கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வெள்ளாவி

Page 1


Page 2

வெள்ளாவி
விமல் குழந்தைவேல்
2D. Caffig DILD

Page 3
விலை 125 ரூபாய்
உயிர்மை வெளியீடு
வெள்ளாவி 0 நாவல் 0 ஆசிரியர் : விமல் குழந்தைவேல் e (G) விமல் குழந்தைவேல் 0 முதல் பதிப்பு: ஜூலை 2004 0 வெளியீடு : உயிர்மை, 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018, தொலைபேசி: 91-44-24993448, LS6ir 60T (5 & 6): uyirmmai(a)yahoo.co.in o (p6ir GT60L வடிவமைப்பு: றஷ்மி 0 அச்சுக்கோப்பு : உயிர்மை இமேஜ் & இம்ப்ரஷன் 0 அச்சாக்கம் : மணி ஆஃப்செட், சென்னை 600 005
Vellavi o Novel o Author: Vimal Kuzhanthaivelu o (C) Vimal Kuzhanthaivelu o Tamil O First Edition: July. 2004 o' Demy 1x8 o Paper: 18.6 kg Maplitho o Pages: 216 O Published by Uyirmmai, 1 1/29 Subramaniam Street, Abiramapuram, Chennai 600 018, India. Tele/Fax : 91-44-24993448, e-mail : uyirmmai Gyahoo.co.in O Front Cover Designed by Rashmi O Typeset by Uyirmmai Image & Impression O Printed at Mani Offset, Chennai 600 005 o
Price RS. 125

என் தேசத்தில் குந்தக் குடில் இன்றி குடிக்க கஞ்சி இன்றி கந்தல் துணியைக்கூட
கனநாளாய் காணாமல் சொந்த மண்ணில் அகதிகளாய்
அல்லலுறும் அபலைகளுக்கு

Page 4

மண்ணிலிருந்து மரங்கள் முளைக்கின்றன . . .
அகழ்ந்து உயிர்ப்பிக்கப்பட்ட தொல் நகரங்களிலிருந்து பாணர் களின் பாடல்கள் கேட்கின்றன. நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் உயிர்கொண்டெழுந்து மீதி வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்துக்கொண்டிருக்கின்றனர். சமர்க்களங்களில் மலைகள் பொருது கின்றன, குதிரைகளின் குளம்புகளில் பொறித்தீ பறக்கின்றது. யானைகள் குருதி சொரிந்து சரிகின்றன, புராதான மாந்தார்கள் இன்னொரு முறையும் கொல்லப்படுகின்றனர். இதிகாசங்களின் கதாநாயக வில்லன் பாத்திரங்களை தலைகீழாய் ஆட்களை மாற்றி பரிசோதனை செய்து பார்க்கின்றனர்.
சூனியக்காரக் கிழவியோ, பொம்மைகள் செய்து அங்கம் அங்க மாய் ஆணியேற்றியபடி இருக்கின்றாள். அவள் பிடியில் சிக்கிய இளவரசியை மீட்கவென இராஜகுமார்கள் புரவிகளில் புறப்பட் டாயிற்று. அரசிளங்குமரியை மீட்டு அவளையே மணஞ்செய்து நீதி வழுவாது நீண்ட ஆயுள் நல்லாட்சி செய்வதாய்க் கதை முடியவேண்டாமா?-தவளை இளவரசன் முத்தமொன்றிற்காகக் காத்துக்கிடக்கிறான். ஆனால் தும்புத்தடியில் பறந்தவளாய் ஏழேழு கடலுக்கு அப்பால் இளவரசியைச் சிறைவைத்திருக்கும் மாளி கையைச் சுற்றிக் காவல் புரிந்துகொண்டிருக்கின்றாள் சூனியக்காரி. அவள் இன்னும் மாறவேயில்லை. இப்போதும் அவளுக்கு நீண்ட மூக்கு.
இப்படியாய் . . . இப்படியாய் . . .
கதாமாந்தர்கள் உலவிக்கொண்டிருந்த காலத்தில், இரத்தமும் சதையுமாக நம் எல்லோர் முன்னும வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் விமலின் மக்கள். அவர்கள் மனிதத் தாயும் தந்தையும் கூடுவதால் பிறந்தவர்கள். நோய்நொடிப் படுபவர்கள், பட்டினிக்கும் பசிக்கும் ஆளானவர்கள். இளமையிலும் மூப்பிலும் வறுமைப்பட்ட மக்கள். அவர்களுடைய சந்திரமதி தண்ணியடிப்பாள். போடியார் பெண் பிடிப்பார். மாதவியின் செத்தையை ஊர் ஆண்மக்கள் பிராண்டு

Page 5
வார்கள்-இருமிச் சமிக்ஞை செய்வார்கள். அப்பன் தெரியாத கருவை பரஞ்சோதி சுமப்பாள்-அந்த அரவிந்தனில் நாகமணி உசிரையே வைத்திருப்பான். “புஸ்பைசிக்கள்" ஒடுவதே அந்த மக்களின் உச்சக்கனவு.
நீண்ட நெடுந்தொலைவு போய் புலம்பெயரியாய் ஐக்கிய இராச் சியத்தில் வதியும் விமலின் ஆன்மா-இரவுக் காட்சி படம் பார்த்து விட்டு சாறனை தூக்கிக் கட்டியபடியும், கோவில் சுவர்களில் குந்தியிருந்து ஊர்ப்புதினங்களைப் பேசியும், எழுவட்டுவான் மைதானத்தில் உதைபந்து விளையாட்டுக்குப் பிறகான மிகுமாலை அமைதியில் இஞ்சிப் பிளோன்டியொன்றின் உசாரில் காலை நீட்டி உட்கார்ந்து வியர்வை காய்ந்து பனிப்பெய்து நனைக்கும் வரைக்கும் பகிடி பேசிச் சிரித்தாயும், கோளாவில் மணல் தெருக் களில் சைக்கிளையும், துயரம் நொறுக்கும் வாழ்வையும் தள்ளிய படியும் இழந்த வாழ்வின் சாரங்களை இன்றும் சுவைத்துக் கொண்டிருக்கின்றது.
இறந்த வாழ்வின் மகோன்னதத் தருணங்களை, திரும்பவொருத் தரம் நமக்கு வாய்க்க வைத்திருக்கிறார் விமல்.
எல்லா பலவீனங்களையும் மீறி-இழந்த காதலின் நினைவு களின்போது போல சிலிர்க்க முடிகிறது.
21.04.2004 றஷ்மி இரவு 10.50 மணி

என்னுரை
மூன்று வருடங்களுக்கு முன்பு நான்கு பக்கங்களில் நான் எழுதிய சிறுகதையொன்றை படித்துப் பார்த்த நண்பன் அனஸ் "இதை ஏன்டா நீ ஒரு நாவலாக எழுதக் கூடாது?" என்று கேட்டான். அவன் கேட்டதைப் பொருட்படுத்தாமல் அக்கதையை சிறுகதை யாகவே வைத்துக்கொண்டேன்.
பரஞ்சோதி என்பவளின் வாழ்க்கையை, அவளுக்கு ஏற்பட்ட சமூகச் சிக்கல்களை, அவளின் வாழ்க்கைப் போராட்டங்களை, அந்த மண்ணின் வாழ்வியல் நடைமுறைகளை, பேச்சு வழக்கு களையெல்லாம் நான்கு பக்கங்களில் உன்னால் சொல்லி முடித் திருக்க முடியாது. கட்டாயம் நீ அதை நாவலரீக எழுதவேண்டு மென்று அனஸ் என்னை உரிமையுடன் தொந்தரவு செய்ததனால் தான் "வெள்ளாவி” என்ற இந்த நாவலை எனக்கு எழுதத் தோன்றிற்று.
இந்நாவலை எழுதி முடித்து இருவரிடம் படித்துப் பார்க்கச் சொல்லி கொடுத்தபோது படித்தவர்கள் இரண்டு விசயங்களைச் சொன்னார்கள்.
இந்நாவலின் வாயிலாக நீ இன்னாராகத்தானிருக்க வேண்டு மென்ற ஒரு தனிப்பட்ட முத்திரையொன்று உன்னில் பதிந்து விடக்கூடிய நிலைமை இருக்கின்றது என்றார்கள். நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஏனெனின் அஃதுவாக இருந்து தான் அஃது பற்றி எழுதவேண்டுமென்பதிலும் அஃது பற்றி எழுதுவதால் அஃதுவாகி விடுமோமென்பதிலும் நான் உடன்பாடற்றவன். எனவே இஃது பற்றி எனக்கு எந்தக் கவலையும் இருந்ததில்லை.
இரண்டாவது இக்கதை எங்கு நடந்ததோ அந்த பிரதேச மொழி யிலேயே கதை சொல்லப்பட வேண்டுமென்பது: இந்த இடத்தில்தான் நான் ஒரு பெரிய சவாலே எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

Page 6
குறிப்பிட்ட சில கிராமிய சொற்களை வைத்து சிறுகதைகள் எழுதி கிராமத்து மண் வாசனைக் கதைகள் எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டு காலத்தை ஒட்டிக்கொண்டிருந்த நான் மீண்டும் இந்நாவலில் திருத்தி எழுதியபோது திக்குமுக்காடிப் போனேன். காரணம் நான் ஊரைவிட்டு பிரிந்த கால இடைவெளி அதிகமென்பதே.
இந்நாவல் முழுவடிவம் பெற உதவியவர்கள்,
நாவலைப் படித்து, அதுபற்றி என்னோடு விவாதித்து கதைப் பற்றிய கருத்துக்களை சொல்லி, பிழை திருத்தியதோடு தனது வேலைகளுக்கிடையில் இந்நாவல் உருவாக்க முயற்சிகளை சென்னை யிலிருந்து செய்த சகோதரன் ஹஸின்.
முன்னுரையும் அட்டைப்படமும் தயாரித்து இதில் கூடிய பங்கெடுத்து கொண்டவன் நண்பன் றவுமி.
எழுதிய முதல் பிரதியை படித்துப் பார்த்து கருத்துக்களைச் சொல்லி திருப்பி எழுத வைத்தவர்கள் நண்பர்கள் யமுனா ராஜேந்திரன், சபேசன்.
மற்றும் இந்நூலை பிரசுரம் செய்யும் உயிர்மை பதிப்பக மனுஷ்ய புத்திரனுக்கும் என் அன்பும் நன்றியும்.
விமல் குழந்தைவேல்
01.01.2004
VIIMAL KULANTHIAI VEL 1 A CREST DRIVE
ENFELD
MIDDLESEX
EN3,5 QD
U.K.
TP-0208.3647514 e-mail: vimal100Ghotmail.com

லெக்சன் காலம். பச்சையெண்டும், மஞ்சளெண்டும், நீலமெண்டும், சிவப்பெண்டும் கட்சிக் கொடிகளால ஊரே வண்ணமயமா மாறிப் போயிச்சி.
மஜீத்துக்கும் முஸ்தபாக்கும்தான் கடுமையான போட்டி.
போனமுறை முஸ்தபாதான் வந்தார். இந்தமுறை அப்பிடி இரிக்காதாம் எப்பிடியும் மஜீத் வருவாரெண்டுதான் ஊருக்குள்ள எல்லாரும் சொல்லுறாங்க.
பணம், செல்வாக்கு, காரு, ஜிப்பு, அழகு வடிவெண்டு எல்லாம் முஸ்தாப்பாக்கு இருந்தாலும் புருசனுக்கு வோட்டுக்கேட்டு மஜீத்துர பொஞ்சாதி ஊருக்குள்ள ஒவ்வொரு ஊடு ஊடாப் போறதால மஜீத்து இந்த முறை வருவாரெண்டுதான் எல்லாரும் நினைக்காங்க. அழகான முகத்த முக்காட்டால மூடிக் கொண்டு ஒவ்வொரு ஊட்டு வாசலுக்கும் மஜீத்துர பொஞ்சாதி வந்தா, இரிக்கச் சொல்லி பாய விரிச்சா பாயில இருக்காம வாசல் மண்ணுல இரிக்கிறத் தையும் தானே குடிக்கத் தண்ணிகேட்டு பழஞ்செம்புல குடுக்குற தண்ணியக் குடிக்கிறத்தையும் பார்த்த ஊர்ப் பொம்புளையளெ யெல்லாம் இந்த முறை எங்கட வோட்டு மஜீத்துக்குத்தானெண்டு சொல்லிற்றாங்க.
ஊருக்குள்ள இருந்த பாள் வளவெல்லாம் கட்சிக் கூட்டங் களுக்காக வெட்டி வெளியாக்கியாய்ச்சி.
விடிஞ்சி நடுச்சாமம் மட்டுக்கும் ஒரே பீக்கர் சத்தம்தான். ஒவ்வொரு கட்சிக்காரரும் ஒவ்வொரு மெட்டுல பாட்டுக்கட்டி பீக்கருல பாடத் தொடங்கிற்றானுகள். எலக்சன் முடிஞ்சாலும் கொஞ்ச நாளைக்கு சின்னப் புள்ளையளெல்லாம் இந்தப் பாட்டு களத்தான் பாடிக் கொண்டு திரியுங்கள்.
மாதவிர வாசலுல கீறுன எட்டுச் சதுரக்கோட்டையும் சுத்தி வளைச்சி எட்டு, பத்து வயசுக்கார பொம்புளப் புள்ளையள் குந்திக் கொண்டிருந்திச்சுகள். எல்லாரும் பரஞ்சோதிர கூட் டாளிகள்தான்.
வெள்ளாவி 11

Page 7
நெத்தியில ஒரு கிளவளங் கட்டிக் கல்ல வைச்சிற்று நிலத்துல அரைச்ச நீளப் பாவாடையத் தூக்கி இடுப்புல சொருகிற்று அண் ணாந்து பார்த்துக் கொண்டு ஒவ்வொரு சதுரத்தையும் கோட்டுல கால்படாம தாண்டத் தொடங்கினாள் பரஞ்சோதி.
“றைற்ரோ”
°、罗》
றைற “றைற்ரோ ?”
AA چو و
றைற "றைற்ரோ م « "ஆ. . . முள்ளி . . . முள்ளி . . " சிவபாக்கியம் கத்த நெத்தியில இருந்த கல்ல எடுத்திற்று குனிஞ்சி பார்த்தாள் பரஞ்சோதி. கால் பெருவிரல் கோட்டுல பட்டுத்தான் இருந்திச்சி. சதுரங்களுக்குள்ள இருந்து வெளியால வந்திற்றாள்.
“கோளாவில் ஊரிலே தமிழர் வாழும் மண்ணிலே வாக்குக் கேக்க வந்த முஸ்தபாவே - உனக்கு வாக்களிப்போர் யாரய்யா முஸ்தபாவே." பரஞ்சோதி கோட்டில் கால்பட்டு களிபட்ட சந்தோசத்துல எலக்சன் பாட்ட பாடி துள்ளிக் கொண்டிருந்த சிவபாக்கியத்த பூமணி ஓடிவந்து தள்ளியுட கூட நிண்ட வள்ளி சிரிச்சிக் கொண்டே
"ரேடியோ பாட்டுக்கள கேட்டுப் பாரம்மா அத கேட்டுப் பார்த்த பின்னாலே அதுக்கு நேர புள்ள டியப் போடம்மா” எண்டு மஜீத் கட்சிப்பாட்ட பாட நிலத்துல கிடந்த சிவபாக்கியம் ஒழும்பி வள்ளிர கொண்டையப் புடிக்க ரெண்டு பேரும் நிலத்துல உருளுறதப் பார்த்த மத்தப் பொட்டையளெல்லாம் போட்ட சத்தத்துல ஊட்டுக்குள்ள படுத்துக் கிடந்த மாதவி வெளியால வந்து எட்டிப் பார்த்தாள். பொட்டையள் ஒண்டோடொண்டு கொண்டையுப் புடிச்சிக் கொண்டு நிக்காளுகள். வாசலுல காயப் போட்டிருந்த நெல்லுப்பாய் முளுக்க காக்காய் கூட்டமாயுமிரிக்கி. "எடியே . . . எடியே அறாங்குட்டி கிளைகாள் . . . மணிசர ஒரு கண்ணுக்கு நித்திரை கொள்ள உடாம என்னடி மறிப் பழகு றயள் . . . ஒடுங்கடி உங்கட உங்கட ஊட்டுவழிய."
வாசலுல கிடந்த பூக்கம் நெட்டிய எடுத்துக்கொண்டு வந்த மாதவியக் கண்டோடனயே பொட்டையளெல்லாம் கம்பி வேலிக் குள்ளால குனிஞ்சி தரவைப் பக்கம் ஒடிற்றாளுகள்.
“எடியே பாப்புள கொள்ளி நெல்லுப்பாய காக்காய் இறைக்கிறத பார்க்காம அதென்னடி குஞ்சிக் குஞ்சிப் புள்ளையளோட உனக்கு ஒத்தி விளையாட்டு.”
2 விமல் குழந்தைவேல்

தாய் கதைக்கிறது காதுக்கு கேக்காததுபோல காக்கை இறைச்ச நெல்லுகள மண்ணோட அள்ளி சுழகுல போட்டாள் பரஞ்சோதி. நிமிந்து பார்த்தாள் தரவை சாப்பை புல்லுகளுக்குள்ள என்னத் தையோ தேடுறாப்போல குனிஞ்சி பதுங்கி நடக்காளுகள் சினே கிதிகள். அவளுக்குத் தெரியும். நேற்றெல்லாம் ஆக்காண்டி குருவி கத்திக்கொண்டு திரிஞ்சிற்று எப்பிடியும் முட்டையுட்டிருக்கும். ஆந்தைக் கண்ணி பூமணி எப்பிடியும் கண்டு புடிச்சிருவா ளெண்டு அவளுக்குத் தெரியும்.
வெயிலுல காய்ஞ்சி நிலத்துல இருந்து கிளம்புன சாணித்தட்டுகள ஒவ்வொண்டா கிழப்பிப் பார்த்து நடக்கிறாள் பூமணி.
"பரஞ்சோதியே இஞ்ச வாவன் எத்தின ஆக்காண்டி முட்டை யெண்டு பாரன்."
தாய்க்குத் தெரியாம வேலி ஒதினைக்கு போய் பூமணிர பாவாடை மடியுக்குள்ள கிடந்த முட்டைகளப் பார்த்தாள். பச்சை யும் நீலமுமா புள்ளி போட்ட சின்ன முட்டைகள் அழகா இருந்திச்சி.
"அவிச்சி தின்னப் போறம் நீயும் வாவன்." “போங்கடி அம்மை அறிஞ்சாவெண்டா சூட்டுக்கோல் வைச் சிடுவா."
சொல்லிற்று நெல்லு சுழகோட ஊட்டுக்குள்ள வந்திற்றாள் பரஞ்சோதி.
"பரஞ்சோதி வட்டிக்கட்டுக்குப் போப்பறம் நீயும் வாறயோ ?” சிவபாக்கியத்திர குரல் கேட்டு வெளியால வந்த மாதவிக்கு என்னத்தாலையும் எறியோணும்போல இருந்திச்சி.
"எடியே உங்களுக்கு என்னடி வேலை ஊட்டுல தின்னறதும் வட்டிக்கட்டுல பேலுறதும்தானேடி வேலை."
மாதவிர சத்தம் கேட்டதும் பொட்டைகள் தரவை ஒதினையால வட்டிக்கட்டுக்குப் போறத்தயே பார்த்துக் கொண்டு நிண்டாள் பரஞ்சோதி.
கூட்டாளிப் பொட்டைகளோட சேந்து வட்டிக்கட்டுக்கு போறத் துக்கு பரஞ்சோதிக்கும் ஆசைதான்.
பகல் சோற திண்டு போட்டு நீளப்பாவாடை புல்லுல இளு பட்டுவர, கால்பட்டு காய்ஞ்ச புல் முறியுற சத்தம் கேக்க நடந்துபோய் வட்டுக்கட்டுல உள்ள கானாந்தி பத்தை மறைவுல அடுப்புக் கல்லப்போல குந்தியிருந்து ஊரப் பத்தியும், பள்ளிக்கூட வாத்திமாரப் பத்தியும், நாளுக்கு நாள் வளர்ந்து உடலுக்குள்ள குறு குறுப்பேத்துற தங்கட ரகசிய உடலுறுப்புகள் பத்தியும் ரகசியமா பேசி சிரிக்கிற இந்த வட்டிக்கட்டு விசயமென்டுறது பரஞ்சோதிக்கு மறக்க முடியாத விசயம்.
வெள்ளாவி 13

Page 8
“எடியே நீ சாமத்தியப் பட்டகுமர் இனியும் குஞ்சிக் குஞ்சி பொட்டையளோட சேர்ந்து வட்டிக்கட்டுக்கு றில் அடிக்கப் போகேலாடி”
இப்பிடி எப்ப தாய்க்காறி சொன்னாளோ அண்டையில இருந்து தான் வாழ்க்கையில எதையோ ஒண்ட முதன் முதலா பறிகுடுத்த நினைப்புத்தான் பரஞ்சோதிக்கு. வட்டிக்கட்டெண்டுறது அவள்ற நினைப்புல இருக்கிற கனாக்காலம் மாதிரித்தான்.
சாமத்தியப்படுற நேரம், கல்யாணம் கட்டுற நேரம், புள்ளைப் பெறுற நேரமெண்டு பொண்டுகள்ற வாழ்க்கையில ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு இழப்பு இருந்து கொண்டுதாணிரிக்கும். சுழகுல நெல்லோட கிடந்த மண்ண புடைச்சி வெளியால தட்டுன பரஞ்சோதி நிமிந்து பார்த்தாள்.
விரிச்ச தலையோட வள்ளியும் சிவபாக்கியமும் கத்திக்கொண்டு ஒட அவளுகளுக்கு புறத்தால சிவபாக்கியம் ஊட்டு நாய் முடறோவரும் தெத்தி தெத்தி ஓடுது.
அந்தக் காலத்துல வெள்ளைக்கார துரை ஒட்டிவந்த றோவர் ஜீப்ப நாயொண்டு ஒடிமுந்திச்சிதாம். அதால அந்த நாய்க்கு றோவரெண்டு பேர் வந்திச்சாம். அதுக்குப் புறகு அந்த நாய் வழி புறந்த நாய்க்கெல்லாம் றோவரெண்டுறது பரம்பரை பேராச்சி. இந்த நொண்டி றோவர் முதல் றோவரோட எத்தினையாவது பரம்பரையோ தெரியாது.
வள்ளியும் சிவபாக்கியமும் ஒடுன வேகத்துல திரும்பிஒட பூமணிர தாயும் எண்ட மளே எண்ட மளே எண்டு கத்திக்கொண்டு வட்டிக்கட்டு பக்கம் ஒட, ஊர் ஆக்களும் ஒடுறதக் கண்ட மாதவி ஒழுங்கைக்கு வந்து "என்னகா விசயம் ஏங்கா எல்லாரும் ஒட்றயள்." விரிச்ச கூந்தல அள்ளி முடிச்சிக் கொண்டுதான் கேட்டாள் மாதவி.
“கோணேசிர மகள் பூமணிய வட்டிக்கட்டுல பேய் புடிச்சிற்றாங்கா அதான் பாப்பமெண்டுபோறம் நீயும் வாவன்.” சொல்லிப்போட்டு ஒடுனவளுக்கு பின்னால மாதவியும் ஒடத் தொடங்கிற்றாள்.
என்னெண்டுதான் இந்த விசயம் இவ்வளவு கெதியா ஊருக்குள்ள போய்ச்சோ தெரியாது. வட்டிக்கட்டு முளுக்க ஊர்ச்சனம். மாதவியும் போய் சனத்தோட சனமாச் சேந்திட்டாள்.
வாய ஆவெண்டபடி தலைவிரி கோலமா வானத்தையே பார்த்த மாதிரி நிக்காள் பொட்டை பூமணி.
ஆத்துல தாண்ட உடம்பு கரை சேரு மெண்டுறத பாக்க வந்தாப் போல ஆத்தங்கரையெல்லாம் சனம் . . . பீ. . . வாயோட வெயில் குடிச்ச ஆமையெல்லாம் சனத்தக் கண்டு பயந்தோ என்னவோ அடித்துடையில பருப்போட்ட ஆக்கள் நடக்குறாப்போல இடந்திடந்து ஓடி தண்ணிக்குள்ள இறங்கிற்றுதுகள்.
14 விமல் குழந்தைவேல்

"எண்டமளே என்னடி இது உண்ட கோலம் என்னடி நடந்திச்சி எண்ட புள்ளைக்கு."
தாய்க்காறி பூமணிய புடிச்சி பூமரத்த உலுக்குறாப்போல உலுக்கிக் கொண்டேயிருந்தாள்.
"நாங்க எல்லாரும் கானாந்தி பத்தை மறைவுல குந்திக் கொண்டி ருந்த நேரம் இந்தப் பொட்டை பூமணி திடீரெண்டு புளியமரம் ஒடுது புளிய மரத்த பேய் கூட்டிக் கொண்டு போகுது பாருங்க பொட்டை எண்டு கத்தத் தொடங்கிற்று. நாங்க பாத்தா புளியமரம் அவடத்துலதான் அசையாம நிக்குது. அது தான் பயத்துல ஒடிற்றம்."
சிவபாக்கியம் சொல்லக்கோளயே குழறிற்றாள். "குஞ்சானுக்கு என்ன வேணும் தாயார்ர கண்ணுல என்ன தெரியுது சொல்லுதாயே."
வேப்பம் கொத்தும் கையுமா நிண்ட பூசாரியொருத்தன் பூமணிய தாயாராக்கிற்றான்.
ஆத்துக்குள்ள இறங்குன ஆமைகளக் கண்ட நொண்டிறோவர் குரைக்கத் தொடங்கிற்று.
"இதென்னத்தக் கண்டுகா இந்த நாய் இப்பிடிக் குரைக்குது." கூட்டத்துல நிண்டவளொருத்தி புதுக்கதையொண்டுக்கு அடித் தளம் போட்டாள்.
“எமனும் பேயும் கன்னியாகப் போற புள்ளர கண்ணுக்கும் நாயிர கண்ணுக்கும் மட்டுந்தான் தோத்தரவாகும். அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. வாயமூடிக் கொண்டு சும்மா நில்லுங்கோ." பூசாரிர அதட்டலுல எல்லாரும் வாயமூடி நிண்டுற்றாளுகள். பூமணிப் பொட்டை வானத்தையும் பூமியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே நிக்காள்.
சிவபாக்கியமும் வள்ளியும் ஒருத்திர தோழ ஒருத்தி புடிச்சபடி பயந்து நடுங்கிக்கொண்டே நிக்காளுகள். சாப்பைப்புல்சாணி இடுக்குல கண்டெடுத்த ஆக்காண்டி முட்டைகளையும் கானாந்தி பத்தைக்குள்ள எறிஞ்சிற்றாளுகள்.
"இண்டைக்கு நாளைக்கெண்டு சமையுற குமர் மத்தா மதிய நேரம் பேய் பார்வை கொள்ளுற நேரத்துல வெளியால போகாதடி யெண்டா கேட்டாளோ, வட்டிக்கட்டுல எந்தப் புரிசன பாக்க வாளுதோ தெரியா பள்ளியுட்டு வந்து திண்டாளெண்டா வெட்டக்கிறங்கிருவாளுகா."
சொன்னது மட்டுமில்லாம மகள்ற தலையில ஒரு குட்டும் போட்டாள் கோணேசு.
"இஞ்சே . . . விளையாடாத . . . தாயாரோட விளையாடி தாயார் கோவினை கொண்டாவெண்டா நீங்கெல்லாம் தாங்கமாட்டயள்."
வெள்ளாவி 5

Page 9
பூசாரி சொன்னதக் கேட்டு கூட்டத்துல நிண்டவன் ஆரோ சத்தம் போட்டு சிரிச்சிற்றான்.
"ஆருடா அவன் நையாண்டி பண்ணுறவன்." பூசாரிக்கும் சன்னதம் வாறமாதிரித்தான் தெரிஞ்சிச்சி. "புன்ன என்ன பூசாரியார் அப்பன் இல்லாத இவள வளக்க அப்பச்சட்டி நானும் அடுப்புல கிடந்து வேகுறன். இவள் என் னெண்டா பள்ளியுட்டு வந்தா குரும்பொட்டி சம்பல் போட்றதும், குருவிமுட்டை புறக்குறதும், குஞ்சிச் சோறாக்கிறதும், குரவையுட்டு விளையாட்றதெண்டும். தெறிஞ்சித்திரியுற மட்டுமில்லாம இப்ப பேய்ப் புதுனமும் காட்டுறாளே."
"திரும்பத் திரும்ப சொல்லுறன் தாயார் கோவினை கொண்டா தாய் புள்ளையெண்டும் பாராம அள்ளி எறிஞ்சிடுவா. வாய மூடிக்கொண்டு நில்லுங்கோ சொல்லிப் போட்டன்."
எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு மாதவி ஒண்டும் கதை யாமத்தான் நிண்டாள். இப்பெல்லாம் இப்பிடி சபை சந்தியில அவள் வாயே துறக்கிறயில்ல.
"இப்ப என்ன பூசாரியார் செய்யட்டும்.” பூசாரிக்கிட்ட மடிப்பிச்சை கேக்குறாப்போல கெஞ்சினாள் கோணேசு.
"தாயார கூட்டிப்போய் நடுஊட்டுல ஆரும் பாக்காம வைச்சிக் கொள். இண்டு ராவைக்கு நடுச்சாமம் தண்ணி ஒதிக் குடிக்கக் குடுத்து துருநூறு ஓதிப்பாப்பம்."
பூசாரி சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிற்று மகளக் கூட்டிக் கொண்டு கோணேசு போக அவளுக்குப் பின்னால ஊர்ச்சனமும் வட்டிக்கட்டு இறக்கத்தால இறங்கி நடக்க புளியமரம் மட்டும் தனிச்சிப்போய் நிண்டிச்சி.
கட்டுல இறங்கி நடந்துபோன சனமெல்லாம் ஒண்டாக கிறுகி புளியமரத்த பார்த்திச்சிகள். புளியமரம் அப்பிடியேதான் நிக்குது. இதென்ன புதினமிது. நான் எப்ப நடந்தன், என்னய எப்ப பேய் கூட்டிப்போய்ச்சி. இந்தச் சனங்களைப் பார்க்க சிரிப்புத்தான் வருகுதெண்டு தனக்குள்ள பேசிதானே சிரிக்கிறாப்போல காத்துல அசைஞ்சி மிலாறு கலகலக்க நிண்ட புளியமரம் தீவுக்காலைக்குள்ள சனம் போய் மறையும் மட்டும் அவங்களையே பார்த்துக் கொண்டி ருந்திச்சி.
இண்டைக்கெண்டில்ல இதுக்கு முதலும்-கணதரம் இந்தப் புளிய மரத்த பேய் கூட்டிக் கொண்டு போனத்த கனபேர் கண்டிரிக் கினமாம் எண்டு ஊருக்குள்ள கதையிருந்தாலும் இண்டுவரைக்கும் இந்தப் புளியமரம் நிண்ட இடத்துலதான் நிக்குது.
16 விமல் குழந்தைவேல்

தென்னம்புள்ளையுள்ள வளவ தென்னம் காலை எண்ணுமாப் போல; தென்னம் சோலைக்குள்ள இரிக்கிற இந்த குடியிருப்ப தீவுக்காலை எண்டு சொன்னாங்களாக்கும் ஆருக்குத் தெரியும். இந்த தீவுக்காலை எப்பிடியிரிக்கும் தெரியுமோ? தூரத்துல நிண்டு பார்த்தா பொத்திப் புடிச்ச ஒரு புடி கீரைக் கொத்து போல இரிக்கும். இல்லாட்டி ரெண்டு மூண்டு கட்டை போய் மொட்டையா மலையிலயோ, முருங்க மலையிலயோ ஏறிநிண்டு பாத்தா சீதை நிண்ட நிலத்துண்ட ராவணன் பேத்தெடுத்துக் கொண்டு போனானே அந்த நிலத்துண்டு மாதிரி தனிச்சிப்போய் பாக்குறதுக்கு அழகாத் தெரியும்.
தூரத்துல இருந்து பாத்தா அழகாத்தானிரிக்கும். கிட்ட நெருங் கினா அடைச்சிக் கிடக்கிற கம்பிவேலி வளவுகளுக்குள்ள இரிக்கிற ஒவ்வொரு ஊட்டு மூலையிலயும் இரிக்கிற வெள்ளாவி பானையும் ஊத்தை உடுப்பு மாராப்பும்தான் நம்மட கண்ணுக்குத் தெரியும். தீவுக்காலையில இருந்து கோளாவிலுக்கு வரவேண்டிய இடைப் பட்ட வயல் வரப்புக்குள்ள ஆத்துத் தண்ணி பூந்துடாம பாத்து பெரிய அகலமான களிமண் வரப்புக் கட்டொண்டு கட்டியிரிக்கி, இந்த வரப்புகட்டுதான் கோளாவிலுக்கும் தீவுக்காலைக்குமான வழிப்பாடு, எவன் எப்ப இந்த கட்டக் கட்டினான் என்றெதெல்லாம் இப்ப ஆருக்கும் நினைப்பில்ல.
வழிப்பாட்டு களிமண் கட்டோதினையில ஒரு புளியமரம். நல்ல உசரமா வளர்ந்து மிலாறு விரிச்சி நிக்கிற அந்த புளிய மரத்த எப்ப எந்தப் பொழுதுல நிண்டுபாக்கக்குள்ளையும் நல்ல அழகாத்தானிரிக்கும், என்ன பாக்குறத ஒள்ளம் எட்டி நிண்டு பாக்கோணும் அப்பதான் நல்ல அழகா தெரியும்.
விடியங்காட்டியில சூரியன் உதிக்கிற நேரத்துல, உதிக்கிற சூரியன புளியமரத்துக்கிடவால பாத்தமெண்டுவை, அந்தக்காட்சி இரிக்
வெள்ளாவி 17

Page 10
கெல்லா - அது சின்னபுள்ளையஸ் கீறுங்களே காலைக்காட்சி சித்திரம்கூட தோத்துப் போயிரும். அது மாதிரித்தான் ராவுக் காட்சியும்.
புளிய மர மிலாறுகளுக்கிடையால நிலவு தெரியும். நிலவு வெளிச்சத்துல ஆத்துத்தண்ணியும் பளபளக்கும். நிலவத் தாண்டி மேகம் ஒடும்தானே அந்த நேரத்துல பாக்குறதுக்கு நல்ல சோக் காயிரிக்கும். பட்டப்பகல்ல உச்சிவெயில் நேரத்துல தூரத்துல இருந்து புளியமரத்தப் பார்த்தமெண்டா, ஆத்து தண்ணி தெரியும். ஆத்து தண்ணிய கண்ணுல இருந்து விலத்திப்போட்டு புளிய மரத்த மட்டும் பாத்தமெண்டா காத்துல தண்ணி ஒடுற மாதிரி கண்ணுக்கு தோத்தரவாகும். அதையும் நல்லா உத்துப்பாத்தர் அந்த தண்ணி ஓட்டத்துல புளியமரமும் நகர்ந்து போற மாதிரி நம்மள டேச்சிரா காட்டும். புளியமரத்த பேய் கூட்டிப் போறத கண்ணால கண்டனெண்டு சுள்ளி புறக்கப் போற புள்ளயளெல்லாம் கத்திக் கொண்டு வந்திச்சிகளாம்.
புளியமரத்துக்கு முன்னால ஒரு கள்ளிப் பத்தை. கள்ளிப் பத்தையெண்டுதான் பேரு. தூதுவழை, முல்லை, முஸ்டை, கானாந்தி, எண்டு கறிக்குத் தேவையான அத்தினை கொடியும் அதுக்குள்ள படந்து கிடக்கும். கிடந்தாலுமென்ன ஆரும் தொடுவாரில்ல.
எப்ப போனாலும் கள்ளிப் பத்தைக்குள்ள இருந்து தாமரக்கிழங்கு அவிச்ச மாதிரி ஒரு மணம் வந்துக்கிட்டுத்தானிரிக்கும். ரெண்டு பாம்பு சினைக்கிற நேரம்தான் இந்த மணம் வருமாமெண்டு சொல்வாங்க.
இப்பிடி தாமரக்கிழங்கு அவிச்சமணம் வந்த நேரம் ரெண்டு பாம்புகளும் பின்னிப் பிணஞ்சு சினச்சிக் கொண்டிருந்தத ஆக்கள் கண்ணால கண்டுமிரிக்காங்க. அந்த நேரத்துல கள்ளி முள்ளுல ரெண்டு பாம்புச் சட்டையும் தொங்கிக் கிடக்குமாம் எண்டா நம்பத்தானே வேணும். இல்லாட்டி சட்டைய களட்டி தொங்க போட்டுப் போட்டு சும்ம இரிக்க ரெண்டு பாம்புக்குமென்ன பயித்தியமோ. ஆட்கள் சொல்லுறதும் உண்மையாக இரிக்குமாக்கும். அதாலதான் ஒருத்தரும் கள்ளி பத்தை பக்கம் போறயில்ல. அப்பிடி எட்டுல தப்புல தப்பித் தவறி போய் ஆரும் பாக்குறத பாம்புகள் கண்டிச்சோ பாத்தவையள் தப்புன பாடில்ல. விரசி விரசி கொத்து மாம். சினை முறியாப் பாம்பு சினம் கொண்டு அலையுமாம் எண்டு இதத்தான் சொல்லுவாங்க.
புளிய மரத்தப் பத்தியும், கள்ளி பத்தயப் பத்தியும் கன பேருக்குத் தெரியுமோ தெரியாதோ? ஆனா புளிய மரத்துக்குமட்டும் வாயி ருந்தா இந்த கோளாவிலையும் தீவுக் காலையையும் பத்தின கதைகள வக்கணம் வக்கணமா சொல்லும். ஏனெண்டா நடக்குற தெல்லாத்தையும் நிண்ட நிலையில நிண்டு பாத்துக் கொண்டி ருக்கிறது இந்த புளியமரமொண்டுதானே.
8 விமல் குழந்தைவேல்

கோளாவில் ஊருல ஒரு பெரிய கண்ணகை அம்மன் கோயி லிரிக்கி, சுத்தி வளைச்சி மதில், மணல் வாசல், வாசலுல இலுப்ப மரம். அந்த நிழலுல பெரிய கோயிலுக்குள்ள சுவாத்தியமா இப்ப அம்மன் இரிக்கிற இடத்துலதான் ஒரு காலத்துல இந்த தீவுக்காலை ஆட்கள் இருந்தாங்களாம்.
கோளாவிலில இப்ப கண்ணகை அம்மன் கோயில் இரிக்கிற இடமிரிக்கே - அது அப்ப ஒரு பெரியகுளம், அல்லியும் ஒல்லியும் பூத்துக் கிடக்குமாம் எண்டாங்க. குளத்தோதினையில ஒரு சின்ன குடில் கோயிலும் இருந்திரிக்கி. இந்த குளத்தையும் கோயிலையும் சுத்திவளைச்சித்தான் வண்ணார ஆக்கள் குடியிருந்திரிக்காங்க. அவங்க ஊத்த உடுப்ப தோய்க்கிறதும் குளிக்கிறதும் இந்த குளத்தில தானாம். மனிசானாப் புறந்தவன் குளிக்கிறதும் துவைக்கிறதும்கூட ஆருக்காததல் கண்ணுலபட்டு கரிக்குமோ?
கோவலண்ட தலை வெட்டுப்பட்ட விசளம் அறிஞ்ச கண்ணகி அப்பதான் முளுகிக்கொண்டு தலைகாயப்போட்டுக் கொண்டிருந் திருப்பா போல. கொண்டயகூட கட்ட நேரமில்லாம விரிச்ச தலையோட காலுல கிடந்த சிலம்பையும் களட்டி எடுத்துக்கெண்டு துடிச்சிப் பதைச்சி அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு ஓடிவந்து மதுரைக்குள்ள உளுபட்டு பாண்டிய ராசனுக்கிட்ட கேக்க வேண் டிய கேள்வியையும் கேக்க்க்கூடாத கேள்வியையும் கேட்டு உள்ள பூறுவமெல்லாம் சொல்லி கொம்ப கேட்டுக் கொண்டிருந்த ராசாவும் நெஞ்சப் பொத்திக்கொண்டு சரிஞ்சி உள பக்கத்துல இருந்த அவர்ர பொண்டாட்டியும் மூச்சடைச்சி உளுந்திற்றாவாம். அதுக்குப் புறகாகுதல் சும்மா இரிக்காம இந்த கண்ணகி பைத்தியக்காரிபோல சத்தம் போட்டு சிரிச்ச சிரிப்புல எப்படா உளுவமெண்டிருந்த அரண்மனைத் தூணெல்லாம் இடிஞ்சி உள வெட்டக்கிறங்கி வந்த கண்ணகி சின்னப் புள்ளையளையும் சாகக்கிடந்த பெரியாக் களையும், ஆடு, மாடு, கோழி, குருவிகளையும், உட்டுப்போட்டு மத்த எல்லாத்தையும் சேர்த்து மதுரைய பத்தவைச்ச கையோட எங்க போறன், ஏன் போறன் எண்டுறது தெரியாம நடந்துகொண்டு போய் ஒரு இடத்துல குந்துன போதுதான் தான் இலங்கைக்கு வந்து சேந்திட்டனெண்டுறது கண்ணகிக்கு தெரிஞ்சிச்சாம்.
இப்பிடி இலங்கையில வடக்குல இருந்து கிழக்கு பக்கம் பாத்து நடந்து கொண்டு போன நேரத்துலெல்லாம் கால் சோந்து களைப் பாற குந்தியெழும்பி போன இடத்துகள்லதான் இப்ப இரிக்கிற கண்ணகி கோயிலெல்லாம் உண்டாச்சாம்.
இப்பிடியே நடந்துகொண்டு வந்த கண்ணகி காரதீவுல கொஞ்ச நாள் இருந்துபோட்டு அங்க என்ன பிரச்சினையோ தெரியாது நேரா கோளாவிலுக்கு வந்து வண்ணார ஆக்கள் குடியிருந்த குளத்தோதினையில குந்தியிருக்கா,
வெள்ளாவி 19

Page 11
குளத்தோதினைக்கு கண்ணகி வந்திரிக்கா எண்டு இவங்களுக் கென்னெண்டு தெரியும். அவையள் வழமைபோல ஆக்குறதும் காய்ச்சிறதும் குடிக்கிறதும் குளிக்கிறதும் தோய்க்கிறதும் எண்டு தங்கட சீவியத்த ஒட்டிக் கொண்டிருந்திருக்கிறாங்க. எல்லாத்தையும் பொறுத்த கண்ணகியால அவங்க கல்லுல தூமைச்சீல வெளுக்கிற சத்தத்த மட்டும் பொறுக்கேலாம போய்ச்சாம்.
அடுத்த நாள் ராவு நல்லா குறட்டையுட்டு படுத்துக் கொண்டி ருந்த கப்புகனார்ர கனவுல கண்ணகி போய் அவர தட்டியெழுப்ப, தட்டுக் கெட்டு எழும்புன கப்புகனார் "என்ன தாயி ஏன் தாயி எனக்கிட்ட வந்திரிக்காய்” எண்டு கேக்க.
"உனக்கிட்ட வராம நான் ஆருக்கிட்டவர. அவன் கண்கெட்டுப் போன பாண்டியன் எண்ட புருசன கொண்டு போட்டான். புருசன் போயிற்றானெண்ட கவலையில பைத்தியக்காரி போல ஊர்ஊரா நடந்து நிம்மதி கிடைக்குமெண்டு இஞ்ச வந்து குந்துனா இஞ்சயும் என்ன நிம்மதியா இரிக்க உடுறயளோ" "ஏன் தாயி என்ன கொறை சொல்லுதாயி” "ஆ. . . இஞ்ச என்ன நடக்குதெண்டு உண்ட கண்ணுக்கு தெரியுதில்லையாக்கும், விடிய விடிய தூமைச்சீலய கழுவுறதும் ஊத்த உடுப்ப போட்டு கல்லுல அடிக்கிறதும் எண்டு என்ன நிம்மதியா இரிக்க உடுகுதுகளா? என்னால இந்த அசிங்கத்துக்குள்ள இனியும் இரிக்க ஏலாது. நான் இனியும் இந்த இடத்துல இரிக்கிறதோ இல்லையோ எண்டுற முடிவ நாளைக்கு ராவுக்கிடையில எனக்கு தெரியப்படுத்தோணும். எண்டுபோட்டு கண்ணகி கப்புகனின் கனவில இருந்து மறைய, துண்ட உதறி தோழில போட்ட கப்புகனார் ராவோடு ராவாக ஊரைக் கூட்டி குளத்தச் சுத்தி இருந்தவைய லெல்லாரையும் ஊரைக் காலி பண்ணச் சொல்ல, ஊருக்கு பயந்து அந்த சனங்கள் ஒடிவந்து ஒதுங்குன இடம்தானாம் இப்ப இரிக்கிற இந்த தீவுக்காலை.
இப்பிடி குடியிருந்த வண்ணாரச் சனத்த குடியொழுப்பியுட்ட கண்ணகைக்கு என்ன குத்திக் கிழப்புனதோ தெரியாது. கடைசியா கோளாவில்லயும் இரிக்கப் புடிக்காம, ஆறேழு கட்டைக்கங்கால உள்ள பட்டிமேட்டுல போய்க் குந்திக் கொண்டாவாம் எண்டும் சொல்லுறாங்க. அங்கயும் ஒரு பெரிய அம்மன் கோயில் இரிக்குத் தான.
தீவுக்காலையோட ஆரம்ப சந்ததியையும் அந்தக் குடியிருப்பிர இந்த நாளைய வளத்தியயும் பாக்க இந்தக் கண்ணகை மதுரைய பத்த வைச்சி இல்லத்தாக்கிப் போட்டு இவடத்துக்கு வந்து சேர எவ்வளவு காலம் எடுத்ததோ எண்டுறதுதான் புதுனமான சங்கதி. அக்கரப்பத்துல இருந்து சாகாமம் போற றோட்டு கோளாவில குறுக்கறுத்துத்தான் போகுது. கோளாவிலுக்கும் பனங்காட்டுக்கும்
20 விமல் குழந்தைவேல்

இடைப்பட்ட தூரத்துக்குள்ளதான் வயல் வெளியும் ஆறும் இரிக்கி. கோளாவிலத்தாண்டுனா வயல்வெளி, வயல் வெளியத் தாண்டுனா. ஆறு, ஆத்தக்கடக்க பெரிய பாலமொண்டும் இரிக்கி. அறுபத்தாறாம் ஆண்டுக்கு முன்னெல்லாம் அந்தப்பாலம் மரப்பாலமாத்தான் இருந்திச்சி.
அறுபத்தாறுக்கு முன்னெல்லாம் பாலத்த கடக்கோணுமெண்டா தொங்குபாலத்துல நடக்குறாப்போல ஒருத்தர் கைய ஒருத்தர் புடிச்சிக் கொண்டு சங்கிலிக்கோருவையாகத்தான் நடக்கோணும். அப்பிடி நடக்கக்குள பாலத்துல அங்கொண்டும் இங்கொண்டுமா கழண்டு தொங்குற பலகை ஒட்டை இடவால ஆத்தக் குனிஞ்சி பாத்தா ஈரக்குலையெல்லாம் நடுங்கும்.
அறுபத்தாறுல எலக்சன் வந்த நேரம். வோட்டுக்கேட்டு ஊடு ஊடா வந்தாக்களுக்கிட்ட ஊர்ச்சனமெல்லாம் ஒண்டுசேந்து ஒட்டப் பாலத்துல உசிரக் கையில புடிச்சிக் கொண்டு போறம், வோட்டுப் போட்டா பாலம் கட்டித்தருவியளோ எண்டு கேட்டாங்க ஓம் செய்யுறன் எண்ட மனிசன் ஏமாத்தாம செய்து தந்துட்டான்.
நிந்தவூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரால இத்தினையாம் ஆண்டு இத்தினையாம் திகதி இந்தப் பாலம் திறந்ததெண்டு எழுதின கல்வெட்டு அந்தப் பாலத்துர முகப்புல இரிக்கி.
நடாத்துக்குள்ள தூண நிறுத்தி பாலம் கட்டத் தொடங்கி அது முடியுமட்டும் ஊரே புதுனம் பாத்துச்சி. பாலம் கட்டி முடிச்சி இப்ப மூண்டு வரிசம் இரிக்கும். இப்பயும் அம்மாளுக்கு செய்யுற ஊட்டுக்கு வெள்ளையடிச்சமாதிரி அந்தப் பாலம் பளிச் செண்டுதாணிரிக்கி.
சாகாமத்துக்கு போற றோட்டுல இருந்து இடப்பக்கமாக வயலுக் குள்ளால இறங்கி போற ஒரு அகலமான கிறவல் பாதைதான் தீவுக் காலைக்குப் போற பாதை. தீவுக்காலைக்கு குறுக்கால போற அந்தப் பாதைய உட்டா வேற ஒழுங்கையோ தெருவோ அங்கிட்டும் இங்கிட்டும் கிடையாது. அப்பிடித் தேவையும் இல்ல. ஏனெண்டா ரெண்டு பக்கமும் ரெண்டு ரெண்டு ஊட்டு மனைய கொண்ட குடியிருப்புத்தானே அது.
குறுக்கறுத்துப் போற பாதைர முடிவுல கடைசிக்கு முதல் ஆத்தோதினையாத்தான் மாதிவிர ஊடும் இரிக்கி.
ஆத்தப் பாத்த மாதிரி இரிக்கிற மாதவிர ஊட்டுத் திண்ணையில இருந்து நேர நிமிர்ந்து பாத்தா பனங்காட்டு சிவன் கோயில் நல்ல அழகாத் தெரியும். அப்பிடியே திண்ணையில் இடப்பக்கம் ஒள்ளம் முகத்த கிறுக்கிப்பாத்தா அந்த புளியமரமும் தெரியும். வேலை செய்ஞ்சி உடம்பு முறிஞ்சி சதுர நோவு வாற நேரமெல் லாம் திண்ணையில் கால நீட்டி இருந்து எதுக்க தெரியுற ஆத்தையும்
வெள்ளாவி 2

Page 12
அதுக்கங்கால தெரியுற கோயில் கோபுரத்தையும் இடப்பக்கம் தெரியுற புளியமரத்தையும் பாக்குறதுதான் மாதவிர பொழுது போக்கு. இதுகள உட்டா அந்த ஊட்டுல அவளோட கதைக் கிறத்துக்கெண்டு ஆரு இரிக்கா. மகள் பரஞ்சோதி இரிக்காள்தான். இருந்தாலும்ென்ன, தாயோட கதைப்பாளோ? இல்லையே. எப்பை யாகுதல் இருந்துபோட்டு தாயும் புள்ளையும் கதைக் கோணு மெண்டா வில்லுல இருந்து பாய்ஞ்ச அம்புபோல, வாய்க்கு வாய் வாக்குவாதத்துலதானே முடியுற.
தீவுக்காலை சனத்திர வாழ்க்கை வண்டி அயலூராக்கள்ற ஊத்த உடுப்புத்தான் நம்பி நகர்ந்து கொண்டிரிக்கி.
விடிஞ்சா ஊடு ஊடாகப் போய் ஊத்த உடுப்புகள எடுத்து வந்து, பின்னேரத்துல வெள்ளாவி கொதிக்க வைச்சி, துணிகளுக்கு குறிவைச்சி, அவிச்சி, ஆத்துக்கு எடுத்துக் கொண்டுபோய் அடிச்சிக் கழுவி, காய வைச்சி, மடிச்சிக் குடுத்து உழைக்குற அந்த உழைப்புக்கு கிடைக்கிற வருமானத்துலயும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஏத்த இறக்கம் இல்லாம இல்ல,
கோளாவில், பனங்காடு ஊருக்குள்ள போய் புடவையெடுத்து வெழுத்துக் குடுத்து கூலி வாங்குறாக்கள் சாதாரண வருமான முள்ளாக்களெண்டா. கோளாவில் பனங்காட்ட உட்டு, அக்கரப் பத்துக்கும், சோனகவட்டைக்கும் போய் புடவை எடுத்து வந்து வெளுக்குறாக்கள் இன்னும் ஒள்ளம் கூட வருமானமுள்ளாக்களா இரிப்பாங்க. இதஉட அக்கரப்பத்துக்குள்ளயும் சோனக வட்டக் கேயும் றோட்டோதினைக் கட்டிடங்களில ஒரு பகுதிய வாடகைக் கெடுத்து வண்ணான் கடை வைச்சிரிக்கிறாக்கள்ற வருமானம் இன்னும் ஒள்ளம் கூட இரிக்கிறதால இவங்கள தீவுக்காலைக்குள்ள பணக்காராக்கள் எண்டு சொல்லுவாங்க. இந்த மூண்டு தரப்புக் குள்ளையும் மாதவி அடங்கப்படாததாலதான் அவள்ற வாழ்க்கை முறையிலையும் இப்பிடியொரு தடம்புரள்வாக்கும்.
கோளாவில்ல மட்டும் அதுவும் ஒரு நாலைஞ்சி ஊட்டுலதான் மாதவியால புடவையெடுக்க முடிஞ்சுது. அதுக்குமேல ஊடுஊடாப் போய் உடுப்பெடுத்து ஆம்பிளையப்போல மாராப்புக் கட்டி தோள்ல சுமந்து கொண்டு வந்து ஆத்துல இறங்கி நிண்டு அடிச்சிக் கழுவ அவளால ஏலாது.
ஊத்தை உடுப்பெடுக்கப் போற ஊட்டுப் பொண்டுகள் கேக்குற ஊட்டு வேலைகளச் செஞ்சி குடுத்தா அரிசி தேங்காய் எண்டு என்னவும் கிடைக்கும். அதையும் உட்டா அவளுக்கு கிடைக்கிற வருமானமெண்டா ராவுல அவளத் தேடி வாறாக்கள் குடுக்கற தொகைதான். இப்பெல்லாம் அந்த வருமானமும் நல்லா குறைஞ்சி போய்ச்சி. ஏனெண்டா வந்துபோன ஆக்கள்ல சிலபேர அவள் வரவேணாமெண்டுட்டாள். சில பேருக்கு அவள் வேணாமெண்
22 விமல் குழந்தைவேல்

டாகிப் போயிற்றாள். இந்த ரெண்டாக்கள்ற கண்ணுகள் இப்ப மாதவிர மகள் பரஞ்சோதிர பருவத்துல உழுந்து புரள்ற தாலதான் அந்த ஊட்டுல தாயும் மகளும் கீரியும் பாம்பும்போல கட்டிப் புரள்றாளுகள்.
பத்து வயசு வரைக்கும் பரஞ்சோதிக்கு தாய்தான் உலகம். தாயெண்டா உசிராத்தான் இருந்தாள். சொந்தபந்தம் அண்ணன் தம்பி மச்சான் மாமன், மாமி மச்சாள் என்ற உறவு முறை யெல்லாத்தையும் வகுத்துப் பாக்குற வயசு வந்த நேரம்தான் புருசன் பொஞ்சாதி உறவு முறை, உடலுறவுர வரைமுறை பாலுணர் வெண்டா என்ன எண்டுறதெல்லாத்தையும் பகுத்தறியிற புத்தியும் அவளுக்கு புடிபட்டு போய்ச்சி. அப்பதான் தண்ட தாய்க்காறிர நடத்தையிலையும் அவளுக்கு சந்தேகம் வரத்தொடங்கிச்சி.
ராவு நேரத்துல ஊட்டுத் தட்டுவேலி சரசரக்கும். அதுக்குப்புறகு படுத்துக் கிடந்த தாய் கதவத்துறந்து கொண்டு வெளியில போறதை யும், இல்லாட்டி தன்ன தூங்கச் சொல்லிப் போட்டு ஆரோ ஒருத்தன் வருவானெண்டுற மாதிரி வாசலுல காத்திருக்கறத்தையும் “வேணாங்கா” எண்டு சொல்லுறதுக்கும் "ஏங்கா, இப்பிடி செய்யு றாய்?" எண்டு கேக்குறதுக்கும் பரஞ்சோதிக்கு வயசு காணாது. சொல்ல நினைக்கிறத சொல்லத் தெரியாத வெப்பிசாரத்துல தாயக் காணுற நேரத்துலெல்லாம் சோனகருக்கு பண்டிய கண்ட மாதிரி, தாயில ஏறிப் பாஞ்சி கொண்டுதாணிருப்பாள். மாதவி சொல்லுற ஒண்டையும் காதுகுடுத்துக் கேக்காம முகத்த நீட்டிக் கொண்டுதான் பகலெல்லாம் திரிவாள்.
தன்ட நடத்தையில மகளுக்கு சந்தோசமில்ல எண்டுதான் மாதவியும் நினைச்சிக் கொண்டிருந்திருக்காள். "உன்னப் பத்தி பள்ளிக்கூடத்துல பச்சை பச்சையா கதைக்காங்க. இனி நான் பள்ளிக்குப் போகமாட்டனெண்டு.” பள்ளிக்கு போறத நிப்பாட்டுன நேரந்தான் தன்னப்பத்தி மகளும் அறிஞ்சிற்றாள் எண்ட சங்கதிய மாதவியும் அறிஞ்சாள்.
மகளும் எவ்வளவோ குழறி ஒப்பாரி வைச்சிப் பாத்தாள். மாதவியால ஒண்டும் கதைக்கேலாமத்தான் இருந்திச்சி. நாலு ஊட்டுல ஊத்த வெளுக்குற வருமானத்த மட்டும் நம்பி ரெண்டு சீவனுகள் என்னெண்டு சீவிக்கிறதெண்டுறதுதான் மாதவிர கேள்வி. கடைசியில பரஞ்சோதிர படிப்புத்தான் நிண்டுபோயிச்சி.
“எடியே உனக்கும் பதினெட்டு வயசாகுதுடி. நான் ஒருத்தி மட்டும் என்னடி செய்யற. நீயும் வந்தா இன்னும் நாலு ஊட்டுல துணியெடுக்கலாம் அதோட என்னோட கூடமாட் இருந்து ஊட்டு வேலையும் செஞ்சா என்னவும் கிடைக்கிறதுல மிச்சம் புடிச்சாத் தானே டி. உன்னய ஒருத்தண்ட கையில புடிச்சிக் குடுக்க லாம்”மெண்டு எப்ப மாதவி மகளுக்கிட்ட கேட்டாளோ அப்ப இருந்து தொடங்குனதுதான் இந்த நாய் பூனைச்சண்டை.
வெள்ளாவி 23

Page 13
நான் செத்தாலும் உன்னோட ஊடு ஊடா வரமாட்டனெண்டு பரஞ்சோதியும் எத்தினையோ தரம் சொல்லிட்டாள். மாதவி கேட்டாத்தானே. மகள எப்பிடியும் கூட்டிக்கொண்டு போறதுலதான் அவளுக்கும் குறி.
24 விமல் குழந்தைவேல்

LDTரி காலத்துல அடைமழை பெய்ஞ்சா காட்டு வெள்ளம் வந்து ஆத்து தண்ணி பெருகி பாலத்துர முகட்ட தொட்டுக் கொண்டு நிக்கும். காட்டு வெள்ளத்துல அடைஞ்சிவார மரம் செடியும் புல்மோட்டுப் புட்டியளும் வெள்ளத்துல மிதந்து வந்து பாலத்துர முகட்டுநுனியில முட்டிக்கொண்டு அங்கால பக்கம் போக ஏலாம அடைபட்டுக் கொண்டு நிக்குற நேரத்துல கோளாவில், பனங்காடு, தீவுக்காலை ஆக்களெல்லாம் ஒண்டுகூடி நீளமான துறட்டிக்கம்பு போட்டு பாலத்துர மற்றப் ப்க்கத்துல நிண்டு இழுத்து உட்டா, அடைபட்டதுகளெல்லாம் வெள்ளத்துல ஒடி கடலுக்குள்ள போறதுக்காக முகத்துவாரத்த பாத்தமாதிரி ஒடும்.
மாரி காலத்தில வயல் வெளியெல்லாம் வெள்ளத்துல தாண்டு போச்செண்டா கோளாவில் பனங்காடு, தீவுக்காலையெல்லாம் தீவுத் திடலப்போல தெரியும்.
தீவுக்காலை தெற்குப்பகுதி ஆத்துக்கங்கால இரிக்கிற பனங் காட்டுக் கிராமத்திர அடிவாரத்துல ஆத்தையும் வயல்வெளியையும் அண்டிய பகுதியில இரிக்கிற சிவன்கோயில் தீவுக்காலையில இருந்து பாத்தா, அதுவும் - வெள்ளகாலத்துல பாத்தா நடுக்கடலுக் குள்ள இருந்து பாக்குறநேரம் தெரியுற ராமேஸ்வர ராஜ கோபுரம் மாதிரித்தான் இரிக்கும்.
ராவு முழுவதும் மாதவிக்கு நித்திரையேயில்ல. மூண்டுநாளா அடை கட்டி பெய்ஞ்ச மழையால தீவுக்காலய சுத்தியிருந்த வயல் வெளியெல்லாம் வெள்ளத்துல தாண்டு கிடந்திச்சி. இன்னும் மழைபெய்ஞ்சா வெள்ளம் வாசலுக்கு வந்து மாதவி ஊட்டு திண்ணையிலையும் ஏறிரும். போன வருச மழைக்கு சாய்ஞ்சி இரிக்கிற கோடிப்பக்கத்துச் சுவர் இந்த மழைக்கு எப்பிடியும் சரிஞ்சி உழுந்திடும் எண்டபயம் மாதவிக்கு.
ஊ . . . ஊ . . . எண்ட காத்துச் சத்தம் காத்துல பேயாட்டம் போடுற மரத்துகளுற அசைவோசை . . . ஜில்லெண்ட மாதிரி காத்து
வெள்ளாவி 25

Page 14
வந்து உடம்புல பட்ட நேரம் புளுப்போல சுறுண்டுட்டாள். திடீ ரென்று ஏதோ ஒருமரம் வாசலுல முறிஞ்சுள பயந்துபோய் எழும்பி வெளியால எட்டிப்பார்த்தாள். கும்மிருட்டு ஒண்டும் தெரியயில்லை. வளைஞ்சி சாய்ஞ்சி வேர் கிழப்பிக் கொண்டு வாசலுல நிக்கிற தென்னை உளுந்திச்செண்டா ஊட்டுக்கு மேல உளுமெண்டுறதும் அவளுக்குத் தெரியும். உளுந்து முறிஞ்சமரம் தென்னையில்ல எண்டதிலையும் அவளுக்கு சந்தேகமில்ல.
எழும்பி இருட்டுல திறாவித் தடவி நெருப்புப் பொட்டிய எடுத்து உள்ளங்கையில தேய்ச்சி சூடாக்கி குச்சிய உரசி விளக்கப் பத்த வைச்சாள். விளக்குச் சுடர் திரியில நிக்கோணாம ஒத்தக்காலன் நொண்டியாட்டம் ஆடுறமாதிரி ஆடிக் கொண்டிருந்திச்சி. மூலையில சுறுண்டு படுக்குற பரஞ்சோதிய திரும்பிப் பார்த்தாள்.
நீளப் பாவடைய கீழ இளுத்துட்டு அதுர நுனிய கால் விரலுகளுக் கிடையில் இடுக்கிக்கொண்டு வகுத்துக்குள்ள முகத்த முட்டி நத் தையப்போல சுறுண்டு படுக்கிற பரஞ்சோதிய உத்துப் பாத்த மாதிரியே இருந்தாள் மாதவி.
இந்த மழைக்குளிருக்கும் காத்துச் சத்தத்துக்கும் பயந்தொடுங்கி சுறுண்டு படுக்கிற மகளப் பாக்கக்குள்ள மாதவிர நெஞ்சில துக்கம் அப்பிக் கொண்டிச்சி. ஊட்டுக் கூரை கிடுகுகள பைத்தியக்காரனப் போல காத்து பிய்ச்சி விளையாடிக் கொண்டிருந்திச்சி.
"வானம் பொத்து வருணபகவான் பொழிஞ்சி தள்ளுறான் அவனுக்கு தெரியுமோ ஏழை எளியதுகளுற கயிற்றம். ம் . . . " எண்டு மாதவி உட்ட பெருமூச்சிக் காத்து பட்டு நொண்டி கூத்தாடிக் கொண்டிருந்த விளக்குச் சுடர் நூந்து போய் ஊடு இருட்டாகிச்சி. “பொட்டேய் பரஞ்சோதி குளிரில நடுங்கி சன்னிகின்னி கண்டு செத்துப் போயிருவடி. இந்தா இந்த சாக்கையாச்சும் போத்திக் கொண்டு படுடி”
இருட்டுல தடவி கையிலபட்ட சாக்க பரஞ்சோதி படுத்துக்கிடந்த பக்கம் போட போட்ட வேகத்துல சாக்கு திரும்பி வந்து மாதவிர முகத்துல உளுந்திச்சி.
"அடா உனக்கு வந்த கோள்வமோகா இது. அடிக்குற காத்துலயும் பெய்ற மழையிலயும் குந்தியிருக்கிற குடிமனை கரைஞ்சுளுந்துருமோ எண்டு நான் பயந்து நடுங்கிக் கொண்டிரிக்கன். இவள் என்னடா எண்டா போத்தக் குடுத்த சாக்க எறிஞ்சி விளையாடிக் கொண்டிரிக் காளுகா ?”
பரஞ்சோதி தூக்கி எறிஞ்ச சாக்க எடுத்து மடிச்சி தலைக்கு வைச்சிக்கொண்டு படுத்த மாதவி சத்து நேரத்துக்குள்ளால கண்ண யந்து போயிற்றாள்.
இயற்கை தாண்டவக் கூத்தாட ராவு நேரத்த ஏன்தான் தேர்ந்தெடுக்குதோ தெரியாது.
26 விமல் குழந்தைவேல்

பரஞ்சோதி கண்முழிச்சிப் பாத்தாள். நல்லா விடிஞ்சி போய்ச்சி. தாய் இன்னும் ஒழும்பயில்ல. எழும்பி வந்து எட்டிப்பார்த்தாள் எங்களுக்கு ஒண்டும் தெரியாதுகா, நாங்க ஒண்டும் செய்யஇல்லகா எண்டுறாப் போல காத்தும் மழையும் அடங்கிப் போயிருந்திச்சி.
பரஞ்சோதி எழும்பிவந்து வாசலுல இறங்குன நேரம் குதிகால் அளவுக்கு வாசலுல தண்ணி தேங்கி நிண்டுச்சி. ராவு அடிச்ச காத்துல வேலி ஒதினையில நிண்ட பப்பாசி மரம் ரெண்டு மூண்டு துண்டா முறிஞ்சி உழுந்து கிடந்திச்சி. மூடையில இருந்து பிரிச்சிக் கொட்டியுட்டாப் போல வளவெல்லாம் பப்பாசி பிஞ்சும் காயும் பழமுமாக பரவிக் கிடந்திச்சி. காலுகள மேல தூக்கி வைச்சிக் கொண்டு கையால நடக்குற சேக்கஸ்க்காரன் மாதிரி நடுவாசலில நிண்ட முருங்க மரம் வேரோட புடுங்குப்பட்டு தலைகீழாக கிடக்குது.
வாசலுல நிண்டபடியே பாலம் வரைக்கும் ஆத்த நோட்டம் உடுறாள் பரஞ்சோதி. ஆடைகட்டுன பால் சட்டிபோல நிரம்பி ததும்பி நிற்குது தில்லையாறு.
ஆத்துத் தண்ணி கடலுக்குள்ள இறங்கினா வெள்ளம் ஒள்ளமாகு தல் வத்தும். அதுக்கும் இன்னமும் முகத்துவாரத்த வெட்டியுட்ட மாதிரிக் காணயில்ல. காட்டுவெள்ளத்துல அடைஞ்சி வந்த மரம் செடியும் புல்மோட்டு புட்டியளும் ஆத்து தண்ணி தெரியாதளவுக்கு அடைஞ்சி கிடக்குது.
ஊட்டுக்கு முன்னுக்கு இருந்த கிணத்த எட்டிப் பாத்தாள் பரஞ்சோதி. ஆடுகால் வீசுமரம் தேவையில்ல. ஒருஏனத்தால குனிஞ்சி எட்டி அள்ளுமாப் போல கிணத்து தண்ணிமட்டம் உயர்ந்திருந்திச்சி எப்பவும் விடிஞ்சா முதல் வேலையா முகத்தக் கழுவிப் போட்டுத்தான் வாசல் கூட்டுவாள். வளவெல்லாம் தண்ணி தேங்கி கேணியப்போல இரிக்கக்குள்ள என்னெண்டு வாசல் கூட்டுற எண்டு நினைச்சிக்கொண்டு, இறைச்சிக் கிடந்த குரும் பொட்டியளையும் பப்பாசிப் பிஞ்சிகளையும் ஒவ்வொண்டாப் புறக்கி மூலையில குவிச்சிப்போட்டு கோடிப்பக்கம் வந்த நேரம் ஊத்தை உடுப்பு மாராப்பு மூண்டு மழையில நனைஞ்சி தாவரத்துல துவண்டு கிடக்கு. இப்பிடியே உட்டா ஊரா ஊட்டு உடுப்பெல்லாம் கரும்பயம் புடிச்சிருமெண்டு நினைச்சி மாராப்புகள கிணத்தடிக்கு கொண்டு வந்து பிரிச்சி தண்ணியில ஊறப்போட்ட நேரத்துல துணிகளுர மூலையில இருந்த குறியூடுகளையும் கவனிச்சாள். அதிகமான துணிகளுல கோளாவில் போடியார் ஊட்டு குறியுடுகள் தான் இருந்திச்சி.
கோளாவிலுக்குள்ள பெரிய பணக்காரனெண்டா அது போடி யார்தான். தோட்டம் தொரவு, காணி நெலம், ஊடுவாசலெண்டு ஏகப்பட்ட சொத்துக்கு சொந்தக்காரனெல்லோ போடியார்.
வெள்ளாவி 27

Page 15
போடியார் ஊட்டு புடவைய மாதவி வெளுக்குறதுல தீவுக் காலைக்குள்ள பெருமைப்படுறாக்களும் இரிக்காங்க பொறாமைப் படுற ஆக்களும் இரிக்காங்க.
"நம்மட ஊட்டுத் துணிமணியெல்லாம் எக்கச் சக்கமாக இரிக்கு வெளுக்குறத்துக்கு ஒரு ஆம்பிள வண்ணான வைச்சாலென்ன எண்டு போடியாரும் பொஞ்சாதிக்கிட்ட எத்தினையே தரம் சொல்லிப் பாத்திற்றார். எந்த ஆம்பிள வண்ணானும் தேவையில்ல அவள் மாதவியே வெளுக்கட்டுமெண்டு போடியார் பொஞ்சாதி கட்டன்றைற்றாகச் சொல்லிற்றா.
மாதவிர தொழில் நேர்மையும் அவள் செய்ஞ்சி குடுக்கற ஊட்டுவேலையும் போடியார் பொஞ்சாதிக்கு நல்லா புடிச்சிப் போய்ச்சி.
மத்த வண்ணானுகளப் போல ஒரு ஊட்டுப் புடவைய இன் னொரு ஊட்டுக்கு மாத்துப் புடவையா குடுத்துப் போட்டு இண் டைக்கு கொண்டுவாறன், நாளைக்கு கொண்டுவாறன் எண்டு ஏமாத்துற வேலையெல்லாம் மாதவிக்கிட்ட கிடையாது. அதையும் உட ஊத்தவெளுக்கிறனெண்டு சொல்லி புடவைய கல்லுல அடிச்சிக் கிழிக்கிற தெங்கெடு தேள்வை வேலையும் மாதவி செய்யமாட்டாள். தனக்கு புடிச்சாக்கள் ஆரும் வெளுக்கப் போட்ட புடவை ஒள்ளம் புதிசி மாதிரிச் தெரிஞ்சா அத ஆத்துத் தண்ணியில கழுவ அவளுக்கு மனசு வராது. கிணத்துத் தண்ணியில களுவி காயப்போட்டு மடிச்சிக் குடுப்பாள்.
கிணத்தடியில ஊத்த உடுப்புகள பிரிச்சி ஊறப் போட்டுக் கொண்டிருந்த பரஞ்சோதி நிமிந்து ஆத்தங்கரைய பாத்த நேரம் தீவுக்காலைச் சனமெல்லாம் ஆத்தங்கரைக்கு ஓடிக் கொண்டிருந் தாங்க.
பக்கத்து ஊட்டு நாகமணியும் கம்பி வேலிக்கு மேலால பாய்ஞ்சி ஓடிக் கொண்டிரிந்தான். இன்னுமொள்ளமெண்டா அன்னா இன்னா எண்டு எல்லாம் தெரியுற அளவுக்கு நாகமணி சாறன துடைக்கு மேல உயர்த்திக் கட்டிக்கொண்டெல்லோ ஒடுறான். பரஞ்சோதிக்கு இப்ப பதினெட்டு வயசெண்டா நாகமணிக்கு முப்பத்தஞ்சி வயசாகுதல் இரிக்கும். பரஞ்சோதிக்கு மச்சான் முறை. முப்பத்தஞ்சி வயசாகியும் இன்னமும் கல்யாணம் கட் டாமத்தான் இரிக்கான். அதப்பத்தி றோசினை பண்ணுறவன் மாதிரியும் இல்ல.
"எலக்கோ நாகமணி மச்சான், என்னகா புதுனம் எல்லாரும் எங்ககா ஒடுறாங்க?"
ஒடிக் கொண்டிருந்த நாகமணிய இடமறிச்சி கேட்டாள் பரஞ் சோதி.
28 விமல் குழந்தைவேல்

"என்னகா புள்ள பாஞ்சோயி உனக்கு புதுனம் தெரியாதோ காட்டு வெள்ளத்துல முதளையுமொண்டு அடைஞ்சி வந்து புல்லு புட்டிக்குமேல வாய ஆவெண்டு காத்துக் குடிச்சிக் கொண்டிரிக்கு தாங்கா. துவக்கெடுத்துக் கொண்டு வரச் சொல்லி போடியாருக்கு விசளம் போயிரிக்காம். இன்னேரம் வந்தாலும் வந்திருப்பார். அவர் வந்து முதளைய கொல்லுறதுக்கிடையில உசிரோட ஒள்ளுப் பம் முதளைய பாப்பமெண்டுதாங்கா ஒடுறன்.
தீவுக்காலை, பனங்காடு, கோளாவில் பகுதியில உள்ளவங்களுல போடியாருக்கிட்ட மட்டும்தான் தொவக்கிரிக்காம். அந்த நாளுல போடியார் நல்ல வேட்டக்காரனாம். அவர்ர ஊட்டுச் சுவருல மான் கொம்பு கொழுவி இருக்காம், மான்தோல், புலித்தோல், ஆனப்பல்லு, ஆனக்கால் எலும்பெல்லாம் இருக்காமெண்டு பரஞ் சோதி சின்னப்புள்ளையா இரிக்கிற நேரம் மாதவி கதை கதையா சொல்லியிரிக்காள்.
"புல்லுப் புட்டிக்குமேல முதளையொண்டு ஆவெண்டு காத்துக் குடிச்சிக்கொண்டிரிக்காம்."
"நாகமணி இன்னுமாருக்கிட்டயெல்லாம் சொல்லிக்கொண்டு அவுண்டு நழுவுன சாறண்ட நுனிய தூக்கி வாயில கொழுவிக் கொண்டு முளங்காலளவு வயல் வரப்புத் தண்ணிக்குள்ளால பாய்ஞ்சி பாய்ஞ்சி பாலத்த பாத்த மாதிரி ஓடிக் கொண்டிரிந்தான்.
வெள்ளாவி 29

Page 16
முதளையெண்டு நாகமணி கூவிச் சொன்ன சொல்லுல முகத்துல தண்ணி தெளிச்சி ஒழுப்பியுட்ட மாதிரி திடுக்கிட்டு கண்முழிச் சிற்றாள் மாதவி.
"முதளையாமோகா? எங்கயாங்கா ? . . . என்னவாங்கா” எண் டெல்லாம் ஆருக்கிட்டையும் கேக்கோணும்போல இருந்திருச்சி அவளுக்கு எட்டிப்பாத்தாள், தாவாரத்துல ஒள்ளம் தண்ணி வடிஞ்சி தெரிஞ்ச நிலத்துல நாக்கிழியான் புழுவெல்லாம் ஊர்ந்து கோலம் போட்ட மாதிரி இருந்திச்சி.
மூண்டு நாள் மழையில கோடிப் பக்கத்து மையரி மரமெல்லாம் ஊத்துப் புடிச்சி வேர் அழுகி வாடிப்போய் நிக்குது.
ஆனைபூந்த காடுபோல வளவு முழுக்கையும் மரமும் செடியும் தாறுமாறா முறிஞ்சி கிடக்குது. எழும்பி வந்து வேலி ஒரத்துல நின்டு பாலத்த பாத்தாள் மாதவி. தூரத்துல சனக்கூட்டம் கும்பல் கும்பலாக நிக்குதுகள்.
ம் . . . இப்பிடித்தானே அண்டைக்கும் நாலு ஊர்ச் சனமும் கம்பு கத்தியோட ஒண்டு கூடிச்சி. கடைசியா என்னத்த கண்டன். போன உயிர் போனதுதானே உசிர் போய்ச்சிதெண்டு அந்த மணிசண்ட கட்டையாகுதல் கண்ணுக்குத் தெரிஞ்சுதோ, அதுவும் இல்லையே.
பதினெட்டு வருசத்துக்கு முன்ன நடந்த சம்பவம் இண்டைக்கும் நேத்து நடந்தமாதிரி இரிக்கி மாதவிக்கு.
அப்ப மாதவிக்கு இருபத்திரெண்டு வயசு, அவள் சின்னப் புள்ளையா இரிக்கிற நேரமே தாய் செத்துப் போயிற்றாளாம்.
நித்திரை கொள்ளக்குள்ள பாம்பு வந்து கடிச்சிப் போட்டு போக படுத்த படுக்கையில செத்துக் கிடந்தாளாம் தாயெண்டு அவளுக்கு புத்தி புடிபட்ட நேரம்தான் தகப்பன்காறன் சொன்னா
30 விமல் குழந்தைவேல்

னாம். அதுக்குப் பிறகு தகப்பன் பேய் வண்ணான் ஒரு கலியாணம் கிலியாணம் பண்ணாம மாதவிய வளக்குறத்துலேயே காலத்த ஒட்டியிரிக்கான்.
மாதவிக்கு செம்பவண்ணான் எண்டொரு மச்சான் இரிந்திருக் கான். ரெண்டு பேருக்கும் தொடுப்பாகியிரிக்கு.
மயண்டையானப்பிறகு புளியமரத்தடிக்கு போய் கள்ளிப்பத்தை மறைப்புல ரெண்டு பேரும் கனநாளா தொடுப்பா இருந்திருக்காங்க. இது ஊருக்கும் தெரியாது. தகப்பன் பேய் வண்ணானுக்கும் தெரியாது.
இந்தப் பொட்டை பரஞ்சோதி மாதவிர வகுத்துல உண்டாகுன நேரம்தான் பேய் வண்ணானுக்கும் விசயம் தெரிஞ்சிருக்கு.
கல்லுல புடவையப் போட்டு அடிக்கிறாப்போல பூக்கனெட்டி யால மாதவியப் போட்டு என்னமாதிரியெல்லாம் அடிச்சான். "எண்ட அப்போ உன்னக் கும்பிட்டங்கா, என்னக் கொல்லாதகா எண்டு மாதவி கத்துன கத்துல தீவுக்காலைச் சனமெல்லாம் பேய் வண்ணாண்ட வாசலுல கூடிச்சி.
“ஏண்டி அம்மையில்லாத புள்ளையெண்டு உனக்கு செல்லம் குடுத்து வளத்ததுக்கு நீ செய்திருக்கிற வேலையாடி இது? அப்பிடி என்னடி உனக்கு மதனக்குழப்பம்."
பல்ல நறுவிக் கொண்டு ஓடிவந்தவாக்குல திரும்பமும் மாதவிர முதுகுல பூக்கனெட்டியால ஒரு போடு போட ரெண்டு கையாலை யும் முகத்தப் பொத்திக் கொண்டு தலையக் கொண்டு போய் வகுத்துக்குள்ள சுறுட்டிக் கொண்டு "எண்ட அப்போ என்னக் கொல்லாதகா ... எண்ட சொல்லமட்டும் தான் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிரிந்தாள்.
“காமம் கண்ணுக்கேறி கொழுப்பெடுத்து அலைஞ்சி திரிஞ்சி இப்ப ஆரோ ஒருத்தனோட படுத்துரசி வகுத்திலையும் வாங்கிக் கொண்டு நிக்கிறாளே, அதாருடியது உனக்கு தெரியாம உனக்கு புள்ள தந்த இந்திரமகாராசன்.”
மாதவி விசும்பி விசும்பி குழறிக்கொண்டு, மூக்கச்சீறி விரலால வழித்து சுண்டியெறிஞ்சு கொண்டிருந்தாள்.
"திமித்த கிடாமாதிரி நெஞ்ச நிமிர்த்திக்கொண்டு மல்லாந்து மல்லாந்து நீ நடந்து திரியக்குள்ளயே நாங்க நினைச்சம். பொட்டை புள்ளைவாங்கத்தான் போகுதெண்டு ஆருடி அவன் சொல்லண்டி" பேய் வண்ணாண்ட தூரத்து சொந்தக்காரியொருத்தி கூட்டத்துக் குள்ளயிருந்து குரல்குடுத்தாள்.
"அவள் எங்ககா சொல்லப் போறாள் அமசடக்கி. ஆமமுண்டி. சூடுசுறணை யத்த போக்கணம் கெட்டவள். நான் ஊடுஊடாப் போய் புடவையெடுத்து வந்து தூமை வெளுத்து உழைச்சிக்குடுத்த
வெள்ளாவி 31

