கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்

Page 1
INTERREPTATIVAMENN 瞿、 顯 |წყუწწ. 靚*鳶
 

STI
T
M

Page 2

ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள் ஈழத்தின் முன்னோடிப் படைப்பாளிகள் இருபத்தைந்து பேரின் சிறுகதைகள் (1936-1950)
தொகுப்பாசிரியர் செங்கை ஆழியான் க. குணராசா
பதிப்பாசிரியர் பூபாலசிங்கம் ரீதரசிங்
பூபாலசிங்கம் பதிப்பகம் பூபாலசிங்கம்புத்தகசாலை கொழும்பு

Page 3
தலைப்பு
பதிப்பு
பதிப்புரிமை
தொகுப்பு
வெளியீடு
கணினி வடிவமைப்பு
நூல் வடிவமைப்பு
அச்சுப் பதிப்பு
அட்டைப்பட ஓவியம் :
விலை
TrTLE
COMPLIED BY
PUBLISHED BY
LAYOUT & DESIGN
ARTWORK (COVER)
PRICE
ISBN
பதிப்பு விபரம்
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
ஜூன் 2001
: 5LD6)st (5600TUTEFIT
செங்கை ஆழியான் K. குணராசா
: R. P. Jöggńsk
பூபாலசிங்கம் பதிப்பகம்’ 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11
பவானி கிருஷ்ணமூர்த்தி
சு. கிருஷ்ணமூர்த்தி
சக்தி என்டர்பிரைஸஸ்
ஞானகுரு
: 250/-
EELATHTHU MUNNODI SIRUKATHAIKAL
A collection of short stories of the pioneers of Sri Lankan Tamil writings (1936-1950)
SENGAI AALIYAN K. KUNARASA (DR. K. KUNARASA, MA, PhD, SLAS)
R. P. SRITHARASINGH
“PoOBALASINGHAM PATHIPPAKAM’
340, SEASTREET, COLOMBO-11
MR. & MRS. S. KRISHNAMOORTHY
GNANAKURU
250/-
955-9396-05-6

நன்றி
இத்தொகுதியில் தங்களது சிறுகதைகளைச் சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்த ஆசிரியர்கள், உரிமையாளர்களுக்கும்; ஏற்கனவே சிரமத்துடன் தொகுக்கப்பட்ட தொகுதிகளிலிருந்து மீளப் பயன்படுத்த வசதிசெய்து தந்த தொகுப்பாசிரியர்களுக்கும், பதிப்பாசிரியர்களுக்கும் நன்றிகள்.
தொகுப்பு விபரம் 9ே படுகொலை (சுயா), பரிசுக்கட்டுரை (சோ. சிவபாதசுந்தரம்), தண்ணிர்த் தாகம் (ஆனந்தன்), ஆறிய மனம்' (பாணன்), 'வாழ்வு' (சம்பந்தன்), ஆசைச்சட்டம்பியார் (பவன்), நல்ல மாமி (சோ. தியாகராஜன்), 'வண்டிற்சவாரி (அ. செ. முருகானந்தன்), கற்சிலை (நவாலியூர் சோ. நடராஜன்), ஒரு பிடி சோறு’ (கனக செந்திநாதன்), 'கிடைக்காத பலன்’ (சு.வே.), 'வெள்ளம்’ (இராஜ அரியரத்தினம்), 'பிழையும் சரியும் (கசின்), "சேதுப்பாட்டி’ (அழகு சுப்பிரமணியம்), மாமி (நாவற்குழியூர் நடராஜன்)
"ஈழகேசரி” இதழ்களிலிருந்து ஆசிரியரால் பிரதியெடுக்கப்பட்டவை 9ே 'வஞ்சம் (இலங்கையர்கோன்)
"மாணிக்கம்" சஞ்சிகை
9ே 'கற்பு’ (வரதர்)
"வரதர் கதைகள்” சிறுகதைத் தொகுதி  ெ'உழைக்கப் பிறந்தவர்கள் (சி. வி. வேலுப்பிள்ளை)
நள்ளிரவு’ (அ. ந. கந்தசாமி)
"உழைக்கப் பிறந்தவர்கள்” சிறுகதைத் தொகுதி, துரைவி வெளியீடு 9ே ‘சத்திய போதிமரம் (கே. கணேஷ்)
"மலையகச் சிறுகதைகள் தொகுதி", துரைவி வெளியீடு 0 "கடல் (சொக்கன்)
"கடல்” சிறுகதைத் தொகுதி 9ே 'சொந்த மண்' (சு. இராஜநாயகன்) "தினக்குரல்" ஞாயிறு மலர் 9ே 'பாற்கஞ்சி' (சி. வைத்தியலிங்கம்)
"கங்கா கீதம்” சிறுகதைத் தொகுதி 9 குருவின் சதி (தாழையடி சபாரத்தினம்)
ஈழத்துச் சிறுகதைகள் தொகுதி  ெமனமாற்றம் (கு. பெரியதம்பி)
"மறுமலர்ச்சி” சஞ்சிகை

Page 4

பதிப்புரை
ங்ெகள் தந்தையார் பூபாலசிங்கம் அவர்கள் எங்களின் புத்தக சாலையை வியாபார நிலையமாக மட்டுமன்றி ஓர் அறிவுக்கூடமாகவும் ஆக்கியவர். அவர் 'காலத்தில் இலக்கியகர்த்தாக்கள் ஒன்றுகூடும் இடமாக எங்கள் புத்தகசாலை விளங்கியது. இன்று பெருமைபடப் பேசப் படும் பல பேரறிஞர்கள் எங்கள் தந்தையின் நண்பர்கள். வியாபாரமே நோக்கமாக அல்லாது வாசிப்பினை ஊக்குவிக்க வேண்டும் எனும் நோக்கோடு எங்கள் தந்தையார் ஆரம்பித்த பூபாலசிங்கம் புத்தகசாலை இன்றும் அப்பணியைத் தொடர்கிறது. தந்தையாரிட்ட அத்திவாரத்தால் இன்றைக்கும் எங்கள் வியாபார நிலையம் அறிஞர்களின் ஒன்றுகூடு களமாகவே திகழ்கிறது. அது எங்களின் பேறு.
இத்தகு அறிஞர்களின் தொடர்பால் வெறுமனே புத்தக வியாபாரம் மட்டுமன்றி வெளியீட்டு முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும் எனும் பெரு விருப்பு உண்டாகியது. அந்த விருப்பத்தால் யாழ்ப்பாணத்தில் இருந்த போது பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு என்ற பெயரில் மூதறிஞர் 'சொக்கன் அவர்களின் "பத்திக் சந்” எனும் மொழிபெயர்ப்பு நூலினை முதன்முதலில் வெளியிட்டோம். தொடர்ந்து ஓரிரு புத்தக வெளியீடுக ளோடு போர்ச்சூழலால் அம்முயற்சி நின்றுபோனது. பின் 1993இல் கொழும்புக்கு இடம்பெயர்ந்து இங்கு எங்கள் புத்தகசாலையை ஆரம்பித் ததும், அடி மனதில் கிடந்த நூல் வெளியீட்டு விருப்பம் மீண்டும் தலை தூக்கியது. 1993இல் பூபாலசிங்கம் பதிப்பகம்’ எனும் அமைப்பைத் தொடங்கி தரமான நூல்களை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டோம்.
"ஈழத்தவர் வரலாறு" (செங்கை ஆழியான்) “கலைக்குரல்கள்” (V.N.S. உதயச்சந்திரன்) “மனநதியின் சிறு அலைகள்” (K. விஜயன்), “வேட்கை" (நீர்வை பொன்னையன்), “பாதை" (நீர்வை பொன்னையன்), "மரக்கொக்கு” (தெணியான்), "காத்திருப்பு” (தெணியான்) ஆகிய நூல் கள் இதுவரை பூபாலசிங்கம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டன.
ஈழத்தைப் பொறுத்தவரை வெளியீட்டு முயற்சிகள் இன்னும் வளர்ச்சி பெறவில்லை என்பதே உண்மை நிலை. தமிழகத்தைப் போல விரிந்த வாசகர் வட்டம் இங்கில்லாதிருப்பது பெரிய குறை. அரசாங்கத் தின் ஆதரவும், ஏற்றுமதி வசதியும் இல்லாத நம் நாட்டுச்சூழலில் வெளியீட்டு முயற்சி என்பது மிகச் சிரமமான காரியம். இந்நிலையில் புத்தக விற்பனைத் தொடர்புகள் இருப்பதால், இவ்வெளியீட்டு முயற்சி யில் தொடர்ந்து துணிந்து முயன்று வருகிறோம்.
அண்மைக்காலமாக, கல்வியமைச்சினால் நூல்கள் வாங்கப்படுவது வெளியீட்டாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய ஊக்கம். அதற்குக் காரணமாயிருந்து பணியாற்றும் கல்வியமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. எஸ். தில்லைநடராஜா அவர்களுக்கு வெளியீட்டாளர் அனைவரும் கடமைப்பட்டுள்ளனர். எமது நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
V

Page 5
பூபாலசிங்கம் பதிப்பகத்தின் எட்டாவது வெளியீடாக ஈழத்தில் வெளி வந்த தரமான சிறுகதைகளின் தொகுப்பொன்றை வெளியிட வேண்டும் என்னும் விருப்புண்டாயிற்று. சிறுகதையைப் பொறுத்தவரை ஈழத்து ஆக்ககர்த்தாக்களின் முயற்சி காத்திரமானது. அன்று தொட்டு இன்று வரை வெளிவந்த தரமான சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டால் ஒரே பார்வையில் ஈழத்து ஆக்ககர்த்தாக்களின் சிறுகதை முயற்சியின் காத்திரத்தன்மையை வெளிப்படுத்தலாம் என எண்ணினோம். நம் நாட்டில் மட்டுமன்றி தமிழ்நாட்டிலும் நம் இலக்கிய முயற்சிகளை அறிமுகம் செய்வதாக இந்நூல் அமையும் என்பதும், ஆய்வாளர் களுக்கு இந்நூல் பெரும் பயன் செய்யும் என்பதும் உறுதியாய்த் தெரிந்த தால் இம்முயற்சியை முன்னெடுக்க முனைந்தோம்.
‘யாரிடம் இப்பணியை ஒப்படைப்பது?’ என்ற கேள்வி எழுந்தபொழுது ஈழத்து எழுத்தாளர்களில் மிகப் பிரபலமானவரும், இலக்கிய முயற்சி களில் ஓயாது உழைப்பவரும், தனக்கென ஓர் சொந்தப்பார்வை உடைய வரும், எங்கள் நண்பருமான செங்கை ஆழியான் நினைவில் வந்தார். இத்தொகுப்பினைச் செய்ய அவரைவிடப் பொருத்தமானவர் வேறு யார் இருக்கமுடியும்? நட்புரிமையோடு அவரிடமே அப்பொறுப்பினைக் கையளித்தோம். பெருமனதோடு எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண் தொகுப்பினைச் செய்யச் சம்மதித்தார்.
ஏற்றுக்கொண்ட பொறுப்பினைச் செவ்வனே செய்வது செங்கை ஆழியான் அவர்களின் இயல்பு. அவ்வியல்பினால், விரிந்த தேடுதலுக் குப் பின், ஈழத்துச் சிறுகதையின் முன்னோடிகளான பிரபல எழுத்தாளர் களின் இருபத்தைந்து கதைகளைத் தரமறிந்து தொகுத்துத் தந்தார். இக்கதைகள் 1936 இலிருந்து 1950 வரை வெளிவந்தவை. அன்றுதொட்டு இன்றுவரை வெளிவந்த தரமான சிறுகதைகள் முழுவதையும் தொகுப் பதானால், அத்தொகுப்பு மிகப் பெரியதாகும் என்பதால் குறித்த கால கட்டத்திற்கு உட்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு மட்டும் எங்களின் எட்டாவது வெளியீடாய் "ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்” எனும் பெயரில் வெளிவருகிறது. இச்சிறுகதைத் தொகுப்பு முயற்சி மேலும் தொடரப்பட வேண்டியதன் அவசியம் தெரிகிறது. தெளிவான அளவு கோலோடு ஈழத்துச் சிறுகதைகளைத் தொகுக்க முனைந்திருக்கும் செங்கை ஆழியான் அவர்கள் சம்மதித்தால் இம்முயற்சியை மேலும் தொடர்வோம்.
இதுவரை எங்கள் ஆக்கங்களுக்கு ஆதரவு தந்த வாசகர்களை நன்றியோடு வணங்குகின்றோம். இந்நூலுக்கும் தங்கள் ஆதரவு வேண்டி ஈழத்து இலக்கிய உலகுக்கு 'ஈழத்து முன்னோடிச் சிறுகதைகளை” மகிழ்ச்சியோடு சமர்ப்பிக்கிறோம்.
19. O6. 2001 பூ பூரீதரசிங்

பொருளடக்கம்
இல, சிறுகதையின் பெயர் ஆசிரியர் எழுத்துத்துறையில் பிரவேசித்த ஆண்டு
1. படுகொலை EUL|T 1936
2. பரிசுக்கட்டுரை சோ.சிவபாதசுந்தரம் 1936 3. தண்ணிர்த்தாகம் ஆனந்தன் 1938
4. ஆறியமனம் பாணன் 1938
5. வாழ்வு சம்பந்தன் 1938
6. பாற்கஞ்சி சி.வைத்தியலிங்கம் 1938
7. வஞ்சம் இலங்கையர்கோன் 1939
8. ஆசைச்சட்டம்பியார் பவன் 1939
9. உழைக்கப்பிறந்தவர்கள் சி.வி.வேலுப்பிள்ளை 1939
10. வண்டிற்சவாரி அ.செ.முருகானந்தன் 1940
11. நல்லமாமி சோதியாகராஜன் 1940
12. கற்சிலை நவாலியூர்சோ.நடராஜன் 1941
13. கற்பு வரதர் 194
14 நள்ளிரவு அ.ந.கந்தசாமி 1942
15. ஒருபிடிசோறு கனக செந்திநாதன் 1943
16. கிடைக்காதபலன் சு.வே. 1943
17. Dril 6 நாவற்குழியூர் நடராஜன் 1943
18. வெள்ளம் இராஜ அரியரத்தினம் 945
19. சத்தியபோதிமரம் கே.கணேஷ் 1945
20. பிழையும் சரியும் கசின் 1947
21. கடல் சொக்கன் 1947
2 சேதுப்பாட்டி அழகுசுப்பிரமணியம் 1947
23. சொந்தமண் சு.இராஜநாயகன் 1947
24. குருவின்சதி தாழையடிசபாரத்தினம் 1947
25. மனமாற்றம் கு.பெரியதம்பி 1947
vi

Page 6

முன்னுரை
தமிழில் வெளிவந்த நல்ல சிறுகதைகளைத் தொகுத்து நூலுருவில் வெளிக்கொணர்ந்த பெருமை முதன்முதலில் அல்லயன்ஸ் புத்தக வெளியீட்டு நிறுவனத்தினை உருவாக்கிய வீ குப்புசாமி ஐயர் அவர் களையே சாரும். ஏறக்குறைய முந்நூறு சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து, 1938 இற்கும் 1948 இற்கும் இடைப்பட்ட காலவேளையில், ஒவ்வொன்றும் ஐநூறு பக்கங்கள் வரையிலான, நான்கு சிறுகதைத் தொகுதிகளைக் “கதைக்கோவை” என்ற பெயரில் தமிழிற்குத் தந்துள்ளார். ஆனால் அந்நூல்கள் அக்காலத்தில் அவ்வளவு தூரம் விற்பனையாகவில்லை என்பதும் அவற்றில் பாதிக்கு மேல் கறையானுக்கு இரையாயின என்பதும் வேதனைக்குரிய நிகழ்ச்சி ஆகும். எவ்வாறாயினும் தக்க சிறுகதைகளைத் தமிழுக்கு நூலுருவில் வழங்கிய முதற்பெருமை குப்புசாமி ஐயரையே சாரும்.
அல்லயன்ஸ் குப்புசாமி ஐயரின் முதலாவது கதைக்கோவைத் தொகுதியில் நாற்பது எழுத்தாளர்களின் தேர்ந்த சிறுகதைகள் இடம் பிடித்திருந்தன. டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களின் சிறுகதை யில் இருந்து ஆர். திருஞானசம்பந்தனின் சிறுகதை வரை அத்தொகுதி யில் இருந்தன. விருப்பு வெறுப்பற்ற நிலையில் தமிழ்ச் சிறுகதை உலகிற்குப் பங்களிப்புச்செய்த அனைவரும் இத்தொகுதிகளில் சேர்க்கப் பட்டிருந்தனர். அதற்குத் தக்க உதாரணம் ஈழத்தினைச் சேர்ந்த சி. வைத்தியலிங்கத்தின் மூன்றாம்பிறை', சம்பந்தனின் 'விதி இலங்கையர்கோனின் தந்தை மனம் ஆகிய மூன்று சிறுகதைகள் முதற் தொகுதி யில் தகுதிகண்டு சேர்க்கப்பட்டிருந்தமையாகும். 19384களில் வெளிவந்த இந்த முதலாவது தொகுதி ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் இன்றுவரை மாற்றியெழுதப்படாத ஒரு கருதுகோளை உருவாக்கி விட்டது. "ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் மூலவர்கள் சி. வைத்தியலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன் ஆகிய மூவருமாவர்” என்பதே அந்த மாற்றப்பட வேண்டிய கருதுகோளாகும்.
குப்புசாமி ஐயரின் கதைக்கோவை இரண்டாம் தொகுதியில் ஐம்பது தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பிடித்திருந்தன. வழமை போல ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களான சோ. சிவபாதசுந்தரம், நவாலியூர் சோ. நடராஜன் ஆகிய இருவரது சிறுகதைகள் சேர்க்கப்பட்டி ருந்தன. மூன்றாவது தொகுதியில் அ. செ. முருகானந்தனின் சிறுகதை உட்பட அறுபது தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் கதைகள் இடம் பெற்றிருந்தன. உண்மையில் சிறுகதை வரலாற்றின் ஆரம்ப காலத்தில் ஈழத்துச் சிறுகதைகளை இனங்கண்டு, ஐயப்பாடின்றி, தனது தொகுதி யில் சேர்த்துக்கொண்ட நேர்மை குப்புசாமி ஐயரிடம் இருந்துள்ளது. "எதிலும் தப்பும் தவறும் நேர்ந்துவிடக்கூடாது என்பது எனக்கு அவசியம்”

Page 7
எனக் கூறும் ஐயரின் இலக்கிய நேர்மையைச் சந்தேகிக்க முடியாது. ஈழத்துச் சிறுகதைகள் இந்தியத் தொகுதியில் இடம்பிடித்தமைக்குக் காரணம் "கலைமகள்" சஞ்சிகையும், "ஈழகேசரி’யுமாகும் என்பது குறிப் பிடத்தக்கது. "கலைமகள்”, “கிராமஊழியன்” போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள் இலங்கையில் மக்களிடையே பரவலாக வாசிக்கப்பட்ட வேளையில் "ஈழகேசரி” தமிழக இலக்கியவாதிகளால் விரும்பி வாசிக்கப் பட்டிருக்கின்றது. அதனால்தான் குப்புசாமி ஐயர் "கலைமகளில்” எழுதிய ஈழத்து எழுத்தாளர்களுடன் மற்றையவர்களையும் இனங் கண்டிருக் கின்றார்.
கதைக்கோவையின் பண்பையும் பணியையும் பின்பற்றி எழுத்தா ளர்கள் பலரின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சிகள் பல தமிழகத்தில் நடந்து வருகின்றன. 1965இல் இருந்து 1986 வரையில் வெளிவந்த இலக்கியப் பத்திரிகையான நா. பார்த்தசாரதியின் (மணி வண்ணன்) 'தீபம்" சஞ்சிகையில் வெளிவந்த 250 இதழ்களிலிருந்து தெரிவுசெய்த நாற்பது சிறுகதைகளை "தீபம் சிறுகதைகள்” என்ற பெயரில் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கதைக்கோவைக்கும் இத்தொகுதிக்குமிடையில் சிறுகதைத் துறையில் ஏற்பட்டிருக்கும் ஒரு பாய்ச்சலை "தீபம்” கதைகளிலிருந்து காணமுடியும். இன்றைய தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் சிறந்த எழுத்தாளர்களாக இனங்காணப்பட்ட பலரின் சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பிடித்திருக்கின்றன. ஈழத்து எழுத்தாளர் செ. யோகநாதனின் தர்மங்கள்’ என்ற சிறுகதை இத் தொகுதியில் உள்ளது.
1988இல் எழுத்தாளர் சா. கந்தசாமி முப்பத்தொரு தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தெரிந்தெடுத்து "சிறந்த கதைகள்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இதனையும் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தமிழில் எண்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதப் பட்டுவரும் சிறுகதைகளிலிருந்து இக்கதைகள் தெரிவு செய்யப்பட்டிருப் பதாகத் தொகுப்பாசிரியர் குறிப்பிடுகிறார். தமிழ்ச் சிறுகதைத் துறைக்குப் புத்துயிரும் புதுமையும் ஊட்டிய புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், மெளனி, ந. பிச்சமூர்த்தி, லா. சா. ராமாமிர்தம், க. நா. சுப்பிரமணியம், கு. அழகிரிசாமி, பூமணரி, ஐராவதம் முதலான முப்பத்தொரு எழுத்தா ளர்களின் சிறந்த சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பிடித்திருக் கின்றன. இத்தொகுப்பில் சிறுகதை எழுத்தாளர்கள் சா. கந்தசாமியின் இலக்கிய அளவுகோல் தெரிவுக்குக் (ஆரோக்கியமானதுதான்) கையா ளப்பட்டிருக்கின்றது.
1992இல் எழுத்தாளர் மகரம் தொகுத்த “வானதி சிறப்புச் சிறுகதை கள்” 101 எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட நான்கு தொகுதி களாக வெளிவந்திருக்கின்றது. முன்னைய கதைத் தொகுதிகளிலும் இது ஒரு வகையில் வேறுபட்ட முறைத் தெரிவாகும். இத் தொகுதியில்
X

எந்தெந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற வேண்டுமெனத் தொகுப்பாசிரியர் மகரம் முடிவெடுத்துக் கொண்ட பின்னர், அந்தந்த எழுத்தாளர்களை அணுகி அவர்களின் சிறந்த கதைகளைத் தருமாறு கேட்டுப் பெற்றுத் தொகுத்துள்ளார். எனவே "வானதி சிறப்புச் சிறுகதை கள்” எழுத்தாளர்களின் தொகுப்பாகும். தமிழகத்தின் புகழ்பூத்த சிறுகதை ஆசிரியர்களிலிருந்து இளம் எழுத்தாளர்கள் வரையிலானவர்களின் ஆக்கங்கள் இந்த நான்கு தொகுதிகளிலும் இடம்பிடித்திருக்கின்றன.
1993இல் மாலன் என்பவர் "அன்று” என்ற பெயரில் முப்பத்தொரு எழுத்தாளர்களின் சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டு உள்ளார். இது ஒரு காலவரன்முறைத் தொகுப்பாகும். 1917 இலிருந்து 1981 வரையிலான சிறுகதைகளை அவ்வக்காலத்து நிலையை அல்லது சிறுகதைத் தரத்தினை அறியவைக்கும் விதமான தொகுதிகளாக இவை உள்ளன. வ.வே.சு. ஐயர், அ. மாதவையர் என்பவர்களிலிருந்து, கல்கி, புதுமைப்பித்தன் உட்பட சுஜாதா, மாலன் வரையிலானவர்களின் சிறுகதைகள் இவற்றில் இடம்பிடித்திருக்கின்றன. தமிழ்ச் சிறுகதை களின் வளர்ச்சியை அறிய விழைபவர்கள் அவசியம் படிக்கவேண்டிய தொகுதிகள் "அன்று'. இத்தொகுதி இரண்டில் ஈழத்து எழுத்தாளர் எம். ஏ. நுஃமானின் சதுப்பு நிலம்’ என்ற சிறுகதை இடம்பிடித்திருக் கின்றமை குறிப்பிடத்தக்கது. “அன்று" சிறுகதைத் தொகுதிகள் தமிழில் தனித்துவமான தொகுப்பு என்றும், தமிழின் சிறந்த சிறுகதைகளைக் கொண்டிருக்கின்றது என்றும் அந்நூலில் பறைசாற்றப்படுகின்றது. இக் கூற்றுகளில் முன்னது ஏற்கக்கூடியது, பின்னது ஏற்புடையதன்று.
1993இல் விட்டல்ராவ் என்பவரால் தொகுக்கப்பட்ட "இந்த நூற்றாண் டின் சிறுகதைகள்” என்ற இரு தொகுதிகள் வெளிவந்தன. 101 தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களின் கதைகள் இவற்றில் இடம்பிடித்திருக் கின்றன. ஈழத்து எழுத்தாளர் செ. யோகநாதனின் ‘வெடிக்காரன்’ என்ற சிறுகதை இவற்றில் ஒன்றாகும். செ. யோகநாதன் இந்தியாவில் பதினான்கு வருடங்கள் அஞ்ஞாதவாசம் செய்தமையால் தமிழகத்தில் அறியப்பட்டவராகவும், தவிர்க்க முடியாதவராகவும் மாறிவிட்டார்.
மாலன் தொகுத்த "அன்று”ம், விட்டல்ராவ் தொகுத்த "இந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதை"களும், தமிழ்ச் சிறுகதையின் முதல்வர் வ.வே.சு. ஐயர் அல்லர், சுப்பிரமணிய பாரதியார்தான் என நிரூபிக்க முயல்கின்றன. இத்தொகுதிகளில் இடம்பிடித்திருக்கும் சிறுகதைகளைப் படிக்கும்போது அவர்களின் கூற்றிலிருக்கும் மெய்மை மறுப்பதற்கில்லை.
மேலே சுட்டிக்காட்டிய சிறுகதைத் தொகுதிகளைவிட "கணையாழி கதைகள்”, “கண்ணதாசன் இதழ்க் கதைகள்”, “மணிக்கதைகள்", “விழிப்புணர்ச்சிக் கதைகள்”, “விருட்சம் கதைகள்”, “இந்தியா டுடே கதைகள்", "சாகித்ய அகாதெமிச் சிறுகதைகள்” எனப் பல தொகுதிகள் தமிழ் நாட்டில் வெளிவந்திருக்கின்றன. இவற்றுடன் வருடாவருடம்
xi

Page 8
இலக்கியச் சிந்தனை அமைப்பு, அவ்வருடத்தில் வெளிவந்த சிறந்த பன்னிரு சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டு வருகின்றது. இத் தொகுதிகளில் ஈழத்து எழுத்தாளர்களான தர்மு சிவராம், செங்கை ஆழியான் ஆகியோரின் சிறுகதைகள் இடம்பிடித்திருக்கின்றன. தாமரை யில் வெளிவந்த செங்கை ஆழியானின் அறுவடை' என்ற சிறுகதை “அற்றது பற்றெனில்..” என்ற இலக்கியச் சிந்தனைத் தொகுதியில் இடம் பிடித்திருக்கின்றது. கணையாழிச் சிறுகதைகள், முதலில் படைப்பு, பின்னர் படைப்பாளி என்ற முறையைக் கையாண்டு தெரிவு செய்யப்பட்டி ருப்பதை அறிய முடிகின்றது. ஈழத்து எழுத்தாளரான எம். ஏ. நுஃமானின் சதுப்பு நிலம் இத்தொகுதியில் இடம்பிடித்திருக்கிறது. கவிதைகளில் சித்திரிக்கக்கூடிய மனவெளி அதிர்வைச் சிறுகதைகளில் எப்படிச் சித்திரிக்கலாம் என்பதற்கு இச்சிறுகதை தக்க உதாரணம், கணையாழிச் சிறுகதைகளில் நிச்சயம் இடம்பெறும் தகுதி பெற்றது. விழிப்புணர்ச்சிக் கதைகள் என்ற தொகுதியில் ஈழத்து எழுத்தாளர் சுதாராஜ் என்பவரின் அடைக்கலம் என்ற சிறுகதை இடம்பிடித்திருக்கின்றமை குறிப்பிடத் தககது.
2. ஈழத்து முயற்சிகள்
ஈழத்து எழுத்தாளர்களின் முதலாவது சிறுகதைத் தொகுதி என்ற பெருமையைக் “கலைச்செல்வி” ஆசிரியர் சிற்பி சிவசரவணபவன் தொகுத்தளித்த "ஈழத்துச் சிறுகதைகள்” என்ற தொகுதி பெறுகின்றது. 1958இல் ஈழத்தின் பதின்மூன்று சிறுகதை எழுத்தாளர்களின் சிறுகதை களை உள்ளடக்கி வெளிவந்த "ஈழத்துச் சிறுகதைகள்", அக்கால வேளையில் ஒரு மாபெரும் இலக்கிய முயற்சியாகவும், இலக்கியப் பங்களிப்பாகவும் கருதப்பட்டது. இச்சாதனையைச் சிற்பி அவர்கள் தனித்து நின்று சாதித்திருக்கின்றார். இத்தொகுதி வெளிவந்தபோது ஈழத்து இலக்கிய உலகம் தன்னை ஒருக்கால் சிலிர்த்துக் கொண்டது. இலக்கிய உலகில் ஓர் அற்புதம் நிகழ்ந்துவிட்டது போல வியப்படைந் தது. இத் தொகுதியில் இடம்பெறாத சிறுகதை ஆசிரியர்கள் அடுத்த தொகுதி எப்பொழுது வெளிவரும் என ஆலாய் பறந்தார்கள். சுன்னாகம் தமிழ் அருவிப் பதிப்பக வெளியீடாக வெளிவந்த இச்சிறுகதைத் தொகுதியை சென்னை பாரிநிலையம் வெளியிட்டிருந்தது. இத்தொகுதி யில் இலங்கையர்கோன் (கடற்கரைக் கிளிஞ்சல்), இராஜ அரியரத்தினம் (வெள்ளம்), சம்பந்தன் (மனிதன்), தாழையடி சபாரத்தினம் (குருவின் சதி), சு. இராஜநாயகன் (அவன்), கனக செந்திநாதன் (ஒரு பிடி சோறு), வரதர் (பிள்ளையார் கொடுத்தார்), வ. அ. இராசரெத்தினம் (தோணி), சகிதேவி தியாகராஜா (வாழ்வு உயர்ந்தது), சி. வைத்தியலிங்கம் (கங்கா கீதம்), கே. டானியல் (உப்பிட்டவரை), செ. கணேசலிங்கம் (பதவி துறந்தார்) ஆகியவர்களின் சிறுகதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதல் பதினோரு சிறுகதைகளும் சிற்பி அவர்களின் தெரிவாக அமைய,
Χί

இறுதிக் கதையான பதவி துறந்தார்’ செ. கணேசலிங்கத்தின் சுய தெரிவாகும்.
“கணேசலிங்கம் அவர்களை நான் சந்திக்கச் சென்றிருந்தேன். ஈழத்துச் சிறுகதைத் தொகுதியொன்றினை வெளியிடவிருக்கும் விருப்பி னைத் தெரிவித்தேன். கணேசலிங்கம் என்னை ஒரு இராணுவ அதிகாரி போல அலட்சியமாகப் பார்த்தார். அவர் பார்வையில் இலக்கியக் கர்வம் இருந்தது. அப்படியோ? எங்க அச்சிடுகிறீர்? பாரியிலோ? சரி சரி நீர் போம். நான் பாரியிலேயே என் சிறுகதையைக் கொடுத்து விடுகிறேன்’ என்று என்னை அனுப்பிவிட்டார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. மூத்த எழுத்தாளர் ஒருவர் இப்படி நடந்து கொள்கிறாரே? கணேசலிங்கம் தனது புதியதொரு சிறுகதையை வாக்கு மாறாது கொடுத்தார். அச் சிறுகதை என்னவென்பது தொகுதி வெளிவரும்வரை எனக்குத் தெரியாது. நான் தெரிவு செய்திருந்தால் அவரின் மிகச்சிறந்த சிறுகதை யொன்றினை அத்தொகுதியில் வரச்செய்திருப்பேன்’ என்கிறார், ஈழத்துச் சிறுகதையுலகிற்கு ஒரு புதிய பரம்பரையினை உருவாக்குவதற்குக் காரணமாகவிருந்த சிற்பி அவர்கள். செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன் என ஒரு எழுத்தாளர் பட்டியல் சிற்பியின் அரவணைப்பில் வளர்ந்தவர்கள். நமது மூத்த எழுத்தாளர் செ. கணேச லிங்கம் அவர்களுக்கு இது சமர்ப்பணம்.
ஈழத்துச் சிறுகதைத் தொகுதிக்குப் பின்னர் இலங்கையில் வெளி வந்த சிறுகதைத் தொகுதிகள், பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்களாக விளங்கிய செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், க. நவசோதி ஆகியோர் உருவாக்கிய பல்கலை வெளியீடு' என்ற நிறுவனம் வெளியிட்ட “கதைப் பூங்கா", "விண்ணும் மண்ணும்", “காலத்தின் குரல்கள்”, “யுகம்” என்ற நான்கு சிறுகதைத் தொகுதி களாகும். பல்கலை வெளியீட்டினை நிறுவுவதில் செங்கை ஆழியானின் பங்கும் பணியும் மறுக்க முடியாதது. பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் அ. சதாசிவம், பேராசிரியர் க. கைலாசபதி ஆகியோருடன் மூத்த மாணவர்களாக விளங்கிய கலாநிதி ஜெபநேசன், காசிநாதன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், மு. தளையசிங்கம், பேராசிரியர் பத்மநாதன் ஆகியோர் தோன்றாத் துணையாக நின்றார்கள். பல்வேறு கருத்தியல்கள், வழிகாட்டல்கள் இத்தொகுதிகள் வெளிவர உதவின.
1962ஆம் ஆண்டு க. குணராசா (செங்கை ஆழியான்), க. நவசோதி ஆகிய இருவரையும் தொகுப்பாசிரியராகக் கொண்டு பன்னிரண்டு பல்கலைக்கழக மாணவ எழுத்தாளர்களது சிறுகதைத் தொகுதியான “கதைப் பூங்கா” வெளியிடப்பட்டது. ஈழத்தின் இன்றைய தலைசிறந்த எழுத்தாளர்களாகக் கருதப்படுகின்ற செ. யோகநாதன், செங்கை ஆழியான், செ. கதிர்காமநாதன், செம்பியன் செல்வன், அங்கையன் ஆகியோருடன் கோகிலா, வாணி, எம். ஏ. எம். சுக்ரி, அ. சண்முகதாஸ்,
xiii

Page 9
க. நவசோதி முதலானோர் அத்தொகுதியில் தம் சிறுகதைகளை எழுதி யிருந்தனர். இத்தொகுதிக்கு பேராசிரியர் க. கைலாசபதி முன்னுரை வழங்கியிருந்தார். "தேசிய பண்பு பொருந்தப் பெற்று ஈழத்தில் வளம் பெற்றுவரும் ஆற்றின் கிளையாகக் கருதித் தெளிந்த சிற்றருவியொன் றின் துள்ளலழகையும் சுவைக்க” இச்சிறுகதைத் தொகுதி உதவுமெனக் குறித்துள்ளார்.
1963ஆம் ஆண்டு பல்கலை வெளியீடாகச் செம்பியன் செல்வனைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு "விண்ணும் மண்ணும்” வெளிவந்தது. செங்கை ஆழியான், முருகு, துருவன், யோகேஸ் ஐயாத்துரை, எம். சிவபாலபிள்ளை, முத்து சிவஞானம், சி. மெளனகுரு, இ. சிவானந்தன் (கவிஞரல்லர், கல்விப் பணிப்பாளர்), செம்பியன் செல்வன் ஆகிய ஒன்பது எழுத்தாளர்களின் சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றன. 1964ஆம் ஆண்டு கலா பரமேஸ்வரனைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு "காலத்தின் குரல்கள்” என்ற மூன்றாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. க. பரராஜசிங்கம், குந்தவை, எம். ஏ. எம். சுக்ரி, செம்பியன் செல்வன், க. நவசோதி, செல்வ பத்மநாதன், செங்கை ஆழியான், FIT. ஜெயராசா, கலா பரமேஸ்வரன் ஆகிய ஒன்பது பல்கலைக்கழக எழுத் தாளர்களின் சிறுகதைகள் வெளிவந்தன. இன்று ஈழத்தின் பல்வேறு துறைகளில் முன்னணி வகிக்கின்ற பலர் பல்கலை வெளியீட்டின் சிறுகதைத் தொகுதிகளில் தம் எழுத்தாற்றலைப் பதிவு செய்திருக்கின் றனர். “காலத்தின் குரல்கள்” தொகுதிக்கு ஈழத்தின் பிரபல படைப்பாளி எஸ். பொன்னுத்துரை முன்னுரை வழங்கியுள்ளார். “பல்கலையின் காலத்தின் குரல்கள் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் வருங்கால வளத்திற்குக் குரல் எழுப்புகின்றன” என்று பொன்னுத்துரை குறிப்பிட் டுள்ளார். அவர் கணிப்புப் பிழைபடவில்லை. பல்கலை வெளியீட்டின் நான்காவது தொகுதியான “யுகம்” இமையவன் என்ற ஜீவகாருண்யனை தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்தது. இத்தொகுதியில் மு. பொன்னம்பலம், சபா. ஜெயராசா, சரநாதன், பி. மரியதாஸ், இரா சிவச்சந்திரன், இமையவன், பி. வஜிரஞான, செ. வே. காசிநாதன் ஆகியோர் தம் சிறுகதைகளைப் படைத்திருந்தனர்.
1960-1964 காலகட்டத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கருக் கட்டிய புனைகதைத் துறையின் முயற்சி இன்று ஈழத்து இலக்கியத்தின் அறுவடைகளாக மாறிவிட்டது. அக்காலகட்டத்தின் வீறுகொண்ட எழுத்தாளர்கள் போன்ற ஒரு படைப்பாளிக் கூட்டம் அதன் பின்னர் உருவாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு தமிழ் எழுத்தாளர் மன்றம் 1963இல் "ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள்” என்றொரு தொகுதியை வெளியிட்டது. ஈழத்து எழுத்தாளர் களால் எழுதப்பட்டு பல்வேறு பத்திரிகைகளில் பரிசில்களைப் பெற்ற சிறுகதைகள் ஒன்பது இத்தொகுதியில் இடம் கொண்டுள்ளன. கொழும்பு
Χίν

எழுத்தாளர் மன்றம் ஆரம்பித்ததும் முதல் முயற்சியாக வெளியிடப்பட்ட இச்சிறுகதைத் தொகுதிக்குப் பண்டிதர் கா. பொ. இரத்தினம் முன்னுரை எழுதியுள்ளார். ஈழத்திலும், தமிழகத்திலும் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுகதைகளான சிற்பியின் 'மறுமணம்’ (உதயம்), நவத்தின் நந்தாவதி (கல்கி), அ. முத்துலிங்கத்தின் அக்கா’ (தினகரன்), செங்கை ஆழியானின் நாட்டிற்கு இருவர் (சுதந்திரன்), செம்பியன் செல்வனின் இதயக் குமுறல்’ (கலைச்செல்வி), சகிதேவி கந்தையாவின் மலையும் மடுவும் (உதயம்), உதயணனின் தேடிவந்த கண்கள்’ (கல்கி), முத்து சிவஞானத்தின் ‘உரிமைக்கு உயிர்' (சுதந்திரன்), செந்தூரனின் ‘உரிமை எங்கே?’ (கல்கி) முதலான சிறுகதைகள் இத் தொகுதியில் இடம்பிடித்தன.
1971ஆம் ஆண்டு “ஈழநாடு", தனது பத்தாவது ஆண்டு நிறைவை யொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டியில் பரிசில்களை பெற்ற ஐந்து சிறுகதைகளைத் தொகுத்து “கங்குமட்டை” என்ற ஒரு தொகுதியை வெளியிட்டிருந்தது. செங்கை ஆழியான் (கங்குமட்டை), செம்பியன் செல்வன் (பூவும் கனியும்), அப்பச்சி மகாலிங்கம் (ஆறுதற் பரிசு) எம். ஏ. ரஹற்மான் (சிறுகை நீட்டி), மு. கனகராசன் (சுண்டுவிரல் மெட்டி) ஆகியவர்களின் சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. சமூகத்தின் பல்வேறு துறையினரை அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் எழுத்தாளருக்கேயுரிய கலையழகோடு இச்சிறுகதைகள் படைக்கப் பட்டுள்ளன. அதேயாண்டு மலையகத்திலிருந்து ஒரு சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. வீரகேசரியும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றமும் இணைந்து மலைநாட்டு எழுத்தாளர்களுக்காக ஒரு சிறுகதைப் போட்டியை நடாத்தின. அவ்வாறு நான்கு போட்டிகள் நடாத்தப்பட்டிருக் கின்றன. அப்போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற பன்னி ரண்டு சிறுகதைகளின் தொகுப்பாகக் “கதைக்கனிகள்” என்ற தொகுதி வெளிவந்துள்ளது. 1979இல் மாத்தளை எழுத்தாளர் ஒன்றியம் "தோட்டக் காட்டினிலே" என்ற பெயரிலே ஒரு தொகுதியை வெளியிட்டது. இதில் மாத்தளை சோமு, மலரன்பன், மாத்தளை வடிவேலன் ஆகியோரது ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன.
தமிழ்நாட்டில் இலக்கியச் சிந்தனை, மாதாமாதம் தமிழில் வெளி வந்த சிறந்த கதையொன்றினைத் தெரிவுசெய்து பரிசும் சான்றிதழும் வழங்கிப் பின்னர் வருட இறுதியில் தொகுதியாக வெளியிடுவதுபோல, இலங்கையிலும் "தகவம்” (தமிழ்க் கலைஞர் வட்டம்) என்ற இலக்கிய நிறுவனம் காலாண்டுகளுக்கு ஒருமுறை இலங்கையில் தமிழில் வெளி வந்த சிறுகதைகளை மதிப்பீடு செய்து பரிசிலும் சான்றிதழும் வழங்கி வருகின்றது. இப்பணி 1975ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து வருகின்றது. 1975 இற்கும் 1982 இற்குமிடைப்பட்ட காலவேளையில் தகவத்தினால் நடாத்தப்பட்ட சிறுகதை மதிப்பீடுகளில் தெரிவாகிய இருபத்தினான்கு
XV

Page 10
சிறுகதைகளைத் தொகுத்து இரண்டு சிறுகதைத் தொகுதிகளை, "தகவம் பரிசுக்கதைகள்-தொகுதி 1", "தகவம் பரிசுக்கதைகள்-தொகுதி 2" என வெளியிடப்பட்டுள்ளன. இவ்வகையில் தகவம் வ. இராசையா அவர் களின் முயற்சி விதந்துரைக்கத்தக்க பணியாகும். ஒவ்வொரு காலகட்டத் தில் வெவ்வேறு பிரச்சனைகள் முனைப்புக் கொள்கின்றன. சமூகப் பிரக்ஞை உள்ள எழுத்தாளனின் படைப்புக்களில் அம்முனைப்பான பிரச்சனைகள் கையாளப்படுகின்றன. தகவம் பரிசுக்கதைகள் அவ்வாறான கால இயக்கப் பதிவுகள் என தகவம் இராசையா குறிப்பிடுகிறார்.
அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர் போன்று மாபெரும் சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்ட பெருமை ஈழத்தில் இருவருக்குரியது. ஒருவர் செ. யோகநாதனும் அவரது மனைவி சுந்தரலட்சுமியும், மற்றவர் துரை விசுவநாதன். இவர்களது இலக்கியப் பணி குப்புசாமி ஐயரின் பணிக்கு எவ்வகையிலும் குறைந்ததன்று. நாடறிந்த எழுத்தாளர் செ. யோகநாத னும், சுந்தரலட்சுமியும் தொகுத்து, தமிழகத்தில் பதிப்பித்து வெளியிட்ட “வெள்ளிப் பாதசரம்”, “ஒரு கூடைக் கொழுந்து" ஆகிய இரண்டு தொகுதிகளும் இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகளாக வெளி வந்தன. இரு தொகுதிகளும் ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்டனவாயும், ஈழத்தின் அறுபத்தைந்து எழுத்தாளர்களின் எண்பத்தியேழு சிறுகதை களைக் கொண்டனவாயும் விளங்குகின்றன. “வெள்ளிப் பாதசரம்” 1993 , இலும், "ஒரு கூடைக் கொழுந்து” 1994இலும் வெளிவந்துள்ளன. ஈழத்துச் சிறுகதைகளை ஒட்டுமொத்தமாகத் தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வைத்த பெருமை இந்த இரண்டு சிறுகதைத் தொகுதிகளுக்கும் உரியது. 'ஈழத்து இலக்கியம் பற்றிப் பரவலாக இன்று பேசப்படுகின்றது. ஆனாலும் அதன் உண்மையான வளர்ச்சித் தன்மை பற்றி ஒரே பார்வை யில் அறிந்துகொள்வதற்கு, படைப்பிலக்கியத்தைப் பொறுத்தவரையில் முழுமையான ஒரு தொகுதி இதுவரை உருவாக்கப்படவில்லை. அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில் "இந்த நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் இத்தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன' எனத் தொகுப்பாசிரியர்கள் குறிப்பிட்டிருப்பது ஏற்ற கூற்று ஆகும்.
செ. யோகநாதன் என்ற படைப்பாளியின் இலக்கிய ஆற்றலை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. 1960 களிலிருந்து செ. யோகநாதனுக்கு நிறைய எழுதவேண்டும், நிறைய அவை நூல்க ளாக வெளிவரவேண்டுமென்ற ஆதங்கம் இருந்ததை நானறிவேன். பதினான்கு வருடங்கள் தமிழகத்தில் சொந்த மண், குடும்பம், சுகதுக்கம் என்பவற்றினைத் துறந்து இலக்கிய யாகம் ஒன்றை அவர் செய்தமைக்கு அவர் வெவ்வேறு காரணங்கள் கற்பித்தாலும், அவற்றில் சரியான காரணம் அவரின் இலக்கிய வெறிதான். தமிழகத்திற்கு அவர் சென்ற இலக்கிய யாத்திரை முற்றுப் பெற்றது. அவரின் இலக்கு அடையப் பட்டது. ஈழத்தின் இலக்கிய ஆற்றலை அவர் அங்கு தன் படைப்புக் களால் நிறுவினார். சர்வதேசம் தழுவிய படைப்புக்களை வெளியிட்டார்.
Xvi

தமிழகச் சஞ்சிகைகளின் பார்வை ஈழத்து எழுத்தாளர்களை நோக்கித் திரும்பியமைக்கு ஈழத்தின் முனைப்பான பிரச்சனைப் பகைப்புலமும், பூமிப் பந்தெங்கும் பரவிவிட்ட ஈழத்தமிழனின் சந்தையைக் கவரும் உத்தியும், செ. யோகநாதனும் காரணமாயினர்.
செ. யோகநாதனும் அவரது மனைவி சுந்தரலட்சுமியும் தொகுத்து வெளியிட்டிருக்கும் ஈழத்துச் சிறுகதைத் தொகுதிகளில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியின் வரன்முறை காணப்படவில்லை. செ. யோகநாதன் எடுக்கின்ற முடிவும், அதனைச் செயற்படுத்துகின்ற வேகமும் வியப்பான சங்கதிகள். இவைதான் அவரின் பலமும் பலவீனமும். எவ்வாறாயினும் அவர்கள் ஈழத்து இலக்கியத்திற்கு அளித்த பெரும்பணி அவர்கள் வெளியிட்டிருக்கும் இச்சிறுகதைத் தொகுதிகள் என்பதில் இரு கருத்துக் களில்லை என்பேன்.
1994இல் "மலையகப் பரிசுக் கதைகள்” என்ற பெயரில், பதினாறு மலையக எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுதி வெளி வந்தது. பதுளை கலை ஒளி முத்தையாபிள்ளை நினைவுச் சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற பதினாறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் இத் தொகுப்பில் உள்ளன. மலையக எழுத்துக்களை வெளியுலகம் அறிவதற்குக் கொண்டுவந்து முன்வைத்த பெருமை, துரைவி பதிப்பகத் தினை நிறுவிக் குறுகிய காலத்துள் பல நூல்களை வெளியிட்ட துரை விசுவநாதனுக்குரியதாகும். அவர் வெளியிட்ட "மலையகச் சிறுகதைகள்", "உழைக்கப் பிறந்தவர்கள்” என்ற இரு மாபெரும் சிறுகதைத் தொகுதிகள் தெளிவத்தை யோசெப்பினால் தொகுக்கப்பட்டன. முப்பத்திமூன்று மலையக எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்டதாக "மலையகச் சிறுகதைகள்” தொகுதியும், ஐம்பத்தாறு எழுத்தாளர்களின் சிறுகதை களைக் கொண்டதாக "உழைக்கப் பிறந்தவர்கள்” என்ற தொகுதியும் அமைந்துள்ளன. மலையக எழுத்தாளர்களின் மறைக்கப்பட்ட இலக்கியப் பக்கங்களை வெளிக்கொணர்ந்த தொகுதிகள் இவையாம். மலையக இலக்கிய உலகம் துரை விசுவநாதனுக்கு என்றும் கடமைப்பட்டது. துரை விசுவநாதன் என்ற இலக்கிய ரசிகனின் இலக்கியப் பணியைச் சுட்டிக் காட்டியவர்கள் டொமினிக் ஜீவாவும், தெளிவத்தை யோசெப்பும் ஆவர். காலத்தின் தேவையொன்றினை துரை விசுவநாதன் நிறைவேற்றி உள்ளார்.
துரை விசுவநாதன் வெளியிட்ட "உழைக்கப் பிறந்தவர்கள்” என்ற தொகுதி வெளிவந்த 1997ஆம் ஆண்டில், வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் கந்தரம் டிவகலாலா “மறுமலர்ச்சிக் கதைகள்” என்ற தொகுப்பொன்றினை இலக்கியவுலகிற்கு வழங்கினார். 1946ஆம் ஆண்டிலிருந்து 1948ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் "மறுமலர்ச்சி” என்றொரு சஞ்சிகை வெளிவந்தது. இச்சஞ்சிகை தனது குறுகிய கால ஆயுளில் சாதித்த இலக்கிய
XVii

Page 11
அறுவடை அதிகமாகும். இன்றும் 'மறுமலர்ச்சிக்காலம்' எனறு \மபசப படுகின்ற ஓர் இலக்கியத் தடத்தினை அது பதிவு செய்துள்ளது. உலக ளாவிய தரத்திற்கு மறுமலர்ச்சிச் சிறுகதைகள் அமையாவிட்டாலும் அவை வெளிவந்த காலகட்டத்தில் சிறுகதையின் வடிவத்தினையும், செழுமையையும் புரிந்துகொண்டு படைக்கப்பட்ட இலக்கிய ஆக்கங் களாக அக்கதைகள் உள்ளன. மறுமலர்ச்சியில் வெளிவந்த 52 சிறுகதை களில் 25 இனைத் தெரிந்தெடுத்துத் தொகுத்து இச்சிறுகதைத் தொகு தியை செங்கை ஆழியான் வழங்கியுள்ளார். அ. செ. முருகானந்தன், சம்பந்தன், இலங்கையர்கோன், வரதர், து. ருத்திரமூர்த்தி, சு.வே. நாவற்குழியூர் நடராஜன், கு. பெரியதம்பி, நடனம், வே. சுப்பிரமணியம், தாழையடி சபாரத்தினம், சு. இராஜநாயகன், எஸ். பூரீநிவாசன், இ. பொன்னுத்துரை, சொக்கன், வல்லிக்கண்ணன் ஆகியோரின் சிறுகதைகள் இத் தொகுதியில் இடம்பிடித்திருக்கின்றன. ஒரு காலகட்டத்தின் இருப்பினை அறிய இத்தொகுதி உதவுகின்றது.
இலங்கையின் சுதந்திரதினப் பொன்விழாவையொட்டி இலங்கைக் கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாக "சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதை கள்” என்ற தொகுதி 1998இல் வெளிவந்துள்ளது. இதில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் ஐம்பது பேரின் ஆக்கங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கவேண்டிய ஈழத்து எழுத்தாளர்கள் சிலரின் சிறுகதைகள் இடம்பெறாது போனமைக்குக் காரணம் இத் தொகுதி தயாரிப்பில் ஏற்பட்ட அவசரத் தன்மையாகும் எனக் கருதுகின். றேன். கடைசி நேரத்தில் பணிக்கப்படும் அரசுப் பணிகள் பல இவ்வாறு தான் முடியுமென்பதற்கு இந்து கலாச்சார சமய அலுவல்கள் அமைச்சும் விதிவிலக்காகாது. எனினும் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்குப் பங்களிப்புச் செய்த படைப்பாளிகள் பலரின் சிறுகதைகள் இத் தொகுதி யில் இடம்பிடித்துள்ளன.
மிக அண்மையில் (1998) வெளிவந்திருக்கும் இன்னொரு தொகுப்புச் சிறுகதைத் தொகுதி, துரைவி வெளியீட்டினரின் “பரிசுபெற்ற சிறுகதை கள் - 1998” என்பதாகும். ஈழத்தின் மிகப்பெரிய சிறுகதைப் போட்டியை துரைவி - தினகரன் செயற்படுத்தியதன் விளைவாகப் பரிசு பெற்ற பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும். படைப்பாளிக்கு அமரர் துரை. விசுவநாதன் ஒரு இலட்சத்து ஓராயிரம் ரூபாவை அள்ளி வழங்கிய பெருந்தன்மை வரலாற்றில் பதிவுசெய்யவேண்டிய இலக்கியச் செய்தியாகும். ஸி. எல். எம். மன்துர், மு. சிவலிங்கம், பெருமாள் வடி வேல், எம். என். அமானுல்லா, மல்லிகை சி. குமார், இரா. சடகோபன், மலரன்பன், சிவயோகமலர் ஜெயக்குமார், கே. கோவிந்தராஜ், ஏ. ஆர். அப்துல் ஹமீட், கே. விஜயன், சாகுல் ஹமீட், நிஃமத்துல்லாஹற், சி. கனகசூரியம், அல் அஸஅமத், இ. யனார்த்தனன் முதலியோரின்
Хviji

சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பிடித்துள்ளன. சிறுகதையுலகிற்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர்களும் புதியவர்களும் இப்பரிசுக் கதை களை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வரிசையில் வெளிவரவிருக்கும் இன்னொரு தொகுதி “ஈழகேசரி சிறுகதைகள்” ஆகும். ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் ஈழகேசரிக் காலகட்டத்துச் சிறுகதைகள் ஐம்பத்திமூன்று தொகுக்கப் பட்டு நூலுருவாக வெளிவரவிருக்கின்றது. ஈழத்தின் இலக்கியப் பரப்பில் 1930ஆம் ஆண்டிலிருந்து 1958ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஈழகேசரிப் பத்திரிகை ஆற்றிய பணி இலக்கியத்திற்கு வலு சேர்ப்ப தாகும். ஈழகேசரியில் வெளிவந்த ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆராய்ந்து அவற்றில் தகுதியான ஐம்பத்திமூன்றினைத் தெரிந்தெடுத்துத் தொகுத்து செங்கை ஆழியான் வழங்கியுள்ளார். வடக்கு-கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு இத்தொகுதியினை வெளியிடவுள்ளது. இத்தொகுதி வெளிவந்த பின்னர் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் புதிய கருதுகோள்கள் பல உருவாக இடமுண்டாகுமெனக் கருதுகின்றேன். ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளெனக் கருதக்கூடிய தண்ணீர்த் தாகம் (ஆனந்தன்), ‘கற்சிலை (நவாலியூர் சோ. நடராஜன்), 'வண்டிற்சவாரி (அ. செ. முருகானந்தன்), 'வெள்ளிப் பாதசரம்' (இலங்கையர்கோன்), 'வெள்ளம்’ (இராஜ அரியரத்தினம்), ஒரு பிடி சோறு’ (கனக செந்திநாதன்), 'தோணி (வ. அ. இராசரத்தினம்) ஆகிய ஏழு சிறுகதைகள் ஈழகேசரியில்தான் வெளிவந்திருக்கின்றன.
3. ‘ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்’ தொகுதி
பூபாலசிங்கம் பூரீதரசிங் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் முன்னெடுத் திருக்கும் இலக்கியப்பணி ஈழத்தின் சிறுகதை இருப்பினைக் காலவரன் முறையில் தமிழுலகம் அறிய முன்வைக்கும் முயற்சியாகும். நான்கு தலைமுறைப் படைப்பாளிகள் இன்று ஈழத்திலக்கியத்தில் தமது பங்களிப்பினைச் செய்து வருகின்றனர். எனவே, அவ்வகையில் நோக்கின் நான்கு தொகுதிகள் வெளிவரல் வேண்டும். அத் தொகுதிகளுக்கான சிறுகதைகளை எவ்வாறு தெரிவுசெய்வது? தெரிவு முறைக்கு அல்லது ஆய்வு முறைக்கான நடவடிக்கைக்கு இரண்டு முறைகளைக் கைக் கொள்ளலாம் எனக் கருதுகின்றேன். 3.1 எண்ணிக்கையில் குறைவாகவோ நிறையவோ சிறுகதைகளை எழுதி
யிருக்கும் படைப்பாளிகளின் கலைத்திறன் வாய்ந்த படைப்புக்கள் 32 நிறையவே எழுதியிருக்கும் படைப்பாளிகளின் வினைத்திறன்
வாய்ந்த படைப்புகள் இப்பகுப்பாய்வு தவிர்க்க முடியாததெனக் கருதுகின்றேன். ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளின் சிறுகதைகளைத் தொகுக்கும்போது எண்ணிக்கையளவில் நிறையவே சிறுகதைகளை எழுதியிருக்கும் சுயா
xix

Page 12
என்ற சு. நல்லையா, கசின் என்ற சிவகுருநாதன் ஆகியோரை மறந்து விட முடியாது. அதேவேளை எண்ணிக்கையில் குறைவாகச் சிறுகதை களை எழுதியிருந்தாலும் நிறைவாக அவற்றினைப் படைத்திருக்கும் ஆனந்தன் என்ற பண்டிதர் சச்சிதானந்தனையும், நவாலியூர் சோ. நடராஜனையும் விட்டுவிடமுடியாது. இத்தொகுதியின் தெரிவிற்கான அளவு கோல் இவையே என்பதை முற்கூட்டியே சொல்லிவிடுகிறேன்.
4. முன்னோடிகள்
2000 ஆண்டுடன் நவீன தமிழ்ச் சிறுகதை 95 ஆண்டுகள் வயதை அடைந்திருக்கின்றது என்பதை அறியும்போது நமது இருப்பினைத் தெரிந்துகொள்ளும் ஆவல் இயல்பாகவே ஏற்படுகின்றது. தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் சுப்பிரமணிய பாரதியார், வ.வே.சு. ஐயர், அ. மாதவையா ஆகிய மூவரும் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளாகக் கொள்வது மரபாகவிருந்து வந்தது. நீண்டகாலமாக விமர்சகர்கள் வ.வே.சு. ஐயரையே தமிழ்ச் சிறுகதையின் மூலவர் ஆகவும், அவரது குளத்தங்கரை அரசமரம்' என்ற கதையிலிருந்து சிறுகதை வழக்கமாகவிருந்தது. அவரது சிறுகதைகள் 1915 இற்கும் 1917 இற்கும் இடைப்பட்ட கால வேளையில் எழுதப்பட்டன. அவற்றின் தொகுப்பே 'மங்கையற்கரசியின் காதல் ஆகும். "வ.வே.சு. ஐயர் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் உருவ அமைதியும் கற்பனைச் செறிவும் நிஜத்தன்மையும் குளத்தங்கரை அரசமரத்திலேயே காணப்படுகின்றனவென்பது பலரது கருத்தாகும்" (சா. கந்தசாமி- 1988). ஆனால், "வருடக்கணக்கை வைத்துப் பார்த்தாலும் சரி, இலக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அளவிட்டா லும் சரி தமிழின் நவீன சிறுகதை சுப்பிரமணிய பாரதியிடமிருந்தே துவங்குகிறது. 1905இல் அவர் "சக்கரவர்த்தி'யில் எழுதிய துளசிபாய்’ என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம் தமிழின் முதல் நவீன சிறுகதை என்று நம்ப இடமிருக்கிறது" (மாலன் - 1993) சுப்பிரமணிய பாரதியின் 'காக்காய்ப் பார்லிமென்ட்', 'காற்று ஆகியவை சிறந்த சிறுகதைகளாக அடையாளங் காணப்பட்டிருக்கின்றன. "இவர் சிறுகதையை வ.வே.சு. ஐயரைப் போல ஒரு இலக்கிய வடிவமாகவோ, மணிக்கொடிக்காரர்களைப் போலச் சுத்தக் கலை வடிவமாகவோ கொள்ளவில்லை. தனது சிறுகதைகளை சமூக விமர்சனத்திற்கான ஒரு ஊடகமாகப் பயன்படுத்தியுள்ளாரென இன்றைய ஆய்வாளர் கருத்துத் தெரிவிக்கின்றனர். (மாலன் - 1993). 1920-1925 காலகட்டத்தில் அ. மாதவையாவின் சிறுகதைகள் வெளிவந்தன. தமிழ்நாட்டின் தமிழ்ச் சிறுகதை மூலவர்களாக இந்த மூவரையும் - பாரதி, வ.வே.சு. ஐயர், மாதவையா - கொள்வதில் தவறில்லை. ஆனால் தமிழில் முதற் சிறுகதை ஆசிரியர் எவரென ஆராயும்போது அந்தப் பெருமை ஈழத்து எழுத்தாளர் ஒருவருக்குரியதாக மாறிவிடுவதைக் காணலாம்.
XX

1841ஆம் ஆண்டு தொடக்கம் "உதயதாரகை” என்ற பத்திரிகை, இதுவே ஈழத்தின் முதலாவது பத்திரிகை, வெளிவருகின்றது. இதன் ஆசிரியர்களாக முதலில் கறோல் விசுவநாதபிள்ளையும், பின்னர் 1860 களில் ஜே. ஆர். ஆனால்ட் சதாசிவம்பிள்ளையும் விளங்கினர். இப் பத்திரிகையில் ஆனால்ட் சதாசிவம்பிள்ளை பல சிறுகதைகளை எழுதி யுள்ளார். நாவலரின் சமகாலத்தவரான ஆனால்ட் சதாசிவம் பிள்ளை யின் சிறுகதைத் தொகுதி ஒன்றினைப் பற்றி பேராசிரியர் க. கைலாசபதி மல்லிகை கட்டுரையொன்றில் தொட்டுக் காட்டியுள்ளார். உதயதாரகை யில் அவரால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாக இது இருக்க வேண்டும். மேலும், ஈழத்து எழுத்தாளரான ஈழகேசரி சோ. சிவபாதசுந்தரமும் தமிழக எழுத்தாளரான சிட்டியும் இணைந்து எழுதி வெளியிட்டிருக்கும் "தமிழ்ச் சிறுகதைகள்” என்ற ஆய்வு நூலில், வ.வே.சு. ஐயர், பாரதியார், மாதவையா ஆகிய மூவரையும் சிறுகதை மூலவராகக் கொள்கின்ற இலக்கிய மரபினை மாற்றி அமைத்து, தமிழ் கூறும் நல்லுலகில் ஆனால்ட் சதாசிவம்பிள்ளையே தமிழ்ச் சிறுகதை யின் முன்னோடி என நிறுவியுள்ளார். எனவே, தமிழ்ச் சிறுகதையின் வருடக்கணக்கினை வைத்துப் பார்த்தாலும் சிறுகதைக்கு உரிய உருவ அமைப்பு, உள்ளடக்கம் என்பவற்றினை வைத்துப் பார்த்தாலும் ஆனால்ட் சதாசிவம்பிள்ளையே தமிழ்ச் சிறுகதையின் பிதாமகர் ஆகின் றார். (ஆடலிறை மயிலங்கூடலூர் நடராஜன்). இது குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆனால்ட் சதாசிவம்பிள்ளை யின் சிறுகதைகள் நவீன பாங்கானவையா என்பது உறுதிப்படுத்தப் படவேண்டும்.
ஈழத்துச் சிறுகதை வரலாறு, ஒப்பீட்டளவில் காலத்தால் முந்தியது ஆகும். ஆனால்ட் சதாசிவம்பிள்ளையின் சிறுகதைத் தொகுதியைத் தொடர்ந்து இரு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளதாக அறியப் படுகின்றது. பண்டிதர் சந்தியாகோ சந்திரவர்ணம்பிள்ளை "கதாசிந்தா மணி” என்றொரு கதைத் தொகுதியை 1875ஆம் ஆண்டில் வெளியிட் டார். இதில் ஏழு சிறுகதைகள் அடங்கியிருந்தன. தம்பிமுத்துப்பிள்ளை என்பவர் "ஊர்க்கதைகள்” என்ற தொகுதியையும், ஐதுருஸ் லெப்பை மரைக்கார் என்பவர் "ஹைதர் ஷா சரித்திரம்” என்ற கதைத் தொகுதியையும் வெளியிட்டனர். "ஊர்க்கதை"த் தொகுதியில் 101 கதைகள் இருப்பதாக அறியப்படுகின்றது. (கனக செந்திநாதன் - 1964) எனவே ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மூலவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே மரபு வழியை மீறி, ஆரம்பச் சிறுகதை வடிவத்தில் கதைகளைப் படைத்துள்ளனர் எனத் துணியலாம்.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றினைக் காலரீதியாகவும், நவீன சிறுகதை வடிவரீதியாகவும் ஆராய்விற்கு எடுக்கும்போது, ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளாக க. திருஞானசம்பந்தன் (சம்பந்தன்),
XXi

Page 13
சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகிய திரிமூலர்கள் கொள்ளப் பட்டு வருகின்றனர். சிறுகதை வரலாற்றினை விபரிக்க முயலும் விமர்சகர்கள் அனைவரும் இந்த வரன்முறையை ஒரு வாய்ப்பாடாகவே ஒப்புவித்து வருகின்றனர். ஆனால், இந்த மூவருக்கும் முன்னரேயே ஈழத்துச் சிறுகதை மரபினை ஒரளவு ஆரோக்கியமாக முன்னெடுத்துச் சென்ற சுயா என்ற சு. நல்லையா, ஆனந்தன், L IIT600T6t ஆகிய மூவரும் கவனத்திற்கெடுக்கப்படாது விடப்பட்டனர். இவர்களுடன் சோ. சிவபாதசுந்தரத்தினையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றாலும் அவர் ஆரம்ப காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதவில்லை. நமது சிறுகதைத் திரிமூலர்களுக்குப் பின்னர் அவர் எழுதிய சிறுகதைகளே கணிப்பிற்குள்ளாக்கப்படத்தக்கன. சுயா, ஆனந்தன், பாணன் ஆகிய மூவரில் சுயா 1936 இலிருந்து 1957 வரை தொடர்ந்து எழுதி வந்திருக் கின்றபோதிலும் அவரது சிறுகதைகளின் வடிவிலும் உள்ளடக்கத்திலும் அவரின் வளர்ச்சிநிலை தெரியவில்லை. அவர் ஆரம்பத்தில் வரித்துக் கொண்ட சிறுகதை பற்றிய நிலைப்பாட்டிலிருந்து சற்றும் விலகி வரவில்லை. சுயா எழுதிய ஏறக்குறைய 40 சிறுகதைகளும் இந்தக் கருத்துக்குத் தக்க உதாரணங்களாம். அதேவேளை 1938 களில் எழுத ஆரம்பித்த பாணன் என்பவர் ஏறக்குறைய பத்துச் சிறுகதைகளுடன் 1943 களில் தொடர்ந்து எழுதாது காணாமற் போயுள்ளார். 1938 களில் எழுத ஆரம்பித்த ஆனந்தன் என்ற பண்டிதர் சச்சிதானந்தன் ஏறக்குறைய பத்துச் சிறுகதைகள் வரையில் 1944 வரையிலான காலகட்டத்தில் எழுதிய பின்னர் கவிதைத் துறையிலும் காவியப் படைப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இந்த மூவரும் நவீன சிறுகதை வடிவத் தினை நன்கு புரிந்து கொண்டு படைப்புத்துறைக்கு வந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.
சுயா, பாணன், ஆனந்தன் ஆகிய மூவரில் ஆனந்தன் குறிப்பிடத் தக்கவர். அவர் 'ஹரிஜனங்களின் கண்ணிர், நான் அசுரனா? நீங்கள் அசுரரா?', 'அவிந்த தீபம்’ தண்ணிர்த் தாகம் 'சாந்தியடையுமா? முதலான கதைகளை எழுதியுள்ள போதிலும் அவர் எழுதிய தண்ணிர்த் தாகம்’ என்ற சிறுகதைக்காகவே கணிக்கப்படவேண்டியவராகிறார். ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் தண்ணிர்த் தாகம்' ஒன்றாகும். அது எழுதப்பட்ட கால கட்டத்தையும், அது கூறுகின்ற சமூகச் செய்தி யையும் கவனத்திற்கெடுக்கும்போது வியப்பும் பெருமிதமும் ஏற்படும். யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியக் கொடுமையை முதன்முதல் கருப் பொருளாக்கி மக்கள் முன் தூக்கி வைத்தவர் அவர் சமூகத்தின் எரியும் பிரச்சனையை அவர் கையாண்டிருக்கும் முறைமையும் அதனுடாக அவர் கூறும் செய்தியும் 1956 களின் பின்னரும் ஈழத்தின் நவீன சிறுகதை ஆசிரியர்களால் கையாளப்பட்டு வருகின்றது.
சுயா, பாணன், ஆனந்தன் ஆகியோர் சிறுகதை இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்குமுன்னர் ஈழத்தின் நவீன சிறுகதைப் பரப்பு
xxii

வெற்றிடமாக இருந்ததெனக் கொள்ளமுடியாது. பல எழுத்தாளர்கள் தம் அறிவிற்கும் திறனிற்கும் ஏற்ற விதத்தில் சிறுகதைகளை எழுதிப் பார்த்துள்ள சங்கதியை மறந்துவிடக்கூடாது. 1931இல் மலையகப் பத்திரிகையாளரான சோ. நடேசையர் திரு இராமசாமி சேர்வையின் சரிதம்' என்றொரு சிறுகதையை எழுதியுள்ளார். 1933இல் அளவெட்டி த. சிவலிங்கம் என்பார் 'பறைச்சேரியில் தீ விபத்து’ என்றொரு சிறுகதையை எழுதியுள்ளார். இவற்றில் சிறுகதைக்குரிய வடிவமுள்ளது. பொன் குமாரவேற்பிள்ளை, பரிதி, நவாலியூர் சத்தியநாதன், எ. சி. இராசையா, வண்ணை வை. சி. சின்னத்துரை, சுமாதி போன்ற சிலர் சிறுகதைகளை எழுதிப் பார்த்துள்ளனர். "ஈழகேசரி” போன்ற பத்திரிகைகளில் அவை பிரசுரமாகியுமுள்ளன.
தமிழகத்தில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் போன்ற பண்டிதர்கள், தாமும் சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தில் பங்கு கொண்டிருந்தனர். சாமிநாதையரின் தருமம் தலை காக்கும்’ என்ற சிறுகதை விமர்சகர்கள் சிலரால் விதந்துரைக்கப்பட்டு வருகின்றது. அதேபோல ஈழத்திலும் இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, குருகவி ம. க. வே. மகாலிங்கசிவம் ஆகியோர் சிறுகதைகளை எழுதியுள்ளனர் என்பது வியப்பிற்குரியது. பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஈழகேசரியில் 1938ஆம் ஆண்டு நவ பாரதம்” என்ற சிறுகதையை ஜ்யோதிர்மகிஷம் சாதேவ சாஸ்திரியார் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார். ஆசிரிய கலாசாலையையும் அதன் நடவடிக்கைகளையும், அதில் சம்பந்தப்பட்ட வர்களையும் வைத்துக் குறியீடாக இச்சிறுகதை ஆக்கப்பட்டிருக்கின்றது. அக்கால யாழ்ப்பாணத்துப் பிரமுகர்களின் முகமூடிகள் இச்சிறுகதையில் கிழிக்கப்பட்டிருக்கின்றன. ஆடலிறை மயிலங்கூடலூர் நடராஜன் என்பவர், "ஈழகேசரி ஆண்டுமலர்” 1939இல் குருகவி ம. க. வே. மகாலிங்கசிவம் என்பவரால் எழுதப்பட்ட அன்னை தயை’ என்ற படைப்பினை தக்கதொரு சிறுகதையாக அடையாளங் கண்டுள்ளார். சமயச் சார்புக் கதை எனினும், உருவமும் உள்ளடக்கமும் சமூகச் சார்பும் இதனைத் தக்க சிறுகதையாக்கி உள்ளன என்பது அவரின் கருத்தாகும்.
5. சிறுகதை மூவர்
ஈழத்தின் தமிழ்ச் சிறுகதை மூலவர்களாக இதுவரை காலமும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகிய மூவரும் ஈழத்தின் தமிழ்ச் சிறுகதைக்குப் புத்துக்கமும் புதிய வடிவமும் வழங்கியவர்கள் என்பதில் ஐயமில்லை. சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன் ஆகிய இருவரும் ஆங்கிலப் புலமை வாய்ந்தவர்கள். நவீன சிறுகதையின் மேலைத்தேயப் பண்பு களையும் வளர்ச்சிநிலைகளையும் தெரிந்தவர்கள். ஆதலால் அவர்களின் சிறுகதைகளில் வடிவமும் உள்ளடக்கமும் நன்கு விரவிக் காணப்பட்டன.
W Wiii

Page 14
சம்பந்தன் அவர்கள் தமிழும் வடமொழியும் நன்கு கைவரப் பெற்றவர். அத்தோடு நவீன சிறுகதையின் தாற்பரியங்களைத் தெரிந்தவர். இவர்கள் மூவரும் அக்காலகட்டத்தில் தமிழகத்தில் சிறுகதைத் துறையில் சாதனைகளைப் புரிந்த மணிக்கொடி எழுத்தாளர்களான புதுமைப் பித்தன், கு. ப. ராஜகோபாலன், பி. எஸ். ராமையா, மெளனி, ந. பிச்ச. மூர்த்தி முதலானோரின் சிறுகதைகளையும் "கலைமகள்", "ஆனந்த விகடன்”, “கிராம ஊழியன்”, “மணிக்கொடி", "சூறாவளி”, “சக்தி” முதலான சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழகப் பத்திரிகைகளையும் வாசிப்பவர்களாகவும் இருந்துள்ளனர். அவர்கள் படைத்த கதைகளில் இவர்களின் தாக்கமும் செல்வாக்கும் இருந்திருப் பதைக் காணமுடியும். எனவேதான் இந்த மூவரினதும் சிறுகதைகள் நவீன சிறுகதையின் அழுத்தமான பண்புகளைத் தம்முள் கொண்டிருக் கின்றன.
ஈழத்தின் தமிழ்ச் சிறுகதைத்துறைக்கு புது நீர் பாய்ச்சிய சி. வைத்தியலிங்கம் ஏறக்குறைய இருபத்தைந்து சிறுகதைகள் வரை யில் எழுதியுள்ளார். ஆங்கில, சமஸ்கிருத மொழிகளில் நல்ல தேர்ச்சி யுடையவராக விளங்கியமை அவரது சிறுகதைகள் சரியான தடத்தில் அமையவும், உரைநடையை கவிதா பண்போடு பயன்படுத்தவும் உதவி யிருக்கின்றன. இவரது சிறுகதைகளில் தமிழக எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலனின் எழுத்துக்களின் செல்வாக்கினைக் காணலாம். கு.ப.ரா. போல மனவுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தனது சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் தென் இந்தியப் பத்திரிகைகளை மனதிற்கொண்டு எழுதப்பட்டவை ஆதலால் பெரும்பாலான சிறுகதைகளில் தூய தமிழ்நடை பயன்படுத்தப்பட்டி ருக்கின்றது. அவரின் பல சிறுகதைகள் சரித்திரக் கதைகளாகவும் உள்ளன. "ஈழகேசரி", "கலைமகள்", "ஆனந்த விகடன்” “கிராம ஊழியன்” ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ரவீந்திரன் என்னும் புனைபெயரிலும் இவர் எழுதியுள்ளார். இவரது சமூகச் சிறுகதைகளில் கிராமிய மக்களின் அன்றாட வாழ்க்கையின் அம்சங்கள் மண்வாசனையோடு கலந்திருக்கும். கங்கா கீதம்', 'பாற்கஞ்சி', 'நெடு வழி', 'மூன்றாம் பிறை' என்பன இவரது சிறந்த சிறுகதைகள் எனலாம். ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களுக்குப் பின்னர் 1990இல் சி. வைத்திய லிங்கத்தின் சிறுகதைகள் பதினேழு தொகுக்கப்பட்டு “கங்கா கீதம்” என்ற பெயருடன் வெளி வந்தது. இதனை சோ. சிவபாதசுந்தரம் தொகுத்துள்ளார். தமிழக அன்னம் வெளியீட்டினர் பதிப்பித்துள்ளனர்.
இலங்கையர்கோனின் (ந. சிவஞானசுந்தரம்) கல்விப் பின்னணியும் காரியாதிகாரியாகக் கடமை செய்த நிர்வாகப் பின்னணியும் அவரது சிறுகதைப் படைப்புக்களின் நவீன பண்புகளையும் களங்களையும் நிர்ண யித்திருக்கின்றன. ஆங்கில இலக்கியத்தின் செல்நெறிகளை இலங்கையர் கோன் நன்கு தெரிந்திருந்தமையால் அவரது சிறுகதைகளில் உணர்வு
XXiV

