கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிருதயுகம் 1981.03-04

Page 1


Page 2
大 தரமான பொருட் * மலிவான விலையி
மக்கள் த கட்டைவேலி
* பலநோக்குக் கூட் நாடு
கூட்டுறவுச் சங்கத்தின் உ இ
பொருட்களும் மக்களதே!
2
ெ
G. C. E. As L G. A. Q. B. A. * வகுப்புக்களுக்கு 2
HICK
39,
BRA

களை ற் பெற
ாபனமான
- நெல்லியடி -டுறவுச் சங்கத்தை ங்கள்!
உயர்வு மக்களின் உயவு
.. 夺
ங்கு
இலாபமும் மக்களதே!
INSTITUTE 17, PoWER HOUSE ROAD,
JAFFNA. ; NCH: Stanley Road,
路
Jafna.
Sస్రిjSjస్లాక్షిప్లొ

Page 3
ఓpgutft 5 ni a-3T வரைக்கும் ஒருல கரசென்றே Lif Lq மானுட நேசிப்பை வளர்ப்பேன்
மன்பதை புன்னகை பூக்கும்!
கிருதயுகம்
தமிழ்த் துவாசிகை
198-2
ஆசிரியர் க. வீரகத்தி
280, பிரவுண் வீதி, uTjbit Tissir iir, இலங்கை,
KRUTHAYUHAM
280, Brown Road, JAFFNA, Sri Lanka.
அவரவரின் கருத்துக்கு அவரவர் பொறுப்பாளி, வேண்டாதவற்றை விலக்குவதற்கு ஆசிரியருக்கு உரிமை உண்டு.
*கிரு
சத்திய சகதியி நித்தி நெஞ்சு விக்கல்
சக்தி
சமதர்
ஆதாம் பூதா
போதா புண்ை பாதா
பதறப்
சாகாது சத்திய
வாழத் வாழ்வி ஞாலத் ѣлт д கோல குற்று
6) உணர்த
காந்தி கார்ல்ப சாந்தி சாதி 8 மாந்த மாநில வாந்தி வசந்த
எங்கும் எதிலு எங்கும் எதிலு எங்கும் எதிலு இங்கின

தயுகம் எழுக மாதோ'
-Urry 5
யுகத்தின் புத்தொளி வேண்டி ற் தவிக்கும் மனிதனை மீட்க பம் சிந்தணு யாத்திரைக் கனவில் சு பூரித்து, நீதியும் நேர்மையும்
எழுந்து பயங்கர மரண பில் துடிக்கும் அவஸ்தை நீக்க மிகுந்தவர் அணிதிரள் கின்றர் ம யுகத்தின் விடிவெள்ளி காணிபீ!
b ஏவாள் ஆற்றிய தவப்பணி காரமாய் வளர்ந்து விட்டது. ாக் குறைக்கு முதலா வித்துவம் ரியம் பாவம் போதனை செய்து
ளத்தில் பாடாய்க் கிடத்தி
பிழியுது உழைக்கும் ஜீவனை
சாகும் ஜீவனைப் பேணச் நவயுகச் சாலையில் வாரீர்!
துடிக்கும் யுவனும் யுவதியும் பில் வசந்த வாடை யாவது
தெம்மிலும் படுமோ என்று தினைந்து நெஞ்சம் கருகிக் ம் மாறிக் குணந்தடு மாறிக் பி ரான ஆன்மா குரலிடும் செவியில் உறுத்துவ தில்லை பு மரத்தவர் மனிதரும் இல்லை!
கண்ட சத்திய ஒளியில் 0ாக்ஸ் காட்டிய பொருளியல் நெறியில்
மிளிரும் சமூகம் காண்போம்! சமயப் பேதம் அங்கில்லை ர் எவர்க்கும் நீதி ஒன்றே ம் முழுவதும் ஒருல காசே
எடுக்கும் நோய்பிணி தீர்த்து ம் மலர உழைப்போம் வாரீர்!
பதட்டம் எங்கும் பயங்கரம் ம் புலுடா எதிலும் புரளி
சுரண்டல் எங்கும் மோசடி ம் கரவு எதிலும் கலப்படம் ) புகழின் ஏம்பலிப் புக்கள் ம் பணத்தின் ஏக போகம் வ தகர, மானிடம் வளர கிருதம், இன்னுெரு LIT 3!
ኳ கவி.

Page 4
ஒரே !
பேராசிரியர் :
சமுதாயம் நாகரிக வாழ்க்சை ویsfقDگا வாழத் துவங்கிய காலமுதல் கண்டுவர் துள்ள பெருங் கனவுகளில் ஒன்று ஒரே உலகம் உருவாகுதல் வேண்டும் என்பதா கும். உலகியல் அடிப்படையில் மட்டுமன்றி ஆன்மீக அடிப்படையிலும் பேதங்கள் அற்ற ஒருமையை சமய தத்துவங்கள் இலட்சிய மாய்க் குறிப்பிட்டு வந்துள்ளன. சமுதாய வரலாற்றை எடுத்து நோக்கினல் பெரிய வொரு முரண்பாடு இருந்து வந்திருப்பது புலனுகும். ஒருபுறம் சகலவிதமான எல்லை களையும் வரம்புகளையும் வேறுபாடுகளையும் கடந்த பொதுமையை மனிதன் விழைந்து வந்திருக்கிருன்; மறுபுறம் குலம், சாதி, ஊர். நாடு, மொழி, இனம் நிறம் முதலிய எத் தஜனயோ உணர்வுகள் அவனைப் பாதித்துப் பேதித்து வருவதையும் காண்கிருேம். அபே தத்தை அவாவும் மனிதன்தான் பேதப்பட் டும் கிடக்கிருன். இது மனுக்குலம் அனுப வித்து எதிர்நோக்கும் மாபெரும் முரண்பாடு.
நயத்தகு நாகரிகம் கண்ட சமுதாயங்களி லெல்லாம் தத்தம் எல்லைகளேக் கடந்து உல கெலாம் தழுவும் உயர்ந்த குறிக்கோள் காலந் தோறும் எழுந்திருக்கக் காண்கிருேம்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பழந்தமிழ்க் கவிஞனும்,
மனுக்குலம் ஒன்று; மானிடம் ஒன்று
என்று பாடிய கிரேக்கப் புலவனும் அகன்று விரித்த காட்சியுடையராகவே இருந்தனர்.
அவர்கள் அறிந்த உலகம் இன்றைய உலகம்
அன்று. கணியன் பூங்குன்றன் கண்ட "உல கம் சிற்றுார்களின் தொகுதியே. ஆயினும்
சிற்றுார்களினூடாகப் பேருலகு ஒன்றனைக் கண்ட அற்புதக் காட்சி அவனைச் சாரும்.
பிளேற்ருேவும் அவ்வாறே கிரேக்கத் தீவு
களுக்கும் அப்பால் மானிடத்தின் அடிப்
படை ஒருமைப்பாட்டைக் காட்சியிற் கண்
36.
2

உலகம்
க. கைலாசபதி
மனுக்குலத்தின் வரலாற்றிலே ஒரே உல கத்தைப் பல நூற்றண்டுகளாகச் சமய ஞானிகளே விவரித்து வந்தனர். ஒரு வகை யான ஆன்மீகப் பொதுமையும் ஒருமைப பாடும் அவர்களை உந்தியது என்பதில் ஐய மில்லை. w
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
என்ற குரல் அத்தகையதே. பல்வேறு சம யங்களும் தமது கோட்பாடுகளின் அடிப் படையில் பரந்த ஓர் உலக அமைப்பைக் கனவுகண்டன. எனினும் ஒவ்வொரு சமய மும் நாளடைவில் பிளவுபட்டுப் பின்னப் பட்டு பேதங்களைப் பெருக்கிக் கொண்டது. அந்த வகையில் சமயங்கள் விதந்துரைத்த ஒருலகக் கோட்பாடு நடைமுறை சாத்திய மற்றதாயிற்று. தனிப்பட்ட ஞானியரின் மானதக் காட்சியாகவே அது இருந்து வந் துள்ளது. மனுக்குலத்தின் நாளாந்த வாழ்க் கைக்குரிய மார்க்கமாக அது மலரும் வாய்ப்பு உண்டாகவில்லை.
மதங்களைப் போலவே காலத்துக்குக் காலம் தோன்றிய பேரரசுகளும் தமது ஆனைக்குட்பட்ட பரந்த உலக அரசுகஃா யும் அமைப்புகளையும் கனவுகண்டன. அலெக் ஸாந்கர் முதல் ஆங்கிலேயர் வரையில் உலக சாம்ராச்சியத்தை உருவாக்க முயன்றனர். ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியம் ? என்று பிரித்தானியப் பேரரசு ஒரு காலத் தில் உயர்வாகப் பேசப்பட்டது. நமது கண் முன்னேயே அது உருக்குலைந்து சிற்றரசாய்ச் சிறுமைப் பட்டுக் கிடப்பதைப் பார் க்கிழுேம். பிறரை அடிமைப்படுத்திப் பலாத்காரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட எந்தப் பேர ரசும் உலக அரசாக உருவாக முடியாது.
இன்னெரு விதமாக நோக்கினல், உல கிலே முதலாளித்த வம் வளர்ச்சியுற்ற காலப் பகுதியிலேயே பொருளாதார பெளதீக - தேவைகளின் இன்றியமையாமையால் ஒரு பொதுவான உலகத் தன்மை உருவாகியது. முற்பட்ட காலத்து ஒருலகக் கோட்பாடுகள்

Page 5
கனவுகள் முதலாளித்துவம் தோற்றுவித்தது நடைமுறைத் தத்துவம். கார்ல் மார்க்ஸ் தனக்கேயுரிய நடையில் இதனைச் சுவைபட விவரித்தார்:
உலகக்ஆந்தையைச் சுரண்டுவதன் மூலம் பூர்ஷ்வ வர்க்கம், ஒவ்வொரு நாட்டின் பொருளுற்பத்திக்கும் பொருள் உபயோ கத்திற்கும் ஒரு பொதுவான உலகத் தன்மையை அளித்திருக்கிறது. புதிய தொழில்களின் உற்பத்திப் பொருட்கள் உள் நாட்டில் மட்டுமல்ல, உலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் உபயோகிக்கப் படுகின்றன. . தேசங்கள் உலக ரீதியாக ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன; பெளதிகப் பொருளுற்பத்தியைப் போல வே, அறிவுப் பொருளுற்பத்தியிலும் இதே நிலைமை. தனிப்பட்ட நாடுகளின் அறிவுப் படைப்புகள் பொதுச் சொத் தாகின்றன. ஒருதலைப் பட்சமான தேசி யப் பார்வையும் குறுகிய மனப்பான்மை யும் மென்மேலும் அசாத்தியமாகின்றன. மிகப் பல தேசிய இலக்கியங்களிலிருந் தும் பிரதேச இலக்கியங்களிலிருந்தும் ஒர் உலக இலக்கியம் உதயமாகிறது"
இவை முதலாளித்துவ சகாப்தம் தோற் றுவித்த வாய்ப்பான அம்சங்கள். ஆனல் முதலாளித்துவம் தனது உள்ளார்ந்த முரண் பாடுகள் காரணமாக மனுக்குலம் ஒற்றுமை யாகவும் அமைதியுடனும் வாழ்வதற்குத் தடையாக அமைந்து விடுகிறது. சுரண்டல் போட்டி, ஆக்கிரமிப்பு, யுத்தங்கள் முதலி யனவும் முதலாளித்துவ சகாப்தத்தில் உல களாவியனவாக உள்ளன. இந்நிலையிலேயே சோஷலிஸம் முதலாளித்துவத்தின் கொடு மையை நீக்கிப் புதியதொரு சமூக அமைப்பை உருவாக்கும் மார்க்கத்தை உலகிற்கு அறி முகப் படுத்தியுள்ளது. சோஷலிஸத்திலே 'மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக் கம்" இல்லாமையால் பேதமும் குரோதமும் மறைய வாய்ப்புண்டு.
ஆல்ை சோஷலிஸம் மந்திரக் கோல் அன்று. அதன் பெயரில் அமாதுஷ்ய சக்தி எதுவும் இல்லை. அதனையும் மக்களே உரு வாக்கிச் சிறப்புற நடத்த வேண்டும்.

