கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சர்ப்ப வியூகம்

Page 1
||-
|- | ||
! -| | | | | | | |-
| |- |- |- | || - - |- |-│ │ │
|- - . |-|-|- |- |- . . |- |-
-- |- |-* |-|-. .| () |-so . . . . | |||- |- (, s.|-
 
 


Page 2

arVILI2F1ab

Page 3
TITLE:
SUBJECT:
AUTHORS
LANGUAGE :
EDITION:
PRCE:
COPYRIGHT :
PAPER USED :
SIZE :
TYPE POINT :
PAGES :
COVER DESIGN &
ILLUSTRATIONS:
PRINTER:
PUBLISHERS:
SATPAVIY()()KAM
COLLECTION () o S(I)NR''S ( ) NS "SEMPLAN SELVANo
TAMIZH
FIRST - 2002.07.02
RS 250.00 CAUTHOR - 10, NEW ROAD,
ATHIADY, JAFFNA. 70 GRAM JK, WHITE
18 DEMY
12 PT
XII + 224
" RA MANI " BOASCO ARTONE PRINTERS, NALLUR, JAFFNA. YARL LITERARY CIRCLE, JAFFNA.
PUBLISHED NASSOCATION
WITH
MINISTRY OF NORTH EASTERN PROVINCE REHABILITATION, RESETTILMENT TAMIZH LANGUAGE IMPLEMENTATION & HNDU CULTURAL AFFAIRS
நூல் : சர்ப்பவியூ ம்
விடயம் : சிறுகதைக்கோவை நூலாசிரியர் : செம்பியன் செல்வன்
மெழி : தமிழ்
பதிபு : முதல் 2002.07.02
விான் : ரூ 250.00
உரிம்ை : நூலாசிரியர்,
10. புதுவீதி, அத்தியடி, யாழ்ப்பாணம், தாள் : 70 கிராம், வெள்ளை, JK அளவு : 1 டெமி
அச்சு : 2Ps பக்கங்கள் : x + 224 அட்டை, விளக்கப்படங்கள் : "ரமணி”
அச்சாக்கம் : போஸ்கோ நிறக்கலைப் பதிப்பகம்,
நல்லூர், யாழ்ப்பாணம் வெளியீடு : யாழ் இலக்கிய வட்டம், யாழ்ப்பாணம்.
ii

முன்னுரையாகும் வெளியீட்டுரை
Fழத்து நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான ஒரு படைப்பாளி செம்பியன் செல்வன் ஆவார். நான்கு தசாப்தங்களாக நவீன தமிழிலக்கி யத்தின் பல்வேறு துறைகளில் ஆழமாய்த் தன் கால்களைப் பதித்துக் கொண்டிருப்பவர். செம்பியன் செல்வனைக் குறிப்பிடாது சிறுகதை, நாவல், நாடகம், ஆய்வு, குறுங்கதை, உருவகக்கதை, ஓரங்க நாடகம், ஈழத்திரைப்படம், இதழியல் முதலான இலக்கியத்துறைகள் பற்றிய வரலாற்றினை எழுதிவிடமுடியாது. 1943 ஜனவரி 1இல் திருநெல்வேலியில் ஆறுமுகம், தமர்தாம்பிகை (இரத்தினம்) தம்பதியருக்குப் பிறந்த இராஜகோபால் என்ற செம்பியன் செல்வன் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து தமிழ் ஆரம்ப பாடசாலையிலும், உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பெற்றார். இந்துக் கல்லூரியின் திறன்மிகு ஆசிரியர்களான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்த கார்த்திகேசன், அற்புதரத்தினம், எம். பி. செல்வரட்ணம் இலக்கியவாதிகளான ஏ.கே. கனகரட்ணம், வை. ஏரம்பமூர்த்தி, க. சிவராமலிங்கம்பிள்ளை முதலானோரின் மாணவராக கற்கநேர்ந்த சந்தர்ப்பமும், இலக்கிய ஆர்வமும்
உத்வேகமுங் கொண்ட மூத்த/ இளைய மாணவ நண்பர்களான கவிஞர்
சோ. பத்மநாதன், செங்கை ஆழியான், து. வைத்திலிங்கம், முனியப்பதாசன், அங்கையன் கைலாசநாதன் ஆகியோரின் இனிய நட்புறவுகளும் செம்பியன் செல்வனை முளையிலேயே படைப்புலகத்தில் நாட்டம் கொள்ள வைத் துள்ளன என்பேன். இளம் வயதிலேயே அவர் நிறைய நூல்களைக் கற்றார். வெறியோடும் வேட்கையோடும் பல்வகை நூல்களையும் அவர் படித்தார் இன்றும் அதே வெறியுடன் படித்து வருபவர் என்பதும் எனக்குத் தெரியும்.
1960களில் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு செம்பியன் செல்வன் நுழைந்தார். அவர் நுழைந்த காலத்துடன் ஈழத்து நவீன இலக்கியத்தின் புத்தெழுச்சிக்காலம் ஆரம்பமாகியது. தாய்மொழி மூலமான கல்வி போதித்தல் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகியது. தாய்மொழி மூலமான சிந்தனை தரமான படைப்பாளிகளைப் பல்கலைக் கழகத்தி னுள்ளும் வெளியிலும் உருவாக்கிவிட்டது. தனிச்சிங்களச் சட்டத்தால் இனங்களுக்கிடையே காணப்பட்ட முறுகல் நிலை, தமிழரசுக்கட்சி தன்

Page 4
சுயத்தை இழந்து ஏனைய இருகட்சிகளுள் இணைந்து அமைத்துக் கொண்ட கூட்டணியின் வட்டுக்கோட்டைத் தீர்மானம், சர்வதேச அரசியலில் கம்யூனிஸ்ட் கட்சியினது மொஸ்கோ பிரிவு, சீனப்பிரிவு என்ற பிளவு, முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இயங்காமையும் புரட்சிகர ஜனநாயக எழுத்தாள் சங்கமாக கிளை பிரிந்ததும், யாழ். இலக்கியவட்டத்தின் எழுச்சியும், இலக்கிய மரபு வாதப்பிரச்சினைகள் உச்சம் பெற்றமை, ஈழத்துத் தமிழிலக்கி யங்கள் குறித்துத் தமிழக எழுத்தாளர்களின் மனதைப் புண்படுத்திய கூற்றுக்கள் முதலான இன்னோரன்ன சூழலின் மத்தியில் படைப்புலகத்தில் ஆக்கபூர்வமாகச் செங்கோலோச்சியவர் செம்பியன் செல்வன். ஆற்றல் மிக்க எழுத்தாளர் கூட்டமொன்று அக்கால வேளையில் பல்கலைகழகத்தில் இருந் துள்ளது. செங்கை ஆழியான், செ. யோகநாதன், துருவன், குந்தவை, அங்கையன்கயிலாசநாதன், செ. கதிர்காமநாதன், க. நவசோதி, கலா, பரமேஸ்வரன் என அப்பட்டியல் நீளும். பல்கலைக் கழகக் காலத்தில் வெளிவந்த கதைப்பூங்கா, விண்ணும் மண்ணும், காலத்தின் குரல்கள், யுகம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளின் பிதாமார்களில் இவரும் ஒருவர். நவீன இலக்கியத்தின் இரு வேறு கோட்பாடுகளையும் செல்நெறிகளையும் நன்கு புரிந்து கொண்டவர்களாகவும் தத்தமது கருத்து நிலைகளை விவாதித்துத் தம்மளவில் நிரூபிப்பவர்களாகவும் எழுதுபவர்களாகவும் பல்கலைக்கழகத்தில் இருவர் விளங்கினி. ஒருவர் செம்பியன் செல்வன், மற்றவர் யோகநாதன். யோகநாதனின் பின்னணியில விமர்சகர் கைலாசபதி நிற்க, செம்பியன் செல்வன் சுயமாக விளங்கினார்.
செம்பியன் செல்வன் பேராதனைப் பல்கலைக்கழகச் சிறப்புப் பட்டதாரி. தனித்துவமான ஓர் இலக்கியச் செல்நெறியைத் தனக்கென அமைத்துக் கொண்டவர். மாக்சிய முற்போக்கு வாதத்தின் சுலோகப்பிரயோகப் படைப்புக்களைக் கடுமையாக விமர்சிப்பவராகவும் விளங்கினார். கட்சி என்று வரும் போது பல அறிவுத்துறைகள் அடைபட்டுப்போகின்றன. மரபு, தேசிய இலக்கியம், மண்வாசனை, இழிசினர் வழக்கு போன்ற சொற்றொடர்களின் பின்னே இலக்கிய குருஷேத்திரங்கள் தோன்ற கட்சி மாயை உதவியது' என்பார் செம்பியன் செல்வன். 'இலக்கியம் என்பது ஒரு கலை சார்ந்த சமூக சீர்திருத்தமாகும். கலை சமூக மாற்றத்தை உருவாக்கும். சமூக மாற்றம் கலை வடிவங்களை மாற்றியமைக்கும் என்பது அவரது கருத்து நிலை. 'என் எழுத்து காலத்தை உணர்த்தி நிற்க வேண்டும்' என்பதில் அவர் பிடிவாதமானவர்.
புவியியல் சிறப்புப்பட்டதாரியான செம்பியன் செல்வன் முதலில்
V

திருகோணமலை சென் ஜோசெப் கல்லூரியிலும், பின்னர் செட்டிகுளம் மகாவித்தியாலயத்திலும், அதன்பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் ஆசிரியராக கடமை புரிந்தார். பின்னர் இலங்கை அதிபர் சேவையில் முதலாம் தரத்தில் சித்தியடைந்து யாழ்ப்பாணம் செங்குந்தா இந்துக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றி, இன்று யாழ்ப்பாணக் கோட்டக் கல்வி அதிகாரியாக அமர்ந்திருக்கிறார். செம்பியன் செல்வனின் உத்தியோக அனுபவங்களும் கடமையாற்றிய பிரதேசங்களின் சூழல் தந்த படைப்புலகச் சிந்தனைகளும் அவரது படைப்புகளுக்கு செழுமையையும் தனித்துவத்தை யும் தந்துள்ளன என்பேன்.
செம்பியன் செல்வனின் இலக்கியத்துறைகளில் முதன்மையானது சிறுகதைத்துறையாகும். அத்துறையில் அவரின் முதன்மையைப் புரிந்து கொள்ள அன்னாரின் ஏனைய துறைச் சாதனைகளை முதலில் நோக்குதல் அவசியம். அவர் ஈழத்தின் சிறந்ததொரு நாவலாசிரியர். கானகத்தின் கானம், நெருப்பு மல்லிகை, விடியலைத் தேடும் வெண்புறா ஆகிய அவர் படைத்த நாவல்கள். முதலிரண்டும் முறையே மீராப்பிரசுரமாகவும், வீரகேசரிப்பிரசுரமாக வும் வெளிவந்துள்ளன. கானகத்தின் கானம் சமகாலப் பிரச்சினையையும், நெருப்பு மல்லிகை சமூகக்களத்தின் எரியும் பிரச்சினையொன்றையும் கருவாகக் கொண்டவை. வீரகேசரி நடாத்திய பிரதேசநாவல் போட்டியில் யாழ்ப்பாணத்துப் பிரதேசத்தின் சிறந்த நாவலாகவும் அகில இலங்கை ரீதியில் மிகச்சிறப்பான பிரதேச நாவலாகவும் தெரிவாகி முதற்பரிசினைத் தட்டிக்கொண்டது நெருப்பு மல்லிகை ஆகும். ஈழத்தின் சிறந்த நாவல்களின் வரிசையில் நெருப்பு மல்லிகை சேர்க்கப்படவேண்டிதொன்றாகும். விடியலைத் தேடும் வெண்புறா ஈழமுரசில் தொடராக வெளிவந்து 300 பக்கங்கள் கொண்ட நூலாக அச்சாகியிருந்தது. 1995 இடப்பெயர்வுக்குக் காரணமான ‘ரிவிரச அரக்கன் யாழ்ப்பாணக்குடாநாட்டில் கபளிகாரம் செய்து கொண்ட வற்றுள் விடியலைத் தேடும் வெண்புறா நாவலின் அச்சான பிரதிகள் அடங்கலும் அழிந்துபோயின. தாயக விடுதலைக்கு வலுச் சேர்க்கும் நாவலாக இது மலர்ந்திருந்தது. இன்று இத்தொகுப்பும்கூட நண்பர்கள் தாம் சேமித்து வைத்திருந்த கதைகளைத் தந்துதவியதாலேயே வெளிவருகிறது.
செம்பியன் செல்வனின் நாடகத்துறைப்பணியைக் குறைத்து மதிப் பிட்டுவிட முடியாது. கலைக்கழக நாடக எழுத்துப் போட்டியில் தொடர்ந்து நான்கு வருடங்கள் முதற் பரிசினைத் தனதாக்கிக் கொண்டவர். 1965ஆம் ஆண்டு அவரின் நாடகப் பிரதியான இந்திரஜித் இரண்டாம் பரிசினைப் பெற்றுக்கொண்டது. அடுத்த ஆண்டு சின்னமீன்கள் என்ற அவரின் நாடகப்
V

Page 5
பிரதிக்குக் கலைக்கழகம் முதற்பரிசினை வழங்கியது. 1968ஆம் ஆண்டு ரியும் பிரச்சினைகள் என்ற ஓரங்க நாடகமும், 1969ஆம் ஆண்டு இருளில் ாழும் பெருமுச்சு என்ற முழு நாடகப் பிரதியும் முதற்பரிசுகளைப் பெற்றுக் கொண்டன. ஈழநாடு தனது பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு டாத்திய ஓரங்க நாடகப்போட்டியிலும் செம்பியன் செல்வனின் 'விடிய இன்னும் நேரமிருக்கு நாடகம் முதற்பரிசினைப் பெற்றது. இப்போட்டியில் இரண்டாம் மூன்றாம் பரிசுகளை எந்தவொரு நாடகத்துக்கும் வழங்க நடுவர்குழு மறுத்துவிட்டது. செம்பியனின் நாடகத்திற்கும் அடுத்த நாடகங் களுக்குமிடையே காணப்பட்ட நீண்ட இலக்கிய இடைவெளியே காரண மாகும். ஏனையவை ஆறுதல் பரிசில் அடக்கமாகின. இந்நாடகங் களைத் தொகுத்து ஈழநாடு’ பத்திரிகையே "விடிய இன்னும் நேரமிருக்கு என்னும் நூலாகவும் வெளியிட்டது. இதே பத்தாண்டு நிறைவுச் சிறுகதைப் போட்டியில் நாம் இருவருமே முதற் பரிசுகளைத் தட்டிக் கொண்டோம். அப்பரிசுக்கதை இக்கோவையிலும் உளது. இவை காரணமாகவே 1977 லிருந்து 1983வரை இலங்கைக் கலாசாரப் பேரவையின் நாடகப் பிரிவுக்கான செயலாளராகச் செம்பியன் செல்வன் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் வித்தியானந்தத்துடன் இணைந்து வெளித்தெரியா நாட்டுக்கூத்துக் கலைஞர்களைக் கெளரவித்தமையில் பங்கேற்றுள்ளார்.
இவரது மூன்று முழு நிலவுகள் என்ற முழு நேர நாடகம் புத்தரது வாழ்க்கைப் பாதையைக் காட்டுவதாயினும் புத்தர் வாழ்வு அவரது கால அரசியல், பொருளாதார சமூக நிலைகளை புத்தரின் விழித்தடத்தால் வாசகருக்கும், பார்வையாளனுக்கும் உணர்த்தி நிற்பதாகும். அழகிய உரையாடல், நாடகத்தினை நடத்திச் செல்லும் இலாகவம், சம்பவ கோவை களிடையே ஏற்படுத்தும் மறைகவர்ச்சிப் பண்புகள், தத்துவ விசாரங்கள் என்பன மூன்று முழு நிலவுகள் நாடகத்தை இலக்கிய காவியம் ஆக்குகிறது என்பேன். அதனாற்றான் இலங்கை இலக்கியப் பேரவை அந்நூலிற்கு பரிசளித்துக் கெளரவித்தது.
நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க எனது நாவலான 'வாடைக் காற்றுக்கு திரைக்கதை உரையாடல் என்பதனை அமைத்துத் திரைப்படச் சுவடியாக்கினர். 9.g. Shooting Script -955, 3(bib;576i 5fp;5560)
படச்சுவடி வரலாற்றில் இலங்கை திரைப்படக் கூட்டுத் தாபனத்தால் A
Grade செய்து மானியமும் வழங்கப்பட்டது. ஆயினும் திரைப்பட வெளியீட்டின்போது இருவருமே நன்கு ஏமாற்றப்பட்டாலும் செம்பியன்
vi

பெற்ற இழப்பே அதிகம். ஆனாலும் அதனை அலட்சியமாக புறம் தள்ளி சிரித்துநின்றதுதான் செம்பியன் என்பேன்.
சு.வே. பொன்னுத்துரை (எஸ்.பொ.) ரஹ்மான் ஆகியோரின் வரிசையில் உருவகக்கதைத்துறையில் கணிசமான பங்களிப்பு இலக்கியத் திற்குச் செய்திருப்பவர் செம்பியன் செல்வனாவார். கவித்துமான சொற்கள் இவரது உருவக்கதைகளில் படிந்திலங்கும். ஐம்பதுக்கு மேற்பட்ட உருவகக்கதைகளை இவர் படைத்துள்ளார். அவையும் தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்ட நிலையில் இடப்பெயர்வின் இழப்புகளுக்கு இரையாகிப்போன நூலாகும். ஈழத்தில் குறுங்கதைகளைத் தரமாகவும் நிறைவாகவும் படைத் தளித்திருப்பவர் செம்பியன் செல்வன். அவருடைய 'குறுங்கதைகள் நூறு நூலுருப்பெற்றிருக்கின்றது. பலராலும் விதந்துரைக்கப்பட்ட படைப்பு இதுவாகும். உருவக்கதைகள் வேறு, குறுங்கதைகள் வேறு எனத் தெளவான இலக்கிய வரையறையைத் தன்படைப்புக்கள் மூலம் காட்டியவர் செம்பியன் செல்வன். மல்லிகை சஞ்சிகையின் ஆரம்ப இதழ்களில் இவரின் குறுங்கதைகள் பலவும் வெளிவந்துள்ளன. இவற்றோடு செம்பியன் செல்வன், விவேகி, அமிர்தகங்கை ஆகிய இரண்டு இலக்கிய இதழ்களில் முறையே இணையாசிரியராகவும் ஆசிரியராகவும் இலக்கியப் பங்களிப்புச் செய்துள்ளார். அமரர் எம். வி. ஆசீர்வாதத்தினால் ஆரம்பிக்கப்பட்டு நடாத்தப்பட்ட விவேகி யின் இணையாசிரியர்களாக செம்பியன் செல்வனும் செங்கை ஆழியானும் விளங்கியுள்ளனர். 1968 தொடக்கம் 1971 வரையிலான விவேகி இதழ்களில் செம்பியன் செல்வனின் படைப்பாற்றலும் புதிய எழுத்தாளர்களை தக்கவாறு அறிமுகப்படுத்திய பண்பும் வெளிப்பட்டிருக்கின்றன. ஈழமுரசு மயில் அமிர்தலிங்கத்தினால் நடாத்தப்பட்ட ஈழமுரசு தினசரியின் மாதாந்த இலக்கியச் சஞ்சிகையாக அமிர்தகங்கை 1988இல் வெளிவந்தது. பன்னிரண்டு இதழ்களே வெளி வந்திருந்தாலும் இச்சிறுசஞ்சிகையின் இலக்கியப் பங்களிப்பு அதிகமாகும். செம்பியன் செல்வன் நல்லதொரு சிறுசஞ்சிகை எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு இலக்கணமாக அமிர்தகங்கையை உருவாக்கி வெளி யிட்டார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு கற்கையின்போது கலைஞானம் என்று சஞ்சிகையின் ஆசிரியராக விளங்கினார். செங்கை ஆழியானின் புவியியல், நுண்ணறிவியல் ஆகிய சஞ்சிகைகளின் இணை யாசிரியராகக் கடமையாற்றியதோடு பங்களிப்பும் செய்துள்ளார்.
இவர் தான் ஆசிரியராகப் பணியாற்றிய விவேகி, அமிர்தகங்கை சஞ்சிகைகளில் எழுதிய தலையங்களாலும், கட்டுரைகளாலும் சிறந்த விமர்சகள் : எனக் கருதப்பட்டவர். 1968ல் இவரால் எழுதி வெளியிடப்பட்ட 'ஈழத்துச் V11

Page 6
சிறுகதை மணிகள்' என்ற விமர்சன நூல் இன்றும் படைப்பாளரிலிருந்து பல்கலைக்கழக மாணவர் வரை பயன்பட்டுவருகிறது. இவர் நூல் மதிப்புரைக்கு என எழுதிய விமர்சனப் பந்திகளை அதே நூலாசிரியர்கள் தம் அடுத்த நூல்களின் பின்னட்டையிலேயே பதித்து மதிப்பளித்திருக்கிறார்கள். பல முக்கிய முதன்மையான கலைஞர்கள் இவர்களாவர்.
1980-ஆம் ஆண்டுகளில் செம்பியனின் மனம் ஆன்மீக வழிகளில் இலக்கியத்தடம் பதித்தது. அவரின் உலக அனுபவங்கள் உருமாற்றம் பெற்றதுடன் தடைகளற்ற பற்றற்ற மனம் பிரபஞ்ச யதார்த்தத்தில் நிகழும் ஆத்ம விழிப்பின் சகல மலர்ச்சியே உலக மானிட விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற எண்ண மிதப்பில் உருவான நாணலின் கீதை இன்று கூட பலரால் மறுவாசிப்புக்கு ஆளாகி, விமர்சனங்களாக பத்திரிகைகளில் வெளி வருகின்றன.
ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்கு 1960-1983 காலகட்டத்தில் அவர் அளித்த முதற்கட்டப் பங்களிப்பு அதிகம். யதார்த்த பூர்வமான, மண்ணோடிணைந்த தமிழ்த் தேசியத்தை நேசித்த மக்களிலக்கியப் படைப் புக்கள் அவை. மக்கள் இலக்கியம் என்பதற்கு அவர் வகுத்துக்கொண்ட அர்த்தமே வேறு. பேச்சு வழக்கையும் சூழலையும் தொழிலையும் சித்திரிப்பது மட்டுந்தான் மக்கள் இலக்கியம் எனக்கருதுவது ஹிமாலயத் தவறாகும். அக்கால மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு அழுத்தங் கொடுத்து வரையப்படும் எந்த ஓர் இலக்கியமும் மக்கள் இலக்க, மாகும். மக்களுக்காக மக்களின் நன்மை கருதி மக்களில் ஒருவனாக வாழும் கலைஞர் ஒருவனால் பிறப்பிக்கப்படும் எந்த இலக்கியமும் மக்கள் இலக்கியமாகும்" என்கிறார். செம்பியன் செல்வன் எழுதிய புத்தெழுச்சிக் காலகட்டத்துச் சிறு கதைகளில் பாரம்பரியம், வர்க்கங்கள், பாதிமலர், இதயக்குமுறல், அமைதியின் இறகுகள், நீரும் நிலமும், நெல், கிழக்கும் மேற்கும், நீரோட்டம், பூவும் கனியும், ஒரு ஞாயிற்றுக்கிழமை, பழங்கட்டில் என்பன குறிப்பிடத்தக்கன. செம்பியன் செல்வனின் சிறுகதைத் தொகுப்பாக அமைதியின் இறகுகள் வெளிவந்துள்ளது. கலைச்செல்வி நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதற் பரிசினை இதயக்குமுறல் என்ற சிறுகதை பெற்றது. அதன் பின்னர் செம்பியன் செல்வன் ஈழத்தின் சிறுகதையாளர்களில் ஒருவராக அடையாளங்காணப் பட்டார். 'ஒரு சிறுவன் ஒரு இளம் பெண், அவர்கள் வாழ்க்கை விந்தை யானது. அவள் இளம் வயதில் பருவக் கோளாறால் பாதிக்கப்பட்டு நம்பிய வனால் கைவிடப்பட்டு, கர்ப்பிணியான அப்பெண்ணின் அவமானத்தை உலகிற்கு மறைக்க, அவள் தகப்பனாரே தன் பேரனைத் தன் மகனாகப்
viii

பதிவு செய்து வளர்த்துவர மகன் சொந்தத் தாய்க்குத் தம்பியாகிய கொடு மையை இதயக்குமுறல் சித்திரிக்கின்றது. இச்சிறுகதை ஈழத்துப் பரிசுச்சிறு கதைகள் என்ற தொகுதியில் இடம் பெற்றுள்ளது. 'பெண்கள் தம் வாழ்வில் வழுக்குவதால் பல இடர்பாடுகளை அடைகின்றனர். இதயக் குமுறல் எனும் சிறுகதையின் ஆசிரியர் இத்தகைய ஒரு பெண்ணின் எண்ணங் களைத் துன்பக்குழம்பில் தோய்த்து முறித்து முறித்து சிறு சொற்றொ டர்களாக வெளிப்படும் அருமைப்பாடு போற்றுதற்குரியது' என்கிறார் ஈழத்துப் பரிசுச் சிறுகதைத் தொகுதியின் பதிப்புரையில் க.பொ. இரத்தினம். கதைப் பொருளுக்கேற்ற நடையை ஆசிரியர் இச்சிறுகதையில் கையாண்டுள்ளார். இதயக்குமுறல், அமைதியின் இறகுகள், நீரும் நிலமும், நெல் ஆகியன ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறக்கின்றன. ஈழத்தமிழ் வாழ்வு, இன்றைய பல்வேறு நிலைமையை இவை கதைகளுக்குப் புலமாகத் திறம்படக் கையாளப்பட்டிருப்பதே இக்கதைகளின் சிறப்பிற்கு முக்கிய காரணம். நெல்லில் வரும் மாப்பிள்ளைக் கந்தரையும், நீரும் நிலமும் சின்னரையும் படைத்த பாங்கு சிறப்பானது' என சாலை இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.
செம்பியன் செல்வனைச் சிறுகதை வரலாற்றுக் காலகட்டத்தின் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது மல்லிகையில் வெளிவந்த சர்ப்ப வியூகம் என்ற கதையாகும். வன்னிப்பிரதேசச் சூழலில் வீறுகொண்டெழும் தொழிலாளர்களை இயற்பண்பு மீறாது சர்ப்பவியூகத்தில் சித்திரித்துள்ளார். இச்சிறுகதை மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்துள்ள மல்லிகைச் சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம்பிடித்துள்ளது. புத்தெழுச்சிக்கால கட்டத்தின் (1961-1983) முக்கிய சிறுகதை ஆசிரியராக இனங்காணப்பட்ட செம்பியன் செல்வன், தமிழ்த்தேசிய உணர்வுக் காலக்கட்டத்திலும் (19832000) தக்கதொரு சிறுகதைப் படைப்பாளியாக விளங்குகிறார். இக்கால கட்டத்தில் பல சிறுகதைகளைச் செம்பியன் செல்வன் படைத்தளித்துள்ள போதிலும், காண்டீபம், வீடு திரும்புதல், வலை, ஓவர் லாண்ட் ஆகிய சிறுகதைகள் அவற்றின் உருவ அமைதியிலும் பொருள் அமைதியிலும் சிறந்து விளங்குகின்றன. அகவயப்பட்ட மானிடப் பொருமல்களை மிகத் தத்ரூபமாகப் புறச்சூழலோடு பின்னிச் சிறுகதைகள் தருவதில் செம்பியன் செல்வன் வல்லவர். அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பாக வெளி வரும் சர்ப்பவியூகம் போராட்டச் சூழலின் வாழ்வியலல்ல. நெருக்கடிகளையும், இந்திய அமைதிப்படை, இலங்கை இராணுவம் ஆகியவற்றின் அடக்குமுறை அட்டூழியங்களையும், போராளிகளின் தியாகங்களையும், கருப்பொருளாகக்
ix

Page 7
கொண்டு உருவாகியுள்ளன. அவற்றின் துணிச்சலாகத் தம் கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்திய இராணுவமும் தமிழ்த்தேசிய இராணுவமும் யாழ்ப்பாணத்தில் இருந்த காலவேளையில் 'காண்டீபம்' தத்ரூபமாகச் சித்திரிக்கின்றது. அக் கதையை விபரிக்க ஆசிரியர் பிரக்ஞை பூர்வமான மொழிநடையைக் கையாண் டுள்ளார். இந்திய இராணுவம் கல்லூரி ஒன்றினுள் புகுந்து ஆசிரியர்களைச் சுட்டுக்கொன்ற அவலத்தைக் காண்டீபம் கலாபூர்வமாகச் சித்திரிக்கின்றது. போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட இளைஞர்களின் முடிபை நியாயப்படுத்தும் சிறுகதையாகக் காண்டிபம் விளங்குகின்றது.
செம்பியன் செல்வனின் அண்மைகாலப் படைப்புக்களில் சுலோகப் பிரயோகங்கள் வார்த்தையாடல்கள் இருந்தாலும் அவற்றினை மேவி மனதைக் கல்விப் படிக்கும் பாங்கானவையாக அவை விளங்குகின்றன. காரணம் இன்றைய தமிழர் வாழ்வியலில் சுலோகங்கள் உயிர்த்துவமான உரையாடல் களாக பழமொழிகள் கையாளப்படுவது போல் மாறிவிட்டன. (உதாரணமாக கல்லறையல்ல, கருவறை. வித்துடல் என்பன) முன்பு வெறும் வெற்றுக் கோஷங்களாக அலங்கார ஒலிகளாக விளங்கிய சுலோகங்கள் இன்று போராட்ட முன்னெடுப்புக் கீதங்களாக மாறிவிட்டமையையும் அவை பின்னர் சிறாரின் வாயில் பாலர் பாடல்கள்போல் மிழற்றுவதாலறியலாம். அவரின் 'சர்ப்பவியூகம் என்ற இச்சிறுகதைத்தொகுதி அன்னாரின் சிறுகதை படைப்பனுபவத்தினை நன்கு புலப்படுத்துகின்றது. தக்கதொரு விமர்சகராக இனம் காணப்படும் செம்பியன் செல்வனின் படைப்புக்களில் மிக்க அவதானிப்பும் முரண்படா பாத்திரவளர்ப்பும் சமூக எதிர்வு நோக்கலும் கலைத்துவமாக அமைந்துள்ளன. ஈழத்து நவீன இலக்கியவுலகத்திற்குப் பெருமை சேர்க்கும் படைப்பாளி செம்பியன் செல்வன்.
இலக்கிய இரட்டையர்களாக ஈழத்து இலக்கியவுலகில் பேசப்படும் நானும் செம்பியன் செல்வனும் இலக்கியவுலகில் காலடி எடுத்து வைத்த காலமும் கருத்தும் ஒன்றே. நண்பரின் சர்ப்பவியூகம் என்ற இச்சிறுகதைத் தொகுதிக்கு யாழ் இலக்கியவட்டத்தின் தவைர் என்ற வகையில் வெளியீட்டுரை ஒன்றினை எழுத முன் வந்து அது ஒரு பெரும் முன்னுரையாக மாறிவிட்டது. இவை அனைத்தும் சொல்லப்பட வேண்டியவை தாம்.
பாழிஇலக்கிய வட்டம் செங்கை ஆழியான் மாழப்பாணம் 08-07-2002. க. குணராசா.

xi

Page 8
மற்றுமொருவுரை மானிட சிந்தனா வளர்ச்சிப் போக்கில் எழுந்த நுண்ணறிவுக் கூர்மையின் தீ3 ஷண்யம் உலகை உள்ளங்கையளவாய்ச் சுருக்கி, அதன் சுட்டு விரல் நகநுனியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டபோது உலகவாழ் மக்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் விளிம்பு மனிதராகும் நிலையாகிவிட்ட நிதர்சனம். அந்தச் சுட்டுவிரல் எதனுடையது? அது சுட்டுவது-காலத்தைய, களத் தையா?. உலகம் செல்ல வேண்டிய திக்கையா?. அதன் மெளன ஆணைதான் என்ன? ஆணையின் அர்த்தம் இன்னதென்று புரியாமலே உலகம் அதன் வழியில் இயங்க ஆரம்பிக்கிறது. காலவெளி புதியதோர் உலகைச் சூழ்கிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, பண்பாடு அனைத்தும் இந்த நிழல் அதிகார ஆக்ஞைகளுக்கு உட்பட்டே, ஒவ்வொரு நாடு களும் மாற்றத்துக்கும் மறுமலர்ச்சிக்கும் ஆளாகி வருகின்றன. தேசியம், சர்வதேசியம் என்பன புதிய பால்வீதிக்கான புதிய தோற்றம் கொள் கின்றன. புதிய தத்துவார்த்த நெறிகளைஉற்பவிக்கின்றன.இவை சார்ந்தமைந்த கலை இலக்கியக் கோட்பாடுகளும் கொள்கைகளும் உருமாற்றம் கொள்கின்றன. எனவே, உலகப் படைப்பாளிகளிடையே கலைகளின்/இலக்கியங்களின் தன்மை, த ல், செம்மைசார் இலக் கியம், செல்நெறி, சுயம், அந்நியம் எனப் oபதங்கள் மிதவையிடு கின்றன. படைப்பியல் ரீதியான சமூக ஆய்வுமாகின்றது. இப்பேதங்கள் இலக்கியப் போராட்டங்களாகின்றன. இலத்தீன் அமெரிக்க நாடுகள், ஆபிரிக்க நாடுகள், மத்தியகிழக்கு நாடுகள் இவற்றை முன்னெடுக்கின்றன. போராட்டமே இலக்கியமாகி, இலக்கியம் அரசியலாகி, அரசியல் பொருளாதாரமாகி, பொருளாதாரம் சமூகவாழ் நிலைகளை நிர்ணயிக்கின்றன. எனவே இலக்கியம்/ கலைசார் போராட்டங்களே விளிம்பு மனிதர்களின் - உலக மக்களின் - விடிவுக்கு ஆதார சுருதி எனக் கோளின் சுழற்சி உரக்க மீட்டுகிறது. ஈழத்து எழுத்தாளர்களின் கருத்து/படைப்பியல் முரணிகளை மீறி கால வெளியின் கதைக் கருப்பொருட்கள் அவ்வப்போது அக்னிப் பீட்சை செய்து கொண்டபோதும் - ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் செல்நெறி இதனை நோக்கித்தான் நகர்கிறது. ஆனால் மெது மெதுவாக.
செம்பியன் செல்வன் / 2002-07-01 யாழ். கல்விக் கோட்டம்
xii

A7 ٹی/o7ح دستے طٹ%/42'
மியிலுக் கிழவருக்கு ஆத்திரம்
குமுறிக் குமுறிக் கொண்டு வருகிறது. ; வீட்டு வளவில் நிறைந்திருக்கும் ".ே சந்தடிகளுக்கும் இன்பப் பரபரப்புகளுக்கு \:ே "I மிடையில், அவரது ஆத்திரம் அர்த்தமற்றதாயினும் மனதில் எழும் அழலை அவரால் அடக்கமுடியவில்லை. முற்றம். வீட்டுத்தாழ்வாரம். கிணற்றடி. அடுப் படி எங்கும். இனசனங்கள் குழந்தை குட்டிகளுமாகக் குவிந்திருக்கின்றனர். அவர்களின் பரபரப்பான மகிழ்ச்சிச் சந்தடிகளுக்கு மிடையில் கைவேலைகள். ஏதேதோ கருமங்கள் துரிதமாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. மாமரத்தின் நிழலின் கீழ் ஒலிபெருக்கிக்காரன் இருந்து கொண்டு சமீபகாலத் திரைப்படப் பாடல்களால் ஊரைக் கதற அடித்துக் கொண்டிருந்தான். சிறுவர் கூட்டமொன்று அவனை மொய்த்துக்கொண்டு நின்றது. 1 அங்கு வேறு வேலையாக வரும் சில இளைஞர்கள் சிறுவர்களை அதட்டி
பூவும் கனியும்/1

Page 9
விலகச்செய்துகொண்டு தாம் விரும்பும் பாடலை ஒலிபரப்புமாறு தூண்டிக்கொண்டு நிற்கிறார்கள். பாவாடை கட்டிய இளம் சிறுமிகளும், புதிதாகச் சேலை உடுக்கத் தொடங்கிய இளம் பெண்களும் தாமும் அக்கூட்டதினிடையே கலந்து கொள்ள வேண்டுமென்ற தவிப்பினுள்ளும் தங்கள் மனத்திற்கே பிடிபடாத வெட்கத்திற்கோ அன்றி பெரியவர்கள் ஏதும் சொல்வார்கள் என்ற பயத்திற்கோ ஆளாகி உதட்டின் விளிம்புகளிலும், கன்னக் கதுப்புகளிலும் சிறுநகையைத் தேக்கியவாறு, மலர்ந்த முகத்துடன் அங்குமிங்குமாக அலைந்து திரிந்து தம்மைக் காட்டிக் கொள்வதில் ஒருவித ஆனந்தம் கொள்கின்றனர்.
கிழவருக்கு இதனால் ஒன்றும் ஆத்திரம் வரவில்லை. மாறாக இந்த இளவட்டங்களின் தடுமாற்ற ஆரவாரம் அவரின் மனத்திற்கு இதமாகத்தான் படுகிறது. இந்தச் சுபகாரியத்திற்குக் காரணமான சம்பவத்தை நினைத்த போது நெஞ்சத்திலே கோடை மலர்களாக உவகை பூத்துக்கொட்டுகிறது.
அவரது செல்லப்பேத்தி சாரதாவின் மகளுக்கு இன்று ‘காதுகுத்தல் நடக்கப்போகிறது.
"விஜிக்குட்டிக்கு. என்ர பூட்டிக்கு காது குத்தல் அவர் மனதில் பெருமிதம் பொங்கி வழிகிறது.
'எனக்கென்ன குறை. பூட்டியைக்கூடச் சாகமுந்திக் கண்ணால் பாத்திட்டன். நான் செத்தாலும் நெய்ப்பந்தம் பிடிக்கப் பேரன் பேத்திகள், பூட்டன் பூட்டிகளெல்லாம் இருக்கினம்.- ஈழத்துக் குடியானவன் ஒருவன் மனத்தில் இயல்பாக எழும் பெருமிதம் மனதில் நிறைகிறது. ஆனால் இந்தப் புறக்கணிப்பு. உதாசீனம் தான் அவரால் தாங்கமுடியவில்லை.
அந்த வளவிலேயே பிரதான வீட்டை விலத்தி, ஒதுக்குப்புறமாகத் தனக்குத்தானே அமைத்துகொண்ட சிறு ஒலை வீட்டின் தலைவாசலில் நின்று கண்களில் எரிவுதோன்றப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் மனதில் மகிழ்ச்சியும் ஆத்திரமும் ஏதோ பிடிபடாத நிலையில் கலந்து குமைகின்றன. வந்திருக்கும் விருந்தினருக்கு பழமும், பலகாரமுமாக சோடாவும் சிகரட்டுமாக உபசாரம் நடந்து கொண்டிருக்கின்றது. அதனைப் பார்த்ததும் அவரின் ஆத்திரம் அதிகரித்தது. 'ஹும்' என்ற உறுமலுடன் இடுப்பிலிருந்து நழுவி விழும் நாலுமுழ வேட்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு முன்னும் பின்னுமாக நடக்கின்றார்.
வந்தவைக்கெல்லாம் பெரிசா உபசாரம் பண்ணுறாளவை. இங்க ஒரு கிழவன் விழுந்துகிடக்கிறானெண்டு கொஞ்சமாவது நினைச்சாளவையே. அவளவைக்கு அவையின்ர புதிய சொந்தக்காரர்கள்தான் பெரிசாப் படுகுது. இது. இந்த. அவையின்ர கொண்டாட்டத்துக்கெல்லாம் இந்தக் கிழவன்தான் காரணம் எண்டு எப்பனாவது சிந்தனை?. இந்தக் கிழவன் நேரத்துக்குச் 2 /செம்பியன் செல்வன் --

சாப்பிடாட்டி பசியால துடிச்சுப்போகும் எண்ட கரிசனை.கொஞ்சமாவது உதுகளுக்கு இருக்கா?. ஹும்! எல்லாம் நன்றி கெட்டதுகள். மகள் எண்டால் என்ன? பேத்தி எண்டால் என்ன? எல்லாம் ஒண்டாத்தான் இருக்குதுகள் .
'எட தன்ர வளவைத்தான் கிழவன் எங்களுக்குக் குடியிருக்க விட்டது மட்டுமல்லாமல், தானிருந்த வீட்டைக்கூட எங்களுக்கு விட்டிட்டு, தனக்கொரு குடிசை போட்டுக் கொண்டு பிறத்தியா வாழுறது கூட எங்கட வசதிக்காகத்தான் எண்டு நினைச்சுப் பாக்கிறாளவையே.? - மனதின் கொதிப்பு எண்ண அலைகளை எழுப்புகின்றன.
தன்னை ஒருவரும் நன்றாகக் கெளரவிக்கவில்லை, கவனிக்கவில்லை என்ற எண்ணம் எப்படியோ கிழவர் மனதில் எழுந்துவிட்டது. அதனால் அவரின் உள்ளம் கொதித்துக்கொண்டிருக்கிறது.
கிழவர் உண்மையிலேயே மிகவும் நல்லவர். தன் குடும்பம் கொப்பும் கிளையுமாகச் செழித்து வளர்வதைக் கண்டு மனம் மகிழ்கின்றவர். இல்லா விட்டால் தனது ஒரேஒரு மகளான கமலத்தை ஏராளமான நிலபுலன்களைச் சீதனமாகக் கொடுத்து கலியாணம் செய்துவைக்க, கொடுத்த சொத்தை யெல்லாம் சில ஆண்டுகளிலே கரைத்துவிட்டு, வெறுங்கையோடு மகளும் மருமகனும், பேரப்பிள்ளைகளோட வந்து நின்றபோது அவர் உருகியே விட்டர். முதலில் மருமகனின் செய்கைக்காக ஆத்திரப்பட்டாலும், "எல்லாம் எழுதின படிதான் நடக்கும் என்று விதியின்மேல் பழிபோட்டுவிட்டு மகளுடன் வந்திருந்த பேரன் பேத்திகளைக் கண்டு மனங்கலங்கி அப்படியே அணைத்துக்கொண்டார். மூத்த பேத்தியான சாரதா - அவரது செல்லப்பேத்தியாகிவிட்டாள். எப்போதும் அவள் அவருடனேயே கோயில் குளம் எல்லாம் திரிவாள்.
அவர் மனைவி பாக்கியம்கூடக் கேலி பண்ணுவாள். 'என்னடி சாரதா அப்புவை காவல்செய்தா அவர் வேலைவெட்டியள் பார்க்கப் போறதில்லையே? சாரதா வெடுக்கெனப் பதில் சொல்வாள் அப்பு வேலை வெட்டி பார்க்கப்போகவேணாம்'
அப்படியெண்டா எப்பிடிச் சாப்பிடுறது. உழைச்சாத்தானே சாப்பிடலாம்.
'ஏன் அப்புட்டத்தான் கனக்கக் காசிருக்கே. என்னப்பு காசு இருக்கல்ல உங்களிட்ட?- என்று அவரையே திருப்பிக் கேட்பாள்.
அவரை அப்படியே மகிழவைக்கும் அவள் மழலைகள். அவர் அப்படியே மெய்மறந்து போவார்.
அவளது மழலையிலும் குறும்பிலும் தன்னை மறந்திருந்த அவருக்கு சாரதா ஒட்டு மாங்கன்றாக மதமதவென்று வளர்ந்து, பருவப் பூஜ்புடன் விளங்குவது புரியவேயில்லை. தெரியவுமில்லை. ܖ
பூவுமில்னியுழி/3

Page 10
சாரதா அருகிலுள்ள கல்லூரி ஒன்றுக்குப் போய் வரத்தொடங்கினாள். அப்படி அவள் போகவும் வரவும் அவளைப் பார்த்துப் பார்த்து மெய்மறந்துகொண்டிருந்தான் சிவராசா. அவன் தினசரி அவள் போகும் பாதையில், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் கச்சேரிக்குப் போகும் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருப்பானி. அவளின் அழகைப் பார்த்துப் பார்த்து மெய்மறந்த அவனை அந்த குழந்தையுள்ளத்தின் பண்பாடான நடத்தையும், உலகை விகற்பமின்றிப் பார்க்கும் களங்கமற்ற பார்வையும் மெய்மறக்கச் செய்தன. அவன் தூண்டுதலால் அவன் பெற்றோர்களே சாரதாவிற்கு மணம் பேசி வந்த போது கிழவர் திடுக்கிட்டுத்தான் போனார்.
சாரதாவிற்கு மணமா? குழந்தைக்குத் திருமணமா? அவளை புதியவளாக பார்த்தபோதுதான் அவள் சிறுமியல்ல. பெண்மை முகிழ்த்து நிற்கும் சுடர்விளக்கு.ஒரு குடும்பத்திற்கு ஒளி தரவேண்டிய பெண் விளக்கு என்பது புரிந்தது. கலியாணம் சீதன விசயத்தில் பிசகிய போது சாரதா கண் “கலங்கியதைக் கண்டார். அவரால் பொறுக்கமுடியவில்லை. தனக்குப்பின் தானிருக்கும் காணியை அவளுக்கே எழுதி வைப்பதாக வாக்குக் கொடுத்து கலியாணத்தை நடாத்திவைத்தார். அந்தச் சாரதாவின் மகளுக்குத்தான் இன்று 'காதுகுத்தல் நடக்கிறது.
அந்த விழாவில் அவரை ஒருவரும் சரியாகக் கவனிக்கவில்லை. ஏன் அவருக்குப் பொருமல் வராது?
பாக்கியம் - அவர் மனைவி - இறந்த விரக்தியிலும், தானிருந்த கல்வீட்டை பெருகிவரும் மகளின் குடும்பம் ஆளக்கொடுத்துவிட்டு தனக்கொரு குடிசை அமைத்துக்கொண்டு வாழ்வதற்கு காரணம் அவர்கள் குடும்பத்துடன் வாழப்பிடிக்காததல்ல. குழந்தைகள் காலம் தெரியாமல் அழுவதும் பிடிவாதம் பிடிப்பதும் இப்போது அவருக்கு ஏனோ எரிச்சலை மூட்டின. பேரன் பேத்திகளின் தற்கால நடைமுறைக்கேற்ற நடை, உடை, பாவனைகளைக் காணும் போது அவருக்கு மனம் எரியும் அவர் தனித்து வாழ்ந்தாலும், அவருக்கு தேவையான உணவும், பிறதேவைகளும் நேரம் தவறாது மகளாலோ பேத்தியாலோ நிறைவு செய்யப்பட்டுவிடும். ஆனால்
அவர் இரண்டு மாதங்களுக்கு முன்னால் பெரிய காய்ச்சலில் விழுந்து எழுந்ததின் பின்னர் அவருக்கு வழக்கமாக வரும் உணவுகளுக்குப் பதிலாக உப்பில்லாமல் ஒருவித சுவையுமற்ற உணவே வந்துகொண்டிருக்கின்றது. கேட்டால் அவர் வாய்தான் சரியில்லை என்று பதில் வருகிறது.
‘என்ர நாச்சியார் சமைச்செல்லோ சாப்பிடோணும். அவவைப்போல சமைக்க ஒரு பிறவியள் இப்ப இருக்கினமோ. அவவிட்ட சாப்பிட்டவாய் இப்ப இதுகளின்ர சாப்பாட்ட சாப்பிட வேண்டியிருக்கு. நாச்சியார் குணத்தால, அழகால என்னைக் கவர்ந்ததைப்போல சாப்பாட்டாலேயும் என்னை அப்படியே
4 / செம்பியன் செல்வன்

பயக்கி முந்தானையில முடிச்சிவைச்சிருந்தா. இப்ப உணவும் சரியில்ல. அதையும் நேரகாலத்துக்கும் உண்ண முடியேல்ல. கிழவர் நிலைகொள்ளாமல் தவிக்கின்றார்.
டக்- மேசைமேலிருந்த கடிகாரம் ஒலிக்கிறது. நிமிர்கிறார்.
- ஒன்றரை மணி!"
நடந்து நடந்து கால்கள் ஓயவே, அங்கு போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்கிறார்.
"கிறீச். கிறீச்'- என்று கட்டில் ஓலமிட்டு, அசைந்து கொடுக்கிறது. அது அவருக்கு வேதனையாக இருக்கிறது. அவரின் தளர்ச்சியை நினைவூட்டுகிறதோ? கட்டிலின், தலைமாட்டிலிருந்த ஸ்டூலை நகர்த்தி இழுத்து அதன்மேலிருந்த செம்பை எடுத்து, வாயில் ஊற்றித் தலைவாசலின் பக்கத்துத் தட்டியை ஒரு கையினால் விலத்திக்கொண்டே கொப்பளிக்கின்றார்.
வயிற்றில் கடகடவென்ற தவளைச் சத்தம். வெறுமையான வயிற்றில் தகரப் பேணியில் கற்களைப் போட்டுக் குலுக்குகின்ற பிரமையின் நோக்காடு.
'வயித்தில வாயுகூட குடிகொண்டிட்டுது. இவளவை என்னைக் கொஞ்சமாவது கவனிக்கிறாளவையே. எல்லாம் அந்தப் புண்ணியவதி போனாள். அதோட எல்லாம் எனக்குப் போச்சு. இல்லாமலே பழைய மணிசர் சொல்லி வைச்சவை. மனைவியோட அறுசுவை போம் எண்டு. என்ர நாக்கை நல்லா வளத்துப்போட்டு அவள் போயிட்டாள். இவளவையோ காலமை தந்த இடியப்பத்தைவிட வேறொன்றையும் கண்ணில காட்டுறாளவையில்லை. நினைவுகள் வயிற்றின் கடுகடுப்பில் சீறி எழுகின்றன.
'இவளவைக்கும் என்னவிட வந்திருக்கிறவைதான் பெரிசாப் படுகினம். இவைதான் நாளைக்கு இவையை வந்து தாங்கப் போயினம். எல்லாத்துக்கும் இந்தக் கிழவனிட்ட வந்துதான் பல்லைக் காட்டவேணும். எல்லாம் என்ரபிழை. நான் கொடுத்த இடம். இனிப் பாக்கிறனே. நானும்- என்ற சிந்தனையினூடே எழுந்த எரிச்சலைத் தணிக்க செம்புத் தண்ணீரை எடுத்து நான்கு முறடுகள் விழுங்குகின்றார். பசிநாக்கில் தண்ணீர் ஒருவித அருவருப்புச் சுவையைத் தருகின்றது. வயிற்றின் கடுகடுப்புக் கொஞ்சமும் தீரவில்லை.
மடியைத் தொட்டுப்பார்த்துப் பிரிக்கின்றார். ஒரேயொரு சுருட்டு மடியிலிருந்து கையில் உருள்கின்றது. திருட்டுப் பார்வையுடன் அதனை எடுத்துக்கொண்டு சுற்றுமுற்றும் பார்க்கிறார். அதனைக்கண்டால் மூத்த பேத்தி ஓடிவந்து பறித்துவிடுவாள்.
'உங்களைச் சுருட்டுப் பிடிக்கக் கூடாதெண்டெல்லே டாக்குத்தர் சொன்னவர் என்று சண்டை பிடிப்பாள். கிழவருக்கு பேத்தி சாரதாவின் நினைவு வந்துவிடுகிறது.
பூவும் கனியும் / 5

Page 11
அவள் சரியா குணத்திலும், உருவத்திலும் என்ர நாச்சியார் பாக்கியத்தைப் போலத்தான். அவளப் பாத்துப் பாத்துத்தான் என்ர பாக்கியத்தின்ர மறைவை மறக்கிறன். அவள் பேசேக்கை. தலையைச் சாய்த்து சிரித்துப் கேர)து .அப்படியே பாக்கியத்தை உரிச்சு வைச்சிருக்கிறது.அதாலதான் எனக்கும் அலவில இந்தப் பற்று. இல்லாட்டி அவளுக்கு இந்தக் காணியை எழுதிக் கொடுக்கிறன் எண்டு சொல்லுவனே. ஆனா அவளும்தான் இப்ப மாறிப் போயிட்டாளே. என்னை கொஞ்சமும் கவனிக்கிறதில்ல. முந்தியெண்டால் . என்னணை அப்பு வேணும் எண்டு கேட்டுக் கேட்டு செய்யிறவள். இப்ப.- நெஞ்சத்திலிருந்து பெருமூச்சொன்று எழுகிறது. சுருட்டைப் பற்றவைக்கும் ஆவலில் சுருட்டை முகர்ந்து முனையைக் கிள்ளி வைத்துத் தும்பை கடித்துத் துப்பிவிட்டு, வாயில் வைத்துக்கொண்டு நெருப்புப் பெட்டியைத் தேடுகிறார்.
‘எங்க வைச்சன்?. வரவர ஒண்டும் வைக்கிற இடமே தெரியுதில்ல. மறதி கூடிப்போச்சு. இந்த மறதியாலதான இப்ப ஒருதரும் வீட்டில மதிக்கிறேல்ல. ஓம். ஓம். நான் விட்ட இடம்தான். நான் எல்லாரையும் வீட்ட விட்டு எழும்பச்சொன்னா எழும்பவேண்டியதுதான. என்ற ஒரு வக்கிரமான எண்ணம் மனதிலே எழுகிறது.
அவையளுக்குக் கொஞ்சமும் தங்கட நிலை தெரியுதில்ல. நான் நினைச்சனெண்டா இந்தக் காணியைக் கோயிலுக்கு எழுதிவைச்சுட்டுப் போயிடுவன். என்ர காணியில இருந்துகொண்டு அவையின்ர நடப்பைப் பார். பாரனங்க. நல்லா நடக்குது உபசாரம். இங்க ஒரு மனுசன் இருக்கிறான் எண்ட சிந்தனை எப்பனும் இருக்கா அதுகளுக்கு? ஆ. கட்டிலுக்காலோடு நெருப்பெட்டி கிடக்க. நான் இங்க கிடந்து தடவுறன். அதனைத் தடவி எடுக்கின்றார். எடுக்கும்போதே சந்தேகம். நடுக்கங்கண்ட இரத்தத்தின் ஈரமே வற்றிய விரல்கள் பதட்டத்துடன் நெருப்புப்பெட்டியைத் தள்ளிப்பார்க்கின்றன.
பெட்டி காலி.
முகத்திலே ஏமாற்றம் புகையாய்க் கவிகின்றது. ஆத்திரம் அனலாகப் பற்றுகிறது.
மகள் கமலம் யாரையோ வலிந்து உபசரித்துக் கொண்டிருப்பது கண்ணில் பதிகிறது.
'என்ர நாச்சியார் இருந்தா. என்னை இப்படிப் பரிதவிக்க விடுவாளே. இதுக்கிடையில பத்துத்தரம் வந்து என்ன?. ஏது?. எண்டு விசாரித்துக் கவனித்திருப்பாள். எனக்கு என்ன தேவையெண்டு குறிப்பாலேயே உணர்ந்து செய்வாள். அவள் என்ன இப்பத்த பெண்டுகளைப் போலவே. தவிச்சவாய்க்குத் தண்ணி கொடுக்கத் தெரியாம. ஏன் சாப்பிடுற இடத்தில தண்ணி வைக்க
6/ செம்பியன் செல்வன்

மறக்கிறவைபோலவே. என்ர ராசாத்தி இருக்கேக்க நான் எப்பவும் பசியோட இருந்திருக்கிறனா? இல்ல. அவள்தான் இருக்க விட்டிருப்பாளா? நான் ஏதும் கோபத்தில சாப்பிடாம இருந்திட்டா. இல்லாட்டி சாப்பாடு வேணாம் எண்டிட்டா அவளும் சாப்பிடாமப் பட்டினி கிடந்து என்னைச் சாப்பிட வைச்சிருப்பாள். என்ர திமிரில எவ்வளவு கஸ்டத்தை அவளுக்குக் குடுத்திருப்பன். குழம்புக்கு உப்புக் கூடிற்றா அதுக்கு அடி. சொதிக்கு புளி கூடிற்றா அதுக்கு ஏச்சு. எண்டு எத்தனை சித்திரவதை செய்திருப்பன். ஆனாலும் ராசாத்தியின்ரை சமையல் சமையல்தான். அதை திண்டவாய்க்கு இன்னொரு சமையலைத் தின்ன முடியுமே. என்னமோ என்ர கெட்டகாலம் இதுகளிட்ட சோத்துக்குக் கையேந்தி நிக்கவேண்டியிருக்கு
"அவ மஞ்சள் குங்குமத்தோட போயிட்டா. நான்தான் இங்க நரகத்தில கிடந்து அழுந்திறன். அவளில்லாத உலகம் எனக்கு நரகம்தான். அந்தப் புண்ணியவதி போகேக்கையும் என்ர கவலையோடதான் போனவ. சாகிற வேளையிலும் மகளைக் கூப்பிட்டு என்ன சொன்னவ.
'பிள்ளை நான் போனாப்புறவு நீதான் அப்புவைப் பார்த்துக் கொள்ளவேணும். உனக்குத்தான் அவற்ற குணம் தெரியுமே. கோபம்தான் கடுபுடெண்டு வருமே தவிர வேறொண்டும் தெரியாது. அவரையும் உன்ர புள்ளயளில ஒண்டாப் பாத்துக்கொள். நேரகாலத்துக்குச் சாப்பாட்ட கொடுத்திடு. இல்லாட்டி பசியால துடிச்சிடுவார். நானும் அவற்றை நாக்கை வேறு நல்லா வளர்த்துப்போட்டன். நீ அவரை நல்லாக் கவனிச்சுக்கொள்.
என்ர ராசாத்தி என்னைப் புருசனைப் போலயே பார்த்தவள். தாயைப்போல. புள்ளையப்போல எல்லோ பார்த்தவள். அவளின்ர குணத்துக்கும், அழகுக்கும் இப்பத்தப் பொம்பிளையஞம் இருக்கினமே. என்ர மகளும் பேத்தியும் அப்படி இருப்பினம் எண்டுதான் நினைச்சன். அவையஞம் இப்ப காலத்துக்கேற்ற கோலமா நடக்கினம். எண்டாலும் சாரதா சரியா அவள் மாதிரித்தான். அவளைப் பாக்கேக்கை எனக்கென்னமோ மனசுக்கு ஆறுதலாகத்தான் இருக்கு.
-ஒலிபெருக்கி திடீரென பலத்த குரலில் பாடவும் அவர் சிந்தனை தடைப்பட்டது. அவரால் பொறுக்க முடியவில்லை.
-மேசை "லாச்சியைத் திறந்து கொஞ்சம் காசை எடுத்து முடிந்து கொண்டு, அதனைத் தள்ளிப்பூட்டுகின்றார். அவர்கள் கவனிக்காவண்ணம் ஏதோ வேலிப்பக்கம் காரியமாகப் போகிறவர்போல போய்த் திடீரென்று வாசற் கதவைத் திறந்துகொண்டு தெருவில் இறங்கிவிடுகிறார். யாராவது பார்க்கிறார் களா..? பார்த்துவிட்டார்களா?' என்று சந்தேகத்துடன் திரும்பிப்பார்க்கிறார். நல்லவேளை, ஒருவரும் கவனிக்கவில்லை. வேகமாக நடக்கத்தொடங்குகிறார்.
பூவும் ஆவியும் / 7

Page 12
நீண்ட நாட்களின்பின் நடப்பது சிரமமாக இருக்கின்றது. வெயிலின் வெப்பம் இன்னும் தணியவில்லை. வேகமாக நடக்கத் தொடங்குகிறார்.
சந்திக்கடை வேலாயுதம் தேத்தண்ணிக்கடையில் கூட்டம் இல்லை. இரண்டொருவர் அங்கிருந்த வாங்குகளில் இருந்துகொண்டு தேநீர் அருந்து கிறார்கள். 'பொயிலர் முன்னால் தேநீர் ஆற்றிக்கொண்டிருப்பவன் அவரைக் கண்டதும் பணிவுடன், ‘என்ன அப்பு வீட்டில விசேசம்?' என்று விசாரிக்கிறான்.
பூட்டிக்குக் காதுகுத்தல் அதுதான். யார். உங்கட பேத்தியின்ர மகளுக்கோ? 'ஓம்.ஓம்அங்க காதுகுத்து நடக்கப்போகுது. நீங்க இங்க வந்து நிக்கிறியனே. என்ன சங்கதி.?
பேத்தி எண்டா என்ன, பூட்டி எண்டா என்ன?’ என்று அலுத்துக் கொள்கின்றார். 'என்ன அப்பு சொல்லுறியள்' என்று வேலாயுதம் அவர் வாயைக் கிண்ட "சே இவனிடம்போய் வீட்டுச் சங்கதியெல்லாம் சொல்லுறதே? நாளைக்கு இவன் ஊரெல்லாம் சொல்லித்திரியவே.என்ற எண்ணம் ஏற்பட, 'கம்மா ஒரு பேச்சுக்குச் சொல்ல நீ அதைப் பெரிசாகக்கேக்க வந்து விட்டாய். என்று சிரித்துச் சமாளிக்கிறார்.
அதுசரி அப்பு வெயிலுக்க எங்க கிளம்பினியள்.? எட இவன் விடமாட்டான் போல- என்ற எண்ணம் ஏற்பட, 'ஒன்றுமில்ல. சும்மா காலாற நடந்துவந்தனான். அப்ப வரட்டே எனக்கொரு வேலை இருக்கு என்று நடக்கிறார்.
நல்லவேளை இவனிட்ட ஏதாகிலும் வாங்கித்தின்ன. அவள் என்ர வாயைக் கிண்டி ஏதும் எடுத்திடுவான்.
வழியில் பியசேனாவின் பேக்கரி அலங்காரமாகக் காட்சியளிக்கிறது. இப்ப சிங்களாக்கள் கனபேர் யாழ்ப்பாணத்தில கடைபோட வந்திட்டினம். முந்திக்கொஞ்சாக்கள் தான் இருந்தவை. இந்தக் கடையில நாலு விசுக்கோத்து வாங்கினா ஒருத்தனுக்கும் ஒண்டும் தெரியாது. பேக்கரிக்குள் நுழைகின்றார். உள்ளே, கண்ணாடிப்பெட்டிக்குள் எத்தனையோ விதம்விதமான கேக்குகள், அல்வாத்துண்டுகள். அழகான இனிப்புச்சோடிப்புடன் விளங்குகின்றன. அவர் நாவில் நீரூறுகின்றது.
"எவ்வளவு காலமாச்சு இதெல்லாம் திண்டு? அவளவை ஒரு இனிப்புப் பலகாரமாவது கண்ணில காட்டு றாளவையளா?" என்று மகள் மீதும் பேத்திமீதும் மனத்திற்குள் வன்மம் வளர்த்துக்கொண்டார்.
அவளவை தராட்டி என்னால வாங்க முடியாதே?.
8/செம்பியன் செல்வன்
*

'ஒரு றாத்தல் கேக் தா" என்று கம்பீரமாகக் கேட்கிறார். அவன் அழகான வளவளப்பான காகிதத்தில் கட்டிக்கொடுக்கிறான்.
அவளவைக்கு இதையொண்டும் கண்ணில காட்டக்கூடாது. இரகசியமாகக் கொண்டுபோய் வீட்டுக்க ஒளிச்சு வைக்கவேணும். அதுகளுக்குத் தெரிஞ்சுதோ அவ்வளவுதான்' என்று நடைபோடுகிறார். அருகில் ஒரு கார் உரசியபடி வந்துநிற்கிறது. பதறிஅடித்துக்கொண்டு வேலியோரமாக பாய்ந்து அங்கிருந்து பார்த்தபோது
அட புரக்கிராசி விசுவலிங்கம். என்ன மயிலர். எங்க இங்கால பக்கம்.? விசுவலிங்கம் கேட்கிறார். இருவருக்கும் இளமையிலேயே நல்ல பழக்கம் உண்டு
வேறெங்க வீட்டுக்குத்தான்.?’ என்று கசப்புடன் கூறுகிறார். "என்ன ஒரு மாதிரிச் சொல்லுநீர். வீட்டில ஏதும் சச்சரவோ? "சச்சரவு என்ன சச்சரவு. அதுகள் என்னைக் கவனிச்சாத்தானே? விசுவலிங்கம் தனக்குள் சிரித்துக்கொள்கிறார். அவர் இதுபோல் எத்தனை விசித்திர உள்ளங்களைக் கண்டவர்.
‘என்ன உண்மையாகவா சொல்லுறீர்? நான் நம்பமாட்டன். சாரதாவையும், கமலத்தையும் எனக்கு நல்லாகத் தெரியுமே. காரில் ஏறும். நானும் அந்த வழியாலதான் போறன். உம்மை வீட்டில இறக்கி விடுறன்.' அவர் ஆவலுடன் ஏறி அமர்கிறார். கார் புறப்படுகிறது.
-அவர் தனது மனஅரிப்பை எல்லாம் கொட்டுகின்றார். அப்படியா?" என்று வியப்புடன் விசுவலிங்கம் கேட்கவும், அவர் தன் எண்ணத்தை வெளியிடுகிறார். அவர் திடுக்கிடுவதை முகம் காட்டுகிறது.
‘என்ன நீர் சொல்லுறது உண்மையா? என்ன விசர்க்கதை பேசுநீர்?" "இதொண்டும் விசர்க்கதை இல்லை. உண்மைதான். நான் ஏன் அவளவைக்குக் காணியைக் கொடுப்பான்?. கோயில்குளத்துக்கு எழுதி வைச்சாலும் போறவழிக்காவது புண்ணியமுண்டு. அவர் உறுதியாப் பேசுறர். மயிலர் உமக்கேதோ ஆத்திரம்போலக் கிடக்கு. இப்ப இதைப்பற்றி எல்லாம் கதைக்கவேண்டாம். ஆறுதலாக யோசிப்பம். அவசியமெண்டா நான் உமக்கு உதவி செய்வன். இதோ வீடுகூட வந்திட்டுது. உம்மை இறக்கிவிடுறன. பேசாம வீட்டபோம்!"
கார் நிற்கிறது. கிழவர் இறங்குகின்றார். புரக்கிராசியாருக்கு விடைகொடுத்தனுப்பிவிட்டு, மெல்ல வாசற்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தபோது
அவிழ்த்தவிடப்பட்ட ஆட்டுக்குட்டி மல்லிகைப்பந்தலின் கீழ் நின்று மல்லிகைக்கொடியை இழுத்திழுத்துக் கடித்து மேய்ந்துகொண்டிருக்கிறது.
பூவும் கனியும் /9

Page 13
வழக்கமாக அந்தக்காட்சியைக் கண்டால், கிழவருக்கு இரத்தம் தலைக்கேறி மனம் அசுரகுணம் கொள்ளும். வீட்டிலுள்ளவர்கள் அனைவரையும் திட்டித்தீர்த்து விடுவார். ஆட்டுக்குட்டிக்கு 'சனியன் நாசமாகப்போக!'- என்று கல்லால் விட்டெறிவார். ஆனால் இன்றோ?- கடைவாயின் இரத்தத்தை நாவால் சுவைபார்க்கும் ஆட்கொல்லியின் வக்கிரகுணம் மனதை மேவி நிறைக்க, மல்லிகைக்கொடியின் அழிவின் சிதைவில் மனதின்கொதிப்பு தண்மை கொள்வது போன்று சுகமாக இருக்கின்றது.
'நீ நல்லாத்தின். இவங்களுக்கேன் மல்லிகையும் பந்தலும்.மயிரும் மட்டையும் இதுகளையெல்லாம் வைத்து பராமரித்து என்ன சுகத்தைக்
கண்டன். ஏதோ அவளவைதான் உதுகளை அனுபவிக்கிறாளவை. அவளவைக்கு நல்லா வேணும். நீ நல்லாத்தின். உனக்கும் பசியாத்தான் இருக்கும். என்னையே கவனிக் காத வளவை உன்னை எங்க
கவனிக்கபோறாளவை? வழக்கமா உனக்கு கிடைக்கிற கஞ்சித்தண்ணியைக் கூட இண்டைக்கு உனக்கு வைச்சிருக்கமாட்டாளவை. எனக்குத் தெரியும். வாயில்லாச்சீவன். நீ என்ன செய்வாய்?. நல்லாத்தின்'- என்று மனதின் கொதிப்பை வெளியிட்டவாறு தனது குடிசையை நோக்கி செல்கின்றார். தனது பார்சலை யாராவது பார்த்திடுவார்களோ என்ற அச்சத்தில் மேலிலிருந்த சால்வையால் மரறத்துக்கொள்கிறார்.
இங்க வந்திட்டாரே அப்பு. எங்கண அப்பு அதுக்குள்ள போனனீ!. அதுவும் இந்த வேகா வெயிலுக்க. வாவா. உனக்காகத்தான் எல்லாரும் காத்துக்கொண்டு இருக்கினம். அவர்கூட எங்க உன்னைக் காணேல்ல எண்டு தேடப்போட்டார். என்று மூத்தபேத்தி ஓடிவருகின்றாள்.
-அவர் ஒன்றும் புரியாமல் விழிக்கின்றார். ‘என்னணை அப்பு முழிக்கிறா. பசிமயக்கமே. இண்டைக்கு இதால கொஞ்சம் நேரம் போச்சுது. எங்க நீ பசியால துடிக்கப்போறியேண்டு அம்மா பதைச்சுப்பதைச்சு வேலைபார்த்தும் நேரம்போயிட்டுது. அதோட நீ ஏதாவது எண்ணைப்பலகாரத்தை எடுத்துத்திண்டிடுவியோண்டு எவ்வளவு பயப்பட்டா தெரியுமே?. -
'ஏன் நான் திண்டா என்னவாம்?" இப்ப உனக்கிருக்கிற நிலையில உப்புப்பண்டம், எண்ணைப்பண்டம் எல்லாம் கூடாதெண்டல்லே டாக்குத்தர் சொன்னவர். அதாலதான் என்னைக்கூட உங்களிட்ட போகக்கூடாது எண்டு அம்மா சொன்னவ. நான் சிலநேரம் உங்களுக்கும் பலகாரம் கொடுத்திடுவன் எண்டு.
'-அவருக்கு அப்போதுதான் தன் உடல்நிலைமை தெரிகிறது. ஆத்திரம் அகல்வதுபோல், முகத்தின் கடுகடுப்புக் குறைந்தாலும்
10 செம்பியன் செல்வன்
ఎ*

அதுசரி என்னை எதுக்குத் தேடினியள்?. என்கிறார். ‘என்ன அப்பு அப்படிக்கேக்கிறாய்?. உன்ர பூட்டிக்கு நீதான காதுகுத்தோணும். வேறுயார் அதைச் செய்யிறது. அதோட அவர் அப்புவாலதான எங்கட கலியாணம் நடந்தது. அவர்தான வீட்டுக்கு பெரிய மனுஷர். அவர்தான் குத்தவேணும் எண்டு பிடிவாதமா நிக்கிறார். உங்களைக் காணேல்ல எண்டு உங்களைத்தேடிப் போனவர். அவரையும் காணேல்ல
‘என்ன பிள்ளை. இவ்வளவுபேர் இருக்கேக்க.?- என்று கேட்கும்போதே, அவர் மனம் பெருமிதம் கொள்கிறது.
"எவ்வளவுபேர் இருந்தென்ன அப்பு. நீதான எங்களுக்கு முக்கியம். அந்தா. அவரும் உன்னைத்தேடிப்போய் வந்திட்டார். வாவன் கெதியா!. அங்க ஐயர் எல்லாரும் உனக்காகக் காத்திருக்கினம்.
அவர் மனம் பாகாய்க் கனிந்து உருகுகின்றது. அவரது மடியில் பூட்டி அமர்ந்திருக்கின்றாள். எல்லாவித சடங்குகளும் (τρις ΙΙΙ
நடுநடுங்கும் கைகளினால் பூட்டியின் காதில, குழந்தை அழஅழ, காதுகுத்தி, தங்கச்சோடி வளையங்களை இடுகின்றார். குழந்தையின் காதுகள் குங்குமமாகச் சிவந்து வழிகின்றன. அவரால் தாங்கமுடியவில்லை. நெஞ்சம் உருகுகின்றது.
‘சாரதாவைவிட இவள்தான் சரியாப் பூட்டியை உரித்து வைத்திருக்கிறாள். காதுவளையத்தோட. காதுகுத்தினப்புறகு அசல் பாக்கியம் மாதிரியே இருக்கிறாள். என்று யாரோ கூற, 'ஓம், ஓம். சரியாப் பாக்கியத்தை உரிச்சுக்கொண்டு பூட்டி வந்திருக்கிறாள்' என்று கூறவும், அவர்மெய் சிலிர்க்கிறது. குழந்தையின் அழுகையை நிறுத்த தான் மறைவாகக் கொண்டுவந்திருந்த "கேக் பார்சலைப்பிரித்து ஒரு துண்டை நசித்து, குழந்தையின் நாக்கில் வைக்கிறார். குழந்தையின் அழுகை சிறிது தடைப்படுகிறது. எச்சிலுடன் ஊறிய கேக் கடைவாய்வழியாக வழிவதை, ஆவலுடன் பார்த்து நிற்கும்போது
‘சாரதா. அப்புவை சாப்பிடக் கூட்டிக்கொண்டு வா. பந்தியை மற்றாக்கள் பாக்கட்டும். அவருக்குப் பந்திச்சாப்பாடு. இந்த விருந்துச் சாப்பாடு ஒத்துக்கொள்ளாது" - என்று அவரது அருமைமகள் கமலத்தின் குரல் அவர் செவிகளில் விழுகிறது.
ஆனால், அவர் பசிதான் எப்போதோ அடங்கிவிட்டதே!.
(ஈழநாடு - 10வது ஆண்டு விழாமலர் - 1968 முதற்பரிசு) A
பூவும் கணியும் / 11

Page 14
2އ
よス<ア/Vシづでつの乙三ーラ
12/செம்பியன் செல்வன்
கோடை துடைத்தலம்பிய வானத்தின் நட்சத்திரப் பொட்டுக்களின் ஒளித்தடத்தில், அவர்கள் கானகத்தைக் கடந்துகொண்டிருந்தார்கள்.
கானகத்திற்குள் புகுந்து மூன்று இரவுகளும், இரண்டு பகல்களும் கழிந்துவிட்டன. நித்திரை சுமந்த விழி மடல்கள் கணக்க, உடல் சோர்ந்து மடங்கி விழ, பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது. *
அவர்கள், கானகத்தே சிதறிக்
கிடக்கும் குளங்கள், புற்றரைகளைச் சார்ந்து மிக்க அவதானத்துடன் எருமைகளை ஒட்டிக் கொண்டிருந் தாாகள.
வழித்தடத்திலும், சுற்றுப் புறங்களிலும் விழியையும், செவியையும் கூர்மையாகப் பதித்து. ஏதாவது மனித காலடி ஓசைகள், மிருகங்களின் புதர் அசைவுகள் வெளிப்படுமோ என்று பயந்து. மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டார்கள்.
மச்சான் ஆரேனும் வந்து புடிச்சா, தொலைஞ்சம்
ఎ*
 

‘என்ன, உனக்கு இன்னும் பயம் போகேல்லயா?" என்றான் இஸ்மாயில். "எண்டாலும் ஆரும் கள்ள எருமைமாடு கடத்திப் போறம் எண்டு டிஆர்-ஒவிட்ட சொல்லிட்டா. ஜீப்பில் வந்து புடிச்சிப்போடுவினம்- பயத்துடன் கூறினான், இப்போதுதான் முதன்முதலாக இவர்களோடு புதிதாக வந்திருக்கும் சுப்பிரமணியம்.
'கள்ள எருமையோ. ஆர் சொன்னது? முதலாளி காசு கொடுத்து வாங்கி, டி.ஆர்.ஒ.விட்ட பெர்மிட் எடுத்தல்லா கொண்டு வாறம்' என்று குறுக்கிட்டான் ஜேக்கப்.
டி.ஆர்.ஓ. பன்ரெண்டு எருமைக்குத்தான் பெர்மிட் கொடுத்தவர்.மிச்ச நாப்பது எருமைக்கு என்ன பெர்மிட் இருக்கு? அப்படிப் பெர்மிட் இருந்தா லொறியிலேயே கொழும்புக்கு அனுப்பியிருக்கலாம்தானே? அதை விட்டிட்டு முதலாளி காட்டுக்குள்ளால. குடிமனைகளை விட்டு. மிருக சாதிகளுக்குப் பயந்து. எருமைகளுக்கு குளம் வாய்க்கால் காட்டி. அதுகளை வழி நடையாகவே கொழும்புக்குக் கொண்டுவரச் செய்யிறார் எண்டால் பின்ன என்ன?
அவன் ஆக்ரோஷத்துடன் கேட்டான். மற்ற இருவரும் வியப்புடன் பார்த்தார்கள்.
பின்ன என்ன. வீடு வாசலை. புள்ள குட்டியளை விட்டிட்டு இந்த நடுக்காட்டுக்க மனுஷ மாஞ்சாதியை விட்டு திருடர் கூட்டம் மாதிரி எருமைகளைக் கடத்திக்கொண்டு. பிடிபட்டா முதுகெலும்பு மிஞ்சாது. ஆப்பிடாட்டித்தான் முதலாளி தாற நாலு காசைக் கண்ணால் பார்க்க முடியும்.
'நீ நல்லாத்தான் பயப்படுறாய்"
பயப்படாம என்ன செய்யிறது?
-பேச்சில் வழிநடை மறந்து முன்னேறினார்கள்.
'உனக்குத் தெரியுமே, வரப்போகிற பெரிய வெள்ளி. உயிர்த்த ஞாயிறு கொண்டாட்டங்களுக்கு இந்தப் பணத்தைத்தான் நம்பியிருக்கிறன்' என்றான் ஜேக்கப்.
ஆரும் வந்து புடிச்சிட்டா ஜெயிலிலே கிடந்து கொண்டாடலாம்
இதுகளுக்கெல்லாம் பயந்த நீ இந்த வேலைக்கு வெளிக்கிட்டிருக்கப்
’படாது. இது எல்லாத்துக்காண்டியும் தான் முதலாளி காசு தாறார்.
'உண்மைதான் ஜேக்கப். தெரியாமத்தான் வந்திட்டன். ம். வராமலிருந்துதான் என்ன செய்யிறது? வீட்டில புள்ளையஞம் மனுசியும் ஆமான சாப்பாடு சாப்பிட்டு எத்தனையோ நாளாச்சு. அதோட மனுசியும் புள்ளத்தாச்சி. இந்த நிலையில கையில காசொண்டும் இல்லாம என்ன செய்ய முடியும்?
கால்நடைகள்/ 13

Page 15
இதுக்கொண்டும் குறைச்சலில்லை முகத்தைச் சுளித்தான் ஜேக்கப். தம்பி, நீ கலியாணம் கட்டாதவன். உனக்கொண்டும் இதுகள் விளங்காது. என்ர முகத்தை மனுசியும், மனுசியின்ர முகத்தை நானும் பாத்துப் பாத்து. இப்ப பெறுமாதம் முதலாளி தாறதைக் கொண்டுதான் எல்லாத்தையும் ஒப்பேத்தனும்
சுப்பிரமணியம் கூறிக்கொண்டிருக்கும்போது எருமை மாட்டின் தீனக்குரல் காட்டையே கிடுகிடுக்க வைப்பதுபோல் எழுந்தது.
இஸ்மாயில் டோச்லைட்டை அத்திசை நோக்கி அடித்தான். புதருக்குள் புகுந்த பிணையொன்று வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
காளை புதரைவிட்டு வெளியேறுவதற்காக வேகமாக இழுக்க, கழுத்தில் கட்டியிருந்த பிணைச்சல்கோல் புதரில் எக்கச்சக்கமாகச் சிக்கித்தடுமாற பெண் எருமை புதரை விட்டு வெளியேற முடியாமல் தவித்தது. அதன் பின்புறம் இவர்கள் கண்ணில் தெரிந்தது. வேகமாக ஓடினார்கள். முதுகில் சுமந்து வந்த சமையற் பாத்திரங்களும், ஆயுதங்களும் பலமாக மோதிக்கொண்டன.
அட பாவிகள் சினை எருமையைக்கூடவா கொழும்புக்கு அனுப்புறாங்கள்? இரக்கமற்ற சாதிகள்.
மூவரின் இரத்தமும் துடித்தது. இஸ்மாயில் வேதனையுடன் சிரித்தான்.
மச்சான். இதில் முதலாளிக்கு எவ்வளவு லாபம் எண்டு தெரியுமே? கொள் முதல் செய்யேக்க ஒரு எருமை எண்டுதான் கணக்கெடுப்பார். அது கொழும்பு சேரும்போது எண்ணிக்கை ரெண்டு எண்டு ஆயிடும் இந்த எருமையால மட்டும் முதலாளி ஆயிரம் ஆயிரத்தைஞ்ஞாறு அடிச்சிருவார். பாவம் புண்ணியம் இரக்கம் பார்த்தா முடியுமே?”
அவனுக்குப் புள்ள குட்டிகள் கிடையாதா? சுப்பிரமணியம் பரபரத்தான். அதுகளுக்காகத்தான் அவன் இதையே செய்யிறான்' சுப்பிரமணியம் அதிர்ந்து போனான் அவர்கள் பற்றையை வெட்டி, புதரை நீக்கி பிணைச்சலை அவிழ்த்து சினை எருமையைப் பிரித்து நீக்கியபொழுது சுப்பிரமணியத்தின் மனம் தன் மனைவியை நினைத்துத் துடித்தது!
எருமையை புற்கள் நிறைந்த பக்கமாகக் கொண்டு வந்தார்கள். டோர்ச்சையும், வெட்டுக்கத்தியையும் எடுத்துக்கொண்டு தூரத்தே
14 செம்பியன் செல்வன்

தெரிந்த ஆலமரத்தை நோக்கி சுப்பிரமணியம் ஓடினான். பசுந்தழைகளாக வெட்டித்தள்ளி அள்ளிக்கொண்டு வந்தான்.
அதனை கண்டுவிட்ட எருமைக்கூட்டங்கள் அந்த மரத்தடியை நோக்கி ஓடின. "ஹேய்ஹேய்' எனச் சப்தமிட்டு விரட்டினான்.
மற்ற இருவருக்கும் அவனது செயல்கள் வியப்பூட்டின. எருமை தீனக்குரல் எழுப்பத் தொடங்கியது. மச்சான், இங்க கொஞ்சம் தங்கிப் போவம். பாவம், எருமையை இந்த நிலையில நடத்தேலா கன்று போட்டாப்போலத்தான் ஏதும் செய்யலாம். என்ன சொல்லுறியள்.
மச்சான், இது ஆபத்தான இடம். மிருகங்கள் தண்ணி குடிக்க வாற இடம்' என்றான் இஸ்மாயில்.
'ஓம் மச்சான், நீ சொல்லிறது சரிதான். அங்க பாத்தியா மரத்தில வேட்டைக்காரர் கட்டியிருக்கிற சிறாம்பியை
டோர்ச் ஒளியில் இலுப்பை மரமொன்றில் கட்டப்பட்டிருந்த பரண் ஒன்றைக் காட்டினான் ஜேக்கப்.
சுப்பிரமணியத்திற்கு அதுவே சாதகமாகப் போனது. மச்சான், நாங்களும் நல்லாய்க் களைச்சுப்போனம். இனியும் காட்டுக்க நடக்கேலா. பயமில்லாம கொஞ்சம் படுத்தெழும்ப இந்தச் சிறாம்பி உதவும். இங்கேயே தங்குவம்.
எருமைக்கூட்டம் குளத்தை நாடிச்சென்றுகொண்டிருந்தது. இஸ்மாயில் தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு 'சிறாம்பிக்கு வறினான்.
எருமையின் தீனக்குரல் அதிகரிக்கத் தொடங்கி, அவர்கள் இரத்தத்தையே உறையவைப்பது போல் ஒலிக்கத் தொடங்கியது.
‘என்ன மச்சான் செய்யிறது? முதலில நாலு சுள்ளியைப் போட்டு கொஞ்சம் பச்சரிசிக் கஞ்சி காய்ச்சு. நாங்களும் குடிக்கலாம், எருமைக்கும் வைக்கலாம். கண்டு போட்டோடன அதுக்கு கட்டாயம் வைக்கவேணும்
'உன்னோட பெரிய தொல்லையாப் போச்சு என்றவாறு இருவரும் நடந்தனர்.
அரிக்கன் விளக்கு காட்டு இருளை விரட்ட அஞ்சிக்கொண்டிருந்தது. எருமையைச் சூழ்ந்து மூவரும் நின்றிருந்தனர்.
தூரத்தில் அடுப்பில் பச்சையரிசி வெந்துகொண்டிருந்த மணம் காற்றில் எழுந்தது.
எருமையின் பன்னீர்க்குடம் பெரிது பெரிதாக உப்பி வெடித்து நீராகி விழுந்தது.
கால்நடைகள்/ 15

Page 16
பாலிதீன் பையில் சுற்றிய பிண்டமாக கன்று விழுந்து, எழுந்து நிற்கத் துடித்தது. நச்சுக்கொடி தானே விழுந்தது.
எருமை கன்றை நக்கிச் சுத்தம் செய்ய முனைந்தது. இடையிடையே தாய்மையின் பெருமையோடு ம்..ம்மா. என்று குரல் எழுப்பியது.
இஸ்மாயில், அடுப்பில் சூடேறிக்கிடந்த கஞ்சியை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஊற்றி ஆறவிட்டான்.
சாம்பல் பூத்த கன்றுக்குட்டி நிற்கத் தடுமாறிக்கொண்டு தாயின் மடியை நோக்கி நகர்ந்தது.
மச்சான், அதைக் குடிக்கவிடாத "கடம்புப்பால் கன்றுக் கூடாது' என்று ஒரு பாத்திரத்தை எடுத்தான் சுப்பிரமணியம்.
கடம்புப்பாலை சுப்பிரமணியம் கறக்க எருமை முதலில் இடமளிக்க வில்லை. ஆலங்குழையால் போக்குக்காட்டி கறந்து முடித்தபோது அவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
எருமைக்குக் கஞ்சி கொடுத்தான் சுப்பிரமணியம் கஞ்சியை ஆவலுடன் குடித்துவிட்டு, ஆலங்குழையை அசைபோட்டவாறு அது புற்றரையில் படுத்தது. கடம்புப்பால் குடித்த தெம்பு இவர்களுக்குப் புத்துயிரூட்டியது.
கன்று அதன் கால்களுக்கிடையில் முடங்கியது. அவர்கள் அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு சிறாம்பியை நோக்கி நடந்தனர்.
நடுநிசி. எருமைகள் நின்ற நிலையில் இடம் மாறுவதால் ஏற்படும் 'கடக்.முடக், நீர்த்தாரையின் ‘கர்.ர். ஒசைப் பின்னணி
அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். உர்.ர். ர்.ர்' என்ற உறுமலுடன், எருமைக் கூட்டத்தின் பதட்டமும் அவர்களைத் துள்ளியெழச் செய்தது.
எருமைக் கூட்டத்தினிடையே இரு கண்கள் இருட்டினில் பளபளத்தன. சட்டென எழுந்த இஸ்மாயில் மச்சான், என்ன வந்திருக்கு? ஜேக்கப்பிடம் கிசுகிசுத்தான்.
பொறு பாப்பம். ரோர்ச் எங்க? எடு" எடுத்தான். அடித்தான். ரோர்ச் ஒளியில் தெரிந்ததுநரி. அது கன்றையும், எருமையையும் வலம் வந்துகொண்டிருந்தது. எருமை கன்றினருகே நெருங்கவிடாமல் முட்டித் துரத்த முயன்றது. நரி பாய்ந்து கவ்வ முனையும் போதெல்லாம் எருமையின் முரட்டுக்கொம்புகள் அதன் பல்லை உடைத்தன. இரத்தம் வாயில் வடிய வெறிகொண்ட நரியின் பாய்ச்சல்.
16/செம்பியன் செல்வன்

கன்றுக்குட்டியின் பச்சை இரத்த வாடை நரியை மூர்க்கம் கொள்ள வைத்தது.
'மச்சான், வெடி வைப்பமே?” இப்ப வெடி வைச்சால் அவ்வளவுதான்.எல்லா எருமையளும் சிதறி ஓடிவிடும். புறகு நாங்க தொலைஞ்சம்'
அப்ப என்ன தான் செய்யிறது' துடித்தபடி கேட்டான் சுப்பிரமணியம். அங்க பாரன், எப்படியும் அது கன்றை கடியாம விடாது நீ கன்றைப் பார்க்கிறா. அதொண்டுக்காக எல்லா எருமையளையும் இழக்கச் சொல்றியா? V− சுப்பிரமணியம் கொஞ்சமும் தாமதிக்கவில்லை. வெட்டுக்கத்தியை எடுத்துக்கொண்டு வேகமாக சிறாம்பியை விட்டுக் கீழே இறங்கினான்.
‘என்ன செய்யப்போறா? எங்க போறா? மேல ஏறு'- கத்தினார்கள் இருவரும்.
நான் எப்படியும் கன்றைக் கொண்டு வாறன். நீங்க மட்டும் டோர்ச்சை நரி நிக்கிற பக்கமாக அடியுங்க' என்வாறு நிலத்தில் குதிதிதான்.
மனித வாடை நரியின் நாசியைத் தாக்கியிருக்க வேண்டும். அதன் கவனம் அவன் பக்கம் திரும்பியது. அவன் மீது வேகமாக பாய்ந்தது. அவன் சரேலென மரப்பக்கமாக ஒதுங்கினான்.நரி மரத்துடன் பலமாக மோதி ஊளையிட்டவாறு நகர்ந்தது.
அவன் தன் வெட்டுக்கத்தியை வீசினான். நரியின் காதில் கத்தி உரசிச் சென்றது. நரி அவனை வலம் வந்து பாய, அவன் குனிந்தான். நரி மண்தரையில் உருண்டது.
அதன் ஆவேசம் அதனை நிலைகுலைய வைத்தது. அந்தக் கணம்தான் அவனுக்குப் பயன்பட்டது. நரியின் உச்சந்தலையில் வெட்டுக்கத்தி பலமாக விழுந்தது. அது பலமாக ஊளையிட்டுக் கொண்டு காட்டில் ஓடி மறைந்தது.
சிறாம்பியிலிருந்து இறங்கி வந்த ஜேக்கப்பும், இஸ்மாயிலும் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டனர். அவர்கள் பார்வையில் அவன் புதிய மனிதனாக- மகா மனிதனாகத் தெரிந்தான்.
விடிந்துகொண்டிருந்த நேரம். அதற்குள் காட்டில் அவர்களுக்குக் குறிப்பிட்டிருந்த எல்லையை அடைந்துவிட்டிருந்தனர்.
இனி மேற்கொண்ட செல்லத் தேவையில்லை. எருமைகள் கூட்டத்தை ஒழுங்கில் கட்டியிருந்தனர். எந்த வினாடியும் முதலாளியின் லொறியோ, டிராக்டரோ அந்த இடத்தை வந்தடையும்.
காத்திருக்க வேண்டும்.
கால்நடைகள் / 17

Page 17
அதோ லொறி. மணி பாதைளில் புழுதியைக் கிளப்பிவிட்டவாறு வேகமாக வந்துகொண்டிருந்தது.
வேகம் வேகமாக எருமைகள் ஏற்றப்பட்டன. அவனும் எருமைக்கன்றுடன். லொறிக் காக் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஜேக்கப் மற்ற லொறிக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. லொறி வேகமாக ஓடியது. அதன் ஓட்டத்திலேயே அதன் பதட்டம் தெரிந்தது. ஏதோ நீண்ட தொலைவு ஓடுவதுபோலத் தெரிய.
கணங்கள் யுகங்களாக நீள. பலத்த பிரேக் சப்தத்துடன் லொறி நின்றது. முதலாளியின் குரல் வெளியே கேட்க, கான்வாஸ் திரையை நீக்கியவாறு கன்றுக்குட்டியுடன் வெளியே குதித்த போது
அது இறைச்சியடிக்கும் மடுவம் எனத் தெரிந்தது.
- குங்குமம் 1981 நவம்பர் 29
18/செம்பியன் செல்வன்

至
ease42
கிராமத்தின் செம்மண் புழுதியை வாரியிறைத்துக்கொண்டு சென்ற ஜீப்பை, தெருவில் வெற்றுடம் புடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பாதியிலேயே விளையாட்டை நிறுத்திவிட்டு வியப் புட ைபார் தீது நிற் க சில துணிச்சற் காரச் சிறுவர்கள் ஹோய்ய்ஹஅய்ட எனச்சப்தமிட்டவாறு அதன் பினினே சிறிது துரம் ஓடிச்சென்றவர்கள் ஜீப்பின் வேகம் குறையவும், அப்போதுதான் அதனுள்ளே அமர்ந்திருந்த 'காக்கிச்சட்டைக்காரர்' அவிர்கள் கண்ணில் படவும் பயத்தால் வெலவெலத்து தப்பித்து சரேலென்று தெருவோர மரங்களின் பின் ஒடிமறைந்து நின்றவாறு நெஞ்சம் படபடக்க அதுசெல்லும் திசையை நோக்கினர்.
வேகமாகச் சென்ற ஜீப் அந்த வளவின் படலையில் கிறீச்சென்ற பயங்கர சத்தத்துடன் பெரும் குலுக்கலுடன் நின்றது. வர்ணக் கிே தாள்கள் சில படலையில் LULiதுக்கொண்டிருக்க, 人 அதன் அருகே ஆங்காங்கு சிலரயும் பலராயும் கூட்டமாகச் சிதறிக்காணப்ப்ட்ட
ෂණ්, /19

