கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அலை 1981.07-09

Page 1
தமிழர்களும் ஆமை:
எல்லா இன ஆமை அவற்றின் முட்டைக சட்டத்தின் பாதுகாப்பு
இது விலங்கின, த கட்டளைச் சட்டத்தி
@
 
 

6ளும்
களும், ஊரும் |ப் பெற்றவையாகும்.
தாவரப் பாதுகாப்புக் ன் கீழானது.
ாைசிவராசிகள் பாதுகாப்புத் னேக்களத்தினுல் தொகுத் தளிக்கப்பட்டது.
ஒர் அரசாங்க விளம்பரம்
ஆடி - புரட்டாதி 1981
5 LIT 33-35)

Page 2
பதிவுகள்
மு. புஷ்பராஜன்
ஈழத்துத் தமிழர் வாழ்வில் 58ம் 77ம் யாத ஆண்டாகி விட்டது. நடந்து முடிந்த தென வெளிச்சப்படுத்தப்பட்டு விட்டது. ப நினைத்து தலையிலடித்து வருந்த வைத்த - நூல் செய்ய முடியும். 2ம் உலக யுத்தத்தின் பே மும் ஏற்படக்கூடாது என்பதில் அக்கறை ெ ளவன் தானே? ܝ
எரிந்து விடிந்த காலையில்: நூல்நிலையத்ை மக்களைப்பார்த்து "ஐயோ பாவம், ஐயோ ட களே இது எதனைக் காட்டுகிறது, "என்ன ே என்ற ஒரு திரைப்பட வசனமே நெஞ்சில் ே
ஆசியாவின் உன்னத நூல்நிலைய எரிப்பின் டலப் பரிசின் பெறுமதி என்ன? உறுப்பினர்ச இந்த அரசாங்கம் தரும் சாகித்திய மண்டல ளனல் கை நீட்டி வாங்கிக் கொள்ள முடியும்?
o o - ၇၀
மே மாதம் தீயவர் இட்ட தீச்சுவான கல். உயிரோடு கொளுத்துதல், கற்பழித்த முடிந்த பின்னர்தான் அரசாங்கம் அவசரகால குழப்ப நிலைக்குத்தமிழர்களே காரணம் எனக் யின் மேல் பழஞ் சீலையைப் போட்டு அணைக் ணத்திற்காக அரசாங்கத்தை ஆதரித்த தமிழ் அல்ல. அது ஒரு தெளிவான எல்லைக்கோட்டில் வாழவேண்டும் என்று எம்மை அழைக்கிறர்க வேண்டும் என்பதுதான் ஒற்றுமை என்பதன் அர் கொள்ளை எல்லாமே தார்மீகம் என்ற அர்த் பட வேண்டியதில்லை.
Ο Ο Ο Ο
O
R. L. Goffalgárs. Gofair Dr. Jekyll and படம் இன்று ஞாபகத்திற்கு வருகிறது. பகலி கரக் கொலை வெறியனுய் மாறுவதே அதன் சா கொலை செய்பவர்கள்; பகலில் தீ வைத்தவை வரையும் தேடிக் க்ண்டுபிடிக்க முனையும் சூழ் கிறது. ஸ்ரீவன்சனின் இப்பாத்திரம் இங்கு" யதாக இருக்கிறது. இறுதியில் Jakylன் குணுப தரமாகியதுபோல், இங்கும் இரவில் தீ வைத் தரமாகவே தீ வைத்து கொலை செய்பவர்கள
ರ್ಸ"

ஆண்டுகளைப்போலவே 81ம் ஆண்டும் மறக்கமுடி சம்பவங்களெல்லாம் எதன் துணையோடு நடந்த பனிதகுல மனச்சாட்சியை உலுக்கிய - நினைத்து நிலைய எரிப்பை, இதன் இழப்பை எதனுல் ஈடு ாது "ஒக்ஸ்போட்" பல்கலைக் கழகத்திற்கு ஒரு சேத காண்டிருந்த ஹிட்லர் ஓரளவு மனச்சாட்சி உள்
த, துயர்படிந்த முகங்களுடன் சுற்றிச்சுற்றி வந்த பாவம்' என்று கொச்சைத் தமிழில் கேலிசெய்தாா செய்வேன் என் நாடே! இது உனக்கள் எனக்கா’ மாதியது.
* பின்னணியில் அரசாங்கத்தின் சாகித்திய மண் 5ள் தம் மனச்சாட்சியை தட்டிக் கொள்ளட்டும். ப் பரிசை எந்த முதுகெலும்புள்ள தமிழ் எழுத்தா
Ο Ο Ο Ο Ο Ο Ο Ο O
ல அணையுமுன் மீண்டும் (ஆவணியில்) இனஒடுக் ல், கொள்ளையடித்தல்கள் தாராளமாய் நடந்து பச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது. பின்னர் காட்ட முனைகிருர்கள். பற்றியெரியும் தீச்சுவாலை $முயலும் நம்பிக்கைதான். தமிழன் என்ற கார முஸ்லீம்கள் தாக்கப்பட்டது தற்செயல் விளைவு ண் வெளிப்பாடுதான். இன்னமும் அவர்கள் சேர்ந்து 5ள். அடித்தால் ஒட வேண்டும் அழைத்தால் வர 'த்தமா? உயிரோடு எரித்தல், கற்பழித்தல், கொலை தத்தில் பேசப்படும் சூழலில் இதற்கும் ஆச்சரியப்
१० १० ? 4r, Hyde" என்ற நாவலின் ஆங்கிலத் திரைப் பில் உயிரைக் காக்கும் ஒரு டொக்டர் இரவில் பயங் ராம்சம். இரவில்: தீ வைத்து, கொள்ளை அடித்து, ரயும், கொள்ளை அடித்தவரையும், கொலை செய்த நிலை ஸ்ரீவன்சனின் சாரத்தையே ஞாபகப்படுத்து படை படையாகத் திரண்டிருப்பதைக் காணக்கூடி சம் கரைந்து, Hydeன் குணம்சம் மேலோங்கி நிரந் து கொள்ளை, கொலை செய்பவர்கள் பகலில் நிரந் கவும் மாறிவருகிருர்கள் அல்லவா? O
مسلسلة

Page 3
@&6ກum6fluຕໍ່: மு. புஷ்பிராஜன் 13 Jo. Gudr.JTJIT
அரசுப் ப
யாழ்ப்பாணம் மீண்டும் எரிக்கப்பட்டு களும் சிதைக்கப்பட்டுள்ளன. இவற்றை நிக லங்கா மக்களுக்கு மட்டுமல்லாது ஏனைய நா குறிப்பிட்ட சம்பவமொன்றினடியாக எழுந்: தற்செயலாக நிகழ்ந்ததாக நம்பவைக்க, அர வேனும் உண்மையில்லை. ஆத்திர உணர்வைே மீறிய அந்நிய பிரதேசமொன்றின் மீதான தி பயங்கரவாதமே, இது. அழிக்கத் தேர்ந்தெடுக் முறை, படைகளின் உயர் அதிகாரிகளும், அை களின் பின்னர் அரசின் உயர் அதிகாரிகள் இ மிகக் குறைந்த விவேகமுடையோரைக் கூட *பிரச்சார ஊதுகுழல்கள்’ எவ்வளவுதான் மு
இன்னும் தெளிவடையாமலிருக்கும் பெ தொடர்ந்து 31-5-81 இரவு இச் சம்பவங்கள் வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டுள்ளன: கோ நிலையத்திலும், வேறு இடங்களிலும் கண்டப நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு, கார், ஜிப் யவும் முயற்சிக்கப்பட்டது. தமிழர் விடுதலை குண்டுகள் வீசி எரித்துச் சிதைக்கப்பட்டது. கடைகளும் சூறையாடப்பட்ட பின்னர் எரிக்
1-6-81ல், கொழும்பிற்கு வெளியிலிருந்து பிரதேசத் தமிழ் மக்களின் பெரும் ஆதரலை யாலயம் எரிக்கப்பட்டது. அச்சுக் கருவிகள், டன. தமிழர்களிடம் இருந்த முக்கிய வெகுஜ வதே அதன் நோக்கமாயிருந்தது. இதனேடு மும் இருக்கிறது. தென்கிழக்காசியாவிலேயே திரண்ட புத்தகச் செல்வம்-95,000 தொகுதி மரபுகளையும் மீறிய இக் காட்டுமிராண்டிச் வளர்ச்சியினையும், கலாசாரத்தினையும் நிர்மூ
 

48, சுய உதவி வீடமைப்புத் திட்டம்,
குருநகர், யாழ்ப்பாணம்.
யங்கரவாதம்
|ள்ளது. அத்தோடு குடாநாட்டில் வேறுசில பகுதி ழ்த்திய மிலேச்சர்கள் யாரென்பது தமிழீழ, பூரீ டுகள் பலவற்றின் மக்களுக்கும் தெரியவந்துள்ளது த ஆத்திரத்தின் காரணமாயே இவ் வெறியாட்டம் rசு சார்பானவர்கள் முயல்கின்றனர். இதில் கடுகள யோ, அதனை மீறிய வகுப்புவாத உணர்வினையோ ட்டமிட்ட ஆக்கிரமிப்பே இதுவாகும். கொடிய அரசுப் கப்பட்ட இடங்கள், அழிப்பு முயற்சிகளின் ஒழுங்கு மச்சர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்த சூழல், அழிவு இதுபற்றிக் கவலை தெரிவிக்காமை என்பனவெல்லாம் இம்முடிவுக்குத்தான் கொண்டுசெல்லும். அரசின் முழங்கினலும் உண்மை மறைந்துவிடாது.
ாலிசார் மீதான துப் பாக் கி ச் சூடொன்றினைத் ர் நிகழ்ந்துள்ளன. நாச்சிமார் கோவிலருகிலுள்ள "விலின் சொத்துக்களும் எரிக்கப்பட்டுள்ளன. பஸ் டி பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண
என்பன எரிக்கப்பட்டன; அவரைக் கொலை செய் க் கூட்டணியின் தலைமைச் செயலகமும் பெற்றேல்
பெரியகடைப் பகுதியிலுள்ள பழைய சந்தையும் க்கப்பட்டுள்ளன.
து வந்துகொண்டிருக்கும் ஒரே பத்திரிகையும், வட வப் பெற்றிருப்பதுமான ஈழநாடு பத்திரிகைக் காரி
ஊழியர்களின் வாகனங்கள் உட்பட எரிக்கப்பட் ஜன தொடர்புச் சாதனம் ஒன்றை இல்லாமற் செய் தொடர்புறுவதாகவே யாழ். நூலக எரிப்புச் சம்பவ
குறிப்பிடத் தகுந்த நூலகங்களிலொன்றன இதன் கள்வரை சாம்பராக்கப்பட்டுவிட்டது. யுத்தகால செயலினைச் செய்தவர்கள் தமிழர்களின் அறிவு முலமாக்கும் எண்ணத்தையே கொண்டுள்ளனர்.
469

Page 4
புகழ்பெற்ற எமது புலவர்களான திருவள்ளுவ உடைக்கப்பட்டமையும் இதனையே காட்டிநிற்
2-6-81ல் குடாநாடெங்கும் அவசரகால நகர எல்லைக்குள் ஊரடங்குச் சட்டமும் அமுல கம், காங்கேசன்துறை போன்ற பட்டணங்கள் பட்டு எரிக்கப்பட்டுள்ளன. முக்கிய நகரமான கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்
கொலைகளையும், கொள்ளைகளையும், அழிவு வகையினதான தாக்குதல் நிகழ்கிறது. 3-6-81 றது. வலிந்து தூக்கிச்சென்றும், தெருக்களிலு டன. கோப்பாயில் பரமேஸ்வரனும், நீர்வேலி ஜோதியும் சுட்டுக் கொல்லப்பட்டு வீசப்பட்டுக் நோக்கத்துடன் ஒரே நாளிலேயே செய்யப்பட்ட இவர்கள் கொல்லப்பட்டதாக அரசு கூறுகின்ற யாழ், மாநகர எல்லைகளிற்கு அப்பால்தான் யது. யாழ்ப்பாணத்திற்கூட 'ஊரடங்குச் சட்ட அறிவிக்கப்படவில்லை - முக்கியமாக வாஞெலி இதுபற்றிய அறிவிப்பே இல்லை.
4-6-81ல் வடபகுதியில், இலங்கையின் ஜ யைப் பூசிக்கொண்டு, நிர்வாணமாகப் பல்லை இ
யாழ். பிரதேச மக்களின் மீதான அரசின் இம் மக்களைப் பாதுகாப்பதற்கு அவர்களுக்குத் னரினல் சிறு சுண்டு விரலைத்தானும் உயர்த்த { நாட்டை அமைத்துத் தரப்போவதாக வஜன: கதிரைகளைக் குறியாகக்கொண்டு அது சென்ற மக்கள் நன்முகக் காண முடிந்தது. ஒடுக்கு முன் களிடம் இல்லையென்பது வெளியாக்கப் பட்டுள் முழக்கங்களில் காலத்தை ஒட்டும் இக் கட்சியி: மேலும் கூடியேயுள்ளது. தேர்தல் விளையாட்டு முடிவு தேர்தலின் முன்பே பரவலாகக் காண்ட் தாக்குதல்களிற்கு எதிர்ப்புக் காட்ட வேறு வழி லில் கலந்து, மாபெரும் ஆதரவைக் கூட்டணி மின்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டு
அழிவுகளிடையிலும் சில நல்ல நிகழ்வுக தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகள் சிங்கள ! லங்கையைச் சேர்ந்த இயக்கங்கள் பல, இக் கா மக்களிற்குத் தெரியப்படுத்தி அரசுக்கெதிரான அனுதாபத்தை ஏற்படுத்தவும் அயராது முய டையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கமும் இலங்கைக் கம்யூனிஸ்ற் கட்சிப் பத்திரிகையா தமது குழுவினை அனுப்பி உண்மை நிலைவரங் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் Mirie பிரச்
470

ர், சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் சிலை கள் கின்றது. லைமை பிரகடனப் படுத்தப்பட்டு, யாழ்ப்பான ாக்கப்பட்டது. இந்த நிலைமைகளில்தான் சுன்ன ல் கடைகளும், சந்தையும் கொள்ளையடிக்கப் யாழ்ப்பாணத்திலிருந்து சிறிய பட்டணங்களிற் படுவதனைக் காண்கிருேம்.
களையும் பொலிசார் நிகழ்த்தியபிறகு இன்னுெரு ல் இராணுவம் தலையிட்டுக் கொலைகளைச் செய்கி ம், வீட்டினுள் புகுந்தும் கொலைகள் செய்யப்பட் பில் சண்முகம் நடேசுவும், திருநெல்வேலியில் பால கிடந்தனர். இவையெல்லாம் பீதியை மூட்டும் -ன. ஊரடங்குச் சட்டத்தை மீறியதாலேயே து. ஆனல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த இக் கொலைகள் நிகழ்ந்துள்ளமை கவனத்துக்குரி -ம் செம்மையான முறையில் பொதுமக்களுக்கு போன்ற வெகுஜன் தொடர்புச் சாதனத்தில்
னநாயகத் தேர்தல் முறை தன் முகமெங்கும் கரி இளித்ததும் யாவரும் அறிந்ததே!
பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது
தலைமைதாங்கும் தமிழர் விடுதலை கூட்டணியி முடியாது போய்விட்டது. விடுதலை பெற்ற தனி ங்களே முழங்கும் அக்கட்சியினதும், பாராளுமன்றக் தேர்தற் பாதையினதும் கையாலாகாத்தனத்தை, றைகளிற்கெதிரான எந்த வேலைத்திட்டமும் அவர் rளது. நடைமுறைச் செயற்பாடற்ற - வெறும் ன்மீதான தமிழ் மக்களின் அதிருப்தி, இப்போது களில் தொடர்ந்தும் பங்கெடுக்காதிருக்கும் பட்ட போதிலும், திடீரென நிகழ்ந்த அரசின் யில்லாததாலேயே அபிவிருத்திச் சபைத் தேர்த க்கு வழங்கினர். இதனைக் கூட்டணியினர் மயக்க Lf) ..
ரும் நடந்துள்ளன. முன்னரெப்போதையும் விட Dக்கள் மத்தியில், வைக்கப்பட்டுள்ளன. தென்னி ட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைச் சிங்கள
உணர்வை உருவாக்கவும், தமிழ் மக்கள்மீது ஸ்கின்றன. பலர் முயன்றபோதும் இனங்களிற்கி (Mirie), அதன் தலைவர் பிதா, போல் கஸ்பர்சும், எ அத்தவும் முக்கியமானவைகள். உடனடியாகத் ளை அறிந்து பிரசுரங்கள், கூட்டங்களின் மூலம் :ாரப் படுத்தியதுடன் முக்கியமாக, இச் செயல்க

Page 5
ளைக் கண்டிக்கும் கூட்டங்களைச் சிங்கள மக்கள் லியும், ஆங்கில, சிங்களப் பத்திரிகைகள் போல் பாண நிகழ்வுகளைத் திரித்தும், மறைத்தும் ெ டன் உண்மை நிலைவரங்களைச் சிங்கள மக்களிற்
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உண்டை யாளனுகக் காட்ட, விசாரணைக் குழுவொன்ை இது தனது கைகளிற் படிந்துள்ள இரத்தக் கறை தமிழர்களிற்கு நியாயம் கிடைத்துவிடப் போல யுறுவதற்கு முன்பாகவே தமிழர்களிற்கு விரோ ஜன தொடர்புச் சாதனங்களினல் பிரச்சாரப்ட கைகள் கிணற்றில் போட்ட கல்லாக மாறிவிடு ஞல், குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் சொ முன இடமாற்றங்கள்தான் தண்டனையாக(!) வ முறை பற்றிய சன்சோனி ஆணைக்குழுவினலும், ருந்த அவசரகால நிலைமையின்போது நடைபெ குழுவினலும், எந்தவிதப் பயனும் கிடைத்துவி வில்லை. ஆதலினுல், அரசின் விசாரனைக் குழுவ றைய நிலையில் அவர்கள் தயாரில்லை.
யாழ்ப்பாணச் சம்பவங்களிற்கு வடக்கிலுள் அரசு சார்பானவர்கள் பொய்யாக ஒலமிட்டுக் யில் கிழக்கில் அம்பாறை-பட்டிருப்பு எல்லைப் கரவாதம் கட்டவிழ்த்துவிடப் பட்டுள்ளது. கா னைச் செய்துள்ளனர். லீடுகள் எரிக்கப்பட்டு, த விவசாயிகள் அகதிகளாகியுள்ளனர். தாக்குதல் காலத்துக்குக் காலம் பேரினவாதிகள் செய்துவ கல்முனைப் பிரதேசங்களில் தமிழகர்கள்மீது மீ பாறையில் கடைகள் வீடுகள், கோவில் என்ட னையில் தஞ்சம் புகுந்துள்ளனர். உத்தியோக ரீதி கப்ப்ட்டிருந்த வேளையில்தான் பல வீடுகள், க. டக்களப்பிலும் வீடுகள், பாடசாலைகள், கடை இவற்றைச் செய்ததோடு தமிழ் மக்களைக் கண் கிழக்கைச் சேர்ந்த அரசு சார்பான தமிழ்பேசு! ளும் வடக்குச் சம்பவங்களின்போது இருந்ததுே யில், வாய்மூடி மெளனிகளாக உள்ளனர். வட கிழக்குப் பிரதேசத் தமிழர்களைத் திசைதிருப்ப தும் கபடத்தனங்கள் இப்பொழுது அந்த மக்க
வடக்குக், கிழக்கு மக்கள்மேல் நிகழ்ந்தது( கரவாதம் இப்பொழுது கட்டவிழ்த்து விடப்ட இரத்தினபுரி போன்ற இடங்களில் கொள்ளைய குடாநாட்டிலும், மட்டக்களப்பிலும் இராணு டுள்ளது. மிகக் கூர்மையடைந்துவரும் தமிழ்த் வாதத்தினுல் ஒடுக்கிவிடலாமென அரசு நினைக்

வாழும் பகுதிகளில் நடத்திவருகிறது. வானுெ rற வெகுஜன தொடர்புச் சாதனங்களும், யாழ்ப் வளியிட்டபோது "அத்த" பத்திரிகை உடனுக்கு கு விரிவாகத் தெரியத் ஆந்தது.
கள் வெளியாகிவிட்ட நிலையில் தன்னை நேர்பை ற அமைக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது களைத் துடைப்பதற்கேயாகும். விசாரணைகளால் பதில்லை. காலங் கடத்தப்படுவதும், முழு  ைம தமான முறைகளில், விசாரனைப் பகுதிகள் வெகு டுத்தப்படுவதும், விசாரணை முடிந்தபின் அறிக் வதும்தான் இதுவரை நடந்துள்ளன. ஆக மிஞ்சி ந்த ஊர்களுக்குச் சமீபமர்கச் செல்லக்கூடியவா ழங்கப் படுகின்றன. 1977 ஆவணி இன ஒடுக்கு 1979 ஆடி-மார்கழி வரை யாழ்ப்பாணத்திலி ற்ற கொலைகள் பற்றிய பாராளுமன்றத் தெரிவுக் டவில்லையென்பதைத் தமிழ் மக்கள் மறந்துவிட பில் நம்பிக்கை வைத்து மடையர்களாக, இ5
ாள சில தீவிரக் குழுக்கள்தான்" காரணமென்று கொண்டிருக்கையிலேயே, ஆடி மாத முற்பகுதி பகுதியிலுள்ள தமிழ்க் கிராமங்களின்மீது பயங் டையர்களும், அரசுப் படைகளும் சேர்ந்து இத ம் வயல் நிலங்களிலிருந்து விரட்டப்பட்ட தமிழ், களிற்கூடாக நில விஸ்தரிப்பு நடவடிக்கைகளைக ருகின்றனர். ஆவணி முற்பகுதியில் அம்பாறை, ண்டும் தாக்குதல் தொடுக்கப் பட்டுள்ளது. அம் lன எரிக்கப்பட்டு 1000க்கு அதிகமானேர் கல்மு யற்றமுறையில் ஊரடங்குச் சட்டம் அமுலாக் டைகள் கல்முனையில் எரிக்கப்பட்டுள்ளன. மட் கள் எரிக்கப்பட்டுள்ளன. அரசு ப் படைகளே டகண்ட இடங்களில் தாக்கியும் இருக்கின்றன ம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்க பாலவே இப்பொழுதும் வெட்கங்கெட்ட முறை .பிரதேசத் தமிழர்களின் தேசிய எழுச்சியிலிருந்து முயன்றுகொண்டிருக்கும் இவர்களதும், அரசின ரின் முன்னுல், அம்பலப்பட்டுவிட்டன.
பான்று மலையகத் தமிழ் மக்கள்மீதும் இப் பயங் ட்டுள்ளது. பதுளை, ப ச றை, பண்டாரவளை, ம், எரிப்புகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. யாழ். வம் மேலும் கொண்டு வரப்பட்டுக் குவிக்கப்பட்
தேசிய விடுதலைப் போராட்டத்தைப், பயங்கர நிறது. பொருளாதார முரண்பாடுகளினல் தீவிர
471