எல்லோருக்கும் உலகம் ஒன்று
இருளும் ஒன்று ஒளியும் ஒன்று என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடுவது சமத்துவத்தின் இலட்சிய நிலையைக் காட்டுகிறது. ஆயினும் அதுவும் மனித முயற்சியினூலேயே மாண்புற அமைத்து நிறு வப்பட வேண்டியுள்ளது. சோஷலிஸம் புதிய சமூக அமைப்பை ஓரளவு எளிதாக உரு வாக்கி விடலாம். ஆயினும் புதிய மனிதன் உருவாகுதல் அத்துணை எளிதான காரியம் அன்று. பல நூற்றண்டுகள் பழகிப்போன எண்ணங்களும் உணர்வுகளும் சோஷலிஸ் சமுதாயத்து மனிதருள்ளும் மண்டிக் கிடப் பதில் வியப்பெதுவுமில்லை. அவை சோஷலி ஸத்தின் உயிருக்கே உலை வைக்கவும் கூடும். ஆயினும் சமத்துவத்தின் அடிப்படையிலேயே என்ருே ஒரு நாள் ஒரே உலகம் சாத்தியப் படும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல்களிலே பலவிடங்களிற் கூறு வது போல, அனைவருக்கும் ஒரே நீதி, ஒரே கடவுள், ஒரே காற்று, ஒரே நீர், ஒரே
e a C) வானம், ஒரே பூமி, ஒரே பாதை, ஒரே தீர்ப்பு என்பது போன்ற நிலை தோன்றப் பலகாலமாகலாம். ஆயினும் முன்னெக்காலத் தும் இருந்ததை விட எதிர் காலத்தில், ஒரே உலகம் உதயமாகுவதற்கான வாய்ப்பு கள் அதிகம் என்பதில் ஐயமில்லை. இன்றைய காலகட்டத்தில் தொடர்பு சாதனங்கள் ஒருல கத்தை நடைமுறை சாத்தியமாக்கியுள்ளன. முதலாளித்துவம் தொழிற் கருவிகளையும், தொடர்பு சாதனங்களையும் ஏகபோக உரிமை யின் அடிப்படையில் துஷ்பிரயோகம் செய் வது வெளிப்படை. ஆனல் ஒருமைப்பாடும்" சமத்துவமும் உண்மையாக உலக ரீதியாக ஏற்படும் போர், தொடர்பு சாதனங்கள் உல கத்தை ஒரு கிராமமாக மாற்றிவிடும் என் பதில் எள்ளளவும் ஐயமில்லை. சகல எல்லை களையும் வரம்புகளையும் கடக்கும் சச்தி இன்று தொடர்பு சாதனங்சளுக்கே உரியது. ஆஞல் அவை மனுக்குலத்தை ஆக்கப் பாதையில் நடத்திச் செல்லாமல் அழிவுப் பாதையிலே இட்டுச் செல்கின்றன. அதற்கான அடிப் படைக் காரணத்தை அகற்றி, சமத்துவம் பூரணமாக நிறைந்த புதியதோர் உலகினைப் படைக்கும் கட்டத்தில் 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற வாசகம் கனவாக வன்றி நனவாகும். அதுவே ஒரே உலகின் உணர்வு வெளிப்பாடாகவும் இருக்கும். "எவ் வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை, வாழிய நிலனே'.
3

Page 6
காலத்தில் மாலை கோர்
கறுப்புத் துணியால் கண் கட்டி வி காலத்தில் வருவேன் கதை செ'ல்லி அகாலத்தில் வருவான்
அந்தரிக்கும் இருளிற் கண் திறப்பா அவன் கூடு விட்டுக் கூடு பாயு ே
நேரம் ஒருமித்து வளராத இக்சட்டி கறுத்தப் பூனையின் மஞ்சட் கண்கள் புல்விதையைத் தூவப் போனேன். மேளங்கள் உடைந்தன, திருவிழா, "குருடனே உனக்காய்க் குடலையாய்ட்
ஒருமிப்பு தூரங்கள் அண்மிக்கும் ே ஒரு கடிகாரமாகில், காணுத வீணில், பாழில், எதுவரினும் எட்டிப் பாய்ந்தாலும் மதி வேலிக்கரையில் அநாதரவாய் நீ அத்தெருப்பிள்ளை சொன்னது - "காலை பிரகாசன் வருவான் துக்கிப்புத் தொக்கின் காகங்கள் செ
அண்டங்காகம் அலரியில் சொன்னது
சீவிதங் காலக்கணிப்பு, விளக்கம், மு புல்வளர நீர்தெளித்தல் கர்மம் கர்மத் தொடர்ச்சி விளக்கம். கரிபூசிக் கொண்டு கோமாளி வந்தா கண் திறந்த்ான்.
"என்னடா பேதைக் கதைகள் ள்ங்கேயுன் யுகதர்மம் காலத்தில் மாலை கோர் கண்ணீரைத் துடை, உன் கன்னச் சு

ட்டுக்
மறைந்தான்
ன் போவான்
காமாளி,
ல்
வழிநடத்தப் மின்னல் கீறி ஒளிந்தது,
பிரித்தேன்’
பகங்கள் காணில்,
ற்கும்.
ால்லும் மறக்கா’.
2த்தாய்ப்பு
வடும் காயும்".
- சேந்தன்

Page 7
மதுரை மாநாடு
ஆராய்ச்சிக் கருத்தர
ஜனவரி 4 தொடக்கம் ஜனவரி 10 வரை மதுரையில் நடைபெற்ற விழாக்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் "உலகத் தமிழ் மாநாடு" என்ற பெயர் பொதுவாக வழங்கப் பட்டது. எனினும் அது பல்வகைப்பட்ட பெருவாரியான நிகழ்ச்சிகளின் குவியல் என்று சொல்வதே பொருத்தமாகும். கண் காட்சி கள், நாட்டியங்கள், இசையரங்குகள், நாட கங்கள், திரைப்படக் காட்சிகள், கவியரங்கு கள், கருத்தரங்குகள், உபசாரப் பேச்சுகள், பாராட்டுகள், கண்டனங்கள், அலங்கார ஊர்வலங்கள் என்று பலப்பல வைபவங்கள் ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளிற் பல பொது மக்களுக்கென ஏற்பாடு செய்யப் பட்டவை. ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் கற் றறிவாளர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்
t. --oð} 3ðf s
கற்றவர்கள் எனவும், கல்லாதவர்கள் எனவும் மனிதர்களைப் பாகுபடுத்தி நடத்த வேண்டிய தேவை மிகவும் தெள்ளத் தெளி வாக நமது சமுதாயத்தில் உள்ளமையை மாநாட்டு ஒழுங்குகள் காட்டுகின்றன. "இரு வேறு உலகத்து இயற்கை' என்ருர் வள் Oருவர் - வேருெரு சந்தர்ப்பத்தில்! அவர் சொன்னது அருளையும் பொருளையும் பற்றி. இங்கு கல்வி இல்லாதவர்கள் எனவும் கல்வி உள்ளவர்கள் எனவும் மக்களைப் பிரித்து நோக்க வேண்டிய நிலைமை எம்மிடையே உள்ளது. இந்நிலைமை மிகவும் பரிதாபகர மானது.
'என்னரும் தமிழ் நாட்டின்கண்
எல்லாரும் கல்வி கற்று, பன்னரும் கலை ஞானத்தால்

ங்குகள்
முருகையன்
பராக்கிரமத்தால், அன்பால்
உன்னத இமயமலை போல்
ஓங்கிடும் கீர்த்தி எய்தி" இன்புறுதல் வேண்டும் என்று கனவு கண் டான் பாரதிதாசன். அந்தக் கனவு பூர்த்தி யாக மிக நெடுங்காலம் எடுக்கும். ஆயினும் தமிழ் மக்களின் பொதுவான கல்வி நிலை உயரும்போது தான் அவர்களின் வாழ்வு நிலேயும் உயர்வு பெறும். அவ்வாறு உயர்வு பெறும்போதுதான் ஆராய்ச்சிகளுக்கும் கருத் தரங்குகளுக்கும் உண்மையான அர்த்தப் பொலிவு உண்டாகும். அது வரைக்கும் இவ் வித விழாக்களெல்லாம் சேற்றிடையிேபோ ட்ட மாக்கோலங்களாகவே தோன்றுகின் றன. "
எது எவ்வாருயினும் மாநாட்டு அமைப் பாளர்கள் தமிழ் மக்களிடையே இரு வேறு உலகங்கள் உண்டு என்னும் மெய்ம்மையை உணர்ந்து கொண்டு, பொதுநிலைக் கூட்டங் கள் எனவும் ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் எனவும் இருவகைப்பட்ட நிகழ்ச்சிகளை ஒழு
ங்கு செய்திருந்தனர். இவற்றுள் ஆராய்ச்
சிக் கருத்தரங்குகள் “உலகத் தமிழ் ஆராய்ச் சிக் கழகம்’ (1ATR) என்னும் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு உயிர் மையம் போல் அமைந்தவை. ஆகையால் ஆராய்ச்சிக் கருத் தரங்குகள் எங்ங்ணம் ஏற்பாடு செய்யப்பட் டன என்றும் எங்ங்ணம் நடந்தேறின என் றும் எத்தகைய பலன்களைத் தந்தன என் றும் விசாரனை செய்வது முக்கியமாகும்.
முதலில் ஏற்பாடுகள் பற்றிப் பார்க்க evrib.
5

Page 8
ஆராய்ச்சிக் கருத்தரங்குகளிலும் இ வகை நிகழ்ச்சிகள் காணப்பட்டன. இை முழு அமர்வு, குழு அமர்வு என்பன. மு அமர்வுகள் முற்பகல் 9-00 மணி தொடக்க பிற்பகல் 1-15 மணி வரை நடைபெற்றன இவற்றிலே பல்வேறு நாடுகளிலிருந்தும் பா தத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வ திருந்த பேராளர்களும் பார்வையாளர்களு பிறரும் பிரசன்னமாயிருந்தனர். பலரும் ஈ{ பாடு கொள்ளத்தக்கன என எண்ணப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், இந்த (p(LP alpic களில் அறிமுகமாயின. இவை பற்றிய கரு துரைகளும் இடம் பெற்றன.
முழு அமர்வில் அறிமுகமான கட்டுரை கள் எவ்விதமானவை என உணர்வதற்கு உதவியாகச் சில கட்டுரைகளின் தலைப்புகை மாத்திரம் இங்கு தருவோம். திரு. ஏ.'; பையாவின் ‘தமிழ் மொழி’, கலாநிதி சுசுமு ஒண்ணுேவின் 'ஜப்பானியத்துக்கும் தமிழுகிகு மிடையேயுள்ள ஒலியியல் ஒற்றுமைகள்", கலாநிதி வசெக்கின் "திராவிட அல்ற்றேயிக் உறவு - சொல்லொற்றுமையும் ஒலி ஒற் றுமையும்’, புத்தனேரி ரா. சுப்பிரமணியத் தின் கூத்துத் தமிழ், நீதிபதி எஸ். மஹ் ராஜனின் "கம்பரது அழகியல்’, ம. Gurr. g.: இன் ‘சமயங்கள் வளர்த்த தமிழ்", எஸ் சிறிதிவாசனின் "தமிழ் நாட்டுக் கோயில் களின் மறைஞானக் குறியீடு" என்பன, (p(p அமர்வுகளின் போது அறிமுகமாகிய Sirfrti F சிகளுட் சில வகை மாதிரிக்காகச் சில கட் டுரைகளை எடுத்துக் கொண்டோமே தவிர இது முழுமையான لاL-ا{-tLJa6 ہوئے نئirgy.
இக்கட்டுரைகளிற் பல அறிமுகக் கட் டுரைகள் போல் அமைந்தவை. தமிழர் 6չյոք வியலின் சிற்சில கூறுகளே, வேற்று நாட் டவர்க்கு விளக்கும் பாணியில் அவை இருந் தன. ஆகையால் ஏற்கெனவே தமிழரிை புழக்கத்திலுள்ள சில கருத்துகளை ஆங்கிலத் தில் எடுத்துரைக்கும் Sylviu GunrFuò எனவும் அவற்றைக் கூறலாம். உதாரணமாக, நீதிபதி எஸ். மஹராஜனின் உரையைக் கூறலாம். அவர் கம்பன் கவிதையையிட்டு மிகுந்த ஈடு பாட்டுடன் ஆங்கில மொழியிலே பேசிஞர். அவர் நிகழ்த்திய உரை ஆங்கிலம் அறிய தோருக்கு எதுவித பயனையும் அளிக்கவில்லை,
6

ஆங்கிலம் அறிந்த தமிழர்கள் கூட அதனை அவ்வளவாகச் சுவை த்திருக்க !pnri. --nriř56řir. ஏனென்றல் கம்பன் கவிதை அவன் கையாண் டுள்ள தமிழ்ச் சொற்களின் ஆற்றலிலும் காம்பீரியத்திலும் இதம்பதமான 6ogunrt二g} யிலும் உள்ளது. ஆங்கில மொழிபெயர்ப் பிலே கம்பனின் உண்மையான உயிர்ப்பை
இனங்காட்டுவது மிகவுஞ் சிரமம். ஆகவே
தமிழர்களைப் பொறுத்த வரை கம்பனது நிழ லின் நிழலைக் காட்டுவதாகவே மஹராஜ னின் உரை இருந்தது. தமிழறியாத பிற நாட்டாரும் அவ்வுரையால் அதிக பயன் பெற்றிருக்க மாட்டார்கள். ஏனென்ருல், இராமாயணத்தின் *விாசார மரபுகளை உரை ராத நிலையில், இராமாயண பாத்திரங்களின் நடத்தைகளும் பேச்சுகளும் அவற்றின் பின் னணிகளும் நன்கு விளங்கா. இவற்றையெல் லாம் ஒரு சில நிமிடங்களுள் எடுத்டுக் காட் 1-லாம் என்று துணிவது அத்தமாகும். மொத்தத்தில் கம்பன் பற்றிய அப்பேச்சு ஆங்கிலம் அறியாத வேற்று நாட்டாருக்கோ, ஆங்கிலம் அறியாத தமிழருக்கோ - ஏன் ஆங்கிலம் அறிந்த தமிழருக்குமே di.t. -- சுவைப் பயனுடைய ஒன்முக இருக்கவில்லை. பேச்சாளர் ஒருவர் மாத்திரே திம்முடைய பேச்சினை மிகவும் இரசித்தார் என்றும் கூற
லாம் போலும்! அறிமுகப் பாணியில் 587 6DLIQ
த்த கட்டுரைகள் பல இவ்விதம் பொருத்த மற்றுப் போயின. ஆயினும் சிற்சில அறி முகக் கட்டுரைகள் தம் பணியைச் சீராக நிறைவேற்றுவனவாயும் இருந்தன.
முழு அமர்வில் இடம்பெற்ற வேறு சில கட்டுரைகள் ஆராய்ச்சித் தன்மை கூடியன ாப் இருந்தன. ஆயினும் இவை ւյն մի விரிவான சர்ச்சைகள் நடைபெறுவதற்கு ஏற்ற சூழ்நிலை மாநாட்டுப் பந்தலில் இருக்க வில்லை. கருத்துரை கூற வந்தோர், விடயத் துக்குப் புறம்பான வேறு விவகாரங்கஆளே அதிகமாய்ப் பேசினர். இதனல், உண்மை யைத் தேடல் எனப்படும் ‘ஆராய்ச்சிக்கு? அதிக வாய்ப்பு இருக்கவில்லை.
முழு அமர்வுகள் "தொல்காப்பியர் * T ங்கு' என்னும் பெரும் பந்தலிலே நடை

