கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1981.04-06

Page 1
நீதியும் சமாதானமும்
"வறுமைத் துயர்கள் அதன் பிறகே அடுத்த மீட்பின் குரலொடு, அமர்த்தோர் ஆட்சியி வாக் குறுதிகள் வெற்றுவார்த்தைக ளாயின்
கால உதிர்வில் மீண்டும் எழுந்தன எ அடி வயிற்றி லெழுந் சிரசிங் கொதிக்க, திசைக ளெங்கும் வயிறு தடவிய கைகள்
நீண்டு உயர்ந்த கைது "வாள்" கொண்டு வி வாள் முனேயில்: படிந்த குருதியை வழி இன்றி லேறிக் குரலிடு "இந் நாடே நீதியும் சமாதனமும் நிலவும் நாடு."
 
 

சித்திரை - ஆணி
981.
FIT 3/-
--
நீங்கிடவேண்டும் தவை' யென்ற
1றுமையின் ஒச்சம். த தியோ
- - Tri fillu rritja, GT.
: ழ்த்தினர்.
த் தெறிந்து,
θεοταγή:
மு. புஷ்பராஜன் (TH--!}--198[}]

Page 2
******々々々々々々々々々々々々々々々々々々??*******
eXA O 8)
る With the best Compliments ex
from
Bentota Stores RCE
哆
General Rice merchants & Commission Agent ふ Dealers in Sri Lanka Produce
*
w
30, 4th Cross Street, a 2924: COOMBO - 1. 32351
Your satisfaction is
O9th best
钞警多铬g & 鳍 140, 1/1, Galle
COLO We are Specialist in: Drycleaning Dying Saree ҙ Steат Фиев6ing dC 5èемп
sp8088-880888088-88-888-888-808080888
:
 

ళీ
令
Se.
Sh
LYYYLeSLL0L00LJL0Y0LLL00LLL0LSLJ0LSYYYYL0LL0L0YYYY00000LYYLLLLYYeS
Эpace 9Donated
Al Odell Leisher oUR BUSSINESS Complim ents c!
:
冶算 够色级邸伦铭g : Road, Wellawatta, : IBO - 6. :
gar S1332 'rinting, anent Cчеaoing :
LL00YY00000L0L000L0L00000LL0L00L0LLYLY0L0LL0YYYLLYLL000LLYYY

Page 3
மு. நித்தியானந்தன்
இந்தியத்த
- களுத்
இலங்கையருக்கு சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ( 19311981) நிறைவுற்று பொன்விழா கொண்டா டப்படும் இச்சந்தர்ப்பத்தில் இந்தியத் தமிழர் கள் மத்தியில் இதன் முக்கியத்துவம் என்ன என்று ஆராய்வது பொருத்தமுடையதாகும். ஒன்றரை நூற்ருண்டிற்கு மேலாக இந்த மண் ணில் ரத்தம்சிந்தி உழைத்த இந்தியத் தமிழர் தொழிலாளர் வர்க்கமாகவும் தேசியச் சிறு பான்மையினமாகவும் அரசியல் ரீதியில் நசுக் கப்படுவதற்கு வாக்குரிமையானது எவ்வாறு ஆள்வோரால் பிரயோகிக்கப்பட்டது என்பதை நோக்குகையில் இளைய தலைமுறையினர் சினங் கொள்ள நேர்ந்தால் அதில் வியப்படைய எதுவுமில்லை.
இலங்கையில் சர்வசன வாக்குரிமை வழங் கப்படுவதுபற்றி அரசாங்க சபையில், அரசியல் மேடைகளில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதெல் லாம் யாருக்கு வாக்குரிமை வழங்கப்படவேண் டும் என்பதைவிட யாருக்கு வாக்குரிமை வழங் கப்படக்கூடாது என்பதைப் பற்றியே வாதங் கள் சம்பவித்துள்ளன. இத்தியத் தோட்டக் கூலிகளுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்று அரசாங்க சபை ஹன்சார்டுகளின் இரு நூற்றுக்கணக்கான பக்கங்களில் சிங்கள அரசி பல்வாதிகள் கக்கியிருக்கும் விஷமத்தனமான கருத்துகள் மிலேச்சத்தனத்தின் எதிரொலி களாகும். ஜோன் கொத்தலாவலை கூறுவ து போல 1928ற்கும் 1947க்கும் இடையில் இந் தியர் பிரச்சிரை விவாதிக்கப்பட்டபோது அது முழுவதுமாக வாக்குரிமைபற்றிய பிரச்சினை யாகவே கருதப்பட்டது.

மிேழர்களும் வாக்குரிமையும்
“ஏனென்று கேட்க நாங்கள் யார் நாங்கள் உழைக்கவும் சாகவுமே பிறந்தவர்கள்"
துறை தோட்டத்தில் சிரு தொழிலாளியின் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வரிகள்
இலங்கை இந்தியர் பிரச்சினை பிரிட்டிஷ் காலனித்துவத்தின் சிருஷ்டியே இதில் தங்க ளுக்கு எந்தப்பங்குமில்லை என்று இலங்கையின்
அலுடோவைக் சிறுவதுபோல் இப்பிரச்சினையை உருவாக்கியவர்களே அதனைத் தமது காலத்தில்
தீர்த்துவைப்ப்தில் பெரும்பங்கினை வகித்திருக்க வேண்டும், பிரித்தாளும் கலையில்வல்ல பிரித்
தானியர் இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் எந்த
அக்கறையும் கொண்டிருக்கவில்லை. பிரிட்டிஷ்
இராணுவத் திளங்கள் இலங்கையில் நிலைபெற வேண்டுமானுல் இலங்கையு ? எதிர்முகாம்களில் நிறுத்தப்பட3 அவசியத்தை பிரிட்டிஷ் அரசாங் திருக்கிறது.
இத் கியாவும் வண்டியதன் கம் °-可行应
சிங்கள அரசியல்வாதிகளைத் திருப்திப் படுத்தாவிட்டால் தங்களின் சிபார்சுகளை 9 Sri கள் பூரணமாக நிராகரித்து விடுவர் என்றஞ் சிய டொனமூர் ஆணைக்குழுவினர் இந்தியர் களின் வாக்குரிமை கட்டுப்படுத்தப் படுவதனை திமது அறிக்கையில் ஆதரித்திருக்கின்றனர்.
"முதலாவதாக, இந்நாட்டில் ஐந்துவரு டம் வாழ்ந்த தகுதி இருத்தல்வேண்டும். டில் நிலையான அக்கறை கொண்டவருக்கோ, நிலையாகக் குடியிருப்போருக்கோ மட்டுமே வாக் குரிமை அளிப்பதே இதன் நோக்கம். இந்த விதியானது இந்தியாவிலிருந்து குடியேற்றப் -ட்ட மக்கள் தொடர்பாக சிறப்பான முக் கியத்துவம் பெறுவதை நாம் பின்னர் காண் போம்" என்று டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகிறது. a
435

Page 4
டொனமூர் ஆணைக்குழுவின் இந்த விவு வித்துத்தான் லட்சோப லட்சக்கணக்கான இந் தியத் தமிழர்கள் வாக்குரிமையற்றவர்களாக் கப்பட்டமைக்கு அடிப்படையாக அமைந்து விட்டது. மறுபுறம், இந்தியத் தமிழர்களின் வாக்குரிமை கட்டுப்படுத் தப்படுவதன் மூலமே டொனமூர் குழுவினரது சிபார்சுகளின் சாராம் சத்தைக் காப்பாற்ற முடியும் என்று சிங்கள அரசியல் தலைவர்கள் வாதாடினர்.
இந்தியர்களின் வாக்குரிமைபற்றி வாதங் கள் எழுந்தபோதெல்லாம் அவர்கள் இந்நாட் டில் நிலையாகக் குடியிருக்கும் அக்கறை கொண் டவர்கள் அல்லர் என்ற காரணமே பெரும் T01th முன்வைக்கப்பட்டிருக்கிறது. இலங் கையைவிட இங்கிலாந்தில், உள்ள தனது காரீ யச் சுரங்கங்களை மேற்பார்வை செய்ததில் அதிக நாட்களைச் செலவிட்ட இலங்கையின் முன்னுள் பிரதமர் ஜோன் கொத்தலாவலை  ோன்ருேர் கூட இம்மாதிரி வாதிட்டதுதான் (S, , விக்கிடமானது.
1928-ல் டொனமூர் ஆணைக்குழுவினர் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களில் 40 தொடக்கம் 50 வீதத்தினர் வரை இலங்கை நிரந்தரமாகத் தங்கிவிடுவதாக மதிப்பிட் Gðff ^
1938-ல் ஜாக்ஸன் அறிக்கையில் இந்தியர் களில் 66 வீதமானேர் இலங்கையில் நிரந்தர மாகக் குடியிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக் கிறது. S. -
இதே காலகட்டத்தில் தோட்டத்துரை மார் சங்கம் இந்தியத் தொழிலாளர்களில் 70 -80 வீதமானேர் இலங்கையில் நிரந்தரமா கத் தங்கி வாழ்வதாகக் கூறியது.
சோல்பரி ஆணைக்குழுவின் அறிக்கை 80 வீதமான இந்தியர்கள் இலங்கையில் நிரந்தர மாகத் தங்கி வாழ்வதாக மதிப்பிட்டது.
இலங்கை பிரஜாவுரிமை பெற்றவர்கள் கூட இந்தியாவில்தான் அக்கறை காட்டுகிறர் களே தவிர இலங்கையில் அவர்கள் நிலையான அக்கறை கொண்டவர்கள் அல்ல என்றும் மறு முனையில் வாதிக்கப்பட்டது. "பூரண இலங்கை
尘母6

பிரஜாவுரிமை பெற்றுக்கொண்ட இந்தியர்கள் கூட இந்தியாவைத்தான் தமது தாயகமாக நோக்குகிறர்கள்; அவர்கள் இந்தியக் கொடி யைத்தான் ஏற்றுகிருர்கள்: இலங்கைத் தேசி யக் கொடியைஅல்ல" என்று ஏ. ரட்னுயக்கா பாராளுமன்றத்தில் பேசியிருக்கிருர்.
எல்லாளனின் சமாதியில் துட்டகெமுனு வின் அஸ்தியைக் கண்டுபிடிக்கும் சாணக்கியர் களின் முன்னுேடிகளுக்கு இந்தியத் தமிழர் களின் நிலைமையை விளங்கிக்கொள்வதில் கஷ் டம் இருந்திருக்கவே வேண்டும்.
பிரிட்டிஷ் பிரஜைகள் என்றும் கருந் தோட்டம், இந்தியாவின் சேய்மை, தோட்ட ங்களில் வேலை இல்லாதபோது இந்தியாவிற் குத் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்பிய தன்மை, கண்டியரின் மனுேபாவம், உள்ளூர் வாசிகளுடன் இந்தியத்தமிழர்கள் கலந்துவிடா திருப்பதற்காக அவர்கள் தனிக்கூருக்கப்ப்ட் டமை இனத்துவேஷம், வர்க்கச்சுரண்டல், குறுகியகால வரலாறுபோன்ற பல்வேறு அம் சங்களின் பின்னணியிலேயே இந்தியத்தமிழர் களின் நிரந்தரக் குடியமர்வுபற்றிய பிரச்சினை கள் பரிசீலிக்கப்படவேண்டும்.
இந்தியத் தமிழர்களிலும் தோட்டங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு வாக்குரிமை வழங் கப்படுவதனையே சிங்களத் தேசியத் தலைவர்கள் மூர்க்கமாக எதிர்த்தனர்.
"கொழும்பு இந்தியருக்கு நாங்கள் எதிரா னவர்கள் அல்லர். தோட்டங்களில் வாழும் இந்தியக் கூலிகளுக்கு வாக்குரிமை வழங்கப் படுவதனையே நான் திட்டவட்டமாக எதிர்க் கிறேன்" என்று திரு. வி. எஸ். டி. எஸ். விக் ரமநாயக்கா அரசாங்க சபையில் வாதாடும் போதுதான் வர்க்கரீதியாக இந்தியத் தொழி லாளருக்கு எதிரான இவர்களின் விஷமத்த னம் பளிச்சிடுகிறது.
"பெருந்தொகையான இந்திய வாக்காளர் களை வெளியே தள்ளும் நோக்கத்துடன்தான் எனது தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்று கூறப்படுகின்றது. இந்த விஷயத்தில் எதனை யும் மழுப்பிப் பேசுவதில் பயனில்லை. ஆம், அது உண்மைதான் என்று திட்டவட்டமாக

Page 5
ஏற்றுக்கொள்கிறேன்" என்று இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திரு. ஏ. எப். மொல்முரே நிர்வாணமாக வெளியே வருகிருர்,
**இந்தியத் தொளிலாளர்கள் பொய்யான ஃபாக்குறுதிகளின் அடிப்படையில் இந்நாட்டிற் குக் கொண்டுவரப்பட்டு, இங்கு அடிமைநிலை பில் வைக்கப்பட்டிருக்கிருர்கள் என்று அடிக் கடி கூற்ப்படுகிறது. அடிமைப்படுத்தப்பட்ட நிலையில், கிராமங்களிலிருந்து தூரத்தே தனி மைப்படுத்தப்பட்டு, இந்நாட்டு மக்களுடன் உறவாடமுடியாத நிலையில் வைக்கப்பட்டிருக் தம் ஒரு மனிதனுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்று நாங்கள் கேட்பது நியாயம் தானே?" என்ற வாதத்தில் மிலேச்சத்தனத் தின் கடூரத்தை நாம் கேட்கநேர்கிறது என்ருல் இந்த வாதங்களை உதிர்ப்பவர் வேறுயாரு மில்லை; இலங்கைக்கு இலவசக்கல்வி வழங்கிய தேசபிதா அதிகெளரவ சி. டபிள்யு. டபிள்யு
கன்னங்கரா அவர்கள்.
இந்தியத் தமிழர்களுக்கு வாக்க ரி  ை! வழங்கப்படுமானல் சிங்கள இனம் விழுங்கப் பட்டுவிடும் என்ற பூதாகரமான பொய்யை நிறுவுவதில் கோபல்ஸும் கோபினேவும் மொல முரேக்களிடமும் கன்னங்கராக்களிடமும் தோற் றுப் போயிருப்பார்கள்.
** இங்கிலிஷ்காரர்களின் கைகளிலிருந்து ஆட்சி அதிகாரம் இந்தியர்களின் கைகளுக்கு மாற்றப்படுவதை நாம் அனுமதிக்கப்போவ தில்லை" என்று டி. எஸ். சேனநாயக்கா தொடர்ச்சியாக வாதாடியிருக்கிருர்,
இலங்கை சுதந்திரம் அடைந்து அதன்
முதல் ஆண்டு நிறைவுப்பரிசாக திரு. டி. எஸ்.
சேனநாயக்கிா இலங்கை பிரஜாவுரிமைச் சட் டத்தினை அமுலாக்கினர். எட்டு லட்சம் இந் தியர்களால் இலங்கையர் விழுங்கப்பட்டு விடு வார்கள் என்று சுதந்திர தேசபிதா பெரிதும் அச்சம் தெரிவித்தது, ‘எட்டுலட்சம் இந்தியர் கள் அறுபதுலட்சம் இலங்கையரை விழுங்கி விடுவார்கள் என்பது சுத்தக் கோழைத்தன மானது" என்று என். எம். பெரேரா இதனை எதிர்த்து வாதிட்டார்.

“இலங்கை பிரஜாவுரிமை மசோதா: " னது இனவாதச் கொள்கையினையும் ஒரு சில ருக்கு விசேஷ சலுகை வழங்குவதனையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறக, நாங்கள் அந்தக்கட்டத்தை எப்போதோ கடத்துவிட் டோம் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஹவுஸ்டன் செம்பர்லின், அடொல்ஃப் ஹிட் லர் ஆகியோருடன் அத்தகைய இனவாதம் முடிந்துபோய்விட்டது என்றுதான் நினைத்தி ருந்தேன். அது தவறு. இலங்கைப் பிரதம ரான (திரு. டி. எஸ். சேனநாயக்கா) எனது நல்ல நண்பர் இந்த உலகின் கடைசி இனவாதி தானேன்ன்ற உருத்தினை மிகத்தெளிவக் கோருகிருர்' என்ற திரு. என். எம். டெரே ராவின் கூற்று நிலையைத் தெளிவாக்குகிறது.
அரசியல் உரிமைகள் இல்லாதவரை இந்தி யத் தமிழர்கள் புராதனகால அடிமை சமூக மாய் இந்த நாட்டிற்கு உழைத்து உடல ம் நோவதில் - இலங்கையில் வாழ்வதில் இலங் கையின் சுதந்திர சிற்பியான திரு டி. எஸ். சேனநாயகாவிற்கு ஆட்சேபனையில்லை. அவரு
டைய ஐந்தொகைக் கனக்கில் இந் தி படத் கொழிலாளர்கள் பொருள த7ா ரீஇபில்
சொத்தாகவும் (Assets) அரசியல் ரீதியில் பொறுப்பாகவும் (Liabilities) மதிப்பிடப்பட்
G. w
வெள்ளையனின் கால்களை நக்கி ஆட்சி அதி காரமேறியவர்கள் இதைவிட வேறும்ாதிரி யோசித்திருந்தால்தான் ஆச்சரியப்படமுடியும்.
1930களில் இந்தியத் தமிழர்களால் த்ாங் கள் விழுங்கப்பட்டு விடுவோம் என்று சிங்கள இனவாதிகள் கருத்துக் கொண்டிருந்ததைப் போலவே இலங்கைத் தமிழர்களின் மேல்ம. டப் பிரதிநிதிகளும் கருதினர்.
டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கையில் (1931) காணும் புள்ளி விபரங்களிலிருந்து பின்வரும் விபரத்தைப் பெறலாம்,
இலங்கைத் தமிழர்கள் 540,000 இந்தியத் தமிழர்கள் 700,000
இலங்கைத் தமிழர்களின் கற்ற பிரதிநிதி கள் கல்வித்தகுதி, வருமானத்தகுதி என்பன வற்றைக் கொண்டுதான் வாக்குரிமை வழங்
437

Page 6
கப்படவேண்டும் என்பதை அழுத்தம் திருத்த மாக ஆதரித்தனர். இது இந்தியத் தமிழர் களின் வாக்குரிமையைப் பறிக்கும் என்பதை அவர்கள் உணராமல் இருந்ததைக் காட்டும் என்பதை நாம் நம்பத் தேவையில்லை.
இந்தியர்களின் இலங்கை வரத்தினைத் தடை செய்வதில் இலங்கைத் தமிழர்கள் காட் டிய ஆர்வமும் அவர்கள்முன் ன்வத்த வாதங் களும் இதனை ஊர்ஜிதம் செய்கின்றன.
இந்தியர்களின் இலங்கை வரத்தினைத் தடைசெய்வது தொடர்பாக 1937 பெப்ரவரி 14-ம் திகதி யாழ் சங்கத்தின் விசேட கூட்ட பொன்று சங்கத்தலைவர் டாக்டர். ஐசக் தம் பையா அவர்களது இல்லத்தில் நடைபெற்ற போது திரு. எஸ். எச். பேரின்பநாயகம் பின் ல குமாறு பேசியிருக்கிறர்.
**இந்தியர்களை எல்லையின்றி இலங்கைச் குள்வர அனுமதித்தால் அவர்க்ளுடைய உதவி யைக்கொண்டு சிங்களவர்களை இலங்கையிலி ருந்து வெளியேற்றிவிடலாமெனச் சிலர் (இலங் கைத் தமிழர்களிற் சிலர்) நினைக்கின்ருர்கள். இது, தவருன அபிப்பிராயமாகும். சிங்களவர் களை வெளியேற்றுவதன் முன்னர் இந்தியர்க ளால் நாமே வெளியேற்றப்பட்டு விடுவோ மென்பதை எச்சரிக்கை செய்ய விரும் பு கிறேன்" vk
மொலமுரேயும் கன்னங்கராவும் பேரின்ட தாயகத்தின் குரலிலே வெளிப்படுவதை இங்கு காண்கிருேம்.
அதே கூட்டத்தில் கரகோஷத்தின் மத்தி யில் திரு. கு. நேசையா பேசுகையில்" "சமீட மாக ஹற்றன்-டிக்கோயா ஸிலோனிஸ் தோட் டக் கிளாக்குமார் சங்கத்தார் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிருர்கள். அந்த அறிக்கையில் இந்தியரின் போட்டியிலிருந்து தங்களைப் பாது காக்கவேண்டுமென அவர்கள் கோரியிருக்கிரு கள். கண்டக்றர்கள், ரீமேக்கர்கள், லிகிதர்கள் முதலான உத்தியோகங்களை வகித்துவரும் இலங்கையர்கள் குறிப்பாக இலங்கைத் தமிழ கள் இந்தியர்களால் வேலையை இழத்துவிடு கின்றர்கள். வியாபாரத் தலங்களில் உள்ள
4.38

