கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிருதயுகம் 1981.05-06

Page 1
ாது பிர் நான் உள வரைக்கும்
ஒருவ கரசென்றே பாடி asga Ggsaaanu a Grtiagu adr
ாண்தை புன்னகை பூக்கும்! "
கிருதயுகம்
தமிழ்த் துவாசிகை
ان 5 بچ
or assig 1981 - 3.
Plfuuri : க. வீரகத்தி
280, பிரவுண் வீதி, பாழ்ப்பாணம்,
a so. இலங்கை.
KRUTHAYUHAM
280, Brown Road, JAFFNA. Sri Lanka.
அ. ரவரின் கருத்துக்கு அவரவரே பொறுப்பாளி வேண்டாதவற்றை
விலக்கிவிடும் உரிமையும்
ஆசிரியருக்கு உண்டு.
உலகெ ஒன்று உரிடை

மே தினம்
ாழ்க வாழ்க மேதினம்-உழைப்பின் மன்மை பாடும் மேதினம்.
மெங்கும் உழைப்பினம் பட்டுக் குரலெழுப்பும் ம பாடும் மேதினம்.
1ாழ்க வாழ்க மேதினம்- உழைப்பின் மன்மை பாடும் மேதினம்,
கண்ட மண் பரப்பில் வாழினும் தோழா தி நொந்து உடல் உழைக்கும்
லாளி ஒரினம்.
சமய மொழி கடந்து ாதம் செய்திடும் bறு உழைக்கும் வர்க்கம் ம் சாங்கும் ஓரினம்.
பத்து மனிதர் கையில் டுவளம் குவிந்திடும் அற்ற ஆட்சி நீதி பின்னம் ஆக்குவோம்.
ழ செய்து களைத்து விட்டுக் க்கும் தவித்திடும் மி சாடி அரசு கட்டில் ராக ஏறுவோம்.
ச விடக் கொடிய தீய
ாரக் கும்பலேப்
போல ஊதி விட்டுப்
ாயாளச் சேருவோம்.
த காலைப் பின் வையாமல் விலே முன் னேறுவோம்; தொழிந்த நமது தோழர்
மீது ஆணையே!
வாழ்க வாழ்க மேதினம் - உழைப்பின் மேன்மை பாடும் மேதினம்.
- கவி --

Page 2
s? யாழ் நூலக
国
தெய்வம் கண் அயர்ந்ததோ? தேவதைகள் உறங்கினவோ? அட்டதிக்குப் பாலகரில் ஆரேனுங் கண்டிலரோ? விண்மீனும் மூழுமதியும் விண்படர்ந்த தீப்பிழம்பின் வெம்மைக்கு ஆற்ருமல் வேர்த்துஒடி ஒளித்தனவோ?
ஐயகோ தெய்வமே! ஜீவ கருணையே ஜீவன்என மையமிடும் போதி சத்துவத்தின்
ம(ஹா)யான மண்ணிலே நவீன மிலேச்சர்களின்
இலங்கா தகனம் செய் ஈன அனுமர்களின் வெறியாட்டு விபரீத வெந்தணலுக் கிரையாகி அஸ்தி கரைப்பதற்கும் அனுவேதும் இல்லாமல் சூனியத்திற் சூனியமாய் சுயமிழந்து நிற்கின்றம்!
படிப்பகத்தைப் பாழடித்தார் பரம்பொருளே இதுமுறையோ?
முன்னுேரின் பொன்னுன மெய்ஞ்ஞானச் சுவடியெலாம் கண்ணுலே காண்பதற்கும் கதியிழந்து விட்டோமே.
இரத்தம் உறைந்துவிட என்ஆவி துடிக்கிறதே கண்களிலே கங்கை கரைகடந்து பிரவகிக்கப் பித்தாகிப் பேயாகிச் சித்தம் கலங்கினமே
2

கவி
எங்கள் இளம்பயிர்கள்
ஏற்றம் எழுச்சியுறும் மூலதனம் ஆன
மூளைவளம் எல்லாம் முற்றம் இழந்துவிட வெதும்புகிறள் யாழ்நங்கை, விதிர்க்கின்றள் யாழ்மங்கை, வினையொடிந்து
விழி ஏத்தம்கக்க திக்கெட்டும் நோக்கிப் பாஞ்சாலி ஆகிப் பெளதிகத்தை நினைக்கின்ருள்
ஓ! யாழ் நூலகமே!. உனக்காக இல்லை. தமக்காக, நமது பட்டைவிட்ட சுயநலம் பாசாங்கு பம்மாத்து சாதிச் சழக்கு ஆதி துட்ட குணங்களெலாம் ஒட்டுமொத்தமாய் உடைய நமக்காகத் தீக்குளித்தாய்! ஈாமெல்லாம் புனிதம்உற நடுநிசியில் தீக்குளித்தாய்! வரலாற்றைக் கடந்துநீ வாழத்தான் போகின்றப்!
நாளையுனது நவீனமறுமலர்ச்சி! நாளை மறுநாள், நமது இளம்தலேமுறையின் நவயுகத்துப் புதுமலச்சி! புத்துலகப் பூரிப்பு:

Page 3
கல்லறைகள் என்றும் பேசிக் கொண்டே இருக்கும்
"எங்கள் சொற்பொழிவுகள் பேசாததை எங்கள் கல்லறைகள் பேசும்’
சிக்காக்கோவின் தெருக்களில் மேதினத்திற்கு
குருதிச் . . . சித்திரம் வரைந்தவர்களின் இறுதிச் செப்புதல் இவைகள்.
அவர்களின் கல்லறைகள் இன்றும் பேசிக்கொண்டே உள்ளன அந்தக் கல்லறைகள் என்றும் பேசிக்கொண்டே இருக்கும்.
assiv gösyı ü) கருணையும் ஜிவிக்கும் மனித இதயங்கள் ஜிவிக்கும் வரை அந்தக் கல்லறைகள் பேசிக் கொண்டே இருக்கும்.
ஒடுக்கு முறைகளினுல் ஓங்காளிக்கப் படும் துப்பாக்கிச் சன்னங்களினை தடுத்து நிமிரும் ஒவ்வோர் விடுதலை இதயங்களும் அந்தக் கல்லறைகள் பாடும் கவிதைகள் ஆகும்.
மொழிகளே மீறிய மொழிகளினுல் அந்தக் கல்லறைகள் கவிதைகளைப் பாடும்.
கறுப்பு வெள்ளை ஆசியா ஐரோப்பா வேலிகளே முறித்த வெடிகளின் ஒசையாய் அந்தக் கல்லறைகள் கவிதைகளைப் பாடும்.

உதிரும் வியர்வைகளில் ஊடறுத்து ஒடும் உழைப்பு மொழியில் உதித்த கவிதைகளாய் அந்தக்
கல்லறைகள் பாடும்.
அடிமை வாழ்வின் நினைவைப் பேணும் இறுதி எச்சமும் உலகின் மேனியில் ஒழியும் வரை செந்நீர்த் துளிகளினை கவிதையின் சந்த்மாக்கி அந்தக் கல்லறைகள் கவிதைகள் பாடும்.
கண்ணுக்கு இமை போல் பிள்ளைக்குத் தாய் போல் விடுதலைக் களத்தில் விளைகின்ற தோல்வியால் உளே வெடுக்கும் மன நோவுகளை உதிர்த்திடும் மா ஒலியாய் அந்தக் கல்லறைகளின் கவிதைகள் பாடும்.
துயரங்களுடன் சதுராடி துவக்கு முனைகளை நொறுக்கி விடுதலை யாகங்களில் வெற்றி கொள்ளும் புதிய பிறப்புக்களின் உயிர்ப்புக்களை அந்தக் கல்லறைகளின் கவிதைகள் பாடும்.

Page 4
WW கிருதயுகமும் | கேடில்லா வாழ்வுப்
நவீன தமிழிலே "பொற்காலம்’ என்ற சொற்ருெடர் பெருவழக்கா யிருப்பதைப் பலரும் அவதானித்திருப்பர். Golden Age erreiro ஆங்கிலத் தொடரின் தமிழாக்கமே பொற்காலம் என்னும் தொடராகும். ஒரு நாட்டின் அல்லது இனத்தின் வரலாற்றிலே குறிப்பிட்ட ஒரு காலப்பகுதி மகோன்னத மானதாக இருப்பதாகவும் அக்காலப் பகு திக்குப் பின்னர் வாழ்கின்றவர்கள் சென் ருெழிந்த அச்சிறப்பு மிக்க காலப் பகுதி யினைப் பொற்காலம் என வழங்குவதும் பல இன மக்களின் வரலாற்றிலே நாம் காணுவ தொன்ருகும். தமிழ் மக்களைப் பொறுத்த வரையிலும் தமது வரலாற்றின் தொடக்கத் திலே உன்னதமான பொற்காலம் ஒன்று நிலவியது என்றும், அதன்பின் படிப்படி யாக இழிநில வளர்ந்து வந்துள்ளது என் றும் ஐதீகம் ஒன்று கருத்துலகிலே ஆழமா கப் பதிந்துள்ளது. உதாரணமாக தமிழ் நூல் வரலாறு என்னும் நூலிலே பாலூர் கண் ணப்ப முதலியார் பின்வருமாறு எழுதியிருப் பதைக் காணலாம். "பழங்காலம் பொற் காலம் ஆகும். அக்காலத்து மக்கள் நணி நாகரிகராய் வாழ்ந்தனர். தங்கள் வாழ்வை இயற்கையோடு இணைத்து வாழ்ந்தனர் இலக்கிய வளத்திற் சிறந்து விளங்கினர்' கண்ணப்ப முதலியாரின் கூற்று வகைமாதி ரிக்குப் பொருத்தம்ானது கடந்த ஒரு நூற் ருண்டுக்குள் ஆயிரக்கணக்கான தடவைகள் இக்கூற்று வெவ்வேறு வடிவங்களில் ஒலித்து வந்துள்ளது. பொற்காலம் எது என்பது குறித்துச் சிலரிடையே கருத்து வேறுபாடு இருத்தல் கூடும்; "சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த’ மூவேந்தர் ஆட்சிக் காலமே பொற் காலம் என்றும், "அவனி முழுதாண்ட திரி புவனச் சக்கரவர்த்திகள் ஆட்சிக் காலமே பொற்காலம் என்றும் இரு சாரார் வாதிடு
4

க. கைலாசபதி
அடிப்படையாகும்.
வர். அது எவ்வாறயினும், குறைகள் எவை யும் அற்ற நிறைவான சமுதாயம் இயங்கிய பொற்காலம் ஒன்று முன்னர் ஒரு காலத் திலே இருந்தது என்பதே இவ்வாதத்தின்
இக்கருத்து நம்பிக்கையின்பாற் பட்டதா கும். ஆராய்ச்சி முடிபு அன்று. ஆயினும் ஆராய்ச்சிகள் நிறைந்தனவாய்க் கொள்ளப் படும் நவீன காலப் பகுதியிலேயே தமிழ
ரின் பொற்காலம் பற்றிய கோட்பாடு உறுதி
யும் வேகமும் பெற்றது என்பதும் கருதத் தக்கதே. சங்க நூல்களிற் பெரும்பாலனவும்
சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்
பியங்களும், தொல்காப்பியம், இறையனர்
அகப்பொருளுரை முதலிய இலக்கண நூல்
களும் அச்சிற் பதிக்கப் பெற்று வெளிவந் ததை அடுத்தே பழந்தமிழர் வாழ்ந்த பொற் காலம் பற்றிய எண்ணம் எழுந்தது. எனி னும் இடைக்கால உரையாசிரியர்களும் வேறு சிலரும் பழங்காலத்தைப் பற்றி மிக உயர்ந்த அபிப்பிராயம் கொண்டிருந்தமை மனங் கொளத் தக்கதே. இலக்கிய மரபிலே முற்
பட்ட புலவரைச் சான்றேர் என்றும் அவ
ருக்குப் பின்வந்தோரைப் பிற்சான்றேர் என்
றும் தரவேறுபாடு கண்டனர் உரையாசிரி
யர்கள்.
வடமொழி வாயிலாக வளர்ந்த பெளரா ணிக மரமும் காலப் பாகுபாட்டைக் & ଟି ୪୪t # கிட்டுக் கூறும்பொழுது நான்கு யுகங்கள்
பற்றிக் குறிப்பிடுவதைக் கவனிக்கலாம். Ljurr
ணங்கள் கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய சதுர் யுகங்களையும் அவற்றின் இயல்பு களேயும் இறங்கு வரிசையிலே விவரிக்கின் றன. கிருத யுகத்தைத் தொடர்ந்து வரும் மற்றைய புகங்களின் கால அளவுகள் குறைந் திருப்பது மட்டுமன்றி மற்றைய யுகங்களிலே

Page 5
அதருமமும் அதிகரிக்கும் என்பது பெளரா. னிக நம்பிக்கை.
மநுதர்ம சாஸ்திரம் இது சம்பந்தமாகப் பின்வருமாறு பேசுகின்றது.
**கிருத யுகக் கால எல்லை மொத்தம் நாலாயிரத்து எண்ணுாறு தேவ வருடங் கள். திரேதா யுகம் மூவாயிரத்து அறு நூறு,துவாபரயுகம் ஈராயிரத்து நானுர்று, கலியுகம் ஆயிரத்து இருநூறு தேவ வரு டங்கள் எனக் கொள்க.
கிருத யுகத்தில் சத்தியமும் தருமமும் நான்கு கால்களுடன் இருந்தன. இக்கால கால்லையில் அதருமத்தால் விளைகின்ற துன் பங்கள் மானிடர்களை அணுகுவதில்லை. மற்ற யுகங்களிலே மானிடர் அதரும முறையில் ஈட்டும் பொருள், கல்வி ஆகிய வற்றின் காரணமாக, சத்தியமும் தரும மும் ஒவ்வொரு காலாகக் குறைகின்றன.
கிருகபூக மாந்தர் தருமமன்றி வேருென் றையும் அறிய மாட்டாதவராய் வாழ்வத ஞல் அவர்கள் எண்ணியவெல்லாம் கை கூடப் பெறுகிறவராகவும், தம்மிச்சையாக நானுTறு வருடங்கள் உயிர் வாழ்பவராக வும் இருக்கின்றனர். மேலும் தவம் முத லான சாதனைகளால் நானூற்றுக்கு மேற் பட்ட காலமும் சீவித்திருக்க அவர்களால் முடிந்தது. மூன்று யுகங்களிலும் மானிடர் வயது ம் முறையே நூருண்டுகள் வீதம் குறைந்து கொண்டே போகிறது.'
இந்த நம்பிக்கையின் அடிப்படையிலே,
பாரத யுத்தம் நடந்த காலந்கொட்டு - அதா வது ஏறத்தாழ இந்திய வரலாற்றுத் தொடக் கம் முதற்கொண்டு - கலியுகம் நடப்பதாக நம்புகின்றனர், கலிகாலம் கெட்ட காலம். இருத யுகத்திலிருந்து மனுக்குலம் முன்னேறு வதற்குப் பதிலாக வளர்ச்சி குன்றி வந்திருப்ப தாக புராணங்கள் கூறுகின்றதைக் கவனிக் கலாம்"
இந்திய கலாசாரத்தைப் போல தொல் காலப் பெருமை வாய்ந்த கிளேக்க இதிகாச மரபிலும் இத்தகைய ஒரு நம்பிக்கை இருந்