Page 9
பெற, குழு அமர்வுகள் அப்பந்தலின் அய வில் அமைந்த சிறு அறைகளில் இடம் பெற றன. (இவை மதுரை காமராசர் பல்கலைச் கழகத்தின் விரிவுரை அறைகள்) ஈழத்து அறிஞர்கள் சிலரின் ஆய்வுக் கட்டுரைகள் இக்குழு அமர்விலேயே அரங்கேறின. குழு அமர்வுகள் பிற்பகல் 2.30 மணி தொடிக்கப் பிற்பகல் 4-15 மணி வரை நடைபெற்றன. இந்த அமர்வுகளின் போது, ஒவ்வொரு கட் டுரையாளருக்கும் தம் ஆய்வினை அறிமுகம் செய்வதற்கெனப் பதினைந்து நிமிடங்கள் தரப்பட்டன. பின்னர் பதினைந்து நிமிடங் களுக்குக் கலந்துரையாடல் நடைபெற்றது.
திரு. வை. கா. சிவப்பிரகாசம், திரு. கலா பரமேஸ்வரன் பேராகிரியர் க. கைலாச பதி, திரு. ச. அம்பிகைபாகன், திரு. ம. சமகுணம், கலாநிதி எச். டபிள்யூ. தம்பையா திருமதி மனுேன்மணி சண்முகதாஸ், பண்டி தர் க. வீரகத்தி, திரு. எஃப். எஸ். சி. நட Ú'*/r • éutr Ggu grsrgm. பேராசிரியர் சு. வித்தியானந்தன் என்போர் குழு அமர்வு கிளிலே கட்டுரை சமர்ப்பித்துப் பேசுதற்கு இடமளிக்கப்பட்ட ஈழத்தவர்களுட் சிலரா இT
மொழியும் மொழியியலும், ெதால் பொருளியல், கலையும் சிற்பமும், நடனமும் இசையும், நாடகம், வரலாறு, இலக்கியம், ஒப்பியல் இலக்கியம், சிறுவர் இலக்கியம். நாட்டாரியலும் இலக்கியமும், கடல் கிடந்த இலக்கியம், சமயமும் தித்துவமும், விஞ்ஞான மும் தமிழும், சமூகவியல், மொழிபெயர்ப் Hம் அகராதியியலும், பிற என்னும் பதி ஞறு துறைகளில் இவ்வாராய்ச்சிகள் நடத்தப் பட்டன. குழு அமர்வுகளில் ஏறக்குறைய 200 கட்டுரைகளை ஆய்வதற்கான ஏற்பாடு கள் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தன. இவை பன்னிரண்டு அறைகளில் ஒரே சமயத் தில் அரங்கேறின.
பல்வேறு நாடுகளையுஞ் சேர்ந்த பல்வேறு துறைகளில் அக்கறை கொண்" அறிஞர் களை ஒருங்கு கூட்டி இந்த ஆய்வுகளை ஒழு ங்குசெய்தமைழ்மெச்சத் தகுந்த காரியம்ே. ஆயினும் இந்த ஆய்வுகள் அவசர அவசர upiras, uńsenyub மேலெழுந்த வாரியாகவும், அரைகுறையாகவுந்தான் நடைபெ ற்றன என்

14தையும் குறித்துச் சேஸ்வது நம் க.கை "சிறது. அத்துடன், ஏற்றுக் கொள்ளப் பட்ட கட்டுரைகள் பல, நிகழ்ச்சி நிரலில் இடம்பெருது தவிர்க்கப்பட்டமைக்கான கார ணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.
சுருங்கச் சொல்வதானுல், குழு அமர்வு களுக்கு வேண்டிய ஆழமும் அறிவியல் நோக்
கும் நிதானமும் அந்த அமர்வுகளில் மிகவும்
அருமையாகவே காணப்பட்டன எனலாம்.
இவ்வாறு இக்கருத்தரங்குகள் நடந் தேறியமைக்கு என்ன காரணம்? முக்கியமான சில காரணங்களை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத் தமாகும். y
(1) கட்டுரைகளின் பிரதிகள் பேராளர் களுக்கு வழங்கப்படாமிை. இப்பிரதிகள் இல் லாத நிலையில், ஆய்வுகளின் முழுமையான ஆழ நீளங்கள் எவருக்குமே புலப்படுதல் இயலாது.
(2) சில கட்டுரைகளின் சுருக்கங்கள் அச் சிட்டுக் கொடுக்கப்பட்டனவாயினும் பெரும் பாலான கட்டுரைகளைப் பொறுத் த வரை யில் அவ்வகைச் சுருக்கங்கள் தானும் கொடுக் கப்படாமை.'s
(3) அமர்வுகளுக்குத் தலைமை தாங்கி யோர் சிலர் கலந்துரையாடல்களை உரிய வாறு வழி நடத்தாமை,
V
மேலே காட்டப்பட்டவை போன்ற
ஏதுக்களின் விளைவாக, ஆராய்ச்சிக் கருத்
தரங்கினல் நாம் பெறத்தக்க பலனில் RG5 பகுதியை மாத்திரமே பெற்றுக் கொண் Guruh.
மிகவும் பரந்த அளவிலே இம்மாநாட் டுக் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்யும்போது, பிரச்சினைகள் பல எழுவது இயல்பே. எனி னும், முதலிலே குறித்த தேதிகளில் நடை பெருது ஒராண்டு கழித்தே மாநாடு நீடந் துள்ளது. ஆகையால், ஏற்பாடுக%ர்ச் ஒ; பெறச் செய்வதற்கு நேரம் போதாது என் னும் சாட்டினை யாரும் சொல்ல (fot. Luftrig. ஏற்பாடுகளைச் செய்யும்போது சில நெறி முறைகளே வகுத்துக் கொண்டு அவற்றின்
sig

Page 10
அர்த்தம் புரிந்த அன்று,
*வம்துக்கு வருவதுதான் முத *மாத விலக்காதல்தான் மறு ஆஸ்தான கவிஞர் தன் அமர புதுமை விளக்கத்தைப் பொறி
நேற்று,
பூனக்குட்டிக்குப் பால் கொடு "புரட்சி நாய்' என்று பெயர் ஆண்டிப் பண்டாரப் பேராசிரிய ஆண்டு மலரையே அலங்கரித்
முட்டாள்கள் நமக்கு ஒரு வா முழுசான அர்த்தங்கள் புரிவதி "மறுமலர்ச்சிக் கவிஞர்", " வந்துவிட்டார் இனி நமக்குக்
கடல் அலேகள் தரையில்வந்து முத்து மீன்கன் துள்ளி விள மக்கள் வ காற்று வாங்கி மீனவர்கள் தம் பட்குகளை
உன்னிடம் செலுத்தி முத்து மீன்கள் சில பிடித்தி அள்ளித் துடிக்கும் அலகளும் துள்ளிக் குதித்து வரும் கடே நான் உன்னைப் போற்றிப் பா மகிழ்ந்து நீயும் கேட்பாயா?
= கல்
(sruЈg
ta
முன்பக்கத் தொடர்ச்சி
படி செயற்பட்டிருந்தால், பல குழப்பங்களை யும் ஒழுங்கீனங்களையும் தவிர்த்திருக்கலாம்.
மற்றும் ஒரு குறிப்பினையும் இறுதியிலே சொல்வது பொருத்தமாயிருக்கும். ஆராய்ச் சிக் கருத்தரங்கெனத் திட்டமிட்டு நடத்த முற்படும் போது பகுத்தறிவு நோக்கும் விஞ் ஞான மனப்பான்மையும் அங்கு முதலிடம் பெறுதல் வேண்டும். 'உண்மை தான் எமக்கு
R

அறிஞர்கள்
ல் மலர்ச்சி" என்றும், மலர்ச்சி" என்றும்,
கவிதையிலே சித்து வைத்தார்!
க்கும் நாய்க்கு
கொடுத்து - ஒரு last - assif
தார்!!! ர்த்தைக்கேனும் தில்லை ! !
புரட்சிப் பேராசிரியர்" கவலையில்லை ! ! !
ஏ. தெ. சுப்பையன்
நன்றி 'அறைகூவல்"
மோதி.
нпit
-
سا
آیه
டுவேன்
யாணி யோகநாதன் நு 8 - தாமரைக்கேணி}
வேண்டும்; ஒரு துளி பொய்யும் வேண்டாம்" என்னும் கொள்கை பிரதானமானது. நம் மவர்கள் இன்று ஆராய்ச்சி என்று நடத்தும் நிகழ்ச்சிகளில் இவ்வாறன பார்வைகள் சற் றுக் குறைவாகவே காணப்படுகின்றன. இது யார் குற்றம்? தமிழின் குற்றமா? தமிழா ராய்ச்சி மரபின் குற்றமா? அல்லது தமிழின் பேரைச் சொல்லிப் பெரியோராகப் பவனி வர ஆசைப்படும் தலையாட்களின் குற்றமா?

Page 11
நில், கவனி, ே
(UP
நிம்முடைய தாய்மொழி இனிமையா னது என்றும் பழமையானது என்றும் சொல் லிச் சொல்லி நாம் பெருமைப்படுகிறோம். நமது மொழியைப் புகழ்ந்து பேசுவதிலே நமக்குத் தனியானதோர் ஆசைகூட இருக்கி றது. ஆகுலும் ஒரு பெரியவரைப் பாராட்டு வது என்றால், - எப்படி, அவருக்குச் சிலை எடுத்துவிட்டு அல்லது விழா எடுத்துவிட்டு அவருடைய கொள்கையைக் காற்றிலே விட்டு விடுகிறோமோ,-அப்படியேதான், நமது மொழியைப் புகழ்ந்துவிட்டு, அதை நல்ல படிப் பயன்படுத்த வேண்டும் என்னும் அடிப் படை உண்மையையே நாம் மறந்துவிடுகி றோம்.
நில்லாத வண்டி
மொழி என்பது நமது கருத்துக்களையும் உ53ளர்ச்சிக ளையும் மற்றவர்களுக்கு உர்ைத்து வதற்கு நாம் படைத்துக் கொண்டுள்ள ஒரு கருவி. அந்தக் கருவியின் சிறப்பு அதைப் பயன்படுத்தி நாம் சிறப்படைவதிலேதான் உள்ளது. எண்ணெய் பூசிப் பளபளப்பாக்கி வைக்கப்பட்டுள்ள மொட்டைக் கத்தியை விட, - அழகு இல்லாவிட்டாலும் கூர்மை உடையதாக இருப்பது தானே நல்ல கத்தி?
நெடுஞ்சாலைகளிலே பார்த்திருப்பீர்கள்: சிாலைகள் சந்திக்கும் இடத்தை நெருங்கும் போது, பேருந்து, மகிழுந்து போன்ற விரை வான வண்டிகளுக்காக ஓர் அறிவிப்பு வைத் திருப்பார்கள்: ‘நின்று கவனித்து மெதுவர் கச் செல்லவும்' என்னும் அந்த அறிவிப் பைப் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள்.
இந்த வாக்கியத்தைப் படிக்கிறபோது, நடந்து செல்லுலோருக்கு உரிய அறிவிப்பா கத் தெரிகிறதே தவிர, மணிக்கு 60/70 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து வருகிற வண்டிகளுக்கு உரிய அறிவிப்பாகத் தோன்ற

L i I !
னைவர் சாலை இளந்திரையன்
வில்லை. வேகமாக வருகிற வண்டி அதே வேகத்தில் சந்திப்பை தாண்டினால், அடுத்த சாலையில் (குறுக்கே) வரக்கூடிய மற்றொரு வண்டியில் மோதிவிடக் கூடும் என்று கரு தியே அந்த அறிவிப்பை எழுதி வைக்கிருேம். அதாவது, வண்டி அங்கே நின்று, அதன் பிறகு புறப்பட வேண்டும் என்பதே நமது எண்ணம். அப்படியானால் நாம் செய்திருக்க வேண்டியது என்ன? 'நில்!" என்று பெரிய எழுத்தில் போட்டிருக்க வேண்டும்; அதன் கீழே, "கவனி" என்று அதைவிடச் சிறிய எழுத்திலும், அதனினும் கீழே **போ" " என்று அதைவிடச் சின்ன எழுத்திலும் எழுதி இருக்க வேண்டும். அதாவது, வண்டியை முதலில் நிறுத்தும் விதமாக நமது சொற்கள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இப்படிச் சட்டென்று பார்த்து நிறுத் தும் விதமாக எழுதிப் போடாததால், - வேகமாக வண்டியை ஒட்டிவருபவர், யாரோ பாதசாரிகளுக்கு உரிய அறிவிப்பு என்று கரு திக் கொண்டு வண்டியை ஒட்டிச் செல்லு கிறார். விபத்து ஏற்பட்டு விடுகிறது.
இது பிழை டா?
இப்போதே சில தமிழ் அன்பர்களுக்குக் கோபம் வந்திருக்கும்; சிலபேர், 'தமிழ்ப் பண்பாடே போய்விட்டது!’ என்று கூடக் குதிக்கத் தொடங்கி இருப்பார்கள். "பேருந் திலும் மகிழுந்திலும் வருகிறவர்களெல்லாம் சின்னம் சிறிய குழந்தைகளா? அல்லது அவர் கள் அனைவருமே தாழ்ந்த நிலையில் உள்ளவர் களா? அவர்களை எல்லாம் 'நில்' என்று ஒருமையிலேயே (ஏக வசனத்தில்) கட்டளை இடுவதா?’ என்றெல்லாம் அவர்கள் முணு முனுக்கத் தொடங்கி இருப்பார்கள். ஆனால் இந்த மாதிரி இடங்களிலேதான் நாம் கொஞ் சம் தெளிவாக இருக்க வேண்டும். வீடு தீப் பிடித்து விட்டது என்ற செய்தியைச் சொல்ல வந்தவன், அடாண்ா ராகத்கில் பாட்டாக
9

