்து கொண்டு வருவான். நல்ல வாலிபப் பருவத்திலே மனமும் அமைதியாக இருக்கச் சம்மதிக்கிறதில்லை. ஒரு சிறுவன் போல துள்ளிக் குதித்து இல்லாத குறும்பு கள் எல்லாம் செய்து கொண்டிருக்கும் எழுந்த மாத்தி ரத்தில் எதையும் செய்துவிடும். இந்தப் பொல்லாத பருவம் கோபாலன் மேல் ஏறி உல்லாசமாய் உட்கார்ந் திருந்தது.
ஒரு நாள் மாலைப்பொழுது மேகம் கறுத்து மின்னலும் இடியுமாயிருந்தது. கோபாலன் பங்களா வாசலிலே நின்று கொண்டிருந்தான். நந்தவனத்துக்குப்போய் அவ்விடத்தில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண் டிருக்கும் ஆயாமார்களைப் பார்க்க வேண்டு மென்று, அவனுக்கு ஆசைதான். ஆனால் மழை எந்த நேரத் திலும் வந்து விடுமென்று பயந்து பங்களா வாசலிலே நின்றான். அப்பொழுது , ஒரு ஆயா குழந்தையுடன் அவன் நின்ற இடத்தை நோக்கி வீதி வழியாக வந்து கொண்டிருந்தாள். திடீரென்று மழை கொட்டத்
104 O கங்கா கீதம் O

தொடங்கியது. ஆயாவும் குழந்தையும் இன்னது செய்வ தென்று தோன்றாமல் விழித்துக் கொண்டு நின்றனர். பக்கத்தில் ஒதுங்குவதற்கு ஓரிடமும் இல்லை. அவ்விடத் தில் ‘ரிக்ஷோ" வண்டிகளும் தென்படவில்லை. அந்த ஆயா தன்னையே பரிந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டு நிற்பதாக கோபாலன் எண்ணினான். உடனே ஒடிப்போய் 'ஏம்மா, மழையிலே நிக்கிறீங்க, வங்களா விலே தொரையுமில்லை, வாங்க, அங்கே போயிட லாம்' என்றான்.
முதலில் ஆயாதயங்கினாள் ஆனால் வேறு வழிஇல்லை. கோபாலன் அவர்களை அழைத்துக் கொண்டு போய் ஒரு நாற்காலியில் இருக்கச் செய்து விட்டு பங்களாவி லுள்ள நூதன சாமான்களை எடுத்து ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டிருத்தான்.
கோபாலன் அம்புலியை விட வேறு இளம் பெண் களுடன் இதற்கு முன் தனிமையில் பேசியதில்லை. இன்று அந்த ஆயாவுடன் சம்பா ஷிப்பது அவனுக்கு தனி இன்பமாயிருந்தது. தானே அவ்வீட்டின்எஜமானன் போலப் பங்களாவின் பல பாகங்களையும் காட்டிக் கொண்டு வந்தான். அவர்கள் திரும்பிய பொழுது மழை நின்றுவிட்டது. "இந்த மழை இன்னும் பெய்யாதா?" என்று நினைத்தான் கோபாலன்; ஆனால் மழை ஓய்ந்தே விட்டது. ஆயா போகும் போது அவனுக்கு நன்றி செலுத்தி விட்டு, ஒரு மோகனப் பூஞ்சிரிப்பை உதிர்த்துக் கொண்டு போனாள் கோபாலன் அவள் மேல் வைத்த கண் வைத்தபடி பார்த்துக் கொண்டு நின்றான். அந்தச் சிரிப்பு விஷம் போலக் கோபாலனை நிலை தடுமாறச் செய்தது.
அவள் போய்விட்டாலும் அந்தச் சிரிப்பு அவனைக் கலைத்துக் கொண்டிருந்தது. அதை நினைத்து அவனும் இடைக்கிடை சிரித்துக் கொண்டான். அவனுக்கு மயிர்க் கூச்செறிந்தது, தேகம் விம்மிப் பொருமியது. அவயவம் முழுவதும் ஏதோ ஓர் உணர்ச்சியால் சுண்டிக் கொண்டிருந்தது. உற்சாகமேலிட்டால் அவனையு மறியாமல் வாய் தெம்மாங்கு பாடத் தொடங்கியது.
இப்பொழுது கோபாலனின் பகல்களெல்லாம் இனிய
O சி ,வைத்தியலிங்கம் O 105

Page 55
கனவு போல் இருந்தன. மாலை எப்பொழுது வரும்; அவளைக்காண முடியுமா?
உண்மையில் அவனுக்கு இப்போநிமிஷங்கள், நிமிஷங்க ளல்ல. நீண்டநாட்கள். ஒவ்வொரு நிமிஷமும் மாலைப் பொழுதையே எதிர்பார்த்திருந்தான்.
ஒருமுறை அவனுடன் பேசிவிட்டாள். அவள் அவனைப் பார்த்து ஒரு முறை சிரித்தும் விட்டாள். இனி, பயமில் லாமல் முன்னேற அவனுடைய யெளவன உள்ளத்தில் தைரியம் பிறந்தது.
நந்தவனத்துக்குப் போய் அவளைக் காண்பான். கைக்கு வளையல்கள் வாங்கிக்கொடுப்பான். பேசாத பேச்செல் லாம் பேசுவான். மலர்களைக் கொய்து அவள் மேல் எறிந்துவிட்டு வேறெங்கோ பார்த்துக் கொண்டிருப் பான். புறாக்கள் மரக்கிளைகளிலிருந்து கொஞ்சுவதைச் சுட்டிக் காட்டிக் கடைக் கண்ணால் பார்த்து புன்னகை புரிவான். அவளுடைய பின்னலைப் பிடித்து இழுத்து விட்டு ஓடுவான். இங்ங்ணம் இனிய கீதம் போல் அவனுடைய பொழுது கழிந்து கொண்டிருந்தது.
அவன் தன்கிராமத்தை மறந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கள்ளங்கபடமில்லாத அம்புலிஒவ்வொரு நாளும் தன்னை நினைத்து நினைத்து எப்போவருவான் என ஏங்கியிருப்பாளே என்பதை கோபாலன் மறந்தே போய்விட்டானா?
சில வேளைகளில் அவன் மனம் அலைவீசாமல் அமைதி யாயிருக்கும் போது, அந்த அமைதியிலிருந்து பிறந்த தேவகுமாரி போல் அம்புலி அவன் முன்வந்து நிற்பாள். அல்லது அவளிடமிருந்து கடிதம் வரும் பொழுது அவளுடைய நினைவு வந்து விடும். அவளுடைய முகத் தில் அல்லிமலர் போன்ற தூய்மையும், அழகும் வடிந்து கொண்டிருப்பது போல் தோன்றும், அவளுக்கு கடிதம் எழுத வேண்டுமென்ற நினைவு வரும். மனத்தை வேதனை அரித்துக் கொண்டிருக்கும், அவளுக்காக கண்ணிர் விடவும் தயாராயிருப்பான். அது ஒரு கூடிணம்
தான,
106 O கங்கா கீதம் O

உடனே நந்தவனத்தில் ஆயா நின்று கெக்கலி விட்டுச் சிரிக்கும் சப்தம் கேட்பது போல் தோன்றும். அவள் கை வளையல்கள் கலீரென ஒலிக்கும். கூந்தலின் சுகந்த வாசனை வந்து அவனை மெய் மறக்கச் செய்யும். இவைகள் ஒரு மோஹன சக்தியுடன் அவனை வசீகரித்து உணர்வையே அழித்து விடும்.
'இராமேஸ்வரத்தில் வாழ்க்கை அந்த மணற்காடு போல் வறண்டுபோயிடுமே. என் குலத்தொழில்? சே, அஞ்சாறு மாடுகளை வைத்துண்டு, மேய்ச்சு, பால் கறந்து வீடுவீடாய் பாலை விற்று, என்ன பிழைப்பப்பா இது? பட்டிக்காட்டுப் பெண் அந்த அம்புலி, சீலைகட் டத் தெரியாது; பேசிடத் தெரியாது. சிரிச்சிடத்தெரி யாது'
"பென்னம் பெரிய பங்களாவிலே பொடியன் வேலைன்னா
மஹாராசா வாட்டம் இல்லையா? மாசம் பதினைஞ்சு
ரூபா சம்பளமின்னா பின்னே சும்மாவா? பட்டணத்திலே
இருப்பதுன்னா எல்லாருக்குமா கிட்டும் இந்த ஆயா
இராசாத்தியாட்டம். . ஆ ஆ . . . இவளைக்கண்ணா
லம்பண்ணிக் கிட்டா? இவளும் பேசுடறாள். அம்புலி யும்தான் பேசுடறாள், தூ! காக்காயாட்டம் .'
இராமேஸ்வரத்தின் இயற்கைச் சூழலில், அந்த மணல் மேடுகளுடனும் மரஞ் செடி கொடிகளுடனும், தானும் அவைகளுடனும் ஒருவனாய் ஒன்றி இசைந்து வாழ்ந்த எளியவாழ்க்கை எங்கே? மெல்ல மெல்ல பட்டண வாசத்தின் பகட்டான வாழ்க்கையில் மயங்கி அதற்கு அடிமையானான்.
அப்புலியைக் கைப்பிடித்து தன் குலத்தொழிலில் நிலைத் திருக்க வேண்டுமென்ற கோபாலனின் லட்சியம் இப் பொழுது எண்ணமாய் , கனவாய் அழிந்து கொண்டு வந்தது. . .
இப்பொழுது வசந்த காலம். ஆகாயம் நல்ல நீலவர்ணம் பெற்றுத் தெளிவுடன் விளங்கியது. தென்றலிளங்கன்னி மென்னடை பயின்று கொண்டிருந்தாள். எங்கிருந்தோ குயில்களும் செண்பகப் பகூரிகளும் பறந்து வந்து நந்த
O சி. வைத்தியலிங்கம் O 107

Page 56
வனத்திலே ஆரவாரஞ் செய்து கொண்டிருந்தன. குக் குக்கூ .குக்குக். குக்குக்கூ. குக்குக். மரங்களும் கொடிகளும் இளமையும் காந்தியும் பெற்றுத்தளிர் களை எறிந்து கொண்டிருந்தன. எங்கும் ஒரு விழிப்பு, கோபாலனின் நரம்புகளிலும் புதிய ரத்தம் ஒடத் தொடங்கியிருந்தது.
அன்று அமாவாசை வந்து மூன்றாம் நாள். கோபால னுக்கு இது தெரியாது. நந்தவனத்தில் ஆயாவுடன் நின்ற அந்த மாலைப் பொழுதில் அவனுடைய உள்ளத் திலே ஒரு புதிய உணர்ச்சி தோன்றித் தேகம் முழுவதும் ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த உணர்ச்சி வேகத்திலே உடலம் பதறியது, மனம் நிறைவு பெறாமல் இருதயத் திலே விடாய் எடுத்தது. அந்தத்தாகம் தீராமல் நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகரித்து வரவே தன் சரீரம் முழுவதும் எரிந்து சாம்பலாகி விடுமோவென்று உணர
su T60Tr6ón.
பூஞ்சோலைக்கு வந்தவர்கள் ஒவ்வொருவராய்ப் போய் விட்டார்கள். ஆயாமாத்திரம் வழக்கத்திற்கு மாறாக அன்று தங்கி நின்றாள். இல்லை. கோபாலனும் கூட. பாவிகளுடைய மனம் போல் இருள் சூழ்ந்து கொண்டு வந்தது.
கோபாலனுக்கு இப்போ கட்டுக்கடங்காத பருவம். வயது இருபது. வெறிகொண்ட காளைப்பருவம், பய மென்பது இன்னதென்பது தெரியாது. ஆயாவை மெல்ல நெருங்கி மிக மிக வாஞ்சையுடன் அவள் கைகளைத் தன்கையில் எடுத்தான். பின்னாலே குயில் குக்.குக். எனறது.
அவள் கைகளை எடுத்து மிகமென்மையாய் வருடிக் கொண்டு தன் அதரங்களுக்கு கொண்டு போகுமுன் சுற்று முற்றும் பார்த்தான். யாராவது கண்டு கொண் டால்? எங்கும் அமைதி கைகளை மேலே கொண்டு போகையில்... யாரோ இலை மறைவில் நின்று எட்டிப் பார்ப்பது போல் தோன்றியது. கோபாலனின் சப்த நாடிகளும் ஒடுங்கிப்போயின.
108 O கங்கா தீபம் O

யாரது? இலைமறைவில் நின்று மரங்களின் ஊடாக எட்டிப் பார்த்துக் கொண்டு நின்றது. ஒருபிறை; அன்று மூன்றாம்பிறை, -
மின் வேகத்துடன் ஒரு உணர்ச்சி கோபாலனின் நெஞ்சில் பாய்ந்தது “ஏ , பாபி' என்றது.
அம்புலி அந்த ஆலமரத்தின் கீழ் நிற்கிறாள். அலட்சிய மாய் எறிந்து முடித்த கொண்டையைச் சுற்றி ஒரு பிச்சிமாலை. அழுக்கும் தூசியும் படிந்த ஒரு கந்தல் சேலை அணிந்திருக்கிறாள்- அன்பும் பேதமையும் நிறைந்த கண்களினாலே அவனையே பார்த்த வண்ணம் நிற்கிறாள். அவளுடைய வாய் ‘சரி சீக்கிரம்னா. எத்தனை நாட்களில் வந்துருவாய்'. . என்று கேட்பது போல் உணர்ந்தான்.
கோபாலனுடைய பிடியிலிருந்து அவனை அறியாமலே ஆயாவின் கைகள் நழுவின. தான் அம்புலிக்குக் கொடுத்த வாக்குறுதி நினைவில் வந்தது. ஒரு மஹா பாதகமான காரியத்தைச் செய்யப் போகையில் அம்புலி கூப்பிடுவதுபோல் தோன்றவே, அவ்விடத்திலே நிற்க வும் கூசி பங்களாவை நோக்கி ஓடி விட்டான். ஆயா, ஸ்தம்பித்து நின்றாள்.
இப்போ கோபாலனுடைய மனத்திலே ஒரு சாந்தம். முன் போல் அலை பாய்ச்சல் இல்லை. அம்புலியைக் காணவேண்டுமென்ற ஒரே ஒரு நினைவுதான் மனதில். பதினோராவது முறை வரும் மூன்றாம்பிறையன்று வந்து சந்திப்பதாகவல்லோ அம்புலிக்கு உறுதி அளித் திருந்தான். எத்தனை நாட்கள் கழிந்து விட்டன. எத்தனை பிறைகள் தோன்றி மறைந்தன? யாரறிவார்? கோபாலனுக்கே தெரியாது. ஆனால் அவள் கொடுத்த நாளையுங் கடந்து அநேக நாட்கள் கழிந்து விட்டன. என்று அவன் உள் மனம் சொல்லியது. சில தினங்களில் இராமேஸ்வரத்தை நோக்கிப் பிரயாணமானான்.
இராமேஸ்வரத்தை நெருங்க நெருங்க கோபாலனின்
மனம் ஆவலினால் குதிக்கத் தொடங்கி விட்டது. "அம்பு, இப்போ வளர்ந்திருப்பாள். அவள் மேனி
O சி. வைத்தியலிங்கம் O 109

Page 57
புதுமை மெருகேறி பள பளப்பாய், எவரையும் கிறங்க வைத்துவிடும். கண்கள் கருங்குவளைமலர் போல் அழகாயிருக்கும் நான் கொடுக்கும் நீலப் பட்டா டையை அணிந்துகொண்டால் ஒருராணி போல் காட்சிதருவாள் நான் முதலில் அவளிடம் என்ன பேசுவேன்-என்னைக் கண்ட வெட்கத்தில் ஒருவேளை பேசவேமாட்டாளோ..?
இங்ங்னம் சிந்தனை அலைகள் சூழ்ந்துவர இடைச் சேரியைப் போய் அடைந்தான். நேரே அம்புலியின் குடிசைக்குப் போய் 'அம்பு,அம்பு, என்று குரல் கொடுத்தான்- அவள் குரலைக் கேட்டு ஓடிவருவாள் என்று எதிர் பார்த்து நின்றான். ஆனால் அவள் வரவில்லை, அவளுடைய தாய்க்கிழவி கையில் ஒரு கோலை ஊன்றிக் கொண்டு மெல்ல நடந்து வெளியே வந்தாள். கோபுவைக் கண்டதும் "ஐயோ, கோபு, கோபு'' , என்று கதறத் தொடங்கிவிட்டாள். கிழவியின் கையிலிருந்த கோல், "டக், என்று கீழே வீழ்ந்தது
கோபாலனுக்கு ஆச்சரியமாயிருந்தது- ஒன்றும் தோன்றாதவனாய் 'அம்மா, ஏன் அழுறிங்க, அம்புலி எங்கே’’ என்றான்.
கிழவிமேலும் ஒப்பாரிவைத்துப் புலம்பத் தொடங்கி னாள். கோபாலன் கேள்விக் குறியுடன் அவளையே பார்த்தவண்ணம் நின்றான். கண்ணிர் விட்டு, ஒரு குரல் அழுதபின் கிழவிக்கு ஆறுதலாயிருந்தது-அவள்
சொன்னாள்'
'கோபு நீ வந்துட்டாயப்பா, அம்புலி. ' கிழவியால் பேசமுடியவில்லை. துக்கம் நெஞ்சை அடைத்தது. ‘‘அவள் செத்துப்போயிட்டாள் தம்பி’ என்று மேலும் அவள் ஓலமிடத் தொடங்கினாள். கோபாலன் கோ வென்று கதறிவிட்டான். கிழவி அழுகையும், விம்மலும் குமுற 'அவள் சாகுந்தறுவாயிலும்' கோபு, கோபு என்று கூப்பிட்டிட்டே இருந்தாள், மவனே."
கோபாலனுடைய நெஞ்சு காய்ந்து எலும்பும் தசையும் கரைந்து உருகிக் கதறினான். "ஐயோ, அம்பு. அம்பு.
110 O கங்கா கீதம் O

ஆழ்ந்த சோகத்திலே பிறந்த விரக்தியுடன் சோர்ந்து போய் கோபாலன் மெளனமாய் இருந்தான். திடீரென்று ஏதோ யோசித்த வண்ணம் கிழவியைப்பார்த்து "அவள் எப்படிச் செத்தாளம்மா?' என்று கேட்டான்.
'அந்தக் கண்றாவியை எப்படிச் சொல்வேன் கோபு. கொழும்புக்குப் போயிட்டதும் சில நாளாய் அவளுக்கு மன நிம்மதி கிடையவே கிடையாது. தினமும் கோயி லுக்குப் போயிட்டு வந்துட்டிருந்தாள். அவள் மொகத் திலே களை வந்திடிச்சு. எனக்கு சந்தோசமா போச்சு. நீ குடுத்தூண்டுப்போன கன்னுக்குட்டியை வைத்துண்டு, தன் கையாலே பூமாலை செஞ்சு போட்டு விளையாடிண் டிருப்பா. இடையிடையே அந்த ஆலமரத் தண்டை போயிட்டு வருவா.ஏன் போறாயின்னு நான் கேக்கலே. ஆனா, அங்கிட்டிருந்து வரும்போது மொகம் சிரிச்சிட் டிருக்கும். அவளைப் பார்க்க எம் மனசு பூரிச்சுடும்.
ஆனா, இந்தப் பொறத்திலே ஒன்னைப்பத்தி ஏதோ கதையொண்ணு ஒலாவிச்சுது.நீ கொழும்புச் சீமையிலே கண்ணாலஞ் செஞ்சிட்டிருப்பதாகப் பேசினாங்க அம்புலி காதிலும் உழுந்திட்டிருக்கும். ஆனா. அவ அதை நம்பலை. அப்படித்தான் என்னண்டை சொல்லிச்சு. நீ அப்பிடி மானங்கெட்ட காரியம் ஒண்ணும் செஞ்சுட மாட்டாயெண்ணு தனக்கு தெரியுமின்னிட்டா. அப்படித் தங்கமான மனசு மவனே, அவ, மனசு’’ கிழவியால் மேலும் பேசமுடியவில்லை. கோபாலன் பெரு மூச்
செறிந்தான்.
“ ‘பின்னர், ஆமா. ஆம், அஞ்சு மாசத்துக்கு மிந்தி யிருக்கும். அந்த ஆலமரத் தண்டை போயிட்டு வந்தாள். எனக்கு அவளைப் பாக்க பயமாயிருந்திடிச்சு . சுடுகாடு போல அவாமொகம் எரிஞ்சிட்டுக் கிடந்திச்சு. ஊட்டுத் திண்ணையிலே கிடந்து விம்மி விம்மி அழுதிட்டுக் கிடந் தாள். நான், ஏன் கண்ணு அழறாயென்று கேட்டேன். பேசமாட்டேண்டிட்டாள். எனக்கோ மனசு கேக்கலை. எத்தினியோ சொல்லி ஆத்திப்புடலாம்னு பாத்தன். ஆனா, ஒண்ணுக்கும் அவ ஆறலை. ஏதோ மொண மொணத்துட்டு, ஊட்டு மோட்டை பாத்துண்டேஇருந் தாள். பரியாரியைக் கூட்டிண்டு காட்டினதுக்கு அவளுக்கு பிச்சி புடிச்சுண்டுதென்று சொன்னாங்க.
O சி. வைத்தியலிங்கம் O 111