பூர்வமான சித்திரிப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தன. "கலைமகள்", "பாரதத்தாய்”, “சக்தி", "சூறாவளி’ ஆகிய தமிழக ஏடுகளிலும் "ஈழகேசரி”, “கலைச்செல்வி’, ‘ஈழநாடு", "வீரகேசரி", "தினகரன்” முதலான ஈழத்து ஏடுகளிலும் நிறைய எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு வலுவூட்டிய மணிக்கொடியின் கடைசிக்கால இதழ்களில் இலங்கையர்கோனின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இவரால் படைக்கப்பட்ட சிறுகதைகளில் 'வெள்ளிப் பாதசரம் ஈழத்தின் உன்னதமான கதைகளில் ஒன்றாகக் கணிக்கப்படுகின்றது. இந்த மண்ணின் வாசனை நன்கு செறிந்த சிறுகதை அதுவாகும். ‘வஞ்சம், ‘கடற்கரைக் கிளிஞ்சல்' என்பன சிறப்பான ஏனைய சிறுகதைகளாம். இவரது பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பாக “வெள்ளிப் பாதசரம்”
உள்ளது.
தமிழ்ச் சிறுகதைகளுக்கு அழுத்தமான காவிய மரபினைத் தந்தவர் சம்பந்தனாவார். "கலைமகள்”, “கிராம ஊழியன்", "மறுமலர்ச்சி", "ஈழகேசரி” ஆகிய பத்திரிகைகளில் இருபதிற்கு மேற்பட்ட சிறுகதை களை சம்பந்தன் படைத்துள்ளார். ஈழத்துச் சிறுகதைகளில் உருவமும் உள்ளடக்கமும், அழகாகவும் ஆழமாகவும் அமைவதற்குச் சம்பந்தன் அவர்களின் ஆரம்பகாலச் சிறுகதைகள் வழிகோலின எனலாம். இவரின் கதைகளில் எக்காலத்திற்கும் பொருந்துவதான மனிதனின் அடிப்படைப் பண்புகள் அழியாத உருவில் எழுந்திருப்பதால் இவரின் இலக்கியப் பாதை செம்மையானதாகவும், தனித்துவமானதாகவும் அக்காலத்தி லேயே விளங்கின. மனித உணர்வுகளையும் மன அசைவுகளையும் மனோதத்துவ முறையில் அணுகி அவற்றின் சிறப்புக்களைக் கலை யாக்கிய பெருமை சம்பந்தனுக்குரியது. (செம்பியன் செல்வன் - 1998). சம்பந்தனின் சிறுகதைகளில் ஆத்ம தத்துவ விசாரணை மிக அழுத்தமாகப் பதிந்திருக்கும். 1938 களில் சிறுகதைத் துறைக்கு வந்த சம்பந்தன்ை முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு அவரின் சிறுகதைத் தொகுதி ஒன்றில்லாதிருந்தமை பெருங்குறையாகும். அவரின் சிறுகதை களில் பத்தினை 1998இல் "சம்பந்தன் சிறுகதைகள்” என்ற பெயரில் செங்கை ஆழியானும், செம்பியன் செல்வனும் தொகுத்து வெளியிட்ட னர். அவரின் ஏனைய சிறுகதைகளும் (இன்னொரு பத்து இருக்கும்) தொகுப்பாக வெளிவரல் வேண்டும். ,曾
சி. வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகிய மூவரும் ஈழத்தின் தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு ஆற்றிய பணியையும் பங்களிப்பையும் மறந்துவிட முடியாது. "ஈழகேசரி பத்திரிகையின் மூலம் சிறுகதைத் துறைக்குப் புகுந்த இவர்கள் தமது கீர்த்தியை நிலை நாட்டியது தமிழகப் பத்திரிகைகள் மூலந்தான்” என்ற சோ. சிவபாத சுந்தரத்தின் கூற்று ஏற்புடையதன்று. ஏனெனில், இலங்கையர்கோனின் முதற் சிறுகதையான மரிய மதலேனா 1930 களில் "கலைமகளில்"
XXV

Page 15
வெளிவந்துள்ளது. மேலும், "ஈழகேசரி”யில் சி. வைத்தியலிங்கத்தின் சிறுகதைகள் வெளிவருவதற்கு முன்னரேயே "கலைமகளில்” வெளி வந்துள்ளன. சம்பந்தனின் முதற்படைப்பான தாராபாய்’ 1938 களில் "கலைமகளில்” வெளிவந்தது. எனவே, இந்த மூன்று எழுத்தாளர்களும் தங்களது இலக்கியப் பணிக்குத் தமிழகப் பத்திரிகைகளை முழுமை யாகப் பயன்படுத்தியதோடு “ஈழகேசரி’யையும் தளமாகக் கொண்டிருக் கின்றனர் என்பது ஏற்ற கூற்றாகும். இவர்கள் மூவரையும் "ஈழகேசரி"க் குழுவினைச் சேர்ந்த படைப்பாளிகள் என்று கொள்வதில் தவறில்லை. இவர்களது கணிசமான படைப்புக்கள் - சி. வைத்தியலிங்கத்தின் பதினோரு சிறுகதைகளும், இலங்கையர்கோனின் பத்துச் சிறுகதை களும், சம்பந்தனின் ஐந்து சிறுகதைகளும் - “ஈழகேசரி"யில் வெளிவந் துள்ளன. சம்பந்தன் "ஈழகேசரி"யில் அருட்செல்வன் என்ற புனைபெய ரிலும் எழுதியுள்ளார்.
ஈழத்தின் இம்மூன்று எழுத்தாளர்கள் பற்றி பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிடும்போது, "இவர்கள் மறுமலர்ச்சி இலக்கியத்தையோ, இலக்கியத்தின் உட்பிரிவுகளையோ, புதிய புதிய பரிசீலனைகளையோ அதிகம் வளர்த்தனர் என்று கூறுவதற்கில்லை. ஆங்கில விமர்சகர்கள் கூறும் ரோமான்டிசம்' என்னும் கனவுலகக் காட்சிகளில் ஈடுபடச் செய்யும் இலட்சியபூர்வமான சிந்தனைகளிலும், உணர்ச்சிகளிலும் மயங்கி எழுதினர் என்றுதான் சொல்லலாம்” என்ற கூற்றில் அவ்வளவு தூரம் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் மூவரினதும் சிறுகதைகள் தொகுப்புக்களாக வெளிவந்திருக்கும் இக்கால வேளையில் அவர்களின் சிறுகதைகள் பற்றி மதிப்பீடு மறுபரிசீலனைக்குள்ளாக வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அவர்கள் படைத்த அத்தனை படைப்புக்களும் "ரோமான்டிசப் பண்பு கொண்டவை என ஒதுக்கிவிட முடியாது. இவர்களால் படைக்கப்பட்ட "வெள்ளிப் பாதசரம்', 'கடற்கரைக் கிளிஞ்சல்', "மச்சாள்', 'பாற்கஞ்சி', 'நெடுவழி, அவள்', 'பிரயாணி முதலான சிறுகதைகள் கனவுலகக் கற்பனைகள் அல்ல. இந்த மண்ணில் ஆழமாகக் காலூன்றி எழுதப்பட்ட மண்வாசனைப் படைப்புகள். சம்பந்தனின் சிறுகதைகளில் பேச்சுவழக்கு அவ்வளவு தூரம் முக்கியம் பெறவில்லை என்றாலும் இலங்கையர்கோன் அவ் வழக்கினை அளவாகவும், கலைத்துவத்தோடும் கையாண்டுள்ளார். இவர்கள் ஒரு பத்தாண்டு காலத்தில் ஏற்படுத்திய சிறுகதைத் துறையின் தாவலை ஐம்பது வருடங்களாக எழுதப்பட்டுவரும் இன்றைய சிறுகதைகளில் ஒரு பெரும் பாய்ச்சலாகக் காண முடியவில்லை என்பது ஏற்பதற்குச் சங்கடமானதாயினும் மெய்மையானது.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் துறையின் முன்னோடிகளென 1949ஆம் ஆண்டிற்கு முன் எழுதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களைக் குறிப்பிடலாம். ஈழத்துச் சிறுகதைத் துறையில் ஏராளமானவர்கள் இனங்
XXVi

காணப்படுகின்ற வேளையில் குறுகியகால அளவினதான ஆய்வுப் பகுப்பு ஏற்றதாகவில்லை. இருபதாம் நூற்றாண்டில் முதல் ஐந்து தசாப்தங்களில் சிறுகதைத் துறைக்குப் பங்களிப்புச் செய்தவர்களில் இருபத்தைந்து எழுத்தாளர்கள் இனங்காணப்பட வேண்டியவர்களாவர். சுயா, பாணன், ஆனந்தன், சோ. சிவபாதசுந்தரம், சி. வைத்தியலிங்கம், சம்பந்தன், இலங்கையர்கோன், பவன், சி. வி. வேலுப்பிள்ளை, அ. செ. முருகானந்தன், சோ. தியாகராஜன், நவாலியூர் சோ. நடராஜன், வரதர், அ. ந. கந்தசாமி, கனக செந்திநாதன், சு.வே, நாவற்குழியூர் நடராஜன், இராஜ அரியரத்தினம், கே. கணேஸ், கசின், சொக்கன், அழகு சுப்பிர மணியம், சு. இராஜநாயகன், தாழையடி சபாரத்தினம், கு. பெரியதம்பி ஆகிய இருபத்தைந்து படைப்பாளிகளே அவர்களாவர்.
ஈழத் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளென இந்த இருபத்தைந்து எழுத்தாளர்களையும் கொள்ளமுடியுமா என்ற கேள்வி நியாயமானது ஆகும். ஏனெனில், இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட அ. செ. முருகானந்தன், வரதர், சொக்கன், சு. இராஜநாயகன், அ. ந. கந்தசாமி ஆகியோர் மறுமலர்ச்சி எழுத்தாளர்களாக நீண்டகாலமாக அடையாளங் காணப்பட்டவர்கள். 1946 பங்குனி மாதத்திலிருந்து 1948 ஐப்பசி மாதம் வரை மொத்தமாக 24 இதழ்கள் மறுமலர்ச்சி' சஞ்சிகை வெளிவந்தது. தமிழகத்தில் மணிக்கொடிகாலம் போல ஈழத்தில் மறுமலர்ச்சிக்காலம் அடையாளங் காணப்பட்டது. உண்மையில் "ஈழகேசரி"யில் நிறையவே எழுதிய படைப்பாளிகள், மறுமலர்ச்சிப் பத்திரிகையிலும் எழுதியுள்ளனர். இவர்கள் "ஈழகேசரி’ப் பண்ணையில் உருவாகியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. "மறுமலர்ச்சி” சஞ்சிகையில் அ. செ. முருகானந்தனின் சில சிறுகதைகள் வெளிவந்தன. ஆனால், "ஈழகேசரி"யில் அவரின் பதினெட்டுச் சிறுகதைகள் பிரசுரமாகி இருந்தன. வரதரின் சிறுகதைகள் "ஈழகேசரி"யில் பதின்மூன்று வரையில் வெளிவந்துள்ளன. வரன், வரதர், தி. ச. வரதராசன் எனப் பல பெயர்களில் "ஈழகேசரி"யில் எழுதியுள்ளார். "மறுமலர்ச்சி"யில் வெளிவந்த 52 மொத்தச் சிறுகதைகளில் பத்தளவில் அவருடையவை. "ஈழகேசரி"யில் 14 சிறுகதைகள் எழுதிய சொக்கன் மறுமலர்ச்சியில் ஒரேயொரு சிறுகதை எழுதியதன் மூலம் எப்படி மறுமலர்ச்சி எழுத்தாளரானார் என்பது வியப்பானது. "ஈழகேசரி"யில் 11 சிறுகதைகள் எழுதியிருக்கும் சு.வே. மறுமலர்ச்சியில் மூன்று உருவகக் கதைகள் எழுதியிருக்கிறார். சில விமர்சகர்களால் "ஈழகேசரி’ப் பண்ணையில் வளர்ந்த எழுத்தாளராகவும், சிலரால் மறுமலர்ச்சி எழுத்தாளராகவும் கணிக்கப்படும் அ. ந. கந்தசாமி "ஈழகேசரி"யில் 1942 இல் 'குருட்டு வாழ்க்கை' என்ற தனது ஆரம்பக் கதையொன்றினை மட்டுமே எழுதியுள்ளார். "மறுமலர்ச்சி"யில் அ. ந. கந்தசாமியின் ஒரு சிறுகதைதானும் வெளிவரவில்லை. மறுமலர்ச்சி இயக்கத்துடன் அவர் இருந்தார் என்பதற்காக அவரை "மறுமலர்ச்சி” எழுத்தாளராக இனங் காண்பது இலக்கிய வரலாற்றுத் தவறாகும். உண்மையில் "மறுமலர்ச்சி”
XXVii

Page 16
சஞ்சிகை மூலம் உருவாக்கிய எழுத்தாளர்களென கு. பெரியதம்பியை யும் தாழையடி சபாரத்தினத்தையும் மட்டுமே குறிப்பிடமுடியும், "மறுமலர்ச்சி” சஞ்சிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசினைப் பெற்று சிறுகதைத் துறையில் பிரவேசித்த கு. பெரியதம்பி அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சியில் 'அம்மான் மகள்', 'குழந்தை எப்படிப் பிறக்கிறது', 'காதலோ காதல்', 'எட்டாப்பழம், மனமாற்றம், 'வீண் வதந்தி ஆகிய ஆறு சிறுகதைகளை எழுதியுள்ளார். அவை சிறுகதைக்கு உரிய இலட்சணங்களைக் கொண்டவை. மெல்லிய மன உணர்வுகளை எளிதான வசனநடையில் கூறும் ஆற்றல் பெரியதம்பி யிடம் இருந்தது. அவர் கதை சொல்பவராக இருந்தாலும் ஒப்பளவில் அக்காலகட்டத்தின் சிறப்பான சிறுகதை ஆசிரியராக விளங்கியுள்ளார். விமர்சகர்களின் பார்வையில் அவர் அகப்படாது போனமை விசனத்திற்கு உரியது. தாழையடி சபாரத்தினத்தின் சிறப்பான சிறுகதைகளாகக் கருதப்படும் 'ஆலமரம், "தெருக்கிதம்' ஆகிய இரண்டும் "மறுமலர்ச்சி" யில்தான் வெளிவந்துள்ளன.
தமிழகத்தில் சிறுகதைத் துறைக்கு மணிக்கொடி எப்படி புத்தூக்கம் அளித்ததோ அதேபோல ஈழத்தில் சிறுகதைத் துறைக்கு "மறுமலர்ச்சி” புதியதொரு உத்வேகத்தை அளித்துள்ளது. உலகளாவிய தரத்திற்கு "மறுமலர்ச்சி"யின் சிறுகதைகள் அமையாவிட்டாலும் அவை வெளி வந்த காலகட்டத்தில் சிறுகதையின் வடிவத்தையும் செழுமையையும் புரிந்துகொண்டு படைக்கப்பட்ட ஆக்கங்களாக உள்ளன. எனவே, "மறுமலர்ச்சி” சஞ்சிகையில் எழுதிய படைப்பாளிகளையும் ஈழத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் முன்னோடிகள் எனச் சேர்த்துக் கொள்வதில் நியாயமுள்ளது.
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் இருவராக இனங்காணப் படும் பாணன், பவன் ஆகியவர்கள் எவரெனத் தெரிந்துகொள்ள முடியா திருக்கின்றது. இவர்கள் இருவரதும் சிறுகதைகள் மனதைப் பிடித்துக் கொள்ளும் மனிதாபிமானப் பிரச்சனைகளையும் சமூகத்தில் ஒரு களத்தினையும் அற்புதமாகக் காட்டும் தன்மையையும் கொண்டிருக் கின்றன.
அ.செ.மு. என்ற முருகானந்தன் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்குப் பெருமைகூட்டிய எழுத்தாளர். அவரது ‘வண்டிச் சவாரி ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் ஒன்றாகும். யாழ்ப்பாண மண்வாசனையை அற்புதமாகச் சித்திரித்திருக்கின்றது. அவரது சிறுகதைகள் யாழ்ப்பாணச் சமூகக் களத்தில் மட்டுமன்றி மலையகக் களத்திலும் வரையப்பட்டிருக் கின்றன. புகையில் தெரிந்த முகம்', 'காளிமுத்துவின் பிரஜாவுரிமை, 'மனிதமாடு' என்பன அவரின் சிறந்த ஆக்கங்கள். கருவுக்குகந்த வார்த்தைகளைப் பாசாங்கற்ற முறையில் தேர்ந்தெடுக்கும் கலையை அவரது சிறுகதைகளில் காணலாம்.
XXVii

ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் சோ. சிவபாதசுந்தரம் தான் எழுதியவற்றிலும் பார்க்க "ஈழகேசரி"யின் ஆசிரியராக விளங்கிய காலவேளையில் உருவாக்கிவிட்ட சிறுகதை எழுத்தாளர்கள் பலராவர். அவ்வாறான பெருமை இராஜ அரியரத்தினத் திற்கும் உரியதாகும். இவர்கள் இருவரும் எழுதிய சிறுகதைகள் எண்ணிக்கையில் குறைவாயினும் தரமானவை. சிவபாதசுந்தரத்தின் "ஆனந்தவிகடன்” சிறுகதையான 'தோட்டத்து மீனாட்சி குறிப்பிடத்தக்க சிறுகதையாகும். இராஜ அரியரத்தினத்தின் 'வெள்ளம்' என்ற சிறுகதை ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படும். இச் சிறுகதை "ஈழகேசரி"யில் 1945இல் 'வயலுக்குப் போட்டார்’ என்ற தலைப்புடன் வெளிவந்தது. முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்பட வேண்டியவர் சோ. தியாகராஜன் ஆவார். சோ. சிவபாதசுந்தரத்தின் சகோதரரான இவர் சூழ்நிலைகளைக் காட்சிப்படுத்தி விபரிப்பதில் வல்லவராக விளங்கியமையை அவரது சிறுகதைகளிலிருந்து அறிய முடியும். “கலைச்செல்வி’ சிற்பி அவர்கள் கருதுவது போல, சோ. தியாகராஜனின் இன்னொரு புனைபெயர் "பரிதி” என்பதாயின் சோ. தியாகராஜனின் சிறுகதைப் படைப்பின் காலகட்டம் 1934ஆம் ஆண்டிற்குரியதாக மாறிவிடும். "ஈழகேசரி"யில் பரிதி (அதாவது சோதி) என்ற புனைபெயரில் சில நல்ல சிறுகதைகளைத் தந்துள்ளார். எதிர்பாராதது என்ற சிறுகதை அவ்வகையில் விதந்துரைக்கத்தக்க தாகும்.
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகனாகிய நவாலியூர் சோ. நடராஜன் எழுதிய பல சிறுகதைகளில் சிறப்பான இடத்தினைப் பெறுவது ‘கற்சிலை' என்பதாகும். நவாலியூர் சத்தியநாதன் என்பதும் இவராயின் இந்த முன்னோடியின் சிறுகதைப் பிரவேச காலம் 1934 ஆக மாறிவிடும். மாலினி, அபயன்’ ஆகிய சிறுகதைகள் சத்தியநாதன் என்ற பெயரில் "ஈழகேசரி"யில் வெளிவந்துள்ளன. கனக செந்திநாதன், சு.வே, நாவற்குழியூர் நடராஜன் ஆகியோர் 1943 களில் சிறுகதைத் துறைக்கு வந்தவர்களாவர். கவிஞராகக் கணிக்கப்பட்டிருக்கும் நாவற்குழியூர் நடராஜன் "ஈழகேசரி"யிலும், "மறுமலர்ச்சி"யிலும் சில சிறுகதைகளை எழுதியுள்ளார். கவிதாபூர்வமான நடை இவருக்குரியது. தமிழ் ஆசிரிய ரான கனக செந்திநாதன் சிறுகதைத் துறையிலும் விமர்சனத் துறை யிலும் ஆற்றிய பணி அதிகம். இவர் "ஈழகேசரி"யில் யாழ்பாடி' என்ற புனைபெயரில் எழுதிய ஒரு பிடி சோறு’ என்ற சிறுகதை இவருக்கும் ஈழத்துச் சிறுகதைத் துறைக்கும் பெருமை சேர்த்ததாகும். 'செம்மண்', கூத்து', 'வெண்சங்கு' என்பன கனக செந்திநாதனின் மணியான சிறுகதைகள். நுண்ணிய அவதானிப்புடன்கூடிய கள விபரணையும் சமூக வாழ்வின் அவலங்களையும் இருப்பையும் சித்திரிக்கும் திறனும் கொண்டனவாக கனக செந்திநாதனின் சிறுகதைகள் விளங்குகின்றன. சு.வே. என்ற சு. வேலுப்பிள்ளை ஈழத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
XXix

Page 17
பதினொரு சிறுகதைகள் வரையில் "ஈழகேசரி"யில் எழுதியுள்ளார். ஈழத்தின் உருவகக் கதைத் துறையின் முன்னோடி இவராவர். மண் வாசனை', 'வெறி', 'கிழவனும் வத்தகைக் கொடிகளும் (இச்சிறுகதை யின் ஆரம்பத் தலைப்பு - கிடைக்காத பலன்) ஆகியன சு.வே. அவர்களின் தரமான சிறுகதைகளாகும்.
"சொக்கன் பழைய எழுத்தாளர். சோ. சிவபாதசுந்தரம், சம்பந்தன், இலங்கையர்கோன், சு.வே. வரதர், கனக செந்திநாதன் வரிசையில் இடம்பெற்றவர். பின்பு பொன்னுத்துரை, டானியல், டொமினிக் ஜீவா சந்ததியோடு ஒன்றானவர். அதைத்தொடர்ந்து யோகநாதன், பெனடிக் பாலன், செங்கை ஆழியான், செம்பியன் செல்வன் காலத்தில் அவர் களுடன் நின்றவர். இப்போதும் புதிய இளமையுடன் எழுதிக் கொண்டி ருப்பவர்” (நந்தி - 1972). 1947 களில் சிறுகதைத் துறைக்குள் வந்த சொக்கன் சிறுகதை எழுதிக்கொண்டிருக்கின்ற இளம் சந்ததியோடு இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்.
'கடல், ஒழுங்கை', 'இழப்பு' என்பன சொக்கனின் சிறந்த கதைகள் ஆகும். சம்பவமும் மொழியும் முக்கியமெனக் கருதுபவர் சொக்கன். கருத்தும் கவர்ச்சியும் வாய்ந்த வசனநடையையும், சமுதாயப் பார்வைத் தெளிவையும் அவரது சிறுகதைகளில் காணலாம். சொக்கன் போலவே சு. இராஜநாயகன் அவர்களும் 1947 இலிருந்து 1998 வரை தொடர்ந்து எல்லாப் பரம்பரையினருடனும் சிறுகதைகளை எழுதி வந்தவர். சமூக அநீதிகளுக்குக் குரல் தந்த முற்போக்காளரான இராஜநாயகனின் சிறுகதைகளில் பொத்தல், நாகதோசம்’ என்பன சிறந்த கதைகளாம். தெரிந்த சொற்களைப் பயன்படுத்தி நனவோடை உத்தியில் எழுதியவர் இராஜநாயகன். இந்த இருவரதும் சமகாலத்தில் சிறுகதைத் துறையில் பிரவேசித்து 1957 வரை தொடர்ந்து சிறுகதைகளை எழுதியவர் கசின் எனப்படும் க. சிவகுருநாதன் ஆவார். கசினின் சிறுகதைகளில் கருப் பொருளாகக் குடும்ப உறவுகளே முக்கியம் பெற்றன. "ஈழகேசரி"யில் மட்டும் இவரின் பதினான்கு சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அவற்றில் 'வண்டியில் வளர்ந்த கதை', 'மணியோசை" ஒரு சொட்டுக் கண்ணிர் ஆகியன சிறப்பானவை. கசின் அவர்கள் நிறையவே எழுதியுள்ளபோதிலும் நவீன சிறுகதைப் போக்கின் தடத்தினை ஏனைய முன்னோடிகள் போல நன்கு தெரிந்து பிரயோகிக்கவில்லை. இயல்பான கதை சொல்லும் பாங்கில் தம் சிறுகதைகளை நகர்த்தியுள்ளார்.
1945 களில் சிறுகதைத் துறைக்கு வந்த இன்னொரு முன்னோடி எழுத்தாளர் கே. கணேஷ் ஆவார். முற்போக்காளரான அவர் எழுதிய சிறுகதைகள் மிகச் சொற்பமாகும். எனினும், அவரின் ‘சத்திய போதி மரம் குறிப்பிடத்தக்க ஒரு சிறுகதை,
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் ஆங்கிலத்தில் தமிழ் மக்களது சமூக வாழ்க்கையையும், நடவடிக்கையையும், சமூகவியற் பண்புகளையும்
XXX

சிறுகதைகளாக்கிய இருவர் முன்னோடிகளாகவுள்ளனர். ஒருவர் மலையக எழுத்தாளரான சி. வி. வேலுப்பிள்ளை. மற்றவர் அழகு சுப்பிரமணியம். சி. வி. வேலுப்பிள்ளை 1930 களில் எழுத்துலகில் பிரவேசித்தவர். மலையக மக்களின் சமூக வாழ்க்கையின் இடர்களையும் அவற்றின் போராட்ட உணர்வுகளையும் "உழைக்கப் பிறந்தவர்கள்” என்ற ஆங்கிலச் சிறுகதைத் தொகுதியில் சிறுகதைகளாக வெளியிட்டார். சி. வி. வேலுப்பிள்ளையின் பார்வையும் பரிவும் மலையக மக்களில் நிலைத்திருப்பது போல அழகு சுப்பிரமணியத்தின் பார்வையும் பரிவும் யாழ்ப்பாண மண்ணில் நிலைகொண்டிருப்பதைக் காணலாம். அவரின் சிறுகதைகள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு சமூக மாந்தரை உலகச் சிறுகதை அரங்கிற்கு கொண்டுவந்தன. அவரின் “கணிதவியலாளன்” உலக இலக்கியத்தின் உன்னத சிறுகதைகள் என்ற தொகுதியில் இடம் பிடித்திருக்கின்றது.
இருபத்தோராம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமக்கு, நமது சிறுகதைத் துறையின் வளர்ச்சி நிலையை மதிப்பீடு செய்வதற்கு தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளின் கதைகளைக் கவனத்திற்கு எடுப்பது அவசியமாகின்றது. மாடியை அடைவதற்குப் படிகளில் ஏறியே ஆகவேண்டும். ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள் என என்னால் இனங் காணப்பட்ட இருபத்தைந்து படைப்பாளிகளில் ஒரு சிலரது சிறுகதைகள் தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன. இலங்கையர்கோனின் “வெள்ளிப் பாதசரம்”, சி. வைத்தியலிங்கத்தின் “கங்கா கீதம்”, சம்பந்தனின் "சம்பந்தன் சிறுகதைகள்", வரதரின் “கயமை மயக்கம்” (வரதர் கதைகள்), அ. செ. முருகானந்தனின் “மனித மாடு", இரசிகமணி கனக செந்திநாதனின் "வெண்சங்கு", சு. வேலுப்பிள்ளையின் "மண் வாசனை", தாழையடி சபாரத்தினத்தின் "புதுவாழ்வு', சொக்கனின் "கடல்", கசினின் "கசின் கதைகள்” என்பன சிறுகதைத் தொகுதிகளாக உள்ளன. அ. ந. கந்தசாமி, சு. இராஜநாயகன், சுயா, ஆனந்தன், பவன் முதலானோரின் சிறுகதைத் தொகுதிகளும் வெளிவரின் ஈழத்துச் சிறுகதைத் துறையின் இருப்பினைக் கணிப்பிட உதவியாக அமையும்.
ஈழத்தின் சிறுகதை முன்னோடிகள் இந்த மண்ணில் ஆழக் காலூன்றி நின்று சமூகத்தினைப் பார்த்தார்கள் என்பது அவர்களின் சிறுகதை களிலிருந்து புலனாகின்றது. கற்பனை ரதத்திலேறி சஞ்சரிக்கின்ற சிறுகதைகள் ஏராளமாக அவர்களிடம் இருக்கின்ற போதிலும் தாம் வாழ்கின்ற சமூகத்தின் பிரச்சனைகளையும் தீர்வுகளையும் சமூகப் பொறுப்போடு பல தரமான சிறுகதைகளில் சித்திரித்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. சமூகத்தின் எரியும் பிரச்சனைகள் அவர்களின் சிறுகதைகளில் வெளிவந்திருக்கின்றன. குடும்ப உறவுகளின் ஊடலும் கூடலும் மிக நளினமாக அவர்களின் சிறுகதைகளில் பரவியிருக்கின்றன. வாழ்க்கையில் நம்பிக்கையையும் திருப்தியையும் ஊட்டத்தக்க செய்தி களை அவர்கள் தம் சிறுகதைகளில் பெய்திருக்கின்றனர். அவர்களின்
ΧΧΧΙ

Page 18
சிறுகதைகளில் சொல்லிய விடயங்களிலும் சொல்லாத சங்கதிகள் பல தொக்கிநிற்கின்ற திறனைக் காணலாம். நம்பிக்கை வரட்சியை அவர் களின் கதைகள் ஏற்படுத்தாது வாழ்க்கையில் ஒரு பிடிமானத்தை அவை சுட்டிநின்றன. இலக்கியத் தேடலும் கலையழகும் ஆங்காங்கு விரவி உள்ளமை மறுப்பதற்கில்லை. அவர்கள் சமூகத்தினைப் புரிந்துகொண்டு சமூகத்திற்காக எழுதினார்கள்.
நமது சிறுகதை முன்னோடிகளின் படைப்புக்களை ஆராயும்போது, “அவை நம்மைப் புடமிடுவதற்கான சந்தர்ப்பங்களைத் தருகின்றன. சில வேளைகளில் வளர்ச்சி என்ற பெயரில் நாம் கட்டி வைத்திருக்கும் போலியான கட்டுமானங்களைத் தகர்க்கவும் செய்யலாம். போதாமை களை உணர்த்தவும் செய்யலாம். போலித்தனங்களை உதறவும் செய்யலாம். எவ்வாறெனினும் எமது பழையவற்றை ஆவணப்படுத்தி மீளாய்வு செய்வது என்பது எம்மைப் புடமிடுதலிற்கு இட்டுச் செல்லும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது" என்ற எனது நண்பன் சுந்தரம் டிவகலாலாவின் "மறுமலர்ச்சிக் கதைகள்” நூலின் பதிப்புரை வாசகங் கள் மீண்டும் நினைவில் வருகின்றன. நமது இருப்பினை அறிய இத் தொகுதி உதவும்.
நமது சிறுகதை முன்னோடிகளின் சிறுகதைகளைத் தொகுத்து வழங்குமாறு கோரிக்கை விடுத்து ஊக்கப்படுத்தியதுடன், அவற்றை நூலுருவில் பதிப்பித்து வெளியிடும் பூபாலசிங்கம் பூரீதரசிங்கிற்கு இலக்கிய உலகம் கடமைப்பட்டுள்ளது. அல்லயன்ஸ் குப்புசாமி ஐயரின் வழியில் துணிந்து நுழைந்திருக்கும் பூ பூரீதரசிங்கின் துணிச்சலும், தன்னம்பிக்கையும் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிய கனதியைக் கொடுக்குமென நம்புகின்றேன்.
செங்கை ஆழியான்
பிரதேச செயலாளர்,
சங்கானை.
19. O6, 2001

ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்

Page 19

முத்த எழுத்தாளரான 'சுயாவின் இயற்பெயர் சு. நல்லையா. 1936ஆம் ஆண்டு அன்னையின் கட்டளையும் அதுதான்’ என்ற சிறுகதையுடன் 'ஈழகேசரியில் எழுத ஆரம்பித்து, 1957 வரை முப்பத்தெட்டுச் சிறுகதைகள் வரையில் ஈழகேசரியில் மட்டும் எழுதியுள்ளார். இவர் தமிழாசிரியர். யாழ்ப்பாணத் தமிழில் பல நகைச்சுவைக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தினகரனில் 'ரவிச்சந்திரன்’ என்ற தொடர்கதையை எழுதியுள்ளார். அமர ராகிவிட்ட சுயா, மிக எளிதாகக் கூறவந்த செய்திகளைக் கதையாகக் கூறி விடுவார்.
படுகொலை
சு. நல்லையா (சுயா)
LTலியாற்றங்கரையில் ஐந்து ஏகரா விஸ்தீரணத்திற் சர்க்காருக்குச் சொந்தமான ஒரு சந்தனமரக் காடுண்டு. ஊரவர்கள் திருட்டுத்தனமாக வந்து, சந்தனக் கட்டைகளை வெட்டிக்கொண்டு போய் வியாபாரிகளுக்கு விற்றுப்போடா வண்ணம், சர்க்காரால் நியமிக்கப்பட்டு, இதைக் காவல் செய்பவன், பொடிசிங்கோ என்றவோர் சிங்கள வாலிபன். பொடிசிங்கோ வுக்கு இருபது வயது வரையிலிருக்கும்; புதிதாகத்தான் இக்காட்டுக்குக் காவலாளியாக வந்தவன்; ரொம்பத் துணிகரமுள்ளவோர் சிங்களச் சிறுவன்; பகல் முழுவதும், அக்காட்டினுள்ளேயுள்ள குடிசையில் உறங்கிக்கொண்டு கிடப்பான். இராவானதும், துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு காடு முழுவதும் சுற்றி வருவான்; பேய், பிசாசு, பூதங்கள் என்றால் அவனுக்கு நம்பிக்கையில்லை. அப்படி யாரேனும் சொன்னால், “அவைகள் என்னோடு சீட்டாட வருமா?” என்று கேட்கக்கூடிய அத்தனை துணிச்சலுள்ளவன். இவனுக்கு முன், இந்தக் காட்டைக் காவல் செய்த வன், பீரிஸ் என்ற மற்றோர் சிங்களக் கிழவன்; அவன் அறுபது வயதான தும், சர்க்கார் கொடுக்கும் பென்ஷனையும் வாங்கிக் கொண்டு, ஊரில் தன் குடிசையில் வசித்து வருகின்றான்.
III
கிர்த்திகை மாதம் பதினைந்தாம் திகதி நடு இரவு பன்னிரண்டு மணிவரையிலிருக்கும்; நல்ல இருட்டு; மெதுவாக மழையும் தூறிக்

Page 20
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
கொண்டிருந்தது. அந்த நேரம், இருளிலேயிருந்து மற்றோரிருள் புறப் பட்டது போல, பொடிசிங்கோ தன் துப்பாக்கியையும் தோளிற் சுமந்து கொண்டு, காட்டைச் சுற்றி, யாரேனும் திருட்டுத்தனமாய் மரம் வெட்டு கிறார்களோவென்று, அங்குமிங்கும் கூர்ந்து பார்த்தபடி வந்து கொண்டி ருந்தான். ஒரு இடத்துக்கு வந்ததும், பட், பட்’ என்று யாரோ நடுக் காட்டினுள்ளே மரம் வெட்டும் சத்தம் கேட்டது. பொடிசிங்கோவுக்குக் கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது; என்ன! என் காவலுக்குள்ளேயா இந்த வேலை? இவ்வளவு துணிச்சலுள்ளவனும் இந்தக் கிராமத்திலிருக் கின்றானா?” என்று எண்ணிக்கொண்டு, பூனைபோல் பதுங்கி நாலடி முன்னுக்கு வைத்தான். மரம் வெட்டும் சத்தம் நின்று போய், "ஐயோ! கொலை கொலை!!” என்று ஒரு அபயக்குரல் அதேயிடத்திலிருந்து புறப்பட்டுக் காடு முழுவதும் பரவிச் சென்றது. அப்பாற் பொடிசிங்கோ விற்கு ஒன்றுமே புரியவில்லை. துப்பாக்கியையும் முன்னுக்கு நீட்டிக் கொண்டு, ஒரே துள்ளில் அந்த இடத்தையடைந்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனைத் திடுக்கிடச் செய்தது! ஒருவன் தலை வேறு, முண்டம் வேறாக இரத்த வெள்ளத்துள் பிணமாய்க் கிடந்து புரண்டான்; இன்னொருவன், இரத்தம் தோய்ந்தவோர் கூரிய கத்தியுடன், காட்டி னுள்ளே ஒடிக்கொண்டிருந்தான். பொடிசிங்கோ, ஒடும் கொலைகாரனைப் பிடிப்பதற்காக அவனைத் தொடர்ந்து ஓடிப்போனான். கொலைகாரன் அகப்பட்டாற்தானே! கடைசியாகத் தன் துப்பாக்கியாற் சுட்டும் பார்த் தான். ஆனால் கொலைஞன் அதற்குள் மாயமாய் மறைந்து விட்டான். பொடிசிங்கோவுக்குக் கொலைகாரனைத் தப்பவிட்டது ரொம்ப விசனம். ‘சரி; இனிக் கொலையுண்டவனையாவது கவனிப்போம்' என்று எண்ணிக் கொண்டு, அந்த இடத்துக்கு ஓடிவந்தான்; அங்கே இறந்தவனாவது, கொலையின் அடையாளங்களாவது ஒன்றுமே காணப்படவில்லை. ஒருக்கால் இடத்தைத் தவற விட்டுவிட்டேனோ என்று எண்ணிக் கொண்டு, அந்த இருளில், அந்தக் காடு முழுவதும் துருவித் துருவி ஆராய்ந்து பார்த்தான். ஒரு இடத்திலாவது கொலையுண்டவனையாவது, கொலையின் அடையாளங்களையாவது அவனாற் கண்டுகொள்ள முடிய வில்லை. இச்செய்கை அவனுக்கு பெருத்த திகிலையும், அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏககாலத்தில் மூட்டிவிட்டன. ஒருவனாக இக் கொலை யைச் செய்யவில்லை; பலபேர் இதிற் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்; இதில் ஒரு முடிவு காணாவிட்டால் நான் பொடிசிங்கோவா?’ என்று எண்ணிக் கொண்டு எல்லாவற்றிற்கும் கிழவன் பீரிஸையும் கண்டு ஒருமுறை யோசனை கேட்போம்; சிலவேளை அவன் காலத்திலும், இப்படியான செய்கைகள் நடந்திருக்கவும் கூடுந்தானே’ என்று சிந்தித்தவனாய் இரவோடிரவாய்ப் பீரிஸ் வீட்டை நோக்கி நடந்தான்.
III பெ Tடிசிங்கோ பீரிஸ் வீட்டை அடையும்போது பொழுது புலர்ந்து விட்டது. கிழவன் பீரிஸ் ஒரு கணப்புச் சட்டிக்குப் பக்கத்தில்
2

படுகொலை:
குளிர் காய்ந்து கொண்டிருந்தான். வாயில் ஒரு சுருட்டும் புகைந்து கொண்டிருந்தது. கிழவனுக்குப் பக்கத்திலே ஒரு கோரைப்பாயில், சிறுவனொருவன் இன்னும் குறட்டையடித்துத் தூங்கிக் கொண்டிருந் தான். அவன் தூங்கிய மாதிரியில், உலகம் கவிழ்ந்தாலென்ன! நிமிர்ந்தா லென்ன என்று எண்ணிக்கொண்டு உறங்குபவன் போல இருந்தது. அச் சிறுவன் கிழவனின் பேரன். பொடிசிங்கோ கிழவனின் குடிசையுள் நுழையுஞ் சமயம், பத்து வயதுச் சிறுமியொருத்தி ஒரு பாத்திரத்தில் காப்பி எடுத்துக்கொண்டு வந்து கிழவன் முன் வைத்து விட்டுப் போகும் போது பொடிசிங்கோவையும் ஒருமுறை விறைக்கப் பார்த்துக்கொண்டு சென்றாள். இதனர்த்தம் அவனுக்கு விளங்கவில்லை. அவள் பார்வை யைக் கண்டு அவன் பயந்தே போனான். இவள் கிழவனின் மற்றோர் பேரப்பிள்ளை.
பொடிசிங்கோவைக் கண்டதும் கிழவன் பீரிஸ், கணப்புச் சட்டியை அப்புறம் நகர்த்தி வைத்துவிட்டு, அவனை ஒரு இடத்தில் அமரச்செய்து, அடக்கமான குரலில், “என்ன மகனே இவ்வளவு தூரம் முகமும் வெளிறினதுபோற் காணப்படுகின்றதே! இரவு நித்திரை இல்லையோ?” (என்றுவிட்டு பொடிசிங்கோ மறுமொழி கூறுமுன்னரே) “ஒகோ மறந்து விட்டேன்! இரவு நடந்த கொன்லயைக் கண்டு பயந்து விட்டாயோ?” என்று கேட்டுக்கொண்டு, பொடிசிங்கோவின் முகத்தை உற்றுப் பார்த் தான். எவ்வளவு ஆச்சரியத்தோடும், திகிலோடும் பொடிசிங்கோ கிழவனி டம் வந்தானோ, அதிலும் பன்மடங்கு ஆச்சரியப்பட்டான் பொடிசிங்கோ, கிழவனின் இந்தக் கேள்வியால்.
“என்ன! நீங்களும் இதிற் சம்பந்தப்பட்டிருக்கின்றீர்களோ?” என்று ஆத்திரத்துடன் கேட்டான் பொடிசிங்கோ.
கிழவன் கொஞ்சநேரம் மெளனமாய் இருந்துவிட்டு, “இல்லை” என்று அழுத்தமாய்க் கூறினான். \
"பின்னை, கொலை நடந்தது உங்களுக்கு எப்படித் தெரியவரும்! இதில் என் சொந்தத் தகப்பனேயானாலும் நான் விடப் போகிறதில்லை”
"மகனே! கொஞ்சம் அவசரப்படாதே. நான் சொல்பவைகளைக் கேட்டபின், நீ செய்ய வேண்டியதை யோசி" என்று கிழவன் சொல்லி விட்டு ஒரு பெரிய பெருமூச்சோடு சொல்லத் தொடங்கினான்.
IV “னெக்கு உக்குபண்டா என்றோர் மகனிருந்தான்; அவனுக்கு ஐந்து வயது நடந்துகொண்டிருக்கும்போதே அவன் தாய். 6Gör LDGODGØTG........ எங்களிருவரையும் ஆதரிப்பாரில்லாமல் விட்டுவிட்டு இவ்வுலகை நீத்து விட்டாள்; தாயில்லாப் பிள்ளையென்று நானும் அவனை மிகுந்த அன்போடு வளர்த்து வந்தேன்; பள்ளியில் வைத்துப் படிக்கவுஞ்
3.

Page 21
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
செய்தேன்; நான் எவ்வளவு அவனிற் பிரியமாய் நடந்து வந்தேனோ அவனும் என்னில் அத்தனை அன்பு காட்டி வந்தான்; என் சொல்லை அவன் ஒருபோதும் தட்டி நடந்ததே கிடையாது; நல்ல புத்திரனைப் பெற்றேனென்று நானும் மகிழ்ந்திருந்தேன்; இருபது வயதானபோது, அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்து விவாகமும் செய்து வைத்தேன்; ஏனோ தெரியாது அப்பெண்ணை மணந்துகொள்ள ஆரம்பத்தில் அவன் விரும்பவில்லை; மகனே! தந்தை சொற் தட்டலாமா? என்று நான் பல முறையும் வருத்தத்தோடு கேட்டுவந்தபடியால் என்னைப் பிரியப் படுத்தும் நோக்கமாக அவளை விவாகம் செய்வதாக ஒப்புக்கொண்டான்; மணமும் முடிந்தது; புருஷனும் மனைவியும் ரொம்ப இஷடமாகச் சீவித்து வந்தார்கள்; இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார்கள்; அவர்கள்தான் (சிறுவர்களைக் காட்டி) இச்சிறுவனும், அந்தப் பெண்ணும்; (இந்நேரத்திற் கிழவனின் கண்களிலிருந்து, கண்ணிர் வடிந்தது.) நானும் அவர்களின் குடும்ப சீவியத்தைக் கண்டு மகிழ்ந் திருந்தேன்; குழந்தைகள் பிறந்த பின்பு, இடையிடையே புருஷன் மனைவிக்கிடையில் சச்சரவு நடப்பதாகப் பிறர் கூறுவதுண்டு; இதை நான் ஆரம்பத்தில் நம்பவில்லை; ஒருநாள் என் மகனை அழைத்து, நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதானா என்று விசாரித்தேன். பீதிரிஸ் என்ற ஓர் வாலிபன் அடிக்கடி தங்கள் குடிசைக்கு வருவதாகவும், அவனைப் பற்றித் தன் மனைவியைக் கேட்டபோது, அவன் தன் அண்ணன் முறையானென்று அவள் கூறுவதாகவும், ஆனால், அவர்கள் சம்பாஷணைகளைப் பார்க்கும்போது, தனக்கு அவர்களிற் சந்தேகம் உண்டாகிறதென்றும், அவனின் உறவை விட்டுப்போடென்று தன் மனைவியிடம் கூறினால் அவள் அதைக் கேட்பதாயில்லையென்றும் என் மகன் என்னிடம் கூறினான். நானும் ஒருமுறை என் மருமகளை . அந்தக் கொடியவளை. கண்டு வேண்டிய புத்திமதிகளை எல்லாம் சொல்லி வைத்தேன்; சில நாட்களின் பின் என் மகன் மறுமுறையும் என்னிடம் வந்து, அவன் தன் வீட்டுக்கு அடிக்கடி வருவதாகவும், அதுவும் தான் இல்லாத சமயங்களிலேதான் அவன் அதிகமாக வந்து போவதா கவும், ஒருமுறை தானே தன் கண்களால் அவர்களின் கூடா ஒழுக்கத் தைக் கண்டுவிட்டதாகவும் எனக்குச் சொல்லி அழுதான்; இதைக் கேட்டதும் எனக்கு இடிவிழுந்த மாதிரியாய் விட்டது; என் அருமைக் குழந்தைக்கு மீளாத் துயரத்தைத் தேடி வைத்து விட்டேனே என்று வருந்தினேன்; கோட்டு மூலம் விவாக பந்தன நிவிர்த்தி செய்து கொள்வோம் என்று ஆறுதல் கூறி அவனை அனுப்பி விட்டு அதற்கான ஆயத்தங்களையுஞ் செய்து வந்தேன்;
“ஒருநாள் கார்த்திகை மாதம் பதினைந்தாம் திகதி பகல் பன்னிரண்டு மணிவரையிலிருக்கும். என் மகன் மறுபடியும் என்னைத் தேடி வந்தான். அன்று அவன் சந்தோஷத்தோடிருப்பவன் போலக் காணப்பட்டான். அப்பா, நான் பீதிரிசோடு ரொம்பச் சினேகிதனாய் விட்டேன்’ என்றுங்

படுகொலை
கூறினான். ஆனால் அவன் முகம் மாத்திரம் ஏதோ செய்யச் சங்கற்பம் செய்து கொண்டிருக்கிறானென்பதைத் தெளிவாய்க் காட்டிற்று. 'மகனே! புத்தியாய் நட' என்று மாத்திரம் நான் அன்று அவனுக்குச் சொன்னேன். அன்று என்னுடன் கூடவே மத்தியானப் போசனமும் உண்டான். போகும் போது என்றுமில்லாத மாதிரியாய், என்னைத் தாவிப் பிடித்து என் இரு கன்னங்களிலும் முத்தமிட்டான். (இதைச் சொல்லும் போது, கிழவனின் குரல் கம்மிற்று. விம்மி விம்மி அழுதான். பின் திடப்படுத்திக்கொண்டு) ஏனப்பா இதெல்லாம்' என்று கேட்டேன். யாதும் பேசாமல் என்னையே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு போய் விட்டான். அன்றிரவு எனக்கு நித்திரையே கிடையாது. பொல்லாத கனவுகளெல்லாம் கண்டேன். மூளை குழம்பிக்கொண்டு கிடந்தது.
V w
"மற்றநாள் அதாவது பதினாறாந் திகதி அதிகாலையில், ஒரு பொலீஸ் இன்ஸ்பெக்டரும், ஐந்து ஜவான்களுமாக என் குடிசையை நோக்கிச் சந்தனக்காட்டுள் வந்தார்கள். நான் நடுங்கிப்போய், ‘என்னையா சமாச்சாரம்?’ என்று இன்ஸ்பெக்டரை நோக்கிக் கேட்டேன். 'உன் மகன் உக்குபண்டா, பீதிரிஸ் என்பவனை இக்காட்டினுள்ளே வெட்டிக் கொலை செய்து விட்டானாம்.’ என்று என்னைப் பார்த்து இரக்கத்தோடு கூறினார் இன்ஸ்பெக்டர். 'யாரையா சொன்னார்கள்?’ என்று படபடப்புடன் கேட்டேன் நான். அப்போது என் இருதயம் பிளந்துவிடும் போலிருந்தது. தலை "கிருகிருவெனச் சுழன்றது. ஏன் உன் மகனே தான் கொலை செய்த கத்தியோடு பொலிஸ் ஸ்டேசனில் வந்து தன் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறான்’ என்று கூறிவிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு, கொலை நடந்த இடத்துக்குப் போனார்கள். ஐயோ! அங்கே நான் கண்ட காட்சி, என்னைப் பயித்தியக்காரனாக அடித்துவிடும் போலிருந்தது. பீதிரிஸ் தலை வேறு, முண்டம் வேறாக இரத்த வெள்ளத்தில் பிணமாய்க் கிடந்தான்.”
“எதிர்வழக்காடலாம் என்று பிரயாசப்பட்டேன். ஆனால், என் மகனின் வாக்குமூலத்தைக் கேட்டபின், பிரயோசனமில்லை என்று விட்டு விட்டேன். பீதிரிஸைச் சிநேகம்பண்ணி, களவாய்ச் சந்தனக்கட்டைகள் வெட்டலாம் வாவென்று அழைத்துக்கொண்டு போய், அவன் கட்டைகள் வெட்டும் போது, என் கத்தியால் ஒரே வெட்டில் தலை வேறு, முண்டம் வேறாக வெட்டினேன்’ என்று வாக்குமூலங் கொடுத்திருந்தான். அவன் தூக்கு மேடைக்குப் போகும்போது, அப்பா என் பிள்ளைகள் உன் பொறுப்பு என்று கண்ணிரோடு என்னைப் பார்த்துக் கூறினான். இது நடந்து எட்டு வருஷங்களாகின்றன” என்று கிழவன் கதையை முடித்து விட்டு, "மகனே! பொடிசிங்கோ அந்த இருவரும் அகாலத்தில் மடிந்த படியால் அவர்களின் ஆவிகள்தான் ஒவ்வொரு வருஷமும் கொலை நடந்த அதே நாளில் தோன்றி மறைகின்றன. அவைகளையிட்டு நீ
5.

Page 22
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
பயப்படாதே! அவை ஒன்றுஞ் செய்யா. நான் காட்டிலிருந்த காலத்தில் ஒவ்வொரு வருஷமும் அதேநாளில் மறைந்திருந்து, என் மகனின் ஆவிரூபத்தைக் காண்பதில் என் மனத்துயரை அடக்கி வந்தேன்” என்றான் கிழவன் பீரிஸ்.
"நான் இதை நம்பேன்! ஒருபோதும் நம்பேன்’ என்றான் பொடிசிங்கோ.
"நீ நம்பமாட்டாய்தான்; ஆனால், என் மகனின் பெண்ணாகிய அக்கொடியவள், தன் சுற்றத்தாரோடு போய் வசிக்கின்றாள். அவளிடம் போய்க் கேள். சந்தனக் காட்டைப் பற்றிய சர்க்கார் தஸ்தாவேஜசகளை யும் போய்ப் பார். அல்லது பொறுமையோடு அடுத்த வருஷமும் இந்த நாளிற் போய்ப் பார்” என்று சொல்லிவிட்டுக் கிழவன் தன் அலுவலாக எழுந்து போய்விட்டான்.
"ஈழகேசரி ஆண்டுமலர்” 1939

ஈழத்தின் மூத்த புனைகதையாசிரியர்களில் சோ. சிவபாதசுந்தரம் ஒருவர். ஈழகேசரியின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். வானொலியிலும் பணி புரிந்துள்ளார். ஒலிபரப்புக்கலை பலராலும் விதந்துரைக்கப்பட்ட நூல், "தோட்டத்து மீனாட்சி என்ற ஆனந்த விகடன் கதை மூலம் சிறுகதைத் * துறையில் பிரவேசித்தவர். "மாணிக்கவாசகரின் அடிச்சுவட்டில், 'புத்தரின் அடிச்சுவட்டில்' என்ற இவரது யாத்திரையும், ஆய்வும் இணைந்த நூல்கள் இலக்கியத்திற்குக் கிடைத்த அருஞ்செல்வங்கள். சிட்டியுடன் இணைந்து தமிழ் நாவல்கள், தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற இரு நூல்களையும் ஆக்கித் தந்துள்ளார். அமரராகிவிட்டார்.
பரிசுக்கட்டுரை
சோ.சிவபாதசுந்தரம்(சோ.சி)
Lதினைந்து தரம் எழுதியெழுதி அலுத்துப்போய்க் கிழித்தெறிந்து விட்டு அப்பொழுதுதான் பதினாறாவது தடவை ஒரு கட்டுரையுடன் மண்டையைப் போட்டுடைத்துக் கொண்டிருந்தேன். அந்தவேளை பார்த்து அறையின் கதவைத் திறந்துகொண்டு "கேட்டியளா!” என்ற பீடிகையுடன் நுழைந்தாள் ராஜி.
பிடித்து விழுங்கி விடலாமா என்றிருந்தது எனக்கு வந்த ஆத்திரம்! கொஞ்சம் நிம்மதியாக உட்கார்ந்து ஏதாவது எழுதலாமென்று பார்த்தால் அந்தப் பொறுத்த வேளையில் குழப்ப வந்துவிட்டாள் அவள் வந்த கோபத்தில் எனது பவுண்டன் பேனா மை முழுவதையும் அவளுடைய மூஞ்சியிலே கொட்டியிருப்பேன். ஆனால், ராஜியின் முகத்தில் தோன்றிய ஒரு மோகனப் புன்னகை அப்படிச் செய்யவிடாமல் தடுத்து விட்டது. ஒருவாறு ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, "எனக்கு காது கீது ஒன்றும் செவிடாகி விடவில்லை. வேண்டியதைச் சொல்லித் தொலைத்துவிட்டு அப்புறம் போ” என்று எரிந்து விழுந்தேன் நான்.
அவளுடைய புன்னகை கலகலத்த சிரிப்பாக மாறியது. "பூ! அதற்கிடையில் மூக்கு நுனிக்கு வந்துவிட்டது கோபம்? அப்படியென்ன பிரமாதமான எழுத்து? ஆமாம், உங்கள் எழுத்துக்கள்தான் சந்தையில் விலைப்படுகின்றனவே. ஏதோ இரண்டொரு கட்டுரை யாரோ குட்டிப் பத்திரிகைக்காரர் இடம் நிரப்பவேண்டி பிரசுரித்து விட்டால் அதற்காகக் கர்வம் ஏற்றிக்கொள்வதா?”

Page 23
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
, “உன்னை யார் இங்கே கூப்பிட்டது நியாயம் பேச? உனக்குத்தான் வாய் இருக்கிறதென்ற மாதிரி அதிகப் பிரசங்கம் செய்யத் தொடங்கி விட்டாய்!” என்று கடிந்தேன் நான்.
ராஜி மீண்டும் ஒரு புன்னகை புரிந்துகொண்டே, "இந்தாருங்கோ! இதற்கெல்லாமா இத்தனை கோபம்? அடேயப்பா, இப்படியானால் ஆயிரம் தடவை பிரயத்தனப்பட்டாலும் ஒரு கட்டுரை முடிவுபெறாது, தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டு வந்து என் பக்கத்தில் உட்கார்ந் தாள். ஏதோ ஒரு நாடகத்துக்கு ஆயத்தப்படுத்துகிறாள் என்பது எனக்குத் தெரியும். நான் சொன்னேன், “ராஜி, உன்னை ஆயிரம் தடவை வேண்டு மானாலும் கேட்டுக்கொள்கிறேன். உனக்கு என்ன தேவை இப்போது என்று சொல்லித் தொலைத்துவிட்டுக் கொஞ்சம் என்னை நிம்மதியாக இருக்கவிடேன்.”
"அப்படி வாருங்கோ! நல்ல குழந்தையைப் போலப் பேசுவதை விட்டுச் சும்மா சீறிவிழுந்தால் காரியம் ஏதும் ஆகிவிடுமா?” என்றிடித் தாள் அவள். தனது காரியங் கைகூடுவதற்கு அவள் இம் மாதிரிப் பல தடவைகளில் சாமர்த்தியமாக நடந்து கொள்வாள். அதன்பின் ராஜி தொடர்ந்து சொன்னதுதான் என்னைத் திகைக்கச் செய்தது: "கேட்டியளா! அன்று நாம் இரண்டுபேரும் அனுப்பினோமோ இல்லையோ இரண்டு கட்டுரைகள்! அதிலே எனது கட்டுரைதான் போட்டிக்கு ஏற்கப்பட்டிருக் கிறதாம். உங்களது.” என்று அவள் சொல்லி முடிக்குமுன் நான் குறுக்கிட்டு, "சும்மா அலட்டாதே. வெறும் பொய் சொல்லப் பழகி விட்டாய்” என்றேன்.
ராஜியின் முகம் திடீரென்று மாறியது. அந்தச் சொற்கள் அவளுக்குப் பிடிக்கவில்லை. "நானா பொய் சொல்லுகிறேன்? இதோ பாருங்கள் கடிதத்தை” என்று சொல்லி என் முன்னால் ஒரு கடிதத்தை வீசி எறிந்து விட்டு ஒரு மிடுக்கான நடை நடந்து வெளியேறினாள். போகும்போது வாசலில் சிறிது நின்று ஒரு பார்வை பார்த்தாள் போலிருந்தது. அவள் நின்ற நிலையைப் பார்த்தேனேயொழிய ராஜியின் முகத்தை நான் பார்க்கவில்லை.
ஆம், என் மனைவி சொன்னது உண்மைதான். அந்தக் கடிதத்தில் அது எழுதப்பட்டுத்தானிருந்தது. நான் எழுதிய அந்தக் கட்டுரை எத்தனை இரவு நித்திரையின்றித் திருப்பித் திருப்பிப் பாடுபட்டெழுதிய அருமையான சிறுகதை - போட்டியிலே ஏற்கப்படத்தானும் அருகதை அற்றதாம்! குப்பைக் கூடைக்குள்தான் போடத் தகுந்ததாம். ஆனால் அவள் எழுதியது - அந்தப் பேதைப் பெண்ணொருத்தி எழுதியது - வெறுங் குப்பையுங் கூழமும் - அவர்களுக்குப் பிடித்திருக்கிறதாம்! என்ன விபரீதம்? கொஞ்சமும் நாகரிகம், பழக்க வழக்கங்கள் தெரியாத முட்டாள்கள் இந்தப் பத்திரிகாசிரியர்கள்! ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தில் புருஷனும் மனைவியும் எழுதிய கட்டுரைகளில் இப்படித் தாரதம்மியம்
8

பரிசுக் கட்டுரை
இல்லாமல் நடத்துவது நன்றாயிருக்கிறதா? கட்டுரைகளின் குண விசேஷங்களை இப்படியும் எந்தக் கழுதைகளாவது மோசமாக மதிப்பார்களா? அதிலும் கட்டுரை கூடாவிட்டால் பேசாமல் திருப்பி அனுப்புவதை விட்டு இம்மாதிரி மரியாதைக் குறைவாகக் குறிப்பெழுத வேண்டுமா?
எனக்குப் பொறுக்கமுடியாத மனவேதனையாயிருந்தது. அதுவரை நான் எழுதிக்கொண்டிருந்த கடதாசிகளைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து ஒரு மூலையில் எறிந்தேன். எறிந்த பின்னும் எனக்கு ஆத்திரம் தீரவில்லை. எழுந்து போய் அந்தத் துண்டுக் கடதாசிகளையெடுத்து நெருப்பு மூட்டினேன். அதுதான் எனக்குத் திருப்தியளித்தது. இனி எழுதித்தான் பிரயோசனமென்ன? இவ்வளவு பாடுபட்டு நான் அதி உன்னதமான கதை என்று எழுதியனுப்பிய கட்டுரை, அவள் எழுதிய ஒரு வெறும் சாரமற்ற - நயமற்ற - கட்டுரைக்குத் தோற்றுவிட்டது. அது மாத்திரமா? கட்டுரை நயமற்றதெனத் தள்ளிவைத்தால் போதாதா? அதற்கு ஒரு குறிப்பும்! “இந்தப் பஞ்சகாலத்திலே இம்மாதிரி உதவாத கட்டுரைகளை எழுதிக் கடதாசியை வீணாக்க வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!” எப்படியிருக்கும் பாருங்கள்! இதற்கு ஒரு நாகரிகமான யுத்தகால ஹாஸ்யமொன்று தேவையோ? இந்தப் பத்திரிகாசிரியர் மாரை எல்லாம் திரட்டி யுத்தமுனைக்கனுப்பிப் பீரங்கி வாயில் வைத்து விட்டால் என்ன என்றிருந்தது எனக்கு!
பேசாமல் எழுந்து போய்க் கட்டிலின் மேற் படுத்துக்கொண்டேன். ஆனால், அதிகம் ஆத்திரப்பட்டால் அது பொறாமை என்பதை ராஜி அறிந்துகொண்டு மனங்கோணி விடுவாள் என்றும் எனக்குப் பயமாய் இருந்தது. எப்படியாவது அதைச் சமாளித்துக்கொள்ள வேண்டும் என்று நான் சிறிது நித்திரை கொள்ளப் பிரயத்தனப்பட்டேன்.
அறையின் கதவை யாரோ திறக்கும் சத்தங் கேட்டது. மெதுவாகக் கண்களைக் கொஞ்சம்போலத் திறந்து பார்த்தேன். ராஜிதான் அங்கு தோற்றினாள். ஆனால் அவள் முகத்தில் முன்னைய குறும்பும், அதிகார தோரணையும் காணப்படவில்லை. பயமும் இரக்கமும் காணப்பட்டன. சந்தடி செய்யாமல் அவள் வந்து படுக்கையின் மேல் உட்கார்ந்து கொண்டே, “என்ன, உடம்புக்கு ஏதாவது செய்கிறதா?” என்று கேட்டாள். அவளுடைய குரலில் மிகுந்த கனிவு சொட்டியது. கண்களில் இரக்கமும் பச்சாதாபமும் அப்படியே எழுதப்பட்டிருந்தன. முகத்தைப் பார்த்ததும் என் இருதயம் குழைந்து விட்டது. நான் இத்தனை நேரமும் மனம் புழுங்கியதற்கு, பொறாமை கொண்டு எரிந்ததற்கு, இது ஒரு தண்டனை போலிருந்தது எனக்கு அவளுடைய இனிய சுபாவமும் இன்சொற்களும் என்னிருதயத்தை ஈட்டிபோலுறுத்தின. அவள் தாராளத்தை என்னாற் பொறுக்கமுடியவில்லை. "என் உடம்புக்கு ஒன்றும் செய்யவில்லை, ராஜி. சும்மாதான் படுத்திருக்கிறேன். கொஞ்சம் களைப்பாயிருக்கிறது,
9

Page 24
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
அவ்வளவுதான்” என்றேன். ஆனால் என் வஞ்சக நெஞ்சை அவள் அறிந்தாளானால்?
"அப்பா! நான் என்னவோதான் என்று பயந்துவிட்டேன் இதுதானா? எழுந்திருங்கள், கொஞ்சம் காப்பி போட்டு வைத்திருக்கிறேன். சாப்பிட்டு விட்டுக் கடற்கரையிற் போய்ச் சிறிது உலாவினால் எல்லாம் சரியாய்ப் போய்விடுகிறது!’ என்று அவள் தன் வழக்கமான கிள்ளை மொழியில் கொஞ்சினாள்.
来 率 水
Tஜேஸ்வரியை மணந்து ஒரு வருடந்தானாகிறது. நான் பத்திரிகை களுக்கு எழுதுவது அவளுக்கு அளவற்ற பிரியம். முன் இரண்டொரு தடவைகளில் என் கதைகளை அவள் புகழ்ந்து பாராட்டியிருக்கிறாள். ஐம்பது ரூபா ஒரு நாள் ஒரு செக்காக வந்து கிடைத்தது எனக்கு. அதைப்பற்றி ராஜி எத்தனை பேருக்குத்தான் பெருமையோடு சொல்லித் திரிந்தாள் தனது கணவன் பிரபல எழுத்தாளராய் இருப்பது எந்தப் பெண்ணுக்கும் பெருமையாகவிருக்குந்தானே! ராஜேஸ்வரி ஒரு இலக்கியப் பிரியை. நல்ல ரஸிகத் தன்மையும் விமர்சனத் திறமையும் உள்ளவள். ஒரு கட்டுரையில் இன்ன இடம் சுவைக்கும், இன்ன இடம் அழகாயில்லை என்று அளவிடுவதில் கெட்டிக்காரி. ஆனால், அவள் எழுதப் பழகியிருக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லை; அதுதான் காரணம்.
ஒரு நாள் மிக ஆவலோடு அவள் என்னிடம் வந்து, "நான்கூடக் கட்டுரை எழுதப் போகிறேன்” என்றாள். எனக்குச் சிரிப்பு வந்தது. நீ மாத்திரமா, எத்தனையெத்தனையோ பேர்தான் கட்டுரைகளும் கதை களும் எழுதுகிறார்கள் பத்திரிகைகளுக்கு. ஆனால் பிரசுரமாக வேண் டாமா?” என்று குத்தலாய்க் கூறினேன்.
"பூ! எனக்கென்ன எழுதத் தெரியாதா? நன்றாயிராதா? பார்க்கிறேன் ஒருகை” என்று சொல்லி ராஜேஸ்வரி பேனாவை எடுத்து எழுதத் தொடங்கினாள். ஒரு மணி நேரம் பேனாவை வாயில் வைத்துக் கடித்த தைத் தவிர அவளால் அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நான் இதில் பிரவேசிப்பதில்லையென்று தீர்மானித்தேன். பிரவே சித்து உதவி செய்வதும் ராஜிக்குப் பிடிக்காது. 'உன் எண்ணம் என்று சொல்லி விட்டுவிட்டேன்.
芬 冰率、
கிடற்கரையில் உலாவிவிட்டு ஒரு வாங்கிலே சிறிதுநேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நிலவு அப்பொழுதுதான் புறப்பட ஆயத்தமாயிருந்தது. அங்கு நடமாடிக்கொண்டிருந்தவர்களில் இரண் டொருவரைத் தவிர மற்றவர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி
10

பரிசுக் கட்டுரை
விட்டனர். கடலலைகள் ஒன்றையொன்று விட்டுத் துரத்தி மோதி விளையாடின. அதிலிருந்தெழும் நுரையைப் பார்த்துக்கொண்டே நான் சொன்னேன், "ராஜி, நீ அதிஷடசாலிதான்” என்று.
ராஜியின் முகத்தில் ஒரு முல்லைக் குறுநகை தோற்றியது. "சும்மா ஏன் முகஸ்துதி கூறுகிறீர்கள்? அப்படி எனக்கேதாவது அதிஷடம் இருந்தால் அதில் பாதி உங்களுக்குந்தானே” என்றாள் அவள்.
"அதெப்படிச் சொல்வாய்? உன்னுடைய உருவகத்தினால் நீ வெற்றி பெறுகிறாய். நானோ அவ்வளவு அறிவாளியல்ல. எனது கட்டுரைதான் குப்பைக் கூடைக்குள் போய்ச் சேர்ந்துவிட்டதல்லவா? உனது கட்டுரை போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இனி அது பரிசு பெறுவது நிச்சயம். இந்தப் பெருமை உனக்கா எனக்கா?”
“நிச்சயமாய் எனக்குத்தான்!” என்றாள் ராஜி. இப்பொழுது எங்கிருந்தோ அகங்காரமும் பெருமையும் அவளுக்கு வந்து சேர்ந்தன. கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தாள். எனக்கு இந்த நிலை ஆச்சரியமாகத் தானிருந்தது. பின்னும் அவள், "அதெல்லாம் பாருங்கோ, அதிஷடம் கிதிஷடம் ஒன்றுமில்லை. நானனுப்பிய கதை உண்மையில் விசேஷ மானதுதான். அதில் வரும் கதாபாத்திரங்கள் உயிருள்ளவை. வெறுமனே கதைக்காகச் சோடிக்கப்பட்ட பொம்மைகளல்ல. ஜீவன் நிறைந்த கதை அது. நீங்கள்தான் பார்த்தீர்களே, அதில் கிருஷ்ணமூர்த்தி என்ற கதா பாத்திரத்தின் வாயினால் எவ்வளவு உலகானுபவங்களை, நிதி மொழி களை எடுத்துப் புகட்டப்பட்டிருக்கின்றது என்று?”
"அது பழையகால சம்பிரதாயம். இந்த நாட்களிலே இப்படி நீதி வாக்கியங்களும் முதுமொழிகளும் சனங்களுக்குப் பிடிக்காது. நேரே விஷயத்தைச் சொல்லிவிட வேண்டியதல்லாமல் பிரசங்கம் செய்து கொண்டிருந்தால் அலுப்புத் தோற்றிவிடும்.”
"அதெல்லாமில்லை. சொல்லும் பாவனையில் தங்கியிருக்கிறது அது குழந்தைகளுக்குச் சர்க்கரையில் வைத்து மருந்தையும் சேர்த்துக் கொடுத்து விடுகிறார்களல்லவா? அது மாதிரி லேசாக ஒவ்வொன்றையும் புகுத்தி விட்டால் போகிறது”
"துப்பறியும் அந்தப் பெண் இவ்வளவு பயங்கரமான - நம்பத்தகாத - காரியங்களைச் செய்வது இயற்கைக்கு மாறாகவில்லையா? கதையென் றால் கற்பனையைக் கடந்து விடுவதா?”
"யாரோ சில நவயுக எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ளும் போலி விமர்சனக்காரர் கதைகளை நம்பிக்கொண்டு என்னுடன் வாதாட வந்துவிட்டீர்களாக்கும் எது இயற்கை, எதுதான் இயற்கையில்லை என்று உங்களால் வரையறுத்துச் சொல்லமுடியுமா? தெருவிலே போனவனை மோட்டார் அடித்து விழுத்தினால் அது இயற்கை, ஆனால், மோட்டார் ஒருவன் மேல் தாக்கிவிட அந்த மோட்டாருக்கே காயமென்றால்
11

Page 25
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
இயற்கையல்ல என்று சொல்வீர்களாக்கும்? ஏன், அம்மாதிரி ஒரு சம்பவம் சிலநாட்களுக்கு முன் கொழும்பில் காலி றோட்டிலே நடை பெற்றதை நீங்கள் பத்திரிகையில் படிக்கவில்லையா?”
“சரி, சரி, உன் கட்டுரைதான் திறமானது” என்று சொல்லி நான் கதையை அதிகம் வளர்க்க விரும்பவில்லை.
ராஜி விடுவதாயில்லை. "நீங்கள் எழுதிய ‘கண்ணிர்கடல்தான் திறம் என்று சொல்லவும் எண்ணமோ?” என்று கிண்டத் தொடங்கினாள் அவள். “உங்கள் கதாநாயகிதான் என்ன தீரச்செயல்களைச் செய்து விட்டாள்? சதா அழுதமுஞ்சி. அடுக்கடுக்காகத் துன்பங்கள். கடைசியாக ஆற்றிலே விழுத்திவிட்டீர்கள்! கொஞ்சமும் தாகூடிண்யமற்ற மனிதர் நீங்கள்! இது ஒரு சம்பிரதாயமாம் இந்தக் காலத்தில், சில வங்காளக் காரரைப் பின்பற்றி யாராவது ஒரு இளம்பெண்ணைக் கொண்டு போய் ஆற்றிலோ குளத்திலோ தள்ளிக் கொன்றுவிடுவதுதான் சிறுகதைகளுக்கு லகூஷியம் என்று கைக்கொண்டிருக்கிறார்கள்! துக்க சமாச்சாரம் நிறைந்ததுதான் உணர்ச்சிகளைத் தட்டிவிட்டு அனுதாபத்தை வருவிக் கும் என்ற நோக்க மாம்! ஆகத்தான் என்ன பெண்கள் பிசாசுகளா இப்படிக் கோரப்படுத்து வதற்கு?”
“சரி, சரி, உன்னோடு பேசுவதற்கு என்னால் முடியாது. வழவழ’ என்று வாயுளையாமல் பேசிக்கொண்டிருப்பாய். வா வீட்டுக்குப் போகலாம், நேரமாகிவிட்டது” என்று சொல்லிக்கொண்டு எழுந்தேன் நான்.
"முடியாது, நீங்கள் மரியாதையாகத் தோல்வியை ஒப்புக் கொள்ளுங் கள். என்னுடைய கட்டுரைதான் விசேஷமென்று சொல்லுகிறீர்களா இல்லையா?” என்று ராஜி பிடிவாதமாக நின்று கொண்டாள்.
வேறு வழியில்லை. நான் தோல்வியை ஒப்புக்கொண்டுதானே ஆக வேண்டும்? ஆத்திரம் உள்ளே கிடந்து அறுத்துக் கொண்டிருந்தது. அந்தப் பெருமைக்காரியோ விடுவதாயில்லை. வாக்குவாதத்திலிருந்து தப்புவதற்காக, "ஆமாம், உனது கட்டுரைதான் விசேஷம்” என்று சொல்லிவிட்டு நடந்தேன். ராஜி தனக்கு வந்த சிரிப்பையடக்கிக் கொண்டு பக்கத்தில் நடந்தாள்.
冰冰冰
ருெஷப்பிறப்பு நெருங்கிவிட்டது. அன்றொருநாள் கடைத் தெரு விலே பார்த்துவந்த ஜரிகை போட்ட பட்டுப்புடவையை வாங்கித்தர வேண்டும் என்று ராஜி இட்ட கட்டளையை எப்படி நிறைவேற்றுவதென்று ஆலோசித்துக்கொண்டே காலையில் எழுந்து எனது நண்பன் ஒருவனைக் காணச் சென்றுவிட்டேன். எனக்கு மனம் நிம்மதியாயில்லை. மாதத் தொடக்கத்தில் சம்பளமெடுத்து அது முழுவதும் கடன்காரருக்குப் போய்
12

பரிசுக் கட்டுரை
விட்டது. இப்பொழுது வருஷப்பிறப்புச் செலவுக்கு யாரிடம் போவது? ராஜிக்கு ஒரு புடவையாவது எடுத்துக் கொடாவிட்டால் அவள் இருக்க விடமாட்டாள். என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டே நடந்தேன். மணி பத்தாகிவிட்டது வீடு திரும்பும்போது. வாசலில் என்னை
எதிர்பார்த்தபடி நின்றாள் ராஜி. அவள் முகத்தில் ஒரு ஆவல் துடித்துக் கொண்டிருந்தபோதும் அவள் அதைப் பாடுபட்டுச் சமாளிக்கப் பார்த் தாள். அவளையறியாமல் சிரிப்பு வந்தது. கண்கள் துடித்தன. கைகளி ரண்டும் பின்னாலே ஏதோ ஒரு பொருளை மறைத்து வைத்திருந்தன. நான் வாசலினுள்ளே காலெடுத்து வைத்ததும், "இவ்வளவு நேரமாக எங்கே போயிருந்தீர்கள்” என்றாள் அவள்.
"அதெல்லாம் உனக்குச் சொல்லிக் கொண்டிருக்கத்தான் வேண்டுமோ?” என்று கேட்டுக்கொண்டே நான் போய் ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். ராஜியும் கூடவந்து அந்த நாற்காலியின் சட்டமொன்றில் உட்கார்ந்துகொண்டே "இதைப் படியுங்கள்!” என்று சொல்லி ஒரு பத்திரிகையை என் மடியில் விரித்து வைத்தாள்.
அந்தப் பக்கத்தை நான் பார்த்ததும் அப்படியே ஸ்தம்பித்துப் போனேன்!
“சிறுகதைப் போட்டி முதலாவது பரிசு ரூபா நூறும் ‘கண்ணிர்க் கடல்
என்ற கட்டுரை எழுதிய ரீமதி ராஜேஸ்வரிக்கு அளிக்கப்பட்டுள்ளது."
"அடி திருடீ! என்ன காரியம்..” என்று நான் ஏதோ பேசுவதற்கு ஆரம்பிக்க விடாமல் ராஜி என் வாயை இறுகப் பொத்திக்கொண்டாள்! பிறகு என் தோளிற் சாய்ந்து காதோடு காதாக, “அதற்கென்ன, உங்கள் பெருமையை நான் - உங்கள் மனைவி - திருடிக்கொள்ளலாகாதா? அப்பொழுது நீங்கள் என்னிடம் தபாலில் சேர்க்கும்படி தந்தபோது நான் பெயர்களை மாற்றி எழுதிவிட்டேன்! அதற்கு நஷ்டஈடு வேண்டுமானால் இந்தாருங்கள்!” என்று சொல்லி என் கையில் நூறு ரூபா செக் ஒன்றைக் கொடுத்தாள் ராஜி!
"இதற்காகத்தானா இத்தனை நாட்களும் உன் கட்டுரையைப் பற்றி ஏதோ பிரமாதமாகப் பேசிக்கொண்டு திரிந்தாய்?” என்று நான் கேட்டேன்.
நானா சொன்னேன்? நீங்கள்தான் அன்றொரு நாள் என்னுடைய கட்டுரையே விசேஷமானதென்று உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள வில்லையா? இப்போது நான் சொன்ன புடவையை மாத்திரம் மறந்து போக வேண்டாம்” என்று சொல்லி அந்தக் குறும்புக்காரி கலகலவென்று சிரித்துக்கொண்டே சமையலறைக்குள் ஓடிவிட்டாள். கடைசியாக, எனது கட்டுரைபெற்ற பெயரும் பரிசும் அவளுக்குத்தான்! நான் தோல்விதானே?
"ஈழகேசரி ஆண்டுமலர்” 1940
13