தது. தமது இனத்தின் ஆரம்ப காலத்தில் இயற்கையின் மத்தியில் மக்கள் இன்பமாக வாழ்ந்த பொற்காலம் ஒன்று இருந்தது என்று கிரேக்க ஆதி கவிகள் கருதினர். ஆதி கவியாம் ஹோமருக்குப் பின் வந்த பெளரா ணிக்க கவிஞன் ஹீசியட் ஐந்து யுகங்களைக் குறிப்பிடுகிருன். அவை முறையே பொற் காலம், வெள்ளிக்காலம், வெண்கலக்காலம், வீரபுருஷர் காலம், இரும்புக் காலம் ஆகி யன. தான் வாழும் காலம் ஒளியற்ற - பெருமையற்ற இரும்புக் காலம் என்பது ஹீசியட்டின் கருத்து. முன் கூறிய காலங் கள் - யுகங்கள் படிப்படியாகத் தரங்குன்றித் தகைமையிழந்திருப்பதாக அவன் நம்பினன். அவனது பாகுபாட்டின் அடிப்படையிலேயே மேற்குலக வழக்கிலே "பொற்காலம்’ என்ற கோட்பாடு உருவாகியது.
உலோகங்களின் பயன்பாட்டு வரலாற்றினை உலக ரீதியாக நோக்கும் பொழுது இலகு வில் உருக்கிப் பயன்படுத்தக் கூடிய பொன், வெள்ளி முதலிய உலோகங்களுக்குப் பின் னரே இரும்பு பயன்படுத்தப்பட்டது என் பது புலப்படும். அந்த வகையில், ஹீசியட் டின் பாகுபாடு நாகரிக வரலாற்றுச் செய்தி களை ஆதாரமாய்க் கொண்டது என்று சிலர் கருதுவர். நவீன தமிழ் ஆய்வாளர் சிலர், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலப் பாகுபாடும் அதனடியாகப் பிறந்த ஒழுச்கப் பாகுபாடும் புராதன வேட்டுவ நிலையிலிருந்து வாணிபம் வளர்ந்தோங்கிய பட்டின நாகரிகம் வரையில் தமிழர் கண்ட வாழ்வியல் வளர்ச்சியை எடுத்துக் காட்டுவ தாகக் கூறுவதைக் காண்கிருேமல்லவா? இவை ஆராய்ச்சிக்குரியன.
இருபதாம் நூற்ருண்டிலே வாழும் நாம் இரும்பின் பயன்பாட்டுடனேயே மனித நாக ரிக வரலாறு உறுதியாக முன்னேறத் துவங் கியதெனக் கருதுகிருேம். ஆனல் ஹீசியட் அவ்வாறு எண்ணவில்லை. நாட்களும் வேலை களும் என்ற புராண முறையிலமைந்த தனது நூலிலே, பின்வருமாறு கூறியுள்ளான்.
'ஐந்தாம் காலப் பகுதியைச் சேர்ந்த மாந்தரிடையே நான் வாழ வேண்டுமென்
5

Page 6
பது தெய்வ சங்கற்பமாயில்லாது போனல், தான் இக்காலத்துக்கு முந்தியோ அல்லது பிந்தியோதான் வாழ விரும்புவேன், ரனெ னில் இப்பொழுது இரும்பு இன மனிதர் வாழ்கின்றனர். நமது யுகம் இரும்பு யுகம்.'" ܚ தனது காலத்து மக்கள் மீதும் விவகாரங் கள் மீதும் கவிஞனுக்கிருந்த மனவெறுப்பு வெளிப்படை.
பொற்காலம் என ஒன்றை வருணிக்கும் பொழுது அக்காலப் பகுதியுடன் சிறப்பெல் லாம் முடிந்து விட்டது என்னும் எண்ணம் உட்கிடை. அச்சிறப்பை மீண்டும் பெறத் துடிப்பதே பலருக்கு இலட்சியமாக அமைந்து விடுகின்றது. இத்தகைய உணர்விற்கு இந் திய வைதிக சமயக் கோட்பாடுகளும் ஆதா ரமாயமைந்தன. சமய உண்மைகளை ஞானி கள் இறை வாயிலாகப் பெற்று விட்டனர் என்றும், இனிப் பெறக்கூடியது இல்லை என் றும் வேத வழக்கினைப் பிரமாணமாகக் கொள் வோர் கூறுவர். "எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்' எர்ன்பதன் அடிப்படையும் இதுவே. பொற்கால உணர்வானது போதிய செயற் பாடின்மையால் - இயக்க மறுப்புக் கருத்துக் கள் நிலவுவதால் - சமூகத்திலே நிலைகொண் டிருக்கும் தேக்கத் தத்துவமாகும். பழைய பொற்கால மட்டுமன்றி, அதைக் காட்டி லும் சிறப்பான புது யுகத்தையும் மனிதனே தனது முயற்சியாலும் சமுதாயப் புரட்சி யாலும், இயக்கத்தாலும் நிறுவலாம் என்ற உணர்வும் இக்காலத்திலேதான் வேகம் பெற் றுள்ளது. இந்த உணர்வின் வெளிப்பாடா கவே அமரகவி பாரதியாரும்,
வீழ்க கலியின் வலியெல்லாம்
கிருத யுகந்தான் மேவுகவே என்றும்,
பொய்க்குங் கலியை நான் கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதியிஃதே என்றும்,
*அறிவாளிகள் சந்தர்ப்பவாதிகளா சந்தர்ப்பவாதிகளாக மாறுவதைவிட பு

கிருத யுகத்தைக் கேடின்றி நிறுத்த விரதம் நான் கொண்டனன் என்றும் மன உறுதியுடன் பாடினர்.
சுருங்கக் கூறின், கிருதயுகம் எனற தொட ரில் கவிஞர் நமது காலத்து உயரிய இலட் சியங்கள் பலவற்றை அடக்கி விடுகின்ருர்.
இலக்கிய கர்த்தாக்களும், பெளராணிகர் களும் யுகங்களேப் பற்றிப் பேசிப் பாடுதல் ஒருபுறமிருக்க, மக்களும் பொற்காலத்தைத் தமக்குப் பற்றுக் கோடாகக் கொள்வதுண்டு. முடியுடை மூவேந்தர் ஆட்சியும், உறந்தை போன்ற இடங்களிலிருந்த அறங்கூறவையங் களும் அக்கால மன்னர்கள் மக்கள் மீது திண்த்த வர்க்க ஆட்சியையே காட்டுகின் றன. இரத்த உறவினராய் ஒரு தாய் வயிற் றிலே பிறந்த நேசபாசத்துடன் இயற்கை யின் மத்தியில் வாழ்ந்த குலமரபுக் குழுக்க ளின் அழிவின் மீதே அரசு - வர்க்க ஆட்சி - தோன்றியது. அந்த ஆளும் வர்க்கத்தின் வழிவழி வரும் இன்றைய அதிகார வர்க்கம், மூவேந்தர் ஆட்சி முதலியவற்றைப் பொற் காலமாகச் சித்திரித்துக் காட்டுவதைக் காண் கிருேம். ஆனல் சாதாரண மக்களோ அடி மனத்திலே பகிர்ந்துண்டு வாழ்ந்த இன்ப நினைவுகளே வாழையடி வாழையாகப் பேணி வைத்துள்ளனர். ஆண்டான் அடிமையற்ற சகோதரத்துவ சமுதாயமே மக்களின் இதய வேட்கையாகும். அந்த வகையில் பொற் காலம் என்ற கோட்பாடு புனிதமான சில குறிக்கோள்களைப் பாதுகாத்து வருகிறது என் றும் கூறலாம். அது வெளிப்படும் விதம், விகற்பங்களை யுடையதாயிருப்பினும், மறை ந்து போன, வர்க்க பேதமற்ற சமுதாயத்தை நினைவு கூருவதால் அதற்கு ஒகு தார்மீக பலம் உண்டு.
'இல்லை என்ற கொடுமை உலகில்
இல்லையாக வைப்பேன்’
என்று பாரதி பாடியபொழுது அவனது குர லிலே மக்கள் விழையும் எதிர்காலப் பொற் காலம் இடம் பெறுகிறதன்றே! கிருதயுகம் சென்ற காலத்தின் சிறப்பு அன்று, இனி வருங்காலத்தில் நிறுவப்பட வேண்டிய புது யுகத்தின் நாமம் ஆகும்.
க மாறிவிட்டால், அது அரசியல்வாதிகள் பூபத்தானது.”
-அத்வர்னி

Page 7
*(EID தின
- காவலூர்
சர்வ வல்லமை படைத்த தொழிலாளர் தினம், ஆண் டாண்டு தோறும் வரும் மே முதல் நாள்-தொழிலா ளர் போர்க்கரம் உயர்த்திய நினைவுநாள். மயிலே மயிலே என்ருல் இறகு போடுமா? வழி? அதில்தான் எவ்வளவு உத்வேகம் . உலகமெங்கும் தொழிலாளர்கள் உற்சாகத் துடன் ஒன்று கூடும் அந்த மேதினம் நாளை.
2
அந்தத் தமிழாளரின் முன்னல் பத்திரி கைகள் விரிந்து கிடக்கின்றன. அவரிடம் முகச் சுழிப்பு. தமிழ் 'அறக்கப் படித்தவர்" தப்பிப் பிறந்தது போல் அரசியலுக்கு வந்த வர். பகவிச் சுகம், அதிகாரம் என்று தன்னை மறப்பவர். அனைத்தையும் விட மிஞ்சிய 、GS)* பத்திரிகையில் பெயர் வரவேண் டும் அதற்கென்றே பலதும் செய்வது அவ ரது கட்டாயக் கடமைகளில் ஒன்று. காஜல களில் பேப்பரில் விழுந்தடிப்பது வழக்கமா னது. முகத்தைப் பார்த்து சொல்லலாம் . பேப்பரில் பெயர் உள்ளதா இல்லையா முன்பக்கமா பின்பக்கமா என்று.
இன்று முகச் சுழிப்பு .
பெயர் இல்லை.
"பேப்பர்காரன்கள் பேயன்கள்? (ԼՔ9ձԶ/, முணுப்பு. ம் சொன்னப்போலை நாளைக்கு மே தினம் விட்டன பார் அவர் "அரசி யல் தலைவர் மட்டுமல்ல. கட்சி தொழிற் சங்கத் தலைவர். படு பிற்போக்குவாதிகள் இப் படியெல்லாம் வாழ முடிவது நம் மத்தியில் தான் முடியும். இலவசத் தொலைபேசி இணைக்கிறது.

、罗
PPGI
ஜெகநாதன் .
"தொழிலாளர் உரிமைகளை வென்றெ
டுப்போம்." தலைவரின் மேதினச் செய்தி
ஓம். ஓம். போட்டோவோட . மூன்பக் கத்தில.
3
அரசாங்கப் பத்திரிகை-தலைப்புச் செய்தி "அரசாங்க மே தின விழாவுக்கு எம்.ஜி.ஆர். வருவார் ??
வரமாட்டார்.
"தமிழ் நாட்டில் வேலைநிறுத்தம் செய் பவர்கள் வேலை இழப்பார்கள் புதியவர்கள் றெடி' தயாரிப்பில் எம். ஜி. ஆர்.
பாடகர் வருவர்.
சென்னை நாட்டியக்குழு வரும்.
அரசாங்க வானெலி அலறு கிறது. தொழிலாளர்களை மகிழ்விக்க அரசாங்கம் ஏற்பாடு.
சினிமா எல்லா வகுப்புக்கும் கட்டணம் ஒரு ரூபா.
BAJOmrüü... RAOnruiu ...
4.
"தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்;
முதலாளித்துவம் ஒழிக’ இது ஒரு சிவப்பின் கோஷ ஒத்திகை.
'திரிபுவாதிகளை நிராகரிப்போம்" இதுவும் சிவப்பு.
'அம்மாவை ஒழிப்போம்.
ஐயா ஒழிக’ இது இளம் சிவப்பு.

Page 8
பல பல சிவப்புகள்
பல பல கோஷம்.
ஜலயகத் தொழிலாளர் முதுகில் மி" கட்டியவர்களும் - சுரண்டிக் கொழுத்து சுகம் பெறுவோர்களும் " மே தினம் ஒரு பாஷன் போல ஆக்கத் தயாராகினர்கள். விதம்வித மான கவிதைகள், கதைகள் எழுதி குப்பைக் கூடைக்கு அனுப்பிய வர்கள் - மே தினம் வாழ்க - உழைப்பவர் பெரு நாள் என்று கவிதை கதை படைத்து " நாளே பத்திரி கையை எதிர்பார்த்தனர்.
வருடாவருடம் வருவது ஒரே மேதினம் தானே என்று ஒரே கட்டுரையை பந்தி மாற்றி மாற்றி அனுப்புபவர். தனது "பணி" முடிந்தது என்று நிம்மதியாக படுக்கையில் சரிந்தார்.
அவன் வாசற்படியில் அமர்ந்திருந் தான். எதிர்காலம் சூனியமாகத் தெரிவது
போல் . பசியில் கண் பஞ் சனி -- த் த து துவண்டு போய் இருக்கக் கூட- ஜீவனற்று.
அவன் தான் எவ்வளவு உடைந்து போஞன். முப்பது வயதில் முதுமை கண்ட வகை. எலும்புக் கூடாகி. இந்த ஒன்பது மாதங்கள் பட்டினியும் பரிதவிப்புமாக.
அரசாங்கத் திணைக்களத்திலே genrrrrij காக வேலை செய்தவன். யூலை வேலைநிறுத்தத் திலே - நி யாயம் தானே என்று கலந்து கொண்டவன். இன்று. இளம் மனைவியும் இரண்டு பிள்ளைகளுமாக பட்டினிப் போராட் டத்தில். அவன் என்ன செய்வான். கல்வி முறை அவனை கிளார்க்காகத் தான் தயார்
S

படுத்தியது. உடலைக் கசக்கத்தான் என்னலும் வேலை கிடைத்து விடுகிறதா? ஏற்கனவே வேலைக்கு அடிபிடி. இவன் வேறு.
கிடைக்கும் அருமையையும் பிள்ளைக ளுக்கு வாரிவிட்டு எத் த னே பொழுது கள் வெறும் வயிற்றுடன்.
இவன் மட்டுமா? எத்தனை ஆயிரம் பேர் .
^ இவன். இயலாமையின் எல்லைக்கே வந்துவிட்டான். விற்றுச் சுட்டு எல்லாம் வெறுமை. -
நெஞ்சை அடைத்தது.
அவ்வளவுதான்.
காலிமுக மைதானம் அமளிதுமளிப்பட் டது. மழை குலைக்காத உற்சாகம் . . இன் னிசை, நடனம். )
மறுபுறங்களில்.
ஊர்வலம். . கோஷம். 2-pib&F IT &5ši; குரல்கள்
பலப்பல பிரிவுகள். பலப்பல கோஷங் கள்.
பத்திரிகைப் படங்கள். தலைப்புச் செய் திகள். நாள் முழுவதும் வானெலி அல றல். சினிமாக்களில் நிறையும் விசிறிகள்.
முன்பக்கச் செய்தியும் போட்டோவும் பார்த்து முகம் மலரும் தமிழ் மணி,
8
அன்றுதான் அவனது பிண ஊர்வலமும் நகர்ந்து கொண்டிருந்தது.

Page 9
எந்தப் பிறவியில் இவர்கள் இறுப்பார்கள்
ஏருநாள் கொத்தின தாளிரு எடுத்த மண்வெட்டி வைக் சோறு, கறி,தண்ணி பத்திய தொண்டைக்குள் போனதுப் நேரங் காலமெதும் LinTyrfiro நெஞ்சு முறிய உழைச்சதிந் ஊருல் கத்துக்குத் தான்தெ உண்மையும் நேர்மையும் உல
அஞ்சில் ஒருகூலி தாறதாய் அன்றைக்குச் சொன்னது ே தஞ்சையில் கண்டது நாற்ப தல்லாய் விளைஞ்சிது; பத்தவ பஞ்சிப் பட்டுப்பட்டுப், போ பாட்டுக்குத் தந்ததோ பத்தி கஞ்சி குடிக்கவும் காணுதெ6 கணக்குக் கொப்பியை நீட்டு
பள்ள வெளிக்கண்டம் இந்த "பாலான வெள்ளாமை; உ உள்ளதுக் குள்ளே,நான் செ உச்ச விளைச்சலைக் கண்டதெ கள்ளங் கபடெதும் இல்லாப கந்தோரால வந்த ஓவிசரூ, **நல்ல கமக்காரன் நீ'யென் நம்ப முடியாத பேச்சுகளோ
முந்த நாள் மாணிக்கப் பிள்க முகப்பில, எம்பி முகதாவில இந்த வரிச விவசாய மன்ன சாங்கட போடியார் தானபெ கந்தோர்ப் பெரியவர் கைகு காசும் கொடுத்த மாபாவத் சாத்தப் பிறவியை இந்த மனி எடுத்து வத்தே இறுப்பார்கே

T
- ஜீவா ஜீவரத்தினம்
தந்து - கையில்
வில்லை; பமாய் எந்தன் b இல்லேயம்மா! ல், ராப்பகல்
岛 f urrasrr(Suor,
மைகளோ?
ח"חtg.uחנ3L) נ: பச்சளவோ? து புஞ்சையில் Jessorb; ፹ rturri, j5rreirut".l.- லொண்டு! *ருல் - அவர்
)5agi!
முறை - நல்ல ஊரறியும்! ய்த வயலேதான் iண்டு,
ல், அன்றைக்குக்
ஈடு சொன்னது
2
ாயார் கோவில்
வன்
2ண்டு, லுக்கிப் போட்டுக் துக்கு,
?erfassir
smirnir?