Page 18
அவர்கள், தம் பேச்சொழிந்து ஜீப்பைப் பார்த்தனர்.
இரண்டு மூன்று போலீஸ்காரர் 'தொப் தொப்' என வெளியே குதித்து இறங்கினர். டிரைவர் ஆசனத்தில் இருந்தவன் இருந்தவாறே ஸ்ரேரிங்கைப் பிடித்தவாறு வெளியே எட்டிப்பார்த்தான். அவனருகே யாரோவெள்ளை வேட்டியுடன் அமர்ந்திருப்பது மங்கிய மாலை ஒளியில் தெரிந்தது.
யேசுதாசன் ஆடுத?. பொலீஸ்காரனின் உச்சரிப்பில் சிங்களத்தொனி மிதந்தது.
அவர்களிடையே பரபரப்பு. கறையான் வேலி உதிர்வதுபோல் எழுந்தது. யாரோ உள்ளே வேகமாக ஓடினார்கள்.
உள்ளே கூடத்தில் முதற்பந்திக்கு இலை போட்டுக்கொண்டிருந்தர்கள். கூடத்துக் குந்திலும், முற்றத்தில் விடப்பட்டிருந்த டிராக்டர் பெட்டியிலும் பெண் வீட்டர் நிறைந்திருந்தனர். முகத்தில் பசிக்களை, வேர்வையாக, அயதியாக படர்ந்திருந்தது.
பாவம் எல்லாரும் நல்லாக் களைச்சுப் போட்டியள். சேர்ச்சில எல்லாம் நேரகாலத்தோட சுவாமியர் செய்தனுப்பிப்போட்டார். வழியில இந்த டிராக்டர் இஞ்சின் பிழைப்பட்டு எல்லாரையும் நடுக்காட்டிற் தவிக்க விட்டிட்டுது. இல்லாட்டி எப்பவோ கலியாணச் சாப்பாடு எல்லாம் முடிஞ்சிருக்கும் அவன் அம்மா கல்யாணப் பரபரப்பிலும் வந்தவர்களுக்கு ஆறுதல் வர்த்தைகள் கூறிக்கொண்டு அலுவலில் ஓடிக்கொண்டிருக்கிறாள். அவள் முகத்தில் "கல்யாணமே வேண்டாமெண்டு சொல்லிக்கொண்டிருந்த பொடியன் ஒமெண்டு சம்மதிச்சு கட்டிக்கொண்டது பெருமிதமாக மிதந்துகொண்டிருந்தது.
யேசுதாசன். யேசுதாசன்' அவன் நண்பன் ஒருவன் பலமாக குரல்
அம்மாவுக்குச் சிப்பு வந்தது. இந்த நேரத்திலும் அவனைத் தனியாக இருக்க விடாதுகளாம். அவனுக்கும் இதுகளில உசிர். இல்லாட்டி இப்படி இதுகள் ஓடியாடித் திவியுங்களே. கலியான அலுவல் எல்லாத்தையும் அவன்ர நண்பர்கள்தான இழுத்துப் போட்டுக்கொண்டு பாக்குதுகள்
இப்ப ஏன் அவனை? அவன் இப்பதான் உள்ள போனவன்' என்று அவள் பதில் கூறிக்கொண்டு அடுப்படிக்குப் போகிறாள். பொலீஸ்கார் முற்றத்திற்கு வரவும், எல்லாரும் வாயடைத்துப் போகிறார்கள்.
யேகதாசன். அவன் எங்க போயிற்றது? பொலிஸ்காரன் குரல் பலமாகக் 'மாப்பிள்ளையைத் தேடி பொலிக வந்திருக்கு
20/செம்பியன் செல்வன்

பெண்கள் தங்கள் கைவேலைகளை அப்படி அப்படியே போட்டுவிட்டு காழுந்து நின்றனர்.
அவனுக்கு வெளியில் நிகழ்ந்த எதுவும் அவன் கருத்திலே விழவில்லை.
மணமகனான அவன், வீட்டிலிருந்த ஒரேயொரு ஒடுக்கமான அறையில் அதன் ஒருபுறத்தே கலியாணத் தட்டுமுட்டுச் சாமான்கள், பலகாரப்பெட்டிகள், வெற்றிலைத் தட்டங்கள், வாழைக்குலைகள், கலியாணத்துக்கு வந்த விருந்தினர் அவிழ்த்துப்போட்ட ஆடைஅணிகள் என்று நிறைந்திருக்க.
மறுபுறமாக, பழங்காலக் கண்ணாடி மேசையின் காலோரமாக அவசரமாக, ஒழுங்கற்று விரிக்கப்பட்டிருந்த புற்பாயில் அவளின் பக்கலில் பரவசநிலையில் தன்னை மறந்து. .
அச்சமும், நாணமும் விழிகளில் படபடக்க, வியர்வை ஏறிய மேனியில். பட்டுப்புடவை. பிளவுஸ் கசகசக்க. .
ஒருகாலை மடித்து, மறுகாலைக் குத்திட்டு இருகரங்களாலும் அதனை அணைகோலி அவற்றிடையே வாய்புதைத்து இடையிடையே நிலம் செருகி நின்ற தன் கருவிழிகளால் அவன்மேல் பன்னீர் சொரிந்தவாறு.
அந்த சொற்ப விநாடி நேரங்களின் தனிமையில் மெளனம் கரைந்த உலகு அவர்களை எங்கோ அழைத்துச்சென்றபோது. .
வெளியே மீண்டும் அவன்பெயர் சொல்லிக்கேட்டது. அப்போதுதான் கிணற்றடிப்பக்கமாக வாளிநிறைய நீருடன் தூக்கேலாமல் தூக்கிவந்த அம்மாவின் காதில் அழைப்பு விழுகிறது. பொலிஸ்காரரை சனங்கள் சூழ்ந்திருந்ததால் அவர்கள் அவள் பார்வையில் விழவில்லை. தண்ணீர் வாளியை 'தொப்' என்று வைத்தாள்.
அதாரு புதினமா. வெளியநிண்டு அவனை விசாரிக்கிறது?. இண்டைக்கு அவன் மாப்பிள்ளையெல்லே. இதுகூட அவன்ர சினேகிதங்களுக்கு தெரியுது இல்லை. இந்தக்காலப் பிள்ளைகளே இப்பிடித்தான். அவனுக்கும் விடிஞ்சாப் பொழுதுபட்டா ஒரே சினேகிதக் கூட்டம்தான். இனித்தம்பி என்னணிடுதான் உவையளோடு முந்திமாதிரி சங்காத்தியம் கொண்டு திரியப்போகிறார் எண்டு பாக்கத்தான் போறன். மாப்பிளை பொம்பிளை இப்பதான் கோயிலால வந்திருக்குதுகள். அதுகளும் காலையிலயிருந்து வாயில் வெந்நிதண்ணி இல்லாம. அதுகளுக்கும் நல்ல பசியாய் இருக்கும் விபரம் தெரியாதவள் யாருக்குச் சொல்கிறோமென்று தெரியாது சொல்வது கேட்கிறது.
அவனுக்குப் பசியா? அவனுக்குள் சிரிப்பாய் வெடித்தது. அவளைப் பார்த்தான். கண்ணக்கதுப்பில் நெளிந்த சுழிப்பு அவளும் சிரிப்பதாய் அவனுக்கு போதையூட்டியது.
பூட்ஸ் சப்தம் முற்றத்தில் அதிர மீண்டும் அந்தக் குரல் கேட்டது.
குரூரம் / 21

Page 19
அவன் திடுக்கிட்டான். பட்டுவேட்டி காலைத் தடுக்க வேகமாக எழுந்தவன் சற்றுத் தயங்கி மெளனமாகப் பார்வையாலேயே அவளிடம் விடைபெற்றுக்கொண்டு கனவில் மிதப்பவனாக வெளியே வந்தான்.
உவர்தான் ஆள் யாரோ அவனை இனம் காட்டுவது கேட்டது. அவன் அந்தப் பக்கமாகத் திரும்பினான்.
ஆனைவிழுந்தான்குளம் முதலாளி. ‘என்ன முதலாளி. இங்க நிக்கிறியள். உள்ள வாங்களன்' அவன் உள்ளம் மேலும் குதூகலிக்க அவரை மரியாதையுடனும் அன்புடனும் அழைத்தான். முதலாளி வழக்கமாகத் தன் தோட்டத்தில் வேலைசெய்யும் எந்தத் தொழிலாளியின் நல்லது கெட்டது எதிலும் கலந்து கொள்ளாதவர் தன் வீட்டுக்கு வந்ததைக் கண்ட சந்தோசமிகுதியில் பக்கத்தில் காணப்பட்ட பொலிசை அவன் சற்றே மறந்து போனான்.
யாரோ முதலாளிக்கு ஆசனம் தேடினர். அவன் பிடரியில் பலமான அடி விழுந்தது. எதிர்பாராத அடியினால் நிலைகுலைந்து, முகம் குப்புற விழுவதுபோலோடித் தன்னைச் சமாளித்துக் கொண்டு நின்றான்.
‘என்ன முதலாளி நீங்களும் பார்த்துக்கொண்டிருக்க இப்படி. . அவன் வார்த்தைகள் முடியவில்லை மறு அடி விழுந்தது.
‘என்னடா மொதலாளி. மொதலாளியிட மிசினை நீ களவாண்டினதா? 'மிசினா?. என்ன மிசின்? 'ஒனக்கு மிசின் தெரியேல்ல. அடிச்சுக்கொண்டு போகத் தெரிறான்' அவன் முதலாளியைப் பார்த்தான்.
அவர் மெல்லச் சிரித்தார். எல்லாம் சகஜம் என்பதுபோன்ற பாவனையில் முகத்தை வைத்துக்கொண்டு, சாந்தமாகச் சொன்னார். யேசுதாசன் காசு கீசு தேவையெண்டா என்னட்ட நேராகக் கேட்டிருக்கலாம். கலியாணம் எண்டா அது இது எண்டு எக்கச்சக்கமாகக் காசு தேவைப்படும். அதுக்காகப் போய் தோட்டத்தில தண்ணியிறைச்சுக்கொண்டிருக்கிற மிசினைக் களவெடுத்துக் கொண்டு வாறதே. அங்க பயிர்பச்சையெல்லாம் கருகுது. உன்ன நம்பித் தோட்டத்தில விட்டதுக்கு இப்படியா நடக்கிறது.உனக்குத் தெரியும் இப்ப ஒரு "வாட்டப்பம்ப் எடுக்கிறதில இருக்கிற கஷ்டநஷ்டத்தைப்பற்றி,
‘என்ன முதலாளி. நீங்க பேசிறது? பயிர்பச்சை உங்களுக்குச் சொந்தமெண்டாலும் அதுகளுக்கு உயிரும் உணவும் ஊட்டுற நாங்களே அதுகளைக் கருகவிடுவமே? வாட்டப்பம்ப் காணாமப் போச்சு எண்ட சங்கதியே இப்பதான் எனக்குத்தெரியுது. 22/செம்பியன் செல்வன்

அப்ப நீ மிசினைப் பற்றிச் சொல்லமாட்டாய்? நான்தான் மிசினை எடுத்ததெண்டு ஆர் சொன்னது? எந்த ஆதாரத்தில் என்னட்ட வந்தனியள்? அவன் ஆவேசத்துடன் கேட்டான்.
டேய் ஆதாரமா கேக்கிறாய், மசிர் உம்மட்ட வர ஆதாரம் தேவையா. சந்தேகம் போதாது?
‘என்ன சந்தேகம்?" 'என்ர தோட்டத்தில வேலை செய்து நாள் கூலி வாங்குற நீ இப்ப கலியாணம் செய்ய ஏதடா காசு. பாரன் பெரிய விருந்து. பந்தி. வேற
முதலாளி இவ்வளவு கல்நெஞ்சக்காரர் எண்டது இப்பதான் ஃயது. உங்கட்ட வேலைசெய்யிற தொழிலாளி கலியாணம் கட்டுறதுகூட உங்களுக்கப் பொறுக்கேலாம இருக்கு. அதுகூட உங்களுக்குச் சந்தேகத்தைக் கொடுக்குது. தொழிலாளியின் மெளனம், கூச்சல், சந்தோசம், துக்கம் எல்லாத்தையும் கண்டு ஏன் இப்படிப் பயப்படுறியள் முதலாளி
நீ இப்படிச் சொல்லுவாயெண்டு தெரிஞ்சுதான் நான் கையோட பொலிசையும் கூட்டிவந்தனான். எனக்கு எல்லாம் விளங்கும். யேசுதாசன் மிசினை எங்க கொண்டுபோய் வித்தாய். மரியாதையா சொல்லிப்போடு. வீணா அடிவாங்காதை அவர் சொல்லி முடிக்கவில்லை.
பொலிஸ்காரர் கண்மூடித்தனமாக தாக்கத்தொடங்கினர். அவன் அலறல் பரிதாபமாக எழுந்தது. உள்ளே மணக்கோலத்திலிருந்த மணப்பெண் வேகமாக வெளியே வந்தவள் அவன் மிருகத்தனமாக அடிபடுவதைக்கண்டு பயத்தால் உறைந்துபோய் நின்றாள். அவனுக்கு, அடிபடும் வேதனையை விட, அவள் முன்னால் தான் நிற்கும் கோலந்தான் தீயாகத் தகித்தது. அவன் அவமானத்தால் குன்றிப் போனான்.
கூட்டத்தினருக்கு அவனைக் கேள்வி முறையில்லாமல் தாக்குவது ஆத்திரத்தை மூட்டியது. ஒரு இளைஞன் வந்து யேசுதாசன் முன்நின்று கத்தினான். இனி யாராவது அவனில கைவைச்சுப் பாக்கட்டும். அதுக்குப் பிறகுதான்.
'.அவனில குற்றம் இருந்தா கோட்டுக்குக் கொண்டு போங்க. உங்களுக்கு அவனை இப்படிப்போட்டு அடிக்க அதிகாரமில்லை'
பொலிஸ் அரண்டது. பாரன் சாப்பிடக்கூட வழியத்ததுகள். இப்ப நாலுபேர் சேர்ந்தோடன அதுகள் துள்ளுறதுள்ளல முதலாளி முணுமுணுத்தார்.
முதலாளி அப்படிச் சொல்லாதே! உன்னால இந்த நாயளை விலைக்கு வாங்கமுடியுமெண்டா. ஒரு தொழிலாளிக்கு அவன் கண்ணசைவிலேயே
குரூரம் /23

Page 20
உலகெலாம் பரந்திருக்கிற தொழிலாள கூட்டமே திரண்டுவரும். நீங்கள் எந்தச் சட்டத்தின்ரை துணிச்சலில இப்படியெல்லாம் நடக்கிறியள். அவன்தான் களவெடுத்தான் எண்டு எப்படிச் சொல்லுறியள்
அட! இங்க கட்சிபேசிற மனுஷன் இருக்கிறான்' என்ற பொலிஸ்காரன் முகத்தில் சங்கட ரேகை ஓடியது. ஏதோ புதிய பிரச்சனை உருவானதை உணர்ந்த 'றாலாமிகள் யேசுதாசனைப் பார்த்தார்கள். அவன் அவமானத்தாலும், பயங்கர தாக்குதலினாலும் சீவனற்றுப்போய் நின்றுகொண்டிருந்தான்.
தன் சொத்தைப் பறிகொடுத்தவன் சும்மா விடுவானே?’ என்று பொருமினார் முதலாளி.
முதலாளி நீங்க சொத்தைப் பறிகொடுத்திருக்கலாம். ஆனால் அதற்காக குற்றவாளி எண்டு நிரூபிக்காதவரை ஒருவனைத் தாக்க அதிகாரமில்லை. அப்படிச் செய்யச் சட்டம் ஒண்டுக்குத்தான் அதிகாரமுண்டு. நீங்க உங்களிட்ட பணமிருக்கு எண்ட திமிரில பொலிஸ்காரரை விலைக்கு வாங்கிவந்து எங்களை நீங்க துன்புறுத்தமுடிவதாலதான் ஏற்கனவே எங்களை இளக்கமாக நினைக்கிற உங்களுக்கு மேலும் கொண்டாட்டமாப் போகுது இளைஞர்கள் மாறிமாறிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பயம் அதீத தாக்குதலைக் கண்டதால் பறந்தோடி விட்டது.
உங்கட தோட்டத்தில நூத்துக்கு மேலால ஆக்கள் வேலை செய்யேக்க, மிசின் காணாமப் போனதுக்காக இவனை இப்படித் தண்டிச்சா கிடைக்குமா?" இதுவரை பேசாமலிருந்த பெண்களிடமும் முணுமுணுப்பு எழலாயிற்று. "ஒரு கேள்வி முறையில்லையா? பாவம் ஒரு சோலி சுரட்டுக்கும் போகாத பிள்ளை, ஏழை எளியதுகளெண்டால் என்னத்தையும் செய்யிறதா. பாவம், பாரன் பொடிச்சியும் பதகளிச்சுப்போய் நிக்கிறதை
-மணமகளின் விம்மல் அனைவரின் ஆத்திரத்தையும் கூட்டியது. நிலமை மாறுவதைக் கண்ட பொலிசுக்காரர் அதட்டினார்.
யேசுதாசன் ஜீப்பில ஏறு நாங்க அவனைக் கொண்டுபோக விடம் இளைஞர் கூட்டம் வழிமறித்தது.
பொலிஸ்காரன் முகம் சிவந்தது. ‘எங்கட டியூட்டிய தடுக்கிறது நீங்க. உங்களுக்கு மிச்சம் கூடாது. போனதடவை நடந்தது தெரியும்தான.?
முன்பொருமுறை இப்படித்தான் கோபித்துக்கொண்டுபோன றாலாமிகள் பொலிஸ் டிரக்கோடு வந்து மிருகத்தனமாகத் தாக்கிப் பலரை அரெஸ்ட் செய்து போனதை நினைத்தனர்.
மச்சான் பயப்படாம நீ போ. . அவங்க பொலிஸ்டேசனுக்குத்தான் கூட்டிக்கொண்டு போவாங்க. நாங்க பின்னாலயே பிணைஎடுக்க வாறம் 24/செம்பியன் செல்வன்
*

f
ஜீப் புறப்பட்டது. சோமால மாதாவே அம்மாவின் குரல் ஒலித்தது!
2
ஜீப் ஓடிக்கொண்டிருந்தது.
அவன் கரங்கள், ஜீப்பின் மேல் கூரைக் கம்பி ஒன்றுடன் கைவிலங்கால் பிணைக்கப்பட்ட நிலையில் நின்று கொண்டிருந்தான். போகும் வேகத்தில் விநாடிக்கொருமுறை அவன் நெற்றி கம்பியுடன் மோதிக்கொண்டிருந்தது. வேதனையால் நெற்றி 'விண்விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்தது.
அட இப்ப சொல். எங்கடா மிசின்'
'எனக்குத் தெரியாது.
சொல்லுறது இல்லே நீ. சாறது.
நான் எடுக்கேல்ல. எனக்கு ஒண்டுமே தெரியாது.
குண்டாந்தடியால் அவன் பிருஷ்டத்தில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.
ஆ. ஐயோ. அம்மா. அவன் பட்டுவேட்டி நழுவியது. சிரிப்பொலி எழுந்தது.
அட அம்மா கூப்புடுறது. ஒம் பொண்டாட்டி கூப்புடு. அது பாக்க இது மிச்சம் நல்லது
பிடரியில் அறை விழுந்தது. அவன் நெற்றி கம்பியில் பலமாக மோதியது.
ஐயோ. .
நீ சொல்றதில்ல. உயிரோட தப்பமாட்டாய். சொல் சொல்
குண்டாந்தடிகள் சுழன்று விளையாடின. முதுகு, தோள் பட்டை, குதிக்கால், இடுப்பு, ஆடுசதை, பிருஷ்டபாகம்.
தெரியாது, தெரியாது, தெரியாது.
பொலீஸ்காரருக்கும் களைப்பு மிஞ்சியது.
முதலாளி தன் சிகரட் கேசை எடுத்துக் கொடுத்தார். அவர்கள் ஆளுக்கொன்று எடுத்ததோடு, தங்கள் சட்டைப்பையிலும் மேலதிகமாக ஒவ்வொன்று எடுத்துக் வைத்துக் கொண்டார்கள். முன்னாலிருந்து சிகரட் லைட்டர் சுடர் குதித்து வர அதில் அவர்கள் பொறி இழுத்துக் கொண்டனர்.
அப்பாடா புகையை உள்ளிழுத்து நன்றாக வெளியிட்டனர். அவர்களின் முகத்துக்கு நேராக அவன் இடுப்புக் கச்சுடன் நின்றிருந்தான். ஒரு பொலீஸ்காரன் முகத்தில் குரூரப் புன்னகை நெளிந்தது.
அவனின் இடுப்புப் பட்டியைப் பலமாக பிடித்திழுத்தான். அறுந்து நழுவி விழுந்தது. அவன் அவமானத்தால் குன்றினான். அவர்கள் ஆரவாரமாகச்
குரூரம் /25

Page 21
சிரித்தனர். ஒருவன் மிகக் கொச்சையாக, ஆபாசமாக அவனின் ஆண் உறுப்பை வர்ணித்தான். இன்னொருவன் தன் சிகரட் தணலை அவ்வுறுப்பை நோக்கி. 'ஆண்டவரே! அவன் அலறல் அந்தக் காட்டுப் பகுதியையே கலக்கியது. நகக் கண்கள், பிற நொய்மைப் பகுதிகளில் தணல் தன் முத்திரையைப் பொறித்துக் கொண்டிருந்தது.
அவன் இறப்பை வேண்டி பிரார்த்திக்கலானான். இறப்பு ஒன்றாலேயே தன் வேதனையை தீர்க்க முடியும் என அலறலானான்.
'சொல்லடா மிசின் எங்க வச்சிருக்கிறாய் எண்டு முதலாளி சீறினான். அப்படி ஏதும் செய்திருந்தா இவ்வளவுக்கும் நான் சொல்லியிருப்பேனே. ஐயோ முதலாளி எனக்கு உண்மையிலேயே ஒண்டும் தெரியாது
'உனக்கா தெரியாது, எல்லாரிட்டையும் சரியா விசாரிச்சிட்டுத்தான் உன்னட்ட வந்தனான். நீ நல்ல திறிக்கீஸ்காரன். இல்லாட்டி இவ்வளவு பிடிவாதம் பிடிப்பியா? வேலாயுதம் நீதான் மெசினைத் திருடிக்கொண்டு போனதைப் பார்த்ததாக சொன்னவன். வீணாகச் சாகாதை, மிசின் எங்க?"
முதலாளி எங்கட பரம்பரையிலேயே திருட்டுப்புத்தி கிடையாது, நீங்க முதலில வேலாயுதத்தை விசாரியுங்கோ. அதை விட்டிட்டு. அட முதலாளியை எதுத்துத் பேசறது' மடர், மடர். அவன் முகம், முதுகு, முழங்காலை மடித்து ஒருவன் அவன் வயிற்றில்.
மிருகத்தனமாக தாக்குதலில் இருந்து தற்காலிகமாக விடைபெற்றுக் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கவேணும் போலிருந்தது. நரம்புகள் விண் விண்' எனத் தெறித்தன. தசைகள் தளர்ந்து உருக்குலைந்து உதட்டால இரத்தம் வழிந்தது.
'தம்பிராசாட்ட பம்ப் கொடுத்தனான்’ (தம்பிராசா என்னை மன்னித்து விடு. வேதனை தாங்க முடியாமல் உன் பெயரைப் பயன்படுத்தி விட்டன்)
'சரி தம்பிராசான்ர வீட்டைக் காட்டு
ஜீப் திசை திரும்பி ஓடியது.
3
தம்பிராசா தன் வீட்டின் முன்னால் ஜீப் வந்து நிற்பதையும் அதிலிருந்து இறங்குபவர்களையும் வியப்பால் பார்த்தான். அவனும் கலியான வீட்டிற்கு வந்திருந்தவன்தான்.
யேசுதாசனை அவன் முன்னால் இழுத்துச் சென்றனர்.
'என்னடா பாக்கிறது. இவனைத் தெரியுமா?"
தெரியும்
அவன் தந்த மிசின் எங்க?" 26/செம்பியன் செல்வன்
ཡོད།

'மிசினா. என்ன மிசின் எப்ப தந்தது' தம்பிராசா வார்த்தைகளை முடிக்கவில்லை. மண்ணில் புரண்டான்.
'பொய் பேசாத. எங்க மிசின் வைச்சிருக்கிறாய்? தம்பிராசாவின் மேனி எல்லாம் குண்டாந்தடிகள் உறவாடின. யேசுதாசனின் மனம் பதறியது. "ஐயோ. ஐயோ. இல்ல. இல்ல நான் பொய் சொன்னனான்'
அவன்மீது பாய்ந்தனர். ஆத்திரம் திசை திரும்பியது. நாயே பொய் சொல்லி எங்களை ஏமாத்துறது" அவன் தெருப்புழுதியில் சுழன்றான். 'சொல்லடா எளிய நாயே, எங்கடா வித்தன். முருகையனிடம் தான் மிசின்'- மீண்டும் பொய். -ஜீப்பில் அவனை ஏற்றினர். கிராம மூலைமுடுக்கெல்லாம் ஜீப் அலைந்து வெறிகொண்டது.
4. பொலிஸ்ரேசன் வாசலில் ஆண்களும் பெண்களுமாக அவனைப் பிணை எடுக்க வந்திருந்தனர். மணப்பெண்கூட அவனைப் பார்க்கவேண்டும் என்ற துயரத் துடிப்பில் வந்திருந்தாள். அவளின் கண்ணிரில் முதலிரவுக் கனவுகள் கரைந்தோடிக்கொண்டிருந்தன.
‘எங்களுக்கு முன்னர் புறப்பட்ட ஜீப் ஏன் இவ்வளவு நேரமாக இன்னும் வந்து சேரவில்லை. வழியில் அவனை எங்காவது வைத்துத் துன்புறுத்துகிறார்களோ?-ஓரளவு விபரம் தெரிந்த சில இளைஞர்கள் பரபரத்தனர். எப்படியும் மாப்பிள்ளையை மீட்டுக்கொண்டு போவதற்காக அவர்கள் அந்த ஆலமரத்தடியில் காத்திருந்தார்கள். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
அவன் பயத்தாலுமி, வீம்பாலும் சொன்ன பொய்களால் ஆத்திர வேகத்துடன், பலத்த ஓசையுடன் பதினொரு மணிக்கு ஜீப் பொலிஸ்ரேசனுக்குள் புகுந்தது.
-அவர்கள் கூட்டமாக உள்ளே சென்றனர். அவனிடம் அவர்கள் ஏதேதோ வாக்குமூலம் வாங்கிக்கொண்டிருந்தனர். கனவுக்கும் நனவுக்குமிடையில் அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆடிக்கொண்டிருந்தான். அவன் நண்பர்கள் பொலிஸ்ரேசன் வாசல் விறாந்தையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.
‘என்ன விடுவான்களாமே?” மாஜிஸ்ரேட்டிடம் கொண்டு போனாத்தான் பிணை எடுக்கலாம். இப்ப அவன் இருக்கிற நிலையில மாஜிஸ்ரேட்டிடம் கொண்டு போகான்கள். அவன்களுக்குத்தான் கெடுதிவரும். ஒருவேளை நாளைக்குத்தான் எடுக்கலாம் போல'
குரூரம் /27

Page 22
அப்ப நாங்கபோய் மாஜிஸ்ரேட்டிடம் சொன்னா என்ன? அவர்கள் தமக்குள் தீர்க்கமாக ஆலோசித்துக் கொண்டிருக்கையில் வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு பொலிஸ்காரர் இறங்கினர். அவர்கள் மத்தியில் ஊருக்குப் பெரிய மனுஷராக நடக்கும் கனகசிங்கம் இறங்கிக்கொண்டிருந்தார். அவரது தோட்டத்தில் ஆணை விழுந்தான் முதலாளியின் மிசின் வேலைசெய்வதாகக் கிடைத்த இடைத்தகவலால் சென்ற இன்னொரு பொலிஸ்காரப் பிரிவு ஆளையும் சாமானையும் கொண்டுவந்துள்ளது. பின்னால் பயந்தபடி வேலாயுதம் நடந்துகொண்டிருந்தான்.
உள்ளே பொலிஸ்காரரிடம் பரபரப்புக்கண்டது. விடயம் திசை திரும்பியதைக்கண்டு அவர்களுக்கு வியர்த்துக் கொட்டியது. முதலாளி பயத்தாலும் குற்ற உணர்வாலும் யேசுவின் பக்கம் பார்க்கவே அஞ்சினார். அவனின் நண்பர்களை எஸ். பி. உள்ளே அழைத்தார்.
5
அவனை அவன் நண்பர்கள் நிரபராதியாக மீட்டுக்கொண்டு வந்ததை அவள் தூரத்திலிருந்தே பார்த்தாள். அவளின் நெஞ்சத்தில் அவன் கோலம் இரத்தத்தைக் கொதிக்க வைத்தது. அவளுக்காக அவன் நண்பர்கள் காத்திருந்தும் போராடியதும் அவனுக்கு நண்பர் மத்தியில் இருந்த செல்வாக்கைப் புலப்படுத்தியது. துயரத்தினூடும் பெருமை உணர்வு தென்பட அவனைப் பார்த்து புன்னகைத்தாள். கடைவிழியில் கண்ணிர் பெருக்கெடுத்தது. அப்போதுதான் அவனும் அவளைப் பார்த்தான். கல்யாணப்பெண் தன் முதலிரவு அன்று தன் கணவனைத் தேடி பொலிஸ்ரேசனுக்குமுன் காத்திருந்தது அவனுக்கு அவமான ஆவேசத்தை ஏற்படுத்தியது. அவள் தன்னைப் பற்றி என்ன எண்ணுவாளோ என்ற நினைப்பு அவனுக்கு திகிலூட்டியது. அதேவேளை கண்ணிர் துளிர்க்கத் தன்னை நோக்கி புன்னகைப்பதைக் கண்டு அவளை நோக்கி வேகமாக தன் நண்பர்களின் கைத்தாங்கலை மறந்து முன்னோக்கி காலடிவைக்க முனைந்தான்.
ஐயோ. அம்மாடி -விலாஎலும்பில் எதுவோ முறிந்திருப்பது போன்ற நரக வேதனைத் துடிப்பில் அப்படியே சாய்ந்தான். அவளும் நண்பர்களும் ஓடிச்சென்று அவனைத் தாங்கிப் பிடித்தனர்.
6
இரவு வேளையின் மங்கிய ஒளியில் ஆஸ்பத்திரி மெளனமாக இயங்கிக்கொண்டிருந்தது. நர்ஸ், டாக்டகளின் பரபரப்பு ஓசைகளைத் தவிர மெளனமே நிலவியது.
அவனைப் பரிசோதித்த டாக்டர் ஒரு படுக்கையில் "அட்மிட்' செய்துவிட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தார். 28/செம்பியன் செல்வன்
s

டாக்டர் அவனுக்கு ஆபத்த ஒன்றுமில்லையே அவர்களின் கேள்வியை மீறிக்கொண்டு விம்மல் ஒன்று எழுந்தது. டாக்டர் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார்.
அவன் பெண்சாதி டாக்டர். இன்றுதான் கலியாணமாச்சு. அதுக்குள்ள அவன்ர கெட்ட காலம். .
டாக்டரின் முகம் இருண்டது. அவர் உதடுகள் துடித்தன. ‘என்ன டாக்டர் சொல்லிறியள். விளப்பமாகச் சொல்லுங்கள் மோசமா தாக்கிருக்கிறார்கள். சித்திரவதை வேறு செய்யக்கூடாத இடத்தில் செய்திருக்கிறார்கள். அவன் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றவனா இல்லையா என்பதை என்னால் உடன் சொல்லேலாது. சில சமயம் கர்த்தரின் கிருபை எப்படி இருக்குமோ. .
-டாக்டர் தன்னை அறியாமல் நெஞ்சில் குருசையிட்டுக் கொண்டார். டாக்டர். பலமான அலறல் ஆஸ்பத்திரியின் அந்தகாரத்தைக்குலைத்தது.
- மல்லிகை 74 O
குரூரம் / 29

Page 23
ع4
22429246SCé
30/செம்பியன் செல்வன்
அனல் பறக்கும் வயல் வெளியை உற்று நோக்கியவாறு அமர்ந்திருந்தான் திரவியம். வெறுமையின் தகிப்பில் வயல் வெளி பாலை என நீண்டு கிடந்தது. வெப்பத்தால் இலை புழுதிப் புயலில் அடிபட்டும், பசுந்தளிர்கள் கூட கருகியும், மணி பூத்த செந்நிற மரங்கள் வரியமைத்தும் அடிவானின் விளிம்பாக காட்டெல்லை தெரிந்தது. வயலின் வரம்புகள் மனிதனின் காலடியே படாத கன்னி நிலமென, உடைந்தும், சிதறியும், கரணைக் கட்டிகளாயும் உருக் குலைந்தும் கிடக்க. நெருஞ்சி, தொட்டாற்சிணுங்கி, கிடைச்சி, எனப் பரவி பூக்களாய்ச் சிரித்து முட்களாய்ச் சிலிர்த்திருந்தன. திரவியம் மேலே பார்த்தான்.
வானில் வெணிமேகங்கள் குடும்பம் குடும்பமாக உல்லாசப்பவனி வந்துகொண்டிருந்தன. உச்சிச் சூரியனின் வெப்பக்கதிர் குளத்தில் நீச்சலடித்துத் திரியும் மீன் குஞ்சுகளாக. .
அவனின் எக்கி, ஒட்டிய அடிவயிற்றிலிருந்து எழுந்ததென நீண்ட
 

பெருமூச்சு எழுந்து, வயிற்றில் சப்த ஜாலங்களை ஏற்படுத்திற்று.
அக்னி உள்ளும் புறமும். O தூரத்தில் யாரோ குடும்பமாகப் பாதை விலக்கி, முட்களுக்கு வழி பிந்து வருவது தெரிந்தது.
'யாரது? -பசியால் பூத்த கண்களை இடுக்கிக்கொண்டு, நெற்றி மேட்டில் கை வைத்துக்கொண்டு பார்த்தான். அவர்கள் நெருங்கிக்கொண்டிருந்தனர். வெள்ளை வேட்டியும், நாஷனலுமாக, இடையிடையே அவரது ஏதாவது ஒரு விரலில் இருக்கும் மோதிரத்தில் ஒளிபட்டுத் தெறிக்க, வேலாயுதம் முன்னாக வேகமாக வந்து கொண்டிருந்தார். அவரின் பின்னாகவோ, அருகாகவோ கிராம சேவகரும் அவரின் உதவியாள் குறி சுடும் கம்பியையும், முத்திரை இரும்பையும் கொண்டு வர, அவர்களின் பின்னால் சில அடி ஆபத்தில் ரகுமானும், இஸ்மாயிலும் வந்துகொண்டிருந்தனர்.
‘என்ன திரவியம். எப்படி இருக்கு உங்க பாடெல்லாம்?' என்று கேட்டவாறு வந்தார் வேலாயுதம்.
அவன் இடுப்பால் நழுவும் சாரத்தைத் தூக்கி அவசரமாகச் செருகினாற் போல கட்டியவாறு எழுந்தான்.
‘என்னத்தச் சொல்லிறது. உங்களுக்குத் தெரியாததா? பாத்துக் கொண்டுதானே இருக்கிறியள். . வானம் பாத்த பூமி, குளம், அரசாங்கம் எண்னத்த செய்தென்ன. மழையெல்லே பெய்யோணும். மூண்டாம் வருஷமா வானம் முகடு துறக்கேல்ல.குளமெல்லாம் வத்திப் போச்சு குடிநீருக்கே அருந்தலாக இருக்கு. குளம் சேறாகி கொதிச்சுக் கிடக்கு. சீலையைப் போட்டு பிழிஞ்சு தண்ணி எடுக்கிறம். மீன் எல்லாம் செத்து மிதக்குது. இந்த நிலையில எப்படி வேளாண்மை செய்யிறது. பயறு, உழுந்தெண்டாலும் போடலாமெண்டு பத்தா. அதுக்கும்கூட பன்னீர் தெளிச்ச மாதிரியெண்டாலும் மழை வேணுமே. இப்ப ஒண்டுக்கும் வழியில்லாமத் தவிக்கிறம் வெள்ளாமையை நம்பியிருக்கிறவர் பாடெல்லாம் நரகம்தான்'
வேலாயுதம் சிரித்தார். உப்பிடிச்சொல்லாத திரவியம் வெள்ளாமையை விட்டொரு தொழிலே. 'உப்பிடிச்சொல்லிச் சொல்லித்தான் கமக்காரன் ஏமாந்து போய் வயித்துக்குக் கூட வழியில்லாமல் காய்கிறான். எல்லாருக்கும் உணவளிக்கிறவன் ாகண்டுபேர். இங்க அவன்ர வயிறு கருகிறதை ஆர் கண்டினம்? எல்லாத்துக்கும் மழைத்தண்ணி வேண்டும். கொதிக்கிற வயித்தில ஈரத்துணி போடக்கூட தம0ண்ணிக்கு வழியில்ல.
-இப்போது வேலாயுதத்துக்குச் சிரிப்பு வரவில்லை.
சர்ப்பவியூகம் / 31

Page 24
'சரி சரி உன்னோட நிண்டு கதைக்கிறதெண்டாக் கணக்கக் கதைக்கலாம். எனக்கு இப்ப நேரமில்ல. கொஞ்சம் வேலை கிடக்கு. விதானையாரையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறன். அப்ப வரட்டே' என்றவாறு, அவன் வளவுக்கு அடுத்திருந்த தனது மாட்டுப்பட்டிக்குள் நுழைந்தார்.
திரவியத்தின் கமத்திற்கு ஒதுக்குப் புறமாக, முட்பற்றைகளிடையே ஒற்றையடிப் பாதை அமைத்து தனது மாட்டுப்பட்டியை வேலாயுதத்தார் அமைத்திருந்தார். யாரும் பொதுப்படையாக நோக்கினால் முட்பற்றைதான் தென்படுமேயன்றி அவற்றிடையே ஒரு மாட்டுப்பட்டி அமைந்திருக்கும் எனக் கற்பனை கூடச்செய்து பார்க்க மாட்டார்கள்.
வேலாயுதத்தார் ஒரு பெரிய மாட்டு வியாபாரி. ஊருக்குள் உள்ள மாடுகளை, எருமைகளை விலைக்கு வாங்கியும்- விலைக்கு வாங்காமலும் கள்ளமாடு, எருமைகள் பிடித்தும் - கொழும்பு போன்ற நகரங்களுக்கு டி.ஆர்.ஓவின் அனுமதியுடனும், அனுமதியில்லாமலும் அனுப்பி வருவார். அவர் வெளிப்படையாக மாடுகளை ஏற்றுமதி செய்து வருவதால் அவருக்குக் கொஞ்சக் காலம் தொடக்கமாக மாட்டுக்கார வேலன்' என்ற புதுப்பெயரை ஊரிலுள்ள வாலிபர்கள் சூட்டப்போக, அது சிறுவர், வயோதிபர் வரை வியாபித்து கிராமம் முழுவதும் அவருடைய பெயராகப் பரவிவிட்டது.
ஆரம்ப காலங்களில் அவர் ஊரவர்ருடைய மாடுகளைக் கள்ளமாகவே பிடித்து ஏற்றுமதி செய்து வந்ததைக் கண்டு டிஆர். ஒவிற்கும், கவுண்மேந்து ஏஜெண்டிற்கும் அனுப்பப்பட்ட புகார்களும், பெட்டிசங்களும் அவர் பணம் பெருகப் பெருக வலிகுன்றி, மங்கி மடிந்து எலியரித்தும், இராமபாணம் துளைத்தும் அழிந்து போயின. ஆரம்பத்தில் அவரை எதிர்த்த ஊர் மக்களும் பணத்தின் சீற்றத்திற்கு அஞ்சி அஞ்சி ஒடுங்கிப்போக வேலாயுதத்தாரின் கள்ள மாட்டு வேட்டைகள் அதிகரித்திருந்தன. அவர் கள்ள மாடு ஏற்றுகிறார் என்று ஊர் மக்களுக்குத் தெரிந்தாலும், எப்படி, ஆர் மூலம் பிடித்து எப்படி அனுப்புகிறார் என்பதனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இன்று அவர் ஊரில் பெரிய மனுஷர். அவருக்கு எந்த வீட்டில் எவனிடம் எத்தனை மாடுகள் நிக்குது? எங்க கட்டியிருக்கு? அவனுக்கு எப்ப பணமுடை ஏற்படும் என்பதெல்லாம் அவருக்குப் பஞ்சாங்க பாடம். 'ဂွာ... .ஓ. . செல்லன்ர பெஞ்சாதியப் பாத்தா இப்ப எட்டு மாசம் போலக்கிடக்கு . . ஆளுக்கொரு பெரும் செலவு காத்திருக்கு. இப்ப வெள்ளாமையுமில்லை.
செல்லன் பிள்ளைப் பெறுவுக்கு என்ன என்ன செய்வான்? தன்ர
நெற்றிச்சுட்டியனை வித்தாத்தான் புள்ளத்தாச்சிக்குச் சரக்கரைச்சுக் கொடுக்க முடியும். எப்படியும் ரெண்டு மூண்டுக்க அமத்திப் போடோணும். கிடைச்சா அந்த மாட்டிலேயே எல்லாம் போக எனக்கும் ரெண்டு மூண்டு கிடைக்கும்இப்படித்தான் அவருக்கு எந்தவொரு மாட்டைப் பார்த்தாலும் சிந்தனை ஒடும். 32/செம்பியன் செல்வன்

அவனவனிடம் அந்தந்தக் காலங்களில் நட்சத்திர நேர காலம் போல
ாரு மாறுகிற வீட்டைப் போல போய் நிற்பார். போகும் போது மாட்டு வியாபாரத்துக்குப் போவது போலவும் போகமாட்டார். வேறை அலுவலா இந்தப் பக்கம் வந்தது போலவும், அவனையும் வந்த கையோட பாத்திட்டுப் போவம்' கான்று வந்ததாகவும் சுகம் விசாரித்து நிற்பார். இதுவரை காலமும் அவரைக் கண்ைணால் கண்டாலே எரிச்சலுடனும் கோபத்துடனும் நோக்கிக் கொண்டிருந்த கமக்காரனுக்கு - அவர் வந்த வேளையில் கண் கண்ட தெய்வமாகத் தோற்றமளிப்பார். பிறகென்ன?
- தெய்வத்திடம் பக்தன் பேரமா பேசுவான்?
- தெய்வம் தீர்த்ததுதான் விலை.
- பணத்தேவை முடிந்ததும்தான் பக்தன், கற்பூரச் செலவைப் பற்றி எண்ணிப் பார்ப்பான். பதறிப்போவான். பதறி என்ன செய்வது? வேலாயுதத்தார் அவனால் வந்த வரவை எண்ணிக் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருப்பார்.
தொழிலின் நெளிவு சுழிவுகளை நன்குணர்ந்து தொழில் நடத்திச்
செல்வதில், வேலாயுதத்தார் வெகு சாமர்த்தியசாலி. டிஆர்ஓ கொடுக்கும் பெமிட் டுக்கு பன்னிரண்டு மாடுகளை லொறிகளில் அனுப்புவார். அவருக்கு மாதம் ஒரு பெமிட் டுத்தான். ஆனால், கொழும்பு மாநகள் தேவைக்கு இந்தப் பன்னிரண்டு மாடுகளோ, எருமைகளோ எந்த மூலைக்கு? இதை எண்ணியதும் இவருக்கு கொழும்பு மக்கள் மேல் ஏற்படும் பரிதாபவுணர்ச்சி கருணை வெள்ளத்தைக் கரைபுரண்டோடச் செய்துவிடும். உடனே எப்பிடியோ இன்னுமொரு ஐம்பது எருமைகளையோ, மாடுகளையோ தேடி அதிகாரிகளுக்குத் தெரியாமல் காடுகளிடையேயும், குளங்களிடையேயும் அவற்றை நடத்தியே கொழும்புக்குக் கொண்டு போய்ச் சேர்க்கச் செய்துவிடுவார். இரண்டு நாட்களில் அத்தனை மாடுகளும் கொழும்பில் நிற்கும். அல்லது இறைச்சிக்கடையில் தொங்கும். சில சமயங்களில் கொழும்புக்கு அனுப்பி வைக்கும் உருப்படிகளில் நாலைந்தோ, இரண்டு மூன்றோ கூடுவதுமுண்டு. இறைச்சிக்காக 'அடிபட (ஓஅறுபட) அனுப்பப்படும் மாடுகளிலோ,எருமைகளிலோ சிலதுகள் சினைப்பட்டவையாக இருக்கும். வழியில் புல்லும் தண்ணிரும் கண்ட இடத்தில் அவை ஈன்று விட்டால் அவற்றை விட்டுவிட்டா செல்வது? அனுப்பும் போது அவற்றையும் மனக்கணக்கிட்டுத்தான் அனுப்பி வைப்பார். அவற்றை மாடோட்டிகள் தூக்கி அணைத்துக்கொண்டு செல்வர். இதற்கெல்லாம் வேலாயுதத்தாரின் கருணையுள்ளம்தான் காரணம் என்பீர்கள். உண்மைதான். இல்லாவிட்டால் கொழும்புக்காரருக்கு இதமான, மென்மையான ஆட்டிறைச்சி எப்படிக்கிடைக்கும்?.
கால்நடைகளை நடத்திச் செல்லும் மாடோட்டி கள் மீதும் இவரின் கருணை வெள்ளம் வற்றாத நதியாக கரைபுரண்டு ஓடுவதும் நித்ய உண்மை. சர்ப்பவியூகம் /33

Page 25
கடத்திச் செல்லும் எருமை மாடுகளை வழியில் கிராமசேவகரோ, டி. ஆர். ஒவோ மடக்கிவிட்டால் பணத்தால் சமாளிக்கப் பாப்பார். இல்லாவிட்டால் தான் என்ன? மாடோட்டிகள் பதினான்கு நாள் ரிமாண்ட் சிறையிலிருப்பர். மாடுகளும் டி. ஆர். ஒவின் மேற்பார்வையில் நாளொன்றுக்கு நான்கு ரூபா செலவில் பராமரிக்கப்படும். பதினான்காம் நாள் மாடுகளும், மாடோட்டிகளும் பிணையிலோ, குற்றம் கட்டிவிட்டோ வெளியே சுதந்திரக் காலிகளாக வருவர். இவ்வளவுக்கும் வேலாயுதத்தாரின் பெயர் வெளியே தெரியவராது. ரிமாண்டால் வெளியே வருபவர்கள் ஓய்வுகூட எடுக்க மாட்டார்கள். எதற்காக ஓய்வு? ரிமாண்டிலிருந்த பதினான்கு நாட்கள் போதாதா? அன்றிரவே மாடுகள் விட்ட பயணத்தைத் தொடங்கிவிடும். அவர்களும் உற்சாகமாக ஒட்டிச் செல்வர். அவர்களுக்கு உருப்படிகளைப் பத்திரமாகக் கொழும்புக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டால் ஒன்றிற்குப் பத்து ரூபா என்ற வீதம் கிடைக்கும் வழிச்செலவு வேறு, கொழும்புச் செலவினை இறைச்சிக்கடைக்காரர் பார்த்துக் கொள்வார். மூன்றாம் நாள் லொறி மூலமோ, ரயில் மூலமோ கொழும்பால் திரும்பி வருவர்கள். தற்போது கமம், சேனை எல்லாம் வறண்டு கிடப்பதால் இந்த வேலைக்கு ஏக மதிப்பு. ஆனாலும் அவர் எல்லாரையும் இந்த வேலைக்குச் சேர்த்துவிட மாட்டார். நம்பிக்கை, நாணயம், தொழில் வல்லமை பார்ப்பார்.
திரவியத்தை அடிக்கடி நோட்டம் விட்டுப் பார்க்கிறார். அவன் அசைந்து கொடுப்பதாகவில்லை. மனைவி பிள்ளைகளை விட்டிட்டுப் போய்ச் சிறையில் இருக்க நேர்ந்தால்.
நினைக்கவே அவன் மேனி நடுங்கும். மாடுகளின் கதறல் கேட்டது. குறி சுடுகிறார்கள். அதுதான் மாடுகள் கத்துது திரவியம் காதைப் பொத்திக் கொண்டான்.
போயும் போயும் என்ர அருமை மாடுகளான "வெள்ளைப் பூச்சியனையும் நெற்றிச் சுட்டியனையும், கறுத்த வாலனையும் இவனுக்கு வித்தனே? நான் என்ன செய்யிறது. அறாவிலைக்கு வித்து என்ன சுகத்தைக் கண்டன்? அதுகள் இரண்டும் இப்போது இல்ல. வித்ததால வந்த பணமும் இல்ல. வானம் வரண்டு போய், வீடு, வளவு எல்லாத்தையுமே துடைச்சுக் கொண்டிருக்கு நினைவும் வெறுமை பூத்து நெருஞ்சியென சிரித்துக் குத்தியது.
என்ர குழந்தையள் போலையல்லவோ வளத்தன். அதுகளும் என்ர குரலைக் கேட்டாப் போதும், சொன்னபடி கேக்கும். அதுகளை நம்பித்தானே இந்த மூண்டேக்கள் நிலத்தை வைச்சிருந்தன். இனி மழை பெய்தாலும் எப்படி உழவு செய்யப் போறனோ?. அவன் இரு கரங்களாலும் தலையைப் பிடித்துக் கொண்டான். 34/செம்பியன் செல்வன்

உச்சி வெய்யிலில் உலகு இருண்டு வந்ததென அவன் கண்களுக்குப் பட்டது.
உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்க, வரம்பு வழியே விநாசித்தம்பி ஓடிவந்தான். அவன் முகம் வெய்யிலில் கறுத்து வியர்வையில் மெருகிட்டிருந்தது.
இந்த வெய்யிலுக்கை இவன் எங்கையெல்லாம் போய் அலைஞ்சிட்டு வாறான். நாளைக்குக் காய்ச்சல் எண்டு கிடந்தா இவனை ஆர் ஆஸ்பத்திரிக்குக் கொணிடு காவுறது. ஆசுப்பத்திரியிலும் மருந்தே கிடக்கு. காக கொடுக்கிறவைக்குத்தான் அப்போதிக்கரி டாக்குத்தரும் ஊசி போடுகிறார். அவனுக்கு எரிச்சல் மண்டியது.
டேய். . எங்கையெல்லாம் போய்ச் சுத்திட்டு வாறாய். இங்க வாடா" திரவியம் சத்தம் போட்டான்.
விநாசி குடிசைக் கப்புப் பக்கமாக ஒதுங்கினான். திரவியத்துக்கு அவன் நின்ற கோலம் ஆத்திரத்தை மூட்டியது.
‘என்னடா பதுங்கிறா. . வாய்க்க என்ன கொழுக்கட்டையா? நான் கேக்கிறன் எண்ட மட்டு மரியாதை கூட இல்லாமல். படவா. ராஸ்கல். .
அப்பா - வந்தப்பா. 'அவன் தயங்கினான். என்னடா? சொல்லிறதைச் சொல்லித் தொலையன்' நானும் தம்பிராசாவின்ர மகன் காங்கேசனும் கீரைக் கொட்டை தேடிக் காட்டுக்க போனம்' அவன் முடிக்கவில்லை.
சனியனே. தனிய உந்த காடுவழிய போகாத எண்டு எத்தனை தரம் உனக்குச் சொன்னனான். எடி. இஞ்சாய். உள்ள இருக்கிற துவரம் கம்பைக் ’கொண்டு வா. தங்கம் வெளியே எட்டிப் பார்த்தாள்.
‘என்ன செய்யப் போறியள் அவனை? வீட்டில அது அதுகளுக்குத் திறுத்தியா வாய்க்கும் வயித்துக்கும் போட்டா ஏன் அதுகள் காடு மேடெல்லாம்போய் அலையுதுகள் தண்டிக்கப் போன திரவியம், தானே தண்டிக்கப்பட்டவனாகத் தயங்கினான். என்றாலும் மகனின் முன் தன் தோல்வியைக் காட்டினால் நாளைக்கு அவன் மதிக்க மாட்டானே என்ற எண்ணம் மனதில் எழவும் காட்டுக்க போய் என்ன செய்தனியள்' என்றான்.
விநாசித்தம்பிக்கு முகம் மலர்ந்தது. அப்பா. அங்க காட்டுக்க ஒரு குளம். கணக்கத் தண்ணியோட இருக்கப்பா. . அங்க கணக்க அல்லிக்காய் எல்லாம் காய்ச்சு வெடிச்சு. . நாங்க ரெண்டு பேரும் நிறைய புடுங்கிக்கொண்டு வந்தமப்பா
- அப்போதுதான் மகனின் சறத்தைக் கவனித்தான் திரவியம். "சண்டிக்கட்டு கட்டியிருந்தான். அந்தச் சண்டிக் கட்டு நிறைய அல்லிக்காய் நிறைந்து இருப்பது தெரிந்தது.
சர்ப்பவியூகம் /35

Page 26
-அவன் முகம் மலர்ச்சியடைந்தது. - இரண்டுவேளை சாப்பாட்டைத் தாக்காட்டும். -அல்லிக்காய்களை உடைத்தால் 'ரவைக்குறுணல்" போல் அல்லிவிதைகள் சிதறிப்பரவும். அக்கிராம மக்களின் உணவுச் சேமிப்பில் முக்கிய இடம் வகிக்கும். கிராம உள்ளூர்ப் பெட்டிக் கடைகளின் வாசலில் குளங்கள் வற்றும் கலாங்களில் சாக்குச் சாக்காக வரிசையாக காட்சியளிக்கும். -வறுத்துப் பொரியாக்கி நொறுக்குத் தீனியாகவோ, இனிப்புக்கூட்டி லட்டாகவோ. நீரில் அவித்து சோறாகவோ. அல்லிவிதைகள் பயன்படும்.
-மனம் பிள்ளையை மெச்சிக்கொண்டது. அதே வேளையில் ஐயமும் கொண்டது.
இந்த காலத்தில குளமாம், தண்ணியாம். என்ன ஏதும் கனவு கினவு கண்டியா?" என்று விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், அடுத்த கமம் தம்பிராசா தன் மகன் காங்கேசனை இழுத்துக் கொண்டு வந்தான்.
'திரவியம் கேட்டியே சங்கதியை பெடியள் எதையோ கண்டுபோட்டு உளர்றாங்களே
'வா தம்பிராசாண்ணை, அதைத் தான் நானும் விசாரித்துக் கொண்டிருக்கிறன், நீயும் வாறாய். அப்ப என்ன செய்வம்'
'வாவன். . இதுகளோட போய் நாங்களும் அதைப் பார்த்திட்டு வருவம். இங்கயும் என்ன வேல வெட்டியே வீணாப்போகுது' 'சரி நடவுங்களடா, நாங்களும் வாறம். போய்ப் பாப்பம் - சிறுவர் இருவரும் உற்சாகமாக வழி காட்டிச் சென்றனர்.
வழக்கமாகச் செல்லும் பாதையிலிருந்து, ஒற்றையடிப் பாதை கூட இல்லாமல் ஏதோ விலங்குகள் பற்றைகள் புதர்களை விலக்கிச் சென்றதால் ஏற்பட்ட குகை போன்ற பாதை வழியே இருவரையும் அழைத்துச் சென்றார்கள். வழியில் யானை 'இலத்திகள் காணப்பட்டன. திரவியம் தயங்கினான். தம்பிராசா சென்று அதன் மேல்தான் தன் உள்ளங்காலை மெதுவாக வைத்தான். சிரித்துக்கொண்டே அந்த இலத்தியை உழக்கிக்கொண்டு வந்தான். இலத்தி பொடிப்பொடியாக உதிர்ந்தது.
மச்சான் அது எப்பவோ போட்ட இலத்தி, சூடாறிப்போய்.எப்பவோ வந்துபோன யானையின்ர இலத்தி. - விளக்கம் சொல்லிக் கொண்டு நடந்தான். விர்ரென்ற தேனீ இலையான் ஒன்று திரவியத்தின் முகத்தின் முன்னால் வட்டமிட்டு ரீங்காரித்தது.
அட சை. . திரவியம் முகத்திற்கு முன்னால் கைகளை ஆட்டினான். தேனி எழும்பிப் பறந்து சென்றது. தம்பிராசா திடீரெனப் பரபரப்புக் கொண்டான்.
மச்சான், நீ விசர் வேலை பாத்துக் கொண்டாய். அது தேனீயடா. இப்ப பார். காட்டு மரமெல்லாம் பூத்துக் கிடக்கு. இப்பதான் தேன் எடுக்கிற é5fT6)L), 36/செம்பியன் செல்வன்

உந்த தேனீ போற இடத்தில நிச்சயம் தேன் இருக்கும். வா. வா. பொடியங்கள் போற பாதையில தான் அதுவும் பறக்குது. வா. அது எந்த மரத்தைப் போய் அடையுது எண்டு பாப்பம்
சிறுவர்களுடன்,பெரியவர்களுக்கும் இந்த வனவேட்டை உற்சாகமான பொழுது போக்காக அமைந்தது.
தேனி மெல்லிய நெட்டையான பாலை மரத்தின் கவரில் இறங்கியது. தம்பிராசா அதனை கூர்ந்து கவனித்தான்.
மச்சான். இந்த மரத்தில நிச்சயம் தேனிருக்கும் என்றான். ‘எப்படி?’ என்பது போல் திரவியம் அவனைப் பார்த்தான். தம்பிராசா மரத்தினடியில் போய் சுற்று முற்றும் பார்த்தான். குனிந்து ஒரு ஆமானமான கல்லை எடுத்தான்யாலைமரத்தின் அடியில் ட்ொக் டொக்" எனச் சப்தமிடப் பெரிதாகத் தட்டினான். தட்டிய இடத்தில் காதைக் கொஞ்ச நேரம் வைத்து அமைதியாகக் கேட்டான். அவன் உதட்டில் புன்னகை மிளிர்ந்தது. சிறுவர்கள் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவன் கண்ணசைவால் திரவியத்தைக் கூப்பிட்டு, தன்னைப்போல் காதை வைத்துக் கேட்கும்படி கூறினான். திரவியம் காதை வைத்தான். முதலில் ஒன்றும் புரியவில்லை. சில விநாடிகளின் பின் மெல்லிதாக ஈக்கள் இரையும் சப்தம் கேட்டது. அவன் மரத்தை விட்டு நீங்கியதும் சிறுவர்கள் ஓடிச்சென்று காதை வைத்து உற்றுக் கேட்கலாயினர்.
தம்பிராசா அந்த மரத்திற்கு அடியில் சில கற்களைக் குவித்து அடையாளமிட்டான். மச்சான் திரும்பி வரேக்க எந்த மரம் எண்டு அடையாளம் காணத்தான்' என்றான்.
சரி சரி கேட்டது போதும். நீங்க போய்ப் பாத்த இடத்தைக் காட்டுங்க" என்று திரவியம் அதட்டினான். சிறுவர்கள் உற்சாகம் கொண்டவர்களாகப் பற்றைப் புதர்களை விலக்கிக்கொண்டு நடந்தவர்கள், திடீரென ஓரிடத்தில் நின்றார்கள். அந்த இடத்தைக் கண்ணுற்ற இருவரின் விழிகளும் ஆச்சரியத்தால் விரிந்து மலர்ந்தன.
இளம் காடுகளால் சூழப்பட்டு, கன்னி கழியாத குமரிப்பெண் போல மரநிழலின் குளுமையில் அந்தக்குளம் அமைதி கண்டிருந்தது. ஒரு காலத்தில் யாரோ தனிப்பட்டவர்கள் Tமரிக்கப்பட்டு வந்து கைவிடப்பட்ட குளம் எனத் தெரிந்தது. மண் பகு, மடை அனைத்தும் ஆங்காங்கு சிதைந்து உடைவுற்ற மண்பாண்டம் போல விளங்கியது. அவர்கள் நின்ற இடத்தில் அகலமாகப் பரந்து காணப்பட்ட குளம் அவர்கள் பார்வையிலே முன்னாகச் சற்றுக் குறுகிச் சென்று, மீண்டும் கிழக்காகத் திரும்பிப் பரந்திருந்தது. அவர்கள் நின்றிருந்த பக்கமே குளத்தின் ஆழமான பகுதியாக இருக்க வேண்டும். வடக்கேயும், கிழக்கேயும் குளத்து நீர் வற்றி புல் நிலமாகப் பரந்திருந்தது. கோரைப் புற்கள் தலைநிமிர்ந்து பச்சைச் சிரிப்பில் மயங்கின.
சுப்பவியூகம்/37

Page 27
சிறுவர்கள் கோரைக் கிழங்குக்காக ஓடினார்கள். தண்ணிரைக் கண்டதும் திரவியத்தால் சும்மா இருக்க முடியவில்லை. மச்சான் வடிவா ஒரு போகம் செய்யத் தண்ணி காணும்' என்றான்.
‘எங்க செய்யிறது? எப்படிச்செய்யிறது?’ என்றான் தம்பிராசா. மச்சான் குளத்தின் வடக்குப் பகுதியை உழுது பதப்படுத்தி இந்தத் தண்ணியை வாய்க்காலாகப் பாய்ச்சினமெண்டால்
குளத்திலேயே பயிர் செய்யப் போறியா? 'இதொண்டும் அதிசயமில்ல. உப்பிடிக்கன இடத்தில செய்யிறதுதான். ஆனா இந்த விசயம் ஒருத்தருக்கும் தெரியக்கூடாது. தெரிஞ்சாப் போச்சு
அதுசரி. . உழுகிறதுக்கு என்ன செய்யிறது. கலப்பையை நீயும் நானுமா இழுக்கிறது. மாட்டைத்தான் வித்துச் சாப்பிட்டுட்டமே!
திரவியத்துக்கு அப்போதுதான் மாடுகள் பற்றிய பிரச்சினை உறைத்தது. பரிதாபமாக தம்பிராசாவை பார்த்தான். தம்பிராசா தலையைத் தடவி விட்டுக்கொண்டான். திடீரெனக் குளத்தின் வடபகுதியிலே ஹூங்கார முக்கார முழக்கம் கேட்டது. சிறுவர்கள் ஓடிவந்தார்கள். எல்லாரும் மரத்தின் பின்னால் போய் ஒளிந்து கொண்டார்கள்.
நான்கைந்து காட்டெருமைகள், குளுமாடுகள் குளத்தை நோக்கி ஓடி வந்தன. முன்பு வளர்ப்பு மாடுகளாக இருந்து, காட்டுக்குள் ஓடி குளுப்பத்தின மாடுகள் பிடித்தால் வயலுழப் பழக்கிறது கஷ்டமல்ல.
தம்பிராசாவின் முகம் மலர்ந்தது. மச்சான் நீ ஒண்டுக்கும் பயப்படாத, பொடியங்களோட இங்க வந்ததும் ஒரு நன்மைக்குத்தான். எங்கோ அடிக் காட்டுக்க கிடக்கிற குளுமாடுகள் தண்ணித் தாகத்தில இந்தக் குளத்துக்கு வந்து போகுதுகள். இதுகளில ஒண்டு ரெண்டை மட்டும் வளைச்சுப் பிடிச்சிட்டா. என்றவாறு திரவியத்தைப் பார்த்தான்.
அது முடியிற காரியமே.? இந்த குளுமாடுகளைப் பிடிக்கிறதெண்டா, மாடுகளைப் பிடிக்கிறமோ இல்லையோ அதுகள் நிச்சயம் முதலில எங்கட
உயிரைத்தான் பறிச்சுக் குடிக்குங்களோ தெரியாது' என்று கவலையோடு
பார்த்தான் திரவியம்.
மச்சான் எனக்கும் உதில கொஞ்சப் பழக்கமுண்டு. ஊருக்குள்ள இருக்கிற எருமைகளில முக்கால்வாசி இப்படிக் காட்டுக்க புடிச்சு வந்ததுகள்தான். அதுக்கு ஒரு பழகின எருமையிருந்தாப் போதும். அதின்ர குரலையும் அதனையும் காட்டியே மற்ற குளுமாடுகளை வளைச்சுப் பிடிச்சிடலாம். ஆனா எங்களுக்கு அதுக்கும் வழியில்ல, நாங்களே எப்பிடியும் பிடிச்சுப் பாப்பம். வா வீட்ட போவம். எல்லா ஆயத்தத்தோடும், கயிறு, கோடலி எல்லாத்தோடும் திரும்பிவருவம்
- திரும்பும்போது அவர்கள் நடையில் வேகம் கண்டிருந்தது. 38/செம்பியன் செல்வன்
ഷ്ട്

2 அடுத்த நாள் புலரிப்பொழுதிலேயே தங்கராசாவும், திரவியமும் காட்டிற் குள் நுழைந்து கொண்டிருந்தனர். தங்கராசாவின் தோளிலே தேடாக்கயிற்று வளையங்கள் சுமையாக அழுத்த, கைக்கோடரியுடன் முன்னே நடக்க, திரவியம் இரண்டு சுரைக்குடுவையுடனும், ஒரு சாக்கு மூட்டையுடனும் பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.
முதல் நாள் அடையாளமிட்ட பாலை மரத்தை அண்மியதும் தங்கராசாவின் நடை தடைப்பட்டது. தேடாக்கயிறுகளை கீழிறக்கினான்.
'நெருப்புப் பெட்டியும், கொஞ்சம் கந்தல் துணியும் தா" திரவியம் தனது மூட்டையை அவிழ்த்து எடுத்துக் கொடுத்தான். தங்கராசா இரண்டையும் எடுத்து மடியில் கட்டிக் கொண்டு, கோடரியை வலப்பக்க இடுப்பில் செருகிக் கொண்டு பாலையில் விறு விறுவென்று ஏறிக் கவரை அடைந்தான்.
தேன் பொந்திற்கு ஒரு சாண் கீழாக, கைக் கோடரியால் பதமாக வெட்டி ஓட்டை தயாரித்தான். கோறை பாய்ந்த மரமாதலால் அது சுலபமாக இருந்தது. அந்தக் கோறைக்குள் துணியைத் திணித்து நெருப்பு மூட்டினான். புகை எழும்பத் தொடங்க வேகமாகக் கீழிறங்கினான்.
பாலைக் கவரிலிருந்து தேனீக் கூட்டம் கரும்புகையென வெளிக்கிளம்பிப் பறந்தன. சிறிது விநாடியின் பின் தேனீக்கள் முற்றாகக் கலைந்து விட்டன என்றதன் பின் மீண்டும் தங்கராசா மரமேறிப் பொந்திற்குள் கைவிட்டான்.
தேன்வதை கையோடு வந்தது. எந்தவித சேதாரமுமில்லாமல் அவன் தேன் எடுத்து வந்த லாகவம் திரவியத்தை மெய் சிலிர்க்க வைத்தது. இருவருமாகச் சுரைக்குடுவையில் தேனைச் சேகரித்துக் கொண்டு குளத்தை அண்மிய போது பொழுது உச்சிக்கு வந்திருந்தது.
மச்சான் நல்ல நேரத்திலதான் வந்து சேர்ந்திருக்கிறம். இனித்தான் குளுவான்கள் வெப்பம் தாங்காமல் தண்ணி குடிக்க இங்க வரும்.
அவர்கள் தங்களின் சுமைகளை, குளக்கரையோரமாக கூந்தல் வேர் பரப்பியும், சயனித்தும் பரந்து கிடந்த மருதமரத்தடியில் இறக்கினார்கள். சுற்றுவெளி எங்கும் வெறுமை பூத்துக் கிடந்த து. நேரம் சென்று கொண்டிருந்தது. திடீரெனத் தூரத்தில் புயல் கிளம்புவதைப் போல் புழுதி எழ, குளுமாடுகள் கூட்டம் விரைந்து வந்து கொண்டிருந்தது.
தம்பிராசா பரபரத்தான். மச்சான், அதுகள் கூட்டமாக வரேக்க பிடிக்கிறது கஷ்டம். இப்ப எங்களைக் கண்டாலும் எங்களுக்குத் தான் ஆபத்து. கவனமாக மரத்துக்குப் பின்னால மறைஞ்சு கொள்'
ப்ப்பவியூகம் /39

Page 28
குளுமாடுகள் வந்தன. புல்லை அசைபோட்டன. அழுந்தி அழுந்தி எழுந்து சேற்றில் புரண்டு.
- அவர்கள் பொறுமையுடன் காத்திருந்தார்கள்.
- சூரியன் காட்டு மரங்களைத் தடவித் தடவித் சென்று சரிந்து கொண்டிருந்தான். குளுமாடுகள் ஒவ்வொன்றாகக் குளத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தன. ஆனால் அந்த ஒற்றை குளுமாடு மட்டும் எதனையும் கவனியாமல் குளத்தைச் சேறாக்கித் தனிமையில் இனிமை கண்டு கொண்டிருந்தது. அது குளத்தை விட்ட வெளியேறுகையில் எல்லா மாடுகளும் காட்டிடையே மறைந்துவிட்டன. ஒன்றையொன்று நோக்கி, பிறையாக வளர்ந்த கொம்புகளுடன் அது சிலிர்த்து எழுந்து வெளியேறிய போது, அதன் தாடை,கால்களின் வலிவு தெரிந்தது. தங்கராசாவுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
மச்சான் உருப்படி ஆமானதுதான், கிடைச்சால் என்று கிசு கிசுத்தபடி மரத்தை விட்டு வெளியே வந்தான். மாடு என்ன எதுவென்று அறியமுன் தேடாக்கயிறு வானத்தில் வட்டமிட்டு எழுந்து, அதன் கழுத்தில் போய் விழுந்தது. அதே வேளையில் அவன் புல் தரையில் உருண்டுகொண்டிருந்தான். அவன் கயிற்றை விடவில்லை. திரவியம் பின்னால் ஓடிச் சென்று கயிற்றைப் பற்றினான். இருவர் பிடியிலும் மாடு திணறியது. கயிற்றை அப்படியே கொண்டு சென்று ஒரு மரத்தில் சுற்றிவிட்டு, அதன் முனையை திரவியம் பிடித்திருக்க, தம்பிராசா இன்னொரு தேடாவளையத்தை எடுத்துவந்து அதனை நோக்கி ஓடினான். மாடு ஹுங்காரத்தொனியுடன் மண்ணைக் காலாலும், கொம்பாலும் கிளறிக்கொண்டிருந்தது.அமானுஷ்யப் பிரதேசமே ருத்ர போராட்டத்தால் அதிர்ந்தது. தம்பிராசா மாட்டிற்குப் பாய்ச்சல் காட்டிக்கொண்டே நான்கு கால்களையும் எப்படியோ கயிற்றால் பிணைத்துவிட்டான்.
எப்படியோ ஒரு மரத்தினடியில் அதனைக் கட்டிப்போட்ட போது அவர்கள் உடலே இற்றுவிட்டது போலிருந்தது. ஆனால் உள்ளத்திலிருந்த மகிழ்ச்சி முகத்தில் மலர்ச்சி காட்டியது.
பசி வயிற்றைக் காந்தியது.
'சாப்பிடுவமா? - இருவரும் குளக்கரையில் அமர்ந்து உணவுப் பொட்டலத் துணியைப் பிரித்தார்கள்.
வட்டமான, தோசைக்கல் அளவில், குண்டாளமான இரண்டு குரக்கன் ரொட்டிகள். அதுதான் கிராமத்தவர்கள் காட்டிற்கோ, வேட்டைக்கோ செல்லும் போது கொண்டுபோகும் உணவு. குரக்கன்அடை என்பார்கள். அதனைத்தின்று தண்ணீரும் குடித்தால் போதும் காட்டு பகுதியின் வெம்மை இதனால் அடங்கும்
மச்சான். இண்டைக்கு நாங்கள் இதைப்பிடிச்சது பெரிய வேலையில்ல. ஏன் தெரியுமே, மாடுகள் வழக்கம்போல சுதந்திரமாக வரும் ஆபத்தை 40/செம்பியன் செல்வன்

உணராமல் நடமாடியதால் பிடிச்சிட்டம். ஆனா. போன குளுவான்கள் தங்கட ஆாள் ஒண்டு குறையுது எண்டு நிச்சயம் திரும்பும். அப்ப இன்னொண்டைப் பிடிப்பதிலதான் இருக்கு விசயம். ‘எப்ப வரும்?" இரவு வரலாம். விடிஞ்சாப் பிறகும் வரலாம். அதோட கட்டிப் போட்டிருக்கிற குளுவான்ர சத்தமும் அதுகளைக் கூட்டிவிடும்
அப்ப என்ன செய்யிறது? இரவு இங்க ஒரு 'சிறாம்பி கட்டி அதில தங்க வேண்டியதுதான். கெதியனச்சாப்பிடு, வசதியா ஒரு சிறாம்பி கட்டவேணும்
-அவசரமாக உணவை முடித்துக்கொண்டு எழுந்தனர். வாகான இரண்டு மரங்களிடையே தங்களின் 'சிறாம்பி எனும் பரணை அமைத்து முடித்த போது இருட்டிவிட்டது.
கட்டிப்போட்ட குளுமாட்டிற்குப் புற்களை அரிந்துகொண்டு வந்து போட்டார்கள். தங்கள் சிறாம்பியின் நேர் கீழாக காட்டு மரங்களை அடுக்கி நெருப்பு மூட்டினார்கள்.
இருவரும் சிறாம்பியில் ஏறிப் படுத்துக் கொண்டார்கள். இரவு முழுவதும் குளுமாட்டின் சிறுநீரின் ‘கர் சப்தமும் அது நடமாடுவதால் எழும் ஓசையும் இடைவிடாது கேட்டுக்கொண்டிருக்க இருவரும் அறிதுயிலிலாழ்ந்து கொண்டிருந்தனர்.
நடு நிசியின் போது பலத்த சப்தம்- பற்றைகள் முறிவடைவதைப் போல் எழவும் விழித்தெழுந்தார்கள். திரவியம் பயத்தால் உறைந்து போனான்.
ரோச் எங்க?" குளுமாட்டின் பக்கமாக பலத்த சந்தடி கேட்டது. ரோச்சின் ஒளி வெள்ளத்தில் பன்றிக் கூட்டம் ஒன்று புற்றரையை கிளறிக்கொண்டிருக்க அருகே கட்டியிருந்த குளுமாடு மிரண்டு ஹுங்காரம் செய்து திணறிக் கொண்டிருந்தது.
தம்பிராசா துணிப் பந்தொன்றை நெருப்பு மூட்டி பன்றிகளிடையே எழிந்தான். பன்றிக்கூட்டம் சிதறி ஓட, நெருப்பால் மிரண்ட குளுவானின் வாங்காரம் அந்த அந்தகாரத்தைத் துளைத்தது.
தூங்காத இரவாக விடிந்தது. திரவியத்திற்கு அனுபவம் புதிதாக இருந்ததால் புத்துணர்ச்சி இருந்தது. குளுமாடு அமைதியாக அசைபோட்டுக் கொண்டிருந்தது.
அவர்கள் எழுந்து காலைக் கடனை முடித்து, உணவையும் டnண்டுவிட்டு கீழிறங்கி நடந்து திரிந்தார்கள். அவர்களே அறிந்திருந்த பெயர் தெரியாத காட்டுப் பழங்களைப் பறித்துண்டார்கள்.
நேற்றைய தினம் போலவே குளுமாட்டுக் கூட்டம் ஓடி வந்தது. வழியில் கட்டிப் போட்டிந்த குளுவான் அருகே நின்று சுற்றிச் சுற்றி வந்தது. காது எச்சரிக்கையான விழிகளை நாற்புறமும் சுழற்றி ஹுங்கார முழக்கமிட்டன.
சர்ப்பவியூகம் /41

Page 29
இவர்கள் இருவரும் சிறாம்பியில் ஏறி மரக்குழைகளிடையே பதுங்கிக் கொண்டனர். அவைகளின் பார்வையில் பன்றிகள் பறித்த குழிகளே பட்டன. சில அவற்றை முகர்ந்து கிளறி எறிந்தன. சில குளத்தை நோக்கி நகரவும், எல்லாம் ஓடிச்சென்று குளத்தைச் சேறாக்க முனைந்தன.
திரவியத்துக்குப் பரபரப்பாக இருந்தது. தம்பிராசா அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் சென்று கொண்டிருந்தது.
குளுவான்கள் ஒவ்வொன்றாக குளத்தை விட்டு வெளியேறிக் கட்டப்பட்ட காளையைப் பார்த்துவிட்டு தயக்க நடையுடன் போய்க்கொண்டி ருந்தன. ஆனால் ஒன்று மட்டும் போகாமல் தனித்து அதனையே முகர்ந்தும், உராய்ந்தும். முகத்தோடு முகம் வைத்தும் என்ன பேசினதோ? ஆறுதல் சொன்னதோ?
திரவியத்துக்கு தாங்க முடியவில்லை. உருக்கமாக இருந்தது. 'ஏன் மச்சான் போகாம இருக்கு? இதின்ர சோடி போல. அதுதான் நிற்குது. உது லேசில போகாது. உதைப் பிடிக்கிறதுதான் வேலை. ஆனால் கோபமாக இருக்கும். நேற்று நல்ல வேளை காளையைப் பிடிச்சிட்டம். இது அதின்ர பிணைதான். அதுதான் காளையோடு முகந்தது.
தம்பிராசா கீழிறங்கினான். அவனது தேடாக்கயிறு அதன் மேல் விழுந்தது. கயிறு சோர்ந்தது. குளுமாடு அவனைப் பார்த்தது. அவனைத் துரத்தத் தொடங்கியது. தம்பிராசா நேராக ஓடாமல் வளைந்து வளைந்து ஓடி, அதன் பின்புறமாக ஓடத் தொடங்கினான். குளுமாடால் உடனடியாகத் திரும்ப முடியாது. அது வட்டமடித்துத் திரும்ப முயலுகையில் தம்பிராசா நிலைமாற்றி அதன் பின்புறத்துக்குப் போய்விடுவான். அது திரும்ப முயற்சிப்பதும், தம்பிராசா அதற்குப் பாய்ச்சல் காட்டுவதுமாக இருந்தான். அவன் நன்றாகக் களைத்துப் போனான். ஒரு திருப்பத்தின்போது தம்பிராசா கத்தினான்.
மச்சான் கயிற்றைக் கழுத்தில எறி திரவியம் பயத்தால் உதறிக் கொண்டே கயிற்று வளையத்தை அதன் கழுத்தை நோக்கி எறிந்தான். நல்ல சுருக்கு, இறுகியது. மாட்டின் மூர்க்கத்தனம் அதிகரித்து, பலமாக இழுத்தது. சிறாம்பியிலிருந்து திரவியம் கயிற்றுப் பிடியோடு விழுந்து, தரையில் உருண்டு அரையலானான்.
குளுமாட்டின் கவனம் திரும்பியதும் தம்பிராசா தனது கயிற்றை அதன் கால்களிடையே வீசினான். பின்னங்காலில் அந்தச்சுருக்குப் போய் இறுகியது. இதற்குள் எழுந்துவிட்ட திரவியம் மாட்டின் கயிற்றை முன்னாலிழுக்க, தம்பிராசா கால் கயிற்றை பின்னால் இழுக்க மாடு நிலைத்து ஹுங்காரமிட, கட்டியிருந்த மாடும் ஹுங்காரமிடத் தொடங்கியது. இரு குளுவான்களையும் ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கட்டினர்.
4 *ரெம்பியன் செல்வன்

திரவியம் சிறாம்பியிலிருந்து விழுந்ததாலும், சருகுப் புதர்களில் விழுந்ததால் விலாவில் சிறிதளவே நோ கண்டிருந்தது. புறங்கைகள் உராய்வு ஏற்பட்டு இரத்தம் வழிந்தது தம்பிராசாவின் தோள் மூட்டுக்களெல்லாம் கழன்று விட்டதென வலி கணிடிருந்தது. இருவருக்கும் மகிழ்ச்சியால் சிரிப்புவெடித்துக்கொண்டு வந்தது.
இரண்டு குளுமாடுகளையும் ஒட்டிவந்து, திரவியத்தின் மாட்டுக் கொட்டகையில் கட்டிவிட்டுப் படுக்கும்போது இரவாகி நீண்ட நேரமாகிவிட்டது. அப்போதும் வேலாயுதத்தாரின் மாட்டுப் பட்டியில் விளக்கு வெளிச்சம், ஆட்கள் நடமாட்டம் காணப்பட்டது.
3 முதனாள் தூக்கமின்மையும், மாடுகளின் போராட்டத்தால் ஏற்பட்ட உடல் அசதி, சோர்வு என்பவற்றால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை மனைவியின் கூச்சல் தூக்கி எறியப்பட்டதென எழுப்பியது.
இங்க வாங்கோவன்! இராத்திரி கொண்டுவந்த மாடொண்டையும் காணேல்ல. .
எந்தப் படுபாவியோ இரவோடு இரவாகக் கொண்டு போட்டான். திரவியம் ஓடிப்போய்ப் பார்த்தான். புழுதியில் மாடுகளின் தடயமும், மனிதரின் காலடிச் சுவடுகளும் தெரிந்தன.
வேலாயுதத்தரின் மாட்டுப்பட்டியை எட்டிப் பர்த்தான். ஒன்றுமேயில்லை. இரவு கள்ளமாக மாடுகள் கடத்தப்பட்டிருந்தன. வெளியே ஓடிவந்து பாதையைப் பார்த்தான். மாடுகளின் குழம்படிகள் குழம்பிப்போய் பாதை நீண்டதென தொலைவு தூரம்வரை வெறிச்சிட்டிருந்தது. அவனுக்கு ஏதோ புரிந்தது. அவனது ஆக்ரோஷ வெள்ளம் ரத்த நாளங்களைத் துடிக்கச் செய்தன.
உள்ளே ஓடிச்சென்று கைக் கோடரியை எடுத்துக் கொண்டு ஓடினான். மாடுகளின் குளம்படிகள் வழிகாட்டிச் சென்றன.
மச்சான் நில்லு. நேற்று நடத்தியது போராட்டமில்ல. இண்டைக்கு நடக்கப் போறதுதான் பே 'ம்' என்ற குரல் கேட்டுத் திரும்பினான். தம்பிராசா தன் கைக்கோடரியுடன் ஓடிவந்து கொண்டிருந்தான்.
அவன் பின்னே புழுதியே மேகங்களாகத் திரண்டதென மக்கள் கூட்டம் வந்து கொண்டிருந்தது.
- மல்லிகை ஆகஸ்ட் 1979

Page 30
タ
eズ乞キ<三ズでつの乙ベ李ジ <ヌーラのタニーキススキラニ/ス三っ
44/செம்பியன் செல்வன்
பொழுது புலர இன்னும் நேரமிருந்தது.
அவன் இரவு முழுவதும் தூங் காமல், இரவைப் பகலாக்கி மன்மதனாய் லீலா விநோதங்களிலீடுபட்டதால், இரவின் விடிதலில் எந்தவித ஆர்வ, ஆரவாரமான எதிர்பார்ப்புமில்லை. இரவின் எழுந்த இன்ப நினைவுச் சுரங்கள் நெஞ்சில் அலையாக இசைமீட்க, அவன் தான் தங்கியிருந்த ஹோட்டல் மாடியின் கைப்பிடிச் சுவரில், முழங்கைகளை ஊன்றியபடி தெருவை எந்தவித சிந்தனைகளுமற்ற விழிகளினால் மேய்ந்து கொண்டிருந்தான்.
.இடையிடையே அவன் விழி, அவளை வீட்டிலே விட்டுவிடச் சென்ற சுரேன் திரும்பிக்கொண்டிருக்கின்றானா என்ற எதிர்பார்ப்பில் தெருவின் கோடிவரை பார்வையோடி, பூமராங்காய்த் திரும்பிக் கொண்டிருந்தது.
ஆரவாரப் பாதையாய்- பகல் வேளைப் பொழுதில் ஏகாதிபத்தியக் குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கும் தெருவும், எதிலோ போய் மயங்கியதுபோல், அமைதி உறைந்த நிலையில் சோம்பிக்கிடந்தது.
~
 
 

மனிதர்கள். மாடுகள். வண்டிகள். லாரிகள். ஜீப்புகள். பஸ்கள்.` என ஆரவாரத்தின் சிற்றேவல்கள் எங்கேபோய்ப் பதுங்கிக்கொணப்டனவோ?.
சுரேன் ஏன் வரவில்லை? அவளை விட்டு. விட்டு வர ஏன் இத்தனை நேரம்? போகும்போது அவள் அவனுடன் ஏதாவது சண்டை பிடித்து, விசயம் ஏதாவது ரசாபாசமாகியிருக்குமோ? அப்படியென்றால் நாங்களும் நீண்டநேரம் காலம் கழிப்பதில் வேலையில்லை.?
-அவள் விழிகள் வலைகளென தெருவை அரித்தன.
சுரேனின் சுவடுகளே இல்லை.
அவன் திரும்பி, உட்புறமாக தாங்கள் தங்கியிருந்த அறையைப் பார்த்தான். கட்டிலில் ட்ரவுசரில் அலங்கோலமாக, பொத்தான்கள் சரிவரப் பூட்டப்படாமல் கனகு உருண்டிருந்தான். அவனைப் பார்க்கும்போது அவனுக்குச் சிரிப்பு வந்தது.
'கடைசியாக அவன் தானே'
‘என்னதான் குடித்தாலும், குணங்கெட்டுத் திரிந்தாலும் நிதானந் தவறமாட்டன் நான். அதிலும் ஒரு ஒழுங்கு. அமைதியைக் காப்பாற்றிவிடுகிறவன் நான் என்ற எண்ணங்கள் இறுமாப்பாய் நெஞ்சில் உறைய பார்வையை மீண்டும் தெருவிலே எறிகிறான்.
தூரத்தே -
நம் நாட்டவரால் பிற நாட்டினருக்காக இரவும் பகலும் சேவை செய்வதற்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட, ஆடம்பரமான நடுநிசிக் ஹோட்டல் ஒன்றின் உச்சித்தம்ப நியான் விளக்குகள். யாருக்காகவோ எதற்காகவோ. நேரம் கெட்ட வேளையிலும். வேளைகளை எதிர்பார்த்து கண்கொட்டிக் கொட்டி விழித்திருந்தன.
ஒருநாளைக்கு அதில போயும் தங்கிப்பார்க்க வேணும். காசு கொஞ்சம் கூடத்தான். அதுக்காக அனுபவிக்க வேண்டியதுகளை அனுபவிக்காமல் காசை மலைபோலச் சேர்த்து வைச்சு என்ன புண்ணியம்?
-அவன் பார்வை மெல்லக் கீழிறங்கியது.
அப்பிரதான வீதி வடக்காகச் சென்று, தெருவே முடிவதுபோல் மடங்கி, கிழக்குநோக்கிச் செல்லும் வளைவில்- நடைபாதை கொஞ்சம் ஒதுக்குப் புறமாகவும், அகலமாகவும் அமைந்திருந்தது. நடைபாதையில் மறுபுறத்தே எழுந்து, உயர்ந்து நின்ற சுவர்களுக்கு அப்பாலிருந்த மகோகனி மரங்களின் ஒளி நிழல்கள் இருளெனப் படர்ந்திருந்தன. அவ்விருளை விரட்ட தெருமூலையி லுள்ள தெருவிளக்கு ஒன்று முயன்று தோல்வியுற்றுக்கொண்டிருந்தது. அந் நடைபாதையிலே, ஆண், பெண்ணென்ற வேறுபாடற்று உருவங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி உருண்டு புரள்வதும் தெரிகின்றது.
சாக்கடை நீர் தெறிக்காதவர்கள்/45

Page 31
நடைபாதைக்குச் சற்றுத் தள்ளியமைந்த இடைவெளி கூடிய பாகத்தில் பொது மலசலகூடம் ஒன்று- அந்த நடைபாதை வாசிகளுக்கே உரித்தான கட்டிடம் என்ற பெயரில் விளங்குகின்றது. அதனருகேயுள்ள தெருக்குழாயில் நீர் கொட்டிக்கொண்டிருக்கிறது. அதன் அருகே படுத்திருந்த தெருநாயொன்று திடீரென்று எதையோ துரத்துவது போன்ற எண்ணத்தில், எழுந்து குலைத்துவிட்டு, வேகமாகச் சிறிது தூரம் ஓடிச்சென்று, அதே வேகத்தில் மீண்டும் ஒடித்திரும்பி தெருக்குழாயை ஒருதரம் வலம்வந்து குழாயினருக்கே சென்று தனது இடதுகாலை உயர்த்தி, தனது இயற்கை உபாதையை தீர்த்துவிட்டு பழையபடி தன்னிடத்திலேயே படுத்துவிட்டது.
-நாயின் சேட்டை நடைபாதையிலே படுத்திருந்த சிலரின் உறக்கத்தை கலைத்துவிட்டது என்பதனை அவர்களின் புரளலும் போர்த்திருந்த துணியை இழுத்துச் சரி செய்வதும் காட்டிவிட்டது. யாரோ இருவர் எழுந்து மலசலகட பக்கம் போகிறார்கள்.
யாரவர்கள்?- என்ற சிந்தனையோ தேவையோ இல்லாமல், அவன் அத்திக்கை நோக்குகிறான். தெருவிளக்கின் மெல்லிய ஒளி, அவர்களில் விழுந்து புறவாயிலின் ஒளிச்சிதறலால். கருநிழலென ஆணும் பெண்ணும்.
ஆதாமும் ஏவாளுமா? அவன் மனதிலொரு துடிப்பு. கிளுகிளுப்பு. அதைப் பார்ப்பதிலுமா இத்தனை வேட்கை-அவர்கள் என்ன செய்கிறார்கள்.? என்னென்ன செய்வார்கள்? -ஆணுருவம் தனது நெற்றியைக் கொண்டு சென்று மற்றதன் நெற்றி யில். அதன் ஒருகரம் இடுப்பை வளைக்க. மறுகரம் தோள்வழியே இறங்கி.
-ஆ. என்ன ரொமான்ஸ். -பெண்ணுருவம் ஏதோ முணுமுணுக்கிறது. தெருவிளக்கைக் காட்டுகிறது. அவன் ஏதோ சொல்லுகிறான். யார் இந்தநேரம் வரப்போகிறார்கள் 6T6ipr?
-மீண்டும் அவன் முனைய. மறுப்பு. அதுவும் ஒரு ஊடல்தானோ? -பெண் உருவம் அவனைக் கைகளால் தள்ளிவிட்டு, தன்மார் பகங்களைக் கைகளால் மறைத்தபடி மலசலகூடத்தின் படிதாண்டி உள்ளே ஒடுகின்றது.
ஓ! ஆடைகள் என்னவாயின? இனி என்ன நடக்கும்? நெஞ்சப்பரப்பில் எறும்புப் படையின் ஊர்தல். ஆ! என்ன ஏமாற்றம் -ஆர்வத்தின் ஆரவாரம் அடங்கிய ஆத்திரத்திலும், மனதில் அருவருப்பு எழுகிறது. 46/செம்பியன் செல்வன்

-அவன் தன் பார்வையைத் தயக்கத்துடன் திருப்பினான். சீ! எவ்வளவு அருவருப்பானதுகள். அசிங்கப் பிறவிகள். - "சுரேன் இன்னுமா வரவில்லை' - அவனுக்குப் பயமாக இருந்தது. பார்வை மீண்டும் தெருவிற்கே ஓடியது.
ஹோட்டலின் முன்னே தெருவில் ஈரம் பரவுவது தெரிகிறது. எட்டிப் பார்த்தான். ஹோட்டலின் முன் தெருவில் கீழாக ஓடிக்கொண்டிருந்த சாக்கடை நீர் ‘எங்கோ எதிலோ ஏற்பட்ட மழையால், தெருவின் மீது இடப்பட்டிருந்த இரும்புவலைப் பின்னல் தகட்டின் வழியாகப் பெருகி தெருவில் நதியமைக்கிறது. அதன் துர்க்கந்தம் நாசியைத் துளைக்கிறது.
ட்ரிங். டக். ட்ரிங். டக். ட்ரிங்.டக். -கீழே யாரோ டெலிபோன் செய்யும் ஓசை கேட்கிறது. அவன் கைப்பிடிச் சுவரின் மறுமுனையில் போய் நிற்கிறான்.
- சுரேன் உனக்கு என்ன நேர்ந்துவிட்டது. அவள் ஏதாவது தகராறு செய்கிறாளா?
-தெருவில் ஓசை கேட்கின்றது. எட்டிப் பார்க்கிறான். ஹோட்டலின் முன்னே ஒரு லொறிவந்து நிற்கிறது. திமுதிமுவெண்று ஒரு கூலித் தொழிலாளர் கூட்டம் தரையில் குதிக்கின்றது. ஒவ்வொருவரின் கைகளிலும் கடப்பாறை. அழுக்ககற்றும் கருவிகள்.
சாக்கடை திறந்து - (அவன் நாசியைப் பொத்திக்கொண்டு) உழைப்பின் உருவங்கள், அதிலிறங்கி (அவன் மனம் சுளித்து அருவருப்படைய, கண்களை மூடிக்கொண்டு)
அவன் தன் அறைக்குள் நுழைகிறான். அவன் மண்டையில் அழகிய திரைக்குள் மறைந்திருந்த படி இடித்துவிடுகிறது.
அவன் படுக்கையின் ஒரு புறத்தே, கால்களைத் தரையில்பட முதுகையும் தலையையும் கட்டிலில் கிடத்தியவாறு தலைக்கு வலைபின்னிய விரல் கரங்களை தலையணையாக்கிச் சாய்ந்தான். மின்விசிறி வேகமாய்ச் சுழல. நல்லவேளை. வெளியிலிருந்து துர்க்கந்தம் வராது என்ற நினைப்போடு சுரேனின் வரவுக்காகக் காத்திருந்தான்.
தெருவில் நடமாட்டம் தொடங்கிவிட்டது என்பதனை வெளியிலிருந்து கேட்கும் குரல்கள் காட்டிக் கொடுக்கின்றன.
மெல்ல.மெல்ல. ஆக்கள் போறது தெரியேல்லையே.? நல்லவேளை எங்களில சாக்கடைத் தண்ணி படயில்ல. யாரோ கூறிச்செல்வது அவன் காதுகளில் விழ, வெளியே வந்து மீண்டும் எட்டிப் பார்த்தான்.
உடைந்துபோன சாக்கடைக்குழாய் நீக்கப்பட்டு, புதுக்குழாய் அமைத்துவிட்ட தொழிலாளர்கள் அழுக்கை உடலில் ஏற்றிக்கொண்டு தாங்கள் வந்த லொறியில் ஏறிக்கொண்டிருக்கின்றனர். தெருவால் செல்லும் ஒருசிலரும் முகம் சுழித்தவாறு செல்கின்றனர்.
சர்ப்பவியூகம் /47