Page 17
சோறு அவளுக்கு குத்திக் கிளப்பியிரிக்கி. இல்லாட்டி இப்பிடிச் செய்திரிப்பாளோ ?”
"பேய்ப் பொட்டை அல்லுத்தொல்லு இல்லாம அப்பனுக்கு ஆக்கிக்காய்ச்சி குடுத்துக்கொண்டு விடிஞ்சா பொழுது படுமட்டும் அப்பனுக்கு புறகால ஆத்தங்கரையிலதானே குந்திக் கொண்டிரிப் பாள் இதென்னகா புதினமா இரிக்கி."
கூட்டத்தில இருந்து ஆரோ ஒரு பொம்பிளைர குரல் மாதவிக்கு ஆறுதலாக வந்ததுதான் தெரியும், புண்ணுல புளிபாய்ஞ்சமாதிரி துள்ளி ஒழும்பிற்றான் பேய் வண்ணான்.
"ஆருடியது தொழுப்புறிவேசை, இவளுக்கு வக்காலத்து வாங்க வந்தவள். போங்கடி எல்லாரும். வந்திட்டாளுகள், இஞ்ச அவுத்துக் காட்டுறத்த ஆராய்ஞ்சிபாக்க. போங்கடி . போங்கடி .
சில்லாங்கொட்டை சிதறுண் மாதிரி சனமெல்லாம் நிண்ட இடத்துக்கும் விசளம் சொல்லாம கலைஞ்சி போக அந்தச் சொந்தக் கார கிழவிமட்டும் மாதவிக்குப் பக்கத்துல குந்திக் கொண்டிரிந்தாள். “ஏண்டா இப்பிடி ஏறிப்பாயுறாய், அவள் சொன்னதுலையும் என்னடா பிழை இரிக்கி விடிஞ்சா பொழுதுபடுமட்டும் உனக்கு புறகால வந்து ஆத்தங்கரையில குந்தியிருக்கிறவளுக்கு இப்பிடியொரு கெதியெண்டா ஆருதான் கேக்கமாட்டாளுகள்.”
"ஒங்கா ஏன் சொல்லமாட்டாய் . . . இவள் பெரிய குந்தி தேவி ஆத்தங்கரையில வந்து குந்தியிருந்து தவம் கிடந்தாள். சூரியபகவான் வந்து புள்ளயக் குடுத்துப் போட்டு போயிற்றான். இப்ப கர்ண மகாராசன் புறப்பான் அந்த அறாங்குட்டிய சீலையில சுத்தி ஆத்துல மிதக்கஉடு”
"டேய் உட்ட பிழைக்கு மட்டையோடா வைச்சிக் கட்டப் போறாய், நடந்தது நடந்து போய்ச்சி அதுக்கு அட்டம்பக்கத்துல இரிக்கறவளுகளோட ஏறிப்பாய்ஞ்சி ஏண்டா அல்லயர பகைச்சிக் கொள்ளுறாய்”
"ஆங். இந்த சங்கை கெட்டவள் செய்ஞ்ச கிரிசை கெட்ட வேலைக்கு இனி ஒரு சாவு வாழ்வெண்டாக்கூட எந்த அட்டம் பக்கத்தவனும் வரமாட்டான். இவள . . . இவள ஏறிமிதிச்சி கொண்டாத்தான் என்னகா ?” ஒத்தக்கால தூக்கிக் கொண்டு சிவபெருமானப் போல நிண்ட பேய் வண்ணான எழும்பி தண்ட பலம் கொண்ட மட்டும் நெஞ்சில தள்ளி நித்தாட்டினாள் கிழவி. “ஏண்டா கண்கெட்டுப் போயிருவாய் இளகப் போட்ட சீலய கல்லுல போட்டு அடிக்கிற மாதிரி சரக்கெண்டோண ஓடியோடி வந்து வாயும் வயுறுமா இரிக்கிறவளப் போட்டு குத்துறயே உனக் கென்னடா நெஞ்சில ஈவிரக்கம் இல்லையோடா ?”
"ஈவிரக்கம் . . . இருந்திச்சிகா . . . அது ஒரு காலத்துல, இப்ப இல்ல. இங்க பாருகா, அவள, செய்யுறதையும் செய்ஞ்சி போட்டு
32 விமல் குழந்தைவேல்

எண்ணம் கவலையில்லாம சம்மாணம் கொள்ளி சக்கப்பணிய இரிக்கிறத . . இவள கொண்டால்தான் என்ன கா ?
மாதவி சுண்டுவிரலால வாசலுல குழி தோண்டிக் கொண்டிருக்க கிழவி வந்து அவளுக்கு பக்கத்துல குந்திக் கொண்டாள்.
"பெத்து வளத்தவண்ட நெஞ்சி பதறத்தானேகா செய்யும், காதும் காதும் வைச்ச மாதிரி நீ எனக்கிட்ட மட்டும் சொல்லுகா, ஆருகா அவன் ?”
குழி தோண்டிக் கொண்டிருந்த விரலுல ஒரு நாக்கிளியான் புழுவொண்டு கொழுவி நெழு நெழுக்க, அருவருப்பாகி கையில இருந்த நாக்கிளியான் புழுவ உதறி எறிஞ்ச மாதவி கிழவிய திரும்பிப் பார்த்தாள்.
பொத்தானை மலைக்குப் பின்னால சூரியன் ஒழிஞ்சி கொள்ள, காக்காய் எல்லாம் சிறகடிச்சிக் கொண்டு வந்து தென்னைகள்ல இரவுத் தங்கலுக்கு இடம் புடிச்சிக் கொண்டிருந்திச்சி.
"இதுவேற நாமசறுத்த காக்காய் கூட்டம். ஊரவளுகளுற புடவை யெல்லாத்தையும் கொண்டுவந்து கழுவிக் காயப்போட்டா ராராவா பீய்ச்சி நாசமறுத்துப் போட்டு போயிடுதுகா.”
வளவு முளுவதும் விரிச்சி காயப் போட்டிருந்த புடவையெல் லாத்தையும் எடுத்து மடிச்சி மாராப்பு கட்டி ஊட்டுத் தாவாரத்துல வைச்சிப்போட்டு இடுப்பு மடிப்புக்க இருந்த சுறுட்டொண்ட எடுத்து வாயில வைச்சி சுருட்டு நுனிய கடிச்சி துப்புன நேரத்தி லையும் "தூ , . இப்பிடி சங்கை குறைஞ்சி வாழுறதஉட சகதியில புதைஞ்சி சாகலாமேகா என்னகா ? . . . என்னகா ... என்ன, பெத்த நான் சொல்லுறது காதுல உழுகுதோகா இல்லையோ?”
"இதென்ன கரப்பன்கா, அப்பனுக்கும் மகளுக்குமிடையில கிடந்து நான் மல்லுக்கட்டுறன். ஏண்டி பொட்ட மயண்டையாகி இருண்டு போகுது ஒழும்பி ஊட்டுக்கு விளக்க வையங்கா ?”
பேய் வண்ணானுக்கு தெரியாமல் மாதவிர துடையில கிள்ளி ஊட்டுக்குள்ள போகச்சொல்லி சாடைகாட்டினாள் கிழவி.
ஊட்டுக்குள்ள போய் குப்பி விளக்கெடுத்து திரிய நீட்டியுட்டு பத்தவைக்க கிழவியும் பக்கத்துல வந்து குந்திக் கொண்டாள்.
"எலக்கோ பெத்தா, மதியத்தால கிறுகி மயண்டையாகுமட்டும் கிறுகிக் கிறுகி நீயும்தான் கேட்டு கொண்டிரிக்காய், முட்டடப்பன் கட்டுனவளுற வாயில இருந்து ஒரு சொல்லு வருகுதோ எண்டு பாருகா ?”
“எடேய் தலையால தெறிச்சிருவாய் உண்ட பாட்டுல நீ சும்மா கிடவண்டா. நான் கேக்குற மாதிரிக் கேக்கன். நீ சொல்லம்மா எண்ட சீதேவியெல்லோகா நீ சொல்லு.”
வெள்ளாவி 33

Page 18
கெஞ்சிக் கொண்டிரிந்த கிழவிய திரும்பிப்பார்த்தாள் மாதவி. "இஞ்சப்பாரு புள்ள அன்னாசிப் பிஞ்சி. பப்பாசிப் பிஞ்சி. சூரமீன் திண்டு கலைக்குறத்துக்கு இதொண்டும் பதினைஞ்சி இருவது நாள் சங்கதியில்ல. நாலுமாசம் எண்டு சொல்லுறாய். இனி ஒண்டும் செய்யேலாது, அப்பன் ஆரெண்டு இப்ப சொல்லு. மறுகா நடக்குறதப் பாப்பம்."
மாதவி மெளனமாகத்தான் இருந்தாள். கிழவியும் உடுற மாதிரியில்ல. திரும்பத்திரும்ப கெஞ்சிக்கேட்ட நேரம் மாதவி மெல்லிய குரலுல சொன்னாள்.
“செம்பன் மச்சான்." பேய் வண்ணானின் காதுக்கு மகள் சொன்னது கேக்கயில்ல. அவன் நல்ல நித்திரை.
பேய் வண்ணாண்ட உண்மையான பேர் இளையவன் எண்டுறது இப்பத்தய தலைமுறையில ஆருக்கும் தெரியாது.
அவன் சின்னப் பொடியனாக இருக்கக்குள்ள ஆத்தங்கரையில கழுவிப் போடுற புடவையில ஏதாவது களவு போனா, புடவைக் காராக்களுக்கிட்டப்போய், கழுவிப்போட்ட புடவை கண்காணாம மறைஞ்சி போய்ச்சி, பட்டப்பகல்ல பேய்தான் கொண்டுபோயிரிக்கு மெண்டு பொய் சொல்லுவானாம். அதில இருந்துதான் அவன பேய் வண்ணானெண்டு எல்லாரும் கூப்பிட்டிருக்காங்க. காலப் போக்குல இளையவன் எண்ட பேர் மறைஞ்சி பேய் வண்ணா னெண்டு எல்லாரும் கூப்பிட்டாலும் இந்தக் கிழவி மட்டும் இப்பயும் அவன இளையவன் எண்டுதான் கூப்பிடுவா.
“செம்பன் மச்சன்” எண்டு மாதவி சொன்னதும் கிழவி மாதவியப் பாத்துச் சிரிச்சிட்டா.
"அது சரி . . . அட மச்சானோடதான் சரசம் பழகியிருக்காய். எடியே எங்கடி ரெண்டுபேரும் ஒண்டாகினயள்”
சில்மிசப் பாணியில கேள்வி கேட்டு விசயமெடுக்கிறதுல கிழவி கெட்டிக்காரி.
“மயண்டையானப்புறகு புளியமரத்துக்கு பக்கத்துல இரிக்கிற கள்ளிப்பத்தை மறைவுல."
மாதவி சொல்லக்கோளயே வெட்கப்பட்டுக் கொண்டாள். "எடியே போக்கணம் கெட்டவளே, அந்தக் கள்ளிப் பத்தை முளுக்க பூச்சி பட்டையெல்லோடி கிடக்கு. உனக்கென்ன ஊடு வாசல் இல்லையோடி. சரி சரி ஒழும்பி ஏதும் தண்ணிவென்னியக் குடிச்சிப் போட்டு படு. விடிஞ்சதுக்கு புறகு நடக்குறதப் பாப்பம்." கிழவி எழும்பி வந்து வாசலுல படுத்துக்கிடந்த பேய் வண் ணானுக்கிட்ட விசயத்த ரகசியமாத்தான் சொன்னாள்.
"அந்த வேசமகன என்ன செய்தாத்தகும்"
34 விமல் குழந்தைவேல்

துண்ட உதறிக்கெண்டு எழும்புன பேய் வண்ணான இருக்கச் சொல்லி அமர்ந்திற்றாள் கிழவி.
“டேய் சத்தம் போட்டு ஊரக் கூட்டாத, அவன் ஆம்புளை ஆத்துல சேத்தக் கழுவுற மாதிரி அவன் போயிடுவான். வகுத்துல புள்ளை வாங்கிக்கொண்டு வந்து நிக்கிறவள் உண்டமகள்”
"அப்ப அவன சும்மா உடச் சொல்லுறயோகா ?” "அவன் ஆருடா ?. . . மச்சான்தானே. விடிஞ்சதும் கூப்பிட்டு கதைப்பமேடா”
“மச்சானெண்டாப்போல இப்பிடி மானாங்கெட்டு நடக்கச் சொல்லியிரிக்கோ"
"சின்னஞ்சிறுசுகள்டா ஒண்டா இருந்திற்றுதுகள். இப்ப என்ன நாளைக்கு கூப்பிட்டு கையில புடிச்சிக் குடுத்தா ஒண்ணாதெண்டு போட்டோ போகப் போறான். அவன் மச்சாண்டா. உதிரம் . . . உதிரம் உறவறியாமலோடா உட்டுரும்."
கிழவிர கதைக்கு பேய் வண்ணான் மறுப்பேதும் சொல்லயில்ல. வாசலுலேயே படுத்து நித்திரையாகிட்டான். தகப்பனையும் மகளை யும் உட்டுப்போட்டுக் போக கிழவிக்கு மனம் இல்ல அவளும் வாசலுல படுத்திட்டாள்.
வெள்ளாவி 35

Page 19
ஆத்துக்குள்ள புடவை வெளுக்குற ஒவ்வொருத்தரும் தங்களுக் கெண்டு ஒரு இடத்தப்புடிச்சி, தண்ணிக்குள்ள எல்லை பிரிச்சி வேலி கட்டி, அதுக்குள்ள கல்ல வெச்சி அந்தக் கல்லுலதான் துணிகள அடிச்சித் துவைப்பாங்க.
புடவைய கழுவுற தண்ணிக்குள்ள கூழங்களோ செடிகொடிகளோ அடைஞ்சிராம வேலிக்கு வலையும் போட்டுக் கட்டியிரிப்பாங்க. செம்பனத்தவிர தீவுக்காலை வண்ணாரஆக்களெல்லாம் தண்ணிக்குள்ள எல்லைபிரிச்ச பகுதிக்குள்ள நிண்டுதான் புடவை வெளுக்குறது.
செம்பன் எப்பவுமே ஆத்துக்குள்ள இறங்குற வழியில நிண்டு இறங்குபடி கல்லுலதான் புடவைகள அடிச்சிக் கழுவுவான். அதுவும் விடியுறதுக்குமுன்ன வந்து தண்ட வேலையெல்லாத்தையும் முடிச்சி மத்த வண்ணான்கள் தண்ணிக்குள்ளா இறங்கக்குள்ள இவன் கரையேறி, புடவையெல்லாத்தையும் புல்லுல காயப்போட்டுருவான். மாதவி ஊட்டுத் திண்ணையில படுத்திருந்த கிழவிதான் முதல்ல கண்முழிச்சாள். முழிச்ச கண்ணுக்கு ஆத்தங்கரைக்கு ஆக்களெல்லாம் ஒடுறதுதான் தெரிஞ்சிச்சி.
மாதவியையும் பேய் வண்ணானையும் ஒழுப்பியுட்டுப் போட்டு தலைமுடிய அள்ளி முடிஞ்சி கொண்டு ஆத்தங்கரைய நோக்கி அவள் ஒட, அவளுக்கு புறத்தால பேய் வண்ணானும் மாதவியும் ஓடி ஆத்தங்கரைக்கு போன நேரம் செம்பண்ட தாய் தரையில கிடந்து தலையில பாய்ஞ்சி அடிச்சி ஒப்பாரி வைச்சிக் கொண்டி ருந்தாள்.
"எண்ட மகனே, முதளை வாய்க்கு இரை குடுக்கவோடா உன்னப் பெத்துவளத்தன். எண்ட ராசா கருங்காலி கட்டைபோல உடம்ப வளத்து இப்பிடி இடைநடுவுல போய்ச் சேந்திட்டேயாடா ? டேய் நூறு தரம் சொன்னேனேடா ஊர் ஒழும்பமுன்ன நீ
36 விமல் குழந்தைவேல்

ஒழும்பிப்போய் ஆத்துக்குள்ள இறங்காதேடா எண்டு. கேட்டேயோ இந்த அம்மர கதைய."
மார்புல அடிச்சி குழறிக் கொண்டிருந்த செம்பண்ட தாய கிழவிதான் தாங்கிப் புடிச்சாள்.
அண்டைக்கெல்லாம் ஆறுமுழுவதும் தோணிகளாகத்தான் தெரிஞ்சிச்சி. லாம்பு வைச்சிக்கொண்டு ராராவா தோணியிலபோய் வலைவீசிப் பாத்தாங்க. ஊர்ச்சனமெல்லாம் விடிய விடிய ஆத்தங் கரையில காவல் கிடந்திடுச்சி. உசிரோடதானில்ல செம்பண்ட புணமாகுதல் கிடைச்சிதோ ? அதுகுமில்லையே.
நாள் ஆக ஆக செம்பண்ட கதை ஊருக்குள்ள குறைஞ்சிபோய்ச்சி. வகுறு பெருக்க பெருக்க செம்பண்ட நினைப்பு மாதவிக்கு கூடிக் கொண்டிருந்திச்சி.
மாதவிர வகுத்துல வளர்ற புள்ளைக்கு செம்பன்தான் அப்பன். எண்டுசொன்னத ஊருல உள்ளாக்கள் நம்புனாங்கதான். ஆனா செம்பண்ட தாய்மட்டும் நம்பமாட்டனெண்டுட்டாள்.
"ஆருக்கோ புள்ளையெடுத்துப் போட்டு, செத்துப்போன எண்ட புள்ளர தலையில போட்டு தாயதிச் சொத்த ஆளலாமெண்டு நினைக்கிறயோ ? இதஉட கூட்டிக்குடுத்து உழைக்கலாமே.” எண்டு பேய் வண்ணானுக்கிட்ட செம்பண்ட தாய் கேட்ட கேள்வியில நெஞ்சப் புடிச்சிக் கொண்டு குந்தின பேய்வண்ணான் கொஞ்ச நாளையில செத்தும் போயிட்டான்.
செம்பன் செத்து அஞ்சிமாசத்துல முளைச்ச பயிரெல்லாம் கருகிச் செத்த ஒரு அறக்கோடையிலதான் பரஞ்சோதி புறந்தாள். அப்ப ஆத்துத் தண்ணி வந்திப்போய் ஆத்தோரம் காய்ஞ்சி சுரியெல்லாம் பாளம்பாளமா வெடிச்சிருந்திச்சி. காய்ஞ்சி போய் கிடந்த சேத்து பகுதியில ஒரு கையெலும்பு தெரியுதெண்டு ஆரோ சொல்ல ஊராக்கள் ஒடி, தோண்டிக் கிடைச்ச எலும்ப வைச்சி, அது செம்பண்ட எலும்பாத்தான் இரிக்குமெண்டு முடிவாக்கியாச்சி. அப்பன் செத்ததுக்குப் புறகு மாதவி ஊருக்குள்ள போய் தகப்பன் புடவையெடுத்த ஊட்டாக்களுக்கிட்ட இனி நான் உங்களுக்கு புடவை வெளுக்கட்டோ எண்டு கேட்டாள்.
s
“வேணாம் . . . ஆம்பிள வண்ணானப் பாத்துக் கொள்ளுறம்’ எண்டு சில ஆக்கள் சொன்னாலும், பேய் வண்ணாண்ட மக ளெல்லோ எண்ட மட்டுல அவளுக்கும் வெளுக்க புடவை போட ஆக்களுமில்லாமலில்ல.
புடவை வெளுக்குற ஊட்டுப் பொண்டுகள் ஏதும் ஊட்டுவேலை செய்யச் சொல்லிக் கேட்டா அதையும் மாதவி செய்ஞ்சி குடுப்பாள். "பாவம் கைப்புள்ளைக்காரியெண்டு செஞ்ச வேலைக்கு தேங்காய் அரிசியெண்டு ஆக்கள் குடுக்கிறதுழுண்டு.
வெள்ளாவி 37

Page 20
செய்ஞ்ச வேலைக்கு கூலிய வாங்கிக் கொண்டு வந்து, ஆக்கிக் காய்ச்சி மகளுக்கும் தீத்திப்போட்டு தானும் திண்டு கைகழுவிப் போட்டு சிவனே தம்பிரானே எண்டு படுக்கப் போனாளெண்டா நடுச்சாமத்துல வாசலுல ஆரோ நிக்கிற மாதிரி இரிக்கும். இருட்டுல மரம் செடி ஆடுதெண்டுதான் முதல்ல நினைச்சாள்.
"என்ன மாதவி ராவு உண்ட வாசலுக்கு வந்து கனநேரமா நிண்டன் நீ கதவத் திறக்கமாட்டனெண்டு படுத்திற்றாய்"
வெளுத்த புடவைய குடுக்கப்போற நேரந்தான் அந்த ஊட்டு ஆம்புளைர சாயமும் வெளுக்குறது அவளுக்கு தெரிஞ்சிச்சி.
சின்ன வயசுக்காரி, இல்லாமையும் கூட, என்னெண்டு சொல்லத் தெரியாது, நடுச்சாமம் வாசலுக்கு வந்தாக்களோட ஒத்துப் போகத் தொடங்கிற்றாள்.
இண்டைக்கு பதினெட்டு வயது மகள், மாதயிர வாழ்க்கைய சுட்டிக்காட்டி அவள வெறுக்குறமாதிரி நடக்குற நேரத்துல எல்லாம் செம்பன் இருந்திருந்தா தனக்கு இப்பிடியொரு நரக வாழ்க்கை வந்திருக்காதே எண்டு அவள் தனக்குள்ளேயே குமுறிக் கொள்ளறதும் தான்.
38 விமல் குழந்தைவேல்

முதளையெண்டு நாகமணி கூவிச் சொன்ன சொல்லுல இருந்து செம்பன நினைச்சிக் கொண்டிருந்த மாதவி ஒழும்பிப் போய் வேலிக் கம்பியில கையூண்டி பாலத்துப் பக்கம் எட்டிப்பார்த்தாள். கூடி நிண்ட கூட்டம் ஒவ்வொண்டாக பிரிஞ்சி நடந்து போறது தெரிஞ்சிச்சி. போன வேகத்துல நாகமணி தண்ணி பாஞ்சி ஓடி வந்தான்.
“என்னடா நாகமணி முதளைய சுட்டாச்சோடா ?” நாகமணியும் மாதவியும் மாமி மருமகன் உறவுதான் எண்டாலும் உறவுமுறை சொல்லி ரெண்டு பேரும் கூப்பிடுறதில்ல. மாதிவியக்க எண்டுதான் அவன் கூப்பிடுவான், நாகமணி எண்டுதான் மாதவி கூப்பிடுவாள்.
“எங்க மாதவியக்க சுட . . . அது நிண்டாத்தானே சுடலாம் . . . வானத்தப் பாத்து ஆவெண்டு காத்துக் குடிச்சிக் கொண்டு நிக்கு மட்டும் நிண்டுபோட்டு போடியார் துவக்கோட வாறத்த கண்டிச்சோ என்னவோ பொசுக்கெண்டு தண்ணிக்குள்ள பூந்து மறைஞ்சிற்றுகா” "இம் . . . இன்னும் ஆரக்கொண்டு போக அலைஞ்சி திரியுதோ ஆருகண்டா? அத உட்டுப்போட்டு அந்தா உழுந்து கிடக்குற முருங்க மரத்த உள்ளம் தறிச்சி துண்டுபோட்டுப்போட்டு போடா உனக்கு புண்ணியம்கிட்டும்”
மாதவி சொன்னதும் கத்திய எடுத்தான், சாறனக் கொடுக்குக் கட்டினான். முருங்கய துண்டு துண்டாக வெட்டி வெட்டுன துண்டுகள வேலியோரத்துல அடிக்கினான்.
முருங்கமரத்துல இருந்த இலையையும் பூவையும் வேற வேறா எடுத்து ஒலைப்பொட்டிக்குள்ள அடைஞ்சிபோட்டு பச்சோலைப் பாம்புபோல கிளை நுனியில இருந்து நிலத்துல வளைஞ்சி நெழிஞ்சி கிடந்த முருங்கம் பிய்ஞ்சுகள பிய்ச்செடுத்து பொட்டிக்குள்ள அடைஞ்சி கொண்டாள் பரஞ்சோதி.
வெள்ளாவி 39

Page 21
நிலத்துல குந்தியிருந்து பிஞ்சாஞ்ச நேரம் அவள்ற நீளமான தலைமுடி கருமேகம் போல நிலத்துல படந்துகிடந்திச்சி.
“கொப்பனக் கொண்டுபோன முதளைதான் இப்பவும் வந் திருச்சோ என்னவோ? என்ன புள்ள பாய்ஞ்சோயி ?”
"ஆ, வந்த முதளை அப்பனக் கொண்டுபோன முதளையோ? இல்லாட்டி அது, பெத்த புள்ளை முதளையோ எண்டு வந்த முதளைக்கிட்டயே நீ ஒள்ளுப்பம் கேட்டிற்று வந்திருக்கலாமே?” முருங்கை இலை இணுக்குகள முறிச்சிக் கொண்டு பரஞ்சோதி போக இப்ப பப்பாசிகளை துண்டுபோட்டு வேலிஒதினையில அடுக்கிக் கொண்டிருந்தான் நாகமணி.
காலையில பிரிச்சி ஊறப்போட்ட உடுப்புகளை கிணத்துத் தண்ணியில கழுவி, புழிஞ்சி, ரெண்டு தென்னையில கவுறுதொடுத்து காயப்போட்டாள் பரஞ்சோதி.
வளவு முழுக்க இறைஞ்சி கிடந்த இலை செடி மரம் எல்லாத் தையும் ஒதுக்கி குவிச்சிப்போட்டு, கிணத்தடியில நிண்ட செவ்விளநீர் தென்னம் கண்டுக்கீழ கத்தியப் போட்டுப் போட்டு தண்ட தோழ் உயரத்துல வளர்ந்து நிண்ட தென்னைய உத்துப்பாத்தான் நாகமணி. ஒட்டி ஒட்டி வைச்சாப்போல இருந்திச்சி செவ்விழநி குலை. “டேய் நாகமணி என்னடா வைச்சகண்வாங்காம தென்னையைப் பாத்த மாதிரி நிக்காய்.”
"இல்ல மாதவியக்க எண்ட தோழ் உசரம்கூட இல்ல என்னமா காய்ச்சித் தொங்குது. நல்ல காலம் அடிச்ச காத்துக்கு ஒள்ளம் உசரமா இருந்திருந்தா ஒரு குரும்பைசுட மிஞ்சியிரிக்காது, அதான் பாக்குறன்.”
"தூ . . .தூ . . . உண்ட கண்ணேண்டா அதுல பட்டிச்சி, கண்ணுறு படப்போகுது இஞ்சாலவாடா"
“பாக்கப் பாக்க சோட்டையா இரிக்கக்க. ஒரு இளநி பிய்ச்சிக் குடிக்கட்டோ ?”
“டேய் மாரி காலம் அடைமழையும் வெள்ளமும் . . . அடிக்குற காத்துக்கும் குளிருக்கும் இளநியக் குடிச்சி கைகால் கொடுகிச் சாகப் போறயோடா ?”
“மாதவியக்க சோட்டையா இரிக்கி அதுதான் . . .” “டேய் முன்னமுன்ன காய்ச்ச தென்னங்குலைய அம்மன் கோயிலுக்கு குடுக்கறதெண்டு நேந்து வச்சிரிக்கன். அது அம்மாளுற தென்னை தொட்டுடாதை . . . அத உட்டுப்போட்டு இஞ்சாலவாடா" குசினிக்குள்ள போன நாகமணிக்கு ஒருதட்டுல முருங்கையிலைச் சுண்டலையும் அவிச்ச கிழங்கையும் வைச்சிக் குடுத்தாள் மாதவி.
40 விமல் குழந்தைவேல்

பரஞ்சோதியும் வந்து ஒரு தட்டுல சுண்டலையும் கிழங்கையும் போட்டெடுத்து மூலைக்குள்ள குந்திக்கொண்டு முழங்காலுல தட்ட வைச்சித் தின்றுகொண்டிருந்தாள்.
“முருங்கையிலைச் சுண்டல் நல்ல சோக்கா இரிக்கக்க. இந்த மையரிக் கிழங்குதான் செப்பமாயில்ல."
“ஏண்டா நல்லா மாப்போல விரிஞ்சி அவிஞ்சிதானேடா இரிக்கி" "அவிஞ்சிரிக்கக்க இல்லையெண்டதாரு ? வெள்ளத்துல வேர் அழகுனதால ஒரு பூங்கறை நாத்தம் அடிக்கிற மாதிரி இரிக் கெல்லோ.”
"அடா இதாகுதல் கிடைச்சிதே . . . விளைஞ்ச பூமிய வெட்டிக் கட்டுற காலத்துல வெள்ளம் வந்திரிக்கேடா இண்டைக்கு நாளைக் காகுதல் முகத்துவாரத்த வெட்டி உட்டாங்களெண்டா பரவாயில்ல. தண்ணி வடிஞ்சி நிலம் காஞ்சாத்தானேடா களவட்டிக் காகுதல் போகலாம்.”
நாகமணியும் தாயும் கதைச்சிக் கொண்டிருக்கிறது காதுல உழாததுபோல எழும்பிவந்து, கோப்பையக்கழுவி பானைக்கு மேல வைச்சிற்று பரஞ்சோதி வாசலுக்கு வர, காசாத்தை பெத்தா தன்னிலும் உயரமான தடியொண்ட ஊண்டிக்கொண்டு கண்ணி ருண்ட காலத்துலையும் தட்டுத்தடுமாறி என்னவோ புறுபுறுத்துக் கொண்டுவந்தா,
"ஆருடி அது எதுக்கால வாறவள் மாதவியோ ?” முன்னுக்கு நிக்குறது ஆரெண்டு அடையாளம் காணமுடியாட்டி யும் பெத்தாக்கு எல்லார்ர பேருகளும் நல்ல மனப்பாடம்.
காசாத்தை பெத்தாவ தீவுக்காலையில சின்னபுள்ளையஸ் எல் லாருமே முலையாடைப் பெத்தா எண்டுதான் கூப்பிங்டுகள். அந்த காலத்துல பெத்தாட அம்மம்மாகாரிட மேல்சட்டைய குதிரையில வந்த வெள்ளக்காரத்துரை கிழிச்சிப் போட்டு போனா னாம். அதில இருந்து காசாத்தை பெத்தா வரைக்கும் அந்தக் குடும்பத்துல எந்தப் பொண்டுகளும் மேல்சட்டை போடவேயில்லை யாம். வயது போன காலத்துல காசாத்தை பெத்தா நெஞ்சத் திறந்துட்டு காத்தாட திரிஞ்ச நேரம், சின்னப்புள்ளையளெல்லாம் பெத்தாட முலைய தொட்டு விளையாடியிரிக்குதுகள். தொட்ட உடனே அது தொழ தொழ என்று உறையாத தயிர் ஆடை மாதிரி ஆடியிரிக்கு. அதுல இருந்து சின்னப் புள்ளையளெல்லாம் காசாத்தை பெத்தாவ முலையாடைப் பெத்தா எண்டுதான் கூப்பிடு றது.
"இல்ல பெத்தா நான் பரஞ்சோதி” ஆருடி என்ட கேள்விக்கு ஒத்தவரியில பதில் சொல்லிப் போட்டு பரஞ்சோதி மெல்ல விலகிப் போயிற்றாள்.
வெள்ளாவி 41

Page 22
"ஆ. பரஞ்சோதியோடி எங்க கண் தெரியுது? எல்லாம் இருண்டு போய்ச்சே, இந்த நாசமறுத்த வெள்ளம் வந்து வாசல் வளவெல்லாம் நசநசெண்டு நரகலா இரிக்கிடி . . . அது சரி எங்கடி கொம்மை." "என்னகா பெத்தா சங்கதி. சொல்லு நான் இஞ்ச குடிலுக்குள்ள இரிக்கன்.”
"எடியே மாதவி நாளைக்கு கோளாவில் கூப்பன் கடையில அரிசி, பருப்பு குடுக்கானுகளாண்டி நேரகாலத்தோட போய் போளின்ல நிண்டு வெள்ளச்சாமான வாங்கிக் கொள்ளுங்கோடி.” சொல்லிப்போட்டு பதிலுக்கு கூட காத்திருக்காம தடியால நிலத்த தட்டித்தட்டிக்கொண்டு காசாத்தை பெத்தா போயிற்றா. தீவுக்காலையில என்ன நன்மை தீமை நடந்தாலும் அத ஒவ் வொரு ஊடாகப் போய்ச் சொல்லுறது காசாத்தை பெத்தாட சம்பளம் இல்லாத உத்தியோகம். அவவ வா . . . இரு . . . ஏதும்குடி எண்டு ஆதரிக்கக்கூட விரும்பாத ஊடுகளுக்குக் கூட போய் தான் அறிஞ்ச விசயங்களை சொல்லுறதுல பெத்தாவுக்கு அப்படி யொரு திருப்தி இப்பெல்லாம் காசாத்தை பெத்தாவுக்கு சொந்த இடமெண்டு ஒண்டுமில்ல. விடிஞ்சா ஊட்டுக்கு ஊடு ஒரு நடை. கிடைக்கிறத திண்டுபோட்டு அந்த ஊட்டுலேயே ஒரு பகல் குட்டி தூக்கம். திரும்பவும் ஒழும்பி கதிர்காம நடை யாத்திரிகள் களைப்போல நடந்து போற நேரம் எந்த ஊட்டுல கண்ணுக்கு இருட்டு உழுதோ அந்த ஊட்டிலேயே படுக்கை.
காசாத்தை பெத்தா ஆருக்கும் எந்தத் தொந்தரவும் குடுக்கவு மாட்டா, எவளுக்கிட்டையும் எதுவும் வாய் துறந்து கேக்கவுமாட்டா. “என்னடா நாகமணி, வெள்ளழிவுச் சாமான் குடுக்கப் போறாங் களாமெண்டு காசாத்தை பெத்தா சொல்லிற்று போறா மெய்யாத் தான் இரிக்குமோடா ?”
“தெரியாதக்க முலையாடைக் கிழவி கனவு கண்டுப் போட்டும் கதை சொல்லித் திரியும். ஆருக்குத் தெரியும்.”
“டேய் எதுக்கும் அவள் பரஞ்சோதியையும் நாளைக்கு என்னோட வரச் சொல்லுடா. அரிசி, பருப்பு, மாவு எண்டு எல்லாத்தையும் நான் மட்டும் என்னெண்டுடா தூக்கிக் கொண்டுவாற. உப்புக் கருவாடும் தருவாங்களாக்கும். கூப்பம்மா புட்டும், கருவாட்டுக் குழம்பும் இந்த மாரி மழைகாலத்துக்கு செப்பமாத்தான் இரிக்கும். 6T6öIT GOT nt ?”
நாகமணிக்கிட்ட மாதவி சொன்னது கிணத்தடியில நிண்ட பரஞ்சோதிர காதுலபட்டுச்சி. தீமிதிச்சவளப்போல ஓடிவந்தாள். "என்ன கூப்பன் கடைக்கு நானும் வரவோ? அதுவும் உனக்குக் கூட, இஞ்ச பார் சொல்லிப் போட்டன், நினைச்சிக்கூட பாக்காத, நான் வரமாட்டன்."
42 விமல் குழந்தைவேல்

"எடியே என்ன சொல்லிப் போட்டனெண்டுடி இப்ப அறுத்த கோழி துடிக்கிறாப் போல துடிக்காய். கூப்பன் கடைக்கு போய் கூப்பம்மா அரிசி பருப்பு வாங்கி வரத்தானேடி உன்னக் கூப்புடுறன். கூப்பன் கடைக்கு வாறவனுகளுக்கு உன்னய என்ன கூட்டிக்குடுக்க வோடி கூப்பிடுறன்.”
"ஆருகண்டா செய்தாலும் செய்வாய். உன்னப் பாத்தவனுகளே ராராவா பத்தையையும் செத்தயையும் பிராண்டுறானுகள். என்னை யும் கொண்டுபோய் காட்டுனா அவ்வளவுதான். நான் வரமாட் டன் . . . செத்தாலும் வரமாட்டன்."
"நான் சதுரப்பாடு பட்டு உழைச்சித்தர, ராசாத்தி மாதிரி திண்டு போட்டு எப்பிடிக் கதைக்குறாளெண்டு பாருடா. இதஉட செத்துத்துரலாண்டி நீ . . ."
மாதவி குழறிக் கொண்டு முந்தானைய உதறி பிரிச்சி மூக்குல பொத்தி சீறிக் கொண்டாள்.
நாகமணி என்ன சொல்லுறதெண்டு தெரியாம ரெண்டுபேரையும் மாறிமாறி பாத்துக் கொண்டிருந்தான்.
"செத்துத் துலையாமலோ உடப்போறன். உனக்கு மகளாய் புறந்ததக் காட்டிலும் செத்துத் துலையறது எவ்வளவு நல்லம். கூப்பன் கடைக்கு வரட்டாம் கூப்பன் கடைக்கு. அவவப்பாத்து பல்லிளிக்கிறவனுகளெல்லாம் என்னையும் பாத்து பல்லிளிச்சா லாபம்தானே. அதுக்குத்தான் கூட்டிப் போகலாமெண்டு பாக்குறா" "எடேய் நாகமணி இவளேண்டா இப்பிடிக் கதைக்காள், தலைப் பாரம் தாங்காது அவளும் வந்தா ஒரு பொட்டிய தூக்குவாளே எண்டு கூப்புட்டா இவளேண்டா இப்பிடி வாயால புளுவக் கொட்டுறாள். டேய் சொல்லுடா அவளுக்கிட்ட கூப்பன் கடைக்கு போறதொண்டும் சங்கை குறைஞ்ச காரியமில்லெண்டு சொல்லுடா" "கூப்பன் கடைக்கு போறதொண்டும் சங்கை குறைஞ்ச சங்கதி யில்லெண்டு எனக்கும் தெரியும். ஆனா, உன்னோட வாறதுதான் சங்கை குறைஞ்ச சங்கதி, அது தெரியுமோ உனக்கு ?”
"இதென்னடா இது, பூமி பூலோகத்துல பெத்த தாயோட புள்ள போறது சங்கை குறைஞ்ச காரியமோடா ?”
"இல்லாம . . . அதுக்கும் உன்னோட . . .” "ஆ. . . ங் . . . ங் . . . என்னோட நீ வராட்டியெண்டாப் போல இந்த மாதவி பெத்த பொண்ணு கண்ணகி ஆகிருவாளாக்கும். இரி. இரி. கோளாவில் கோயில்ல உனக்கு ஒரு சிலை வைச்சிக் கும்புடுவானுகள். அப்பநானும் வந்து கும்புட்டுக் கொள்ளுறன்.” “எனக்கு சிலை கிலை வைக்கோணுமெண்டில்ல நடுச்சாமத்துல வந்து செத்தை பிராண்டாம உட்டாலே போதும்"
வெள்ளாவி 43

Page 23
இரண்டு பரம எதிரிகளப்போல தாயும் மகளும் வாய்ச் சண்டை போடுதை இன்னும் நீட்டிக்க நாகமணிக்கு விருப்பமில்ல.
"இஞ்சபார் மாதவியக்க நிப்பாட்டு கதைய. தாயும் மகளும் நாயும் பூனையுமாதிரி இப்பிடிச் சண்டைபுடிக்கையளே, உங்களுக்கு வெக்கமாயில்லையோக்க,
"நான் என்னடா கேட்டன் அவளுக்கிட்ட, என்னால எல்லாத்தை யும் தூக்கேலாது நீயும் ஒள்ளம்கூட வாடி ஒத்தாசைக்கு எண்டுதானே கேட்டன். அதுக்கு தாயெண்டும் பாராம நரம்பில்லாத நாக்கால பாதகத்தி என்னவெல்லாம் கேள்வி கேட்டுற்றாள். நீயும் தானேடா கேட்டுக் கொண்டிரிக்காய்.”
"இஞ்ச உடுமாதவியக்க. எனக்கிரிக்கிறது எண்ட கூப்பன் மட்டும் தான். நாளைக்கு நானும் உன்னோட கூப்பன் கடைக்கு வந்து, எண்ட சாமானோட உண்ட சாமானுகளையும் தூக்கிக் கொண்டு வாறன். இப்ப இந்தப் பிரச்சினைய உட்டுப் போட்டு வேலையப் ".ש)חנL
"க்கு . . . நீ வந்து எண்ட சாமான சுமந்து, வர அவள் நோகாம இருந்து தின்னுவாளாக்கும்."
பரஞ்சோதி ஏதோ சொல்ல வாயெடுக்கும்போதே நாகமணி அவளைத் தடுத்திற்றான்.
"இஞ்சபாருபுள்ள பாய்ஞ்சோயி, பெத்த தாயோட சும்மா வாய்க்கு வாய் கதைக்காம உண்டவேலைய நீ பாருபாப்பம்."
சொல்லிற்று நாகமணி போயிற்றான். பரஞ்சோதி வேலி ஒதினைக்கு வந்து ஆத்துக்கும் வயல் வெளிக் கும் வித்தியாசம் தெரியாம பரந்து விரிஞ்சி நிரம்பி நிண்ட வெள்ளத் தப் பாத்தாள்.
சில சில இடங்கள்ல உசந்த வரப்புகள் மொட்டைத் தலைபோல வெள்ளத்துக்கு மேலால தெரிய, அதுக்குமேல ஆமையெல்லாம் வரிசையா இருந்து கழுத்த நீட்டி சூரியனப் பார்த்துக் கொண்டிருந் திச்சி.
நூல் கட்டி இழுக்குறாப்போல தண்ணிப்பாம்பெல்லாம் தலைய மேல உசத்திக்கொண்டு நெளிஞ்சி வளைஞ்சி ஒடிக் கொண்டிருந் திச்சி.
பகல் கழுவிப்போட்ட புடவையெல்லாம் முறுகக் காயாட்டிலும் ஈரம் வத்தி ஆல்வாடிற்று. புடவைகளை ஒவ்வொண்டாக எடுத்து தோளில போட்டுக்கொண்டு, ஊட்டுக்குள்ள வந்து மாரப்புக்கட்டி மூலைக்குள்ள வைச்ச பரஞ்சோதிய நிமிந்து பாத்தாள் மாதவி. “நாளைக்கு அரிசி பருப்போட கூப்பன் கடையில சீத்தைத் துணியேதும் தந்தாங்களெண்டா, இந்தப் பொட்டைக்கு ஒரு பாவாடை தச்சிக் குடுக்கோணும். பாவம் வயசு வந்த குமர் பீத்
44 விமல் குழந்தைவேல்

தல் பாவாடையும் சட்டையுமா காலத்த கடத்துது. அடிக்கிற கொல்லனுக்கு அறுக்க அருவானை இல்லெண்ட கதைபோல வெளுக்குற வண்ணாத்திக்கு உடுக்கத் துணியில்ல."
தனக்குள் ளாலயே கதைச்சி மாதவி பெருமூச்சினை உட்டுக் கொண்டாள்.
நேத்துராவு எத்தின மணிக்கு முகத்து வாரத்த துறந்துட்டாங்களோ தெரியாது. முகத்துவார தண்ணி ஓட்டத்துல தீவுக்காலய சுத்தியிருந்த வயல் நிலங்களை நிரப்பியிருந்த வெள்ளம் குறைய வரம்புகள் தலைகாட்டத் தொடங்கிற்று.
சித்திரை வருசப் புறப்புக்கு தலையில வைக்கிற அரப்புப்போல வரப்புகள்ற தலையில கூழங்கள வைச்சிப்போட்டு வெள்ளம் வடிஞ்சி கொண்டிருந்திச்சி. வரப்புல நடந்து கொண்டு வந்த நாகமணி, கால் இடறி உழுந்தெழும்பி நிண்டு திரும்பிப் பாத்தான். தூரத்தால நடந்து கொண்டிருந்தாள் மாதவி. முழங்கைய ஒலப் பொட்டிக்குள்ள வைச்சி இடுப்புல புள்ளயப் போல இடுக்கிக் கொண்டிருந்தாள். பருப்பு சீனி வாங்கெண்டு ரெண்டுமூணு பன் ஒலைப் பைகளும் ஒலப் பொட்டிக்குள்ள கிடந்திச்சி.
“என்ன மாதவியக்க சுறுக்கா வாவன் நொம்பர் குடுத்துடு வாங்கெல்லோ ?”
வரப்புக் கட்டுல குந்தியிருந்து மாதவியக் கூப்பிட்டான் நாகமணி. “எங்கடா சுறுக்கா நடக்குற நெஞ்செல்லாம் படபடக்குது மூச்சடைக்கிற மாதிரி இரிக்குடா. இந்த தீஞ்சிரிவாளோட ராராவா ஏறி இறங்குனதுல தொண்டத்தண்ணி வத்திப் போச்சுடா.”
வந்து புளியமரத்தடிக்கிட்ட பாத்த நேரம் ஆரோ செய்வினை செய்ஞ்சி களிச்சிப் போட்டுபோன மாப் பொம்மையொண்டு தண்ணியில கரைஞ்சி கொண்டிருந்திச்சி.
புளியமரத்தடியில நிண்டு நாலா பக்கமும் சுத்திப் பாக்கக்குள்ள ஆத்து வெள்ளம் சமுத்திரம் போல தெரிஞ்சிச்சி.
இந்த வெள்ளத்துக்குள்ளயும் எங்காலதான் கிடைச்சுதோ தெரி யாது. வெண்ணை திண்ட கண்ணனுகளாய் வாயெல்லாம் பீகுழப்பு களோட ஆமையெல்லாம் கழுத்தநீட்டி ஆவெண்டபடி வரப்புகள்ல இருந்து சூரியனப் பாத்துக் கொண்டிருந்திச்சிகள்.
புளிய மரத்துக்குக் கீழ குந்தியிருந்து மேற்குப் பக்கம் திரும்பிப் பாத்தாள் மாதவி. மேற்குப் பக்கம் இருண்டு போய் காட்டுப் பகுதியில மழை பெய்ஞ்சி கொண்டிரிக்கிறது தெரிஞ்சிச்சி.
“என்னடா நாகமணி இந்த மழை ஏத்திக் கட்டிக் கொண்டுதான் நிக்கப்போகுது போல. விளைஞ்ச வெள்ளாமையும் அடியோட சாய்ஞ்சி வெள்ளத்துல அழுகிப் போய் கிடக்கப் போகுதாக்கும்.”
வெள்ளாவி 45

Page 24
"விளைஞ்ச வெள்ளாமயப் பத்தி இவ்வளவுக்கு கவலைப்படுறாயே அப்படி எத்தினை ஏக்கர் செய்திருக்காய் நீ நட்டப்பட ?”
"இதென்னடா ஆர்ரையெண்டாலும் வெள்ளாமையெல்லோடா நிலத்துல விளைஞ்ச சீதேவி அழுகிப் போறதப் பத்திக் கவலைப்பட, நாமளும் ஏக்கர் கணக்குல விதைச்சிருக்க வேணுமெண்டிருக் கோடா ? நிலம் விளைஞ்சா ஊரு நல்லா இரிக்குமேடா."
“என்ன விளைஞ்சும் நமக்கென்ன மாதவியக்க; நாம கூலிக்கு வெளுக்குற நாமதானே. குந்திக் கொண்டிரிக்காம எழும்பு போவம்.” "ஒள்ளம் பொறுடா இந்த விட்ட விடியங்காட்டியில கூப்பன் கடை வாசலுல போய் நிண்டு என்னடா செய்யுற”
இரண்டடி எடுத்துவைச்ச நாகமணி திரும்பி வந்து மாதவிக்கு முன்னால குந்தினான்.
“டேய் நாகமணி என்னமோ தெரியாடா. இந்த அடமழைக் கூதலுக்கு கொடுங்கிக் கொண்டு சுறுண்டு படுக்கோணும் போல இரிக்குடா. அதுமட்டுமில்லாம கூப்பன் மாவுக்குள்ள நிறைய தேங்காப்பூவப் போட்டு உறட்டி சுட்டு, அடுப்படியில கூதல் காஞ்சிகொண்டு உறட்டிய முறிச்சி கொறிச்சிக் கொண்டிரிக்கோணும் போல சோட்டையா இரிக்கிடா.”
“சின்னப்புள்ளயஸ் மாதிரி சோட்டப்பட்டுக் கொண்டிரிக்காய். ஒள்ளுப்பம் கிறுகிப்பார் நமக்குப் பின்னால வாறசனத்த, முந்தி வந்த நாம இப்பிடிக் குந்திக் கொண்டிருந்தா நொம்பர் கிடைச்ச மாதிரித்தான், எழும்பு மாதவியக்க."
சொல்லிக் கொண்டு நாகமணி நடக்கத் தொடங்க. பின்னால நடந்த மாதவி கிறுகிப் பாத்தாள்.
புள்ளையஞம் தாய்மாரும் இடுப்புல ஒலப்பொட்டியள இடுக்கிக் கொண்டு, குறுக்கு வரம்பால நடந்து கோளாவில நோக்கி போய்க் கொண்டிருந்திச்சிகள்.
புளியமரத்தடியில இருந்து கோளாவிலுக்கு போற பெரிய வரப்புக்கட்டு வழி, வயல் வெள்ளம் ஆத்துக்குள்ள இறங்குறதுக் கெண்டு வெட்டியுடப்பட்டிருந்திச்சி.
சின்ன உடைப்பு வெள்ள ஒட்டத்துர வேகத்துல வாய் துறந்து அகண்டு போயிற்று. உடைப்பு வழியால இறங்கி நடந்துதான் போகோணும். வரப்பு வாய் ரெண்டுலையும் குந்தியிருந்து கொண்டு கோவணம் கட்டுன சின்னப் பொடியனுகள் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கானுகள்.
"தாப்பம் இல்ல மாதவியக்க பயப்பிடாம இறங்கிவா." நடுத்தண்ணிக்குள்ள நிண்டு அண்ணாந்து பாத்து சொன்னான் நாகமணி. "மெய்தானோடா, பயமில்லையோ, இப்பிடியெண்டு தெரிஞ்சிருந்தா குறுக்கு வழியாலயே போயிரிக்கலாம்டா."
46 விமல் குழந்தைவேல்

வாய்க்காலுக்குள்ள இறங்கி புடவைய முழங்காலுக்கு மேல உயத்திப் புடிச்சிக்கொண்டு நடந்து, மத்தப் பக்க வரப்பு வாயில ஏறி ஒலைப் பொட்டிய கீழ வைச்சிப் போட்டு புடவைய கீழ உட்டு புழிஞ்சி உதறியுட்டாள் மாதவி.
“கெதியா வா மாதவியக்க நேரம் போகுது.” முன்னால நடந்து கொண்டிருந்த நாகமணிய ஒடுறாப் போல நடந்துதான் நெருங்கினாள்.
"நாகமணி உனக்கொரு சங்கதி தெரியுமோடா ?” *ଘTତର୍ଦtକ୪t ?” "தெய்வானையக்காட மகன் வந்து நிக்கிறான் போல” "ஆரு சதாசிவமோ ? அதென்னெண்டக்க உனக்கு தெரியும்?” "விடியுக்குள்ள கிணத்தடியில கதைச்சிக்கேட்டிச்சிடா, வேலி ஒட்டையால எட்டிப்பாத்தான், பொடியன்தான் நிக்குறான்.”
சதாசிவம், மாதவிர பக்கத்து ஊட்டு தெய்வானரமகன் தீவுக் காலைக்குள்ள கல்லூடெண்டா அது தெய்வானைர ஊடுதான். புருசனுக்கு அட்டாளைச்சேனையில தனிக்கடை இரிக்கி. குடியூட்டு வண்ணான் வேற. நல்ல பணக்காரக் குடும்பம்.
தீவுக்காலையில படிச்சவன் உத்தியோககாரனெண்டா அது சதாசிவம் மட்டும்தான். மட்டக்களப்புல கச்சேரியில கிளாக்கு வேலை பாக்குறானாம்.
களுதாவளையில சொந்தக்காரர் ஊட்டுல தங்கி நிண்டு மட்டக் களப்புக்கு வேலைக்கு போய் வாறவன். சனி, ஞாயிறு மட்டும்தான் தீவுக்காலையில வந்து நிப்பான்.
சனி, ஞாயிறுல வந்து நிக்கிறவன் பரஞ்சோதியோடதான் சிரிச்சிக் கதைப்பான். பரஞ்சோதியும் தீவுக்காலையில சதாசிவம் ஒருத்த னோடதான் சிரிச்சிக் கதைக்கிறது.
பரஞ்சோதியவிட அஞ்சு வயசு மூத்தவன் சதாசிவம். சின்னப் பருவத்துல கோளாவில் பள்ளிக்கூடத்துக்கு ஒண்டாப் போய் வந்த பழக்கம், இப்பவும் வாற நேரத்துல பரஞ்சோதிர வாசலுக்கு வராம போகமாட்டான்.
மாதவிர ஊட்டு வாசலுக்கு போகாதடா எண்டு தெய்வானையும் எத்தினையோ தரம் மகனுக்கிட்ட சொல்லிப்பாத்தாள், அவன் கேட்குற மாதிரியில்ல.
அக்கரப்பத்துல இரிக்கிற, தகப்பண்ட தங்கச்சிக்காரி தண்ட மகளுக்கு சதாசிவத்த மாப்பிள்ளை கேட்டு தெய்வானை ஊட்டுக்கு நடையா நடக்குறா எண்டும் மாதவி கேள்விப்பட்டிரிக்காள்.
"சதாசிவம் வந்து நிக்கானெண்டு கேள்விப்பட்டா அவள் அக்கரப்பத்தாள் இனி ஓடிவந்துருவாளே, என்ன மதவியக்க ?”
வெள்ளாவி 47

Page 25
“பொண்ணப் பெத்தவள் வராம இரிப்பாளோடா ? அதுவும் அழகு வடிவான படிச்ச மாப்பிள்ளையெண்டா ஆருக்குத்தாண்டா உட்டுவைக்க மனம் வரும். ம் . . . எண்ட பொட்டர தலையிலதான் என்ன எழுதியிரிக்கோ ஆருகண்டா ?”
பரஞ்சோதிய நினைச்சி பெருமூச்சினை உட்டுக்கொண்டே நடந்தாள் மாதவி.
"சும்மா வா மாதவியக்க, வாயப்படைச்ச கடவுள் மண்ணப் படைக்காமலோ உட்டுடுவான்.”
எட்டி நடந்தான் நாகமணி.
"நாகமணி, உனக்கிட்டயும் ஒண்டுகேக்கோணுமெண்டுதான் இரிக்கன். நீ என்ன சொல்லுவாயே தெரியாது.”
"என்ன கேக்கோணும், கேக்குறத கேளன்.”
"இல்ல நீ இவளுக்கு மச்சான் முறைதானே.”
"ஆருக்கு م« "ஆருக்கு பரஞ்சோதிக்குத்தான்.” "அதுக்கு . . . ?”
"இல்ல . . . உனக்கு சம்மதமெண்டா எண்ட பொட்டைய நீ கட்டலாமேடா.”
மாதவி விளையாட்டாக கதைக்கிறாளெண்டுதான் நாகமணி நினைத்தான்.
"உண்ட செல்லக் கதைய உட்டுப்போட்டு கெதியா நடந்து
yy
ᎧᎻ fᎢ .
"இல்லடா நாகமணி, சத்தியமாத்தாண்டா கேக்கன். எண்ட வாழ்க்கைதான் அந்திலி சிந்திலியாப் போய்ச்சி. அவளையாவது ஒருத்தனுக்கு கட்டிக் குடுத்தாத்தாண்டா எனக்கு நிம்மதி.”
“மாதவியக்க உனக்கென்ன பெயித்தியமோ புடிச்சிரிக்கு ?” "எனக்கொண்டும் பெயித்தியம் கியித்தியம் புடிக்கல்லடா. நான் ஆருக்கும் அவள கூட்டிக்குடுத்து வாங்கிருவேனோ எண்டு அவள் தினம் தினம் ராராவா நித்திரையில்லாம கிடக்காள்றா. எண்ட வாழ்க்க இப்பிடி போயிற்றுதெண்டுறதுக்காக பெத்த புள்ளய கூட்டிக்குடுக்க எந்தத் தாய்க்கும் மனம் வருமோடா ?”
"அதுக்கிப்ப என்ன செய்யப் போறாய்?" "ஆருக்கெண்டாலும் கட்டிகுடுத்ததாத்தாண்டா அவள் என்னய நம்புவாள். அதுக்குத்தாண்டா உனக்கிட்ட கேக்கன்.”
“மாதவியக்க, எண்ட வயதென்ன் பாய்ஞ்சோதிர வயதென்ன நீ றோசனை பண்ணி பாத்தியோ அது சின்னப் புள்ளையெல்லவா ?”
48 விமல் குழந்தைவேல்

"என்னடா சின்னப் புள்ளை ? பதினெட்டு வயதுக்குமர். உனக்கு சின்னப் புள்ளையோடா ?”
"அதத்தான் உட்டுத்தள்ளு. அது நாலு எழுத்து படிச்சி ஊரு உலகம் அறிஞ்சது. நான் தூமை வெளுக்குற வண்ணான்.”
“வண்ணாத்தி வண்ணான முடிக்காம கவுறுமெண்டு துரையவோ முடிக்கிற.”
"இஞ்சபார் கிறுகி கிறுகி பெயித்தியக்காரி மாதிரி அதையே கதைக்காம எட்டிப் போட்டு நடந்துவா. கூப்பன் கடை திறந்திருப் பானுகள்."
கதை போன போக்குல கூப்பன் கடை வாசலுக்கு நாகமணியும் மாதவியும் வந்து சேந்துட்டாங்க.
வெள்ளாவி 49

Page 26
நிTகமணியும் மாதவியும் வந்த நேரம் கூப்பன் கடை வாசல் வெறிச்சோடிக்கிடக்குது.
"இதென்னடா நாகமணி ஒரு குருவியயும் காணயில்ல. நாமதான் முந்தி வந்திட்டமோடா. சொல்லிப் பாத்தனே, இந்த விட்டவிடியங் காட்டியில ஏண்டா போகோணுமெண்டு . . . கேட்டாத்தானே.” மாதவிர குரல் கேட்டிச்சோ இல்லையோ கூப்பன் கடைக்குள்ள இருந்து வந்த சின்னப் பொடியனொருவன் ஆளுக்கொண்டாக மாதவிக்கும் நாகமணிக்கும் இலக்கத்துண்ட குடுத்துப் போட்டுப் போனான்.
இம்மை மறுமை தெரியாத நாகமணி, துண்ட விரிச்சிப் பாத்துப் போட்டு "இஞ்ச தா மாதவியக்க உண்ட துண்ட” எண்டுகொண்டு வாங்கிப்பாத்து நூற்றி அறுபத்தஞ்சும். நூற்றி அறுபத்தாறுமெண்டு எழுதியிரிக்கு. எண்டு சொல்ல ஆ. . . வெண்டு கொண்டு நாக மணியப் பாக்குறாள்.
"என்னடா நாகமணி மிச்சநூத்தி அறுபத்து நாலுபேருமென்ன விடியச் சாமம் தலக்கோழி கூவமுன்னம் வந்து துண்டு வாங்கியிரிப் L 526orGBuDmtLnT ?”
"ஆருகண்டா . . . இல்லாம நேத்தக்கே குடுத்தாங்களோ என்னமோ."
நாகமணிக்கும் மாதவிக்கும் புறத்தால வந்த தீவுக்காலை பொண்டு களும் வந்துசேர, பொடியன் ஓடிவந்து அவங்களுக்கும் துண்டுகளக் குடுத்துப் போட்டு போனான். எல்லாருக்கும் நூற்றி அறுபத்தாறுக்கு மேல்பட்ட நம்பர்தான்.
வெள்ளம் ஓடி மண்வடிஞ்ச கூப்பன் கடை வாசல்ல நத்தை நடைபழகி தடம் போட்டிருந்திச்சி. மாதவி கூப்பன் கடை சுவர் ஒரமாப் பாத்து திண்ணையில குந்திக் கொண்டிரிந்தாள்.
50 விமல் குழந்தைவேல்

காத்துக்கு ஆடி அசைஞ்சி ஓய்ஞ்சிபோன மரஞ்செடியெல்லாம் சோந்துபோய் நிக்குது. கூப்பன் கடைக்கு முன்னால உள்ள ஒழுங்கை முழுக்க மாம்பிஞ்சுகளும் குரும்பையும் கொட்டிக்கிடக்கு.
மணிஅடிச்சோண்ண பள்ளிக்கூடத்துக்குள்ள ஒடுற புள்ளையளப் போல ஒள்ளுப்பம் நேரத்துக்குள்ள கூப்பன்கடை வாசல் நிறைய சனமாயிற்று.
ஒத்தமர குருவிபோல தனிச்சிக் குந்திக் கொண்டிருந்த மாதவி இப்ப சனக் கூட்டத்துக்குள்ள மறைஞ்சி போயிற்றாள்.
ஒத்தக் கையில சாவிக் கொத்தும் மத்தக் கையில காகிதக்கட்டுமா கூப்பன் கடை மனேச்சன் வந்து கதவத்துறந்து உள்ளுக்குப்போக தள்ளி நில்லுங்கோ. வழியஉடுங்கோ எண்டு கொண்டு இன்னும் நாலஞ்சி பேரும் மனேச்சருக்குப் பின்னால போறானுகள்.
மனேச்சன் உள்ளுக்குப் போய் ஒள்ள நேரத்துல முதலாம் நம்பரக் கூப்பிட்டானுகள். ஆருகா அந்த குடுத்துவச்சவள் எண்டறிய ஆசைப்பட்டு எல்லாரும் எட்டி எட்டிப் பாக்கினம். ஒரு பணக்கார ஊட்டு வேலைக்கார பொடியன்தான் உள்ளுக்குப் போறான்.
வெள்ளழிவுச் சாமான முதன் முதல்ல கண்ணால பாக்க சோட்டப்பட்ட சனம், பொடியன் வெளியால வருவானெண்டு வாச்லையே பார்த்துக்கொண்டு நிக்குதுகள்.
எந்தச் சாமானும் வெளியால தெரியாத மாதிரி, நல்லா மூடிக் கட்டிக் கொண்டு பெரிய பெரிய பொட்டிகளை தூக்க ஏலாம தூக்கிக்கொண்டு பொடியன் வெளியில போறான். எல்லாரும் ஒராள ஓராள் பாக்குறாங்க.
மற்ற மற்ற நம்பர்களும் கூப்பிடத் தொடங்கியாச்சி. சாமான் வாங்க உள்ளுக்குள்ள போன உடனே மனேச்சன் கத்துற சத்ததும் கேக்குது.
"ஒழுங்கு முறையா நொம்பர் படி வந்து சாமானுகள வாங்க ஏலாதெண்டா நாங்களும் கடைய மூடிப் போட்டு போயிடுவம்.” மனேச்சன் அடிக்கடி இப்பிடியேதான் சொல்லிக் கொண்டிரிக் கான்.
தலையில சுமந்த ஒலைப்பொட்டியில இருந்து உழுந்த கூப்பன்மா முகத்துலபட்டு கூடத்துக்கு மாத்துப் பூசினாப் போல வெளியில வந்தவள் ஒருத்தி, மாதவிக்கு பக்கத்துல மெல்ல பொட்டிய இறக்கி வைச்சிப் போட்டு, மடியில கட்டியிருந்த சீனிய இறுக்கி முடிஞ்சி கொள்ளுறாள்.
அரிசி, மா, பருப்பு, கருவாடு, சீத்தை துணியெண்டு அந்தப் பொம்பிளை வைச்சிருந்த சாமானுகளப் பாத்ததும், மகள் பரஞ்சோதி புதுச்சீத்தை பாவாடை உடுத்தி கிணத்தடியில் நிக்கிறாப் போலயம், கருவாட்டுக் குழம்பு குழைச்ச கூப்பன்மா புட்டுக்கோப்பையோட
வெள்ளாவி 5

Page 27
தான் அடுப்படியில இருக்கிறாப் போலவும் மாதவிர மனக் கண்ணுக்குள்ள தெரியுது.
இடையிடையில இலக்கம் வாங்காதவங்களும் உள்ளுக்குப் போய் சாமானெல்லாம் வாங்கிக் கொண்டு போறாங்களாமெண்டு பக்கத்துல இரிக்கிற ஆக்கள் குசுகுசுக்கிறதும் மாதவிக்கு கேக்குது. நேரம் நாலுமணியத் தாண்டியிரிக்கும். இடையில ஒருமணி யளவுல மனேச்சன் கடைய அடைச்சிப்போட்டு ஊட்டுக்குப்போய் மதியச் சோறும் திண்டுபோட்டு வந்திட்டான்.
"வந்த சாமானெல்லாம் முடிஞ்சிபோய்ச்சி, இனி மறுதரம். சாமான் வந்தாத்தான் மத்த மத்த ஆக்களுக்குத் தரலாம். இப்ப எல்லாரும் ஊட்டுக்குப் போங்கோ.
மனேச்சர் சொல்லிப் போட்டு சாவிக் கொத்த ஆட்டிக்கொண்டு போறான். மாதவி நாகமணியப் பாத்துக் கொண்டு நிக்கிறாள். சனமெல்லாம் புறுபுறுத்துக்கொண்டு நடந்து போகுதுகள்.
வெள்ளம் வத்தி வெளியில தெரியுற மண்புட்டிபோல மாதவியும் நாகணியும் மட்டும்தான் இப்ப கூப்பன்கடை வாசல்ல நிக்குறாங்க. "நிண்டென்ன புண்ணியம், வா மாதவியக்க ஊட்ட போவம்.” சொல்லிக் கொண்டு நடந்த நாகமணிக்குப் புறத்தால மாதவியும் நடக்குறாள்.
"விடியச் சாமம் முதலாளா வந்தம். பின்னேரம் கடைசியாளப் போறம் என்னடா ?”
மாதவிக்கிட்ட இருந்து திரும்பவும் ஒரு பெருமூச்சினை வெறும் பொட்டியும் கையுமா வந்த தீவுக்காலைச் சனங்களக் கண்டதும் சதாசிவத்துக்கு ஆத்திரம் வந்திற்று.
"வண்ணார ஆக்களெண்டா கேக்கப்பாக்க ஆளில்ல எண்ட எண்ணமோ அவங்களுக்கு. நாங்களும் ஆரெண்டுறத்த காட்ட வேணும்.”
நடு ஒழுங்கைக்குள்ள நிண்டு சத்தம் போடுறான் சதாசிவம். எதுக்கால வந்த மாதவி தலையக் குனிஞ்சி கொண்டு வளவுக்குள்ள போயிற்றாள்.
"தம்பி நாலு எழுத்துப் படிச்ச நீயும் இப்பிடிச் சும்மா இருந்தா அவங்களும் எங்கள மறுகா மறுகா நாய் மாதிரித்தான் நடந்துவாங்க" நாகமணி சொன்னதும் கூடிநிண்டாக்களும் இல்லையோபுன்ன எண்டrங்கள்.
"சொந்தக்காரருக்கும் குடியானவங்களுக்கும் மட்டும் சாமானக் குடுத்துப்போட்டு, தூமைச்சீலை வெளுக்குற கூட்டம்தானே எண்டு எங்கள நாய் மாதிரி நடத்திப் போட்டாங்களே."
கூட்டத்துக்குள்ள இருந்து ஆரோ சொன்னது சதாசிவத்த இன் னும் ஆத்திரப்படுத்திச்சாக்கும்.
52 விமல் குழந்தைவேல்

எதுவுமே கதைக்காம ஊட்டுக்குள்ள போய் பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொண்டு மேசைக்கு முன்னால இருந்திற்றான்.
"உனக்கேண்டா தேவைக்கில்லாத பிரச்சினை. உத்தியோகம் பாக்குறரீ, லீவுல வந்து போறத உட்டுப்போட்டு ஊர் பிரச்சினையப் பாக்கப் போறயோ."
தாய் தெய்வானை கதைக்கிறது சதாசிவத்துர காதுல உழாதது போல அவன் எழுதிக் கொண்டேயிருந்தான்.
வெள்ளாவி 53

Page 28
தீவுக்காலைய சுத்தியிருக்கிற ஆத்துல பட்டுவந்த மார்கழி மாசக் காத்து பரஞ்சோதிர உடம்புல பட்ட உடன அவள்ர உடம்பு நடுங்கத்தொடங்கிற்று.
ராவெல்லாம் பரஞ்சோதிர கண்ணுக்கு நித்திரையெண்டுறதே வரமாட்டனெண்டுற்று சாகக் கிடக்கிற வயசாளிர தொண்டக்குழி துடிக்கிறாப்போல எப்ப நூந்து போகலாமெண்டு மூலைக்குள்ள மறைப்புல இருந்த விளக்குச் சுடரும் துடிச்சிக் கொண்டிருந்திச்சி. விளக்குத்திரி மட்டுமோ பரஞ்சோதிர மனசும்தான் கிடந்து துடிச் இச்இ.
நேத்துப் பின்னேரம் தாய்க்காரி கதைச்ச கதைய நினைக்க நினைக்க பக்கத்துல படுக்குற தாய நித்திரையில ஏறி மிதிச்சா என்ணெண்டமாதிரித்தான் அவளுக்கு தாயில கோபம் வருகுது. புளியமரத்தடி வரப்புக்கட்டு முறிவு பள்ளத்தண்ணியில மீனென் லாம் கும்பம் கும்பமா அடையுதாமெண்டு கேள்விப்பட்டு உள்ள சனமெல்லாம் அத்தாங்கோடையும் வலையோடையும் மீன்பிடிக்க, குந்திக் கொண்டிருந்த மாதவியும் ஒலைப் பொட்டிய எடுத்துக் கொண்டுபோய் ஆரோ குடுத்ததாமெண்டு பொட்டி நிறைய மீனோட வந்து இந்தாடி இத அறுத்துக் கழவி கறிஆக்குடி. எண்டு பரஞ்சோதிக்கிட்ட சொல்ல பொட்டி நிறைஞ்ச மீனப்பாத்த பரஞ்சோதிக்கு எரிச்சல் வந்து, நான் அறுத்துக் கழுவமாட்டன். வேணுமெண்டா நீதான் அறுத்துக் கழுவி ஆக்கித் தின்னெண்டு மீன் பொட்டிய காலால உதைச்சி உட, மாதவிக்கு வந்த கோவத்துல என்ன எவடமெண்டு தெரியாம பக்கத்துல கிடந்த முருங்கக் கம்ப எடுத்து பரஞ்சோதிக்கு நல்லா அடிச்சிப் போட்டாள்.
"நீ போய் பிச்சக்காரி போல பொட்டியோட நிண்டிருப்பாய், வலையில இருந்து களட்டி நாய்க்கெறியுற கச்சப் பொட்டியான் மீனெல்லாத்தையும் உனக்கு அள்ளித் தந்திருக்கானுகள். நீயும்
54 விமல் குழந்தைவேல்

வெக்கமில்லாம அத அள்ளிக் கொண்டு வந்திருக்காய். அத நான் அறுத்துக் கழுவி ஆக்கித்தரவோ? அதுக்கு வேறாளப் பாரு.” "எடியே தேவடியாள், கச்சப் பொட்டியான் மீன் திங்க சங்கை பாக்கையோடி நீ. கச்சப் பொட்டியான் இல்லாம வெட்டுமீனும் குத்தரிசியும் தின்ன நீயென்ன பெரிய காசிக்காரணையோடி கட்டி யிருக்காய்?"
"ம் . . . தொடங்கிட்டாய். எப்ப பாரு கட்டுற கதையும் படுக்கற கதையும்தான் உனக்கு. இப்ப நானென்ன உனக்கிட்ட மாப்பிளையோ கேட்டன் ?”
"நீ கேட்டாலும் கேக்காட்டியும் உன்னக்கட்டிக்குடுத்து தலை முளுகுனாத்தாண்டி எனக்கு நிம்மதி. அதுக்குத்தான் அவன் நாகமணிக்கிட்ட சொல்லியிருக்கன்.”
"என்னெண்டு எனக்கு மாப்பிள்ளை பாரெண்டோ ?” "மாப்பிள்ளை பாரெண்டோ ? . . . ஆருக்கு உனக்கோ ?” "அப்ப ஆருக்கு? உனக்கோ ?” பரஞ்சோதி சொல்லி முடிச்சிரிக்கமாட்டாள். அடுப்புக்குள்ள இருந்த கொள்ளிக்கட்டையொண்டு பரஞ்சோதிய பாத்து வர, அவள் குனிஞ்சிற்றாள்.
“ஏண்டி, முறை மாப்பிள்ளை நாகமணி இரிக்க அவன உட்டுப்போட்டு, உனக்கு மாப்பிள்ளை பாக்கச் சொல்லி அவனுக் கிட்ட சொல்லோனுமாக்கும்.
தாய்க்காரி சொன்னதக் கேட்ட உடனே பரஞ்சோதிக்கு வாய் அடைச்சிப் போயிற்று. கண்ரெண்டுலயும் தண்ணி நிறைஞ்சி நிண்டிச்சி. தர்க்கம் செய்யுறதக்காட்டிலும் தாயோட சமாதானமா கதைப்பம் எண்டு நினைச்சாளோ என்னமோ பரஞ்சோதி தாய்க் கிட்ட கெஞ்சுறமாதிரிக் கேட்டாள்.
"ஏங்கா . . . குறுட்டுக் கண்ணி, என்னய உனக்கு புடிக்கயில் லெண்டா சொல்லங்கா. ஆத்துல வெள்ளம் நிறைஞ்சிதான் இரிக்கு, அதுல உழுந்து சாகிறன்."
"ஆங் . . . செத்துக் கித்து போயிடாத மாரிமழைகாலம் சாச் செலவுக்கு என்னால அலைஞ்சி திரியேலாது. பேசாம அவன் நாகமணியக் கட்டிக்கொண்டு குடும்பம் நடத்தப்பாரு.”
"இஞ்சபாரு அறமுடிவாச் சொல்லுறன். நாகமணியக் கட்டுற கதை மட்டும் எனக்கிட்ட இனிக்கதையாத."
"இவ பெரிய ஏழு அண்ணன்மாருக்கு தங்கச்சி, இவளக்கட்ட மாலையும் கையுமாக ஒருவன் குதிரையில வந்திறங்குவான் எண்ட நினைப்பு போல இவளுக்கு.”
"நான் ஏழு அண்ணன் மாரோட பிறக்காத பிச்சைக்காரிதான். அதுக்கெண்டு நாகமணியத்தான் கட்டோனுமோகா ?”
வெள்ளாவி 55

Page 29
"ஏங்கா பொட்ட, கட்டுணாத்தான் என்ணெண்டு கேக்குறன் இப்ப."
"ஏன் என்னக் கட்டச் சொல்லுறத உட்டுப்போட்டு நீயே கட்டிக் கொள்ளுறதுதானே.”
பரஞ்சோதி இப்பிடிக் கதைப்பாளெண்டு மாதவி நினைச் சிரிக்கயில்ல. அவள்ற உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கிற்று. மூலையில கிடந்த முருங்கம்தடிதான் கண்ணுக்குத் தெரிஞ்சுது. “சூத்தத் தட்டுனா சாம்பல் பறக்குது ஏழு ஊட்டுக்கு அங்கால. அதுக்குள்ள சுள்காசமான வாழ்க்கையோ உனக்கு தேவைப்படுகுது எண்டு. முருங்கங்கம்பு முறிஞ்சி சிதறித்தெறிக்குமளவுக்கு பரஞ்சோதிர காலுலயும் முதுகுலயும் அடிச்சாள் மாதவி.
கத்திக் குழறி கூச்சல் போட்டு ஊரக் கூட்டயில்ல பரஞ்சோதி. தாய் அடிச்சி முடியுமட்டும் பொறுமையா இருந்துப் போட்டு எழும்பி ஊட்டுக்குள்ள போயிற்றாள்.
மகளுக்கு அடிச்ச கவலையில தலையில கைவைச்சி கிணத்தடி யில் குந்தியிருந்து ஒப்பாரி வைச்சாள் மாதவி.
மத்தப் பக்கம் புரண்டு படுத்த நேரம், அடிபட்ட முதுகுல சுள்ளெண்டு நோவெடுக்க எண்ட அம்மா எண்டு முனகிக் கொண்டு எழும்பிக் குந்தினாள் பரஞ்சோதி. கோளாவில் கோயில் பீக்கருல இருந்து வந்த திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சிப் பாட்டு குரல் விடியச் சாமமாச்சி எண்டுறத சொல்ல, எழும்பி முகத்தக் கழுவி சாமியக் கும்புட்டுப் போட்டு வேலி ஓரத்துக்கு வந்து, செத்தை ஒட்டைக்குள்ளால கண்ணஉட்டு சதாசிவத்துர வாசலப் பாத்தாள். நடுவாசலுல கொழுந்துட்டு எரியுற அடுப்பு வெளிச்சத்துல சதாசிவம் நடந்து திரியுறது தெரிஞ்சிச்சி.
56 விமல் குழந்தைவேல்

LDTர்கழி மாசத்துல தொடங்கி தைப்பூசத்தோட முடியுற திரு வெம்பாவை நாளுகள்ல, ஒவ்வொரு விடியச் சாமத்துலயும் இளந் தாரிகளும் சின்னப்புள்ளைகளும் ஊருக்குள்ள ஒவ்வொரு ஒழுங்கை யாலையும் நடந்துபோய், திருப்பள்ளியெழுச்சி பாடுறது வழக்கம். கோழி கூவமுன்னம் எழும்பி, முழுகி, வேட்டி சட்டை உடுத்திக் கொண்டு, சைக்கிள்ல பீக்கரக்கட்டி, நல்லா பாடக்கூடிய இளந்தாரி கள் ஒழுங்கை ஒழுங்கையாக பாடிக்கொண்டு போறநேரம் ஆராவது ஒரு ஊட்டுக்காரர் அவங்கள உள்ளுக்கு வரச்சொல்லி கூப்பிடுவாங்
956.
கூப்பிட்டவங்கள் வாசலுல பாய் விரிச்சி, இருக்கச் சொல்லி, சூடா ருசியான கஞ்சியோ கூழோ குடுத்தா குடிச்சிப் போட்டு அந்த ஊட்டு வாசலுல இருந்து ரெண்டுமூண்டு திருப்பள்ளியெழுச்சி பாடிபோட்டு போறதுதான் திருவெம்பாவை காலத்து வழக்கம். "நாளைக்கு விடியச் சாமம் நம்மட தீவுக்காலையில ஒரு புதினம் நடக்கப் போகுது பாரேனெண்டு” நேத்துப் பின்னேரமே சதாசிவம் பரஞ்சோதிக்கிட்ட சொல்லிற்றான்.
தூரத்துல இருந்து கேட்ட திருப்பள்ளியெழுச்சி பீக்கர் குரல், தண்ட காதுக்கிட்ட கேக்குற மாதிரி இருந்திச்சி அவளுக்கு.
அண்டைக்கு கூப்பன் கடையில இருந்து தீவுக்காலை ஆக்கள வெறும் பொட்டியும் கையுமா திருப்பி அனுப்புனதுல ஆத்திரப்பட்ட சதாசிவம் பேனாவ எடுத்து முதல்ல எழுதினது கோளாவில் கோயில் பரிபாலன சபைக்குத்தான்.
தீவுக்காலைல சேந்தாக்கள்ற பேர்கள் கோளாவில் வாக்காளர் பட்டியல்ல இருக்குமெண்டா, அவங்களும் கோளாவில் கூப்பன் கடை பங்கீட்டு அட்டை உள்ளவங்கெண்டா அவங்களும் கோளா வில் கிராமத்து பிரஜைகளாகவே மதிக்கப்பட வேணும். இதை அங்கீகரிக்குமுகமாக இவ்வருட மார்கழி மாத திருவெண்பாவை -
வெள்ளாவி 57

Page 30
திருப்பள்ளியெழுச்சி பாடுபவர்கள் தீவுக்காலை தெருவுகளுக்கும் வந்து பாடிப் போகவேண்டுமென்பது எங்களின் கோரிக்கையும் வேண்டுகோளுமெண்டு எழுதி தீவுக்காலை ஆக்களுக்கிட்ட கையொப்பம் வாங்கி கோளாவில் பரிபாலன சபைக்கிட்ட சேப்பிச் சிட்டான்.
சதாசிவம் அனுப்புன கடிதத்துக்கு இம்மும் இல்ல, ஆமும் இல்ல. குடுத்த கடிதத்த அங்கீகரிச்சமெண்டோ இல்லாட்டி நிராகரிச்சமெண்டோ கூட ஒரு பதிலும் பரிபாலன சபைக்கிட்ட இருந்து வரயில்ல.
தீவுக்காலய நெருங்கிக் கொண்டிருந்த திருப்பள்ளியெழுச்சிப் பாடல், சதாசிவத்திர கடிதத்த அங்கீகரிச்சிற்றாங்க எண்டுறத சொல்லாம சொல்லிச்சி. இந்த விசயம் நேத்தக்கே சதாசிவத்துர காதுக்கு எட்டியிருந்திச்சி. அவண்ட பள்ளிக்கூட்டாளிகளும் கோளா வில்ல இருப்பானுகள்தானே.
"கூவின பூங்குயில் கூவின கோழி, குருகுகளியம்பின வியம்பின சங்கம் யாவரும் அறிவரியாயெடிக்கறியோம் எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே..."
பாடிக் கொண்டு வயல் வெளிக்குள்ளால நடந்து வந்து, தீவுக் காலை ஒழுங்கைக்குள்ள உழுபட்ட இளந்தாரிமாருக்கு முன்னால போய் நிண்ட சதாசிவம் தண்ட ஊட்டு வாசலுக்கும் வந்து திருப்பள்ளியெழுச்சி பாடிப்போட்டு போங்கெண்டு சொல்ல. இளந்தாரிப் புள்ளையளெல்லாம் ஆளாளுக்கு முகத்த முகத்தப்பாத்து நிண்டுபோட்டு ஒண்டும் சொல்லாம சதாசிவத்துர வாசலுக்கு வந்திற்றாங்கள்.
வாசல்ல விரிச்சிருந்த வெள்ளைப் புடைவகள்ல இளந்தாரிமார இருக்கச் சொன்னான் சதாசிவம்.
"ஏன் ராசா நிண்டுகொண்டிரிக்கையள் வெள்ளை விரிச்சிரிக்கி இரியுங்கோவன் கிளியான்" என்றாள் சதாசிவத்திர தாய்.
அவள்ள குரல்ல பயமும் பதட்டமும் கலந்திருந்திருச்சி. புத்தியறியா சின்னப் புள்ளையளெல்லாரும் வெள்ளையில சம்மாணம் போட்டு சக்கப் பணியக் கிடந்திச்சிகள். மத்த மத்த இளந்தாரிமாரெல்லாம் வளவுக்குள்ள நிண்ட தென்னம் மரத்துக் கள் ர அடியில காலக்குத்தி நிண்டுகொண்டாங்க.
எந்தத் தென்னையடியில் எத்தினை பேர் நிண்டாங்களெண்டு இருட்டுல தெரியயில்ல. ஆனா குசுகுசு எண்டு என்னென்னமோ கதைக்கிறது மட்டும் கேட்டுச்சி.
கிளாசுகளுக்குள்ள கூழ ஊத்தி ஒரு பெரிய அலுமினிய தட்டுல வைச்சி, எடுத்துக்கொண்டு போய் சின்னப் புள்ளையஞக்கு குடுத் தான் சதாசிவம். சின்னப் புள்ளையன்தானே ஒண்டும் சொல்லாம எடுத்துக்குடிச்சிற்றுகள்.
58 விமல் குழந்தைவேல்