Page 10
தேசிய pjbGur
அமரர் அ.
- எஸ். அகச்
இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களில் முதல்வரும், தேசிய யதார்த்த இலக்கிய வாதிகளில் ஒரு வரும், சிறந்த படைப்பிலக்கிய வாதியும், தமிழிலக்கியப் பரப்பின் சகல துறைகளிலும் தன்னிகரற்றுத் திகழ்ந்தவருமான அறிஞன் அமரர் அ. ந. கந்தசாமி மறைந்து பதின் மூன்று ஆண்டுகளாகின்றன. இலக்கியக் களத்தில் அவர் ஒர் இயக்க வாதியாக விளங் கியதே அவரின் சிறப்பு. அவரின் இழப்பு இன்னும் சரியாக ஈடுசெய்யப்படவில்லை,
தமிழகத்தின் நச்சு இலக்கிய வணிகப் பூதங்களுக்கு அன்று புதுமைப் பித்தன் எவ் வாறு நீறுபூத்த நெருப்பாக விளங்கிஞரோ, அது போன்றே ஈழத்தில் நமது எழுத்தாளர் அரமர் கந்தசாமியும் நச்சு இலக்கிய வாதி களுக்கு ஒர் எரிசரமாக விளங்கிஞர். அவரை எதிர்த்தவர்கள் பலர்; அவரை வென்றவர் கள் ஒருவருமேயில்லை.
யாழ்ப்பாணம் அளவெட்டியைப் பிறப் பிடமாகவும், வண்ணுர்பண்ணையை வசிப்பிட மாகவும், கொழும்பு - மலையகத்தை இலக்கி யப் பாசறையாகவும் கொண்ட அ. ந. கந்த சாமி, ஈழத்து 'மறுமலர்ச்சி' இலக்கிய ஸ்தாபகர்களின் முன்ளுேடியாகத் திகழ்ந் தார். அ. செ. முருகானந்தம், "வரதர்" போன்ற எழுத்தாளர்கள் "மறுமலர்ச்சி" இலக்கிபப் பாசறையில் வளர்ந்தவர்கள் என் பதும் குறிப்பிடத்தக்கது. அ. ந. க. ஆரம் பத்தில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முழுநேர ஊழியராகவும், பின்பு சுமார் பத்து ஆண்டுகளாக அரசாங்க சேவை யில் எழுதுவினைஞராகவும் பணியாற்றி, அதி லிருந்தும் விலகி, இலக்கிய - இயக்கக் களத் தில் முழுமூச்சாக இயங்கியவர்.
10

ಕ್ಲಿಲ್ವHಶಿಶ್ನ"
9தியர் -
"எல்பிட்டியா என்ற பிரதேசத்தில் முழுநேர ஊழியராக இயங்கிய போது *தோட்டத் தொழிலாளி என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை பிரசித்தி பெற்றது. செ. யோகநாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ’வசந்தம் இதழிலும் அக்கவிதை மறுபிரசுரம் செய்யப்பட்டது. அ. ந. க. வின் ‘நாயிலும் கடையர்' என்ற சிறுகதை யும் பல்வேறு இலக்கிய இதழ்களில் பல தடவை மறு பிரசுரம் செய்யப்பட்டது. டொமினிக் ஜீவாவின் "மல்லிகை"யிலும் அவர் இலக்கியங்கள் மறுபிரசுரமாயின.
சிறுகதை, கவிதை, நடகம், நாவல், விமர்சனம், சித்தாந்தம், மனுேதத்துவம், இலக்கிபக் கட்டுரை - என்கின்ற பல்வேறு படைப்பிலக்கியப் பிரிவுகளில் கைவைத்து இலக்கிய ஆளுமை பெற்றவர் அ. ந. க. ‘வீரகேசரி’, ‘சுதந்திரன்’ பத்திரிகை களிலும், "ட்ரிபியூன்” என்ற ஆங்கிலப் பத் திரிகையிலும் பணியாற்றியவர். ஈழத்தில் முற்போக்கு இலக்கியத்திற்கு வித்திட்ட கே. ராமநாதன், கே. கணேஷ் ஆகிய எழுத்தாளர் களுடன் செயலாற்றிய அ ந. க. கே. ராம நாதனுடன் "தேசாபிமானி பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினர்.
செ. கணேசலிங்கனின் முயற்சியால் வெளியிடப்பட்ட "வெற்றியின் இரகசியங் கள்" என்ற அவரது மைேதத்துவ நூல், அ. ந. க.வின் திறமைக்கு ஓர் எடுத்துக் காட்டு. சிறந்த பேச்சாளராகவும், தர்க்க 'வியல் வாதியுமான அலி ரின் "மதமாற்றம்" என்ற நாடகமும், தினகரனில் வெளிவந்த 'மனக்கண்' என்ற நாவலும் ஈழத்து இலக் கிய பரப்பில் பெருந் தாக்கத்தை உண்டாக் இயவை. தமிழிலக்கியக் களத்தில் இத்தகைய

Page 11
சாதனைகள் புரிந்த அ. ந. கந்தசாமி தனது 48வது பிராயத்தில் நம்மை விட்டுப் பிரிந்த அவலகோலம் இலக்கியப் பாசறையில் ஓர் கல்லறைக் காட்சியாகவே தெரிகின்றது.
"மக்கள் பக்கம் நின்று மக்களுக்காகவே எழுதுபவனை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்" என்னும் அவர் தம் கூற்றின அவர் சிருஷ்டிகளிலும் தரிசிக்கலாம்.
மக்களுக்கு எழுதுவது ஒருவகை; மக்க ளுக்காக எழுதுவது இன்னேர் வகை. மக்க ளுக்கு இலக்கியம் படைப்பதாகக் கூறிக் கொண்டே, மக்களின் சமூக அமைப்பின் இயக்க இயல்பினையோ, அவற்றின் குளும் சங்களையோ புரியாமல் நடப்பியல் இலக்கி யம்" என்ற சாட்டில் சாக்கடை நச்சு இலக் கியங்களைப் படைக்கும் கற்பளுவாத வணி தர் கூட்டம் போன்று கந்தசாமி இலக்கியம் படைக்கவில்லை. சமூகவியல்பின் குணும்சங் களைப் புரிந்து, அவற்றினூடாக மனிதகுலத் தைத் தரிசனம் செய்து, அத்தரிசனத்தோடு மக்களை வெளிச்சத்திற்கு - ஓர் புதிய உல கிற்கு அழைத்துச் செல்லும் மேய்ப்பஞக நின்று யதார்த்த முற்போக்கு இலக்கியம் படைத்த கந்தசாமி, "செக்ஸ்" என்னும் பாலுணர்வினைக் கசடறக் கற்றுத் தேர்ந்த நுண்ணறிவினராயினும், தமது படைப்புக ளில் பண்டிதத் தனத்தையோ, காம உணர் வினைத் துண்டும் கழிசடைத் தனத்தையோ மறந்தேனும் எழுதாத மக்கள் எழுத்தாளர்.
சிறு பராயத்தில் இயக்க - இலக்கியக் களத்தில் பிரவேசித்த அ ந. க. இறக்கும் வரை இலக்கியக் கருவுருவத்தின் கோட்பாடு கள் பிறழாது வீருர்ந்து எழுதிய விமர்சனங் களும், படைத்த காவியங்களும் ஏராளம்.
1946 - 47 வாக்கில் ஈழத்தில் עשמש மலர்ச்சி இலக்கியக் குழு அமைத்தள ர்களில் தத்துவ தரிசன இயசக சக்தியாகத் திகழ்ந்த கந்தசாமி, உழைக்கும் தொழிலாள விர்க்க சக்திகளுடன் இணைந்து ஓர் இயக்க இயல் தத்துவ வாதியாக - போராட்ட உணர்வுக ளேக் கிளறும் ஆவ்ேசக் கவிஞராக - ஆழ்ந்த சமூகவியற் சிறுகதை, நாவல், நாடக எழுத் தாளராகத் திகழ்த்தார்.

ஒரு காலம் யாழ்ப்பாணத்தில் ஜாதி
வெறி மிருகதாண்டவமாடிய வேளே - மணி தன் மனிதன் - தமிழனைத் தமிழனே கொடு மைப் படுத்திய நிகழ்ச்சிகள் சொல்லில் அட ங்கா. அக்கொடுமைகளிலொன்றே யாழ்ப்பா ணத்தைக் குலுக்கி வைத்த, கொட்டடி வில் லூன்றிச் சுடலை மயானத்தில் பகிரங்கமாக நடந்த துப்பாக்கிப் பிரயோகம்.
ஜாதிவெறி பிடித்த ஈனப் பிறவிகளா னுேர் கிராமங்களிலுள்ள வறிய மக்கள்மீது சொல்லொண்ணு நிஷ்டூரங்கள் புரிந்த காலத் தில் - வில்லூன்றிச் சுடலையில் ஜாதித் திமி ராடிகளான ஈன ஜென்மத்தினஸ் வெறி கொண்டு "தாழ்த்தப்பட்ட மக்கள்" எனப் படுகின்ற தமது தமிழினச் சகோதரர்கள் மீது பகிரங்கமாகவே துப்பாக்கிப் பிரயோ கம் செய்து படுகொலை புரிந்தனர். தமது எழுத்தாளன் கந்தசாமி யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பில் அந்தஸ்துப் பெற்றிருந்த போதும், அவரே போர்க்களம் புகுந்தபடைத் தளபதி போல் ஆகாவென வீருர்ந்தெழுந்து நீதி கேட்டுச் சிங்கேறஞகப் போராடியவன்; தன் பேறு முனையாலும் வீரகாவியம் படைத் தவன். அவன் அன்று படைத்த அக்காவி யங்கள் இன்றும் ஈழத்துப் படைப்பிலக்கி யப் பரப்பில் அழியாச் சுவடாக - ஜாதித் திமிராண்டிகளுக்கு எரிசரங்களாகத் திகழ் கின்றன.
பிரிட்டிஷ் காலணித்துவ காலந்தொட்டு இன்றுவரை இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு முதுகெலும்பாகவும், உயிர் நாடியாகவும் விளங்குகின்ற பாட்டாளி வர்க் கமான மலையகத் தொழிலாளர்களின் ஏக்கம் நிறைந்த அவல வாழ்க்கையையும், மூதலா ளித்துவச் சுரண்டல்களுக்கெதிரான அவர் களின் விறல்மிக்க போராட்டங்களையும் தம தாக்கிக் குரல் கொடுத்த மலையக எழுத் தாளர்களான கே. கணேஷ் ஸி. வி. வேலுப் பிள்ளை போன்றவர்களில் அ. ந. க. முன்ன ணிப்படை இலக்கிய வாதியாக விளங்கிஞர். "ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி பற்றி எழுதும் சரித்திர ஆய்வாளர்கள் இதனையும் சிறப்பாக மறந்து அழகாக மறைத்து விட் டிருக்கின்றனர். சுப்ரபோதம், நித்திய சங் கடம். ஆளுல், மக்கள் உத்தியில் அவர்
11

Page 12
எழுத்தோவியங்கள் வாழ்கின்றன. சரித்திரப் புரட்டர்கள் எத்தகைய இருட்டிப்புச் செய்த போதும் அ. த. க.வை மக்கள் மத்தியி
விருந்தோ இலக்கிய களத்திலிருந்தோ மறை த்துவிட முடியாது.
ஈழத்தின் இதய நாடியாகத் திகழும் தோட்டத் தொழிலாளர்களின் கோரம் திறைந்த-சகிக்க முடியாத வாழ்க்கையை அ. ந. க. தனது சிருஷ்டிகளில் தத்ரூபமா கச் சித்தரித்த கதைகளும் கவிதைகளும்
பலவுண்டு. நாட்டு வளப்பம் சொல்ல வெளிக்
கிட்ட கிணற்றுத் தவளைகளுக்கு இது தெரி
யாமல் விட்டதில் வியப்பில்லே. அ. ந. க. வின் அச் சிருஷ்டிகள் இன்றும் மலையகத்
தொழிலாளர்களின் வாழ்க்கை முறையைப்
பிரத்தியட்சப் படுத்துவதுடன், சுரண்டலற்ற
சமுதாய அமைப்பிற்கு அவர்களை அழைத்
துச் செல்லும் தூண்டாமணிகளாகவும் விள ங்குகின்றன. அவரின் 'நாயிலும் கடையர்'
தேயிலைத் தோட்டத்திலே’ போன்ற சிறு கதை - கவிதைகளை உதாரணத்திற்குக் குறிப் பிடலாம். "மக்களுக்காக எழுதும் போது மக்களின் குரலாக நின்று படைப்பதிற் ரூன் எழுத்தாளன் தன் தேசத்தின் சிருஷ்
டிக் களத்தில் நிலைகொள்ள முடியும்" என்
னும் அவர்தம் கூற்றிற்கு, அவரின் சகல
சிருஷ்டிகளுமே சான்று பகர்கின்றன,
பிரதேச வாரியான இலக்கியங்களின், பரிணும வளர்ச்சிகள் வெவ்வேறு புதிய வடிவ மெடுத்த காலகட்டங்களில், அவற்றினைச் சமூகவியற் பாங்கினிற் சரியாகக் கணித்து முற்போக்குக் கலை இலக்கியம் ஈழத்தில் தோற்றுவிக்கப்பட்டது. இவ்விலக்கியக் களத் தில் அ. ந. கந்தசாமியும் இன்று சோவியத் தில் தமிழ் இலக்கியப் பகுதியில் பணியாற் றும் கே. ராமநாதனும் முக்கிய பங்கு வகித் தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இலங்கை முற்போக்கு இலக்கியப் பரப்பில் ஒரு தளபதியாக விளங்கிய கந்தசாமி, தன் னிச்சை வாதப் போக்கினில் சுயபுராணம் பாடுகின்ற இலக்கியக் கோமாளிகளையும், கோயல்பல்ஸ் வாதிகளையும் சரியாக இனங் கண்டு சமராடிய சுத்த வீரனுமாவார்.
12

மனிதனை மனிதன் வஞ்சித்து வாழும்
கொடுமையான அமைப்புக்கு முடிவுகட்டும் சாதனமாக விளங்குகின்ற முற்போக்கு இலக் கியக் களமே, மனித குலத்தை முழுமுட்டா ளாக்கிய “பிரபஞ்சம் என்னும் அஞ்ஞான வாதத்தைச் சாடி, சோஷலிஸ் மெஞ்ஞான ஆக்கங்களிலும் ஆளுமை கொண்டு திகழ்கி றது. இதில் அ. ந. க. முழுமூச்சாக்ச் செயற் பட்டதால் போலிகள் களைந்தெறியப் பட்ட னர்.
கலை இலக்கியங்களில் அஞ்ஞான ஆதிக்க மும் நச்சு இலக்கியங்களும் தலைவிரித்தாடி, உழைக்கும் மக்களையே பரலோகம் பார்த்துப் பொருமுகின்ற வீணர்களாகவும், வியாபார இலக்கியத் தாண்டவர்களின் அடிமைகளா கவும் ஆக்கிவிட்டன். இந்த அழுந்தலால் உந்தப்பட்ட அ. ந. க.வின் உன்னத சிருஷ்டி களில் ஒன்றே "மதமாற்றம்’ என்ற நாட கம். அந்நாடகம் ஈழத்தில் பெருந் தாக்கத் தையே உண்டாக்கிற்று. இவ்வாறு அஞ் ஞான வேதாந்தங்களேச் சாடி மெய்ஞ்ஞான உண்மைகளை விஞ்ஞான பூர்வமாகத் தமது சிருஷ்டிகளால், மக்களுக்கு அறிவொளி பரப் பியவர் அறிஞர் அ. ந. க.
எழுத்தாளனுக்கு இலக்கணமாகவும், முற்போக்கு இலக்கியத்தின் கலங்கரைவிளக்க மாகவும் விளங்கிய அ. ந. க. ஈழத்து இலக் கிய ஆரோக்கிய வளர்ச்சி கருதி, தேசிய இலக்கியக் கோட்பாட்டினை முன்வைத்தார் அப்போது ஒருபக்கம் பேரின ஆதிக்க வாதி. களும், மறுபக்கம் தேசிய இன வாதிகளும் தாயும், சேயும் போல் இணேத்து அக்கோட் பாட்டினை எதிர்த்தனர் முற்போக்கு இலக் கியக் களத்தை எதிர்த்தே இலக்கியப் பரப் பில் "பிரபல்யப் படுத்தப்பட்ட இவர்கள், தேசிய இலக்கியத்தையும் கண்மூடித்தனமாக எதிர்த்துத் தம்மைப் பிரபல்யப்படுத்தும் வழக்கத்தையே கையாண்டனர். அதன் பிரதி பலிப்பை இன்று அனுபவத்தில் கண்டும் வருகின்றனர்.
இன்று என்றுமில்லாதவாறு இந்திய இலக்கிய வியாபாரிகளின் கவர்ச்சிகரச் சஞ் சிகைகளின் ஆக்கிரமிப்பால் ஈழத்து எழுத் தாளன் திணறிக் கொண்டிருக்கிமூன். இதன்