கணக்கப்பிள்ளைகள், வைத்தியர்கள், சிப்பந்தி கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள் முதலான பதவி களில் இந்தியரின் தொகை நாளுக்குநாள் அதி கரித்து வருகிறது. எல்லாப் பதவிகளும் இந் தியர்களுக்குத் திறந்து விடப்படுமானல், எல் லாம் இந்தியர்மயமாகிவிடும்" என்று அச்சம் தெரிவித்திருக்கிருர்.
இந்தியர்கள் வெறும் தோட்டக் கூலிக ளாய் - உரிமைகள் எதுவுமற்றவர்களாய் வேலை செய்வதில் இவர்களுக்கு ஆட்சேபனையில்லை. இந்தியர்கள் கூலிகளாக இருந்து உருவாக்கிய தோட்டங்களில் கண்டக்றர்கள், ரீமேக்கர்கள், லிகிதர்களாகத் தாங்கள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்ற இவர்களின் அக்கறைகளில் வர்க்கசார்பு பளிச்சிடுகிறது.
தங்கள் தலைவிதி நிர்ணய்மாகிற ஒரு சரித் திர கட்டத்தில் சிங்களத் தேசியவாதிகளாலும் கற்றறிந்த இலங்கைத் தமிழ்ப் பிரதிநிதிகளா லும் வஞ்சிக்கப்பட்ட இந்தியத் தமிழர்களின் ஆத்மாவின் குரலை இந்தியப் பிரதிநிதிகளின் வாதங்களில்கூட அல்ல, ஜனுப். ரி.பி. ஜாயா வின் வாதங்களில்தான் நான் கேட்கிறேன்.
"இந்நாட்டு மக்களுக்கு சர்வசன வாக் குரிமை நன்மை அளிக்கக்கூடியது என்று நாம் நினைத்தால்-இந்நாட்டின் வெகுஜனங்களுக்கு ஒரு பெருங்கொடையை, ஆசீர்வாதத்தை வழங்குகின்ருேம் என்று நாம் நினைப்போமே யானுல் சரியாகவோ, பிழையாகவோ இந்நாட் டிற்கு கொண்டுவரப்பட்ட - இந்நாட்டின் நிலையை உணர்த்தும் பணியில் நிச்சயமாக ஈடுபட்ட அந்த வறிய அப்பாவி இந்தியமக னுக்கு இப்பெருங் கொடையினை, ஆசீர்வா தத்தினை நாம் வழங்க மறுத்தோமெனில், நாம் மாபெரும் அநீதி இழைத்தவர்களர் Gourrib” ” r
- و نقاجب
அந்த வறிய இந்தியனுக்கு வரலாற்றில் மாபெரும் அநீதி இழைக்கப்பட்டது.

Page 7
அந்த அநீதியின் முழுவடிவமாய் 1948-ம் ஆண்டி பிரஜாவுரிமைச் சட்டம் நடைமுறை க்கு வந்தபோது 1947-ம் ஆண்டுத் தேர்தலில் 7 ஆசனங்களைப் பெற்ற இந்தியத் தமிழர்கள் மறு தேர்தலில் ஒரு ஆசனத்தையும் பெற
முடியாமல் போய்விட்டது.
அதனைத் தொடர்ந்து 'நாடற்றவர்கள்' எனப்பட்ட இந்தியத் தமிழர்களை வெளியேற் றும் கைங்கரியமும் சீராக மேற்கொள்ளப் பட்டன.
米 1954-ல் நேரு-கொத் தலாவலை ஒப்பந்தம் * 1964-ல் பூரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் * 1974-ல் பூரீமா-இந்திரா ஒப்பந்தம்
ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை சீனிமூடை ஒப்பந்தம் மேற்கொள்வதுபோல இந்தியத் தமிழர்கள் தொடர்பான ஒப்பந்தங் கள் மேற்கொள்ளப்பட்டன.
நிர்க்கதியாக நிற்கும் ஒரு சமூகக் கூட் டத்தின்மீது ஒரு அராஜக அரசு சாதிக்கக் கூடிய சகல அட்டூழியங்களும் தோட்டத்து மக்கள்மீது சம்பவித்துவிட்டன.
இந்த மண்ணின் வளத்திற்காக தங்கள் வியர்வையை, உதிரத்தை, உயிரை அர்ப்ப ணித்த இந்தியத் தமிழர் கூட்டத்தின் கடைசி மகன் வாக்குரிமையற்றவனுக - பிரஜாவுரிமை பற்றவணுக - தாடற்றவனுக இந்நாட்டில் உல வும்வரை உங்களின் சர்வசன வாக்குரிமைப் பொன் விழாக்களையும் தார்மீகங்களையும் காறி உமிழக்கூட திராணியற்றுப் போய்விட்டால் மானுடம் தோற்றுவிட்டது என்று அர்த்த மாகிவிடும்.
மானுடம் தோற்பதில்லை. C
கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் மனிதனை நேகெலருேம். மனிதத் தன்மையுள்ள எவையும் எங்களுக்குப் புறம் பானவையல்ல. மிகச் சாதாரண மனித இன்பங்களின் மதிப்ப்ையும் நாங்கள் அறிவோம்.
- ஜாலியஸ் பூசிக்

ர்வசி
ES
வேலி
நட்சத்திரப் பூக்களை எண்ண முடியாமல் மேலே கவிந்தபடி கூரை ஒட்டடைகள் படிந்து கறுப்பாய் போனது.
கம்பி போட்ட சாளரம் கூட உயரமாய் ஆனலும் திறந்தபடி, அதனுடே காற்று
எப்பொழுதும், மிகவும் ரகசியமாய் உன்னிடம் என்ன
அழைக்கின்ற காற்று.
என்னைச் சூழவும் சுவர்கள்தான்.
நச். நச். என்று ஓயாமல் கத்திக் கொண்டிருக்கிற பல்லிகள் ஊர்கிற சுவர்கள். அவையும் ஒட்டடைகள் படிந்து
எப்போதோ கறுத்துப் போனவை.
உனக்காக நான் தனிமையில் தோய்ந்தவளாய் இங்கே காத்திருக்கிறேன். பழைய பஞ்சாங்கங்களில் புதிதாக,
நம்பிக்கை தருவதாய் ஒருசொல்லைத் தேடிப் பார்த்தபடி,
எப்போதுதான் என்னல் நீ வசிக்கின்ற அந்தத் திறந்த வெளிக்கு வரமுடியும்? உன் இருப்பிடம் இங்கிருந்து வெகு தொலைவோ?
உன்னிடமிருந்து
இரண்டு சிட்டுக் குருவிகளை இங்கே அனுப்பேன்! அல்லது
இரண்டு வண்ணத்துப் பூச்சிகளையாவது.
439

Page 8
சு. வில்வ ரத்தினம்
இடிந்து கிடந்த நினைவுத் தூண்களே எழுப்பிவைத்தீர் இடித்தவரை நினைவூட்ட
எழுபத்தியேழு ஓகஸ்ட்டில் தெற்கில் இழந்த உயிர்களுக்கு நினைவுத்தூண்கள் நிறுவுவீரா; உங்கள்
இழிமையை நினைவூட்ட?
மலர்வளையங்கள், மாலைகள் சாத்தல் இவை உதவப் போவதில்லை * எங்கள் நினைவுகளில் உங்களைச் செதுக்க, மலர்வளையங்களும் மாலைகளும் உதிர்ந்து விழும் உங்கள்
சொல்லலங்காரங்கள் போல.
மாலை சாத்திய கைகள் மறுநாளே, வாளெடுக்கும் நிகழ்சசிகள் பல நடப்பிலே கண்டோம்.
மலர்தூவிய கைகளாலேயே துட்டகெமுனுவின் அஸ்தியும் தூவுவீர் வகுப்புவாத மேகங்கள் இருண்டு குருதி மழை பொழிய"
இரத்தச் சுவடுகள் பதிய ஒழிந்தோடி ஓர்மூலையில் பதுங்கி உடை மாற்றி வந்து ஒப்புக் கழுவீர்.
440

அகங்களும் முகங்களும்
உடை மாற்றலேன்? உங்களை மாற்றுங்கள்.
இனவாதமணம் அருதவாயால் இன்னமுதமொழிகள்: "இதயத்தை உங்களிடமே விட்டுவிட்டுச்
செல்கிறேன்" இப்படிப் பலப்பல.
எடுத்துச்செல்லுங்கள் உங்களிதயத்தை உங்களுடனேயே. எங்கள் நினைவுகளில் உங்களைச்
செதுக்குமுன் உங்கள் இதயத்தைச் செதுக்குங்கள்.
காலங்காலமாய் இரத்தக் கறைபடிந்து துருப்பிடித்த இதயத்தை துருவி ஆராயுங்கள் போலித்தார்மீகப் போர்வையைக் களைந்து உண்மை நிர்வாணம்பற்றுங்கள்.
மஞ்சள் அங்கிகளுக்கும் மழித்த தலைகளுக்கும்
புலப்படாது புதைக்கப்பட்டுள்ள புத்தரின்அன்பு துலங்கும் வரை செதுக்குங்கள், உங்கள் இதயத்தைச் செதுக்குங்கள்.
எடுத் துச்செல்லுங்கள் எங்கள் உபதேசமிதே, O

Page 9
ரஞ்சகுமார்
வெயில் கொளுத்துகிறது. ஆனிமாதத்து வெயில். மூச்சுவிடவே சிரமமாக இருக்கிறது. இங்கே, கல்லாப் பெட்டியில் இருந்துகொண்டு பார்த்தால் கிட்டத்தட்ட கால்மைல் தூரத் துக்கு முன்னுல் ‘கண்டிவீதி விரிகிறது. வீதி யின் இடது ஓரத்தில், கடை வாசலிலிருந்து சுமார் நூறுஅடி தூரம் தள்ளி இந்த ஊரின் பெயரைத்தாங்கிய சிமெந்துப் பலகை ஒன்று வெள்ளையாகத் தெரிகிறது. அதன்மேல் இந்த வெயிலிலும் இரண்டு காக்கைகள் உட்கார்ந்து கொண்டு கரைகின்றன. அந்தக் காக்கைகளின் சத்தம் சன்னமாக, காதுக்கு சிரம்ந்தருவதாக இருக்கிறது. சுறுசுறுப்பாக, அங்குமிங்கும் பறந்துதிரிந்து, இரைதேடும், இந்தக் காக்கை கள் கூட ஓரிடத்தில் சோம்பியிருக்கின்றனவே! அவ்வளவு வெயிலா? J.
கடைவாசலுக்கு நேரே ருேட்டுக்கு அப் பால் ஒரு கம்பிவேலி. அக்கம்பிவேலிக்கும்.ருேட் டுக்கும் இடையில் ஒரு பசுமாடு படுத்துக் கொண்டு அசை போடுகிறது. பக்கத்தில் ஒரு வெள்ளைக் கன்றுக்குட்டி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, கண்கள் அரைத்தூக்கம் போலச் செருகிக்கொள்ள, கால்களைப் பரப் பிக் கொண்டு நிற்கிறது. இந்தமாடு எப்போ தும் "ஆவ் ஆவ்' என்று வாய்கொள்ளாமல் புல் மேயுமே? இன்று இதற்கு என்னவந்தது? ஆறுதலாகப் படுத்திருக்கிறதே! கன்னத்தோ லினுக்கூடாக தாடை எலும்புகள் பீறித் தெரிய மெதுவாக இது அசைபோடுவதைப் பார்க்க, ஒரே சினமாக இருக்கிறது.
கம்பிவேலிக்கு அப்பால் சிறிய வயல்வெளி. அவ்வயல்வெளியின் மத்தியில் மஞ்சளாகவும், சற்றுப் பெரிதாகவும் காட்சியளிக்கிறது "அப் போதிக்கரி ஆசுப்பத்திரி வயல் வெளியில் நான் வந்திறங்கியபோது சிறிய பூண்டாக - இன்னசெடி என்று அடையாளம் காணமுடி யாத நிலையிலிருந்த - சணல் இப்போ வேலி யளவுக்கு வளர்ந்து மஞ்சட் பூக்களுடன் குலுங்

சுருக்கும் ஊஞ்சலும்
கிச் சாய்கிறது. ஆசுப்பத்திரி விருந்தையில் ஓடலி பரமசிவம் இருந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கிருர், கால்கள் இரண்டையும் அகட்டிப்போட்டுக்கொண்டு, வாங்கில் முதுகு சாயுமிடத்தில் கைகளை வீசிப் போட்டு க் கொண்டு, தலையைக் கவிழ்த்துக்கொண்டு தான் இருக்கிருர், சுருட்டுப் பிடிக்கிருரா இல்லையா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. குரங்கு தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல் இடைக்கிடை புகை மெல்ல வருவதுதான் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அவரும் கூட இந்த வெயிலில் சோர்ந்து சுருண்டுபோய் இருப்பதாக எனக்குப்படுகிறது.
ஆசுப்பத்திரிக்கு இடதுபுறம் கொஞ்சத் தூரம்தள்ளி சிவப்பாக அரசாங்க குவாட்டஸ் தெரிகிறது. குவாட்டஸின் முன்விருந்தை யில் இருதூண்களுக்கு நடுவே ஒரு கயிற்றுக் கொடி கட்டப்பட்டு அதில் சில துணிகள் காய விரிக்கப்பட்டிருக்கின்றன. சுவரோடு சாய்த்து *சாயும் இடம் இல்லாத கதிரை ஒன்று வைக் கப்பட்டிருக்கின்றது. காற்றில் ஆடும் துணிகள் மெதுவாக, ஆடிக்களிக்கவே பிரியமற்றவை போல, பலவந்தமாக ஆட்டப்படுவதாக எனக் குப்படுகிறது. அனேகமான வேளைகளில் அந் தக் கதிரையில் கனகசிங்கம் கால்மேல் கால் போட்டுக்கொண்டு, தொடையில் ஊன்றிய கையை நாடிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு இருப்பதைக் காணலாம். இப்போ அதுவெறுமே வெறிச்சோடிக் கிடக்கிறது.
கல்லாவிலிருந்து பின்புறம் திரும்பிப்பார்த் தால் யன்னலினூடாக “றெயில்வேலைன்" தெரி கிறது. அதை ஒட்டினற்போல பற்றையும் மர முமாக ஒரே காடு. அந்தப் பச்சைக்குமேல் நிர்மலமான நீல ஆகாயம். பச்சையும் நீலமும் பார்க்கவே சகிக்கவில்லையே. வானத்தைக் கண் கொண்டு பார்க்கவே முடியவில்லை. வெயில் கண்ணைக் குத்துகிறது. அப்பாடா, வெயில் இந்த வெயில் நாசமாய்ப்போக!
44

Page 10
முன்புறம் இப்படிக் கிட்டவாகக் கா இல்லை. ஆசுப்பத்திரி, குவாட்டஸ் எல்லா தாண்டி பெரிய வயல்வெளி. "லக்ஷபான' லிருந்து “யாழ்ப்பாணக்குடா' வுக்கு "கரண்ட டைச் சுமந்து செல்லும் நீள நீளமான கம் களும், அவற்றைத் தாங்கி நிற்கும் பிரமா டமான "போஸ்ட்"களும் அவ்வயல்வெளிை ஊடறுக்கின்றன. அதற்குமப்பால் கருநீலநி மாகத்தான் காடு தோன்றுகிறது. எங்களூர் தொலைதூரப் பனைகள் காட்சியளிப்பது ஏறத்தாள இதே காட்சிதான்.
மேலே கூரைக்குத் தகரம்தான் போ டிருக்கிருர்கள். அதனல் ஒரே வெக்கையr அடிக்கிறது. அடிக்கிற வெக்கையில் முக கருகிவிடுமாற்போல் எரிந்து தள்ளுகிறது ப்ோதாத குறைக்கு பின்னலிருந்து பொ லர்” சூடு முதுகை எரிக்கிறது. த ன் னி கொதிக்கும் "தளதள’ சத்தம் வேறு காதுக் 1ாராசமாக இருக்கிறது.
கண்டி வீதியில் செருப்புச்சத்தம் ‘சரச என கையில் பிரப்பங்கூடையுடன் கருவே நடந்து போகிருன், அதற்குள் "போத்தில்"க இருக்கும். போகிற போக்கில் அவன் மெல் தாக என்னைப்பார்த்துச் சிரித்துக் கொண் போகிருன். வெயில் வெக்கையில் கண்ணையும் முகத்தையும் இடுக்கிக்கொண்டு, அவ வேண்டா வெறுப்பாகச் சிரிப்பதைப் பார்க் பாவமாக இருக்கிறது.
இப்படியே அவன் போகிற பாதையி கிறிது தூரம் போனல் "முதுபண்டாவின் தச் வேலைக் கொட்டிலுக்கு முன்னல் சிறுபற்ை ஈளுக்கு இடையில் உள்ள பழுதடைந்த கிண றின் "மிதி'யில் அவன் இந்தப் பிரப்பங்கூை யுடன் உட்கார்வதைக் காணலாம். "இரண் ரூபா, ஐந்து ரூபா, பேர்வழிகள் அடிக்கடி அ6 னிடம் வருவார்கள். ஒருதடவை அ வ எ பொலிசிடம்கூட அகப்பட்டிருக்கிருன்.
அப்பா இப்போதைக்கு வரமாட்டார் வந்தால் நான்கொஞ்சம் தாங்கலாம். வ இரண்டுமணியாவது ஆகும். இப்போது நேர பன்னிரண்டிற்குள்தான் இருக்கும் நேர பார்ப்பதற்கு கடை மணிக்கூட்டை நம் முடியாது
442

s
Jr
ir
உள்ளே குசினியிலிருந்து தேங்காய் துரு வுகிற சத்தம் கேட்கிறது. யாரோ இரண்டு பேர் துருவுகிருர்கள் போல இருக்கிறது. யாராக இருக்கும்? சமையல்காரனும் சிரிபா லாவும்தான். சிவலிங்கம்தான் இங்கே முழங் கையை முண்டுகொடுத்துக்கொண்டு மேசையில் தூங்கிவழிந்து கொண்டிருக்கிருனே. சின்ன வன் அப்பாவுடன் சந்தைக்குப் போய்விட் liftgir.
\
இது ஒரு சனியன்யிடித்த ஊர். சந்தைக்குப் போவதானலும் எட்டுமைல் துரம் பஸ்ஸில் போகவேண்டும். எனக்கு இப்போதுள்ள நில யில் பஸ்ஸைப்பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது. அதிகம் ஏன்? கக்கசுக்குப்போவ தாக இருந்தாலும் பின்னல் ரெயில்வேலைனைக் கடந்து, காட்டுக்குள்தான் போகவேண்டும். எனக்கு ரெயில்வே லைனைப் பார்க்கவே பய மாக இருக்கிறது. ஆயினும் என்னசெய்வது? இயற்கைக் கடனை நிறைவேற்ற நானும் ரெயில்வே லைனைக் கடந்துதான் தீரவேண்டும்.
நெடுக, இப்படிக் காட்டையும் ருேட்டை யும் பார்த்துக்கொண்டிருக்கச் சலிப்பாகத்தான்
இருக்கிறது. இந்த ஒருமணி நேரமாக ருேட்
டிலும் வாகன நடமாட்டங் குறைவு. அப்படி யிருந்தால் வியாபாரமாவது சுறுசுறுப்பாக இருக்கும்.
யாராவது பேச்சுத்துணைக்கிருந்தால் Lug வாயில்லை, சிவலிங்கத்தைக் கூப்பிடலாமா? வேண்டாம், பாவம்! அவன் இரவு படுக்கப் போனபோது நேரம் இரண்டு மணியிருக்கும். அதுதான் இப்போது தூங்கிவழிகின்றன்.
'ஐஸ் மாதிரிக் குளிராக ஏதாவது குடித் தால் நல்லது. சோடா. வேண்டாம். செலவுகூட இளநீர். குடிக்கலாம். என்ன செய்வது? கத்திஎடுக்க சிவலிங்கத்தைத்தான் அருட்டவேண்டியிருக்கிறது.
"சிவலிங்கம். சிவலிங்கம். டேய்’
அவன் மெல்ல அருண்டு விழிக்கிருன். சிவந்த கண்களைக் கைகளால் தேய்த்து கொட் டாவி விட்டுச் சோம்பல் முறித்துக் கொள் கிமுன்.
'எண்ண, சிண்ண மொதலாளி"