Page 6
வளர்ச்சியடைந்துவரும் சிங்கள மக்களின் அதி கப்பார்க்கின்றது. இவ் ஒடுக்குமுறைகளிற்கு ( அதன் தற்போதையத் தலைமை, கையாலாகாத மற்ற அதன் பாராளுழன்றப் பாதையின் மீதா வாக உணர்ந்துகொள்ள முடிகிறது. கசப்பான யினை உணர்ந்து, தெரிந்துகொள்ளவேண்டிய நி கும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் அப்ப தேசிய விடுதலைப் போராட்டங்களையும், தேசி கரவாதத்தின் மூலம் ஒழித்துவிட முனைபவர்க வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள மறுக்கும் ளையும் மேலும் கட்டவிழ்த்துவிடுவர். தமிழ்த் இந்நிலையில் - எதிர்காலத்தில், எ ம து கவிஞ தானுல் . . w
"இனி மரணத்துள் வாழ்ே
சாகாவரம் ெ
விஞ்ஞானம் வியத்தகுமுறையில்
இதிகாசங்களை வெறும்கட்டுக்கதைக் இயல்பாகவே வளர்ந்துவிட்டது. அ பதே பெரும்பான்மையானேரின் மு
ஆனல் அவற்றை நேர் கூற்றுகளா போன்று சில ஆழ்ந்த உண்மைகளை ஞல், எமக்குப் பல வழிகளிலும் ப
பண்டைய எகிப்திய சமயத்தில் பீ ஐதிகம் ஒன்று வழங்கியது. இப் எனப் பண்டைய எகிப்திவர் கருதி றும், அதற்குப் பின்னர் தானகவே அச் சாம்பலிலிருந்தே புதுப் பொலி உயிர்த்தெழும் எனவும், அவர்கள் மைக்கு ஒரு குறியீடாகக் கையாளட்
இந்த ஐதிகம், மனித வாழ்விற்கு உண்மையைப் புலப்படுத்துகின்றது ( எப்படியோ?
472

ருப்தியைத் திசைதிருப்பவும், இதைக் கருவியாக் மு கங் கொடுத்துத் தமிழ்ம க்க ளைக் காப்பாற்ற தாக இருக்கிறது. நடைமுறைச் செயற்திட்டமேது ான மாயை கலைந்து செல்வதையும், இன்று தெளி ா வரலாற்று அனுபவங்களுக்கூடாக புதிய பாதை லைமையில் நாம் வாழ்கிருேம். உலகெங்கும் நடக் ாதையை எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. ய இனங்களின் கலாசாரத்தினையும் அரசுப் பயங் ள் இறுதியில், தோல்வி அடைவதுதான் வரலாறு. முடர்கள் பயங்கரவாதத்தையும், ஒடுக்கு முறைக தேசிய இனத்தின்மீதான நிலைமையும் இதுதான். னுெருவனின் வார்த்தைகளைக்கொண்டு கூறுவ
snuTub” - О
பற்ற பறவை
இன்று முன்னேறிவிட்டதால், புராண 5ள் என ஒதுக்கும் மனப்பான்மையும் அவை காலத்துக்கு ஒவ்வாதவை என் pடிவாக இருக்கலாம்.
"ய்க் கொள்ளாது கவிதைக் கூற்றுகள் உணர்த்தும் குறியீடுகளாய் நோக்கி யனுண்டு.
'னிக்ஸ் என்ற அற்புதப் பறவைபற்றிய பறவை சூரியபகவானின் வெளிப்பாடு னர். இது 500 ஆண்டுகள் வாழுமென் தீக்குள் விழுந்து கருகிச் சாம்பலாகி, வுடனும், அழகு ட னு ம் மீண்டும் நம்பினர். இதனுல் இப்பறவை, இறவா படுகின்றது இன்று.
எக்காலத்திலும் பொருந்தக்கூடிய ஓர் என்றே, எனக்குப் படுகிறது; உங்களுக்கு
- வெளியான் நன்றி: ஈழநாடு - 10-6-81,

Page 7
ரொம் ஸ்ரொப்பட்
ஆ. சபாரத்தினம்
அந்நிய நாட்டில் பிறந்து ஆங்கில மொழி யில் திறமை பெற்று ஆங்கில இலக்கிய உலகில் அழியா இடம் பெற்றவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். நம் சமகால நாடக உல கில் மங்காப் புகழ் பெற்ற இளம் தலைமுறையின ரில் பெருமதிப்புப் பெற்றவர் ரொம் ஸ்ரொப் பட். அவர் செக்கோஸ்லவேக்கியாவில் 1937 ல் பிறந்தார். இரண்டாம் உலகப் போர்க் காலத் தில் சிங்கப்பூரில் கடமையாற்றிய அவரது தந்தை இறந்தார். தாயாரும் சகோதரரும் இந் தியாவில் வசித்தபோது இவர் டார்ஜீலிங் ஆங் கிலப் பள்ளியில் பல இன மாணவருடன் படித் தார். தாயார் ஸ்ரொப்பட் என்ற ஆங்கிலே யரை மணந்து இங்கிலாந்தில் குடியேறினர். யோக்ஷயரிலுள்ள உயர்நிலைப் பாடசாலையில் படித்த இளைஞர் ரொம் பத்திரிகைத் துறையில் ஆருண்டுகள் பணிபுரிந்தார். நாடக, சினிமா விமர்சனமும் செய்யலானர்.
23ம் வயதில் முதலாவது நாடகத்தை எழு தினர். ஒரு சுதந்திர மனிதன் பிரவேசிக்கிறன் என்ற பெயரில் பின்னர் அரங்கேறிய அந்த நாடகத்தைப் பற்றி அவரே கு  ைற கூறும் போது, "ஒருவன் எழுதும் முதல் நாடகம் அவன் பார்த்த எல்லா நாடகங்களின் சாராம் சத்தையும் உள்ளடக்கியதாயும், அவன் ரசித்த மாதிரியில் பிறிதொன்றை உருவாக்கியதா யும் காணப்படும்" என்கிருர், இந்நாடகம் இப்ஸெனின் காட்டுத்தாராவை ஓரளவுக்கு ஒத் திருக்கிறது. ஆனல் இதன் ஆசிரியர் தாம் இப்ஸெனின் நாடகத்தை படித்ததே இல்லை என்கிருர், சோம்பேறியான ஒரு நடுவயதினன் தன்னைத் தானே ஏமாற்றுவதில் மட்டும் வல் லவன். தான் விஞ்ஞானத்தில் ஏதோ பெரிய கண்டுபிடிப்பாளன் என்றும் பெரிய குடும்பத் துக்கு உழைத்து உணவு போடுகிறவன் என்றும் புழுகுகிறவன். தன் மனைவியும், மகளும் தன்

தகப்பனும் கஷ்டப்பட்டு உழைப்பதை உண்டு சுகிப்பவன். வாழ்நாள் முழுவதும் ஒரு பொய் மையில் தோய்ந்து தன்னைத் தானே வெறுக் காமலும் சோகத்தில் கரையாமலும் இருக்கி முன். இந்தப் பொய்மையை விடயமாகக் கொண்டு ஹாஸ்யமாகக் கதையை வளர்த்துச் செல்லுகிருர்; ஆசிரியர். பாத்திரங்களிடையே உள்ள தொடர்பை நாம் பலமாக உணர்கி ருேமா என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. இத்தகைய உணர்வைத் தருவதில் ஸ்ரொப்பட் எப்போதும் சிறப்படையவில்லை. இன்பியல் நாடகத்தின் பகட்டான ஒளியிஞல் பார்வை யாளர் இத் தொட்ர்பு நம்பிக்கை தருவதாக உள்ளதா? என்று கேட்காது நின்றுவிடுவர். 1960க்கும் 68க்குமிடையில் இந் நாடகம் பல முறை புதுக்கி எழுதப்பட்டது. இதன் பின்னர் ஸ்ரொப்பட் எழுதிய நாடகங்களில் ஒரு சாதா ரண மனிதன் அசாதாரண மனிதர்களுக்கு நடுவே சாதாரண சம்பவங்களுக்கிடையில் அகப் பட்டு அவஸ்தைப் படுவதை வெகு நுட்பமாகக் கையாளுகிருர்,
1963ல் "சீன்" பத்திரிகையின் நாடக விமர்சகரானர். ஏழு மாதத்தில் 132 நாடகங் களைப் பார்த்தார். அடுத்த ஆண்டு றேசன் கிருன்ற்ஸ"சம் கில்டென்ஸ்ரேனும் லியர் மன்னனைச் சந்திக்கிருர்கள். என்ற ஓரங்கக் கவிதை நாட கத்தை எழுதினர். ஷேக்ஸ்பியரின் "ஹாம்லெற்”
பிறமொழி நாடகங்களே எதிர்த்த கிணற்றுத்தவளேக் குரல்கள் தேய்ந்து செல்கின்றன்; திறந்த யன்னலூ டாக வீசும் "புதிய காற்று" ஆரோக்கியத்திற்கு அவசிய மாயுள்ள தன்மை பரவரலாக உணரப்பட்டு வருகின் றது. தொடர்ந்த மேடையேற்றங்கள் சில இதை மேலும் வலுப்படுத்தி வரும் சூழலில், மேற்கின் முக் இய நாடகாசிரியர் ஒருவரைப்ப்ற்றிய அறிமுகம், இங்கு வெளியிடப்படுகின்றது.
- இணையாசிரியர்
47s

Page 8
நாடகத்தில் வரும் சிறு பாத்திரங்களிரண்டை வைத்துக்கொண்டு இந் நாடகத்தைப் புனை, தார். த்ஹாம்லெற் இளவரசனுடன் வந்த இ விரு பிரபுக்களும் இங்கிலாந்தில் யாரைச் ச தித்திருப்பார்கள்? என்ன செய்திருப்பார்கள் என்ற வினவுக்கு விடைகாண முயன்றிருக்கிருர் டோவர் துறைமுகத்தை வந்தடைந்த இரு பி புக்களும் அரசனைப் பற்றி விசாரித்துப் பார் கின்றனர். மூ வர் சிம்மாசனத்துக்கு உரிை கொண்டாடுவதாக அறிகின்றனர். லியர் மன னன் பைத்தியமாக அலைந்து வருகிறன். ஷேக்ஸ் பியர் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்கு ஏற். நாடக வசனங்களை எழுதுதல் இயலாது என கண்ட நம் ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் நாட
வசனங்களை அப்படியே லியரும் பேசவைக்கிருர்
"லண்டன் ரைம்ஸ்’ பத்திரிகை விமர்சகர் இ நாடகம் வெறும் "பண்டிதச் சொற்குவியல் என்று குறை சொன்னர். ஸ்ரொப்பட் அதனை புதுக்கி எழுதினர். லியர் மன்னனை விலக்கி விட்( க்  ைத நிகழ்ச்சியைச் சற்று முன்னே தள்ள டென்மார்க்கில் நிகழ்ந்தவற்றைக் கூடியவ!ை யில் விரித்து எழுதினர். ஷேக்ஸ்பியரின் செய யுள் நடைக்குப் பதிலாக, இறுக்கமான வசன நடையில் இரு அங்கங்களுடன் கூடிய நாட! மெர்ன்றைப் படைத்தார். ஒக்ஸ்போட் பல் லைக்கழக மாணவர் அதனை நடித்தபோது 'ஒட்
சேவர்' பத்திரிகை நல்ல விமர்சனம் எழுதியது
தேசிய அரங்கு என்னும் மாபெரும் நிறுவன
அதனை ஏற்று விரைவில் மதிப் பு மிக்கதன் அரங்கத்தில் மேடையேற்றியது. இந் நாடக: தில் ஆசிரியரின் தனித் தன்மையையும், பி ரது தத்துவங்களின் சிறப்பான அம்சங்களை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் ஆற்றலையும் காண்கின்ருேம். மனிதனது இன்றையநிலை ப றிய ஆசிரியரின் அங்கலாய்ப்பை இதில் அவத னிக்கலாம். பெக்கற் என்ற நாடகாசிரியரில் அங்கலாய்ப்பை இது ஒத்தது; ஆனலும் அவ்ே ளவு தீவிரமில்லாதது. பெக்கற்றின் கொடே வுக்காகக் காத்திருத்தல், ரி. எஸ். எலியற்றின் புறூஃபுருெக்கின் காதற் பாட்டு என்பவற்றி 6 சாயல் இந்நாடகத்தில் பிரதிபலிக்கின்றது. ஏ, கனவே எழுந்த இலக்கியங்களிலும் கலாசார போக்குகளிலும் இருந்து தளம் அமைத்து கொள்கிருர் நம் ஆசிரியர். 1955க்கு முன் பில் னக ஆங்கில நாடக அரங்கில் பிறெஃக்ற், பெ
474

கற் ஆகியோரின் தாக்கம் காணப்பட்டது உயர் குலத்தில் உதித்த, நன்கு கற்ற உயர்ந்த பாத் திரங்களுக்குப் பதிலாகப் போர்வீரரும் சிறு அர சவை அதிகாரிகளும் முக்கிய இடம் பெறலாயி னர். கீழ் மட்டத்திலிருந்தோர் திடீரென அரங் கத்தின் நடுவுக்கு வந்தனர். அவையோர் சாதா ரண போர்வீரர் படும் உடல் வருத்தத்தையும்.
உணரும் மனவருத்தத்தையும் கவனித்து இரங் கத் தொடங்கினர். குலத்தாலும் குணத்தாலும் குன்றுபோலுயர்ந்த உயர் தனிப் பாத்திரங்களை விடுத்து வெகு சாதாரண பாத்திரங்களை மெச் சும் காலம் வந்தது. "ஹாம்லெற்’ நா ட கம் டென்மார்க் இளவரசன் (ஹாம்லெற்) இல்லா மல் நடைபெற்றது. இத்தகைய அரங்கச் சூழ் நிலையில் ஸ்ரொப்பட் தமது ருெசன் கிருன்ற் ஸாம் கில்டென்ஸ் ரேணும் இறந்து விட்டார்கள் என்ற நாட்கத்தை மேடையேற்றினர். அதில்
ஹாம்லெற் இளவரசன் ஒரு சிறு பாத்திரமே. ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் வரும் மற்றப் பாத் திரங்கள் எவற்றையேனும் சந்திக்கு முன் இவ்வி ருவரும் (ஹாம் லெற் அரசசபையில் நாடகம் நடத்த அழைத்து வந்த) நாடகக் குழுவைச் சந்
திக்கின்றனர். ஹாம்லெற் இளவரசன் தன்
காதலி ஒஃபீலியாவைப் பின் தொடர் ந் து மேடைக்குக் குறுக்கே ஒடுகிறன். பேச்சு எது வும் நிகழ வி ல் லை. ஷேக்ஸ்பியரின் கதைப் போக்கு சிறிது தூரம் பின்பற்றப்படுகிறது. நடி கர்கள் சபையோர் இருப்பதை அறியாது இருப் பது போல நடிக்க வேண்டும் என்ற எழுதாத விதியை மாற்றினர் பெக்கற். ஸ்ரொப்பட் மேலும் ஒருபடி சென்றுவிட்டார். இது அரங் கத்தின் நிலைபற்றிய நேரடித் தொடர்புடைய நாடகமாகையினல் அவருக்கு இந்த வாய்ப்புக் கிடைக்கிறது. மேடையில் செயல் அனைத்தும் நின்றுவிடும் ஒரு கணம் வருகிறது. இந்த இடை வெளிக்குப் பின் "ழுேசன் கிருன்ற்ஸ்" பார்வை யாளர்களை விளித்துப் பேசுகிருன். முப்பது பக் கத் தி ல் வரும் உரையாடலில் ஸ்ரொப்பட் பெரும் சிக்கார்ந்த வடிவம் ஒன்றைப் புனைந்
துள்ளார்.
இந் நாடகம் எடின்பரோ நகரில் மேடை யேற்றப் பட்ட அதே கிழமையில் அவருடைய நாவலான மால் குவிஸ்ற் பிரபுவும் மிஸ்ரர் மூனும் வெளியாயிற்று. அதில் கருத்துக்களுக்கும் இலட்

Page 9
சியங்களுக்கும் கூடிய முக்கியத்துவம் கொடுத்து பொருள்களுக்கும், செயல்களுக்கும் முதன்ம்ை வழங்காது விட்டார். இங்கிலாந்துப் பிரதமரா பிருந்த சேர்ச்சிலின் மரண ஊர்வலம் கதைப் போக்கில் வருகிறது. ஆனல் அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை. "உணர்ச்சி மிக்க ஒரு மக்களினத்தின் தலையில் கட்டிய, பெருஞ் செல வில் நிகழ்ந்த, -வலிந்து பெறப்பட்ட - மரண அனுதாபம்தான் பழைய யுகம் ஒன்றின் இறு திப் பிரகாசம். பெருமை எது என்பது குறித்து அதன் அளவுகோல்கள் இனிச் செல்ல மாட்டா. அவர் காலத்தில் வரலாறு என்பது ஒரு பெரிய மனிதன் நெறியாள்கையில் நடைபெறும் நாட் கம் என்று கருதப்பட்டது. அன்னரது மரணச் சடங்கு வீரம் குறித்து ஒரு யுக சிந்தனையின் முடிவைக் குறிக்கலாம்'. ரி. எஸ். எலியற்றின் “புறுரஃருெக்’ கிலிருந்தும் சில வசனங்கள் இதில் வருகின்றன. ஜேம்ஸ் ஜோய்ஸ், ஒஸ்கார் வைல்ட் ஆகியோரின் கருத்துக்களும் நிழலாடு கின்றன.
பி. பி. சி அதிசயத் தொழில்கள் என்ற தலைப் பில்'முப்பதுநிமிட நாடகம் எழுதுமாறு கேட்ட போது ஸ்ரொப்பட் எழுதிய நாடகம் 'நீ மகிழ்ச் சியடைவாயெனில் நான் வெளிப்படையாகப் பேசு வேன்' என்பது. தலைமைத் தபால் நிலையத்தில் பேண்ணுெருத்தி நோம் சொல்லிக் கொண்டிருக் தம் வழக்கத்தைக் கேலி செய்வது போல, நாக சிக மனிதன் நேரம் என்ற கட்டுப்பாட்டுக்குள் அடிமைப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுகிறது அதில்வரும் "கிளாடிஸ்' என்ற பெண் "ஸீரியஸ்" ஆகச் சிந்திக்கிறவள். காட்சி பற்றித் தத்துவம் 3LJs:6)a?6ir.
உச்சியிலிருந்து கீழ் நோக்கும் போது தலே சுற்றுகிறது; அத்தகைய ஆழமும், அவ்வளவு தூரமும் தூரத்தே தோன்றும் அத்தகைய சிறுமை யின் தேய்வும்மறைவும், ஓடிச் செல்கின்றன; வாழ்வைச் சூனியத்திற்கு ஒடுக்குகின்றன. நாம் வாழும் அளவுகோல்கள் சிதறுகின் றன. மனிதனது நிலை பற்றிய அங்கலாய்ப்புடன், *றாஸ்ய நாடக இழையொன்றும் பின்னணியில் ஒடிக் கொண்டிருக்கிறது. "அயனெஸ்கோ’ வின் ஆரம்பகால நாடகங்களில் கதாநாயகன் மத்

திய வகுப்பாரின் ஒழுங்கு முறைகளுக்கு உட் படுவதால் மனித இயல்பு மங்கிப் போவதை எதிர்த்துப் புரட்சி செய்கிருன். ஸ்ரொப்பட் டின் இந்த நாடகத்திலும் பஸ் டிரைவரும் மனைவியும் தபால் நிலைய மேலதிகாரிகளால் சமூ கத்தின்மீது திணிக்கப்படும் நேரகுசிக்கு விலகி ஒரு கணமேனும் சந்திக்க முயல்கின்றனர். அவனைப்போலவே நேரம் அறிவிக்கும் கிளாடிஸ் கூட மணிக்கூட்டுக்கு அடிமையாயிருக்கும் நாக ரிக வாழ்வுக்குக் கட்டுப்படுவதை எதிர்க்கிருள்.
ஒரு புறம்பான அமைதி என்ற தொலைக் காட்சி நாடகத்தில் சாதாரண சமூக, வர்த் தக நடைமுறை வாழ்க்கையிலிருந்து தப்பி விட முயலும் ஒருவனது தோல்வி சித்தரிக்கப்படுகி றது. பிறெளன் என்பவன் நோயில்லாமலே ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேருகிருன். **கெளரவமான சமுதாயத்தில் படுக்கையில் இருந்து தேனீர் அருந்துவது தவருண காரியம்; எழும்பாமல் இருந்தால் அதிகாரிகளே வந்து விடக் கூடும். ஒருவனுக்கு அப்படி இருக்கும் துணிவு இருந்தாலும், அவனுக்கு மூளைக்கோ ளாறு இல்லை என்று வைத்திய அத்தாட்சிப் பத்திரம் வாங்கும் அவசியம் ஏற்படும்’ ஆசை கள் எதுவுமின்றி அமைதியாயிருப்பது இன்றைய போட்டிச் சமுதாயத்தில் பெரும் குறைபாடு என்று கருதப்படுவதைக் கேலி செய்கிருர் ஆசி ரியர். பெக்கற்றின் தொடக்ககால கதைகளில் ஆசை எதுவுமில்லாது தனிமையில் செயலின்றி இருக்க விரும்பும் - "சும்மா இருப்பதுவே சுகம்’ என்று நம்பும் - பாத்திரங்கள் வருகின்றன; ஒரு பாத்திரத்திற்கு இத்தாலிய மகாகவி தாந் தேயின் "சும்மா விருந்து ஆத்மா அறிவியல் உயர்வதை விரும்பும் ஒரு பாத்திரத்தின் பெய ரையே சூடியிருக்கிருர்,
ஸ்ரொப்பட் எழுதிய பிற நாடகங்கள் புவி என்ற மற்றெரு மதி; அல்பேட்டின் பாலம்; உண் மையான பரிசோதக வேட்டை நாய்; பற்கள்; மாடி றிற்றுக்குப் பின்; அவர்கள் இப்போது எங்கே? டோக் எங்கள் வளர்புப் பிராணி; கலைஞன் மாடிப் படியிறங்குகிறன்; அழுக்கு ஆடை முதலியன. 1976 ல் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெற் நாடகத்தை 15 நிமிடத்தில் காட்டக் கூடியதாகச் சுருக்கி சூறா ,
475