Page 58
மருந்தும், மந்திரமும் செஞ்சு பாத்தன். இராமேசுவர சாமியை கையெடுத்துண்டு வந்தேன். ஒரு சொகமும் வந்த பாடே காணலை. எனக்கென்னவோ பயமாயிருந் திச்சு, வாயில் வந்தபடி பேசிட்டிருந்தாள். கொழும்பூருக் குப் போகணும் போகணும்னு எப்பவும் கொழும்புப் பாட்டுத்தான். நாலு மாசமாய் இப்படித்தான் இருந் தாள். ‘‘அதுக்குப் பொறவு சாப்பிடவும் மாட்டேனென்னுட் டாள். நெத்திரையுமில்லை. தினே தினே மெலிஞ்கிட்டே வந்தாள். எனக்குப் பெத்த வயிறு பத்தி எரிஞ்சுது." கிழவியால் தொடர்ந்து பேசமுடியவில்லை. தொண்டை காய்ந்து போய்விட்டது. உமிழ்ந்து விழுங்கிக் கொண்டு "'எனக்கென்னவோ அவா பிளைச்சிடுவாளென்று தோணிச்சு. ஆனா, அவா, எலும்புந்தோலுமாய் பாயும் படுக்கையுமாய் உழுந்திட்டாள். ஆனா, ஒன்னை அவாள் மறக்கலை கோபு. சில சமயம் கோபு, கோபூன்னு வாய் கூப்பிட்டிட்டே இருந்திச்சு. பதினைஞ்சு நாளாய் இப்படித்தான் எல்லாம் ஒடுங்கிட்டு தென்னு பரியாரி சொன்னாங்க. நான் நம்பலை கோவில் கோபுரத்தை கையெடுத்திட்டிருந்தேன். ஆனா, நான் கொடுத்து வைக்காத பாவி கோபு, பதினாறாவது நாள் எல்லாம் முடிஞ்சுபோச்சு. ஐயோ, அம்பு, அம்பு. 9 is
‘'இப்போ அவளைச் சுட்ட இடத்திலே பில்லும் முளைச் சுண்டிருக்கும் தம்பி' என்று பெரு மூச்சுடன் முடித்தாள் கிழவி.
கோபாலன் அந்த ஆலமரத்துக்கு ஓடிப் போனான். அந்தி மயங்கிக் கொண்டிருந்தது. ஆலமரத்தின் கீழ் கிடந்த மண்ணில் சிறிதெடுத்து தன் வாய்க்குள் போட் டுக் கொண்டான் அது அவள் காலடி பட்ட மண். கீழே வீழ்ந்து கிடந்து புரண்டான், பக்கத்திலே சமுத்தி ரம் ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்தது. தூரத்திலே உயர்ந்து நின்ற கோயிற் கோபுரத்தின் மேல் ஏறிக் கொண்டிருந்தது, மூன்றாம் பிறை.
கதைக் கோவை, 2. 1942
A
112 O கங்கா கீதம் O

நெடுவழி
உலகம் அவளுக்குஇல்லை அவள் உலகத்திலில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்கமுடியாத கனத்த இருள் சூழ்ந்த உலகம் - அது இருக்கிறதோ இல்லை யோ என்பதையும் அறியமாட்டாள். கால் முன்னே செல்கிறது. மனம்நிதானமில்லாமல் ஒடுவதும் நிற்பதும் குமுறுவதும் ஒய்வதுமாய் ஏதோ ஒரு அந்தர நிலையில் தொங்கி நிற்கிறது. நடக்கிறான். நடக்கிறான்.அது நெடுவழி.
அவள் பெயர் முத்துமெனிக்கா. அவள்தோளின்மேல் அவளுடைய ஏழுமாதக் குழந்தைஅயர்ந்து தூங்குகிறது. பச்சைக்குழந்தைக்குத்தாயின் தோளும் மார்பும் சுவர்க்க பூமி. அது பேசாமல் தூங்கு கிறது. வெளியே உலகம்- குரூர உலகம். இருள் படர்ந்த உலகம். இரக்கம் தயைஇல்லாத முரட்டு உலகம். இதைக் குழந்தை அறியுமா? கடவுளே! இந்தக் குழந்தையை என்றும் குழந்தையாய் இருக்க விட்டுவிடு.
காலமோ கார்த்திகை மாசத்து நள்ளிரவென்றாலும்

Page 59
தைரியத்துடன் முத்துமெனிக்கா நடக்கலானாள். அவள் தோள் மேல் துயிலும் குழந்தை, அதுதான் அவள் உயிர். அக்குழந்தைக்காகவே அவள் உயிர்வைத்துக் கொண்டிருக்கிறாள். குழந்தையின் நினைவுவரும் வேளைகளில் தான் அவள் கிணற்றுக்கும், குளத்துக்கும், ஆற்றுக்கும்பயப்பட்டாள்.
அதிக தூரம்வந்துவிட்டாள். மனம்இளைத்துப்போயிற்று
காலும் ஓய்ந்துவிட்டது. தன் குழந்தையை இறுக அணைத்துக் கொண்டாள். மெல்ல மெல்ல மனமும் நிதானமடைந்துவந்தது - எங்கெங்கோவெல்லாம் சுற்றிச்சுழன்றுவந்த மனம் அமைதிபெற்று, சென்று போன அவள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கத் தொடங்கியது.
துக்கம் வரும் போது மனிதன் தன் பழைய கால நிகழ்ச் சிகளை மனதிற் கொண்டு வந்து அதில் ஒரு ஆறுதல் பெற முயல்கிறான். இச்சமயங்களிலே சாரமற்ற வரண்ட வாழ்க்கையும், ஏதோ ஒரு வகையில் இன் பத்தை அவனுக்கு கொடுக்கிறது.
முத்து மெனிக்கா உலகம் அறியாத சிறு பெண் அல்ல. சரத்கால சந்திரனின் வனப்போ, லாகிரிபோல் ஆடவனை மயக்கும் ரூபலாவண்யமோ அவளிடத்தில் இல்லை. அவள் ஒரு கிராமப்புறப் பெண். அவளிடத் தில் காணும் ஒய்யாரமும், ஆரோக்கியமான தேக காந்தி யும் எவரையும் மயக்கி அவளைத் திரும்பிப் பார்க்கச் செய்யும். கல்வியறிவில்லாவிட்டாலும் பகுத்தறிவும் கற்பனையும் நிறைந்த ஒரு பெண் அவள்.
குழந்தைப் பருவத்தின் நினைவுகள் வந்து தோன்றி மறைந்து கொண்டிருந்தன. தந்தையின் ஞாபகம்-அது ஒரு நீதிவாசகம் "போல் நினைவுக்கு வந்தது. தாய்
ன்னெப் பொழுதோ எவ்விடத்திலோ, கேட்ட இன்னிசையின் நினைவுபோல்-அவளும் வந்து தோன் றினாள். தாய் இன்று உயிருடன் இருந்தால் அவள் மடியில் வீழ்ந்து குழந்தை போல் தன் துக்கத்தைச் சொல்லி ஆறியிருப்பாள். அவள் ஒருத்தியால் மாத்தி ரமே தன் மன வேதனையை பூரணமாய் அறிய முடியு
114 O கங்கா கீதம் O

மென்று ஏங்கினாள். ஆனால் அவள் இன்று உயிருடன் இல்லை. முத்துமெனிக்காவுக்கு அழவேண்டும் போலி ருந்தது. கதறி அழுதாள். வழிநெடுக அழுதவண்ணம் போய்க் கொண்டிருந்தாள்.
அழுகை ஓய்ந்து கன்னத்தில் கண்ணிர் விட்ட சுவடும் காய்ந்து போய் விட்டது. தன் வாழ் நாளில் கண்ட கனவுகள், கட்டிய கோட்டைகள்- ஆ, அப்பொழுது அவளுக்கு தன் கணவன் நினைவு வந்தது. அவள் வாழ்க்கை இடிந்து போய்விட்டதா? அன்று தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றிய கணவன் பால் அவளுக்கு ஒரு குரோதமும் தோன்றவில்லை. அவரை நட்டாற்றில் நிறுத்தி விட்டது போன்ற உணர்ச்சிஅவள் மேல் ஈட்டி போல் குத்தத்தொடங்கியது. "'நான் தான் பாதகி, துரோகி, என்னால் தான் எல்லாம் வந்தது. நானே என் தலையில் மண்ணைவாரிக் கொட்டிக் கொண்டேன்' என்று கதறலானாள்
‘‘அவர் ஒரு பாவமும் அறியாதவர். அவரை மணக்கும் போது நான் இருபது வயசு குமரியாய் இருந்தேன். ஒரு வரை ஒருவர் விரும்பித்தான் கல்யாணம் செய்து கொண் டோம். பொல்லாத காலம் எவருக்கும் வருவது தான். நான் ஒரு நாள் அவருடன் ஒரு சாதாரண மனஸ்தாபத் தில் தன் வயிற்றுக்கு இரண்டு பணம் சம்பாதிக்கத் தெரியாத மாப்பிள்ளைக்கு வீட்டில் இருக்க என்ன யோக்கியதை? என்று கேட்டு விட்டேன். என் நாக்கு கொடிய வாளினும் கூரியதாய் அவர் ஆண்மையை உலுக்கி விட்டது. அதன் பின்னர்.
பிரிவு. ஆம், பிரிவுடன் கூடியது. தனிமை, முத்து மெனிக்கா தன் குடிசையில் தனியே இருந்தாள். அப் பொழுதெல்லாம் தன் கணவர் திரும்பி வருவார் என்று தினமும் எதிர்பார்த்திருந்தாள். அவனோ வரவில்லை. அவளோ ஏழை. கட்டழகு குலையாத பெண். வயலில் போட்டது விளைந்தால் தான் வயிற்றை நிரப்பமுடியும். அவளுக்கு ஒரு துண்டு வயல் காணி இருந்தது. அதில் அயலவர் சிலருடைய உதவியுடன் சிறுதானியம் விதைத் திருந்தாள். வீட்டில் இருக்கநேரம் கிடையாது. காலை முதல் மாலை வரை வயலில் நின்று கிண்டினால் தான்
O சி. வைத்தியலிங்கம் O 115

Page 60
ஏதேன் கிடைக்கும். இடைக்கிடை யாரும் வந்து அவளுக்கு ஒத்தாசை செய்வார்கள். எல்லோரும் நல்ல மனம் படைத்தவர்கள்.
அவள் வயலுக்கு அண்மையில் டேவிட்சிங்கேரஜின் வயல் அவன் நல்ல கட்டமைந்த வாவிபன். அவனும் சில சமயம் வந்து உதவிகள் செய்து கொடுப்பான்.
ஒரு நாள் பெருமழை பெய்தது. இலங்கையின் மலைப் பிரதேசங்களில் மழை பெய்வதில்லை. நீர்வீழ்ச்சி போல் வீழ்ந்ததென்று சொல்ல வேண்டும். ஆறுகள், குளங்கள் நீர் நிலைகள் யாவும் பெருக்கெடுத்து வயல்களைச் சூறையாடி ஓடிவந்தன. முத்துமெனிக்காவின் வயல் பள்ளப் பாங்கில் வெள்ளம் வந்து நிறைந்து பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. உழவர் மண்வெட்டியுடன் வந்து தங்கள் வயல்களின் வரம்புகளை வெட்டி வெள்ளத்தை வெளியேற்றிக் கொண்டு நின்றனர். முத்துமெனிக்கா வுக்கு உதவி செய்வோர் எவருமில்லை. நீரில் அமிழ்ந்து போகும் குழந்தையைப் பார்க்கும் தாய் போல் தன் வயலை வந்து பார்த்துக் கொண்டு நின்றாள். வயிறு பற்றி எரியத் தொடங்கியது. நெடுநேரம் இப்படி நின்றாள்.
டேவிட்சிங்கோ தன் வயலில் வேலை செய்து கொண்டு நின்றவன் . இவளைக்கண்டான். ஒடோடி வந்து, இவள் வயலில் வேலை செய்யத் தொடங்கினான். முத்து மெனிக்கா இதையும் கவனித்தாள். அவளுக்கு தன் கணவரின் நினைவு வந்தது. அவர் இப்பொழுது இவ் விடம் இருந்தால். தன் கணவரின் தேவையை இதற்கு முன்னர் இவ்வாறாக அவள் உணரவில்லை, ஒரு சிறு மனஸ்தாபத்தினால் எங்கோ போனவன் இன்னும் திரும்பி வரவில்லை. பெருமூச்சு விட்டுக் கொண்டு நெடுமரம் போல் தனித்து நின்றாள்.
டேவிட் சிங்கோ இங்கு சிறிது, அங்கு சிறிதாய் வயலின் அணைகளை உடைத்து வெள்ளம் மெல்ல மெல்லப் படிந்து கொண்டிருந்தது. அப்பொழுது அவள் அவனைப் பார்த்து ‘சிங்கோ, நீ இன்று என் வயிற்றில் பால் வார்த்தாயப்பா. நீ இல்லையென்றால் என் பயிர்
பச்சைகள் எல்லாம் நீரில்மூழ்கி அழிந்து போயிருக்கும்
116 O sisir g5b O

என்றாள். அவள் முகத்தில் நன்றியறிதலுடன் கூடிய பாவம் நிறைந்து நின்றது.
'இல்லை, மெனிக்கா, நாங்கள் ஏழைக் குடியானவர் கள். என் வயலைப் போலத்தான் உன் வயலும் இளம் பயிர்கள் அழிந்து போவதை எங்களால் பார்க்கவே பொறுக்காது. பயிர் என்ன உயிரில்லாத ஏதோ ஒன்றா? எங்களுக்கு அவைதான் எங்கள் பிள்ளைகுட்டி மாதிரி. அதனால்தான்.
‘'நல்லாய்ச் சொன்னாய் சிங்கோ, இந்நாட்களில் அப்படி ஆபத்துக்கு உதவுகிறவர்கள் ஆயிரத்தில் ஒன்று. எல்லாரும் இப்படிச் செய்து விடுவார்களா? நான் இதை என் உயிர் உள்ளளவும் மறக்கமாட்டேன். '
டேவிட் சிங்கோவுக்கு இந்த வார்த்தைகளில் ஒரு இன்பம்-என்றும் சுவைக்காத ஒரு சுவை போல் கேளாத ஒரு இன்னிசை போல் காணாத ஒரு புதுமை போல், அவனுக்கு ஒரு தனிப்பட்ட அனுபவம் அன்று.
இப்பொழுது மாரிக்காலம் என்று சொல்வதற்கு முன்னமே மாரிக்காலமும் போய் மறைந்து விட்டது. இனி மாசு மறுவற்ற ஆகாயம், கண்ணைக் கூசும் வெய்யில்; எங்கும் ஒரே தேசோ மயமான பிரகாசம், மெல்லிய தென்றலின் தழுவல். அறுவடைக் காலம் முடிவடைந்து விட்டது.
முத்துமெனிக்கா தன் காணித்துண்டில் ஒரு பகுதி அவரைச் செடிகள், இன்னொரு பகுதியில் புடலங் கொடிகள் போட்டிருந்தாள். புடலங்கொடிகள் நடக்கத் தொடங்கும் குழந்தை தட்டுத்தடுமாறி தாயின் சேலைத் தலைப்பைப் பிடிப்பது போல் தென்னங் கயிற்றில் தாவிக் கொண்டிருந்தன. அவள் வயலில் வேலை செய்து கொண்டு நின்றாள்.
டேவிட்சிங்கோ தன் காணித்துண்டில் பயறு, புடலை, பாகல் போட்டிருந்தான். பாகற் கொடிகள் படர்ந்து பூவிடத் தொடங்கிவிட்டன.
காலமோ விடியலுக்கு முன் வரும் புலரிக் காலம். முத்து
O சி. வைத்தியலிங்கம் O 117

Page 61
மெனிக்கா அவரைக்காய் ஆய்ந்து கொண்டு நின்றாள். டேவிட்சிங்கோ புடலம் பிஞ்சுகளுக்கு கல்லுக்கட்டி தூங்க விட்டுக் கொண்டிருந்தான்.
ஆழ்ந்த அமைதி, புலரிக் கால அமைதி. ஊழிக்காலத் தின் முடிவில் இருக்கும் அமைதி மாதிரி, புல் பூண்டுகள், பட்சிகள், மிருகங்கள் காற்று-ஆம் காற்றும் இந்நேரத் தில் ஆழ்ந்த உறக்கத்துக்கு போய்விடுகிறது. முத்து மெனிக்கா தனிமை" என்றால் என்ன? என்பதை இன்று உணரலானாள்.
தனிமை-இளமை -பிரிவு. பயங்கரமான வார்த்தை கள்தான். சந்தேகமில்லை. மூன்றும் ஒன்று சேர்ந்தால் ஒரு பெண் பேதையால் என்ன செய்ய முடியும்?
அவள் எதையோ எதிர்பார்த்தாள் என்ன அது? அது அவளுக்கே தெளிவாய்ப்புரியவில்லை. மனம் நிலை கொள்ளாமல் அலை பாய்ந்து கொண்டிருந்தது.
அவரைக் கூடையும் நிறைந்து விட்டது. இனி அவளுக்கு இங்கே அலுவலில்லை. பல விதமான உணர்ச்சிகள் அவள் உள்ளத்தில் நிறைந்து நீருண்ட மேகம் போல் இருந்தன, எந்நேரத்திலும் அந்த உணர்ச்சிகளின் அதிர்ச்சியிலே அவள் உள்ளம் வெடிக்கக் கூடும். அந்த வேளை. . .
‘'டேவிட் சிங்கோ, இங்கே வந்து இந்தக் கூடை யைத் தூக்கிவிட்டுப்போ’’ என்று கூப்பிட்டாள். அவன்வரவில்லை, அவள்சிறு தூரம் அவனை நோக்கி ஒடிப்போய்." "சிங்கோ, என்ன கேட்கவில்லையா? இந்தக் கூடையைத் தூக்கிவிட்டுப் போ' என்று கேட்டாள். அவன் இன்னும் வரவில்லை. அவள் அவனை இன்னும் நெருங்கி மென்மையாய் "சிங்கோ, நான் கூப்பிட்டது கேட்கவில்லையா?. என்றாள். “ ‘கேட்டது. இந்தாவந்திட்டேன். '' என்று சொல்லிக் கொண்டு சட்டென எழுந்தான். முன்னே, சமீபத்தில், தனிமையில் - ஐயோ, இப்போ அவனுக்கு காளைப் பருவம . . . . . . .
திடீரென்று ஆண் சிங்கம் போல் தாவி அவள் கை
118 O கங்கா கீதம் O