Page 11
சூசினிக்கைபோய் சின்னக்கத்தி ஒண்டு எடுத்துக்கொண்டந்து ஒரு இளனி வெ:த்தா. போ” " ;
இவன் அரைச் சிங்க்ளவன். தாய் சிங்க ாத்தி, தகப்பன் இந்தியத்தமிழன். அதுதான் தமிழ்ப் பெயரும் சிங்களக் கதையுமாக இருக் கிருன்,
அதோ, அந்தப் பெயர்ப்பலகையருகில் கனகசிங்கம் வருகிறர். எங்கோ இந்த வெயி லில் போய்விட்டு களைத்துவிழுந்து, வியர்த் தொழுக "டியூட்டி யூனிபோம்" உடன் வருகி ஓர். இந்தப் போறஸ்ற் காட் வேலைகூடச் சிரமந்தான். காட்டுக்குள்ளே தனியாக அலைய வேண்டும். ஆனல் கனகசிங்கம் அப்படியல்ல. குவாட்டஸிலேயே அந்தக் கதிரையில் இருந்து கொள்ளுவார். எப்போதாவது ஒருநாள் தான் த்திபூத்தாற்போல் டியூட்டி யூனிபோம் உடம்பில் ஏறும்
ஒவலிங்கம் குசினிக்குள்ளிருந்து நன்குசீவி எட்டிய இளநீருடன் வருகிருன் சிங்களவ ஒகியபடியால் குறும்ப வெட்டிப் பழகிய கையால் நல்ல அழுத்தமாக வாய் பொருத்திக் குடிக்க ஏதுவாக இளநீர் வெட்டித் தருகிறன். ஆனல் இதைத் தூக்கிக் குடிக்கவே பெரிய சோம்பலாக இருக்கிறது எனக்கு
கனகசிங்கம் நேரே இங்கேதான் வருகிருர், ஒரட் வாங்கவாக இருக்கும். வாசலில் ஏறும் போதே கு. சரியான வெயில்’ என்று அலுத்தபடியேதான் வருகிருர்,
போறேசஸ் ஒண்டு தா. தம்பி"
இலாச்சியை இழுக்கவே அலுப்பாக இருக் கிறது. வேண்டா வெறுப்பாக சிகரட் விற் பனை நடத்துகிறேன். அவர் சிகாட்டைப்பற்ற வைக்க சதா எரிந்துகொண்டிருக்கும் விளக் கண்டை போகிறர் அது அணைந்துபோயிருக் கின்றது.
* விளக்கு நூந்துபோச்சுத்தம்பி'
சிவலிங்கத்திடம் சொல்லிக் கொளுத்து விக்கலாம் தான். அவ்ன், பாவம்! மீண்டும் மேசையில் தூங்கி வழிகிருன் எனக்கும் எழச் சோம்பலாக இருக்கிறது.

*・?
ப்பிடி உள்?ள வந்து ,ெ பாயிலர் கெருப் شیم . பில பத்துங்கோ. அல்லது உப்பிடி உந்தக் கூரைத் தகரத்திலை பிடியுங்கோ எரியும்”.
என்னுடைய நகைச்சுவைக்காக ஏதோ கடமைக்காகச் சிரிப்பதுபோல் சிரித்துவிட்டு, சிகரட்டைக் கொழுத்திக்கொண்டு மெதுவாக குவாட்டஸ்ை நோக்நெடக்கிறர் அவர்.
மீண்டும் வெறுமை. ஒரே எரிச்சலாக இருக்கிறது. ரேடியோவைத் திருகுகின்றேன். ஏதோ கிரிக்கட் நேர்முக வர்ணனை நடக்கிறது. இந்தியாவுக்கும் நியூசிலந்துக் குb * டெஸ்ட் ச்ச நடப்பதாக கனகசிங்கம்தான் நேற்றுச் சொன்னர், 'வெங்கட்ாாகவனின் பத் துவீச் சுக்கு யாரோ ஒரு நியூசிலந்துக்காரன் பெளண் டரி அடித்ததாக’ அறிவிப்பாளன அறிவிக் கின்றன். வெங்கட் தமிழன். ஒரு தமிழனின் பந்துவீச்சுக்கு அந்நியன் ஒருவன் அடித்தானும் பெளண்டரி தமிழனுக்குச் சோம்பலா? சே . இந்த அறிவிப்பாளனின் கரகரத்த, சோம்ப லான குரலேக் கேட்கவே பறறிக்கொண்டு வருகிறது. ரேடியோவை வெறுப்புடன் மூடு கிறேன்.
崇、 米 ජීද
ரத்தே யாரோ மஞசள் நிற ஜப்பான் குடையுடன் வருகிறர்கள்.
ஜப்பான் குடைதான் இப்போது பாசன்’
பெண்கள்தான் அதிகமாக ஜப்பான்குடை பாவிக்கின்றர்கள். எதிரே வருவதுகூட ஒரு பெண்ணுக இருக்கலாம். இருக்கலாம் என்ன? பெண்னேதான்.
மஞ்சளுக்குக் கீழே சிறிது இடைவெளி விட்டு மெல்லிய . மிகமெல்லிய சிவப்பாகத் தெரிகிறது. முேட்டின் கறுத்தப் பின்னணியில் மஞ்சளும் மென் சிவப்பும் நல்ல எடுப்பாக இருக்கிறது. அந்த மென்சிவப்பு அப்பெண் னின் ஆடையாக இருக்கும்.
w மினிகவுண்தான் இப்போது பாசன்"
இவளுக்கு தூரத்தே நின்று பார்க்க இது
அழகாகத்தான் இருக்கிறது. கிட்டவர நன்கு
பார்க்கலாம். முகத்தையும் பார்க்கலாம்.
443

Page 12
அழகாக இருப்பாளோ? அழகாகத் தான் இருப்பாள். அதையே நான் நான்மட்டு மென்ன, எல்லோரும் விரும்புகிருர்கள்.
இந்த வெயிலில் நடந்து வருகிருளே பாவம் சுடாதா?
குதிச்சப்பாத்து போட்டிருப்பாள். குதிச்சப்பாத்துதான் இப்போது பாசன்" குதிச்சப்பாத்துப் போட்டால் வேகமாக நடக்கமுடியாது. அதுவும் நல்லது. சில பெண்
களுக்கு அதுவே ஆறஅமர. நிதானமாக நடக்கப் பழக்குகிறது.
இந்தப் பெண்ணின் நடை. நன்றயிருக் கிறது. மிக நன்றயிருக்கிறது. அன்னநடை என்பார்களே! அதுமாதிரி.
இப்பொழுது அவள் அந்தப் பெயர்ப்பல  ைஈக்குக்கிட்ட வந்துவிட்டாள். நல்ல நிறம், நான் பெண்கள் எந்தநிறத்தில் இருக்கவேண் டுமென எண்ணுவேனே? அந்த நிறம்.
இன்னும் கிட்டவந்தால் ஏன் கடைக்கே வந்தால் . 2 நன்ருகப் பார்க்கலாம்.
இந்த நேரத்தில் எங்கே வருகிருள்? ஆசுப்பத்திரிக்காக இருக்கும். இந்த அழகான பெண்ணுக்கு ஆசுப்பத்திரிக்குப் "போகு ள வுக்கு நோயா? சீ. கூடாது. அப்படியிருப் பதை நான் விரும்பவில்லை.
இப்பொழுதுதான் நன்ருகக் கவனிக்கக் கூடியதாக இருக்கிறது. குழுகுழு கண்ணுடி மாட்டியிருக்கிருள். சிவந்த முகத்திற்கு கறுத் தக் கண்ணுடி எடுப்பாக இருக்கிறது.
ஆமாம், இந்தச் சனியன்' பிடித்த ஊரில் கூட இப்படிப் பெண்கள் இருக்கிருர்களா? ஏன் இருக்கக் கூடாது? ஒருவேளை இவர்கள் - இப்பெண்ணின் குடும்பத்தினர்-என்ஆணப் Guirgi) வெளியூர்க்காரர்களாக இருக்கலாமல் லவா? இங்கே "பாம்" ஏதாவது .
என்ன இவள் கடைக்கல்லவா வருகிரு? 2.நான் சற்று உஷாராக இருக்கவேண்டும். இப்படி இருந்தால் எப்படி? அதுவும் ஒரு அழ கான பெண்ணுக்கு முன்னல்,
444

கடைவாசல்படி கொஞ்சம் உயரம். அதில் ஏறும்போது அவளுடைய குதிச்சப்பாத்து வழுக்கப் பார்க்கிறது. வாசல் தூணைப்பிடித் துக்கொண்டு சமாளித்துக் கொள்கிருள்.
"கவனம். பாத்துவரக்கூடாதா' “Its alright thank you'
ஆகா! மதுரமான குரல். இவள் இங்
கிலீசு தெரிந்தவள். நானும் எனக்குத் தெரிந்
ததாகக் காட்டிக்கொள்ளவேண்டும்.
“What do you want "சோடா ஒண்டு தாங்க"
சோடா என்று சொல்லும்போது சாயம் பூசிய, சிறிய அளவான உதடுகளின் பின்னணி யில் முத்து வெள்ளைப் பற்கள். வடிவமே முத்துப்போலச் சிறிதான பற்கள் - நன்முக இருக்கின்றன. சோடா கொடுக்க சிவலிங் கத்தை எழுப்பலாமா? வேண்டாம் நானே கொடுக்கலாமே! எழுந்த வேகத்தில் பாதி திறந்திருந்த இலாச்சி தொடையைப் பதம்
பார்க்கிறது. கனகசிங்கம். அவரால்தானே இலாச்சி திறக்கவேண்டி வந்தது. அவர் பாழாய்ப்போக. -
"அம்மாடி” என்றவாறு திரும்ப உட் கார்ந்து கொள்கிறேன். அவள் முன்னலிருந்த *சோடா ராக்"கிலிருந்து சோடா ஒ ன்  ை எடுக்சிருள்.
"பரவாயில்லை opener ஐத் தாங்க. நானே உடைக்கிறன்"
எடுத்துக் கொடுக்கிறேன். நல்லகாலம் அது கையெட்டும் தூரத்திலேயே இருக்கிறது. . இல்லாவிடில் அவள் முன்னலேயே நொண்டி
.நொண்டி. சீ . வெட்கக்கேடு.
சோடா குடிப்பதற்காகப்போலும் கண் ஞடியைக் கழற்றிக்கொள்கிருள். நல்ல பெரிய விசாலமான கண்கள். உதட்டுக்குச் சாயமிட் டவள், கண்ணுக்கு மையும் இட்டிருக்கலாமே! இட்டிருந்தால் இன்னும் அழகாக இருத திருக்கும்.
**எவ்வளவு காசு ..”*
'ஒண்டிருபது தாங்க. "

Page 13
காசு தரும்போதுதான் கவனிக்கிறேன் கையில் மெல்லிய பூனை மயிர்கள். அது கறு பாக இல்லாமல் உடலின் நிறத்திலேயே இரு கிறது. அதுவும் ஒரு அழகு கான் . காலிலும் இருக்கும், எட்டிப்பார்க்கலாமா? சீ. அவள் என்ன நினைத்துக்கொள்வாள்.?
நான்தான் அவளையே பார்க்கிறேனே அவள் என்னைக் கவனிப்பதாகவே காணுேம்.
முகத்தைக் கைக்குட்டையால் ஒற்றித் துடைக்கிருள். திரும்ப அதை மடிக்கும்போது . 'நான் நினைத்தது நடக்கிறது. கண நேரம் தான். கண்களைத் திருப்பிக்கொள்கி ருளே! ஆமாம், இப்படியான சந்தோச சமாச் சாரங்கள் எல்லாம் கணநேரம்தானு?
இன்னும் நிற்கிருள். ஏதாவது வேறு தேவைகளும் இருக்கும்.
*வேறை என்ன வேணும்?* - "Gag th Soda bottle கொடுத்தா. தல்லது” . . . . .
"ஒ. அதுநாங்கள் விக்கிறதில்லையே?
"Oh... I see "எண்டாலும் பரவாயில்லை. உதின் கிடக்கிற போத்தலை எடுங்க . இன்னும் ஒரு ரூபா தாங்க"
அலுவல் முடிந்து போகும்போது மீண்டும் ஒருதடவை மின்வெட்டு, இப்போது அவள் மெதுவாக சிரிக்கிறதாக எனக்குப்படுகிறது.
毕。 亲 掌
திடீரென பெயர்தாங்கிப் பலகையிலிருச் கும் காக்கைகள் உச்சஸ்தாயியில் கத்துகின்றன. அவை ஆரவாரமாக. மகிழ்ச்சிப் பெருக்குடன் கரைவதாக எனக்குப் படுகின்றது. அவை இப்போ நெருக்கமாக அமர்ந்து ஒன்றைஒன்று கொத்தியும் சீண்டியும் விளையாடுகின்றன.
அந்த மாடு இப்போது எழுந்து நிற்கிறது. அசைபோடுவதை நிறுத்திவிட்டது. புல் மேய ஆயத்தமாகின்றதா?. முதுகில் தொந்தரவு தரும் ஈக்களை வாலால் விளாசி விரட்டுகின் றது. அப்படித்தான் இருக்கவேண்டும். எதி ரியை அடித்து ஒட . ஒட விரட்டவேணடும்.

d
கன்றுக்குட்டி துள்ளித் துள்ளி தாய்க்குக் கிட்ட வருகிறது. தாயைமுட்டி மோதிப் பால் குடிக்கிறது. அப்படித்தான் இருக்சவேண் டும். சேரவேண்டியதை எடுத்துக்கொண்டு
ஆனந்தமாக . கோலாகலமாக வாழ வேண்
டும். ஒ! வாழ்க்கைதான் எல்வளவு இன்ப
கரமானது.
அந்தப்பெண் ஆசுப்பத் திரிக்கே தான் போகிருள். பரமசிவம் யோகத்திலிருந்து விழித். தெழுகின்ருர், போகத்திற்கா? சீ , என்ன அசிங்கமான எண்ணம் . சுருட்டு 'புக். புக்’ என்று புகைகக்குகிறது. அந்தப்புகை"அப்படியே மேலெழுந்து . மேலே. இன்னும் மேலே போய்க்கரைந்து காற்றேடு ஐக்கியமாகின்றது. அப்படிக் கரைவதைப்பார்க்க, எனக்கும் நான் அவ்வாறு மேலே மேலே போகவேண்டும் போல் இருக்கிறது.
குவாட்டஸ் முன்விருந்தையில் கதிரையின் மேல் வழமையான பாணியில் கனகசிங்கம்
உட்கார்ந்திருக்கிருர், கொடியிலுள்ள துணிகள்
காற்றுடன் கலந்துறவாடி இன்பப் பெருக்கால் கனகசிங்கத்தின் முகத்தில் மெல்ல விசிறுகின் றன. ஒரொரு சமயம் அவரின் முகத்திலேயே செல்லக்குழந்தையின் விளையாட்டு அடிகள் போல பட்டு விலகுகின்றன. அவர் முகத்தில் புன்னகை. அப்படித்தான் இருக்கவேண்டும். சதாநேரமும் சிரித்தமுகத்துடன். அதைவிட்டு விட்டு கடுவன்பூண்மாதிரி கடுகடுத்த முகத் துடனு?
வெயில் இப்போதும்கூட சுள்ளென்று
அடிக்கிறது. இந்த வெயில் இல்லாவிட்டால்
நானில்லை. எதிரே தெரியும் காடு இல்லை. தூங்கிவழியும் இந்தச் சிவலிங்கம் இல்லை. இந்தக் கடையில்லே. அந்தக் கன்னி இல்லை. ஒன்றுமே இருக்காது. வெயில் வேண்டும். நன்கு எறித்து, எரிந்து தள்ளவேண்டும்.
கருனே செருப்புச் சத்தம் "சரசர’க்கக்
கடைக்கு வருகிறன். ரீ குடிக்கவா? வரட்டுமே!
ஒரே வீச்சில் ஒன்பது ரீ அடிக்கமாட்டேன நான்! அவனும் வெகு உற்சாகமாக இருக் கிருன். சீட்டிகூட அடித்துக்கொள்கிருனே! கைச்சரக்குத் தீர்ந்துவிட்டதா? காசு சேர்ந்து விட்டதா? சந்தோசம் கொண்டாட வரு ممه همه 69)dy 6
445

Page 14
gytunT , இப்போதைக்கு வரமாட்டார். வராவிட்டால் போகட்டுமே! நானிருக்கிறேன் கடையை நடத்த, வேலை செய்வது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியமின்லையே!
ரெயில்வேலைனில் கூட்ஸ்ஒன்று போகிறது. கடையே அதிருகிறது. கடை அதிர. கடை யில் நிலம்அதிர. நான் அதிர. என்னேடு பொய்லர் அதிர. எதிரே வீதிஅதிர. ஆசுப் பத்திரி, அந்தப் பெண் அதிர. ஷோக்கேஸ்கள் அதிர சிவலிங்கம் அதிர அதிர - இந்த அதிர்வுகள்கூட இவ்வளவு லயத்தைத் தேக்கி வைத்திருக்கின்றனவே!
இந்தச் சத்தத்தில் சிவலிங்கம் விழித்துக்
கொள்கிருன், அவனது சோம்பல் முறியவில் லையா? சனியன் பிடித்தவன். மத்தியான வியா பாரநேரம் தூங்கிவழிகிருனே!
ஒவலிங்கம். டே! சிவலிங்கம், என்ன நெடுகத் தூங்கிவிழுகிருய்? போ. போய் முகத்தைக் கழுவிக்கொண்டுவா. இப்பிடி நெடுகத் தூங்கிவழிஞ்சா வாறவனும் சாப்பி டாமல் திரும்பிப்போடுவன்.'
ரெயில்வே லைனைக்கடந்து ஒருவன் போகி ருன், ஜலக்கடனை மத்தியானத்தில் கழிக்க
ஸ்போன கையோடே போகிருன், இவ் 9 ளவு நேரமும் கூட்ஸ் போகட்டும் என்று காத்து நின்ஞன? பயந்தாங்கொள்ளி பயம். என்னபயம் சாவதற்கு?. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு?
இருந்தாற்போல் ருேட்டில் ஒருபஸ் போகி றது. வேகம் அவ்வளவாக இல்லை. ஆமைவேகத் தில் உருட்டுகிருனே பஸ்ஸை! அடே சோம் பேறிப் பயலே பஸ்ஸை வேகமாக, உன்னல் முடிந்தவரை வேகமாக ஒட்டு! பஸ்ஸைப் பார்க்க எனக்கு பரமானந்தமாக இருக்கிறது. ருேட்டில் சுறுசுறுப்பு விஷம்போல் ஏறுவதாக எனக்குத் தோன்றுகிறது.
ரேடியோவைத் திருகுகின்றேன். சத்தம் . ஏகச்சத்தம். யாரோ ஸிக்சர் அடித்துவிட்டா னம்! யார் பந்து வீசுவது? மடையன்'ஸிக்சர்
அடிக்கும்படியாகவா பந்துவீசுவது?" *வெங்கட்
446