Page 32
தெருவில் சுரேன் வரும் எந்தவித சிலமனுமில்லை. அவன் உள்ளே போய் சாய்வுநாற்காலியில் சாய்கிறான்.
2
திடீரெனக் தந்திவந்து போனவன், ஒருகிழமை லீவில் நின்றுவிட்டுத் திரும்பிவந்து, தன் திருமண அழைப்பிதழை நீட்டியபோது-அவர்கள் வியந்து போனார்கள்.
'மச்சான்! உனக்குத் திடீரெனத் தந்திவந்து போகேக்க உன் அம்மாவுக்குத்தான் ஏதோ.என்னமோ எண்டு நினைச்சம். நீயென்னடாண்ணா 'கலியாணக்காட்டோட வந்து நிற்கிறாய். எப்படியெண்டாலும் 'கங்கிராஜு லேஷன்ஸ் மச்சான்' என்றான் சுரேன்.
அதுசரி மச்சான். பொம்புளை எப்படி. எங்காலப்பக்கம். சீதனம். பாதனம் எல்லாம் எப்படி. என்று லெளகீக விசாரிப்பில் ஆழ்ந்துவிட்டான் கனகு. அவன் எப்போதுமே அப்படித்தான். சந்தோஷமாக இருக்க இவையெல்லாம்தான் முதலில் வேண்டியது என்பது அவன் கருத்து.
அதில்ல மச்சான். எனக்கென்னமோ கலியாணத்துக்கொண்டும் இப்ப அவசரமில்லை. அம்மாதான் என்னைக் கொழும்பில் இப்படியே விட்டுவைக்கிறது கூடாதாம். நான் ஆரும் பறங்கி, சிங்கள பெட்டையளுக்குப் பின்னால போயிடுவன் எண்டு என்னையொரு தமிழ்ப் பெட்டைக்குப் பின்னால போகச்சொல்லிட்டா' என்று அவன் சொன்னபோது, அவர்கள் ஆரவாரித்துச் சிரித்தார்கள்.
மச்சான்.நீ வந்தாத்தான் எங்களுக்கும் கலகலப்பாக இருக்கு. ம். இதுவும் எவ்வளவு காலத்துக்கு. நீயும் உன்ர மனிசி வந்தாப் பிறகு எங்கள வந்து பாக்கவாப் போகிறாய்?
போடா விசரா. கலியாணம் எண்டால். பிரண்ட்சை மறக்கவேணு மெண்டு எதிலயடா எழுதியிருக்கு. எல்லாம் அம்மாவுக்காண்டித்தான்
இப்படித்தான் எல்லாரும் தொடக்கத்தில சொல்லித்திரியிறது. பேந்து பின்னால மனிசியைச் சுத்தித் திரியிறதுக்கே நேரம் பத்தாது. இதில பிரண்ட் சாவது. மண்ணாங்கட்டியாவது
அதிலிருந்த நயத்தில் மீண்டும் அமளிச் சிரிப்பு எழுகிறது. அதெல்லாம்சரி. எப்ப பச்சிலர்ஸ் பார்ட்டி கொடுக்கப்போகிறாய்.? பெரிய கிராண்டாக செலிபறேட் பண்ணவேணும். ஊரில பெரிய சீதனத்தோட முடிக்கப் போறc தெரியுமே?
போட மடையா இவ்வளவுநாளும் சீதனப்பணத்தை நம்பியே நாங்க பார்ட்டி' எல்லாம் நடத்தினாங்கள். எப்ப பச்சிலர்ஸ்பார்டி வைக்கலாம், எங்க வைக்கலாம் எல்லாத்தையும் நீங்களே டிசைட் பண்ணுங்க. நான் எதுக்கும் தயார். சரிதானா? 48/செம்பியன் செல்வன்

ஓம்! மச்சான். இதைப் பெரிய கிராண்டாத்தான் செலிபரேட் செய்யோணும். நீ கலியாணம் கட்டினோடன, உன்னை வந்து எங்களோட குடிக்க விடுவாவே?
அவவிட்டாயென்ன விடாட்டியென்ன? நான் குடிக்கிறதை அவள் என்ன கேக்கிறது?. வேணுமெண்டா அவளும் குடிக்கட்டும். மச்சான்! நான் உந்தச் சேட்டையளுக்கு மசியிற ஆளில்லை. அப்படியில்ல எண்டு அவள் ஏதும் கதைச்சாளெண்டா. டைவோர்ஸ் தான்.
‘என்ன ரெண்டு பேரும் விழல்கதையெல்லே கதைச்சுக்கொண்டு நிக்கிறியள். கலியாணமே முடியேல்ல. டைவோசுக்கு வந்தாச்சு. -சுரேன் ஆத்திரத்துடன் கூறினான்.
'பச்சிலர்ஸ் பார்ட்டியை எப்படி. எங்க எப்ப வைக்கிறது?
"வேறெங்க. வழக்கம் போல. ஹோட்டல் கம்காரில் நடாத்துவம் அவன் தான் எங்கட எண்ணத்துக்கு விட்டுத்தருவான். நான் எங்கட வழக்கமான ரூமை சனிக்கிழமை இரவுக்கு 'புக்' பண்ணி விடுறன்.
மச்சான் பார்டிக்கு. மற்றதும் கிடைச்சிட்டா. அந்த எண்ணத்தை விதைத்தவனே கனகு தான்.
மற்றதா?. என்ன சொல்லுறா..?
'உனக்குக் கலியாணம் எண்டோடனயே எல்லாத்தையும் மறந்திட்டாய் போல.?
'9 அதுவா வேண்டாம் மச்சான் உந்த வேலை. உதால போன ஒரு முறை பட்டயாடு போதாதா? மூண்டு பேற்ற வீட்டையும் தெரிஞ்சு. என்ர கலியாணம் கூட அதாலதான இப்ப நடக்குது. இல்லாட்டி இன்னும் ரெண்டு வருஷமாவது கழிச்செல்ல நடக்கும்.?
அப்போது தான் சுரேன் அந்த யோசனையைச் சொன்னான். மச்சான் எங்கட ஒபீசுக்குப் பக்கத்தில் பெட்டிக்கடை வைச்சிருக்கிற மனிசியின்ர மகள் ஒண்டு இருக்குது. நான் சிகரட்வாங்கப் போக, வரேக்க ஒரு மாதிரி என்னைப் பாத்துச் சிரிக்குது. நான் அதைச் சினிமா பாக்க எண்டு கூட்டிக் கொண்டு வந்துவிடுறனே.
மச்சான்! அது பாவமடா. ஏழைப்பெண் எண்டாய்.
'ஏழை எண்டபடியால்த்தான் என்னில ஒருமாதிரிச் சுழலுது. நாங்களும் அதுகளுக்கு ஏதாவது நன்மைசெய்ய வேணுமெண்டா இப்படியான வழியிலதான் செய்யமுடியும்.
சாக்கடை நீர் தெறிக்காதவர்கள் /49

Page 33
அவனது சித்தாந்தம் பயங்கரமாக இருந்தபோதிலும் அவர்களுக்கு இனிப்பூட்டியது.
சுரேன் கெட்டிக்காரன்தான். புளோ கோல்ட் புளோ கொட் படத்திற்குக் கூட்டிச் சென்றுவிட்டு, ஏதாவது சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் என அழைத்துவந்திருந்தான்.
966 அவன் கைகளை உரிமையுடன் பற்றியவாறு ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரித்தவாறு வியப்புக்கண்களால் சூழலை ரசித்தபடி ஒவ்வொரு படியாக ஏறி உள்ளே வருகையில் அவனுக்கே பாவமாக இருந்தது.
- சுரேன் நண்பர்களுக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தான். ஓ. எவ்வளவு உயர்ந்த நண்பர்கள் அவருக்கு அவள் ஆசை விழிகளால் சுரேனைப் பார்த்தாள்
அவர்கள் அறைக்குள் சென்றனர். நீண்ட மேசையின் மத்தியில் உயர்ந்தவகை உணவுகள் படைக்கப் பட்டிருந்தன. அதனருகே இடப்பட்டிருந்த சிறுமேசையைச் சுற்றி நான்கு நாற்கிாலிகள். அதன் மத்தியில் உயர்ரக குடிவகைகள்.
சிறு மேசையைச் சுற்றி அமர்ந்தார்கள். விபரம் புரிந்தும் புரியாத நிலையில் அவர்களுடன் இணைந்தே தீரவேண்டும் என்ற நாகரிக உணர்வில் அவளும் ஒரு நாற்காலியில் அமர்கிறாள்.
மூவரும் தத்தம் கிண்ணங்களில் மதுவை ஊற்றிக்கொள்ள. அவளுக்கா. ஒரேஞ் குவாஸ் பைற்ஸ் கேக், பற்றிஸ், முந்திரிப்பருப்பு, கட்லட். சிக்கன்றோல் அவள் அனுபவித்து உண்டாள். பருகினாள். ஒரேஞ் குவாஸ். கொஞ்சம் மதுகலந்து. இன்னும் இன்னும் கொஞ்சம். கசப்பா. கட்லட். இன்னும். அவள் முகம் வியர்த்தது. உள்ளம் திமிறிக் குதூகலித்தது.
ஒரேஞ் குவாஸ். மதுவாய் நுரைக்குமா? கசக்குமா. தலையைச் சுற்றுகிறதா. கனக்கிறதா. கிண்ணத்தைப் பற்றியிருந்த உள்ளங்கைகள் ஏன் வியர்க்கின்றன.
'எனக்குக் கொஞ்சம் தலையை வலிக்குது. நான்கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டுமா?.
'ஷர் சுரேன் அவளை அழைத்து வந்து அறையின் ஒரு மூலையில் திரைமறைவில் இடப்பட்டிருந்த கட்டிலில் விட்டான்.
அவள் படுக்கையில் கிடக்கின்றாள். மேலே மின்விளக்கு பளிட்டுக் 50/செம்பியன் செல்வன்

5
கண்ணைக் கூசவைக்கிறது. எங்கோ ஜுக்ஸ் பாக்ஸ் மெல்லிய மேனாட்டு இசையைக் காற்றில் தூவிக்கொண்டிருக்கிறது. மெத்தை சுகமாக நெகிழ்ந்து கொடுக்கிறது. யாரோ பைப்பைத் திறக்கிறார்கள். நீர்சொரியும் ஓசை உடல் வியர்வையாக. ஆடைகளைத் தளர்த்திவிட்டு படுத்தாள். படுக்க வீட்டைப் போகவேண்டுமே. அம்மா துடித்துப் போவாளே. காணவில்லை எண்டு. சினேகிதியோட படத்துக்குப் போயிட்டு வாறன் எண்டு பொய்சொல்லிவிட்டு வந்து அம்மாவின் கண்ணில எப்படி முழிக்கிறது. அவள் உடலை அசைக்கப் பார்க்கிறாள். முடியவில்லை. விழிமடலில் உறக்கம் பூஞ்சிட்டாக வந்தமர்கிறது.
இருள். இருள். இருள்.
யாரது. என்னை.இப்படி. வேண்டாம் .வேண்டாம் அவள் முனகல் அவளின் ஆடைகளின் சரிவில் ஒதுங்குகின்றன.
உணர்ச்சிகள் ஒவ்வொரு அங்கங்களிலும் கூடியிருந்து புதுவெள்ள மென சீறுகின்றன. கன்னங்கள். தோள்பட்டைகள். இதழ்கள். மார்பகங்கள். இவற்றின் சொந்தக்காரியான நானே அதனை உணராமல் இருந்தேனே.
எங்கோ. எங்கோயிருந்து எரிசரம் ஒன்று முதுகுத் தண்டின் வழியாக. எரிசரமா. பனிக்கட்டிச்சரமா. உடலின் வேகம். உணர்வின் கொந்தளிப்பு.
தழுவலில் சுருதிபேதங்கள். பேதங்கள். பேதங்கள் மறந்த உடல். மணத்தீச்கங்குகள். கரிந்து சொரியும் மத்தாப்புகள்.
விபரீதம். வேண்டாம். வேண்டாம்.
- ஓசை எழுப்பவும் சக்தியற்றுச் சோர்கிறாள்.
4
அவள் கண்விழித்தபோது -
அவர்கள் மூவரும் இருந்த நிலையில் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறாள். தான் மூவரால் மோசம் போனதை உணர்ந்த போது யாரையும் கோவிக்க இயலாமல் (கோவிப்பதற்கும் உரிமைவேண்டுமே) அவ்விடத்தை விட்டு வெளியேறவே விரும்புகிறாள். மெளனமாக எழுந்து ஆடையை அணிகிறாள். கண்ணாடியின் முன்நின்றபோது - அந்த அல்ஷேசன் நாய்களின் வெறியாடல் புரிகிறது.
நான் வீட்டை 'கவேணும்'
இப்பவே வா?
'ஓம்'
சரிவா நான் கொண்டுபோய் விட்டுவிட்டு வருகிறேன் சுரேன் அவளுடன் வெளியேறுகிறான்.
5
யாரோ அவன் தோளைப் பற்றி உலுக்கிய வேகத்தில்
விழித்துக்கொள்கிறான். எதிரே.
சாக்கடை நீர் தெறிக்காதவர்கள்/51

Page 34
சுரேன் பதட்டப்பட்ட கோலத்தில் நிற்கிறான்.
'என்ன மச்சான்?. என்ன நடந்தது! ஏன் இவ்வளவு நேரம்?
நல்லவேளை நான் தப்பி வந்ததே பெரியகாரியம்.
‘என்ன' ':
'ஓம் மச்சான். நானும் அவளும் வெளிய போனமல்லவா? ஒரு டாக்சிகூடக் கிடைக்கேல்ல. டாக்சிய பார்த்துக்கொண்டே நடந்தம். திடீரென எங்கிருந்தோ வந்தது அந்த ஜீப். பொலீஸ் ஜீப். நான் மெல்லமாக நழுவி விட்டன்.
'பாவம் அவள்தான்.
‘என்ன செய்தாங்கள். அவளை?
'சந்தேகத்திற்கிடமாக நடந்தாகக் கூறி அவளை ஏற்றிக்கொண்டு போய்விட்டாங்கள். அவளை என்ன செய்வாங்களோ. அவளின் தாய்க்குச் செய்தி அனுப்புவாங்களோ. பாவம். அவள். நல்லவேளை நாங்கள் தப்பிவிட்டம். எங்களப் பிடிச்சிருந்தா எங்கட மானம் மரியாதையெல்லாம் என்னவாயிருக்கும். காற்றாப் பறந்திருக்கும். என்று சொல்லிக்கொண்டே எழுந்துவந்தான் கனகு.
மூவரின் சிரிப்பொலியும் இருண்ட அறையில் கசந்து நிறைந்தது.
- 6ਸੀ . 18-02-1973
52/செம்பியன் செல்வன்

6
2z്ട് ഠശ്രZത്ര
திடுமென எழுந்த குண்டுவெடிச் சத்தம் நித்திரையின்றும் அவரை தூக்கிவாரி வெளியே வீசியது. 'டும். டும்.தொம்.தொம் எறிகணைகள் தொடர்ச்சியாக வந்து விழுந்து வெடிக்கத் தொடங்கின. இராணுவம் தான் விழிப்பாக இருப்பதைக் காட்டவோ, ஆனந்தமான நித்திரையில் ஆபத்துக்களை சற்று மறந்து மக்கள் ஆழ்ந்து கிடப்பதை பொறுக்கமாட்டாமலோ, நாளை ஏன் இவ்வளவு வெடிமருந்துகள் பயன்படுத்த மாட்டாமல் சும்மா கிடக்குது என்று ஜெஒசியிடமிருந்து 'மெமோ வராமல் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்காகவோ, குண்டுகள் எங்கே போய் விழுகின்றன என்பது பற்றிய பிரக்ஞையின்றியே இருளில் தடம்புரியாமல் வெடித்துப் போயின. நிச்சயம் மணி பதினொன்றுக்கும் பன்னிரண்டுக்கும் இடையிலிருக்கும் எனத் தீர்மானித்துக் கொண்டார். இருளில் கணிகளைக் கொட்டக்கொட்ட விழித்த வண்ணம் எறி கணைகளின் திசையை நிதானிக்க முனைந்தார். தூக்கக் கலக்கமும், திடுக் கென ஏற்பட்ட விழிப்பும், எறிகணை
வடக்கே ஒரு பாடசாலை /53

Page 35
ஏவலால் ஏற்பட்ட பதட்டமும் சேர்ந்து அவரால் திசையை உறுதியாக தீர்மானிக்க முடியவில்லை. காரைநகர் பக்கமோ. சே. அங்க ஏன் ஏவுறாங்க.? அங்க ஆரும் மனுச மாஞ்சாதியள் இருந்தாத்தான. நாலைஞ்சு கிழங்கட்டையள வைத்துக்கொண்டு ஆட்சி புரியிறாங்க. மாதகல், பண்டத்தரிப்பு பக்கமாக கேக்குது போல. ஐயோ என்ர தங்கச்சியும், புருஷனும், புள்ளையஞம் அங்க. என்னபாடோ?. இல்ல இல்ல.இங்கால அராலி, வட்டுக்கோட்டைப் பக்கம் போல.
ஏவுகணை ஒன்று திடீரென காதுக்குள் வந்து வெடித்ததென சவ்வுப்பறை அதிர்ந்தது.
'அடl. கிட்டடியிலதான் வந்து விழுகுது. பலாலியிலிருந்து ஏவுகிறானோ?. இல்லாட்டி. மண்டைதீவிலிருந்து அடிக்கிறானோ?. ஓம். ஓம். கோட்டைப்பக்கமாகத்தான் கேட்குது. எங்க, ரவுணுக்கு அடிக்கிறாங்களே?. பண்ணைப்பாலமாகத்தான் விழுகுது போல. ரவுண் 'சேவ்ரி ஏரியா செக்யுரிட்டி வலயமெல்லா. அப்ப ஏன் அடிக்கிறாங்கள்.?
அந்தப்பதட்டத்திலும் அவருக்கு மெல்லிய பெருமிதம் கலந்த சிரிப்பு வந்தது.
‘மண்டைதீவிலயிருந்து பொடியள் அவங்கட "வாட்டர் ஜெட் வள்ளத்தை அடிச்சுக்கொண்டு வந்ததிலிருந்து பண்ணைப்பக்கம் ஒரு தலை கறுப்புக்கண்டாப் போதும், அடிக்கவெளிக்கிட்டுவிடுவாங்கள். அதால பாதிக்கப்படுவது கொட்டடிப்பக்கம்தான். பொலிஸ் ஸ்டேசன். 'ரெலிகொம் யூனிக்கேசன் காம்ப்' என்று அடிபாடுதொடங்கிய நாளிலிருந்து கொட்டடிப்பக்கம் பாழடைந்து. சிதிலமடைந்த வீடுவாசல். போக்குவரத்து பாதையென வெறுமை கொண்டு. ஆனால். மக்கள்.? இன்னமும். அங்கு உயிர்ப்பூக்களாக நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மீண்டும் ஒரு எறிகணை பயங்கரமாக வெடித்தது அவர் உறுதிசெய்து கொண்டார். கொட்டடிப்பக்கமாகத்தான் போய் விழுகிறது. அவர் மனதில் பதட்டம் சூழ்ந்தது. அவரின் பாடசாலை அந்தச் சூழலில்தான் இயங்கி வருகின்றது. இரண்டுமாடிக் கட்டிடம். அங்க ஏதும் போய் விழுந்தா?. அவருக்கு தலையைச்சுற்றி வந்தது. அரசாங்கத்தின் வாக்குறுதிகளும் சுழன்றன.
தேவாலயங்கள். கோயில்கள். பாடசாலைகள். செஞ்சிலுவைச்சங்க பாதுகாப்புவலயங்கள். என்பன அர்த்தம் இழந்து போயின. அந்தந்த இடங்களில் அநர்த்தம் விளைவிப்பதே அரசாங்கத்தின் இயல்பாகிவிட்டது. தெற்குக்குத்தான் எவ்வளவு அந்நியதேச உதவிகள். வகைவகையான விமானங்கள். ஹெலி சியாமாசிட்டிவிமானம். வை-12. வை-8, என்றாரம்பித்து இன்று புக்காரா. வருவதே தெரியாத சுப்பர்சோனிக’ அதேபோல. குண்டுகள்.எரிகுண்டுகள். 54/செம்பியன் செல்வன்
y

நேபாம்.கிரனெட் குண்டுகள். மலக்குண்டுகள். ஆளுயரக்குண்டுகள் என அழிவிலும் ஆபத்திலும் பெரிதான குண்டுகளை வீசியதெல்லாம் பொதுமக்கள் ாைழும் குடிமனைப்பாகங்களில்தான்.
‘எங்கையோ பொடியளிட்ட அடிவாங்கிட்டாங்கள் போல. அதுதான் இப்படி வெறியாட்டம் ஆடுறாங்கள். முந்தி எங்கையாவது சென்றிப்பொயின்ரில நிக்கிற இராணுவத்தில நாலைஞ்சுபேரை தட்டிவிட்டாப்போதும். தாங்கள் பலாலி முகாமில கைதுசெய்து வைத்திருக்கும் மீனவத் தொழிலாளர்களையோ, கடலில் கைதான பொதுமக்களையோ போய்ப் பலமாக தாக்கித் தனது கையாலா காத்தனத்தை பறைசாற்றும். இல்லாவிட்டால் நாலைந்துபேரை கொலை செய்து தமது இழப்பை ஈடுசெய்து விட்டதாக பெருமூச்சுவிடும். இந்த இராணுவத்தினது செயல், அறிக்கைகளை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது பொதுமக்களுக்கு நன்கு பழக்கமாகிவிட்டது.
- எறிகணைவீச்சுக்கள் தொடர்ந்தவண்ணம் இருந்தன. - அவருக்கு நெஞ்சில் எதுவோ உறைக்கத் தொடங்கியது. - 'சே' என்ன பைத்தியக்காரத்தனம் பணிணிப்போட்டன். கொட்டடிச்சனங்கள் இந்தச் செல்லடிக்கு எங்கபோய் ஒதுங்குங்கள்? அங்க ஒதுங்க ஏதும் ஆமான கட்டிடங்கள் இருக்கே? எல்லாக் கட்டிடங்களையும் தான் குண்டுவீசி அழிச்சுப்போட்டாங்களே! இப்ப ஒதுங்க இருக்கிறது. பாடசாலை கட்டிடம் மட்டும்தான். அதின்ர வெளிவாசல் கதவைத்தான் சங்கிலிபோட்டு பூட்டிவிட்டு வந்திட்டனே.
இந்த மாரிக்குள்ள. சேறும் சகதியுமான. நுளம்புப்பட்டாளத்துக்குப் பதில்கொடுத்துக் கொடுத்து நோய்நொடி. கொலாரா. என்று பரிதவிக்கும் மக்கள். என்ன செய்யுங்கள்?.
குழந்தைகுட்டிகளோட எங்க போய் ஒதுங்குங்கள்.? பதுங்குகுழியெல்லாம். இடிஞ்சு கொட்டுண்டு போனதல்லாமல் வெள்ளத்தால் நிரம்பிச் சிறுசிறு கேணிகளாகப் பாம்பும் நட்டுவாக்காலியும். புலிநகச்சிலந்தியுமாக. நிரம்பி வழியும்.
விளக்கும் வெளிச்சமும் இல்லாமல். வெளியே, இன் மம் மழைதூறிக்கொண்டிருந்தது. -i. - அவர்மேனி ஒருகணம் சிலிர்த்துக்கொண்டது. மெல்லத்திரும்பிப் பார்த்தார்.
நுளம்புவலைக்குள் மனைவியும் பிள்ளைகுட்டிகளும் போர்வையால் காலிலிருந்து தலைவரை இழுத்து மூடிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில்.
- குற்ற மனப்பான்மை நெஞ்சில் ஊடுருவியது. - இன்று நான் நடந்துகொண்டது தவறு. அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது.
வடக்கே ஒரு பாடசாலை /55

Page 36
- அன்று அவர் காலை - விடிகாலையிலே பாடசாலைக்கு ஆயத்த மாகிக்கொண்டிருந்தார்.
- வீட்டிற்குள்ளிருந்த சைக்கிளை விறாந்தையால் வெளியே இறக்கி ஸ்ராண்டில் நிறுத்தினார். பின்பக்க கரியரில் ஒரு கறுத்த தோற்பையை வைத்துக் கட்டினார். அது திட்டமில்லாத இ வமுகாம் போல பருத்துப் பெருத்திருந் தது. அதன் வாய்வழியாக விழுந்த பாடசாலை ரபர் ஸ்ராம்பை குனிந்து எடுத்து மீண்டும் திணிக்க பாடசாலை இன்வென்றி புத்தகமும் வசதிக்கட்டண ரிசீதுப் புத்தகமும் லொக் புத்தகமும் இன்னொரு மூலையில் தையலைப் பிரிக்க முனைந்து கொண்டிருந்தன. அவை பாக்' கால் நழுவிவிடாமலும் பாக் 'கரியரி லிருந்து விழுந்து விடாமலும் இருக்க நைலான் கயிற்றினால் கட்டி பெரிய போராட்டமே நடத்திக்கொண்டிருந்தார்.
அடுப்படியிலிருந்து, அவர் என்ன செய்கிறார் என்று பார்க்க வெளியே எட்டிப்பார்த்த மனைவிக்கு பற்றிக்கொண்டுவந்தது. காலை, மாலை இருநேர சாப்பாடு பார்சல்களை வைத்தாள்.
- பெரிய அதிபர் எண்டு பெயர். சம்பளத்திலும் எப்பனும் உயர்வில்லை. ஒபீசில இருக்கவேண்டியதெல்லாத்தையும் ஒவ்வொருநாளும் ஏற்றி இறக்கிற வேலை. வெள்ளனக்காத்தாலேயே எழும்பி ஓடுகிறவேலை. அஞ்சாறுமயிலுக்கு நாரிமுறிய சைக்கிள் மிதிக்கவேணும். அங்கபோய் என்னப்பா பள்ளிக்கூடத்தை கூட்டப்போறன்ரோ?. பேசாம முந்திமாதிரி மாஸ்டரா இருந்திருக்கலாம் பக்கத்தில பாடசாலை. எட்டுமணிக்குபோய் ரெண்டரைக்குத் திரும்பலாம். இப்ப. இப்பபோய் வீட்டவர அஞ்சாறு ஆகுது. அவள் பொரிந்து கொட்டினாள். அவர் உள்ளும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டார். 'இவள் பாடசாலை கூட்டவோ எண்டு கேக்கிறாள். ஆனால் நான் செய்யிற வேலையைத் தெரிந்தால் வீட்டுக்குள்ள விடமாட்டாள்"
-அவர் சைக்கிளில் ஏறி அமர்ந்தார். பதில் எதுவும் சொல்லாமல் சைக்கிளை மிதிக்கத் தொடங்கவும் அவளும் கதவை அறைந்து மூடிக் கொண்டதில் தனது கோபத்தை வெளிக்காட்டினாள்.
-அவள் கோபம் நியாயமாகப்பட்டது. கடந்த இருபது வருடங்களாக பாடம்படிப்பித்து நல்லாசிரியனாக பெயர் வாங்கியாகிவிட்டது. இவருக்குப் பின்னால் வந்த எத்தனையோபேர் அதிபர்களாகிவிட்டனர். இதில் இவருக்கு எதுவித சுவர்ச்சியும் இருக்கவில்லை. அதிபர்களின் சம்பளத்தையே பெற்று வருகிறார். பேசாமல் படிப்பித்துவிட்டு போறதை விட்டுவிட்டு பாடசாலையின் கட்டிடம். தளபாடம். கொப்பி புத்தகம். என்று ஏன் கட்டிக்கொண்டு மாரடிக்க வேண்டும்? என்ற எண்ணத்தை குறைந்த அனுபவம் கொண்ட ஒருவன் அதிபராக வந்து இவரைக் கேள்விகேட்டது இவரது தன்மானத்தைச் சுட்டுவிட்டது. அதன் விளைவு அவரும் இன்று அதிபர். 56/செம்பியன் செல்வன்

- ஆரம்பத்தில் அவர் எதிர்பார்த்தது தனது தகுதிக்கு ரவுனில் ஒரு நல்ல கல்லூரி கிடைக்கலாம் என்று. கிடைத்த பாடசாலையின் பெயரைக் கேட் வுடன் புருவம் சற்று ஏறி இறங்கியது. படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் வசதிகுறைந்தவர்களின். ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகள். படிப்பில் ஆர்வத்தை முதலில் பெற்றோர்களுக்கு ஊட்டி அவர்களின் ஒத்துழைப்பைப் பெறவேண்டும். சவாலாக எடுத்துக்கொண்டார்.
-புதிய அதிபரை பெற்றோர் - ஆசிரியர் - மாணவர் புரிந்து கொண்டனர். பாடசாலையில் முன்னிருந்ததைவிட ஒழுங்கு, கல்விமுன்னேற்றம் தெரிந்தது. பாடசாலையில் ஆங்காங்கு பூமரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு ஒரு அழகு வெளிப்பட்டது. குழந்தைகள் சுத்தமான ஆடையுடனும். நேரகாலத்துடனும் வரத்தொடங்கினர். அவர் மனதில் நிம்மதியும் திருப்தியும் லற்பட்டது.
ஆனால் -
ஒருநாள் அவர் காலை பாடசாலை சென்றபோது அதிர்ந்தார்.
- பாடசாலை வெளிக்கதவு 'ஒ' வென்று விரியத்திறந்து கிடந்தது.
- அவர் அவசரம் அவசரமாக உள்ளே புகுந்தார். அவர் அலுவலக அறை திறக்கப்படாமல் இருந்தது. ஏனைய வகுப்பறைகள் அலங்கோலமாக வாங்கு மேசைகள் கண்டபடி இழுத்துப் போடப்பட்டிருந்தன. சில வகுப்பறை களின் மூலைகளில் அடுப்பு மூட்டப்பட்டிருந்தன. திருத்தத்திற்காகப் போடப்பட்டி ருந்த சில தளபாடங்கள் விறகாக.
அவர் தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். உப அதிபர் அவரை மெதுவாக அண்மினார். அவர் அந்தப் பகுதியைச் சார்ந்தவர். சேர். இராத்திரி ஷெல்அடி மோசமாயிருந்தது. சனங்கள் பாதுகாப்புக் காக பாடசாலையில் வந்து தங்கியிருக்கிறாங்கள்.
அவங்கள் எப்படி உள்ள வந்தாங்கள்? வெளிக் கதவை பூட்டிவிட்டுத் தான போனனான்.
அவங்கள் அவசரத்தில உடைச்சுத் திறந்திருக்கிறாங்கள். முந்தியும் இப்படித்தான் சேர் ஷெல் ர்கேக்க வந்து தங்கியிருக்கிறவையள். அவயஞக் காகக் கதவைப் பூட்டிoைடககிறேல்ல. நீங்கள் புதிசு. தெரியாமல் பூட்டிவிட்டு போயிட்டிங்கள்?
அவருக்குப் பற்றிக் கொண்டு வந்தது. - பாடசாலைப் பொருட்களுக்கு ஆர்பொறுப்பு? கல்விக்கந்தோர் சும்மாவிடுமே
அன்று பாடசாலை நடைபெறவில்லை. வகுப்பறைகளைச் சீர்செய்வ திலும் ஒழுங்குபடுத்துவதிலுமே முடிந்தது.
வடக்கே ஒரு பாடசாலை /57

Page 37
கழிப்பறைகள் கண்டபடி பயன்படுத்தப்பட்டு, பாடசாலை வகுப் பறைகளை நாறடிக்கத் தொடங்சி போதுதான் பிரச்சினை மலையாயிற்று.
அன்றைய அநுபவத்தoன் பின் அவர் பாடசாலை முடிவுற்றதும் அதன் பாதுகாப்புக் கருதி பெரிய சங்கிலிப்பூட்டாக போட்டுவிட்டார். அவர் ஆவேசமாக அழுத அழுத்தி சைக்கிளை மிதித்தார். ஆண்டவனே! மக்களுக்கு ஒண்டும் ஆகியிருக்கக்கூடாது. ஒரு சிறு காயமும் பட்டிருக்கக்கூடாது. அப்படி ஏதும் நடந்திருந்தால் என்னில்தான கொலைப்பழிவிழும். இனி ஒருபோதும் இப்பிடிப் பூட்டிவிட்டு வரமாட்டன். பாடசாலை என்பது படிக்க மட்டும் தான் என்று எப்பிடி முடிவெடுத்தன். அது.அது எல்லாவற்றிற்கும் மேலானது. அதுவும் கற்பதற்காக போராடும் சூழலில்.
அவரின் சைக்கிள் பாடசாலை வாசலில் போய் நின்றது. கதவு திறந்து கிடக்க, பூட்டுச் சங்கிலி அறுந்து தொங்கியது. அவர் மனதில் ஒரு நிம்மதி. வகுப்பறைகள் தாறுமாறாக வாங்குமேசைகளினால் குழம்பிக்கிடக்க. காலில் எதுவோ தட்டுப்பட்டது. கீழே குனிந்தார். ஒரு பால்போச்சி. கழிவறையிருந்து நாற்றம் மூக்கைத் துளைக்க, ஒரு வாளியை எடுத்துக்கொண்டு அதனை நோக்கிச் சென்றார்.
- வெளிச்சம் தை 1994
58/செம்பியன் செல்வன்

ク
26225644257
இவனின் முதுகு, நெஞ்சு, மர்மஸ்தானம் எல்லா இடங்களிலும் கைவிட்டுத் தடவித் தேடியும் ஆபத்தான, சந்தேகத்திற்கிடமான ஆயுதங்கள் எதுவும் கிடைக்கப்பெறாமல் ஏமாந்த நிலையில், அந்தக் கூர்க்கா சிப்பாய் எரிச்சலுடன் விழுந்தான்.
'ப் -போ!'
இவன் அந்தக் கூர்க்காவைக் கடந்தபோது, நல்லூர் ஆலயக் கோபுரம் நெடிதுயர்ந்த மதில்களின் மேலாகப் பின்னணியில் பின்தங்கியது.
கூர்க்காவின் சோதனையிலிருந்து முன்பே வெளியேறியிருந்த மனைவி, அவன் வரவை எதிர்பார்த்து பிள்ளைகளுடன் சற்றுத் தூரத்தே நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. அங்கு ஒருவரையும் நிற்கக் கூடாது என இன்னொரு குள்ளச்சிப்பாய் தன்னிலும் பெரிய தடியொன்றால் விரட்டிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருந் தது. இவன் வெளியே வரும்வரை திடுக் கிடும் நெஞ்சத்துடன், பறையடிக்கும் பதை பதைப்புடன் பேயறைந்த முகத்துடன் காத் திருந்தவளின் முகம் சற்று நிதான மடைந்ததென அமைதி கொண்டான்.
வீடு திரும்புதல்/59

Page 38
நேற்றிரவு முழுவதும் ஒரே தொணதொணப்புத்தான். 'வீடு வாசல் என்ன மாதிரி கிடக்கோ.? ஆடு. மாடு. கோழியள் என்னபாடோ..? நாங்கள் வாற அவசரத்தில என்னத்தைச் செய்யிறது. எதைச் செய்யிறது எண்டு தெரியாமல் அதைஅதை அப்படியே போட்டது போட்டபடி விட்டிட்டு வந்தம். வாற அந்தரத்தில ஆடு மாடுகளின்ர கட்டையும் அவிழ்க் காமல் வந்திட்டம். இந்தப் பத்துநாளில அதுகள் தண்ணி. புல்லு. வைக்கல். பிண்ணாக்கு எதுவுமில்லாமல் செத்திச்சுதுகளோ. பிழைச்சிருக்கிதுகளோ..? ஆரப்பா என்னத்த- எதைக் கண்டம்? எல்லாத்துக்கும் வீட்ட போய்ப் பாத்தால்தான் தெரியும். ஆரும் நினைச்சமே இப்படி வீடு வாசல் கிட்டடியில் கிடக்க.கோயில்ல வந்து அகதியாய்க் கிடப்பமென்டு? ஒரு நாள் அரை நாளில் திரும்பியிரலாம் எண்டுதான் வந்தனாங்கள்-இல்லாட்டி இப்பிடி மாத்துத் துணிகூட இல்லாமல் வந்திருப்பமா..?
என்ர குஞ்சுகளுக்கு ஒரு ஆமான சாப்பாடோ. தண்ணியோ இந்தப் பத்து நாளில் கிடைச்சிருக்குமே..? எளிய பாவியள்-இதுக்குத்தான் இங்க வந்தவங்களா. ஏதோ எங்களைப் பாதுகாக்கிறம் எண்டு வந்து.
's இந்த நல்லூரானிட்ட நாப்பதாயிரம் சனங்களைப் போட்டுக் கசக்கிப் பிழியிறாங்கள்.பூட்ஸ் காலோட உள்வீதி எல்லாம் திரியிறாங்கள். கோயிலின்ர புனிதம். சுத்தம். சுகாதாரம் எல்லாத்தையும் நாசமாக்கிப் போட்டாங்களே. பெரிய புண்ணிய பூமியில இருந்து வந்தவங்கள் எண்டு தம்பட்டம் வேற. அதுக்கு ஏனப்பா இப்படிக் கிடந்து மாயிறீர்? நாளைக்கு எப்படியும் போக விடுவாங்கள் எண்டு கதைக்கினம்.
மெய்யேப்பா உண்மையாத்தான் விடுவாங்களோ..? இல்லாட்டிச் சும்மாதான் சொல்லுறாங்களோ..?
இப்படித்தான் ஒவ்வொருநாளும் சொல்லி வாறாங்கள். அவள் குரலில் சந்தேகம் தட்டும்.
'ஏதோ ஆக்கள் கதைகிறதைக் கொண்டுதானே சொல்ல முடியும். நாளைக்கு பத்து வயதுக்கும் நாப்பது வயதுக்கும் உட்பட்ட ஆக்களை வைச்சுக் கொண்டு மற்றாக்களை வீடு போக விடுவினமாம்.
அவளுக்கு மீண்டும் சந்தேகம் கடந்த பத்து நாட்களாகச் செய்திகளைக் கேட்டுக் கேட்டு ஏமாந்ததன் விளைவு.
ஏனப்பா..? எங்கட மூத்தவனுக்கு வயது எட்டுத்தான். ஆனா ஆள் வளர்த்தி. வயது எட்டு எண்டு சொன்னா நம்புலவாங்களே..? அவன விடுவாங்களே..? அவனுக்கு ஐசியும் இல்லை. இவனுக்குப் பற்றிக் கொண்டு வரும். பத்து நாட்களாக சினத்தை வெளிக்காட்ட முடியாத சனக்கூட்டம். வெக்கை. கையாலாகாத்தனமாக மனைவியின் முன்னால். கணவனுக்கு ஏற்படும் அவமான உணர்ச்சி. 60/செம்பியன் செல்வன்

கொஞ்ச நேரம் எண்டாலும் என்னைச் சும்மா இருக்க விடமாட்டீரே.? கன்னைப் போட்டுப் பிச்சுப் பிடுங்கிறீரே. ஐஞ்சாறு நாளா ஆமான நித்திரைகூட இல்லை. நடுச்சாமம் பெரிசா மழைபெய்யுது. ஒதுங்கக்கூட இடமில்லை. காலுக்க வெள்ளம். அதோட நேரகாலம் தெரியாம மக்களின்ர வயிற்றுப் போக்கு. நரகல். கால் வைக்க இடமில்லை.
அப்ப நான் மட்டும் நல்லாப் படுத்துறங்குறனே.? அவள் வார்த்தையில் வெடிப்பு, அவனுக்குப் புரிகிறது. இனி வார்த்தைகளை வளர விடுவது ஆபத்து. தணிவதைத் தவிர வேறு வழியில்லை.
‘எப்படியும் நாளைக்கு விடுவாங்கள் எண்டுதான் நம்புறன். எனக்கு வயது நாப்பத்தாறு. உமக்கோ நாப்பது. விடத்தானே வேண்டும். ஐசி இருக்குத்தானே. பெற்றோரை விட்டிட்டு புள்ளையள வைச்சு அவங்கள் என்ன செய்யிறது.?
அவள் முகம் மலர்கிறது. அவனை உன்னிப்பா நீண்ட நேரம் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் பெருமிதம். கனிவு. பாசம். எல்லாம் கவிகிறது. தன்னை மனைவி பார்க்கிறாள் என்பது தெரிந்தும் தெரியாத பாவனையில் மனதில் ஏதேதோ கிளுகிளுப்பு.அந்தரங்கம் எதுவுமின்றிக் கழிந்த அர்த்தமற்ற பத்து நாட்கள்.
இஞ்சருமப்பா.
'உம்.
நான் சொன்னாக் கோவிக்க மாட்டியளே."
"என்ன.?
இல்லையப்பா. உம்மைப் பாத்தா நாப்பது வயதுக்காரர் என்று ஒருத்தரும் நினையாயினம்.
'உம்மைப் பாத்தாலும் அப்படித்தான் நினையாயினம்.
அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்லுறீர்.?
‘என்ன செய்யச் சொல்லுறனா? தலையில அடிச்சு அடிச்சுச் சொல்லிறனான். மீசையில வளருற நரைச்ச மயிர்களைப் புடுங்காதையுங்கோ. புடுங்காதேயுங்கோ எண்டு சொன்னா கேக்கிறியளே? ரெண்டு பிள்ளைகளுக்குத் தேப்பானகியும் இன்னுய இளந்தாரிக்கு நடிக்கிறியள். இல்லாட்டி நேத்துப் பார்த்தனே. அவள் வம்புச் சண்டைக்கு இழுக்கிறாள் என்பது புலனாகிறது.
‘என்னத்தப் பாத்தனீர்..? அவன் குரலில் கடுமை ஏறுகின்றது. மனைவிகளிடம் காணப்படுகின்ற குறையே இதுதான். எந்தளவுக்கு எந்தளவு பாசமிருக்கிறதோ அந்தளவுக்கு அந்தளவு சந்தேகம். பொறாமையும் இருக்கும்.
'அண்டைக்குப் பட்டப் பகலில ஆரோ ஒருத்தியோட இளிச்சு இளிச்சு கதைச்சுக் கொண்டிருந்ததை நான் பாக்கேல்ல எண்ட நினைப்போ. அப்ப பத்திக்கொண்டு வந்ததுக்கு நல்லா நாலு கேள்வி கேட்டிருப்பன். சுத்திவர வீடு திரும்புதல் / 61

Page 39
ஒரே சனஞ்சந்தடியாப் போச்சு. எல்லாத்துக்கும் வீட்ட போய்த்தான் கதையிருக்குஅவனுள் திக்கென்றது. வீட்டுக்குப் போன பின்பும் அலுப்பிருக்கு. இப்போதே அடக்காவிட்டால் சந்தேகம் தலைக்கேறிவிடும்.
'கண்டபடி விசர்க்கதை பேசாத. அது பாவம் என்னட்ட என்ன கேட்டது தெரியுமே..?
நாங்களும் புள்ளகுட்டியளோட அந்தரப்படுவதைப் பர்த்திட்டு கேட்டுது. ஒரு இடமும் பாத்ரூம் போக வழியில்லாமலிருக்காம். ஒரே கியூவாம்.வேற எங்காவது போக வசதியிருக்கா எண்டு வெக்கத்தவிட்டுப்போட்டு கேட்டதயே சொல்லிக் காட்டுறாய்.?
மனதிற்குள் ஆத்திரத்தையும் மிஞ்சி ஏதோ பெருமை பொங்குகிறது. இந்த வயதிலும் நான் இன்னொருத்தியுடன் கதைப்பதால மனுசிக்கு பொறாமை வருகுதெண்டால்..? அவள் முகத்தை பார்க்கிறான்.
மெளனித்திருந்த அவள் முகத்தில் மூன்றாம் பிறைபோன்ற ஒளிக்கீற்று மெல்லத் தெரியவாரம்பிக்கின்றது
நீர் ஏதேதோ விசர்க்கதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கீறீர். எங்களோட வந்த அம்மா எங்க போட்டா எண்டு நான் கலங்கிப் போய் நிக்கிறன்.
அதுதானப்பா. எனக்கும் விளங்கேல்ல.நாங்கள் இங்க வந்த அடுத்த நாள் ‘கந்தசட்டியெல்லே. அவ எதைத் தவற விட்டாலும் அதைத் தவற விடுவாவே. வீட்ட போகவேணும். விரதம் பிடிக்க வேணும். ஆடு மாட்டில பால் கறக்க வேணும். விளாத்தியில் பழம் பொறுக்க வேணும் எண்டுதான் நாண்டுகொண்டு நிண்டவ. இப்ப எப்படி போறது. சும்மா இருங்கோ எண்டு சொல்ல. அவ பிடிவாதம் பிடிச்சா. வீடு கிட்டத்தான் உவன் செல்லாச்சிப் பிள்ளைகூட ரகசியமா ஒருத்தருக்கும் தெரியாம. உந்த வளவுக்குள்ளால போய்ப் பேரப்பிள்ளையருக்கு சீனி. மாப்பவுடர். தேயிலை. அரிசி.மா எண்டு கொண்டுவந்து விட்டாள். எங்கட வீடு இன்னும் கிட்டத்தானே. எண்டு நிண்வ. காலையில ஆளைக்காணேல்ல.
அப்படியெண்டா.வீட்ட போனவ திரும்ப வசதிப்படாம தங்கிப் போட்டாவோ?
அப்பிடித்தான் நினைக்கிறன். வயதுபோன கிழவி. எவன் என்னை என்ன செய்யப்போறான். கண்டாலும் விட்டிடுவான். எண்டுதான் புலம்பிக் கொண்டிருந்தவ. எல்லாத்துக்கும் வீட்ட போனாத்தான் முடிவு தெரியும். வீடு திரும்ப வேண்டும் என்ற துடிப்பு ஒருகாலத்திலும் தன்னுள் இந்தளவுக்கு எழுந்ததில்லை என எண்ணிக் கொண்டான். காலை எட்டி வைத்தான். கால் மடங்குவது போல் சவட்டி விழுவது போல் ஒருகணம் சேர்ந்து துவண்டது. மீண்டும் ப்போ' என்று யாரையோ சிப்பாய் கூறும் குரல் கேட்டுத் திரும்பினான். 62/செம்பியன் செல்வன்

அந்தச் சிப்பாய் தன்னுள் ஆயுதம் தேடியதுபோல் கர்மசுத்தியுடன் ஓர் இளம் பெண்ணின் இரவிக்கைக்குள் கைவிட்டுத் தேடிக் கொண்டிருப்பது, யதேச்சையாக திரை நீக்கிய இடைவெளியினூடாக இவன் கண்ணில் பட்டுத் தெறித்தது. இவன் நெஞ்சில் 'குப் பென எதுவோ பலமாக அழுத்தத் திணறினான். கால்கள் பரபரத்தன் கண்களில் கனல் ஏறின.
இதற்கெல்லாம் இவங்களிட்ட பெண் சிப்பாய்கள் இல்லையா? தூரத்தில் செயின் புளக் ஒன்று நகரும் ஓசை கேட்டது.
மனைவி, பிள்ளைகள் நின்ற இடத்தை நோக்கி வேகமாக நடந்தான். இவன் பின்னால் யார் யாரோ வருகிறார்கள்
கோப்பாய் சந்தியில கறுத்த பிளவுசும் கட்டைப் பாவாடையுமா பெண் புலிகள் மேஜரோட வந்த படையணியையே சிதறி ஓட வைத்தார்களாம். அதால அந்த மேஜர் அந்த வயது. உடுப்போட உள்ள பொம்பிளைப் புள்ளை யளை கடுமையாகச் சோதிக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கிறானாம்.? யாரோ சொல்லிக்கொண்டு நடக்கின்றார்கள்.
இவன் முகம் மேலும் இறுகிசூறது. பெண்பிள்ளைகளே இப்படி துணிவுடன் எதிர்க்க. நாங்கள் ஆண்கள்.? தங்கள் கையாலாகாத்தனத்தை எண்ண. எண்ண.
மனைவி பிள்ளைகளை அண்மிக்கிறான்.
ஏனப்பா. இவ்வளவு நேரம்.? அவள் ஆர்வமுடன் கேட்கிறாள்.
அங்க குளிச்சு முழுகிச் சாப்பிட்டு வாறன். பேசாமநட.
அவள் அடங்கிப்போகிறாள். அவன் பார்வை அவளை உச்சிமுதல் பாதம் வரை அளக்கிறது. அவன் நடத்தை அவளுக்கு புரியாமலிருக்கின்றது.
குழந்தைகள் முன்னே குதூகலமாக ஓடிக் கொண்டும். வீதியைக் கண்டபடி கடந்து கொண்டும். சுதந்திரமாகக் கூச்சலிட்டுக் கொண்டும். தெருவில் நடமாடுவோர் தொகை மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டுவர அவன் மன இறுக்கத்துடன் நடந்து வருகின்றான். அவன் மெளன இறுக்கம் அவளுள் சஞ்சலத்தை விளைவிக்கிறது.
ஏதும் கேட்டால் எரிந்து விழுவான் என்பதால் அவளும் மெளனமாக நடக்கின்றாள்.
அவன் மனதில் கூர்க்கா அந்தப் பெண்பிள்ளையுடன் நடந்து கொண்ட முறை நிழலாடியது.
ஒருவேளை - ஒருவேளை என் மனைவியிடம் கூட அப்படி ஆயுதம் தேடியிருப்பானோ..? நினைப்பே நெருப்பாகி.
பெற்ற தாயும். பிறந்த பொன்னாடும் என்பது போல நாட்டின் பெண்கள். என்றும் கூட்டிக் கொள்ளலாமா.
வீடு திரும்புதல் / 63

Page 40
எங்கள் பெண்கள் இவங்கள் கைகள் பட்டு மாசுபட என்ன பாவம் செய்தார்கள்.? நெஞ்சில் அனலேறியது.
மனைவியிடம் கேட்பமா..? கேட்டால்? என்னை ஒரு அற்பனைப் போல பார்ப்பாளோ? உண்மையைத்தான் சொல்வாளோ? அப்படிச் சொன்னாத்தான் நான் என்ன இந்த இந்தியச் சிப்பாய்களை அடித்து நொருக்கப் போகிறேனா? எல்லாத்துக்கும் புலியள்தான் பாடம் கற்பிக்க வேணும். பாவம் இப்பதான் அவங்கட நோக்கம் புரியுது. கஷ்டங்கள் புரியுது.
அவன் கால்கள் காரணமறியாமல் வேகமாகின்றன. இளம் பிள்ளையளிலதர்ன் உந்தச் சேட்டைகள் விட்டிருப்பாங்கள். சேலைகட்டிய இரண்டு பிள்ளைக்காரியிலுமே. அவங்களையும் தாய்மார்தானே பெற்றிருப்பினம். எண்டரலும் உந்த எளியவங்களை நம்பேலாது.
கொஞ்சமெண்டாலும் படிப்பு வர்சனையற்றதுகள்.அதுகளுக்கு எங்கட ஐசி எப்படி விளங்கும்.?
நடையில் வேகம் கூடுகின்றது. அவள் அவன் பின்னால் ஓட்டமும் 560LLAT5 .. W
தூரத்தே ஆரிய குளம் தெரிகிறது. மருதமர நிழலில் காய்களையும் புற்களையும் மேய்ந்து கொண்டு நகரும் மாடுகள்.
மாடுகளை உவங்கள் தின்னங்கள். மனிசரைத்தான் முழுங்குவான்கள். இஞ்சருமப்பா. மாடுகள். எங்கட மாடுகளும் இப்படி வெளிக்கிட்டி ருக்குமோ..? M ر
கட்டில் கிடந்த மாடுகள், கயிறு அறுத்தாத்தான் வரமுடியும். திடீரென்று அவள் முன்னால் போகும் குழந்தைகளை நோக்கிக் கத்தினாள்:
மகன் ஒடு. ஒடு. ஒடிப்போய்ப் பார். எங்கட நெற்றிச் சுட்டியனும் கறுத்த வாலனும் போலகிடக்கு. போ. கெதியெண ஒடு.
மகன் ஓடுகிறான், இவனுக்கும் மனதில் சந்தேகப் பொறி தட்டுகின்றது.
LDLD/I. Lf3ls)s. LDLD/I. மகன் திரும்பி ஓடி வருகின்றான். பின்னால் மாடுகளும் ஓடி வருகின்றன. மக்கள் வியப்புடன் பர்த்தவாறு நடக்கின்றார்கள்.
'ஓம். ஓமம்மா. எங்கட மாடுகள்தான். பாரம்மா என்னைக் கண்டோன கத்திக்கொண்டு ஓடி வாறதை.
அப்ப ஆடுகள்.?' ஆடுகளைப் பார்த்தாள். காணவில்லை. 'திண்டு முடிச்சிருப்பாங்கள். என்று முனகிக் கொண்டான். 'மாடுகளை ஆர் அவிட்டு விட்டிருப்பினம்? அம்மாவோ..? அல்லது 64/செம்பியன் செல்வன்

அறுத்துக்கொண்டு வெளிக்கிட்டுதுகளோ? அம்மா வீட்டில்தான் இருப்பாள் என்பது மனதில் மெல்லிய ஆறுதலைக் கொடுத்தது.
அவளின் முகம் பூரிக்கின்றது. முகத்தில் தெளிவு பிரகாசமாகப் படர்கின்றது. மாடுகளின் அருகில்போய்த் தடவிக் கொடுக்கிறாள். அவற்றின் கன்னத்தோடு கன்னமாக குனிந்து உரசுகிறாள். அவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறான். முகத்தில் எந்தவித களங்கமும் தெரியவில்லை. 'சாய் நான் ஒரு விசரன். இவளில அவன் கை வைத்திருக்க முடியாது. வைச்சிருக்கவும் விட்டிராள். அப்படி ஏதும் நடந்திருந்தா இவள் முகம் இப்படியிருக்குமோ..? அவன் முகம் சோளகக் காற்றில் மணல் நீங்கிய தரையாகக் கிடந்தது.
இப்போதுதான் அந்த விசும்பல் ஒலி இவன் காதில் விழுகின்றது. பின்னால் திரும்பிப் பார்க்கிறான். அவர்களைப் போல மக்கள் குடும்பம். குடும்பமாகவும் தனித்தும். நகர்ந்து கொண்டிருக்க. எங்கிருந்து இந்த விசும்பல் ஒலி. ஒரு குடும்பத்தில் ஒரு தாய். தந்தை. பெண். சிறுவன் என வந்து கொண்டிருக்கின்றார்கள். வறிய குடும்பம் எனத்தெரிகிறது. அந்தப் பெண்தான் விசும்பிக் கொண்டு. தாய் அவளை அணைத்து தேறுதல் சொல்ல. சிறுவன் மிளர விழித்தவாறு.
'ஒண்டுமில்ல. ஒண்டுமில்ல பிள்ளை. உன்னை மட்டுமே. எல்லோரையும்தானே சோதிச்சவங்கள். அழாத பிள்ளை. அழாத.
அட! அந்த கூர்க்கா சோதிச்ச பிள்ளை' ‘என்ன பிள்ளைக்கு. ஏதும் சுகமில்லையே. என்று கேட்டவாறு மனைவி அவர்கள் பக்கம் போகின்றாள்.
'காய்ச்சலா கிடந்த பிள்ளை இரண்டு கிழமை வாட்டில பெரியாஸ் பத்திரியில வைச்சிருந்தனாங்கள். கொஞ்சம். எப்பன் சரியெண்டா வீட்டுக்குப் போவம் எண்டுதானிருந்தம். அந்த அறுவாங்கள். நடுச்சாமம்போல ஆஸ்பத்திரிக்கே வந்திட்டாங்கள். நோயாளி. டாக்குத்தர்மர் எண்டு ஒருத்தரையும் பாக்கேல்ல. எல்லாரையும் சுட்டுக் கொண்டாங்கள். படுத்திருந்த நோயாளிகள் இருட்டுக்குள்ள எங்க போறம். வாறம் எண்டு தெரியாம ஓடிச்சுதுகள். நாங்களும் எழும்பி ஓடி '. எங்கட நல்ல காலம் இந்த ஊர்ப் பொடியன்போல. எங்கள இந்தக் கானுக்குள்ள இறக்கி. சேறும் சகதியும்தான்.
மரண பயத்தில என்ன பாத்தம். அப்பிடியே இரவோட இரவாக கோயிலுக்குள்ள கொண்டுவந்து சேர்த்துப்போட்டுப் போச்சு. பேந்து ஆளையே காணேல்ல. ஆஸ்பத்திரியிலதான் எங்கட ஐசி எல்லாம் தொலைஞ்சு போயிருக்க வேணும். செக் பண்ணுறவன் இதைச் சாட்டா வைச்சுக் கொண்டு பிள்ளையைக் கொஞ்சம் கரைச்சல் படுத்திப் போட்டான். அதுதான் பிள்ளை அழுகிறாள்.
வீடு திரும்புதல் /65

Page 41
அப்பிடிச் சோதிச்சவன் கையை நீ முறிச்சிருக்க வேணும். வடக்கத்தையான்களுக்கு புத்தி சொல்லிக் கொடுத்திருக்க வேணும். அவரும் சோதிக்கிற சாட்டில எங்களில சேட்டை விட்டுப் பாத்திருக்க வேணும். எத்தனை பேர் சாகினம். தூ! போற உயிர் மானத்தைக் காக்கப் போகட்டன். மனைவி சீறுகிறாள்.
இவன் மனதில் இதுவாை நிலவிய தவிப்பு அடங்குகிறது. மனதில் ஆனந்த அலைகள் வீசுகின்றன. முகத்தில் மகிழ்ச்சிக் குமிழிகள்.
அவர்கள் வருகையின் வலது பக்கமாகச் சந்தி முகப்பில் வெறும் காணி அங்கும் கூட்டம் கூட்டமாக மக்கள்.
மக்கள் சில சமயம் கலையும் போது தெருவிலிருந்து பார்க்கும்போது நிலம் கறுத்து கரியுண்டதுபோல்.
‘என்ன கூட்டமாம் அது.? அநியாயம் செய்த இந்தியச் சிப்பாய்கள் பதினாலுபேரை பொடியள் சுட்டுப்போட்டுக்கொண்டுவந்து எரிச்சதாம்.
மனைவி அருவருப்பால் முகம் களித்தாள். குழந்தைகள் பயத்தால் அவனுடன் ஒட்டிக் கொண்டன.
'அம்மா. அம்மா. அதை ஒருக்காய் போய்ப் பாப்பமணை அந்தப் பெண் துடிதுடித்தாள்.
'உனக்கு விசரே பிள்ளை. வயது வந்த பிள்ளை. இப்படிச் சவங்களைப் பாக்கலாமே.
இல்லையணை. கட்டாயம் பார்க்க வேணும். கேக்க ஆளில்ல எண்டுதானே அப்பிடி நடந்தவங்கள். இனிச் செய்வாங்களா..? செய்வாங்களா. பெண் பற்கள் தெரியச் சிரித்தாள்
அவனுள் சக்தி எதுவோ இறங்குவது போலிருந்தது. புரிந்ததுபோலும் இருந்தது.
அம்மா பிள்ளையை ஒருக்காக் கூட்டிக்கொண்டுபோய்க் காட்டுங்கோ. பிள்ளை இனி அழாள்.
அவர்கள் அந்தக் காணிக்குள் இறங்க, இவர்கள் தங்கள் வீட்டை நோக்கி நடக்கிறார்கள்.
வீடு நெருங்கியது. அயலவர்கள் இன்னும் வீடு திரும்பத் தொடங்கவில்லை என தெருவும், வளவுகளும் நிசப்தம் கொண்டிருந்தன. காலாதிகாலமாக நடந்து திரிந்த பகுதி. பயம் கொண்டு வாழவெனக் காத்துக் கிடப்பதாக.
இதுவரையும் நிலவாத படபடப்பும். துரிதமும். வழியில் கிடந்த ஏதோவொன்றை மகன் கால்களினால் தட்டி உருட்டிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினான். 66/செம்பியன் செல்வன்

'கண்டதையும் காலால தட்டாத. காலில் ஏதும் ஏறிவிடும். இப்ப மருந்துகூடப்போட வழியில்லை. புண்ணுக்கு மருந்துகூட தடை செய்யப்பட்ட சட்டவிரோதப் பொருளாம். மனைவி சத்தம் போடுகிறாள்.
அதொண்டுமில்லை. காஞ்ச வெறும் பனங்காய். என்று மகன் கத்துகிறான்.
கட்டிப்போட்ட சங்கடப்படலை சங்கிலியும் பூட்டும் இழந்து கிடக்கின்றது. திறந்து கொண்டு உள்ளே போகின்றார்கள்.
மாடுகள் உள்ளே இழுக்கும் போது நெற்றிச் சுட்டியன் மகனால் கூட்டிவரப்பட்ட பனங்காயைப் முன்னங்காலால் தட்டிவிட, அது உருண்டுபோய் முற்றத்தில் விழுகின்றது. இந்த சீசனில் பனங்காய் ஏது? என்ற சிந்தனை மனதில் ஓடாமல் ஓடி மறைகின்றது.
மனைவி வீட்டுப் பக்கம் போக, இவன் மாடுகளைத் தொழுவப்பக்கமாக கூட்டி வருகின்றான்.
ஆடு, கோழி ஒன்றையும் காணவில்லை. மாடுகளைக் கட்டிவிட்டு கிணற்றடிப் பக்கம் போகின்றான்.
இஞ்சாரும். ஐயோ. ஐயோ..!" என்று அலறிக் கொண்டு அவள் ஒடி வருகிறாள்.
'வீடுவாசல் எல்லாம் திறந்து கிடக்கு. பெட்டகம் அலுமாரி எல்லாம் ட டைச்சுக் கிடக்கு. மாமி வரேல்லப் போல கிடக்கு.
அவன் நெஞ்சில் ஏதோ நிரடுகின்றது. கிணற்றடியை நோக்கி நடக்கின்றான். அதென்ன வாய்க்கால் சேற்றில். இராணுவச் சப்பாத்துத் தடம். சற்றுத் தள்ளி ஐந்தாறு விளாம்பழங்கள். கிணற்று மறைப்பு வேலியில் முட்கிழுவையில் கிழிந்ததுணி. அம்மாவின் சேலையா? அதென்ன எறும்பு புற்றுகள் போல. ஆட்டுத்தோல். குடல். கால் குளம்புகள். வால். கக்கூசுக்கும் வேலிக்கும் இடைப்பட்ட வெளியில்.
மனம் 'அம்மா. அம்மா." என அடித்துக் கொள்கின்றது. மனதில் ாதுவோ மின்னல் என வெட்டுகின்றது.
பனங்காய். பனங்காய். என உதடுகள் துடிக்க ஓடிப்போய் அதனைக் கையில் எடுக்கிறாள்.
பல நாட்கள் மழையிலும் வெயிலிலும் கிடந்து நாய் காகங்களுக்கு உணவாக எஞ்சியவை கறுத்து, வரண்டு சுருங்கி.
'அம்மா. அவன் அடிவயிற்றிலிருந்து எழுந்த குரல் அந்த வளவு முழுவதும் எதிரொலித்தது.
- பாரிஸ் ஈழமுரசு 12-04-1995.
வீடு திரும்புதல் / 67

Page 42
8
2ua 22 2/27-22
Y செல்லாச்சியம்மா அவசரம்
அவசரமாக 'போயிலைப் போறணைக் குடிலுக்குள்ளிருந்து புறப்பட்டாள். போற ணையில் தேங்காய்மட்டை, ஊமல், விறகு என கனிந்து கொண்டிருந்தன. அவ்வெப் பத்தை சீராக்கி உலர்த்தும் புகையிலை யைப் பதமாக வாட்ட பிரண்டை, நாகதாளி என வெட்டிப் போடப்பட்டிருந்தன. பின் பனிக் காலத்தில் புகை குடிலின் கூரை வழியாக வெளியேறி பனிப்புகாருடன் கலந்து கொண்டிருந்தனர்.
கொஞ்சநாட்களாக நிலமை சரி யில்லை. எங்கோ தூரத்தே இடிமுழக்க மென ஷெல் அடிகளும். துப்பாக்கிச் சூடுகளும் கேட்கின்றன. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.?
அவளுக்கு நிறைய வேலை இருந்தது. அந்த வேலைகளிலேயே இந்த குண்டுச் சத்தங்கள் அவளை வீறுகொள்ள வைக்கின்றன.
முன்பெல்லாம் எவ்வளவு அமை தியாக இருந்தம். எந்தப் பிரச்சினையும் அவர்கள் தீவுக்குள் தீவிரம் காட்டுவ
J தில்லை. தீவுக்குள் விரோதி நுழைய
68/செம்பியன் செல்வன்
 

(முடியாது. நுழைந்தாலும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது. புவியியல் நிலையோ. மக்களின் மனநிலையோ. அவனுக்கு சாதகமாக இருக்கமாட்டாது. ஆனாலும் முன்பு ஒரு முறை. நள்ளிரவில் நாசகாரன் தீவிற்குள் நுழைந்து விட்டான். அவன் நுழைந்த அதிர்ச்சியைவிட. அவன் எப்படி நுழைந்தான் என்பதே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவனுக்கு இந்த வழிவகைகளையும் போக்குகளையும் காட்டிக்கொடுத்தவர்கள் யார்.? கோயில்களிலும் பாடசாலைகளிலும் அவர்களை அகதிகளாக்கி விசாரணை புரிய வந்தவர்களைப் பார்த்தபோதுதான் உண்மை தெரிந்தது.
இந்த 'ஐந்தாம்படை' வேலையைப் பார்ப்பதும், இவர்களா..? மனம் கசந்து வழிய காறித்துப்பினார்கள். எல்லோரும் கோயிலுக்கோ, பாடசாலைக்கோ இரவோடு இரவாகப் புறப்பட்டார்கள்.
இரண்டு மூன்று நாட்களிலே திரும்பிவிடலாம் என்ற எண்ணத்தில் உடுத்த உடுப்போடு புறப்பட்டவர்கள். வீட்டைப் பூட்ட மறந்தவர்கள். காசையோ. பணத்தையோ. நகைநட்டுக்களையோ எடுக்காமல் வெளிக்கிட்டவர்கள்.
திரும்பிவந்தபோது. வீடுவாசல்கள் சூறையாடப்பட்டிருந்தன. கிணறுகள் நீருக்குப் பதிலாக மனிதச் சடலங்களால் நிறைந்து. வயல்வெளிகள் எரியுண்ட புல் பூண்டு மேடுகளாக.
போனவன் வந்துவிட்டானோ? எங்கட பிள்ளைகள் அப்படிவர விட மாட்டாங்களே. அப்படி அவன் வந்துவிட்டால்.?
- அவளுக்குத் தலையைச் சுற்றி வந்தது. கிணற்றுக் கட்டில் அப்படியே அமர்ந்தாள்.
காலைச் சூரியன் ஆடுகால் பூவரசங்குழைகளினூடாக வந்து கன்னத்தைச் சுட்டது. அவள் திடுக்குற்றாள்.
இன்னும் வீடுவாசலைக்கூட கூட்டேல்ல. இதிலஇருந்து என்ன செய்யிறன்?
- அவள் வேகமாக நடந்தாள். - அவள் வீடுகூட்டுவதே ஒரு சடங்கு நிறைவேறுவதைப்போலத்தான் இப்போதெல்லாம் நின்று நீண்ட நேரம் கூட்ட முடிவதில்லை. குந்தியிருந்தவாறு பாதங்களை நகர்த்தி நகர்த்திக் கைவிளக்குமாறால் ஒரு மணல்கூட இல்லாமல் கூட்டுவாள். எத்தனையே விதமான விளக்குமாறுகள். தும்புத்தடிகள். இப்போது பிளாஸ்ரிக்கிலும் வந்தபின்னும் அவளுக்கு கைவிளக்குமாற்றை விட மனமில்லை. கிணற்றடியில் பருத்து வளர்ந்திருந்த இளந்தென்னையின் விழுந்த ஒலையில் ஈர்க்கு வார்ந்து எடுத்துக் கட்டிய கைவிளக்குமாறுபோல் எதுவும் இதமளிப்பதில்லை. வீடு கூட்ட ஒரு விளக்குமாறு அடுப்படிக்கொன்று; முற்றத்திற்கு இன்னொன்று.
நிலம், வீடு, வாசல் / 69

Page 43
வீடு என்றால் இன்று நேற்றைய வீடே முப்பாட்டன் காலத்து வீடு. நாற்சாரவிடு. சுண்ணாம்பு. முட்டையின் சிவப்புக்கரு. பனங்களில். சர்க்கரை கலந்து கற்கள் வைத்துக்கட்டப்பட்ட வீடு. தாராளமாக ஓராள் விழாமல் படுத்தெழும்பக்கூடிய அகலச் சுவர்கள். கோடையும் மாரியும் அந்தச் சுவர்களால் வடிகட்டப்பட்டு வீங்கிள வேனிலாகச் சுகம் கொடுக்கும். வாசலில் வேப்பமர நிலை. ஒரு கனஅடி தடிப்பு. முற்றிலும் சிற்பச்செடி வேலை. கதவில் பித்தளையிலான பளபளக்கும் கைப்பிடி. திறப்பு கால்கிலோ நிறை உருக்கு. நிலையின் இருபக்கச் சுவரிலும் சிறு விதானம் போலமைந்த உட்குழிந்த மாடம் பழைய காலங்களில் அகல் ஏற்றி இருப்பார்கள். இன்று சிக்கனவிளக்கு கடற்காற்றுக்கு ஈடுகொடுத்து மாலையில் கண்விழிக்கக் காத்திருக்கிறது. வெளிநடைப் பாதையின் இருபுறமும் நீண்ட திண்ணைகள். திண்ணை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குடும்பம் வாழலாம். நடை பாதையில் பதிக்கப்பட்ட பட்டைக்கற்கள் நடந்து நடந்து மெருகேறிய பளிங்காக.
-அவள் வீடு கூட்டிய குப்பைகூளங்களை. மண்ணை ஒரு சுளகில் அள்ளுவாள். வீட்டிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு பொருளும் லச்சுமி. வீட்டிலிருந்து பணம். பொருள். எது எடுப்பதனாலும் நாளும் கோளும் கிழமையும் நேரமும் பார்ப்பது தவறாது. இரவில். உப்பு, முட்டை மட்டுமல்ல வீட்டைக்கூட்டி வெளியேயும் தள்ளமாட்டாள்.
-அவள் வீடு கூட்டிய குப்பை கூளங்களை. நீக்கி மண்ணை ஒரு சுளகில் அள்ளுகிறாள். அவற்றை அப்படியே கொண்டுவந்து குப்பைகளோடு போட்டுவிட்டு, முற்றத்தை முழுவதுமாக கூட்டமுனைவாள். சமீபகாலமாக இருந்தால் நினைத்தபடி எழும்பமுடிவதில்லை. நாரியைப் பிடித்துக்கொண்டு ஆ. ஆ. அ. அ. மெல்ல முனகியவாறு நிமிர்ந்து படிப்படியாக எழுந்து நிமிர்த்துவதும் ஒரு சடங்குதான். நிமிருவதுவரைதான் இந்த இடுப்புப்பிடிப்பு. பிறகு எல்லாம் சரி.
'எல்லாம் உவர் பரியளியாற்ற நாட்டுமருந்தைக் கொஞ்சநாளா விட்டதின்ர குணம்தான் இது. எப்படியும் நாளைக்கு பரியாரியாரைப் போய்க் காணவேண்டும். முடக்கத்தானில அவர் தாற குளிசைக்குத்தான் இந்தப் பிடிப்பு போகும்.
-வாசற்படியிலிருந்து ஆரம்பித்த கிரியை முற்றத்தின் வலதுகோடி மூலைக்கும் இடதுகோடி மூலைக்குமாகப் போய் முடிகிறது. முற்றம் முழுவதும் இரவில் உதிர்ந்த மாவிலைகள். சருகுகள். வலப்பக்கத் திண்ணைக்கு சற்றுத் தெற்காக நாலைந்து அடி இடதுரம் விட்டு ஒரு பருத்த மாமரம். நாலாள் சேர்ந்து கட்டிப்பிடிக்கக் கூடியதாக பருமன். கற்கண்டுப் பழங்கள். வீடு கட்டும் பொழுது வைத்த மரம் என்று அப்பா சொல்லிச்சொல்லி மகிழ்வர். மாமரத்தில் அவர் தனது பாட்டனாரைக் கண்டு ஸ்பரிசித்து மகிழ்வார். இன்று செல்லாச்சிக்கு தந்தையாக விளங்குகிறது. 70/ஃெபியன் செல்வன்

அண்டைக்கு ஒரு மசிர் வந்து கேக்குது. மரத்துக்கு இருபதாயிரம் தாறன். வெட்டவிடுவியளா எண்டு. இப்பத்த விறகுப் பஞ்சத்துக்கு விலை கேது. தூமை. இது மரமேடா?. எங்கட குடும்பத்தில இரத்த உறவில ஒண்டு எண்டு தெரியுமே? இது என்ன மரம்? எப்பத்தைய மரம். ஆர் வைச்ச மரம். எண்டு நினைச்சான். என்ற அப்பு வைச்ச மரமும். கட்டின வீடும். அப்ப இந்த வீட்டிற்கும் மரத்திற்கும் என்ன வயசிருக்கும்.? இந்த வீட்டில இந்த நிழலில. இந்த மண்ணிலதான் பிறந்தவையள். வளர்ந்தவையள். இதைப் போய் விலை பேசவந்திட்டான் எளியவன்.'
முற்றத்துக்குக் கோடியில் குப்பை கூளமுமாக மண் குவிகிறது. அவள் ஆறுதலாக மண்ணை விலத்தி. குப்பைகளைத் தனியாகப் பிரித்தெடுத்துச் சென்று உரக்கிடங்கில் வீசுகிறாள். பின் மண்ணை காலால் பரவி விடுகிறாள்.
‘என்னணை ஆச்சி மண் என்ன பொன்னா?” என்று பேரன் கேலி செய்வான்.
'பொன் என்னடா பொன். மண்ணுக்கு நிகரேது. கண்டபடி கூட்டித் தொலைச்சுத்தான் எத்தனைபேற்ற வளவுகள் நாசமாய் கிடக்கு. பள்ளக் காணியாகப் போய்விடும். பசளையும் போய்விடும். இந்த மண்ணின் மகிமையை உணராததுகள்தான் மண்ணை விட்டு பரதேசிகளாக ஓடுதுகள். பிறநாடுகளில பிச்சை எடுக்கிறதை பெருமையா நினைக்குதுகள். தூ!.
உதுகளும் ஒரு பிறப்புகளே. நிலம். வீடு. வாசல் எல்லாத்தையும் விட்டிட்டு ஊர் உறவுகளை மறந்து. பிச்சைக்காரர் போல முகமறியாததுகளிட்ட எல்லாம் கையேந்தி நிற்குதுகள். அதுக்கும் வீட்டைவளவை வித்து ஈடு வைச்சு லச்சக்கணக்கில செலவழிச்செல்லே பிச்சை எடுக்கப் போகுதுகள். சே. என்ன மனிசர்கள்.
-புகையிலைக் கொட்டிலில் வேலை பார்க்கிறவர்கள் வரத்தொடங்கு கிறார்கள்.
அவள் அவர்களுக்கு தேனீர் வைக்கவும் பேரனை எழுப்பவும் எழுந்து உள்ளே போகிறாள்.
2 செல்லாச்சியம்ட போனமுறை மாதிரி இந்த முறையும் ஆமி வரப் போகுதெண்டு கதையாய்க் கிடக்கு
'உதென்ன விசர்க்கதை முத்தையா. முந்திமாதிரி. நடக்க இப்ப பொடியள் விடுவாங்களே.
'உண்மைதான் செல்லாச்சியம்மா. ஆனா பொடியள். பொடியள் எண்டாப்போல முடியுமே. நாங்களும் அவங்களோட சேர வேணும். அடிதீப்*ww. போகவேணும். எங்கட பிள்ளையளையும் அனுப்பவேணும். ஆமி எக்கச்ாக்கமர்
நிலம், வீடு, வர்சல் /

Page 44
காரைநகரில வந்து குவியுதாம். அவனோட எங்கட காட்டிக்கொடுக்கிறதுகளும் வந்து நிற்குதுகளாம். அதுதான்.
அப்ப காரைநகர்ச்சனங்கள் என்னமாதிரி. அதுகள் ஒயது வந்ததுகளை வீட்டிலவிட்டிட்டு யாழ்ப்பாணப்பக்கமா நகருதுகளாம்.
'உவன் ஏன் இப்படித வுகளில வந்து மாய்கிறான். இயலுமென்டா யாழ்ப்பாணத்தில போய் மோதிப்பாக்கிறதுதான.
அவங்களுக்கென்ன பயித்தியமே. முந்திஒருக்கா கோட்டைக்குள்ள அகப்பட்டு கடைசியில இராவோடு இராவாக தப்பினேன் பிழைச்சேன் எண்டு மண்டைதீவுக்கு ஓடிப்போனதை அவ்வளவு இலேசில மறந்தே போவாங்கள் முத்தையாயண்ணை உனக்குத்தான் விளப்பமாகத் தெரியும். பொடியளோடையும் நெருக்கமாகப் பழகிறனி. அங்க இருந்த எல்லாரும் எப்படி. ஒரேயடியாத் தப்பினாங்கள். கிட்டத்தட்ட இருநூறு பேரல்ல.
முத்தையாண்ணையின் சிரிப்பு பலமாக எழுந்தது. நல்லாய் கேட்டாயணை செல்லாச்சி. கோட்டைக்குள்ள இருந்த சிப்பாய்கள் பொடியளின்ர பசீலன் குண்டுகளுக்கு கொஞ்சமும் தாக்குப்பிடிக்க முடியாமையும். குளிக்கவோ. உறங்கவோ. முடியாமலும் பங்கருக்குள்ளேயே. சீவியம் நடத்திக்கொண்டிருந்தவங்களால எப்படி போராட முடியும். பத்தாததுக்கு சிப்பாய்களைக் காவலில வைச்சுவிட்டு இராணுவ மேலதிகாரிகள் தூங்கிக்கொண்டு இருந்தா என்ன நடக்கும். ஒருநாள் பின்னிரவு வேளையில காதும் காதும் வைச்சாப்போல மண்டைதீவில இருந்து 'பொன்ரூன்' என்ற (Pontoon) ஒரு தற்காலிக பாலம் போன்ற கட்டுமரம் ஒன்றுவந்து கோட்டைக்குப் பின்னால நிண்டது.
அதென்னப்பா. பொன்ரூன் பாலம். அதனை இரண்டு மூன்று போட்டுகளை சமதளமாக மேற்பரப்பை அமைத்து பத்தடி இருபதடி தூரங்களில இன்னும் இரண்டு மூன்று போட்களை பிணைத்து மேற்பரப்பை பலகைகளால் பாலம்போல மாற்றி அதில் எல்லாரையும் ஏற்றிக்கொண்டு போயிற்றிாங்கள்.
கோட்டைக்குள்ள இருந்தவங்கள் எப்படி வெளியேறினாங்கள்? சுத்திவர புலியள் இருக்கேக்க.
‘என்னண்டா. கோட்டையிலிருக்கிற கழிவுநீர் போறதுக்கெண்டு ஒரு வாய்க்கால் அகழியோடு உள்ளிருந்து வந்து கடலுடன் கலக்குது. அதில மூழ்கித்தான் ஒவ்வொருத்தன் ஒவ்வொருத்தனாக வெளியேறினாங்கள்.
'உவ்வாக். -யாரோ ஓங்காளமெடுத்தனர்.
ஆச்சி. ஆச்சி. -என்று பேரன் ஓடிவந்தான். பத்து வயதிருக்கும்.
'என்னப்பு. என்ன. என்ன?-அவள் பேரன்’ என்றால் துடித்துவிடுவாள். 72/செம்பியன் செல்வன்
*

ஆச்சி. ஆமி காரைநகரால ஊர்காவற்றுறைக்கு வந்து விட்டதாம். புங்குடுதீவுச்சனத்தை வெளிக்கிடச்சொல்லி பொடியளும் சொல்லிப் போட்டாங்களாம். அதால சனங்கள். வேலணைப்பக்கமாக நகருதுகளாம். அப்படியே நிலமை? எதுக்கும் எல்லாரும் வீட்டபோய் முடிவெடுக் கிறதுதான் நல்லது.
அவசரமாக எல்லாரும் கலைய, புகையில் பொசுங்கும் மணம் காற்றில் கரைகிறது.
3 − நள்ளிரவு. விளக்கெரிந்துகொண்டிருக்கிறது. மங்கிய ஒளியில் நிழல்களாக பேரனும் செல்லாச்சியும் படுக்கையிலிருந்து எழும்பி இருக்கிறார்கள்.
தூரத்தே கேட்ட ஷெல் அடிகள் கிட்டக் கிட்டக் கேட்கத் தொடங்குகின்றன. தெருவழியே மக்கள் போகும் சந்தடி. காலநேரம் புரியாமல் தெருநாய்களில் குரைப்பும். ஊளையும். குழந்தைகளின் சிணுங்கள். அழுகைச் சத்தங்கள். இடையிடையே பொருட்கள் விழும் ஓசைகள்.
ஆச்சி. ஆமி வங்களாவாடிப் பக்கமாக வருகுதாம்.இங்க இருக்கிறது வீண்வேலை. நாங்களும் சனங்களோடு சனங்களா வெளிக்கிடுவம்.
‘விட்டிட்டுப்போறதோ. முந்தி இப்படிப் போய்த்தான் நான் உன்ர அப்பனையும் மருமோளையும் இழந்தன். இனிப் போய் இந்த நிலத்தை. வீடு வாசலையும் இழக்கிறதா?.
ஆச்சி முதலில போவம். பிறகு நிலமையைப் பார்த்து திரும்புவம்." நீ பேசாமப் படு. வீடு முழுக்கப் புகையிலை. ஒருவருஷம் பாடுபட்ட பலன். இதை எப்படிக் கொண்டுபோறது.?
"ஆச்சி இப்ப உயிருக்கே ஆபத்தாயிருக்கேக்க. நீ போய் புகையிலையைப் பற்றிப் பேசுகிறாய்.
'எட பேய்ா. முந்தி வந்த ஆமி என்ன செய்தது.? எங்களை துரத்திவிட்டு எங்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்தது. கும்மாள மடித்தது. அவனுக்கு இந்த முறையும் வாய்ப்புக் கொடுக்கிறதே.
சொத்துபோனா மீண்டும் சம்பாதிக்கலாம். நீ வரப்போறியா இல்லையா? பேரன் கோபமாகக் கேட்டான். வெளியே யாரோ இவர்களை அழைக்கிறார்கள். செல்லாச்சி. லாச்சி. எங்களையெல்லாம் பெருங்குள அம்மன் கோயிலுக்கு போயிருக்கச்சொல்லி பொடியள் சொல்லுகினம். கெதியில வா.
- செல்லாச்சி கொஞ்சம் பேசாமலிருந்தாள். பிறகு எழுந்தாள், விறுவிறு வென்று உடுபுடவைகளைத் திரட்டினாள். பேரன் தன் பொருட்களை திரட்டினான். முக்கியமான நகைநட்டுக்களை. பணத்தையும் ஒரு லேஞ்சியில் போட்டு முடிந்தாள். மார்பக றவிக்கைக்குள் செருகினாள். பொருட்களை ஒரு பெட்டியில் போட்டு பூட்டினாள்.
நிலம், வீடு, வாசல் /73 h

Page 45
'வார். போகலாம் செல்லாச்சி தன் பேரனை ஒரு கையிலும், மூட்டைமுடிச்சுக்களை தலையிலும் சுமந்தவாறு வளவைவிட்டு வெளியே வந்தாள். 'சங்கடப்படலை படர் என அடித்து மறுப்பு தெரிவிப்பதுபோல் சாத்திக்கொண்டது.
இருளோடு இருளா " படக்கள் நகர்ந்து கொண்டிருப்பது அரவங்களிலிருந்து புலனாகியது.
வளவில் அவிழ்த்துவிடப்பட்ட ஆடு மாடுகள் காலம் தெரிந்தோ தெரியாமலோ ம்மே! ம்மே.ம்மா.ம்மா' என்று கதறிக்குரல் கொடுக்க கோழிகள் மாமரக்கிளைகளிலிருந்து சடசடத்துக் கூவின.
முன்வைக்க எடுத்த கால்கள் ஒருகணம் தயங்கின. நெஞ்சம் குளிர் காற்றை மேவி ஒரு கணம் இளந்தளிராக நடுங்கியது.
சப்த தீவுகளைப் பாதுகாப்பதென பகைவனுக்குப் பயம் காட்டிக் கொண்டு ஆழ்ந்த அமைதியில் கடல் பரந்து. விரிந்து.கடலோரப் பூவரசு மரங்கள் மக்களுக்கு அபயம் காட்டிக் கொண்டிருக்க, தூரத்தே மின்மினிப் பூச்சிகளென மின்சார விளக்குகள் கடலிலும் கரையிலும் பகைவனின் இருப்பினைக் கூறிக்கொண்டு இருந்தன.
இருளில் யாரோ கூறிக்கொண்டு போனார்கள். 'விரசா போ புள்ள. நேரத்துக்குப். பெருங்குள அம்மன் கோவிலைப் போய்ச் சேந்திட வேணும். ஆமி காரைநகரிலிருந்து வெளிக்கிட்டு ஊர்காவற்றுறைக்கு வந்திட்டுதாம். புங்குடுதீவுச்சனத்தையும் பொடியள் இப்போதைக்கு வெளிக்கிடச் சொல்லிப் போட்டினமாம். பெரிய அடிபாடுதான் நடக்கப்போகுது. பெடியளுக்கு இடையில நாங்க இடையூறாக இருக்கக்கூடாது
செல்லாச்சி மீண்டும் ஒருமுறை படலையால் எட்டிப்பார்த்தாள் பரந்து விரிந்த முற்றத்துமாமரமும் வீடும் கடும் நிழலென இருளில் 'எங்களை இப்படி அநாதையாக விட்டுவிட்டு நீயும் போறியா?" என்பது போல் சோகம் கொண்டு நிற்பதென அதிர்ந்தாள். -
மனதைக் கல்லாக்கிக்கொண்டு, பேரனுடன் இருளில் இறங்கினாள். பெருங்குள அம்மன் கோயில் மக்களால் அலைமோதியது. அம்மன் கர்ப்பக்கிருகத்திலிருந்து மெளனமாகப்பார்த்துக் கொண்டிருந்தாள். பாலுக்காக அழும் பாலகர்களின் அழுகுரலில் அவள் தனது பாலமுதப் பொற்கிண்ணத்தில் பாலொழுகுவதுபோல் மெல்லிய ஒளியில் சிலிர்த்துக்கொண்டிருந்தாள். இருளிலிருக்கும் மக்களுக்கு என்னால் இதுமட்டும்தான் முடியும் என்பது போல் மெல்லியதான ஒளி மண்ணில் பரவ. கோழிகளின் கூவலும். ஆடுமாடுகளின் அம்மே. என்ற அழைப்புகளும். மனிதர்களின். மக்கள் வெள்ளங்களிலிருந்தும் எழுந்தவண்ணமிருக்க குண்டுச் சப்தங்கள். கையில் ஆயுதத்துடன் பொடியள் பதிலடி கொடுத்துக் கொண்டே மக்களைப் 74/செம்பியன் செல்வன்

பாதுகாத்தவாறு அனுப்பிக்கொண்டிருந்தனர். தோள்பட்டைகளில். காலின் ஆடுசதைகளில். மேனியெங்கும் இரத்தக்கறைகளுடன் அவர்கள் ஒடி ஒடியோடி. மக்களைப் பாதுகாத்து வழியனுப்பியவாறு.
- அவளின் நெஞ்சம் துவண்டது. கால்கள் பின்னின. கையை விட்டு நழுவ முயன்ற பேரனை இருளிலும் பாய்ந்து பற்றினாள். நடக்கத் தொடங்கினாள்.
இந்த இருட்டுக்க உன்னவிட்டிட்டு எங்க போய் நான் தேடுறது? உன்ர அப்பன் இப்படியே? அவன் பெயருக்குத்தான் மருமோன். என்ர சொந்தப்பிள்ளைகூட அப்படியிருக்கமாட்டுது. வாய்க்குவாய் மாமி மாமியெண்டு என்னில உசிரையே வைச்சிருந்தான். நான் கொடுத்து வைச்சது அவ்வளவு தான். கண் நிறைஞ்ச குடும்பம். நான் அதுக்குச் சீதனமா என்னத்தைக் கொட்டிக்கொடுத்தன்? இந்த வீடுவாசலும் நாலைஞ்சு பவுண் நகையும்தான. அவர் அதுகளை எட்டாப்பத்தாப் பெருக்கினார். இப்ப இருக்கிற இருபத்தைந்து பரப்புக் காணியையும் புகையிலைத் தோட்டமும் அவற்ற சம்பாதிப்புதான. டிராக்டர் என்ன. மோட்டார்ச் சயிக்கிள் என்ன எல்லாம் போச்சு. எல்லாத்தையும் அந்த நாசமாப் போனவங்கள் காட்டிக்கொடுத்து அழிச்சாங்களே. அந்த அறுவாங்கள். ஆமிக்கு எங்கட வயல், வெளி. பாதை எல்லாம் தெரியுமே. எல்லாம் எங்கடயவங்கள் சொல்லிக் கொடுக்காமலே அவன் வாங்களாவடியால வந்திருப்பான்கள்.? - அவள் நடை துரிதமடைந்தது.
முந்தியும் இப்படித்தான். திடுக்கெண்டு வந்திட்டாங்கள். பொடியளுக்கும் விளங்கேல்ல. எங்க பிசகு நேந்ததுவெண்டு. வந்தவங்கள் எல்லாரையும் கோயிலுக்குப் போகச்சொன்னார்கள். என்னையும் இவனையும் முதலில போகச் சொல்லிட்டு பின்னால வாறம் எண்டு புருஷனும் பொஞ்சாதியுமா நிண்டிச்சினம். மருமோனும் மகளைப் போகச்சொல்லி போ..! போ. எண்டு துரத்தினவர்தான். ஒரு பொஞ்சாதியானவள் அப்படி நிண்டு போடுவாளே. அப்ப இவனையும் கொண்டு கோயிலுக்குப் போனவள். பேந்து பின்ன அதுகளைக் கண்ணில கண்டனா..?
எல்லாரையும் வீட்டுக்குப் போகச்சொல்லி திரும்பி வந்தபோது வழியெல்லாம் யார்யாரோ எரிந்து கரியான காட்சியைத்தான் கண்டம். நான் கண்டனா..? என்ர புள்ளையஞம் இச்சாம்பலில கிடப்பினமெண்டு?
'வீடு வாசல் திறந்து கிடக்கிறது. டிராக்டர். மோட்டார் சைக்கிள் எதுவுமேயில்லை. பெட்டகம் அடித்துத் திறக்கப்பட்டு.
என்ர புள்ளையளைக் காணமுடியவில்லை. நாலைந்துநாளைக்குப் பின்னால பாக்கிறன் என்ர மருமோன்ர மோட்டர் சைக்கிளை ஆரோ ஒரு விடுகாலி ஓடிக்கொண்டு போகிறதை. நான் பின்னால ஓடினன். அவன் எங்க ஓடி மறையிறது. எல்லாரும் அவனைப் போய்
நிலம், வீடு, வாசல் / 75

Page 46
பிடிச்சிக் கேட்டா. ஒண்டும் தெரியாது எண்டு சொல்லிச் சிரிக்குது மூதேவி,
என்ர மருமோன் புள்ளைபற்றி இன்றுவரை ஒரு தகவலும் இல்லை.
இப்ப. மீண்டும் அந்தப் பரதேசியள் வந்திட்டுது. தூரத்தே ஷெல்லடி கேட்கத் தொடங்கியது. ஆச்சி. கெதியாப் போவமணை மற்றாக்கள் ஒடுகினமெணை' - இருட்டுக்குள் தடம் பார்த்து கற்கள் இடற மூட்டை முடிச்சுக் களுடன் அவள் வேகம் கொள்கிறாள். பேரனின் நடையில் ஒரு துடிப்பும் துள்ளலும் இருப்பதைப் பார்த்து, மெள்ள. மெதுவாப்போ. விழுந்து விடப் போகிறாய். யாரோ அருகாக நகர்கிறார்கள். ஏதோ மாம்பழவாசனை.
- 'ம். வாசல் மாமரம் காய்க்கத் தொடங்கீட்டுது. அது என்ன இன்றைய நேற்றைய மரமா..? அந்த வீடு கட்டும் போது வைத்த மரம் எண்டு என்ர அப்புவுக்கு அவற்ற அப்பு சொன்னதெண்டு சொல்வார். அப்படி யெண்டா என்ன வயதிருக்கும். ஏன் இப்படி ஒடுறம். எங்கட நிலம். வீடு. வாசல். எல்லாவற்றையும் விட்டு. யாருக்குப் பயந்து ஒடுறம். ஒண்டுமே புரியவில்லையே. ஆர். ஆரைத் துரத்துவது? எங்கட நிலம், வீடு, வாசலுக்கு ஆர் உரிமை கொண்டாட வரப்போகிறான்.?
-ஷெல் ஒன்று அருகாமையில் எங்கோ வெடித்துச் சிதறுகிறது. நடையில் வேகம் அதிகரிக்கிறது. - ஷெல் தொடர்ந்து வந்து விழுந்த வண்ணமிருக்கிறது. - ஓட்டமும் நடையுமாக இருளில் தட்டுத்தடுமாறி முன்னேறினார்கள். இவர்கள் தலைக்குமேலால் குண்டுகள் பறந்தன. அழுகை. ஒலம். அவலம். பயம். விரக்தி. ஆத்திரம். தாகம். தவிப்பு. தண்ணிர். இதற்கிடையில் பரந்த வெளிகளில் பொடியள் ஒரு கையில் ஆயுதமும். மறுகையில் மக்களுக்கான குடிநீருமாக அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள்.
-தூரத்தே கேட்ட ஷெல்லடிகள் அருகே கேட்கத்தொடங்கின. மக்களின் நகர்வும். காலநேரம் புரியாமல் தெருநாய்களும் வீட்டுக்காரரை பிரியமுடியாமல் பின்தொடரும் வீட்டுநாய்களும் ஒன்றையொன்று 'உள்' என்று உறுமி. குலைத்து. கடித்துக்குதற மக்களின் விரட்டலும், குழந்தைகளின் அழுகை. சிணுங்கள். பொருட்கள் விழும் ஓசையும் கதம்பமாகி.
-பொடியள் எதிரிக்கு பதிலடி கொடுத்துக்கொண்டே மக்களைப் பாதுகாத்து அனுப்பப் பாடுபடுகிறார்கள். அவர்கள் மேனி, தோள்பட்டை, காலின், ஆடுசதைகளில். இரத்தக்கறைகளுடன். தூங்கா விழிகளுடன்.
-செல்லம்மா இவையெல்லாம் பார்த்துத் தவித்துக்கொண்டிருந்தாள். யாரோ ஒருவரைக் காயம்பட்ட நிலையில் தூக்கி வருகிறார்கள். கூட்ட நெருக்கடிக்குள்ளும் இடமொதிக்கி. முதலுதவி வழங்கப்படுகிறது.
-இதெல்லாம் ஏன்?. ஏன்?. 76/செம்பியன் செல்வன்