Page 12
அதை இசைத்தது போல, - நாமும், இடம், பொருள் தெரியாமல் நமது மரியாதைச் சொற்களைப் பிடித்துக்கொண்டு தொங்கச் கிடாது.
உண்மையில், இங்கே நாம் பயன்படுத் தும் நில், கவனி, போ-என்னும் ஏவல் சொற் களால் யாருடைய மரியாதையும் கெட்டு விடவில்லை. காரணம், நாம் கட்டளை இட்டது பேருந்து மகிழுந்து போன்ற வாக னங்களைத்தானே தவிர, உள்ளே இருக்கிற வர்களைக் கூப்பிட்டு நாம் சொல்லவில்லை.
‘என்ன அய்யா இது? காருக்குப் பார்க்க வும் படிக்கவும் தெரியுமா?’ என்று சிலர் கேட்கலாம். காருக்குப் படிக்கத் தெரியா விட்டாலும் அந்த அறிவிப்பு காருக்கு உரியது தானே? சான்றாக, நமது மன்றத்தின் ஆண் டவையில் தீர்மானங்களை நிறைவேற்றுகி றோம். அப்போது எப்படி அதை வெளிப் படுத்துகிறோம்? இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று இந்த ஆண்டவை அரசைக் கேட்டுக் கொள்ளுகிறது, - இன்னின்ன செய்தி களை அறிந்து இந்த ஆண்டவை வருந்து கிறது என்றுதானே சொல்லுகிறோம்? ஆண் டவையில் எத்தனையோ படிப்பாளிகளும் பணக்காரர்களும் இருந்தாலும், - "ஆண் டவை அவர்கள் வருந்துகிறர்கள்" என்று நாம் சொல்லுவதில்லையே! -
பலபேர் சேர்ந்த ஓர் அமைப்பு அல் தினைச் சொல்லால் குறிக்கப்படுவது போல வே, நாம் ஏறிச் செல்லும் வண்டியின் வேகத்தைக் கருதிச் செய்யப்படும் அறிவிப்பு, அதையே முன்னிலைப்படுத்திச் செய்யப்படு வதிலே எந்தத் தவறும் இல்லை.
ஆள்கள் யாரும் இல்லாமல் ஆண்டவை இல்லை; அது தீர்மானங்களை நிறைவேற்று வதும் இல்லை. என்ருலும் அனைவரின் பொதுச்செயல் ஆண்டவையின் பேரால் (அல் திணை ஒருமையில்) குறிக்கப்படுகிறது. அதே போல், அந்த வண்டியின் வேகம் காரணமா, கவே செய்யப்படும் அறிவிப்பு, அதை நோக் கியதாகவே செய்யப்பட வேண்டும்.
நமது நீதி
வண்டிகளுக்கு உரிய அறிவிப்புகளிலே வழவழா என்று இருப்பது போலத்தான்,
O)

எல்லை மீறுகிற மனிதர்களை எச்சரிப்பதி லும், நாம், போதிய கூர்மை இல்லாமலே இருக்கிருேம்.நமது நீதி நூலைத்தான் பாருங் களேன்: ‘ஈர்ங்கை விதிரார் கயவர் கோடிறு உடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு”* என்பது குறள். 'கயவர்கள் மனமார மற்ற வர்களுக்குக் கொடுக்க மாட்டார்கள் அடித் துப் பிடுங்குகிறவர்களுக்குத்தான் கொடுப் பார்கள்" என்பது இதன் பொருள்.
கயவர்கள் கொடுப்பதில்லை என்பது மக் களின் அன்ருட அனுபவம். அவர்களிடம் போய், 'அடிக்கிறவர்களுக்குத் தவிர மற்ற வர்களுக்குக் கொடாதவர்கள் இருக்கிறார் களே, அவர்கள்தான் கயவர்கள்" என்று இலக்கணம் (Definition) சொல்ல வேண்டிய தில்லை. அவர்களை எப்படிக் கொடுக்கச் செய்வது, அல்லது அவர்களிடம் தேங்கித் துருப்பிடிக்கும் பொருளைக் கைப்பற்றி நல்ல வற்றுக்குப் பயன்படுத்துவது எப்படி என் னும் குரலையே நீதி நூல் முதன்மைப்படுத் திச் சொல்ல வேண்டும். ۔۔۔ ۔ , "
ஏற்கனவே நன்கு தெரிந்த ஒரு செய் தியை அதேவிதமாகத் திரும்ப ஒரு முறை சொல்வதால், நமது மொழியின் சொற்கள் வீணாகின்றன; செயல் எதுவும் நடைபெற வில்ளை. இத்தகைய கயவர்களைப் பற்றி, "எச்சிற் கையால் காக்கா ஒட்ட மர்ட் டான்" என்று மக்கள் தெரிந்துதான் வைத் திருக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, "ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும், பாடிக் கறக்கிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும். - அடித்துக் கறக்கிற மாட்டை அடித்துக் கறக்க வேண்டும்” என்று கூட அவர்கள் சிந்தித்திருக்கிறார்கள். அவர் களுக்கு வேண்டியதெல்லாம். ஒரு கூர்மை யான வழிகாட்டுதலும் அதைச் செய்வதற் குத் தேவையான உந்துதலுமே. அதற்குப் பயன்படாத விதமாக நாம் சொற்களை அழ காக அடுக்குவது நமது புலமையைக் காட்ட லாம்; நமது உள்ளார்ந்த நோக்கத்தை அது நிறைவேற்றாது.
தொண்டர்களைத் தூண்டுவதற்கு மட்டு மல்ல, கயவர்களை எச்சரிப்பதற்குக் கூட அப்படிப்பட்ட நேர்முக நீதி உரையே பயன் படும். "ஈர்ங்கை விதிரார் கயவர் கொடி

Page 13
துடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு என்ற பாடலே, 'ஈர்ங்கை விதிராக் கயவர் கொடிறு உடைக்கும் கூன்கையே நல்ஆண் மைக் கை" என்று அமைந்திருந்தால் எப் படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். 'ஈர்ங்கை விதிராக் கயவர் கொடிறு உடைக் கும் கூன்கையே நல்லாண்மைக் கை" என் பதைப் படித்த உடனே, கயவனே கூட நடுங்குவான்; 'கை உள்ளவன் எல்லாம், இதைப் படித்த உடனே நமக்கு எதிராகக் கை உயர்த்தி விடுவானே!" என்று அஞ்சு வான். அதன் மூலம் அவனே திருந்திக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா? திருத்தவும் திருந்தவும் உந்துதலாக உள்ள ஓர் உணர்ச்சி தானே நீதி நூலால் ஊட்டப் id- வேண்டும்?.
புரட்சிக் கவி
புதுவை தந்த புரட்சிக் கவிஞர் சுப்பு ர்த்தினமும் இது பற்றிச் சிந்தித்திருப்பதா கவே தெரிகிறது. ஒர் இடத்திலே, ‘‘நய முடன் நீ சொல்லுமட்டும் திருந்த மாட் டார், - நறுக்காக நாலு சொற்கள் தவில வேண்டும்!” என்று சொல்லுகிறர் கவிஞர். தலைவி ஒருத்தி, தன் தோழியிடம் சொல்லி வழி தவறிய தன் தலைவனிடம் (அவளேத தூது) அனுப்புவதாகக் குறிஞ்சித்திட்டிலே வருகிற ஒரு கருத்துரை இது.
இந்த வாக்கியத்திலேயே "நறுக்காக' என்னும் சொல் மிகவும் முக்கியமானது. சுருக்கென்று தைக்கும் விதமாக என்ற பொரு
ஞானம் ஒற்றுமைக்கு இட்டு அஞ்ஞானம் பல்வேறுபட்ட செய்கிறது.
ஒரு சமயத்தrரது கேடு தெ செல்வரது வழிபாடு அதனுட் முதலே.

எளிலே மட்டும் இதை ஆகாவில்லை கவிஞர் ஆங்கிலத்திலே அப்ற் (ap) என்று சொல்லு கிறோம் அல்லவா?-"இடத்துக்கும் நோக்குக் கும் பொருத்தமான’ என்னும் அந்தப் பொரு ளிலும் இந்தச் சொல் இங்கே ஆளப்படு கிறது. -
"சொல்லென்னும் அன்னது சூரத்தனத் துக்குத் தூண்டிவிட வேண்டும்; .அதில், சோதனைத் தீரமும் சாதனை வீரமும் துள்ளி வர வேண்டும்!" என்று சொல்லுகிறது.இக் காலப் பாட்டு. 'சொல்லைப் பொருளின்றித் தூவிக் களிப்பவன் சொப்பனக் கோமாளி. அந்தச் சொத்தையில் முத்துச் சுடர்கிறது என்பவன் சுத்தமே ஏமாளி' என்றும் அந் தப் பாட்டு எச்சரிக்கிறது. இதை எல்லாம் நன்கு உணர்ந்தே, "நறுக்காக நான்கு சொற் கள் நவில வேண்டும்" என்கிருர் புரட்சிக் கவிஞர்.
செம்மொழி
சரியான இடத்தில் சரியான சொல்லைப் பயன்படுத்திக் கருத்தையோ உணர்ச்சியை யோ செம்மையாக உணர்த்தும் செயலே சீரான மொழியாட்சி. அத்தகைய மொழி யாட்சித் திறனே நமக்குப் பெருமை சேர்க் கிறது; அதில் ஏற்படும் குறை, நம்மைத் தோல்விப் பள்ளத்திலே அல்லது செயலின் மைத் தடத்திலே தள்ளி விடுகிறது. இதை நன்கு உணர்ந்து, நமது இனிய செம்மொழி யின் சொற்செல்வத்தை நாம் உரியவாறு பயன் செய்து உயர வேண்டும்.
* செல்கின்றது. நிலைக்கு வழி
- இராமகிருஷ்ணர்
★ ★
ாடங்குவது புகும் நாள்
- விவேகானந்தர்
11

Page 14
யுகப் பிரசவம்
ിക്ക பஸ்சினுள் பாட்டு அமர்க்களம் செய்து கொண்டிருந்தது.
வாய் பிளந்து இருக்கும் கதவுப் பக்கத் தில் சிக்காராக அமர்ந்திருந்தார் பொன் னையா. உள்ளே நல்ல கூட்டம். வெளியே பொழிந்து கொண்டிருக்கும் வெய்யில் புழுக் கத்தை ஏற்படுத்த வேர்வையில் குளித்தபடி மனித ஜென்மங்கள் பெண் புரசுகள் வேறு அவிந்து கொண்டிருந்தது.
பொன்னையாவுக்கு இறங்கி விடுவோமா என்று கூடத் தோன்றியது. கிடைத்த இட த்தை விட மனமில்லை.
தனக்குப் பெற்றேல் நிரப்பப் போயி ருந்த ட்றைவர் இன்னும் திரும்பி வராத தால் "காசு வாங்கும் பெடியன் மீது ஒரு சீண்டல். ’
"கொஞ்சம் பொறுங்கோ , இன்னும் நாலைஞ்சு பேர் சேரட்டும். கட்டுபடியா காது?" என்ருன் காசு வாங்கும் பெடியன்.
மினிபஸ் "கண்டக்டரை காசு வாங்கும் பெடியன் என்றுதான் எங்களவர்கள் அழைக் கிருர்கள். கவுண்மேந்து பஸ்சா? சம்பளமா? கண்டக்டர் என்று அழைப்பதற்கு? ஊறிப் போன புத்தி, -
ட்றைவர் வந்து சேர்ந்த சில நிமிடங் களில் 'தக்குப்பிககென்று ஓடி வருகிருர் சுப்பிரமணியம். சதைத் தொங்கல்கள் வேர் வையை அணைகட்டி நிற்கின்றன. "சரக் புரக்" என்கின்ற பட்டு உடுப்பு, அணைந்து புரளும் தங்கச் சங்கிலி, "சாதிமான்" நினைப் பில் வலிந்து அழைத்த கம்பீரம் பரிதாபப் படுகிறது.
வாய் பிளந்த கதவருகில் வந்து ஒரு முகச்சுழிப்பு.
உள்ளே இடமில்லை. சிறிய நுழை வாச லால் கொழுத்த உடலை நுழைக்கும் சிரமம் வேறு.
12

காவலூர் ஜெகநாதன்
**வெளிக்கிடப் போறம் நிண்டுகொண்டு வர ஏலுமெண்டால் ஏறுங்க" பெடியன் பச்சைக் கொடி காட்டிவிட்டான்.
*ராஜா பொண்ணு அடி வாடியம்மா" மினிபஸ் பாட்டு.
சுப்பிரமணியம் தன்னையறியாமலே பிாட் டுக்கேற்ப உடல் நெளித்து. எப்படியோ srps)at 't-rri.
**விர்' என்று வலு சுகமாக புறப்படு கிறது மினிபஸ்,
மூன்றடி பஸ்சில் ஐந்தடி உடலை குலுக் கிக் கொண்டு விழித்தவரின் முன்ஞல் பொன் årsruumr... :
பாம்பை மிதித்தவரானர் சுப்பிரமணியம் தானும் தன் பாடுமாக வெற்றிலையை
மென்று விழுங்கிக் கொண்டு கம்பீரமாக இருக்கும் பொன்னேயா.
முன்னுல் வெளவால் தொங்கலில் சுப் பிரமணியம்,
* நீ என்ன ராஜாவின் பொண்டாட் டியோ’ பாடிக் கொண்டு மினிபஸ் தன் பாட்டில் ஒடுகிறது.
2
ஒழுங்கில்லாமல் அங்குமிங்குமாக அமைந திருக்கும் அந்தக் குடிசைகளின் வாசல்களைப் பழக்கமானவர்களைத் தவிர மற்றவர்கள் கண்டு பிடிப்பது அவ்வளவு சுலபமான காரிய மல்ல. r
கனகலிங்கம் கஷ்டங்களைக் கண்டு களை த்து விடவில்லை,
புளித்துப் போன மதுவின் நெடி வேறு மூக்கோடு சமர்செய்து கொண்டிருக்க ஒவ் வொரு குடிசையாகப் புகுந்து புறப்பட்டார்.