ச. ரவீந்திரன்
அறிந்தும் அறியாதது
*கன்னடர்கள் தமிழர்களை வெளியேறச் சொல்கிருராம்: சிங்களரும் சொன்னல் என்ன செய்வதாம்?-- தர்மிஷ்டர் கேட்கிருர்!*
தமிழர்களை மட்டுமா மலையாளி களையும்தான் போகச் சொல்லுகிருர், கன்னடர்கள்! கன்னடத்துக்குத் தமிழர்கள் போனவர்கள்: மலையாளி களும், அப்படித்தான்.
ஆனல், எங்கிருந்து நாம்வந்தோம்? விஜயனுக்கும் முன்னிருந்தே இங்கே இருக்கிறேம். தர்மிஷ்டர், வரலாறு படிக்கவேணும்!
* ஆன்ேமடுவில் ஜஞர்திபதியின் பேச்சு 25-3-1981.
ராகவனின் பந்துவீச்சு" என அறிவிப்பாளன் சொல்கிருன். அவனுடைய குரலில் உற்சாகம் தொனிக்கிறதா? அவனுடைய குரலையும்மீறிச் சனங்கள் கத்துகிருர்களே! உயரேபோன பந்தைப் பார்த்து குதூகல வெறியுடன் அவர் கள் குரவையிடுகிருர்களா? கத்துங்கள் மகா சனங்களே கத்துங்கள் உலகமெங்கும் உற்சா கத்தை விதைக்கக் கத்துங்கள்!
வெங்கட் தமிழன்! தமிழன் என்ருல் என்ன? எந்தக் கொம்பணுக இருந்தால் என்ன? திறமையைப் பாராட்டியே ஆகவேண்டும். ஸிக்சர் அடித்தவனுக்கு ஜ்ே! O

Page 15
எஸ். எம். ஜே. பைஸ்தீன்
தமிழ்ப் படங்களைத் திரையிடுவதற்கெனச் சிறப்பாக ஒதுக்கப்பட்டுள்ள தியேட்டர்கள் சிங்களப்படங்களை வெளியிடுவதற்கான ஆரு வது காட்சிமண்டலமாக மாறும் ஒருநிலை தற் போது உருவாகியுள்ளது. “ஒருதலைக் காதல்" என்ற படத்துடன் இந்நிலை ஆரம்பமானது. * பனிமலர்கள்’’ அதனைத் தொடர்ந்துள்ளது. இவை இரண்டும் சிங்களப் படங்களின் மொழி மாற்றங்கள். W
இலங்கையிற் தேசீயத் திரைப்படத் தொழி லுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளின் காரண மாகச் சிங்களப் படங்களின் தயாரிப்பு அவற் றைத் திரையிடுவதற்கு உள்ள தயேட்டர் வசதிகளைக் காட்டிலும் கூடுதலாகப் பெருகி யுள்ளது. முழுத்திரைப்பட விநியோகத்தை யும் படிப்படியாகத் தனது பொறுப்பில் ஏற்று 1976 ஏப்ரல் முதலாம் திகதிமுதல் முழுமை யான பொறுப்பைக் க்ைக்கொண்ட அரச திாைப்படக் கூட்டுத்தாபனம் இப்பட வெளி யீட்டுக்காக ஓர் ஒழுங்குமுறையை ஏற்படுத்தி புள்ளது. தியேட்டர்கள் ஒரு முதன்மை வரி சைப்படி நிரற்படுத்தப்பட்டுள்ளன. இவை அட்ங்கக்கூடிய வகையில் காட்சி மண்டலங் களும் அமைந்துள்ளன. எனவே புதிய திரைப் படங்கள் இம்மண்டல ஒழுங்குப்படியும், முதன் மைத் தியேட்டர் வரிசைப்படியுமே முதன் முதல் திரையிடப்பட வேண்டும். முதன்மைத் தியேட்டர்களினின்று பின்னரே ஏனைய தியேட் டர்களுக்கு மாற்றப்பெறும். இவ்வாருக அதி வருமானத்துக்குரிய தியேட்டர்களில் திரை பீட்டு வாய்ப்பினைப் பெறவும், ஏனைய தியேட் களில் ஓடி முழுவசூஃல ஈட்டிக்கொள்ளவும் ஒரு படத்தயாரிப்பாளர் தமதுமுறை வரும் வரை நீண்டகாலம் காத்திருக்க வேண்டும்.

சிங்களப் படவெளி யீட்டுக்கு தமிழ்த் திரையரங்குகளில்
ஆறவது காட்சி மண்டலம்
இக்கால நீட்சி தற்போதைய சூழலில் இரண்டு முதல் மூன்று வருடங்களை மிகைக்கலாம்.
திரைப்படக் கூட்டு த்தாபனம் ஆரம்பிக்கப் பட்டபோது ஒரு சமயத்தில் இரண்டு சிங்களப் படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன. 1973ல் மூன்ருவது மண்டலமும், 1975-ல் நால் காவது மண்டலமும் ஏற்படுத்தப்பட்டன. பரிசோதனை முயற்சிகளிலும், கலைநயப் படைப்புக்களிலும், மரபுமீறிய ஆக்கங்களிலும் ஈடுபடுவோரை ஊக்குவிக்குமுகமாக 1980-ல் ஐந்தாவது காட்சி மண்டலம் உருவாக்கப்பட்டது. இந்நோக்கத் தின் மெய்ப்பாடுகள் எப்படியிருந்தபோதிலும் தற்போது வெகுவாகப் பாராட 6-ا{ Lb ع9 س 3) و வும்படுகின்ற "ஹன்ச விலக்' போன்ற படங் கள் தமது முறைக்காகக் காத்திராமல் கூடிய விரைவில் ரசிகர்களை வந்தெய்த ஐந்தாம் மண் டஸம் உதவியுள்ளது. ஆனல் *ஒருதலைக் காதலும்’, ‘பனிமலர்க"ளும் இதன் உதவி யைப் பெற்றிருக்கமாட்டா, எனவேதான் அவை மாற்றுவடிவத்தை ஏற்றன.
தமிழ் ரசிகர்களின் சுவைக்குப் பெரிதும் பாத்திரப்பட்டுள்ள இந்தியப் படங்களின் , இறக்குமதியையும் திரைப்படக் கூட்டுத் காப னம் கட்டுப்படுத்தியுள்ளது. இந்திப் படங்கள் தற்போது முற்றிலும் நிறுததப்பட்டுள்ளன. கொழும்பில் மட்டும் ஒரே நேரத்தில் ஆறு இந்திப்பட்டங்கள் திரையிடப்பட்ட காலமும் உண்டு. இலங்கை முழுவதிலும் இத்தகைய இந்திப்படங்களைத் திரையிடுவதில் முன்னர். வகுத்த ஒன்பது தியேட்டர்கள் சிங்களப்படங் களுக்காக முதன்மை வரிசை பெற்றுள்ளன. சிங்களப் படங்களுக்கான ஏனைய தியேட்டர் களுக்கும் பொது வேயான போதிலும், விசேட
447

Page 16
மான இவ்வொன்பது தியேட்டர்களில் இந்திப் படங்களின் அச்சொட்டான சிங்களப் பிரதிகள் (காபன் கொப்பி!) (சில வேளைகளில் இத்தியேட்
டர்களிலேயே வெளியான இந்திப் படங்களின் பிரதிகளும்) வெளியாவது வேறு விடயம்!
இறக்குமதித் தமிழ்ப்ப்ட் வெளியீடு கொழும்புக்கும் வடபிரதேசத்துக்கும் மட்டுப் படுத்தப்பட்டுள்ளது. புதிய தமிழ்ப்படங்கள் முதன் முதலில் கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இரு நகரங்களிலுமே திரையிடப்படும். சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங் களிற் தமிழ்ப்படங்கள் திரையிடப்பெறுவது அங்கு குறித்த அளவுக்கு (சுமார் 40%திரை யிடற் காலமாதல்) சிங்களப் படங்கள் திரையி டப்படுவதனையும், சிங்களப் படங்கள் புதிதா கத் திரையிடப் பெருக இடை வெளிக்கால ங்களையும் பொறுத்தாகும். வட பிரதேசத்தில் யாழ்ப்பாணம் போன்றவை தவிர சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளிற்தானும் இதே ஒழுங்கே அமையும். சிங்களமக்கள் அதிக மாக வாழும் பகுதிகளேயான போதிலும் அங் கும் தமிழ் பேசுவோர் கணிசமாகச் செறிந்து வாழும் புத்தளம், நீர்கொழும்பு, கண் டி போன்ற இடங்களில் இலங்கையில் மிகவும் அரிதாகவே திரையிடப்படுகின்ற தமிழ்ப்படங் களைக் கூடப்பார்பதற்கு வெகு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது என்ற குரல் எழுகிறதெனில் அதற்குக் காரணம் இதுவே.
இறக்குமதித் தமிழ்ப்படங்களின் இடத் தைக் குறைவின்றிக் கூட்டுத் தயாரிப்புகள் தற்போது பெற்றுள்ளன. உள்நாடு சம்பந்தப் பட்ட தயாரிப்பு என்ற முறையில் இவற்றுக் குக் கூட்டுத்தாபனத்தின் உதவி கிட்டுகிறது. பல நாடுகள் தொடர்புபடுவதால் ஒவ்வொரு நாட்டிலும் சம்பந்தப்படும் துறைகளைமட்டும் முன்னிறுத்தி, அவ்வவ்நாட்டிற் பயன்பெற இவை இடமளிக்கின்றன. இலங்கையிற் தயா ரிக்கப்பட்டவை என்றமுறையில், இவை இலங் கையைப்பற்றித் தோற்றுவிக்கும் அகவுருவம் கவன்த்துக்குரியதாகும். இலங்கையைக் காட்டு மிராண்டிகள் வாழும் ஒரு நாடென்ற எண் ணத்தை உருவாக்கும் சர்வதேசத் தயாரிப் பைப் பற்றியும் நாம் அறிகின்ருேம். ஒரு வேற்றுமொழிக் கதையை இலங்கையிற் பட
448

மாக்கிக் கதை நிகழ்களமாகச் சென்னையைச் சித்தரிக்கக்கூடிய அளவுக்குக் கூட்டுத்தயாரிப்பு கூர்மையடைந்துள்ளது. எனினும் கூட்டுத் தயாரிப்புக்களின் வரிசையில், "இரத்தத்தின் இரத்தமே சிறப்பாகக் குறிப்பிடப்படவேண் டும். ஒரு வழமையான தமிழ்ப்படத்துக்குரிய குறைகள் பலவற்றை இதிற் சுட்டிக்காட்ட முடியுமேயாயினும், ரசிகர்கள் விரும்புகின்ற ஒரு பொழுதுபோக்குச் சித்திரமாக இது அமைந்தது. அவர்களிடம் "நோக்கங்களையும் அபிமானத்தையும் வெறுமனே திணிக்க முடி யாது என்பதை இப்படத்தின் வெற்றி காட் டுகின்றது. உள்நாட்டுத் திறமைகள் இதிற் கணிசமான அளவுக்குத் துலங்குகின்றன. ஆரம் பத்திற் குறித்த மொழி மாற்றப் படங்களைப் போன்றே கூட்டுத் தயாரிப்புக்களது சா த க பாதகம் தனியாக ஆராயப்படவேண்டும்.
இலங்கையின் படத்தயாரிப்பில் மற்று மொரு முக்கிய அம்சம் அதற்கான கடன் வசதி யாகும். திரைப்படக் கூட்டுத்தாபனம் மக்கள் வங்கியின் அனுசரனயுடன் இதை வழங்கு கின்றது. படத்தயாரிப்பாளர் எவரும் இதைப் பெறலாம். படத்தயாரிப்புச்செலவில் 50%த்தை முதலிடக்கூடிய வசதியுள்ள தயாரிப்பாளருக்கு மக்கள்வங்கி படத்தை நிறைவுசெய்வதற்கான கடனைக் கொடுக்கும். படமெடுத்தல் நிறைவு பெற்றதும் படத்தைத் திரையிடுவதற்கு வேண் டிய செலவுகளுக்கும் க்டன் வழங்கப்படும். இக்கடன்வசதி தற்போது மேலும் விரிவுபடுத் தப்பட்டுள்ளது. ஆற்றல்மிக்க இயக்குநர்க ளுக்கு 100% கடன்வசதி வழங்கப்பட்ட சந் தர்ப்பங்களும் உள்ளன. இத்தகைய கடன் வழங்குதலில் ஒரு முக்கிய அம்சம் அதற்கெ னப் பிணை ஏதும் கோரப்படாமையர்கும். படத்தயாரிப்பு உறுதிப்படுத் தப்பட்டால் போதுமானது.
இங்கு குறிப்பிடப்பட்ட வசதிகளை இலங் கையிற் தயாரிக்கப்படுந் தமிழ்ப்படங்களும் பெறுகின்றன. ஓர் இலங்ண்கத் தமிழ்ப்படம் திரையிடப்படும்போது அதற்கு இறக்குமதித் தமிழ்ப்படங்களின் போட்டி ஏற்படாதவகை யில் கவனிக்கப்படுகிறது. இலங்கைத் தமிழ்ப் படங்களுக்கும் கடன்வசதிகள் அளிக்கப்படு கின்றன.

Page 17
எனவே முற்குறித்த இரு பெற "ழிமாற்றப் படங்களும் தமிழ்ப்படங்களேபோல் இவ்வசதி களைப் பெற்றுள்ளன. ஒரு படத்தின் சிறப் புக்கு அதன் நெறியாளுகை, ஒளிப்பதிவு, இசையமைப்பு, நடிப்பு போன்ற எந்த ஒரு துறையும் தனியாகப் பொறுப்பாக மாட் டாது. எனினும் இவற்றில் ஏதாவது ஒவ் வொன்றுக்காகப் படத்தைச் சென்று பார்க்கும் ரசிகர்கள் பெரும்பாலாக உள்ளனர். இவ்விரு படங்களையும் பொறுத்தவரை இவ ற் று ஸ் எதைப்பற்றியுமே ரசிகர்கள் முதலில் அறியும் வாய்ப்புக் கிட்டவில்லை. இத்துறைக் கலைஞர் 5ள் சிங்களப் படத்தயாரிப்பிற் பிரசித்தமாக இருந்தபோதிலும் தமிழ் ரசிகர்கள் முன் வைக் கப்படாமைக்குக் காரணம் இவை சிங்களப் படங்களின் மொழிமாற்றங்கள் என்பதை அவர்கள் அறியாதிருப்பதற்காக இருக்கலாம். "பனிமலர்'களின் கதாநாயகி மட்டும் பிரசித் தப்பட்டாரெனில் அவர், "இலங்கையின் இளம் குயிலாக ஒரு கூட்டுத்தயாரிப்பில் இசைத்த மையினலாக வேண்டும். V
இம்மொழிமாற்றப் படங்களின் முக்கிய பலமாகத் தோன்றுவது இன்று இலங்கை வானெலியில் வர்த்தக ஒலிபரப் பின் மூலம் கணிசமான அளவு ரசிகர்களின்பாற் தமது அகவுருவங்களைப் பதித்துள்ள க%லஞர்களின் குர்ல்களேயாகும். தமிழைச் சரிவர உச்சரிக்க முடியாதபோதிலும் (இரவற் குரலால் அதனை :டுசெய்து) ஏதோ வழிகளால் ரசிகர்களிடம் அகவுருவங்களைத் தோற்றுவித்துள்ள நடிகர் கள் பலர் காணப்படுகின்ற தென்னிந்தியத் தமிழ்ப்பட உலகினை நோக்குமிடத்து இவ்வா ைெலிக் கலைஞர்கள் உண்மையிற் பாராட்டுக் குரியவர்கள்தாம். எனினும் இப்பலம் எவ்வ் ாவு காலம் கணித்து நிலவமுடியுமென்பதை யும், அதன் இறுதிப் பயன்பாட்டையும் கருத் திற் கொள்ளவேண்டும்.
இம்மொழிமாற்றப் படங்கள் வர்த்தக நோக்கினையே கூடுதலாகச் சார்ந்து தோன்று வதால் அதற்கேற்ப பல அம்சங்களை ரசிகர் களிடம் சுமத்த முயன்றுள்ளன. விசித்திர மான முறையில் ரசிகர்களது கவனத்தை ஈர்த்து அமோக வெற்றியுடன் தமிழ்நாட்டில் ஒடிக்கொண்டிருக்கும், "ஒருதலை ராகம் இவற்

றில் ஒரு படத்துக்கு உந்து தலை அம்ரித்துள் "க. "ஒருதலை ராகத்துடன் இணைத்து “ஒருதஃக் காத"லுக்குச் செய்யப்பட்ட விளம்பரங்களைப் பற்றிய குறிப்புக்கள் தினசரிப் பத்திரிகை யொன்றில் வெளிவந்தமையை இங்கு குறிப் பிடலாம். இதனுல் பின்னதை முன்னதென மயங்கிப் பார்க்கச் சென்ருேரும் உளர்.
ஓர் இந்திப்பாடல், ஒரு கிரேக்கப்பாடல் என்பன ஒருதலைக் காதலில் மற்றும் ஒல கவர்ச்சி அம்சங்களாகும். வட இந்தியாவில் பெரும் பரபரப்பினையூட்டிய *சத்யம் சிவம் சுந்தரத்தில் அப்பரபரப்புக்குக் காரணமான காட்சியின் நுட்பமான இணைப்பின் விளைவே அவ்விந்திப்பாடற் காட்சியாகும், குறிப்பாக இந்திப் பாடல்களைத் தழுவிய இசையமைப்பு திரையீட்டு அனுமதி மறுப்புக்கு ஒரு நிபந்த னையாக விதிக்கப்பட்டிருந்த சூழலில் இவ்வாறு நேரே ஓர் இந்திப்பாடல் இவ்விலங்கைப்படத் தில் இடம்பெற்றமையும் ஒரு புதுமையே!
ஒருதலைக் காதலின் உண்மையான பல மாக ரசிகர்முன் படைத்திருக்கக் கூடியது டாக்டரது கதாபாத்திாமே "மூ ன் பெலஸ்ல படத்தில் 'கதிரா"வாக நடித்ததன் மூலம் 1980இன் சிறந்த நடிகர் விருதினைச் சில: ஈட்டக்கூடிய ரெக்ஸ கொடிப்பிலி இதனை ஏற்றிருந்தார். இவரது அடக்கமான நடிப் பினை இப்படத்தின் மூலவடிவத்திலேயே ரசிகர் கள் சுவைத்திடச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி யிருக்கலாம். தும்பைவிட்டு வாலைப்பிடிக்கிற இத்தகைய முயற்சிகளின் பின்னணி மேலே விவரித்தவாற்ருல் இதுவரை புரிந்திருக்கலாம்.
சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற் றப்படங்களின் ஆரம்பம் இங்கு குறித்த இரு படங்களும் அல்ல "கலியுக காலய என்ற படத்தின் மொழிமாற்றமான 'கலியுக காலம் இதன் மெய்யான ஆரம்பம் எனலாம். இது வெளியான ஆண்டு எனக்கு நினைவில்லா த போதிலும், இது ஒரு தீபாவளிப் பண்டி கைக்கு வெளியிடக் குறிக்கப்பெற்றிருந்தது. அப்போது இது ஒரு கலாச்சார ஊடுருவெ லன் றும், திணிப்பென்றும், ஒரு தமிழ்ப்பண்டிகை சமயத்தில் நல்ல தமிழ்ப்படங்களைப் பார்த்து ரசிக்கம் உரிமையை மறுப்பதாகும் என்றும் பெருங்குரலெழுப்பப்பட்டது. அதே குரல் தற்
449."