முந்தி இங்க இருக்க முடியாது என்று ஓடின ஆமி. இப்ப ஏன்?. ஏன்?. அவள் நினைப்பு வாய்வழியாக வந்துவிடுகிறது.
முதலுதவி வழங்கிக்கொண்டிருந்த பொடியன் அவாை நிமிர்ந்து பார்க்கிறான்.
நல்ல கேள்விதான் அம்மா. எங்கட குடாநாட்டிற்குள்ள பகைவன் வாற வழியெல்லாத்தையும் அடைச்சாச்சு. இப்ப கடல் பாதையைத்தான் நம்பு கிறான். கடனீரேரி போக்குவரத்துப் பாதையை அடைக்கிறதெண்டால் வேலணை. புங்குடுதீவு. காரைநகரைக் கைப்பற்ற வேண்டும் எண்டு நினைக்கிறான். ஏன் எங்கட வேலணைதான் அவங்கட முயற்சியைத் தடுக்கிறது. மக்கள் கடனீரேரியில் பயணம் செய்யும் பொழுது அவன் நாகதேவன்துறை, ஆனையிறவு, பூநகரியிலிருந்து வெளிக்கிட்டு வந்தபோது மக்களைக் கடலிலேயே கொலை செய்துவிட்டு தலைமைக் காரியாலயத்திற்கும், சிங்கள மக்களுக்கும் புலிகளைக் கொன்றுவிட்டோம் என்று கணக்குக் காட்டுகிறான். ஆனால் அதைத்தடுக்க. எந்த நேரமும் வேலணைப் பகுதியிலிருந்து "சக்கைவண்டி புறப்பட்டால் போதும். ஆனையிறவும் போச்சு. நாகதேவன்துறையும் போச்சு. இதால எங்கட தீவுகளைக் கைப்பற்றத் துடியாய்த் துடிக்கிறான். அவனுக்கும் எங்கட ஆக்களின் சிலபேர் வழிகாட்டுகினம். தங்கட பெற்றோர். சுற்றத்தாரைக் கூட அகதிகளாக்கி மகிழத்துடிக்கினம். இதை ஒருநாளும் நடக்கவிட மாட்டோம். எங்கட உடலில கடைசித்துளி உயிர் இருக்கும் வரை இந்த மண்ணை மீட்டெடுத்தே தீருவோம். இது ஆமிக்கும் தெரியும். வாறவன் கொஞ்சநாளில திரும்புவான். பாருங்கள் நீங்களும் உங்கட மண்ணுக்குத் திரும்புவீர்கள்.
-செல்லாச்சி அந்தப் போர்வீரனையே வைத்தகண் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
'மெள்ள. மெள்ளமாக வெளிக்கிடுங்கள். அவன் ஷெல்லடி திசையை நாங்கள் பதிலடி கொடுத்து மாற்றிக் கொண்டிருக்கிறோம். எல்லாரும் மண்கும்பான் பிள்ளையார் கோவிலடிப் பக்கமாக நடவுங்கள்.-யாரோ கட்டளை யிடுகிறார்கள்.
-அம்மன் கோவிலை விட்டு மக்கள் நிலம் தெரிகிற மெல்லிய ஒளியில் நகர்கிறார்கள். மக்களுக்கு பாதுகாப்புக் கொடுத்துக்கொண்டே போர்வீரர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள். காயப்பட்டவர்களும். காயப்படாதவர்களு மாக, காயப்பட்டவர்களை யார்யாரோ தூக்கிக்கொண்டு ஓடிவருகிறார்கள்.
வெட்டவெளி. "கவர் எடுக்க இடமோ. பதுங்கவழியோ அற்ற வெட்ட வெளி. மேனியெங்கும் வியர்வையும், இரத்தமும் ஆறாகப் பெருக.
அவர்களைப் பார்க்கப்பார்க்க செல்லம்மாவின் நெஞ்சில் ஈரம் சுரக்கிறது. அவர்கள் நடந்துகொண்டே இருக்கிறார்கள்.
நிலம், வீடு, வாசல் / 77

Page 47
கடல் சமீபிக்கிறது. அங்கும் கூக்குரலும். அழுகுரலும். அழைப்பின் ஓசையும்.
'போட்’களில் காயம் பட்டவர்களும். சிறுகுழந்தைகளும் ஏற்றப்படுகிறார்கள்.
மற்றவர்கள் நடந்துகொண்டே.
அவர்கள் பாதையின் இருமருங்கிலும் ஷெல்கள் வந்துவிழுந்து கொண்டே. அவள் பேரனை நெஞ்சோடு நெஞ்சாக இழுத்து அணைத்துக் கொள்கிறாள். தலையில் பெட்டி பெரும் சுமையாகக் கணக்க பயணம் தொடருகிறது.
கடல் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முனைவதுபோல் மெல்லிய கடலலை அரவமின்றி கரைமோதுகின்றது.
நடை. நடை. தூரத்தே கோட்டை. தண்ணிர்த் தாங்கிக் கோபுரம். நகர ஒளியெல்லாம் தெரியத்தெரிய.
ஏதோ விடிவுக்கு வந்ததுபோல்.
அந்தச் சங்கிலிப் பாலத்தடியில் கூட்டம் தம்பித்து நிற்கிறது.
சங்கிலிப்பாலம் உடைக்கப்பட்டு. அந்த இடத்தில் ஒடுங்கிய மின்சாரக் கம்பங்கள் அடுக்கப்பட்டு தற்காலிக பாதையாக. ஆனால் மக்கள் அங்காலப் பக்கம் போய்விட வேண்டும் என்ற ஆத்திரத்தாலும். ஒருவரையொருவர் இடிக்க பலரின் பொருட்கள் பாலத்தடி நீரில் விழுகிறது. நீராற்று வேகம் கொண்டு ஓடுகிறது. சிலர் தாங்கள் கொண்டுவந்த சைக்கிள் போன்றவற்றை கயிற்றில் கட்டி பாலத்தடி நீரில் அக்கரையில் நின்று இழுத்துக்கொண்டிருந் தனர்.
இதேபோல பாரமான பொருட்கள் இவ்விதம் கரையேற.
‘எங்க போக வேணும். எங்க தங்கப்போகிறீர்கள். தங்க இடமில்லை என்றால் எங்களுடன் வாருங்கள். ஒண்டுக்கும் பயப்படாதீர்கள் -என்ற குரல்கள் எங்கும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. குண்டுச் சப்தங்களின் ஒலி மெல்லியதாய் கேட்கின்றது. குளிர்ந்த காற்று முகத்தில் படீரென அடிக்கிறது.
நிம்மதியான பெருமூச்சு அவளில் எழ, சூரியனும் பிரபையுடன் கிழக்கே எழத்தொடங்குகின்றான்.
- வெளிச்சம்
78/செம்பியன் செல்வன்

9
4229sker71/2/2C236 acö7C2/2 od&oac2243
メッ ు:"Arస్తఃషి..."స్విజ _-టిస్తూ"సెi్వ......" 2:సెక్టెయ్విజ
பழங்கால மரக்கட்டிலொன்றில் காலிருந்து கழுத்துவரை வெள்ளை வேட்டியினால் மூடிக் கிடத்தியிருக் கிறார்கள். எதனுடனோ போராடி வெற்றி கண்ட நிறைவு நெற்றித்திலகமாகப் பொலிவூட்ட வெப்பத்தின் துடிப்புகளடங்கி ஒடுங்கி மெளனத்தின் ஆளுகையின் மீளா நித்திரையின் அவன் ஆழ்ந்து மற்றவர் நெஞ்சங்களிலெல்லாம் அனல் எறிந்து உணர்ச்சிக்குளமாக்க, அவையாவும் இயல்புக்கு மீறி வேகமாகத் துடிக்கின்றன. அவர்கள் கண்களின் ஊற்றுஉடைய துயரத்திலும் வியப்பிலும் அறநனைந்து அவன் காலடியிலேயே புதைந்து போகின்றனர்.
அவனா? அது வா?
நேற்றுவரை 'அவனாக நின்று அவர்களின் இன்ப துன்பங்களிலெல்லாம் பங்கு கொண்ட அவன், இன்று அவர் களை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டு 'அது'வாகிவிட்ட விந்தை அவர்களுக்குப் புரியவேயில்லை. மற்றவர்கள் 'அது' ஆகிவிட்ட அவனை வழியனுப்ப 'ஆக வேண்டியதைக் கவனித்துக் கொண்டிருக் கிறார்கள்.
மழைக்காலமும் மண்பொம்மைகளும் / 79

Page 48
ஆனால் அவளோ? V பார்வை கடந்த சூக்கும நிலையில் விழிப்பொட்டு பிரபஞ்ச தாவர சங்கமப் பொருட்கள்ையெல்லாம் எகிறிக் கடந்து அடிவானில் ஒரு கறுப்புப் புள்ளியில் நிலைக்கச் செயலற்றுக் கிடக்கிறாள். மனம் கைக்குழந்தையாய் நழுவி எங்கோ சென்றுவிட அடிவானில் நீர்க்கோட்டில் கதிரவன் ஈமத்தீயாகி எரிந்து, அவள் நெஞ்சத்தில் தணலைக் கொட்ட விம்முவதற்கும் இயக்கமின்றி. கனகம். எடியுள்ள கனகம். என்னவோ கெட்டகாலம் நடக்கக் கூடாதது நடந்து பேர்ட்டுது. உப்பிடியே சும்மா கிடந்தா எப்படி?. இனி ஆகவேண்டியதை ஆர் பாக்கிறது.? -யாரோ அவளை உலுக்கித் தன்னிலைக்குக் கொண்டுவர முயல்கிறார்கள்.
பிரேதத்தின் கால்மாட்டில், கட்டிலின் வலப்பக்க விளிம்பில் இடுப்பைச் சாய்த்தபடி அவன் கால்களைப் பற்றியபடி மழைவிட்ட வானமாக வெறிச்சிட்டுக் குழம்பிக் கிடக்கின்றாள். மடியில் தவழ்ந்த பச்சைமண் பசியால் அழுது பயனளிக்காமற் போகவே, தனது பட்டுக்குஞ்சு விரல்களால் தாயின் மார்புச் சட்டையை விலத்தி, பாலமுதுண்டு கொண்டிருக்கும் செப்புவாய் இதழ்களின் ஸ்பரிச உணர்வோ, பால்சுரக்கும் உணர்ச்சிக்கீறலோ அவளை அருட்ட முடியவில்லை.
'எணை அக்கா. எடியுள்ள உதென்னணை உப்பிடியேகிடந்தா. பாவம் பாரணை அந்தப் பச்சை மண்ணை. பசியால துடிக்கிறதை. போன உசிரை பற்றியே நினைச்சு உருகிக்கொண்டிருந்தா. இருக்கிற உசிருகளை ஆர் பாக்குறது. எழும்பி ஆகவேண்டியதைக் கவனியணை- பல குரல்கள் உயிர்த்துடிப்புடன் அவளை உலுக்குகின்றன. அவளில் பனியில் உறைந்த மீனின் தோற்றம் தெரிகிறது.
‘என்னடி பெண்டுகள். விடுப்புப் பார்த்துக் கொண்டே நிக்கிறியள். அதுக்கும் நல்ல நேரம் பாத்தியள்.நீங்கள் எல்லாம் எப்படித்தான் குடும்பம் நடத்திறியளோ. உங்கட புரியன்மாரும் எப்படித்தான் பொறுத்துக் கொண்டு உங்களோட சீவியம் நடத்துறாங்களோ.
இப்பத்தப் பெண்டுகளின் கருமங்களெல்லாம் இப்புடித்தான். எதைஎதை எந்தெந்த நேரத்தில் எப்பிடிஎப்பிடி செய்யவேணுமெண்ட சிந்தனையள் கொஞ்சமாவது இருந்தாத்தானே, "செல்லாச்சிக் கிழவியின் குரலில் கல்லெறிபட்ட காகக் கூட்டமாக நகருகின்றனர்.
இரவிக்கை அணியாத, தளர்ந்த மார்பில் குறுக்காகச் சுற்றிய இலங்காச் சீலை உறுதியாக நிற்கமாட்டாமல் நழுவி விழ அதைச் சரிசெய்து கொண்டே வரும் செல்லாச்சியின் குரலில் கனகம் கூடச்சிலிர்த்துக் கொண்டாள்.
செல்லாச்சியின் அருகே வண்டிக்கார முருகேசு வந்து ஏதோ அவசர மாக காதோடு காதாக உரசுகிறான். அவனையும் செல்லாச்சியையும் ஒருங்கே 80/செம்பியன் செல்வன்

கண்டதும் அவளுக்கு அடிவயிற்றின் நரம்புக்குடல்களைப் பியத்தெறிந் தவாறு அழுகை பொத்துக்கொண்டு வருகின்றது.
'பாருங்கண்ணை. பாரணையாச்சி!.அவற்ர முகத்தை. கொஞ்ச மெண்டாலும் செத்ததுபோலிருக்காண்டு. உங்களோடயெல்லாம் கூடித் திரிந்த , அவரைப் பாருங்கண்ண. நான்தான் பாவி கொஞ்சமெண்டாலும் விழிப்போட இருந்திருந்த. என்ர ராசாவுக்கு இப்படி இந்தக்கதி வந்திருக்குமா? இனி நான் என்ன செய்வன். அவள் துயரங்கள் வார்த்தைகளில் வடிகின்றனவா? மூழ்கின்றனவா? یہ علیہ
கூட்டத்தினரின் மனங்களும் கலங்கிக் குழம்புகின்றன. அவளின் இழந்தி துயரத்தைவிட, இனி எதிர்கொள்ள இருக்கும் பயங்கர இருளைக்கண்டு அஞ்சும் துணையற்ற தவிப்பின் புலம்பலும் எல்லாரிடமும் பரிதாபக் கசிவை ஏற்படுத்துகின்றன.
'எடி புள்ள கனகம் இதெல்லாம் என்ன பேச்சு?. நீ மனதைத் தளர விடாத. நடந்தது நடந்து போச்சு. நீ ஒண்டுக்கும் பயப்படாத. நாங்கள் எல்லாம் மனிசமாஞ்சாதி எண்டு என்னத்துக்கு இருக்கிறம். உன்னை அப்படி ஒண்டும் அல்லல்பட விட்டிடமாட்டம். எழுந்து நடக்கவேண்டியதைக் கவனி"
'எணை நேரமெல்ல செல்லுது. இன்னும் எவ்வளவு வேலையள் இருக்கு.நான் சொன்ன விஷயத்தைக் கேளாம நீ என்னமோ பேசிக் கொண்டு இருக்கறா? -முருகேசு அவள் காதில் கடிந்து விழுகிறான். கனகம் கண்களை உயர்த்திப் பார்க்கிறாள்.
புள்ள1.சவ அடக்கத்துக்கு விதானையளிட்ட கூப்பன் கொடுத்துத்தான் அநுமதி எடுக்கவேணுமாம். கணவதியன்ர கூப்பன் எங்க வைச்சிருக்கிறாய். சொல் நான் எடுத்துக் கொடுக்கிறன்'
சவம்
கூப்பன்
அவள் நெற்றிப் பொட்டில் எதிர்பாராத விதமாக எதுவோ தாக்கியது போலிருந்தது.
"கூப்பன். கூப்பன்.
அவள் உதடுகள் துடிக்கின்றன.
2 வெண்முகிலின் விந்தை உண்டு உண்டு சூல் பெருத்துவிட்ட கார்மேகப் பெண்ணின் பன்னீர்க்குடம் உடைந்துவிட்டதா?
வானகமும், வையகமும் நீர்ப்பாலத்தால் சங்கமமாகிவிட்டதா எங்கும் வெள்ளம். வெள்ளம். . நீர்ச்சுழிப்புகள். நீர்கோலங்கள். நீர்வளையங்கள். நீர்க்குமிழிகள். நீர்த்தாரைகள்.
மழைக்காலங்களும் மண்பொம்மைகளும் / 81

Page 49
டப். டப். க்ளக். க்ளக். சள.சள. நீர்ச்சர விழுகையின் ஒசையில் தான் எத்தனை விகற்பங்கள்.
டப். டப். நீர்த்தாரையின் ஊசிமுனைகள் நீர்க்குமிழ்களைத் தாமே தோற்றுவித்து கணவிநாடிக்குள் உலகே பிரதிபலிக்க குதூகலமாக அசையவிட்டு பின் உடைத்து. என்ன ஆனந்தமோ, தத்துவமோ? உலக இயற்கையே இதுதான் என்ற உபதேசமா?
வீட்டுவாசல் இறப்பில் தொங்கிக் கொண்டிருக்கும் அளிக்கன்லாம் பின் புகைமண்டிக் கிடக்கும் உடைந்த சிம்னிக்கூடாக் வெளிவரும் மெல்லிய ஒளிக் கதிர்கள் வீட்டுவாசலிலும் முற்றத்து மழைநீரிலும் ஒளிஜாலம் காட்டுகின்றன. மாலைப் பொழுதும் மழையிருட்டும் எங்கும் கருமையை இறைத்திருக்கின்றன. கனகத்தின் இதயம் மழைத்துளிகளின் ஓசையுடன் போட்டியிட்டுத் துடிக்கின்றது. வாசல் கப்பைப் பிடித்தபடி பார்த்துக்கொண்டு நின்றாள். நிலம் தெரியாத இருட்டில் கலந்த மழைவெள்ளம் முற்றத்தைக் குளமாக்கிவிட்டிருந்தது. யார் வந்தாலும் தெரியாத இருட்டாயினும் பழக்கப்பட்ட காலடி ஓசையைப் புரிந்து கொண்டு முற்றத்தில் "லாம்பைத்தூக்கி வெளிச்சம் காட்டும் அவள் இன்றும் நீரிலே நடந்து வரும் சளசள ஓசை கேட்கின்றதா என்று காதினைக் கூர்மையாக்கி. பார்க்கிறாள்.
நாய் ஒன்று வெள்ளத்திடையே ஓடிவந்து தாழ்வாரத்தில் ஒண்டுகிறது. அவளிடமிருந்து நீண்ட பெருமூச்சு எழுகிறது. 'காலையில் போனவரை இன்னும் காணேல்லயே. என்ன நடந்துதோ. ஒண்டும் தெரிலேல்லையே. ஒருநாளும் இப்படி இருக்கிறதில்லையே? ஆரையும் அவரை போய்ப் பார்க்கச் சொல்லி அனுப்ப ஒருவருமில்லையே?. பத்தாததுக்கு இந்தச் சனியன் பிடிச்சமழை இழவுவேற. எங்க நனையுறாரோ எப்படி அவதிப் படுறாரோ?
அவளுக்கு மாரிகாலம் வந்துவிட்டாலே இந்த அவதிதான். இந்தத் தகிப்புத்தான். அடிவயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டது போலாகிவிடும். எல்லாவற்றிற்கும் அவர்கள் வாழும் இடம்தான் காரணம்.
நகரத்தின் மத்தியில், வடபுறமாக அமைந்துள்ள பிரதான வீதியுடன் மேற்கிலிருந்து வரும் சிறுவீதி ஒன்று இணையும் மூலைப்பாகத்தில் அமைந்திருக்கும் அந்தக் குளம் நகருக்கு அழகைக் கொடுப்பதாகக் கூறுகிறார்கள். குளத்தில் ஜப்பான் நாட்டிலிருந்து விமானம்மூலம் கொண்டுவரப் பட்ட மீனினங்களையும் வளர்க்கிறார்கள். ஆனால், குளத்தின் நீர் பெரும்பாலும் சாக்கடைக் கழிவுகளையும், வழிப்போக்கர்களின் இயற்கை உபாதைக் கழிவுகளையும் ஏந்தி நகருக்கு ஒரு சுகாதார கேந்திரமாக விளங்கிவருகிறது. குளத்தின் எதிர்புறமாகவுள்ள வீதிகளின் அக்கரைகள் உயர்ந்த மேடான பாகங்களாக விளங்குகின்றன. அம்மேட்டு நிலங்களை நகர விருத்திக் காலத்தின்
82/செம்பியன் செல்வன் ܣܛܲܠ

k
போதே மேட்டுக் குடித்தனக்காரர்களும், செல்வந்தர்களும் உறுதிமுடித்துத் தங்கள் மாடி வீடுகளைக் கட்டிவிட்டனர்.
ஆனால்குளத்தைச் சார்ந்தமைந்த வீதிக்கரையோரங்கள் பள்ளக்காணிகளாக விளங்குகின்றன. உண்மையில் இப்பாகங்கள் ஒரு காலத்தில் குளக்கரையாகவோ, குளத்தினொரு பகுதியாகவோ இருந்து தூர்ந்து போனதால் ஏற்பட்ட நிலப்பரப்பாகும். இன்றும் பெருமழை பெய்தாலோ, குளம் நிறைந்தாலோ இப்பகுதியும் குளமாக மாறி வீதியின் விளிம்புவரை நீர் தழும்பி நிற்கும்.
கோடை காலங்களில் நீர்வற்றும் போதெல்லாம் இப்பள்ளக்காணிகளில் குடிசைகள் பல முளைத்துவிடும். அவற்றில் நாட்டின் இரத்த நாளங்களான நகரத் தொழிலாளர்களும், தாழ்த்தப்பட்டோரும் சென்று குடியேறுவர்.
மாரி காலம் வந்துவிட்டாலோகுளத்தில் பெய்யும் மழைமட்டுமன்றி, கழிவு நீரைத் தேக்கி நகர்ந்து சென்று கடலையடைய வேண்டிய சாக்கடைக் கழிவு நீர், உயர்மட்ட எஞ்ஜினியர்களின் பொறுப்பற்ற தன்மையினால் ஏற்பட்ட, சாக்கடையமைப்புப் பிழை பாட்டினால்- குளத்தை நோக்கி வேகமாக வந்து அதனை விரைவில் நிறையச் செய்துவிடும். அவ்வளவுதான்
பள்ளக்காணியில் இருக்கும் அத்தனை குடிசனங்களும் அருகிலுள்ள சிங்களப் பாடசாலையை நோக்கிப் படையெடுப்பர். அவர்களுக்கு தஞ்சம் கொடுக்க வென்றே விடுமுறைவிட்டதுபோல்- மார்கழி மாதத்தில் அப்பாடசாலை விடுமுறையில் வெறிச்சிட்டுக் கிடக்கும், பள்ளக்காணி மக்கள் தங்கள் 'சாமான் சக்கட்டுகளைத் தூக்கிக்கொண்டு பாடசாலையை நோக்கி ஓடும்போது, அங்கு அவர்களை முந்திவந்து ஏற்கனவே குடியேறியிருக்கும் கட்டாக்காலி ஆடுமாடுகளின் சாணம், மூத்திரம் என்பன மழைநீருடன் சேற்றில் கலந்து எழும்பும் 'மனோகரமான சுகந்த வாசனையும் அவைதரும் அற்புதக்காட்சியும் அவர்களை முகமன்கூறி வரவேற்கும்.
மரிமழை ஓய்ந்து மீண்டும் வெய்யில் தலைகாட்டத்தொடங்க, அவர்கள் மீளவும் அங்குபோய் குடியேறத் தொடங்குவார்கள். அநேகமாக அவர்கள் ஒவ்வோர் ஆண்டிலும் தங்கள் மண்குடிசைகளைப் புதுப்பித்துக் கொள்வார்கள். அவர்கள் ஏன் அங்கு மீளவும் போகவேண்டும்? வேறு இடத்திற் சென்று குடியேறக்கூட ?
நகரத்தில் ஒரு அறைக்கு ஐம்பது, வீட்டிற்கு நூறு ரூபாயெனச் செலவழிக்க அவர்களால் முடியுமா? பலரின் மாத வருமானமே அந்த அளவிற்கு இருக்குமா என்பதே சந்தேகம். அப்படியே செலவழிக்க வழி செய்தாலும் சாதிநிலை கல்வீடுகளின் வாசற்படியை மிதிக்க விடுமா?
இந்தப் பள்ளக்காணி இல்லாவிட்டால் இன்னோரிடத்தில் போய் குடியேற
மழைக்காலங்களும் மண்பொம்மைகளும் /83

Page 50
லாம். மேற்காகச் செல்லும் வீதியால் சற்றுச் சென்று பாழடைந்து கிடக்கும் பிள்ளையார் கோவிலையும், சேறுமண்டித் துர்நாற்றம் வீகம் தெப்பக்குளத்தையும் தாண்டிச் சென்றால்
மாநகரசபையின் நகரச் சுத்திகரிப்பு வாகனங்கள் கொண்டுவந்து குவிக்கும் குப்பைகூளங்களால், புதியபுதிய வியாதிகளையும், துர்நாற்றத்தையும் உற்பத்தி செய்தவாறு மேடாகிவரும் நரிக்குண்டுப் பகுதியில் சென்று குடியேறலாம். ஆனால்
அங்கும்தான் எத்தனை போட்டி? நெருக்கடி? காட்டுத்தடிகளாலும் சாக்குக் கந்தல்களாலும் தள்ப்ப்பாத் தகரங்களாலும், சுவரொட்டி மறைப்புகளாலும்
எத்தகைய குடியிருப்புக்கள். எத்தனை வகை குடியிருப்புக்கள். 'மாடர்ன் ஆட்'டின் அழுத்தமான கோடுகள் போன்ற உயிர் வாழ்க்கையிலும் எத்தனை போட்டி? எத்தனை விபரீதங்கள். அனைவருமே தொழிலாளிகள்.
தொழிலாளியைத் தொழிலாளி வஞ்சிப்பதில்லையே. அதனால் அங்கும் சென்று குடியேற முடியாது.
தொபுக்கடீர்! கனகம் திடுக்கிட்டாள். தெருவோரத் தென்னையிலிருந்து தேங்காய் விழுந்திருக்க வேண்டும். அதுவும் முற்றத்துக் கிணற்றில். அதுதான் இந்தச் சப்தம். முற்றத்தைப் பார்த்தாள். கிணறு வெள்ளத்துடன் வெள்ளமாக ஐக்கியமாகிவிட்டிருந்தது.
எந்தக் காலத்திலோ, யாரோ வெட்டிய கிணறு அது. அதன் பக்க கட்டுகலெல்லாம் இடிந்து தரையோடு தரையாகக் கிடக்கின்றது. இப்போது நிலம் எது? கிணறு எது என்று தெரியாதபடி ஒரே வெள்ளம்.
ஐயோ! இந்த வெள்ளத்தில் அவர் வந்து தெரியாமல் கிணற்றில் விழுந்து விட்டால். நெஞ்சம் பகீரென்றது.
அவள் காதைக் கூர்மையாக்கிக் கொள்கிறாள். நேரம் செல்லச் செல்ல அவளின் துடிப்பு அதிகரிக்கின்றது.
மழை. பேய் மழை.
சளக். சளக். வருகிறாரா? பிரமை.
காலையில் வெறும் தேநீரோடு ரயிலடிக்குப் போனவன்தான். இன்னமும் காணவில்லை. இரண்டு மூன்று நாட்களாக ஒரே மழை கொழும்பு ரயில் மதவாச்சிக்கப்பால் வரமுடியவில்லை. ரயில் வராததால் அதனை நம்பி வாழும் கணபதி போன்ற போட்டர்கள்.
கணபதியின் குடும்பம் சோற்றைக்கண்டு இரண்டு நாட்களாகிவிட்டன.
84/செம்பியன் செல்வன்
~

இயற்கையின் சீற்றம் ஒருபக்கம். அரசாங்கத்தின் அந்நியச் செலாவணி நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதாரக் கொள்கை ஒருபக்கம்.
அரசியல் மாற்றமாயிருப்பினும், பொருளாதார மாற்றமாயிருப்பினும், அதனால் பெரிதும் உடனடியாகப் பாதிக்கப்படுபவர்கள் - கணபதி போன்றோரே.
'சளக். சளக். - தாழ்வாரத்தில் தங்கியிருந்த தெருநாய் வெள்ளம் அதிகரிக்க, மேட்டைநோக்கி ஓடுகிறது. குழந்தைகளின் முனகல் சப்தம் குடிசையினுள்ளே கேட்கிறது. அவள் உள்ளே ஓடுகிறாள்.
குழந்தைகளிரண்டும் தட்டினருகே விக்கப்பட்ட பாயில் கண்வளர்ந்து கொண்டிருக்கின்றன. பசியின் சோர்வா?
குழந்தைகளைச் சுவரில்லாப்பக்கமாகக் கிடத்தியிருந்தாள். மண் சுவரை மழைநாளில் நம்பலாமா? ஒருநாள் இல்லாவிட்டாள் இன்னொருநாள்.
அவளின் கண்கள் சுவரைப் பரீட்சிக்கின்றன. சுவரின் அடிப்பாகத்தில் நீர் ஊறிவரும் கருமை தெரிகிறது. அவள் நெஞ்சம் திடுக்கிடுகிறது.
கனகம். அடி புள்ளோய். கனகம். தெருவில் நின்று யாரோ குரல் கொடுக்கிறார்கள். செல்லாச்சிதான்.
"ஒய்ய்!.ய் என்னணை விசயம்?"
‘என்னடி புள்ள!. இன்னும் வீட்டுக்கியே இருக்கிறா. ஊரே கூடி எழும்பிட்டுது. குளமெல்லாம் நிரம்பிட்டுதாம் வெளி வெள்ளமெல்லாம் உள்ளுக்குள்ள வரத்தொடங்கிட்டுதாம். சுறுக்கணக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு ஓடிவா. எல்லாரும் சிங்களப் பள்ளிக்குப் போட்டினம். செல்லாச்சி மூச்சுவிடாமல் கத்துகிறாள்.
‘என்னணை உண்மையாவா சொல்லுற?.அவரையும் காணேல்ல. இந்த வெள்ளத்துக்கிடையில. இந்தக் குஞ்சுகளோட நான் எப்படி?
'எடி புள்ள1. கணபதியைக் காணேல்ல எண்டு கவலைப்படாத. ரயில்வே ஸ்டேசனுக்கு போனவங்க ஒருத்தனும் தான் வரேயில்ல. கையில வரும்படி ஒண்ணுமில்லாம வீட்டபோய் மனிசி புள்ளையளின்ர முகத்தை எப்படிப் பார்க்கிறது எண்டு முழிசிக்கொண்டு நிக்கிறாங்களாம். இரு. இரு-நானும் வாறன். இரண்டுபேருமா குழந்தைகளைக் கொண்டு போகலாம்
இருவரும் குழந்தைகளோடு வெளியேறுகிறார்கள்.
சில தொழிலாளர்கள் அங்கு மழையில் நனைந்தபடி ஓடிவருகிறார்கள்.
'சுறுக்கண நீங்க வெளிக்கிடுங்க. நாங்க மற்றச் 'சாமான்சக்கட்டுகளை எடுத்துவாறம். கெதியாய் நீங்க போங்க' - அவசரம் அவசரமாக வெள்ளத்தில் இறங்குகிறார்கள்.
மழைக்காலங்களும் மண்பொம்மைகளும் /85

Page 51
O பாடசாலை எங்கும் பரபரப்பு, பரபரப்பில் அடங்கிய நிதான நடப்புகள். குழந்தைகள், குமரிகள், வாலிபர்கள், கிழவர்கள், கிழவிகள் - என்ற வேறுபாடின்றி, நாங்களும் மனிதர்தாம். ஒருவருக்கொருவர் உதவிவாழ வேண்டியவர்கள் தாம் என்ற மனநிலையின் ஆத்மார்ந்த ஈடுபாடுகள்.
எங்கெங்கிருந்தோவெல்லாம் உணவுப் பொருட்கள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன.
அரிசி, பருப்பு, சக்கரைப்பூசணி, சாம்பற்பூசணி, வெங்காயம், மிளகாய்ஒருபுறத்தில் அடுப்பு காளாவாயாக எரிவதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இந்த மழையிலும் பச்சை ஈர விறகுகள் அண்டாக்களைத் தழுவிச் சிரித்து எரிகிறது. ஏழை வெறும் வயிற்றின் வெம்மையில் விறகின் ஈரம் வற்றியதோ?
வகுப்பறையின் குறுக்குச் சட்டம் ஒன்றில், சீலை ஏணை ஒன்றைக் கட்டி குழந்தைகளைத் தாலாட்டிக்கொண்டிருந்த அவள் மனதில் தவிப்பு இன்னும் அடங்கவேயில்லை.
"எங்கே அவன்? ஏன் வரவில்லை. ஒருவேளை வீட்டை போய்த் தேடுகிறாரோ?. ஐயோ. முற்றத்துக் கிணறு இந்த மழையில தெரியாதே. ஐயோ- தெய்வமே அவரைக் கூட்டிக்கொண்டு வந்து என் கண்ணெதிரே காட்டு. பசியோ. பட்டினியோ கண்முன்னாலே கிடந்து எல்லாருமாச் சாவம்.
கனகம். அவன் குரலா? அவள் நெஞ்சம் கணத்தில் திக்குற்று நின்று, மீண்டும் துடிக்க, திரும்பிப் பார்த்தாள்.
அவனேதான் கணபதி. ஓடிச்சென்ற அவள், அவன் கைகளைப்பற்றி நெஞ்சினில் முகம் புதைத்து 'ஓவெனக் கதறியழுதாள். அவனின் பரிவான சாந்தத் தட்டுதலிலும், அவளின் விம்மலோசை அடங்க நீண்டநேரம் பிடித்தது.
கனகம். இண்டைக்கும் ரயில் வரேல்ல. பாதையொண்டும் சரியில்லையாம்- அதெல்லாம் சரிப்பண்ணி ரயில் ஒடத்துடங்க ஒரு கிழமை யெண்டாலும் செல்லுமாம், நாங்க அதுவரை எப்புடித்தான் சீவிக்கப்போகிறோமோ. கடவுளுக்குத்தான் தெரியும். நானும் இண்டைக்கு ஆராரோட்டையெல்லாம் ஒரு ரெண்டு ரூபாக்காசுக்காக அலைஞ்சு பார்த்தன். எல்லாரும் எங்களைவிட மோசமா வாழுகினம் கடைசியில என்ர புள்ளையஞக்கு இண்டைக்கு தர்மத்துச் சாப்பாடுதான் கிடைக்கவேணும் எண்டு எழுதியிருக்குப் போல. வார்த்தைகளில் நெஞ்சம் உருகிவழிய அந்த நெகிழ்ச்சியின் பதைப்பில் அவளின் நெஞ்சம் கசிந்துருக அவள் விம்முகிறாள். நெஞ்சத்து நெகிழ்வு கண்களிலே மடை திறந்து பொங்குகின்ற. 86/செம்பியன் செல்வன்

'வீணாய் ஒண்டுக்கும் நீங்க கவலைப்படாதீங்க. ஊரோட உள்ளதுதான் எங்களுக்கும். எங்களைப்போல் எத்தனையோ பேர். வாழேல்லையா?. இதுக்குப் போய் ஆரேனும் இப்பிடிக் கலங்குவினமே. நீண்ட காலத்துக்கு நாங்கள் இப்புடி இருக்கமாட்டம். எங்களுக்கும் ஒரு விடிவு வரத்தான் வேணும். கடவுளும் நீண்ட காலத்துக்கு இதைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார். அவளின் வார்த்தைகள் பொங்கு உலைநீரில் விழுந்த தண்ணிர்த் துளிகளாய், அவன் மனதில் எரிமலைத் தணலை ஊதி இதம்கொடுத்து அடக்குகின்றன.
அவன் கரங்கள் அவள் தோளை ஆதுரத்துடனும் ஆசையுடனும் வாழ்வின் துடிப்புடனும் இறுக்கிப் பிடிக்கின்றன. அவளின், அதுவரை நிலவி வந்த துயரங்கள் ஆவியாகி மறைகின்றன.
வெறும் கரங்களின் அணைப்பில் எழும் ஆதரவின் இதம்- ஆத்மாவின் பூந்தூறல் கோடி கோடிக் குவித்தாலும் கிடைக்காதது.
புதிய இடத்தில்- புதிய சூழ்நிலையில்- பதிய அநுபவமாக அன்றிரவு
கழிகின்றது.
4
மறுநாட்காலை.
இரவு முழுவதும் பெய்த மழை ஓய்ந்து விட்டாலும் அதன் சீற்றத்தில் வடிகால்களும், கொதிப்புக்களும் எங்கும் நீக்கமற நிறைந்து.
sẾii,
சேறு,
வழுக்கல்,
குடிசைகளின் முகடுகளும், தூண்களும், நீரின் மட்டத்தில் மேல் நலை தூக்கி நிற்கின்றன.
கண்களில் நீர்த்துளி படர, கணபதி தன் குடிசையை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
நீரின் மேல் இறப்பும், கூரையும் படகாகிக் காட்சியளிக்கிறன. அவனின் சேமிப்புப் பொருட்களான மட்பாண்டங்கள் பக்கீஸி' பெட்டிகள் எல்லாம் மறைந்து விட்டிருகின்றன.
யாரோ ஓடி வருகிறார்கள்.
போங்க. கெதியணப் போங்க. முடிஞ்சு போப்போகுது. வெள்ளத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கு கூப்பன் கடையில் அரிசியும், சீனியும், மாவும், தேயிலையும் சும்மா கொடுக்கிறாங்கள்.ஒடிப் போங்க. -யாரோ கத்திவிட்டுப் போகிறார்கள்.
- கணபதியும் ஓடுகிறான்.
மழைக்காலங்களும் மண்பொம்மைகளும் / 87

Page 52
5 காலை வேளையிலும் கூப்பன்கடை வாசலை மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. ஒழுங்கை நிலைநாட்டச் சிலர் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேகமாக ஓடிவந்த கணபதி கூட்டத்தைக் கண்டதும் அப்படியே நின்றுவிடுகிறான், அங்கே நின்றவர்களில் பெரும் பாலானோர்
வெள்ளத்தினால் சிறிதும் பாதிக்கப்படாத மேட்டுநிலப் பகுதியினரும், கல்வீடுகளுக்கும், மாளிகைகளுக்கும் சொந்தக்காரர்களான பெரிய மனிதர்கள். அவர்கள் மழைக் குளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஆடைகளின் மேல் ஆடைகளாக, வண்ண வண்ணக் கம்பளித்துணிகளில் மின்னுகிறார்கள். அவர்களுடன் முட்டி மோதிக் கொண்டு, வெற்றுடம்போடும் இடுப்பில் ஈரத்துண்டோடும் போராடும் பாதிக்கப்பட்டவர்களை கண்டதும் அவன் நெஞ்சம் வியப்பான திகைப்பிலாழ்ந்து விடுகின்றது. சில மோட்டார்வண்டிகளும் தெருவோரமாக, கற்குவியல்களின் அருகே நிறுத்தப்படுகின்றன.
இலவசம் என்றதும், மேடும் பள்ளமும் ஒன்றாகியதை எண்ணி எண்ணி. அதைவிட மேலான ஆச்சரியம் என்னவென்றால்.
வரிசையில் அவர்கள் முன்னணியில் நிற்கிறார்கள் என்பதுடன், அவர்களுடன் முட்டி மோதிக்கொள்ளாமல் இருப்பதற்காக பாதிக்கப்பட்டோர் இன்னொரு வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களே முதன்மையாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்.
முதலில் - கெளரவமானவர்களை அனுப்பிவிட்டு பிறகு ஆறுதலாகப் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிக்கலாம் என்ற சித்தாந்தத்தில் அரிசி, சீனி, மா, தேயிலை, தேங்காயெண்ணை விநியோகம் நடந்து கொண்டிருக்கிறது.
பெட்டி, கடகங்களுடன் பாதிக்கப்பட்டவர்களின் வரிசை பயிற்றங் கொடியாக நீண்டு படர்ந்து.ஏக்கக் கண்களின் சோர்வுடன்.
கணபதியும் நிரைக்கு அழக்கூட்டவா, அங்கு போய் நிற்கிறான்?
6
வரிசை மெதுமெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. பெரிய மனிதர்களின் வரிசையும், கார்களும் மறைந்துவிட்டன. வரிசை நகர்கிறது. துரித கதியில் இதுவரையில்லாத நகர்வு. ஏனோ? இதோ -
கணபதியும் கடையை நெருங்கிவிட்டான். இன்னும் சிறிது நேரத்தில் அவனுக்கும் உணவுப் பொருட்கள் கிடைத்துவிடும். நிரையில் திடீரென சலசலப்பு ஏற்படுகின்றது. பிறகு குழப்பமாக மாறுகிறது.
‘என்ன? என்ன? ஏன்?. விடைகாண வினாவில் வரிசை சற்று நெளிந்து சிதறுகிறது.
88/செம்பியன் செல்வன்

'அண்ண. கூப்பனிருக்கிற ஆக்களுக்குத்தான் சாமான்கள் கொடுப்பாங்களாம். எங்கட வீடு வாசல் எல்லாம் அழியவிட்டு உயிர் தப்பினாப் போதுமெண்டு. உடுத்த துணியோட உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு ஓடி வந்த எங்களிட்ட கூப்பன் எங்க இருக்கும். இது அநியாயம். வெள்ளத் தோட போன கூப்பனைக் கேட்டா என்ன செய்யிறது.
என்னதான் சொல்லுகினம்?. இப்ப. அரிசி தரமாட்டினமா?. பிஞ்சுக் குரல் ஒன்று ஏக்கத்துடன் ஒலிக்கிறது. கூப்பனில்லாதவர்கள். விதானையாரிட்டப் போய்த் துண்டு வாங்கி வரட்டாம்
அவன் நெஞ்சம் மீண்டும் வரண்டது. விதானையாரை அவன் கண்டதேயில்லை. அவனின் பள்ளக்காணிப்பக்கம் அவரும் கடமை புரிய ஒருபோதும் வந்ததுமில்லை. வரவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படவில்லை. அவருக்கு ஆட்களைத் தெரிந்தால்தானே துண்டு கொடுப்பர். ஊர்ப்பிரமுகர்களை தெரிந்திருப்பது போல் இவர்களை அவருக்கு எப்படித் தெரியும்? இவர்கள் பகுதிக்குள் கால் வைத்தாலே நரகம் ஒட்டிக்கொள்ளும் என்று எட்டப்போகிறவர் அல்லவா?
நெஞ்சம் கொதிக்கிறது.
இயற்கை, மனிதர் எல்லாம் ஏன் ஏழை மக்களுக்கு மட்டும் எதிரிகளாகின்றனர்?
7
கனகம்.
‘என்ன!.ஏதும்சாமான்கள் தந்தாங்களா? ஆவலே வார்த்தைகளின் வடிவங்களாகின்றனவா?
அவனின் சேர்ந்த முகத்தைக் கண்டதும் அவள் நெஞ்சம் துணுக்குற முகம் களையிழக்கின்றது.
‘என்ன. என்ன நடந்தது? ஏன் ஒரு மாதிரி இருக்கிறியள்.
கனகம். அவங்க கூப்பன் கொண்டு வந்தாத்தான் சாமானாம்
அப்ப எங்கட கூப்பனையும் கொண்டு போறதுதான' என்று வழக்கமான நினைவில் கூறியவள் "கூப்பன்' என்ற போது தன்னையறியாமலே திடுக்கிட்டாள்.
ஐயையோ. கூப்பன் எல்லாத்தையும் கூரை இறப்பிலல்லவா சொருகி வைச்சனான். இப்ப எப்படி இருக்கோ. இருந்தாலும் எப்படி எடுக்கிறது? நனைஞ்சு போயிருக்கும். இல்லாட்டி வெள்ளத்தில மிதந்து போயிருக்கும்.
'என்ன!. இறப்பிலையா கூப்பனை வைச்சனி? ஆவல் மின்னக் கேட்டான்.
'ஓம் இப்ப என்ன செய்யிறது?
'காலையில போய் வீடு எப்படியிருக்கெண்டு ரோட்டில இருந்து பாத்தனான். இறப்புக்கீழதான் வெள்ளம் நிண்டது. கூரை ஒண்டும் பழுது
மழைக்காலங்களும் மண்பொம்மைகளும் /89

Page 53
படேல்ல. போன ஆவணிக்கு மேய்ஞ்ச கூரையெண்டபடியா இந்த மழைக்கும், காத்துக்கும் தாக்குப்பிடிச்சு நிண்டது. கூப்பன் நிச்சயமா நீ வைச்ச இடத்தில
தானிருக்கும். இப்ப வெள்ளம் கொஞ்சம் வத்தியிருக்கும். நீந்திப் போனா
எடுத்து வந்திடலாம். என்ன சொல்லுறா?
அவள் பதறி விட்டாள்.
ஐயோ வேண்டாமப்பா. இந்த வெள்ளத்துக்குள்ள ஆரும் போவினமே?. பத்தாததுக்கு முத்தத்துக் கிணறு கூட எங்கிருக்கு எண்டு தெரியாம ஒரே வெள்ளம். உவங்கட உந்தச் சாமான்கள் வந்துதானா எங்கட வயிறு நிரம்பப் போகுது. வேண்டமப்பா என்னாணை, சத்தியமா நீங்கள் போகக்கூடாது.
‘என்ன கனகம் ஒண்டும் புரியாமப் பேசுகிறா. இந்தச் சாமானுக்காகவா நான் சொல்லுறன். கூப்பனில்லாட்டி எங்களைக் கள்ளத்தோணி எண்டு கூடச் சொல்லிப்போடுவாங்கள். பிறகு புதுக் கூப்பன் எடுக்கிறதெண்டால் அப்பிடி இப்படி லேசான அலுவலில்லை. இதெல்லாம் ஒரு பெரிய வெள்ளமே. நான் இப்ப போனனெண்டா ஒரு நிமிசத்தில எடுத்துக் கொண்டு வந்து விடுவன்.
'எல்லாம் வெள்ளம் வத்தினபின் போய் எடுக்கலாம். இப்ப ஒண்டும் போக வேண்டியதில்லை. என்ர புள்ளையாணை உங்களைப் போகவிடமாட்டன், அவளின் சத்திய ஆவேசப்பேச்சு அவனை அயர வைக்கிறது.
"சரியப்பா. நான் போகேல்ல. போதுமா?"
அவள் புன்னகைக்கிறாள்.
நள்ளிவு. கனகம் பிள்ளைகளுடன் அயர்ந்து தூங்குகிறாள். ஒரு மூலையில் தூங்கும் விளக்கு மெல்லிய ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. கணபதி ஓசைபடாமல் மெல்ல எழுந்து வெளியேறுகிறான். கால்கள் விரைகின்றன. தன் குடிசையிருக்கும் பக்கமாக வருகிறான். அர்த்த சாமப் பிறையொளியில் குடிசை தெரிகிறது. சந்திர கிரணங்கள் வெள்ளத்தில் ஒளிர்கின்றன. அவன் மெல்ல வெள்ளத்தில் இறங்குகிறான். உடல் மழைநீரில் சில்லிட்டு விறைக்கிறது. அப்பா என்ன குளிர். ஐசைப்போல. அவன் கால்கள் நீரைக் கிழித்து உதைக்கின்றன. உடல் குளில் நடுங்கிச் சிலிர்க்கின்றது.
'இதென்ன குளிர் ஒருநாளுமில்லாம. காய்ச்சல்க்காரரைப் போல.சீ! இரவு வேளை. மழைத்தண்ணி அதுதான் இந்தக் குளிர். இதுக்கெல்லாம் பயந்தா. ஒண்டும் நடக்காது. உலகத்தில வாழவும் முடியாது'
கால்கள் நீரை உதைக்க உடல் முன்னேறுகிறது. 90/செம்பியன் செல்வன்
*

கால்கள் நீரை உதைக்க உடல் முன்னேறுகிறது. 'ஆ வந்தாச்சு. இந்தக்கப்பைப் பிடிச்சுக் கொண்டு கப்பை பற்றியவன் ஏதோ வளவளவென்று கையில் புரள. ஆ. பாம்பு சப்தம் தொன்ைடைக்குரல் வளைக்குள் சிக்கிக் கொண்டதா? பாம்பு, நீரில் வழுக்கி ஓடுகிறது.
பாம்பா, நீர்ப்பாம்பா? அவன் தன்னை ஒரு மாதிரிச் சுதாகரித்துக் கொள்கிறான். நல்லவேளை, இறப்புக்கு மேல் ஒலைகளுக்கிடையில் நீர் புகா வண்ணம் பொலித்தீன் பைக்குள் வைத்த கூப்பன்கள் வைத்தபடி பத்திரமாக இருக்கின்றன. அவன் மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது. அதனை எடுத்துக் கொண்டு மீண்டும் நீந்த ஆரம்பிக்கின்றான். மிக்க கவனத்துடன் கைநீச்சல் போடுகிறான். இதுவென்ன. காலை என்ன சுற்றிக் கொள்கிறது?.ஒரு வேளை பாம்போ.கைகள் தடுமாறுகின்றன. மறுவிநாடி கூப்பன்களை இறுகப்பற் றுகின்றன. கால்களை எதுவோ சுண்டியிழுக்கின்றது. அவன் கூச்சத்தால் உடலைப் புரட்டிக் கால்களை மாற்றுகின்றான்.
ஆ. இதுவென்ன..! பெரிய இரைச்சல். கண், மூக்கு. வாய். காது எல்லாம் நீரைவாரியடிப்பது என்ன..? என் உடலை வாரிவாரிப் புரட்டித் தூக்கி. மேலும் கீழுமாக. வெள்ளம் ஏன் தலைக்கு மோலாக. கைகள் ஏன் செயலற்று. உடல் ஏன் திரிகையாக சுழல்கிறது. ஆ1 ஐயோ!. - அவன் இட்ட சப்தம் நிசப்தமாக இரவைத் துண்டாக்கிய அதிர்ச்சியான் பயத்தில் அவர்கள் விழித்துக் கொள்கிறார்கள்.
நித்திரையில் விழித்துக் கொண்ட கனகம் பக்கத்தில் படுத்திருந்த கணபதியைப் பார்க்கிறாள். அவன் படுக்கை காலியாகிக் கிடக்கிறது. உடனே எல்லாம் புரிந்துவிடுகிறது.
திக்கற்ற திசைநோக்கி ஓடுபவளைப்போல், வெறி கொள்கிறாள். "ஐயோ!. என்ர ராசாவை ஆராவது காப்பத்துங்களேன்.
- என்ற குரல், இரவின் மெளனத்தைச் சிதைக்கிறது. - எல்லாரும் வெள்ளத்தை நோக்கி ஓடுகிறார்கள். அவன் காலில் மாடுகள் கட்டும் கயிறு ஒன்று கட்டிச் சிக்கக் கிடக்க, அவன் கையின் இறுகிய பிடிக்குள் பொலித்தீன் பையில் கூப்பன் புத்தங்கள் கசங்கிய வண்ணமிருக்க, அவன் சடலத்தைக் கொண்டு வருகிறார்கள். ஆயினும். அதன் தாற்பரியம் அவர்களுக்கு புரியவேயில்லை. ஆனால் புரிந்தவள்தான் மயங்கிக்கிடக்கிறாளே.
வீரகேசரி 18-2-1971
மழைக்காலங்களும் மண்பொம்மைகளும் / 91

Page 54
92/செம்பியன் செல்வன்
/O <ラグ○又公子ッ<ブイ
ഖി டு வாசற்படியிலமர்ந்து
கொண்டு, முழங்கையை முழங்காலில்
ஊன்றி, உள்ளங்கையை நாடிக்கு ஆதாரமாக வைத்துக்கொண்டு தெரு வையே வெறுத்துப் பார்த்துக் கொண்டி ருக்கிறான் பாலன். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. வீட்டில் ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது. ஆனால்
அந்த நடக்கக்கூடாதது தான் என்ன?.
சின்னஞ்சிறு நெஞ்சத்திலே எண் ணங்கள் அலைகளாகப் புரள. புழுக்களாக நெளிய. அந்த வேகத்தை தாங்க முடியாதவாறு உள்ளம் பதற. உடல் நடுங்க.
தெருவிலே அமைதி பூத்துக் கிடக்கிறது. தெருவிளக்குகள் சரம் கோர்த்தது மாதிரி. ஒளிப்பூக்களைச் சிதறுகின்றன. சாரைசாரையாகத் தெரு விலே வாகனங்கள் ஓடி மறைகின்றன. முற்றவெளியிலே மேயச்சென்ற மாடுகள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டி ருக்கின்றன. அவற்றின் கழுத்திலே கட்டப் பட்டிருந்த மணிகளால் மங்கலமாகக்
نیچ<
 

'கிணிங் கினிங்" ஒலி எழுப்பப்படுகின்றது. மாடுகளின் பின்னே கன்றுகள் துள்ளிக்குதித்துக் கொண்டு தாய் மேல் பாய்ந்து புரண்டு, வாகனங்களின் ஒசையில் பயந்து மிரண்டு 'ம்.மா. என்று அபயக்குரல் எழுப்பி, அந்தக் குரல் எழுந்து காற்றோடு கலக்கும் முன்பே, கவலையை மறந்து, மீண்டும் துள்ளிக் குதித்தோடும் கன்றுகளின் அழகில் பாலனின் கண்கள் இலயித்து விடுகின்றன. மாடுகளின் பின்னே ஒரு வயதான கிழவன். 'ந்தா.தா. என்று ஒரு தடியினால் மாடுகளை ஒரமாக அதட்டி நடத்திச் செல்கிறான்.
ஓயாத இரைச்சலும் ஒருவித அமைதி தானே? கன்றுகளின் 'ம். மா' என்ற அழைப்புக்குரல் பாலனுக்கு அம்மாவை நினைவூட்டிவிடுகின்றது. அம்மா எங்கே போயிற்றா? வரவே மாட்டாவா?. தாயின் நினைப்பில் மாலை நிகழ்ந்த நிகழ்ச்சிகள் நினைவில் நிழலாடுகின்றன.
பாலன் பள்ளிக்கூடத்தால் திரும்பிக் கொண்டிருக்கிறான். அவன் தோளில் புத்தகப்பை தொங்கி ஊசலாடுகிறது. அவன் காற்சட்டைப் பையில் அன்று வெற்றிபெற்ற போளைகள் கனத்துக் கலகலக்கின்றன. அந்த இனிய இசையில் கலகலப்பில் அவனின் மலர் இதயம் பெருமிதம் கொள்கிறது. எவ்வளவு போளை எனக்கு வெற்றி!
அவன் வீடு இருக்கும் தெருவில் வைத்தும் அவனுக்கு அந்த புது அனுபவம் நிகழ்கிறது. ரயில் பாதைக்கு அருகில் இருக்கும் வெற்றிலைக் கடையில் நின்று வெற்றிலை போட்டுக்கொண்டு நின்ற இருவர் பாலனைக் கண்டதும் தமது பேச்சை நிறுத்திக் கொள்கின்றனர். பாலனை விநோதமாகப் பார்க்கின்றனர். பாலனும் அவர்களைப் பார்த்துக் கொண்டே நடக்கின்றான். ஒருவனை அவன் முன்பே பார்த்திருக்கின்றான். ஆனால் பேசியது இல்லை.
'. ம்.இந்தப் பொடியன்தான். இவன்ரை அம்மாதான் இன்டைக்கு. -பாதிச்சொற்கள் காதில் விழாமல் மழுங்கி விடுகின்றன.
பாவம் பொடியனுக்கு நடந்தது' தெரியாது போலை. தெரிஞ்சா இப்படி இருப்பானே.
'.அவன் ‘கந்தையனுக்கு என்ன குறை எண்டு ஓடினவள். பத்தாததுக்கு ராசா மாதிரி வடிவான ஆம்பிளைப் பொடியன் வேறு. இவங்களை விட்டுப்போக் எப்படி மனம் வந்தது அவளுக்கு. காலம் கெட்டா புத்திபோற போக்கு.
பொடியன் விஷயத்தைக் கேட்டா துடிச்செல்லே போயிடும். இந்தச் சின்ன வயதில் இளைச்சுத் துரும்பாகவும் போயிடும்.
நான் கனவிலகூட நினைக்கேல்ல. அதுவும் இந்த வட்டாரத்துக் குள்ள. இப்படி மானக்கேடான விஷயம் நடக்குமெண்டு. இந்தக் காலத்தில பெண்டு பிள்ளைகளை எப்படி நம்பிவாழுறது?
அரும்பு / 93

Page 55
பாலனுக்கு ஏதோ புரிந்தும் புரியாத மாதிரி இருக்கிறது. அந்தச் சொற்றொடர்கள் அவன் செவிப்பறையில் அலைமோதிக் கொண்டிருக்க.
அம்மா' - என்று அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைகிறான். பள்ளிவிட்டுட்டுதா?. ஏன் இவ்வளவு நேரம்?' என்று கேட்டுவரும் அம்மாவைக் காணோம். வீடு மயான அமைதி பூத்துக்கிடக்கிறது. பாட்டியும் அப்பாவும் தான் காணப்படுகிறார்கள். பாட்டி வீட்டுத் திண்ணைச் சுவரைச் சாய்மானம் கொடுத்து, காலை நீட்டிக்கொண்டிருக்க. அப்பா வீட்டுக் கம்பத்தோடு சாய்ந்து கொண்டிருக்கிறார்.
'வாடா கண்ணு. வாடா!. இதென்ன முகமெல்லாம் வாடிக்கிடக்குது. வெய்யிலில போளை அடிச்சியோ? -என்கிறாள் பாட்டி,
அம்மா எங்க பாட்டி?. அம்மாவை காணேல்லையே?’ என்கிறான் LJT606i.
பாட்டி அப்பாவைப் பார்க்கிறாள். அவர் வாயில் விரல் வைத்ஆது 'உஷ்! சொல்லிப்போடாத' என்று பாட்டியை எச்சரிப்பவர், "வாடா கண்ணு சாப்பிடுவமே! இண்டைக்கு மீன் பொரிச்சிருக்கிறா பாட்டி. -என்கிறார்.
மீன்பொரியல்' என்றதும் அதன் சுவைதரும் இனிய நினைவின் லயிப்பில் அம்மாவைப் பற்றிய கேள்விகள் அநாதையாக விடப்படுகிறது.
பாலன் சாப்பிட உட்காருகிறான். பாட்டி அலுமினியத் தட்டில் குத்தரிசிச் சோற்றை பரிமாறுகிறாள். தட்டில் சோறு செம்பருத்தம் பூ வாக மலருகிறது. அதன் மெல்லிய ஆவிப்படலத்தை இனிய மணம் வாயில் நீருற்றெடுக்க மீன் பொரியலின் சுவையில். பாலன் தன்னை மறந்து உண்ணுகிறான். விளையாடி விட்டு வந்த களைப்பில் 'சாப்பாடு இதமாக இருக்கிறது. அவன் ஆவலுடன் உண்பதைப் பார்த்துக் கொண்டிருந்த பாட்டியின் கண்களில் இருந்து நீர் துளிர்க்கிறது. தொடர்ந்து. 'ம்' என்ற நீண்ட பெருமூச்சும் கிளம்புகிறது. இந்தப் பிள்ளையையாவது நினைச்சுப் பார்த்தாளே?. அந்தப் பாழாப் போனவள். இவளுக்கெண்டு எங்கிருந்து வந்தான். சுப்புறுமணியமாம். சுப்புறு மணியம். அவனைப் பாம்பு கொத்த!. அவன் வீட்டுக்கு கந்தையனோட வந்துபோக, நானேன் வித்தியாசமா நினைக்கிறன்?. இவள் சரசு இப்படிப்பட்டவள் எண்டு எனக்குத் தெரியுமே?. என்ர வயித்தில பிறந்தவளுக்கா இப்படிப் புத்தி போகவேணும்.
. இவன் கந்தையனில என்ன பிழை கண்டிட்டு, அவனோட. அந்தக் கரிமுண்டத்தோட ஓடினாள். கந்தையன் குடிக்கிறவன்தான். குடிச்சிட்டு இவளை கரைச்சல் படுத்துறவன் தான். ஆண் எண்டா அப்படி இப்படித்தான் இருக்கும். அதுக்காக இப்படிச் செய்யிறதே!. சீ ஒடுகாலி'
பாட்டி பிரேக்" உடைந்த 'கூட்ஸ்வகனாக, தன்னை மறந்து புலம்புகிறாள். பாலன் வாயருகே கொண்டுபோன. கவளத்தை விட்டுவிட்டு 94/செம்பியன் செல்வன்

பாட்டியைப் பார்த்து பிரமித்துப்போய் இருக்கிறான். அங்கிருந்த, அப்பா, திடுக்கிட்டுப் போய் விடுபவர், பாலனின் நிலையைக் கவனித்து விடுகிறார். மூதேவி. முண்டமே. உனக்கு ஏதாவது புத்திகித்தி இருக்காடி?. குழந்தைக்கு முன்னாலையாடி உன்ர துக்கத்தைச் சொல்லி புலம்பிறது.பாவம் குழந்தையைப் பார். முழிச்சிக்கொண்டு விழிப்பதை. வயதான உனக்கே ". மூளை இப்படிப் போனால். அதுகளுக்கு இதுக்கு மேலதானே மூளை போகும்.
பாட்டி, பெட்டிப் பாம்பாகி விடுகிறாள். பாலனுக்கு வயிறு நிரம்பா விட்டாலும், நிரம்பியது போன்ற உணர்வு. சாப்பிட்டதை விட்டுவிட்டு எழுந்திருக்கிறான். கைகழுவிவிட்டு வந்து வாசற்படியில் குந்தியவன் இன்னும் அப்படியே இருக்கிறான். அவனுக்குப் பனித்திரை கிழித்துப் பரவும் மெல்லொளி யாக இப்போது எல்லாம் விளங்கத் தொடங்குகிறது.
அம்மா ஓடிவிட்டாள் தன்னை, அப்பாவை விட்டு விட்டு"
பாலனுக்கு இப்போதெல்லாம் பாட்டியோடுதான் பொழுது கழிகின்றது. அம்மா இல்லாத சூழ்நிலையில் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்கிறான். பாட்டியும் தனது பாசம் முழுவதையும் சொரிந்து பேரனின் மனதில் வேறுவித கவலை, எண்ணங்கள் தோன்றாமல் பார்த்துக் கொள்கிறாள். ஆனாலும்.
அம்மாவின் அணைப்புக்காக சில வேளைகளில் அந்த அரும்பு நெஞ்சம் ஏங்குகிறது. எண்ணிச் சுருங்குகின்றது. ஆனால் ஐயாவைப் பற்றிய எண்ணமே அவனுக்கு வேம்பாகக் கசக்கிறது.
'ஐயா கூடாதவர். கள்ளுக் குடிக்கிறவர். அவரின் கண் பயமாய் இருக்கும். அவர் தூக்கிக் கொஞ்சினால் வாயெல்லாம் கள் மணக்கும். அம்மா கொஞ்சினா மாத்திரம் பவுடர் மணக்கும். முகமெல்லாம் மெத்தென்று. சோக்கா இருக்கும். அம்மாவைப் பற்றிய எண்ணம் மீண்டும் தலைதூக்க, தன்னிடமிருந்து அம்மாவைப் பிரித்த சுப்புறுமணிய மாமாமேல் ஆத்திரம். கொப்பளிக்கிறது. மனம் ஆங்காரத்தால் குமுறுகிறது.
சுப்புறு குப்புறு. வரட்டும் இனி. நான் கண்டனெண்டா என்ர' கெற்றப்போலால கட்டாயம் அவன்ர மண்டையை உடைப்பன்'
அன்று வகுப்பல் பாலனுக்கும் சோமனுக்கும் சண்டை வந்து விடுகிறது. டீச்சர் வகுப்புக்கு வரவில்லை. பிள்ளைகள் எல்லோரும் சப்தமிடுகின்றனர். பாலனும் டீச்சர் வராத சந்தோசத்தில் உரக்க சப்தமிடுகிறான். இந்த இரைச்சலைக் கேட்டு, ஹெட்மாஸ்டர் வந்துவிடுகிறார். அவர் கையில்* இருக்கும் பிரம்பைக் கண்டு பிள்ளைகளுக்கு உதறல் எடுக்கிறது. அஞ்சிப் பதுங்குகின்றனர். 1
அரும்பு/95'

Page 56
r . .  ̄ ܵ ‘என்ன சப்தம் இங்கே? உறுமுகிறார். தொடர்ந்து. 'டீச்சர்' வராட்டி܀ நீங்கள் எல்லாம் உங்கட புத்தகத்தை எடுத்து சப்தம் போடாமல் வாசியுங்கோ. என்று கூறிவிட்டு நடக்கிறார்.
பாலன் தனது புத்தகத்தை எடுக்கிறான். பாடசாலை ஆரம்பமாகி சில நாட்களானபடியால் புத்தகமெல்லாம் புத்தம் புதிதாக இருக்கிறது. அதில்கூட ஒருவித பெருமை. மற்றவர்களின் புத்தகத்தைவிடத் தனது புத்தகம் புதிதாக இருக்கிறதென்று. அதன் வளவளப்பை அவனின் விரல்கள் வருடி, அதன் சுகத்தை இரசிக்கின்றன.
முதல்பாடம். உயிரெழுத்து. ஆனா. ஆவன்னா. இனா. அனா. 'ம்மன்னா. மாவன்னா. அம்மா"- பாலன் வீட்டிலேயே முன்பு அம்மா சொல்லித் தந்ததை நினைவில் வைத்துப் படிக்கிறான். பக்கத்திலிருந்த சோமனுக்குப் பொறாமையால் பொறுக்கமுடியவில்லை.
போடா!. உனக்குத்தான் அம்மா இல்லியே" என்கிறான் ஏளனத்துடன். இல்லையா?.ஏண்டா பொய் சொல்றாய்?. எனக்கும் அம்மா இருக்கிறா தானே' - என்கிறான் பாலன்.
போடா!. உன்ர அம்மாதான் உன்னைவிட்டு ஓடிவிட்டா எண்டு எங்கட அம்மா சொன்னாவே. உன்ர அம்மா கெட்டவவாம். அதுதான்
உன்னை விட்டுட்டு ஒடிட்டாவாம்" - பாலனுக்கு அழுகை ஆவேசமாக மாறுகிறது. 'போடா உங்கட அம்மாதான் கெட்டது. எங்கட அம்மா ரொம்ப நல்லவ. - என்று சோமன் மேல் பாய.
.இருவரும் கட்டிப்பிடித்துப் புரள்கின்றனர். பிள்ளைகள் சூழ்ந்து நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். சப்தம் கேட்டு ஹெட்மாஸ்டர் வர அமைதி சூழ்கிறது.
பாலன் பள்ளிக்கூடம் விட்டு வந்துகொண்டிருக்கிறான். பள்ளிக் கூடத்தில் நிகழ்ந்த சம்பவம் அவனின் அரும்பு இதயத்திலே வண்டாகத் துளைக்கிறது. அம்மாமேல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. அவன் கால்கள் தெருவில் ஏறிவிடுகின்றன. அப்போது -
அவன் அருகே ஒரு கார் வந்து நிற்கிறது. அதன் கதவுகள் திறந்துகொள்கின்றன. திரும்பிப் பார்ப்பவனின் கண்கள் மகிழ்ச்சியால் அகல விரிகின்றன. உதடுகள். அம். என்ற உச்சரிப்பின் மேல் எழ மறுக்கின்றன. 'பாலா - என்கிறாள் ஆர்வத்துடன் அவள். பாலன் மிரண்டு விழிக்கிறான்.
பாலா. அம்மாட்ட வரமாட்டியா?. 's' என்று தன்னையறியாது தலையாட்டிய பாலனின் கண்கள் ட்ரைவர் ஆசனத்தில் இருப்பவனின் மேல் பாய்கின்றன. அவன் முகம் கோபத்தால் சிவக்கின்றன. அவள் மீண்டும் பரிதாபமாகக் கேட்கிறாள்
96/செம்பியன் செல்வன் *

-
பாலா அம்மாட்டை வரமாட்டியா?. அம்மா மேல கோபமா?
பாலனின் மனதிலே எண்ணங்கள் வெறியாட்டம் ஆடுகின்றன.
வெறுப்பு
பொறாமை
UTFL
நான் மாட்டேன் போ! உன்னோட கோபம்
'உனக்கு அம்மா வேண்டாமாடா? உன்ர அம்மால்ல நான்.
இல்லை. பொய். நீ அம்மா இல்லை. என்ர அம்மாண்டா என்னை விட்டிட்டுப் போவியா?.
பாலா!.-இரத்தநாளம் வெடித்துவிடும்படி கூவுகிறாள்.
'இல்லையடா. நான் உன் அம்மாதாண்டா கண்ணா!'
நீ அம்மாண்டா, இவன் யார்?.
இவர் உன் சின்னைய்யாடா'- தலைகுனிகிறாள்.
பொய். பொய். இவன் சின்னையாவும் இல்லை. நீ என்ர அம்மாவும் இல்லை. நான் பாட்டியோடதான் இருப்பன். நான் உன்னோட வரமாட்டன். போ' மறுவிநாடி காரில் இழுத்துப் போடப்படுகிறான், அவன் கூச்சலிடுகிறான். சத்தம் கேட்டு காரை நோக்கிப் பலபேர் ஓடிவரும் அரவம். பாலனை இறக்கிவிட்டு, கார் பறக்கிறது.
3
வீடுசென்ற பாலனுக்கு இன்னொரு அதிர்ச்சி காத்துக்கிடக்கிறது. கந்தையா குடித்துவிட்டு வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறான். அப்பா கெஞ்சிக்கொண்டிருகிறார்.
தம்பி நீங்கள் இப்படிச் செய்யிறது நல்லாயில்ல. அவள் தான் அப்படிச் செய்துவிட்டாள் என்றால் நீங்களுமா இப்படி?
அவள் என்ன நினைச்சுக் கொண்டாள்?. அவளொருத்திதான் உலகத்தில பெண் என்ட நினைப்போ?. இவன் கந்தையா நினைச்சா.என்று கத்திக்கொண்டிருந்தவன் பாலனைக் கண்டதும், டேய் பொடியா வெளிக்கிடு' என்கிறான். பாலன் விழிக்கிறான்.
அப்பா மீண் கெஞ்சுகிறார். 'தம்பி. தம்பி. நீங்க யாரை வேணுமானாலும் வைச்சருங்கோ. ஆனா. பாலனை மட்டும் கொண்டு போயிடாதேங்க. அவன் எங்களோட வளரட்டும்.
முடியாது. அவன் என்ர பிள்ளை. என்னோடதான் இருக்கவேணும். டே பயலே யாரோட இருக்கப் போறாய்? என்னோடயா?. அல்லது அப்பாவோடயா?. என்று உறுமுகிறான். பாலனின் களிசான் பயத்தால்
நனைந்துவிடுகிறது.
அரும்பு /97

Page 57
வேண்டாம் தம்பி. உங்களுக்கு வாறவள் எப்படி இருப்பாளோ? குழந்தையை கவனிப்பாளோ என்னமோ? பாவம் இந்த அரும்பு, இளவயதிலேயே வாடிவிடக் கூடாது தம்பி.
'வாறவள் என்ன வாறவள். எல்லாம் வந்தாச்சு. -என்று ஒருத்தியின் பெயரைச் சொல்கிறான். பெயரைக் கேட்ட அப்பா திடுக்கிடுகிறார்.
என்ன தம்பி. புருஷனைத் துரத்திப்போட்டு இருக்கிறவளைப் போய்
'எல்லாம் உங்கட மகளைவிட சிறந்தவள்தான். உங்கட மகள் செய்தது மட்டும் நல்ல காரியமோ?. நான் என்ர மகனைக் கொண்டுதான் போகப்போறேன். என்று பாலனைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நடக்கிறான். பாலன் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
-அப்பா கூனிக்குறுகி உட்கார்ந்து விடுகிறார்.
4.
டே பாலா! இவதாண்டா இனி உன்ர அம்மா"- என்று தகப்பன் அறிமுகப்படுத்துபவளை நிமிர்ந்து பார்த்த பாலனின் முகம் அருவருப்பால் சுருங்குகிறது. அவள் முகத்தில் முதிர்ச்சியின் ரேகைகளோ. அநுபவங்களின் அத்தாட்சிகளோ. விகாரமாக முத்திரைகள் இட்டிருக்கின்றன. பருத்த சரீரம். பரட்டையான தலை. வெற்றிலைச்சாறு ஒழுகும் வாய். காவிப்பற்கள்.
அ.ப்.யா. என்கிறான்.
‘என்னடா?
நான் பாட்டியோட இருக்கிறன் அப்பா-என்றான் பயத்துடன்.
'ஏன். இந்த அம்மா பிடிக்கேலியா?. அந்த ஒடுகாலி அம்மாதான் வேணுமா? பாட்டியொண்டும் வேண்டாம். இந்த அம்மாவோட இரு.
இது, என்ர அம்மா இல்லை. -பாலன் இது அம்மா இல்லை. சின்னம்மா. சரிதானே?-ஐயா. பாலன் வியக்கிறான். இது என்ன புதிதுபுதிதாக சின்னம்மாவும், சின்னையாவும் முளைக்கிறார்கள்?- ஒன்றுமே புரியவில்லை.
'எனக்குச் சின்னம்மா வேண்டாம். பாட்டிதான் வேணும். டே, இனி மூச்சுக்காட்டினா உதைதான் விழும். இந்த அம்மாவோட போய் சாப்பிடு முதலில
அவள் அவன் கரத்தைப்பற்றி இழுத்துக் கொண்டு போகிறாள். என்ன வலி. இரும்பு மாதிரி. அவள் பரிமாறும் சாதத்தை எடுத்துக்கொண்டு வாயருகே கொண்டு சென்றவன் முகம் -
அருவருப்பால் சுளிக்கின்றது. இதென்ன மணம்?. காரமா? உப்பா?. புளிப்பா?. 98 /செம்பியன் செல்வன்

அவளை நிமிர்ந்து பார்க்கிறான். அவள் பார்க்கும் பார்வையில் வெப்பம் தாங்காது, தலையைக் குனிந்துகொண்டு, சாப்பிட்டதாகப் பாவனை செய்து கொண்டு எழுகிறான்.
அன்றிரவு!
அவள் அவனை அணைத்துக்கொண்டு படுத்திருக்கிறாள். அவனுக் குத் தூக்கம் வர மறுக்கிறது. புதிய இடம். பக்கத்தில் படுத்திருப்பவளிடம் இருந்து கிளம்பும் குறட்டை ஒலி. நெடி. நாற்றம். மூக்கை அவளின் வியர்வை நாற்றம் துளைக்கிறது. வெளியே
ஐயா படுத்திருக்கிறார்.
எப்படி இதைவிட்டு வெளியேறுவது?. இந்த நரகத்தில் வாழவே முடியாது. எப்படியும் வெளியேறியே தீருவது. என்ற எண்ணத்தில் தன்னையும் அறியாது தூங்கிவிடுகிறான்.
திடீரென அவனுக்கு விழிப்புக் கண்டுவிடுகிறது, வெளியே மங்கிய வெளிச்சம். நிலம் தெரிகிறது. பக்கத்தில் இருந்தவளைப் பார்க்கிறான்.
அவளைக் காணோம்.
வெளியே வருகிறான். பயத்துடன் படுத்திருந்த ஐயாவைப் பார்க்கிறான். அங்கே
திண்ணை காலி
பாலன் தெருவுக்கே வந்துவிடுகிறான். தெருவில் நடமாட்டம் தெரிகிறது. தன்னை அன்புடன் ஆதரிக்கும் அந்த வயதான தம்பதிகளை நோக்கி ஓடுகிறான் பாலன். தெரு நீண்டு கிடக்கிறது.
ஈழநாடு 10-06-1962
அரும்பு /99

Page 58
M/ 2a@ス支クイラング・タ c不びう○アー
தேவராசன் 'காம்ப்' கூடார வாசல் துணியை விலக்கிக் கொண்டு வெளியே வந்தான், சுற்றுப்புறமெல்லாம் மங்கிய ஒளியில் மயங்கித் தெரிந்தன, பச்சைப் பசுஞ்செடிகள். மரக்காடுகள். பற்றைப் புதர்கள். தமக்கேயுரித்தான நெடியை வாரியிறைத்தன. பற்றைகளின் படபடப்பும் சில்வண்டுகளின் ரீங்காரமும் கலவையிட்டு விசித்திரமாக ஒலித்தன.
தொலைவில் மலைகள் சாம்பல் பூத்து, முகிலினுள் புதைந்து சாம்பல் வர்ணத்தையே மிகவிரும்பும் ஒவியனின் சித்திரமாய் தெரிந்தன. சாம்பல் வர்ணத்தில் தான் எத்தனை சாயல்கள். சாம்பல் கலந்த நதியின் நிலநீர். சாம்பல் படிந்த பச்சை மரங்கள்.சாம்பல் குளித்த பல வர்ணப் புற்பூக்கள்.
மனித மனங்களின் பல்வேறு சாயல்கள், சொந்த மனதின் தனித்துவச் சாயல்களை விழுங்கி விடாத ஆளு மையின் ஆற்றலைப் போல ஒவ்வொன் றும் தத்தம் சொந்த இயல்புகளைச் சாம்பலிடையேயும் இனம் காட்டிக் கொண்டிருந்தன.
100/செம்பியன் செல்வன்
 

தன் இன்பமெலலாம் சோகச் சாம்பல், பூத்துக் கிடப்பதென எண்ணிய போது அந்த வர்ணநிலை மனதுக்கு இதமாகித் தெரிந்தது.
மனித சஞ்சாரத்தினின்றும் பிரிந்ததென. மனித காலடிபடும் என்ற எண்ணமே எழாத உயரத்தில் ஆற்றையொட்டியமைந்த காட்டினருகே இருந்த மேட்டு நிலத்தில் அவர்கள் ‘காம்ப் இறக்கியிருந்தார்கள். அவர்களின் முயற்சி வெற்றியளித்த பின்னர் அவ்விடங்களெல்லாம் காட்சியளிக்கமாட்டா. பயிர் நிலங்களாக.மனித உயிர் சிரிக்கும் பூமியாக மாறிவிடும். அவன் பார்வை தொலைதூரத்து அடிவானில் பட்டுத் தெறித்தது.
- அவர்களால் அளவையிட்டும். திட்டமிட்டும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அணைக்கட்டின் ஆரம்ப வேலைகள் அரைகுறை 'கங்கிரீட் தூண்களாக பூமியின் விரல்களாக உயர்ந்து எழுந்திருப்பது தெரிகிறது. அதற்கும் அப்பால் நீர் வீழ்ச்சியின் பயங்கர இரைச்சல் கேட்டது. அவர்கள் அடையாளமாகவும் ஆரம்ப பரீட்சார்த்தமாகவும் இடையிடையே கட்டியிருந்த சிறு தடை அணைகளை முட்டி மோதித்தழுவி வெண்ணலையாய்ச் சிரித்துச் சிதறி நீர்நொப்பும் நுரையுமாக ஆற்றில் ஓடிக்கொண்டிருந்தது.
நதியின் வலது பக்கக் கரையோரமாக. தாழ் நிலத்தில். ஆங்காங்கே சிதறிய பச்சைப் பொட்டுகளாக வயல்வெளிகள் வானக் கருமையுடன் சங்கம மாவதென விரிந்து மங்கித் தெரிந்தன. வைக்கோல் வேய்ந்த குடிசைகள். பாக்கு மரங்கள். சேற்றில் புரளும் எருமைகள். சிறு தாதுகோபம் எல்லாம் சாம்பலில் குளித்துத் தெரிந்தன.
எவ்வளவு நல்ல மனங்கள். சிங்களவர், தமிழர் என்ற வேறுபாடேயறியாத கள்ளமில்லா உள்ளங்கள். ஏற்றத் தாழ்வுகளற்ற மனிதாபிமானம் கொண்ட பண்டமாற்று கொடுக்கல், வாங்கல் வர்த்தகங்கள். நாகரிகத்தின் வாடையே வீசாததால் அதனால் ஏற்படும் தீங்குகளை உணராத உயிர்கள். மாத்தயா. மாத்தயா. என்ற அன்புபசாரங்கள். அவர்கள் அளிக்கும் பச்சைக் காய்கறிகள். இறைச்சி வகைகள். பனிகிரி. கித்துள். இவையெல்லாம் இவர்கள் அளிக்கும் பணத்துக்காக மட்டுமே அளிக்கப்படும் பொருட்களா?. அவர்களின் மனங்களுமல்லவா அவற்றில் கலந்து கிடக்கின்றன?
அவனுக்கு மேனி சிலிர்த்தது.
இதையுணரா. அவையள் அங்கை உழைக்கப் போயிட்டினம். இங்க எங்களுக்கு உழைக்க ஆளில்ல. என்று கேலிப் பேச்சுப் பேசும் ஊரவர்கள் நினைவுக்கு வந்தார்கள்.
உயிர்களில் இத்தனை பேதங்களா?
'-தேவா. தேவா. மச்சான்'
- கூடாரத்திற்குள்ளிருந்து நண்பர்கள் அழைக்கும் குரல்கேட்டது. அவன் உள்ளே போனான். அங்கே இளைஞர்களின் வாழ்வு காவியமாக மலர்ந்து கொண்டிருந்தது.
உயிரின் நிறம் என்ன? / 101

Page 59
மண்ணெய் குக்களில் சோறு 'தளதளத்துக் கொண்டிருந்தது. விசாகன் வேகமாகத் தேங்காய் துருவிக்கொண்டிருந்தான். அவன் துருவிய துருவலில் தேங்காய்ப் பூந்தூறல்கள் தட்டைவிட்டு வெளியேதான் அதிகம் கோலமிட்டிருந்தன. கதிர்காமு காய்கறி அரிந்துகொண்டிருந்தான். சிதம்பரி வெங்காயத்தை உரித்து. கண்ணிர் விட்டு. மூக்கை உறுஞ்சி.
அவனுக்குச் சிரிப்பாக வந்தது.
நீ நல்ல ஆள்தான் மச்சான். இஞ்ச நாங்கள் சமையலோட மாரடிக்கிறம். நல்ல தருணம் பாத்து நீர் வெளிய போயிட்டீர் என்ன.? இண்டைக்குக் கறிச்சட்டி கழுவிறது உம்மட வேலை தெரியுமே. வாளியுக்க கொஞ்சமேனும் தண்ணியில்ல. கெதியாய்ப் போய்க் கொண்டந்து கழுவும். சிதம்பரி வெங்காய எரிச்சலில் எரிந்து விழுந்தான்.
இதுக்கேன் மச்சான் இப்புடிக் கோவிக்கிறா? என்ர கவலையில. ஏதோ நினைப்பில போட்டன். என்றபடி வாளியை எடுத்தான். விசாகன் அவனைப் பரிவுடன் பார்த்தான்.
மச்சான். சிதம்பரி ஒரு விசரன். அவனுக்கு இன்னும் கலியாணம் ஆகேல்ல. அதுதான் இப்பிடிக்கிடந்து துடிக்கிறான். அவனும் ஊரை உலகத்தைப் பகைச்சு. காதலிச்சு. கலியாணம் கட்டீட்டு. புதுப்பொம்பிளையை ஊரோட விட்டுட்டு. இங்க நடுக்காட்டுக்க. கடுங்குளில. பாம்பு. நட்டுவாக்காலி. தேள். பூரானுக்க.எங்கட சமையலயும் சாப்பிட்டுக்கொண்டு கிடக்கேக்கதான் உன்ர நிலை இவனுக்குப் புரியும்.
அதில்ல மச்சான். என்று இழுத்தான் தேவராசன்.
குடும்பம் எண்டாச் சும்மாவே. முந்தி எண்டா எங்களைப் பத்தி மட்டும் நினைச்சுக்கொண்டு எப்படியும் இருந்திடலாம். அங்க ஒரு சீவன் இவன்ர நினைப்பில பெருமூச்சு விட்டுக்கொண்டு கிடக்கேக்க. அதுகளைப் பத்தி ஒண்டும் யோசியாம இருக்க முடியுமே. கதிர்காமு சொன்னான்.
மச்சான் நான் பகிடிக்குச் சொன்னனான். கோவிக்கிறியே'- என்று சிறுபிள்ளைத்தனமாகச் சிதம்பரி கேட்டான்.
நண்பர்களின் அநுதாபமும், ஆறுதல் வார்த்தைகளும் மனதுக்கு சாந்தியாய் இருந்தன.
‘எங்களுக்குள்ள என்ன கோபதாபங்கள். அதெல்லாம் ஒண்டுமில்ல மச்சான். அவளும் தன்ர குடும்பத்தை விட்டுத் துணிச்சலோட என்ர பின்னால வந்திட்டாள். சரி. நல்ல பெரிய இடத்தில வசதியா பிறந்து வளந்தவள். பாடசாலை நட்பையே பெரிசா நம்பி. என்னட்ட என்ன இருக்கெண்டு வந்தவள். நல்ல தொழிலா. படிப்பா. பெரிய என்ஜினியர் ஐயா வீட்டுக்கு மேசன் வேலைக்குப் போன இடத்தில. அவருக்கு என்னைப் பிடிச்சு. தன்னோட கூட்டி வந்து இந்த வேலையும் எடுத்துக் தந்திராட்டி நானும் என்ர அம்மாவும் என்ன பாடுபட்டிருப்பம்.
102/செம்பியன் செல்வன்

‘என்ன மச்சான். இந்த வேலைக்கு ஜேசி பாஸ் பண்ணியிருந்தாப் போதும் தான். நீ ரெண்டு மூண்டுதரம் எஸ். எஸ். சி. எடுத்துப் பெயிலாயிருந்தாலும் பெரிய ஸ்போட்ஸ்மன்னெல்ல.
'உதுகளைக் கண்டு மயங்கித் தான் அவளும்தன்ர இனம் சனத்தை விரோதிச்சுக் கொண்டு எனக்குப் பின்னால ஓடிவந்தவள்.
'இப்ப உனக்கு எதில குறை. அரசாங்க உத்தியோகம். பென்சனுமிருக்கு. பெரிய ஐயா எங்க தான் போற இடமெல்லாம் உன்னையும் டிரான்ஸ்பரில கூட்டிக் கொண்டு வந்திடுறார். நீ அவருக்கு வலது கைபோல இருக்கிறாய். அவர் சொல்லி முடிக்கிறதுக்குள்ள எந்த ஆழத்திலும் ஆத்தில இறங்கி விடுறா. உன்ர ஸ்போட்ஸ் விளையாட்டுக்களெல்லாம் இங்க வேலைக்கு உதவியாக கிடக்கு. நீ செய்யிற வேலை ஒவ்வொண்டும் படத்தில் காட்டுறது போலயெல்லே கிடக்கு. பாத்துகொண்டு நிக்கிற எங்களுக்கு பாதி உயிர் போய் வருகுது. ஆத்தின்ர ரகஸ்யமெலாம் அறிஞ்ச நீ பாதி இஞ்சினியராயிட்டாய். பாரன் உனக்கு நல்ல எதிர்காலமிருக்கு.
அதெல்லாம் சரிதான் மச்சான். ஆனா அவவின்ர ஆக்களுக்கு என்ர குலம் கோத்திரம் தானே பெரிசாப்படுகுது. இந்த எளிய வடுவா எங்கட பகுதிப் பொம்புளையைக் கிளப்பிக் கொண்டு போகவோ எண்டு குத்தரியம் குத்தினம். வெட்டடா. கொத்தடா. சுட்டுத் தொலையடா எண்டு கொடுவாக் கத்தி, துப்பாக்கியளோட வந்திட்டினம். அவள் உறுதியோட நிண்டதால அவையளால ஒண்டுமே செய்ய முடியவில்லை. ஏதோ அடங்கிப் போட்டினம் எண்டும் சொல்லேல. அங்க ஊரில என்னத்தச் செய்யினமோண்டு பயமாக் கிடக்கு.
'ஏன் மச்சான்!. ‘என்னை நம்பி வந்தவளக் கூட்டிவந்து என்னத்தச் செய்தன். என்ர அம்மாவோட விட்டிட்டு லீவு முடிஞ்சுதெண்டு இங்க வந்திட்டன். அம்மாவும் வயசாளி. நோய்க்காரி. அவங்கள் மீண்டும் வந்து பயமுறுத்தினா- பாவம் பெண்புரசுகள் என்னத்தச் செய்யுங்கள்.
அவையஞக்கு ஏழை எளியதுகளின்ர உயிர் எண்டா இளப்பமா இருக்காமோ. மச்சான் அப்படி ஏதும் உனக்கு ஏற்பட்டா நாங்கள் சும்மா இருக்க மாட்டம் கண்டியோ. சிதம்பரி ஆத்திரத்துடன் கூறினான்.
மச்சான் உதுகளையெல்லாம் நினைச்சு வீணாகக் கவலைப் படாத. அப்படி ஒண்டும் நடக்காது. எதுக்கும் பெரியவரிட்ட நாலுநாள் லீவு கேட்டுப் பார். கிடைச்சா ஒருக்கா ஊருக்குப் போய் வா.
'அப்படித்தான் நானும் நினைச் சிருக்கிறன். கொழும்புக்கு கொன்பிரன்ஸுக்கு போனவர் வந்துதான் எல்லாம். என்றபடி வாளியை தூக்கிக் கொண்டு ஆற்றைநோக்கி நடந்தான்.
உயிரின் நிறம் என்ன?/103

Page 60
2 மலைப்பிரதேசம் அவனது மனதுக்குத் தெம்பூட்டியது. அழகின் அமைதியில் ஏக்கச் சுமைகள் கழன்று நழுவியதென.
யாழ்ப்பாணத்தில் காணமுடியாத. ஆறுகள். பள்ளத்தாக்குகள். கரையோர மூங்கில் புதர்கள். மூங்கிலிலையில் ஊஞ்சலாடும் பூஞ்சிட்டுகள். ஆற்றில் பயணமாகும் பிரம்புத் தோணிகள். நீண்ட கழிகள். நாடோறும் ஏடு புரட்டும் காவியச் சுவடுகள். இத்தனை இயற்கைச் செல்வங்களத்தனையையும் மனிதர்களால் எப்படி இத்தனை காலமும் புறக்கணிக்க முடிந்தது? இவர்களின் உழைப்பு எங்கே போயிற்று.
யாழ்ப்பாணமோ? சுண்ணாம்புப் பாறையில் சுடர்விடும் மலர்களான வாழ்க்கை. சுண்ணாம்பு நிலத்தையே பூக்க. காய்க்க. கனிய வைக்கும் உழைப்பாளிகள். வானத்தை அண்ணாந்து பார்த்துப் பார்த்து. பார்வையாலேயே வானிற்கு இரக்க உணர்வூட்டி. அதனைக் குளிர வைத்து. மனமிளகிக் கண்ணீர் சொரிய வைக்கும் ஊரவர்கள். சுண்ணாம்புப்பாறையினடியில் நீர்தேடும் வேட்கை. இங்கோ..?
அவனுக்கு இதுவும் ஒரு ஆச்சரியமே. ஆறு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. நீர் கலங்கலாக. வானம் தூரத்தே கருவண்டாக இருண்டு. மலைத்தொடர்கள் முற்றாக கரும்புகாரில் மறைந்து விட்டன. எங்கோ பெரும் மழை பெய்கிறது. பெருவெள்ளம் வரப் போகிறது என்ற உணர்வு மனதில் எழ ஆற்று நீரை அள்ளிக்கொண்டு கூடா ரத்தை நோக்கி நடந்தான்.
கூடாரத்து வாசல் வெளிக்கம்பத்தில் அரிக்கன் லாம்பு வெளிச்சத்தை உமிழ்ந்துகொண்டிருந்தது. உள்ளே எல்லாம் அல்லோல கல்லோலமாயிருந்தது. அவன் திடுக்கிட்டு வாசலில் நின்றுவிட்டான்.
மச்சான் மெல்லக் கவனமாப் பாத்துவா. பாம்பொண்டு வந்திட்டுது. இங்கதான் எங்கேயோ போய் பதுங்கிக் கிடக்குது- நண்பர்கள் விளக்குடனும் கையில் தடியுடனும் பாம்பு வேட்டையிலிருந்தனர். வாளியை வெளியே வைத்துவிட்டு உள்ளே நுழைந்தான். பதட்டத்தில் கைவிளக்கு சரிந்து. மண்ணெய் மணம் பரவ.
-ஆ. அதென்ன! சுருட்டி வைக்கப்பட்டிருந்த படுக்கையினடியில் எதுவோ துடித்து அசைவதுபோல. அவன் அருகே சென்றான். நண்பர்கள் என்ன நடக்கிறது என்பதனை உணரமுந்தியே.
அவன் கையில் பாம்பொன்று மேலாகச் சுழன்று கொண்டிருந்தது. பாம்பை வெளியே எடுத்துச் சென்று வீசினான்.
நண்பர்கள் பிரமித்துப் போய் நின்றார்கள். 104/செம்பியன் செல்வன்

t
மச்சான். பாம்பெண்டா படையும் நடுங்கும். நீ.?
இதைவிடப் பெரிய பாம்புகள் மனித சமூகத்தில இருக்கேக்க. இதுகளுக்குப் பயந்தா முடியுமே. சரி. சரி நேரமாகுது. முதலில வயித்துப் பாட்டைப் பாப்பம். என்றவாறு எல்லாவற்றையும் ஒழுங்குசெய்ய தொடங்கினான்.
அவனுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். விழிமடல்களில் நினைவுகள் உருக்கொண்டு நடமாடுவது போல.
ஏக்கங்கள். கனவுகள். செயலற்ற யெளவனத் துடிப்புகள். எண்ணங்களாலேயே அவளைத் தேற்றி ஆறுதல் கூறுவதாக. அந்தக் கொடிய குளிரை மனைவியின் மார்பகக் கணப்பில் இதம் கண்டு விரட்டுவதாக மெய்மறந்து. நடுநிசியில் கண்விழித்தெழுந்து வெட்கத்தால் பதறிய இரவுகள் எத்தனை? இத்தகைய விழிப்புகட்கு உயிரூட்டும் வண்ணம் காட்டுப் பூனைகள் குழந்தைகளின் அழுகுரலில் கூட்டுக்களியின் கலவியின்பத்தைப் பறைசாற்றும். பகல் வேளைகளில் அவள் எழுதும் கடிதக் கண்ணீர் வரிகளிலே அவளைச் சம்போகித்துத் தேற்றுவான். அவளும் இதேபோலத்தான் தவிப்பாள் என்ற நினைப்பு வரும்போது துடிதுடித்துப் போவான்.
'.அத்தான். கல்யாணம் கட்டியும் தனிமையில் வேகும் கொடுமை தாங்கமுடியவில்லை. காடோ மேடோ என்னையும் வந்து கூட்டிப்போய் வைத்திருங்கள். சீதை ஏன் கல்லிலும் முள்ளிலும் நடந்தாள் என்பதனை அநுபவபூர்வமாக இப்போதுதான் உணர்கிறேன். கலியாணம் ஆகாதவரை கல்யாணம் ஆகவில்லை என்ற கவலை மட்டும்தான். கல்யாணமாகித் தாம்பத்திய இன்பமும் பெற்றுவிட்டபிறகு. புதிய அநுபவ இன்பங்களில் இதுவே வாழ்க்கை என்றுணர்ந்து தேர்ந்தபிறகு.கணவனை விட்டுப் பிரிந்திருக்கும் மனைவிக்கு எத்தனை இழப்பு. நஷ்டங்கள்.
அத்தான். நீங்கள் அனுப்பும் மணியோடர்கள் வயிற்றை நிரப்பலாம். ஆனால் உள்ளத்தை நிரப்ப நீங்கள்தான் நேரில் வரவேண்டும்.
-அவள் எழுதிய பல கடிதங்களில் அவன் மனதைப் பிணித்த வரிகளினூடே திரும்பத் திரும்ப அவளின் சத்திய சொரூபத்தைத் தரிசிப்பான்.
ஆனால். நேற்றுவந்த கடிதம்?. அத்தான்!. நேற்றுத் திடீரெண்டு அண்ணனாக்கள் நாலைஞ்சு தடியன்களோட. இருட்டுப்படற சமயமா வீட்டவந்து கத்தினார்கள். மாமி நல்லாப் பயந்து போனா. உங்களோட ஒடிவந்ததால மானம் மரியாதை எல்லாம் போட்டுதாம். ஊரில தலைகாட்ட முடியேல்லியாம். எங்கள் ரெண்டு பேரையும் சுட்டுக் சாக்காட்டினாத்தான் தங்கட மானம் மரியாதை நிலைக்குமாம். உங்களத்தான் தேடிச்சினம். உங்கட ரெத்தத்தாலதானாம் தங்கட கறையைக் கழுவ முடியுமாம். ஊருக்க உங்கட தலைக் கறுப்பைக் கண்டா எங்களை வீட்டோடையே கொளுத்திவிடுவினமாம். என்னை ஒண்டு தங்களோட வரட்டாம்.
உயிரின் நிறம் என்ன?/105

