கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 1

sufi (p6oo6O6JÍ SLUIT. Sg2 HUJITSIT

Page 2


Page 3

இலக்கியத் திறனாய்வுக் 68TIJT(586r
THEORES OF LITERARY CRTICISM
பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா
GFDLDC சேமமடு பதிப்பகம்
2OO8

Page 4
நூற் தலைப்பு :
நூலாசிரியர் பதிப்பாளர் பதிப்புரிமை பதிப்பாண்டு எழுத்து
Esses ! sty856ir விலை அச்சிடல்
வெளியீடு
ISBN - NO
Title
Author
Edition
Price Published by
Printed by
நூற் குறிப்பு
இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள் பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா சதபூபத்மசீலன் ஆசிரியருக்கே ஆடி தி.பி.2039 (2008) 11 புள்ளி 124
- MTM MTYTA ண்ண்
báRSO
,estibلfuL{ئی مرتبہ ۔۔۔
கொழும்பு -11. ରgit.Cly: O777 345 ଜୋଜୋତ. சேமமடு பொத்தகசாலை, யுஜி.50, பீப்பள்ஸ் பார்க், கொழும்பு-11. தொ.பே: 011-2472362, 2321905. (fairs (6586) Chemamadu(a)yahoo.com
978-955-1857-16 - 05
ELAKKIYATHI THIRANAVU KOTIPATUKAL Pro. Saba Jayarasa (C)
2s. dët) ar *** PoththakaSalai UG.50, People's Park, Colombo -11. TP: 011-2472362,2321905. Chemamadu Pathippakam, Colombo -11.
TP 0777 345 666. E-mail: ChemamaduGyahoo.com

முன்னிடு.
இனிய நட்போடு என்றுங் கலந்திருந்த கீர்த்தனைக் குயில் வீரமணி ஐயாவுக்கு.

Page 5

முன்னுரை
மேனாட்டுத் தொடர்பால் வந்த இலக்கிய வடிவங்களை விளங்கிக் கொள்வதற்கும் கவிதை, உரைநடை போன்றவற்றின் இயக்கத்துக்கான கோட்பாட்டு விளக்கத்தினை மேனாட்டு இலக்கியக் கோட்" பாட்டாளர்கள், திறனாய்வாளர்கள் முன்வைத்தனர். இதன்வழியாக அறிந்து கொள்வதற்கு இவ்விமரிசனப் பயில்வு இடமளித்தது. குறிப்பாக, புனைகதையின் பயில்வு அதிகரிக்கவே அந்த இலக்கிய வகையினை அறிந்து கொள்வதற்கும் சிறுகதை, நாவல் போன்ற வடிவங்களின் தமிழ் நிலைப்பட்ட வளர்ச்சியை மதிப்பிடுவதற்கும் மேனாட்டு வழிவந்த விமரிசனம் வழிவகுத்தது. இது புதிய அறிதல்முறை, சிந்தனைமரபு சார்ந்து இயங்குவதற்கான அறிகை மரபைக் கையளித்தது.
இன்று நாம் “இலக்கிய விமரிசனம்" என மேற்கொள்ளும் பயில் நெறியானது மேனாட்டுக் கல்விமுறை வழியாக வந்த மேனாட்டு இலக்கிய அறிகையுடனேயே கையளிக்கப்பட்டு வந்துள்ளது. அதே நேரம் தமிழ்மொழி நிலைப்பட்ட விமரிசனப் புலமையும் எம்மிடையே இழையோடி வந்திருப்பதையும் நாம் இனங்காணலாம்.
gridsagigas a Slippij dislippslf-glib (Literary Criticism) at 607ds குறிப்பிடப்படும் புலமைத் தொழிற்பாடு, தமிழில் “இலக்கிய விமரிசனம்" அல்லது "இலக்கியத் திறனாய்வு" என்ற இரு தொடர்கள் மூலம் பயன்பட்டு வருகின்றன. இந்த இரண்டுமே ஒரே அர்த்தத்தில் தான் கையாளப்படுகின்றன.
Critic என்ற சொல்லை இலக்கியத்தோடு முதன்முதலாகத் தொடர்புபடுத்திப் பேசியவர் ஃபிரான்சிஸ் பேக்கன் (1605). இவர்
5/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 6
ஆங்கில நாட்டின் மிகச் சிறந்த உரைநடையாசிரியரும் சிந்தனையாளருமாகத் திகழ்ந்தவர். 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜான்டிரைடன் என்ற ஆங்கிலக் கவிஞர் தான் Criticism என்ற சொல்லை ஒரு கலைச் சொல்லாக இன்றைய பொருளில் முதலில் புழக்கத்தில் விட்டவர்.
இலக்கியம் பற்றிய வரன்முறையான எந்த விவாதத்தையும் இந்தச் சொல்லினால் குறிப்பிடுவதற்கான தடத்தை ஜான்டிரைடன் ஏற்படுத்தினார். தமிழில் 'திறனாய்வு’, ‘விமரிசனம்’ என்ற இரு சொற்களுமே இந்தப் பொருளில்தான் வழங்கப்படுகின்றன. 1944களில் அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கி வந்த ஆ.முத்துசிவன் “விமரிசனம்" எனும் சொல்லைப் பயன்படுத்தி னார். விமரிசை என்ற சொல்லிலிருந்து விமரிசனம் வந்தது. இது பழைய சொல். விரிவாக - விளக்கமாகச் சொல்லுதல், பாராட்டிப் பேசுதல் என்று இதற்குப் பொருள். இதிலிருந்து விமரிசனம் என்ற சொல் இலக்கியத்தோடு தொடர்புடையதாக எடுத்தாளப்பட்டு வந்தது. பேரா.ஆ.முத்துசிவன் தனது அசோகவனம் எனும் நூலுக்கு எழுதிய முன்னுரையில் "விமரிசனம்" எனும் சொல்லையே பயன்படுத்தியுள்ளார்.
தமிழில் விமரிசனம் பற்றிய நூலை முதன்முதலாக எழுதியவர் தொ.மு.சி.ரகுநாதன். இவர் 1944இல் “இலக்கிய விமரிசனம்" எனும் நூலை எழுதினார். அதன் பிறகு க.நா.சுப்பிரமணியம் "விமரிசனக் கலை" என்ற நூலை எழுதினார். “திறனாய்வு" என்ற சொல்லை முதன்முதலாகப் புழக்கத்தில் விட்டவர் பேரா.அ.ச.ஞானசம்பந்தன். இவர் 1953இல் "இலக்கியக்கலை” எனும் நூலை வெளியிட்டவர். இதில் திறனாய்வு என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
திறனாய்வு’ என்ற சொல் திறனை ஆய்தல் என்ற பொருளில் ஒரு தொகைச் சொல்லாக உருவாக்கம் பெற்றது. தமிழில் விமரிசனம், திறனாய்வு என்ற இரு சொற்களும் வழக்கில் இருந்தாலும் “திறனாய்வு" என்ற சொல் பெரும்பாலும் கல்வியாளர் மத்தியிலும், "விமரிசனம்" என்பது கல்வியாளரல்லாத பிறநவீன எழுத்தாளர்கள் மத்தியிலும் அதிகமாக வழங்குகின்றன.
குறிப்பாக, நவீனத்துவம் சார்ந்த சொல்லாடல்களைத் தமிழில் கொண்டு வந்த சிறப்பு சிறுபத்திரிகைச் சூழல் சார்ந்துதான் அதிகம் சாத்தியப்பட்டுள்ளது. கலை-இலக்கியம் சார்ந்த நவீன கோட்பாடு" களை விவாதிக்கும் நபர்கள் - படைப்பாளிகள் பலர் தமிழில்
6/oLIT 6guynast

எழுச்சிகொள்கின்றார்கள். இவர்கள் தமிழின் அறிதல்முறை, சிந்தனை மரபுகளைக் கேள்விக்குள்ளாக்கி பன்மைத் தன்மையான உரையாடல் களம்நோக்கி முன்னோக்கி நகர்த்திச் சென்றார்கள்.
இருபதாம் நூற்றாண்டு ‘இலக்கியக் கோட்பாடுகளின் காலம்’ எனக் கூறலாம். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் காமன்வெல்த் நாடுகளில் பரவலாகப் பயிலப்பட்டு நடைமுறையில் இருக்கும் இலக்கியக் கொள்கைகள் பலவாறு உருவாகியுள்ளன. இவை தமிழ்க் கல்வி மரபுக்குள் உள்வாங்கப்பட்டு இலக்கியத் திறனாய்வுக் கல்வி யின் பயில் நெறி விரிவும், ஆழமும் மிக்கதாக உருப்பெறக் காரணமாயின. சமூகம், இயற்கை, மனிதர் பற்றிய தத்துவார்த்த உரையாடல்கள் கலை- இலக்கியம் பற்றிய விசாரணையிலும் பல்வேறு புதிய வளங்களைக் கொண்டு வந்து சேர்ந்தது. இதைவிட வியாபித்துவரும் பன்முக புதிய அறிவுத்துறைகளுடனும் ஊடாட்டம் கொண்டு இலக்கியக் கோட்பாடுகள் பலவிருத்தி பெறுவதைக் காணலாம். அதாவது, ஒவ்வொரு கோட்பாடும் தன்னளவில் பிறதுறைக் கோட்பாடுகளுடன் ஊடாட்டம் கொண்டவையாகவே இருக்கும். இதனால், எந்த ஒரு கூறுபற்றிய கோட்பாடும் பிறகூறுகளின் கோட்பாடுகளையும் தழுவியே செல்லும். இத்தன்மை இதன் பொதுவான தனித்துவ அம்சமாகவே உள்ளது. இந்நிலையில் ஒரு கோட்பாட்டைப் பற்றிச் சிந்திக்கும் பொழுது பிறகோட்பாடுகளும் இயல்பாக மேற்கிளம்பும்.
இதனால், கோட்பாடுகளுக்குத் தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. தொடர்ச்சியே நிலையான பண்பாக அமைகிறது. ஆகவே, எந்தவொரு துறையின் வரலாறும் வரையறுத்த முதல், இடை, கடை என்னும் அமைப்பினைப் பெற்றிருப்பதில்லை. மேலும், எமது தேட லும் சிந்தனையும் ஆழ அகலப்படுகின்றன. இதனால் மானுட அறி. வுத் துறைகளின் எல்லைகள் விரிகின்றன. ஒவ்வொரு துறையின் தனிப்பட்ட கோட்பாடும் மற்றத்துறைகளின் கோட்பாடுகளைப் பாதிக்கின்றன. ஆகவே, கோட்பாடுகள் பல்கிப் பெருகுகின்றன. இருபதாம் நூற்றாண்டு நமக்கு கற்றுத்தரும் பாடம் இதுதான்.
எந்தத் துறைக்கும் தனிப்பட்ட ஒரு கோட்பாடென்பது இல்லாமல் போகவே கருத்துக் குழப்பங்கள் ஒரு நிலையிலும், கருத்து வளர்ச்சி மற்றொரு நிலையிலும் உருப்பெறுகின்றன. இதனால் குழப்பங்கள் தெளிவின்மைகள் இருப்பது தவிர்க்க முடியாது. எவ்வாறாயினும் இலக்கியக் கோட்பாடுகளின் உருவாக்கத்தில் பல்துறை
7/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 7
பன்முகப் பார்வை மேவி நிற்கின்றது. இதுவே, இலக்கியக் கோட்பாடுகளின் இயங்கியலையும் இருப்பையும் தீர்மானிக்கிறது. இங்கு பல்வேறு கோட்பாட்டுக் குரல்கள் கோட்பாட்டாளர்களின் விவாதங்கள் நடைபெறுவதை மேலும் மேலும் ஊக்குவிக்கும் சனநாயகத் தன்மை நிலைபேறாக்கம் அடைகின்றது.
சிந்தனைத் துறையில், அறிதல் முறையில், அறிவுத் தொகுப்பில் பன்முகப் போக்குகளை வலியுறுத்தும் பண்பு முதன்மை பெறத் தொடங்கின. இதனால், இலக்கியம் என்ற சொல்லை குறிப்பீடு செய்யும் முறைமை மாறியது. அதாவது, அர்த்தம் குறித்த தத்துவம், அர்த்தம் குறித்த அரசியல் என்ற இரு நிலைகைளை உள்ளடக்கிய சிந்தனை மாற்றம், அறிதல்முறை, திறனாய்வுநோக்கு உருவானது.
இந்தப் பின்புலத்தில் அமைப்பியல், பின் - அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்ற சிந்தனைகளின் - கோட்பாடுகளின் தாக்கம் இலக்கியத் திறனாய்வுக் கல்வியில் பெரும் மாறுதல்களை பண்பு களை ஏற்படுத்தின. விமரிசன நோக்கு முறைக்கான புதிய அறிகை மரபுகளைக் கொண்டு வந்தன. வேறு வார்த்தையில் சொன்னால் சமூகவியல், மொழியியல், தத்துவம், உளவியல், நவமார்க்சியம், அரசியல், பொருளியல், பண்பாட்டியல், நாட்டார் வழக்காற்றியல் போன்ற அறிவுத் துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகள் இலக்கியக் கோட்பாடுகளின் உருவாக்கத்துக்கு பெரிதும் காரணமாயின. இலக்" கிய வரலாறு பற்றிய கற்கை, ஆய்வு மற்றும் தேடல் இலக்கிய விமரிசனமாக இலக்கியக் கோட்பாடுகளாக விருத்திபெற்று வருவதைக் காணலாம். இலக்கிய விமரிசனம் இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய தேடலாக ஆய்வாக கற்கையாக மாறுகிறது. பன்முகக் கோட்பாடு" களை அறிமுகம் செய்கிறது. இந்தக் கோட்பாடுகளுடன் நாம் பரிச்" சயம் கொள்வது என்பதும் தவிர்க்க முடியாது. இது அறிவுக்கையளிப்பில் இயல்பானதும் கூட.
எண்பதுகளின் பிற்பகுதியில் இலக்கியக் கல்வியின் முக்கிய ஈடுபாடு இலக்கியக் கோட்பாடாக உருமாற்றம் பெற்றது. இலக்கிய மற்றும் கலாசார ஆய்வுகளில் கோட்பாடு குறித்து அதிகம் பேச வேண்டிய நிலைமை உருவானது. ஐரோப்பிய பின்னணியில் கருப்பர்கள், பெண்கள் ஆகியோரின் பண்பாட்டினுள் ஆழமாகச் சென்று நுண்ணியதான புதிய பார்வைகளைப் பெறும் நோக்கில் பிரெஞ்சு சிந்தனையாளரான ழாக்தெரிதா மற்றும் ‘பூக்கோ போன்றோரது எழுத்துக்களால் பாதிக்கப்பட்ட இலக்கியக் கோட்பாடுகள்
8/சபா ஜெயராசா

முதன்மை பெற்றன. பின் "அமைப்பியல், பின்நவீனத்துவம் போன்ற சிந்தனைகளின் தாக்கத்தை இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டும்.
இதைவிட தொடர் மார்க்சிய விவாதங்களின் அடிப்படையில் சமூகம், பண்பாடு, அரசியல் பற்றிய செழுமையான விமர்சனக் கண்ணோட்டங்கள் மேலும் விரிவுபெறுகின்றன. குறிப்பாக, எண்பதுகளின் இறுதிப்பகுதியில் ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலானவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையொட்டி சனநாயகம், சோசலிசம் பற்றிய விவாதங்கள் மீளவும் வலியுறுத்தப்பட்டன. புதிய கருத்தாடல் வளங்கள் நோக்கி திசைதிருப்பின. தமிழகச் சூழலில் சாதியம், தேசியம், பண்பாடுகள் குறித்த ஆழமான விவாதங்களை, விமரிசனங்களை உருவாக்கின. இலக்கியம் பற்றிய அணுகுமுறையிலும் இத்தகைய மாற்றங்கள் உருவாயின. இவை புதிய வழிமுறைகளையும் திறந்துவிட்டன. இலக்கியம் - படைப்பு" படைப்பாளி - வாசகர் என்ற புள்ளிகளில் பல்வேறு புதிய பார்வைகள், விசாரணைகள், விமரிசனங்கள் எழுச்சிபெற்றன.
எழுத்தாளரைக் காட்டிலும் வாசகருக்கும், வாசிப்புக்கும் முக்கி யத்துவம் கொடுக்கும் நிலைமைகள் உருவாயின. அதாவது, வாசிக்" கப்படும் சூழல், எழுத்தாளருக்கும் வாசகருக்குமிடையிலான ஊடகத்தின் தன்மை, வாசிக்கப்படும் பிரதி அல்லது பனுவல் பற்றிய இதர பிரதிகளின் கருத்தாடல்கள் போன்ற இதுவரை முக்கியத்துவம் கொடுக்கப்படாத அம்சங்கள் எல்லாம் பிரதியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்தப் புரிதலின் அடிப்படையில் பிரதி யின் அரசியல், வாசிப்பின் அரசியல் பற்றியெல்லாம் பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டது.
தமிழ்ச்சூழலும் இதற்கு உட்பட்டு இயங்கி வருவதைக் காண" லாம். 1990களுக்குப் பிறகு இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய விவாதங்கள், இவற்றினது அடிப்படை மூலக்கட்டுரைகள், கோட்பாடுசார் மொழிபெயர்ப்பு நூல்கள் என அதிகம் வெளிவரத் தொடங்கின. தற்போது பின்நவீனத்துவ சிந்தனையாளர் வரிசை என்று பொதுவாசகர் நோக்கிய வாசிப்பு நூல்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. புதிய விமரிசன அணுமுறைக்கான நுட்பங்கள் எழுச்சி பெறுகின்றன. படைப்பாக்கம் பற்றிய புதிய விமரிசனப் பார்வைகள் விரிகின்றன.
இந்தப் பின்புலத்தில்தான் எமது சூழலில் இருந்து பேராசிரியர் சபா.ஜெயராசா இலக்கியத் திறனாய்வுக் கே7ட்டாடுகள்” எனும்
9/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 8
நூலைத் தருகின்றார். சமகால திறனாய்வுக் கோட்பாடுகள் யாவை என்பது பற்றிய ஒர் அடிப்படைப் புரிதலைத் தருகிறது இந்நூல். இந்த அறிகைக் கையளிப்பு விமரிசனச் செயற்பாடுகளை இன்னும் கூர்மையாக முன்னெடுப்பதற்கான ஆய்வுக் கருவிகளையும் நமக்குத் தருகிறது.
உலகமயமாக்கல், நுகர்வுக்கலாசாரம் போன்ற சமகாலப் பின்புலத்தில் இயங்குவதற்கான மாற்றுத்தளம் எத்தகையது என்பது பற்றிய தேடலுக்கான களங்களையும், திறனாய்வுச் சிரத்தையையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது. மேலும், பின்காலனித்துவச் சூழ" லில் இயங்குவதற்கான கருத்துநிலை, அரசியல் பற்றிய அருட்டுணர்வையும் நிலைப்பாடுகள் நோக்கிய கவனக் குவிப்பையும் வழங்கு" கிறது. இந்தத் தேடல், ஆய்வு, கற்கை இன்னொருபுறம் தமிழ்நிலைப் பட்ட விமரிசனச் சிந்தனைக்கான மூலங்கள் பற்றிய பின்னோக்கிய தேடுகைக்கும் செல்வதற்கான அவசியத்தையும் நமக்கு உணர்த்துகிறது. "உரையாசிரியரும் திறனாய்வும்", "மரபுவழி இந்தியத்திறனாய்வு" போன்ற பகுதிகள் எம்மை இது குறித்து இன்னும் உரத்துச் சிந்திப்பதற்கான ஆய்வு செய்வதற்கான களம் நோக்கி திசை திருப்புகிறது. மேலும், "திறனாய்வும் மத்தியதர வகுப்பினரும்" என்னும் பகுதி எமது விமரிசன செயற்பாட்டுப் பின்னணியை மறுவாசிப்பு, சுயவிசாரணை செய்வதற்கான உந்துதலையும் வழங்குகிறது. பொதுவாக மத்தியதர வகுப்பினரது செயற்பாடுகள் அறிவு மற்றும் திறனாய்வுத் தொழிற்பாடுகளில் எத்தகைய கோலங்களை வெளிப்படுத்தும் என்பதை சிந்திப்பதற்கான திசையை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு நோக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இந்த நூலில் இந்தப் பகுதி ஒரு சிறப்பாகக் குறிப்பிட வேண்டிய பகுதியாகும்.
எமக்கு "இலக்கவியத் திறனாயர்வுக் கோட்பாடுகள் சிந்தனைத்துறையில், அறிதல் முறையில், அறிவுத் தொகுப்பில் புதிய தடங்களை அறிமுகம் செய்கிறது. கலை இலக்கியம் பற்றிய புதிய விசாரணைகளுக்கான, விமரிசனங்களுக்கான களம் நோக்கி முன்னகர்த்துகிறது. இதுவே இந்நூலின் பலம்.
O2-O7-2OO8 தெ.மதுசூதனன்
10/சபா ஜெயராசா