இன்னுமொரு கிளாசி குடியுங்க கிளியான் எண்டுகொண்டு தெய்வானை கிளாசித்தட்ட நீட்ட, வேணாம் கீணாமெண்டு சொல்லாம, அதையும் வாங்கி சின்னப் புள்ளையன் குடிச்சிற்றுகள். தென்னை மரத்துல சாஞ்சிநிண்ட இளந்தாரிமாருக்கும் சதாசிவம் கூழ்கிளாசிகள கொண்டுபோய்க் குடுக்க, ஒண்டும் சொல்லாம வாங்கிற்றாங்கள்.
சதாசிவத்துர வாசல்லயும் நிண்டு ரெண்டுமூண்டு திருப்பள்ளி யெழுச்சி பாட்டுபாடிப் போட்டு எல்லாரும் போயிற்றாங்கள். இதெல்லாத்தையும் வேலி ஒட்டைக்குள்ளால பாத்து நிண்டுபோட்டு வந்து, வாருகல எடுத்து வாசல்கூட்டத் தொடங்கினாள் பரஞ்சோதி கூட்டிக் கொண்டு நிண்டவள் நினையாப் பிரகாரமா ஆத்தங் கரைப் பக்கம் நிமிர்ந்து பாக்க, நாகமணி வேலி ஒரத்துல புடவை மாராப்போட நிண்டாள்.
நேத்துராவு தாய்க்காறி காட்டுன புதுனம் நினைப்புக்கு வர சட்டெண்டு முகத்த திருப்பிற்றாள்.
“என்ன பாய்ஞ்சோயி வாசல் கூட்டுறோயோகாபுள்ள ?” "ஆ. . . கையில இரிக்கிற சாமானப்பாத்தா என்ன செய்யுற மாதிரித் தெரியுது."
ஏலுமெண்ட மட்டுக்கும் எரிச்சலாத்தான் கேட்டாள். "கொம்மை எங்க புள்ள ஏதோ துணிமணி கிடக்கு, ஆத்துல அடிச்சிக் கழுவித்தாடா எண்டு நேத்துக் கேட்டிச்சி. கொம்மைப் ஒருக்கா ஒழுப்பி உடங்கா.”
"இஞ்சபார் எங்கட வேலைய எங்களுக்கு செய்யத் தெரியும். நீ போய் உண்ட வேலையைப் பாரு."
முகத்துல அடிச்சாப்போலதான் சொல்லிற்றாள். "இடுப்பு புடிப்பு நெஞ்சி நோவெண்டு மாதவியக்கதான் செய்யச் சொல்லி கேட்டிச்சி. இல்லாட்டி எனக்கென்ன கரப்பனோகா ?” தனக்குள்ளால புறுபுறுத்துக் கொண்டு போயிற்றான் நாகமணி. குப்பையக்கூட்டி அள்ளிக்கொண்டு பரஞ்சோதி நிமிர, முன்னால சதாசிவம் நிண்டான்.
உடம்புல சேட் இல்ல, சிவப்பும் மஞ்சளும் எண்டு கோடு போட்ட துவாய் ஒண்ட தோளுக்கு மேலால போட்டு உடம்ப மறைக்கப் பாத்தாலும் புளந்துட்ட வீரக்கட்டையப்போல அவண்ட மார்புப் பகுதி திடமாகத் தெரிஞ்சிச்சி.
"எல்லாத்தையும் விடியச் சாமம் வேலி ஓட்டைக்குள்ளால பாத்தன், இது எங்கபோய் முடியப் போகுதோ தெரியாது. வந்தாக்கள வாசலுக்கு கூப்பிட்டதோட நிப்பாட்டியிரிக்கோணும். கஞ்சி கூழ்குடுத்து அவமானப்பட வைச்சிரிக்கத் தேவையில்ல."
வெள்ளாவி 59

Page 31
"என்ன பரஞ்சோதி வந்தாக்களெல்லாரும் குடுத்த கூழ குடிச்சமாதிரியெல்லோ உண்டகதையிரிக்கி. நாமெல்லாம் புடவைக் குத்தான் கஞ்சி போடுவம். விடியச் சாமம் வந்தவையள் எங்கட தென்னம் மரங்களுக்கெல்லோ கஞ்சி போட்டுற்றுப் போயிரிக்கினம். சதாசிவம் சொன்னத்தக் கேட்டு பரஞ்சோதி சிரிக்க, சதாசிவமும் சேந்து சிரிச்சான்.
வெளியால சிரிக்குற சத்தம் கேட்டு எழும்பி படுத்தபாயச் சுறுட்டி பாய் அசவுல வைச்சிப் போட்டு, அடுப்புக்குள்ள விரலஉட்டு தீய்ச்சிப் பாத்து ஒரு கரித்துண்ட எடுத்து வாய்க்குள்ள போட்டு சப்பிக் கொண்டு கிணத்தடிக்குப்போன மாதவிக்கு நெஞ்சி வலிக் கிறாப்போல இருந்திச்சி.
பல்லத்தீட்டி கொப்பளிச்சிப் போட்டு அடித்தொண்டைக்குள்ள விரலஉட்டு சளி போக காறித்துப்பினாள். துப்பல் உழுந்த இடத்த உத்துப் பாத்தாள். சளியோட இரத்தமும் கலந்த மாதிரி தெரிஞ்சிச்சி. தாய் எழும்பி கிணத்தடிக்கு போறதக் கண்ட பரஞ்சோதி சதாசிவத்த போகச் சொல்லிப் போட்டு கிணத்தடிக்கு வந்த நேரம் ஆத்தங்கரையில இருந்து வந்து கொண்டிருக்கிற நாகமணியக் கண்டதும்தான் அவனுக்கிட்ட தாய் கழுவச் சொல்லிச் சொன்ன புடவைகள்ள ஞாபகம் வந்திச்சி.
வேலி ஓரத்தப் பாத்தாள் துணி மூட்டை அப்பிடியே கிடக்குது. “டேய் நாகமணி ஒனக்கிட்ட நேத்தைக்கு வழிக்குவழி சொன்ன னேடா இந்தப் புடவைகளயும் ஒள்ளுப்பம் கழுவித் தாடா எண்டு ஏண்டா அயத்துப் போயிட்டோயடா ?”
தூரத்துல நிண்ட நாகமணியக் கூவிக் கேட்டாள் மாதவி. "நான் அயத்துக் கியத்துப் போகயில்ல மாதவியக்க, கேட்டன் பாய்ஞ்சோயிதான் இல்லெண்டிச்சி, அதான் எனக்கென்ன கரப்ப னெண்டு போட்டுப் போயிற்றன்."
சொன்ன நாகமணி மாதவிர பதிலுக்குக் கூட காத்திருக்காம போயிற்றான்.
தட்டுவேலி மறைப்புல கிடந்த துணிமூட்டைய எடுத்துக் கொண்டுவந்து, பிரிச்சி கிணத்தடியில போட்டு, தண்ணிய அள்ளி இறைச்சி, துணிகளக் கல்லுல குத்தத் தொடங்கினாள் பரஞ்சோதி. "எண்ட நெஞ்சிக்கூடு கறள் கண்டு சளிசளியாத் துப்புறன். ஏலாதெண்டு அவனுக்கிட்ட ஒள்ளம் செய்யச் சொல்லிக் கெஞ்சுறன் நீ வேணாமெண்டு சொன்னியாமடி அப்பிடியென்னடி உனக்கு பெரிய சங்ககுறைவு."
"வண்ணாத்தியூட்டுக்கு கூலியில்லாம இன்னொரு வண்ணான் புடவை வெளுக்கோணும்மெண்டில்ல."
60 விமல் குழந்தைவேல்

“எடியே இண்டைக்கில்லாட்டியும் எண்டைக்கெண்டாலும் இருந்து பாரு, இந்த ஊட்டுப் புடவையும் சேத்து வெளுக்கப் போறது நாகமணி தாண்டி, அத மறந்துடாத."
"இனி விடிஞ்சிற்று உனக்கு . . . பகல் கனவு காணாம உண்ட வேலையப் பாரு”
"ம் . . . படிச்சவன் பக்கத்து ஊட்டுக்காரன் பதவிசாக் கிடைச் சிருவானெண்டு நீதான் பகல் கனவு காணுறாய் எண்டு என்னை யுமெல்லோ பகல் கனவு காணச் சொல்லுறாய். இது நல்ல கூத்துத்தான்.”
தாயின் குத்தல் கதை கேட்ட உடன நிலைகுலைஞ்சி போயிற்றாள் பரஞ்சோதி.
தனக்குள்ள இல்லாத ஒரு எண்ணத்த, தாய் இப்பிடி கற்பனை பண்ணிச் சொன்னதுல, தாய்க்காறியில கோபப்படுறதா பாவப் படுறதா எண்டுதெரியாம துணிகள எடுத்து கல்லுல குத்திக் கொண்டி ருந்தாள்.
கண்ணாடி முட்டையுட்ட சவுக்கார நுரையில் தெரிஞ்ச அவள்ற முகம் அவளப் பாத்துச் சிரிச்சிச்சி.
வெள்ளாவி 61

Page 32
வெள்ளத்தண்ணி வடிஞ்சி வயல் நிலமெல்லாம் கண்ணுக்கு தெரிஞ்ச நேரம். திருவிழா முடிஞ்ச கோயில் வீதியப்போல வயல் வெளி வெறிச்சோடி கிடந்திச்சி.
வழமையா வெட்டுக்குத்துக் காலமெண்டா ஊருக்குள்ள நல்ல கலகலப்பும் பாட்டும் கூத்துமா இரிக்கும். இந்தமுறை அப்பிடியில்ல. விளைஞ்ச பயிரெல்லாம் வெள்ளத்துக்குள்ள முழுகி வேரோட புடுங்குப்பட்டு ஓட்டத் தண்ணியில ஓடி ஆத்துக்குள்ள இறங்கினா ஊருக்குள்ள என்னெண்டு சந்தோசமிரிக்கும்.
வண்ணானுகளுக்குள்ளயும் குடியூட்டு வண்ணானெண்டும், கூலி வண்ணானெண்டும் ரெண்டு வகையான வண்ணாராக்கள் இரிக்கினம்.
வருசம் பூராவும் வெளுக்கிற கூலிய நிலம் விளைஞ்சதும், நெல்லு மூடையளாக வாங்கிக் கொள்ளுறவன்தான் குடியூட்டுவண்ணான். ஒவ்வொரு ஊட்டுல இருந்தும் கிடைக்கிற நெல்லுமூடைகள் அடுத்த வருச அறுவடை வரைக்கும் குடியூட்டு வண்ணான்ட குடும்பத்துக்கு சோத்துப் பாட்டுக்குக் காணும்.
நாகமணியும் இந்த வருசம்தான் ரெண்டு மூணு ஊடுகளுக்கு குடியூட்டு வண்ணானாக புடவை வெளுக்கத் தொடங்கியிருந்தான். அவண்ட கயிற்ற காலம், வெள்ளம் வந்து, எல்லாத்தையும் அடிச் சள்ளிக் கொண்டு போயிற்றே.
அண்டைக்கண்டடி கழுவிக் குடுக்கிற உடுப்புகளுக்கு உடனுக் குடன கூலிய வாங்கிச் செய்யுறதுதான் கூலி வண்ணான்ட வேலை. மாதவியும் இண்டுவரைக்கும் கூலி வண்ணாத்தியாத்தான் இரிக் காள். எண்டாலும் வெட்டுக்குத்துக் காலமெண்டா ஒவ்வொரு ஊட்டுலயுமிருந்து அரைமூடை காமூடையொண்டு அவளுக்கும் நெல்லுக்கிடைக்காமிலில்ல. இந்த முறை அது தன்னும் இல்ல.
62 விமல் குழந்தைவேல்

இதுக்கிடையில வெள்ளழிவுச் சாமான் குடுத்தத்துல நடந்த சுத்து மாத்த வெளிக்காட்டி சதாசிவம் காட்டுன புதுனத்தால, தீவுக்காலை ஆக்களோட கோளாவில் ஆக்கள் மறைமுகமா கோவத் தில இரிக்காங்களாம் எண்டும் கேள்வி.
வெள்ளம் வந்து வத்தி வடிஞ்சி ஒரு மாசத்துக்குப் புறகு வெளுத்துக்கழுவி மடிச்சி வைச்ச புடவைகளை எடுத்துக்கொண்டு மாதவி நேத்துத்தான் போடியார் ஊட்டுக்கு போனாள்.
மாதவியக் கண்ட போடியார் பொஞ்சாதி, எப்ப வருவாள் எண்டு காத்துக் கொண்டிருந்தாப் போல குத்துக் கதை கதைக்கத் தொடங்கிற்றா.
"இதாருடி இது, மாதவியோடி கறடி புறையக் கண்டமாதிரியெல் லாடி உன்னக்காண வேண்டியிரிக்கி. இனி நீ இஞ்சால பக்கம் வரமாட்டாயெண்டெல்லோ ஊட்டுல சொல்லிச்சினம்”
நேத்தைக்கு மாதவியக் கண்ட உடன இப்பிடித்தான் போடியார் பொஞ்சாதி கதையத் தொடங்கினா.
"ஏன் தாயி அப்பிடி," போடியார் பொஞ்சாதி என்ன சொல்ல வாறா எண்டுறது மாதவிக்கு விளங்கயில்ல.
"இல்ல படிச்ச, உத்தியோகக்காரர் இரிக்கிற தீவுக்காலையில இருந்து இனியும் ஆரும் புடவை எடுக்க வருவாங்களோகா? எண்டுதான் கேட்டன்.”
போடியார் பொஞ்சாதிர கதைக்கு வாசல்ல நெல்லுத் திலாவிக் கொண்டிருந்த அவட மகள் நக்கலா ஒரு சிரிப்புச் சிரிச்சா.
போடியார்ர பேத்திக்காரி உள்ளுக்குள்ள இருந்து ஊத்த உடுப்பு கள அள்ளிக்கொண்டு வந்து, மாதவிக்கு முன்னால குவிக்க, ஒவ்வொண்டாக எடுத்து மாராப்பு கட்டுனாள் மாதவி.
"அது சரி மாதவி, கூப்பன் கடைக்காரனுகளுக்கு புட்டிசம் போட்டது சரியோ, பிழையோ, அது ஒரு பக்கம் கிடக்கட்டும் அவள் தெய்வானைட மகன், எங்கட ஊட்டுப் புள்ளயள வாசலுக்கு கூப்புட்டு குடிக்கச் சொல்லி கூழும் குடுத்தானாமேடி இதெப்படி இம்புட்டு தையிரியம் வந்திச்சி ?”
"ஆருக்குத் தாயி தெரியும் நானெண்டா கனவுல கூட நினைச் சனோ ? அந்தப் பொடியன் அப்பிடிச் செய்வானெண்டு.”
“எடியே மாதவி எங்கட பொடியனுகள் நினைச்சானுகளெண்டா, தீவுக்காலைக்க பூந்து, குஞ்சு குராலெண்டும் பாராம நெருப்புக் குடுத்துருவானுகள்ஹி. சொல்லுடி, இனியும் இப்பிடி அசிக்குக் பிசிக்கா நடக்கோணாமெண்டு.”
“சொல்லிப் பாத்திற்றம் தாயி. கேட்டாத்தானே நாலு எழுத்து படிச்சிற்றமெண்ட திமிர் தாயி.”
வெள்ளாவி 63

Page 33
சொல்லுற நேரமே இருமிற்றாள் மாதவி. "இதென்னடி இது . . . கசக்காறி மாதிரி வக்குவக்கெண்டு இரு முறாய். உனக்கொண்ணாதெண்டா நீ ஏங்கா வந்த”
"ஒண்ணாதெண்டு படுத்தா எப்பிடித்தாயி.” "ஏங்கா உண்டமகள அனுப்பேலாதோ உனக்கு ?” "எங்கதாயி, எவ்வளவு சொல்லியும் வெட்டக்கிறங்கமாட்டன் எண்டெல்லோ சொல்லுறாள். சோனகத்தி ஈராவுக்குள்ள இரிக்கிற மாதிரி அடைச்ச கடப்புக்குள்ள கிடக்காள் பொட்டை."
"அதில்லகா . . . தான் ஒரு அழகு சிறையெண்ட எண்ணம் அவளுக்கு. நீயும் அவள ஏழுதட்டு வேல்கட்டி மறைச்சி வைச்சிக் கொள்.
"நான் என்ன தாயி செய்யட்டும். நேத்து ராவும் கூட கூப்பிட்டன், அசையமாட்டனெண்டுட்டாளே. வந்த கோவத்துல சாம்பு சாம் பெண்டு சாம்பிப் போட்டன்."
"ஆ. . . அம்பட்டுக்காகுதல் . . . நீயில்லாக் காலத்துல என்ன வாகா செய்யப் போறாள், தூமை வெளுக்கிற தொழில உட்டுப் போட்டு, கவர்மெண்டு உத்தியோகமாமோகா பாக்கப் போறாள். "அதானே தாயி... முட்டடப்பன் கட்டுனவள பெத்துப் போட்டு நான் படுற கயிற்றம் ஆருக்குத் தெரியும்.”
“இது எனக்கேங்கா தேவைக்கில்லாத கதை. அதஉட்டுப் போட்டு அந்தக் கொள்ளிக்கட்டையில நாலு சிராய் கொத்திப் போட்டுட்டு, சோறு தண்ணி ஏதுமிருந்தா வாங்கி எடுத்துக் கொண்டுபோ."
போடியார் பொஞ்சாதி கிணத்தடிக்கு போயிற்றா. மாதவி எழும்பி கொள்ளிக்கட்டையில கோடாலிய போட வைரம்பாய்ஞ்ச கொள்ளிக் கட்டையில புங் . . . ணங் எண்ட சத்ததோடதான் கோடாலி உழுந்திச்சி.
கொத்திக் குவிச்ச கொள்ளித்துண்டுகள திரும்பிப் பாத்தவள், கோடலிய சுவருல சாய்ச்சிப் போட்டு, முந்தானைய உதறி முகத்தத் துடைச்சிக் கொண்டு வாசலுக்குவர, பழைய அலுமினிய சட்டி நிறைய சோத்தப் போட்டுக் கொண்டு வந்து போடியார்ர மகள் குடுத்தாள்.
“நான் வாறன் தாயி” எண்டு போட்டு, சோத்துச் சட்டியும் உடுப்பு மாராப்புமா நடந்த மாதவிக்கு எதுக்கால வந்த போடியார் விசுக்கெண்டு ஊட்டுக்குள்ள போயிற்றார்.
“எடியே மாதவி, எங்கடி, போயிற்றயோ ? இஞ்சவா. இதக் கொண்டுபோ.”
போடியார் பொஞ்சாதி கூப்பிடுறது கேட்டு வாசல் கடப்படிக்கு வந்த மாதவி திரும்பப் போனாள்.
64 விமல் குழந்தைவேல்

"இந்தா மாதவி நாலு மரைக்கால் நெல்லு. வெள்ளத்துல அடைஞ்சி போய் மிஞ்சிக் கிடந்ததுல கண்ட விளைச்சல் நெல் இது தாண்டி. அதுவும் மடிப்பத்திச் போய்ச்சி. கொண்டுபோய் நாலு நாளைக்கு ஆக்கித் தின்னு."
தலையில நெல்லு, இடுப்புல உடுப்பு மாராப்பு, மத்தக் கையில சோத்துச் சட்டி.
ஆத்தோதினையால நடந்து புளியமரத்தடிக்கு வர தலைப்பாரத்த ஒள்ளம் இறக்கோணும்போல இருந்திச்சி.
நெல்லுச் சாக்க இறக்கி புளிமரத்து வேருக்கு மேலபோட்டுற்று அதுக்குமேல குந்திட்டாள் மாதவி.
"என்ன மாதவியக்க, விளை நெல்லு கிடைச்சிருக்கு போல, திரும்பிப் பார்த்தாள் மாதவி.”
தோளுல அரைச்சாக்கு நெல்லோட வரப்பால நடந்து வந்து கட்டுல ஏறுன நாகமணி, மாதவிக்கு எதுக்கால சாக்க இறக்கிப் போட்டுற்று அதுக்கு மேல் இருந்திற்றான்.
"நீ எங்கால கிடந்துடா வாறாய்?" “கந்தவனம் போடியார் சொல்லி அனுப்பியிருந்தாரெண்டு போனான். இம்புட்டுத்தான் கிடைச்சிதெண்டு தந்தார். ஈரப்பட்ட நெல்லு ஈயக்குண்டுபோல பாரிக்குதக்க."
புளியமரத்துக்கு எதுக்கால உள்ள கள்ளிப்பத்தய உத்துப் பார்த்தாள் மாதவி.
பாம்பொண்டு சட்டையக் களட்டி கள்ளிமுள்ளுல கொழுவிப் போட்டு போயிருந்திச்சி.
“டேய் நாகமணி வாடா போவம் பூச்சி பட்டை உலாத்துறாப் போலபும் இரிக்கி இவள் பொட்டையும் அங்க தனியக் கிடப்பாள்." "ஆரு பாய்ஞ்சோயியோ அதுக்கென்னக்க தனி, சதாசிவம் நிக்குமட்டும்.”
"உண்ட நையாண்டிய உட்டுப்போட்டு எழும்புடா போக." ஒத்தையடி வரப்பு வழி மாதவி முன்னால நடக்க நாகமணி பின்னால வந்தான்.
“டேய் நாகமணி நான் உனக்கிட்ட கேட்ட கேள்விக்கு நீ இன்னுமொரு மறுமொழியும் சொல்லாம இரிக்கியே என்னடா சொல்லுறாய்.”
"என்னத்தப் பத்தியக்க கேக்காய் ?” "அதுதாண்டா இந்தப் பொட்டை பரஞ்சோதிய உனக்குக் கட்டித் தாறதாப் பத்தித்தான்.”
"இஞ்சபார் மாதவியக்க, பாய்ஞ்சோயியும் சதாசிவமும் சிரிச்சிக் கதைக்குதுகள், அவனும் படிச்ச பொடியன். பாய்ஞ்சோயியும்
வெள்ளாவி 65

Page 34
அழகு வடிவான கிளிமாதிரிப் பொட்டை. அதுதான் சரியெண்டும் எனக்குப் படுகுது மாதவியக்க.
“டேய் ஆரச் சொல்லுறாய், அவன் தெய்வானர மகன்டா, படிப்பிச்ச காசையும் கணக்குப் பாத்து கறந்தெடுக்க மகன நிறுத்து விக்கத் திரியுறாள், அவள். அதுவும் காணாதெண்டு அவள் - அக்கரப்பத்தாள் தயிரும் நெய்யுமாக எடுத்துக்கொண்டு தினம் தினம் நடந்து தெய்வானை ஊட்டு வாசல் மண்ணையும் இல்லாமப் பண்ணிக் கொண்டிரிக்காள். இதுக்குள்ள நீ கதைக்குற கதையப் பாத்தா சிரிப்புத்தாண்டா வருகுது.
"அதுகள்ற மனசுலையும் என்னென்ன இரிக்குமெண்டு ஆருக்குத் தெரியும் மாதவியக்க."
"ஆ. . . மனசுக்கு புடிச்சவனைக் கட்டி வைக்க நானென்ன மடியிலையோடா கட்டிவைச்சிருக்கன். இந்தக் கதையெல்லாத்தையும் உட்டுப்போட்டு உனக்குச் சம்மதமெண்டா சொல்லு. ஒரு நல்ல நாளப்பாத்து, நாலு சனத்தக் கூப்பட்டு கல்லத்துல சோத்தப் போட்டுர்றன். அதுக்குப் புறகு நான் கண்ண மூடிற்றாலும் கவலை யில்ல.”
“இப்ப என்னக்க அவிசரம் ஒள்ளுப்பம் பொறன். றோசினை பண்ணிப்பாப்பம்.”
"இஞ்ச பார் நாகமணி எனக்கிரிக்கிற வருத்தம் உனக்குத் தெரி யாது. நான் மனிசி எண்ட பேருக்குத்தான் உலாத்திக்கொண்டு திரியுறன். அதுவும் இன்னும் எத்தின நாளைக்கெண்டு தெரியாது.” "அந்தப் புள்ள பாய்ஞ்சோயிட மனசிலையும் என்ன இரிக் கெண்டு அறியத் தேவையில்லையோக்க."
"மனச அறிஞ்சி கட்டிவைக்க நுழையாத ஊட்டுல இருந்து உழையாத சோறோடா திண்டு கொண்டிருக்கன். என்னய அறிஞ் சவன் ஆரும் இரங்கி வந்தாத்தான். அதுதான் உனக்கிட்டகேட்டன். உனக்கும் ஆரிருக்கா, அம்மையப்பன் இல்லாம தனிக்கட்டை யாத்தானே கிடக்காய்.
மாதவி சொன்னதுகள கேக்கக்கேக்க நாகமணிர மனசுலயும் கல்யாண ஆசை வராமலில்ல. எண்டாலும் அவனுக்கும் பரஞ் சோதிக்குமிடையில இருக்குற வயது வித்தியாசம்தான் அவனைப் பாத்துக் கேலி பண்ணுறாப் போல இருந்திச்சி அவனுக்கு.
வரப்புல நடந்து கொண்டுவந்த மாதவி. வரப்பு மூலைக்குள்ள தேங்கி நிண்ட தண்ணிக்குள்ள மீன் குஞ்சுகள் கச, கசெண்டு துடிக்கிறதக் கண்டுட்டாள். குஞ்சு மீன் வத்தல் கறியெண்டா மாதவிக்கு நல்ல விருப்பம்.
உடுப்பு மாராப்பையும், சோத்துச் சட்டியையும், குந்திக் கீழ வரப்புல வைச்சாள், தலையக்கவுட்டு சாக்கக் கீழ போட்டாள், புடவையத் தூக்கி இடுப்புல சொருகினாள். வரப்பு மூலைக்குள்ள
66 விமல் குழந்தைவேல்

தேங்கி நீண்ட தண்ணிக்குள்ள கைய உட்டு அள்ளுனாள். கைநிறைஞ்ச மீன் குஞ்சுகளை கண்டோனேயே கனவுல காசு அள்ளுாறாப்போல பரவசப்பட்டுப் போயிற்றாள்.
“எடேய் நாகமணி இஞ்ச பாருடா மீன் விளைஞ்சிகிடக்குற புதினத்த. குஞ்சுமீன் கறியும் குறுணல் சோறும் திண்டா எவ்வளவு செப்பமா இரிக்குமெண்டு தெரியுமோடா உனக்கு ?”
கண்ணுக்கு முன்னால கிடக்குற மீன ஏன்தான் உடுவானெண்ட நினைப்புல தானும் இறங்கி, தேங்கி நீண்ட தண்ணிய காலால எத்தி வெளியால இறச்சி உட, தண்ணி குறைஞ்ச மூலைக்குள்ள மீன்மட்டும் சட . . . கச . . . எண்டு கொதிச்சுக் கொண்டு கிடந்திச்சி. மாதவி குந்தியிருந்து மீனெல்லாத்தையும் கஷ்டப்படாம ஒவ்வொண்டாக எடுத்து போடியார் ஊட்டுப் புடவையொண்டுக் குள்ள போட்டு முடிச்சிக் கட்டிக்கொண்டாள்.
"எறிக்குற வெயிலுக்கு தண்ணி வத்தி நிலம் காயஞ்சிதெண்டா இந்த மீனெல்லாம் அநியாயமா செத்துப் போயிடும்டா. நாலு சனத்துக்கு தெரிஞ்சா புடிச்சி ஒரு நேரம் கறி ஆக்கமாட்டாதுகளோ ?”
மாதவிர கதையக் கேட்டு நாகமணி சிரிச்சிட்டான். "உனக்கு தேவைப்பட்டத நீ எடுத்துக் கொண்டு போறத உட்டுப் போட்டு ஆக்களுக்கும் சொல்லப் போறாயாக்கும். வா கெதியாப் போவம். நான் போயி இதுக்குப் புறகுதான் வெள்ளாவி வைக் கோணும்.”
தேங்காய்ப் பூ போட்டு உறட்டி சுட்டு, அடுப்படியில இருந்து தின்னோணுமெண்டு ஆசைப்பட்டு அண்டைக்கு கூப்பன் கடைக்குப் போய் ஏமாந்து போயிருந்த மாதவிர மனதுக்கு இண்டைக்கு கேக்காம பாக்காம கிடைச்ச குஞ்சுமீன் பெரிய ஆறுதலாகத்தான் இருந்திச்சி.
நாகமணியும், மாதவியும், மீன் புடிச்சி முடித்து வரப்பேறி நடந்த நேரம் சூரியன் அடிவானத்து பொத்தானை மலை இடவு களுக்குள்ள முகத்த மறைச்சிக் கொண்டது.
வெள்ளாவி 67

Page 35
திடுச்சாமம் ஆகியும் இன்னும் கண்ணுக்கு நித்திரையெண்டுறது மட்டும் வந்தபாடில்ல.
ஊட்டுக்குள்ள புரண்டு புரண்டு படுத்தவள் வெளியால வந்து வாசல்ல கால் நீட்டியிருந்து இடப்பக்கமா திரும்பிப் பாத்தாள். நிலவு வெளிச்சத்துல தெளிவாத் தெரிஞ்ச வயல்வெளி நடுவுல குடை விரிச்சாப் போல தெரியுற புளியமரத்துக்குக் கீழ விளக்குகளும் அடுப்பும் எரியுறது நல்லா தெரிஞ்சுது.
ஆரோ செஞ்சி கழிக்கானுகளெண்டு மனசுக்குள்ளால நினைச்சுக் கொண்டாள் மாதவி.
ஊருக்குள்ள ஆருக்காவது வருத்தம் வந்திட்டதெண்டா, வெத் திலை வைச்சி, மைபோட்டு, குறி கேட்டு, செய்வினை, சூனியம் செய்துதான் வருத்தம் வந்திருக்கெண்டு சொல்லிற்றா, அண்டு ராவு முழுக்க புளிய மரத்துக்குக் கீழ பெரிய புதுனமெல்லாம் நடக்கும்.
எந்தச் சாமிக்குள்ளால ஏவியுட்டு சூனியம் செய்திருக்கெண்டு பூசாரி சொல்லிற்றா அதுக்கேற்றாப்போலதான் கழிப்பும் நடக்கும். வருத்தக்காரரும் பூசாரியும் இன்னும் ரெண்டு ஆம்புளையஞம் மட்டுந்தான் புளியமரத்தடிக்கு வருவாங்க.
சுடலைமாறன் குடிகொண்டா, அரிசி மாவால செஞ்ச மனிச உருவமொண்டு அடுத்தநாள் புளியமரத்துக்குக் கீழ வெட்டுப்பட்டு கிடக்கும்.
வைரவன் குடிகொண்டிருக்கானெண்டா சுருட்டும் சாராயமும் படைச்சிக் கழிப்பாங்க. காளி பார்வை கொண்டாவெண்டு அறிஞ்சா, பொங்கல் படையலோட ஒரு கோழியும் கழத்தறுபட்டுக் கிடக்கும்.
இதெல்லாம் ஊர் அடங்குனப்புறம்தான் நடக்கும்.
68 விமல் குழந்தைவேல்

நிலா வெளிச்சத்துல ஆத்துத் தண்ணி பளபளத்துக் கொண்டிருந் திச்சி.
ஆத்துல மிதக்குற தோணிகள்ல எரியுற விளக்கெல்லாம் காத்துக்கு ஆடி ஆடி மறையுறதும் தெரியுறதுமா இரிக்கி.
ஒரு தோணியில இரிக்கிறவன் மற்றத் தோணியில இருக்கிறவ னோட கதைக்கிறதெல்லாம் ஆத்துலபட்டு, காத்துலவந்து அசரீரி மாதிரி மாதவிர காதுலையும் உழுகுது.
ரெண்டு நாளா முகத்த நீட்டி புடிச்சிக் கொண்டு உம்மெண்டு இரிக்கிற மகள்ற நினைப்பு மாதவிக்கு.
கோபமோ, வெறுப்போ, இல்லாம ஏதும் சோகமோ என்னெண்டு கண்டறியாதளவுக்கு முகத்த வைச்சிக் கொண்டிரிக்கிற பரஞ்சோதிய பாக்குற நேரமெல்லாம், பொட்டைக்கு நல்ல துக்கமெண்டுதான் மாதவி நினைச்சாள். முந்தாநாத்து தெய்வானை ஊட்டுல நடந்த புதுனத்தாலதான் மாதவிக்கும் அப்பிடியொரு நினைப்பு வந்திருச்சி. தைப் பொங்கல் லீவுல வந்து நிண்டு போன சதாசிவம் அடுத்த மாத லீவுல வந்தநேரம். அக்கரப்பத்து நேசம்மா, மகளுக்கு மாப் பிள்ளை கேட்டு பாத்துவாறனெண்டு பத்து பதினைஞ்சி பேரோட பாக்கு, பழம், வெத்திலை, பலகாரமெண்டு வெள்ளைச்சீலை மூடி கட்டின ஏழு பெட்டியோட தெய்வானை ஊட்டு வாசலுல முந்தாநாத்து வந்து இறங்கிற்றாள்.
ஏழு பொட்டியையும் கண்டு பூரிச்சிப்போன தெய்வானை எண்ட மகன் உண்ட மகளுக்குத்தான். வைகாசியில நாளப்பாத்து முடிச்சி வைப்பமெண்டு சொல்லி வந்தாக்களுக்கெல்லாம் ஆடு வெட்டி விருந்தும் குடுத்தனுப்புனாளாமெண்டு காசாத்தை பெத்தா சொல்லித்தான் மாதவிக்கும் தெரியும்.
கல்லூடு வளவு, முதல் போட்ட வயல் நிலம் தேவையெண்டா அக்கரப்பத்துல ஒரு கடையும் கட்டி சதாசிவத்துக்கு சீதனமாத் தருவனெண்டு அக்கரப்பத்து நேசம்மா சொன்னாளாமெண்டு தெய்வானை சொன்னாளுகா எண்டா காசாத்தை பெத்தா.
"அது மட்டுமோ ஆறு மாசச் சோறும் தலப்புள்ளச் செலவும் கூட நேசம்மா பொறுப்பாளாக்கும். ஆருகண்டா, உள்ள இடமெல் லோகா செய்யுறதுக்கென்னெண்டு” காசாத்தை பெத்தா சொல்லிற்று போயிற்றா.
நேசம்மா சதாசிவத்த மாப்பிள்ளை கேட்டுவந்தண்டைக்கு தீவுக்காலை ஆக்களையும் தெய்வானை வரச் சொல்லி கூப்பிட்டிருந் தாளாம். பக்கத்து ஊடெண்ட முறைக்காகுதல் வந்துற்று போடி யெண்டு மாதவிய தெய்வானை கூப்பிடயில்லை. அதால மாதவிக் கொண்டும் கவலை கிவலை இல்லை. எண்டாலும் தண்டதாயக் கூப்பிடம உட்டுற்றாங்களே எண்டுற கவலைதான் பரஞ்சோதிக்கோ
வெள்ளாவி 69

Page 36
என்றுகூட மாதவி மனசுக்குள் நினைச்சாலும் அவள் வேறமாதிரியும் நினைக்காமலில்லை.
சதாசிவத்த மகள் பரஞ்சோதி மனசுக்குள்ள விரும்பி இருந்திருப் பாள். ஏழையாப் புறந்திட்டனே என்னெண்டு சொல்லிக் குழற எண்டு மனதுக்குள்ளால மகள் குமுர்றாளோ எண்டும்கூட மாத விக்கு ஒரு எண்ணம்.
பரஞ்சோதிர நினைப்புல எவ்வளவு நேரம் வாசலுல இருந்தாளோ தெரியாது. திரும்பயும் ஒருக்கா புளியமரப் பக்கம் திரும்பிப் பாத்த நேரம் புளியமரத்தடி இருட்டடைஞ்சி கிடந்திச்சி.
நிலா மறைஞ்சி ஆத்துக்கும் ஊட்டுக்கும் இடைப்பட்ட வயல் வெளி இருண்டு போயிருந்தாலும், வயல் வெளிக்குள்ளால ஆரோ நடக்குற மாதிரி பரஞ்சோதிர கண்ணுக்கு புலப்பட நல்லா உத்துப் பாத்தாள்.
வயலுக்குள்ளால நடந்து வந்தவர் தண்டவளவுக்குள்ளதான் வாறார் எண்டு கண்ட மாதவி, ஒழும்பி முந்தானைய உதறிக் கொண்டு ஊட்டுத் திண்ணைக்கு போயிற்றாள்.
வளவுக்குள்ள வந்தாள், கிணத்தடிக்கு வந்து பூவரசமரத்துல மறைஞ்சி நிண்டுகொண்டு ஒரு செருமல் செருமி மாதவிய கூப்பிடுகிற மாதிரி செய்தார்.
அந்தச் செருமல் குரல் மாதவிக்கு பழக்கப்பட்ட குரல். வந்திருக் கிறது இன்னார்தானெண்டு மாதவிக்கு நல்லாத் தெரியும். முன் னெல்லாம் இந்தக் குரலுக்குரியாள் எப்ப வருவாரெண்டு மாதவி பாத்து பாத்து இருந்திருக்காள். இப்ப அந்தக் குரலுக்குரியாள்ற அழைப்புக்கு ஒழும்பிப் போய் ஒத்துப்போக அவள்ற உடம்புலயும் தெம்பில்ல மனசுலயும் விருப்பமில்ல.
கிணத்தடியில இருந்து செருமல் சத்தம் உட்டுட்டு கேட்டுக் கொண்டுதாணிருந்திச்சி. கூடவே விலை கூடுன சிகரட்டு வாசனை யும் பரவிக் கொண்டிருந்திச்சி.
“வேணாங்கா அம்மா. வந்து படுத்துக்கொள்ளுகா.” எண்டு மகள் பரஞ்சோதி கெஞ்சுறாப்போல இருந்திச்சி மாதவிக்கு.
ஊட்டுக்குள்ள பூந்து இருட்டுல தட்டுத்தடுமாறி நடந்த மாதவி படுத்துக்கிடந்த பரஞ்சோதியில இடறுப்பட பரஞ்சோதிக்கும் முழிப்பு வந்திற்று.
கிணத்தடியிலருந்து ஆரோ செருமுறதும், சிகரெட் வாசனையும் பரஞ்சோதிர காதுலயும் மூக்குலயும் பட்ட நேரம் என்ன நடந்திருக் கோணுமெண்டு அவள் மனசுக்குள்ளால, என்னத்தையோயெல் லாத்தையும் நினைச்சிட்டாள்.
மாதவி ஊட்டுக்குள்ள வந்து மகள்ல இடறுப்பட்ட ஒள்ளுப்பம் நேரத்துல செருமல் சத்தத்த கேட்க முடியவில்லை. சிகரெட்
70 விமல் குழந்தைவேல்

வாசமும் காத்துல கலந்து கலைஞ்சி போய்ச்சி. கலைஞ்சி போனது சிகரட் வாசம் மட்டுமில்ல, பரஞ்சோதிர நித்திரையும்தான். உள்ளுக்கு வந்த மாதவிக்கிட்ட பரஞ்சோதி கேட்ட கேள்வியில அவள்ற நெஞ்சு படபடண்டு அடிக்கத் தொடங்கிற்று.
நடந்ததென்ன நடக்காததென்னெண்டெல்லாம் சொல்லிச் சொல்லி மகள்ற காலுல உழுந்து குமுறோணும்போல இருந்திச்சி மாதவிக்கு.
"சீ . . . இந்த நரகத்துல இருந்து தப்புறத்துக்கு எனக்கொரு சாவாகுதல் வருகுதில்லையே. நீயெல்லாம் இரிக்கிறதக்காட்டிலும் செத்துப் போகலாமேகா."
இருட்டு மூலைக்குள்ள இருந்து குரல்குடுத்தாள் பரஞ்சோதி. “ஏண்டி கண் கெட்டுப் போயிருவாய். பெத்த தாயெண்டும் பாராம நரம்பில்லாத நாக்கால இப்பிடியெல்லாம் கதைக்காயேடி. எடியே, விடிய விடிய வாசலுல குந்திக் கொண்டிருந்து உன்னபத்தித் தானேடி நினைச்சி கவலப்பட்டுக் கொண்டிருந்தேன்."
பரஞ்சசோதிக்கிட்ட கெஞ்சிறாப் போல சொன்னாள் மாதவி. "ஆ. . . என்னப் பத்தி நினைச்சிக் கொண்டிருந்தயோ? என் னெண்டு, ஆருக்குக் கூட்டிக் குடுத்து வாங்கலாமெண்டோகா ?” “எடியே நாசாமாப் போறவளே, ஏண்டி . . . இப்பிடி வாயால நெருப்பை அள்ளி தாயிர நெஞ்சில் கொட்டுறாய்?”
"உனக்கு மகளாப் புறந்தத நினைச்சி நினைச்சி தினம் தினம் நான் வெந்து சாகிறனேகா அது உனக்குத் தெரியுமோ? ஏங்கா, இப்பிடிச் சம்பாதிக்கிறத உட்டுப்போட்டு பிச்சை எடுத்து தின்ன லாமேகா ?”
"பிச்சை எடுக்குறதுக்கு ஆருடி சங்கை பாத்து ஒண்ணாதெண்டது. வெட்டுக்குத்துக் காலத்துல நானும்தான் வயல் வெளிக்குள்ள போய் களவட்டிப் பிச்சைக்கு நிண்டன். பகலெல்லாம் பொட்டி யோட நீண்ட எனக்கு பதக்கடை நெல்லாகுதல் போட்டானு களோடி? இல்லையே. படுக்கவா மாதவி பதக்கடையில்ல, முதல் பொலி நெல்லுத்தாறன் எண்டெல்லோடி கூப்புட்டானுகள்.”
"களவெட்டியில படுக்கேலாதெண்டுதான் நடுச்சாமம் ஊட்டுக்கு வரச் சொல்லிப் போட்டு வாசலுல காத்துக்கொண்டிருந்தையாக்கும், உனக்கேங்கா இன்னும் இந்தப் புத்தி."
இதுக்குமேலயும் மகளுக்கு எப்படித்தான் சொல்லிப் புரிய வைக்கிறதெண்டு மாதவிக்கு தெரியயில்ல.
ஊர் அடங்கி உறங்குன சாமத்துல சத்தம்போட மாதவிக்கு விருப்பமில்ல. அவள் ஒண்டும் கதைக்காம இருந்திட்டாள். பரஞ் சோதிர விசும்பல் மட்டும் உட்டுட்டு கேட்டுக் கொண்டேயிருந்திச்சி.
வெள்ளாவி 71

Page 37
எப்படா விடியுமெண்டு நித்திரையில்லாம இருந்த மாதவி, ஆத்தங்கரைக்கு நாகமணி போறதக் கண்டு ஒழும்பி வேலி ஒதி னைக்கு வந்து. "டேய் நாகமணி எண்டு குரல் குடுக்க, வேலி ஒதினைக்கு வந்த நாகமணிக்கு மாதவிர முகத்தக் கண்டோண்ணயே என்னமோ நடந்திருக்கு எண்டுறது தெரிஞ்சி போய்ச்சி.
“என்ன மாதவியக்க, ஒரு மாதிரியா இரிக்காய். ஏதும் வருத்தம் கிருத்தமோ ?”
"ஒண்டா, நாகமணி. விடிய விடிய நெஞ்சிக்குத்துடா. காறித்துப் புறதெல்லாம் சளியாத்தான் வருகுது. அதுவும் செடிநாத்தமா இரிக்குடா"
"அண்டைக்கு குஞ்சிமீன் புடிக்கக்குள்ளயே உன்னக் கவனிச்சன் வரவர நீயும் செரியா கோலம் குறைஞ்சி போறாய் அக்க. இப்பிடியே சொல்லிக் கொண்டிருந்தமெண்டா ஏலாமை சுகமாகுமோ? ஒருக்கா ஆசுபத்திரிக்குப்போய் காட்டி ஒரு கலவை மருந்தெடுத்து குடிச் சாத்தானென்ன."
"எண்டுதான் நினைச்சிரிக்கன். இண்டைக்கு எப்பிடியும் கல வைக்குப் போகோணுமெண்டுதான் இரிக்கண்டா.”
“வேணுமெண்டா நானும் கூடநாட வரட்டோக்க." "இல்லடா, வேணாண்டா. ஊர்சுத்திப் போகோணுமெண்டில்ல ஆத்துல தண்ணி வத்தி தரவையெல்லாம் காய்ஞ்சி வெடிச்சிக்கிடக்கு. நான் குறுக்கால நடந்துபோய் காட்டி மருந்தெடுத்து வாறன். வாற வரைக்கும் இஞ்சால ஒள்ளம் எட்டிப்பாத்துக் கொள்ளுடா, பொட்டை தனிய இரிக்காள்.
"ஆரு பாய்ஞ்சோயியோ, அதுகென்னக்க. அவன் சதாசிவம் வந்தா வாசல் தென்னையில சாய்ஞ்சிநிண்டு சிரிச்சிக்கதைச்சி பொழுதக் கழிக்கும் நீ போயிற்றுவா."
"ஆரு சதாசிவமோடா . . . அவள் தாய்க்காறி தெய்வானை ஏதும் சொன்னாளோ என்னமோ தெரியாடா. அக்கரப்பத்தாள் கேட்டுப் பாத்து வந்து போனத்துல இருந்து அந்தப் பொடியன் சதாசிவத்தையும் இஞ்சால பக்கம் காணக் கிடைக்குதில்லடா” "மெய்தானோ மாதவியக்க, பாய்ஞ்சோயி மனமுடைஞ்சொல்லோ இரிக்கும்."
"ஆருக்குத் தெரியும், அதுதானோ என்னமோ தெரியாடா இப்பெல்லாம் எடுத்ததுக்கெல்லாம் பாய்ஞ்சி உழுறாள்றா. சோனிக்கு பண்டியக்கண்டால் போல, என்னக்கண்டா பொட்டைக்கு புடிக்கு தில்லடா. வாய்துறந்தாளெண்டா கீரியும் பாம்பும் மாதிரித்தாண்ட நிக்காள்."
"அதெல்லாத்தையும் உட்டுப்போட்டு நீ முதல்ல ஆசுபத்திரிக்குப் போய் உண்ட உடம்பக் காட்டிப் போட்டு வாக்கா."
72 விமல் குழந்தைவேல்

நாகமணி ஆத்தங்கரைக்கு போக, மாதவி அடுப்புகரிய எடுத்து சப்பி பல்ல விளக்கத் தொடங்கினாள்.
ஊட்டுக்குள்ள இருந்து வெளிக்கிறங்கி வந்த பரஞ்சோதி, சதாசிவத்துர வேலியோர குப்பையைக் கூட்டுறத்தையும், அடிக்கடி அவள் சதாசிவத்துர ஊட்டுப்பக்கம் பாக்கறத்தையும் மாதவியும் கவனிச்சிக் கொண்டுதான் நிண்டாள்.
வெள்ளாவி 73

Page 38
போடியார் பொஞ்சாதி இண்டைக்கு சந்தோசப்பட்ட மாதிரி எண்டைக்குமே பட்டிருக்க மாட்டா. என்னத்த செய்யுற, எதச் செய்யுற எண்டுறது தெரியாம அங்கிட்டும் இங்குட்டும் நடந்து கொண்டேயிருந்தா.
பேத்தி சாமத்தியப்பட்டுட்டாள், எண்ட சங்கதிய பொஞ்சாதி சொன்ன உடனேயே, மாமன் மச்சான்காரனையெல்லாம் கூப்புட்டு நாலு போத்தல் சாராயத்த உடைச்சிக்குடுத்து குடிச்சி முடிச் சிட்டாராம் போடியார்.
போடியார் ஊட்டு ஆக்களுற முகம் மட்டுமில்லாம, அந்த ஊட்டு வாசல் வளவு மரம் செடியெல்லாமேகூட சந்தோசமா இரிக்கிறாப் போலதான் தெரியுது.
நிண்ட நிலையில் நிண்டு எட்டி ஆயுற உயரத்துல மாலை கட்டி தொங்கஉட்டாப்போல காய்ச்சி நிற்கிற மாமரம். இலைகளக் காட்டிலும் பழங்கள் கூடுதலா இருக்குமாப் போல, விகாரையில வெசாக்குக்கு வலுப்புப் பூட்டுனாப் போல காயும் பழமும் நிறைஞ்ச மாதுளை மரம், ஒண்டுக்குப் பின்னால ஒண்டு குலைதள்ளிக் கொண்டு கிணத்தச் சுத்தி நிற்கிற வாழைகள் எண்டு மரம் செடி யெல்லாம் செழிப்பாத்தான் இருந்திச்சி.
கிணத்த ஒட்டி உயந்து வளந்து நிற்கிற கமுக மரங்களுல இருந்து உழுந்த பாக்குகளும் கமுகம் பூவுகளும் கிணத்துக்குள்ள மிதக்குது. பழுத்ததுகள இறக்கிப்போட்டு, ராவோடு ராவாக ஏறி பொருத்திப் போட்டு வந்தாப்போல இளநீர் குலைகளோட நிக்குற தென்னைகள் எண்டு போடியார் ஊட்டு வெளியால தெரியறதுகள் இது களெண்டா அந்த ஊட்டுற உள்ளுக்கு எப்பிடி இரிக்குமெண்டுறத என்னெண்டுதான் சொல்லுற.
முகடுமுட்ட அடுக்கிவச்சிருக்கிற நெல்லுமூடைகள், பெரிய அண்டாவுல தொடங்கி சின்ன செம்புவரைக்கும் அளவு பாத்து
74 விமல் குழந்தைவேல்

கோபுரம் போல அடுக்கி வைச்சிருக்கிற வெள்ளிப் பாத்திரங்கள். வெத்திலைத் தட்டுல இருந்து துப்பல் படிவரைக்கும் பளபளக்குற பழைய வெங்கல பொருட்களால அந்த ஊடே ஜெகஜோதியாக ஜொலிக்குது.
இதெல்லாம் போக ரெண்டு போக விளைச்சல் வேலையப் பாக்குறதுக்கெண்டே ரெண்டு வேலைக்காரனுகள்.
ஆயிரக்கணக்குல எருமையும், பசுவுமெண்டு எங்கேயோ ஆருக் கிட்டயோ குடுத்து கவனிக்கப்படுகுது.
முதல் கண்டிண்ட மாட்டுல இருந்து கிடைச்ச பாலையும் அதுல இருந்து வாற தயிர் நெய்யையும் குடும்பத்துல உள்ளாக்களத் தவிர வேறாக்களுக்கு குடுத்தா கண்டீண்ட மாட்டுக்கு ஆகாதாம் எண்ட பரம்பரை ஐதீகத்தால, அந்த ஊட்டு வளவுக்குள்ள அடிக்கடி குழிவெட்டி குழிக்குள்ள தயிரையும் நெய்யையும் கொட்டி மூடி உட்டுருவாங்க.
இப்பிடிப்பட்ட செல்வம் கொழிக்கிற ஊட்டுல திடீரெண்டு ஒரு மங்கள காரியம் நடக்கப் போகுதெண்டா அந்த ஊடு எப்படி இருக்கும். அதுவும் எப்ப எப்பெண்டு காத்திருந்து இப்பதானெண்டா எப்பிடி அந்த ஊடு திமிலோகப்படும்.
தான் சமைஞ்ச விசயத்த பேத்திக்காரி பயந்து பயந்து குழறிக் கொண்டுபோய் அம்மம்மா காறிக்கிட்ட சொல்ல போடியார் பொஞ்சாதி ஒடிப்போய் சொந்தக்கார சுமங்கலிப் பொம்பிளையக் கூட்டிக் கொண்டுவந்து பேத்தியப் பாக்கச் சொல்ல, வந்த பொம் பளையும் உண்டபேத்தி சமைஞ்சிற்றாளுகா எண்டு சொன்னதுக்குப் புறகுதான் போடியார் பொஞ்சாதி சந்தோசத்துல குதியாட்டம் போடுறா.
அயல் ஊட்டுப் பொண்டுகளக்கூப்புட்டு மூண்டுதரம் குரவை யுட்டு சமைஞ்ச சங்கதிய வெளிப்படுத்திப்போட்டு, வந்தாக்களுக்கு வெத்திலை பாக்குக் குடுத்துக்கொண்டிருந்த நேரம்தான் மாதவியும் வந்து சேந்தாள். மாதவிக்குக்கூட நாகமணியும் வாறதக் கண்ட போடியார் பொஞ்சாதிர முகத்துல சின்னதா ஒரு பொய்க் கோவம் தெரிஞ்சிச்சி.
"இஞ்சபாருடி இவள ஆடி அசைஞ்சி வாறவரத்த . . . எடியே மாதவி புள்ளை பெரிய புள்ளையாகிட்டாளெண்டு விடியக்குள்ள விசளம் சொல்லி அனுப்புனா இதுதானோடி நீ வாறநேரம்."
"என்ன தாயி செய்யுற, கூரை முடிக்கு வேணுமான புடவைகள தேடி எடுக்க வேணுமெல்லோ ?”
சொல்லிக் கொண்டே கொண்டு வந்த புடவை மாராப்ப இறக்கி வைச்சாள் மாதவி.
உண்மையிலேயே அவள் சுணக்கத்துக்கு காரணம் பரஞ் சோதிதானே தவிர புடவையில்ல.
வெள்ளாவி 75

Page 39
போடியார்ர பேத்தி சாமத்தியபட்ட விசயம் தெரிஞ்சோடனயே மாதவி ஒடிப்போய் நாகமணிக்கிட்ட சொல்லி, என்னடா செய்யட் டும் எண்டு கேக்க நாகமணி தனக்கிட்ட உள்ள புடவை யெல்லாத்தையும் குடுத்திட்டான்.
நாகமணி குடுத்த புடவையெல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வந்து, சாமத்திய ஊட்டு வேலைகளைச் செய்ய தன்னால மட்டும் ஏலாதுபடி, நீயும் ஒத்தாசைக்கு வாடி எண்டு கூப்பிட்டதுதான் தெரியும் அடிபட்ட நாகம்போல சீறிப்பாயத் தொடங்கிற்றாள், பரஞ்சோதி.
"என்ன சமைஞ்ச ஊட்டுக்கு நாலு பேர் வருவானுகள். அதே சாட்டுல என்னக்கூட்டிக் கொண்டுபோய் காட்டலாமெண்டு நினைக்கிறயாக்கும் ?”
மகள் கேட்ட கேள்வியில மாதவிக்கு வந்த வெப்பிசாரத்துல குந்தியிருந்து குழறத் தொடங்கிற்றாள். அப்பதான் நாகமணி வந்து, வேணுமெண்டா நானும் கூடவாறனே மாதவி அக்க எண்டான். “ஏண்டி மாதவி என்னத்தடி பாத்துக்கொண்டு நிக்காய்? கூரை முடி கட்டுற எண்ணமில்லையோடி ?”
“போடியார் பொஞ்சாதி போட்ட சத்தத்துலதான் மாதவிக்கு மகளப்பத்திய நினைப்பு கலைஞ்சது.
நாகமணி புடவை மாராப்ப அவுக்கிறதக் கண்டுட்டா போடியார் பொஞ்சாதி.
“ஏண்டி மாதவி நீதானே எண்ட ஊட்டு வண்ணாத்தி. அதேண்டி நாகமணியக் கூட்டிக் கொண்டு வந்து நிக்காய்?"
ஆச்சரியமாத்தான் கேட்டாள் போடியார் பொஞ்சாதி. "இல்ல தாயி கூரை முடி கட்டுற வேலையெல்லாம் ஆம்பிளை செய்யுற வேலையெல்லோ, என்னால என்னெண்டு தாயி செய்யே லும்? அதான் கூட நாட இரிக்கட்டுமேயெண்டு நாகமணியக் கூட்டி வந்திருக்கன்."
"இஞ்ச பாரு மாதவி நீ ஆரையொண்டாலும் கூட்டிக் கொண்டு வந்து வேலையச் செய், அது உண்ட புறியம் ஆனா . . . நீ தான் ஊட்டுக்கு வண்ணாத்தி. ரெண்டாம் தண்ணி வாக்கக்குள்ள செய்ய வேண்டிய கடமையெல்லாத்தையும் உனக்குத்தான் செய்வம் அத மட்டும் தெரிஞ்சிக்கோ."
“போடியார் பொஞ்சாதி கண்டிப்பான குரலுல சொல்லிற்றாள்." "அதெல்லாம் நீங்க விருப்பப்பட்டு செய்யுறது. அதுல நான் என்ன தாயி சொல்லக்கிடக்கு."
ஊட்டு வாசல் கதவு நிலைக்குமுன்னால ரெண்டு நேரான தடிகள நாட்டி, கம்புக்கிடையில பலகைய வைச்சி, அஞ்சு புடவை
76 விமல் குழந்தைவேல்

களை குறுக்கால ஊட்டு தொங்கப் போட்டான் நாகமணி. சிவந்த கண்ணோட வந்த போடியார் இதக் கண்டுட்டார்.
"இதென்னடா நாகமணி பிச்சக்கார வேலை பாக்காய். போடியார் பேத்திக்கு அஞ்சி சீலைபோட்டோடா கூரை முடி கட்டுறது. டேய் போடுடா ஒம்பது பதினொண்டெண்டு ஒத்தப்பட போட்டுக் கட்டுடா.”
நாகமணியப் பாத்து சினேகமாய் ஒரு சிரிப்புடன் சந்தோசக் கட்டளை போட்டிற்று போனார் போடியார்.
ரெண்டாம் சடங்க எப்பிடியெப்பிடி செய்யுறது. ஆர் ஆரக் கூப்பிடுறது. எண்டெல்லாம் போடியாரும் பொஞ்சாதியும் சொந்தக் காரரோட கதைச்சிக் கொண்டிருந்தாங்க.
யாழ்ப்பாணத்துல இரிக்கிற தண்ட தம்பி குடும்பத்த உடனடியா வரச்சொல்லிக் கூப்பிடோணுமெண்டு சொல்லிக் கொண்டிருந்தா போடியார் பொஞ்சாதி.
போடியார் பொஞ்சாதிர தம்பி கணவருசத்துக்கு முந்தி யாழ் பாணத்துக்கு படிக்கப்போன நேரம், அங்க ஒரு பொண்ணக் காதலிச்சி கல்யாணம் செஞ்சிகொண்டு அங்கேயே இருந்திற்றார். அதுக்குப்புறகு ஊர்ப்பக்கம் வாறதெண்டுறது குறைவு. எட்டுல தப்புல இப்பிடி ஏதும் கல்யாணம் கச்சேரியெண்டு அறிவிச்சா மட்டும் வந்து தலையக் காட்டிப் போட்டு போயிடுவார். மருமகள்ற மகள் சாமத்தியப்பட்ட சங்கதி அறிஞ்சா எண்ட தம்பி பூரிச்சிப் போயிடுவானெண்டு போடியார் பொஞ்சாதி கதைச்சிக் கொண்டி ருக்கிறது மாதவிர காதுக்கும் கேட்டிச்சி.
"உண்ட தம்பி வேணுமெண்டா வருவானாக்கும். பொஞ்சாதி புள்ளையஸ் வருவாங்கெண்டு நான் நினைக்கல்ல ?”
சொல்லிப்போட்டு சிரிச்ச போடியார முறைச்சிப் பாத்தாள் பொஞ்சாதி.
"இல்ல உண்ட தம்பிர மகனும் பெரிய கடை முதலாளியாம். மகளும் வெளிநாட்டுல அதுகள் வர ஏலாது. இனி உண்ட தம்பிர பொண்டியத் தெரியும்தானே. புரிச்ன்மட்டும்தான் வேணும். புரிசண்ட ஆக்கள் தேவையில்லெண்டு அவன கண்ணுல காட்டாம அடக்கி வைச்சுக் கொண்டிருக்கிறவள். இப்ப இந்தச் சாமயத்திய ஊட்டுக்கோ வரப்போறாள். வேணுமெண்டா உண்ட தம்பி மட்டும் வருவானாக்கும்.
போடியாரும் பொஞ்சாதியும் கதைக்கிறதெல்லாத்தையும் அவர்ர மருமகனும் கேட்டுக் கொண்டுதாணிந்தார்.
"இப்ப ஆரு வந்தாலுமென்ன, வராம உட்டாலுமென்ன எண்ட மகன்ற சாமத்தியக் கல்யாணம் நடக்காமலோ போகப்போகுது. நீங்க ரெண்டு பேரும் சும்மா ஏன் கதை வளத்துக் கொண்டு நிக்கயளோ தெரியாது."
வெள்ளாவி 77

Page 40
மருமகன் சற்று குரல உயத்திக் கதைக்க மரியாதைக்காக எழும்பி போய்விட்டார், போடியார்.
போடியாரின் மருமகன் வெளியால வந்து கூரைமுடிக்குத் தேவையான தேங்காய்களுக்கு முடிசீவத் தொடங்கினார். போடி யாரின் மகள் வந்து மாதவியக் கூட்டிக் கொண்டுபோய் அவிச்சி இறக்கின நெல்ல வாசல் வெயில்ல படங்குவிரிச்சி பரவியுடச் சொன்னாள்.
"ஏன் மாதவி உண்ட மகளையும் கூட்டி வந்திருந்தா உனக்கு ஒத்தாசையாக கூட நாட ஏதும் செய்திருப்பாளே."
போடியாரின் மகள்ற கேள்விக்கு என்னத்த சொல்லுற தெண்டு தெரியயில்ல மாதவிக்கு.
"குமர்பொட்டை விருப்பப்பட்டிருக்க மாட்டாள்தானே” தான் கேட்ட கேள்விக்கு தானே பதிலையும் சொல்லிற்று போனாள் போடியாரின் மகள் போடியாரின் மகள் தாயப் போல இல்ல. ஆர்ரையும் மனம் நோகக் கதைக்கமாட்டாள். போடியார்ர பொஞ் சாதியுமென்ன நெஞ்சுல ஈட்டி எறிஞ்ச மாதிரிக் கதைப்பாவே தவிர கதைச்சி அடுத்த நிமிசத்துல அதெல்லாத்தையும் மறந்து இரக்கப்பட்டு போவா.
படங்கு விரிச்சி நெல்லக்கொட்டி திலாவியுட்டுப்போட்டு நிமிர இடுப்பு முறிஞ்சமாதிரி இறந்திச்சி மாதவிக்கு. நெத்தி வேர்வைய வழிச்செறிஞ்சிப் போட்டு திரும்ப போடியார் பொஞ்சாதி பக்கத்துல நிண்டா.
"என்னடி மாதவி ஒரு மாதிரியா இரிக்காய்." "ஒண்டுமில்ல தாயி, உச்சி வெயிலுக்குள்ள குனிஞ்சி நிண்டு நெல்லுத் திலாவுனதுல தலை கிறுகிறுக்குது."
"வேலி ஒரத்துல நிண்ட பப்பாசி மரத்த கெட்டியாப் புடிச்சிக் கொண்டு அதுர அடிநிணல்ல குந்தினாள் மாதவி.
"ஏலாமைக் காறியெண்டா ஏண்டி இதெல்லாத்தையும் செய்யு றாய் வா ... வந்து சோத்தக் கறியத் திண்டுபோட்டு, சில்லாட்டு வேலையேதும் கிடந்தா செய்.”
கொள்ளி கொத்துறது, தூள், மா, இடிக்குறது, நெல்லுக் கொட்டித் திலாவுறதெண்டு ஊட்டுக்கு வெளியால செய்யுற வேலைய உட்டா சில்லாட்டு வேலையெண்டு இதுவரைக்கும் வேறவேலையேதும் அந்த ஊட்டுல செய்ஞ்சதில்ல.
நாகமணிக்கு நல்ல பசி. போட்டுக்குடுத்த சோத்துக் கோப்பய மடியில வைச்சிக் கொண்டு, ஊட்டுத் தாவார கூரை நிழல்ல குந்தியிருந்து திண்டுகொண்டிந்த நாகமணிக்கிட்ட தண்ட சோத்துக் கோப்பையையும் குடுத்தாள் மாதவி. அதிலயும் ரெண்டொரு புடிச்சோறுதான் திண்டிருந்தாள்.
78 விமல் குழந்தைவேல்

அவளுக்கும் நல்ல பசிதான் என்டாலும் ரெண்டொரு புடிக்கு மேல அவளுக்கு தின்னப் புடிக்கயில்ல.
நாகமணிக்கிட்ட சோத்துக் கோப்பய குடுத்துக்போட்டு பக்கத்துல இருந்த நெழிஞ்ச அலுமினியச் செம்பில இருந்த தண்ணிய அண் ணாந்து தொண்டைக்குள்ள உட்டாள்.
"இதென்ன மாதவியக்க தந்தத நீ திங்காம எனக்குத்தாறாய், பசில்லையோ உனக்கு ?"
சோத்தக் குழைச்சி தொண்டைக் குழிக்குள்ள எறிஞ்சிகொண்டே கேட்டான். நாகமணி.
“பசியில்லாம இல்லடா, தொண்டைக்குள்ளால இறங்குதில்லை யேடா. அந்தக் கண் கெடுவாள நினைக்க நினைக்க நெஞ்சு பதைக்குதுடா."
"ஆரு மாதவியக்க, பரஞ்சோதியயோ சொல்லுறாய்?” “வேற ஆர, அவளத்தான் சொல்லுறன். நம்மளோட வந்திருந்தா அவளும் ஒரு நேரம் நல்ல சோறு கறி திண்டிருப்பாளேடா. மத்தாமதிய நேரம் இந்த வேகுற வெயிலுக்குள்ள என்ன திண் டாளோ என்னத்த குடிச்சாளோ பசிக்கு கல்லையும் திண்டா செமிக்கிற வயதுல அவள் அங்க பட்டினி கிடக்க நான் என் னெண்டுடா திண்டு குடிக்க.”
நீண்டுகொண்டு போன தாவார நிணலுல கால் நீட்டி சுவருல தலையச் சாய்ச்சாள் மாதவி. மடிக்குள்ள சுறுட்டிக் கிடந்த துண்ட எடுத்து உதறி விரிச்சி நாகமணியும் ஒள்ளுப்பம் தலைசாய்த்து கண்ணயர்ந்துட்டான்.
போடியார் ஊட்டுக்கு சொந்தக்காராக்களெல்லாம் ஒவ்வொருத்த ராக வரத் தொடங்கிற்றாங்க. வந்த பொண்டுகளெல்லாம் ஆளுக் கொரு வேலை செய்யுறதுலதான் கவனமா இருந்தாங்க. இல் லெண்டா போடியார் பொஞ்சாதிர வாயுக்குள்ளால இருந்து வாற வார்த்தைக்கு என்னெண்டு தப்புறது.
பதினொரு வெள்ளிக்குடங்களைக் கொண்டுபோய் கிணத்தடியில வைச்சி தண்ணிய நிரப்புனாள் ஒரு பொம்பிளை.
ஊட்டுக்குள்ள இருந்த வெங்கலக் குத்து விளக்குளை கொண்டு வந்து, புளிபோட்டு பூசி மினிக்கி துடைச்சி திரிபோட்டு என்ணை ஊத்தினாள் இன்னொருத்தி.
ரெண்டுமூண்டு பொண்டுகள் கூடியிருந்து சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு, எல்லா நிறத்துலயும் ஆராத்தி செய்ஞ்சி கொண்டிருந் தாங்க. இன்னும் சில பொண்டுகள் ராவைக்கு வாராக்களுக்கெண்டு வெங்கலவட்டாவுகள்ல வெத்திலய அடுக்கி பாக்கு சீவலுகள், நிரப்பிக் கொண்டிந்தாங்கள்.
சாமத்தியபட்ட பொண்ணுக்கு மச்சான் முறையான பொடிய னொருவன் அவனொத்த சினேகிதனுகளோட கூடிக்கொண்டு
வெள்ளாவி 79

Page 41
ஒரு கையில கத்தியும் மறுகையில் தென்னம்பாளையுமா வந்து வாசலுல பாளையப் போட்டு போட்டு போயிற்றான்.
"பாளை வெட்டுன மச்சாண்ட சிரிப்பப் பாத்தயளோகா, சமைஞ்சவள் அவனோட வாண்டமாதிரியெல்லோகா பொடியன் பூரிப்புல போறான்."
வாசலுல இருந்த கிழயொருத்தியின் பேச்சுக்கு மற்றப் பொம் பிளையெல்லாம் சிரிச்சிற்றாளுகள்.
நெருங்குன சொந்தக்காரப் பொம்பிளைகள்ல ஆரையும் எந்த வேலையும் செய்ய உடாம கூட்டிவைச்சி ஊட்டுப் பெருமைகளையே சொல்லிக் கொண்டிருந்தா போடியார் பொஞ்சாதி.
யாழ்பாணத்துல இருக்கிற தண்ட தம்பியையும், தம்பி பொஞ்சாதி புள்ளைகளையும் பத்தித்தான் அடிக்கடி கதைச்சிக் கொண்டிருந்தா. பேத்திர ரெண்டாம் தண்ணி வார்ப்புக்கு தண்ட தம்பியும் பொஞ் சாதி புள்ளையஞம் வந்தா தனக்கு எவ்வளவு மதிப்பா இரிக்கு மெண்றாப் போலதான் அவட கதை இரிந்திச்சி. தம்பிக்காரன் யாழ்பாணத்துல கல்யாணம் செய்ததே போடியார் பொஞ்சாதிக்கு ஒரு பெருமையான விசயம்.
யாழ்ப்பாணத்துல கல்யாணம் கட்டி இவ்வளவு காலத்துக்கும் தம்பிர பொஞ்சாதி இந்த ஊருக்கு ரெண்டுதரம்தான் வந்திருக்காள். அப்பெல்லாம் அவளப் பார்க்க சொந்தக்காராக்களும் ஊராக்களும் வந்த நேரம் எல்லாருக்கிட்டயும் தம்பிர பொஞ்சாதியப் பத்தி பெருமையடிச்சிக் கொண்டிருப்பா போடியார் பொஞ்சாதி. அதுக் கேத்தாப் போல தம்பிர பொஞ்சாதி காட்டுன புதினமும் கொஞ்சநஞ்சமில்ல.
போடியார் ஊட்டு அகண்ட கிணறையும், ஊடு நிறைஞ்ச பண்ட பாத்திரத்தையும், குழிவெட்டிப் புதைக்கிற நெய் தயிரையும் தம்பிர பொஞ்சாதி புதினமாப் பாத்தா அவள ஊராக்கள் புதினம் பாக்காமலோ இரிப்பாங்கள்? அப்பிடியொரு புதினத்த இன்னொரு தரம் ஊருக்கு காட்டோணுமெண்ணுறதான் போடியார் பொஞ் சாதிர எண்ணம்.
பேத்திர ரெண்டாம் தண்ணி வார்ப்புக்கு எத்ணி நாள் சிறப்பு செய்யுற தெண்டும், எத்தின ஆடுவெட்டி எத்தின சாராயப் போத்தல் உடைக்கிறதெண்டும், பீக்கர எந்தத் தென்னையில எந்த திசைபாத்துக் கட்டலாமெண்டும், ஊட்டு வாசலுல இருந்து வெளிக்கடப்பு வரைக்குமோ இல்லாட்டி ஒழுங்கை நீளத்துக்குமோ பந்தல போடுற தெண்டெல்லாம் வந்திருந்த மாமன் மச்சானோடெல்லாம் விவாதிச்சிக் கொண்டிருந்தார் போடியார்.
போடியார்ர கவலை அதெண்டா, இஞ்சால பொஞ்சாதிக்காறி எத்தினை மூடை நெல் அவிச்சிக் குத்தோணுமெண்டும் எத்தின மரக்கறி ஆக்கி எப்பிடி பந்திவைக்கோணுமெண்டும் நாலு பொண்டு களை இருத்தி வைச்சிக் கதைச்சிக் கொண்டிருந்தா.
80 விமல் குழந்தைவேல்

"இதென்ன இது, ஊடு நிறைஞ்ச வெள்ளிக்குடமிரிக்க எண்ட பேத்திக்கு பதினொரு குடத்துலதானோ தண்ணி வாக்கப் போறயள்." கிணத்தடியில வரிசையில கிடந்த குடத்துகள எண்ணிப் பார்த் தார் போடியார்.
"இஞ்சே அதெல்லாம் பொண்டுகள் பாக்குற வேலை. அதுக்குள்ள நீயேன் வந்து தலையப் போட்டுக் கொண்டு நிக்காய்.”
பொஞ்சாதி முறைக்க, தள்ளாடியபடி விலத்திப் போயிற்றார் Gurtugusti.
வாசலுல அலங்கரிச்சிருந்த நிறை முட்டிகளையும், நிறைகுடங் களையும் ஆராத்தி தட்டுகளையும் மறைச்சி நாகமணியும் மாதவியும் புடவையால சுவர் மாதிரி மறைப்புக்கட்ட, போடியார்ர பேத்தியக் கூட்டிக் கொண்டு வந்து இருத்தி, ஒவ்வொரு சொந்தக்காறியும் ஒவ்வொரு குடமாக எடுத்து தலையில தண்ணி வாத்த நேரம், குரவைச் சத்தமும் வெடிச்சத்தமும் ஒண்டாக கேட்டிச்சி.
ஒரு மாதிரியா முதலாம் தண்ணிப் புதுனம் முடிஞ்சிச்சி. போடியார் பொஞ்சாதி குடுத்த அரிசி தேங்காயையும் தீட்டுத் துணி மாராப்பையும் எடுத்துக்கொண்டு நாகமணியும் மாதவியும் புளியமரத்தடிக்கு வந்து சேர்ந்த நேரம் எப்பிடியும் பத்துமணி ஆகியிருக்கும்.
"இந்த ராவிருட்டுல பொட்டை தட்டத் தனியக் குந்தியிருக்கும்” எண்டு மகளப்பத்தி நினைச்ச மாதவிர மனசுக்குள்ள பயமும் கவலையும் ஒண்டாக சேர்ந்து என்னவோ செய்ஞ்சிச்சி.
"என்ன மாதவியக்க ஒண்டும் பேசாம வாறாய் உடம்புக்கு ஏதும் ஏலாமக் கீலாம இரிக்கோ? நேத்தைக்கு ஆசுபத்திரிக்கு போனயே என்ன சொன்னான் டாக்குத்தன் ?”
வரம்புக்கட்டுல கால் இடறி உழுந்தெழும்பி நடந்துகொண்டே கேட்டான் நாகமணி.
“என்னத்த சொல்லுற . . . சதுரப் பெலக்கேடாம். நல்லா மீன இறைச்சிய பால, பழத்த தின்னட்டாமெண்டு ஒரு கலவை மருந்து தந்திரிக்கான், நம்மட சம்பாத்தியத்துக்கு நாம எங்கடா போற பால், பழம் இறைச்சிக்கு.
"அதுக்கென்ன மாதவியக்க செய்யுற டாக்குத்தன் சொல்லுறத் தையும் கேக்கத்தானே வேணும்.”
"அட சும்மா போடா, படுக்கப் பாயில்லாதவன் பறக்கக் seðrfrð; 66öTL-fT6ðrfrtd.”
"உன்னோட கதைச்சிக் கழரேலாதக்க . . நாளைக்கு வந்து கதைக் கன் . . . வேணுமெண்டா நானும் வாசலடிமட்டுக்கும் வந்துற்று வாறேனே"
வெள்ளாவி 81

Page 42
"என்னத்துக்குடா, இந்தா இரிக்கிற பக்கத்து ஊடுதானே. அதுக் கிடையில் என்னய என்ன பேயோ கொண்டு போகப் போகுது. அதுவும் இந்த பட்டப்பகல் மாதிரி இரிக்கிற நிலா வெளிச்சத்துல." நாகமணி போயிற்றான். கடப்பத் திறந்து வாசலுக்கு வந்தாள் மாதவி ஆத்துப்பக்க வேலி ஒதினையால ஆரோ நடந்து போறமாதிரி தெரிஞ்சிச்சி அவளுக்கு. கெதியா நடந்து வேலி ஒரத்துல நிண்டு எட்டிப் பாத்தாள். நடந்து போறது வேற ஆருமில்ல. சதாசிவம் தான் எண்டுறது நிலவு வெளிச்சத்துல மாதவிக்கு நல்லாத் தெரிஞ் சிச்சி.
வந்து போறது சதாசிவம்தான் எண்டதறிஞ்ச மாதவிர சிந்தனை யெல்லாம் பல பக்கத்துக்கும் ஒடிச்சி.
நல்ல காலம் நாகமணி வரயில்ல. வந்திருந்தா பரஞ்சோதியப்பத்தி அவன் என்னெல்லாம் நினைச்சிருப்பான்.
இந்த நேரத்துல சதாசிவம் இஞ்ச வந்து பேறானெண்டுறத தாய் தெய்வானை அறிஞ்சாளெண்டா அவள் என்ன கதை யெல்லாம் கதைப்பாள்.
மாப்பிள்ளை கேட்டுப் பாத்து வந்து, கல்யாணமும் முடிவான பிறகு இவன் சதாசிவத்துக்கு இஞ்சென்ன வேலை. இப்பிடிப் பல பக்கத்துக்கும் மாதவி யோசினை போக திண்ணையில பத்துற விளக்குல எண்ணைமுடிஞ்சி திரிர உசிர் ஊசலாடிக் கொண்டிருக்கி. ஊட்டுக்குள்ள எட்டிப் பாத்தாள் மாதவி.
தாய் வாறது தெரிஞ்சிதோ, இல்ல நுளம்பேதும் கடிச்சிச்சோ தெரியாது. முழங்காலுக்கு ஏறிக்கிடந்த பாவாடைய கீழ இறக்கியுட் டுட்டு மத்தப் பக்கமா திரும்பி சுறுண்டு படுத்தாள் பரஞ்சோதி. குடிலுக்குள்ள போய் மூடிவைச்சிருந்த பானைசட்டிய துறந்து பாத்த நேரம், ஆக்குன சோறும் முருங்கையிலைச் சுண்டலும் அவளுக்காகத்தான் ஆக்குனாப்போல அகப்பை பதிக்காம மூடி யிருந்திச்சி.
வெளியால வந்து நிலவு வெளிச்சத்துல வாசலுல குந்திக் கொண்டிருந்தாள் மாதவி.
என்ன நடந்திருக்கும். ஆர நம்புற ஆர நம்பாம உடுற. ராவு முளுக்க மனசுக்குள்ளா ஆயிரம் கேள்விகள். ஒண்டுக்கும் விடை கண்டு கொள்ளேலாமத்தான் மாதவிர அந்த ராப்பொழுது கழிஞ்சிச்சி.
82 விமல் குழந்தைவேல்

அக்கரப்பத்தாள் தை மாசம் பாப்பிள்ளை கேட்டு வந்த நேரத்துல வைகாசியில கல்யாணத்த வைச்சிக் கொள்ளுவம் எண்டு சொல்லி யுட்ட தெய்வானை, இப்ப என்னெண்டா வைகாசிக்கு இன்னம் ரெண்டு மாசம் இரிக்கக்குள்ளயே திடீர் புடீரென்று சதாசிவத்துக்கு கல்யாணத்தச் செய்ஞ்சி வைச்சிட்டாள்.
மகனுக்கு ஏன் இவ்வளவு அவசரப்பட்டு கல்யாணத்த செய்ஞ் சாளெண்ட யோசினையால மாதவிக்கு இருந்த தலையிடி இன்னும் கூடிப்போச்சி.
களுதாவளை, தம்பிலுவில், தம்பலகாமம் எண்டு ஒவ்வொரு ஊருல இருந்தும் ரெண்டு நாளைக்கு முந்தியே சொந்தக்காரர கூப்புட்டு தங்கவைச்சி கல்யாண நாளண்டு ஆறு வேனுல எல் லாரையும் ஏத்தி ஊர்வலம் போல போய்த்தான் கல்யாணத்த முடிச்சி போட்டு வந்தாளாம்.
தீவுக்காலையில இருந்து கன சனத்த கூட்டிப் போகயில்ல தெய்வானை. தண்ட பணத்தகுதிக்கு ஏத்தமாதிரியான ஆக்கள மட்டும்தான் கூட்டிப் போனாள்.
கல்யாணம் முடிஞ்சி மாப்பிள்ளையும் பொண்ணும் தெய்வானை ஊட்டுக்கு கால் மாறி வந்தண்டைக்கு, கல்யாணத்துக்கு கூப்பிடாம உட்ட சொந்தக்காரரையும் கூப்புட்டு நாலு ஆடு வெட்டி சோத்தக் குடுக்க, உள்ள குறைபாடெல்லாம் மறந்திட்டாங்க சொந்தக்காரர்.
கால்மாறி வந்தண்டைக்கும் கல்யாண நாளப்போல ஏழுபொட்டி பலகாரத்தோடதான் அக்கரப்பத்தாள் வந்திறங்குனாள்.
வட்டாவுல பலகாரத்த வைச்சி, மாப்பிள்ளையும் பொண்ணும் சொந்தக்காரர்ற ஊட்டுக்கெல்லாம் போய்குடுத்துப் போட்டு வாறது தான் வழக்கம்.
வெள்ளாவி 83

Page 43
போடியார் ஊட்டுக்குப்போய் புடவையக் குடுத்துப் போட்டு வந்த நேரம் திண்ணையில இருந்த பலக்ாரத்தட்டக் கண்டதும் திகைச்சிப் போயிற்றாள் மாதவி.
"என்னடி இது ஆருடி கொண்டாந்தது?" “மாதவி போட்ட சத்தம் காதுல கேக்காதவளப் போல இடுப்புல தண்ணிக் குடத்தோட வந்த பரஞ்சோதியப் பாத்து ஆத்திரத்தோட ஓடி, அவள தள்ளிஉட இடுப்புல இருந்த தண்ணிக்குடம் கீழ உழுந்து உடைஞ்சிபோச்சி.
இடுப்புல இருந்த குடம் நிலத்தில ஓடாக்கிடக்கிறத்தையே உத்துப்பாத்துக்கொண்டு நிண்டாள் பரஞ்சோதி,
"ஏண்டி முட்டடப்பன் கட்டிருவாளே, நான் கேக்குறன் நீ அம்மமுட்டி, அமசடக்கி, ஆமை மாதிரி நிக்கேயடி சொல்லண்டி ஆருடி தந்தது.”
"சதாசிவமும் பொண்டாட்டியும் வந்தாங்க அவங்கதான் கொண்டந்ததாக்கும்."
பரஞ்சோதி சொல்லி முடிச்சிருக்கமாட்டாள். மாதவி தட்டத் தூக்கி வாசலுல எறிஞ்சிட்டாள்.
தண்ட காலடியில வந்துழுந்த தட்டையும் பலகாரங்களையும் பார்த்த பரஞ்சோதி, இந்த மனிசிக்கென்ன பைத்தியமோ எண்டு மனசுக்குள்ள நினைச்சிக் கொண்டு ஒண்டும் சொல்லாமக் கொள்ளாம ஊட்டுக்குள்ள போயிற்றாள்.
எண்டைக்குமில்லாம இண்டைக்கு தனக்கேன் இப்பிடிக்கோவம் வந்திச்செண்டு தெரியாம வாசலுக்கு வந்து குந்திட்டாள் மாதவி. போடியார்ர பேத்தி சாமத்தியப்பட்ட இந்த இருபது நாளுக்குள் ளையும் மாதவி ரெண்டு தரம் ஆசுபத்திரிக்கு போயிற்று வந்துட்டாள். எண்டாலும் இருமலும், இருமுற நேரம் வாற சளியும் குறைஞ்ச .uj-606UחנL
துண்டெழுதித் தாறன் மட்டக்களப்பு பெரியாசுப்பத்திரிக்கு போய் காட்டெண்டு டாக்குத்தர் சொல்லியும் இன்னும் போன பாடுல்ல. எல்லாம் இந்த போடியர்ர பேத்திர சாமத்திய ஊட் டாலதான்.
ஏன்தான் இந்த சாமத்திய ஊட்டுப் பொறுப்ப எடுத்தனோ எண்டுதான் மாதவி நினைச்சாள்.
நான் உங்கட வண்ணாத்தியாவே இரிக்கான், வேணுமெண்டா இந்த சாமத்திய ஊட்டுச் சடங்க மட்டும் வேறொரு வண்ணான வைச்சி செய்யுங்கெண்டு சொல்லியிருக்காலமெண்டு கூட நினைச் சாள் மாதவி. அந்தளவுக்கு போடியார்ர பொஞ்சாதி அவள வாட்டி எடுத்திட்டாள்.
84 விமல் குழந்தைவேல்