Page 10
அவரது புகழ் உலகெங்கும் பரவியது எனி னும் சில விமர்சகர்கள் தமது கடினமான பார் வையை அவர்மீது செலுத்தத் தவறவில்லை. "ஜோண் றஸல் ரெய்லர்’ கூறுகிருர்; "பிரித் தானிய அரங்கத் துறையில் மிக இளைய தலை முறையினருள் மிகப் பிரபல்யம் அடைந்தவர் ஸ்ரொப்பட். அவருடைய "ருெஸன் கிரான்றஸ்’ தான் தேசிய அரங்கத்தின் நாடக ரசிகர்களுக்கு நவீன நாடக மரபுகளை அறிமுகம் செய்தது. அவருடைய திறமையை யாரும் மறுக்க முடி யாது. எளிய, இனிய, ஹாஸ்யம்ான உரையா டல்; நிகழக் கூடிய சந்தர்ப்பம் இல்லை என்று குறிப்பிடத் தக்கவாறு இருவர் (ருெசன் கிரான் றஸ"ம் கில்டன் ஸ்ரேணும்) காசு சுண்டும் போதெல்லாம் தலைதான் விழுகிறது என்பதைக் கவனிக்கும்போதே நாம் அபத்த நாடகம் என்ற தெளிவற்ற பிரதேசத்தில் நிற்கிருேம் என்பதை உணர்கிருேம். இங்கு சுற்றிச் சுழற்றிப் பேசு வதும் வரண்ட தத்துவவாதங்களும் ஒன்று கலக்கின்றன; அல்லது ஒன்றுமாறி ஒன்று வரு கின்றன; ஆனல் காத்திருந்தது ஒருபோதும் வருவதில்லை. கதாபாத்திரங்கள் செயலாற்றும் நிலைக்கு அண்மையிலிருப்பினும் செயல் புரிவ தில்லை, நம் சிறிய மேடையைச் சுற்றிப், பயங் கரமான, அறியப்படாத, சம்பவங்கள் நிறைந்த உலகம் இருக்கிறது. அபத்த நாடகங்களுட் பெரும்பாலானவைபோல இந்த நாடகமும் குறைந்து செல்லும் விளைவு விதிக்கு ஆட்பட் டிருக்கிறது. மிகக் குறையச் சொல்வதற்கு மிகக் கூடிய சக்தி செலவிடப்பட்டிருக்கிறது. இறுதி யாகப் பெரிய மலையைக் கல்லி கதாபாத்திரங் களையும் வாழ்வையும் பற்றிய கணிப்பு என்ற மிகச் சிறிய எலியைப் பிடித்ததாகி விட்டது. ஸ்ரொப்பட்டின் பிற நாடகங்களும் அவரை ஒரு திறமை மிக்க, ஆன ல் இரத்தமில்லாத (நோஞ்சான்) நாடகாசிரியர் என்பதை நிரூ பிக்கின்றன.”*
\
ஆனல் இது ஒரு பழமை பேணும், பல் கலைக்கழக விமர்சகரின் கருத்து என்பதைக் கவ னத்திலிருத்த வேண்டும். . Ο
ஒரு தேசியச் சிறிபான்மையின் உரிமைகளுக்கு உத்த வாதமளிப்பது முழுச் சம அந்தஸ்து என்ற கோட் போட்டுடன் பிரிக்கமுடியாதபடி பிணைந்துகிடக்கிறது.
- லெனின்
476
 
 

புத்தரின் படுகொலை
சுந்தரன்
நேற்று என்கனவில் புத்தர் பெரும்ான் சுடப்பட்டிறந்தார் சிவில்உடை அணிந்த அரச காவலர் அவரைக் கொன்றனர் யாழ் நூலகத்தின் படிக்கட் டருகே அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இரவின் இருளில் அமைச்சர்கள் வந்தனர் "எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை பின் ஏன் கொன்றீர்' என்று சினந்தனர்.
'இல்லை ஐயா, தவறுகள் எதுவும் நிகழவே இல்லை இவரைச் சுடாமல்
ஓர் ஈயினைக்கூடச் சுடமுடியாது போயிற்று எம்மால் ஆகையினுல்தான் .' என்றனர் அவர்கள்.
“ “rifegf உடனே மறையுங்கள் பிணத்தை" என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவிலுடை யாளர் பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர் தொண்ணுளருயிரம் புத்தகங்களினல் புத்தரின் மேனியைமூடி மறைத்தனர் சிகாலோக வாத குத்திரத்தினைக் கொழுத்தி எரித்தனர், புத்தரின் சடலம் அஸ்தியானது தம்ம பதமும்தான் சாம்பரானது.
சிகாலோகவாத சூத்திரம், தம்மபதம் ஆகியன பெளத்தமத அற நூல்கள்.

Page 11
அகங்களும் முகங்களும் -
சு. வில்வரெத்தினம்
வெடிகள் சிதறும் ஒலிகள் வேடிக்கை தெருவெல்லாம். என்ன வெளியே? எட்டிப் பார்த்தேன்.
தேர்தல் வெற்றித் திருவிழா
நம்மவர்
மேளங் கொட்டுருர்
ஊர்வலம். குதிக்கிருர் விழுகிருர் கோஷம்போடுவார்! நடுவே கோடி யுடுத்த மாப்பிள்ளையாக மாலை மரியாதைகளுடன் எம்.பிக்கள் சகிதம் மா. அ. சபைத் தலைவர் வருகிருர், தொண்டர்களின் தோளிலேறி.
சீச்சி வெட்கம்! வேற்ருர் இட்ட நெருப்பின் வெக்கை தணிந்து இன்னும் சாம்பல் அள்ளவில்லை தூர்ந்துபோன தேசத்தை தூக்கிநிறுத்த தோள்கொடுப்பாரில்லை அதற்குள் தேர்தல் வெற்றி ஊர்வலம்வருகிருர்.
58 ல் தொடங்கி அடுத்தடுத்து அடிவிழுந்த பின்னலும் என்னசெய்தார் இவர்கள்? அடித்தாரைச் சொல்லி அழுதழுது வாக்குப் பெற்ருர், கூட்டுச்சேர்ந்தும் கொள்கைமுழக்கி வெற்றிகள் குவித்தார்
தேர்தல் எனும் வ்ேசி விடுதலைக் குழந்தை ஈவாள் எனச்சொல்லி பாராளுமன்றத்தில் ‘கூடல் செய்தார்

*மா. அ. சபை மடங்கட்ட முண்டு கொடுப்போம்" என்ருர் மும்முரமாக தேர்தல் ஏற்பாடுகள் நடந்துகொண்டி
ருக்கையிலேயே எழுந்தது நெருப்பு. 77 ன் எரிதழற் காயங்கள் ஆறமுன்னம் மீண்டும் எரிநெருப்பில் தமிழீழம்.
காக்கி உடைகளும் காடையரும் - கூட்டுச் சேர்ந்து கொள்ளி வைத்தார் எரிமலைப் பிரதேசம் போல் எல்லாமே நாசம்
தற்காத்துக் கொள்ளத் தகுதியிலாத் தமிழர் ஒப்பாரி வைக்கிருர்! விடுதலைக் குழந்தை பெறத்தெரியா மலட்டுத் தலைவரெல்லாம் இன்னும் பாராளுமன்ற ஒட்டுண்ணிகளாய் பதவிகளை உதருமல்
பகிஷ்கரிப்பு ஊடல் செய்வார்.
பதவிகளை உதறி எறிந்திருந்தால் உலகின் மனட்சாட்சியை உலுப்பியிருக்
காதா? எமைச்சுற்றி நாமிட்ட வேலிகள் நகர்ந்து விடுதலைக்கு ஒருவழி திறந்திருக்காதா?
ஆணுல்
"எதை உதறினலும் பதவிகளை உதருே”
மென
தோளில்இட்ட துண்டுகளை எடுத்துதறிய
6մng) இதோவருகிருர் தலைவர்கள் ஊர்வலமாய் சவக்காட்டில் வெற்றிச் சங்கூதி.
அதிலென்ன! m இன்றைய இடிபாடுகளை நாளைய தேர்தலுக்கு படிக் கற்களாக்கும் பயன் தெரிந்தவர்தானே? *பயணம்" தொடரட்டும்
477

Page 12
1 + 1 = 1
1 - 1 = 2
வ. அ. இராசரத்தினம்
பழக்கப்படாத புதிய இடம். மார்கழி மாதத்து வாடைக் குளிர். நுளம்புக்கடி. எல் மாகச் சேர்ந்து எனக்கு விழிப்பு வந்துவிட்டது.
ஆனலும் எழுந்திருந்து படிக்கவோ எழு தவோ முடியாத சூழ்நிலை, எனக்குப் பக்கத்து மேசைகளில் என் உதவியாளர்கள் துயில்கின் றனர். எதிர்த்த மேசையிலே பொலிஸ்காரர் து யின் று கொண்டிருக்கிருர். அகாலத்தில் எழுந்து விளக்கை ஏற்றி அவர்கள் துயிலைக் கலைக்க நான் விரும் ப வில்லை. விழித்துக் கொண்டே படுத்தபடியிருக்கையில் என் மனம் எங்கெங்கோ வெல்லாம் ஒடுகின்றது.
இப்படியான விடியற்காலை அறிதுயில் வேளை களில் என் மனம் எழுதாக் கிளவியாய் எத்த னையோ கதைகளைச் சிருட்டித்திருக்கிறது. கவி தைகளை இசைத்திருக்கிறது. அவைகள் எல் லாமே உருவம் பெற்றிருப்பின், ஈழத்துப் பிர சுர களங்கள் அத்தனையுமே என் சிருட்டிகளைத் தாங்கி க் கொள்வதற்குப் போதுமானதாக இருக்கும் என்று நான் நம்பவில்லை
இன்று இந்த அறிதுயில் நிலையில் என் மனம் கதை எழுதிக் கொண்டிருக்கிறது. கதாபாத்தி ரங்களையும் கதைக் கருவையும் தேடி எங்கும் அலையவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட வில்லை. கடந்த மூன்று நாட்களாகப் புதிய இடத் தில் நான் பெற்ற அனுபவங்களே கதையாக என்னுள் விரிகின்றன.
ஆமாம். க. பொ. த பரீட்சை நிலையத் தின் இணைப்பதிகாரியாக மூன்று நாட்களின் முன்னர் வந்தேன். எனக்கு உதவியாக இரண்டு ஆசிரியர்கள். எம் மூவரையும், நாம் காவல்
478

பண் ணு ம் வினுப்பத்திரங்களையும் - ஏன் விடைப்பத்திரங்களையும் பாதுகாப்பாக ஒரு பொலிஸ்காரர். எங்கள் நால்வரைச் சுற்றி யும் - அப்படியல்ல; நானெழிந்த மற்ற மூவ ரையும் சுற்றிச் சுருள்விரியும் அந்தக்கதை . .
இந்த இளைப்பதிகாரி உத்தியோகமே சோம் பேறித்தமான வேலை. காலையிற் பரீட்சை தொடங்க முன்னர், சுமார் எட்டு மணியளவில் பரீட்சை மேற்பார்வையாளரிடம் அன்றைக் கான வினப்பத்திரங்களைக் கொடுக்க வேண்டும். சாயந்திரம் பரீட்சை முடிவடைந்ததும் மேற் பார்வையாளர்களிடமிருந்து விடைப்பத்திரங் களை வாங்கிக்கொண்டு பற்றுச்சீட்டுக் கொடுக்க வேண்டும். பின்னர், குறிப்பிடப்படாத நேரத் தில் வரும் மேலதிகாரி ஒருவரிடம் விடைப்பத் திரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மொத்த மாக அரைமணித்தியால வேலைகூட இரு க் காது ஒரு நாளில், மற்றைய பொழுதையெல் லாம் தடுப்புக் காவற் கைதிபோலச் சோம்பே றித்தனமாகக் கழிக்க வேண்டும். அந்தச்சோம் பேறித்தனம் இன்றைக்கு அதிகாலையிலேயே தொடங்கிவிட்டது!
நான் பாதுகாப்பாகக் கொண்டு வந்திருந்த புத்தகங்களை எடுத்து வாசிக்கவும் முடியாத நிலை. மற்றவர்களின் துயிலைக் கலைத்து விளக்கை ஏற்ற என் மனம் ஒருப்படவில்லை. ஆகவே தான் படுத்த படுக்கையிற் கிடக்கிறேன். ஆணுல் மனத்திற்குத்தான் சும்மா இருக்கின்ற திறமில் 2, Gul
வாசகர்களுக்கு என் கதாபாத்திரங்கள் மூவரையும் பற்றி இவ்விடத்திற் சொல்லத்தான் வேண்டும்.

Page 13
எனது உதவியாளர்களான ஆசிரியர்கள் இருவரும் 1956க்குப் பிந்திய பண்டாரநாயகா யுகத்தில் தங்கள் கல்வியை ஆரம்பித்து, எமது கிராமத்துப் பாடசாலைகளில் க. பொ. த சித்தி யடைந்து ஆசிரிய நியமனம் பெற்று - அவர் கள் ஆசிரிய நியமனம் பெற்றதே சுவாரஸ்ய மான கதையாக அமையலாம் - எழுபதுகளுக் குப் பின்னல் ஆசிரிய பயிற்சியை முடித்துக் கொண்டவர்கள். இந்தக் காலகட்டங்களைச் சரித்திர ஆசிரியன் போலக் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. அந்த இருவருக்கும் ஆங்கி லமோ, சிங்களமோ தெரியாது. ஆமாம். ஐம் பத்தாரும் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் வந்தபின்னர் அவர்கள் படித்த பாடசாலைகளி லிருந்த சிங்கள ஆசிரியர்கள் போய்விட்டார் கள். ஆசிரியராக இல்லாமல், கிளாக்கராக ஆகி யிருந்தால் அவ்விருவரும் உத்தியோகத்தைக் காப்பாற்றிக் கொள்ளச் சிங்களத்தை படித்தி ருக்கலாம். v,
ஆமாம். ஐம்பத்தாரும் ஆண்டுச் சம்பவங் கள் ஆங்கிலந்தெரிந்த சிங்களவரையும் தமிழரை யும் தத்தமது தாய்மொழியிலேயே எழுதவும் பேசவும் ஊக்கமளித்தன. அதுவரைகாலமும் சகோதரர்களது மொழியான சிங்களத்தைத் தாமாகவே விரும்பிக்கற்ற தமிழரிடையே அம் மொழியின்மேலே வெறுப்பையும் துவேஷத்தை யும் வளர்த்தன.
சிங்கள மக்களிடைய்ே இது எம் நாடு; சிங் களமே இந்நாட்டின் மொழி என்ற பெருமி தமான, எண்ணம் துளிர்விட்டது. தம் சகோ தரர்களது மொழியான தமிழைக் கற்பதைப் பற்றி அவர்கள் எண்ணிக் கூடப் பார்க்கவில்லை. இந்தக் கால கட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் மற்றைய கதாபாத்திரமான பொலிஸ் காரர். இருபதைத்தாண்டிய இளைஞரான அவ ருக்குத் தமிழோ ஆங்கிலமோ கொஞ்சமும் தெரியாது!
ஐம்பத்தாரும் ஆண்டில் ஏற்பட்ட விரி லின் அகண்டமான பிளவை இன்று நான் சந் திக்கிறேன். y ,
ஐம்பத்தாறுக்கு முன்னர் நான் மலை நாட் டில் ஆசிரியராக இருக்க நேர்ந்ததால் எனக்குச் சிங்களம் சுமாராகப் பேசவரும். எனது ஆங்கில

அறிவுக்கு இவ்விடத்தில் எவ்வேலையும் இருக்க வில்லை. தெரிந்த சிங்களத்தை வைத்து க் கொண்டு எனது உதவியாளர்களான ஆசிரியர் களுக்கும் பொலிஸ்காரருக்குமிடையில் தர்ஜ" மா'த் தொழில் பண்ணும் ரசமான பொழுது போக்கு என் தலையில் விடிந்திருக்கிறது.
- خم . . . bDIل 5لق) வேறு எந்த வேலையும் இல்லாததினுல் என் உதவி யாளர்கள் சமையல் செய்யவென்று தீர்மனித் தனர். முதல் நாள்வரை கடையிலிருந்து வந்த எடுப்புச் சாப்பாட்டிற்குப் பிரியா வி  ைட சொல்லியாகி விட்டது! ஆசிரியர்கள் இருவரும் சமையல் வேலையில் மிக உற்சாகமாக ஈடுபட் L-İrfİ567
பொலிஸ்காரருக்கு அந்தக் கவலையில்லை. பக்கத்திலிருக்கும் பொலிஸ் நிலையத்திலிருந்து அவருக்குச் சாப்பாடு வந்துவிடுகின்றது!
தெருவாற் செல்லும் மீன்காரனை மட்டும் வரவழைப்பது உங்கள் பொறுப்பு என்று எனக் குச் சொல்லி விட்டு மற்றய அலுவல்களை ஆசி ரியர்கள் பார்த்துக் கொண்டிருக்கிருர்கள்.
நான் வெளியே நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு கையிற் கம்பராமாயணத் துடன் தெருவையும் கவனித்துக் கொண்டிருந் தேன். சைக்கிள்காரன் 'மீன்' என்று கத்திய போது நான் அவனை வரவழைத்தேன்.
கடற்கரையோரத்திலிருந்து சற்று உள்ளே விலகி இருக்கும் கிராமம்ாகையினுல் மீன் சற்று விலையாகத்தானிருக்கும் என்று தெளிந்து கொண்ட நான், மீன்காரனுடன் பேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவன் “நெருப்பு" விலை சொல்லிக் கொண்டிருக்கிருன்.
அறைக்குளிருந்த பொலிஸ்காரர் வருகிறர். மீன்காரன் என்ன நினைத்தானே தெரியாது ஆறு ரூபாய்க்கு ஒருசதம் குறைந்தாலும் இல்லை என்று அடம் பி டி த் தவ ன் ஐந்து ரூபாய்க்கே மீனைத்தந்து விட்டான்!
மீன்காரனின் வருமானத்தில் ஒரு ரூபா யைத் தட்டிப் பறித்த உணர்வு என் மனதில் மிஞ்சியது. ஆயினும் மீனை வாங்கிக் கொண்
டேன்.
479

Page 14
பொலிஸ்காரர் மீன்காரனேடு பேசி க் கொண்டிருந்தார் -
சக ஆசிரியர்களில் ஒருவர் சொன்னர்: "பொலிஸ்காரணுலதான் இரு த் த ல் ஐந்து ரூபாய்குக் கொடுத்தான்”*
**இந்தச் சிங்கள பொலிஸ்காரங்க நம்ம மக்களை இப்படித்தான் கொள்ளையடிக்கிருங்க" என்ருர் அடுத்தவர்.
“கொள்ளையடிக்கிறதில தமிழன் சிங்கள வன் என்ற வித்தியாசமில்ல, ஏன் நாம கூட அவன் கேட்டபடி ஆறுரூபாயக் கொடுக்கத் தயா ரில்ல.**
ஆனலும் இந்தப் பொலிஸ்காரங்க சுத்த மோசம், அதிலயும் சிங்களவன்கள் நம்ம மச் கள விரட்டிப்பிடுங்கிருங்க"
ஒமோம், காக்கிச் சட்டைக்கும் மொறட் டுச் சிங்களத்துக்கும் பயந்து நம்ம சனங்களும் காசைக் கொடுக்குதுகள்”*
பொலிஸ்காரர் ஆசிரியர் இரு வரை u! L மாறி மாறி பார்த்தார். தன்னைப்பற்றி, ஏதே குறைவாக அவ்விருவரும் கதைப்பதாக அவ மனதிற் பட் டி ருக்க வேண்டும், என்னிடம் கேட்டார்.
“என்ன சொல்ருங்க"
"உங்களைக் கண்டுதான் ஐஞ்சுரூபாவுக்கு ஒரு இருத்தல் மீன் தந்ததாகச் சொல்கிரு கள்." என் மொழி பெயர்ப்பிற் திருப்தியடை தவர் போலத் தோன்றியவர் தன் பாட்டி சொல்லிக்கொண்டார் 'தராட்டா நான் விட டிருக்க மாட்டன். பிறகு அவன் வியாபாரே செய்யமுடியாது' v.
அவர் பேச்சிலே ஒரு அகம்பாவம் தொனி தது. புதிய தலைமுறையினரான சிங்களவரிடம் அதிலும் ஆயுதப் படையினரிடம் இந்த அக பாவம் இருப்பது அனுபவத்திற் கண்டதுதான்
இதன் காரணந்தான் என்ன? என் மன எங்கோ தாவுகிறது.
சுதந்திரோதய காலம். மலை நாட்டின் தெ. கிலே தேயிலைத் தோட்டங்களில் சந்தையா
480