Page 26
நாடறிந்த கவிஞர் பண்டிதர் க. சச்சிதானந்தன் 'ஆனந்தன்' என்ற புனை பெயரில் 1938-1944 காலகட்டத்தில் நல்ல சில சிறுகதைகளைப் படைத் துள்ளார். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இவர், 1921இல் பிறந்தார். ஈழத்தின் மூத்த படைப்பாளி பட்டதாரி, பண்டிதர், முதுகலைமாணி ஆனந்தத் தேன்' இவராக்கிய கவிதைகளின் தொகுதியாகும். அன்னபூரணி 'ஈழகேசரியில் இவர் எழுதிய நாவல். யாழ்ப்பாணக் காவியம் இவர் யாத்த காவியம். தமிழர் யாழியல் இவரது சிறப்பான ஆய்வுநூல். ஒய்வுபெற்ற ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர். எண்பது வயதுப் பேரறிஞர்.
தண்ணிர்த்தாகம்
ஆனந்தன்
I
Lங்குனி மாதம். வெயில் மிகவும் காய்தலாக அடித்துக் கொண்டி ருந்தது. றோட்டில் அவ்வளவு நடமாட்டமில்லை. தூரத்தில் மாத்திரம் ஒருவன் குடை பிடித்துக்கொண்டு வியர்க்க வியர்க்க விறுவிறுக்கத் தார் றோட்டில் அவசரமாய்ப் போய்கொண்டிருந்தான். அதற்கப்பால் ஒரு கட்டை வண்டி கடா கடா என்று ஆடி ஆடி வந்து கொண்டிருந்தது. பன்னிரண்டு மணி வெயிலிலே யாரும் தலை காட்டவில்லை. பகல் முழுவதும் வெயிலிலே திரியும் நாய்கூட சுவரோரத்தில் கிடந்த சிறு நிழலில் இளைத்துக் கொண்டிருந்தது. அவ்வளவு உக்கிரமான வெயில், பலர் பகலுறக்கம் போட்டார்கள். சிலர் புழுக்கம் தாளாமல் தவித்தார்கள். செட்டியார் புதினப் பத்திரிகையோடு தூங்கி வழிந்துகொண்டிருந்தார்.
அந்த அரசமரத்தின் கீழ்த்தான் பகல் முழுவதும் மீனாட்சிக்கு வேலை. நியாஸ்தலத்துக்குப் போகும் கிளை றோட்டும் பெரிய தெருவும் கோணமாய்ச் சந்திக்கும் சந்தி அது. அந்த அரசமரத்தைச் சுற்றி வெயில் கடுமைக்கு உகந்த குளிர் நிழல். தட்டுச் சுளகிலே சின்னச் சின்னக் கூறாகக் கத்தரிக்காய், பிஞ்சு மிளகாய் நன்றாக அடுக்கிப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்தன. அவளுக்குச் சோம்பேறித்தனமோ கொட்டாவியோ இல்லை. அன்றைக்கு வியாபாரம் அவ்வளவு ருசியாகவில்லை. கோடு கலைந்ததும் பள்ளிக்கூடம் விட்டதும்தான் வியாபாரத்தின் ருசி தெரியும். கொண்டுவந்த பெட்டியைக் காலி செய்து விட்டே வீடு திரும்புவாள். அப்பொழுது அவள் உள்ளத்தில் எழுவது ஆனந்தக்கடல்தான்.
14
 
 
 
 

தண்ணீர்த் தாகம்
தலையைக் கோதிக்கொண்டே பள்ளமான அடியிற் சாய்ந்தாள். அரசமிலைகளை இடையிடையே அசைக்கும் காற்று அவள் கூந்தலை யும் ஆட்டிக்கொண்டிருந்தது. ஒரு காகம் மாத்திரம் கொப்பிலே இருந்து பலத்த தொனி வைத்தது.
அவளைப் பார்த்தால் யாருமே இழிகுலத்தவள் என்று சொல்ல மாட்டார்கள். அவளுடைய சிவந்த மேனியும் கருவண்டுக் கண்களும் யாரையும் கொள்ளை கொண்டுவிடும். அவள் ஜாதியைப் பற்றி யாருமே கேட்டதில்லை.
அப்படி அவர்கள் அறிந்திருந்தால் எப்பவோ அவள் வியாபாரத்தில் மண் விழுந்திருக்கும். ஊரார் மாத்திரம் அவளிடம் எதுவும் வாங்குவ தில்லை. அவர்களுக்குத்தான் விசயந் தெரியுமே?
வெயில் எரிய எரிய அவளுக்குத் தாகம் எடுக்கத் தொடங்கியது. பொறுத்துப் பார்த்தாள். நா வறளத் தொடங்கியது. இனி அவளால் சகிக்க முடியாது. மெதுவாக அவற்றைப் பெட்டியிலே போட்டுக்கொண்டு கிளம்பினாள். பக்கத்தில் வீடுகளில்லை. அவையெல்லாம் காய்கறி விளையும் பூமியும் பற்றைக்காடுகளுந்தான்.
செழித்த கமுகுகளும் வாழைகளும் அங்கே கிணறு இருக்க வேண்டுமென்பதை ருசுப்படுத்தின. மெல்ல மெல்ல வீட்டின் அருகே வந்தாள். தெருவழியே ஒடிய சேற்றுத் தண்ணிர் இன்னும் அந்த எண்ணத்தைப் பலப்படுத்தியது. உள்ளே பெட்டியை வைத்துவிட்டு அங்கும் இங்கும் பார்த்தாள். யாரையும் காணவில்லை.
கிணற்றைக் காணக்காண மேலும் தாகம் அவளை வாட்டியது. அடிநாவிலே சொட்டு ஜலமில்லாமல் வறண்டு போயிற்று. அந்த வெயிலின் அகோரத்திற்கு யாருக்குத்தான் தாகமில்லை!
கிணற்றுக் கட்டிலே விளக்கி வைத்த செம்பிலே நிறையக் குளிர்ந்த ஜலத்தைக் காண அவள் உள்ளமும், வாயும் அதிலே ஆழ்ந்துபோயிற்று. பாவம், அந்த விடாயை அடக்க இன்னொரு விடாய் உதவியாய் இருந்தது. தான் அந்த விடாயைத் தீர்க்க அருகதையற்றவள் என்பதை அவள் அறிவாள். இழிகுலத்தில் பிறந்த பெண்கள் எல்லாம் தாகசாந்தி செய்யக்கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார் என்பது அவள் அபிப்பிராயம். அந்தச் செம்பை மாறி மாறிப் பார்த்தாள். யாரையும் காணவில்லை.
66 III
ன்ெனடி செய்தாய் பாதகி" என்று மிரட்டல் கேட்டது அதிகார தோரணையில். .
ஏங்கி விலவிலத்துப் போனாள் மீனாட்சி. உடம்பு சொட்ட வியர்த்தது. நெஞ்சு திக்திக் என்று அடித்துக் கொண்டது. கண்கள் மிரள மிரள
15

Page 27
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
விழித்தன. அவள் தான் செய்த களவு பிடிபட்டதை எண்ணிக் கல்லாய்ச் சமைந்து போனாள்.
"உனக்கு அவ்வளவு மமதையா 'பறைச்) சிறுக்கி” என்று ஆத்திரத் தோடு ஓடிவந்தார் நடேசய்யர் விபூதியைப் பொத்திக்கொண்ட கைகள் ஆத்திரத்தால் அங்குமிங்கும் எதையோ தேடின. கோபாக்கினி கண்களி லிருந்து பறந்தது.
"அவ்வளவு நெஞ்சுத் துணிவு. கிணற்றுக்குக் கிட்ட வந்து செம்புச் சலத்திலும் தொட்டுவிட்டாயே? அனுஷ்டான ஜலத்தில் தொட உனக்கு அவ்வளவு தைரியம் வந்துவிட்டது” பல்லைக் கடித்துக் கடித்து ஆத்திரத்தோடு அவளை விழுங்கப் போனார். பாவம்( பறைப் பெண் அல்லவா? கோயிலுக்குப் போனால் எப்படிப் பிராயச்சித்தம் செய்வது என்று விட்டுவிட்டார் போலும்.
“மூதேவி நாயே, இனி என்னுடைய கிணற்றை நான் என்ன செய்வது? அனுஷ்டான பாத்திரத்தை வைத்துவிட்டு விபூதி எடுத்து வருவதற்கிடையில் இப்படிச் செய்துவிட்டாயா? இனி இந்தச் செம்பை..! நீ அந்தக் கதிரன் மகளல்லவா? என்னுடைய அனுஷ்டான ஜலத்தைத் தொட்ட நீ கொள்ளையிலே போகமாட்டாயா? சிவன் உன்னை வதைக்க மாட்டானா?”
ஒரு மின்னல் மின்னியது போல் இருந்தது. உலகமே இருண்டு மடமடத்து அவள் தலையில் கவிழ்ந்தது போல் இருந்தது. பூமியே அவள் கால்களிலிருந்து நழுவிவிட்டது. இரத்தம் நெற்றியிலிருந்து குபிரிட்டது. களங்கமற்ற பார்வைக் கண்ணிரோடு இரத்தம் சேர்ந்து ஒடியது. செம்பு அலங்கோலமாய் உருண்டு போய்விட்டது. அது அவள் கனிவாயைப் பற்றப்போய்த் தோல்வியடைந்ததற்காக அழுது கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தது.
“மூதேவி, இனி இந்தப்பக்கம் தலைகாட்டு, உன் தலையை நுள்ளி எடுத்துவிடுகிறேனோ இல்லையோ பார். உனக்கு இது போதாது போ நாயே வெளியே. சனியன்கள் வீட்டில் வந்து கூசாமற் கால் வைக்குதுகள்”
தங்கச்சிலைபோல இவ்வளவும் நின்ற உருவம், இரத்த ஆற்றோடு பெயரத் தொடங்கியது. பெட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு மெதுவாக வெளியே போய்விட்டாள். அவர் எறிந்தபோது வாய்ச்செம்பு அவள் நெற்றியில் நன்றாய்க் கணிரிட்டுவிட்டது. தீண்டாமை அசுரனின் அசுரத்தன்மை அவள் பிறைநுதலில் இரத்தத்தை வாங்கி விட்டது.
பாவம் தாகவிடாய் தீர்ந்தபாடில்லை. களவுக்கேற்ற தண்டனை கிடைத்து விட்டதல்லவா? ஒரு பிராமணனின் அனுஷ்டானப் பாத்திரத்தைத் தொட்டுவிட்டாளல்லவா? எவ்வளவு பொல்லாத கோரக்களவு. இதற்கு இந்தத் தண்டனை போதுமா? சிவனுடைய
16

தண்ணிர்த் தாகம்
அனுஷ்டானத்தை முடிக்க விடாமல் தண்ணிரைத் தொட்டு தீட்டாக்கி யவளல்லவா? பெண்ணைத் திட்டிய திட்டுக்களைப் பார்த்துப் பகவான் சிரித்துக்கொண்டிருந்தார். "என் பிள்ளையின் கடுர நா வரட்சியைத் தணிக்காத உனக்கு என்மீது ஒரு அன்பா? உன்னுடைய அனுஷ்டானம் கொடிய நரகிற்கு வாயிலல்லவா” என்று அழுகையோடுதான் அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.
சந்திரனுக்கும் இவள் முகத்திற்கும் நெடுங்காலம் ஓர் வித்தியாசம். அது இன்றோடு பூர்த்தியாகிவிட்டது. அவள் மதிவதனத்திலும் மறு ஏற்பட்டுவிட்டது.
ஏழையின் தண்ணிர் விடாய் என்றுதான் தீருமோ?
III
நடுநிசி, எங்கும் ஒரே நிசப்தம். ஆனால் அறைகளில் இருமும் சப்தமும் குழந்தைகளின் கீச்சுக்குரலும் இன்னும் ஒழிந்தபாடில்லை. ஐயோ அம்மா’ என்று அடுத்த அறைகளில் வியாதிக்காரர் கஷடப் பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. குழந்தைகளைத் தாலாட்டும் தாய்மாரின் பல தினுசான குரல். அங்கங்கே மின்சார விளக்குகள் தூக்கிக்கொண்டிருந்தன.
ஒரு கிழவன் பூநூலை இழுத்துவிட்டுக் கொண்டு மூலையிலே செருமிக் கொண்டு நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான். கஷடப்பட்டுக் கஷடப்பட்டு முக்கி முனகிக் கொண்டிருந்தான். அவனை யாரும் கவனிப்பார் இல்லை. அவன் சுற்றமெல்லாம் இன்று அவனைக் கைவிட்டுவிட்டன. அவன் அவர்கட்கெல்லாம் என்ன செய்தான்? ஒரே ஒரு பிழை. வாலிபமாய் இருந்த காலத்திலே தெரியாமல் தூரத்திலே உள்ள வெள்ளாளப் பெண்ணைப் பார்ப்பனத்தி என்று கல்யாணம் செய்தான். சிலநாட்கள் சென்றதன் பின் சுற்றம் எல்லாம் அவனை இகழ்ந்துதள்ளிவிட்டது. அதன் பின்புதான் அவனுக்கு விஷயம் புரிந்தது. தான் வெள்ளாளப் பெண்ணைக் கட்டிவிட்டான் என்று உணர்ந்ததும் மெல்ல அவளைக் கைவிட்டான். பெண்வழியால் லாபமும் இல்லை. இனசனமும் இல்லை. இன்றுவரையும் தனியேதான் காலந் தள்ளினான். இன்றைக்கு வியாதியாய்ப் போனான். கவனிப்பார் இல்லை. தர்ம ஆசுப்பத்திரியிலே கிடக்கிறான்.
அவனுக்கு மேலும் மேலும் மூச்சுவாங்கத் தொடங்கியது. தண்ணிர் விடாயெடுத்தது. அடிநாவிலே ஈரலிப்பில்லை. இருமி இருமி வரண்டு போயிற்று. தாகவிடாய் வரவர அதிகரித்தது. பேச்சுக் கொடுத்தாலோ இருமல் வாட்டுகிறது.
"அம்மா, தண்ணிர்! நாவை வறட்டுகிறது" என்று சொன்னான் அந்தக் கிழவன் கெஞ்சும் குரலில், பதிலே இல்லை. அடுத்த அறையில் இருந்து ஒரு இருமல்தான் அதற்குப் பதில், கொஞ்சநேரம் நிசப்தம்.
17

Page 28
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
"அம்மா, என்னால் சகிக்க முடியவில்லை. தண்ணிர் விடாயால் செத்துப் போய்விடுவேன். தண்ணிர் கொடுங்களம்மா.”
யாருமே மூச்சு விடவில்லை. தாதிகள் எல்லாம் ஒரே உறக்கம் போலும்,
ஒரு பெண்ணுருவம் அந்த மூலையருகே வந்தது. ஆமாம் அவளும் ஒரு தாதிப் பெண்தான். அந்த ஆஸ்பத்திரியில், காலதேவன் கீறிய கோடுகள் பதிந்த அவன் முகத்தை உற்றுப் பார்த்தது. ஆனாலும் அந்த முகம் அவளுக்குச் சட்டென்று ஞாபகம் வந்தது. கிழவன் தண்ணிருக் காக வாயைத் திறந்தான்.
"ஐயா, ( பறைச்சி) தொட்டுத் தண்ணிர் தந்தால் குடிப்பீர்களா? தாங்கள் பிராமணரல்லவா?” என்றாள் அவள்.
"அம்மா, அம்மா, குழந்தாய், பிராமணனானாலென்ன? பறையனா னாலென்ன? என் தாகத்திற்கு நீர் கொடம்மா! கொடிய மரணதாகம் நெஞ்சை அடைக்கிறது.”
அவள் ஒரு சின்னப் பாத்திரத்தில் இளஞ்துடான நீரைக் கொண்டு வந்தாள். கிழவன் விடாய் அலாதியால் வாயைத் திறந்தான். ஆகா! உள்ளம் பூரிக்க - ஆத்மா சாந்தியடைய - மெல்ல மெல்ல நீரை வார்த் தாள் பெண்மணி.
"அம்மா, இந்த மரணவிடாயில் என்னைக் காப்பாற்றினாய். உன் குலம் நன்றாக வாழட்டும். நீ யாரம்மா?”
ஐயா, என்னைத் தெரியாதா? நன்றாக உற்றுப் பாருங்கள்” என்று குனிந்தாள் அந்தத் தாதி.
“ஞாபகம் இல்லையே?”
தன் நெற்றியை அவன் முகத்திற்கு நேரே பிடித்தாள். "இதோ பாருங்கள் இந்த மறுவை. தண்ணிர் விடாய்த்து அன்றொருநாள் உங்கள் வீட்டில் வந்தேனல்லவா? தாகவிடாய் தாங்காமல் சிறுபிள்ளைத் தனத்தால் ஏதோ அனுஷ்டானச் செம்பைத் தொட்டுவிட்டேனென்று நீங்கள் செம்பால் எறிந்த காயம் இதுதான்” அவள் நெற்றியைக் காட்டினாள் கிழவனுக்கு.
கிழவன் முகம் காட்டிய குறியின் உணர்ச்சி, ஏதோ புதிதாய் இருந்தது. "ஆமாம், கதிரன் மகளல்லவா? எப்படியம்மா இங்கே வந்தாய்? தாதியாகவும் வேலை பார்க்கிறாயே?”
"ஆம் ஐயா, எல்லாம் அந்தக் கிறிஸ்தவப் பெரியாரின் கிருபைதான். அன்றைக்கு நீங்கள் தீர்க்காத தாகத்தை அந்தப் பெரியார்கள் தீர்த்தார்கள். கல்வியுமளித்து இந்த நிலைமையில் வைத்தார்கள்”
18

தண்ணீர்த் தாகம்
கிழவன் உள்ளம் வெடித்துவிட்டது. ‘என் மரண தாகத்தை நீக்கிய கரங்களுக்கா அன்று இரத்தக்கறை ஏற்படவேண்டும்! இந்த விடாய் தானே அந்தப் பசலைக்கும் அன்று!’
"அம்மா என்னை மன்னி. ஜாதிக் கர்வத்தால் அன்று உன்னை எறிந்த என்னை மனப்பூர்வமாய் மன்னி!”
கிழவன் அவள் காலடியில் விழ எழுந்தான். பாவம்! அப்படியே தொப்பென்று விழுந்தான். விடாய் அடங்கியதோடு, அவன் கண் திறக்கவேயில்லை.
"ஈழகேசரி” 12.02.1939
19

Page 29
Fழத்தின் மூத்த எழுத்தாளரில் ஒருவர் பாணன் ஆவார். இவரது சிறுகதை கள் பல ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. இப்புனைபெயரில் மறைந்துள் ளவர் எவரென அறிய முடியவில்லை.
ஆறியமனம்
பாணன்
“எப்படி மிஸ்ரர் தாமோதரம்; என்ன சாக்கு வைத்துக்கொண்டு பென்ஷன் வாங்கிக்கொண்டு வந்தீர்? டக்ரர் சபேதார் இடந்தானே மெடிக்கல் சேர்டிவிக்கேற் வாங்கினிர்? மூத்த பையன் படித்தானே கிங் கொலீஜில்; அவனையும் கொண்டுவந்து விட்டீர்களோ? அவ்விடத்துப் புதினங்கள் என்ன?” - என்றிவ்வாறு அடுக்கிக்கொண்டே வந்து உட்கார்ந் தார் சுப்பிரமணியம். நீங்கள்தானே பழைய பூடுகள்; நீங்கள் காட்டிய வழிகள் எங்களிடம் எப்படித் தப்பமுடியும்; ஒருமாதிரி பென்ஷனும் வாங்கிக்கொண்டு வந்துதான் விட்டோம். எப்படி, உங்களுக்கு இந்த யாழ்ப்பாணம் பிடித்துக்கொண்டதா, என்ன?” என்று தம் உள்ளே அவாவிய எண்ணத்திற்கு ஒரு அத்திபாரம் போட்டார் தாமோதரம்.
தாமோதரம் நாளது 1937-ம் வருஷம் டிஸம்பர் மாசத்தோடு எவ், எம். எஸ். இல் தம்மைப் பிடித்து வைத்திருந்த வேலையையும் உதறித் தள்ளிவிட்டு தம் இரண்டு புத்திரர் - மனைவியோடும் ஜன்ம தேசத்துக்கு வந்து சேர்ந்தார். அவருடைய மூத்த பையன் கோலாலம்பூரிலே கிங் கொலீஜில் மூன்றாம் போமில் படித்தவன். அவனைக் கொழும்பில் றோயல் கொலீஜில் படிக்க வைக்கலாம் என்னும் எண்ணத்தோடுதான் அழைத்து வந்தார். ஆனால் ஜன்ம தேசத்தில் அவருடைய எண்ணம், தம்மைப்போன்ற இரண்டொரு பென்ஷனர்களுடைய தரிசனத்தால் மாறிவிட்டது. அதனாலேதான் மணியம் தம்மிடம் வந்தபோது, யாழ்ப் பாணம் எப்படி?’ என்னும் கேள்வியைப்போட்டு அவரை ஒருமுறை
20

ஆறிய மனம்
விழிக்கச் செய்தார். பாவம், மணியம் எப்படி யாழ்ப்பாணத்தைப் பற்றி அறிவார். அவருக்கு வெளுத்ததெல்லாம் பால். மனதில் அப்பழுக்கில் லாத மனுஷன். மதுரநாயகனின் ஏதோ ஒரு நல்ல வினையாற் போலும், கந்தையா உபாத்தியாயர் சிபார்சு செய்தபடி - நம்பி - அவர் தமது மகன் மதுரத்தை இந்துக் கொலீஜசக்கே படிக்க அனுப்பி வைத்தார். அவன் அங்கே ஜூனியர் வகுப்பில் வாசித்துக் கொண்டு வருகிறான்.
“என்ன பேசாமல் இருக்கிறீர்கள்; மணி, மாமாவுக்கு ரீ கொண்டு வா; சீக்கிரம்” என்று தம் இளைய மகனிடம் தூண்டினார். மணியம் தலை தூக்கி உட்கார்ந்தார். "யாழ்ப்பாணம் என்ன அப்படி இப்படி ஒரு சிறிசு பட்ட ஊரா? வந்து இரண்டு மாசங்கூட ஆகவில்லை. இதற்கிடையில் நான் எதை என்ன அறிந்து உங்களுக்குச் சொல்லுவது? இங்கே மனிதர்கள் எல்லாம் ஒரு மாதிரியாய்த்தான் இருக்கிறார்கள் எனக்கு. ஒருவர் இன்றைக்கு ஒன்று சொல்லுவர்; நாளைக்கு உடனே அதை மாற்றிப் பேசுவர். ஒரு நாளைக்குக் கடவுள் இல்லை என்கிறார். மற்ற நாளைக்கு ஆ! கடவுளே இப்படியும் வரலாமோ என்கிறார். நேற்றுச் சொன்னார்: "சிங்களவர் எங்கள் சோதரர்தான்; அவர்களோடு ஒத்து ழைத்து வாழ வேண்டும்' என்று. இன்று சொல்கிறார்: "சிங்களவர் நமது விரோதிகள்; உத்தியோக வேட்டைக்குப் பாடுபடுகிறார்கள்; உத்தியோ கத்தை மடக்கிக்கொண்டு தமிழனைத் திண்டாட வைக்கிறான்’ என்று. ஒரு பத்திரிகையில் ஒருநாள் ஒருவர் எழுதுகிறார்: "எங்கள் சமயத்துப் பிள்ளை எங்கள் சமயப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும். பிற சமயத்துப் பிற பள்ளியிலே படிக்கவைத்தால் பிள்ளைகளும் பரமோக மாகி ஒன்றுக்கும் உதவாக்கரையாகிறார்கள்”
“சைவர்கள் சைவப்பள்ளியிற் படிக்கட்டும்! அப்படியே மற்றவர் களும்; அந்த நாளில் நாவலர் ஒருவர் இருந்தார்; அவர்தான் யாழ்ப்பா ணத்தை யாழ்ப்பாணம் என்று சொல்ல வைத்தவர்; எத்தனை குறைத் தமிழ் பேசும் மனிதர் யாழ்ப்பாணத் தமிழைக் கண்டு மயங்குகின்றார் கள்; சைவம் - தமிழ் இரண்டுக்குமாகப் பிறந்தவர்தான் நாவலர்.’ என்று, மற்றொரு நாள் மற்றொரு பத்திரிகையிலே ஒருவர் எழுதுகிறார். அப்பா, எங்கள் பிள்ளை உத்தியோகம் பார்க்கவேண்டும். வைத்தியராவதற்கு நல்ல படிப்பு வேண்டும். நல்ல படிப்புள்ள பள்ளிக்குத்தான் நமது பிள்ளைகளையும் அனுப்ப வேண்டும். நல்ல உபாத்திமாரில்லாமல் சம்பளத்தைக் கருதிப் படிப்பிக்கிற உபாத்திமாரிடம் எங்கள் பிள்ளைகளை அனுப்பி, அவர்கள் மூளையைக் குழப்புதல் கூடாது. பிள்ளை உத்தியோகமான பிறகு சமயத்தையோ தமிழையோ கட்டியழட்டும்! எல்லாம் வயிறு குளிர்ச்சியாக இருந்தால்தானே வரும்.’ என்று. பாரும் இன்னும் எத்தனை? ஒருநாளைக்கொருவிதம்! பனையடி போகமுன் ஒருவிதம் - பின் வேறு ஒருவிதம். அப்பப்பா! எனக்கு ஒன்றுமாய்ப் புரியவில்லையே!” என்று இவ்வாறு தம் மனசில் இரண்டு மாசமாகக் குமுறிக்கொண்டிருந்த எண்ணங்களை எல்லாம் கொட்டி அளந்தார்.
21

Page 30
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
தாமோதரம் திறந்த வாய் மூட மறந்தே கேட்டுக்கொண்டிருந்தார். மணி கொண்டு வந்த 'ரீ அப்படியே கிடந்து ஆறியது! தாமோதரத்தின் சம்சாரம் கதவோரத்தில் நின்று இப்பிரசங்கமெல்லாம் கேட்டவள், ஒரு பெருமூச்சுடன் சமையலுட் போனாள். தாமோதரம் மணியத்தின் வரவையே எதிர்பார்த்திருந்தவர் மற்றொன்றையும் கவனித்தாரில்லை. தாயின் சமிக்ஞைப்படி போன மணி சுடச் சுடக் காப்பியுங் கொண்டுவந்து "மாமா காப்பி குடியுங்கள்” என்று வேண்டினான். அப்பொழுதுதான் அந்த இருவரும் தம்மை உணர்ந்தார்கள்.
"மாமா, மதுரமண்ணா எங்கே படிக்கிறான்? அவன் ஸ்கூலால் வந்த பிறகு கூட்டி வருகிறீர்களா? அண்ணாவும் பார்க்கவேண்டும் என்று சொன்னார்; ஏன், அவன் இங்கேதானே படிக்கிறான்”
தம்பீ, மாமாவுக்கு வெற்றிலை வாங்கிக்கொண்டு வாரும் அம்மா விடம்.” மீனாகூஷி உள்ளே தயார்படுத்தி வைத்திருந்த வெற்றிலைத் தட்டுடன் வந்து சேர்ந்தான் மணி.
"மிஸ்ரர் மணியம், என் மூத்த பையன் இருக்கிறானே சிற்றம்பலம்; அவனைக் கொழும்பில் றோயல் கொலீச்சுக்குப் படிக்க அனுப்பலாம் என்றுதான் இருந்தேன்; அவர் பொன்னம்பலமும் சோமரும் சொன்னார் கள்: ‘அங்கே வீண்செலவு என்று; தாங்களும் தங்கள் மக்களை அந்தப் பாதிரியார் பள்ளிக்கே அனுப்பியிருக்கிறார்களாம்; என்னை அங்கேதான் அனுப்பச் சொன்னார்கள். நானும் பார்த்தேன் - அது பழுதில்லைப் போலத்தான் இருக்கிறது! முந்தாநாள் அங்கே போனேன் - பெரிய உபாத்தியார் எல்லா இடங்களையும் காட்டினார்; என்ன! ஸயன்ஸ் றுாம் - ஜியோக்றபி றுாம் - ஹைஜீன் றும் - பிறேயர் ஹோல் - ஆ! என்ன அழகான டொமிற்றறி! பாத்றுாம் ஊ! எல்லாம் என்ன செளகரியம்! இரண்டு பேரையும் அனுப்பினால் ஒன்றரைச் செலவில் படிப்பிக்கி றார்களாம்" - இவ்வாறு தாமோதரம் தமது விஷயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டார்.
“ஏதோ எனக்கு அவ்வளவு பிடிமானமாக இல்லை; எப்படி இருந்தாலும் அவர்கள் அந்நியர்கள்தானே; தாழ்விலும் கவனிப்பார்களா என்ன; இப்போது பச்சையாய்த்தான் இருப்பார்கள்; பிறகு எப்படிப் போகுமோ யார் கண்டார்? அந்தக் கந்தையா உபாத்தியாயர் ஒரு நல்ல மனுஷன்; அவர் சொன்னார் சொன்னபடி அந்த இந்து கொலீச்சுக்கே மதுரத்தை அனுப்பி இருக்கிறேன்; பாடுபட்டுத் தேடிய பணம் அப்பா! கடவுள்தான்.” சுப்பிரமணியம் விடைபெற்றுச் சென்றார். அவருடைய வார்த்தைகளால் தாமோதரத்தின் மனசில் ஒரு மெல்லிய திரை வீழலா யிற்று. அந்தத் திரைக்கூடாகவும், பூர்வபீடிகைகளையே அவர் கண்டார்.
ஒரு கிழமை கழிந்தது. சிற்றம்பலத்தையும் மணியையும் தாமோதரம் தாம் நினைத்த அந்தப் பள்ளிக்கூடத்தில் ஒன்றரைச்
22

ஆறிய மனம்
செலவுடன் எத்தனையோ பிளிஸசகள் பண்ணிச் சேர்த்துவிட்டார். முன் பணமாகவும் ஒரு சிறு தொகை கட்டப்பட்டது. வெள்ளிக்கிழமை சிற்றம்பலமும் மணியும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தார்கள். அம்மாவிடம் போய் ஏதோ முறையிட்டார்கள். (அந்தப் பள்ளிக்கு இனிப் போகமாட்டோம் என்றுதான்!) தாய் கெஞ்சியும் பார்த்தாள்; மணி ஒரே பிடிவாதமாய் நின்றபடியால் மீனாகூழியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள் - பிள்ளைப் பாசத்தால் சகல விஷயங்களையும் தெளிவாக அவளுக்குச் சிற்றம்பலம் சொல்லி வைத்தான்.
தமது இரத்தினங்களின் படிப்பையும் பள்ளியையும் பற்றி அறிய ஆவலோடிருந்த தாமோதரம் அவர்கள் படித்துக் கொண்டிருந்த அறைக்கே வந்துவிட்டார். அங்கேதான் மீனாகூழியும் அவர்கள் படிப்பதை ஆசையாய்ப் பார்த்துக்கொண்டு இருந்தாள். தாமோதரம் ‘மணி! எப்படியடா பள்ளி? உபாத்தியாயர் பிடித்துக்கொண்டதா?’ என்று தம் வேட்கையைப் புலப்படுத்தினார்.
"ஹசம் - ஐயா, நான் அந்தப் பள்ளிக்கு இனிப் போகமாட்டேன்; அண்ணாவும் வரார் ஈவூம்!” என்றான் தாயின் புன்சிரிப்பிற் கடைக் கண்ணை எறிந்து கொண்டே!
"ஏன்? அங்கே என்ன? அடித்தார்களா?”
“சை - இல்லை.”
"பின் எதற்காக மாட்டாய்?"
"அம்மாவைக் கேளுங்கோ.”
"ஏன் பெரியதம்பி, பள்ளிக்கூடம் பிடிக்கவில்லையோ? மணி குழப்படி பண்ணுகிறானோ?”
"அப்படி ஒன்றும் இல்லை, ஐயா, பள்ளிக்கூடம் நன்றாய்த்தான் இருக்கு. உபாத்தியார்களும் அப்படித்தான்! ஆனால் எல்லாம் ஒரு புது மாதிரியாக இருக்கு காலையில் பிறேயர் ஹோலில் என்னமோ எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள்! அதில் ஒன்றும் விளங்காத ஒரு பாடம்! அவர்கள் சொல்லித் தருகிறதை அப்படியே சப்பித் தின்னவேண்டும்! அங்கே எல்லாரையும் பார்க்க வேறுவிதமாய்த்தான் தோன்றுகிறார்கள்! அப்பா, நாங்கள் ஏன் அந்த அந்நிய மதப் பள்ளியில் படிக்க வேண்டும்? எங்கள் சமயத்தில் எங்கள் சமய உபாத்தியார் படிப்பிக்கிற பள்ளிக் கூடங்கள் யாழ்ப்பாணத்தில் இல்லையே? இருக்கின்றனதானே? என்னு டைய மனசுக்கு சரியென்று ஒன்று செய்தல்கூட மிகப் பெரிய குற்றமாக இருக்கிறதே! எங்கள் மனிதர் படிப்பிக்கும் பள்ளியில்தான் படிக்க வேண்டும். இல்லையேல் படிப்பே வேண்டாம்” என்று சிறிது அழுத்தந் திருத்தமாகச் சொன்னான்.
23

Page 31
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
தாமோதரம் சிறிது நேரம் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். "தம்பி, அங்கேதான் படிப்பு நல்லாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்களே! பழக்க வழக்கமும் தான்; நீ கொஞ்சம் விருப்பம் வைத்துத்தான் சிறிது காலம் அங்கே படித்துப் பாரேன்” என்றார்.
"ஐயா, நான் அந்தப் பள்ளிக்குப் போதல், என்னவோ ஒருபொழுதும் முடியாது; சும்மா இருப்பேன்; சுதந்திரமும் போகாது" என்று அவன் முணுமுணுத்தான்.
தம்பி, இந்தக் கிழமையும் போய் வா; நான் பெரிய வாத்தியாரோடு எல்லாம் பேசி ஒழுங்கு பண்ணுகிறேன்; மனசைக் கஷடப்படுத்தாதே?”
"ஐயா, அம்மாவிடம் அல்லாமல் ஒரு சட்டைக்காரியிடம் என்னைச் சோறு வாங்கிச் சாப்பிடச் சொல்வது போல இருக்கிறது; நீங்கள் அங்கே போகச் சொல்லுவது; ஏன் இந்த ஊரில் வேறு பள்ளிக்கூடம் இல்லையா நாங்கள் படிக்க” என்று சிறிது கம்பீரத்துடன் சொன்னான் சிற்றம்பலம்.
"சைவப் பள்ளிக்கூடம் எத்தனையோ இருக்கிறதுதான் தம்பி; கல்வி நன்றாயில்லையே - என்ன செய்வது? சும்மா காசைக் கொட்டுகிறதா?”
"அப்படியானால் அதற்கேற்ற வழிகளை செய்யவேண்டியது சைவர் கள் எல்லாருக்குங் கடமைதானே! உங்களுக்கும் அது உரியதுதானே?”
"நான் என்ன செய்ய முடியும்? நான் ஒருவன் சொன்னால் கேட்பார் 956Tit?"
"ஐயா, இப்படியே ஒவ்வொருவரும் நாம் என்ன செய்வது; நம் பாட்டைப் பார்ப்போம் என்று இருந்தால் காரியம் எப்படி உருப்படும்”
"சரி, சரி. எத்தனை பென்ஷனர்மார்கள் இப்படிச் சொல்லிச் சொல்லி, தம் மந்த புத்தியால் தமது பிள்ளைகளை அநியாயமாகத் திருப்ப இடங் கொடுத்தார்களோ? தனிப்பட்ட முறையில் ஒன்றும் செய்ய முடியா விட்டாலும், சேர்ந்தாவது சைவர்களைக் கண்விழிப்பிக்கச் செய்ய வேண்டியது எங்கள் கடமைதான்! அன்று மணியம் சொன்ன போதும் நான் உணரவில்லையே!”
மீனாகூழி உள்ளூர வந்த மகிழ்ச்சியைக் காட்டிக்கொள்ளாமலே சமையலுள்ளுட் சென்றாள்.
“ஈழகேசரி" 1,1,1939&8.1.1939
24

H, த்திற்குப் புகழ் சேர்த்த புனைகதையாசிரியர் சம்பந்தன் ஆவார். இவருடைய இயற்பெயர் க. திருஞானசம்பந்தன். 'கலைமகள்' 'கிராம ஊழியன்', 'மறுமலர்ச்சி', 'ஈழகேசரி முதலான பத்திரிகைகளில் இருபதிற்கு யேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அல்லயன்ஸ் கதைக்கோவை . இவரது 'விதி சிறுகதை இடம்பிடித்துள்ளது. சம்பந்தன் கதைகள் வரது சிறுகதைத் தொகுதியாகும். 'சாகுந்தல காவியம் அன்னாரது
1விய நூல். அவரது தர்மவதிகள் நவீன இலக்கியத்திற்குக் கிடைத்தி பூக்கும் புத்திலக்கியமாகும்.
வாழ்வு
சம்பந்தன்
திெர் எதிராக அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களது உள்ளங்கள் வேறுவேறு பாதையில் சென்று கொண்டிருந்தன. அவர் களைச் சூழ்ந்து ஒருவித அமைதி நிலவியது.
அவள் தன்னைப் பற்றிச் சிந்திக்கவில்லை என்றுஞ் சொல்ல முடியாது. அவன் சம்பந்தமான நினைவுகளில் தானும் சம்பந்தப்பட்டுக் கொண்டேயிருப்பதை அவள் நன்றாக உணர்ந்திருந்தாள். அவனுக்கு அப்படி ஒரு நம்பிக்கை உண்டாகும்படி அவள் ஒருநாளும் நடந்ததே இல்லை. ஆனாலும் அவன் நம்பியிருந்தான். அந்த நம்பிக்கை எந்த ஆதாரத்தைக் கொண்டெழுந்ததோ அதைப்பற்றி அவள் கவலைப் படவே இல்லை.
முதலில் நல்லவன், பரிசுத்தமானவன் என்று மட்டும் எண்ணினவள் பிறகு?. தானும் அந்த நினைவுகளுக்கு அடிமையாகியிருக்கிறாள். அப்பொழுது அதில் ஒரு அபாயமும் தெரியவில்லை. இன்றோ? மேலே அவள் சிந்திப்பதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள். அவளை அறியாமலே ஒரு மெல்லிய நீண்ட மூச்சு வந்தது.
அதேசமயம் அவனும் பெருமூச்சுவிட்டான். உடனே அவள் கேட்டாள், "என்ன யோசிக்கிறீர்கள்?” அவனும் திருப்பிக் கேட்டான்.
“முதலில் நீ சொல்லு. எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாய்?”
25

Page 32
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
அவள் ஒருமாதிரிச் சிரித்தாளே தவிரப் பதில் ஒன்றுஞ் சொல்ல வில்லை. மறுபடியும் இருவரும் மெளனமாக இருந்தார்கள். இப்பொழுது அவள் சிந்தனைகள் நிதானமாக எந்தப் பாதையிலும் செல்லவில்லை. சுழன்று சுழன்று தடுமாறி அலைந்தது. அவன் மட்டும் நினைவற்று அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ஒருவித வேதனை கலந்த உணர்ச்சியோடு இதைச் சொன்னான்.
“சாவித்திரி மனிதனாகப் பிறப்பது மிகவும் மேலானதுதான். ஆனால் அதிலும் சில கவஷ்டங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படியான கஷட நிலைகள் வரும்போதுதான் "எதற்காக மனிதனாகப் பிறந்தோம் என்ற வேதனை உண்டாகிறது. இதை நீயும் ஒப்புக் கொள்வாய் என்றே எண்ணு கிறேன்.”
உடனே அவள் சொன்னாள்: அவளுடைய பதில் நிதானமாக இருந்தது.
"மனிதனாகப் பிறப்பது மேலானதோ தாழ்ந்ததோ என்று ஆராய நான் விரும்பவில்லை. ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையைத் தானா கவே தேடிக்கொள்கிறான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதைக் காலம் கடந்த உண்மை என்றுகூடச் சொல்லலாம்"
"எல்லாவற்றையும் அவனவனே தேடிக் கொள்கிறான் என்று சொல்வதற்கில்லை. சாவை ஒருவன் தானாகவே தேடிக் கொள்கிறான் என்று சொல்லிவிடலாம். பசியை அப்படிச் சொல்லிவிட முடிகிறதா? சிலவற்றை நாமே வரவழைத்துக் கொள்ளுகிறோம் என்பதற்காக எல்லா வற்றையும் அப்படிச் சொல்லுவது தப்பு”
அவள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாளே தவிர ஒன்றும் பேச வில்லை. அவன் பிறகும் தொடர்ந்து சொன்னான்.
"உண்மையிற் சிலர் பாக்கியசாலிகள்தான். பெரும்பாலானவர் களுக்கு பாக்கியம், அதிஷடம் என்பவற்றின் அர்த்தமே தெரிவதில்லை. இந்தப் பாக்கியங்களையோ அதிஷ்டங்களையோ பற்றி அவர்கள் நினைக்கிறதுமில்லை. இவர்களுக்கு இடையிற் சிலர் இருக்கிறார்கள். இந்தச் சிலருக்கு அதிஷடமும் கிட்டுவதில்லை. அது கிடைக்கவில் லையே என்ற துக்கமும் விட்டு நீங்குவதில்லை. மனிதனைப் படைத்த தெய்வம் அவனுக்கு மூளை, புத்தி, மனம் என்ற இவைகளை ஏன் வைத்தது என்றுதான் நான் அடிக்கடி எண்ணுகிறேன்”
கடைசியில் அவன் பேச்சில் துயரத்தின் பிரதிபிம்பம் மெல்ல முகங் காட்டியது. அவளுடைய உள்ளத்திலும் அதன் சாயை படிந்துவிட்டது. ஆனால், அதை வெளிக்குக் காட்டாமலே அவள் பதில் சொன்னாள்:
நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் எல்லாம் ஒருவித மயக்கமே ஆகும். முடிவில்லாமல் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருப்பதில் ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை”
26

வாழ்வு
இந்த வேதாந்தம் அவனுக்குச் சிரிப்பையே உண்டாக்கியது. பிறகு சொன்னான்: "நீ என்னை ஜனக மகாராஜா என்று எண்ணுகிறாயா? எல்லாம் வெறும் மயக்கம், வாழ்வு அநித்தியம் என்ற இவையெல்லாம் உண்மையென்றே வைத்துக்கொள். அதற்காக என் கண்முன்னே உட்கார்ந்திருக்கும் உன்னைப் பார்த்து, 'இவளும் அநித்தியமான ஒன்று தான்’ என என்னால் எண்ண முடியவில்லை.”
பேச்சை அவ்வளவில் நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவனுடைய பார்வையிலே சொல்ல வேண்டியதை எப்படியோ சொல்லி விட்டேன் என்ற மனத்திருப்தி காணப்பட்டது.
அவளோ எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே உட்கார்ந்திருந்தாள். தடைகள், ஆசைகள், நியாயங்கள் என்று எத்தனையோ விஷயங்களை அவளுடைய மனம் தொட்டுக்கொண்டு ஓடியது. கடைசியில் குறுக்கே இறங்கி "என்னை என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
எதிர்பாராத இந்தக் கேள்வி அவனைத் திடுக்கிடச் செய்துவிட்டது. ஆனாலும் கொஞ்சம் பொறுத்துப் பதில் சொன்னான்:
"இதில் நியோ நானோ தனித்து ஒன்றும் செய்ய முடியாது. நானும் தெண்டிக்கிறேன். நீயும் கொஞ்சம் பிரயத்தனப்படு. எப்படியும் இந்த நினைப்புக்களை அழித்து விடலாம். நீ சுகமாக வாழுகிறாய் என்று தெரிந்தாலே எனக்குப் போதும். இப்பொழுது நீ என்னை மன்னிக்க வேண்டும். இவ்வளவையுமே நீ செய்ய வேண்டுமென விரும்புகிறேன்”
பிறகு அவன் ஒன்றும் பேசவில்லை. அவளும் பதில் சொல்லாமலே நின்றாள். அவன் பலமுறை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே வெளியே சென்றான்.
水冰冰
நீண்ட நாட்களாக வளர்த்த அந்த ஆசைத் தீயின் ஒரு பகுதி அந்தச் சமயம் பலவந்தமாக அவிக்கப்பட்டதேயன்றி, முற்றாக அணைய வில்லை. அது மூலைக்குமூலை பதுங்கியிருந்து பற்றி எரிந்தது. ஆயினும் அவன் தடுமாறவில்லை.
அவளுடைய நன்மையை உத்தேசித்தாவது நான் மறக்கவேண்டும். அல்லது அவளையும் படுகுழியில் விழுத்துகிற பாவம் என்னையே சாரும்.’
"உண்மையில் அவள் தந்தை எண்ணுவதில் நியாயமிருக்கிறது. அவளுக்காக இருக்கிற கணவன், என்னைவிட ஆயிரம் பங்கு உயர்ந்தவன். குணம், பதவி, பணம் எல்லாவற்றிலும் அவனுக்கு நானா இணையாவது? அவள் நன்றாக வாழவேண்டும். உயர்ந்த அன்புக்கு இப்படி நினைப்பதுதான் சாகூஷி”
27

Page 33
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
அவன் தன்னை ஒருவாறு சமாதானஞ் செய்து அமைதியடைய விரும்பினான். கழிந்த வாழ்வை ஒரு கனவுபோல மங்க வைத்துக் கொண்டே காலமும் ஓடிச் சென்றது.
米 来 来
இந்தநிலையில் எல்லா நினைப்புக்களுக்கும் ஒரு முடிவு தேடித்தர வந்ததுபோல அவனுக்கு ஒரு புது வேலை கிடைத்தது. யாரோ ஒரு பெரிய மனிதர் அதைத் தொடங்கினார். உடுக்கத் துணியும், குடிக்கக் கஞ்சியுமில்லாத ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு குருகுலம் தொடங்கப் பட்டது. அதில் அவனுடைய பங்கு நாளுக்கு நாள் வளர்ந்து விட்டது. வேண்டுமென்றே அவன் அதை வளர்த்தான் என்றுகூடச் சொல்லலாம். அவனுடைய தொண்டை எல்லாரும் பாராட்டினார்கள்.
அந்த ஏழைக் குழந்தைகளுடைய வளர்ச்சியை நாளுக்கு நாள் பார்க்கும்போதெல்லாம் அவன் பூரித்தான்; அந்த இன்பம் அவனை விடாமல் அங்கேயே அடைத்து வைத்து விட்டது.
வெகுகாலத்திற்குப் பிறகு, ஒருநாள் அவன் வெளிக்கிளம்பினான். வழியில் வரும்போது தூரத்தில் அவளுடைய வீடு தெரிந்தது. பழைய ஞாபகங்கள் ஒருமுறை வந்து மோதின. மெல்லச் சிரித்துக் கொண்டான். மனம் உள்ளே சொல்லியது: “மனிதன் எப்பொழுதும் இயற்கையான உணர்ச்சிகளை அடக்கி அழிப்பதென்பதும் இலேசில் முடிகிற விஷயம் அலல
வாசலிலே திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்று திடமாக முடிவு செய்து கொண்டு வேகமாக நடந்தான். ஆனால்? வீட்டுக்கு முன்னாலே போனதும் தன்னை அறியாமலே திரும்பினான். அவள் வாசலிலே - சற்று உள்ளே நின்றாள். அவளைக் கண்டதும் அவனால் தன்னையே சமாளித்து வழிநடத்த முடியவில்லை. அதற்குள் அவள், "ஏது, வெகு நாட்களுக்குப் பிறகு இந்தப்பக்கம்?” என்று தொடங்கினாள். "ஆமாம்” என்றது அவனது வாய். கால்கள் அசையாமல் நின்றுவிட்டன.
“உள்ளே வரலாமே" என்று அவள் மறுபடியும் ஆரம்பித்தாள்.
“வேண்டுமானால் வருகிறேன். ஏதாவது அவசியம் உண்டா?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.
"அவசியமென்ன? பார்த்தேன்; அதனாலேதான் கேட்கிறேன். பிழை என்றால் மன்னித்துக் கொள்ளலாம்தானே.”
அவன் பேச்சின்றி உள்ளே சென்று உட்கார்ந்தான்.
அவள் சமீபத்தில் நின்றபடியே கேட்டாள்;
28

வாழ்வு
"உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்கு என்னைப் பார்க்க வெறுப்பாக இருக்கிறதல்லவா?”
“எப்படிச் சொன்னால் நீ ஆறுதலடைவாய் என்று எனக்குத் தெரிய வில்லை.”
“என்னிடம் புதிர் போடுகிறீர்கள். இது ஏன்?”
"மறுபடியும் எதற்காக ஒரு நம்பிக்கையை வளர்க்க இச்சைப் படுகிறாய்?”
“இப்பொழுது நான் சுதந்திரமடைந்துவிட்டேன்.”
"நான் அடிமையாகிவிட்டேனே!”
“என்னை வருத்தவேண்டும் என்று நீங்கள் வேண்டுமென்றே பொய் சொல்லுகிறீர்கள்”
"நான் ஒருநாளும் பொய் சொன்னதில்லை. சத்தியமே பேசுகிறேன்.”
அவள் மெளனியாகி நின்றாள்.
"நான் போகலாமா?” என்று, அவன் முடிப்பதற்குள்ளாக, “உங்கள் ஆச்சிரமப் பக்கம் நானும் வரலாமா?” என்று அவள் கேட்டாள்.
“எப்பொழுது வேண்டுமானாலும் நீதாராளமாக வரலாம். வரவேற்க எத்தனையோ மலர்க் கரங்கள் நீட்டப்படும்.”
அவள் பிறகு ஒன்றும் கேட்கவில்லை. வெறுமனே பார்த்தபடி நின்றாள். அவன் எழுந்து வெளியே சென்று மறைந்தான்.
水 米 米
தொடக்கத்தில் ஒன்று இரண்டு என்று ஆரம்பித்துப் பல நூறு குழந்தைகள் வந்து சேர்ந்து அங்கே வாழ்ந்தார்கள். ஜனங்களும் நான், நீ என்று தாராளமாக உதவினார்கள். எல்லாமாக அவனை இடையீடற்ற வேலையில் ஆழ்த்திவிட்டது.
ஒரு சாயந்திரம், குழந்தைகள் தோட்டத்தில் விளையாடிக்கொண்டு நின்றார்கள். அவன் அவர்களைக் கவனித்தபடியே ஏதோ செய்து கொண்டு நின்றான். அப்பொழுதுதான் அவள் அங்கே வந்தாள். எதிர்பாராத அவளது வரவு அவனுக்கு அதிர்ச்சியை உண்டுபண்ணியது. பிறகு கிட்டப்போய், “ஏன் இந்த நேரத்தில் வந்தாய்?” என்று கேட்டான்.
"இந்த நேரத்தில் வரக்கூடாதா?” என்று அவள் திருப்பிக் கேட்டாள்.
“எப்பொழுதும் யாரும் வரலாம். காலையில் வந்தால் எல்லா வற்றையும் பார்ப்பது செளகர்யமாக இருக்கும் என்பதற்காகச் சொன்னேன்” என்று அவன் நிறுத்தினான்.
29

Page 34
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
"நாளைக் காலையிற் பார்த்துக் கொள்ளலாம்.”
நல்லது. அப்படியானால் நாளைக் காலை வந்துவிடேன்.”
"நான் போக இங்கே வரவில்லை.”
"அப்படியானால்?”
"இந்தக் குழந்தைகளுக்கும் அவர்களுடைய 'பாபுவுக்கும் தொண்டு செய்ய வந்துவிட்டேன்.”
அவனால் அசைய முடியவில்லை. அவளைப் பார்த்தபடியே
நின்றான்.
"ஈழகேசரி" 3.7.1949

ஈழத்தின் சிறுகதை மூலவர்களில் ஒருவர் சி. வைத்தியலிங்கம் ஆவார். கலைமகள்', 'கிராம ஊழியன், ஆனந்த விகடன்', 'ஈழகேசரி’ முதலான டத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 'மூன்றாம் பிறை அல்லயன்ஸ் கம்பனியின் கதைக்கோவையிலும், பாற்கஞ்சி' 'ஈழத்துச் சிறுகதைகள்’ தொகுதியிலும் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகளைக் கொண்ட தொகுதி "கங்கா கீதம்' என வெளிவந்துள்ளது. ரவீந்திரன் என்ற புனைபெயரிலும் எழுதியவர். அமரராகிவிட்டார்.
រ៉ង់
பாற்கஞ்சி
சி.வைத்தியலிங்கம்
66
UITமு, என் ராசாவன்னா குடுச்சிடுவாய், எங்கே நான் கண்ணை
மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம். நாளைக்குப் பாற்கஞ்சி.”
"சும்மா போம்மா, நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பிட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா."
"இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்ன பாற்கஞ்சி தாரனே"
"கூழைப் பார்த்தாலே வவுத்தைப் புரட்டுதம்மா. முடியாதுன்னா முடியாது” என்று சொல்லி அழத் தொடங்கினான்.
"அப்பா பசியோட காத்துண்டிருப்பாரடா வயல்லே. கூழ் கொண்டு போகணும். என்ன பாடுபட்டும் நாளைக்குக் கஞ்சி தந்துடுறனே. ஆம். என் கண்ணோல்லியோ?”
“நிச்சமாய்ச் சொல்றயாம்மா? நாளைக்குப் பாற்கஞ்சி தருவாயா?.”
சட்டென்று பக்கத்திலிருந்து சிறுவர்கள் தம்பளப்பூச்சி பிடித்து விளையாடும் சப்தம் கேட்டது. அவதி அவதியாய் பத்து வாய் கூழ் குடித்தான் ராமு, எல்லாவற்றையும் மறந்து விளையாட ஓடினான்.
அந்தக் கிராமத்தில் முருகேசனுடைய வயல் துண்டு நன்றாய் விளையும் நிலங்களில் ஒன்று; அதற்குப் பக்கத்திலே குளம். குளத்தைச்
3.

Page 35
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
சுற்றிப் பிரம்மாண்டமான மருதமரங்கள். தூரத்திலே அம்பிகையின் கோவிற் கோபுரம். இவை எல்லாவற்றையும் சுற்றி வேலி போட்டாற் போல தூங்கிக் கிடந்தன குடிமனைகள்.
米米 米
LOTர்கழி கழிந்துவிட்டது. இப்பொழுது மேகத்திலே புகார் ஓடுவது இல்லை. ஞான அருள் பெற்ற நாள் வெண்ணிறம் பெற்று வந்தது.ஆம் தை மாதம் பிறந்து துரிதமாய் நடந்துகொண்டிருந்தது.
மாரிகாலம் முழுவதும் ஓய்ந்து தூங்கிக்கிடந்த ஜீவராசிகள் பாட்டுடன் வேலை தொடங்கிவிட்டன. முருகேசனும் வயலிலே வேலை செய்து கொண்டிருந்தான். பனியிலே ஒடுங்கிக் கிடந்த நரம்புகளிலே சூரிய ஒளிவெள்ளம் பாயவே, அவன் தேகத்தில் ஒரு சுறுசுறுப்பு உண்டானது. வலிந்து இறுகியிருந்த நரம்புகள் விண்போல் தெறித்தன. எழுந்து நின்று கண்களைச் சுழற்றித் தன் வயலைப் பார்த்தான். நெற் கதிர்கள் பால் வற்றி, பசுமையும், மஞ்சளும் கலந்து செங்காயாக மாறிக் கொண்டிருந்தன. "இன்னும் பதினைந்து நாட்களில்.” அறியாமல் அவன் வாய் முணுமுணுத்தது.
முருகேசன் மனத்திலே ஒரு பூரிப்பு, ஓர் ஆறுதல், ஒரு மனஅமைதி. அவன் ஒரு வருஷமாய்ப் பாடுபட்டது வீண்போகவில்லை அல்லவா? ஆனால் இவற்றிற்கு இடையில் காரணமில்லாமல், “சிலவேளை ஏதேனும். யார் கண்டார்கள்?” என்ற இன்பமும் துன்பமும் கலந்து ஒரு மன ஏக்கம்..!
என்று அவனை
முருகேசனுக்கு வயலை விட்டுப் போக மனம் வரவில்லை. பொழுது உச்சிக்கு வந்துவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது. என்றாலும் பயிருக் குள் நுழைந்து ஒவ்வொரு கதிராகத் தன் கைகளால் அணைத்துத் தன் குழந்தைகள் போலத் தழுவிக்கொண்டிருந்தான்.
கண்ணை மின்னிக்கொண்டிருந்த அந்த வெயிலிலே காமாட்சி கூழுடன் அப்பொழுதுதான் வந்தாள். கூழ் குடித்துக் கொண்டிருக்கும் பொழுது முருகேசன் அவளைப் பார்த்து, “போன வருசந்தான் மழை இல்லாமல் எல்லாம் சப்பையும் சாவியுமாய்ப் போயிருத்து. காமு, அதோ பார். இந்த வருசம் கடவுள் கண் திறந்திருக்கிறார். கருப்பன் செட்டி கடனைத் தீர்த்துப்புடலாம். நமக்கு ஒரு வருடத்துக்குச் சோத்துக் குக் குறைவு வராது. எங்க ராமனுக்கு ஒரு சோடிக் காப்பு வாங்கணும்.”
"எனக்கு ஒட்டியாணம்.”
"ஏன், ஒரு கூறைச்சேலையும் நன்னாயிருக்குமே?”
"ஆம்ாங்க, எனக்குத்தான் கூறைச்சேலை, அப்படின்னா ஒங்களுக்கு ஒரு சரிகை போட்ட தலப்பா வேணுமே?”
32

பாற்கஞ்சி
"அச்சா, திரும்பவும் புது மாப்பிள்ளை பொம்புளையாட்டம் ரெண்டு பேரும். ஒ. ஒரே சோக்குத்தான்” என்று சொல்லி அவளைப் பார்த்து இளித்தான்.
காமாட்சி வெட்கத்தினால் தன் சீலைத் தலைப்பால் முகத்தை அரைகுறையாய் மூடிக்கொண்டு "அதெல்லாம் இருக்கட்டும். எப்போ அறுவடை நாள் வைக்கப் போறிங்க” என்றாள்.
"இன்னிக்குச் சனிக்கிழமை, சனியோடு சனி எட்டு, மற்றச் சனி பதினைந்தாம் நாள் நல்லநாள். அதே சனிக்கிழமை வைத்திடுவமே.”
"தாயே, இதுக்கிடையில் ஒரு விக்கினமும் வந்திடப்படாது” என்று மனதில் சொல்லிக் கொண்டாள்.
水 米 来
ஒரு பெருநாளை எதிர்பார்ப்பது போல் காமாட்சியும் முருகேசனும் அறுவடை நாளை எதிர்நோக்கி இருந்தார்கள். காமாட்சி தன் வீட்டில் உள்ள களஞ்சிய அறையைக் கோலமிட்டு மெழுகி வைத்திருந்தாள். லசஷ்மி உறையப் போகும் அந்த அறைக்கு ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றி வந்தாள். மணையாகக் கிடந்த அரிவாள்களைக் கொல்லன் பட்டடையிற் கொண்டுபோய்த் தேய்த்து வந்தான் முருகேசன். கதிர்ப் பாய்களை வெயிலிலே உலர்த்தி, பொத்தல்களைப் பனை ஓலை போட்டு இழைத்து வைத்தான். ஐந்தாறு நாட்களுக்கு முன்னரே அயல் வீட்டுக் கந்தையாரிடமும் கோவிந்தனிடமும் "அறுவடை, வந்திட வேணும் அண்ணமாரே" என்று பலமுறை சொல்லிவந்தான். இருவரு டைய மனதிலும் ஓர் ஆவல் துடித்து நின்று இவற்றை எல்லாம் செய்து வநதது.
அறுவடை நாளுக்கு முதல்நாள் அன்று வெள்ளிக்கிழமை. பகல் தேய்ந்து மறைய இன்னும் மூன்று நாழிகைதான் இருந்தது. நிஷகளங்க மாய் இருந்த வானத்திலே ஒரு கருமுகிற்கூட்டம் கூடியது. வரவரக் கறுத்துத் தென்திசை இருண்டு வந்தது. அந்த மேகங்கள் ஒன்றுகூடி அவனுக்கு எதிராகச் சதி செய்வதாக முருகேசன் நினைத்தான். அந்தக் கருவானம் போல் அவன் மனதிலும் இருள் குடிகொண்டது. காமாட்சி அவள் மனத்திற்குள் அம்பிகைக்கு நூறு வாளித் தண்ணிரில் அபிஷேகம் செய்வதாகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் ஒரு காற்று அடித்துக் கூடியிருந்த முகிற்கூட்டம் கலைந்து சிறிதுசிறிதாய் வானம் வெளுத்துக்கொண்டு வரவே, முன்போல் ஆகாயம் தெளிவுடன் விளங்கிற்று. தன்னுடைய பிரார்த்தனை அம்பிகைக்குக் கேட்டுவிட்டது என்று காமாட்சி நினைத்தாள்.
முருகேசன் படுக்கப் போகுமுன் அன்றைக்குப் பத்தாவது முறை கந்தையனுக்கும், கோவிந்தனுக்கும் காலையில் அறுவடையைப் பற்றி
33

Page 36
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
நினைப்பூட்டிவிட்டு வந்து படுத்துக்கொண்டான். அவன் நித்திரைக்குப் போனபொழுது நேரமாகிவிட்டது. அவன் படுக்கையிலேயே புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். நித்திரை அவனுக்கு எப்படி வரும்? அவனு டைய மனம் விழிப்பிற்கும் தூக்கத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டி ருந்தது. ஆயிரஞ் சிந்தனைகள் பிசாசுகளைப் போல் வந்து அவன் மனதிலே ஒடிக்கொண்டிருந்தன.
அவன் வயலிலே நெல் அறுத்துக் கொண்டிருக்கிறான். பக்கத்திலே கோவிந்தனும், கந்தையனும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அறுத்து வைத்ததை காமாட்சியும், பொன்னியும், சின்னம்மாவும் கட்டுக்கட்டாய் அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். கிளிகளையும் காக்கைகளையும் துரத்திக்கொண்டு திரிகிறான் ராமு. அப்பொழுது காமாட்சி; “பள்ளத்து பள்ளன் எங்கேடி போய்விட்டான்” என்று பள்ளு பாடத் தொடங்கினாள்.
அதற்குப் பொன்னி “பள்ளன் பள்ளம் பார்த்துப் பயிர் செய்யப் போயிட்டான்” என்று சொல்ல, காமு, "கொத்துங் கொண்டு கொடு வாளுங் கொண்டு.” என்று இரண்டாம் அடியைத் தொடங்கினாள்.
அதற்குப் பொன்னி “கோழி கூவலும் மண்வெட்டி கொண்டு” என்று சொல்ல, இருவரும் சேர்ந்து "பள்ளன் பள்ளம் பார்த்துப் பயிர்செய்யப் போயிட்டான்!” என்று முடித்தனர்.
உடனே காமு, “ஆளுங் கூழை அரிவாளுங் கூழை” என்று சொன்னதும் முருகேசன் “யாரடி கூழை” என்று அரைத்தூக்கத்தில் இருந்து கத்திக்கொண்டு எழுந்திருந்தான்.
முருகேசன் - ஆள் கூழை, பாவம் தன்னையே அவள் கேலி செய்வ தாக நினைத்து அப்படிக் கோபித்துக்கொண்டான். இப்பொழுது நித்திரை வெறி முறிந்ததும் தான் செய்ததை நினைக்க அவனுக்கு வெட்கமாய் இருந்தது. தனிக்குள்ளே சிரித்துக்கொண்டு திரும்பவும் படுத்துக் கொண்டான். அந்தக் கனவுதான் எவ்வளவு அழகான கனவு அதன் மீதி யையும் காணவேண்டுமென்று ஆவலாயிருந்தது. ஆனால், நித்திரை எப்படி வரப்போகிறது? கனவுதான் மீண்டும் காணப் போகிறானா? தன் கற்பனையிலே மீதியைச் சிருஷ்டித்துப் பார்த்து அவன் மகிழ்ந்து கொண்டிருந்தான். W
பாட்டுடன் அறுவடை சென்றுகொண்டிருக்கிறது. வயலிலே நின்று நெல் மூட்டைகளை வண்டியிலே ஏத்துகிறான். வண்டி வீட்டு வாசலிலே வந்து நிற்கிறது. அவனுடைய களஞ்சியம் நிறைந்து பரிபூரணமாய் விட்டது. ராமன் வயிறு நிறையப் பாற்கஞ்சி குடித்துக்கொண்டிருக்கிறான். காமு ஒட்டியாணத்துடன் வந்து அவனை.
34

பாற்கஞ்சி
அப்பொழுது வீட்டுக்கூரைக்கு மேலிருந்த ஒரு சேவல் கூவிற்று. முருகேசனுடைய கற்பனை அறுந்துவிட்டது. அக்கிராமத்திலுள்ள சேவல்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாகக் கூவிக்கொண்டு வந்தன. அவன் வீட்டுக்கு முன்னால் கட்டியிருந்த ஆட்டுக்குட்டி "மேய் மேய்" என்று கத்தத் தொடங்கியது. எங்கிருந்தோ கள்ளத்தனமாய் உள்ளே நுழைந்த மெல்லிய காற்று அவன் மேல் படவே, மீண்டும் குளிர்ந்தது. முருகேசன் பரபரவென்று எழுந்திருந்தான். வாசலை அடைந்து வானத்தை அண்ணார்ந்து பார்த்தான்.
அவன் படுக்கைக்குப் போனபொழுது வானத்திலே பூத்திருந்த நட்சத்திரங்கள் ஒன்றையும் காணவில்லை. வானம் கறுத்துக் கனத்து எதிலோ தொங்கிக் கொண்டிருப்பதுபோல் தோன்றிற்று. வீட்டு முற்றத் திலே வந்து நின்றான். ஒரு மழைத்துளி அவன் தலைமேல் விழுந்தது. கையை நீட்டினான். இன்னுமொரு துளி மற்றக் கையையும் நீட்டினான் இரு துளிகள் வீழ்ந்தன. அவன் தலையிலே வானமே இடிந்து விழும் போல் இருந்தது.
உக்கிப்போய்த் தன் வீட்டுத் திண்ணையிலே அவன் குந்திக் கொண்டான். பொலுபொலுவென்று மழை தொடங்கியது. இடி இடித்தது. மின்னி மழை சோனாவாரியாகக் கொட்டிக் கொண்டிருந்தது.
காலை ஏழுமனியாகியும் மழை விடவேயில்லை. ராமு ஓடிவந்து தந்தைக்குப் பக்கத்திலே குளிர் காய்ந்துகொண்டிருந்தான். காமாட்சி இடிந்துபோய் நின்றாள். மழையுடன் காற்றும் கலந்து "ஹோ" என்று இரைந்து கொண்டிருந்தது.
"அம்மா, இன்னைக்குப் பாற்கஞ்சி தாறதாய்ச் சொன்னியே, பொய் யாம்மா சொன்னாய்?" என்று தாயைப் பார்த்துக் கேட்டான் ராமு.
காமாட்சிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் வயிறு பற்றி எரிந்தது. பச்சைக்குழந்தையை எத்தனை நாட்களாய் ஏமாற்றி விட்டாள்? மழையையும் பாராமல் பக்கத்து வீட்டிற்கு ஓடினாள். காற்படி அரிசி கடனாய் வாங்கிக்கொண்டு வந்தாள்.
முருகேசன் ஒன்றும் பேசாமல் வானத்தைப் பார்த்தபடி இருந்தான். அவனுடைய பார்வை வயல்வெளியை ஊடுருவிச் சென்று எங்கேயோ லயித்துப்போய் இருந்தது.
வெள்ள வாய்க்காலிலே தண்ணிர் கரைபுரண்டோடிக் கொண்டி ருக்கிறது. இப்பொழுது குளம் நிறைந்து தண்ணிர் பெருக்கெடுத்துவிடும். என்னுடைய நெற்பயிர்கள் கீழே விழுந்து உருக்குலைந்துவிட்டன. நெற் கதிர்கள் உதிர்ந்து வெள்ளத்துடன் அள்ளுண்டு போய்க் கொண்டிருக் கின்றன’ என்று அவன் எண்ணி ஏங்கினான்.
35

Page 37
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
காமாட்சி களஞ்சிய அறைக்குப் போனாள். அது வெறுமனே கிடந் தது. அதைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை விம்மிக்கொண்டு வந்தது. அங்கே நிற்கத் தாங்காமல் வெளியே வந்தாள். ராமு, “நாளைக்கும் தாரியாம்மா பாற்கஞ்சி” என்று கெஞ்சிக் கேட்டான். அவன் கஞ்சி குடித்த கோப்பை அவளுக்கு முன்னே காலியாகக் கிடந்தது.
அநேக நாள் பழக்கத்தினாலே நாளைக்.” என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது. அந்த அரைகுறையான வார்த்தை
முருகேசன் வயிற்றிலே நெருப்பை அள்ளிக் கொட்டியது.
"ஆனந்த விகடன்”

இலங்கையர்கோன்' ஈழத்தின் சிறுகதை மூலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சிவஞானசுந்தரம், இலங்கை நிர்வாகசேவை அதிகாரி காரியாதிகாரி, 'கலைமகள்', 'சூறாவளி’, ‘மணிக்கொடி', 'பாரதத்தாய்', சக்தி, சரஸ்வதி', 'ஈழகேசரி, கலைச்செல்வி', 'ஈழநாடு', 'வீரகேசரி, தினகரன்' ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகளைப் படைத்துள்ளார். பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பாக, "வெள்ளிப் பாதசரம்' வெளிவந் துள்ளது. அல்லயன்ஸ் கதைக்கோவையில் இவரது சிறுகதை முதற் சம்பளம் இடம்பிடித்துள்ளது. நாடகங்களையும் எழுதியுள்ளார். அமர ராகிவிட்டார்.
வஞ்சம்
இலங்கையர்கோன்
நீல் பால் கலப்பது போல, கழியும் இரவின் மையிருளில் உதயத் தின் வெண்மை பரவிக் கொண்டிருந்தது. நிலத்தில் சிதறிக் கிடக்கும் இலைகளின் மேல் பலாமரங்கள் சொரியும் பணித்துளிகளின் ஏகதாள சப்தம் அவ்வைகறையின் நிசப்தத்திற்குப் பங்கம் விளைவித்தது. அப் பனித்துளிகளின் குளிர்ந்த ஸ்பரிசம் பட்ட மாத்திரத்தே; அருங் கோடை யின் காய்ச்சலினால் உயர்ந்து முறுகிப் போயிருந்த நிலம் ஒரு அற்புத மான மண் வாசனையைக் கக்கியது.
பலா மரத்தின் கிளை ஒன்றில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த புள்ளடியன் உறக்கம் கலைந்து, தன் வலப் புறச் சிறகிற்குள் புதைந்து கிடந்த தன் தலையை வெளியே இழுத்துச் சுற்றும் முற்றும் பார்த்தது. ‘என்ன இரவின் கரும் போர்வை அகன்று விட்டதா? சரிதான். இந்தப் பனிக்குளிரில் நேரம் போவதே தெரியவில்லை.
அந்த வைகறைப் பொழுது உயிர்த்த ஜீவசக்தி புள்ளடியனுடைய வக்கரித்த நரம்புகளிலும் பாய்ந்தது. அதற்கு உயிர் வாழ்வதில் ஒரு புது ஆசையையும் ஊக்கத்தையும் கொடுத்தது. உயிர் வாழ்வதே பெரிய இன்பம்! தினமும் வைகறையில் கண் விழித்து எப்பொழுதும் தன் உடலில் இன்னும் ஜீவன் குமுறிக்கொண்டிருக்கிறது என்ற உணர்ச்சியே புள்ளடியனுக்கு புளகாங்கிதம் உண்டாக்கிற்று.
வாழ்க்கையில் என்ன குறை? எதற்காக ஏங்கி அழவேண்டும்? வாழ்க்கையில் கோர உருவம், உருவத்திற்கு ஒரு உறுத்தும் விஷக் கொடுக்கு இருக்கிறதென்பது புள்ளடியனுக்கு இதுவரை தெரியாது.
37

Page 38
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
ஏன் தெரியப்போகிறது? அதன் ஐந்து வருட வாழ்வு பூராவிலும் அது கவலைப்பட்டதில்லை. ஆசைகள் நிராசையாகவில்லை. வேண்டிய தெல்லாம் வேண்டியபடியே கிடைத்து வந்தது. உண்பதற்கு கறகறப்பான நெல், கிளறுவதற்கு உயரமான குப்பை மேடு, சுகிப்பதற்கு நல்ல அழகான தடித்த பேடைகள்.!
புள்ளடியன் தன் இறகுகளைப் படபட என்று அடித்து, தலையை உயரத் தூக்கி, பல நாளைய அனுபவத்தால் விளைந்த ஒரு அலட்சியத் தோடு, தன் பரம்பரைப் பல்லவியைப் பாடியது. "கொக்கரக்கோ.
ஓ.ஓ!”
திடீரென்று அந்த வட்டாரமே சிலிர்த்துக் கனைத்துக்கொண்டு எழுந்தது போன்ற ஒரு பரபரப்புக் காணப்பட்டது. பனையோலைக் ‘கடகங்களை தலைமேல் சுமந்து கொண்டு பனங்காய் பொறுக்கப் போகும் சிறுவர் சிறுமியர்; கலப்பை சகிதமாக உழவு மாடுகளை ஒட்டிக் கொண்டு வயலுக்குச் செல்லும் குடியானவன்; அழுக்கு மூட்டைகளைத் தோளில் சுமந்துகொண்டு குளக்கரை செல்லும் தொழிலாளி.
பொழுது நன்றாகப் புலர்ந்துவிட்டது. புள்ளடியனும் மற்றக் கோழி களும் மரங்களை விட்டு இறங்கினர். அந்த வளவில் வளர்ந்து அந்த பத்துப் பனிரண்டு பெட்டைக் கோழிகளுக்கு புள்ளடியன் ஒரு தனி நாயகன் மாதிரி, மகாராஜாக்களைப் போல புள்ளழயனுக்கு மோகமும் எல்லையற்று இருந்தது. பெண்பித்து மகாராஜாக்களுக்கு இருப்பது போலவே, புள்ளடியனுக்கும் ஒரு பட்ட மகிஷி இருந்தாள். தூய வெள்ளை நிறம் பொருந்திய தடித்த ஒரு பேடை.
இந்தப் பேடையிடத்தில் புள்ளடியனுக்கு ஒரு தனிப் பிரேமை. ஒரு தனி அருள். முட்டையிட்டு அடை காக்கும் நேரம் தவிர, மற்றப்படி இரண்டும் சதா ஒருமித்தே இருக்கும். புள்ளடியனுக்கு ஐந்து வயதா கிறது. முன்னிருந்த துடிதுடிப்பு இப்பொழுது இல்லைத்தான். வீரியமும் தளர்ந்து போய்விட்டது. ஆனால் வெள்ளைப் பேடை மேலிருந்த மோகம் மட்டும் சிறிதும் குறையவில்லை. அன்னியன் ஒருவனுடைய பார்வை பேடையின் மேல் விழுந்தால்; விழுந்துதான் பார்க்கட்டும்.
அன்று காலையில்தான் அடுத்த வளவிற்கு ஒரு புதுச் சேவல் வந்திருந்தது.
அதன் நிறமும் வெள்ளை. பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருந்தது. கழுத்தடியில் விரிந்து சடைத்த இறகுகள், பூப்பந்தல் போல அகன்று பரந்த வால், தலையிலும் தாடையிலும் தெறித்துக்கொண்டிருந்த சூடு கள்! அதன் நடையிலே ஒரு ராஜகம்பீரம் தொனித்தது.
அதன் இளமை இப்பொழுதுதான் பூரண மலர்ச்சி. அதற்கு வேதனையைக் கொடுத்து அதன் கனவுகளையும் நினைவுகளையும்
38

வஞ்சம்
தேக்கிக் கொண்டு நின்ற ஆசை, பேடைக் குலம் முழுவதையுமே சுட்டெ ரித்து பஸ்பமாக்கி விடுவது போல் இருந்தது.
அன்று வந்ததும் வராததுமாக அது வேலியில் உள்ள துவாரத்தின் வழியாக மறுபுறம் எட்டிப் பார்த்தது. புள்ளடியனுடன் குப்பை கிளறிக் கொண்டிருந்த வெள்ளைப் பேடையைக் கண்டுவிட்டது.
இரண்டு நாளாகப் பட்டினி கிடந்தவன் அறுசுவை உண்டியைக் கண்டதுபோல் இருந்தது. அதற்குப் பேடையின் வாசனை என்பதே அறியாமல் ஒரு பகலும் இரவும் கோழிக்கார சாயுபுவின் கூடைக்குள் அடைபட்டுக் கிடந்த பிறகு இந்த மனோகரமான காட்சி. 'ஆ' அதன் நரம்புகள் ஒவ்வொன்றும் விண்பூட்டி இருப்பது போல் தெரிந்தது.
மறுகணம் வேலியைத் தாண்டி மறுபக்கத்தில் குதித்தது. அப்பொழுதுதான் வெள்ளைப் பேடை தனியாக இல்லை என்பது அதன் கண்களில் பட்டது. பேடையை அணுகிவிடவேண்டுமென்ற ஆசை தடைபட்டு அவ்விடத்திலேயே ஒரு ஏக்கப் பார்வையோடு நின்றுவிட்டது.
இந்தச் சச்சரவைக் கேட்ட வெள்ளைப் பேடும் குப்பை கிளறும் வேலையை நிறுத்திவிட்டு தலை நிமிர்ந்து பார்த்தது. கோழிக் குலத்தின் மன்மதன் போல் நின்றிருந்த புதுச் சேவல் அவளுடைய மனதில் பெரும் புயலைக் கிளப்பி விட்டது. யார் இது? புது ஆசாமி. ஆனால் அதன் அழகு, என்ன நிறம். என்ன கம்பீரம், எங்கிருந்து, எப்பொழுது, ஏன் வந்தது?
அவள் இதுவரை புள்ளடியனுடைய தனி ஆட்சிக்கு உட்பட்டிருந்த திற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அந்த வட்டாரத்தில் புள்ளடிய னைத் தவிர வேறு சேவல் கிடையாது; ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை. புள்ளடியன் மூப்படைந்து பலம் குன்றி இருந்தா லும் சேவல் சேவல்தான்.
ஆனால் இன்று அவளுடைய கனவுகளை வடித்துப் பிழிந்து எடுத்த ரூபம் போல் நின்றிருந்த புதுச் சேவலைக் கண்டதும் அவளுக்கு உண்மையாகவே தலை கிறுக்கி விட்டது.
பேடையின் கவனம் கலைந்ததைக் கண்ட புள்ளடியன் தலை நிமிர்ந்து பார்த்தது. "ஆகா, அப்படியா சங்கதி?”
பெட்டையைக் கண்டிப்பது போலப் புள்ளபடியனும் ஒரு தரம் கொக்கரித்தது. அதன் அர்த்தம் புரிந்துகொண்ட பேடை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து மறுபடியும் கிளறும் வேலையில் ஈடுபட்டது.
இப்பொழுது ஆகக்கூடிய காரியம் ஒன்றுமில்லையென்று புதுச் சேவலுக்குப் பட்டுவிட்டது. "இன்று மத்தியானம் எப்படியும்.” என்று நினைத்து வேறு பக்கமாகத் திரும்பி நடந்தது.
39

Page 39
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
மத்தியான வெயில் யுகாந்த காலாக்கினி போல் எரிந்து கொண்டி ருந்தது. தொலைவில் கானலி என் மிதுப்பு மர ஏணிகள் காற்றில் சற்றே அசைந்தன.
கோழிகள் எல்லாம் ஒரு மாதுள மரத்தின் கீழ் தம் இறகுகளை கோதிக்கொண்டு படுத்திருந்தன. அந்த உக்கிரமான வெய்யில் அவற்றின் பரபரப்பை அடக்கிவிட்டது.
புள்ளடியனுக்குப் பலத்த யோசனை, "அட எங்கிருந்து வந்தான்? யாரைத் தேடி?”
மயிர்ப்புழு ஒன்று மாதுள மரத்தின் கிளையொன்றில் இருந்து கொடிவிட்டு, புள்ளடியனின் தலைக்கு மேலாக இறங்கிக் கொண்டி ருந்தது. அதைக் கண்ட புள்ளடியன் லபக் என்று அதைத் தன் அலகு களில் கெளவிக் கொண்டது, கிட்ட வந்ததை விட்டுவிட்டால்.
மறுபடியும் அந்தப் புதுச் சேவலைப் பற்றிய யோசனை. "காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டு போவதா? ஆனால் "எங்கே வெள்ளைப் பேடை?” புள்ளடியன் சுற்றுமுற்றும் பார்த்தது. அதைக் காணவில்லை. உடனே புள்ளடியனுக்கு எல்லாம் விளங்கிவிட்டது. தூ! என்ன பெண்குலம்! இப்படியுமா?
புள்ளடியன் வயதடைந்து உதவாக்கரையாகப் போய்விட்டது உண்மைதான். ஆனால், அதற்காக இப்படி நட்டாத்தில் கைவிட்டு நேற்று முளைத்த அற்பனோடு போகிறாள். எப்படியும் - ஆனால் -
புள்ளடியன் விரைவாக எழுந்து குப்பை மேட்டை நோக்கி ஓட்டம் பிடித்தது. வெள்ளைப் பேடும் புதுச் சேவலும் ஒன்றாக நின்று குப்பை கிளறின. அவை இரண்டினதும் போக்கிலும் ஒரு உல்லாசம், ஒரு திருப்தி, ஒரு ஆனந்தம் காணப்பட்டது! அவள் போகிறாள் எப்படியும். ஆனால் புள்ளடியனுடைய அவமதிக்கப்பட்ட ஆண்மை காப்பாற்றப்பட வேண்டாமா? அதுவும் குல கோத்திரம் இல்லாத பதரினால்.
கணப்பொழுதில் மஞ்சள் நிறமாக இருந்த புள்ளடியனுடைய தடுகள் ரத்தம் ஏறி செக்கச் செவேல் என்று சிவந்துவிட்டன. அதன் கழுத்தில் இருந்த ரோமங்கள் குத்திட்டு நின்றன. சிறகுகளைப் பலமாக அடித்துக்கொண்டு ஒரு பயங்கரமான கொக்கரிப்போடு புதுச் சேவலை நோக்கிப் பாய்ந்தது. புதுச்சேவலும் தயாராகவே நின்றது.
புள்ளடியன் விட்டுக்கொடுக்கவில்லை. “உயிர் போனால் போகட்டும்”
திடீரென்று புள்ளடியனுக்கு உலகம் எல்லாம் இருண்டு போனது போல் காணப்பட்டது. ஒன்றும் தெரியவில்லை. தன் கழுத்திலும் முகத்திலும் வேகமாக விழும் கூர்மையான கொத்துகள்தான் அதற்குத் தெரிந்தது.
40

வஞ்சம்
மறுகணம் அதை யாரோ கைகளால் தூக்கி எடுப்பது போல் இருந்தது. தன் எஜமானனான கமக்காரர்களின் கைகள்தான் எஜமானு டைய குரல் இரக்கத்தினால் குழைந்து இருந்தது.
"அடசி இந்தக் கிழட்டு வயதிலும்கூட உனக்கு பொம்பிளை ஆசை விடவில்லையே! வீணாகச் சண்டைப் பிடிச்சு உன் கண்களைக் கெடுத்து விட்டாயே நிதான் என்ன செய்வாய் பாவம்! அவள் கொழுத்த குமரி -
yy துர!
“மாணிக்கம்”
1978 (மீள் பிரசுரம்)
4.