யைப்பற்றினான். முத்துமெனிக்கா கிடுகிடென்று
மாந்தளிர் போல் ஆடினாள் 'இதென்ன இது? என்கையை விட்டுவிடு சிங்கோ’’ என்று கெஞ்சலாய் அவனைப்பார்த்துச் சொன்னாள். ஆனால் அவன்
கைப்பிடிஇறுகியது. அவன்பிடியிலிருந்து தன்னை விடு விக்க முயன்று பார்த்தாள். முடியவில்லை. குனிந்து அவன் கையைக் கடித்துவிட்டாள். கையின் இறுகியபிடி இன்னும் நெகிழவில்லை. கடித்த இடத்திலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது.
புலரிக் காலத்தின் மங்கிய ஒளியிலே முத்துமெனிக்கா அவனை இப்பொழுது பார்த்தாள். தோள்கள் உயர்ந்து திரண்டிருந்தன. பார்வையில் காந்தம் போன்ற ஒரு ஒளிவீசியது. கைகள் இரும்புபோன்றிருந்தன.
பெட்டைநாய் கடிக்க கடிக்க, ஆண்நாய் தொடர்ந்து போய் வெற்றி கொண்டுவிடுகிறது. ஆண்மயில் ஆடும் கம்பீரத்தைக் கண்ட பெண் மயிலோ மயங்கி அடிமையா கிறது. சேவலின் வீரப்பார்வையையும் நடையையும் கண்டு பேடை தன் கர்வம் அடங்கித்தலைகுனிகிறது. ஆண்மை என்பது இதுதானோ?
இப்பொழுது முத்துமெனிக்காவின் மேனி முழுவதும் பெண்மை குலுங்கியது-மென்மை, வாஞ்சை, இனிமை. தான் கடித்த இடத்தை மென்மையாய் தடவி வருடத் தொடங்கினாள். டேவிட் சிங்கோ வெற்றி வெறி யுடன் அவளைத் தூக்கி அணைத்துக் கொண்டு புடலம் பந்தரின் கீழ்கொண்டு போனான்.
அத்தருணம் திடீரென கடல் கொந்தளித்துப் பொங்கி எழுந்தது. மேகம் மின்னி முழங்கி இடி இடித்தது. காற்றுச் சினத்துடன் சூறாவளியின் வேகத்துடன் வீசத் தொடங்கியது-பிரகிருதியே சீற்றங் கொண்டு பொங்கி ஆர்ப்பரிப்பது போல் தோன்றியது . . கிழக்கு நன்றாய் வெளுத்து விட்டது. டேவிட் சிங்கோ எழுந்து தன் பாகற் கொடிகளைப் பார்த்தான். கொடி களில் பிஞ்சு பிடித்திருந்தது.
முத்து மெனிக்கா மன நிறைவின் பூரிப்பிலே கூடையின் சுமையையும் உணராமல் ஒய்யாரமாய் மிதந்து சென்று
O சி. வைத்தியலிங்கம் O 119

Page 62
கொண்டிருந்தாள். அவளுடைய கையாட்டத்திலே உலகமே சுழல்வதுபோல் இருந்தது.
அன்று சந்தையிலிருந்து அவள் விடு திரும்பும் போது மாலைப் பொழுதாய் விட்டது. வழியிலே ஒரு கிழவனும் கிழவியும்-புருஷரும் மனைவியும்-போய்க் கொண்டி ருந்தார்கள். கிழவன் தோல் சுருங்கிக் கூனி, நடக்க முடியாமல் மெல்ல மெல்ல நடக்க, அவன் மனைவி தாங்கும் ஒரு கழிபோல் அவனை அணைத்துக் கொண்டு போனாள். முத்து மெனிக்காவும் இதைக் கவனித்தாள். கிழவியிடத்தில் அவள் எதையோ கண்டாள். பரிவா? தியாக உணர்ச்சியா? இரக்கமா? அது என்னவென்று சொல்ல முடியாது. அவள் நெஞ்சில் வெட்ட வெளி உண்டானது போல ஒர் உணர்ச்சி மனம் பகீரென்றது. கிழவன் மேல் காட்டும் பரிவும் பாசமும் கிழவிக்கு எப்படி வந்தது? அவனிடம் ஆண்மை இல்லை. அழகில்லை, ஆனால் இருவரையும் எதோ ஒன்று சங்கிலி போல் பிணைக்கிறது. அது பரிசுத்தமானது, தெய்வீகமானது, என்று உணரலானாள். *
அப்பொழுது தான் அவளுக்கு தான் அன்று காலை நடந்து கொண்டது மஹாபாவச் செயல் போலத் தோன்றி அவளை உயிருடன் சித்திரவதை செய்யத் தொடங்கியது.
நேற்று-இன்று. இரண்டுக்குமிடையிலே மனதிற்கும் எட்டாத கற்பனையாலும் கடக்க முடியாத பெரும்பிளவு
நேற்று அவளுக்கு தனித்துவமான ஆளுமை ஒன்று இருந்தது இன்றோ அவள் உருவற்ற உருவம், பேச் சற்ற ஒரு பேச்சு .
மெனிக்கா, தான் செய்த தவறைக் காலப் போக்கில் மறந்திருக்கலாம். ஆனால் அவள் உடலுக்குள் வளர்ந்து வரும் ஒரு ஜீவன் அந்த நினைவுக்கு நெய் வார்த்துக் கொண்டு வந்தது. சில சமயங்களில் நேரமே கழியாமல் பாரத்துடன் கனத்து தொங்கி இருக்கும் வேளைகளில் தன் குடிசைவாசலிலேயிருந்து தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் வருங்காலத்தைப் பற்றி எண்ணாததெல் லாம் எண்ணி மனம் ஏங்குவாள். தன் கணவர் திரும்பி
120 O கங்கா கீதம் O

வருவார் என்று அவளுக்கு நம்பிக்கை இருந்தது. அவர் வந்ததும் அவருடன் எப்படி நடந்து கொள்ளவேண்டு மென்று அனேக நாட்களாய் மனதைத்திடப் படுத்தி வைத்திருந்தாள். என்ன கஷ்டத்தையும் தாங்க அவள் தயங்கவில்லை. ஆனரல் தன் குழந்தையைப்பார்த்து உலகம் எள்ளி, நகைத்து வெறுத்து, ஒதுக்குமே என்ற நினைவுவரும் சமயங்களில் ‘'என் மண்டைசுக்கு நூறாய் வெடிக்காதா ஒ தெய்யோ’’ என்று கதறிக் கண்ணிர் வடிப்பாள்.
டேவிட் சிங்கோவுடன் கூடிவாழுவோம் என்ற எண்ை மும் சில வேளைகளில் உதிக்கும் குழந்தையின் வருங் காலவாழ்வுக்கும் அது உசிதமாய் இருக்குமென்று அவள் நினைப்பாள். ஆனால் 'நெறிதவறிய எச்சில் கலயம்", என்று அவன் இகழ்ந்து விட்டால். . தான் பெற்ற குழந்தையை, "யாருக்குப்பிறந்ததோ, என்று கேட்டுவிட்டால்? இந்தச் சுடுசொல்லை அவளால் தாங்க முடியுமா?, ...”*
இவைகளுக்கிடையில் தெய்வசந்நிதியில் தன்னைத் தொட்டு மணந்த புருஷனின் ஞாபகம்வரும். முன் னொரு நாள்கண்ட கிழத்தம்பதிகளின் தோற்றம் கண் முன்தோன்றும். தன்னையே சபித்துக் கொள்வாள். 'இல்லை, என் உயிர் போனாலும், தன்குழந்தைக்கு இப் பேருலகில் ஒரு ஒதுக்கிடம் இல்லாமற் போனாலும் சிங்கோவிடம் போகவே மாட்டேன்' என்று மனத்திடம் கொள்வாள்.
சிலநாட்களில் குழந்தையும் பிறந்தது.
தான் ஒரு தாய் என்ற அந்தப்பெருமையிலே சில நாட்களாய் எல்லாவற்றையும் மறந்திருந்தாள். தாய் மை உணர்ச்சி உள்ளுக்குள், அட்ங்கிக்கிடந்த மன வேதனையைத்தணித்து அவள் உள்ளத்திலே அன்புப் பெருக்கை ஊற்றெடுக்க வைத்தது. தன் குழந்தை யின் பேச்சற்ற பார்வையும், “கிளி கலை, க்கும் அமிர்த ஒலியும் அவளை மெய் சிலிர்க்கவைத்தன குழந்தை யின் மழலை மிழற்றலிலே பிறருக்குத் தோன்றாத ஒரு அபூர்வ ஆறுதல் மொழியை அவள் கண்டு நெஞ்சு பூரிப்பாள். ஆனால் சிலவேளைகளில் தன் குழந்தையின்
O சி. வைத்தியலிங்கம் O 121

Page 63
விளையாட்டுக்களில் அடிமையாகி அமரரும் அறியாத ஆனந்தத்திலே மூழ்கியிருக்கும்போது உணவில் கடிபடும் கல்லுப்போல் அதன் எதிர்காலவாழ்க்கையைப் பற்றிய . நினைவு ஓடிவரும். நெஞ்சு தடுமாறுவாள். தற்கொலை செய்யவும் நினைப்பாள். வேறுவழி அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் திடீரெனகுழந்தை யின் அழுகை ஒலிகேட்கும். குழந்தைக்காக எதையும் தாங்கத்தக்க ஒரு மனோபலம் பிறந்துவிடும் எதையும் எதிர்த்துப் போராடத் தயாராயிருப்பாள்.
இப்பொழுது அவள் எவருக்கும் பயப்படவில்லை. உலகத்துக்கும், தன் கணவருக்கும், அவள் அஞ்ச வில்லை. .
ஆனால் குழந்தை பிறந்த ஏழாவது மாசம், ஒரு காலை நேரம்; அவள் தைரியம் எல்லாம் எப்படிக் குலைந்த தோ அவளே அறியமாட்டாள். யாரோ அவளைக் குறிவைத்துச் சுட்டதுபோல் அவள் நடுங்கிப்போனாள். ea . A a அன்று அவள்புருஷன் வீடு வந்திருந்தான்.
அவள் எதிர்பார்த்துக் காத்திருந்தவள் இத்தினத்தை; எதையும் தாங்குவதற்கு, எதிர்கொள்வதற்கு வைராக்
கியத்தை வளர்த்து மனத்திடத்துடன் இருந்தவள்ஆனால்- அது ஏனோ?
அவள் கணவன் இதொன்றையும் எதிர்பார்க்கவில்லை. மனக்கோட்டைகளுடன் வந்தவன், குழந்தையைப் பார்த்தான். முத்து மெனிக்காவையும் பார்த்தான்.நெடு நேரம் இருவரையும் பார்த்துக் கொண்டு நின்று விட்டு அப்படியே நிலத்தில் சப்பணம் கட்டி இருந்து கொண் டான். அன்று முழுவதும் அவர்கள் இருவரும் ஒருவார்த் தை பேசவில்லை.
முத்து மெனிக்கா அவனை அணுகவும் பயந்து ஒருமூலை யில் படுத்துக் கொண்டாள். பகலும் தேய்ந்து மாலை யாய் மாறிக்கொண்டிருந்தது; இந்த மெளனநாடகத்தை அவனால் பொறுக்க முடியவில்லை. எவருடனாவது
பேச வேண்டும் போல் இருந்தது. அவன் எழுந்து அவளை அணுகி ‘‘மெணிக்கா' என்று கூப்பிட்டான்.
122 0 கங்கா கீதம் O

அவள்எழுந்திருந்து தலையைக் கவிழ்த்துக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து நீர் ஓடிக்கொண்டிருந்தது. 'நீ என்னை எதிர் பார்க்கவில்லையல்லவா மெனிக்கா’ என்று அவளைப் பார்த்துக் கேட்டா வின்,
"ஆ, அப்படிச் சொல்லாதீர்கள்’’
‘அப்படியானால்?’’
‘'நான் உங்கள் வரவுக்காக இன்றும், நேற்றும், சென்ற மூன்று வருஷங்களும் எதிர்பார்த்திருந்தேன்' 'ஊம் .' என்று ஒரு பெருமூச்சுக் கிளம்பியது. பின்னர் உரக்கச் சிரித்தான். அவன் சிரிப்பைக் கண்டு அவள் பயந்து போனாள்.
'நீங்கள் நான் சொல்வதை நம்பவில்லையா?’’
'நம்பாமல்? நீ இருப்பது நிஜம். உன் குழந்தை இருப் பதும் நிஜம்தானே?"
'அது என்குற்றமில்லையே'
** என்னடி சொல்கிறாய்?" என்று உரக்கக் கத்தினான். குடிசையே அதிர்ந்து விடும் போலிருந்தது.
'துரோகி, உன் குற்றமில்லையென்றா சொல்கிறாய். உண்மையில் உன்னைப்பற்றி நீ என்ன நினைக்கி ‚ወffú፡?” ”
‘என்னைப்பற்றி ஒன்றுமே வேண்டாம். நான் சொல் வதை மாத்திரம் கொஞ்சம் கேளுங்கள். நீங்கள் திரும்பி வரவேஇல்லை. ஒரு நாளா இரண்டு நாளா? மூன்று வருஷங்கள். நான் ஒவ்வொரு நாளும் உங்கள் வாவுக் காக ஏங்கிக் கொண்டிருந்தேன். மருந்துக்கேனும் ஒரு கடிதம், அதுவும் இல்லை, என்னைப்பற்றிய நினைவே உங்களிடம் இல்லை. இங்கே தன்னந்தனியே ஒரு பெண், ஒரு இளம் பெண். தனிமை இருந்தது. அதை நினைத்தாலே என் உடல் நடுங்குகிறது. பிரிவி னால் ஏற்பட்ட மன ஆத்திரம், வேதனை எல்லாம்
O சி. வைத்தியலிங்கம் O 123

Page 64
இருந்தது. அத்துடன் இருந்தது. பயங்கரமான இந்த இளமை. அவைகளுக்கு அடிமையானேன், என் வல்லமையில் இல்லாத ஒரு தளர்ச்சியான சமயத்தில் என்னையே இழந்து போனேன்.'
",சரி சரி மெனிக்கா,நீ செய்ய வேண்டியதையும்செய்து போட்டு உன் மேல் குற்றமில்லை என்றும் நிரூபிக்கப் பார்க்2ோய், அதைப்பற்றி காரியமில்லை - ஆனால் இது பார் சமூகத் தொடர்புடைய பாரதூரமான விஷயம். இதை நீ அறிந்திருப்பாய். இருந்தும் நீ மிருகம் போல் நடந்து கொண்டாய்: அதன் பயனை அனுபவிக்க வேண்டுமென்பது உனக்குத் தெரியுந் தானே ‘’ என்று அவன் சொல்லும் போது குரல் மாறி வேதனையைக் காட்டியது.
'நான் தான் எதற்கும். தயாராய் இருக்கிறேனே."
"அப்படியானால் இந்த வீட்டை விட்டு நீ குழந்தை யுடன் போய் விட வேண்டும். இது இருவருக்கும் நல்லது’’
*சென்ற ஒன்றரை வருசமாக நான் அதற்கு மனதைத் தயார் செய்து வைத்திருக்கிறேன். நான் தவறு செய்து கொண்டேனாகில் தண்டனையை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும். ஆனால் நான் உங்களை ஒன்று கேட் கிறேன். கருணை கூர்ந்து . "" அவளால் பேச முடிய வில்லை. நா தள தளக்க, ‘'என் பிழைகளை மன்னித்து விட்டதாக ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள். அதைத்தான் நான் உங்களிடம் யாசிக்கிறேன்.""
அவள் ஒன்றுமே பேசவில்லை. அவன் கண்களிலிருந்து எரியும் கண்ணிர் பொங்கிவழிந்தது.
முத்து மெனிக்கா, திடீரெனப் பாய்ந்து அவனை இறுக அணைத்துக் கதறினாள். பின்னர் கீழே வீழ்ந்து அவன் பாதங்களைத் தொட்டு தன் கண்களில் ஒற்றிக் கொண் டாள்- அப்பொழுது அவன் அவளைத் தூக்கி நிறுத்தி அணைத்தவண்ணம் ‘‘மெனிக்கா, என் மன்னிப்பு உனக்கு வேண்டாம். உலகம், உன்னை மன்னிக்க வேண்டும்.முதல் அதைப் பெற்றுவா’’ என்றான்.
124 O கங்கா கீதம் O

அவள் தன் குழந்தையை எடுத்து தன் மார்புடன் அணைத்தவண்ணம் குடிசையிலிருந்து வெளியே காலடி வைத்தாள். நள்ளிரவு.
முத்து மெனிக்காவின் சிந்தனைகள் அறுந்து போயின. இப்பொழுது அவள் நிற்கும் நிலை, இடம் , காலம், யாவும் நினைவுக்கு வரவே துரிதமாய் நடக்கத் தொடங் கினாள். மெல்லிய குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. ஒரு முற்சந்தி குறுக்கே வந்தது. அதன் ஒரத்தில் ஒரு பிரமாண்டமான வெள்ளரச மரம், அதன் நிழலில் நிஷ்டை கூடும் நிலையில் ஒரு புத்தவிக்கிரகம் யாரோ வழிப்போக்கன் ஏற்றிப் போன ஒரு மெழுகுவர்த்தி எரிந்து அவியும் தறுவாயில் இருந்தது.
முத்து மெனிக்கா அந்த விக்கிரகத்தின் முன்னால் போய்
நின்று அதையே உற்றுப்பார்த்தவண்ணம் நின்றாள்.
கண்கள் கலங்கிக் கொண்டிருந்தன. தன் குழந்தையை
எடுத்து அந்த விக்கிரகத்தின் முன்னால் கிடத்தி கீழே
ழ்ந்து வணங்கினாள்.
‘‘பெருமானே, சாந்தமூர்த்தியே, இந்தக் குழந்தையை உனக்கு அடைக்கலமாய் ஒப்பிக்கிறேன். நான் காற்றுக் குப் பயப்படவில்லை, மழைக்குப் பயப்படவில்லை, தீக்குப் பயப்படவில்லை, மிருகங்களுக்கும் பயப்பட வில்லை. ஆனால், என் இனத்தவராகிய மனிதரை நினைத்தாலே என் மனம் நடுங்குகிறது. இந்தக் குழந்தையை அவர்களிடமிருந்து காப்பாற்று. .'
அத்தருணம் வெளியே செபாலி மலர்கள் மலர்ந்து கொண்டிருந்தன.
முத்து மெனிக்கா தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு யுகம் யுகாந்தரமாய்ப் போய்க் கொண்டிருக்கும் அபாக்கியவதிகளான தாய்மாரின் அடிகளைப் பின்
பற்றிச் சென்று கொண்டிருந்தாள். முன்னே குரூர உலகம். வழியோ நெடுவழி.
ஈழகேசரி (5.7.1942)
A
O சி ,வைத்தியலிங்கம் O 125

Page 65
பைத்தியக்காரி
கழனி கங்கையின் உபநதி ஒன்று ஜெயலாக் கிராமத்தை அள்ளி அணைத்துக் கொண்டுசெல்கிறது. அது சலசலத் துக் கொண்டு ஓடும்போது அதன் மெல்லிய ஓசை சமீபத்தில் இருக்கும் குடிசைகள் வரையில் கேட்டுக் கொண்டேயிருக்கும்.
இளவேனிற்காலம். ஆற்றோரத்தில் நின்ற மாமரங்கள் பூவும் பிஞ்சுமாய் ஆடாமல் அசையாமல் எதையோ உற்றுக் கேட்டுக் கொண்டு நின்றன , பிரகிருதி முழு வதுமே அன்று பேரமைதியுடன் இருந்தது.
நதிக்கரையின் ஓர் இடத்தில் ஓர் இளம் பெண் குடத்தை ஜலத்தில் அமிழ்த்தித் தண்ணீர் மெல்ல மெல்ல ஒரு விசித்திர ஓசையுடன் அதில்நிறைந்து கொண்டிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள். அவளுடன் வந்த அவள் குழந்தை குறு நடை நடந்து கரையில் கிளிஞ்சில் பொறுக்கிக் கொண்டிருந்தது. அடிக் கடி அவள் கண்கள் குழந்தையை நோக்கிச் செல்லும். குழந்தையின் சிற்றடிகள் மணலில் பதிந்திருப்பதைப் பார்க்க அவள் உள்ளம் விம்மிப்பூரிக்கும். குடத்திலே நீர்