Page 15
கிராமத்தில் உள்ள சிறிய பாடசாலேக்கு தலைமை ஆசிரியராக அவர் வந்து சேர்ந்து இரண்டு வருடங்கள்தான் ஆகின்றன. அந் தப் பாடசாலையில் பொழுது போக்கி சுகம் காண கனகலிங்கத்தின் மனித நெஞ்சம் உடன்படாததால் விடுமுறை நாளான இன்று கூட பள்ளிக்கூட விடயமாக புறப்பட்டிருக் கிருர்,
"பொன்ன்ையாண்ணை. பொன்னை யாண்ணை** ኣ
உடற் பயிற்சியாக முதுகை வளைத்து வெளியே வந்தார் பொன்னையா,
வாங்க வாத்தியார் முற்றத்தில் இரு ந்த நொண்டிக் கதிர்ையை சாரத்தால் துடைத்து விட்-ார்.
"வாத்தியார் எப்பிடி எங்கட பெடியள் படிக்கிருங்களே. அந்தக் காலத்திலை மழை தண்ணிக்குக் கூட ஒதுங்கியிருக்க மாட்டுது $ git, ' ' w
'அதனுலைதான் உங்கட சனத்தின்ர வாழ்க்கை கிடந்து சீரழியுது"
'அந்தக் காலம் நமக்கெண்டு பள்ளிக் கூடம் இருக்கவில்லை. அலங்கட பள்ளிக் கூடத்துக்குப் போனுல் நிலத்திலேதான் இரு க்க விடுவான்கள்’ கசிந்த கண்களைத் துடை த்து விட்டுக் கொண்டார் பொன்னையா.
அந்தக் காலம் மலையேறிப்போச்சுது'
என்ன வாத்தியார் தெற்குப் பக்க மாய் திரும்பிப் பாருங்க. உங்கட ஆட்கள் என்னமாய் முன்னேறுதுகள் எங்கட சனம் .ம் பெருமூச்சு விட்டார்.
**நீங்களும் ஏன் அப்பிடி முன்னேறக் கூடாது’’ W
வசதிகளும் வாய்ப்பும் அவங் களுக்குத்தான் இருக்குது. எங்கட பிள்ளைய ளுக்கு பனை மரத்தைத் தவிர வேறென்ன இருக்குது?' /
வசதிகளும் வாய்ப்பும் தானுக ഖTrഷ്ട நாமதான் உண்டாக்க வேணும்' என்ற கனகலிங்கம் மாஸ்டர் தான் வந்த சக பத்தை கூறினர். ஐந்தாம் வகுப்பு வரை

இருக்கும் பள்ளிக்கூடத்தில் வகுப்புகளே அதி கரிக்கக் கோரி மாலையில் ஒரு கூட்டம் நட த்த இருந்தார். ஊருக்குத் தலைமை ஆள் என்பதால் பொன்னையாவையும். . Y.
3
நாலைந்து பள்ளிக்கூடங்கள் கட்டுவதற் குத் தேவையான பணத்தை தன்னுள் விழு ங்கி விட்டு திமிருடன் நிமிர்ந்து நின்றது சுப்பிரமணியத்தின் வீடு, விருந்தையில் இரு ந்த சாய்வு நாற்காலியில் காவல் நாய்போல் படுத்துக் கிடந்தார் சுப்பிரமணியம்" சுரண் டிக் கொழுத்த உடலைச் சுமக்க சிரமப்பட் டுக் கொண்டிருந்தது நாற்காலி.
வயிற்றைத் தடவிக் கொண்டே அவர் பார்வையை ஒடவிட்ட போது பொன்னையா வந்து கொண்டிருந்தார்.
உச்சி குளிர்ந்து வயிறு சில்லிட்டது. எல்லா இடங்களிலும் பனை ஏறிவிட்டு கடைசியாகத்தான் சுப்பிரமணியம் வளவுக்கு வருவது பொன்னையாவின் வழக்கம்.
பனப் பங்குக் கள்ளைக் கொடுத்துவிட்டு "ஐடன்பனக் கள்ளில் இவர் ஊற நாலு கதை கதைத்து விட்டுத்தான் பொன்னையா புறப்படுவார்.
கொடுத்தேன் நடந்தேன் என்பது போல். ሎ
பொன்னையாவுக்கு கூட்ட த் துக்கு ப் போகும் அவசரம்.
சுப்பிரமணியத்திடம் பலத்த சந்தேகம். ‘பொன்னையா. சைக்கிளில் மூட்டியைக்கொழுவி வைத்து விட்டு திரும்பி வந்தார் பொன்னையா.
**அப்பிடி இரு பொன்னையா. என்ன இண்டைக்கு அவசரமாய்ப் போருய்" தற் காலிகமான கனிவு.
* 'இண்டைக்கு எங்கட பள்ளிக்கூடத் திலே கூட்டம் இருக்குது. அதுதான்.
13

Page 16
'ம். எந்த நாளையிலை பள்ளிக்கூடத் தைக் கண்டிருப்பியள். இப்ப என்னெண் டால் பள்ளிக்கூடம் அதுக்கொரு கூட்டம். ம்.’’ தனக்குள் முணுமுணுத்தார்.
"எங்கட பள்ளிக்கூடத்திலை வகுப்பைக் கூட்டிறதுக்கு அலுவல் பார்க்கப்போறம்’
எேன்ன கதை இது எங்கட- பள்ளிக் கூடத்திலையும் அஞ்சு மட்டும்தான் இருக்குது. தலை இருக்க வால் ஆடுறது மாதிரி .'
'இருந்தாலும் உங்கட பிள்ளையளை பட் டணம் அனுப்பிப் படிப்பிப்பியள் எங்களாலை முடியுமே...'
**அது நடவாது பொன்னையா.
9.
* கனகலிங்கம் வாத்தியார் விடமாட் டார். கட்டாயம் எடுத்துத் தருவார். பொன்னையாவின் நம்பிக்கை வார்த்தைகளா யின.
**கனகலிங்கம் ஆரு என்ர மருமகன் தானே. அவன்ர குலம் என்ன கோத்திரம் என்ன. பேசாமல் சம்பளத்தை எடுத்துக் கொண்டு கிடக்கிறதுக்கு. வீரூக் கிடந்து கஸ்டப்படுகிறன்.
* நேரம் போட்டுது நான் வாறன்’
** இரு பொன்னையா. உனக்கென்ன பிள்ளையா குட்டியா. ஒண்டிக்கட்டை. பள்ளிக்கூடத்தைப் பெரிசாக்கி எல்லாரும் படிச்சு நிமிர்ந்திட்டால் உன்னை மதிக்க மாட்டாங்கள். உன்னை மிஞ்சி.’
"என்னை மிஞ்சித்தான் என்ர சனம் வளரவேணும். அப்பதான் நாளைக்கு வாற என்ர சந்ததிக்கும் மதிப்பு வரும்.’’ -
விறுக்கென்று எழுந்து நடந்தார் பொன் &soru unr.
செயலிழந்து இருந்தார் சுப்பிரமணியம்.
குதிரைச் சவாரி போல் சுகம் காட்டி மினிபஸ் பண்ணைப் பாலம் வழியாக துள் ளித் துள்ளி ஓடிக்கொண்டிருந்தது.
14

ஒவ்வொரு துள்ளுக்கும் தலை அடித்து மீண்டது. சுப்பிரமணியம் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு நினைவின் பொறி அவரது நெஞ்சில் சுட்டது.
அப்போதெல்லாம் மினிபஸ் ஏது கட கடக்கும் தட்டி வான். இதே போலத்தான் கோலம். ஆனல் இளமை மிடுக்கோடு ஓடி வருகிருர் சுப்பிரமணியம். கதவே இல்லாத அகன்ற வாயின் அருகே வந்து முகம் சுழித் தார். r
உள்ளே இடமில்லை.
அவசரம் உள்ளே தள்ள. முன்னுல் இருப்பது பொன்னையாவின் தகப்பன்.
பாம்பை மிதித்தவராக தோளில் கிடந்த சால்வையை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு ‘இருங்க இதிலை' என்றபடி வலு பக்குவமாக எழுந்து நிற்கிருர் பொன்னையா வின் தகப்பன். :
சிக்காராக பெருமிதமும் கம்பீரமும் பொலிய அமர்ந்து ஒரு வெற்றிப் பார்வையை சுழல விடுகிறர் சுப்பிரமணியம்.
பயணம் முழுவதும் கூsனி நின்றபடி பொன்னையாவின் தகப்பன்.
நிமிர்ந்து இருந்தபடி சுப்பிரமணியம்.
இப்போது தலை கீழாகி.
Llyfranu Lib அவதிப்படுகிறர் என்று மனிதப் பண்பு உந்த சிறிது இடைவெளி காடடுகி ருர் பொனனையா. இரண்டங்குல இடை வெளியில் இருபது அங்குல பீடத்தை அது வும் முகம் சுளித்தபடி திணிக்கிருர் சுப்பிா மணியம்.
ஊசி நுழைய இடம் கொடுத்தால் போ தும் எதையெதையெல்லாமோ நுழைக்கத் தெரிந்த புத்தி.
முயற்சியைத் தொடங்கும் போது.
'இறக்கம். இறக்கம்..”*
மினிபஸ் சடாரிட்டு நிற்கிறது.
உதறி எறிய பதறி விழுகிருர் சுப்பிர மணியம். ,

Page 17
நின்று வந்த ஒருவன்தான் இறங்கிஞன். சுப்பிரமணியம் மீண்டும்வெளவாலாக.
மாலை நேரம் பள்ளிக்கூடத்துச் சந்தியில் நிற்கும் ஆல
ரத்தில் காகங்கள் மொய்க்கத் தொடங்கி - 601 ساسان
பொன்னையாவைச் சுற்றிச் சிலர்.
‘இந்த முறையும் சுப்பிரமணியத்தாற்ற திருவிழாதான எழுப்பமா இருக்கும்’ பொன னையாவை துணடிவிடமெய்ேைற ஒருவர் din D (G); f.
‘அதையும் பார்ப்பம் எங்கட திருவிழா தான் இந்த முறை எழுப்பம்' என முர் மற்றவர்,
‘மற்றவை செய்யிறனதப் பற்றி நமக் கென்ன. நாம் செய்யியல்தச் சரியாச் செய்ய வேண்டியதுதான். இது ஒரு இளை ஞ்ன.
‘விடிய விடிய நாலைஞ்சு செற் சின்ன மேளம் பிடிசசால் எலலாம் சரி. இது ஒரு கிழவர்.
சில நிமிடங்கள் நீண்ட மெளனம்.
உடைக்கின்ற பொன்னைய வின் குரல்.
ஊரைச் சுரண்டிக் கொழுத்திருக்கிற வங்களோட நமக்குப் போட்டி ஒண்டும் தேவையில்லை. நம்மட பெடியள் நாடகம் ஏதோ பழகிக் கொண்டிருந்தவங்கள் அதைப் போட்டு திருவிழாவைச் செய்ய வேண்டியது தான்*
பொன்னையாவின் முடிவோடு சந்தியில் வைத்தே காசுக் கணக்குப் பார்த்து கூட்டம் கலைத்தது.
சிவன் கோயிலின் சுற்றுப் புறத்தில் உள்ள கிராமத்தவர் ஆவலுடன் எதிர்பார்த்