:
இருந்த பட்டினத்திலே ஆசிரியர்! என் மனம் நிறையத் தீவிர இடதுசாரித் தத்துவங்கள்!
சிங்கள மக்களைப் பெரும்பான்மையின ராக்க கொண்ட அந் நகரின் வைத்தியசாலை, | தபாற்கந்தோர், பகிரங்கவேலைப்பகுதி, சுகா தாரத்திணைக்களம், புகையிரதநிலையம், ஆங்கி லப் பாடசாலை என்ற அத்தனை காரியாலயங்களி லும் தமிழ் உத்தியோகத்தகர்கள். ஏன் கடைத் தெருவிலும் தோட்டங்களிலும் கூடத் தமிழ் மக்களின் ஆதிக்கம்தான்! இந்த நிலையில் இங் குள்ள சிங்கள மகன் ஒருவன் ஏன் இந்த உத் தியோகங்களுக்கெல்லாம் எம்மவர் வரக்கூடாது என்று நினைப்பானயின், அவ ன் எண்ணம் வகுப்புவாதமானதல்ல என்றுதான் என் இடது சாரி மனம் சொல்லிக் கொண்டது எப்போதா வது ஒரு காலத்தில் அந்த நிலைமை வரத்தான் போகிறது என்றும் நான் நம்பினேன். ஆனல் அந்த மாற்றம் வந்த முறை. es;
**நாங்கள் பார்க்க வ்ேண்டிய உத்தியோகங் களை எல்லாம் சுப்பையாவும் கந்தையாவும் பிடித் துக்கொண்டார்கள். தொழில் வாய்ப்புக்களை யெல்லாம் "அந்நியரான தமிழர்கள் அபகரித் கொண்டார்கள்’ என்று தேர்தல் மேடைகளில் இடதுசாரிகளின் தந்தை என்று வர்ணிக்கப் பட்டவர்களே முழங்கினர்கள். அந்த முழக்கம் என் காதிலே இப்போதும் தெளிவாகக் கேட் கிறது!
சிங்களம் மட்டும் என்ற சட்டத்திற்கு மூல காரணமே உத்தியோக வேட்கைதான?
சிங்களம் கற்ற எல்லாருக்கும் உத்தியோகம் இல்லை என்ற நிலை நாளாவட்டத்தில் ஏற்படுகை யில் இந்தத் துவேஷம் மறைந்து விடும் என்று தான் அப்போது நான் நம்பினேன்
ஆன ல் நீரினடியிலே வலோத்காரமாக அமுக்கி வைக்கப்பட்டிருந்த கிடைச்சி கையூை எடுத்ததும் திமிறிக்கொண்டு உத்வேகத்தோ ெ வெளிவந்ததைப் போல ஒன்றரை நூற்ருண்ெ காலமாக அடங்கிக்கிடந்த மக்கள் சிங்கள. மட்டும் கற்றுக்கொண்டு - நாட்டின் மற்றைட தேசிய மொழியை அறிந்து கொள்ள விரும் பாமல் - உத்தியோகத்திற்கு வந்த சிங்கள மக் கள், ஒரு வித அகம்பாவத்துடன்தான் கிளம்பி

Page 15
யிருக்கிருர்கள் தேசியம் என்ற வார்த்தைக்ே அவர்கள் சிங்களத் தேசியம் என்றுதான் அர்த் தப் படுத்துகிருர்கள். தாம் ஆளும் இனம் என்ற உணர்வு எப்படியோ அவர்கள் மனதிற் பதிந்து விட்டது.
நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தினரிடையே ஊடுமொழியாக இருந்த ஆங்கில அறிவும் குன்றி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாத சூழ் நிலையில் இப்பிளவு மேலும் விரிவடைந்து கொண்டே சிங்களத்தின் புதிய தலைமுறையி னர் மற்றையவர்களைக் சந்தேகக்கண்கொண்டே பார்க்கிருர்கள். மற்றைய சமூகத்தை அடக்கி ஒடுக்குவது தம் புனிதமான கடமையென்றும் அப்படியாக அடக்கி வைத்திராவிட்டால் அவr கள் எப்போதாவது ஒரு நாள் மீண்டும் தப் மீது குதிரை விடுவார்கள் என்று அவர்கள் எண்ணுகிருர்களா?
என் மனம் 1958லும், 1977இலும் நடை பெற்ற வகுப்புக் கலவரங்களை எண்ணிப்பார்த் தது.
முன்னைய கலவரத்தில் ஆயுதப்படைகள் குண்டர்களை அடக்கின. காரியாலயங்களில் சிங் கள உத்தியோகத்தர்கள் தமிழ் உத்தியோகத் தர்களுக்குப் பாதுகாப்பு அளித்தார்கள்.
பிந்தியதிற் கலகத்தை நடத்தியவர்களே பொலிஸ்காரர்கள் தானே துவேஷம் நடுத்தர வகுப்பாரிடமும் பரவிக் காரியாலயங்களிலேயே எத் தமிழனுக்கும் பாதுகாப்பு இல்லை!
மாரியம்மன் கோயில் ஒலிபெருக்கி அலறித் திருவெம்பாவைக் காலம் தொடங்கி விட்டதை அறிவுறுத்துகிறது!
பக்கத்து டெஸ்குகளில் படுத்திருந்த ஆசி ரியர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக எழுந்து கைவிளக்கை ஏற்றிவைத்து மார்கழி நீராடப் பங்கயப் பூம்புனலே நோக்கிச் செல் கிருர்கள்.
கைவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது!
விழித்துக் கொண்ட பொலிஸ்காரர் என்னி டம் கேட்கிருர் “ஏன் ஒலிபெருக்கி சப்திக்கிறது?
நான் அவருக்கு திருவெம்பாவைப் பூசை பற்றி விளக்குகிறேன்.

பொறுமையற்றவராக என் விளக்கித்தைக்
கேட்டவர், வெளியே சென்று சலம் விட்டு
வந்த பின்னர், கதவைத் தாழ்ப்பாளிட்டுக் கைவிளக்கைப் படீர் என்று கையாலணைத்து விட்டுக் கட்டிலிற் சரிகிருர்.
"குளிக்கச் சென்றவர்கள் இங்கு வந்துதான்
கோயிலுக்குச் செல்வார்கள் என்று அவருக்கு
விளக்கிய நான் எழுந்து சென்று கதவை வெறு மனே சாத்திவிட்டு வருகிறேன். மீண்டும் படுக் கையிற் சரிவதைத்தவிர வேறு வழியில் ஃ. விளக்கையும் ஏற்றவில்லை.
மீண்டும் என் நினைவுக் கொடிகள் எங் கெங்கோ படர்கின்றன.
சனத்தொகைக் கேற்பச் சிங்கள மக்களுக்கு அரசாங்க உத்தியோகங்கள் வழங்கப்படல் வேண்டுந்தான். ஆனல் அதற்காக மற்றையச் சமூகங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டி யவைகளை மறுப்பதுதான் தார்மீகமா? பதவி உயர்வுகள், புதிய நியமனங்கள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் எடுத்துக்காட்டும் புள்ளிவிபரங்களை நினைத்துக் கொள்கிறேன். பொலிஸ், இராணுவம் போன்ற ஆயுதப்படையணிகளில் சிறுபான்மையினரான தமிழருக்கு இடமேகிடையாதா? ஏன்? நான் பிறந்து வளர்ந்த திருக்கோணமலைக்கு ஆ சாங்க அதிபராக ஒரு தமிழரோ, அல்லது ஒரு முஸ்லீமோ வரமுடியுமா? அரசாங்க அதிபர் ஏன்? எந்தத் திணைக்களத்தை எடுத்துப் பார்த் தாலும் இதுதானே கதை அரசு முன்னெச்சரிக் கையாக எமது மாவட்டத்தை ஒரு அல்ஸ்ரர், ஆக்கிக் கொண்டு வருகிறதா? சிங்கள சமூகம் ஆளப்பிறந்தது என்பது தான் பொருளா?
வெளியே காலடியோசை கேட்கிறது. நான் தலைமாட்டிலிருந்த ரோச் வைற்றை எடுத்து கத வுப்பக்கமாக ஒளியைப் பாய்ச்சினேன். நீராடி விட்டு வந்த இருவரும் உள்ளே வந்து மீண்டும் விளக்கை ஏற்றிக் கோயிலுக்குப் புறப் பட ஆயத்தமாஞர்கள்.
"யார் மாஸ்ரர் விளக்கை அணைத்தது?
நான்தானி மற்றவருக்குத் தொந்தரவாக இருக்கக்கூடாதல்லவா?
48

Page 16
எதிரே படுத்திருந்த பொலி ஸ்காரர் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குப்புறப் படுத் துக் கொண்டார். கடிகாரம் மணி நான்கு என்று சொல்லிக் கொண்டிருந்தது.
உடையணிந்து கொண்ட ஆசிரியர்கள் இரு வரும் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்ருர்கள். எனக்கும் கோயிலுக்குப் போக ஆசைதான்! ஆணுல் நான் இணைப்பதிகாரி. வினுப்பத்திரங் களைக் காவல் காக்கும் தலையாய பொறுப்பு என்னுடையது! எனவே மூக்குக் கண்ணுடியை எடுத்துப் போட்டுக் கொண்டு கம்பனைப் புரட்டி னேன். வாடைக்காற்று சில்லென்று ஊதிக் கொண்டிருந்தது.
பொலிஸ்காரரும் சோம்பல் முறித்துக் கொண்டு எழுந்தார். வெருகலுக்குச் செல்லும் முதல் பஸ்ஸின் உறுமல் - தேனீர்கடை அலு மீனியக் கரண்டி பித்தளைக் குவளையைத் தட் டும் ஒசை - திருப்பள்ளியெழுச்சி பாடலின் சுநாதம் என்ற மண்ணுலகத்து நல்லோசைகள் காதை வந்தடைக்கின்றன.
"மாஸ்ரர் நான் வெளியே போய் வருகி றேன்"
*சரி போய் வாருங்கள்" "துவக்கு இருக்கிறது மாஸ்ரர் பார்த்துக் கொள்ளுங்கள்? 8
"சரி பார்த்துக் கொள்கிறேன்" "எனக்குப் பயமாக இருக்கிறது" *ஏன், பயம்* '.
துவக்கை விட்டுவிட்டுப் போவதற்கு" *அப்படியானல் கையோடு அதையும் எடுத் துக் கொண்டு போங்கள்
"உங்களிடம் எனக்குப் ப்யம் இல்லை’ *அப்படியானல்" *மற்றவர்களிடம்
‘எவருமே அதைத் தொடமாட்டார்கள்
"இல்லை. அவர்கள் எந்நேரீமும் என்னட் பற்றித்தான் ஏதோ கதைக்கிருர்கள்"
482

"அப்படியில்லை. மொழி விளங்காததினுல் நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள். நான் பல மாகச் சிரித்தபடியே மேலும் சொன்னேன். *பொது மக்களோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டிய தாங்கள் தமிழையும் சற்றுத் தெரிந் திருக்கவேண்டும்".
"நாங்கள் ஏன் தமிழ் படிக்கவேண்டும். நீங்கள் சிங்களம் படியுங்கள்’.
"சிங்களப் பொதுமக்கள் தமிழையும், தமி ழர்கள் சிங்களத்தையும் படிக்கத் தேவையில் லைத்தான். ஆனல் அவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய அரசாங்க உத்தியோகத் தர்கள் இருமொழிவையும் தெரிந்துகொள்வதே நல்லது. A.
‘இல்லை. நாங்கள் பெரும்பான்மையினர். உத்தியோகத்திற்கு வரும் தமிழர்கள்தான் சிங் களம் படிக்க வேண்டும். சரி மாஸ்ரர் நான் வருகிறேன். தேநீர் குடிக்கவேண்டும்" என்று விட்டு அவர் நடக்கிருர்.
என்மனம் மீண்டும் அலை பாய்கிறது. சிங் கள ம க ன் ஒருவனின் உண்மையான மன நிலையே இது தானு?
பேராசிரியர் ஜெயதேவா ஹெட்டியா ராய்ச்சி அவர்களின் ஆய்வு என் மனத்துறை யில் நெளிகிறது. சாதாரண சிங்கள மகன் மட்டுமல்ல நாட்டின் உயர்கல்விப் பீடமான சர்வகலாசாலைச் சிங்கள மாணவர்களில் மிக மிகக்குறைந்த விகிதத்தினரே தமிழ் மாணவர் களைப்பற்றி நல்லெண்ணம் கொண்டிருக்கின்ற னர். இத்தோழமையுணர்வு சிங்கள மாணவர் களை விடத் தமிழ் மாணவர்களிடம் அதிகமாக வுள்ளது". *
நம் மிடம் தோழமையுணர்வை வைத்துக் கொள்ள விரும்புரத ஒரு சமூகத்திடம் நாம் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
பந்தியிலிருந்து எழும்பு என்பவர்களிடம் நாம் ஏன் கல்லை பொத்தல் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்?
பிரிந்து போ வது ஒன்றேதான் நாம் கெளரவமாக இருப்பதற்கு ஒரே வழியா?

Page 17
1956ல் சிங்களம் மட்டும் நாடாளுமன்ற தில் விவாதிக்கப் பட்டபோது கலாநிதி கொ வின் ஆர் டி சில்வா பேசியது என் ஞாபக ga i g a(59p5). Parity: Mr. speaker, \ beleive is the road to freedom of our nati and the unity of its components. Otherwi two torn little bleeding states may yet ar. of one little state; which has compelled by arge section of itself to treason.
ஆமாம் ஒரு மொழி: இரண்டு நாடு; என் அன்று அவர் சொல்லியது நிறைவேறத்தா போகிறதா?
கோயிலிலிருந்து திருவெம்பாவைப் பாட கேட்கிறது.
‘எங்கெங்கை நின்னன்பர் அல்லார் தோ சேரற்க" என்ற அடிகளுக்கு என்னுள்ளே புதி அர்த்தம் தொனிக்கிறது. ஞாயிறு உதயமாகி கொண்டு வரும் அடிவானத்திற் செம்மை பட வதை என் கண்கள் ஜன்னலூடே வெறிக்கி
OGðIT
“தேசிய இயக்கங்கள் விஷயத்தில் ஒடுக்கும் தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கம் பின்பற்ற வேண்டிய கொள்கைக்கு மார்க்சும் எங்கெல்சும் ஐரிஷ் பிரச்சினை யில் கடைப்பிடித்த கொள்கை ஒரு இறந்த உதாரண மாகும்; அவ்வுதாரணமானது தனது மாபெரு ப் செயல் முறை முக்கியத்துவத்தினை இம்மியும் இன்று இழந்துவிடவில்லை. ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த நிலப் பிரபுக்கள், பூச்சுவாக்களின் வன் முறையினலும் விசேஷ உரிமைகளினலும் வகுக்கட் பட்ட அரசுகளின் எல்லைகளே மாற்றும் கருத்தானது "கற்பனை ரீதியானது' என்று எல்லா நாடுகளையும் கிறங்களேயும் மொழிகளையும் சேர்ந்த பிலிஸ்டைன் களும் "அடிமைக்குரிய அவசரத்துடன்’ விரைகிரு களே, அதைப் பற்றி எச்சரிக்கையாக அது பணியா றுகிறது.”
- லெனின்

நானே.
81 மே 31 இரவு மனைவிக்கு
(po புஸ்பராஜன்
முனி!
இன்னும் வரவில்லையென
அச்சம் சூழ வாசலைப் பார்த்தபடி
எனக்காகக் காத்திருப்பாய்.
ஆதரவிற்கு உன்னருகில் யாருண்டு. ? வீட்டினுள்ளே.! சின்னஞ் சிறுசுகள் மூலைக் கொன்ருய் விழுந்து படுத்திருக்கும்.
வெறிச் சோடிய வீதியில் நாய்கள் குரைக்க விரைந் தோடிய ஒருவனல் செய்திகள் பரவ இன்னும் கலங்குவாய்.
தொலைவில் உறுமும் ஜீப்பின் ஒலியில் விளக்கை அணைத்து இருளில் நின்றிருப்பாய்.
உயிரைக் கையில் பிடித்தபடி குண்டாந் தடிக்கும்
துப்பாக்கி வெடிக்கும்
தப்பியோடிய மக்களில் ஒருவணுய் என்னை நினைத்திருப்பாய்.
நம்பிக்கையின் கடைசித் துளியும் வடிந்து மாணத் தருகே.
சூழவும் உடைபடும் கடைகளின் ஒலியும் வெறிக் கூச்சலும் வேற்று மொழியும்
சிங்களம் விண்ணுயர்ந்த தீச் சுவாலையும்.
01-06-81
483

Page 18
(p. போ. இலக்கியம் என்
யானை இருந்ததாம்
S. சிவசேகரம்
ஒரு தேறுதல் வார்த்தை. நும்மாணை கேட்டெழுத நாங்கள் இல்லை நம்மெண்ணம் நாந்துணிந்து எழுத வல்லோம் எம்மெழுத்தில் எத்தனையும் பிழைகள்
f LG எடுத்தியம்பும் உண்மையெனில் ஏற்போம் Otis - தம்பிழைகள் மூடுதற்காய்ப் பிறரை ಬ್ಡಿ தரமற்றேர் நூற்றுவரைத் தாங்கும் பூமி நம்பிழைகள் தாங்காதோ? பிழைகள் இன்றேல் நாமெழுதோம் - காவியங்கள், நாமே
h− ஆவோம்
மு. போ. காவிய நாயகர்களே!
மனைவியுடைய கற்பைக் "காக்கும்’ ஒரே *நல்ல நோக்கத்துக்காகத் தன்னுடைய ஒழுக் கத்தைப் பற்றியே அக்கறை காட்டாமல் வேலி பார்க்கும் கணவனுடைய அக்கறை எப்படி இருக்கும்? நுஃமானுடைய கட்டுரை மாதி இருக்குமா?
1. எரிச்சலூட்டும் விஷயங்கள் பல, து திர்ஷ்டவசமாக அவற்றுள் உண்மையும் ஒன்று நான் துருவத்துக்குத் துருவம் பாய்வதாக முத லாவது முறைப்பாடு. "நெஞ்சு பொறுக்குதில் லையே” என்றும் “பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்’ என்றும் அதே பாரத ஜனா களைப் பார்த்துப் பாடிய பாரதியை விடவ நான் செய்திருக்கிறேன்? லு ஷின் கதைகளின் மனித இனத்தின் மீது அவரது கோபம் ஒ( புறம், நம்பிக்கை மறுபுறம் தெரியவில்லையா சமகால யதார்த்த நிலையை எண்ணி ஏற்படு ஆத்திரம், வெறுப்பு வெவ்வேறு வடிவங்களின் வரலாம். விரக்தியாகக் கூட அது சிலர் கண் ணுக்குத் தெரியலாம். இனி என்ன செய் வேண்டும் என்னும் உணர்வின் உந்துதல் ஒ(
484

r
சிலருக்கு வெறியாகத் தெரியலாம். நாளை பற் றிய் நம்பிக்கை, அதை நோக்கி நடைபோடும் ஒரு போராளியின் சிந்தனைகள் சிலருக்குக் கற் பஞவாதமாகவும் தெரியலாம். இவை எல்லாம் எதிர் மறைகளாகவும் தீராத முரண்பாடுகளா கவும் தென்படுவது கவிதை உணர்வற்ற ஒரு நெஞ்சுக்குச் சாத்தியம். ஆனல் நுஃமான்?
இன்றுவரை உள்ள விமர்சனக்கலையின் இழி நிலையை நான் என் மொழியில் சுட்டிக்காட் டுகிறேன். இன்று உள்ள இழிநிலை தீர்வதற்குத் துணிவான விமர்சகர்கள் மிகவும் தேவை என் கிறேன் (நூற்றிலும் ஆயிரத்திலும் லட்சத்தி லும் உள்ள சைபர்களை எண்ணும் நுஃமான் "நூறு பூக்கள் மலரட் டும்” என்று மா ஒ சொன்ன போது "நூறு போதுமா?’ என்று கேட்காமல் விட்டாரே!) விமர்சகர்கள் என்ருல் பத்திரிகையில் எழுதுவோர் மாத்திரம் அல்ல. விமர்சனம் என்ற பெயரில் வியாபாரக் கும்பல் கள் (மு. போ. கும்பல் உட்பட) நடத்தும் விற் பனைக் கூட்டங்களில் துணிந்து நின்று விமர் சிப்பதும் விமர்சனம் தான். வாசகர்கள் எல் லாருமே தேர்ந்த விமசகர்கள் இல்லை. ஆனல் ஒரு ஆழமான விமர்சனக் கண்ணுேட்டத்தைப்
பலர் வளர்த்துக் கொள்ள முடியும். அது இன்று தேவை. ஏனென்ருல் முன்னுரைகளையும் முக
மன்களையும் வைத்துக்கொண்டு மேலும் காலங் கடத்த முடியாது பாருங்கள்! "சரியான சூழ்நி லையில் புரட்சி, கலை இரண்டும் இணையத்தான் வேண்டும்’ என்பது என் அசட்டுத்தனமான நம்பிக்கை வாதம் என்ருல் நான் அசடாகவே இருக்க விரும்புகிறேன். (ஆணுல் அந்த நம் பிக்கையில்லாத புத்திசாலி எப்படிப் புரட்சி வாதியாக முடியும் என்று என் அசட்டு மூளைக்கு எப்படியாம் எட்டும்?)