Page 61
இல்லாட்டி உடனடியா எங்கயாவது ஊரவிட்டு ஓடட்டாம். அப்படி ஒரு கிழமையுக்கை போகாட்டா எல்லாரையும் தொலைச்சிடுவினமாம். நானும் விட்டுக் கொடுக்காம எதிர்த்துப் பேசினன். அதுகள் வாயடைச்சுப் போட்டுதுகள். எண்டாலும் அதுகள் ஒரு மாதிரியானதுகள். எதுக்கும் உடனடியா ஊருக்கு வந்து போங்கள். யோசிச்சு ஒரு முடிவுக்கு வருவம்.
- 'ஊருக்குப் போய்த்தான் வரவேண்டும் அவன் அயர்ந்து போனான்.
4. ஹோ' என்ற பெரிய இரைச்சல் கேட்டது. அதனைத் தொடர்ந்து கடகடவென எதுவோ பலத்த சத்தத்துடன் சரியும் ஓசை எழுந்தது. எல்லாரும் நித்திரையில் தூக்கி எறிந்ததுபோல் பதறி அடித்து, வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து வெளியே வந்தனர்.
காரிருட்டு, மழைத்துளி விழும் சத்தம் தொடர்ச்சியாக ஆற்றின் ஓசையுடன் தெளிவாகக் கேட்டது. வேறொன்றும் புரியவில்லை.
திடீரென மக்கள் கூக்குரலிடும் ஓசை கேட்டது. தூரத்தே. பள்ளத் தாக்குகளில் மக்கள் தீப்பந்தங்களுடன் மழையிடையே அலைவது தெரிந்தது. சில தீப்பந்தங்கள் ஆற்றை நோக்கி வேகமாக நகர்வதுமாக.
மங்கிய ஒளியில் அணைக்கட்டிற்கு எழுப்பப்பட்டிருந்த தூண்களுக்கு சற்றுத் தொலைவில் ஆற்றின் மத்தியில் எதுவோ கரும்பூதமாக.
தேவராசன் பரபரப்புக் கொண்டான். கிராமங்களில் அலறல். அழுகை. கூக்குரல். அபயம். கலவையிட்டுக் கேட்கலாயின.
மச்சான் மலைப்பாறையொன்று ஆற்றுக்குக் குறுக்கே சரிஞ்சிட்டுது. அதாலை வெள்ளம் தடைபட்டுத் தேங்கி கிராமப்பக்கமாகத் திரும்பிப்பாயுது. கிராமம் மூழ்கப்போகுது. பாறைக்குப் பக்கமாக பவர்கவுஸ் வேற.
எல்லாரும் விக்கித்து நின்றனர். கிராம மக்களின் மரண ஒலம் விநாடிக்கு விநாடி அதிகரித்தது. 'மச்சான். ஆத்துக்குக் குறுக்கே விழுந்திருக்கிற பாறையை உடைத்தெறியாட்டி. அவ்வளவுதான். அதை உடைத்தெறிவதை விட வேறு வழியில்லை. தேவராசன் முஷ்டியை உயர்த்திக் கூறினான்.
'உண்மைதான் மச்சான். ஆனா எப்படி. ஆர் போறது. உடைக்கிறது.? பாறை சரிஞ்சிருக்கிற இடத்தைப் பாத்தியே. அணைக்கட்டிற்கு முன்னால சரிஞ்சிருக்கு. பாறைக்கு வைக்கிற வெடியில அதுக்கே சேதம் வந்திட்டா. எதுக்கும் பெரிய எஞ்சினியர் இல்லாம என்னத்தப் பாக்குறது. 'எல்லாத்துக்கும் எஞ்ஜினியர்ஸ் குவாட்டஸுக்குப் போய்ப் பாப்பம். வாங்க. போவம். போட்டது போட்டபடி கிடக்க, இருளில் தட்டுத் தடுமாறி சேற்றில் வழுக்கியுருண்டு, கற்களில் தடுக்கி விழுந்து. காலில் முள்முனைகள் ஒடிந்துநெரிய வேதனையுடன் குவாட்டர்ஸை நோக்கி ஓடினர். 106/செம்பியன் செல்வன்

அங்கும் பரபரப்பே நிலவிக்கொண்டிருந்தது. டெலிபோனைச் சூழ்ந்து இளம் உதவி எஞ்சினியர்மார். டெலிபோனைக் கையில் வைத்திருப்பவர் "டெலிபோன் அவுட் ஒவ் ஓடர்' என்று முனகிக்கொள்வது கேட்டது.
இவர்களைக் கண்டதும் என்ன. 'என்ன சங்கதி. உங்கட இடத்திலையும் தண்ணி பூந்திட்டுதோ?’ என்றார்கள்.
இல்ல ஐயா. கிராம மக்கள்தான் பாவம். அதுகளைக் காப்பாத்த வேணும். ஏதாவது உடனடியா செய்யாட்டி அதுகள் அத்தனையும் நாளைக்கு கடலிலதான் பிணமா மிதக்கும்.
-கிராம மக்களின் மரண ஒலம் காதைக் கிழிப்பதென இருளிலே எழுந்து. அலையிரைச்சலுடன் போட்டியிட்டுக்கொண்டு.
தேவராசனுக்கு அந்தரமாக. ஐயா. ஐயா. செய்யிற எதையும் கெதியாகச் செய்யுங்க. வீணா நேரத்தைக் கடத்தாதீங்க. என்று பதறினான்.
இப்ப எங்கள என்ன செய்யச் சொல்லுறா? பாறையை வெடி வைச்சுப் பிளக்கிறதெண்டா சும்மாவே. பெரிய வேலை. பத்துப்பதினைஞ்சு பேராவது வேண்டும். அங்க எப்படிப் போறது. ஆர்போறது? பிரம்புத் தோணியில உந்தப் பெருக்குக்க போகேலுமே. அப்படிப் போறவன் திரும்பி வருவானோ. கடலிலதான் போய் மிதப்பானோ. நீ என்ன விசர்க்கதை பேசிறா. இளம் எஞ்சினியர் கையாலாகாத்தனத்தால் எரிந்துவிழுந்தார்.
நிலைமையின் விபரீதம் அப்போதுதான் புரிந்தது. நண்பர்களெல்லாம் பயத்தால் உறைந்து. அவனை நோக்கி மன்னிப்பை வேண்டுவனபோன்ற கண்களில்.
மாத்தயா. மாத்தயா.எங்கள ஊரோட சாகவிடாதீங்க. காப்பாத்துங்க. என்று சிங்கள மொழியில் எழுந்த மரண ஒல இரங்கல் இரவில் உரத்து.
நீங்க ஒருத்தரும் வர வேண்டாம். நான் போய் இயன்றளவு வெடி வைத்துப் பார்க்கிறன். -தேவராசனின் குரல் உறுதியுடன் ஒலித்தது.
மச்சான் உனக்கென்ன பைத்தியமே? வீணாப் போய்ச் சாகப்போறியோ? பெஞ்சாதி. தாயை நினைச்சுப் பாத்தியே.
என்ர குடும்பத்தைக் காப்பாத்துவதற்காக இத்தனை உயிர்கள் சாவதை. குடும்பங்கள் அழிவதைப் பாத்துக்கொண்டிருப்பதா. என்ர உயிர் மட்டும் தான் வெல்லமா. அவன் நிதானமாகப் பேசினான்.
விநாடிகளை மக்களின் ஒலம் யுகங்களாக்கின.
எஞ்சினியர்கள் ஒன்றுகூடி எப்படிப் 'பெரியவரின் அனுமதியில்லாமல் வெடி மருந்தை யார் பொறுப்பில் எடுத்துக் கொடுப்பது என்று நீண்ட நேரம் மண்டையை உடைத்து இறுதியில் கூட்டுப் பொறுப்பை ஏற்று, வெடிமருந்து, கயிறு, தேவையான உபகரணங்களுடன் ஆறுவேகம் குறைவாக ஓடிக்கொண் டிருக்கும் பக்கமாகச் சென்று பார்த்தபோது, ஆறு தேங்கிக் கடலாகக் குமுறிக் கொண்டிருந்தது.
உயிரின் நிறம் என்ன? /107

Page 62
5 கரையில் நண்பர்கள் உறுதியான நீண்ட கயிற்றில் பிணைத்துப் பிடித்திருந்த பிரம்பு வள்ளத்தை நீண்ட கழியின் உதவியுடன் செலுத்தினான். வள்ளம் காம்பவிழ்ந்து விழும் பூராட்டினமாகச் சுழன்றும். ஆற்றுடன் இழுத்துச் சென்றும். சுழிகளில் தட்டாமா. கூறியும். அங்குல அங்குலமாக முன்னேறிக் கொண்டிருந்தது. கரையிலிருந்த நண்பர்கள் உற்சாகமாக கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். 'போகஸ்லைட் அவன் மீதும் வள்ளத்தின் மீதும் ஆற்றின் மீதும் பட்டுத் தெறித்து பயங்கரப் பரவச உணர்வை ஏற்படுத்திற்று.
அவன் இதயத் துடிப்புகள் அதிகரித்தன. உடல் வேர்வையால் குளித்தது. தோள்மூட்டுக்கள் பூட்டுக் கழன்றதென வலிக்க. நரம்புகள் விண் விண்ணென தெறித்தன. அதோ. அதோ. கயிற்று வளையம் பாறையில் தலைநீட்டிக் கொண்டிருந்த குத்துக்கல்லில் போய் விழுந்து இறுகுகிறது. அவன் வள்ளம் பாறையை நோக்கி வேகமாக நகர்கிறது. கரையில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.
பாறையுடன் வள்ளத்தை இணைத்துக் கட்டிவிட்டு. ஆங்காங்கு வெடி மருந்துகளை. ஈரம் பாதிக்காத வண்ணமும். உறுதியாக இருக்கும் வண்ணமும் பாறையைப் பலமாகக் குடைந்து. கொட்டி. அவற்றை ஒரு நெடுந்திரியினால் இணைத்து தீவைத்துவிட்டு அவசரமாக வள்ளத்தில் ஏறினான்.
திரியின் எரியும் மணம் எழுகிறது. வள்ளம் நகர்கிறது. கரையில் ஆரவாரம் அதிகரிக்கிறது. நண்பர்கள் கயிறுகளை வேகமாக இழுத்து வள்ளத்தை கரையில் சேர்க்க முனைகின்றனர். தேவராசனின் முகத்தில் வெற்றிப் புன்னகை மிளிர்ந்து மனைவியின் முகம் தெரிந்தது. எதுவோ மனதை நிறைத்தது.
விநாடிக்கு விநாடி பாறை தகர்வதை எதிர் நோக்கியும்.வள்ளம் கரை சேர்வதை எதிர் நோக்கியும் இரட்டைப் பரபரப்பு. ஆ. சுழல் எங்கிருந்து தோன்றியது? வள்ளம் சுழன்றாடியது. பாறைகள் வெடிக்கலாயின. டமார். படார் பாறைகள். மலைப்பிஞ்சுகள் நொருங்கி நாலாபுறமும் பறந்தன. இருளில் எது எங்கிருந்து எப்படி வருகின்றது என்பது புரியாமல் மனம் மயங்கிற்று. வள்ளத்தில் இருப்பது இனி ஆபத்து. தண்ணில் பாய்ந்தான். அவன் தலையில் எதுவோ வந்து தாக்கிற்று. ஆற்று வெள்ளம் கிராமத்து வெள்ளத்தையும் இழுத்து ஓடத்தொடங்கியது.
ஒளி வெள்ளம் நீரில் அலைக்கழிந்து அவனைத் தேடிற்று. தலைக் கறுப்பு எங்கே?. எத்தனையோ உயிர்களின் தலையெழுத்தை மாற்ற முயன்றவனின் தலைக்கறுப்பு எங்கே?.
கிராம மக்கள் சந்தோஷத்தால் கூக்குரலிடுவது கேட்கத் தொடங்கியது. தினகரன் - 01-01-1978
108/செம்பியன் செல்வன்

M2 . Gമല്കs്ര)
வீட்டு வாசலில் சைக்கிளை விட்டு இறங்கியபோது, சில்லுக்கு காற்றுப் போனது போலிருந்தது. வலதுகைப் பெரு விரலால் பின்சில்லை அழுத்திப் பார்த்தார். காற்று இறங்கியிருந்தது.
"சீ எத்தனைதரம் எண்டுதான் ஒட்டுறது? ஒருஒட்டுக்குப் பத்தாகக் கொட்டி அழுததுக்குப் பதிலாக புதிசா கவே போட்டிருக்கலாம். எண்டாலும் ரயரும் ரியூப்பும் என்ன விலை விக்குது?. அந்த விலைக்கு விக்கிற ரயரும் ரியூப்பும் என்ன திறமோ?. அதுகளும் கொம்பனி யால கொண்டெம்ப் செய்ததுகளாகத்தான இங்க வருகுது. கம்பிக்கட்டு விட்ட ரயர்களும், ஜொயிண்டால காற்றுப்போற ரியூப்புகளுமா.இப்பத்த சொலுசன், கொம்ப வுண்ட் எல்லாம் முந்திமாதிரியே கிடக்கு. எல்லாம் வெயிலுக்கு உருகிப் போகுது. சைக்கிள் பாட்ஸ் எண்டு என்னத்த வாங்கக் கிடக்குது?.கிறீஸ் இல்லை. போல்ஸ் இல்லை. வால்வ்ரியூப் இல்லை. இதெல்லாம் தடை செய்யப்பட்ட பொருட் களாம். பொடியள் ஆமியை அட்டாக்" பண்ண சைக்கிளைப் பாவிக்கினமாம்.
போர்க்கால இலக்கியங்கள் / 109

Page 63
அவருக்கு எரிச்சலுடன் கூடிய சிரிப்பு வந்தது. நாளைக்கு வெள்ளனத்தோட அச்சகத்துக்குப் போகவேண்டும். அப்பதான் அந்தப் புத்தக வேலை முடியும் எண்டு பாத்தா. சைக்கிள் எல்லாத்தையும் கெடுத்துவிடும் போல இருக்கே?' மனதில் எழுந்த ஆத்திர ஆவேசத்துடன் சைக்கிளை வாசற்படி ஏற்றினார். சைக்கிள் சத்தம் வீட்டிற்குள் தகவல் பரிமாற்றம் செய்திருக்க வேண்டும். அவர் மனைவி ஓடிவந்தாள். அவர் முகத்தைப் பார்த்துவிட்டு ‘என்னப்பா?’ என்பதுபோல் தயக்கம் கொண்டு நின்றாள்.
'இதொரு இழவு. சைக்கிளுக்கு காத்துப் போட்டுது. காலையில படுக்கையால எழுந்தோடன "சைக்கிள் ஒட்ட பஞ்சு வேலைக்குப் போறதுக்கு முந்திப்போய் விடவேணும். அப்பதான் நேரத்துக்கு பிறகக்குப் போகமுடியும். 'காரிலபோய் வந்த மனுஷன் இப்ப இந்த ஒட்டச்சைக்கிளில உடம்பு முறிய உழக்கிறதே!'- என்று உருகி நின்றாள்.
நான் சொன்னாக் கேட்டாத்தானே? இப்படியெல்லாம் முறியவேண்டும் எண்டு என்ன தலையெழுத்தே?. பேசாம. எண்டு அவள் ஆரம்பிக்கவும், அவள் என்ன சொல்லப்போகிறாள் என்பதனை ஊகித்தவராய் சரி சரி. நீ உன்ர புராணத்தை வாசலில நின்று ஆரம்பித்து விடாத. .' என்று உறுமினார். இப்பத்த றோட்டுக்களெல்லாம் றோட்டுக்கள் போலவே கிடக்கு?. இதுகளில சைக்கிள் ஓடுறதெண்டா சும்மாவே?. இவ்வளவு நாள் ரயர் ரியூப் நிண்டு பிடிச்சதே என்ர கெட்டித்தனத்தாலதான் கண்டியோ? முந்தி பொமர், சகடை எண்டு வந்துவீசி வீடு. வாசல் டிரான்ஸ்போமர் றோட்டுக்களை அழிச்சாங்கள். குண்டும் குழியுமாக்கினாங்கள். இப்ப புகாரா. சுப்பசோனிக். எண்டு வந்து நகரத்தை நரகக்குழியாக்கிறாங்கள்.
அவர் 'ஸ்ராண்டில் சைக்கிளை நிப்பாட்டிவிட்டு 'கரியரிலிருந்த கொப்பிக் கட்டுகளை அவிழ்த்தெடுத்தார். அவள் அவற்றை வாங்கிச் சென்று மேசையில் வைத்தாள்.
இப்ப பேப்பருக்கே பஞ்சம் வந்திட்டுது. அச்சிடும் பேப்பர் முந்தி நீம் முந்நூறு, நாநூறு எண்டு இருந்திச்சுது. இப்ப மூவாயிரம் எண்டு ஏறிப் போச்சு. அந்த விலைக்கும் சாமான் கிடைக்கிறது கஷ்டமாயிருக்கு இப்ப கொப்பித்தாளிலதான் எதையெண்டாலும் அச்சடிக்க வேண்டியிருக்கு. பொடியள் காகிதத்தில குண்டு விமானம் செய்துவந்து தாக்குவாங்கள் எண்டோ அல்லது குண்டுகளே செய்து விடுவாங்களெண்டோ பயந்து காகிதமும் தடை செய்யப்பட்ட பொருளாகிவிட்டது. .ܚ
கூறிக்கொண்டே அவர் வீட்டிற்குள் நுழைந்தார். அவரின் பின்னால் மனைவியும் சென்றாள். கூடம் மெல்லிய ஒளியில் தடம் காட்டியது. சுவாமிப் படங்களின் முன்னால் எரிந்துகொண்டிருந்த அகல் விளக்குகள் மெல்லிய ஒளியில் தேங்காய் நெய் மனத்தையும் பரப்பிக்கொண்டிருந்தன. விழிகளை 110 / செம்பியன் செல்வன்

சமையலறைப்பக்கம் திருப்பினார். அங்கு அடுப்பு நெருப்பு ஒளிகாட்டிக் கொண்டிருந்தது. அவள் அவருக்காக ஏதோ சூடாகக் தயாரித்துக் கொண்டிருக்க வேண்டும்.
பிள்ளையஸ் எல்லாம் எங்கையப்பா? அவர் மெல்ல வினாவினார். அதுகள் இவ்வளவு நேரமும் அப்பா அப்பா' எண்டு கேட்டுக்கொண்டு கிடந்ததுகள். சாப்பிட்டுட்டு இப்பதான் படுத்ததுகள்' என்ற போது மணி ஒன்பது அடித்தது.
"இண்டைக்கு நானும் வர நல்லாத்தான் செண்டு போச்சு. நாலைஞ்சு இடத்தில பேப்பர் கிடக்கு எண்டு அலைஞ்சு திரிஞ்சதில வர நேரம் போச்சு உந்தக் கொப்பியளை வாங்கத்தான் முடிஞ்சுது. முந்தி பத்துபதினொரு மணிவரை கண்முழிச்சுப் படிச்ச பிள்ளையஸ். இப்ப ஆரேழு மணிக்கே படுக்கையைப் போடுதுகள். இதுகள் எங்க படிச்சு நல்லா வரப்போகுதுகள்?. ஏனப்பா. அப்படிச் சொல்லுநீர்? அதுகள் என்ன பாடத்திலகுறைவாவே மாக்ஸ் எடுக்குதுகள்?. இப்ப நேரகாலத்தோட மண்ணெய் தட்டுப்பாட்டில. இரவுச் சமையல் முடியுது. பிறகு ஏன் ஆறி அவலாப் போகவிடுவான் எண்டு கூப்பிட்டு நான் தான் சாப்பாட்டைக் குடுக்கிறன். சாப்பிட்டுட்டுப் படிக்குதுகள். மின்சாரவிளக்கில படிச்சதுகளின்ர கண் உந்தச் சிக்கன விளக்கில களைச்சுப்போய் விடுறது. அதுகள் பாவங்களப்பா. r
பேசிக் கொண்டு நிண்டது போதும். முதலில ஒரு விளக்குக் கொண்டு வாரும். கிணற்றடிக்கு போக.
அவள் அவசரமாக ஓடி விளக்கை எடுத்து வந்தாள். அவர் கை கால் முகம் கழுவி வந்து முகம் துடைத்து திருநீறு பூசி சாமிபடத்துக்கு முன் நின்று கண்மூடிக்கும்பிட்டுவிட்டு பக்கத்திலிருந்த ஈசிச் சேரை இழுத்துப் போட்டு முருகா!' என்றவாறு அதில் சரிந்தார். தெற்குப்பக்க சுவாரோரக் கண்ணாடி உடைந்து வெறும் சதுரமாகக் காட்சியளித்த யன்னலூடாக காற்று சுகமாக வீசிற்று.
சாப்பிடேல்லியேப்பா. மனைவி கேட்டாள். "கொஞ்சம் பொறுமப்பா!. எப்பன் ஆறியிருந்து சாப்பிடுவம். அவர் கொஞ்சம் கண்ணை மூடினார். நெற்றிப்பொட்டில் இது 7 நிலவிய கொதிப்பு சற்று அடங்கி. இதமாக.
‘எப்படி இருந்த தாழில். வாழ்க்கை?. எல்லாத்தையும் எப்படி இந்த அரசாங்கம் நாசமாக்கிப் போட்டுது. இருபத்தைந்து பேருக்கு மேலாக வேலை கொடுத்து கைடல்பேர்க்மிஷின், பிளேட்டிங்மிஷின்' என்று ஒடிக் கொண்டிருந்த அச்சகத்தை எப்படி நாசப்படுத்தினாங்கள். அவரால் அந்த நாளை மறக்கவே முடியவில்லை. உச்சிவெயில், வெளியே கத்தரி வெயில் கனன்று கொண்டிருக்க. வேலையாட்கள் பாதிப்பேர் மதிய உணவுக்குப் போய் விட. அவர் தனக்கு போர்க்கால இலக்கியங்கள் / 111

Page 64
வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டிற்காக காத்திருந்த வேளையில் தான் வாசலில் ஆமிட்ரக் வந்து நிற்கிறது.
தொப். தொப். என்று ஆமிக்காரர்கள் குதிக்கிறார்கள். அவர்களைத்
தொடர்ந்து சீருடையணியாத ஆயுதபாணிகளாக சில இளைஞர்கள்.
டேய். முதலாளி எங்க '^றான்?. அந்த இளைஞர்கள் கேட்பது காதில் விழ, நெஞ்சம் படபடக்கிறது. மனம் எதனையோ விபரீதமாகக் கற்பனை செய்யத்தொடங்குகிறது.
யாரோ அவரது அறையைக் காட்டுகிறார்கள். அவருக்கு பிரக்ஞை தவறியதென, கனவுபோல் கண்களிலே திரை யொன்று விரிகிறது.
டேய். இந்த நோட்டீசு நீதான அடிச்சது?. ஏதோவொன்றைக் காட்டுகிறார்கள். அவர் அதனைவாங்கிப் பார்க்கிறார். அவருக்குப் புரிந்து விடுகிறது. அவர் அச்சகத்தில் அடித்ததுதான். யாருக்கு அடித்துக்கொடுத்தது என்பதும் விளங்குகிறது. என்றோ எப்போதோ. ஆனால் அச்சகத்தின் பெயரில்லை.
இவர் இல்லை எனத் தலையாட்டுகிறார். அவ்வளவுதான் 'பளார்' முகத்தில் ஒரு அறை விழுகிறது. அவருக்கு கண்முன்னால் பூச்சிகள் பறக்கின்றன. கரிக்கோட்டுச் சித்திரங்கள கலைந்து போய் நடமாடுகின்றன.
நீ பொடியளுக்கு அச்சடித்துக் கொடுக்கிறவன். இது புலிகளின்ர அச்சகம். இங்கிருந்து தான் எல்லா நோட்டீசும் வெளிக்கிடுது. உண்மையைச் சொல்.
அவர் திடமாக மறுக்கிறார். வெளியில் சென்றிருந்து வேலையாட்கள் புத்திசாலித்தனமாக ட்றக்கைக் கண்டதும் வெளியே மாறிவிட்டார்கள். அகப்பட்டது அவரும் நாலைந்து தொழிலாளரும்தான்.
அவர்கள் அச்சகத்தையே புரட்டி எடுக்கிறார்கள். நோட்டீசின் மூலப் பிரதியை தேடுகிறார்கள். கிடைக்கவில்லை.
திரும்பவும் அவரிடம் வருகிறார்கள். டேய். உண்மையைச் சொல். இல்லாட்டி உன்னை இதிலேயே அடிச்சுக் கொண்டுபோடுவம்.- வந்த ஆமி பார்த்துக்கொண்டிருக்க அவர்கள் ஊளையிடுகிறார்கள்.
அச்சாகிக் கிடக்கும் போம்களைக் கலைக்கிறார்கள். 'கலிப்புறுவ்' களை சிதறுகிறார்கள். மிசினில் ஒடிக்கொண்டிருந்த மற்றரை வாசித்துப் பார்க்கிறார்கள். அங்கு சிவப்பு மட்டையில் "பைன்ட் ஆகிக்கொண்டிருந்த புத்தகத்தை- அது வணிகவியல் பாடப்புத்தகம் என்று புரியாமல் அதை ஆமியிடம் காட்டி புரட்சி. இரத்தம். பயங்கரவாத புத்தகம் என்றெல்லாம் கழ்தக்க. ஒரு ஆமி பல்லை நறுமியபடி அவரை நோக்கி வருகிறார்.
112 /செம்பியன் செல்வன்

மறுவிநாடி அவர் தரையில் புரள்கிறார். அவர் தலைமயிரைக் கொத்தாகப் பற்றி.
இந்த அச்சு உன்ர பிறகிலதான் இருக்கு. நல்லா விசாரிச்சுப்போட்டுத் தான் வந்தனாங்கள். சொல். இவங்கள் எங்க இருக்கிறாங்கள். ஆர் ஓடர் தந்தது. தந்தவனைக் காட்டு.- பொடியன்களைப்பற்றி புரியாதவர்கள் ஏதேதோ கேட்டுச் சித்திரவதை செய்கிறார்கள். கீழே விழுந்து கிடந்தவரை ஒருவன் மூலையில் சாத்திக்கிடந்த தும்புத்தடியால் பிரட்டி எடுக்கிறான்.
'உன்னை இங்கு வைச்சுக் கேட்டா நீ சொல்ல மாட்டாய். அங்க கொண்டுபோனாத்தான் சரியாப் பதில் சொல்வாய். எழும்படா. அவர் எழும்ப முயற்சிக்கின்றார். முடியவில்லை. 'எழும்படா. என்னடா பாசாங்கா செய்கிறாய்" என்று ஒருவர் தும்புக்கட்டையை கையிடுக்கில் சொருகி நிமிர்த்துகிறான். அவர் வேதனையுடன் எழுந்துநிற்க, அவன் பலமாகத் தள்ளுகிறான். அவர் கால்பாவாமல் தடுமாறிக் கதவடியில் போய் முட்டிக்கொண்டு நிற்கிறார். அவரை அடித்துக்கொண்டே வாசல்வரைக் கொண்டு போகிறார்கள். யாரோ ஒருவன் அவரைத் தூக்கி ட்ரக்கில் போட, கோட்டையை நோக்கி அது விரைகிறது. கோட்டை. பலாலி இராணுவமுகாம் என்று அவர்களது பிக்னிக் ஸ்பொட்களிடையே அவரது சித்திரவதைகள். வஞ்சகப் பேச்சுக்கள். ஆசை வார்த்தைகள் என்று காலம் ஒட, இந்திய இராணுவம் மூட்டைகட்ட அவர் விடுதலையாகி வருகிறார்.
அன்றிலிருந்து அச்சகம் என்றாலே அவர் மனைவிக்கு அடிவயிற்றிலே நெருப்புப்போல. ஆனால். அவரிலோ பலத்த மாற்றம். அவர் ஒருபோதும் முதலாளியாக இருந்ததில்லை. தொழிலாளர்களுடன் தானும் ஒரு தொழிலாளியாக வேலை செய்வதில் மிகுந்த சந்தோசம் கொள்பவர். அச்சகத்தின் சகல பிரிவு வேலைகளும் அவருக்கு அத்துபடி, ஒரு உந்நதமான தொழிலாளியே சிறந்த முதலாளியாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். அச்சகவேலையில் நாள்தோறும் ஏதோவொரு படைப்பு புத்தம் புதிதாக வெளியேறும்போது, மகிழ்ச்சியின் களிப்பில் வியர்வைத் துளிகள் உலர்ந்து மணம் பரப்பும்.
இராணுவத்தினரின் சித்திரவதை முகாம்களும், அங்கு பொடியள் படும் கஷ்டங்களும் போரட்டம் பற்றிய புதிய பார்வையை அவரிடம் எழுப்பி யிருந்தன. அதில் அச்சகங்களின் முக்கியத்துவம் என்ன என்பதும் அவருக்குப் புலனாகின. பொடியளை அவர் நெஞ்சம் நேசிக்கத்தொடங்கியது.
விடுதலையாகி வீடுவந்தால். வீட்டுநிலமை மோசமாகியிருந்தது. மனைவியும் பிள்ளைகளும் அரைவாசியாய்ப் போயிருந்தர்கள். தலைவனில்லாத வீடு. நல்ல தலைவனில்லாத நாடும் இப்படித்தான் ஆகும் என்று அவர் மனதில் ஏனோ பட்டது. எட்ட விழுந்த குண்டுகள் கூட தன் வீட்டின் தாவார ஒடுகளையும் யன்னல் கண்ணழி
போர்ககால இலக்கியங்கள்

Page 65
களையும் உடைத்திருப்பதைக் கண்டர். கிணற்றுநீர் குடிப்பதற்கு உதவாமலும், குளித்ததினால் உடற்சருமத்தில் சொறிகளையும் உண்டாக்கியிருப்பதையும் பார்த்தபோது வாய்விட்டே அலறிவிட்டார்.
அச்சகத்தை ஓடோடிப்போய் பார்த்தார். பலத்த சேதத்துக்கு ஆளாகியிருந்தது. பல எழுத்து கேஸ்களைக் காணவில்லை. ஹெடல் பேர்க்கில் சில பாகங்களைக் காணவில்லை. ஸ்டிக்கர், 'லெட் எல்லாமே மாயமாக மறைந்திருந்தன. மின்சாரம் ஓடிய வயர்கள். பல்ப். மீற்றரெல்லாம் அறுந்தும் ܘܚܘܣܬ55ܠܹܐ-6OL-ܧ
அவரது இரத்தமே உறைந்து போயிற்று. நான் சோரமாட்டேன். ஒருபோதும் சோரமாட்டேன்' என்று சொல்லிக் கொண்டார்.
அச்சகத்தை புதுப்பிக்கத்தொடங்கியதும் தான் எத்தனை வேலைப்பளு காத்திருக்கிறது என்று பட்டது.
மின்சாரம் இல்லை. மோட்டர் வாங்கி இணைத்தார். எரிபொருளை அரசாங்கம் தடை செய்தது. மண்ணெய்க்கும் தட்டுப்பாடு. பிளேட்டின் மிஷினைக் காலால் அழுத்தலாம் எண்டால் அச்சுத்தாளைக் கண்டு இராணுவம் அச்சம் கொள்ளுகிறது. காகிதப் பஞ்சம்.
அவள் அவசரமாக உள்ளே இருந்து வருகிறாள். இஞ்சருமப்பா. அவர் விழிகளைத் திறந்தார். அவள் கையில் ஒரு வெளிநாட்டு விமானத் தபால். முகத்தில் ஒரு பரபரப்பு.
'gl. மேர்க்ஸ் குமண' கப்பல் இம்முறை தபால் பொதிகளையும் கொண்டுவந்துள்ளதாக நேற்று ஈழநாதத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. இவளுக்கும் கனடா மச்சாள்- தங்கச்சி கடிதம் போட்டிருக்கிறாள் போல.
அவர் விழிகளை மூடிக்கொண்டார். ‘என்னப்பா. நித்திரையே. உங்கட தங்கச்சியெல்லே கடிதம் போட்டிருக் கிறாள்'
‘என்னவாம்?. கண்களைத் திறக்காமலே கேட்பர். ஏதோ எதிர்பார்த்து வந்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
‘என்னப்பா. இப்படிக் கேடக்கிறியள். கடிதத்தைப் படிக்காமல் என்னத்த எணை படிக்கிறது? நாலுமாசத்துக்கு முந்திப் போட்டதாய் இருக்கும். அதில இருக்கிற புதினமெல்லாம் பழசாப்போயிருக்கும். அதில வேறென்னத்த எழுதியிருக்கப் போறாள். நாலுமாசத்துக்கு முந்தி அவளின்ர பேத்டே நடந்திருக்கும். அந்தப் படங்களோட அண்ணை ஏன் அங்ககிடந்து கஷ்டப்படவேணும். அவரையும் கூட்டிக் கொண்டு வா எணர்டு எழுதியிருக்கிறாளோ?.
14/செம்பியன் செல்வன்
།

அவளின் ஈரவிழிகள் அந்த இருளிலும் பளபளத்து. வியப்பால் விரிவது அவருக்குத் தெரிந்தது.
உங்களுக்கு எல்லாம் நக்கல்தான். இப்ப இங்க என்ன எங்களுக்குக் கொட்டிக்கிடக்குது? அச்சகமும் முந்தியமாதிரிபோல இல்லை. அச்சடிக்க எழுத்து இல்லை. மையில்லை. காகிதமும் இல்லை. கரண்டும் இல்லை. வருமானமும் குறைவு. பொருட்களின் விலையோ நாலுமடங்கு. பேசாம எல்லாத்தையும் விட்டிட்டு அங்க போனா என்ன. நிம்மதியாச் சீவிக்கலாம்.
நீ என்ன யோசித்துத்தான் பேகறியோ?. நிலவுக்கஞ்சி பரதேசம் போனது போலத்தான் இருக்கு. இங்கயெண்டாலும் உரிமைக்காகப் போராடலாம். அங்க அப்படி முடியுமே. ஆராருக்கோ உழைச்சுக் கொடுக்கவோ நாங்கள்? இப்படி உழைச்சி உழைச்சுக் கொடுக்கக் கொடுக்கக் அவர்கள் உயர்வடைகிறார்கள். நாங்கள் கீழகீழ போய்க்கொண்டிருக்கிறம்.
அவள் முகம் ஏமாற்றத்தால் சுருங்கியது.
அப்ப என்னப்பா சொல்லுறியள்?.
என்னத்த சொல்லுறது? அங்கபோய் என்ன செக்கியூறிற்றி வேலையே செய்யிறது. பெரிய பெரிய இங்கத்த நீதவான்கள்கூட அங்க அதைத்தான் செய்யினமாம். இங்க எங்கட மண்ணை அந்நியன் தீண்ட அதுக்கு ஆர் செக்கியூறிற்றி. இந்தப் பொடியளோ? இங்க அரைவயிறெண்டாலும் மானமா சொந்த வீடுவாசல் தொழில் எண்டு சீவிக்கிறம். அங்கபோய் இன்னும் அடிமைச் சீவியமே?. கள்ளர்போலப் போய். கள்ளர்போல உழைத்து. கள்ளர்போல வாழ்ந்து. இதில இன்னும் பெரிய வேதனை என்னண்டால் பெரியவை நாங்கள்தான் நாசமாப் போறமெண்டு எங்கட சந்ததியையுமெல்லே முகவரியில்லா அடிமைகளாக்கி விடுறம்.
அவர் ஈசிசேரை விட்டு எழுந்தார்.
சரி சரிவந்து சாப்பாட்டைப் போடும். காலையில வெள்ளன எழும்ப வேணும்?.
அவள் முகம் சுண்டியவளாக நடந்தாள்.
அதிகாலையே எழுந்துபோய் சைக்கிள் பஞ்சரை ஒட்டி வீட்டிற்கு வந்தபொழுது வீடு இரண்டுபட்டுக் கொண்டிருந்தது. அவர் இரவு அச்சடிப்பதற்காக வாங்கி வந்திருந்த கொப்பிகளை 'உனக்கு எனக்கு என்று குழந்தைகள் பங்குபோட்டு சண்டை பிடித்துக் கொண்டிருந்தன. அவள் சமையல் அறையில் வேலையாக இருந்தாள்.
அவருக்கு கோபம் கண்ணை மறைத்தது. சைக்கிளை வேகமாக இழுத்து 'ஸ்டாண்டில் நிறுத்தினார். அவரைக் கண்டதும் குழந்தைகள் தங்கள் சண்டையை மறந்து நியாயம் கேட்க அவரை நோக்கி ஓடிவந்தன.
போர்க்கால இலக்கியங்கள் / 115

Page 66
அப்பா எனக்குத் தமிழுக்கு கொப்பியில்ல. அண்ணா தரமாட்டானாம். அப்பா. டீச்சர் என்னட் கொப்பியில்ல எண்டு நேத்து அடிச்சவ. நான் கொப்பியில்லாம பள்ளிக்குப் போகமாட்டன்.
அவர் கோபம் குழந்தைகள் பிரச்சினையிலில்லை. அச்சுக்குக் கொடுக்க வேண்டிய தாள்கள் வீடு முழுவது, சிதறி.
இரண்டு குழந்தைகளையும் பற்றி இழுத்து. குழந்தைகளின் அலறலைக் கேட்டு அவள் ஓடிவந்தாள். குழந்தைகள் இரண்டும் அலக்க மலக்க மல்லாந்து நிலத்தில் வீழ்ந்து கிடப்பதை கண்டதும் அவளால் தாள முடியவில்லை.
‘என்ன செய்தனியள்?. என்ர குஞ்சுகளை என்ன செய்தனியள். புள்ளையளைக் கொல்லவா போறியள்?. அடிகிடி என்னென்னத்தில் பட்டதோ தெரியேல்லியே" என்றவாறு ஓடிச்சென்று குழந்தைகளைத் தூக்கினாள்.
அப்போதுதான் அவருக்குத்தான் செய்த வேலையின் கொடுரம் புலப்பட்டது. உள்ளுக்குள் வெட்கிப் போனார். ஆனாலும் சாமாளிப்பதற்காக பார் அச்சுக்கு வாங்கிய கொப்பியளை? இதுகள், கசக்கி எறிஞ்சு போட்டுதுகள். இதுகளுக்கு மூளையிருக்கா? என்று கத்தினார்.
அதுகளுக்கு ஒழுங்கா கொப்பி புத்தகங்களை வாங்கிக் கொடுத்தா அதுகள் ஏன் உங்கடயள எடுக்குதுகள். பெரிய அச்சகம் நடத்துறாராம். புள்ளையஸ் படிக்க நாலு கொப்பி கட்டிக் கொண்டு வந்து குடுக்க வழியில்ல. இங்கேயே கிடந்து என்னையும் புள்ளையளையும் கொல்லத்தான் வழிபாக்கிறார் அவள் இரவு நினைவுகளுக்கு புலம்பத்தொடங்கினாள்.
சீ. வீடு வரவர நகரமாகி வருகிறது- என்றபடி கொப்பிகளை எடுத்து 'கரியலில் கட்டினார். சைக்கிளை வெளியே எடுத்தார். குழந்தைகள் பயத்துடன் பார்த்தபடி இருந்தார்கள்.புலம்பிக் கொண்டு இருந்தவள் திடீரென நிறுத்திவிட்டு 'சாப்பிட்டுப் போங்கள்.- என்று கூறவும் நீயும் உன்ர சாப்பாடும் என்று பதிலுக்குக் கத்திவிட்டு, சைக்கிளில் ஏறி மிதிக்கலாயினார்.
அச்சகவாசலிலே அவர் இறங்கவும், அவர் வருகைக்காக காத்திருந்த ஒருவர் எழுந்து நின்றார்.
‘என்ன கனகசபை எங்களையெல்லாம் மறந்தாச்சுப் போல. நாங்கள் பேப்பருக்கு எவ்வளவு அலையிறம் தெரியுமே?”
'உங்களுக்கும் தெரியும்தான. மார்க்கட்டில சாமான் சூடு, அதுதான் வாறதில்ல. இராத்திரி கொஞ்சம் கிளாலியால வந்திருக்கு. வேணுமெண்டால் சொல்லும். விலை கொஞ்சம் சூடுதான். ஜேஒச் காரர் கடுமையாநிற்கிறான் பேப்பர் விசயத்தில. அதால வழியில கனலட்சங்கள் புரளவேண்டியிருக்கு. கிளாலியைக் கடந்துகொண்டு வாறதும் பெரிய 'றிஸ்கியாக் கிடக்கு.சாமான் படகுகளுக்கு சூடு விழுகுது. இதுகள் எல்லாத்துக்கும் தப்பித்தான் சாமான் 116/செம்பியன் செல்வன்

வரவேண்டியிருக்கு என்ன சொல்லுநீர். வெளியில் மூண்டரைக்குப் போகுது. வாடிக்கையாள் நீர். மூண்டுக்கு எண்டால் அனுப்பிறன்.
அவருக்கு உள்ளூர மகிழ்ச்சி எழுந்தது. அந்தப் புத்தகவேலையை முடிச்சிடலாம்.
சரி.சரி.விலையைப் பேந்து பேசுவம். ஒரு பத்து நீம் அனுப்பும். மண்ணெண்ணைப்புகையைக் கக்கியவாறு மோட்டர் ஒடத் தொடங்கியது. எட்டெட்டுப் பக்கங்களாகப் புத்தகம் அச்சேறலாயிற்று. அவர் ஆவலுடன் அதன் அருகில் போய் நின்று கொண்டார். அந்த மகிழ்ச்சி அச்சகக்காரருக்கும் நூலை எழுதியவனுக்கும் தான்விளங்கும். அந்த ஈரமையின் மணம் பளபளப்பு எவ்வளவு அலாதியானது.
பக்கங்கள் போம்.போமாக. அச்சிட்டு ஒட. இதென்ன!. நிறுத்து.நிறுத்து. பலமாகக் கத்தினர்.அவசரமாக ஒரு பக்கத்தை எடுத்துப் பார்த்தார். தாளின் நடுவில் எதுவோ துளைத்தது போல் கிழிசல். யந்திரத்தில் கோளாறா?.
அவரும் மிஷின்மைன்டரும் பார்த்தார்கள். ஒரு பிழையும் தெரியவில்லை. முதலில் ஓடிய பக்கங்களில் கிழிசல் காணப்படவில்லை. புதிதாக இப்போதுதான். பதித்திருப்பது தாள்கள்.
ஒரு வேளை பேப்பர் நீமில கிழிசல்கள் இருக்கோ? எப்படி இருக்க முடியும், நாங்கள்தானே பக்கட் உடைச்சுப் போட்டது. எதற்கும் அடிக்க இருக்கும் பேப்பர்களைப் பாப்பம்.
அவர்கள் அந்த நீம் பேப்பரைப் பார்த்தார்கள். அந்த நீமில் மத்திய பாகத்தில் பேப்பர்கள் வெடித்தது போல கிழிசல். அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. நீமுக்கு மூண்டு வாங்கிறாங்கள். ஆனால் கழிவுப் பேப்பர்கள்? வரட்டும். வரட்டும்.காசு வாங்க.
கிழிஞ்ச பேப்பரைத் தனியா எடுத்துவை. அவன் வந்தாக் காட்டவேணும். பதிலுக்கு நல்ல பேப்பர் வாங்குவம்
-மெஷின் மைண்டர் நடுவில் கிழிந்த தாள்களை சேகரிக்கத் தொடங்கியவன்.
.திடீரென்று "ஐயா!' என்று கத்தினான். ‘என்னடா!. என்னடா!. என்று அவர் அவன் அருகே ஓடினார். அவன் அந்தப் பொருளைச் சுட்டிக் காட்டினான். வெள்ளைத்தாளின் மத்தியில் அது பள பளத்துக் கொண்டிருந்தது. அது-வெடித்த ரவைக்குண்டு.
இரண்டாம் ஆண்டு நிறைவுச் சிறப்பிதழ்- வெளிச்சம் புரட்டாதி 1993.
பேர்க்கால இலக்கியங்கள் / 117

Page 67
毫
t
118 /செம்பியன் செல்வன்
M25 Cá-മൂന്
என்ன மோனே. வளவுக் குள்ள வந்தனி. வீட்டுக்குள்ள வராம அப்படியே மரத்தடியில் நிண்டிட்டாய்.? ஒ. இந்த வீடு இடிந்து பாழடைந்து கிடக்கிறதால. இதில ஒரு மனிதச்சாதி வாழுமெண்டு நினைக்கேல்லயா..? அல்லது என்ன பார்க்க உனக்கு ஒரு மனிசனா தெரியேல்லயா. என்ன மோனே இன்னும் அங்கேயே நிண்டுகொண்டு ருக்கிறாய். வா. வா. இந்த வீட்டில்ல வந்து இளைப்பாறு.
இந்த உச்சி வெயிலுக்குள்ளால எங்க புறப்பட்டனி. வெயில் அனலாய்க் கொளுத்துது. இதுக்குள்ள போய் நடந்தா மூளையெல்லோ உருகப்போகுது? உன்னைப் பெத்து விட்டவள் கண்டா ளெண்டா தலையிலயெல்ல கையை வைக்கப் போறாள்.?
என்ன மோனே சிரிக்கிறா? இந்தக் கிழவன் இப்படிப் பேசுறானெண்டு தான. நீங்கள் எல்லாம் ஒடுறபாம்பைக். காலால மிதிக்கிற இளசுகள். உங்களுக்குச் சிரிப்பாத்தான் கிடக்கும். எங்கட கதையும் பழங்கதையாத்தானிருக்கும்.
 
 
 

வாமோனே. வா. வந்துக்கார். வா! உன்ர முகத்தை இங்காலப் பக்கமாத் திருப்பு பாப்பம். ஆற்றபிள்ளை மோன நீ.? அவன் முருகேசுவின்ர பேரனா. இல்லையா. ஒ! ஊருக்குப் புதுமுகமாத் தெரியுது. எங்கட ஊரை வேடிக்கை பார்க்கவே வந்தனி.? என்ன என்ன யாழ்ப்பாணத்திலே இருந்தே ஒரு ரயிலேறி பஸ் ஏறி வள்ளம் ஏறி இங்க வந்தன். நல்ல வேடிக்கைதான். அப்படி வேடிக்கை பார்க்க என்ன இருக்கு இந்த ஊரில. மணிசர்கூட மனிசராயில்லை இப்ப ஊரில.இப்ப போய் நீ வேடிக்கை பார்க்க வந்திருக்கிறாய். என்ன. என்ன. இன்னுமொருக்காச் சொல்லு. எங்கட ஊரை ஆராய்ச்சி பண்ணிக் கட்டுரை எழுத வந்தனியோ? அதுக்குத்தான் இந்தக் கடதாசி பேப்பர்களோட திரியுறியே. அப்படிச் சொல்லன் சங்கதியை. நானும் நாலு நாளாப் பாக்கிறன். நீயும் இப்படித்திரியுறதை. உனக்கும் வேலையில்லை. உதை எழுதி என்னத்துக்கு வீணா மினக்கெடுறா. நீ சொல்லுறது.
இது எல்லாத்தையும் விடப் பெரிய விண்ணாணமாக்கிடக்கு? உதை எழுதிக் கொடுத்தா உனக்கு 'எம்மேப் பட்டம் கிடைக்குமோ? உனக்கென்னத் துக்குத் தம்பி உந்த எம்மேக்களும் கிம்மேக்களும். இப்பதான் ஊர்முழுக்க பெரிய எம்மேக் கள்ளன்களாக இருக்கிறாங்களே.
என்ன தம்பி அப்படியே நிக்கிறாய்? ஓ நான் உன்னை இருக்கச் சொல்லேலையா. இரு. இரு என்ன முழிக்கிறாய். இருக்க இடமில்லை யெண்டா. பறவாயில்லை. நீயும் என்ர கட்டிலில இருக்கலாம். வெட்கப்படாத, நான் தள்ளி இருக்கிறன்.
ஏன் இன்னும் நிற்கிறா..? அவசரமா? போகலாம் நில்லு. நல்லா வெயில் தாளட்டும். ஒ. ஓ. எனக்குப் புரியுது. உன்ர வெள்ளைக் காச்சட்டை பிசங்கிப் போயிடுமெண்டுப் பயப்படுற. அப்படியொண்டும் பயப்படாத. கட்டில் கறுப்பா இருக்கிறது அழுக்காலயில்ல. இதுதிறம் முதிரைக் கட்டில். பழங்கால வேலைப்பாடுள்ள கட்டில். பார்மோனே இதில உள்ள வேலைப்பாடுகளை. இப்ப இந்த மாதிரிச் செய்ய ஒரு தம்பியால முடியுமே. இந்தக் கட்டில். இந்தக் கட்டில்.
என்ன தம்பி பயந்திட்டியா என்னமோ ஒரு பழைய ஞாபகம். அதுதான் கண்ணில தண்ணி வந்தி 'துெ. அழுதழுது தண்ணி வத்திக்கிடந்த கண்களில் உன்னையும், இந்தக் கட்டிலையும் பாத்தோடண கண்ணிர் வந்திட்டுது.
என்ன தம்பி அப்படி ஆச்சரியமாய்ப் பாக்கிறாய். இதில் இரு.ஒரு வேளை என்ர கதை உண்ர ஆராய்ச்சிக்கு உதவலாம். என்ன நீ கலாசாரம், பொருளாதாரம், மனித வாழ்க்கையை ஆராய வந்தனியோ. அது எல்லாம் சரிதான் தம்பி உந்த ஆராய்ச்சி எல்லாம் மனிதன்ர குணத்துக்குள்ள அப்படியே அடங்கிப் போகும். மனிசன் நல்லா இருந்தா அவன் நடவடிக்கைகளும் நல்லா இருக்கும். நடப்பு நல்லா இருந்தா அவன்ர பொருளாதாரமும் வாழ்க்கை
பழங்கட்டில் / 119

Page 68
முறையும் நல்லா இருக்கும். அதுதான் நான் சொல்லுற கதையை ஆறுதலாs கேள். பேந்து சொல்லு உன்ர அபிப்பிராயத்தை,
காலில இறக்கை கட்டிக் கொண்டிருக்காம முதலில நீ இரு. என்ன மோன.கட்டிலின்ர சத்தத்தைக் கேட்டு அப்படியே பயந்து போனாய் போல. பொறிஞ்சு போடும் எண்டு நினைக்காத. அது எனக்காக அழுது ஓலமிடுது. கடந்த இருபது வருடங்களாக.
இந்தக் கட்டில் இருக்கே மோன. இது சாதாரண கட்டிலில்ல. என்ர ஒரே மகள் ஆசை மகள். அன்னம்மாவுக்காகச் செய்வித்த கலியாணக் கட்டில் ஆனா. ஆனா.
ஓம் தம்பி. நீ நினைக்கிறது உண்மைதான். நான் என்னத்துக்காக வாங்கினனோ அது நிறைவேறாமலே போட்டுது. எல்லாத்துக்கும் நான் விபரமாய்ச் சொல்லுறன் கேட்டுக் கொள் தம்பி.
நாப்பது வருசத்துக்கு முந்தி. இந்த வீடுதான் இந்த ஊரிலே பெரிய வீடு. அளவில பெரியதால இந்த வீட்டையே பெரிய வீடு எண்டுதான். சொல்லுவினம். நீ இப்ப வெறும் நிலைகளைத் தான் பாக்கிறாய். ஆனால் முந்திப் பாத்திருக்க வேண்டும்.
முந்தி பெரிய வீட்டுப் பேரம்பலம் எண்டால் ஊரில இராசாமாதிவி. ஒம் தம்பி அது நான்தான். அப்பநான் இப்படியே இருந்தன். முறுக்கிவிட்ட மீசையும். காதில வைரக் கடுக்கணும் தோளில சால்வையும், தட்டிக்கட்டிய. கொண்டையும். இப்பவும் இருக்கினமே பெண்டுகள். தலையில நாலு மயிர் கிடையாது. அதுக்குள்ள அவையின்ர எட்டுவிதக் கொண்டையும் எடுப்பும் சாய்ப்பும் எனக்குப் பத்திக் கொண்டு வருகுது. དབྱེ་ ஊரில அப்பநான் சின்ன மனுஷனே? பதினைஞ்சு ஏக்கள் காணி நல்ல விளைபூமி. நாப்பது மாடுகளைக் கொண்ட பெரிய பட்டி இருந்தது. குழைக் குத்தகை, தோணிக்குத்தகை, சங்கக்கடை மனேச்சர்பதவி, கிராமச் சங்கத் தலைவர் பதவி எல்லாத்துக்கும் நான்தான் எண்டாப் பாரன்.
உங்களுக்கு ஏன் இந்த நிலை எண்டு பாக்கிறியா? தம்பி எல்லாம் கால வித்தியாசம். எல்லாம் விபரமாச் சொல்லுறன். விளக்கமாக் கேட்டுக் கொள் தம்பி.
அதோபர் தம்பி. அங்க பாத்தியா ஒரு ரெட்டப்பனையை அதில இருந்து அந்தக் குளக்கட்டு வரை எனக்குத்தானிருந்தது. எதை விதைச்சாலும் பொன்னா விளையும்.
காலையில நாலுமணிக்கு எழுந்தா முத்தத்திலையிருந்த வேப்ப மரத்திலிருந்து. ஓம் தம்பி நீ பாக்குறது புரியுது.
அந்த வேப்பமரம் போன புசலால அடிசாஞ்சு அதை வித்து நாப்பது பவுண் எடுத்தன் தம்பி. அவ்வளவு பெரிய மரம். அதில. இருந்து ஒரு 120/செம்பியன் செல்வன்

தடியை முறிச்சு பல்லிடுக்கிலை வைச்சு சப்பிக்கொண்டு போய் வயலை ஒரு சுற்றுப் பாத்துவிட்டு, காலைக் கடனை முடிச்சுவிட்டு வீட்டுக்கு வரேக்க காலை எட்டு மணியாகிவிடும்.
அதைச் சுப்பிட்டிட்டு மீண்டும் கிளம்பின. இறங்குதுறை சங்கக்கடை எல்லாம் மேற்பார்வை பார்த்துவிட்டு விடு திரும்ப மணி ஒண்டுக்கு மேலாகிவிடும் என்ன இறங்குதுறையா. உனக்குத் தெரியாதா. ஓ. இப்ப இல்லையெண்டு சொல்லுறள் தம்பி கவனமாக கேட்டுக்கொள். முந்தி இப்ப இருக்கிற மாதிரியே.
நடத்துறதெண்டா மிகக் கஷ்டம். ஊர்க் கோடியில ஒரு பெரிய கடல்நீர் ஏரி சமுத்திரமாக எப்போதும் நிக்கும் அரைக் கட்டைத் துரத்துக்குப் பரந்திருக்கும் அந்த இடைப்பாதையில வள்ளப் போக்குவரத்துத் தான். அந்தப் போக்குவரத்துக் குத்தகையை தான் எடுத்திருந்தன் தம்பி. அதில வள்ளம் வந்து நிக்கிற இடம் தான் தம்பி. இறங்குதுறை. இப்பகட அதுக்குப் பெயர் அதுதான். என்னட்ட அப்ப ஏழெட்டு வள்ளமிருந்தது. அதால நிறையச் சம்பாதிச்சன் தம்பி. அதுதான் காலமைபோய் எல்லாப் படகுக் காரரும் வந்திட்டினமா எண்டு பாத்திட்டு வருவன்.
பேந்து வழக்கம்போல சங்கக்கடை மேற்பார்வை. மத்தியானம் ୫୯୭ மணிக்கு வந்தாச் சாப்பாடு, ஒரு கண்ணுறக்கம். பின்னேரம் வர் விசாரணை, ஒரே கூட்டம்தான் வீட்டுக்கவலைப் பற்றி எனக்கு ஒரு எப்பன் கவலை இருக்குமே. மூச்சுக்காட்டக்கூடாது.
வீட்டுக்கவலையே எனக்கு ஏற்படாமல் பாதுகாக்க என் மனிசியும் மகளும் இருந்திச்சினம். குடும்ப விளக்குகளாக வீட்டை ஆடு மாட்டை பார்த்துப் பராமரிக்க அவர்கள் இருக்க என்வாழ்வு சொர்க்கமாகத்தான் இருந்திச்சுது தம்பி.
பத்தாததுக்கு என்ர சகலன் தம்பிராசம்ை, அவன் மகனும், தங்கச்சியும் இருந்திச்சினம்.
ஊர் உறவு எண்டு சிறப்பாக வாழ்ந்தவன் தான் தம்பி நாளொண்டுக்கு நாற்பதுபேர் என்ர வீட்டில சாப்பிட்டவைதான் தம்பி! ஆனா. இண்ைடைக்கு. நீ ஒரு விருந்தாளி. ஏன ”*ருக்கே விருந்தாளி. அப்படியிருந்தும் என்னால உனக்கு ஒருவாய் தண்ன கொடுக்க முடியாம இருக்கு. இதுதான் தம்பி மனிச வாழ்க்கை.
நான் சொல்ல வந்ததை நடுவில விட்டிட்டன் எண்டு நினைக்காத. மனசும் கூட கிழடுதட்டிப் போச்சு.
என்ர சகலன் மகன் கணேசன் எப்ப பாத்தாலும் என்ர விட்டிலதான் கிடப்பான். 'மாமா மாமா' எண்டு காலைச் சுற்றி வருவான். மகள் அன்னமோ அவனோடு கூடவே சிட்டுக்குருவியாகவே திரிந்துகொண்டிருப்பாள்.
பழங்கட்டில் /121

Page 69
அவர்களைச் சின்ன வயதிலேயே நாங்க தம்பதிகளாக நினைச்சிட்டம். அன்னம்மாவுக்கு கணேசனில உள்.
அந்தச் சின்னஞ்சிறுசுகள் நான் வள்ளத்தில் ஏறி பட்டணம் போயிட்டு வரும் வேளையில் எல்லாம் இறங்குதுறையிலேயே வழிமேல் விழிவைச்சு நிக்குங்கள். அவர்களைக் கண்ட டி என் சோர்வும் பறந்திடும். ஒர்நாள்
அன்னம்மா பெரிசாயிட்டாள். ஆமாம் தம்பி என்ர மகள் மனிசியா யிட்டாள். அண்டு நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை தம்பி அண்டைக்கு என்னைப் பார்க்க வந்த ஆசாரி முத்தனிட்ட ஏதோ வெறியில ஒரு கலியாணக் கட்டிலச் செய்யச் சொல்லி அச்சாரப் பணமும் கொடுத்திட்டன். என்ர செய்கையைக் கண்டு என்ர மனிசியே திகைச்சுப் போட்டுது தம்பி
அப்படி வாங்கிப் போட்ட கட்டில்தான் தம்பி இது. ஆனா. ஆனா. நீ பயந்து போயிடாத தம்பி. முழுக்கதையையும் கேட்டிட்டுப் போ. நான்தான் சொன்னனே. குழைக்குத்தகைக்கு எடுக்கிறதெண்டு. மார்கழி வந்திட்டா. கடலேரிக்கு அப்பாலுள்ள வெட்டுக் காட்டுக்குழையெல்லாம் குத்தகைக்கு வாங்கி, வள்ளத்தில் ஏற்றி இக்கரைக்குக் கொண்டு வந்துவிடுவன். பச்சைக்குழைப் பசளை என்ர நிலத்துக்குப் பயன்பட்டது போக, மீதியை ஊராருக்கு வித்துவிடுவன். அதாலயம் பணம் வரும். பல தொழிலில ஈடுபட்டவனுக்கு பணத்துக்கு என்ன தம்பி குறை.
குழைக்குத்தகை எண்டாச் சும்மா சின்னம் பொன்னனாக வருமானம் இல்லை. அங்கபார். அந்தக் கடலுக்கு அப்பால இளம் காடாக இருக்கிறது பார். பச்சைப் பசேலென்று. அதைத்தான் வெட்டுக்காடு எங்கிறது. அங்கை உள்ள குழையளையெல்லாம் வெட்டி எடுத்துக் கொண்டு என்ர வள்ளங்கள் வரேக்க நீ பாக்கோணும். அப்படியே சிலுத்துப்போவாய். குழை வள்ளங்களினாலே பாலம் அமைத்தது போல. ஒண்டின்பின் ஒண்டாக, பொழுது சாயும் வேளையில வரேக்க. அது ஒரு காலம் தம்பி. என்ர குழையை நம்பி எத்தனை வயல்கள் இருந்திச்சிச்செண்டு உனக்கென்ன தம்பி தெரியும்?. இப்பதான் செயற்கை உரம் எண்டு சொல்லி நிலத்தையே ஒரே அனல் பூமியாக்கி விட்டீங்களே.
குழை வியாபாரத்தால நல்ல வரும்படி, அதோட ஒரு போட்டியில்லாத வியாபாரம். இதில இறங்கிறதுக்கு வள்ளம் வேண்டுமே, அதால போட்டியில்லாமலே வியாபாரம் நடந்தது. இதால ஊரில சிலருக்கு என்னில பொறாமை. எப்படியும் உந்தக் குத்தகையை எடுத்துவிட வேண்டும் எண்டு நாண்டுகொண்டு நிண்டிச்சினம். என்னட்டையா இது நடக்கும்?
அதோட போக்குவரத்துக்கும் நான்தான் சங்கத்தில குத்தகை எடுத்திருந்தன். விளங்கேல்லையா. இந்த வள்ளப்போக்குவரத்து ஒவ்வொரு வருடமும் எங்கட கிராமச் சங்கம் குத்தகைக்கு விடும். குத்தகை எடுக்க விரும்புபவர்கள் தாங்கள் கொடுக்கப் போகும் தொகையை சங்கத்துக்குச் 122/செம்பியன் செல்வன்

சொல்லுவினம். யார் கூடிய பணத்தைக் கொடுப்பினமோ அவையஞக்குத்தான் வள்ளப் போக்குவரத்தைக் குத்தகைக்கு விடும். நான்தான் ரொமச்சங்கத் தலைவர். என்னை விட்டு யார் எடுக்கமுடியும். ஆனா. அந்த வருடம் வேண்டுமெண்டே சிலபேர் கூடி அதிக பணத்தைக் கொடுத்து எடுத்து விட்டாங்கள். அவங்கள் பத்து வரியமுழைச்சாலும் பெறமுடியாத பணம் அது. நான் திடுக்கிட்டுப் போனன். அதைவிட என்னை இன்னுமொரு சங்கதி திடுக்கிட வைத்தது. எனக்கு எதிராக வேலைசெய்த கூட்டத்தில என்ர சகலனும் ஓராள் எண்டதுதான். அதிலும் நான் ஐமிச்சப்படவில்லை. ஏனெண்டா என்ர சகலனும் ஒரு மாதிரியான ஆள், பொதுவா நல்ல மனிசன். ஆனா கொஞ்சக் குடிப்பழக்கம். அதால. உள்ள கொஞ்சம் போயிட்டா மனிசன் இழுத்த இழுப்புக்கெல்லாம் போற ஆள்தான்.
நானும் பொறுத்துக் கொண்டன் தம்பி. என்ன இருந்தாலும் என்ர மகள் வாழப்போற இடமெல்லே. எங்களால ஏன் வாழப்போற சிறிசுகள் கவலைப் படுவான் எண்டு. ஆனா சகலனோடு பேசுறதை மட்டும் சற்று நிறுத்திக் கொண்டன்.
அப்பதான் கிராமச்சங்கத் தேர்தல் வந்தது. அதிலும் எனக்குப் போட்டியாக என்ர சகலனையே நிறுத்தி விட்டாங்கள். எனக்கு என்ன செய்யிறது எண்டே புரியவில்லை. நேராச் சகலனிட்டயே போய் கேட்டன். நான் சமாதானமாகத் தான் கேட்டன். ஆனா. அவன் குடிமயக்கத்தில ஏதோ ஆபாசமாகக் கேட்டு விட்டான், முகம் பார்த்துக் கதைக்காதவன் உப்படிப் பேசறதைக் கேட்ட எனக்குப் பத்திக்கொண்டு வர முன்பின் யோசியாமல் அவன்ர கன்னத்தில அடிச்சுப் போட்டன்.
தங்கை கத்த அவன் கத்தியைத் தூக்க. தலைநிமிர்ந்து நிண்ட நாங்க, தலைகுனிய வேண்டியதாயிற்று.
வீட்டில் மனிசியும், அன்னம்மாவும் அழுதழுது என்ர உசிரையே வாங்கி விட்டர்கள். மனிசிக்கு மகளின் கவலை, மகளுக்கு கணேசன் நினைப்பு. எனக்கு வாழ்வே வெறுத்துப் போச்சு.
அதுக்கிடேல்ல ஒரு சங்கதி, கேட்டியெண்டா விறைச்சுப் போவாய். நான் என்ர வயலில பட்டி அடைக்கிறது வழக்கம். ஓ! நீ பட்டணத்துப் பொடியன். பட்டியடைக்கிறதெண்டா விளங்காதுதான். பட்டியடைக்கிறதெண்டா ஒவ்வொரு வயலிலும் நாப்பது ஐம்பது மாடுகளை நாலைந்து நாளைக்கு கட்டி விடுறது. அதுகள் அங்கின உள்ள புல்லைத் திண்டு எருவையும் வயலில போட, வயல் நல்ல உரமாகி விடும். நான் என்ர மாடுகளை மட்டு மல்லாமல் பிற இடங்களிருந்தும் மாடுகளைக் கொண்டுவந்து பட்டியடைக்கிறது வழக்கம். அப்பதான் என்ர வயலுக்கு போதுமான பசளைக் கிட்டும். ஆனா அந்த முறை பட்டியடைக்க வெண்டு கொண்டுவந்த மாடுகளில சரி அரைவாசி
பழங்கட்டில் /123

Page 70
அப்படியே இறந்து போய். வயல் பாக்கப் போன நான் அப்படியே மயங்கிப் போய், எப்படி வீடுவந்து சேந்தன் எண்டே எனக்குத் தெரியாது. அப்படி ஒரு பயங்கரம் நிறைந்த கொடுமைக் காட்சியை என் ஆயுளில கூட நான் கண்டதில்லை. அவை ஏன் செத்தனவெண்டு இன்னமும் எனக்குப் புரியேல்ல தம்பி எனக்கு உலகமே சுடுகாடாகிப் போச்சுது தம்பி. பட்ட காலிலே படும். எண்ட கதையாய். கிராமச் சங்கத் தேர்தலிலும் சகலனும் வெற்றி பெற.
நான் தலையில துணி டைப் போட்டுக் கொண்டு குந்த வேண்டியதாயிற்று.
அப்ப கணேசன் என்ன செய்தான் எண்பா கேக்கிறாய்? என்ன செய்வான் பாவம். அடிக்கடி அவன் வீட்டுக்கு வந்து மாமிக்கும் அன்னத்துக்கும் தேறுதல் சொல்லுவான். அவன் வருகையுமில்லா விட்டால் எங்க குடும்பமே இருளில் மறைந்திருக்கும்.
ஒரு நாள் அவன் வருகையும் தடைப்பட்டது. 'மாமா! பட்டணத்துக்குப் படிக்கப் போறன்' எண்டு ஒரு நாள் வந்து நிண்டான். மகிழ்ச்சியோடுதான் எல்லாரிட்டையும் விடைபெற்றுக் கொண்டு போனான்.
அவன் போனதும் எங்களுக்கு வாழ்வே வெறிச்சுப்போச்சு. இறக்கை யொடிந்த பறவையாக நான் ஒடுங்கிப் போய் மூலையில் இருக்க. அன்னமும் தாயும் என்னைப் பார்த்து கண்ணிர் வடிக்கிறதைத் தவிர என்ன செய்ய முடியும் அவர்களால் தம்பி.
கணேசன் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதெல்லாம் எங்களைக் காணாமலே போக மாட்டான். அவன் அவ்வளவு நல்லவன் தம்பி. ஆனா அவன் வந்து கொழும்புக்குத் திரும்பிப் போனதும் யார் உவையளுக்கு மாப்பிள்ளை கொடுக்கிறதெண்டு சொன்னது?- எண்டு ஊர் முழுக்கச் சொல்லித் திரிவான் சகலன்.
இதைக் கேள்விப்பட்ட என் வீட்டின் குலவிளக்குகள் சாமி படத்துக்கு முன்னால தினசரி கண்ணிர் மாலை கோக்கிறதுதான் தொழிலாப் போச்சு. நானும் அவையளைப் பாத்து ஊமைக்குரலில் கதறுவதே என் தொழிலாகி விட்டது.
ஒரு முறை விடுமுறைக்கு ஊருக்கு வந்தவன் 'ஐயா என்ன சொன்னாலும் நான்தான் அன்னத்தை முடிக்கிறது. எண்டு சொல்லிவிட்டுப் போனான். ஆனால் அவன்ர வாக்கு நிறைவேறியிருந்தால் ஐயோ!.
எல்லாத்துக்கும் தலைச்சுழியெண்டு ஒண்டிருக்குதே, தம்பி. அதை மாத்த முடியுமா?
கணேசன் வந்து விட்டுப் போன சிலநாளில், அன்னம் ஏதோ வயிற்றுவலி எண்டு சொன்னாள். பின் படிப்படியாக வலி கூடித் துடித்தே போனாள். ஊர்ப் பரியாரிட்டக் காட்ட அவரும் பட்டணத்துக்கு கொண்டு போங்க எண்டிட்டார். யாழ்ப்பாணத்து ஆஸ்பத்திரியில வந்து காட்ட ஏதோ கல் போய் குடலில 124/செம்பியன் செல்வன்

அடைஞ்சிருக்கு, சின்ன ஒப்பிறேசன் செய்தாச் சரியாப் போயிடும் எண்டு கத்தி வைச்சு சுகமாத் திரும்பிவர. ஊரில இருக்கிற நாக்கில நரம்பில்லாததுகள். ஐயோ. இப்ப நினைச்சாலும் மனம் அனலாய் எரிகிறது தம்பி. எல்லாம் என்ர குடும்பத்தைக் கலைக்கச் செய்த சதி தம்பி.
'என்ர மகள் அன்னம் ஏதோ தவறா நடந்ததால தான் ஒப்பிறேசன் பண்ண வேண்டி வந்தது எண்டு ஒரு கதையைக் கட்டி விட்டிச்சினம்
-அதைக் கேட்ட மகள் அப்படியே பதை பதைச்சுப் போய் விட்டா. நோய்தேறிய பலவீன உடம்பு, தலையை நிலையில மோதின மோது. ஐயோ. நான் ஒப்பிறேசனில இறந்திருக்கக் கூடாதா எண்டு கத்தின கத்து.
மலரில் சேறுபட்டாலும், சேற்றில் மலர் வீழ்ந்தாலும் மலருக்குத்தான் தம்பி மாசு.
அன்னத்தை எங்களால தேற்றவே முடியவில்லை தம்பி ஒரு நாள் நான் வெளியில போட்டு வீட்டுக்கு வாறன், மனிசி குசினியில ஏதோ வேலையா இருந்தா. இந்தக் கட்டில்ல என்ர மகளுக்காக. மண இரவுக்காக வாங்கிய கட்டில்ல அன்னம் அலுங்காமல் படுத்திருந்தா. பிறரின் மெல்லிய காலடிச் சத்தம் கேட்டோடனயே பதறித் துடித்தெழும்பும் அன்னம் அசையாம படுத்திருந்தா. 'அன்னம் எண்டு கூப்பிட்டன். பதிலேதுமில்லை. மீண்டும் அன்னம் எண்டு கத்தினன் பதிலில்லை. எனக்கு விசயம் விளங்கி விட்டது. எல்லாமே விளங்கி விட்டது."அன்னம்' - எண்டு கத்தினன்.என் கத்தலைக் கேட்டு அவள் ஓடிவந்தாள். மயங்கிச் சாய்ந்தாள்.
ஓம் தம்பி. எங்களை மோசஞ் செய்துவிட்டு போய் விட்டாள். பிறகென்ன தம்பி. மகள் போனாள்.மனைவி போனாள். பாவி நான் மட்டும் இன்னும் பழிசுமக்க வாழுறன். என்ர வயல்களை யார் யாரோ எடுத்தார்கள். ஆண்டார்கள்.ஆனா நிலத்தை நிலமாகப் பார்க்க முடியவில்லை. அவர்களால். நிலத்தை விற்றார்கள். பலர் பட்டணக்கரையை அடைந்தார்கள். பட்டணத்தில் உணவுக்குப் பஞ்சம் ஏற்பட மீண்டும் கிராமத்துக்கே வந்து கொண்டிருக் கிறார்கள். ஒரு கால் நூற்றாண்டு மாற்றங்களையே இந்தப் பழங் கட்டிலிலமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறன் தம்பி. எனக்கு எப்பொழுது மாற்றம் வருமோ?. ί என்ன தம்பி. Tஸ்லுறாய். என்ரகதை உன் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியா இருக்கோ. நன்றியோ?. உனக்கெல்லோ தம்பி நான் நன்றி சொல்ல வேணும். இந்த வயோதிப காலத்தில.ஒரு அறளைப் பேச்சை அலுக்காமல் கேட்ட உனக்கெல்ல தம்பி நான் நன்றி சொல்ல வேண்டும். போய் வா தம்பி.
சுதந்திரன் 31-05-1987
பழங்கட்டில் / 125

Page 71
ع4لر


Page 72
இங்கதான் பிள்ள பயப்படக் கணக்க இருக்கு. இரவில இங்க இருக்கிறதுகள் கள்ளச்சாராயத்தை வர்யில ஊத்திச்சுதுகள் எண்டால் ஆள் ஆள் என்ன ஏது எண்டு ஒண்டும் தெரியாமல் தாறுமாறா நடந்து கொள்ளுங்கள். அதுதான் புள்ள பயப்படுறன். அயலுக்கையும் ஆருமில்ல. எல்லாரும் தூரத் தூரத்தான் இருக்குதுகள். இருட்டிப் போட்டுது எண்டால் ஒருத்தர் வீட்டில ஒண்டு நடந்தாலும் ஏனெண்டு கேக்க ஒருத்தருமிராயினம். எல்லாம் விடிஞ்சாப்பிறகுதான். உன்னோட இருக்கிற ரீச்சர்மார் இருந்தா நான் இப்பிடி பயப்படமாட்டன்.ஒரு வயது வந்த கன்னி கழியாததை விட்டுட்டுப் போறன் எண்டதை நினைக்க என்ர உயிர்க் குலையே நடுங்குது.
-அவளின் நெஞ்சம் ஈரக்கசிவு கண்டது. ஒரு கணம் தன் தாயை நின்ைத்துக் கொண்டாள். V
அம்மா!. நீ என்னை பெற்றாயே தவிர. இப்படிப் பொறுப்போடு ஒரு வார்த்தை எப்பவாவது சொன்னதுண்டா? நீ என்னை ஒரு பெண்ணாக ஆவது நினைச்சதுண்டா. உனக்கு என்னை விட என்ர பணம். சம்பாத்தியம் தானே முக்கியம்? என்னை தன் வீட்டில் ஒரு அறையில் வாடகைக்கு குடி யிருக்கும் ஒருத்தியெண்டு மட்டும் கருதியா இந்தத் அம்மா இப்படிக் கசிகிறாள்.? .அதெல்லாம் ஒண்டுமில்ல. உங்களுக்கு பஸ்சுக்கும் நேரமாச்சு *ܫ உந்த பஸ்சை விட்டா நீங்க நேரத்துக்குப் போய்ச் சேரமாட்டியள்- என்று அவர்களை ஆறுதல் சொல்லி அனுப்பவே நீண்ட நேரம் ஆகிவிட்டது.
கந்தோர் முடிந்து வெளியேற ஐந்து மணியாயிற்று. அவர்கள் தந்துவிட்டுச் சென்ற திறப்பால் தெருக்கதவைத் திறந்தபோது, சங்கிலி கலகலத்து பிடியினின்றும் நழுவி விழ, எடுக்க குனிந்த போது அவன் அவள் பார்வையில் விழுந்தான். அவள் வரவை எதிர்பார்த்து நின்றதென அவன் நிலையில் தெரியவும் அவள் மனம் துணுக்குற்று பின்வாங்கி நிமிர்ந்தபோது கால்கள் இடறின. தன்னைச் சமாளித்துக் கொண்டு உள்ளே வளவில் காலடி பதித்தவள் திரும்பிப் பார்த்தாள். அவன் தூரத்தே சைச்கிளில் போய்க் கொண்டிருந்தான்.
வெளிச்சேலையை அவிழ்த்து எறிந்துவிட்டு, உள் பாவாடை கணுக்காலுக்கு மேலாக றேந்தைப் பின்னல் சித்திரமாகத் தொங்க- கறுப்புப் பின்னணியில் சிவப்பு, மஞ்சள் எனப்பெரிய பெரிய பூக்கள் அச்சிட்ட
சோட்டியணிந்து, கிணற்றடியில் கால் முகம் கழுவி அறைக்குள் வந்தபோது
அவள் மனம் நிதானம் கண்டது.
- வழக்கத்திற்கு மாறாக நிலவிய அமைதியும், திடீரெனக் கவிழ்ந்ததெனக் கூடிய இருளும் அவளைத் திடுக்கிட வைத்தன. யன்னல் திரே விலகி வெளியே தெறித்த பார்வை மேற்குத்தொடுவானில் விழுந்தது. 128/செம்பியன் செல்வன்
N

இருளுடன், ஒளி- மஞ்சள், சிவப்பு, வெண்மை எனக் குழம்பிப் போய் அங்கிருந்து எழுவதென காடுகளின் மரங்கள் இருளில் தலைக்கறுப்பை வித்துப் பரத்தி. வயல் வெளிகளாக மாறி வீட்டு வளவில் காலடி பதித்து. அவளுக்கு ஏனோ தான் அந்தக் கிராமத்திற்கு வந்த முதல் நாள் ஞாபகத்தில் ஒளிவிட்டது.
அவள் அந்த ரெயில்வேஸ்ரேசனில் இறங்கி, கிராமத்திற்குச் செல்ல வேறு வாகனம் எடுக்க வேண்டும் என்றார்கள்.
எல்லாரும் காத்திருந்த பஸ்ஸில் அவளும் ஏறிக்கொண்டாள். புழுதியை வாரி இறைத்துக்கொண்டு பலத்த சப்தங்களுடன் பஸ் ஓடியது. அவளுக்கு யன்னல் ஓரமாக இடம் கிடைத்தது- கிராமத்தைத் தரிசிக்க வசதியாக இருந்தது. சூரியனிலிருந்து நெருப்புப் பொறிகள் வெடித்துச் சிதறியதென எங்கும் கானல் எழுந்துகொண்டிருந்தது. வெப்பத்தால் கரிந்துபோன மரங்கள், பற்றைப் புதர்கள், முட்காடுகள் தீயால் பாதி கருகிப் பட்டைகழன்ற பின்னும் உயிர்த்தெழும் கரையோர. களத்துமேட்டு மரங்கள், வற்றிய குளத்தில் வயிறொட்டிய எருமைகளின் மேய்ச்சல், உருக்குலைந்த வயல் வரம்புகளுக்கு அணிசெய்யும். கத்தரி வெயிலில் பூக்கத் தொடங்கிய கத்தரிநிறப் பூம்பஞ்சுகளாக தொட்டாற்சிணுங்கியும், மஞ்சளை அள்ளித் தெளித்தாற் போல நெருஞ்சிப் பூக்களும் சில்லிட்டு மலர்ந்திருந்தன. மாடுகள் இலைகளை விட்டும், முட்களைத் தவிர்த்தும் பூக்களை மட்டும் மேய்ந்து கடைவாயை நாக்கால் நக்கின.
வற்றின ஒடையில் அல்லிக் காய்களைப் பறித்தும், காட்டுக் கீரைச் செடிகளின் நுண்ணிய வெண்ணிற விதைகளைக் கசக்கி ஊதி வாயில் போட்டுக் கொண்டும் வெற்றிப் பெருமிதத்தால் கண்மலரச் சிரிக்கும் வெற்று மேனியரான சிறுவர், சிறுமியர்கள்.
பஸ் ஓடும் ஓட்டத்தில் அவளுக்குத் திகிலான புதுமையாக இருந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக மழையிலா மேகம் வெண்ணாடை பூண்டு தலை கவிழ்ந்ததால் வந்த கோலம்.
-க்வாக். க்வாக். க்வாக் ஆட்காட்டிக் குருவியொன்று அலறி யடித்துக் கொண்டு விண்ணிலே குறுக்காகப் பறந்தோடியது.
அவள் மேசை விளக்கை ஏற்றினாள். ஏனோ இரவுணவு ஒன்றுமே தேவையில்லையென்று -து. நித்திரை வருமட்டும் என்ன செய்வது?
வீட்டிற்குக் கடிதம் எழுதுவமா? அவளுக்கு சிரிப்பு வந்தது. வீட்டில் அவள் கடிதத்தை- சுக துக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டு யார் இருக்கிறார்கள்? அம்மா ஒருவேளை கேட்டாலும் கேட்பாள்.
'ஏன்ரி. வீணா முத்திரைக்கும் என்வலப்புக்கும் காசை கரியாக்கிறா? அந்தக் காசை அனுப்புற காசோடு சேர்த்து அனுப்பினியெண்டாலும் ஏதுக்கும் உதவியாயிருக்கும்
கருங்கற்பூமியும் நெருஞ்சிக்காமமும் / 129

Page 73
- அவளுக்கு அவமானகரமான ஆத்திரம் எழும்.
ஓம்.ஓம்.உங்களுக்கு என்ர சுகதுக்கம் ஒண்டுமே பெரிசில்ல. என்ர உழைப்பு. பணம்தான் முக்கியம். அப்பதான நீயும் உன்ர ஏனைய செல்வங்களும் அப்பாவும் வயிறுகொழுக்க இருங்கவிடக்தைவிட்டு விலகாமச் சாப்பிடலாம்.
-அவளின் குடும்படி கஸ்ள விசித்திரமானவர்கள். குடும்பமும் அப்படியே. அப்பா, அம்மாவுக்குச் சட்டபூர்வமான கணவரல்லர். அவர் ஊரில் தலைநிமிர்ந்து நின்ற ஒரு பரம்பரையின் பிரதிநிதி. அவர்களின் கீழ் பல குடும்பங்கள் அவர்களை அண்டி வாழ்ந்தன. அத்தகைய குடும்பங்களின் ஒன்றுதான் அம்மாவினதும். கமக்காரனின் பிள்ளை தன்னைச் சுற்றுவதால் அம்மா கொண்ட பெருமிதம் அவளைத் தாயாக்கிவிட்டது. ஆனால் கமக்காரன்' விசயம் முற்றுவதற்குள் தன் மகனுக்குப் பெரிய இடமொன்றில் கட்டிவைத்து விட்டான். அப்பா அப்படி ஒன்றும் மோசமானவரல்ல. இவள் அம்மாவுக்கு கெளரவத்தை சொத்து சுகத்தை வழங்காவிட்டாலும் தன் சொந்த மனைவிக்குத் தெரிந்தும் தெரியாமலும் இவளம்மாவிடம் அடிக்கடி வந்து வைத்துக் கொண்ட 'தொடுப்பு இரண்டு பெண் பிள்ளைகளுக்கும், மூன்று ஆண்களுக்கும் தாயாகும் பெருமையை அளித்து தனது பெரிய இடத்துப் பெருமையை நிலைநாட்டி வருபவர். இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து போனவரே தவிர சட்ட பூர்வமான, அம்மி மிதித்து அருந்ததி காட்டின மனைவியின் வீடுதான் அவரது நிரந்தர விலாசம். அவளுக்குப் பிறந்த மூன்று பெண்களுக்கும், மூன்று ஆண்களுக்கும் வாழ வழிகாட்டிய அவசரத்தில் இவள் 'அம்மாவின் குழந்தைகள்ை மறந்து போனார். இன்று நாடி தளர்ந்துவிட்டது. இளமையில்
ஆடிய ஆட்டம் வயதை முன் தள்ளி இயலாமையக் கொண்டுவந்துவிட்டது.
இருந்த எஞ்சிய சொத்தையும் இவர் 'இவள் அம்மாவுக்கும் குழந்தைகட்கும் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்ற ஐயத்தில் பிள்ளைகளும், சொந்த மனைவியும் சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு அவரை வெளியே அனுப்பிவிட்டனர்.
வயதுபோன காலத்தில் இவர்களுக்குச் சுமையாக அவர் வந்த போது, அம்மாவுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி? தனது கெளரவம் ஆகாயம் அளவு உயர்ந்துபோனதாக எண்ணி எண்ணி மகிழ்ந்து போனாள். அண்டை அயல் எல்லாம் சுற்றித்திரிந்து பறைசாற்றினாள். வீட்டில் அவருக்கு உணவு படைக்கும் போது அவள் வேண்டாத பரபரப்பில் ஆழ்ந்துவிடுவாள்.
ஐயே. அவருக்கு இதைக் கொடுக்க வேண்டியிருக்கே. ஐயோ. இதொண்டும் திண்டு பழகாதவராயிற்றே. எடி.கீரிக்கோழி போய் படுத்தது. முட்டை போட்டுட்டுதோ எண்டு பர். வந்திருக்கிறவருக்கு வாய்க்கு வயணமாச் செய்து போடயும் கையில காசில்லையே. -எண்டு அவள் அங்கலாய்த்து அலையும் பேது இவளுக்கு எரிச்சலே எழும். 130/செம்பியன் ல்ெவன்
།

இங்க நாங்களே வெறும் கஞ்சித் தண்ணிக்குத் தவிக்கேக்க. அவ புருஷன்ர வாய்ச்சுவை பாக்கிறா. ஏதோ குடும்பத்துக்கு உழைச்சுக் கொட்டி பாடுபடுகிறவர் மாதிரி. அவருக்கோ- இளவயதில் இவளம்மாவைப் போல் எத்தனையோ பேர். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் எல்லாரையும் பற்றிக் கவலைப்படத்தான் முடியுமா? அப்படிக் கவலைப்படுவது அவரின் பிறந்த குலப் பெருமைக்கு இழுக்கல்லவா?
கண்ட இடங்களில் மிதித்த சேற்றின் சுவடுகள். சேற்றில் எழும் சோற்றுப் பருக்கைகள் வயோதிப வயதிலும் அமிழ்தமாக விருந்தன. ஆ என்ன சுகம். நிம்மதி.?
இவள் கிளறிக்கலில் எடுபட்டு ஊர் ஊராக அலைந்து அனுப்பும் பணத்தில் அப்பா, அம்மாவின் அநுசரணையில் கால் மேல் கால் போட்டபடி அனுபவித்துக் கொண்டிருந்தார்.
அப்பாவின்மேல் கோபம் வந்தாலும் தன்னைக் கண்ணாடியில் பார்க்கையில் அவள் அவரை மன்னித்து விடுவாள். அவள் முகத்தில் இருக்கும் பெருமையும் கண்ணியமான தோற்றம் காட்டும் நிறமும், வளர்த்தியும். நிச்சயமாக அம்மாவின் பகுதியில் அவளைப் போலவோ, அவள் சகோதரங்களைப் போலவோ யாரும் இல்லை. அதுமட்டுமன்றி அவள் அப்பாவின் பெயரை ஏதும் தேவை கருதி சொல்ல நேரும் போதெல்லாம் தன்னுள் ஓர் கருவம் மிகுவதை அவள் உணர்வாள். இதனால் அவள் தனது சம்பளப் பணத்தை வீட்டிற்கு மணியோடர் செய்கையில் அம்மாவைப் போன்ற பெருமிதம் தன்னையறியாமலே தனக்குள் எழுவதை பலமுறை கண்டிருக்கிறாள். தங்கள் திருமண விசயத்தில் அப்பாவின் பிறந்த வீட்டுப் பெருமையும், சிறப்பும் தனக்கும் தங்கச்சிமாருக்கும் கரைசேர உதவும் என்ற அர்த்தமற்ற எதிர்பார்ப்பும் அவளிடம் ஆரம்பத்தில் நிறைந்திருந்தது. அதனால் அவள் வங்கியில் தனது சேமிப்பாகப் போட்டுக் கொண்டு வந்த சிறிய தொகையையும் வீட்டிற்கு அனுப்புவதில் எந்தவித மனக்கஷ்டமும் அடையவில்லை. அப்பா செல்லக் குழந்தையாக அனுபவித்துக் கொண்டிருந்தார். ஆனால்.
சென்றமுறை லீவில் சென்றுகொண்டிருந்தபோது அயல் வீட்டுக் காரியிடம் அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள். அப்பா சுவரோரம் "ஈசி சேரை" இழுத்துப் போட்டுக்கொண்டு அம்மாவின் பேச்சை சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
'நீங்கள் கேக்கிற கேள்விக்கு என்னத்தச் சொல்லுறது. அவளொருத்தி யாலதான் குடும்பமே நடக்குது. இவரும் இப்படி வந்து வீட்டோட கிடக்கிறார். சீதன. பாதனம் ஒண்டும் வேண்டாம் எண்டு ஒருத்தன் வலியவந்து பெண் கேக்கிற மாதிரி பெடிச்சிக்கு வயதா. வாலிபமா.வடிவா? பெடிச்சிக்கும் வயது கருங்கற்பூமியும் நெருஞ்சிக்காமமும் / 131

Page 74
முப்பதாகுது. வீட்டிலும் வேற குமர் இரண்டிருக்கு. இவளும் இல்லை யெண்டா நாங்க என்னத்தைத்தான் செய்யிறது. காத்தத்தான் குடிக்கவேணும். பெடிச்சிக்கும் கலியாணம் கட்டிரதில அதிகம் பிடிப்பில்லை. இல்லாட்டி எப்பவாவது சொல்லியிருப்பாள். நானும் அவரும் அவளுக்குக் கலியாணம் செய்யிற நிலையிலுமில்ல.
அம்மாவின் அப்பட்டமான சுயநலம் அவளுக்கு அருவருப்பூட்டித் திகைக்கவைத்தது. தன் வயது பற்றியும். தன் அழகு பற்றியும் பெற்ற தாயான அவளே கூறிய வார்த்தைகள். அவளுக்குத் தன்னைக் கண்ணாடியில் பார்க்க வேண்டும் போலிருந்தது.
உச்சி வகிட்டிலிருந்து ஓரிரு நரைமயிர்கள். கன்ன மயிர்களாக ஒன்றிரண்டு. முகம் தன் சோபையை இழுத்து. வசந்தத்தின் உச்சிப்பொழுதாக.
உள்ளம் கனத்து இருண்டது. தள்ளாடியபடியே சென்று கதிரையில் அமர்ந்து, மேசையில் முகம் பதித்துக் கவிழ்ந்தாள். எங்கும் ஒரே சூன்யமாகியிருந்தது. அவள்தலை நிமிர்ந்த போது எதுவோ கையில் தட்டுப்பட்டது. வளவளப்பான பேப்பர் பாக் புத்தகம்.
'ஹெரோல்ட்ரொபின்ஸின் அட்வென்சரஸ் -புத்தகத்திலிருந்து கடிதம் ஒன்று நழுவி விழுந்தது. மூன்றாவது தங்கச்சி எழுதியிருந்தாள். பலமுறை படித்தாயிற்று. மீண்டும் பிரித்தாள்.
'.அக்கா நீண்ட நாட்களின் பின், இந்த நெருக்கடியில் இதை எழுதியிருக்கிறேன். வீட்டில் இருப்பதே நரகமாகி விட்டது. நீ பாடுபட்டு உழைத்து அனுப்பும் சம்பளம் எல்லாம் இங்கு அப்பாவின் பராமரிப்புக்கே போய் விடுகிறது. அம்மா ஏதோ வெறிபிடித்தவள் போல. குழந்தைகுட்டியள் இருக்கு என்ற நினைவேயில்லாமல். அக்கா நாங்கள் வீட்டில் ஆமான சாப்பாடு சாப்பிட்டு எத்தனையோ நாளாகிவிட்டன.
சின்னண்ணன் கோவிச்சுக்கொண்டு போய்விட்டார். வீட்டை வாற தில்லை. ஆரோ புத்தூரில் ஒரு கமக்காரன் வீட்டில் இருப்பதாகக் கேள்வி. போனவிடத்திலேயே கலியாணமும் கட்டிக்கொண்டார் எண்டு கதை அடிபடுகிறது. அம்மா ரெண்டு நாள் கத்திவிட்டு பேசாமலிருக்கிறாள். சின்னண்ணன் போனதிலிருந்து அம்மா முற்றாக எங்களைக் கவனிப்பதேயில்லை. என்ன சாப்பிட்டம். சாப்பிடேல்லை எண்டு எப்பனும் கேட்கிறதில்லை.
அக்கா ஒருநாளும் இல்லாமல் இந்தக் கடிதத்தை ஏன் எழுதியிருக்கிறன் எண்டு நினைப்பாய். உன்னோடு நாங்கள் நெருங்கிப் பழகாம லிருந்திருக்கலாம்.ஆனா நீதான் எங்கட வாழ்வுக்கு ஆதாரம் எண்ட நன்றியுணர்ச்சிதான் மரியாதை என்ற பெயரில் விலகியிருக்கச் செய்திருக்க வேணும். அக்கா நீ இவ்வளவு வயது சென்றும் கல்யாணத்தைப்பற்றிச் சிந்திக்கேல்ல. ஆனா. நான். அவசரக்காரி எண்டு என்னைத் திட்டாத.
132/செம்பியன் செல்வன்