Page 40
பவன்' என்ற புனைபெயரின் சொந்தக்காரர் எவரெனத் தெரியவில்லை. 'ஈழகேசரியில் கனதியான சிறுகதைகள் பவனால் எழுதப்பட்டுள்ளன. 1936 இல் இவரது தியாகி' என்ற சிறுகதை ‘ஈழகேசரியில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து 1946 வரை பன்னிரண்டு சிறுகதைகளை எழுதி uhammi.
ஆசைச் சட்டம்பியார்
பவன்
செல்லத்துரைச் சட்டம்பியார் அந்த வீட்டை விட்டுப் போய் வாரம் ஒன்று கழிந்து விட்டது. அவரிருந்த அறையில் அவரை இப்போது ஞாபகப்படுத்துவதற்குக் கிடந்தது ஆகக்கூடி அவருடைய மூக்குப்பொடி டப்பி ஒன்றுதான். அதையுங்கொண்டு சண்டையிட்ட வண்ணம் வீட்டி னுள்ளே நுழைந்த இரு பிள்ளைகள் “கும்”, “றாணி" என்னும் இருவரும் ஐந்து வயது வரைக்கும் குழந்தைகளின் வளர்ப்பு முழுவதும் ஆயாக் களின் பொறுப்பிலிருந்தபடியினால் அந்தப் பருவத்து இன்பங்களையோ தொந்தரவுகளையோ அனுபவிக்கத்தக்கதாய் விஸ்ஸாவுக்கு (பெற்றோர் இட்ட பெயர் விசாலம்) கொடுத்து வைக்கவில்லை. எப்போதும் அவர் களைப் பார்ப்பதும், மேய்ப்பதும் பணிப்பெண்களாவர்.
பிள்ளைகளுக்குப் படிக்கும் வயது வந்துவிட்டபடியாலும், சுதேச பாஷைகளுக்கு மதிப்பு ஏற்படத் தொடங்கிக்கொண்டிருந்தபடியாலும் வீட்டிலேயே அதற்கென ஒரு சட்டம்பியாரையும் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று சில பணக்கார வீடுகளில் ஏற்பட்டது. சட்டம்பியார் இல்லாத வேளைகளில் பிள்ளைகளை வீட்டில் வைத்துச் சமாளிப்பதென்றால் விஸ்ஸாவுக்கு ஒரே தலையிடிதான். ஆனால் அதே பிள்ளைகளைச் சட்டம்பியார் சற்றே உரத்த குரலில், உறுக்கி அதட்டி னால் போதும், உடனே விஸ்ஸாவுக்குக் கண்ணிர் ஆறாகப் பெருக ஆரம்பித்துவிடும்.
பிள்ளைகள் பண்ணும் அமளிகளைப் பொறுக்கமுடியாத விஸ்ஸா வெளிவிறாந்தையில் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த தன் புருஷன்
42

ஆசைச் சட்டம்பியார்
அருகே சென்று, "புதுச் சட்டம்பியார் எப்போ வருகிறார்? ஒருவரையும் இன்னும் ஒழுங்கு பண்ணவில்லையா?” என்று பெருந்தொகைப் பணம் செலவிட்டு அரிதிற் படித்து ஓரளவில் வீட்டுப் பாஷையாக்கிய இங்கிலீ சிலே கேட்டாள்.
உடனே "போய்” (பையா) என இராட்சதத் தொனியில் சத்தமிட்டார் நாக்லின்கன் (நாகலிங்கம்) 'coming si' (இதோ வந்திட்டன்) என்று இங்கிலீசில் சொல்லிக்கொண்டே அவர் முன்னிலையில் வந்து நடுங்கி நின்றான் ஒரு றாமன்.
“இன்றைத் தபால் இன்னும் வரக் காணோம். தபாற்காரர் வேலை நிறுத்தம் செய்யத் திடீரென்று தொடங்கினாலும் தொடங்கி இருக்கலாம். எதற்கும் நீ தபாற்கந்தோருக்குப் போய் தபால் பார்த்து வா” என்று கட்டளையிட்டார் லின்கன்.
"அப்படியே செய்கிறேன்” என்று பணிவுடன் சொல்லிவிட்டுப் போன றாமன், கால் மணித்தியாலத்திற்குள்ளாக நாலைந்து காகிதங்களுடன் வந்து சேர்ந்தான். லின்கன், காகிதங்களை வாங்கி, உடைத்துப் படித்தார். பின்பு மனைவியை அழைத்து, "மிஸ்டர் ஆறுமுகம் என்றொருவரை ஒழுங்குபடுத்தியிருக்கிறார்களாம். வருகிற திங்கட்கிழமை கட்டாயம் வந்து சேருவாராம்” என்றார்.
விஸ்ஸா, “வருகிறவர்கள் ஏதாவது கல்யாணம் என்றும் அதென்றும் இதென்றும் சாக்குப் போக்குச் சொல்லி அடிக்கடி இவ்விடத்தை விட்டுப் போய்விடுகிறார்களே? இவர் எப்படிப்பட்டவரோ தெரியவில்லை” என் றாள.
லின்கன், "சட்டம்பிக்கு ஒரு வருஷமாவது நின்றுபிடிக்க வேணும் என்று சொல்லியிருக்காம் எதற்கும் ஆள் வந்து சேரட்டும். நாங்கள் நறுக்காய் பேசிக்கொள்ளுவோம்.”
விஸ்ஸா, “எப்படியும் பிள்ளைகள் சந்தோஷமாகப் படிக்க வேண்டும். சட்டம்பியார் என்றாற் செல்லத்துரைச் சட்டம்பியாரைப் போல் வந்து வாய்க்க வேணும். எந்தநேரமும் பிள்ளைகளை அவர் மடியிலேதானே காணலாம். பிள்ளைகளை அவர் செல்லமாய் நடத்தினபடியால் அல்லவோ பிள்ளைகள் எங்களை எள்ளளவும் நினைக்காமல் நாள் முழுதும் அவரோடேயே பொழுது போக்கி வந்தார்கள்.”
லின்கன்: "எதுவும் கணக்கு வழக்காய் அளவாய் இருக்கவேணும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. நீ அளவுக்கு மிஞ்சிக் காட்டுகிற செல்லத்தினாலேதானே பிள்ளைகள் உருப்படுகிறார்கள் இல்லை. இத்தனை சட்டம்பிமார் வைத்துப் பார்த்தும் ஒரு மண்ணாவது இன்னும் மூளையில் ஏறவில்லையே?”
விஸ்ஸா: "என்னவோ - இப்போதே சொல்லி வைக்கிறேன். எந்த கவணரானாலும் சரி. என் பிள்ளைகளின் மேலே மாத்திரம் கைவைக்க
43

Page 41
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
விடமாட்டேன். படிப்பிக்கிறதானால் அடிக்காமற் படிப்பிக்கட்டும். அவருக் கென்ன! சம்பளந்தானே தேவை."
லின்கன் : “அதெல்லாம் அவர் வரட்டும். பேசிக் கொள்வோம்.”
மேலே ஒவ்வொருவரும் தத்தம் கருமத்தின் மேற் செல்லலாயினர்.
米率来
திங்கட்கிழமையும் வந்தது. ஆறுமுகச் சட்டம்பியாரும் வந்து சேர்ந்தார். வந்தவரை உபசரித்து, அவருக்கு வேண்டுவன செய்து, நிபந்தனைகளையும் பேசி முடித்து, அவரை அவருக்குரிய விடுதி அறை யிற் சேர்த்தார்கள்.
“காட்டுப்பூனை போன்ற அவரது கடுகடுத்த முகத்தைப் பார்க்க எனக்கே பயமாயிருக்கிறபொழுது பிள்ளைகளுக்கு எப்படித்தான் படிப்பு ஏறப் போகுதோ தெரியாது” என்று சற்றே ஏக்கங்கொண்டாள் விஸ்ஸா,
"படிப்பைப் பற்றி உனக்கே இவ்வளவு கவலை ஏற்படுகிறது நல்ல சகுனம்தான். அந்தக் கவலையை இப்போதைக்குச் சட்டம்பியாருடன் விட்டால் நல்லது. நாங்கள் கண் மூடினால் இந்தப் பிள்ளைகளுக்கு நடக்கிறதைப் பற்றி ஏதாவது அறியப் போகிறோமோ? படிக்கிற வேளை யிலாவது அவர்களுடைய செல்லத்தை நினைக்காமற் கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டிரு, அவர்கள் உருப்படுவார்கள். அது கிடக்க சட்டம்பியார் இன்றைக்குத்தானே வந்திருக்கிறார். அவருடைய தோற்றத் தைக் கொண்டு அவருடைய குணத்தைக் கணிக்காதே. பலாப் பழம் போல உள்ளே தித்திப்பும் வெளியே முள்ளுமாய் இருக்கினும் இருக்
கலாம்” என்று சமாதானம் பண்ணினார் லின்கன்.
பிள்ளைகளும் கொலைக் களத்திற்குச் செல்வார் போல் வெகு அச்சமுடையராய்ப் படிப்பறைகளுக்குப் போகலாயினர்.
"வரலாம், வரலாம். வந்து உட்காரலாம்” என்று அதிகார தோரணை யிலே சொல்லி எதிரிலிருந்த கதிரைகளைச் சுட்டிக்காட்டினார், வீட்டுக்குக் காகிதம் எழுதிக்கொண்டிருந்த சட்டம்பியார். ቈ
காலிற் சப்பாத்து கிறீச் கிறீச்சென்று சப்தமிட உள்ளே மெதுவாக நுழைந்தனர் பிள்ளைகளிருவரும். உள்ளங்காலிலிருந்து உச்சி வரையும் அவர்களை ஏறிட்டுப் பார்த்துச் செருமிக் கொண்டு பின்வருமாறு உறுமினார் சட்டம்பியார்.
"கிட்ட வாருங்கள். உங்கள் காலுக்குச் சப்பாத்து இப்போ அவசியம் தேவைதானோ? ஆண்டவன் தந்த காலை ஏன் இப்படித் தோலினாலே மூடி வரைந்து இறுக்கிக்கட்டி பலவீனப்படுத்தி அலங்கோலமாக்கு கிறீர்கள். கழற்றி எறியுங்கள். சுத்தமான காற்றுக் கொஞ்சமாவது காலிலும்
44

ஆசைச் சட்டம்பியார்
படட்டும். ஒருவேளை காலிலே அழுக்குப் பிடிக்கும் என்றெண்ணமோ? இது ஆருடைய வீடு? உங்களுடைய வீடுதானே! உங்களுடைய வீட்டை ஆர் சுத்தமாய் வைத்திருக்க வேண்டாம் என்றது? கழற்றுங்கள் சப்பாத்தை. இந்த அறையினுள்ளே நீங்கள் வெறுங் காலுடனேதான் வர வேண்டும்” என்றார். பிள்ளைகள் இடி விழுந்தது போலத் திகிலடைந்து ஒன்றும் செய்ய முடியாதவர்களாய்ச் சிறிது நேரம் மிரள விழித்துக் கொண்டு நின்றுவிட்டுப் பின்பு ஒருவாறு சப்பாத்தைக் கழற்றிச் சுவரோர மாக வைத்துவிட்டுத் தங்கள் ஆசனத்தில் உட்கார லாயினர்.
உட்கார்ந்த பின்பு, தாம் அறிய வேண்டிய விஷயங்களைப் பிள்ளை களிடம் விசாரிக்கலானார் சட்டம்பியார்.
'தம்பீ! உன் பேரென்ன?”
(மெதுவான குரலிலே) "கும்”
சட்டம்பியார் “என்ன?” என்று காதிற் கையைச் சேர்த்துச் சற்றே குனிந்து உறுமினார்.
"கும்” என்ற மறுமொழியே மீண்டும் வந்தது.
"அதென்ன ‘கும்' என்றால்? முழுப்பெயரையுஞ் சொல்லு”
“குமாரசுவாமி”
"தெய்வமே! ஆண்டவனை நினைவூட்டும் அருமந்த பேரை இப்படியா கொலை பண்ணவேண்டும்? நான் கூப்பிடும்பொழுது முழுப் பெயரையுந்தான் சொல்லிக் கூப்பிடுவேன். கதிர்காமத்தையனை, நல்லூர்க் கந்தனை, செந்தூர்த் தேவனை நினைப்பூட்டி எங்கள் பிறவிப் பிணியைத் தீர்க்கிற திருநாமத்தைக் கொலை பண்ணாதே."
"பிள்ளை! உன் பேரென்ன?”
“றாணி”
“என்ன ராணி?”
“கமலராணி”
"நல்லது. அந்த லசஷ்மீகரமான பெயர் முழுதும் என் காதிலே விழ வேண்டும்.”
“சரி - எங்கே - உங்கள் புத்தகங்களைப் பார்ப்போம். எடுங்கள்”
“புத்தகங்கள் சட்டம்பியார்தான் வைத்தெடுத்துத் தருகிறவர். எங்களிடம் இல்லை."
"படிக்கிறது யார்? நீங்களா? சட்டம்பியாரா? இந்த நிமிஷம் கொண்டு வந்து காட்டவேணும் புத்தகங்களை - உ.ம்..ம்!”
45

Page 42
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
"உந்த மேசையின் லாச்சியினுள்ளேதான் வைத்தவர் பழைய சட்டம்பியார் இப்புறம் வந்தெடுங்கள் கெதியாய்.”
வாயில் விரல் சூப்பியவண்ணம் மேசையருகே மெதுவாகப் போனார்கள்.
"வாயில் விரலை எடுங்கள். பசித்தால் வீட்டுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டு வாருங்கள். முதலிலே கையைக் கழுவி வாருங்கள்.”
பெருமூச்செறிந்து கொண்டு அடுத்த அறையொன்றிற் போய் கை கழுவின பின்பு, திரும்பி வந்து மேசை லாச்சியின் உள்ளிருந்த தங்கள் புத்தகங்களை எடுத்து அம்மேசையின் மீது வைத்தார்கள்.
"ஏன் இந்தப் புத்தகமெல்லாம் இவ்வளவு அழுக்கேறி உருவங் கெட்டு கிழிந்து போயிருக்கு? ஒவ்வொரு புத்தகமும் உறையிட்டுச் சுத்த மாய் வைத்திருக்கவேணும். இப்பொழுதே எனக்கு முன்னாலிருந்து சீர் படுத்துங்கள் பார்ப்போம்.”
அவர்கள் புத்தகங்களை சீர்படுத்திக் கொண்டிருக்கும்போது, அவர்கள் மீது கவலைகொண்டு வீட்டில் ஒரு கருமமும் பார்க்க முடியாத வளாய் தவித்துக் கொண்டிருந்த விஸ்ஸா, அவர்களைப் பார்க்கும் பொருட்டு, அங்கே சென்று, அடிமேல் அடிவைத்து மெதுவாக அவர் களுக்கருகே போய்க்கொண்டு, “சட்டம்பியார் இன்றைக்கு எப்படி? எல்லாம் ஒழுங்காய் நடைபெறுகிறதுதானே?” என்று கேட்டாள்.
“பிள்ளைகள் படிக்குமிடத்திலே பிற அலுவல்களுக்கு இடமில்லை. படிப்பறையின் உள்ளே திறந்த வீட்டினுள் நாய் புகுவது போல் ஒருவரும் வர வேண்டாம்” என்ற பதில் காதில் விழுந்ததே அவளுக்குத் தலை கிறுகிறுக்கத் தொடங்கியது. அவர் தன் பிள்ளைகளுக்கு கட்டளையிடும் பொழுது அவர்கள் ஆடாமலும், அசையாமலும் சித்திரப்பாவை போலி ருந்து கேட்டுப் பணிகளை நிறைவேற்றுதலையும், அவருடைய தொனி ஏதோ எளியார் வீட்டுப்பிள்ளைகளை ஏவுதல் போலிருத்தலையும் அவள் கண்டாள். சப்பாத்துக்கள் சுவரோரம் இருப்பதையும் பிள்ளைகள் வெறுங் காலுடன் இருப்பதையும் கண்டாள். வந்த ஆத்திரம், துக்கம் எல்லா வற்றையும் அடக்கிக்கொண்டு தலை குனிந்தவண்ணம் வந்த வழியே திரும்பிவிட்டாள் விஸ்ஸா,
அன்றெல்லாம் தான் கண்ட காட்சியையிட்டுப் புருஷனிடம் பிணங் கினாள். ஆனால் அவரோ, “சிவபூசையிலே கரடி விட்டாட்டுவது போல நீயேன் பிள்ளைகளுடைய படிப்பு வேளையில் அங்கே போனாய்? படிப்பறையை என்னத்திற்காக வீட்டினின்றும் இவ்வளவு தூரம் தள்ளிக் கட்டி வைத்திருக்கிறோம்? சட்டம்பியார் தனக்கு ஏதாவது வேணுமென் றால் அவர் தானாகவே எங்களுக்குத் தெரிவிப்பார். வரமுந்தியே அவரைக் கலைக்க முயலாதே. அவர் கண்டிப்பானவர் என்று
46

ஆசைச் சட்டம்பியார்
கேள்விப்பட்டபடியினால் அல்லவா அப்படியானவரையும் ஒரு முறை பார்ப்போம் என்று நான் உடன்படலானேன். எதற்கும் அவசரப்படாதே. இனிமேல் ஆகவேண்டியதைச் செவ்வனே செய்து கொள்” என்று சற்றே கண்டிப்பாகத்தான் மறுமொழி சொன்னார். இதுவும் என் தலைவிதி தான்’ என்றெண்ணி மெளனஞ் சாதிக்கலானாள் விஸ்ஸா,
அடுத்தது காட்டும் பளிங்கு போலப் படிப்பறையிலிருந்து வந்த பிள்ளைகளின் முகம் அன்றைய அனுபவத்தின் கசப்பைத் தெளிவாகக் காட்டியதை விஸ்ஸாவன்றி லின்கனும் அவதானித்திருந்தபோதிலும் வெளியே பிள்ளைகளுக்கு உற்சாக வார்த்தைகளையே சொல்லிக் கசப்பைப் போக்க முயன்றார் அந்த லின்கன். முதல்நாள் இப்படிக் கழிந்தது.
本 来 来
கிலச்சக்கரம் விரைந்து சென்றது. பிள்ளைகளுடைய நடையுடை பாவனை வாழ்க்கை என்னுமிவையெல்லாவற்றிலும் அநேக மாறுதல் கள் உண்டாகிக் கொண்டன. குறித்த குறித்த நேரங்களிலே அவ்வக் காரியங்களைச் செய்யத் தலைப்பட்டுக் கொண்டனர். தாங்களே தங்கள் பல்லைத் துலக்கலாயினர். தங்கள் உடைகளைத் தாங்களே களைந்து தோய்த்துலர்த்தி உடுக்கத் தொடங்கிக் கொண்டனர். தங்களை பொறுத்த வரையில் ஆயாமாருடைய சேவையையும் வேலைக்காரருடைய சேவை யையும் கூடிய விரைவிலேயே நீக்கி நடக்க முயல்வாராயினர். சமயாசார சீலங்களைக் கைக்கொள்ளலாயினர். தும்பி, வண்ணாத்துப்பூச்சி முதலா னவைகளைப் பிடிப்பதுமில்லை, அவைகளுடைய சிறகை ஒடித்து வருத்துவதுமில்லை. பேச்சிலும் "கீழோராயினும் தாழவுரை என்னும் மூதுரைக்கு ஒர் இலக்கியமாய் அமையலாயினர்.
இவைக்கெல்லாம் காரணம் யாது?
"அணுக்கள் சேர்ந்தே அண்டமானது, அணுக்களின் குணமே அண்டத்தின் குணமாகப் பரிணமிக்கிறது. ஆனபடியால் அணுவை நல்லணுவாக்கினால் அண்டம் நல்லண்டமாகும். பிள்ளைகளே! நீங்கள் ஒவ்வொருவரும் நல்லவர்களாயிருந்தால் உலகம் முழுவதுமே நல்ல தாயிருக்கும். பணச்செருக்கு ஆகாது. முடி மன்னரும் பிச்சை எடுக்க லாயினர். பணத்திமிரினாலே தொழிலிலே வேறுபாடு கற்பித்துப் பிறரைத் தாழ்த்திக் கெடவேண்டாம். சாதித் திமிர் ஆகாது. பிறரெல்லாம் தங்கள் சாதிக்கே அடிமைகளாம் என்று இறுமாப்புக் கொண்டெழுந்த ஹிற்லரின் வீழ்ச்சியை நீங்களே காணவில்லையா? இப்பொழுது அவருடைய நாடே உலகத்திற்கு அடிமையாகிவிட்டது. நிறத் திமிர் ஆகாது. நிறத் திமிருக்கும் அதோகதிதான். நிறத் திமிர் கொள்ளுகின்ற வீடு ஒவ்வொன் றும் தென்னாபிரிக்காவாகிக் கொந்தளிக்கத் தொடங்கி விடும். திமிர் கொண்டோரது நீதியெனப்படுவது எல்லாம் பிறருக்கு வாத்தியார்
47

Page 43
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
தனக்கு வாத்தியாரல்ல' என்னும் பழிமொழிக்கு இடமாகி விடும். வசையுற்றும் மானமுடையார் போலப் போலி வாழ்வே வாழ நேரிடும். பிறரைப் பழித்தலாகாது, அவர்களுடைய நிலையில் உங்களை வைத்துப் பாருங்கள். உண்மை விளங்கும். தெய்வமொன்று உண்டு. தேவகட்டளை களை மீறவேண்டாம். மீறாதோரே பெரியோராவர். என்றிப்படியான போதனைகளை இடித்திடித்துரைத்த பின்பே சட்டம்பியார் தினசரிப் பாடங்களை ஆரம்பிப்பது வழக்கமாகி விட்டது. கற்ற போதனைகளைச் சாதிக்கவும் பயிற்றிவந்தார். ஆதலினாலே பிள்ளைகளுக்கு ஆரம்பத்தி லேற்பட்ட கசப்பு நாளடைவிலே அறவே தொலைந்து விட்டது.
s
பிள்ளைகளுடைய வாயிலிருந்து "அவர் மிகவும் நல்லவர்” என்பதைத் தவிர வேறெவ்விதமான அபிப்பிராயத்தையும் வெளிப் படுத்த முடியாமற் போன விஸ்ஸா இரண்டாம் வருட முடிவிலே தனது பிடிவாதத்தினாலும் தலையணை மந்திர வலிமையினாலும் ஒருவாறு ஆறுமுகச் சட்டம்பியாரை நீக்குவித்து வேறொருவரை அமர்ப்பித்துக் கொண்டாள். பிள்ளைகளோ மடியில் வைத்துச் செல்லம் பண்ணின செல்லத்துரைச் சட்டம்பியாரை நினைத்து ஒரு சொட்டுக் கண்ணிரா யினும் விடாதவர்கள் ஆறுமுகச் சட்டம்பியார் பிரிவை ஆற்றாது கண்ணிர் பெருக்கிக் கொண்டு இப்போது மேல்வந்த புதுச் சட்டம்பியா ரிடம் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
“ஈழகேசரி” 28.04.1946
48

ஈழத்தின் மூத்த தலைமுறை எழுத்தாளர் சி. வி. வேலுப்பிள்ளை ஆவார். மலையகம் தந்த படைப்பாளி "Bom to Labour" என்ற இவரின் ஆங்கிலச் சிறுகதை நூல் மலையக மக்களின் வாழ்க்கையை மிகத் தெளிவாகச் சித்திரிப்பதாகும். பார்வதி', 'எல்லைப்புறம்' ஆகிய நாவல்களையும் இவர் எழுதியுள்ளார். 'வீடற்றவன் இவரது புகழ்பூத்த நாவல் ஆகும். இவர் அமரராகிவிட்டார்.
உழைக்கப்பிறந்தவர்கள்
சி.வி.வேலுப்பிள்ளை
தேயிலைத் தோட்டங்களில் மச்சான், மாமன் உறவு மிகவும் நெருங்கியதொன்றாகும். குடும்ப சம்பந்தமான விஷயங்களில் இவர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
பழனி மாமன் இப்படியான விஷயங்களில் தன்னுடைய கடமை களைச் செய்ய ஒருபோதும் பின் நிற்பதில்லை. ஒருநாள் மாலை அர்ச்சுனன் வீட்டிற்குப் போகிறார்.
பாஞ்சாலியும் பாய் விரித்துப் போட்டு தேத்தண்ணிரும் கொண்டு வந்து வைக்கிறாள். தாம்பாளத் தட்டில் வெற்றிலை பாக்கும் வருகிறது. வாய் நிறைய வெற்றிலை போட்டு எச்சில் பணிக்கம் நிறையத் துப்பி விட்டு வாயையும் துடைத்துவிட்டு தனக்குரிய பாணியில் தொடங்கு கிறார்.
“அர்ச்சுனா, இந்த வீட்டில் விருந்து சாப்பிட்டு மிச்ச நாளாகிவிட்டது. கூடிய சீக்கிரத்தில் பெரிய விருந்தொன்றுக்கு என்னை அழைக்கப் போகிறாய் என்று கேள்விப்படுகிறேன். அதென்ன நிசமா?”
"இந்தக் காலத்திலே குடும்பத்தில் நடக்கவேண்டிய காரியங்களைப் பற்றி ஞாபகம் இருப்பதில்லை. யாராவது ஒருத்தர் அதைப்பற்றி ஞாபக
மூட்ட வேண்டியிருக்கிறது. பாஞ்சாலி மகளுக்குக் காது குத்த வயசு சரிதானே?”
49

Page 44
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
அர்ச்சுனன், "ஆமா மாமா, பிள்ளைக்கும் வயது ஆறாகி விட்டது. அடுத்த மாதம் சம்பளம் போட்ட உடனே காது குத்து வைக்கனும் மாமா.”
தம்பி எந்தக் காரியம் செய்தாலும் நல்ல நாள் கெட்ட நாள் பார்த்து வைக்கனும் தம்பி அதனாலே கோயில் பூசாரியாரிடம் போய் நல்ல நாளைக் கேட்டு காரியம் செய்ய நாளைக் குறிச்சிக்கிட்டு வா.”
அன்றிரவு சாப்பாடு முடிந்தவுடன் அர்ச்சுனனும், பாஞ்சாலியும் தம் வீட்டில் நடைபெறப் போகும் முதல் நல்ல காரியத்தைப் பற்றிக் கலந்து ஆலோசித்துக் கொண்டார்கள். பாஞ்சாலி சொல்கிறாக: "இந்தாங்க, இதுதான் நம்ம வீட்டிலே நடக்கப் போகிற முதல் காரியம். நல்லா ஆடம்பரமா செய்யனுங்க.”
அர்ச்சுனன், “ஆடம்பரமா செய்யத்தான் வேணும். ஆனால் விரலுக் கேத்த வீக்கந்தானே புள்ளெ. கொஞ்சம் கச்சிதமா ஆனால் சிறப்பா செய்துறலாம்.”
அர்ச்சுனனின் ஆலோசனையின்படி கொஞ்சம் கச்சிதமாகக் காரியத்தை செய்து முடிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
செலவுக்கு முன்னூறு ரூபாய் தேவை. கையில் உள்ளது நூற்றி ஐம்பதுதான். மீதியைப் பெரிய கங்காணியிடம் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்ற தீர்மானமும் எடுத்துக் கொண்டார்கள்.
கோவில் பண்டாரம் அடுத்து வரும் கார்த்திகை 16ம் திகதி காது குத்து வைக்கலாம் என ஆலோசனை கூறிவிட்டார்.
காதுகுத்துக்கு அழைப்பு விடுவதில் அர்ச்சுனன், பழைய முறையில் உற்றாருக்கும், தோட்ட மக்களுக்கும் தன் மச்சான்மார் ஒருவர் மூலமாக பாக்கு வைக்கிறான்.
தூரத்து இன ஜனங்களுக்கும், ஏனையோருக்கும் 'கார்ட்’ அனுப்பி வைக்கிறான்.
தேவை நடைபெறுவதற்கு ஒரிரு வாரங்களுக்கு முன்னரே காது குத்துக்கான ஆயத்தங்கள் ஆரம்பிக்கின்றன.
வீட்டுச் சுவர்கள் வெள்ளையடிக்கப்பட்டு, வீட்டு முன் சுவரில் நீலம், சிவப்பு, மஞ்சள் ஆகிய வர்ணங்களின் கோலங்கள் தீட்டப்படுகின்றன.
வீட்டு முன்பக்கமாக சிறிய பந்தல் பச்சிலைகளாலும், கொடி மீனாவாலும் அலங்கரிக்கப்படுகின்றது. மாவிலைத் தோரணங்கள் பந்த லின் வெளிப்பக்கத்திலும், உட்பக்கத்திலும் கட்டப்படுகின்றன. பந்தலின் நாலு மூலைகளிலும் குலை போட்ட வாழை மரங்கள் கட்டப்படுகின் றன. பந்தலின் நடுவில் மண்ணைக் கொண்டு ஆக்கப்பட்ட திண்ணையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
50

உழைக்கப் பிறந்தவர்கள்
தேவை நடக்கும் நாள் டோபி அப்பச்சி பூப்போட்ட சீலைகளைக் கொண்டு பந்தலை மேலும் அலங்கரிப்பார். விருந்தாளிகள், உற்றார், உறவினர் அமர்வதற்கான மாத்து விரித்து விடுவார். காது குத்துவதற்கு ஆசாரியாரும், தோட்டத்து பார்பரும் வருவதுண்டு.
தப்புக்காரர்கள், உருமி விளையாட்டுக்காரர்கள், ஆர்மோனிய வாத்தி யார், பஜா போடுபவர்கள் பந்தலின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருப்பார்கள்.
திண்ணையின் பின்புறமாக நன்கு துலக்கப்பட்ட குத்துவிளக்குகள் ஏற்றப்பட்டு இருக்கும். அகலமான வெண்கலத் தட்டுகள் நிறைய வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியவை குவித்து வைக்கப்பட்டி ருக்கும். கிண்ணங்கள் நிறையச் சந்தனக் குழம்பு, செந்தூரம் ஆகியவை இருக்கும்.
அர்ச்சுனனின் மூத்த மைத்துனனும், பிள்ளையின் தாய் மாமனு மாகிய நடேசனும், அவனின் சகோதர்களும் வருபவர்களை எல்லாம் கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்பார்கள்.
உறவினர்களின் குடும்பம் ஒவ்வொன்றும் மூன்று கொத்து அரிசி, தேங்காய், காய்கறி, காது குத்தப்படும் பிள்ளைகளுக்கான புடவை ஆகியவற்றைச் சீராகக் கொண்டு வருவார்கள். தோட்டத்தில் எழுத வாசிக்கத் தெரிந்த ஒருவர், சீர்வரிசைகளைச் செய்தவரின் பெயர், சீரில் அடங்கிய பொருட்கள் ஆகியவற்றை விபரமாக எழுதிக்கொள்வார். ஏனெனில் தோட்டத்து மக்கள் தங்களுக்கு சீர் கொண்டு வந்தவர் வீட்டில் ஏதாவது தேவை நடந்தால், கொண்டு வரப்பட்ட சீருக்குப் பதில் சீர் எடுக்கும்போது சீரானது முதல் சீரைப் பார்க்கச் சற்றுப் பெறுமதி கூடியதாக இருக்கவேண்டும் என்பது தோட்ட மக்களின் சம்பிரதாயம்.
காது குத்தல் தொடங்கப் போகிறது. மச்சான் - மச்சாள் முறையான சிறுவர்கள் பிள்ளையைக் கேலி, பரிகாசம் செய்கிறார்கள். பந்தல் நிறையக் கேலியும், பரிகாசமும், சிரிப்பும், கலகலப்பும் நிறைந்து வழி கின்றது.
பழனி மாமா வருகிறார். பெண் குலம் சிரிப்பை நிறுத்திவிட்டு பழனி மாமாவுக்கு மரியாதையாக ஒதுங்கி நிற்கிறார்கள். பழனி மாமா எத்தனை காது குத்து, சடங்கு, திருமணம் ஆகியவற்றை முன்னின்று சிறப்பாக நடத்தியவர்.
மங்கள பேரிசையாக விளங்கும் "மொலக்குவை தப்புக்காரர்கள் முழங்கும்படி சைகை காட்டுகிறார். தப்பும், உருமியும் காதை அடைக்கும் உச்சமான சத்தத்தோடு முழங்குகின்றன.
பாஞ்சாலியின் மகள் ஜானகியை, பழனி மாமா அழைத்துக் கொண்டு, திண்ணைக்குப் போகிறார். “மெதுவாக கூட்டிப் போங்க” என்று பழனி மாமாவிடம், பாஞ்சாலி சொல்லிவிட்டு, ஆனந்தக் கண்ணிர் அவள்
5

Page 45
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
கண்களிலிருந்து சொரியப் போகிறது. சீலைத் தலைப்பால் பாஞ்சாலி தன் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.
ஜானகியின் தாய்மாமனாகிய நடேசனைப் பார்த்து, "என்ன மாப்பிள்ளை போல நிக்கற உன் மருமகளை திண்ணையில் உட்கார வை, கிழக்கைப் பார்த்துவிட்டு திருநீரைப் பூசு” என்று சொல்லுகிறார்.
மேலும் பண்டாரத்தைப் பார்த்து, “பண்டாரம் உங்க வேலையைத் தொடங்குங்க” என்று பழனி மாமா கூற, பண்டாரம் திருவிளக்குக்கு அடியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், சூடம், சாம்பிராணி, பத்திக் குச்சி ஆகியவற்றை ஒழுங்காக பண்டாரத்திற்குரிய பக்தி தோன்ற அடுக்கி வைக்கிறார். பின் தேங்காயை உடைத்து, தட்டில் கற்பூரத்தைக் கொளுத்தி, மணியை ஒரு கையால் அடித்தவாறே தீப ஆராதனை செய்கிறார்.
இந்நேரத்தில் பழனி மாமா தாய்மாமன் நடேசனுக்கு சைகை காட்டுகிறார்.
திண்ணையில் மற்றொரு மாமன் மடியில் ஜானகி உட்கார்ந்து இருக்க, தாய்மாமன் காதணிகளை எடுத்து மின்னல் வேகத்தில் ஜானகி யின் காதுகளில் குத்திவிடுகிறான். அருகில் நிற்கும் ஆசாரியார் உடனே காதணிகளைப் பொருத்தமாக அமைத்து விடுகிறார்.
சிறுமி ஜானகி வலி பொறுக்காது "ஐயோ அம்மா” எனக் கத்த தொடங்குகிறாள்.
பழனி மாமா பிள்ளையை அதட்டிவிட்டு, "ஏய் தப்புக்காரர்களா உருமிக்காரர்களா” என்று உரத்து சப்தமிட மீண்டும் ஒருமுறை தப்பும், உருமியும் காது செவிடுபடும் ஓசையுடன் முழங்குகின்றன. இவ்வோசை கள் ஜானகியின் அழுகைச் சத்தத்தை அடக்கி விடுகின்றன.
பந்தலில் இருக்கும் அனைவரும் கைகொட்டி ஆரவாரம் செய்கின் றனர்.
பாஞ்சாலியின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணிர் சொரிகிறது. அவளுடைய உதடுகளில் புன்முறுவல் விளையாடுகின்றது.
“அர்ச்சுனா சாப்பாட்டைத் தயார் செய்” இது பழனி மாமாவின் உத்தரவு.
ஸ்தோப்பின் சுவர் ஒரமாக பாய்கள் விரிக்கப்படுகின்றன. ஆண்கள் உள்வீட்டினுள் போவதும், திரும்பி வருவதுமாக இருக்கிறார்கள். உள்ளி ருந்து வருபவர்கள் தொண்டையைத் தடவிக்கொண்டும், ஒருவாறு காறிக் கொண்டும் வருகிறார்கள். ஆமாம் ஆளுக்கு ஓர் அளவு கருப்பு போத்தல் சாராயம்.
52

உழைக்கப் பிறந்தவர்கள்
பழனி மாமாவின் குரல், "சம்பந்திகளே, பங்காளிகளே கூச்சப்படாத வாங்க. இது உங்கள் வீடுதானே. வந்து முதல் பந்தியில் உட்காருங்கள்.”
உறவு முறை தவறாது பந்தியில் அமர்கிறார்கள். வாழை இலை போடப்படுகிறது. அதற்கடுத்துக் கறி வகைகள், கடைசியில் சாதம் பரிமாறப்படுகின்றது.
ஒரு மணிநேர காதுகுத்து கலியாண விருந்து.
பண்டாரம், டோபி, பார்பர் அவர்களின் கூலி காசாகவும், வேறு பொருட்களாகவும் வழங்கப்படுகின்றது.
விருந்துபசாரங்களுக்குப் பின் ஆண்கள் மீண்டும் பந்தலின் கீழ் அமர்கிறார்கள். அடுத்த கட்டமாக நடைபெறுவது மொய் முதலாவது பழனி மாமா தன்னுடையதைக் கொடுக்கிறார். அதற்கடுத்ததாக சம்பந்திகள் மொய். அதற்கு அடுத்ததாக பங்காளிகளின் மொய். சம்பந்தி, பங்காளிகளின் மொய்த்தொகை சற்றுக் கூடுதலாகவே இருக் கும். சம்பந்திகள் தொகை ரூபா 50க்கு குறையாமலும், பங்காளிகளின் மொய் 20க்கு குறையாமலும் இருக்கும். சம்பந்திகளின் மொய்க்கு முன் பங்காளிகளின் மொய்யோ, சம்பந்தி, பங்காளியானோரின் மொய்க்கு முன் வெளியாரின் மொய் எடுக்கப்பட்டால் அதைப் பற்றிய வாதம் தொடங்கி கலவரத்தில் முடிவதும் உண்டு.
இப்படியான ஒரு கட்டம் ஜானகியின் காதுகுத்துக் கல்யாணத்திலும் ஏற்படப் பார்த்தது. ஆனாலும் பழனி மாமா வெகு சாதுர்யமாக அதைச் சமாளித்து விட்டார்.
ஒரு மூலையிலிருந்து ஒருவரின் குரல்.
“பார்த்தீங்களா? பார்த்தீங்களா? பழனி மாமாவுக்கு நான் இங்கே இருப்பது தெரியல போல, அவர் கண்ணுக்கு பெரிய ஆள்களைத்தான் தெரியும். என்னப் போல சின்ன மனுசனைத் தெரியாது" என்ற முணுமுணுப்பு, பழனி மாமா காதில் இலேசாகக் கேட்கவே,
கோபத்தை, தாபத்தை துரத்தி அடிக்கக்கூடிய சிரிப்புப் பூத்த முகத்தோடு, அந்த முணுமுணுப்பின் ஆளைப் பார்த்து,
தம்பி, தம்பி நீயா? நீ முன்னுக்கு இருக்கவேண்டிய ஆள் பின்னுக் கல்ல நிக்கற. சரி கொஞ்சம் முகத்தையாவது காட்டியிருந்தால் இந்தப் பிழை நடந்திருக்காது. இதென்ன பெரிய கல்யாணமா? சின்னப் பிள்ளை யின் காது குத்துத்தானே. இந்தத் தேவையை நான் மட்டுமா நடத்து கிறேன். நான், நீ இங்கே எல்லோரும்தானே சேர்ந்து நடத்துகிறோம்.”
பழனி மாமா உரத்த குரலில், “சரி பங்காளி ராமையா மொய் 11
99
ரூபா
53

Page 46
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
மொய் விபரங்கள் யாவும் கிரமமாக்கப்படுகின்றன. எல்லா விடயங் களும் பழனி மாமாவின் மேற்பார்வையிலும், வழிகாட்டலிலும் மிகவும் சிறப்பாக ஜானகியின் காது குத்துக் கல்யாணம் முடிவுறுகிறது.
நேரம் நடுச்சாமம் கழிந்துவிட்டது. விருந்தினர் ஒவ்வொருவராக வீடு நோக்கிச் செல்கின்றனர்.
தமிழாக்கம் : பி. ஏ. செபஸ்தியன் Born to Labour (1959)
54

அ.செ.மு. என்ற அ. செ. முருகானந்தன் ஈழத்துச் சிறுகதை இலக்கியத் திற்கு பெருமை கூட்டிய முன்னோடி. ஈழகேசரியின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். நிறையவே எழுதியவர். புகையில் தெரிந்த முகம், காளிமுத்துவின் பிரஜாவுரிமை', 'வண்டிற்சவாரி என்பன இவரது சிறந்த படைப்புக்கள். மனிதமாடு இவரது சிறுகதைகளின் தொகுதி ஆகும். இவர் அமரராகிவிட்டார்.
வண்டிற்சவாரி
அ.செ.முருகானந்தன்
I
இறைப்பு ஆரம்பமாயிற்று.
ஆளை ஆள் தெரியாத இருட்டு. துலாவில் இரண்டுபேர் ஏறினார்கள். பட்டைக் கொடியை ஒருத்தன் பிடித்தான். பரந்து கிடந்த புகையிலைத் தோட்டத்துள்ளே இன்னொருத்தன் நுழைந்தான். துலா மேலுங் கீழுமாக ஏறி இறங்கிற்று. "ஆறுமுக வேலனுக்கண்ணனாமடி" என்று துலாவில் நின்ற ஒருத்தன் ஆரம்பித்தான். மற்ற இருவரும் அதற்குப் பிற்பாட்டு இழுத்தார்கள்.
இந்த அமளியில் பக்கத்தே பூவரசு மரத்தில் அரைக்கண் உறக்கம் உறங்கிக் கொண்டிருந்த சேவல் கோழி ஒன்று சிறகடித்துக் கூவியது. அதைப் பின்பற்றி அந்த வட்டாரத்திலுள்ள ஒன்றிரண்டு கோழிகள் ஒவ்வொன்றாகக் கரகரக்கத் தொடங்கின. இறைப்புக்காரரின் கச்சேரிக்குப் பொருத்தமான பின்னணியாக அது வாய்த்து விட்டது.
ஒரு மணி கழிந்தது. இருள் சிரித்தது. கீழ்வானம் வர்ணஜாலம் காட்டிற்று. கச்சேரி” ஸ்வரம் இறங்கி உள்ளே உள்ளே போய்க் கொண்டி ருந்தது. காலை இளந் தென்றலில் புகையிலைக் கன்றுகள் சிலுசிலுத் தன. பசுமை சொட்டிக்கொண்டிருந்த அவற்றின் இலைகள் கண்ணுக்கு மிகவும் குளிர்ச்சியாகவிருந்தன. ஏறி இறங்கிச் சோர்ந்து போனவர். களுக்கு இந்தக் காட்சி ஒருவகை உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் அளித்தது.
55

Page 47
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
மண்காவி ஏறிய கொடுக்கு இடுப்பில்; அதே செம்பாட்டு நிறத்தில் பாதித் தலையை மூடிய ஒரு தலைப்பா' வாயில் ஒரு குறைச் சுருட்டு, தோளில் ஒரு மண்வெட்டி இத்தனை அலங்காரத்தோடும் ஒருத்தன் வந்தான்.
இறைப்பு அமைதியாய்ப் போய்க் கொண்டிருந்தது.
"கூ.ய் எங்கே. தண்ணியைக் காணவில்லை.” தூரத்தே புகையிலைக் காட்டிலிருந்து திடீரென்று இப்படி ஒரு குரல் எழும்பிற்று. எல்லோரும் ஒருகணம் திடுக்கிட்டுப் போய் நாற்புறமும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அள்ளி ஊற்றிய தண்ணிர் ஒரு பக்கத்திலே உடைத்து ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. “ஓடு ஒடு அங்கே உடைத்துவிட்டது, ஒடிப் போ” என்று மூன்று குரல்கள் அதைப் பார்த்துக் கத்தின. மண்வெட்டி கொண்டுவந்தவன் ஓடிப்போய் உடைப்புக்கு மண் வெட்டிப் போட்டு அதை அடைத்துவிட்டுத் திரும்பி வந்தான். ஸ்தம்பித்துப் போயி ருந்த இறைப்பு மறுபடியும் ஓடத் தொடங்கிற்று.
"சின்னத்தம்பி நல்ல சமயத்தில் வந்தாயப்பா” என்று உபசாரங் கூறினான் இறைத்துக்கொண்டு நின்றவன்.
"அது கிடக்கட்டும் அண்ணே! வல்லிபுரக் கோயிலுக்கு எப்போ வண்டில் பூட்டிறியள்? அல்லது இம்முறை பூட்டாமலே விடுகிற யோசனை.?”
நல்லாயிருக்கு வரிசத்திலே ஒருக்கா வருகிற இதைக்கூட விட முடியுமோ? அதுவும் போக."
"ஓ! சொன்னாப்போல் இந்த முறை சவாரிச் சங்கதி ஒண்டும் இருக்குதல்லோ..?”
"வேறென்ன? என்னவோ குருட்டுவாக்கிலே அன்றைக்குத் தச்சன் காட்டில் காரியம் பார்த்து விட்டான்கள். வாற சனிக்கிழமை அந்தக் கெட்டித்தனத்தைக் காட்டட்டும் பார்ப்போம். சனிக்கிழமை பூச்சியன்கள் கழுகன் சோடிகளை இறக்கி எடுக்காவிட்டால் நான் இந்தச் சவாரி வியாபாரத்தையே அன்றோடு கைகழுவி விட்டு விடுகிறேன்.”
“சரி சரி, எல்லாம் நடக்கட்டும். ஆனால் சண்டை கலாதி ஒண்டும் இல்லாமல் நடந்து முடியட்டும்.”
இத்துடன் சின்னத்தம்பி அவ்விடத்தை விட்டுக் கழண்டு விட்டான். தூரத்தே புகையிலைக் கன்றுகளுக்குள்ளிருந்து மனித சாரீரம் எட்டக் கூடிய உச்சஸ்தாயியில் ‘கூ.ய்' என்றொரு குரல் பிறந்தது. இறைப்பு நின்றது.
56

வண்டிற்சவாரி
III
அமாவாசை வந்த பதின்மூன்றாம் நாள். இரவு முழுவதும் ஜெகஜ்ஜோதியான நிலவு. யாழ்ப்பாணத்தின் வடகோடியிலே பரந்து கிடக்கும் அந்த நீண்ட மணற் பிரதேசத்தைப் பகற்காலத்தில் வெயில் தகித்து அக்கினிக் குண்டமாக்கி விடும். ஆனால், வளர்பிறை காலத்து இரவோ இதற்கு மாறான நிலமை. வெண்மணற் பிரதேசம் முழுவதிலும் சந்திரன் தனது அமுத கிரணங்களை வாரி இறைத்து அதைக் குளிர்ச்சி மயமாக்கிவிடும். கண்ணுக்கெட்டிய தூரம் பாற்கடலைப் போல் பரந்து கிடக்கும் மணல்வெளியை இரண்டாகப் பிளந்து செல்லும் அந்தத் தெரு வழியே நிலாக் காலத்தில் மாட்டு வண்டிப் பிரயாணஞ் செய்வதில் ஒரு தனி இன்பம் உண்டு. அந்த இரண்டுக்குமே ஒரு தனிப்பொருத்தம் என்று சொல்லவேண்டும்.
வருஷம் முந்நூற்றி அறுபத்தைந்து நாளும் மண் கிண்டி, தண்ணிர் ஊற்றி, அலுத்துப்போகும் தோட்டக்காரனுக்கு மனச்சந்தோஷத்துக்கும், ஆறுதலுக்கும் உகந்த ஓர் அருமையான பிரயாணம் இது. வழிநெடுகப் பால் போன்ற வெண்ணிலவு; வானமும் பூமியும் ஒன்றாகும் ஒரே வெளி. இவற்றைக் கடந்து கோயிலை அடைந்தால் அங்கேயும் கோயிலைச் சுற்றிலும் ஒரே வெண்மணல் வெளியும், பால் நிலவும் தென்றற் காற்றும் தான். இவற்றோடு கோவிலிலேயிருந்து நாதசுரம் இன்னிசையை பிழிந்து மிதந்து வரும் தென்றலிலே அனுப்பிக் கொண்டிருக்கும். பாமரன் உள்ளத் தின் மலர்ச்சிக்கும் குதூகலத்துக்கும் இன்னும் என்ன வேண்டும்?
வருஷா வருஷம் வல்லிபுரக் கோயிலுக்குக் கூட்டம் கூட்டமாக சனங்கள் அள்ளுப்படுவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை, வல்லிபுரப் பெருமான் மேல் உள்ள பக்தி சிரத்தையினால் அல்ல. எல்லாம் அந்த மணற்காட்டுக்கும், அங்கே எறிக்கிற வெண்நிலவுக்கும், ஆடல் பாடலுக் கும்தான். சுருங்கச் சொன்னால் அன்றைய தினம் வல்லிபுரப் பெருமா ளுக்குக்கூட கோவிலுக்குள் அடைபட்டுக்கிடக்க மனம் வராது. தென்ற லும், இன்னிசையும், வெண்ணிலவும், பால் மணலும் சேர்ந்து வல்லிபுரக் கோவிலை - பகலில் கண்கொண்டு பார்க்க முடியாத காண்டாவனத்தை - ஓர் அமர உலகமாக மாற்றிவிடும்.
இந்த 'அமர உலகைத் தரிசிக்க வருகின்ற பக்தகோடிகளின் வழிப் பயண இன்பத்தைக் கொஞ்சம் பார்க்கலாம்.
ஐம்பது வருஷத்துக்கு முந்திய பயண வண்டி ஒன்று. அதைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாயிருக்கிறது! ஒரு பெரிய குடும்பம் தாராளமாக வசிக்கக்கூடிய வீடு அது! மேல்மாடிகூட அதில் உண்டு. சட்டி, பானை, பெட்டி, படுக்கை எல்லாம் வண்டிக்கு மேலேயும் கீழேயும் ஊஞ்சலாடுகின்றன. வண்டிக்குள்ளே வைக்கோல் மெத்தை மேலே புருஷன், மனைவி, தாய், பிள்ளை, பேரன், பேத்தி எல்லோரும் இருந்து கதைத்துச் சிரித்துக் கொள்கிறார்கள். மேல் மாடியிலே இரண்டொரு
57

Page 48
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
குழந்தைகள் தூங்குகின்றன. இன்னொரு சிறு குழந்தைக்குப் பசி. அதற்குத் தாயார் சோறு பிசைந்து கொடுக்கிறாள். இத்தனை வைபவங் களுடன் வண்டி ஊர்ந்து ஊர்ந்து போகிறது.
ஹகுட்’ மடித்த மோட்டார்கள் பாட்டோடும் தாளத்தோடும் பறக்கின் றன. அவற்றைப் பின்பற்றி சைக்கிள் வண்டிகளும் ஒருபுறம் கிணுகினுத் துக் கொண்டு ஓடுகின்றன. கால்நடைப் பக்தகோடிகள் பாட்டுக் கச்சேரி, சிரிப்புக் கச்சேரி, கூக்குரல் கச்சேரி எல்லாவற்றோடும் கூட்டங் கூட்ட மாகப் போகிறார்கள். மிருகத்துக்கும், மனிதனுக்கும், மெஷினுக்கும் வெண்ணிலவு ஒரே அளவாகப் பொழிகின்றது. வழி நெடுக இப்படியே உல்லாசமான் ஊர்வலம். இன்னும் சிறிது மேலே போனால் இந்த இயற்கை அற்புதத்தால் உற்சாகம் மேலிட்டுவிட்ட பேர்வழிகளைப் பார்க் கலாம். வாலிபத் தோற்றங் கொண்ட மொட்டை வண்டிகள் நூற்றுக் கணக்கில் குவிந்து நிற்கின்றன. வண்டிச்சவாரி நடக்கப் போகின்றது.
சரி, இரண்டு வண்டிகள் முன்னே வந்துவிட்டன. மாடுகள் பூட்டியாய் விட்டன. குத்தூசி, சவுக்கு, துவரங்கம்பு - எல்லாம் அவரவர் கைக்கு வந்துவிட்டன. வண்டி ஒட்டுகிறவர்கள் ஆசனங்களில் ஏறிவிட்டார்கள்.
“சின்னத்தம்பி!” என்கிறான் முன் வண்டிக்காரச் சாரதி. “சரி, சரி எல்லாம் தெரியும்” என்றான் வண்டியில் சவுக்கும் கையுமாக நின்ற ஒருத்தன்.
வண்டிகள் கிளம்பிவிட்டன. "கடகட'வென்ற முழக்கத்தோடு ஒன்றை யொன்று உராய்ந்து கொண்டு அந்தரநிலையில் பறக்கின்றன. இதோ அதோ? சவுக்குகள் "நொய் நொய்' என்று கீச்சிடுகின்றன. குத்தூசிக் காரன் வண்டியில் படுத்துக்கொண்டு சாவகாசமாக மாடுகளுக்கு ஊசி ஏற்றினான். துவரங் கம்புகள் சடார் சடார்’ என்று விழுந்தன.
கழுத்தில் வெள்ளைப் புள்ளிகள் விழுந்த வண்டி மாடுகள். இவைதான் பூச்சியன்களோ? முன் வண்டியைத் தாண்டி விடுகிற சமயம் - இதோ தாண்டிவிட்டன. ஒரு நொடிக்குள். இதோ.
"ஐயோ! அம்மா”
பூச்சியன்’ வண்டியிலிருந்து ஒருத்தன் சுருண்டு கீழே விழுந்தான்.
III LDல்லாகம் பொலீஸ் கோர்ட்டில் அன்றைக்கு ஒரு முக்கியமான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இத்தனை நாளும் அதற்குப் போடப்பட்ட தவணைக்கு ஒரு அளவில்லை. இரண்டு கட்சிக் காரரும் “வேண்டாம் அப்பா இந்தக் கோர்ட்டு விவகாரம்” என்று சொல்லிக் களைத்துப் போகும் சமயத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
AR

வண்டிற்சவாரி
வழக்குக் கொடுத்தது, அதாவது வாதி கந்தையா; பூச்சியன் கந்தையா என்றால்தான் தெரியும், சவாரி உலகில் பூச்சியன் கந்தையா ஒரு மங்காத தீபம்! எதிரி, கழுகன் செல்லையாவும், சின்னத்தம்பியும். முறைப்பாடு என்னவென்றால், அவர்கள் இருவரும் வல்லிபுரக் கோயி லுக்குப் போகும் வழியில் வண்டிச்சவாரி நடக்கும்போது தன்னைச் சவுக்கால் அடித்துப் படுகாயப்படுத்தியதுடன் பிராணாபத்தும் உண்டாக்க எத்தனித்தது என்பது.
சின்னத்தம்பியும் 'கழுகன்’ செல்லையாவும் கோர்ட்டுப் புள்ளிகள். அதாவது இப்படி எத்தனை எத்தனையோ வழக்குகளுக்கும், முறைப் பாடுகளுக்கும் வகை சொல்லிக் கைதேர்ந்தவர்கள். அப்புக்காத்துமாரை யும், பிரக்கிராசிமாரையும், கோட்டை முனியப்பரையும் கைக்குள் போட்டுக்கொண்டு வானத்தை வில்லாகவும், மணலைக் கயிறாகவும் திரித்துவிடக்கூடியவர்கள். சட்ட உலகத்தின் நுட்பங்களையும் ததுவாது களையும் தெரிந்தவர்கள். கந்தையாவுக்கோ இவையெல்லாம் ஓடாது. ஒரு பாவி சின்னத்தம்பியும் செல்லையாவும் செய்த அட்டுழியத்தைப் பொறுக்கமுடியாமல் போய் வழக்குத் தொடுத்து விட்டார். நிதி அநீதியைத் தெய்வம் கேட்கட்டும் என்று சிவனே என்று இருந்துவிட்டார். இந்தக் காலத்தில் நிதி அநீதியைக் கேட்பவர்கள் யார் என்பது செல்லையா கோஷடிக்குத் தெரியும். அவர்கள் அதற்கான வேலையை இரவுபகலாகச் செய்து வந்தார்கள்.
விசாரணை தினத்தன்று செல்லையாவும் சின்னத்தம்பியும் விசாரணை செய்யப்பட்டார்கள். அவர்கள் சொல்லியது: "தச்சன் காட்டில் நடந்த சவாரியில் கந்தையாவின் பேரான பூச்சியன் சோடிகளை என்னு டைய கழுகன் இறக்கிவிட்டன. அதிலிருந்து அவருக்கு எங்கள் மேல் பெரிய ஆத்திரம். வல்லிபுரக் கோயிலுக்குப் போகும்போது அவரும் அவரோடு வண்டியிலிருந்தவர்களும் நன்றாகக் குடித்துவிட்டு வந்து என்னை மாடுவிடும்படி கேட்டார்கள். நான் முதலில் மறுத்து விட்டேன். அவர்களுடைய தொந்தரவு பொறுக்க முடியாமல் பின்னர் ஒப்புக் கொண்டு மாடு பூட்டினேன். என்னுடைய வண்டில்தான் முன்னுக்குப் போனது. கந்தையாவின் வண்டில் பின்னுக்கு சவாரி ஒடும்போது கந்தையா வண்டியிலிருந்து விழுந்ததைப் பார்த்தேன். வேறொன்றும் எனக்குத் தெரியாது.”
கந்தையாவின் வண்டியில் அன்று போன இரண்டொருத்தன்கள் இந்த வாக்குமூலத்துக்கு 'ஓம்' வைத்துச் சாட்சியங் கூறினார்கள். அதாவது தாங்கள் அன்றைக்குக் குடித்திருந்ததாக ஒப்புக் கொண்டார் கள்! உண்மையில் அன்றைக்கு அவர்கள் ஒருவருமே குடித்திருக்க வில்லை. குடியாமலே எத்தனையோ ஜனங்களுக்கு முன்னால் தாங்கள் குடியர்கள் என்ற பட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே தட்டத் துணிந்து விட்டார்கள்! விநோதப் பிறவிகள்!
59

Page 49
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
வழக்கு முடிவைச் சொல்லவேண்டியதில்லை. செல்லையா கோஷடி யினர் சொல்லியது போல, கந்தையாவின் வழக்குப் பறந்து போய் விட்டது!’
IV
பட்டணத்து இரைச்சலுக்கும் பரபரப்புக்கும் ஒரு சிறிது விலகி பரந்து கிடக்கும் பசும்புல் வெளியிலே ஒரு கோவில், சிறிய கட்டிடம். டச்சுக்காரன் கட்டிவிட்ட அந்தப் பிரமாண்டமான கோட்டைக்கு முன்னாலே இந்தக் கோயிலின் சிறுமையை நன்றாக உணரலாம். இது தான் கோட்டையடி முனியப்பர் வாசஸ்தலம். யாழ்ப்பாணத்திலே கோட்டுப் புள்ளிகளின் ‘கண்கண்ட தெய்வம்.
திருவிழா ஒன்று நடைபெறுகிறது. வழக்கில் வென்ற சின்னத்தம்பி - செல்லையா கோஷடியாரின் ‘உபயம். திருவிழாவின் கலாதியைச் சொல்லவேண்டாம். செல்லையா கோஷடியாருக்குச் சாதகமாக வழக்கைத் தள்ளிவிட்ட அந்த நீதிபதி அவரை அறியாமலே பதினைந்து ஆடு கோழிகளின் தலையெழுத்துக்கும் அன்றைக்குத் தீர்ப்பளித்து விட்டார்.
வழக்கு வெற்றியைக் கொண்டாடுவதற்கு சின்னத்தம்பி கோஷடிக்கு இந்த ஒன்று மட்டும் திருப்தியளிக்கவில்லை. இது சாதாரணமாக நடத்தும் ஒரு சில்லறைக் காரியம்.
கந்தையாவைத் தாங்கள் வழக்கில் தோற்கடித்துவிட்டால் ஊரிலே உள்ள வைரவர் கோவிலில் ஒரு பெரிய திருவிழாச் செய்வதாக வைரவ சுவாமிக்கு வேண்டுதல் செய்திருந்தார் செல்லையா. 'பொல்லாத வைரவர் ஆகையால் அவர்கள் அவரை அலட்சியம் செய்வதற்கில்லை.
ஒரு பெரிய திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள். பெரிய மேளங்கள், சின்ன மேளங்கள் அத்தனையும், முத்துச்சப்பறம், லைட்மெஷின் அத்தனையும் பங்குபற்ற இரவுபகலாக ஒருநாள் முழுவதும் திருவிழா நடைபெற்றது. வாணவேடிக்கைக்கு நூற்றுக்கணக்கில் ரூபா ஒதுக்கி யிருந்தார்கள்.
V
இவையெல்லாம் நடந்து முடிந்து ஒரு கிழமைக்குப் பின்,
கழுகன் செல்லையா வீட்டில், மனைவி புருஷனைக் கேட்கிறாள்:
"அண்டைக்குத் திருவிழாவிலே வேலனை அடித்துப் போட்டீர் களாமே, எதற்காக?"
“எதற்காகவா? சபைப் பழக்கம் தெரியாத மாடுகள் கோயிலுக்கு உள்ளே வந்து நுழைந்து விடுவான் போல நின்று எட்டி எட்டிப்
99
பார்த்தானே.
60

வண்டிற்சவாரி
"அதுபோக, பெட்டிக்குள்ளே கழட்டிவைத்த என் கழுத்துக்கொடி எங்கே? வைத்த இடத்தில் காணவில்லை.”
செல்லையா ஆடு திருடிய கள்ளனைப் போல முழிசினார்.
இந்தச் சமயத்தில் தெருவிலே இரண்டுபேர் கதைத்துக்கொண்டு போனார்கள்:
"பூச்சியன் கந்தையாவின் திமிரை செல்லையா அண்ணை அடக்கிப் போட்டார். அவன் இனிமேல் தலை தூக்கமாட்டான். அண்டைக்கு நடந்த திருவிழாவைப் பாத்தியா? ஒரு திருவிழாவும் இப்படி நடக்
கேல்லை. எப்படியானாலும் செல்லையா அண்ணர் ஆள் கெட்டிதான்.”
சகதர்மிணி அம்மாளுக்கு முன்னால் அஞ்சறிவும் ஒடுங்கிப்போய் நின்ற செல்லையா அண்ணைக்கு மனங் குளிர்ந்தது. தான் எங்கேயோ ஆகாசத்தில் பறப்பது போன்ற உணர்ச்சி அவருக்கு உண்டாயிற்று.
"ஈழகேசரி” O9.01.1944
61

Page 50
Gy-II. தியாகராஜன், சோ. சிவபாதசுந்தரத்தின் சகோதரர் ஆவார். இவரைக் கவிஞனாகவே தமிழுலகு அறிந்துள்ளதாயினும், 'ஈழகேசரியில் தரமான சிறுகதைகளைப் படைத்துள்ளார். பயிற்றப்பட்ட ஆசிரியர். குழந்தைப் பாடல்கள் பலவற்றைத் தந்துள்ளார். கிராம விதானையார் ஆகவும், பின்னர் ஆசிரியராகவும் கடமையாற்றியவர்.
p6b6u LomLól
சோ.தியாகராஜன்
படுத்துக்கிடந்த நிலையிலேயே தலையை நிமிர்த்தினேன். கதற வேண்டும் போல இருந்தது. ஆனால், அதுதான் முடியவில்லையே. தூர்ந்து வரண்டு போன கிணறு மாதிரி இருந்தது இருதயம். தூக்கக் கலக்கத்திலும், அமைதியானது நெஞ்சை அமுக்கிக் கொண்டிருந்தது.
மாமியின் விம்மல் நானா திக்கையும் நடுங்கிக்கொண்டே பார்க்கச் செய்தது. நடுவிலே கட்டிலில் மாமா; கால்மாட்டிலே பொருமிக்கொண்டு தலைவிரி கோலத்துடன் இருந்தாள் மாமி அவரைக் காலிலிருந்து தலைவரை வெள்ளைத்துணி மூடிக்கிடந்தது. அவர் தானே போர்த்திக் கொண்டதல்ல, யாரோ போர்த்திவிட்டிருந்தார்கள். அவருக்கு - அந்த ஜடத்துக்கு - இனி எதுவுமே தேவையில்லை. உடம்புப் போர்வையில் இருந்து, உயிர் சிறிது நேரத்துக்கு முன்புதான் பிரிந்தது.
அவர் செத்துப் போனார்.
அது பிரேதம், ஆம் உயிரற்ற ஜடம்.
மாமி.?
அவளுடைய விம்மல்கூட ஒருநாளைக்கு நின்று விடவே போகிறது. ஆனால், இப்போது உணர்ச்சி, உடல் யாவுமே ஒய்ந்து குழைந்து கிடந் தாள். வாய்விட்டு ஒலமிட, அலறித் துக்கத்தைக் குறைக்க அவளுக்குத் திராணி இல்லை. தலைமாட்டிலே குத்துவிளக்கு மெளனமாக எரிந்து
62

நல்ல மாமி
கொண்டிருந்தது. சதிர்க்கூட்டத்தின்போது எழும்ப வேண்டுமே என்பதற் காகக் கோவில் வடக்கு வீதியிலே போய்த் துண்டை விரித்துத் தூங்கு பவர் போல, பலர் மாமாவைச் சுற்றி, பிரேதத்தைச் சுற்றித் தூங்கிக் கொண்டிருந்தனர். விடியுமுன்பே அவர்கள் மற்ற வேலைகளைப் பார்க்க வேண்டும். பிறகு? - மாமாவைப் பற்றிய நினைவு அவர்களுக்குக் கனவாகி விடும்.
LDITLÉlšg5.
அது கனவா?
அந்த ஒரு வருட வாழ்விலே அவள் எதிர்காலத் திட்டங்களின் சட்டமாக இருந்த அவர், அவளது இருதயத்தின் பார்வையிலே முழுக்க முழுக்க உண்மையாக இருந்த மாமா, அன்றுவரை சிரஞ்சீவியாக இருந்த மாமியின் புருஷன், இப்பொழுது பேச்சுமூச்சற்று, வெள்ளைத் துணியினுள்ளே அடங்கிக் கிடக்கிறார்.
அது கனவல்ல. அப்படியானால் அது உண்மையா?
水米 米
குத்துவிளக்கிலிருந்து ஒரு சுடர் தெறித்து எரிந்துகொண்டே கீழே விழுந்தது. மாமிசுட மெதுவாக நிமிர்ந்து மேலே சுற்றிவரப் பார்த்தாள். அவள் கண்களில் தேங்கியிருந்த ஏக்கத்தைக் காண என்னாற் சகிக்க முடியவில்லை. நான் வேறு திசையில் முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.
நானும் விழித்துக்கொண்டு அவளை, அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்று அவள் அறியக்கூடாது. அறிந்தால்..?
அது பழைய ஞாபகக் குவியலைக் கிண்டிக் கிளறிச் சிறிதளவாவது அணைகட்டப்பட்டிருக்கிற சோக வெள்ளத்தை, மடை திறந்தது போல ஆக்கிவிடும்.
இதேபோன்ற ஒரு இரவில், நான் தூங்கவில்லை; மாமியும் விழித்தி ருக்கிறாள். மாமா சும்மா படுத்திருக்கிறார்; என்று ஞாபகக் குவியலைக் கிளறினால், அது எந்த நினைவைக் கொண்டுவரும் என்று எனக்குத் தெரியும்.
அது.
என் வாழ்க்கையின் நினைவு தெரிந்த பருவத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது.
அப்போது எனக்குத் தாய் இல்லை என்று நினைத்து நான் திடுக்கிட வில்லை; அந்தக் குறையை மாமி நிவிர்த்தி செய்திருக்கிறாள். என்னை ஏமாற்றிக் காக்கா காட்டி உணவூட்டக் கதைகள் சொல்லி உறங்க வைக்க
63

Page 51
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
அவளுக்குத்தான் தெரிந்திருந்தது. அவளுடைய இடையை அனைத்துக் கொண்டு தூங்காவிட்டால் எனக்குத் தூக்கமும் வராது.
மாமி அப்போது கன்னிப்பெண். "அவள் விவாகம் செய்துகொண்டு புருஷன் வீட்டிற்கும் போனால் பிறகு என்ன செய்வாய்?” என்று என்னைப் பலர் கேலி செய்வார்கள்.
நான் மாமியைப் பார்ப்பேன். அவள் என்னை அணைத்துக் கொள் வாள். அந்த அணைப்பிலே, நான் கேள்விக்கு விடை காண வேண்டும் என்பதை மறந்துவிடுவேன். என்றாலும், மாமியின் கலியாண நாளை ஒரு பயங்கர நாளாகவே எதிர்பார்த்தேன்.
அந்த நாளும் வந்தது. மாமியைப் பெண் பார்க்க வந்தவர்கள் திருப்தியுடன் போனார்கள். அன்று நிலாவிலே உணவூட்ட அழைத்துச் சென்ற மாமி "அவரைப் பார்த்தாயா?” என்று கேட்டாள்.
“பார்த்தேன் மாமி, நல்லவர் போல இருக்கிறார்” என்றேன்.
அவள் ஒன்றும் பேசவில்லை. சிறிதுநேரம் கழித்து நல்லவர் என்று உனக்கு எப்படியடா தெரியும்” என்று கேட்டாள்.
"குடுமி வைத்திருக்கிறார்; மீசை இல்லை” என்றேன்.
அவளுடைய முகபாவத்தைக் கொண்டு, அவளுடைய உணர்ச்சி களை அளந்தறிய எனக்கு விவேகம் போதாமல் இருந்திருக்கலாம். அல்லது நிலவிலே அவள் முகம் மறைந்திருக்க வேண்டும். மறந்து விட்டேன். இப்போது ஞாபகமில்லை.
கல்யாணத்துக்கு நாள் குறித்தார்கள். விவாகம் சிறப்பாக நடந்தே றியது. அன்றே மாமாவின் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். நானும் போனேன். அங்கே புது இடத்தைப் பார்ப்பதில் பொழுது கழிந்து, இரவு வந்தது. நேரத்தோடு மாமி எனக்கு உணவூட்டி என்னைத் தூங்க வைத்தாள். அவள் அரவணைப்பிலே மெய்மறந்து தூங்கினேன்.
நடுநிசி. ஏதோ கனவு கண்டு விழித்தேன். எங்கும் இருள். பக்கத்திலே என்னுடைய அணைப்பிலே அகப்பட்டுக் கிடந்தது தலையணையா? கைக்கு எட்டிய தூரம்வரை தடவிப் பார்த்தேன். வெறும் பாய், தரை, அப்பால் யாரோ படுத்திருக்கிறார்கள். மாமியினுடைய 'ஸ்பரிசம்' எனக்குத் தெரியும். அது யாரோ! அவள் - மாமி - அங்கு இல்லை.
அழுகை ஆரம்பித்தது. விம்மிக்கொண்டே சிறிதுநேரம் காத்திருந் தேன். வெளியே போய் இருந்தால் வரட்டும் என்ற யோசனையில். அவள் வரவில்லை! z
“மாமீ.” என்று கூப்பிட்டுக்கொண்டே வெளியே பார்த்தேன். ஆகாயம் வழக்கமில்லாத புதிய இடத்தில் தெரிந்தது. புதிய மரங்கள், புதிய வீடு, புதிய புதிய.
64

நல்ல மாமி
எல்லாம் வெளிச்சமாகி விட்டது. அவள் வேண்டுமென்றே என்னை ஏமாற்றி இருக்கிறாள். அழுகையின் ஸ்தாயி மாறிற்று. சப்தம் பலத்துக் கொள்ளவே பக்கத்து அறைக் கதவிலே திறப்பின் சப்தம் கேட்டது.
"திறக்க வேண்டாம்” என்று யாரோ கூறியது - அழுகையின் இடை யிலே மெதுவாகக் கேட்கவே, ஆத்திரத்தோடு கத்தினேன். "மாமீ. LDIILÓ..... LDIIT.....LÁŠ....”
விளக்கொளி வந்தது. எல்லாரும் வந்தார்கள். ஆனால், எல்லாம் புதிய முகங்கள். அவர்களுக்குள்ளே மாமியைக் காணவில்லை. பல்லவி யில் ஆரம்பித்த அழுகை அனுபல்லவியிலேறிற்று.
‘மாமி எங்கே? மாமியைக் கொண்டு வா” என்று கத்தினேன். மாமி வந்த பிறகே அழுகை ஓய்ந்தது. என்னை அலங்கார அறைக்குள்ளே கொண்டுபோய் தனக்கும் அவருக்கும் இடையே வளர்த்தினாள். வெற்றி அடைந்த பெருமிதத்தில் அப்போது தூங்கினேன். துயரம் தெரியாமல் தூங்கினேன்.
அடுத்தநாளைப் பற்றிய குறிப்பு என்னுடைய நினைவுப் புத்தகத்தில் பதியப்படவில்லை. அன்று அவர்களுடைய முதல் சம்பாஷணை என்னைப் பற்றியதாகத்தான் இருந்திருக்கும்? இன்று -
மாமி ஒப்பாரி வைத்துக் கதறி உலகறியச் சம்பாஷிக்கிறாள். கேட்பதற்கு அவர் இல்லை.
"ஈழகேசரி” 16.10.1949
65