நூலாசிரியர் உரை
இலக்கியத் திறனாய்வின் பன்முகப் பரிமாணங்களைக் கண்டறியும் ஆக்கமாக இந்நூல் மேலெழுந்துள்ளது. பழைமையின் இயல்" புகளையும் புதுமையின் வகைப்பாடுகளையும் அறிதல் திறனாய்வின் புலக்காட்சியை வளம்படுத்திக் கொள்வதற்கும், திறனாய்வு அறிகை" யை வலுப்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புத் தருகின்றது.
“திறனாய்வு எங்கும் தலை நீட்டுகின்றது" (Criticism is Every Where) என்ற கருத்து அது பற்றி அறியும் தேவையை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. இத்துறையின் இற்றைப்படுத்தலை முன்னெடுக்" கும் நூலாக்கத்தின் தேவையை நண்பர் தெமதுசூதனன் அவர்களும் சேமமடு பதிப்பகத்தின் இயக்குநர் பூபத்மசீலன் அவர்களும் குறித்து ரைத்தனர். அவர்களின் விருப்பம் இந்நூலாக வரைவு பெற்றுள்ளது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இந்நூலை எழுதுவதற்குத் தொடர்ந்து உற்சாகம் தந்தனர். சிறப்பாக பேராதனைப் பல்கலைக்கழகத்து முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி வ.மகேஸ்வரன் அவர்களும், தென்கிழக்குப் பல்கலைக்" கழகத்து முதுநிலை விரிவுரையாளர் திரு.கே.இரகுபரன் அவர்களும் உற்சாகத்துக்கு விசை தொடுத்தனர். இவர்கள் அனைவரும் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.
Զ6-Օ6-2OO8 T.
11/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 9
பதிப்புரை
நாம் தமிழ்ப் பதிப்புத்துறைக்குள் குறுகிய காலத்துள் நுழைந்து இன்றைய கல்வித் தேவைக்கருதி மிகவும் பயனுள்ள நூல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளோம். இந்த ரீதியில் எமது பதிப்பாக்க முயற்சிகளுக்கு ஆரம்பம் முதல் ஆலோசனைகள், அறிவுரைகள் தந்து, தமது காத்திரமான நூல்களை வெளியிடவும் தொடர்ந்து சந்தர்ப்பம் வழங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதுவரை பேராசிரியரது கல்வியியல் நூல்களை வெளியிட்ட நாம் இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்” எனும் நூலை வெளியிடுகின்றோம். இதன் மூலம் பேராசிரியரது பிறிதொரு பரிமாணத்தை சமூகத்துக்கு புலமை மரபுக்கு கொண்டு செல்வதையிட்டு நாம் பெருமிதம் கொள்கிறோம். பேராசிரியரும் எம்மீது நம்பிக்கை கொண்டு எம்முடன் இணைந்து பணியாற்றும் அவரது விரிந்த உள்ளத்துக்கு முன் சரணடைகின்றோம்.
தமிழ்ச் சூழலில் இத்தகு நூலின் தேவையை நமக்கு பலரும் சுட்டிக்காட்டி வந்தார்கள். நாமும் பேராசிரியர் சபா.ஜெயராசா மூல்ம் இதைச் சாத்தியப்படுத்தியுள்ளோம். வழமைபோல் எமது நூலாக்கப் பணியில் இணைந்துள்ள மதுசூதனாருக்கும் நன்றி.
தொடர்ந்து எமது நூல்களுக்கு வாசகர்களாக இருக்கும் ஆசிரிய நண்பர்களுக்கும், அதிபர் முதலானோருக்கும் என்றும் எமது நன்றிகளுடன். நன்றி : வணக்கம் அன்புடன் Ol-O7-2OO 8 பதிப்பாளர்
12/சபா ஜெயராசா

பொருளடக்கம்
முன்னுரை
நூலாசிரியர் உரை
பதிப்புரை
திறனாய்வுக் கலையின் வளர்ச்சி
மார்க்சியத் திறனாய்வு
இருப்பியத் திறனாய்வு
உளப்பகுப்புத் திறனாய்வு
தொல் வடிவத் திறனாய்வு
அமைப்பியலும் பின்அமைப்பியலும்
பெண்ணியத் திறனாய்வு
பின்னவீனத்துவம்
சூழலியல் திறனாய்வு
கதை உரைப்பியல்
எழுநடையியல்
குறியியல்
பின் காலனியத் திறனாய்வு
13/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்
பக்கம்
5
92
27
32
37
42
49
6
67
72
76
84.

Page 10
ls.
16.
17.
18.
19.
2Ο
2.
புதிய வரலாற்றியலும் பண்பாட்டுப் பொருண்மிய வாதமும்
தாராண்மை மானிடவாதம்
பெண்பால் இணைவு மற்றும் மகிழ்விலகல் திறனாய்வு
உரையாசிரியரும் திறனாய்வும்
மரபுவழி இந்தியத் திறனாய்வு
திறனாய்வும் மத்தியதர வகுப்பினரும்
திறனாய்வுக் கலைச்சொற்கள்
உசாத்துணைகள்
14/சபா ஜெயராசா
89
94.
99
O4
Ο9
14
2Ο
193

و ۹
:
திறனாய்வுக் கலையின் GlubITïrijff
கலைகளுக்குரிய கோட்பாட்டு அடிப்படைகளைத் தேடுதல் திறனாய்வின் அடிப்படையான வினைப்பாடாகின்றது. பின்வரும் அறிதலைப்புகளில் திறனாய்வாளர் தமது குவிப்பை மேற்கொள்கின்றனர்.
கலை இலக்கியங்களின் இயல்பு கலை இலக்கியப் படைப்பின் உருவாக்கல் முறைமை ஆக்குனரின் வகிபாகம்
நூலியத்தைப் பகுப்பாய்வு செய்தலும் பொருள் கோடலும்
அழகியல் மற்றும் சமூகக் கண்ணோட்டங்களில் மதிப்பீடு செய்தல் தொன்மையான கிரேக்கக்கல்வி மரபில் வரன்முறையான திறனாய்வு கால்கோள் கொண்டுவிட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. பிளேட்டோ கவிதையை "ஐயப்பாட்டுடன்" நோக்கினார். அது உலகைப் போலி வடிவாகச் சித்திரிக்கின்றதென்றும், நிஜஉலகைத் திரிபுபடுத்தி அரசுக்குரிய கடமைகளைச் செய்யவிடாது மனித மனங்களை மாசுபடுத்தி விடுகின்றதென்றும் குறிப்பிட்டார். பிளேட்டோ குறிப்பிட்ட போலி வடிவப் பதிலீடு (limitation) என்ற கருத்தை ஒரு வகையில் மறுத்துரைத்த அரிஸ்ரோட்டில் அந்த எண்ணக்கருவை நேரியல்புகளுடன் நோக்கினார். கிறிஸ்துவுக்கு முற்" பட்ட ஐந்து நூற்றாண்டுக் காலத்துக் கிரேக்கத் துன்பியல் நாட" கங்களை அடியொற்றி அரிஸ்ரோட்டில் தமது திறனாய்வுக் கருத்துக்" களை முன்மொழிந்தார். கலைகளால் உள்ளம் ஊறுபடுத்தப்படுதல்
15/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 11
இல்லை என்றும் அது உள்ளத்தைப் புடமிடப்பட்டுச் சீர்மியத் தெளிவை ஏற்படுத்தி விடுகின்றதென்றும் விளக்கினார். அதனை விளக்குவதற்கு அவர் "கதாசிஸ்" (Cathasis) என்ற எண்ணக்கரு” வைப் பயன்படுத்தினார்.
கிரேக்கத்தின் செவ்வியற் சிந்தனைகளைத் தொடர்ந்து திறனாய்வுக்கலை என்பது கவிதைகளை அடியொற்றியே வளரலாயிற்று. அச்சுப்பொறிகண்டறியப்படுவதற்கு முற்பட்ட வரன்முறையான இலக்" கியப் படைப்புகள் செய்யுள் வழியாகவும் கவிதை வழியாகவுமே முன்னெடுக்கப்பட்டு வந்தன. மனித நினைவுகளின் பதிவுகளை உள்ளடக்கிய கவிதைகளிலே சுவைகாணும் செயற்பாடுகள் திறனாய்வாளர்களிடத்து மேலோங்கியிருந்தன. மொழியின் கலை வடிவப்பாங்கின் வற்புறுத்தலோடு திறனாய்வை முன்னெடுத்தல் குவின்டிலி யன் மற்றும் லோங்கினஸ் போன்றோரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது. கவிதைக்கலை வளர்ச்சி மற்றும் பேச்சுக்கலை வளர்ச்சி முதலி யவற்றுடன் தொடர்புடைய சொல்லாடற்கலை (Rhetoric) வளர்ந்தது" டன் அதனை அடியொற்றிய மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட" லாயின. மனங்கவரச் செய்தல், மனக்குவிப்பை ஏற்படுத்துதல், தருக்க வழியாக நிரூபணமாக்குதல் முதலியவற்றில் மொழியின் பயன்பாடு சொல்லாடற் கலையில் வலியுறுத்தப்பட்டது.
ஐரோப்பாவிலே தோற்றம் பெற்ற மறுமலர்ச்சிச் சிந்தனைகள் திறனாய்வு தொடர்பாக முன்னர் மொழியப்பட்ட செவ்வியற் சிந்த" னைகளுக்கு மீள்வடிவம் கொடுக்கும் “நவசெவ்வியல்" திறனாய்வு முறைமையை முன்னெடுத்தன.
இங்கிலாந்து, பிரான்சு, ஜேர்மனி, இத்தாலி முதலிய நாடுக" ளிலே தோற்றம் பெற்ற புதிய இலக்கியங்களுக்குப் பொருந்தக் கூடிய வகையிலே அரிஸ்ரோட்டில், ஹொரேஸ் மற்றும் தொன்மையான ஆய்வாளர்களின் கோட்பாடுகளை மீள்வடிவமைத்து நவசெவ்வியல் (Neoclassicism) அல்லது புதிய செந்நெறிவாதம் உருவாக்கம் பெற்றது. மொழியும் வடிவமும், வகையியலும், எழுநடையும் என்ற துறைகள் கூடிய கவனக்குவிப்புக்கு உள்ளாக்கப்பட்டன. பதினேழாம், பதி: னெட்டாம் நூற்றாண்டுகளின் ஐரோப்பிய இலக்கிய அணுகுமுறை" களில் செவ்வியல் சிறப்பார்ந்த நெறியாக முன்னெடுக்கப்பட்டது.
பதினெட்டாம் நூற்றாண்டில் செவ்வியல் திறனாய்வு மரபுக்கு எதிரான தகர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
16/சபா ஜெயராசா

செவ்வியலில் வலியுறுத்தப்பட்ட செம்மை, சமச்சீர்மை, சமநிலை உறுபாவனை (Balanced limitation) முதலியவற்றைக் காட்டிலும் கற்பனை வலுவின் முக்கியத்துவத்தை ஜேர்மனிய நாட்டைச் சேர்ந்த லீசிங் என்பார் வலியுறுத்தலானார். கற்பனை மேலோங்கல், உறுபற்று (Sentiment), தனிமனித மேலோங்கற் பளிச்சீடுகள் முதலியவற்றை அடியொற்றி "உளக்கவர்ச்சியியல்” (Romanticism) வளர்ச்சி பெறலாயிற்று.
சமூக வாழ்க்கை முறைமைக்கும் இலக்கியக் கோட்பாடுகளின் ஆக்கங்களுக்குமிடையேயுள்ள நேரடியான உறவுகளை செவ்வியல் மற்றும் உளக்கவர்ச்சியியல் ஆகிய கோட்பாடுகளின் ஆக்கங்கள் வெளிப்படுத்துகின்றன. அரசுகளின் பெருங்கட்டுமானப் பணிகளுக்கு மனித உழைப்புப் பயன்படுத்தப்படலும், கீழ்ப்படிவுள்ள நற்பிரசை களாகத் தொழிற்படும் பிரதி பண்ணும் மனோபாவமும் செவ்வியல் நெறியோடு நேர் இணைப்புக்களைக் கொண்டிருந்தன. ஐரோப்பாவில் நிகழ்ந்த சமூக மாற்றங்களை அடியொற்றிய தனிமனித மே" லோங்கல் நிலை, உளக் கவர்ச்சி இயலின் ஆக்கத்துக்கும் தோற்றத்துக்கும் வழிவகுத்தது.
தனிமனித எழுச்சிக்கும் பிரபஞ்ச ஒத்திசைவுக்கும் இடையே காணப்பட்ட இடைவெளியின் முரண் சுவைகளை உளக்கவர்ச்சியியல் தழுவிய கவிதைகள் வெளிப்படுத்தின. மொழியின் புதிய வியூ" கங்களை அது முன்னெடுத்தது. "மனிதன் மனிதர்களைத் தேடல்" ஆங்கில உளக்கவர்ச்சிக் கவிதைகளின் சிறப்பார்ந்த பரிமாணமாயிற்று. அழகை ஆராதித்தலில் கவிஞர் ஷெல்லி ஈடுபடலானார். நடப்பு உலகில் மனிதரை மானிடப்படுத்தலும், மனிதச் சிறப்பை வலியுறுத்தலும் முன்னெடுக்கப்பட்டன.
நடப்பியல் வாழ்க்கையிலிருந்து விடுபட்டுக் கற்பனையில் மிதக்" கும் கோட்பாடாக அமைந்த உளக்கவர்ச்சியியலைத் தகர்ப்பதற்குரிய மாற்று நடவடிக்கையாக ஐரோப்பிய சிந்தனை மரபில் “சமூகத்திறனாய்வியல்" மேலெழத் தொடங்கியது. தோமஸ் கார்லைல் மற்றும் ரஸ்கின் ஆகியோர் சமூகத்திறனாய்வு மரபை முன்னெடுக்கலாயினர். இலக்கியங்களின் வழியாக சமூக ஒழுங்கைக் காணல் வலியுறுத்தப்பட்டது. உருக்குலைந்துள்ள சமூகத்துக்கு உருக்கொடுப்பதற்" குரிய இலக்கிய ஆக்கங்கள் பற்றிய சிந்தனைகள் மேலெழுந்தன. கவி. தையை வாழ்க்கையின் திறனாய்வாக அர்னல்ட் கொள்ளலானார்.
17/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 12
சமூகத் திறனாய்வியலுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் இங்கிலாந்தின் நாவல்கள் எழுச்சி கொள்ளலாயின. சமூக நிபந்தனைப்பாடுகளுக்கு உட்பட்ட மனித நடத்தைகளை அறிவியல் பூர்வ மாக நாவல்கள் வெளிப்படுத்துதல் வேண்டும் என்ற கருத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரான்சிய சிந்தனைகளிலே வலுப்பெற்றிருந்தது.
இருபதாம் நூற்றாண்டு பல்வேறுபட்ட கலை இலக்கியச் சிந்த" னைகளின் "குவியலாக" அமைந்தது. கைத்தொழில் வளர்ச்சியின் தீவிரப்பாடும், புதிய கண்டுபிடிப்புக்களும், பன்முகமாகிய நுகர்ச்சிக் கோலங்களும், கோட்பாட்டு நிலையிலே பன்மைநிலைப்புத்தாக்கங்களுக்கு இடமளித்தும் வலுவூட்டியும் வந்துள்ளன. சமூகத்து அடித்" தளத்து மக்களின் வாழ்க்கையைப் புனைதல் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு இருபதாம் நூற்றாண்டில் விரிவடையலாயிற்று கலை இலக்கியங்கள் தொடர்பான மார்க்சிய சிந்தனைகள் பல நிலைகளிலும் வளம்படுத்தும் அறிகைச் செயல்முறைகளை வழங்கலாயிற்று.
1930ஆம் ஆண்டளவில் ரூசியாவில் வளர்ச்சிபெற்ற உருநிறை" யியல் (Formalism) கலைத் தொடர்புகளின் இணைப்புக் கட்டமைப்பை வலியுறுத்தி நின்றது. மொழியும் அதன்வழி எழும் கருத்தும் நிறை" வான மேலெழுச்சியை (Articulation)த் தாங்கிநிற்றல் வேண்டும் என்பது குறித்துரைக்கப்பட்டது. அதேவேளை சூழமைவின் நிராகரிப்பை "புதிய திறனாய்வு" வலியுறுத்துகின்றது. மேலும், நூலாசிரியரது வாழ்க்கைக் கோலங்கள், அவர் வாழ்ந்த காலம், சூழல், அவற்றின் செல்வாக்குகள், படைப்பின் சூழமைவு முதலிய கண்ணோட்டங்களில் இலக்கியங்களை ஆராய்தலும் பொருத்தமற்றது என அக்" கோட்பாடு வலியுறுத்துகின்றது.
கவிதைகளை அவை ஆக்கப்பெற்ற அவற்றுக்குரிய மொழியூ டாகவே விளக்கப்பட வேண்டுமென்ற கருத்தை அவர்கள் தீவிரப்படுத்தினர். கவிதை ஆக்கத்துக்குரிய மொழியைவிட்டு விலகிச் செல்லலாகாது. அவற்றில் இடம்பெறும் படிமங்கள், குறியீடுகள், அவற்" றுக்குரிய தன்னிலைத் தகைமைகளை விட்டு வெளிச்சென்று பார்க்க முடியாதென்பதே அவர்களின் வாதம்.
இருபதாம் நூற்றாண்டின் திறனாய்வு வளர்ச்சியை ஆராய்வோர் சிக்காக்கோ ஆய்வு வட்டத்தினரது பங்களிப்பையும் இணைத்து நோக்குதல் உண்டு. அரிஸ்டோட்டிலினது கவிதை பற்றிய சிந்தனைகளுக்கு அவர்கள் மீள்வாழ்வு கொடுத்து விளக்கலாயினர்.
18/சபா ஜெயராசா