Page 19
நுஃமான் தன்னைச் சமுத்திரனிடமிருந்து கவனமாக வேறுபடுத்த முயன்றிருக்கிருர், அவ Lanka Guardian இல் சம்பந்தப்பட்ட என் கட் டுரைகளை வாசித்திருக்கமாட்டார் என்று நான் நினைக்கவில்லை. ஒன்றில் அவர் குறிப்பிட்ட நாடகங்கள் பற்றி நான் ஒரு சில வார்த்தை கள் விளக்கமாகச் சொல்லியிருந்தேன். மற்ற சில விஷயங்கள் பற்றியும் கூடுதலாக எழுதி யிருந்தேன். அவை பற்றியும் நுஃமான் கருத துத் தெரிவிக்கலாம். மற்றப்படி, சமுத்திரனுக் கும் நுஃமானுக்கும் உள்ள உண்மையான வேறு பாடு பின்னவருடைய எழுத்து என்னுல் ரசிக கக் கூடியதாக இருக்கிறது என்பது மட்டுமே (நுஃமான், Please, ஒன்று. இரண்டு. எண்ண வேண்டாம். Please .)
2. ஏணிப்படிகள் மோசமான நா ட க | என்ரு சொன்னேன்? தப்பு தப்பு எத்தனை தோப்புக்கரணம் போடவேண்டும் நுஃமான், நூறு? ஆயிரம் லட் சம்? ஏணிப் படிகள் ஒரு நாடகமா? அதையும் போய் நாடகம் என் றேனே! N. M. பெரேரா பற்றி ஒரு கிண்ட லாம் (நிற்க, அவர் மு. போ, வா, பி. போ வா?) பள்ளிக்கூடப் பையன்கள் போடுகிற நாடகம் மாதிரி. அதில் என்ன நாடக அம்சப் இருந்தது என்று உண்மையாகவே தெரியவில்ை அந்தமாதிரி மட்டரகக் கிண்டல் எல்லாம் நாட கம் என்ருல் நுஃமானும் நானும் கூடப் பெரிய நாடகாசிரியர்களாகிவிட ஒரு தடையும் இல்லை (அதற்குப் பிறகு காவியம்எழுத என்ன தடை!
(197 ல் என்று ஞாபகம்) பஞ்சமர் பற்றிட பேராதனையில் ஒரு விமர்சன (விற்பனை?) கூட் டம் நடந்தது. அதில் நான் “அரசியல் கண் ணுேட்டத்தில் விமர்சிக்கும்படி அழைக்கப்பட டேன். அங்கு அக்கதையில் ஒருவிதமான மார்ச் சியக் கண்ணுேட்டமும் இல்லை என்று ஆண ஆணியாகக் கழற்றிக் காட்டினேன். அதற்குட் மேலாக கதையின் சூழ்நிலையினது யதார்த்த மின்மை பற்றிச் சொன்னேன். பாத்திரங்கள் முறைய்ாக உருவாக்கி வளர்க்கப்படவில்ஃ என்ற கருத்தையும் கூடச் சொன்னேன். டான 'யல் மறுக்கவில்லை. ஓமும் தான் இல்லையும் தான் என்ற மாதிரி நழுவி விட்டார். ஆரத்தி எடுத் தவர்களைக் கேளுங்கள். அவர்கள் தான் அதில் புரட்சியைக் கண்டார்கள்.

r
கந்தன் கருணை நாடகத்தில் உள்ள இசை நயமும், தாளம் பிசகாத ஆட்டமும் கண் டிருந்தால் சிவபெருமானே தூக்கிய திருவடி யைக் கீழே இறக்கி விட்டுத் திருக்கரங்களைத் தூக்கியிருப்பார் தன் தலையில் வைக்க! அதோடு சைவமும் சாதியும் ஒழிந்திருக்கும் (அது தான் நாடகம் போட்டவர்களது நோக்கமோ தெரி யாது!) செய்தி எவ்வளவு அழகாயும் தெளி வாயும் இருந்தது என்று வட்டத்துக்கு வெளியே வந்து கேட்டுப்பாருங்கள்,
அபசுரம் பற்றி நான் உண்மையாகவே எழுதவேண்டுமா? தயவு செய்து அழவைக்கா தீர்கள். (எனக்கு மிக மென்மையான மனது. துக்கமான சம்பவங்களை நினைவூட்டாதீர்கள்!)
"தாய் மகளுக்குக் கட்டிய தாலி" என்று ஒரு
படம் வந்தது தெரியுமா? அதற்குக் குமுதத்தில் வந்த விமர்சனம் தெரியுமா? "வெட்கக்கேடு ஒரே /வார்த்தை, அதைவிடச் சிறந்த விமர்ச னத்தை நான் குமுதத்தில் கண்ட நினைவில்லை.
*பொறுத்தது போதும் பற்றி என் அபிப் பிராயம் ஒரு புறம் இருக்க என் நண்பர் சொன்ன வார்த்தைகள் மிக அருமையான விமர்சனமாக இருந்ததால் அவற்றைப் பாவித்து விட்டு என் வழக்கமான அசட்டுத்தனம் கார ணமாக, அவை நண்பரின் வார்த்தைகள் என்று சொல்லி விட்டேன். நான் உங்கள் உய ரிய மு. போ. எ. ச. மரபில் பயிற்றப்பட்டிருந் தால் என் நண்பரை வம்புக்கிழுத்திருக்கமாட் டேன். வார்த்தைகள் இரவல் தான் நுஃமான், ஆனல் இரந்து பெற்றவை அல்ல. அவை அவர் உவந்து சொன்னவை! A
இந்த நாடகங்கள் பற்றிக் கூடுதலாக ஒரு Gav GunTrisë GM3535 Git Lanka Guardian gav GosFtrGðir னேன் என்றேன். என்னுடைய "தீர்ப்புக்கு" என்றும் Appeal உண்டு. உங்கள் அபிப்பிரா யங்களுக்காக நான் உங்களை வசைபாட மாட் டேன். ஆனல் தயவுசெய்து uேardian இல் சமுத்திரனுடைய பதிலே வாசித்து விட்டு என் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளு ங் சள். (அத்தோடு A. கனகரத்ணுவுக்கு அவர் சூட்டிய சொல்லாரங்களை மோந்து பாருங்கள்.) அந்த நாடகத்தின் (பொறுத்தது போதும்) "செய்தி வழங்கப்பட் டி ரு க் கும் முறை - அந்தக்
485

Page 20
*Crudeness" -அது உங்கள் கண்ணுக்குப்படவில் லையா? இல்லையென்ருல் இதற்கு மேல் உங்களு டன் வாதிப்பதைவிட கொமெய்னியின் பாரா ளுமன்றத்தில் Bani Sad க்காக வாதிடலாம்.
3. தாஸிஸியஸின் உத்திகள் பற்றி நான் ஒன்று சொல்கிறேன். "துண்ண துணுகமுவே" சிங்கள நாடகம் பார்த்தீர்களா? அதில் உள்ள குறியீடுகளைக் கவனித்தீர்களா? தாஸிஸியஸின் சொந்தக் குறியீடுகள் ஒன்றிரண்டு. பொறுத் தது போதுமில் அவர் அடிக்கடி பாவித்த ஒன்று உண்மையிலேயே எனக்கு அருவருப்பாக இருந் தது. (ஒருவேளை அதுதான் உங்கள் கண் ணுேட்டத்தில் புரட்சியோ?)
தர்ஸிஸியஸ் (மட்டுமல்ல) இரவல் வாங் கினர் என்கிறேன். நீங்கள் ஒத்துக் கொள்கிறீர் கள். திருட்டு எது? ஒரு கூட்டம் இரவலை மறைத்து நின்றதுதான் திரு ட் டு. அங்கே மறைத்த குற்றத்திலும் அதேநேரம் இரவல் வாங்கிய மற்றவர்களைப் பழித்த குற்றத்திலும் உங்களுக்கு ஏதும் பிழை தெரியவில்லையா? இர வல் வாங்குவது குற்றம் என்று நான் என்றுமே சொல்லவில்லை. மாருக, Guardian கட்டுரையில் பாலேந்திரா நேரடியாக மேற்கிலிருந்து எடுத் தது தான் குற்றம் இவர்கள் சிங்களத்தின் மூலம் எடுத்ததால் பாவங்கள் கழுவுண்டு விட் டன” என்று கிண்டலான கருத்தில் எழுதிய நினைவு (நீங்கள் Guardian கட்டுரை படிக்க வில்லை என்ருல் நான் அதை ஏற்றுக்கொள்கி றேன்) சிங்கள மேடை திருடியதா இல்லையா என்பன போன்ற கேள்விகள் எல்லாமே அன வசியம் என்பதை என்னுடைய இரண்டாவது Guardian கட்டுரை படித்திருந்தால் விளங்கி யிருப்பீர்கள். தாஸிஸியஸை நான் ‘திருடனு’க்க வில்லை ஆனல் இரவலை மூடி மறைத்து உலா வும் திருட்டுக் கூட்டத்தை தாக்கியிருக்கிறேன் தயவு செய்து தாசீஸியஸின் முதுகுக்குப் பின் னல் அவர்களை மூடி மறைக்காதீர்கள். "சுய மான கண்டுபிடிப்பு" போன்ற உங்களது வார்த் தைப் பின்னல்கட்கும் எனக்கும் ஒரு சம்பந்த
மும் இல்லை.
கலை வளர்ச்சியை நான் கொச்சைப்படுத் தியதாக நுஃமான் மனவருத்தப்பட்டிருக்கிருர், தனியே தேசிய பாரம்பரியத்தின் அடிப்படை யிலேயே தேசிய நாடக மரபை அமைக்க முனை
A.
486

வதாகப் பேசும் கூட்டமா அல்லது எங்கிருந் தும் கொண்டுவந்து எங்கள் தேவைகட்கு ஏற்ப அமைப்போம் என்று சொல்லும் நானு இப் படிக் கொச்சை மொழிவது என்று நுஃமா னுக்குப் புரியாதா?
4. பாலேந்திராவின் மிகச் சிறந்த படைப் புகளில் ஒன்றை எடுப்போம். ‘ஒரு பாலை வீட் டில் பிரதான பாத்திரத்தின் கையில் உள்ள கோல் அவரது அதிகாரத்தின் சின்னம். அதி காரத்தை மீற முனையும் போது அது பிரயோ கிக்கப்படுகிறது (தரைமீது கோல் ஓங்கித் தட் டப்படுகிறது). அந்தக் கோல் நாட்க இறுதிக் கட்டம் ஒன்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாத்திரம் அக்கோலை நாடக முற்பகுதியில் sgyér
வுக்கு அதிகம் பாவிக்கிருர், அதன் அளவு மீறிய பிரயோகம் அதன் வலிமையைக் கொஞ்சம் தாழ்த்துகிறது என்பது என் விமர்சனம், இன் னென்று ஒசை, பின்னணியில் ஒலிக்கும் பறை போன்ற கருவி. நாடகத்துக்கு அது குந்தக மான முறையிலேயே பயன்பட்டது. இசை,
இசைக் கருவிகளின் பிரயோகம் இவை பாலேந்
திராவின் பலவீனங்களுள் அடங்குவன. இவை எல்லாம் “சில்லரை" விஷயங்கள் என ஒதுக்கி விடும் அளவுக்கு பாலேந்திரா பற்றி என் அபிப் பிராயம் தாழ்வாக இல்லை, விமர்சனத்தின் நோக்கம் வெறுமே குறைகள் காண்பது என்று யாரும் நினைத்தால் அது அவர் அவர் கருத்து. என்னளவில் நாடக வளர்ச்சிக்கு இவைபோன்ற விமர்சனங்கள் தேவை. பாலேந்திராவின் (5ITLகத் தெரிவு பற்றி முதலில் மூக்கால் அழுதவர் சமுத்திரன். ஆனல் பாலேந்திரா மீதான தாக் குதலுக்கான காரணம் தெரிந்தவர்கள், அதன் சரித்திரம் அறிந்தவர்கள், உண்மையை விளங் கிக் கொள்வார்கள். ஆடு நனையுதென்று (9Glpg5
ஒநாயைப் பார்த்து அழுகிறவர்கள் எதுக்கோ
காவல் வேறெதுக்கோ தோழர்கள் போன்ற வர்களா என்ற நினைவு என் மனதில் எழாமல்
இல்லை.
பாலேந்திராவை ஒரு மார்க்சியவாதி, அல் லது புரட்சிவாதி என்ற அடிப்படையில் நான் அணுகவில்லை. அவரது நாடகத்தெரிவுகள் இன் றைய சூழ்நிலையில் ஏற்படுத்தும் பாதிப்புக் களைப் பற்றி அவராக உணரட்டும். "அந்நியப் படுதலை’ எடுத்துக் கொண்டால் ‘பசி"யை ரசித்தவர்கள் (அது ஒரு அபத்தவாத நாடகம்)

Page 21
ஏனே நல்ல நாடகமான "புதிய உலகம் பழைய இருவரை ரசிக்கவில்லை. சாதனை, வெற்றி பயன், நோக்கம், இவை எல்லாவற்றையும் என்னுல் எளிதாகத் தொடர்பு படுத்திப் பார்க்க முடியவில்லை. பாலேந்திராவின் நாடகங்களி லிருந்து பாலேந்திராவின் நாடகத் திறமையை வெளிக் கொணர்வது அவரது தயாரிப்பு. நாட கத்தேர்வு வேறு யாருடையதோ திறமையை யும் பாலேந்திராவின் அரசியல்/சமூகக் கண் ணுேட்டத்தையும் சர்ர்ந்தது. நான் பாலேந்தி ராவை ‘மாற்ற முனையவில்லை. அது அவர்து கண்ணுேட்டம். அவரது மேடையை விமர்சித் தல் அவருக்கும் பிறருக்கும் பயன் தருவது. அவரது நாடகக் கருத்துக்களை அரசியல் ரீதி பாக விமர்சிக்க வேண்டியபோது விமர்சிட் பேன். ஆனல் பாலேந்திராவை ஒரு மார்க்சிய வாதியாக ஏன் நான் கருதவேண்டும்?
5. வெங்கட் சாமிநாதன் பேரைச் சொன் ஞல் வெருளுவதற்கு நான் யார்? (கொச் க்ொன்று நினைத்தாயோ கொங்கனவா? என்ற வசனம் நினைவுக்குப் வருகிறது). வெங் கட் சாமிநாதன் போலிகள் என்று சொல்லிவிட்ட தால் மட்டுமே நான் அதை மறுக்க வேண்டுமா? நெற்றிக் கண்ணைக் காட்டாவிட்டாலும் கூடக் குற்றம் குற்றம்தான் நண்பரே! என்னுடைய எழுத்திலே உள்ள தோரணையை விட்டுத் தள் ளுங்கள். மு. போ. எ. சங்கமும் தம்மை மு. போ. எ. என்று அழைத்துக்கொண்டுதிரியும் கும் பலையும் பற்று என்ன நினைக்கிறீர்கள்? Marxis என்று தம்மை அழைக்கும் மொஸ்கோ தாசர் களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இந்தட் போலிகள் ஒழிய வேண்டும். சீனுவுக்கும் ரஷ்யா வுக்கும் ஒரே நேரத்தில் லாலி பாடும் கும்பலை என்னல் புரிந்து கொள்ள முடியவில்லை! மற்றப் படி நீங்கள் என்மேல் ஒட்டப் பார்க்குப் Prejudice போல லேபல்களை (எறிய நினைத் சாணம்?) நான் கவனிக்கப்போவது இல்லை (உங்கள் கையைக் கொஞ்சம் பாருங்கள். சில வேளை அங்கேயே ஒட்டியிருக்கும்).
"முற்போக்கு இலக்கியத்தில் நான் தாக்கு பவை உங்களது விமர்சகர்கள் எல்லாம் அம காவியங்கள் என்று தூக்கிப்பிடிக்கும் தொை யைத் தான்! சமுத்திரன் எடுத்துக்காட்டிய எண்ணற்ற இலக்கியங்களைத்தான் (பாரதியை யும் புதுமைப் பித்தனையும் ஏன் வம்புக்கிழுத தீர்களோ தெரியாது.) நீங்கள் சொல்லும்

கழிவுகளை நான் கணிப்பில்கூட எடுக்கவில்லை. நான் தூக்கி எறிவது முற்போக்கு இலக்கி யத்தை அல்ல. முன்பே சொன்னேன்; அங்கே பொதுவாகச் சொன்னல் முற்போக்கும் இல்லை. இலக்கியமும் இல்லை. போலிகளை எறியுங்கள் என்கிறேன். யாரும் லேபல் ஒட்டிக் குப்பை கள் இலக்கியங்கள் ஆகா, குழறுபடிகள் முற் போக்கு ஆகா! நீங்களும் இந்த மு. போ. எ. ச. போன்ற போலிகளின் கும்பலின் ஒருவர் என்ருல், வருந்துகிறேன் நண்பரே!
கணேசலிங்கனின் எழுத்துத் திறமை என் ருல் எதைக் குறிப்பிடுகிறேன் என்று கூட நுஃமானுக்கு யோசிக்க நிதானம் இல்லை. அவ ரது மொழிவளம், எழுத்தின் வேகம் இவை எல்லாம் எழுத்துத்திறமைக்கு அப்பாற்பட்ட வைகளா? அவரது வலிமையான பாத்திரப் படைப்பு ஒருபுறம் அவரது கதைகளில் செயற்
கையான சூழல்கள் மறுபுறம், பிரச்சார வெறி
யால் அவரது கோஷங்கள், இன்னெருபுறம் (கந்தன் கருணையை விட மோசமான அப்பட் டமான தன்மையுடன்) - இவை எல்லாம் அவ ரது படைப்புக்களை விகாரப்படுத்தி விடுகின் றன. என் மூக்கு உள்ளபடியே உள்ளது. நுஃ மான், ஒருதரம் கண்ணுடியில் பாருங்கள்.
6. மார்க்சியத்தைக் காட்டி மற்றவர்கிளை மிரட்டுவதை இனங்காணும் அளவுக்கு நான் மார்க்சியத்தைப் படித்திருக்கிறேன். எனக்கு அது போதும். என் விமர்சனங்களை நான் கோஷங்களின் அடிப்படையில் செய்யத் தயா" ராயில்லை. குறுகியகால அரசியல் கண்ணுேடங் களுக்காக நான் உண்மையைப் புறக்கணிக்கவும் கோஷங்களைக் கொண்டு மூடிமறைக்கவும் தயா ராக இல்லை நுஃமான். கோஷங்கள் தான் மார்க் சியம் என்று நீங்கள் நினைத்தால் அந்தக் கும் பலில் பல மார்க்சிய வாதிகள் இருக்கிருர்கள் என்றும் நீங்கள் நம்பலாம். கடைசியாக
நீங்கள் சொல்லிக் காவியம் எழுதும் அள வுக்கு நீங்கள் சோழனும் அல்ல, நான் கம்ப னும் அல்ல. சும்மா இரண்டு கட்டுரை எழுது கிறேன். இப்போதைக்கு அது போதும்!
(பி. கு. புரட்சிகரமான கலை உணர்வும், ரசனையும் பற்றி நுஃமான் ஏன் ஒரு காவியம், | mean கட்டுரை, எழுதக் கூடாது? இது *மு. போ. முகாமின் மிகவும் காலங்கடந்த தேவை இல்லையா? (- 3 J
487

Page 22
ஹிட்லரும், ரிச்சர்ட் வாக்ன
- வெ. சாவுக்கு சில குறிப்புகள்
நிர்மலா நித்தியானந்தன்
} என்னும் காலாண்டு இதழில் (ஜூலை, அக் டோபர் 1981) "ஹிட்லரும் ரிச்சர்ட் வாக்ன ரும்" என்ற தலைப்பில் வெங்கட் சாமிநாதன் எழுதிய தொடர் கட்டுரையில் ரிச்சர்ட் வாக் னரின் கலைத்துவம் பற்றியும் ஹிட்லருக்கும் வாக்னருக்குமிடையில் இருந்த உறவு எவ்வகை யானது என்பதையும் கூறி, அதிலிருந்து ஒரு மனிதனின் கலை ரசனை பற்றி வெ. சா. சில முடிவுகளுக்கு வந்திருக்கிருர்,
நான் வெ. சா. குறிப்பிட்டிருக்கும் Gasfl'. L'IGT ". GJITšGOTř (Winifred Wagner) என்ற படத்தைப் பார்க்கவில்லை. ஆனல் நான் வாக்னரைப் பற்றி அறிந்திருந்த மட்டிலும் ஹிட்லரை உருவாக்கிய ஜெர்மனியின் கலாசா ரச் சூழ்நிலை பற்றி அறிந்திருந்த மட்டிலும் வெ: சா. சில விவரங்களைப் பிழையாகப் புரிந்து கொண்டிருக்கிருர் என்று எனக்குப்படுகிறது. இதனல் அவர் சில தவருண முடிவுகளுக்கும் வரத்தலைப்பட்டிருக்கிருர் என்றும் நான் கருது கின்றேன். r
முரண்பாடு”, “பொய்மை’ என்ற இரு மன நிலைகளைப் பற்றிப் பேசும் பொழுது வாக் னரின் கலைத்துவ ஆற்றலையும் அவரின் யூத எதிர்ப்பு வாதத்தையும் எப்படி சமரசப்படுத் துகிருர் என்பது அவர் வாதங்களிலிருந்து தெளி வாகவில்லை. ஹிட்லருக்கு இக்கருத்துகளைப் பொருத்திப்பார்த்து தன் முடிவுகளை விரிவாக எழுதுகிருர். ஆனல் வாக்னர் விடயத்தில் அப் படிச் செய்யாமல் நழுவி விடுகிறர். வெ. சா. வின் வாதங்களில் இருந்து வாக்னரில் இவ்விரு துருவ தேர்ற்றப்பாடு எனக் கூறப்படுவது அவர் கூறும் முரண்பாடாக இருக்கவேண்டும் என்று நாம் அனுமானிக்கலாம் என நினைக்கிறேன்.
ஆனல் முரண்பாடு என்பது உண்மையா னது; இயல்பானது; கலைத்துவத்திற்கு இட்டுச் செல்லும்; எல்லாத் தளங்களிலும் வெளிப்படும்;
488 -

நம்
ஒரு தளத்தின் முரண் மற்ருெரு தளத்தின் முரணுக வெளிப்படும் என்கிறர். வெ. சா அதாவது சிந்தனைத் தளத்தில் முரணுகப்பிறந்து தவிப்புக்காட்பட்டு பின் செய்கைத் தளத் திலும் முரணுக வெளிப்படும் என்கிருர்,
ஆனல் அதே சமயத்தில் சாதிவெறி, கல்ைத் துவம் அல்லது இனவெறி கலைத்துவம் போன்ற “முரண் தோற்றப்பாடுகள் எழும் பொழுது மனித நேயத்துக்குப் புறம்பான சாதிவெறி, இனவெறி என்பன ஒரு கலைஞனுக்கு இறந்த பிரச்சினை அவன் அடி மனதில் அவன் மரபின் சுமையாய் அவை வெளிப்படுவன. அவ ன் பிரக்ஞை நிலை அதை அடித்து வீழ்த்திவிடும் என்று சமாளித்து விடுகிருர், அதாவது அவர் கூறும் முரண்பாடு என்னும் தோற்றப்பாட்டின் இரு பக்கங்களும் அவன் மனதில் சம பலம் வாய்ந்த எண்ண ஓட்டங்களாக தொழிற்படு கின்றன என்ற கருத்து முரண்பாடு பற்றிய முதல் விளக்கத்தில் தொனிக்கிறது. இரண்டா வதில் அப்படியல்ல. கலைஞனின் பிரக்ஞை நிலை அவன் மரபின் சுமையை அடித்து வீழ்த்திவிட் டால் அது சிந்தனைத் தளத்திலிருந்து செய்கைத் தளத்திற்கு முரண்பாடாக எப்படி வெளிப்பட முடியும்? அடிப்படையில் முரண்பாடு கலைத்து வத்திற்கு இட்டுச் செல்லும் ஒரு நல்ல தோற் றப்பாடாகவும் பொய்ம்மை அல்லது வேஷதா ரித்தனம் என்பது கலைத்துவத்திற்கு இட்டுச் செல்ல முடியாத ஒரு எதிர்மறையான தோற் றப்பாடு என்றும் கூறி வாக்னரின் யூத எதிர்ப்பு வாதத்திற்கு நியாயங்காண முற்படுகிருர்,
வெ. சாவிற்கு வாக்னரின் யூதனதிர்ப்பு வாதம் ஓரளவு நியாயம் காணக்கூடிய ஆளுல் பிழை பட்ட ரூபம் கொண்ட அரசியல் கொள்கை"ஆக மாத்திரம் தெரிகின்றது. மேலும் வாக்னரின் யூதனதிர்ப்பு வாதம் கலையுருப் பெறும் நிலைக்கு ஆழமற்றது; உண்மையற்றது