Page 13
பால் ஈழத்துத் தேசிய இலக்கியம் "படுத்து விட்ட உண்மையையும், இதனை எதிர்க்கத் திராணியற்று இதே கவர்ச்சி இதழ்களின் பாதார விந்தங்களில் வீழ்ந்து, தமது ஆக் கங்களை ஆள்பிடித்துக் கொடுத்து ஈழத்தில் புகழ்க்கொடி ஏற்ற அங்கலாய்க்கும் பேர்வழி களைத் தற்போது பார்க்குமிடத்து, ஈழத்துத் தேசிய இலக்கியத்தின் தாற்பரியம் அன்றைய காலத்தைவிட இன்று எத்தகைய வீறுடன் செயற்பட வேண்டியுள்ளது என்பதை அவ தானிக்கலாம். ネ
இதனை அன்றே தீட்சண்யத் துடன் கணித்துத் தமிழ்த் தேசிய இலக்கியத்திற்கு வித்திட்ட அ. ந. க.வுக்கு இன்றைய ஈழத் துத் தமிழ் எழுத்தாளர்கள் - கவிஞர்கள் கட மைப்பாடுடையவர்கள்.
அ. ந. க.வின் தேசிய முற்போக்கு இலக்கியப் பாசறையில் வேகமாக இயங்கிய படைப்பாளிகள், விமர்சகர்கள் இன்று ஈழத் தின் சமுதாயக் கண்ணுேட்டத்துடன் தாக்க மான இலக்கியங்களை அளித்து வருவதிலிரு ந்து இந்த உண்மையைப் புரிந்து கொள்ள லாம். இத்தகைய படைப்பாளிகளையும் படைப்புகளையும் இதில் குறிப்பிடின் விரிந்து கொண்டே போகும். இதனை வேருேர் கட் டத்தில் விரிவாக்கம் செய்ய உத்தேசம் இங்கே விரிவஞ்சி அது தவிர்க்கப்படுகிறது
இன்று தேசிய இலக்கியக் கோட்பாட் டினைச் சரியாக நோக்கின், கந்தசாமி போன்ற இலக்கிய வாதிகள் எந்தத் தேசிய இலக்கி யத்தின் தனித்துவத்திற்காகப் போராடிஞர் கள் - போராடுகிருர்கள் என்பதை அனுபவ வாயிலாக உணர்வர். ஈழத்துத் தமிழ் எழுத் தாளர்கள் மத்தியில் இன்று தேசிய இலக்கி யத்திற்கும் அதன் தனித்துவ ஆளுமைக்கும் ஆதரவு நல்க எழுந்துவரும் முனைப்பு. கந்த சாமியின் சரியான சமுதாயக் கண்ணுேட்டத் துக்கு எடுத்துக்காட்டு. 塾生
நமது தேசிய இலக்கியத்தின் தனித்து வத்தை நாம் டேஞமல் இனி ஒர் அடிகூட வைக்க முடியாது என்பதற்குச் சான்ருக, இன்று ஈழத்தைச் சந்தைப்படுத்தி ஆக்கிர மித்துக் கொண்டிருக்கின்ற அயல் நாட்டு நச்சு இலக்கியக் குப்பைகள் நமது இலக்கிய

வாதிகளைப் பார்த்துச் சவால் விட்டுக் கொண் டிருக்கின்றன. கந்தசாமியின் இலக்கியப் பாசறையில் வளர்ந்த எழுத்தாளர் படை யாவது இதில் போதிய கவனம் செலுத்த வேண்டும். அ. ந. க. நாமம் அழியாவிடம் பெற அவர் பாசறை எழுத்தாளர்கள் சங் கற்பமெடுப்பார்களாக,
அமரர் அ. ந. கந்தசாமியின் தோழனும், இலக்கிய நண்பருமான திரு. பி. ராமநாதன் அ. ந. க. மறைவின் பின் அவர்பற்றி அடிக் கடி இவ்வாறு சொல்லிக்கொள்வார்.
'ஈழத்து இலக்கியக் களத்தில் நமது கந்தர் இல்லாதபடியால்தான் சில மந்தை கள் சிங்கங்கள் போல் கர்ஜிக்கின்றன’
இன்று இது எத்தகைய அர்த்தமுள்ள வாக்கியம் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஈழத்தின் மறுமலர்ச்சி இலக்கிய குழு வைத் தோற்றுவித்து அதனடியாக வளர்ந்து சிறந்த படைப்பாளிகளாகத் திகழ்ந்தோர் இருவர். ஒருவர் அ. ந. கந்தசாமி அடுத்த வர் நம் மத்தியில் அடக்கமாக வாழும் அ. செ. முருகானந்தம். இயக்கவியல் படைப் பிலக்கியத்தில் உன்னத பாத்திரம் வகித்த வர்களில் அ. ந. க. நவீன இலக்கியத்தின் சகல வடிவங்களிலும் கைவரப்பெற்று மேதை யாக விளங்கினர். அத்துடன் அரசியல், விஞ் ஞானம், சரித்திரம், தர்க்கவியல், தத்துவம், மொழிபெயர்ப்பு ஆகிய சமூகவியல் இலக்கிய சாகரத்திலும் மூழ்கியவர். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற அ த. க., எமிலிஸோலாவின் "நாணு" என்ற நவீனத்தைத் தமிழிற் பெயர்த்துள்ளார். சிறந்த பேச்சாளராகவும், அலுக்காத இலக் கிய சம்பாஷணையாளராகவும் விளங்கிய அ. ந. க.வுடன் பேச்சுக் கொடுத்தால் போதும், பேச்சுக் கொடுத்தவர் சுளுவில் தப்ப முடி யாது. எப்படியும் அவர் ஏதோ ஒரு புதிய கருத்தும், அதன்பால் வீறுணர்வும் பெற்றுச் செல்வார் என்பது நிச்சயம்.
இதன் காரணமாக அ. ந. க.வுடன் இலக்கிய - இயக்க சர்ச்சை புரிந்து அவர் நட்பைப் பெற்றுக்கொள்வது தமது பாக்கி யம் என்று நினைத்து, அவருடன் "தோழமை"
3.

Page 14
கொண்ட கலை இலக்கிய வாதிகள்-இயக் வாதிகள் பலர். இத்தகைய ஓர் அற்புத இலக்கிய வாதியான அ. ந. கந்தசாமி 48 வய தில் ஈழத்து இலக்கியத் தாய் மடியில் திரர் தரமாக உறங்கி நம்மையெல்லாம் ஏக்கத்தி லாழ்த்தி விட்டார் புதுமைப் பித்தன் தமி ழகத்தை விட்டு சென்றது போல, கந்தசாமி ஈழத்தை விட்டுச் சென்றுவிட்டார்.
இலக்கிய பரப்பின் சாகரமாக விளங்கிய கந்தசாமியின் தன்மைகளையும், இலக்கியங் களேயும், இலக்கிய வாழ்க்கையையும், சரித் திர வாயிலாக முழு ஆய்வு செய்து இலக்கி யப் பரப்பில் இடவேண்டும். இதனை இலக் கிய விமர்சன ஆய்வாளர் மேற்கொள்ளு வார்கள் என்று எதிர் பார்க்கின்றேன். இது அவர்கள் கடமை. அ. ந. க.வின் இலக்கியங் கள் ஆய்வு செய்யப்படின் அ. ந. க.வின் இலக்கிய ஆளுமையைத் தரிசிக்கவும், ஈழத்து தமிழிலக்கியத்திற்கு ஆதாயம் காணவும் உத வும் என்பது என், கருத்து. ·
அ. ந. க. எந்தச் சந்தர்ப்பத்திலும் தனிப் பட்ட விருப்பு வெறுப்புகளை எவரிடத்திலும் "சாட்டுவதில்லை. ஒரு மானிதக் கலைஞனுக்கு இருக்கவேண்டிய ஆத்மாவேசக் குளும்சங் கங்களும், எழுத்தாளனுக்கு இருக்கவேண் டிய உயர்ந்த பண்புகளும் அவர் பால் இருந் தன. "இலக்கியம் மக்களுக்காகப் போராடும் சாதனம்; கலை கலைக்காகவென்பவன் ஒருவித வழிபாட்டு அடிமை" என்று கூறும் கந்தசாமி, அக் கூற்றினை இலக்கியக் களத்தில் நிரூபித் துக் காட்டிய இலட்சியவாதியாவார்.
அமரர் கந்தசாமியின் எழுத்தில் நீரருவி போன்ற தெளிவும் எக்களித்து ஆர்ப்பரிக் கின்ற வேகமும் திரவியிருக்கும். அவர் கை யாளுந் தமிழ் நடை ஓர் மான்விழி ஆரணங் கின் நடனம் போன்று லளிதமாகவிருக்கும், அவர் கையாளும் உத்திகள் ஒவ்வோர் கட் டத்திலும் பிரமிப்பையும், புதிரையும், வியப் பையும் காட்டுவன. இவற்றை அவரின் உன் னத சிருஷ்டிகளான "மதமாற்றம்’ நாடகத் திலும், 'மனக்கண் நாவலிலும் தரிசிக்க லாம். இந்த "மணக்கண் நாவலை அண்மை கவிஞர் சில்லையூர் செல்வராசன் 5 FTL-as மாகத் தயாரித்து வானெலியில் வாரந்தோ
14

றும் தொடராக அளித்து நிறம்பித்ததைக் கல இலக்கியவாதிகள் மட்டுமன்றி, பொது மக்களும் அறிவார்கள். கவிஞர் சில்லையூர் செல்வராசன் உரிய காலத்தில், தக்க முறை யில் அ.ந.க நாவலை வாஞெலி நாடகமாக்கி அளித்தமை குறிப்பிடத் தக்கது.
அ.ந.க. தான் காணும் உலகத்தை ஒரு கலைக்கூடமாகவே நோக்குபவர். அவர் இயக்கவாதியாக விருந்த போது மக்களின் அன்ருட வாழ்க்கையின் யதார்த்த நிலைகளைப் புரிந்து, அவர்களின் வாழ்க்கை முறைகளைப் படம்பிடித்துக் காட்டும் அற்புதக் கலைஞனுக வும் விளங்கிஞர். அவர் துயில் கொள்ளும் போதும் அவர் இதயம் இலக்கியத்திலும், இயக்கத்திலும் மூழ்கிவிடும். துயின்று எழுந் தவுடன் அக் காட்சிகளை இலக்கிய வடிவங்
கொடுத்துப் படைக்கின்ற பாங்கு அவரிடம்
இயல்பாகவிருந்தது. "நடமாடும் புத்தக சாலை’ என்று அழைக்கப்படும் அ. தி. க. , எங்கே-எப்போ பார்த்தாலும் கலே, இலக்கி
யம், அரசியல், இயக்கம் சம்பந்தமா 61 (ւք
தி க் கொண்டோ, சம் பா ஷி த் து க் கொண்டோ, தர்க்கம் புரிந்து கொண்டோ தானிருப்பார். பிரச்சினைக்குரிய சர்ச்சைக ளில் இறங்கிவிட்டால் போதும், உணவையே மறந்து மணிக்கணக்காக-விவகாரம் முடியும் வரை சுவை ததும்ப-ஆனல், ஆக்ரோஷமாக அலறு தொனியில் நெருப்புப்பொறி போல் கனல்சக்கத் தன் கருத்துக்களை அழுத்திஅழுத் திப் பேசிக் கொண்டே இருப்பார் சம்பாஷ னேயின் போது "கலகல"வென்று அட்டக மாசு எக்காளமிட்டுச் சிரிப்பார். மாற்றுக் கருத்துக்களின் ஆளுகைகள் கூட அவரின் அமர்க்களச் சிரிப்பில் அமுங்கிவிடும். 'மா வீரன் போன்ற அவரின் கம்பீர்ய தோற்றத் தினுள்ளே இத்தகைய குழந்தைப்பிள்ளைத் தனமா?" என நமக்கு வியப்புண்டாகும்.
அ.ந.கந்தசாமியிடம் பழி வாங் கும் இயல்போ இடம்-பொருள்-ஏவல் பார்த்துக் கோபஞ் சாதிக்கின்ற - குழி தோண்டுகின்ற பெண்ணைத்தனமோ மருந்துக்கும் இருந்த தில்லை. "நாம் நமக்கு உடன்படாத கருத் துக்களுக்கு வைரிகளே தவிர, அவற்றைக் கூறும் கலஞர்கள் மீதல்ல" என்று அ.ந.க. அடிக்கடி கூறுவார். "குரோதம், பழிவாங்

Page 15
கும்குனம், எழுத்தாளனிட்ம் இருக்குமா பின் அவன் மனிதக் கலைஞனல்லன்' என் லுங் கூற்றில் நம்பிக்கை கொண்ட அ.ந.க., அக் கூற்றின்படி வாழ்ந்துங் காட்டிய உத்த Leri.
அமரர் கந்தசாமியால் பல கவிஞர்கள்,
எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள் உரு வாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நடிகவேள் அடிஸ் வீரமணி, கலைதாஸன் போன்ற கலை ஆh களைக் குறிப்பிடலாம். கலைதாஸன் தற் போது தமிழகத்தில் இருப்பதாக அறியவரு கிறது. ஓர் எழுத்தாளன் அவன் எந்த இயக்க அணியைச் சார்ந் தவ ஞ ணு லும், அவன் படைப்பு ஏதோ ஒரு அம்சத்தில் சிறந்து விளங்கியிருப்பின் அ.ந.க. தானகவே அவ
மரமும்
- ெ
பஞ்சாபை ஆண்டுவந்த ரன டன் தலைநகரைக் கடந்து போன ே தங்கினுர் நல்ல வெயில். பக்கத்திலி அது அரசரின் உடலில் பட்டுவிட்ட டும்? காவலர் நாலு பக்கமும் விை ருந்த கிழவி ஒருத்தியை இழுத்து
நடுங்கிக் கொண்டிருந்த கிழவின 'நீங்களா கல் எறிந்தீர்கள்?’ என் “மகாராஜா, என் மகன் இரண் தானியங் கூடக் கிடையாது. இந்த காய்களை வீழ்த்தக் கல் எறிந்தேன். இல்லை. நான் செய்த பிழையை மன் இதைக்கேட்டதும் ரண்ஜித்சிங் என்றர். கிழவி வீடு திரும்பியதும், ளுக்கு வேண்டிய உணவுப் பொரு கொண்டு நூறு பொற்காசுகளைம் செ
பக்கத்தில் இருந்த அமைச்சர் டிச் சன்மானமா?’ என்று கேட்டா
அரசர் சிரித்துக் கொண்டே, 6 யைப் போக்கக் காயோ கனியோ த தண்டனை தந்தால் மரத்தைவிட ம6 நான் அந்த இழிவுக்கு இலக்காக வி நன்றி: யூதரீ ராமகிருஷ்

னைத் தேடிச் சென்று, அவனை நெஞ்சாரப் பாராட்டி விட்டுத்தான் மறுவேலை பார்ப் பார். இத்தகைய சம்பவங்கள் அவர் வாழ்க் கையில் ஏராளம் உண்டு. இவற்றைப் பிறி தோரிடத்தில் விஸ்தரிப்பேன்.
தானறிந்தளவில் அடுத்தவன் எழுத்தை மனந்திறந்து இதயசுத்தியோடு பாராட்டும் உயர்ந்த பண்பு (திண்மை என்றுங் கூற லாம்). அனேகமாக அ.ந.க. ஒருவரிடமே பூரணமாக விருந்தது. இதன் கண் அ.ந.க. வின் நட்பையும், அவருடன் சம்பாஷிக்கும் சந்தர்ப்பத்தையும் ஒரு வரப்பிரசாதமாக " பாக்கியமாக இலக்கிய நண்பர்கள் கருதினர் கள் இன்றும் கருதுகிருர்கள். Y
மனிதனும்
சளரி -
ண் ஜித்சிங் ஒரு சமயம் பரிவாரங்களு போது ஒரு மரத்தடியில் இளைப்பாறத் ருந்து திடீரென்று ஒரு கல் விழுந்தது. டது. பரபரப்புக்குக் கேட்கவா வேண் ரந்து பக்கத்தில் மரத்தடியில் நின்றி வந்தனர். - யைப் பார்த்து ரண்ஜித்சிங் நிதானமாக
றர். ாடு நாளாகப் பட்டினி. வீட்டில் மணி விளாமரத்தைப் பார்த்ததும் இந்தக் நீங்கள் தங்கியிருப்பதை கவனிக்கவே ானித்தருளுங்கள்“ என்ருள்.
'கிழவியை விடுதலை செய்யுங்கள்” அரசர் அதிகாரியை அழைத்து, “அவ ட்களை நிறைய வாங்கிக் கொடு. மேற் காடுத்துவிட்டு வா’ என்ருர். கள், ‘கல்லால் அடித்தவளுக்கு இப்ப ‘ர்கள். - மரத்தின் மேல் கல் வீசிஞல் அது பசி ருகிறது. என் மேல் பட்டதற்கு நான் னிதன் தாழ்ந்தவன் என்று ஆகிவிடும். ரும்பவில்லை’ என்று பதில் அளித்தார்.
ன விஜயம் (தமிழ்: மணி விழா மலர் 1981)
15