நிறைந்து பொங்கிப் பெருகுவதையும். கவனியாமல் குழந்தையைப் பார்த்த வண்ணம் அவள் நின்றாள்.
அப்படி நின்றவள் உடனே திரும்பிப் பார்த்ததும் திடுக் கிட்டாள். குடிமனைகளிலிருந்து நதியை நோக்கி வரும் ஒற்றையடிப்பாதையில் ஒரு கிழவி வந்து கொண்டிருந் தாள். அவள் ஒரு காலை ஊன்றிக் குடுகுடுவென நடந்து கொண்டு வாயில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு வந்தாள். நல்ல கூனல் கிழவி அவள். பேரீஞ்சைவத்தல் போல் அவள் தோல் சுருங்கிக் காணப் பட்டது. தலைமயிர் எண்ணெய் காணாமல் சிக்கேறி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து திரண்டு புளியங்காய் போல் வீழ்ந்திருந்தது. அவள் உடுத்திருந்த சேலை, அதை நெருப்பில் போட்டாலும் எரியாது, வாழ்க்கையில் அவளுடன் சேர்ந்த அழுக்கு முழுவதும் அதில் ஏறியிருந் தது. இருவிழிகளும் யாரையும் அலறச் செய்துவிடும். அவ்வளவு பயங்கரமானவை. வெளுத்துத் தொங்கிக் கொண்டிருந்த வாய் இதழ்கள் இன்றும் குரூரமாய்அவள் கோரப் பற்களை எடுத்துக் காட்டின. ஊன்று கோலைப் பிடித்திருந்தது கை. அது கையல்ல, காய்ந்து ஒடிந்து வீழ்ந்த மரச் சுள்ளி.
கிழவி ஆற்றோரத்தை நெருங்கவே அந்த இளம் பெண் தன் குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு, குழந்தையையும் கைகளால் அனைத்த வண்ணம் அவ் விடத்திலிருந்து விரைவாய்ப் புறப்பட்டாள். குழந்தை யைக் கண்டதும் கிழவி காறி உமிழ்ந்து விட்டுப் பற்களைக் காட்டி குரூரமாய் இளித்துக் கொண்டு கழி யை ஊன்றி நிமிர்ந்து நிற்கமுயன்றாள்.
அவ்விடத்திலிருந்து ஓடும் பொழுது அந்த இளம் பெண் 'ஹா கடவுளே, இந்தப் பிசாசிடமிருந்து என் குழந்தை யைக் காப்பாற்று ' என்று கூச்சலிட்டுக் கொண்டு பேரனாள். கிழவி அவள் ஓடுவதைப் பார்த்த வண்ணம் ஏதோ சொல்லிக் கொண்டு நின்றுவிட்டு, ஆற்றோரத்தை அடைந்து ஒரு கல்லின் மேல் இருந்தாள்.
நதிமென்மையாய் இசைத்துக் கொண்டு ஓடிக் கொண்
127 O கங்கா கீதம் O

Page 66
டிருந்தது. தன்னுடைய கழியால் அந்தக் கல்லைத் தட்டிக் கொண்டே ‘நதியே எப்பொழுதுமே ஓடிக் கொண்டிரு. பிரிந்துபோன அவருடைய ஆத்மாவுக்கு இனிய கீதம் இசைத்துக் கொண்டே உன் குளிர்ந்த கைகளால் அவருடைய எலும்புக் கூட்டைக் கரையிலே ஒதுக்கிவிடு. நீ ஓடிக்கொண்டிருக்கும் வரையில் உலகத் தில் இன்பம் நிலை பெற விட்டு விடாதே. யெளவன வாலிபர் மாண்டு மண்ணுடன் மண்ணாய்ப் போகட்டும், காதலரின் அணைப்பிலே துயிலும் இளமங்கையரைக் கொன்று விடு' என்று முணுமுணுத்துக் கொண்டிருந் தாள. -
பின் அவள் குனிந்து ஆற்றிலே ஓடிக் கொண்டிருக்கும் தெளிந்த நீரின் ஓசையை உற்றுக் கேட்டாள். அது அவளைப் பரிகாசம் செய்து கொண்டு ஓடியவண்ணம் இருந்தது. ஒடிந்து காய்ந்துபோன ஒரு தனிமரம் அந்தக் கிழவி. ஆற்றோரத்திலே கிடக்கும் பாசியைப் போன்ற ஒரு ருசியற்ற பிண்டம், சாரமும். செழிப்பு மற்ற உலர்ந்த மண் அவள். நித்திய யெளவனத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் அந்த நதியின் சில சலப்பை அவள் உற்றுக் கேட்டாள். எதையோ யோசித்த வண்ணம் அவள் அப்படியே இருந்தாள், இருந் தாள். . அவளுடைய மனம் பல வருஷங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை நோக்கி அலைந்து சென்றது. அவள் நடுநடுங்கினாள்.
ஓர் உயர்ந்த கொடி போன்ற இளம் பெண் கூந்தல் அழகே ஒரு தனி அழகு. மலை நாட்டிலே மலர்ந்த ஒரு மலர்-இப்படித்தான் முன்னொரு பொழுது கிழவி இருந்தாள். ஒருநாள் அந்திப் பொழுது காலமோ காம வேளின் காலம். இதே நதிக்கரையில் இதே இடத்தில் ஒருவன் அவளைக் கண்டான். அவள் நதியில் ஸ்நானம் செய்ய வந்திருந்தாள். அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள். இது ஐம்பது வருஷங் களுக்கு முன்,
இரண்டு மாத காலமாக அவனுக்காக அவள் ஏங்கி
இருந்தாள். நாணத்துடன் கூடிய ஒரு இன்ப வேட்கை யால் அவள் கொடி உடம்பு துடித்துக் கொண்டிருந்தது.
- 128 O கங்கா கீதம் O

அவன் ஒரு குடியானவன். தந்தை விட்டுச் சென்ற நிலத்தில் தனியே இருந்தான். சில நாட்களில் வந்து அவளை அழைத்துக் கொண்டு போய் விவாகம் செய்து கொண்டான். அவள் அவனுடன் கூடி வாழ்ந்தது இரண்டே இரண்டு இரவுதான்
மூன்றாவது நாள். w இளம் இரவு. இருண்டு சொற்ப நேரந்தான் கழிந்திருந் தது. ஆகாயம் தெளிந்து நீல நிறத்துடன் விளங்கியது. அவனுடைய நண்பன் ஒருவன் வந்தான். வீடு திறந் திருந்தது. இன்னும் விளக்கேற்ற வில்லை.
நண்பன் வந்து 'இன்று நல்ல நிலா வீசுகிறது. ஆற் றோரத்தில் இரண்டு படகுகள் இருக்கின்றன. வா, கொஞ்ச நேரம் ஆற்றில் படகோட்டிக் கொண்டு உல்லாசமாய் இருந்துவிட்டுத் திரும்பலாம்' என்றான். அவன் ஒன்றும் பேசவில்லை. அவளைப் பார்த்தான்.
"நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தாலும் எடுக்கலாம். மலைநாட்டில் நல்ல மழை பெய்யும் காலம் இது.
و • •ه
போக வேண்டாம்' என்றாள் அவள் .
நண்பன் அவனைப் பார்த்து 'உன் ஆண்மை எங்கே போய் விட்டது. பெண்டாட்டி வந்து இரண்டு நாளா கவில்லை. இப்படி அடிமையாய்ப் போனாயே’’ என்றுபரிகாசமாய்ச் சொன்னான். இப்படிச் சொல்லி விட்டு, திரும்பிப் போகத்தயாரானான். அவளுடைய கணவனும் அவனைப் பின் தொடர எழுந்தான். அவள் அவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டு போக வேண்டா மென்று கெஞ்சினாள். ஆனால் அவன் கோபத்துடன் அவளைத் தள்ள்ளிக் கொண்டு விசையாய் நடந்து போய் விட்டான்.
நண்பர்கள் இருவரும் கிராமத்தில் உள்ள வேறு சில நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரையை அடைந்தார்கள்.
அவர்கள் போனபின் இருந்த இடத்திலேயே அவள்
O சி. வைத்தியலிங்கம் O. 129

Page 67
வெகுநேரம் இருந்தாள். தனிமையும் அவளுடன் இருந்தது. மதி மேலே எழுந்து தன் அமுதகிரணங்களை அவள் வீட்டுவாசலிலே பொழிந்து கொண்டிருந்தது. எங்கும் பரந்திருந்த மோனம் சந்திரிகையுடன் கலந்து கொண்டிருப்பதைப் பார்த்து பிரகிருதியே நாணத்தால் ஒடுங்கிப்போயிற்று. நேரங் கழியக் கழிய அவள் நரம்பு கள் சோர்ந்து போயின. மனத்திலே பயம் வேர் ஊன்றி யது. மேனி முழுவதும் ஓர் அயர்வு பரந்து, மனத்தில் பயங்கரமான எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந் தன. பயத்தினால் முகத்திலே வேர்வை கூடச் சொட்டியது. அவளால் அடையமுடியவில்லை. மயங்கி யிருந்த நிலாவொளியைப் பார்த்த வண்ணம் அவள்
அமைதியாய் இருந்தாள்.
பேரமைதியுடன் இருந்த இரவு திடீரெனப் பேரிரைச்ச
லுடன் ஆர்ப்பரிப்பது போல் அவள் உணரலானாள்.
ஒரு பயங்கரமான கூச்சலுடன் பாய்ந்து எழுந்தாள்.
குழம்பியிருந்த மனத்திலே கவிழ்ந்து, நிலைகுலைந்து
எல்லாம் தலைகீழாகிவிட்டது பேt ல் அவளுக்குத் தோன்றியது. தானே கூச்சலிட்டதை அவள் மறந்து
போனாள். அது அவள் கணவனின் குரல் போல் அவள்
காதுகளில் எதிர் ஒலித்தது. அந்த ஆறு தெரிந்தது.
அதன் மத்தியில் அவன் புருஷனும் மரணதேவனும் கை
கோத்து நிற்பது போல் அவள் உணாலானாள்.
அந்தக் கூச்சல் இன்னும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. வீட்டிலிருந்து வேகமாய் வெளிக் கிளம்பினாள். வீதியிலே ஒரு குருவியும் இல்லை, ஊர் அடங்கி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. சந்திரிகையிலே தோய்ந்திருந்த வீட்டுக் கூரைகளும், மரங்களும் அவள்போவதைப் பைசாசங்கள் போல் பார்த்திருந்தன. அதி விரைவாய் ஆற்றோரத்தை வந்தடைந்து விட்டாள். நதி நடுக்கத்துடன் பாய்ந்து கொண்டிருக்க அதன் இருதயத்தைத் திறந்து காட்டுவதுபோல் சந்திர கிரணங் கள் அதன் நீரில்ே பிரதிமலித்துக் கொண்டிருந்தன. தூரத்திலே விம்மிப் பெருமூச் செறிவது போல் இருந்தது வயல் வெளி,
அவள் மெதுவாய் அடிமேல் அடிவைத்து ஆற்றோர
130 о. கங்கா கீதம் O

மாய் நடந்து சென்றாள். அந்தக் கூச்சல் மாத்திரம் இன்னும் அவள் காதுகளில் வீழ்ந்து கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும் ஒரு கூட்டமாகப் பலர் ஆற்றங் கரையில் நிற்பதைக் கண்டாள். அப்படியே உறைந்து போனாள். மேனி விறைத்துச் சிலைபோல் நின்றாள். அவர்கள் பேசுவது அவள் காதுகளில் வீழ்ந்த தென்றா லும், என்ன பேசுகிறார்களென்பது அவளுக்குத் தெளி வாய் விளங்கவில்லை. அவர்கள் பேச்சோ அவளுக்குப் பொருளற்ற பேச்சு.
மூச்சுவாங்க முன்னால் ஓடினாள். அவளைக் கண்டதும் அந்தக் கூட்டத்தினர் திடுக்கிட்டுப் போனார்கள். அவர் கள் அவளை அந்த இடத்தில் எதிர்பார்க்கவில்லை. அவர்களைக் கவனியாமல் ஆற்றில் குதிக்க ஓடினாள். உடனே ஒருவன் அவளை எட்டிப் பிடித்துக் கொண் டான். அவன் கைகளைப் பற்களால் கடித்துவிட்டு, வெறி கொண்ட பெண்சிங்க்ம்போல் ஏதோ வாயில் வந்ததெல்லாம் பேசினாள். அவளைப் பிடித்து கயிற் றால் கட்டினார்கள். அவள் அமைதியாய்ப் பேசாமல் நின்றாள்.
இப்பொழுது அவளுக்கு வேதனை இல்லை. அந்தக் கூச்சலும் அவள் செவிகளில் கேட்கவில்லை. தேகம் ஒடுங்கி மனமும் இளைத்துப் போய்விட்டது, எப்ப டியோ , அக்கும்பலில் தன் புருஷன் மாத்திரம் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டாள். அந்தக் கூட்டத்தின ரின் கண்களிலே அவள் கணவரின் மரணக்குறி த்ெரிவது போல் உணர்ந்தாள். கரையிலே கிடந்தது ஒரு படகு, ஒரே ஒரு படகு, அதையும் பார்த்தாள்.
திடீரென, அக்கும்பலிலிருந்து அவள் கணவரின் நண்பன் 'என்ன பயங்கரமான மரணம்' என்று தன் கூட்டாளிகளைப் பார்த்துச்சொன்னான். வேறொருவன் 'மலை போல் ஒரு அலை வந்தது தான் தெரிந்தது. கூடிண நேரத்தில் எல்லாம் மின் வெட்டுப் போல் முடிந்து விட்டன."
இன்னும் ஒருவன் ‘நான் நன்றாய் கவனித்தேன். ஒரு பேரலை வந்து மோதியது; படகு ஒரு புறம் சாய்ந்து கவிழப் போகும் தருணத்தில், அவன் முழுப்பலத்துடன்
O சி. வைத்தியலிங்கம் O 131

Page 68
துடுப்பை வலித்தான். ‘படக்" என்று துடுப்பு முறிந்து விட்டது. ஐயோ, படகு சுழன்றது. அவன் நீரிலே மறைந்து போனான். அதற்குள் எங்கள் படகு அள்ளுண்டு வெகுதூரம் வந்து விட்டது’’.
'உஸ், மெல்லப் பேசுங்கள். அவள் கேட்டு விட்டால், என்றான் நண்பன். முன்பேசியவர்களில் ஒருவன் 'அவள் அறியத்தானே வேண்டும்? பாவம், அவளும் துக்கம் தாங்காமல் இறந்தே போவாள்' என்றான்.
அப்பொழுது எல்லோரும் "ஆம், இல்லாவிடில் அவளுக்கு வாழ்நாள் முழுவதும் தீராத துன்பமே’’ என்றார்கள்.
அவர்கள் பேசுவது அவள் செவிகளிலும் வீழ்ந்தது. னால் அவள் அசையவில்லை. வேதனைப் படவுமில்
ன்ல. குழத்தை போல் ஒரு விநோதப் பார்வையுடன்
நின்றாள்.
சட்டென்று கைகளை உயர்த்திப் பயங்கரமாய் கூச்சல் இட்டாள். அவர்கள் அவளிடம் ஓடி வந்தார்கள். அவள் முகம் வெளுத்துக் காணப்பட்டது. அவள் சிரித்தாள். இல்லை, அவளைப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது.
**அவளுக்குப் ‘பைத்தியம்" என்று மெதுவாய்ப் பேசிக் கொண்டனர்.
அதன் பின்னர் ஐம்பது நீண்ட வருஷங்கள் கழிந்து விட்டன. இக்காலத்தில் அவள் எப்போதும் அழுத தில்லை. அவளுடைய துக்கம் ஒரு தீரா நோய் போல் வளர்ந்து கொண்டே வந்தது. அந்தத் துக்கத்தின் வீறுக்கு முன்னால் மரணமும் நெருங்க அஞ்சியது. அவளது குரூரமான கண்களில் சுடர் விடும் நெருப்பைக் கண்டு, எவரும் அவளைக் காதலிக்கவுமில்லை. அவளு டைய உடம்பும் அவள் ஆத்மாவைப் போல் உலர்ந்து போய்விட்டது. அந்தக் கிராமத்தில் அவளைக் கண்டாலே எவரும் பயந்து நடுங்குவர். இளமை யுடன் கூடிய எதைக் கண்டாலும் அவள் நெஞ்சு பொறுக்காது. ஏசுவாள்; காறி உமிழ்வாள்; சபிப்பாள்.
132 O கங்கா கீதம் O

ஆற்றங்கரையிலே முதல் முதல் அவனைச் சந்தித்த இந்த இடத்துக்கு அவள் நாள்தோறும் வருவாள்.
கிழவியின் மனத்திரையில் தோன்றிய தோற்றம் மெல்ல அழிந்தது. அவள் இளைத்துக் காணப்பட்டாள். அவள் இருந்த கல்லின் மேல் திரும்பவும் தன் கழியால் தட்டினாள்.
‘நதியே, நிதானமாய் ஒடு. அவருடைய எலும்புக் கூட்டை அணைத்தவண்ணம் ஒடு. எல்லாம் இறந்து ஒழிகின்றன, ஆனால் நீயோ, ஒரு தேவதை போல் யெளவனத்துடன் எப்பொழுதும் ஒடிக் கொண்டிருக் கிறாய்."
கேலிச் சிரிப்புடன் ஒடிக் கொண்டிருக்கும் அந்த நதிக்
கரையில் இருந்து கொண்டு, அந்தப் பைத்தியக்காரக்
கிழவி இப்படி முணுமுணுத்தாள்.
(ஒரு ஆங்கிலக் கதையைத் தழுவியது)
கலைமகள்--(1942)
O சி. வைத்தியலிங்கம் 0 133

Page 69
கங்கா கீதம்
அத்தருணம் பெளத்தப் பள்ளியில் நின்ற மாமரங்கள் ஆடவுமில்லை, அசையவுமில்லை. மாஞ்சோலையில் ஊதிக் கொண்டிருந்த காற்று, சலனமற்று இருந்தது, பள்ளியைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்த மஹாவலி கங்கையும் ஒரு கூடிணம் தயங்கி நின்றுதான், திரும்ப வும் ஓட ஆரம்பித்தது. . .
மகாநாயக தேரர், புத்தகோஷர், திரும்பிப் பார்த்தார். பெளத்தப் பள்ளியின் வாசலைத் தாண்டி மறைந்து கொண்டிருந்தது ஒரு யெளவன பிக்ஷாவின் உருவம். அது கையில் பிக்ஷாபாத்திரத்துடன் நிலத்தை நோக்கிய வண்ணம் சென்றது. இதைப் பார்த்த அவருடைய கண் களிலே நீர் நிறைந்து கொண்டிருந்தது. ஆனால், இது
அவர் இட்ட கட்டளை.
இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம். சமனலகந்த மலையின் அடிவாரத்தில் ஆற்றோரமாய் ஞானோதயப் பிரிவினா என்ற ஒரு பெளத்தப் பள்ளி, அதைச் சுற்றிலும் குன்றுகள். ஒரு புறத்தில் குறிஞ்சி நாட்டு மக்களின் குடிசைகள். இடையில், உன்னதமாய்

நிமிர்ந்து நின்றது ஒரு புத்த விஹரரை. புத்தக்ோஷர் அப்பள்ளியின் மஹாநாயக தேரர் பீடத்தில் அமர்ந் ததும், அந்தப் பிரிவினாவின் பெயரும் புகழும் கடல் கடந்து, சீனா, திபெத், இந்தியா முதலிய தேசங்களை யும் எட்டியிருந்தது. அந் நாடுகளிலிருந்து புத்த பிக்ஷ மக்கள், மஹா வித்வானாகிய புத்த கோ ஷரிடம் பாடங் கேட்க வந்து கொண்டிருந்தனர். காஞ்சியிலி ருந்து உபாலி என்ற ஒரு யெளவன சந்நியாசியும் வந்திருந்தார்.
புத்த கோஷர் அந்நாட்களில் 'விசுத்தி மார்க்கம்' என்ற பெளத்த நூலைப் பாலி பஷையில் எழுதிக் கொண்டிருந் தார். உபாலியின் குருபக்தியையும், புத்திக் கூர்மையை யும், திரிபிடகத்தில் அவனுக்கு இருந்த பரிச்சியத்தை யும் கண்டு, புத்த கோஷருக்கு அவன் மேல் விசேஷ மதிப்பும் அன்பும் இருந்து வந்தது. அவர் சொல்லிக் கொண்டே போக, அவன் ஏடுகளில் அவைகளை எழுதிக் கொண்டே போவான். இடையில் அவன் சட்டென்று ஒரு கேள்வியைப் போட்டுவிட்டு, ஆசாரிய குருவையே பார்த்துக் கொண்டிருப்பான். அவரும் அவனுடைய தீக்ஷண்யமான புத்தியைக் கண்டு மனசில் வியந்து கொண்டு, ‘‘உபாலி, தக்க சமயத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டு விட்டாய். இல்லையானால், நூலில் குறை ஏற்பட்டிருக்கும் ' என்று சொல்வார்.
அந்தி வேளை, இப்படித் தரிசன ஆராய்ச்சியிலும், நூல் எழுதுவதிலும், உபதேசங்களிலும் கழிந்து விடும்.
காலையானதும் சங்கத்திலுள்ள பிக்ஷாக்கள் எல்லோரும் உபாலியும் சேர்ந்து பிகூைடிப் பாத்திரத்துடன் ஊர் மனைக்குப் போய் விடுவார்கள்;
உபாலி வழக்கமாய்ப் பிச்சை வாங்கி வரும் ஒரு குடிசை யில், ஓர் இளம் பெண்ணும், அவள்தந்தையும் குடியிருந் தனர். டிங்கிரி மெனிக்கா என்ற அந்தப் பெண்,பிகூைடிப் பாத்திரம் நிறைய உணவு நிரப்பி, உபாலியின் கால் களில் வீழ்ந்து வணங்கி உபசரித்து அனுப்புவாள்.
இலையுதிர் காலம் முடிவீடைந்து விட்டது. பெளத்தப்
O சி. வைத்தியலிங்கம் O 135