"கவிதை வினைப்பாடுகளின் உறுபாவனை” என்பது இக்கருத்தின் வேர்களை அடியொற்றி ஐ.எறிச்சாட் அவர்கள் கவிதை பற்றிய தமது கருத்துக்களை வெளியிட்டார். உணர்ச்சி மற்றும் கருத்து ஆகியவற்” றின் ஒன்றிணைப்பு மேலெழுச்சி அவரது அணுகுமுறையின் முத் தாய்ப்பாய் அமைந்தது.
அழகும் அமைப்பும் (Form) அவரது ஆய்வுகளிலே மேலோங்கியிருந்தன. கவிதையின் உள்ளமைந்த ஒருங்கிணைப்பு வழியாக அதன் மனவெழுச்சிப்பாங்கை அறிந்துகொள்ள முடியுமென வலியுறுத்தினார். றிச்சாட் அவர்களின் கருத்துக்கள் ஐ.அமெரிக்காவில் முகிழ்த்தெழுந்த "புதிய திறனாய்வு” (New Criticism) வளர்வதற்கு உந்துவிசைகளாக அமைந்தன. அமெரிக்கத் திறனாய்வாளர் உறுநிறையியற் கோட்பாட்டை உள்வாங்கி உருவாக்கிய வடிவமாக புதிய திறனாய்வு அமையப்பெற்றது.
இலக்கியங்களினது தன்னியல்பானதும், சுயாதீனமானதுமாகிய இயல்பு என்று அவர்கள் புலக்காட்சி கொண்ட கருத்தியலின் வடிவமாக “புதிய திறனாய்வு” எழுச்சி கொண்டது. இலக்கிய வடிவத்தின் உள்ளமைந்த தனிமங்கள், பண்புகள், விழுமியங்கள் முதலியவற்றை வரலாற்று விளக்கங்களினாலோ மெய்யியற் பொருள் கோடல் வழி யாகவோ அணுகமுடியாது என சிக்காகோ ஆய்வு வட்டத்தினரால் வலியுறுத்தப்பட்டது. குறித்த இலட்சியப்பாங்கான வினைப்பாடுகளை எந்தளவு வெற்றிகரமாக இலக்கியங்கள் அணுகின என்ற அடிப் படையிலேதான் மதிப்பீடுகளும், தீர்மானங்களும் முன்வைக்கப்படல் வேண்டுமென்பது அவர்களின் விபரிப்பாக அமைந்தது. இந்த அடிப்படையில் அவர்கள் உளவியல் திறனாய்வையும் நிராகரித்தனர். ஏனெனில் பாத்திரங்களின் வினைப்பாட்டு வடிவமைப்புக்கள் அருவப்படுத்தப்பட முடியாதவை என்று அவர்கள் முன்மொழிந்தனர்.
ஆழ்ந்துநோக்கும் பொழுது ஐ.அமெரிக்காவில் எழுச்சி பெற்ற புதிய திறனாய்வுக் கோட்பாடு இலக்கியத்தையும் சமூகத்தையும், வரலாற்று இயக்கத்தையும் புறந்தள்ளுவதாக அமைந்துள்ளது. ஒரு வகையில் இதனை எதிர் மாக்சிய நடவடிக்கை என்றும் கூறலாம். இந்தப் புதிய திறனாய்வுக் கோட்பாட்டின் செல்வாக்குகள் சுந்தர ராமசாமி, வெங்கட்சாமிநாதன், எஸ்.பொன்னுத்துரை முதலியோரிடத்து வெவ்வேறு செறிவுகளில் ஊடுருவியிருந்தன.
19/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 13
இருபதாம் நூற்றாண்டின் திறனாய்வு வளர்ச்சியை நோக்கும் பொழுது தனித்துவமானவர்களின் பங்களிப்பும் விதந்து பேசப்படுதல் உண்டு. அவர்களின் விபரங்கள் வருமாறு:
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
நோத்றொப் பிறை : கவிதைகளின் சொற் கட்டுமானங்களை நோக்காது அவற்றில் இடம்பெறும் உணர்வுபூர்வமான தொல்வடிவங்களை நோக்கல் வேண்டுமென்ற முன்மொழிவு. எப்.ஆர்.லிவிஸ் : எழுத்தாளரின் அறவழிப் புலக்காட்சிச் செழுமையினை அடியொற்றி இலக்கியங்களை அணுகுதல் வேண்டுமென்ற குறிப்பு.
ஐவர்.விண்ரேர்ஸ் : நாகரிகம் மற்றும் தூய்மைப்படுத்தல் (Sanity) அடிப்படை களில் எழுத்தாளரையும் எழுத்தாக்கங்களின் இயல்பையும் நோக்கல் வேண்டுமென்ற குறிப்பு. கரோலின் ஸ்போர்யியன் :
மீண்டெழும் படிமப் பிரயோகங்களை வகைப்பாட்டினுள் கொண்டுவந்து எழுத்தாளர்களை ஆய்வுக்கு உட்படுத்துதல் வேண்டும் என்ற கருத்தாடல்.
வில்லியம் எம்சன் :
கவிதையின் ஒவ்வொரு வரியையும், ஒவ்வொரு சொல்லையும் பல்பொருள் கோடல் வாசிப்புக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்தல் வேண்டுமென்ற கருத்துரை. க.கைலாசபதி :
பல்வேறுபட்ட பிரதேசங்களில் உருவாக்கம் பெற்ற இலக்கிய வடிவங்களை ஒப்பியல் நோக்கில் மதிப்பீடு செய்வதற்கு சமூக வரலாற்று இயங்கியல் நுட்பங்களின் பயன்பாடு பற்றி விளக்கியமை.
20/சபா ஜெயராசா

(7) ழான் போல் சார்த்தர் :
இருப்பியக் கண்ணோட்டத்தில் இலக்கியங்களை அணுகியமை.
(8) றோலணி பார்திஸ் :
அமைப்பியற் கண்ணோட்டத்தை இலக்கியங்களுக்கு அறிமுகப்படுத்தியமை.
(9) கார்ல் யுங் :
இலக்கியங்களின் இடம்பெறும் படிமங்களைக் கூட்டு நனவிலியின் வெளிப்பாடாகக் கருதியமை.
இருபதாம் நூற்றாண்டு பெருக்கெடுத்த அறிவு வளர்ச்சியுடன் இணைந்த வகையிலே திறனாய்வுக் கலையும் சமாந்தரமாக வளரலாயிற்று.
令令令
21/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 14
மார்க்சியத் திறனாய்வு
சமூக இருப்பை அடியொற்றி இலக்கியங்களை விளக்குதல் மார்க்சியத்திலே தலையாய முனைப்புப் பெறுகின்றது. கட்புலனாகும் உலக உறுநேர்வுகளை விஞ்ஞான வழியிலும், தருக்க வழியி லும் தரிசித்தல் மார்க்சியத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. மெய்யியலாளர் உலகின் உறுநேர்வுகளை விளக்க முயன்றனர். ஆனால், மார்க்சியம் உலக நியதிகளை மாற்றியமைப்பதற்குரிய முன்மொழிவு களைத் தந்தது. வரலாற்றை வர்க்கப்போராக மார்க்சியம் விளங்கி யமை வெறுமனே வாய்பாடு போன்ற கருத்து அன்று. அதனை வரன்" முறைப்படுத்திய தருக்கநோக்கிற் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மார்க்சியம் குறிப்பிடும் பறித்தற் செயற்பாடு (Exploitation) சமகாலத்திலே துல்லியமாக வெளிப்படுத்தலைக் கண்டறியக் கூடியதாகவுள்ளது.
பறித்தலின் நேரடியான வெளிப்பாடாக உருவாகும் மனித அன்னிய மயப்பாடு இலக்கிய ஆக்கங்களுக்குரிய பல பரிமாணங்களைத் தூண்டிய வண்ணமுள்ளது. பொருளுற்பத்திமுறை ஏற்படுத்தும் மனித அசைவுகள் அல்லது சமூக நிலைப்பட்ட அசைவியம் (Mobility) இலக்கிய ஆக்கங்களுக்குரிய புதிய தூண்டுதல்களைத் தந்த வண்ணமுள்ளது.
மார்க்சிய சமூக அமைப்பின் மாதிரிகையாக்கம், அடிக்கட்டுமானம் மற்றும் மேலமைந்த வடிவங்கள் என்பவற்றால் விளக்கப்படும். சமூகத்தின் அடிக்கட்டுமானமாக பொருண்மிய உற்பத்தி முறைமை, பங்கீடு மற்றும் பரிமாற்றம் ஆகியவை அமைந்துள்ளன. அதன் மேலமைந்த வடிவமாக கருத்துருவாக்கம், கலை இலக்கியங்கள், சமயம், சட்டம் முதலியவை அமைந்துள்ளன.
22/சபா ஜெயராசா
 

மார்க்சிய இலக்கியநோக்கு இறுகிய வைராக்கியப் போக்கைக் கொண்டிராது இதமான நெகிழ்ச்சிப்பாங்கானது. பொருண்மிய நிலைகள் இறுதிநிலை அடிக்கட்டுமானமாக இருந்தாலும் இலக்கி யங்கள் அதன் தொடர்ச்சியில் நெகிழ்ச்சிப் பாங்கானவையாக இடம்பெறக் கூடியவை. இவ்வாறு கூறும்பொழுது இறுதிநிலைத் தீர்மானிப்பை உருவாக்கும் பொருண்மியக் காரணியின் விசைகளை மறந்து விடலாகாது. அந்த விசைகள் நேரடியாகத் துலங்காது மறைபொருட் களாக இருக்கும் நிலையில் அவற்றின் தீர்மானிப்பு இல்லை என்று கூறுதல் பொருத்தமான அறிகை முறைமையாகாது.
மார்க்சிய இலக்கிய நோக்கு மட்டும் இலக்கியத்தைப் பிரசாரமாக்கியுள்ளது என்பது தவறான ஓர் அணுகுமுறையாகும். மார்க்சிய நோக்குடையவராக இருந்தாலென்ன, எதிர்மார்க்சிய நோக்குடைய வராக இருந்தாலென்ன அவர்களின் கருத்தியல் இலக்கிய வடிவில் எங்கோ ஒரு நிலையில் வெளிப்படும் வாய்ப்பு இருத்தலை நிராகரிக்க முடியாது. இவ்வாறான தெளிவான புலக்காட்சி நிலையையும் மார்க்சியமே வெளிப்படுத்தியது.
மார்க்சியம் கலை இலக்கியங்களில் நடப்பியலின் (Realism) நோக்கைக் குறிப்பிடுகின்றது. அக்கருத்தியலை மேலும் கூர்ம்மைப்படுத்தி சோசலிச நடப்பியலை வலியுறுத்துகின்றது. கலை இலக்கி யங்களில் சோசலிச நடப்பியல் புதிய பரிமாணங்களைத் தோற்றுவித்" தது. நாவல் மற்றும் திரைப்படத் துறைகளில் சோசலிச நடப்பியல் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தி வருகின்றது.
சோவியத்தில் 1905ஆம் ஆண்டின்போது இலக்கியம் கட்சியின் கருவியாகப் பயன்படுத்தப்பட்டமையானது. குறித்த வரலாற்றுக் காலகட்டத்தின் தேவையைப் புலப்படுத்துவதாக அமைந்தது. பின்னர் அந்த நிகழ்ச்சி மார்க்சியத் தரிசனத்தைக் கொச்சைப்படுத்தி விட்டது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
எதிர்மார்க்சிய நோக்குடையவர்கள் இலக்கியம் என்பது புற" விதிகளுக்கு உட்படாத தனித்துவமுடையதென விளக்குகின்றனர். ஆனால், தருக்க வழியாக இக்கருத்து அரண் செய்யப்படாதிருத்” தலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. விநோதப் பண்புகளை உரு” QuiróG556) (Making Strange) Lugp535L6aotaol Durdisas (Defamiliarisation) முதலிய உளச் செயற்பாடுகளை உள்ளத்தின் நேர் மற்றும் எதிர் முரண்பாடுகள் வழியாகவே மார்க்சிய திறனாய்வு நோக்குகின்றது.
23/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 15
ஆனால், எதிர்மார்க்சிய நோக்குடையோர் அதனை இலக்கியங்களுக்குரிய தனித்துவ விதிகளின் தோற்றப்பாடு என்று கருதுகின்றனர்.
மார்க்சிய அழகியல் பற்றி ஆராயும் முன்னெடுப்புக்கள் 1921ஆம் ஆண்டிலே ஜேர்மனியில் தோற்றுவிக்கப்பட்ட பிராங்போட் சிந்தனா கூடத்தினால் மேற்கொள்ளப்பட்டன. பிராட்டிசத்தையும், மார்க்சியத்தையும் இணைப்பதற்குரிய அறிகை முயற்சிகள் அவர்களால் அணுகப்பட்டன. வால்டர் பென்ஜமின், கேர்பட்மார்க்கஸ், தியோட்டர் அடோர்னா, பிரெச்ற முதலியோரின் கலை இலக்கியச் சிந்தனைகள் மார்க்சியத்தை அடியொற்றிய பலநிலையான வெளி வீச்சுகளின் அனுபவங்களாக முகிழ்த்தெழுந்தன.
மார்க்சியச் சிந்தனைகளை அடியொற்றியும், மாறுபட்டும் பிரான்சிய மார்க்சியவியலாளராகிய லுயி அல்துஸ்ஸரின் அமைப்பியல் சிந்தனைகள் அமைந்தன. சமூக அடிக்கட்டுமானத்துக்கும் மேலமைந்த வடிவங்களுக்குமுள்ள தொடர்புகளை மார்க்சியம் அறிகை நிலையிலே தருக்கப்படுத்தியமை எதிர்மார்க்சியவாதிகளால் ஒற்றைப் பரிமாணத்திலே சுருக்கப்படுத்தப்பட்டும் கொச்சைப்படுத்தப்" பட்டும் திரிபுபடுத்தப்பட்டும் வந்தன. குறுகிய வாய்ப்பாடுகளுக்குள் மார்க்சியத்தை இயந்திரப் பாங்கானதாகச் சுருக்கிவிடும் செயற்பாடுகளும் அவர்களால் முன்னெடுக்கப்பட்டன. அத்தகைய அறிமுறை" யின் செல்வாக்குகள் அமைப்பியலை வலியுறுத்தியோரிடத்தும் ஏற்பட்டன. (மார்க்சியத்தைத் திரிபுபடுத்துவதற்கும் கொச்சைப்படுத்துவ தற்கும் மேலைநாட்டில் நுண்மதியாளர் கூலிக்கு அமர்த்தப்பட்டனர் என்ற செய்தியும் உண்டு).
பொருளாதார விசைகளில் இருந்து விடுபட்டு மேலமைந்த வடி" வங்கள் சுயாதீனமாக இயங்குதல் அமைப்பியலாளரின் சிந்தனைகளிலே முகிழ்த்தெழுந்தன. இத்துறையில் சிறப்பார்ந்த பங்களிப்பைச் செய்தவர்களுள் லுயி அல்துஸ்ஸர் குறிப்பிடத்தக்கவர். மார்க்" சைப் போன்று "கருத்தியல்" (Ideology) என்ற எண்ணக்கருவை அல்துஸ்ஸர் முதன்மைப்படுத்தினார். அதுவே, குறிப்பிட்ட சமூகத் தின் இருதயமாகவும் செயலூற்றாகவும் விளங்குகின்றது. அது வர லாற்று வகிபாகமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. கருத்துக்கள், எண்ணக்கருக்கள், தொன்மங்கள், எண்ணங்கள் முதலியவை கருத்துருவங்களில் உள்ளடங்கிநிற்கின்றன. கலை இலக்கியங்களின் ஆக்" கத்தில் கருத்தியலின் தனித்துவமான இயல்புகளை விளக்கிய அவர் அமைப்பியலின் ஒவ்வோர் அடுக்கும் சுயாதீனமாகவும் அதே"
24/சபா ஜெயராசா