Page 23
என்றும் கூறுகின்றர். வாக்னர் விடயத்தில் எப் படி இந்த முடிவுக்கு வந்தார் என்பது கட்டுரை யில் விளக்கப்படவில்லை.டெரிச், வி குக்கின் வாக் னர்பற்றிய என்சைக்கிளோபீடியா வாதங்களைத் தான் வெ. சாவும் எதிரொலிக்கிருர் போலிருக் கிறது. வெ. சா. திட்ட வட்டமாகக் கூருவிட் டாலும் வாக்னர் பற்றி அவருடைய வாதங் களின் அடிப்படையில் இருந்து பின்வரும் முடிவு களுக்கு வரலாம். வாக்னர் ஒர் உன்னத கலை ஞன். ஆகவே அவர் பிரக்ஞை அவர் மரபின் சுமையான யூதனதிர்ப்பு வாதத்தை அடித்து வீழ்த்தி, செய்கைத்தளத்தில் கலைத்துவம் - யூத எதிர்ப்புவாதம் என்ற முரண்பாடாகப் பரிண மிக்கவில்லைப் போலும். அதுதான் வாக்னரின் பூதனதிர்ப்புவாதம் வெ. சா. வின் கூற்றுப்படி வறிட்லரில் போன்று "மனித விரோதக் கொள் கையாக ராஷஸ ஹிம்சாவாத ரூபம் எடுக்க வில்லை". யூத எதிர்ப்புவாதம் என்ருலே மனித விரோதக்கொள்கை தானென்பது வெ. சா. வுக் தப் புரியவில்லையா? வாக்னருக்கு ஹிட்லரைப் பால் அரசியல் பதவி கிட்டவில்லை. கிட்டி பிருந்தால் என்ன செய்திருப்பார்? செய்கைத் தளத்திலும் முரண்பாடு தோன்ருமல் போயி ருக்குமா? நான் வாக்னரைக் கொச்சைப்படுத் துவதற்காகக் கூறவில்லை. ஹிட்லர் என்பவன் தனிநபர்தான். அக்காலத்தில் பல ஹிட்லர்கள் இருந்தனர். ஹிட்லர் இதைப்பற்றி யெல்லாம் சிந்திக்கமுன்னமே "யூதப் பிரச்சினைக்கு எப்ப டித் தீர்வுகாணலாம் எனப்பலர் வழிகாட்டி பிருந்தனர். ஜெர்மன் மக்கள் பலகாலமாக தம் குற்ற உணர்விலிருந்து விடுபடவில்லையென்ருல் அது ஹிட்லர் என்ற தனிமனிதன் செய்த பாவச் செயல்களுக்காக அல்ல. இரண்டு மூன்று சந் ததியினர், அவர்களின் புத்திஜீவிகள், சிந்தனை யாளர்க்ள், கலைஞர்கள் ஏன் அவர்களின் அறி வியல்துறைகள் எல்லாமே இந்த மனித விரோத கொள்கையை ஆதரித்தமையே. இப் பிரச்சி 2ணயை வெ. சா. எப்படிக் கையாளுகிருர்?
ஹிட்லர்ஒரு கொலைபாதகன் . அத்துடன் உண்மையான கலைரசனையும் இல்லாத வன். . 'இசையில் உண்மையான ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவன் அறுபது லட்சம் பெண்களையும் குழந்தைகளையும் விஷப்புகைப் பொந்துகளில் திணித்துக் கொண்றிருக்க முடியாது" இது வெ. சா. வின் தீர்மானம். ஆகவே இதன் மறுதலை

தான் வாக்னரைப் பற்றிய அவர் வாதம். ஓர் உன்னத கலைஞன், இசைமேதை குரூரமான யூத எதிர்ப்புவாதியாக இருந்திருக்கமுடியாது - ஹிட் லரைப் போன்று. அதாவது அவரின் (5 எதிர்ப்புவாதம் அவ்வளவு மோசமானதாக இருந்திருக்கமாட்டாது.இப்படித்தான் வெ.சா. வாக்னரின் யூதனதிர்ப்பு வாதத்திற்கு நியாயங் கற்பித்து தன் வாதத்தை நிலைநாட்டுவதற்காக ஒரு நேர்மையான முடிவிலிருத்து நழுவி விடுகி CPгТ.
2
இனி வெ. சா. வின் வாதங்களின் மேல் நான் வைக்கும் விமர்சனங்களை விளக்க битiобт ரின் பின்னணி, சாதனைகள், முக்கியத்துவம் பற்றிச் சில தகவல்கள் தரலாமென்று நினைக் கிறேன்.
இளைய வயதிலேயே இசைத்துறையில் தன் ஆற்றலை வெளிப்படுத்திய வாக்னர் தனது முப் பதுகளின் பிற்பகுதியில் ஜெர்மனியின் இசை உலகில் அங்கீகாரம் பெருத காரணத்தினுலும் பணக்கஷ்டம் நிமித்தமாகவும் பாரீஸ் நகரம் செல்கின்ருர். பாரீஸ் நகர இசை உலகில் t-65 வது ஜெர்மனியை விடக் கடினமாயிருந்தது. அரசியலில் வாக்னரின் முதற் பிரவேச இங்கு தான் ஆரம்பமாகிறது. பாரீஸ் நகரில் ப4ை கஷ்டத்தில் சிக்கிக்கொண்ட வாக்னர் தனதும் தனது மனைவியினதும் வயிற்றுப்பாட்டுக்காக பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் கட்டுரை கள் எழுதத் தொடங்குகிருர்,
இவ் அரசியல்ஈடுபாடு வாக்னரை, 1848-ல் ஐரோப்பா முழுவதையுமே உலுக்கிய அப்புரட் சிகர நிகழ்வுகளின் முன்னணியில் Li si g5 கொள்ள வைத்தது. இப்புரட்சியின் தோல்வி காரணமாக ஐரோப்பா முழுவதிலும் ஏற்பட்ட அதிருப்தியினதும் விரக்தியினதும் பாதிப்புக்கு ஆளாகியவர்களுள் வாக்னர் முக்கியமானவர். இசைத்துறையிலும் அங்கீகாரம் பெறமுடியாத நிலையில் பவேரியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டு, தீவிர புரட்சிகர அரசியலில் இருந்து விடுபட்டவராய் பிரஷ்க்யா செல்கிருர், இவ்விரத் தியில் அமிழ்ந்திருந்த வாக்னர் பிஸ்மார்க்கின்(Bismarck) பிரஷ்யாவில் ஏற்பட்டுக் கொண்டிருந்த புதிய கைத்தொழில் பொருளாதார மாற்றங்
8&sra
499 -

Page 24
களை வெறுத்தொதுக்கி மேலும் மேலும் தனக் குள்ளேயே ஒடுங்கிப் போகிருர்.
இதே காலகட்டத்தில் ஒரு புதிய சிந்தனை யின் வசப்படுகிருர், நெப்போலியனுல் அடி யுண்ட ஜெர்மனியில் ஒரு புதிய தேசிய உணர்வு தோன்றுகின்றது. நெப்போலியனின் புரட்சிகர மாற்றங்கள், புதிய பொருளாதார மாற்றங் களை நிராகரித்து, ஜெர்மனியின் பழைய வீர்ய முடைய புராண இதிகாசங்களில் ஒரு புதிய ஜெர்மன் ஆளுமையைத் தேட எத்தனிக்கின் றது. பழைய ஜெர்மன் குலக்குழுக்களின் வர லாற்றில், வாழ்க்கை முறைகளில் தமக்குப் பொருத்தமானதொரு முகத்தைத் தேடி ஜெர் மணிக்கு ஒரு புதிய அத்திவாரத்தை, முத்தி ரையை வலியுறுத்தும் தேசியவாதிகளின் ஒரு இயல்பான வாரிசாகவே வாக்னர் காணப்படு கிருர்.
ஃபிஃக்டே (Fichte), ஆர்ன்ட் (Arndt) போன்றேரின் வரிசையில் வாக்னரும் ஜெர்மன் மொழியினதும் கலாசாரத்தினதும் "தெய்வீகத் தன்மையிலும் தூய்மையிலும் நம்பிக்கை வைத் திருந்தார். உலக கலாசார இயக்கத்துக்கு தலுைமை வகிக்கும் தகைமை, ஜெர்மனிக்குத் தானுண்டு என்ற மிதமான தன்னம்பிக்கையு டன் இவர்களிருந்தனர்.
புரட்சிக்குப் பிற்பாடு வாக்னரை முக்கிய மாகப் பாதித்தவர்கள் ஷோபன்ஹாவரும் (Schopenhauer) fil GjujLDrgb(Nietzsche). gail விருவரும் பிஸ்மார்க்கின் பளபளப்பான, புதிய செயற்திறனுடனும் காரியத் திறனுடனும் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் துரித நடைபோட்டுக் கொண்டிருந்த ஜெர்மனியை வெறுத்தொதுக்கினர். புதிய கைத்தொழிலின் சல சலப்புக்கள், தேசிய ரீதியிலான பாரிய பொருளாதாரத் திட்டங்களில் ஆளுமையிழந்து அமிழ்ந்து போய்விட்ட ஜனத்திரள்கள், அச்ச மூட்டுமளவிற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த அரசு, புதிதாக மேலேழுந்து வரும் பூர்சுவாக் களின் கடைந்தெடுத்த உலோகாயுதவாதம் - இவற்றின் பாதிப்பில் மனிதனே மிகச் சில்லறை யான, அற்பணுகப் போய்விட்டதாக, உலகே சீரழிந்ததாக, தரங்கெட்டதாகக் கற்பனை பண் ணிஞர்கள். தம் உலகிலிருந்து இக் கசடுகளை நீக்கவேண்டுமென்றும் நம்பினர்கள்.
490

யூத - கிறிஸ்தவ பாரம்பரியத்தின் "அழுத் தக்காரத்தனமான காரிய கெட்டித்தனத்தைச் சந்தேகிக்க வாக்னர் நீட்சேயிடமிருந்து கற்றுக் கொண்டார். மேலும் இச்சமுதாய அழுக்குகளை "வீர மும் "தூய்மையும் நிரம்பிய அந்த வட புலத்து மீமானிடனின் பலத்தால் அகற்றவேண் டும் என்ற நீட்சேயின் சித்தாந்தத்தை வாக்னர் தனதாக்கிக் கொண்டார். இச்சித்தாந்தம் "உண்மை" "செளந்தர்யம்? "வீரம் இவற்றின் அடிப்படையில் எழுகிறது. ஆனல் இவர் இங்கு ஒரு விடயத்தில் நீட்சேயிடமிருந்து வேறுபடு கிருர், ஃபிஃக்டே, ஆர்ன்ட் பாரம்பரியத்தின் படி ஜெர்மனியரே உலகை மேம்படுத்தப் பிறந் தவர்கள். ஆகவே வாக்னர் நீட்சே கூறிய அந்த மீமானிடன் ஜெர்மனியரிலிருந்தே உ தி ப் பான், ஜெர்மனியர் தம்மைப் புத்தாக்கம் செய் வதுமட்டுமல்லாமல் உலகையும் கலாசாரச் சீர ழிவிலிருந்து பாதுகாப்பார்கள் என்று திட்டவட் டமாக நம்பினர். உலகைச் சீரழிவிலிருந்து பாது காக்க வேண்டுமெனில் அது கலை, கலாசாரத் தினுரடாகவே நடைபெறலாம் எனவும், அ) ருக்கே உரித்தான தன்முனைப்புடன் தானே இவ் வுலக கலாசார இயக்கத்தின் மையம் எனவும் நம்பினர். வாக்னருக்கு தன்மேலிருந்த நம் பிக்கை நல்ல இசைரசிகனன நீட்சேயினல் மேலும் வலியுறுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில் நீட்சே, வாக்னரே தன் கனவுகளின் தெய்வீக வெளிப்பாடு என்று கூட எண்ணினர்.
இதற்குப் பின் வாக்னர் தன்னுடன் நன்கு கூடிப்பழகிய ஒருவரான கோபினே (Gobineau என்ற இனவாதியினல் பாதிக்கப்பட்டிருந்தார் கோபினேவின் இனவாதக் கருத்துக்கள் Lorrair சிலும் பார்க்க ஜெர்மனியிலேயே கூடிய பிர பல்யமடைந்தன. வாக்னரும் இக்கருத்துக்களை ஜெர்மனியில் பரப்ப உதவினர். குறைப்பிரச வம் அடைந்துவிட்ட 1848 புரட்சியின் பின் வாக்னர் 1850-ல் "இசைத்துறையில் யூதர்' என்ற கட்டுரையை வெளியிட்டார். இக்கால கட்டத்தில் வெளிவந்த யூதனதிர்ப்புக் கட்டுரை களில் இது ஒரு முன்னேடியாகும். ட்ரைட்ஷ்கே (Treitschke) என்கிற பிரபல தேசியவாதி, வர லாற்ருசிரியன் எழுதிய யூதரே எங்கள் துர திர்ஷ்டம்” என்பது 1879-ல் தான் வெளிவந்தது" தற்காலத்தைய நடைமுறையை வாக்னர் * மறுதலித்தமையும் ஜெர்மனிய புராண இதி

Page 25
காசங்களில் தஞ்சம் புகுந்து ஆறுதல் தேடி கொண்டமையும்-ஜெர்மனியின் புதிய உரத் லோகாயுதவாதத்தினதும் அதன் வழிவ் ந்
தீமைகளுக்கும் காரணம்" யூதரே என்ற நம்பி கையிலிருந்து எழுந்தது. யூத-கிறிஸ்தவ பார பரியத்தின் விழுமியங்கள், அவற்றின் பயன் பாட்டு வாதத்துக்கு எதிரான ஒரு சித்தா தம் அவருக்கும் அவனிரப் போன்ற மற்றவர் கும் தேவைப்பட்ட்து. இத்தேவையை மி நேர்த்தியாக வியத்தகுவகையில் பூர்த்தி செ தது, அக்காலத்தைய ஜெர்மன் பெருந்தேசி வாதம். வங்கிகளிலும் பங்குமாற்றுச்சந்,ை களிலும் பெரும்பங்கு வகித்த அருவருக்கத்திக் குள்ளமான, பணத்தாசை பிடித்த யூதர் தா? ஒரு காலத்தில் மேன்மை பொருந்திய, கல பற்ற தூய ஜெர்மானியர்களின் தேச த்ை நாசம் செய்யும் புற்றுநோய் என நம்பினர் "யூதர்" என்ற ரோகத்தினல் பீடிக்கப்பட்டு உயிரிழந்து மிகச் சாதாரண நிலையை அடைந்து விட்ட ஜெர்மன் இனத்துக்கு மீண்டும் உயி கொடு க் க வேண்டுமெனில், ஜெர்மனியில் பழைய புராண காலத்து விழு மி யங் கள் வாழ்க்கைமுறைகளுக்குத் திரும்பவேண்டும் எ6 பதே தீர்வு எனவும் நம்பப்பட்டது.
இந்த யூதவிஷம் சமுக பொருளாதார வ! டங்களை மாத்திரமல்ல, ஜெர்மன் கலையையு தச்சுப்படுத்திவிட்டது என்றே வாக்னர் நம் னர். யூதக்கலைஞர்களின் பாதிப்பை அறே இல்லாமல் செய்யவேண்டுமென்று முதல் கூ பது வாக்னர் தான் -ஹிட்லர் இல்லை. இவற்ை யெல்லாம் நான் விரிவாகக் கூறுவதன் காரணப் எப்படி இந்த யூதனதிர்ப்பு வாதம் வாக்னரில் வாழ்க்கை நோக்கு, தத்துவம், தம்மைச் சூ விருந்த உலகம் பற்றிய விளக்கம், அவரின் கலை கோட்பாடு, அவர் வாழ்ந்த சமுதாயம் எல்ல வற்றையும் ஆட்கொண்டிருந்தது ள் ன் ப  ை விளக்கவே. வாக்னரின் யூதனதிர்ப்பு வாத, திற்கு ஒரு சிறு உதாரணம் தரவிரும்பி அவ( டைய "இசைத்துறையில் யூதயிஸம் (Judais in Music) என்ற கட்டுரையிலிருந்து பின்வரும் பகுதியைத் தருகிறேன்.
"யூதப் பேராதிக்கவாதத்தின் நுகத்தடிய லிருந்து விடுபடுவது எமது முக் கி பு

Գ
தேவைகளிலொன்ருனல், இவ்விடுதலைப் போருக்கான சக்திகளைத் திரட்டவேண் டும். நாம் போராடப்போகும் விடயத் தின் ஒரு வெறும் கருத்து ரீதியான வரை விலக்கணத்தை முன்வைப்பதனல் மாத் திரம், நாம் இச்சக்திகளைத் திரட்டிவிட முடியாது. ஆனல் ஒரு யூதனின் விசேட குணம்சத்துக்கு எதிராக, இயல்பாகவே எம்மையறியாமலே எங்களுள் எ மும் அந்த உணர்விருக்கின்றதே, அவ்வுணர் வுடன் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் சரி யான ஒரு பரிச்சயம், அனுபவத்தினுல் தான் நாம் இதைச் சாதிக்க முடியும். இவ்வுணர்வினுாடாக - அதாவது தடங் கலின்றி இவ்வுணர்வை நாம் வரித்துக் கொண்டால் - அந்த யூத குணம்சத்தின் சாரத்தை ஏன் வெறுக்கிருேம் என்பது எமக்குத் தெளிவாகிவிடும். எ மக்கு த் தெளிவாகப் புரிவதை எதிர்ப்பது சுலப மாகிவிடும். இல்லை - அந்தப் பிசாசை இத்தெளிவின் வெட்டவெளிச்சத்துக்கு கொண்டுவருவதாலேயே அவனை எல் லாத் துறைகளிலிருந்தும்ஓட ஓட விரட் டியடித்துத் தோற்கடிக்க முடியும். இவ் வளவு காலமும் மங்கிய இருளின் பாது காப்பினுள் அவன் ஒழிந்து கொண்டி ருந்ததால் மாத்திரமே அவன் தன் அந் தஸ்தை நிலைநிறுத்தக்கூடியதாயிருந்தது. மனிதாபிமானிகளாகிய நாம் அப்பிசா சின் அவலட்சணமான கோலத்தில் எங் களுக்கிருக்கக்கூடிய அரு வ ருப்பை க் குறைப்பதற்காகவே இவ்விருளின் கவ சத்தை அவன்மேல் நாமே போர்த்தி
விட்டிருந்தோம்.
ஹிட்லரின் யூத எதிர்ப்பு வாதத்தைவிட இது எவ்வகையில் குறைந்தது? கைத்தொழில் யுகத்தின் அத்தியாவசியக் கருத்துக்களான பயன்பாட்டுவாதம், பகுத்தறிவுவாசம் போன்ற வற்றைத்தவிர்த்து இதிகாச கால விழுமியங்களை தேடிச் சென்ற வாக்னர் எப்படி ஒரு விடயத்தை விளக்குகிறர் பாருங்கள். உணர்வு (feeting) இயல்புணர்ச்சி (instinct) போன்ற வற்றிற்கூடாகவே ஒரு பிரச்சினையை அணுகு கிருர்,
49

Page 26
35
*டுத்து வெ. சா. வாக்னரின் யூதனதிர்ப்பு வாதம் அவர் கலைப்படைப்புகளை எட்டிப்பாரா தது என்று கூறுகிறர் வாக்னரின் யூதஎதிர்ப்பு வாதம் அவரின் வாழ்க்கை நோக்குடன் பின் னிப் பிணைந்தது. ஆகவே வாக்னரின் பிரத்தி யேக கலைக்கோட்பாட்டைச் சற்றுப் பார்ப் போம்,
‘வாக்னர் தனக்கு முன்னிருந்த கலைஞரிடத் திருந்தும் தன் காலத்துக் கலைஞரிடமிருந்தும் முக்கியமான ஒரு விடயத்தில் வேறுபடுகிருர், அவர் கருத்துப்படி இசை தன்னளவிலேயே முழுமைபெறக்கூடிய ஒரு கலை என்பதை நிரா கரித்தார். இதனல் முக்கியத்துவம் வாய்ந்த எந்த ஒரு அரூப இசைப்படைப்பையும் படைத் ததாகவும் தெரியவில்லை. தன்னுடன் இ  ைச ரீதியாக ஒத்திருந்தோருடன் கூட இவர் இவ் விடயத்தில் வேறுபடுகிருர், வாக்னரின் கருத் துப்படி இசை தன்னளவிலேயே நிற்கக்கூடிய ஒரு கலைப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதொன் றன்று. கவிதை, இசை, இயக்கம் இந்த மூன் றினதும் நயத்துடன் கூடிய சேர்க்கை, ஒத்தி சைவுதான் ஒரு உன்னத கலைப்படைப்பாகலாம் என நம்பினர். இந்த மூன்றில் எது ஒன்ருவது தனித்து நிற்கமுடியாது. ஒவ்வொன்றும் மற் றதை முழுமையாக்கிமேம்படுத்த உதவவேண்டு மேன்றும் ஒரு கூறின்றி-மற்றது தனித்து இருக்க முடியாதென்றும் வாதாடினர். சிறுவயதிலேயே கவிதை, கவிதை நாடகம் இயற்றும் ஆற்றலைப் பெற்றிருந்த வாக்னர் தன் ஒபராக்களின் (Opera) கவிகளை (Libretto) தானே இயற்றினர். இக்கோட்பாடு முற்று முழுதாகப் புதிதொன் றில்லாவிட்டாலும் வாக்னர்தான் முதன் முத லாகப் பிரக்ஞை பூர்வமாக இதை ஒரு கோட் பாட்டுவடிவத்தில் போட எத்தனித்தவர். அத னல் தான் அவர் ஒபராக்கள் இசை நாடகங் கள் (Musicdrama) என அழைக்கப்படுகின்றன. தன் காலத்தைய இசை உலகி ல் இவ்வாறு நிற்பதன் காரணம் யாது? இவ்வளவு இசை படைக்கும் திறனுடைய ஒரு கலைஞன் தனியே ஒபராக்களை மாத்திரம் இயற்றியதன் காரண யாது? தானே தன் இசை நாடகக் கவிகளை இசையை, கதையை இயற்றி அவற்றின் தய
492