“ஏண்டி மாதவி ரெண்டு நாளைக்கு துடக்கு சீலையோட மூலைக்குள்ள முடங்கிக் கிடக்க எண்ட பேத்தியொண்டும் இல்லாத ஊட்டுப் புள்ளையில்லடி. ஒவ்வொரு நாளும் உன்னால மாத்துப் புடவை குடுக்கேலுமெண்டாக்குடு. இல்லாட்டி சொல்லுடி, பொட்டி நிறைய அடுக்கி வைச்சிருக்கிற புடவைய எடுத்து நான் எண்ட பேத்திக்குக் குடுக்கன்."
இப்பிடிப்பட்ட போடியார் பொஞ்சாதிர நக்கல் கதைக்காக ஒவ்வொரு நாளும் மாத்துப் புடவைக்கெண்டு மாதவி கஸ்டப் பட்டுத்தான் போயிற்றாள். இந்த நேரத்துல நாகமணியும் இல் லெண்டா அவள்ற கெதி என்னவாயிருக்கும்.
இந்த ரெண்டாம் தண்ணி வாத்து முடிச்சிற்றாங்களெண்டா மாதவிர தலையில இருந்து ஒரு பெரிய பாரம் இறங்குன மாதிரி இருக்கும்.
வழமையா சாமத்தியப்பட்டு பதினோராம் நாளோ பதிமூண்டு. பதினைஞ்சாம் நாளிலோ ரெண்டாம் தண்ணி வாத்திருவாங்க. போடியார் பொஞ்சாதி பேத்திக்கு வெத்திலை வைச்சிக் கேட்டத்துல மாதவிர கயிற்றகாலம் பாளாய்ப்போன சாத்திரி இருபத்தோண்டுல தண்ணிவாக்குறதான் நல்லதெண்டு சொன்னத்தில இருந்து மாதவிர பாடு பெரும் திண்டாட்டமாத்தான் போயிற்று.
எப்பிடியோ பதினைஞ்சி நாள் ஓடிற்று. இனிவாற ஏழுநாளையும் நினைக்க நினைக்கத்தான் மாதவிக்கு நெஞ்சிக்குலை நடங்குது. போன பதினைஞ்சி நாளுக்குள்ளயும் போடியார் ஊட்டுல நடந்த புதினங்கள் அப்பிடிப்பட்டதுதானே. அதிலையும் அந்தக் கல்யாணம் பண்ணிவாற தெண்டுற விசயம்தான் பெரிய இக்கட்டான விசயம். நேத்துக்கூட போடியார்ர ஊட்டுக்கு பேத்திர முறை மாமன் ஊட்டாக்கள் கல்யாணம் பண்ணி வந்தாங்கள். அந்த நேரத்துல நடந்த புதுனத்தையும் அதனால மாதவிபட்ட அவமானத்தையும் நினைக்க நினைக்க இப்பயும் அவளுக்கு உடம்பு நடுங்குது.
அந்த அவமானத்துல இருந்த கோவத்தத்தான் இப்ப தட்டத் தூங்கியெறிஞ்சி பரஞ்சோதியில காட்டுனாளோ தெரியாது.
சாமத்தியப்பட்ட பொண்ணுர தாய் மாமன் ஊட்டுல இருந்தோ தகப்பன் வழி மாமி ஊட்டுல இருந்தோ இல்லாட்டியும் மச்சான் முறைப் பொடியனுகள் உள்ள நெருங்கிய சொந்தக்காரர் ஊட்டுல இருந்தோ பொண்ணுக்கு ஒரு தங்க நகையக் கொண்டு வந்து குடுக்கறத்த ஊருக்கெல்லாம் புதுனம் காட்டுறதத்தான் கல்யாணம் செய்ஞ்சி வாற சம்பிரதாயம் எண்டு சொல்லுறாங்க.
அதிலையும் வசதிக்கார ஊட்டுப் பொட்டை சமஞ்சிட்டா ரெண்டாம் தண்ணி வாக்குற வரைக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊட்டுல இருந்து கல்யாணம் பண்ணி வருவாங்க.
வெள்ளாவி 85

Page 44
போடியார்ர பணத்துக்கும் ஊர் நிறைஞ்ச சனத்துக்கும் சொந்தக் காரர் கல்யாணம் செய்ஞ்சிவாறதுக்கு இந்த இருபத்தொரு நாள் எங்ககாணும். அதனால தான் காலையில ஒரு ஆள். பின்னேரம் ஒரு ஆளெண்டு ஒவ்வொரு நாளைக்கும் கல்யாணம் செய்ஞ்சி வந்து தங்கட கடனையும் கடமையையும் முடிஞ்சிற்றுப் போறாங்க. அதுலயும் உள்ள நாளுக்குள்ள செய்ஞ்சி முடிக்காட்டி போடியார்ர பொஞ்சாதிர வாயால தப்பேலாதுகா எண்டுகூட சொந்தக்காரர் அவசர அவசரமாக வந்துற்றுப் போயிற்றாங்கள்.
முன்னுக்கும் பின்னுக்கும் ரெண்டு பொண்டுகள் குடை விரிச்சிப் புடிச்சிக் கொண்டு நடக்க, ரெண்டு குடையையும் தொடுத்தாப்போல போட்ட வெள்ளவேட்டி பந்தலுக்குள்ள பலகாரப் பொட்டியளயும் தட்டுக்களயும் எடுத்துக்கொண்டு பொண்டுகள் நடக்க, மெல்ல மெல்ல நடந்து வந்த மாப்பிள்ளை ஊட்டாக்கள் பொண் ஊட்டு கடப்படிக்கு வந்ததும் தடுத்து நிறுத்தினாப் போல நகரமாமல் நிண்டுடுவாங்கள். கேட்டா இவ்வளவு தூரம் நடந்து வந்த மாப் பிள்ளை ஊட்டாக்கள பொண்ணுரட்டாக்கள் கடப்படிக்கு வந்து வரவேற்று உள்ளுக்கு கூட்டிப் போகோணும் எண்டு சொல்லுவாங்க. இந்த நேரத்துல பொண்ணுரட்டுக்குள்ள இருந்து மாப்பிள்ளை ஊட்டாக்கள உள்ளுக்கு கூட்டிப்போக கையில பூத்தட்டுக்களோட பொண்டுகள் கூட்டமெண்டு ரெண்டு குடைதொடுத்த வெள்ளை வேட்டிப் பந்தலுல மெல்ல மெல்ல நடந்துவருவாங்க.
ஊட்டுக்கு வாற மாப்பிளைய சமைஞ்ச பொண்ணு வந்து வரவேற்று கூட்டிப் போற மாதிரி ஒரு கற்பனை நாடகமாதிரித்தான் இந்த கல்யாணம் செஞ்சிவார சம்பிரதாயம் இருக்கும்.
இந்த மாப்பிள்ளை ஒண்டும் எங்கட ஊட்டுக்கு வரவேணு மெண்டு நாங்க தவம் கிடக்கயில்ல. எங்களுக்கு இதஉட்டா ஆயிரம் மாப்பிள்ளை கிடைப்பானெண்ட உதாசீனத்துல நடந்துவாற மாதிரி மெதுமெதுவாகத்தான் பெண்ணுரட்டு ஊர்வலம் நகர்ந்து போகும். இந்த கல்யாணம் செய்ஞ்சி வாற சடங்கு சம்பிரதாயத்தில் பொண்டு கள் மட்டும்தான் கலந்து கொள்ளலாம். ஆம்பிளைகள் புதுனம் பாக்குறது மட்டும்தான்.
“என்னடி பொண்ணு இன்னும் நித்திரையால எழும்பயில் லையோ இல்லாட்டி இந்த மாப்பிளைர அழகு வடிவப் பாத்து மயங்கி உழுந்துட்டாளோ பாருங்கடி வந்தவளுகள் நகராம நிக் காளுகள்."
மாப்பிள்ளை ஊர்வலத்துக்குள்ள இருந்து இப்பிடிப்பட்ட கேலி யான குரல் வரும்.
"ஆ. . . ஆருடி . . . அது . . . அழகப்பத்தி கதையளக்கிறவள். எண்ட புள்ளைக்கு கோடிப்பானைக்கு தண்ணி வைக்கத் தகுமாடி உண்ட
86 விமல் குழந்தைவேல்

மாப்பிள்ளைர அழகு. வந்திட்டாளுகளாம் கண்டறியாத மாப்பிள் ளைய எடுத்துக்கொண்டு.”
பெண் ஊட்டு ஊர்வலத்துக்குள்ளிருந்து இப்பிடியொரு அதிரடி நக்கல் பேச்சு வரும்.
இந்த பேச்சுச் சண்டைக்காக ரெண்டு தரப்பாக்களும் நல்ல அனுபவப்பட்ட பொண்டுகளை விசேடமாக கூட்டி எடுத்துக் கொள்ளுவாங்க.
கல்யாணம் செய்ஞ்சிவாறதெண்டுறதுல உள்ள சுவாரஸ்யமே இந்த வாய்ச் சண்டையிலதான் இரிக்கும். இந்தச் சண்டைய புதினம் பாக்குறதுக்கெண்டே ஊர்கூடி நிற்கும். ஆனா ஒண்டு, ஆம்புளையஸ் எல்லாரும் தூரத்துல நிண்டுதான் வேடிக்கை பாக் கேலும். இந்த வாய்ச்சண்டையில ஆம்பிளையஸ் கலந்து கொள்ளவே கூடதெண்டுறது சம்பிரதாயச் சட்டம்.
வேடிக்கையாயும், விளையாட்டாயும் நடக்குற இந்த சம்பிரதாய நிகழ்வு சில நேரத்துல வினையாக மாறி குடும்பங்களுக்குள்ள வெட்டுக்குத்துல கொண்டுபோய் முடிஞ்சிடும். சொந்தக்காரருக் குள்ள பரம்பரை பகையையும் ஏற்படுத்திடும்.
நீறுபூத்த நெருப்பாக பகைமையாக இருக்கும் குடும்பங்கள். கடமைக்கு ஒரு மோதிரத்தோட வந்து வாய்ச்சண்டை பொய்ச் சண்டைதானே எண்டசாட்டுல தங்கட சொந்தப் பகைமைக்குரிய காரணத்தையும், ரெண்டு குடும்பத்தாக்களும் தங்கட குடும்பத்துல உள்ள குறைநிறைகளை குத்திக்காட்டி வாய் விளையாட்டு விளை யாடுற நேரம் அது வினையாக முடிஞ்சி ஆம்புளையஞம் மோத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு கடைசியில அடிதடியில் முடியுறது முண்டு.
நேத்தும் அப்பிடித்தான் நடந்திச்சி. இருபது வருசமாக பேச்சுக் கதையில்லாம இருந்த போடியார்ர தூரத்துச் சொந்தக்கார குடும்ப மெண்டு, பேத்திக்கு கல்யாணம் செஞ்சி வரப்போறமெண்டு சொல்லி ஆள் அனுப்பின நேரம், அந்தக் குடும்பத்தோட இனி எந்த ஒட்டோ உறவோ வேணாமெண்டு போடியார் சொல்ல மாதவிர கெட்டகாலமோ என்னமோ.
"இண்டைக்கு இரிக்கிற நாம நாளைக்கு இரிப்பமோ எண்டுறது நிம்மளம் இல்லாத சீவியத்துல இன்னும் எத்தின நாளைக்குத்தான் சாதி சனத்தோட பகைச்சிக் கொண்டிருக்கிறதாம். அந்த ஆள்ற கதைய உட்டுப்போட்டு அவங்கள கல்யாணம் செஞ்சி வரச் சொல்லுகா”
பொஞ்சாதி சொல்லியனுப்ப மறுப்பேதும் சொல்லாமல் இருந்து விட்டார் போடியார்.
வெள்ளாவி 87

Page 45
சொன்னபடி அவங்களும் கல்யாணம் செய்ஞ்சி வந்தாங்கள். பொண் ஊட்டாக்களும் வெள்ளை விரிச்ச குடையின்கீழ் கடப்படி வரைக்கும் போனாங்க.
நாகமணியும் மாதவியும்தான் குடைரெண்டையும் தொடுத்து வெள்ளை விரிச்சது. நாகமணி வெள்ளை விரிக்கிற நேரம் குடையிர உச்சிக்காம்பு குத்தி வெள்ளை ஒரு சின்ன பிய்ச்சல் உழுந்திச்சி. அதஆரு கவனிக்கப் போறாங்கெண்ட நினைப்புல நாகமணியும் உட்டுற்றான்.
மாதவியும் அந்த பிய்த்தல காணயில்ல. பின்னால இந்த பீய்த்தல் தான் தண்ட மனத பிய்ச்செறியப்போகுதெண்டு அவளுக்கென் னெண்டு தெரியும்.
மாப்பிள்ளை ஊட்டாக்களும் பொண் ஊட்டாக்களும் கடப் படிக்கு வந்து சேர வழமையப்போல வார்த்தை விளையாட்டும் தொடங்கிற்று.
ஆரம்பத்தில் கேலியாக ஆரம்பித்த சொல் யுத்தம் நேரம் போகப் போக வார்த்தைகள் திசைமாறி ஒருவர் குடும்பத்த ஒருவர் குறை சொல்லி, ரெண்டு குடும்பமும் தங்கட குடும்பப் பிரச்சினைகள தெருவுக்கு கொணந்துட்டாங்கள்.
வேடிக்கை பார்தவங்களுக்கு நல்ல கொண்டாட்டம். கைதட்டிச் சிரிச்சாங்கள்.
வந்தாக்கள இனி ஊட்டுக்குள்ள எடுக்கிறதில்ல எண்டு நினைச்சிக்கொண்டு போடியார் பொஞ்சாதியும் கூட்டத்துக்குள்ள நுழைஞ்சிற்றா.
வந்தாக்கள் இனித்திரும்பிப் போறளவுக்கு வார்த்தைகளை அள்ளி வீசினாள் போடியார் பொஞ்சாதி. மாப்பிள்ளை ஊட் டாக்கள்ற வாயும் சின்னதா இல்ல. இனி திரும்பி போறதுதானெண்ட முடிவெடுத்தவங்க தங்கட மனதுல ஆளப்பதிஞ்சி கிடந்த பழைய குப்பைகளையெல்லாம் கிண்டிக்கிளறி போடியார் பொஞ் சாதிக்குநேர அள்ளி வீசினாங்கள்.
போடியார் பொஞ்சாதியும் உடுறதாயில்ல. “போங்கடி போக்கத்தவளுகளே, நீங்க கொணந்த அரைப்பவுண் நகையில்லாமத்தான் எண்டபேத்தி இரிக்காளோடி? உங்கட மோதிரக் குஞ்சயும் நாத்தப் பலகாரப் ப்ொட்டியளயும் அள்ளிக் கொண்டு போங்கடி . . . இனி உங்கட சாவும் வேணாம் வாழ்வும் வேணாம்.”
போடியார் பொஞ்சாதிர விரட்டலால அவமானப்பட்டுப்போன எதிர்த்தரப்புப் பொம்பிளர கண்ணுல பொண் ஊட்டுக் குடைக்கு மேல் விரிச்சிருந்த வெள்ளையில தெரிஞ்ச பிய்ச்சல் தெரிய திரும் பயும் ஒரு துருப்புக் கிடைச்ச சந்தோசத்துல துள்ளிக் குதிச்சிற்றாள்.
88 விமல் குழந்தைவேல்

"தூ விரிக்கிற வெள்ளைக்கே வழியில்லாம கந்தல் துணிய குடையில விரிச்சிக் கொண்டு வந்து நிக்குற வக்கத்தவள் நீ. நான் கொண்டு வந்த மோதிரத்த அரப்பவுணெண்டு குத்திக் காட்டுறயாக்கும்.”
குடைக்கு மேல விரிச்சிருந்த வெள்ளய அண்ணாந்து பார்த்தாள் போடியார் பொஞ்சாதி.
"ம் . . . இப்பதான் பாக்காவாம் அவ . . . பாருங்கடி அவக்கு ஒண்டுமே தெரியாதாம்டி . . . பூத்திரிப்பு மாலையெல்லோடி இது. ” "வண்ணாத்தியே மாதவியாம்டி . . . அவளே ஒரு கந்தல் புடவை. அவள் போட்ட வெள்ளை மட்டும் எப்பிடி இரிக்குமாம்.”
“மாதவிய குடியூட்டு வண்ணாத்தியா வைச்சிரிக்கிற போக்கணம் கெட்டவளோட நமக்கென்னடி கதை."
“கந்தல் புடவைய வெள்ளை விரிச்சிக்கொண்டு சந்திக்கு வந்து நிண்டு கொண்டு எங்களுக்கிட்ட வக்கணம் கேக்காளே இவளுக்கு வெக்கம் மானமில்லையோடி.”
"வெக்கம் மானம் இருந்தா மாதவிய குடியூட்டு வண்ணாத்தியா வைச்சிரிப்பாளோ வாங்கடி போக."
வந்தாக்களெல்லாரும் ஆளுக்கொரு கதை கதைச்சிப் போட்டு போயிற்றாளுகள். போடியார் பொஞ்சாதி வாசலுல குந்தியிருந்தாள். அவள்ற தேகம் நடுங்கிக்கொண்டே இரிந்திச்சி.
“எடியே ... எங்கடி ... எங்கடி . . . எடியே மாதவி எங்கடி இரிக் 5Tui?”
போடியார் பொஞ்சாதிர கத்தல் சத்தம் கேட்டு ஓடிவந்த மாதவி “என்னதாயி" என்றாள்.
"எடியே மாதவி இல்லாதவள் எளியவள் எண்டிரங்கி, உன்ன தூமை வெளுக்கக் கூப்பிட்டதுக்கு இப்பிடி கந்தல் புடவைய வெள்ளை போட்டு வந்தவளுகளுக்குள்ள எண்டசங்கய குறைச்சிப் போட்டேயேடி . . . உனக்கொண்ணாதெண்டா ஒண்ணாதெண்டு சொல்லியிருக்கலாமேடி . . . எனக்கென்ன வேற வண்ணானோ கிடைக்கமாட்டான்."
பொஞ்சாதிர கோவத்துக்கு முகம் குடுக்கப்பயந்து பந்தல் காலுக்கு மடுத்தோண்டிக் கொண்டிருந்தார் போடியார்.
"ம் . . . ஆடுறதெண்டு சலங்கை கட்டி களரியில இறங்குனா ஆடித்தானே முடிக்கோணும். ஆரக்குத்தம் சொல்லியும் என்ன பிரயோசனம். எடியே மாதவி இண்டைக்கு செய்ததப் போல ரெண்டாம் தண்ணி வாக்குறண்டைக்கும் ஏதாகுதல் இசகுபிசகா செய்து போடாத ... எண்ட தம்பி குடும்பம் வேற யாழ்ப்பாணத்துல இருந்து வருகுது தெரியுமோடி ?”
வெள்ளாவி 89

Page 46
சொல்லுறபோதே போடியார் பொஞ்சாதிர முகத்துல பூரிப் பெண்டா கொஞ்ச நஞ்சமில்ல.
“ஏண்டி மாதவி இப்பிடி திமித்த சணக்கிடா மாதிரி விறைச்சிப் போய் நிக்காயே செக்கமக்கலாகுறது கண்ணுக்குத் தெரியயில்லை யோடி.”
“ஓம் தாயி . . . இன்னுமேதும் வேலை வெட்டி கிடக்குதோ எண்டு பாக்கன்."
“கிடக்கிற வேலைய நாளைக்கு பாக்கலாம் இப்ப நாகமணியக் கூட்டிக்கொண்டு போ, எடியே நாளைக்கு புள்ளைக்கு புடவை கொண்டுவர மறந்திடாத."
சத்தைக்குமுன்னால இருந்த கோவம் மாறி சாந்தமான போடியார் பொஞ்சாதி, கல்யாணம் செய்ஞ்சி வாறாக்களுக்கு பறிமாற செய்ஞ்சி வைச்சிருந்த பலகாரத்துகளுலயும் சாப்பாடுகளுலயும் நிறைய எடுத்து ஒரு பொட்டியில போட்டு மாதவியிடம் கொடுத்தாள்.
போடியார் ஊட்டுல இருந்து வந்து புளியமரத்தடிக்கு வாற வரைக்கும் மாதவி நாகமணியுடன் ஒண்டும் கதைக்கயில்ல."
“என்ன மாதவியக்க ஒண்டும் கதையாம ஒரு மாதிரியா வாறாய், போடியார் ஊட்டுல நடந்ததுகள இன்னமும் நினைச்சிக் கொண்டு வாறாயாக்கும். அதெல்லாத்தையும் மறந்திரு மாதவியக்க."
"அதெல்லாத்தையும் மறக்காம மனசுல வைச்சுப் பாராட்ட வோடா முடியும் . . . நான் ஒரு தருமக் கிணறு . . . அள்ளியும் குடிப் பானுகள். அள்ளியும் இறைப்பாளுகள் . . . எதெண்டாலும் தாங்கத் தானே வேணும்.”
"உன்னோட பெரிய கணகாட்டு மாதவியக்க. எப்பயும் நீ இப்பிடித்தான் எதெண்டாலும் நினைச்சி றோசினை பண்ணிக் கொண்டே இரிப்பாய்."
"நான் ஏண்டா நாகமணி இப்பிடிக் கிடந்து கக்கிசப்படோணும். இவள் பரஞ்சோதிய ஆர்ரையும் கையில புடிச்சிக் குடுத்திற்றா ஆலிசப்படாம கண்ண மூடிடுவண்டா. எத்தினதரம் உனக்கிட் டையும் கேட்டிற்றன். நீதான் இன்னமும் உண்டகெப்பறக் காட்டிக் கொண்டிரிக்கிகாய்.
"அத உடக்க, எல்லாம் காலநேரம் வந்தா நடக்கும்தானே" "எண்ட சாவும்தான்." "இதேன் மாதவியக்க இப்பிடி பெயித்தியம் மாதிரிக் கதைக்காய்" மாதவி எதுவும் கதைக்கயில்ல. போடியார் ஊட்டுல நடந்ததெல் லாம் இப்பயும் அவள்ற மனத அறுத்துக் கொண்டுதான் இரிக்கி. அண்டு ராவு முளுக்க ஒரு சொட்டு நித்திரையும் வர மாட்டனெண்டுற்று. நடந்த சம்பவங்களும் இருமலும் மாதவிர நித்திரைய குழப்பிக் கொண்டே இருந்திச்சி.
90 விமல் குழந்தைவேல்

ராவு முளுக்க நித்திரையும் இல்ல. போடியார் ஊட்டுலயும் கனக்க வேலை செய்திட்டாள். சோந்து போய் வந்த மாதவிர கண்ணுல, சதாசிவம் வைச்சிற்றுப்போன பலகாரத்தட்டு தெரிய வந்த கோவத்துலதான் அத தூக்கி எறிஞ்சி பரஞ்சோதியில ஏறிப் பாய்ஞ்சாள்.
வெள்ளாவி 91

Page 47
Tெசலுல இருந்து ஒழுங்கை வரைக்கும் வெள்ளை கட்டுன பந்தல், பந்தல் முழுக்காலும் தென்னம் குருத்தோலைக் குஞ்சங்கள், இதுக்கெண்டு சம்பளத்துக்கு ஆள்புடிச்சி கட்டுன வெளிவாசல் தோரணம், ஊடுவாசல் முழுக்க முயல்குட்டிகளப் போல துள்ளிக் குதிச்சி ஒடிப்புடிச்சி விளையாடுற சின்னப் புள்ளையன், திருவிழா வுக்கு வந்தாப்போல ரெண்டு நாளைக்கு முந்தியே வந்து தங்கி நிக்கிற சொந்தக்காரர், உசந்த தென்னமரத்துகள்ல நாலு திக்கயும் பாத்துக் கட்டியிருக்கிற பீக்கர்கள்ல அலறல் சத்தமெண்டு போடி யார்ர ஊடு திருவிழா மாதிரித்தானிருந்திச்சி.
பேத்திர ரெண்டாம் தண்ணி வாப்புக்கெண்டு வந்தாக்களுக்கு பகல் விருந்து குடுக்க விடியச் சமாத்திலேயே ரெண்டு ஆட்டவெட்டி ஆக்கியுமாய்ச்சி.
வந்திருந்த சொந்தக்காரரையும் தண்ட ஊட்டுர கலகலப்பையும் பார்க்க பார்க்க போடியார்ர சந்தோசம் கூடிக்கொண்டுதான் Gumt uiuF).
கண்ணுலபடுற ஆம்பிளையளெல்லாரையும் உள்ளுக்கு கூட்டிக் கொண்டுபோய் வாங்கி வைச்சிருந்த சாராயப் போத்தல உடைச்சி ஊத்திக்குடுத்துக் கொண்டேயிருந்தார்.
பொஞ்சாதியோடயும் மகனோடயும் தம்பிக்காரன் யாழ்ப் பாணத்துல இருந்து வந்து நிக்கிறதுல போடியார் பொஞ்சாதி படுறபாட்ட கண்ணால பார்க்கேலா,
மாமர நிணலுல நாலைஞ்சி பொண்டுகளோ சிரிச்சிக் கதைச்சிக் கொண்டிருக்கிற தம்பிர பொஞ்சாதிய வாற போறாக்களுக்கெல்லாம் புதுனம் காட்டிக் கொண்டிருந்தாள் போடியார் பொஞ்சாதி.
"பத்து வருசத்துக்கு முந்தி பதிமூண்டு வயதுல வந்ததுக்கு இப்பதான் வந்திருக்கார் பொடியன், ஆளுர உசரத்தையும் உடம்பை யும், அழகு வடிவையும் பாருங்ககா ?”
தம்பியின் மகனப் பத்தி புகழ்ந்து கொண்டேயிருந்தாள்.
92 விமல் குழந்தைவேல்

“என்ன செய்யுறானாம் பொடியன் ?”
தவறுதலாக் கேட்டுற்றாள் வந்தவளுகள்ல ஒருத்தி. “யாழ்ப்பாணத்துல சொந்தக்கடை வைச்சி நடத்தி லெச்சாதிபதி யாத்தான் இரிக்கான் எண்ட தம்பிர மகன், இவன் தம்பிதான் இஞ்ச அவன்ட பேருல் கிடக்கிற காணி பூமிர விளைச்சலையும் வருமானத்தையும் இனி எண்ட மகன் நிண்டு பார்க்கட்டுமெண்டு சொல்லி மகன உட்டுப்போட்டுப் போகப் போறனெண்ணுறான்.”
"மெய்தானோகா ?” "ஓங்கா . . . அதுதான் எனக்கும் பெரிய றோசினையா இரிக்கி. இந்த அழகு வடிவானவன இஞ்ச உட்டுப்போட்டுப் போனா ஊரவளுகள்ற கண்ணு கிண்ணு பட்டுடாதோகா ? ... ஊரெல்லாம் எரிச்சலும் புகைச்சலுமால்லோக இரிக்கி . . . இந்தப் பீக்கர் வேற மனிசரோட கதைக்சிப் பேச உடாம கீருட்டுக் கத்திக் கொண் டிரிக்கி. நூறு தரம் சொன்னன், ரெண்டு குழல் போதுமெண்டு. கேட்டாத்தானே. நாலு குழலக் கொண்டு வந்து கட்டி வைச்சிரிக்கு அதுவும் எட்டு நாளைக்காமே . . . இப்பயே காதுகன்னமெல்லாம் அடைச்சிற்று. இன்னும் எட்டு நாளைக்கு என்னெண்டுதான் தாங்கப் போறனோ ?”
வந்திருந்த பணக்காராக்களுக்கு நடுவுல மகன இரிக்க வைச்சி தண்ட விளைநிலங்களைப் பத்தியும் செய்முறைகளைப் பத்தியும் அதுல கிடைக்கிற வருமானத்தப் பத்தியும் போடியார் பொஞ்சாதிர தம்பி மகனுக்கு புத்திமதி சொல்லிக்கொண்டிருந்தார்.
பணக்காரத்தனமான உடம்பு, வசீகரமான முகவெட்டு, அழகாத் தான் இருந்தான் அவர்ர மகன் வரதன்.
தகப்பன் சொல்லுறதுகள காதால கேட்டுக் கொண்டு இருந்த அவண்ட கண்ணுகள் வந்திருந்த இளம் பொட்டையள்லதான் இருந்திச்சி.
வெளியூருல இருந்து வந்து நிண்ட பணக்கார ஊட்டுப் பொட்டையளெல்லாம் சேர்ந்து நிண்டுகொண்டு வரதனப் பாத்துப் பாத்து என்னவோ குசுகுசுத்துக் கொண்டிருந்தாளுகள்.
இந்தப் புதுனங்களுக்கிடையில நாகமணியும் மாதவியும் வந்தத போடியார் பொஞ்சாதி கண்டிற்றாள்.
"எடியே மாதவி வந்திட்டாள்நி இனி வண்ணாத்திர கடமைய முடிச்சிப் போட்டு வந்தாக்களுக்கு பந்தி வைக்கிற அலுவலப்பாருங் கோடி. எடியே மாதவி என்னடி வாடி வதங்கிப் போய் நிக்காய் வாவண்டி ஊட்டுக்குள்ள . . . வந்தயெண்டா உண்ட கடமைய முடிச்சிப்போட்டு வந்தாக்களுக்கு சோத்தக்குடுக்கலாமேடி.
"இல்லதாயி நான் வரயில்ல நாகமணியக் கூப்புட்டு கடமைய செய்யுங்கோதாயி" ஊட்டுக்குள்ள கூப்புட்ட போடியார் பொஞ்சாதி முன்னால நிண்டுற்றாள் மாதவி."
வெள்ளாவி 93

Page 48
"இதென்னடி இது புதுனமான கதை கதைக்காய். உனக்கு ஒத்தாசைக்குத் தானேகா நீ நாகமணியக் கூட்டிக் கொண்டு வந்த, அதுக்கெண்டு குடியூட்டு வண்ணாத்திக்கு செய்ய வேண்டிய கடமையையும் அவனுக்குத்தான் செய்யோனுமெண்டா அதெப் பிடிகா ? வாடி உள்ளுக்குள்ள" மாதவியக்கூட்டிக் கொண்டு போடி யார் பொஞ்சாதி ஊட்டுக்குள்ள போறதக் கண்ட தம்பிர பொஞ் சாதி இதென்ன புதுனம் எண்டுற மாதிரி முகத்த வைச்சிக் கொண்டு, தானும் புறகால போய் நடக்குறதுகள புதுனம் பார்க்கத் தொடங் கிற்றாள்.
ரெண்டாம் தண்ணி வாக்குற அண்டுப்பகல் குடியூட்டு வண்ணா னையோ, வண்ணாத்தியயோ கூப்புட்டு நடு ஊட்டுக்குள்ள இருத்தி, சாமத்தியப்பட்ட பொண்ணுக்கு முன்னால சோறு கறி தின்னக் குடுத்திற்று. அரிசி, பருப்பு, காய்கறி, புது துணிமணி காசெண்டு எல்லாத்தையும் ஒருதட்டுல வைச்சி சமைஞ்ச பொண்ணுர கையால வண்ணானுக்கிட்டயோ வண்ணாத்திக்கிட்டயோ ஒப்படைச்சிப் போட்டு சமைஞ்ச பொண்ணு வண்ணாண்ட காலுல உழுந்தொழும் புறதத்தான் வண்ணான் கடமை செய்யுறதெண்டு சொல்லுறது. வைச்ச சோத்துல ரெண்டு புடிச்சோறுதான் திண்டிருப்பாள் மாதவி. மிச்சத்த கொண்டாந்து வெளியால கொட்டிப்போட்டு திரும்பயும் உள்ளுக்குள்ள போய் குந்தியிருந்த மாதவிய வைச்ச கண் வாங்காம பாத்துக் கொண்டிருந்தாள் போடியார் பொஞ்சாதிர தம்பிர பொண்டி,
“என்னடி மாதவி ரெண்டுபுடி திண்டாயில்ல கொண்டுபோய் கொட்டிப்போட்டு வந்திருக்காய்."
பரிதாபத்தோட சொன்ன போடியார் பொஞ்சாதி மகள் கொண்டுவந்து தட்டக்குடுக்க எல்லாச் சாமானையும் சரிபாத்தாள். "என்னெத்துல குறையுட்டாலும், வண்ணான் கடமையில மட்டும் குறையுட்டுடக் கூடாதுகா . . . இந்தா புள்ள, இத மாதவிர கையில குடுத்துப்போட்டு காலுல உழுந்தெழும்பு."
பேத்திர கையில தட்டுமாறுனதுதான் தெரியும் பார்த்துக் கொண்டு நிண்ட போடியார் பொஞ்சாதிர தம்பிர பொஞ்சாதி சட்டெண்டு வெளிக்கிறங்குன அடுத்த நிமிசத்துல கத்திக் கொண்டி ருந்த பீக்கர் மூக்கடைச்சி நிண்டுற்றது.
"உங்க என்ன கோதாரியெல்லாம் நடத்துறயள்" கத்திக் கொண்டு வந்து கையில தட்டோட நிண்ட மாதவிய இளக்காரமாப் பார்த்த தம்பியக்கண்டு பயந்து போயிற்றாள் போடியார் பொஞ்சாதி.
"உந்த இழவெல்லாத்தையும் இப்பவும் செய்து கொண்டோ இரிக்கிறயள். வரமாட்டன் வரமாட்டனெண்டு அடம்பிடிச்சவள கெஞ்சி கூத்தாடிக் கூட்டிக் கொண்டு வந்தன். இப்ப உங்க நடக்குறது
94 விமல் குழந்தைவேல்

கள பார்த்துப் போட்டு இப்ப வெளிக்கிடுங்கோ போவமெண்டு கொண்டு நிக்கிறாள், எல்லாம் உன்னாலைதானக்கா. வண்ணான் கடமை அம்பட்டன் கடமையெண்டு இன்னும் இன்னும் பழசையே புடிச்சிக்கொண்டு நிக்காய்.
கதைச்சிக் கொண்டிருக்கக்குள்ள அவர்ர பொண்டாட்டியும் வந்து பக்கத்துல வந்து நிண்டுற்றாள்.
சத்தம் கேட்டு போடியார், மகள், மருமகன், இன்னும் ஆரோ வெல்லாம் ஊட்டுக்குள் கூடிற்றாங்க.
“என்ன . என்ன நடந்ததெண்டு சொல்லுங்கோவங்கா" கேக்கக் குள்ளயே நாக்கு தடுமாறிற்று போடியாருக்கு.
“உங்க இன்னும் என்ன நடக்கயிருக்கு? கட்டாடிப் பொம்பிளயக் கூப்புட்டு நடு வீட்டுக்குள்ள இருத்திப் பந்தி வைக்கிறயள், தட்டுல சாமானையெல்லாம் வைச்சிக் குடுத்து காலிலையும் விழச் சொல்லுறயள். உங்க இப்பிடியெல்லாம் நடந்ததெண்டு நான் என்ர ஊரில போய்ச் சொன்னால் என்னையுமெல்லே வெளியில விட்டு தலையில தண்ணி தெளிப்பினம்.”
"காலம் காலமா செய்யுற கடமையெல்லோ புள்ள” போடியார் பொஞ்சாதிர குரல் பயத்துல இளுபட்டிச்சி. “என்ன காலம் காலமான கடமை, தட்டுல சாமனக்குடுத்து கட்டாடியின்ர காலுல விழுறதோ கடமை. உங்கட கடமையும் நீங்களும் இந்தக் குடும்பத்துக்குள்ளெல்லோ என்ர மகனையும் விட்டுற்று போகப் போறாராம்.”
மைத்துணி கதைக்கக் கதைக்க பயந்து போய் ஒடுங்கி நிண்டுற்றாள் போடியார் பொஞ்சாதி.
சமைஞ்ச பொண் குடுத்த நிறை கும்பத்த வாங்குன மாதவி நடக்குற புதுனம் என்னெண்டு விழங்காம முளுசிக்கொண்டு சோந்து போய் நிண்டாள். அவளப் பரிதாபமாக பாத்தார் போடி штfї.
“என்னகா ...? என்ன புதுனங்கா இஞ்ச நடக்குது?” எல்லாத்தையும் பாத்துக்கொண்டு நிண்ட, போடியார் மாமன் முறக்கார அப்பச்சி ஓராள் கூட்டத்துக்குள்ள வாயஉட்டார்.
"இஞ்ச பார் அப்பச்சி இது எங்கட குடும்ப விசயம் நீ குடிச்ச யெண்டால் அங்கால போய் குந்திக் கொண்டிரும் பாப்பம்."
போடியார்ர பொஞ்சாதிர தம்பி அப்பச்சிர தோழத் தொட்டு பின்னால தள்ளுறத பாத்துக்கொண்டிருந்த போடியார்ர மருமகன் முன்னால வந்து அப்பச்சிர தோழுல இருந்த கைய விலத்தியுட்டுப் போட்டு.
"இஞ்ச பாரு சித்தப்பு உண்ட பொஞ்சாதிக்காக எண்ட ஊட் டுக்கு வந்த உருத்துக்காரர்ர மேலுல நீ கைவைக்கிறதப் பாத்துக் கொண்டு நான் சும்மா இரிப்பனெண்டு மட்டும் நினைக்காத”
வெள்ளாவி 95

Page 49
"அப்ப நீங்களென்ன எனக்கு அடிக்கப் போறயளோ ?” "டேய் தம்பி ஏண்டா அப்பிடியெல்லாம் நினைக்காய் அவர் என்ன அப்பிடியோடா சொன்னவர். எடியே உண்ட புருசனக் கூட்டிக் கொண்டு அங்கிட்டுப் போவண்டி.”
தம்பிக்காரனச் சமாளிச்சி மகளுக்கிட்டயும் கெஞ்சினாள், போடி யார் பொஞ்சாதி.
"ம் . . . எல்லாத்தையும் கூட்டியுட்டுப் போட்டு இப்ப எதுவும் நடக்காத மாதிரியெல்லே நடக்குதுகள். உதுக்குத்தான் நான் சொன் னன் . . . என்னால வர ஏலாது, ஏலா தெண்டு. கேட்டாத் தானே . . . ஊரையும் சொந்த பந்தத்தையும் பார்க்க வேணு மெண்டையள். இஞ்ச வந்தால் கட்டாடிப் பொம்பளைக்கு சமபந்தி வைச்சிக் காலிலையும் விழுந்து கும்பிடுதுகள். நீங்களும் வேணு மெண்டால் அவளோட இருந்து விருந்து சாப்பிட்டுப்போட்டு கெதியாய் வெளிக்கிடுங்கோ நான் இப்பவே வெளிக்கிடவேணும் சொல்லிப் போட்டன்."
சொல்லிப்போட்டு நடந்தவள அப்பச்சி குறுக்கால போய் நிண்டு நில்லு புள்ள ஒள்ளமெண்டார்.
"இப்ப என்ன நடந்துற்றெண்டு இப்பிடிக்கிளம்பியடிக்காய்கா ?” அப்பச்சி கேட்ட கேள்விக்கு மறுமொழி சொல்லாம அவர முறைச்சிப் பாத்த மாதிரியே நிண்டாள். அப்பச்சியும் உடுறமாதிரி யில்ல.
"என்னகா புள்ள வண்ணாத்திர காலுல உளோணுமெண்டு நாங்கெல்லாம் போளினுல நிக்குற மாதிரியெல்லோ உண்ட கதை இரிக்கி. பக்குவப்பட்ட பொண்ணு மட்டும்தாங்க வண்ணாண்ட காலுல உழந்தெழும்புற . . . அதுதாங்க இந்த ஊர் வழக்கம்."
"எங்கட ஊரில உப்பிடிக் கேவலமான வழக்கமெல்லாம் இல்ல." "அதுக்கு நாங்கன்ெனபுள்ள செய்ய? ... எங்கட ஊரக்கொண்டு போய் உங்கட ஊரோட சேக்கச் சொல்லுறோயோகா ? அதென் னெண்டுகா முடியும் . . . புள்ளே உனக்கொண்டு சொல்லுறன் நீ கோவிக்காம கேக்கோணும் சரியோ? கல்யாணம் முடிஞ்சோடன தாய் தகப்பண்ட காலுல உழுந்தெழும்புறம், படிச்சி முடிச்சோடன வாத்திர காலுல உழுந்தெழும்புறம், கடைசியா செத்த கட்டர காலையும்தான் தொட்டுக்கழுவி கும்புடுறம், இதெல்லாம் ஏனெண்டு தெரியுமோகா உனக்கு. பெத்து வளத்த கடனுக்கும், படிப்பிச்சி ஆளாக்குன கடமைக்கும் இன்னும் மத்த மத்த விசயத்துக்குமெல்லாம் நண்டி சொல்லுற முறைதாங்காபுள்ள அது . . . அது மாதிரித் தான்கா சமைஞ்சவள் வண்ணாண்ட காலுல உழுந்தெழும்புறதும்." "உனக்கு ஒண்டு தெரியுமோகா ? புள்ளை சாமத்தியப் பட்டுட்டா ளெண்டோடன முதலுல ஆருக்குகா சொல்லி அனுப்புறயள். வண்ணாத்திக்குத்தானே? பெத்த தாயே தொட்டுக் கழுவ அரி
96 விமல் குழந்தைவேல்

கண்டப்படுற தூமைச்சீலைய அடிச்சிக் கழுவி புளிஞ்சி காய வைச்சி எடுத்துவாடி எண்டு நாம ஏவி உடுற நேரமெல்லாம் முகம் சுழிக்காம தூமைச் சீலைய வெளுத்துக் கட்டிக்கொண்டு வருவாளேகா வண்ணாத்தி. அந்த வண்ணாத்திக்கிட்ட கேக்குற பாவ மன்னிப்புத்தாங்கா இந்த உழுந்து கும்புடுற சங்கதி.”
"நாங்களும் சாதி பாக்குற ஆக்கள் தாங்கா புள்ள, ஆனா அந்தந்த சாதிக்காரனுக்கு குடுக்குற மரியாதையயும் செய்யோணு மெண்ட கடமையயும் நாங்க ஒருநாளும் செய்யாம உட்டதில்லகா தெரிஞ்சிக்கோ வந்திற்றாயே புள்ள ஏத்திக்கட்டிக் கொண்டு . . . என்னத்தையோ காணாமக் கண்டமாதிரி, என்ன மாதிரி உதறிக் கொட்டிற்றாய்காபுள்ள நீ"
தோழுல கிடந்த துண்ட உதறி மறுகாயும் தோழுல போட்டிற்கு அப்பச்சி போயிற்றார்.
அப்பச்சிர கதையக்கேட்டு வாயடைச்சி நிண்டாக்களும் நிண்ட இடத்துக்கு விசளம் சொல்லாம ஆள் மாறிற்றாங்க. போடியார் பொஞ்சாதியும் மகளும், பேத்தியும் மாதவியும் மட்டும்தான் இப்ப ஊட்டுக்குள்ள.
"பொட்டேய் என்னடி பொட்ட பாத்துக்கொண்டு நிக்காய் தட்டக்குடுத்துப்போட்டு உழுந்தெழும்பண்டி.
அம்மம்மாக்காறி சொன்னோடன தட்டக் குடுத்துப்போட்டு மாதவிர காலுல உழப்போக வாங்குன தட்டோட சட்டெண்டு சுவரோதினையில விலத்தி நிண்டுற்றாள் மாதவி. vn
“வேணாம் தாயி . . . எனக்கிந்த மரிசாதியெல்லாம் வேணாம் தாயி . . .தூம வெளுத்ததுக்கெண்டு நீ மனமிரங்கி தாறத்த வாங்கிக் கொண்டு போறன் தாயி . . .”
வாங்குன தட்டுல இருந்த சாமானுகள ஒரு ஒலப் பொட்டியில போட்டெடுத்திற்றாள்.
"நான் போயிற்று ராவைக்கு தண்ணி வாக்குற நேரம் வாறன் தாயி.”
கிணத்தடி பூவரசமர நிழலுல குந்தியிருந்த நாகமணியக் கூட்டி யெடுத்துக் கொண்டு, ரெண்டு பேருமா நடந்து தரவை ஓதினைக்கு வந்த நேரம் "நாகமணி . . . நாகமணி"யெண்டு ஆரோ கூப்பிர்ற சத்தம் கேட்டு நாகமணி திரும்ப போடியர்தான் வந்து கொண்டி ருந்தார். நாகமணி நிண்டிற்றான். மாதவி நடைய நிப்பாட்டயில்ல. “என்ன போடியார் ஏதும் சொல்ல மறந்துற்றயளோ ...?” தோழுல கிடந்த துண்ட எடுத்து கையால சுறுட்டி குனிஞ்சி வகுத்துக்குள்ள மறைச்சிக் கொண்டான் நாகமணி." "இந்தாடா நாகமணி இதவைச்சிக் கொள்ளுடா” இடுப்பு மடிப்புல இருந்து எடுத்து நீட்டின ரூபாய் நோட்டுக்கள பார்த்து வாங்காம பின்னால நகந்தான் நாகமணி.
வெள்ளாவி 97

Page 50
நடந்துபோய் கொஞ்ச தூரத்துல நிண்டுற்றாள் மாதவி. "டேய் நாகமணி நீ எண்ட குடியூட்டு வண்ணானில்லத்தாண்டா. எண்டாலும் எண்ட பேத்திர சாமத்திய ஊட்டுக்கு நீயும் வந்து வெள்ள கட்டியிரிக்காய் உனக்கும் நான் கடமை செய்யத்தானேடா வேணும், ஒண்டும் சொல்லாம இந்தா இத வைச்சிக்கொள்.”
போடியார் வற்புறுத்திக்குடுத்த ரூபாய் நோட்டுகள வாங்கி இடுப்புல சொருகிக்கொண்டுற்றான் நாகமணி.
"டேய் நாகமணி இன்னுமொரு சங்கதி. . . ஊட்ட நடந்ததுகள பெரிசா எடுத்துக் கொள்ளோணாமெண்டு மாதவிக்கிட்ட சொல்லு gFrf Guust ?”
புளியமரத்தடிக்கு வந்து சேர்ர வரைக்கும் நாகமணியும் மாதவியும் ஒண்டும் கதைச்சிக்கொள்ளயில்ல.
"என்ன மாதவியக்க ஒண்டும் கதைக்காம வாறாய்." “என்னத்தடா கதைக்கச் சொல்லுறாய்.” "நானும் பார்த்துக் கொண்டுதான் வாறன் போடியார்ர பேத்தி சமைஞ்ச நாள்ல இருந்து உன்னத்தான் நோகடிச்சிக் கொண்டிரிக் காங்க."
"காய்ச்ச மரம் கல்லெறி பட்டுத்தானேடா ஆகோணும்.” "அதுக்கு பட்டமரத்துலயோ பட்டையுரிக்கிறது. நீ ஏலாவாளி, உண்ட நிலமை தெரியாம ஆளுாளுக்கு உன்னப்போட்டு என்ன கருக்கக் கருக்குறாங்க."
"என்னடா செய்யச் சொல்லுறாய்? நான் கேட்டு வந்த வரம் அப்பிடிடா . . . டேய் நாகமணி பின்னேரம் போடியார் பேத்திக்கு தண்ணி வாக்குற நேரம் நான் வரயில்லடா நீ தான் போய் வெள்ளயக் கட்டிப் போட்டுவா."
"ஏன் மாதவியக்க?" "போதும்டா . . . நான் பட்டசங்கைக் குறைவும் சிருப்பாணி நாத்தமும் போதும்டா . . . நான் வரயில்லைடா நீ மட்டும் போயிற்று өoипт.”
"அதெப்பிடியக்க குடியூட்டு வண்ணாத்தி நீ வராம நான் மட்டும் போய் வெள்ள கட்டுனா ஒத்துக்கொள்ளுவாங்களோ ? அதுலயும் போடியார்ர பொஞ்சாதிர வாயத் தெரியும்தானே.” "ஒத்துக் கொள்ளாட்டி ராவைக்கு மட்டுமென்ன வேற வண்ணா னையோ புடிக்கப் போறாங்க . . . ஒண்டும் சொல்லமாட்டாங்கடா நீ போயிற்றுவா."
நாகமணி அவண்ட் வாசலுக்குள்ள உளுபட்ட நேரம். "டேய் நாகமணி சொல்ல மறந்திட்டன்டா, சோறு கறி புட்டுக் கழி பலகாரமெல்லாம் இரிக்குடா, வந்து எடுத்துக்கொண்டுபோக மறந்துடாத, இஞ்ச இவள் பரஞ்சோதிய உட்டா வேற ஆரிருக்கா
98 விமல் குழந்தைவேல்

இவ்வளவத்தையும் திண்டுமுடிக்க, அப்பிடியே காசாத்தை பெத்தாக் கிட்டயும் ஒரு சத்தம் சொல்லியுடு, வந்து சோறு கறி கொண்டுபோகச் சொல்லி பாவம் சாகக் கிடக்குற சீவன், நல்ல சோறு கறி தின்னச் சோட்டப்பட்டுப்போய் திரியும் . . .”
"ஒமோம் சொல்லுறன் மாதவியக்க." ஊட்டுக்குள்ள உளுபட்டு தலையில இருந்த பொட்டிய இறக்கி கீழ வைச்சிப் போட்டு வெளியால வந்து வாசல் தென்னையில், சாய்ஞ்சி நிண்டு வானத்த அண்ணாந்து பாத்தாள் மாதவி.
இம்பட்டு நேரமும் கிணத்தடியில் நிண்ட பரஞ்சோதி ஊட்டுக் குள்ள போய் தாய் கொண்டு வந்தது வைச்ச ஓலைப்பொட்டிய சுத்தியிருந்த வெள்ளச்சீலைய அவுட்டு பொட்டிக்குள்ளயிருந்த தின்பண்டங்கள் ஒவ்வொண்டையும் எடுத்து ஆசையா திண்டாள். தண்டதாயிர ஒழுங்கான உழைப்புக்கு கிடைச்ச உண்மையான கூலி இதெண்ட பூரிப்புல பரஞ்சோதி ரசிச்சித் தின்னுறத வாசலுல நிண்ட மாதவி ஆச்சரியமாத்தான் பாத்தாள்.
மாதவிக்கு திடீரென்டு கண்ணெல்லாம் இருண்டு தலை சுத்துறாப் போல இருந்திச்சி. நெஞ்சப் பொத்திக் கொண்டு இரும, ரெத்தம் கலந்த சளிக்கட்டி தொண்டைக்குள்ளயிருந்து வெளியால துள்ளி உழுந்திச்சி. உழுந்த சளிக்கட்டிக்கு மேலால ஒரு புடி மண்ணள்ளிப் போட்டு மூடிற்றாள் இருமல் உடுற மாதிரியில்ல. இருமி இருமி நிலத்துல முகம் புதையுற மாதிரி குனிஞ்ச நேரம் ஊட்டுக்குள்ள இருந்த பரஞ்சோதி ஓடிவந்து வலது புறங்கையால முதுகத் தொட்டுத் தடவி இடதுகையால தாயிர நெத்தியத் தடவி தாங்கிப் புடிச்சிக் கொண்டாள்.
மாதவி மகள நிமிந்து பார்த்தாள். மாதவிர வலது கை முழுதும் சோத்துப் பிசையலா இரிக்கிறத கண்டோன அவளுக்கு குமுறோணும்போல வெப்பிசாரா வந்திற்றுது.
“எத்தின நாள் எத்தின ஊட்டுல இருந்து நல்ல நல்ல சோறு கறியெல்லாம் கொண்டந்திருப்பன்." ஒரு நாளுமில்லாம இண்டைக் குத் தானே நீ தின்னுறாய். உண்ட மனசுக்குள்ளயும் இவ்வளவு சோட்டையோடதானேடி இருந்திருக்காய். வைராக்கியம் புடிச்சவள். வைச்சிக் கட்டிக் கொண்டுதானே இருந்திருக்காள்.
தண்ட மனசுக்குள்ளாலேயே கதைச்சிக் கொண்டாள் மாதவி. “எனக் கொண்டுமில்ல . . . நீ போ மளே . . . சோத்தக் கறியத் தின்னு."
"அத நான் புறகு திண்டு கொள்ளுறன், உனக்கு இப்ப என்னகா செய்யுது? ஏங்கா இப்பிடி வக்கு வக்கெண்டு இருமுறாய்?"
"நான் பெத்தமளே பெத்த தாய்க்கிட்ட பாசம் காட்டுறோயோடி நீ . . இனி, பச்சக்காடு பத்துனாலும் பத்தும்டி . . . என்னால நம்
வெள்ளாவி 99

Page 51
பேலாமத் தாண்டி இரிக்கி . . . நீ . . . போம்மா . . . போய் சோத்தத் தின்னுதாயே.”
"நான் புறகு தின்னுறங்கா ... நீ சொல்லு . . . உனக்கேதும் தண்ணி கிண்ணி வேணுமோகா ?”
"நான் சொல்லுறதக் கேளுமளே, நீ வகுறாற திண்டுபோட்டு எனக்கொரு கோப்பை தேத்தண்ணி தந்தாப் போதும் புள்ள."
சொல்லிபோட்டு மாதவி ஒழும்பிப்போய் மாமரத்துக்கீழ தலை சாய்ச்சிற்றாள். கனகாலத்துக்குப் புறகு பரஞ்சோதி தனக்கிட்ட நெருங்கி வந்ததுல அவள்ற மனசெல்லாம் நிறைஞ்சி போய்ச்சி. பரஞ்சோதிக்கு அதுக்குப்புறகு எதுவும் தின்னுறதுக்கு மனசு வரயில்ல. கையக் கழுவிப்போட்டு சுடுதண்ணி வைச்செடுத்துற்று வந்து தாய்க்கிட்ட குடுத்துப்போட்டு பக்கத்திலேயே இருந்திட்டாள். "கன காலத்துக்குப்புறகு நல்ல சோறுகறியக் கண்டாய். நான்தான் உன்ன மனமாற த்தின்ன உடயில்லையாக்கும்.”
"அதுக்கிப்ப என்னகா, ராவைக்கு தின்னலாம்தானே ?” "ஒம் மளே அத்தாப்பத்திச் சோறு, நாறவைச்சி நாய்க்குக் கொட்டாம திண்டுடுகா ..இவன் நாகமணி வருவான், அவனுக்கும் அந்தச் சருவச் சட்டியில சோறு கறியோட பலகாரத்துலயும் வைச்சிக் குடுத்துடுகா . . . ம் . . . சொல்ல மறந்திற்றன், காசாத்தை பெத்தாக்கும் விசளம் சொல்லியுட்டிருக்கன். வந்தாவெண்டா, என்னத்தையாகுதல் குடு தின்னட்டும். பாவம் ஒத்தியில கிடந்து உத்தரிக்குது. சாகுற சீவன் நல்லதுதின்ன சோட்டப்பட்டெல்லோ அலைஞ்சி திரியுது."
இன்னும் இவடத்துல இருந்தா தாயுர பட்டியல் நீண்டு கொண்டு தான் போகுமெண்டு நினைச்சி பரஞ்சோதி எழும்பிற்றாள்.
"மளே, அவன் நாகமணிக்கு குடுக்க மறந்திடாத, பாவம் அவன் நாய்க்குட்டி மாதிரி ராப்பகலா எனக்கு புறத்தால அலைஞ்சி திரியுறவன்."
"இப்ப அதுக்கேங்கா ஊரெடுக்க கத்துறாய். வேணுமெண்டா பொட்டியோடதான் கிடக்கு. வந்து அள்ளிக் கொண்டு போகச் சொல்லு.”
மகள்ற மனசுர ஆழமறியத்தான் மாதவி அப்பிடிச் சொன்னாள். என்னதான் மகள் கத்துனாலும் இண்டைக்கு மாதவிக்கு பரஞ் சோதியில ஒள்ளமும் கோபம் வரயில்ல.
கனகாலத்துக்குப்புறகு மகளோட நாலு சொல்லு கதைச்ச சந்தோசத்துல மாதவி நித்திரையாகிப் போயிற்றாள்.
100 விமல் குழந்தைவேல்

Tெப்பிடித்தான் நாள் ஒடிச்சோ தெரியாது. போடியார்ர பேத்திர சாமத்தியச் சடங்கு முடிஞ்சி ரெண்டு மாதமாயிற்று.
அண்டைக்கு போடியார் ஊட்டுல இருந்து வந்த மாதவி இண்டைக்கு வரைக்கும் போடியார் ஊட்டுக்கு மட்டுமெண்டில்ல எந்த ஊட்டுக்குமே உடுப்பு எடுக்க போகயில்ல.
இந்த ரெண்டு மாசத்துக்குள்ள நாலு தரம் மாதவி ஆசுப்பத்திரிக்கு போயிற்று வந்திட்டாள்.
முன்னேயப் போல அவளால ஒடியாடி வேலை செய்ய ஏலாது. எழும்பி நடக்குறதுக்கே கயிற்றமா இரிக்கெண்டுதான் சொல்லுறாள். வெளுக்கக் கொண்டு வந்த புடவையெல்லாத்தையும் நாக மணிக்கிட்டதான் குடுத்தனுப்பினாள்.
கன குடும்பங்கள் வேற வண்ணான வைச்சிக் கொள்ளுறமெண்டு நாகமணிக்கிட்ட சொல்லியனுப்பி மாதவிக்கும் விசளம் வந்து சேந்திச்சி. சில குடும்பம் மாதவிக்குப் பதிலா நாகமணிய வெளுக்க வைச்சிக் கொள்ளுறமெண்டுச்சிகள். இந்தப் போடியார் ஊட்டுப் புடவையள் மட்டும் நாகமணி மூலமா மாதவி ஊட்டுக்குதான் இன்னமும் வந்து கொண்டிருக்கு.
தன்னால இனி ஏலாதெண்டு எத்தினையோ தரம் சொல்லியனுப் பிற்றாள். போடியார் பொஞ்சாதி கேக்குறமாதிரியில்ல. எண்டாலும் குடுத் துர்ர புடவையெல்லாத்தையும்கூட நாகமணிதான் வெளுத்துக் குடுத்துக் கொண்டிருக்கான்.
நாகமணி குடுக்கிற அஞ்சோ, பத்தாலோதான் மாதவி ஊட்டு அடுப்புல நெருப்பெரியுது. நிமிர்ந்த நடையும் திடமான உடம்புமா இருந்த மாதவி நல்லா உடைஞ்சிற்றாள். முன்னெல்லாம் அவள்ற மேல் சடைக்குள்ளால பிதுங்கிக்கொண்டு இடுப்புச் சதை வழிஞ்சி கிடக்கும். இப்ப அந்தச் சட்டைக்குள்ள அவள்ற உடம்பு தொங்கு றாப்போலதான் இரிக்கி.
வெள்ளாவி 101

Page 52
எப்ப பாத்தாலும் இருமல். முழங்கால், முழங்கை, முதுகு எண்டு எல்லா இடத்துலயும் மூட்டுவலி வந்து எந்த நேரமும் முனகிக் கொண்டுதான் இருப்பாள்.
பசிக்குது எண்டா . . . பரஞ்சோதி எதையும் தின்னக்குடுத்தா ஒரு புடிய எடுத்து வாய்க்குள்ள வைச்சிப்போட்டு மிச்சத்த பீயப் பாத்தாப்போல ஒதுக்கி உட்டுடுவாள்.
தாயிர கோலத்தப் பாக்குற நேரமெல்லாம் பரஞ்சோதிக்கு மனசுக்குள்ள திக்குத் திக்கெண்டிருந்திச்சி. அடிக்கடி மகள நிமிந்து பாத்து பெருமூச்சினை உடத்தொடங்கிற்றாள் மாதவி.
கடைசியா மாதவிய நாகமணிதான் ஆசுபத்திரிக்கு கூட்டிப் போனான்.
விடியக்குள்ள மாதவியக் கூட்டிப் போனவன், மதியத்தால் கிறுகின நேரம் தட்டத்தனிய வாறதக கண்டு பரஞ்சோதி பதைச் சிற்றாள்.
"கொம்மய வாட்டுல நிக்கச் சொல்லி டாக்குத்தன் சொல்லிற்றான். நாளைக்கு விடியக்குள்ள பாக்கப்போறெண்டு இரிக்கன். என் னெண்டாலம் தின்னக் குடிக்க குடுக்கத் தாறண்டா தந்திரு”
நாகமணி சொன்னதக் கேட்டுக்கொண்டு போய், கிணத்துக் கொட்டுல சாய்ஞ்சி கொண்டாள் பரஞ்சோதி.
“டாக்குத்தன் கேளாத கேள்வியெல்லாம் கேக்கான் . சு. என்ன கொம்பலக் கொம்புறான் . . . கொம்மைக்கு கசமாம் . . . அதுவும் முத்திப் போகுமட்டும் உட்டுவைச்சிரிக்கமாம் எண்டு டாக்குத்தன் கொம்புறான்."
பரஞ்சோதி குனிஞ்சி பாவாடை நுனியால கண்ணத்துடைச்சி விசும்புறத நாகமணி கவனிச்சான்.
“டாக்குத்தன் என்யைக் கூப்புட்டு தனியாகவும் சொன்னான். ஏலுமெண்டா மட்டக்களப்பு பெரியாசுப்பத்திரிக்கு கொண்டுபோய் காட்டெண்டு. கூப்புட்டுப் பாத்தன், கொம்மைதான் அசையமாட்ட னெண்ணுறாவே நான் என்ன செய்ய ?” பரஞ்சோதி குழறத் தொடங்கிற்றாள். "பாவம் மாதவியக்கை. பாய்ஞ்சோயி நான் ஒண்டு சொல்லுறன் நீ கோவிக்காம கேளு சரியோ?”
பரஞ்சோதி எதுவும் பேசயில்ல. "கொம்பை ஆசுபத்திரியில இருந்து வந்ததுக்குப் புறகு நீ அவட மனம் நோகுற மாதிரி ஒண்டும் கதையாத மாதவியக்கைக்கு எந்த நேரமும் உண்ட கவலைதான்."
மூண்டு நாளைக்குப் புறகுதான் நாகமணி மாதவிய ஆசுபத்திரியில இருந்து கூட்டிக்கொண்டு வந்தான். அண்டையில இருந்து இண்
O2 விமல் குழந்தைவேல்

டைக்கு வரைக்கும் எவடத்துக்கும் போகாம ஒருத்தரோடயும் கதை குடுக்காம மாதவி ஒடுங்கிக் கிடந்தாள்.
நாகமணி ஒருத்தன்தான் ஒவ்வொரு நாளும் வந்து மாதவியப் பாத்து கதைச்சிருந்திற்றுப் போவான்.
தாய்க்குத் தேவைப்படுற நேரத்துலெல்லாம் கஞ்சி வைச்சிக் குடுத்துப்போட்டு தாய்க்குப் பக்கத்துலதான் பரஞ்சோதியும் இரிப் штоїт.
இதுக்கிடையில மூண்டுதரம் நடுச்சாமத்தில பூசாரிக்கிட்ட சொல்லி மாதவிய புளியமரத்தடிக்கு கூட்டிப்போய் நூலெல்லாம் ஓதிக்கட்டியாச்சி. எல்லாம் நாகமணிரபாடுதான் எண்டாலுமென்ன, நாளுக்கு நாள் மாதவிர கோலம் குறைஞ்சி கொண்டுதானே போகுது.
வெள்ளாவி 03

Page 53
கோளாவில் கண்ணகை அம்மன் கோயில் வாசல் இலுப்பை மரத்துல கட்டியிருக்கிற பீக்கர் சத்தம் ஆத்துல பட்டு காத்து வாக்குல தீவுக்காலையும் கிடுகிடுத்திச்சி.
கண்ணகை அம்மன் கோயில கதவு துறந்து நாளையோட எட்டுநாள் முடியப்போகுது. நாளைக்கு வைகாசிப் பெளர்ணமி. குளித்தி முடிச்சி நாளைக்கு கோயில் கதவ மூடுனா இனி அடுத்த வருசம் வைகாசிக்குத்தான் கதவு துறப்பாங்க.
புருசன் செத்துப்போயிற்றானாமெண்ட விசளம் அறிஞ்ச கண் ணகி கோபாவேசமா நடந்து வந்து ஊர் ஊராக் குந்தி. குந்துன இடத்துலெல்லாம் கோயிலையும் கட்டி வாங்கி. கோயிலுக்குள்ள போய் கதவ இழுத்து மூடிப்போட்டு நான் இனி ஆரையும் பாக்க மாட்டனெண்டு சொல்ல, இல்ல தாயாரே வருசத்துல ஒரு தரமாகுதல் நாங்க உன்னப்பாக்கத்தான் வேணுமெண்டு சொல்ல அப்ப கண்ணகி ரெண்டு மனசுல சரியெண்டாவாக்கும். ஒவ்வொரு வருசமும் வைகாசி பெளர்ணமிக்கு கதவு துறந்து கண்ணகிய குளிப்பாட்டுவாங்க.
எத்தின காலம் போயும் கண்ணகிக்கு புருசன் இழந்த கோபம் மாறாமத்தானிருக்கு. வருசத்துக்கொரு தரம் கதவு துறக்கிற நேரத்துக் கெல்லாம் தண்ட கோபத்தால ஊருக்குள்ள கனபேருக்கு அம்மை வருத்தத்தையும் குடுத்துருவா கண்ணகி.
கதவு துறந்திருக்கிற எட்டு நாளுக்குள்ளயும் கண்ணகிர சினத்தத் தணிக்க, மனசு குளிர அவள பாராட்டியும், தாலாட்டியும் குளித்திப் பாட்டு பாடுவாங்க.
இந்த எட்டு நாளைக்குள்ளயும் அம்மன்ர நேர்த்திக்கடனக் குடுக்க வாறசனத்துக்கு அளவிருக்காது.
நேர்த்திக் கடனுக்கெண்டு கொண்டு வந்து குடுக்கிற தேங்காய் இளநியெல்லாம் கோயில் வீதியில் மலையாக் குவிஞ்சி கிடக்கும்.
104 விமல் குழந்தைவேல்

வாழைக்கண்டும் தென்னம் புள்ளையும் கோயில் வீதிய திடீர் சோலையாக்கியுட்டிருக்கும். இதெல்லாத்தையும் திரும்பயும் ஊராக் களுக்குத்தான் வித்துக் காசாக்குற.
தங்கத்துலயும், வெள்ளியிலையும் செய்ஞ்சி குடுக்குற உடம்பு உறுப்புகள கோயில் உண்டியல் நிறைச்சிரும்.
கோளாவில் ஊராக்களுற தனித்திருவிழாதான் இது. எண்டாலும் அந்த எட்டு நாளைக்கும் அம்மன் கோயிலுக்குள்ள போய் நிர்வாகம் செய்ய ஊருல ஒரு சில குடும்பங்களுக்குத்தான் உரிமையிருக்கு. இந்த உரிமைய அவங்களா எடுத்தாங்களோ, இல்லாம ஊராக்கள் தான் குடுத்தாங்களோ எண்டுறத ஆரும் கிண்டிக் கிழறுறது இல்ல. இந்த நிர்வாகத்துல போடியார்ர குடும்பந்தான் முக்கியமா இரிக்கும். கதவு துறக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு முந்தியே போடியார் குடும்பம் மச்சம் மாமிசம் தின்னுறத உட்டுடும். கதவு துறந்ததும் போடியாரோட சேந்து அவர்ர குடும்பத்து ஆம்புளையஞம் கோயிலுக்குள்ள எங்கயும் எப்பயும் போய் வரலாம்.
குடுக்குற நேர்த்திக்கடன வாங்குறதும், வாங்குன பூசைப் பொட்டிக்குள்ள பிரசாதம் வைச்சித் திருப்பிக் குடுக்கறதெல்லாம் போடியார் ஊட்டு ஆம்புளையன்ற வேலையாத்தான் இரிக்கும். அதுமாதிரித்தான் குளித்திப் பாட்டு பாடுற சங்கதியும். இந்தக் குளித்திப்பாட்ட ஊருக்குள்ள ரெண்டொரு ஆளத் தவிர வேற ஆராலையும் பாடிட முடியாது. முந்தியெல்லாம் ஆரு பாடிக் கொண்டிருந்தாங்களோ தெரியாது. இப்ப கோளாவில் மாணிக்கர் தான் பாடிக் கொண்டிருக்கார். அவருக்கு பக்கத்துல ஒரு சிசியனையுமெல்லோ வைச்சிக் கொள்ளுறார். மாணிக்கர் கண்ண மூடினாரெண்டா சிசியண்ட கைக்கு குளித்திப்பாட்டு புத்தகம் மாறுமாக்கும்.
பாட்டுக்கும் வசனநடைக்கும் இடையால ஒரு ரெண்டும் கெட் டான் ராகத்துல மாணிக்கர் ஒரு பாட்டப்படிச்சாரெண்டால் அதுக்குசிசியன் கருத்துக் கேட்பார். கருத்தச் சொல்லிப்போட்டு உட்ட இடத்துல இருந்து மறுகாலும் பாட்டத் தொடருவார் மாணிக்கர்.
எல்லாப் பாட்டும் கண்ணகையை புளுகி எழுதுன பாட்டாத் தானிருக்கும். உண்ட புருசன் கோவலனுக்கிட்ட எந்தத் தவறுமில்ல. அந்த மாதவியாலைதான் இதெல்லாம் ஆயிற்று. கண்கெட்ட பாண்டியன் அப்பிடியேன்தான் உண்ட புருசண்ட தலைய அவசரப் பட்டு வெட்டுனானோ? எண்டெல்லாம் இன்னுமின்னும் கண்ணகிய உசுப்பேத்துற மாதிரித்தான் கன பாட்டுகள் பாடப்படும். "கள்ளிருக்கும் பூஞ்சோலை காவிரிப் பூம்பட்டணத்தில் வள்ளலுக்கு நேரான வணிசேகர் தலத்துதித் தோன்
வெள்ளாவி 105

Page 54
தெள்ளுதமிழ் தெரிமுதகர் தேசிகர் மா சாத்தருக்கு உள்ள தொரு புள்ளையுந்தான் உலகு புகழ்
கோவலனார்."
நாலு வரிப் பாட்டுக்குள்ள கோவலண்ட குலம் கோத்திரம் ஊர் பேர் எல்லாத்தையும் சொல்லி மாணிக்கர் பாடுன பாட்டு படுத்துக்கிடந்த மாதவிர காதுலையும் விழுந்திச்சி.
பத்துற அடுப்புல வெள்ளாவிப் பானைய தூக்கி வைச்சாள் பரஞ்சோதி, தோழுல தொங்குன சின்ன புடவை மாராப்ப இறக்கிப் போட்ட நாகமணி.
"இந்தா பாய்ஞ்சோயி கொம்மர ஊட்டுப் புடவையும் இரிக்கி கொதிக்கிற வெள்ளையோட இதையும் போட்டு அவி.”
சொல்லிப்போட்டு நாகமணி போய் மாதவிக்கு பக்கத்துல குந்திக் கொண்டான்.
மாராப்ப பிரிச்சி துணிகள வேறயாக எடுத்த பரஞ்சோதி போடியார்ர ஊட்டுக் குறியில்லாத உடுப்புகளை எடுத்து வேறயாக போடுறதக் கண்ட மாதவி, நாகமணிய உத்துறங்க பார்த்தாள். "ஆ. . . அதையேன்கா அங்கால தூக்கிப் போடுறாய், அதுவும் இனி போடியார் ஊட்டுப் புடவையோட வெளுக்க வேண்டிய துணிதான். மாதவியக்க உனக்கொண்டு சொல்ல மறந்திற்றன், போடியார் பொஞ்சாதிர தம்பிர மகன் யாழ்பாணத்தில இருந்து வந்தாரெல்லோ, அவர் திரும்பிப் போகயில்லையாம். அவர்ர உடுப்புத்தான் அது. இனி போடியார் ஊட்டுக் குறியத்தான் அவர்ர உடுப்புக்கும் குத்தோணும்."
"அப்ப அந்தத் தம்பி போகயில்லாத்தானோடா, இந்தா எண்ட புள்ளையக் கூட்டிக் கொண்டு போகப் போறனெண்டு தாய்க்காறி அண்டைக்கு கிளம்பி அடிச்சாவே, இப்ப என்னவாம் ?”
"அந்தக் கதையெல்லாம் நமக்கெதுக்கக்கா." "அது சரி. . . அத உடு. டேய் நாகமணி, போடியார் பொஞ்சாதி என்னய கேக்கக்கீக்கயில்லையோடா ?”
"கேக்காம என்ன? தம்பிர மகன் புட்டும் இடியப்பமும் தான் தின்னுவாராம். மா இடிக்கக்கூட ஆளில்லையாம்.”
“அதுக்கு நான் என்ன செய்யட்டுமாம்.” "நீ வராட்டியும் உண்ட மகளையாது அனுப்பட்டாம் நெல்லுக் குத்தி மா இடிக்க. அம்மன் கோயில் பந்தலுக்கு வெள்ள கட்டப் போயிருந்தன். இந்த வருசம் போடியார் அந்த யாழ்ப்பாணத்துப் பொடியனத்தான் கோயிலுக்குள்ள எல்லா வேலையயும் முன்னிண்டு செய்ய உட்டிருக்கார். மேல சேட்டுப்போடாம வேட்டியோட மட்டும்தான். பொடியன் நிக்கான். முதுரமரமாதரி உடம்பு பொடி
06 விமல் குழந்தைவேல்

யனுக்கு . . . வாறபோற ஆக்கள்ற கண்ணெல்லாம் அந்தப் பொடிய னுலதானக்க."
"ஆ. . . இதுதான் இப்ப முக்கியமாக்கும். டேய் நாகமணி போற துக்கு முன்ன அந்தத் தெம்பிலி தென்னையில பழுத்துத் தொங்குற தேங்கா குலைய அறுத்துத் தந்திட்டுப் போடா."
"ஏன் மாதவியக்க, எண்ணை உருக்கப் போறயயோ ?” "இல்லடா அம்மாளுக்கு தாறதெண்டு நேந்து வைச்ச தென்னங் குலை, வாறவருசம் இருப்பனோ இல்லையோ இந்த வருசம் குடுத்தாதானே . . . அதான் . . . வெட்டித்தாடா.”
நாகமணி ஒண்டும் கதைக்கயில்லை தேங்காய் குலைய அறுத்து வாசலுல வைச்சிற்றுப் போயிற்றான். மாதவி எழும்பி கிணத்தடியில் போய் குந்திக் கொண்டு "இஞ்சவாபுள்ள ரெண்டு பட்டை தள்ளி யள்ளி தலையில ஊத்து" என்றாள்.
"எங்ககா போகப் போறாய் கோயிலுக்கோ ?” தலையில தண்ணிய அள்ளி வாத்துப் போட்டு தாயிர முதுகத்தேய்ச்சிஉட்டாள் ப்ரஞ் சோதி,
"ஒம் புள்ள இந்த நேத்திக்கடன குடுக்கோணுமெல்லோ ?” "இப்பிடி ஏலாமக்கிடக்கக்குள்ள இந்த வெயிலுக்குள்ள போகப் போறயோகா”
"ம் என்ன செய்யுற ஏலா தெண்டாலும் தயாார்ர கடன குடுத்துரத்தானே வேணும்." "அப்ப நானும் வாறன்." "தண்ட காதுகளயே நம்பாம திரும்பிப் பாத்துட்டாள் மாதவி. தண்ணிய அள்ளி தண்ட தலையிலையும் ஊத்திக் கொண்டாள் பரஞ்சோதி.”
குளிச்சி முடிச்சிற்று தோய்ச்சி மடிச்சிருந்த ஒரு சீலைய உடுத்தி வெள்ள துணியொண்ட ஈரமுடிக்கிடையில செருகி, முறுக்கி கொண்டை போட்டுக் கொண்டு தேங்காய்களையும் கமுகம் பாளை பச்சரிசியெல்லாம் வைச்சி, வெள்ளை போட்டு மூடுன பூசைப் பொட்டியோட மாதவி வெளியால காத்துநிண்ட நேரம் ஊட்டுக்குள்ள இருந்து வெளியால வந்த பரஞ்சோதியக் கண்டதும் அவள்ற கண் கலங்கிற்று.
பேத்திர சாமத்திய சடங்கண்டைக்கு போடியார் பொஞ்சாதி மாதவிக்கு குடுத்த புதுச்சீலையத்தான் பரஞ்சோதி உடுத்தியிருந்தாள். அவள் உடுத்தத்தாலையோ என்னவே அந்தச்சீலை இன்னும் அழகா இருந்திச்சி.
களுத்துலயோ காதுலயோ ஒண்டுமில்ல, ஈரமுடி நீளப் பின்ன லுக்கு இடவுல கிணத்தடி செவ்வரத்தம்பூ, நெத்தியில ஒருவிரல்
வெள்ளாவி 107

Page 55
திருநீற்றுக்கோடு, நடுவுல ஒரு சின்னக் கறுத்தப் பொட்டு, இவ்வளவுத் திலையும்கூட மழை நிண்டாப்புறமும் சொட்டிட்டுக்கொண்டு நிக்குற பூமரம்போல பரஞ்சோதி அழகாத்தான் இருந்தாள்.
ஊட்டுக்குள்ள இருந்து ஒழுங்கைக்குள்ளால வந்து றோட்டுல ஏறி நடந்தநேரம். ஒரு புது உலகத்துக்கு வந்த நினைப்பு மாதிரி இருந்திச்சி பரஞ்சோதிக்கு. கண்ணுல தெரியுற மணிசர் மட்டுமல்ல. அடிக்கிற காத்து, கண்ணுக்கு தெரியுற மரம், செடி, கொடி எல்லாம் கூட தன்னத்தான் பார்க்குற மாதிரி இருந்திச்சி அவளுக்கு.
வெட்கமா? வேதனையா ? சந்தோசமா சங்கடாமா? இதுகள்ல எதெண்டு தெரியாததொண்டு அவளுக்குள்ள ஊடுருவுறத அவள் உணர்ந்து கொண்டாள்.
இம்பட்டு நாளைக்கும் நான் ஏன் இந்த உலகத்த மறந்திருந்தன்? இல்லாட்டி இம்பட்டு நாளும் இருந்த நான் இண்டைக்கு ஏன் வெளியால வந்தன்? இந்த ரெண்டுல ஒண்ட அவள் நினைக் காளென்டுறது அவளுக்கு தெரிஞ்சாலும் எதெண்டுறதுதான் அவளுக்குத் தெரியாம இருந்திச்சி.
பூசைப் பொட்டியும் கையுமா கூடி நிண்ட பொண்டுகளால கோயில் கிணறு மறைஞ்சி போய்ச்சி.
பொம்பளையுள கால் கழுவிப் போட்டு, தண்ணிய தலை யிலையும் பூசைப் பொட்டியிலையும் தெளிக்க, ஆரோ ஒரு பொடி யன் கிணத்தடியில் நிண்டு தள்ளியள்ளிக்குடுத்து உதவி செய்து கொண்டிருந்தான்.
கூட்டம் குறையுமட்டும் பார்த்து நிண்டிற்று, மகள்ற கைய புடிச்சிக் கொண்டு கிணத்துப் படிக்கட்டுல ஏறி கால் கழுவி தலையில தண்ணியத் தெளிச்சிப்போட்டு இறங்கி அம்மன் கோயில் பந்தலுக்குப் போனாள், மாதவி.
மாதவியின் பூசைப் பொட்டிய போடியார்தான் வாங்கினார்.
“இது ஆரு மாதவி மகளோ ?” "வேப்பம் இலைகளை செம்புக்குள்ள உட்டுஆட்டி மஞ்சள் தெளிக்குறபோது போடியார் கேட்டார்."
போடியார் பொஞ்சாதிர தம்பிர மகன்தான் வந்தாக்களுக்கு திருநீறு சந்தனம், குங்குமம் குடுத்தான்.
தாய்க்குப் புறத்தால மறைஞ்சி நிண்ட பரஞ்சோதியும் முன்னால வந்து திருநீறு சந்தணத்த வாங்குன நேரம் வரதண்ட பார்வை மகள்ல பட்டத மாதவி காணாம இல்ல.
சட்டையில்லாத உடம்போட வேட்டிக்கு மேலால சால் வையச்சுத்தி முடிச்சிப் போட்டுக் கட்டிக்கொண்டு நிக்குற வரதன் பரஞ்சோதிய அடிக்கடி பாக்குறத போடியாரும் கவனிக்காமலில்ல.
08 விமல் குழந்தைவேல்

சின்ன மீசை, அடர்ந்த புருவம். மயக்க மருந்து குடிச்சாப் போல மயங்கின இமை, களுத்துல தொங்குற தங்க அரக்கூடும் சங்கிலியுமா ஒருக்கா பார்த்தா இன்னொரு தரம் திரும்பிப் பார்க் கோணும்போல மனசத்தூண்டுற அழகானத்தான் வரதன் பந்தலுக் குள்ள நிண்டான்.
ஏனெண்டே தெரியாம பரஞ்சோதிர கண்ணும் அவன திரும்பத் திரும்ப பார்க்கத் துடிச்சுதுதான்.
கோயில் வீதியில மலைபோல குவிஞ்சி கிடந்த தேய்ங்காயும், சோலையாத் தெரிஞ்ச வாழைக்குட்டிகளும் தென்னம்புள்ளைகளும் பரஞ்சோதிக்கு புதுணமாத்தான் தெரிஞ்சிச்சி. குத்து விளக்கு சுடருகள மாலை கட்டித்தொங்க உட்டாப்போல திருக்கொன்றை மரம் புத்து நிக்குறத கண்ட பரஞ்சோதிர மனசு பரவசப்பட்டுப் போச்சி.
பின்னேரம் ஆனதுதான் தெரியும் சொல்லிவைச்சாப் போல எல்லாரும் வந்து தெருவில் பொங்கல்பானைய அடுப்புல ஏத்த ஒள்ளுப்ப நேரத்துக்குள்ள கோயில் வீதியே புகைமண்டலமாய்ச்சி. அம்மன் கோயில் சுவர் ஒரத்து மணல்குவியலுக்கு பக்கத்துல மாதவியும் பரஞ்சோதியும் வந்து இருந்திற்றினம்.
கடைசி நாள். அதுவும் கதவு பூட்டுறநாள், கடைசிவரைக்கும் இருந்து பூசைபார்த்துப் போட்டுத்தான் போகோணுமொண்டுறது தான் மாதவிர ஆசை. பூசை முடிய நடுச்சாமம் ஆகும் அதுவரையில பரஞ்சோதியயும் வைச்சிக் கொள்ளுறதுக்கு மாதவிக்கு விருப்பமில்ல. பொங்கலெல்லாம் முடிஞ்சி, அத்தன பொங்கல் பானைகளையும் கோயிலுக்குள்ள கொண்டுபோய் முன் பந்தலுல படைச்சதுக்குப் புறகுதான் அம்மனுக்கு நீராட்டி புதுப்புடவை உடுத்துவாங்க. அந்த நேரம் தான் குளித்திலுற உச்சக்கட்டம் தொடங்குற நேரம். ஊருக்குள்ள உள்ள அம்மன் வாலாயம் இரிக்குற ஏழெட்டு பொண்டுகள் திடீரெண்டு உருவேறி தெய்வமாடத் தொடங்கிடு வாங்கள். இந்தப் பொண்டுகள் ஆடத்தொடங்குனா அவங்கள கட்டுப்பாட்டுல வைச்சிருக்கிறதெண்டுறது சும்மாகாரியமில்ல. அதுக்கெண்டே நல்ல பலசாலி இளந்தாரிமார் தயாரா இருப்பானு கள். தெய்வம் ஆடுற நேரம் அம்மாள் கேக்குறன் கோயிலுக்கு இன்னன்னது செய்யோணுமெண்டு இந்தப் பொண்டுகள் கேக்குற நேரம் "செய்யுறம் தாயாரே” எண்டு கோயில் பரிபாலன சபை உறுதி கொடுக்கும்.
இப்பிடி தெய்வம் ஆடுற பொண்டுகள்ற பார்வை தங்கள்லயும் படோணுமெண்டு வேண்டிக்கொண்டு தங்கட கஸ்டங்கள் விலகி நோய் நொடி நீங்கி நல்லா வாழ, அம்மண்ட அருள் கிடைக்காதா எண்டு ஏங்குற ஏழை எழியதுகளெல்லாம் கூட்டத்துக்குள்ள முண்டி யடிச்சி முன்னுக்கு வந்து தெய்வம் ஆடுற பொம்பிளையன்ற
வெள்ளாவி 09