Page 16
சிறுகதை
*சிவப்ரியா?
Pலர்ந்தும் மலராத பாதி மலராக இரு ந்து மண்ம் வீசும் இதமான காலை நேரம். இருட் குவியலைச் சிறிது சிறிதாக அகற்று கின்ருன் ஆதவன். ஆலய மணிகளின் ஒசை கள். அங்கும் இங்கும் சிறகடித்துப் பறக்கும் சின்னஞ்சிறு குருவிகளின் குரலோசைகள். காகங்கள் சேவல்கள் முதலிய அதிகாலைப் பட்சிகளின் மழலை மொழி நாதங்கள் எல்லா விதமான் ஒலி ஓசைகளும் ஆழ்ந்த தூக்கத் தில் உறங்கிக் கிடந்த உலகத்தை துயி லெழுப்புகின்றன.
இயற்கையின் இனிய கீதத்தினுல் அகி லனும் விழித்தெழுந்தான். அகிலன் அக் கிராமத்தில் எல்லோராலும் விரும்பப்படும் ஒர் அன்பான ஆசிரியன். ஆசிரியத் தொழி லுக்கே உரிய அறிவான ஒளி வீசும் தோற் றம் கொண்டவன் அகிலன். அவன் ஓர் துடிப்பான இளைஞனும் கூட.
ஆலய மணியின் ஒசையைக் கேட்டு கண் விழித்த அகிலன் அக்கிராமத்தின் அழகிற்கு மேலும் அழகூட்டுவதாக அமைந்த சின்னஞ் சிறு குளத்தில் நீராடினன். பக்கத்தில் உள்ள சிவன் கோவில் தான் அகிலனின் வாழ்வில் அமைதியையும் நிம்மதியையும் கொடுக்கும். ஒரே இடம். அக்கோவிலில் தினமும் காலை யில் படிக்கப்படும் திருப்பள்ளி எழுச்சிப் பாடலில் தன்னை மறந்து லயித்திருப்பான்.
**போற்றி என் வாழ் முதலாகிய
பொருளே
புலர்ந்தது. பூங்கழற்கிணை துணை மலர் கொண்டேற்றி
என்று தொடங்கி எம் பெருமானப் பள்ளி
16

}ன்னிக்கத் தெரிந்த
மனிதனின் உள்ளம்
எழுப்பும் அப்பாடல் பத்தும் தினம் தினம் அவன் கேட்டு வந்தாலும் ஒவ்வோரு நாளும் Sதவனுக்குத் தெவிட்டாத இன்பத்தை அளி ப்பதாகவே இருந்தது.
அந்தப் பாடல்களை கேட்கும் நாளெல் லாம் அவனுக்கு இன்பமான நாட்களே, புனல் ஆடி புது மலரிட்டு அப்பெருமானைத் தொழுது, கற்பூர ஒளியில் முக்கண்ணனைக் காணும் காட்சி தான் அவனை மனிதனுக உலவ வைக்கின்றது என்று எண்ணிக்கொள் வான்.
தனது ஊரை விட்டு அச்சிறு கிராமத் திற்கு வரும்போது அவன் மனதில் வேதனை யின் சுவடுகள் அப்படியே ஆருது இருந்தன. நாட் செல்லச் செல்ல அவ் அழகிய கிரா மத்தின் தோற்றமும் பசுமையான வயல் வெளிகளும் அவ்வயல் கட்கிடையே அங்கும் இங்குமாக காணப்படும் சிறு சிறு குடிசை களும் மாட்டுத் தொழுவங்களும் அவ்வூர் மக்களின் பண்பான பழக்க வழக்கங்களும் அவனைக் கவர்ந்துவிட்டன.
வயல் வரம்புகளின் மீது தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அகிலனை வாத்தியார் தம்பி, வாத்தியார் தம்பி என்ற கந்தையா அம்மானின் குரல் தடுத்து நிறுத் தியது. அவரைக் கண்டதும் மனிதர் என்னை இன்று விடமாட்டார் போலத்தான் இருக்கி றது என்று எண்ணிக் கொண்டான் அகிலன்.
என்ன தப் பி ஐ ம க முடிவு, "நீ இன் றைக்கு ஒம் என்று சொன்னலும் சரிதான் காரியத்தை சட்டுபுட்டு என்று முடித்துவிட ல்ாம். பொம்பிளை வீட்டார் எவ்வளவு சீத

Page 17
னம் வேணுமென்ருலும் தருவதற்குத் தயார். தம்பி, வெட்கப்படாமல் சொல்லும் என்று அகிலனின் கழுத்தை அறுத்தார் கந்தையா அம்மான்.
ஓம் பெரியவர் நான் உங்களிடம் வந்து சொல்லும் வரை பொறுத்திருங்கள். எனக்கு இப்பொழுது அந்த சிந்தனையே இல்லை. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லி அவரிடமிருந்து விலகி விட்டான் அகிலன்.
கந்தையா அம்மானிடமிருந்து விலகின லும் அவன் தன்னை விட்டு விலகிவிட வேண் டும் என்று நினைக்கும் சில நினைவுகள் அவனை வந்து முட்டி மோதின.
பட்டண வாழ்க்கையில் பட்டாம் பூச்சி யாகத் திரிந்த கால நினைவுகள் அவனின் நெஞ்சாழத்தில் முள்ளாய் உறுத்தி வேதனை யாக வெளிப்பட்டது. .
பத்மா அவள்தான் அவனின் இதயத்தில் என்றும் வீற்றிருக்கும் அழகுப் பாவை அன் பிலும் பண்பிலும் உயர்ந்த பணக்கார வீட்டு பத்மா பாடசாலை வாழ்வில் குறு கிட்டு அவன் உள்ளத்தில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டவள்.
பணக்காரியான பத்மா பல்கலைச்கழகம் சென்று பட்டம் பெற்று பறந்து சென்று விட்டாள். அவள் அவனை விட்டுப் போகுளே தவிர அவள் நினைவு அகிலனின் உள்ளத்தை லிட்டு அகலவில்லை.
ஏழையான அகிலன் பல்கலைக்கழகம் சென்று படிக்க முடியாத நிலையில் ஒரு பாட சாலை ஆசிரியணுக மாறிவிட்டான். பத்மா பல்கலைக்கழகம் சென்றதும் அகிலனுடன் கிகாண்டுள்ள தொடர்பையும் துண்டித்துக் கொண்டாள். ஏமாற்றத்தால் தாக்குண்ட அகிலன் காலப் போக்கில் கவலையை மறத்து லாழ முயன்றன். ஆனல் அவன் திருமணம் செய்து வாழவேண்டும் என்ற எண்ணம் இன்றியே வாழ்ந்தான்.

பழைய ரினைவுகளால் அமைதியிழந்த அகிலன் பாடசாலையிலும் அமைதியின்றி மன வேதனையுடன் தான் இருந்தான்.
அடுத்த வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு புதிய குரல் அவனைத் திடுக் கிட வைத்தது. யாராய் இருக்கும் என் பத்மா வின் குரலாக ல்ெலவோ இருக்கின்றது. அந்த இடத்தை விட்டே ஓடிவிடலாமா என்று எண்ணினுன். ஆனல் அவனல் அப்படிச் செய்ய முடியவில்லை. தன்னை ஒருவாறு சமா ளித்துக் கொண்டு பாடசாலை விடும் வரை இருப்போமே என்று இருந்தான்.
பாடசாலை மணி அடித்ததும் சிறுவர்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஒடத் தொடங்கினர்கள். கால்கள் போவோ மா, விடுவோமா என்று தயங்க அகிலன் வெளியே வந்தான்.
சந்தேகமேயில்லை அது பத்மா தான் என்று தீர்மானித்து ஒன்றும் தோன்ருதவனுக அப்படியே நின்று விட்டf ன் அகிலன்.
அகிலனைக் கண்ட பத்மாவும் திகைப் படைந்த விட்டாள். "அகில் நீங்களா! உங் களை இங்கு சந்திப்பேன் என்று நினைக்கவே இல்லை என்ருள்.
அவளையே வைத்த கண் வாங்காது பார்த்து நின்ற அகிலன் அ எரின் வெறுமை யான நெற்றியையும் பூவிழந்த கூந்தலையும் பார்த்து கேள்விக் குறி எழுப்பினன்.
அவனின் மன எண்ணத்தைப் புரிந்த பத்மா, −
அகில் நான் ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணம் செய்தேன். எனக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. ஆளுல் சுமங்கலியாக வாழத்தான் கொடுத்து வைக்காத பாவியாகி 69. CL-67. -
உங்களுக்குச் செய்த துரோகம் தான் என்னை இந்த நிலைமைக்கு உள்ளாக்கி விட் டதேர் என்று நினைக்கின்றேன். என்னை மன் னித்து விடுங்கள் அகில்.
--21ம் பக்கம் பார்க்க
17

Page 18
பூதம் விழுந்து கிடக்கும் ம?
-ஜெயபாலன்
உயிர்ப்பிச்சை கேட்கும் கொடியவன் போல தளர்ந்து போனதால் குளிர் இவ்வேளை நாடியைத் தடவி உச்சிமுகரும் வெண் பூந்துகிலால் முகத்திரையிட்ட் மணமகளாக பணியில் அடங்கா பசும்பேர் அழகை மலை மகள் சிந்தும் மாலைப்பொழுது எங்கோ பாடும் எதோ ஒரு பறவையும் எங்கோ பூத்த எதோ ஒரு புஸ்பமும் தங்கள் இருப்பின் சுதந்திரம் மகிழும். புகைபடிந்த ஓவியம் போன்ற காட்சிப்புலத்தில்
சூரியக்குழந்தை சிறுகை அளாவும். யாழ்ப்பாணத்துக் கூரைப்பதிவினுள் கூனிப்போன எனது ஆத்மா முகில் பாய்விரிக்கும் கற்றன் மலைகளில் நெஞ்சையும் நிமிர்த்தும். குடாவைத்தாண்டியும் உலகம் விரிவதை அலட்சியப்படுத்தி  ைத்தியம் போல பழம்பெருமை சந்தலத் தேகம் முழுவதும் சூடி முள்முடிகளையும் விலங்குகளையும் அணியெனத்தாங்கும் யாழ்ப்பாணத்தை வலிமை பெயரும் இளையகரத்தால் குட்ாவின் வெளியே இழுத்து வாருங்கள். கற்றன் மலைகளில் நிமிர விடுங்கள். அரைத்தூக் கத்தில் தேயிலை நிரல்களுள் கத்திகள் வீசியும் கூடைகள் நகர்த்தியும் விழுந்து கிடக்கும் பெரும் பூதத்தை விழிக்காதென்ற குருட்டுத் துணிவுடன் ாட்டி உதைக்கும் சின்ன மனிதருள் விலங்குகள் சுமக்கும் நாங்களும் இருந்தோம். ஒரு நாள் இங்கு மானிடம் விழிக்கும். எல்லோர்கைகளின் விலங்கும் தகரும். பறவைகள் போலவும் பூக்களைப் போலவும் எல்லோர் இருப்பும் சுதந்திரம் எய்தும்.
18

வாசகர் கடிதம்
un,
அண்மையில் வட பகுதியில் பொலிசாரினலும், Քե եւ ծ մ படைகளினலும் நடாத் த ப் பட்ட வன்செயல் சம்பவங் களே கண்டிக்காத அரசியல் கட்சிகளோ பொது ஸ்Smr usawa களோ இல்லை எனலாம். தென் னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்களில் ஒரு பகுதியினர் கூட இச் செயலைக் கண்டித்துள்ள
னர்.
ஆணுல் இவ்விடயத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் இதுவரை எவ் வித கண்டன அறிக்கையையும் விடுத்ததாகத் தெரியவில்ல. கண்டன அறிக்கை விடுவதற்கு தான் முதுகெலும்பு இல்லா விட்டாலும் ஒரு கவலை அறிக் கையையாவது யாழ் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் விடுத்தி ருக்கலாம். இதே வேளையில் "குருவை மிஞ்சிய சிஷ்யர் எாக' பல்கலைக் கழக மான வர்கள் இவ்விடயத்தில் செயல் பட்டதை பாராட்டாமல் விட
gatgutrigl.
எஸ். வேணுகோபான்
பாழ்ப்பாணம்.
2-6-1.

Page 19
பாட்டாளி படும் பாடு -
ங்ெகள் ஊரில் எங்களுடைய வீடு ஒன்று தான் ஒலை வீடு. நாவலர் ஒழுங்கை எங்க ளது குடிசையை அராவிக் கொண்டு போகி றது, குடிசையின் கிழக்கே அம்மன் கோயில் இருக்கிறது. கோயிலின் முகப்பில் அறநெறி மன்றம் இருக்கிறது. ஒழுங்கையில் ஏறித் தெற்கே பார்த்தால் இராணி படமாளிகை இருப்பது தெரியும். கோயிலும் மன்றமும் மாளிகையும் அவற்றை மொய்த்துள்ள வீடு களும் ஒட்டுக் கூரை கொண்டவை.
அம்மன் கோயில் மணி ஓசை முக்கால மும் எங்களுக்குக் கேட்கும். மாலை வேளை யில் அறநெறி மன்றத்திலிருந்து ஆரவாரம் கேட்கும். காலையில் இராணி படமாளிகையி லிருந்து 'மாட்டுக்கார வேலா, எந்தன் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா" என்ற பாடல் கேட்டதும் நேரம் பத்து மணி என் பது தெரிந்துவிடும். மாலேயில் அதே பாடல் கேட்டதும் நேரம் ஆறு மணி என்பது தெரிந்து விடும்.
எனக்கு எத்தனை விளையாட்டுகள் தெரி யும்? எண்ணித்தான் சொல்ல 3ே ன்டும். முன்பக்கமாக ஒடுவேன்; பின்பக்கமாக ஒடு வேன்; தலைகீழாக நிற்பேன்; உருளுவேன்; புரளுவேன். சின்ன வயதில் நான் யாருட ஞவது விளையாடினேனே தெரியவில்லை. அவர் கள் என்னைச் சேர்ப்பதில்லையாக்கும். ஆனல் அவர்கள் யாடு பாய்வதையும் பந்தாடுவதை யும் ஒடித் தொட்டு விளேயாடுவதையும் நான் கண்டிருக்கிறேன்.
நான் எப்போதாவது பள்ளிக்குப் போன தாக எனக்கு நினைவில்லை. இவர்கள் என்னைப் பள்ளியில் சேர்க்கவில்லையாக்கும் நானகவா போவது? சரி; இவர்களும் படியாதவர்கள் தானே! A.
அம்மன் கோயிலில் சஞ்சி வார்க்கும் நாட்களில் நான் அங்கே போகத் தவறுவ

* வீ. எஸ். ഥങ്ങീ
தில்லை. தைப்பூசம், சித்திரைத் திங்கள் நாட்களில் கஞ்சி ஊற்றுவார்கள். பொடிகள் ஊரா வீட்டுத் தோட்டங்களில் காய் பிஞ்சு களைப் பிடுங்கி வந்து கோயில் மடைப்பள்ளி யில் குவிப்பார்கள். பெரியவர்கள் தனித் தனிக் கடாரங்களில் சோறு, மரக்கறி காய் ச்சி ஒரே கடாரத்திலிட்டுக் கலப்பார்கள். இது ஒரு புறத்தில் நடைபெறும். மறுபுறத் தில் வேறு சிலர் பனைஒலை கொண்டு பிளாக் கள் கோலிக் குவிப்பார்கள். ஓட்டை இல் லாது ஆழமாகக் கோலிய பெரிய பிளாக்க ளைத் தேர்ந்தெடுப்பதில் சிறுவர்கள் போட்டி  ோடுவார்கள். நான் தருணம் பார்த்து நல்ல பிளாவாக எடுத்துக் கொள்வேன். ஐயர் திரு நீறு, சந்தனம் கொடுக்கும் போது ஏற்படாத நெரிசல் கஞ்சி வார்க்கும் போது ஏற்படும். எல்லோரும் கஞ்சியை வாங்கிக் கள்ளுக் குடிப் பது போல் பொச்சடித்துக்குடித்துக்கொண்டு போவார்கள், ·
நான் அறநெறி மன்றத்துக்குப் போனது கிடையாது. அங்கே உடையார் மகன், மணிய காரர் மகன், விதானையார் மகன், தாமுச் சட்டம்பியார், முத்து முதலாளியார், கச் சேரியில் உத்தியோகம் டார்க்கும் அம்பல வாணர், கணக்கப்பிள்ளை, கொன்னைச் சின் னையா எல்லோரும் வந்திருப்பார்கள். அவர் களுடைய பிள்ளைகளும் பேரர்களும் அங்கே ஒடி ஒளித்து விளையாடுவார்களாம்; அந்தக் குழந்தைகள் புத்தகங்களையும்.பத்திரிகைகளை யும் கிழிப்பார்களாம்; வாங்கில் மேசைகளில் மூத்திரம் பெய்வார்களாம்; டீ. ஆர். ஒ.வாக இருக்கும் உடையார் மகன் வெள்ளைக்கார ஆட்சியைப் போற்றுவாராம்; மந்திகையில் இடாக்குத்தராக இருக்கும் விதானையார் மகன் விருத்தாசலம், எஞ்சினியர் சத்திய மூர்த்தி இருவரும் எக்கவுண்டன் வேலும் மயிலுவுக்கு சத்திய சாயிபாபாவின் அற்புதங் களைச் சொல்லி - மெய் சிலிர்ப்பார்களாம்; உருசியரும் சீனரும் சேர்ந்தால் அமெரிக்க
19