Page 18
போது மட்டும் ஏன் எழவில்லை என்பது விந் தையாக உள்ளது. அன்று எதிர்ப்புக்குரல் எழுப்புவோரே இன்று இம்மொழிமாற்றப் படங்களின் வெளியீட்டை முன்நின்று நடத்தி வைப்பதையும் காணமுடிகிறது. அதே சமயம் 'கலியுககாலம்" படஇயக்குநரான ரீ. அர்ஜுன வின் அபார வளர்ச்சியையும் நாம் அவதானிக் கிருேம். நெறியாள்கையிலும், படப்பிடிப்பி லும் இவருக்குள்ள ஆற்றல் ஐயத்துக்கிடமற் றது. இவரது ஆற்றல் இவரை இன்னும் ஓர் அதியுன்னத இயக்குநரென்ற முறையில் வெளிப் படுத்திக் காட்டவில்லை என்பது உண்மையே. எனினும் இவர் சிறந்தபடம் உட்படப் பல ஜனதிபதி விருதுகளை தமது 'வசந்தயே தவ சக்' படத்துக்காகப் பெற்றுள்ளார். தற்போது "வசந்தத்தில் ஒரு வானவில்’ என்ற தமிழ்ப் படத்தை ஒரு கூட்டுத்தயாரிப்பாகத் தயா ரித்து வருகிருர், !
*ஹந்தயா? படத்தின்மூலம் தமது சர்வ தேச மதிப்பை நிலைநிறுத்திக்கொண்ட “டைட் டஸ் தொட்டவத்தை'யின் ஆரம்ப முயற்சி களுள் ஒன்றன ‘ஹார லக்ஷயே’ ‘நாலு லட்சம் ரூபா கொள்ளையாக" வெளிவந்துள் ளது. இதனைவிடவும், ஒரு சிங்களப்படத்தைத் தயுாரிக்கும் அதேவேளையில் அதனுடன் தமிழ் நடிகர்கள் தோன்றும் சில காட்சிகளை இணைத்து இறுதியில் அதனைத் தமிழ்ப்படமாக வெளி யிடும் முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன. *சுமதி எங்கே?' 'அனுக்கிரகம்’ போன்ற படங்கள் இத்தகையன.
இன்று சிங்களப் படங்கள் தொகையள விலும், தரத்தாலும் அபார வளர்ச்சி ஈட்டி யுள்ளன. இலங்கைத் தமிழ்ப்படங்கள் ஏஞே இன்னும் அந்நிலையை எய்த முடியவில்லை. அவற்றின் வளர்ச்சிப் பாதையிற்தானும் இத் தகைய மொழிமாற்றங்கள், அர்த்தமற்ற கூட் டுத்தயாரிப்புக்கள், அச்சொட்டான தழுவல் கள் பின்னடைவையே நிலைநிறுத்தும். மொழி மாற்றங்களைப் பொறுத்தமட்டிலும் அவை அவசியமா, அவசியமாயின் மொழிமாற்றப் எவ்வாறு அமையவேண்டும், எந்த அளவில் இருக்கவேண்டும் என்பவை தீவிரமாக ஆர யப்பட வேண்டும். திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்ற முறையில் மிகவும் சிக்கன
50

மான ஒலிப்பயன்பாடுகளுடன் "அபெக்ஷா" *ஹன்ஸ்விலக்’, 'தண்டு மொனர” போன்ற சிங்களப்படங்கள் வெளிவந்துள்ளன. இதன
\
லும், அறியக்கூடிய மிக அயல்மொழி என்ற முறையிலும் இச்சிங்களப் படங்களை அவற்றின் மூலவடிவங்களிலேயே ரசிகர்கள் சுவைக்கலாம். மேலும் “சருங்கலய’ (பட்டம்) மொழிமாற் றத்துக்கே அவசியமின்றி அதன் பெரும்பகுதி தமிழ் உரையாடலையே கொண்டுள்ளது. சிங் களத்தின் முன்னணிக் கதாநாயகரான காமினி பொன்சேகா நடரர்ஜாவாகத் தோன்றி (பிழை படவேயாயினும்!) தமிழிற் பேசி நடித்திருந் தமை இதிற் குறிப்பிடத்தக்கது. அதுபோ லவே இப்படத்தின் வெளியீடு தணிக்கைக் குழு வினருடன் பிணக்குக்குட்பட்டபோது இதற்காகக் குரலெழுப்பத் தமிழ்த் திரைப் படத் துறையினர் முன்வராமையும் விசனத் துக்குரியதே.
இயக்குநர்கள் பெரும்பாலும் பொது மக் களுக்குத் தற்காலிகமான சுவையுணர்வையூட் டும் படங்களையே தயாரிக்க முற்பட்டுள்ள போதிலும், மக்களின் அபிலாஷைகளுக்கு இயை புறும் வகையிலான படங்களைத் தயாரிப்பதை ஊக்குவிக்க அரச திரைப்படக் கூட்டுத்தாப னம் முயல்கிறது. எனினும் மட்டமான பட மெது என்றும் நல்லபடம் எதுஎன்றும் தீர்மா னிப்பதோ, நிர்ப்பந்தத்தால் மட்டும் நல்ல படங்களை எந்த அளவுக்குத் தயாரிக்க வைக் கலாம் என்பதோ, மக்கள் மட்டமானவை' எனப்படுகின்ற படங்களை விரும்பிப்பார்ப்ப தேன் என்பதோ இன்னும் தீர்வு காணப்படா மலே உள்ளது. எனினும் கூடியவரை நல்ல படங்களைத் தயாரிப்பதற்கு உள்ள தடைகளை நீக்கிப் பொருத்தமான ஒரு சூழ்நிலையை உரு வாக்கித்தர முயல்கிறது.
இச்சூழலில் நல்ல படங்களை உருவாக்கித் தர வேண்டியது உண்மையான கலைஞர்களின் பொறுப்பாகும். O
எழுத்துக் கலேஞனுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை யில்லாவிட்டால் நிகழ்காலத்தை அவனல் மதிப்பீடு செய்ய முடியாது:
- டால்ஸ்டாய்

Page 19
எம். ஏ. நுஃமான்
நீங்க
ஒரு முறையீடு:
நீங்களாவது காவியம் பாடலாம் நேர்மையாகவும் கட்டுரை ஆக்கலாம் தாங்களேபிழை செய்திடில் தாங்குமோ தாழ்ந்து கெட்டஇப் புண்ணிய பூமியே!
ஒரு முன்னுரை
அலை 16 இதழில் வெளிவந்துள்ள திரு. இ. சிவசேகரத்தின் நீ சொன்னுல் காவியம் என்ற த ட் டு ரை தொடர்பாகச் சில கருத்துக்கள் சொல்லவேண்டியுள்ளது. சமுத்திரனின் கருத் துக்களுக்கு வக்காலத்து வாங்குவதோ, அவை யெல்லாம் சரியானவை என்று வாதிட முனை வதோ எனது நோக் க ம ல் ல: சிவசேகரம் சொல்லி இருப்பதுபோல சில விமர்சனங்களுக்கு விமர்சனம் தேவைப்படத்தான் செய்கின்றது. சிவசேகரத்தின் கட்டுரை இதற்கு விதிவிலக்கா னதாக எனக்குத் தோன்றவில்லை. என் னைப் பொறுத்தவரை அவரது கட்டுரை ஒரு துருவத் தில் இருந்து மறு துருவத்துக்குப் பாய்வதாக அம், முற்றிலும் அகநிலைச் சார்பானதாகவும் எரிச்சலூட்டுவதாகவுமே படுகின்றது. சிவசேக ரத்தின் விமர்சன நேர்மையையும் அது கேள் விக்கிடமானதாக்குகின்றது. ஆகவே அது தொடர்பான என்னுடைய கருத்துக்களைச் சொல்லத்தான் வேண்டியுள்ளது.
முதலாவதாக தமிழ் விமர்சன மரபுபற்றி ஒரு அவநம்பிக்கை வாதத்தை (pessimism) சிவ சேகரம் முன்வைக்கின்றர். "நல்ல விமர்சன மரபொன்று உருவாகக் கூடிய சாத்தியக் கூறு களை என்னல் காணக்கூடியதாக இல்லை’ என் றும் (சிவசேகரத்தின் கட்டுரையைப் படிக்கும் போது எனக்குக்கூட அந்தச் சந்தேகம் வரத் தான் பார்க்கின்றது) "சிலநேரம் நக்கீரருக்கு விமர்சனத்தால் ஏற்பட்ட கதி தமிழ் இலக்கி பத்தின் காலம் மீருத கதியோ என்று சிந்திக்க வேண்டி இருக்கின்றது." என்றும் கூறுவதன் மூலம் அவரது அவநம்பிக்கைவாதம் வெளிப்ப டுகின்றது.

ni འབངས་
5ளாவது காவியம் பாடலாம்
இரண்டாவதாக "தமிழில் நேர்மையான விமர்சனங்கள் இல்லாமல் இல்லை’ என்றும், அவை சிறுபான்மையாக, நசுங்கக்கூடிய நிலையி லேயே உள்ளன என்றும் அவை பலமான சக் தியாக விருத்தியடைய வேண்டின் புதுமைப் பித்தன் விரும்பும் வகையிலான (அதாவது நல்ல இலக்கியத்தைக் காணும்போது அதைத் தெரிந்து பாராட்டவும், போலியைக் காணும் போது நெற்றிக் கண்ணைக் காட்டினும் அது போலியே என்று கூறும் நெஞ்சழுத்தமும்உள்ள) விமர்சகர்கள் நூறு, ஆயிரம், லெட்சமாக உரு வாக வேண்டுமென்றும் அப்போதுதான் தமி ழில் விமர்சனம் உருப்பட முடியும் என்று ம் ரசித்து மகிழத்திக்க வெறும் கற்பனவாதக் கன வுகளை முன்வைக்கின்ருர். உலகின் எந்த நாட் டிலாவது, எந்த மொழியிலாவது, எந்த க் காலத்திலாவது உன்னதமான, கோஷ்டி மனப் பான்மை, நட்புறவு, தனிப்பட்ட கோபதாபங் கள் போன்ற அடிப்படைகளில் அல்லாமல் நாக ரிகமாக, அதேநேரம் - நேர்மையாகவும் துணி வாகவும் எழுதப்பட்ட அறிவுபூர்வமான ஆக்க பூர்வமான விமர்சனங்களைப் படைத்தவர்கள்' நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், லெட்சக் கணக்கில் வாழ்ந்த ஒரு மனேகரம்ான இலக்கி யக் கனவுலகம் இருந்திருக்கிறதா என்று தேடிப் பார்த்து அதில் நுழைந்து கொள்ள எனக்கும் தான் ஆசையாக இருக்கின்றது. ஆனல் அது ஒர் உட்டோப்பியவாக அல்லவா தோன்று கின்றது.
மூன்ருவதாக "தமிழில் புரட்சிகரக் கலை இலக்கியம் நிச்சயம் நாளை மலரும்” என்ற நம் பிக்கை வாதமும் அவரிடம் தலைகாட்டத்தான் செய்கின்றது. 'தமிழனுக்கு அரசியல் தெளிவு ஏற்படத்தான் போகின்றது. ஒரு புரட்சிகரக்
கட்சியும் இலக்கியமும் உருவாகி வளரத்தான் போகிறது-அந்த வேலை தன்பாட்டில் நடக்கத் தான் போகின்றது (அதுவரையும் ஏன் காத்தி ருப்பான். ஆகவே) தமிழனது கலை உணர்வும் ரசனையும் (இவை புரட்கிகரமானதாக இருக்க
451

Page 20
வேண்டிய அவசியம் இல்லைப் போலும்) இ பொழுது வளரட்டும். (பிறகு ஒருகாலத்தி சரியான சூழ்நிலையில் புரட்சி, கலை இரண்டு இணையத்தான் 'வேண்டும்' என்பது சிவே ரத்தின் கருத்து. அவரது அவநம்பிக்கை வா மும் கற்பணு வாதமும் கடைசியில் அவர அசட்டுத்தனமான நம்பிக்கை வாதமும் த முள் எப்படித்தான் முட்டி மோதி முரண்ப கொண்டாலும் கொள்ளட்டும். அதை விட் விட்டு இனி விசயத்துக்கு வருவோம்.
சில குறிப்புகள்:
1. அறுபதுகளில் பல சிறந்த சிறு கதைகளு கவிதைகளும் வந்து குவிந்ததாகச் சமுத்திர கூறுவதாகவும் “சில நல்ல கதைகள் வந்த என்னவோ உண்மைதான்; ஆனல் சிறந்தை என்று சொல்லத்தக்கவையாக எத்தனை வ தன, என்ன அடிப்படையில் அவை சிறந்தை என எங்காவது விளக்கம் தந்தால் உதவியா இருக்கும்’ என்றும் சிவசேகரம் கூறுகின்ற பாலேந்திராவுடைய மனதுக்கு Brecht இ அரசியலோ, காவிய நாடகக் கோட்பாடே பிடித்திருப்பதாகத் தெரியவில்லை என்பது சமு திரனுடைய தீர்ப்பு. (அப்பீல் கிடையாது) எ றும் அவர் கூறுகின்ருர். சரி இதை ஒத்து கொள்வோம். இனி சிவசேகரம் வழங்கும் தீர் புக்களைப் பார்ப்போம்.
(l) ஏணிப்படிகள் ஒருமோசமான நாடகப் (2) பஞ்சமர் (ஒரு மோசமான நாவல்) அதற் ஆராத்தி எடுத்த மு. போ. விமர்சன மேை கள் எந்த வரிசையில் அடக்கம்? (3) கந்த கருணை ஒரு மேடைக் குதிப்பு. அதில் கலையு இல்லை கதைப் போக்கில் அரசியல் ஆழமு இல்லை. (4) அபசுரம் அப சுரத் தில் செய் போஸ்டர் போன்றது. (5) ப்ொறுத்தது போது மிகநல்ல மேடை நிகழ்ச்சி ஆனல் படு மோ மான நாடகம் (இதுவும் பிறிதொரு நண்ப டம் இரந்து பெற்ற இரவல் தீர்ப்பு.)
இந்தத் தீர்ப்புகளை வழங்கிய சிவசேகர திடம் நான் கேட்கின்றேன் எந்த அடிப்பை யில் இவை மோசமானவை என்று நீங்களாவ கொஞ்சம் விளக்கமாகச் சொல்லக் கூடாதா என்னைப் போன்ற பலர் இவற்றைப்பற்றி ஒர வுக்காவது நல்ல அபிப்பிராயம் கொண்டிரு
452

iv) o
Fs
s
i
கின்ருர்களே அவர்களை நீங்களாவது திருத்தி உங்கள் பக்கம் வென்றெடுக்க முயற் சிக் கக் கூடாதா? சமுத்திரனுடைய தீர்ப்புக்குத்தான் "அப்பீல் கிடையாது"; உங்களுடைய தீர்ப்புக் கும் அப்பீல் கிடையாது என்றுதான நீங்களும் நினைக்கிறீர்கள். நீங்களாவது இவற்றைப்பற்றி ஒரு விசாரண்ை நடத்தித் தீர்ப்பு வழங்கலாமே. நீங்களுமா சிவசேகரம் . .11
2. 'தாஸிசியனின் வெற்றிகரமான மேடை உத்திகள், பாவனைகள் (mime) குறியீடுகள் symblos) எல்லாமே சிங்கள நாடகத்தினின்றும் பெற்ற இரவல்கள் என்ற உண்மையை சுய விமர்சனம் செய்யும் இக்கூட்டம் உரிய இடத் தில் எப்போதாயினும் சுட்டிக் காட்டியுள் ளதா?" "சிங்கள மேடையின் நாடக உத்திக ளைத் திருடும், நாடக முறைகளைத் திருட்டாகக் கையாளும் கூட்டத்தை என்ன செய்யலாம்" என்று சிவசேகரம் கேட்கின்ருர். நீண்டகால ஆராய்ச்சியின் பின் சிவசேகரம் கண்டுபிடித்து இப்போது பகிரங்கப்படுத்தி இருக்கு ம் இத திரு ட் டு க் குற்றச்சாட்டுப் பாரதூரமானது தான். திரு. சிவசேகரத்திடம் தாழ்மையாச ஒன்று கேட்கின்றேன், தாஸிசியஸ் எல்லாவத றையும் சிங்கள மேடையில் இருந்து இரவல் வாங்கினர் அல்லது திருடினர் (இரவல் வாங்கு வதும் திருடுவதும் ஒன்றல்ல) என்று ஒரு பேச் சுக்கு ஒத்துக்கொள்வோம். ஆனல் இவற்றை
யெல்லாம் சிங்கள நாடகமேடை எங்கிருந்து:
இரவல் பெறவோ திருடவோ இல்லையா? எல்
லாமே அவர்களுடைய சுயமான கண்டுபிடிப்பு
கள்தாமா? சிவசேகரமும் நானும் மதிக்கின்த பாலேந்திரா கூட தன்னுடைய நாடகங்களில் இதேவகையான மேடை உத்திகள், பாவனைகள் குறியீடுகள் எல்லாவற்றையும் கையாள்கின்ற7 தானே. அவையெல்லாம் அவருக்கு மட்டுமே உரிய சொந்தக் கண்டுபிடிப்புகள்தாமா? தாள் சியஸை மட்டும்தான் நீங்கள் திருடனுக்கவேண் டுமா? நான் சிவசேகரத்துக்குக் கூறுவேன். உண்மை வேறுவிதமானது என்று. ஒரு குறிப் பிட்ட சாரார்மீதுள்ள ஒதுக்கல் மனப்பான்மை
யால் நீங்கள் நேர்மையீனமாக கலை விவகாரத
தையே கொச்சைப்படுத்தி விட்டீர்கள். நீக களே கூறியுள்ளதுபோல இவையெல்லாம் மேற கில இருந்து வந்தவைதான். பொது மூலம் அச் கேதான் இருக்கின்றது. சிங்களத்திலும் தமிழி

Page 21
லும் நவீன நாடக மேடையின் பெரும்பாலான அம்சங்கள் மேற்கிலிருந்து கடன் வாங்கப் பட் டவைதான். சிங்கள மேடை கொஞ்சம்முந்திக் கடன்வாங்கியது. தமிழ் மேடை கொஞ்சம் பிந்திக் கடன் வாங்கியது. சிங்கள மேடை முற் றிலும் நேர்முகமாகக் கடன் வாங்கியது. தமிழ் மேடை நேர்முகமாகவும் சிங்களத்தின் ஊடா கவும் கடன்வாங்கியது. அவ்வளவுதான் வித்தி பாசம். தாஸிசியஸுக்கு மட்டு மல் ல நமது தவீன நாடக நெறியாளர்கள் அனைவருக்குமே இது பொருந்தும்.
இன்னும் ஓர் உண்மையையும் கவனிக்க வேண்டும். பாவனையும் குறியீடும் முற்றிலும் மேற்குக்கோ, சிங்களத்துக்கோ மட்டும் உரி பவை என்று கூறுவதுகூட உண்மைக்குப் புறம் பானது. நமது கிராமியக் கலைக ள் அனைத்தி லுமே குறியீடும் பாவனையும் மலிந்துள்ளன. பரதம் போன்ற நமது பாரம்பரிய கலைகளின் முத்திரைகள் எல்லாம் பாவனைகள் இல்லாமல் வேறென்ன? நமது அன்ருடப் பேச்சின் அரை வாசியே பாவனை மொழிமூலம்தான் நிகழ்கின் தது. அவற்றில் இருந்தும் நமது நாடகமேடை பலவற்றைக் கடன் வாங்கியுள்ளது. கலை வ்ளர் வதே இப்படித்தான். சிவசேகரம் இதை இவ் வளவு கொச்சைப்படுத்தி இருக்கக்கூடாது.
ஆனல் ஒரு குறிப்பிட்ட சிங்கள நாடகத் தில் இருந்து ஒரு குறிப்பிட்ட காட்சியை அல் லது அம்சத்தை அப்படியே தாஸிசியஸ் தனது நாடகம் ஒன்றில் திரு டி ச் சேர்த்திருக்கிருர் என்று சிவசேகரம் ஆதாரபூர்வமாக நிரூபித் தால் அது வேறுவிசயம் அந்த த் திருட்டுக்கு நீங்கள் என்னமும் செய்யலாம். முதலில் சிவ சேகரம் அந்த வழியில் நிரூபிக்க முயலட்டும். அதற்குப் பதிலாக யாருடைய முப்பாட்டனும் தனி உரிமை கொண்டாட முடியாத எல்லோ நக்கும் பொது உடமையான நவீன மேடை உத்திகள், பாவனைகள், குறியீடுகள் முதலிய வற்றைக் கையாழும் ஒரு கலைஞனை மட்டும் திருடன் என்று கூறமுனைவது அவர் கூறும் விமர்சன நேர்மைக்குப் பொருந்தாது.
3. "பாலேந்திராவை முதலில் விமர்சிக்க வேண்டியது முக்கியமாக அவரது மேடை உத் திகளில் உள்ள சில குறைபாடுகட்காகவே'