வேளை மற்றைய அமைப்பு அடுக்குகளுடன் வேண்டியவிடத்து இடைவினை கொண்டு இயங்குவதாகவும் சுட்டிக் காட்டினார்.
வலுவுக்கும் அரசின் கட்டுப்பாடுகளுக்குமிடையே அல்துஸ்ஸர் வேறுபாடு காட்டினார். அரச அதிகாரம் ஒடுக்குமுறை அமைப்புக்க" ளுடன் தொடர்புடையது. காவல்துறை, இராணுவம், நீதிமன்றம் முதலியவை ஒடுக்குமுறை அமைப்புடன் இணைந்த நிறுவனங்களாகும். அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதாக அரசக் கருத்துருவச் சாதனம் அமைகின்றது. பள்ளிக்கூடங்கள், திருச்சபை, ஊடகங்கள் முதலியவை கருத்துருவங்களைத் தாங்கி நிற்கின்றன. இவை அரசின் கருத்தியலோடு இணங்கி இயங்கிய வண்ணமுள்ளன.
கலை இலக்கியங்கள் வழியாக சுதந்திரமாகக் கருத்து நுகரப்படுகின்றது என்று எண்ணுதல் தவறாகின்றது. மேற்கூறிய அமைப்புக்கள் வழியாகக் கருத்துக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பதிவு செய்யப்படுகின்றன. அல்துஸ்ஸர் விளக்கிய இந்தப் பாகுபாட்டுக்கும் அந்தோனியோ கிராம்ஸ்கி என்ற இத்தாலிய மார்க்சியவியலாளர் விளக்கிய "மேலாதிக்க நிலைக்குரிய நோக்கு” என்பதற்குமிடையே ஒப்புமைகள் காணப்படுகின்றன.
முதலாளியம் மிக நுட்பமாகத் தனது செயற்பாடுகளை மேற்" கொள்கின்றது. மனிதர்களுக்குச் சுதந்திரமான கருத்தியல் தேர்வுகளுக்கு இடமளிக்கப்படுகின்றது என்று கூறிக்கொண்டு மேலாதிக்கத்துக்குரிய கருத்தாக்கத்தையே திணித்து வருகின்றது. சமூக விசைகளில் இருந்து தனிமனிதர் தனித்துச் சுதந்திரமாகச் செயற்படுவதான மாயைத் தோற்றத்தையே அது ஏற்படுத்தி வருகின்றது. இதே நிலை" தான் முதலாளியத்துக்குச் சார்பான கலை இலக்கிய ஆக்கங்களிலும் உடுருவியுள்ளது. ஊடக நிறுவனங்களின் கருத்தியலே ஊடகங்களின் கருத்தாக அமைகின்றது. எழுத்தாளரும் வாசகரும் சுதந்திரமான கருத்து வெளிப்பாடுகளுக்குரியவர் என்ற மாயைத் தோற்றம் மேலெழச் செய்யப்பட்டுள்ளது.
அல்துஸ்ஸரது நோக்கு ஆழ்ந்த புலக்காட்சியை ஏற்படுத்துவ தாக இருந்தாலும், கோட்பாட்டை நடைமுறையிலிருந்து வேறு படுத்தி நோக்கியமை மார்க்சிய அணுகுமுறைகளை ஒருவகையிலே திரிபுபடுத்துவதாகவும் அமைந்து விடுகின்றது.
மார்க்சிய திறனாய்வு முறைமை ஈபிதோம்சன், ரெறி எகல்டன் போன்ற ஆய்வாளர்களால் பிரித்தானியாவில் மேலும் வளமாக்கப்
25/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 16
பட்டு வந்தமை பின்காலனியத் திறனாய்வுச் சிந்தனைகள் மீதும் சில நிலைகளில் பதிவுகளை ஏற்படுத்தலாயிற்று.
மார்க்சியத் திறனாய்வின் வழியாக முன்னெடுக்கப்படுகின்ற சிறப்பார்ந்த அணுகுமுறைகள் வருமாறு :
(l)
(2)
(3)
(4)
(5)
கலை இலக்கிய உள்ளடக்கத்தின் வெளிப்பாட்டு தோற்" றங்களையும், மறைநிலைப் பண்புகளையும் ஆய்வுக்கு உட்படுத்துதல்.
சமூகத்திலே காணப்படும் பல நிலை முரண்பாடுகளின் பெரும் அதிர்வுகளையும் நுண்அதிர்வுகளையும் மெளனித்" தலையும் நோக்குதல். அவ்வாறு நயப்படுத்தி வெளிப்பாடு செய்யப்பட்டவற்றின் வர்க்க சார்புடைமையை நோக்குதல்.
கலை இலக்கிய ஆக்கங்களிற் புனைவோரின் கலை மற்றும் அழகியற் பண்புகளுக்கும் கருத்தியல் பண்புகளுக்குமுள்ள தொடர்புகளைப் பகுப்பாய்வு செய்தல்.
எந்த இலக்குமாந்தரைக் குவியப்படுத்திக் குறித்த ஆக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற தெளிவைப் பெற்றுக் கொள்ளல்.
சமூகச் சூழமைவினதும் அரசியற் கவிநிலையினதும் தெறிப்புக்கள் எத்தகைய தளத்திலிருந்து வெளிப்படுத்தப் பட்டுள்ளன என்பதைக் கண்டறிதல்.
மார்க்சியத் திறனாய்வுமுறை ஒற்றைப் பரிமாணம் கொண்டது அன்று. சமூகத்தின் சிக்கலான இயல்புகளைப் போன்று மார்க்சியத் திறனாய்வும் எளிதிலிருந்து சிக்கலை நோக்கிச் செல்லும், பரிமாணங்களைக் கொண்டது. மார்க்சியம் வலியுறுத்தும் இயங்கியற் பண்பு அதன் திறனாய்வுக்கும் பொருந்தும்.
ぐ>ぐ>ぐ>
26/சபா ஜெயராசா

இருப்பியத் திறனாய்வு
விரைந்து வளர்ந்து நிகழும் விஞ்ஞானத் தொழில்நுட்பப் பரவ லும், முதலாளியச் செல்வக்குவிப்பின் ஏறுமாறான நிலைமைகளும், தனிமனிதரிடத்தே தோற்றுவித்த அகநிலை நோக்கையும் அன்னியமாதலையும் வெளிப்பாடு கொள்ளச் செய்தவேளை தோற்றம் பெற்ற கோட்பாடாக "இருப்பியம்" (Existentialism) மேலெழுந்தது. விஞ்ஞான மயமாதலின் எதிர்மறைத் தாக்கங்களும், மதம் பற்றிய மீள்நோக்கில் ஏற்பட்ட ஐயப்பாடுகளும் இருப்பியத்தின் எழுச்சிக்குரிய பின்விசைகளாயின இருத்தல் பற்றிய சிந்தனைகளின் விரிவை கிர்கேகார்ட் (1813–1855) அவர்களின் எழுத்தாக்கங்களிலே காண முடியும். ஆயினும், அதற்கு முன்னரே இருப்பியச் சிந்தனைகள் வெளியரும்பத் தொடங்கிவிட்டன.
இருப்பியத்தின் ஆழ்ந்த அகநிலை நோக்கு, “கைவிடப்பட்டமை” என்ற அவலத்தில் முகிழ்த் தனிமனித துயரங்கள், இடிந்து சிதறிய மனவுணர்வுகளின் ஏக்கங்கள் முதலியவை தனிமனித வாதத்தை முன்நிறுத்திய கலை இலக்கியப் புனைவுகளுக்கு உவப்பான எழுவடிவங்களாக அமைந்தன.
விஞ்ஞானக் கல்வியினதும் பண்பாட்டினதும் தீவிரமான வளர்ச்சி நிலைகள் புறவய அணுகுமுறைகளை விரிவாக்கம் பெறச் செய்தன. அவற்றால் மனித மனவெழுச்சிகளால் அறியப்படாத அவ" லங்கள் மேலோங்கின. மனிதரின் பிரத்தியேக வாழ்க்கை, ஒடுக்கி ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்தன. தனிமனித மனங்களுக்குள் மூடப்பட்ட துயரங்களை ஐரோப்பாக் கண்டத்தில் வளர்ச்சி பெற்ற மக்களாட்சிச் சிந்தனைகள் புறக்கணிப்புச் செய்தன அல்லது ஆழ்ந்து ஊடுருவத் தவறிவிட்டன. அந்தப் புலக்காட்சி மனித இருப்பை
27/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 17
விசாரணைக்கு உள்ளாக்கியது. இருப்பியத்தின் ஊற்றாக அமைந்தது. மக்களாட்சி போன்ற பொதுமைப்படுத்தப்பட்ட பெருங் கோட்பாடுகள் தனிமனித உணர்வுகளின் நுண்அதிர்வுகளைத் தரிக்காதிருத்தல் இருப்பியத்தினாற் சுட்டிக்காட்டப்பட்டது.
புறவயமான அளவீடுகளுக்குள் அடங்காத நுண்ணிய கூறுகளை இருப்பியம் உள்ளடக்கிநிற்கின்றது. தனிமனித உணர்வுகளின் தனித்த ஓர் அலகைத் தரிசிப்பதன் வாயிலாக இருப்பின் முழுமை" யைக் கண்டறிந்துவிட முடியாது. இருத்தலின் ஊற்று மனித அக" வயப்பாங்கினை அடிப்படையாகக் கொண்டது. மனவெழுச்சிகளும், மனநெருடல்களும், மனத்தின் கொந்தளிப்பு விசாரங்களும் மனக்" குகையின் அந்தரங்கமான அலகுகளாக அமைந்துள்ளன. இவ்வாறான நுண்ணிய தரிசனங்களைப் பெரும் கோட்பாடுகளுக்குள் அடக்க முடியாது. அவ்வாறு உருவாக்கப்படும் மேலெழு விசைகளில் இருந்து விடுபட்டுத் தன்னியல்போடு தனித்துச் செயற்படவே மனிதர் விரும்புகின்றனர்.
அறிவு வளர்ச்சியும், அறிவுப் பரம்பலும் மனித இருப்பை ஆழ்ந்து நோக்காத அவலமான நிலை காணப்படுகின்றது. அறிவி னால் இருப்பின் நடப்பியல் அறிந்து கொள்ளப்படவில்லை.
இருப்பு நேர்ப்பொருள், இன்மை எதிர்ப்பொருள், இயங்கியல் விதி, முரண்பாடுகளின் இணைவையும் முரணையும் விளக்கு" கின்றது. ஆனால், இருப்புக்கும் இன்மைக்கும் இணக்கம் காண முடியாத முரண் பிசகு இருப்பதாக இருப்பியம் கூறுகின்றது.
அழகியல், அறவியல், சமயம் என்ற மூன்று விதமான வாழ்க்" கைக் கோலங்கள் பற்றிய கருத்தும் கிர்கேகார்ட் அவர்களால் முன்வைக்கப்பட்டது. புலன் இன்பங்களை அழகியல் வாழ்வு கொண்டுள்ளது. இதிலிருந்து மேலெழுச்சி கொண்ட வாழ்வாக அறவாழ்" வும், சமயவாழ்வு அமையும் என்பது அவரது கருத்து.
இருப்பியச் சிந்தனையை மேலும் விசையூட்டி வளர்த்தவர். களுள் ஜோன் போல் சார்த்தர் (1905-1982) சிறப்பாகக் குறிப்பிடத்தக்" கவர். பிரான்சியச் சிந்தனைத் தளத்தில் அவருடைய இருப்பியச் சிந்தனைகள் மேலெழுந்தன. ஒருபுறம் மெய்யியல் சார்ந்த எழுத்” தாக்கங்களைப் புனைந்த அவர் மறுபுறம் புனைகதையாக்கங்களிலும் ஈடுபட்டார். இருப்பியத்தை இலக்கிய வடிவிலே தரிசிப்பதற்குரிய தளங்களை அவர் அமைத்துத் தந்தார்.
28/சபா ஜெயராசா

கலை இலக்கிய ஆக்கங்களின் நுண்ணிய வேர்களுள் ஒன்றாக அமையும் “தண்ணுணர்வு” என்ற பிரக்ஞை நிலையைச் சார்த்தர் ஆழமான அறிகைக்கு உட்படுத்துகின்றார். மனிதரது தொழிற்பாடுகளோடு இடைவினைகளோடும் தன்னிலை உணர்வு முகிழ்த்தெழுந்து விரிவாக்கம் பெறத் தொடங்குகின்றது. அனுபவங்களும், சிந்தனைகளும், கலைஉணர்வுகளும் தன்னிலை வழியே ஒழுங்கமைக்கப்படுதலை சார்த்தர் ஏற்றுக்கொள்ளவில்லை. கிடைக்கப்பெறும் பொருளும், இடைவினைகளுமே அனுபவங்களைக் கட்ட" மைப்புச் செய்கின்றன. மார்க்சிய சிந்தனைகளின் சில பரிமாணங்கள் சார்த்தரிடத்து ஊடுருவி இருந்தமை இதனாற் புலப்படுத்தப்படுகின்றது.
தன்னிலை இருப்பு, தனக்காக உள்ள இருப்பு என்ற இரண்டு எண்ணக்கருக்களைச் சார்த்தர் முன்னெடுத்துச் செல்கின்றார். தன்னிலை இருப்பு பொருள் சார்ந்த புறவுலகைக் குறிப்பிடும். மனிதரின் உணர்வோடு கூடிய அகநிலை இருப்பாகும். இந்த இருமை நிலைகளில் உலகு பற்றிய அவரது தரிசனம் அமைந்துள்ளது. அருவப்படுத்தல் என்ற செயற்பாடு மனிதருக்கும் உலகுக்குமுள்ள தொடர்புகளைக் கண்டறிவதற்கு ஒருவிதத்திலே தடையாகவுள்ளது.
சார்த்தருடைய இருப்பியச் சிந்தனைகளில் “இன்மை” என்ற எண்ணக்கரு சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது. இருப்புடன் இன்மையும் தொடர்புபட்டு நிற்கின்றது. இன்மையின் எதிர்நிலையே இருப்பை உணர்த்துகின்றது. உலகின் நடப்புநிலையைத் தரிசிக்க இன்மை உதவுகின்றது. காரணகாரிய நேர்க் கோட்டுத் தொடர்புகள், இன்மையால் தகர்க்கப்படுகின்றன. இன்மையின் வழியாக மனிதரின் விடுதலை நிலையை அவர் வலியுறுத்துகின்றார். உயிரியற் காரணிகளோ, பொருண்மியக் காரணிகளோ மனிதரைத் தீர்மானிக்கவில்லை. இன்மையே மனித இருப்பை உணர்த்துகின்றது. மனிதர் எவற்றிலும் கட்டுப்பட்டிருக்காத நிலையை விளக்கும் தனித்துவமான எண்ணக்கருவாக "இன்மை" விளங்குகின்றது.
இருப்பின் அர்த்தத்தைத் தேடுதல் இருப்பியத்தில் முன்னெடுக்" கப்படுகின்றது. தனிமனித விடுதலையும் ஆக்க மலர்ச்சியும் அங்கே குவியப்படுத்தப்படுகின்றன.
சார்த்தருடைய நாவலாகிய நொசி (Nausea) என்பதில் நியமப்படுத்தப்படும் பொது வகைப்பாடுகளை நிராகரித்தலும், குறிப்பிட்ட தனிச்சிறப்பை முதன்மைப்படுத்தலும் சிறப்புற்றுள்ளன.
29/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 18
தனிப்பொருள்கள் அவற்றின் சாராம்சத்தால் அறியப்படுதல் இல்லை. அவ்வாறே தனிமனிதரும் முற்று முழுதான விடுதலைக்குரியவர்கள், சாராம்சத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டவர்கள்.
இருப்பின் மூன்று வகைகளைச் சார்த்தர் குறிப்பிடுகின்றார். அவை :
* அதனுள்ளே இருத்தல்
=> அதற்காக இருத்தல்
பி) மற்றவர்களுக்காக இருத்தல்
நாவல்கள் மட்டுமன்றி நாடகங்களையும் சார்த்தர் எழுதினார். “வெளியே இல்லை" என்ற நாடகத்தில் அவர் பயன்படுத்தும் ஒரு
முக்கிய வசனம் நரகம் என்பது வேறு மக்கள்" (Helis otherpeople) என்பதாகும்.
இன்மை நிலையிலேதான் மனித விடுதலை அடங்கியுள்ளது. எதனாலும் தீர்மானிக்கப்படாத அந்த நிலையிலேதான் மனித விடு" தலை சாத்தியமாகும். தீவிர வளர்ச்சி கொண்ட ஐரோப்பிய முதலாளிய எழுச்சியில் தனிமனித அடையாளங்கள் பறிப்புக்கு உள்ளாகிய நிலையில் நிஜமான மனித விடுதலை பற்றிய எண்ணங்கள் சார்த்தரி டத்துத் தோற்றம் பெற்றமை வியப்பானதன்று.
இருப்பியத்தின் தனிமனித மையப்பாடும், மனிதரின் அகவய அனுபவங்களை முதன்மைப்படுத்தும் நோக்கும் கலைஇலக்கிய ஆக்கங்களிலே பலவகையான செல்வாக்குகளை ஏற்படுத்தலாயின. உலகின் உண்மை நிலைகளைத் தனிமனித அகநெருடல்கள் வழியே கண்டுகொள்வதற்குரிய வலியுறுத்தல்களை இருப்பியம் வழங்கியது. கலை இலக்கியங்களைப் புனைவோரின் கட்டற்ற விடுதலையும், சுயாதீனமும் அதனால் வலியுறுத்தப்படுகின்றன.
தருக்க நிலைப்படுத்தி வரன் முறையாக அமைக்கப்பட்ட புலமைசார்ந்த மெய்யியலில் இருந்து இருப்பியம் ஒரு வகையில் வேறுபட்டுள்ளது. அதனை அடியொற்றியே அதற்குரிய இலக்கிய நடப்பும் திறனாய்வும் முன்னெடுக்கப்படுகின்றன.
உலகை மனிதர் எவ்வாறு தொடர்புபடுத்திக் கொள்கின்றனர் என்பதை நோக்குதல் இருப்பியத் திறனாய்வில் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. வேறுபல அணுகுமுறைகள் உலகையும் மனித மனத்தையும் வேறுபடுத்தி நோக்குகின்றன. உலகிலிருந்து துண்டிக்"
30/சபா ஜெயராசா