திருந்த நாட்களும் வந்து விட்டன.
முதலாம் திருவிழா செய்யும் கிழக்குப் பகுதியார் இரண்டு சின்னமேளம் பிடித்தால் இரண்டாம் திருவிழா மூன்று சின்னமேளத் தால் அல்லோலகல்லோலப் பட்டது.
நிகழ்ச்சி நிரல் போட்டியில் திருவிழாக்
காரர்கள்.
ஒவ்வொரு நாள் திருவிழாவுக்கும் சுப்பிர மணியம் வருவார். பக்தர்கள் முதல் குருக் கள் வரை அவருக்குத் தனியான மரியாதை .
அன்று ஐந்தாம் திருவிழா, பொன்னையா பகுதியின் திருவிழா என்றுதான் எல்லாரும் கூறிக்கொள்வார்கள். இரவு நாடகம் நடக்க இருந்தது. கனகலிங்கம் மாஸ்டர் எழுதி இயக்கிய நாடகம் "கிருதயுகம் எழுகிறது" நோட்டீசைப் பார்த்துப் பார்த்து வெப்பி சாரத்தில் சுப்பிரமணியம் புழுங்கிக்கொண்டு இருந்த போதுதான் பொன்ஃணயா கோயி லடிக்கு வந்து சேர்ந்தார்.
கசங்கியிருந்த பட்டு வேட்டியை கை யால் தடவி விட்டுக்கொண்டு Qurr6572,7 uur வர அவரைத் தொடர்ந்து கந்தன். நாகன். கணபதி.
'நாடகமும் போடப்போறியள் என்ன .." ஒரு செருமலுடன் உள்ளே போளுர் சுப்பிரமணியம்.
சோக்கான நாடகம் இருந்து பாருங் களன்' என்ருர் பொன்னேயா,
காதில் விழுத்தாமலே உள்ளே போனர் சுப்பிரமணியம்.
உபயகாரர் பொன்னேயா வெளியிலேயே நின்ருர்,
'திருவிழா செய்யிறது நீங்க. வெளி யிலே ஏன் நிற்கவேணும்' என்ருர் பக்கத் தில் நின்ற கனகலிங்கம் மாஸ்டர்.
உண்மையேதான்.
°gr岳 குடுக்கிறதுக்கு கடமையிருக்கு. கடவுளட்டப் போறதுக்கு உரிமையில்லையா'
இவர்கள் முன் னேறினர்கள்.
15

Page 18
பேய் பிடித்தவர் போல் ஓடி வந்தார் சுப்பிரமணியம். கையில் குடைக்கம்பு. பின் ஞல் அவரது பக்தர்களும் வெறிக் கோலத் தில்.
'அவன் கனகலிங்கத்துக்கு அடியடா முதலிலை’
பொன்னையா குறுக்கே பாய்வதற்குள் கனகலிங்கத்துக்கு அடி விழுந்து விட்டது. வெறி கொண்டு பாய்ந்து பறித்த பொன் னையா ஓங்கி அறைந்தான். சுப்பிரமணியத்
துக்கு ஆனமான அடி.
பிரளயம் பிரசவமானது. *அடிச்சுப் போட்டான். மரமேறுற மயிர் எனக்கு அடிச்சுப் போட்டான்"
'அடிக்கிறதில்லையடா பாளை சீவுற கத்தி யாலை குடலை சரிப்பன் ஒ.”* -
6
ஐந்தாம் திருவிழாவில் முளேவிட்டுக் கிளர்ந்த உணர்ச்சி அதைத் தொடர்ந்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் திருவிழாக் களிலும் சாதி வெறியர்களுக்கெதிராக சீறி எழுந்தது.
தனது கடைசித் திருவிழாவை பொப் இசையுடனும் காபரே நடனத்துடனும் நட த்தி வென்றுவிட்டதற்கென்ன..,. சுப்பிர மணியத்துக்குப் பலத்த தோல்வி.
அவரும் அவர் போன்றவர்க்ளும் காலம் காலமாகக் கட்டியெழுப்பி வந்த சாதித் திமிருக்குப் பலத்த அடி.
அடிபட்ட புலியாகத்தான் அவர் சீறி எழுந்தார். -
விதை போட்ட கனகலிங்கம் மீது. ‘வாத்தியார் e e நாங்க போராடப் பிறந்தனங்கள். போராடி வெற்றியும் காண் பம். நீங்களும் வீணப் பகை தேடிக்கொண் டு. "
'வீண் இல்லைப் பொன்னையா இது தேவை?"
"'என்ன இருந்தாலும் நீங்க உங்கட ஆட்களைப் பகைச்சுக் கொண்டு . உங்களைத் தான் குறிவைச்சு கொலை வெறியிலை அல யிருங்கள்’’

சிரித்தார் கனகலிங்கம் மாஸ்டர், "ஆரு பொன்னையா எங்கட ஆட்கள். இது தனியா சாதி சம்பந்தப்பட்ட பிரச்சனை எண்டு நினைக்கிறியளா? சாதியைச் சாட்டி அவங்கள் எல்லா வகையிலும் சுரண்டிக் கொழுக்கிருங்கள். '
சிந்தனையில் பொன்னையாவின் நெற்றி சுருங்கியது.
“என்னை எங்கட ஐயா இட்டுக்கட்டி படிக்க வைச்சதுக்கென்ன ஐயாவுக்கென்ன நடந்தது. சுப்பிரமணியத்தாற்ற நிலத்திலை மாடா உழைச்சு இன்றைக்கு ஓடாச் சரிந் திருக்கிறர். அவரை நிமிர்த்திப் போட்டு. எங்கட சமூகத்திலை எங்கட ஐயாவைப் போல எத்தனைபேர் சுரண்டப்பட்டு.”*
பொன்னையாவிடம் இப்போது தெளிவு. * "எங்கட சமூகத்திலையும் உங்களைப் போல சுரண்டப்படுகிற - ஒடுக்கப்படுகிற ஆட்கள் இருக்கினம். எல்லாரும் இணை ந்து. பொதுவான எதிரியை...”*
W "வாத்தியார்' என்றபடி கனகலிங்கத்
தின் கையைப் பிடித்தார் பொன்னையா
"எங்களுக்குள்ளும் சாதி வெறியை ஊட்டி பிரிச்சுவைக்க முயலுவாங்க و (( و إنه யெல்லாம் வென்று. 射
**வென்று." பொன்னையாவுக்கு குறி தெளிவாகப் புரிந்தது.
7
சிவன் கோயில் தேரடியில் இரண்டு கொழும்பு "மாப்பிள்ளைகள் நின்ருர்கள்.
"மச்சான் இமயம் பார்த்திற்றியா ..”*
**சரியான கிறவுட்டடாப்பா. இருநூறு நாள் குறையாது”
**அவன் மன்னன்ர நடப்பு.ம்'
‘சர்’ என்று வந்து கோயிலின் முன் ஞல் நின்றது சுப்பிரமணியத்தின் கார், கொழும்பு மாப்பிள்ளைகள் கோயிலின் பக்க மாக கைதொழுது நின்ருர்கள். சுப்பிரமணி யத்திடம் நல்ல பெயரெடுத்தால்தான் ஊரில் மாப்பிள்ளைச் செல்வாக்கு உயரும் என்பது உண்மைதான். அவருட ன் பகைத்ததால்

Page 19
தானே கனகலிங்கம் மாஸ்டர் செல்வாக்கு இழந்தார்.
“மரத்திலை ஏறுறவங்கள் நம்மட தலை லையும் ஏறப் பார்க்கிருங்கள் விடப்படாது" என்று கறுவிக் கொண்டே சனசமூக நிலை யக் கட்டிடத்துள் நுழைந்தார் சுப்பிரமணி பம். அவரது பகுதியைச் சேர்ந்த சிலர் ஏற் கவவே வந்து இருந்தார்கள். சிலர் வந்து கொண்டிருந்தார்கள்.
கூட்டம் ஒன்றுக்கு தனது சமூகத்தவர் களை அழைத்திருந்தார் சுப்பிரமணியம்.
காதுக்கு எட்டி கனகலிங்கமும் சைக்கி ளில் வந்து சேர்ந்தார்.
'பொன்னையாவின்ா ஆட்கள் தலைக்கு மிஞ்சிப் போனுங்கள். இனிமேல் அவன்க ளுக்கு கள்ளுச் சீவுறதுக்கு மரம் குடுக்கப் படாது" என்ருர் சுப்பிரமணியம். கொதிப் :ம் ஆத்திரமும் அவர் குரலில் வெளிப்பட் |-3úl ·
'மரம் சீவப் பனையில்லாமல் நடுருேட் டிலை நிண்டால்தான் பாடம் படிப்பான்கள்' 'இப்ப அவன்கட பிள்ளையஸ் பள்ளிக் கூடத்திலே பாடம் படிக்குதுகள்' என்ற ஒருவர் அர்த்தத்துடன் கனகலிங்கத்தையும் தரும்பிப் பார்த்துக் கொண்டார்.
'பனைமர விசயத்தை தீர்மானமா நிறை வேற்ற வேனும்' என்ருர் சுப்பிரமணியம். க:ைகலிங்கம் அமைதியாகக் குறுக்கிட் ι- τff.
**அது சரி அவர்கள் மாம் சீவாமல் விட்டால் உங்களுக்குக் கள்ளு.”*
உணர்ச்சி வசப்பட்டுக் கூறினர் சுப்பிா மணியம்
** நாங்க கறுப்பு பாவிப்பம்' கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் நிமிர் ந்த போதுதான் அவருக்தக் கனது தவறு புரிந்தது. "தண்ணி பாவிக்காத மனிசன் என்று ஊர் புகழும் நிலையில் .
"சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னினன்' என்று சமாளித்தார்.
ஊர் விசயத்துக்கு வந்தது. 'அவங்கள் எங்களை மிஞ்ச விடப்படாது எங்களுக்குப் பணி புரியத்தான் அவங்கள் இருக்கிறது' என்ருர் சுப்பிரமணியம்.
'அப்பிடிச் சொல்லுங்க*’ ஒத்துTதினுர் ஒருளர்.
"எங்களுக்கு கள் இறக்கித் தாறதுக்கு பொன்னையா பகுதி. எங்களுக்கு துணி வெளு த்து தாறதுக்கு கட்டாடி சின்னத்துரை பகுதி,
w எங்களுக்கு மீன் பிடிச்சுத் தர சேமாலை பகுதி." கூறிக்கொண்டே போன சுப்பிர

மணியத்தை ஆத்திரத்துடன் இடைமறித் தார் கனகலிங்கம்.
"அதைப் போலதான் உங்கட நிலத் திலை உழைக்கிறதுக்கு இவங்கள் . எங்க ளுக்கு எங்களுக்கு என்கிறீங்களே அது எத் தனை பேர். நீங்களும் உங்களைப் போல ஒரு சிலரும். நாங்க. நாங்க'
கூட்டம் குழப்பத்தில்தான் முடிந்தது.
8
மினிபஸ் இதமாகத் தள்ளிக் குறித்து ஓடிக்கொண்டிருந்தது. "ஊய் 'ஆஹய்‘ என்று காற்று வீசிக்கொண்டிருந்ததால் இப்போ தெல்லாம். வேர்வை மறைந்து ஒரு சுகம் பரவியிருந்தது. பாட்டு வேறு காற்றில் பொசி த்து கலகலப்பை 'ஊட்டியது. மிதகருகில் ஒரு துள்ளு. மண்டை இடிப. . சூழலின் இதம் கழன்ற எரிச்சலுடன் பல்லை நறுநறுக்கிருர் சுப்பிாமரிையம்:
பொன்னையாவையும் தமக்குப் புறம் திரும்பிவிட்ட காலத்தையும் நினைத்து உள் ளூாப் புழுங்கிக் கொண்டிருந்த அவர் இப் போதுதான் மினிபஸ்சினுள நிதானமாகப் பார்க்கிழுர்,
உள்ளே. சின்னத்துரை, சேமாஃல, கனகலிங்கத் தின் எலும்பான தகப்பன். எல்லாரும்." எல்லாரும். W
வலு சிக்காராக கம்பீரமாக அமர்ந்த Lt. . . .
சுப்பிரமணியம் ஒரு இடமும் இல்லாமல் அவதியுடன் நிற்கிருரர். AV - *" என்ன விண்ணுணம் பார்த்துக் கொ ண்டு. காசை எடும்' பெடியஸ் அதட்டு கிரு?ன்.
'எட இவன் சேமாலை பகுதிப் பெடியன் போல கிடக்கு. திமிரைப் பார்' மனதள் கறுவியபடி காசை எடுத்துக் கொடுக்கிறார். 'இ வங்கள் பஸ்காரர்களுக்கு நல்ல உழைப்பு .' என்று இவர் முணுமுணுக்கும் போதே "இது சின்னத்துரை பகுதியான்ர பஸ் என்ற உண்மை சுடுகிறது.
'அவங்கள் ஒண்டாகியிட்டாங்கள். ஒண்டாகி எல்லாத்தையும் பிடிச்சிட்டாங் கள் நாம் . " பெருமூச்சு விடுகிருர் சுப்பிர மணியம்.
புதிய யுகம் நோக்கிய பயணம் போல மினிபஸ் கம்பீரமாக ஒடிக்கொண்டிருந்தது.
இந்த ஐக்கியம் அந்த யுகத்தைத்தான் பிரசவிக்கும்.