Page 52
நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மகன் நவாலியூர் சோ. நடராஜன் ஆவர். கவிஞர் நவாலியூர் சத்தியநாதன் என்ற பெயரிலும் சிறுகதைகள் எழுதியுள்ளார். ரவீந்திரநாத் தாகூர், ராதாகிருஷ்ணன் போன்ற மேதை களின் நாடகங்களையும், கட்டுரைகளையும் மொழிபெயர்த்துள்ளார். 'மருதக்கலம்பகம் இவரது கவிதைத் தொகுதி ஆகும். காளிதாசரின் மேகதூதத்தையும், தாகூரின் கீதாஞ்சலியையும் தமிழில் தந்துள்ளார்.
கற்சிலை
நவாலியூர்சோ.நடராஜன்
கில்லிற் கோதிய அந்த உருவம் முடிந்து தன்னெதிரே நின்றதைக் கண்ட கணேசாச்சாரி புன்முறுவல் செய்தான், அக்கற்சிலையின் புன் முறுவல் போல, இந்த முறுவலின் வனப்புத்தானென்ன புதிதாய் உலகத்தைக்கண்டு ஆச்சரியமடையும் குழந்தையின் அப்பழுக்கில்லாத தூய உள்ளத்திலிருந்து எழும் மனோரம்மியமான புன்முறுவல் போன் றது. என்ன பூரணமான அமைவு, விஸ்வகர்மாவும் செய்ய முடியாத கற்சிலை! “என் உள்ளக்கோவிலில் இத்தனை காலமாகக் கண்ணாம்பூச்சி விளையாடிக்கொண்டிருந்த என் இலட்சியம் இன்றே இக் கல்லில் அமைந்தது” தன் வாழ்க்கையின் நோக்கமெல்லாந் திரண்டு சிற்றுளி மூலம் திவ்வியமான உருப்பெற்ற அச்சிலைமுன் கணேசாச்சாரி தெண்டனிட்டு அஞ்சலி செய்தான். சந்தோஷத்தினால் தன்னை மறந்து ஆனந்தக்கூத்தாடினான். இளமை முழுவதும் அவன் மனதில் தாண்டவ மாடிய பல்வேறு உணர்ச்சியின் வரலாறுகள் போல அச்சித்திர சாலை யெங்கும் சலவைக்கல்லிற் சமைந்த உருவங்கள் கிடந்தன. அந்தோ அந்த வாசற் கதவண்டை இரண்டு மோகினிச் சிலைகள், உயர உள்ள மரக்கட்டையில் கிருஷ்ணனை நினைந்து அழுங்கும் இராதையின் சாயல். இந்த மூலையில் காமனை எரித்த சங்கரர் நிஷடை. அங்கே பர்வத குமாரியின் தவக்கோலம். இவற்றையெல்லாம் தன் மனத்தில் கர்ப்பமாக்கிக் கையினாற் பிரசவித்த கணேசாச்சாரி தன் சித்திர சாலை யில் ஒருவரும் பிரவேசிக்கக்கூடாதெனத் தடுத்துவிட்டான். எனது மனோ விலாசத்துக்கும் உள்ள அமைதிக்கும் ஏற்பட்ட இச்சிற்ப சாலையில்
66

கற்சிலை
மற்றவர்களுக்கு என்ன வேலை இதென்ன தாசிகள் வீடா? நாடக சாலையா? இவர்களெதற்காக இங்கே வரவேணும்? இது நூதன சாலை யுமல்ல, மிருகசாலையுமல்ல. எனது மனச் சாந்திக்காக நான் செய்யும் விளையாட்டை மற்றவர்கள் பார்த்து அதிசயப்படவும் வேண்டாம். சிரிக்க வும் வேண்டாம்.
ஆனால், இது ஒரு நூதனசாலைதான். கணேசாச்சாரியின் உள்ளம் அங்கே திறந்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு கல்லில் மின்னிடை; மனதில் மின்னல் போல உதயமான ஒரு குறிப்பைக் கல்லில் உருவாக்க எண்ணி, உளியினால் உரமாக மோதுண்டு பிளவுபட்ட கற்கூட்டங்கள். கை ஒன்று, கால் ஒன்று, அதரம் ஒன்று, கண்ணிமை ஒன்று, பவளவாய் ஒன்று. இவ்வாறாக மனித அங்கங்களைக் காட்டும் சிலைகளும் தலைகளும் சம்பூர்ணமான உருவ அமைப்பையுடைய பல்வேறுவகைப்பட்ட உருவங் கள், போரில் வெட்டுண்டு கிடக்கும் வீரர் போலக் கல்லிற் காட்சியளித் தன. கணேசாச்சாரியின் மனோதர்ம வரலாற்றுச் சின்னங்களா? அல்லது ஆவேச மின்னலின் இடிகளா?
இந்தக் கோலாகலத்துக்கிடையே சிதைந்து கிடக்கும் வெண்முகிற் கூட்டங்களின் மத்தியில் பூர்ண சந்திரன் உதயமானது போல அவன் கல்லிற் செதுக்கிய மணிமேகலையின் உருவம் தோன்றியது. அசிரத்தை உடன் அவிழ்ந்து சொரிந்த கூந்தல், அதன் செளந்தரியத்தைப் பார்த்து மகிழ்வது போல முகக் கண்ணாடி போன்ற கையை நோக்கிக் குனித்த புருவம். இவற்றிற்கெல்லாம் அழகு முத்திரையிட்டாற்போல புராணங் களில் வரும் ஊர்வசி, திலோத்தமை ஆகிய தெய்வ அரம்பையர்க்குரிய கடவுளரும் காதலிக்கும் தெய்வ சோபையையும் ஊட்டிவிட்டான் கணேசாச்சாரி.
அன்னநடையென்பார்கள். துடியிடை என்பார்கள். கைகளின் வனப் புத்தானென்ன?
வெண்மையான தூசி படர்ந்த தனது உள்ளங்கைகளை உற்று நோக்கினான் கணேசாச்சாரி. "அநித்தியமே உருவான இந்தக் கரங்கள் தானா இந் நூதனச் சிலையை உண்டாக்கின. தெய்வங்கள்தான் மகா செளந்தர்யமுடையனவாம். அந்த அழகுப் பொக்கிஷத்தை நான் களவாடி விட்டேன். அழிவில்லாத சனாதனமான ஒரு பெரிய சிற்பத்தை
ஒரு அபூர்வ சக்தியினால் சிருஷடி செய்துவிட்டேன்.”
இவ்வாறு எண்ணிய கணேசாச்சாரி பூரணம் பெறாது, முடிவுறாது குவிந்து கிடந்த சிற்பக் கலைகளைக் கண்டு தனது அபஜயங்களை நினைந்து வருந்தினான். திறமையற்ற கைகளே! மந்தமான என் மனமே! அந்திமாலை. செஞ்ஞாயிறு ஒளி குறைந்து குறைந்து கடலில் மறையவே இருள் தழ்ந்தது. ஆனால், கணேசாச்சாரியின் சித்திர சாலையில் நின்ற கற்சிலைகள் ஒளிவீசின. இரவினால் அவை
67

Page 53
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
சோபித்தன. இருட்டில் இவ்வாறு ஒளி பெற்று நூதனமாக விளங்கிய சிலைகளைக் கணேசாச்சாரி பார்த்தான். அவையெல்லாம் சலவைக் கல்லினாற் சமைந்த சிலைகளாக அவனுக்குத் தோன்றவில்லை. அவை உயிர் பெற்று மூச்சுவிட்டுக் கொண்டிருப்பன போலத் தோன்றின.
மனிதருள்ளத்திற் காதற்றியை மூட்டிக்கொண்டு மந்தமாருதம் அந்த மாலையில் ஊதிற்று. பக்கதேயுள்ள கடல் மேலே சுக்கிரன் உதய மானான். கணேசாச்சாரியாரின் மனதில் பரந்த மகிழ்ச்சிக் கடலில் இம் மணிமேகலையின் கற்சிலை சுக்கிரன் போல உதயமானது - "எனக்கு இச் சென்மம் பலனளித்தது. ஏழேழு சந்ததிக்கும் நான் பிறந்த நவாலி என்னுமிவ்வழகிய கிராமத்துக்கும் இவ்வூருக்குமே இச்சிலையினால் உலகப் பிரசித்தி ஏற்பட்டது. என்ன? இது சிலைதானா?” என்று எண்ணிக் கொண்டிருக்கையில் ஓங்கி ஒளிவிட்டுக் கொண்டிருந்த அந்தச் சுக்கிரச் சோபை இவ்வழகிய சிற்பசாலையிற் கதிர்விட்டு அம் மண்டபத்தைப் பிரகாசிக்கச் செய்தது. காற்றில் அசையும் மெல்லிய பாவாடைக்கூடாக அச்சிலையின் கோமளமான தொடையும், காலும், கணைக்காலும், சதங்கை அணிந்த பாதங்களும் அப்பொழுது கணேசாச்சாரிக்கு ஒரு புதிய உணர்ச்சியை உண்டு பண்ணின. மாணிக்க மயமான மேகலையும், அவன் கையினாற் செதுக்கிய நுண்ணிடை மேல் சுருங்கிக் குவிந்து திரண்டு விளங்கிய அடிவயிறும் அதற்கு மேலே சொல்லொணா வனப் பும் கம்பீரம் உடையதாய் மாணிக்கவாசகர் கூறியது போன்ற “ஈர்க்கிடை போகா” இளங் கொங்கை மூச்சொடு பொங்கிப் புறகிடும் சாட்சாத்கார மான சித்திர பாவமும் அவனை, அவன் உள்ளத்தே ஒளித்து மறைத்து வைக்கப்பட்ட ஓர் உணர்ச்சியின் ஆழத்தைக் கலக்கத் துவங்கின. அவ்வுணர்ச்சிகள் சப்த சமுத்திரங்களும் புயலிற் சிறியது போல் பொங்கிப் புரண்டு சுழன்று அலைந்தன. கமுகின் திரட்சி போன்ற கழுத்து இந்த உணர்ச்சிப் புயலில் சுழிகளை உண்டுபண்ணின. யெளவனத்தின் புதுமை கட்டுக்கடங்காது வெளிவந்தாற் போன்ற கைகளின் வனப்பு. செளந்தர்யமே கொடிவிட்டுப் படர்ந்தாற் போன்ற காந்தள் விரல்கள். கண் என்றால் தூங்கி விழித்துக் கொண்டால் ஆனந்தமான காட்சியொன்றைக் கண்டு திகைத்துக் கொண்டதுபோல என்று மாத்திரம் கூறமுடியாது. நீண்டவை; கரியவை; சஞ்சலம் உடையவை; சிகிரியா குசைச் சித்திரத்திற் தீட்டிய பெண்களின் பார்வைக்கு இலக்கணமானவை. இவ்வளவில் கணேசாச்சாரி விட்டுவிடவில்லை. பிரமதேவன் உலகில் உத்தமமான ஒவ்வொரு சுந்தர வஸ்துக்களிலும் திலப் பிரமாணம் எடுத்துத் திலோத்தமை என்ற பெண்ணணங்கைச் சிருட்டித்த பின் அதனழகிற் சொக்கி உன்மத்தன் ஆனானாம்,
கணேசாச்சாரி கல்லிற் செதுக்கிய சிலையின் கொண்டையழகே அதற்குப் போதுமானது. வெள்ளி வெளிச்சத்தில் கணேசாச்சாரி தன்முன் நின்ற இந்த ஜகன்மோகினியைக் கண்ணாற் பார்த்து, இதுவரை
68

கற்சிலை
வெளிவராத ஒரு உணர்ச்சியில் ஈடுபட்டுத் தன்னை மறந்து போனான். கற்சிலை புன்முறுவல் பூத்துத் தலை அசைத்தது.
கணேசாச்சாரிக்கு உடலம் பதறிற்று கையிலிருந்த உளி கீழே விழுந்தது. உரை தழுதழுத்தது. அகலிகையைக் கனவிற் கண்ட இந்திரன் போலத் தான் சிருஷ்டித்த அந்த அற்புதச் சிலை முன் உணர்ச்சி பொங்க நின்றவன் அதை வேகமுற்ற தன் கைகளால் கட்டித் தழுவிக் கொண்டான். சற்று நேரத்திற்கெல்லாம் சித்தப்பிரமை கொண்ட வன் போல் ஏதேதோவெல்லாம் குழறினான். சிறிது நேரத்தில் புன்முறுவல் பூத்துத் தலையசைத்த அக்கற்சிலை திண்ணெண்றிருந்தது.
அவனுக்குத் திக்பிரமை தீர்ந்தது போல, கையிலிருந்து விழுந்த உளியை எடுத்துக்கொண்டே இன்னொரு முறை சிலையைப் பார்த்தான். சிலையின் தேஜஸசம், சீவ களையும் அழகுச் சோபையும் எல்லாம் அஸ்தமனமான மாதிரியே இருந்தன. பவளம் போன்ற அச்சிலையின் அதரத்தில் அம்மந்தஹாசத்தைப் பிறப்பிப்பதற்கு ஒரு சிறிய செதுக்கல் வேண்டியிருந்தது. உளியைக் கையிலெடுத்து அதரப் பாகத்தில் ஒரு சிறு பொறி போட உன்னித்தவன் சிறிது உரமாக உளியை வைத்தானோ என்னமோ, மறுகணமே ஜகன்மோகினியான அச்சிலை கல்லோடு கல்லாய் வெடித்துச் சுக்குநூறாயுடைந்து அச்சிற்பச் சாலையெங்கும் சிதறியது.
"ஈழகேசரி” 29.6.194

Page 54
1924இல் பிறந்த வரதர் என்ற தி. ச. வரதராசன் ஈழத்தின் மூத்த சிறுகதை ஆசிரியர். 1940இல் 'கல்யாணியின் காதல்' என்ற ஈழகேசரி’ச் சிறுகதையுடன் எழுத்துலகில் பிரவேசித்தார். கயமை மயக்கம் அவரது சிறுகதைத் தொகுதி. புதுக்கவிதையின் பிதாமகர். யாழ்ப்பாணத்தார் கண்ணீர் அவரது நெடுங்கவிதை நூல். 'மறுமலர்ச்சி', 'புதினம்’ ’வெள்ளி, ‘தேன்மொழி', 'ஆனந்தன்' என்பன அவர் நடாத்திய சஞ்சிகைகள். 'கயமை மயக்கம்', 'வாழ்க நீ சங்கிலி மன்ன, நாவலர்', 'மலரும் நினைவுகள், 'பாரதக்கதை’ என்பன அவரது நூல்கள்.
கற்பு
வரதர்
LOTலை நாலரை மணி பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டின் முன் விறாந்தையிலே மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். எங்கெல்லாமோ சுற்றிவந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள். "மாஸ்டர், நீங்கள் கலைச்செல்வியைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா” என்று கேட்டார் ஐயர்.
"ஒமோம், ஆரம்பத்திலிருந்தே பார்த்து வருகிறேன். ஆனால் எல்லா விஷயங்களையும் படித்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. ஏன்? என்ன விசேஷம்?”
“கலைச்செல்வி பழைய பிரதியொன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை."
"யார் எழுதியது?”
“எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவம்தான் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கிறது” w
“சொல்லுங்கள், நினைவு வருகிறதா பார்க்கலாம்?”
"மூன்றாம்வருஷம் இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டதல்லவா! அந்தச் சூழ்நிலையை வைத்து கதை எழுதப்பட்டிருக்கிறது. குளக்கட்டை உடைத்துக்கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகின்றது; சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகிறார்கள். அந்த ஊரில் ஒரு
70
 

கற்பு
பணக்காரனின் வீட்டுக்கு 'மேல்வீடும் இருக்கின்றது; அங்கே அவன் தனி யாக இருக்கிறான். வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப் பெண் - இளம் பெண் அந்த மேல்வீட்டுக்குச் செல்கிறாள்; பணக்காரன் அவளைப் பதம் பார்க்க முயல்கிறான்; அவள் இசையவில்லை; அவன் பலாத்காரம் செய்தேனும் அவளை அடைந்துவிடத் துணிந்துவிட்டான். அவள் உயிரை விடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல் வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள். இந்தக் கதை யைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் மாஸ்டர்?”
"என்ன நினைக்கிறது? புராண காலத்திலிருந்து திருப்பித் திருப்பிப் படித்த கருத்துத்தான். கதையை அமைத்த முறையிலும் வசன நடை யின் துடிப்பிலும்தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்க வில்லை. படித்தால்தான் அதைப்பற்றிச் சொல்லலாம்.”
"நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை மாஸ்டர். புராண காலத் திலிருந்து படித்ததாகச் சொன்னீர்களே, அந்தக் கருத்தைப் பற்றித்தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்.”
"எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப்பற்றியா?”
"ஒமோம், அதையேதான்.”
“ஒரு பெண்ணின் - முக்கியமாக தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அதில் தானே இருக்கின்றது! மானம் அழிந்தபின் வாழாமை இனிதென்பதல் லவா தமிழன் கொள்கை?”
ஐயர் பெருமூச்சுவிட்டார். பிறகு, "நீங்களும் இப்படிச் சொல்கிறீர் களா?” என்று கேட்டார்.
மூர்த்தி மாஸ்டர் திகைத்தார். தான் என்ன தவறுதலாகச் சொல்லி விட்டாரா? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிறார்?
ஒரு நிமிஷ நேரம் மெளனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்து விட்டவர் போல கணபதி ஐயரே மீண்டும் மெளனத்தைக் கலைத்தார்.
"மாஸ்டர் எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் தெரிந்த ஒரு இரகசி யத்தை உங்களுக்குச் சொல்லப் போகிறேன் - உங்களுக்குச் சொல்ல லாம்; சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்ட பிறகு 'கற்பு பிரச்சனையைப் பற்றிப் பேசுவோம்.”
米 米 米
G8 IITனவருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர்கூட இருக்காது. விசேட தினங்களுக்கு
7

Page 55
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
மட்டும் பிற இடங்களிலிருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர் கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம்.
சிங்களவர் - தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கேயிருந்த தமிழர்களில் முக்கால்வாசிப்பேரும் யாழ்ப்பாணத்திற்கு ஓடிவந்து விட்டார்கள். நான் பூசையை விட்டுவிட்டு எப்படிப் போகமுடியும்? என் மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டும் என்று அவள் மறுத்துவிட்டாள். சிங்களவரும் அக்கோயிலிலே கும்பிடவரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிட மாட்டார்கள். எங்களுக்கும் ஆபத்து நேராது என்ற துணிவில் அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டுவிட்டேன்.
ஒரு புதன்கிழமை. அன்று பேபி நோனா என்ற சிங்களக் கிழவி - அவள் எங்களோடு நன்கு பழகியவள். கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள் - அவள் சொன்னாள்: "நீங்கள் இனி இங்கே இருப்பது புத்தியில்லை ஐயா. காலியிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுமை செய்கிறார்களாம். இன்றிரவோ, நாளையோ இந்தப் பக்கம் வரக்கூடும் என்று கதைக்கிறார்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டுப் பொலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்விடுங்கள். பிறகு பொலீஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லலாம்” என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்ட பிறகு அப்பனே முருகா! என்னை மன்னித்துக்கொள்’ என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு கையோடு கொண்டு போகக்கூடிய பொருட்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித் தோம். என் மனைவியின் நகைகளையும் - நூலிற் கட்டிய தாலியொன் றைத் தவிர - எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியிற் பூட்டினோம், இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. நாங்களும் புறப்பட ஆயத்தமானபோது பேபி நோனா அவசரம் அவசரமாக ஓடி வந்தாள். "ஐயா, ஐயா! சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறான் கள். அம்மாவை அவன்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளித்தி ருக்கச் சொல்லுங்கோ! கேட்டால் ‘நேற்றே ஊருக்குப் போய்விட்டா' என்று சொல்லுங்கோ. நான் இங்கே நின்றால் எனக்கும் ஆபத்து; உங்களுக்கும் ஆபத்து, கவனம் ஐயா!” என்று சொல்லிவிட்டு பேபி நோனா ஒடி மறைந்துவிட்டாள்.
சில்வாவை எனக்குத் தெரியும்; ஆள் ஒரு மாதிரி. ஐயா, ஐயா என்று நாய் மாதிரிக் குழைந்து ஐம்பது சதம், ஒரு ரூபாய் என்று இடைக்கிடை என்னிடம் வாங்கியிருக்கிறான். ஆள் காடைத் தரவளி ஆத லால் நானும் பட்டும்படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொரு நாள் என் மனைவியை றோட்டில் தனியாகக் கண்டபோது, அவனுடைய பார்வையும் சிரிப்பும் நன்றாக இருக்கவில்லை என்று அவள் சொல்லிய துண்டு.
72

இப்போது அவன் வருகிறான் என்றால்.
எனக்கு ஒருகணம் ஒன்றும் தோன்றவில்லை. யோசிக்கவும் நேர மில்லை. வீட்டுக்குள் உயரத்திலே பரண் மாதிரி மூன்று மரங்களைப் போட்டு அதன்மேல் சில பழைய பெட்டிகளைப் போட்டிருந்தது. என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின்மேல் விட்டு மெதுவாக அந்தப் பெட்டிகளின் பின்னால் மறைந்திருக்கும்படி விட்டேன். பிறகு எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு, முன் விறாந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர அந்தக் காடையர்களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள் மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, “என்ன சில்வா, இந்தப்பக்கம்?” என்று சிரிக்க முயன்றேன்.
“சும்மாதான், நீங்கள் இருக்கிறீர்களா, இல்லாவிட்டால் யாழ்ப்பாணத் துக்கு கம்பி நீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்” என்றான்.
“முருகனை விட்டு நான் எங்கேதான் போகமுடியும்?” என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.
“எங்களுக்குக் கொஞ்சம் தண்ணிர் குடிக்கவேண்டும்” என்றான் சில்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஆனாலும் திருப்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணிரை வார்த்துக்கொண்டு நிமிர்ந் தேன். எனக்கு முன்னால் அந்த மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.
"அதுசரி ஐயா, எங்கே அம்மாவைக் காணவில்லை?”
நான் திரும்பித் திரும்பி மனத்துக்குள் ஒத்திகை பார்த்து வைத்தி ருந்த வசனங்களை ஒப்புவித்தேன்: "அவ நேற்றே ஊருக்குப் போய் விட்டாவே.”
'பளிர் என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. செம்பும் தண்ணிரும் உருண்டு சிதறிற்று. என் கண்களுக்குப் பார்வை வருமுன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான்; மற்றக் கையினால் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.
"தமிழ்ப் பண்டி பொய்யா செல்லுகிறாய்? இன்று காலையிற்சுட உன் பெண்டாட்டியைப் பார்த்தேனே!”
மற்றவன் கேட்டான்: “சொல்லடா! அவளை யார் வீட்டில் கொண்டு போய் ஒளித்து வைத்திருக்கிறாய்?" எனக்கு நெஞ்சிலே கொஞ்சம் தண்ணிர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவளை வேறு யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்துவிட்டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்கமாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி; அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
73

Page 56
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
“என்னடா பேசாமல் நிற்கிறாய்?”
குத்து! அடி உதை!
குத்து! அடி உதை!
குத்து அடி உதை!.
நான் இயக்கமின்றிக் கீழே விழுந்துவிட்டேன். அம்மட்டிலும் அவர்கள் விடவில்லை. இரண்டுபேர் என்னைப் பிடித்துத் தூக்கினார்கள்,
"அவள் இருக்கிற இடத்தை நீ சொல்லமாட்டாய்?. கடைத் தெருப் பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான்கள். அவன் களிடம் உன்னைக் கொண்டுபோய்க் கொடுத்தால், உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்தபிறகு கீழே நெருப்பைக் கொளுத்தி சுடுவான்கள், உனக்கு அதுதான் சரி. வாடா!” என்று சொல்லி இழுத்தார்கள். என்னால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக்கொண்டு நடு வீட்டுக்கு வந்து விட்டார்கள். மேலே என் மனைவி. அந்த அறையையும் கடந்து வெளியே காலை வைத்துவிட்டார்கள்.
நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்ற கூச்சலோடு என் மனைவி பரணி லிருந்து குதித்தாள்.
"அவரை விட்டு விடுங்கள்” என்று அலறிக்கொண்டே என்னிடம் ஓடி வந்தாள். W
அவர்கள் என்னை விட்டுவிட்டார்கள். ஆறு முரட்டுக்கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன.
பிறகு.
என்னை ஒரு மேசையின் காலோடு பின்கட்டாகக் கட்டினார்கள். அவளை - என் மனைவியை - குசினிப்பக்கம் இழுத்துக்கொண்டு போனார்கள். இரண்டொரு நிமிஷங்களில் இவளுடைய அலறல் கேட்டது. பிறகு அவள் அலறவில்லையோ, அல்லது நான்தான் இரத்தம் கொதித்து, மூளை கலங்கி, வெறிபிடித்து, மயங்கிவிட்டேனோ!
மறுபடி எனக்கு நினைவு வரும்பொழுது அதே மேசையடியில் யாரோ ஒருவருடைய மடியில் படுத்திருப்பதை உணர்ந்தேன், என்னை அவ்விதம் ஆதாரவாகத் தூக்கி மடிமீது வைத்திருப்பது யாரோ என அறிய ஒரு ஆவல். கண்களைத் திறந்து பார்த்தேன்.
O என் மனைவி!
மானம் அழிந்த என் மனைவி.
எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப்போன கருத்து’ என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனைவியின் மடிமீது
74

கற்பு
தலை வைத்துப் படுத்திருக்கிறேனே; . என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்துவிட வேண்டுமென்று மனம் உன்னிற்று.
என் முகத்திலே ஒரு சொட்டுக் கண்ணிர்; இன்னொன்று, இன்னொன்று. என் முகமும் அவள் கண்ணிரால் நனைய, மனம் சிந்திக்கத் தொடங்கியது.
மூன்று விஷப் பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறிஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யாரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப் படாதபோது அவளுடைய மானம் போய்விடுமா? செய்யாத குற்றத்துக்கு அவள் தண்டனை அடைய வேண்டுமா? மனம் சம்பந்தப்படாதபோது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்துவிடுமென்றால் பிரசவத்துக்காக டாக்டரிடம் போகும் பெண்களெல்லாம்.
என் மனதில் எழுந்த அருவருப்பை வெளியே இழுத்தெடுத்துத் தூர விசினேன், பரிதாபப்படவேண்டிய, பாராட்டப்படவேண்டிய என் மனைவி யின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.
பிறகு பொலீஸ் வந்தது. பேபி நோனாதான் அந்த உதவியைச் செய்தாளென்று பின்னால் தெரிந்துகொண்டேன், என்னவோ கஷடங்கள் எல்லாம் பட்டு, அகதி முகாமில் கிடந்துழன்று எப்படியோ இங்கே வந்து சேர்ந்தோம்.
来 来 来
"இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்து விடுமா? அதற்காக அவள் உயிரையும் அழித்துவிட வேண்டுமா?. அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிட வேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறியவள். அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள் பத்தினித்தெய்வமா, அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்துக்குப் பலியான பேதையா?. சொல்லுங்கள் மாஸ்டர்.”
கணபதி ஐயர் உணர்ச்சி மேலிட்டால் பொருமினார்.
“என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா! இப்படித்தான் பரம்பரை பரம்பரையாக இரத்தத்தில் ஊறிப்போன பல விஷயங்களைப் பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டு விடுகிறோம். நான்கூட எவ்வளவு முட்டாள்தனமாக அபிப்பிராயம் சொல்லிவிட்டேன். ஐயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு தேவையில்லாத விஷயங்களில்
75

Page 57
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
எல்லாம் வாய்வீச்சு வீசுகிற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மை யான ஒரு பகுத்தறிவுவாதியை இன்றைக்குக் கண்டுபிடித்து விட்டேன்” என்று சொன்னார் மூர்த்தி மாஸ்டர். ஐயர் வீட்டுச் சுவரிலே இருந்த மகாத்மா காந்தியின் படம் - அதிலே ஐயரின் சாடை தெரிவது போலத் தோன்றிற்று மூர்த்தி மாஸ்டருக்கு.
“மத்திய தீபம்” 1950
76

அ. ந. கந்தசாமி முற்போக்கு அணியைச் சேர்ந்தவர். "ஈழகேசரியில் தனது முதலாவது சிறுகதையை எழுதினார். தொடர்ந்து, ‘தேசாபிமானி சுதந்திரன்', 'வீரகேசரி’ ஆகிய பத்திரிகைகளில் நாற்பது சிறுகதைகள் வரை யில் எழுதியுள்ளார். இரத்த உறவு'சந்திப்பு' என்பன தரமான சிறுகதைகள் 'மதமாற்றம் இவரது சிறந்ததொரு நாடகம். கவீந்திரன் என்ற பெயரில் கவிதைகளும் யாத்துள்ளார். அமரராகிவிட்டார்.
நள்ளிரவு
அ.ந.கந்தசாமி
6 நான் நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன்' என்றான் அவன் சர்வசாதாரணமாக,
அவன் பேச்சிலே துக்கமோ, துயரமோ, அல்லது ஏக்கத்தின் ரேகை களோ தென்படவில்லை. அமைதியாகவும் ஒருவித விரக்தியோடும் பேசினான் அவன். என் மனதிலே சுந்தராம்பாள் பாடிய 'சிறைச்சாலை ஈதென்ன செய்யும் என்ற பாடல் ஞாபகத்துக்கு வந்தது. அந்தப் பாட்டிலே கூறப்பட்ட சரீராபிமானமற்ற ஞான தீரரில் இவன் ஒருவனோ என்று என்னுள் நானே கூறிக்கொண்டேன். ஆனால் அவன் பேச்சில் விரக்தி மட்டுமல்ல ஒருவித ஆனந்தம்கூட அலை வீசியது. ஜெயிலுக்குப் போவ தற்கா இவ்வளவு தூரம் சந்தோஷப்படுகிறான் என்று எண்ணினேன்
நான்.
என்னுடன் பேசிய அவன்’ ரொம்பக்காலம் என்னுடன் பழகியவன் அல்ல. அன்றுதான் அகஸ்மாத்தாக அவனைச் சந்தித்தேன். இரவு சினி மாவில் இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு தன்னந்தனியாக கொழும்பு நகரில் எனது அறையை நோக்கி வந்துகொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென எங்கள் நட்புக்குதவியாக மழை பொழிய ஆரம்பித்தது. நான் ஓடோடிச் சென்று, மெயின் ஸ்ரீட்டும், பூந்தோட்ட விதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டடத்தில் ஒதுங்கிக்கொண்டேன். பழைய கிறிஸ்தவ தேவாலயங்களைப் போல் பிரமாண்டமான வளைவுகள் உள்ள வராந்தா வுடன் கூடிய இக்கட்டடத்தைப் பல தெருத்திகம்பரர்கள் தமது திருப்
77

Page 58
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கம் என்பதை அப்படி ஒதுங்கியபோதுதான் தெரிந்து கொண்டேன்.
அங்குமிங்குமாய் சிலர் நீட்டி நிமிர்ந்தும் மடங்கி முடங்கியும் கூனிக் குறுகியும் படுத்துக் கிடந்தார்கள். ஒருசிலர் நித்திரையாகிவிட்டார்கள். இன்னம் சிலர் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மேலும் சிலர் மெல்லிய குரலில் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள்.
நான் அங்கே ஒதுங்கி ஒருசில வினாடிக்குள் மழையின் வேகம் அதிகரித்தது. சாரல் வராந்தாவின் உள் சுவர்வரை வீசி அடித்தது. படுத்திருந்தவர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். அங்குமிங்குமாக தமது படுக்கை இடங்களை மாற்றிக் கொண்டார்கள், அல்லது மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.
அந்தக் காட்சி எல்லாம் எனக்குப் புதுமையாகவும் கவர்ச்சி நிறைந்த தாகவும் தோன்றியது. அவற்றைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தேன். அப் பொழுதுதான் அங்கு மழையோடு போட்டி போட்டு வந்து வராந்தாவில் ஏறினான் அவன். பக்கத்திலே சந்தியிலிருந்த மின்சார வெளிச்சம் மழை யால் மங்கி இருந்த போதிலும் வராந்தாவில் ஒரு சிறிது வீழ்ந்து கொண் டிருந்தது. அந்த வெளிச்சத்திலே அவனைக் கவனித்தேன். உற்சாக மான சிரித்த முகம். சுத்தமான ஷர்ட்டும், கோடுகளிட்ட வெள்ளைச் சாரமும், இடையில் ஒரு புலித்தோல் பெல்ட்டும் காட்சி அளித்தன. வயதில் வாலிபன். நன்றாக நனைந்து போயிருந்தான்.
இழவு பிடித்த மழை என்று கூறிய அவன், என்னைப் பார்த்து "நீங்கள் மழையினால் இங்கு அகப்பட்டுக் கொண்டீர்களோ?” என்று கேட்டான்.
"ஆம்" என்றேன். அத்துடன் சம்பாஷிப்பது அந்த நேரத்தில் டானிக் போல உற்சாகம் தருவதாய் இருந்ததால் அதனைத் தொடர விரும்பி நீ எங்க அவசரமாய்ப் போகின்றாய்?" என்றேன் சுமுகமாய். 8
அவன் சிரித்தான். "இதுதான் நமது மாளிகை படம் பார்த்துவிட்டு வருகிறேன், படுப்பதற்கு” இப்படியாக ஏற்பட்ட பேச்சு எங்கெல்லாமோ சுற்றி, எவ்விதமாகவோ வளைந்து வளைந்து சென்றது. அவன் நான் யார், எங்கிருக்கிறேன் என்பதையெல்லாம் விபரமாகக் கேட்டான். நான் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்தவன் என்றால் அவன் பயந்து திகைத்துப் போய் விடுவானோ என்று அஞ்சி ஒரு கடையிலே சேல்ஸ்மென் என்று கூறினேன்.
பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் சர்வசாதாரணமாக கஞ்சாச் சுருட்டொன்றைப் பற்றவைப்பதற்காக அதற்கு வேண்டிய முஸ்தீபுகளைச் செய்ய ஆரம்பித்தான். மடியில் இருந்த கஞ்சாவை எடுத்து கையில் வைத்துக் கசக்கினான். பின்னால் ஒரு சிகரட்டைச் சீர்குலைத்து அதனுள்ளே அதைப் பொதித்தான்.
78

நள்ளிரவு
என்னைப் பார்த்து நீங்கள் கஞ்சா பிடிப்பதில்லையா?” என்றான் சிரித்துக்கொண்டு. "இல்லை” என்ற பாவத்தை முகத்தில் பரவவிட்டேன். "குளிருக்குக் கொஞ்சம் தடேற்றிக் கொள்ளலாம், குடித்துப் பாருங்கள்" என்று வற்புறுத்தினான். அவன் பேச்சு, அவன் புன்னகை எல்லாமே என்னை அடிமை கொண்டிருந்தன. குடித்துத்தான் பார்ப்போமே என்று சிகரட்டை வாங்கினேன். அவன் தன் கையிலிருந்த நெருப்புப் பெட்டி யால் பற்றிவைத்து விட்டான்.
கஞ்சாப் புகையை உள்ளே இழுத்தேன். அந்தக் குளிருக்கு அது சிறிது தெம்பு தரத்தான் செய்தது. மழையோ இப்போது மேலும் அடித்துப் பெய்யத் தொடங்கியது. பொட்டுப் பொட்டாக ஆங்காங்கு பரந்து கிடந்த மின்சார வெளிச்சத்தில் தார் ரோடு எண்ணெயால் மெழுகியது போலப் பளபளத்தது.
எனக்குப் போதை உண்டாகியதோ என்னவோ தெரியாது; ஆனால் மஸ்துப் பொருட்களின் போதைக்கு ஒரு அபூர்வசக்தி உண்டு. மனிதனின் தன்னுணர்ச்சியையும், வெட்கத்தையும், பயத்தையும் போக்கடித்து விடு கிறது. இதன் காரணமாகத்தான் சிலர் போதையின் வயப்பட்டதும் வேதாந்தம் பேசுகிறார்கள். பயத்தாலோ வெட்கத்தாலோ அவர்கள் உள்ளக் கூஜாக்களில் அடைபட்டிருந்த வேதாந்தம் மெல்ல வெளியே கிளம்ப லாகிரிப் போதை மூடியைத் திறந்து விடுகின்றது.
நானும் நண்பனும் அளவளாவிப் பேசிக்கொண்டிருந்தோம். நான் ஐந்தாறு தடவை கஞ்சாவை இழுத்த பின்னர் குறைச் சிகரட்டை அவன் வாங்கிக் கொண்டான்.
நான் கேட்டேன்: "நீ நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன் என்றாயே, ஏன் போகிறாய்? என்ன குற்றஞ் செய்தாய்?”
அவன் சிரித்தான். “அதோ பார்த்தீர்களா ஒரு பெண் முடங்கிப் படுத்திருக்கிறாள்! அவளைப் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு”
“ஒரு நாளிரவு கள்ளுக்கடை முடுக்கிலே அவளைப் பலாத்காரம் செய்கையில் போலிசார் பிடித்து வழக்குப் போட்டுவிட்டனர்” என்று கூறி அவன் கலகலவெனச் சிரித்தான்.
"யார் அந்தப் பெண்?” என்றேன் ஆவலுடன். "அவளா? யாரென்று யாருக்குத் தெரியும்! ஆனால் அவள் பக்கத்திலே படுத்திருக்கிறதே குழந்தை, அது என் குழந்தைதான்!”
"அப்போ அவள் உன் மனைவியா?” அவன் முகத்தைச் சுழித்தான். "அவள் எல்லோருக்கும் மனைவி தான். ஆனால் என்னிடம் மட்டும் அவளுக்குச் சிறிது அதிகப் பிரியம்! நானும் அப்படித்தான்!”
79

Page 59
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
எனக்கு விஷயம் ஒரே புதிராகிவிட்டது. கஞ்சா மயக்கத்தில் முன் னுக்குப்பின் முரணாக அவன் பேசுகிறானோ, அல்லது எனக்குத் தான் அவன் ஒன்று பேச வேறொன்று கேட்கிறதா என்ற சந்தேகம் ஜனித்தது.
எனது நண்பன் இப்பொழுது அந்தப் பெண்ணிருந்த பக்கத்துக்குச் சென்றான். நிச்சிந்தையாகத் துயின்று கொண்டிருந்த அவளுக்கு அருகில் சென்று, "பேபி பேபி” என்று கூப்பிட்டான். அதை அவள் எதிர்பார்த்துத் துயின்றுகொண்டிருந்தவள் போல எழுந்து உட்கார்ந்தாள். கண்களை கசக்கி விட்டுக் கொண்டாள். பின் அவர்கள் இருவரும் ஏதோ சில வார்த்தைகள் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். இரண்டு நிமிஷத் தில் நண்பன் மீண்டும் என்னிடம் வந்தான். அவன் கையில் வெற்றிலை பாக்கு நிறைய இருந்தது.
நீங்கள் வெற்றிலை பாக்கு போடுவீங்களா?” என்று என்னிடம் கேட்டான் அவன். நான் வெற்றிலை பாக்குப் போடுவதில்லை. என் மனதில் ஆச்சரியமும் இந்த வினோதமான காதலர்களின் தன்மையை அறிவதில் அவாவும் அதிகமாகி இருந்தது. இவர்கள் காதலர்களா? அல்லது பலாத்கார வழக்கிலே சம்பந்தப்பட்ட இரு பகைவர்களா? அவன் கூறுவதின்படி அவர்கள் இரண்டுமென்று அர்த்தமாகிறது. குளிர்ந்த நீர் கையை வைத்ததும் கையைச் சுட்டது என்று கூறுவது போல் இருந்தது, இந்த வினோதச் செய்தி. இதன் பூரா விபரங்களையும் அறிய வேண்டுமென்ற ஆவல் அடக்க முடியாமல் என் மனதிலே கிளம்பியது.
மீண்டும் சம்பாஷணையில் ஓட்டத்தை உண்டாக்குவதற்காக நீ என்ன தொழில் செய்கிறாய்?" என்று அவனிடம் கேட்டேன்.
அவன் அர்த்தபுஷடியுடன் புன்னகை புரிந்தான். “தொழில் எதுவென்றிருக்கிறது? எப்படியும் ஜீவனோபாயம் நடந்தாற் சரிதானே?” என்று வேதாந்தி போல் பேசினான் அவன்.
"அப்படியானால்.” என்று ஆரம்பித்த வசனத்தைப் பூர்த்தி செய்யாது நிறுத்தினேன் நான்.
அவன் சிரித்தான்.
மழை இப்பொழுது முன்னிலும் திடீர் வேகத்தோடு பெய்ய ஆரம்பித்தது. இடிகள் வானவெளியிலே உருண்டுருண்டு சப்தித்தன. வானம் தன் மூடிய கண்களைத் திறந்து உலகை ஒரு தடவை பார்த்து பின் படீரென்று இமைக்கதவுகளை மூடிக்கொள்வது போல மின்னல் ஒன்று பளிச்சிட்டு மறைந்தது.
எனக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. புத்திசாலியாகவும், நேர்மை உள்ளவனாகவும் தோன்றும் இவன் பிக்பாக்கட்டா? ஆம். அவன் நேர்மையுள்ளவன்தான். இல்லாவிட்டால் தான் பிக்பாக்கெட் என்பதைக்
80

நள்ளிரவு
கூறிவிடுவானா? இந்த முடிச்சுமாறிக்கும் சமூகத்தின் இதர கள்வர் களுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. அவர்கள் தம் போக்கை மூடி மறைத்துக் கண்ணியம் நிறைந்தவர்களாக நடிக்கிறார்கள். இவனோ உண்மையைக் கூறிவிடுகிறான். இதன் காரணமாக என் உள்ளத்தில் ஒரு மகாத்மாவாக, சத்தியவந்தனாகத் தோன்றினான் அவன். t
"அப்படியானால் உனக்கு ஒழுங்கான வருமானம் கிடைக்காதே! ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பாய்” என்று சாதாரணமாகக் கேட்டேன்.
உலகத்திலே எல்லோரும் பிக்பாக்கட்டைப் பற்றிப் பேசுகிறார்கள். ட்ராமிலும், பஸ்ஸிலும், சினிமா நெருக்கடியிலும், அங்கிங்கெனாதபடி நிறைந்திருப்பவன் போல, நகரத்தில் மடியிற் கனமுள்ள எவரும் அவனை ஞாபகப்படுத்தி அஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஆயிரத்தில் ஒருவருக்குத்தானும் அவன் நேரில் காட்சியளிப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒருவகை உடையைக் கொண்டு இவன் பிக்பாக் கட்டாயிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறதே அல்லாமல் நிச்சயம் செய்து கூறுவதற்கில்லை. பழைய காலத்து 'சதாரம் நாடகத்தில் கள்ள உடைபோட்டு கொள்ளையடிக்கப் போவோமடா என்று பாடிவரும் கொள்ளைக்காரர்கள் நாடகத்திற்குத்தான் சரியேயல்லால், வாழ்க்கையில் நாம் காணக்கூடியவர்கள் அல்ல. பிக்பாக்கட்டுகள் தீயணைக்கும் வீரர் கள் போல் அதற்கென்றுள்ள உடையை உடுத்துக் கொண்டா தமது தொழிலுக்குப் போகப் போகிறார்கள்? - பார்க்கப் போனால் கடவுள் போல் இவர்களும் பலர் மனதிலே அரூபிகளாகத்தான் விளங்க முடியும். ஒரு சிலர் பிடிபடுவதும் உண்மைதான்! ஆனால் அவர்கள் உண்மைக் குற்றவாளிகள்தாம் என்பதை யார் கண்டார்கள்!
என் மனதிலும் பிக்பாக்கெட்' என்பவன் நகரில் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கும் ஒரு அரூபியாகத்தான் இதுவரை இருந்தான்.
ஆனால் இப்பொழுதோ என் கண்முன் காட்சி தந்து விட்டான். என்பு தோல் போர்த்த சதையுடம்புடனே நிற்கும் அவனது அந்தரங்கங்களை எல்லாம் கூடிய அளவு தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை, அந்த ஆசையில்தான் எவ்வளவு சம்பாதிப்பாய்? என்ற கேள்வி என் உள்ளத்தில் ஜனித்து வாயினால் வெளிப்பட்டது.
"மாதம் முடிந்ததும் இவ்வளவு கிடைக்கும் என்று நிச்சயமாய்ச் சொல்லக்கூடிய தொழில் அல்ல இது. சில சமயம் கிடைக்கும், சில சமயம் ஒன்றுமே கிடைக்காது.”
எனக்கு இதிலே மனம் படியவில்லை. என் உள்ளத்தை அலைக் கழித்த அந்தப் பெண்ணின் விவகாரத்திற்கு எப்படி வருவது என்று தெரியவில்லை. இருந்தும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு "ஆமாம், நீ நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறாயே, உனக்குக் கவலையாய்
81

Page 60
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
இல்லையா? பயம் கிடையாதா?” என்று அந்தத் திசைக்கு சம்பாஷ ணையைத் திருப்புவதற்குச் சாதகமான முறையில் என் பேச்சை ஆரம் பித்தேன்.
அவன் இதற்கும் தன் புன்னகையுடனேயே பதிலளித்தான். "பன்னி ரண்டாவது தடவையாக ராஜா வீட்டுக்குப் போகிறேன், பயமா? எதற்கு?” என்றான் அவன்.
ஆரம்பத்திலிருந்தே அவன் பேச்சு, செயல் எல்லாம் எனக்குப் புதுமையாயிருந்தன. ஆனால் இப்பொழுதோ அந்தப் புதுமையின் உச்சியை நான் எட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்தது.
அவன் மேலும் தொடர்ந்தான். "ஜெயிலிலே எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான். உண்மையில் அங்கிருந்து நான் வெளியே வந்து ஒண்ணரை மாதந்தான் ஆகிறது. பத்துப் பன்னிரண்டு பேர்களைத் தவிர அனேகமாக மற்ற நண்பர்களெல்லாம் இன்னம் அங்குதான் இருப்பார்
岁笼
ஏதோ நண்பர்களைச் சந்திக்க வேலையிலிருந்து ஒய்வெடுத்துக் கொண்டு செல்லும் ஒருவன் போல அவன் பேசினான். மறியற்சாலை அவனைத் தன் இருண்ட அறைகளைக் கொண்டு பயமுறுத்தவில்லை. அவன் வர்ணனையைப் பார்த்தால் அவனை அது மயக்கி அழைப்பது போலத் தெரிந்தது.
நான் அவன் முகத்தை நோக்கினேன். கஞ்சா நெருப்பு இப்பொழுது தன் முடிவான கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. மழை நேரத்தில் குளிர்ந்த பாரமான காற்றினாற் போகும் புகை விரைவாக மேலெழுந்து மறையவில்லை. ஆறுதலாக சுருள் சுருளாக மாடிப்படிகளில் சிரத்தை யோடு ஏறும் ஒரு குழந்தை போல புகை மெல்ல மெல்ல எழுந்து கொண்டிருந்தது. அதனுடாக அவன் கண்களைப் பார்த்தேன். அதில் ஒளியும் இன்பமும் அலைவீசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், ஆச்சரியம் மேலும் அதிகமாகியது.
"அப்போது சிறைக்குப் போவது உனக்குப் பிரியமென்று சொல்லு!”
"சந்தேகமில்லாமல்”
"ஏன்? அங்கே என்ன அவ்வளவு விசேஷமிருக்கிறது?”
“என்ன இருக்கிறதா? அப்போது உங்களுக்குச் சிறையைப் பற்றி ஒன்றுமே தெரியாதென்று சொல்லுங்கள்”
குருவின் சொற்களை ஆவலுடன் எதிர்நோக்கும் பக்தி நிறைந்த ஒரு சிஷயன்போல அவன் வார்த்தைகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
82 ܝ

நள்ளிரவு
"இந்த மழை ஓய்ந்ததன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டுக்கோ கடைக்கோ செல்வீர்கள். அடைமழை இரவுக்கும் நித்திரைக்கும் நல்ல பொருத்தம். நன்றாகத் தூக்கம் வருமல்லவா?”
நான் தலையை ஆம்' என்ற பாவனையில் அசைத்தேன்.
“எனக்கும் தூக்கம் வரும். ஆனால் தூங்கத்தான் இடமில்லை! பார்த்தீர்களா நமது மாளிகை எப்படி ஈரமாய்ப் போய்விட்டதென்று.”
கதை சுவாரஸ்யத்தில் ஈடுபட்டிருந்த நான் அப்போது தான் நிலத்தை நோக்கினேன்; காலிலே செருப்பு அணிந்து இருந்ததால் சுற்றிலுமிருந்த ஈரம் என்னை அவ்வளவாகத் தாக்கவில்லை. அவன் கால்களைப் நோக்கினேன். அவை ஈரத் தரையில் பதிந்து சிறிது வெளிறி இருந்தன.
குளிர்ந்த காற்றொன்று மழைச் சாரலை உள்ளே அடித்து வீசியது. உடம்பிலே சிலிர்ப்பும் நடுக்கமும் சிறிது தோன்றின.
"நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா?” என்று என்னை விசாரித்தான் அந்த அதிசய நண்பன்.
"சாப்பிட்டுவிட்டுத்தான் படம் பார்க்கக் கிளம்பினேன்” என்றதும் அவன் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். எதையோ பேச அவன் கூச்சமடைந்தானென்று தெரிந்தது.
பேசிக்கொண்டிருந்தவர்கள் மெளனமாகியதும் காதிலே மழையின் 'ஓவென்ற இரைச்சல் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. அந்த ஓசையிலே ஒரு தனிமையுணர்ச்சி இருப்பது போல எனக்குப் பட்டது. வானம் யாரை நினைத்து இவ்வளவு கண்ணிரையும் கொட்டி ஓவென்று அழுது கொண்டிருக்கிறதோ? என்ற வினோதமான கற்பனை என் மனதிலே தோன்றியது.
"நீ சாப்பிட்டு விட்டாயா?” என்றேன்.
"இன்று இந்தக் கஞ்சாவோடு சரி ஒரு டீ அடித்துவிட்டுப் படுக்க வேண்டியதுதான்! ஆமாம், நீங்கள் கேட்டீர்களே, ஜெயிலிலே என்ன சுகமென்று. நேரத்துக்கு உணவு! இது போன்ற அடைமழை நேரத்தில் இருண்ட சிறைச்சாலை 'கம்' என்றிருக்கும். நல்லாக நித்திரை வரும்! அந்தக் கருங்கற் சுவர்களை மீறிக் குளிர் உள்ளே நுழைந்துவிட முடியாது.”
நான் திகைத்து விட்டேன்.
அடிமைத்தனத்திலே கிடைக்கும் சுகத்தை விரும்பிய இவன் சிறையை நாடுகிறான்! என் மனதைச் சிறிது நேரத்தின் முன் கவர்ந்து நின்ற அவனது உருவம் இப்பொழுது வெறுக்கத்தக்கதாகத் தோன்ற
83

Page 61
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
ஆரம்பித்தது. இப்படியும் ஒரு மனித ஜன்மம்! ஒருவேளை ஆகாரத்துக் காக தனது சுதந்திரத்தையே விற்கத் தயாராகி விடுகிறதா?
"அப்படியானால் உன் சுதந்திரம் பறிபோவதைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா?” என்றேன் நான்.
“சுதந்திரம். ஜெயிலுக்குப் போனதும் அடுத்த வேளை உணவு எங்கே இருந்து எப்படிக் கிடைக்கும் என்பது போன்ற கவலையிலிருந்து விடுதலை கிடைக்குமல்லவா?” என்றான் அவன்.
என் சிந்தனையில் புதிய அலைகளைக் கிளறிவிடும் அவன் பிக்பாக்கட் என்று என்னால் நம்ப முடியவில்லை. என் உள்ளத்திலே மீண்டும் மோகனருபம் பெற்றான் அவன்.
"அப்படியானால் ஜெயிலுக்குப் போக நீயேதான் சந்தர்ப்பத்தை சிருஷ்டித்துக் கொண்டாயா?”
அவன் இதற்கும் தன் சிரிப்புடனேயே பதில் தந்தான். அவனது கசந்த வாழ்விலே எப்படி இந்தச் சிரிப்பென்னும் இனிமை உதயம் ஆகிறது என்று ஆச்சரியப்பட்டேன் நான்.
"ஆம் அந்த பெண்ணின் ஒத்தாசையால் அது முடிந்தது. நான் என்ன சொன்னாலும் அவள் அதை மறுக்கமாட்டாள். அவளுக்கு என் மீது அவ்வளவு பிரியம். அன்று பொலீஸ்காரர் ரோந்துவரும் நேரத்தில் பலாத்கார நாடகத்தை நடத்தினோம். அவள் பலே கெட்டிக்காரி. 'டவர்ஹால் நடிகைகள் கூட அவள் மாதிரி நடிக்க மாட்டார்கள்! அவ்வளவு கூச்சல் போட்டாள் அவள். அடுத்த நாள் கோட்டில் ஆஜரானோம்” என்று கூறிச் சற்று நிறுத்தினான் அவன்.
"அங்கே குற்றத்தை ஒப்புக்கொண்டாயாக்கும்” என்றேன் நான்.
"இல்லை! நாளைத் தவணையன்றுதான் ஒப்புக்கொள்ளப் போகிறேன்” என்று விளக்கினான் அவன். இதுவரை பிணையிலிருந்து வருவதாகவும் அவனது கோஷடியில் ஒருவன் இப்பொழுது வர்த்தகத் துறையில் சிறிது முன்னேறி வந்ததாகவும் அவனே தனக்குப் பிணை கொடுக்க முன்வந்ததாகவும் மற்ற விபரங்களையும் தெளிவுபடுத்தினான்.
"நாளை குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்த பட்சம் ஆறுமாதம் சிறைவாசம் நிச்சயம்!”
விஷமம் செய்து ஓவென்று கூச்சலிட்டு அழுதுகொண்டிருந்த இளம் சிறுமி ஒருத்தி படிப்படியே காரம் குறைந்து பின்னர் நீண்ட நேரம் சிணுங்கிக்கொண்டு உட்கார்ந்து விடுவது போல வேகமும், வலியும் குன்றி மழை மந்த நடை போட்டுக் கொண்டிருந்தது. என்னுடைய உள்ளத்தில் தாண்டவமாடிய பல கேள்விகளுக்கும் பதில் கிடைத்து
84

நள்ளிரவு
விட்டதால், அங்கும் சிந்தனைக்குகந்த ஒரு மந்தமான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது.
மணிக்கூண்டுக் கோபுரம் சமீபத்தில்தான் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். இரண்டு மணிக்குப் பதினைந்து நிமிஷங்கள் இருந்தன. ஒரு கூப்பிடு தொலைவில் தேநீர்க்கடை இருந்தது. தூறலிடையே அங்கு நண்பனையும் அழைத்துச் சென்று தேநீர் அருந்தினேன். நானே தேநீருக்குப் பணத்தைச் செலுத்தினேன்.
கடையிலிருந்து வெளியே வரும்போது மழை முற்றாக நின்று விட்டது. அவனிடம் விடைபெற்றுக்கொண்டு நான் ஜம்பட்டா விதியில் உள்ள என் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.
சிறையை விரும்பி அங்கே செல்ல முனைந்த அந்த இளைஞன் எழுப்பிய எண்ணங்கள் மனதிலே சுழன்று கொண்டிருந்தன. அவன் கல்லால் ஆகிய சிறையை விரும்புவது நாட்டிலுள்ள பசி பட்டினி என்னும் சிறைகளிலிருந்து ஓரளவு விடுபடவே என்பதை நினைத்ததும் தான் அச்சிறைகள் எவ்வளவு பயங்கரமானவை என்பது எனக்குத் தெரிய ஆரம்பித்தது. குற்றம் புரியாமலே குற்றம் புரிந்ததாகச் சட்டத்தை ஏமாற்றி அதனால் கிடைக்கும் தண்டனையை அடைந்து சுகிப்பதற்கு ஒருவன் முன்வருகிறான் என்றால் அது நம் சமுதாய அமைப்பின் ஒட்டையையே காட்டுகிறது என்ற எண்ணமும் என் உள்ளத்தில் பளிச் சிட்டது.
வீதியிலே யாருமில்லை. என் செருப்பின் சப்தம் மட்டுமே என்னைப் பயமுறுத்துவதுபோல ஒலித்துக் கொண்டிருந்தது. யாரோ ஒருவன் ஒரு குறுக்குத் தெருவில் இருந்து ஒரு "கொக்கைத்தடியுடன் அங்கே பிரசன்னமானான். மழையின் காரணமாக எங்கோ ஒதுங்கி இருந்து விட்ட நகரசபையின் இருட்டடிப்புத் தொழிலாளியான அவன் மின்சார தீபங்களை அணைத்துச் சென்றுகொண்டிருந்தான். இருளின் தூதுவனாக நடந்து கொண்டிருந்த அவன் மக்கள் வாழ்வில் இருளைப் பரப்பி நின்ற இன்றைய சமுதாயத்தைத்தான் எனக்கு ஞாபகமூட்டிக் கொண்டி ருந்தான்! R
"உழைக்கப் பிறந்தவர்கள்" 1950
85

Page 62
- இரசிகமணி கனக செந்திநாதன் ஈழத்தின் முன்னோடிப் புனைகதை ஆசிரியர்களில் ஒருவர். குரும்பசிட்டி தந்த திறனாய்வாளர். நடமாடும் வாசிகசாலை, வெண்சங்கு இவரது சிறுகதைத் தொகுதி, 'வெறும் பானை', 'விதியின் கை' என்பன இவரது நாவல்கள். 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி இவரது ஆய்வு நூல், யாழ்பாடி, உபகுப்தன் என்பன இவரது புனைபெயர்கள். யாழ் இலக்கியவட்டத்தின் தாபகர் அமரராகி விட்டார்.
ஒருபிடிசோறு
கனகசெந்திநாதன்
1 யTழ்ப்பாண மாதா - மலடி என்று பெயர் கேளாமல் - சத்திர சிகிச்சையோடு பெற்றெடுத்த நொண்டிக் குழந்தை தொண்டமான் ஆறு. கடலிலேயிருந்து வெட்டப்பட்ட அந்த உப்புக் கழிக்கு "ஆறு" என்று பெயரிட்டதே விசித்திரம். அதனிலும் விசித்திரம் அந்த கழிக்கரையில் முருகப்பெருமான் இருக்க எண்ணங் கொண்டது.
இந்த விசித்திரமான முருகன் பல திருவிளையாடல்களைப் புரிய, சாதி பேதமில்லாமல் எல்லா நோயாளரும் அவனைத் தஞ்சம் அடைந் தனர். இப்படித் தஞ்சமடைந்த பலபேருக்கும் அன்னமளிக்கும் பொறுப் பைப் பல பணக்காரப் புள்ளிகளுக்கு நோய் கொடுப்பதனால் தீர்த்து வைத்தான்.
வெள்ளிக்கிழமை மடம். இந்த மடத்திற்கு ஒரு கெளரவ ஸ்தானம் அந்தக் கோயிலில் உண்டு. எவர் அன்னதானம் பெரிதாக நடத்தினாலும் அந்தப் பெருமையை அடைவது அந்த மடந்தான்.
இன்று மடத்திலே புகை கிளம்பிக் கொண்டிருந்தது; பக்கத்திலே இரண்டு வண்டிகள் பொருட்களை இறக்கியவண்ணம் இருந்தன. ஆமாம்! சனங்கள் ஊகித்தது சரி. யாரோ பெரிய இடத்து அவியல்' குதுரகலம்! பிச்சைக்காரர் - காஷாயம் தரித்தவர் - தீரா நோயாளர் -
86
 
 

ஒரு பாடி சோறு
சோம்பேறித் தடியர்கள் எல்லோருக்கும் குதூகலந்தான்! ஹரிஜனங் களின் மடம்; வெகுதொலைவிலே பற்றைகளுக்கு மத்தியில், மனிதர் தான் "எட்டப்போடா, எட்டப்போ” என்று சொல்லாத அந்தக் கோவிலில் மடம் மாத்திரம் ஏன் அப்படித் தீண்டத்தகாததாகக் கட்டப்பட்டது என்று விளங்கவில்லை.
புண்ணியம் சம்பாதிக்க அந்த மடத்தைக் கட்டிய 'புண்ணியவானைத் திட்டிக்கொண்டே ஒரு கிழவி வந்துகொண்டிருந்தாள். கட்டையிலே போறவன் ஏன் இவ்வளவு தொலைவிலே கட்டினான்? நான் என்னமாய் நடக்கிறது’ என்பது அவள் வாழ்த்தின் ஒரு பாகம்.
'உம்- உம் - உம் - ஆ - அப்பனே முருகா! என்னைக் கொண்டு போ' என்ற முனகலைக் கேட்டுக் கிழவி திட்டுவதை நிறுத்திவிட்டுக் கெதியாக நடந்து வந்தாள்.
"ஆத்தை, தண்ணீர் - தண்ணீர் - தா” என்றது அந்த எலும்பும் தோலுமாய் முனகிய உருவம். கிழவியும் அடுப்பில் இருந்த தண்ணிரை முட்டியிலே வார்த்து அந்த உருவத்தின் வாயுள் ஊற்றினாள். கை நடுங்கியது; தண்ணிர் கழுத்து, தோள் எங்கும் சிதறியது.
கொடுத்து முடிந்ததும் "மோனே, என்னா செய்யுது? காய்ச்சல் கடிசா? அப்பிடி என்டால் வீட்டை." என்று இழுத்தாள். "வீடா, எங்கே?. உம், பேசாமைப் போய்ச் சோத்தைக் காய்ச்சு” என்றது அந்த உருவம்.
“எனக்குக் கொஞ்சம் பழஞ்சோறு இருக்குது. உனக்குக் காய்ச்ச அரிசியும் இல்லை; காய்கறியும் இல்லை. அந்தக் கட்டையிலே போறவள் இண்ணைக்குக் கொண்டு வாறேனென்றாள். அவளையும் இன்னும் காணேல்லை; பொழுதும் ஏறிட்டுது; நான் என்ன செய்ய” என்று அவள் முணுமுணுத்தாள்.
"அப்போ பட்டினியாய்க் கிடக்கச் சொல்லிறியோ?” என்றான் சின்னான். ஆம்! அவன்தான் அந்தக் குடும்பத்தின் கடைசிப் பிள்ளை. கறுப்பியின் கடுந் தவத்தினால் நாலு பெண் குழந்தைகளுக்குப்பின் சந்நிதி முருகன் கொடுத்த வரப்பிரசாதம்.
“வெள்ளிக்கிழமை மடத்திலே யாரோ அவிச்சுப் போடுறாங்களாம்; நான் போய் வாங்கிக்கொண்டு வாறேன். ஒரு பிடி சோறு உனக்குப் போதுமே” என்றாள் கறுப்பி. “உம் போடுவான்கள். உனக்கா..? தடியன்கள் - சோம்பேறிகள் - சாமிகளுக்கு - இடிபட்டு வாங்குகிறவர் களுக்குக் கிடைக்கும். ஏழைகளுக்கா? கையைக் காலை உடைச்சுக் கொண்டுதான் வருவாய்; ஒண்ணும் தரான்கள். போ! சோத்தைக் காய்ச்சு” என்று உபதேசித்தான் அவன்.
87

Page 63
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
2 LDத்தியானத்து மணி ஓசை கேட்டது. 'தம்பி மணி ஓசை கேட்குது; வாறியா கோயிலடிக்கு” என்று கறுப்பி ஆதரவாகக் கேட்டாள்.
“இண்ணைக்கு என்னால் வர ஏலாது; காய்ச்சல் - இருமல் - தலை யிடி எல்லாம்; நீ போய்க் கும்பிட்டுவிட்டுத் திருநீறு, சந்தனம், தீர்த்தம் எல்லாம் வாங்கி வா; நான் இங்கேயே படுத்திருக்கிறன்” என்ற அவன் பதில் ஈனஸ்வரத்தில் கேட்டது.
கிழவி ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு தடியை ஊன்றிபடியே கோவிலுக்கு வந்துகொண்டிருந்தாள்.
மனிதக் கூட்டத்தின் அவசரம்; ஒருவரையொருவர் மோதி மிதித்துத் தள்ளி ஓடிக்கொண்டிருந்தார்கள். கிழவி "பொல்லையும் ஆட்டிக்கொண்டு காலையும் எட்டிவைத்து நடந்தாள்.
பறைமேளத்தின் ஒசை படீர் படீர் எனக் கேட்டது. நாதஸ்வரத்தின் கீதம் அதற்குள் அமுங்கியும் மிதந்தும் ஒலித்தது.
கிழவியின் அவசரம் பையன் எறிந்த வாழைப்பழத் தோலுக்குத் தெரியுமா? தடியை ஊன்றும்போது அந்தத் தோல் சறுக்கிவிட்டது. "ஐயோ! முருகா!” என்ற சப்தத்தோடு கிழவி விழுந்தாள். “தடக்” என்ற ஓசையோடு தடி கற்களின் மேல் உருண்டது. பின் பக்கத்தில் அவசரமாய் வந்த மோட்டாரில் இருந்த கனவான் திட்டியபடியே 'கோனை அமுக் கினார். "பெத்தா!. விழுந்தா போனாய்? எழும்பு. எழும்பு.’ என்று பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த பையன் தூக்கி நிறுத்தித் தடியையும் எடுத்துக் கொடுத்தான். "நீநல்லாய் இருக்கவேணும்” என்று வாழ்த்துரை கூறிவிட்டு நடந்தாள் கிழவி. "கிழடு கட்டைகளுக்கு ஒரு கோயில் வரத்து” என்று காரில் போகும் கனவான் கூறியது அவளுக்குக் கேட்கவில்லை.
குன்ற மெறிந்தாய் குரைகடலில்' என்று ஒரு பக்தர் பாடும் பாட்டு; முருகா! வேலா’ என்று இரண்டு கைகளையும் நீட்டிப் பிள்ளைவரம் வாங்கும் பெண்ணின் ஒலம்; புன்னெறி அதனில் செல்லும் என்று புராணத்துடன் நிலத்தில் விழுந்து கிடக்கும் அடியவர் புலம்பல்; பாராயோ என்னை முகம் என்று பஞ்சத்துக்கு ஆண்டி பாடும் ஒலி சங்குகளின் நாதம். பறைகளின் ஒசை. தவில்காரனின் கிருதா. நாதஸ்வரத்தின் அழுகை, எல்லாம் ஒன்றாய்த் திரண்டு ஒரே ஆரவாரம்.
இவ்வளவுக்கு மத்தியில், “முருகா! நீ தந்த சின்னான், உன்னை நம்பிக் வந்து கிடக்கிறான்; நியே காப்பாத்த வேணும்” என்ற அழுகை கேட்டது. அது கறுப்பியின் வேண்டுகோளல்லாமல் வேறு யாருடையது? அவளுக்குத் தேவாரமோ புராணமோ தெரியாது. உண்மைதான்!
பிள்ளையார் வாசல் - வள்ளியம்மன் இருப்பிடம் - நாகதம்பிரான் புற்று - முருகனின் மூலஸ்தானம் - எல்லாம் சுற்றி வந்து ஒவ்வொரு இடத்திலும் தன் வேண்டுகோளைக் கேட்டு முடித்தாள் கறுப்பி
88

ஒரு பிடி சோறு
பூசை முடிந்தது. அதிசயம்! இத்தனை பக்தகோடிகளில் பத்தில் ஒரு பங்குபேர்கூட அவ்விடம் இல்லை. அவர்கள் வயிற்றுப் பூசைக்காக, மடத்துக்கு ஒடும் காட்சியைக் கண்டு கறுப்பி சிரித்தாள். ஆமாம்! முருகப் பெருமானும் சிரித்திருக்கவேண்டும்!
அவ்வளவு பேருக்கும் வயிற்றுப் பூசை தேவையாக இருந்ததோ - என்னவோ - அவள் அறியாள். ஆனால் அவளுக்கு - இல்லை - அவள் பெற்ற அருமைச் சின்னானுக்கு ஒரு பிடி சோறு தேவையாகத்தான் இருந்தது. எல்லாரும் மடத்தை நோக்கி ஓடியபோது தலை சுத்துது, போ - சோத்தைக் காச்சு' என்று கேட்ட தன் மகனின் ஞாபகம் அவள் மனக்கண் முன் நின்றது.
விபூதி, சந்தனம் எல்லாம் வாங்கி இலையில் வைத்து மடித்து தன் சீலைத் தலைப்பில் முடிந்தாள். ஒரு சிரட்டையில் கொஞ்சம் தீர்த்தம் வாங்கினாள். பெட்டியையும், 'பொல்லையும் எடுத்துக்கொண்டு மடத் துக்கு வந்துகொண்டிருந்தாள். பக்கத்துப் பூவரசமரத்துப் பல்லி என்ன காரணமோ இச் - இச்' என்றது. அவள் வாய் "ஐயோ! முருகா!! நிதான் துணை” என்று முணுமுணுத்தது.
3
ரவாரம் ஒருவரோடு ஒருவர் இடிபட்டுக் கொண்டும் எகிறி விழுந்து கொண்டும் இருந்தார்கள். உள்ளே போவோரையும் வெளியே வருவோரையும் அவியல் முடிந்ததா?’ என்று ஆவலாகக் கேட்கும் கேள்வியும் திண்ணையில் இருந்து பண்டாரங்கள் அரட்டை அடிக்கும் ஓசையும் வானைப் பிளந்தன.
அந்த நேரத்தில் கறுப்பி மடத்தைக் கடந்துகொண்டிருந்தாள். 'விபூதியை மகனுக்குக் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்து சோறு வாங்கலாம்' என்று ஒருகணம் யோசித்தாள். ஆனால், "நேரம் போய் விட்டால் ஒரு பிடி சோறும் வாங்கமுடியாதே' என்று மறுபடி நினைத்தாள். 'இருதலைக்கொள்ளி எறும்புபோல’ என்று புலவர்கள் வர்ணிக்கிறார்களே அதேநிலை அவளுக்கு, தங்கள் மடத்தை ஒருமுறை பார்த்தாள். "ஐயோ! போயிட்டுவர ஒரு மணியாவது செல்லுமே என்று அவள் மனம் திக்கிட்டது.
இந்தளவுக்கும் பொறுத்த பொடியன் எப்பன் நேரம் பொறுக்க மாட்டானா?” என்று அவள் முணுமுணுத்தாள். தீர்த்தச் சிரட்டையை மனிதப் பிராணிகளின் காலடி படாத ஒரு பற்றை மறைவில் வைத்து விட்டுத் திரும்பினாள். ஒரு நிமிஷம், கூட்டத்தின் மத்தியிலே நடுங்கிய கையோடு ஒரு பெட்டி மேலெழுந்து நின்றது.
சரி எல்லோரும் வரலாம் என்ற உத்தரவு பிறந்தது. ஒவ்வொரு மனித மிருகங்களும் பலப் பரிகூைடி செய்தபடி உள்ளே போனார்கள்.
89

Page 64
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
"ஐயா! ஆறு நாளாய்ப் பட்டினி, மவராசா” என்று கதறும் ஒரு கிழவனின் தீனக்குரல்.
"ஐயோ! சாகிறேனே" என்று கூட்டத்தின் மத்தியில் இடிபடும் குழந்தையின் அலறல்.
"அடா! உனக்குக் கண் பொட்டையா? காலில் புண் இருப்பது தெரியலையோ’ என்று கோபிக்கும் தடியனின் உறுமல்.
"சம்போ சங்கரா! மகாதேவா!!!” என்று இழுக்கும் தாடிச்சாமியின் கூப்பாடு.
"சாமி கொஞ்சம் வழிவிடுங்களேன்!” என்று மன்றாடும் சிறுமியின் அழுகை, நாய்களின் குரைப்பு, காகத்தின் கொறிப்பு. இத்யாதி! இத்தியாதி!!
இவ்வளவுக்கும் மத்தியில் "ஒரு பிடி சோறு, ஒரு பிடி சோறு” என்ற சப்தம். அந்தக் கிழட்டுப் பினத்தின் சத்தத்தை யார் கவனிக்கப் போகி றார்கள்?
முதலாவது பந்தி நிரம்பியது. கதவு மூடும் சத்தம் கிழவிக்குக் கேட்டது. "ஐயா! ஒரு பிடி சோறு" என்று பலமாகக் கத்தினாள் கடைசி முறையாக, அதுவும் பிரயோசனமற்ற வெறும் கூச்சலாய் முடிந்தது.
இனி அடுத்தமுறைக்கு எவ்வளவு நேரமோ?. அதுவும் இப்பிடி முடிந்து போனால். அடுத்தமுறை. ஐயோ! என் மகன் சின்னான். அவன் சொன்னது சரியாய்ப் போச்சுது. "தடியன்கள், சாமிகள், சோம்பேறிகளுக்கு போடுவான்கள். நமக்கா? கையைக் காலை உடைத்துக் கொண்டுதான் வருவாய்' என்றானே அதுசரி. மெத்தச் சரி” என்று அவள் மனதுக்குள்ளே புகைந்தாள்.
நெடுநேரம் தாமதிக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். ஒவ்வொரு நிமிடமும் சின்னானின் பசி - பசி' என்ற ஒசை கேட்ட வண்ணமாய் இருந்தது அவள் மனத்தில். இனி வெறுங்கையோடு திரும்ப வேண்டியதுதான் என்பதை நினைக்கையில் ஏதோ குற்றம் செய்தவள் போல் அவள் துடித்தாள். ஆம்!! குற்றமில்லாமல் வேறென்ன இந்த விபூதி சந்தனத்தையாவது கொடுத்துவிட்டு வந்த மில்லையே’ என்ற நினைப்பு முன்போலக் குத்திக்கொண்டிருந்தது. இடையிடையே அந்த முடிச்சைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள்.
திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. மறுபக்கம் போய்ப் பார்த்தால் ஒருவேளை கிடைக்கலாம்; அங்கு பெண்கள் இருப்பார்கள்; அவர்களிடம் பல்லைக் காட்டினால் ஒரு பிடி போட மாட்டார்களா?’ என்பதுதான் அது. இந்த எண்ணம் பிடர்பிடித்து உந்த பொல்லையும் பெட்டியையும் எடுத்துக்கொண்டு சமையற் பக்கம் போனாள். "அம்மா ஒரு பிடி சோறு" என்றது அவள் வாய். கதவு மெல்லெனத் திறந்தது.
90

ஒரு பிடி சோறு
4 − ஒரே சமயத்தில் இரண்டு கதவுகள் திறந்தன. ஒன்று வெள்ளிக்
கிழமை மடத்து சமையல் பக்கத்துக் கதவு, மற்றது பள்ளர் இருக்கும் மடத்துப் பெரிய அறையின் கதவு.
அதைத் திறந்தவள் பூதாகாரமான ஒரு சீமாட்டி, இதைத் திறந்தவன் எலும்பும் தோலுமான சின்னான்!
மலேரியாக் காய்ச்சலின் உக்கிரத்திலே - டாக்டர்களுக்குப் பணம் கொடுக்க முடியாத நிலைமையிலே 'சந்நிதி முருகனைத் தஞ்சடைந்த அந்தச் சின்னான், தனக்குத் துணைசெய்ய வந்த ஆத்தையின் வரவைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வந்தபாடில்லை. காய்ச்சல் உதறியது. தலை சுழன்றது. நா வறண்டது. தண்ணிர் விடாய், மெல்ல நிமிர்ந்து பக்கத்தில் இருந்த முட்டியை எடுத்துப் பார்த்தான். ஒரு துளி தண்ணிர்கூட இல்லை. படீர்! முட்டி சுக்கல் சுக்கலாகப் போய் விழுந்தது. அவன் ஆத்திரம் அவ்வளவு!
“இவ்வளவு நேரமாய் எங்கே போனாள் பாழ்பட்ட கிழவி?” என்று பல தடவை திட்டினான் அவன். என்ன பிரயோசனம். எல்லாம் பழைய படிதான். பசி. தண்ணிர்.
கம்பளியால் எடுத்து மூடிக்கொண்டு சிறிது நேரம் படுத்தான். கண்களைக் கெட்டியாக மூடிப் பார்த்தான். ஒன்றாலும் திருப்தி ஏற்படவில்லை, வயிற்றில் பசி மிகுந்தது. தண்ணிர் விடாய் கூடியது.
தண்ணிர். தண்ணி. தண்ணிர்’ என்று அவன் அலறினான். வெறும் சொற்கூட்டந்தான். தொண்டைகூட அடைத்துவிட்டது. எழுந்திருந்து யோசித்தான். கிழவியோ வந்தபாடில்லை. சோறு வாங்கப் போனாள். சோறு கொடுப்பார்களா? சோம்பேறிகள். தடியன்கள். இந்தக் கசப்பான உண்மையை பலதடவை திருப்பித் திருப்பிப் பைத்தியக்காரன் மாதிரிச் சொன்னான். கண்ணை மூடினான், ஒரு கணம். எலும்பும் தோலுமான அவனின் ஆத்தை சனக்கூட்டத்தின் மத்தியில் நசிக்கப்பட்டு "ஐயோ! ஐயோ!" என்று கத்தும் சப்தம் அவன் மனத்திரையில். “எனக்குச் சோறு வேண்டாம். வா!. ஆத்தை. வா!!” என்று பலமாகவும், பரிதாபமாகவும் கூப்பிட்டான். வந்தபாடில்லை.
கண்ணைத் திறந்தான். 'செத்தல் நாயொன்றுதான் வாயிலை நோக்கி வந்து எட்டிப் பார்த்தது.
“உம். உனக்கும். பசியா? அல்லது. எட்டிப் பார்க்கிறியே. அங்கை ஒன்றும் இல்லை. இல்லையா?. இருக்கிறது” என்று ஏதேதோ சொன்னான் நாயைப் பார்த்து.
"இருக்கிறது. இருக்கிறது” என்றான் மெளனமாக “ஓம்! அங்கை பழஞ்சோறு இருக்குது என்று சொன்னாளே ஆத்தை, அட.
91