Page 56
பார்வை படுறமாதிரி நிண்டாலும், ஏனெண்டு தெரியாது இந்தத் தெய்வம் ஆடுற பொண்டுகள்ற பார்வை மட்டும் அந்த ஊர் பணக்காராக்கள்லயும், செல்வாக்குள்ளவையள்லயும் தான் படும். மாதவிர மனசுக்குள்ளையும் சின்னதா ஒரு ஆசையும் நம்பிக்கை யும் இருந்திச்சி. தண்டநோய் குறையுமோ, மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுமோ எண்டு தெய்வம் ஆடுற பொண்டுகள்ற வாயால அருள் வாக்கு கேக்கோணுமெண்டு அவளுக்குள்ளயும் ஒரு ஆசை, அந்த ஆசையிலையும் நம்பிக்கை யிலையும்தான் அவள் கோயில் வாசலுல மகளோட குந்திக் கொண்டிரிக்காள். "என்னடி மாதவி, பூமியக்குனிஞ்சி உத்துறங்கப் பாத்துக் கொண்டிரிக்காய், சமைஞ்ச குமர் மாதிரி.”
குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் போடியார் பொஞ்சாதிதான். பூசைப் பொட்டியோட நிண்டுகொண்டிருந்தா. பக்கத்துல பேத்தியும் நீளப்பாவாடை சட்டையோட வெள்ளத்துணி சேத்து முறுக்கிக் கட்டுன ஈரமுடிக் கொண்டையும், நெத்தி நிறைஞ்ச திருநீறு குங்குமமு மெண்டு பக்திப்பரவசமா நிண்ட போடியார் ர பொஞ்சாதிர பார்வையெல்லாம் மாதவிக்கு பக்கத்துல இருக்கிற பரஞ்சோதியில் தான் பட்டிச்சி.
“இதாருடி மாதவி உண்ட மகளோகா?” “ஓம் தாயி . . . புத்தியறிஞ்ச காலத்துக்கு இண்டைக்குத்தான் கடப்படிதாண்டியிரிக்கி."
சொல்லக்குள்ளயும் மாதவிர முகத்துல பூரிப்பு. கொஞ்சம் தோழுல ஏறுன முந்தானைய இழுத்து நிலத்துல ஊண்டியிருந்த கைவரைக்கும் மூடிக் கெண்டுற்றாள் பரஞ்சோதி.
"அதென்னடி . . . உனக்கென்னமோ ஏலாமையெண்டு வெட்டக் கிறங்கேலாம படுக்குறாயாமெண்டு நாகமணி சொன்னான். மெய் தானோகா ?”
தண்ட எலும்பு தெரியுற கோலத்தப் பாத்த புறகும், இப்பிடி வேணுமெண்டு கேக்குற கேள்விக்கு மாதவி ஒண்டும் சொல்லாம இரிக்க, போடியார் பொஞ்சாதிக்கு புரிஞ்சி போய்ச்சி.
“பார்க்கத் தெரியுதுதான். பாதி மனிசியா உடைஞ்சிபோய் இப்பிடி ஆட்டியுட்ட தேவாங்கு மாதிரித்தான் இரிக்காய் . . . இதுக் குள்ள இனியென்ணெண்டுகா நாலு ஊட்டுக்குப் போய் புடவை எடுக்குற م«
“இந்தக் கண்ணகைத் தாயார்தான் கண் துறக்கோணும் தாயி.” "கண்ணகைத் தாயார் கண்துறக்குமட்டும் கஞ்சிக்கென்னடி செய்யப் போறாய்.”
"அதுக்கு . . . இந்த ஏலாமையோட நான் என்ன செய்யட்டும் தாயி?”
110 விமல் குழந்தைவேல்

"உனக்குத்தான் ஏலாமையெண்டா உண்ட பொட்டைக்கு மோடி ஏலாமை? அவள ஊட்டுப் பக்கம் வரச்சொல்லு வந்து நெல்லுப்பாய திலாவி உட்டு, அரிசிய தூள இடிச்சித் தந்துபோட்டு வகுத்துப் பாட்டுக்கு அரிசி தேய்ங்காய எடுத்துக் கொண்டுபோகச் சொல்லுடி” சொல்லிப்போட்டு போடியார் பொஞ்சாதி போக, மாதவி மகளத் திரும்பிப் பாத்த நேரம் பரஞ்சோதி மணலுக்குள்ள விரலுகள உட்டு பெருமணல் புறக்கிக் கொண்டிருந்தாள்
பொங்கல் முடிஞ்சி எல்லாப் பானைகளுக்கும் வாழை இலை போட்டு மூடியாச்சி.
தீய்ஞ்சி போன பொங்கல் வாசனை, பொங்குன பால் அடுப்புக் குள்ள வழிஞ்சி எரிஞ்ச வாசனை, அடுப்ப நூக்க அடுப்புக்குள்ள அடைச்ச தேங்காப்பு கருகுன வாசனையெண்டு எல்லாமாச்சேந்து கோயில் வீதி கமகம எண்டிருதிச்சி.
“என்னடி புள்ள மாதவி இஞ்ச குந்திக் கொண்டிரிக்காய். ஊட்டபோற எண்ணம் கிண்ணம் இல்லையோடி உனக்கு ?”
ஆருதான் அடையாளம் காட்டுனாவோ தெரியாது, தட்டுத்தடவி வந்து குந்திற்றா காசாத்தை பெத்தா, “என்னடி உனக்கு வெருத்தமாம் எண்டு கேள்விப்பட்டன், மெய்தானோடி"
"கேள்விப்பட்டுத்தான் ஊடு ஊடாத் திரியுற நீ ஒருக்கா வந்து எட்டிப் பாத்தாயாக்கும்.”
“எங்கடி இந்தக் கண்ணோட என்ணெண்டுகா நான் வெட்டக் கிறங்கித்திரிய. அது சரி என்னடி உடம்புக்கு . . .?”
“என்னத்த சொல்லுற பெத்தா, எல்லாம்தான் ஒண்டா வந்து உடம்புக்குள்ள பூந்து என்னப்போட்டு ஆட்டுது. ரெண்டு எட்டு வைச்சி நடந்தா மூச்சி வாங்குது. உலைப்பானை கொதிக்கிறாப்போல நெஞ்சிக்குள்ள சளி கறகறண்டுக்கொண்டே இரிக்கி. இனி போற காலம்தானாரிக்கும். என்னத்துக்குத்தான் இந்த உசிர் கிடந்து ஊசலாடுதோ தெரியல்லகா ?”
"ஆ. எடு . . . பட்டமரம் நானெல்லாம் பாலமரமாதிரி இரிக்கன், நீ நேத்துப் புறந்த நீ, பாடையில போற கதைகதைக்காய், சும்மா உட்டுப்போட்டு நல்ல ஊறலக் கீறலப்போட்டுக் குடிடி, உன்னோட ஒத்த வயதுதானே அவள் தெய்வானைக்கு முதுர மரம் மாதிரி எப்பிடி இரிக்காளெண்டு கண்டாய்தானே.”
"இஞ்ச பாரு பெத்தா, எனக்கு ஏலாமையெண்டா அவளுக்கும் ஏலாமை வரோணுமோ? இல்லாம எனக்கு ஏலாமையெண்டு சும்மா சொல்ல எனக்கென்ன சோட்டையோகா ?”
"அதுகும் சரிதான், அத உடு. இப்ப தாயும் மகளும் குந்திக் கொண்டு இரிக்கயளே, மாலைபடப்போகுது ஊட்ட போற எண்ண மில்லையோடி ?”
வெள்ளாவி 11

Page 57
"இல்ல பெத்தா பூசை பாத்திற்றுத்தான் போறெண்டு இரிக்கன்.” “எனக்குந்தாங்கா தாயார குளிப்பாட்டுறத பாக்கச் சோட்டை. எங்கடி மாலைபட்டா கண்தெரியாதே. தட்டுக்கெட்டு உழுந் தெழும்பியெல்லோகா போகோணும். ராவுல இருட்டுல போறவாற வழியெல்லாம் இந்தக் கண்கெட்ட அறாங்குட்டிக் கிளைகள் பேண்டுமெல்லோகா வைச்சிரிக்குங்கள். அந்த நரகல என்னால மிதிக்கொண்ணா. நான் வாறன் நீங்க இருந்து வாங்கோபுன்ன.” "பெத்தோ இப்பயே போறாய்யெண்டா எண்ட புள்ளை பரஞ் சோதியயும் கூட்டிக் கொண்டுபோய் ஊட்டஉட்டுடு பெத்தா. நான் பூசை பாத்திற்று வாறன்."
“ஏனெண்டு தெரியாது” போறதுக்கு விருப்பம் இல்லாமத்தான் இருந்திச்சி. எண்டாலும் தாய் சொல்லிற்றாளே எண்டுறதுக்காக காசாத்தை பெத்தாவுக்கு பின்னால நடந்தாள் பரஞ்சோதி.
அம்மனுக்கு குளிப்பாட்ட மஞ்சள் தண்ணி கரைக்க கிணத்துல இருந்து வெள்ளிக் குடத்தில தண்ணி எடுத்துக்கொண்டு வந்த வரதன் காசாத்தை பெத்தாவோட போற பரஞ்சோதிய ரெண்டு மூணுதரம் திரும்பிப் பார்த்துக் கொண்டுதான் வந்தான்.
பொங்கல் பானையெல்லாத்தையும் உள்ளுக்குள்ள கொண்டு போயிற்று அம்மனுக்கு நீராட்ட ஆயுத்தமாயிற்றாங்க.
கோயில் பந்தலுக்கு முன்னால ஆம்புளையளையும் பொம் பிளையளயும் பிரிச்சுட்டு கயிறு வேலி போட்டபுறகு இடைப்பட்ட மணல் பரப்புல தெய்வமாடுற பொண்டுகளெல்லாரும் தங்கட உடம்புக்குள்ள உருவேத்திக் கொண்டு, கோயில் உள்பகுதிய பாத்த மாதிரி நிண்டு பல்ல நறுவிக்கொண்டிருந்தாங்க.
அம்மனக் குளிர்விக்க மாணிக்கர் குளித்தி பாட்டுகள பய பக்தியோட பாடிக் கெண்டிருக்க பாட்டோட உடுகுச் சத்தமும் கேட்டிச்சி.
நீராடி முடிச்ச அம்மண்ட அலங்காரக் கோலத்த பார்க்கெண்டும், தெய்வமாடுற பொண்டுகள்ற பார்வையில எப்படியாகுதல் பட்டு டோனுமெண்டும் பக்தர் கூட்டம் முண்டியடிச்சி முன்னேறிக் கொண்டிருந்திச்சி.
சனக்கூட்டத்துக்குள்ள அம்பிட்டு தள்ளு முள்ளுப் பட்டுக் கொண்டிருக்கிற மாதவிய ஆரும் கண்டுகொள்ளாட்டியும் அந்தத் தாயார் தன்னப் பார்த்துக் கொண்டுதாணிருக்கிறாள். தயார்ர அருளால தெய்வமாடுற பொண்டுகள் தனக்கிட்டையும் வருவாங்கள். அருள்வாக்கு சொல்லுவாங்கள். எண்ட நம்பிக்கையில மாதவி சனக் கடலுக்குள்ள எதிர் நீச்சல் போட்டுக்கொண்டுதானிருந்தாள். எப்பிடியெல்லாமோ மல்லுக்கட்டி, மலைமோதிப் பாத்தும் மாதவியால முன்னுக்கு வந்து முகத்தக் காட்டிக் கெள்ளேலாமத்தான்
12 விமல் குழந்தைவேல்

இருந்திச்சி. சனத்துக்குள்ளயிருந்து பின்னுக்கு தள்ளியுடப்பட இனி யும் ஒண்டும் செய்யேலாதண்டெண்ணி பின்னால வந்து கிணத்துக்கு பக்கத்துல இருந்த கூத்துக் களரி மோட்டுல ஏறி நிண்டுற்றாள். நேத்துராவு நடந்த அரிச்சந்திர மயான காண்டம் கூத்துமேடை புழுதிபோக இறைச்ச தண்ணி ஈரம் காயாம இப்பயும் குளிச்சியாத் தான் இருந்திச்சி.
"பாண்டியனே எனவுரைத்துப் பைந்தொடியான் நிற்பளவில் தானபேரி மீனவர்கோன் தமிழ் மாற னேதுரைப்பான் ஈண்டு புகழ் புனைசோழ மண்டலமுன் னிடமானால் கூன்டிநண்ட முகிற்குழலாய் கூறாய் உன்குலத்தை என்றான்.” "குலம் கேட்ட மீனவனைக் கொடையிடையார் முகம் நோக்கி நலம் காட்டு மாதவிக்கு நற்பொருளை மிகத்தோற்று மலங்கா நின் றவன்தேவி மணிச் சிலம்பு தனைத்திருடிக் கலங்கா நின்றுயிரிழந்த கள்வர்குலக் கள்ளியென்றாள்.” கண்ணகித்தாயார் நீராடுறதத்தான் பார்க்கக் குடுத்து வைக்க யில்ல. எண்டாலும் அந்த நேரத்துல மாணிக்கர பாடுற பாட்டு காதுல உள, மனமுருகி கண்கலங்கிக் கொண்டிருந்த மாதவி. கோயில் வளவோட சேந்த நெருக்கொழுங்கையப் பாத்தாள்.
இருட்டடைஞ்ச ஒழுங்கைக்குள்ளால சலார் . . . சலார் எண்டு சலங்கை சத்தத்தோட ஆரோ நடந்துவாற மாதிரித் தெரிய மாதவி நல்லா உத்துப் பார்த்தாள்.
நடந்து வாறது ஒரு பொம்பிளை போலத்தான் தெரிஞ்சுது. எண்டாலும் இதென்ன கையில சிகரட்டோட ஒரு பொம்பிளை வாறாளெண்டு மாதவிக்கு ஆச்சரியம். கையில சிகரட், காலுல சலங்கை எண்டு நினைச்சிக் கொண்டிருக்கக் குள்ளால நடந்து வந்த பொம்பிளை நேராக வந்து கூத்துக் களரியில ஏறி அவளுக்கிட்ட வந்த நேரம் தான் மாதவி நல்லா பார்த்தாள். அது பொம்பிளையில்ல பொம்பிளை வேசம் கட்டுன சாமித்தம்பி.
அந்த ஊருக்குள்ள உள்ள நாட்டுக் கூத்துக்காராக்களுக்குள்ள திறமையான, பேர் பெற்ற ஆள் சாமித்தம்பிதான்.
சாமித்தம்பி கூத்தெண்டா எப்பயும் பொண்வேசம்தான் கட்டு வான். திரெளபதியாக, சீதையாக, சந்திரமதியாக அவன் கட்டுன பொண்வேசம் ஊருக்குள்ள அவனுக்கு நல்ல பேரெடுத்துக் குடுத் திருக்கு.
நேத்து ராவு நடந்த அரிச்சந்திர மயான காண்ட கூத்துலயும் சாமித்தம்பிதான் சந்திரமதி. விசப் பாம்பு கடிச்சி செத்துப்போன மகன் லோகிதன தூக்கிக்கொண்டு வந்து, சுடலையில எரிக்க அனுமதி கேட்ட நேரம் சுடுகாட்டுக் காவலாளிக்கு கொடுக்க வேண்டிய கூலிய குடுத்துப்போட்டு உண்ட மகனப் பத்தவை. இல்லாட்டி ஒடுடி எண்டு அரிச்சந்திரன் துரத்தியுட, செத்த
வெள்ளாவி 113

Page 58
மகன பத்தவைக்கக்கூட காசில்லையே எண்டுற வேதினையில மனம் வெதும்பி வெந்து மகனக் கையில "ஏந்திக்கொண்டு சொல்லுடா என் மகனே நமக்கேனிந்த துயரமெண்டு?” எண்டு மகனப் பார்த்து சந்திரமதி சாமித்தம்பி ஒப்பாரி வைச்சி, கால்மாத்தி தாளக்கட்டுப்போட்டு கூத்தாடுன நேரம் களரிய சுத்தியிருந்து கூத்துப் பார்த்த பொண்டுகளெல்லாம் புடவைத் தலப்பெடுத்து வாயுக்குள்ள வைச்சியும் அடக்கேலாம சத்தம் போட்டு குழறிற்றாங்க. அப்பிடிப்பட்ட நடிப்பு சாமித்தம்பிர நடிப்பு.
சாமித்தம்பிர தத்ரூபமான நடிப்பப் பார்த்துக் கொண்டிருக்கிற ஆம்புளையஸ், காசு மாலைகளயும் பூமாலைகளையும் கொண்டுவந்து களரிக்குள்ள ஏறி சாமித்தம்பிர களுத்துல போட்டுருவாங்க களுத்துல உழுந்த மாலைகள கழற்றிக் குடுக்கிற சாட்டுல, களரி இறக்கத்துல இறங்கி குனியுற சந்திரமதி தயார இருக்கிற சாராயத்த வாங்கி மடக்கெண்டு வாயுக்குள்ள ஊத்திக் கொண்டு திரும்பயும் உற்சாகமா ஆடத் தொடங்குவா,
பெரும்பாலும் அடுத்தநாள் காலையில புள்ளையளெல்லாம் பள்ளிக்கூடம் போற நேரத்துலதான் கூத்தும் முடியும். அப்பயும் சிலபேர் வெயிலுக்குள்ள குந்தியிருந்து கூத்துப் பார்த்துக் கொண்டு தானிரிப்பினம்.
காலையில கூத்து முடிஞ்சிற்றாலும், அரிச்சந்திரன் சந்திரமதி யோட இன்னும் கூத்துல பிரதானபாத்திரங்கள் தங்கட அரி தாரத்தையும் ஒப்பனையையும் கலைக்க விருப்பமில்லாம பகல் முளுக்க அந்த ஒப்பனையோட ஊருக்குள்ள திரிவாங்க.
ஆராவது ஒருத்தர் நேத்து ராவு களரியில தப்புத்தாளம் போட்டி ருந்தது தெரிஞ்சா, அந்தத் தப்புத் தாளத்துக்கான திருத்தத் தாளமெண்டு, பகலுல ஊர் சந்தியில ஒரு சின்ன அரங்கேற்றம் நடக்கும். சந்திரமதி எப்படியுமே வாயில சிகரட்டோடயும் கையில போத்தலோடயும்தான் திரிவா.
சாமித்தம்பிக்கு தண்ட ஒப்பனைய கலைக்கிறதெண்டா அது ஒரு சோகமான பேரிழப்பெண்ட எண்ணம். அதனால ஏலுமான வரை அவண்ட பொஞ்சாதி புள்ளைகளுக்கு ஒழிஞ்சி மறைஞ்சி ஒப்பனையோடதான் திரிவான்.
தங்கட மானம், மரியாதையெல்லாம் போகுதேயெண்ட கவலை புள்ளைகளுக்கு. தண்டசிலையையும் சட்டையையும், உள்ளுடுப்பு களையும் வெறியில கம்பியில கொளுவி மனிசன் கிழிச்சிப் போடு வானெண்ட கவலை பொஞ்சாதிக்கு.
கூத்துக் களரியில ஏறி பக்கத்துல நிண்டவனுக்கிட்டயிருந்து வந்த சாராய நாத்தம் முகத்துல அடிக்க ஒள்ளம் விலத்தி நிண்டுற் றாள் மாதவி.
114 விமல் குழந்தைவேல்

"என்ன மாதவி கூத்துக்களரியில தனியா நிக்காய், ஆரு வாறண் டாங்களோ ?”
“வெறியெண்டாலும் விசமமாத்தான் சாமித்தம்பி கதையக்குடுத் தான். மாதவி ஒண்டும் கதைக்கயில்ல."
"இல்லகா ஊட்டபோக ராவு இருட்டுல பயமா இரிக்கும். அதான் ஆரையும் பார்த்துக்கொண்டு நிக்கயோ எண்டுகேட்டன்."
"இல்ல சாமித்தம்பியண்ண பூசமுடியட்டுமெண்டு நிக்கன்." "இல்ல மாதவி போகப் பயமெண்டாச் சொல்லு புளியடிமட்டும் கூட வந்து உட்டுப்போட்டு வாறன்.”
"இதென்னத்துக்குக்கண்ண நான் போய்க் கொள்ள மாட்டனோ ?” "அது சரி கூப்புட்டோடன நீ வாறதுக்கு நானெல்லாம் என்னகா போடியாரோ ?”
"அம்மாள் சந்நிதானத்துல நிண்டுகொண்டு நீ என்ன கதையெல் லாம் கதைக்காய் ?”
“என்னத்த கதைக்கன். நீயெல்லாம் போடியாருக்கு நேந்துட்ட கோழி மாதிரியெல்லோ. நானெல்லாம் நெருங்கேலுமோக உனக் கிட்டஎண்டன்.”
மாதவி ஒண்டுமே கதைக்காம கூத்துக் களரி இறக்கத்துல மெல்ல இறங்கப் பார்த்தாள்.
"அத உடு மாதவி, அது சரி நேத்து ராவு கூத்துப் பாத்தாய்தானே எப்பிடி இருந்திச்சி எண்ட தாளக்கட்டு.”
"நேத்து ராவு நானெங்க கூத்துப் பாத்தன். அந்தக் கூத்த உட இண்டைக்கு இந்தா நீ காட்டுற கூத்து நல்லாத்தானே இரிக்கி."
"கேசமுன் பதமளவுங் கிரணதுப்பு மேனியங்காண் வாசமிகு கொன்றையந்தார் மதயெருக்கின் மலரணிந்தோன் நேசமுடன் அம்பலத்தே நின்று தரு நடமாடும் ஈசனுக்கு தோழனுமாய் இவ்வுலகில் வந்தவன் காண்” மாணிக்கர்ர பாட்டஉத்துக் கேட்டுக் கொண்டிருந்த சாமித்தம்பி, "ஆரு மாணிக்கனோகா இந்தா படிக்கிறது? இதெல்லாம் என்னகா பாட்டு ? நான் ஒரு விருத்தம் எடுத்துட்டா இவனுகளெல்லாம் எந்த மூலைக்கு."
சாமித்தம்பிர கவனம் வேற திசையில திரும்பினத அறிஞ்ச மாதவி மெல்ல இறங்கி சனத்துக்குள்ள தன்னப்புகுத்திக் கொண்ட நேரம்.
“எங்கிருந்தாலும் போடியார் அவர்கள் அவசரமாக அழைக்கப் படுகின்றார்கள். எண்டு பீக்கருல ஒரு குரல் போடியார்க் கூப்பிட்டுக் கொண்டேயிருந்திச்சி.”
வெள்ளாவி 115

Page 59
அம்மாள குளிக்க வார்த்து கோயிலுக்குள்ள கொண்டு போயாச்சி. இப்பயாகுதல் தாயாரப் பார்ப்பமெண்டு நினைச்சி மாதவி எட்டிப் பார்த்தாள். மூலஸ்தானத்துல இருந்த அம்மாள பார்க்கேலாதளவுக்கு பந்தலுக்குள்ள பொங்கல் மலையாக மறைச்சிருந்திச்சி. மாதவி கடைசிவரைக்கும் கண்ணகியப் பார்க்கயில்லத்தான்.
16 விமல் குழந்தைவேல்

பரஞ்சோதிர இப்பத்தய வாழ்க்கைய பார்க்குற நேரத்துலதான் மணிசருக்குள்ள இருக்கிற வைராக்கியத்தையும் பிடிவாதத்தையும் வறுமை எப்பிடி தளர்த்தி விலத்தியுடுறதென்றுறது தெரியுது.
பருவ மறிஞ்ச காலத்துல இருந்து அடைச்ச தட்டுவேலிக்குள்ள தன்ன அடைச்சி மறைஞ்சி சீவிச்சிக் கொண்டிருந்த பரஞ்சோதியால இனியும் தண்டகட்டுப்பாட்ட கடைப்பிடிக்க ஏழ்மை இடம் கொடுக்கயில்ல.
எந்தச் சந்தர்ப்பத்திலையும் தண்ட எண்ணத்துல இருந்து விலகுற தில்ல எண்டிருந்த பரஞ்சோதிர புடிவாதம் தாயிர இருமல் சத்தத் தால தளரத் தொடங்கிற்று.
மரத்துக்குள்ள அம்புட்ட பல் நெழிஞ்ச வாள் குழர்றாப்போல தாயிர தொண்டைக்குழிக்குள்ள சளி கொதிக்கிற சத்தத்துல அவ ளால ராவுல நித்திரை கொள்ளேளலாமத்தான் போயிற்று.
"மத்தியானம் போன இந்தப் பொட்டைய இன்னும் காண யில்லையே எண்ட புள்ளைக்கிட்ட என்னென்ன வேலையெல்லாம் வாங்குறாங்களோ ?”
தண்டபாட்டுல கதைச்சிக் கொண்டு வாசல எட்டிப் பார்த்தாள் மாதவி.
அம்மன் கோயில் குளித்தி முடிஞ்சி அடுத்த கிழமை திடீரெண்டு மாதவி மயக்கம் போட்டுஉழ நாகமணிதான் வண்டில் புடிச்சி ஆசுபத்திரிக்குக் கொண்டு போனான். அண்டைக்கு போன மாதவி ரெண்டு கிழமைக்குப்புறகு எலும்பும் தோலுமா திரும்பி வந்து வாசலுல குந்தியிருந்த நேரத்துலதான் பரஞ்சோதி கேட்டாள்.
"அம்மோ . . . அண்டைக்கு கோயிலடியில வைச்சி போடியார் பொஞ்சாதி என்னய வரச்சொல்லி சொன்னாதானே. வேணு மெண்டா நான் போயி எதுவும் செய்து குடுக்கட்டோ ?”
வெள்ளாவி 117

Page 60
"போய் செய்ஞ்சி குடுக்க உனக்கு என்னமளே தெரியும் ?” “எதெண்டாலும் தெரிஞ்சத செய்யுறனே ... எத்தின நாளைக்குத் தான் நாகமணியயும் நம்பி இரிக்கிற . . . நீ ஒருக்கா என்னோட வந்து போடியார் ஊட்டபோற வழியக்காட்டிப்போட்டு, போடியார் பொஞ்சாதிக்கிட்ட சொல்லிப் போட்டும் வாவன்.”
அண்டைக்கு மகள் கேட்டதும், அதுக்குப் புறகு தானே கூட்டிக் கொண்டு போய் போடியார் பொஞ்சாதிக்கிட்ட மகளஉட்டதும், முதலண்டைக்கே தண்ட கண்ணுக்கு முன்னால மகள் அரிசி இடிச்சதையும், கொள்ளி கொத்துனதையும் பார்த்து மாதவி தனக் குள்ள குழர்றனதும் இப்பயும் கண்முன்னால நடக்குறாப்போலதான் இரிக்கி அவளுக்கு.
போடியார் ஊட்டுக்கு வேலைக்குபோன முதல் கிழமையெல்லாம் பரஞ்சோதிர முகத்துலயோ நடத்தையிலையோ எந்தவிதமான சலிப்போ, கழைப்போ தெரிஞ்சதில்ல. ஆனா இப்பெல்லாம் பரஞ்சோதி வரக்குள்ள சோந்துபோய்த்தான் வாறாள்.
சொத்துப்பத்தோ, படிப்பு வசதியோ எண்டு எதுவுமில்லை யெண்டாலும், தான் கொண்டுவாறத்ததிண்டு குடிச்சிப்போட்டு ஊட்டுக்குள்ளயிருந்த காலத்துல மகள்ற முகத்துல தெரிஞ்ச மலர்ச்சியும் சந்தோசமும் இந்த ரெண்டு மாசத்துல இல்லாமப் போனத நினைக்க நினைக்க மாதவிக்கு வெப்பிசாரமாத்தான் வருகுது.
இப்பெல்லாம் மாதவியால எதுவும் செய்யேலுதில்ல. பரஞ்சோதி ஊட்டஉட்டுப் போற நேரம் எல்லாத்தையும் தாய்க்கு பக்கத்துல வைச்சிப் போட்டுத்தான் போவாள். எட்டுல தப்புல கிணத்தடிக்கு போகோணுமெண்டாக்கூட இடையில ரெண்டொருதரம் இருந் தொழும்பித்தான் போவாள்.
மறுகாயும் வாசலஎட்டிப் பார்த்தாள் மாதவி. பகல் வீச்சுத் தோணியெல்லாம் தரைதட்டி, மீன் கூடையோட தோணிக்கார ரெல்லாம் போறாங்கள். ஆத்தங்கரையோரம் காயப்போட்ட புடவை யெல்லாத்தையும் அவசர அவசரமா ஆக்கள் மடிச்செடுக்கிறது மாதவிர கண்ணுக்கு மங்கலாத்தான் தெரியுது, நாகமணியும் நிப்பானாக்குமெண்டு மனதுக்குள்ள நினைச்சிக் கொண்டாள். "எண்ட தங்கமளே எங்கடி இன்னும் உன்னக்காணயில்ல?” தனக்குள்ளயே முணுமுணுத்துக்கொண்டு மறுகாலும் வாசல எட்டிப் பார்த்த நேரம். இடுப்புல ஒலப்பொட்டிய அணைச்சமாதிரி வந்த பரஞ்சோதி பொட்டிய திண்ணையில வைச்சிப்போட்டு வந்து தாய்க்குப் பக்கத்துல இருந்திட்டாள்.
பரஞ்சோதிர தலைமுடி கலைஞ்சி நெத்திய மறைக்க, நெத்தியில வைச்சிருந்த கறுத்தப்பொட்டு வேர்வையில கரைஞ்சி கோடா வழிஞ்சிருந்திச்சி.
18 விமல் குழந்தைவேல்

“என்ன புள்ள இம்மளவுக்கும் என்னடி செஞ்சநீ போடியார் ஊட்டு வேலையெல்லாம் உண்டதலையில தானாரிக்கும்."
"ஓ . . . சொல்லிப்போட்டுத்தானே போனன். நாளைக்கு உகந் தைக்கு போறாங்க. அதுக்கு மாவிடிக்கோணும், சீனிமா வறுக் கோணும் நேரமாத்தான் வருவனெண்டு.”
நேத்துராவு நித்திரைக் கண்ணுல மகள் சொன்னது இப்பதான் மாதவிர நினைப்புக்கு வந்திச்சி.
"ஒங்கா மளே, நீ சொன்னதான். நித்திரக் கண்ணுல கிணத்துக் குள்ள கதைக்குறாப்போல கேட்டது . . . நல்லா அயத்து போயிட் டன்”
பரஞ்சோதி கொண்டுவந்த ஒலைப்பெட்டிக்குள்ளயிருந்த சாமானு கள ஒவ்வொண்டாக எடுத்து கடை விரிக்கிறாப்போல திண்ணையில பிரிச்சி வைச்ச, தாய சின்னப்புள்ளயப் பார்க்குறாப்போல பார்த்தாள் பரஞ்சோதி.
"நீ என்னம்மா தண்ணி வென்னியக் குடிச்சியோகா ?” "அட என்னய உடு. என்னத்த குடிச்சாலும் தொண்டைக் குள்ளால இறங்குனாத்தானே. நீ கழைச்சுழுந்து வந்திரிக்காய், போய் ரெண்டு பட்டை தண்ணியள்ளி மேலுல ஊத்திப்போட்டு வந்து என்னத்தையும் தின்னுடபுள்ள . . . அதுசரி போடியார் ஊட்டுல எல்லாருமோகா உகந்தைக்கு போறாங்க? போடியார் பொஞ்சாதி என்ன சொன்னா ?”
சீனி மாவுல ஒள்ளத்த அள்ளிவாயில போட்டாள் மாதவி. "என்னத்த சொல்லுற உகந்தைக்கு எல்லாருந்தான் போறாங் களாம். கோழி, குஞ்சுகளுக்கு குறுணல்போட்டு தண்ணி வைக்கட் டாம். நாயப்பாத்துக் கொள்ளட்டாம், வாசலக்கூட்டி பொழுது பட்டா விளக்கு வைக்கட்டாமெண்டெல்லாம் சொன்னவு"
"அப்ப அவையள் உகந்தை நிண்டு வாறவரைக்கும், நீயும் ஒவ்வொரு நாளைக்கும் போய் வரத்தான் வேணுமாக்கும்.”
“என்ன செய்யுற, போகத்தானே வேணும். ஏங்கா போன வருசம் அவங்க எல்லாரும் உகந்தைக்குப் போன நேரம் நீயும்தானே ஒவ்வொரு நாளும் போய் வந்த, இப்ப புதுனமாக் கேக்காய்.”
சொல்லிக்கொண்டே உடுத்தாடைய உடுத்திக்கொண்டு கிணத் தடிக்கு நடந்த பரஞ்சோதிக்கு வகுத்தப் புரட்டிக்கொண்டுவர பூமரத்துக்குக்கீழ குந்தி வகுத்தப் பொத்திக்கொண்டு சத்தியெடுத்துட் டாள். இதக்கண்ட மாதவி பதறிப் போயிற்றாள்.
"எண்ட மளே என்னடி இது? பித்தம்டி. மத்தா மதிய நேரத்துல வெறு வகுத்தோட நடுவெயிலுக்குள்ள நிண்டு . . . குனிஞ்சி நெல்லுத் திலாவியிருப்பாய், பித்தம் தலைக்கேறி இரிக்கும் . . . அதுதான் சத்தி . . . போ . . . போய் குளிச்சிக் கொண்டு என்னத்தையும்
வெள்ளாவி 119

Page 61
வாய்க்குள்ள போடு . எண்டமளே உன்ன கூலித்தொழிலுக்குட்டு நான் உசிரோட இரிக்கோணுமெண்டு இரிக்கே. இதென்ன கொடு 60)ւDծո F"
தாய் புலம்புறத கேட்டுக்கொண்டு, தண்ணிய அள்ளி தலையில ஊத்துனாள் பரஞ்சோதி. திரும்பயும் குமட்டிக்கொண்டுவர தாய்க்குத்தெரியாம கிணத்துல மறைஞ்சி குனிஞ்சி சத்தியெடுத்தாள். தாய் நினைக்கிற மாதிரி உச்சிவெயிலுல நிண்டதால வந்த பித்த, வாந்தியில்ல இதெண்டுறது பரஞ்சோதிக்கு நல்லாத் தெரியும். மெதுவாக தண்ட அடி வகுத்த தடவிப் பார்த்துக் கொண்டாள், பரஞ்சோதி.
கிணத்தடியில நிண்டு திண்ணையில குந்தியிருக்கிற தாயப் பார்த்தாள். எலும்புருகி உருக்குலைஞ்சி போய் குந்திக் கொண்டி ருக்கிற அந்தச் சீவனப் பார்க்க பரஞ்சோதிக்கு அழுகையும் பயமும் மாறி மாறி வந்திச்சி.
கிணத்த எட்டிப் பார்த்தாள் எப்பிடிக் கோடை வந்தாலும் வத்தாத ஆழ்கிணறு, அவள்ற முகத்தக்காட்டிற்று.
போடியார் குடும்பம் உகந்தைக்குப் போறதெண்டவுடன தன்னையும் கூடநாட வேலைசெய்றதுக்கொண்டாகுதல் கூட்டிக்கொண்டு போக மாட்டாங்களோ எண்டுதான் பரஞ்சோதியும் நினைச்சாள். அவள் நினைச்ச மாதிரி நடக்கல்ல. பரஞ்சோதிய ஊட்டுக்காவலுக்கு உட்டுப் போட்டு, போடியார் குடும்பம் மட்டும் உகந்தைக்கு போயிற்றாங்க.
அறுபது மைல்களுக்கப்பால உகந்தையில குடிகொண்டிருக்கிற முருகப்பெருமாண்ட வருடாந்தர தீர்த்தோற்சவத்துக்கு போறதெண்டு றது ஏழை எளியதுகளப் பொறுத்த மட்டுல அது சாமி தரிசன மெண்டா, பணக்காரருக்கு அது ஒரு சுற்றுலாப் பயணம் போலத் தான,
தீர்த்தத்துக்கு முந்தினநாள் ஏழை எளியதுகளெல்லாம் அரசாங்க வஸ்களில போயிருங்கள். சகல சாப்பாட்டுச் சாமான் தட்டு முட்டோட ஒருகிழமைக்கு முன்னமே பணக்காரர் வேன் புடிச்சிப் போய் தங்கிருவாங்க
போடியார் குடும்பம் உகந்தைக்கு போய் இண்டையோட ஐஞ்சி நாளாச்சி.
கோழிகளுக்கு குறுணலையும் தண்ணியயும் வைச்சிப்போட்டு விளக்கக் கொழுத்தி திண்ணையில வைச்சாள் பரஞ்சோதி. ராவாக யில்லைத்தான் எண்டாலும் விளக்கு வைக்கிறளவுக்கு இருள்றவரைக் கும் காத்துக் கொண்டிரிக்க அவள் விரும்பயில்ல.
120 விமல் குழந்தைவேல்

போடியார் ஊட்டு அயலாக்களும் உகந்தைக்குப் போயிருந்ததால அக்கம் பக்கமெல்லாம் சத்தமில்லாம உறங்கிப் போயிருந்திச்சி. வாசலையும் கூட்டியுட்டுப்போட்டு போவமெண்டு நினைச்சி வாசலக்கூட்டத் தொடங்க, மண்ணுல இருந்து ஒழும்பின புழுதிக் காத்து மூக்குலபட்டோடன, அது நல்லா இருந்திச்சி பரஞ்சோதிக்கு. குசினித் துறப்ப மட்டும்தான் போடியார் பொஞ்சாதி குடுத்துட்டுப் போயிருந்தா.
குசினியப்பூட்டி இடுப்புல துறப்ப சொருகிக் கொண்டு நடந்த வளுக்கு, வகுத்தக் குமட்டிக் கொண்டுவர குந்தியிருந்து குனிஞ்சி சத்தியெடுத்த நேரம் தாயிர முகம் கண்ணுக்கு முன்னால நிண்டு பயம் காட்டிற்று. ஐஞ்சாறு நாளா தாய் தன்ன ஒரு மாதிரி சந்தேகமாப் பாக்குறாப் போல அவளுக்குள்ள ஒரு உணர்வு.
கிணத்தடிக்குப் போய் வாயக் கழுவிப் போட்டு வெளியால வந்தவளுக்கு முன்னால வந்த வரதனக் கண்டு திகைச்சிப் போயிற் றாள் பரஞ்சோதி.
போடியார் குடும்பத்தோட உகந்தைக்கு போனவன். தீத்தம் முடிஞ்சி ஆக்கள் திரும்பி வர இன்னும் ரெண்டு நாள் கிடக்கக்குள்ள இவன் மட்டும் ஏன் முந்தி ஓடிவந்திருக்கானெண்டு தனக்குள்ளயே கேட்டுக்கொண்டாள் பரஞ்சோதி.
"வயலுக்கு தண்ணி விடவேணும். அதான் ரெண்டு நாளைக்கு முந்தியே வந்திட்டன்." சொல்லிப்போட்டு, கிணத்தடிக்கு போன வனுக்கிட்ட இடுப்புல இருந்த குசினித் துறப்ப குடுத்துட்டு நடந்தாள், பரஞ்சோதி.
பரஞ்சோதி புளியமரத்தடிக்கு வர மறுகாயும் வகுத்தக் குமட்டிக் கொண்டு வந்திச்சி. புளியமர அடியில் குந்தியிருந்து ஏலுமெண்ட அளவுக்கு சத்தியெடுத்தாள்.
தூரத்துல வாறது ஆரெண்டு அடையாளம் காண முடியா தளவுக்கு இருளத் தொடங்கிற்று. திரும்பிப் பார்த்தாள். ஆரோ வேக்மாக சைக்கிள்ல வாறமா திரித் தெரிஞ்சுது. இனியும் ஏன் இஞ்ச குந்தியிருப்பானெண்டு நினைச்சிக் கொண்டு பரஞ்சோதி எழும்ப, வேகமாக வந்த சைக்கிள் அவள மறிக்க சைக்கிள்ல இருந்தவன் புளியமரத்து வேருல காலக்குத்தி நிண்டு அவளப் போக உடாமத்தடுத்தான்.
நிமிந்து பார்த்தாள் பரஞ்சோதி வரதன்தான் நிண்டு கொண்டிருக் கான். தான் என்னத்தையும் மறந்துபோய் எடுத்துற்று வந்திற்றனோ? அதக்கேக்கத்தானாரிக்கும் வரதன் வந்திருக்கான் எண்டுதான் பரஞ்சோதி நினைச்சாள்.
“என்ன பரஞ்சோதி இதுக்குள்ள இவ்வளவு தூரம் வந்திற்ற?" அவண்ட கேள்விக்கு என்னத்த சொல்லுற தெண்டு தெரியாம நிண்டாள், பரஞ்சோதி.
வெள்ளாவி 21

Page 62
"உகந்தையில போய் நிண்ட ஐஞ்சு நாளும் உன்ர நினைப்புத்தான் எனக்கு. அதான் வயலுக்கு தண்ணியுட வேணுமெண்டு பொய் சொல்லிப்போட்டு ரெண்டு நாளைக்கு முன்னமே ஒடிவந்திற்றன்." வரதன் சொல்லுறதக்கேட்டு இதென்ன புதுனங்கா எண்டுற மாதிரிப் பார்த்தாள் பரஞ்சோதி.
“இவ்வளவு நாளைக்கும் உன்னோட ஒரு சொல்லுக்கூடக் கதைக்கயில்ல. என்ர மாமா மாமியப் பத்தி உமக்குத் தெரியும்தானே. தப்பித்தவறி உம்மோட கதைச்சிட்டால் அதனால உமக்குத்தான் பிரச்சினை வரும். ஆனால் இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச் சிருக்கு."
இப்ப பரஞ்சோதிர மனசுல லேசாப் பயம் ஒட்டிக் கொண்டிற்று. "பரஞ்சோதி, உம்ம முதன் முதலா அம்மன் கோயில் குளிர்த்தி யண்டைக்குத்தான் கண்டன். கண்டநாளில இருந்து உம்மோட நினைப்புத்தான் எனக்கு . . . நினைப்புத்தான் . . . என்ன செய்யுறது ஆசை ஆரவிட்டிச்சி."
சைக்கிளுக்கும் புளியமரத்துக்கும் உள்ள இடைவெளிகுறையுற மாதிரித் தெரிய புளுப்போல நெழிஞ்சிற்றாள் பரஞ்சோதி.
"பரஞ்சோதி ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” "இல்ல கள்ளிப்பத்தைக்குள்ளயிருந்து தாமரக்கிழங்கு அவிச்ச மணம் வாற மாதிரி இரிக்கி அதான் . . . "
"அப்பிடியெண்டா உங்கட ஊருல எதையும் சொல்லுவியளே சொல்லு."
கள்ளிப் பத்தய திரும்பி உத்துறங்கப் பார்த்துக்கொண்டே கேட் டான். புல்லாந்தி மரமும் பூவரச மரமும் ஒட்டிக்கொண்டு நிண்டிச்சி. "இல்ல நல்ல பாம்பு ரெண்டு கள்ளிப் பத்தைக்குள்ள கிடக்குதாக்கும்.”
"அதான் தாமரக் கிழக்கு வாசனையா? இஞ்சபார் நம்மளப் போலதான் மரம் செடிகளும் சுவாசிக்கும். இந்த நேரத்துல ரெண்டு மரம் சுவாசிக்கிற நேரம் வெளியுடற சுவாசக் காத்துர கலவைதான் இந்த மணம்.”
"அதெல்லாம் இல்ல ராவிருட்டு பூச்சிபட்டை கிடக்குற இடம் ..." "அத விடு பரஞ்சோதி. நான் கேட்டத்துக்கு பதிலச் சொல்லு. அண்டைக்கு அம்மன் கோயில்ல உன்னப் பார்த்த நேரம் உன்னிட் டத் தெரிஞ்ச அழகும் பொலிவும் இப்ப இல்லையே. இப்பெல்லாம் ஒரே சோகமா இருக்கிறாயே ஏன்? மாமியும் உன்னிட்ட கணவேலை வாங்குறா எண்டு நினைக்கிறன்.
இந்தக் கேள்விக்கும் பரஞ்சோதி ஒண்டும் சொல்லாமத்தான் நிண்டாள்.
122 விமல் குழந்தைவேல்

"இஞ்சபாரும் பரஞ்சோதி இப்பிடியெல்லாம் கஸ்டப்படத் தேவையில்லை. நீர் சம்மதிச்சால், நீர் வெளியில வராமலேயே வீட்டுக்குள்ள சந்தோசமாய் வாழலாம். எல்லாம் உம்மோட வீடு தேடி வரும். என்ன சொல்றீர்?”
"நான் ஊட்ட போகோணும் உடுங்கோ ஐயா.” வெளியால வர வழி தேடினாள், பரஞ்சோதி. "இஞ்சபாரும் பரஞ்சோதி, உம்மத் தொடவேணுமெண்டால் அது எனக்குப் பெரிய விசமில்ல. கொஞ்ச நேரத்துக்கு முந்தி என்ர வீட்டுல உம்மத்தனியப் பார்த்த நேரமே என்ர ஆசையத் தீர்த்திருக்க முடியும். கட்டாயப்படுத்தியோ கஸ்டப்படுத்தியோ உன்னத் தொடவேணு மெண்டுறது என்ர விருப்பமில்ல. ஏனெண் டால் உன்னில நான் வைச்சிருக்கிறது ஆசைமட்டும் இல்ல, அன்பும்தான்."
வரதன் சொல்லுறதக் கேக்கக் கேக்க பூரிக்கிறதோ, சிரிக்கிறதோ, வேதனைப்படுறதோ, கோபப்படுறதோ எண்டு ஒண்டுமே பரஞ் சோதிக்கு தெரியயில்ல.
“என்ன பரஞ்சோதி நான் கேக்குறன் நீர்பேசாமல் நிற்கிறீர்.” அவன் என்ன கேக்கானெண்டு அவளுக்கு தெரியாமஇல்ல. ஊர் ஊலகத்துக்கு தெரியாம சொந்த பந்தங்கள் அறியாம இருட்டு னதுக்குப்புறகு வந்து உன்னோட படுத்துப்போட்டு விடி யறதுக்கு முன்ன போயிடட்டோ எண்டு அவன்ட மறைமுகமாக் கேக்குறா னெண்டு பரஞ்சோதிக்கு நல்லாப் புரியுது. ஆனா பதில் சொல்லத் தான் அவளுக்கு தெரியுதில்ல.
"பரஞ்சோதி என்ன பயம்? ஏதாவது சொல்லுமன் நான் உம்மிலை ஆசைப்படறன். உமக்கும் விருப்பமெண்டால் சொல்லும்."
இப்ப வரதன் கெஞ்சுறாப்போலதான் கேட்டான். "அம்மை பார்த்துக் கொண்டிருப்பா நான் ஊட்ட போகோணுமய்யா.”
"உம்மோட முடிவச் சொல்லிப் போட்டுப் போ, உமக்கு என்னில ஆசை இருக்கோ இல்லையோ?”
"ஆரும் ஆரிலையும் ஆசைப்படலாம்தான் ஆசைப்படுறதெல்லாம் நடக்குமோ ?”
"இதுல நடக்குறத்துக்கு எதுவும் இல்ல. உம்மோட விருப்பம் என்னெண்டு சொல்லும்."
"asto உலகத்துக்கு தெரிஞ்சா உங்களுக்குத்தானப்யா சங்கைக் குறைவு."
"ஊர் உலகத்துக்கு ஏன் தெரியவேணும் ? நமக்குள்ளயே இருக்கட்டுமே.”
வெள்ளாவி 123

Page 63
"ஐயா நடக்குற காரியத்த நினையுங்கோ ஐயா . . . நாங்கெல்லாம் ஏழை பாழையள். அம்மைக்கு ஏலாதெண்டுதான் நான் கூலிவேலை செய்ய வந்தன். உங்கட ஆசைக்கு என்னயப் பலியாக்கி எங்கட சோத்துல மண்ணள்ளி போட நினையாதைங்க ஐயா. உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் அம்மை சாகக் கிடக்கா கடைசி காலத்துல யாகுதல் கஞ்சி ஊத்தலாமெண்டு நினைக்கன். என்னய உடுங்கய்யா நான் வாறன்.”
"இஞ்சபார் பரஞ்சோதி திரும்பவும் சொல்லுறன் உன்னத்தொட வேணுமெண்டு நினைச்சால் அப்பவே தொட்டிருப்பன். இப்பவும் தொட முடியும். ஆனால் நான் அப்படிப் பட்டவனில்ல. நான் தொட்டதுக்கப்புறம் நீ கஸ்டப்பட்டிடக் கூடாதே என்கிறத்துக்காகத் தான் கேட்டன்."
சொல்லிக்கொண்டு அவளத்தொடுமாப்போல அவன் கிட்டவர பின்னால போனவள்ற தலை புளியமரத்துல முட்ட, தன்னை மறிச்சி நிண்ட சைக்கிள தண்ட பலம் கொண்ட மட்டுக்கும் தள்ளி விலத்தியுட்டுப் போட்டு கட்டுச் சரிவுல இறங்கி நடந்த பரஞ்சோதிய பார்த்துக்கொண்டு நிண்டான் வரதன்.
வரதன் கேட்ட கேள்வியால உடம்புல ஏற்பட்ட படபடப்பு வாசலுக்கு வந்து சேந்த வரைக்கும் அடங்குனாப்போல இல்ல அவளுக்கு.
“என்ன மளே இப்பதானோ வந்த? இன்னாதான் நாகமணியும் போறான்-இவ்வளவு நேரமா அவனோடதான் கதைச்சிக் கொண்டிருந்தன்”
அடுப்பமூட்டி தேயிலைப்பானைய வைச்ச பரஞ்சோதிர காதுல தாய் கதைக்கிறது கேக்குதுதான், எண்டாலும் அவள்ற நினைப் பெல்லாம் வரதனத்தான் சுத்திக்கொண்டிருந்திச்சி. திடீரெண்டு திரும்பயும் வகுத்தக் குமட்டிக் கொண்டுவர அடுப்பங்கரையில சத்தியெடுத்துப்போட்டு நிமிர அவளுக்குப் பக்கத்துல தாய் நிக்கறதக் கண்டு நடுங்கிப் போயிற்றாள்.
“எடியே நானும்தான் அஞ்சு நாளாப் பார்த்துக்கொண்டிருக்கன் புல்லத்திண்ட நாய் மாதிரி நீ சத்தியெடுத்துக் கொண்டிரிக்காய் என்னடி சங்கத?."
வாயால வடிஞ்ச வீணிய துடைச்சிக் கொண்டாள் பரஞ்சோதி, "எடியே முட்டடப்பன் கட்டிருவாய், நான் கேட்டுக் கொண்டிரிக் கன், என்னடி நீ வக்குமுணான் மாதிரி முளிசிக் கொண்டிரிக்காய்.” தாயிர கதையிர கோபமறிஞ்ச பரஞ்சோதி பயந்துபோய் நிமிந்து பார்த்தாள்.
“எடியே சொல்லுடி, எப்படி நீ கடைசியா இடஞ்சலாகி முளு 360T ?”
yy
124 விமல் குழந்தைவேல்

"நினைச்சன் . . . நான் நினைச்சன். என்னடி நீ . . . என்ன புள்ளை உண்டாகியிரிக்கையோடி ?”
தலையக் குனிஞ்சி ரெண்டு முழங்காலுக்கிடையிலையும் மறைச்ச பரஞ்சோதிர தலைமுடிய கொத்தாப் புடிச்சி நிமித்தினாள் மாதவி.
"அடி கண்கெட்டுப்போயிடுவாய், என்னடி இது? எத்தினமாசம்டி இப்ப . . . எடியே வேச ஆரோட படுத்துடி இத உண்டாகியிரிக்காய்?"
"பரஞ்சோதி ஒண்டும் பேசாமத்தான் இருந்தாள்."
“எடியே. சொல்லண்டி தேவடியாளே . . . ஆருடி . . . ஆரோடடி படுத்த ?”
"தெரியாது."
úé נע
தெரியாதெண்டு பரஞ்சோதி சொன்ன ஒரு சொல்லக் கேட்ட உடனேயே மாரடைப்பு வந்தாப்போல நெஞ்சப் பொத்திக் கொண்டு குந்திற்றாள் மாதவி. கனநேரத்துக்கு தாயும் மகளும் ஒண்டும் கதைச்சிக் கொள்ளயில்ல.
“எடியே நாள் ஊரறிஞ்ச வேசைதாண்டி . . . ஆனா . . . இந்த வேசபெத்த புள்ள நீ அறாங்குட்யில்லடி . . . நீ அப்பன் பேர் தெரிஞ்சவள்நி . . உண்ட அப்பன் செம்பன்தானெண்டு இந்த ஊர் உலகத்துக்கு தெரியுமேடி . . . நீ என்னடாஎண்டா அப்பன்பேர் தெரியாத அறாக்குட்டியயோடி வகுத்துல சுமந்து கொண்டிருக்காய். உன்னக் கும்பிட்டண்டி ஆரெண்டு சொல்லுடி.”
மகளக் கையெடுத்துக் கும்பிட்டாள் மாதவி. "உன்னாணச் சொல்லுறங்கா; சத்தியமா எனக்குத் தெரியாதுகா. மாதவிக்குப் பக்கத்துல இருந்த செம்பொண்டு பரஞ்சோதிர முகத்த நோக்கி பறந்திச்சி.
"எடியே ஆத்தோதினையில வண்ணான் கல்லுல நீ குத்தியிருந்த நேரம் காத்துல புள்ளை வந்து வகுத்துல பூந்திருக்காதுடி சொல்லுடி . . . ஆரெண்டு சொல்லுடி ?”
"ஆரெண்டு தெரிஞ்சா சொல்லமாட்டனோகா.” "எண்டைக்குடி இது நடந்திச்சு அதையாதல் சொல்லண்டி.” "நீயும் நானும் அம்மன் கோயில் குளித்திலுக்கு போனண்டிக்கு." "ம் . . . தெரியும் . . . எனக்குத்தெரியும் . . . அவன் சதாசிவம் தாண்டி . . . ராவு இருட்டுல வேலி ஒதினையெல்லாம் அவன் ஒட்டி ஒழிஞ்சு திரியக்குள்ள நினைச்சன். அவன் இப்பிடி ஏதும் சமக்கட்டுப் பாப்பானெண்டு . . . கண் கெட்டுப் போயிருவான் . . . அவன்தாண்டி . . . கல்யாணம் கட்டுணவனெண்டு இந்த ஆமைச்சி அவண்ட பேரச் சொல்லாம இரிக்காளே."
"இல்லகா . . . சதாசிவம் அண்டைக்கு ஊருலயே இல்லகா.”
வெள்ளாவி 125

Page 64
“எவனெவன் எப்பெப்ப ஊருல இருந்தான் இல்லெண்ட கணக் கெல்லாம் வைச்சிரிக்காய். ஆனா ஆருவந்து உன்னோட படுத்துற்று போனானெண்டுறத மட்டும் தெரியாதெண்டுறேயடி என்னடி பம்மாத்துக் கதையிது.”
"ஒழும்பி வந்து மகள்ற முதுகுல நாலைஞ்சி குத்து உட மூச்சி வாங்குன மாதவி அப்பிடியே குந்திற்றாள்.”
“கொல்லுகா . . . என்னக் கொல்லு . . . உண்ட கையால என்ன வெட்டிக் கொல்லு நான் செத்துப் போறன்." ரகசியமாகத்தான் குழர்னாள் பரஞ்சோதி. "உன்னயக் கரை சேர்க்கோணுமேயெண்டு எண்ட வகுத்துல வந்த எத்தினயக் கரைச்சிருக்கனெண்டு உனக்குத் தெரியு மோடி . . . ஒரு அப்பனில்லா தம்பி தங்கச்சி உனக்கு கிடைச்சா நீ உசிரையே உட்டுடுவாயெண்டுதானேடி நான் அத்தினையும் கரைச்சி ஊத்துனன். இப்ப நீயே ஒரு அறாங்குட்டியோட நிக்குற யேடி . . . எடியே சொல்லிப்போட்டன் விடியறத்துக்கிடையில ஆத்துலயோ குளத்துலயோ உழுந்து செத்துடு இல்ல என்ன உசிரோட பாக்கமாட்டாய்.”
மாதவியால அதுக்குமேல எதுவும் கதைக்கேலாம திண்ணைக்குப் போய் இருந்திட்டாள்.
ஆருடி ... ? சொல்லண்டி ... ? எண்டதாயிர கேள்வி பரஞ்சோதிர காதுக்கு கேட்டுக் கொண்டுதாணிரிக்கு. அவளுக்கும் அது ஆராக இருக்கும் எண்டுறத அறியத்தான் ஆவல், நடந்த சம்பவம் நினைப்புல இருக்குத்தான், ஆனாலும் இருட்டுல நடந்ததால எல்லாமே கனவு போலத்தானே தெரியுது அவளுக்கு.
அம்மன் கோயில் குளித்தியண்டைக்கு காசாத்தை பெத்தாவோட விருப்பமில்லாமத்தான் நடந்து வந்தாள், பரஞ்சோதி.
கோயில் வீதி நிறைஞ்ச பொங்கல் பானைகள், கோயிலச் சுத்திக் கிடந்த தென்னம்புள்ளைகளும் வாழைக்கண்டுகளும், பூத்துக் குலுங்கின திருக்கொன்றை மரம். இது எல்லாமே பரஞ்சோதிர மனசுக்குள்ள நிறைஞ்சி பரவசரமூட்டிச்சி. போதாக்குறைக்கு வரதண்ட வாலிப உடம்பும் அவண்ட காந்தப் பார்வையும் கண்ணுக் குள்ளயும் மனசுக்குள்ளயும் நிண்டு அவள என்னவோ செய்யறாப் போல இரிக்க, திரும்பயும் கோயிலுக்கு ஓடவேணும் போல தான் இருந்திச்சி. எப்பிடி இருந்தாலும் அவளால என்னதான் செய்யேலும்.
விருப்பமில்லாம காசாத்தைப் பெத்தாக்கு பின்னால அவள் நடந்து வாற நேரத்துலதான் எதுக்கால சதாசிவம் வந்தான்.
“என்ன பரஞ்சோதி கோயிலுக்குப் போயிற்று வாறாப்போல இரிக்கே.”
26 விமல் குழந்தைவேல்

எண்டைக்குமில்லாம இண்டைக்கு பரஞ்சோதிய வெளியில கண்டு ஆச்சரியப்பட்டுட்டான் சதாசிவம்.
“ஒம் கோயிலுக்குத்தான் . . . நீங்க எங்க கனதுாரப் பிரயாணம் போல இரிக்கி."
"எண்ட வேலை விசயமா கொழும்புக்குப் போறன் வர நாலைஞ்சி நாளாகும் பொஞ்சாதி அம்மர ஊட்டதான் நிக்காள், கண்டை யெண்டால் கதையன் . . . நான் வாறன் பரஞ்சோதி.”
ஊட்டுக்கு வந்து படுக்கைக்கு பாய் விரிக்குமட்டும் பரஞ்சோதிக்க பசிக்கக்கூட மாட்டனெண்டுற்று.
கோயிலிலிருந்து ஊட்டுக்கு வந்த நேரம் தொட்டு அவளுக்கு எந்த வேலையும்கூட செய்யோனுமெண்டுறாப்போல இல்ல. அந்த மூலையில இருந்து இந்த மூலைக்கெண்டு வளவெல்லாம் நடந்து நடந்து அளவெடுத்தவள். வாசலுல நிண்ட தெம்பிலித்தென்னை ஒலை ஒண்டுற ஈக்கிலையெல்லாம் நகத்தால பிரிச்சி பிய்ச்சி உட்டிருந்தது கூட அவளுக்கு தெரியாது. நறும்பித் துப்புன ஈக்கில் நுனிகளுக்கு கணக்கில்ல. இதுக்குள்ள தன்னோட தானே கதைச்சிக் கொண்டுமெல்லோ நடைபழகினாள்.
பாயில சாய்ந்து கண்மூடுன நேரமெல்லாம் வரதண்ட தோற்றமும் அவண்ட கம்பீரமும் அவண்ட பார்வையும் கண்ணுக்குள்ள உழுந்த மண்ணப்போல அவள்ற நித்திரையக் குழுப்பிக் கொண்டே யிருந்திச்சி.
பரஞ்சோதிர உடம்புக்குள்ளையும் மனசுக்குள்ளையும் முதன் முதலா ஏற்பட்ட உணர்ச்சி உண்டாக்குன கிளர்ச்சியால பைத்தியம் போல சிரிச்சிட்டாள்.
சூரியனக் கண்ட உடனேயே சில பூவுகள் விரியுது. சில பூவுகள் சூரியன் போன உடனே விரியுது. இன்னுமொண்டு சூரியன் போற பாதையெல்லாம் முகத்தத் திருப்புது. இதொண்டுமில்லாம காத்துப்பட்டாலே சிலது விரிஞ்சிருமாம். இந்தப் பூவெல்லாம் பொம்பிளையளப் போலத்தான். சில பொம்பிளைகள்ற உடல்நிலை புதுனமானது. பருவக்கோளாறுல கனவு காணக்குள்ள கூட உண்மை யிலயே உடல் உறுப்புகள் உணர்வுக் கிளர்ச்சிர உச்ச நிலையக்கூட தொட்டுடுமாம். பரஞ்சோதிர நிலையும் அண்டுராவு அப்பிடித் தானிருந்திச்சி.
தொட்ட உடன தன்னச் சுருக்கிக் கொள்ளுற தொட்டாச் சிணுங்கி போலத்தான் ஒடுங்கிப் போனாள். நடக்கிறதெல்லாம் கனவெண்டுதான் நினைச்சிக் கிடந்தாள் பயித்தியக்காரி. இந்த நேரம் வரை தன்னத் தவிர ஆரும் தொட்டடறியாத தண்ட ரகசிய அங்கங்கள ஆரோ தொட்டு விளையாடுற உணர்வு தெரிஞ்சும் கூட கனவுதானே அதுவும் வரதன் தானே எண்டுதான் நினைச்சுக் கிடந்தாள்.
வெள்ளாவி 127

Page 65
தான் அனுபவிச்சுக் கொண்டிருக்கிறதெல்லாம் கனவு சுகம்தான் எண்ட நினைப்புத்தான் பரஞ்சோதிக்கு உறுப்புக்களற்ற புணர்ச்சியில ஏற்பட்ட கிளர்ச்சியால உச்சநிலையை அடைய முற்பட்டபோதுதான் அது கனவில்ல நிசமெண்ட உண்மையுணர்வறிஞ்சி திடுக்கிட்டவள் தனக்குமேல் படர்ந்து கிடந்த ஆணுடம்பில இருந்து தன்ன விடு விச்சிக் கெள்ள படாதபாடுபட்டும் தோற்றுத்தான் போனாள். கத்திக் கதற முற்பட்டவள்ற வாயை பொத்தி அடக்கி தான் வந்த வேலைய முடிச்சிப்போட்டு ஒழும்பி இருட்டுக்குள்ள மறைஞ்சி போனவன பின்னால ஒடிப்பிடிச்சி ஆரெண்டு பார்க்கவும் அவளால முடியயில்ல. வந்து போனவன் ஆரு? இண்டு வரைக்கும் அவளுக்கு தெரியாமத்தானிருக்கு.
தாய் சொல்லுறாப்போல அண்டைக்கு வந்தவன் சதாசிவமா இருக்க முடியாது. ஏனெண்டா அவன் அண்டைக்குத்தானே கொழும்புக்குப் போறனெண்டு சொல்லிற்று போனான். ஊருல நிண்டுருந்தாக்கூட சதாசிவம் அப்பிடி நடந்திருக்கமாட்டா னெண்டு றதுல பரஞ்சோதிக்கு சந்தேகமேயில்ல.
வந்தது ஆராக இரிக்கும்? வரதனாக இரிக்குகுமோ ? இண்டு வரை பரஞ்சோதியும் அப்பிடித்தான் நினைச்சிக் கொண்டிருந்தாள். அப்பிடி அவனாத்தான் இரிக்குமெண்டா அத நினைச்சிப் பாக்கவே பரஞ்சோதிர உடம்பெல்லாம் நடுங்கிச்சி. இண்டைக்கு புளியமரத் தடியில நடந்த சம்பவத்துக்குப் புறகு அவளால அப்பிடி நினைக் காமலும் இரிக்கமுடியல்ல. அப்பிடியெண்டாலும் ஏன் அந்த மாதிரி கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டு நிண்டானெண்டும்கூட பரஞ்சோதி எண்ணாமயில்ல.
அண்டைக்கு வந்துபோனவன் வரதன்தானெண்டா அவனக் குத்தம் சொல்ல என்ன இரிக்கு. அவன் வரமாட்டானோ எண்டு ஏங்கி கனவு கண்டு கிடந்து போட்டு, அவன்கூடப்படுத்த நேரம் உட்டுக் குடுத்துப் போட்டு, இப்ப ஏன்கா நான் கிடந்து கிளம்பியடிக் கோணுமெண்டு பரஞ்சோதி தன்னத்தானே கேட்டுக் கொண்டாள். அப்பிடித்தானெண்டாலும் இத எப்பிடிச் சொல்லுற, ஆருக்கிட்ட சொல்லுற என்னெண்டு சொல்லுற, ஆரு நம்புவா, நம்புனாலும் என்னதான் நடந்திரப் போகுது எண்டெல்லாம் ஆயிரம் கேள்விகள் பரஞ்சோதிர மனசுக்குள்ள . . .
என்நேரம் நித்திரையாப் போனாளோ தெரியாது. திடீரென்று கண்முழிச்ச நேரம் நிலா வெளிச்சத்துல வாசல் பகல் போல இருந்திச்சி. வெளியால வந்து அண்ணாந்து பாத்தாள் வானத்துல அனாதரவா நிண்ட நிலா மேகத்துக்குள்ள மெல்ல மறைச்சிற்று.
128 விமல் குழந்தைவேல்

10கள் புள்ளத் தாய்ச்சியெண்டும், அதுவும் அப்பன் பேர் தெரியாத புள்ளையொண்ட மகள் வகுத்துல சுமக்காளெண்டும் ஒரு பேரிடி வந்து மாதவிர நெஞ்சில் உழுந்து இண்டையோட மூண்டுநாள். உள்ள நோயோட இந்தக் கவலையும் சேந்து மாதவிய படுத்த படுக்கை ஆக்கியுட்டிச்சி.
மகள் குடுத்த சுடுகஞ்சிய குடிச்சவளுக்கு தலைப்பாரம் இறங்கு னாப்போல இருந்தாலும் மனப்பாரம் மட்டும் பாறாங்கல்லப் போல இறங்காம ஏறிக் கொண்டிருந்தது.
மூண்டு நாளைக்கு முன்னம் மகள்ல வந்த கோவமும், ஆத்திரமும் இப்ப அவளப் பாக்குற நேரம் பாசமாயும், பரிதாபமாயும் மாறிப் போயிற்று.
நீயும் நானும் அம்மன் கோயில் குளித்துக்குப் போனண்டைக்குத் தாங்கா இது நடந்திச் செண்டு மகள் சொல்லிக் குழர்னது, கிணத்துல உழுந்த குரல் எதிரொலிக்கிறாப்போல திரும்பத் திரும்ப மாதவிர காதுக்கு கேட்டுக் கொண்டுதான் இருந்திச்சி. மூண்டுநாள மண்டயப் போட்டுக்குடைஞ்சி கொண்டுதாணிருந்தாள். இண்டைக்குத்தான் ஒரு துருப்புக் கிடைச்சாப்போல இருந்திச்சு அவளுக்கு.
அண்டு . . . அம்மன் கோயில் குளித்தியண்டைக்கு, சாமித்தம்பிர வெறிக்கதையக் கேக்கேலாம கூத்துக் களரியில இருந்து இறங்கி வந்து, பொங்கல் மேட்டுக்கு அங்கால ஒழிஞ்சி இருந்த அம்மாளப் பார்க்க மாதவி எட்டிப் பார்த்தநேரம் . . . "போடியார் அவர்கள் எங்கிருந்தாலும் அழைக்கப்படுகிறார் . . . போடியார் அவர்கள் எங்கிருந்தாலும் ஆலைய பந்தலுக்கு அழைக்கப்படுகிறார்.” எண்டு கோயில் பீக்கர்ல ஆரோ கனநேரமாக் கத்துனது மாதவிர காதுக்கு இப்பயும் கேக்குறமாதிரித்தான் இரிக்கி.
உடுத்தியிருந்த கந்தல் சீலைய கழட்டி மூலைக்குள்ள போட்டுற்று, வேறொரு பழஞ்சீலைய உடுத்திக் கொண்டு வெட்டக்கிறங்குன
வெள்ளாவி 29

Page 66
வளுக்கிட்ட "எங்க போறாய்” எண்டுகட பரஞ்சோதி கேக்கயில்ல. வாய் துறக்கவே பயப்பிட்டாள்.
உச்சி வெயில் சாய்ஞ்சி, புளிய மரநிழல் ஆத்தங்கரைக்கு நீண்டிருந் திச்சி.
மாதவி, போடியார் ஊட்டு வாசலுக்கு வந்த நேரம் வாசலும் வளவும் ஆருமில்லாம உறங்கிப் போயிருந்திச்சி. உகந்தையில இருந்து வந்த பண்டபாத்திரமெல்லாம் திண்ணையில குவிஞ்சி கிடந்திச்சி.
வாசலுல நிண்டமாதிரியே குசினிக்குள்ளயும் மண்டபத்துக் குள்ளையும் எட்டிப்பார்த்தாள். எவரும் கண்ணுலபடயில்ல. வளவு மூலையில மரத்துல கோடாலி உழுந்தெழும்புற சத்தம் மட்டும் கேட்டுது. வாசலால நடந்து எட்டிப்பார்தாள் போடியார்தான் கோடலியும் கையுமாநிக்கார்,
பத்துப் பதினைஞ்சி வருசத்துக்குமுன்ன நிலத்துக்குள்ள இருந்து எடுத்த பால மரக் கிணத்துக்கொட்டு, அதத்தான் போடியார் புளந்து கட்டிக் கொண்டிருந்தார்.
நாலு பேர் கைகோத்து நிண்டு கட்டிப் புடிக்கக் கூடிய பால மரத்த நடுவால தோண்டியெடுத்து, நூறு வருசத்துக்கு முந்தி கிணத்துக் கொட்டுக்கு பதிச்சாங்களாம். அகலக் கிணறு வேணு மெண்டு புதுக்கிணறுகட்ட பதிச்சிருந்த மரக்கொட்ட வெளியால எடுக்க பதினஞ்சி வருசத்துக்கு முன்னம் ஒருநாள் போடியார் பட்டபாட்ட அண்டைக்கு ஊரே கூடி நிண்டு புதினம் பார்த்திச்சி. மரக் கொட்டுக்கு ரெண்டு பக்கமும் ஒட்டை போட்டு, காதுல தோடு போடுமாப்போல ஒட்டை ரெண்டுலையும் சங்கிலிய மாட்டி யுட்டு, ஊருக்கு றோட்டு வேலை செய்ய வந்த நிண்டூசி மெசின தண்ட செல்வாக்கப் பயன்படுத்தி நடுவாசலுக்கு கொண்டு வந்து மரக்கொட்டுர காதுச் சங்கிலிய நிண்டுசில கொழுவி மரக்கொட்ட வெளியால இழுக்க அண்டைக்கு போடியார் காட்டுன புதுனம் ஒள்ளுப்பம் இல்ல.
பதினஞ்சி வருசத்துக்கு முன்னால வெளியால இழுத்துப்போட்ட பால மரக்கொட்ட, கொள்ளியாக்குற எண்ணம் இப்பதான் போடி யாருக்கு வந்திருக்குப்போல.
கட்டியிருந்த தலைப்பாகைய கழட்டி உட்டு நெத்தி வேர்வைய வழிச்செறிஞ்சவர் திரும்பிப் பாத்த நேரம் தான் மாதவி நிக்குறது தெரிஞ்சுது. தன்னத்தேடி ஒரு நாளும் வராத மாதவி இண்டைக்கு வந்து பக்கத்துல நிக்குறத கண்டோடன ஆச்சரியப்பட்டுத்தான் போனார். அக்கம் பக்கம் ஆரும் நிக்கறாங்களோ எண்டு கிறுகிக் கிறுப் பார்த்தார்.
“என்ன மாதவி இவடத்துக்கு வந்திருக்காய்? அங்கால ஊடு வாசலுக்குள்ள ஒருத்தரும் இல்லையோ?”
30 விமல் குழந்தைவேல்

"இல்ல. . . . இல்லாததும் நல்லதுதான்.” "புள்ளை, புள்ளையளோட அக்கரப்பத்துக்கு கல்யாண ஊடொண்டுக்குப் போயிருக்காள்போல. இவ எங்க . . . ? தலை யெல்லாம் ஈரும்பேனும் புளுத்துப் போயிற்றா மெண்டு உணாவிக் கொண்டு திரிஞ்சா. பார்வதிக் கிட்டத்தான் தலையக் குடுத்துக் கொண்டிருப்பா போய் பாரன்.”
"நான் அவங்க ஒருத்தரையும் பாக்க வரயில்ல. உங்களத்தான் பாக்கவந்தன். நல்லகாலத்துக்குத்தான் ஊட்டுலயும் ஒருத்தரும் இல்லாமஉட்டது."
"என்னத்தான் பாக்க வந்தயோ . . . என்ன மாதவி?” “ஓம் போடியார் உங்களுக்கிட்ட ஒண்டு கேக்கோணுமெண்டுதான் வந்திரிக்கன்.”
“GT 6T 6T 6 Fulub ?” "எண்ட புள்ளை, புள்ளத் தாய்ச்சியா இரிக்காள். அதத்தான் சொல்ல வந்தன்”
"இதென்ன புதுனம், உண்டமகள் புள்ளத்தாய்ச்சியெண்டா அதஏன் எனக்கிட்ட சொல்லுறாய்? அதன்னெண்டு கல்யாணம் இல்லாம புள்ள . . . அதுசரி . . . உண்ட தொழில புள்ளைக்கும் காட்டிக் குடுத்துட்டயாக்கும்."
"எண்ட புள்ளை அப்பிடிப்பட்டவளில்ல எண்ட வாழ்க்கைய போல கிரிச கெட்ட வாழ்க்கை அவளுக்கும் வந்திரக்கூடா தெண்டு தான் எண்டபுள்ளய தட்டுவேலிக்குள்ள வைச்சி வளத்தன்.”
"வளத்தாய் சரி ... வந்துருக்கானே ஆரோ ஒருத்தன்." “வந்தது ஆருமில்ல போடியார் நீங்கதான் அது. எனக்கு நல்லாத் தெரியும்."
“என்ன மாதவி விளையாடுறயோ.” "என்னோட விளைாயடுனது காணாதென்டுதானே, எண்ட புள்ளர வாழ்க்கையிலையும் விளையாடி இரிக்கயள்."
“என்ன எல்லாத்தையும் கண்ணால கண்ட மாதிரியெல்லோ கதைக்காய்."
"கண்ணால காணயில்ல . . . ஆனா அந்தக் கண்ணகை அம் மனான சொல்லுறன். எண்ட புள்ளைக்கிட்ட வந்தது நீங்கதான்."
“Tu u ?” “எப்பவோ . . . ? அம்மன் கோயில் குளித்தியண்டைக்கு” போடியார்ர முகமெல்லாம் வேர்த்து பயந்து போனாலும், அதவெளிக்காட்டயில்ல.
"ஆ. வந்தன் . . நீதானெண்டு நினைச்சன் . இருட்ல ஆரெண்டு கண்டனோ ?”
வெள்ளாவி 131

Page 67
“இப்பிடிச் செய்து போட்டியளே . . . பெத்தயுள்ளைக்கு சமான மில்லையோ? உங்களுக்கு என்னெண்டு மனம் வந்திச்சிப் போடி LITrr.”
"நடந்தது நடந்து போய்ச்சி. இப்ப என்னதான் செய்யச் சொல்லு றாய்.”
“எப்பிடியெல்லாம் வாழோணுமெண்டு, எண்ட புள்ளை கனவு கண்டிருப்பாளோ ?”
"என்னெண்டு ... கவர்மெண்டு ஏசெண்டுத்துரையக் கட்டோணு மெண்டோ மாதவிர மகள் கனவு கண்டிருப்பாள் ?”
"இல்லாதவள். ஏனெண்டு கேக்க நாலுசனம் இல்லாதவளெண்டு தானே இப்பிடியெல்லாம் கதைக்கயள் ?”
"நாலு சனம் இருந்தாமட்டும், என்ன என்னகா செய்யேலும் ?” "ஒண்டும் செய்யேலாதுதான், இப்ப என்ன செய்யட்டுமெண்டு தான் எனக்குத் தெரியாம இரிக்கி."
"உனக்குத் தெரியாததோ . . . பப்பாசிப் பிஞ்சையும் அன்னாசிப் பிஞ்சையும் சப்பித் தின்னக்குடு. ஒரு பங்கு சூர மீன வாங்கி, ஆக்கித் தின்னக்குடு . . . ஒரு துவாலையோட எல்லாம் போயிரும். இதெல்லாம் நான் உனக்குச் சொல்லித் தரோனுமோ ?”
"அப்பிடியெல்லாம் செய்யோணுமெண்டில்ல . . . பெத்தெடுக்கிற புள்ளைக்கு அப்பன் ஆரெண்டு எண்ட புள்ளைக்கு தெரிஞ்சாப் போதும் . . . ஒண்டு சொல்லுறன் போடியார். இப்பிடி ஏழை எழியது கள்ற நெஞ்சில் வைச்ச நெருப்புக்கு நீங்கெல்லாம் ஒரு நாளைக்கு பதில் சொல்லித்தான் ஆகோணும் . . . நான் வாறன்.”
மாதவி போடியார் ஊட்டு வளவ உட்டு வெளியால வந்து நடந்து போன போது பால மரத்துல கோடாலி உழுந்தெழும்புற சத்தம் ஆரம்பிச்சிட்டுது.
எப்பிடித்தான் வருத்தப்பட்டுக் கிடந்தாளெண்டாலும், போடியார் ஊட்டுக்குப்போய் நாலு கேள்வி கேக்கத்தான் வேணுமெண்டு நினைச்சதும், கஞ்சி போட்டு காய வைச்ச புடவைபோல விறைப் பாத்தான் போனாள், மாதவி. ஆனா திரும்பி வரக்குள்ள போடியார் கேட்ட கேள்வியாலயும் அவமானத்தாலயும் தண்ணியில தோஞ்ச பஞ்சப் போல நொய்ஞ்சி போய்த்தான் திரும்புனாள்.
போடியார் ஊட்டுல இருந்து வாற நேரம் தனக்காக வாசலுல காத்துக் கொண்டிருந்த மகளக் கண்டோடன பரிதாபமாஇருந்திச்சி மாதவிக்கு.
நல்லா இருட்டுப்பட்டுற்று. கார்த்திகை விளக்குகளப்போல ஆத்துல மிதக்குற தோணிகள்ல விளக்குகள் ஆடி ஆடி தெரிஞ்சுது. "என்னடி குந்திக் கொண்டிருக்காய் ஏதும் திண்டயோடி ?” தாயிர கேள்விக்கு பரஞ்சோதி ஒண்டும் சொல்லயில்ல.
32 விமல் குழந்தைவேல்

"எடியே அமசடக்கி . . . உனக்கில்லாட்டியும் வகுத்துல கிடக்கிற சீவனுக்கு வேணும்டி . . . ஒழும்புடி . . . போய் என்னத்தயும் தின் னுடி . . . "
பரஞ்சோதி ஒழும்பிப் போய் ரெண்டு கோப்பையில சோத்தப் போட்டெடுத்து வந்து தாய்க்கு ஒரு கோப்பய குடுத்துப்போட்டு அவளும் திண்டாள்.
மகளோட கணக்க கதைக்கோணும் போலயும் என்னென்னமோ எல்லாம் சொல்லோனும் போலபும் இருந்தது மாதவிக்கு. இப்ப ஒண்டும் கதைக்கத் தேவையில்ல எண்டு நினைச்சாளோ என்னவோ ரெண்டு வாய் சோத்தத் திண்டு தண்ணியக் குடிச்சிப் போட்டு திண்ணையில படுத்திட்டாள் மாதவி.
பரஞ்சோதிர மனதுக்குள்ள . . . அது ஆராக இரிக்கும்? எண்ட கேள்வியத் தவிர வேற எந்தக் கேள்வியும் இல்ல. யோசினையில் இருந்தவள் எப்ப கண்ணயந்தாளோ தெரியாது. கண்முழிச்ச நேரம் நல்லா விடிஞ்சிற்றது. திரும்பிப் பார்த்தாள். நித்திரையாக் கிடந்த தாயிர முதுகெலும்பக் கண்டு தாயில பரிதாபப்பட்டாள்.
அடுப்பமூட்டி தேயிலைப்பானையில தண்ணி உட்டு கொதிக் கவைச்சி யொக்குல ஊத்தியெடுத்துக் கொண்டுவந்து தாய்க்குப் பக்கத்துல குந்தியிருந்து -
"அம்மா எழும்புகா, தேயிலை கொண்டாந்திரிக்கன் குடிகா.” தான் சொன்னதக் கேட்டதும் தாய் திரும்பிப் பாப்பாள் எண்டு தான் பரஞ்சோதி நினைச்சாள். மாதவி திரும்பவேயில்ல.
"எலக்கோ அம்மா எழும்பங்கா ... எழும்பி தேயிலை இரிக்கிக் குடியன்."
தாயிர உடம்பத்தொட்டு நிமித்த கட்டையப்போல விறைச்சிச் சரிஞ்சிச்சி மாதவிர உடம்பு.
தாயிர மூக்குல உள்ளங் கையவைச்சிப் பாத்தாள். மூச்சுக்காத்தே இல்ல.
"எலக்கோ, அம்மோ ...” எண்டு பரஞ்சோதி கத்துன சத்தம் கேட்டு ஆத்தங்கரையில நிண்டஆக்களெல்லாம் ஓடிவந்து பரஞ்சோதிர வாசலுல கூடிற்றாங்க. புடவை மாராப்போட ஆத்தங்கரைக்கு போக வந்த நாகமணி பரஞ்சோதி ஊட்டு வாசலுல கூட்டம் கூடி நிக்குறதக் கண்டு ஓடி வந்துட்டான்.
பரஞ்சோதிர குழறுவைச் சத்தம் கேட்டு தாயயும் கூட்டிக் கொண்டு வந்த சதாசிவம் மாதவிர உடம்புல முகம் புதைச்சி அழுது கொண்டிருந்த பரஞ்சோதிய பரிதாபமாப் பார்த்துக் கொண்டு நிண்டான்.
வெள்ளாவி 133