கப்பட்ட நிலையில் இருந்து கொண்டு மனம் உலகை நோக்குகின்றது என்பது அதன் விரிவாகின்றது. ஆனால், இதற்கு மாறுபாடான முன்மொழிவை இருப்பியம் முன்வைக்கின்றது. தன்னிலை என்பது நெகிழ்ந்து விரிந்து ஈடுபாடு கொண்டு உலகோடு ஒன்றித்து அதனோடு வாழ்ந்து, தமது வாழ்க்கையின் அர்த்தங்களையும், பொருண்மையையும் வாழ்க்கையூடாகத் தரிசித்துக்கொள்ளச் செய்கின்றது. அதாவது, ஈடுபாட்டு விளைவுகள் (Engaged) கொண்ட செயற்பாடுகளே நிகழ்கின்றன. "பார்வையாளர்” என்றநிலை அங்கு நிகழ்வதில்லை.
நுண்ணிய மன அதிர்வுகளுக்கும், அதீத அகவயப்பாங்குக்கும் இலக்கியங்களிலே இடமளிக்கும் இருப்பியம் மனித இருப்பை நடைமுறையில் மாற்றுவதற்குரிய புறவய நோக்கைக் காணத் தவறி. விட்டது. அந்த இடைவெளியை நிரப்ப முயன்ற பின்னவீனத்துவம் மீண்டும் இருப்பை மாற்றமுடியா நிலைப்பில் தரித்துள்ளது.
மனித இருப்பைப் புறவயமாக அணுக முடியாது என்ற இருப்பி யத்தின் அடியாதாரமான கருத்து இலக்கியத் திறனாய்விலும் நீட்சி பெற்றுள்ளது. வாசகரின் உள்ளார்ந்த இயல்புகளை எதிர்நோக்கும் அகவயத் தூண்டலுக்கு இருப்பியத் திறனாய்வு முதன்மை தருகின்றது. ஒவ்வொருவரும் தத்தமக்குரிய சுயாதீனமான போக்கில் இருப்பைத் தேடுவதற்கு இலக்கியங்கள் உதவுதல் வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்படுகின்றது.
令令令
31/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 19
உளப்பகுப்புத் திறனாய்வு
கலை இலக்கியங்கள் தொடர்பான பொருள் கோடலுக்கு உளப்பகுப்பு உபாயங்களைப் பயன்படுத்துதல் உளப்பகுப்புத் திற" னாய்வில் முன்னெடுக்கப்படுகின்றது. நனவு மனம் மற்றும் நனவிலி மனம் என்றவாறு உள்ளத்தின் தொழிற்பாடுகள் வெவ்வேறு நிலைக" ளிலே நோக்கப்படுகின்றன. இரண்டு மனங்களுக்குமிடையே நிகழ்த் தப்படும் இடைவினைகளை விசாரணை செய்தல் வழியாக உளச்சுகம் எட்டப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது. நனவிலி மனத்தில் அடக்கியும் அழுத்தியும் வைக்கப்படும் உணர்வுகளே மனிதரிடத்துப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
நனவிலி மனம், நனவிலி ஊக்கல், நனவிலி அடக்கல், நனவிலி வழியான நடத்தை உருவாக்கம், ஆளுமை உருவாக்கம் முதலிய கருத்துக்களை வெளியிட்ட சிக்மன் பிராய்ட் அவர்கள் உளப்பகுப்பியலின் தந்தையாகக் கருதப்படுகின்றார். நனவிலி உள்மனத்தில் பெரும்பாலும் பாலியல் சார்ந்த உணர்வுகளும், உந்தல்களுமே அடக்" கியும் அழுத்தியும் வைக்கப்படுகின்றன. குழந்தை நிலையிலிருந்தே இந்த அடக்கல் ஆரம்பித்து விடுகின்றது. இவற்றுடன் தொடர்புடைய ஆளுமையின் மூன்று பெரும் பரிமாணங்களையும் அவர் விளக்கியுள்ளார். அவையாவன:
=> இட் என்ற விலங்கின உணர்ச்சிகளையும் உந்தல்களையும் கொண்ட பரிமாணம், இது "விம்மிடே7" எனப்படும் பாலியல் வலுவை உள்ளடக்கியது. * விலங்கின உணர்வுகளையும், சமூகம் ஏற்றுக்கொள்ளும் இலட்சியங்களையும் சந்து செய்து வைக்கும் ஈகோ என்ற ஆளுமைப் பரிமாணம்.
32/சபா ஜெயராசா
 

பி) உயர்ந்த விழுமியங்களை உள்ளடக்கிய சுப்பர் ஈகோ
பரிமாணம்.
நனவிலி மனத்தில் அமுக்கி வைக்கப்படும் உணர்வுகள், கனவு களாயும், கற்பனைகளாயும் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது வெளி வந்து கொண்டிருக்கும். கலையாக்கங்களும், கலையாக்கக் கற்பனைகளும் நனவிலி மனத்தை அடியொற்றியே வெளிக்கிளம்புகின்றன. நனவிலி மனத்தின் அழுத்தங்களைப் புடமிட்டு வெளிப்படுத்தும் செயற்பாடுகளோடும் கலை இலக்கிய ஆக்கங்கள் தொடர்புபட்டி" ருக்கும். நனவிலி மனத்தின் வெளிப்பாடுகளாகத் தோற்றம்பெறும் குறியீடுகள் கலை இலக்கிய ஆக்கங்களுக்குரிய வளமான மூலகங்க" ளாக அமைகின்றன.
பிராய்டின் உளப்பகுப்புக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு மரபு பின்வரும் சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
(1) நனவிலி மனமே கலை இலக்கிய ஆக்கங்களுக்குரிய தள
மாகக் கொள்ளல்.
(2) இலக்கிய ஆக்கத்துக்குரிய விசை நனவிலியிலிருந்தே
முகிழ்த்தெழுகின்றது. (3) பாலியலை அடிப்படையாகக் கொண்ட மனித வளர்ச்சிப்
படிநிலைகளை இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. (4) பாலியலோடு தொடர்புடைய உறுத்தும் சிக்கல் (Complex) இலக்கியப் பாத்திரங்களைப் படைப்பதற்கும், இயக்கு" வதற்கும் துணை செய்கின்றன. (5) பாலியல் என்பது அகல்விரி விளக்கத்தை உள்ளடக்கி
நிற்கின்றது. (6) மனித உறவுகளில் பாலியல் வலிமையான விசையாகத்
தொழிற்படுகின்றது. சிக்மன் பிராய்ட்டின் கோட்பாட்டினை அடியொற்றி அட்லர், யுங், ஹோர்னி, எரிக்புறோம், எரிக்சன் முதலியோர் உளப்பகுப்புச் சிந்தனைகளைப் பலநிலைகளில் வளர்த்து வந்தனர்.
யுங் முன்மொழிந்த தொல்வடிவங்கள் (Arche Types) மற்றும் கூட்டுநனவிலி (Collective Uncoscious) முதலாம் கருத்துக்கள்
33/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 20
உளப்பகுப்புத் திறனாய்வில் எடுத்தாளப்படுகின்றன. தொன்மங்களை ஆழ்ந்து ஆராய்ந்த யுங் அவர்கள் அவை கூட்டு நனவிலியின் வெளிப்பாடுகளாக இருப்பதாகக் குறிப்பிட்டார். சிந்தனைகள் உணர்வுகள் முதலியவை தலை தலைமுறையாக கையளிக்கப்பட்டு நனவிலியின் இருப்பாக இடம்பெற்று விடுகின்றன. நம்முன்னோர் உலகைத் தரிசித்தவாறு நாம் உலகைத் தரிசித்துக் கொள்வதற்குக் கூட்டு நனவி லியே துணையாகவுள்ளது.
கூட்டு நனவிலியின் வேர்களாக தொல்வடிவங்கள் அமைகின்றன. தொன்மக்கதைகள், நாட்டார் இலக்கியங்கள், சமய இலக்கியங்கள் முதலியவற்றில் பெருமளவிலான தொல்வடிவங்கள் காணப்படுகின்றன.
(1) தாய்த் தொல் வடிவம் - அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. அருவிகள், தாவரங்கள் இதற்குச்
சமமாகக் கூறப்பட்டுள்ளன.
(2) அதற்கு மாறுப்பட்ட வகையிலே தந்தைத் தொல்வடிவம் அமைந்துள்ளது. இது பலம் அதிகாரம் முதலியவற்றை வெளிப்படுத்துகின்றது. இடி, மின்னல் முதலியவை இதற்குச்
சமமாகக் கூறப்பட்டுள்ளன.
(3) வீரர் தொல்வடிவம் - வீரதீரம், தன்னலமின்மை, இலட்சி யப்பாங்கு முதலியவற்றை வெளிப்படுத்துகின்றது. உலகில் உள்ள அசையும் வலுக்கள் இதற்குச் சமமாகக் கூறப்பட்டுள்ளன. (4) அனிமா என்பது பெண் இயல்புகளையும் அனிமஸ் என்பது ஆண் இயல்புகளையும் படிமப்படுத்துகின்றன. (5) தன்னிலை என்ற தொல்வடிவம் சமயங்களிற் பலநிலைக"
ளில் இடம்பெற்று வருகின்றது. தொன்மங்களையும் நாட்டார் இலக்கியங்களையும் விளக்குவ தற்கு உளப்பகுப்புத் திறனாய்வாளர் யுங்கின் கருத்துக்களைப் பரவ" லாக எடுத்தாள்கின்றனர்.
பாலியல் வலுவே வாழ்க்கையில் மேன்மை நிலைகளை நோக்கி நகர வைக்கின்றது என்று அட்லர் விளக்கினார். அதனைத் தன்னியல் நிறைவு என்ற கண்ணோட்டத்தில் யுங் குறிப்பிட்டார்.
34/சபா ஜெயராசா

உளப்பகுப்பு இயலையும் மார்க்சியத்தையும் இணைத்துப் புதிய புலக்காட்சியைத் தோற்றுவிக்கும் அறிகைச் செயற்பாட்டை எரிக்" புறோம் முன்னெடுத்தார். மனிதரின் உயிரியல் சார்ந்த உணர்வுகள் சமூக வலிமைகளால் நெறிப்படுத்தப்படும் பரிமாணங்கள் மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாயின. உளப்பகுப்பு இயல் தனித்து உயி ரியல் பண்புகளை மாத்திரம் வலியுறுத்தி நின்றதென்ற ஒற்றைப் பரிமாண நோக்கு தகர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டது.
பாலியல் இன்றி உலக இலக்கியங்கள் இல்லை என்ற அளவுக்" குப் பாலியலின் விரவல், உளப்பகுப்புத் திறனாய்வாளருக்குரிய "பலத்தை" வழங்கியது. பாலியல் இன்றித் திரைப்படங்கள் இல்லை என்ற அளவுக்கு பாலியற் கருத்து மேலும் மீள வலியுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது. உளப்பகுப்பியல் மேலும் மேலும் புதுக்கியும் திருத்தியும் அமைக்கப்படுதலை அடியொற்றி நவ உளப்பகுப்புவாதம் தோற்றம் பெற்றது.
உளப்பகுப்பியல் திறனாய்வுக்கு மேலும் வலுவூட்டியவர்களுள் ழான்லகான் அவர்கள் குறிப்பிட்டுக் கூறத்தக்கவர். சமகாலத்தைய இலக்கியக் கோட்பாடுகளில் அதிகம் எடுத்தாளப்படுபவராகவும் இவர் விளங்குகின்றார். “மீண்டும் பிராய்டிசத்துக்குச் செல்லல்” என்பது அவரின் முன்மொழிவாக அமைந்தது. மனித இருப்பு நனவி லியை அடிப்படையாகக் கொண்டது என்பது அவரது வலியுறுத்தல். நனவிலி உள்ளம் மொழியின் முழுமையான கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்ற முன்மொழிவால் நனவிலியின் முக்கியத்துவத் தையும், மொழியின் முக்கியத்துவத்தையும் ஒரே காலத்தில் வெளியிட்டார்.
குறிப்பான் (சொல்), குறிப்பீடு (பொருள்) ஆகிய இரண்டையும் பற்றிய ஆய்வுகளை மொழியியலாளர் சசூர் ஆரம்பித்து வைத்தார். ஒரு சொல்லுக்கும் மற்றைய சொல்லுக்குமிடையேயுள்ள வேறுபாட் டின் அடிப்படையிலேதான் மொழியின் பொருள் தங்கியுள்ளதென்று குறிப்பிட்டுச் சொல்லுக்கும் பொருளுக்குமுள்ள வேறுபாட்டாற் கருத்துப் பிறப்பிக்கப்படுதல் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். வேறுபாடுகளின் வலைப்பின்னல் வழியாகவே கருத்துக் கையளிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இந்தத் தளத்திலிருந்து வேறுபட்ட கருத்” தை லகான் முன்மொழிந்தார். சொற்களும் கருத்துக்களும் தத்தமக்குரிய தனித்துவமான வாழ்வைக் கொண்டுள்ளவை என்று லகான் கருதினார். மொழியானது உலக யதார்த்தங்களில் இருந்து விடுபட்டு
35/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 21
சுயாதீனமாக நனவிலியின் இருப்பாகி விடுவதாக மேலும் விளக்கினார். இந்நிலையில் நனவிலி மொழிபோன்று கட்டமைக்கப்பட்டு விடுகின்றது.
மொழியை நனவிலி உள்ளத்துடன் தொடர்புபடுத்தி லகான் விளக்கியமை இலக்கியத்திலே கட்டமைப்புக் குலைப்பு (Deconstruction) அல்லது தகர்ப்பு என்பதை விளக்குவதற்குரிய கோட்பாட்டுப் பலத்தைக் கொடுத்தது. ஒவ்வொருவரும் தத்தமது நனவிலியின் இயல்புக்கேற்றவாறு பொருள் கோடலை உருவாக்கிக் கொள்வர். நனவிலியின் இறையாண்மையே இலக்கிய ஆக்கங்கள் எங்கும் விரவியுள்ளதாகக் கொள்ளப்படுகின்றது.
ஆறுமாதத்துக்கும் பதினெட்டு மாதத்துக்கும் இடைப்பட்ட குழந்தை வளர்ச்சிப் பருவத்தை “கண்ணாடிப் பருவம்” என்று குறிப்பிடும் லகான் அப்பருவத்திலே குழந்தை கண்ணாடியில் தனது உருவத்தின் பிரதிபலிப்பைக் காண்பதைத் தொடர்ந்து தன்னைப் பற்" றிய ஒருங்கிணைந்த இருப்பை புறவுலகிலிருந்து வேறுபடுத்தி உரு" வாக்கிக் கொள்கின்றது. இப்பருவத்திலேதான் குழந்தை மொழித் தொகுதியிலே உள்நுழையத் தொடங்குகின்றது. இவ்வாறாக, குறியீட்" டுத் தொகுதியில் நுழையும் செயற்பாடே மொழியாக்கத்துக்கு மட்டுமன்றி கலை இலக்கிய ஆக்கங்களுக்கும் தளமாக அமைகின்றது.
கலை இலக்கியத் திறனாய்வுகளில் அதிக செல்வாக்குச் செலுத்” திய கோட்பாடுகளாக மார்க்சியமும், உளப்பகுப்பியலும் விளங்கு கின்றன. மார்க்சியம் உயிரியலுடன் சமூகவியலையும் அதற்குத் தளமாக அமையும் பொருண்மிய நிலைகளையும் வலியுறுத்துகின்றது. அதேவேளை உளப்பகுப்பியல் உயிரியற் பண்புகளை முதன்மைப்படுத்தினாலும், இயற்கை உந்தலை நனவிலி மனத்திலே அழுத்தி வைப்பதற்குச் சமூகக் காரணிகளே பங்களிப்புச் செய்வதைக் குறிப்பிட்டுள்ளது. ஆழ்ந்து நோக்கும் பொழுது உளப்பகுப்பியலாளர்கள் சமூகக் காரணிகளை நிராகரிக்கவில்லை என்பதை உளங்கொள்ள வேண்டியுள்ளது.
சமகாலத்தைய தொலைக்காட்சிப் படிமங்களை விளக்குவதற்கும் உளப்பகுப்பியல் சில தளங்களிலே துணை நிற்றலை மறுக்க முடியாதுள்ளது.
令令令
36/சபா ஜெயராசா

தொல்வடிவத் திறனாய்வு
படியெடுக்கப்படாத அல்லது பார்த்து இழைக்கப்படாத ஆதி வடிவங்களே தொல்வடிவங்கள் (Arche Type) என்று சுட்டிக் கூறப்படுகின்றன. மனிதரின் கடந்தகால இருப்பைக் கண்டறிவதற்குரிய பதிவுகளாக அவை அமைந்துள்ளன. சிக்மன் பிராய்ட் முன்மொழிந்த நனவிலி மனமும் அதற்கு அப்பாற் கடந்து சென்று யுங் அவர்கள் விளக்கிய கூட்டுநனவிலி மனம் பற்றிய எண்ணக்கருவும், தொல்வடி" வங்கள் பற்றிய கருத்தும் இத்துறையில் விரிவான ஆய்வுகளை முன்னெடுப்பதற்குத் துணை நின்றன.
தொல்வடிவம் என்ற எண்ணக்கருவை கிரேக்க சிந்தனை மரபில் முதன்முதல் பிளேட்டோ பயன்படுத்தினார். எண்ணங்களிலிருந்தே (Ideas) அனைத்தும் தோற்றம் பெறுகின்றன என விளக்கிய அவர் தொல்வடிவங்களுடன் அவற்றைத் தொடர்புப்படுத்திப் பார்த்தல் வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அடிப்படை எண்ணங்க" ளைப் புலன்களால் உணர முடியாதென்றும், தருக்க நிலையாலும் பகுத்தறிவாலுமே அடைய முடியுமென்றும் வலியுறுத்தினர்.
எண்ணங்களின் தெறிப்பாக வாழ்க்கை அமைகின்றது. வாழ்க்கையின் தெறிப்பாக இலக்கியம் அமைகின்றது. தெறிப்பின் தெறிப்பாக இலக்கியம் அமைவதால் மூலப்பொருள்களில் இருந்து விலகி நிற்கின்றது என்று விளக்கப்பட்டது. தொன்மையான கிரேக்கஅறிவு தொன்மங்களோடு தொடர்புபட்டிருந்தாலும் அவற்றின் ஆழ்ந்த சுவ டுகளை அவர்களால் தருக்க வீச்சுக்குள்ளே கொண்டுவர முடியாமற் போய்விட்டது. அரிஸ்ரோட்டிலும் தொன்மங்களை காலவீச்சுக்கு அப்பாற்பட்டதாக விளக்கினார்.
37/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 22
விகோ, மாக்ஸ்முல்லர், பிரேசர், லெவி ஸ்ராஸ் முதலியோர் தொன்மங்களின் இலக்கியப் பரிமாணங்களை விளக்கலாயினர். அறியாதவற்றைத் தேடிய ஆதி வடிவமாகத் தொன்மம் விளக்கப்பட லாயிற்று. ஆதி மனிதரின் பாமர விஞ்ஞானப் பண்புகளும் தொன்மங்களிலே உட்பொதிந்திருந்தன. மானிடத்தைத் தெய்விகப்படுத்துவதற்கும், தெய்விகத்தை மானிடப்படுத்துவதற்குமுரிய தொன்மை" யான அறிகைக் கட்டமைப்பாகத் தொன்மங்கள் அமைந்தன.
உலகின் தொன்மையான புராணக் கதைகளையும் தேவதைக் கதைகளையும் ஆராய்ந்த யுங் அவற்றிலே தொல்வடிவங்களின் விபரங்கள் அடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். காலங்காலமாக மனித மனங்களிலே உறைந்து தலைமுறை தலைமுறையாகக் கையளிக்கப்பட்டு வந்த உணர்வுகளைத் தொல்வடிவங்களிலே காணமுடியும். நனவு மனத்தின் எண்ணங்கள் காலவோட்டத்தில் நனவிலி மன எண்ணங்களாக மாறி அனைத்து மக்களுக்கும் பொதுவான தொல்வடிவங்களாக மாறிவிட்டன என்பதே யுங்கின் கருத்து.
பின்வரும் தொல்வடிவங்களை யுங் தனது ஆய்வுகள் வழியாக
வெளிப்படுத்தினார்.
1.தாய்த் தொல்வடிவம் - உலகின் எல்லாப் பண்பாடுகளிலும் அன்பு, ஆதரவு, பாதுகாப்பு, சேய்" நலம் பேணல் ஆகிய அனைத்துக்கு" முரிய படிம வடிவினராக தாய் விளங்குகின்றாள்.
2.தந்தைத் தொல்வடிவம் - பலம், அதிகாரம், மேலாதிக்கம் முதலி யவற்றுக்குரிய படிமமாகத் தந்தைத் தொல்வடிவம் உலகின் அனைத்துப் பண்பாடுகளிலும் பொதுவாக அமைந” துள்ளது.
3.வீரர் தொல்வடிவம் - இலட்சியப்பாங்கு, தன்னலமின்மை அங்கீகரிப்புக்கு உள்ளாக்கப்படுதல் முதலியவற்றின் வடிவமாக வீரர் என்ற படிமம் அமைந்துள்ளது.
ஆளுமை :
உண்மையான ஆளுமையைக் காட்டிக்கொள்ளாது முகமூடி" யணிந்து நடப்பியலை வெளிப்படுத்தாத இயல்பு பரவலாக எல்லாப்
38/சபா ஜெயராசா