என்று சிவசேகரம் கூறுகின்றர். *அவைபற்றி நேரில் கூறியதுபோல பத்திரிகைகளிலும் எழு தாதது எவ்வளவு பெரிய தவறு என்பது இப் பொழுதுதான் தெரிகிறது’’ என்றும், அதன் பயன் பாலேந்திராவுக்குமல்லாமல் வேறு சில ருக்கும் கிட்டியிருக்கும் என்பதும் அவர் மேலும் கூறுகின்றர். சிவசேகரத்தைப் போல் மேடை உத்தி நுணுக்கங்களில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் எனக்கு இல்லை என் பதை நான் ஒத்துக்கொள்வேன். நானும்தான் பாலேந்திராவின் பெரும்பாலான நாடகங்க ளைப் பார்த்துள்ளேன். பெரும்பர்லானேரைப் போல் எனக்கும் அவற்றின் மேடையாக்கத்தில் குறிப்பிடக்கூடிய குறைகள் இருப்பதாகத் தெரி யவில்லை. பொதுவாக எல்லாமே சிறப்பான தயாரிப்புக்களாகவே தெரிந்தன; அப்போதைக் கப்போது திருத்திக்கொள்ளக்கூடிய சில்லறைக் குறைபாடுகளைத் தவிர.
ஆனல் நான் பாலேந்திராவை முதலில் விமர்சிக்க வேண்டும் என்று நினைப்பது அவரது நாடகத் தெரிவுக்காகத்தான். அவரது நாடகத் தெரிவில் அரசியல் ரீதியான ஒருமைப்பாட்டின் மையை என்னுல் காணமுடிகிறது. ஒ ன் று க் கொன்று முரணுன இரண்டு சிந்தனையோட் டங்களைப் பிரதிபலிக்கும் நாடகங்களை அவர் மேடையேற்றி இருக்கின்றர். யுகதர்மத்தையும் நாற்காலிக்காரரையும் உதாரணத்துக்குச் சொல் லலாம். யுகதர்மம் ஒரு மாதிரியான, உடன் பாடான (positive) அரசியல் விமர்சனத்தை முன்வைக்கிறது. அது சமூக மாற்றத்துக்கான அரசியல் விழிப்புணர்வை வெளிப்படையாகவே தூண்டுகின்றது. கண்ணுடி வார்ப்புகளும், ஒரு பாலைவீடும்கூட இதையே மறைமுகமான வகை யில் செய்கின்றன. (இம்மூன்றும் பாலேந்திரா வின் மிகப்பெரிய சாதனைகள் என்பேன் நான், பாலேந்திராவின் பெயரை ஈழத்துக் கலை வர லாற்றில் நிரந்தரமாகவே பொறிக்க இம்மூன் றுமே போதுமானவைதான்). ஆனல் நாற்காலி காரர் எதிர்மறையான (negative), அரசியல் நடவடிக்கைகளையெல்லாம் கேலிக் கூத்தாக்கு கின்ற விமர்சனத்தையே முன்வைக்கின்றது. யுகதர்மத்துப் பின்னர் - அடுத்த மேடையில் நாற்காலிக்காலிக்காரரைப் போடும்போது புக தர்மத்தின் செய்தியையே பிறிதொரு கோஷ மென்ற வகையில் நிராகரித்து, அது கேலிக்கி
453

Page 22
டமாக்கி விடுவதையே என்னுல் காணமுடி தது (இதே கருத்தை இவற்றின் விமர்சனக் கூ டத்திலும் நான் கூறினேன்.) அந்த நிலையி பாலேந்திராவின் அரசியல் நிலைப்பாடு, அவர் சமூக செய்தி என்ன? என்ற கேள்வி எழுவ நியாயமே, சுவரொட்டிகள், பசி, மழை போர் றவை பற்றியும் இதே கேள்வியே என்னு எழுகின்றது. சமீபத்தில் தினகரன் வார இத ஒன்றில் (28-12-80) 'தீவிர நாடக உலகி 6 மாபெரும் சாதனை" என்ற கட்டுரையில் "சு ரொட்டிகள் போன்ற நாடகங்களை மேடையே றியதன்மூல்ம் அவற்றின் புரியாததன்மை கா ணமாக அந்நியப்பட்டுவிடும் அபாயம் இரு பதாக அவைக்காற்றுகலை கழகத் தின ே உணர்ந்திருப்பது வெளிப்படுகின்றது. ஆணு எதிர்காலத்திலேனும் புரட்சிகரக் க்லையை எதி பார்த்துக் காத்திருக்கும் சிவசேகரம் சில்லை யான மேடை உத்திகளில் உள்ள குறைபாடு ளையே முதன்மைப்படுத்துவது வினுேதமாக, தான் தெரிகிறது.
4. மு. பேர. கும்பல்”, “ஆராத்தி எடுத்த மு போ. விமர்சன மேதைகள்’ என்று காரமான எதிர்ப்புணர்வோடு குறிப்பிடும் சிவசேகர "புரட்சிகரக் கலையில் புரட்சியும் வேண்டு கலையும் வேண்டும். உங்களிடம் இரண் டு இல்லை. இதற்குக் காரணம் உங்கள் கலையு உங்கள் அரசியலும் transplants கூட இல்லை யாரையோ பார்த்துச் செய்யப்டும் பாசாங் கள்’ என்று வெங்கட் சாமிநாதனின் தோழுக் மேலேயே ஏறி நின்று உரத்துக் கூறுகின்ருர் அந்த வகையிலே முற்போக்கு இலக்கியம் என் சொல்லேயே இலங்கை இலக்கிய வரலாற்றி இருந்து அழித்து, தலைமுழுகித் துட க்கு தீர்க்காதவரை ஈழத்து இலக்கிய உலகுக்ே விமோசனம் இல்லை என்ற தோரணை தான் அ6 ரது எழுத்திலே தொனிக்கிறது. நல்லது, அ6 ருக்கு நான் கூறக்கூடியது இதுதான். உங்கள் மனத் தடைகளை (prejudice) முதலில் கலைய மல், பிரச்சினைபற்றி ஒரு புறநிலையாக அணுகு முறையைக் கையாளாம ல் அகநிலைப்பட்ட எதிர்ப்புணர்ச்சியோடு தொடர்ந்தும் சர்ச்ை பண்ணிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
முற்போக்கு இலக்கியம் முழுவதையும் புனி மானது என்பது எனது கருத்தல்ல. அதில் பல
454

:
தும் உண்டு. வரட்டுவாதமும், அசட்டுத்தனங்க ளும் உண்டு. அதுபோல் அருமைகளும் உண்டு. நான் முன்பு கூறியதுபோல, உலக இலக்கியத் தைப் பொறுத்தவரை எந்த நாட்டிலும், எந்த மொழியிலும், எந்தக் காலத்திலும், நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில், லெட்சக் கணக் கில் சிறந்த படைப்புக்களும், படைப்பாளிக ளும் உருவாகவும் இல்லை, உருவாகவும் முடி யாது. இது "பு ர ட் சிக ர* ரஷ்ஷியாவுக்கும் பொருந்தும், புரட்சிகர சீனுவுக்கும் பொருந் தும். அமெரிக்க. பிரஞ்சு இலக்கியத்துக்கும் பொருந்தும். அதுபோல் தமிழுக்கும் பொருந் தும். நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் எழுத் தாளர்கள் தோன்றலாம். ஆனல் ஐந்து பத்த பேர்தான் நிலைக்கிருர்கள். ஐம்பது, அறுபது படைப்புக்கள்தான் தேறுகின்றன. ஓர் புகழ் பெற்ற படைப்பாளியின் எல்லாப் படைப்புக் களுமே சிறந்ததாக இருப்பதும் இல்லை, இருச் கவும் முடியாது. பாரதி மகாகவித்ர்ன். ஆனல் அவனது கவிதைகள் எல்லாமே சிறந்தவையாக இருக்க வேண்டியதில்லை. புதுமைப்பித்தன் அமர கலைஞன்தான். அதற்காக அவனது கதைகள் எ ல் லா மே அமர சிருஷ்டிகள் அல்ல. முற்
போக்கு இலக்கியமும் இப்படித்தான். நாலு
நல்லவை இருந்தால் நானூறு கழிவுகளும் இருக் கத்தான் செய்யும். ஏதோ முற்போக்கு இலக் கியத்தின் தலை எழுத்துத்தான் இப்படி என் பதுபோல எல்லாவற்றையும். கூட்டு மொத்த மாக நிராகரிப்பது ஆக்கபூர்வமான விமர்சனத் தி ன் பர் ற் படாது. மற்றவற்றைப் பற்றி மெளனம் சாதித்துக் கொண்டு முற்போக்கு
இலக்கியத்தில்தான் கலையும் இல்லை முற்போக்
கும் இல்லை எ ன் று வரிந்து கட்டிக்கொண்டு வரும்போது முற்போக்கு இல்லாததெல்லாம் இவர்களது ஆசீர்வாதம் பெற்ற அப்பழுக்கற்ற பத்தினி இலக்கியமாக இவர்கள் கருதுவதாக ஆகாதா? முற்போக்கு இலக்கியத்தைத் தூக்கி எறியும் சிவசேகரம் இதையும் மனங்கொள்ள வேண்டும்.
இன்றைய நமது தேவை ஒரு புறநிலையா திறந்த விமர்சனம்தான். மனத்தடைகளோ உள்ளவர்களால் அதைச் செய்ய இயலாது. சிவ சேகரமும் அதை நிரூபித்துவிட்டார். இவர்க ளிடம் புரட்சியும் இல்லை கலையும் இல்லை என் து முற்முக நிராகரித்து எழுதிய அதே கையினல்

Page 23
'கணேசலிங்கனின் எழுத்துத் திறமையை நான் என்றும் மறுத்ததில்லை" என சிவசேகரத்தினல் பட்டும்தான் எழுத முடியும். க%லக்கே உரிய பட்டும்படாத தன்மையை (Subtlety) கந்தன் கருனையில் தேடி அது கிடைக்காததால் அதை ஒரு மேடைக் குதிப்பு என்று நிராகரிக்கத் தயங் காத சிவசேகரத்தினுல் மட்டும்தான் எதையும் வெளிப்படையாக, நேரடியாக எழுதும் கணேச லிங்கனின் எழுத்துத் திறமையை தான் என் தும் மறுத்ததில்லை என எழுதுவது சாத்தியமா கும். ஏனெனில் அவரும் எதிரிக்குச் சகுனப் பிழைக்காக தனது மூக்கையே வெட்டிக்கொண் டவர்தான்.
52(5 (plq-665):
**என்னுடைய முறைப்பாடு என்னவென் ரூல் மாக்ஸ்வாதிகள் எனத் தம்மை அழைக்கும் இந்தக் கூட்டமும் சரி, மாக்ஸைத் தாண்டிப் பார்க்க முனைந்ததாகச் சொல்லப்படும் கூட்ட மும் சரி மாக்ஸையே உருப்படியாகப் படிக்க வில்லை சும்மர மற்றவர்களைப் போட்டு மிரட்டு கிழுர்கள்' என்கிழுர் சிவ சேகரம். இதில் இருந்து சிவசேகரமாவது மாக்ஸை உருப்படி
Me. N. A. Varnakul
GENERAL MERCHANTS
No. 73, KEY COLOM

யாகப் படித்திருப்பார் என்று யூகிக்க முடிகின் றது. ஆனல் அதைத் தனது விமர்சனத்தில் பிரயேர்கிக்கத் தவறியமைக்கு அவரது மனத் தடைமய காரணமாக இருந்திருக்கவேண்டும். அது எவ்வாருயினும் கம்பனே கூறியதுபோல பாற்கடலைக் குடித்து முடிக்க வந்த ஒரு பூனை யாக சிவசேக்ரம் தன்னை உண்மையாகவே கரு திக்கொண்டாரானல்- சமுத்திரன் எக் கேடு
கெட்டுப் போனுலும்
'நீங்களாவது காவியம் பாடலாம்’
என்றே எனக்குச் சொல்லத் தோன்று கின்றது. O
கலே உன்னத நிலே அடைந்திருக்கும் சில காலகட்டங் களில் அவற்றிற்கும்: அக்கால சமுதாய வளர்ச்சிக்கோ பொருளாதார அடித்தளத்திற்கோ இடையில் நேர டியான தொடர்பில்லை. V
- upsTish).9 (ஏ. ஜே. கனகரத்தினவின் மார்க்சியமும் இலக் கியமும் கட்டுரையிலிருந்து - பாடும் மீன்
LSLALALLSASA ALLLLSAMLLLALSMLSSLSLSSLSLSSLLLLLL M
SS1S, .
asingam &O Sons & COMMISSION AGENT
ZER STREET, MBOso 11
*AMAPM,
AMAMAMO
VAMW
WAYAVWA
VANP
VM
Ma
*ASARAM
455

Page 24
படிகள்
இலங்கை இல
முதன் முதலாக-நமக்குத் தெரிய-கைலா சபதி, சிவத்தம்பி ஆகியோரின் நூல்கள் மூல மாகத்தான் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இலங்கைத் தமிழ் ஆய்வு, விமர்சனம் பற்றித் தெரியவந்தது. இந்த இலங்கை நோக்கிய கரி சனம், சு. வித்தியானந்தன், வேலுப்பிள்ளை போன்றவர்களை வே று காரணங்களுக்காக அறிந்து கொள்ளவும் வைத்தது.
இலங்கையில் நடப்பவைகளைக் கவனத்து டன் தெரிந்து வர ஆரம்பித்தவர்களுக்கு சமீபத்தில் இலங்கையில் நடக்கும இலக்கிய வாதங்கள் மீது கவனம் செல்கிறது. கைலாச பதியின் விமர்சனங்கள், 70 வாக்கில் தமிழகத்து இளைஞர்கள் ஒர் தேடலை மேற் கொண்ட சூழ லில் மார்க்சீயத்தை அறிமுகப்படுத்தின. வெறும் அபிப்பிராயங்கள் தமிழகத்தில் விமர் சனமாக இருந்த சூழலில் ஓர் உலுக்கு உலுக்கி விமர்சனத்தை விஞ்ஞான அடிப்படைகளில் செய்யப்பட வேண்டுமென்றும், அபிப்பிராயங் களாகவும் அரட்டைப்பேச்சுக்சளாகவும் இருந்த விமர்சனம் சமூகவியல் குணங்கள் கொள்ள வேண்டுமென்றும் மிக வலிமையாக ஓங்கிப் பேசிய கவர்ச்சியான குரல் கைலாசபதியினுடையது. மறுப்பதற்கில்லை. இல்ங்கையில் உருவான குழ ல் பற்றி அதிகம் சொல்லத் தெரியாது. ஆணுல் தமிழகத்தில் அன்று கைலாசபதி எத்தகைய தோற்றம் தந்தார் என் பது இங்கு சொல்லப்பட முடியும்.
எழுபதின் மத்தியிலிருந்து தமிழக அரசியற் களத்தில் புதிய அம்சங்கள் தென்பட்டன. அது கோட்பாட்டுக் களத்திலும் பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தியது. இக்கட்டத்தில் ஒர் புதிய தலைமுறையும் உருவாயிற்று. ஞானி, ராஜதுரை போன்றேரின் மார்க்சீய அணுகல்கள் இங்கு முக்கியமாகின்றன. இதே கட்டத்தில் படைப் புக் களத்தில் புதிய கோணங்கள் புதிய தோர னைகள், அழுத்தங்களுடன், புதிய செய்திகளுடன் ஓர் எழுத்து உருவாகிறது பூமணி, அஷ்வகோஷ், வண்ண நிலவன், ப. செயப்பிரகாசம்
456

க்கியச் சூழலும் விவாதமும்
ஈழத்து இலக்கியச் சூழல்பற்றி அதிக அக்கறை காட் டிவரும் தமிழ்க ச்ஞ்சிகையான படிகள் தனது 9வது இதழில் இக் கட்டுரையை பிரசுரித்திருந்தது. ஈழத்து தமிழ் வாசகர்களுக்காக இங்கு மறுபிரசுரம் செய்யப் படுகின்றது. இது தொடர்பான கருத்துக்கள் அடுத்த இதழில் வெளிவரும். - இணையாசிரியர்
எழுத்துக்களாகட்டும், ஞானக்கூத்தன், கலாப் ரியா, நகுலன் தேவதச்சன், பதி, கவிதை களாகட்டும் ந. முத்துசாமியின் நாடகங்களா கட்டும் இவைகள் எல்லாம் ஓர் புதிய இலக் கியச் சூழலை உருவாக்குகின்றன (இங்கு குறிப் பிடப்படும் பெயர்கள் ஒர் குறிப்பிட்ட போக் கைக் குறியீடாகக் காட்டவே). இந்தப் பின்னணியில் கைலாசபதியின் விமர்சனம் இன்னும் நிறுத்தப்படவில்லை. சர்ச்சிக்கப்படவில்லை, மதிப்பிடப்படவில்லை. s'
இக்கட்டத்தில் இலங்கையில் கைலாசபதி யின் கோட்பாடுகள் மீது மறுவிமர்சனம் வைக்கும் தேவை உருவாகியிருப்பதை அறிகின்ருேம். முதலில் கைலாசபதி மறுத்த புதுக்கவிதை அங்கு வேர் கொள்ளும் நிர்ப்பந்தம் உருவா யிற்று. புதுக்கவிதை வளர்ச்சி தர்ன் பெரும் பாலான கைலாசபதியின் மீதான ஒர் நிர்ப்பந் தமாய் உருப்பெற்றது. இந்தப் பொதுவான ஓர் நிலைமை, கைலாசபதியைத் தாண்டிய புதிய மார்க் சீய விமர்சனத்திற்குத் தமிழகத்தை எதிர் நோக்கும் நிலையை இலங்கையில் இன்று உருவாக்கி உள்ள தெனத் தெரிகிறது. இப் பின்ன வி யில் தான் பூரீ லங்கா கார்டிய னில், வெளியான தொடர் விவாதம் கவனங் கொள்ளத் தக்கது. சமுத் தி ரன், ஏ. ஜெ. கனகரெட்ன, கே. எஸ். சிவகுமாரன் ஆகி யோர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளும் அதைத் தொடர்ந்து சிவசேகரம் போன்ருேர் அலையில் எழுதிய கட்டுரைகளும் சமீபத்திய "அ%ல’ இதழ்களில் வெளியானபிற கட்டுரைக ளும் ஏற்படுத்தும் சில எதிர்வினைகளை இலங்கை, தமிழக மார்க்சீய இலக்கிய விமர்சனத்தில் ஈடு பாடுள்ளவர்கள் முன் ஒர் சர்ச்சையாக வைக்

Page 25
கும் முயற்சிக்குக் காட்ல்கோள் இப்பகுதி மூலம் போடப்படுகிறது.
இடையில் ஒர் எச். ரிக்கை, ச10ர் இதழ் படிகள், இலங்கையில் உள்ள பிரச்சனைகளையும், நடந்த நிகழ்ச்சிகளையும் சரியாய் அறிந்து கொள் ளாமல் அ லை யின் வார்த்தைகளை நம்புகிறது என்ற அர்த்தத்தில் ஓர் குறிப்பு எழுதியுள்ளது: இக்குறிப்பை கவனத்தில் கொண்டு படிகள், இவ் விவாதங்களில் தனிப்பட்ட காழ்ப்புணச்சிகள், குரோதங்கள், சூதுவாதுகள் இவைகளை அறிந்து கொள்ளும் ஈடுபாடு காட்டாது தனியான கரு த்துப் போர்" என்ற அம்சத்தை மட்டும் சர்ச் சையில் முன் வைக்க விரும்புகிறது. கடந்த பத்து வருடங்களாய் தமிழகத்தில் நடந்த தாக் குக் கட்டுரை வரலாறு எந்தப் பயனையும் சிருஷ் டிபரமாய் யாருக்கம் செய்யவில்லை என்பதை அலை பத்திரிகையும். கைலாசபதி அணியினரும் பரிந்து இந்த மாதிரி வாதத்தை தனிமையான கருத்துப் போக்குள்ள நாகரிகத்துடன் மேல் எடுத்துச் சென்ருல் தமிழகப் பிரச்சனைகள் பலதும் கூட தென்படலாம்.
கைலாசபதிக்கான ஆதரவான கட்டுரை பாளர்கள் முக்கியமாய் இரண்டு விஷயங்களை முன் வைக்கிருர்கள் (1) மார்க்சீயத்திற்கான Git érheti Gir Guq-Gulf đổi) Gunr 655 sit (Formalists). இவர்களுக்கெதிரான அணியைக் கைலாசபதி வலிவூட்டியது. (2) இலங்கையின் மார்க்சீயவாதி கள் தங்கள் கருத்தாக்கங்ளை வளர்த்து வருகி மூர்கள். தேங்கிவிடவில்லை. (இவ்விருகருத்தும் சமுத்திரன் கட்டுரையில் வெளிப்படும் முக்கிய அம்சங்கள்) ஏ. ஜே. கனகரெட்ன இந்த விவா தத்தை வ பட்டு மார்க்சீயவாதிகளுக்கும், வள மான மார்க்சீயவாதிகளுக்கும் உள்ள பேராய்ப் பார்க்கிருர். இவர் இக்கருத்தை இன்னும் வளர்க் கவில்லை. எனவே இவுர் பார்வை பற்றிய முக் கியத்துவம் விளக்கப்படாமலே நிற்கிறது. அதே வேளையில் கைலாசபதியை வறட்டு மார்க்சிய விமர்சனத்தின் சொந்தக்காரராகவும், அலையை வளமான மார்க்சீய விமர்சனத்தின் அணியா கவும் இவர் பார்க்கிருர் என்பது புரிகிறது. இலங்கையின் மார்க்சீய இலக்கிய விமர்சனம் வடிவத்திற்கு , முக்கியத்துவம் கொடுப்பது சோஷலிஸ்ட் யதார்த்த வாதத்திற்கு எதிரா னது என்று கருதுகிறது:இது தவருண பார்வை? என்கிருர் கே எஸ். சிவகுமாரன்.