ரிப்பிலும் முழுதாக ஈடுபட்டதன் உந்து சக்தி என்ன?
வாக்னர் தன் இசையை விட தான் என்ன சொல்ல வருகிருர் என்பதே முக்கியம் எனக் கருதினர். ஜெர்மன் மக்களுக்குச் சொல்வதற் குத் தன்னிடம் ஒரு செய்தி இருக்கின்றதெனக் கருதினர். நீட்சே கூட இந்தfதியில் வாக்ன ரின் ஆளுமையையும் கலாசாரத் தலைமைக்கான தகைமையையும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக இசைரீதியில் மிக அழ கியதெனக் கருதப்படும் மிக நீண்ட, பிரபல மான ஒரு இசைநாடகமான "ரிங் ஒஃப் த நீப g) iiii (Ring of the Niebelung) 6T657 Lugog பார்ப்போம். இவ்விசை நாடகம் நான்கு பகுதி களைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் ஒரு முழுநீள இசைநாடகமாகும். Niebelung Saga பழைய*ஜெர்மனிய இதிகாசங்களிலிருந்து எடுக் கப்பட்ட கதையாகும். கதையின் மையமான மந்திர மோதிரத்தை எல்லோரும் உடைமை யாக்கிக் கொள்ள அவாவுடையவராயிருந்த போதிலும், உண்மையில் அம்மோதிரம் ஒரு சாபக்கேடாக இருக்கிறது. ஆல்பெரிக் (Alberich) என்பவன் ஒரு அவலட்சணமான கள்ளக் குள்ளர்களான நீபலுங்கின் தலைவன். றைன் நதிக் கன்னிகளிடமிருந்து இம்மோதிரத்தைக் திருடிக் கொள்கிறன். சீக்ஃப்ரீட் (Siegfried) என்பவன் தேவர்களுக்காக இதை மீட்க முயல் கிருன். சீக்ஃப்ரீட் அழகும், இளமையும் வீர மும் கொண்டவன். தேவர்களின் இரட்சகன். ஒருவகையில் நீட்சேயின் சரதுரஸ்ரா (Zarathus tra) தான். இம்மோதிரத்தை மீட்கும் பணி யில் அவன் சாகசங்களே "த ரிங் ஒபரா. இவ் விசை நாடகம் மேடையேற்றப்பட்ட காலகட் டங்களில் இது அரசியல் குறியீடுகளுடன் கூடிய நாடகம் என்பது பரவலாக ஒத்துக்கொள்ளப் பட்டவிடயம் நீபலுங் குள்ளர்கள் -யூதர் - ஜெர்மனியின் பொருளாதாரமையத்தைக் கைப் பற்றி வைத்திருப்பதையே குறியிட்டுக்காட்டி னர். வாக்னருக்கு நவீன பொருளாதார நடை முறைகளில் இருந்த வெறுப்பின் காரணமாக அதன் குறியீடான தங்கமோதிரத்தை, ஒரு சாபக்கேடாகக் காட்டுகிருர். இம்மோதிரத்தைச் கைப்பற்றிக்கொள்ள எழும் போராட்டங்களும் சாபத்தில்தான் முடிகின்றன. மோதிரத்தை

Page 27
மீட்டாலும் சீக்ஃப்ரீட்டையும் தேவர்களையும், தேவர்களின் இருப்பிடமான வல்ஹாலாவையும் (Valhala) அழிவும் நெருப்பும் அணைக்கின்றன. தேவர்கள் யூதரல்லாத ஜெர்மனியரைக் குறிக் கின்றது. இப்பொருளாதாரப் போட்டியில் ஈடு படாமல் பழைய எளிய இயற்கையுடன் பின் னிப் பிணைந்த வாழ்க்கைக்குத் திரும்புவதற் கான அறிவுரைதான் - நாடகத்தின் முடிவு. நாடகத்தில் சமூக விரோதிகளாகவும், தீம்ை பின் வடிவமாகவும் உள்ள நீபலுங் குள்ளர் தான் யூதர். அழகும், பண்பும், நேர்மையும் கொண்டோர்தான் சீக் ஃப்ரீட் டும் அவன் சகாக்களான தேவரும். அவர்களிடையே ஏற் படும் போர் காவிய வடிவு எடுக்கின்றன. நல் லதுக்கும் கெட்டதுக்குமிடையே ஏ ற் படும் போராட்டம் இது.
இதை மேலும் விளக்கத் தேவையில்லை. தனது அரசியற் கருத்துக்கள் அவனது கலைப் படைப்புக்களைத் திட்டவட்டமாகப் பாதித்த ஒரு கலைஞன் இருந்தானெனில் அந்த வரிசை யில் வாக்னருக்கு நிச்சயமான இடம் உண்டு.
இக்கட்டத்தில் கட்டுரையின் ஆரம்பத்தில் வெ. சாவின் வாதங்கள் பற்றிய குறிப்புகளை மீள நோக்கவேண்டும். எமக்கு இங்கு தெரி கின்றதென்ன? வா க் ன ர் தன் பூதனதிர்ப்பு வாதத்தையும் இசைப்புலமையையும் பக்கம் பக்கமாக பிரக்ஞை பூர்வமாக வளர்த்துச் சென் ரூர் என்பதே. வாக்னருக்கு இதை விளக்க, இதற்கு நியாயங்கற்பிக்கத் தேவையிருக்கவில்லை போலிருக்கிறது வெ. சாவைப் போன்று. வெ. சாவின் கருதுகோள்களைப் பொருத்திப்பார்த் தால் வாக்னரிலும் சிந்தனைத் தளத்தில் ஏற் பட்ட முரண் செய்கைத் தளத்திலும் வெடித் திருக்கின்றது. மரபின் சுமையாய் எழுந்த இன வெறியை உன்னத கலைத்துவம் பொருந்திய வாக்னரின் பிரக்ஞை நிலை அடித்து வீழ்த்த வில்லை. ஹிட்லர்தான் ஆழமான கலைரச 2னயோ, அறிவுவிருத்தியோ இல்லாதவன். அவ னைச் சூழ இருந்தவர்கள் அவனுடைய கால கட்டத்தை நனிடமுறைக்குக் கொண்டுவந்த வர்கள் பலரில் கல்விமான்கள், கலைஞர்கள் இலக்கியகாரர்கள் இருந்திருக்கின்றனர். இரவில் Fg2 g60SFš5(ipi 356fisör (Ehamber music -

UL6)
உனதுஅசைவுகளில் எத்தகு நளினத்தோடும் உணதுவலிமையில் எத்தகு உயிர்த் துடிப்போ நுரையில் துள்ளி நீ *、 (Guħ கடலில் நீந்தியிருப்பாய்!
துரதிர்ஷ்டவசமாய் ஓர் எ ரி மலைவெடிப்பு அல்லதொரு பூமி அதிர்ச்சி உனதுசுதந்திரத்தின் விலையானது, வண்டலில் நீ புதைபட்டாய்.
பத்துலட்சம் வருடங்களின் பிறகு ஒரு புவிச்சரிதவியற் குழுவினர் பாறைப் படையினில் உன்னைக் கண்டனர், பார்ப்பதற்கு இன்னும்நீ உயிருடனேயே.
ஆனல் இப்பொழுது நீ மெளனம், பார்வைகூட இல்லாது. உனது செதிள்களும் துடுப்புகளும் முழுமை ஆனலும்உன்னுல் அசைய முடியாது. (யாக
ஆக முழுமையாய் அசைவற்று, உலகிற்தஎந்த எதிர்ச் செயலுமற்று. வானையோதண்ணீரையோ உன்னல் பார்க்க
t {ւpւգ-Ամո Ց]» அலைகளின்ஒலியை உன்னல் கேட்கமுடியாது. -
இந்தப், படிவினைப் பார்க்கையில் முட்டாள் கூட அதிகம் கற்கலாம்; "இயக்கம் இன்றி
வாழ்க்கை இல்லை".
வாழ்விற்காய்ப் போராடுவதற்கு போராட்டத்தில் முன்னணியில் நிற்பதற்கு; மரணங்கூட தவிர்க்க இயலாததாயினும் சக்திமுழுமையையும் நாங்கள் பயன் படுத்த வேண்டும்.
1978 ۔
சீன மொழியில் அய்கிங்
ஆங்கிலம் வழியாகத் தமிழில்: அ. யேசுராசா
493

Page 28
இவற்றை ரசிப்பதற்கு ஆழமான இசைஞானம்
வேண்டும்) இசையைக் கேட்டு ரசிப்போ மறு நாட்காலை அவுஷ்விட்ஸின் (AuSchwitz) குரூ ரங்களுக்குத் திரும்பினர்கள் என்கிருர் ஸ்டை 6Tii. (Steiner)
தனி ஒரு. மனிதனின் அல்லது கலைஞனின் மனதில் இவ்வாறு ஏற்படும் முரண்பாடுகள், பிரக்ஞை பூர்வமான ஒத்திசைவின்மைகள் அவ னுடைய மனதளவிலேயே, ஒரு தனி நபரின் பிரக்ஞை நிலையளவிலேயே தோன்றி முடிந்து விடு கிற காரியமல்ல. இது தனி ஒருவனின் பிரச்சினையும் அல்ல - அதாவது ஒரு இனவாதி, ஒரு - மனிதாபிமானியா, கலைஞணு என்பது தனி ஒருவனின் பிரச்சினை அல்ல. அவன் வாழும் உலகத்தின் பிரச்சினை, அவன் வாழும் கால கட்டத்தின் பிரச்சினையாகவும் பரிமாண ம் கொள்ள நேர்கிறது.
4
gGಾಗಿ வெ. சாவின் கட்டு  ைரயில் முன் வைக்கப்படும் மற்றுமொரு வாதத்தைப் பார்ப் போம். இது நேரடியாக ஹிட்லரின் குணும்சங் களைக் கையாளுகின்றது.அறுபது லட்சம் யூதர் களைக் கொன்றவன் - தன் இனவெறி ஹிம்சா வாதருபமெடுக்கச் செய்தவன் ஒரு கலைரசனை யுடையவனுக இருந்திருக்கமுடியாது என்கிருர் வெ. சா. அத்துடன் ஒவியத்துறையில் ஹிட்லர் தோல்வியடைந்தது இதை நிரூபிக்கின்றது. ஆகவே ஹிட்லருக்கு வாக்னர் மேலிருந்த பக்தி எதனுல் வந்தது என்று கேட்டு அதற்குப் பதி லையும் தருகிருர் வெ. சா. வாக்னர் மேல் அவ னுக்குப் பக்தி அவருடைய யூத எதிர்ப்பு வாதத் தினுல் ஏற்பட்டிருகக்வேண்டும். அவனுக்கு அவர் இசைமேலிருந்த ஈடுபாடு- குறுகிய மரபு வழிவந்த ஒரு ஈடுபாடென்றும் கூறுகி ருர்இருக்கலாம். ஹிட்லர் விடயத்தில் - அதாவது கலை ர சனை இல்லாதவனுயிருந்திருக்கலாம்
ஆணுல் இனவெறியும் கலைரசனையும் ஒன்ருக
இருக்கமாட்டாதென்று நாங்கள் பொதுப்படை யாகக் கூறலாமா? இல்லையென்றே நான் நினைக் கிறேன். வெ. சா. உதாரணம் கூறிய வாக் னரே இதற்கு நல்ல அத்தாட்சி. அடுத்து, ஹிட்லருக்கிருந்த குறுகிய மரபு வழிவந்த வாக் னரின் இசைநாடகங்களிலான ஈடுபாடு அவ
494

வக்கு "உண்மையான கலைரசனை' இல்லாத பட் த்தில் அது வெறும் பொய்ம்மையே என்கிருர், தே வாதத்தை தமிழ்நாட்டு இசை உலகிற் ம் பொருத்திப்பார்க்கிறர்.
மரபு வழிவந்த ரசனை ஒரு பொய்ம்மை, வஷதாரித்தனம். அடிப்படையில் ஒரு பொது ான கலையுணர்வு இல்லாதவன் எந்த கலைத்  ைற யிலும் "உண்மையான ஒரு ஈடுபாடு காண்டிருக்கமுடியாது என்கிருர் வெ. சா. வறுமனே மரபு காரணமாக, பழக்கப்பட்ட ன் காரணமாக ஒரு கலைப்படைப்பை ரசித் 1ல் ரசனை அல்ல - கலையுணர்வு அல்ல - வெறும் பாய்ம்மை. இத்தகையவனின் ரசிகத் தன் மக்கு, ரசனைக்கு, ஹிட்லரின் ரசனை போன்று |வன் மரபிற்கு அப்பால் எந்த ஒரு அர்த்த pம் இல்லை. இது வே நான் வெ. சாவின் பாதத்திலிருந்து விளங்கிக்கொண்டது. வெ. ா. கூறுவதைப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு ய ர்ந்த "கலாரசிகனின் ஆளுமையிலும் தோ ஒரு தெய்வீகமான - அதன் இயல்பு ணர்ச்சி என்று கூறப்படுவதுடன் ஒன்றிய ஒரு லையுணர்வு, ஒரு ரசனை இருப்பது போலவும் ந்த ஒரு உயர்ந்த கலைப்படைப்பைக் கண்ட |டனும் அவ்வியல்பான கலையுணர்வு. தன்னிச் சயாக ரசிக்கத் தொடங்கிவிடும் போலவும் பாதாடுகிருர்,
ஆனல் ஒருவருக்கு அழகென்று படுவது இன்னுெருவருக்கு அழகென்று படுவதில்லை. ஒரு மூகத்தினருக்கு அழகென்று படுவது இன்னெரு மூகத்தினருக்கு விகாரமாகக் காட்சியளிக்கும். ரு கால கட்டத்தினருக்கு த மக்கு முன்னி ந்த சந்ததியரின் சில விழுமியங்கள் -படு மாசமானதாகக் காட்சியளிக்கும் என்பதை ாம் நடைமுறையில் காண்கிருேம். இப்படி ]டத்துக்கு இடம், கலாசாரத்துக்கு கலாசாரம் ாலத்துக்குக் காலம் கலை விழுமியங்கள், வழக் ாறுகள் மாறுவதன் கார ண ம் யாது? இம் ாறும் கலைவிழுமியங்கள் வழக்காறுகள் அவற் ன்ெ மாறும் சமூகப்பின்னணி, மரபுகள் என்ப ற்றுடன் தொடர்புடையனவாய் அவற்றிலி ந்து ஊற்றெடுப்பனவாய் இருப்பதனலேயே மூகமாற்றங்களுக்கமைய கலைமரபுகள், விழுமி ங்கள் மாறிக்கொண்டு போகின்றன. இவ்வாறு ாறிக்கொண்டிருக்கும் மரபின் பாதிப்பில் தங்

Page 29
கியிராத, இம்மாறுதல்களுக்கெல்லாம் அசைந்து கொடுக்காத, அவற்றை மீறிய, சுதந்திரமான மாறிலியான ஒரு "கலேயுணர்வு" ஒரு தனிமனி தனுக்கு இரு ப் பின் அது இவ்வுலக சமூக யதார்த்தச் சூழலில் இயங்கும் போல் எனக்குட் படவில்லை எங்கேயாவது ஒரு வெற்றிடத்தில் அல்லது இயற்கை கடந்து - மானிட சமுதாய எல்லைக்கப்பாற்பட்ட ஒரு உலகி ல் தான் செயற்படும்.
X 5
ஒரு குறிப்பிட்ட கலை மரபு ரசிகர்களை பாதிப்பதும் அந்த ரசிகர் கூட்டத்தின் ரசனை மரபைப்பாதித்து புதிய மரபுகள் தோன்றுெ தும் நாம் வழமையாகக் காணுவதொன்று. ரசி கனின் ரசனைக்கும் கலை மரபுக்குமிடையில் ஒத் தியைபு காணப்படும் பொழுது அம்மரபில் எழுந்த கலைப்படைப்பு அங்கீகாரம் பெறுகிறது பல வேளைகளில் இவ்வாறு நடைபெறுவதில்ல்ை ஒரு ரசிகனுக்கும் எல்லா உயர்ந்த கலைப்படை புகளுக்குமிடையில் எப்பொழுதும் அர்த் தி முள்ள சந்திப்புகள் நிகழ்வதில்லை. இதற்கு நல்ல உதாரணம் வாக்ன்ரின் இசைதான்.
வாக்னர் தன் சமகாலக்கலைஞர் மத்தியில் மரபுகளை உடைத்தெறியும் ஒரு எதிர்ப்பாளி ராகத்தான் இரு ந்திருக்கிறர். கலை பற்றி அவர் கோட்பாட்டினுல் மாத்திரமல்ல அவர் இயற்றிய இசையே அக்காலகாட்டத்துக்கு சற்றுப் புதுமையானது என்று தான் சொல்ல வேண்டும். வாக்னர் தனது முன்னுேடிகளான கிளாசிக்கல் (Classical) காலகட்டக் கலைஞர் ளின் விசேட அம்சங்களான வடிவசீர்கள், Ke என்ற அடிப்படை விதியின் முழுப்பயன்பாடு போன்றவற்றை விடுத்து இசையினூடாக ஒரு உணர்வு நிலை (mood) - ஒரு உணர்வுச்சூழை (Atmosphere) உருவாக்குவதில் கவனம் செலுத் தினர். இவை ஐரோப்பிய சங்கீ த த் தி 6 ரோமான்டிக் இயக்கத்தின் (Romantic mov ment) முக்கிய பண்புகளாயின. பெர்லியோஸ் (Berlioz), லிஸ்ட் (Liszt) ஆகியோரால் பாதி கப்பட்ட வாக்னர் எண்ணக் கருக்களைக்கூட சில பிரத்தியாகத் தொணிச் சேர்க்கைகளின கண்முன் கொணரலாம் என நம்பினர். இவரது இசை நாடகங்களின் இசைக்கருக்கள் (motif:

இப் படி எண்ணக்கருக்களை, பாத்திரவார்ப்பு களை, சில கதைக்கட்டங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாயமைந்தன. இந்த விளைவை செழு மையும் பலதரப்பட்டதுமான தொணிச் சேர்க் கைகளினலும் ஒர்கஸ்டிரேஷ (Orchestration - இசைக்குழுவின் இசைக்கருவிகளை ஒவ்வொரு இசைப்படைப்புக்கும் பிரத்தியாகமாக ஒத்தி சைக்கும் முறை) னினலும் அடைய முயன்ருர், தொனிகளுக்கு உணர்வு நிலையை (mood or atmosphere) தோற்றுவிக்கும் குணதிசயங்கள் உண்டென்பதை (tone colour) பிரக்ஞை பூர்வ மாகத் தொனிகளை பயன்படுத்தத் தொடங்கி யவர்கள் இந்த ரோமான்டிக் கலைஞர்களான பெர்லியோஸ், லிஸ்ட், வாக்னர் போன்றேர். ஒர்கஸ்டிரேஷன் விடயத்திலும் இவர்கள் பல பரீட்சார்த்த முயற்சிகள் செய்து பார்த்தனர். வாக்னரே இப்பரீட்சார்த்த முயற்சிகளின் உச் சக்கட்டத்தை அடைந்தவர். ரோமான் டி க் இசைக்கு ஒரு விசேஷ அந்தஸ்தையும் வாங்கித் தந்தவர். வடிவக்கட்டுப்பாடுகள், மற்றும் இவ் வளவு காலமும் இருந்துவந்த இசை விதிகளின் பிடியிலிருந்து விலகி இறுக்கமில்லாத ஒரு போக் கில் இசை ஏற்படுத்தும் தொனி விள்ைவுகளை மாத்திரம் எண்ணி இசை இயற்றினர்கள் இந்த ரோமான்டிக் கலைஞர்கள். வாக்னரோ பெர்லி யோஸ், லிஸ்ட் போல் அரூப இசை இயற்று பவராக இல்லாமல் நாடகங்களை இயற்றியமை யால் இப்போக்கு அவரில் இன்றும் மிகுந்து காணப்பட்டது. இது ஏனெனில் தன் இசை உத்திகளை, எண்ணக்கருக்கள், பாத்திரங்கள், நாடக நிகழ்வுகள் போன்றவற்றை விளக் க் வேண்டியதாலேயே வாக்னர் ஒவ்வொரு ஸ்வரந் (note) திலிருந்தும் கடைசித்துளி உணர்ச்சியை யும் கசக்கிப் பிழியும் ஆற்றல் படைத்தவர் என்று பேர் பெற்ருர்.
இவ்வாறு உணர்வு நிலையை ஒரு உணர்வுச் சூழலைத் தோற்றுவித்து அதன் மூலம் பார்வை யாளருக்கு ஒரு விஷயத்தை உணர்த்துதல், அனுபவத்தை ஏற்படுத்துதல் என்பதைப் புரட் சிகர மா ன ஒரு இசை உத்தியின் உதவி கொண்டு அடையமுயன்றர். அவரு  ைடய இசையின் மேன்மை பலதரப்பட்ட காரணிக
ளால் ஏற்பட்டதாயினும். இந்தவொரு இசை
உத்திகிளாசிக்கல் காலகட்டம் வரை மேற்கத்
495