Page 68
விசயமறிஞ்சி தட்டுத் தடுமாறி ஓடிவந்த காசாத்தை பெத்தா பெத்த புள்ளை சொத்தாப் போல மாதவிர தலைமாட்டுல இருந்து மார்புல அடிச்சி ஒப்பாரி வைச்சிக் கொண்டிருந்தா.
சாவூட்டு வேலையெல்லாத்தையும் சதாசிவமும் நாகமணியும்தான் முன்னிண்டு செய்து கொண்டிருந்தாங்கள். செய்யுற வேலையில கவனமா ஒடித்திரியுற நாகமணி அடிக்கொரு தரம் வந்து திண்ணை யில கிடத்தியிருக்கிற மாதவிய பார்த்துட்டுப் போறத்த காசாத் தைப்பெத்தா கண்டுற்றா.
“எடியே மாதவி . . . பாரண்டி வளத்த நாய் முகத்தப்பாக்குற மாதிரி அத்தைக்கொரு தரம் வந்து நாகமணி உன்னையே பாக்கு றானேடி ... எடியே குட்டிபோட்ட பூனைமாதிரி எப்ப பார்த்தாலும் மாதவியக்க, மாதவியக்க எண்டுகொண்டு உனக்குப் புறகாலதானேடி திரிவான் எடி மாதவி, நாகமணி வந்துருக்கான், எழும்புடி.”
காசாத்தைப் பெத்தா ஒப்பாரி வைச்சிக் கொண்டேயிருந்தா. விசயம் கேள்விப்பட்டு வந்த போடியார் நாகமணியக் கூப்பிட்டு ஒரு தொகையக்குடுத்து எல்லாத்தையும் பார்த்து நல்ல படியா முடிக்கச் சொல்லிற்று ஒழுங்கைக்குள்ள நிண்டு தலையக்காட்டிப் போட்டுப் போயிற்றார்.
மாதவிக்கு உடுத்தியுடச் சொல்லி போடியார் பொஞ்சாதி ஒரு புதுப் புடவையக் குடுத்தனுப்பியிருந்தா.
அழுது புரண்டு சோந்துபோன பரஞ்சோதி ஆரும் பார்க்காத நேரம் வகுறுகுமட்டுற நேரமெல்லாம் மூலைமுடுக்குத் தேடிப் போய் சத்தியெடுத்தத ஆரும் காணயில்லெண்டுதான் நினைச்சாள். ஆனா நாகமணி அவளையே கவனிச்சிக் கொண்டிருந்தத அவள் கவனிக்கயில்ல.
34 விமல் குழந்தைவேல்

LDTதவி செத்துப்போய் பத்து நாளாயிற்று. உள்ளவன் செத்தா ஊர்செத்த கணக்கு, இல்லாதவன் செத்தா எலி செத்த கணக்கெண்டு செல்லுறாப்போல, மாதவி செத்த ரெண்டு நாளைக்குத்தான் தேவார, திருவாசக, திருப்புகழ் பாடப்பட்டிச்சி. துக்கச்சோறுகூட ரெண்டு நாளைக்குப் புறகு ஆரும் கொண்டாந்தாங்களில்ல.
ராவுல கூட காசாத்தை பெத்தாவையும் நாகமணியயும் தவிர வேற ஆரும் வந்து பரஞ்சோதிக்கு துணையா இருக்கயில்ல.
பொழுதுசாயுறதுக்கு முன்னமே காசாத்தைப் பெத்தா வந்து திண்ணையில முந்தானைய விரிச்சி முடங்கிக் கொண்டிருவாள். பரஞ்சோதியும் காசாத்தைப் பெத்தாவும் நித்திரை கொண்டாப் புறகு வாற நாகமணி வாசலுல படுத்திற்று விடியறதுக்கு முந்தியே எழும்பிப் போயிடுவான்.
கிணத்தடியில கிடந்த துணிமூட்டய்ப் பிரிச்சாள். பரஞ்சோதி, எல்லாம் போடியார் ஊட்டுப் புடவைகள்தான். போடியார் ஊட் டாக்கள் உகந்தைக்குப் போறதுக்கு முந்திக் கொண்டு வந்தது.
துணிகள எடுத்து வெள்ளாவிப் பானைக்குள்ள திணிச்சபோது வகுத்தக் குமட்டிக் கொண்டுவர நெத்திய ரெண்டு கையாலையும் அமுக்கிப் புடிச்சிக் கொண்டு குனிஞ்ச நேரம் பக்கத்துல நாகமணி வந்து நிக்குறதக் கண்டு நிமிந்து பார்தாள்.
பழைய சீலைத்துண்டுக்குள்ள முடிச்சிக் கட்டிக் கொண்டுவந்த மாங்காய்கள பிரிச்சிப் போட்டான், நாகமணி.
"இந்தா பாய்ஞ்சோயி இதத்தின்னு. வாய்க்கு ருசியா இரிக்கும் எனக்கெதுக்கு இதெல்லாம் எண்டுறாப்போல அண்ணாந்து பார்த்த பரஞ்சோதி சட்டெண்டு தலையக் குனிஞ்சிற்றாள்.
"என்ன பாய்ஞ்சோயி எனக்கு எப்பிடித் தெரியுமெண்டு நினைக் கயோ ? சாகிற அண்டைக்குப் பகல், எல்லாத்தையும் எனக்கிட்ட சொல்லிக் குழறிச்சி மாதவியக்கை."
py
வெள்ளாவி 135

Page 69
"பரஞ்சோதி எதுவும் கதைக்காம வெள்ளாவி அடுப்புக்குள்ள பூக்கன் நெட்டியொண்ட பூத்தினாள்."
"பாய்ஞ்சோயி பெயித்தியக்காரத்தனமா எதையும் செய்ஞ்சி கிஞ்சி போடாத ...நீ ஊடுஊடாப் போய் புடவை எடுத்து வெளுக் கோணுமெண்டில்ல . . . நான் இரிக்கன் என்னால ஏண்ட வரைக்கும் பாடுபட்டு கொண்டு வாறத்துல நீ நல்லா ஆக்கிக் காய்ச்சி தின்னு. விரும்புனா எனக்கும் ஒரு புடிதா, திண்டு போட்டு இந்தத் திண்ணை யிலயே சுறுண்டு கொள்ளுறன். அதுவும் உனக்கு விருப்பமில் லெண்டாச் சொல்லிரு. நான் எண்ட ஊட்டயே படுத்துக் கொள்ளு றன்.”
இதுக்கும் பரஞ்சோதி ஒண்டும் சொல்லயில்ல. “டேய் நாகமணி, அந்த மாதவிப் பொட்டை உசிரோட இருந்த வரைக்கும், உனக்குத்தான் மகளக் கட்டிக்குடுக்கப் போறனெண்டு சொல்லிக்கொண்டு திரிஞ்சாள். அவள் நினைச்சதுதான் நடக்கயில்ல போய்ச் சேந்திட்டாள். பாவண்டா . . . அவள்ற மகள். அவள கையுட்டுடாதடா செத்த ஊட்டுல படுத்திறனெண்டு நினையாம இப்பிடியே இஞ்சயே இருந்து கொள்ளுடா மனே . . . உனக்குப் புண்ணியம் கிட்டும்.”
நேத்து ராவு காசாத்தை பெத்தா கதைச்சது பரஞ்சோதிர நினைப்புல வந்திச்சி.
“மாதவியக்கை இவ்வளவு கெதியா போயிருமெண்டு ஆரு நினைச்சா? திரும்புற நேரமெல்லாம் மாதவியக்கை திண்ணையில குந்தியிருக்கிற மாதிரித்தானிரிக்கி. உன்னத்தாண்டா நம்பியிரிக்கன். எண்டபுள்ளய கையுட்டுடாதடா நாகமணியெண்டு அத்தைக்கொரு தரம் சொல்லும்."
வெள்ளாவிப் பானைய இறக்கி வைச்சி, கம்புச் சுள்ளி யொண்டால துணிகள எடுத்து வெளியால போட்டாள் பரஞ்சோதி. "பாய்ஞ்சோயி கேக்கனேயெண்டு கோவிக்காத அவன் ஆரெண்டு தெரிஞ்சா சொல்லு? நான் சேத்து வைக்கன். இல்லாட்டியும் ஒண்டுமில்ல. நானிரிக்கன் கவலைப்படாத, என்ன பாக்காய் இதுவும் எப்பிடித் தெரியுமெண்டோ ? அண்டைக்கு ராவு நீயும் கொம்மையும் குத்துவாரப்படக்கோள எல்லாத்தையும் வாசலுல நிண்டு கேட்டுக் கொண்டுதாணிருந்தன்."
நாகமணி புடவை மூட்டைய எடுத்துக் கொண்டு ஆத்தங்கரைக்கு போயிற்றான்.
ஆறுன துணிகள கிணத்துத் தண்ணியில கழுவி முறுக்கிப் புழிஞ்சி பிரிச்சி கொடியில காயப் பேgடக்குள்ள "என்னடி பொட்ட செய்யுறாய்” எண்டு கேட்டுக்கொண்டு வந்த காசாத்தை பெத்தா வாசலுல குந்திக் கொண்டாள். பரஞ்சோதி பெத்தாட கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லயில்ல.
136 விமல் குழந்தைவேல்

கடைசியா உதறிப் போட்ட சேட்டுக்குக் கழுத்தப் பார்த்தாள். குடும்பக்குறியக் காணயில்ல. எண்டாலும் அது வரதண்ட சேட் டெண்டுறது அவளுக்கு நல்லாத் தெரியும்.
வகுத்துக்குள்ள என்னமோ ஊந்து போற மாதிரி உணர்வொண்டு தெரிய, அவளையும் அறியாம அவள்ற கை, வகுத்தத் தடவிப் பார்த்திச்சி.
குறியில்லாம கொடியில காயுற துணியப்போலத்தான் அப்பன் பேர் தெரியாம புள்ளையொண்டு தண்ட வகுத்துல வளருதெண்டுறத நினைக்கக்குள்ள எதிர்காலத்தப் பற்றிய பயமும் அவளுக்குள்ள உண்டாகி மனசு உதறத் தொடங்கிற்று.
குறியில்லாட்டியும் கொடியில காயுற துணி இன்னார்ர துணி தானெண்டு எப்பிடியும் கண்டுபிடிச்சிடலாம், ஆனா இந்தத் தொப்புள்கொடியில தொங்குற உசிருக்கு அப்பன் ஆரு ? ஆரோ வைச்ச பயிருக்கு நாகமணியக் காலம் பூரா தண்ணி ஊத்தச் சொல்லுறது எந்த வகையில சரியாகும். இப்பிடி எத்தினையோ கேள்விகள் பரஞ்சோதிர மனசப் போட்டு குடைஞ்சி கொண்டி ருந்திச்சி.
பொழுது சாயிற வரைக்கும் காசாத்தைப் பெத்தா மாமர நிழல்ல குந்திக் கொண்டிருந்தா.
அடுப்படி, கிணத்தடி, பூமரத்தடியெண்டு ஒவ்வொரு இடத்துலயும் பரஞ்சோதி சத்தியெடுத்துக் கொண்டு திரியிறத்த பெத்தாவும் பார்த்துக் கொண்டுதாணிருந்தா.
ரெண்டு தரம் பெத்தாவுக்கு, தேத்தண்ணி குடுத்திற்றாள் பரஞ் சோதி, பழஞ்சோறும், தேங்காப்பூ வெங்காயமெல்லாம் இரிக்கி தாறன், ஒள்ளுப்பம் தின்னங்கா பெத்தா, எண்டு எத்தனையோ தரம் கேட்டும், எனக்கொண்டும் வேணாங்கா எண்டிற்றா பெத்தா. ஏனிந்த மனிசி அட்டை ஒட்டுன மாதிரி குந்திக் கொண்டிரிக்கு, எண்டு பரஞ்சோதிக்கு ஒரே யோசனை.
கொடியில காய்ஞ்சி, காத்துல ஆடிக் கொண்டிருக்கிற துணிகள எடுத்து, தோளுல தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள், பரஞ் சோதி.
“எடியே பொட்ட இஞ்சால ஒள்ளம் திரும்புடி பாப்பம். என்னடி உண்ட முகமெல்லாம் வெளிறிப் போயிரிக்கி ?”
பெத்தா கேட்டது காதுல உளாதது போல நடந்தவள, கூப்புட்டு நிப்பாட்டினா பெத்தா.
“எடியே, என்னடி ஒரு மாதிரியா இரிக்காய்? கண்ட கண்ட இடத்துல எல்லாம் ஒங்களிச்சிக் கொண்டு திரியுறாய் என்னடி புதுனம்.”
"அது ஒண்டுமில்லகா பெத்தா நீ உண்ட வேலையப்பாரு.”
வெள்ளாவி 137

Page 70
துணிகளுக்குள்ளால ஊர்ந்து போன கட்டெறும்பொண்டு பரஞ் சோதிர களுத்துல குத்த "எண்டம்மோ” எண்டு கொண்டு குந்திற்றாள் பரஞ்சோதி.
"சொல்லுடி, எப்படி நீ கடைசியா இடஞ்சலாகி முளுகுன?”
"ஏங்கா கேக்காய்? உனக்கு வேற வேலையில்லையோகா ?”
“பொட்ட, நீ புள்ள உண்டாகியிரிக்காய் தானே ?”
f
ஆ. . . உனக்குப் பைத்தியம்.” "ஒருத்திர நடையப் பாத்தே அவள் எத்தின மாசப் புள்ளத்
தாச்சி எண்டு சொல்லுறவளுடி நான். எனக்கிட்ட உண்ட மாசா
லையக் காட்டாத, சொல்லுடி? எத்தின மாசம்டி ?”
ம் . . . மூண்டுமாசமாரிக்கும்.” சொன்ன பரஞ்சோதிர முகத்துல அவளுக்கும் தெரியாம வெட் கம் ஒட்டிக் கொண்டிற்று.
ஆத்தங்கரை புல்தரையில விரிச்சிக் காயப்போட்ட புடவைகள மடிச்சி மாராப்புக்கட்டி தோழுல போட்டுக்கொண்டு பரஞ்சோதி ஊட்டு வாசலால நடந்துபோன நாகமணிய சத்தம் போட்டுப் கூப்புட்டு.
“டேய் நாகமணி நில்லுடா செய்யுறதையும் செய்து போட்டு அவுட்டுட்ட மாடு மாதிரி எங்கடா திரியுறாய்?"
“என்னகா பெத்தா உண்ட பாட்டுல கத்திக் கொண்டிரிக்காய், உடுப்புக்குக் கரி போடோணும் ... நேரமாகுது. நான் போகோணும் என்னகா விசயத்தச் சொல்லன்."
"எண்ட புள்ளய நாகமணிக்குக் கட்டிக் குடுக்கப் போறனெண்டு அவள் மாதவி உசிரோட இரிக்குமட்டும் சொல்லித் திரிஞ்சாளே அது நினைப்பிருக்கோடா உனக்கு?”
"அதுக்கென்னகா இப்ப.” "அதுகென்னவோ ... அவள் கட்டிவைக்கிறதுக்கிடையில நீங்க ரெண்டுபேரும் கட்டிபுடிச்சி விளையாடியிரிக்கயள் போல."
"எலக்கோ, வாய மூடிக்கொண்டு எழும்பிப் போய் உண்ட வேலயப் பாருகா."
கிணத்தடியில நிண்ட பரஞ்சோதி காசாத்தை பெத்தாவுல ஆத்திரமாக் கத்தினாள்.
“பொத்துடி வாய, தொளும்புநி. எடநாகமணி, தாயத்தின்னி தகப்பனத்தின்னிடா அவள். இப்ப வாயும் வயிறுமா நிக்காள். ஊர் உலகத்துக்கு தெரியாம நடந்ததுதானே எண்டு கை கழுவி உட்டுடாதடா. குமர் பாவம், உன்னயச் சும்மா உடாதுடா."
38 விமல் குழந்தைவேல்

"இப்ப என்னகா பெத்தா செய்யச் சொல்லுறாய்?"
"போகாதடா. ஒரு இடத்துக்கும் போகாதடா, இஞ்சயே இருந்து, கூழோ கஞ்சியோ நீ கொண்டு வாறத்துல ரெண்டு பேரும் ஆக்கிக் காய்ச்சி திண்டுபோட்டு, குடும்பத்த நடந்துங்கோடா. நான் சாகுற சீவன். என்னால இதுக்குமேல ஒண்டும் சொல்லொண்ணா.”
“காசாத்தை பெத்தா போயிற்றாள். இனி இந்தப் பிரச்சினைக்கு கண் காது மூக்கெல்லாம் வைச்சி பெத்தா ஊருக்குள்ள பரப்பி உட்டுடுவா.
போடியார் ஊட்டு புடவையெல்லாத்தையும் உதறி மடிச்சி வைச்சிக் க்ொண்டிருந்தாள், பரஞ்சோதி.
"இஞ்ச கொண்டா பாய்ஞ்சோயி அந்த உடுப்புகள. நான் நாளைக்கு கொண்டு போய் குடுத்திர்ரன்.”
"இல்ல நான் நாளைக்கு போகலாமெண்டிரிக்கன்.” "ஆ..கொம்மை செத்துப் பத்து நாளாயும் இன்னும் அவளுக்கு துக்கம் தீரயில்லையாமோ? ஊட்டு வேலையெல்லாம் கிடக்கு அவள வரச் சொல்லுடா. எண்டு சொல்லிக் கொண்டிரிக்கா போடியார் பொஞ்சாதி."
"சொல்லுவாதானே. போகத்தானே வேணும்." "நீ ஒண்டும் இனி ஊடு ஊடாப் போய் புடவை வெளுக்கோணு மெண்டில்ல. கொம்மை வெளுத்த ஊட்டுக்கெல்லாம் நான் போய் புடவை கேக்கன். இந்த நேரத்துல நீ போய் உள்ள வேலையெல் லாத்தையும் தலையில போட்டுச் செய்யாத, நீ இன்னும் கொஞ்ச நாளைக்கு வரமாட்டாயெண்டு நான் போடியார் பொஞ்சாதிக்கிட்ட சொல்லிர்றன்.”
“கொஞ்ச நாளைக்கெண்டா எத்தின நாளைக்கு ?” “என்ன பாய்ஞ்சோயி உண்ட மனசுக்குள்ள இன்னும் ஒரு முடிவில்லாமத்தான் இரிக்குப் போல. நீ நினைக்காய் உன்னுல சோட்டப்பட்டுத்தான் இப்பிடிச் சொல்லுறனெண்டு. உண்ட அழகு வடிவுக்கு நான் சோட்டப்பட ஏலுமோகா? அதானே கொம்மை கேட்ட நேரமெல்லாாம், வேணாம் அக்க எண்டு தட்டிக் கழிச்சன். இப்பயும் ஒண்டுமில்ல அவன் ஆரெண்டு சொல்லு நான் கட்டி வைக்கன் . . . அதையும் சொல்லமாட்டனெண்ணுறாய். அப்ப, என்னய என்ன செய்யச் சொல்லுறாய் எண்டு சொல்லங்கா ?” நாகமணியின் புடவை மாராப்புக்கு மேல போடியார் ஊட்டுப் புடவைகளையும் கொண்டு வந்து வைச்சாள், பரஞ்சோதி.
“போடியார் ஊட்டுல சொல்லு. இனி வெளுக்க வேண்டிய புடவையெல்லாத்தையும் உனக்கிட்டத் தரச்சொல்லி . . . போடியார் ஊட்டுக்கு மட்டும் ஊட்டு வேலை செய்ய போகலாமெண்டிரிக்கன். நீ என்ன சொல்லுறாய்.”
வெள்ளாவி 139

Page 71
"உன்னப் போகவேணாமெண்ணயில்ல. இந்த நேரத்தில ஏன் போகப் போறாய் எண்டுதான் சொல்லுறன்.”
“இப்ப இல்ல கொஞ்ச நாள்ல வாறனெண்டு சொல்லுறயோ புன்ன?”
"அதப்புறகு பாக்கலாம். நீ ஒண்டையும் பத்தி றோசினை பண்ணாம இரி. நான் வாறன்.”
பரஞ்சோதிக்கு பொழுது சாயுற வரைக்கும் யோசினையாத்தான் இருந்திச்சி. தண்ட வகுத்துச் சுமைய இறக்கி, நாகமணிர தலையில ஏத்தி, காலம் பூராவும் சுமக்கச் சொல்லுறது, பாவமில்லையோ? எண்டு அவளுக்குள்ளாலயே பேசிக் கொண்டாள்.
“என்ன பரஞ்சோதி யோசினையோட குந்திக் கொண்டிருக்காய்." நிமிந்து பார்த்தாள், கையில பையோட சதாசிவம் நிண்டான். “என்ன பரஞ்சோதி இப்பிடி நடந்திருக்காய். உன்னப்பத்தி நான் என்னெல்லாம் எண்ணியிருந்தன்."
சதாசிவம் என்னத்தப்பற்றிக் கதைக்கத் தொடங்குறான் எண்டுறத பரஞ்சோதியால ஊகிக்க முடியாமத்தான் இருந்தது.
"பரஞ்சோதி நீ சொன்னா நம்ப மாட்டாய். கொம்மா வெளியில போய் ஊட்டுக்கு வர நேரமாகுனா இந்த வேலி ஒரத்திலயும் ஆத்தோதினையும் காத்து வாங்குற மாதிரி நிண்டு ஆரும் உண்ட ஊட்ட நெருங்காம எத்தின நாள் ராவிருட்டுல காவல்காத்திருக்கன் தெரியுமோ, ஆனா நீ கொம்மாட பேர எடுக்கோணுமெண்டுதான் இருந்திருக்காய் போல."
"சதாசிவத்துக்கு இந்த விசயம் எப்பிடித் தெரிஞ்சிருக்குமெண்டு பரஞ்சோதிக்குள்ள யோசினை.
"பரஞ்சோதி இது உனக்கே நல்லா இரிக்கோ எண்டு நீ ஒரு ஒரு தரம் யோசிச்சிப் பாத்தயோ?”
"யோசிச்சிப் பாக்க இதென்ன கேட்டுப்பாத்து நடந்த விசயமோ. "இதுல கேட்டுப் பாக்க என்ன பரஞ்சோதி இருக்கு. ஏன் உண்ட அறிவு எங்க போய்ச்சி? உண்ட வயதென்ன அவன் நாகமணிர வயதென்ன ? இது வாழ்க்கைக்கு சரிப்படுமோ இல் லையோ எண்டு நீதான் யோசிச்சிப் பாத்திருக்கோணும்.”
"நீ என்ன சொல்லுறாய் சதாசிவம் ?”
yy
“என்னத்த நான் சொல்லுற எல்லாத்தையும்தான் காசாத்தைப் பெத்தா வந்து சொல்லிச்சே."
பரஞ்சோதி உட்ட நிம்மதிப் பெரூமூச்சி கூட அரைமனதாத்தான் வெளியில வந்திச்சி.
"இந்தா பரஞ்சோதி, இதுல அரிசியும் காய்கறியும் இரிக்கி. அம்மா குடுக்கச் சொன்னா. உனக்கு என்னவும் வேணுமெண்டா அம்மாக்கிட்டக் கேளு. நான் அவக்கிட்ட சொல்லியிரிக்கன்.
140 விமல் குழந்தைவேல்

சதாசிவம் வைச்சிற்றுப்போன பையப்பிரிச்சி, ஒரு சுண்டு அரிசிய எடுத்துக்கழுவி, கொதிக்கிற உலைப்பானைக்குள்ள போட்டவள் திடீரென்று எதையோ நினைச்சாப் போல இன்னுமொரு சுண்டு அரிசிய எடுத்துக் கழுவி உலைக்குள்ள போட்டாள்.
சோறு பொங்கி பானை மட்டத்துக்கு வந்திருந்துது. கழுவிக் கவுட்டிருந்த தாயிர சாப்பாட்டுக் கோப்பயும் எடுத்து தண்ட கோப்பையோட வைச்சிப்போட்டு வாசலுக்கு வந்து நாகமணி வாற வரைக்கும் காத்திருந்தாள்.
அவள் எதிர்பார்த்தாப் போல நாகமணியும் அவண்ட ஊட்ட போகாம பரஞ்சோதிர ஊட்டுக்குத்தான் வந்தான்.
பூவரச மர இருட்டுல இருந்தவள், நாகமணி வந்ததக் கண்டதும் தட்டுல சோத்தப் போட்டெடுத்து வந்து, நாகமணிக்கு முன்னால வைச்சிற்று தண்ணிச் செம்பையும் பக்கத்துல வைச்சாள்.
சாப்பாட்டுத் தட்ட கையில் ஏந்தி பிடியில வைச்சிக் கொண் டான், நாகமணி.
“என்ன பாய்ஞ்சோயி நீ என்னவும் திண்டயோ?” "நான் புறகு தின்னுறன். நீ இப்ப தின்னு." "முடிவு தெரியாம தின்னெண்டா, என்னெண்டு தின்னுற ?” “என்ன முடிவு” "அதான் நான் சொல்லிற்றுப் போனனே.” “என்னெண்டு.” "பாய்ஞ்சோயி நான் கேக்கனெண்டு கோவிக்காத, உனக்கு ஆருமேலயும் சந்தேகமிருந்தா சொல்லன்.”
"அத உட்டுப்போட்டு சோத்தத் தின்னு." "இல்ல உண்ட கதையப் பார்த்தா உனக்கு ஆருமேலயோ சந்தேகமிரிக்கி. இந்த இரணமாணச் சொல்லுறன் நீ சொல்லயில் லெண்டா நான் இந்தக் கல்லையில கைகுத்தமாட்டன்."
"சந்தேகமிருந்தாலும் சொன்னாலும் இனியொண்டும் நடந்துடாது. நீ சோத்தத் தின்னு."
"அப்ப ஆரோ இரிக்கான். நீ சொல்லு? எண்ட உசிரக் குடுத்தெண்டாலும் அவண்டகாலுல உழுந்து உன்னயச் சேத்து வைக்கன்.”
"சொன்னாத்தான் சோறு திம்பாயெண்டா, சொல்லுறன். எனக்கு சந்தேகமெண்டா அந்த வரதனுலதான் சந்தேகமாரிக்கு."
"ஆரு போடியார் ஊட்டுப் பொடியனோ ?” “.” "நாகமணி ஒண்டும் கதைக்காம சோத்தத்திண்டு முடிச்சி கையக் கழுவி பூமரத்து வேருல எச்சித் தண்ணிய ஊத்தினான்."
வெள்ளாவி 141

Page 72
"சந்தேகமெண்டு, ஆரோ தீவுக்காலை வண்ணானத்தான் சொல்லு வாயெண்டெல்லோ நினைச்சன். உனக்குத் தெரியுமோ என்னமோ தெரியாது. சாமத்தியப்பட்ட பொட்டை கொம்மர காலுல உழப் போன நேரமே வண்ணாத்திர காலுலையும் ஆரும் உழுந்து கும்புடுற தோ எண்டு, எடுடாபுடிடா எண்டு கொண்டு ஊருக்குப் போக பொட்டி கட்டினவ, இந்த வரதண்ட தாய். நீ சந்தேகப்படுறாயெண்டு, நான் போய் கேட்டா; என்ன நடக்குமெண்டுறத றோசினை பண்ணிப் பாத்தயோ ? . . .எங்க எடு அந்தப்பாய."
பரஞ்சோதி கொண்டு வந்து குடுத்த பாய விரிச்சி வாசலுல படுத்தவன் சடக்கெண்டு ஒழும்பிக்கொண்டு சொன்னான்.
"இஞ்ச பார் பாய்ஞ்சோயி இந்த சந்தேகப்பட்ட கதையெல்லாத் தையும் எனக்கிட்ட சொன்னதோட நிப்பாட்டிக் கொள். ஆருக்கிட் டயும் மூச்சு உட்டுடாத உன்னக் கையெடுத்துக்கும் பிட் டன் . . . கொழுத்திப் போட்டுறுவானுகளுகா . . . இந்தத் தீவுக்காலய ராவோட ராவாக் கொழுத்திப் போட்டுறுவானுகள் .போ. போய் சோத்தத் திண்டு கையக் கழுவிப்போட்டு படு. நான் இரிக்கன்கா உனக்கும் உண்ட புள்ளைக்கும் சாகுறவரைக்கும் தண்ணியூத்த நானிரிக்கன்கா. நீ போய் படு.
பரஞ்சோதி ஊட்டுக்குள்ள போயிற்றாள். இனி பரஞ்சோதி குடியூட்டுப் புடவைக்கெல்லாம் சேத்து வெள்ளாவி அவிக்க நாளைக்கு கொஞ்சம் கூடுதலா சோடாத்தூள் வாங்கோணுமெண்ட யோசினையோடயே நித்திரையாகிப் போனான் நாகமணி.
142 விமல் குழந்தைவேல்

சிடுகாட்டுக்குப் பக்கத்தில இருந்த, அந்த ஆசுபத்திரியுங்கூட, ஆள் அசிப்பத்து மயான அமைதியாகத்தானிருந்தது. ராவு நேரத்துல வெளிச்சமா இருக்க வேண்டிய அந்த ஆசுபத்திரி வளவு, அங்கொண் டும் இங்கொண்டுமெண்டு மின்னுற லைற்று வெளிச்சம் காணாம இருண்டுபோய் கிடந்துது.
ஆசுபத்திரி வளவுக்கு நடுவுல நிக்கிற வேப்பமரத்துக்கு கீழ குந்திக் கொண்டிருந்த நாகணிக்கு வேதனையும், பயமும், வெப் பிசாரமும் ஒண்டுசேந்து உடம்பு ஒரு மாதிரி நடுங்கத் தொடங்கிற்று. கொஞ்ச தூரத்துல இருக்கிற அரசமரத்தடி கோயில நோக்கி நடந்தான், நாகமணி, ஆசுபத்திரி நிர்வாகத்தால கட்டப்பட்டதால அந்தக் கோயில ஆசுபத்திரிக் கோயிலெண்டுதான் சொல்ற.
கோயிலுக்குள்ள தொங்கிக் கொண்டிருந்த சிமிலி லாம்பு காத்துல ஆடிக் கொண்டிருந்திச்சி.
“காளித்தாயே தாய்க்கும் புள்ளைக்கும் எந்தக் குறையுமில்லாம நீதான் தாயே காப்பாத்த வேணும். நீ காப்பத்துனா உண்ட கடன என்ன பாடுபட்டெண்டாலும் அடைப்பன் தாயே. நீதான் தாயே துணை."
தலைக்குமேல கையக் கூப்பி பைத்தியம் போல முணு முணுத்திற்று, திரும்பவும் வந்து வேப்பமரத்துக்கு கீழ குந்திக் கொண்டன், நாகமணி.
பொம்பிளை வார்ட்டு வெளிவிறாந்தையில இருந்து, என்னத் தையோ பற்றிக் கதைச்சிக் கொண்டிருக்கிற ரெண்டு நேசுப் பொம் பிளைகள் தூரத்துல இருந்து பார்க்கக்குள்ள கோயில் நந்தி மாதிரிச் தெரிஞ்சாளுகள்.
மறுகாயும் ஒருக்கா போவம் எண்டு ஒழும்புன நாகமணி, எதையோ நினைச்சு பயந்தவன் போல திரும்பயும் குந்திக் கொண்டான்.
வெள்ளாவி 143

Page 73
பிரசவ வலியில் துடிச்சிக் கொண்டிருக்கிற பரஞ்சோதிய பார்க்க வேணும் போலவும், அவளுக்கு ஆறுதலா பக்கத்துல இரிக்கோணும் போலவும், நாகமணிர மனம் துடிச்சாலும், கொஞ்ச நேரத்துக்கு முன்ன அந்தப் பொம்பிளை ரெண்டுபேரும் அவன நாயத்துரத் துறாப்போல துரத்துனத நினைச்சி, ஒழும்புனவன் திரும்பயும் குந்திற்றான்.
பக்கத்துல இருக்குற சவக்காலைக் காட்டுக்க, என்னவோ எரிஞ்சி கொண்டிருக்கிறது அடர்ந்த மரக்களுக்கிடையால தெரிஞ்சிது.
புதைச்ச பொணத்த, நரிகள் தோண்டியெடுத்திருக்கும். அந்த நேரத்துல நாய்களும் ஒண்டு சேர்ந்திருக்கக்கூடும். நரியெல்லாம் ஊளையுட, நாயெல்லாம் ஒண்டோடொண்டு சண்டைபுடிக்குற சத்தம் நல்லாக் கேட்டிச்சி. போதாக்குறைக்கு திடீர் திடீரென்டு மேலெழும்புற கடல் அலையெழுப்புற சத்தம் வேற நாகமணிய திடுக்கிட வைச்சிச்சி.
தற்செயலா திரும்பிப் பார்தான் நாகமணி. விறாந்தையில இருந்த ரெண்டு பொம்பிளையஞம் எங்கயோ போயிற்றாளுகள். மெல்ல நடந்து வந்து விறாந்தையில ஏறி உள்ளுக்குள்ள எட்டிப்பாத்தான். அந்த நடுச்சாமத்துல, ஆசுபத்திரி சமையல் அறைக்குள்ள நிண்டு என்னத்தையோ திண்டு கொண்டிருந்தாளுகள்.
அவளுகள்ற கண்ணுல படாம, மெல்ல நடந்து வந்து, இருட்டுல மறைஞ்சி சுவர் ஒரத்துல நிண்டுற்றான் நாகமணி.
சுவரோட சுவராக ஒட்டி ஒட்டி நடந்து வந்து ஜன்னலால உள்ளுக்குப் பார்த்தான்.
எவரும் இல்லாத வெறும் கட்டில்கள் எத்தினையோ கிடக்கு. எண்டாலும் தரையில விரிச்ச பாயில கிடத்தப்பட்டிருந்த பரஞ் சோதி பின் இடுப்புல கையக் குத்தி "அம்மா ... அம்மோ ...” எண்டு நோவுல துடிச்சிக் கொண்டிருந்தாள். தண்ணி இறைச்ச மாதிரி முகமெல்லாம் வேர்வையில் நனைஞ்சி போயிருந்திச்சி. பரஞ்சோதி யால இனியும் நோவத்தாங்கேலாம இருந்திச்சி.
"எண்ட அம்மோ, ஆரெண்டாலும் வாங்கவன் தாயே." எண்டு சத்தம் போட்டுக் கத்தின கத்துல சர்வ சாதாரணமா நடந்து வந்த நேசுப் பொம்பிளையில ஒருத்தி.
“என்னடி . . . என்னத்துக்குடி இப்ப ஊரெடுத்துக் கத்துறாய்” எண்டு அதட்டினாள்.
"எண்ட தாயே . . . புள்ளை வெளியால வாறாப்போல இரிக்கே, நான் முக்கட்டோ தாயே" கெஞ்சினாள், பரஞ்சோதி.
"ஆ. . . பத்துப்புள்ளை பெத்தவளுக்கு ஒரு புள்ளைப் பெத்தவள் மருத்துவிச்சி வேலை பார்த்த கதை மாதிரியெல்லோடி உண்ட கதையிரிக்கி எப்ப புள்ளை புறக்குமெண்றது, எங்களுக்குத் தெரியுமடி நீ முக்கக் கிக்கத் தேவையில்ல நீ சும்மா கிட."
y
144 விமல் குழந்தைவேல்

"எண்ட தாயே என்னால தாங்க முடியாம இரிக்கே தாயே.” "ஆ. . . இப்ப தாங்க மாட்டாயே . . . அப்ப மட்டும் நல்லா இருந்திருக்குமே.”
ஒருத்தி சொல்ல, மத்தவள் சிரித்தாள். பெத்தாலும் பெத்தாள்; செத்தாலும் செத்தாள். எண்டு சொல்லுற இந்த நேரத்துல ஒரு சீவனப் பார்த்து இவளுகள் இப்பிடிப் பகுடி பண்ணிச் சிரிக்காளு களேயெண்டு நாகமணி மனசுக்குள்ள குமுறிற்றான்.
தற்செயலாகத் திரும்புன நேரம் ஜன்னல் ஓரத்துல நிண்ட நாகமணியக்கண்ட அந்தப் பொம்பிளைரெண்டு பேரும், பேயாட்டம் ஆடத் தொடங்கிற்றாளுகள்.
"டேய் ஆருடா அது. ஆ. . . நீதானோ எத்தின தரம் துரத்தியும் திரும்பத் திரும்ப வாறாயே, உனக்குப் பயமெண்ட சாமானே இல்லையோட டேய் . . . வேணுமெண்டா நீவந்து உண்ட பொஞ் சாதிக்கு மருத்துவிச்சி வேலையப் பாரு நாங்க போறம் . . . பொண்டுகள் வாட்டுக்குள்ள உனக்கென்னடா வேலை. இப்ப போய் டொக்டர் ஐயாக்கிட்ட சொன்னமெண்டா உன்னோட உண்ட பொண்டாட்டியயும் ஊட்ட போகச் சொல்லுவார் தெரியுமோ ?”
அந்தப் பொண்டுகள் போட்ட சத்தத்துல குழறுன பரஞ்சோதி கூட அடங்கிற்றாள். நித்திரையாக் கிடந்த புள்ளப் பெத்த பொம் பிளையஞம் புள்ளைகளும் கூட முழிச்சிற்றுகள்.
இனியும் நிண்டா, அது பரஞ்சோதிக்குத்தான் கெடுதலா முடியு மெண்டு நினைச்ச நாகமணி மெதுவா நடந்து வந்து திரும்பவும் வேப்பமரத்துக்குக் கீழ குந்திக் கொண்டான்.
எங்கெல்லாமோ போய் எதையெல்லாத்தையும் திண்டுபோட்டு வந்து வேப்ப மரத்துல குடிகொண்ட வெளவாலுகளெல்லாம் பீய்ச்சுன பீச்சுல நாகமணிர தலை நனைஞ்சி போய்ச்சி. ராவுலதான் கண் தெரியுமெண்டாலும், கண்கடை தெரியாம தட்டுக்கெட்டுப் பறந்து வந்த வெளவாலொண்டு நாகமணிர முகத்துல மோதி சிறகால அடிச்ச அடியில அவன் தட்டுத்தடுமாறிற்றான்.
சுடலைக்குப் பக்கத்துல இரிக்கிற ஆசுபத்திரி பிண வார்ட்டு கதவுகள் பலமாக அடிக்குற காத்துல பெலத்த சத்தத்தோட மூடித் திறந்து விளையாடிக் கொண்டிருந்தது. காத்தும், பணியும், பயமும், பசியும் ஒண்டாச்சேந்து நாகமணிய கண்ணயரவைக்க, வேப்பமரத்தடியில் நல்ல நித்திரையாக்கிறான்.
திறந்து கிடந்த ஜன்னல் வழியால வந்த பரஞ்சோதிர "அம்மா ...” எண்ட அலறல் சத்தம் காதுக்குக் கேட்க திடுக்கிட்டு எழும்பிற்றான், நாகமணி எழும்பியும் அவனால என்ன செய்யமுடி யும். துணைக்குக்கூட ஆரும் இல்ல வேணுமெண்டா நானும் கூடவாறனே எண்டு சதாசிவம் கேட்ட நேரம் வேணாமெண்டு
வெள்ளாவி 145

Page 74
மறுத்தது எவ்வளவு மடத்தனமெண்டுறது அப்பதான் அவனுக்கு தெரிஞ்சுது.
தூரத்தில தனிச்சிருந்த டாக்குத்தர் ஐயா ஊட்டுல இருந்து ஆரோ கையில டோச்சி லைட்டோட வாறதக் கண்ட நாகமணி ஒழும்பி மெல்ல நடந்தான்.
"ஆரு டாக்குத்தர் ஐயாவோ م« நாகமணிர முகத்துல டோச் வெளிச்சத்தப் பாய்ச்சினார் டாக்டர். "ஏய் ஆருடா நீ . . . ஏண்டா இந்த நேரத்துல இஞ்ச நிக்குறாய்." டாக்டர்ர குரலுல அதட்டல் இருந்தாலும், கொஞ்சம் ஈவிரக்கம் இருந்திச்சி.
"எண்ட பொண்டாட்டிக்கு இடுப்பு வலியெண்டு கொண்டு வந்தனய்யா புறந்துற்றாக்கும். உசிர் போற மாதிரித் துடிச்சாளப்யா. இப்ப புள்ளை புறந்துட்டாக்குமெண்டு நினைக்கனய்யா. உள்ளுக்குப் போக உடாம அந்த நேசுமார் நாயத் துரத்துற மாதிரி துரத்துறாங் கய்யா. ஐயா உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். உங்களோட என்னையும் ஒள்ளம்கூட்டிப் போங்கய்யா."
கையெடுத்துக் கும்பிட்டான், நாகமணி. “érrf . . . Frf . . . aurr.” டாக்டரின் வேகமான நடைக்கு ஈடுகொடுத்து, பசி எடுத்த கன்று தாய்க்குப் பின்னால ஒடுறாப்போல டாக்டரின் பின்னால ஒடிக் கொண்டிருந்தான், நாகமணி.
நாகமணியக் கண்ட பரஞ்சோதி ஆம்புளைப் புள்ளை எண்டு போட்டு. புள்ளயத் திரும்பிப் பார்க்க, அவன் குந்தியிருந்து புள் ளையத் தூக்கி மடியில் வைச்சிக் கொண்டான்.
“என்ன பாய்ஞ்சோயி நல்லாத்தான் கயிற்றப்பட்டு போயிற்றாய் GLumrov.”
நாகமணிர மடியில கிடந்த மகனையே, பார்த்துக்கொண்டி ருந்தாள் பரஞ்சோதி.
"இஞ்ச பாரன் பாய்ஞ்சோயி எண்டமகண்ட முகத்த, எழுந்துவாற சூரியன் மாதிரி எவ்வளவு அழகா இரிக்காங்கா."
எண்ட மகனெண்டு உரிமையோட சொன்ன நாகமணியப் பார்க்க பாவமா இருந்திச்சி அவளுக்கு.
விடிஞ்சதும், ஆசுபத்திரி தேத்தண்ணிக் கடையில கோப்பியும் வாட்டுரொட்டியும் வாங்கி வந்து பரஞ்சோதிக்குக் குடுத்தான். பகல் முளுக்க பரஞ்சோதிக்குப் பக்கத்துல தவம் இருந்தாப் போல கிடந்த நாகமணி, எந்த நேரமும் புறந்த புள்ளர முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மத்தியான நேரம், ராவு முளுக்க அலைஞ்ச களைப்பு, பசி எல்லாம் சேர்ந்து நாகமணிய நல்லா சோந்து போகசெய்துற்று.
46 விமல் குழந்தைவேல்

"போவன் . . . ஊட்ட போய் குளிச்சி முளுகிற்று, தண்ணிய வென்னிய குடிச்சிப்போட்டு வாவன்."
பரஞ்சோதி சொன்னதக்கேட்டு சரியெண்டுற்று போக எழும்புன நேரம் ஒரு கடதாசிக் கட்டோட வந்த ஒரு நேசுப் பொம்பிளை நாகமணிய மறிச்சி.
"எங்க போகப் போறாய் இதுல ஒரு கையெழுத்துப் போட்டுப் போட்டு போ” என்றாள்.
"ஆரு தாயே நானோ ?” அப்பாவி போல கேட்டான் நாகமணி. “புறந்த புள்ளைக்கு அப்பன் நீதானெண்டா நீ கையெழுத்துப் போடாம ஊருக்குள்ள இரிக்கிறவனோ வந்து போடுவான்.”
நேசுப் பொம்பிளர அந்த வார்த்தை பரஞ்சோதிர மனதுல சாட்டை அடிபட்ட மாதிரி வலிச்சுது.
"எங்க தாயே, எந்த இடத்தல கையொப்பம் வைக்கோணும்?" அவள் காட்டுன இடத்துல தகப்பன் பேர் எண்டிருந்ததுக்கு நேரக. நாகமணியெண்டு காகம் கிழிச்சாப் போல கையெழுத்த வைச்சிற்று பரஞ்சோதியப் பார்த்தான் நாகமணி.
புள்ளயத் தடவுறாப்போல அங்கால பக்கம் திரும்பி தலையக் குனிஞ்சி கொண்டாள். பரஞ்சோதி.
வெள்ளாவி 147

Page 75

அத்தியாயம் இரண்டு

Page 76

பதினைஞ்சி வருசங்கள் . . . இந்த பதினைஞ்சி வருசமும் எப்பிடித் தான் ஓடிற்றெண்டே தெரியயில்ல. ஒடுன நாளுகள் மணிசர்ர வாழ்க்கையிலையும், இயற்கை சூழலுலயும் எத்தின மாத்தங்களத் தான் உண்டு பண்ணிப் போட்டு ஓடியிருக்கி. இதக் காலம் செய்த கோலமெண்டுகூட சொல்லேலாது ஏனெண்டா காலங்களே மாத்தங் களாலதானே கணக்கிடப்படுது.
நிண்ட நிலையில நிண்டு எட்டிப் பிய்க்குமாப் போல சின்னதா நிண்ட பரஞ்சோதி ஊட்டு வாசல் செவ்விளணி தென்னமரம் இப்ப அண்ணாந்து பாக்குறளவுக்கு ஆறுபேர் உயரத்துக்கு வளர்ந்து நிக்குது.
அகண்டு விரிஞ்சி கிடந்த ஆறு இப்ப ஒடுங்கி நீண்டுபோய் தெரியுது. ஆத்திர இரண்டு கரையையும் ஆக்கிரமிச்ச ஊர் பணக் காரர் உமியையும் கழியயும் கலந்து போட்டு மேடாக்கி சமப்படுத்தி விதை நிலமா மாற்றிற்றாங்கள். இருக்கிறது காணாதெண்டு ஆறு குளங்களுக்கும்கூட உறுதி எழுதி வைச்சிக் கொண்டாங்க.
ஆத்துல அடிச்சிக் கழுவி எடுத்துவாற புடவையெல்லாத்தையும் விரிச்சிக் காயப்போட உதவுன சாப்பைப் புல் நிலமெல்லாம் விதை நிலமாப் போனதால இப்பெல்லாம் தென்னையில தொடுத்துக் கட்டுன கயிறுலதான் தீவுக்காலை வண்ணாரெல்லாம் உடுப்புக் காயப்போடுகினம்.
இயற்கை இப்பிடியெல்லாம் மாறியிருக்குமெண்டா சமூகம் எப்பிடியெல்லாம் மாறியிருக்கும்.
மூண்டு நேரம் கேட்குற மணி ஓசையும், கோயில் பீக்கர் சத்தமும் அடங்கிப்போய், எப்பயாவது இருந்தாப்போல ஒரு நாள்லதான் அந்தச்சத்தங்களையும் கேக்கமுடியுது.
எப்ப? எந்தத் திக்குல இருந்து துவக்குச் சத்தமும் குண்டு வெடிக்குற சத்தமும் கேக்குமோ எண்டுற பயத்துக்கு நடுவுலதான மனிச வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கு.
வெள்ளாவி S1

Page 77
எந்த லைட்டுக் கட்டையில இண்டைக்கு ஆர்ர உடம்பு தொங் குதோ எண்ட எதிர்பார்ப்போடதான் பொழுதும் விடியுது.
இண்டு ராவு தண்ட கையால சோறு வாங்கித் தின்னுற மகன நாளைக்கும் ஒரு தரம் பாக்கக் கிடைக்குமோ இல்லையோஎண்டு ஏங்கி நம்பிக்யத்து ஒவ்வொரு நாளையும் கடத்துற நடைப்பிணமாய் தாய்மார்.
காணாமப்போன மகன் இண்டாவது கிடைப்பானெண்டு விடிஞ்சா பொழுதுசாயுமட்டும் ஒவ்வொரு நாளும் முகாமுக்கும் கோயிலுக்குமெண்டு நடையா நடக்குற தாய்மார்.
நேற்று கழுத்துல தாலி ஏறி நெத்தியில ரெட்டைப் பொட்டு வைச்சவள், இண்டைக்குதாலியக் கழற்றி பொட்டிக்குள்ள வைச்சிப் போட்டு, ரெட்டைப் பொட்டு வைச்ச நெத்தியில ஒத்தை விரல் திருநிற்றுக்கீற்றோட திரியுற இளம் பொம்பிளைகள்.
இப்பிடி எத்தினையோ துயரமான சம்பவங்களோடதான் இண் டய வாழ்க்கை ஒடிக் கொண்டிருக்கு.
காலமொண்டும் பரஞ்சோதி வாழ்க்கைய ஒகோ எண்டாக் கியுடல்லதான். எண்டாலும் அவளும் அவள்ற மகன் அரவிந்தனும் கவலைப்படாதளவுக்குத்தான் நாகமணி பாத்திருக்கான்.
காணி நிலமெண்டு சொத்துப் பத்து, நகை நட்டெண்டு சேர்த்து வைக்காட்டியும்கூட, நாளைய பொழுத நினைச்சி கவலைப்படத் தேவையில்லாதளவுக்குத்தான் நாகமணி சீவிச்சிக்கொண்டிருக்கான். எப்ப பார்த்தாலும் அரவிந்தனப் பற்றிய யோசினைதான். நாகமணிக்கு எப்பிடியாலும் கஸ்டப்பட்டு இந்த சமூகத்துல மகன ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவந்து உடோனுமெண்டுறதான் அவண்ட ஆசையெல்லாம்.
அரும்பு மீசையுட்ட அரவிந்தன் பதினைஞ்சி வயது விடலைப் பொடியனா இல்ல; பதினாறு வயத எட்டிப்புடிக்க எத்தனிக்கிற இளந்தாரியா எண்டு அடையாளம் காணேலாதளவுக்குத்தான் திரியுறான்.
பெத்த தாயவிட, தகப்பனெண்டு நம்பிக்கொண்டிருக்கிற நாக மணிக்குக்கூடதான் எந்த நேரமும் ஒட்டுன மாதிரித் திரிவான். என்ன வேணுமெண்டாலும் தயக்கமில்லாம நாகமணிக்கிட்டத்தான் கேப்பான்.
இத்தனை வருசத்திலையும் ஒருநாள் கூட நாகமணி அரவிந்தனை ஆத்தங்கரைக்கு கூட்டிப் போயிருக்க மாட்டான். சின்ன வயசுல தானும் ஆத்தங்கரைக்கு வரப்போறனெண்டு அரவிந்தன் அடம் புடிச்சி கத்துன நேரமெல்லாம் "ஏன் கூட்டிக்கொண்டு போனாத்தா னென்ன” என்று பரஞ்சோதியும் எத்தினையோ தரம் சொல்லிப் பார்த்தாள். இது வரையில ஒருநாள்லகூட நாகமணி அரவிந்தன் ஆத்தங்கரைக்கு கூட்டிப்போகயில்ல.
152 விமல் குழந்தைவேல்

பதினைஞ்சு வயசு பொடியனுக்கு தாய்எண்டு சொன்னா, ஆராலேயும் நம்பேலாத அளவுக்குத்தான் இப்பயும் பரஞ்சோதிர உடல்வாகு இருந்திச்சி. காதுல ஒரு மின்னிசுட இல்லாட்டியும்கூட அந்த மின்னிக்குத்தான் பரஞ்சோதிர காதுல குடியிருக்க குடுப் பினையில்ல எண்டு சொல்லுமாப்போல பரஞ்சோதி இப்பயும் அழகாத்தான் இரிக்காள்.
இந்த வயதுலயும் எத்தினையோ பேர் அவளக் கண்ணால பகல்ல தொட்டுப் பார்த்தவயள், ராவுல உடம்பால தொட்டு விளையாடலாமெண்ட நினைப்புல வேலிக்கிடவால நுளையப் பார்க்கிற நேரமெல்லாம் நாகமணி நாயப்போல காவல் இருந்து விரட்டியிரிக்கான்.
வயது வந்தாக்கள் மட்டுமில்ல பரஞ்சோதி பருவமறிஞ்சாப்புறகு புறந்ததுகளெல்லாம்கூட பரஞ்சோதியப் பார்த்து சபலப்படாமலில்ல. இப்பிடிப்பட்ட நேரத்துலெல்லாம் இதுவர்ைக்கும் பரஞ்சோதி நெருப்பாத்தான் இருந்திருக்காள்.
கட்டுக்கோப்பான் உடம்பு, கட்டுப்பாடான வாழ்க்கை, கண்டிப் பான பேச்சு, பொறுப்பான குடும்பப் பொம்பிளையெண்டு பரஞ் சோதி நாகமணியோட சந்தோசமாத்தான் சீவிக்காள்.
சில நேரங்களுல ஆத்தங்கரையில நிண்டு புடவை வெளுக்கிற நாகமணிய ஊட்டு வாசலுல நிண்டுபார்ப்பாள் பரஞ்சோதி, அவனுக்கு பின்னால பனங்காட்டு சிவன் கோயில் ராஜகோபுரம் பிரமாண்டமாத் தெரியும். அந்தப் பிரமாண்டத்தையும் தாண்டி அதுக்கு முன்னால நிற்குற நாகமணிதான் அவள்ற கண்ணுக்கு பிரமாண்டமாத் தெரிவான்.
தனியா இருக்குற நேரத்துலெல்லாம் தாயிர நினைப்பு ஓடிவந்து அவள்ற கண்ணுல இருந்து தண்ணி வடியச்செய்யும்.
"அம்மா, நீ செத்துத்தான் போயிற்றாய் என்னகா ?” தன்னையும் அறியாமல் அவள்ற உதடுகள் துடிக்கும். அரவிந்தனோட நாகமணி இரக்கமா இருக்கிறத்தையும், நாகமணி யோட அரவிந்தன் ஒட்டிக்கொண்டு திரியுறத்தையும் பார்க்கிற நேரமெல்லாம் பரஞ்சோதிக்கு பொறாமை மாதிரியும் வரும், கூடவே அந்த இரவையும் அண்டு ராவு தண்ட மனதுல உண்டான காயத்துர வடுவையும் தடவிப் பார்ப்பாள். மறந்திரத்தான் வேணு மெண்டு நினைச்சாலும் அரவிந்தனக்காணுற நேரத்துலெல்லாம் அந்த மனக்காயத்துர வடு கீறிக் கிழிக்கப்பட்டு ரணப்படுத்திக் கொண்டேயிருந்திச்சி.
காயங்கள் ஆறிப்போனாலும் அதனால உண்டான வடுக்கள் எண்டைக்கும் மாறாதுதானே.
வெள்ளாவி 153

Page 78
Lரஞ்சோதியும் நேத்துல இருந்து கவனிச்சுக் கொண்டுதாணிரிக்காள். நாகமணிர முகத்துல இனம்புரியாத கவலையொண்டு ஒட்டிக் கொண்டே இருக்கு.
"என்னகா மனிசா ஒரு மாதிரியா முகத்த தொங்கப் போட்டுக் கொண்டிரிக்காய் உடம்புக்கு ஏதும் ஏலாமை கீலாமையோ?” என்று எத்தினையோ தரம் கேட்டுப் பாத்தும் "அது ஒண்டுமில்ல புள்ள. உண்ட வேலைய நீ பாரு” என்று விட்டு அவண்ட வேலைய அவன் பார்த்துக் கொண்டேதான் திரிஞ்சான்.
பரஞ்சோதிக்கு நாகமணிர முகவாட்டத்துல பெரிய சந்தேகம். மகன் அரவிந்தன் வேற நாகமணி போற இடமெல்லாம் பின்னால போறதும் ஏதோ சொல்லி மூக்கால குழர்றதும் அதுக்கு ஏதோ சொல்லி நாகமணி சமாளிக்குறதுமான புதுனத்த பார்க்கப் பார்க்க பரஞ்சோதிர சந்தேகம் இன்னும் கூடிப் போய்ச்சி.
"இஞ்சே . . . இஞ்சே . . . உன்னத்தான். இஞ்ச ஒள்ளம் நில்லு. உனக்கிட்ட ஒரு சங்கதி கேக்கோணும்."
கூப்பிட்டுக் கொண்டே வந்த பரஞ்சோதி நாகமணிக்கு முன்னால நிண்டு வழிமறிக்க முதுகுல கிடந்த மாராப்ப கீழ போட்டுற்று மாராப்புக்கு மேலயே குந்திக் கொண்டான். நாகமணி. தாய் வாறத்த கண்ட உடனேயே நாகமணியோட நிண்ட அரவிந்தன் மெல்லமாய் நழுவிற்றான்.
"என்ன பாய்ஞ்சோயி மதியத்தால கிறுகுதெல்லா, ஆத்துக்குப் போகோணுங்கா, என்ன விசயம்?”
"ஆத்துக்குப் போறது கிடக்கட்டும். நேத்துல இருந்து கேக்குறன் முட்டப்பன் கட்டுன உண்டவாயத்துறந்து எதுவும் சொல்லுறயோ?
"என்னத்தப் புள்ள சொல்லச் சொல்லுறாய்?"
54 விமல் குழந்தைவேல்

"நீ போற இடமெல்லாம் குட்டிபோட்ட பூனைமாதிரி இவனும் உன்னோடயே வாறானே அது ஏங்கா ? இதென்ன புதுன மெண்டுதான் கேக்கன்."
"அதொண்டுமில்ல புள்ள. நீ போய் உண்ட வேலையப்பாரு." திரும்பிப் பார்த்தான் நாகமணி, அவனும் பரஞ்சோதியும் கதைக்கிறதெல்லாத்தையும் தென்னை மறைவில நிண்டு ஒட்டுக் கேட்டுக் கொண்டு நிக்கிற அரவிந்தனப் பார்க்க சிரிப்பு வந்திச்சி நாகமணிக்கு. சிரிச்சும் போட்டான். அவண்ட சிரிப்பு பரஞ்சோதிக்கு மேலயும் கோபத்த உண்டு பண்ணிற்று.
"நான் ஒரு பெயித்தியக்காரி, கத்திக் கொண்டிரிக்கன். அப்பனும் மகனும் சிரிச்சி விளையாட்றயள் போல.”
"அரவிந்தா, நீ போ . . . போடா . . . ஊட்டக்குள்ள போய் படி,"
சொல்லிப்போட்டு நாகமணி கண்ணச்சிமிட்ட புரிஞ்சி கொண்ட அரவிந்தன் உள்ளுக்குப் போயிற்றான்.
"அப்பனும் புள்ளையும் இந்தா காட்டுற நாடகம் என்னெண்டு புரியுதில்லையே எனக்கு."
"இஞ்சே. இப்ப ஏங்கா தலையில பாய்ஞ்சடிச்சி ஊரக் கூட்டு றாய்?"
"அப்ப என்னெண்டுதான் சொல்லன் ?” "சொன்னா, நீசும்மாயோ இரிப்பாய்? எண்ட புள்ளயப்போட்டுக் கரிச்சிக் கொட்டமாட்டயோ?”
“சரி விசயத்த சொல்லன்." "இல்ல பாய்ஞ்சோதி அவனும் வளந்திட்டான். நாலு புள்ளயப் போல தானும் இரிக்கோணுமெண்டு ஆசைப்படுறான், அதுல என்ன பிழையோ.”
"இல்லத்தான . பிழையில்லத்தான். என்னவாம் இப்ப, அவனுக் கொரு கல்யாணம் கட்டி வைக்கட்டாமோ ?”
"ச்சி. இதென்னபுள்ள இப்பிடியெல்லாம் கதைக்காய். அவன் அதுக்கெல்லாம் ஆசைப்படயில்லகா. ஒரு வைசிக்கில் வாங்கித் தரச்சொல்லித்தான் எண்டபுள்ளை முன்னாலையும் பின்னாலையும் காலையும் திரியுறான்.”
"ஆ. என்னது வைசிக்கிளாமோ? இதுக்குத்தானோ அட்டை ஒட்டினாப்போல உன்னோட ஒட்டிக்கொண்டு திரியிறான்."
“சத்தம் போடாத பாய்ஞ்சோயி, வளந்த புள்ளையெல்லோ, பின்னேரப் பள்ளிக்கு மெல்லோகா போய் வாறான். ரெண்டு தியாலமும் நடக்குறதெண்டா புள்ளர கால் என்னத்துக்காகும்."
வெள்ளாவி 155

Page 79
"அவனோடொத்த புள்ளையன் எப்பிடிப் போய் வருதுகள், அப்பிடித்தான். இன்னா இரிக்கிற அக்கரப்பத்தென்ன கதிரமல ராய்சியமோ நடக்கொண்ணாததுக்கு ?”
"சும்மா உடு, . . . ஒண்டேயொண்டு பத்தப் பெத்துப் போட்டு பரிதவிக்கிற மாதிரியெல்லோ கதைக்காய்.”
"அதுக்கு . . . வேணுமேகா ? இரிக்கோ ஐநூறு ஆயிரம் உறுவா உனக்கிட்ட இரிக்கோ ? இருந்தா வாங்கிக்குடன். ஆருப்ப உன்ன இப்ப புடிச்சிழுத்தா.”
"எனக்கிட்ட இருந்த எண்ட புள்ளை கேட்டு இத்தின நாளைக்கும் பார்த்துக் கொண்டிருந்திருப்பேனாகா, கேக்குமுன்னமே வாங்கிக் குடுத்திருக்க :
"இல்லெண்டா உடன்கா. இரிக்கிற நேரம் வாக்கிக் குடுக்கலாம்.” "இரிக்கிற நேரமெண்டா எப்ப அவன் கல்யாணம் கட்டி புள்ளை பெத்ததுக்குப் புறகோ, ஆசைப்பட்டத வாங்கிக் குடுக்கிற?”
"அதுக்கிப்ப என்னதான் செய்யச் சொல்லுறாய்?" "உனக்கிட்ட காசி கீசி இருந்தா தாவன் . . . கைமாத்தாத்தான். பாய்ஞ்சோயி மறுகா தந்திருவன்.”
"இஞ்சே அப்பன் புள்ளையெண்டு பாக்கமாட்டன். எண்ட வாயுல அறம் புறம் கெட்டு வருது. வாயக் கிளறாம ஒழும்பிப்போய் உங்கட உங்கட வேலையப் பாத்துக் கொள்ளுங்கோ, சொல்லிப் போட்டன், அவர் வைசிக்கில் கேட்டாராமெண்டு இவர் எனக்கிட்ட கைமாத்தாக் கடன் கேக்கார்.”
"அப்பிடியெல்லாம் சொல்லாத பாய்ஞ்சோயி, ஊரு உலகத்துல என்ன நடக்குதெண்டு தெரியாதேகா உனக்கு இண்டைக்கு இரிக்கிற புள்ளயள நாளைக்கு காணக் கிடைக்குதில்ல. இதுக்குள்ள நீயும் இப்பிடிக் கதைச்சயெண்டா மனம் நொந்து போய் ஊட்ட உட்டு வெட்டக்கிறங்கிப் போய் துவக்கத் தூக்குனானெண்டா இனி அவன் நமக்கு புள்ளையோகா."
“போகட்டும் . போகட்டுமேகா அப்பன் அம்மர கயிற்றம் தெரியாத புள்ளை இருந்தென்ன, இறந்தென்ன? போகட்டுமே.” பரஞ்சோதி சொல்லி முடிச்சிருக்கமாட்டாள் அதுக்குள்ள காத்தக் கிழிச்சிக் கொண்டு விசுக்கெண்டுவந்த நாகமணிர கை பரஞ்சோதிர கன்னத்துல அறய அத எதிர்பாராத பரஞ்சோதி நிலத்துல சாய்ஞ் சிற்றாள்.
"இல்லெண்டா, இல்லெண்டு சொல்லன். அதஉட்டுப்போட்டுப், பெத்த புள்ளைக்கு சாகுறத்துக்கு வரம் குடுக்காயே."
"இல்ல. எனக்கிட்ட இல்ல. செப்பால அடிச்ச ஒரு சல்லிக்காசு கூட எனக்கிட்ட இல்ல . . அப்பன் அறியாத இந்த அற்ாங்குட்டி
156 விமல் குழந்தைவேல்

எப்ப வந்து எண்ட வகுத்துல சனிச்சிதோ அப் புடிச்சிச்சி எனக்கு சனியன்."
"க்கு . . . அதுக்கு முதல் கொம்மைக்கும் உனக்கும் கொடிகட்டிப் பறந்திச்சாக்கும்.”
"மாராப்பத்தூக்கி தோளுல போட்டுற்று, பரஞ்சோதிய முறைச்சிப் பார்த்திற்று நடந்த நாகமணி ஆத்தங்கரைக்குப் போய்ச்சேரு மட்டும் பார்த்துக் கொண்டேயிருந்தாள் பரஞ்சோதி."
வெள்ளாவி 157

Page 80
தீவுக்காலயச் சுத்தியுள்ள வயல் நிலத்திலெல்லாம் புறாக்களும், காகங்களும், குருவிகளும் குந்தியெழும்பி பரவிப் பறந்து கொண்டி ருக்கு.
காலபோக விதைப்புக்கெண்டு வயலெல்லாம் உழவத்தொடங் கியாச்சி. நிலத்துல கலப்பய பதிச்சி, ஒழவு மெசின் மண்ணப் புரட்டிப் போடக்குள்ள வெட்டக்கிறங்குற பூச்சி புளுக்கள கொத்தித் தின்னத்தான் பறவைகள் நிலத்த மறைச்சமாதிரி பறந்து திரியுது. புரட்டுற மண்ணுல இருந்து ஒழும்புற புழுதி மணம் காத்துல வந்து பரஞ்சோதிர மூக்குலபட அவளுக்குள்ள ஒரு இனம்புரியாத மகிழ்வு ஒட்டிக்கொண்டது.
ஏனோ தெரியாது விதைப்பாட்டுக் காலமும், வெட்டுக்குத்துக் காலமும் எப்பயும் ஆர்ர மனசையும் மகிழ்வடையத்தான் செய்யுது. இப்பெல்லாம் நாகமணியும் கன ஊடுகளுக்கு குடியூட்டு வண் ணானா இருக்குறதால வெட்டுக்குத்து முடிய தண்ட ஊட்டுக் குள்ளையும் நாலு சாக்கு நெல்லுச் சேருமெண்ட சந்தோசம்தான் பரஞ்சோதிர மகிழ்வுக்கு காரணம்.
வேலி ஒரத்துலநிண்டு உழவுற மெசின சின்னப் புள்ளை மாதிரிப் பாத்துக்கொண்டு நிண்ட பரஞ்சோதி வாசலுக்கு வந்து ஊட்டுக் குள்ள எட்டிப்பாத்தாள். என்னவோ ஒரு புத்தகத்த புரட்டிப் பாத்துக் கொண்டிருந்தான், அரவிந்தன்.
கிணத்தடியில வெள்ளாவிப் பானைய இறக்கி வைச்ச நாகமணி, அவிச்சதுணிகள எடுத்து கிணத்துத் தண்ணியில நனைச்சி, முறுக்கி புழிஞ்ச நேரம் அவண்ட முகத்துல ஒரு வலி ரேகை மின்னலப் போல வெட்டி மறைஞ்சதக் கண்டுற்றாள் பரஞ்சோதி.
மூண்டு நாளா மூண்டு பேரும் ஒருத்தரோட ஒருத்தர் முகம் பார்த்துக் கதைச்சிக் கொள்ளயில்ல. நேத்து ராவு நாகமணிதான் முதல்ல அவளோட கதைச்சான்.
S8 விமல் குழந்தைவேல்

“என்ன பாய்ஞ்சோயி இன்னும் கோவம் ஆறயில்லையோகா? நான் உன்ன அடிச்சிருக்கத்தான் கூடா. அடிச்சத மனசுல வைச்சிப் பாராட்டிக் கொண்டிருக்காயாக்கும்."
நித்திரையில்லாம் புரண்டு புரண்டு படுத்தவள்ற தலைமாட்டுல இருந்து அவன் சொன்னதக் கேட்டு, அவள் ஒழும்பிக் குந்திட்டாள். "ஆ. . நீ அடிச்சாய்யெண்டுதான் இப்ப கவலையோட இரிக் கனாக்கும். அப்பனும் புள்ளையும் இப்பிடிக் கயிற்றம் தெரியாம ஒத்தக் காலுல நிக்கயளே எண்டுதான் கவலை."
அவள் சொன்னது சரி பிழையெண்டுகூட நாகமணி சொல்ல யில்ல. மகனுக்கு ஏதும் செய்யோனுமெண்டு நினைச்சானெண்டா அதுக்குக்குறுக்கால ஆரு நிண்டாலும் அது நாகமணிக்குப் புடிக்கா தெண்டுறது பரஞ்சோதிக்கு நல்லாத் தெரியும். நேத்து ராவுக்கதை அதோட முடிஞ்சிற்று. அதுக்குப் புறகு இண்டுப்பகல் மட்டும் அதப்பற்றி ஒரு கதையும் இல்ல.
வெள்ளாவியில போட வேண்டிய துணிகளுக்கு குடும்பக் குறி குத்திக் கொண்டிருந்த பரஞ்சோதி நாகமணிய உன்னிச்சிப் பாத்தாள். ஒவ்வொரு தரமும் துணிய நனைச்சி புழியுற போதெல்லாம் அவண்ட முகத்துல அதே வேதனை ரேகை வெட்டி மறைஞ்சி கொண்டுதான்ரிருந்தது. கையில இருந்த குறி குத்துற ஊசிய பக்கத்துல நிண்ட வாழையில குத்திப்போட்டு, ஒழும்பிப்போய் புளியக் கையில எடுத்த துணியொண்ட பரஞ்சோதி பறிக்க, அத எதிர்பாராத நாகமணி நிமிந்து பாத்தான்.
“என்ன . என்ன ஒரு மாதிரியா முகத்தச் சுழிச்சிக் கொண்டிரிக் காய் இடுப்புக்குள்ளால வெட்டுது கிட்டுதோ ?”
"அதெல்லாம் ஒண்டுமில்ல புள்ள. புடவையத் தந்துபோட்டு நீ போய் உண்ட வேலையப் பாரு."
"எண்ட வேலய நான் பாப்பன் அது எனக்குத் தெரியும். நீ முதல்ல உண்ட கதையச் சொல்லு."
"இதென்னகா இது கதைசொல்லி விளையாடுற நேரமோகா இது வேணுமெண்டா ராவைக்கு வாசலுல இருந்து கதை சொல்லுறனே.”
"எண்டபோய், உண்ட ஒசிலும் நீயும் செல்லக்கதைய உட்டுப் போட்டு சொல்லு ... குனிஞ்சொழும்புற நேரமெல்லாம் பீயக்கண்ட மாதிரி முகத்தச் சுழிக்கயே அதென்னகா அது."
*சும்மா முதுகுக்குள்ள நோகுற மாதிரி இரிக்குகா, ஏதும் நெறி கண்டிருக்குமாக்கும் சும்மா உடுஅத.”
“எங்க திரும்பு பாப்பம்." சொல்லிக்கொண்டு நாகமணியத் தொட்டுத் திருப்பி அவண்ட முதுகத்தடவினாள் பரஞ்சோதி.
வெள்ளாவி 59

Page 81
"ஆ, அவடத்துலதாங்க . . . தொட்ட உடன பச்சப் புண்ணா நோகுது."
அவள் தொட்டோடன வலிக்குது எண்ட இடத்த உத்துப் பார்த்தாள் பரஞ்சோதி, தோள் புசத்துக்குக்கீழ முதுகுப் பகுதியில மெல்லிசா சிவந்து போயிருந்ததக்கண்டு பதறிப் போயிற்றாள் பரஞ்சோதி.
"இதென்னகா மனிசா சிவந்து கொச்சிப் பழம்போல இரிக்கி? ஏதும் பூச்சிபட்டை கடிச்சிரிக்குமோ ? நான் போய் சதாசிவத்த கூட்டி வரட்டோ ?”
"இஞ்ச உடு எதுக்கொடுத்தாலும் சதாசிவம் . . . சதாசிவம் . . . சதாசிவமென்ன டாக்குத்தனோ ? அத உட்டுப்போட்டுப்போய் குறியக்குத்து.”
"இப்பிடிச் சிவந்துபோய் இரிக்கேகா." "கனநாளா ஒரு பக்கத்துக்கு மாராப்ப போட்டிரிப்பன், நோப் பட்டு சிவந்திரிக்கும். அதஉடு, இவன் எங்க அரவிந்தன் ?”
"அவன் ஊட்டுக்குள்ள இருந்து படிக்கான். ஏன் கேக்காய்?" பரஞ்சோதி சொன்ன உடன ஊட்டுக்குள்ள எட்டிப் பார்த்திட்டு, நாகமணி ரகசியமா சொன்னான்.
"உண்ட மகன் ராவு வந்து என்ன சொன்னானெண்டு தெரியுமோ ?”
“என்ன ?” "அவன் இயக்கத்துக்கு போகப் போறானாம். இந்த ஊருல நடக்குறதொண்டும் அவனுக்கு புடிக்கயில்லையாம்."
"ஆ. . . உடு, போறவன் சொல்லிப்போட்டுத்தான் போகப் போறானாக்கும்.”
“நீ நல்லா கவனிச்சயோகா ... இப்பொல்லாம் பொழுதுபட்டா புதுபுதுப் பொடியனோடுகளோட நிண்டு ஒழுங்கைக்குள்ள ரகசியம் கதைக்கான்.”
"அதுக்கிப்ப என்னய என்ன செய்யச் சொல்லுறாய்." "இல்ல . . . அவன் கேட்டாப் போல அவனுக்கொரு வைசிக்கல் வாங்கிக் குடுத்தமெண்டா ...”
"குடுத்தா . . . போறவன் போகமாட்டானாரிக்கும் . . . போற னெண்டுறவன் ஏழுகடலுக்கங்கால கொண்டு போய் வைச்சாலும் போவான்தாங்கா. அதஉட்டுப்போட்டு ஆசுபத்திரிக்குப் போய் இந்த முதுகக் காட்டி ஏதும் குழம்பக் கிழம்ப வாங்கிப் பூசப் Lust (b."
"நான் போறன் புள்ள ஆசுபத்திரிக்கு. ஒண்ணா எண்ணயில்ல. நீ சொல்லன் . . . பொடியனுக்கு வைசிக்கல் வாங்க . . .”
160 விமல் குழந்தைவேல்

"நினைச்சன் . . . நீ தொடங்கக்குள்ளயே நினைச்சன். முடிக்க மாட்டாயெண்டு . . . காலச்சுத்துன பாம்பு மாதிரி அவடத்துலதானே நிப்பாய் . . . எப்ப பாரு . . . புள்ளை . . . புள்ளை . . .”
கையிலிருந்த துணிய பரஞ்சோதி தூக்கி எறிஞ்ச எறியில வாளி யில நிறைஞ்சிருந்த தண்ணி துள்ளி நாகமணிர முகத்துல இறைக்க, திடுக்கிட்ட நாகமணி பின்னால விலத்த, விறு விறு எண்டு நடந்த பரஞ்சோதி அடுப்படியில குந்தி குழறத் தொடங்கிற்றாள்.
வெள்ளாவி 61

Page 82
அண்டைக்கு சனிக்கிழமை. போடியார் ஊட்டு உடுப்புக்கள மடிச்செடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்த பரஞ்சோதி கிணத்தடியில நிண்ட மகனுக்கிட்டப்போய்.
“டேய் குளிச்சிப்போட்டு தண்ணிச்சோறு எடுத்து வைச்சிருக்கன் தின்னு. கொப்பன் வந்தா அவரையும் சோத்த தின்னச்சொல்லு" சொன்னவள் ஆத்துக்குள்ள ஒத்தையாக நிக்குற நாகமணிய நோட் டம் விட்டாள். அவன் ஓங்கி உயர்த்தி கல்லுல அடிக்கிற நேரம் துணியிலருந்து விசிறி அடிக்கிற தண்ணி விசிறி அழகாக அரை வட்டம் போட்டு அடங்குது.
"நீ எங்ககா அம்மா போறாய்?” அவள் ஊட்ட உட்டு வெளிக்கிறங்குற நேரமெல்லாம் அரவிந்தன் கேக்குற வழமையான கேள்விதான் அது.
"வாறண்டா, போடியார் ஊட்டுக்குப்போய் புடவையக்குடுத்துப் போட்டு, போடியார் பொஞ்சாதி தூள் இடிக்கோணுமெண்டா அதையும் இடிச்சிக் குடுத்துப்போட்டு வாறன்."
"அப்பா வந்தா, ஏதும் சொல்லோனுமோகா ?” குளிச்சிற்று துடைச்சதுவாய தோழச் சுத்திப் போட்டுக் கொண்டு வந்த மகண்ட அழக மனதுக்குள்ள ரசிச்சாள் பரஞ்சோதி.
சிவந்த உடம்பு, நீண்ட மூக்கு, மெல்லிய உதடு, அடர்ந்த புருவமெண்டு அப்பிடியே பரஞ்சோதிய ஒட்டி உரிச்சிப் புறந்தாப் போல இருந்தான் அரவிந்தன்.
"சொல்லு, சோத்தத் திண்டுபோட்டு இண்டைக்குமொருக்கா ஆசுபத்திரிக்குப்போய் முதுகக் காட்டச் சொல்லு. இந்த மனிசன் என்ன சொல்லி என்னத்த காட்டினானோ தெரியாது. டாக்குத்தன் குடுத்த குழம்புக்கு ஒரு சொட்டாதல் வீக்கம் வத்துதில்ல . . . ம். . . அதைப்பத்தி ஆருக்கென்ன கவலை. அப்பன் ஒருத்தன் இப்பிடி
162 விமல் குழந்தைவேல்

மாடா உழைக்கிறானே எண்டு உனக்கு கவலையோ . . . உனக்கு உண்ட சோக்கப்பத்தித்தானே கவலை."
சொல்லிப் போட்டு வெளிவாசல் கடந்து வயல் வரப்புகள்ல நடந்தாள் பரஞ்சோதி.
காலபோகம் விதைச்சி முளையுட்ட எட்டுநாள் பயிர் பச்சப் புடவை விரிச்சாப்போல சமனாக நிண்டது. வரப்புகள்ல கூட புல் இல்ல - புது வரப்பு. கால் வைச்சி நடந்த நேரம் வரப்புர பொய் மண் சரிஞ்சி சறுக்கி உளச்செய்திச்சி.
வரப்பு மண்ணச் சரிக்கிறத அறிஞ்சா வயலுக்கு சொந்தக்காரர் கேளாத கேள்வியெல்லாம் கேப்பாங்க எண்ட பயத்துல காலடி பார்த்து அவதானமா நடந்து வந்த பரஞ்சோதி தற்செயலாக நிமிர்ந்து பார்த்தாள்.
தூரத்துல தெரியுற புளியமரத்துக்குகீழ பெருந்திரளா சனக்கூட்டம் கூடி நிக்குறது தெரியுஞ்சிச்சு. அங்கொண்டும் இங்கொண்டுமாக ஊருக்குள்ளயிருந்து வயல்வரப்புகள்ல தடுக்கி உழுந்தொழும்பி ஓடிவந்த ஆக்களும் புளியமரத்தடி சனத்தோட சனமா சேர்ந்து கொண்டாங்க.
என்னவா இரிக்கும் ஆரெண்டாலும் புளியமரத்துல தூக்கு போட்டு செத்திருப்பங்களோ இல்ல சூனியம் செய் யெண்டோ ? . . . செய்ஞ்சி கழிக்கெண்டோ வந்த ஆரையும் ராவு பேய் அடிச்சிருக்குமோ? பரஞ்சோதிர மனதுக்குள்ள பல கேள்விகள். கெதியா நடந்தாள். நடையிர வேகம் அதிகரிக்க அதிகரிக்க திரளா தெரிஞ்ச சனக்கூட்டம் ஒற்றை ஒற்றை மனிச கூட்டமாத் தெரிஞ்சுது அவள் கண்ணுக்கு.
பரஞ்சோதி புளியமரத்தடிய நெருங்க முன்னமே கூட்டத்துக் குள்ளயிருந்து கேட்ட "அம்மா . . . அம்மா . . .” எண்ட அலறல் சத்தம் வந்து அவள்ற காதுகள்ல மோத அவளுக்குள்ள ஒரு இனம்புரியாத பயமும் பரிதவிப்பும் உண்டாகிறது.
புளியமரத்தடிக்குப் போய் கூடி நிற்கிறாக்கள்ற தலைக்கு மேலாலையும் தோழுக்குமேலாலயும் எட்டிப்பார்க்க எத்தனிச்சாள். எதுவும் தெரியல. குனிஞ்சி மனிசக் கால்களுக்கிடையாலயாகுதல் எதுவும் தெரியுமா எண்டு பார்த்தாள். ஒண்டும் தெரியயில்ல.
"எண்ட அம்மோ . . . உங்களக் கும்பிட்டன் . . . என்ன ஒண்டும் செய்யாதையுங்கோ . . . எண்ட அம்மோ . . . நான் சாகுறனே ..." கூட்டத்துக்குள்ளயிருந்து வரும் அந்த ஆம்பிளைக் குரலின் அவலம் மட்டும் அவளுக்கு கேட்டது.
"டேய் சொல்லுடா . . . சொல்லுடா நாயே? ஏய் எல்லாரும் விலத்தி நில்லுங்கோ. விலத்துங்கோ . . . இவன . . . இவன் இப்பிடி
வெள்ளாவி 63