Page 20
ருக்கும் உலகத்தவருக்கும் ஆபத்து மூளுமென கொன்னைச் சின்னையா எச்சரிப்பாராம்; இடை சுகம் ‘ஈழநாடு’ பத்திரிகையில் அம்மன்மாட்சி பற்றி எழுதும் அம்பலவாணர் கோவூர்கிழார் (up 56) ஆபிரகாம் கோவூர் வரை ஆராய் வ/> ராம். இவை எல்லாவற்றையும் பொறுமை க் கேட்டுக் கொண்டிருந்து விட்டு தாமுச் உடம்பியார் 'இற்றை வரை உலகத்தி லேயே அறநெறிப்படி ஒழுகியவர் திருவள்ளு வர் ஒருவர்தான்' என்று ஆர்ப்பரிப்பாராம். டு வாக்குவாதம் திசை திரும்பிவிடு மாம். . . நான் அறநெறி மன்றத்துக்குப் போனது கிடையாது
ஒருமுறை நாங்கள் வீடு வேய்வதற்கு ஆயத்தம் செய்தோம் கலப்பை, மண்வெ ட்டி, பட்டை, பானை, சட்டிகளை முற்றத் தில் கொண்டு வந்து வைத்தோம். பிற்பாடு கூரையைப் பிடுங்கினுேம், முன்னமே 27 ரூபா வுக்குப் பனை ஓலை வாங்கிக் கோடியில் கரம் போட்டிருந்தோம்.
நாங்கள் கூரை வேய்ந்து கொண்டிருந்த போது கொஞ்ச இளந்தாரிகள் வந்தார்கள்; ஒரு கடதாசியை நீட்டிஞர்கள். "புத்தாண்டு நாடக நிதி திரட்டுகிருர்கள் என்பது தெரிந் தது. அந்தக் கடதாசியில் ஒரு நிரல் இருந் 点列·
மனேஸ்கரன் 1001 ebolunt தேவராயர் 1001 , தருமவீரன் 00 l , , வல்லிபுரம் 1001 , , முத்தையா 1001 , , தாமோதரம் l0I , பஞ்சலிங்கம் 50 , ,
இரத்தினம் 25 ,,
VM e p
'பாவம் பத்து ரூபா போடுவோம்" என்று யாரோ ஒரு தொண்டர் இரங்கினர். நாங்கள் திடுக்குற்றேம். 'சரி, ஐந்து ரூபா' என்று குறைத்தார்கள். "இரண்டு, இப்போ இல்லை" என்று தயக்கத்துடன் சொன்னேன்.

'இரண்டு ரூபாவுக்காக மறுபடி வரு வதோ' என்று சினந்துவிட்டுப் போய்விட் டார்கள் அவர்கள் திரும்பி வரவே இல்லை,
புத்தாண்டு வந்தது. ஒழுங்கை கிழுங்கை எல்லாம் ஒலிபரப்பிஞர்கள்;
"கரவெட்டி அறநெறி மன்றம் அளிக் கும் நாடகம்
'பாட்டாளி படும் பாடு
'காலம் 14-4-64. கிழமை.மணி
"இட்ம் கரவெட்டி அம்மன் கோயி அறநெறி மன்ற முன்றல்'
நானும் நாடகம் பார்க்க வெளிக்கிட் டேன். கூரை பிடுங்கும் போது அகப்பட்ட ஒரு ரூபாவைக் கைகாவலாக மடியில் செரு கினேன். அவர்கள் கொட்டகையில் வைத் துக் காசைக் கேட்டால் என்ன செய்வது? அந்த ஒரு ரூபாவைக் கொடுத்தாவது தப்பிக் கொள்ளலாம் அல்லவா? -
நான் படலையைச் சாத்திய போது இராணி படமாளிகையிலிருந்து 'மாட்டுக் கார வேலா ...?? என்ற அறைகூவல் கேட் و أي حسا
நாடகம் தெரிடங்குமுன் சைவப்புலவர் சிவப்பிரகாசம் அம்மன் அருள் பற்றிப் பேசி ஞர். அடுத்து கரவையூர் கவிஞர் கண்ண பிரான் அறநெறி மன்றத்தை வாழ்த்திப் Luntlger.
திரை இழுக்கப்பட்ட போது ஓர் ஒட் டுக் கல்வீடு தெரிந்தது. உழவு இயந்திரமும் இறைக்கும் இயந்திரமும் தெரிந்தன. வேட்டி, சால்வை, சட்டை, செருப்பு, கைக்கடிகாரம், பசுமைக் கண்ணுடி ... அணித்த உழவன், அவனுடைய கோவணம் எங்கேயாவது தூங் கியதோ? இல்லவே இல்லை. அவன் பெண் சாதி கூடக் குறுக்குக் கட்டுடன் நிற்கவில்லை. சேலை, சட்டை, நசை, கெர்ண்டை, குடை. தாங்கி நின்ருள். நான் 35 சதத்துக்கு அரைக் கட்டணச் சீட்டு வாங்கி ‘இராணி"யில் " கமக்காரன்'' படம் பார்த்திருக்கிறேன்
20

Page 21
அதில் கமக்காரனக நடிக்கும் எம்.ஜி.ஆரும் அவன் மனைவியாக நடிக்கும் பானுமதியும் இப்படித்தான் தோன்றுவார்கள்.
நான் நாடகம் முடியுமுன் வீடு திரும்பி விட்டேன். பாயைத் தட்டி விரித்துச் சரித் தேன். நித்திரை வந்தால் தானே? கொட்ட கையிலிருந்து இயந்திரம் உழும் சத்தமும் இயந்திரம் தண்ணீர் இறைக்கும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தன. நான் எங்
V மன்னிக்கத் தெரிந்த.
-17ம் பக்கத் தொடர்
வேதனைபட்ட என் உள்ளத்திற்கு ஒரு அமைதியைத் தேடித்தான் இக்கிராமத்திற்கு மாற்றம் கேட்டு வந்தேன் என்றுள் பத்மா.
சமூகத்தில் நான் உயர்ந்த நிலையில் வாழ வேண்டும் என்ற ஓர் நப்பாசையால் தான் உங்களை மறந்தேன். நான் ஒரு பட்டதாரி பணக்காரி என்ற எனது கர்வம்தான் உங்களை மறக்கச் செய்தது. ஆனல் இன்று என் கதி இப்படியாகும் என்று நான் கனவிலும் ar க்கவில்லை என்று உணர்ச்சி வசப்பட்டு குற் றம் செய்த மனத்தினளாக தன்னை மன் னித்து விடும்வடி கேட்டுக் கொண்டாள்.
அகில் கடந்த காலத்தை ஒரு நடந்து முடிந்த கதையாக மறந்து விட்டு நிம்மதி பாக வாழ முயற்சிக்கின்றேன் உங்கள் வீடு எங்கே, உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டான்
தனது கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்த வண்ணம் இன்னமும் திருமணம் ஆகவில்லை. உன்னை மறந்து இன்னுெரு பெண் னுடன் வாழக்கூடிய நிலையில் என்னை நான் இன்னமும் பக்குவப் படுத்தவில்லை என்று சொல்ல நினைத்த அகில், இன்னமும் பிரமச் சாரிதான் என்று சொன்ரூன்.
அவனின் பதில் கேட்டு அதிர்ச்சியுற்சள் பத்மா. அவளின் நினைவு அகிலன் திருமணம்

கள் கலப்பையையும் பட்டையையும் பார்த்த படியே நித்திரையாகி விட்டேன்.
அடுத்த நாள் காலையில் ஒழுங்கை வழியே யாரோ கதைத்துக் கொண்டு போனுர்கள்.
"கொட்டகைக்கு 2000 குபாவுக்கு மேல் செலவாம்.'
விடு மாதிரிச் செய்து காட்டுவதற்கு
மட்டும் 1000 ரூபாவுக்கு மேல் செலவாம்
廖 跨
செய்து குடும்பமாக வாழ்ந்து வருகின்றன் என்பது. அவன் பதில் அவளைத் தலைகுனிய வைத்தது. பொங்கி வந்த கண்ணீரை ےyنی-س கிக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன் ருள் பத்மா
メ அவன் போகும் திக்கையே பார்த்துநின்ற அகிலன், பாவம் பத்மா சமுதாய ஏற்றத் தாழ்வினுல் என்னை மறந்தாள். ஆளுல் என் உள்ளம் இன்றும் அவளைத்தான் Greskrevväik கொண்டு இருக்கின்றது.
என்ரூல் மறந்துபோ மறந்துபோ என் முலும் போகாத நினைவாக நிற்கும் பத்மா வை மீண்டும் மங்கலகர்மானவளாக வாழ வைத்தால் என்ன என்ற துணிவு அவன் மனதில் பிறந்தது.
oooooooooooooooo
"புரட்சி இயக்கம் பலாத்கார வழியைப் பின்பற்றுவது இயல்பல்ல என்று அரசியல் துறை அறிஞர்கள் கருதுகின்றனர். புரட்சி தோன்றுவதற்குக் காரணமான அரசாங்கம் புரட்சியை அடக்குவதற்குப் பலாத்காரத் தைப் பயன்படுத்துவதாலேயே பெரும்பா லும் புரட்சிக்காரர்களும் பலாத்காரத்தைக் தையாள நேர்கின்றது.'
-கலக் களஞ்சியம்
o-oooooooneereoGoodboro
21

Page 22
ஹரிசனமும் தரிசனமு வேதநிலை தவருகப் புரிந்திரோ? வேறு எதையேனும் வேதமென்று ஏமாந்தீரோ? வாதத்திற்கு அழைக்காதீர். வண்டவாளம், வரும்வழியில் வெளித்துவிடும் மடமை மிஞ்சும் பேதத்தை வளர்க்காதீர்! பிறைகு டெந்தை பெருநெறியாம் சைவத்தைச் சவமாக் காதீர்! வேதம்இந்த விபரீதம் விள்ளும் என்னில் வெந்தணலில் அவ்விதழைப் புனிதம் செய்வோ வானுயர்ந்த தெங்கேறி இளநீர் பிய்த்து வள்ளல்திரு முழுக்காட வைக்கும் அன்பன் ஏனுயர்ந்த ஆலயத்துள் ஏகக் கூடாது? ாம்பெருமான் இணையடிகள் தொழக் கூடாது? தானும்ஒரு மானுடன்தான் தானும் தெய்வத் தயவுபெறக் கோயிலுள்ளே தாழ்தல் வேண்டின் ஏன்மிரண்டு பாய்கின்றீர்? அவன் மறுத்தால் ஏறுமோ தென்னையில் வேதாக மங்கள்? வேற்றுமத ஊருேவல் நிகழின் வேதம் விரைந்ததனை நிறுத்திடுமோ? விளம்பீர் ஆஹா சோற்றியுண்ர் வதணுலே எங்கள் சொந்தச் சிவநெறியின் மாண்புகளைச் சிதைக்கா தீர்கள்! காற்றுளரும் போதவர்கள் தூற்றி விட்டால் கலிபுகுந்து குடிமுழுகும் இந்து நங்கை நேற்றிருந்த நிலபாறி வீதி யோரம் தெட்டுயிர்த்துப் புலம்புவளே ஐயோ வேண்ட்ாம்! மக்ட்பேசிப் பரிசம்அவர் அனுப்ப வில்லை. மனையிலே உறவாட விரும்ப வில்லை. மரத்தேறி வட்டிருந்து மது இறக்கும் மாய்ச்சலுக்கு வாருமேன அழைக்க வில்லை. வினைப்பூசல் தீர்ப்பதற்கு விமலன் கோயில் விட்டிடுமின் எனத்தானே வேண்டு கின்றர் இனைப்போதும் காலந்தாழ்த் தாமல் இன்றே தேவதையின் கதவுகளைத் திறப்பீர் நன்மை! அன்புநெறி வளர்இந்து நாக ரீகம் ஆணவத்தால் அழிந்துவிடும். அதிகந் தீமை! பின்புபெரும் கழிவிரக்கம் கொள்வீர்! அன்றி, பேசாரோ பிற்சந்த தியார்கள் 'உம்மை? வன்புநெறி கூடாது அநீதம்! இன்னே வல்லவளுர் கோயில்புக வழி விடுங்கள் இன்பமுறுங் கதவுகளைத் திறக்கமுன் உம் இதயங்கள் திறந்திடுக! எல்லாம் நன்மை
- நன்றி: "வாணி கையெழுத்துப் பிரதி 12 22

in!
一画á,
-1-1966
*இலங்கா தகனம்’
ஆற்றெணுத் துயரமும்
அகம் நிறைந்த ஆசியும்
*ழநாடு செய்தி நிறுவனம் நாசகரமாக்கப்பட்ட செய்தி கேட்டு நாடே ஆற்ருெணுத் துயரத்தில் மூழ்கியது.
ஈழநாடு நல்லடக்கம் செய் யப்பட்டு விட்டது என அசுரத்
துவம் எக்களித்தது.
அனல் வெறித்தது. பதி லுக்கு ஈழநாடு சிரித்தது. சொற் ப தினங்களுக்குள்ளா
கவே ஈழநாடு உயிர் பெற்றெ
ழுந்தது. அழுது கண்ணிர் வடித்த மக்கள் அனைவரும் அகம் நிறைந்து ஆசி கூறினர்.
இவ்வளவுடன் நின்று விடக் கூடாது. ஒவ்வொரு குடும்ப மும் ஒவ்வொரு ஈழநாடு வாங் குவதை தினசரிக் கடமைகளில் ஒன்ருக்கிக் கொள்ள வேண்டு மெனக் கிருதயுகம் விநயமாக வேண்டிக் கொள்கிறது. உணர் வுகன் . எரிவதில்லையாளுனும் அவை கொழுந்து விட் டு க் கொண்டே இருக்கும். அவை பற்றிப் படர்வதற்குக் கொழு கொம்புகள் தேவை.