Page 20
சீனுவில் பணிபுரியும் திரும
9(ወj
"மது யாழ்ப்பாண சமூகத்திலிருந்து ஒரு இளம் பெண் தொழில் நிமித்தமாக தன்னந் தனியாக சீனுவுக்கு சென்றிருக்கி ரூர் என்ருல் புதுமையாக இல்லையா?
இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் சிறப்பு பட்டதாரியான இவர் 1968ம் ஆண்டு பீக்கிங் அயல் மொழிப் பதிப்பகத்தில் பணி புரிய கிடைத்த சந்தர்ப்பத்தை துணிவுடன் ஏற்றுக்கொண்டு சீன சென்றர். பின்னர் பீக்கிங் வானெலியில் பணி புரியும் திரு. சின்னத்தம்பியை அங்கேயே திருமணம் செ ய்து கடந்த எட்டாண்டுகளாக தமிழ்ப் பணி புரிந்து வருகிருர், அண்மையில் மதுரைத் தமிழ் மகாநாட்டில் இவரை சந்தித்து பேட்டி காணும் சந்தர்ப்பம் நமது கிருதயுகப் பத்தி, ரிகை நிருபருக்கு கிடைத்தது. அந்தப் பேட் டியையே நாம் வாசகர்களுக்காக இங்கே தருகின்ருேம். இவர் தம் வாழ்வை கம்னியூசக் கொள்கைகளுக்காய் அர்ப்பணித்த காலஞ் சென்ற தோழர் கார்த்திகேசனின் மூத்த புதல்வியாவர்.
கேள்வி: உங்களுக்கு சீனு செல்லும் சந் தர்ப்பம் எவ்வாறு அமைந்தது? முதன் முத லாக ஒரு கம்யூனிச நாட்டிற்கு தன்னந் தனியாகப்போவது உங்களுக்கு எந்தவித அச் சத்தையும் ஏற்படுத்தவில்லையா?
பதில் நான் பல்கலைக்கழக பரீட்சை முடிந்து வீடு வந்திருந்த போது சீளுவில் சென்று தமிழ்ப் பணி ஆற்ற முடியுமா? என்று என் அப்பா கேட்டார். நானும் உடன்பட்டேன். அதற்கு இரண்டு காரணங் கள். பல்கலைக் கழகத்தில் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்ற நான் இன்னுெரு தேசத் தில் தமிழ்ப் பணி செய்யப் போவது ஒன்று. மற்றது, இந்தப் பயனுள்ள வேலையை நான் நிறையக் கேள்விப்பட்டிருந்த சீன நாட்டில் செய்யப் போவது. சீன நாட்டின் வளர்ச்சி களை நேரடியாக அறிய இந்த சந்தர்ப்பம் தவுமென்று எண்ணினேன். சோஸலிச சீன
IS

தி ராணி சின்னத்தம்பியுடன் பேட்டி
பாதுகாப்பானது என்று நான் அறிந்திருந்த தால் எனக்கு அங்கு போவதில் எந்தவித பயமும் ஏற்படவில்லை. 'சீனு செல்ல ராணிக் குப் பயமா’ என்று அம்மா கேட்டபோது என் ஐந்து வயது தங்கை சுமதி "ராணி அக்காவுக்கு எதற்குப் பயம், சீனவில் மா ஒ சேதுங் இருக்கின்ருர்’ எனக் கூறினுர்,
கே: சீனுவில் நீங்கள் என்ன தொழில் செய்தீர்கள்?
ப; நான் பீக்கிங் அயல்மொழிப் பதிப் பகத்தின் தமிழ்ப் பகுதியில் மொழிபெயர்ப் பாளராகவும், மொழி ஆலோசகராகவும் ஆசி ரியராகவும் பணி புரிந்தேன். நாம் பிரதான மாக தலைவர் மா ஒ சேதுங்கின் படைப்பு களை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளோம்.
கே சீனப் பெண்களின் சமூக நிலைம்ை பற்றிச் சற்றுக் கூற முடியுமா?
பதில்: சீனப் புரட்சி, பிரமாண்டமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள க. அங்கு ஏற் பட்ட பொருளாதார சமூக மாற்றங்களுடன் சேர்ந்து பெண்களின் அந்தஸ்திலும் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
சீனப் பெண்கள் ஆண்களுக்கு பெண்கள் நிகர் என்ற முறையில் வாழ்க்கை நடத்து

Page 21
கின் ருர்கள். ஆண்களேப் போலவே பெண்க ளும் புரட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டார்கள். பலர் உயிர், உடமை என்ற எந்தவித தியாகத்தையும் செய்யத் தயங்க வில்லை தற்போது நகர்ப்புற பெண்களும் சரி, கிராமப்புற பெண்களும் சரி, அனைவ ரும் உற்பத்தி உழைப்பில் ஈடுபடுகின்ருர்கள்.
சீனக் குடும்பங்க்ளில் கணவனும் மனைவி யும் மாறி மாறி குடும்ப வேலைகளைச் செய் கிருர்கள். கணவன் வேலைக்குச் சென்றிருந் தால் மனைவி சமையல் மற்றும் பிள்ளைகளைப் பார்க்கும் வேலையும் செய்கின்ரு * , மனைவி வேலைக்குச் சென்றிருந்தால் கணவன் இவ் வே லேகள் அனைத்தையும் செய்கின்ருன், என் னுடன் வேலை செய்த சீன நண்பர்களின் வாழ்க்கையை அவதானித்துத் தான் நான் இதனைச் சொல்கின்றேன்.
áført பெண்கள் விஞ்ஞானி முதல், விற்பனைச் சிப்பத்தி வரை சகல துறைகளி லும் தொழில் புரிகின்ருர்கள்.
கே. சீனப் பெண்கள் தம்மை அழகுப் படுத்திக் கொள்வதில் எந்தளவிற்கு அக்கறை காட்டுகிறர்கள்?
ப; சீனப் பெண்களும் தம்மை அழகு படுத்துகின்ருர்கள் தான். ஆணுல் ஒழுங்கான அழகுபடுத்தல் என்று நான் அதனைக் கூறு வேன். பொதுவாக அவர்கள் ட்ரவுஸர் அணி கிழுர்கள். கோடை காலங்களில் மாத்திரம் reiss. போன்றவற்றை அணிவார்கள். சீனப் பெண்கள் நகை அணிவதில்லை. குளிர், வரட்சி ஆகியவற்றிலிருந்து தமது தோலைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நண்டு, கிறீம் முதலியவற்றைப் போடுகின் மூர்கள். லிப்ஸ் டிக் முதலியவற்றை வெகு சிலரே பயன் படுத்துகின்றர்கள்
கே: நவசீன அரசு பெண்களின் அந் தஸ்தை உயர்த்த என்ன நடவடிக்கைகளை மேற்கெண்டிருக்கிறது ?
ப. பெண்கள் சமூகத்தின் சரிபாதி. அவர் கள் அரை வானத்தைத் தாங்குகின்றர்கள். பெண்களின் உணர்வு பூர்வமான பங்காற்ற லின்றி சமுதாயம் முன்னேற முடியாது. தலைவர் மா ஓ சேதுங் வகுத்த இந்தக் கொள்கை நெறியின்படி சீன அரசு செயற் பட்டு வந்துள்ளது. முன்னர் குறிப்பிட்ட

வாறு பெண்கள் உற்பத்தி உழைப்பில் ஈடு படுதல், சாப்பாட்டு விடுதிகளையும், பாலர் பராமரிப்பு நிலையங்களையும் அமைத்தல் (1Ք5 லிய நடவடிக்கைகளின் மூலம் நவசீன அாசு பெண்களை குடும்ப வேலைகளிலிருந்து பெரு மளவிற்கு விடுவித்து அவர்களையும் நாட்டின்
முன்னேற்றத்தில் பங்குபற்றச் செய்துள்ளது.
கே. சீனுவில் திருமணங்கள் காதல் திரு மணங்களா? அல்லது பெற்றேர் ஏற்பாடு செய்யும் திருமணங்களா? メ
ப; நகரங்களில் பெரும்பாலும் காதற் திருமணங்கள் தான் இடம்பெறுகின்றன. வேலைத்தலங்களில் அல்லது வேறு இடங்க ளிற் சந்தித்து நீண்ட காலம் பழகிய பின் னர் அவர்கள் பொதுவாகத் திருமணம் செ ய்து கொள்கின்றனர் கிராமங்களில் இன் னும் பெற்றேர் ஒழுங்கு செய்யும் திருமணங் கள் இடம்பெறுவதாகவும் அறிந்துள்ளேன்.
கே: திருமண்ம் எவ்வாறு நடைபெறு கின்றது?
ப: பதிவு செய்தல்தான் திருமணத்தின் முக்கிய நிகழ்ச்சி. அதற்குப் பின்னர் ஒவ் வொருவரும் தமது விருப்பத்தின்படி தமது திருமண விழாவைக் கொண்டாடுகின்றனர். சிலர் விருந்தளித்தும் வேறு சிலர் சிறிய "பார்ட்டி"களை நடத்தியும் இதனைச் செய் கின்றனர். அநியாயமாக, ஆடம்பரமாகத் திருமண விழாவை நடத்துவது அவசியமில்லை என்ற உணர்வுடன் அவர்கள் செயற்படு வதை நான் பலதடவை கண்டுள்ளேன்.
கே: இறுதியாக சீன மக்களின் குடும்ப வாழ்வு பற்றிச் சற்றுக் கூறுங்கள்?
ப: சீன மக்கள் மிகுதியான குடும்ப பாசம் உடையவர்கள். அவர்கள் தமது பெற் ருேரையும் பிள்ளைகளையும் மாத்திரமல்ல உற் முர், உறவினரையும் மிகுதியாக நேசிக்கின் றனர். பிள்ளைகளின் உணர்ச்சியில் அவர்கள் காட்டும் அக்கறை உண்மையில் அதிசயிக்கத் தக்கது. அது போலவே தமது பெற்ருேரை யும் சீன இளைஞர்கள் அன்புடனும், ஆதர வுடனும் கவனிக்கின்றனர்.
19

Page 22
ஈழத்துப் புலவர் அவை
ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களின் பல் வகை நலன்களும் பாதுகாக்கப்படவும், அவர் களது ஆக்கங்கள் நூலுருப் பெறவும், சர் தைப் படுத்தலை இலகுவாக்கவும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள நமது கவிஞர் கள் அடிக்கடி சந்தித்துக் கருத்துப் பரிமாற் றம் செய்து கொள்ளவும், கவிதைத் துறை யில் அர்த்த பூர்வமான புதுமைகளுக்கு ஊக்க மளிக்கவும் அரசினரின் ஒத்துழைப்பைட் பெறத்தக்க வகையில் 'ஈழத்துப் புலவர் அவை” என்னும் ஓர் அமைப்பினை விரைவில் ஏற்படுத்தப் பிரதேச அபிவிருத்தி அமைச் சர் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவி தாக கவிஞர் ஜீவா ஜீவரத்தினம் அவர்கள் அறிவிக்கின்ருர்கள்.
5. 'உலகத் தமிழ்ப் புலவர் ஒன்றியம்' இதன் மூலம் அமைக்கப்படலாம் எனவுப் நம்பப்படுகிறது.
மேற்படி புலவர் அவையின் அமைப்புக் செயலாளராகக் கடந்த பல மாதங்கள் இட் பெரு முயற்சியில் ஈடுபட்டு வரும் ஜீவா ஜிவரத்தினம் அவர்கள் நாடெங்கிலும் உள்ள கவிஞர்களின் முகவரிகளைப் பெற்றுக் கொள் வதில் எடுக்கும் சிரமம் கொஞ்சநஞ்சம் அல்ல
கவிஞர்கள், கவிதைப் புலவர்கள் அனை வரும் திரு. ஜீவா. அவர்களுடன் உடனடி யாகத் தொட்ர்பு கொள்ளும்படி “கிருதயுகம் விநயமாக வேண்டிக் கொள்ளுகின்றது.
கவிஞர் ஜீவா. ஜீவரத்தினம் கூடிய விரைவில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தர வுள்ளார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெர் விக்கின்ருேம்.
தொடர்பு முகவரி:
கவிஞர் ஜீவா ஜீவரத்தினம் அமைப்புச் செயலாளர், ஈழத்துப் புலவர் அவை, துறைநீலாவணை, கல்முனை.
20

மாறுவது என்றே?
புலவர் பார்வ திநாதசிவம்
பள்ளிசெல்லும் பருவத்துப் பாலகர்கள் பசிவருத்தம் தாங்காராகி உள்ளவர்பாற் பிச்சையெனப் பல்காட்டி இரக்கின்ற உலகுமாறிக் கள்ளமிலா இளஞ்சிறுவர் யாவருமே
கற்கின்ற காட்சி நல்கும்
எள்ளரிய புதுஉலகம் பொதுவுடைமை தவழுலகம் என்றே தோன்றும்?
2
பெண்களினப் பெற்றேர்கள் பதினுறும் பெண்ணெய்த மணஞ்செய் வித்துக் கண்குளிரக் காணவென ஆவலுற்று சீதனத்தாற் காணு ராகிப் பெண்மகவைப் பெற்றேமே பெற்றேமே
எனத்தலையில் அடித்துக் கொள்ளும்
புண்படைத்த இவ்வுலகம் பொய் என்றே பொதுவுடைமை உலகம் தோன்றும்?
3
கந்தலுடன் கஞ்சியின்றிக் காலமெலாம்
கவல்கின்ற ஏழை மக்கள் சந்தியிலும் வீதியிலும் மடங்களிலும் ரயில்களிலும் வயிற்றைக் காட்டி நம்துயரை நீக்கிரோ நமதுபசிக்கு உதவீரோ என்றே கேட்கும் இந்தஒரு நிலைமாறி எல்லோரும் பசிநீங்கும் உலகம் என்றே?
4
சந்தர்ப்பம் காரணமாய்ச் சிலமனிதர் தம்மைத்தாம் சமர்த்த ரென்றே இந்தப்பார்ச் செல்வமெலாம் இருட்டறையில் குவித்துவைத்தே இல்லா தோரை நிந்தித்தே அடிமைகளாய் நிலத்தினிடை நடத்துகின்ற நிலைமை மாறி இந்தபார்ச் செல்வமெலாம் எல்லோர்க்கும் சொந்தமுறும் உலகம் என்றே?