Page 70
பள்ளியில் இருந்த மாஞ்சோலையில் மரங்கள் இளந்தளிர் விட ஆரம்பித்திருந்தன. குயிலும், மைனாவும், நாகண வாய்ப் புள்ளும் மாஞ்சோலையில் வந்து ஆரவாரஞ் செய்யும் நாட்கள். சாலையோரத்தின் இருமருங்கும் நிற்கும் அசோக மரங்கள் பூச்சுமந்து நின்றன. மழை விட்டு ஆற்றுநீர் தெளிவுடன் ஒடிக் கொண்டிருந்தது.
உபாலி வழக்கம் போல் டிங்கிரி மெனிக்காவின் குடி சைக்கு முன்னால் வந்து கண் மூடிய வண்ணம் நின்றான் முன்னால் மஹாவெலி கங்கை, நித்திய யெளவனத் துடன் பாடிக் கொண்டு போனது. பிரகிருதியே அப் பாட்டில் மயங்கி, உற்றுக் கேட்டுக் கொண்டு மெளன மாய் நின்றது. டிங்கிரி மெனிக்கா பிகூைடிப்பாத்திரத்தை உணவினால் நிரப்பி விட்டு, பிக்ஷாவின் கால்களில் வீழ்ந்து வணங்கினாள். அப்பொழுது அவள் கைகள் அவனுடைய பாதங்களில் பட்டுவிட்டன.
உபாலி போய் விட்டான். ஆனால் டிங்கிரி மெனிக்கா அப்படியே நின்று விட்டாள். பிக்ஷாவின் வடிவத்தில், முன் அவள் கண்டிராத ஒரு புதுமையையும், மாயத்தை யும், மயக்கத்தையும் இன்று கண்டு விட்டாள். ரோஜாச் செடியின் இலைகளுள் மறைந்திருக்கும் ரோஜாப் புஷ்பத் தின் இதழ்கள் போல் வெளிக்காட்டாதிருந்த ஓர் இன்ப மயமான உணர்ச்சி, அவள் மேனி முழுவதும் பரவி அவளை மெய் சிலிர்க்கச் செய்தது.
மறுமுறை அவள் உபாலியைக் கண்ட பொழுது, அவளுக்கு ஆனந்தத்தினால் கூத்தாட வேண்டும் போல் இருந்தது. சந்திர கிரணங்களைக் கண்ட சந்திரகாந்தக் கல் போல் உள்ளம் நெகிழ்ந்து போனாள். அவளுடைய நடையிலும், பார்வையிலும், கீழே வீழ்ந்து வணங்கும் முறையிலும் ஆடவரைப் பித்தாக்கும் ஒரு மோகன சக்தி எப்படியோ வந்து விட்டது. இதையெல்லாம் உபாலி எதிர்பார்க்க வில்லை. அபசுரம் போல் ஏதோஒலிப்பதாக அவன் உணரலானான். பெளத்த பள்ளிக்கு அவன் திரும்பும் பொழுது மனம் அமைதியுடன் இருக்கவில்லை, மனிதன் இப்படித்தான்! ஊருக்குள் விஷமி யாரோ ஒரு விதையை விதைத்து விட்டான். அது விஷவிருகூடிமாகிப் பெளத்த பள்ளியின் புனிதமான காற்றையும் நஞ்சாக்கி
136 O கங்கா கீதம் 0

விட்டது. உபாலியைப் பற்றிப் பிக்ஷாக்களுக்கிடையில் பலவிதமான கதைகள் உலாவத் தொடங்கின,
உபாலி வழக்கம் போல் பிச்சைக்குப் போய் வந்தான். அவனது உள்ளம் உலக விவகாரங்களில் படியாமல், மேலும் பரமார்த்திக விஷயங்களிலே உறவாடியிருந் தது. நியமமான வாழ்க்கையினாலும், தியானத்தி னாலும் அவனது உள்ளும் புறமும் தூய்மை பெற்று, முகத்திலே சாந்தப் பொலிவு நிறைந்து கொண்டு வந்தது. புத்தகோஷர் தனக்குப் பின்னர் ஆசாரிய பீடத் தில் இருக்கத் தகுதி வாய்ந்த ஒருவன் இருக்கிறான்
என்று பெருமை கூடக் கொள்வார்.
ஒரு நாள் டிங்கிரி மெனிக்கா கேட்டாள். ‘‘சுவாமி நானும் நேற்று ‘சில்’ அனுஷ்டித்தேன். அதனால்
என்ன பயன் சுவாமி எனக்கு?'
‘‘நல்லது, அது உனக்கு மனச் சாந்தியும், தூய்மையும் கொடுத்திருக்கும்' என்றான் உபாலி.
ஆனால் எனக்குப் பெரிய வேதனையாயல்லவோ இருக்கிறது சுவாமி. கடலலைபோல் என் நெஞ்சம் ஓயாது புலம்பிக் கொண்டிருக்கிறதே!’’
'இந்த வேதனையையும், தீராத் துக்கத்தையும் கண்டு தானே பகவான் உலகத்தையே துறந்தார். உன் மனசை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.'
** மனசைப் பற்றிப் பேசுவானேன். இந்தச் சரீரத்தையே கட்டியாள முடியாமல் போய்விடுகிறது. அக்கினி வீசுவது போல் ஒரு கனல் என் தேகம் முழுவதையும் தகித்துவிடும் போல் உணர்கிறேன். இது ஏனோ
gr6ur L6)?''
**உன் மனந்தான் எதற்கும் மூலகாரணம். இன்று உனக்கு உடல் தளர்ச்சியுடன் மனத் தளர்ச்சியும்
இருக்கிறது.'
"'எனக்கா தளர்ச்சி சுவாமி? சில வேளைகளில் கார் மேகத்தைக் கண்ட மயில் போல் என் மனம் கூத்தாடு
O சி. வைத்தியலிங்கம் O 137

Page 71
கிறது. ஆற்றோரத்திலிருந்து நான் தண்ணீர் மொண்டு வரும் பொழுது, நடை கொள்ளாமல் குதிக்கச் சொல் கிறது. மெல்லிய இளம் காற்று என் கன்னத்தில் பட்ட தும், முகமும் நாணிச் சிவந்து விடுகிறது. இவைகளை உங்களைப் போன்ற ஒருவர் ஒளிந்திருந்து பார்க்க வேண்டுமென்று ஏங்குகிறேன். இந்த ஏக்கத்திலும் ஓர் இன்பம்தான் உண்டாகிறது. இவையெல்லாம் ஏனோ 36m8?'
‘‘இதெல்லாம் தளர்ச்சியால் ஏற்பட்ட மயக்கம்.' 'மயக்கம். அப்படியானால் நீங்கள் இருப்பது மயக்கமா சுவாமி? நான் இருப்பது மயக்கமா? என் பொற்கனவுகளெல்லாம் மயக்கமா? என் இருதயத்தில் பொங்குகிற உணர்ச்சியெல்லாம் மயக்கமா?’’
உபாலி ஒன்றுமே பேசவில்லை. சட்டென்று அவ்விடத்தி லிருந்து போய் விட்டான்.
டிங்கிரி மெனிக்கா ஓடோடியும் போய்த் தன் அறையின் மூலையிலிருந்து கதறினாள். நெருப்புக் கண்ணிர் அவள் கண்களில் பொங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய தந்தை வந்து கூப்பிட்ட பொழுதும் அவள் ஒன்றுமே பேசவில்லை.
உபாலி நேரே தன் அறைக்குப் போய் ஆழ்ந்த தியானத் தில் இருந்தான். நடுயாமம் வரையிலும் அவன் அறை யிலிருந்து, 'புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி” என்ற ஒலி கேட்டுக்
கொண்டிருந்தது.
புத்தகோஷர் இந்தியாவைச் சேர்ந்தவர். புத்த சமயத் தின் ஒரு "கிளையாகிய ஹீனயான மதக் கொள்கை களைப் பயிலும் எண்ணத்துடன் இலங்கைக்கு வந்து, நாயக தேரரானார். திரிபிடகத்தின் உாை நூல்களும், பாஷியங்களும் சிங்கள பாஷையில் இருந்தன. அவை
களைத் தகுந்த ஆசாரியர் மூலம் படித்துணர்ந்து மஹா பண்டிதராய் விளங்கினார். இவைகளுக்குப் பாலி பாஷையில் வியாக்யானம் எழுத வேண்டுமென்று அவருக்குப் பெரும் ஆவல் இருந்தது. இந்நாட்களில்
138 O கங்கா கீத்ம் O

அவர் தீர்க்க நிக்காயம்' என்ற நூலை எழுதத் தொடங்கியிருந்தார். உபாலி பாலி பாஷைஃ சிங்களமும் நன்கு அறிந்திருந்தமையுரல், புத்த கோஷருக்கு மிகவும் உதவியாயிருந்தான்,
குருவும் சிஷ்யனும் ஒருநாள் வெளியுலகத்தையும் மறந்து இரவு நெடுநேரமாய் இவ்வேலையில் ஆழ்ந் திருந்தார்கள். பிக்ஷாக்கள் யாவரும் நித்திரைக்குப் போய்விட்டனர். இருவரும் தனிமையாய் இருக்கும் பொழுது புத்தகோஷர், ‘உபாலி, உன்னை ஒரு விஷயம் கேட்க வேண்டுமென்ற ஆவல் சில நாட்களாய் இருக்கிறது. விஹாரையில் கண்டெடுத்ததாக ஒரு பிகூடி" என்னிடம் கொடுத்தான். "'இதோ பார், இந்த ஒலையை’’ என்று ஓர் ஓலையை அவனிடம் நீட்டினார். உபாலி அதை வாங்கி விளக்கில் வாசித்தான். அது காதல் வாசகங்கள் கொண்ட ஒர் ஒலை. உபாலிக்கு டிங்கிரி மெனிக்கா எழுதியிருந்தாள். உபாலி ஒன்றுமே பேசாது மெளனமாய் இருந்தான். அப்பொழுது புத்த கோஷர். 'உனக்கு இதைப்பற்றி ஏதாவது தெரியுமா?" என்றார். குரு, தேவா, நான் ஒன்றுமே அறியேன்.'" என்றான். 'நல்லது. நானும் அப்படித்தான் நினைத் தேன். எப்படியானாலும் ஜாக்கிரதையாய் இரு.' என்று சொல்லிவிட்டு மீண்டும் வேலையைத் தொடங் d56OTiri.
வானத்திலே கார் முகில்கள் ஓடத் தொடங்கி விட்டன. மழைக்காலத்தின் ஆரம்பம். இனி ஆற்றிலே புதுப்புனல் ஓடிக் கொண்டிருக்கும்.
டிங்கிரி மெனிக்கா அந்திவேளையில் இந்த மஹாவலி ஆற்றங்கரையில் வந்து நின்று மணிக்கணக்காய் ஏதோ யோசனையில் ஆழ்ந்து போவாள். நாணத்தோடு கூடிய ஓர் இன்ப வேட்கையுடன் உபாலியின் வடிவத்தை :ன தில் கொண்டு வந்து நிறுத்தி, உள்ளங் குமுறுவாள். ஓயாமல், சலிப்பே இல்லாமல் பாடி ஓடிக் கொண்டிருக் கும் அந்த நதியின் நித்தியயெளவனத்தைக் கண்டு, நீறு பூத்த நெருப்புப் போல் அடங்கியிருக்கும் உள்ளத்தீ ஆவேசத்துடன் சுடர் விட ஆரம்பிக்கும். அது காட்டுத்தீ போன்ற வேகங் கொண்டது. மின் வெட்டுப் போல் திடீ ரென்று தோன்றி எதையும் நிர்த்துரளியாக்கிவிடும். இப்படியான மனத்தளர்ச்சி கொண்டகாலம் அவளுக்கு.
() சி. வைத்தியலிங்கம் 0 189

Page 72
நிறைமதி நாலைந்துமுறை பெளத்தப் பள்ளியின் வாசலி லே வந்து காய்ந்துவிட்டுப் போய்விட்டது. புத்தகோஷர் எழுதிவந்த 'சுமங்கல விலாசினி' ‘மனோரதபூரணி" என்ற திரிபிடக நூலின் பாஷ்யங்கள் சில நாட்களில் முடிவடைந்து விடலாம். புத்தகோஷர் சில சிக்கலான பகுதிகளை விளக்கி உரை கூறிவந்தார். உபாலி அவை களை எழுத்தாணி கொண்டு ஏடுகளில் எழுதிக் கொண்டு வந்தான். அச்சமயம் டிங்கிரிமெனிக்காவின் தந்தை அள் விடம் வந்தான். அவன் அலட்சியமாய் புத்தகோஷரைப் பார்த்து, ‘‘சுவாமி, நான் சொல்வதைச் சிறிது கேட்க வேண்டும். என் மகள் இன்று கர்ப்பவதியாய் இருக் கிறாள். நான்அவளைக் கேட்டேன். அதற்குப்பொறுப்பு உங்கள் எதிரில் நிற்கும் உபாலி என்று சொல்லுகிறாள். இதற்கு வேண்டியதைச் செய்வது உங்கள் கடமை' என்றான்.
புத்தகோஷர் கூட ஒரு முறை திகைத்து விட்டார்; பின்னர் தான் நிதானம்வந்தது அவருக்கு. உபாலியைப் பர்ர்த்தார்.
‘'தேவா,நான் ஒன்றும் அறியேன்" என்றான் உபாலி
'ஆனால் உனக்கு அந்தப் பெண்ணைத் தெரியுமா?'
* ‘தெரியும் சுவாமி. நாலைந்து வருஷங்களாய் அறிவேன்' 'நீ அவளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
‘‘அவள் என் மேல் அன்பாய் இருக்கிறாள். பிகூைடிப்
பாத்திரத்தை உணவால் நிரப்பி உபசரித்து அனுப்பு கிறாள்'"
‘‘நல்லது. நான் அவளை இங்கு அழைத்து. 总>
‘'வேண்டாம் சுவாமி, வேண்டாம். அவள் மனம்
உடைந்து போகும்; இறந்தே போவாள்'
‘‘அப்படியானால் நீ இக் குற்றத்தை ஒப்புக் கொள் கிறாயா?"
140 O கங்கா கீதம் O

உபாலி ஒன்றுமே பேசவில்லை. அவனுடைய கண்களி லிருந்து நீர் உதிர்ந்து கொண்டிருந்தது.
புத்தகோஷரின் மனசிலே பெரியபோராட்டம் சூறாவளி போல் எழுந்தது. 'பெளத்தப்பள்ளியின் தூய்மைக்கும், ஆசாரத்துக்கும், கெளரவத்துக்கும் பங்கம் வரக் கூடிய கொடிய விஷயம் இது. உபாலியோ தவ ஒழுக்கத்திலும், சீலாசாரத்திலும்-ஆனால் இனி அதைப்பற்றி யோசிக்க இடமில்லை. அவன் நிரபராதியோ அல்லவோ-நிரப ராதி என்றாலும் அவனுக்குப் புத்த சங்கத்தில் இனி இடமேயில்லை. 9
உடனே புத்தகோஷர் கம்பீரமாய் நிமிர்ந்துநின்றார். ’ ‘உபாலி, மூன்றாவது முறையாக இந்த அவதூறான வார்த்தைகள் என் காதில் விழுந்திருக் கின்றன. பகவானின் கெளரவம், தர்மத்தின் கெளரவம், சங்கத்தின் கெளரவம்- இவைகளைக் காப்பாற்ற வேண்டியது என் கடமை. இந்த சஷணமே நீ இவ் விடத்திலிருந்து வெளியேறுதல் வேண்டும்' என்று ஆக்ஞை பிறப்பித்தார்.
நாயகதேரரின் கண்களில் நிறைந்து கொண்டு வந்த கண்ணிரை அவரால் மறைக்க முடியவில்லை.
உபாலி இப்போது சமூக சாம்ராஜ்ய நீதி மன்றத்தின் முன்னிலையில் பாரதூரமான அபராதத்தைச் செய்து விட்ட குற்றவாளி. பார்த்தாலும். கேட்டாலும்,சிந்தித் தாலும் கூட உலகம் அவனை மிதித்து நசுக்கிவிடும். ஒதுக்கிடத்தில், வழிப்போக்கர் தங்கும் ஒருமடத்தின் திண்ணையில், இராப் பொழுதைக் கழித்து வந்தான். அவன் தன்கொடிய விதியை நினைத்து வருந்தவில்லை. எவர் மேலும் கோபங் கொள்ளவில்லை. அந்த மடத்தை விட்டுப் போய்விட விரும்பவுமில்லை. மலையின் அடி வாரத்தில் இருந்த அந்த மடத்தில் இருப்பது, புத்த பகவானின் நிழலில் இருப்பது போன்ற ஓர்உணர்ச்சியை அவனுக்குக் கொடுத்தது.
புத்தகோஷர் அநுராதபுரத்துக்குப் போய், சங்க பாலரா கிய அவரது குருதேவரை மஹாவிகாரையில் கண்டு
O சி. வைத்தியலிங்கம் O 141

Page 73
தரிசித்து நாலைந்து மாசங்களில் திரும்பிவிட்டார். திபெத், சீனா முதலிய இடங்களிலிருந்து இன்னும் அநேக பிக்ஷாக்கள் பெளத்தப் பள்ளிக்கு வந்திருந்தனர். புத்த விஹாரையில் ஒரு புத்த சிலை புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டது. அதன் சுவர்களிலே தேவஸேனன் என்ற பிரசித்திபெற்ற சைத்திரிகன் சித்திரங்கள் எழுதத் தொடங்கியிருந்தான்.
இன்னொரு விஷயம்; மறந்தே போனேன். டிங்கிரி மெனிக்காவுக்குக் குழந்தை கூடப் பிறந்து விட்டது.
வானத்திலே, வளரும் அர்த்த சந்திரன் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் சில நாட்களில் அது வட்ட வடிவம் பெற்றுவிடும். அன்றுதான் 'போசங்'திருவிழா. சமனலகந்த மலையின் உச்சியில் புத்தபிரானின் அடிச் சுவடுகள் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஹிந்துக் களும், பெளத்தர்களும் சிகரத்துக்குப்போய் வருவார்கள்.
'போசங்' பண்டிகையும் வந்தது.
மலையடிவாரத்திலிருந்து உச்சிக்குப் பெருந்திரளாக ஜனங்கள், செங்குத்தான பாதைவழியாய்க் கொடி விட்டுப் போய்க் கொண்டிருந்தனர். உபாலியும் ஜனங் களுடன் தானும் ஒருவனாய் வெளிக் கிளம்பினான். வழியில் ஆற்றைக் கடந்து வரும்பொழுது ஆற்றிலே தண்ணிர் நிமிஷத்துக்கு நிமிஷம் கூடிக் கொண்டு வருவதை அவனும் கவனித்தான். ஆற்றோரமாய்ப் போய்க் கொண்டிருந்த பாதை வழியாய் வரும் பொழுது, ஆற்றில் ஜலம் கடுவேகமாய்ப் பாயத் தொடங்கி விட்டது. மலைப் பிரதேசத்தில் எங்கெங்கோ வெல்லாம் கடுமழை பொழிந்திருக்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இரு கரைகளையும் மோதி யடித்துக் கொண்டு வந்தது.
டிங்கிரிமெனிக்காவின் வீடு ஆற்றோரத்தில் எதிர்க்கரை யில் இருந்தது. அவள் ஆற்றைக் கடந்து இக் கரையி லுள்ள கடைக்குப் போய்விட்டு, வீடு திரும்பிக் கொண்டி ருந்தாள். ஆற்றில் ஜலம் பெருக்கெடுத்து விட்டதையும், அதைக்கடக்க முடியாதென்பதையும் கண்டாள். உடனே அக்கரையில் உள்ள தனது குடிலில் துரங்கும் தன்
142 O கங்கா கீதம் O