Page 65
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
இவ்வளவும் என் மூளைக்குப் படவில்லை; நில்; நில்; உனக்கும் தாறேனே" என்று முணுமுணுத்தான். தெளிவு. மகிழ்ச்சி எல்லாம் அவன் முகத்தில் தோன்றின.
மெல்ல எழுந்து சுவரைப் பிடித்துப் பிடித்து வாயிலுக்குப் போய்ச் சேர்ந்தான். கதவைத் தள்ளினான். அது மெல்லெனத் திறந்தது. பைத்தியம் மாதிரி இருந்தவன் அதிக மகிழ்ச்சியில் அசல் பைத்தியமாய் விட்டான்.
"சோறு தண்ணிர். எல்லாம். தண்ணிர். சோறு எல்லாம்” என்று பலமுறை கூவினான். "பாவம் கிழவி ஒரு பிடி சோத்துக்கு அலையுதே. இங்கை எத்தனை பிடி சோறு. போதும் போதுமென்ன இருக்கே” என்று பலதரம் தன்னுட் தானே கூறினான்.
இருந்த சோறு அவ்வளவையும் சட்டியிற் போட்டுப் பிசைந்தான். ஒவ்வொரு கவளமாய் வாய் மென்று விழுங்கியது. "ஆகா! பலே!!” என்று ஆநந்த மிகுதியில் பிதற்றினான். அந்த நாயும் அப்போது ஆவலாகக் கிட்ட வந்தது. "பாவம் நீயும் தின்” என்று ஒரு கவளத்தை எடுத்து இருந்தபடியே எறிந்தான்.
சாப்பிட்டு முடிந்தது. குளிர். நடுக்கம். உதறல், எழுந்திருக்கவே முடியவில்லை. கைகூடக் கழுவியபாடில்லை. பானை சட்டி எல்லாம் வைத்த வைத்தபடியேதான்.
எழுந்ததும் விழுந்துவிடுவான் போல் இருந்தது. மார்பால் தவழ்ந்து தவழ்ந்து பாய்க்குப் போய்ச் சேர்வதே சங்கடமாகிவிட்டது.
"ஐயோ! முருகா. என்னைக் கொண்டு போ” என்று அலறினான். கம்பளியால் இழுத்துப் போர்த்தான். தேகம் "ஜில்" என்று குளிர்ந்து விட்டது. ஒரே விறைப்பு: பிதற்றல். ஆத்தை. ஆ.த்தை. வா.
5
அவன் போட்ட சத்தம் அவளுக்குக் கேட்கமுடியாது. என்றாலும் அவள் தன் பலம் கொண்டமட்டும் விரைவாகத்தான் வந்து கொண்டி ருந்தாள். தான் வாங்கிய சோற்றைக் கொடுப்பதற்கல்ல. இனிமேலாவது சமைத்துக் கொடுக்கலாம் என்பதற்காக.
ஒரு பிடி சோறும் அவளுக்குக் கிடைக்கவில்லையா கிடைக்கும் தருணத்தில் இருந்தது. ஆனால். அவளுக்கு வாங்கப் பிரியமில்லை. ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
ஒரு பிடி சோறு. ஒரு பிடி சோறு’ என்று அலறிய அந்தக் கறுப்பிக்கு சோறு போடுவதற்கு அந்தச் சீமாட்டி திரும்பிப் பார்க்கும் போது அவள் தூரத்தே போய்க்கொண்டிருப்பதைக் கண்டாள். ஏனோ? நமக்கு மானம் ரோசம் இல்லியோ?. கறுமி. மலடி. சண்டாளி.
92

ஒரு பிடி சோறு
இவள் கையால் ஒரு பிடி சோறா? வேணாம். வேணாம்” என்று அலட்டியபடி அந்தக் கிழவி போகும் கருத்தென்ன?
இன்னும் அவள் செருக்கு மாறவில்லை. இங்கேயும் வந்து தன் சாதிப் புத்தியைக் காட்டிவிட்டாளோ என்று இந்தச் சீமாட்டி பொருமு வதன் மர்மமென்ன?
இருவருக்கும் முன் அறிமுகம் உண்டா?. உண்டு. அறிமுகம் அல்ல, பெரும் பகை. அவர்களைச் சீமான் சீமாட்டி ஆக்கியதெல்லாம் தன்னுடைய மகனின் உழைப்பு என்பது கிழவியின் எண்ணம். இதில் உண்மை இல்லாமல் இல்லை.
வற்றாத ஊற்றைக் கொண்ட நிலாவரைக் கேணி இருந்தும் நவுக்கிரி என்னும் அந்த ஊரை - இயற்கை தேவி தன் திருக்கண்ணால் பார்க்கவில்லை. ஒரே கல்லும் முள்ளும். சிறு பற்றைக் காட்டில் முயல் பிடிக்கும் - கெளப்பீன கோலச் - சிறுவர் வேட்டை நாயுடன் திரிவர். அந்த ஊரை விட்டு 'வன்னித்தாயைச் சரணடைந்த கந்தர் - கந்தவனம் - கந்தப்பிள்ளை - வட்டிக்கடை முதலாளி ஆகியது பெரும் புதினம்.
அந்தக் கந்தப்பிள்ளையின் வீட்டு வாயிலில் நகை அடைவு பிடிக்கத் தத்துவம் பெற்றவர்’ என்ற விளம்பரப் பலகை ஏறிய அன்றைக்கே அவரின் கீழ் வன்னி நாட்டில் கமத்தொழில் செய்துவந்த சின்னானுக்கு மலேரியா ஏறியது.
மூன்றாம் நாள் அவன் வன்னி நாட்டைவிட்டுத் தன் தாய்த் திருநாட்டுக்கு மலேரியாக் காய்ச்சலோடு வந்து சேர்ந்தான்.
ஏமாற்றம். ஒரு வருடத்துக்குப் போதுமான நெல்லோடுதான் வந்து இறங்குவான் எனக் கற்பனை பண்ணிக்கொண்டு இருந்த கறுப்பிக்கு, இது எப்படி இருக்கும்?
பெரிய ஏமாற்றம். தங்கள் முதலாளி கந்தசாமிப்பிள்ளையின் வீட்டை அடைந்து சமையல் பக்கம் போன கறுப்பியோடு அந்த வீட்டுச் சீமாட்டி முகங்கொடுத்துப் பேசவில்லை.
சீமாட்டிக்குப் பிள்ளைப் பேற்றிற்காக - அந்தத் தாடிக்காரச் சாமி சொல்லிய முறைப்படி - வருகிற வெள்ளிக்கிழமை அவிச்சுப்போட எத்தனை பணம் - ரூபா - பவுண் தேவை’ என்ற செலவைப் பற்றிய எண்ணம்.
கறுப்பிக்குத் தன் மகனை எப்படியாவது உயிர் பிழைக்கச் செய்ய வேண்டும் என்ற நினைப்பு.
இந்த நினைப்பில் ஒரு மூடை நெல்லு, பத்து ரூபாய் - ஐந்து ரூபாய் - ஒரு ரூபாய்’ என்று கண்ணபிரான் துரியோதனனைக் கேட்ட ரீதியாகக் கேட்டுப் பார்த்தாள் - மன்றாடினாள் - அழுதாள் - கத்தினாள்.
93

Page 66
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
சீமாட்டி ஒன்றுக்கும் மசிவதாயில்லை.
கடைசியில் கறுப்பியின் ஆத்திரம், மலடிகளுக்குப் பிள்ளையின் அருமையைப் பற்றித் தெரியுமா?’ என்ற பெருநெருப்பாக வெளிவந்தது.
இந்த நாவினாற் சுட்ட வடு சீமாட்டியை ஒரு உலுக்கு உலுக்கியது:
“போடி வெளியே. பள்ளுப்பறையர்களுக்கு இந்தக் காலம் தலைக்கு மிஞ்சின செருக்கு. உன் மகன் எங்களுக்கு அள்ளி அள்ளிச் சும்மாதான் கொடுத்தானோ? வேலை செய்தான் கூலி கொடுத்தோம். அதுக்கு வேறு பேச்சென்னடி? மலடி.மலடி என்கிறாயேடீ. கடவுள் கண் திறந்தால் இனியும் பிள்ளைப் பாக்கியம் வராதா..?” என்று ஆத்திரத்தை தீர்த்தாள் சீமாட்டி.
"கடவுள் கண் திறப்பார். உங்களுக்கா?” என்று அநாயாசமாய்ச் சிரித்துவிட்டு வெளியேறிய கறுப்பி, தன் மகன் உழைப்பால் தின்று கொழுத்து ஊராருக்கு அவிச்சுக் கொடுத்துப் புண்ணியம் சம்பாதிக்க வந்த சீமாட்டியிடம் இன்றும் ஒரு பிடி சோறு வாங்கச் சம்மதிக்காதது அதிசயமல்ல,
கிழவி மடத்துக்கு வந்து சேர்ந்தாள். நாய் அவளைக் கண்டு வெளியே போயிற்று.
தீர்த்தத்தை வாயில் விட மகனை எழுப்பினாள். அவன் அசைவதாக இல்லை. மூக்கடியில் கை வைத்துப் பார்த்தாள். ஏமாற்றம்தான்!
"அவள் கொன்றுவிட்டாள். சீமாட்டி கொன்றுவிட்டாள். என் மகனைப் பட்டினி போட்டுக் கொன்று விட்டாள்" என்று அலறினாள்.
“சந்நிதி முருகா! நீயும் பணக்காரர் பக்கமாய் ஏழைகளைக் காப்பாத்தாமல் விட்டுவிட்டாயோ' என்று கதறினாள்.
அந்த இரண்டு வண்டிகளின் கடாபுடா சத்தமும், 'வெண்டயம்' சதங்கைகளின் ஒசையும் தூரத்தே கேட்டன.
"புண்ணியம் சம்பாதிச்சியா?. போ, போ” என்று அவள் பல்லை நெருடினாள்.
உடைந்த முட்டியும் - ஒரு பிடி சோறு வாங்கச் சென்ற ஒலைப் பெட்டியும் தவிர இந்தச் சொற்களைக் கேட்க அங்கு வேறு மனிதர்களாக யார் இருக்கிறார்கள்?
"ஈழகேசரி”
22.7.1945
29.7.1945
94

நாவற்குழியைச் சேர்ந்த சு.வே.யின் இயற்பெயர் சு. வேலுப்பிள்ளை, 'ஈழகேசரிப் பண்ணையில் உருவாகியவர். 1924இல் பிறந்த சு.வே. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். 'மண்வாசனை அவரது சிறுகதைத் தொகுதி. சு.வே. உருவகக் கதைகளின் ஈழத்துப் பிதாமகர் மணற்கோயில் இவரது உருவகக் கதைத் தொகுதியாகும்.
கிடைக்காதபலன்
சு.வே.
1.
வேறொன்றுமில்லை. மூன்று வத்தகைக் கொடிகள், நன்றாகப் பண்படுத்தி எருவிட்டு நீர்ப்பாய்ச்சி வளர்க்கப்பட்ட கொடிகள். 'கொழு கொழுவென்று கண்களுக்கு ஒரு தனிக் குளிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தன.
ஒருநாள் விடியற்காலை, இன்னும் நன்றாக நிலம் வெளுக்கவில்லை. கிழக்கு வெளுத்துவிட்டது. மிருதுவான ஊதற்காற்று வீசிக் கொண்டி ருந்தது. ஒரு உருவம், மனித உருவந்தான். உடம்பை மூடிப் போர்த்திக் கொண்டு அந்த வத்தகைக் கொடிகளுக்குப் பக்கத்தில் வந்து இருந்தது. அந்த உருவத்தின் முகத்திலே காலதேவனின் சாட்டைத் தழும்புகள் நன்றாகப் பதிந்திருந்தன. கன்னங்கள் குழி விழுந்திருந்தன. வத்தகைக் கொடியின் இலையிலுள்ள ஆழமான வெட்டுக்கள் போலே, தோல் உடம்போடு ஒட்டித் திரைந்து போயிருந்தது. அந்த மெல்லிய குளிருக்கும் அவன் தேகம் 'விடுவிடு' என்று நடுங்கிக் கொண்டிருந்தது. அவ்வளவு பெலவீனம். யமதர்மராசனின் வரவு அவனுக்குச் சமீபத்தில் இருந்தது.
அவன்தான் அந்த வத்தகைக் கொடியின் சொந்தக்காரன். அவன் தான் தகப்பன், பாதுகாவலன், எல்லாமே அவன்தான் - கார்த்திகேயன்.
கார்த்திகேயன் கொடிகளை ஒரு முறை கூர்ந்து நோக்கினான். பின்னர் தனது நடுங்கிய கைகளால் இலைகளை மெல்ல நீக்கினான்.
95

Page 67
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
"மூன்று பிஞ்சு, இரண்டு காய்" என்று முணுமுணுத்தது அவன் வாய். அந்த இரண்டு காய்களையும் தடவிக் கொடுத்தான். அந்தத் தடவலில் தான் எத்தனை அமைதி.! எவ்வளவு அன்பு எவ்வளவோ காலமாக வேலை செய்து மரத்துப் போய் சொரசொரப்படைந்திருந்த அவனது கைகள், அன்று அனிச்ச மலரின் மென்மையைப் பெற்றன. அந்தக் காய்களின் பரிசம் அவன் மனதைப் பாகாய் உருக்கிவிட்டது, அவன் குழந்தைகளின் சிறு கைப்பரிசத்திலும் பார்க்க.
"ஆம் இரண்டு காய்கள்; என் இரண்டு கண்கள் போல. இவைகள் எப்போதுதான் பழுக்குமோ? என் நாவின் ஆசை என்றுதான் தீருமோ? என்று என் கைகள் இந்த மெல்லிய காம்பைப் பிடித்துப் பறிக்கப் போகின் றனவோ! என் நாவின் களைப்பு என்றைக்கு மாறும்?” இப்படி அவன் வாய் புலம்பிற்று. மன உணர்வு நிலை அவனறியாமலே அவன் வாய் வழியே வந்து விட்டன வார்த்தைகளாக, "பத்தே பத்து நாட்கள்” என்று கிழவனுடைய அங்கலாய்ப்புக்கு அந்தக் காய்களும் விடை சொல்லி விட்டன. ஆனால் இவையெல்லாம் கார்த்திகேயனின் மனப் பிரமைகள். அந்த மூன்று காய்கள்மீதும் அவன் பெரும் பாசம் கொண்டிருந்தான்.
2
ஒருபுறம் நொச்சிப் புதர்களும், கிஞ்ஞாச் செடிகளும்; ஒருபுறத்தில் ஓங்கி வளர்ந்த பனங்காடு. மறுபுறத்தில் பரந்த வயல்வெளி. சன நடமாட்டம் குறைந்த பகுதி அது. இவைகளுக்கு மத்தியில் ஒரு சிறு குடில். இதுதான் கார்த்திகேயன் இல்லம். அவன் வீட்டு வாசலில் நின்று பார்த்தால் மற்றொரு கார்த்திகேயன் கோவில் தெரியும். உயர்ந்தெழுந்து கம்பீரமாய் நின்ற அதன் கோபுரத்தைப் பார்த்தே அவன் தன் கஷடங் களை எல்லாம் மறந்து விடுவான். முன்னொரு நாள் அந்தக் குடிசை இல்லை. அந்த மாளிகை, குழந்தைகளின் அழுகை, அவர்களின் குறுநடை, மழலை, கலகலவென்ற சிரிப்பு, இன்னிசைக் கீதங்கள் இவை களாகிப் பரிமளித்தது. ஆனால் இன்றோ? அவையெல்லாம் இல்லை. வெறும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. கிழவனின் அபஸ்வர இருமல் சப்தத்தை விட,
கார்த்திகேயன் அந்த நாளிலே பெருத்த பூசாரி. மனைவி, மூன்று நாலு இனிய குழந்தைகள். இவர்களின் தலைவன் அவன். இந்நிலை வெகுநாள் நிலைநிற்கவில்லை. காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. எப்படியாக ஒரு புயலில் எற்றுண்டு இரண்டு படகுகள் ஒன்றையொன்று இணைந்தனவோ அப்படியே இன்னொரு புயலினால் அவை இரண்டும் பிரிந்துவிட்டன. அவன் பிள்ளைகளும் விவாகஞ் செய்து சீவியத்தை யிட்டுப் பிரிந்து விட்டனர். காலச் சுழிப்பின் சேவை. அவன் இப்போது தனியன். ஆருமற்ற அநாதை.
இந்த நிலையிலே அவன் மனத்திற்குச் சிறிது நிம்மதியையும் ஆறுதலையும் அளித்தன, அந்த மூன்று கொடிகளும், பசுமை சொட்டும்
96

கிடைக்காத பலன்
அந்தக் கொடிகளின் இலைகளைப் பார்த்து அவன் தன் தனிமையின் துன்பங்களையெல்லாம் மறந்துவிடுவான். காலையில் குறுநகை செய்யும் பூக்களில் தேனுண்ண வரும் வண்டுகள்தான் எத்தனை எத்தனை இன்பக் கனவுகளை அவனுக்கு மூட்டியிருக்கும். பலபடச் செல்லும் ஒவ்வொரு கொடியின் கொழுந்தும் அவன் வாழ்க்கையின் ஒவ்வொரு இன்ப வழிகளென்று உணர்வான். ஒப்புயர்வற்ற ஒரு நண்பனாக அதை மதித்தான் கிழவன்.
3
கிர்த்திகேயன் அன்று காலை நிம்மதியுடன்தான் எழுந்தான். ஆனால், பூரண நிம்மதியன்று. அவன் மனதின் அடியிலே ஏதோ ஒன்று தட்டிக்கொண்டிருந்தது. யோசித்து யோசித்துப் பார்த்தான். மனதில் இருப்பது வெளிப்பட்டால்தானே. இன்னும் கொஞ்சநேரம் யோசித்தான்.
“ஓகோ இன்றுதானே அந்த இரண்டு வத்தகைக்காய்களும் சொன்ன பத்தாவது நாள்" அவனால் ஒரு நிலையில் நிற்க முடியவில்லை. ஏதோ இன்பவுலகொன்றை நாடிச் செல்பவன்போல் தன்னைக் கருதிவிட்டான். அவன் மனம் சிறிது முன்னாடிச் சென்றது நிலைகொள்ளாமல்,
"இன்னும் சிறிது நேரத்தால் அவைகளைப் பிடுங்கிவிடுவேன், நான் தனியனாக. தனியனாகவா..? ஆம் தனியனாகத்தானே சாப்பிடவும் வேண்டும். அந்தக் காலமென்றால் எத்தனை பேரின் கைகளுக்குத் தாவி விழும் அந்தப் பழங்கள். அவளின் தளிர்க் கரங்களின் ஸ்பரிசமே இப்பழத்திற்கு ஒரு தனிச்சுவையல்லவா? என் இன்பக் குழந்தைகள் சூழ்ந்திருக்க, அவள் இப்பழங்களை வெட்டுவாளே? அப்பொழுது அவள் முகத்தில் எத்தனை இன்பச் சாயைகள் படரும். அந்தப் பேறு எனக்குக் கொடுத்துவைக்கவில்லை.! என்ன, ஒரு சிறு துண்டுப் பழத் திற்கு எத்தனை சண்டை போடுவார்கள், அந்தச் சிறிசுகள்.”
அவன் சிந்தனை சுழன்றது. ஒரு பெருமூச்சு அவனை அறியாமலே வெளிவந்தது.
“சரி, சரி; துறைக்காற்றினால் அள்ளுண்ட சருகுக் கூட்டங்கள் எப்போதும் கூட்டமாக இருப்பதுண்டா?” என்ற கேள்வியைத் தன்னைத் தானே கேட்டவண்ணமாய்த் தான் வளர்த்த கொடிகளை நோக்கி மெல்ல மெல்ல நடந்தான். மனம் எங்கெல்லாமோ சென்று வெள்ளாட்டைப் போல அலைந்து கொண்டிருந்தது.
ஏதோ அபாரசக்தியால் மனதைத் தன்னிலைக்குக் கொண்டு வந்த வன் போலக் கண்களை வத்தகைப்பழம் இருந்த இடத்தைச் செலுத்திப் பார்த்தான்; இரண்டு தரம் பார்த்தான்; இல்லை, ஆயிரந்தரம் பார்த்தான். "ஆ. காணவில்லையே." என்றான், பிரமை பிடித்தவன் போல. அவன் தலை சுழன்றது. அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை. அதிலேயே இருந்துவிட்டான். அவன் அன்பின் கனி - அன்பின் பலன் -
97

Page 68
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
கிடைக்கவில்லை. என்ன செய்வான் பாவம்! ஏதோ எண்ணாத எண்ண மெல்லாம் எண்ணினான். சோகம் அணையை உடைத்துக் கிளம்பிற்று. கண்கள் அதைப் பிரதிபலித்தன. இந்த நிலையில் இன்னொரு தரம் கொடியைப் பார்த்தான்.
அவன் முன்கொண்ட துயரமெல்லாம் எங்கே? அவன் முகத்தில் சந்தோஷத்தின் மறுமலர்ச்சி தாண்டவமாடியது. முன்பு மனதை நிரப்பியிருந்த சோகக்கடல் வற்றி வரள, சில இன்ப ஊற்றுக்கள் அந்த இடத்தை நிரப்பிவிட்டன போலும் "ஒகோ! யாரோ பசிக்கொடுமையால் கொண்டுபோய்விட்டார்களாக்கும். கொண்டு போகட்டும்; நல்லாகக் கொண்டு போகட்டும்; என் பங்குக்கும் இங்கே மூன்று பிஞ்சு - இல்லை, காய்கள் - இருக்கின்றன. இவற்றின் ருசியை நான் அனுபவிக்கிறேன்.”
4.
இப்போதெல்லாம் கார்த்திகேயன் முன்போலில்லை. அவன் வெளியாலேயுள்ள அந்தச் சாக்குக் கட்டிலிலேதான் படுப்பான். அவன் நித்திரை கொள்வதே குறைவு, அந்த மூன்று காய்களையும் காவல் காக்க, பொல்லாத குளிரடிக்கும்; அதைப் பொருட்படுத்தான். மூசி மூசிக் காற்று இரையும்; அவையெல்லாம் அவனின் அலட்சியப் பொருள்கள். கனத்த அந்தகாரம்; அது அவனுக்குப் பரிச்சயம். அவன் பஞ்சபூதங் களின் சேஷடைகளை மறந்திருந்தான்.
அந்த மூன்று பிஞ்சுகளும் காய்நிலை போய்க் கனிநிலையை அடைந்து விட்டன. கார்த்திகேயன் உடல்நிலையோ வரவர மோசமாய் விட்டது; துரும்பாய் இளைத்துவிட்டது. பஞ்சபூதங்களின் வேகத்தாலும் மனத்துயரங்களாலும் அவன் பெலவீனமடைந்துவிட்டான். அவன் உடம்பு நோயின் இருப்பிடமாய் விட்டது. ஒரு இருமல். தொடங்கினால் அரைமணி செல்லும் முடிய. இவைகளெல்லாம் கார்த்திகேயனை உயிருடன் உண்டு வந்தன.
இப்படியாகச் சில நாட்கள் கழிந்தன.
அன்று கார்த்திகேயன் அந்த மூன்று பழங்களையும் பிடுங்க எண்ணி யிருந்த நாள். பழங்கள் பழுத்துச் சாம்பர் நிறமடைந்து கார்த்திகேயன் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றன. கார்த்திகேயன் எங்கே?
அதோ அந்தச் சாக்குக் கட்டிலில் கிடக்கிறான். வத்தகைக் காய்கள் பூரணமாகப் பழுத்துவிட்டன. ஆனால் அவற்றைப் பிடுங்கக் கிழவன் வரவில்லை. ஏன்? முந்திய இரவு அவற்றுக்கு முன்னரே அவன் வாழ்வு பழுத்துவிட்டது. பழங்கள் கொடியோடு நிலத்தில் புரண்டு கிடந்தன. கார்த்திகேயன் கட்டிலில் புரண்டு போய்க் கிடந்தான்.
"ஈழகேசரி” 19.09. 1943
98

நாவற்குழியூர் நடராஜன் ஈழத்திற்குப் பெருமை சேர்த்த கவிஞர் ஆவார். 'டறுமலர்ச்சி சஞ்சிகை காலத்தில் வரதரோடு இணைந்து வெளியிட்டதில் மிக முக்கியமானவர். சமஸ்கிருதத்தில் மிகுந்த ஞானம் இருந்ததனால் 'கீதோபதேசம்' 'மேகதூதம்' போன்றவற்றைத் தமிழில் கவிதை வடிவில் தந்தவர். அரிதாக நல்ல சில சிறுகதைகளை எழதியுள்ளார்.
LomLól
நாவற்குழியூர் நடராஜன்
இவங்கள் கொடுக்கிற இடந்தானே இதெல்லாம். நாலு மணியாய் விட்டால் போதும். 'டாங்கு டீங்கென்று சோடித்துக்கொண்டு, நாட்டியக் காரிகள் மாதிரிக் கிளம்பிவிடுகிறார்கள். புருஷன் என்று ஒருவன் இருக்கிறானே; அவன் ஆபீசால் வேர்த்துக் களைத்து வரும்பொழுது, கொஞ்சங் கோப்பியைக் "கீப்பியைக் கொடுத்து. சிச்சிச்சி, அந்த நினைவே கிடையாது. என்ன பிறவிகளடி இது” என்று இரைந்து கொண்டு குசினிக்கும் கூடத்துக்குமாக நடந்து கொண்டிருந்தாள் தங்கம்மாள்.
ஆம், ஆம் என்று சொல்லுவதைப் போல, மணியும் 'டாங். டாங். என்று நாலு அடித்தது.
அப்பொழுதெல்லாம் உள்ளே நின்று அந்தமாதிரியாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்த கமலாவுக்குச் சுளிர், சுளிர் என்று ஏதோ உடம்பெல்லாம் ஏறிற்று.
என்ன செய்வது? கல்யாணமாகி இரண்டு வருஷங்களாவது போயிருந்தால், திடீர் திடீர் என்று தக்க பதில் கொடுக்க அவளும் பழகித்தானிருப்பாள். ஆனால், அப்படியெல்லாம் பட்டென்று விழ, இன்னும் அவள் தெரிந்துகொள்ளவில்லை. எப்படியென்றாலும், ஏதோ ஒன்று உள்ளே கிடந்து வெந்து வெடித்துக் கொண்டிருந்தது அவளுக்கு. என்னவோ வெளியே மட்டும் வரவில்லை.
99

Page 69
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
“ஒரு புருஷனுக்குப் பெண் என்று வந்துவிட்டார்கள்! இந்தச் சோடினைக்காரிகள் வராவிட்டால், பெற்ற தாய் என்றிருப்பவள் மகனைப் பார்க்கமாட்டாளாக்கும். கொடிக்குச் சுரைக்காய் பாரமாய் விடுமா என்ன?” என்று மேலும் சீறியடித்துக்கொண்டு, அங்குமிங்குமாக நடந்து, அடுப்பில் எதையோ பார்ப்பதும், அறையில் கமலா செய்யும் கோலாகலத்தைக் கூடத்திலிருந்து பார்த்து எரிவதுமாக இருந்தாள் தங்கம்மாள்.
முகத்தைச் சுளித்துக்கொண்டு, கூடப்பக்கத்துச் சுவரைப் பார்த்துத் தலையை ஒரு ஏளன அசைப்பு அசைத்துவிட்டுக் கொண்டைமாலை சரியாக அமைந்திருக்கிறதா என்று கழுத்தைத் திருப்பித் திருப்பிக் கண்ணாடியிற் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலா,
மீண்டும் தங்கம்மாளின் குரல்தான்: "இல்லை. புருஷர்களுக்கு இவர்கள் என்னதான் பிரமாதமாய்ப் பண்ணிவிடுகிறார்கள் என்று கேட் கிறேன். இரா முழுதும் குசுகுசென்று கூடிக் கதைத்துத் தூக்கத்தைக் கெடுப்பதும், பகல் முழுதும் ஆபீசிலிருந்து களைத்து வருகிறவனை ஒரு நிமிஷ நேரம் ஓயவிடாமல், "சினிமாவுக்கு வா அதுக்கு வா இதுக்கு வா என்று அரித்தரித்து இருக்கவிடாமல் வீதிக்கு விதி இழுத்துக் கொண்டு திரிவதும் - இதுதானே!”
இவ்வசவு வார்த்தைகளையெல்லாம் கேட்டுக் கேட்டு, அவர் வரட்டும் இன்றைக்கு; அவர் வரட்டும்’ என்று பொருமிக் கொண்டி ருந்தது கமலாவின் மனம்.
“என்னடி இது!” என்று முகத்தை ஒரு திருப்புத் திருப்பிக் கொஞ்ச நேரம் நாடியில் கையை வைத்துக்கொண்டிருந்துவிட்டு, "அம்மா அம்மா என்று தாயிடம் கன்று போல வருகிற பிள்ளை, இப்பொழுது - அதை ஏன் பேசுவான்; ஒருத்தி கையில கொடுத்தோமே! - விதி வீதியாக இழுபட்டுத் திரிகிறது. உண்ண நேரமோ? உறங்க நேரமோ..” என்று அடுக்கிக் கொண்டே போனாள் கூடத்திலிருந்து.
"அதுக்கு என்னவாக்கும்?” என்று கேட்பது போல வேகமாகத் துடித்தன கமலாவின் உதடுகள்.
水 米 米
6
டக். டக்' என்று வாசற்படியில் சிலிப்பர்ச் சத்தம் கேட்டது. மேசைக் கண்ணாடி முன் நின்றுகொண்டிருந்த கமலா, அப்படியே தாவிப் படுக்கையில் மெதுவாக இருந்து தன் கையைத் தலையணை யில் போட்டு நெற்றியை அதன்மேல் வைத்து அழுத்திக் கொண்டாள்.
"என்ன இது?” என்று கமலாவைப் பார்த்துக்கொண்டே ‘கோற்றைக் கழற்றினான் சுந்தரன்.
100

ແomA
"இஞ்சாரும் இதென்ன இது?” என்று பக்கத்தில் அமர்ந்து, கெஞ்ச லாகக் கேட்டான், அவள் தலையைத் தடவித் தடவி
s
தலையைக் குழப்பிவிடப் போகிறானே என்றோ என்னவோ, விறுக் கென்று தலையை ஒருபுறமாக இழுத்துக்கொண்டு “உங்கள் அம்மா வைத்தான் கேளுங்கள். அவவுக்குத்தானே எல்லாந் தெரியும்; எனக்கு என்ன தெரியப் போகிறது?” என்று விம்மி விம்மிச் சொன்னாள்.
"அம்மாவைக் கேட்கத் தெரியாமலா உம்மைக் கேட்கிறேன்?
雉
அவவின் குணந்தான்.
“உங்களுக்குத் தங்கமாகப் பிடிக்குமே!”
“எனக்குத் தெரியுமே, நான் சொல்லுவதற்கு எதிராகத்தான் சொல்லு வீர் என்று”
"ஆம், ஆம்; நான் எதிராகத்தான் சொல்லுவேன். உங்கள் அம்மா
s
என்றால்.
"அதையெல்லாம் ஆர் கேட்டது? என்ன இப்படி வாடிப் போயிருக் கிறிரே என்று கேட்டால்.
"இந்த மாமியென்று இருக்கிறவங்களோடு இருக்க முடியாது, முடியாது என்று சொன்னால்.”
"மாமிக்கு என்னவாம்?” என்று கேட்டுக்கொண்டே சமையற் கட்டிலி ருந்து வந்தாள் தங்கம்மாள்.
“என்னம்மா? எனக்கு மட்டும் ஒரு மருமகள் வந்தால் என்ன மாதிரிப் பார்ப்பேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தீங்களே, அடுத்த வீட்டு மாமி மருமகளைப் படுத்துற பாட்டைப் பார்த்து.”
"அதுக்கு இப்ப என்ன வந்துவிட்டது? இப்படி "ஆபீசால் வந்ததும் வராததுமாக, உள்ளதும் இல்லாததும் சொல்லி - நான்தான் சொன்னேனே - தாய்க்கும் பிள்ளைக்கும் இருக்கிற அன்பைக் கெடுத்துப் போடுவாள் ஒருத்தி வந்தால் என்று.”
"கெடுத்துப்போடாமல், உங்கள் மகனை நீங்களே வைத்துக் கொண்டிருக்கிறதுதானே!"
%罗
"வைத்துக்கொண்டிராமல் என்னடி.
"அம்மா! போதும், போதும். நீங்கள் மட்டும் என்னவோ விதிவிலக் கான மாமியாக அமையப் போகிறீர்களாக்கும் என்றுதான் பிரமாதமாக எண்ணிக்கொண்டிருந்தேன். எப்படியென்றாலும் மாமி மாமிதான் -
101

Page 70
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
இஞ்சாரும் காட்சிக்கு நேரமாகிறது; வாரும்” என்று கமலாவின்
கையைப் பிடித்து இழுத்தான்.
அவளும், ஊடல் தணிந்து இணங்கியவள் எழுந்து பின் சென்றாள்,
கடைக்கண்ணால் மாமியை ஒரு மின்வெட்டுப் பார்வை பார்த்துவிட்டு.
ck k sk
GG
பிள்ளைகளைப் பெற்று வளவுமன்” என்றாள் தங்கம்மாள், ஒரு ஏக்கம் நிறைந்த குரலில்; தன் மகன் தன் பக்கத்துக்குப் பேசவில்லையே என்ற ஆத்திரத்தினால் போலும்.
"ஈழகேசரி” 01.10.1944
102

ஈழகேசரி, ‘ஈழநாடு', 'சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக விளங்கிய இராஜ அரியரத்தினம் எழுதிய சிறுகதைகள் குறைவு. தரமானவை. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஓர் இலக்கியப் பாலமாக இராஜ அரியரத்தினம் விளங்கியுள்ளார். 'கல்கி பிறந்தார் இவர் எழுதிய நூல், அமரராகிவிட்டார்.
வெள்ளம்
இராஜஅரியரத்தினம்
மின்னல் மின்னி இடியிடித்தது. தொடர்ந்து நிகழ்ந்த ஊழிக் கூத்தைப் படம் பிடிக்க வேண்டியதில்லை. இப்படித்தான் வானம் பார்த்து நிற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்தாற்போல் இருந்து வெள்ளம் வரும். ஒரு கலக்குக் கலக்கும். மக்களை அல்லோலகல்லோலப் படுத்திவிட்டு அகப்படுகின்ற எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய்விடும்.
சிங்கப்பூர்ப் பணத்தில் முளைத்த கல்வீடுகள் நிமிர்ந்து நிற்கும். ஏழை மக்களின் குடிசைகளைச் சின்னாபின்னமாக்கித் தலைசாய்க்க இடம் இல்லாமற் தவிக்கச் செய்துவிடும். கல்வீடுகளில் இருந்த பணக்காரர் களையும் அந்தமுறை வந்த வெள்ளம் பீதிகொள்ளச் செய்து விட்டது.
இத்தனைக்கும் கந்தப்பருடைய குடிசை அசையவில்லை. திடற்பூமி வெள்ளம் வந்தாலும் எங்கேயோ ஒடி மறைந்துவிடும்.
காலையில் எழுந்ததும் கந்தப்பருக்குக் கண்ணில் பட்டது வெள்ளத் தில் நீச்சுப்பழகும் ஒரு நுகம். சுருட்டுப் பிடிப்பதையும் மறந்து கொட்டிற் பக்கம் போனார். நுகம் அங்கில்லை. சரி, என்று சொல்லி தவித்துத் திரிந்த நுகத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுவந்து பத்திரமாக வைத்துவிட்டார்.
ஒரு பசுவும், இரண்டு நாம்பன்களும் சிலிர்த்துக்கொண்டு வெள்ளத் தில் நின்றன. அவிழ்த்து அக்கம்பக்கத்தில் கட்டுவது முடியாத காரியம்.
103

Page 71
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
கந்தப்பர் லொக் லொக்' என்று இருமிக்கொண்டு, மாடுகளைப் பார்த்த படி நின்றார்.
கந்தப்பர் இப்போதெல்லாம் எலும்புந் தோலுந்தான். ஆளில் ஒரு பிடி இரத்தமில்லை. நரம்புகளெல்லாம் உடம்பிலே பச்சைப் பசேலென்று நெளிந்து மிதந்து கிடந்தன. போதாக்குறைக்குக் கொடிய இருமலும் அவரை ஆட்டும்வரை ஆட்டி வைத்தது.
சிவகாமி அப்போதுதான் பாயைச் சுருட்டி அசைவில் வைத்து விட்டுப் புகைச்சட்டியைத் தூக்கிக்கொண்டு அடுக்களைப் பக்கம் போனாள். வாயிற் சுருட்டில்லாமற் கந்தப்பர் அன்று சோர்ந்து நின்றது சிவகாமிக்குப் புதுமையாகவிருந்தது.
“வெள்ளத்திக்கை நில்லாதே அப்பு - அது கொஞ்ச நேரத்தால் வத்திப்போம். நீ வந்து புகைச்சட்டியிலே காலைக் காச்சு” என்றாள் மகள்.
கிழவனுக்கு அப்போதுதான் சுருட்டின் ஞாபகம் தட்டியது. "தலை மாட்டுக்கை பொயிலை கிடக்கிது, பாதி கிள்ளிக் கொண்டு வா பிள்ளை” என்று சொல்லித் திண்ணையிற் போய்க் கையை ஊன்றிக் குந்தினாரோ இல்லையோ, வெள்ளத்தை விழுங்கி, மிக வீங்கிக் கிடந்த திண்ணை, அழுகிய பழம் போல் நெகிழ்ந்துவிட்டது.
அடுக்களைக்குள் இருந்த சிவகாமி "அப்பு” என்று சொல்லிச் சிரித்தும் விட்டாள்!
அப்பு எரிந்து புகையவில்லை. அடிச் சுருட்டைச் சப்பிச் சப்பிப் புகை விட்டுக் கொண்டிருந்தார்.
"மோனே, காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம்” என்று சொல்லி ஒருமாதிரிச் சமாளித்து ஒல்லித் தேகத்தைத் தூக்கிக்கொண்டு, எழும்பிவிட்டார்.
மகள் அடுக்களையிலே தேநீர் ஆயத்தம் செய்துகொண்டு இருந் தாள். இப்படித்தான் பெருமழை பெய்து 'விர்’ என்று குளிராக இருந்தாற் கந்தப்பருடைய குடிசையிலும் தேயிலை வாசனை - கமகமக்கும்.
"இந்தா அப்பு, இருமலுக்குமிது நல்லது. சுடச்சுடக் குடித்தாற் சுகமாகவிருக்கும்” என்று சொல்லி சிரட்டையைக் கையிற் கொடுத்து முட்டிக்குள்ளே கிடந்த தேநீரைப் பக்குவமாக ஊற்றினாள், மகள். கிழவர் சீனியை உள்ளங்கையிற் கொட்டி, நாக்காற் தடவி பொச்சடித்துக் குடிப்பதை மகள் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தாயார் இறந்து இவ்வளவு காலமாகியும் அவள் தகப்பனாருக்குச் செய்யவேண்டிய தொண்டுகளை மறந்துவிடமாட்டாள்.
水 米 来
104

வெள்ளம்
சிவகாமியின் முகத்தில் அழகு பொங்கி வழிந்துகொண்டிருந்தது. ஒளி தட்டும் விழிகள். மாந்துளிர் மேனி சூரியனின் கூரிய அம்புகள் அவளுடைய மார்பைக் கிழித்துக்கொண்டு போகும் வேளைகளில் எல்லாம், அவளுடைய உடம்பு அப்படியே பளபளக்கும். பொன் - தோடு கள் காதுகளில் ஒட்டிக்கொண்டு கிடந்தன. ஒரு சின்னப் பொன் மூக்குத்தி மின்னிமின்னி அவளுடைய முகப்பொலிவுடன் போட்டியிட்டது. கூந்தலை அள்ளி வாரி ஒரு பெரிய கொண்டை கட்டியிருந்தாள். கொத்துக் கொத் தாக மலர்கள் அவளுடைய கொண்டையை அலங்கரிக்கவில்லை. சேலையைக் கட்டி இடுப்பிலே இறுக்கமாகச் சொருகிக் குடமும் கையு மாகக் கிணற்றடிக்குச் செல்லும் போதும், தண்ணிருடன் திரும்பும் வேளைகளிலும், சிவகாமி ஒரு கைவீசி ஒய்யாரமாக அடி எடுத்து வைப் பதே ஒரு தனி அழகு.
இதையெல்லாம் கண்டு அவஸ்தைப்பட்டு, உள்ளத்தைப் பறி கொடுத்துவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தவியாய்த் தவிக்க, அக்கம்பக்கத்தில் ஒரு வாலிபன் இருந்தானோ இல்லையோ, கடவுளுக் குத்தான் தெரியும். அப்படியில்லாவிடில், அந்தக் கடவுள் அவளிடம் ஏன் அவ்வளவு அழகையும் வாரியிறைத்திருக்க வேண்டும்?
§ 8k ප්k
கிழட்டுக்கட்டை சிரட்டையை இறப்பிற் சொருகிவிட்டு, சுருட்டைப் பிடித்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தது நெருப்புக்காக.
“மேனே, ஒருநாளுமில்லாத பெருமழை. வயல் என்ன பாடோ தெரியாது. போன கிழமை அங்கினை ஒரு மாதிரி எல்லாம் பச்சையாய்க் கிடந்தது. இந்தமுறை கடவுள் கண்பார்த்துவிட்டார்; குறையில்லை என்று கிடக்க வெள்ளம் அடித்துக்கொண்டு வந்திட்டுது. ஒருக்காப் போய்ப் பாத்துக்கொண்டு வாறேன். ஆடுகாற் சுப்பர் வந்தால் இருக்கச் சொல்லு" என்று சொல்லிக் கிழவர் தலைப்பட்டையை எடுத்துத் தட்டித் தலையிற் போட்டுக்கொண்டு வயற்பக்கம் திரும்பினார்.
"அப்பு நல்ல வெள்ளம், இப்ப என்ன அவசரம் - நீயும் போக வேணு மெண்டு நிக்கிறாய். வாய்க்காற்பக்கம் போகும்போது கவனமாய்ப் போ. இந்தா இந்தத் தடியையும் கொண்டு போ” என்று மகள் சொல்லிக் கிழவனுக்கு ஒரு சிறு துண்டு பனாட்டும் தேங்காய்ச் சொட்டுகளும் கொடுத்து அனுப்பினாள்.
冰求 米
கிந்தப்பர் வீட்டுப் பக்கம் ஒரு குருவியும் தலைகாட்டுவதில்லை. இத்தனைக்கும் அந்த மனுஷன் ஒரு பொல்லாத ஆள் அல்ல. தானும் தன் பாடும். ஆனால் ஆடுகாற் சுப்பர், கந்தப்பரைக் கண்டு அரட்டைக் கச்சேரி வைக்காமல் விடுவதில்லை.
105

Page 72
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
ஏன் அம்மாக்குட்டியும் சிவகாமியிடம் அன்பு வைத்திருந்தாள். "அப்படிச் செய் மேனே; இப்படிச் செய் மேனே” என்று அம்மாக் குட்டிதான் சிவகாமிக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது. அப்பெண் ஓர் ஏழை என்றாலும் நல்ல மனுவி.
米米率
அந்த வெள்ளத்தைத் தாண்டி ஒரு மாதிரி வயற்பக்கம் சேர்ந்து விட்டார் கந்தப்பர். கிழடுதட்டிய காலத்தில் இப்படியெல்லாம் வெள்ளத் திலே நீந்தவேண்டியிருந்தது, அந்த உயிருக்கு! வயல் இருந்ததாகத் தெரியவில்லை. வெள்ளம் எல்லாவற்றையும் விழுங்கிக் கக்கிக் கொண்டு பாய்ந்தது. செத்த பசுக்கன்றும், ஒரு கறுத்த நாயும் மரக் கிளைகளுடன் சிக்குண்டபடி கிழவனை நோக்கி வந்து கொண்டிருந்தன. சொற்ப தூரத் திலே ஒரு குடில் மிதந்து திரிந்தது. குடிலின் உச்சியில் ஒரு சேவலும், பெட்டைக் கோழியும் கூனிக் குறுகிக் கொண்டிருந்தன.
கந்தப்பர், நாவல் மரத்தைக் கண்டுவிட்டார். மரத்தருகேதான் வாய்க்காலென்பது அவருக்குத் தெரியும். வாய்க்காலைக் கடந்து விட்டால் முதலிற் கால் படுவது கந்தப்பருடைய நிலத்தில். ஆனால் அங்கே எதற்காகப் போகவேண்டும்? நீச்சுப் பழகவா? கிழவனுக்குக் குளிர் வெடு வெடு’ என்று நடுக்கங் கொடுத்தது.
வாய்க்காற் பக்கம் போய்க் கால் வைத்தாரோ இல்லையோ, குபுக் என்று சறுக்கி வீழ்ந்தார்! வாய்க்கால் வரம்பு இருந்த இடமும் தெரியா மல் வெள்ளத்தோடு அள்ளுப்பட்டுவிட்டது. அந்த இடத்தைப் பார்த்துத் தான் கந்தப்பரும் காலை வைத்தார். “வாய்க்காற் பக்கம் போகும்போது கவனமாய்ப் போ” என்று சிவகாமி ஏற்கனவே சொல்லி யிருந்தாள். சிவகாமியும் அடுக்களையும், கந்தப்பரின் மனக்கண் முன் மின்னி மின்னி மறைந்தன.
திக்குமுக்குப்பட்டு எழுந்துவிடலாமென்றால் அது அவரால் முடிய வில்லை. அந்தப் பக்கம் ஒரு குருவிகூடப் பறக்கவில்லை. தூரத்தில் எங்கோ ஒரு ஆந்தை அலறியது. மகள் கொடுத்த தடியைப் பிடித்தபடி கந்தப்பர் செத்துக்கொண்டிருந்தார்.
米 米 来
சிவகாமி அப்புவைப் பார்த்தவண்ணம், கொதித்துப் பறக்கும் உலைக்கு அரிசி போடுவதற்காக, அரிக்கன் சட்டியில் அரிசியை அலசிக் கொண்டிருக்கிறாள். பக்கத்திலே ஒரு சட்டியிற் பிட்டுக்காக, ஒடியல் மா தண்ணிரில் ஊறுகின்றது.
அப்புவைக் காணவில்லை. ஆடுகாற் சுப்பர் வருவார், அவரிடம் சொல்லி வயலுக்கு அனுப்பலாம் என்றால் அவரும் வந்தபாடில்லை.
106

வெள்ளம்
அதிக தூரத்தில் இருக்கும் பள்ளன் ஒருவன் ஒருநாளுமில்லாத திரு நாளாக அன்று வந்தான்.
"நாச்சியார் கமக்காரன் எங்கே?” என்றான் பள்ளன்.
“வயலுக்குப் போட்டார். இன்னும் வரயில்லை” என்றாள் சிவகாமி பள்ளன் நில்லாமற் போய்விட்டான்.
அம்மாக்குட்டிகூட அன்று வர அவ்வளவு நேரமாகிவிட்டது. "அப்பு எங்கே?” என்றாள்.
“வயலுக்குப் போட்டார். ஆடுகாற் சுப்பர் வந்தால் அப்புவைப் பாத்து வரச் சொல்லவேணும்”
“ஓம் பிள்ளை ஒருக்கா அனுப்பிவிடு” என்று சொல்லிவிட்டு அம்மாக் குட்டி பறந்து சென்றுவிட்டாள்.
米 来 来
டுகாற் சுப்பர் கந்தப்பரின் வீட்டுக்குப் போகவில்லைத்தான். ஆனால் வெள்ளத்தின் வேடிக்கையைப் பார்க்கலாமென்று வாய்க்காற் பக்கம் போனவர், கந்தப்பரை அங்கு கண்டு கண்ணிர் வடித்தார். சுப்பரின் கண்ணிர்த் துளிகள் வெள்ளத்துடன் கலந்து கொண்டன. அவர் அங்கும் இங்கும் பார்த்தார். ஒருவருமில்லை. கந்தப்பருடைய தலைப் பட்டை மாத்திரம் தண்ணிரிலே தவித்துக்கொண்டு, வருவதும் போவது மாக இருந்தது.
நண்பனின் உடலைத் தூக்கி கவர்விட்ட மரமொன்றில் வைத்து விட்டு கந்தப்பரின் குடிசையை நோக்கி, ஆடுகாற் சுப்பர் விறுவிறு' என்று நடந்தார்.
ze ze ze
GONG) Isirotub வந்தது.
இத்தனைக்கும் கந்தப்பருடைய குடிசை அசையவில்லை.
இப்போது ஆடுகாற் சுப்பர் கந்தப்பருடைய குடிசையை அசைக்கப் போகின்றார். அவ்வளவு வேகமாகப் போகின்றார்.
கப்பர் போகின்ற போக்கிலே குடிசை பொலு பொலு’ என்று இடிந்து மண்ணோடு மண்ணாகிவிடுமா?
"ஈழகேசரி” 18.02.1945
107

Page 73
கே. கணேஷ் குறைவாக எழுதினும் நிறைவாகப் படைத்தவர். 'பாரதி என்ற சஞ்சிகையை நடாத்தியவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தாபகர்களில் முக்கியமானவர். மொழிபெயர்ப்பாளர். எண்பது வயதுடன் எம்முடன் வாழும் மூதறிஞர்.
சத்தியபோதிமரம் கே.கணேஷ்
அன்று திங்கட்கிழமை ஆனதால் பஸ்ஸில் அதிகமான நெருக்கடி சந்தை நாளானபடியாலும் 'கோடு கச்சேரி என்று போனவர்கள் நிறைந்தி ருந்தபடியாலும் பஸ் நிறைய ஜனங்கள் இருந்தனர். சட்டப்படி முப்பத்தி ரண்டு பிரயாணிகள் ஏற்றப்படவேண்டிய பஸ்ஸில் எழுபத்திரண்டு பிரயாணிகளாவது ஏறியிருப்பார்கள். ஒரு ஆசனத்தில் இரண்டு பேர்தான் உட்கார வேண்டியது. ஆனால் மூன்று பேரை அமர்த்தி இருந்தான் கண்டக்டர் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பால்கார கிரிபண்டாவோ இரட்டை நாடி ஆசாமி மூன்றுபேர் அமர்ந்ததும் என்பாடு சிரமமாகி விட்டது. நெருக்கிப் பிடித்துக்கொண்டு ஒருவகையாக உட்கார்ந்தோம். பஸ்ஸசம் புறப்பட்டுச் சென்றது. பாதித் தூரத்திற்குக் கிட்டத்தட்ட வந்தி ருக்கும். எவனோ ஒருவன் சைக்கிளில் சென்றவன், சைகை காட்டி விட்டுச் சென்றான். 'பொலிஸ்காரர்கள் இருக்கிறார்கள்’ என்பதுதான் அதன் பொருள். டிரைவர் உடனே பஸ்ஸை நிறுத்தி பிரயாணிகள் எல்லோரையும் உட்கார வைக்கத் தொடங்கினான். இரண்டு பேர் உட்கார வேண்டிய இடத்தில் நான்கு பேரை உட்கார வைக்கும் சிரமமான காரியத்தில் ஈடுபட்டான் கண்டக்டர். வெளிப்பார்வைக்கு ஓவர் லோடா' கத் தோன்றாமலிருக்கும் என்பது அவன் எண்ணம். மீண்டும் பஸ் புறப்பட்டது.
வெளித் தோற்றத்தைக் கண்டு மயங்கிவிடுவது எங்கள் இலாகா அல்ல என்று நிலைநாட்டுவது போல ஒரு இன்ஸ்பெக்டரும், ஒரு சார்ஜனும் பஸ்ஸை நிறுத்தினார்கள். நிறுத்தியதும் கான்ஸ்டபிள் ஒருவன் 108
 

சத்திய போதி மரம்
பிரயாணிகள் தொகையை எண்ணினான். டிரைவர் இறங்கி வெளியே இன்ஸ்பெக்டரிடம் தலையைச் சொறிந்தவாறு பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான். பஸ் நின்ற இடத்திற்கு அருகில் அரசமரம் ஓங்கி வளர்ந்திருந்தது. வயதின் முதுமையைக் காட்டுவது போல மரம் பரந்து விசாலமாக இருந்தது. அதனைப் பொதுவாக தியுரும் போதி (சத்திய அரசமரம்) என அழைப்பார்கள். அவ்வூரின் சுற்று வட்டாரங்களிலிருந் தும் இன்னும் தொலைவு தூரங்களிலிருந்தும் சத்தியம் செய்வதற்கு அங்குதான் வருவார்கள். அங்கு சத்தியம் செய்துவிட்டால் அவர்களின் சர்ச்சைகளும் பூசல்களும் அத்துடன் நின்றுவிடும். பொய்ச் சத்தியம் செய்தவன் அழிந்தே விடுவான் என்பது அவர்களது நம்பிக்கை. அந்த அரசமரத்தின் கீழுள்ள பெளத்த ஆலயந்தான் அத்தகைய சக்தி வாய்ந்ததாம். அதிலே அன்று ஆள்நடமாட்டம் அதிகமாக இருந்தது. கிராம உத்தியோகத் தேவதைகள் அங்குமிங்குமாக நடமாடின. பொலிஸ் காரர்கள், பஸ் டிரைவரிடமும் கண்டக்டரிடமும் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு அந்தக் கோவிலுக்குள்ளேயே சென்றனர். பஸ் டிரைவரும் கண்டக்டரும் 'டிஸ்ட்ரிட் கோர்ட் நீதிபதியே கோவிலுக்கு ஒரு வழக்கு விஷயமாக வந்திருக்கிறாராம். அதற்குக் காவலாகப் பொலீஸ்காரர்கள் வந்திருக்கிறார்கள். அவர் வருவது முன்னமே தெரியாது போய்விட்டது என்று வருத்தப்பட்டுக் கொண்டார்கள். மீண்டும் பஸ் புறப்பட்டுவிட்டது.
"ஆமாம் நானும் மறந்துவிட்டேன். அந்த ரேஸ் டிக்கட் வழக்குத் தீர்ப்பல்லவா இன்றைக்கு. நான் கூட அந்த இரண்டு பேர்களை அங்கே கண்டேன்” என்றான் ஆசனத்தில் நகர்ந்து கொண்டே கிரிபண்டா!
"அது என்ன ரேஸ் டிக்கட் வழக்கு?” என்று ஏககாலத்தில் பல குரல்கள் கேட்டன.
"தோட்டத்தில் வேலைசெய்யும் ஒரு தொழிலாளி, கடைக்காரன் ஒருவனிடம் இரண்டு ரூபாய் கொடுத்து கண்டிக்குப் போகும்பொழுது ரேஸ் டிக்கட் ஒன்று எழுதிவிட்டு வரச் சொன்னான். கடைக்காரன் தன் பெயருக்கே எழுதிவிட்டான். தற்செயலாகப் பரிசும் கிடைத்துவிட்டது. தொழிலாளி அதை அறிந்து பரிசைக் கேட்டேன். கடைக்காரன் வேண்டு மென்றால் இரண்டு ரூபாயைத் திருப்பித் தருவதாகக் கூறினான். முடிவில் பலர் உதவியுடன் தொழிலாளி வழக்குத் தொடர்ந்தான். ஆதாரம் எல்லாம் கடைக்காரன் பக்கம் இருக்கவே, தொழிலாளி தியுரும் போதியில் சத்தியம் செய்தால் போதும் என்று கூறிவிட்டான். இதுதான் விஷயம்" என்று விஷயம் அறிந்தவனது கம்பீரத்தில் தனது புஷ் கோட்டை முட்டிக்கொண்டு தொந்தி தெரிவதை அறிந்து கோட்டை இழுத்து விட்டுவிட்டுக் குடுமியை முடிந்தான் பண்டா.
"ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்பொழுது தாராளமாய் எவனும் பொய்ச்சத்தியம் செய்வான். சத்தியத்திலெல்லாம் என்ன இருக்கிறது?" என்றேன்.
109

Page 74
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
"அப்படிச் சொல்லாதீர்கள். மற்ற இடத்தில் சத்தியம் செய்வதைப் பற்றி எனக்குத் தெரியாது. இந்த அரச மரத்தில் சக்தி இருக்கத்தான் செய்கிறது” என்றார் எனக்கு எதிர் ஆசனத்தில் அமர்ந்திருந்த கடைக் காரர் ஒருவர்.
"அதர்மம் செய்பவர்கள் அழிந்துவிடுவதாகக் கூறுவதெல்லாம் சுத்தப் பொய். உண்மையில் பார்க்கப் போனால், அயோக்கியனுக்கும், தில்லுமுல்லுக்காரர்களுக்குந்தான் நல்ல காலமாகத் தெரிகிறது. பண்டைக் காலத்தில் ஏன் இன்றைக்குந்தான் என்ன? மக்களின் வயிற்றி லடித்துக் கொழுத்த கடைக்காரர்களுக்கும் தண்ணிரில் பாலை ஊற்றி பணம் பெருத்தவர்களுக்கும் என்ன வந்துவிட்டது? அவர்கள் எல்லாம் நன்றாய்ச் செளகரியமாய்த்தான் இருக்கிறார்கள். வீடு, வயல், தேயிலைத் தோட்டம் என்று வாங்கிக் கொழுத்துத்தான் இருக்கிறார்கள்” என்றேன்.
பக்கத்திலமர்ந்திருந்த பண்டாவும் எதிரில் அமர்ந்திருந்த கடைக் காரரும் தங்களையே கூறியதாக நினைத்துக் கொண்டார்கள் என்பதை அவர்கள் முகம் காட்டியது.
'தம்பீ, நன்மையான காரியம் செய்தால் நன்மை சம்பவிக்கும். தீமை செய்தால் தீமை கிட்டும். எதை நாம் செய்கிறோமோ அது நமது வாழ்க்கையில் பிரதிபலிக்கும். இது நமது பெளத்த மதத் தத்துவம். இது என்றும் பொய்யானதில்லை” என்று அடுத்து அமர்ந்திருந்த ஆப்பக் கடை ஆச்சி கூறினாள்.
“என்னவோ என் அனுபவத்தில் நன்மை செய்தவர்கள் நன்மை அடைவதையும் தீமை செய்தவர்கள் தீமை அடைவதையும் கண்ட தில்லை. நடைமுறையில் எதிராகத்தான் நடக்கிறது” என்றேன்.
"உனக்கு என்ன வயது வந்துவிட்டது. மகா அனுபவஸ்தன் மாதிரிப் பேசுகிறாய். என் ஐம்பத்தைந்து வருட அனுபவத்தில் எத்தனை எத்தனையோ பார்த்திருக்கிறேன். இந்தத் தியுரும் போதியைப் பற்றிய ஒரு சம்பவம் உண்டு. அதைத் தெரிந்த பின் நீ நம்பிக்கை அடைவாய்” என்று தாத்தா முறையான ஒருவர் என்னை நோக்கிக் கூறத் தொடங் கினார். அவர் மேல் பகுதியிலிருந்து வருகிறவர்.
"இது நடந்து இருபது முப்பது வருஷம் இருக்கும். சம்பந்தம் பிள்ளை என்பவர் பெரிய முதலாளி. நம்மூரில் முதல்முதல் கடை வைத்தவரும் அவர்தான். நல்ல தாராளமான மனசு, பலருக்கும் உதவி செய்தார். அவர்கள் தகப்பனார் தேடிய பூர்வ சொத்தான தோட்டம் இருந்தது. விலைவாசிகளும் அன்று நன்றாக விற்றது. செலவு இன்றைக் குச் செலவழிப்பதில் பத்தில் ஒரு பங்கு கூட ஆகாது. இன்றைக்குத்தான் பஸ் என்றும் கார் என்றும் வந்து விட்டது. தொசுக்கென்று எடுத்ததற் கெல்லாம் கார், கொஞ்ச தூரம் போக வேண்டுமென்றாலும் டவுன் பஸ்ஸசக்கு மணிக்கணக்காக கால் கடுக்க நிற்பார்களே ஒழிய நடக்க
110

சத்திய போதி மரம்
மாட்டார்கள். அப்பொழுதோ இந்தத் தூரமெல்லாம் காலாலேதான் நடந்து தீர்ப்போம்."
"இன்றைக்குத்தான் நன்றாகப் பளபளவென்று கருத்த ரோட்டிலே லொறிகளில் சாமான்களைக் கொண்டு வருகிறார்கள். அப்பொழு தெல்லாம் பொதி மாட்டின்மேல்தான் கொண்டு வருவது வழக்கம். ஒ.! மறந்து விட்டேனே, எதையோ சொல்லிக் கொண்டு வருகிறேனே. வந்து. வந்து. ஆமாம் சம்பந்தம்பிள்ளைக்குச் செலவு மிகக் குறைவு. ஆனால் வருமானம் நிறைய வந்தது. எனவே நல்ல மிச்சம். அவருக்கு ஒரு அண்ணன் இருந்தார். அவர் பெயர் சிங்காரம்பிள்ளை. அவர் இந்தியாவிலுள்ள சொத்துக்களைப் பார்த்துக் கொள்வார். பூர்வீகச் சொத்துக்களின் வருமானத்தை இருவரும் பிரித்துக் கொள்வார்கள். இப்படியாகச் சிறிது காலம் நடைபெற்றது. உள்ளூர்க் கடையில் நல்ல லாபமென்றவுடன் மேலும் பணம் சம்பாதிக்க ஆசை ஏற்பட்டுவிட்டது. பணம் இருக்கிறதே அதுவும் கஞ்சா, அபின் போன்ற ஒரு போதை வஸ்துதான். மேலும் மேலும் சம்பாதிக்க ஆசை ஏற்படுகிறதே ஒழிய, போதும் என்று ஒரு எல்லை ஏற்படுவதில்லை.”
"கொழும்பிலுள்ள எவனோ ஒரு சினேகிதன், 'பலசரக்கு மொத்த வியாபாரம் தொடங்கினால், நல்ல மிச்சம்' என்று கூறினான். தூத்துக்குடி மிளகாயை, தூத்துக்குடியிலிருந்தும், பெல்லாரி வெங்காயத்தை பெல்லா ரியிலிருந்தும் நேரே வரவழைத்தால் கொள்ளை லாபம் கிடைக்கும் என்றும் எடுத்துக் காட்டினான். சம்பந்தம்பிள்ளையும் ஒரு கூட்டாளி ஆகி தொழிலை ஆரம்பித்தார். தொழில் கொஞ்சக்காலம் நன்றாகத்தான் நடந்தது. அதில் வேலை செய்த தெக்கித்திச் சீமைப் பயல் ஒருவன், பெருச்சாளி மாதிரி சுரண்ட ஆரம்பித்துவிட்டான். பெரும் நஷ்டம் ஏற்படத் தொடங்கிவிட்டது. கொழும்பு போய்வந்த சிலர், இதனை சம்பந்தம் பிள்ளையிடம் கூறி, எச்சரித்து வைத்தார்கள். கிராமத்துக் கடையில் 'டா டு’ என்று ஏதோ பொட்டை அதிகாரம் செய்ய முடியுமே ஒழிய கொழும் பில் போய் இவரால் என்ன செய்ய முடியும்? பொதுவாக, அவர் கடை கொழும்பில் எந்தத் தெருவில் இருக்கிறது என்று அவரைக் கேட்டாலே சரியாகச் சொல்ல முடியாது. என்றைக்கோ எப்பொழுதோ அங்கு போய்விட்டு புதுமை வீடு, துறைமுகம், மிருகக்காட்சிச்சாலை என்பவற் றைப் பார்த்ததோடு தன்னுடைய கடையையும் பார்த்துவிட்டு வந்தார். அவ்வளவுதான். கடையில் நஷடம் ஏற்பட்டால் கடைக்குக் கடன் கொடுத்தவர்கள் எந்தப் பங்காளியிடமும் வதல் செய்யலாம் என்று சட்டம் இருக்கிறது என்று ஒருவன் கூறினான். உடனே முன்னெச்சரிக் கையாகத் தனது பாகமாக இலங்கை இந்தியச் சொத்தை எல்லாம் சுத்தக் கிரயமாக அண்ணன் பேருக்கே எழுதி வைத்தார்.”
"எதிர்பார்த்தபடி கொழும்புக் கடை நொடித்துவிட்டது. கடன் கொடுத் தவர்களும் சம்பந்தம்பிள்ளையின் சொத்தை ஜப்தி செய்ய முயன்றார்கள்.
11

Page 75
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
அவர் பெயரில் சொத்து இல்லை என்றறிந்ததும் சும்மா இருந்து விட்டார்கள். கடன்காரர்களிடமிருந்து சொத்துக் காப்பாற்றப்பட்டது. ஆனால் அண்ணனிடமிருந்து சொத்தைக் காப்பாற்ற முடியவில்லை. சொத்தெல்லாம் தன் பெயருக்கிருக்கவும் சிங்காரம்பிள்ளை முழுதும் தனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி தம்பியையும், தம்பி யின் மகனையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டார். சம்பந்தம்பிள்ளை வழக்குத் தொடர்ந்தார். ருசு இல்லாத பொழுது வழக்கு என்ன செய்ய முடியும் முடிவில் சத்திய போதியில் சத்தியம் செய்துவிட்டால் போது மென்றார். அதன்படி அந்தப் படுபாவி சிங்காரமும் கூசாமல் சத்தியம் செய்தேவிட்டான்.”
"சம்பந்தம்பிள்ளை மனமுடைந்தவராய் இந்தியாவிற்குப் போய் மாமனார் வீட்டில் ஒட்டுக் குடித்தனம் நடத்தினார். அதே மன வருத்தத் தால் வியாதி வாய்ப்பட்டு விரைவில் மாண்டுவிட்டார். மகன் சுந்தரம் அனாதையாகி விட்டான். ஊரில் மாடு ஒட்டிக்கொண்டு வயிறு வளர்த்து வந்தான். பின்னர் சிலர் தயவால் இலங்கையில் ஒரு கடையில் பொடிய னாக வேலை கிடைத்தது.”
"பணம் கிடைத்தால் பத்தும் கிடைக்கத்தான் செய்கிறது. பவிசும் பெருமையும் எங்கிருந்துதான் வருமோ? சிங்காரம்பிள்ளையின் சொத்தும் மதிப்பும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தன. சொல்லி வைத்தாற்போல் தேயிலைக் கூப்பன் ஏற்படுத்தி னார்கள். பணம் பணமாகக் காய்த்துத் தள்ளியது. சிங்காரம்பிள்ளை வெகுவிரைவில் லட்சாதிபதியாகிவிட்டார். யாரோ எவரோ என்றிருந்த சிங்காரம்பிள்ளையைத் தேடி பெரிய மனிதர் என்று சொல்லப்பட்ட வர்கள் எல்லாம் சுற்றத் தொடங்கினார்கள். சர்க்கரையைக் கண்ட இடத் தில் ஈ மொய்க்கிறது. பணமுள்ள இடத்தில் பலரும் மொய்க்கிறார்கள்; யோசனை கூறுகிறார்கள்; கைகட்டி வாய்புதைக்கிறார்கள். பணந்தானே இன்று மூலமந்திரமாக இருக்கிறது. ஆமாம்! பல விதத்திலும் பணத் தைச் சிங்காரம்பிள்ளை பெருக்கிவிட்டார். கார்க் கம்பனியென்றும் பெட்ரோல் ஷெட்டென்றும் பல ஸ்தாபனங்களின் சொந்தக்காரராகி விட்டார். கொஞ்சக்காலம் இப்படி ஓடியது யாதொரு குறையுமின்றி. நவீன மயமான பங்களாவில் சுகமாகக் குடும்பத்துடன் வாழ்க்கை நடத்தி வந்தார் சிங்காரம்"
"பங்கு முறிந்து விட்டது; பிஸ்னஸ் முறிந்துவிட்டது என்று யாராவது கூறப் போகிறீர்கள்” என்றேன் அவசரக்குடுக்கையாகிய நான்.
"அதெல்லாம் இல்லை தம்பி, முறிந்தது வேறு விஷயம். அதற்குள் ஏன் அவசரப்படுகிறாய்? கொஞ்சம் பொறுமையுடன் கேளேன். கரடு முரடாயிருந்த ரோடெல்லாவற்றையும் நேராக்கி ரோடு போட்டார்கள். சிங்காரம்பிள்ளை கார்கூட வாங்கிவிட்டார். அந்தக் காலத்தில் கார்
12

சத்திய போதி மரம்
என்பதை நமது பகுதியில் அபூர்வமாகத்தான் பார்ப்பார்கள். யாராவது உத்தியோகஸ்தர்கள்தான் வாங்குவது வழக்கம். இன்றைக்குத்தான் கார் தண்ணிர்பட்ட பாடு படுகிறதே. அப்படி அபூர்வமான சமயத்தில் கார் வைத்திருந்தார். ஒரு நாள் குடும்ப சமேதராக கண்டியில் பெரஹரா பார்த்துவிட்டு சிங்காரம் வந்துகொண்டிருந்தார். வரும் வழியில்தான் சத்திய போதி இருந்தது. பாரேன் அதிசயத்தை சிறிது நேரத்துக்கு முன்னால் யாதொரு பின்னமும் இல்லாமல் இருந்த அந்த அரச மரத்தின் கிளையொன்று அவர்கள் காரில் திடீரென்று விழுந்து சிங்காரத் தின் குடும்பத்தைக் கூண்டோடு கைலாசத்திற்கு அனுப்பி விட்டது. கோர்ட்டும், சமூகமும் தண்டிக்க முடியாத மனிதனை அந்த சத்திய போதி மரமே தண்டித்துவிட்டது. மேலும் அதிசயம் தெரியுமா? அக்காரின் டிரைவருக்கு ஒரு சின்ன சேதமாவது இருக்கவேண்டுமே கொஞ்சநேரம் மயக்கம் போட்டிருந்தான். அவ்வளவுதான். ஆனால் காரும், சிங்காரம் பிள்ளையும் குடும்பத்தாரும் சட்டினி, சிங்காரம்பிள்ளை மாண்ட செய்தி சுந்தரத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. தந்தி கிடைத்த இரவு ஒரு மணிக்கு சுந்தரம் என்ன செய்துகொண்டிருந்தான் தெரியுமா? புடவைக் கடையில் புடவை அடுக்கிக்கொண்டிருந்தான். இரவு ஒரு மணிக்கா? ஷாப்புச் சட்டமாச்சே என்கிறாயா? அதெல்லாம் ஏட்டிலே தானே. கதவடைத்த பிறகு உள்ளே நடப்பது சிப்பந்திகளுக்குத் தானே தெரியும்? முடியாது என்றால்தான் வயிற்றிலடி என்ன செய்வது, சிவனே என்று செய்ய வேண்டியதுதான். இதை எதற்காகச் சொன்னேன் என்றால் அவ்வளவு கஷடப்பட்டுக் கொண்டிருந்தான் சுந்தரம் என்பதற்காகத்தான். சிங்காரம் பிள்ளையின் குடும்பத்தில் ஒருவரும் மிஞ்சவில்லையாதலாலும், அடுத்த வாரிசு சுந்தரமானதாலும் சொத்தெல்லாம் அவனுக்கே சேர்ந்தது. இதுதான் என்றைக்கிருந்தாலும் தருமம் வெல்லும் என்பது” என்று முடித்தார்.
"வில்லம்பை விடச் சொல்லம்பு கொடுமையானது' என்று கம்பர் சொன்னாரல்லவா? அவர் வாய்ச் சொல்லால் பாண்டியன் குலம் கெட்ட தைப் போல் சிங்காரம்பிள்ளையின் குலமும் சாம்பாறாய் போயிற்றுப் போலும்” என்று தமது தமிழறிவைக் காட்டினார் சென்டிரல் ஸ்கூல் வாத்தியார் சிவஞானம்பிள்ளை.
"கதை நன்றாயிருக்கிறது” என்றேன் நான்.
"கதை இல்லையடா. நிஜமாக நடந்தது” என்றார் அவர்.
"மலையகச் சிறுகதைகள்” 1949
113

Page 76
கசின் என்ற புனைபெயரில் மறைந்திருக்கும் க, சிவகுருநாதன் 1947-1957 காலகட்டத்தில் சிறுகதைகள் பலவற்றைப் படைத்துள்ளார். சாவகச்சேரி யைச் சேர்ந்தவர். 'கசின் சிறுகதைகள் யாழ், இலக்கியவட்ட வெளியீடாக வெளிவந்தது. நிதானபுரி அவரது குறுநாவற்றொகுதி ஆகும். எங்களோடு இன்னும் வாழும் முன்னோடி,
பிழையும் சரியும்
கசின்
இக்காலத்திற் சினிமாக்களிலே 'வில்லன்’ என்று ஒரு பாத்திரம் சிருட்டிக்கப்படுகிறது. இந்த வில்லன் இல்லாவிட்டாற் கதை நடக்காது. ஆகவே, கதையின் சாரதி என்றுகூட "வில்லனைச் சொல்லலாம். இப்பொழுது கூறப்போகும் கதையில் நான் ஒரு 'வில்லன்' அல்லன்; 'வில்லனைப் போலத் துஷடத்தனங்கள் செய்யவுமில்லை.
'வில்லன்' என்ற பாத்திரத்திற்கு எதிரான குணங்களே என்னிடம் இருந்தன. கதை முடிவதற்கு, அதுவும் சுபமாக முடிவதற்கு நான் காரணஸ்தனாக இருந்திருக்கிறேன். கதையின் விபரங்களைப் பிழையான வழிகளில் அறிந்தவன் என்று என்னைச் சிலர் குற்றஞ் சாட்டலாம். என்ன நோக்கத்திற்காக நான் இந்த விபரங்களை அறிய முயற்சித்தேனோ அதே நோக்கத்தின் பலனை நீங்களும் பெறுவதற்காக இதைக் கதை யாக எழுதுகிறேன்.
米 米 来
இலங்காமாதா சுதந்திரமடைந்த பின் பலவிதமான சீர்திருத்தங் களைப் பெறுகிறாள் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. இதைச் சில அரசியற் கட்சிகள் மறுக்கவும்கூடும். மற்ற எல்லா விஷயங்களைப் பற்றியும் அபிப்பிராய பேதங்கள் இருந்த போதிலும், இலங்கையின் எல்லா மூலை முடுக்குகளிலும் பல உப தபாற் கந்தோர்கள் புதிதாகத் திறக்கப்பட்டன என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். இவ்விதம்
114
 

பிழையும் சரியும்
புதிதாகத் திறக்கப்பட்ட உப தபாற் கந்தோர்களிற் பந்தனக் குறிச்சி உப தபாற் கந்தோர் என்பதும் ஒன்றாகும். இந்தப் பந்தனக் குறிச்சி உப தபாற் கந்தோர் அதிகாரி உத்தியோகம், மலடி வயிற்று மகன் போலவும், ஒரு புதையல் எடுத்த தனம் போலவும், எனக்குக் கிடைத்தது.
இந்தத் தபாற் கந்தோர் 'ஸி வகுப்புத் தபாற் கந்தோராக இருந்த போதிலும், எனது மாத வேதனம் இருபத்தைந்து ரூபாவாக இருந்த போதிலும், அந்த ஊரவர்கள் என்னைப் போஸ்மாஸ்ரர் என்று அழைக் கின்ற ஒன்றே எனக்குப் போதிய திருப்தியாக இருந்தது.
மதிப்பு வாய்ந்த உத்தியோகங்களில் வேலை குறைவு என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒன்றாகும். உப தபாற் கந்தோர் அதிகாரி என்ற இந்த உத்தியோகம் மதிப்பு வாய்ந்தது என்பதை ஆட்சேபிப்பவர்களுக்கு நான் நாள் முழுவதும் போதிய வேலையின்றி இருந்தேன் என்பது ஒன்றைக் கூறினாலே போதுமானது.
இந்த வேலையிருந்தும் வேலையில்லாச் சிக்கல், கெளரவம் என்று நான் கூறக்கூடிய ஒன்றாகிலும், எனக்கு அது தலைவலியையே கொடுத் தது. புதினப் பத்திரிகை ஒன்றினை வரவழைத்து வாசித்துப் பார்த்தேன். அது வந்த ஒரு மணித்தியாலத்தில் விளம்பரம், விலைவாசி உட்பட முழுவதும் முடிந்துவிடும். அதன்மேல், செய்வதற்கு ஒரு வேலையு மில்லை; பேசுவதற்கு ஒரு மனிதருமில்லை. இது என்னளவில் ஒரு தீராத சிக்கலாக இருந்தது. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு எனக்கு ஒரு புத்தம் புதிய அருமையான யோசனை தோன்றியது.
நான் வேலை பார்த்து வந்த இந்தப் பந்தனக் குறிச்சி என்ற கிராமத் திற்குத் தபால் விநியோகம் செய்வது கிடையாது. கிராமவாசிகள் வந்து தாங்களே தங்கள் தபால்களைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு போவார்கள். இதனாற் பலரின் தபால்கள் கந்தோரில் நாட்கணக்காக இருக்கும்.
வேலையற்ற நேரங்களில் அங்கேயிருக்கும் காகிதங்களைப் பிரித்து வாசித்துத் திரும்பவும் ஒட்டிவைப்பது ஒரு நல்ல பொழுதுபோக்காக எனக்குத் தோன்றியது. கடிதங்களை வாசித்துப் பார்ப்பதிலும் பார்க்க, அவற்றைப் பிரிப்பதிலும், திரும்ப ஒட்டுவதிலும், அதிக நேரத்தையும், கூடிய கவனத்தையும், எடுக்கவேண்டியிருந்தது. மற்றவர்களுக்குச் சந்தேகம் சிறிதும் புலப்படாதவாறு இத்தொழிலை நுட்பமாகச் செய்ய வேண்டும். இது ஒரு நுட்பமான கைத்தொழில். இதில் அநேக தொழில் நுட்பங்களிருக்கின்றன. இத்தொழில் நுட்பங்களை உலோகோபகாரத்தின் பொருட்டு நான் வெளியிட விரும்பவில்லை.
வேறு இடங்களிலிருந்து அந்த ஊருக்கு வரும் காகிதங்களையும், ஒழுங்காக நான் படித்து வந்தமையால் அநேக இன்பகரமான புதினங் கள் எனக்குத் தெரிய வந்தன. பத்திரிகைகளில் தொடர்கதை வாசிப்பது
115