வீட்டில் பெற்றவையே கலியாணம் கட்டி வைப்பினம் எண்ட நிலை எங்களுக்கு வரவே வராது. நாங்களே புத்திசாலித் தனமாக நடந்தாத்தான்.
அக்கா முந்தி எங்கள் கல்லூரியில் படித்த தேவராசா இப்ப யூகேயில் கம்யூட்டர் சயன்ஸ் செய்துகொண்டிருக்கிறார். அவரும் நானும் படிக்கேக்கயே. அக்கா. ஒருவேளை நீ கோவிக்கலாம். அவை 'குறைஞ்சபகுதியெண்டு. இப்ப இருக்கிற காலத்தில அதுகளுக்கு எல்லாம் எந்தவித மதிப்பும் இல்லை. ஒன்றுமில்லாததுகளும், வாழவழியற்றதுகளும்தான் பழம்பெருமையில் வாழப்பாக்குதுகள். அவர் அங்கிருந்து எனக்கு எல்லா வசதியும் செய்து டிக்கட்டும் அனுப்பியிருக்கிறார். இது அம்மாவுக்கோ அப்பாவுக்கோ தெரியாது. இந்தக் கடிதம் கிடைக்கையில் நான் வெளிநாடு சென்றிருப்பேன். எனக்கு உன் வாழ்த்துத் தேவை. நீயும் ஒரு வாழ்வைத்தேடு எண்டு தங்கச்சி நிலையிலிருந்து எப்படி சொல்லமுடியும்.?
தங்கையின் புத்திசாலித்தனமும், துணிச்சலும் அவளுக்கு வியப்பூட்டி னாலும், மனதிற்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆனால். நான். நான். எனக்கு.
எனக்கு திருமணமே இல்லையா? அப்பாவின் குடும்பப் பெருமையை எண்ணி, அப்பாவால் தனக்கு சிறப்பான வாழ்க்கை அமையப் போவதாக கற்பனை பண்ணி. அவளே அவளுக்காக அவள் பின்னால் அலைந்த நடராசனை எண்ணிக் கொண்டாள். கந்தோர் நண்பர்கள் என்ற முறையில் பழகி, ஏதோவொரு ஞாயிற்றுக் கிழமை சபையரில் 'மெட்னிக் காட்சியில் டிக்கட் கவுண்டரில் அவளைச் சந்த, து அவளை எதிர்பாராமல் கண்ட மகிழ்வில் அவன் அவளுக்கும் சேர்த்து டிக்கட் எடுக்க, அவனை மறுதலிக்கமுடியாத சூழ்நிலையில், அவன் அருகே அமர்வதைத் தவிர்க்கமுடியாதவளாய் நெஞ்சம் படபடக்க, வியர்வைத் துளிகள் நெற்றியில் அரும்பு கட்ட.
மங்கிய ஒளியில். நரம்பு நாளங்களைக் குதிக்க வைக்கும் மெல்லிய ஆங்கில இசையின் பின்னனியில். அவன் தனது உளக்கிடக்கையை வெப்பத்தில் மலரும் பூக்களென மலர்விக்கையில். அவனது வெப்ப மூச்சுக் காற்றுடன் கலந்துவந்த சொற்கள். அவளின் மெளனத்தை சம்மதம் என ஏற்றுக்கொண்டு. அதனை உறுதிப்படு: முத்திரைகள் எனக் கால் விரல்கள் செய்த குறும்புகள்.
-ஏதோ தனது குலப்பெருமை குலைந்ததென. பெண்மை களங்கப்பட்டதென. அவமானப்படுத்தப்பட்ட உணர்வுடன் அவசரமாகத் தியேட்டரை விட்டு வெளியேறி.
கந்தோரில் அவன் தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டபோதுகூட அவனை அருவருக்கத்தக்க பிராணிபோலப் பார்த்தாள். சில நாட்களில் அவனும் 'டிபாட்மெண்ட் மாறிவிட்டான். நாளடைவில் அவன் ஞாபகம் முற்றாக
கருங்கற்பூமியும் நெருஞ்சிக்காமமும் / 133

Page 75
நினைவிலிருந்து அழிந்து விட்ட நிலையில், கிராமத்துக்கு அவள் டிரான்ஸ்பர் ஆகி வருவதற்குச் சில நாட்களின் முன்னர் அவனை ஐந்து வயதுப் பாலகனுடன் கண்டபோது. "மை சண்' என அவன் வாலிபக்குறும்பு அடங்கி, குடும்பத் தலைவன் என்ற கண்ணியமான தோற்றத்துடன் அவளுக்கு அறிமுகம் செய்தபோது.
அச்சிறுவன் தனக்குப் பிறந்திருக்க வேண்டியவன் என்ற உணர்வொன்று, கண்களில் நீர்மல்கப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தெருவில் யாரோ கத்திக்கொண்டு போவார்கள். சில ஒளிப்பொட்டுக்கள் பாதை தடவிச் செல்லும். யார் யாரோ கூட்டம் கூட்டமாக- நாலைந்து பேராக- போவதெனச் சந்தடி கேட்கும். உருச்சிதைந்த- ஏன் பொருள்கூட -பேச்சொலி எழும். அவள் காதிலும் சில சமயம் இரண்டொன்று விழும். அப்போதெல்லாம் அவளுக்கு சிரிப்பு முட்டும்.
அவள் வீட்டுவாசலால், வடக்காகச் சென்று நூறு யார் தூரத்தில் கிழக்காகத்திரும்பி, கால்மைல் தூரம் சென்றால் அங்கு "ஸ்போட்ஸ் கிளப் என்ற பெயரில் அரசாங்க உத்தியோகத்தவருக்கான அங்கத்தவருக்கு மட்டும் என்ற அநுமதியில் அங்கத்தவரல்லாத கிராமமக்கள் சட்டத்திலிருந்து பகிரங்கமாக பாதுகாப்புத் தேடிக்கொண்டு நீதிக்குத் துரோகமிழைத்துக்கொண்டிருந்தனர். அங்கு 'பொலிஸ் ஸ்ரேசன் ஏதுமில்லாத காரணத்தால் 'சாராயத் தவறணைகள் நடாத்த அரசாங்கம் அனுமதி வழங்காததை ஊரில் சில பெரிய மனிசர்கள் தங்களின் வருவாய்க்குச் சாதகமாக்கிக் கொண்டிருந்தனர். அளவும், விலையும் யதேச்சாரதிகாரமாகப் போட்டியிட்டு, ஏழை விவசாயிகளின் உழைப்பை மேலும் மறைமுகமாக உறுஞ்சிக்கொண்டிருந்தன. இருட்டியதும் அது இயங்கத் தொடங்கிவிடும். விடியும் வரை அதன் பிரதிபலிப்பு தெருக்கதியால் மரங்கள் முறிவதிலும், ஞானப்புலம்பல் பேச்சுகளிலும் எதிரொலிக்கும். அசிங்கமான சொற் பிரயோகங்களும் அமைதியைக் கிழிக்கும் ஆரவாரங்களும். இருளில் எழும். சில வீட்டுப் படலைகள் முறட்டுத்தனமாகத் திறக்கப்படும் ஓசையும் எழும். சில நடக்கக்கூடாத அசம்பாவிதங்கள் நடைபெறுவதும், அடுத்த நாள் காலையில் டி. ஆர். ஒ. அதிகாரியிடம் சிறைப்படுவதும். பிணையில் வெளிவருவதும். அன்று மாலையே "ஸ்போட்ஸ் கிளப்' நிகழ்ச்சி தொடருவதும் அந்தக் கிராமத் துக்கே பழகிப்போன இயல்பானதாகி விட்டது.
-அவர்களுக்கும் எந்த வீட்டில், யார் யார் போய் வருவது என்பதெல்லாம் மனப்பாடமாகி அதனைப் பற்றிக் கதைப்பது ஒரு சுவாரஸ்யமான விருந்தாகி விட்டது. நான்கு பெண்களின் தனிமையில் இதைப்போன்ற விசயங்கள் மெல்லும் வாயின் அவல்களல்லவா..?
'தேவி ரீச்சர். நேத்து ராத்திரி நடந்த சம்பவம் தெரியுமே?. - அவசரமாக ஓடி வருவாள் கமலா ரீச்சர். இவள்தான் இந்த மாதிரி விசயங்களை 134/செம்பியன் செல்வன்

மாணவர்களிடமிருந்தே சேகரித்துக்கொண்டு வந்து செய்தி விரிப்பதில் குறும்புத்தனம் நிறைந்த கெட்டிக்காரி. எல்லாரையும் விட வயதில் சிறியவள் ஆயினும் பச்சையாகப் பேசுவதிலும், அதனைக் கேட்டு மற்றவர்கள் அதிர்ச்சி யடைவதைப் பார்த்துச் சிரிப்பதிலும் மகிழ்ச்சி கொள்பவள். மற்றவர்களும் தாங்கள் பேசுவதுதான் கெளரவக் குறைவு, இன்னோராள் பேசுவதைக் கேட்பது. ரசிப்பது எல்லாம் தவறில்லை என்ற முகத்திரையில் அவளைத் துரஏர்டி விட்டு கேட்பதில் ஒரு சுகானுபவம் பெறுவதில் முன்னிற்பார்கள். என்னடி கமலா ஆவலில் கேள்வி பிறக்கும். நேற்று காத்தான் பெண்டிலிட்ட ராத்திரி குடிவெறியில போய் சேட்ட விட்டு நல்லா வாங்கிக்கட்டினாராம். எங்கட ஹீரோ
ஹீரோ -அவனுக்கு இதே தொழில். மனோவியாதிக்காரன் போல இரவில் "ஸ்போட்ஸ் கிளப்புக்குப் போறது. திரும்பும் வழியில். பகலில் யார் எந்த வீட்டில் ஆண்துணையில்லாமல் இருப்பார்கள் என்ற நோட்டத்தெரிவில். அந்த வீடுகளில் புகுந்து. இரண்டிலொன்று வெற்றியும் கிட்டுவதுண்டு. அவன் ஒரு மேனியாக்காரன் போல. பார்வை. பல்லிளிப்பு. நடையில் காட்டும் போலித் தீவிரம்.
-அவள் அதிசயத்தில் மிதப்பதுண்டு இது எப்படி. புருஷன் இருக்கவும். தன்னளவில் புதிய அர்த்தம் காணத்தொடங்கி. அவள் கவனம் பேச்சில் திரும்பும்போது அது எங்கெல்லாமோ சென்று தொட்டுத் திரும்பி சுவாரஸ்யமான கட்டத்தை அடைந்திருக்கும். அவளைப் போலவே அவர்களும் சிந்தித்திருக்க வேண்டும். என்றுபட்டது.
கட்டினதுகளில சிலதுகள் வறுமையாலும், பெரிய இடத்துப் பெடியன் என்ற நினைப்பாலும், அவனே தங்களை மோகித்து வலியவரும் பெருமையாலும் தன்னிலை இழந்து குலைந்து நிற்கும்போது குமருகள் சிலசமயம் அவன் தங்களை கலியாணம் கட்டக் கூடும் என்ற நினைப்பிலாழும் போதும் அவனுக்கு வெற்றி கிடைத்து விடுகிறதுபோலும்.
அதுமட்டுமில்லரீச்சர். குடிவெறியில. ஒரு ஆணின் முழுப்பலமும். முரட்டுத்தனமும். என்று கமலா ஏதோ மெல்லிய குரலில் அவர்கள் காதுகளில் 'கிசுகிசுத்தாலும் எல்லாரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
போடி மூதேசி. வாயைத் திறந்தா போதும். எல்லாரும் எட்டுக் கட்டைக்குத்தான் ஓடவேண்டும்' என்று செல்லமாக அவர்கள் கண்டிக்கவும் அவளுக்கு உற்சாகம் புரண்டோட. குடிபோதையிலாழ்ந்த ஒருவனிடம் அகப்பட்ட ஒருத்தியின் மனவுணர்ச்சிகளை. சுகங்களை. எதிர்பார்ப்பின் நிறைவுகளை வர்ணிக்கத் தொடங்கவும் எல்லாரும் புல்லரிப்புத் தோன்ற அவள் வாயையே பார்த்துக்கொண்டு.
கருங்கற்பூமியும் நெருஞ்சிக்காமமும்/135

Page 76
- அப்படியெண்டா தனிய இருக்கிற நாங்களும் கொஞ்சம் கவனமாகத் தான் இருக்கவேண்டும். எல்லாற்ற வீட்டிலும் நுழையிற மாதிரி நுழைஞ்சிட்டால்.?’ என்று அவள் சிலிர்த்த மேனியுடன் கூறும்போது கமலா வேடிக்கையாகச் சொன்னது அவள் காதில் தெளிவாக விழுந்தது.
'கள்ளப்பால் கறக்க வத்துமாட்டுக்கே வருவான்கள்
-அவள் விக்கித்து நின்றாள்.
நான் அவ்வளவு மோசமாகவா இருக்கிறன். என்ர அழகு. இளமை எதுவுமே ஆண்வர்க்கத்தைக் கவரும் சக்தியை இழந்துவிட்டதா?. இனி மணவாழ்வு என்பதே கானல் நீரா?. அவள் அடிக்கடி கண்ணாடி முன்னால் நிற்கத் தொடங்கி தன்னையறியாமலே ஒருவித தாழ்வு மனப்பான்மை கொண்டவளாக. வாழ்க்கையே சுடுகாட்டு மொட்டை மரமாக தோற்றம் காணத் தொடங்கியது. கிராமத்தவர்களிடையே தன் யௌவனமும் அழகும் கவரப்படா விட்டால். என்வாழ்வு. ஆண்மகனை கவராத அழகா. இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையா. சோதித்துப் பார்த்தால்? தூக்கம் வரமறுத்தது.
சிந்தனையாலா? வெறும் வயிறாலா?.
மேசையிலிருந்த பிளாஸ்கை எடுத்துக் குலுக்கினாள். காலையில் ஊற்றிவைத்த சுடுநீர் குலுங்கியது லக்ஸ்பிறேயில் கொஞ்சம் கரைத்துக் குடித்துவிட்டுப் படுக்கையில் சாய்ந்தாள். சிரிப்பு வந்தது.
கொஞ்சநஞ்சம் வந்த நித்திரையையும் லக்ஸ்பிறேயால் போய்ச்சு
அவள் நெஞ்சம் படபடக்கலாயிற்று. நெற்றியில் வியர்வைகள் முத்துக் கோத்ததுபோல. உடலெல்லாம் நரம்பின் குதியாட்டம். பெருவிரலிலிருந்து உச்சம்தலை நோக்கி ஈயஆறு ஓடியது போன்ற துடிப்பு. பெண்மையின் இரகசியங்கள் தரிசனம் கண்டதென. இவைகள் எழுத்துக்கள் தானா. நரம்புகளின் கானமிசைக்கும் கந்தர்வவரிகளா.
நேரம் போனது போலிருந்தது. விளக்கு மெல்லிய ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. சிம்னியின் மேல்பாகம் புகைபிடித்து.
வெளியே ஏதோ சப்தம் கேட்டது. குடிவெறியில் உளறியும், பாடியும் கொண்டு செல்வது. திடீரென தடைப்பட்டது போல நிசப்தம் கொள்ள.
அவள் மேனி வியர்த்தது. படுக்கையில் கிடந்தவாறே மூச்சை உள்ளிழுத்து அவதானித்தாள். எந்நவித சந்தடியும் கேட்கவில்லை. புத்தகத்தை மூடிவிட்டு விளக்கைத் தணித்தாள். விழிகளை மூட செவிப்புலன்கள் விழிப்புக் கொண்டதென.
யாரோ நடமாடுவது போல்.
விழிகளைத் திறந்தாள்.
எதுவுமேயில்லை.
பிரமை.
136 / செம்பியன் செல்வன்

அவள் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு செவியைக் கூர்மையாக்கி.
நிசப்தம்.
எங்கோ நாய் ஒன்று வெறிகொண்டதெனக் குலைத்தது.
'ஊளையா?.
-அவள் படுக்கையிலேயே கால்களை நீட்டியவாறு, தலையையும் இடுப்பையும் நிமிர்த்தி உட்கார்ந்தாள்.
'யாரோ வெளிக்கதவைத் திறப்பது போல.
திடுக்கிட்டாள். நெஞ்சில் கையை வைத்தாள்.
'கடவுளே. வெளிக்கதவைத் திறந்தனான். பிறகு சங்கிலி போட்டுப் பூட்ட மறந்துபோட்டனா?.
சங்கிலி கலகலத்து விழும் ஒசை.
அலறுவமா?.
முற்றத்தால் யாரோ நடப்பதுபோல.
ஐயோ. கடவுளே. என்னைக் காப்பாற்று.
காலடிச் சத்தம் அறையை அண்மியது.
-விநாடிகள் யுகங்களாக நீண்டு.
-நீண்ட நேரம் மெளனம் நிலவியது.
-அவள் ஏதோவொரு முடிவுக்கு வந்தவளைப் போல் படுக்கையை விட்டெழுந்து, கதவை நோக்கி நடந்தாள்.
வீரகேசரி 13-07-1977
கருங்கற்பூமியும் நெருஞ்சிக்காமமும் / 137

Page 77
138/செம்பியன் செல்வன்
M2 evてづラ○ク。身っグnク
என்ன அன்னம்மா ஒருவருக் கும் சொல்லாம விசயத்தை நடத்திப் போட்டாய் போல
அப்படியொண்டுமில்லை, தங்கம் மாக்கா. இன்னும் சொல்லிச் செய்ய வேண்டியது எம்மட்டோ கிடக்கு. கலியாணம் எண்டது இம்மட்டோட போச்சே. கலியாணத்தை எல்லாருக்கும் சொல்லிச் செய்யிறதாத்தான் எண்ணம். இது என்ன பொன்னுருக்குத் தானே! வீட்டுக்கையே. முக்கிய இனஞ்சனத் துக்கு மட்டும்தான் சொன்னம்.
அதுதான் சரி. இப்ப إس إفTلامي" எல்லாம் என்ன முந்தின காலம் மாதிரியே கிடக்கு. உப்புப்புளி விலையெல்லாம் ஏறிக்கிடக்குது. இதில பொன்னுருக்கு. கல்யாணம் எண்டெல்லாம் நடத்த முடியுமே! ஏதோ இருக்கிறதைக் கொண்டு தானே நடத்த வேண்டும்.
-அன்னத்தில் முகத்தில் கருமை படருகிறது.
அதுக்கில்லை தங்கம்மாக்கா. சிக்கனத்துக்காக நாங்க ஒண்டும் பாக்கேல்ல. அவள் மூத்தவள் நாலு
 

பேரைக் கூப்பிட வேண்டும் எண்டுதான் சொன்னவள். அவளுக்கு தன்ர தங்கச்சியின்ர கலியாணத்தை நல்லா நடத்தோணும் எண்டுதான் விருப்பம். ஆனா நான்தான் நாலுபேர் கூடவந்தா ஏதாவது சண்டை சச்சரவு வந்திருமெண்டு.
ஒ. மூத்தவளே. அவளைப் போல பெண்பிறக்க கொடுத்தெல்லோ إلي" வைக்கோணும். அவள் உழைச்சு. தங்கச்சியின் கலியாணத்தை நடத்துற தெண்டால். இந்தக் காலத்தில ஆம்பிளைப் பிள்ளையளே காதல் கீதல் எண்டு ஓடுதுகள். அதுசரி அன்னம். பொன்னுருக்கில எத்தனை புள்ளியள் விழுந்தது.?
இரண்டு புள்ளிதான் நல்லாத் தெரிஞ்சுது. இதுல சின்னத்தங்கச்சிக் குக்கு புத்திர பாக்கியம் இருக்கெண்டது தெரிஞ்சுபோச்சு. அப்புறம் எத்தனை எண்டு யார் கண்டது. முகம் மலரும் மல்லிகையாகின்றது.
இரண்டே தெரிஞ்சது. மெத்த நல்லது. இந்தக் காலத்தில கணக்க பெத்திட்டு என்ன செய்யிறது. ஒண்டையும் சரிவர கவனிக்க முடியாம. அதுகளாலத்தான் இண்டைக்குத் தெருவே நாறிக்கிடக்குது. உதார் சின்னத்தங்கச்சியே. எங்க அவசரமா. ஒ1.ஓ. இப்ப இனி எங்களையெல்லாம் கவனிப்பியே. இனிக்கிளாஸ் ரூ கிளறிக்கல்காரன் பெண்டாட்டி. எங்களுக் கெல்லாம் சொல்லாம உன்ர மாப்பிள்ளையைத் தேடிட்டாய். என்று சிரிக்கிறாள் தங்கம்மா.
இந்த மனிசிக்கு வாயில. மனதில நல்ல நினைப்பே வராதா- என்று (மனக் வாறு வருகிறாள் சின்னத்தங்கச்சி.
'sl. நாகம்மாக்காவே. எப்ப வந்தனீங்க?. நான் கவனிக்கேல்லியே.
இப்பதான் பிள்ளை வந்தனான். உனக்கு மாப்பிள்ளையை நல்லாய் பிடிச்சுக்கொண்டுதாமே!. உன்ர அம்மா சொன்னாள். உன்ர அவசரத்தைப் பார்த்தா எங்களைக் கலியாணச் சாப்பாட்டுக்குக் கூட அழைக்கமாட்டாய் போல கிடக்கு.
போங்க அக்கா. உங்களுக்கு எப்பவும் இது தான். உங்களைக் கலியாணச் சாப்பாட்டுக்கு அழைக்காம வேறயாரை அழைக்கப்போறம். முகம் செந்தாழைப்பூவாகின்றது.
தங்கம்மாவின் ண்கள் வீட்டின் முகப்பினிலே நடப்பட்டிருந்த கன்னிக்காலிலே விழுகின்றது.
'இதுதானா கன்னிக்கால்? நல்ல மரமாப் பார்த்துத்தான் இதைக் கொண்டந்தனிங்க, வம்சம் தழைக்க இது நல்லா இருக்க வேணும். சின்னத் தங்கச்சி இதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டுவார். இது நல்லா தழைத்து செழித்து வளர்ந்தா உனக்குத்தான் நல்லது. அதுபோல நீயும் பதினாறும் பெற்று.- என்று தங்கம்மாக்கா சின்னத்தங்கச்சிக்கு சொல்லிக் கொண்டிருக்கி றாள். அப்போது
கன்னிக்கால்/139

Page 78
மலர் அங்கு வருகிற அவள் விழிகள் கன்னிக்காலை தெய்வ வழிபாட்டுணர்வில் தழுவுகின்ற
‘என்ன பிள்ளை மலர். உனக்கெப்ப கன்னிக்கால் நாட்டப்போகிறாய்?. உனக்காகத் தானே சந்திரன் காக்கிருக்கிறான். முறைக்காறன். நீ சம்மதம் கொடுத்திருந்தா உனக்குத்தா இடத்தில கன்னிக்கால் நட்டிருப்பினம்.
ஒ. ஒ. முறைக்காறன் எண்டாலும் படிச்சபெண் நீ, ஒரு கடைக்காரனை முடிக்க மனம் வருமே. உனக்கு விருப்பம் இல்லாட்டி அம்மாட்ட சொன்னா வேற எங்காவது முயற்சி பண்ணுவாளே. தங்கம்மாவின் வார்த்தைகள் உருண்டோடும். பத்துச்சத நாணயமாகின்றன.
சின்னத்தங்கச்சியும், அம்மாவும் வெறுப்பின் உச்சியிலே திக்பிரமை யடைந்தவர்களாக நின்றனர்.
போதும். நிறுத்துங்க. கொஞ்சம் வயதுக்கு மூத்த மனுஷி எண்டு இடம் கொடுத்தா. ஏதேதோ பேசிக்கொண்டு போநீங்களே!. உங்களுக்கு வேறவேலையில்லையா. போங்க உங்கட வேலையைப் பாத்துக்கொண்டு.- மலர் விறுவிறுவென்று வீட்டிற்குள் சென்று மறைகிறாள்.
2
மலர் உடைமாற்றிக்கொண்டு கண்ணாடி முன்னாள் வருகிறாள். உடல் அளவுக்குமீறி பருத்துக், கன்னங்கள் உப்பி, கன்னத்துச் சதைமேட்டில் ஆங்காங்கு விண்டுவரும் பயிராகும் பருக்கள் அழிந்த கருஞ்சுவடுகள் காய்ந்து உரிந்து தேமல் படரும், வெளிறிய உதடுகள்
சீ! அவளாலேயே அவள் முகத்தைப் பார்க்கமுடியவில்லை. '.ம் நான் இந்தியாவுக்குப் போகேக்க இப்படியா இருந்தன்! நான் இராமநாதன் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கேக்க எத்தனை வாலிபர்கள் காலையிலும், மாலையிலும் பின்தொடர்வார்கள் - .
-இப்பவும் அவர்கள் பேச்சும் நடத்தையும் நினைக்க, வேடிக்கையாக இருந்தாலும் மனதில் பசுமை கொழிக்கின்றது.
அவளுக்கென்ன ராசாத்திமாதிரி இருப்பாள். சீதனம்கூட வேண்டா மெண்டு கொத்திக்கொண்டு போக எத்தனைபேர் வருவாங்களண்டு இருந்து பாரன். என் மலர். தாண்டி. அவளுக்கேற்ற பேர் தாண்டி நான் வைச்சனான். அப்பாவுக்கு அவள் அழகைப்பற்றி ஒரே பெருமிதம், கர்வம் அவர் குடிமயக்கத்திலிருக்கும் போது அவள் எதிரில் வந்தால் போதும் அவ்வளவுதான். அவள் புராணம்தான்.
போதும் போதும். நீங்க இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் அவளைக் கெடுத்து வைச்சிருக்கிறியள். இப்பவே அவள் குசினிக்குப் போறாளில்லை. ஏனெண்டு கேட்டால் அப்பா போகவேணாண்டவர், கரிபிடிச்சுக் கறுத்துப் போயிருவன் எண்டு நான் மாட்டன் என்கிறாள் நல்ல பிள்ளையளைக் 140/செம்பியன் செல்வன்

குடிச்சுப்போட்டு வந்து கெடுத்து வையுங்க. நாளைக்கு அதுகள் எப்படிக் குடித்தனம் நடத்துங்களோ எண்ட கவலை உங்களுக்குக் கொஞ்சமாவது இருந்தாத்தானே!.அம்மாவின் கண்டிப்பு அப்பா பேச்சுக்கு
போடி' போடி உனக்கென்னடி தெரியும் என்ர பிள்ளையளைப் பத்தி அவளவையை யார் எண்டு நினைக்கிறாய்? இந்த வேலாயுதத்தின்ர மோளுகளெண்டா சும்மாவே- அவரை தன்னிலைக்கு கொண்டு வருவது, அம்மா பாடு பெரும்பாடு ஆகிவிடும்.
அந்தக் காலத்திலேயே சந்திரனுக்கு அவளில் கொள்ளை ஆசை. மலர். மலர். இங்க ஓடிவா! கெதியா வா. -சந்திரன் அழைக்க அவள் ஓடி வருகிறாள்.
‘என்ன சந்திரன்?. -என்று தன் பாவாடையை சற்று மெல்ல தூக்கிய வாறு கணுக்கால் தெரிய வண்ணத்துப்பூச்சியாகப் பறந்து வருகிறாள்.
‘என்ன சந்திரன் எதற்குக் கூப்பிட்டாய்?" 'உஷ் சத்தம் போடாத மூலையில் பாத்தியா. -சிவப்புப் பொட்டாக தம்பளப்பூச்சி.
ஆ. எவ்வளவு வடிவாக இருக்கு. வெல்வெட் மாதிரி. நான் தொட்டுப் பாக்கட்டா!.- ஆவலில் அவள் கண்ணின் கரு இமைகள் படபடக் கின்றன.
தொடாத. கூடாது. செத்துப்போயிரும். என்கிறான் அவன். 'சந்திரன்!. இது கடவுளின்ர வெத்திலைத் துப்பல்தானே?. அப்படியா?. யார் சொல்லிச்சினம் உன்னட்ட அப்படி. கடவுள் வந்து சொன்னாரா?'- கடகடவென சிரிக்கிறான். அவன் சிரிப்பில் அவள் லயிக்கிறாள்.
போடா! உனக்கு எப்பவும் கேலிதான் செல்லக் கோபம் அரும்பு கட்ட எவ்வளவு வடிவு. இல்லையா?. -அவள் இதழ்கள் மகிழ்வின் முகிழ்தலில் மாதுளை முத்தாகின்றது.
'ஓம் ஓம் மலர்1. உன்னைப் போல. 'ஆ இளமை நினைவுகள் எவ்வளவு இனிமையானது! அவ்வளவும் எனக்கு இன்று காட்சிப் பொருட்களா?
மலர் மலர்! நீ வெளியே வாம்மா. அந்த பொல்லாத இராட்சசி போயிட்டா. உதுகள் சொல்லுறதுக்கு நீ கவலைப்பட்டுக் கொண்டிருந்தா படிச்சநீயே இப்படி வந்து கோப்பியைக் குடி
-மலர் ஏன் வெளியே வருகிறாள்.
‘என்னவோ பிள்ளை!. எனக்குப் பயமாத்தானிருக்கு. நீதான் போப்போறன் எண்டு முட்டுக்காலில் நின்றாய்.
கன்னிக்கால் / 141

Page 79
‘என்னம்மா நீ நான் மட்டும்தான் தனிய இந்தியாவுக்கு படிக்கப் போறானா? எனக்கு முந்தி எவ்வளவு பேர் போய் வந்திருக்கினம் செல்லப்பற்ரமேள் கூடப்போயிற்றுத்தான் வந்தவ. அவவும் இப்ப பாதிரியாள் பள்ளிக்கூடத்தில படிப்பிக்கிறா. என்னோட இன்னும் நாலைஞ்சுபேர் வருகினம். நீ ஒண்டுக்கும் பயப்படாதயணை.
'நீ எத்தினைதான் சொல்லு! இந்த மனம் கிடந்து தவியாய் தவிக்குது. உனக்கென்ன தெரியும்? இவ்வளவுநாளும் உன்னை அங்கால இங்கால அயலுக்கக் கூடப் போகவிடாம வளத்து வந்தன்! இப்ப உன்னைத் தனிய கண்காணாத தேசத்திற்கு அனுப்பிறதெண்டா- அம்மாவின் முகத்தில் நீர் சரம் கோக்கிறது.
கொஞ்சநாள்தானே. மூண்டு வருசம் தானே! பஞ்சாப்பறந்துடும். நான் வந்து ஏதும் உழைச்சாத்தானே வீட்டைக் காப்பாத்தலாம்.
என்னவோம்மா. அவர் இருந்தா நான் உன்னை இப்படி அனுப்புவனே. இல்லாட்டி அவர்தான் சும்மா விடுவாரே. ஏதோ பத்திரமா போய்வா. அடிக்கடி எண்ணைதேய்த்து முழுகு. உடம்பைக் கவனிச்சுக்கொள். கடிதம் எழுது. என்ன.
'என்ன சின்னத்தங்கச்சி வரட்டே. சந்திரன் அத்தான் போயிட்டுவரட்டே. டாட்டார். டாட்டா.
4 அன்றுதான் மலர் முதல்முதலில் பணத்தைப்பற்றிய கவலையில் சிந்தனையிலாழ்ந்தாள்.
வீட்டிலிருந்து வரவேண்டிய 'மணிஓடர் வரவில்லை. அம்மாவின் கடிதம் வந்திருந்தது.
'.இந்த மாதம் எவ்வளவோ முயன்றும். முடியேல்லை அங்கினேக்க யாற்ற உதவியையெண்டாலும் பார். இந்த மாதத்திற்கு மட்டும். அடுத்த மாதம் அனுப்பப் பாக்கிறன். இங்க. வட்டிக்கார பொன்னம்மா கதிராமத்திற்கு போயிற்றா. மற்றாக்களிட்டக் கேட்டுப்பாத்தன். சல்லிக்காசு புரட்டமுடியவில்லை. 'ஹாஸ்டல் பீஸ். வண்ணான் கூலி. மற்றும் சில்லறைச் செலவுகள்." -மலர் மலைத்துப்போனாள்.
'ம். இந்த மற்றப் பெண்களால் எப்படி இவ்வளவு ஆடம்பரமாக செலவு செய்ய முடிகிறது. எனக்கு மாதம் நூத்தம்பது ரூபா வந்தும் பத்தவில்லையே. ஆனால் இவள் சியாமளா மாத்திரம் எப்படி கவலைப் படாமல். ஆடம்பரமாக இருக்கிறாள். வீட்டிலிருந்தும் அவளுக்கு ஒழுங்கா பணம் வாறமாதிரியும் தெரியவில்லை. ஆனால் எப்படி?. அவள்?.
-சியாமளா சொன்ன பதிலைக் கேட்ட அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலயிருந்தது. 142/செம்பியன் செல்வன்

'உண்மையாகத் தான் சொல்லுகிறாயா சியாமளா இதுக்காகத்தான் கடல் கடந்து வந்தனியா? வந்த இடத்தில் கற்றது இதுதானா?.
இதிலொன்றும் தவறில்லை மலர் எங்களுக்கோ அதிக பணம் இங்கு கொண்டுவரமுடியாது. அதற்காக ஊரிலே இருந்து பழகி வந்த தேவைகளையும் குறைத்துக் கொண்டு வாழமுடியாது. இதில் ஆண்களின் பலவீனத்தைநாங்கள் பாதிக்கப்படாம~ எமக்கு சாதகமாக்கிக் கொள்வதில் என்னடி தவறு. உன்ர அழகுக்கு நீ பணத்துக்காக கஷ்டப்பட வேண்டியே இருக்காது.
போதும் சியாமளா போதும். நீர் என்னோட இப்படிக் கதைகிற தென்டால் என் அறைக்கே வரவேண்டாம்.-மலரினால் வெம்மையைத் தாங்க முடியுமா? படுக்கையில் சுருண்டு விழுந்தாள்!
'ஆண்களின் பலவீனத்தை- நாங்கள் பாதிக்கப்படாமல் எமக்கு சாதகமாக்கிக் கொள்வதில் என்னடி தவறு?.
-முடியுமா?
ஏன் முடியாது, சியாமளா செய்யவில்லையா?.
'உன்ர அழகுக்கு. நீ பணத்திற்காக கஷ்டப்படவேண்டியே இருக்காது'
-அழகுக்கு விலை பேசுவதா, சீ. வேண்டாம். வேண்டாம் இந்த நினைவு. அப்படியானால் நாளை ஹாஸ்டலுக்கு எப்படிப் பணம் கட்டுவது..? யாரிடம் கடன் வாங்குவது? வாங்கினாலும் எப்படித் திருப்புவது?.
-நெஞ்சத்தின் மெல்லிய உணர்ச்சித்தசை நரம்புகளை, கோரக்கரங் கள். ப் இழுத்தெறிவது யார்?
நினைவுகளா?.
-அடுத்தநாள்.
-அவள் தனக்குத் தேவையான பணத்தை ஓர் நண்பரிடமிருந்து, பெற்று விட்டாள்
5
மலர் இரண்டாண்டின் பின், ஊருக்கு முதன்முறையாக வந்திருக்கிறாள். அக்கா. இந்தச் சேலை யாருக்கக்கா. நான் எடுத்துக்கொள்ளட்டே ஆவலின் ஒ கண்களில் பிரகாசிக்க சின்னத்தங்கச்சி அவளைப் பார்க்கிறாள்.
அதெல்லாம் யாருக்கு கொண்டுவந்தது. உனக்குத்தானே. நல்லா எடுத்துக்கொள். அம்மா இதைப் பாத்தியா?. இந்த கரைபோட்ட சேலை உனக்கு நல்லா இருக்குமணை1.
- அவள் பெட்டியில் கசங்கியும் கசங்காமலும் இந்திய நாட்டு கெட்டிக் கரையிட்ட பட்டுப் புடவைகள். விலையுயர்ந்த இந்தியத் துணிமணிகள் எல்லாம் இறைந்து கிடக்கின்றன.
கன்னிக்கால்/143

Page 80
'எணை பிள்ளை. எல்லாஞ்சரிதான். இதுகளுக்கெல்லாம் உனக்கேது காக?. இதுகள் மிகவும் ஊரிப்பட்ட விலையாயிருக்குமே. அம்மா கலலையுடன் கேட்கிறாள்.
மலரின் மனம் ஒரு கணம் நிலையாக நிற்கிறது! நீ அனுப்புற பணத்தில மிச்சம் பிடிச்சுத் தானணை இதெல்லாம் வாங்கி வந்தனான். எங்களுக்கு அங்கென்ன செலவு?.
நான் அனுப்புற பணத்தில நீ எங்கினேக்க மிச்சம்பிடிக்க முடியும்?. சிலவேளையில நான் அனுப்புறதில்லை. சிலவேளை நீயே பணம் வேண்டாம் எண்டு எழுதிவிடுறாய். பேந்து இதுகளுக்கும் உனக்கேதணை பிள்ள காசு. 'அம்மா அங்கினேக்க சில பிள்ளையஞக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறனான். என்ற சிநேகிதி ஒருத்தி நல்ல பணக்காரி. அவதான் வேண்டாம் வேண்டாம் எண்ட இதுகளைக் கொண்டுபோய் உன்ர தங்கச்சிக்கு என்ர அன்பளிப்பாகக் கொடெண்டு தந்துவிட்டவ.
‘என்னவோ பிள்ளை. எனக்கு ஏதோ பயமாக இருக்குது. அங்கின நீ தனியா இருக்கிறனி. புத்தியா பிழைச்சுக்கொள். அங்க படிக்கப்போற பிள்ளையளப்பத்தியெல்லாம் பலரும் பலவிதமாப் பேசுகினம். அதுக்கு நீ இடம் கொடுத்து நடந்திடாதை!.
அம்மா. -மலரின் கத்தலைக் கேட்டு சின்னத்தங்கச்சி ஓடி வருகிறாள்.
6
ஹாஸ்டலின் கட்டிலில் மலர் படுத்துப் புரண்டுகொண்டிருக்கிறாள். அவள் கண்பார்வை, எதிரேயுள்ள கலண்டர் தேதித்தாள்களை மேய்கின்றன.
மனம் அலைகடல் தெப்பமாகி அலைப்புறுகிறது.
நாலேழு இருபத்தெட்டு. என்ர நாள் கணக்கில இருபத்தொம்பது முப்பதிலேயே வந்திருக்கோணுமே!. இண்டைக்கு ஆறாம்தேதி. ஒருகிழமையாயும். இன்னும். ஏன். எனக்கு. எப்போ. வரவேண்டியது."
-அவள் வயிற்றுள் பாதரசமணிகளாக, எதுவோ உருள்கின்றதாக பிரமை. புழுக்கள் நகர்கின்றனவா?.
ஒருவேளை. ஒருவேளை. அப்படியிருக்குமோ. அண்டைக்கு கமலபதியோட. நான் அப்படி நடக்க இடம்கொடுத்திருக்கக்கூடாது. அவசரக்காரன. சனி வரட்டும். நான் மாட்டன் மாட்டன் பயமா இருக்கெண்டு சொல்லச் சொல்ல. சீ.
டக். டக். யார் கதவை தட்டுவது
சியாமளா!. சியாமளா புருவத்தை சுருக்கி நெரிக்கிறாள். 'ஓ!. அப்படியா இவ்வளவு அவசரமா உனக்கு. சீ!
நல்லவேடிக்கைதான். நான் என்ன சொன்னனான். எங்களைப் பாதிக்காம நட 144/செம்பியன் செல்வன்

எண்டு தானே சொன்னனான். பரவாயில்லை இதுக்காக ஒனர்டும் பயந்து சாகாதை. பொறு வாரன்.
மறுநாள் மலருக்குப் பயப்படவேண்டிய அவசியமே ஏற்படவில்லை. தொய்யக்கட்டிய ஈரக்கூந்தலில், சிவப்பு றிபன் எழிலூட்ட அவள் விரிவுரைக்குச் செல்கின்றாள்.
7 மலர் பட்டம் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டாள். இதென்னபிள்ளை இந்தக் கோலம். என்று அன்னம் திடுக்கிடுகிறாள். ‘என்னம்மா!. இதென்ன முன்னை இருந்தமாதிரியே இருக்கிறாய்?. உடம்பு முகம் எல்லாம் ஊதி. இதென்னபிள்ள முகத்தில பருக்கள் இப்படி அள்ளிப்போட்டுக் கிடக்குது?. உனக்கென்ன அந்த சுவாத்தியம் ஒத்துவரேல்லியா.
இயற்கைக்கும், நவீன செயற்கைத் தடுப்புமருந்துகட்கும் நடக்கும் போரில், செயற்கை வெற்றிகண்டாலும் அவை இயற்கையின் வளர்ச்சியில் பலத்த மாறுதல்களை ஏற்படுத்தி இயற்கையையே விகாரப்படுத்திவிடுகின்றன என்பதைதே நீ அறிவாயா அம்மா' என அவளால் கேட்ட முடியுமா?
இந்த உடம்பை ஒருக்கா. உந்தப் பரியாரி சின்னத்தம்பியிட்ட கொண்டுபோய் காட்டு. அந்த மனுஷன் ஏதாவது மருந்து தரும்.
இதென்னம்மா இது. பரியாரிட்ட காட்ட நோயா நொடியா?. சும்மா வியாதியில்லாம எதைப்போய்க் காட்டுறது?.
'இதென்னடிநீ பேசறது. உடம்பை கொஞ்சமெண்டாலும் கவனிச்சனியே. நான் அதுதான் அடிக்கடி எழுதினன். வெள்ளி தவறாம எண்ணை வைத்து முழுகு. எண்டு. நான் சொன்னபடி கேட்டாத்தானே?. நீ எண்டைக்கு என்ர கையவிட்டு நழுவினியோ அண்டே உன்ர உடம்பும் போச்சு. எல்லாம் போச்சு.
‘என்னணை நீ!. உடம்புடம்பெண்டு. போதும் சும்மா இரு கொஞ்சநேரம்.
இந்த அதட்டல் ஒண்டுதான் தெரிஞ்சது. நாளைக்குக் கலியாணமாகப் போறன். ஏதோ எனக்கு தெரிஞ்சதைச் சொன்னன். அன்னம் குசினிக்குள் நுழைகிறாள்.
8
வாங்க அத்தான்!. இப்பதான் கடையால வாறியளா?. வீட்டுக்குப் போகாம இங்க வாரீயள் போல கிடக்கு. இருங்க கோப்பி கொண்டாரன். என்று சின்னத்தங்கச்சி யாரையோ வரவேற்கும் ஒசையில் திரும்பும் கண்களின் பார்வையில் படுவது சந்திரன்.
கன்னிக்கால்/145

Page 81
'சந்திரன் படிக்காட்டி என்ன. படித்தவர்கள் சம்பாதிக்கிறதைவிட கூடச் சம்பாதிக்கிறான். பெண்களைக் கவரும் ஆண்மை அழகு நிறம்பியவன். ஆனால் அவனை மணக்க எனக்கு தடையாக நின்றது எது?.
காற்றில் கரைந்துறையும் ஒலியலையை தன்னுள் அடக்கி ஒலிபரப்பும் டிரான்சிஸ்டர் ஆகின்றது மனம்.
'சின்னத்தங்கச்சி இதைக் கவனமா பாத்துக்கொண்டு வார். இது நல்லத் தழைச்சி செழித்து வளந்தா உனக்குத்தான் நல்லது. வம்சம் தழைக்க. இது நல்லா இருக்கவேணும். தங்கம்மாவின் குரல் ஒலித்து, மன அலைகளை கிளப்புகின்றது.
நான் அவனை மணந்தா அவன் வம்சத்தை தழைக்கச் செய்ய என்னால முடியுமா? அவன் என்னை விரும்புகிறான் எண்ட காரணத்தால மட்டும். ஒரு அப்பாவியின் வாழ்வை. அவன் வம்சத்தை அவன் வாழ் ‘வோடையே அழித்துவிட முடியுமா? என்தாய்மைக் கலசத்தில் தான் நஞ்சு
கலந்து விட்டதே?
அதில் இனி எந்த உயிர்ப்பூச்சியும் தோன்றமாட்டுதே. எனக்கு. என்னால் ஒரு பிள்ளைக்கு தாயாக முடியாதே.
நெஞ்சை ஏதோ குப் என்று அடைக்கிறது. மிஸ் நீங்க இனி தாய்மைப்பேறு உண்டாக வழியில்லை! நீங்களே உங்களை. சீ. உங்களைப் பெண்ணாகவே என்னால் மதிக்க முடியவில்லையே!.
ஒருமுறை வயிற்றில் ஏதோ நோய் ஏற்பட்டு, தன்னை ஒரு "லேடி டாக்டரிடம் சியாமளா அழைத்துச் சென்றபோது லேடிடாக்டர் கூறிய வார்த்தைகள், அவள் இல்லற ஆசைகளை நாராகக் கிழித்தெறிகின்றன.
நான் போயிட்டுவாரன் மாமி. சும்மா உங்களைப் பாத்துட்டுப் போகத்தான் வந்தனான். சரி அப்ப வாரன். என்று விடைபெற்றும் சந்திரன் விழிகள் ஜன்னலூடாகச் சென்று அவளின் பார்வையில் முட்டிமோதிக் கலக்கின்றது. அவன் குனிந்த தலையுடன் தெருவைநோக்கி நடக்கின்றான். அவள் வெளியே வருகின்றாள். கன்னிக்காலையே உற்றுப்பார்க்கிறாள். அவள் விழிகளில் உதிரும் நீர்த்தாரைகள் கன்னிக்காலிடம் பாவமன்னிப்புப் பெறுகின்றனவா?.
6ჩT(წყნაყfiმ 12-01-1964
146/செம்பியன் செல்வன்
تمنح

W6 a○えらグーラスフ
கிலையில் சாப்பிட்டுவிட்டு, சைக்கிளையும் எடுத்துக்கொண்டு போன அவனை, நேற்று முழுவதும் காண வில்லை என்பதனை வீட்டார் உணரத் தொடங்கித் தேட ஆரம்பிக்கும் போதே இருள் கவிழ்ந்து விட்டது.
நேரகாலத்துக்குச் சாப்பிடவும் வராம தம்பியருக்கும் அவ்வளவு வேலை? எங்க யோ சினேகிதர் மாரோட கொட்டமடிக்கிறார் போல. வரட்டும். வரட் டும். படிப்பா.கிடிப்பா ஒண்டு மில்லை. ஏயல் பாஸ் பணிணோனும் எண்ட சிந்தனை எப்பனும் இல்லை. எல்லாம் அவற்ற எண்ணம் தான். என்று மத்தியா னம், அவனைச் சாப்பாட்டிற்குக் கூட முடியவில்லை என்ற கோபத்தில் அம்மா சீறியது இவள் நினைவுக்கு வந்தது.
கொஞ்சநாட்களாக அவன் நடத் தையே புரிவதில்லை. வேளை கெட்ட நேரத்திற்கு வருவது. காலையிலும் எங்கோ எவருக்கும் சொல்லாமல் புறப் பட்டுப்போய் பத்துப் பதினொரு மணிபோல் திரும்பி வருவதும். பிறகு குளித்துச் சாப்பிட்டுவிட்டு உடனே புறப்பட்டு விடுவதும்.
trafghsdh / 147

Page 82
இவன் எங்கே போய் வருகிறான்? ஒருவேளை?
கோட்டை அடிபாடு தொடங்கியபின் பாடசாலைகள் எல்லாம் மூடுண்ட நகரமென
மாணவர்கள் எல்லாம் எ வானார்கள்?
கண்மூடித்தனமாக பாடசாலைகள், நகரங்கள், வியாபார நிலையங்கள், ஆஸ்பத்திரி என ஷெல்' குண்டுகள் மழைத்துளிகள் என விழுந்து மனித மணங்களைக் கழுவிப் புதைக்க.
அன்றும் அவன் புறப்பட்டபோது ‘எங்க வெளிக்கிட்டிட்டாய்?" என்று அவள் கேட்க அவன் முகம் விரக்தியில் சிரித்தது போலிருந்தது.
இந்த அடிபாட்டுக்க எங்க போறது?
'வீட்ட இருக்கிறதுதான?
'வீட்ட இருந்து என்ன செய்யிறது?
குண்டுகிண்டு விழுந்தா பொம்மர்கள் வந்தா பங்கருக்குள்ள ஒடலா மெல்ல' 4.
பங்கருக்கு மேலேயே குண்டு விழுந்தா? அப்படி எத்தனையோ இடத்தில் விழுந்திருக்கு தெரியுமே?”
அப்படிப் போற உயிர் போகட்டுமே? -அவள் எரிச்சலுடன் கூறினாலும், அவனை வியப்புடன் நோக்கினாள்.
இப்ப எங்க போறாய்.?
‘என்ன அக்கா இப்படிக் கேக்கிறாய்?
இல்ல. நீ கோட்டைப் பக்கம் போறதா கேள்விப்பட்டன்' அவன் முகத்தில் மெல்லிய கலவரம் தெரிந்தது.
- 'ஆர் சொன்னது? மெதுவாப் பேசு!"
அப்ப சொல்லு. உண்மையே
-அவன் அவளருகில் வந்து அமர்ந்தான்.
அக்கா என்ர பிரெண்ட்ஸ் எல்லாம் அங்கநிண்டு அடிபடுறான்கள். பாடசாலைகள் எல்லாம் மூடிக்கிடக்கு. அதைத் திறக்கத்தான் இந்த அடிபாடுகள், இப்ப நான் ஏயெல் எடுத்தாப்போல பல்கலைக்கழகம் கிடைச்சிடுமே? ஷெல் அடிச்சு அடிச்சு எத்தனை பாடசாலைகள் அடியுண்டு கிடக்கின்றன. ஹாட்லி, வேலாயுதம். சென்றல், வேம்படி. இவையெல்லாம் எப்ப இயங்கப் போகின்றன. அவனுக்கு பதிலடி கொடுக்காட்டி எங்கடை இனத்தை மட்டுமே. எங்கட பண்பாடுகளையே அழித்துவிடுவான்கள். லைப்ரரியை எரிச்சு. ஒரு லட்ச நூல்களை எரிச்ச பாவிகள். ஆர்மேல போரைத் தொடுத்திருக்கிறாங்கள் பார்த்தியே? மாணவர்கள் மீதுதான்.
- அதுக்காக. நீ என்ன செய்யப் போகிறாய்?. -அவனை ஆழமாக நோக்கினாள். 148/செம்பியன் செல்வன்

-அவன் சிரித்தான். நீ நினைப்பது மாதிரி இல்லை. அந்தளவுக்கு போக எவ்வளவோ பாடுபட வேண்டும். எங்கட பொடியள் அவங்கள் கோட்டையால வெளிவராமலிருக்க கோட்டையை முற்றுகையிட்டுருக்கினம். அவர்கள் கவனம் கொஞ்சம் திரும்பினாலும் போதும். எதிரி வெளியே வந்து விடுவான். அவர்கள் சாப்பாட்டிற்காகக் கூட வெளிவர முடியாது. அவர்களுக்கு உணவு வழங்க. கொண்டு செல்ல. நாங்கள் உதவுகிறோம். அம்மாட்ட சொல்லாத. கேட்டா உயிரையே விட்டுவிடுவா..?
- 'சாப்பாடு கொண்டு போகைக்கே ஏதும் ஆபத்து.? - ரிஸ்க் தான் இதுகளைப் பார்த்தால் போராட்டம் நடத்திறது எப்படி? என்றபடி அவன் எழுந்து போனான்.
அப்படிப் போனவனைத்தான் காணவில்லை. - பிள்ள உனக்கேதும் தெரியுமே?. -அம்மா அவளைச் சந்தேகத் துடன் கேட்க, அவள் தலையசைத்தாள். அம்மாவின் சீற்றம் அவள் மேல் UTiji;5g).
நீயும் சரியான அமசடக்கி. உனக்குத் தெரியாம இராது. உனக்குச் சொல்லாமலும் இரான். அக்காவும் தம்பியும் அறையில் இருந்து குசுகுசுக்கிறது எனக்குத் தெரியாது என்ற நினைப்பு.
அப்பா குறுக்கிடுகிறார். 'ஏன் இப்ப அவளில பாயிறீர்? அவளும் வீட்டுக்குள்ளதானே இருக்கிறாள்.'
அப்பொழுது வெளியிலிருந்து யாரோ கூப்பிடுகிறார்கள். - கொஞ்சம் பேசாமலிரும் அப்பா வாசலுக்குப் போகிறார். அவள் பின் தொடர அம்மாவும்.
'ஜெகனின் வீடு. -தயக்கமான குரல். 'ஓம் தம்பிமார். என்ன விசயம்?. - அவர்களின் வாயிலிருந்து தயக்கம் தயக்கமாக. -அம்மா ஐயோ அலறிமயங்கிவிழ. அவர் எங்க க்கு உணவு கொண்டுவந்து விட்டு வெளிய வரும்போது சினைப்பர் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். அவற்ற பொடி கொஞ்சம் எட்டக் கிடக்குது. எடுக்கேலா. இப்ப அவங்கள் விழிப்பாக இருக்கிறாங்கள். கொஞ்சம் நள்ளிரவுக்கு பின்னால் இருட்டிலதான் போய் எடுக்க வேணும். எப்படியும் இரண்டு மூண்டு மணிக்குள்ள பொடியைக் கொண்டந்திடுவம்.
அவர்கள் போக- விடயம் எப்படிப் பரவியதோ? ஊர் உறவு, நட்பு என வீடு நிரம்பியது. பெடி'யைக் கெளரவப்படுத்து வதற்கான ஏற்பாடுகளை யார் யாரோ செய்து கொண்டிருந்தார்கள். அவள் மனிதர்கள்/149

Page 83
கனத்த நெஞ்சத்துடன். ஆயினும் அடிக்கடி இவர்கள் எல்லாம் எங்கள் உறவா? இவ்வளவு பெரிய உறவு எப்படி வந்தது? போராட்டத்தாலா? தம்பி இந்த உறவுகளுக்குத்தான் உயிரை விட்டானா?
இந்தப் பொடியனைக் கண்டு அடிக்கடி சொல்லுறனான். தம்பி உந்த விசர் வேலையை விட்டு விட்டுப் பேசாமப்போய்ப் படி எண்டு கேட்டாத்தானேமாமாவின் குரல் கேட்கிறது.
'உந்தப் பெரிய இராணுவத்தை இவையள் எதிர்த்து வெல்லப் போகினமாம். அரசுக்கு எத்தனை நாடுகள் உதவிகள் செய்யும். இந்தக் காலப் பெடியளுக்கு கொஞ்சமும் சிந்தனையில்லை, இது பெரியப்பாவின் குரல்.
இல்லா விட்டால். இப்ப பாரன் உயிரையும் கொடுத்து உடம்பையும் எடுக்க முடியாமல். மாமி மெதுவான குரலில்.
இப்பத்தப் பிள்ளைகளுக்கு எப்பனெண்டாலும் பெரியவையின்ர பேச்சைக் கேக்கிற பழக்கமில்.ை இப்ப உவர் என்னத்தைப் பெரிசாய் செய்து கிழிச்சுப் போட்டார்?.
அது சரியப்பா. பொடி நேற்று செத்திருக்கு- இன்டைக்கு இரண்டாம்
நாள். அப்ப எட்டுச் செலவு நாளைக்கே நடத்த வேணும்?.
ஓமப்பா அதுக்கு நெறையச் செலவாகும். இப்ப உன்ர கொண்ணிட்ட கொஞ்சம் பணம் தட்டுப்பாடு. உம்மட்டக் கதை விடுவார். கவனம். கையில காசு இல்லை அவரிட்ட எண்டு சொல்லிப்போடும்.
"செத்தபொடி இருக்கிறானே வாய் ருசிக்காரன். அவன் சாப்பிடாத பொருட்களே இல்லை. ஆடு மாடு. கோழி, சுறா, திருக்கை எண்டு எல்லாம் வாங்கிப் படைக்க வேணும். எட்டுச் செலவிலதான் கனநாளைக்கு பிறகு வாய்க்கு ருசியா ஒரு வெட்டு வெட்ட வாய்ப்பு - பெரியப்பா சொல்ல தங்களை அறியாமல் சிரித்து பின் அடங்குகிறார்கள்.
அவள் நெஞ்சம் கொதிக்கிறது. நாட்டு நடப்புகளோ. இழப்புகளோ. அவற்றின் பெருமைகளோ ஒன்றையுமே விளங்கிக்கொள்ள முடியாத வெறும் கிணற்றுத் தவளைகள். ஊரே பத்தி எரிஞ்சாலும் தங்கள் மடிகளை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு பிலாக்கானம் பாடும் நடுநிசி ஆந்தைகள். ஆர் ஆரோவெல்லாம் வந்து. ஊரே கூடித் துக்கத்தில் கலந்துகொள்ள. இந்த இரத்த உறவுகள் என்ன வெல்லாம் பேசுகின்றன.
அவள் வெளியே வந்தாள். மாமா. மாமி, பெரியப்பா தயவு செய்து இண்டைக்குப் போய் விட்டு எட்டுச் செலவுக்கு வாங்கள். நாங்களே சொல்லியனுப்புகிறோம்.
வாசலில் வாகனம் ஒன்று வந்து நிற்கும் ஓசை கேட்கிறது.
-நான்- சித்திரை 1995
150/ஆெம்பியன் செல்வன்
ܛܠ

A.
2,27217
நிசி நிலவு வானத்தைத் தெளி வாகத் துடைத்து விட்டிருந்தாலும். அங் கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்த வெண்முகிற் கீற்றுக்கள் விபூதிப் பூச்சாகத் தெரிந்தன. பரிவட்டத் தடாகத்தில் அரசோச்சிய நிலவின் கதிர்கள் மரக்கிளை களினிடையே புகுந்து நிழலையும் ஒளியை யும் அளித்து, பரமாத்மாவுடன் சீவாத்மா கலக்க எடுக்கும் முயற்சியின் பிரதிமையாக விளங்கின. தெப்பக்குளத்தின் தெளிந்த நீரில் கோபுரக் கலசம் நிலவுக் குடையில் செங் கோலோச்சுவது எழிலார் கோலமாகத் தெரிந்தது. தெளிந்த நீரும், நீலவானும் முற்றுமுணர்ந்த ஞானிகளின் மெளன உரையாடலில் தம்மை மறந்திருந்தன.
உடைந்த மதிற் சுவரும், இர விலும் வெண்ணகை உதிர்க்கும் அலரி மரங்களும் கோயிலின் சுற்றுப்புறத்தை நிறைவு செய்துகொண்டிருந்தன. கால வெள்ளம் அடித்துச் சென்ற வண்ணப் பூச்சுக்களும், மணலில் விழுந்த மழைத் துளிப் பள்ளங்கள் போன்ற உடைவுச் சிதைவுகளும், மூளிச் சிற்பங்களும்

Page 84
கோயிலின் தொன்மையைக் கலையழகுடன் உணர்த்தி, மூர்த்த லிங்கத்தின் சிறப்பினைத் துலக்கிக் காட்டின. அதே வேளையில் சமீபகாலத் தேர்தல் விளம்பரங்கள், கரிக்கட்டியால் 'வாழ்க' -என யாரோ காசுக்காக வாழ்த்தியிருந்த எழுத்துக் கிறுக்கல்கள் நவீன உலகுடன் கோயில் கொண்டிருந்த தொடர்பினை விளக்கின.
கோயில் மண்டபத்தின் ஒரு மூலையில், நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சகடையொன்றின் பக்கத்தில் ஒரு நெடிய உருவம் படுத்துக் கிடந்து நெளிவது மங்கிய ஒளிப்பரப்பில் தெரிந்தது. அந்த உருவம் படுத்திருந்த மூலைக்குச் சற்றுத்தள்ளி, ஆண்டுகள் பல கண்ட வில்வமர மொன்று சடையாகக் கிளைபரப்பிக் குடையாகக் கவிந்திருந்தது. அம்மரத்தி னடியில் மூன்று கற்களினாலான அடுப்பொன்றில் சாம்பல் நிறைந்து கிடந்தது. கோவிற் பூனையொன்று சாம்பல் மேடான சப்ரமஞ்சக் கட்டிலில் சுகமான தூக்கம் கண்டுகொண்டிருந்தது. அதன் அருகே ஒரு மட்யானையும், இரண்டு மூன்று சட்டிகளும் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. ܀
நிசிநிலவு- வைகறை நிலவாகப் பரிணமித்துக்கொண்டிருந்தது. படுத் திருந்த உருவம் சோம்பலை முறித்துக்கொண்டு முருகா என்றபடி எழுந்தது. ஆலம் விழுதாகித் தொங்கும் நீள் சடையும் ஒளியுகூட உட்புக முடியாத அடர் தாடியும், நீர்க்காவியேறிய நான்கு முழத் துண்டும் திறந்த மேனியும், அடைபடாத வேலிக் கதிகால்கள் போன்ற விலா எலும்பு வரிச்சுக்களும், நீர் வற்றிய குளமாக எக்கிய வயிறும் நிலவொளியில் விசித்திரமாகத் தெரிந்தன. உருவம் மண்டபத்தை விட்டு வெளியே வந்தது. வானத்தையும் நிலவில் குளிக்கும் நிலத்தையும் சுற்றுப்புறங்களையும் வெறிக்க வெறிக்கப் பார்த்தது. கண்ணின் கருமணியினுள்ளே ஆனந்தக் களிப்பு கனிகளாகத் திரளலாயிற்று. கண்ணில் கனிந்த கனிகள் கனியக் கனிய, அமுதச் சுரப்பு நெஞ்சிலே ஊற்றுக்கண் திறந்து, வெள்ளமாகத் தேங்கலாயிற்று. அமுத வெள்ளத்தில் இதயம் தோயத்தோய அமுதுண்ட வெறி தலைக்கேறத் தொடங்கியது. அதன் மனம் எங்கோ. எதிலோ ஒன்றலாயிற்று. அதன் கண்டம் மெல்லத் திறந்தது. உதடுகள் மெல்ல மெல்ல அசையலாயின. அர்த்தம் புரிந்த பக்தனின் உச்சாடன மந்திரம் போல் வர்த்தைகள் தங்கு தடையின்றி வரலாயின. அவை என்ன? எந்த மொழியில் வருகின்றன? அனைத்துலக மொழிகளின் உந்நத சேர்க்கையா? மயக்கவுணர்வின் சிதறலா? அகவுயிரின் புலம்பலா? தெய்வ தரிசனத்தின் பக்திக் களிப்பின் பிதற்றலா? பித்தனின் உளறலா? உலகின் பல்வகை இசைகளையெல்லாம் உள்வாங்கி வெற்றிக்கொண்ட பேரோசையால் அந்தப் பிரதேசமே- அந்தக் கணநேரங்களின் நகள்வில் வெருட்சி கண்டனவா? மனமகிழ்ச்சி கொண்டனவா? 152/செம்பியன் செல்வன்

எதை- யார்- எப்படி அறிவது?
ஆனந்தக் களிப்பு மிக்கூர, அது ஆடியது, பாடியது, ஓடியது, சிரித்தது. மண்ணில் புரண்டது, மண்ணை அள்ளி மேனியெங்கும் பூசியது, கோவில் பிரகாரத்தைச் சுற்றிச் சுற்றி. ஓடியோடி வலம் வந்தது. வானத்துடன் ஏதோ பேசியது. இதயம் விரிய நகைத்தது.
மேனியெங்கும் வியர்வை ஆறாக ஓடியது. மண்ணில் கலந்தது. மண்ணும், வியர்வையும்- மேனியும் கசகசப்பும் - அதன் ஆனந்தக் குளத்தில் எறிகல்லாக விழுந்தன போலும், ஒடிச்சென்று தெப்பக்குளத்தில் விழுந்தது. எதனையோ தேடும் வேட்கையில் நீரைக் குடைந்து குடைந்து முக்குளித்து ஆடியது. நேரம் மெல்ல மெல்லக் கழிந்துகொண்டிருந்தது. மேனியினின்றும் நீர்த்துளிகள் வயிரமணிகளாய்ச் சிதறி ஓட, குளத்தை விட்டு வெளியேறியது.
காலை கட்டியம் கூறிக்கொண்டே புலர்ந்துகொண்டிருந்தது. அதன் உள்ளத்தில் ஏதோ அமைதி நிறைந்திருப்பது போன்ற பிரகாசத்தை முகம் காட்டியது. ஈரத்துண்டை பிழிந்து கட்டியவாறு, கோயிலின் வாசலில் தொங்கிக் கிடந்த சங்கிலிருந்து திருநீற்றை அள்ளி உடலெங்கும் பூசியது. சந்தனத்தை கை மணக்க மணக்க அரைத்துப் பூசிக்கொண்டது. அலரிப் பூக்களைப் பறித்து இரு காதுகளிலும் செருகியது.
கோவிலை மீண்டும் வலம் வந்து மூலஸ்தானத்திலிருந்து வழிபட்ட போது அதன் வயிற்றினின்றும் ஏதோ வினோதமான சப்தங்கள் கடகட'வென எழலாயின. வயிற்றை யாரோ பலமாகப் பிசைவது போன்ற வேதனையில் நரம்புகள் புரளலாயின. சிறுகுடலைப் பெரும் குடல் விழுங்கும் முயற்சியா? அது தன் வயிற்றை ஒருமுறை தடவி விட்டுக்கொண்டது.
'.ம்..ம். ஒரு ரெண்டு நாளைக்குச் சாப்பாடு இல்லையெண்டா இந்தப்பாடு படுத்துறாய்..? உன்னால் சும்மா கிடக்கேலாம இருக்கா. அப்படித் தானா. இரு. இரு. நானும் பாக்கிறேன். நீ என்னதான் செய்திடுவாயெண்டு. உலகத்தில ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு வகையான பசி. உனக்கு வயிற்றுப் பசி. வயிறே சும்மா இரு. சும்மா இருத்தலே சுகம். நீ சும்மா கிட.
உருவம் கோவிலை விட்டு வெளியேறியது.
2
கோவிலை விட்டு தெருவில் இறங்கி வடக்கு மூலையில் திரும்பிப் பிரதான தெருவில் காலடி பதிக்கும்போது, தேநீர்க்கடை முருகேசுவின் கடையில் இருந்து காலைப் பலகாரங்களின் மணமும், அப்போதுதான் கொதி எண்ணையில் துள்ளிக்கொண்டிருக்கும் வடையின் நறுமணமும் அவர் நாவில் நீரூற துறவி /153

Page 85
வைத்தன. கடையில் அமர்ந்திருந்து முருகேசு விரைவாக ஆசனத்தை விட்டு வெளியே வந்து. "வணக்கம் சாமியார்' எனக் கைகூப்பினார். அவர் மனதில் மெல்லிய சலனம் ஒரு கணம் தோன்றி மறைந்தது. முருகேசுவைக் கேட்டால் தயங்காமல் உணவு கொடுப்பான் என்ற எண்ணமும் எழுந்தது. மறுகணம் மனதில் எழுந்த எண்ணங்களை கையிலேறிய அருவருப்பான புழுவை எட்டி உதறி எறிவதுபோல் தள்ளிவிட்டார். சலனத்தை ஏற்படுத்திய முருகேசுவின் மேல் காரணமற்ற கோபம் எழுந்தது. அவனை ஒருகணம் முறைத்துப் பார்த்துவிட்டு ஆய்ங். என்ற உறுமலுடன் அவரைக் கடந்து சென்றார்.
‘சாமியாருக்கு இரவில வழக்கமா வாற கலை இன்னும் போகேல்லப் போல கிடக்கு' என்று கூறியவாறு பலகாரக் கண்ணாடிப் பெட்டியைத் துடைக்கலானார்.
சாமியாரின் வழக்கமே அப்படித்தான். மனம்போனபடி நடப்பார். எங்கே போகிறோம்? ஏன் போகிறோம்? -என்ற சிந்தனையே எழுவதில்லை. ஒரு வேளை இந்த மண் உலகில் போவதற்கே இடமில்லை என்ற எண்ணமுமாய் இருக்கலாம். சில நாட்களுக்கு உறவையே மறந்துவிடுவார். அவருக்கும் மனதுக்குமிடையே எப்போதுமே போட்டி நிகழ்ந்துகொண்டிருப்பது எவருக்குமே தெரியாது. அந்தப் போட்டியின் வேகாரத்தில் அவரின் நடை வேகம் அதிகரிக்கும். அந்த வேகம் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு போதும் தடைப்படுவதில்லை. பரபரப்பான, சந்தடி மிகுந்த பிரபஞ்ச இயக்கங்கள் எதுவும் அவரைத் தடைசெய்ய முடிவதில்லை. தாமாக நினைத்துக் கொண்டால் வழியில் தென்படுபவர் யார் முன்னாலாவது போய் நிற்பார். 'உனக்கு இப்போது காலம் சரியாய் இல்லை. இயந்திர விபத்துக்கள் ஏற்படலாம். கவனமாக நடந்து கொள்' என்றும் கூறிக்கொண்டே நடந்து விடுவார். கேட்டவர் வியப்பால் திகைத்து நிற்பார். இவரின் இச்செயல்களால் மக்களுக்கு அவரிடம் ஓர் அநுதாபம் - அவர் தம்மீது செலுத்தும் அக்கறை காரணமாக இருக்கலாம். -பயபக்தி, மரியாதை எல்லாம் உண்டு. சாமியாரின் நடைமுறைகள் அவர்களின் பயபக்தியை மேன்மேலும் அதிகரிக்க வைப்பதாக அமையும்.
சாமியாரின் நடை தடைப்பட்டது. வழியில் பிள்ளையார் கோயில் தென்பட்டது. அமைதியில் பிள்ளையார் கோயில் ஆழ்ந்து கிடந்தது. காலைப் பூசையை முடித்துக்கொண்டு ஐயர் கோயிற் கதவுகளை இழுத்துப் பூட்டிக் கொண்டு போய்விட்டார். அவருக்கு பல கோயில் பூசை உண்டு. இனிமேல் மத்தியானப் பூசைக்கே ஐயர் வருவார். சாமியாருக்கு ஆறுதலாக இருந்தது.
கோயிலை நோக்கி நடந்தார். கோயில் மண்டபத்தூண் அருகே குளிர்ச்சியாக இருந்தது. அங்கேயே அமர்ந்தார். கண்ணை மூடியவாறு ஏதோவோர் இலயிப்பில் மனதை
154/செம்பியன் செல்வன்
*

செலுத்தியபோது உடலும், மனமும் இலேசாகி, எங்கோ பறப்பது போலிருந்தது. அந்தச் சஞ்சாரத்தில் அவர் தன்னை மறந்தார்.
‘சாமியர் என்ர மகளுக்கு இனி எப்ப நல்ல காலம் வரப்போகுது என்ற குரல் அருகிலே கேட்டபோது அவரின் மனோலயம் கலைந்தது. சினம் சிறிது கண்களிலே தெறித்தது. ஆனால், வெகுநேரம் கழித்து- மதிய பூசையும் முடியும் தருணமாகிவிட்டதை உணர்ந்தபோது அவர் சினம் சற்றுத் தணித்தது. எவ்வளவு நேரமாக இருந்திருக்கிறேன்? அவர் மெளனியாக விழிப்பதைப் பார்த்து மீண்டும் அந்த வினா திக்கற்ற நிலையில் எழுந்தது.
‘சாமி. எவ்வளவு காலம்தான் என்ர மகள் இப்படியே கன்னியாகக் காலம் கழிப்பது. இவளுக்கு விடிவே இல்லையா? நாங்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் கொடுக்கல், வாங்கல் விசயத்தில் முறிந்து போகிறதே."
-அவர், அவர்களைப் பார்த்தார். ஒரு தாயும் மகளும், கோயில் பிரசாதத்துடன், கவலை தேங்கிய முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள். மகள் மங்கைப்பருவம் தாண்டி. மடந்தைப் பருவத்தின் தலைவாசலில், இன்னமும் கன்னி கழியாமல் நின்றுகொண்டிருந்தாள். சாமியாருக்கு அவர்களைப் பார்த்ததும் அவர்களின் பூர்வோத்திரமெல்லாம் கண்களில் எழுந்தது போல் இருந்தது.
மகளே! நீ ஒண்டுக்கும் பயப்பட வேண்டாம். இவ்வளவு காலமும் உன் மகளுக்குச் சனியின் பார்வை இருந்தது. இப்போது அது நீங்குகிற காலம் வந்துவிட்டது. அத்தோடு உனக்கொரு உதவியும் எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும். அது வந்தா உன்ர மகளின்ர சுபகாரியம் எந்தவித விக்கினமும் இல்லாம நடந்தேறும்.
அது எதற்கிடையில் சாமி நடக்கும்?" ‘எல்லாம் இந்த ஆவணிக்குள் நடந்துவிடும். நீ ஒண்டுக்கும் கவலைப் படாம போய் வா
-அவர்கள் முத்தில் நெஞ்சின் நிம்மதி ஒளியாய் படர, அவரை வணங்கிக் கொண்டு போய்விட்டனர். கோயிலின் சந்தடி முற்றிலும் மீண்டும் அடங்கி விட்டது. அவர் தனது பார்வையை மண்டபத்திற்கு வெளியே மேயவிட்டார்.
உச்சி வேளை, தெருவில் அனலலை எழுந்து கொண்டிருந்தது. தெருவைச் சார்ந்து கோயிலின் முன்றலில் ஒரு வாகைமரம் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது. மரத்தினடியில் வெள்ளாடு ஒன்று படுத்தபடியே அசை போட்டுக்கொண்டிருந்தது. தூரத்தில் -இரு ஆட்டுக்குட்டிகள் அவ்வப்போது
துறவி /155

Page 86
அணில் அரித்து விழுந்தும் வாகைக் காய்களை ஒடிஓடிச் சென்று மேய்ந்து கொண்டிருந்தன.
t தெருவழியாக மணியை கலகலத்தவாறு, அந்த உச்சிவேளையிலே
ஒருவன் பலகார வண்டியைத் தள்ளிச் சென்றான்.
சாமியாருக்கு, அதனைப் பார்த்ததும் வயிற்றின் நினைவு வந்துவிட்டது. வயிறு மீண்டும் குடையலாயிற்று. மனம் சீற்றம் கொண்டது.
-சீ! இதென்ன உபத்திரவம். இந்த உடலே இப்படித்தான். ஒவ்வொன்றாகக் கேட்க ஆரம்பித்து. மண்ணாகிப் போகிற இதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?
-சாமியாருக்கு இதற்குமேல் பொறுக்கமுடியவில்லை. எழுந்து நடந்தார்.
4
ஒரு வீட்டின் வாசலில் போய் நின்றார். உள்ளிருந்து ஆண்குரல் கேட்டது. இஞ்சாரும். உள்ள என்ன செய்யிறீர்? வாசலில யாரோ நிக்கினம் போலக் கிடக்கு. ஆரெண்டு போய்ப் பாரும்."
ஒரு பெண் அவசரமாக வெளியே வந்தாள். அவரைக் கண்டதும் மரியாதையுடன் கூடிய பரபரப்படைந்தாள்.
'வாங்க சாமியர். உள்ள - என்று வரவேற்றபடி உள்ளே விரைந்தாள்.
சாமியாருக்குத் தலைவாழை இலையில் உணவு பரிமாறப்பட்டது. சாமியார் ஒவ்வொன்றாகக் கவனித்துக்கொண்டே வந்தார். சோறு. குழம்பு. அவியல். பொரியல்.ஊறுகாய். இரசம்.
உணவைப் பார்க்கப் பார்க்க வயிறு கும்மாளமிட்டது. கை பரபரத்தது. மனமோ இவ்வளவு விரைவில் தான் தோல்வியடைந்ததை எண்ணி. வேதனை அடைந்தது.
‘என்ன சாமியார் பார்த்துக்கொண்டிருக்கிறியள். சாப்பிடுங்கோவன்." என்று அவள் மரியாதையுடன் உதிர்த்த சொற்கள், அவர் ஆற்றாமையை கண்டெழுந்த அநுதாபச் சொற்கள் எனக் கற்பித்துக்கொண்டார். அவர் சோற்றையே வெறிக்க வெறிக்கப் பார்த்தார். மனதில் புயலாக வைராக்கியமும் மீண்டும் வந்து கவிந்தது.
இந்தக் கட்டைக்குச் சோறா கேட்குது? இப்ப சோறு கேட்கும். பேந்து பின்ன ஏதேதோவெல்லாம் கேட்கும். இது பட்டினி கிடந்தா செத்தா 156/செம்பியன் செல்வன்

போகும். நல்லா சாகட்டும். ஈரம் வற்றிய கட்டைதான் நல்லா பற்றி எரியும். -என்றும் கூறிக்கொண்டே அவர் கைகளை உதறிக்கொண்டு வெளியேற, அவள் விக்கித்து நின்றாள்.
5 சாமியாருக்கு வெறி பிடித்து விட்டதா? காலடியில் தணல் தகிப்பதையும் உணராமல், நடந்துகொண்டிருந்தார். நெற்றியில் வியர்வைகள் மணிகளாகத் திரளலாயின. கண்களிலே கத்தரிப்பூக்கள் வட்டமிட்டுச் சுழன்றன.
வடக்கே சென்ற வீதியினின்றும் திரும்பிக் கிழக்கே நடந்தார். கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு பெரிய கட்டடம் மாளிகையாக எழுந்து பார்வையை மறித்தது. அதனையே கொஞ்சநேரம் வெறிக்கப் பார்த்துக் கொண்டு நின்றார். யாரோ அம்மாளிகையின் வெளிவாசற் கதவைத் திறந்துகொண்டு வந்தார்கள்.
மெல்லிய மல் வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். சரிகைச் சால்வை கழுத்திலே கொன்றை வடமாகச் சரிந்து கிடந்தது. கை விரல்களில் நீலக்கல் மோதிரங்கள் கண்வெட்டிச் சிரித்தன. ஊரிலேயே பெரிய மனிதர். முதலாளி முதலாளி என்று அழைத்தழைத்து. அவருக்கு அவர் பெயரே மறந்து போய் விட்டது. எல்லாம் இடையில் வந்த சொத்து. பலர் பலவிதமாகப் பேசிக்கொள்கிறார்கள். வெளியில் பேச எல்லாருக்கும் பயம். பெரிய இடத்து விசயம். ஊரில் அவர் பெயரால் எத்தனை நல்ல கருமங்கள் நடந்திருக்கின்றன. நடக்கவுமிருக்கின்றன. எத்தனை திருவிழாக்கள். எத்தனை கோயில் ம.ை-பங்கள், மெர்க்குரி விளக்குகள்- எல்லாவற்றிலும் உபயம் என்ற பெயரில் அவர் பெயர்தானே கொடிகட்டிப் பறக்கின்றது. வந்தவரின் பார்வை சாமியாரின் மேல் விழுந்தது. முகத்தில் வலிந்து வருவித்துக் கொண்ட மரியாதை தெரிந்தது.
‘சாமியார். என்ன தெருவிலேயே நிண்டிட்டியள். உள்ள வாங்கவன். இதெல்லாம் நீங்க தந்த சொத்து. செல்வம்தான்.
- சாமியாருக்குச் சிரிப்பு வெடித்துக்கொண்டு வந்தது.
துறவிக்கு ஏ." சொத்து- கொடுக்கவும், வாங்கவும். என்ன மாதிரி கதை விடுகிறான். எல. எண்ணியபோது எரிச்சல் மண்டிய நெஞ்சத்தில் கனல் எழுந்தது.
‘என்ன சாமியார் யோசிக்கிறியள்.?- அவரின் தூண்டுதற் சொற்கள், கனலில் விழும் நெய்யாய்ச் சொரிந்ததா?.
சாமியார் உருத்திரரானார்.
டேய். என்னடா நினைச்சுக் கொண்டாய். என்னைப் பற்றி. ஆய்ங். உனக்கு அவ்வளவு துணிச்சல் வந்திட்டுதோ. என்ன உன்ர வீட்டுக்கோடா
துறவி / 157

Page 87
கூப்பிடுறா. எனக்கு அங்க என்னவெல்லாம் நடக்குது எண்டு நல்லா தெரியுமடா. நான் எங்கோ கோயில் மடத்தில கிடக்கிறவன் தான. இவனுக்கு எங்க இதெல்லாம் தெரியப்போகுது எண்ட துணிச்சல் தான உனக்கு. டேய். எனக்கு எல்லாம் தெரியுமடா. . ?. உனக்கு இந்தச் சொத்துச் சுகம் எல்லாம் எப்படி வந்தது. எல்லாம் எனக்குத் தெரியும். கோயிலுக்கு நாலு காசை அள்ளி வீசினா எல்லாப் பாவமும் கரைஞ்சுபோம் எண்டதுதான் உன்ர நினைப்பு. ஆய்ங். உன்ர பட்டுவேட்டிக்கு ஊர் மயங்கலாம். ஆனா எனக்குத் தெரியும். உன்ர பட்டுவேட்டிக்க. மறைஞ்சுகிடக்கிற வியாதியெல்லாம் என்னண்டு. -சாமியார் அனலில் விழுந்த உப்பாக வெடித்துக் கொட்டினார்.
-வந்தவருக்கு வியர்த்து, விறுவிறுத்தது. சுற்றுமுற்றும் பார்த்து விட்டுச் சரேலென வீட்டினுள்ளே புகுந்துவிட்டார். சாமியார் ஓயாமல் சிரித்துக் கொண்டே வெகுநேரம் நின்றார்.
6 சாமியார் மீண்டும் தன் இருப்பிடத்திற்கு வந்த பொழுது நன்றாக இருட்டிச் சந்திரனும் உதயமாகி மரக்கிளைகளிடையே, பாலன்னத்தைச் சிந்திக் கொண்டிருந்தான்.
அப்பாடா!.- என்று ஆயாசப் பெருமூச்சு விட்டபடி மண்டபத்தில் வந்தமர்ந்தார். அவரது தோளிலே வரும் பொழுது சங்கக்கடை வேலாயுதம் பிள்ளை வற்புறுத்திக் கொடுத்துவிட்டிருந்த துணிமுடிப்பு தொங்கிக் கிடந்தது. வேலாயுதம்பிள்ளைக்கு சாமியார் மீதும் எப்போதுமே ஒரு பாசம். சாமியார் எப்போதாவது சாப்பிட்டர் என்றால் வேலாயுதம்பிள்ளையின் தூண்டுதலாகத்தான் இருக்கும்.
அன்று அவருக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது. நடந்த களைப்பாலும், பசியின் கொடுமையினாலும் உடலும் மனமும் தளர்ந்திருந்தன. வயிறோ காளவாயாகி எரிந்தது. அவர் ஏதோ தீர்மானத்திற்கு வந்தவராய் எழுந்தார்.
வில்வ மரத்தடியில் கிடந்த அடுப்பை சீராக்கினார். பானையையும் சட்டியையும் எடுத்துச் சென்று குளத்து நீரில் கழுவி பானையில் உலை நீரும் கொண்டு வந்தார். விழுந்து கிடந்த, காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கித் திரட்டினார்.
அடுப்பில் உலை ஏறிற்று. காய்ந்த மரச்சுள்ளிகள் 'சடசட'வென நெருப்புப் பற்றிக் குதித்துச் சுடராய் எரியலாயின. தீயின் நாக்குகள் பானையை அசுரப் பசியுடன் தழுவிக்கொள்வதை- முழங்கால்களை இரு கைகளினாலும் கட்டியவாறு குந்தியிருந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்தார். 158/செம்பியன் செல்வன்

உலை நீர் கொதித்துத் தளதளவெனச் சத்தமிட்டது அரிசியையும், பருப்பையும் களைந்து உலையில் இட்டார்.
சுள்ளிகளை உள்ளே தள்ளியவாறு அடுப்பையே பார்த்துக் கொண்டி ருந்தார். சுள்ளிகள் சீராக எரிந்தன. பானையில் பதார்த்தம் கொதிக்கக் கொதிக்க வயிறும் கும்மாளமிட்டது. ஒரு மெல்லிய மணம் கிளம்பிற்று. அவர் வாயில் உமிழ் நீர் சுரக்கலாயிற்று.
'ம். ம். -மூச்சை உள்ளிழுத்து விட்டார்.
ஆ. என்ன மணம்.
-உணவின் நறுமணம் வயிற்றின் பசித்தீயை கிளறிவிட்டது. அவர் கைகள் விரைந்து விரைந்து சுள்ளிகளைத் தள்ளியவாறு இருந்தன. உடலிலும் மனதிலும் ஆவல் கலந்த பரபரப்பு ஏற்பட்டது.
வெந்திருக்குமா?.
கலயத்தினதும் ஓர் அவிழ் எடுத்துப் பெருவிரலையும் சுட்டுவிரலையும் சேர்த்து அழுத்திப்பார்த்தார்.
இன்னும் கொஞ்சம் வேணும்'
-மீண்டும், சுள்ளிகளை உள்ளே தள்ளினார். அருகில் சிதறிக்கிடந்த எல்லாவற்றையும் ஒன்று திரட்டி, மொத்தமாக அடுப்பினுள் நுழைத்தார். நெருப்பு அவிந்து மீண்டும் பெருஞ்சுடராய் தீயாய் எரியலாயிற்று.
வெந்திருக்குமா?. வெந்திருக்குமா?
-மனதின் துடிப்பும், அடுப்பின் கொதிப்பும்.
ஆ! சரியான பதம்.
கலயத்தை அடுப்பினின்றும் இறக்கினார். கலயம் கனலாகக் கொதித்தது.
சட்டியில் கஞ்சி போன்றிருந்த அதனை ஊற்றினார். ஆவலுடன் சட்டியை உதட்டருகே கொண்டுபோனார். சட்டி சுட்டுவிட்டது.
சட்டியா? கஞ்சியா?
ஆறட்டும். கொஞ்சம் ஆறட்டும். சீ. இவ்வளவுக்கும் ஆறாமலா இருக்கும். ஆறியிருக்கும்.- சட்டியைத் தூக்கினார். அதன் சூடு கையைச் சுட்டது.
அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
துறவி / 159

Page 88
"சீ இதென்ன அவசரம். பலவீனம். துறவிக்கு இந்தப் பதட்டம் கூடாது.
நானா துடிக்கிறேன். இந்த வயிறல்லவா துடிக்குது.- தன் மனதைச் சாந்தப்படுத்த முயன்றார்.
‘எல்லாவற்றிற்கும் இந்த வயிறுதான் காரணம். பசி. பசி. எண்டு துடிக்கிறதே. M
துடிக்கட்டுமே. அது துடித்தால் நீயும் துடிக்க வேண்டுமா. பசி பெரிதா உனக்கு. உனக்குப் பசிதான் பெரிதா. இவ்வளவு கேவலமா. பல வீனனாய்ப் போய்விட்டாயா?- அந்தராத்மா அவரைக் கேட்பது போலிருந்தது. அவரது இதயத்தை யாரோ சுட்டுப் பொசுக்குவது போலிருந்தது.
நாளைக்கு கட்டையில் வேகப்போற உனக்கு, இண்டைக்கு வெந்த உணவா கேக்குது. உனக்குப் பசி.அப்படியொரு பொல்லாத பசி. எல்லாத்துக்கும் இந்த மனம் காரணம். உனக்கு இந்தக் கஞ்சி ஆறும் வரை பொறுக்கேலாது. இது இருக்கப் போய்த்தான் இத்தனை ஆட்டம். இதுவே இல்லாமல் இருந்துவிட்டால். சும்மா கிடக்கிற வயிறுதான்.எல்லாம் இது இருக்கப்போய்த்தான். இருக்கப்போய்த்தானே.
மனதில் ஞான மூர்க்கம் எழுந்தது. மறுவிநாடி
கலையத்தை அப்படியே கல்லில் அடித்தார்.
படார்."
-கலயச்சோறு மண்ணில் கலந்து நிலவில் சிரித்தது.
தினகரன் வாரமஞ்சரி 1988 வருஷம் நவம்பர் மாதம் 19
160/செம்பியன் செல்வன்

除
45-- g2/7/7267e.
மத்திய கிழக்கு நாடுகளுக்கே உரித்தான கோடை வெப்பம், ராணுவக் கட்டுப்பாட்டையும் மீறி, உயர்ந்த மதில் களைத் தாணி டி சிறை யன்னல்களினூடாகப் பரவிக் கண்ணைக் குருடாக்கும் வெளிச்சதீதையுமி வெம்மையையும் பரப்புகின்றது. நாக்கு வரள்கிறது. நெஞ்சே உலர்ந்து போயிருக்கும் போது தாகமாகவது. தண்ணிராலது. ஊரிலுள்ள பழங்கால நாற்சார வீட்டின் அமைப்பை ஒத்த. ஆனால் அகலமான, நீண்ட கூடத்தை உள்ளடக்கி நாற்புறமும் உயர்ந்து, உறுதியான சுவர்களைக் கொண்ட மூன்றடுக்குச் சிறைக்கூடம் கனதியான சுவர்களிலே புறப் பொந்துகளைக் குடைந்ததுபோல் அடுக்கடுக்காகச் சின்னஞ்சிறிய செல்கள். நின்றால் தலையை மட்டும் வெளியே காட்டும் கண்ணாடி வெளியைக் கொண்ட, முழு இரும்புத் தகட்டாலான கதவு. அதனைத் திறந்தால் இரு காலடிகளே
ஓவர் லாண்ட் 1161

Page 89
வைக்கப் போதுமானதான ஒடுங்கி நடைபாதை. ஒவ்வொரு தளத்தினதும் எல்லாச் செல்களையும் இனை ருெந்தது. தரையிலிருந்து எழுந்த கம்பி வலைச்சுவர்கள் நடைபாதையின எல்லையாக விளங்கின. ஒவ்வொரு தளமும் தனது எதிர்ப்புறத்தை நீண்ட இாம் ர்கேடர்களினால் கம்பிவலைச் சுவர்களைத் தொட்டு இணைத் திருந்த பல . இடைவெளிவிட்டு இணையாக இணைக்கப்பட்டிருந்த கேடர் தடுப்புக்கள் கைதிகள் தப்பியோடா திருக்கவோ, தற்கொலை முயற்சியிலீடுபடாதிருக்கவோ உதவின. மூன்றடுக்குகளின் நடைபாதைகளும் சிறைக்கூடத்தின் ஒரு எல்லையிலுள்ள மாடிப்படிகளைச் சென்றடைகின்றன. அப் படிகள் கீழ்தளத்திற்கு செல்கின்றன. அங்கு எப்போதும் ஒரு காவற்காரன் துப்பாக்கியுடன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்பான். காலை வேளைகளில் தங்கள் காலைக்கடன்களைக் கழிக்கவும், முன்னைய இரவு தாம் கழித்த சிறுநீர் தாங்கிய பெட்பானை' கையிலெடுத்துக் கொண்டு வேகமாகக் கீழிறங்கும் நேரத்தில் அந்த நடைபாதை முட்டி மோதி வழியும். ஒரே இரைச்சலாக இருக்கும். பலமொழிக் கதம்பச்சப்தத்திலே ஈரானிய-பேர்ஸிய மொழி மேலாக ஒலித்துக் கட்டளையிடும்.
சிறைக் காவலர்களின் கனத்த பூட்ஸ் ஓசைகள் நெஞ்சை அதிர வைக்கின்றன. மூன்றடுக்குத் தடுப்புக் கேடர்களின் இடை வெளிகளினூடாகக் கீழ்த் தரையின் ஒரு மூலையில் மேசைகளும், கதிரைகளும் இடப்பட்டு ஜெயிலரின் அலுவலகம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மேற்றளத்தில் காவற்காரனின் பூட்ஸ் ஒலிகள் உச்சியில் இடியாக இறங்குகின்றன.
எங்கும், கட்டுப்பாடான கண்காணிப்பின், கடமையின் அகோரம், சிறையதிகாரிகள் 'ஜரூராக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கையில்
விநாடிக்கொருதரம் வெளியிலிருந்து வந்துசேரும் "பேப்பர்களைப் பார்ப்பதும்.
பதிவதும். பைல்களைப் புரட்டுவதும். கைதிகளை விசாரிப்பதும். சிறையிலடைப்பதும். சிறையிலிருந்து விடுவிப்பதும். லோயர்கள் வருகைக்குத் தயாராவதும் . பதிலளிப்பதும். பார்வையாளர்களுக்கான அனுமதிகளைப் பரிசீலிப்பதும்.
காவற்காரர்கள் அடிக்கடி வந்து அட்டென்ஷனில் நிற்கும் அதிர்வுகளும். இடையிடையே எங்கோ அந்தகாரத்திலிருந்து எழுவது போன்ற கைதிகளின் அலறல்களும், ஈனக்குரல்களும். வெளியே சப்திக்கும் துப்பாக்கி வேட்டுக்களும்.
அவருக்கு எல்லாமே பழக்கமாகிவிட்டது. பயங்கர எதிர்பார்ப்புகளும். பயங்கரங்களும் பழக்கமாகிய போதிலும், வியர்த்துக் கொட்டுகிறது.
ஒரு வாரமாக இந்தச் சிறைப் பொந்தில் அனுபவிக்கும் மனவேதனை. மரண பயங்கரம்.
1621 செம்பியன் செல்வன்