Page 23
சிவப்பு நாடுகளில் செந்தமிழ் இலக்கியம்.
இந்திய விடுதலைக்குப் பின் பல்வேறு நாடுகளில் தமிழியல் படிப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது. சோவியத் யூனியன், செக்கோஸ்லேவேகியா, கிழக்கு ஜெர்மனி: போலந்து ஆகிய சே சலிச நாடுகளும் தமி ழியல் படிப்புக்கான திட்டங்கள் வகுத்து, போற்றத்தக்க தொண்டு புரிந்து வருகின் றன. தமிழ் மொழி, இலக்கியம், இலக்க ணம், கலை, பண்பாடு, வரலாறு முதலிய பல்வேறு துறைகளிலும் சிறப்பான ஆய்வுக் கட்டுரைகளும், நூற்களும் எழுதி வெளி யிட்டுள்ளனர். அவர்களது திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ் இலக்கிய மொழிபெயர்ப் பும் இடம் பெற்றுள்ளது. இரஷ்யன், செக். ஜெர்மன், போலிஷ் மொழிகளில் வெளி வந்துள்ள தமிழ் இலக்கியங்கள் பற்றிய சில செய்திகளை இங்கே காணலாம்.
சோவியத் யூனியன் -
1957 இல் லெனின் கிராடிலும் 1965, 1971ம் ஆண்டுகளில் மாஸ்கோவிலும் பல் கலைக்கழகப் பாடத் திட்டத்தில் தமிழுக்கு இடம் ஒதுக்கப்பெற்றது. பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றுக் கொடுக்கப் பெறுதற்குக் கார ணம், தமிழ் இலக்கியம், இலக்கணம் பற். றிய பொது அறிவு சோவியத் யூனியனில் கல்வியாளர் மத்தியில் நிலவியதேயாகும். தமிழ் பற்றிய அறிவைத் தன் நாட்டு மக்க ளுக்கு அலெக்ஸாண்டர் மெர்வெர்த் என்ப வர் தமது கட்டுரைகள் மூலம் ஏற்படுத்தி ஞர். தனக்கென ஒரு தனிப் பண்பாட்டை யும் இலக்கிய முதிர்ச்சியையும் உடைய மொழி தமிழ் என்னும் கருத்தை வெளிப் படுத்திய இவர், 1929இல் 'தமிழ் இலக்க ணம் பற்றிய ஒரு நூலையும் வெளியிட்டார். இந்த நூலில் பேச்சுத் தமிழுக்கு முக்கியத் துவம் தந்து இலக்கணம் அமைத்துள்ளார். (இந்நூலின் சில பகுதிகளே இரஷ்ய நண்பர் ஒருவர் துணையோடு படிக்கின்ற வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது) மெல்ல மெல்லப் பர

டாக்டர் இராம. சுந்தரம் பி. எச். டி.
விய தமிழ் மொழிப் படிப்பு காலப்போக் கில் தமிழ் இலக்கியப் படிப்பாகவும், ஆங் வாகவும், மொழி பெயர்ப்பாக்வும் வளரத் தொடங்கிற்று. இரேனசிடமிர்நோவா என்ப வர் (1958) தமிழ் இலக்கிய வளர்ச்சி" பற்றி ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டார். இக் கட்டுரை 'இந்திய இலக்கியம்" என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றது. தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்குகளைச் சுரு க்கமாகவும், தெளிவாகவும் இக்கட்டுர்ை எடுத்துக் கூறியது. இவரே "பாரதியின் படைப்புக்கள்" என்ற தலைப்பில் ஒரு கட் டுரை (1962) எழுதி, "இந்திய மக்களின் செய்யுள்" என்ற நூலில் வெளியிட்டார். பாரதியின் தனித்தன்மை, கவிதையாற்றல், தேசிய உணர்வு ஆகியவற்றைத் தெள்ளத் தெளிய வெளிப்படுத்தியது இக்கட்டுரை. 1917இல் ஏற்பட்ட அக்டோபர் புரட்சியை வரவேற்று வாழ்த்திப் பாடிய முதல் இந்தி யக் கவிஞன் பாரதியே ஆவான். அதனுல் பாரதிக்கு சோவியத் மண்ணில் தனித்த வொரு இடம் கிடைத்ததில் வியப்பில்லை யன்ருே? 1963இல் சிமிர்நோவா பாரதியின் தேசீயப் பாடல்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலியவற்றை இரஷ்யமொழி யில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இத்த மொழி பெயர்ப்புக்கு நல்ல வரவேற்பு கிடை த்தது. இவ்வாறு பாரதி பற்றிய படிப்பு சோவியத் நாட்டில் பரவலாக்கப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற திருக்குறளும் சோவி யத் தமிழ் அறிஞர்களின் கவனத்தை ஈர்த் தது. இப்ராகிமோவ் என்பவர் இதைக் கவிதை தடையில் மொழி பெயர்த்தார். திருக்குறளின் சிறப்பைக் குறித்து, பிரபல இரஷ்ய எழுத்தாளரான டால்ஸ்டாய் தமது நூலொன்றில் குறிப்பிட்டு, சில குறட்பாக் களை மேற்கோள் காட்டியுள்ள செய்தியும் இங்கு நினைவு கூரற்குரியது. திருக்குறள் தமி ழர்களின் பண்பாட்டுச் சிறப்பை மட்டுமல்ல, இந்தியப் பண்பாட்டின் உயர்வையும் எடுத்
23

Page 24
துக் காட்டுகிறது என்கி கருத்து சோவியத் கண்ணில் கால் கொள்ளத் தொடங்கியது. திருக்குறள் சோவியத் மக்களை எந்த அளவுக் குக் கவர்ந்திருக்கிறது என்பதற்கு தெ.பொ. மி. அவர்களின் நேரடி அனுபவம் ஒன்றே போதுமானது. தெ. பொ. மீ. அவர்கள் சோவியத் யூனியன் சென்றிருந்த பொழுது ஒரு டாக்ளி டிரைவர் திருக்குறள் படித்ததை யும், அதுபற்றிப் பேசியதையும் அவர் தமது நினைவுக் குறிப்பு ஒன்றில் சுட்டிக் காட்டி
புள்ளார்.
அலெக்ஸாண்டர் பியாத் கோர்ஸ்கி என் பவர் காரைக்கால் அம்மையார், மாணிக்க வாசகர், சுந்தரர், கோவலன், கண்ணகி, மணிமேகலை பற்றிய கதைகளை சில மேற் கோள் பாடல்களுடன் 1963இல் வெளியிட் டார். "இந்தியத் தத்துவ வரலாற்று மூலங் கள்' என்ற நூலின் ஆசிரியர் திருக்குறள் நாலடியார், மணிமேகலை, குண்டலகேசி, தாயன்மார், ஆழ்வார் பாடல்கள் போன்ற வற்றிலிருந்து மொழி பெயர்ப்புச் செய்து அவற்றைத் தம் நூலில் இணைத்து வெளி யிட்டார். கிளாஸோவ் 1965இல் சிலப்பதி காரத்தை உரைநடையில் எழுதி வெளிப் படுத்திஞர்.
முற்கால, இடைக்காலத் தமிழ் இலக்கி யப் பகுதிகள் மட்டுமன்றி, தற்கால உரை நடை இலக்கியமும் சோவியத் யூனியனில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. புதுமைப் பித்தனின் 22 கதைகளைக் கொண்ட தொகுதி ஒன்று இப்ராகிமோவ் என்பவரால் 1961இல் வெளியிடப்பட்டது. புதுமைப் பித்தனின் கதை சொல்லும் ஆற்றல், சொற்சிக்கனம், மெல்லிய நையாண்டி அவரது கதைகளில் காணப்படும் யதார்த்தம் ஆகியவற்றை மொழி பெயர்ப்பாசிரியர் மிகச் சிறப்பாகவே எடுத்து மொழிந்திருக்கிருர். புதுமைப் பித் தன், அழகிரிசாமி, கி. வா. ஜகந்நாதன், ஜெயகாந்தன் ஆகியோரின் கதைகளின் மொழிபெயர்ப்பு "இந்திங் எழுத்தாளர் கதை கள், (1959) என்ற நூலிலும் இடம் பெற் துள்ளன. 1960இல் இன்னும் சில மொழி பெயர்ப்புகள் வெளி . வரலாயின. ஜெய காந்தனின் "வாழ்க்கை அழைக்கிறது", இலட் su 60au 57air *Guador Lomorth', கல்கியின் "அே
24

ஓசை" ஆகியவை அவற்றுள் குறிப்பிடத் தக்கன. தொ. மு. சி. ரகுநாதன், கல்கி, அகிலன், பி. எஸ். ராமய்யா கதைகளும் 1964இல் ஒரு தொகுப்பில் வெளிவந்தன. சோவியத் தமிழறிஞரும் எனது நல்ல நண் பருமான, அண்மையில் மறைந்து போன "செம்பியன்" என்று தமிழ் தாட்டுக்கு அறி முகமான ரூதின் அவர்களும், நீணு என்ற அம்மையாரும் இத்தொகுதிக்கு அருமையான ஒரு முன்னுரை தந்துள்ளனர். அந்த உரை தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிய ஒரு சிறிய வரலாற்றுச் சுவடியாகும்
தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புக்க ளும் இலக்கியப் படிப்பும் 1966இல் ‘தமிழ் இலக்கிய வரலாறு" என்ற நூல் இரஷ்ய மொழியில் தோற்றம் கொள்ள காரணமா யின. லெனின் கிராடு, மாஸ்கோ பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்கும் மாணவர்கள் தங் கள் ஆய்வுக்கென பத்துப்பாட்டு, பெரியாழ் வார், மாணிக்கவாசகர், அகிலன், வரதரா சன், கல்கி ஆகியோரது படைப்புகளை எடுத் துக் கொண்டனர். இந்த ஆய்வேடுகளில் இந்நூற்களின் பல பகுதி மொழிபெயர்த்தும் தரப்பட்டுள்ளன. عہ
அண்மைக் காலங்களில் இம் மொழி பெயர்ப்புப் பணி இன்னும் விரிவடைந்துள்
ளது. சங்கப் பாடல்கள் சில மொழிபெயர்க் பட்டு வெளிவந்துள்ளன. தமிழியல் ஆய் விலும், மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ள
ஆந்த்ரநோவ், கிளாஸோவ், இவ்வானேவ், இரேனசிமிர்நோவா, பியாத் கோர்ஸ்கி, இப் ராகிமோவ், துப்யான்ஸ்கி,(மறைந்துபோன) செம்பியன் ஆகியோர் நம்மால் என்றும் நினைத்துப் பாராட்டத் தக்கவர்களாவர். செக்கோஸ்லோவேகியா
செக்கோஸ்லோவேகியா, என்றதும் தமி
ழறிஞர் கமில் சுவலபில் பெயர் நம் நினை வுக்கு வராமல் போகாது. தமிழை ஐரோப்
திய நாடுகளில் பரப்பி நல்ல தமிழ்த்தொண்டு புரிபவர்களில் குறிப்பிடத் தக்கவர் எமில் தற்பொழுது இவர் ஹாலந்து காட்டில் உள்ள "உத்ரிசிட் (Utrecht) பல்கலைக் கழ தத்தில் திராவிட மொழிப் GSurrrRifaturrras'ü பணியாற்றுகிருர், ஆங்கிலத்திலும் செக் - ஸ்லோவாக் மொழிகளிலும் பற்பல கட்டுரை

Page 25
கிரும், நூற்களும், மொழிபெயர்ப்புக்களும் வெளியிட்டுள்ளார் இவர். தமிழ் இலக்கண, இலக்கியப் புலமையோடு, வடமொழி, தெறு ங்கு, மலையாளம், இந்தி, வங்காளி, முதலிய பிற இந்திய மொழிகளில் நல்ல அறிவும், பிரெஞ்சு, ஜெர்மன், இரஷ்யன் GLлтер மொழிகளில் ஆழ்ந்த பயிற்சியும் உடைய கமில், சோசலிச நாட்டு இளந்தலேமுறை தமிழ் மாணவர்களுக்கு ஒரு "எழுச்சியூட்டும் ஆசான்' ஆகத் திகழ்கின் முர், இவர் தமிழ் கற்ற வரலாறே சுவையானது. செக், நாட்டு தலைநகரான் பிரா கில் உள்ள இந்தியத் தூத ரகத்தில் பணிபுரிந்த சென்னைத் தமிழர்கள் மூலம் தமது தமிழ்ப் படிப்பைத் தொடங் கியவர் இவர். 1949-50களில் இது தொட ங்கியது. இதற்கு முன்பே, இவர் தமிழ் பற்றியும், திராவிடப் பண்பாடு பற்றியும் அறிந்திருந்தார். அந்த அறிவின் உந்துதலே தமிழின் பக்கம் இவர் கவனத்தை ஈர்த்தது. அன்று தொடங்கி இன்றுவரை - கடந்த 30 ஆண்டுகளாக தமிழுக்கு அயராது தொண்டு செய்து வருகிழுர், •
செக். நாட்டில் இவருக்கு முன்பே தமிழ் பற்றிய சில செய்திக் குறிப்புக்கள் வெளி வந்தன. 1919இல் ஒதகர் பெர்தோல்ட் என்பவர் தமிழ் நாட்டுப் பழங் கதைகள் சிலவற்றையும், பத்தினித் தெய்வக் கதை யையும் செக் மொழியில் வெளியிட்டார். ஆயினும், 1953-லிருந்துதான் தமிழ் கல்வி பற்றிய சிந்தனை முகிழ்த்து செயல்படத் தொடங்கிற்று. இதற்குக் கமில் ஆற்றிய பங்கு பாராட்டுக்குரியது. அவரது விடா முயற்சி காரணமாக பிராகிலுள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் (தொன்மைக் சிறப்புமிக்க ஐரோப்பியப் பல்கலைக் கழகங்கள் சிலவற் துள் இதுவும் ஒன்று) 1985இல் திராவிட மொழித்துறை ஏற்படுத்தப்பட்டு, கமில் சுவலபில் பேராசிரியர் பொறுப்பேற்முர். அதற்கு முன்பும் பின்பும் இவரால் பல மான வர்கள் பயிற்றுவிக்கப்பெற்றனர். ஆசிரிய கும் மாணவர்களும் சேர்ந்து பல தமிழ்க் கதைகளையும் கவிதைகளையும் மொழிபெயர் ந்து வெளியிட்டுள்ளனர். கமில், சங்கப் பாடல்கள் கிலவற்றை மொழி பெயர்த்து 'கறுப்பு மலர்கள்’ (1955) என்ற தலப்பி

கிம், “முல்ஃப் பூக்கள்" (1957) GT (to தலைப்பிலும் இரு நூற்கள் வெளியிட்டார். இவற்றுள் "கறுப்பு மலர்கள் என்ற நூல் நான் பார்த்து, செக். நண்பர் ஒருவர் மூலம் அதைப் படிக்கச் சொல்விக் கேட்டேன். Gudra பெயர்ப்பு தரமாகவும் elasiwsMLD Lurras சிம் அமைந்துள்ளது. பழத்தமிழ் இலக்கி யம் பற்றிய குறிப்புரையும் காணப்படுகிறது. இவரே 1965இல் சிலப்பதிகாரம் முழுவி தை யும் கவிதை வடிவில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். இந்த நூலையும் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது சிலப்பதி காரம் பற்றிய முன்னுரையும், தமிழ் யாப்
பற்றிய குறிப்புகளும் இந்நூலுக்கு அணி
செய்கின்றன. என் செக். நண்பர் ஒருவர் இந்த மொழி பெயர்ப்பை மிகவும் பாராட் 4ணுரி தமிழ் இலக்கியம் பற்றிய பல செய்தி களையும், தமிழ் இலக்கிய தயத்தையும் ஒர வுே தான் தெரிந்து கொள்ள இந்நூல் உத வியதாகவும் கூறிஞர். புதுமைப் பித்தன், அகிலன், லா. சா. ராமாமிர்தம், ஜெயகாந் தன், ஜானகி ராமன், ரகுதாதன் L9ëdrejtat த்தி, அழகிரிசாமி, வல்லிக் கண்ணன், செல் வராஜ் தூரன் ஆகியோர் படைப்புகள் இல வும் செக்-ஸ்லோவாக் மொழிகளில் வெளி வந்துள்ளன. உ. வே. சா.வின் ‘என்சரிதம்" லா, சா. ரா.வின் புத்ர" ஆகியனவும் மொழி பெயர்ப்புக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. "குறுந்தொசுை மொழி பெயர்ப் Hம் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய சிறு குறிப்பு ஒன்றும் செக். மொழியில் வெளி வந்துள்ளது. தமிழ் மொழி, இலக்கணம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளும், தமிழ் நூற்கள் பற்றிய பல விமர்சனக் கட்டுரை களும் செக். நாட்டில் வெளிவந்து, தமிழி யல் அறிவை வளர்த்துள்ளன. k . . . போலந்து
போலந்து நாட்டின் தலைநகரான வாரி Frodò a si6T 67rigfr பல்கலைக் கழகத்தில் 1972 முதல் தமிழ்ப் படிப்பு "இந்தியவியல்" துறை பாடத் திட்டத்தில் இடம் பெற்று
வகுகிறது. இந்தப் படிப்பைத் தொடங்கி வைக்கும் நல் வாய்ப்பு எனக்குக் கிடைத்
25