Page 77
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
போலச் சில விஷயங்களைக் கதைபோலக் காகித மூலம் ஒழுங்காக அறிந்து வந்தேன்.
சில காகிதங்களை அதைப் பெறுபவரிலும் பார்க்க நான் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். இத்தொழில் எனக்குச் செலவற்ற சிறந்த பொழுதுபோக்காக இருந்தது.
நான் வாசித்த கடிதங்களுள் ஒரு சிறந்த காதற் கடிதத்தைச் சிறிதும் மாற்றாது அப்படியே கீழே தருகிறேன்.
米 本 米
ன்ெ ஆருயிர்க் காதல,
வாரந் தவறாமற் கிடைத்து வரும் தங்கள் காகிதங்களின் சொல் அழகும், பொருளழகும் என்னை எப்பொழுதும் குதுகலத்தில் ஆழ்த்து கின்றன. குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு தரமாயினும் தங்கள் கடிதங்களை நான் வாசிக்கத் தவறுவதில்லை. அவற்றை வாசிக்கும் போது நான் அடையும் இன்பந்தான் அதற்குக் காரணமாகும். காகிதங் களை நான் வாசிக்கும்பொழுது தங்களுக்கு மிகவும் சமீபத்தில் இருப்பது போன்றதோர் உணர்ச்சி எனக்கு ஏற்படுகிறது. காகிதங்களை வைத்துப் பூட்டிய பின் தாங்கள் எனக்கு எட்டாத ஒரு பொருள் போலத் தோற்றமளிக்கிறீர்கள். இத் தோற்றம் எனக்கு வரவரப் பெரிதாகவும் தோற்றுகிறது. இன்னும் சிறிது நீள ஆலோசித்தால் மகா பயங்கரமாகவும் தோற்றுகிறது.
என் அன்பே, என் அந்தரங்கத்திலுள்ள ஒரேயொரு சந்தேகத்தைத் தங்களிடம் கேட்கின்றேன். இதைச் சந்தேகம் என்று அழைப்பதே தவறு. காதலர் பாதையில் சந்தேகத்தின் சாயைக்கே இடமில்லை. ஒரு நினைப்பு, ஓர் எண்ணம், அல்லது ஒர் ஆராய்ச்சி என்று கூறலாம். இதைத் தங்களைக் கேட்கவும் முடியவில்லை. கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. கேட்கவேண்டுமானாற் போதிய சக்தியும் வேண்டும்.
தங்களைச் சேர்ந்ததேயன்றித் தங்களின் வேறாக இப்பொழுது எனக்கு ஒரு சக்தியேயில்லை. தங்களைத்தானே கேட்கிறேன் என்று நினைக்கும் பொழுது, எங்கோ ஒளிந்திருந்த சக்தி மெல்ல எட்டித் தலை நீட்டுவது போல் இருக்கின்றது. அந்த ஆதாரத்தைப் பற்றிக்கொண்டு இதை எழுதுகிறேன்.
தாங்கள் எங்கள் ஊருக்கு முதன்முதலில் வந்தீர்கள். நான் அப்பொழுது விடுமுறையில் நின்றேன். தங்களுடைய கண்களைத்தான் முதன்முதலிற் கண்டேன். அவை பஞ்சாடு படர்ந்த சோகக் கண்களாக எனக்கு முதலில் தோன்றின. ஆனால் அந்தக் கண்களினுள்ளே நுட்பமாக அவதானிப்பவர்களுக்கு ஒரு குறும்பும், ஆழமான அவதானமும் ஓடி மறைவதைக் கண்டேன்.
116

பிழையும் சரியும்
பெருந்தொகையான மக்களின் உயிர்களுக்கு அபயம் அளிப்பது போன்று நீண்டு படுத்திருக்கும் குளக்கட்டும், அக்குளக்கட்டின் மேல் பந்தர் போன்றமைந்த மந்த மரச்சோலையும், அவற்றோடு இரகசியம் பேசும் தென்றலும் பின்னணியாகத் தாங்கள் நின்றீர்கள். நான் கண்டேன். இது எனது நெஞ்சில் எழுதிவிட்ட சித்திரம். −
அன்று தொடக்கம் மீண்டும், மீண்டும் தாங்கள் என்னைப் பார்க்க எத்தனை விதமாகத் தெண்டித்திருக்கிறீர்கள். எத்தனை தந்திரம் செய்தி ருக்கிறீர்கள். எங்கள் வீட்டுப் பொல்லாத நாய் - வீமன் - அதற்கு எங்கள் ஊரே நடுங்குமே. அதைக்கூடத் தாங்கள் ஒரு திரணமாக மதிக்க வில்லையே.
அன்றொரு நாள் மத்தியானம், அதை நினைத்தால் எனக்கு இப்பொழுதும் சரீரம் நடுங்கும். அப்பா சாப்பாடு முடிந்து அயர்ந்து தூங்கும் நேரம்; நீங்கள் கிணற்றோரத்தால் வேலியைக் கடந்து மெல்ல மெல்ல வரும்பொழுது, உங்களை வீமன் கண்டு துரத்தியது. நீங்கள் ஒடிப்போய் மாமரத்தில் ஏறினிர்கள். அந்தப் பொல்லாத நாய் அந்த அளவில் விடாமல் மாமரத்தைச் சுற்றிச் சுற்றிக் குலைத்து வந்தது. அப்பாவின் தூக்கம் கலைந்து, எழுந்து எண்ணெய் பூசி மினுமினுப்பாக வைத்திருந்த துப்பாக்கியையும் தூக்கிக்கொண்டு மாமரத்தை நோக்கிச் செல்ல நான் பயந்த பயத்தை நினைக்க எனக்கு இப்பொழுதும் பயமாய் இருக்கிறது. தங்களைச் சுட்டுவீழ்த்திப் போடுவாரோ என்று நடுங்கினேன்.
அப்பா அண்ணாந்து பார்த்துத் தாங்கள் எனக் கண்டதும், நன்றாகப் பழுத்த பழங்கள் என்னிடம் வீட்டில் இருக்கின்றன. என்னைக் கேட்டால் கொடுத்திருப்பானே’ என்று தங்களைக் கூட்டிக்கொண்டுபோய் மாம்பழம் கொடுத்தனுப்பினாரே; அப்பொழுதெல்லாம் கடவுள் எங்களுடைய பக்கம் என்று நாங்கள் பேசிக்கொள்வோம் அல்லவா.
எங்கள் வீமன் நாயை நினைக்கும்போது எனக்கு இன்னொரு சிரிப்பான சம்பவம் எப்பொழுதும் நினைவு வரும். எங்களைப் பற்றி அப்பாவிடம் கோள்சொல்லும் நாகமணிக் கிழவனை வீமன் ஒருநாள் மாட்டுக் கொட்டிலுக்குள் பாய்ச்சுக் காட்டினதை நினைத்தால் எனக்கு இப்பொழுதும் சிரிப்பு வருகிறது. கிழவனுக்கு அது காணாது.
பாடசாலை விடுமுறைக் காலம், கடமை செய்யும் காலம் போலவும்: கடமை செய்யுங் காலம் விடுமுறைக் காலம் போலவும் நீங்கள் பாவித்தீர்கள். பாடசாலை நாட்களில் லீவு எடுத்துக் கொண்டு வந்து, எங்கள் கல்லூரிப் பக்கம் வருவீர்கள். விடுமுறை நாட்களில் நான் வீட்டில் நிற்கும்பொழுது, படிப்பிப்பதிற் பெரும் கவனம் உள்ளவர்போல் விடுமுறை நாட்களிலும் வகுப்பு வைத்து நடத்துவீர்கள். இச்செயல்கள் எல்லாவற்றையும் நான் எப்பொழுதும் நினைத்து அகமகிழ்வேன்.
ஆம்; கடைசியாக நான் தங்களை யாழ்ப்பாணம் புகையிரத நிலை யத்திற் சந்தித்தபொழுது, எவ்வளவு அன்பாக என்னை நடத்தினிர்கள்.
17

Page 78
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
ஏன்? இப்பொழுதும் என்ன? எவ்வளவு அன்பாகக் காகிதம் எழுது கிறீர்கள்.
தாங்கள் தங்கள் அன்புச் சின்னமாக எனக்களித்த கணையாழி, அது எனக்கு எவ்வளவு ஆறுதலளிக்கின்றது. எங்கள் எல்லை காணமுடியாத இந்த அன்புச் சமவெளியில் இந்தக் கணையாழி அணுவாகக் கிடந்து மின்னுகிறதே.
அன்று நான் இளைக்க இளைக்க யாழ்ப்பாணம் புகையிரத நிலை யத்திற்கு ஓடிவந்தபொழுது நீங்கள் ஆபத்பாந்தவன் மாதிரி நின்றீர்களே. இது அன்புடையார் இருவருக்கிடையில் ஏற்படும் தெய்வத் தொடர் பல்லவா?
அப்பாவுக்கு வருத்தங் கடுமை’ என்று தந்தி வந்ததும், நான் கல்லூரியிலிருந்து ஒடோடியும் புகையிரத நிலையத்திற்கு வந்தேன். நீ இந்த வண்டியைப் பிடிக்க மாட்டாய்' என்று கல்லூரியில் உள்ளவர்கள் தடுத்தார்கள். முயன்று பார்ப்போம் என்று ஓடிவந்தேன். நிலையத்து மேடையிற் புகைவண்டி, யானை காதை ஆட்டிக்கொண்டு நிற்பது போலப் புகையை ஊதிக்கொண்டு நின்றது. புகையிரதச் சீட்டுப் பெற்ற பின் வண்டியிலேறுவதானால் வண்டி சென்றுவிடும். அந்தச் சனக் கூட்டத்தைக் கண்டவுடன் தாங்களும் அதில் ஒருவராக நிற்க மாட்டீர் களோ' என்று நினைத்தேன்.
‘என்ன அதிசயம்! தாங்கள் அருகே நின்றீர்கள். நான் காண்பது உண்மைதானா என்று உணர்வதற்குக் கண்களை அகல விழித்துப் பார்த்தேன். தாங்கள் புன்சிரிப்புடன் என்னை நோக்கி வந்தீர்கள். புகையிரதம் குழல் ஊதிவிட்டது. "ஐயோ! டிக்கெற் எடுக்கவில்லையே. அப்பாவுக்கு வருத்தம் கடுமையாம்' என்றேன். உடனே நீங்கள் ‘என்னிடம் டிக்கெற் இருக்கிறதென்று சொல்லி, டிக்கெற்றும் தந்து, ஸ்திரிகள் வண்டியில் ஏற்றியும் அனுப்பினிர்கள்.
நீங்கள் எங்கள் ஊருக்குப் புகையிரதச் சீட்டு எடுத்து வைத்திருந்த மர்மம் எனக்குச் சிறிதேனும் விளங்கவில்லை. என்னிடம் டிக்கெற்றைக் கொடுத்த பின்னர், நீங்களும் வண்டியில் ஏறினிர்களே, பின்னர் நீங்கள் எங்கள் ஊரில் வந்து இறங்கவில்லை. டிக்கெற் இல்லாமல் எப்படிப் பிரயாணஞ் செய்தீர்கள்? இவைகளைப் பற்றித் தாங்கள் எழுதும் காகிதங்களில் ஒன்றும் குறிக்கவில்லையே. இவற்றைப் பற்றி எத்தனை முறை விசாரித்தேன். நீங்கள் இவ்விஷயத்தில் மெளனம் சாதிக்கிறீர்கள்.
நீங்கள் சிலசமயம் அன்று பெரும் துன்பத்திற்காளானிர்களோ? சீட்டின்றிப் பிரயாணஞ் செய்து அவமானப்பட்டீர்களோ? நான் துன்பப் படுவேன் என்று மறைக்கிறீர்களோ?
என் அன்பே, தாங்கள் எனக்கு ஒன்றும் தெரிவியாமல் மறைப்பது தானே, எனக்குப் பெருந் துன்பத்தைக் கொடுக்கின்றது. இதைவிடப் பெரிய துன்பமா இருக்கிறது?
118

பிழையும் சரியும்
என்னுயிரே, நீங்கள் இவைகளெல்லாவற்றிற்கும் சமாதானம் சொன்னாலும், இன்னொரு எண்ணம் என் இருதயத்திற் கணந்தோறும் முள் போல தைக்கின்றது.
என்னைத் தாங்கள் காண முன்பெல்லாம் புழுவாய்த் துடிப்பீர்கள். ஆனால் அப்பொழுது சந்தர்ப்பம் அதிகமாக கிடையாது. இப்பொழுது எனக்குத் தகப்பனார் இல்லை. கல்லூரிப் படிப்பும் இல்லை. எந்த நேரமும் என்னைக் காணலாமே. இங்ங்ணமிருந்தும் தாங்கள் இதுவரை என்னைக் காண முயற்சிக்கவில்லை. நான் தங்களிடம் புறப்பட்டு வர முடியுமா? அதைத் தாங்கள் விரும்புவீர்களா?
அன்று தாங்கள் புகையிரதத்தில் டிக்கெற் இன்றிப் பிரயாணஞ் செய்து துன்பப்பட நான் அதைப்பற்றி விசாரியாமற் சுகமாகப் பிரயாணஞ் செய்தேனென்று, என்மீது கோபமாக இருக்கிறீர்களா?
என் அன்பே, நான் என்ன நிகழும் என்றே யோசிக்கவில்லை. நான் வாய் திறக்க முன்னர் புகையிரதம் புறப்பட்டுவிட்டது. தாங்களும் மறைந்து விட்டீர்கள். ஏற்கனவே தகப்பனாரின் நிலவரத்தை அறிந்து கலங்கி யிருந்தேன். தங்கள் திடீர்ச் சந்திப்பு எனது மூளையை மேலும் ஸ்தம்பிக் கச் செய்தது. இவைகளைச் சமாளித்துக் கொண்டு நான் சிந்திக்கத் தொடங்கமுன் புகையிரதம் புறப்பட்டுவிட்டது. நான் பெண் பேதை பின் என்ன செய்யமுடியும்.
தங்களின் அன்பான காகிதங்கள் தான் என்னை இப்பொழுதும் உயிருடன் வைத்திருக்கின்றன. அவைதான் என் நம்பிக்கையை இன்னும் தளரவிடவில்லை. நம்பிக்கையினம் என்ற சொல்லையே என்னால் நினைக்க முடியவில்லை. இவற்றின் மத்தியில் நீங்கள் என்னைப் பார்க்க இதுவரை வரவில்லையே என்ற ஆராய்ச்சி புகுந்து என் மூளையைக் குழப்புகின்றது. மூளை என்று ஒன்று இல்லாமல் மேற்படி ஆராய்ச்சியே மூளையாகப் பரிணமித்து விடுமோ என்று அஞ்சுகின்றேன்.
வாடி வதங்கிக் கொண்டிருக்கும் இளம் பயிர் மழை வெள்ளத்தைக் கண்டதுபோல விரைவில் தாங்கள் என் முன்னிலையில் தோன்றுவீர்கள் என்று என் அந்தராத்மா கூறிக்கொண்டிருக்கிறது. அத்தருணம் நான் தங்களோடு கோபித்துக்கொண்டு மறுபக்கம் திரும்பி நிற்பேன். இப்படி எத்தனையோ மனக்கோட்டைகள், பகற்கனவுகள் கண்டு கொண்டிருக் கிறேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் சொல்லுகிறேன். இனிமேல் தங்களைச் சந்திப்பதாகிய அப்பெரும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமே ஆயின் பின் ஒருபோதும் தங்களைவிட்டுப் பிரியவே மாட்டேன். இது எனது உறுதியான தீர்மானமாகும்.
இங்ங்னம்,
தங்கள் .
米米米
119

Page 79
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
இக்காகிதம் பந்தனக் குறிச்சியிலிருந்து அனுப்பப்பெற்ற காகிதம் ஆகும். இதற்கு வந்த மறுமொழியும், இத்தொடரில் நடந்த கடிதப் போக்குவரத்துக்களும் மிகப் பல. அக்காகிதங்கள் எல்லாவற்றிலும் பார்க்க இது, விஷயங்கள் பல பொதிந்திருந்தமையால் அப்படியே பிரதி செய்திருக்கிறேன். மற்றக் காகிதங்களில் நான் அறிந்தனவற்றையும், நேரில் அறிந்தனவற்றையும் வைத்துக்கொண்டு ஏனைய நிகழ்ச்சி களையும் முடிபையும் தெரிவிக்கிறேன். அதன் பின்னர், நான் தபாற் கந்தோரிற் காகிதங்களை இவ்விதம் திறந்து வாசிப்பது சரியா பிழையா என்று கூறுங்கள்.
பந்தனக் குறிச்சிக்குத் தபாற் கந்தோர் உத்தியோகம் எடுப்பதற்காக நான் எங்கள் பிரதேச பாராளுமன்ற அங்கத்தவரை வளைப்பதற்காகக் கொழும்புக்குப் புகைவண்டியிற் சென்ற பொழுது, ஒரு இளைஞன் அனுராதபுரத்தில், தான் தனது புகையிரதச் சீட்டைத் தவறவிட்டு விட்ட தாகவும், கணையாழி ஒன்றைக் காட்டி அதை வைத்துக்கொண்டு பணம் தரும்படியும் கேட்டான். சிறிது தூரத்திற்கப்பால் டிக்கெற் பரிசோதகர், டிக்கெற் பரிசோதித்துக்கொண்டு வருவதைக் கண்டு நானும் அவ்விளைஞ னுக்கு உதவி செய்தேன். ஆனால், பெறுமதி வாய்ந்த அந்த மோதிரத்தை அவன் திருப்பிப் பெறுவதற்கு இலகுவாக நான் எனது விலாசத்தை அவனுக்குத் தெரிவிக்க முன்னர், நான் தேடிச் சென்ற பாராளுமன்ற அங்கத்தவர் - அவ்விடத்திற் சந்தித்த கொழும்பிலிருந்து வந்த - புகைவண்டியில் இருப்பதைக் கண்டு, எனது பிரயாணத்தை அவ்வளவில் முரித்து நான் திரும்ப வேண்டியதாயிற்று. பின்னர் அந்த இளைஞனை நான் சந்திக்கவேயில்லை.
அந்த இளைஞனுக்குத்தான் நான் மேலே எழுதிய காகிதம் அனுப்பப்பட்டதென்பதையும், அவனுக்குக் காதலியாற் கொடுக்கப்பட்ட மோதிரம்தான், என்னிடம் புகைவண்டியில் கொடுக்கப்பட்ட மோதிரம் என்பதையும், காதலின் ஞாபகச் சின்னமாகக் கொடுக்கப்பட்ட கணை யாழியை இழந்து அவன் தனது காதலியைச் சந்திக்க விரும்பாமை யாற்றான், அவன் அவளைப் பார்க்க வராமற் கடத்தி வந்தான் என்பதை யும் நான் காகிதங்களை பிரித்து வாசித்தமையால் உணர்ந்து கொண்ட வையாகும். ஆனால், அவனோ, தான் என்ன காரணத்திற்காக வராமல் நிற்கிறான் என்பதை ஒரு காகிதத்திலும் தெரிவிக்கவில்லை. அவளோ அவன் வரவில்லையே என்று ஒவ்வொரு காகிதத்திலும் துடியாய்த் துடித்து எழுதிக் கொண்டிருந்தாள். நானோ இரு பகுதியாரின் காகிதங் களையும் வாசித்துத் துடியாய்த் துடித்தேன். முழு விஷயங்களும் என் கையிலிருந்தன. காதலர் இருவரிலும் பார்க்க எனது மனத் துடிப்புத்தான் கூட என்று கூறலாம். இந்நிலைபரத்தில் நான் இக்காதலர்களுக்கு உதவி செய்யின் நான், காகிதங்களைக் களவாகப் பிரித்து வாசிக்கும் குற்றத்தை ஒப்புக்கொண்டாக வேண்டும். அவர்கள் அதை மன்னிப்பார்களோ என்று
120

பிழையும் சரியும்
எனக்குத் தெரியவில்லை. ஆகவே, என்ன செய்வதென்றறியாது நான் துடியாய்த் துடித்தேன். நடப்பது போல் நடக்கட்டும் என்று என்னால் இருக்க முடியவில்லை. கணையாழி என்னிடம் இல்லாவிட்டாலும் இருந்துவிடலாம். அதையும் வைத்துக் கொண்டு, இரு இளம் உள்ளங் களின் தொடர்பை முரிக்க என் மனம் ஒப்பவில்லை. நான் காகிதங் களைப் பிரித்து வாசிப்பதே பெரிய பிழை. இக் காதலர்களின் தொல்லையை நீக்க மருந்து என் கையிலிருந்தும் அதைப் பிரயோகி யாமலிருப்பது அதிலும் பெரும் பிழை. ஆகவே முதலாவது பிழையைச் சரியாக்குவதானால் எனது பிழையை ஒத்துக் கொண்டு காதலர்களைச் சேர்த்துவைப்பதுதான்.
நான் கணையாழி என்னிடம் இருக்கும் விஷயத்தை அவ் இளைஞ னுக்கு எழுதி, அவனை வரவழைத்து எனது குற்றங்களையும் ஒப்புக் கொண்டு, கணையாழியையும் அவனிடம் கொடுத்தேன். அத் தம்பதிகள் எனது குற்றத்தை மன்னிக்க முடியாது என்று கூறி, ஒரு வானொலிப் பெட்டியை அங்கும் இங்கும் திருப்பி அதிலிருந்து வரும் ஓசையைக் கேட்டு, அதனால் ஏற்படும் தலைவலியை அனுபவிக்கும்படி செய்து விட்டுச் சென்றார்கள்.
மணமகன் : முன்னர் பந்தனக் குறிச்சியில் ஆசிரியராக இருந்தவரும் இப்போது கொழும்பு தம்பட்டக்கோட்டையில் ஆசிரியராக இருப்பவருமாகிய திரு. திருஞானசம்பந்தர்.
மணமகள் : பந்தனக் குறிச்சி காலஞ்சென்ற பிரபல நிலச் சொந்தக் காரரான திரு. மாணிக்கம்பிள்ளையின் மகள் செல்வி மங்கையர்க்கரசி.
வாழ்க மணமக்கள்!
"ஈழகேசரி வெள்ளிவிழா மலர்”
121

Page 80
மூதறிஞர் சொக்கனின் இயற்பெயர் க. சொக்கலிங்கம். 1930இல் அச்சுவேலியில் பிறந்த சொக்கன் முதுகலைமாணி ஈழகேசரிப் பண்ணை யில் உருவானவர். கடல் இவரது சிறுகதைத் தொகுதி, சிலம்பு பிறந்தது, சிங்ககிரிக் காவலன்', 'தெய்வப்பாவை’ என்பன நாடக நூல்கள். "செல்லும் வழி இருட்டு, சீதா, ஞானக் கவிஞன், சலதி' என்பன இவரது நாவல்கள்.
SL6)
சொக்கன்
1.
5டல் கரையை முத்தமிடுகின்ற இடத்திலே, கீரிமலைச் சுடலை யிலே அந்தச் சடலம் எரிந்து கொண்டிருக்கிறது.
எரிகிறது. தீக்கொழுந்துகள் வடவைக் கனலாகி, காற்றின் பிடியிலே இருந்து திணறிக்கொண்டு வெளிப்பட்டுக் கடலையே குடித்துவிட முயல் வது போல அந்தத் திசையிலே திரும்பிச் சுவாலை கக்குகின்றன.
நீரின் எல்லையிலே நெருப்பு. நெருப்பின் எல்லையிலே நீர். மனிதத்துவம் கடலைப் போலப் பொங்கி ஆர்ப்பரித்துக் கரையிலே மோதி மோதி அடங்கி அழிந்து போய்ப் பிணக்கோலத்திலே சிதை ஏறி எரிந்து போகிறது என்பதற்கு நிதர்சன விளக்கம்!
தொடுவானத்திலே நெருப்புக்கோளம் ஒன்று தண்ணிரினுள்ளே அமுங்கிக் கொண்டிருக்கிறது. சிதறிப் போன சிறுசிறு சுடர்கள் நீல வானத்தை எரித்து, ஜசவாலை கிளப்பிக் கடலிலே பிரதிவிம்பித்துப் பொன் வண்ணம் காட்டுகின்றன.
சனசந்தடி அடங்கிப்போன ஏகாந்தப் பெருவெளியிலே, சுடலைக்கு
நூறு யார் தூரத்திலே தென்னந்தோப்புக்குள் நின்றுகொண்டு சிதையை வைத்தகண் வாங்காது பார்க்கிறேன்.
122
 

கடல்
அவன் எரிகிறான். அவனா? அதுவா? அவனாக இருந்த அதுவா? அல்லது அவனும், அவன் என்று சுட்டுவதற்குக் காரணமான அதுவும் இரண்டுமே நெருப்போடு நெருப்பாய், சாம்பரோடு சாம்பராய்.
சிரிக்கிறேன். முன்பொருக்கால் எரிகின்ற சிதையின் முன்னால் நின்றுகொண்டு அவன் செய்த தத்துவ விசாரத்தைத்தான் நானும் செய்வதாகப் பாவனை பண்ணுகிறேனோ?
அவன் பேசுகிறான். "ஆழம் நிறைந்த இந்தக் கடலிலே ஒரு குமிழியாக மிதந்து எட்ட
முடியாத கனவு லோகங்களை எல்லாம் நான் கண்டுவரப் போகிறேன். அலைகளிலே ஊஞ்சல் ஆடுவது போல அங்கும் இங்கும் ஆடிக் கொண்டு முடிவேயில்லாமல் மேலே மேலே சென்று கொண்டிருக்கப் போகிறேன். ஆஹா அது எவ்வளவு நல்ல காட்சியாய் இருக்கும்!”
ஆ. அதோ. அந்த நெருப்பிலேயிருந்து ஓர் அம்பு போலக் கிளம்பி, கடலுக்குள்ளே பாய்ந்து நீரைக் கிழித்துக்கொண்டு அவன் போகிறான். நீந்துகிறான். சுழி ஒடுகிறான்.
என்ன? மனப் பிராந்தியா? அல்லது உண்மையாகவே அவன்.
கிள்ளிப் பார்த்துக்கொண்டு நிமிர்கிறேன். கால்கள் தள்ளாடுகின்றன. பீதி கண்களில் சுழல்கிறது. உடம்பே குடங்கிப் போய் இல்லை என்று ஆகிவிடுவது போல.
நிற்கிறேன். காற்றிலே சரிந்து தள்ளாடுவது போலச் சரிந்து வெடவெடவென்று நடுங்கியபடி தடுமாறிக்கொண்டு நிற்கிறேன்.
மனக்கடலிலே நினைவுகள் குமிழியிடுகின்றன.
2
நெஞ்சை நிமிர்த்தியபடி போர்வீரன் ஒருவனுடைய கம்பீரத்துடன் அவன் முன்னால் சென்றுகொண்டிருக்கிறான். சதை கொழுவிய அவனது கால்கள் மணலினுள்ளே ‘சதக் சதக்கென்று ஆழ்ந்து பிறகு வெளியேறுவது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. சிரித்துக்கொண்டே பின்தொடர்கிறேன்.
அவனுடைய பிடரி மயிர் சிங்கத்தினது போலச் சிலிர்த்துக்கொண்டு நிற்கிறது. கருங்காலியிலே செதுக்கிய உடலும், உடுக்குப் போன்று சிறுத்த இடையும், இராஜநாகத்தின் படத்தைப் போல அகன்ற மார்பும், ஆடுகின்ற குதிரைச் சதையும்.
“கணேசா! நீ அபூர்வப் பிறவியடா’ என்று அந்தச் சிறிய வயதிலே என்னைச் சொல்ல வைக்கவில்லை என்பது உண்மையே. ஆனால், அவனிலே பயம், மதிப்பு, பாசம் என்ற அத்தனையும் கலந்த ஒருவகை அன்பைச் செலுத்தினேன் என்பதை மறுக்கமுடியாது.
123

Page 81
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. பத்துக்கும், பதினொன் றிற்கும் இடையிலே இருக்கலாம்.
'சதக். சதக்' அவன் மணலைக் கிழித்துக்கொண்டு போகிறான். நான் பின் தொடர்கிறேன்.
திடீரென்று நின்றவன் கையிலே வைத்திருந்த புத்தகத்தைச் சுழற்றிக் கடலிலே வீசுகிறான். அது காற்றிலே இதழ் விரித்து ஒரு வெள்ளைத் தாமரைப் பூப்போல மிதக்கிறது.
கலகலவென்று சிரிக்கிறான். நான் நடுங்குகிறேன். “டேய் கணேசா! பள்ளிப் புத்தகமடா. எறிந்து விட்டாயே! உன் ஐயா அடிப்பாரேயடா!” பயந்து பயந்துதான் இப்படிச் சொல்கிறேன்.
"அப்படியா? அடிக்கட்டுமே! எனக்குப் பயமா? இன்று பள்ளிக்கூடம் போகாமல் கடற்கரைக்கு வந்தேன். அடித்தாரோ? அவ்வளவுதான்! ஒவ்வொரு நாளும் ஒளித்தொளித்து இங்கே வருவேன். மிஞ்சினால் கடலுக்கே என்னைக் கொடுத்து விடுவேன். அதுதான் என் அம்மா”
கடைசி வார்த்தைகளைச் சொல்லும்போது உலகத்தின் பாசம், கனிவெல்லாம் அவனது கண்களிலே தேங்கி நிற்க அவன் கடலையே வெறித்து நோக்குகிறான். அந்த விழிகளிலே வெட்டி வெட்டி ஒளிவீசும் மின்னற்கீற்று என் கண்களைக் கூச வைக்கிறது. குத்தி இழுக்கின்ற அந்தக் குத்தீட்டி நாசியையும், தடித்துப் பருத்த உதடுகளையும் உற்று நோக்குகையில், எனக்கு வாய் அடைத்துப் போகிறது.
அவன் வழிநடத்தவும், நான் மறுபேச்சின்றி அவனைப் பின்பற்றவும் என்றே கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைக்காதிருக்க என்னால் கூடவில்லை.
இந்த உணர்ச்சி உண்டானதும், எனது புத்தககங்களை மணலிலே புதைத்து அதற்கு மேல் கல் ஒன்றை அடையாளம் வைத்துவிட்டு அவனுக்குப் பின்னால் போகிறேன். போய்க்கொண்டே இருக்கிறேன்.
‘சதக சதக் கால்கள் மணலிலே தாழ்ந்து மிதந்து செல்கின்றன. சிறிது நேரத்தில் கரை ஒடுங்கிப் போகத் தண்ணீரில் இறங்கி நடக்கி றோம். தண்ணிர் பட்டுப் பட்டுத் தேய்ந்து போய் வழுக்கை பற்றிய கற்க ளிலே இலாவகமாக அவன் நடந்து சென்றபொழுது, அவனைத் தொடர்ந்து செல்வது சற்றுக் கடினமாகவே இருக்கிறது.
“கடந்த இரவு ஒரு கனவு கண்டேன். கதாகாலகூேடியத்தில், விஷ்ணு வின் பத்து அவதாரங்களைப் பற்றி பாகவதர் சொன்னாரே? அந்த அவதாரங்களைப் போலவே நானும் பல பிறவிகளை எடுப்பது போல இருந்தது. எனக்கு முன்னால் எல்லையில்லாத கடல் விரிந்து கிடப்பது போலவும், நான் திடீர் என்று மீனாகவும், நண்டாகவும், சுறாவாகவும்,
124

ald)
திமிங்கிலமாகவும் மாறி மாறி அதிலே மிதந்து செல்வது போலவும், தோற்றங்கள் உண்டாயின."
"இதிலே ஒரு விசேடத்தைப் பார்த்தாயா? வேறு வேறான எனது பிறவிகளெல்லாம் கடலிலேயே உண்டாகின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது? நான் இந்த மண்ணிற்கு உரியவன் அல்லவென்றும், கடல் தான் எனக்கு உரியதென்றும் தோற்றவில்லையா?”
சில மணித்தியாலங்களுக்கு முன்னால் வரும் வழியிலே அவன் சொன்னவை எல்லாம் என் மனதிலே எதிரொலிக்கின்றன. இதெல்லாம் என்ன? இப்படியெல்லாம் இவன் ஏன் பேசுகின்றான்?
என்னுடைய சின்னஞ்சிறிய மூளைக்கு ஒன்றுமே விளங்கவில்லை; விளங்கவேயில்லை. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டதுபோல இருக் கிறது. ஆனால்.
வழிநடத்துவது அவன் பொறுப்பு பின் செல்வது என் கடமை.
- நெளிந்தும் வளைந்தும் சுழியிட்டுப் புதுப்புதுக் கோலங்களைக் காட்டி, உடனுக்குடன் அழித்து. தண்ணிர் விலகி வழி விடுகிறது.
போய்க்கொண்டே இருக்கிறோம்.
3 சிடலை வந்துவிட்டது. நேரம் மத்தியானம் பன்னிரண்டு மணி எனக்குத் திக்கென்றது. நெஞ்சின் அடிப்பே நின்றுவிட்டதுபோல இருக் கிறது.
மத்தியான வேளையிலே சுடலையில் பேய் உலாவுமாமே? பயத்திலே காலும் ஓடவில்லை! கையும் ஒடுவில்லை!
"டேய்” கணேசன் வந்து தோளிலே தட்டி ஆதரவோடு கூட்டிக் கொண்டு போய்ச் சுடலை மத்தியிலே இருத்துகிறான்.
அப்பொழுதுதான் சுடலையிலே பிணம் ஒன்று எரிந்து முடிந்து நீறு பூத்துக் கிடக்கிறது. அவன் ஓடிச்சென்று, தன் மாமாவின் கடையிலே களவெடுத்து வந்த சுருட்டொன்றை அதிலே பற்றிக்கொண்டு வருகிறான். சுருட்டுக்கும் வாய்க்குமாகப் புகை முக்குளிக்கிறது.
"அடப் பாவிப் பயலே! என்னடா செய்கிறாய்? நீ பேயா பிசாசா? என்று கத்தவேண்டும் என்று நினைக்கிறேன். வாயையுந் திறந்து விட்டேன். சப்தம் வெளிப்பட்டால்தானே! நாக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது.
சுடலைப் பக்கத்திலே சிதறிக் கிடந்த எலும்புகளைச் சேகரித்தும், கீழே கிடந்த இளநீர்க் குரும்பைகளை எடுத்துப் பக்கத்திலே உள்ள
125

Page 82
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
கிணற்றிலே எறிந்தும் அவன் தன்னை மறந்த லயத்திலே ஆடிக் களிக்கையில்.
நான் விக்கித்துப் போய் பிணத்தோடு பிணமாய்க் கிறங்கிய நிலையில் சுடலை மடத்திலே அமர்ந்திருக்கிறேன்.
“டேய் கோழை! ஏனடா பயப்படுகிறாய்? ஒரு நாளைக்கு நாங்களும் இப்படித்தானே? வாடா"
சுருட்டை வீசிவிட்டு காறி உமிழ்ந்த வண்ணம் அவன் என்னை அழைக்கிறான். நான் எழுந்து அவனைத் தொடர்கிறேன்.
4. தண்ணீரிலும் கரையிலுமாக மாறி மாறி நடந்து செல்கிறோம்.
பாறைகள் தெரிகின்றன. முடவனைப் போலும், நொண்டியைப் போலும் முண்டு, முடிச்சுகளோடு அவை சர்வ அவலட்சணங்களாய் காட்சி தருகின்றன. கன்னங்கரிய பேய்க் கூட்டங்கள் தங்கள் விழிக் குகைகளின் மூலம் என்னை முறைத்துப் பார்ப்பதுபோல இருக்கிறது.
ஆங்காங்கு மணலிலே பாம்புகளும், நண்டுகளும் ஊர்ந்து சென்ற சுவடுகள்.
‘இனி என்றைக்குமே இவனோடு வரக்கூடாது. பள்ளிக்கூடத்துக்குக் கள்ளம் போடக்கூடாது. கடவுளே! இந்த ஒருமுறை மாத்திரம் என்னைக் காப்பாற்றிவிடு' என்று பயத்தினால் பேரிகைபோல அதிர்ந்து கொண்டி ருக்கும் நெஞ்சு, கடவுளை நினைத்து ஓலமிட்டுக் கதறுகையில்.
கணேசன், கயிற்றை அறுத்துவிட்ட கன்றுக்குட்டி போலப் பாறையி
லும், கற்களிலும் குதித்துக் குதித்து ஒடுகிறான்; மேலே மேலே ஏறிக் குன்றின் உச்சிக்கே போய்விடுகிறான்.
இனிப் பயப்படக்கூட இயக்கம் இல்லாதவனாய் அவனை நோக்கு கிறேன்.
“டேய் மூர்த்தி! பாரடா. இந்தப் பாறையிலிருந்து குதித்துத் தண்ணிரிலே நீந்திக் கொண்டே போய், அதோ அந்த ஆகாயத்தை எட்டிப் பிடிக்கவேண்டும் என்று ஆசையாய் இருக்கிறதடா. பின்னேரங் களில் அங்கே துரியன் வந்தால் அதைத் தொட்டுப் பார்த்து ஆனந்தப் படவேண்டும்போல இருக்கிறதடா, ஆகாயம் நான் கட்டியிருக்கும் வேட்டி போல இருந்தால் அதைக் கிழித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து வந்து உனக்குச் சொல்லுவேன்."
ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, மறு கையைத் தொடு வானத்திற்கு எதிராக நீட்டி அவன் அந்தப் பாறையின் உச்சியிலே
126

கடல்
நிற்கையில், பயத்தால் அடைபட்டுப்போன என் காதுகள் கூடத் திறந்து கொள்கின்றன. அந்த வயதிலே, அந்தச் சூழ்நிலையிலே, அவன் சொன்னதை நம்பத்தான் வேண்டும் போல எனக்குத் தோன்றுகிறது. திறந்த வாய் மூடாது அவசமாகி அவனையே பார்த்து நிற்கிறேன்.
sg, ... . இது என்ன? கால்களினுடாக ஏதோ நொளு நொளு வென்று. "ஐயோ! பாம்.”
கணேசன் பாறை உச்சியிலேயிருந்து படபடவென்று குதித்து ஓடி வருகிறான். கல்லைத் தூக்கி ஓடுகிற பாம்பின் தலையில் ஒரே போடு.! பாம்பு வாயைப் பிளந்து விடுகிறது.
அதைத் தூக்கிச் சுழற்றியபடி அவன் என்னைத் துரத்திக்கொண்டு ஓடிவந்தபொழுது. அதற்கு உயிர் இல்லை என்று தெரிந்துகொண்டும், உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு ஓடுகிறேன். அப்படி ஒடுகிறேன்.
நான் களைத்துச் சோர்ந்து போய்க் கீழே சரிகையில், அவனுக்கு அநுதாபம் ஏற்பட்டுவிடுகிறது போலும் பாம்பை எறிந்துவிட்டு எனக்கரு கிலே வந்து என்னை அணைத்துக் கொள்கிறான். "பயப்படாதே" என்று ஆறுதல் சொல்கிறான்.
திரும்பி நடக்கிறோம்.
வழியிலே கிடந்த பலவர்ண இறால் ஒடுகள், கிளிஞல்கள், இராவணன் மீசை என்று பலதும் பத்தும் அவனுடைய மடித்துக் கட்டிய வேட்டியைச் சரண் அடைகின்றன.
‘பைத்தியக்காரா! ஏனடா இந்தக் குப்பைகளையெல்லாம் சேகரிக் கிறாய்?’ என்று அவனைக் கேட்கலாமா என்று ஒருகணம் யோசித்துப் பிறகு மெளனமாகிறேன். கேட்டுத்தான் என்ன பயன்? தன் முட்டாள் தனத்தை விட்டுவிடப் போகிறானா? இவை கடல் அன்னை எனக்குத் தந்த அன்புப் பரிசில்களடா’ என்று சொல்லிப் பெருமைப்பட்டு இன்னும் இன்னும் பொறுக்கிச் சேகரிப்பான்.
என்ன பந்தமோ? என்ன பாசமோ?
அவனைப் பின் தொடர்கிறேன்.
5 கிடலிலே கணேசன் இறங்குகிறான் என்றால், அவனுக்குக் குஷி பிறந்துவிட்டது என்பதுதான் அதற்கு அர்த்தம்.
வேட்டியை அவிழ்த்து வைத்துவிட்டு முழு நிர்வாணமாகக் கடலிலே குதித்துக் குதித்துச் செல்கிறான்.
சுறாமீனைப்போல, யந்திரப் படகைப் போல நீரைக் கிழித்துக்
கொண்டு.
127

Page 83
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
குரும்பையாகத் தெரிந்த தலை பனங்காய் அளவாகி விளாங்காய்ப் பரிமாணத்திற்குச் சிறுத்து எலுமிச்சங்காயளவு குறுகி.
கண்ணிற்கு மறைந்து விடுகிறது.
வருவானா? மாட்டானா?
தனிமையின் பயங்கரத்திலே அமிழ்ந்து போய்க் குழந்தை போல விக்கி விக்கிக் குமுறிக் குமுறி அழுகிறேன்.
கடல் போல நெஞ்சு குமுறுகிறது. ஆர்ப்பரிக்கிறது. அழுகிறது. விம்முகிறது.
என்ன செய்வேன்?
“என்னடா பயம்? மடையா! கடல் எனக்குத் தாயடா. அவள் ஒரு போதும் என்னை அழிக்க மாட்டாள். அழாதே வா, போகலாம்"
அவசரம், அவசரமாக வேட்டியைக் கட்டியபடி அவன் இவ்வாறு சொல்கிறான். துடைக்கப்படாத அவனுடைய பிடரியிலிருந்து முத்து முத்தாக நீர்த்துளி சிந்துகிறது.
நடக்கிறோம்.
கணேசன் தன் பேச்சைத் தொடர்கிறான். "வாத்தியார் நீரரமகளிரின் கதையைச் சொன்னதிலிருந்து, நானும் அந்தச் சாதியார் போல ஆகிக் கடலினுள்ளேயே வாழவேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக என் உயிரையும் இழக்கத் தயங்க மாட்டேன். மண்ணிலே இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியில்லை.”
"சிலசமயங்களில் அரைகுறையாகக் கண்ணை மூடிக்கொண்டு நான் கனவு காணும்பொழுது கடல் தாய் "மகனே! வா” என்று அழைப்பது போல எனக்குத் தோற்றுவதுண்டு. இது எதில் போய் முடியுமோ? நான் அறியேன்.”
அறுபது வயதுக் கிழவனைப் போலக் கண்கள் கிறங்க நடுங்கி, நடுங்கி அவன் இப்படியெல்லாம் சொன்னபொழுது.
எனக்கு அவனைப் புரிவது போலவும் இருக்கிறது. புரியாதது போலவும் இருக்கிறது.
கடற்கரையிலே ஓவென்று இரைந்துகொண்டு சுழன்றடிக்கும் காற்றை வாயைத் திறந்து நிரப்பிய பின், வாயை மூடினால் ஒன்றுமே வாய்க்குள் இல்லாத உணர்ச்சி ஏற்படுகிறதல்லவா? அதுபோலத்தான் இந்தச் சந்தேகமும், தெளிவும் என் நெஞ்சை நிரப்பியும் வெறுமை யாக்கியும் விளையாடுகின்றன.
128

நாள்கள் உருண்டோடுகின்றன.
இதுநாள்வரை ஒலையால் வேயப்பட்டிருந்த சுடலை மடம் ஒடுகள் பெற்றுப் புதுமையிலே மினுமினுக்கிறது. அதற்குச் சிறிது தூரத்திலே இருந்த வீரசைவரது சமாதிகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாகக் கூடுகின்றன. மண்ணைத் தழுவிவிட்டு மீண்டு செல்லும் அலைகளைப் போலப் பிறப்பும், மரணமும் ஒன்றை ஒன்று தழுவி முயங்குகின்றன.
ஏகாந்த நிசாசரப் பெருவெளியாய் இருந்த கடற்கரையிலே அந்தி யேட்டி மடமும், சில புதுக் கட்டடங்களும் புதுமையின் மெருகு குறை யாது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றன. பன்னிரண்டு வருடங்கள்!
நானும், கணேசனும் வளர்ந்து வாலிபராகி விடுகிறோம். செளந்தர்ய மூர்த்தியாக, புருஷத்துவத்தின் உன்னத இலட்சியமாக நிமிர்ந்து நின்ற கணேச விருகூடித்தின் பக்கத்திலே, ஒரு சிறு முருங்கை மரமாக நானும் நிற்கிறேன். இன்னமும் என்வரையில் அவன் ஒரு வழிகாட்டிதான்.
அவனை நான் நேசிக்கிறேன். அவனுடைய ஏளனங்கள், பரிகாசங் கள் என்ற அனைத்தையும் தாண்டி, எனது பாசக்கொடி அவனைச் சுற்றிப் படர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எந்தக் கூட்டத்திலும் அவனுக்குத்தான் தலைமை, யாரும் அவனை மதிக்காமல் இருக்க முடியாது.
அவனுடைய கிண்டல்களும், கேலிகளும், சந்திரக் கதிர்கள் போலத் தண்மையாக இருப்பதில்லை. அவை காய் கதிர்ச்செல்வனின் கதிர் களுக்கு எவ்வகையிலும் குறையாத வெம்மை பொருந்தியவை.
அவனுடைய கேலிகள் ஈட்டிகளாய் வந்து பாயும் பொழுதும், அசடு வழியச் சிரிக்கலாமேயொழிய எதிர்த்துப் போர்க்கொடி தூக்க என்றைக் குமே முடியாது. அத்துணை சக்தி பொருந்தியவை அவை.
சில வேளைகளில் நண்பர்களோடு வம்பளந்தபடி கடற்கரையிலே இருப்பான். நான் சிறிது தாமதித்து அங்கு போனாலோ தொலைந்தது. மற்றவர்களைத் தூண்டிவிட்டு, என்னை அலட்சியம் பண்ணச் செய்து, சம்பாஷணையிலே கலக்கவிடாமலே அலைக்கழிப்பான்.
அவனும் நண்பர்களும் தங்கள் பாட்டிலே பேசிக் கொண்டிருப் பார்கள். நான் என்ன சொன்னாலும் யாரிடமிருந்தும் பதில் வராது. இப்படிச் சில நிமிஷங்களல்ல; பல மணித்தியாலங்களுக்குக்கூட நான் அலட்சியப்படுத்தப்படுவதுமுண்டு.
ஆனால் அதற்காக அவனை வெறுப்பது மாத்திரம் என்னால் முடிவதில்லை. அவ்வளவு ஆழமாக அவன் தனது புருஷத்துவத்தை என் நெஞ்சிலே ஆழப் பதித்திருந்தான்.
129

Page 84
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
7 கிடல்மீது அவன் கொண்டிருந்த அன்பு வெறியோ காலப்போக்கில் அவன் அளவையும் கடந்து விசுவரூபமெடுத்து அவனைத் தன்னுள் ஆக்கிரமிக்கலாயிற்று.
பல்கலைக்கழகக் கல்வியும், தத்துவ சாஸ்திரத்திலே பெற்ற சிறப்புப் பட்டமும் நெய்யாகி அவனது பாசாக்கினியைக் கொழுந்துவிட்டெரியத் தான் வைக்கின்றன.
கடற்கரைக் கிளிஞ்சல்கள் நிறைந்திருந்த அவன் அறையிலே, அலமாரிகள் பொங்கி வழியுமளவுக்குக் கடல் பற்றிய ஆராய்ச்சி நூல் களும், கட்டுரைகளும், துண்டுப் பிரசுரங்களும் அடைந்து கிடக்கின்றன.
கல்லூரி விட்டதும் ஓடோடி வருவான். மீதிப் பொழுதெல்லாம் சமுத்திர ஸ்நானத்திலும், கடலையே பார்த்திருக்கும் சிந்தனையிலும் கழியும். அது ஒரு யோகம்! எந்தச் சக்தியாலும் கலைக்க முடியாத ஏகாக்கிர சித்தயோகம்!
அடிவானமும், செங்கதிரும் பின்னிப் பிணைந்து கலந்து உறவாடும். கடலிலே குருதிச் செம்மையை நிழலாக விழுத்தி, அதைத் தழுவிச் சிலிர்ப்பான் வெய்யோன்.
சிறிதுபொழுதில் வானத்திலே நட்சத்திரப் பூக்கள் பூத்துக் குலுங்கும். சந்திரப் பாற்குடம் கவிழ்க்கப்பட்டு அதிலிருந்து ஒளியமுதத் துளிகள் உலகின்மீது தெளிக்கப்பட்டிருக்கும். கடலே வெள்ளியாய் உருகி வழியும். இந்தக் காட்சிகளிலே அத்துவிதமாகி, மெய்ம்மறந்துபோய் அவன் கடற்கரையிலேயே வீழ்ந்து கிடப்பான். கனவுகள் செறிந்த விழியும், கற்பனை பொதிந்த நெஞ்சும், கவித்துவம் நிறைந்த சிந்தையும் அவனி லிருந்த 'அவனைத் தட்டி எழுப்பி விழிப்பு நிலையில் வைக்கையில்.
அவன் என்னவெல்லாமோ புலம்புவான். “உலகின் தோற்றமூலம் தண்ணிர்தான்’ என்று கிரேக்க தத்துவஞானத் தந்தையாகிய தேல்ஸ் கூறியிருக்கிறார். உலகின் சராசரப் பொருளெல்லாம் நீரிலேயிருந்தே தோன்றியிருக்குமாயின் நானும் நீரின் ஒர் அம்சந்தானே! உங்கள் எல்லோரிலும் அதிக அளவிலே நீரின் தன்மை என்னில் அமைந்திருக்க வேண்டும். இல்லாவிடில் இந்தக் கடலிலே எனக்கு இத்தனை பாசம் ஏன்? எந்தவோ ஒரு காலத்தில் சமுத்திரபுத்திரனாக நான் வாழ்ந்தி ருக்கிறேன் என்று சொன்னால் அது உனக்குப் பைத்தியக்காரத்தனமா கத் தெரியலாம். ஆனால், அதுதான் உண்மை”
"நான் விஞ்ஞானம் படித்தவன். குருட்டுத்தனமான எண்ணங்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் கடலோடு எனக்குள்ள சம்பந்தத்தை குருட்டு நம்பிக்கை என்று என்னால் தள்ள முடியவில்லை”
130

கடல்
"இந்த வெள்ளலைக் கரங்கள் எனது உடலை அளைந்து கொண்டே இருக்க என் கடைசி மூச்சு என்னை விட்டு நீங்குமானால். நான் உண்மையிலே பெரும் பாக்கியசாலிதான்.”
8 "எப்படிப்பட்ட பிள்ளை? எத்தகைய அறிவாளி இவனுக்கா இந்த நிலை? கணேசனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாமே! "என் தாயிடம் போகிறேன். விடுங்கள், விடுங்கள்’ என்று கத்திக்கொண்டு கடலை நோக்கி ஓடுகிறானாமே” ஊரெல்லாம் அவனைப் பற்றி அநுதாபத்தோடு பேசிக்கொள்கிறது.
பெற்ற வயிற்றைப் பிசைந்து கொண்டு அவனுடைய விதவைத் தாய் செய்யாத வைத்தியமே இல்லை.
பைத்தியம் என்றாலல்லவா தெளிவதற்கு?
அது ஒரு வெறி, தாயின் முலையிலே பாலைக் குடித்தபடி அவளின் மடியிலேயே சயனிக்கத் துடிக்கும் குழந்தையின் வெறி.
அது அடங்கவே மாட்டாது.
விலங்கு அறுகிறது; அவன் ஒடுகிறான். கையை விரித்தபடி, கடல் அன்னையை அணைத்துக்கொண்டு அவன் மேலே மேலே போகிறான்.
குரும்பையாய்த் தெரிந்த தலை, பனங்காய் அளவாகி, விளாங்காய் பரிமாணத்திற்குச் சிறுத்து, எலுமிச்சங்காய் அளவிற்குக் குறுகி.
கண்ணிற்கு மறைந்து விடுகிறது.
நிரந்தரமாக.
நெருப்பு அணைகிறது.
அவனில் அது செத்து அவன் எஞ்சி.
கடல் கோஷிக்கிறது!
கொலை வெறியா?
இல்லை.
குழந்தையைத் தழுவி அணைத்த ஆனந்த வெறி.
'தினகரன் sy 23.09. 1962
131

Page 85
அழகு சுப்பிரமணியம் ஈழம் பெற்ற ஆங்கில இலக்கியகர்த்தா. அவரது புனைகதைகள் ஆங்கில மூலமாயினும், அவரது பார்வையும் பரிவும் யாழ்ப்பாண மண்ணில் நிலைபெற்றிருப்பதைக் காணலாம். இவரது கணிதவியலாளன்’ சிறுகதை, உலக இலக்கியத்தின் உன்னத சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம்பிடித்திருக்கிறது. ராஜ பூரீகாந்தன் இவரது சிறுகதைகளைத் தமிழாக்கி ஒரு தொகுதியாகத் தந்துள்ளார்.
சேதுப்பாட்டி
அழகுசுப்பிரமணியம்
UTழ்ப்பாணத்தில் மழை ஒழுங்காகப் பெய்வதில்லை. இந்த வரண்ட நிலத்திற் பயிர் பச்சை அதிகமாக இல்லாதிருந்தாலும் குடிசனத் துக்குக் குறைவில்லை. யாழ்ப்பாணத்தவர்கள் எல்லோருமே சுறுசுறுப்பா னவர்கள். அதிலும் கமக்காரர்கள் கருமமே கண்ணானவர்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் நாலு மணிக்குள் எழுந்து தோட்டந் துரவு களுக்குப் போய்விடுவார்கள். போகும்போது மத்தியானம் சாப்பிடுவதற் காகச் சோறும் ஒரு குழம்பும் சேர்த்துப் பொட்டணத்திற் கொண்டு போவார்கள். வாய்க்கால் கட்டித் தோட்டத்திற்குத் தண்ணிர் இறைத்த பின்னர் விழுந்துகிடக்கும் தேங்காய், மட்டை என்பனவற்றைப் பொறுக்கி ஓர் இடத்திற் குவிப்பார்கள். இப்படிப் பிரயாசப்பட்டு உழைத்து வானம் பார்த்த பூமியை வளம் செறிந்த நிலமாக்குவதில் அவர்கள் நிகரற்ற வர்கள். ஆழமான கிணற்றிலிருந்து தினமும் நீர் அள்ளுவது என்றால் அதைப் போற் பரமசங்கடமான விஷயம் வேறொன்றுமில்லை.
ஆனால் ஒரு சனிக்கிழமை பெருமழை பெய்தது. அதிகாலையில் ஆரம்பித்த மழை அரை நிமிசந்தானும் ஓயவில்லை.
எனது தகப்பனார் புறுபுறுத்துக்கொண்டேயிருந்தார். சனிக்கிழமை களில் அவர் நீதிஸ்தலத்துக்குப் போவதில்லையென்றாலும் அன்றுதான் புரக்டர்மாரும் வழக்குக்காரரும் அவரிடம் வருவதுண்டு. இடி, மின்ன லுடன் புயலும் சேரவே மழை மிக உக்கிரமாகப் பொழிந்து கொட்டியது.
132
 

சேதுப்பாட்டி
அன்று ஒருவரும் அந்தப்பக்கம் தலைகாட்டாதபடியால் அடுத்த கிழமை அவருக்கு வரும்படி குறைவென்பது அர்த்தமாகி விட்டது.
சனிக்கிழமை எனக்கு என்றுமே ஒரு திருநாளாகவேயிருந்தது. அந் நன்னாளை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன். அன்று பெய்த மழை எனது வேலைகளையும் தடைசெய்துவிட்டது. எனது தாயாரோ என்னைப் படியிற்றானும் இறங்கவிடவில்லை. கம்பளியால் என்னை மூடிக் காலுக்கும் கால்மேஸ் போட்டு என்னை அறைக்குள் இருத்திவிட்டார். தலையிலே ஒரு கம்பளித் தொப்பியையும் அணியும் படி கட்டளை செய்தார். எனக்கோ ஒரே தலைவலியாகத்தான் இருந்தது. 'மழை எப்போது விடும்; நண்பர்களுடன் சேர்ந்து வண்ணாத்திப் பூச்சி பிடிக்கலாமே என்று எனது மனம் அங்கலாய்த்தது.
எங்களது வீட்டிலிருந்து சொற்ப தூரத்துக்கப்பால் சேதுலட்சுமி அம்மாள் வசித்து வந்தாள். சின்னஞ்சிறு பலசரக்குக் கடைதான் அவளுக்கு உயிர். கணவன் இறந்துபோகவே மூன்று குழந்தைகளையும் அவளே பார்க்க வேண்டியிருந்தது. இவர்கள் அனைவரும் ஒரு சிறு குடிசையிற்றான் வசித்து வந்தனர். அதிகாலையிலிருந்து நடுநிசி வரையும் சேது அம்மாள் மாடு போல வேலை செய்வாள். ஆள் வாட்ட சாட்டமாக இருந்தாலும் உடை குப்பைத்தனமாகவே இருந்தது. தலை மயிரை அள்ளிச் செருகியிருந்தாள். எந்த நேரம் பார்த்தாலும் தனது வருத்தங்களைப் பற்றிப் புறுபுறுத்துக் கொண்டேயிருப்பாள். சில வேளை களில் வாடிக்கைக்காரர் மீது எரிந்து புகைவாள். பக்கத்து வீட்டுக்காரர் மீதும் துள்ளிப் பாய்வாள்.
சேதுலட்சுமி அம்மாளின் தோசைக்கு எங்கள் பக்கத்தில் நல்ல மதிப்பு. எனவே பலார் பற்றி விடிய முன்னர் சேது அம்மாள் வீட்டைச் சுற்றி ஒரு கூட்டம் கூடிவிடும். தோசை வாங்குவதற்காகக் குழந்தை குஞ்சுகள் தொட்டுப் பல்லு வீழ்ந்த கிழவர்கள் வரை பெட்டியும் கையுமாக நிற்பார்கள். அந்தச் சிறு குடிசைக்குள் அத்தனைபேரும் எப்படி இருக்க முடியும்? குடிசையின் ஒரு பகுதியில் வியாபாரம் நடைபெற்றது. இப் பகுதி தெருவைப் பார்த்து நின்றது. மற்றப் பகுதியிற் சேது அம்மாளும் பிள்ளைகளும் படுத்துறங்கினர். இரண்டு சதத்துக்குச் சீனி, மூன்று சதத் துக்கு எண்ணெய் இப்படித்தான் சேதுலட்சுமி அம்மாளுக்கு வியாபாரம்.
வண்ணாத்திப் பூச்சிகளைத் துரத்திவிட்டு வியர்வைத் துளி முதுகிலே மணிமணியாகச் சிந்துகின்ற கோலத்தில் நாங்கள் அடித்து விழுந்து கொண்டு சேது அம்மாளின் கடைக்குள் புகுவோம். களையைத் தீர்த்துக் கொள்வதுடன் தோசையையும் பதம் பார்த்துக் கொள்ளலாம் அல்லவா? எங்களிடம் சில சமயங்களில் இரண்டு மூன்று சதம் இருந்தால் அதை அப்படியே சேதுவின் கைக்குள் வைத்துவிடுவோம். அவள் வேறு ஆட் களுடன் பேசிக்கொண்டு வியாபாரம் நடத்தும் வேளைகளில் நாங்கள் சேதுவின் தோசைகளை அங்குமிங்கும் கிள்ளி வாயிற் போட்டுக்
33

Page 86
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
கொள்ளுவோம். தற்செயலாக நாங்கள் செய்யும் துடியாட்டத்தை அவள் கண்டுவிட்டால் எங்களை அந்தப்பக்கம் அடி வைக்கக் கூடாதெனச் சத்தம் போட்டு வெருட்டுவாள்.
நானும் எனது நண்பனும் சேதுவைச் சரியாகப் பரிகாசம் செய்து வந்தோம். இராக் காலத்தில் கிழவி பழங்காலத்துப் போத்தல் விளக்கை ஏற்றுவாள். நான் கடைக்குப் பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டி ருக்கையில் எனது நண்பன் மெதுவாகத் தவழ்ந்து போய்க் கிழவியின் கடையில் எரியும் விளக்கை அணைத்து விடுவான். கிழவி எங்களைப் பார்த்துத் திட்ட முன்னர் நாங்கள் அப்பால் ஓடி மறைந்து கொள்வோம்.
இத்தனைக்கும் சேது இரக்கம் நிறைந்தவள். பிறருக்கு உதவி செய்யப் பின்னிற்பதில்லை. வறியவர்களே அவளுடைய கடைக்குப் போய் வருவதுண்டு. இவர்களில் அநேகருக்கு சேது கடன் கொடுப்பதும் உண்டு. "நான் ஒரு பேய்ச்சி! வெறும் மடைச்சி இருந்தாலும் வேறு என்ன செய்யமுடியும்? குழந்தைப்பிள்ளை ஒன்று தோசைக்கு வந்தால் நான் எப்படி இல்லையென்று சொல்லுவேன்! என்னுடைய பிள்ளை குட்டி களையும் நான்தானே பார்க்கவேண்டும். என்றாலும் மற்றப் பிள்ளைகள் பசியால் வாடுவதை நான் எப்படிச் சகிப்பேன். என்னுடைய பாடு அப்படி யும் இப்படியுமாகிவிட்டது. மல்லி உள்ளி வாங்கத்தானும் கையிலே துட்டுக் காசுமில்லையே” சேதுக் கிழவி குடிசைக்குள் நின்றுகொண்டு புலம்பினாள்.
சேதுவைப் போய்ப் பார்க்க வேண்டுமென்ற ஆசை என்னைப் பிடர் பிடித்து உந்தியது. ஆனால் மழையோ விட்டபாடாயில்லை. எனது தாயார் தேநீருடன் அறைக்குள் வந்தார். தேநீர் என்று அதைச் சொல்ல முடியாது. ஏனெனில் அதிகமான பாலே அதிற் கலக்கப்பட்டிருந்தது. தேநீரைக் குடிக்கும்போது எனக்குக் கோபம் கோபமாக வந்தது. மழை யானது எனது விளையாட்டையும் குழப்பிவிட்டதே என்று நினைத்து அழ ஆரம்பித்தேன். வண்ணாத்திப்பூச்சி பிடிப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதற்கும் மழை தீமை தேடி விட்டதே!
அன்று முழுவதும் மழை பொழிந்துகொண்டே இருந்தது. சூரியன் இருண்ட மேகங்களுக்கூடாக எட்டித்தானும் பார்க்கக்கூடியில்லை. அவ்வளவு மப்பு மந்தாரம். இருட்டுக்கட்டும் நேரமாகிவிட்டது. வீட்டின் பின்பக்கத்து விறாந்தையுடன் வெள்ளம் மருவிக்கொண்டு நின்றது.
எனக்குத் துக்கம் ஒரு பக்கம். பயம் மறுபக்கம். மனவேதனை தாங்க முடியாதவனாய்ப் படுக்கைக்குப் போய்விட்டேன். கூனிக் குறுகிக் கொண்டு நல்லாகப் படுத்துத் தூங்கினேன். காலையில் அவசர அவசர மாக எழுந்தபோதும் மழை பெய்துகொண்டேயிருந்தது.
எங்கும் ஒரே வெள்ளம். சில இடங்களில் நாலு அடிக்கு வெள்ளம் மேவி நின்றது. பெருகிவரும் வெள்ளத்தைக் கண்டு ஒருவரும் வெளியே போக எத்தனிக்கவில்லை.
34

சேதுப்பாட்டி
நான் சாளரத்தின் ஊடாகப் பார்த்தேன். அதிக தூரத்தில் செத்த ஒரு நாயும், நாலைந்து கோழிகளும் மிதந்து சென்றன. இரவு அடித்த புயலுக்கு எத்தனையோ வீடுகளும் உயிர்களும் இரையாகிவிட்டன. அக்கம்பக்கத்தில் இருந்தவர்களில் அநேகர் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அடுத்த வீட்டிலிருந்தவர்களுக்கு எங்கள் அறைகளில் இடம் கொடுத் தோம். கட்டாடிமாரும், நாவிதரும், தச்சவேலை செய்பவரும் எங்கள் வீடுதான் தஞ்சமென வந்தடைந்தனர். அவர்களுக்கும் ஏற்ற இடங்களை காட்டினோம். அவர்களுடன் கூடவே அவர்கள் வளர்த்த நாய், பூனை, கோழி போன்ற பிராணிகளும் வந்து சேர்ந்தன.
இவ்வளவு சந்தடிக்குள்ளும் எல்லோரும் சேதுலட்சுமி அம்மாளை மறந்துவிட்டனர். சேதுவின் தோசையைத் தின்று உடம்பெடுத்தவர்கள் கூட அவளின் உதவிக்குச் செல்லவில்லை. நான் அம்மாவிடம் ஒடோடி யும் சென்று சேதுவைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு யாரேனும் ஒருவரை அனுப்பும்படி வேண்டினேன்.
"மகனே! இந்த அடைமழைக்குள் நான் யாரைப் போகும்படி கேட்கலாம். புயலோ உக்கிரமாக அடிக்கின்றது. நான் என்ன செய்ய முடியும்? சேதுவின் பிள்ளைகளில் வளர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தாய்க்கு உதவி செய்வார்கள்தானே. நீ பயப்படாதே" என்று பரிவாகப் பேசினார் எனது தாயார்.
"அது சரி அம்மா; சேதுவின் பிள்ளைகள் வீட்டிலே இல்லை. அவர்கள் வேறு வீடுகளில் வேலைக்கு நிற்கிறார்கள்.”
"மகனே, நான் சொல்வதைக் கேள்; சும்மா சிணுங்காதே. ஒருவரை யும் இப்போது சேதுவின் இடத்துக்கு அனுப்பமுடியாது” என்று சொல்லிக் கொண்டே சரிந்து கிடந்த எனது கம்பளித் தொப்பியைச் சரிப்படுத் தினார்.
ஆனால் மழை தொடர்ந்து பெய்துகொண்டேயிருந்தது. மூன்றாம் நாள் பெரும் புயல் ஒன்று சீறி எழுந்து பட்டினம் முழுவதையும் ஒரு கை பார்த்துவிட்டது. மணித்தியாலக்கணக்கில் நின்று நர்த்தனம் புரிந்த அந்தப் புயல் எத்தனையோ நாசங்களை விளைத்து விட்டது. கடலின் இரைச்சலும், மழையின் குமுறலும் காற்றின் வேகமும் ஒன்று சேர்ந்து மிகுந்த பயங்கரத்தை உண்டாக்கின. தென்னை மரங்கள் ஒலைகளுடன் சுழலும்போது எனது குடலே கலக்கமெடுத்தது. மழை சிறிது ஒயும் போதெல்லாம், புயலின் உக்கிரமும் குறைந்துகொண்டே போனது. ஆனால் மறுகணம் மேகங்கள் ஒன்று திரண்டு அலறிப் புடைத்துக் கொண்டு சோனாவாரியாக மழையைக் கொட்டியது. எங்கும் பயம் குடி கொண்டது. சலப்பிரளயம் வந்து உலகத்தையே அழிக்கப் போகின்ற தாக்கும் எனப் பலர் பேசிக்கொண்டனர்.
எனக்கோ அன்றிரவு அதிகநேரமாக நித்திரை வரவில்லை. அம்மா வின் அருகணைந்து அவருடன் படுத்துறங்கினேன். அம்மா இடை
135

Page 87
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
இடையே எழுந்து ஒழுக்குக்கென வைத்த வாளியை எடுத்துத் தண்ணிரை அப்புறப்படுத்துவார். பின்னர் என்னுடன் வந்து படுத்துக் கொள்ளுவார். “கண்ணே பயப்படாதே. மழை இப்போது குறைந்து விட்டது" என்று சொல்லிக்கொண்டே என்னைப் படுத்துறங்கும்படி இதமாகச் சொல்லுவார்.
அடுத்த நாட் காலை நான் கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்த போது மழை நின்றுவிட்டது. எங்கும் ஒரே குதூகலம், மப்பு மந்தாரமாக இருந்தபோதிலும் மழை பெய்யவில்லை. ஆனால் ஒருவரும் வீட்டை விட்டு வெளியே போக விரும்பவில்லை. இதற்கிடையில் வெள்ளத்தால் நேர்ந்த விபத்துக்களை பார்க்கவும், அள்ளுப்பட்ட மதகுகளைத் திருத்து வதற்காகவும் ஒவசியர்மாரும், வேலையாட்களும் அங்குமிங்குமாக விதிகளிற் கூடிநின்றனர். பொலிஸ்காரரும் விதிகளைச் சுற்றிப் பார்த்தனர். பட்டின வாழ்க்கை மீண்டும் பக்குவமடைந்து வரலாயிற்று. வழக்கம் போலவே காலை ஒன்பது மணிக்கு நான் புத்தகப்பையுடன் பள்ளிக் கூடத்துக்குச் சென்றேன். அந்தப் பைக்குள் எனக்காக அம்மா செய்து வைத்த கணக்குகளும் பத்திரமாக ஊறிக் கிடந்தன. என்னுடன் எனது நண்பனும் பள்ளிக்கூடத்துக்கு வந்தான். அன்று நாங்கள் தினமும் சந்திக்கும் சேதுப் பாட்டியைக் காணவில்லை. பேரிஞ்சுப்பழம் போற் காய்ந்து சுருங்கிய அவளுடைய முகத்தைக் காணும்போதெல்லாம் எங்கள் உள்ளம் பூரிப்பது வழக்கம். "சேதுப் பாட்டி சேதுப் பாட்டி! எப்படிச் சுகம். தோசையிருக்கிறதா?” என்று அவளைப் பரிகாசமாகக் கேட்போம். அன்று அந்தப் பழகிய முகத்தைக் காணவில்லையே.
சின்னச்சிறு கடையிருந்த அந்த இடத்தில் ஜனங்கள் கூடி நின்று ஒருவரோடு ஒருவர் குசுகுசுத்தனர். நாங்கள் அவர்களிடம் சென்று சேதுவைப் பற்றி விசாரித்தோம். சிலர் எங்களைத் திரும்பித்தானும் பார்க்க மறுத்தனர். வேறு சிலர், "குழந்தைப் பொடியளுக்கு இந்த இடத்தில் என்ன அலுவல்; பள்ளிக்கூடத்துக்கு நேரமாகிவிட்டது ஒடுங் கள்” என்று உரப்பினர்.
அன்று தொடக்கம் நாங்கள் அந்தப் பக்கத்தாற் போகும் போதெல் லாம் சேதுப் பாட்டியின் கடைப்பக்கம் திரும்பிப் பார்ப்போம். ஆனால் சேதுலட்சுமி அம்மாள் அங்கு தென்படவில்லை. பாட்டியுடன் பரிகசித் துப் பேசுவது நின்றது போலவே கிழவியின் தோசைச் சாப்பாடும் நின்று விட்டது.
ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு : இராஜ அரியரத்தினம்
“ஈழகேசரி” 1707. 1949
136

சு. இராஜநாயகன் 'ஈழகேசரிப் பண்ணையில் சம்பந்தனின் அடிச் கவட்டில் முகிழ்த்தவர். நல்ல சிறுகதைகள் முப்பது வரை படைத்துள்ளார். நனவோடை உத்தியில் தன் சிறுகதைகளைப் படைத்தவர். 'பிரயாணி' இவரது நாவலாகும். அமரராகிவிட்டார்.
சொந்த மண்
சு.இராஜநாயகன்
66
dBig5 ஆஆஅஅ.
p
முருகேசரின் இந்த அழைப்பு அந்தக் கந்தக் கடவுளுக்குக் கேட்டதோ என்னவோ, அந்தப் பாரிய வேப்பமரத்தின்கீழ், பாத்தி யிலிருந்து பிடுங்கி நாற்புறமும் எறிந்துவிட்ட பனங்கிழங்குகள் போல் படுத்திருந்த நூற்றுக்கணக்கான மக்களுக்குக் கேட்டது. அவர்களின் தூக்கமும் சற்றுக் கலைந்தது.
முருகேசர் எழுந்து நின்றார். ஏதோ ஒரு திசை நோக்கிக் கைகூப்பி மீண்டும் "கந்தா, கந்தா ஆஅ” என்றழைத்தார். தளர்ந்திருந்த நாலு முழத்தைச் சீராக உடுத்தார். நலமுண்டுத்துண்டை உதறித் தோளிற் போட்டார். குனிந்து சிறு துணிப்பை ஒன்றை எடுத்தார். புறப்பட்டுவிட்டார்.
தூரத்தில் சேவல் ஒன்றின் கொக்கரக்கோ’ கேட்டது. நேரம் அதிகாலை நாலரை மணியாக இருக்கும். இயல்புநிலை குலையாமல் இருந்திருந்தால், நல்லூர்க் கந்தசாமி கோயிலின் ஆயத்தமணி நாதம் முருகேசரின் கோண்டாவில் விவசாயிகளைத் துயிலெழுப்பி அவரவர் தோட்ட நிலங்களுக்கு அனுப்பியிருக்கும். அவர்களுடன் முருகேசரும் நார்க் கடகத்தில் இலைச் சருகுகளைத் தலையில் தாங்கி, மண்வெட்டி யுடன் தன் நிலத்தை நோக்கிச் சென்றிருப்பார்.
இன்று..?
137

Page 88
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
‘எங்கு செல்கிறோம் என்ற இலக்கின்றி, ‘என்ன செய்யப் போகின் றோம்’ என்ற விடை கிடைக்காத வினாவைச் சுமந்து கொண்டு அலை அலையாக வந்த பல நூறாயிரம் மக்கள் வெள்ளத்தில் ஒரு துளி முருகேசர். அத்துளியோடு ஒட்டிக்கொண்ட மற்றிரு துளிகள் மனைவி மீனாட்சியும், மகள் பூமணியும்.
மனிதத்திரட்சியை ஊடறுத்தோ அல்லது அதனுடன் அள்ளுண்டோ செல்ல இயலாமல் விதி ஓரத்தில் ஒதுக்கப்பட்ட சில நூறு மனிதருள் இவர்களும் சேர்த்தி.
கைதடி வயோதிபர் இல்லத்துக்குச் சற்று அப்பால் விதியை முகப் பாய்க் கொண்ட பெரிய வெறுங் காணியினுள்ளே கண்ட பாரிய வேம்பு இவர்களுக்குத் தற்காலிக புகலிடம் தந்தது.
இரவு தங்கிச் செல்லலாம். குழந்தை குஞ்சுகளுடன் தாய்மார் பலர், வயோதிபம் வாட்டும் ஒரு சிலர், வெவ்வேறு நோய் நொடி கண்டவர்கள், ஆணும், பெண்ணுமாய் இளசுகள் என்பவர்களோடு மூட்டை முடிச்சுக் களும் அங்கு பரந்து கிடந்தன. ஆடுகள், குட்டிகள் அங்குமிங்கும். நாய் கள் சில ஒடித்திரிந்தன. பல சைக்கிள்கள்.
முருகேசரின் ‘கந்தா அழைப்பொலி கேட்டு மீனாட்சியும், பூமணியும்
விழித்து எழுந்து அமர்ந்தார்கள். அவர் புறப்பட்டு விட்டார் என்பதைக் கண்டதுமே அவர்கள் சுறுசுறுப்பானார்கள்.
அவருடைய போக்கு அவர்களுக்குப் பழக்கமானது. அவர் எந்த நேரத்தில் என்ன செய்வார் என்று குறிப்பாலுணர்ந்து இவர்கள் நடந்து கொள்ள வேண்டும், நடந்து கொள்வார்கள். 'ஏன்?’ என்று கேட்க மாட்டார்கள். அவர் செய்வதெல்லாம் சரி’ என்பது இவர்கள் தீர்மானம்.
தாமதமின்றி தமது சிறிய பைகள் இரண்டைத் தூக்கியோராய் முருகேசரைத் தொடர ஆயத்தமானார்கள்.
புறப்பட்ட முருகேசருக்கும் வீதிக்குமிடையே முப்பது மீற்றர் தூரம் வழியில் கால்மாடு, தலைமாடு பேதமின்றி ஆண், பெண், சிறுவர், சிறுமி யர் பரந்து படுத்திருந்தார்கள்.
மிகச் சாவதானமாகக் காற் சுவடுகளை நீட்டியும், குறுக்கியும் மக்களைத் தாண்டி அவர் வீதிக்குச் சென்று மிதக்க முடிந்தது. மீனாட்சி யும் மகளும் சிரமங்களினூடாக ஒருவழியாக விதிக்கு வந்து விட்டார்கள்.
வீதியில் மக்கள் நடமாட்டந் தொடங்கிவிட்டது. மங்கிய ஒளியிலும் பூமணி வீதியின் இருபுறமும் கூர்ந்து நோக்கினாள். அசாதாரண உயரங் கொண்ட முருகேசர் எந்தக் கூட்டத்தில் நின்றாலும், இலகுவில் கண்டு கொள்ளலாம்.
138

சொந்த மண்
கைதடிச் சந்தியை நோக்கிச் செல்வோரிடையே அவரில்லை. எதிர்ப்புறம் நாவற்குழிச் சந்திக்குப் போகும் திசையில் முருகேசரின் வேக நடை தெரிந்தது.
நேற்று வந்த பாதையில் திரும்பிச் செல்கின்றார் ஏன்? வீடு நோக்கியா?
ஓட்டமும் நடையுமாய் இருவரும் முருகேசருக்குப் பின்னால் பத்து மீற்றர் தூரத்துக்கு வந்துவிட்டார்கள்.
நாவற்குழிச் சந்தி எதிரே, ஒரு காலத்தில் புகைவண்டி நிலையமாக இருந்த இடத்தில் மேடை அடங்க மக்கள் படுத்துக்கிடந்தார்கள்.
முருகேசர் நின்றார். துணிப்பையைத் தோளில் கொழுவினார். கைகளை உச்சியில் குவித்து நான்கு திசையும் சுற்றிச்சுற்றி வணங்கினார். “கந்தா' என இரங்கி அழுவாராய் அவனிடம் விடைபெற்றார். பின்னர் கேரதீவுப் பாதையில் நடக்கத் தொடங்கினார்.
வைகறை ஐந்து மணியிருக்கும் நாவற்குழி குடிமனைகளினூடாகச் செல்லும் விதியின் இருமருங்கும் சாக்குகள் விரித்துச் சில்லறைக் கடைகள் முளைத்துக் கொண்டிருந்தன. பாதையின் ஓரத்திலிருந்த வெறுங் காணிகளுள் மரங்களின் கீழும் வான முகட்டின் கீழும் இடம் பெயர்ந்தோர் பலர் இன்னும் நித்திரையிலிருந்தார்கள்.
முருகேசரின் இயல்பு நடை வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவர் மனைவியும், மகளும் நாயோட்டத்தில் சென்றார்கள்.
மறவன்புலவு.
இருபுறமும் வயல்கள். நெற்பயிர் சோர்ந்து கிடக்கிறது. ஒரு வயல் ஒரத்தில் ஒரு சிறு கொட்டில் கோயில். வயல் காக்குந் தெய்வக் கோயில், காலைப்பூசைக்கு ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. 始
முருகேசர் நின்றார். கோயிலில் வடகிழக்கு மூலையில் வயல் ஒரத்தில் ஒரு கிணறு. கைவாளியால் நீர் மொண்டு கை, கால், முகங் கழுவியும் நீர் குடித்தும் சிலர் மீண்டனர்.
கிணற்றடியில் எவருமில்லாதபோது முருகேசர் அங்கு போனார். நலமுண்டுத் துண்டையும் துணிப்பையையும் ஒரு கல்லின்மேல் வைத்தார். நாலுமுழத்தோடு ஒரு காகக் குளிப்புக் குளித்தார். ஈரவேட்டி, உடலுடன் கோயில் வாயிலுக்கு வந்தார்.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீனாட்சியும், மகளும் கிணற்றடிக் குப் போய் கை, கால் முகங் கழுவி, தாகசாந்தி செய்து கோயிலுக்கு வந்தார்கள்.
39