இன்று என்ன பதில் வரப்போகிறது? நாளைய உதயம் எப்படி இருக்கும்? வியர்வை வழிய மேனி பயத்தால் நடுங்குகிறது. இந்த வயதில். இந்த இடத்தில் வந்து உயிருக்காக மன்றாடுவாய் என்று யாராவது முன்பு கூறியிருந்தால், விழுந்து விழுந்து சிரித்திருப்பார். இல்லா விட்டால் இந்தப் பயணத்தையே தவிர்த்திருப்பார். ஆனால். இன்றோ? நாளையோ?.
பாங்கு ஓசை எங்கும் திடீரெனப் பரவுகிறது. அன்று வெள்ளிக்கிழமை. சிறையதிகாரிகள் எந்தவித சப்தமின்றி அமைதியாக வெளியேறுகின்றனர். திடீரென வெம்மையை மீறின மெளனம். சில செல்களில் சிறைப்பட்டிருந்த கைதிகள் கூடத் தங்கள் தொழுகைக்கு ஆயத்தப்படுத்திக் கொள்கிறார்கள்.
அவர் தன் பார்வையை தனது "செல்லுக்குள் திருப்பிக் கொள்கிறார். அந்தச் சின்னஞ்சிறிய செல்லில் அவருடன் அடைபட்டுக் கிடக்கும் அவன் பார்வையில் படுகிறான்.
ஒரு கட்டிலின் மேல், கால்களைத் தொங்கப்போட்டுக் கொண்டு, தொடைகளில் இரு கைகளையும் ஊன்றி, நாடிக்கு உள்ளங்கைகளை முட்டுக் கொடுத்துக் கொண்டு அவரையே வெறித்துப் பார்த்தபடி அந்த இளைஞன் உட்கார்ந்திருந்தான். அருகே சிறு மேசையில் சிறையதிகாரிகள் வழங்கிய அத்தியாவசியப் பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன.
மெல்லிய சிவந்த நெடிய மேனி. முகத்தில் ஒரு வாரத்தாடி விறைத்துப் போன விழிகள். மனதின் சோகம் முகத்தில் ஆற்றாமையாக வடிந்து கொண்டிருந்தது.
அவனைப் பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ‘எல்லாம் உன்னால் தான். இல்லை. இல்லை. உங்களால்தான்' அவர் வாய் பேசாவிட்டாலும் அவர் விழிகளில் தெறித்த கோபத்தினை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் ஆத்திரத்தில் முன்னாலிருந்த சிறு ஸ்ரூலை எட்டி உதைத்தார். அது கருங்கற்சுவரில் மோதியதால் எந்தவித ஓசையையும் எழும்பவிடவில்லை.
கட்டிலில் போய் அமர்ந்து குலுங்கக் குலுங்க அழுதார். அவன் அவரையே விறைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். மெல்ல எழுந்து வந்து அவர் தோளில் கையை வைத்தான். அவர் அதனைத் தட்டிவிட்டார்.
பெரியவர் அழாதையும். எல்லாம் நன்மையா முடியும்
ஒவர் லாண்ட் 1163

Page 90
அழாமல் என்ன செய்யிறது? நான் என்ன உங்களைப் போல பொறுப்புகளோ. உறவுகளோ இல்லாதவனே?. தம்பி, எனக்கு ஊரில வயது வந்த ரெண்டு பொம்புளைப் பிள்ளையஞம், ஏ/எல் படிக்கிற பொடியனும் மனுஷியும் இருக்கினம். அவையஞக்கு இப்படி நான் சிறையிலடைபட்டுக் கிடக்கிறது கொஞ்சமும் தெரியாது. அவையள் அப்பா வெளிநாட்டில் சம்பாதித்துக் கொண்டு வருவார் எண்ட கனவுகளோடை கிடப்பினம். ஆனா நான். ஐயோ. மரணதண்டனை விதித்து நான் செத்தாக் கூட வீட்டாருக்குத் தெரியப்படுத்த யாரிருக்கினம். அவர் அலறத் தொடங்கினார்.
அவன் அவரை அனுதாபத்துடன் பார்த்தான். 'ஐயா. என்ன தண்டனை விதித்தாலும் எல்லாருக்கும் தான் . அவன் அவரைச் சமாதானப்படுத்தத் தொடங்கினான்.
‘எல்லாருக்குமோ. உங்களுக்குத் தண்டனை கிடைச்சா என்ன கிடைக்காட்டி என்ன? ஒரு குற்றமும் செய்யாத எனக்கு ஏன் இந்த நரக வேதனை. மரணதண்டனை.
அப்படியொண்டும் நடக்காது. அப்படி நடந்தாலும் உங்களுக்கு நடக்க விடமாட்டோம். பயப்படாதியள். நீங்கள் விடுதலையாகி நிச்சயம் வீட்ட போவியள். 'உண்மையே தம்பி. நான் ஊருக்குப் போவனே. நான் சாகப் பயப்பட வில்லைத்தம்பி. ஆனா எனக்குக் கொஞ்சம் கடமையள் இருக்கு. அதுகளை நிறைவேத்த வேணும். பெடிச்சியள் ரெண்டும் வயசுக்கு வந்து கனகாலமாச்சு. அதுகளுக்கு ஒரு கலியாணம் காட்சிகளை செய்து பாக்கவேணும் பொடியனை எப்படியாவது தன்ர காலில் நிக்கிறதுக்கு வழி செய்யோணும். அதாலதான் தம்பி ஐம்பத்தி ஐஞ்சு வயசுக்கும் பிறகும் எழுதி எழுதிக்கேட்டு வேலை நீடிப்புபெற்று உழைச் சும். பென்ஷன் எடுத்தாப்புறமும் ஓய்வாக இருக்கமுடியேல்ல. வீட்டுல கிடந்து பெருமூச்சு விடுகிற குமருகளில ஒண்டையும் கரை சேர்க்க முடியாமத்தான். இந்த வயதில பொடியள் பிறதேசம் வெளிக்கிடுறதைப்போல. நானும் வெளிக்கிட்டன். வேலைவாய்ப்பு ஏஜென்சிகளைப் பிடிச்சு வெளிக்கிட, கையில ஒரு காசும் இல்லை. இப்பவும் ஈட்டிலகிடந்த காணியில தான் மேலும் கடன் வாங்கிக்கொண்டு ஓவலாண்டா வெளிக்கிட்டா செலவு குறையும் எண்டு புறப்பட்டன். மன்னார். இராமேஸ்வரம். திருச்சி. தமிழ்நாடு. பம்பாய். பாகிஸ்தான் வரை எந்தவித இடையூறுமில்லாம வந்து சேந்தன். உங்களைச் சந்திச்சாப்புறகு தான்.
அந்த இளைஞன் அவரின் தோளைத் தட்டி ஆசுவாசப் படுத்தினான். மேலே நடந்தது எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல அவரைப்
1641 செம்பியன் செல்வன்

பார்த்தான்.
இந்தோ- பாகித்தான் எல்லையில் பல ஈழத்து இளைஞர்கள் கண்ணாம்பூச்சி விளையாட்டில் பணம் திரட்டிக் கொண்டிருந்தார்கள். கையில் ஒரு டிரவலிங் பையுடனும் அழுக்கேறிய டெனிம் டிரௌசருடனும் அவர்கள் செய்யும் வீரவிளையாட்டுகள் மலைப்பையூட்டின. பாகித்தான். பம்பாய். சிங்கப்பூர். கல்கத்தா. டில்லி. பம்பாய். பாகித்தான் ஈரான். எனப் பறந்து பறந்து சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். முதலில் இவர்களும் திசை தெரியாமல் பறந்தவர்கள் தான். ஆனால். பின்னாலிருந்து இயக்குபவர்கள் யாரென்று தெரியாமல் சொல்வதைச் செய்து. குறிப்பிட்ட இடங்களில் ஊதியம் பெற்றுக் கொண்டிருந்தார்கள். இடையிடையே பஞ்சாப் வெற்றிலை கூட பாகித்தானில் நல்ல விலைக்குப் போய்க்கொண்டிருந்தது. ஒரு எல்லை தாண்டல். பஞ்சாப்பாகித்தான். பாகித்தான்- பஞ்சாப் அவ்வளவு தான். கைநிறையக் காசு.
அவர் தங்கியிருந்த ஹோட்டலிலேயே, எதிர்பாராத விதமாக அந்தத் தகவல் கிட்டுகிறது.
இன்றிரவு இன்ன இடத்திலிருந்து ஒன்பது மணிக்கு ஒரு வாகனம் ஈரானுக்குப் புறப்படுகிறது. நிலைமைகள் சாதகமாக இருந்தால் ஈரான் எல்லையைக் கடந்து கொண்டு போய் விடுவார்கள். இல்லாவிட்டால் ஈரான் எல்லையைக் கடக்கும் முயற்சியை பயணிகளே சொந்தமாக மேற்கொள்ள வேண்டும்.
இவருக்கு எந்தவித அச்சமுமில்லை. கையில் இன்ர நேஷனல் பாஸ்பேர்ட் ரூர்ஸ்ட்விஸா.
புறப்பட்டு விட்டார் அவர்களுக்காக அந்த வாகனம் காத்திருந்தது. ஒரு புத்தம்புது "ஹை-ஏஸ்' வான். இருபத்திரண்டு பேர்களுக்கானது. அதனைப் பல தேசப் பயணிகள் சூழ்ந்திருந்தார்கள். யார் யார், எந்த நாட்டவர்கள் என விசாரித்துக் கொண்டு டிக்கெட்' கொடுத்துக்கொண்டிருந்தான் கொண்டக்டர். அங்கு பல இளைஞர்கள் சிறிலங்கன்' என்று சொல்லிக் கொண்டிருப்பதைத் கண்டதும் அவருக்கு உற்சாகமாகி விட்டது.
துணைக்குத் துணை. இவர்கள் மூலம் ஏதாவது வேலை வசதிகளைப் பெற்றுவிட இந்தப் பிரயாணம் பெருந்துணை புரியலாம்.
அவசரமாக முண்டியடித்துக் கொண்டு - கால தாமதம் செய்தால் சீட் கிடையாது போய்விடுமோ என்ற பதட்டத்தில் - நானும் சிறிலங்கன்' என்று கூறுகிறார். அந்த ஏழு இளைஞர்களுடன் அவரையும் சேர்த்து எட்டு சிறிலங்கன்
ஒவர் லாண்ட் 1165

Page 91
என ஒரே சீட்டாக கொண்டக்டர் டிக்கெட் வழங்குகிறார்.
வாகனம் புறப்படுகிறது. புயலைப்போல பாலை மணலை வாரியிறைத்துக் கொண்டு விரைகிறது. அவர் அருகிலுள்ளவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார். கண்களால் நட்புறவு கொள்ள முனைகிறார். பேசவும் வாயெடுக்கிறார். அருகிலுள்ளவன் அவரை விசாரிக்கிறான். அவர் திடுக்கிட்டு விடுகிறார். தமிழ்ப் பொடியன்.
மகிழ்ச்சி கரைபுரள, தன் நிலையை எடுத்துச் சொல்கிறார். ரெண்டு குமர். கலியாணம். கடன். பென்ஷ்ன். இத்யாதி. இத்யாதி. அவன் கவலையோடு கேட்டுவிட்டு மெல்லக் கூறுகிறான். நீங்கள் உங்கள் பிள்ளைகளைக் கரைசேர்க்க வந்திருக்கிறியள். நாங்கள் எங்கள் சகோதரிகளைக் கரைசேர்க்க வந்திருக்கிறோம். பயப்படாதியள். இந்தப் பயணம் சக்ஸஸ் ஆனால் உங்களுக்கு எங்களால் நிச்சயம் உதவ முடியும். அவர் அவனை வியப்புடன் பார்க்கிறார். 'எவ்வளவு அழகாக நிலைமையைப் புரிந்துகொண்டு பதில் சொல்கிறான்? இவனுக்கு கலியாணமாகி யிருக்குமோ? என்ர மூத்தவளுக்கு கணக்கான மாப்பிளை' என்று ஒடிய சிந்தனையைக் கடிந்து கொண்டார்.
பெண்ணைப் பெற்றதும் போதும். அதுகள் வளர்ந்ததும் போதும். வழியில வாற போற பொடியங்களை மாப்பிளையாப் பாக்கிறதே வழக்கமாகிப் போச்சு. இந்தக் கெட்ட பழக்கம் தந்தையே மகளை பற்பல வாலிபனோட சோரம் போகச் செய்யிற மாதிரியான நினைப்பல்லவா?.
இருளில் வாகனம் திசை புரியாத மயக்கத்தில் விரைந்து கொண்டிருந்தது. ‘எல்லாரும் தயாராகுங்கள். நாங்கள் ஈரானின் எல்லைக்குள் புகும் நேரம் நெருங்கிவிட்டது. எல்லாரும் மெளனத்தை விழுங்கிக் கொள்கின்றனர். திடீரென்று ஒரு விசில் சப்தம் . அதனை மீறி வாகனம் விரைகிறது. அதோ அவுட்போஸ்ட். ஆனால் அவர்கள் முன்னால் வேகமாக வருவது என்ன?.
ஒரு ஈரானிய ஜீப் அதிலிருந்து பட பட வென இராணுவ வீரர்கள் துப்பாக்கிகள் சகிதம் குதிக்கிறார்கள். ஈரானிய பாரசீக மொழியில் ஏதோ டிரைவருடனும், கொண்டக்டருனும் பேசுகிறார்கள். எல்லோரும் இறங்கும்படி உத்தரவாகிறது. பாஸ்போட். விஸா. பரிசீலிக்கப்படுகிறது. எல்லாம் சரி . அவர்களின் சூட்கேஸ். டிராவலிங்பாக் சோதனை போடப்படுகிறது. ஒவ்வொருவரும் தத்தம் பைகளை அடையாளம் காட்டி சோதனையிடச் செய்கின்றனர். எல்லாம் சரி "ரைட்"
166/ செம்பியன் செல்வன்

எல்லாரும் புறப்படலாம் என்று கட்டளை வந்து, அவர்கள் வாகனத்திற்குள் ஏற முயன்ற போதா இது வரை சோதனையில் அகப்படாமல் ஒதுங்கிக் கிடந்த அந்தச் சின்னபாக் அந்த இராணுவ வீரனின் கண்ணில் பட்டிருக்கவேண்டும்?
'ஹால்ட்'
அது யாருடையது?.
- நிசப்தம்.
மீண்டும் குரல் எழும்புகிறது.
- அது யாருடையது?
காற்றில் கேள்வி அநாதையாகப் பரவுகிறது.
வேகமாக எடுத்துச் சோதனையிடப்படுகிறது. அதற்குள்ளிருந்த -
ஹெராயின் போதைப் பொருள். ஈரானிய எல்லைக்குள் நுழையக் கூடாத, மதத்தால் விலக்கப்பட்ட ஹெராயின்
அந்தப் பையை யாரும் உரிமை பாராட்டவில்லை. அதனால் அதிலிருந்து துப்புத் தேடுகிறார்கள்.
அழகிய தோற்பை, அதன் ஒரு மூலையில் அழிந்தும் அழியாமலும் எம்போஸ்ட் செய்யப்பட்ட சில ஆங்கில எழுத்துக்களைக் கூட்டிப் படிக்கிறார்கள்.
SRI LANKA
அவர்களிடையே பரபரப்பு, இதில இருக்கிற ஜீ லங்கன் எல்லாம் இறங்கு
அந்த ஏழு இளைஞர்களுடன் அவரும் இறங்குகிறார்.
மீதிப் பயணிகளுடன் வாகனம் போய்விடுகிறது.
சிறு கொட்டடி போன்ற இருண்ட அறையினுள் அடைக்கப்படுகிறார்கள். அடுத்த நாள் காலை மாஜிஸ்ரேட் முன்நிறுத்தப்படுகிறார்கள். அந்த கோட் அமைப்பே எளிமையாக, அதே வேளையில் குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலிருந்தது.
மாஜிஸ்ரேட் உ "ர் மேடையில், வட்டமாக மறைக்கப்பட்ட வளைவு
மேசையில் உயர் நாற.ாலியில் அமர்ந்திருக்கிறார். மேடைக்குக் கீழே வழக்கறிஞர்களின் மேசை. இதற்கு இருபக்கமும் குற்றவாளிக் கூண்டுகள். வளைவாக அமைக்கப்பட்ட பார்வையாளர்கள் கலரி.
நீங்கள் குற்றவாளிகள். போதைப் பொருள் கடத்தியவர்கள். அது சமூகவிரோதம் சட்டவிரோதம், மதவிரோதம், இனவிரோதம்; இது பற்றி என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா? -மாஜிஸ்ரேட்
ஒவர் லாண்ட் 1167

Page 92
அமைதியாகக் கேட்கிறார்.
அமைதி இத்தனை பயங்கரமா? அவர் அதிர்கிறார். நாங்கள் குற்றவாளிகள் அல்ல. அந்த பையுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்புமில்லை. அந்த ஏழு இளைஞர்களும் கூறுகிறார்கள். அவர் மெளனமாக நிற்பது மாஜிஸ்ரேட்டின் கவனத்தை ஈர்க்கிறது. நீர் என்பது போல் அவர் பார்வை உயருகிறது.
'எனக்கு இந்த வழக்கே புரியவில்லை. இந்த இளைஞர்களை முன்பின் அறியேன். நான்முதன் முதலாக இப்போதுதான் ஈரான் வருகிறேன்.
அப்படியானால் அந்த இளைஞர்களின் டிக்கெட்டில் தான் உமது பெயரும் இடம் பெற்றது எப்படி? பெரியவர் பொய் சொல்லக்கூடாது. திருடுவது போல் பொய் சொல்வதும் இந்த நாட்டில் குற்றம்
இதற்கு எப்படிப் பதில் சொல்வது? எப்படி விளங்க வைப்பது? மொழி வேறு தடையாக இருக்கிறதே. அவர் மயக்கம் கொள்ளாத குறைதான்.
அப்போது அவசரம் அவசரமாக ஒரு லோயர் உள்ளே நுழைகிறார். ‘என்னைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழக்காட அனுமதிக்கும் வண்ணம் கேட்டுக்கொள்கிறேன்.
யூ மே புரொசீட் நீர் யார் யாருக்காக வாதாடப் போநீர்?. அந்த ஏழு இளைஞர்கள் சார்பாக. அவரைக் கவனிப்பாரில்லை. குறுக்கு விசாரணையாகவும், நேர் விசாரணையாகவும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதனை நிலை நாட்ட வழக்கறிஞர் முற்படுகிறார்.
இவர்களைக் குற்றவாளிகளாகக் காட்டுவது அந்தக் கிட்பாக். அது இவர்களுக்குத் தான் சொந்தம் என்பதனை யாரும் நிலைநாட்டவில்லை. அது யாருடையதாகவுமிருக்கலாம்.
அப்படியானால் அது யாருடையது? அதைக் கண்டுபிடிக்க வேண்டியது அரசாங்கம் இவர்களுடையது' என்பதுதான் நீதியின் நம்பிக்கை. இது அநுமானம் அநுமானமே உண்மையாகிற சூழல் வழக்கறிஞர் எவ்வளவோ வாதாடியும் முடியவில்லை. மாஜிஸ்ரேட் அசைந்து கொடுக்கவில்லை.
தீர்ப்பு அடுத்த கிழமை எழும்புகிறார். இவர்களை இருவர் இருவராகச் சிறைகளில் அடைக்கின்றனர். அவருக்கு ஒரே வியப்பு. இவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர் யார்? இந்த ஏற்பாடுகள்
1687 செம்பியன் செல்வன்

除
எப்படி நடந்தன?
காவலாளிகளுடன் கதை கொடுத்ததில் தெரியவந்தது இவ்வளவு தான். இத்தகைய குற்றங்களுக்கு இங்கு மரணதண்டனை தான்! சிறையில் அதைக்கேட்டதிலிருந்து எங்கும் மரண ஒலம் அழுகை; புலம்பல்; பிரார்த்தனை ஊரை எண்ணி. உறவை எண்ணி ஒரே புலம்பல். அவர்களுடன் சேர்ந்து அவரும் மரணத்தின் விளிம்பில் நிற்கிறார்.
அவசரம் அவசரமாக கருணை மனு ஒன்றைத் தயாரிக்கிறார்கள். நாங்கள் அந்நியர்கள். இந்த நாட்டின் சட்டம் தெரியாதவர்கள். எங்களுக்குக் கருணை காட்ட வேண்டும்.
அதுவும் இரக்கமின்றி நிராகரிக்கப்படுகின்றது. ኩ» இது ஒரு நாட்டிற்கு மட்டும் சட்டவிரோதமல்ல. சர்வதேச விரோதச் செயல். மன்னிக்கக்கூடிய குற்றமல்ல.
மரணம் ஒலம். ஒப்பாரியாகச் சிறைக்கூடத்தை நிறைக்கிறது. இரகஸ்யமாக வழக்கறிஞர் மூலம் தகவல் வருகிறது. மதம் மாறுவதாக கருணை மனுவில் எழுதுங்கள் மீண்டும். மன்னிப்பு இதனால் வழங்கப்படலாம் அல்லது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படலாம். உங்களுடன் உள்ள பெரியவரை விடுவிப்பதற்கான எந்த முயற்சிகளும் நடைபெறாததால் மாஜிஸ்ரேட் அவர் குற்றமற்றவர் என்றுணர்கிறார். அவர் சில சமயம் விடுதலை செய்யப்படலாம். ஆனாலும் அதற்கான ஆாரங்களும் வேண்டும்.
கருணைமனு மீண்டும் தயாரிக்கப்படுகிறது. அதில் மேலதிகமாக இவர் இந்த விடயத்தில் ஒரு அப்பாவி என இளைஞர்களால் காட்டப்பட்டிருந்தது. அவர் சம்மந்தப்பட்ட முடிவுக்காகவும் அவர்கள் காத்திருக்கிறார்கள்.
எந்த விநாடியும் பதில் வரலாம். மரணமா? மன்னிப்பா? "பெரியவர். நீர் உம்மட கவலைகளைச் சொல்லி ஆறிப்போட்டீர். ஆனால் நான்." அவன் திணறினான். பின்னர் தொடர்ந்தான். 'வீட்டில அம்மாவும் மூண்டு தங்கச்சிகளும். அப்பா ஒரு சுருட்டுத் தொழிலாளி. கஷ்டப்பட்டு என்னை அட்வான்ஸ் லெவல் வரை படிக்க வைத்தார். எல்லா அப்பாக்களைப் போல மகன் டாக்குத்தராக வரவேண்டுமெண்டு ஆசைப்பட்டார். ஏ எல்லில ரூ ஏ ரூ பி எடுத்துக்கூட அக்கிறிக்கேடட் மாக்ஸால பல்கலைக்கழகம் போற வாய்ப்பை இழந்திட்டான். இதுக்கிடேயில அப்பா ஹாட் அட்டாக்கில மோசம் போயிட்டார். வீட்டில ஒரே வறுமை. யாராவது ஒருத்தர் உழைக்கப்
ஒவர் லாண்ட் 1169

Page 93
போக வேணும். யார் போவது. ஏதாவது ஒண்டிரண்டு கூலிவேலை செய்தன். வயிற்றை அரைகுறையாத்தான் கழுவமுடிஞ்சது. வேற வழியில்லை. உங்களப் போலத்தான் எங்களுக்குச் சொந்தமாக இருந்த ஒரு பரப்புக் காணியை ஈடுவைத்து ஒரு ஏஜென்டிடம் கட்டினன். அவன் குவைத்துக்கு அழைத்துப் போறதாகச் சொல்லி பம்பாய்க்குடி .டடி வந்து விட்டுட்டு மாயமாய் மறைஞ்சு போனான். பம்பாயில் பசி. பட்டினியோட எத்தனை நாட்கள். வெறுங்கையோட எப்படி வீடுதிரும்புவது? திரும்புவதுக்கும் காசேது?
அப்போது தான் முன்பின் தெரியாத அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அவர்கள் எப்போவாவது ஒரு பையைத் தருவார்கள். விமானடிக்கெட், பயணச் செலவு எல்லாம் தந்து இன்ன இடத்தில் ஒருவர் இந்த உடையுடன் நிற்பார். அவரிடம் இதைக் கையளித்தால் உடனடியாக இருபத்தையாயிரம் கிடைக்கும் என்பார்கள். அதன்படியும் தருவார்கள். பை கைமாறும் நிகழ்ச்சி பெரும்பாலும் ஏரோட்றோமிலயே நடந்துவிடும். அப்படி ஏதும் பிடிபட்டால் அவர்களே வழக்கு நடத்தி வெளியில் எடுத்து விடுவார்கள் . பிறகு நாலைஞ்சு மாதம் ஏதாவது உல்லாச ஹோட்டலில் ஒய்வெடுக்க வசதி செய்வார்கள். பிறகு எப்பவாவது மீண்டும் பயன்படுத்துவார்கள். வேலையிருக்கோ இல்லையோ மாதா மாதம் இரண்டாயிரம் வீட்டுக்கு அனுப்பத் தந்துவிடுவார்கள்.
ஊரிலிருந்து போனவாரம் கடிதம் வந்திருந்தது. அம்மா எழுதியிருந்தா. தம்பி உன்னைப் பார்த்து அஞ்சாறு வருஷமாச்சுது. ஒருக்கா லீவில வந்துபோ. வீட்டமீட்டிட்டன். தங்கச்சிகளுக்கும் நாலைஞ்சு நகைநட்டுகளை வாங்கிப் போட்டிருக்கிறன். இப்ப ஒரு குறையுமில்ல. ராசா உன்னைப் பார்க்காத குறையொன்று தான். ஒருக்கா வந்திட்டுப்போ
'எனக்கும் ஊரை, அம்மாவை, சகோதரிகள்ைப பார்க்க ஒரே ஆவல். ஆனால் ஊருக்குப் போகேக்க வெறும் கையோடயே போறது எண்டு நினைக்கேக்க இந்தப் பயணம் வந்தது. இந்தப் பயணம் சரிவந்திருந்தா எனக்கு ஒரு ஐம்பதாயிரம் கிடைச்சிருக்கும். நாங்க கொண்டு வந்த சரக்கு என்ன பெறும் தெரியுமே? ஒரு கோடிக்குமேல. எல்லாம் கனவாய்ப் போச்சு. இனி இதிலிருந்து மீளுறதெண்டாப் பெரிய கஷ்டம். இனி எங்கள் வாழ்வு அப்படியும் இப்படியும் தான்.
அவர் உருகிப்போய் நின்றார்.
ஒரு மனிதனுக்குத்தான் எத்தனை முகங்கள்? இவைதான் இதயத்தின் முகங்களா?
"பெரியவர். நீங்கள் எனக்கொரு உதவி செய்வியளா?” என்றபோது
170 / செம்பியன் செல்வன்

அவன் கண்கள் கலங்கின.
என்ன? என்பது போல் நிமிர்ந்தார். அவன் தன் கழுத்திலனிந்திருந்த சங்கிலியைக் கழட்டிக் கொடுத்தான். அவர் அதைக் கையில் வாங்குவதா விடுவதா என்ற ஐயத்தில் தடுமாறினார். 'ஐயா உங்களுக்குத் தொந்தரவு கொடுப்பதற்கு மன்னியுங்கள். நான் இனிக் கிட்டடியில ஊர் திரும்பிறது முடியாத காரியம். அதுவரை தங்கச்சி கலியாணம் கட்டாமல் காத்திருக்கிறதும் சரியில்ல. நான் விரைவில் திரும்பி வருவன் எண்டும் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கும்படியும் நான் வீட்டிற்கு கடிதம் போட்டிருக்கிறன். நீங்கள் ஊருக்குத் திரும்பினவுடனே எங்கள் வீட்டிற்குப் போய் இந்தச் சங்கிலியை தங்கச்சிக்குக் கொடுத்து விட்டனான் என்று சொல்லிச் சேர்ப்பித்தால் போதும். நான் சுகமாக இருக்கிறன் எண்டு சொன்னால் போதும். அவையஞக்கும் மாதா மாதம் தவறாமல் காசு ரெண்டாயிரம் போய்ச் சேரும் என்றவன் கண்களிலே நீர் திரையிட்டது. அவர் பிரமித்துப் போய் நின்றார். கதவு திடீரெனத் திறக்கப்பட்டது. காவலாளிகளுடன், லோயர்.
வழக்கறிஞர் அவன் கரத்தை மெல்லப்பற்றினார். கங்கிராஜுலேஷன்! உங்கள் மரண தண்டனை ஆயுள் தண்டனை யாக்கப்பட்டுள்ளது. இவர் விடுதலை செய்யப்படுகிறார். தேவையற்ற முறையில் இவர் சிரமத்துக்குள்ளாக்கப்பட்டதாலும் அவரது பயணம் தடைப்பட்டதாலும் நஷ்டஈடாக ஆயிரம் ரியால் வழங்கப்படுகின்றது.
நான்கு செல்' களிலும் களிப்புக்குரல் மேலெழுந்தது. அவன் அவரைத் தழுவி விடைகொடுத்தான். அவர் ஊருக்கு வந்திறங்க இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. அவர் மனைவி பதறிவிட்டார். பிள்ளைகள் என்னமோ ஏதோவன்று துடித்து விட்டார்கள். ஆனால் அவர் கொண்டுவந்த பொருட்களும் பணமும் அவர்கள் மனதைச் சாந்தப்படுத்தினாலும் ஐயத்தை நெருடிக் கொண்டிருந்தன. அவர் நெஞ்சில் இரகசியத்தை புதைத்துக் கொண்டார். அவன் கொடுத்த விலாசத்தைத் தேடிச் சென்றார். சின்னஞ்சிறு ஒட்டுவீடு, புதிதாக ஆபரணம் போடத் தொடங்கும் கலியாணப் பெண் போல் களைகட்டியிருந்தது. புதிய செற்றிகள் இடப்பட்டிருந்தன.
அவன் பெயரைச் சொல்லி விசாரித்த போது 'ஓம். ஓம். அவற்ற வீடுதான் உள்ளவாங்க. நீங்க..? என்று அவரை அம்மா விசாரித்தாள்
"நான் வெளிநாட்டில் இருந்து போன வாரம் தான் வந்தனான். அவரை
ஓவர் 航L /171

Page 94
வழியில சந்திச்சனான். அவர் உங்களிட்ட சுகம் சொல்லச் சொன்னவர். அதோட இந்தச் சங்கிலியையும் தங்கச்சியின்ர கலியாணத்துக்கெண்டு கொடுக்கச் சொல்லி தந்துவிட்டவர்"
அப்படியே. என்ர ராசா வேறென்ன சொல்லிவிட்டவன்?. சாப்பாடு கீப்பாடு ஒழுங்காக் கிடைக்குதோ? வாய்க்கு ருசியா என்ன கிடைக்குதோ. பாருங்கோ. பிள்ளை போய் ஐந்து வருஷத்துக்கு மேலாகுது. ஒருக்காவும் வந்து போகவில்லை. வந்தாப் போறது கஷ்டம் எண்டு அங்கநிண்டு உழைக்கிறான். இது தான் சகோதரிகளோடை கூடப்பிறக்கிறதால வாற குற்றம் எல்லாக் கடிதத்திலும் தங்கச்சி மாற்ற கலியாணம் பற்றிக் கவலைப்படுறதுதான். எப்பவாம் ஊருக்கு வரப்போறான்: நேரத்துக்கூட காசு. கடிதம் எல்லாம் வருகுது. ஆனால் தான் வாறதைப்பற்றி மட்டும் ஒண்டும் எழுதிறல்லை. முதலில் தங்கச்சிமாருக்கு ஏத்த ஒழுங்கைச் செய்யச் சொல்லித்தான் பலதடவை சொல்லிவிட்டவர். தான் வாறதைப் பற்றிக் கவலைப்படாமல் கலியாண ஒழுங்குகளை செய்யட்டாம். தான் எப்படியும் கலியாணத்துக்கு வந்திடுவாராம். அப்படியே முருகா வரட்டும். வந்தோடான அவனுக்கும் ஒரு பெண்ணைப் பார்த்து கட்டிப் போடவேணும். குடும்பத்துக்காக உழைச்சது போதும். இனி அவன் தன்ர வாழ்க்கைக்காக உழைக்கட்டன். நல்ல சனம் சாதியில நல்ல பெண்ணா இருந்தா சொல்லுங்கவன்' என்று அவருடன் மனம் விட்டுப் பேசினாள்.
எல்லாவற்றிற்கும் தலையாட்டி விட்டு அவர் வெளியேறியபோது, அவர் மனதில் அவன் நினைவு கல்லாகக் கணத்தது.
- ஈழமுரசு - இரண்டாவது ஆண்டு மலர் - 5.2.1988
1721 செம்பியன் செல்வன்

M9
ഗ്രീയ്ക്കൂ മെത്രം
மயிலி வாகன தி தாருக்கு வழக்கம்போல அதிகாலையிலேயே நித்திரை கலைந்துவிடுகிறது. கட்டிலிலிருந்து காலை எடுத்துத் தரையில் ஊன்றி ஏழ முயன்றவர், ஏதோவோரு நினைப்பும் ஏழ மீண்டும் படுக்கையில் சாய்கிறார்.
'இப்ப எழும்பித்தான் என்ன செய்யிறது. ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா..? கந்தோருமில்லை. பாரன் எல்லா அறையிலும் கேக் கிற குறட்டையை. மூதேசியள் விடிஞ்சும் இப்படித் தூங்குதுகள். எனக்கெண்டா எப்பனும் தூக்கம் வருகுதில்லை. சும்மா படுகி கையில் கிடந்து கிடந்து புரள்ளுறதுதான் மிச்சம். அண்டைக்கு டொக்டர் சோமசேகரத்திட்ட கேட்க அவன் சிரிக்கிறான். 'வயது போயிற்றா நித்திரையும் குறைவாம். விசர் டாக்குத்தர் பொடியன். இணிடைக்கும் ஒரு இளந்தாரி என்னோட நேருக்கு நேர் நிக்கமுடியுமே.
‘டாணி 1 டாணி 1. டாணி’
ஞாயிற்றுக்கிழமை / 173

Page 95
பேராலய மணி ஒலிக்கிறது.
ஒ. சண்டே மாஸ் ஸுக்கு கத்தோலிக்கள் வரத் தொடங்கிற்ரினம் போல. நான் விசரன் போல. முகட்டைப் பாத்துக்கொண்டு. சாய். நான் வீணா நிண்டிட்டன். இந்த வீக் - எண்டில்லும் ஊருக்குப் போய் இருக்கலாம். எடுக்கிற சம்பளம் எல்லாம் ரயிலுக்கும் பஸ்ஸுக்கும் தான் போகுது. அடுத்த வாரம் சம்பளம் வாங்கின கையோட ஊருக்குப் போனாத்தான். வடக்கால பாறிக்கிடக்கிற வேலியையும் நாலு கதியால் போட்டு நிமித்தி அடைக்கமுடியும். வீட்டிலும் ரெண்டு மூண்டு வயதுக்கு வந்ததுகள் நிக்குதுகள். வடக்கால என்ன? எல்லாம் சொரியல் காணியள் தான். அடைக்காமலும் விடலாம் தான். எண்டாலும் ஒரு பாதுகாப்பு பத்தறிக்கை இல்லாம. இருக்கலாமே? அதால ஆடு மாடுகள் பூந்து வீட்டில ஒரு மரம் செடியை வைக்க விடுதுகள் இல்லை எண்டு அவளும் எழுதியிருக்கிறாள். வாற கிழமை ஊர்த் திருவிழா ஆரம்பமாம்.
மரம் செடி, கொடி என்ற நினைப்பு வந்ததும் அவரால் படுக்கையில் கிடக்கமுடியவில்லை. இடுப்பால் நழுவிய சாறத்தைத் தூக்கி, உடம்பில் முளைத்த மேடான வயிற்றில் இறுக்கிக் கட்டிக்கொண்டு, யன்னலடிக்குப் போகிறார்.
யன்னலில் ஒரு சதுர அடிக் கண்ணாடி, காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது. யன்னலினூடாகப் புகுந்த வெண்மை அறையை அம்பல மாக்குகிறது. கண்ணாடியில் பார்த்தவாறு கன்னங்களையும் நாடியையும் தடவிப் பார்க்கிறார்.
சொர. சொர. இண்டைக்கு என்னத்துக்கு? நாளைக்கு ஒபீசுக்கு போகேக்க ஷேவ் செய்யலாம்.
சுவரில் பதித்திருந்த பலகைத் தட்டிலிருந்து ரூத் பேஸ்டை எடுத்து பிறகில் பிதுக்கிக்கொண்டு நிமிர்ந்தவர் பரவசமாகிறார். உடம்பில் உணர்ச்சி ஜில்லிட்டுப் பரவுகிறது.
இவரின் யன்னலுக்கு அப்பால் மூன்றடி தூரத்தில் கவர்மண்ட் குவாட்டர்ஸ் மதில். அறையின் தரை உயரமாதலால், மதிலுக்கு அப்பாலும் இவர் பார்வை விழ வாய்ப்புண்டு. ஆனால், மதிலுக்கு அப்பாலுள்ளவர்களுக்கோ இங்கு அறையில் இவர் நடமாடுவது தெரியாது.
அடுத்த வளவு வெறும் காணி. உடைந்த மதிலும், முட்கம்பி வேலியுமாக நாயுண்ணி மரப்பற்றைகளால் நிறைந்த, என்றோ எப்போதோ ஆங்கில
1741 செம்பியன் செல்வன்

அரசாங்கத்தால் கட்டப்பட்டு, தாழ்வாரப் பத்திகளின் கொழுக்கி ஓடுகள் உடைந்தும், சிதறியும், நிலங்கள் குண்டும் குழியுமாகி அதில் போடப்பட்டிருந்த கற்கள் நீண்டகால பாவனையால் மெருகேறி பளிச்சிட்டுக் கொண்டிருக்கும் வீடும் வளவும். யார் யரோ வருவார்கள். போவார்கள். எவரது கவனத்தையும் அது ஈர்த்ததில்லையாயினும், இவர் அதிகம் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார். அந்த வளவிலும் அரசாங்கம், ஏதாவது ஒரு புதிய கட்டிடம் அரசாங்க அலுவலகமாகவோ, பாச்சுலர்ஸ் குவாட்டர்சாகவோ எழுந்துவிட்டால், எவ்வளவு நல்லது. பாம்பு பூச்சி வராது. கண்டகண்ட ஆட்கள் வந்து குடியேறி அசிங்கம் பண்ணாதுகள். அதோட இந்த குவாட்டர்சுக்கும் நல்ல பாதுகாப்பு.
புதிதாக யாரோ குடிவந்திருக்கவேணும். ஒரு பெண். நாட்டுக்கட்டை. இளவயது. வீட்டிற்குள்ளிருந்து அவசரம் அவசரமாக வெளியே வந்துபோகிறாள். யாரோ புதிசா சாய்ச்சு வந்ததோ? என்னிலும் சாயுமோ. மனம் அப்படி நினைப்பதில் சுகம் காண்கிறதோ
இவரது முகத்தை குளிர்காற்று தாக்குகிறது. அவள் வீட்டிற்குள் நுழைந்து நீண்ட நேரமாகியும், இவரது கால்கள் நகர மறுக்கின்றன.
அறையை விட்டு வெளியே வருகிறார். நீண்ட விறாந்தை. பல அறைகள். கிழக்குத்திசையில் பொது மண்டபம். அதனைச்சுற்றியும் LIGA அறைகள். பெரியவளவு. வடக்குச் சுவரேமாக 'லட்ரின் வரிசை. இவரது அாைக்கு நேராக விறாந்தையை ஒட்டி ஒரு பெரிய பழங்கால கிணறு. என்றும் பாவனையிலிருப்பதால் பழமையை மீறிய இளமையின் உயிர்த்துவம் கொண்ட கற்கண்டாய் ருசிக்கும் நீர் கொண்ட கிணறு. கிணற்றின் உட்பக்கச் சுவரின் பொந்தில் குடித்தனம் நடத்தும் பெயர் தெரியாத குருவிகள். 'விர் விர்' ரென்று நீருக்கு மேலால் பறந்து கொண்டிருக்கும்.
இருபது பேருக்கு மேலாக வாழும் குவாட்டர்சின் நீண்ட கால அங்கத்தவர்களில் மயில்வாகனத்தார் தான் வயதிலும் சீனியர்தான். கச்சேரியில் நிதிக் கிளையில் அக்கவுண்டனுக்கு அடுத்த நிலையில் இருப்பவர். அரசாங்க எஸ்ரபிளிஸ்மன்ட் கோ ஏ. ஆர். எவ். ஆர் எல்லாம் தண்ணிபட்டயாடு. இதனால் இவருக்கு கச்ஸ் .யில் ஏக செல்வாக்கு. எந்தப் பெரிய உத்தியோகத்தர் யாருக்காவது நிர்வாகச் சிக்கலோ, டிபார்ட்மன்ரல் விசாரனையோ வருமிடத்து இவரைத் தான் தஞ்சம் அடையவேண்டிய ஆளுமை, செல்வாக்கு மட்டுமல்லாமல் சாராயப் போத்தலிலிருந்து ஆயிரக் கணக்கான ரூபாய்வரும் சாத்தியம் நிறையவுண்டு. வீட்டிலும் ஒன்றுக்கும் குறைவில்லை. இரண்டு பெடிச்சிகளுக்கும் இப்ப மாப்பிள்ளை ரெடி' எண்டால் நாளைக்கே பந்தல்
ஞாயிற்றுக்கிழமை / 175

Page 96
போட அவர் தயார். பொம்பிளைக்கு என்னென்ன தேவையோ அத்தனையும் ரெண்டு பெட்டையளுக்கும் செய்து தயாராக வைத்திருக்கிறார். ஊர்க்கோயில் கொடியேறி விட்டால் அந்தப் பத்து நாளும் ஊரில் போய் தஞ்சம் புகுந்துவிடுவர். இவரின் அட்டகாசம் தான் திருவிழா சப்தங்களை விட மேலோங்கி நிற்கும். அந்தச் சப்தம்கூட ஊர்மக்களுக்கு வேண்டிருந்தது. பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். மயில்வாகனத்தார் இல்லாட்டி இந்தத் திருவிழாக்கள் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நடந்து முடியுமே?
வாயில் பிறஷை' போட்டுக் கொண்டு, வாளித் தண்ணீருடன் லெட்ரினை நோக்கி நடக்கிறார். மனம் திடீரென இளமையாகிவிட்ட குதூகலம். மீண்டும் கிணற்றடியில் வந்து வாயையும் முகத்தையும் தண்ணீரால் மெல்லத் துடைத்துக் கொண்டு, காலை மீண்டும் தண்ணீரால் நன்கு கழுவிக் கொள்கிறார். கிணற்றைச் சுற்றி ஆறடிக்கும் மேலாக வாழைகள் எழும்பி குலைகள் தள்ளியிருக் கின்றன. அத்தனையும் அவர் நட்டது. ஒபீஸ் பியோன்களின் துணையுடன் போட்ட தோட்டம். குவாட்டர்சில் வசிக்கும் ஏனைய கவுண்மன்ற் ஓபீசர்ஸ் குளிக்கிற தண்ணிள் எல்லாம் தோட்டத்துக்கு இறைக்கும் நீராகிவிடும். வாழைக்குலை தள்ளி ஒரு பழம் குவாட்டர்சில் வசிப்பவர்களுக்கு கொடுத்ததாக ஞாபகமில்லை. வார இறுதியில் ஊருக்குப் பயணமாகும் காலங்களில் காட்போட் பெட்டியில் குலைகள் சீப்புச்சீப்பாக அடைக்கலமாகிவிடும்.
ஓ. அந்த நடுக்குலை நல்லா முத்தி நிறத்து வந்திட்டுது. இந்த முறை ஊருக்கு போகேக்க மறக்காம வெட்டிப் போடவேணும். ஊரிலும் திருவிழா என்டெல்லே எழுதியிருக்கிறாள். ஊரில இந்த இன வாழைகிடைக்காதே "ஐயா! எழும்பிப் போட்டியளே!" என்ற குரல் கேட்க திரும்புகிறார். ஓபீஸ்பியோன் தணிகாசலம். அவர் தான் அவனை வரச் சொல்லியிருந்தார். லீவு நாட்களிலும் அவன் அவருக்கு பியோன் தான். அவனும் ஒரு வழியில அவர் ஊர்க்காரன் தான். அவனின் அப்பா இந்த ஊருக்கு வேலைதேடி இளைஞனாக வந்தவன் மீண்டும் ஊருக்குப் போகவில்லை. வேலையோடு தனக்கொரு துணையையும் சேர்த்துக் கொண்டான். ஊர்ப்பக்கம் தலைகாட்ட முடியாத சேர்ப்பு. அதனால் தணிகாசலம் இங்கேயே பிறந்து வளர்ந்து வேலை பார்க்கிறான்.
பிளாஸ்கை எடுத்துக் கொண்டுபோய் வாங்கி வந்திட்டு அப்படியே சாப்பாட்டுக்கும் சொல்லிப் போட்டு வா. ஐயா ஊருக்குப் போகேல்லியம். நல்லதா மத்தியானத்துக்கு இறைச்சிக் கோழி முட்டை வைச்சு அனுப்பச் சொல்லிவிட்டு வா. அவன் பிளாஸ்க்குடன் வெளியேறுகிறான்.
176/ செம்பியன் செல்வன்

அவன் ரீ யுடன் வந்த பொழுது மயில்வாகனத்தார் உடம்பு முழுக்க எண்ணை பளபளக்க, இடுப்பில் 'டவலுடன் வெற்று மேனியராகக் காட்சியளிக்கிறார். கன்னங்கள். வயிற்றுத் தொப்பூள். எல்லாம் எண்ணையில் பளிச்சிட உச்சி மயிர் எண்ணைத்தேய்ப்பில் எழும்பியிருக்கின்றன. கண்கள் இரண்டும் கோவைப் பழமாக சிவந்து. "என்ன சிசி. என்னும் எண்ணை தேய்ச்சு முடியேல்லியா? இதென்ன தேத்தண்ணியா? இப்ப. ஏன் இதெல்லாம். என்ன வேலை பார்க்கிறீர்?" கிளாக்கள் கனகசபை வருகிறார்.
"என்ன எல்லாரும் வந்திட்டினமே..?” எல்லாரும் எப்பவோ ரெடி நீர்தான்."
"சரி. சரி. தணிகாசலம். பிளாஸ்க்கை கொண்டுபோய் உள்ளவை. உடன போயிராத, நில்லு. என்ன?”
கனகசபையும் அவரும் பொதுமண்டபத்துக்குப் போகிறார்கள். அவனும் அவர்களைத் தொடர்கிறான். பொது அறையில் அங்கங்கே சிதறிக்காணப்பட்ட கதிரைகள் ஓரமாகத் தள்ளப்பட்டுள்ளன. நடுமையத்தில் நாலைந்து பெட்ட்ே கள் விக்கப்பட்டு சோடாப் போத்தல்களும் கிளாஸ்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒதுக்கிப் போடப்பட்டிருந்த கதிரைகளில் அமர்ந்திருந்த கல்விக்கந்தோரைச் சேர்ந்த பரஞ்சோதி, புலேந்திரன், மின்சாரசபையைச் சேர்ந்த விநாயகமூர்த்தி, ரிஜிஸ்ரர் வேலாயுதம், தபாற் கந்தோர் அதிபர் வெற்றிவேலு எல்லாரும் அவரைக் கண்டதும் அசட்டுச் சிரிப்புடன் எழுந்து நிற்கிறார்கள். அவருக்கு பரஞ்சோதி, புலேந்திரன், விநாயகமூர்த்தி ஆகியோரை கண்டதும் உள்மனம் சுருங்குகிறது. முளைச்சு மூண்டு இலைவிடேல்ல. அதற்குள்ள அவைகளுக்கு குடி. இவங்களை நம்பி எப்படி நாங்கள் எங்கட பெண் பிள்ளையளக் கட்டிக் கொடுக்கிறது. கொடுக்கிற சீதன பாதனத்தை நாலு நாளில் குடிச்சழிச்செல்லே போடுவாங்கள்.
"வாரும். நல்ல எண்ணை முழுக்குப் போடப்போநீர் போல. உமக்காகத் தான் காத்திருக்கிறம்." ரிஜிஸ்ரார் வேலாயுதம் உரிமையுடன் அழைக்கிறார்.
எல்லாரும் அமர்கிறார்கள். அவர் கண் வட்டமிட்டுச் சுழல்கிறது. ‘என்ன ஒண்டையும் காணேல்ல
என்ன? ‘என்னத்தைக் கடிக்கிறது? ஏதாவது . வடை, பகோடா. முந்திரிப்பருப்பு. கச்சான். சாச்சாய். உதொண்டும் வாய்ப்பானதில்லை. பச்சை மிளகாய். வெங்காயம் கடிச்சுக்கொண்டு அந்தக் காரத்தில சாராயக் கசப்பை விழுங்கினா என்னமாதிரி இருக்கும் தெரியுமே. அமிர்தம் தான்.
ஞாயிற்றுக்கிழமை 177

Page 97
♥♥፡
நோ பிராப்பிளம். வாங்கிவிட்டாப் போச்சு. "தணிகாசலம். நல்ல பிள்ளையா. ஓடிப்போய் ஐந்து ரூபாய்க்கு சின்ன வெங்காயம். பச்சை மிகாய் வாங்கியாறியா?”
"அதுகென்ன ஐயா?” "கெதியா வரவேணும். எ க்காகத்தான் வெயிட் பண்ணுறம். நீயும் இண்டைக்கு எங்களோடைதான் நிக்கவேணும். உனக்குக் காலமை சாப்பாட்டுக்கும் ஏதும் வாங்கிவா என்ன?”
சமா உச்சநிலையை எய்திக்கொண்டிருக்கிறது. பச்சை மிளகாயும். வெங்காயமும் சாராயமும் தமது மணத்தை ஹோல் முழுவதும் வாரியிறைக் கின்றன. ஹோலின் வாசலில் நிலைப்படிக்கருகாமையில் இருந்தவாறு தணிகாசலம் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்கள் அடிக்கடி ஏவும் வேலைகளுக்காகக் காத்திருக்கிறான்.
'தணிகாசலம் ஒரு பெட்டி பிறிஸ்டல் வாங்கிவா. 'ஒரு நெருப்புப் பெட்டியும்', 'என்ர பிராண்ட வேற. நெவிக்கட். 'தணி. தண்ணிகொண்டு வா. பரஞ்சோதி, புலேந்திரன், விநாயாமூர்த்தி மூவரும் அநாயாசமாக எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாமல் தண்ணி அடிப்பதைப் பர்க்கப் பர்க்க அந்த வெறியிலும் மயில்வாகனத்தாருக்கு பற்றிக் கொண்டு வருகிறது.
பாரன். எல்லாருமே பாம்புக் குடலன்கள். எப்பனெண்டாலும் வெறியேறுதா. இப்ப எனக்கு என்ன மாதிரி தலையைச் சுற்றிக்கொண்டு வருகுது. எல்லாருமே குடிகாரன்கள். இவங்களை நம்பி பொம்பிளையளைக் கொடுத்துப்பாரன். இவங்கள் சொத்தை மட்டுமே அழிப்பாங்கள். வாற பொம்பிளையளின்ர சீவியத்தையுமல்லே அழிச்சுப் போடுவாங்கள்.
பெண்பிள்ளை நினைப்பு வந்ததும் ஊர் ஞாபகம் தலை நீட்டுகிறது. மறுகணம் மதிலுக்கு மேலால் காலையில் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது. 'ஹா. ஹ. ஹோ. ஹோ' என்று தொடையில் தட்டியவாறு சிரிக்கத் தொடங்குகிறார்.
எல்லாரும் அவரையே வியப்புடன் பார்க்க, ரிஜிஸ்ரார் ‘என்ன மயில்வாகனத்தார். என்ன திடீரென்று?’ என்று கேட்கிறார்.
காலையில் கண்டதற்கு, கொஞ்சம் கால், கை, வாய், மூக்கு வைத்துச் சொல்லி சந்தோஷப்படுகிறார் - கற்பனை ஆகாயமாக விரிய. விரிய.
இளைஞர்கள் வாய்பிளந்து. இரண்டு சாராயப் போத்தல்கள் உருண்டு கிடக்க. மூன்றாவது உடைபடுகிறது. மதியம் தாண்டிவிட்ட வேளையிலும் சமா ஒயவில்லை. மயில்வாகனத்தரின் எண்ணை மேனியே வியர்வை வெள்ளத்தில் குளிக்கின்றது.
178/ செம்பியன் செல்வன்

ரிஜிஸ்ரார் வேலாயுதத்தார் ஏதோ வெளியில் போறவர் போல் எழுந்து சென்று, மதில் பக்கமாக கொஞ்ச நேரத்தைச் செலவு செய்துவிட்டு வருகிறார். முகத்திலே வாட்டம் தெரிந்தது. கொஞ்சநேரம் கழித்து புலேந்திரன் போய்விட்டு வந்து பரஞ்சோதியின் காதில் முணுமுணுக்கிறான்.
மச்சான். கறுப்பெண்டாலும் ரொப் மச்சான். இனிப் பின்னேரங்களில் இந்த விறாந்தை தான். கிழவன்ர அறைதான் ரொப். ஒருத்தருக்கும் தெரியாது. கிழவன் இனி அறையில் தான் கிடக்கப்போகுது.
மணி இரண்டைத் தாண்டுகிறது. "ஐயா. நேரம் போகுது. சாப்பாடு அப்பவே வந்து காத்துக்கிடக்கு. எப்ப முழுகிறது. எப்ப சாப்பிடுறது.
அதுவும் சரிதான். இது தான் கடைசி றவுண்ட் எல்லாரும் எழும்புங்கோ. கிணத்தடிக்குப் போவம்' எல்லாரும் தட்டுத்தடுமாறிக்கொண்டு எழும்புகிறார்கள்.
கிணத்தடி அல்லோலகல்லோலப்படுகிறது. நாலு மணியாகியும் ஒருவரும் குளித்து முடிந்தபாடில்லை. "தணி இங்க. வா. எனக்கு ரெண்டு வாளி தண்ணி ஊத்து' என்று மயில்வாகனத்தார் அவனை அழைக்கிறார். அவனுக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. அருமையான ஞாயிற்றுக்கிழமையை இந்த கிழடுகளுக்காக இழக்க நேரிட்டுவிட்டதே. அதோட இப்ப தண்ணி ஊத்திக் குளிப்பாட்டட்டாம். மாட்டன் எண்டால் நாளைக்குத் தொலைஞ்சன்.
விதியை எண்ணியபடி துலாக்கயிற்றைப் பிடிக்கிறான். 'தணி. இந்த முதுகைத் தேய்ச்சுவிடு.
அவன் திடுக்கிட்டு நிற்கிறான். இப்ப மாட்டன் எண்டால். வெறியில நிற்கிற மனுஷன் உயிரை வாங்கிப்போடும். பிறகு நெடுகிலும் சறவை தான்.
அவன் முதுகைத்தேய்க்க ஆரம்பிக்கிறான். ஆ. அப்படித்தான். ஆ. என்ர மனிஷிகூட இப்படித் தேய்ச்சுவிடமாட்டாள். என்ன சுகம். கண்ணை முடி ஆனந்த பரவசத்தில்.
டேய், தணி. நீயும் குளியடா. இண்டைக்கு என்னோட தான் சாப்பாடு. திடீரெனக்கூறுகின்றார். மற்றவர்கள் வியப்போடு பார்க்கிறார்கள். டிசிப்பிளின் பார்க்கிறவர். பியோனோடு தோழமை கொண்டாடுவது என்பது.? அவர்களுக்கு ஆச்சரியத்தால் முழி பிதுங்கிவிடும் போலிருக்கிறது.
திடீரென்று அவன்மேல், தனக்கு அவன் ஊற்ற வந்த வாளித் தண்ணீரைக் கவிழ்க்கிறார். அவன் திகைத்துப் போய் நிற்க, அவரே அள்ளிக் குளிப்பாட்டத்தொடங்க அவன் கூச்சத்தால் நெளிகிறான்.
'திரும்படா. முதுகைக் காட்டடா. நீயும் என்ர பிள்ளைபோல என்னசுடச்சம். என்றவாறு அவன் முதுகை வேறு தேய்க்க ஆரம்பிக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை/179

Page 98
ஆளுக்கு கொஞ்சம் கூடிப் போட்டுது. மற்றவர்கள் முணுமுணுப்பது அவருக்குக் கேட்பதில்லை.
எல்லோரும் ஒன்றாக இருந்து தங்களுக்கு வந்திருந்த எடுப்புச் சாப்பாட்டைப் பிரிக்கிறார்கள்.
எனக்கு முட்டை. அவர் தனது சாப்பாட்டைப் பிரித்து வைத்துக் கொண்டு தணி இங்க வாடா. சாப்பிடுவம்' என்று அழைக்கிறார்.
வேண்டாம் ஐயா. நீங்க சாப்பிடுங்க. நான் வீட்ட போய்ச் சாப்பிடுகிறன். 'வீட்டபோய்ச் சாப்பிடுறியோ. நல்ல கதைதான். வாடா. எண்டா வந்திரோணும்.
அவன் அவரைப் பயபக்தியுடன் அணுகுகிறான். அவர் அவனுக்கு ஊட்டி விடாத குறையாக, தனது சாப்பாட்டைப் பங்கீடு செய்கிறார்.
அவன் கண்களில் நீர்பனிக்க 'ஐயா எவ்வளவு நல்லவர். வேலையில தான் நெருப்பு.
சாப்பாடு முடிய மாலை ஆறுமணியாகிவிட்டது. எல்லாரும் அவரவர் அறைகளில் போய் விழும்போது ஏழு மணியாகி இருக்கும்.
மறுநாள் காலை புலர்கிறது. மயில்வாகனத்தார் எழும்புகிறார். 'சொர சொர வென்று கிடக்கும் முகத்தைத் தடவிக்கொள்கிறார். சவர்க்காரம், ஷேவிங் ரேசர் முதலான சாமக்கிரியை உபகரணங்களுடன் கிணற்றடிக்குப் போகிறார். குளியல் எல்லாம் முடிந்து, காற்சட்டை போட்டு, கண்ணாடிக்கு முன் நின்றபோது 'ஐயா. எழும்பிட்டீங்களா? நேத்து ஐயாவுக்கு கொஞ்சம் கூடிப்போட்டுது. அதுதான் பாக்க வந்தனான். எண்டாலும் ஐயா இப்படிக் குடிக்கக்கூடாது. என்று நேற்று அன்பு மழையில் நனைந்த உரிமையில் தணிகாசலம் அவர் அறையில் காலடி பதித்தான்.
‘என்னடா சொன்னாய், நாயே. நான் குடிகாரனோ. இது தான். இந்த எளியதுகளை வைத்துக்கொண்டு ஒண்டும் செய்யக்கூடாது என்கிறது. முதல்ல யாரைக்கேட்டு அறைக்குள் வந்தாய். போடா வெளியால.
- அவன் திக்கித்தான்.
ஈழநாடு - 02.07.1989.
1801 செம்பியன் செல்வன்

2O ഭഗ്രസ്മെ ബ്ലുട്ട
வெளியே எழுந்த பேரிரைச் சலைக் கேட்டு, வீட்டின் பின்னே தோட்டக் காணியில் மிளகாய்ச் செடிகளிடையே நின்றிருந்த சின்னராசு தெருக் கடப்பை யை நோக்கி ஓடி வந்தான். தூரத்தே வாகன வரிசை போல வேகமாக பலவிதமான வாகனங்கள் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
அவனின் இளநெஞ்சம் ஏனோ படபடத்தது. முன்பும் இப்படித் தான். லாண்ட் றோவர் ஜீப் வாகனங்கள் வந்து போன அன்று வீட்டில் தாத்தா, அப்பா, அம்மா, அண்ணன் எல்லாரும் இறுகிய முகங்களுடன் குசு குசுத்துக் கொண்டு இரவுச் சாப்பாடுமில்லாமல் படுக்கையில் புரண்டு புரண்டு திரும்பிப் படுத்ததது ஞாபகத்தில் கூர் தீட்டியது.
"பாவம்பா. முருகேசண்ண1. எவ்வளவு பாடுபட்டு காட்டையழிச்சு அதுவும் ஆட்கள் போகவே பயப்படுற இடத்தை இப்ப பொன் கொழிக்கிற புல வாக்கி கொஞ்ச நாளாச் சந்தோசமாத் திரிஞ்சார். அதுவும் கடவுளுக்கே
须
፳
23 2 3. ※须 ീ,
பொறுக்கேல்ல."
பேரனும் தாத்தாவும் 181

Page 99
‘கடவுள் என்னப்பா கடவுள். முருகேசண்ணை பயப்படாம காட்டுக்குள்ள போய் கமம் செய்ததாலதான, பின்னால எத்தனையோ பேர் போனவை?
முந்திவெறும் கரடிச் கா.ெ தேனெடுக்க இராப்பகலெண்டு பாராம அலையும். தேனெடுக்கப் போறவை எத்தன பேர் கரடிகளால காயப்பட்டு வந்தினம். உயிரை இழந்தினம். அப்படியாப்பட்ட இடத்தில துணிஞ்சு குடிசை போட்டவன் முருகேசு.
அப்படிப்பட்டவனையுமெல்லோ எழும்பெண்டு நிக்கிறார் ஜி. ஏ. யும் டி. எல்லோவும்.
முருகேசண்ணையை மட்டுமே எழும்பச் சொல்லினம். அவருக்குப் பின்னால வந்து குடியேறிய பூக்கண்டு, செல்லத்துரை, காளியண்ணன், எண்டு அங்க வாழுற நூறு குடும்பங்களையும் எழும்பச் சொல்லி நிக்கிறார் ஜி. ஏ.'
பாவம். அதுகள் வாழ எங்க போகும் ‘எங்கட சொந்த நிலத்தில இருந்து போகட்டாம் ‘எங்க போறது போய்க் குடியிருக்கிறது. வீடு கட்டுறது. இவன் இப்படித் துரத்தத் துரத்த ஓடினா நாங்கள் எல்லாரும் கடலில தான் போய் வீடு கட்ட வேணும்.
அதுக்கும் விடுவாங்களே. கடல் எல்லையும் எங்கட பரப்புத்தான் என்பான்கள். மீன் கூடப்பிடிக்க விட மாட்டாங்கள். நாங்கள் எல்லாம் பட்டினியால் சாகவேண்டியது தான்
"ஏனாமப்பா. இப்படித் துரத்துறாங்கள் நாங்கள் கள்ளக்காணியில் இருக்கிறமாம். காட்டை ‘எங்குறோச் பண்ணுறமாம். அது சட்டவிரோதமாம். அவன் ஜி. ஏ. சிங்களவன். அதால சொல்லுறான். ஆனாப் பாரன். அவன் டி எல்லோ சுத்தத்தமிழன். அவனுமல்ல அவங்களோடை சேர்ந்து கொண்டு ஆமாம் போடுறான். லோப் பேசுறான். உப்புடியாப்பட்ட இவங்களாலதான் எங்கட இனமே நாசமாப் போகுது. இந்தப் புலவில கற்பூசணி. கத்தி. வெண்டி, வெள்ளி, பூசணி, எண்டு பற்றை பற்றிப் பரந்து கிடக்கு. தோட்டக்காணியில வெங்காயம் போட்டிருக்கிறாங்கள். எல்லாத்தையும் விட்டுட்டுப்போ எண்டால். சும்மாவே? அவங்களை வெட்டிப் போட்டிட்டுத்தான் போகமனம் வரும்.
அப்ப இந்த இடத்தை என்னப்பா செய்வாங்கள். ‘என்ன செய்வாங்கள். தங்கட சிங்கள இனத்தைக் கொண்டு வந்து குடியேத்து வாங்கள்.
அப்படியே நடந்தது. அதன் பின் அந்தக் கிராமத்தின் நிம்மதியே போனது. ஆத்மாவே அழிந்தது.
1827 செம்பியன் செல்வன்

அதுபோல் ஏதாவது மீண்டும் நடக்கப்போகுதோ? அவன் "கடப்பை குறுக்கு மேல் தடியில் ஏறி உட்கார்ந்து, இரு கால் பாதங்களையும் அடுத்த கீழ்த் தடியில் வாகாகப் பதித்து, இரு கைகளாலும் தானிருக்கும் தடியினைப் பற்றிக் கொண்டு வாகனங்கள் வரும் திசையையே நோக்கிக் கொண்டிருந்தான்.
அவன் இதுவரை பார்க்காத வாகனங்கள். தாமே கிளப்பிய செம்மண் புழுதித்திரை மறைவில் ஓடி ஒளிவது போல் 'ஆமர்ட் கார்கள். அந்தப் புழுதி அடங்குவதற்குள் தாமும் சென்று விட வேண்டும் என்பது போல கவச வாகனங்கள். அவற்றைப்பின் தொடர்ந்து டாங்கிகள்.
இவை படை எடுப்பிற்கா. பயப்படுத்துவதற்கா? அவை அவனைக் கடந்து போகப் போக மனத்திற்குள் எண்ணினான். ஒன்று. இரண்டு. மூன்று. நான்கு எண்ணுவதற்குள் அவனைக் கடந்த டாங்கியின் கடுகுழல் அவனை நோக்கித் திரும்ப.
அவன் 'ஜயோ' என அலறியவாறு கடப்பையினின்றும் உள்பக்கமாகக் கீழே குதித்தான். இரும்புத்தொப்பியும் காக்கிச் சட்டையும் முறுக்கு மீசையுமாக நின்ற சிங்களச்சிப்பாயின் ஏளனச் சிரிப்பு அவன் காதில் விழ திரும்பிப் பார்த்தான். அது ஆச்சரியத்தை அளித்தது.
டாங்கியின் சில்லுகளின் ரயர்களுக்குப் பதிலாக இருபக்க இரும்புச் சக்கரங்களையும் இரும்புச்சங்கிலி பிணைத்து உருண்டு கொண்டிருந்தது. அதனால். அது சென்ற பாதையில் குண்டும் குழியும் தோன்றி எதனையோ மறைமுகமாக உணர்த்திக் கொண்டிருந்தன.
அவனின் குரலைக் கேட்டு அம்மா ஒடி வந்தாள். 'சிங்கள ஆமி போறான். அவனையே வேடிக்கை பார்த்தன். என்ன அநர்த்தமெல்லாம் நடக்கப்போதுதோ கடவுளே!. போடா வீட்டுக்குள்ள! என்று அதட்டியவள். "ஐயோ! கடவுளே வெளியபோன ஆம்பிளையளயும் காணேல்லியே என்றபடி அரற்றத் தொடங்கினாள். அவன் அம்மாவுக்குத் தெரியாமல் கடப்பையில் ஏறி தலையை வெளியே நீட்டி அவர்கள் வழக்கமாக வருகிற திசையைப் பார்த்தான்.
தூரத்தே பற்றை மறைவுகளிலிருந்து சில தலைக்கறுப்புக்கள் வெளிப்படுவது தெரிந்தது. கொஞ்சம் பொறுமையாக இருந்தான்.
கரையோர பற்றை மறைவிலிருந்து முதலில் வெளிப்பட்டவர் தாத்தா தான். அவரைத் தொடர்ந்து அப்பா. அண்ணா.
'அம்மா. அம்மா அங்கை பார் எல்லாரும் வருகினம். என்று உற்சாகமாகக் கத்திக்கொண்டு வெளியே பாதையில் குதித்து அவர்களை நோக்கி ஓட முனைந்தவனை அம்மா இழுத்துப் பிடித்தாள்.
பேரனும் தாத்தாவும் 183

Page 100
பார்!. அவங்களே பதுங்கிப்பதுங்கி வரேக்க. இவன்ர துடியாத் தனத்தை!. என்று அவனை அதட்டினாள்.
ஆமி. ரவுணுக்குள்ள வந்து காம்ப் போட்டிருக்கிறான். இனி இங்க வசிக்கிறவை பாடு கஷ்டம் தான். தமிழற்றபாடு பெரிய கரைச்சலாகத்தான் இருக்கப் போகுது. பெண் புரசுகளை வைச்சுக்காப்பாத்துறதும் பொருள் பண்டங்களைப் பேணுறதும் தான் எங்கட வேலையா இருக்கப் போகுது' என்று சொல்லிக் கொண்டு தாத்தாவருவது கண்ணில் தெரிந்தது.
அவனுக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. தாத்தாவும் பயப்படுவார் என்பது அவனால் கற்பனை கூட செய்யமுடியாததொன்று.
‘எல்லாரும் கடப்பையடியில என்ன பாக்கிறயள்' என்று அண்ணி அப்போது தான் அடுப்படியை விட்டு வந்தாள்.
"எல்லோருக்கும் தெருவில என்ன புதினம் கிடக்கு? போங்க எல்லாரும் வீட்டுக்க. இனி முந்தி மாதிரி கண்டபடி ஆரும் வெளியே போறவாறசங்கதியை வைச்சிருக்கக் கூடாது' அப்பா கண்டிப்பது போல் பேசினார்.
அவனுக்கு மேலும் ஆச்சரியமாப் போய் விட்டது, அப்பா தாத்தாவுக்கு முன்னால வாயையே திறக்க மாட்டாரே! எல்லாரும் உள்ளே போனார்கள். வீட்டின் முன்னே, காட்டு மரமென எட்டுத்திக்கும் கிளை விரித்து நிழலூட்டிக் கொண்டிருந்த மாமரத்தின் கீழ், தனது மிலிற்றரி கன்வாஸ் கட்டிலில் தாத்தா அமர்ந்து தனது பழைய லீ அன்ட்ஃபீல்ட்ஸ் றைபிள் துப்பாக்கியைக் கழற்றிச் சுத்தம் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
‘என்ன இண்டைக்கு வேட்டைக்கு வெளிக்கிடப்போறாரோ தாத்தாவின் முகமும். சுத்தம் செய்யும் விரல்களும். துப்பாக்கியைக் கையாளும் இலாகவமும். அவனுக்குப் பார்க்கப் பார்க்கத்திகட்டாதவை.
விரல்கள் எவ்வளவு உறுதியாக கொஞ்சமேனும் தளர்ச்சியோ. நடுக்கமோ அற்று இயங்குகின்றன. மேனியில் சுருக்கங்கள் விழுந்திருந்தாலும் அவரின் கட்டுடலில் தொய்வனவு காணப்படுவதில்லை. சுறுசுறுப்பில் எறும்பின் வேகம், ஆர்வம், அவனுக்குத் தாத்தா ஒரு அதிசயம் அற்புதம். முறுக்கேறிய கை, கால் தசைநார்கள் வரிந்து கட்டிய இறுகிய கயிறுகளாக, நரம்புகள் புடைத்தும். கூன் விழாத முதுகு. ஆலிலைக்கு குறிசுட்டது போன்ற மடிப்புகளுடன் உள்ளடங்கிய வயிறு, நீண்ட கைகள். நெடிதுயர்ந்த தோற்றம். முறுக்கி விடப்பட்ட வெள்ளையும் கறுப்பும் செம்பழுப்பும் கலந்த மீசை. மீசைக்கு
1841 செம்பியன் செல்வன்

நிழல் கொடுப்பது போலவோ. போட்டிக்கு அழைப்பது போலவோ விளங்கும் தடித்த புருவம். இரு காது மடல்களிலும் ஆற்றங்கரை நாணற்புல் போல குத்தென வளர்ந்திருக்கும் நரைமயிர்க் கூட்டம். கரணை சரணையாக விளங்கும் தொடை, கால்களின் தளராத ஆடுதசைகள். நிலத்தை உறுதியாகப் பற்றி நிற்கும் அகன்ற பாதங்கள். பரந்த மார்பு. விரிந்ததோள்கள்.
அடேயப்பா இப்படியும் ஒரு ஆண் மகனா? இளமையில் எப்படி இருந்திருப்பார்?
இன்றும் அதிகாலையில் நான்கு மணிக்கு முன்பாக எழுந்து விடுகிறார். இரவு முழுவதும் எரிந்து கொண்டிருக்கும் 'ஹரிக்கேன் விளக்கை தூண்டி விடுகிறார். பின் பக்கமாக கிணற்றடிக்குப் போகிறார். முகம் கழுவித் துடைத்து திருநீறிட்டு அடுப்படிக்குச் செல்கிறார். அடுப்பை மூட்டி கேத்திலை ஏற்றி விறகினைச் சீராக அடுப்பில் அடுக்கிறார். காய்ந்த காட்டு விறகு. 'சடசட'த்து மெழுகுதிரி எரிவது போல் சீராக எரிய தேநீர் சில நிமிடங்களில் தயாராகிறது. இங்கிலீசுக்கரன் காலத்தைய குண்டுக் கோப்பை ஒன்று அவரிடம் உண்டு. குண்டு போல கணக்கும், அரை லீற்றர் தேநீர் கொள்ளும். கோப்பையின் சூடு தாங்காமல் தனது மேல் துண்டில் அதனை ஏந்திச் சொட்டுச் சொட்டாக சுவைத்து அருந்தி குடிக்கிறார். முகத்தை தனது மேல் துண்டால் ஒரு முறை அழுத்துத்துடைத்து விட்டு, அறையின் மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த கோடரியைக் கையில் எடுக்கிறார். கோடாலி பேய்க்கணம். எத்தனையோ முறை அதனைத் தூக்கி விறகு பிளக்க இவன் முயன்ற போதெல்லாம் இவன் மூச்சுத் திணறியதே தவிர விறகு ஒரு சிராய் கூடக் கிட்டியதில்லை. ஆனால் அவரோ அநாயாசமாக மேலுயர்த்தித் தூக்கி கீழிறக்குவார்.
டக்-டக். டமார். டக். பளார்' என்ற சப்தம் சீராக இடை விடாமல் எழத் தொடங்கும். ஏதோவொரு சப்தலயத்தில் அந்த அதிகாலைப் பொழுதில். எழுந்து வீட்டை ஆனந்தமயமான தூக்கத்திலாழ்த்தும் உள்ளே இளந்தாரியான பிள்ளைகளும் பெண்களும் ஆழ்ந்த உறக்கத்திலிருப்பர். இந்தச் சப்தம் ஏழாத நாட்களில் அவர்களது விடிகாலைத் தூக்கம் பறிபோய் விடுவது பற்றி அவர்களுக்கே ஒன்றும் புரிபடுவதில்லை.
விடிந்து பார்த்தால் முற்றத்தில் கருங்காலிக் கட்டைகளும். முதிரை, வீரை, சூரை, பாலைக் குற்றிகள் எல்லாம் மறைந்து குவியலாக விறகு கிடக்கும். "மொக்கு கட்டைகளின் எச்சங்கள் கூடக் காணப்பட மாட்டா. அந்த விறகுக்குவியல் காலை பத்து மணிக்கிடையில் அப்பாதை வழியே
பேரனும் தாத்தாவும் 185

Page 101
செல்லும் மடு யாத்திரிகள், நகர வாகனங்களால் நல்ல விலைக்கு வாங்கிச் செல்லப்பட்டுவிடும். நாளாந்தக் கைச் செலவுக்கு பிரச்சனை விடியமுன்னரே தீர்ந்துவிடும்.
ஆறாக வியர்வை பெருக அவர் திண்ணையில் சாறத்தை வழித்து தொடைகளின் மீது மேலேற்றி, இருகால்களிடையே தொங்கவிட்டவாறு அமர்ந்திருப்பார். பக்கத்தில் கோடரி. பரசுராமனின் மழுவென கூர்ப்பகுதி பளபளக்கும். காலைச் சூரியனின் கதிர்கள் அவர் வியர்வை மேனியில் விழுந்து மின்னும். காலை படுக்கைப் பாயால் எழும்பி வரும் குடும்பத்தவர்களுக்கு நாளாந்தம் திவ்ய காட்சி. அவனோ அவரைப் பார்த்தும் மெய்மறந்து நிற்பான். உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி அலைகள் பொங்கி அடிக்கும். தாத்தா பிரமாண்டமாக விசுவரூபம் எடுத்த மாமானிதனாக வானோங்கி எழுந்து நிற்பார். அவனைக் கண்டதும் வாரி அணைப்பார். நேற்றுக் தோய்த்துக் காயப்போட்ட வேட்டி துவாய் என்பவற்றை திரட்டுவார். அவன் ஓடிப்போய் தனது துணிமணிகளை எடுத்து வருவான். இருவரும் குளத்தை நாடிப் போவார்கள். போகும் வழியெல்லாம் எத்தனையோ விதமான கதைகள். தனது போர்க்கால அநுபவங்கள். நாடுகள். நாட்டுக்கதைகள். புராண இதிகாசங்கள். என்று எத்தனை எத்தனையோ.
குளம் பரந்து காட்டையே வெற்றி கொள்வதென நீரலை எறிந்து காணப்படும். ஒன்றுக்குப்பத்தாக கரையோரம் முழுவதும் நீர் முழுவதையும் குடித்துவிடுகிறோம் பார் என்பது போல மருதமரங்களின் வேர்களும் கிளைகளும் நீரை முத்தமிட்டபடி மெளனம் காத்து நிற்கும். தாத்தாவும் பேரனும் நீரில் இறங்குவார்கள். தாத்தா நீச்சல் புலி, பேரனுக்கு பக்கவாட்டு நீச்சல். மல்லாந்த நீச்சல் நீருக்கடியில் நீச்சல். என்றும் நீண்ட நேரம் எப்படி நீருக்கடியில் மூச்செடுத்து நிற்பது. என்றெல்லாம் பயிற்சி கொடுப்பார். இருவரும் குளத்தை விட்டு வெளியே வரும் போது வயிறு 'கபகப' என எரியும். வீட்டிற்கு விரைவார்கள்.
அம்மாவும் அண்ணியும் அடுப்படியில் இவர்களுக்காக காத்திருப்பார்கள். அப்பாவும் அண்ணாவும் எப்பவோ வயலுக்கு போயிருப்பார்கள். இவர்கள் இருவரும் சாப்பிடக் குந்துவார்கள்.
காலையில் வசதி போல புட்டோ தோசையோ கஞ்சியோ களியோ பயறோ காணப்படும். ஆனால் பெரும் அவியல் தான். தாத்தா சாப்பிடுவதே ஒரு கலையாகத்தான் இருக்கும் ஒவ்வொன்றையும் சுவைத்து சுவைத்து ஆறுதலாக வயிறாற உண்பார். அவன் சாப்பிடுவது அவருக்கு திருப்தி தராது. அருமைப் பேரன் அல்லவா?
186/ செம்பியன் செல்வன்

நான் மத்திய கிழக்கில் இருக்கேக்க, அங்க உன்ர வயதுப்பொடியன் என்ன சாப்பிடுவாங்க தெரியுமா?. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு முழு ஆட்டுக்குட்டி வேணும். அப்படியே றோஸ் பண்ணிச் சாப்பிடுவாங்கள். நீ என்னடா எண்டால் சும்மா வெறும் வாயைக் கோழி கொறிக்கிறது போல. இப்படிச் சாப்பிட்டால் எங்கட வயது வரேக்க எப்படி இருப்பியள்?.
தன் மகனில் கூட இவ்வளவு கரிசனை காட்டியது இல்லை. பேரனில் உயிரையே வைத்திருந்தார். போன வருடம் மனைவி செத்ததிலிருந்து பேரன் தான் அவரின் துணை. நண்பன். பொழுது போக்கு. எல்லாம்.
சாப்பிட்டபின் பேரனை பாடசாலைக்குக் கூட்டிக்கொண்டு போவர். திரும்பும் போது வீட்டிற்குத் தேவையான சாமான் சக்கட்டுக்களை வாங்கி வருவர். தவறாமல் தினசரி ஒன்று வாங்கத்தவறுவதில்லை. பேரன் வரும்வரை தினசரியும் கன்வாஸ்கட்டிலுமாக இருப்பார்.
அவன் அம்மா மடியில் வளர்ந்ததை விட அவர் மடியில் வளர்ந்த நாட்கள் தான் அதிகம். அவன் இரவுப் பாடங்களைப் படித்து முடிக்கும் வரை குட்டி போட்ட பூனை போல அலைவர். வீட்டின் அலாரமேசை மணிக்கூடு எட்டடித்தால் போதும். பேரனை சாப்பிட அழைக்கப் போய் விடுவார். சாப்பிட்டு முடிந்ததும் முற்றத்து கன்வாஸ் கட்டிலில் இருவரும் போய் அமர்வார்கள்.
பேச்சு வாக்கில் எவ்வளவோ விசயங்கள் வந்துவிடும். ஆங்கிலேயன் இலங்கைக்கு வந்தது. அவர் இராணுவத்தில் வீட்டுக்கு சொல்லாமல் போய் சேர்ந்து கொண்டது. உலகம் பூராகவும் சுற்றியது நைஜீரியா. கனடா, லியோ. எகிப்து. ஈரான். பஹ்ரான். சிங்கபூர். கெரியா என இராணுவத்தில் அலைந்து. இறுதியாக இலங்கைக்கு வந்த போது இரண்டாம் மகாயுத்தம் உச்ச நிலையில் இருந்தது. தாங்கள் திருகோணமலையில் இருந்தபோது யப்பானியப் போர் விமானங்கள் துறைமுகத்தில் குண்டு வீசியது. இதனால் மிதக்கும் துறைமுகம் (Floating Dock) ஒன்று அப்படியே ஆறைமுகத்திற்கு அண்மையில் அமிட்' து போனது. ஆங்கிலேயன் போன போது தேவையில்லாமல் இந் வை பாகித்தான். இந்தியா என பிரித்தவன். பிரிக்கப்படவேண்டிய தமிழ் சிங்கள இராச்சியங்களை இணைத்து வைத்துவிட்டு போனதால் இன்று தமிழர் அணுபவிக்கும் அநர்த்தங்கள் எல்லாவற்றையும் கதை கதையாக கூறுவர்.
தமது பட்டாலியன் ஒரு முறை சகரா பாலைவனத்தில் எதிரிகளால் சூழப்பட்டபோது தாம் எப்படி அவர்களிடம் இருந்து மீண்டும் வந்தோம் போன்ற அனுபவங்களை கூறும்போது அவனது மணக்கண்ணிலே போர்களமே விரியும்.
பேரனும் தாத்தாவும் 187

Page 102
ரைபிள்கள். ஷொட்கன்கள் ரிவோல்வர்கள் ரிபீட்டர்கள். டாங்கிகள். நாசகாரிகள் போர்க்கப்பல்கள். எம்டன் நீர் மூழ்கிக்கப்பல்கள் போன்ற சொற்கள் அவனுக்கு தெரியாவிட்டாலும் அவை என்ன என்பது அவனுக்கு தெரியவந்தது. உமர்முக்தார். கரிபால்டி. நெப்போலியன் வரலாறுகள் கதையாக.
சுபத்திரை வயிற்று அபிமன்யுவாக அவன். கிருஷ்ண பரமாத்மாக தாத்தா. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்து வெள்ளைக்காரன் தனது படையை கலைத்தபோது இவருக்கு வயது எக்கச்சக்கமாக ஏறியிருந்தது. கையில் கொஞ்சம் பணம் பொருட்களுடன் தனது கிராமத்தை நோக்கி வந்த போது அவர் பெற்றோர்கள் அடைந்த ஆனந்தக்கூத்துக்கு அளவேயில்லை. வயது கூடியிருந்ததால் இவருக்கு ஏற்ற பெண் எடுப்பது கஷ்டமாக இருந்தது. பலர் பட்டாளத்துக்காரன். உலகம் முழுவதும் சுற்றியவன் என்னென்ன திருவிளையாடல்களை நடத்திவிட்டு வந்திருக்கிறானோ என்று பெண் கொடுக்க மறுத்தனர். எல்லாவற்றையும் மீறி முடித்த பாட்டி மீது
அவருக்குப் பெரும் பாசம், மதிப்பு. இறுதி வரை ஊரே மெச்சக்கூடிய
விதமாகவே வாழ்ந்து மறைந்தும் போனாள். இவனுடைய அம்மா ஒரே மகள். செல்வமகள். எல்லாச்சொத்தையும் அவளுக்கே கொடுத்துவிட்டு வாழ்ந்து வந்தார்.
அப்பா இளைய வயதிலே தாய் தந்தையரை இழந்தவர். பிழைப்பிற்காக வந்தவருக்கு இடம் கொடுத்த தாத்தா இறுதியில் தனது மருமகனாக்கிக் கொண்டார். அப்பா நல்ல உழைப்பாளி.
ஆழ்ந்த கவனத்துடன் தனது லீஅன்ட்ஃபீல்ட்ஸ் ரைபிளை சுத்தம் செய்து கொண்டிருந்த தாத்தா தலை நிமிர்ந்தார். தன்னையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பேரனைப் பார்த்துச் சிரித்தார்.
‘என்னடா அப்படி பார்க்கிறாய்?" அப்பு வேட்டைக்கோ. நானும் வரட்டே' ஓம் குஞ்சு கனநாளாய்ப் போச்சு. இண்டைக்கு நல்ல நிலவு. பகலில் நல்ல கோடை, வெய்யில். தாகத்துக்கு நீர் குடிக்க மிருகங்கள் வெட்டைக்கு வரும்.
அதுகள் வெட்டைக்கு வந்தால் எங்களுக்கு நல்லவேட்டை' என்ற பேரனை உற்றுப்பார்த்தார். இவன் எங்கையோ போப்போறான். பெருமிதம் கண்ணில் தெரிந்தது.
தாத்தாவின் வேட்டை ஆசை அவனுக்கு நன்றாகப்புரியும். இறைச்சி
1881 செம்பியன் செல்வன்

என்றால் அவர் ஒருவருக்கே ஒரு கிலோ வேண்டும். கடையில் வாங்கிக் கட்டுபடியாகாது. அவரிடம் பிரித்தானிய தயாரிப்பான 'ருவெல்போர் துப்பாக்கி ஒன்றும், லீஅன்ட்ஃபீல்ட்ஸ் ஒன்றும் இருந்தது. வேட்டைக்கு மணியானது.
நிலவு காலங்களில் இரவு வேளையில் ஐந்து பற்றி டோர்ச் விளக்கோடும் இராணுவப்பணியின் போது தன்னிடம் தங்கி விட்ட பெரிய வாட்டர் கானு' டனும் புறப்பட்டால் விடிகாலையில் பருத்த பன்றியோ, மானோ, மரையோ, ஏதோ ஒன்றை இழுத்து வருவார். அன்று கிராமம் முழுவதும் கதை பரவி, இறைச்சிக்காக வந்து சூழ்ந்து விடும். அவனும் அவரது வரவுக்காக ஆவலுடன் காத்திருப்பான். அவர் கொண்டு வரும், சூட்டு ஈரலுக்காக வேட்டையாடிய மிருகத்தின் உடலை கிழித்துக் குடலை அப்புறப்படுத்திவிட்டு ஈரலைப் பக்குவமாகப் பிரித்தெடுப்பார். காட்டு விறகினை அடுக்கி எரியூட்டி அதில் ஈரலைப் பக்குவமாக வாட்டி எடுப்பார். பேரனின் நினைவாகவே இந்த வேலைகள் நிகழும் கற்தேக்கிலையில் வாட்டிய ஈரலை சுருட்டிக்கட்டி எடுத்து வருவார். காடு அவருக்கு அத்துப்படி. இந்த மூலையில் என்ன இருக்கிறது. போகும் வழி என்ன? என்று மனம் சிந்திக்கும் முன்னரே நடைபோட தொடங்கும். பாலை பழுக்கத்தொடங்கிய காலத்தில் பன்றிகள் கொழுப்பு வைத்திருக்கும். அந்தப் பன்றியினை சிறு துண்டுகளாக வெட்டிப் பாத்திரத்தில் இட்டு காட்டு விறகை கொளுத்தி விடுவார். பன்றியின் கொழுப்பிலேயே இறைச்சி பொரியலாகி. கருக்கல் வடிவம் எடுக்கும். ஆறு மாதம் ஆனாலும் பழுதடையாமல் பயன்படுத்தலாம். தேன் வதைகள். பாலை. சூரை. கிளாத்தி பழங்கள், விளாம்பழம். காட்டு மாம்பழம். அபூர்வமாகக் கிட்டும் காட்டு வாழைக்குலை என வந்து சேரும்.
அவன் அவற்றை ஆர்வமாகச் சாப்பிடுவதை ஒரு தாயின் வாத்சல்யத் தோடு பார்த்து நிற்பார். அவனும் வெட்டை வெளியில் ஏரி நீரில் வளரும் மருத மரமென வயதுக்கு மீறிய வளர்ச்சியுடன். அண்ணனுக்கும் அவனுக்கு மிடையில் வயது வித்தியாசம் அதிகம். ஆதலால் அவனுக்குச் செல்லம். அண்ணிக்கு குழந்தைகள் இல்லாத படியால் அவளுக்கும் அவன்தான் குழந்தை. அவளுக்கு இரண்டு கருக் கலைந்து போயிருக்கிறது. அவளது ஏக்கங்களும், இழப்புகளும் தவிப்புகளும் அவனாலேயே தீர்க்கப்பட்டுக் கொண்டிருந்தன.
‘என்ன அப்பூ நானும் வரவே எண்டு கேட்கிறன். நீ பதில் சொல்லாமல் இருக்கிறாய்.?
இந்த முறை வேண்டாம் அடுத்த முறை கட்டாயம் கூட்டிக்கொண்டு போறன்.
பேரனும் தாத்தாவும்/ 189

Page 103
அவன் முகம் களை இழந்தது.
தாத்தா தனது வேட்டைத் துப்பாக்கியுடன் காட்டின் நடுப்பகுதிக்கு வந்துவிட்டார். ஆனால் மிருகங்கள் ஒன்று கூடச் சந்திக்கவில்லை. இந்த மிருகங்கள் எங்கே போய் ஒழிந்துகொண்டன. தூரத்தில் பற்றை மறைவில் தனது இருப்பை எடுத்துக்கொண்டார். முன் நிலவு கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியது.
இது என்ன ஏமாற்றம்.
அப்போது, தூரத்தே குளத்திற்கு அப்பால் ஏதோ சல சலப்புச் சத்தம் கேட்டது. தாத்தா உசார் ஆனார். 'டோர்ச்சை கையில் எடுத்தார். பளி" ரென்று ஒளிக்கற்றை பாய்ந்தது.
யார் அது?
அவர் திடுக்கிட்டார்.
'வா. வெளியே. அவர் இடத்தை நோக்கி ஒளிக்கற்றை வந்து விழுந்தது. அவரை நோக்கி சிலர் வந்து கொண்டிருந்தார்கள். அன்று வேட்டையிலிருந்து வீடு திரும்பிய தாத்தா வெறுங்கையுடன் வந்ததைக்கண்டு அவன் ஆச்சரியம் கொண்டான். அதே வேளையில் தாத்தா உற்சாகம் கொண்டவராக இருப்பதையும் கவனித்தான்.
நள்ளிரவில் தெருவில் வாகனம் ஒன்று ஒலிபரப்பிக்கொண்டு போனது.
நாளை சரியாக எட்டுமணிக்கு ஐம்பது வயதுக்குட்பட்டசகல ஆண் பெண் பத்துவயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் அனைவரும் காட்டு வைரவர் கோவிலடி முன்னுக்கு வந்து கூடவேண்டும். எவரும் வீட்டில் இருக்கக்கூடாது. அப்படி இருப்பவர்கள் இராணுவ தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
அடுத்த நாள் வைரவர் கோவிலடியில் பெருங்கூட்டம் வீட்டில் இருந்த குஞ்சுகுளுவான்களை வயோதிபர்களிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருந்து அதுகளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு பெண்களும் வேலைவெட்டியை விட்டுவிட்டு வந்து என்னத்துக்காக கூட்டி வைச்சிருக்கிறாங்கள் என்று ஆண்களும் யோசித்துக்கொண்டிருந்தனர். நாலைந்து கவச வாகனங்கள் அவர்களை சூழ்ந்து நின்றன. திடீரென நாலாபுறமும் இருந்து இராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி வந்தனர். அக்கூட்டத்திடையே அவர்கள் யாரையோ தேடினார்கள். காலைச் சாப்பாடும் இல்லாமல், தாகத்திற்கு தண்ணீரும் இல்லாமல் உச்சிச் சூரியனின் கத்தரி வெயிலின் தாக்கத்தால் பலர் மயங்கி விழுந்தனர். சில ஆண்களையும் சில பெண் பிள்ளைகளையும் வாகனத்தில் ஏற்றினர். இவனின் அண்ணாவையும் ஏற்றினர். வாகனங்கள் சென்ற பின் இவர்கள் வீடு திரும்ப
90! செம்பியன் செல்வன்

அனுமதித்தனர். அன்று அம்மாவின் அழுகுரல் அந்தப் பிரதேசத்தையே நிறைத்தது.
திடீர் திடீரென கவச வாகனங்கள் இரவு வேளைகளில் சில வீட்டு வாசல்களில் நிற்பதும், வீட்டிலிருந்து இளவயதுக்காரர்களை ஏற்றிச் செல்வதும் வழக்கமாகி விட்டது.
தாத்தா தனது பழைய மிலிற்றரி அடையாளஅட்டையை பழைய பெட்டி. பெட்டகங்களைக் குடைந்து கண்டுபிடித்தார். பழைய பூட்ஸ். காற் சட்டைகளை மீண்டும் அணிந்தார்.
வீட்டில் எல்லாரும் மறிக்க மறிக்க இராணுவமுகாம் நோக்கி நடந்தார். திரும்பிவரும் பொழுது இவனின் அண்ணாவுடன் வந்தார். ஆனால் அவர்முகம் சிந்தனை வயப்பட்டிருந்தது. அம்மா கனநாட்களுக்குபின் அன்று தான் சாப்பிட வந்தாள்.
இனி. இரவில ஆம்பிளையஸ். முக்கியமாக இளந்தாரியள் தங்கக் கூடாது. இரவிலதான் இந்தக்கைது நடக்குது, பகலில குறைவு. ஆமிவராத இடமாகப் போகவேணும்' என்று கிராமத்தில் முடிவு எடுத்தார்கள்.
அன்று தாத்தா அண்ணனையும் அப்பாவையும் அழைத்துக் கொண்டு காட்டில் நுழைத்தார். இருவருக்கும் ஆமிவராத பாதுகாப்பான ஒரு இடத்தைக் காட்டினார். ஒரு காலத்தில் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் கோச்' ஒடிய போது கட்டி விடப்பட்ட குதிரை லாயம். இன்று சிதைவுக்குள்ளானாலும் கொஞ்சம் பாடுபட்டால் பயன்படுத்தலாம். எல்லா ஒழுங்குகளையும் செய்து கொடுத்து விட்டு தாத்தா திரும்பினார்.
வயல்களில் கதிர்கள் சாய்ந்திருந்தன. கதிரறுக்க வேண்டிய காலம். ஆனால் அறுவடைசெய்ய ஆட்களில்லை. தலைமறைவும் பயமும் வயலில் வேலை செய்வதைத் தடைசெய்தன. சிங்கள குடியேற்ற வாசிகளுக்கு கொண்டாட்டமான கொண்டாட்டம். இரவு வேளையில் தமிழர்களின் வயல்களில் திருட்டுத்தனமாக அறுவடை செய்யத்தொடங்கினர். ஆமி அவர்களுக்குத் துணையிருந்தது.
ஒரு நாள். பி' கல் வேளை, 'அண்ணை. உங்கட வயலில அறுவடை செய்யிறாங்கo . என்று ஓடி வந்தான் முருகேசு.
‘என்ன ஆரடா அவன். இண்டைக்கு அவங்களை ஒரு கை பாக்கிறம். குட்டக் குட்ட குனியிறவன் மடையன். என்றவாறு அண்ணனும் அப்பாவும் கையிலகப்பட்ட வெட்டுக் கத்தியையும் கொடுவாக்கத்தியும் எடுத்துக் கொண்டு வயலை நோக்கி ஓடினர். அப்போது வீட்டில் தாத்தா இருக்கவில்லை. இவன் தாத்தாவைத் தேடி ஓடினான்.
பேரனும் தாத்தாவும் 191