கைலாசபதிக்கு ஆதரவு செரிவிப்பவர்கள் அழகு, வடிவம் போன்றவற்றை மார்க்சீயத் இற்கு எதிராக் காண்பது மிகப் பெரிய சுவழு கத்தான படுகிறது. மார்க்ஸியிடருந்து மாவோ வரைக்கும் வடிவம் முக்கியம் என்பதற்கான குரலைக்காண முடியும். வடிவியல் வாதம்கூட, இன்று நவீன விளக்கங்கள் மார்க்சீய இலக்கிய விமர்சனத்திற்குக் கொடுக்கும் அல்துஸ்ஸர், டெர்ரி ஈகிள்டன், ஃபிரடெரிக் ஜேம்ஸன் போன்றேரால் தேவையான அளவு பயன்படுத் தப்படுகிறது. ரஷ்யாவில்கூட பக்தின் என்பவ ரது (இவர் ஓர் முக்கியமான வடிவியல் வாதி) கட்டுரையை அதிகாரபூர்வ தொகுப்பில் சேர்க்கிறர்கள். ஆக கைலாசபதிக்கு ஆகரவா ளர்களின் இந்தக் குரல் தவருனது என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்கக்கூடியது.
அலையின் இந்த விவாதம் சமுத்திரன் போன் ருேர் எதிர்படும் சஞ்சலத்தை ஏற்படுத்தும். கைலாசபதி கூட. தன் ‘இலக்கிய நயத்தில் வடிவத்தை முக்கியமாய் கவனிக்கிருர், எந்த வித மார்க்சீய கோட்பாட்டு நீட்சியும் இல்லா மல் இதைச் செய்கிருர், மார்க்சீயமானது உள் ள்டக்கமா, வடிவமா என்ற கேள்வியை இடாது. உள்ளடக்கம் வடிவம் இரண்டும் கலந்ததுதான் மார்க்சீயப் பார்வை. கைலாசபதியாகட்டும், அலை பத்திரிகையாகட்டும் வடிவியல் பார்வை களுக்கும் மார்க்சீயத்துக்குமான கோட்பாட்டு ரூப சர்ச்சையை இதுவரைத் தொட்வேயில்லை. அலை சொல்லும் இலக்கியம் என்று வந்தால் அழகு வேண்டும் கருத்து ஏற்கத்தக்கதே. ஆல்ை இதனை அலை மார்க்சீயத்திற்கு வெளியில் உள்ள தமிழக விமர்சகர்களின் பாதிப்பினல் (இது அலையில் லேசாக உள்ளது) மட்டும் வெளிப்பு டுத்தினுல் தன்னைப் பலமான தளத்தில் வைக் தவறிவிட நேரிடலாம். கருத்து முதல்வாத தவற்றிற்குள் சறுக்கிவிழ ஏதுவாகலாம்.
சமுத்திரன் சொல்லும் இன்னுெரு சருத்து இலங்கை மார்க்சீயவாதிகள் தங்கள் கருத்தாக் கங்களை வளர்க்கவும் செய்கிருர்கள் என்பது. இதுவரை சரியாய் வெளிப்படவில்லை. கைலாச பதி பற்றிய இத்தகைய விமர்சனம், தாமரை, செம்மலர் ஆராய்ச்சி பாணி விமர்சனங்களின் போதாமையையும் வெளிப்படுத்தும். சூத்திாங் களை வைத்து விமர்சனம் எழுத முடியாது

Page 26
இந்த நிலையில் கே. எஸ் சிவகுமாரன் சொல் லும், 'மார்க்சீய அணுகுமுறை ஒன்றுதான் சரி யான அணுகுமுறை என்று கூறமுடியாது. பல அணுமுறைகள்உண்டு’ என்ற வர்சகம் ஓர் அக்கடமிக் குரலாய் வலமிழந்தாலும், ஓர் எச் ஸிபிஷன் பார்க்கப்போனவனின் கருத்து பார் வையாய்நின்றுவிட்டாலும், அவர் சொல் லும் இன்னெரு கருத்து முக்கியமானது. அவர் சொல்கிருர் "நம்மூர் விமர்சகர்கள் தென்னி திய விமர்சகர்ளிடமிருந்து பயன் பெறுவதற் கான நிறைய அம்சங்கள் உள்ளன. ஏனெனில் நம்மூர் விமர்சகர்கள் அழகியலை வலியுறுத்துப் எதையும் பூர்ஷ"வா சமாச்சாரம் என்று தள்ளி விடுகிருஷர்கள்* இங்கு ஒரு பிரச்சினை, கட்சி கூடாரமடித்துச் சர்க்கஸ் போட்டுக்கொண்டு இருக்கும் தோத்தாத்ரிகள், முத்கையர்கள் ஆராய்ச்சி, செம்மலர், தாமரை விமர்சகர்கள் எல்லோரும்தான் தென்னிந்திய மார்க்சீய விம ‘சகர்கள் என்று போர்டு போட்டுக் கொண்டுள் ளார்கள். நிறைய நிறைய, பார்முலாக்களோடு இதில்யாரை சிவகுமாரன் உதாரணிக்கிருர்
இடையில் சமுத்திரன் எர்னஸ்ட் பிஷர் பெஞ்சமின், பிரக்ட் பற்றி எல்லாம் சொல்ல அவர்கள் உள்ளடகத்திற்கே "முக்கியத்துவம்
u Saesnessen osass='in HIITEINNITEITA |> {{logy Hixë!
O/ 2 7 வரை வடடி
O
அத்துடன் * ஆயுட் காப்புறுதி இ ( வீட்டுப் பாவனைப் பெ
(பணம் கொடுப்பனவு தவணை
41 வருட த பினுன்ஸ் கப் 191 - 249c, L . GunsiT: 7680 யாழ்ப்
--
ܐܝbܠܶܐ
를
를

தந்தார்கள் என்று சத்தியம் செய்கிருர். இவர் கள் கருத்து கைலாசபதி கருத்துக்கு நேர்மாரு னவை என்பதையாவது சமுத்திரன் தெரிந்து இவர்கள் பெயரை உச்சரித்து இருக்கலாம். O
6.
LOBOLSLLMLLLLLLMSBLLeOBOLMLSLLOLOLLOMGLLMLY
ஜி. நாகராஜன்.
சமூகத்தின் உறவுகளை - மதிப்புகளை நிராக ரித்து, தனிமைப்பட்டு, மரணமே விடுதலை யென்று வாழ்ந்த அந்த தமிழ் நாட்டுக்கள் ரனை கண்டதில்லை, கேட்டதுதான்.
சமூகப் பெறுமானங்களின் பார் வை யில் தன்னை-ஆன்மாவை இழந்து தனது வாழ்வே
சாஸ்வகம் என்ற கந்தனுக்கும்? இந்த தமிழ்
நாட்டுக்காரனுக்குமுள்ள தொடர் பி ஃன ஆராய மனம் முனைந்தது.
முனைந்தென்ன? அந்த நாகராஜன் இன்று இல்லை.
**கண்டதும் கேட்டதும்", "நாளை மற்று மொரு நாளே”” ஆகியவைகள் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு வளமூட்டிய ஆற்றல்மிக்க அந்த கலைஞன் இல்லை என்னும் துயரில்
*அலையும் பங்குகொள்கிறது.
SK
வழங்குகிறேம். உங்களுக்கு னும் ாருட்கள்
அடிப்படையில்) கால சேவை >பனி லிமிட்டெட் ; ன்சார நிலைய வீதி, பாணம். SLLMLSLLLLLLSLLLTLLLLLLLLSLLLOLLMLOLOLLLLOOLOLLLLq

Page 27
க. எஸ். சிவகுமாரன்
மேன் கலாசார நிலையத்தினதும், லயனல் டன் (மேற்கு) ஜேர்மன் திரைப்பட விழா”ெ சித்திரை 88 - 29 வரை நடைபெற்றது. அது டப்படுகின்றன,
ஐரோப்பிய சினிமாவின் ஓர் அம்சமாக ஜேர்மனியப் படங்களும் அமைந்தாலும், அண் மைக்கால (மேற்கு) ஜேர்மனியப் படங்கள் இத் தாலிய, பிரெஞ்சுப் படங்களின் செல்வாக்குக ளினல் பரிமளிக்கும் ஒரு துறையாகத்தான் இன் றும் இருக்கின்றன என்பதற்கு இத் திாைப்பட விழா சான்று. உவோணர் ஹெர்ஸொக் (Wernet Herzog) (3), îl Lîsirul unsies ussilii IT. W. Fassbinder] (2), øyGušEITIGT Lsử š65 [Alexen —der Kiluge) (1), gos,Gaint-Gosyrtsio sioglosióni [Nikol aus Schilling) (1) ஆகியோர் நெறிப்படுத்திய சித்திரங்களும், ஹெர்ஸொக்கின் படங்கள் பற் றிய ஒரு விவரணச் சித்திரமும் (I am what my films are: நெறியாள்கை - கிறிஸ்ரியன் வைசன் போர்ன் விழாவில் இடம் பெற்றன.
இவற்றுள ஹெர்ஸொக்கின் படங்களே சிறந்தவையென்று திரைப்பட விமர்சகர்கள் சிலர் கூறமுன்வந்தாலும், எனக்கு பாஸ்பைண் டரின் படங்களே அதிகம் பிடித்தன. காரணம் ஹெர்ஸெக் கலை என்ற பெயரில் அதீத கற் பனை கொண்ட படங்களைத் தயாரித்திருப்பது தான். அங்கவீனமானவர்கள், வழமைக்கு மாரு னவர்கள், அசாதாரணமானவர்கள், இயற்கை உபாதைகள், விசித்திர மனேநிலையுடையவர் கள் போன்றவற்றைத் தமது படங்களின் பொரு ளாகக் ஹெர்ஸொக் தேர்ந்தெடுப்பதில் புதுப் புனைவாளராக விளங்குகிருர்தான் என்ருலும், அவருடைய, உத்திகளொன்றும் புதுமையான வையல்ல. பிரெஞ்சு புதிய அலை (Cinem: Verite) முறையிலான படங்களைத் தாம் விருப் பவில்லையென்று ஹெர்ஸொக் பேட்டியொன் றில் (லோறன்ஸ் ஸ்ட்ரெனப்புக்கு ஹெர்ஸொக் அளித்த பேட்டியும், அவரது படங்களிலிருந்து சில பகுதிகளும் அடங்கியவையே நான் முன்

ஜேர்மன் திரைப்பட விழா
மனப் பதிவுகள்
வென்ற் திரைப்படக் கழகத்தினதும் ஒத்துழைப்பு ப்ான்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் பற்றிய, ஒருவர்து மனப் பதிவுகள் இங்கு வெளியி
- இணையாசிரியர்
னர் குறிப்பிட்ட விவரணச் சித்திரம்) கூறியி ருக்கிருர், மாரியன்பாட்டில் கடந்த ஆண்டு Illast year at Marienbad] 6Tairp பிரெஞ்சுப் படத்தின் ஞாபகம் ஹெர்ஸொக்கின் படங்களைப் பார்க் கும்பொழுது எனக்கு அடிக்கடி வந்தது. அதே போல கப்கா, கெமு. ‘நவீனத்துவம் எனக் கூறப்படும் இன்னும் வேறுபல வெல்லாம் ஞாப் கத்திற்கு வந்தன. அதாவது ஹெர்ஸொக் இந்த அத்தனைக்கும் வாரிசு. அதேசமயம் அவர் த துெ கலையை ஒரு தமக்கேயுரிய, தமக்கே புரியக் கூடிய ஒன்ருக் கருதுவதனலோ, என்னவோ, பார்வையாளராகிய நமக்கு ஒன்றுமே புரிகிற தில்லை.
ஜேர்மன் கலாசாரம், இலக்கியம் ஆகியன பற்றி நன்கு பரிச்சயமில்லாத எனக்கு ஹெர் ஸொக் பற்றி உதிரியாக அபிப்பிராயம் தெரி விக்க உரிமையில்லைத்தான். ஆனல் சினிமா தொஜலக்காட்சி போன்ற துறைகளில் நன்கு அனுபவப்பட்ட- கலாநிதி புளூம் (blume) போன் நவர்களே ஹெர்ஸொக்கின் பட்ங்கள் தமக்குப் புரியவில்லை என்கின்றனர்.
ஆக 1 கலே கலைக்காகவே” என்ற கருத் தோட்டத்தின் வெளிப்பாடாகவே ஹெர் லொக்கின் படங்கள் அமைவதை நாம் காண் கின்ருேம். படக்கதையே புரியவில்லையென்ருல் படத்தின் ஏனைய அம்சங்கள் பற்றி என்னத் தைக் கூறுவது? . : ،
ஹெர்ஸொக் பற்றிய விவரணச் சித்திரத் தில், இந்த நெறியாளர் தாமே தமது இளமைப் பருவம் பற்றிக் கூறும்பொழுது, சினத்தை அடக் கமுடியாதவராகத் தாம் இருந்ததாகவும் தமது சகோதரரைக் கத்தியால் குத்தியதாகவும்,தமது குடும்பம் பெரியகுடும்பம் என்றும் தாம் சிறு வயதுமுதல் ஒரு விசித்திரமான பேர்வழியாகவே
459

Page 28
வளர்ந்ததாகவும் கூறினர். எரிமலையொன் வெடிக்கப் போவதைப் படமெடுக்க அவர் மு பட்டார். அது வெடிக்கவில்லையென்ருலுட அg வடிப்பதற்கு முன்னிருந்த சவக்களையூ டும் சூழலைப் படம்,பிடித்தார். இவ்வாறு அச தாரணங்களைச் சிறைப்படுத்த முயலும் ஒ புதிய ஐரோப்பிய நெறியாளர் ஹெர்ஸொ எனக்கூறுவதைத்தவிர, அவர் மூலம் பார்6ை யாளன் எந்தவிதப் பரிவர்த்தனைப் பயன்பாட டையும் பெறவில்லை. மாருக, ஹென்றிக் இ சனின் பாவை இல்லம் போன்ற ஒரு நாடக கைத் திரை வடிவமாகக் காட்டிய, "பாஸ்பைண் Lilgár's southsiT grg55Sgth (Freedom of Geesh Gottfried என்ற படம் எனக்குப் பிடித்தது நாடகத் தன்மை நிரம்பியதாக இருந்தபோதி லும், சினிமாவாகவும் "பெண் விடுதலை’ என்ற கருத்துக்குக் கலாரீதியாக அழுத்தமும் வடிவ மும் கொடுத்துப் பரவசப்படுத்தியது,
இதே நெறியாளரின் மற்ருெரு படமான அவன் என்ன நேசிப்பதை மாத்திரமே நான் GiúdLSGypõT. I only want him to . love mej மேற்கில் என்ன கிழக்கிற்கும் பொருந்தக்கூடிய ஒரு படம். கதிையில் வரும் சம்பவங்கள் சில சாமான்யமான படங்களில் வருவதுபோல் வந் தாலும், அச் சம்பவங்களுக்கூடாக "இருப்பியல் சார்ந்த நவீனத்துவப் போக்குகளை நெறியாளர் காட்டுகிறர். இதுவும் எண் க்கு ஒர் அர்த்த முள்ள படமாகப் பட்டது.
மற்றைய படங்களான பேர்டினன்ட் Ferdinand the Radical J, சொர்க்கத்தினின்றும் aiyás (Expulsion from Paradisel g5ugo, a மையான ஐரோப்பியப் படங்கள் போலவே இருக்கின்றன. பின்னையப்படத்தில் ஒர் அபத்து பொது போன்ற பாத்திரம் வருகின்றன். அவன் தனது வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கற்பிக்க முயல்வதுடன் நம்பிக்கையுடனும் முன்னேறு வது அபத் தப் போக்குக்கே முரணுக அமைதி றது. இதுவே படத்தின் வெற்றியாகவும் இருக் "கிறது. "பேர்டினன்ட்" படத்தில் தீவிர ஜாக்கி ரதை அல்லது விழிப்பு சில வேளைகளில் அர்த் தமற்றிருப்பதையும் குறைபாடுகளை நீக்கக் குறைகளை உணர்த்துவது அவசியமாகிறது என் பதும் கூருமற் கூறப்படுகின்றன.
இந்தப்படங்களின் கதைகளே எடுத்துரைக் கவோ விமர்சனத்தைத் தெரிவிக்கவோ நான்
460

இங்கு முற்படவில்லை. ஆயினும் இந்த எட்டுப் படங்களையும் பார்த்தபின் எழுந்த உணர்வு களை உங்களுக்குத் தெரிவிப்பதே எனது நோக் கம். இம் மனப்பதிவுகளின்மூலம் சில அவதா னிப்புக்களையும் கூட்டுமொத்தமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். அவையாவன:
(1) ஒரு நாட்டின் கலைப்படைப்புக்களைச் கணிக்க அந்த நாட்டின் கலாசாரம், வரலாறு. பாரம்பரியங்களின் பின்னணியறிவு தேவை.
(2) சமூகப் பிரக்ஞை, சமூகச்சித்திரிப்பு
உணர்வு போன்றவை இல்லாவிட்டால், கலை கலைக்காகவே" என்ற போக்கிற்கு இட்டுச்
சென்று விடும்.
(3) சாதாரணப் படங்கள், அரசியற்படங் கள்-அதீதக் கற்பனைப் படங்கள் இவ்வாருன வகைவகையான படங்களை மதிப்பிடும்பொழுது ஒரே அளவுகோல் பயன்படாது. வெவ்வேறு அளவுகோல்கள் தேவைப்படுகின்றன.
(4) நவீன ஜேர்மனியத் திரைப்பட நெறி யாளர்கள் ஐரோப்பிய கலாசாரத்தின் வாரிசு களாகவே இருக்கிருர்கள்.
(5) பெரும்பாலான படங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது என்றே கூறுகின்றன.
(6) மேலைநாடு என்பதற்காக அங்கிருந்து வருபவை எல்லாமே நமக்கும் பயன்படவேண் டும் என்றில்லை.
(7) அவரவர் அனுபவங்கள் அவரவருக்கே உரித்தானவை.
(8) விரிவுரையாளர்கள் அடிக்குறிப்புகள் சகிதம் விளக்க உரையெழுதலாம். அந்த உரை கள் எல்லாம் "ஆழம் பொருந்தியவை என்று கணிக்கவும் படலாம். ஆளுல் புதிதாக எதனை யும் தெரிவிப்பதாக இந்த "ஆழமான விமர்ச னக் கட்டுரைகள்" அமைவதில்லை. ஆகையால் விமர்சனம் எழுதப் புகாமல் மனப் பதிவுகளை மேலோட்டமாகத் தெரிவிக்க முற்பட்டேன்.
(9) மேலோட்டமாகத் தகவல்களைத் தெரி விப்பதில் இருக்கும் நேர்மை, வேஷதாரித் தனத்தில் இருக்குமா என்ன? O

Page 29
上ーニー-ー
விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் சொற்பொழிவுகளை அடிப்படையாகக் கொன பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. முதன்மு: பெரிதும் வரவேற்பைப் பெற்ற இந்நூல் தற் ளில் ஒன்ருன, நர்மதா பதிப்பகத்தினுல் பிரசு இதழ்களில் கட்டுரையாக வெளிவந்து பின் ஒரு அழகிய வீடு வரும்வரை தமிழில் ஜே. கும். கடந்த நவம்பரில் ஜே. கி. இலங்கைக்கு பரவலாகி உள்ள நிலையில், ஆங்லப் பரிபச்சய மிகவும் அழகான அமைப்புடன் விளங்குவது
参曼
போர்க்குரல்: உலகப் புகழ்பெற்ற சீன முதற் தமிழாக்கம். 1940களிலிருந்தே இடது திலும் ஈடுபட்டவரும், இலங்கை முற்போக்கு வரும், கே. ஏ. அப்பாஸின் "குங்குமப்பூ (சிறு களான "தீண்டாதான்", "கூலி மற்றும் "ே ஜானியக் கதை ஆசிரியரின் அந்த கானம்' ஒய திரு. க. கணேஷின் தமிழாக்கத்தில் கட நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தி டன் கூடியது
. . )
மா சேதுங் கவிதைகள்: மாவோ கவி திரு. சி. சிவசேகரத்தினல் தமிழாக்கம் செய தற்போதைய தொகுதி, இடதுசாரி இலக்கி அறிமுகம் எக்சிஸ் டென்ஷயலிசம், அந்நியமா ராஜதுரையின் தமிழாக்கமாகும். இதுவும் ெ
The Massage Bearers: The Nation in South India 1880–1945. Written byl and the Rise of Nationalism, Popular Songs of New Medium; Silent Cinema, Patriotic Film Censorship, and Political Control in
o
o
தமிழகச் சிற்றேடுகள்: ஈழத்து இலக் படைப்புக்களையும் வரவேற்கும் தமிழகச் சழு கேகரம், தாமரை, மற்றும் ழ, கவனம் பிற6
R. PATHMANABHAN, 15/14A.