Page 89
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
அரோகரா’ ஒலி மத்தியில் சுவாமிக்குப் பஞ்சாலாத்தி காட்டிக் கொண்டிருந்தார் பூசகர். இவர்களும் தரிசித்து வணங்கினார்கள் விபூதிப் பிரசாதம் பெற்றார்கள்.
பின்னர் அங்கு நின்ற பத்துப் பன்னிரண்டு பேரிடையே முருகேசரைத் தேடினார்கள். அங்கு அவரில்லை. விதியைத் திரும்பிப் பார்த்தார்கள். நேர் விதி பார்வை செல்லும் தூரம் வரை இருபுறமும் பார்த்தார்கள்.
அவரைக் காணவில்லை! ஈரவேட்டி, நல்ல உயரம், சிறிய துணிப்பை, அடையாளங் கூறி விசாரித்தார்கள்.
சற்று முன்னர் அவர் கேரதீவுப் பக்கஞ் சென்று விட்டாராம். இவர்கள் வீதியிலிறங்கி நடக்கத் தொடங்கினார்கள். விதியிலெங்கும் அந் நெடிய உருவத்தைக் காணவில்லை.
இவர்களுக்குப் பின்னால் சிறுவன் ஒருவன் ஓடி வந்தான். அவர் களிடம் ஒரு துணிப்பையைக் கொடுத்தான்.
முருகேசரின் பை
"இது ஆர் தந்தது?"
"அந்த ஐயா உங்களிட்டைக் கொடுக்கட்டாம்.”
"அந்த ஐயா எங்கை?"
"குடுக்கச் சொல்லிப்போட்டுப் போட்டார்.”
சிறுவன் கேரதீவுச் சந்திப் பக்கம் கை நீட்டிக் காட்டினான்.
பூமணி பையினுள்ளே பார்த்தாள். ஒரு கடதாசிப்பை. உள்ளே சில பணத்தாள்கள். எண்ணினாள். சிறிய பெரிய தாள்களில் நாலாயிரத்தறு. [5/TOJ ĈI5LJIT.
"அம்மா, இதுக்கை காசிருக்கு."
அம்மாவுக்கு இது கேட்கவில்லை. கணவனைக் காணாத, பறி கொடுத்த தமிழச்சியாய் அவள் நினைவிழந்தாள். நிலத்தில் சரிந்து விழவிருந்த தாயை மகள் அணைத்தாள். நிலத்தில் அமர்ந்து தாயின் தலையைத் தன் மடியில் தாங்கினாள்.
மீனாட்சிக்கு வியர்த்துக் கொட்டியது. குளிர்ந்த இக்காலை வேளை யில் இப்படி ஒரு வியர்வையா? பசியோ? துணிப்பையால் தாயின் முகத்தைத் துடைத்தாள். துடைத்தல் தொடர்ந்தபோது பூமணிக்கு அழுகை வந்துவிட்டது. பரம்பரை பரம்பரையாக சீவியகாலம் முழுவதும் சிறுகச் சிறுகச் சேர்த்த உடைமைகளைத் தற்காலிகமாக வேனும் கை விட்டு, ‘எங்கு, ஏன், என்ன செய்ய புரியாமல் ஓரொரு துளியாகச் சென்று
40

சொந்த மண்
கொண்டிருந்த மனிதப் பேரலையில் எவரும் இவர்களைத் திரும்பியும் நோக்கவில்லை.
பேரலை நகரத் தொடங்கியது. விதி நிறைந்து மக்கள் கிழக்குத் திசையில் நகர்கிறார்கள். வெயிலும் ஏறத் தொடங்கி விட்டது. தங்கி ஆற நிழலில்லை. இப்படியே இருந்தால்..?
மீனாட்சி சற்றுத் தேறிவிட்டாள். கண்கள் திறக்க வெருட்சி தெரிந் தது. அரைமணி நேர மயக்கந் தீர்ந்து மகளின் மடியிலிருந்து எழுந்தாள்.
"அப்பா வந்திட்டாரா?” முதல் கேள்வி. பூமணி பதில் தரவில்லை.
“எழும்பு போவம். போய்த் தேடுவம்” நடக்கத் தொடங்கினார்கள். கணவனைக் காணாத வெப்பியாரம் உள்ளே, வெளியே வெயில்,
ஒரு மணி நேர நகர்வின் பின் கேரதீவுச் சந்திக்கு வந்து சேர்ந்தார் கள். மர நிழல்களின் அரவணைப்பில் பலர் ஆறிக்கொண்டிருந்தார்கள். இவர்களும் அங்கு ஒதுங்கினார்கள். நகர்வதையே நோக்காக, வெயிலை யும் களைப்பையும் பொருள் செய்யாது, மக்கள் சாவகச்சேரி நோக்கிச் செல்கிறார்கள். சிறுவர் சிறுமியர் வாடிய கீரைத்தண்டுகளாய் பெற்றோ ரின் பின்னால் ஓட்டமும் நடையுமாகச் செல்கிறார்கள்.
பூமணியும் தாயும் பயணத்தைத் தொடர்ந்தார்கள் வழியெல்லாம் திரள் திரளாக மக்கள். இடைக்கிடை சில வாகனங்களுக்கு இடம்விட்டு
விதி ஓரத்தில் நிற்கும் நிலை.
சாவகச்சேரி எட்டாத தூரத்தில் இருப்பதாக இவர்களுக்குப் பட்டது. அள்ளுண்டு சென்றார்கள். சாவகச்சேரிச் சந்தியைக் கண்டபோது முற்பகல் பதினொன்றரை மணி.
சந்தியில் விவரிக்கமுடியாத நெரிசல், கூடு முழுமையும் மொய்த்துப் புரளும் தேனிக்களாய் மக்கள் திரள். கேரதீவுப் பாதைத் திரளும், பிரதான விதித் திரளும் அங்கு சங்கமித்துப் பெருந்திரளாய்ப் பரிணாமங் கொண் டது. இதை ஊடறுத்துச் செல்வது முயற்கொம்பு போதாததற்குச் சில வாகனங்களும் நெரிசலைப் பிரமாண்டமாக்கிக் களேபரம் ஏற்படுத்தின.
மீனாட்சிக்கும் பூமணிக்கும் வாழ்வே வெறுத்த நிலை. இந்த நிலை இன்னும் எத்தனை ஆயிரம் பேருக்கு ஏற்பட்டதோ?
நகர்வுக்காய் மேற்கொண்ட பல்லாயிரம் பகீரதப் பிரயத்தனம் ஒன்று டன் ஒன்று மோதின. பரிதாபக் குரல்களும், அவல ஒலிகளும் குழந்தை யின் அழுகைக் குரல்களும் அந்தச் சதுக்கத்தையே உருக வைத்தன.
அலையால் எற்றுண்ட துரும்புகளாய் அள்ளுண்டு இந்துக் கல்லூரிக்குள் இருவரும் ஒதுக்கப்பட்டபோது நேரம் ஐந்து மணிக்கு மேலிருக்கும். பசியையும் தாகத்தையும் விஞ்சிய களைப்பு.
141

Page 90
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
பல நூறு மக்கள் நின்றும், நடந்தும், இருந்தும், கிடந்தும் உள்ளிடத்தை நிரப்பி இருந்தார்கள். இந்த இருவரும் குந்தி இருக்க ஓரிடம் கிடைத்துவிட்டது.
“கந்தா, முருகா!'
தாகம்-பசி-களைப்பு என்பவற்றுக்கு மேலாக, குடும்பத் தலைவரைக் காணாத சோர்வின் உக்கிரம் இருவரையும் உலுப்பியது.
நேரம் கரைந்து இரவும் வந்தது. பூமணி வெளியே சென்றாள். திரும்பியபோது சில திண்பண்டங்களும் பிளாஸ்ரிக் போத்தல் ஒன்றில் நீரும் கொண்டு வந்தாள். மீனாட்சி தண்ணிர் மட்டும் குடித்தாள். பக்கத் திலிருந்த சிறுமி ஒருத்தியுடன் பூமணி பலகாரங்களைப் பகிர்ந்து உண்டாள்.
நான்கு நாள். இரவும் பகலும் வருவோரும், தங்குவோரும், வெளியேறுவோரும் அடுத்து என்ன என்ற பிரச்சனைக்குத் தீர்வு காண இயலாத மக்களின் அவலங்களுக்குச் சான்று ஆயினர்.
முருகேசரோ, அவரின் சுவடோ காணப்படவில்லை. காலை நேரங் களில் கஞ்சி, பிற்பகல் சிறிய சோற்றுப் பொட்டலம், எவரோ புண்ணியாத்மா அரிசியும், பரும்பும் தர, அங்கு ஒதுங்கியிருந்த பெண்கள் சமைத்துப் பகிர்ந்து வழங்கினார்கள்.
ஐந்தாம் நாள் காலை, முருகேசர் அங்கு வந்தார். நாலுமுழம் மட்டும். நலமுண்டைக் காணவில்லை. அவரது திருநீற்றுப் பட்டுப்பை அரையில் தொங்கிக் கொண்டிருந்தது. நாலு புறமும் நோட்டம் விட்டார். பூமணி கண்டுவிட்டாள். "அப்பா” என்ற கதறலுடன் அவரிடம் ஓடினாள். அவளை அணைத்தபடி அவர் மீனாட்சியின் அருகில் வந்து ஒதுங்கி அமர்ந்தார்.
‘போன உயிர் மீண்ட உணர்வில் மீனாட்சி மிதந்தாள். யுவதிகள் சிலர் உணவுப் பண்டங்களை அங்கும் இங்கும் திரிந்து கொடுத்தார்கள். குறிப்பிட்ட சிலருக்கு அவர்கள் அருகில் சென்று மருந்து வில்லைகளும் தந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த காற்சட்டை ஷேட்டும், அவர்களின் சுறுசுறுப்பும் முருகேசர் கவனத்தை ஈர்த்தன. யுவதிகள் காட்டிய ஆதர வும், அரவணைப்பும் தனக்கும் கிடைத்தாற்போல முருகேசர் ஆயாசந் தீர்ந்தார்.
"அப்பா, அம்மாவைக் கவனமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கோ” என்ற பூமணி, முருகேசரின் மடியில் அவர் துணிப்பையை வைத்தாள். அதனுள், அவள் எடுத்துச் செலவிட்ட தொகை போக மிகுதிப் பணம் இருந்தது.
142

சொந்த மண்
“ஒருக்காப் போட்டுவாறன்’ பெற்றோரை இரண்டு மூன்று தடவைகள் திரும்பிப் பார்த்தவள் சிரித்துக்கொண்டே நடைவேகத்தை அதிகரித்தாள்.
உள்ளம் பூரித்தவளாய் மீனாட்சி எழுந்தாள். நான் ஒருக்கா முகங் கழுவிப்போட்டு வாறன். இருந்து கொள்ளுங்கோ.”
பத்து நிமிஷங் கழித்துத் திரும்பி வந்தாள். முகத்தைத் துடைத்துக்
கொண்டே, “உங்கடை விபூதியிலை கொஞ்சம் தாருங்கோ” என்றாள்.
“என்னட்டை விபூதி இல்லை மீனாட்சி.”
“உங்கை பை வைச்சிருக்கிறியள். கொஞ்சம் எண்டாலும் கிடக்குந் தானே!”
முருகேசர் சிரித்தார். வழமைக்கு மாறாகக் கதைக்கத் தொடங்கினார்.
"இரு, பக்கத்திலை இரு. இதுக்குள்ள என்ன இருக்கெண்டு பார்.”
பையை எடுத்துச் சுருக்கைத் தளர்த்திக் காட்டினார். உள்ளே விபூதி இல்லைத்தான். செந்நிறத்தில் ஏதோ இருந்தது.
“என்னப்பா இது?”
“பொறு. சொல்லிறன். இந்தப் பயணத்திலை நான் தற்சேலாக் கண்ணை மூடீட்டா, எனக்குப் போடிற வாய்க்கரிசி இதுதான். இது எங்க வீட்டுத் தோட்டத்து மண், செம் மண். சொந்த மண்.”
மீனாட்சி விம்மி விம்மி அழத் தொடங்கினாள். "அழாதை மீனாச்சி. மனிசன் காரியம் நிச்சயமில்லை. எதுக்கும் தயாராயிருக்க வேணுமல்லே!”
மீனாட்சியின் அழுகை மேலும் வலுத்தது. அழுகையும் விம்மலும் ஒய நீண்ட நேரம் எடுத்தது. பின்னர் மீனாட்சியும் சிரித்தாள்.
"நான் முந்தீட்டா, உதிலை அரைவாசி எனக்கு” என்றாள். முருகேசரின் முகத்தில் புன்னகை ஒன்று தோன்ற முயன்று ‘வேண்டாம் என மறைந்துவிட்டது.
இந்தச் சிறிய சம்பாஷணையின் எதிர்விளைவு அத்தம்பதியினர் மேல் மெளனமாய்க் கவிந்தது. மதியங் கடந்துவிட்டது. யுவதிகள் இருவர் வந்து மீனாட்சியைப் பார்த்து விட்டு, மூன்று உணவுப் பொட்டலங் களைத் தந்து சென்றார்கள்.
ஓ! பூமணியை இன்னும் காணவில்லை. அவள் போய் எவ்வளவு நேரம்? ஐந்து மணித்தியாலங்களுக்கு மேல் மீனாட்சியைக் கலக்கம் பிடித்துக்கொண்டது. உணவுப்பொட்டலங்கள் பிரிக்கப்படாமலே கிடந்தன.
143

Page 91
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
முருகேசர் நிஷடையில் இருப்பவர் போல் மெளனித்திருந்தார். மீனாட்சி இடைக்கிடை எழுந்து போய் விதியின் இருபுறமும் பார்த்து ஏமாற்றமே உருவாகத் திரும்பி வந்தாள்.
மாலைப்பொழுது மீனாட்சி பொறுமையின் எல்லையில் நின்றாள். “ஒருக்காப் போய்த் தேடிப் பாருங்கோவன்!” முருகேசர் சிரித்தார்.
"அவள் எங்கடை மகள். அவள் பிழை செய்வாளே? எங்கை போனாள், ஏன் திரும்பி வரேல்லை எண்டுகூட யோசிக்காதை."
தன் மடியில் செருகியிருந்த அந்தப் பையை எடுத்து மீனாட்சியிடங் கொடுத்தார்.
"கவனமா வைச்சிரு.”
"தினக்குரல் yy 03.05.1998
144

స్ధ్యాణి சித்தின் முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் தாழையடி சபத்தினம். ஆனந்தனில் இவர் எழுதிய குருவின் சதி இவரைத் தக்க
.క్ట சிறுகதையாளனாக இனங்காண வைத்தது. கல்கியில் பரிசில் பெற்றவர் ܗܝܼܛ̈ܐ இவரது சிறுகதைத் தொகுதி புதுவாழ்வு வெளிவந்துள்ளது. அமரராகி விட்டார்.
குருவின்சதி
தாழையடிசபாரத்தினம்
s
அடர்ந்த காட்டினுாடே நடந்து கொண்டிருந்தான் அந்த வாலிபன். அவன் செல்வதற்கு வழி செய்துகொண்டு முன்னால் இருவர் சென்றனர். பின்னாலும் வில்லும் வேலும் ஏந்திய வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். தாரகைகள் புடைதழப் பவனி செல்லும் வான்மதி போல் வீரர்கள் மத்தியில் ஏறுநடை போட்டு நடந்து கொண்டிருந்தான் அவன்.
திரண்ட புயங்களும், பரந்த மார்பும், பால் வடியும் முகமும் - அவன் வீரன் மட்டுமல்ல; அழகன் என்பதையும் பறை சாற்றிக் கொண்டிருந்தன. அவன் வேறு யாருமல்ல; பாண்டவர்களிலே வீமனுக்கு இளையவனான அர்ச்சுனன்தான்.
காட்டினுாடே அவன் கண்கள் நீண்ட தூரம் பிரயாணம் செய்தன. வேட்டையாடுவதில் அவ்வளவு அக்கறை அவனுக்கு. வேங்கையைக் கூட விரட்டியடிக்கும் நாயொன்று எஜமானுக்கு உதவியாக அங்குமிங்கும் ஒடி ஒடி மோப்பம் பிடித்துத் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தது.
திடீரென்று ஒரு கண நேரம் காற்றிலே சுழல் ஏற்பட்டது. சிறிய வன விலங்குகள் அங்குமிங்கும் பாய்ந்தோடின. அர்ச்சுனனின் கரங்கள் ஒரே முறையில் வில்லையும் அம்பையும் பற்றின. வேட்டை நாய் ஒரு திசையை நோக்கிப் பாய்ந்து பாய்ந்து குரைத்தது. இந்தச் சூழ்நிலை ஒரு வனராஜனின் திடீர் வருகையால் ஏற்பட்டது.
சிங்க வேட்டையில் அர்ச்சுனன் திருப்தியடைந்தான். நெடுந்துரம் தொடர்ந்து செல்லவேண்டி ஏற்பட்டுவிட்டது. கூட வந்த வீரர்கள் அவனை
45

Page 92
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தார்கள். எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டனர். நாய் எங்கே?
சிங்கத்தையும் நேரே நின்றெதிர்க்கும் - பயமென்பதைக் கனவிலும் அறியாத - நாய் குற்றுயிரும் குறையுயிருமாகத் தள்ளாடி வந்து கொண்டி ருந்தது. நாய்க்கு நேர்ந்ததென்ன? அர்ச்சுனனின் கண்கள் கோபத்தால் சிவந்தன. வில்லின் நாணொலி எட்டுத்திக்கும் எதிரொலித்தது. சல்லடைக் கண்கள் போல் உடலெல்லாந் துளைக்கப்பட்டு பலாசமரம் போல் சோகமே உருவாய் எஜமான் முன் வந்து நிற்கும் நாயைக் கண்ட அர்ச்சுனனுக்கு ஆத்திரத்தோடு ஆச்சரியமும் ஏற்பட்டது. ஒரே பாணத் தில் பல துவாரங்களை உண்டுபண்ணும் வித்தையை நேற்றுத் தான் அவன் துரோணரிடம் கற்றிருந்தான். அந்த வித்தையை அவர் வேறு யாருக்காவது போதித்திருப்பாரா..?
சிந்தனைக் குவியலை விலக்கிக்கொண்டு நாயைத் தொடர்ந்து வேகமாய் நடந்தான். புல்லினாலும் அதன் இலை தழைகளாலும் வேயப் பட்ட ஒரு குடிசை முன்னே வில்லேந்திய ஒரு வீர வேடுவன் நின்று கொண்டிருந்தான். அர்ச்சுனனைக் கண்டதும் அவன் பயந்து நடுங்க வில்லை. அவன் கண்களிலே அலட்சிய பாவம் நிறைந்திருந்தது. நாயோடு வந்த அர்ச்சுனனைக் கண்டதும், அவன் ஏன் வந்திருக்கிறான் என்பதை ஏகலைவன் புரிந்துகொண்டான்.
"நீ யார்?” இடியோசை போல அர்ச்சுனன் தொண்டையிலிருந்து சொற்கள் புறப்பட்டன.
ஏகலைவன் உரக்கச் சிரித்தான். "நான் கேட்கவேண்டிய கேள்வியை நீ கேட்கிறாய். என் வீட்டு எல்லைக்குள் வந்த உன்னை நானல்லவர் நீ யார்?’ என்று கேட்க வேண்டும்?"
அர்ச்சுனன் பற்களை நறநறவென்று கடித்தான். கோபத்தோடு சொற்கள் தெறித்தன. "ஏய் வேடனே, உன்னோடு வார்த்தையாட நான் வரலில்லை. என் நாய்க்கு இக்கதி உன்னால்தான் ஏற்பட்டது. என் நாயைத் துன்புறுத்துவதற்கு உடந்தையாயிருந்த உன் வலக்கரத்தை இப்பொழுதே துண்டிக்கப் போகிறேன்.”
"ஏய் கர்வங்கொண்ட அர்ச்சுனா, என் கையைத் துண்டிக்கு முன் உன் கையைப் பத்திரப்படுத்திக்கொள்” ஏகலைவன் வாயிலிருந்து வசனங்கள் உஷணமாகவே புறப்பட்டன.
அர்ச்சுனன் வெகுண்டெழுந்தான். அம்பறாத்துணியில் இருந்த அம்பின் மேல் அவன் கை தாவியது. ஒரு கணம் சிந்தித்தான். பழைய சம்பவமொன்று அவன் ஞாபகத்திற்கு வந்தது.
பஞ்ச பாண்டவரும் வேறு சில அரசகுமாரர்களும் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அச்சமயம் பந்து கிணற்றுள் வீழ்ந்து
146

குருவின் சதி
விட்டது. கிணற்றைச் சுற்றி எல்லோரும் கூடிவிட்டார்கள். பந்தை வெளியே எடுக்க அவர்கட்கு ஒரு வழியும் தோன்றவில்லை. அச்சமயம் அவ்வழியே வந்த ஒரு கறுத்த பிராமணர் அவர்களண்டை வந்து விஷயத்தை அறிந்து உரக்கச் சிரித்தார். எல்லோரும் பிராமணர் பக்கம் திரும்பினார்கள்.
"ராஜகுமாரர்களே! உங்களால் எடுக்கமுடியாத பந்தை நான் எடுக்கிறேன், பாருங்கள்” என்று கூறி ஒரு குச்சியை எடுத்துக் கிணற்றுள் போட்டார். அது போய்ப் பந்தைப் பற்றிக் கொண்டது. வேறு சில குச்சி களையும் உள்ளே போட்டார். ஒவ்வொன்றும் ஒன்றையொன்று பற்றிக் கொண்டது. பந்தை எடுத்து வெளியே போட்டார் அந்தப் பிராமணர். திடீரென்று அப்பிராமணர்மேல் அவர்கட்குப் பக்தி ஏற்பட்டுவிட்டது. முன்பிருந்த குறும்புத்தனம் இப்பொழுது மறைந்து விட்டது. இச் சம்பவத்தை அவர்கள் போய்ப் பிதாமகரிடம் கூறியபோதுதான் அப் பிராமணர் வேறு யாருமல்ல, தனுர்வேதத்தின் கரையைக் கண்ட வீரர் துரோணர் என்பது தெரிய வந்தது. முதன்முதலில் அவரைக் கண்ட போது பாண்டவர்கள் கிண்டல் செய்து கேலிக் கூத்தடித்தார்கள். பின் அவரையே தங்கள் குருவாக ஏற்றுப் பக்தி செலுத்தினார்கள்.
இச்சம்பவம் அர்ச்சுனன் நினைவுக்கு வந்ததும் அவன் மூளை குழம்பியது. இந்த வேடன் யார்? நேற்றுத் துரோணாச்சாரியாரிடம் கற்ற வித்தை இவனுக்குத் தெரிந்திருக்கிறதே! இவனைச் சாமானியமாய் கருதிப் போர் தொடுத்து அவமானப்படும்படி ஏற்பட்டு விடுமா?
இந்த நினைவு அவன் கோபத்தைக் கொஞ்சம் குறைத்தது. ஆனாலும், சுயகெளரவத்தை விட்டுக்கொடுக்காமல் சற்று உரமாகவே பேசினான். நிறுத்து உன் அதிகப்பிரசங்கித்தனத்தை எதற்காக என் நாய்மீது பாணந் தொடுத்தாய்!”
"அப்படிக் கேள். விஷயத்தை விட்டுவிட்டு வீண்வார்த்தையில் நேரத்தை விரயஞ் செய்வானேன்? அதோ பார்; நான் பக்தியோடு பூஜித்து வரும் என் குருவின் சிலையை, உன் நாய் அதனை அசுத்தப் படுத்திவிட்டது. அதன் பயனை அது அனுபவித்துத்தானே ஆக வேண்டும்!”
திரும்பிப் பார்த்த அர்ச்சுனன் தூரத்தே சிலையைக் கண்டு வியப் படைந்தான். "துரோணாச்சாரியாருடைய சிலையல்லவா அது! அவரா உன்னுடைய குரு”
துவேஷச் சிரிப்பொன்று ஏகலைவன் உதட்டிலிருந்து வெடித்தது. அவன் கூறினான்: “இராஜகுமாரர்கட்கு மட்டும் வில்வித்தை பயிற்றும் துரோணருக்கு உயிருண்டு. என் குருவுக்கு உயிரில்லை. ஆனால் என்னோடு பேசுவார்; எனக்குத் தெரியாததைச் சொல்லித் தருவார். நீ வேடன்; தனுர் வேதத்தைப் போதிக்க மாட்டேன்’ என்று உயிருள்ள
47

Page 93
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
துரோணர் கூறுவது போல் இவர் கூறமாட்டார். அப்படியான என் ஆதர்ச குருவை உன் நாய் அசுத்தப்படுத்திவிட்டால் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியுமா?”
“பகுத்தறிவில்லாத - வாயில்லாத ஒரு பிராணியைத் தண்டிப்பது தான் உன் தருமமோ?”
“காட்டில் வேட்டையாட வந்திருக்கும் நீ எனக்குத் தருமத்தைப் போதிக்கிறாயே! ஆச்சரியந்தான்.”
"குடிகளையும் பயிர்களையும் அழிக்கும் விலங்குகளை வதைப்பதே இராஜதருமம் என்பதை நீ எங்கே அறியப்போகிறாய்?”
"அழிக்கும் என்ற பதத்தை உபயோகிக்காமல் உணவு தேடிச் செல்லும் விலங்குகளை' என்று திருத்திக்கொண்டால் இராஜதருமத்தின் பெருமை தெரியும் மேலும், நாங்கள் வேடர்; மிருகங்களைக் கொன்று சீவிப்பதே எங்கள் பாரம்பரியத் தொழில். வேடனாகிய எனக்கு ஒரு நாயை இம்சிப்பது அசாதாரணமல்ல.”
米 米 米
அர்ச்சுனன் நாடு திரும்பும்போது அவன் இதயம் கனத்துக் கொண்டிருந்தது. வில்லேந்திய வேடனின் உருவம் அடிக்கடி அவன்முன் தோன்றிக் கொண்டிருந்தது. தனக்கு நிகரான - தன்னிலும் மேம்பட்ட ஒரு வீரன் தன் குருவையே மானசீகமாய், ஆதர்ச குருவாய்க் கொண்டி ருக்கிறான் என்ற நினைவு அவன் இதயத்தை விஷப்புழுவாய் அரித்துக் கொண்டிருந்தது. "சீ பண்பாடுள்ள ஒரு வீரன் பொறாமை உணர்ச்சிக்கு இடம் கொடுக்கலாமா?’ என்று ஒரு கணம் வெட்கினான்.
'இல்லை; அவன் அழியத்தான் வேண்டும் அல்லது என் உயிரையே நான் மாய்த்துக்கொள்ள வேண்டும். சீ, பேடியைப் போல் தற்கொலை செய்வதா? ஆகா, அருமையான சந்தர்ப்பத்தை இழந்துவிட்டேனே! அந்த வாயாடிக்கார வேடனோடு வாயாற் பேசாமல் பாணங்களாலே பேசியிருக்கலாமே, ஒன்று அவனை ஒழித்துக் கட்டியிருக்கலாம். அல்லது அவன் கையால் மாண்டிருக்கலாம்.'
"சீ இது என்ன நினைவு. சதிகாரர்களான துரியோதனாதியர்களிடம் என் சகோதரர்களைத் தவிக்க விட்டுவிட்டு நான் இறக்க முடியுமா? எப்படியும் உயிர் வாழத்தான் வேண்டும் குமுறும் உள்ளத்தோடு நாட்டைப் போயடைந்தான் அர்ச்சுனன்.
வாடிய முகத்தோடு தலை குனிந்தபடி நிற்கும் அர்ச்சுனனைக் கண்டதும் ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று ஊகித்தார் துரோணர். ஆனால், தன் ஊகத்தை வெளிக்காட்டாமல் "என்ன அர்ச்சுனா, வேட்டைக்குச் சென்ற நீ உடனேயே திரும்பிவிட்டாயே! வேட்டை ஒருவித விக்கினமுமில்லாமல் நிறைவேறியதா?”
148

குருவின் சதி
"ஆம் குருவே. ஆனால், தங்கள் சிஷயன் ஏகலைவன் என் நாயை இம்சித்ததுமல்லாமல் என்னையும் அவமானப்படுத்திவிட்டான்."
“என் சிஷயனா?. ஏகலைவனா?. அவன் எந்த நாட்டு மன்னன்?”
"அவன் எந்த நாட்டு மன்னனுமல்ல; வனவிலங்குகளிடையே தன் வீரத்தைக் காட்டும் ஒரு வேடன்”
"வேடனா என் சிஷயன்? ஆச்சரியமாயிருக்கிறதே! அல்லாமலும் ஒரு வேடனிடம் நீ அவமானமடைந்தாயே! நீ வீரனாயிற்றே; ஒரு பாணத்தால் அவன் தலையைக் கொய்திருக்கலாமே.”
அர்ச்சுனனுக்கு அவமானம் தாங்கமுடியவில்லை. பதில் கூறாமல் குன்றிப்போய் நின்றான்.
"அர்ச்சுனா, ஏன் பேசாமல் நிற்கிறாய்? நான் அரசகுமாரர்களைத் தவிர வேறு யாருக்கும் வில்வித்தை பயிற்றுவதில்லை என்பது உனக்குத் தெரியாதா?”
"தெரியும் குருவே. இந்த வேடன் ஏகலைவன் முன் ஒரு சமயம் தங்களிடம் வில்வித்தை பயில வந்தானாம்; தாங்கள் மறுத்து விட்டத னால் தங்களைப் போன்ற ஒரு சிலையைச் செய்து அதனிடம் அவன் வில்வித்தை பயின்று வருகின்றான். தங்களிடம் நான் பயின்ற வித்தை யெல்லாம் அவனுக்குத் தெரியும். தாங்கள் கடைசியாக எனக்குக் கற்றுக் கொடுத்த புது வித்தையைக்கூட அவன் தெரிந்து வைத்திருக்கிறான்.”
துரோணரின் உள்ளம் பூரிப்படைந்தது. "ஆஹா! நம்பவே முடிய வில்லையே; அவன் குருபக்தியை என்னென்று சொல்வது!”
அர்ச்சுனன் குரோதத்தோடு ஆச்சாரியாரைப் பார்த்தான். அவர் மகிழ்ச்சி அவன் இதயத்தை வாள்கொண்டு அறுத்தது. மோனநிலையில் உட்கார்ந்திருந்த துரோணரிடம் அவன் கூறினான்: “குருவே, என்னை அவமதித்தவனைத் தண்டிப்பதற்குத் தாங்கள்தான் ஒரு வழி வகுத்துத் தரவேண்டும்.”
"அர்ச்சுனா, வீரர்களுக்குரிய தர்ம வழியைத்தான் நீ கடைப்பிடிக்க வேண்டும். உனக்கும் அவனுக்கும் இடையேதான் பூசல் உண்டாகி இருக்கிறது. ஆகையால் நீயே அவனோடு போர் தொடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயித்துக்கொள்ள வேண்டியதுதான். அவனோடு எந்த நியாயப்படி நான் போர் தொடுக்க முடியும்? மேலும், உன்னைப் போல என்னையே தன் குருவாக அவன் கொண்டிருக்கிறான். நீ நியாயம் தெரிந்தவன்; சிந்தித்துப்பார்."
"குருவே, ஏகலைவனோடு போர் தொடுக்க நான் கொஞ்சமும் அஞ்சவில்லை. ஆனால், அவன் தனுர்வேதத்தின் கரைகண்ட நிபுணனா கக் காணப்படுகிறான். போர் தொடங்கினால் வெற்றி தோல்வி யார்
149

Page 94
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
பங்கென்று சொல்ல முடியாது. போரிலே நான் மாண்டால் என் சகோதரர்கள் கதி என்னவாகும்? என்னை நம்பியல்லவோ அவர்கள் துரியோதனர்களுடைய பகைமையை பொருட்படுத்தாமல் இருக்கிறார். கள்! வருங்காலத்தை உத்தேசித்துப் பாருங்கள்; என் உயிரின் முக்கியத் துவம் தெரியும். கர்ணனை எதிர்க்க என்னைத் தவிர என் சகோதரர்களில் வேறு யாருக்கும் முடியாதென்று தாங்களே பலமுறை கூறவில்லையா?”
"ஏதாவது சதி செய்து ஏகலைவனை அழித்துவிடலாம் என்று எண்ணுகிறாயா? அவ்வித பேடித்தனமான எண்ணமும் வீரனாகிய உன் உள்ளத்தில் தோன்றுகின்றதா?”
"குருவே! என்னைப் பேடி என்று மட்டுமல்ல; வேறு எது வேண்டு மானாலும் சொல்லுங்கள், ஏகலைவன் நினைவு என்னுள்ளத்தில் பெரும் பாரமாய் அழுத்துகிறது. என் உள்ளத்தில் தோன்றும் யோசனையை நான் சொல்லத்தான் போகிறேன்; அதற்காக என்னை மன்னியுங்கள்”
"சொல், அர்ச்சுனா சொல். பொறாமை என்ற விஷப் பூண்டு சில சமயங்களில் பண்பட்ட உள்ளத் தரையிலேகூட முளைத்து விடுகிறது. வேரூன்றி வளர்ந்துவிட்டால் அதைப் பிடுங்கி எறிவது மிகக் கடினந்தான்”
"சுவாமி, நியாயம் எது, அநியாயம் எது என்பதை ஆராயும் நிலை யில் இப்பொழுது நான் இல்லை. என் உள்ளத்தில் உதித்த யோசனை யைக் கூறுகிறேன். அவன் குருவாகக் கொண்டது தங்கள் உருவச்சிலை யையானாலும், அவனிடம் குருதட்சணை பெறும் உரிமை உங்கட்கு உண்டல்லவா?”
"அட பாவி, ஏகலைவனிடம் அவன் உயிரைத் தட்சணையாகக் கேட்கச் சொல்கிறாயா? உனக்கு இதயம் இல்லையா?”
அர்ச்சுனன் ஒருகணம் துணுக்குற்றான். அவன் மனத்தில் எண்ணியதை துரோணர் அப்படியே படம் பிடித்துக் கூறிவிட்டார். அதோடு துரோணருடைய முகபாவம் அந்தச் சதிச் செயலுக்கு ஒரு போதும் அவர் உடன்படமாட்டார் என்பதை எடுத்துக்காட்டியது. ஆகவே, தன் எண்ணத்தை மாற்றி ஒரு சிறு திருத்தம் செய்தான்.
"குருவே, ஏகலைவன் உயிரை குருதட்சணையாகக் கேட்கும்படி நான் கூறவில்லையே! அவனது வலது கைப் பெருவிரலை.”
அர்ச்சுனன் வசனத்தை முடிக்கவில்லை. துரோணர் அவனை அருவருப்போடு பார்த்துக்கொண்டே கூறினார்:
"வலதுகைப் பெருவிரலைக்காட்டிலும் அவன் உயிரையே கேட்பது மேல் என்பது உனக்குத் தெரியவில்லையா? வில்லையும், அம்பையும் சீவியமாகக் கொண்டுள்ள ஒரு வனவேடனின் விரலைத் துண்டித்துவிட்ட பின், அவன் வாழ்வுதான் ஏது? இதைவிட அவனுக்குச் செய்யக்கூடிய அநியாயம் வேறு என்னதான் இருக்கிறது?”
150

குருவின் சதி
C
குருவே! ஏற்கனவே ஏகலைவன் எனக்கு எதிரியாகிவிட்டான். ஒரு சமயம் துரியோதனர்களோடு எங்கட்கு யுத்தம் ஏற்பட்டால் அவன் எங்கள் எதிரிகள் பக்கம் சேர்ந்து தன் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளத் தெண்டிப்பான். எதிரிகள் பக்கம் வலுவடையாமற் செய்வதற்கு எந்தவித உபாயத்தையும் கையாளலாம் என்பது உங்கட்குத் தெரியாதா?”
"ஆனால் அர்ச்சுனா! போர் தொடங்குங்காலை உங்கள் எதிரிகள் பக்கம் சேரக்கூடாதென்றும் உங்கள் பக்கமே நின்று போர் புரிய வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்து, அந்த நிபந்தனையையே ஏகலைவனிடம் குருதட்சணையாகப் பெற்றுக்கொண்டால் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிடும் அல்லவா?”
"குருவே! சமயமும் சந்தர்ப்பமும் மனிதனை மாற்றிவிடும். இப்பொழுது இந்த நிபந்தனைக்குக் கட்டுப்படும் ஏகலைவன் பின் எப்படி எப்படி மாறுவிடுவானோ யார் கண்டது? குருதட்சணையாக அவன் பெருவிரலையே தாங்கள் பெறவேண்டும். இல்லையேல், தங்கள் பாதத்திலேயே என் பிராணனை விட்டுவிடுகிறேன்”
அர்ச்சுனனை தூக்கி நிறுத்திய ஆச்சாரியாரின் உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது. "தெய்வமே! என்னைச் சோதிக்கிறாயா?” என்று அவர் உதடுகள் அசைந்தன. மனதை உறுதிப்படுத்திக்கொண்டு விசையான வாகனத்தில் ஏறி அர்ச்சுனனோடு புறப்பட்டார்.
米林 米
அன்றலர்ந்த புஷபங்களோடு குருவுக்குப் பூஜை செய்யச் சென்ற ஏகலைவன் சிலைக்கு முன்னாலிருந்த மான் தோலில் உட்கார்ந்தான். அன்று அவன் மனத்தில் நிம்மதியில்லை. ஏனோ அவன் மனம் சங்கடப் பட்டுக்கொண்டிருந்தது. கூப்பிய கரங்களோடு சிலையை உற்றுப் பார்த்தான். அவன் கண்களிலே இலேசாக நீர் துளித்திருந்தது. ஏகலைவன் பதட்டத்தோடு "குருவே! இது என்ன விபரீதம்? நான் என்ன அபராதம் செய்தேன்?" என்று கதறினான். துளித்திருந்த நீர், 'பொலுபொலுவென்று பெருகியது. அவனால் சகிக்க முடியவில்லை. "குருவே!" என்று வாய்விட்டு அலறிவிட்டான்.
"ஏகலைவா” என்று சோகமான ஒரு குரல் எங்கிருந்தோ வந்து அவன் செவிகளில் ஒலித்தது.
"சுவாமி” என்றான், அது தன் குருவின் குரல் என்று நிச்சமாக நம்பிய ஏகலைவன்.
"ஏகலைவா! உன் குரு உனக்குச் சதி செய்கிறேன்; ஏகலைவா! உன்னிடம் தட்சணை கேட்கிறேன். தட்சணை கேட்க நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறேன்."
151

Page 95
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
“என் குருவே! இதற்காகவா கண்ணிர் வடிக்கிறீர்கள்? இதோ என் உயிரையே தங்கள் பாதத்தில் தட்சணையாய் வைக்கட்டுமா?”
'ஏகலைவா, உன் குருபக்திக்கு ஈடு இணை இந்த மூவுலகிலும் எதுவுமே கிடையாது. என் அருமை சிஷ்யனே! உன் வலது கைப் பெருவிரலை எனக்குத் தட்சணையாகக் கொடுப்பாயா?”
“கொடுப்பாயா? என்று கேட்கிறீர்களே பிரபு என்மீது சந்தேகம் ஏற்பட நான் என்ன அபராதம் செய்தேன்? இதோ இப்பொழுதே தட்சணை தருகிறேன்.”
உள்ளே எழுந்து சென்று கூரிய கத்தியுடன் வந்தான் ஏகலைவன். வில்லையும் அம்புகளையும் கொண்டு வந்து குருவின் சிலைக்கு முன்னால் வைத்தான். தானும் குருவுக்கு முன்னால் உட்கார்ந்தான். கண்களை மூடியபடி ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தான்.
அதே சமயத்தில் துரோணரும், அர்ச்சுனனும் வந்து சேர்ந்தார்கள். சிலையின் முன்னால் தியானத்தில் ஆழ்ந்துபோயிருக்கும் ஏகலைவன், தன் பின்னால் இவர்கள் நிற்பதை எப்படி உணரமுடியும்? அவன் தியானம் கலைந்து எழுந்திருக்கும்வரை இருவரும் பொறுத்திருந்தார் கள், ஏகலைவன் கண் விழித்தான். கத்தி அவன் கையிலிருந்தது.
"தனுர் வேதத்தைக் குறைவில்லாமல் போதித்த என் குருவே இதோ உங்கள் சிஷயன் மனமுவந்து அளிக்கும் தட்சணை.” М மலர்ந்த முகத்தோடு நறுக்கென்று தன் வலதுகைப் பெருவிரலைத் துண்டித்துச் சிலையின் பாதத்தில் சமர்ப்பித்தான் ஏகலைவன். வானத்திலே இடியிடித்தது. புயல் வீசிக் காட்டு மரங்களை வேரோடு பெயர்த்துப் பிரளய காலமோவென்று ஐயுறும்படி செய்தது. காது செவிடு படும்படி ஏற்பட்ட ஏதோ சத்தத்தைக் கேட்டுச் சிலையைப் பார்த்தான் ஏகலைவன். சிலையின் மார்பு வெடித்துத் துண்டு துண்டாகக் கீழே சொரிந்தது. வெடித்த மார்புக்குள்ளே இதயத்தைக் கண்டான். இதயத்தி லிருந்து பெருகும் இரத்தத்தைக் கண்டான் ஏகலைவன். "ஐயோ குருவே" என்று அலறியபடியே மூர்ச்சித்து வீழ்ந்தான்.
“இப்போது உனக்குத் திருப்திதானே!” என்றார் அர்ச்சுனனைப் பார்த்து. ஆச்சாரியாரின் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விக்கி விக்கி அழுதான் அர்ச்சுனன். அவனால் வாய் திறந்து ஒரு வசனம் கூடப் பேசமுடியவில்லை.
"ஆனந்தன்” 1954
152

賽 மறுமலர்ச்சி சஞ்சிகை மூலம் எழுத்துலகிற்கு வந்தவர் கு. பெரியதம்பி புலோலியைச் சேர்ந்தவர். பத்துச் சிறுகதைகள் வரையில் எழுதியுள்ளார். அவை கனதியானவை. மறுமலர்ச்சி’ சிறுகதைத் தொகுதியில் இவரது இரு சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன.
மனமாற்றம்
கு.பெரியதம்பி
“பெண் படித்தவள், அழகானவள், நாகரிகமானவள், நிரம்பச் சீதனமுண்டு” என்று அவர் கூறினார். அதைக்கேட்டு அவன், இரை கிடையாமல் அவஸ்தைப்பட்ட நரி உயரத்திலே கிடந்த திராட்சைக் குலையைக் கண்டு வாயூறியது போல அங்கலாய்த்தான். தனக்குச் சீதனம் பிரதானமல்ல. அழகும் நாகரிகமும் இருந்துவிட்டாலே போது மென்று முருகேசு எண்ணியிருந்தான். சீதனமுங் கிடைத்தால் யார் வேண்டாமென்று சொல்லுவார்கள்! அவனுக்கு ஒரே ஆனந்தம்.
இந்தக் கல்யாணம் தப்பிவிட்டால் அவன்பாடு அதோ கதிதான். வேறு யார் அவனுக்கு மணம் பேசுவது? தாய் தந்தையர் வள்ளியம்மையை முடித்தாற் சரி, அல்லது அவளுக்கு எங்கேயாவது கல்யாணம் ஆகும்வரை உனக்கு வேறு பெண்ணைக் கட்டிதர முடியாது’ என்று கூறிவிட்டார்கள். வள்ளியம்மை அவனது மைத்துனி அந்தப் பெயரைக் கேட்கவே முருகேசுவுக்கு மிக வெறுப்பாயிருந்தது. லீலா, நீலா, புஷபம், ராணி என்றெல்லாம் இரண்டு மூன்று எழுத்தில் அழகான பெயர்கள் இருக்கும்போது இதென்ன பெயர்! அம்மையைத் தள்ளி விட்டுச் சுருக்கமாக அழைத்தால், "வள்ளி’ என்றுதான் அழைக்க வேண்டும். அவனுக்கு ஒரே அருவருப்பாக இருந்தது.
படிப்புக் குறைவு. அழகும் மட்டம். நாகரிகமே அறியாத பட்டிக் காட்டுப் பெண். அவளைக் கல்யாணம் முடித்துப் பட்டினத்துக்கு அழைத்துச் சென்றால் அங்கே கதிரையில் உட்கார்ந்து கொள்ளவே
153

Page 96
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
அவளுக்குத் தெரியாது. ஆடவர்களைக் கண்டால் ஓடி ஒளிந்து விடக் கூடும். நித்திய பிரம்மச்சாரியாக இருந்து வாழ்க்கையை அனுபவியாது இறந்து விட்டாலும் காரியமில்லை; அந்த வள்ளியம்மையை மட்டும் மணப்பது இல்லை’ என்று அவன் தீர்மானித்து விட்டான். பட்டணத்திலே அரைக்குக் கீழே இறங்கியதும் இறங்காததுமான சட்டை அணிந்த பள்ளிக்கூடப் பெண்கள் இரட்டைப் பின்னலைச் சிலுப்பி மாறிமாறித் தோள்மீது எறிந்து நடக்கும் காட்சியைப் பார்த்துப் பார்த்து அவன் நன்கு நயத்திருக்கிறான். நடு மார்பை மாத்திரம் மறைத்துத் தாவணியணியும் நாரீமணிகள் உயர்ந்த குதிச்செருப்பிலே சறுக்கிச் செல்வதைக் கண்டு மனதைப் பறிகொடுத்து, 'இதுதானோ அந்த அன்னநடை' என்று இன்னுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். இந்தக் காட்சிகளையெல் லாம் கண்ட கண்ணுக்கு வள்ளியம்மை பொலிவாக இருக்கவில்லை. உலகிலே இப்படியாக மினுக்கித் தளுக்கி ஒயிலாய் நடக்கும் சிங்காரிகள் எத்தனையோ பேரிருக்க அவன் இந்த வள்ளியம்மையையா மணந்து கொள்ள வேண்டும்!
இத்தனைக்கெல்லாம் அவன் ஏதோ பிரபு வீட்டுச் சுகுமாரனல்ல. நாகரிகத்திலே பிறந்து நாகரிகத்திலே சுழியோடி முக்குளித்தவனல்ல. அசல் நாட்டவன். பட்டிக்காட்டுத் தாய்க்கும் தந்தைக்கும் புத்திரனாகப் பூமிப்பிரவேசஞ் செய்தவன். பாவம், அப்படியாகப் பிறந்ததற்காக இன்று அவனுக்கிருக்கும் மனவருத்தம்! அது அவனுக்கும் அவனைப் படைத்த அந்த ஆண்டவனுக்குந்தான் தெரியும். தந்தை இன்னமும் அந்தச் செம்பாட்டுக்காவி ஊன்றித் தடித்த நாலுமுழ வேட்டியை முழங்காலுக்கு மேலே கட்டிக்கொண்டிருந்தார். பறட்டைத் தலை; மயிர் நிரம்பிய பொலிவற்ற முகம்; வெய்யிலிலே காய்ந்து கறுத்த மேனி; இவை இன்னு மின்னும் பெருகினவேயன்றிக் குறைந்தபாடில்லை.
"அம்மா, நீகுறுக்கே கட்டுவதை நிறுத்திவிட்டு இனிமேல் இறவுக்கை யும் மாறாடியும் போடம்மா” என்று சொல்லிப் பார்த்தான். "இதுவரையு மில்லையாம். இந்தக் கிழட்டுக்கு இனி ஏனடா அதெல்லாம்” என்று அவள் மறுத்துவிட்டாள். இந்தப் பட்டிக்காட்டுச் சவங்களைத் தன் தோழர் கண்டுவிட்டால் தன் கெளரவத்திற்கு இழுக்கு வந்துவிடும் என்று அஞ்சி யதால் நண்பர்களை அவன் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வதில்லை.
அவன் முதன்முதல் கொழும்பிற்குச் சென்றபோது நடந்த நிகழ்ச்சி களை எல்லாம் இப்போது மறந்துவிட்டான். "யாழ்ப்பாணத்தில் இருந்து எப்போ வந்தது' என்று சிங்கள வாலிபர்கள் ஆங்கிலத்திலே கேட்டு நகைத்தார்கள். கண்டால் தெரியாதா கம்பளி ஆட்டு மயிரை அசல் நாட்டவன் என்று அப்படியே தெரிந்தது. சப்பாத்துக்காலை இழுத்திழுத்து நடந்தபோது நண்பர்கள் செய்த ஏளனந் தாங்காது ஒரே ஒரு நாள் மாத்திரம் அழுதிருக்கிறான்.
米 来 水
154

மன மாற்றம்
அதெல்லாம் இப்போது அவன் நினைவில் இல்லை. அவன் பெரிய நகரவாசி. நாகரிகம் நன்றாய்ப் பிடிபட்டுவிட்டது. அப்பட்டணவாசி முருகேசுவுக்கு இந்தப் பெரியவர் பேசிய பெண், வாழ்க்கைத் துணைவி யாக வந்துவிட்டால் பட்டிக்காட்டிலிருந்து விலகி முற்றாகவே நாகரிக உலகில் திளைத்து விடுவான். ஆம், அவன் மனம் அப்படித்தான் எண்ணியது.
இப்படி அழகான நாகரிகமான பெண்ணை மணம் பேசிய பெரிய வரைக் கண்டு ஆரம்பத்திலே அவன் வெறுப்புக்கொண்டான். அவரு டைய தோற்றம் தந்தையின் தோற்றம் போல நாட்டுப்புற மாதிரியிலே இருந்தது. இப்பொழுது நாட்டவரைக் கண்டால் அவனுக்கு ஒரே வெறுப்பு. ஆனால் அதைப் பெரியவர் கவனியாதது போல் அவனோடு பேச்சுக்கொடுத்தார். அவர் ஆரம்பத்தில் தம்பி, இது வெய்யிலல்ல, நெருப்பு என்று அகோரமான வெயிலை விஷயமாக எடுத்துக் கொண்டார்.
அவன் பதில் கூறாது வேறெங்கோ புலனைச் செலுத்தியிருப்பவன் போலப் பாசாங்கு செய்தான்.
“என்ன தம்பி, நான் சொல்லுவது சரியில்லையா?”
பதிலில்லை.
"ஏன் உமக்கு இந்த வெய்யில் குளிருகிறதா?”
இப்பொழுதும் பதிலில்லை.
பெரியவர் இலேசானவரல்ல. இவன் முந்தநாட் பிறந்தவன். இவனா அவரை அசட்டை செய்வது அவருக்கு இவனையும் தெரியும், இவனப்பனையும் தெரியும்.
y
"அது உம்முடை குற்றமில்லைத் தம்பி. இந்த வார்த்தைகளைக் கேட்டு மெல்ல அவரை நோக்கினான். ஆனால் அதற்கிடையில் அவர் கூறி முடித்துவிட்டார்:
c
a பருவக்கோளாறு, வெய்யில் குளிரும்; நிலவு சுடும்; அது இந்தப் பருவத்தின் இயல்பு."
அசடுவழிய அவரை நோக்கினான். "ஆமாம். அப்படித்தான்" என்று இன்னும் வலியுறுத்தினார். ஒரு கன்னத்தில் அடி விழுந்த அதிர்ச்சி நீங்குவதற்கிடையில் மறு கன்னத் திலும் அடி விழுந்தது போல இருந்தது அவனுக்கு.
"நீங்கள் கூறுவதைக் கவனிக்கவில்லை. மேலே இருந்த குருவியைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்” என்று சமாளிக்க முயன்றான். குரல் தளர்வாக இருந்தது.
155

Page 97
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
"குருவியிலே மனதைப் பறிகொடுக்கக்கூடிய பருவந்தான்” என்றார் குமாரர். w
இன்னுமின்னும் அவர் வார்த்தைகள் அவனைத் தாக்கி அதிர்ச்சி அடையும்படி செய்தன.
இது அந்தப் பெரியவர் குமாரருடைய இயல்பான சுபாவம். தலைக் கிறுக்குப் பிடித்த பேர்வழிகளை முதலில் தன் வாய்ச் சாதுரியத்தால் மடக்கிவிடுவார். பின்பு இயல்பாகவே பேசிக் காரியம் பார்ப்பார். அல்லா விட்டால் அவருக்கு வெற்றி கிட்டுவது அசாத்தியம்.
குமாரர் கீழிறங்கிப் பதமையாகப் பேசினார். முருகேசுவுக்கு நெஞ்சிலே சிறிது சிறிதாகத் தண்ணிர் வந்தது. அவனுடைய ஊர், பெயர், தொழில் இவற்றைப் பற்றி விசாரித்தார்.
அவனுடைய ஊரிலே இருக்கின்ற பெரிய மனிதர்களின் பெயர் களைக் கூறி அவர்களெல்லாம் தமக்குச் சிநேகிதம் என்றார். தம்முடைய மருமகனும் கிளாக் உத்தியோகத்தில் இருப்பதாகக் கூறிப் பெருமை கொண்டார்.
பேசிக்கொண்டிருக்கும்போது குமாரர் அவன் கையில் மோதிரம் இருக்கிறதா என்று பார்த்தார். நீ கல்யாணமானவனா? என்று கேட்க லாமோ என்றும் யோசித்தார். ஆனால் அப்படிக் கேட்கக்கூடாது' என்று அவர் மனம் கூறியது.
எதற்காக மூளையைப் போட்டு உடைக்க வேண்டும். வெற்றிலைப் பை இருக்கிறதே. அதை வெளியே எடுத்தார். தானும் வெற்றிலையைப் போட்டுக்கொண்டு அவனையும் போடும்படி நீட்டினார்.
"நான் போடுவதில்லை” என்றான்.
"ஒருநாளும்.”
“இல்லை”
"அப்படியானால் இன்னும் உமக்குக் கல்யாணமாகவில்லையா?”
"இல்லை” என்றான். 'இன்னும் என்றபோது அவர் சிறிது அழுத்த மாக உச்சரித்தார். அந்த அழுத்தம் அவன் நெஞ்சிலும் சென்று அழுத் தியது. அப்போது அவன் முகமிருண்டது. ஆனால் அதைக் கண்டு குமாரர் முகம் மலர்ந்த காட்சி அவனிடமிருந்த முகமலர்ச்சியும் இவரிடமேதான் வந்துவிட்டதோ என்று எண்ணும்படியாக இருந்தது. அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். புன்முறுவலை வெளித் தோன்றவிடாது அடக்கிவிட்டார்.
நீர் விவாகம் செய்த ஆள் என்று எண்ணினேன்” என்றார். அவன் துக்கம் இன்னும் அதிகரித்துவிட்டது. அது பெற்றோர்மீது ஆத்திரமாக
156

மன மாற்றம்
மாறியது. இதுகால வரையில் அவனுடைய உத்தியோகத்திற்கும் கெளரவத்திற்கும் தக்கதாக ஒரு பெண்ணை முடித்துக் கொடுக்க வில்லையே! 'வள்ளியம்மையாம் வள்ளியம்மை! அந்தச் சவத்தை
யாருக்கு வேணும்? அம்மானுக்கு முன்கூட்டி முடிவு சொல்லி விட்டால். யாரைக் கேட்டுச் சொன்னார்கள்? எனக்கா அவர்களுக்கா கல்யாணம்? என்னைக் கேளாது முடிவு சொல்ல இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இவற்றை யோசிக்கும்போது அவனுக்கு ஒரே சினமாக இருந்தது.
குமாரர் மெல்லக் குறுக்கு விசாரணையில் இறங்கினார். நீர் ஏன் இன்னும் விவாகம் செய்யவில்லை?” பதில்கூற அவனால் முடியவில்லை.
"கடனிருக்கிறதா?”
“இல்லை”
"கரை சேராத குமர். '၇#
“இல்லை”
இல்லை இல்லை என்று கூறுகிறானேயன்றிக் காரணத்தைக் கூறவில்லையே!
"உமக்கு விருப்பமற்ற இடத்திலே மச்சாள் கிச்சாள்."
"ஓ, அந்தத் தொல்லைதான்” என்று ஓய்ந்த குரலிலே கூறினான் முருகேசன்
"இது பெரிய அநியாயந்தான்” என்றார் குமாரர். தொடர்ந்து "அவனவன் விருப்பத்திற்கு மணக்க விடவேண்டும். பெற்றார் இதிலே தலையிடுவது தவறு" என்றார்.
அப்போது அவன் நோக்கிய நோக்கு முற்றுஞ் சரி என்று கூறுவது போல இருந்தது.
"நான் அவளை முடிக்கப் போவதில்லை” என்றான் அவன்.
"ஏன் அழகில்லையா? பணமில்லையா?. நீர் விரும்பாததற்குக் காரணம் என்ன?”
"அழகும் பணமும்! சுத்தப் பட்டிக்காடு."
"அவனவன் உத்தியோகத்திற்குத் தக்கதாக நாகரிகமான பெண் வேண்டும். நீர் சொல்வது நியாயமே" என்றார் குமாரர்.
"நான் இறந்தாலும் அவளை முடிக்கப் போவதில்லை" என்றான் அவன்.
157

Page 98
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
"அப்படியானால் விவாகஞ் செய்யாமலிருக்கப் போகிறீரா?”
“ஏதோ பார்ப்போம்.”
“சரி தம்பி, நான் உமக்கு ஒரு கல்யாணம் பேசட்டுமா?” என்று குமாரர் கேட்டார். அவர் கேட்ட தொனியில் அவன் நிலைமைக்கு இரங்கிப் பரோபகார சிந்தையுடன் அதை ஒழுங்கு செய்து கொடுக்க முயல்வதாகவே தோன்றியது.
அவன் யோசித்தான்.
“ஏன் யோசிக்கிறீர்? உமது கஷடத்தைப் பார்த்துத்தான் கூறுகிறேன். இங்கிலீஷ் நிரம்பப் படித்த பெண். அழகானவள். உமக்காகத்தான் ஒழுங்கு செய்வதாகக் கூறினேன். விரும்பாவிட்டால் விடும். எனக் கென்ன?”
வேண்டாம்' என்று கூற அவன் மனம் துணியவில்லை. எப்படித் துணியும்? அவர் மேலும் கூறினார்; பெற்றாருக்கு ஒரே பெண்.
இப்பொழுது காசாகப் பதினையாயிரம் கொடுப்பார்கள். சொத்து வேறே.
மீதி ஏதாவது இருந்தால் அதுவும் அவளுக்குத்தான்!”
“யாருடைய மகள்?” என்று அலட்சியமாகக் கேட்டான்.
“மாலியூர்ச் சரவணமுத்தருடைய பெண். அவளை முடிக்கப் பலர் விரும்புகிறார்கள். ஆனால் நான் உமக்குச் செய்து தந்தால் நல்லது என்று எண்ணுகிறேன். நீர் கஷடப்படுகிறீர். நல்லவராயுமிருக்கிறீர்.”
சிறிது சிறிதாக அவன் முகம் மலர்ச்சியடைந்து வந்தபோதிலும் தன் விருப்பத்தை இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை.
"தம்பி, நீர் யோசிக்க வேண்டாம். ஏதோ அந்தப் பெண் உமக்குக் கிடைப்பதாக இருந்தால் உமது பூர்வ புண்ணியந்தான். வயலின் கூட வாசிப்பாள். வாய்ப்பாட்டு - அது கேட்கவேண்டியதில்லை. தங்கக் கிளியாட்டம். பார்த்துக்கொண்டிருந்தாலே பசி தீர்ந்துவிடும்.”
அவனுடைய முகமலர்ச்சியைக் கொண்டே அவன் விரும்புகிறான் என்பதை அவர் அறிந்து கொண்டார்.
“பெண்ணின் பெயர் என்ன?” என்று அவன் கேட்டான். ஏதாவது வள்ளியம்மை கிள்ளியம்மையாக இருந்தால். இந்தப் பெயரிலேயே எவ்வளவோ இருக்கிறதாம்!
"சீதாலகூடிமி” என்று அவர் சொன்னார்.
"சீதா என்று அழைக்கும்போது என்ன அழகாகவிருக்கும்! இதைச் செய்துகொண்டால் நல்லதுதான்’ என்ற முடிபிற்கு வந்துவிட்டான் முருகேசு. இதை விட்டுவிட்டு வேறென்ன செய்வான்? கண்ணடித்துக் காதல்கொண்டு கடிதமெழுதிக் கண்ணியிலே பட வைக்கும் தந்திரத்தைக்
158

மன மாற்றம்
கூடக் கையாண்டு பார்த்திருக்கிறான். அந்த வித்தையிலே வல்லவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்தான். ஆனால், அதிலே முருகேசு வுக்குச் சிறிதும் வெற்றி கிடைக்கவில்லை. அவமானம் நேர்ந்ததும் உண்டு. தானாகவே தனக்கொரு பெண்ணைத் தேடிக் கொள்ளுஞ் சக்தியும் தனக்கில்லை என்பதை அறிந்து விட்டான். குமாரர் பேசுமிந்த விவாகத்தையும் நழுவவிட்டால் பின்பு அதோகதிதான்.
"ஏன் தம்பி, விருப்பமா, இல்லையா? இல்லாவிட்டால் இல்லை என்று சொல்லும்” என்று கேட்டார் குமாரர்.
"விரும்பாமலென்ன?.” என்று அவன் கூறினான், கூறிய தொனி யில் ஏதோ மனக் கஷடமிருப்பதாகத் தெரிந்தது.
தாய் தகப்பனுக்குத் தெரியாமல் எங்கேயாவது மணஞ் செய்வது என்று தீர்மானித்த போதிலும், இப்போது அப்படியான ஒரு வசதி வந்த போது இதுகாலவரை இருந்த தீர்மானம் தளர்ந்துவிட்டது. பெற்றார் அறியாமல் தன் எண்ணப்படி எங்கேயாவது முடிப்பது பெரிய தவறு போலத் தோன்றிற்று. யோசித்தான்.
“என்ன? ஒளியாமற் சொல்லும். உமக்கிருக்கும் கஷடம் என்ன?” என்று குமாரர் கேட்டார்.
அவன் மனதிலுள்ளதைக் கூறினான்.
"இதெல்லாம் எனக்குப் பெரிய காரியமல்ல. அவர்கள் மனத்தைத்
திருப்பி ஆனந்தமாக இந்தக் கல்யாணத்தை முடித்துத் தருவேன். இதெல்லாம் எனக்குப் பெரிய காரியமல்ல."
அவர் நிமிர்ந்திருந்து இதைக் கூறினார். அவருக்கு அத்துணை திறமையுண்டு என்பதனையும் முருகேசு நம்பினான். அவனுடைய முகத்தில் மெல்ல மகிழ்ச்சிக்குறி தோன்றியது. அதைக் குமாரர் நன்கு கவனித்தார்.
"ஆனால் ஒரு விஷயம். அப்படி அவர்கள் மனதைத் திருப்பி இதை ஒழுங்கு செய்வதாக இருந்தால், இது இரண்டொரு நாளில் முடியக் கூடிய விஷயமல்ல. பல நாட் செல்லும். அதனால் என் தொழில் துறை கெட்டுவிடக்கூடும்” என்றவர் மேலும் சொன்னார்: "தம்பி நான் சொல்வது விளங்கிறதா? எனக்கு அதனால் வரக்கூடிய நஷடத்தை நீர் சரிக்கட்ட வேண்டும். குறைந்தது இருநூற்றைம்பதாவது தரவேண்டி இருக்கும்”
முருகேசுவுக்கு நெஞ்சிலே ஈட்டிகொண்டு தாக்கியதுபோல இருந்தது. இருநூற்றைம்பதென்றால் கொஞ்ச நஞ்சமா? அதனால் அவன் திகைப்படைந்தான்.
159

Page 99
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
- இந்தக் கல்யாணமே வேண்டாமென்றாற் பிழையில்லைப் போல இருந்தது. ஆனால் இதை விட்டால் அவனுக்கு வேறு கதியில்லையே! ஒரே கல்யாணப் பயித்தியத்தில் மூழ்கியிருக்கிறான், எப்படி அங்ங்னம் கூற மனம் வரும்?
"தொகை அதிகமாயிருக்கு” என்றான்.
"நான் பிள்ளை குட்டிக்காரன். என் தொழிலை விட்டு மினைக்கட வேணும். இருநூற்றைம்பது தந்தாலுமே போதாது. ஏதோ உமக்காக இப்படி ஒப்புக் கொள்கிறேன்” என்று அவர் இடம் வையாது பேசினார்.
அவன் "நூற்றைம்பது தரலாம்” என்றான். நூறு கேட்க என்று விரும்பியவன் பயத்தினால் நூற்றைம்பது என்றான்.
“இல்லைத் தம்பி எனக்குக் கட்டாது.”
9y
"இல்லை, அது போதும் பாருங்கோ.
அதிக நேரம் விவாதித்தனர். தனித்தனி ஒவ்வொருவரும் தமக்கு இருக்கக்கூடிய கஷடங்களைக் கூறினர். இறுதியிலே இருநூறுக்கு இருவரும் சம்மதித்தனர்.
“சரி, உம்முடைய வீட்டிற்கு எப்போது வர?” என்று குமாரர் கேட்டார்.
"நாளைக்கே வாருங்கோ. நான் விரைவிலே பயணம் போக வேண்டும்” என்றான்.
"சரி, நாளைக்குச் சரியாகப் பத்து மணிக்கு உம்முடைய வீட்டில் நிற்பேன். நீர் அங்கே காத்திருக்க வேண்டும். எல்லாம் வெற்றியாகும். இதெல்லாம் எனக்குப் பெரிய காரியமல்ல."
அவன் பத்து மணிக்கு அங்கே காத்து நிற்பதாகக் கூறினான்.
“சரி, தம்பி! நான் போய் வருகிறேன்.”
"நல்லது.”
சிறிது நேரம் இருவரும் மெளனமாக இருந்தனர். மறுபடியும் “சரி, தம்பி நான் வாறேன்" என்றார் குமாரர்.
"வாருங்கோ" என்றான் அவனும், ஆனால் அவர் போவதாகக் காணவில்லை. அவன் ஆச்சரியப்
பட்டான். அதற்கிடையில் நீர் பெண்ணைப் பார்க்க வேண்டாமா?” என்று மறுபடி தொடங்கினார்.
“முதலில் வீட்டுக்கு வாருங்கோ. அதெல்லாம் ஆறுதலாகப் பார்ப் போம்” என்றான் அவன். பெண்ணைப் பார்க்க அவனுக்கு விருப்பந்தான் என்றாலும் அப்போது அப்படிச் சொன்னான்.
160

மன மாற்றம்
சிறிது நேரம் தயங்கி நின்றுவிட்டு, 'தம்பி கையிலே காசிருந்தால் இருபத்தைந்து ரூபா தாரும். பின் அந்த இருநூற்றிலே கழித்து விடுகி றேன்” என்றார். அவனேன் அங்கே இருபத்தைத்து ரூபா கொண்டு வருகி றான்? “பத்து ரூபா மாத்திரம் இருக்கிறது” என்றான்.
"சரி, அதையாவது தாரும்” என்றார்.
அவன் 'மனிபாய்க்கை வெளியே எடுத்தான். அப்போது ஒரு வாலிபன் பைசிக்கிள் வண்டியில் அங்கே வந்து இறங்கினான்.
குமாரர். ஏதோ கூற உன்னுவதற்கிடையில் "உம்மிடம்தான் போய் வருகிறேன்” என்றான் மிடுக்காக அந்த வாலிபன்.
"ஏன், என்ன விசேஷம்?"
“எனக்கு அந்தப் பெண் வேண்டியதில்லை. நீர் சரியான ஏமாற்றுக் காரன்” என்றான் வாலிபன்.
முருகேசுவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “என்ன நீர் சொல்வது விளங்கவில்லை. அவசரப்படாமற் சொல்லும்”
எனறார குமாரர.
"நீர் நேற்றுக் காட்டிய பெண்தானா மணவறைக்கும் வரும்?"
"வேறென்ன!”
“சரி இருக்கட்டும். அந்தப் பெண் எனக்கு வேண்டியதில்லை. மரியா தையாகப் பணத்தைக் கொடுத்துவிடும்”
"ஏன்? எதற்காக?" "என்னை ஏமாற்றிவிட்டீர் நீர் பேசிய பெண் வேறு; நேற்றுக் காட்டிய பெண் வேறு”
உடனே குமாரர் மிகவும் கோபத்தோடு சொன்னார்: "எந்த மடையன் சொன்னான்? நான் அப்படியான அயோக்கியன் என்றா எண்ணுகின்றீர், நீர்! விளங்காமற் பேசுகிறீர்”
“இல்லை, நான் விளங்கித்தான் பேசுகின்றேன்" இருவரும் பலமாகப் பேசினர். கோபமும் மிஞ்சிக்கொண்டிருந்தது. நிலைமையைச் சமாளிப்பதற்காக முருகேசு இடையே குறுக்கிட்டபோது அந்த வாலிபன் சொன்னான்: "இவர் எனக்கு ஒரு கல்யாணம் பேசினார் பாரும். நேற்றுப் பெண் பார்க்கப் போனோம். ஒரு அழகான பெண்ணைக் காட்டினார். ஆனால், மணவறையில் வேறொரு மூளிப் பெண் வரும்"
“பொய்” என்றார் குமாரர்.
“உமக்கெப்படித் தெரியும்?” என்று வாலிபனிடம் முருகேசு கேட்டான்.
161

Page 100
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
“பேசின பெண்ணைத்தான் நான் காட்டினேன் தம்பி” என்று குமாரர் குறுக்கிட்டுக் கூறினார்.
"இல்லை. அந்த வீட்டிலே மூன்று பெண்கள்.” வாலிபன் ஆரம்பித்தான்.
என்று அந்த
குமாரர் அவனைச் சொல்லவிடாது தான் குறிக்கிட்டு “யார் சொன்னான்? நீர் சரியான புரட்டுக்காரனாயிருக்கு” என்றார்.
“யார் புரட்டுக்காரன், நானா? நீரா?” என்று கூறியபடி கைச் சட்டையைச் சுருக்கிக் கொண்டு அவரை நோக்கிப் பாயத் தயாரானான் அவன். முருகேசு அவனைப் பிடித்துக்கொண்டு "பெரியவர், கொஞ்சம் பொறுங்கோ! அவர் தன் நியாயத்தைக் கூறட்டும். பிறகு நீங்கள் சொல்ல லாம்” என்றான்.
அந்த வாலிபன் மீண்டும் கூறினான்: “பாரும் மிஸ்டர் அந்த வீட்டிலே மூன்று பெண். முதல் இரு பெண்களும் அழகில்லை. எத்தனையோ இடங்களில் மணம் பேசியும் எல்லோரும் மறுத்து விட்டார்கள். இறுதியில் இவர் ஒரு தழ்ச்சி செய்தார். மூத்த பெண் என்று கூறி மூன்றாவது பெண்ணைக் காட்டி, மூத்த பெண்ணைக் கட்டி அடித்துவிட்டார். நம்பி மோசம்போன அந்த மாப்பிள்ளை நாலு நாளிலே கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டான். அவன்தான் இந்த இரகசியத்தை என்னிடம் கூறினான். எனக்கு இரண்டாவது பெண்ணைப் பேசினார். ஆனால், காட்டப்பட்டது அந்த மூன்றாவது பெண்ணாம். இந்த லட்சணத்தில் என்னிடம் பெற்றாருக்கு இவள் ஒரேயொரு மகள் தான் என்றும் சொல்லியிருக்கிறார்.”
இவன் இதைக் கூறிக்கொண்டிருக்கும்போது குமாரர் இடையிடையே குறுக்கிட்டு, “பொய்", "புரட்டு”, “சுத்தப்பொய்” என்றெல்லாம் மறுத்துக் கொண்டிருந்தார். விஷயத்தைக் கேட்டு முடித்த முருகேசு, ஒரேயொரு பெண் என்று அவன் கூறிய வார்த்தையைக் கேட்டதும், “யாருடைய மகள்?” என்றான்.
“மாலியூர்ச் சரவணமுத்தருடைய மகளோ, யாரோவாம்!” என்றான் வாலிபன்.
முருகேசு ஆச்சரியப்பட்டான். "அந்தப் பெண் வேறு. உமக்குப் பேசியது வேறு" என்று குமாரர் அவசரமாகக் கூறினார்.
"சரவணமுத்தருடைய மகளைத்தானே எனக்கு இப்பொழுது பேசினிர்” என்று முருகேசு கேட்டேன்.
"எனக்கும் உமக்கும் என்றா எண்ணுகிறீர்? அகப்பட்ட இடமெல் லாம் வலைவீச வேண்டியதுதான். ஏதோ ஒன்று அகப்படும் என்பது அவருக்குத் தெரியும்” என்று வந்தவன் கூறினான்.
162

மன மாற்றம்
குமாரர் நிலத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார். "என்னுடைய காசு தருகிறீரா, என்ன?” என்று அந்த வாலிபன் முறைப்பாகக் கேட்டான்.
"உமக்குக் காட்டிய பெண்ணை முடித்துத் தந்தாற் சரிதானே!” என்று தயவாகக் கூறினார் குமாரர்.
"நீர் எங்கே சுழித்துவிடுகிறீரோ அதை யார் கண்டது? அந்தப் பெண்ணும் வேண்டாம். வேறு பெண்ணும் வேண்டாம். பணத்தைத் தந்துவிடும்.”
அப்போது றோட்டிலே பஸ்வண்டி ஒன்று வந்துகொண்டிருந்தது. "நான் இப்போது யாழ்ப்பாணம் போகிறேன். வீட்டிற்கு வாரும் தருகிறேன்” என்று கூறிக்கொண்டு எழுந்தார் தரகர். கிட்ட வந்த பஸ் யாரையோ இறக்குவதற்காகச் சிறிது தாமதித்தது. தருணத்தைத் தவற விடாது ஓடிப்போய் ஏறிக்கொண்டார் குமாரர்.
பஸ்வண்டி போய்விட்டது. ஏமாந்த வாலிபர் இருவரும் என்ன செய்வது என்று தெரியாது விழித்துக்கொண்டு நின்றார்கள். அந்த வாலிபன் பற்களைக் கடித்தான். அதற்குமேல் வேறென்ன செய்யமுடியும் அவனால்?
சிறிது மெளனம்.
"சரியான ஆசாமி” என்றான் அவன்.
“நல்ல காலம் தருணத்திலே நீர் வந்தது. அல்லாவிட்டால் நான் நிச்சயமாக அணாப்பப்பட்டிருப்பேன். . சீ! இதென்ன உலகம், எங்கே போனாலும் அணாப்பு!” என்றான் முருகேசு.
"ஒரு நாளும் தரகர்மாரை நம்பக்கூடாது" என்று ஒரு அநுபவ சித்தாந்தம் மற்றவனிடமிருந்து எழுந்தது.
"நீர் எவ்வளவு பணம் கொடுத்தீர்?" என்று முருகேசு கேட்டான்.
"அதையேன் கேட்கிறீர்! ஐம்பது ரூபா மண்ணாய்ப் போச்சு!” என்றான் அவன்.
இன்னும் சிறிது நேரம் அந்த அநுபவமற்ற வாலிபர் இருவரும் தங்களுக்கு இதிலே கிடைத்த அநுபவத்தைப் பற்றிப் பேசினார்கள். இறுதியிலே இருவரும் பிரிந்து சென்றார்கள். சுடலை ஞானம் வெளித்த முதியவர்களின் மனநிலையிலேயே அப்போது அவர்கள் மனநிலையும் இருந்தது. தரகர்மாரை நம்பினால் வாழ்க்கை முழுவதுமே திண்டாட வேண்டும் என்ற எண்ணம் உதயமாகிவிட்டது.
வழியிலே முருகேசுவின் மனம் இதைப்பற்றி நன்கு சிந்தித்தது. இந்தத் தரகர் வலையிலே சிக்கியிருந்தால் அவன் நிலைமை என்ன! அவன் பெற்றோர் மற்றும் உறவினர் கண்ணிலே விழிக்க முடியுமா?
163

Page 101
ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்
வீட்டிலே சாப்பிட உட்கார்ந்தபோது தாய் வழமையான பல்லவியைத் தொடங்கினாள்.
தம்பி, கொம்மான் இன்றைக்கும் வந்து போகிறார்." என்றாள். வழமையிலே இந்த வார்த்தைகளை அவள் கூறினால் அவன் சினப்பதுண்டு. இன்று மெளனமாகக் குனிந்தபடி சாப்பிட்டுக்கொண்டு இருப்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"அந்தப் பெண் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க உன்னுடைய வாழ்க்கை ஒருநாளும் உருப்பட மாட்டாது" என்றாள் மறுபடியும்.
"அது சரி இப்ப அவளுக்கென்ன வயது போய்விட்டதா? பதினாலு வயதுதானே! எல்லாம் ஆறுதலாகச் செய்யலாம். கொஞ்ச நாளைக்கு போடிங்கில இருந்து படிக்கவிடச் சொல்லு, தையலும் பழகிவிடுவாள். பழக்கமும் திருந்திவிடும்” என்றான்.
தாய்க்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை. "வாற கிழமை போடிங்கில விடுகிறதென்றுதான் கொம்மான் எண்ணிக் கொண்டிருக்கிறார்” என்றாள் அவள்.
அவளுடைய பெயரை எப்படி மாற்றி வைக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டே ஆறுதலாகச் சாப்பிட்டான் முருகேசு.
"மறுமலர்ச்சி" 1948


Page 102
CC - 4:22:32, 337 373
வள்ளவத்தை - 54255.07 сатана - 0 - o2овато
ISBN 955
■量
 
 
 

: | N.