Page 83
யெல்லாம் கேட்டா சொல்லமாட்டான், கேக்குற மாதிரிக் கேட்டாத்தான் சொல்லுவான். திரும்பவும் சொல்லுறம் எல்லாரும் விலத்தி நில்லுங்கோ ..."
வட்டம் போட்டு நிண்ட கூட்டம் அந்த அதட்டலால, கொட்டிச் சிதறுண குண்டுமணிகளப்போல விலத்திப்பிரிய, பின்னால நிண்டி ருந்த பரஞ்சோதி தானாவே முன்னிலைப்பட்டுற்றாள்.
இப்ப என்ன நடக்குதெண்டு நல்லா பார்க்கமுடிஞ்சுது ஆயுதம் வைச்சிக் கொண்டிருக்கிற பத்து இளந்தாரி பொடி யனுகளுக்கு நடுவுல கிடக்கிற அவன் அவங்கட ஆக்கினை பொறுக் கேலாம துடிச்சிக் கொண்டு கிடந்தான். இருபத்திரண்டு இருபத்தஞ்சி வயதுதாணிரிக்கும் எத்தின நாள் தொடர்ந்த சித்சிரவதையோ தெரியாது. உதடெல்லாம் வெடிச்சி வீங்கித் தொங்குது. முகத்துச் சதை வீங்கி கண்ண மறைச்சிற்றுது கண்ணே இல்லாத ஒரு மனிசன் மாதிரித்தான் இருந்தான்.
அவன் எப்பிடிப்பட்டவனோ? என்ன பிழை செய்தானோ? தெரியாது. ஆனா அவண்ட முகத்துல தெரியுற மரண பயம், உடம்புல காட்டுற குறுகல், கைகள் கெஞ்சுற கெஞ்சல், அவனப் பார்க்குற ஆக்கள்ற மனமிளகச் செஞ்சுது.
“டேய் சொல்லுடா ... சொல்லுடா நாயே. இன்னும் எத்தினடா இப்பிடிச் செய்திருக்காய்."
இது நாள் வரைக்கும் ஊருக்குள்ள கண்டறியாத புதுமுகப் பொடியனொருவன், கேள்விகேட்டு உதைச்சிக் கொண்டே இருக் கிறான்.
பரஞ்சோதியால இனியும் இந்தப் புதுனத்த பார்த்துக் கொண்டு நிக்கேலாமப்போக, அவளையும் அறியாம அவள்ற கால் பின் வாங்கிற்று.
“எத்தினையோ பொட்டைகள கெடுத்திருக்கானாம்கா ... ஊர் ஊராப் போய் கல்யாணம் கட்டுறனெண்டு பொம்பிளைகள ஏமாத்துறதுதான் தொழிலாம் . . . ஊருக்கொரு பொண் வைச்சிருக் கானாமே . . . இப்பதான் அம்புட்டான் . . . இனியெங்க தப்புற . . .” "ஏற்கனவே பாதி உசிர் போயிற்று. இனியென்னெண்டுகா உசிர்தப்புற பொண் பாவமெல்லோகா . . . சும்மா உடுமோகா ?” கூட்டத்துல ஆளாளுக்கு ஒவ்வொண்டக் கதைக்கிறத கேட்ட பரஞ்சோதி திரும்பயும் முன்னால போய் அவன ஒருதரம் பாக்கு றாள். w
இப்பிடிப்பட்ட ஒருவன்தானே, பதினைஞ்சி வருசத்துக்கு முதல் எனக்கிட்டயும் வந்து போயிருப்பான்.
ஒண்டுரெண்டு நிமிசம்தான், அவனப் பார்த்திருப்பாள். அவன் படுற வேதினைய அவளால பார்க்கேலாமப்போக கூட்டத்துகுள்ள
164 விமல் குழந்தைவேல்

யிருந்து வெளியால வந்தவள் போடியார் ஊட்டுக்குப் போகாம தண்ட ஊட்டுக்கு வந்து வாசலுல்ல குந்தி இருந்திட்டாள்.
"என்ன பாய்ஞ்சோயி போடியார் ஊட்ட போறெண்டு போட்டு போனாயாமெண்டு இவன் சொன்னான். இப்ப கிறுகி வந்து குந்திக் கொண்டிரிக்காய் என்னகா விசயம் ?”
தோய்ச்செடுத்துக் கொண்டு வந்த உடுப்புகள விரிச்சி கொடியில காயப்போட்டுக் கொண்டே நாகமணி கேட்க பரஞ்சோதி மெளன மாகவே இருந்தாள்.
“என்ன பாய்ஞ்சோயி நான் கேக்கன், நீ ஒண்டும் கதைக்காம பேய் அறைஞ்சாப்போல இரிக்காய் . . . அது சரி, அதென்னகா புளிமரத்தடியில அவ்வளவு கூட்டம் தெரியுது, என்னவாம் புதுனம்?” தான் கண்டதையும் பார்த்ததையும் நாகமணிக்கிட்ட விபரிச்சாள் பரஞ்சோதி.
"அரசன் அண்டறுப்பான் தெய்வம் நிண்டறுக்குமெண்ட தெல்லாம் பொய்கா. தெய்வமும் எத்தினைக்கெண்டு முகம் குடுக்கிற, அதுதான் உடனுக்குடன காட்டுது."
"நாயப், பேயப் போட்டு அடிக்குற மாதிரி மணிசர மணிசர் சாக்காட்டுறதோ? இதென்ன கறுமம்கா ?”
"இதென்ன பாய்ஞ்சோயி, தப்புச் செஞ்சவன் தண்டனை வாங்கத் தானே வேணும்.”
"அதுக்கு . . . அதுவும் மனிச உசிரெல்லோ." "ஆ. மணிச உசிரோ ... நானெண்டா அந்த நாயெல்லாத்தையும் கண்ட இடத்துலயே சுட்டுச் சாக்காட்டுவன்."
ஊட்டுக்குள்ளயிருந்து வெளியால வந்த அரவிந்தன் இப்பிடிச் சொல்லுவானெண்டு பரஞ்சோதி எதிர்பார்க்கயில்ல.
"ம் . . . போவன் . . . போவண்டா . . . போய்சாக்காட்டிப் போட்டு வாவன்"
மனதுக்குள்ள ஆச்சரியப்பட்டாலும் அத வெளிக்காட்டாமச் சொன்னாள் பரஞ்சோதி.
"இருந்து பாரன். எனக்கொரு வைசிக்கல வாங்கித் தரயில்லை யெண்டா நான் போறனோ இல்லையோ எண்டு இருந்து பாரன். "கண்கெட்டுப் போயிடுவாய். இப்ப போவண்டா ஒருசைக்கில் வாங்கப்படுற கடனாகுதல் மிச்சம்."
தாய்க்காறி சொல்லி முடிச்ச நேரம் அரவிந்தன் வாசலுல இல்ல. திரும்பிப் பார்த்தாள் ஒழுங்கைக்குள்ளால நடந்து போற வண்ட தலை மட்டும் வேலிக்கு மேலால தெரிஞ்சுது."
“பார்தயோ ... பார்த்தயோ? நான் சொன்னனே ...நீ நம்பயில்ல. இப்ப அவனே சொல்லியிற்றான். நீயும் கேட்டுற்றாய்.”
வெள்ளாவி 1.65

Page 84
தூரத்துல குந்தியிருந்த நாகமணி கையால தத்தி தத்தி பரஞ் சோதிக்கிட்ட வந்தான்.
"அப்பிடியென்ன பூமி பூலோகத்துல இல்லாதத காட்டிற்றா ரெண்டு, பார்த்தயோ பார்த்தயோ எண்டுகொண்டு நீ இப்பிடி மண்ணரச்சி தவண்டுவாறாய்.”
"அதுக்கில்ல பாய்ஞ்சோயி, எனக்கு பயமா இரிக்குகா, சொல்லுற னெண்டு கோவிக்காத காசாத்தை பெத்தா சொன்னா வள்ளி யக்கைக்கிட்ட நல்ல காசிரிக்காம் . . . நீ கேட்டாத்தருவா . . . கைமாத் தாத்தான் இல்லையெண்டாலும் வட்டிக்காகுதல் கேட்டுப் பாரன். “ஆரு, வள்ளியோ? பேண்ட பீய பிரம்பால தீய்ச்சிப் பாக்குறவள். நான் போய் கேட்டோடன தூக்கித் தந்திருவாளாக்கும்.”
"பூரணமக்கைக் கிட்டயாகுதல் கேட்டுப் பாரன்." "எச்சிக் கையால காக்காய் விரசாதவள் அவள், அவளுக்கிட்டயும் ஆரும் வாய் வைக்கிறதோ ?”
"அப்ப என்னகா செய்யுற? ஆருக்கிட்டயும் கேட்டுப் பாரன்.” "இஞ்சே நிப்பாட்டு கதைய. மகனுக்காக என்னய ஊடு ஊடாப் பிச்சையெடுக்க உடுவாய் போல இரிக்கி. அப்பனும் புள்ளையும் என்னப் போட்டு என்னபாடுதான் படுத்துறயள்."
பரஞ்சோதி பாய்ஞ்ச பாய்ச்சல்ல பயந்து போனவனப்போல ஒழும்பிப் போயிற்றான் நாகமணி.
1 66 விமல் குழந்தைவேல்

அவிட்டு வேலையெல்லாத்தாயும் முடிச்சி, உடுப்பு மினுக்க கரி போட்டுக்குடுத்து, நாகமணியோடசேந்து ஒவ்வொரு ஊட்டுக்குமுரிய உடுப்புக்கள வெவ்வேறாக பிரிச்சடுக்கி வைச்சிற்று படுக்கையில சாய்ஞ்சபோதுகூட, பகல் புளியமரத்தடியில பாத்த புதுனம் கண்ணுக் குள்ள நிண்டு பரஞ்சோதிர நித்திரையக் குழம்பிக் கொண்டே யிருந்தது.
நாகமணி நல்ல நித்திரையெண்டுதான் நினைச்சாள். ஆனா அவன் தண்டகாலத் தூக்கி. அவளுக்கு மேல போட்டதும்தான் அவனும் நித்திரையில்லாமத்தான் கிடக்கான் எண்டுறது புரிஞ்சிச்சி. "என்ன பாய்ஞ்சோயி முழிச்சிக் கொண்டுதான் கிடக்காய். நித்திரை வரயில்லையோ?”
அவண்ட கை அவள்ற இடுப்பில வளைச்சிக்கொண்டிற்று. "எங்க வருகுது நித்திரை? கண்ணமூடுனா புளியமரமும், சனமும், அந்த ஆக்கினைப்பட்ட சீவனும்தான் கண்ணுக்குள்ள நிக்குது. பாவம் ஆரு பெத்த புள்ளையோ ?”
பரஞ்சோதி திரும்பி நாகமணிர முகத்துக்கு நேர பெருமூச்சு உட்டாள்.
"கவலைப்பட்டு என்ன செய்யுற? ஊரு உலகத்துக்கு நம்மளால நியாயம் சொல்லேலுமோகா ... இதென்ன பாய்ஞ்சோயி படுக்குற நேரத்துலயாகுதல் இந்தப் புடவைக் கொசுவத்த அவுட்டுட ஏலாதோகா உனக்கு ?”
இருட்டுல கையில தட்டுப்பட்ட அவள்ற இடுப்புக் கொசுவத்த நாகமணி தளர்த்திவுட முடிச்சவுண்ட நெல்லுக் கதிர் கட்டுப்போல தளர்ந்து நெழிஞ்சி அவன நெருங்குன பரஞ்சோதிய, இறுக்கி கட்டி அணைச்சிக் கொண்டான் நாகமணி.
வெள்ளாவி 167

Page 85
"அது சரி நீ ஏன் இன்னும் முழிச்சிக்கொண்டு கிடக்காய்? உனக்கும் ஏதும் எண்ணம் கவலையோ?”
நாகமணிர நெத்தியில இருக்குற பாலுண்ணிய தடவிக் கொண்டே கேட்டாள்.
“எனக்கென்னகா எண்ணம் கவலை? எல்லாம் இந்தப் பொடியன பத்தித்தான்.”
“பொடியனுக்கென்ன வகுத்துல புள்ளைகிள்ளையோ கவலைப் է 1ւ- ?"
"சும்மா இரி பாய்ஞ்சோயி அவனப் பத்தி கதையெடுத்தாலே உண்ட முகத்துர அத்திவாரம் அகண்டு போயிரும்."
"நான் இப்ப என்ன சொல்லிப்போட்டனெண்டு நீ இப்ப இந்த இருட்டுல கிடந்து இறால் தெறிக்கறாப்போல துடிக்காய் எண்ணுறன்."
"இல்ல இண்டு பின்னேரம் அவன் கதைச்சத கேட்டாய்தானே?" "அடா அவண்ட செல்லக் கதையத்தான் நீ கேளு.” "ஆருகண்டா, ஊரு உலகத்துல என்ன நடக்குதெண்டு கண்டாய் தானே. சொல்லாமக் கொள்ளாம ஓடிருவானோ எண்டு பயமா இரிக்குகா.”
“ஒடுறவன புடிச்சி வைக்கேலுமோகா? அவனென்ன வாவுடா பாலனோ மடியுக்க வைச்சிக் கொள்ள ?”
"மறுகா, மறுகா நையாண்டிக் கதைதான் கதைக்காய்.” "இப்ப என்னகா செய்யச் சொல்லுறாய்? ஓடிடுவான் எண்டுறத்துக்காக உண்ட மகன் ராசகுமாரனுக்கு கோட்டை கட்டி அவன சிறை வைக்கப் போறயோ?”
“கல்லுல நெல்லு முளைச்ச மாதிரி ஒண்டேயொண்டெல்லோகா இன்னும் ஒண்டு ரெண்டு இருந்திருந்தாலும் பரவாயில்லை."
“வேணாமெண்டு ஆருகா சொன்னா . . . எனக்கு புள்ளை வேணாம் எண்டபுள்ளை அரவிந்தன்தான் எனக்குப் புள்ளை அவனொருத்தன் போதுமெண்டு முதல் மூண்டு வருசமும் நீதான் தள்ளிப்படுத்த."
"தள்ளிப்படுத்தன் . . . உண்மைதாங்கா . . . அதுக்குப்புறகாகுதல் அந்த ஆண்டவன் கண்முழிச்சிருக்கக் கூடாதோ ?”
“இப்ப என்னகா உள்ளபுள்ளையும் செத்து புதைச்ச இடத்துல புல்லும் முளைச்சமாரியெல்லோ கதைக்காய்."
"அதுக்கில்லகா அவன் ஆசைப்பட்ட மாதிரி அவன் கேட்ட வைசிக்கிள வாங்கிக் குடுத்திற்றமெண்டா அவண்ட கவனம் அங் கிட்டு இங்கிட்டு சிதறாதெல்லோ.”
68 விமல் குழந்தைவேல்

நாகமணி சொல்லி முடிக்கமுதலே அவனக் கட்டிப் பிடிச்சிருந்த பிடியத் தளர்த்தி தள்ளி உட்டுட்டு திரும்பிப்படுத்த பரஞ்சோதிய தண்டபக்கம் திரும்பி அணைச்சிக் கொண்டான், நாகமணி.
“நினைச்சன் அடச்சாரை மாதிரி நெழிஞ்சி அங்கிட்டும் இங் கிட்டும் புரண்டு சுத்தி வளைச்சிக் கதைக்கக்குள்ள நினைச்சன். கடைசியா மகனுலதான் கொண்டாந்து முடிப்பாய்யெண்டு. நான் நினைச்ச மாதிரியே நடந்திற்று."
"ஆ. . . அத உடு பாய்ஞ்சோயி உண்டகோவம் எனக்குத் தெரி யாதோ ..."
நாகமணி அவள இறுக்கி அணைக்க அவளும் அவன அணைச்சிக் கொண்டபோது தண்ட முதுகுல உண்டான நோவக் கூட நாகமணி வெளிக்காட்டிக் கொள்ளயில்ல.
வெள்ளாவி 169

Page 86
(Pண்டு நாளைக்கு முந்தி புளியமரத்தடியில நடந்த சம்பவம் இன்னும் பரஞ்சோதிர மனசுல இருந்து உடுபட்ட மாதிரித் தெரிய யில்ல. போடியார் ஊட்டுக்கும் போகயில்ல. அவசரமா வரச் சொல்லி, நேற்று உடுப்புக்குடுக்கப்போன நாகமணிக்கிட்ட போடி யார் பொஞ்சாதி விசளம் சொல்லியனுப்பியிருந்தா.
எத்தின சாக்கு நெல்ல அவிச்சிறக்கி கொட்டித்திலாவவெண்டு வைச்சிருக்காவோ தெரியாதெண்ட பயம் வேற பரஞ்சோதிக்கு. மகனப்பத்தி நாகமணி கதைக்கிற நேரமெல்லாம் அவள் தெங்கடு தேவையத்துக் கதைச்சாலும் அவளுக்குள்ளயும் மகனப் பத்திய பயம் இல்லாமலில்ல.
சின்ன வயது, எதிர்காலத்தப் பத்தி யோசியாம கேப்பார் புத்தி கேட்டு போயிற்றானெண்டா? ஒண்டேயொண்டையும் எப் பிடிப் பறிகுடுக்கிற தெண்டுறத நினைக்கக்குள்ளயே அவளுக்கு ஈரக்குலை நடுங்கிற்று. இதுக்கிடையில நாகமணிர முதுகுவீக்கமும் அவள்ற யோசினைய கூட்டிற்று.
முதல்ல சின்னதா வீங்கி சிவந்து நோ கண்ட இடத்துல ஆசு பத்திரிக் குழம்பத்தான் பூசிக் கொண்டிருந்தான். நோவோ வீக்கமோ ஒள்ளமும் குறையுறதக் காணயில்ல. பாவம் நாகமணி எந்த நோவை யும் வெளிக்காட்டாம தனக்குள்ளயே அடக்கிக் கொண்டு திரியுறான். இதுக்கிடையில பரஞ்சோதிய கைநீட்டி அடிச்சி ஒருகிழமை ஆகியும் இன்னும் அதப்பத்தியே கதைச்சிக் கொண்டு கவலைப்பட்டுத் திரியுறான்.
நாகமணி இண்டைக்கு நேரத்தோடயே ஊருக்குள்ள புடவை யெடுக்கப் போயிருந்தான். அரவிந்தனும் பள்ளிக்கூடம் போயிற்றான். பகலயச் சோறுகறிய பத்து மணிக்கே ஆக்கி காய்ச்சி முடிச் சிற்றாள். பள்ளி கலைஞ்சி புள்ளை பத்திப் பதறி வாற நேரம் தின்ன ஒண்டுமில்லெண்டா பதறிப் போயிருவானெண்டு நினைச்சி
70 விமல் குழந்தைவேல்

சோறு கறிய பத்திரமாமூடி வைச்சி கதவப் பூட்டிற்று போடியார் ஊட்டபோக நடந்தாள் பரஞ்சோதி.
குருத்து வயல் நிலத்தையும் குழந்தைப் புள்ளை முகத்தையும் எத்தின தரம் பார்த்தாலும் சலிக்காது. மூண்டு நாளுல இன்னும் மிஞ்சின விதையெல்லாம் முளைச்சி வயல் பயிர் அடர்த்தியாயிரும். வரப்பு மண் சரிஞ்சா சின்னப்பயிர் தாங்காது முறிஞ்சி போயிரும். பரஞ்சோதி கவனமாத்தான் நடந்தாள்
நடந்து கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். மூண்டு நாளைக்கு முந்தி கண்ட காட்சி போல இண்டைக்கும் புளியமரத் தடிய சுத்தி சனம் கூடி நிண்டிச்சி.
"இண்டைக்கு ஆரோ என்ன புதுனமோ கதிரவேலா" அவளையும் அறியாம கடவுள வேண்டிக்கொண்டாள் பரஞ்சோதி.
புளியமரத்தடிக்கு போறத்த தவிர்க்கத்தான் அவள்ற மனம் நினைச்சுது. ஏனோ தெரியாது அவள்ற கால் புளியமரத்தடிய நோக்கித்தான் நடைபோட்டிச்சி.
அண்டயப் போல இண்டைக்கு கூடிநிண்டாக்கள்ற முகத்துல புதுனம் பார்க்குற தோரணை தெரியயில்ல. எல்லார்ர முகத்துலையும், பயமும், கவலையும்தான் தெரிஞ்சுது. "எண்டம்மோய், இதென்ன கொடுமைகா ?” எண்டு சில பொண்டுகள் சொல்ல இன்னும் சில பொண்டுகள் கண்ணால வடிஞ்சதண்ணிய முந்தானையால துடைச்சிக் கெண்டாளுகள்.
கூட்டத்துக்குள்ளயிருந்து குழர்ற புள்ளைச் சத்தமொண்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது. சன வட்டத்துக்கு மேலால எட்டிப் பார்த்தாள் பரஞ்சோதி.
வெட்ட வெளியில நடுவுல வெறிச்ச பார்வையோட தலைவிரி கோலத்துல கிடந்தாள் அந்தப் பொம்பிளை, கிழிஞ்ச ஊத்தப் புடவை, தோள்பட்டையிலயும் முதுகிலேயும் கிழிஞ்ச சட்டை, எண்ணை கண்டு எத்தினாநாளெண்டு தெரியாத தலைமுடி. புடவை விலத்தி வெளித்தெரியும் உடம்பெல்லாம் திட்டுத்திட்டான ஊத்தைப்படலம். உயிர் இருக்கோ இல்லையோ எண்ட சந்தேகத்துக் கிடமான நிலையில கிடந்த பொம்புளைக்கு, பக்கத்துல வாய்க்குள்ள விரல வைச்சி சூப்பிக் கொண்டிருந்த அந்தப் புள்ளைக்கு ரெண்டு வயதிருக்கும்.
ஆம்பிளைப் புள்ளையோ பொம்பிளப் புள்ளையோ எண்டு அடையாளம் காணமுடியாத சுறுண்டமுடி, களுத்துல நாலைஞ்சி பாசிமாலைகள். இடுப்புல அரக்கூடு கட்டுன கறுப்பு நாடா. கிழிஞ்சி தொங்குற சின்னக்கால் சட்டை, மூக்கால வழிஞ்ச சளி திரும்பயும் வாய்க்குள்ளால உள்ளுக்குப் போகுது. வாயில இருக்கிற கைய எடுத்து பக்கத்துல கிடக்கிற தாயுர கன்னத்துல அறையுது அந்தப் புள்ளைய. ஒடிப்போய் தூக்கி அணைச்சிக் கொள்ள
வெள்ளாவி 171

Page 87
வேணும்போல இருந்தது பரஞ்சோதிக்கு. முகத்துக்கு நேர தெரிஞ்ச பொல்லுகளையும் தடிகளையும் பார்த்து பயந்து நிண்டுற்றாள். "ஏய் எழும்புடி . . . சொல்லுடி . . . எங்கெங்க என்னென்ன வைச்சிருக்காய் எண்டெல்லாம் சொல்லுடி ?”
கேள்விகளோட செருப்புக் கால்கள் எட்டி உதைக்குது அவள. எத இவனுகள் கேக்கானுகள் என்னத்த இவள் வைச்சிருக்காள் எண்டெல்லாம் பரஞ்சோதிக்கு யோசினை.
பழைய சீலைப்பையொண்டுக்குள்ளயிருந்து இழுத்துப் பிரிச்சி பிய்ச்செறிஞ்ச கிழிஞ்ச ஊத்தை உடுப்புகள் அங்கொண்டும் இங் கொண்டுமா அலங்கோலமாகக் கிடக்கு. ரெண்டு நெழிஞ்ச அலு மினியத் தட்டுகள், தேயிலைக் கறள் புடிச்சி கறுத்துப்போன பேணியொண்டு. இவைகளத் தவிர வோறொண்டும் அவளுக்கு பக்கத்துல இல்ல. அவளுக்கிட்ட இருக்கிற இதுகளத் தவிர வேற என்னத்தக் கேட்டு இவளப் போட்டு இவனுகள் இப்பிடிச் சித்திர வதைப் படுத்துறானுகள் ?
பார்த்துக் கொண்டு நிண்ட அத்தின பேர் மனதுலயும் இதே கேள்விதான். ஆனா எதிர்த்துக் கேள்வி கேக்க எவருக்கும் தையிரியம் இல்ல.
“சீ. ஐ. டி. வேலை பாத்தாளாங்க." “சீ. ஐ. டி. வேலயோ? அதென்ன வேலைகா ?” "அதான் எந்தெந்த இயக்கம் எங்கெங்க ஒழிஞ்சிருக்கெண்டு பிச்சக்காரி வேசத்துல திரிஞ்சி கண்டுபுடிச்சி ஆமிக்காரங்களுக்கிட்ட சொல்லுறதத்தான் சொல்லுறாங்க."
"அதுக்கு இவங்க என்ன இயக்கக்காரரா GLDITsirt 2" "ஆரு இவங்களோ ? . . . இவங்க கலக்கத்துக்க கண்டுகட்ட வந்த சில்லாடுகள்கா. இயக்கக்காரர் இதுகள அறிஞ்சா இவையளும் இருந்தாபாடுல்ல."
"இதென்ன அநியாயங்கா ? வருசக்கணக்கா சந்தை சந்தையா பிச்சையெடுத்துத் திரிஞ்ச பிச்சக்காரியெல்லோகா இவள். இவளப் போட்டு இந்த ஆக்கினைப் படுத்துறானுகளே இவள் எப்பயாங்கா சீ. ஐ. டி. வேலை பார்க்கத் தொடங்குனாள்."
“அதானேகா ... பாவம் பயித்தியக்காரியெண்டும் பாராம ஆரோ புள்ளயயும் குடுத்திட்டான். அப்பன் பேர் தெரியாத புள்ளையோட ஊர் பேர் தெரியர்ம அலைஞ்சி திரிஞ்சவள் இந்த நட்டாமுட்டி களுக்கிட்ட வந்து எப்பிடி மாட்டிற்றாளுகா ?”
கூடிநிண்ட பொண்டுகள் ஒருத்தரோட ஒருத்தர் ரகசியமா கதைக்கிறத பரஞ்சோதியும் கேட்டுக் கொண்டுதான் நிண்டாள். "இவள் இப்பிடியெல்லாம் கேட்டா சொல்ல மாட்டாளுடா. இவளுக்கு செய்யுற வேலையப்பாருடா ?”
172 விமல் குழந்தைவேல்

சொல்லிக்கொண்டே புளியமரத்தில இருந்து முறிஞ்சி உழுந்து கிடக்குற மிலாறு சுள்ளிகள முறிச்சிக் கொண்டுவந்து அவள்ற கைவிரல் இடுக்குகள்ல திணிச்சான் ஒருவன். அவள்ற அஞ்சு விரலுகளுக்குமிடைப்பட்ட நாலு நாலு இடுக்குகளுக்குள்ளயும் சுள்ளிகள் திணிக்க, ஒருவன் அவள்ற கைய நிலத்துல கிடையாக வைச்சிப் புடிச்சிக் கொள்ள, இன்னொருவன் ஓடி வந்து துள்ளி அவள்ற கையில மிதிச்ச கணத்துல, காலுகள கட்டிக்கிடத்தி சூட்டுக்கோல் வைக்குற நேரம் வலி தாங்காம எம்பி எழும்புற மாடுபோல ஆ. . . எண்டு அலறிக்கொண்டு நிலத்துல இருந்து எம்பி ஒழும்பி விழுந்திச்சி அவள்ற உடம்பு. இனியும் இந்தக் கொடுமைப் பார்த்து சகிக்கேலாண்டு நினைச்ச பரஞ்சோதி கூட்டத்துக்குள்ள இருந்து வெளிப்பட பின்னால காலெடுத்து வைச்ச நேரம் திடீரெண்டு ஆரோ அவள்ற முதுகதொட்டு இழுக்க திரும்பிப் பாத்தாள். நாகமணிதான் நிண்டு கொண்டிருந்தான். "இதென்ன பாய்ஞ்சோயி உனக்கு வேற வேலையில்லையோ இஞ்ச வந்து இந்த அநியாயத்தயெல்லாம் பார்த்துக்கொண்டு நிக்காய் . . . வா . . . ஊட்டபோக."
பரஞ்சோதிர கண்ணால பொலுபொலெண்டு தண்ணி வடியத் தொடங்கிற்று.
நாகமணியும் பரஞ்சோதியும் புளியமரத்தடி கட்டுல இருந்து இறங்கி வயல் வரப்புல நடந்து வர எதிர சதாசிவமும் வந்து கொண்டிருந்தான்.
“என்ன சதாசிவம் எங்க போகப் போறாய்?” பரஞ்சோதிதான் கேட்டாள்.
"ஆரோஒரு பயித்தியக்காரியக் கொண்டு வந்து சாகவைக் கானுகளாமே. இதுகள தட்டிக்கேக்க ஆளில்ல எண்ட நினைப் பாமோ அவனுகளுக்கு ?"
"ஏன் சதாசிவம் நீ போய் தட்டிக் கேக்கப் போறயோ? அம்மைக்கு அரிசி குடுக்கயில்லையெண்டு கூப்பன் கடை மனேச்சனுக்கெதிரா புட்டிசம் போட்ட மாதிரியெண்டோ நீ இத நினைச்சிக் கொண்டிருக் காய். அது அந்தக்காலம். அதெல்லாம் ஒடிப் போயிற்று பேசாம கிறுகி நட."
"அப்ப பரஞ்சோதி இதெல்லாத்தையும் ஆருதான் கேக்குற தெண்றாய்?"
"ஆ. தட்டிக்கேட்டா உன்னையும் தட்டிவைப்பானுகள். பேசாம பொட்டிப் பாம்பா அடங்கிப் போறதுதான் நல்லது. அதுகள் வயது வித்தியாசமெல்லாம் பாக்காதுகள்."
விலத்தி நடக்க வழிஉடேலாத ஒற்றையடி வரப்பு வழி. சதாசிவம் திரும்பி நடந்தான்.
வெள்ளாவி 73

Page 88
"நீங்க ரெண்டு பேரும் ஊட்டபோங்க நான் போடியார் ஊட்ட போயிற்று வாறன்."
குரல் கேட்டு நாகமணி திரும்பிப் பார்க்க தான் நிக்குற இடத்துல இருந்து தூரத்துல நிண்டாள், பரஞ்சோதி.
"இஞ்சே உனக்கென்ன பயித்தியமோ அந்தப் புதுனங்களப் பாத்து பேயறஞ்சாப் போல நிக்காய். இதோட போடியார் ஊட்ட போகப் போறயோ? பேசாம ஊட்ட வந்து தேயிலைத் தண்ணியக் கிண்ணிய குடிச்சிற்றுப் போகா."
நாகமணி சொன்னதும் சரியாத்தான் பட்டிச்சி பரஞ்சோதிக்கு. சதாசிவத்துக்கும் நாகமணிக்கும் பின்னால நடந்த பரஞ்சோதிர மனசுல நடந்த சம்பவமெல்லாம் வரிசையாக வந்திச்சி.
ஒரு வகையில பாத்தா நானும் இவளப் போலதானே. எண்ட நல்ல காலத்துக்குத்தான் அதுவும் பதினஞ்சி வருசத்துக்கு முன்னால நடந்திச்சி. அப்பயும் நாகமணி வந்து கைகுடுக்கயில்லயெண்டா எனக்கும் இந்த நிலைமைதானே வந்திருக்கும். அப்பிடி நடந்து கிடந்திருந்தா இண்டைக்கு அரவிந்தன் எண்டுற மகன் எனக்கு இந்த வயதுல இருந்திருப்பானோ ? கன கேள்விகள அவளே அவளுக்கிட்ட கேட்டுக்கொண்டு நடந்தாள்.
"இது எப்பிடி இருக்கத் தெரியுதோ நாகமணி. ஆள்மெத்தக்கூடுனா மீன் மெத்தப் புடிக்கலாமெண்டுதான் இவங்க நினைச்சாங்க. குளத்துர ஆளம் தெரிஞ்சதும் இதுகளெல்லாம் கரை ஏறிற்றுகள். ஆழத்தப்பற்றி கவலைப்படாம எதிர்நீச்சல் போடுறவங்களெல்லாம் காட்டுக்குள்ளையும் மேட்டுக்குள்ளையும் கிடந்து கஸ்டப்படுகுதுகள்." இடையில நேத்துப் புறந்த இதுகளெல்லாம் இடுப்புல ஊமக் கொட்டைய மறைச்சி வைச்சிப் பயம் காட்டுதுகள்.
சதாசிவம் தண்டபாட்டுலயே புலம்பிக் கொண்டு நடந்தான்.
புத்தியறியாத விளையாட்டுப் புள்ளையளெல்லாம் சேந்து ஒணாண்ட கழுத்துல சுருக்குப்போட்டுப் புடிச்சி, ஒணாண்ட வாய அமத்திவைச்சி துறந்து புகையிலைய வாய் நிறைய திணிச்சி உட்டுடுங்கள். புகையில மயக்கத்துல தலைய ஆட்டி ஆட்டி ஒட ஏலாம தட்டுத்தடுமாறி முட்டிமோதி திரியுற ஓணானப்பாத்து சந்தோசத்துல கைதட்டி சிரிச்சி துள்ளிக்குதிக்குங்கள் புள்ளக்கிளை கள். அதுக்குப் புறகு ஓணான ஓடச்சொல்லி கல்லால எறிஞ்சா ஒட ஏலாத ஒணான் கடைசியில கல்லெறிபட்டுச் செத்துப் போயி ரும். இதெல்லாத்தையும் பார்த்துக்கொண்டு காத்திருக்கிற காக்காய் ஓடிவந்து ஓணான தூக்கிக் கொண்டுபோய் கொத்திக் கிளறும்.
புளியமரத்தடி பொம்பிளர கோலமும் அந்தப் குழந்தப் புள்ளர முகமும் பரஞ்சோதிர மனக்கண்ணுக்குள்ள வந்து கொண்டே யிருந்திச்சி. கூடவே அந்தப் பொம்புளர மரண அணுகலும் புள்ளர
174 விமல் குழந்தைவேல்

குழறுவைச் சத்தமும்கூட அவள்ற காதுல இப்பயும் கேக்குற மாதிரிச்தானிரிந்திச்சி அவளுக்கு.
போடியார் ஊட்டுவாசல் அடுப்புக்குப் பக்கத்துல கிடந்த நெல்லு மூடையக் கண்டதுமே வளவுக்குள்ள உள்ளிட்ட பரஞ்சோதிக்கு நெஞ்சு திக்கெண்டிச்சி. நிலத்துல குத்துன அலவாங்க சுத்தி வளைச்சி உரிக்குறதுக்கெண்டு தேங்காய்களெல்லாம் குவிச்சிக்கிடக்கு. ஏலு மெண்டா என்னய வெட்டிப் புளந்துதான் பாரனெண்டு சொல்லு றாப் போல தண்டமொக்கு முகத்தால பரஞ்சோதிய முறைச்ச மாதிரிக் கிடந்திச்சி ஒரு பெரிய கொள்ளிக்கட்டை. அத்தின வேலையையும் ஒதுக்கி வைச்சிக் கொண்டு காத்திருந்த போடியார் பொஞ்சாதி பரஞ்சோதியக் கண்டதும் முகத்த நீண்டிற்றாள்.
"எங்கடி பரஞ்சோதி விசளத்துக்க மேலவிசளம் சொல்லி அனுப்பி யும் உன்னக் காணக்கிடக்குதில்ல?"
"உடம்பொண்ணாம் இரிந்திச்சி அதான் தாயே வந்து கொள்ள u5cija.”
"கொம்மயப்போல நீயும் சரக்கெண்டா வருத்தம் சொல்லப் பழகிற்றாய்போல. எடு ஊடு நிறைஞ்ச வேலை கிடக்கு. இந்தா இதத்தூக்கி அடுப்புல ஏத்து."
"பத்துற அடுப்புல இரும்புத்தாச்சிய ஏத்தி வைச்சி, நெல்லுமூடைய அவுட்டு தாய்ச்சிக்குள்ள கொட்டிக் குவிச்சி நெல்லுக்குவியல் முடியில தண்ணிய ஊத்துனாள் பரஞ்சோதி."
“எடியே பரஞ்சோதி என்னடி புளியமரத்தடியில பெரிய புதுன மெல்லாம் நடந்திச்சாமேடி. இந்த ஊர்ச்சனமெல்லாம் ஒதுங்கிச்சி. நான் மட்டும் போகயில்ல, நமக்கிருந்த கறுமத்தையெல்லாம் கண் ணால பார்க்கேலாதுகா. நீயும் போயிருப்பயே என்னடி நடந்திச்சி." "அந்தக் கறுமத்த என்னெண்டுதாயே வாயால சொல்லுற. இன்னமும் அந்தப்புள்ளை கண்ணுக்குள்ளதான் நிக்குது.”
"ஒமாமேடி, அடிதாங்கேலாம அவள் செத்துப்போக, அந்தப் புள்ளையும் சாக்காட்டி ஆத்தோதினயில போட்டிருந்தானுகளாமே தலையால தெறிச்சிருவானுகள்."
"சொல்லாத தாய கேக்கக்குள்ளயே எனக்கு தலைசுத்துது.” "அது மட்டுமோடி, அழகு வடிவான பொடியனொருத்தன் அக்கரப்பத்துல செத்துக் கிடந்தானாம். கத்திக் கீறு பட்டு உடம்பெல் லாம் வெள்ளரிப்பழம் வெடிச்சாப்போல வெடிச்சிருந் திச்சாம். அது அங்காலெண்டா இஞ்சால ஆமிக்காரண்ட புதுனம் ஒள்ளுப் பமோ ? சுத்தி வளைச்சி எத்தினபேர கொண்டுபோய் அடைச் சிற்றான். என்னெண்டுதான் இந்த குஞ்சிகுராலுகள தப்ப வைக்கப் போறமெண்டு தெரியயில்ல."
வெள்ளாவி 175

Page 89
போடியார்ர மகள் கொண்டு வந்து குடுத்த தேயிலைத் தண்ணிய குடிச்சிற்று, தேங்காய்கள உரிக்கத் தொடங்குனாள் பரஞ்சோதி. “உரிக்கக்குள்ளயே பழந்தேங்காய வேறயா இளம் தேங்காய வேறயா போடுகா. எண்ணை உருக்கோணும்.”
"எண்ணை ஊருக்குறெண்டா தேங்காய் திருவி கொடுக்கயும் வேணும். அதுவும் எத்தின தேங்காயோ? எண்டு நினைச்சி பயந்துற் றாள் பரஞ்சோதி.”
"இஞ்சவாடி பரஞ்சோதி இதுல வந்து இருந்து கொஞ்சநேரம் இணப்பாறுகா.”
பூவரச மரத்துக்கு கீழ இருந்த போடியார் பொஞ்சாதி பரஞ் சோதியயும் கூப்புட்டு இருந்தாட்டி, கதை கேக்கத் தொடங்கிற்றா. "புட்டுக்கு மாவும் இடிக்கோணும். இந்தப் பொடியனும் வாறத் தால எல்லாத்தையும் தட்டுப்புட்டெண்டு முடிக்கோணும்டி.”
"எங்க இருந்து, ஆருதாயி வாறார் ?” "என்னடி உனக்குத் தெரியாதோ ... எங்க உன்னக் கண்ணால காணக் கிடைச்சாத்தானே. ஆ. . . ஆருவாறெண்டோ கேட்டாய்? அதுதான் எண்ட தம்பிர மகன் வரதன், யாழ்பாணத்துல இருந்து வாறான்கா.”
பரஞ்சோதி ஒண்டும் கதைக்கியில்லே. “எத்தின வருசமாச்சி கண்டு ... பதினஞ்சி வருசமிரிக்கும். காணி பூமியப் பாத்து வயல் விளைச்சலக் கவனிக்கெண்டு வந்த புள்ளைக்கு எவள் என்ன செய்வினை செய்ஞ்சாளோ, தெரியா? நான் யாழ்ப் பாணத்துக்குப் போகப் போறனெண்டு ஒத்தக்காலுல நிண்டு - திண்டான் பாய்ஞ்சான் மாதிரி அண்டைக்கு ஒடுன பொடியன இண்டைக்குத்தானே பார்க்கப்போறன்.”
பரஞ்சோதிக்குக்கூட நல்லா நினைப்பிருக்கு. பரஞ்சோதிர தாய் செத்ததுக்குப் புறகு. நாகமணி பரஞ்சோதிய கட்டிற்றானாம் எண்ட கதை ஊர்முழுக்கப் பரவிற்று.
பரஞ்சோதிர வகுத்துல அரவிந்தன் நாலு மாச புள்ளையா இருந்த நேரம் ஒரு நாள் போடியார் ஊட்டுக்கு புடவையெடுக்கப் போய் வந்த நாகமணி அவசர அவசரமா போடியார் ஊட்டுப் புடவைகள மட்டும் கழுவி காய வைச்சி மடிச்செடுக்கிறதக் கண்ட பரஞ்சோதி.
ஏன் இப்பிடி அவசரப்படுறாய்? எண்டு நாகமணிக்கிட்ட கேட்ட தும் "என்ணெண்டு தெரியாதாம் பாய்ஞ்சோயி, போடியார் பொஞ் சாதிர தம்பிர மகன் வரதன் நாளைக்கே யாழ்ப்பாணம் போகப் போறனெண்டு ஒத்தக் காலுல நிக்குதாம். அதான் அந்தப் பொடி யண்ட உடுப்ப மட்டும் குடுக்க எடுக்கன்கா.” எண்டு நாகமணி சொன்னது பரஞ்சோதிக்கு இப்பயும் நல்லா நினைப்பிரிக்கி.
176 விமல் குழந்தைவேல்

திடீரெண்டு அண்டைக்கு வரதன் ஒடுன ஒட்டத்துலகூட பரஞ் சோதிக்கு சந்தேகம்தான்.
"என்னடி வேலக்களைப்புல அசந்து தூங்கப்பாக்கயோ?” போடியார் பொஞ்சாதிர கேள்வி பரஞ்சோதிர யோசினைய கலைக்க ஒழும்பி அவிஞ்ச நெல்ல இறக்கி படங்குல கொட்டினாள். "அப்பிடியே கொட்டியுடு. இப்ப திலாவாத சுடுதண்ணி இறங் கட்டும்.”
கோடாலிய எடுத்து வீர மர விறகுக்கடையில போட்டாள். நல்லாக் காயாத கட்டை நீயா நானா எண்டு கேக்குறாப்போல புளக்கமாட்டனெண்டு அடம் பிடிச்சிக் கொண்டிருந்திச்சி.
"அத உடுடி . . . உன்னால ஏலாது. நீ பொம்புள என்னெண்டடி அதோட மோதுவாய். அதுகளுக்கு எங்க இந்த ஊட்டுல ஆம்புளை இரிக்கோ மகள்ற காதுக்கு எட்டாத மாதிரித்தான் கதைச்சா.
"ஏன் தாயி போடியார தறிக்கச் சொல்லலாமே.” தகுதிக்கு மிஞ்சுன கதைகதைக்காளெண்ட பழிவேற தண்ட தலையில உழுந்து ருமோ எண்டுகூட பரஞ்சோதி பயந்தாள். நல்ல காலத்துக்கு போடியார் பொஞ்சாதி அப்பிடி ஏதும் நினைக்கயில்ல.
“ஏண்டி பரஞ்சோதி அந்த மனிசனுக்கென்ன வயசு போயிற் றெண்டோ நினைக்காய். உட்டா இப்பயும் வெட்டித் தறிப்பான் மனிசன். நானெல்லோ ஒண்டுக்கும் மனிசன உடுறயில்ல."
போடியார் பொஞ்சாதி சொன்னதக்கேட்டு சிரிக்க தொண்டைக் குள்ள இறங்குன தண்ணி புரைக்கேறி இருமத் தொடங்கிற்றாள், பரஞ்சோதி.
“எடியே பரஞ்சோதி சொன்னா நம்ப மாட்டாய். என்னய அந்த மனிசன் தூக்கிக் கொண்டு போய் கல்யாணம் செய்யக்கோள அவருக்கு எத்தின வயதெண்டு நினைச்சாய். . . பதினேழு வயது தானேகா.”
"அப்ப என்ன கடத்திக்கொண்டு போயோ கல்யாணம் கட்டுன.” "அட அந்தக் கதையத்தான் கேழு . . . அப்ப எனக்கு பதினொரு வயது. தட்டுவேலிக்கு மேலால பாப்பார். கிணத்துல மறைஞ்சி நிண்டு பாப்பார் . - ஏங்கா நான் குளிக்கக்கோள கமுக மரத்துலயும் ஏறிநிண்டெல்லோ பாப்பான் மனிசன். இத எப்பிடியோ அறிஞ்ச எண்ட அப்பன் இந்த மனிசன வெட்டுறத்துக்கெண்டு கத்தியோட திரிய இந்த மனிசன் ராவோட ராவா வந்து என்னய தூக்கிக் கொண்டெல்லோ ஒடிற்றான். இப்ப பேத்தியும் கல்யாணம் கட்டி புள்ளையும் பெத்தாப் புறகும் அந்த மனிசன் இளந்தாரி மாதிரித்தான் இரிக்கான். நான்தாண்டி ஏலாவாளியாயிற்றன்.
"என்னகா, அம்மம்மா உண்ட காதல் கதைய பரஞ்சோதிக் கிட்டயும் சொல்லி முடிச்சிற்றயோ."
வெள்ளாவி 177

Page 90
பேத்திர குரலக் கேட்டோடன வேற வேலையில கவனமாயிற்றா. நாட்டுநிலமையயும் ஊட்டு நிலமையயும் மறந்து போடியார் பொஞ்சாதிர கதையக் கேட்டு, தான் கொஞ்ச நேரமாக சிரிச்சிருந்தத தன்னாலயே நம்பேலாம இருந்திச்சி பரஞ்சோதிக்கு.
அவிச்சிறக்குன நெல்ல படங்குல கொட்டி, குனிஞ்சி திலாவுன நேரத்துலெல்லாம் நாகமணிர முதுகுவீக்கமும், மகண்ட வயதும், நாட்டு நடப்பும் பரஞ்சோதிர மனசுக்குள்ள நிழலாடிக் கொண்டே இருந்திச்சி.
“என்னகா பரஞ்சோதி, கொச்சிக் காய வறுத்து இடிப்பமோ ? இல்ல ஏலாமக் கீலாம இரிக்கோ ?”
"ஏன் தாயி, இடிப்பமே." "இல்லடி மயண்டையாக முதல் நீயும் போகோணுமெல்லோடி பொழுது பட்டா இவனுகள் வந்து எந்த மூலைக்குள்ள ஒட்டி நிப்பானுகளோ தெரியாது. ராவுல சோத்த திண்டுபோட்டு ஊட்டுக்க பூந்தா, மூத்திரம் பேயக்கூட வாறதில்லடி. அவ்வளவு பயம். ஆரு எவரெண்டுபாத்தோ சுடுறானுகள், ராவிருட்டுல கண்ணுக்கு ஏதும் ஆடுறது அசையுறதக் கண்டாலே சுட்டுத்தள்ளுறானகளே கா."
வறுத்து இறக்குன கொச்சிக்காக்காரம் நாசியில பட்டு தும்மத் தொடங்கிற்றாள், பரஞ்சோதி.
தூள இடிச்சி, அரிச்சி அலுமினியப் பானைக்குள்ள போட்டுக் குடுத்திற்று உரலச் சரிச்சிற்று நிமிந்தபோது உடம்பெல்லாம் எரியுறாப் போல இருந்திச்சி. ஒடிப்போய் குளிக்கோணும்போல பரஞ்சோதிர உடம்பு அங்கலாய்ச்சது.
ரெண்டு தேங்காயும் அரிசியும் மிஞ்சிக் கிடந்த மரக்கறிகளையும் சேத்து ஒலைப்பெட்டிக்குள்ள போட்டு பரஞ்சோதிக்கிட்ட குடுத்த போடியார் பொஞ்சாதி, மூண்டு பத்து ரூபா நோட்டையும் நீட்ட வாங்கி முந்தானையில முடிச்சி எடுத்துக்கொண்டு நடந்தாள்.
பரஞ்சோதி நடந்து போடியார் ஊட்டு வெளிக்கடப்ப கடந்து ஒழுங்கைக்குள்ள ஏறுன நேரம் ஒழுங்கையில இருந்து உள்ளுக்குள்ள வந்த வைசிக்கிள்ற முன்சக்கரம் அவளமுட்டப் பார்க்க விலத்தி நிண்டு நிமிந்து பார்த்தாள் போடியார்தான் தட்டுத் தடுமாறி சைக்கிள்ல இருந்து விழப்பார்த்துக் கொண்டிருந்தார்.
"ஆரு பரஞ்சோதியோ? இந்தமுடக்கால வைசிக்கிள் ஒட்டுனா இதுதாங்கா, எப்பயும் இறங்கி தள்ளிக் கொண்டுதான் வருவன், இண்டைக்கு அவசரத்துல வந்திற்றன் எங்கயும் அடிகிடிபட்டிச்சோ" "அதொண்டும் இல்ல போடியார்” இடுப்புச் சீலைய இறக்கி விட்டுக் கொண்டாள்.
"நாகமணி எப்பிடி இரிக்கான் பரஞ்சோதி” “இரிக்காரு . . .”
178 விமல் குழந்தைவேல்

“பொடியன் எப்பிடியிருக்கான் ?” "ம் . . . அவனுக்கென்ன இரிக்கான் போடியார்.” வைசிக்கிளுக்கும் கடப்புக்கும் இடைப்பட்ட இடவால வெளி யேறலாமெண்டு நினைச்சாள், பரஞ்சோதி.
"சட்டெண்டு உன்னய பார்த்தநேரம் கொம்மயப் பார்த்த மாதிரியே இருந்திச்சி. மாதவிய ஒட்டி உரிச்சி இரிக்காகா நீ."
போடியார் சொன்னத காதுல வாங்கிக் கொள்ளாதவள் போல கிடைச்ச இடவுக்குள்ளால நெழிஞ்சி வளைஞ்சி வெளிப்பட்டு நடக்கத் தொடங்கிற்றாள் பரஞ்சோதி.
வெள்ளாவி 179

Page 91
வீட்டு வேலையெல்லாத்தையும் முடிச்ச பரஞ்சோதிர உடம்பு வேர்த்து நசநசெண்டிரிக்க, இண்டைக்கு எப்பிடியும் நாலுபட்டைத் தண்ணியள்ளி இந்த மேலுல ஊத்தத்தான் வேணுமெண்டு நினைச்சிக்கொண்டு கிணத்தடிக்கு போனவள், ஆத்துப்பக்க வேலி யோரமாய்ப் போய் நிண்டு பனங்காட்டுப் பாலத்தப் பார்த்தாள். பள்ளிக்கூடம் கலைஞ்சி போற புள்ளையளெல்லாம் வெள்ளைப் புள்ளிகளாக பாலத்தால ஒடிப்போறதக் கண்டவள் திரும்பி வாசலப் பார்த்தாள். அரவிந்தன் இன்னும் வரயில்ல. வழமையா பாலத்தால புள்ளையஸ் போற நேரம் அரவிந்தன் வாசலுல நிற்பான்.
இண்டைக்கு புள்ளைக்கு பின்னேரப் பள்ளியா இரிக்கும். நிண்டு வருவானாக்குமெண்டு நினைச்சவள், கிண்ணத்தடிக்கு போய் உடுத்தாடை கட்ட புடவைய அவுக்க இடுப்புச் சொருகத்த தொட்ட போதுதான் நேத்து முடிஞ்சி வைச்ச போடியார் பொஞ் சாதி தந்த காசு முடிச்சி கையில பட்டிச்சி.
முடிச்ச அவுட்டு, சுருண்டு கிடந்த மூண்டுதாளையும் பிரிச்சி நிமித்தியபடி ஊட்டுக்குள்ள வந்து அடுக்குப்பானையில இருந்த கடைசிப் பானைக்குள்ள கைய உட்டுப்பார்த்தவள் திடுக்கிட்டுப் போயிற்றாள்.
பானைக்குள்ள நல்லாக் கைய உட்டுத் தடவினாள். பானைய எடுத்து தலைகீழாக கவுட்டுப் பார்த்திட்டு பானைக்குள்ள முகத்த உட்டுப் பார்த்தாள். சிலநேரம் பானை மாறி இருக்குமோ எண்ட நினைப்புல ஒவ்வொரு பானையா எடுத்து கையுட்டுத் தடவிப் பார்த்தாள். எதுவும் தட்டுப்படயில்ல.
நிலத்துல கலைஞ்சி கிடந்த பானைகள பார்க்கப் பார்க்க பரஞ்சோதிக்கு ஒரு படபடப்பும், வேதினையும், வெப்பிசாரமும் உண்டாச்சி.
180 விமல் குழந்தைவேல்

ஆருக்கிட்ட சொல்லி குழர்றது? ஒண்டோ ரெண்டோ கிட்டத் தட்ட ஆயிரம் ரூபா. ஆருக்கும் தெரியாம கொஞ்சம் கொஞ்சமா குருவி சேர்க்கறாப்போல சேத்து வைச்சிருந்த காசு. எப்பிடி எங்கால போயிருக்குமெண்டுறதே அவளுக்குத் தெரியுதில்ல.
வாசலுக்கு வந்தாள். சொல்லி அழவும் ஆளில்ல, ஒரு இடத்துல நிக்கயும் ஏலாம இருக்கயும் ஏலாமா முட்டை போட்ட கோழி அச்சவாய மலத்திக்கொண்டு ஒடித்திரியுறாப்போல அங்கிட்டும் இங்கிட்டுமா நடந்தாள். வெளிவாசலுக்கு வந்து நாகமணிவாறானோ எண்டு ஒழுங்கைய எட்டிப்பார்த்தாள். ஒழுங்கை வெறிச்சோடிக் கிடந்திச்சி.
வெப்பிசாரம் வெடிச்சி அழுகையாறிற்று. தன் பாட்டுல இருந்து அழுதாள். அவளையும் அறியாம கொண்டை அவுண்டு விரி கூந்தலாக மாதவிர மகள் பரஞ்சோதி கண்ணகி கோலத்துல வாசல்ல குந்திக் கொண்டிருந்தாள். மூக்கால வழிஞ்ச சளிய வழிச்செடுத்து எறிஞ்ச நேரம். "நல்லா இரிக்கமாட்டினம் நாசமாத் தான் போயிருவினம். இந்த நெருப்புல கைவைச்சவயள் தீய்ஞ்சி போயிடுவாங்கள். உய்யமாட்டாங்கள்.” எண்டுதண்ட பாட்டுலேயே கதைச்சிக் கொண்டு ரெண்டுகையாலயும் வாசல் மண்ண அள்ளி "இந்த மண்ணப் போலதான் போயிடுவினம்” எண்டு கொண்டு வாழைமரத்துக்கு மண்ண எறிஞ்சாள்.
பின்னேரம் நாலுமணி அளவுலதான் நாகமணி வந்தான். வந்த வன் வாசலுல தலைவிரிகோலமா இருந்த பரஞ்சோதிய கண்டு கொள்ளாதவன்போல கிணத்தடிக்கு நடந்தவன, அதட்டிக் கூப்பிட் டாள் பரஞ்சோதி.
"இந்தா . இஞ்ச நில்லு . எங்கபோன நீ இவ்வளவு நேரத்துக்கும்? சரிவந்தாயெண்டா இவளொருத்தி இஞ்ச அழுதுகுழறி குந்திக் கொண்டிரிக்காளே என்ன எவடமெண்டு கேக்கமாட்டயோ?”
"ஏங்கா . . . என்ன பாய்ஞ்சோயி ஒரு மாதிரியா இரிக்காய்? என்னகா நடந்திச்சி"
"பானை அடுக்குல வைச்சிருந்த காசக் காணயில்ல நீ எடுத்தயோ?”
"காசோ ? . . . நானேங்கா எடுக்கன்.”
"அப்ப பட்டப்பகல்ல ஊடுபூந்து கள்ளனெடுத்தானெண்டோ சொல்லுறாய்?"
"நல்ல தேடிப்பார். எங்கயும் அயத்துப்போய் கைமாறி வைச்சிருப் untuiu.”
"எல்லா இடத்துலயும் தேடிப்பாத்தனே இல்லையே."
"இந்த எலி தூக்கிக் கொண்டுபோய் பத்தை செத்தையில சொருகி வைச்சிருக்கும் பாத்தயோ?”
வெள்ளாவி 18

Page 92
"எந்த எலி அடுக்குப் பானைய தூக்கி வைச்சிப்போட்டு கடைசிப் பானைக்குள்ள இருந்த காச எடுக்க கைகாலுள்ள எலி எந்த எலியெண்டு சொல்லன்."
"இஞ்சே நீ நேத்துப் பானைய எடுத்திருப்பாய் திரும்ப வைக்க மறந்திருப்பாய் எலி வந்து தூக்கிக் கொண்டு போயிரிக்கும்."
"எலியென்ன பானைக்குள்ள பணியாரம் தேடிவந்ததோ ? எனக்குத் தெரியும். எண்ட காச எடுத்த ரெண்டுகால் எலிதானெண்டு நான்கண்டு புடிக்காம உடயுமாட்டன். செய்யுறன் வேலை பாரு."
"என்ன முளகு வறுக்கப் போறயோ ?” "ஏன் இழந்தது காணாதெண்டு முளகுக்கும் காசு குடுக்கவோ ? காசி நேந்து கட்டப்போறன். காளித்தாயாருக்கு கண்இருந்தா எடுத்தவயள ரெத்தம் கக்கவைப்பாள்."
"இப்ப ஏன் பாய்ஞ்சோயி இப்பிடித்திட்டிவாக்காய்.” "திட்டாம என்ன செய்ய? எண்ட மனம் பத்துதே . . . நல்லா இரிக்கமாட்டானுகள். நாசமா போயிடுவானுகள். எடுத்தவண்ட ஊட்டுல நெருப்பு மழைதான் பொழியும்.”
"இஞ்ச நிப்பாட்டு கதைய. உண்டகாச நான்தான் எடுத்தனெண்டு வைச்சிக் கொள்ளண்.”
“என்ன நீதான் எடுத்தயோ?” "ஒங்கா நான்தான் எடுத்தன். புறகு தந்திடுவன்கா.” "புறகுதாற கதை இரிக்கட்டும். உனக்கெதுக்குக் காசி? அதுவும் எனக்கிட்ட கேக்காம எடுத்திருக்காய்.”
“தேவைக்குத்தான் . கேட்டுப் பாத்தனே, தந்தயோ? அதான் எடுத்தன்."
"எடுத்தது இரிக்கட்டும். அதான் என்னெத்துக் கெண்டுகேக்கனே.” "எடுத்து எண்டபுள்ளைக்கு ஒரு வைசிக்கிள் வாங்கிக்குடுத்திற்றன் நீ கத்தாத நான்தான் புறகு தாறனெண்டுசொல்றன் தெரியும்தானே.
“என்ன, சைக்கிளோ ?” நிலத்துல கையக்குத்தி குப்புறப்படுத்தாப்போல குனிஞ்சி ஒழுங் கைப்பக்கம் பார்த்தாள் பரஞ்சோதி. வைக்கல் போருக்குள்ள ஒளிஞ்சிகொள்ளுற கோழி தண்ட வால் சிறக வெளிக்காட்டிக் கொள்ளுறாப்போல, கோடிப்பக்கம் ஒழிஞ்சிருந்த வைசிக்கிள் சக்கரத்துர அரைப்பகுதி வெளியால தெரிய, சன்னதம் கண்டவள் மாதிரி ஒழும்பி கொண்டைய முடிச்சிப் போட்டுக்கொண்டு கோடிப் பக்கம் ஒட நாகமணியும் பின்னால ஒடுனான்.
தான் ஆசைப்பட்ட பாப்புள்ளய நெஞ்சோட அணைச்சிக் கொண்டு நிக்குற பொம்புளப் புள்ளயப்போல தாயக்கண்டதும் பயந்துபோன அரவிந்தன் சுவருல சாய்ச்சி கிடந்த வைசிக்கிள நிமிர்த்தி தண்ட வகுத்துல சாய்ச்சிக் கொண்டான்.
182 விமல் குழந்தைவேல்

"அட நாசமாப் போனவனுகளே அப்பனும் புள்ளையுமாச் சேர்ந்து எண்டகாசக் கொண்டுபோய் இப்பிடிக் கரியாக்கிப் போட்டு வந்து நிக்கயேளே . . .”
"இஞ்ச பாய்ஞ்சோதி, பெத்த புள்ளக்கித்தானே செய்திருக்கம். "செய்திருக்கமோ . . . ஆரு, நானும்சேந்தோ ? . . . செய்யுறதையும் செய்ஞ்சிபோட்டு இப்ப என்னையுமோ கூட்டுக்கு சேக்காய் . . . எனக்குத் தெரியும். அப்பனும் மகனும் மச்சான் மச்சினன் மாதிரியும் ஒரு பொண்டாட்டிக்காரனுகள் மாதிரியும் மூலைக்கு மூலை குசுகுசு எண்டு திரியக்குள்ள, நான் நினைச்சன். என்னமோ சமக் கட்டுப் பார்க்கத்தான் போறானுகளெண்டு.”
வாசலுல குந்தியிருந்து, சாவூடுபோல ஒப்பாரி வைச்சாள். "அட உடு பாய்ஞ்சோயி. காசு பணம்தானே உழைச்சிற்றுப் போகலாம். பெத்தயுள்ளைக்கு இப்ப வாங்காம சோட்டப்பட்ட பொருள, எப்பகா வாங்கிக் குடுக்கப்போற?”
"எலக்கோ மணிசா, இஞ்சபார் எண்ட காதோட்டய... ஒட்டை தூந்து போயிருமெண்டு காலம்பூரா தோடம்முள்ளும் காதுமா திரியுறனே. எனக்குத் தெரியாதோ ஒரு தோட்டுக் குஞ்சி வாங்கிப் போட . . . அட அத உடு . . . உண்ட நிலமைய றோசினை பண்ணிப் பார்த்தயோ இண்டைக்கு முதுகு வீங்கிப் போய் இரிக்கி நாளைக்கு ஏலாதெண்டு நீ பாயில கிடந்தா ஆருகா நமக்கு நாலு காசி தாறத்துக்கு இரிக்கா.
"அடா வாயப் படைச்ச கடவுள் மண்ணப் படைக்காமலே உட்டுடுவான்.”
"உண்ட வாயில மண்ணுழுந்து போயிரும் . விடிஞ்சா பொழுது படுமட்டும் ஆத்துக்குள்ள ஊறிநிண்டு, அட்டக்கடிபட்டு தூமை வெழுத்து நீ கொண்டந்த காசில நாலு காசி சேத்து வைச்சா, அதக் கொண்டுபோய் அவனுக்கு வைசிக்கிளையும் வாங்கிக் குடுத்துப்போட்டு, இப்ப ஒள்ளுப்பமும் எண்ணம் கவலையில்லாமக் கதைக்காயோ?” .
"ஆருக்குகா குடுத்தன் ஊராருக்கோ ? நீ பெத்த புள்ளைக்குத் தானே குடுத்தன்."
"க்கு . . . இதெல்லாம் பெத்த புள்ளயா இருந்து என்ன புண்ணியம். எத்தின செய்யோணுமெண்டு நினைச்சிருந்தன். கடைசியா வச்சத பாத்து வகுறெரிய வைச்சிட்டானுகளே அப்பனும் புள்ளையும்." "கதைய உடுபுள்ள. பின்னேரப் பள்ளிக்கூடமும் கலைஞ்சி புள்ளயஸ் போயிற்றுகள், புள்ளை வெறும் வகுறோட இரிக்கான். எனக்கும் வகுத்தக்கிள்ளுது என்னவும் தின்ன இருந்தாத்தாவங்கா ?” "ஆ. . . அப்பனும் புள்ளையும் ஒய்ச்ச ஓய்ப்புக்கு நான் சோறு போட்டுத் தரோனுமாக்கும். ஆக்கி வைச்சிரிக்கன், படைச்சிவைச்சி தின்னுங்கோ."
sy
வெள்ளாவி 183

Page 93
மனதுல உள்ளத்தையெல்லாம் திட்டிக் கொட்டி வெளிக்காட்டுன துல அரைவாசிக் கோபம் தணிஞ்சவளாய் ஒழும்பிப்போய் குறுக்கையக்கட்டி குளிக்கத் தொடங்கினாள், பரஞ்சோதி. முதல் வாளி தண்ணிய மேலுல ஊத்துன போது இன்னும் கொஞ்சம் கோபம் தணிச்சாப்போல இருந்தது அவளுக்கு.
நாகமணி போய் கோடிப்பக்கம் நிண்ட அரவிந்தனுக்கு கண் காட்ட அவன் மெல்ல மெல்ல சைக்கிள உறுட்டிக் கொண்டுவந்தத பரஞ்சோதி கண்டுற்றாள்.
“டேய். . . அதக்கொண்டுவராத . . . எண்ட கண்ணுலகாட்டாத, .. பாக்கப்பாக்க எண்ட வாயும் வகுறும் பத்தி எரியுது . . . கொண்டு வந்தாய் கொத்திப் பிரிச்சி ஆத்துல எறிஞ்சிருவன். சொல்லிப் போட்டன்."
பரஞ்சோதி கத்தத் தொடங்க, முன் நகர்ந்த வேகத்துல பின்நகர்ந்து போய் கோடிப்பக்கம் சைக்கிள வைச்சிற்று வந்து நாகமணியோட சாப்பிடக்குந்தினான் அரவிந்தன்.
“சோத்த திண்டுபோட்டு ஒள்ள நேரம் ஒழுங்கைக்குள்ள நிண்டு ஒடிப்பழகு. நானும் வேணுமெண்டா வந்து பின்னால புடிச்சிக் கொள்ளுறன்.”
நாகமணி மகனுக்கிட்ட சொல்லுறதக் கேட்டு மனசுக்குள்ள மறைமுகமாக ரசிச்சிக் கொண்ட பரஞ்சோதி அதவெளிக்காட்டிக் கொள்ளாம வாசலுல குனிஞ்சி நிண்டு ஈர முடிய நிலத்த நோக்கி முகத்த மறைச்சிப் போட்டு ஒருதடியால தட்டினாள்.
84 விமல் குழந்தைவேல்

இந்த வருசம் வானம் இப்பிடிப்பொய்ச்சி சதி செய்யுமெண்டு ஆரும் நினைச்சிருக்கயில்ல.
விதைச்ச பயிரெல்லாம் குடலைப் பருவம் வரைக்கும் வளர்ந்த வளத்தியக் கண்டு இந்த வருசம் நல்ல விளைச்சல்தான். ஊருல மாரிப் பஞ்சம் தீருமெண்டுதான் எல்லாரும் நினைச்சாங்கள்.
பயிரெல்லாம் புள்ளத்தாச்சி பொம்புளையளப்போல வகுறு பெருத்து கதிர்கக்க இருந்த நேரத்துலதான் பெய்யவேண்டிய கடைசி. மழையும் பெய்யாமல் போயிற்று. கனபேர்ர பயிரெல்லாம் பூவோடை யும் பிஞ்சோடையும் செத்துப் போயிற்று.
வீட்டில இருந்து நடைதூரத்துல இருக்குற காலடிப் பூமிக்காரர் ஏதும் மிஞ்சினாலும் மிஞ்சுமெண்ட நம்பிக்கையில ஒவ்வொரு நாளும் போய் பெத்தயுள்ளயப் பார்க்கிறாப்போல போய் வயல பார்த்திட்டு வாறாங்களெண்டா பத்து இருபது கட்டைக்கப்பால வயல் செய்தாக்களெல்லாம் போய் வாறத்தையே உட்டுற்றாங்க. தப்பித்தவறி ஏதும் மிஞ்சினாக்கூட அதவெட்டிக்கட்டுற கூலிக்கே மேலதிகமா கடன் படவேண்டியிரிக்குமே எண்ட பயம் அவங் களுக்கு! குத்தகைக்கு வயல் எடுத்து கடன்பட்டு வயல் செய்தாக்கள்ற நிலமை அதவிட மோசம்.
போடியார் மாதிரி உள்ள ஒரு சில பணக்காரர் மட்டும், மோட்டார் போட்டு தண்ணி இறைத்து இது வரைக்கும் பயிர் வாடிஉடாம பார்த்துக் கொண்டிருக்காங்கெண்டு நாகமணி சொல்லித்தான் பரஞ்சோதியும் அறிஞ்சிருந்தாள்.
போடியார் ஊட்டுக்குப் போயிருந்தாக்கூட, ஊருஉலகத்துல என்ன நடந்திருக்கெண்டுறத அறிஞ்சிருப்பாள். யாழ்ப்பாணத்துல இருந்து வரதன் வந்து நிக்கானாமெண்டு அறிஞ்ச இந்த ஒரு மாதத்துக்கும் போடியார் ஊட்டுப் பக்கமே பரஞ்சோதி போகயில்ல. போடியார் பொஞ்சாதியும் எத்தினையோ தரம் சொல்லியனுப் பிற்றாள் பரஞ்சோதிய வரச் சொல்லி.
வெள்ளாவி 185

Page 94
போடியார் ஊட்டுக்கு பரஞ்சோதி போகாததுக்கு வரதன் வந்து நிக்குறது மட்டுமில்ல, நாகமணிர உடல்நிலையும் ஒரு காரணம். இப்பெல்லாம் நாகமணியால கனவேலை செய்ய முடியுறதில்ல. புடவையெடுக்கிற ஊடுகளையும் குறைச்சிற்றான். அந்த ஊடுகள்ல இருந்து அரை வருசக் கூலிதான் கிடைக்குமெண்டிருந்தாலும் வானம் பொய்த்து பயிர் கருகி அதுவும் இல்லாம போயிற்று.
ஆரம்பத்துல சிவந்து வீங்கியிருந்த நாமகணிர முதுகுல சின்னதா ஒரு முகப்பருப்போலத்தான் அந்தக் கட்டி தெரிஞ்சிச்சி. எத்தி னையோ தரம் ஆசுபத்திரிக்கும் போய் வந்திற்றான். ஒண்டுமில்ல, பயப்பிடத் தேவையில்ல எண்டு ஒருகடுதாசியில டாக்குத்தான் சுத்திக் குடுத்த குழம்பு மருத்துக்கு குணமாக நாகமணிர முதுகுக் கட்டிக்கு இஸ்டமில்ல.
நாகமணிக்கும் அலுத்துப் போயிற்று. செத்தா சாகுறன், என்ன உடுகா இனி அந்த ஆசுபத்திரிக்கு நடக்கேலாகா எண்டு சொல்லிற் றான்.
ஆசுபத்திரி வைத்தியத்த அவன் வெறுத்தாலும் அவன் படுற பாட்ட பார்க்கேலாத பரஞ்சோதியும் எத்தினையோ கைவைத் தியமும் செய்து பார்த்திட்டாள்.
வேலிப் பருத்தி இலைய அரைச்சி பூசிப்பார்த்தாள், தவிட்டையும் மஞ்சளையும் உப்புக் கலந்து வறுத்து குழைச்சி பூசிப் பார்த்தாள். பழைய பாண தண்ணிக்குள்ள நனைச்சி வைச்சிக் கட்டிப் பார்த் தாள். ஒண்டுக்கும் செல்லுக் கேக்குறாப்போல தெரியயில்ல, நாக ம்ணிர முதுகுக்கட்டி வாய் விரிக்கமாட்டனெண்டு அடம்பிடிச்சிக் கொண்டேயிருந்திச்சி.
மூண்டு நாளா நாகமணிக்கு நித்திரையில்ல. முதுகுல மட்டுமிருந்த நோவு, தோள் பட்டை நெஞ்செல்லாம் பரவியுட்டாப்போல பரவலா வலியெடுத்திற்று. கையக்கூட அசைக்கேலாது. ஒரு பக்க காது கண்ணுலயும் வலியெடுக்கத் தொடங்கிற்று.
நேத்துராவு முழுக்க அவன் பட்ட பாட்ட பார்த்துக் கொண்டி ருந்த பரஞ்சோதி விடிஞ்சதும் விடியாததுமா அவனுக்கிட்ட கெஞ் சினாள்.
"உன்னயக் கையெடுத்துக் கும்பிட்டன் மனிசா, வாவன் இன்னு மொருக்கா ஆசுபத்திரிக்கு போயிற்று வருவம்.”
அவள் சொன்னதும் ஏலாதெண்டு சொல்வானெண்டுதான் பரஞ்சோதி நினைச்சாள். தனக்குள்ளயிருந்த வலி பரஞ்சோதி சொல்லுறதும் சரிதானெண்டு அவன நினைக்கச் செய்தது.
"ஓங்கா நானும் அதத்தான் நினைச்சிருந்தன். நான் மட்டும் போயிற்று வாறன், நீ என்னத்தையும் ஆக்கி காய்ச்சி பொடியனுக்குக் குடு.”
186 விமல் குழந்தைவேல்

"ஆ. ஒரு நேரம் சோறு இல்லெண்டா என்ன உசிரோ போயி ரும்? தண்ணிச்சோறு இரிக்கி அவன் தின்னுவான், மதியப் பொழுதுக்கிடையில வந்திடலாம் வாபோவம்.”
"இஞ்சபாரு பாய்ஞ்சோயி, சொன்னாக்கேளு, நீவராத. நான் மட்டும் போயிற்று வாறன்.”
“அதான் ஏனெண்டு கேக்கன். ஆசுபத்திரியில என்ன கள்ளப் பொஞ்சாதியோ வைச்சிரிக்காய். கூடநாட கதை முசுப்புக்காவது வாறனே.”
"நான் சொல்லுறதக்கேளு, ஆசுபத்திரியில இருந்து ஊருவரைக்கும் ஆமிக்காரனுகள் நடந்து திரியுறானுகளாம். எந்த சாப்பப் புல்லோட புல்லா மறைஞ்சி படுக்கானுகளோ தெரியாதாம். இதுக்குள்ள நீயும் வரப்போறயோ?”
"இதென்னகா புதுனம், அவனுகள் சாப்பைக்குள்ள படுக்குறத்துக் கும் நான் கூடவாறத்துக்கும் என்னகா சம்பந்தம்.”
"உனக்கு விளக்காது எந்த நேரம் ஊர சுத்திவிளைப்பானுகளோ தெரியாது? இந்தப் புள்ளைய தனிய உட்டுப் போட்டு போனா நடவாததொண்டு நடந்திற்றா நீதாங்குவயோ?”
பரஞ்சோதி எதுவும் கதைக்கயில்ல. "நான் வாறங்கா புள்ளய கவனமா பார்த்துக்கொள்” என்று விட்டு காலையில போன நாகமணி இவ்வளவு நேரத்துக்கும் வராதத நினைச்சி பயந்திட்டாள் பரஞ்சோதி.
வாழை நிழலப் பார்த்தாள், கிழக்குப் பக்கம் நீண்டிருந்திச்சி. சில நேரம் வாட்டுல நிப்பாட்டிற்றாங்களோ ?. அப்பிடியெண் டாலும் ஆருக்கிட்டயும் சொல்லியனுப்பக்கூட தெரிஞ்சாக்களாரும் இருந்திருக்க மாட்டாங்களே, கண்ணாடியில் முகம் பார்த்து தலை வீசிக் கொண்டிருந்த அரவிந்தனக் கூப்பிட்டாள் பரஞ்சோதி.
“டேய் மகனே, விடியக்குள்ள போன மனிசன இன்னும் காணயில் லடா, ஒள்ளுப்பம் போய் இடையில நடந்துவந்தா வைசிக்குள்ல ஏத்திக் கொண்டுவாடா, பாவண்டா பசியோட பத்திப் பதறி வரும்டா மனிசன்."
மகனுக்கிட்ட கெஞ்சினாள் பரஞ்சோதி. "ஆ. . . நான் பின்னோர வகுப்புக்கு போகோனும். எனக்கேலா" "கண்கெட்டுப் போயிடுவான். சொன்னதச் செய்தா ஏன்தான் ...” அவள் சொல்லிமுடிக்க முன்னே நாகமணி வாசலுக்கு வர.
"வா. . . விடியக்குள்ள போனநீ மதியத்தால இறங்குமட்டும் என்ன செஞ்ச நீ இவ்வளவு நேரத்துக்கும்.”
"நான் என்ன செய்யுற? நாலு மர நிழல்ல குந்தியெழும்பி இளப்பாறி வந்துசேர நேரமாயிற்றாரிக்கும்."
வெள்ளாவி 187

Page 95
"எனக்குத் தெரியும்தானே மர இணலக் கண்டா சக்கப்பணிய கிடப்பாயெண்டு. அதஉடு என்னசொன்னான் டாக்குத்தன்."
“என்னத்த சொல்லுற? இந்தா தந்திரிக்கான் பாரு.” மடியில் வந்துவிழுந்த காகிதத் துண்ட விரிச்சிப் பார்த்திட்டு எதுவும் புரியாம பயந்தவளாய்.
"இதென்னகா இது? எனக்கென்ன இங்கிலீசு படிக்கத் தெரியுமோ ?”
"கேளாத கேள்வி கேக்காங்கா டாக்குத்தன்." “என்னவாம்” பதறிறாள் பரஞ்சோதி. "கட்டியில முளையுட்ரிக்காம். வெட்டித்தானாம் எடுக்கோணு மாம். முதுகெண்டதாலா இஞ்ச செய்ய ஏலாதாம், மட்டக்களப்பு பெரிய ஆசுபத்திரிக்கு உடன போகட்டாமெண்டு துண்டு தந்திரிக் கான்."
“என்ன ?” நாகமணி சொன்னத நம்பாதவளாய் பதறினாள் பரஞ்சோதி.
"அங்கெல்லாம் ஏறி இறங்க நாமென்ன கட்டியோ வைச்சிரிக்கம். சும்மா உட்டுப்போட்டு வேலையப்பாரு."
"அப்ப போன நேரமெல்லாம் வண்டில் சில்லுக்குள்ள அடைக்குற கிறீசுமாதிரி குழம்பொண்ட அள்ளிஅள்ளி தந்தானே ஏனாங்கா ?” "அதெல்லாம் நம்மளப்போல ஏழைபாழைகள பூசிமினுக்கத்தான். கையுக்குள்ள நாலுநோட்ட வைச்சிருந்தா நல்ல மருந்து தந்திருப் பானாக்கும்.”
"இப்ப என்னகா செய்யுற?” “என்ன செய்யுற உட்டுப்போட்டு வேலையப்பாரு” "மட்டக்களப்பு ஆசுபத்திரியெண்டா என்ன ஒள்ளுப்பம் தூரமோ? எவ்வளவு ராச்சியம். வஸ்புடிச்சிப் போகோணும். போனா லும் என்ன உடனவெட்டிப்போட்டு அனுப்பவோ போறான். வாட்டுலதான் நிக்கச் சொல்லுவான். போக்குவரத்து செலவென்ன, அங்க நிக்குற செலவென்ன, இதுக்கெல்லாம் நூறு இரு நூறு வேணுமேகா ?”
"இருந்தா செய்யலாம்தானே; நமக்கிட்டத்தான் இல்லையே. அதான் உட்டுப் போட்டு வேலையப் பர்ரெண்டுறன்.”
"ஏனில்லாம அடுக்குப் பானைக்குள்ள சேத்துவைச்சதக் எடுத்துக் கொண்டு போய் வாங்கிக்குடுத்தயே ஒரு சாமான், அதவித்துப் போட்டு தரச் சொல்லு ஆசுபத்திரிக்குப் போக"
"இஞ்சபார் பாய்ஞ்சோயி அப்பிடிக் காசில எண்ட உசிர் வாழோணுமோகா ? உடுகா உட்டுப்போட்டு வேலையப்பாருகா"
188 விமல் குழந்தைவேல்

"எண்ட சைக்கிளப் பத்திக் கதைச்சா தெரியும்தானே ? உள்ளுக்குள்ளயிருந்து குரல் கொடுத்த அரவிந்தன எட்டிப்பார்த்தாள் பரஞ்சோதி.
“டேய் கேட்டாய் தானேடா ?. கொப்பன மட்டக்களப்பு பெரியாசுப்பத்திரிக்கு கொண்டு போகச் சொல்லிரிக்குடா. நம்மட கையிலென்ன நாலுபணங்காசோ இரிக்கிது, உண்ட வைசிச்சிள வித்துப்போட்டுக் காசத்தாடா கொப்பனக் கொண்டு போறத்துக்கு. "சைக்கிள விக்கிற கதைகதைச்சா நான் இந்த ஊட்டுலா இரிக்க மாட்டன். சொல்லிப்போட்டன்.”
சைக்கிளத் தள்ளிக் கொண்டு ஒடுன அரவிந்தனையே பார்த்துக் கொண்டிருந்த பரஞ்சோதி.
"பார்த்தயோ அவன் சொன்னத. . . அறாத்துல புறந்த அவண்ட புத்திய அவன் காட்டிப்போட்டான் தானே.”
"ஆ. . . இனித்தொடங்கிற்றாய் நீ. . . அதஉடு, பாய்ஞ்சோய்” “என்னத்த உடச்சொல்லுறாய்? அப்பனறியாமப் புறந்த அறாங் குட்டி எண்டுறதக் காட்டிப்போட்டான் தானே"
"மெல்லக்கதைகா. திரும்பி வந்தாலும் வந்தருவான்.” “வரட்டுமே ... வந்து கேக்கட்டுமே. ஆயிரம்தான் இருந்தாலும் உண்ட ரெத்தம் இல்லெண்டுறது தெரிஞ்சுபோயிற்று பார்த்தியோ? இல்லெண்டா இன்னேரம் அப்பனுக்கு இப்பிடியெண்ணக்கோள அவண்ட சதுரம் துடிச்சிருக்கோணுமே.”
"புள்ளே. . . அட்டம்பக்கத்தில ஆக்களுகா ஆர்ரையும் காதுல உளப்போகுதுகா."
"விடிஞ்சி பொழுதுபடுமட்டும் எண்டபுள்ளை, எண்டபுள்ளையெண்டு புலம்புனயே துணியோட துணியா ஆத்துத் தண்ணிக்குள்ள காலம் பூரா ஊறிக்கிடந்து உழைச்சி ஊட்டுனயே, இப்ப பார்த்தயோ ?”
"பாய்ஞ்சோயி உனக்கு வாய்க்கு வந்ததெல்லாம் கதைதானோ? இந்தக் கதைய உடமர்ட்டயோ இப்ப.”
"என்னெண்டு உடச்சொல்லுறாய் ஆருக்கோ புறந்த அறாங்குடி யெண்டோ நீ பாத்தாய், சொந்தப் புள்ளை மாதிரி ஒரு குறையும் வைக்காம வளர்த்தயே இப்ப இப்பிடிச் செய்திற்றானே. நினைக்க நினைக்க நெஞ்சி வெடிக்குமாப்போல இரிக்குகா."
"இஞ்ச உடு, என்னால நீ அந்தப் புள்ளய கரிச்சிக் கொட்டாத, எனக்கு ஒருவருத்தமும் இல்ல. நான் ஆசுபத்திரிக்கும் போகயில்ல. உட்டுப்போட்டு உண்டவேலையப்பாரு”
"ஆ. . . அவண்ட வைசிக்கள் வித்தகாசி கிடைக்குமெண்டுதான் நான் இரிக்கனாக்கும். எப்பிடியெண்டாலும்,எங்க கடன் பட்டெண் டாலும் உன்ன நான் ஆசுபத்திரிக்கு கூட்டிப்போறனோ இல்லையோ
வெள்ளாவி 189

Page 96
பாரு? அதுக்குத்தான். ஆத்திர அவசரத்துக்கு உதவுமெண்டுதான் நாலு காசு சேத்து வைச்சன். அப்பனுக்கும் மகனுக்கும் அந்த காசுதானே கண்ணுல குத்திச்சி." முந்தானைய உதறி இடுப்புல சொருகிக்கொண்டு எழும்பினாள், பரஞ்சோதி.
“எங்ககா போகப் போறாய்” "வாறன் வள்ளியம்ம ஊட்டுப் பக்கம் போயிற்று." “மகன் இயக்கத்துக்கு ஓடிற்றானெண்டு நாலுநாளா ஒப்பாரி வைச்சிக்கிடக்குற வள்ளியம்மைக்கிட்டபோய் கடன் கேக்கப் போறயோ ?”
"அதுகும் மெய்தான். அயத்துப்போயிற்றன். அவளும் ஒன்டே யொண்ட வைச்சிருந்தாள், கேப்பா புத்திகேட்டு அவனும் ஒடிற்றான். நாலு நாளா சோறு தண்ணியில்லாமக் கிடக்காளா மெண்டு காசாத்தைப் பெத்தா சொன்னா. எதுக்கும் போய் எட்டிப்பார்த்திட்டு வாறன்." ஒழுங்கைக்குள்ளால இறங்கி நடந்த பரஞ்சோதிர தலை மறையும் வரைக்கும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் நாகமணி.
இவ்வளவு நேரமும் மகனத் திட்டித்தீர்த்த நேரமெல்லாம் அவள்ல நாகமணிக்கு கோபமா வந்தாலும், தனக்கு ஒண்டெண்டதும் துடிச்சிப்போற பரஞ்சோதிய நினைக்குற போதெல்லாம் அவள்ல அவனுக்கிருந்த பாசமும் பரிதாபமும் கூடிக் கொண்டுதான் போயிற்று.
190 விமல் குழந்தைவேல்