குழந்தையின் ஞாபகம் வந்தது. தந்தையும் மலைக்குப் போய் விட்ட ஞாபகம் வரவே, "ஐயோ, என் குழந்தை' என்று அலறிக் கொண்டு ஆற்றில் பாய ஓடினாள். பக்கத்தில் இதற்குள் கூடிவிட்ட ஜனக் கூட்டம், அவளை இழுத்துப் பிடித்துக் க்ொண்டது. உபாலியும் அப் பொழுது தான் அவ்விடத்தை அடைந்தான்.
எந்தச் சமயத்திலும் அவளுடைய குடிசை இடிந்து அழிந்து விடலாம். அக்கரையிலிருந்த குடியானவர்கள் அநேகர் மலை உச்சிக்குப் போய்விட்டார்கள். எஞ்சி யிருந்தவர்களும் ஒதுக்கிடந்தேடி ஓடிவிட்டனர். ஆற்று வெள்ளமோ சூறாவளியின் பேரிசைச்சலுடன் கரை மரங் களை வீழ்த்தி இழுத்துக் கொண்டும், சிறுகுடிசைகளைச் சூறையாடி இடித்து அள்ளிக் கொண்டும் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இந்த ஆற்றைக் கடக்க எவர் முன் வருவார்? ஆனால், உபாலி திடீரென்று ஆற்றில் குதித்து விட்டான். ஜனங்கள், ‘என்னவாயிருந்தாலும். தந்தையின் இரத்தம் துடிக்காதா?’ என்று சொல்லிக் கொண்டனர். உபாலி ஒரு மரக் கொம்பின் உதவியைக் கொண்டு ஆற்றுப் பெருக்குடன் மிதந்து சென்று கொண்டிருந்தான்.
அதிர்ஷ்டவசமாய் ஒரு தென்னைமரம் ஆற்றின்குறுக்கே வீழ்ந்து நடுவில் நின்ற ஒருபாறையில் தங்கி அசையாமல் கிடந்தது. உபாலி அதன் உதவியால் ஆற்றைத் தாண்டி கட்டிலில் படுத்திருந்த குழந்தையையும் தூக்கிக் கொண்டு இக்கரை நோக்கி வந்தான். வெள்ளப் பெருக் குக் கூடிக்கொண்டிருந்தது. ஒரு கையில் குழந்தையைப் பற்றிக் கெரண்டு, மற்றொரு கையின் உதவியால் சிரமப் பட்டு நீரின் விளிம்புக்கு நீந்தி வந்து ஜலத்தின் கீழ் இருந்த ஒரு கல்லின் மேல் நின்றான். டிங்கிரிமெனிக்கா ஆவலுடன் ஓடி வந்து தன் கைகளை நீட்டினாள். குழந்தையை எடுத்துத் தாயின் கைகளில் கொடுக்கும் பொழுது, அவன் நின்ற கல், நிலை குலைந்தது. திடீ ரென்று அவன் குப்புற வீழ்ந்து போனான். வெள்ளம் அவனை அள்ளிக் கொண்டு போய் விட்டது.
‘‘ஹாமதுரு' என்று கத்திக்கொண்டு கரையோரமாய்ப் பலர் தொடர்ந்து ஓடினார்கள். அவர்கள் ஒர் அரை
O சி. வைத்தியலிங்கம் O 143

Page 74
மைல் தூரம் சென்றதும், ஒரு பாறையின் ஒதுக்கில் அவனுடைய தேகம் சிக்குண்டு கிடந்தது. அவர்கள் அதை எடுத்துவந்து மலையின் உயர்ந்த ஓர் இடத்திலே கிடத்தி, செய்யக் கூடிய சிகிச்சையெல்லாம் செய்து பார்த்தார்கள். உபாலி பிரேதமாய்க் கிடந்தான்.
டிங்கிரி மெனிக்கா பாய்ந்து வந்து கையில் குழந்தை யுடன் அவன் காலடியில் வீழ்ந்து கதறினாள். பிறகு எழுந்து நின்று, 'இக் குழந்தையின் தந்தை இவரல்ல. நான் இவர் மேல் கடுங்காதல் கொண்டிருந்தேன். இவர் அதை அலகூழியஞ் செய்வதைக் கண்டு ஆற்றாமல் ஆத்திரத்தினால் நான் என் அயலான் ஒருவனுடன் கூடிச் செய்த பாதகச் செயலை இவர் மேல்சுமத்தினேன். பாதகி" என்றாள்.
மஹாநாயக தேரர் புத்தகோஷரும் இதைக் கேட்டுக் கொண்டு தான் நின்றார்.
கிராம ஊழியன் (ஆண்டுமலர்) 1944
144 O கங்கா கீதம் O

சிருஷ்டி ரகசியம்
அவன் காத்திருந்த ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. வாசுதேவன் தன் அறையில் மேசை முன்னால் உட் கார்ந்துகொண்டு கதை எழுதஆரம்பித்தான். எழுதிய தைத் திரும்பத் திரும்பத் திருத்தினானேயொழியக் கதை வளரவில்லை; கற்பனை ஊற்றெடுக்கவில்லை. சைஎன்று பேனையை எறிந்து விட்டு ஆழ்ந்தயோசனை யில் இருந்தான்.
"'என்ன, கதை எழுதவென்று தொடங்கினிர்கள். இப்படி ஒரே யோசனையில் ஆழ்ந்து போனீர்கள்?" என்று கேட்டுக் கொண்டு அவன் மனைவி குமுதம் கையில் ஒரு தட்டு நிறைய மாம்பழத்துடன் வந்தாள்.
அவன் மாம்பழத்தில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு," "அதெப்படி முடியும்? நான் ஒரு கட்டுரையோ, கதையோ எழுதி வருஷம் ஐந்தோ ஆறோ ஆகிறது. இதற்கிடையில்என் கற்பனை ஊற்றுத் தூர்ந்து விட்டது போல் தெரிகிறது. கதை மனசில் உருவாகிக் கொண்டு வந்தாலும் அதை எழுத முடிகிற தில்லை. இதற்கு நான் யாரை நோக.?’’

Page 75
'முன்னெல்லாம் என்னைக் கல்யாணஞ் செய்து கொள்ளு முன்னர் எத்தனையோ கதைகள் எழுதினிர் கள். நீங்கள் எழுதிய ‘தேன்கூடு” என்ற கதையில்தான், நான் 'உண்மையில் உங்களை முதன் முதலில் சந்தித்த தென்று சொல்லலாம். அந்தக் கதையை வாசித்த நாள் முதல் அதன் ஆசிரியரைக் காண வேண்டுமென்ற என் ஆவலோ சொல்ல முடியாது. என் அப்பாவுக்குச் சொல்லவும் வெட்கம், அதற்குப் பின்னர். .
அதற்குப்பின் நடந்ததெல்ல்ாம் எனக்குத் தெரிந்த தாயிற்றே, சும்மா இதைப் பற்றித் திரும்பத் திரும்ப எத்தனை தடவை சொல்லியிருக்கிறாய்'
'ஓ, நம் ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது போல் தெரிகிறது. இல்லை, நான் அதைச் சொல்ல வர வில்லை. பாருங்கள், நம் மனசுக்குப் பிடித்த ஒரு இனிமையான விஷயத்தைத் திரும்பத் திரும்ப எத்தனை தரம் சொன்னாலும் அதன் சுவை குறைகிறதில்லை. எனக்கோ, அது எங்கள் ‘இந்து வைத் தழுவத்தழுவ இன்பம் அதிகரிப்பது போல் என்றும் இன்பமாய் இருக் கிறது’.
‘‘அதெல்லாம் சரி, நீ இப்படி சர்க்கரையாய்ப் பேசு வாய் என்று எனக்குத் தெரியும். இப்ப, என்னைக் கதை எழுதவிடப் போகிறாயா, அல்லது இன்னும் ஏதாவது இருக்கா?’’
'நானா உங்கள் கையை வந்து பிடிக்கிறேன். நல்லாய் எழுதுங்கள். என்னைப் பற்றியும் ஏதோ கதை எழுதப் போவதாய்ச் சொன்னீர்களே. ஞாபகம் இருக்கிறதா?’’
'இங்கே பார், குமு , நீ இப்படி வந்து ஏதோ அளந்து கொண்டு போனால் எனக்கு ஒன்றுமே எழுத வராது.
மன நிம்மதியாய் இருந்து சிறிது நேரம்
‘*சரி" சரி, நான் வந்துதான் உங்களுக்குத் தொல்லை யாய் இருக்கிறது. இந்தப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டேன். அந்தக் கதவையும் பூட்டி விடுகிறேன். பார்ப்பமே. எங்கள் ஆசிரியரின் சமர்த்தை' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
146 O கங்கா கீதம் O

வாசுதேவன் ‘அப்பாடி" என்று நெட்டுயிர்த்துக் கொண்டு கையில் பேனாவை எடுத்தான்.
சிறிது நேரத்தில் முன் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. குமுதம் சமையலறையிலிருந்து போய் பார்த்து விட்டு ஓடோடியும் வந்து கதவைத் திறந்து "'உங்கள் நண்பன் ராகவன் வந்திருக்கிறார். இங்கேயே வரச் சொல்லவா? என்று கேட்டாள்.
"யார் நம்ம ராகவனா?' என்று சொல்லிக் கொண்டு வாசு எழுந்துபோய் "அடே ராகவா, வா அப்பா வா, இப்படி உட்கார்ந்துகொள். உன்னைக் கண்டு எத்தனை மாசங்களாகின்றன. எங்களை மறந்தே போனாய் என்றிருந்தேன். எப்படி, வீட்டில் எல்லோரும் கூேடிமம் தானே-குழந்தைகள் வேறும் ஏதாவது.'
ராகவன் நகைத்த வண்ணம், 'அப்படி எல்லாம் ஒன்று மில்லை. என் ஒரே குழந்தைக்குத்தான் அடிக்கடி ஏதோ ஒன்று வந்து கொண்டிருக்கிறது. என் கந்தோர் வேலை கள் வேறு. உங்களையெல்லாம் வந்து பார்க்க வேண்டு மென்று ஆவலாயிருந்தாலும், அவகாசம் கிடைக்கிற தில்லை, வாசு'
‘'நீ அதிகம் சொல்ல வேண்டாம் ராகவா, எனக்குத் தெரியாததல்ல. குடும்பம் என்று வந்து விட்டால் நோய் நொடி என்று ஏதோ வந்து கொண்டுதாணிருக்கும். அதிருக்கட்டும், நீ இப்பெல்லாம் பத்திரிகைக்கு எழுதுவ தில்லையா? உன் கதைகளை வாசித்துப் பல நாட்க ளாகிறது’’
**எழுத வேண்டுமென்று ஆசை இருக்கிறதுதான். ஒரு கதையோ, கட்டுரையோ மனசில் உருவாகி வருவதற் குள் ஏதாவது தொல்லை வந்து மனநிம்மதியைக் கலைத்துவிடுகிறது. முன்னெல்லாம்பா, நாங்கள் கல்லூரி விட்டு, உத்தியோகம் தேடிக் கொண்டிருந்த நாட்களில்..'
'அதை ஏன் நினைத்து ஏங்குவோம் நாங்கள் இருவரும் கைகோர்த்த வண்ணம் எங்கள் ஊர் வயல் வெளியில்
வெயிலையும் காற்றையும் பொருட்படுத்தாமல் உலகத்
O சி. வைத்தியலிங்கம் O 147

Page 76
தில் உள்ள கதைகளைப் பற்றியும், காவியங்களைப் பற்றியும் தர்க்கம் செய்து கொண்டு. அந்தக் குதுகல மான நாட்கள் மீண்டும் வரப் போகிறதா? மூங்கில் புதரில் சலசலக்கும் காற்றுப் போலவும், விண்ணிலே சஞ்சரிக்கும் மேகம் போலவும் சர்வசுதந்தரத்துடன் அலைந்து திரிந்த நாட்கள் உன் ஞாபகத்துக்கு வருகிறதா. '
‘‘அந்த நாட்களில் தானே நாங்கள் முதன் முதல் காளி தாசரின் ‘சாகுந்தலத்தை' தமிழில் கண்டது'
**ஆம், அதை முதன் முதல் படித்த போது எங்கள் மன சில் கொந்தளித்த ஆர்வத்தையும், ரஸானுபவத்தையும், ஒரு இளம் பெண்ணைத் தொட்டது போன்ற அந்த உள்ளக்கிளர்ச்சியையும், நினைத்தால் இன்று நான் இதைச் சொல்லும் போதும் மெய்சிலிர்க்கிறது’
குமுதம் மெல்லக் கதவருகில் வந்து வாசுதேவனை வரும் படி சைகை செய்தாள். அவன் எழுந்து போய் ** என்ன எங்களைக் கொஞ்ச நேரம்-குமு, நாங்கள் எத்தனை நாட்களுக்குப் பின்னர் இன்று சந்தித்திருக்கிறோம்.'" அவனைக் குறுக்கிட்டு மிகவும் தாழ்ந்த குரலில் அவன் காதுக்குள் ‘'இப்போ, என்ன நேரமாகிறது பாருங்கள். மணி ஒன்றாகப் போகிறது. இன்று சமையல் வெகு அபூர்வமென்று சொல்லப் போகிறீர்கள். உங்கள் நண்பரையும் சாப்பிட்டுப் போகும்படி சொல்லுங்கள்’’ என்றாள்.
அப்பொழுது தான் இத்த உலக நினைவு வந்தது வாசு தேவனுக்கு. இலக்கிய நண்பரைக் கண்டு விட்டால் நேரம் போகிறது அவனுக்குத் தெரிவதில்லை. ''அடே, ராகவா, இன்று நீயும் சாப்பிட்டுப் போக வேண்டு மென்று, குமு, உனக்குக் கட்டளை போடுகிறாள். எழுந்திரு' என்று சொல்லிய வண்ணம் ‘*குமு, இலையைப் போடு' என்றான்.
சாப்பாடு முடிந்ததும், ராகவன் சிறிது நேரத்தில் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டான்.
உண்மையில் குமுதம் பிரமாதமாய் சமையல் செய்திருந்
148 O கங்கா கீதம் O

தாள். வாசு வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, ஒரு *சிகறெற்றைப் பற்றவைத்துக் கொண்டு, அயர்வும், தூக்கமும் சூழ்ந்து வர கதையில் இரண்டு வரியாவது எழுதலாமென்று மேசையின் முன் போய் உட்கார்ந்து கொண்டான்,
அப்பொழுது, நித்திரை கலைந்து எழுந்த குழந்தையை யும் ஒக்கலையில் வைத்துக்கொண்டு, கையில் வெற் றிலை பாக்குத்தட்டுடன் குமுதம் அவன் அருகே வந்து ‘இன்று சமையல் எப்படி இருந்தது. உங்கள் நண்பர் என்ன சொன்னார்’’ என்று கேட்டாள்.
‘'இப்படி மோசமான சமையலைத் தான் எங்கும் பார்த்த தில்லையென்று உனக்குச் சொல்லச் சொன்னான்.'
‘‘என்னங்க, அப்படியா சொன்னார். அவர் நல்ல சாப்பாட்டையே ஒரு போதும் கண்டிருக்க மாட்டாரோ? ஒரு நாளைக்கு சமையல் செய்து காட்டும்படி நீங்கள் கேட்டிருக்கலாமே?’’
**சே, சே, கோபப்படாதே குமு. என் குமுவின் சமையலை அவன் அப்படிச் சொல்லியிருந்தால், நான் சும்மா விட்டுவிடுவேனா?’’ என்று கண்களைச் சிமிட்டி நகைத்த வண்ணம் ‘'இப்போ நீ போய் இந்துவைக் கவனி. நான் இப்போ என்ன செய்யப் போறேனென்று உனக்குத் தெரியுந்தானே'
‘‘தெரியாமல் என்ன, நீங்கள் வழக்கம்போல் தூங்கப்
போகிறீர்கள். , '
வாசுதேவன் அயர் கட்டிக் கொண்டு வந்த கண்களைத் துடைத்துக் கொண்டு 'இல்லை. நீ பார், நான் எழுதிக் கொண்டுதான் இருக்கப்போறேன்' என் சொல்லிய வண்ணம் எழுத ஆரம்பித்தான். நித்திரையோ கண்களைச் சுற்றிக் கொண்டுவந்தது. அவனால் சமாளிக்க முடியவில்லை. கதிரையில் இருந்தபடி, மேசைமேல் தலைவைத்து அப்படியே உறங்கிப் போனான்
குமுதம் திரும்ப வந்து பார்த்தபொழுது அவன் குறட்டை
O சி. வைத்தியலிங்கம் O 149

Page 77
விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்க அவள் உள்ளம் நெகிழ்ந்து போயிற்று, அவர் கொஞ்ச நேரம் தூங்கட்டுமென்று நினைத்துக் கொண்டு, தன் அலுவல்களைக் கவனிக்கத் தொடங்கினாள்.
மணி ஐந்தாகியும் வாசுதேவன் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவில்லை. குமுதம் வந்து அவன் அருகிற் போய் அவனைத்தொட்டு ‘இன்னுமா தூங்குகிறீர்கள்? எழுந்து மணியைப் பாருங்கள்' என்று அவன் காதுக்குள் மெல்லச் சொன்னாள். வாசுதேவன் திடுக்கிட்டு எழுந்த வண்ணம் ‘என்ன விடிந்து விட்டதா? காரியமில்லை, இதோ பார், கதையை முடித்தேனோ இல்லையோ வென்று' இப்படிச் சொல்லிக் கொண்டு தன் முன்னால் அரைகுறையாய்க் கிடந்த காகிதங்களை எடுத்து அவளிடம் நீட்டினான். குமுதம் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு நின்றாள். மாலை வெயில் யன்னல் ஊடாக வந்து கொண்டிருந்தது. முற்றத்தில் அவள் குழந்தைகள் பந்தடித்து விளையாடிக் கொண்டிருந் தனா.
‘என்ன, கனவா கண்டீர்கள்? கனவிலாவது கதை முடிந்து விட்டதே. அதே போதும். தேநீர் மேசைமேல் வைத்திருக்கிறேன். எழுந்து குடியுங்கள்’’ என்றாள் சிரித்த வண்ணம்.
வாசுதேவனுக்கு எரிச்சலாயிருந்தது. தன்னையே சபித்த வண்ணம் 'சே, இவ்வளவு நேரமும் தூங்கி விட்டேனே குமு, நீ என்னை உசுப்பி விட்டிருக்கக் கூடாதா?' ' அத்தருணம் அவன் மூத்த பையன் தலை தெறிக்க ஓடி வந்து'' ''அப்பா, அப்பா, வாசலிலே கார் ஒன்று வந்து நிற்குது’’ என்று பலத்து கத்திக் கொண்டு ஓடி விட்டான் . வாசு எட்டிப் பார்த்தான். அவன் தங்கை யும் கணவரும் காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்
56.
அவன் தங்கை ஓடிவந்து ‘அண்ணா, இன்று "சந்திர லேகா படத்துக்கு உங்களையும் கூட்டிப் போகலா மென்று வந்திருக்கிறோம். நேரம் ஆகிறது, நீங்களும் கட்டாயம் வரத்தான் வேணும். புறப்படுங்கள்' என்று சொன்னாள்.
150 O கங்கா கீதம் O

வாசுதேவனுக்கு ஒன்றுமே சொல்ல முடியவில்லை. 'சந்திரலேகா’ படத்தைப் பார்க்க வேணுமென்று அவனுக்கும் ஆவல்தான். தன் தங்கையுடன் போனால் குமுவுக்கும் குழந்தைகளுடன் உதவியாயிருக்கும். ஆனால் அவன் ஆரம்பித்த கதை. கொஞ்சம் யோசித்தான். இரவு நீண்ட நேரம் இருக்கிறது. எப்படி யும் கதையைச் சமாளித்துப் போடலாமென்று முடிவுக்கு வந்தவனாய் குமு, இன்று உனக்கு யோகம்தான். நாங்களும் படத்துக்குப் போய் வருவோம். நேரமாச்சு, சீக்கிரம் ஆயத்தமாகுங்கள்’’ என்றான்.
குமுதத்துக்கு சினிமா என்றால் குழந்தைகள், புருஷன் ஒருவருமே வேண்டாம். அவ்வளவு மோகம் அவளுக்கு. இதோ என்று சொல்லிய வண்ணம், பம்பரம் போல் சுழன்று கூத்தடித்துக் கொண்டு தயாரானாள். சந்திர லேகா படமோ நீண்டபடம். அவர்கள் படம் முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது இரவு மணி பத்தாகி விட்டது.
சாப்பாடெல்லாம் முடிந்ததும் அறையின் யன்னலைத் திறந்து விட்டு, ஏகாந்தமாய் மேசை முன்னாலிருந்து கதையை எழுத்தில் வடிக்க முயன்று கொண்டிருந்தான் 6Jffdr. .
யன்னலுக்கு வெளியே, மேல் விதானத்தில் ஊர்ந்து கொண்டிருந்த சந்திரன் அமுதமாய் தன் நிலவைப் பொழிந்து கொண்டிருந்தது. முற்றத்தில் நிற்கும் மல்லிகைச் செடியிலிருந்து இளந்தென்றல் அறை முழுவதும் மல்லிகை மணத்தைப் பரப்பி நெஞ்சைக் கிளுகிளுக்க வைத்தது.
வாசுதேவனுக்குத் தாகம் எடுத்தது. 'குமு, கொஞ்சம் குடிப்பதற்குத் தண்ணிர் கொண்டு வருகிறாய்ா?"என்று எழுப்பினான். குமுதம் எழுந்து டம்ளரில் ஜலம் கொண்டு வந்து கொடுத்து விட்டு 'கதையில் இன்னும் அதிகம் எழுத இருக்கிறதா? இப்படி நித்திரை முழித்து விட்டு நாளைக்கு கந்தோர் போவதில்லையா? என்று கேட்டாள்.
O சி. வைத்தியலிங்கம் O 151