Page 26
தது. 1972-1979 வரை ஏறத்தாழ 14 மாணவர்கள் தமிழ் பயின்றனர். இவர்க ளுள் 9 பேர் தமிழில் சிறப்புப் பயிற்சி பெற றனர். இந்த மாணவர்கள் வழி தமிழ் இல4 கியப் பகுதிகள் சிலவற்றை மொழிபெயர்த்து வெளியிட முடிந்தது.
ஒரு மாணவர் திருவெம்பாவை, திருட் பாவை இரண்டையும் போலிஷ் கவிதை நடையில் அழகுற மொழி பெயர்த்தார் இவற்றுள் திருவெம்பாவை அண்மையில் வெளிவந்து பலரின் பாராட்டுக்கு ஆளாகி யது. இந்த மொழி பெயர்ப்போடு, மாணிக்க வாசகர் பற்றிய குறிப்பும் வெளியாயிற்று. இதே மாணவர், திருவெம்பாவை ஆய்வு செய்து, சிறப்பான ஒரு ஆய்வுக் கட்டுரை யைத் தனது எம். ஏ. பட்டத்திற்குத் தர் தார். பல புதிய விளக்கங்களும் செய்திகளும் அக்கட்டுரையில் இடம்பெற்றன. மற்ருெரு மாணவர் திருமுருகாற்றுப்படை முழுவதை யும் மொழி பெயர்த்து அதன் அடிப்படை யில் "முருக வழிபாட்டுத் தன்மை குறித்து * ஆய்வு செய்தார். திருமுருகாற்றுப்படை யோடு, ஒப்பிட்டுக் காணும் நோக்கில் பர் பாடலில் உள்ள முருகன் பாடல்களும் மொழி யாக்கம் செய்யப்பெற்றன. இவைகள் செம் மை செய்யப்பெற்று விரைவில் வெளிவர இருக்கின்றன. பாலை பாடிய பெருங்கடுங்கோ வின் சில பாட்டுக்கள், பாரதியின் கண்ணன் பாட்டு, தமிழ் நாடு, தமிழ்மொழி பற்றிய பாடல்கள், கம்பராமாயணத்தில் வாலிவதை படலம், பட்டினப்பாலை, புறநானூற்றில் சில பாடல்கள் ஆகியனவும் மொழியாக்கப் செய்யப்பெற்றன. ஜெயகாந்தனின் "யுச சந்தி" என்னும் சிறுகதை 'பாட்டி" என்ற தலைப்பில் பேர்லிஷ் இதழ் ஒன்றில் வெள டிாயிற்று. இந்தக் கதையைப் பாராட்ப யோர் பலர். அகிலன், இந்திரா பார்த் சாரதி ஆகியோரின் கதைகளும் மொழ பெயர்ப்பு செய்யப்பெற்றன.
இந்த மொழியாக்கப் பணியில் சிறப்ப கக் குறிப்பிடத் தக்கது திருக்குறள் மொழ பெயர்ப்பேயாகும். 1950இல் வந்தாதிஞே: ஸ்கா என்ற அம்மையார் திருக்குறளையும் வேறுசில தமிழ்ப் பாடல்களையும் மொழி பெயர்த்து வெளியிட்டார். திருக்குறள் உை
26

தடை வடிவில் தரப்பட்டது. நான் அங்கே போனதும், போஹ்தான் ஹெம் பார்ஸ்கி என்பவர் திருக்குறளில் ஈடுபாடு கொணடி ருந்த செய்தி அறிந்து அவரோடு தொடர்பு கொண்டேன். பிறகு நானும் அவருமாகச் சேர்ந்து திருக்குறளை மொழி பெயர்த்து வெளியிடும் பணியில் ஈடுபட்டோம். 75 வய தான அவர் கீழ்த்திசை நாடுகளின் பண் பாட்டையும், தத்துவச் சிந்தனையையும் இரத் தினச் சுருக்கமாகச் சொல்லக்கூடிய நூல் திருக்குறளே என்று தாம் கருதியதால்தான் அதைத் தமது தாய் மொழியில் மொழி யாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டதாகச் சொன்னர். என் உதவியோடு கவிதை வடி வில் - குறட்பாவைப் போன்றே ஈரடிகளில் திருக்குறள் முழுவதையும் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழ் இலக்கியம், திருக் குறள் பற்றிய செய்திகளும் முன்னுரையில் இடம் பெற்றன. விளக்கம் பெற வேண்டிய சில பகுதிகள் விளக்கக் குறிப்புக்களாகத் தரப் பட்டுள்ளன. இந்த மொழி பெயர்ப்பின் கவிதை அழகைப் பலரும் பாராட்டினர் மூல நூல் கருத்துக்களினின்று அதிகம் வில கிச் செல்லாமல் கூடுமானவரை மூல நூலா சிரியனை வெளிக்கொணரும் விதத்தில் இம் மொழிபெயர்ப்பு அமைந்தது. சுமார் 10,000 பிரதிகள் வெளிவந்து, இரண்டே வாரங்களில் விற்பனையாயிற்று என்பது நாம் நினைத்துப் பெருமைப்பட வேண்டிய ஓர் செய்தியாகும். இந்த நூல் பற்றிய வேறு ஓர் அனுபவம் என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத தாகும். நான் எனது நண்பரோடு டென்மார்க் செல்லுகையில், போலந்து நாட்டு எல்லை யில் சுங்கச் சாவடிப் பரிசோதகர்களிடம் சுங்கப் பரிசோதனை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு இரு ந்த அதிகாரிகளுள் ஒருவர் நான் தமிழன் என்று தெரிந்ததும், தான் படித்துச் சுவை த்த திருக்குறள் மொழி பெயர்ப்புப் பற்றிக் கூறி எல்லோரும் படிக்க வேண்டிய நூல் அது என்றும் பாராட்டினர். மொழிபெயர்ப் பாளர்களில் நானும் ஒருவன் என்று தெரிந் ததும், எவ்விதப் பரிசோதனைகளும் செய் யாது மிகவும் மரியாதையோடு நடத்தியதை இப்பொழுது நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது. நம் அதிகாரிகளில் எத்தனை பேர்

Page 27
குறளைப் படித்திருப்பார்கள் என்ற கேள்வி யும் அப்போது எழாமல் இல்லை.
போலிஷ் மக்களுக்குத் தமிழ் இலக்கியம் பற்றிய செய்திகளைத தெரிவிக்கும் எண்ணத் தோடு 'தமிழ் இலக்கியக் குறிப்புக்கள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும், திருக்குறள் பற்றி ஒரு கட்டுரையும் "கிறிஸ்தவர் தமிழ்த் தொண்டு என்ற கட்டுரையும் எழுதி வெளி யிட்டேன். 2, 3 இடங்களில் தமிழ் இலக் கியம் பற்றிப் பேசுகின்ற வாய்ப்பும் எனக் குக் கிடைத்தது. போலந்தில் தமிழ் வளர்க் கும் பணியில் ததேயுஷ் ஹெர்மன், தனுத்தா பிரஞ்சுகேவிச், காதஷின விம்கோவ்ஸ்கா ஆகியோர் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு
18-ம் நூற்ருண்டின் துவக்கத்தில் இப் பொழுது கிழக்கு ஜெர்மனியிலுள்ள ஹாலே என்கிற நகரத்திலிருந்து, கிரியெண்ட்லர் என் கிற பாதிரியார் தரங்கம் பாடி வந்தார். இவர் தமிழ் கற்றதோடு, மற்ற ஜெர்மனி யரும் தமிழ் கற்க வேண்டும் என்று வற் புறுத்தினர். இவருக்குப் பின்னர் வந்த ஜீகன் பால்கு பற்றி அறியாத தமிழர் இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன் இவர் 1716 இல் நீதிவெண்பா, கொன்றை வேந்தன், உலக நீதி ஆகியவற்றை ஜெர்மன் மொழி யில் மொழி பெயர்த்தார். தமிழ் இலக்கியம், இலக்கணம், கலை, தத்துவம், சமயம் பற் றிய பல நூற்களை வெளியிட்டார். பைபிளைத் தமிழில் மெ ழிபெயர்த்தார். தமிழ் உரை நடையின் வளர்ச்சிக்கும் அரிய தொண்டாற் றினர். அடுத்து வந்த பாப்ரிஸியுஸ் (Fabrtzius) என்ற பாதிரியார் தமிழ் - ஆங்கில அக ராதி ஒன்றைத் தயாரித்து 1779இல் வெளி யிட்டார். இந்த அகராதியின் முக்கியத்து வம் இன்னும் குறைந்து விடவில்லை என்பதே இவரது பணியின் சிறப்புக்குச் சரியான ஓர் எடுத்துக்காட்டு. இவரும் தமிழ் பக்திப் பாடல்கள் பலவற்றை ஜெர்மன் மொழியில் வெளியிட்டார். 19-ம் நூற்றண்டின் இடைப் பகுதியில் தமிழகம் வந்த இரால் என்பவர் தமிழ் மொழி இலக்கணம் ஆகியவற்றில் ஈடுபட்டு ஆய்வு செய்தமையோடு கூடவே, தமிழ் இலக்கியத்தை ஜெர்மன், ஆங்கிலம், இலத்தீன் மொழிகளில் இறக்குமதி செய்யும் பணியையும் மேற்கொண்டார். இவரது திருக் குறள் மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பானது என்று போற்றப்படுகிறது. "தொன்மை மிக்க தமிழ் இலக்கிய முத்துக்களுள் தல் சிறந்த முத்து திருக்குறள்" என்பது இவரது கருத்து. கைவல்ய நவநீதம், பஞ்ச நச பிர கரணம், ஆத்மபோத பிரகாசிகா, சிவஞான

சித்தியார், அகப்பொருள் விளக்கம் ஆகிய வற்றையும் இவர் ஜெர்மனில் தந்தார். இவர் கள் ஆரம்பித்து வைத்த தமிழ்ப் படிப்பும் தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பும் கிழக்கு ஜெர்மனியில் தொடர்ந்தன ஹென்றிக் நன் என்பவர் பட்டினத்துப் பிள்ளையார்” பாடல் கள் பற்றிய தமது ஆய்வேட்டில் பிள்ளையார் பாடல்கள் சிலவற்றைத் தந்து, பட்டினத் தார் பற்றிய பல செய்திகளையும் வெளியிட் டுள்ளார். 1879 - 1945 க்கு இடையே வாழ் ந்த ஹெச். டபிள்யூ. ஸ்ஹோமெரஸ் என் பார் மாணிச்கவாசகர், காரைச் காலம்மை யார், ஆண்டாள் பாடல்களையும், பெரிய புராணப் பகதிசள் பலவற்றையும் மொழி யாக்கம் செய்து வெளியிட்டார். ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டுள்ள உரைநடை யும் செய்யுளும் கலந்த வடிவிலான பெரிய புராணத்தை அண்மையில் நான் காண நேர்ந் தது. ஆர்நோ லெஹ்மன் என்பவர் 1935இல் தாயுமானவர் பாடல்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். 1948இல் இவர் எழுதிய "தமிழ் பக்தி இலக்கியத்தில் சைவம்" என்ற பினச். டி. பட்டத்திற்குரிய ஆய்வுக் கட் டுரையில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் கள் பல மொழியாக்கம் செய்யப்பட்டு வெளி யிடப்பட்டன. இவரிடம் பலர் தமிழ் கற் றுத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மிகச் சமீப காலத்தில், ஹெல்கா அண்டன் என்ற அம் மையார் பாரதி பற்றி ஆய்வு செய்து நூல் வெளியிட்டிருக்கிருர், பாரதியார் பாடல்கள் பல மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஹங்கேரி
இங்கு தமிழ் முறையாகக் கற்பிக்கப்பட வில்லை. எனினும் இஸ்த்வான் மேயர் என்ற மாணவர் தமிழில் ஈடுபட்டு, பத்துப் பர்ட் டில் ஆய்வு மேற்கொண்டார். பத்துப்பால் டின் பல பகுதிகளை மொழி பெயர்த்துள்ள தாகத் தெரிகிறது.
உலகின் மற்ற சிவப்பு நாடுகளான பல்
கேரியா, ருமேனியா, யுகோஸ்லேவியா, கொ ரியா, கியூபா முதலிய நாடுகளில் இன்னும் தமிழ்க் கல்வி இடம் பெறவில்லை. மக்கள் சீனத்தில் திருக்குறள் மொழிபெயர்ப்பு ஒன்று வந்துள்ளதாகத் தெரிகிறது.
நன்றி:
உலகத் தமிழ் மாநாடு தீக்கதிரி
Fas'uuq arwrî - 19 a I
27

Page 28
கிருத யுகம்
யாழ். மாந8
தேனி தேன் எடுப்பது போ6 தமான அக்கினியில் கலந்துவிட்டன கன்’ எங்கள் இதயத்தில் ஆழமாகப்
தமிழ் பேசும் மக்களுக்கு அ நமது நூலகம் துரித கதியில் மீண்டு முடியாததாகும். இதற்கு பொது ம ணைந்த செயற்பாடு மிக அவசியமும்
மனச்சாட்சி உள்ள நல்ல ரெ பணியில் ஈடுபட்டுள்ளன. எடுத்ததெ யும் பெற்றுக் கொள்ளும் எத்தனிப்பி டும். நமது நூலகத்தைப் பொறுத்தவ பேற வேண்டும் அப்படியானுல் தான் மூனைப்புக்களும் ஏற்படும்.
உடல் உழைப்பாளி முதல் ெ உழைப்புக்களை தாமாகவே முன்வத் உழைப்பு சக்தியுள்ள தமிழ் பேசும் ஊதியத்தை “மேயர் நிதி"க்கு அனுப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. புனித பிரமுகர்கள் பார்த்துப் பாராமல் அள் சாள்ளளவும் ஐயப்பாடில்லை.
நூலகம் மறு அவதாரம் எடுச் சஞ்சிகைகளும், பிற வெளியீடுகளும் எதிர்பார்க்கலாம்.
யாழ் மேயர் அவர்களும் ய ஒவ்வொரு முயற்சியிலும் ‘கிருதயுக புனரமைப்புப் பணியில் தன்னை ஈ லித் தெரிய வேண்டியதில்லை.

கர நூலகம்
ல் சேகரித்த ஞானச் சுவடிகள் அநீ . அதே நேரம் மிலேச்சத்தின் ‘சுவடு
பதிந்தும் விட்டன.
றிவுப்பசி தீர்த்துக் கொண்டிருந்த ம் புதுப்பொலிவு பெற்றிடல் தவிர்க்க க்களின் உணர்வு பூர்வமான ஒன்றி
அவசரமும் ஆனது.
நஞ்சங்கள் ஏற்கெனவே இப் பெரும் ற்கெல்லாம் அந்நிய நிதியும், உதவி பின் தாக்கத்தையும் உணர்தல் வேண் 1ரை நம்மவராலேயே காரியம் ஒப் * பொறுப்பும் விளங்கும். பாதுகாப்பு
தாழில் நுட்பவியலாளர் வரை தங்கள் து இலவசமாகத் தருதல் வேண்டும்; மக்கள் ஒவ்வொருவரும் ஒரு நாள் பிவைப்பது அவர்களுக்கு எவ்வித மான இப் பணிக்கு நமது வர்த்தகப் ர்னிக் கொடுத்திடுவார்கள் என்பதிலும்
*கும்வரை இந்நாட்டுத் தினசரிகளும், b இலவசமாகக் கிடைக்கும் என்றே
rழ் மாநகர உயர்பீடமும் எடுக்கும் b விசுவாசமாகக் கலந்து, நூலகப் டுபடுத்திக் கொள்ளும் எனச் சொல்
أ--

Page 29
கிருத யுக வளர்ச்சிக்கு எமது வாழ்த்துக்கள்
ஆறுமுக
208, பருத்தித்துறை வீதி
ஆண்கள், பெண்கள் ஆடைகளை வ இன்றே விஜய
நெல்லியடி, “g TU:
ـــــــــــــــــــــــــ۔
நேர்த்தியான கவர்ச்சியான தரமான Ur:
66 சரவ 45, கஸ்தூரியார் விதி,

விலாஸ்
| நல்லூர்.
ா, சிறுவர்களுக்கான ாங்குவதற்கு
ம் செய்யுங்கள்
நாஸ்’ கரவெட்டி. |
யாழ்ப்பாணம்.

Page 30
G. C. E. A/L கலை, வர்த்தக வகு
லோக இன்ஸ்
166/1, ஆஸ்பத்திரி வீதி
பலவித நவநாகரீக பாதணிகளுக்கு
հul, I
D-1 இலாஸ்டோ
உள்ளூர் உற்பத்திச் சாமான்களும்
63A, நவீன சந்தை,
தரத்திலும் உறு
f's fun in ீ"இந்து சீமேந்து கிறில்கள் o animasa api um air. Gao
பாதுகாதேவ
199, மின்சார நிலைய வீதி, u Fryphu IT GJITúd. Øy-R: 7845

குப் புகளுக்கு
நாதன் 'ரியூட்
9 யாழ்ப்பாண ம்.
பிரகாஸ்
மிக மலிவில் பெற்றுக் கொள்ளலாம்.
யாழ்ப்பாணம்.
புதியிலும் சிறந்த இலங்கை ஓடுகளும்
மற்றும் மனைகளுக்கு வேண்டிய
சகலவிதமான கட்டிடங்களுக்குரிய மட்பாண்டப் பொருட்களுக்கும்
இன்றே விஜயம் செய்யுங்கள்
பி ஸ்ரோர்ஸ்
கிளை ஸ்தாபனம்: கொடிகாமம் வீதி, நெல்லியடி, கரவெட்டி. இல: 893