ர்: மெய்ஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ண்டு திரு. கந்தையா நவரேந்திரனல் எழுதப் தலில் 1974ல் இலங்கையில் வெளியிடப்பட்டு போது தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்க ரிக்கப்பட்டுள்ளது. 1979 ஏப்ரல், மே வைகை நூலாக வெளியான ஞானியின் மணல்மேட்டில் கி. பற்றி எழுத்தப்பட்ட ஒரே நூல் இதுவா த வந்து சென்றபின் ஜே. கி. பற்றிய தேடல் ம் குறைந்தவர்களுக்கு சிறப்பாகப் பயன்படும். ம் குறிப்பிடதக்கது.
o
எழுத்தாளரான லூசுன் சிறுகதைகள் (9ன்) சாரி இயக்கங்களிலும் முற்போக்கு இலக்கியத் எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒரு க்தைகள்) (1956), முல்க்ராஜ் ஆனந்தின் நாவல் ஹாசிமின் சிறைக்குறிப்புக்கள்’ (1973), அஸர்பை ஆகியவற்றை தமிழில் தந்தவருமான தலாத்து .ந்த மாதம் தமிழகத்தில் பொதுமை வெளியீடு ரு. எஸ். வி. ராஜதுரையின் அறிமுகக் குறிப்பு
Ο Ο d
விதைகளின் மற்றுமோர் தமிழாக்கம். முதலில் ப்யப்பட்டு 1976ல் இலங்கையில் வெளியானது. யங்கள் பல படைத்துள்ளவரும் மார்க்சீயம்: ஒர் | நல் நூல்களின் ஆசிரியருமான திரு. எஸ். வி. ாதுமை வெளியீடாகும்.
o r 90
O
list Politics and the Entertainment Media heodore Baskaran. Contents: Popular Theatre and the Civil Disobedience Movement, Birth cinema an Aspect of the Freedom Struggle, British India. Beautifully produced by CreA.
OO
O 9
யம் பற்றி அக்கறை காட்டுவதோடு, ஈழத்துப் சிகைகளான கணையாழி, வைகை படிகள் 4, ற்றிற்கும்.
angiliyan Road, Nallur, JAFFNA.

Page 30
அ. யேசுராசா
யேர்மன் திரைப்பட விழாவில் நான் எதுவோ, அவைதான் எனது uligit (I am, what my films are) 6T6örp விவரணப்படமே, எனக்கு மிக்க சுவாரஷ்யத்தை ஊட்டியது ஏனிைய ஏழு படங்களும் கதைப் படங்களாய் அமைய ஒரு கலைஞனின் - உலகப் பிரசித்திபெற்ற, உடன் நிகழ்கால யேர்மன் நெறியாளரான வேர்னர் ஹேர்ஸொக்கின் அனுபவ உலகினை வெளிப்படுத் தும் உரையாடலைக் கொண்டதாயும், அவரது படங்கள் பலவற்றின் காட்சிகளைக் கொண்ட தாயும் இது அமைந்தது. கலைஞனின் அனுபவம் பின்னெ துக்கப்பட்டு, கருத்தியலான சூத்திரங் களே அடிப்படையானதாகக் கொள்ளப்படும் எமது க%ல, இலக்கியச் சூழலிற்கொண்ட சலிப் பு: , இச் சுவாரஷ்யத்தைத் தூண்டியிருக்க லாம். ஹேர்ஸொக்"கின் ஈடுபாடுகள், அவ ரைப் பாதித்தவை, கடந்தகாலம் எ ன்பவற் றையே அங்கு தரிசிக்க முடிகிறது. இதுவரை அவரது ஐந்து திரைப்படங்களைப் பார்த்திருப்ப தில் அவரது அனுபவங்களிற்கும் படைப்புகளிற் குமிடையிலுள்ள உறவினைப் புரிந்துகொள்வ தற்கும், இது உதவுகிறது. இளமையிலிருந்தே விசித்திரமான்வராயும், அசாதாரணங்களில் ஈடுபாடுள்ளவராயும், ஒதுக்கங்கொள்பவராயும் அவர் இருந்தார். இதன் தாக்கத்தினல் அவரது படக் கதாபாத்திரங்களிற் பல இவ்வாறுதான் அமைகின்றன. இயற்கையின்மீது அதீத ஈடுபாடு அவருக்கு இருக்கிறது. மலைகளும், காடுகளும், மேகங்களும், ஆறுகளும் எரிமலைகளும், பாலை வன மணல் வெளிகளும், பாறைகளும் பலபடங் களில் முக்கிய இடத்தினை எடுக்கின்றன. தனது அறைச் சுவர்களில் atas படங்களைத் தொங்க விடுவதிலும் ஈடுபாடு காட்டிவருகின்றர்: இயற் கையின் வலிமை, சீற்றம் என்பவற்றுக்கு அழுத் a Qatá6lagi. “Aguirre the wrath of God போன்றவற்றில் இதைக் காணலாம். மரணம் அவருக்க முக்கியமானதாயிருக்கின்றது. இயற் கையின் வலிமை"யினையும் அ தன் மூலம் உணர்த்த முயல்கிறர். "மனித வாழ்வே மர
462

பதிவுகள்
ணத்தை நோக்கிய நகர்தல்'தான் என்றும்,
*குருட்டுத் தலைவனைப் பின்தொடர்ந்து செல்
அலும் சேரிடம் அறியாத பயணம்தான்’ என்றும்
Gaft gia)6) co, Sairogi. "Each man for himself God against all என்ற படத்தில் வலிமையான இரண்டு காட்சிப் படிமங்களின் மூலம் இதை
வெளிப்படுத்துகிருர். இது அடிப்படையான, எளிமையான உண்மைதானென்றலும் அந்த நகர்தலின் போதுள்ள பரிமாணங்களை இவர் பார்க்க மறுப்பதனுடன், நாம் உடன்படமுடி
யாது. மரணம் தவிர்க்கவியலாத நித்தியம் என் , பதால் அதற்கு முன்னுள்ள வாழ்வையும் அர்த் தங் கெட்டது - அபுத்தமானதென்று நாம் கொள்ளமுடியாது. கடவுளை, மதஅமைப்பினை அவர் நிராகரிக்கின்ருர், அவரது முக்கிய, கதா பாத்திரமான "கஸ்பார்’ மூலம் இதை வெளிப் படுத்துகிருர். அவன் சகிக்கமுடியாமல் கோவி லிலிருந்து ஓடிவந்தபடி சொல்கிருன்: "குரு வானவர் ஓலமிடுகின்ருர் நிறுத்துகின்ருர். மற் றவர்களும் ஒலமிடத் தொடங்குகின்றனர்", கல்வி அமைப்பும், பரீட்சை முறைகளும் அவ ருக்கு எரிச்சலைத் தருகின்றன. அவை மாணவர் களின் சுயத்தைக் கொல்லுவதாகச் சொல்லி வெறுக்கிருர், பரீட்சைக்கு விதிக்கப்பட்டிருந்த தால் எழுந்த வெறுப்பினல் 'கதே'யின் Faustஐ இன்றும் படிக்கவில்லையென்கிருர், நிர்ப்பந்தங் களுடன் எப்போதும் முரண்படும் படைப்பு மனத்தை இங்கு காண்கிருேம். முறையான படிப்பில்லாத கஸ்பார்' "நீர் ஒரு பச்சைத் தவளையா??’ என்ற கேள்வியின் மூலம், தர்க்க வியற் பேராசிரியர் எழுப்பிய பிரச்சினையை எளிமையாக-முற்றிலும் வேருனவழியில் விடு விப்பதாகக் காட்டுவது, உண்மையில் கல் வி அமைப்பிற்கு "ஹேர்ஸொக்" காட்டும் எதிர்ப் புத்தான். அசாதாரணங்களில் ஈடுபாடு கொண் டிருந்த அவர் வெடிக்கப் போகும் எரிமலை யொன்றை நேரடியாகப் படமாக்க முயன்ற போது, அவரது ஈடுபாட்டிற்கும், செயலிற்கு முள்ள ஒன்றிணைவின்ை - நேர்மையினை உயர் தளத்தில் காணமுடிவது அவர் மீது மிக்க மதிப்

Page 31
பினை ஏற்படுத்துகிறது, எரிமலையின் வெடிப்பை எதிர்பார்த்து 35 கி. மீற்றருக்கப்பால் ம்க்க ளெல்லாம் அப்புறப்படுத்தப் பட்ட பின்னுள்ள சூன்ய அமைதியில், தனது கமராக் காரருடன் அதைப்படமாக்க அவர் சென்றிருந்தார். ஒரு கட்டத்தில் கமராக்காரர் கேட்கிருர்: “இப்பொ ழுது எரிமலை வெடித்தால் என்ன நடக்கும்?'
சிரித்தபடி அமைதியாகவே அவர் சொல்கிருர் “தடக்கிறது நடக்கும் என்ற சாரப்பட. தனது
ஈடுபாட்டில் திடமாகக் கால் ஊன்றிய நேர்மை
யான ஒரு கலைஞனை இங்கு காண்கிருேம்.
தனது நம்பிக்கைகளிற்கும், அனுபவங்களிற் கும் உண்மையானவராய் இருப்பதனுல் கலை யாக்க முயற்சிக்குத் தேவையான தீவிரத் தன் மை யை இயல்பாகவே கொண்டவராயுள் ளார். தனது படங்கள் தயாரிக்கப்படுமுன்பே, எந்நேரமும் தன் முன்னுல் நிகழ்ந்துகொண்டி ருப்பதாக ஒரு கட்டத்தில் சொல்லுகிருர். இத ஒல் ஆமுேழு நாட்களிலேயே திரைப்படச் சுவ டியினை எழுதிவிடுகிருர், எழுதியபின் சிறிய திருத்தத்துக்கும் இடமிருப்பதில்லையாம். திரைப் படப் பயிற்சியினை முறைப்படி இவர் பெற்றி ருக்கவில்லை என்பதும் முக்கியமானது.
93 நிமிடங்கள் கொண்ட இத்திரைப்படத் தில் ஹேர்ஸொக்குடன் உரையாடுபவர்; லோறன்ஸ் ஸ்றெப். நெறியாளர்: கிறிஸ்ரியன் வெயிசென்போர்ன்
இத்திரைப்பட விழாவில் இன்னும் ஏழு படங்கள் இலவசமாகவே காட்டப்பட்டன. ஆயி னும் கே. எஸ். சிவகுமாரன், க. சட்டநாதன், நான் தவிர இன்னும் இரண்டொரு தமிழ் முகங் களையே திரும்பவும் திரும்பவும் அங்கு காண முடிந்ததில் நம்மவர்கள் இவற்றிலேன் ஆர்வங் காட்டுவதில்லையென்ற, ஆதங்கம் ஏற்பட்டது. கொழும்பில் லயனல் வென்ற் திரைப்படக் கழ கம், O, C. I.C. "சோவியத் கலாசார நிலையம் என்பவற்றிலும், யாழ்ப்பாணத்தில் “யாழ். திரைப்பட வட்டத்திலும் கலைத்தரமான பிற மொழிப் படங்களை ஒழுங்காகப் பார்க்கும் வாய்ப்பு உண்டு. பலருக்கு இது பற்றிய விப ரங்கள் தெரியாமலிருக்கலாம். ஆர்வமுள்ளவர் கள் "அலையுடன் தொடர்பு கொண்டால் விப ரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். s
O O O

கலைரீதியாகவும், வெகுஜன ஆதரவு ரீதி யாகவும் தோல்வியுற்ற பாற திகே (பாதை நெடுக ...) க்குப் பிறகு தர்மசேன பத்திராஜா நெறியாள்கை செய்துள்ள சொல்தாது உன் னஹே (முன்னுள் போர்வீரன்) திரைப்படம் வெளிவந்துள்ளது. இது பற்றிய கருத்தரங் கொன்றும் சித்திரைப் பிற்பகுதியில், கொழும்பு புதிய நகரமண்டபத்தில் "கம் கறு மாவத்த" (தொழிலாளர் பாதை) அரசியற் கட்சிசார்ந்த மன்றமொன்றினுல் ஒழுங்கு செய்யப்பட்டிருந் தது. ஏறக்குறைய மண்டபத்தின் பெரும் பகுதி பார்வையாளர்களினல் நிரம்பியிருந்தது. பதி னேந்து இருபது பேர்களுடன் கஷ்டப்பட்டுக் கூட்டம் நடத்திக் கொண்டே வளர்ச்சி' என் றும் "ஆரோக்கியமான சூழல்’ என்றும் தம்பட் டமடிக்கும் தமிழ்க்கல இலக்கிய உலகை அறிந்த எனக்கு இத்தகு கூட்டம் பிரமிப்பைத்தான் தந்தது. கலை, அரசியல், பிரச்சாரம் தொடர் பான முரண்பட்டவையும், சுவாரஷ்யமானவை யுமான பல கருத்துக்கள் இதில் வெளிப்படுத் தப்பட்டன. கலாநிதி "சுனந்த மகேந்திர' (இவ ரது "ஹெவனல்ல அத மினிஸ்ஸ"0" நாவல் சமீ பத்தில் திரைப்படமாகவும் வந்துள்ளது) இத் திரைப்படம் சிறந்ததெதொன்றெனப் பல கார னங்கள் காட்டிப் பேசியபோதிலும் "அரசியல் இன்மைதான் இதன் சிறப்பெனக் கூறியமை அபத்தமானது. பூரீலங்காவின் பெருமைக்குரிய கலை, இலக்கிய விமர்சகரான றெஜிசிறிவ்ர்த்தணு "அனுபவத்தையும் உருவத்தையும் கோட்பாட் டையும் இணைத்த முழுவதும் அரசியலமைந்த முதற் சிங்களத் திரைப்படமென” இதை எழுதி புள்ளமை இங்கு நினைவுகூரத்தக்கது. எனினும் "பிடித்தமான அரசியல் உள்ளடக்கம் கொண் டுள்ளதைக் கொண்டு மட்டும் ஒரு கலைப்படைப் பைச் சிறந்ததெனப் பராட்டமுடியாது’ என்ற “மகேந்திரவின் கருத்து முக்கியமானது. கொழும்புப் பல்கலைக் கழகச் சிங்கள விரிவுரை யாளரான திருமதி “பியசீலி விஜேகுணசிங்க' இதைச் சிறந்த அரசியற் படமென ஏற்றுக் கொண்டு பாராட்டிய போதும் "அரசின் இறைமை பற்றிய கருத்துக்களை ‘வில்வி மகத் த யா’ பாத்திரம் வெளியிடுவது இயல்பற்ற தாய்-பாத்திரத் தன்மைக்குப் பொருத்தமற்ற தாய் இருப்பது நீக்கப்படவேண்டிய குறைபாடு என்பதைக் குறிப்பிட்டார். (போர்வீரன் இறு தியில் 'இறைமையை உர்ைவதை ‘பியசீலி",
63

Page 32
குறையாகக் காணவில்லை.) கருத்துக்கள் திரை படச்சட்டங்களினுாடாக இயல்பாகத் தான் வெளிவரவேண்டுமென்றும், வெறும் கருத்துகை மட்டும் கலையில் எதிர்பாக்கமுடியா தென்றும் அவைதான் முக்கியமென்ருல் இறைமை பற்றி கருத்தை லெனினின் “அரசும் புரட்சி நூலிலும் மார்க்சின் எழுத்துகளிலும் தெளிவாக நாம் அ பலாம் என்றும் பேசியமை பொறுப்பு நிறை ததாயும் ஏற்றுக்கொள்ளத் தக்கதாயும், இரு தது. ‘பத்திராஜா இந்தத் திரைப்படத்துடன் தான் தனது 'பாதை’ எதுவென்பதைச் சரியாக நிர்ணயம் செய்து கொண்டுள்ளார்" என்று கூறிய "ஜே. உயங்கொட* "அரசியல்தான் இ படத்தின் அடிப்படையென்றும், அதுவும் கல ரீ தி யாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதென்றும் உயர்தரமான படமென்றும் பாராட்டினுர் எனினும் சாதாரண இரசிகர்களினல் இரசிக் முடியாமலுள்ளதைக் குறிப்பிட்ட அவர், அத் கையவர்களின் இரசிகத்தன்மையைப் புரிந்து கொள்ளாமைதான் பத்திராஜாவின் பலவீன மென்றும், இனிமேல் சாதாரண இரசிகர்களு இரசிக்கக்கூடிய படங்களைப் பத்திராஜா தக ரிக்க வேண்டுமென்றும் சொன்னர். உயர்ந்
Space Donated ty
464

கலைக்கும், சாதாரண இரசிகத்தன்மைக்குமுள்ள முரண்பாடுகளை எவ்வாறு சீர்செய்வது என் பது பற்றிய சிந்தனைகளை, அவர் முன்வைக்க வில்லை. என்ருலும் கலையும், பிரச்சாரமும்; உயர் தரத்துக்கும் சாதாரண இரசிகத் தன்மைக் கும் இடையிலுள்ள இடைவெளி போன்ற பிரச் சினை கள், தமிழ்ஈழ மார்க்சீய வாதிகளைப் போலவே பூரீலங்காவின் மார்க்சிய வாதிகளிட மும் இருப்பதை இக்கருத்தரங்கு உணர்த்தியது. இருசாராராலுமே இப் பிரச்சினைகள் பற்றிய சிந்தனைகள் மேலும் வளர்த்தெடுக்கப்படவேண் டும். விரிவுரையாளர் "சுசரித கம்லத்’பேசி யதை அடுத்து, காரசாரமான கலந்துரையாடலும் நடைபெற்றது. s.
*தாம் யாழ்ப்பாணத்தில் நின் போது, மக்கள் ஆர்வமாகக் குழுமி நின்றபடி திரைப்படக் கதைவசனத்தை ஒலி பெருக்கியில் கேட்டதைக் கண்டதாகவும், அவர்கள் திரைப் படத்தைக் கேட்டால் மட்டுமே போதுமென்றும், பார்ப்பது முக்கியமல்லவென்றும் கருதுகிருர்கள் போலும், என்று ‘சுணந்த மகேந்திர தனது பேச்சிடையில் கேலிததும்பக் குறிப்பிட்ட கருத் தொன்றும், மனதிற் பதிந்தவொன்ருகும். O
WELL WISHER