Page 23
மொழியும்
எஸ். அவு
இனங்கள் மொழிகள்பால் கணிக்கப்படு. கின்றன; ஆணுல், மொழிகள் இனங்களைக் கணிப்பனவன்று.
ஆங்கிலம் ஒரு மொழி; ஆனல் மொழி ஆங்கிலமன்று.
தமிழ் ஒரு மொழி; ஆனல் மொழி தமி ழன்று.
சிங்களம் ஒரு மொழி; ஆஞல், மொழி சிங்களம் அன்று.
இது சகல மொழிகளுக்கும் பொதுவான பண்பு.
மக்கள் தம் கருத்துக்களைப் பரிமாறுவ தற்கான சாதனமே மொழி.
தமிழ் மொழி புராதன காலந்கொட்டு இயங்கியதால், "தமிழினம் மிகப் பழமை வாய்ந்த தொன்மை நாகரிகத்தையுடைத்து' என்பர் ஆராய்ச்சி அறிஞர்.
இவ்வகையிற் தமிழ் மொழி புராதன காலந்தொட்டு மக்களின் கருத்துப் பரிமா றற் சாதனமாக விளங்கி வந்தமையால், அதன் தாக்க விளைவுகள், "மக்களின்வாழ்வை யுணர்த்தும் கருவிகளாகக் கொள்ளப்பட்
மக்களின் வாழ்க்கைக் கருவியான இம் மொழியை, ‘இனிமை - அழகு எனப் போற் றினர் - போற்றுகின்றனர்.
பொதுவாக எந்த மொழிக்கும் இது ஒரு பொதுப் பண்பாகவே இருந்து வரு கின்றது.
இப்பண்பின் காரணமாக மொழிக்குத் தொண்டு செய்யும் பிரமுகர்களும் திடீர் என்று தோன்றக் காணலாம். T மொழிக்குத் தொண்டு’ என்பது மொழி வளர்ச்சிக்குத் தடைக்கல்லாகின்றது
மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்று
வது வேறு மொழிக்குத் தொண்டு புரிவது வேறு.

இலக்கியமும்
கஸ்தியர்
‘தொண்டு" என்பது சம்பிரதாயத்துள் ளடங்குவது: “வளர்ச்சி" என்பது உழைப்பி ஞல் சம்பிரதாயங்களை உடைத்து அகல விரிவது.
வாழ்க்கை சம்பிரதாயம் அல்ல; சம்பிர தாயம் வாழ்க்கையாயின் அது போலியா கின்றது
இந்த அணுகலில் மொழியை அலசல் வேண்டும். ་་
சங்க காலத்திலும், சங்கம் பருவிய காலத்திலும் தமிழ் இலக்கியங்கள் பெரும் பாலும் காவியங்களாகவே வெளிவந்தன.
காவிய உருவத்திலிருந்தே உரைநடை இலக்கியம் தோன்றியது,
தேசம், நாடு, நகரம் கிராமம் - எள் றெல்லாம் செறிந்து வாழும் மக்கள், தத் தம் வாழ்க்கை நெறிக்கேற்பத் தம்மை மாற் றிக் கொள்ள ஏதுவாகினர் - ஏதுவாகின்ற னர்.
இவ்வாறு மாற்றிப் பெறும் வடிவங்களே "உயிர்ச் சொற்களா’கின்றன.
இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண் ணுடி, அதாவது, வாழ்க்கையின் பிரதிபிம்பம் இதனை நெறிப்படுத்துவது இலக்கணம். இலக்கியம், வாழ்க்கையை விமர்சிக்கும் கருவி.
இலக்கணம், அதனை நெறிப்படுத்தும் சாதனம்
விமர்சன சாதனம் வளர்ச்சி கொண்
ܘ Ei - .. ܬ
நெறிப்படுத்துங் கருவி நெகிழ்வு கொண் L一跃·
இலக்கணம் மரப்ை மீறும்போது உடை துெ.
இலக்கியம் மரபை மீறும்போது வளர்
வது
இதன்கண், இலக்கியத்திலிருந்தே இலக் கணம் வகுக்கப்பட்ட தொன்ருகிறது.
வாழ்க்கையை விமர்சிக்கின்ற இலக்கிய சாதனம், வாழும் மாந்தர்களின் 歴;@L一・。
21

Page 24
உடை ,பாவனைகளை உணர்வுகஃா - உனர்ச் சிகளை - அவர்கள் பேசும் மொழிகளில் உண ர்த்தும் போதுதான் அவ்விலக்கிய சாதனம் உயிர் பெற்றுக் கொள்கின்றது.
மக்கள் பேசும் மொழியைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் மக்கள் வாழ்க்கை யுடன் கலந்து நிபந்தனையின்றிப் பழகுவ துடன், அவர்களின் துன்பதுயரங்கள் - ஆசா பாசங்களுடன் இரண்டறக் கலந்து கொள்ள வேண்டும்.
சமூக வாழ்வை அனுபவித்த உணர் பூர்வமாகப் பெறும் அறிவிலிருந்தே ஜீவகள்ை கொண்ட உயிர்த்துடிப்பான இலக்கியங்கள் உதிக்கின்றன.
வாழ்க்கையை அனுபவிப்பதற்கு நூற் களில் பெறும் அறிவு மட்டும் துணை புரியாது.
சமூகத்தோடு ஒன்றித்துப் பழகி, மக்க ளின் இதயங்களிலெழும் தாக உணர்வுகளே யும் போராட்ட எண்ணங்களையும் பகிர்ந்துபகுத்துணர்வதற்கு - தெரிந்து கொள்வதற்கு இலக்கிய வாதியோ நூலாசிரியனே முழுமை யாகவும் நிபந்தனையின்றியும் தன்னை அர்ப் பணித்தாலே இது சாத்தியமாகும். w
மக்கள் வாழ்க்கை இலக்கணத்திலிருந் தன்றி, இலக்கியத்திலிருந்து - அவர்கள் பே சும் மொழிகளிலிருந்தே அர்த்தப்படுத்தப் படுகின்றது.
இவ்வகையில் சரியாக நோக்கின், வாழ்க் கையும் வாழ்க்கை அனுபவங்களுமே கவிஞர் களை, எழுத்தாளர்களை, கலைஞர்களைத் தோற் றுவிக்கின்றன,
“புவியனைத்தும் போற்றிடவான் தமிழ் மொழியைப் புகழி லேற்று கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெ வசையென்ற்ை கழிந்த தன்றே! ‘சுவைபுதிது, பொருள்புதிது, வ6 செரற்புதிது சோதி மிக்க நவகவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை' '

மக்கள் வாழ்க்கையலுவங்களே எழுத்ட தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களின் சிறந்த பல்கலைக்கழகம்,
இத்தகைய பல்கலைக் கழகத்தில் பயி லாதவன், மக்களை - மக்கள் பேசும் மொழி யை - மக்களின் வாழ்க்கைத் தேவையைப் புரிந்து கொள்ளவே முடியாது.
மக்கள் வாழ்க்கையை அனுபவித்து, அ வர்கள் தேவைகளை முன்னெடுத்துச் செல் லும் சாதனம் இலக்கிய மென்ருல், அவ் விலக்கியத்தின் கருவூல கர்த்தாக்களான மத் களை - மக்கள் பேசும் மொழியை - அம்மொழி யின் சரியான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்- ۔۔۔۔بر
இவற்றைப் புரியாத எழுத்தாளன், கவி ஞன், கலைஞன் கலை இலக்கியக் களத்தில் எதனையும் சாதிக்கவே முடியாது; சாதிக்கத் துணிந்து இலக்கியக் களத்தில் பிரவேசிப்ப வன் சிருஷ்டிகள் போலித் தன்மையாகவே விளங்கும்.
LMSLLLSLSL MLMLM SSLLqALALMLMLSSLqASqAe SLMLMLMLLLLSLLASLLALLLLAALLLLLALLSA
கிருதயுகம்
ஆண்டுச் சத்தா Ölj5 • 20அரையாண்டுச் சந்தா ტენ. 10; - (முத்திரைச் செலவு உட்பட) முகவரி:
கிருதயுகம்
280, பிரவுண் வீதி,
யாழ்ப்பாணம்.
புகழ்படைத்துத் ம் பன்னும்
ாம்புதிது,
-- Lufrr:S
22

Page 25
கிருத யுகம்
பாரதி நூற்றன
"ஒராயிர வருடம் ஒய்ந்துகிடந் வாராது போலவந்த LDITuDa)5si?a0), பாரதியின் "ஒராயிரப் பாடல் பாரதிக் கிறது. பாரதி புரட்சிக் கவிஞன், யுகசந்திக் க மகா கவிஞன் - ஒப்புயர்வற்ற உலக மகாகவி உலகின் முன் நிறுத்தல் வேண்டும்.
பக்தி இயக்க இலக்கிய எழுச்சியில் 岛山 கி. பி. 10ம் நூற்ருண்டுடன் ஒய்ந்து விட்டது பாடல்களிற் பல “செதிள் செய்யுட்கள்' - செரு ஓராயிரவருடம் பிந்திப் பிறந்த Lurrgré தானுல் "ஆணிமுத்துப் போன்ற மணிமொழிக தந்து ஜீவன் கொடுத்தான். கவிதை பொலிவு யும் கண்டது.
சொற் பிரபஞ்சப் பரவையில் )U( نتقائیjہے *புதிது கண்டான் - புதிதே கண்டான்.
'அ'க்கினிக் குஞ்சொன்று க அங்கொரு காட்டிலோர் டெ வெந்து தணிந்தது காடு - ! வீரத்தில் குஞ்சென்றும் PL தத்தரிகிட தத்தரிக்கிட தித் முடியுந் தறுவாயில் பாரதி 'பைலா அடிக்கத் புதியதே. கம்பன் கவிதையுடன் கலந்து கண்ட அறியாவகை ஒடிச் செல்கிறது.
உலக மகா கவி பாரதியின் நூற்ருண்டு பலரும் பலவிதமான ஆலோசனைகள் தெரிவித் பொன்ஞன அந் நினைவு கருதி கிருத பணியை வாசகர் முன் வைப்பதில் மகிழ்ச்சி பாரதியின் முழுப் பாடல்களையும் (மா படைக்க வேண்டியதில்லை. இந்த மாதிரி ஆே ஆங்கிலக் கவிஞன் தன் முழுக் கவிதைகளுக் நினைத்துப் பார்க்கலாம்.
"10 வீதம் நல்ல கவிதைகள், 30-40 நல்லதைத் தனியப் போட்டால் பு மெலித்தாலும் காரியமில்லை. அந்த எண்ணிக்ை
பாரதி பாடல்களில் அவனை உலக மகா தொகுத்து பாரதி நாளில் வெளியிடுவதே கிருத யாகும். இப்பணியிலே தான் பாரதியின் கவி உலகம் காண முடியும்.
தொடர்ந்து ஆங்கிலத்திலும் சிங்களத்தி யுகம் முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ளும். பாரதி பாரதம்தந்த நல்லதோர் கவிதை யில் எறிதல் கூடாது; எறிய விடுதலும் கிஷ்டாது

ாடு விழா 1982
த பின்னர் பத் தோற்போமோ?? குத்தான் மிகப் பொருத்தமானது போல் தெரி விஞன் என்பதெல்லாம் இருக்கட்டும். அவன் . உலக மகா கவியை உலக மகா கவியாகவே
மிழ்க் கவிதை கண்ட மொழி வளம் ஏறத்தாழ , நொய்ந்து நொடிந்து விட்டது. பின் எழுந்த க்கி எடுக்க வேண்டிய செய்யுட்கள்.
நிதான், அவன் வார்த்தைகளிலேயே சொல்வ ளாலே தமிழ்க் கவிதைகளுக்குப் பிராணவாயு ம் பூரிப்பும் கொண்டு புதுமையும் பொதுமை
க்குளித்த பாரதி பொருட் பிரபஞ்சத்திலும்
ண்டேன் - அதை
ாந்திடை வைத்தேன்
கழல்
ப்பென்றும் உண்டோ
த்தோம்.'
தொடங்கிவிட்டான். ஆஞலும் பொருள் புதிது" கோதாவரிக் கங்கை போல் உணர உணர ஆழம்
விழா நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் துக் கொண்டு வருகிருர்கள். யுகமும் மேற்கொள்ளப் போகும் பொறுப்பான அடைகிறது. னுட வர்க்கத்தின் இளம் தலைமுறையிடம் ஒப் லோசிச்கும் பொழுது W. H. ஒளடன் என்னும் குமான முன்னுரையில் எழுதிய சில வரிகளை
வீதம் சாதாரணம், மிச்சம் கஞ்சல் குப்பை, ந்தகம் மெலித்து போம்'; க மெலிவிலே தான் கவிதைப் பொலிவும். கவியாக இனங்காட்டும் கவிதைகளைத் தெரிந்து தயுகம் மேற்கொள்ளப் போகும் பெரும் பணி த்துவமும் சுயத்துவமும் ஒன்றன ஆன்மாவை
திலும் அத் தொகுப்பை வெளியிடவும் கிருத வீணை. அதன் நலங்கெட கோஷவே ஷப் புழுதி
-塾一f.

Page 26
DIMOND H
வைரமாளிை JEWELLERS & DIA
Branch
141, 143, Sea Street, Colombo.
Phone: 3632
ஆண்கள் பெண்கள் சிறுவ பாதணி வகைகளுக்கு இன்றே விஜயம் செய்யுங்க
பிரகாஸ்
89, கஸ்தூரியார் வீதி,
அடுத்த இதழ் கிருதய
மேதின மலரா
கதை, கவிதை, கட்
மே 10ந் திகதிக்கு முன்:

OUSE Ltd.
க லிமிட்டெட்
MOND MERCHANTS
79, Kannathiddy, Jaffna.
Phone: 7036
ர்களுக்குரிய
i
ஸ்ரோர்ஸ்
யாழ்ப்பாணம்.
கம்
க வெளிவரும்
டுரை அனுப்புவர்கள்
னதாக அனுப்பி வைக்கவும்
ஆசிரியர்