Page 78
"கதை ஒடவில்லை பே, இதற்கு நான் என்ன செய்வது, நாளைக்கு தபாலில் சேர்க்க வேணுமல்லவா?' 'என்னாலும் குழந்தைகளாலும் தான் நீங்கள் ஒன்றும் எழுத முடியவில்லையென்று முன் ஒகு நாள் சொன்னீர் களே. உண்மையாகவா?’ என்று வாஞ்சை நிறைந்த பார்வையுடன் கேட்டாள் குமு.
வாசுதேவனுக்கு இதைக்கேட்டதும் நெஞ்சம் குமுறியது. தளதளத்தகுரலில் 'இல்லையில்லை குமு, அப்படியா
நினைத்து விட்டாய்? என் இல்லத்துக்கு ஒரு உயிர்க் காற்றுப் போல் நீ வந்தாய். என் வாழ்க்கையில் புதுமை யும் ஒளியும் வந்து நிரம்பியது. எங்கள் குழந்தைகளின் மழலையைக் கேட்டு இந்த வீடே கொந்தளித்துக் குதூ கலிக்கிறது நீங்கள் இல்லாதிருந்தால் என் வாழ்க்கை வரண்ட பாலைவனமாய்ப் போயிருக்கும். பார் குமு ,முன் னெல்லாம் கதை எழுத வேண்டு மென்ற ஒரு தேவை இருந்தது, என் மனசுக்கு அந்தத் தேவை நிறைவேறிய தும், அதில் என் மனசு சாந்தியையும் அமைதியையும் பெற்றுக் கொ ண்டது'' ,
等
‘அப்படியானால் இப்போ?'
‘'நீ இருக்கிறாய், எங்கள் குழந்தைகள் இருக்கிறார்கள். உன் பவித்திரமான அழகிலே நிறைவையும், குழந்தை களின் ஸ்பரிசத்திலே சாந்தியையும் பெற்றுக் கொள் கிறது’
'நாட்கள் செல்லச் செல்ல, குழந்தைகள் வளர வளர, என் தேகத்தின் எழில் குறைய..?' "
'இப்படி வா குமு , என் பக்கத்தில். நீ முதல் முதல் என்னிடம் வந்த பொழுது இருந்தது போலவா இப்பவும் இருக்கிறாய்? 'அன்றொரு நாள், இப்படியான ஒரு ஏகாந்தமான இரவில், நிசப்தமான வேளையில், சந்திர கிரணங்கள் யன்னல் ஊடாக வீழ்ந்து கொண்டிருந்த படுக்கையில், உன்னை நான் தொட்ட பொழுது, நடுங்க, என் மெய் சிலிர்க்க. ' குமு அவன் வாயைப் பொத்திப் போட்டாள்.
152 O கங்கா கீதம் O

சீ. உங்களுக்கு வெட்கமில்லையா, இப்பெல்லாம் இதை ஏன் . .
'அந்த இன்பமான, லாகிரி போன்ற, மயக்கந்தரும் நாட்கள் - அவைகளின் "நினைவு நீ"கிழவியானாலும்
இன்பமும், மனநிறைவும் தந்துவரும். அதற்காகச் சொன்னேன். '
மணி இரண்டு அடித்தது.
*குமு, நீ ஏன் உன் நித்திரையைக் குலைத்துக் கொள்கிறாய்? போய்த்துரங்கு' -
அப்பொழுது குழந்தை நித்திரை குழம்பி எழுந்து அழத்தொடங்கியது.
‘‘சரி, இனிக்கதை எழுதினாப் போலத் தான். நீங்கள் வந்து படுத்துக் கொள்ளுங்கள்' என்றாள் குமுதம்
வாசுதேவன் மெல்லப் படுக்கையை எடுத்து விரித்தான்.
ஈழகேசரி (4.7.1948)
O சி. வைத்தியலிங்கம் O 153

Page 79
உள்ளப் பெருக்கு
பல மாசங்களாய் அனலைக் கக்கிக்கொண்டிருந்த அந்தப் பிராந்தியத்திற் சென்ற சில நாட்களாய் மழை பெய்து கொண்டிருந்தது. மணலை அள்ளி எறிந்து விளையாடிய காற்றுத் தணிந்து பருவகாலப் பெண் போல் அடங்கி அமைதியுடன் வீசத்தொடங்கியிருந்தது.
பள்ளர் சேரியிலுள்ள குடிசைகள் எல்லாம் அன்று ஓய்ந்து கிடந்தன. பள்ளரும், பள்ளிகளும் வயலில் வேலை தேடிப் போய் விட்டார்கள். ஆடுகள் தாழ்வாரத்தில் ஆற அமர இரையெடுத்துக் கொண்டு கிடந்தன. வாசற் புறத்தில் நாய்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு படுத்துத் தூங்கின. சேரிக்கு முன்னால் தேங்கிநின்ற வெள்ளத் திலே பள்ளச் சிறுவர் அரை நிர்வாணத்துடன் விளை யாடிக் கொண்டு நின்றனர். மேலே வானம் கறுத்து மழைத்துாற்றல் ஆரம்பித்திருந்தது. அப்பொழுது குடி சைப் பக்கத்தில் பாய்ந்து வந்த பசு ஒன்றைத் துரத்திக் கொண்டு கையிற் கோலுடன் ஒரு இளம் பெண் ஓடி வந்தாள். 'உன்னை விட்டேனோ பார், அட சனியனே! நாசமாய்ப் போ. '' என்று திட்டிக் கொண்டு கையிலி ருந்த கோலால் ஓங்கிப் பசுவின் மேல் ஓர் அடி அடித்து விட்டு, துரத்திக் கொண்டே ஓடினாள். அவள் ஓடி

ஒரு மூலையில் திரும்பும் போது 'ஏ! தெய்விமாட்டை ஏன் இப்படி அடிக்கிறாய்? அது உன்னை என்ன செய்து விட்டது?' என்று கேட்டுக் கொண்டு எதிர்ப்புறத்திலிருந்து வந்தான் ஒரு வாலிபன். அவனைக் கண்டதும் இவள் சற்று நின்று நிதானமாய் அவனை நிமிர்ந்து நோக்கி, 'முருகா! இது உன் வீட்டு மாடா? எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! தெரிந்திருந்தால். '" என்று நிறுத்திக் கொண்டாள்.
‘‘தெரிந்திருந்தால் அதன் காலையும் முறித்திருப் பாயாக்கும்; அதைத் தானே சொல்ல வந்தாய் .' என்று சொல்லிய வண்ணம் மெல்லச் சிரித்தான்.
** சச்சே, உன் மாட்டைப் பிடித்துவைத்துக் கொஞ்சி விளையாடியிருப்பேன், மாடு வைத்து வளர்க்கத் தெரியா தவனுக்கு மாடு என்ன வேண்டிக் கிடக்கிறது? எப்படி மத மதவென்று வளர்ந்திருந்தது; என் கீரைப்பாத்தியை வந்து பார், பயித்தங் கொடி ஒரு சதத்துக்கு உதவுமா? வந்து பார்.’’ என்று கத்தினாள். -
“ ‘சரிதான் தெய்வி, கோவிக்காதே. வாயில்லாப் பிராணி தெரிந்தா செய்கிறது. அதற்கு மாட்டை இப்படி அடித்தால், , '
எல்லாம் என் பிழை முருகா. மாட்டுக்கு வைத்த இந்த அடியை நான் வைக்கிற இடத்தில் வைத்திருக்க வேணும்' என்று ஆக்ரோஷத்துடன் கூறிவிட்டு விறு விறென்று திரும்பித் தன் குடிசையை நோக்கிப் போனாள். அள்ளிச் செருகிய கூந்தலுடன் ஒய்யாரமாய் அவள் நடந்து போவதை முருகன் பார்த்துக் கொண்டு நின்றான். பொங்கிப் பூரித்து நிற்கும் அவள் அவய வங்களிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்த பருவகால எழிலிலே மயங்கிப் போனான்.
மேற்புறத்திலுள்ள தன் வீட்டு வாசலில் நின்று இவர் களைக் கவனித்துக் கொண்டிருந்த முத்துப் பரியாரியார், தெய்வி கடைசியாகச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் விறைத்துப் போனார். வீயூதியை எடுத்து நெற்றி நிறையப் பூசிக் கொண்டார். ஒரு துண்டை
O சி. வைத்தியலிங்கம் O 155

Page 80
எடுத்துத் தலையில் முண்டாசாகக் கட்டினார். ஒரு சால்வையை எடுத்து அரையிலே வரிந்து கட்டிக் கொண்டார் ஒரு துவான்ய எடுத்து ஒற்றைத் தோளில் போட்டுக் கொண்டு வெளியில் வந்தார். மருந்துப் பெட்டியை ஒரு முறை பார்த்துவிட்டு, அதை மூடித் தன் கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு தினமும் தான் பார்க்க வேண்டிய நோயாளிகளைக் கவனிக்க ஊர்வலம் கிளம்பிவிட்டார். நேரே அவர் தெய்வியின் குடிசைக்குச் சென்ற பொழுது ஏதோ தாய்க்கும் மகளுக்குமிடையில் வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தது.
தெய்வியின்தாய் நோயின்கொடுமையால்உருக்குலைந்து பாயிற் படுத்துக்கிடந்தாள். அவள் கையைப் பிடித்து நாடி பார்த்து ஒரு மருந்தைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தார். தெய்வி ஆட்டுக் குட்டிகளுக்குக் குழை கொடுத்துக் கொண்டு நின்றாள். பரியாரியார் அவளை அணுகி, ‘தெய்வி, நானும் சற்று முன் எல்லாம் பார்த்துக் கொண்டுதான் நின்றேன். எப்படியிருந்தாலும் நீ பெண் பிள்ளை, இப்படிப் பேசியிருக்கவே கூடாது. ’’ என்றார்.
அவள் கண்களிலே ஆத்திரத்துடன் கூடிய ஒரு ஒளி வீசியது. 'எப்பொழுது பார்த்தாலும் இவர்கள் என்னை நையாண்டி பண்ணுகிறார்கள். நான் வயலுக்கு வேலை தேடிப் போகவில்லையாம். மற்ற இளம் பெண்களைப் போல் வம்பு பேசிச் சிரிக்கவில்லையாம். 'றாங்கிக்காரி' என்று கதை கட்டித் திரிகிறார்கள். 'என்றாள்
**ஆனால், நீ அடக்கமாய் இனிமையாய்ப் பேசக் கூடாதா? எப்பவோ ஒரு நாள் ஆண் பிள்ளை ஒருவ னுக்குப் பணிந்துதானே நீ ஆக வேணும். ஏன் உன்னை அவன் வீரனுக்குத்தானே கொடுப்பதாக ஒரு பேச்சிருந் 53. 9
அவள் ஒன்றுமே பேசாது மெளனமாயிருந்தாள்.
'ஏன் அவனை உனக்குப் பிடிக்கவில்லையா? நல்ல உழைப்பாளி. தேகக்கட்டுடன் கூடிய நல்ல ஆம்பிள்ளை" உன்னையும் உன் தாயையும் ஒரு குறையும் வராமற் பார்த்துக் கொள்வான்.""
156 O கங்கா கீதம் O

'நாங்களோ ஒன்றுக்கும் வழியில்லாத ஏழைகள் நயிந்தை. என் ஆத்தையும் படுத்த படுக்கையாய் இன் னும் எத்தனை வருஷங்களுக்கோ. இந்தப் பாரத்தை யெல்லாம் ஏன் பிறர் தலையிற் கட்டவேணும்?' என்று உணர்ச்சிப் பெருக்குடன் சொன்னாள்.
'அப்படியானால் வேறு எவரையாவது மனதில் வைத் திருக்கிறாயா? உன்னையே சுற்றிக் கொண்டு திரிகி றானே முருகன். அவன் மேல்.’
'எனக்கு ஒருவனுமே வேண்டாம். என்றுமே நான் எவரையும் கட்டிக்கொள்ளப் போவதில்லை' என்று முணுமுணுத்தாள்.
'உன்னையும் றாங்கிக்காரி என்று அவன்கள் சொல்வ திற் குற்றமில்லை தெய்வி. இந்தப் பரந்த உலகத் திலே நீ ஒரு தனிமரம் என்பதை எப்பொழுதாவது யோசித்திருக்கிறாயா? ஏன் இப்படிப் பிடிவாதம் செய்கிறாய்?’’
அவள் ஒன்றுமே பேசாது தன் காலால் நிலத்தைக் கீறிக் கொண்டு நின்றாள்.
"'என்னைப் பார் தெய்வி, எனக்கோ வயசு அறுபதை அடுத்து விட்டது. 25 வருஷங்களுக்கு முன் நான் இங்கே குடியேறிய பொழுது உன் அப்பன்தான் எனக்கு ஒத்தாசையாக இருந்தான். நீ இன்னும் குழந்தை என்பதை மறந்து விடாதே, உலகத்தைப் பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாது. நீ சொல்லும் காரணத்தில் நியாய மிருந்தால் நானே உனக்கு உதவியாய் இருப்பேன். என்பதை மனதில் வைத்துக் கொள்.'' என்றார்.
'அது தெரியாதா நயிந்தை. நீங்கள் தானே எங்களுக்
குக் கண்கண்ட தெய்வம். உங்கள் அன்பு இல்லா விட்டால் என் ஆத்தை செத்து.' அவளால் பேச முடியவில்லை. அழுகை கலந்த குரலில் 'ஆனால் உங்களைக் கும்பிடுகிறேன், காரணம் கேட்க
வேண்டாம். நான் அதைச் சொல்ல விரும்பவில்லை. ' என்றாள்.
O சி. வைத்தியலிங்கம் O 157

Page 81
முத்துப் பரியாரியார் ‘‘தெய்வி, உன் போக்கே எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. உனக்கு மனசுக்கு வருத்த மானால் சொல்ல வேண்டாம். எல்லாம் கர்லம் வந்ததும் உன்னைக் கேட்டுக் கொண்டுதான் வரப்போகிறதா?” என்று கூறிய வண்ணம் அடி எடுத்து வைத்தார்.
‘என்ன விசித்திரமான பெண். பள்ளர் வகுப்பிலே பிறந்து வளர்ந்த இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு மனோதிடமும் வைராக்கிய சுபாவமும் எப்படி வந்தது? என்று யோசித்த வண்ணம் ஒழுங்கை வழியே போய்க் கொண். டிருந்தார். வழியிலே நின்ற வெள்ளத்தைக் கண்டதும் எல்லாவற்றையும் மறந்து குழந்தை போல் தண்ணிரைக் கலக்கிக் கொண்டு நடக்கலானார்.
தூற்றலாய்ப் பெய்து கொண்டிருந்த மழை ஏதோ வஞ்சம் தீர்ப்பது போல் பாட்டம் டாட்டமாய்ப் பெய்து, அடைமழையாய்ப் பொழிந்து தள்ளிவிட்டு விறுக்கென்று போய் விட்டது. வானிலே கார் ஓட்டம் குறைந்து சூரிய ஒளி வெள்ளம் பரவிக்கொண்டிருந்தது. வயல்களிலும் பனங்கூடல்களிலும் தேங்கி நின்ற வெள்ளம் வடிந்து புல் பூண்டுகள் முளை விட்டுக் கொண்டிருந்தன. பரட்டைவற்றிப் போய்க் கிடந்த கடுகு நாவலும், காட்டுமுல்லையும் இலைவிடத் தொடங்கியிருந்தன. கொடிகள் காய்ந்து செத்துப்போன அடிவேரிலிருந்து தும்பங்கொடி அரும்புகள் வெளிவந்து கொண்டிருந்தன. கோடை காலத்திலே மறைந்து போன கார்த்திகைச் செடிகள் புஷ்பிக்கத் தொடங்கிவிட்டன. தெய்வியின் காய்கறித் தோட்டத்தில் பாவலும் கத்தரியும், தக்காளி யும் பூத்துக் காய்த்து நின்றன. முளைக்கீரை கொய்து சமைக்க வேண்டிய பருவத்தை அடைந்திருந்தது,
அன்று நாலு மைல் தூரத்தில் இருந்த சந்தைக்குத் தெய்வி காய்கறி, கீரை வகைகளை ஒரு கடகத்திற் சுமந்து கொண்டு போயிருந்தாள். அவைகளை விற்று முடிந்ததுந் தான் மாலை ஏழு மணியாகப் போகிறதென் பதைக் கவனித்தாள். வியாபாரமே அன்று அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. அவளுடன் பேச வேண்டு மென்று ஆசையினாற் பலர் வந்து காய்கறி விலை கேட்டார்களேயொழிய வியாபாரம் சரிவர நடக்க
158 O கங்கா கீதம் O

வில்லை. அவசரமாய்த் தாய்க்கு வேண்டிய சில மருந்து களையும் சாப்பாட்டுக்கு வேண்டிய சாமான்களையும் வாங்கிக் கொண்டு அவள் புறப்படும் பொழுது முருகன் ஒரு கடையில் நிற்பதைக் கவனித்தாள். அவன் தன்னைப் பார்க்கு முன் அவ்விடத்திலிருந்து போய்விட வேண்டு மென்ற எண்ணத்துடன் துரிதமாய் நடக்கத் தொடங்கினாள்.
முன் நிலாக்காலமாதலால் இன்னும் இருள் சூழவில்லை. மேலே கிளம்பிக் கொண்டிருந்த இளமதி, சரத்கால மேக மண்டலத்திலிருந்து ஒளியைக் கக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. வீதி வழியாக வந்து கொண்டிருந்த தெய்வி பனங்கூடல் ஊடாகப் போகும் ஒழுங்கையில் இறங்கிப் போய்க் கொண்டிருந்தாள்.
அப்பொழுது பின்னால் யாரோ ஓடிவருவது போன்ற ஒர் உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. சற்று நின்று திரும்பிப் பார்த்தாள். ஒன்றுமே தோன்றவில்லை. நல்லாய் ஊன்றி உற்று நோக்கினாள். எவரும் கண் ணுக்குப் புலப்படவில்லை. அவள் திரும்பி விரைவாய் நடந்து போய்க் கொண்டிருக்கையில் 'தெய்வி1, என்று யாரோ கூப்பிடுவது கேட்டது. அவள் திகைத்துப் போய் 'யார் அது?’ என்று கேட்டுக் கொண்டே கூர்ந்து கவனித்தாள், முருகன் இளைக்க இளைக்க ஓடிவந்து கொண்டிருந்தான்.
‘தெய்வி, இந்த நேரத்தில் தனி வழி ப்ோய்க் கொண் டிருக்கிறாய். உனக்குப் பயமாக இல்லையா?' என்று கேட்டான்.
அவள் திரும்பியும் பாராமல் 'யாருக்குப் பயப்பிட வேண்டும்? உன்னைப் பார்க்கத்தான் பயமாயிருக் கிறது.’’ என்றாள். ''நான் என்ன பேயா, பிசாசா, அப்படி நீ பயப்பட?
இல்லை, நீ இளம் பெண், தனிமையில் போகிறாயே என்று கேட்டேன்.""
என்னைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம். உன் வழியைப் பார்த்துக் கொண்டு நீ போ' என்றாள்.
O சி. வைத்தியலிங்கம் O 159