பண்பாடுகளிலும் காணப்படுகின்றது. வெவ்வேறு சூழலுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் வெவ்வேறு முகமூடிகளை அணிந்து கொள்ளு" கின்றனர்.
அனிமாவும் அனிமஸ் என்பதும் :
அனிமா பெண் இயல்புகளை விளக்குவது, அனிமஸ் ஆண் இயல்புகளை விளக்குவது. ஒவ்வோர் ஆணிலும் பெண் இயல்பு களும், ஒவ்வொரு பெண்ணிலும் ஆண் இயல்புகளும் காணப்படுவதாக யுங் குறிப்பிட்டுள்ளார். நிழல் :
இந்தத் தொல்வடிவம் பிராய்ட் குறிப்பிடும் மிருக உணர்ச்சியாகிய "இட்" என்பதைச்சுட்டி நிற்கின்றது. அதாவது, ஒவ்வொருவருக்" குள்ளும் உறைந்துள்ள பேய் அல்லது சாத்தானாக அது அமைகின்றது. நிழல் என்பது ஒருவருக்குரிய எதிரி அல்லவென்றும் கலை இலக்" கியங்களை ஆக்குவதற்குரிய விசை என்றும் யுங் குறிப்பிடுகின்றார்.
தன்னிலை (Self):
எல்லாப் பண்பாடுகளிலும் காணப்படும் தொல்வடிவமாகத் தன்னிலை அமைதலை அவர் குறிப்பிடுகின்றார். இந்துப் பண்பாட் டில் அது ஆத்மாவென்றும், பிரமம் என்று விளக்கப்படுகின்றது. தன்னிலையே கூட்டுநனவிலி அனைத்துக்கும் அடிப்படையாக விளங்கு" கின்றது. அதுவே, நனைவையும் நனவிலியையும் இணைக்கும் விசையாக அமைகின்றது. நன்மைகளும், தீமைகளும் தன்னிலையால் ஒன்றிணைக்கப்படுகின்றன. ஆளுமையின் உள்ளீடாக அது அமைகின்றது. ஒருவரது நடத்தையும் தன்னிலையின் செயற்பாட்டினால் சம" நிலையை நோக்கி நகர்கின்றது.
யுங்கின் தொல்வடிவக் கருத்துக்களை அடியொற்றி இலக்கியத் திறனாய்வை பேற்கின் அவர்கள் முன்னெடுத்துச் சென்றார். கவி. தைகள் எவ்வாறு தொல்வடிவங்களைத் தாங்கி மேலெழுந்து நிற்" கின்றதென்பதைப் பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் வாயிலாக அவர் விளக்கியுள்ளார்.
இலக்கியங்கள் "இடம்பெயர்ந்த" தொன்மங்களாகின்றன. இலக்கியத்தில் இடம்பெறும் வீரர்கள் தெய்விக உயர்நிலைக்கு மேலெழச் செய்யப்படுகின்றனர்.
39/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 23
பெருங்காப்பியங்கள் உருவாக்கம் பெறுவதற்குரிய கருவை தொல்படிமத்தை உள்ளடக்கிய தொன்மங்களே வழங்கியுள்ளன. நவீன இலக்கிய வடிவங்களுக்குமுரிய கருதொன்மங்களால் வழங்கப்பட்டன. புதுமைப்பித்தனது சிறுகதைகள் பல தொன்மங்களை மானிடப்படுத்தும் செயற்பாடுகளாய் (Humanising Myth) அமைந்துள்ளன. பாரதியின் பாஞ்சாலி சபதமும் தொன்மத்தின் வழியாக எழுந்த பாரதியின் சபதமாக அமைந்தது. தனது காலத்து இந்தியாவின் அவல நிலையை விளக்குவதற்கு பாரதி பாஞ்சாலி சபதத்தைக் குறியீடாக்கினார்.
சிங்கள அரங்கியலுக்குப்புத்துயிர்ப்பு ஊட்டிய பேராசிரியர் சரத் சந்திரா அவர்கள் தொன்மக் கதையை அடியொற்றி "மனமே" நாடகத்தை உருவாக்கினார். குழந்தை ம.சண்முகலிங்கம், இ.முருகையன் ஆகியோரும் தமது நாடக எழுத்துருவாக்கலுக்குப் பொருத்தமான தொன்மங்களைத் தெரிந்தெடுத்தனர்.
தொன்மங்கள் சடங்குகளோடும் வழக்காறுகளோடும் இணைந்துள்ளன. நாட்டார் இலக்கியங்களுக்குரிய வளமும் வலுவும் தொன்மங்களில் இருந்து கிடைக்கப் பெறுகின்றன. இச்சந்தர்ப்பத்திலே தொன்மம் வேறு, தொல்வடிவம் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது. தொல்வடிவத்தின் கலை மற்றும் சடங்கியல் தழுவிய வெளிப்பாடாக தொன்மம் அமைகின்றது.
பழமொழிகளும், நாட்டார் கதையுரைப்புக்களும் தொன்மங்களின் உதிர்ந்த வடிவங்களாகின்றன.
கலை இலக்கியங்களின் தோற்றம் தொல்வடிவங்களில் இருந்தே தொடக்கம் பெறுகின்றது. ஆதிக்கிரேக்க அரங்கு தொன்மங்களில் இருந்தே ஊற்றெடுக்கின்றது. இந்திய மரபிலே தோற்றம் பெற்ற மகாபாரதம், இராமாயணம் போன்ற பெருங்காப்பியங்கள் தொன்மங்களின் தளங்களிலிருந்தே தோற்றம் பெற்றுள்ளன.
தொல் வடிவத்திறனாய்வு பின்வரும் துறைகளிலே கவனக்" குவிப்பை ஏற்படுத்துகின்றது.
(1) கலை இலக்கியங்களின் அடிப்படைகளாகத் தொன்மங்கள்
அமைந்திருத்தலை இனங்காட்டுதல். (2) இலக்கிய உட்கூறுகளை ஒன்றிணைக்கும் அச்சாக அல்லது நடுவண் பொருளாகத் தொன்மங்கள் இருத்தலைக் கண்டறிதல்,
40/afurt 6guystem

(3) தொன்மக்கதைகளில் இடம்பெறும் நிலை மாற்றங்களைப்
பகுத்தாராய்தல்.
(4) தொல்வடிவங்களின் பன்முக வடிவங்களையும் இலக்கியங்
களில் அவை இடம்பெறுமாற்றையும் கண்டறிதல்.
(5) தொல்வடிவங்களின் துணையுடன் கடந்தகால அறிவுத் தேட்டத்தின் இயல்பையும் அறிகை முறைமையின் இயல்" பையும் ஆராய்தல்.
(6) கற்பனைகளையும், உணர்ச்சிகளையும், தொல்வடிவங்கள் எவ்வாறு காவி வந்துள்ளன என்பதைக் கண்டறிதல்.
(7) தொல்வடிவங்களினூடாக மானிடத்தின் பொதுப்பண்புகளை" யும் சிந்தனைப் பொதுமைப்பாட்டினையும் கண்டறிதல்,
தொல் வடிவத்திறனாய்வு பல்வேறு மட்டுப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மனித இருப்பிலிருந்து நீங்கி உளப்பகுப்பு உளவியல் என்ற மிதக்கும் அலகுகளுக்குள் இலக்கியங்களை இழுத்” துச் சென்று விடுகின்றது. மானிடவியலை தொன்மம் என்ற கட்டுக்" கோப்புக்குள் அடக்கிவிட முயல்கின்றது. இத்திறனாய்வைத் "தாங்கும் தூண்கள் அற்ற திறனாய்வு” என்றும் குறிப்பிடுவர். மிகவும் சிக்கலான வாழ்க்கைக் கோலங்களையும் அறிவுக் கோலங்களையும் எளி மையான ஒற்றைப் பரிமாண நோக்கினுக்கு இது உள்ளடக்கி விடுகின்றது.
இவ்வாறான மட்டுப்பாடுகள் காணப்பட்டாலும் தொன்மங்
களின் நேர்ப்பரிமாணங்கள் தொடர்ந்து நீடிக்கக் கூடியவை.
令令令
41/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 24
அமைப்பியலும் பின் அமைப்பியலும்
அமைப்பியல் என்பது ஒரு நுண்மதி சார்ந்த இயக்கமாக கடந்த நூற்றாண்டில் நடுப்பகுதியில் முகிழ்த்தெழுந்தது. லெவிஸ்ராஸ் மற்" றும் ரோலண் பார்தீஸ் ஆகியோரின் எழுத்தாக்கங்கள் இத்துறையில் முன்னோடி ஆக்கங்களாக அமைந்தன. அனுபவங்களின் ஒழுங்க” மைப்பாக உலகைப் புலக்காட்சி கொள்ளல் அமைப்பியலில் வலியுறுத்தப்படுகின்றது. பிரான்சில் தோற்றம்பெற்ற அமைப்பியல் ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவலாயிற்று. அமைப்பியற் கருத்தை நவீனப் படுத்துவதில் சுவிஸ்நாட்டு மொழியியலாளராகிய சசூரின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மொழியியல் ஆய்வுகள் வரலாற்றில் குவியப்பட்டு நின்றன. இலக்கண அமைப்புக்கள் வழியாக கருத்துக் கையளிப்பு எவ்வாறு பராமரிக்கப்படுகின்றது என்பது தொடர்பான ஆய்வுகளைச் சசூர் செறிவுபடுத்தினார். சொல் (குறிப்பான்) சொல் குறிக்கும் பொருள் (குறிப்பீடு) இரண்டுக்கும் உள்ள அமைப்பு நிலைப்பட்ட தொடர்பை சசூர் விளக்கினார்.
மொழி என்பது குறிகளின் தொகுதியாகும். அது குறிப்பானையும் குறிப்பீடுகளையும் கொண்டுள்ளது. சொல்லுக்கும் பொருளுக்கு" முள்ள தொடர்பு நேர்நிலையானதும் குறியீட்டுத் தன்மை கொண்டதுமாகும். நனவுமனத்தின் தளத்தை அடியொற்றியே சொல்லுக்கும் அது குறிக்கும் பொருளுக்குமிடையேயுள்ள தொடர்புகள் இயக்க” முறுகின்றன. சொற்களுக்குரிய கருத்துக்கள் மரபு தழுவி இடம்பெற்று வருகின்றன. சொற்கள் ஊக்குவிக்கப்படா குறிகள் (Unmotivated Signs) என்ற நிலையில் இயங்குகின்றன. எல்லா மொழிக் குறிகளும், எழுந்தமானதாகவும், போகிற போக்கிலும் அமைகின்றன.
42/gLIT 6sguystoft
 

அமைப்பியல், மொழியைக் குறிகளின் செயலமைப்பாகவே கருதுகின்றது. தொடர்புகளின் அடிப்படையிலே கருத்துக் கையளிப்பு நிகழ்த்தப்படுகின்றது. ஒரு சொல்லை வேறு சொற்களில் இருந்து அன்னியப்படுத்தி வரையறுக்க முடியாது.
சிறிய அமைப்பில் இருந்து பெரிய அமைப்பு வரையிலான சிந்தனைகளை சசூர் முன்மொழிந்தார். இலக்கியங்களை விளங்கிக் கொள்வதற்குப் பெரிய அமைப்புக்கள் பற்றிய சிந்தனைகள் துணை செய்கின்றது. மொழி விதியின் அமைப்பு என்பதைக் குறிப்பிடுவதற்கு "லாங்" (Langue) என்ற எண்ணக்கருவைப் பயன்படுத்தினார்.
மொழியின் அனைத்து விதிகளையும் மொழி நடத்தைகளை உள்ளடக்கிய மரபுகளையும் என்ற "கூட்டு மொத்தமான" அமைப்பை "லாங்" என்ற எண்ணக்கரு புலப்படுத்துகின்றது. இது ஒரு பெருநிலை அமைப்பினைக் குறிப்பிடுகின்றது. தனிநிலைப்பட்ட பேச்சு “பரோல்" (Parole) என்ற எண்ணக்கருவாற் புலப்படுத்தப்பட்டது. இலக்கியங்களில் இடம்பெறும் தனிநிலைப் பேச்சை (பரோலை) பெருநிலை அமைப்புச் சூழமைவை அடியொற்றியே விளங்கிக்" கொள்ள வேண்டியுள்ளது.
எவ்வாறு மொழித்தொகுதி செயற்படுகின்றது என்பதை அமைப்பியற் கோட்பாடு விளக்குகின்றது. எல்லாக் குறிப்பான் தொகுதிகளும் எங்ங்ணம் செயற்பாடுகளைப் புரிகின்றன என்பதும் அமைப்பியல் அணுகுமுறையினால் விளக்கப்படுகின்றன. மொழி எவ்வாறு மாற்றலுறலுடன் (Transferable) தொழிற்படுகின்றது என்பதை சசூர் தெளிவுபடுத்தினார்.
தொன்மங்களை விளக்குவதற்கு லெவி ஸ்ராஸ் அமைப்பியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி அறிகை நிலையிலே புதிய புலக் காட்சிகளைத் தோற்றுவித்தார். லாங் என்ற பெரும் சூழல் அமைப்பை அடிப்படையாகக் கொண்டே தொன்மத்தில் இடம்பெறும் தனிக்கதையினை (பரோல்) விளக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். அதாவது, தனிக்கூறின் அமைப்பினை முழுத்தொகுதியினதும் அமைப்பைக் கொண்டே விளக்குதல் பொருத்தமுடையதாகின்றது. அப்பொழுதுதான் தனித்தகூறு முழு அமைப்பின் இயல்புகளோடு ஒன்றித்து நிற்குமாற்றை விளங்கிக்கொள்ள முடியும். முழுமையின் தொடர்ச்சியில் இடம்பெறும் ஒற்றுமைகளுடனும் வேற்றுமைகளு" டனும் கொண்டுள்ள தொடர்புகளை அறிகைப்படுத்த முடியும்.
43/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 25
மேலும், தெளிவுபடக் கூறுவதாயின் லாங் என்பதை மொழியின் பெருநிலை அமைப்பு என்றும், பரோல் என்பதை மொழியில் உள்ளமைந்த சிறுநிலை இயங்குகூறு என்றும் குறிப்பிடலாம். மொழியின் பெருநிலை அமைப்பு பல்வேறு இருநிலைச் சோடிகளைக் கொண்டுள்ளது. அடிப்படையான எதிர்நிலை எண்ணக்கருக்களை அந்தச் சோடிகள் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, விலங்கு/மனிதர், இருள்/ஒளி, ஆண்/பெண், அயலவர்/அன்னியர் என்றவாறு மொழி வலைப்பின்னலில் அமைந்துள்ள சோடிகள் தனித்த சிறுநிலை விளக்கங்களை மேற்கொள்வதற்குத் துணை செய்கின்றன.
மொழியின் பெரு அமைப்பினை விளங்கிக் கொள்ளாது ஒரு சிறுகதை அல்லது ஒரு நாவலையோ விளங்கிக்கொள்ள முடியாது. இலக்கியங்களைப் புனைவோரும் அந்தப் பெருநிலை அமைப்பிலிருந்தே கூறுகளைத் தெரிவு செய்கின்றனர்.
பண்பாட்டையும் மொழி போன்ற வாசிப்புக்கு உட்படுத்த முடி" யும் என அமைப்பியற் கோட்பாடு குறிப்பிடுகின்றது. அதுவும் மொழி சார்ந்த அமைப்பியல் வலைப்பின்னலால் உருவாக்கப்படுகின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட செயல்வடிவில் அது இயங்கிய வண்ணமுள்ளது. குறிகளினால் அந்தச் செயற்றொகுதி இயக்கப்படுகின்றது. அவை மொழிபோன்று வாசிக்கப்படக்கூடும். கோடற் குலைப்புக்கு (De Coded) உள்ளாக்கப்படவுங் கூடும். அதன் அமைப்பே அவ்வாறான அறிகைத் தொழிற்பாடுகளுக்கு இடமளிக்கின்றது.
எழுகோலமும் (Fashion) மொழி போன்று வாசிப்புக்குரியதென அமைப்பியலாளர் குறிப்பிடுவர். எழுகோலச் சித்திரிப்புக்களும் பயன்பாடும் மொழிவாரியான வெளிப்பாடுகளைக் கொண்டிருத்தல் குறிப்பிடத்தக்கது. எழுகோலத்துக்குரிய குறிகள் மொழி அமைப்பின் சூழமைவை அடியொற்றியே பொருள் கோடலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எழுகோலத்தின் தனித்த ஒரு வடிவம் கூட்டு மொத்தமான அமைப்பில் உள்ளடங்கிய நிகழ்ச்சிக் கூறாகவே (Item) அமைகின்றது.
அமைப்பியலை நவீன பண்பாட்டு விளக்கத்துக்கு ரோலண் பார்த்திஸ் பயன்படுத்தினார். நவீன உணவுப் பழக்கங்கள், விளையாட்டுக்கள், பாவனைப்பொருட்கள், செய்திப்படங்கள் முதலியவற்" றைப் பெரும் அமைப்பியலான குறியீடுகள், நம்பிக்கைகள், விழுமி யங்கள் முதலியவற்றின் அடிப்படையிலேதான் விளங்கிக்கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார். பெருங்கட்டமைப்பின் அடுக்கு"
44/சபா ஜெயராசா