Page 104
அண்ணனுக்கும், அப்பாவுக்கும் பின்னால் ஒரு கூட்டமே ஓடிக் கொண்டிருந்தது.
சிங்களக் காடையர்கள் அறுவடை செய்து கொண்டிருந்தனர். எந்தத் துணிச்சலில்.?
வயலைப் பார்க்கும் போது வயிறு பற்றி எரிந்தது. முக்கால் வாசிவயல் அறுவடையாகி விட்டன.
டேய். ஆரடா. எங்கட வயலில இறங்கினவன்" என்று அப்பா கத்தினார். அவர்கள் அலட்சியமாக அறுவடை செய்து கொண்டிருந்தனர்.
டேய். என்று சப்தமிட்டுக்கொண்டு இறங்கிய மறு விநாடி வயல் வரப்பு மறைவில் இருந்து டுமீல் டுமீல். என்று வெடிச்சத்தத்துடன் இராணுவம் எழுந்தது. பின்னால் வந்த கூட்டம் கலைந்து சிதறி ஓடியது.
அப்பாவும் அண்ணாவும் வயலுக்கு செந்நீர்பாய்ச்சிக் கொண்டிருந்தனர். தாத்தாவும் அவனும், அம்மாவும் அண்ணியும் ஓடி வந்து பார்த்தபொழுது வயல் எரிந்து கொண்டிருந்தது. அதன் நடுவில் அவர்கள் கருகிக் கொண்டிருந்தனர்.
அண்ணி மயக்கம் போட்டு விழுந்தாள். அம்மா அலறினாள். அப்பா என்ர இந்தக்குஞ்சையாவது காப்பாத்துங்க. எங்கட நிலத்திலிருந்து எங்களை எழுப்பப் பார்க்கும் இவங்களோட எங்களுக்கு என்ன உறவு. எங்கட மண்ணை உடைமையை. உயிரைப்பறிக்கும் இந்த ராக்ஷசவாதிகளிடமிருந்து எங்களைக் காக்கவேணும். அப்பா போங்க. எங்க இனத்தைக் காக்கிறவங்க வடக்கே இருக்கிறாங்களாம். போங்கள் எங்கட மண்ணைக் காருங்கள். இனத்தைத்காருங்கள்.
அம்மா மயங்கி விழுகிறாள். ஓரிரவு, தாத்தா தனது பேரனைக் கையில் பற்றியவாறு மறுகையில் தனது துப்பாக்கியுடன் முன்பு தான் காட்டில் சந்தித்தவர்களைக் காணும் ஆவலுடன் சென்று கொண்டிருக்கிறார்.
விடியலின் இராகங்கள் கேட்கும் அந்தத்திசையை நோக்கி
வெளிச்சம் - வெள்ளி இதழ் சித்திரை - 94
1921 செம்பியன் செல்வன்

2/
27c57Zez/4s.
அவர்கள் இருவரும் வேகமாக நடந்தார்கள். பொழுது புலர்வதற்கு முன்னர் புறப்பட்ட நடை. நடை அவர்களுக்குப் பழகிய தொன்று. காட்டு வழிகளிலும் . வெம்மையான கட்டாந்த ரைகளிலும் . இரவிலும் பகலிலும். மழையிலும். குளிரிலும். சேற்று நிலங்களிலும் பாரச்சுமைகளுடன் நீண்ட பயணம் கொண்டு பாசறைகளில் வளர்ந்தவர்கள்.
நகரம் விழிப்படைவதற்கு முன் தங்கள் இருப்பிடத்தை அடைந்துவிட வேண்டும் என்ற துடிப்பு. இவர்களின் வரவுக்காக நண்பர்கள் காத்திருப்பார்கள். இவர்கள் கொண்டு செல்லும் தகவலைக் கொண்டு தான் அவர்களின் அடுத்த நடவடிக்கை அமைய வேண்டும். அவர்களின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் ஏற்படும் பின்னடைவுகள் அவர்கள் முயற்சிகளைக் காததுாரம் பின்னிழுத்துச் சென்றுவிடும் என்பதனைப் பெரிதும் நன்குணர்ந்தவர்கள். இதனாற்றாண்
காண்டீபம் 193

Page 105
இந்தியன் ஆமியும், தமிழ்த் தேசிய இராணுவமும் தங்களைச் சல்லடை போட்டுச் சலித்துக் கொண்டிருக்கும் வேளையில் யாழ்ப்பாண நகருக்குள் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள், ஏதோ மரம் தறிக்க, தச்சு வேலைக்குப் போகிறவர்கள் போல கையிலே உரப்பை,
நகரம் மெல்ல மெல்ல விழித்துக் கொண்டிருந்தது. தேநீர்க்கடை மண்ணெய் அடுப்புகள் மெல்லிய இரைச்சலைப் பரப்பிக் கொண்டிருக்க, சீர்காழி கோவிந்தராஜன் பழநிமுருகனைப் பக்திப் பரவசமாக பாடிக் கொண்டிருக்க. அவர்கள் மறைந்து மறைந்து விரைவாக நடந்து கொண்டிருந்தனர். சிலர் அவர்களுடன் இணையாக நடக்க. பயணம் சுகமாயிற்று. அவர்களை இந்திய இராணுவ ட்றக் ஒன்று கடந்து போனது. அவர்கள் நடையில் மாற்றமில்லை. சில மீற்றர் தூரம் சென்ற ட்றக் நின்றது. அப்போதும் அவர்கள் நடையில் மாற்றமில்லல. ட்றக் அவர்களை உற்றுப்பார்த்தது. "சலோ" என்று புறப்பட்டது.
பிரதான நாற்சந்திகளிலும், ஒழுங்கை முடக்குகளிலும், குச்சொழுங்கை வளைவுகளிலும் தமிழ் தேசிய இராணுவம் நின்று - அதே வழியால் செல்லும் இந்திய இராணுவத்தினருக்குச் 'சல்யூட் அடித்துக் தாங்கள் யார் என்பதனையும், நாங்கள் அலேட் டாக நிற்கிறோம் என்பதனையும், அதே வேளையில் உங்கள் பாதுகாப்பில் தான் இப்படி எங்களால் நிற்க முடிகிறது என்றும் காட்டிக் கொண்டார்கள். இதனைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொண்ட சீக்கிய கூர்க்காகப் படையினர் தங்களுக்குள் கேலியாக ஏதோ பேசிச் சிரித்துப் போவது யாழ்ப்பாணத் தமிழர் சமூகத்தின் முகத்தில் அவமானச் சேற்றை வீசியது போல் இருக்கிறது.
இதனைக் காணக்காண இவர்களுக்கு ஆத்திரம் அளவு கடந்தது. "மச்சான்! இவன்களைப் பாத்தியேடா. அவன்களுக்கு வால் பிடித்துக் கொண்டு?. அவங்கட மணிக் கட்டில என்னடா புதிசாக்கட்டியிருக்கிறாங்கள். பெண்கள் தலையில கட்டிற சிவப்பு. மஞ்சள். பச்சை நிற நிபண் களை கட்டியிருக்கிறாங்கள்.?” என்றான் காண்டீபன்.
'ஒரு வேளை கூட்டத்தில உவங்கள் தொலைந்து போனாக் கண்டு பிடிக்க வாக்கும். என்றான் நண்பன். இவனுக்கு எப்பவுமே இடக்குப் பேச்சுத்தான். வேளை கெட்டவேளையிலெல்லாம் எல்லாரையும் சிரிக்கப் பண்ணுவான். இதனால் சீரியஸான காண்டீபனுக்கே இவனைப் பிடிக்கும். இதனால் பலசமயம் அவனை நீ ஒரு நல்ல மூதேசியடா?’ என்று அன்போடு கூப்பிட்டிருக்கிறான். ஆபத்தான வேளையிலும் சிரிப்பாகச் சிந்திப்பது என்பது சுத்தமான ஆத்மாக்களால் தான் முடியும்.
1941 செம்பியன் செல்வன்

"உனக்கு எப்பவும் பகிடிதான். உன்ரபகிடியே எங்களைக் காட்டிக்
கொடுக்கப் போகுது." என்றான் காண்டீபன்.
"அது றிபண் இல்லை மச்சான் அவங்கட இராணுவ கிறேட்டைக் காட்டிற நிறங்களாம். சிவப்பு ஒரு கிறேட், மஞ்சள் இன்னொரு கிறேட் பச்சையும் அப்படித்தான்." ጸ'
"மச்சான். எனக்கு வாற கோபத்துக்கு இவங்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேணும் போல இருக்கு. கைவேற கடிக்குது." என்றான் காண்டீபன். நண்பன் பதறியபடி அவன் கையைப் பற்றிக்கொண்டான். அவனுக்கு காண்டீபனைப் பற்றி நன்றாகத் தெரியும். உயிருக்கு எப்பனும் பயமில்லை. எப்பவும் எதிரிகளில நாலைந்து பேரையாவது தொலைக்கவேணும். திடீரென்று இந்திய இராணுவ முகாமுக்கு அருகில் விழக்கூடியதாக வெடிவைப்பான். சில சமயம் அவன் வெடிக்கு சில இராணுவம் பலியாவதுமுண்டு. அவன் அந்த இடத்தைவிட்டு மாயமாக மறைந்து விடுவான். ஒரு சில மணிநேரங்களுக்கு அந்த ஏரியா அல்லோலகல்லோலப்படும். இராணுவம் ஏமாந்து திரும்ப அவர்களை அவனது "வாக்கி டாக்கி” திரும்ப அழைக்கும். இராணுவம் அவ்மானத்தால் பற்களைக்கடிக்கும். எல்லாம் மக்கள் மேல் கொண்ட நம்பிக்கை தான். எங்கள் பக்கம் தான் மக்கள். எங்களை ஒரு போதும் மக்கள் காட்டிக் கொடுக்கமாட்டார்கள். இந்திய கப்டன் ஒரு முறை வாக்கி டாக்கியில் காண்டீபனின் இடத்தை அறிந்து முற்றுகையிட்டான். அவன் சரியாக "ஸ்பொட்” பண்ணி விட்டான். அந்த வீட்டு வாசல் வரை வந்து விட்டான். ஆனால் அந்த வீட்டில் எல்லாரும் ஹாலில் இருந்து ரி.வி பார்ப்பது தெரிய அவன் உள்ளே வராமல் போய்விட. படம் பார்த்துக் கொண்டிருந்த காண்டீபன் இடி இடி யெனச் சிரித்தது இவனுக்கு ஞாபகத்தில் வந்தது.
"மச்சான்! உனக்கு நல்லாத் தெரியும் உன்னைத் தேடித்தான் இவங்கள் அலையிறாங்கள் எண்டு. நீ இப்ப உன்னை இனம் காட்ட முற்படாத எங்களுக்காக நண்பர்கள் காத்திருப்பார்கள். முதலில வெளிக்கிட்ட வேலையை முடிப்பம்." く
இன்னொரு ஜீப் இவர்களைக் கடந்து போனது. அவனது ஆத்திரம் அளவு கடந்து போயிற்று. "இந்த அஞ்சாம் படைக் கூலிகளால் தான் இந்திய இாாணுவமும் இங்க இந்த ஆட்டம் போடுது. சிங்களவரை எதிர்க்க வெளியாட்களை அழைத்து வந்த இவங்களும் இவங்கட அரசியலும், இலங்கை அரசியல் வரலாறு என்பது எப்பனும் தெரியாத மூடனுகள்.
காண்டீபம் 195

Page 106
நாலைந்து இளைஞர்கள் எதிரே சைக்கிளில் இவர்களைத் தாண்டிப் போக, ஒருவனின் தலை மட்டும் சந்தேகத்துடன் அடிக்கடி திரும்பித் பார்த்தது. பெடலை அவசரம் அவசரமாக மிதிப்பதும் தெரிந்தது.
"மச்சான். அதில போறவனை எனக்கு நன்றாக அடையாளம் தெரியுது. அவன் ஒரு சமூக விரோதி. கையில ஆயுதமில்லாததால ஒடுறான். ஆட்களைக் கட்டாயம் கூட்டி வருவான். நாங்கள் இப்ப முன்னால போகக்கூடாது. பின்னால போவம். அந்தப்பழைய கோயிலுக்குள்ள நுழைஞ்சிட்டா பிறகு எங்களை ஒருத்தரும் பிடிக்க முடியாது. வா ஓடி வா." என்றபடி கோயிலை நோக்கி ஓட, நண்பனும் பின் தொடர்ந்தான். உள்ளே அந்த இடிந்த மொட்டைக் கோபுரம் செடி கொடிகள் பற்றிப் படர தெருவைப்பார்த்துக் கொண்டிருந்தது. "மச்சான் இது நல்ல இடம் வா” இருவரும் அதில் ஏறி மறைந்து கொள்ள, விழிகளிலே தெரு பளீரெனத் தெரித்தது.
யாரோ தப தப வென வீதியில் ஓடி வருகிறார்கள். எல்லார் கையிலும் ஆயுதங்கள்.
"இதால ரெண்டுபேர். போனவங்களா. கையில போறாபை உரச் சாக்கோடு.?"
வழியில் அகப்பட்டவர்களை யெல்லாம் பதட்டத்துடன் விசாரிக்கிறார்கள். அவர்கள் என்ன சொன்னார்கள் என்று தெரியவில்லை.
ஆயுதம் தாங்கியவர்கள் அங்குமிங்கும் ஓடி அலைகிறார்கள். ஜீப் ஒன்று முன்னும் பின்னுமாக. வீதி ஒழுங்கை. குச்சொழுங்கை என அலை பாய்கிறது. இந்தப் பதட்டத்தில் தெருவே வெறிச்சிட்டு விடுகிறது. தார்வீதியில் பூட்ஸ் கால்களின் தட தட சப்தம்.
இவர்களுக்கு நிலமை புரிகிறது. இவர்கள் தயாராகிறார்கள். போறா பையிலிருந்து ஆயுதம் வெளியே வருகிறது. இவர்கள் தக்க வேளைக்காக காத்திருக்கிறார்கள்.
ஒரு மணித்தியாலத்திற்கு மேல் வெறும் வீதியை அலசிய வீரர்கள் ஓய்ந்து போக. மக்கள் நடமாட்டம் மீண்டும் ஆரம்பிக்கிறது.
"டேய் இங்க வாங்கடா. கோயிலுக்கு போய்ப்பார்த்தனிங்களாடா?” "இல்லை” - "பின்ன என்னத்தைத் தேடினியள்" என்று ஊத்தைப் பேச்சுடன் ஒருவன் நுழைய, அவனைத் தொடர்ந்து ஒரு கூட்டமே பின் வந்தது.
"படீர் என்று காண்டீபனின் துப்பாக்கி வெடித்தது. ஒரு ஆள் சரிவது தெரிய, கவர் எடுக்கவும் தெரியாமல் போராட கை ஏவாமலும் கூட்டம் சிதறி ஓட இவர்களும் கீழே குதித்து ஒடத்தொடங்கினர்.
1961 செம்பியன் செல்வன்

யார்? ஆட்கள் எங்கே ஓடுகிறார்கள்?, என்று தெரியாத நிலை. இவர்கள் ஓடத் தொடங்கினார்கள். இவர்களை ஒருவரும் கவனிக்க வில்லையா? அந்தச் சந்தியால் திரும்பி விட்டால் தப்புவதற்கு எத்தனையோ வழிகள். இவர்கள் வேகமாகத் திரும்ப எத்தனிக்கையில் துப்பாக்கி ஒன்று எங்கோ வெடித்தது.
காண்டீபனின் ஆடுதசையில் குண்டு ஒன்று பாய்ந்தது, "மச்சான் காலில வெடிபட்டிடுது. இந்தா துப்பாக்கி பத்திரமாகக் கொண்டோடு. என்னைப்பற்றிக் கவலைப்படாத."
"மச்சான் உந்த விசர்கதையை விடு. முடிந்த மட்டில போராடுவோம். முடியாட்டி. பிறகுபாப்பம்."
துப்பாக்கி ஓசைகளால் அந்தப் பிராந்தியமே சற்று நேரம் கிடு கிடுத்தது. காண்டீபனின் காலிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அவன் தனது கைலேஞ்சியால் அழுத்தமாகக் கட்டிய போதிலும் பகற்பொழுது ஆனதால் இரத்தப்பெருக்கு அதிகமாக இருக்கவும் சுட்டுக் கொண்டே நகர்கிறார்கள்.
சற்றுத் தூரத்தே அந்தக் கல்லூரியின் கட்டடங்களும் திறந்திருந்த வெளிக் கதவும் கண்ணில் பட முகத்தில் நம்பிக்கைப் பூக்கள் மலருகின்றன. "மச்சான். இனிப்பயமில்லை. என்ர பள்ளிக்கூடம் மச்சான். என்ர பிரெண்ட்ஸ் இப்பவும் படித்துக் கொண்டிருக்கிறாங்கள்" என்று கூறிய காண்டீபன் வலிதெரியாதவனாய் கல்லூரி வளவுக்குள் புகுந்து கேற்றில் இருந்த பூட்டை அழுத்துகிறான். அவர்களைப் பார்த்து விட்டுச் சில மாணவர்கள் ஓடிவருகிறார்கள்.
அலுவலக வாசலில் நிழலாட அதிபர் நிமிர்ந்து பார்த்தார். வாசலில் பஞ்சாட்சரம் மாஸ்டர் நின்று கொண்டிருந்தார்.
"வாங்க மாஸ்டர் என்ன விசயம்?" உள்ளே புகுந்த மாஸ்டர் நின்ற நிலையிலேயே "என்ர பிள்ளையை எல்லே." என்று தடுமாறத் தொடங்கினார்.
"முதலில இருந்து பேசுங்க” கதிரையில் அமர்ந்த மாஸ்டரை அதிபர் உற்றுப்பார்த்தார். அவர் வாய் பேசாமல். உதடுகள் துடிக்க. கண்களிலிருந்து நீர்வழிய.
அதிபர் திடுக்கிட்டுப் போய் மாஸ்டர்" என்றார். " என்ன நடந்தது? ஏன் அழுகிறியள்?” "என்ர பிள்ளையை. இந்த அறுவான்கள் வந்து பிடிச்சுக் கொண்டு
srcawiauñW 197

Page 107
போயிட்டாங்கள். பிள்ளையை என்ன செய்யிறாங்களோ. மனிசிக்கரி புள்ளையைக் கொண்டுவா . கொண்டுவா. எண்டு வீட்டில ஒரே புலம்பல்.
"ச்சா. ச்சா. எந்த மகனைப் பிடிச்சுக் கொண்டு போனவங்கள்?" "இங்க ஆண்டு பத்து படிக்கிற மூத்தவனைத்தான்". அதிபர் திடுக்கிட்டார்.
இந்தக் கல்லூரி மாணவன் என்றால் அதிபர் என்ற முறையில் பல கேள்விகள் இந்திய இராணுவத்திடமிருந்து வரும். மாணவனின் பெற்றோர் என்ற முறையில் ஆசிரியர்களிடமிருந்து ஆதரவு கோரி வற்புறுத்தல்கள் வரும். அத்துடன் இந்திய இராணுவத்துக்கோ இந்தக் கல்லூரி என்றால் வேப்பங்காயாகத் தான் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது.
"அவனையா பிடிச்சுக் கொண்டு போனவங்கள். நல்ல அமைதியான பொடியனல்லே."
பஞ்சாட்சரத்தாரின் உதடுகளில் அந்தத் துயரத்திலும் தத்துவம் வெடித்தது.
"இந்தக்காலத்தில ஆர்தான் அமைதியா இருக்கிறம். சின்னவையள். பெரியவையள் என்ற வேறுபாடில்லாமல் எல்லாரும் தானே குமுறிக் கொண்டிருக்கிறம்"
அதிபர் அவரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். "மாஸ்டர். என்ன நடந்தது என்று சொல்லுங்கோவன்." "நேற்று ஆரோ என்னமோ சொன்னாங்கள் எண்டு நடுராத்திரியில வீட்டை வந்து பிடிச்சாங்கள். பொடியனைப் பிடிச்சு என்னென்னமோவெல்லாம் கேட்டாங்கள். ஒரு பிடியும் அவங்களுக்கு கிடைக்கேல்ல. ஆனா அவன்ரை புத்தகத்துக்குள்ள இருந்த கடிதம் தான்." பஞ்சாட்சர ஆசிரியர் முடிக்கவில்லை.
"அதில என்ன இருந்தது?" "நான் ஒ எல் பாஸ் பண்ணினாப் பிறகு இயக்கத்துக்குப் போய்விடுவன்"என்று ஒருநண்பனுக்குக் கடிதம் எழுதி வைச்சிருக்கிறான் 'அவன். கடிதம் எழுதிய நண்பனின் பெயரும் ஒருஇயக்கப் பொடியனின் பெயரும் ஒண்டாயிருக்க, அவங்கள் அவனை அடிச்சு உதைச்சுக் கொண்டு போயிருக்கிறாங்கள்.”
"அந்த இயக்கப் பொடியன்ர பெயர் என்ன?” “காண்டீபன்" "எட அவனும் எங்கட கல்லூரி மாணவன்தான். ஏங்கட கல்லூரிப் பொடியளும் அவனில உசிர், இப்ப நான்என்ன செய்யவேணும் ?”
1981 செம்பியன் செல்வன்

"எங்கட கல்லூரி மாணவன். ஒழுங்காகப் பாடசாலைக்கு வந்துபோறயிள்ளை. அவனைப் பிடிச்சிருக்கிறது தவறு என்று சொல்லி.
அதிபர் யோசித்தார் “வந்து நீங்கள் ஒருக்கா ரவுணி கொமாண்டரனோட கதைச்சுப்பாத்தா...'
"ஆர் கல்கத்தோடயே. அவன் சரியான கள்ளன். டிக்சிற்றைவிட மோசமான கள்ளன். அவனிட்டைவாயைக் கொடுத்திட்டு தப்பேலாது."
இல்ல மகனை விடாட்டியும். அவனுக்கு ஏதும் அடிக்காமல் சித்திரவதை பண்ணாமல் இருந்தால்போதும். நீங்க சொன்னா..."
"இப்ப மகனை எங்கை வைச்சிருக்கிறாங்களாம் . மருதனாமடம். பலாலி. காங்கேசன்துறை. யாழ்ப்பாணம். எங்கையாம்?"
"அதுதான் தெரியாது சேர். அதையும் அறிஞ்சு சொன்னா நல்லது அவரது வார்த்தைகள் உடைந்து விம்மலுடன் வெளிவந்தன.
"சரி " என்று கூறிக்கொண்டிருக்கும் போதே கல்லூரி வளவில் சரமாரியாக துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கின மாணவர்களின் "ஐயோ" என்ற அலறலும் அழுகைச்சத்தங்களும் யார் யாரோ ஒடுவதும் சுடுவதுமாக.
கல்லூரி வளவு கலங்கியது. அமளி துமளிப்பட்டது. மாஸ்டர் மாரைச் சுட்டுப் போட்டாங்கள் . தெருவோர வகுப்பறையெங்கும் இரத்தமயம். சூடுபட்டவர்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக ஏற்றியவர்களுக்கும் நல்ல அடி, உதை. திடீரென அதிபரின் அறை - அலுவலகத்துள் ஆயுதங்களுடன் சிவப்பு பச்சை மஞ்சள் பட்டை கட்டியவர்கள் நுழைந்தார்கள்.
"எல்லாரும் வெளியில போய் வரிசையாக நில்லுங்கடா. எங்கையடா அதிபர். அந்தவே. மகனுக்குப் பாடம் படிப்பிச்சா எல்லாம் சரியாவரும்"
அவன் அதிபரைத்தேட அவர் பாய்ந்து சென்று வெளியே ஏற்கனவே நடுங்கியவாறு உச்சிவெயிலில் வரிசை அமைத்திருந்த ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். உப அதிபர் காலால்உதையப்பட்டு வெளியே வந்து விழுகிறார்.
"உங்கள் எல்லோரையும் சுடப்போறம். நீங்கள் உன்மையைச் சொல்லாட்டி எங்களுக்கும் வேறவழியில்லை. ஓடிவந்தவங்கள் எங்க? ஆர்வந்தது? எங்கை ஒழிச்சு வைச்சிருக்கிறியள்?."
வகுப்பறையில் இருந்த ஆசிரியர்களும் அலுவலகத்தில் இருந்தவர்களும்
காண்டீபம் 199

Page 108
பதில் தெரியாது விழித்தனர். அவர்களது ஆத்திரம் அளவுகடந்தது. கெட்ட வார்த்தைகள் கல்லூரி வளாகத்தில் போதனா மொழியாக. எல்லாரும் உறைந்து போக.
பச்சை றிபன் கட்டிய கறுவல் முன்னும் பின்னும் அலை பாய்ந்தான். "சொல்லுங்கடா. எங்க அவங்கள். உங்களுக்கு அவங்கள் மட்டுந்தான் போராளிகளாத் தெரியிறாங்க... எங்களை அப்படித் தெரியேல்ல. எங்களைச் சுட்டிட்டு வாறவங்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறியள். எங்களுக்கு ஒரு அடைக்கலமும் இல்லை. இன்னும் சிலவிநாடியிலே சொல்லாட்டி காத்தி யோளி மக்களே. நீங்கள் எல்லாரும் சவம் தான்.
வானத்தில் ஒரு வெடி எழுந்தது. எல்லார் வயிறும் கலங்கியது. மனங்கள் கனத்துப் போய் இறுகின.
வகுப்பறையிலிருந்து மாணவர்கள் உச்சிவெய்யிலில் ஆசிரியர்கள் வறுபடுவதைப் பார்த்து பயத்தால் விழிக்க, ஏனைய வகுப்பறைகளிலிருந்து உயர் வகுப்பு மாணவர்களும் வரிசைவரிசையாக கொலைக்களத்துக்கு அழைத்து வரப்படுவதுபோல கொண்டுவரப்படுகின்றனர். தொலைந்தோம் என்று அவர்கள் எண்ணியபோது
பிரதேச காம்ப் அதிகரி ராவ் இராணுவ நடையில் வருகிறார். அவரின் காம்ப் கல்லூரியிலிருந்து நூறு அடிதூரத்திலிருந்தும் அவர் வர நீண்ட நேரம் எடுக்கிறது. எல்லாம் தான் அனுப்பியவர்கள் சொன்ன வேலையை முடித்த பின் நல்லவர் போல வரவேண்டும் என்பதாக வருகிறார்.
ஆசிரியர்கள் சண்முகலிங்கம், தவமணிதாசன், பிரபு ஆகியவர்கள் துப்பாக்கி ரவைகளுக்கு இலக்காகி, சண்முகலிங்கம் அந்த இடத்திலேயே மரணித்துப் போக, மற்றவர்கள் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுகிறார்கள்.
பெற்றோர், ஆசிரிய, மாணவர் குழாம் கொதித்துப்போய். விசாரணை வேண்டும். ஆறுதலுக்கல்ல மீண்டும் ஒரு முறை இவ்வாறு நிகழாதிருக்க, சர்வதேசங்கள் எங்கள் நிலையைப் புரிந்து கொள்ள.
ஆசியர் சங்கக் கூட்டம் கனல் தெறிக்க நடந்து கொண்டிருந்தது. ஆசிரியர் கழகத் தலைவர் நேரில் கல்கத்தை சந்தித்து எதிர்ப்பதில் உறுதியாக நிற்கிறார்.
"இது அநீதி. அக்கிரமம். பாடசாலை நேரத்தில் வகுப்பறையில் புகுந்து. மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களைக் சுட்டுக் கொல்வது ஹிட்லரின் கொடுமையை விடக் கொடுமை. நாம் எல்லோரும் ரவுண் கொமாண்டன்ட் கல்கத்தை சந்தித்து எங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்."
:2001 செம்பியன் செல்வன்

பஞ்சாட்சரம் தனது மகன் பற்றிப் பேச ஆசிரிய கழகத் தலைவர்க் கலைகத்துடன் உதவி செய்ய வேண்டும். விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம். இது கூட்ட முடிவாயிற்று.
மாலை ஐந்து மணி. "யெஸ். கம். கம்" நகரக்காமாண்டன்ரன் கல்கத் ஆரவாரமாக வரவேற்கிறார். இவர்களுக்கு அந்த ஆரவாரம் அபத்தமாகப்படுகிறது. இன்று, எனது பிறந்த நாள்." தேவையில்லாத விபரம் தரப்படுகிறது. இவர்கள் இது என்ன ஐரணி என்று குமைகிறார்கள்.
“யெஸ் நீங்கள் சொல்லுங்கள்." ஒன்றும் தெரியாத மாதிரி அந்த இராணுவ அதிகாரி கேட்கிறான்”
“பாடசாலை நேரத்தில் கல்லூரி வளாகத்தில் புகுந்து ஆசிரியர்களைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். அதில் இருவர் நிலமை கடுமையாக உள்ளது. ஒருவர் மரணித்துவிட்டார்."
"அப்படியா?.” கேள்வியில் போலியான வியப்பு. "கல்லூரிக்குப் பேதிய பாதுகாப்பு வழங்கவேண்டும். மாணவர்களுக்கு. ஆசிரியர்களுக்கு."
"உங்கள் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் புலி என்று கூறுகிறார்களே?”
பஞ்சாட்சரத்தாருக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வருகிறது, "அப்படியிருந்தால் வந்தவையள் உயிரோடு திரும்பியிருக்கமாட்டர்களே. எங்களிலும் நாங்கள் ஆசிரியரை இழந்திருக்கமாட்டோம்."
"ஓ! அங்கிரியெங்மான். இந்த உணர்ச்சி ஆவேசம் தான் மக்களைத் தூண்டி விடுகிறது. நாங்கள் வந்தது சமாதானத்துக்கு. நீங்கள் மக்களின்ரை உணர்ச்சிகளைத் தூண்டி விடுகிறீர்கள்." மெல்லிய கோபம்.
"யார் சுட்டது என்று சொன்னீர்கள்?” "கையில் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறம் கட்டிய ஆயுதம் தாங்கிய இளைஞர்கள்."
"யாராவர்கள்?" "தெரியாது. ஆனால் ஆயுதம் தாங்கியவர்கள்" "ஆயுதம் தாங்கிய புலிகளாக இருக்கலாமல்லவா?” "அவர்கள் எங்களைத் தாக்கவேண்டிய அவசியமில்லை. அதேவேளையில் அவர்கள் மக்களைத் காப்பாற்ற ஆயுதம் தாங்கியவர்கள் அவர்கள் இத்தகைய அநீதிகளை விளைத்ததாக நாம் கேள்விப்படவுமில்லை.
காண்டீயம்/201

Page 109
பஞ்சாட்சரத்தார் கூறுகிறார். கல்கத் அவரையே உன்னிப்பாக நோக்குகிறார்.
"வந்தது புலிகளல்ல. ஆனால் ஆயுதம் தாங்கியவர்கள். அப்படியானால் ஐபிகேஎவ் ஆ வந்தது?"
"அவர்கள் அந்த நேரம் வரவில்லை என்பது தான் பிரச்சனை" "ராவ் அங்கு நின்றதாக நான் அறிகிறேன்." "எல்லாம் முடிந்ததன் பின்தான் வந்தவர்" "அப்ப யார் வந்ததாக நினைக்கிறீர்கள்?" "தேசிய இராணுவமாக இருக்கலாம். "ஆசிரியர் கழக தலைவர் கூறுகிறார்.
"முதலில் தெரியாது என்றீர்கள். இப்ப f என் ஏ என்கிறீர்கள். இது எப்படி?” முகம் சுளித்தது.
"இது ஊகம் தான். ஐபிகே எவ் வந்ததன் பின்பும் அந்த அநியாயகாறர் இருந்தது தெரியும்."- தலைவர் குறுக்கிடுகிறார்.
"ஒ1. அனதர் அங்கிரிமான். அவர்கள் ஐபிகே எவ் வுடன் துணைக்கு வந்தவர்கள் என்று தான் பிரதேசப் பொறுப்பாளர் ராவ் கூறுகிறார்."
"சரி அப்படியே ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் அவர்கள் நடந்து கொண்ட முறை வித்தியாசமானது. கல்லூரி வகுப்பறை வராந்தா இரத்த வெள்ளத்தில் நனைய யார் காரணம்."
"அந்த இரத்தம் புலிகளின்ர என்று தான் ராவ் கூறுகிறார். சூடுபட்டு வந்த புலிகள் சிந்திய இரத்தமாக ஏன் இருக்கக் கூடாது. ."
அப்படியானால் அந்த இரத்தம் ஆசிரியர்கள் சிந்தியதல்ல என்கிறீர்களா? "கூல் டவுன். காம். காம். இப்போது நீங்கள் சமர்ப்பிக்கும் கோரிக்கை என்ன? உங்களுக்குத் தெரியுமா உங்கள் கல்லூரி வளவில் பொறுக்கிய எம்பிகப்ஸ் எதுவும் f என் ஏ இனது அல்ல. அவர்களிடம் ஏகே 47ஏ கிடையாது. நாம் வழங்கவில்லை. ஆதலால் ஆசிரியர்களைச் சுட்ட துப்பாக்கிகள் புலிகளினதாக ஏன் இருக்கக்கூடாது."
விவாதம் வேறு வழிகளில் சென்று கொண்டிருந்தது. வழங்கப்பட்ட தேநீரை பஞ்சாட்சரத்தாரும் ஆசிரிய கழகத்தலைவரும் நாகரிகமாக மறுத்து விடுவதை கல்கத்தின் கண்கள் அவதானிக்கின்றன. மெல்லிய சீற்றம் அவனுள் எழுகின்றது.
"இந்தப் புலிகள் நகரத்திற்கிடையில் உங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு போராடுகிறர்கள். அதற்கு நீங்களும் உடந்தை, அவங்களுக்குப்
2021 செம்பியன் செல்வன்

பாதுகாப்பளிக்கிறீர்கள். இழப்புக்கள் ஏற்பட்டவுடன் அவற்றை எங்கட்கு எதிராகத் திருப்ப முனைகிறீர்கள்."
எல்லோரும் உள்ளம் கொதிக்கக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். கல்கத் சீற்றத்துடன் கூறுகிறான்.
"முடியுமானால் உங்கட புலிகளை வெளியால வந்து போரிடச் சொல்லுங்கள். பாதுகாப்புக்கு அவங்களிட்டயே போங்க. இங்க ஏன் வந்தனிகள். அவங்கள நேருக்கு நேர் வரச்சொல்லுங்கள். நகர வீடுகளில். மக்களிடையே பதுங்கிக் கொண்டு வீரமா பேசுகிறீர்கள்? இதைப் போய்ப் புலிகளிடம் கூறுங்கள்." அவர் சீற்றம் எல்லாரையுமே மெளனிக்கவைக்கிறது. எல்லாமே நன்கு புரிகிறது. காலை புலர்வது போல மயக்கங்கள். தயக்கங்கள் எல்லாம் கலைகின்றன. சர்வதேச அரசியல் புரிபடத் தொடங்குகிறது.
அதிபர் மெதுவாகக் கூறுகிறார். "இனியாவது இப்படி நடக்காமல் பாதுகாத்துத் தரும்படி கூறத்தான் வந்தம். நல்லது. விடைபெறுகிறோம்."
"என்ன மாஸ்டர் உங்கட மகனைப் பற்றி பேசுவமா?. அதுக்காக வந்திட்டு. என்று மெல்லக் கேட்கிறார்.” கழகத் தலைவர்.
"வேண்டாம். போகலாம். வாங்க. பொடியன் இனி போராளியாகத்தான் வருவான். இவங்களை அகற்ற என்ர பிள்ளை மட்டுமல்ல. ஏராளமான பேர் சேருவாங்கள். இவங்கட எண்ணம் எல்லாம் தாள் வெட்டவெளிச்சமாய் விட்டதே. புலியளை வெளியவரச் சொல்லுறாங்கள். கட்டாயம் அது வெளியவரும் அதில என் மகனும் கட்டாயமாக இருப்பான்." அவரின் மனம் உறுதி கொள்கிறது.
-வெளிச்சம்
- sinsoleunä/203

Page 110
204/ செம்பியன் செல்வன்
22
27.1/OD42
ஹோல்சர் கட்டிய நெஞ்சும் துப்பாக்கி ஏந்திய கரங்களுமாக அவர்கள் "தய தய " வென வாகனத்திலிருந்து குதித்தார்கள். "அடியாட்டுக்கு” ப் போக அனுமதிபெற எவ்வளவு அடிபட்டிருப் பார்கள்? சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சி அவர் முகங்களில் படர்ந்திருந்தது. மெல்லிய குளிரான கடற்காற்று மேனியை தடவிச்சென்றது.
இடிந்து நிலை குலைந்து போன கட்டிடங்களும். மனித நடமாட்டம் அற்ற தெருக்களும். கதவோ, யன்னல்களோ காணமற்போக. ஒடுகள் சரிய "ஓ" வென அலறிக் கொண்டிருக்கும் வீடுகளும். பூநாறிப் பற்றைகளும். வெள்ளெருக்குக் குத்துப்புதர்களும். பேய் வெள்ளரிக் கொடிகளுமாக நகரத்தின் நகரமான அப்பகுதி இருண்டு கிடந்தது. அவன் நெஞ்சினில் நெருப்பாக எதுவோ பற்றி எரிந்தது.
 

யாரோ. எங்கோ. எப்போதோ. யாரோடோ செய்து கொண்ட. தவறுகளின் விளைவுகளா - இவை? எம் சந்ததியினரை வஞ்சித்தவர்கள் யார்? ம். பரவாயில்லை. எல்லாவற்றிற்கும் பதிலடி நாம் கொடுப்போம். இதை விட அப்பனான ஒரு நகரை அமைத்துக் காட்டுவம். பழைய வீட்டை அழித்துப் புதுவீடுகட்டுவதைப்போல அவர்கள் அழிக்கின்ற பொறுப்பை ஏற்றுக்கொள்ளட்டும். நாங்கள் புதிது புதிதாக ஆக்குவம்.
அவர்களை இறக்கி விட்டவாகனம் பேரிரைச்சலோடு உறுமியபடி விரைந்து போனது. அது புழுதியைக் கிளப்பிக் கொண்டு கரையிலிருந்து மறையும் வரை பார்த்தான். கழுகுக்கு மூக்கில் வியர்ப்பதுபோல் திடீரென அவர்களுக்கு மேலாக 'தும்பி ஒன்று பறந்து போனது. தொடர்ந்து 'கோள் மூட்டி பிளேன்' என்று சிறுவர்களால் எள்ளி நகையாடப்படும் 'சீபிளேன் பெரிய வட்டமடித்தது. இனி நிச்சு பம் பொமரோ. சகடையோ அல்லது இரண்டுமோ கட்டாயம் வரும்.
'எல்லோரும் கட்டிடத்துக்குள் ஒடுங்கள் கட்டளைக்குரல் ஒய்வதற்கு முன் அவர்கள் அனைவரும் கட்டிடத்திற்குள் புகுந்திருந்தனர். சில மணித்துளிகளில் மூன்று பொம்மர்கள் குண்டு வீச்சு விமானங்கள் இலக்குத் தெரியாமலோ, வீசத் தெரியாமலோ வழக்கம் போலக் கண்மூடித்தனமாகக் குண்டுகளை வாரிக் கொட்டத் தொடங்கின.
அந்த இடைவெளி நேரத்தில் தான் அவன் வந்திருந்த கட்டிடத்தை அவதானித்தான்.
எட. இது ரெஸ்ட்கவுஸல்லவா? ‘என்ன மச்சான்! கோட்டை அடிபாட்டுக்கெண்டு கூட்டி வந்து, இங்க, என்று காதிற்குள் கிசுகிசுக்கும் ஜெகனை மெல்லத் திரும்பிப் பார்த்தான். ஏ.கே 47 ஐப்பற்றியிருந்த அவன் கரங்கள் துடிப்பது தெரிந்தது.
அவசரப்படாத, கொஞ்சம் பொறு. போராளிக்குப் பதட்டம் கூடாது. . நிதானம் மிக மிக முக்கியம் எண்டு சொல்லித்தந்ததை நீ அடிக்கடி மறந்து போகிறாய் என்று நட்புரிமையுடன் அதட்டினான். அவன் கண்கள் யன்னலினூடாக வெளியே வெறித்தது.
யூடிசி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு, இன்று மாநகரசபை என்று அழைக்கப்பட்ட அந்தக் கட்டிடம் தரையோடு தரையாக. இந்தக் கட்டிட மேடையிலே தான் காலம் காலமாக எத்தனை எத்தனை அரசியல்
/205

Page 111
கூட்டங்கள் நடந்தன. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதாகக் கூறிய வாக்குறுதிகள் எத்தனை? எத்தனை? அந்தத் தலைவர்கள் எவ்வளவு மெத்தனமாக இருந்தார்கள். வாக்குறுதிகளைப் பறக்க விட்டார்கள். அல்லது சிங்கள அரசு அவர்களுக்கு வழங்கிய சலுகைகளில் மயங்கிப் போனார்கள். அதன் விளைவு.? ஜெகன் போன்ற இளைஞர்கள் உருவானது தான்.
'எல்லோரும் பங்கருக்குள் இறங்குங்கள் அப்போதுதான் அது அவர்கள் கண்ணில் பட்டது. அறையின் சுவரோரமாக கீழ் நோக்கி படிவரிசையமைத்து. ஓ. ஆச்சரியத்தால் விழிகள் அகலத்திறந்தன. ஜெகன் துள்ளி எழுந்தான்.
தூரத்தே அவர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த கோட்டை, வெட்டை வெளியினுக்கு அப்பால் தோற்றம் கொண்டிருக்க, நேராகக் கோட்டையைச் சமீபிக்க முடியாது. திறந்த வெளியென நிலம் விரிந்து பரந்து கிடந்தது. மெல்லிய அசைவும். தலைக் கறுப்பும் கூட கோட்டையின் மதில்களின் பின்னால் இருக்கும் சினைப்பர்களைப் பேசவைக்கும். கோட்டையைச் சூழ்ந்து சிப்பாய்கள் வளர்க்கும் கட்டாக்காலி நாய்கள் அலைந்து எதிரியைக் காட்டிக்கொடுக்கும். ஒன்று பலவாக கூட்டமாகத் திரிந்தன.
பங்கருக்குள்ளே இறங்கி நடக்க நடக்க. அவன் நெஞ்சம் பெருமிதத்தால் விம்மியது. உள்ளே அழகான பாதை. காற்றோட்ட வசதி. வெளிச்ச வசதி.
"மின்சார டிரான்ஸ் போமர்களை அழித்து மின்சாரக் கம்பங்களைச் சாய்த்தீர்களே. எரிபொருள்களைத் தடை செய்தீர்களே. கேவலம் நெருப்புப் பெட்டியைக் கூடத் தடைசெய்தீர்களே. நகரை இருளில் மூழ்கடித்து என்ன பலனைக் கண்டீர்கள்? பொது மக்களின் வெறுப்பைச் சம்பாதித்ததைவிட வேறென்ன?”
எல்லாம் எங்கள் இளைஞர்களின் ஆற்றல். அறிவு. ஆக்கம். அவர்கள் நெஞ்சம் அப்போதே சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத்தொடங்கி விட்டது. வழியெல்லாம் அவர்களை யொத்த விடுதலை வீரர்கள். இவர்களை நட்புடன். கனிவுடன். நோக்கினார்கள். மறுவினாடி அவர்கள் தத்தம் கடமையிலீடுபடலாயினர். கோட்டையைக் கைப்பற்றியே தீருவோம்' என்பதான உறுதிமுகத்தில் தெறித்தது. பாதை வளைந்து வளைந்து பல பிரிவுகளாகப் பிரிந்து. பிரிந்து. நாளை இவர்கள் உருவாக்கும் நாடும். சமுதாயமும் இப்படித்தான் சீராக ஒழுங்காக. இருக்கும். பழைய பெருச்சாளிகளின் வளைகளை நாங்களே உடைத்தெறியவேண்டும். அந்த வளைகளை எங்கள் எதிரியே உடைத்தெறிந்து
206 செம்பியன் செல்வன்"

உதவுகிறனர், நாளை மலரும் சுதந்திர பூமியில் இந்தப் பழைய பெருச்சாளிகளின் எச்சங்களோ. முடை நாற்றங்களோ நிச்சயம் வீசமாட்டா.
முரளி ஜெகன். விசித்திரன், கலாமணி நீங்கள் இங்க நில்லுங்கள். இவர்கள் நிற்க மற்றவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்களை நோக்கி அங்கிருந்தவர்களில் ஒருவன் வந்தான். தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
'நீங்கள் வருகிறியள் எண்டு முன்பே தகவல் வந்திட்டுது. உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம். இவர்கள் நன்றாகக் களைத்துப் போனார்கள். இவர்கள் இடத்துக்கு நீங்கள் போய் இவர்களை விடுவியுங்கள்.
ஜெகன் ஆவலுடன் அந்த இடத்தை நோக்கி ஓடினான். கொஞ்சம் நில்லுங்கள். அவசரம் கூடாது. எதிரி கண் மண் தெரியாமல் அடிக்கிறான். எங்களுக்கு எதிலும் அநாவசிய இழப்பு இருக்கக் கூடாது. உயிர். ஏன் ஆயுதத்திலும் இழப்பு கூடாது. கவனம்.
ஜெகன் தன்துப் க்கியை மார்பில் அணைத்துக் கொண்டு கூவினான். 'என் உயிரை இழந்தாலும் இழப்பேனேயொழிய ஆயுதத்தை இழக்க மாட்டேன்.
அதுவல்ல விசயம். எதிரிக்கு வான் வெளியாலும் ஆயுதம் வருகுது போல. ஆகவே தாறுமாறாக அடிக்கிறான். நாங்கள் எதனையும் கணக்கிட்டுத் தான் சுடவேண்டும். அதோட அவன்ர சினைப்பர் எந்த நேரம் வெடிக்கு மெண்டு சொல்லேலாது. கவனமாக இருங்கள். அதேபோல கோட்டை மதிலுக்கு மேலாக எதுவும் தெரிந்தால் தயங்காமல் வெடிவையுங்கள்.?
பங்கருக்குள்ளிருந்து தமது இலக்குகளை ஒழுங்குபடுத்திக் கொண்டார்கள். நீண்ட மெளனம் சலிப்பை ஏற்படுத்தியது. மெதுவாக பங்கருக்கு மேலாகத் தரையை உயர்த்தினான். இடமிருந்து வலமாக மெதுவாகத் தலையைத் திருப்பினான். நீலக் கடல். பண்ணைக்கடல். கண்ணில் பள்ரென அடித்தது. முன்பு. கடலை மறைந்திருந்த யாழ் மாநகரசபை மண்டபம் தரைமட்டமாகிய பின் கடல் குதூகலிப்பது தெரிந்தது.
அந்தக் கடலுக்கு அப்பால் தான் எதிரி முகாம் இறக்கியிருக்கிறான். கடலில் அவன் இறங்கும் போது நிச்சயம் கண்ணில் பட்டே தீரவேண்டும். பக்கத்திலிருந்த புதிய கட்டிடமான பொலீஸ் அத்தியட்சகர் காரியாலயம் தகர்க்கப்பட்டு, பழங்கிழவியின் ஆற்றாமையாய்ப் புலம்பிக் கொண்டிருக்க, விழுப்புண் பலபெற்ற விளையாட்டரங்கு வெறுமையில் குளித்துக் கொண்டிருநதது. அந்த மைதானத்தில் அரங்கிற்கும் கோட்டைக்கும் இடையே
காலமை/207

Page 112
சில புல்டோசர்கள் புதைந்து போயிருக்க. நூலகம் கண்களில் பட்டது.
தென்கீழாசியாவின் உந்நதமான முதல் தர நூலகம், என வெளிநாட்டுத்
தூதுவர் சொல்லிப்போன வார்த்தைகள் கூட காற்றில் வலுவிழந்து போகவில்லை. ஆனால் அதற்குள் நூலகம். எரியுண்டது. தொண்ணுற்றாறாயிரம் நூல்கள் கருகிச் சாம்பலாக, தமிழ் மாணவர்களின் கல்வியிலும் தீ பரவியதா?. தமிழீழ மாணவனே என்னை இக்கதிக்கு ஆளாக்கியவர்களைப் பழிக்குப் பழி வாங்கு. அவன் ஒரு புத்தகப் பிரியன். அவனுக்கு நூலகத்தைப் பார்க்கப் பார்க்க நெஞ்சம் விம்மியது. ஒரு கணம் நிலை குலைந்தான்.
'உஷ்ய்க் சினைப்பரின் குண்டு ஒன்று அவன் தலைக்குமேலால் உரசிக்கொண்டு போனது. நல்லவேளை அவசரம் அவசரமாகத் தலையை உள்ளிழுத்துக் கொண்டான்.
எளிய நாய்கள். ஜெகனின் துப்பாக்கி வெடித்தது. அது எதிர்த்தரப்பில் ஏதோ விளைவை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சில நிமிட தாமத்தின் பின் அங்கிருந்து வெடியோசை எழலாயிற்று. அவர்கள் தமது வெடி மருந்துகளையும், ரவைகளையும் வாரியிறைத்தனர்.
"மச்சான் . உவங்களுக்கு கையில ஆயுதம் இருக்கிற திமிரிலதான எதனையும் செய்யிறவங்கள். மச்சான் முதலிக்குளத்தில அரை நூற்றாண்டுக்கு மேலாக குடியிருந்த எங்களை. எங்களைப் போன்ற தமிழ் மக்களை எத்தனை முறை ஓட ஓட விரட்டியிருப்பாங்கள் தெரியுமே? அப்பா சொல்வார் அம்பத் தெட்டில சிங்களக் காடையர் வந்து துரத்தியடிக்க, தாங்கள் காட்டுக்குள் ஓடி, தஞ்சம் புகுந்ததாக, என்ர காலத்திலும் எழுபத்தேழு எண்பத்தி மூன்றுகளிலும் காட்டுக்கைதான் ஓடினம். அப்ப எல்லாம் அவங்கட கையில ஆயுதமிருந்தது. மச்சான். இப்ப என்ர கையிலும் ஆயுதம் இருக்கு. இனி ஒருக்கா எங்கட கிராமத்துக்க இவங்கள் வந்து போகட்டுமன். நான் ஒருவன் மட்டும் அவங்களுக்குப் பதில் சொல்லுவன்'
மச்சான்! நீ முந்தி மாதிரி தனியாள் இல்லை. உனது சுற்றம் பெரியது. உன்னைத் தனிய போக விடுவமா? உனக்கு முன்னால நாங்கள் அங்க நிப்பம். என்ன விசர்க்கதை பேசிறம். நாங்கள் தமிழீழம் பெறும் பொழுது முதலிக்குளத்தில் சிங்களவன் இருப்பானே?"
அதுவும் சரிதான் மச்சான். பயிற்றப்பட்ட இராணுவமும், பொலீசும் இருநூறுக்கு மேற்பட்டவங்கள் கோட்டைக்குள்ள ஆயுதங்களோட நிக்கிறாங்கள் வெளிய வரப்பயப்பிடுறாங்கள்.
ஹெலியும் பொமரும் வானத்திலே தென்பட்டன. இவர்கள்
208/ செம்பியன் செல்வன்
ད།

தயாராகினார்கள். சற்று நேரத்தில் இரண்டு அவ்ரோ விமானங்கள் வட்டமிடத் வலை வீசத் தொடங்கின.
சாப்பாடு போட வந்திருக்கிறாங்கள். சாப்பாடு கிடைக்கச் செய்யக்கூடாது. பசி தாகத்தால தவித்துப் போக வேண்டும். இதால அவர்களுக்குள்ளயே அடிபிடி நடக்கத் தொடங்கும். அரசுக்கும் நெருக்கு வாரம் தொடங்கும். சிங்கள மக்களும் எங்கட போராட்டத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவினம். அதுமட்டுமல்ல மச்சான். உந்தப் பொட்டலங்களுக்குள் ஆயுதங்களோ. வெடி மருந்துகளோ கூட இருக்கலாம் எண்டு கதைச்சதை மறந்து போனியா?.
படபட பட். பட். விமானம் வேகமாக மேலெழ முதல் பொட்டலம் பண்ணைக் கடலுக்குள் போய் விழுகிறது.
பொம்மர் ஒன்று அவசரம் அவசரமாக குண்டுகளைப் போடத் தொடங்கியது.
எங்கும் ஒரே வெடிச்சத்தங்கள். புகை மண்டலங்கள். குழிகள் பறிக்கின்றன. எல்லாவற்றையும் மீறி உணவுப் பொட்டலங்கள் விழுகின்றன. ஒன்று இரண்டு மூன்று இல்லை யில்லை. கோட்டைக்கு வெளியில. கடலில தான் எல்லாம்.
பட்பட். பட். பட் " குண்டு வீச்சு விமானமும் மூர்க்கமாக, குத்தாக கீறிறங்குவதும். குண்டு பொழிவதும். மேலெழுவதுமாக.
விமானம் வேகமாக வருகிறது. இங்கிருந்து யாரோ 50 கலிபரை அடிக்கிறார்கள். அது குண்டினை வீச எங்கோ விழுகிறது. ஜெகனினதும், இவனினதும் துப்பாக்கிகள் ரவைகளை வேகமாகத்துப்புகின்றன. விமானம் உயர்ந்து பெரிதாக வட்டமடிக்கிறது. மீண்டும் அது அவர்கள் பங்கள் பக்கமாக வேகமாக வருகையில், அதனை எதிர்கொள்வது போல் இவர்கள் பங்கருக்கு மேலால் தலையை உயர்த்தி வெடி வைக்கிறார்கள். நாலாபுறமும் ரவைகள் சொரிகின்றன. விமானம் குண்டைப் போட்டுவிட்டு கரும்புகையைக்கக்கிக் கொண்டு மண்டைதீவுப்பக்கமாக கடலை நோக்கிப் போகிறது. எங்கும் வெற்றிக் களிப்பு எழுகிறது. ஆயினும் ஒரு சந்தேகம். பங்கருக்குள்ளிருந்து சுட்டிருக்கமுடியாது. யாரோ பங்கரிலிருந்து வெளியேறித்தான்.
திடீரென பங்களில் பரபரப்பு எழுகிறது. ஜெகன் எங்கே? எங்கே காணவில்லையே
காலமை/209

Page 113
அதோ!. அதோ!. அங்கே. யாரோ விழுந்து கிடக்கிறது போல நூறு யார் தூரத்துக்கு முன் விளையாட்டரங்குக் கட்டிடத்திற்கு முன்னால், புதைந்திருந்த புல்டோசர் வாகனத்திற்குமிடையில் யாரோ குப்புற விழுந்து கிடந்தார்கள். ஒரு கையில் ஆயுதம் தெரிந்தது.
இவனுக்கு நெஞ்சம் வெடித்து விடும் போலிருந்தது. எதிரே பார்த்தான். கொஞ்சநேரத்திற்கு முன் தன் முன்னால் இருந்தவனின் இருக்கை வெறுமையாகக் காட்சியளித்தது.
வானிலே சந்திரன் காலிக்கத் தொடங்கினான். முன் நிலவில் ஜெகனின் சடலமும், அந்தப் பெட்டியும்.
‘உன்னைத் தனிய போக விடுவமா? என்று கூறிவிட்டு இப்படியிருக்கிறோமே. - நெஞ்சம் அலறியது. ஆனால் எங்கும் அமைதி, ஆ'இதென்ன? எங்கிருந்து இந்த நாய்கள் வந்தன? இதெல்லாம் வழக்கமான நிகழ்ச்சிகளே இந்த நாய்கள் ஓடி வருவது அவனுக்காகவா.
கூடாது. கூடாது. என் நண்பனை அவை தீண்ட விடமாட்டேன் அவன் துப்பாக்கி படபடத்தது. ஓரிரு நாய்கள் சுருண்டு விழுந்தன. மற்றவை வெருண்டோடின. இவனை நோக்கி இவன் நண்பர்கள் ஓடி வந்தனர்.
'ஜெகனை மீட்கவேண்டும். அவன் அப்படி அநாதையாகக் கிடக்கக் கூடாது. அவனை நாய்கள் கடித்துக் குதற விடமாட்டன். அலறினான். நாளை காகங்கள் கண்களை. குடலை தோண்டலாமே!. நினைப்பே மனதில் புயலைத் தோற்றுவித்தது.
இந்த இழப்புகளுக்காக நாம் கலங்கக்கூடாது. எமது கலக்கம் எதிரியைப் பலப்படுத்தும். நாம் நிச்சயம் ஜெகனை மீட்போம். இப்பயில்லை. நேரமிருக்கு. முன்நிலவு நேரத்தில எங்கள எதிரி காத்துக் கொண்டிருப்பான். நீ இருட்டும் வரை காத்திரு. இருளோடு இருளாக அவனைக் கொண்டு வரவேண்டும். சிலர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
நானும் அவர்களோடு போய். அவன் இரஞ்சினான். ممfil به அவர்கள் பின்னிருட்டு வரும்வரை காத்திருந்தனர். அவ்வப்போது சேர்சச்லைட்' வெளிச்சம் அவர்களைத்தாண்டிச் சென்றது. அவர்கள் தரையோடு தரையாக. குண்டுகள் விழுந்து பறித்த குழிகளில், மைதானத்தில் பற்றை பற்றிக் கிடந்த குத்துச் செடிகளில், மறைவு கொண்டு முழங்கைகளால் நகர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் கரங்களில் துப்பாக்கிகள்.
210 செம்பியன் செல்வன்

சேர்ச்லைட் தங்களைத் தாண்டிச் செல்ல எடுக்கும் நேரத்தை புறப்படு முன்னரே கணக்கிட்டிருந்தனர். அந்த நேர இடைவெளியை மனதில் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தனர். எதிரியும் இவர்களது ஆற்றலில் அதிக நம்பிக்கை கொண்டவன். ஆதலால் அடிக்கடி ஜெகன் கிடந்த இடத்தை நோக்கி. அவ்வப்போது வெடிகளைத் தீர்த்துக் கொண்டிருந்தான். எதிரியின் துப்பாக்கி வேட்டைகளுக்கு அஞ்சி ஓடிவரும் நாய்கள் பின்வாங்கின. சில உயிரை விட்டன. ஆனால் புறப்படும் பொழுதே மிகக் கடுமையான கட்டளை, இயன்றவரை துப்பாக்கியைப் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் ஜெகனின் சடலத்தை நெருங்கியபோது மிகவும் களைத்துப் போயிருந்தனர்.
ஜெகன் குப்புற விழுந்து கிடந்தான்.
இவன் அவனை தனது முதுகிலேற்றிக் கொண்டான். மீண்டும் ஊர்த்துவ இயக்கம். குண்டுகள் பறித்த குழிகள் பாதுகாப்பாக இருந்த நிலை மாறி, அவையே திரும்புதலுக்குப் பெரும் தடையாக இருந்தன.
பங்களில் ஜெகனைக் கொண்டுவந்து கிடத்தினர்கள். அவன் மல்லாந்து கிடந்தான். அவன் முகத்தில் மண்பட்டிருந்தாலும், உதடு மண்ணை முத்தமிட்டது போல் அப்பிக்கிடந்தது. வலது கரத்தில் அவன் தாங்கிய ஏகே47 ஐ அப்போதுதான் கவனித்தார்கள். அவன் கையிலிருந்து அது அகற்றப்படாமலே கொண்டு வந்திருக்கிறார்கள். ஜெகன் அவனின் வலது கரத்தைப் பிரித்து துப்பாக்கியை எடுக்க முனைந்தான். அசைக்க முடியவில்லை.
விரல்கள் அழுங்குப்பிடியாக மரத்து விறைத்துப் போய். மறுகரத்தைப் பார்த்தார்கள். அதுவும் இறுக மூடியிருந்தது. அதைப்பலம் கொண்ட மட்டும் பிரித்தபோது.
கையிலிருந்து சொந்த மண் உதிர்ந்தது.
- வெளிச்சம் - புரட்டாதி
| 21

Page 114
2分 /މީ ހޮލޭސަފާމި>
இருளும் அச்சமும் கொண்ட
நீண்ட இரவுப்பொழுது. அந்தி வேளை உதயத்தினி போதே 967 60) J
உறக்கத்திலாழ்த்தும். இடையிடை வெடிக்கும் துப்பாக்கி ஒசைகள். அவர்களை அடிக்கடி மூத்திரத்திற்கு எழுப்பிவிடும், ஆர். பி. ஜிக்கள், தொலை தூரத்தில் வெடித்துச் சிதறும். பக்கத்துக் கல் வீடு. பங்களாக்களில். மாடிக் கட்டிடங்களில். நள்ளிரவில் எழும் சந்தடிகளும். சரசரப்புகளும். அச்ச வெடிகளும். "எங்க இருக்கு?. எங்க ஒளிச்சுப் புதைச்சு வைச்சிருக் கிறியள். சொல்ல மாட்டிய? உன்ர சின்ன மகன்ர சின்னவிரலை வெட்டி எடுத்தாத்தான் சொல்லுவியா?. எங்களிட்ட ஒண்டுமில்லை எண்டு நீ சொன்னாப் போல நம்புறதுக்கு. நாங்கள் ஒண்டும் பேயர் மடையரல்ல. நீங்கள் ஆரு?. உங்கட வைப்புச் சொப்பு என்ன? எல்லாத்தையும் அறிஞ்சு கொண்டுதான் வந்திருக்கிறம். டேய். அந்தப்
 

பெட்டையைப் பிடிச்சுக் கொண்டு வாடா. அப்பதான் இவருக்கு எங்களைப் புரிய வரும்"
"ஐயோ. வேண்டாம். வேண்டாம். என்ர சொத்துப் பத்தெல்லாத்தையும் கொண்டு போங்கோடா. என்ரகுஞ்சுகளை ஒண்டும் செய்து போடாதேங்களடா"
"ஏய் வாய் பொத்தோணும். சத்தம் போட்டா பொடியள் வருவாங்கள் எண்டு நினைப்போ. இப்ப வந்து பாக்க வேணும். வரச்சொல்லுங்கடி பாப்பம். தெருமுழுக்க இந்தியன் ஆமி நிக்குது எங்களுக்குத் காவலா. கூப்பிடுங்கடி அவன்களை" . என்று எழும் குரல்களும். சப்பாத்துச் சரசரப்புகளும். தெரு நாய்களின் குரைப்பொலிகளும் எல்லாவற்றையும் உணர வைக்க, இருளில் கூட மூச்செழா வண்ணம் முடங்கிக்கிடப்பர்.
தெரு நாய் கூட நன்றாக இனம் கண்டு கொண்டன. வருவது இந்தியன் ஆமியா. துரோகக் கும்பலா. பொடியளா என்று. நாய்களின் குரைப்பொலி வித்தியாசத்திலிருந்தே மக்களும் இனம் பிரிக்கவும். வெடியோசைகளிலிருந்து இது பொடியளின்ர. இது ஆமியின்ர என்று வேறுபடுத்தவும். வானத்தில் எழும் சப்தங்களிலிருந்து பொம்மரா . அவ்ரோவா. சீப்பிளேனா..? என்று குழங்தைகள் கூட பந்தயம் கட்டுவதை ஒரு போர்க்கால விளையாட்டாகவே மாற்றிக்கொண்ட அவர்கள்.
எதெற்கும் விடியட்டும். செய்தி தெரியவரும் என்று நித்திரையில்லாமல் படுக்கையில் புரளும் ஆண்களை. என்னப்பா. என்று மெல்லக்குசுகுசுக்கும் மனைவிமார்களை, அதை தெரியப் படுத்தவிரும்பாமலோ. வெறும் ஊகங்களைச் சொல்லி இதுகளை ஏன் கலவரப் படுத்துவான் என்ற நினைப்பினாலோ . ஒண்டு மில்லையப்பா நீரேன் வீணாக் கவலைப்படுநீர்?. பேசாம நித்திரையைக் கொள்ளும். அவங்கள் எங்கையோ கடலுக்க அடிக்கிறாங்கள் போல. என்று சொல்லப் போக, 'என்னப்பா. பொடியள் ஏதும் ஆயுதங்கள் 'வண்டியில கொண்டு வந்து இருப்பாங்களோ. அதைக்கண்டிட்டுத்தான் ஆமிக்காரன்கள் அடிக்கிறான்களோ, என்று கவலையில் விசாரணை விரிய. உந்த விசர் எண்ணங்கள் தானே உங்களுக்கு வரும். பொடியளைப்பத்தி இவ்வளவுக்குப் புறகும் என்ன நினைக்கிறியள்?. பொடியளின்ர வீரத்தில. புத்தியில கால்தூசி பெறுவாங்களே. இவங்கள். என்று பேச்சிலேயே மிகுதிப் பொழுதையும் கழித்து வெளியே வருவார்கள்.
அவர்களுக்கு இந்த நித்திய வாழ்க்கை வழக்கமான பழக்கமாகிவிட்டது.
தகர்வு 213

Page 115
அன்று விடியற்காலையில் எழுந்த 'சடசட. சடசட பட்யட் வேட்டுச் சத்தங்கள் கிராமத்தையே ஒரு உலுப்பிவிட்டது.
ஊருக்குள் ஏதோ அநர்த்தம் நடந்து விட்டது. எங்கே?. எங்கே?. கோயில் குருக்களின்ர மகனை. சின்னஐயரை இந்தியன் ஆமி சுட்டுப் போட்டுதாம். பொடி கோயிலுக்குள்ளயாம். ஏன் சுட்டவங்களெண்டு தெரியாது. காலைப் பூசைக்குப் போனவையும் உள்ளேயாம். ஒருவரையும் வெளியே விடுறாங்களில்லையாம்.
செய்தியைக் காற்றிலே பறக்க விட்டவர்கள் யார்? கிராமமே கோயிலை நோக்கி ஓடியது.
சடலத்தை வாங்க நீண்ட நேரம் போராட வேண்டியதாயிற்று. கோயிலுக்கு வெளியே கிராமமே திரண்டிருந்தது. சின்ன ஐயரை ஏன் சுட்டீர்கள். என்ற மக்களின் கேள்விக்குப் பதிலில்லை. இந்தியா இன்னொருமுறை தனது அஹிம்சை முகமூடியில்பில் சேற்றை அள்ளிப் பூசிக் கொண்டது.
சின்னஐயரை எங்களிடம் தாருங்கள். அவர் எங்கட கிராமத்தின் சொத்து. அவரின் கொலைக்கு யார் காரணம்? மக்களின் கொதிப்பிற்கு அவர்கள் இறங்கி வரவேண்டியதாயிற்று.
பிரேதத்தைத்தரலாம்' ஆனால் நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. இரண்டு மணிக்குள் அடக்கம் செய்து விடவேணும். ஊர்வலத்தில் ஐம்பது பேருக்கு மேல் கூடாது. நாங்க அடிக்கடி வந்துபாப்பம்.
இந்திய ஆமி வெளியேறியது. உள்ளே அகப்பட்டிருந்த அடியார் கூட்டம் திகைத்துச் சூழ்ந்து நிற்க வித்தியா வியாகரண சித்தாந்த சிரோண்மணி சாம்பசிவக் குருக்கள் தனது ஐம்பதாவது வயதிலும் தளராத உடல் நிலைகுலைய கர்ப்பக்கிருகப் படிக்கட்டில் உறைந்து போயிருக்க அவர் காலடியில் சின்ன ஐயர் நெஞ்சில் குண்டு பாய்ந்த அடையாளக் குருதி குங்குமமாகக் கிடக்க.
உள்ளே நுழைந்த கூட்டத்திலிருந்த நாலைந்து இளைஞர்கள் பரபரப்பாக கடமையாற்றத் தொடங்கினர். யார் என்ன செய்கிறார்கள். எதைச் செய்கிறார்கள் என்பதனைப் புரிந்து கொள்வதற்கிடையில் சின்னஐயரின் சடலம் வீடு போய்ச் சேர்ந்து விட்டது.
வீடு சிறிது நேரத்தில் அழுகை ஒலியால் நிறையலாயிற்று. ஊரும் உறவும் கூடியது. சாம்பசிவக்குருக்களின் பத்தினியார் மகனின் சடலத்தைப் பார்த்து மயங்கி விழுந்தவரின் மயக்கத்தைப் போக்க சில அம்மாக்கள் முயன்று
214 / செம்பியன் செல்வன்

கொண்டிருந்தனர். சின்னஐயரின் சகோதரிகள் சகோதரனின் முகம் பார்த்துக் கதறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஒரேயொரு சகோதரன். ஆளும் நல்ல அழகன். சைவானுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், இருக்கு வேதம் கற்றுக் கொள்கிறான். வேதங்களில் மிகப் பெரியது. இதனைக் கற்றாலே யசுர், சாம, அதர்வங்களைக் கற்று விட்ட நிறைவு ஏற்படும். சமூகத்தில். சடங்குகளில். நல்ல மதிப்பும் ஏற்படும். இவற்றுடன் யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியில் ஏஎல் மருத்துவம் படிக்கிறான். தோளிற்கு மேல் வளர்ந்த பிள்ளை. அதனால் அடிக்கடி தந்தைக்கும் மகனுக்குமிடையில் தர்க்கங்கள் நிகழ்வதை தாயும், சகோதரிகளும் பார்த்தும் கேட்டும் மகிழ்வர். அந்த சகோதரன் இன்று இப்படி. வாய்பேசா மெளனியாக. நீண்ட துயிலில் சூழ்ந்திருக்கப் பொறாமல் இரு சகோதரிகளும் வாய்விட்டு அடிக்கடி அலறினர்.
சாம்பசிவக்குருக்களோ பார்வையை அவனது நெற்றிப் பொட்டினூடாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
"மகன் இப்ப எங்கட சமூக ஆசாரங்களெல்லாம் கெட்டுக் கொண்டு வருகிறது. அவனவன் ஆசாரங்களைக் கைவிட்டு விட்டு குரொப் வைத்துக் கொண்டு அரசாங்க உத்தியோகத்துக்கும் வேறு மாதச் சம்பளத்துக்கும் போய் விடுறாங்கள். பணம். செல்வம். மட்டுமா. வாழ்க்கை. பிழைப்பு. நாங்கள் தெய்வத்தை தொட்டு வாழுறவங்கள். மக்கள் தங்கள் விக்கினங்களுக்கு கடவுளைத் தேடி வருகினம். நாங்கள் தான் கடவுக்கும் அவர்களுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பவர்கள். நாங்கள் எங்கள் குல தர்மத்தை. புனிதத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்"
"எல்லாம் சரிதான் அப்பா. ஆசாரம். ஆசாரம் என்று சொல்லிக் கொண்டு சில சமயம் மக்களை விட்டே வெகுதூரம் போய் விடுகிறோமோ என்று அச்சமாக இருக்கு."
"நாம் என்ன? அரசியலில் தேர்தல் காலத்தில் வாக்குக் கேக்கும் அரசியல்வாதிகளா?. நாம் எட்ட எட்ட நிற்கத்தான் புனிதம் பெருகும்.? தூய்மை சிறக்கும். மக்களுக்கும் எங்களில நம்பிக்கை பிறக்கும். ஏனெண்டா இது தெய்வ சங்கல்பம். தெய்வ சேவை. அதோட."
அதோட என்னப்பா. ப்பிராஹ்மணோ ஸ்யமுகமாசித் பாஹூன்ய: பிராமணர்கள் யஜ்ஜப் ரெளசவுகள் முகத்திலிருந்து வந்ததாக ஸ9க்தம் சொல்கிறது.
அப்பா உங்களிடம் வேதம் கற்றுக் கொள்கிறேன். உங்களிடம் பெற்ற பிரம்மோபதேசம். திரிகால சந்தியாவந்தனம். காயத்திரி மந்திரம் எல்லாமே எனது உடலுக்கு ஆத்மாவுக்கு இன்பமாக இருக்கிறது. கல்லூரியிலே கற்கும்
தகர்வு/215

Page 116
கல்விக்கும் நிறையப் பயன் தருகிறது. சமூகத்தில் உயர் நிலையிலிருந்த பிராமண சமூகம் இன்று என்ன நிலையில உள்ளது. இந்தியாவில் உயர் சமூகமெனக் கூறி தாழ் நிலைப்படுத்துகிறார்கள். அரசியல் மேடைகளில் எங்களைச் சதுரங்கக்காய்களாக நகர்த்துகிறார்கள். ஏன் எங்களைப் பலிக்கடாக்களாக்கி வருகிறார்கள். இது எங்கள் பொருளாதாரத்தை நிறையப்பாதிக்கிறது. ஏன் இன்றைக்கு பிராமண சமூகம் கோயிலை விட்டு வெளியே வேலை தேடுகிறது.? பூசகர் வேலையில் போதிய வருமானம் மின்மை. மாறிவரும் விலை வாசிகளுக்கேற்ப சன்மானம் வழங்குகிறார்களா? அதுவுமில்லை. ஆனால் அந்த சொற்ப சன்மானத்தைக் கொடுக்கும் போதும் எவ்வளவு எள்ளல்கள். கேலிகள்.
சாம்பசிவக் குருக்கள் மகனை உற்றுப்பார்த்தார். எவ்வளவு உண்மைகளை உணர்ந்து பேசுகிறான். தந்தைக்கு உபதேசித்த தகப்பன் சாமி போல. அவர் நெஞ்சம் விம்மக் கேட்டார்:
"அதற்கு என்ன செய்வது?" "ஒன்றும் செய்ய வேண்டாமா?. நாங்கள் வெறும் பூசகள் மட்டுமல்ல, தமிழர் களின் பண்பாடு. கலாசாரம். சடங்கு. சம்பிரதாயங்களை வழிவழியாகக் கட்டிக்காத்து மக்களுக்கு அளித்து வருபவர்கள். கோயில்கள் இவற்றின் களஞ்சியங்கள். இந்த உண்மையை மக்களுக்கு புலப்படுத்த வேண்டும். இதைத்தான் யூரீ இராமானுஜர் இன்னொரு வழியில் செய்தார்.
அவர் திடுக்கிட்டார். பூg இராமானுஜர்! "ஆமப்பா தாமறிந்த பிரம்மோபதேசம் பிறருக்கு. முக்கியமாக சூத்திரருக்கு தெரியக் கூடாது. தெரிந்தால் தனக்கு நரகம் என்பதை நன்குணர்ந்தும் லோகாமோகூடித்திற்காக ஊர் அறியப் பிரசங்கிக்கவில்லையா. அதனால் இந்துமதம் வளர்ந்ததேயன்றிக் குன்றவில்லையே”
"நீ என்ன சொல்ல வருகிறாய்?" "இந்த உண்மையைப் புரிந்து கொண்ட மக்களுடன் நாம் இணைந்து கொள்வோமானால் எமது தனித்துவமும் வளரும். நாடும் நன்மை பெறும். அதற்காக நாம் போராட வேண்டிய காலம் வந்துவிட்டது.
"சண்டையா? அது பிராமண தர்மல்லவே?” "தர்மங்களை நிலை நாட்ட நடந்த போர்களில் பிராமணர்கள் பங்கு கொள்ளவில்லையா?"
-அவர் நெற்றி சுருங்கியது.
216 / செம்பியன் செல்வன்

“என்ன சொல்கிறாய்? "பாரதப்போர் - நடந்தது எதற்காக?. நடத்தியவர் யார்?." குருக்களின் விழிகளில் நீர் பிரவாகமெடுத்தது.
மகனே!. மகனே!. ஏய். ஏய். இங்க நிண்டு இப்ப ஆர் ஓடினது உண்மையைச் சொல்லிப் போடவேணும்."
யார் யாரோ வேகமாக குறுக்கும் நெடுக்குமாக ஓடுகிறார்கள். சப்பாத்துக் கால்களின் ஒலி. தெய்வ சந்நிதானத்தையே கொலைக்களமாக்கிய பாதகர்கள். தெய்வசந்நிதானத்திலேயே தெய்வமாகி வந்து சயனம் கொள்ளும் இந்தப் புனித இடத்தைக் கூடவாக சற்று நேரம் தூய்மையாக இருக்கமனம் விடவில்லை யார் இந்த அசுரர்கள்.?
எல்லார் கைகளிலும் சனியன்கள் உள்ள துப்பாக்கிகள். உதவி செய்து கொண்டிருந்த இளவட்டங்கள் எல்லாரும் எங்கேயோ போய் ஒளிந்து கொண்டார்கள். பெண்கள் விழிகளில் நீர் பயத்தால் உறைய, சில வயோதிபர்கள் திண்ணையில் இருந்தவாறு மெளனப் பார்வையை
A.
விரித்தவாறு.
இங்க ஆர் வந்தது?. நிண்டபொடியள் எல்லாம் எங்க?" -யார் யாரையோ விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். "நாங்கள் இழவுவீட்டிற்கு வந்தவர்கள். இண்டைக்கு. இண்டைக்கு என்ன இண்டைக்கு. இனி இந்த வீட்டிற்கு துக்கம் விசாரிக்க ஆக்கள் வந்துபோவினம். செத்தது என்ன உங்களைப் போல சாதாரண மனுசனா. வேதவித்து. கிராமமே நம்பிக்கையோட காத்திருந்த உத்தம மனுசன். கிராம மக்களின் கனவையே அழிச்சிட்டீங்களே. இங்க வந்து போறவையளை கணக்கெடுக்கவே வந்திருக்கிறம்? போதாததற்கு நீங்கள் வேற சப்பாத்துக் காலோடு."
"ஏய் கிழடு என்ன கனக்கக் கதைக்கிறா?”. துப்பாக்கியின் பின் பக்கத்தால் யாரோ அடிக்கும் ஓசை
"ஐயோ. ஐயோ. முருகா. கெதியண்டு சவ அடக்கத்தை முடிக்கவேணும். ஆரும் பொடியள். இளம் பொடியள் இங்கநிக்கவேண்டு மெண்டால் எங்கட சம்மதம் எடுக்கவேணும்
'ஏன்?. ஏன்?. -அவர் கண்களில் எதுவோ காட்சியாக விழுகிறது. உதயகால பூஜைக்காக அவரும் மகனும் வீட்டை விட்டு புறப்பட்ட
தகர்வு/217

Page 117
போது எல்லாமே சரியாகத்தானிருந்தது. ஆள் அரவமற்ற வீதி. வெட்டவெளியில் உறங்கும் தோட்டங்கள். ஆட்களற்ற துலாக்கள். வானோடு மெளன இரகஸ்யம் பேசும் பெரிய தோட்டக் கிணறுகள். காலைப் பனி தூறியிருந்த தார் வீதி பச்சைப் பசும் புல் நிலங்களுக்கு சமன்தான். வீதியின் வலது புறம் கழிவு வாய்க்கால். அதற்கு அப்பால் பரந்திருந்த தோட்டம். தோட்டத்திற்கு அப்பால் புகையிரத வீதி. அதற்கும் அப்பால் வெறும் பற்றைகள். பனை வடலிகள், புல் மேடுகள். வழக்கமான பார்வையில் மாற்றம் தெரியவில்லை.
தந்தையும் மகனுமாக கோயிலைத்திறந்து உள்ளே புகுந்து பூசைக்கான ஆயுதங்களை மேற்கொண்டனர். பெரியவர் கர்பக்கிரகம் புக, சின்னவர் மடப்பள்ளியில் இருந்த சருவக்குடமும் கயிறுமாக தீர்த்தக்கிணற்றை நோக்கி சென்ற போது அவர்கள் நுழைந்தார்கள்.
'ஐயா சத்தம் போடாதேங்கோ. நாங்க தான். -இரண்டு இளைஞர்கள் அவசரமாக நுழைகிறார்கள். காலில் சிலிப்பரும் இல்லாமல் சாறம் சேட்டுடன், ஒருவன் கையில் உரப்பையில் எதனையோ சுருட்டி வைத்திருக்கிறான்.
அவருக்கு விளங்கி விடுகிறது. "தண்டவாளத்துக்கு அங்கால ஆமிக்காரன் விடிய விடிய படுத்துக்கிடக்கிறான். ஐயா நாங்க வந்ததை கண்டுட்டாங்கள் எண்டு தான் நினைக்கிறம். எப்படியும் அவங்கள் வாறதுக்குள்ளே நாங்கள் போயிடுவம். நீங்கள் ஓடிப்போய் பூசை மணியை அடியுங்கள். பஞ்சாட்சரம் மணியை நோக்கி ஓட, அங்கே என்ன கதை யாரோட கதைக்கிறா?' என்றபடி சாம்பசிவக்குருக்கள் கர்ப்பக்கிருகத்தை விட்டு வெளியே வந்தவர் திக்கித்துப் போகிறார்.
அவர்கள் வடமேற்கு திசையாக வாகனச்சாலையிலிருந்த இடமாக ஒடுகிறார்கள். வெளியே இருந்து சிற்சில அடியார்கள் கோயிலுக்குள் நுழைந்த சில மணித்துளிகளில் இந்தியா ஆமி படபடவென உள்ளே புகுகின்றது. கோயிலின் உள் வீதி எங்கும் சப்பாத்துக் கால்களுடன் ஒடுகின்றனர். புல் வெளிகளில் தட்டாம் பூச்சியை துரத்தி வெறுங்கையுடன் திரும்பும் சிறுவர்கள் போல.
'ஏய். ஐயர். இங்க வா. இரண்டுபேர் வந்தாங்கள் எங்க. 'எந்த ரெண்டுபேர்?" 'சாறனோட வந்தாங்கள். நான் கர்ப்பக்கிருகத்துக்குள் நிண்டனான். கவனிக்கேல.
218 செம்பியன் செல்வன்

'ஏய். பூசாரி பொய் சொல்லுகிறாய். இல்லை நீயும் அவங்கட ஆளா. நீ நிசம் சொல்லாட்டா உங்களை எல்லாம் சுடுறது. வா. எல்லாரும் வரிசையாக நில்.
ஆ. ஒண்ணு. ரெண்டு. ஏக். தோ. தீன் வெடிச்சத்தம் வானப்பிளக்கிறது. பஞ்சாட்சரம். கற்பகக்கிருக வாசலில். இந்த வெடிச்சத்தம் எதனையோ வெளியில் நின்றவர்களுக்கு உணர்த்தி இருக்க வேண்டும்.
தண்டவாளத்துக்கு அப்பால் பல வெடிச்சத்தம் கேட்க ஆமி நகள்கிறது. ஐயோ. மகனே. பஞ்சாட்சரம். அவரது இதயம் ஓலமிட்டு அழுகிறது.
இந்தியாஇராணுவம் நுழைந்தபோது தமிழர்களுக்கு ஏதாவது இவர்களால் நன்மை கிடைக்கலாம் என அறியாமை வசத்தில் நம்பியவர், இந்தியா என்றால் தமிழகம். தமிழகம் என்றால் எமது தாய் நாடு என்ற மனப்பான்மையில் வளர்த்தெடுக்கப்பட்ட பரம்பரை வேறெப்படிச் சிந்திக்கும்? அதிலும் சாம்பசிவக்குருக்கள் போன்றோருக்கு?
இந்தியா வேதங்களின் விளைநிலம் அங்கிருந்து வரும் படை நிச்சயம் நல்லதே செய்யும்.
"அப்பா படை எண்டால் படை தான். அதில் சைவப்படை. அசைவப்படை என்ற வித்தியாசமில்லையப்பா"
பரமசிவம் வாய்க்கு வந்தபடி பேசாத. உனக்கென்ன தெரியும். இந்தியா பற்றி? எங்கும் நதிக்கரைகள். புண்ணியதலங்கள். கன்னியாகுமரியிலிருந்து இமயமலை வரை புண்ணிய ஷேத்திரங்கள். அந்தப் புண்ணிய பூமியிலிருந்து வருபவர்கள் வேறு யாருமல்ல. எங்கட சாதிசனம். நீ ஒரு கண்டறியாத கல்லூரி ஒண்டிலை படிக்கப் போய்த்தான் இப்படி யெல்லாம் பேசிறா. பாரன் என்ன நடக்கப் போகுது எண்டு.
அவர் எதிர்பாராதது நடந்தது. மக்கள் அனைவரும் உடனடியாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அருகிலுள்ள கோயில் பாடசாலைகளில் போய் இருக்கும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவர் மனதில் ஏதோ ஒன்று நகர்வதுபோல் பட்டது. குடும்பத்துடன் நல்லூரை நோக்கி நடந்த பொழுதுதான் அவருக்கு அரசியல் அறிவு ஏன் அவசியம் என்று புலப்படலாயிற்று. மனைவியோ. வீடு வாசல் எப்படியிருக்குமோ.
தகர்வு/219

Page 118
பண்டம் பாத்திரம் பறிபோகாமல் இருக்குமோ என்று கவலைப்பட்டதற்கு. வந்தவங்கள் என்ன கொள்ளைக்காரன்களோ? நீ ஒண்டுக்கும் பயப்படாத அதோட கோயில் குருக்கள் வீட்டில கை வைக்கிற அளவுக்கு மோசமாக இருக்க மாட்டங்கள்.?, என்று தேற்றியவர் ஒரு வாரத்தின் பின் வீட்டிற்குச் சென்றவர் அதனைத் திறக்க வேண்டியிருக்கவில்லை வீடு சூறைடப்பட்டிருந்தது. கோயிலை நோக்கி ஓடினார்.
கோயிலின் உட்பிரகாரங்களில், மடப்பள்ளிப் பாத்திரங்கள் மாமிசக்கறி எச்சங்களுடன்.
"ஐயோ. முருகா. என்றலறலுடன் அவரின் இன்னொருமுனையில் எதுவோ தகர்ந்தது,
"வேத வித்துக்களின் விளை நிலங்களில் அரக்கள் முளைத்தெழுந்தது எப்படி?.."
கோயிலில். மடப்பள்ளிப்பாத்திரங்களில். மாமிசக்கறி. பொறுப்பதிகாரியின் சட்டையில் ஏதோ சர்மாஜி எனப் பெயர் பொறித்திருந்ததாக ஞாபகம்.
அவர் இடிந்துபோய் உட்கார்ந்திருக்கிறார். கோயிலை எப்படி புனிதப்படுத்துவது..? யார் வீட்டில..? அவர் எப்படிப்பார்க்கிறார். வெளியே இந்திய ஆமி. என்ன? இந்த வளவு வேலியை வெட்டிப் போடவேணும். நாளைக்கு நாங்க வரேக்க வெட்டாமலிருந்தா எரித்துப் போடுவம்
"ஏன்? அதென்ன கேள்வி. சொன்னதை செய்யும் ஐயர் சரியா. அதெப்படி இந்த வளவுக்கு மேற்கால பிரதான வீதி. வேலியை வெட்டி விட்டா. நடுச்சந்தியில தான் என்ர வீடு. இது பிராமண வீடு. அப்படி இருக்க முடியாது.
'ஏய் ஐயர். அதிகம் பேசாத. சொன்னதை செய். அவர் அடுத்த நாள் பூசை முடிந்து வரும் பொழுது அவரது வேலி எரிந்து கொண்டிருந்தது. இந்தியன் ஆமி தனக்குப் பாதுகாப்புத் தேடி கொண்டது.
அவரது நெஞ்சம் எரிந்து கொண்டிருந்தது. இப்படைகளுக்கு இப்படி யெல்லாம் ஆணையிட்டுக் கொண்டிருக்கும் அந்தப் பெரியவன் யார்? நல்லாயிருப்பானா?. அவனும் இப்படியே?. வரம் கொடுக்கும் வாய் சபிக்கிறதா?
220 செம்பியன் செல்வன்
ܛܔ

'ஏய். ஐயர். நீ என்ன பொடியள் கட்சியா?. ‘என்ன பேசாம இருக்கிறாய் அந்த வேலியை நீ ஏன் வெட்டிப்போடேல்ல.
எதை? அதிர்ந்து போகிறார். கிணற்றடிக்கு மறைவாகப் போட்டிருக்கிறதையா?. அதை வெட்டி விட்டா பெண் புரசுகள் எப்படி மானம் மறைப்பாக நின்று குளிக்குங்கள்?
'ஏன் பொடியள் மறைவா நிண்டு எங்களுக்கு குண்டு சுடவா. சொன்னதை செய். படைக்குப் பாதுகாப்புத் தேவை?. அவரது குடும்பம் விடிகாலைக்கு முன்னதாகவே கிணற்றடிக்கு செல்லத் தொடங்குகிறது.
திருப்பொற் சுண்ணம் இடித்தாயிற்று. பஞ்சாட்சரத்தின் சடலத்திற்கு இறுதி மரியாதைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விம்மல். அழுகை எங்கும் நிறைகிறது. பெண்கள் பெருங்குரல் எடுத்து அழுகிறார்கள்.
பெட்டி. பெட்டி. பெட்டி வருகிறது. கிரியைகள் தொடர, பேச்சுக்கள் கிசுகிசுக்கின்றன. பெட்டியைக் கொண்டு வாறது பெரும்பாடாப் போச்சு. பெட்டி எடுக்கிற இடத்தில வைத்து மறிக்கிறாங்கள். யாருக்கு. எங்கசெத்தது. எண்டு ஆயிரம் கேள்வி. வழி வழிய பதில் சொல்லிக் கொண்டு வரவேண்டியுள்ளது. பெட்டிக்குத் தேவையான மரங்களில்லை எண்டு பெட்டி செய்யிறவன் அழுகிறான். வரேக்க இந்தப் பெட்டி ஒன்று தான் கடைசியாகக் கிடந்தது. அவனும் இதோட கடையைப் பூட்டிக் கொண்டு போறான்.
"வேலிகளில்லாததால், பெட்டி வாசலால் வருகிறதா. வீட்டைப் பிளந்து கொண்டு வருகிறதா என்று புரியாத நிலையில் பாடையும் மக்களுமாகத் தெருவில் இறங்குகின்றனர். தூரத்தே வெடிச்சத்தங்கள் கேட்கின்றன.
சுடலையில், மண்டபத்தில் மீண்டுமொருமுறை சடங்குகள் நடக்கின்றன. பெட்டியில், இருந்து சடலம் ‘பச்சைப்பன்னாங்குக்கு மாற்றப்பட்டு குருமாருக்கான இறுதிக் கிரியைகள் மிக வேகமாக. சுடலைக்கு வந்தவர்களுக்கோ வீடுகளுக்குத் திரும்பும் அவசரம். மந்திர கோஷங்களும். யாககுண்டப் புகையும். எங்கும் சூழ.
W சுடலை "கட்டைகுத்தி தனது உதவியாளர்களுடன் சிதையை ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கிறான். . கிடைக்கப் போகும் துணி மணி. சாராயத்திற்கான காசு. என்பனவற்றின் நினைவில் படு உற்சாகமாக. கட்டைகளை அடுக்கி. பக்க அணையாக கம்பிக் கட்டைகளை அடித்து.
தகர்வு 221

Page 119
வாகாகப் பற்றி எரிய பழைய ரயர்களையும் காற்று வீசும் திசை பார்த்து காய்ந்த தென்னோலை காவோலைகளை அடுக்கி. அவன் காத்திருக்கிறான். சடலம் கிடத்தப்பட்டு, நெஞ்சாங்குற்றி ஏற்றி, அவர் கொள்ளிகுடம் கொண்டு மூன்று முறை சுற்றி தீயிட்டபின் தான் அது நிகழ்ந்தது.
சவப்பெட்டியைக் கொத்தி எரியும் நெருப்பில் சிதையில் போடுவதற்காக கட்டைகுத்தி வேகமாக கோடரியை உயர்த்துகிறான். யாரோ ஒருவன் வந்து அவன் கைகளைப் பிடித்து நிறுத்துகிறான்.
என்ன? கொஞ்சம் பொறு. பெட்டியை வீணாக்காத, இப்ப பெட்டி அவசரத் தேவையாக இருக்கு. ஒரு பேராளியின்ர வித்துடலைக் கொண்டு வர.
அப்படிச் சவப்பெட்டியை இரவல் கொடுக்கிற வழக்க மில்லை. அதோட இது குருக்கள் வீட்டுப் பெட்டி. அவர்கள் சம்மதமின்றி.
அந்த இளைஞர்கள் குருக்களை நெருங்குகிறார்கள். முதல் தடவையாக அவர் முகத்தில் ஒரு புன்னகை மலர்கிறது. 'மகனே!. நீயே இல்லை. இதில் உடமை பற்றிய பேச்சு. வேடிக்கையாக இல்லையா. தெய்வமானபின் சடங்குகளும் சம்பிரதாயங்களும். நீ அன்று பூரீஇராமானுயரை உதாரணம் காட்டினாய். ஆனால் இன்று நீயே. உன் சவப்பெட்டியை இன்னொரு போராளிக்கு உதவப் போறதை நினைத்தால் எம் மெய்யே புல்லரித்துப் போகிறது:
அவரது உள் மனம் ஏதேதோ பேசுகிறது. "பிள்ளையள். என்ன தயங்கிறியள். உங்கள் போராட்டங்களின் புனிதமும் பொருளும். ஏன் எங்கட வேதத்தின் உட்பொருளும் இப்ப தான் எனக்குப் புரியுது. ஆனா எப்பவோ புரிந்து கொண்ட என் மகன். போங்கள். கெதியாப் போங்கள். அந்த அறுவான்கள் இங்க வருமுன் பெட்டியைக் கொண்டு போய் விடுங்கள். நிச்சயம் உங்கட போராட்டம் வெற்றி பெறும். அப்பொழுது. நாங்கள் எங்கட பிள்ளைகளை இப்படி அநியாயமாகப் பறி கொடுத்துக் கொண்டிருக்கமாட்டம்"
தூரத்தே எதுவோ நொருங்கித் தகர்வது போல் பேரோசை ஒன்று எழுகிறது.
வெளிச்சம் ஆனி 92.
2221 செம்பியன் செல்வன்

குறிப்புகள்
/223

Page 120
TT S TT SS LL TL LL L LLL LL
are, and resu - aly in இங்கந் தமிழ் புத்தாளர் ஒன்றியம் Irrin-1933 huts eguztia, 1 lortu izazioan வியங் நகங்க - சஞ்சிகைகளின் lufa sufitera "a" RI i IEJ" |
வேங்கந் திரைப்படக் கட்டுக்கான வங்கிய முத்திரைப்படக் குறும்படங்களிர்
in title நான் நாடகம், சிறுகன் RL CL51 - Sri Litali ருந்போது யார்கோட்டக் கல்விப் பளிப்பா
 

மத்தியகுழு உறுப்பினர்
SITETITLER L L L LL L LLLL MM LL Y TMM M LTTTLT S LLLLL LLLLLS LLLSS
கெளரவ ஆசிரியர் வள் திரைப்பட எழுத்துப் பிரதிபிள் சொந்தக்கார்
Turčig Ti A autor, E. 18,000 пеш
LM LLLL L LL LLLL eeTTTLTTS TTTLLLL T K
குறுங்களுக, திரைப்படம், ஆன்மிக பந்ே