Page 82
'பேச்சுத் துணையாக இருக்குமே என்று நினைத்தேன். இந்தா தெய்வி, நாக்கு வரண்டு போயிருக்கும். இந்த ‘பீடா" வெத்திலையைச் சாப்பிட்டுப்பார்' என்று சொல்லி எடுத்து நீட்டினான்.
‘'நீ தான் சாப்பிடு, எனக்கு "அது தின்று பழக்க மில்லை. வரும் பொழுது காய்ப்பாக்குடன் நாட்டு வெத்திலையும் போட்டுக் கொண்டு தான் வந்தேன்.""
சரி அப்படியானால் வேண்டாம்.'
இருவரும் ஒன்றுமே பேசாமல் நடந்து கொண்டிருந் தனா .
'அதெல்லாம் இருக்கட்டும் தெய்வி, இன்று நான் உன்னிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டுமென்று தான் ஓடோடியும் வந்தேன். உன்னை வீரனுக்குக் கொடுக்க எல்லா ஏற்பாடும் நடந்து வருவதாகச் சேரியிலே பேச்சு நடக்கிறது. இது உண்மை தானா?'
'நீ யார் அதைக் கேட்க?' என்று சீறினாள்.
“எனக்கும் இதிற் பல நாட்களாய் ஒரு கண் இருப்ப தால் தான் கேட்கிறேன்; நீயே என் மன நிலையை அறிந்திருந்தும் இப்படிப் பேசுகிறாய்."
‘'நான் சொல்ல என்ன இருக்கு? நீயும் மனசில் ஏதோ வைத்துக் கொண்டு அலைவதாகச் சேரியிலே பேச்சு நடக்கிறது. எலும்பில்லாத நாக்கினால் எதையும் பேசு வார்கள். என்னைப் பொறுத்த அளவில். " மேலும் சொல்ல முடியாதவள் நிறுத்திக் கொண்டாள். பின்னர் ‘உன்னை என் புருஷனாக நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. உன்னை மாத்திரமென்ன,
st 9
எவரையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்றாள்.
‘'இப்ப அப்படித்தான் சொல்லுவாய். ஒரு நாளில்லா விட்டால் இன்னொருநாள் நீ தனியன் என்பதை உணராமல் இருக்கப் போவதில்லை. அப்போ எவனை யாவது ஒருவனைக் கட்டித்தானே ஆக வேண்டும்.’’
160 O assis IT digli O

*அப்படித்தான் என் மனசு மாறினால் உனக்கென்ன?’’
** எனக்கென்னவா? எனக்கென்னவென்றா கேட்கி றாய்?' என்று அவன் உரத்துக் கேட்கும் பொழுது அவனிடத்திலிருந்து கள் நாற்றம் அடித்தது.
அவளை நெருங்கி, *"நான் உயிருடன் இருக்கும் வரை உன்னைத் தொடுகிறவனை நானும் பார்க்கத்தான் போகிறேன்.’’ என்று கறுவினான், அவளை உறுத்துப் பார்த்து,
"'என்னைத் தொட உனக்கு என்ன உரிமை இருக் கிறது?' என்று கேட்டாள்.
‘* என்ன உரிமையா?" என்று வெறிகொண்டவன் போல் ஆவேசத்துடன் கத்திக் கொண்டு பாய்ந்து அவள் கையைப் பிடித்தான். திடீரென்று எதிர்ப்புறத்திலிருந்து * யாரடா அவன்?" என் கூவிக் கொண்டு யாரோ ஓடி வந்து அவன் கைகள்ைப் பற்றி இழுக்கவே, முருகன் திரும்பிப் பார்த்தான். வீரன் அனல் கக்கும் கொடூரப் பார்வையுடன் முறைத்து நோக்கிக் கொண்டு நின்றான்.
'ஒகோ! நீயா?" என்று சொல்லிக் கொண்டே'எட்றா கையை’’ என்று கூச்சலுடன் ஓங்கி வீரனின் கன்னத் தில் ஓர் அறை வைத்து விட்டான். குண்டு பட்ட புலி போல் வீரன் அவன் மேற் பாய்ந்து பிடரியின் மேல் குத்தினான். பதிலுக்கு முருகன் எதிரியின் முகவாய்க் கட்டிலே பலம் கொண்ட மட்டும் ஒரு குத்துக் கொடுத் தான். வீரன் சமாளித்துக் கொண்டு எதிரியின் பின்புற மாக வந்து அவன் கால்களுக்கிடையிலே தன் காலைக் கொடுத்து அவனைக் குப்புற வீழ்த்தி இருவரும் ஒருவரையொருவர் அமுக்கிக் கொண்டு புரண்டார்கள். எதிர்பாரா18ல் மின் வேகத்துடன் வந்து தாக்கிய இந்த அதிர்ச்சியால் தெய்வி ஒடுங்கிப்போனாள். வாய் அடைத்து இவர்களையே நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.
முருகன் தன் பலங் கொண்டமட்டும் வீரன் கழுத்தில் கையை வைத்து நெரித்துக்கொண்டு தலையைப்
O சி. வைத்தியலிங்கம் O 161

Page 83
பூமியுடன் சேர்த்து மோதினான். அவன் திமிறிக் கொண்டு சாதுர்யமாய் முருகனைக் கீழே வீழ்த்தி அவன் மேல் ஏறியிருந்து கொண்டு கையை ஓங்கி விசையுடன் மூக்கிலும் நெஞ்சிலும்குத்துவிட்டான்.முருகன் அப்படியே சாய்ந்து போனான். அவன் மூக்கிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்தோடியது.
''சனியனே தொலைந்து போ' என்று சொல்லிக் கொண்டு வீரன் எழுந்து வந்து பார்த்தான். தூரத்தில் வழிப்போக்கர் யாரோ வருவதுபோலிருந்தது. ‘தெய்வி" இங்கே நாம் இனியும் நிற்பது புத்தியில்லை. கொஞ்சம் எட்டிநட' என்று சொல்லிய வண்ணம் முன்னே நடந்தான். தெய்வி சூத்திரப்பாவை போல் இயங்கத் தொடங்கினாள்.
அப்பொழுது, நிலா, தன் அற்பகால வாழ்வு முடிந்து மேற்கு வாயிலில் வீழ்ந்து கொண்டிருந்தது, பனிப் படலம் வந்து கவிந்து காரிருள் சூழ்ந்து கொண்டு வந்தது. பழகிய பாதைவழியால் கஷ்டமில்லாமல் இரு வரும் போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு வார்த்தை தானும் அவர்கள் பேசவில்லை.
அவர்கள் சேரியை அடைந்த பொழுது ஒழுங்கைகளில் மக்கள் நடமாட்டமே இல்லை. பள்ள சேரியே நேரத்து டன் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டது. நாய்கள் ஒன்றன் பின் ஒன்றாய் ஒலமிட்ட வண்ணம் இருந்தன. தூரத்திலே எவனோ குடிவெறியிலே குரல் எடுத்துப் பாடிக் கொண்டு தனிவழி போய்க் கொண்ருந்தான். பிரியும்பொழுது 'சரி, நேரமாகிறது தெய்வி, போய்த்துரங்கு, நான் நாளை வருவதாக ஆத்தையிடம் சொல்லு.'' என்று கூறிவிட்டு வீரன் போனான். தெய்வி தன் குடிசையை அடைந்ததும் அவள் தாய் 'பார்த்துப் பார்த்துக் கண்ணும் பூத்துப்போச்சு. குமர்ப் பிள்ளை, இத்தனை நேரம் இருட்டிலை தன்னந்தனிய வாறதென்றால் . . ஏன் தெய்வி, எங்க வீரனிடம் சொல்லி அனுப்பினேன். அவனைக் கண்டியா?' என்று படுக்கையிற் கிடந்தபடி கேட்டாள்.
'வந்தான் ஆத்தா, நீ சாப்பிட்டியா? எனக்கு ஒரே தலைவலியாய் இருக்கு. நீ தூங்கு. எனக்கு ஒன்றுமே
162 O கங்கா கீதம் O

வேண்டாம், நான் படுக்கப் போறேன்." என்று சொல்
லிய வண்ணம் கடகத்தை ஒரு மூலையில் வைத்து விட்டுப் படுக்கையை எடுத்து விரித்தாள்.
‘என்னவோ அந்த அண்ணமார்தான் கண் திறக்க வேணும். வீரனும் உன்ம்ேல் உசிராயிருக்கிறான்.'
* 'சரி ஆத்தை, நீ பேசாமல் தூங்கு. எல்லாம் காலை யில் பேசிக் கொள்ளலாம்.’’ என்று படுக்கையில் வீழ்ந்து விட்டாள்,
எவ்வளவுக்கு உடல் அயர்ச்சியும் மனச்சோர்வும் தூக்கத்தை எதிர்பார்த்திருந்த போதிலும் அவள் மனசு ஒடுங்க மறுத்து விட்டது. அன்று நடந்த சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அவள் மனசில் தோன்றிப் பலவித உணர்ச்சிகள் பெருகத் தொடங்கின. 'வீரன் இன்று வந்திராவிட்டால் என்ன நேர்ந்திருக்கும். எப்படி யிருந்தாலும் நான் முருகனுடன் அப்படிப் பேசியிருக்க வேண்டாம். வீரன் ஏன் அந்தச் சமயத்தில் வந்தான் அப்பாடி! என்ன குரூரமான சண்டை 3 y
பலமணி நேரமாய் இந்தச் சிந்தனைச் சங்கிலியிற் சிக்கி நித்திரையே வராமற் புரண்டு கொண்டிருந்தாள். விழிப் பும் அயர்வும் கலந்த நிலையில் எத்தனையோ பயங்கர மான எண்ணங்கள் அவளை வந்து நடுங்கச் செய்தன. 'முருகன் குடிசைக்கு வந்தானோ" அல்லது வர வில்லையோ? அவனைக் கிடந்த இடத்தில் விட்டு விட்டு வந்தோமே. சீ! என்ன கொடுமை. ஒரு வேளை. ஒரு வேளை.'' என்று ஒரு எண்ண அலை வந்து மோதியதோ இல்லையோ, அவள் உடல் எல்லாம் பயத்தினால் குளிரத்தொடங்கியது; மேனி நடுக்கம் எடுத்தது. மனம் நிலை கொள்ளாமல் தத்தளித்தது. யாருக்காவது சொல்லி அழவேண்டும் போலிருந்தது. உடனே படுக்கையை விட்டு வெளியே வந்து முத்துப் பரியாரியார் குடிசையை நோக்கி ஓடினாள். அவள் கூப்பிடுவதைக் கேட்டுக் கண்விழித்துக் கொண்ட Lfu frfu Ti பரபரப்புடன் 'ஏன் தெய்வி, உன்
ஆத்தைக்கு ஏதாவது.'' என்று தொடங்கினார்
'இல்லை. நயிந்தை, அதல்ல.
O சி. வைத்தியலிங்கம் 0 163

Page 84
'அப்படியானால், இந்நேரத்தில் எங்கே கிளம்பி 6ör፬ru፡?” s
"'உங்களைத்தான் காண வந்தேன். என்று சொல்லி, அன்றிரவு நடந்தவைகள் முழுவதையும் ஒன்றும் ஒளிக் காமல் அவரிடம் சொன்னாள்.
‘'இப்போ, என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?’’
'ஒருக்கா, என்னுடன் அவன் குடிசைக்கு வந்து பார்த்து வரவேணும் நயிந்தை."
முத்துப்பரியாரியார் விபூதியை எடுத்து நெற்றி நிறையப் பூசிக்கொண்டார். ஒரு துண்டை எடுத்துத் தலையில் முண்டாசாகக் கட்டினார். ஒரு சால்வையை எடுத்து அரையில் வரிந்து கட்டிக் கொண்டார். ஒரு துவாயை எடுத்து ஒற்றைத் தோளிற் போட்டுக் கொண்டு வெளி யில் வந்தார். மருந்துப் பெட்டியைத் திறந்து ஒரு முறை பார்த்து விட்டு அதை மூடித் தன் கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு தெய்வி பின் தொடரக் கிளம்பி விட்டார்.
படலையைத் திறந்து கொண்டு இருவரும் குடிசையுள் நுழைந்து பார்த்தனர். ஒரு கைவிளக்கு மினுங்கிக் கொண்டிருந்தது. படுக்கையில் எவரையுங் காண வில்லை . தெய்வியின் நெஞ்சு நின்று விடும் போல் அடித்துக் கொண்டது. பரியாரியார் கட்டிலுக்கப்பால் ஒரு ஒதுக்கை எட்டிப் பார்த்தார். அனுங்கிக் கொண்டு படுக்கையிற் புரண்டு கொண்டிருந்தான் முருகன். அரவங் கேட்டுத் தன் கண்களை விழித்துப் பார்த்தான். முன்னாற் பரியாரியாரும் தெய்வியும் நின்றார்கள். அவன் தன் கண்களை நம்பாமல் மீண்டும் துடைத்துப் பார்த்துக் கொண்டான். ஆச்சரியமாயிருந்தது!
முத்துப் பரியாரியார் அவனுடைய காயங்களைப் பார்த்து முதலில் ஒரு தைலத்தை எடுத்துத் தடவிவிட்டு, ஏதோ மருந்துகளை வைத்துக் கட்டினார். தெய்வி கொஞ்சம் தைரியத்துடன்' இப்ப நோ எப்படி இருக்கு? குறைந்திருக்கிறதா?’ என்று கேட்டாள். முருகன் அவளை மிகவும் வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டே “ ‘பனை மரம் ஏறி ஏறி வைரம் பாய்ந்திருக்கும் இந்த
164 Q கங்கா கீதம் O

உடம்பில் வலி ஏது தெய்வி? மனம் தான் நொந்து போய்க் கிடக்கிறது. இச்சை வெறியிலே மிருகம் பேல் நடந்து கொண்டேன். மனசுக்கு எடுக்காதே’’ எனறான,
'ஆனால், நானும் அப்படியெல்லாம் துடுக்காய்ப் பேசி யிருக்கவே கூடாது முருகா. '
முருகன் சற்று வியப்புடன் 'நானும் அப்படிப் பேசி உன்னைத் தூண்டியிருக்கவே கூடாது.'
* அச்சமயத்தில் வீரனும் வந்து-"
உடனே முருகன் இடைமறித்து, 'அவன் வந்தது நல்லதாய்ப் போச்சு. அடி வீழ்ந்ததும்தான் வெறி முறிந்து என் மனசும் தெளிவு பெற்றது.'
'அதற்கு இப்படியும் அடிப்பார்களா? அடித்த அடியில் ஏதாவது எக்கச்சக்கமாய் நடந்து போனால். ‘*
‘'நான் இறந்துதான் போனால் யாருக்கென்ன தெய்வி? நான் ஒரு தனி மரம்' என்று கையை விரித்த பொழுது அவன் குரல் தழதழத்தது. ‘நீ, போ தெய்வி, பரியாரி ஐயா வாசலிற் காத்துக்கொண்டு நிற்கிறார். விடியப் போகிறது.’ என்றான் ,
தெய்வி வாசலை நோக்கிப் போய்த் தயங்கினாள். திடீரென திரும்பி ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக் கொண்டு 'என்னால் பொறுக்க முடியவில்லை, முருகு, நீ இப்படிப் பேசுவதை என்னால் தாங்க முடிய வில்லை. ' என்று கதறினாள்.
முருகன் ஆச்சரியத்தினாற் கல்லாய்ச் சமைந்து போனான், அவனுடைய கண்களிலே பேருணர்ச்சியுடன் கூடிய உஷ்ணக் கண்ணிர் நிறைந்து கொண்டிருந்தது. ‘'நான் சொல்வதைக் கொஞ்சம் கேள். என் ஆத்தை வாழ்க்கையிற் கண்டது அடியும் உதையும் தான். என் அப்பன் தினமும் குடித்து விட்டு இரவு சாமங்கழித்து வந்து என் தாயை அடித்து உதைத்த நாட்கள் இன்னும் என்நினைவில்இருக்கின்றன். அவள் எதிர்த்து ஒரு சொல் பேசமாட்டாள்,எவருக்கும் சொல்லமாட்டாள்.
O சி. வைத்தியலிங்கம் O 165

Page 85
எதையும் சகித்து வந்தாள். அப்போ பிடித்த நோய் அவளை இன்றும் தான் அரித்துத் தின்று கொண்டு வருகிறது. என் இள நெஞ்சிலே பட்ட இந்தச் சூடு ஆறவில்லை. அந்தப் பயங்கரமான இரவுகளை நினைத்து நடுங்குவேன். ஆண்களையே வெறுக்கத் தொடங்கினேன்.' முருகன் ஒன்றுமே விளங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனையும் அறியாமல் அவன் கரம் அவள் தலையைத் தடவிக் கொண்டிருந்தது.
'இதனால் தான் நான் எவரையும் கட்டிக் கொள்வதில் லை யென்று மனசிற் சபதஞ் செய்து கொண்டேன். ஆனால் என்னையும் மீறி உன் மேல் என் நெஞ்சம் சுரந்து கொண்டிருந்தது அது பெருக்கெடுக்காமல் அணைபோடவே நான் உன்னை அலட்சியமாய், துடுக்காய் எறிந்து பேசி வந்தேன். இனி, எல்லை மீறி விட்டது, என் இருதயம் தாங்காது, முருகு' என்று விம்மிப் பொருமினாள்.
இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டுநின்ற முத்துப்பரியாரியார் இளம் உள்ளங்களின் விசித்திரமான மனப் போக்கை அறியமுடியாது திகைத்துப் போனார்.
ஈழகேசரி வெள்ளி விழாமலர் (1956)
166 O கங்கா கீதம் O

அன்னம் வெளியிட்டுள்ள பிற ஈழத் தமிழ் படைப்புகள்
உள் மன யாத்திரை - உமா வரதராஜன் 25-00
திறனாய்வுக் கட்டுரைகள் - எம்.ஏ. நுஃமான்
2.00
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
- எம்.ஏ. நுஃமான் 18-00
மகாகவி கவிதைகள் - எம்.ஏ. நுஃமான் 12-00
மழை நாட்கள் வரும் - எம்.ஏ. நுஃமான் 5-00
மனிதர்கள் - காவலூர் ஜெகநாதன்
7-50
இலங்கை இனப் பிரச்சனையில் ஒரு சிங்கள இதழ் - மோகன சுந்தரபாண்டியன்
800,

Page 86
8
10.
1990-அன்னம் வெளியிட்டுள்ள
சிறுகதைத் தொகுதிகள்
கொல்லனின் ஆறு பெண் மக்கள்
- கோணங்கி
உதடுகள் — Tr. 9 pas ffFTf6
புதிய காற்று - தமிழ்நாடு முற்போக்கு
எழுத்தாளர் சங்கத் தொகுப்பு
பாவண்ணன் கதைகள் - பாவண்ணன் LH - நாஞ்சில் நாடன்یا۔ ھے
கதவு - கி.ராஜநாராயணன் தாத்தா சொன்ன கதைகள் -
கி. ராஜநாராயணன் பூவுக்குக் கீழே - கந்தர்வன் கங்கா கீதம் சி. வைத்தியலிங்கம் தாழை பூத்தது - சிட்டி
22-00
15-00
12-00
20-00
15-00
15-00
35-00
12-00
20-00
20-00


Page 87
O
1956க்குப் பிறகு ஈழத்து தவர்கள் சிலரது கதை வெளிவந் ஆனால் மணிக்கொ சேர்ந்த ஈழத்துப் பணி கதைகள் தொகுத்து
பழைய சஞ்சிகைகளிலே I-IL-LITgj மறைந்துறை குரியது. இலங்கை தொகுப்பு அவர் மை களுக்குப் பின்னர் வெளி கதைகளும் வைத்தியலி நூல்வடிவில் ,ותהrsik வரலாற்றுக்கு இவர்க இல்லாதது பெருங்குை ஐம்பது ஆண்டுகள்
வரலாற்று முக்கியத் என்னுடைய பழைய சக பருமாகிய வைத்தியலிங் கிடைக்கக்கூடிய சில
யெடுத்து வெளியிட ஒப் தொகுப்பை இலக்கிய வைக்கிறேன். தமிழ்ச்சி ஈழத்தின் பங்குக்கு மு: வரான வைத்தியலிங்க முக்கியமானவை என் அன்பர்கள் இதனை என்பதில் ஐயமில்லை.
 

நில் சிறுகதை படைத் கள் தொகுப்பு நூல் ந்திருந்திருக்கின்றன. பரம்பரையைச் டப்பாளிகளின் சிறு
வெளியிடப்படாமல் யே பலருக்கும் பயன் வது வருத்தத்துக் பர்கோளின் *ፆ(፴j றந்து பல ஆண்டு வந்தது. சம்பந்தன் |ங்கத்தின் கதைகளும்
ல்லை. இலக்கிய எளின் தொகு ப்புகள் மயென்பதைக்கண்டு,
கடந்துவிட்டாலும், தை முன்னிட்டு, * எழுத்தாளரும் நண் கத்தை ஊக்குவித்து,
கதைகளைத் தேடி புதல் பெற்று இந்தத் வாசகர்கள் முன் சிறுகதை வரலாற்றில் ன்னோடிகளில் ஒரு த்தின் படைப்புகள் ாபதால் இலக்கிய ன வரவேற்பார்கள்
சா. சிவபாதசுந்தரம்