களைப் புரிந்துகொள்ளல் வாயிலாக ஒரு வடிவத்திலிருந்து மற்றைய வடிவம் முரண்பட்டு நிற்றலை அறிந்து கொள்ள முடிகிறது.
அமைப்பியலாளர் இலக்கியங்களைப் பின்வரும் முறைகளில் ஆய்வு செய்கின்றனர்.
(1) தனித்தனி அலகாகி நிற்கும் இலக்கிய வடிவங்களை அவற்
றின் பெரும் வடிவங்களை அடியொற்றி ஆய்வு செய்தல். (2) பெரும் வடிவங்கள் என்று கூறும்பொழுது அவை தொடர்பான மரபுகள், உருவங்கள், அவற்றுக்கிடையேயான தொடர்புகள், அவற்றின் வலைப்பின்னல் அமைப்பு என்பவற்றை அடியொற்றி ஆராய்தல். (3) மொழி அமைப்பியலை அடியொற்றி இலக்கிய வடிவங்க"
ளுக்குப் பொருள் கோடல் மேற்கொள்ளல். லெவி ஸ்ராஸ் அத்தகைய அறிமுறையையே பயன்படுத்தினார்.
இலக்கியங்களைப் பகுப்பாய்வு செய்யும் முறைமையினை விளக்கி பார்திஸ் வெளியிட்ட S/Z நூலில் புனையங்களை ஆராய்வதற்குரிய நூற்று அறுபத்தொரு கருத்தலகுகளைக் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய சிறிய கருத்தலகுகள் “லெக்சிஸ்" (Lexies) என அழைக்கப்படும். அந்தச் சிற்றலகுகளை ஐந்து கோடல்களைப் (Codes) பயன்படுத்தி வகைப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். மேற்கூறிய சிற்றலகுகளும் வகைப்பாடுகளும் அனைத்துப் புனையங்களுக்குமுரிய அமைப்பியலை ஆதாரமாகக் கொண்டுள்ளன. அவராற் குறிப்பிடப்பட்ட ஐந்து கோடல்களும் வருமாறு: » 656060Tü1 ITL (33 (35TLGö (Proairetic Code) * எதிர்பார்ப்பு ஆவல் வினாக்கோடல் (Hermeneutic Code)
> LIGOruit G53, G5s.ITL65 (Cultural Code) * அறிபொருள் இணைப்புக் கோடல் (Semic Code)
d»
பெருநிலை இணைப்புக் குறியீட்டுக்கோடல் (Symbolic Code) இவ்வாறாக இலக்கியத்தின் உள்ளீடான அல்லது புனைவுக்
குரிய கட்டமைப்பான ஒழுங்கு பற்றியும் உருவ முழுமை பற்றியும் அமைப்பியல் விளக்கியது. இலக்கிய வடிவங்களை அவை
45/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 26
கொண்டுள்ள உறவுகளின் கட்டமைப்பால் விளக்குதல் அமைப்பிய லில் முதன்மைப்பட்டிருந்தது. அதேவேளை பின்னமைப்பியல் மொழியியல் அமைப்பைவிட்டு வெளிவந்து, சமூகம் பற்றிய அமைப் பின் மீது கவனக்குவிப்பைச் செறிவுபடுத்தலாயிற்று. அமைப்பியல் உருவம் பற்றிய சிந்தனைகளுக்கு வலுவூட்டியது. ஆனால், பின்னமைப்பியல் உள்ளடக்க ஊற்றினை முதன்மைப்படுத்தியது.
லகான், பூக்கோ, ரோலன், பார்த், தெரிதா முதலியோரது எழுத்தாக்கங்களிலே பின்அமைப்பியற் சிந்தனைகள் மேலோங்கியிருந்தன. லகான் உளப்பகுப்பியலை அடியொற்றிப் பின் பின்னமைப்பியலுக்கு நகர்ந்தார். பூக்கோ உளப்பகுப்பியல், இருப்பியம் மற்றும் மார்க்சியம் ஆகியவற்றை அடியொற்றிப் பின்னமைப்பிய லுக்கு நகர்ந்தார்.
அமைப்பியலின் விரிவாக்கமாகப் பின்னமைப்பியல் தோற்றம் பெற்றதா அல்லது அதற்கு எதிரான அறிகை நடவடிக்கையா என்ற வினாக்கள் எழுப்பப்படுதல் உண்டு. மொழியின் அமைப்பு உலகின் பதிவுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தவில்லை என்று பின்ன மைப்பியலாளர் கூறுவர் - மாறாக நாம் எவ்வாறு பார்க்கின்றோம் எப்படிப் பார்க்கின்றோம் என்பவற்றை மட்டுமே மொழி உருவாக்" கித் தருகின்றது என்று குறிப்பிட்டனர்.
அமைப்பியல் என்பது முற்றுமுழுதாக மொழியை ஊற்றாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. முறையியல் மற்றும் காரணம் காணும் செயல்முறைகள் வழியாக உண்மையை நிறுவலாம் என்று அமைப்பியலாளர் கூறுகின்றனர்.
பின்னமைப்பியல் மொழியை அடிப்படையாகக் கொள்ளாது மெய்யியலை அடிப்படையாகக் கொண்டு மேலெழுகின்றது. உண்மையைக் கண்டறிதலின் இடர்ப்பாட்டைப் பின்னமைப்பியல் வலியுறுத்துகின்றது. “உறுநேர்வுகள் (Facts) என்று எதுவுமில்லை. அனைத்தும் பொருள்கோடலே" என்று நித்சே ஒரு சமயம் குறிப்பிட்" டார். இருப்பியத்தின் இந்தக் கருத்து பின்னமைப்பியலுக்கும் ஏற்புடையதாக அமைந்தது.
அமைப்பியல் அருவப்படுத்தலையும், பொதுமையாக்கலையும் முன்னெடுத்தது. மொழியியல் விஞ்ஞானத்தின் அடிப்படையாக முடிவுகளை மேற்கொண்டது. ஆனால், பின்னமைப்பியல் எழுச்சி நிலைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றது. அதாவது, புறவய நிலை"
46/சபா ஜெயராசா

களைக் காட்டிலும் அகவய நிலைகளுக்கே அதிக முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது. இதுவும் ஒருவகையில் இருப்பியத்தின் செல்வாக்கைப் புலப்படுத்துகின்றது.
உலக நடப்பியல் மொழி வாயிலாகக் கட்டுமை செய்யப்பட்டுள்ளதென அமைப்பியல் ஏற்றுக்கொள்ளுகின்றது. ஆனால், நடப்பியல் என்பது பொருள் கோடலுக்குரிய நூலியம் என பின்னமைப்பியல் கருதுகின்றது.
நூலாசிரியரின் இறப்பு" என்ற பிரச்சினைக்குரிய கட்டுரையை எழுதியதைத் தொடர்ந்து பார்திஸ் அமைப்பியலில் இருந்து பின்னமைப்பியலுக்கு நிலை பெயர்ந்தார் அதில் நூலியத்தின் சுயாதீனமான அமைப்பை அவர் விளக்கியதைத் தொடர்ந்து அமைப்பியலில் இருந்து விடுபடும் போக்கினை முன்வைத்தார். நூலிய மேலாதிக்கத்திலிருந்து விடுபட்டு பொருள் கோடலின் சுயாதீனமான விளையாட்டைக் குறிப்பிட்டார்.
நூலியத்துக்கு எதிரான வாசிப்பை முன்னெடுத்தல் பின்னமைப்பியலிற் சிறப்பிடம் பெறுகின்றது. பின்னமைப்பியலாளர்களுள் ஒருவராகிய பூக்கோ எழுதிய “பொருள்களின் ஒழுங்கு முறைமை", மற். றும் "அறிவின் தொல்லியல்" முதலாம் நூல்களில் பல சிறப்பார்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில குறிப்பிட்ட அறிவுத்துறைகளை ஏற்றலும் சிலவற்றை நிராகரித்தலும் என்ற செயற்பாடு" களை குறித்த சமூகங்கள் தமது கருத்து வினைப்பாடுகள் வாயிலாக முன்னெடுத்து வந்துள்ளன. அறிவும் ஒடுக்குமுறையும் இணைந்து சென்ற, இயல்பினை அவர் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார். அமைப்பியலாளர் குறிப்பிடும் மொழித் தளத்திலிருந்து வெளிவந்து சமூகத்தளத்தில் மொழியும், அறிவும் கட்டமைப்புச் செய்யப்படுதலைத் தெளிவுபடுத்தினார்.
சமூக நடைமுறைகள் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் கருத்து வினைப்பாடு (Discourse) அல்லது சொல்லாடல் என்பதற்குமுரிய சிக்கலான தொடர்புகளைப் பூக்கோ குறித்துரைத்தார். சமூக ஆக்கத் துக்கும் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் மொழிக் கட்டமைப்புக்கு" மிடையேயுள்ள இணைப்புக்களைக் கண்டறிந்தார். சமூகத் தொடர்புகளை அடியொற்றியே மனிதரின் தன்னிலை (Self) ஆக்கம் இடம்" பெறுதலையும் சுட்டிக்காட்டினார். தன்னிலை என்பது அரசியல் வயப்பட்டதாகவும் அதிகாரத்துடன் இணைந்ததாகவும் காணப்படுகின்றது. அதிகாரத்தினாலும் மேலாதிக்கத்தினாலும் ஒடுக்கப்பட்ட
47/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 27
அறிகுவியங்கள் வெளிப்படுத்தப்படல் வேண்டும் என்பது அவரது சிந்தனைகளிலே மேலோங்கியிருந்தது.
பின்னமைப்பியல் வாதிகள் நூலியத்தின் ஒன்றிணைப்பற்ற இணைவுக்குலைவை (Disunity) வலியுறுத்த அமைப்பியலாளர் அதன் ஒருங்கிணைப்பையும் தொடர்பு இறுக்கத்தையும் அடித்துக் கூறுகின்றனர். மேலும் பின்னமைப்பியல், சிதறல்கள், உடைவுகள், முரண்பாடுகள், சமநிலைக்குலைவு, கோலச்சிதைவுகள், தவிர்த்துவிடப்பட்டவை, முதலாம் எண்ணக்கருக்களை வலியுறுத்திநிற்கின்றது.
அமைப்பியல் மற்றும் பின்னமைப்பியல் ஆகிய இரண்டும் சமூக வரலாற்றின் இயங்கியலையும், முரண்பாடுகளின் இயக்க விசைகளையும் அறிகை நிலையிலே விளக்குவதற்குரிய கவனத்தை மேற்கொள்ளாமை குறிப்பிடத்தக்கது.
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுச்சிபெற்ற பின்னமைப்பியல் பின்னர் தனக்குரிய ஆற்றற் குறைவின் அங்கலாய்ப்பை அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.
ぐ>ぐ>ぐ>
48/சபா ஜெயராசா

பெண்ணியத் திறனாய்வு
சமூகத்திற் பெண்களின் சமத்துவம் நிராகரிக்கப்பட்டமையும், புறக்கணிக்கப்பட்டமையும், நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சிகளைக் கொண்டிருந்தாலும் பருமட்டாக 1960ஆம் ஆண்டுக்குப் பின்னரே வினைப்பாட்டு நிலையில் பெண்ணிய இயக்கம் எழுச்சி பெறத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்தே பெண்ணியத்திறனாய்வு நேர் வளர்ச்சிகொள்ளத் தொடங்கியது.
இலக்கியங்களில் இடம்பெற்ற, இடம்பெற்றுக் கொண்டிருக்" கின்ற பெண் படிமங்களை ஆய்வு செய்தல் முதற்கண் பெண்ணியத் திறனாய்வில் முனைப்பாக்கம் பெற்றது. ஆண்களின் கண்ணோட்டத்திலே பெண் பாத்திரங்கள் உருவாக்கப்படுதலும், பெண்கள் பற்றிய மரபு வழிக்கண்ணோட்டங்களை மேலும் மீள வலியுறுத்தி நிற்றலும் உடனடி அவதானிப்புக்களாக அமைந்தன.
பெண்கள் பற்றிய நோக்கில் மூன்று பரிமாணங்கள் ஆரம்பத்திலே குறித்துரைக்கப்பட்டன அவை:
* அரசியல் வகிபாக நிலையிற் பெண்களை நோக்குதல் பி) உயிரியல் பரிமாணங்கள் அடிப்படையில் நோக்குதல்
* சமூகத்தாலும் பண்பாட்டாலும் உருவாக்கப்பட்ட கட்டு
மைகள் பற்றிய நோக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற பெரும்பாலான ஆங்கில நாவல்களிற் பெண்கள் தொழில் செய்து பொருளிட்ட முடியாதவர்களாகவும், திருமணத் தெரிவிலேதான் அவர்களின் அந்தஸ்து நிர்ணயிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது என்ற கருத்துக்கள் பெருமள
49/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 28
விலே வலியுறுத்தப்பட்டன. பெண்களைக் குவியப்படுத்தும் இவ்வாறான காட்சிகள் பெண்ணியத் திறனாய்வின் வழியாக வெளிக்" கொண்டு வரப்பட்டன. பெண்களை அடக்குவதற்கு ஆண்கள் பயன்படுத்திய பொறிமுறைகளும், தந்திரோபாயங்களும், பெண்கள் தொடர்பாகப் பண்பாட்டு நிலையில் உருவாக்கம் செய்யப்பட்ட உளக்கட்டமைப்பும் (Mind Set) பெண்ணியத் திறனாய்வின் வழியாக எடுத்துரைப்புக்கு உள்ளாக்கப்பட்டன.
பெண்ணியத் திறனாய்வாளர் ஏனைய திறனாய்வுக் கோட்பாடுகளிலே காணப்படும் நற்பண்புகளை உள்வாங்கித் தமது கோட்" பாட்டை அகல்விரி பண்புகளுடன் வளப்படுத்தி வருகின்றனர். நல்லிணைப்பு (Eclectic)ப் பண்பு அங்கே மேலோங்கியுள்ளது. சிறப்பாக மார்க்சியம், மொழியியல், கட்டமைப்பியல் முதலாம் துறைகளில் உள்ள முற்போக்கான கருத்துக்களை அவர்கள் பெயர்த்" தெடுத்துள்ளனர்.
நிராகரிப்புக்கு உட்பட்ட அல்லது அழுத்தங்களுக்கு உட்பட்ட பெண்ணிய உணர்வுகளை வெளிக்கொண்டு வருதலும், மீள்வடி" வாக்குதலும் பெண்களின் புறவுலக நோக்கைக் கண்டறிதலும் முக்கி யத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. பெண்கள் பற்றிய ஆண்களின் வாசகங்களைத் தாக்குதலில் தற்போது அதிக கவனம் செலுத்தப் படுதல் இல்லை. பெண்களின் தரிசனங்களையும் கண்ணோட்டங்களையும் உலகநோக்கையும் குவியப்படுத்தி முன்னெடுத்தலே சமகாலத்தில் எழுச்சிபெறத் தொடங்கியுள்ள செயற்பாடுகளாகின்றன. பெண்கள் பற்றிய எழுத்தாக்கங்களுக்கு வலுவூட்டப்பட்ட புதிய வடிவங்களைக் கொடுத்தலும், புறக்கணிப்புக்கு உள்ளான பெண்ணியச் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் புதிய வடிவங்களுக்குள் கொண்டு வருதலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆண்கள் பற்றிய நூலியத்தில் இருந்து (AndroTexts) பெண்கள் பற்றிய நூலியத்துக்கு (Gynotexts)ப் பெயர்ந்து செல்லல் ஊக்குவிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது. பெண்கள் பற்றிய நூலியம், வரலாறு, அரசியல், பண்பாடு, நடையுடைபாவனைகள், இலக்கிய வடிவங்கள், பெண்களின் ஆக்கமலர்ச்சி, தொழில்சார் முன்னேற்ற வழி முறைகள் என்றவாறு பல பரிமாணங்களை உள்ளடக்கிநிற்கின்றது. பெண் எழுத்தாளர்கள் ஆண்கள் சார்ந்த அழகியல் நியமங்களுக்கு உட்பட்டு நிற்றலும், ஆண்கள் சார்ந்த கலை இலக்கணக்குள் வரித்
50/gust 6sguymo IT