Page 30
ைதய சங்கீதத்தின் அடிப்படையாகவிருந்த கோட்பாட்டை கேள்விக்கிலக்காக்குவதாய மைந்தது. “கீ’ (Key) என்று கூறப்பட்ட அடிப் படையை உணர்வு பூர்வமாக கேள்விக்கிலக் காக்கியவர் வாக்னர் என்று கூறலாம். க்ரோ மாடிஸிஸம் (Chromaticism) 6T6áráp half tone intervals ஐ உடைய ஸ்வரச் சேர்க்கைகளின் உத்திமுறையை உபயோகித்து ஒரு இ ைசப் படைப்பில் இன்னெரு Key பண்பு, தன்மை ஆகி யவற்றின் ஆதிக்கத்தை உடைத்தெறிகிருர். இதல்ை Key என்ற கட்டுப்பாடே வாக்னரின் இசையில் இல்லாமல் போகவில்லை. அது நிகழ்ந் தது வரலாற்றில் மிகவும் பிந்தியே. ஆனல் Chriomaticism 6T6öTso 2.5660)u பிரக்ஞை பூர்வ மாகப் பயன்படுத்தித் தான்விரும்பும் கூணர்வுச் சூழலை ஏற்படுத்தியவர் வாக்னரே.
இந்த வகையில் தன் சமகாலத்தவரான ப்ராம்ஸ் (Brahms), மென்டல்ஸன் (Mendolssohu) போன்ருேரிடமிருந்து வாக்னர் வேறுபடுகிருர், இவர்கள் கிளாசிக்கல் காலகட்டத்தின் வடிவ சீர்கள், நேர்த்திகளை வலியுறுத்தி வந்தவர்கள். ப்ராம்ஸ"டன் வாக்னர் இசையுலகில் ஒரு நீண்ட கால வாக்குவாதத்தையே நடத்தியிருக்கிருஷ் ஆஞல் வாக்னர் உருவாக்கிய புதிய தொனி களை ஏற்றுக்கொள்ள முடியாத ப்ராம்ஸ் மற் றைய கலைஞர்களும் கலேயுணர்வு இல்லாதவர் களா? சேம்பர் இசையில் (சிறு இசைக்குழு) சிறு பார்வையாளர்கூட்டத்துக்கான இசை, ஐரோப்பிய சங்கீதத்தில் ப்ராம்ஸ் ஒரு மா லானகத்தான் கணிக்கப்படுகிருன். ப்ராம் வாக்னரின் பரிசோதனை முயற்சிகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது புதிய விஷயங் ஆளின் பரிச்சயமின்மை காரணமாக . அவருக்கு அழகாகப் படவில்லை என்பதாலேயே,
6 இதே வாக்னரி-ன் தன் சமகாலக் கலைஞர் கள் மத்தியில் ஒரு மரபெதிர்ப்பாளனக இருந் தவரின்-இசை பிற்காலங்களில் என்ன அந்தஸ் தைப் பெற்றிருக்கின்றது?
வாக்னரின் இசை நாடகங்கள், ஐரோப் பிய கலை மரபின் இருபதாம் நூற்ருண்டு நவீன அவைக்காற்று கலைகள் எல்லாமே எதற்கெதி
496

ராகக் கிளர்ந்தெழுந்தனவோ அந்தப் பிர.ை gfTijö5 g) Ir š 5 i S) Gör (Theatre of illusio சிறந்த உதாரணங்களாக விளங்குகின்றன . முதலில் நாடகங்கள் எ ன் ற அடிப்படையி: இவர் படைப்புகளைப் பார்ப்போம். வாக்ன தன் இசை நாடகங்களின் மேடையேற்றங்கள் பிரமாண்டமான சடங்குகளாக, பார்வைய" ளர்களின் புலன்களை முழுதாக ஈர்த்து, ஆட கொண்டு அவர்களை ஒரு ஆன்மீக அனுபவத் துக்குள்ளாக்கும் ஆசாரங்களாக விளங்கவேண் டும் ன்ன விரும்பினர். பேரொய்த்தில் (Bay reuth) இதற்கென விசேஷமான அரங்கம் ஒன்று கட்டப்பட்டதன் நோக்கமே இதுதான். பிரமாண்டமான அரங்க நிர்மாணங்களுடன் நாடகங்களின் பகைப்புலனைத் தத்ரூபமாக கண் முன் கொணரக் கூடியதாக இவ்வரங்கம் கட் டப்பட்டிருந்தது. வழமையாக இசைநாடகங் களின் இசைக்குழு அரங்கத்தின் முன் பக்கத் தில் அமைக்கப்பட்டிருக்கும். இசைக்குழுவின் guágiibii (conductor) குழுவையும் அரங்கத்தி லிருக்கும் நடிகர்களையும் ஒரே நேரம் பார்க்கக் கூடியதாக இருக்கும். இசைக்குழுவினதும் இயக் குநரினதும் இயக்கங்கள் பார்வையாளரின் 丐Q门 னத்தை நாடகத்தில் ஒன்றமுடியாதபடி குழப் பும் என்பதற்காக பேரொய்த் அரங்கத்தில் இசைக்குழுவும் இயக்குநரும் மறைந்திருக்கும் வண்ணம் திட்டமிட்டுக் கட்டப்பட்டது என்று கூறப்படுகின்றது.
அழகிய தத்ரூபமான அரங்க நிர்மானங் களும், ஒளியமைப்பு உத்திகளும் பார்வையா ளரை நாடகத்தின் உலகுக்கே கொண்டுபோகின் றன. சில விமாகர்கள் கூறுவார்கள், வாக்னர் எவ்வளவுதான் இசை, இயக்கம், கவிதையின் சமமான நேர்த்தியான ஒத்திசைவுதான் உன் னத கலை என்று வாதாடினுலும் - அ வரி ன் படைப்புகளில் அவரின் இசை மேதைமையினல் அவரின் நாடகங்களின் இசை, நாடகங்களின் மற்ற அம்சங்களை மேவிவிடும் என்று. வாக்னர் என்ற கலை விற்பன்னனை சில வேளைகளில் ஒரு மாந்திரீகன் என்று தான் குறிப்பிட்டிருக்கின்ற னர். தனது நிறையோசையுடன் (sonorous) கூடிய மனதை ஏங்கச்செய்யும் மெட்டுக்களி 69) ov, woodwinds, strings ouTфgluming oficir தேனெழுகும் ஓர்கஸ்டிரேஷனல், ஆத்மாவை

Page 31
வீரியத்துடன் கிளர்ந்தெழச் செய்யும் bras வாத்தியங்களின் தனி ஆவர்த்தனங்களிளுள் வாக்னர் பார்வையாளர்களைப் பைத்தியமாக்கி யிருக்கிருர், அவர்களும் வாக்னரின் மந்திரக் கயிற்றினுல் கட்டுண்டு அரங்கத்தில் ஆடும் பாத் திரங்களின் சுகதுக்கங்கள் மனுேரதங்களில் உணர்வு பூர்வமாக சங்கமித்து’ விடுகிறர்கள் ப்ரெஃக்ட் (Brecht) தான் வாக்னரின் ட்ரிஸ் L–tr6ör D-«örlo G)g vL– (Tristan Und isolde, பாரித்த அனுபவத்தை பின்வருமாறு விபரிக்கி முர்; "பார்வையாளர் - நாடக இயக்குநரின் கைகளில் வார்த்துக்கொள்ளத்தக்க களிமண் போன்று ஆகிறர்கள். இயக்குநர்களும் பார்வை யாளர்களை அந்தப்பொழுதுக்கு அரசர்கள் போல உணரவைக்கிறர்கள். நாடகமுடிவில், பார்வை யாளர்கள் தம் எல்லா உணர்வுகளும் பெருச் கெடுத்தோட, அவர்கள் மனுேநிலை களைப்புற்று, பலவீனமுற்ற ஒரு கட்டத்தில் அரங்கை விட்டு வெளியேறுகிருர்கள்.'"
உண்மையில் சனங்கள் ட்ரிஸ்டான், இசல் டவின் காதல் - சாவு சிக்கலில் தம்ம்ை இழந்து தாமும் இரு நிலைகளுக்கிடையில் ஊசலாடுகி ரூர்கள். "ரிங் ஒபராவின் கடைசி அங்கமான சீக்ஃப்ரீட்டின் சாவில் (Siegfried's Tod) சீக்ஃப் ரீட்டும், தேவர்களும் வல்ஹாலாவுமே அழிந்து போகின்றன. வல்ஹாலாவை நெருப்பும் பிரள பமும் அணைக்கையில் இந்தப் பிரபஞ்சமே அழி வது போன்ற உணர்வு பார்வையாளருக்கு அவ் வரங்கினுள் ஏற்படுமாம்.
இருபதாம் நூற்றண்டில் அவைக்காற்று sahasair ordiaurrCSLD g).55 Theatre of illusion, முக்கியமாக இந்த ஜெர்மனிய ரொமான்டிக் இயக்கப் போக்குக்கு எதிராகக் கிளம்பியவை என்று கூறலாம். இம்மாற்றங்களுக்கான சமூ கப் பின்னணி பற்றிக் கூருமல் இவ்வெதிர்ப் போக்குகள் நாடகம், இசை போன்ற துறை களில் எவ்வாறு அமைந்தன என்று பார்க்கலாம்.
7
நாடகத்துறையில் பிரெஃக்ட் என்ருல் என்ன, அபத்த நாடகவாதிகள் என்ருல் என்ன, இருவரும் வ்ெவ்வேறு திசைகளில் சென்ருலும் அடிப்படையில் ஒரே விஷயத்துக்கெதிராகத் தான் -செயற்பட்டிருக்கிருர்கள். பார்வையா எார் நாடக நிகழ்வில் ஒன்றி, தம்மை இழந்து urgith glid, Theatre of illusion air 67Gs, L.
97

குணம்சத்துக்கெதிரான போக்கு வளருகின்றது. பார்வையாளர் வெறுமனே உணர்வு பூர்வமாக வன்றி, வெறுமனே மேடையில் நடைபெறும் நிகழ்வை உள்வாங்கிகளாக மாத்திரமன்றி, நாடகநிகழ்வுக்கு தீவிர பங்களிப்புச் செய்யும் அத்தியாவசிய அம்சமாக உருவாகின்றனர். θου விமர்சகர்கள் வாக்னரின் கலையினை Madison Avenue subliminal techniques (0) full Jalfb60fp வேளைக்கே செய்து விட்டார் என்று தட்டிவிடு மளவிற்கு நாம் போகத்தேவையில்லை. ஆனல் வாக்னரின் உத்திகளினற் கவரப்பட்ட ரசிகருக் கும் அரசியல் மேடைகளில் ஹிட்லரின் நடிப் பினுல் வசீகரிக்கப்பட்டு அதனை உள்வாங்கிய ஜெர்மனியருக்கும் என்ன வித்தியாசம்? ஹிட் லரும் அதே உத்திகளைப் பயன்படுத்தியிருக்கி (pair. Ring of the Niebelung Saga 606), LDOIsaid கப் பழகிக்கொள்ளாத ஒரு பார்வையாளர் கூட்டம் Mein Kampfஐ மறுக்கும் என்று எப் படி எதிர்பார்க்கலாம்?
இத்தகைய கலை மரபு அதன் யூத எதிர்ப்பு வாத உள்ளடக்கத்தினுல் மாத்திரமல்ல, அதன் உத்திகள், நடைமுறைகள் போன்றவற்ருலேயே நாஸி ஜெர்மனியை சாத்தியமாக்கியது என்பது எமக்குத் தெளிவாகிறது. பார்வையாளரை ஒரு அறிதுயில் நிலையில் ஆழ்த்தும் வாக்னரின் கலையை முற்றிலும் கேள்விக்கிலக்காக்கி அதற்கு நேரெதிரான மரபு உருவாவதை நவீன நாட கத்துறையில் நாம் காண்கிருேம்.
இசைத்துறையிலும் வாக்னர் நவீன இசைக் கலைஞர்களுக்கு உயிர்ப்பூட்டும். ஒரு முன்னேடி யாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. நவீன இ சைப் பாரம்பரியம் வாக்னருக்கும் பிந்திய ஒரு காலகட்டத்திலிருந்துதான் தன் அருட்டுணர்வைப் பெற்றிருக்கிறது. வாக்னரின் இசை, வடிவ கட்டுப்பாடுகளை விடுத்து தன் இசை கொண்டுவரும் முழுமையான விளைவை அழுத்தியமையால் முக்கியத் துவம் பெற்ற செழுமை வாய்ந்த ஒர்கஸ்டிரேஷன் உணர்வுச் சூழல் உருவாக்கும் தொ னிச் சேர்க்கைகள் போன்றன. தற்காலத்தைய கலைஞனின் மாதிரி கள் அல்ல. வாக்னர் காலத்தில் அழகிய tonal blend - என்று கருதப்பட்டவை நவீன கலைஞர் களுக்குத் தெவிட்டத் தொடங்கிவிட்டது. ஆர் Garabl: GapairGuitai (Arnold Schoenberg) Guitair ருேர் வாக்னர் உபயோகித்த Chromaticism ஐ உபயோகிக்கிருர்கள் முற்றிலும் எதிரான நோக்

Page 32
கத்திற்காக. அதாவது Tonality யை (தொனி சேர்க்கைகளின் போக்கு, த்ன்மை அல்லது மையக்குவிப்பு) குலைப்பதற்காக. வாக்னரின் இசையில் Tonality முக்கியத்துவம் வாய்ந்தது நவீன இசை மரபின் அடிப்படையே Atonality என்பதாகும். இவ்வளவு காலமும் எது ‘அழகிய தொனி' என்று கருதப்பட்டு வந்ததோ அதன் அடிப்படையையே நிராகரிப்பதாகும் இந்த A onality. இசைத்தன்மையற்ற தொ னி கள் தொணிச்சேர்க்கைகள் என்று நாம் எதைக்கருதி னுேமோ - அவற்றைப் பயன்படுத்துதலும், பிரக்ஞை பூர்வமாக சுருதி பேதத்தை (Conscic us use of dissonance) 1 Ju 165ТLIG556Јg Lb u 8u. இசை மரபின் வழக்குகளாகி விட்டன. எவ்வ 60a;uSai Tonality, Harmony, key Gurgit spa56) முன்னைய இசையின் அடிப்படைகளாகவிரு தனவோ அவற்றின் நேர்மாருன Dissonance Atonality என்பவை நவீன இசையின் அடிப்ட டையாகி விட்டன.
சமாந்தரமான வளர்ச்சிப் போக்கை நாம் நவீன ஓவிய சிற்பத் துறைகளிலும் காணக்கூடி யதாவிருக்கின்றது. பாரம்பரியமாக "அழகு" என்று கொள்ளப்பட்டவை கேள்விக்கிடமாவ தும் அழகற்றவை' என்று கருதப்பட்ட அம்சங் கள் முக்கியம் பெற்றதுமான ஒரு மாற்றத்தைச் காண்கிருேம். 8
ஆனல் கிட்டத்தட்ட ஒரு எழுபது, எண் பது வருட பாரம்பரியமுள்ள நவீன இசை மர புக்கு இன்னும்தான் ஒரு பெரிய ரசிகர் கூட் டம் உருவாகியிருப்பததை நாம் பார்க்க முடி யாது. ரசிகர்களைப் பற்றிப் பேசத்தேவையில்லை. இசைக்கலைஞர்களே, அதாவது musicians, inst rumentalists போன்ருேரே இதை வெகுவாக ரசிப்பதைக் காணமுடியாது. மிகவும் பிரபல மான அங்கீகாரம் பெற்ற இசைக்குழுக்களே நவீன composers ஐ மேடையேற்றுவது அருமை யாகத்தானிருக்கிறது. வாக்னர் வரையும் ஒரு மரபோடு ஒன்றிக் கொள்ளக்கூடியவன், Ravel Debussy, Stravinsky GJ GOM Uruqub H. L GupTjhugu. ualair, Schoenberg gabaog; Stockhausen Grai ருல் புரியவில்லை என்கிருன். இது அவனுக்கு கலையுணர்வு இல்லையென்பதாலா? ரசிகர்கள் வேண்டாம் - கலைஞர்களை எடுப்போம். பேத் தோவனை வாசிக்கும் பொழுது ஆழ்ந்த கலை நயத்துடன் வாசிக்கிருன், ஸ்டொக்ஹெளள னைக் கேட்கும் போது இது என்ன சங்கீதமா, வெறும் சத்தமா' என்று கேட்கிருன், அவனுச் குப் பரிச்சயமில்லையானபடியால்.

இது எதைக் காட்டுகிறது? கலைத்துவம் என் பது யாது? அதன் இலக்கணம் என்ன? என் றும் மாருத, கால இடவேறு பாடுகளுக்கெல் லாம் மாறிலியான ஒரு “கலைத்துவம் இருப்பு தில்லை. ஒரு கல்ைப்படைப்பு எப்போது ரசிக்கப்
படுகிறது, எப்பொழுது அங்கீகாரம் பெறுகின்
றது? கலைப்படைப்புக்கும் அதை ரசிக்க விழை யும் ரசிகனுக்கும் மரபு ரீதியான ஒரு ஒத்தியைபு இல்லாவிடில் அக்கலைப்படைப்பு அங்கீகாரம் பெறமுடியாது. ரசிகனுக்கு தன் முன்னனுபவங் களினல் ஒரு கலைப்படைப்பு எழும் மரபுடன் பரிச்சயமானவனுயிருக்க வேண்டும்.
ஒரு கலைப்படைப்பு தீர்க்கதரிசனமாக, பசி
சோதனை முயற்சியாக எழும் பொழுது அக்கலைப்
படைப்புக்கான புதிய மரபுச் சூழல் எழும்வரை அது அங்கீகாரம் பெருமலே இருக்கும். தன் காலத்தை விட்டு முன்நோக்கிப் பாயும் எந்தக் கலை ஞனும் உடனடியாக வரவேற்கப்படுவ தில்லை. ஆனல் அவனுடைய மேதமை கூட இப்புதிய மரபின் சூழலை முன்னனு மானித்த படி, அப்புதிய மரபின் நீழல்களைக் கண்ட ஒரு தீர்க்கதரிசனமாகவே பரீட்சாத்த முயற்சிகளை உருவாக்கிருன் - வெறும் வெற்றிடத்தில் ஏதோ ஒரு "தெய்வீக அருட்டுணர்வில்" அல்ல. மரபை மீறிய கலைப்படைப்பு அப்படைப்புக்கான புதிய மரபுச் சூழல் எவ்வளவு விரைவில் உருவாகின் றதோ அப்பொழுதுதான் அங்கீகாரம் பெறும். இப்புதிய மரபுச் சூழல் உருவாவதில் புறச் சமூக காரணிகள் தவிர, ரசிகன் பயிற்றப்படுதலும் அக்கலைப்படைப்பில் ஏற்படும் கலையனுபவம் பரவலாக்கப்படுவதும் முக்கியமாகின்றன.
இதை விடுத்து தனி ஒரு ரசிகனில் "உனக் குக் கலையுணர்வு இல்லை" என்று பழி சுமத்து த ல் பிரச்சனையை உண்மையில் கொச்சைப் படுத்துவதாகின்றது.
வெ. சா. வின் பிரச்சனையே கலையை ஏதோ ஒரு அரூப விடையமாகவும், கலைத்துவம் என் பது தன்னளவில்முழுமையானது, மாருதது என் றும், கலைரசனை என்பது ஒரு சுத்த சுயம்பு வானதென்றும் வரித்துக் கொண்டபடியால் ஏற்
பட்டிருக்கிறது. ‘குழந்தைகளும் பெண்களும்
பெறும் மற்ருெரு ரூப விகCப்புத்தான் இசை'
“என்று இருபதாம் நூற்றண்டின் பிற்பகுதியில்
வாழும் நவீன கலைப் பரிச்சயமுடைய வெ. சா போன்ற ஒருவர் கூறுகிருர் என்று நாம் ஆச்ச ரியப்பட்டால் இப்பேர்ப்பட்ட அபத்தங்கள் மேற் கூறப்பட்ட குளறுபடியின் விளைவு தான் போலிருக்கிறது.

Page 33
MeLeLeLYSSSLYYJYJLJYYYYYYLLLYLL0LLLYYYLLLYeeLYLLLYY0
For Natural Colour. Insis
| TELEFUNKEN
Distuifutous fau
Vl, {, iäAJ)
ペ T. Phone : 95, STANLY ROAD,
令必必必令必必必必必必令冷净冷令必必令令●令哆令冷令冷夺令必争必4
še

80-888-888-88
Perfect Reception
TELEVISION
Maatseun 5Euovince
JAFFNA.
X8888-8884-888-X888-888-8088-8.
(X «Х» *
令exa
k
va
●
a
t

Page 34
VVHOESAE AND RETA
VEU)|\ K 3
MPORTED CERAMIC WARES AN
S-LON PIPE & FTTNGS FRESH EGGS
சகலவித றேடியோக்களையும் | மின்சார உபகரணங்களையும்
திருத்திக்கொள்ள
ஈருே மினிரே
1, மேல்மாடி, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.
வீடியோ கஸற்றுக்களும் வாடகைக்கு பல புதிய படங்கள் தற்போது வந்து

27/3, Power House Road,
JANA
6)
5க் கொடுக்கப்படும் துள்ளன سمو

Page 35
அதி சிறந்தரக கைத்தறிப் புடிை உற்பத்தியாளரும், மொத்த சில்லறை விற்பனையர்ள
மற்றும் புடை
ஜி. எஸ். லிங்க Af (ميمى 13 - 14, பெரியகடிை,
༥ ஐஸ்கிறீம் வகைகள் குளிர்பான வகைகள்
என்பவற்றுக்கு
கல்யாணி கிறீம் ஹவுஸ்
73, கஸ்தூரியார் வீதி - யாழ்ப்பாணம்
வைபவங்களிற்கான விசேட ஒடர்கள் உடன் நிறைவேற்றப்படும்
is 8077

காஞ்சிபுரம், மணிப்புரி, நைலெக்ஸ், வூலி சேலைவகைகளிற்கும் பட்டுவேட்டி, சேட்டிங், சூட்டிங் வத் தினுசுகளிற்கும் சிறந்த ஸ்தாபனம்
நாதன் அன் கோ
யாழ்ப்பாணம்.
வரதர் வெளியீடு
அளிக்கும்
நீலவண்ணன்' எழுதிய மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது
இப்பொழுது 2-ம் பதிப்பு விற்பனையாகிறது
விலை ரூபா 3-00 சிறப்புப் பதிப்பு ரூபா 12-00
ஆனந்தா புத்தகசாலை 226, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.

Page 36
零 令令令守
LLLLLYLLLLLLSLLLLL0LLLLL00Y00LY00YYYYLLYYLL00LLYYY
歌 அனறும
இன்றும்
ତ୍ରି
சகல பருவத்
ஒரு சுவைய
é令夺夺必令沙争夺&夺冷冷夺令令夺冷冷●曾岭称冷争争●●●●●●●●●

YYYYYYYLLLLYYYLLLYYY00LLLL00LLL0LLLYYYYYLLL00L0YL0L
னி என் mமே
தினருக்கும் ے
ான துணை
単一ト
T
2 கெரமல்கள் - டொபிகள் - ஸ்வீட்ஸ்கள்
000000-880000080800X00000000008-0-880