விடிஞ்சி கணநேரமாகியும் படுத்த பாய உட்டு எழும்பி வெளியால வர மனசில்லாம விரிச்ச பாயிலேயே குந்திக் கொண்டிருந்த பரஞ்சோதி உள் ஊட்ட எட்டிப் பார்த்தாள். பள்ளிப்பாடம் எதையோ மனப்பாடம் செய்து கொண்டிருந்த மகனப் பார்க்க பாவமாய் இருந்தது. நேத்துராவெல்லாம் மகனவாய்க்கு வந்த மாதிரியெல்லாம் திட்டியத நினைக்க நினைக்க அவளுக்கே அவள்ல கோபம் வந்திச்சி. வெளியால எட்டிப் பார்த்தாள். நடுவாசல் செவ்வரத்த மரத்துக்குக் கீழயிருந்து உடுப்புகள பிரிச்சடுக்குற நாகமணிர முதுகுல உள்ள வீங்குன கட்டி புளிபோட்டு மினுக்குன* செப்புச் செம்புபோல வெயில்பட்டு பளபளக்குறத கண்ட கணத்துல அவள்ற மனசு பதைக்கத் தொடங்கிற்று.
பாவம் மனிசன் நேத்து ராவு தாய்க்கும் மகனுக்குமிடையில நடந்த சண்டையால உள்ள நோவையும் மறைக்கப்பார்த்தும் ஏலாம தன்னையும் அறியாம விடிய விடிய முக்கிமுனகுன மனிசன் விடிஞ்சதும் எல்லாத்தையும் மறந்து தொழிலத்தான் கவனிக்கப் பாககுது.
ஏப்பம் எடுத்து, அதையே அசைபோடுற மாடுபோல புரிசனையே நினைச்சிக் கொண்டாள் பரஞ்சோதி.
இத்தின காலமும் புள்ளைக்கும் பொஞ்சாதிக்குமெண்டு மாடா உழைச்சவன். இண்டைக்கு அவனிருக்கிற நிலைமைய நினைச்ச போதுதான் முதன்முதலாக அவளுக்கும் தண்ட எதிர்கால வாழ்க் கையப்பற்றிய பயம் மனசுல அட்டையா ஒட்டிக் கொண்டு வாட்டத் தொடங்கிற்று.
நேத்து ராவெல்லாம் வலி பொறுக்கேலாம நாகமணி முக்கி முனக "பொறுத்துக்கொள் மனிசா. இன்னும் ரெண்டொரு நாளுல எப்பிடியும் நான் உன்னய பெரியாசுப்பத்திரிக்குப் கூட்டிப் போற
வெள்ளாவி 91

Page 97
னெண்டு சின்னப் புள்ளைக்கு சமாதானம் சொல்லுறாப்போல சொல்லி அவன துரங்கவைச்சிற்றாள்” ஆனா எப்பிடியெண்டுறது தான் அவளுக்கே தெரியாம இருந்தது.
நேத்துப்பின்னேரம் வெளியால போனவள் தீவுக்காலைக்குள்ள எத்தினையோ பேருக்கிட்டெல்லாம் கேட்டுப் பாத்திட்டாள். எவரும் அவசரத்துக்கு உதவுவாரில்ல.
சதாசிவத்துக்கிட்டயாவது கேக்கலாமெண்டா, அவனும் ஊருல இல்ல. பொஞ்சாதிர சொந்தக்காரர் ஆரோ செத்ததாமெண்டு களுதாவளைக்கு குடும்பத்தோட போயிற்றானாம். செத்தது பொஞ் சாதிர நெருங்குன சொந்தமெண்டதால எப்பவருவானெண்டு தெரியாது.
விடியுற நேரம் கையில காசோட வந்து நிண்டு ஆராவது கதவத் தட்டுவாங்களெண்டோ, ராவோட ராவா கூரையப் பிய்ச்சிக் கொண்டு பொன்னும் பொருளும் கொட்டுமெண்டோ அவள் நினைச்சிக் கொண்டு படுக்கயில்லத்தான், எண்டாலும் ஏதோ ஒரு நம்பிக்கையிலதான் சொல்லி இருந்தாள்.
"வைசிக்கிளத்தான் வித்துத் தரமாட்டனெண்டுறாய் ஊரெல்லாம் சூடடிக்கிற நேரம். இந்த வருத்தத்தோட வருசக் கூலி வாங்க அந்த மனிசனால களவட்டி களவட்டியா ஏறி இறங்கேலுமோடா ? இந்த வருசம் வருசக் கூடலிய வாங்கவாகுதல் போவண்டா"
என்று இரவு முளுவதும் மகனுக்கிட்ட கெஞ்சிப்பார்த்தாள். அப்பிடியெண்டா நான் படிப்ப உட்டுப்போட்டு புடவை வெளுக்கப் போகட்டோ ?”
எதிர்கேள்விகேட்டுற்று படுத்திற்றான் அரவிந்தன். "கவலைப்படாத மனிசா நானிரிக்கன் உனக்கு” எண்டு ஏதோ ஒரு நம்பிக்கையில ராவு நாகமணிக்கிட்ட சொல்லிற்றாள். அதனால தான் விடிஞ்சி கண நேரமாகியும் ஒழும்பிமுகம் கூட கழுவாம இரிக்காள்.
படுத்த பாய் சுறுட்டாம, யோசினையா இருந்த பரஞ்சோதி மாவிடிக்க வரச்சொல்லி நேத்து போடியார் பொஞ்சாதி சொல்லி யனுப்புனது நினைவுக்குவர, எழும்பி கிணத்தடிக்குப் போய்,அடுப்புக் கரியொண்டெடுத்து சப்பி பல்லத்தீட்டுன போது வரதன் வந்து நிக்கானாமெண்டு கேள்விப்பட்டது சட்டெண்டு நினைப்புக்கு வந்தது.
"அடா எடு இப்ப நானென்ன கொலையோ செய்துபோட்டன் எண்டு தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
முகம் கழுவி, திருநீறு பூசி சாமி கும்பிட்ற்று, பழஞ்சோத்தக்கழுவி கோப்பையில வைச்சி மகனக்கூப்புட்டு சாப்பிடச் சொல்லி
yy
92 விமல் குழந்தைவேல்

வாசலுக்கு இறங்குனவள், கழுவி மடிச்சி வைச்ச உடுப்பு மாராப்ப தூக்கி தோள்ல போடப்போன நாகமணியக் கண்டு பதறிக் துடிச்சிக் கொண்டு ஓடிவந்து மாராப்ப பறிச்சி கீழபோட்டாள்.
"இஞ்சபாரு மனிசா நேத்து ராவு விடிய விடிய படிச்சிப்படிச்சி சொல்லியும் கேக்காம இப்ப இந்த மூட்டைய தூக்குறயே, உனக் கென்ன பயித்தியம் கியித்தியம் புடிச்சிருக்கோகா ?”
"அதுக்கென்னகா செய்யுற? ஒண்டுக்கும் ஒண்ணாதெண்டு மூலைக்குள்ள சுறுண்டுபடுத்தா ஊடுதேடி சோறுவருமோகா? வெட்டுக்குத்துக் காலம். இந்தநேரம் களவெட்டிக்குப் போனாத் தானே வெளுத்த வருசக் கூலியாகுதல் வாங்கலாம்."
"அதுக்கு முதுகுல கட்டிவந்து ராராவா முக்கி முனகிக் கிடந்த நீ. . இப்ப மூட்டையத்தூக்கிக் கொண்டு ஊருக்குள்ள போகப் போறயோ ? இந்த வருசம் மழை செய்த சதியில முதலுக்கே நட்டமெண்டு போடிமாரெல்லாம் ஒப்பாரி வைக்காங்களாம் . . . இதுக்குள்ள நீ சாக்கத் தூக்கிக்கொண்டு களவட்டிக்கு போனாலு மென்ன எங்களுக்கென்ன முதல் பொலியிலையோ தரப்போறாங்க? ஏதோ ரெண்டாம் பொலியோ இல்ல பதக்கடையோ தருவாங்க அதக் கொண்டு வந்து தூத்திப் புடைச்சி அதுல நாலு நெல்லக் கண்டு சேகரிச்சாத்தான்."
மெருமூச்சி உட்டிற்று சாக்குப் பையொண்ட மடிச்சி உடுப்பு மாராப்புக்கு பக்கத்துல வைச்சாள் பரஞ்சோதி.
"அதான் நம்மட புளைப்பெண்டு எழுதியிருந்தா அத ஆராலகா மாத்த முடியும் . . . இஞ்ச உடு இண்டைக்கு போடியார்ர வயல் சூடு அடிக்காங்களாம், நேரத்தோட போனாத்தான் கூலிய வாங் கேலும்."
"இஞ்ச. . . இஞ்ச இரி ... எங்க போகப்போறாய். முதுகுல கட்டி வந்து உள்ளுக்குள்ள முளையுமுட்டிரிக்குமெண்டு டாக்குத்தன் சொல்லுறான். பெரியாசுப்பத்திரிக்கு உன்னயக் கூட்டிக்கொண்டு போய் அதவெட்டி எறிய என்ன வழியெண்டு தெரியாம நான் திண்டாடிக் கொண்டிரிக்கன். நீ என்னடா எண்டா களவட்டிக்குப் போகப் போறனெண்டு ஒத்தக்காலுல நிக்காய்."
"பெயித்தியக்காரி மாதிரி கத்தாதபுள்ள. உனக்கு எண்ட முதுகுல இரிக்கிற கட்டிர கவலை . . . பொடியன் போர்றதுக்தகு காச்சட்ட்டை வேணுமெண்டு மூணு நாளைக்கு முன்னம் கேட்டானே . . . தைப் பொங்கலும் வருகுது தெரியாதோகா உனக்கு ?"
"ம் . தெரியாமென்ன எனக்கு ... எல்லாம் தெரியும். போதும் புள்ளைக்கும் பொஞ்சாதிக்குமெண்டு விடிஞ்சா மயண்டையாகு மட்டுக்கும் ஆத்துக்குள்ள நிண்டு அட்டக்கடிபட்டு, இளகி, ஊறி, புடவை வெழுத்து, ஊடுஊடாப்போய் புடவை வைச்சி உழைச்ச
வெள்ளாவி 193

Page 98
தெல்லாம்போதும். கஞ்சியோ கூழோ பிச்சை எடுத்தெண்டா லும் நான் தாறத திண்டுபோட்டு சும்மா ஊட்டுக்குள்ள கிட சொல்லிப்போட்டன்."
“பொண்டில தொழிலுக்கு அனுப்புற அளவுக்கு இந்த நாகமணி வண்ணான் இன்னும் பாயில கிடந்திடயில்லகா. ம் . . . எண்ட புள்ளய படிக்கவைச்சி, அவன் உத்தியோகம் பாக்குறதப் பாத்துப் போட்டு கண்ணமூடுனாலும் பரவாயில்ல. அதுதான் எண்ட ஒரேயொரு ஆசை.”
"க்கு . . . பெரிய படிப்பு . . . இவர் படிச்சி உத்தியோகம் பார்த்துத் தான் எங்கள கெத்தையில தூக்கி வைக்கப் போறார். அவனவன் ஊத்த வெளுத்தே ஊடு வாசல் வாங்கி வசதியா இரிக்கான். நமக்கு இரிக்குறதும் பறக்குற நிலமை. கேட்டுப்பாத்தனே கொப்பன் இப்பிடி ஏலாமக் கிடக்காருடா நீ ஊருக்குள்ளபோய் வருசக்கூலிய வாங்கியாடா எண்டு கேட்டுப் பார்த்தனே, சறமண் மறமன் சக்குறமனெண்டு ஒரேடியா ஏலாண்டுற்றானே.”
"பெயித்தியக்காரி. பெயித்தியக்காரி எண்டவாயுல அறம்புறம் கெட்டு வருகுதுடி ... ஏண்டி எண்டபுள்ளைக்கிட்ட அப்பிடிக்கேட்ட, போதும்டி இந்த தூமை வெளுக்குற தொழில் என்னாேடயே போகட்டும்டி . . . அந்தப் புள்ளய படிக்க உடுடி. வேணாங்கா எண்ட பரம்பரத் தொழில அவனும் செய்யவேணாங்கா."
நாகமணிர கண்ணெல்லாம் தண்ணி நிறைஞ்சி நிட்டுற்று.
"ஆ. . . நான் பெயித்தியக்காரிதான். இந்தக் கவுறுவம் பாக்குற நமக்கிட்ட நாலுகாசும் இரிக்கோணுமென்டுறதையும் அப்பனும் புள்ளையும் தெரிஞ்சு கொள்ளுங்கோ. அந்திர அவசரத்துக்கு உதவுமெண்டு நானும்தான் நாலுகாசு சேத்துவைச்சன். உட்டயளோ, அப்பனும் புள்ளையஞம் மகன் வைசிக்கிள் கேட்டானெண்டு பானை அடுக்குல அடிப்பானைக்குள்ள, நான் வாயக்கட்டி வகுத்தக் கட்டி குருவிசேக்குறாப்போல சேத்துவைச்ச காசெல்லாத்தையும் எனக்குத் தெரியாம எடுத்துக்கொண்டுபோய் வைசிக்கிள் வாங்கிக் கொண்டு வந்தயளே அப்ப றோசினை பண்ணிப் பார்த்தயளோ இப்பிடியொரு நிலைமை வருமெண்டு.”
"புள்ளை ஆசைப்பட்டானெண்டு வாங்கிக்குடுத்தன்கா."
"ஆ. . . ஆசைதான் எனக்குந்தான் ஆசை, கனநாளா . . . இந்தக் காதுல ஒரு மின்னிபோட்டு கண்ணாடியில அழகு பாக்கோணு மெண்டு. அந்தக்காசில ஒரு மின்னி வாங்கிப் போட தெரியாமலோ தோடமரமுள்ளும் காதுமா அலைஞ்சி திரிஞ்சன். இந்தத் தோட மரமுள்ளும் இல்லெண்டா எண்ட காதோட்டை எப்பயோ தூந்து போயிரிக்கும். ஆனா அப்பனும் புள்ளையும் சேர்ந்து நேர்ந்துட்ட கோழிச்சாவல காளிகோயிலுக்கு குடுக்குறாப் போல எண்ட காசக் கொண்டுபோய் சாய்ஞ்சமருதானுக்கு குடுத்துப்போட்டு
94 விமல் குழந்தைவேல்

வைசிக்கிள வாங்கிக் கொண்டுவந்து சுவருல சாய்ச்சி வைச்சயளே. இப்பதெரியுதோ கயிற்றமெண்டா என்னெண்டு ?”
"ஏங்காபுள்ள இப்பிடிக் கத்துறாய். மொள்ளக் கதைகா ஊட்டுக் குள்ள இரிக்கிற புள்ளர காதுல உழக்கிழப் போகுது”
"உளுந்தாத்தான் என்ன? உழட்டுமே . . . ஒள்ளுப்பம் காசோ, பேசாம இரிக்க. ஆயிரம் உறுவாய். கேட்டுப் பார்த்தனே, கொப் பனுக்கு ஏலாமை வந்து ஊட்டுக்குள்ள கிடக்கப்போறான் மனிசன், அதுக்கு முதல் பெரியாசுப்பத்திரிக்கு கொண்டுபோக உண்ட வைசிக்கிள வித்துப்போட்டு, காசத்தாடா எண்டு கேட்டு பாத்தனே, ஆர்ர உசிர்போனாலும் வைசிக்கள மட்டும் விக்கமாட்டானாம். இவன்தானோ படிச்சி உழைச்சி கடைசி காலத்துல நமக்கு தண்ணி ஊத்தப் போறான். அதெல்லாம் சும்மா கதை.
“எடியே பாய்ஞ்சோயி. ஏங்கா எண்ட புள்ளைக்கிட்ட அப்பிடிக் கேட்ட, அந்த வைசிக்கிள் அவண்ட உசிருடி அதவிக்கச் சொல்லி இன்னுமொருதரம் அவனுக்கிட்ட கேட்டுடாதடி.”
"அப்பிடிச் சொல்லு . புள்ளைக்கேத்த அப்பன் . அப்பனுக்கேத்த புள்ளை. நான் ஏன் கேக்கப் போறன். உண்ட புள்ளர உசிர் வைசிக்கிள்ல, உண்டஉசிர் புள்ளையில, உங்கரெண்டு பேருக்கு மிடையில நான். இந்தப் புதுனமெல்லாத்தையும் பாக்காம எண்ட உசிரு போயிருமெண்டாத்தான் எனக்கு நிம்மதி. நான் இந்தப் பாடெல்லாம் படோனுமெண்டு அந்தக் கண் கெட்ட குருடி என்னய மட்டும் உட்டுப்போட்டு தனிய நிம்மதியாப்போய் சேந்திட்
Toit."
“அதுக்கேங்கா செத்தசிவன திட்டிவைக்காய்." "அதுகும் சரிதான் . . . உசிரோட இரிக்கக்குள்ளெண்டாலும் என்ன அந்த மனிசிய சும்மா உட்டனோ. எந்த நேரமும் ஏறிப் பாய்ஞ்சி கொண்டே இருந்தன். இப்பசெத்தும் எண்ட வாயால ஏச்சி வாங்குது மனிசி. இந்தப் பாவமெல்லாத்தையும் எங்க கொண்டு துலைக்கப் போறனோ தெரியா . . . அதஉடு ... எங்க போடியார் ஊட்டுக்குக் குடுக்குற புடவை இருந்தா இஞ்சதா, நான்கொண்டு போய் குடுத்துப்போட்டு வாறன்."
"அதென்ன பாய்ஞ்சோயி போடியார் ஊட்டுப்புடவைய மட்டும் தனியாக்கேக்காய்."
“மா இடிக்கோணுமாமெண்டு போடியார் பொஞ்சாதி விசளம் சொல்லி அனுப்பியிரிக்கா. ஒரு மாசமா அவவும்தான் கூப்புட்டுக் கொண்டிரிக்கா. இன்னும் போனபாடில்ல. இண்டைக்காகுதல் போகலமெண்டு நினைச்சன். அதான் போற இடத்துல புடவையக் குடுத்திற்று இந்த வருச வருசக் கூலியயும் கேட்டு வாங்கிக் கொண்டு வரலாமெண்டு சாக்கயும் எடுத்துக்கொண்டு போறன்.”
வெள்ளாவி 95

Page 99
“என்ன பாய்ஞ்சோயி புதுனமான கதை கதைக்காய். களவட்டிக் குப் போகாமா ஊட்டுக்குப் போய் நாம எப்பயும் வருசக்கூலி வாங்கி இரிக்கமோ? இல்ல அவங்களுந்தான் தந்திரிக்கினேமா ?”
"இல்லத்தான் . . . அது எனக்குத் தெரியாதோ, உண்ட வருத்தம் வேதினையச் சொல்லி போடியார் பொஞ்சாதிக்கிட்ட கேட்டுப் பாப்பமெண்டு நினைக்கன். அதோட, இந்த வருசக் கூலியோட வாற வருசத்துக்கும் சேத்து இன்னுமொரு நெல்மூடை கடனாக்கேப்ப மெண்டு நினைக்கன். தந்தாவெண்டா வித்துப்போட்டு உன்னய பெரியாசுப்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டுபோய் உண்ட முதுகுல இரிக்குற சனியன வெட்டி எறிஞ்சாத்தான் எனக்கு நிம்மதி."
"நீ சொல்லுறதும் சரியெண்டுதான் படுகுது. வருத்தம் வேதினை இல்லாம இருந்தா வாங்குன கடன வெள்ளை வெழுத்து அழிக்க லாம்தான். எண்டாலும் பாய்ஞ்சோயி எங்கட கயிற்றத்துக்கு அவங்க உதவுவாங்கெண்டு நானெண்டா நம்பயில்ல."
"தாறாங்களோ இல்லையோ, கேட்டு பாக்குறத்துல என்ன எங்கட சங்கையோ குறைஞ்சி போயிரும்.”
"சங்கை கிங்கை குறைஞ்சி போயிடாதுகா, களவட்டிக்குப் போகாம ஊட்டுக்குப் போறயே எண்டுதான் றோசினையா இரிக்கி வரிசக்கூலி வாங்குறெண்டா களவட்டிக்குத்தானே போகோணும். அதுக்குத்தான் நான் போவமெண்டு வெளிக்கிட்டன். நீதான் போகோணாங்கா எண்டு மறிச்சிப் புடிச்சிக் கொண்டு நிக்கயே.” “என்ன சொல்லியும், கஞ்சா குடிச்சவன் கனாக்கண்ட கதை சொன்ன மாதிரி மறுகா மறுகா அதையேதான் நீயும் சொல்லுறாய். உண்டமுதுகு இரிக்குற இரிப்புல என்னெண்டுபோய் எப்பிடி அந்த நெல்லு மூடைய தூக்கிக் கொண்டு வருவாயெண்டு சொல்லு ւյո՞ւնւսւb.”
"நீ சொல்லுறதும் சரிதான். உனக்கிட்ட சொல்லுறத்துல என்ன பாய்ஞ்சோயி, எனக்கிந்த முதுகுல கட்டிவந்ததுல இருந்து மூச்சி ஊடேலாம இரிக்குகா, இப்பெல்லாம் நெஞ்சிலையும் நோகுற மாதிரி இரிக்கி."
“எனக்குத் தெரியாதெண்டோ நீ நினைச்சிரிக்காய். ஆக்குறன் காய்ச்சிறன் தின்னுறன் படுக்கனெண்டுதான் நீ என்னப்பத்தி நினைச்சிரிக்காய் . . . விடிஞ்சா பொழுதுபடும் வரைக்கும் உண்ட நினைப்புத்தான் எனக்கு. அங்கிட்டு இங்கிட்டு புரண்டு படுக்கேலாம ராராவா நீ முக்கி முனகுற நேரமெல்லாம் நான் ஒழும்பியிருந்து முகத்துல முந்தானயப் போட்டுக்கொண்டு குழறிக் கொண்டிரிக்கிறது ஆருக்குத் தெரியும். இஞ்சால கிறுகி முதுக காட்டுபாப்பம்."
நாகமணிர முதுகத் தொட்டு திருப்பிப் பார்த்தவள் முதுகுக்கட்டி இன்னும் வீங்கிப்போய் சிவப்பா இருந்ததக்கண்டு பதறிற்றாள்.
196 விமல் குழந்தைவேல்

"நீயும்தான் என்னோட கிடந்து கயிற்றப்படுறாய் எனக்கு வந்த இந்த ஏலாமைக்கு நீதான் என்ன செய்வாய் பாய்ஞ்சோயி. சின்ன வயசுக்காரி நீ அவசரப்பட்டு என்னயக் கட்டிப்போட்டு இப்ப நீயும் கயிற்றப்படுறாய். அப்ப நானும்தான் அவசரப்படாம் ஒள்ளம் றோசினை செய்ஞ்சிரிக்கலாம் என்னகா.”
"ஆ. . . நீ இரிக்கிற இரிப்புல இப்ப எண்ட சின்ன வயதப்பத்தித் தான் கவலையாக்கும்.ஏன் எனக்கிப்ப என்ன குறைஞ்சி போயிற் றெண்டு நீ கவலைப்படோணும் . . . உண்ட முதுகு கட்டி உனக்குத் தெரியாது. பாக்குற எனக்கெல்லோ தெரியுது, நீணாச்சம் பழம்போல சிவந்து வீங்கிப் போய்க் கிடக்கு. எனக்கெண்டா பயமாயும் இரிக்குகா. வாழ்க்கைபூரா எனக்கும் புள்ளைக்குமெண்டு கயிற்றப்பட் டாய். இப்ப உனக்கெண்டு ஒண்டுவரத்தான் எனக்கு பயமாஇரிக்கி. இதுக்குள்ள அப்பனுக்கு துணையா புள்ளைக்கு தொழிலப்பழக்காம படிப்பு உத்தியோகமெண்டு மகன கனவு காண உட்டுப்போட்டு இரிக்காய் ...”
"அதுக்கென்ன பாய்ஞ்சோயி செய்யுற . . ."
“என்னவோ செய்யுங்கோ ரெண்டு பேரும். இப்ப நிப்பாட்டு கதைய கதைச்சா நாள் முழுத்துக்கும் உங்கரெண்டு பேர்ர கதைதான் கதைக்கோணும். இந்த பாண்டிருப்பு காளி கோயிலுக்கு போன வருசம் நேந்துட்ட கோழிய இன்னும் குடுத்த பாடுல்ல, அதுகள்தான் இந்த ஊட்டப்போட்டு இந்தப் பாடுபடுத்துதோ ஆருகண்டா. இந்த வருசம் எப்பிடியும் அந்தக் கடன அடச்சிடோணும் . . . இஞ்ச கொண்டு வா அந்தச் சாக்க, நான் வாறன், நான் இல்லத் தானேயெண்டு ஆத்துக்குள்ள போய் இறங்கி நிண்டுடாத, உனக்கு ஒரு நாளைக்கு ஒருதரமெண்டாலும் ஆத்துக்குள் இறங்கல்லெண்டா திண்ட சோறு செமிக்காது. டேய், அரவிந்தா கொப்பனப் பார்த்துக் கொள் . . . நான் வாறன்.”
ஊட்டுக்குள்ள இருந்த மகனுக்கிட்ட கூவிச்சொன்ன தாயிர குரல் கேட்டு வெளியால ஒடிவந்தான் அரவிந்தன்.
"அம்மோ . . . அம்மா ... எங்ககா அம்மா போறாய்" அவன் எப்பவும் கேக்குற கேள்விதான் அது.
"ஆ.வாறன் . . . சீமைக்குப்போய் உண்ட வைசிக்கல் சில்லத் துடைக்க சீலத்துண்டொண்டு வாங்கி வரப்போறன் . . . இருந்து கொள்."
சொல்லிற்று நடந்தவள் கோடிப் பக்க சுவருல சாய்ஞ்சிருந்த வைசிக்கிளப் பார்த்தாள். வெள்ளிமூலாம் பூசினாப்போல மினுமினுக் குற சக்கர கம்பிகளுக்கிடையில வளைஞ்சி தொங்குற பல வர்ணத் தும்பு வளையம் பார்க்குறத்துக்கு அழகாத்தான் இருந்திச்சி. "என்னமா வைசிக்கிள் ஒடுறாங்கா எண்ட புள்ளை, ரெண்டு
வெள்ளாவி 197

Page 100
கையயும் உட்டுப்போட்டு பாம்பு வளையம் போட்டுமெல்லோகா ஒடுறான். அவன் வைசிக்கிள் ஒடுற அழக வந்தொருக்கா பாரங்கா."
இப்பிடி எத்தினையோ தரம் சொல்லியிருப்பான் நாகமணி. பரஞ்சோதி மகன் சைக்கிள் ஒடுற அழக இன்னும் பாக்கயில்ல. வெளியால ஓடிவந்தான் அரவிந்தன். தாயிர தலை ஒழுங்கை வேலியில மறைஞ்சிற்று. திரும்பிப் போனவன் சுவருல சாய்ச்சிருந்த வைசிக்கிளையே பார்த்துக் கொண்டு நிண்டான்.
பரஞ்சோதி நடந்து ஒழுங்கை தொங்கல அடைஞ்சபோது நாலைஞ்சி சின்னப் பொடியனுகள் தும்பியொண்ட புடிச்சி, அதுர வாலுல நூல் சுருக்குப் போட்டு, பட்டம் உடுறாப் போல தும்பிய பறக்கஉட்டு நூல இழுத்துக் கொண்டிருக்க நூலுர இழுவைக்கு ஈடு குடுக்கேலாத தும்பி வால அறுத்துக்கொண்டு நிலத்தில உழுந்து துடிக்க அதக்கவனியாம பொடியனுகள் வேறொரு தும்பியப்புடிக்க பதுங்குனானுகள்.
அறுவடை முடிஞ்ச வயல்ர வேளாண்மை நாட்டுக்கட்டைகள் காலுல வலிக்காம குத்திற்று. காலம் தாழ்த்தி பெய்த மழையால சில வயல் வேளாண்மைகள் அழுகிப்போய், புல் அவிஞ்ச நாத்த மெடுத்தது. வரப்பு மூலைக்குள்ள தேங்கி நிண்ட கொஞ்சத் தண்ணிக் குள்ள கிடந்த மீன்குஞ்சுகள் கசகசத்து சத்தமெழுப்பிற்று.
வரப்புல நடந்த பரஞ்சோதி எதேச்சையா நிமிந்து பார்த்தாள். புளியமரத்தடியில கூட்டம் தெரிஞ்சுது. புளியமரத்தடிக்குப் போகவோ கூட்டத்துக்குள்ள என்ன நடக்குதெண்டுறத்த அறியவோ இப்ப அவள் விரும்பயில்ல. கொஞ்ச நேரம் நிண்டு யோசிச்சவள் புளியமரத்தடியால போகாம தார்ரோட்டால போவமெண்டு நினைச்சி திரும்பி நடந்து வந்து பனங்காட்டுப் பாலத்து றோட்டுல ஏறி கோளாவிலப் பார்த்து நடந்தபோது அவளுக்கு எதிக்கால சைக்கிள்கள்லயும், மோட்டார்ச் சைக்கிள்லயும் பொடியனுகளும் ஊராக்களும் அவசர அவசரமாக சாகாமத்துப் பக்கம் ஓடிக் கொண்டிருந்தாங்கள். இதென்ன புதினம் நடக்குதெண்டே பரஞ் சோதிக்கு விளங்கயில்ல. எதுக்கால நடந்து வந்த ஒரு பனங்காட்டுப் பொம்பிளைய நிப்பாட்டி, விசளம் கேட்டாள். "என்னவாம் தாயே புதினம்? ஏனாம் சனமெல்லாம் இப்பிடி ஓடுது?"
"தெரியாதோகா உனக்கு, மட்டக்களப்பு சிறைச்சாலையில இருந்து தப்புன ஆக்கள்ல அந்தப் பொம்புளய சாகாமத்துக்கு கொண்டு வந்திரிக்கினமர்ம், அவவப் பாக்கத்தான் கிடந்தபாயும் சீலம்பாயும் ஓடுதுகள். இதென்ன,புதுனமோ ஆருக்குகா தெரியும்.”
பனங்காட்டுப் பொம்புளை ச்ொல்லிற்று நடந்திற்றாள். நேத்துராவு மட்டக்களப்பு சிறைய உடைச்சி கொஞ்சப் பேர வெளியால எடுத்ததாமெண்டும், பாதர் சிங்கராயர் மட்டும் வெளி யால வர ஏலாண்டுற்றாராமெண்டும் ரேடியோவுல சொன்ன
198 விமல் குழந்தைவேல்

தாமெண்டு பரஞ்சோதியும் அறிஞ்சிருந்தாள்தான் ஆனா எவ்வளவு உண்மை எவ்வளவு பொய்யெண்டுறதெல்லாம் அவளுக்குத் தெரி யாது. எல்லாம் காத்துல வாற கதைதானே கண்ணால கண்டவர் ஆரு. அவளுக்கு இதெல்லாத்தையும்பத்தி இப்ப ஒரு எண்ணம் கவலையுமில்ல, அவள்ற கவலையெல்லாம் நாகமணியப் பத்தித்தான். பாவம் மனிசன் வாழ்க்கை பூரா ஊத்த மூட்டை சுமந்த முதுகுல இப்ப கறம் கண்டிப்போய் கட்டி வந்து படுக்குது. போடியார் பொஞ்சாதி மனமிரங்கி ஒருமூடை நெல்லுத் தந்தாவெண்டா வித்துப்போட்டு மனிசன ஆசுபத்திரிக்கு கூட்டிக்கொண்டு போகலாம். காலம் பூரா ஆத்துக்கள்ள கிடந்து காலத்தக் கழிச்ச மனிசனுக்கு இதுவும் செய்யெல்லெண்டா எப்பிடி.
தனக்குள்ளயே கதைச்சிக் கொண்டு போனவள், றோட்டுல நிண்டு புளியமரத்தடிய திரும்பிப் பார்த்தாள். மனிசப் புள்ளிக் கூட்டமா தெரிஞ்ச இடத்துல இன்னுமின்னும் ஆக்கள் வந்து கூட்டத்தோட தொடுத்துக்கொள்ளுறது தெரியுது. பரஞ்சோதிக் கெண்டா கொஞ்சம் முன்னால ஒழுங்கைக்குள்ள தும்பி புடிச்சி விளையாடுன புள்ளையன்ற நினைப்புத்தான் வந்திச்சி. கூடவே மகன் அரவிந்தண்ட நினைப்பும் வந்து ஒட்டிக் கொண்டுற்று.
இந்த மனிசனுக்கு முதுகுல கட்டி வந்ததுக்கு அந்தப் புள்ளை என்னசெய்வான்? மனசுல உள்ள வெப்பி சாரத்தால புள்ளையயும் அவண்ட வைசிக்கிளையும் திட்டி வார்த்து கரிச்சி கொட்டிப் போட்டன். அம்மை இப்பிடிக் கொம்பிப் போட்டாவேயெண்டு எண்ட புள்ளை என்ன பாடுபடுறானோ தெரியாது. புறந்து வளர்ந்து இளந்தாரி ஆகுற இந்த வயது வரைக்கும், அவன் என்னத்தக் கேட்டுற்றான், ஒரு வைசிக்குள்தானே . . . அடா . . . போனாப் போகுது . . . எண்டபுள்ளை சந்தோசமா இருந்தாச் சரிதான்.
பரஞ்சோதிர மனசுக்குள்ள இப்ப மகன்ல ஒரு எள்ளளவும் கோவமில்ல.
அம்மன் கோயிலத்தாண்டி உள் ஒழுங்கைக்குள்ளால இறங்கி போடியார் ஊட்டுக்கு நடந்தாள் பரஞ்சோதி.
வெள்ளாவி 199

Page 101
போடியார் வளவுக்குள்ள உளுபட்ட பரஞ்சோதி அங்கிட்டும் இங்கிட்டும் பார்த்து மூலைமுடுக்கெல்லாம் நோட்டம் உட்டாள். வரதன் அவள்ற கண்ணுலபடாதது அவளுக்கு நிம்மதியா இருந்தது. பரஞ்சோதி வாறதக் கண்டும், காணாதவளப்போல முகத்த நீட்டிக்கொண்டு வேற வேலையில கவனமா இரிக்கிற மாதிரி பாவனை காட்டிக் கொண்டிருந்தாள் போடியார் பொஞ்சாதி. எத்தினையோ தரம் வரச்சொல்லியும் பரஞ்சோதி வரயில்லெண்ட கோபம். இண்டைக்கும்கூட, உன்ன நான் எதிர்பார்த்திருக் கயில் லெண்ட போலிக் கெளரவத் தோரணை அவட முகத்துல தெரிஞ்சுது.
"என்ன தாயி வரச்சொல்லி விசளம் அனுப்புனாப்போல” பக்கத்துல வந்து நிண்ட பரஞ்சோதிய நிமிந்து பாத்தாள், போடியார் பொஞ்சாதி.
“ஏண்டி பரஞ்சோதி, விடியக்குள்ள வரச்சொல்லி விசளம் சொல்லி அனுப்புனா, மதியத்தால கிறுகுன நேரம் இப்பிடி ஆடி அலைஞ்சிவாறயே, தலக்கோழி கூவுன நேரம் ஊறப்போட்ட அரிசி இளகி பொதிம்பிப்போய் கிடக்கேடி, என்னெண்டு இடிச்சி மாவாக்கப் போறயோ . . . ம் . . . எனக்கிந்த நெஞ்சிக்குத்து இல் லெண்டா ஏன் நான் உன்னெல்லாம் கெஞ்சிக் கொண்டு நிக்கப் போறன் ?”
கொண்டு வந்த உடுப்புகளையும் சாக்கையும் திண்ணை ஒதினை யில வைச்சிற்று, வாசலுல படங்க விரிச்சி உரலநாட்டி அரிசிய வடிச்சி உரலுக்குள்ள போட்டு இடிக்கத் தொடங்கினாள் பரஞ்சோதி. "யாழ்ப்பாணத்துல இருந்து வந்து நிக்குற வரதன் பொடியனுக்கு இண்டைக்கு இடியப்பம், புட்டு அவிச்சிக் குடுக்கக்கூட ஒரு சொட்டுமா இரிக்கயில்ல. தண்ணிச்சோறு திண்டுபழக்கப்படாதவர். வெறும் வகுத்தோட வயலுக்குள்ள போகுது பொடியன்."
200 விமல் குழந்தைவேல்

வரதன் வீட்டுல இல்லையெண்டுறத அறிஞ்சிகொண்ட பரஞ் சோதி நிம்மதியா பெருமூச்சி விட்டிற்று, தோளுல உலக்கைய சாய்ச்சி வைச்சிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.
வேலி ஒரத்து முருங்கைக் கந்துகள் மயிலறகு விசிறயப்போல காத்துல ஆடுறதக்கண்ட பரஞ்சோதி, ஊட்டபோற நேரம் போடியார் பொஞ்சாதிக்கிட்ட கேட்டு நாலு முருங்கை இலை இணுக்கு நோண்டிக் கொண்டு போனா ராவைக்குச் சுண்டலாமெண்டு நினைச்சாள்.
“எடியே பரஞ்சோதி இதென்னடி இது உரல்வாயெல்லாம் அரசி இறைச்சி கிடக்க, நீ உண்ட பாட்டுல நிண்டு உலக்கைக்கு பால் குடுக்காய். அது சரி இதென்ன வெளுத்த உடுப்பெல்லாத்தையும் நீ கொண்டு வந்திரிக்காய், எங்கடி உண்ட புருசன் நாகமணி ?” "அத ஏன்தாயி கேக்காய் . . . மனிசண்ட முதுகுல கட்டிவந்து ஏலாம படுக்குது பாவி. அதான் நான் உடுப்புக் கொண்டு வந்தன்." "அதென்னகா ஒழும்பி நடக்கேலாதளவுக்கு புதுனமான கட்டி u 1g5I p'n
உரல்வாயில இறைச்சிக் கிடக்குற அரிசிய உலக்கை மேல ஒழும்புற நேரவேக இடைவெளிக்குள்ள உள்ள தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள் போடியார் பொஞ்சாதி.
"சின்னக்கட்டிதான் தாயி வந்திச்சி. அதுவும் ஒருபருப்போல தான் இருந்திச்சி. நாள்படப்பட பதகளமாதிரி கட்டிபத்தி வீங்கிப் போய்ச்சி."
"மஞ்சளையும் உப்பயும் வறுத்து வைச்சி கட்டியிருந்தா இந்நேரத் துக்கு வாயுட்டு வெடிச்சிருக்கும். அதெல்லாம் நீ செய்ஞ்சிருக்க மாட்டயே."
"எல்லாம் செய்ஞ்சி பாத்தன்தாயி, குப்பமேனிய அரைச்சிப் பூசிப்பாத்தன், மஞ்சளையும் உப்பையும் வைச்சிக் கட்டிப்பாத்தன், அதொண்டுக்கும் கேக்குதில்ல. சின்ன ஆசுபத்திரிக்கு கூட்டிப் போனன் மாட்டுவண்டில்ற அச்சாணிக் குடைச்சலுக்குள்ள அடைக் கிற கிறீஸப்போல வெள்ளையும் கறுப்புமா குழம்பத்தான் தந்தான். அதுக்கும் கேட்டிச்சோ? கட்டிக்குள்ள முளைதள்ளி யிரிக்காம். மட்டக்களப்பு பெரியாசுப்பத்திரிக்கு கொண்டு போகட்டாமெண்டு சொல்லி துண்டுதந்திரிக்கான் டாக்குத்தன்."
“இப்ப என்னகா காறு வஸ் ஏறி பெரியாசுப்பத்திரிக்கு கொண்டு போகப் போறயோகா? அது சரி உனக்கிட்ட இரிக்கி நீ செலவழிப் Ltruiu.”
"அந்த மனிசன் படுற கயிற்றத்தப் பாத்திற்று என்னெண்டுதாயி கொண்டுபோகாம இரிக்க ?”
"மட்டக்களப்பு பெரியாசுபத்திரிக்குப் போற சாட்டுல டவுணுக் குள்ள பகல் சோ படமும் பாத்திற்று வாறவழியில காத்தான்
வெள்ளாவி 201

Page 102
குடியாண்ட சோத்துக் கடையில புறியாணியும் திம்பாயாக்கும், 6Tai TaoTsint P”
“எனக்கிருக்கிற எண்ணம் கவலையில இதுக்கெல்லாத்துக்குமோ தாயி ஆசை வரும்.”
"ம் . . . எனக்கும்தான் ஆயிரம் நாள் சோட்டை. கட்டுச்சோறு கறிதின்னோணுமெண்டு. நம்மட ஈறலெல்லாம் எங்ககா ஈடேறப் போகுது நீ குடுத்து வைச்ச நீ."
"ஏன் தாயி, போடியார் பொஞ்சாதி நீ உனக்கென்ன தாயிகுறை.” "அதத்தான் கேளு. போடியார் பொஞ்சாதியெண்ட பேருதான். விடிஞ்சா பொழுதுபட்டா அவிச்சிக் கொட்டுறத்த தவிர என்னத்தக் கண்டன்? போடியாருக்கு விடிஞ்சா பொழுதுபடும் மட்டும் குடி . பொழுதுபட்டா விடியுறவரைக்கும் கூட்டாளிமாரும் கூத்தும் . ஊடு நிறைஞ்ச செல்வம் . . . அதனால மனிசனுக்கு இப்பயும் இளந்தாரி எண்ட நினைப்பு. நான்தான் வருத்தக்காரியாக் குந்திற்றன். இந்த மட்டக்களப்புல ஒடுற கோச்சிப் பொட்டியக்கூட இண்டுவரைக்கும் கண்ணால காணாத சீவன் நான். நீ குடுத்து வைச்சவள் கார், வஸ் ஏறி இறங்கப்போறாய்.”
“கார் வஸ் ஏறி இறங்க எனக்கிட்ட என்னதாயி இரிக்கி." இடிச்சமாவ வெங்கலச் சட்டியொண்டுக்குள்ள இறக்கிப் போட் Lig.
"இதென்ன மாசாலைகா இது . . . கார், வஸ் ஏறக்காசில்லாத நீதானோ உண்ட மகனுக்கு அப்பிடியொரு வைசிக்கிள் வாங்கிக் குடுத்திருக்காய்.
"நீ என்னதாயி சொல்லுற. நான் எங்க வாங்கிக்குடுத்தன் ?” "ஊரெல்லாம் உண்ட மகண்ட வைசிக்கிள்ற கதைதானே கதைக் குது. பளபளக்குற கம்பிச் சில்லுக்குள்ள கலர்கலராதும்புப் பூவெல் லாம் சுத்துதாமே? உண்ட மகன் ரெண்டு கையயும் உட்டுப்போட்டு ஒழும்பி நிண்டு வைசிக்கிள் ஒட்டுறானாமே. எண்ட பேரனும்தான் கேட்டான். நாகமணி வண்ணாண்ட மகன் ஒடுற வைசிக்கிள்மாதிரி தனக்குமொண்டு வாங்கித் தரட்டா மெண்டு . . . எங்க காசி பணம் இருந்தாலும் வாங்கிக் குடுக்க ஊட்டு ஆம்பிளையஞக்கு நேரம் இருந்தாத்தானே. காலம்தான். மண்ணுல கிடந்ததெல்லாம் பாயில, பாயில கிடந்ததெல்லாம் மண்ணுல . . . கலிகாலம் முத்திப் போய்ச்சிகா.”
"மகன் ஆசைப்பட்டானாமெண்டு அந்தக் கண்கெட்ட மனிசன் தான் அத வாங்கிக் குடுத்திச்சி."
"இது நல்ல பூத்திரிப்பு மாலைதான். என்னகாபுள்ள வைசிக்கிள் வாங்கக் காசிரிக்கி புருசன ஆசுபத்திரிக்கு கூட்டிப்போக மட்டும்
காசில்லையோகா ?”
202 விமல் குழந்தைவேல்

"குடியிருக்கிற ஊட்டையும் உடுத்தியிருக்கிற சீலையும் தவிர எனக்கிட்ட என்ன் தாயி இரிக்கி?"
"அது சரி படுக்க பாயில்லாதவன் பறக்க கனாக்கண்ட மாதிரி யெல்லோ இரிக்கி, உண்ட பம்மாத்துக் கதை. இப்ப என்ன செய்யப் போறாய்கா மகண்ட வைசிக்கள விக்கிறதானே ... வித்துப் போட்டு கொண்டு போவன்.”
“கேட்டுப் பாத்தன் தாயி, தரமாட்டானாமெண்டு ஒப்பாரி வைக்கான்."
"உண்ட புள்ளர வளப்பு அப்பிடி . . . அப்பன் அம்மைர கயிற்றம் தெரியாதளவுக்கு செல்லம் குடுத்து வளத்து வைச்சிரிக்காய். அத உடு, உண்டபுள்ளர கதை எனக்கென்னத்துக்கு. இப்ப என்னதான் செய்யப்போறாய்கா ?”
“என்ன செய்யுறெண்டு தெரியாமத்தான் தாயி உனக்கிட்ட கேக்கலாமெண்டு வந்தன்."
"எனக்கிட்ட என்னகா கேக்கப் போறாய். உரலுல உலக்கையப் போடு.”
ல்ல . . . இந்த வருச வெளுப்புக்கூலியோட ஒரு மூடை நெல்லு கூடுதலா தந்தா அத அடுத்த வருசக் கூலியில கழிக்கலாமெண்டு நினைச்சன்.”
"ம் . . . வெளுத்த கூலிக்குத்தான் நெல்லுக்குடுக்கலாம். குடுத்த நெல்லுக்கு வெளுக்குறெண்டா புடவையுமெல்லோகா நாங்க புதுசா வாங்கோணும்."
“என்ன தாயி செய்யச் சொல்லுறாய். அந்த மனிசன் படுறபாட்ட பாக்கேலாம இரிக்கே" முதுகுல கட்டிெயெண்டா நெஞ்சிப் பக்கம், தோள்புசம், ஒரு பக்க கண்ணெல்லாம் குத்துதெண்டு சொல்லுறான். மனிசன் இப்பிடியே உட்டா முளை புரையேறி, பொந்து கட்டிப் போயிருமெண்டேல்லோ சொல்லுறாங்க அதுதான் தாயுனைக்கிட்ட கையேந்தி வந்தன்."
"சரி. சரி. குழறாம பாத்து மாவ அரி. அரிதட்டுல ஒட்டை இரிக்கி கப்பி உளுந்திரும் . . . நீ எனக்கிட்ட கேட்டு என்னாகுறகா பரஞ்சோதி. களவட்டிக்குப் போய் போடியாருக்கிட்டெல்லோ நீ கேக்கோணும்."
"போடியார் ஊட்டுக்கு நெல்லு கொண்டு வருவார் கேக்கலா மெண்டுதான் சாக்கோட வந்தன்."
"என்னது ஊட்டுக்கு நெல்லுக்கொண்டு வருவாரெண்டு சாக் கோட வந்தயோ ? . . . இந்த கூலி குடுக்கிறதும், பிச்சை குடுக்குறதும் களவட்டியோட முடிக்கிற அலுவலுகள், ஊட்டுக்குப் புதுநெல்லு வந்தா கோயிலுக்கு புதிர் ஆக்குறத்துக்கு முதல் ஒரு நெல்லு மணியக்கூட நான் வாசலுக்கு வெளியால அனுப்ப மாட்டன் தெரியும்தானே.”
வெள்ளாவி 203

Page 103
"தெரியும்தாயி . . . அந்த மனிசனால களவட்டிக்கு போகேலா தெண்டுதான் நான் வந்தன்."
"புருசனுக்கு ஏலாமையெண்டா, உண்ட புள்ளைக்கு என்ன கைசொத்தி கால் முடமோகா ? சாக்கக் குடுத்து கூலிய வாங்கி வரச் சொல்லி களவட்டிக்கு அனுப்புறதானேகா."
“பள்ளிக்கூடம் போறவன் களவட்டிக்குள்ள போய் சாக்கோட நிண்டா நாளைக்கு பள்ளியில மத்தப் புள்ளையன் பகுடி பண்ணுங் களெண்டு கூச்ச நாச்சப்படுறான். படிக்குற புள்ளை அவன் சொல்லுறதும் சரியெண்டு பட்டுச்சி."
"ஆ, இப்பிடி கவுறுதி பாக்குற உங்களுக்கெல்லாம் இந்த புழைப்பு என்னத்துக்ககா ? . . . அது சரி அப்பிடியொரு வைசிக்குள் ஒடுற உண்ட மகன் களவட்டிக்குப் போறண்டா கவுறவக்குறைவாத் தானிரிக்கும். இதுகளப் பத்தியெல்லாம் எனக்கு கவலையில்ல பரஞ்சோதி. ஆனா ஒண்டு சொல்லிற்றன், ஊட்டுக்க புதுநெல்லு வந்திச்செண்டா அந்த நெல்லுல புதிர் பொங்கல் பொங்காம, நீ தலைகீழா நிண்டாலும் ஒரு நெல்லுமணிகூட தரமாட்டன்." "அப்ப நானாகுதல் களவெட்டிக்குப்போய் போடியாருக்கிட்ட கேட்டுப்பாக்கட்டோ தாயி.”
"உண்ட புருசனும் புள்ளையும் இப்பிடி கவுறுவம் பார்த்தா, நீதான் களவட்டிக்குப் போகோணும். உரலக் கவுட்டு தாவாரத்துல வைச்சிப்போட்டு திண்ணையில அரிசியும் தேங்காயும் வைச்சிரிக்கன் ள்டுத்துக்கொண்டு போ. எண்ட தம்பிர மகன் பசியோட வருவான், நான் இனித்தான் ஆக்கிக்காய்ச்சோணும்.”
"நாலு முருங்கை இணுக்கு நோண்டிக்கொண்டு போகட்டோதாயி, ராவைக்கு சோத்துக்கு சுண்ட ?”
"உண்ட கண்ணுல படாத சாமானும் இரிக்கோடி. முருங்கமரம் முளுக்க பூவும் பிஞ்சுமா இரிக்கி, நுனிக்கந்துல நோண்டாம அடிக் கந்துல பாத்து நாலு இணுக்கு நோண்டிக்கொண்டு போ.”
நோண்டுன முருங்கை இலையையும் அரிசி, தேங்காயயும் ஒரு பைக்குள்ள போட்டு மடியில கட்டிக்கொண்டு சாக்கத் தூக்கி கக்கத்துல வைச்ச பரஞ்சோதிய, போடியார்ர மகள் பரிதாபமாப் பார்த்தாள்.
"நான் வாறன் தாயி.” எண்டிற்று நடந்த பரஞ்சோதிய கூப்புட்டு எண்ணெண்டாலும் குடுக்கோணும்போல இருந்தாலும் தாய்க்காறிய மீறி எதுவும் செய்யேலாதெண்டதால பரஞ்சோதி நடந்து மறையும் வரை அவளையே பார்த்துக்கொண்டு நிண்டாள், போடியார்ர மகள்.
204 விமல் குழந்தைவேல்

துTரத்துல நிண்டு பார்க்குறபோது பரந்து விரிஞ்சி தெரிஞ்ச போடியார் வயலுக்குள்ள, பாத்தி கட்டினாப் போல தெரிஞ்ச களவட்டிக்கு நடுவுல நடப்பட்ட அவரிக்கம்புகள்ல ஏறி நிண்டு காத்து திசைபாத்து பொலி தூத்துறது தெரிஞ்சுது.
அம்மன் கோயிலுக்குப் பின்னால உள்ள வயல் வரப்புக்குள்ள இறங்கி நடந்து போடியார்ர களவட்டிக்குப்போன பரஞ்சோதி மலைமாதிரிக் குவிஞ்சி கிடந்த வைக்கலுக்கு மறைவில நிண்டு கொண்டாள்.
தூத்திக் கூட்டிவைச்ச முதல் பொலி களவட்டிக்கு நடுவுல மலையா தெரிஞ்சுது. காத்துல பறந்துபோய் வேறையாக குவிஞ்சி கிடந்த பதக்கடைகள அள்ளி காத்துல பறக்க உட்டுற்று, மிஞ்சிக் கிடைக்குறதுகள ஏழைகள் தங்கட சாக்குப் பைகளுக்குள்ள நிரப்பிக் கொண்டுதுகள். வயதுபோன பொண்டுகள் சிலபேர் களவட்டிப் பிச்சைக்காக உயந்த வைக்கல் போர குடிசைபோல செய்து அதுக் குள்ள ஒதுங்கி ஒடுங்கி குந்திக் கொண்டிருந்தார்கள்.
பரஞ்சோதிக்கு இதுதான் முதன் அனுபவம். களவட்டிக்குப் போனா, முதல்ல ஆருக்கிட்ட என்ன கேக்கோணும், களவட்டியில் எங்க நிக்கோணும் எண்டுறதெல்லாம் அவளுக்கு தெரியாத விசயம். அவரியில நிண்டு பொலி தூத்திக் கொண்டிந்த மயில்வாகனம் இவளக் கண்டதும் . . .
“என்ன பரஞ்சோதி நீ களவட்டிக்கு வந்திரிக்காய். நாகமணி வரயில்லையோ?” என்றான்.
மயில்வாகனத்துர கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாம, மேலும் தன்ன வைக்கல் போருக்குள்ள மறைச்சிக் கொண்டாள்.
வெள்ளாவி 205

Page 104
புருசனப் பத்திய கவலை ஒரு பக்கமெண்டா, போடியார் பொஞ்சாதி தண்டமகனப் பத்தியும் அவண்ட புதுச் சைக்கிளப் பத்தியும் கதைச்சது மற்றொரு கவலையாக அவள்ற மனசக் குடைஞ்சி கொண்டே இருந்திச்சி.
சைக்கிள் வாங்குன கோபத்துல அதவாங்குன நாள்ல இருந்து இண்டுவரைக்கும் மகன் சைக்கிள் ஒடுறத்த ஒரு நாளாகுதல் அவள் பாக்கயில்ல.
கம்பிச் சக்கரத்துக்குள்ள கலர்கலரா தும்புப் பூவெல்லாம் சுத்து தாமே, கைய உட்டுப்போட்டு எழும்பிநிண்டு சைக்கிள் ஒட்டு றானாமே, எண்டெல்லாம் போடியார் பொஞ்சாதி சொன்னத நினைச்சபோது மகனநினைச்சி மனசுக்குள்ள பெருமைப்பட்டுக் கொண்டாள் பரஞ்சோதி.
இண்டைக்குப் பின்னேரம் ஊட்டுக்குப் போனதும் மகன் சைக் கிள் ஒடுற அழக முதல்முதலா பார்த்து ரசிக்க வேணும்போல அவள்ற மனசு அங்கலாய்ச்சது.
"பரஞ்சோதி உன்னய போடியார் கூப்பிர்றார் போய் என்னெண்டு கேளு.”
போடியார்ர வேலைக்காரப் பொடியனொருவன் ஓடிவந்து குசுகுசுத்தான்.
“போடியார் எங்கப்பு இரிக்கார் ?” "பறனுக்குள்ள இரிக்காராம், உன்னய வரட்டாம்." களவட்டியில இருந்து தூரத்துல, வயல் நடுவுல, வரப்பு சந்திப்பு கழிமண் மோட்டுப் புட்டியில தெரிஞ்ச பறன நோக்கி பரஞ்சோதி நடந்தபோது அவரியில நிண்டு பொலிதுரத்திக்கொண்டு நிண்டவனு கள் தங்களுக்குள்ளால ஏதோ கதைச்சிச் சிரிச்சது அவள்ற காதுக்குக் கேட்டிச்சி.
பறனடிக்குப் போனவள் உள்ளுக்குப் போகாம வெளியாலயே நிண்டு கொண்டு "போடியார்” எண்டு குரல் குடுத்தார்.
"ஆரு . . . பரஞ்சோதியா? . வா. வா. இஞ்சதான் இரிக்கன்." போடியார்ர குரலக்கேட்டதும் உள்ளுக்குள்ளையும் போகாம, வெளியாலயும் நிக்காம மனத்தடுமாத்தத்தோட பறணுக்குள்ள எட்டிப்பாத்தாள் பரஞ்சோதி.
பகல் நித்திரையால ஒழும்பியிருந்த போடியார், தேத்தண்ணி குடிச்சி முடிச்சிற்று சேட்டுப் போடாத உடம்போட இறுக்கியிருந்த வேட்டிய தொந்திக்குக்கீழ இறக்கி உட்டபடி மரக்கட்டையில சாய்ஞ்சிருந்தார்.
“என்ன பரஞ்சோதி நீ வந்திருக்காய். நாகமணி வரயில்லையோ?”
206 விமல் குழந்தைவேல்

போடியார்ர கேள்விக்கு அவர்ர பொஞ்சாதிக்கிட்ட சொன்ன தையே அவருக்கிடையும் சொன்னாள்.
“நல்லவன், நாணயமானவன், கூலியெண்டு குடுக்கிறத வாங்கிக் கொள்ளுறவன். குடுக்க வேண்டிய கூலிக்குமேல ஒருபுடி நெல்லுக்குடுத்தாலும் வாங்கக் கூச்சப்படுறவன். இப்ப ஏலாதெண்டு முடங்கிக் கிடக்கானோ?
பரஞ்சோதி எதுவும் பேசயில்ல. “இப்ப என்ன பரஞ்சோதி இந்த வருசக் கூலியோட சேத்து இன்னுமொரு மூடை நெல்லுதரச் சொல்லுறயோ?”
"தந்தா உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் போடியார்." "புண்ணியமெல்லாம் கிடைக்கிறது கிடக்கட்டும் . . . இப்ப ஆரு தரமாட்டாங்கெண்டது . . . நாகமணிக்கு ஏலாதெண்டா உனக்கும் தானே கயிற்றம்."
வரப்பு மூலைக்குள்ள தேங்கி நிண்ட தண்ணிக்குள்ள சலசலப்புச் சத்தம் கேட்டு எட்டிப் பாத்தாள் தவளைகள் துள்ளிப் பாய்ஞ்சோடிக் கொண்டிருந்தது.
"என்ன பரஞ்சோதி நான் கதைக்கன், வயலுக்குள்ள கட்டுன வெருட்டி மாதிரி நீ உண்ட பாட்டுல பேசாம நிக்காய்."
“என்னத்தப் போடியார் கதைக்கிற? இந்த மனிசன நினைச்சாத் தர்ன் கவலையா இரிக்கி."
"இரிக்காத பின்ன . . . கவலைய உடுநான் இரிக்கன். வாவன் கிட்டவந்து அந்த விசிறிய எடுத்து ஒருக்கா விசுக்கி உடன். செரியான அவிச்சலா இரிக்கி."
போடியார் கதையக் கேட்டு பேச்சு மூச்சில்லாம நிண்டாள். "என்னெண்டா பரஞ்சோதி, ஒருவகையில பாத்தா உண்ட நிலைமைதான் எனக்கும். முதுகுல கட்டி வந்து உண்டபுருசன் ஏலாமப்படுக்கான். நெஞ்சுல ஒட்டை உளுந்து எண்ட பொண் டாட்டியும் ஏலாவாளியாப் படுக்காள். காசுபணம் இருந்து என்னகா பிரயோசனம்? மனிசனுக்கு சந்தோசமெல்லோ முக்கியம்."
"காசு பணம் என்னத்துக்கு போடியார் நோய் நொடி இல்லாத வாழ்க்கையெல்லோ மனிசருக்குத் தேவை."
"அதத்தாங்கா நானும் சொல்லுறன். நாகமணிக்கு ஏலாதெண் டாலும் மூலைக்குள்ள முடங்கிக் கிடக்குற வயதோகா உனக்கு." ஒண்டுக்கு ஒண்டு சம்பந்தமில்லாத கதை கதைச்சிக் கொண்டு போடியார் மெதுவா முன்னால நகர்ந்திருந்தார். பரஞ்சோதி எதுவுமே கதைக்கயில்ல.
“என்ன பரஞ்சோதி நான் சொல்லுறதுல ஏதும் பிழை இரிக்கோ?
வெள்ளாவி 207

Page 105
ஒரு இளந்தாரிப் பொடியனுக்கு நீ தாயெண்டு உன்னப் பாத்தவன் ஆரும் சொல்லுவானோ? கோடியொரு வெள்ளைக்கு, குமரியொரு புள்ளைக்கெண்டு உன்னக் கண்டதுக்குப் புறகும் இனிஆரும் சொல்லேலுமோகா ? பட்டை களண்ட பாலக்கட்டை மாதிரி இந்த வயதிலையும் பளபளண்டு நீ எப்பிடி இரிக்காயெண்டு எனக்கெல்லோ தெரியுது.”
போடியார்ர கதைய கேட்கக் கேக்க, பூரானும் பூச்சியும் உடம்புக் குள்ள ஊர்ராப் போல இருந்தது, பரஞ்சோதிக்கு.
வெயில் படாம வளர்ந்த புல்லுர வெளுப்புப் போல சட்டை மறைச்சிருந்த அவள்ற இடுப்புச் சதை மடிப்பையே போடியார் உத்துப் பாத்துக் கொண்டிருந்ததக் கண்டவள் அவசரமாக முந் தானைய இறக்கி இடுப்ப மறைச்சிக் கொண்டாள்.
வரப்பு மூலைக்குள்ள வத்தித் தேங்கி நிண்ட தண்ணிக் குட்டைக் குள்ள குஞ்சி மீன் சலசலக்குற சத்தத்துல, அதஅவள் எட்டிப்பார்த்த கணத்துல அவள்ற இடுப்புச் சதையில போடியார் கைவைக்க நெருப்புப் பட்டாப்போல துடிச்சிப் போய் விலகிற்றாள் பரஞ்சோதி. "இடுப்போகா இது . . . தோலுருச்ச அலறிக்கம்பு மாதிரி இப்பிடி வழவழவெண்டிரிக்கி . . .?”
“வேணாம் போடியார். இது சரியில்ல." “எது சரியில்ல . . . வேணுமெண்டா சொல்லு . . . நீ ஊட்ட போறதுக்கிடையில ஒண்டுக்கு மூணா முதல் பொலியில கொண்டு போய் உண்டவாசல்ல இறக்கச் சொல்லுறன்.”
"அதுக்காக இப்பிடியெல்லாமோ போடியார் நடக்குற?” "இஞ்சபாரு பரஞ்சோதி, கடலுல கப்பலோடி தடமோகா தெரியப் போகுது?"
"எண்ட புருசண்ட ஏலாமைக்குத்தானே போடியார் நான் உதவி கேட்டன் . . .? அதுவும் வெளுக்குற கூலிக்குத்தானே.”
"நானும் உதவிக்கு உதவிதானேகா கேக்கன்? அதுக்கேங்கா தரையில உளுந்த மீன் துடிக்கிறாப்போல இப்பிடித் துடிக்காய்.” சொல்லிற்று எழும்பி அவளக் கட்டிப்புடிச்சு கொண்டவர, ஆவேசம் வந்தவளாய் அவள் தள்ளியுட, பறன் செத்தையில சாய்ஞ்ச போடியார் எழும்பி வந்து, அவள்ற தோளத்தொட்டு தன்னோட சேத்துக்கொள்ள முற்பட, அவள் திரும்பயும் தள்ளியுட்டுற்றாள்.
பொம்பிளையெண்டாலும் அவள்ற பலத்தோட நிண்டு புடிக்க போடியார்ர முதுமையால் முடியயில்ல. காமமும் கோபமும் ஒண்டாச் சேர்ந்து போடியார்ர கண் சிவந்து போயிருந்திச்சி.
208 விமல் குழந்தைவேல்

கலைஞ்ச முந்தான்ைய உதறி இடுப்புல சொருகினாள், பரஞ் சோதி.
“என்ன பரஞ்சோதி . . . வேணாமோ போகப் போறயோ ?” படுக்கவாறன் போடியார் ஒரு மூடை நெல்லுத்தாறயளோ எண்டு கேட்டாயெண்டு உன்னப்பத்தி ஊருக்குள்ள சொன்னா நம்புறத்துக் கோகா ஆளில்ல."
"சொல்லன் . சொல்லு . அதுக்குப்பயந்து இப்பிடி படுத்துக் கிடைக்குற காசில எண்ட புருசன் உசிர் வாழோணுமெண்டு நினைப்பனெண்டு மட்டும் நீ நினைக்காத."
"கொம்மை படுத்துழைச்ச காசிலதானேகா நீயும் வளந்த." "அம்மைபட்ட கக்சிசமெல்லாம் அம்மையோடயே போகட்டும். என்னையாவது வாழ உடுவாங்கெண்டுதான் நானும் வந்தன்." "படுத்த கதையெல்லாம் கொம்மையோடயே போகட்டு மெண்டுறயே, நீ மட்டுமென்ன சுத்தக்காரியோகா ?”
பாறை வெடிச்சி அதிர்ந்தாற்ப்போல போடியார்ர வார்த்தை கேட்டு நிண்டாள் பரஞ்சோதி.
“என்னகா பாக்குறாய்? நான் திண்டுபாத்து எறிஞ்ச கொட்டை தானேகா நீ . . . இப்பமட்டும் பத்தா பத்தினி மாதிரிக் கதைக்காய்.” பரஞ்சோதிர உடம்புக்குள்ள ஒரு நடுக்கம் அது பயமோ. ஆவேசமோ எண்டு அவளுக்கே தெரியுதில்ல.
“உண்ட மகனுக்கு எத்தினை வயசெண்டாய் .. ஆ. பதினைஞ்சி வயது என்ன . . . இப்பெண்ட மாதிரி இரிக்கு. நீ கொம்மையோட அம்மன் கோயிலுக்கு வந்ததும் . . . மடப்பொட்டியோட நீ கோயில் வாசலுல நிண்டதும் . . . அண்டுராவு நான் ஊட்டுக்கு வந் ததும் . . . உன்னோட படுத்ததும், இப்பெண்ட மாதிரி இரிக்கி. பதினைஞ்சி வருசம் எப்பிடி ஒடிற்றெண்டு கண்டயோ ... அதுக்குப் புறகும் எத்தினயோராவு வந்தன் . . . எங்க . . . அவன் நாகமணி யெல்லோ நாய் மாதிரி வாசல்ல உனக்கு காவலுக்கு படுத்தான்." அண்டைக்கு அம்மன் கோயில் வாசலுல தெய்வமாடநிண்ட பொண்டுகள்ற உடம்புக்குள்ள புகுந்த உருப்போல பரஞ்சோதிர உடம்புக்குள்ள ஒரு மாதிரியான அவேசத்தீ பரவிக் கொண்டிச்சி. "இப்பயும் என்னகா வேணாமெண்டுதான் சொல்லறயோ?” சிரிச்சிக் கொண்டுதான் கேட்டார் போடியார்.
"தூ . . .
பரஞ்சோதிர வாய்க்குள்ளயிருந்து வெளிப்பட்ட எச்சி போடி யார்ர முகத்த நனைக்க அத எதிர்பாராத போடியார் முகத்துல வடிஞ்ச எச்சிய ரெண்டு கையாலயும் வழிச்செடுத்து முகத்துக்குநேர நீட்டி விரிச்சி கையில படம் பார்த்துக் கெண்டிருந்தார்.
罗罗
வெள்ளாவி 209

Page 106
வரப்பால நடந்து வந்த பரஞ்சோதிக்கு தண்ட மடிகனக் குறாப்போல இரிக்க, மடிய தொட்டுப் பார்த்தாள். போடியார் பொஞ்சாதி தந்த அரிசியும் தேய்ங்காயும் கையில் பட்டிச்சி. என்ன நினைச்சாளோ தெரியாது மடிக்குள்ள இருந்ததுகள எடுத்து வரப்புல இருந்த பாம்புப் புற்றுக்குமேல எறிஞ்சிற்று நடந்தவள் களவட்டிய திரும்பிப் பார்த்தாள்.
தூத்துன பொலியெல்லாம் மூடையாகக் கட்டி ஏத்திக் கொண்டு போயாச்சி. வைக்கல் பாத்தி கட்டுன களவட்டி வெறிச்சோடிக் கிடந்திச்சி.
210 விமல் குழந்தைவேல்

Tெங்க குந்தியிருந்து யோசிச்சிக் கொண்டிருந்தாளோ? இல்லா எங்கெல்லாம் கடன் கேட்டுத்திருஞ்சாளோ, தெரியாது. பரஞ்சோதி ஊட்டுக்கு வந்த நேரம் நல்லா இருட்டிற்று.
விளக்கு வைக்குற நேரம் வீடு இருண்டு போய் கிடந்திச்சி. வாசலுக்கு வந்த பரஞ்சோதி கிணத்தடியில குந்தியிருந்த நாகமணியப் பார்த்தாள். அவன் எதுவுமே கதைக்கயில்ல. திரும்பிப் பார்த்தாள். இருட்டுல ஆரோ திண்ணையில குந்தியிருக்காப் போல தெரிய கிட்டப்போய் பார்த்தாள். வள்ளியம்மைதான் குந்திக் கொண்டிருந் தாள்.
ஒரு நாளும் வராத வள்ளியம்மை, இண்டைக்கு ஏன்கா வந்திருக் காளெண்டு தனக்குள்ளயே நினைச்சிக்கொண்டு, ஊட்டுக்குள்ள போய் விளக்க பத்த வைச்சி எடுத்துக்கொண்டு திண்ணையில வைச்சிற்று.
“என்ன வள்ளியக்க, ஒரு நாளும் இல்லாம இண்டைக்கு வந்திரிக் காய்? காசாத்தை பெத்தாவுக்கு ஏதுமோகா ?”
வள்ளியம்மை எதுவும் பேசயில்ல. ஆனா முகத்துல கவலை தெரிஞ்சுது. கிணத்தடிக்குப்போய் நாகமணிக்குப் பக்கத்துல நிண்டு அவன உத்துறங்கப் பார்த்தாள்.
“என்னகா மணிசா, மாலைபட்டு மயண்டையாகியும் விளக்குக் கொழுத்தாம சாவூட்டுல குந்தியிருக்காப்போல இரிக்காய்?” பரஞ்சோதி கேள்விக்கு நாகமணி எதுவும் சொல்லயில்ல. "ஏங்கா மனிசா ஒரு மாதிரியா இரிக்காய்?” "என்னெண்டுதான் கேளு.” "அதான் கேக்கனே என்னெண்டுதான் சொல்லன். முதுகுக்குள்ள குத்துது கித்துதேகா ?”
வெள்ளாவி 211

Page 107
"முதுகுக்குள்ள குத்துனா பறவாயில்லையே . . நெஞ்சுக்குள்ள யெல்லோகா குத்துற மாதிரி நடந்திற்றாய்."
நெஞ்சில ஈட்டி பாய்ஞ்சாப்போல இருந்தது பரஞ்சோதிக்கு. புருசன் பொஞ்சாதிர கதைக்கு நாம ஏன் காதுகுடுப்பானெண்டு நினைச்சி "நான் வாறங்கா பரஞ்சோதி” எண்டிற்று வள்ளியம்மை போயிற்றாள்.
"ஏங்கா மனிசா என்னகா நடந்திச்சி? இப்ப அப்பிடி என்னதான் செய்துபோட்டன் நான்."
"நடத்திறதெல்லாத்தையும் நடத்திப்போட்டு இப்ப என்னெண்டு எனக்கிட்ட கேக்கயோ?”
பரஞ்சோதிக்கு இதுக்கு மேலயும் என்ன சொல்லுறதெண்டு தெரியாம ஊட்டுக்குள்ளபோய் சோத்துப் பானை சட்டியப் பார்த் தாள். நேற்றயை பழஞ்சோறும் கறியும் கிடந்தது. கறிச்சட்டிய அடுப்புல வைச்சிச் சூடாக்கி கோப்பையில சோத்தயும் கறியயும் போட்டெடுத்துக்கொண்டு நாகமணிக்கு முன்னால வைக்க. அத முன்னால தள்ளியுட்டான் நாகமணி."
"இதென்ன கரப்பன்கா இது . . . என்னெண்டும் சொல்லுறாய் இல்ல. வைச்ச சோத்தையும் தள்ளியுடுறாய் . . . எனக்கேன் இந்தக் கக்கிசத்த ஆண்டவன் தந்தானோ தெரியா ..." அழுதிற்றாள் பரஞ்சோதி.”
“எடியே உண்ட கையால சோறு வாங்கித் தின்னயே எனக்கு மனசில்ல. வேணுமெண்டா நீ திண்டுபோட்டுப் படு.” "அப்பிடி என்னகா செய்து போட்டன் நான் ?” "இஞ்ச பார் பாய்ஞ்சோயி இப்பிடிப்பட்ட காசில வைத்தியம் பாத்து எண்ட வருத்தம் சுகமாகி நான் உசிர் வாழோணுமெண்டுறத உட நஞ்சக்கிஞ்சக் குடிச்சோ ஆத்துல குழத்துல உளுந்தோ செத்துடலாம்போல இரிக்குகா”
நாகமணி சொல்லச் சொல்ல பூமி புளந்து, தான் அதுக்குள்ள இறங்குறாப்போல இருந்தது பரஞ்சோதிக்கு. போடியார்ர பறணுக் குள்ள போனதக் கண்ட ஆரோ நாகமணிக்கிட்ட வந்து சொல்லிற் றாங்க எண்டுதான் நினைச்சாள்.
"பெத்த புள்ளையெண்டும் பாராம எப்பிடியெல்லாம் கரிச்சிக் கொட்டிப் போட்டாய் நீ. நான் அப்பிடி என்னத்த செய்து போட்டன். புள்ளை ஆசைப்பட்டானேயெண்டு ஒரு வைசிக்கிள வாங்கிக் குடுத்தன். அதுதானே உண்ட கண்ணுல குத்திக் கொண்டி ருந்திச்சி."
"ஆசைப்பட்டானெண்டுதான் வாங்கிக் குடுத்தாய் அதுக் கென்னகா இப்ப.”
212 விமல் குழந்தைவேல்

“கண்ணுறுபட்டாப்போல இப்ப, அந்த வைசிக்களும்இல்ல எண்ட புள்ளையும் இல்ல."
“என்னகா மனிசா சொல்லுறாய்.” "என்னத்த சொல்ல வைசிக்கிள வித்துக் காசக் கொண்டுவந்து காசோட காகிதமும் எழுதி வைச்சிற்றுப் போயிரிக்கான் எண்ட புள்ளை."
“காசும் காகிதமுமோ எங்ககா போயிற்றான் எண்டபுள்ளை ?” "எங்கெண்டு ஆருக்குத் தெரியும்? இயக்கத்துல சேந்திட்டானாம். கண்காணாத தேசத்துக்குப் போயிரிப்பான். இந்தா . . . காசி . . . காசெண்டு பேயாப் பறந்தயே இந்தாரிக்கு உண்ட காசி. காசி வந்திரிக்கு இனிப்புள்ளை வருவானோகா உனக்கு ?”
இடுப்பு மடுப்புக்குள்ள சொருகியிருந்த காசையும் காகிதத்தையும் திண்ணையில வைச்சிற்று, தோள் துண்ட எடுத்து உதறி விரிச்சிப் படுத்தான் நாகமணி.
"ஆயிரம் மனக்கோட்டை கட்டியிருந்தன். எல்லாத்திலயும் மண் ணள்ளிக் கொட்டிற்றுப் போயிற்றான். எண்டபுள்ளய இனி எப்ப காணுவனோ இல்லாம இனிக்கடைசி காலம் வரைக்கும் காணாமத் தான் கண்ண மூடுவனோ, சாவறிதிகாலத்துக்கு புடிமண்போட புள்ளையிரிக்கானெண்டு நினைச்சிருந்தன். இப்ப அதுக்கும் குடுப் பினை இல்லாம போச்சி.
குத்தியில கட்டிவைச்ச பைத்தியக்காரனப்போல புறுபுறுத்தான் நாகமணி.
"ம் . . . எப்பிடியெல்லாம் ஊட்டி ஊட்டி வளத்தாய். உனக்குப் புறந்ததெண்டா இப்பிடிச் செய்திருக்குமோ, பெத்த தாய் எனக் கிட்டயாகுதல் ஒரு சொல்லு சொல்லிற்று போனானோ ?”
பரஞ்சோதி கதைச்சி முடிச்சிருக்க மாட்டாள் நாகமணி எட்டி உதைச்ச உதையில தள்ளிப்போய் சரிஞ்சுழுந்தெழும்பி நிண்டுற்றாள் அவள்.
"இதென்னகா நீ இந்தா காட்டுற கோட்டாலை அவன் தலையால தெறிச்சிருவான் ஊட்டஉட்டு ஒட நீ என்னப் போட்டு படாதபாடு படுத்துறாய்?"
"கதையாதடி . . . கதைச்சயெண்டா ஒழும்பிவந்து உன்னய ஏறி மிதிச்சுக் கொண்டுபோடுவன் தெரியும்தானே ?”
நாகமணி இப்பிடிக் கோவப்பட்டத பரஞ்சோதி இதுநாள் வரைக்கும் பாத்ததேயில்ல. மெல்ல ஒழும்பி வந்து வாசலுல குந்திட்டாள்.
கம்பிச் சக்கரத்துக்குள்ள கலர் கலரா élւճւյնս சுத்த உண்ட மகன் கையை உட்டுப் போட்டு வைசிக்கில் ஒட்டுறானாமே”
வெள்ளாவி 213

Page 108
போடியார் பொஞ்சாதி சொன்னத இப்பயும் நினைச்சிப் பாத் தாள். கடைசி வரைக்கும் எண்டபுள்ளை வைசிக்கல் ஒடுன அழக நான் பாக்கேலாமத்தானே போயிற்று.
மனசுக்குள்ள கதைச்சிற்று. திண்ணையில இருந்த விளக்க எடுத்துக் கொண்டு போய், ஊட்டுச் சுவரோர தாவாரத்த விளக்கு வெளிச்சத் துல பாத்தாள்.
மகன் அரவிந்தண்ட வைசிக்கிள் சக்கரம் உறுண்டு போன தடம் மணல் பரப்புல பதிஞ்சிருந்திச்சி. குந்தியிருந்து சக்கரம் உருண்டு போன இடத்த தடவி பாத்தாள். தடம் அழிஞ்சி வெறுமை யாயிற்று. அவள்ற கண்ணுல இருந்து உழுந்த தண்ணித் துளிபட்டு விளக்கு நூந்துபோக, இருட்டுல நடந்து வந்து விளக்கக் கொளுத்தி திண்ணையில வைச்சிற்று ஊட்டுக்குள்ள போய் ஒரு பன்வேக்க எடுத்து வந்தாள்.
நாகமணிர ஒரு சேட்டையும் சாறனையும் எடுத்து பன்வேக்குள்ள வைச்சாள். குடிலுக்குள்ள போய் தேத்தண்ணி குடிக்க ஜொக்கொண் டும், தண்ணி குடிக்க கொத்துக் கோப்பையொண்டும், சோத்துப் பீங்கானொண்டையும் எடுத்து வேக்குக்குள்ள அடைச்சிற்றாள். அண்டைக்கொரு நாள் புளியமரத்தடியில் சித்திரவதைப்பட்ட இளந்தாரிப் பொடியண்ட தோற்றம் திடீரென்டு அவள்ற கண்ணுக் குள்ள வர அந்த இளந்தாரிப் பொடியன போடியார் எண்டும், சுத்திநிண்டு சித்திரவதை செய்த பொடியனுகளுக்குள்ள மகன் அரவிந்தனும் நிக்கறாப் போலபும் நினைச்சிப் பாத்தவள் சட்டெண்டு சத்தம் போட்டு சிரிச்சிற்றாள்.
"அடி . . . பெயித்தியக்காரப் பூனா . . . புள்ளை போயிற்றானே யெண்டு கவலைகிவலை இல்லை. நீ பூரிப்புல சிரிக்காய் என்னடி?”
நாகமணி சத்தம் போட்டு கோவமா கத்திற்றான். "இஞ்சே தலைக்கோழி கூவ ஒழும்பி வெளிக்கிட்டு சந்தைக்குப் போய் நாலுமணிக்காகுதல் வஸ்ஸோ வேக்கனோ புடிச்சிப் போனாத் தான், போளினுல நிண்டு நொம்பர் எடுக்கலாம். நீ பேசமாப் படுபாப்பம்.”
அதட்டுற குரலுல சொன்ன பரஞ்சோதிர சத்தத்தக்கேட்டு பயந்திற்றானோ இல்லாம நித்திரையாப்போனானோ தெரியாது நாகமணி அதுக்கப்புறகு கதைக்கவேயில்ல.
திண்ணையில இருந்த பரஞ்சோதி விளக்கத் தூக்கிப் புடிச்சு, செத்ன்தயில செர்ருகியிருந்த நாகமணிர ஆசுபத்திரித் துண்டையும் கடுதாசியில மடிச்சி ஒழிச்சி வெச்சிருந்த முகத்துக்குப் பூசுற பகுடரை யும், முக்கோண வடிவுல உடைஞ்ச ஒரு முகம் பாக்குற கண்ணாடித் துண்டொண்டையும் எடுத்தவள் ‘நாகமணிர ஆசுபத்திரி துண்ட பனைவேக்குக்குள்ள வைச்சிற்று “வாட்டுல நிப்பாட்டுனாலும் . . ."
24 விமல் குழந்தைவேல்

எண்டிற்று கடதாசியில சுத்தியிருந்த முகப்பகுடரையும் முக்கோண கண்ணாடித் துண்டையும்கூட பன்வேக்குக்குள்ள வைச்சிக் கொண் டாள்.
- முற்றும் -
வெள்ளாவி 25

Page 109


Page 110
நீண்ட நெடுந்தொலைவு பே புலம்பெயரியாய் ஐக்கிய இராச்சியத்தில் வதியும் விமலின் ஆன்மா இரவுக்கா படம் பார்த்துவிட்டு சாறை தூக்கிக் கட்டியபடியும், 圈、 குந்தியிருந்து ஊர்ப்புதினங்களைப் பேசிய எழுவட்டுவான் மைதானத்தி உதைபந்து விளையாட்டுக்கு பிறகான மிகுமாலை அமைதியில் இஞ்சிப் பிளோன்டியொன்றின் உச ჟ:fraთის #L-La- `ား உட்கார்ந்து வியர்வை காய்ந் பனிபெய்து நனைக்கும் வரைக்கும் பகிடி பேசிச் சிரித்தாயும், கோளாவில் மன தெருக்களில் சைக்கிளையும், துயரம் நொறுக்கும் வாழ்வையும் தள்ளியபடியும் இழந்த வாழ்வின் சாரங்கை இன்றும் சுவைத்துக் கொண்டிருக்கின்றது. இறந்த வாழ்வின் மகோன்ன தருணங்களை, திரும்பவொருத்தரs நமக்கு வாய்க்க வைத்திருகிறார் வி