துக்கொள்ளலும் தகர்ப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. பெண்கள் தொடர்பான புதிய சொற்களஞ்சியத்தின் தேவையும் விதந்துரைக்" கப்பட்டுள்ளது. பெண்ணியத் திறனாய்வைத் தருக்க வலிமை கொண்ட நிலைக்கு இட்டுச் செல்லலும் நிறைவான குறிக்கோள்களுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டுள்ளது.
பெண்ணியம் தொடர்பான கோட்பாட்டின் பங்கு, பெண்ணியத்துக்குரிய மொழி, பெறுமானங்கள் முதலிய துறைகளில் விரிவான ஆய்வுகளும், கருத்தாடல்களும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
பெண்ணியக் கோட்பாட்டை உருவாக்குவதில் பல்வேறு கருத்தியல் தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அவை:
* மார்க்சிய அடிப்படைகளில் பெண்ணியத்தை அணுகுதல். பி) உளப்பகுப்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நோக்"
குதல். -> பின் - அமைப்பியல் நோக்கில் அணுகுதல். * தாராண்மை மானிடக் கோட்பாட்டின் அடிப்படையில்
அணுகுதல். கோட்பாட்டு நிலைகளில் ஒரு சாரார் பெண்ணியத்தை முன்னெடுத்துச் செல்ல மறுபுறம் நடைமுறைகளுக்கு அதிக முக்கி யத்துவம் கொடுத்தல் வேண்டும் என்ற கருத்துக்களும் மேலெழத் தொடங்கியுள்ளன. கோட்பாட்டுத் தெளிவற்ற நடைமுறைகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்லும் என்ற கருத்தும் பெண்ணியத் திறனாய்வாளரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
லகான், பூக்கோ, தெரிதா முதலாம் பெண்ணியத் திறனாய்வாளர் நூலியம் பற்றிய ஒரு முக்கியமான கருத்தைக் கூறியுள்ளனர். இலக்கிய நூலியம் என்பது ஒருபோதும் நடப்பியலைத் தெறித்துக் காட்டுதல் இல்லை என்றும், சிறியளவு வடிவான மனித உணர்வு களின் தனியாள் சார்ந்த குரல் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பிரான்சியப் பெண்ணியத் திறனாய்வர் மொழியிலும், உளவியலிலுமே தமது கூடுதலான கவனத்தைக் குவித்து வருகின்றனர்.
இலக்கிய ஆக்கங்களைப் புனைவதற்குப் பெண்களுக்குரிய மொழிக் கட்டமைப்பு இல்லையென்ற பிறிதொரு கருத்தும் முன்மொழியப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள மொழி ஆண்பாலாருடன் தொடர்புடையதாக உருவாக்கப்பட்டுள்ளமையால்,
51/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 29
பெண்பாலாரின் வாழ்வியலைப் புனைவதற்கு ஏற்புடையது அன்று என மீளவலியுறுத்தப்பட்டுள்ளது. “ஒருவருக்குரிய தனித்துவமான ஓர் அறை" என்ற தலைப்பில் வேர்ஜீனியா வூல் அவர்கள் எழுதிய கட்டுரையில் மொழி சார்ந்த இடர்ப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். மொழியற்ற இடர்ப்பாடு பெண் எழுத்தாளர்களிடையே பொருள் வெளிப்படுத்த முடியாத இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. மொழி என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான ஊடகம் (Neutral Medium) அன்று என்பதை டேல் ஸ்பென்டர் 1980ஆம் ஆண்டில் வெளியிட்ட "மனிதனால் உருவாக்கப்பட்ட மொழி” என்ற நூலில் துல்லியமாக வெளிப்படுத்திக்காட்ட முயன்றுள்ளார்.
பெண்ணிய மொழி பற்றிய கருத்தாக்கங்களை முன்மொழிந்த” வர்களுள் முக்கியமான ஒருவராக யூலியா கிறிஸ்தெவ விளங்குகின்றார். மொழியின் செயலமைப்பு மற்றும் பேசும் பொருள் என்ற நிலைகளில் அவர் மொழியை நோக்கினார். மொழியிலே பயன்படுத்தும் குறியீடுகள் மேலாதிக்கத்தையும், கட்டளைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டதாக இருத்தலைச் சுட்டிக்காட்டினார். அதேவேளை மொழியில் இடம்பெறும் ஏனைய சொற் பண்புகள் நெகிழ்ச்சி கொண்டவையாயும், தொடர்புகளைக் காட்டுவதற்கு இயைபானவையாயும் காணப்படுதலை விளக்கினார்.
ஏற்கனவே, மொழியின் வேறுபட்ட பரிமாணங்களை லகான் தமது ஆய்வுகளிலே குறிப்பிட்டுள்ளார். மொழியின் நனவிலி நிலைத் தொடர்புகளை விளக்கிய அவரின் கருத்துக்கள் குறிப்பான் மற்றும் குறிப்பீடுகளின் வழியான கட்டுமானக் குலைப்புக்கு அல்லது தகர்ப்புக்கு இடமளிக்கும் குறிப்புக்களை வழங்கின.
உளப்பகுப்பியலைக் குவியப்படுத்திப் பெண்ணியத் திறனாய்வை முன்னெடுப்போர் உளப்பகுப்பியலின் தந்தையாகக் கருதப்படும் சிக்மன் பிராய்ட் அவர்களை ஆணாதிக்க வாதியாகக் கருதித் திற" னாய்வுகளை முன்னெடுக்கின்றனர். அவர் முன்வைத்த ஆண் ஆதிக்" கக் கருத்துக்கள் தகர்க்கப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தப் படுகின்றனர்.
ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை என்றும் பெண்ணாக "ஆக்கப்படுகின்றாள்" என்றும் பெண்ணிய நோக்கிலே குறிப்பிடப்படுகின்றது. உளப்பகுப்பு வாதத்தின் உட்கிடக்கையாக அமைந்த
52/சபா ஜெயராசா

பெண் உறுப்புத் தொடர்பான பொறாமை நிலையும் விளித்துரைக்கப்படுகின்றது.
ஆண்களின் உருக்கட்டமைப்பும் உறுப்புக்களும் மேலாதிக்கத் தின் வடிவங்களாக இருத்தல் விளக்கிக் கூறப்பட்டது. ஆனால், பிராய்டின் சிந்தனைகளை சமநிலையாகப் பார்க்கும் பெண்ணிலை வாதிகளும் இருக்கின்றனர். உளப்பகுப்பு வாதத்தைத் தட்டிக் கழிக்" காது அதனை எதிர்கொள்ளல் வேண்டும் என்ற கருத்துக்களும் எழுச்சிபெறத் தொடங்கியுள்ளன.
பெண்ணியத்தின் சாராம்சமான பண்புகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
(1) பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களை மீள்கண்டுபிடிப்
புக்கு உட்படுத்துதல். (2) பெண்கள் பற்றிய சமூகக் கட்டுமையை வெளிப்படுத்துதல். (3) ஆண் நிலைப்பட்ட மொழிப்பாங்கினைப் பகுத்தாராய்தல். (4) பெண்களின் அனுபவங்களை மீள்பதிப்பீடு செய்தல். (5) பெண்கள் ஏதோ குறைபாடு கொண்டவர்கள் என்பதற்கு
அறைகூவல் விடுத்தல். (6) மாமூலான சமூக அதிகாரத் தொடர்பாடலைத் தகர்த்தல். (7) ஆண்களும் பெண்களும் வேறுபாடு கொண்டவர்களா என்ற வினாவுக்கு அறிவு பூர்வமான விடைகளைத் தேடுதல். (8) பெண்களுக்குரிய தனித்துவமான மொழியைக் கண்டறிதல். (9) உளப்பகுப்பு வாதத்தை மீள்வாசிப்புக் உட்படுத்துதல். (10) ஆண்மையப்பாட்டுப் பெரும் உரையங்களைத் தகர்த்தல். மார்க்சியக் கண்ணோட்டத்திலும் பெண்ணியத் திறனாய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மார்க்சியம் விளக்கிய பறித்தற் கோட்பாடு (ExploitationTheory) பெண்ணியத் திறனாய்வாளர்களின் பயன்பாட்டுக்குரியதாகின்றது. அதேவேளை பெண்கள் பறிப்புக்கு உள்ளாக்கப்படுதலை மார்க்சியம் தனிச்சிறப்புடன் விளக்கிக்காட்டவில்லை என்ற அவதானிப்புக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
53/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 30
மார்க்சியத்தை அடியொற்றி "பாலியற் பறிப்பு" (Sexploitation) என்ற எண்ணக்கருவும் உருவாக்கப்பட்டுள்ளது.
கலை இலக்கியப் பரப்பில் பெண்ணியத் திறனாய்வு புதிய புலக்காட்சிகளை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை பெண்ணியத் திறனாய்வைக் “கொச்சைப்படுத்தல்” அல்லது "மலினப்படுத்தல்” என்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருத்தலையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
அண்மைக்காலமாக இத்துறையில் “பால்நிலை” (Gender) என்ற எண்ணக்கரு பயன்படுத்தப்படுகின்றது. உளவியல் நடத்தையியல், சமூக பண்பாட்டியல் முதலியவற்றுடன் பாலியலைத் தொடர்பு படுத்தி விளக்கும் எண்ணக்கருவாக “பால்நிலை" உருவாக்கப்பட்டுள்ளது. இலக்கிய நிலையில் மட்டுமன்றி உளவியல் நிலையிலும் இந்த எண்ணக்கருவாக்கம் முக்கியத்துவம் பெறுகின்றது. இதனை அடியொற்றி “பால்நிலை அடையாள ஒழுங்கு குலைவு" உளவியலிலே விளக்கப்படுகின்றது.
ぐ>ぐ>ぐ>
54/guiT 6guynefit

பின்னவீனத்துவம்
கலை இலக்கியத் துறைகளில் அதிர்வுகளையும் மாற்று முனைப்புக்களையும் ஏற்படுத்திய அறிகை விசையாகப் பின்னவீனத் துவம் அமைந்தது. நவீனத்துவத்தில் ஏற்பட்ட நம்பிக்கையினமே பின்னவீனத்துவத்தைத் தோற்றுவித்தது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஐரோப்பாவில் மேலெழுச்சி கொள்ளத் தொடங்கிய பின்னவீனத்துவச் சிந்தனைகள் மெய்யியல், கலை இலக்கியங்கள், சமூகவியல், அரசியல், திறனாய்வு முறைமை போன்ற பல்வேறு துறைகளிலும் தாக்கங்களை விளைவிக்கத் தொடங்கின. நவீன மேலைப்புல பொருண்மிய நிலைகள் உருவாக்கும் பன்முகமான நுகர்ச்சிக் கோலங்களுக்கு உவப்பான கருத்து வினைப் பாடுகளையும் பின்னவீனத்துவம் கொண்டுள்ளது. பின்னைய முத" லாளியத்தின் வளர்ச்சியியோடிணைந்த கருத்தியலாகவும் அது வெளிப்பாடு கொண்டுள்ளது.
பெரும் உரையம் (Metamarative) அல்லது பெருங்கதையாடல் பின்னவீனத்துவத்தின் பிரதான மீண்டெழும் கருத்தாக அமைகின்றது. கூட்டுமொத்தப்படுத்தப்பட்ட வடிவமாக அமையும் பெரும் உரையம் உலகம் முழுவதும் எப்பொழுதும் சரியானதாகவும் பொருத்தமானதாகவும், அனைத்து வினாக்களுக்கும் விடை தருவதாகவும் அமைந்து மேலாதிக்கத்துக்கு இடமளிப்பதாக பின்னவீனத்துவம் வலியுறுத்தி யுள்ளது. இந்தப் பெரும் உரையங்களே மனித செயற்பாடுகளையும் கலை இலக்கிய ஆக்கங்களையும் வழிநடத்துவதாகக் கொள்ளப்படுகின்றது. அவற்றின் வழியாகவே மக்களின் வாழ்க்கைக்குரிய அறமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
55/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 31
பின்னவீனத்துவமானது அனைத்தையும் நூலியம் (Everything as Text) என்ற அமைப்புக்குள்ளே கொண்டு வருகின்றது. நூலியம் என்பது ஒரு சிக்கல் நிரம்பிய எண்ணக்கருவாகின்றது. மொழித்தளமும், கருத்துத்தளமும் தொடர்பான சிக்கல் நிலையை அந்த எண்ணக்கரு புலப்படுத்துகின்றது. மொழித்தளம் குறிப்பான் (Signifier) என்றும் பொருள்தளம் அல்லது கருத்துத்தளம் குறிப்பீடு (Signified) என்றும் குறிப்பிடப்படும். இலக்கியம் உள்ளிட்ட அனைத்துத் தொடர்பாடலும் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு குறியீட்டை எவ்வகையிலும் பொருள் கொள்ளக்கூடிய ஆற்றல் மனி தருக்கு உண்டு. அது நீர்ம்மைப் (Fluid) பண்பு கொண்டதென்று தெரிதா (1967) என்ற பின்னவீனத்துவவியலாளர் தமது ஆக்கங்களிலே குறிப்பிட்டுள்ளார். அது மொழியிலிருந்து மட்டுமே எழுகின்றது. அத்துடன் கட்டற்ற முறையிலே மிதந்து செல்வதால் பலவிதமான பொருள்கோடலுக்கு இடமளிக்கின்றது.
குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்குமிடையே நனவுநிலையான நேர்த்தொடர்பு காணப்படுவதில்லை என்றும் மாறாக, நனவிலி நிலை வழியான தொடர்பே காணப்படுவதாகவும், நனவிலி மனமும் மொழி போன்ற அமைப்பாக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் லகான் குறிப்பிட்டுள்ளார். எடுத்துக்காட்டாக, "அம்மா” என்ற குறிப்பா" னுக்கு ஒவ்வொருவரும் தத்தமது மனத்திலுள்ள அம்மாவையே பொருள் கோடல் செய்வார்கள்.
நூலியத்துக்குரிய மிகச் சிறப்பான பண்பு அது தகர்ப்புக்கு அல்லது கட்டமைப்புக் குலைப்புக்கு (Deconstruction) உள்ளாக்கப்படக் கூடியதாக இருத்தலாகும். மேற்கூறிய தர்க்கங்களின் அடிப்படையில் அதன் தகர்ப்பு விளக்கப்படுகின்றது. நூலாசிரியர் எவற்றைக் குறிப்பிட்டாரோ அவற்றுக்குரிய முரணுரைகள் நூலியத்தால் எழுப்பப்படுகின்றன. இதற்குக் காரணம் ஒவ்வொரு சொல்லும் பன்முகப் பாங்கான கருத்துக்களைத் தாங்கி நிற்றலாகும். மொழி எத்தகைய ஒரு சாராம்சத்தையும் தன்னுள்ளே தாங்கி நிற்பதில்லை. நூலியத்தை வாசிப்போர் தத்தமது இயல்புக்கு ஏற்றவாறு பொருள்கோடல் செய்யும் பன்முக வாய்ப்புக்கள் ஏற்படுகையில் நூலாசிரியரின் இறப்பும், வாசகரின் துலங்கலும் ஏற்படும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.
இதனோடு தொடர்புடைய பிறிதொரு கருத்து "பன்மைத்துவமாகும்" பன்மைத்துவ இலக்கியக் கோட்பாடு ஒன்றுக்கு மேற்” பட்ட அணுகுமுறைகளுக்கு ஆக்கம் தருகின்றது. பன்மைத்துவச்
56/சபா ஜெயராசா

சமூகம் சிறுபான்மைப் பண்பாடுகளின் மரபுகளுக்கும், விழுமியங்களுக்கும் இடமளிக்கின்றது. பன்மைத்துவம் என்பது பலநிலை இயல்பு (Multivalency) என்றும் குறிப்பிடப்படும். ஆடை, அணிகலன் மற்றும் நுகர்ச்சிப் பொருள்கள், இலக்கிய ஆக்களில் வடிவப் பெருக்கங்கள் முதலிய அனைத்தினதும் பலநிலை இயல்புகளுக்கும், பெருக்கங்களுக்கும் பின்னவீனத்துவம் ஆதரவும் அங்கீகாரமும் வழங்குகின்றது.
பின்னவீனத்துவம் குறிப்பிட்ட சில பரிமாணங்களில் பயன் கொள்வாதத்துடன் இணங்கிச் செல்கின்றது. எது உண்மை என்று மெய்யியல் தேடுவதைக் காட்டிலும் எவை பயனுடையாமை என்று தேடுவதிலே கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டும் என்று பயன் கொள்வாதியாகிய ரிச்சாட்ரோத்ரி ஒரு சமயம் குறிப்பிட்டார். விழுமியங்களும், கருத்துக்களும் உண்மையும் கூட சார்புடையவை என இருகோட்பாடுகளும் வலியுறுத்துகின்றன.
கலை இலக்கியங்களில் அகிலப் பொதுமை கொண்ட நியமங்கள் வலியுறுத்தப்படுதலைப் பின்னவீனத்துவம் நிராகரிக்கின்றது. அனைத்துலக மேலாதிக்க நியமங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. "glasyp [5LL'IL ĵuuGò (ypLq-GyösG5 Gjög5JGî il gi” (The end of the Real) என்பது அவர்களின் முன்மொழிவு. அதாவது, நடப்பியல் என்பதற்கும் அவற்றை வெளிப்படுத்தும் மொழிக்குமிடையே நேரான தொடர்புகள் இல்லை என்ற தருக்கத்தின் அடிப்படையிலேதான் அந்த முன்மொழிவு தரப்பட்டுள்ளது.
மேற்கூறிய கருத்து இலத்திரனியல் தொடர்பாடலுக்கும் விரிவாக்கப்படுகின்றது. தொடர்பாடற் படிமங்கள் பொதுமக்கள் அனைவரிடத்தும் ஒரே கருத்தைச் சுமந்து செல்லமாட்டாதவை. இத் துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் மேற்கூறிய கருத்தை மீள வலியுறுத்தி நிற்கின்றன. சமகாலத்தைய அச்சுவடிவ மற்றும் எலத்திரன் வடிவத் தொடர்பியற் சாதனங்கள் நுகர்ச்சிப் பண்பாட்டின் (Consumer Culture) விரிவாக்கமாக இடம்பெறத் தொடங்கியுள்ளன. வர்த்தக விரிவாக்க அழுத்தங்களுக்கு எழுத்தாக்கங்களும், கலையாக்கங்களும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. எழுத்தாளர்களின் தனித்துவம் வர்த்தக விரிவாக்க அழுத்தங்களாற் கரைந்து விடுகின்றது.
கலை இலக்கியங்களில் உருவாக்கப்படும் படிமங்கள் "மிதக்கும் படிமங்களாக" மாறிவிட்டன. கருத்துடன் தொடர்பு அறுந்த நிலையில் சுயாதீனமாகத் தொழிற்படும் படிமங்களாக அவை மிதக்கத் தொடங்
57/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 32
கின. ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்ட படிமங்களே மிகையாக எடுத்தாளப்படுகின்றன. ஆழம் குன்றிய மேற்பரப்பு ஆக்கங்கள் வர்த்தகப் பண்பாட்டுக்கு உவப்பானதாக அமைந்து விடுகின்றன.
எதிர்ச் சாரம்சவாதம், எதிர் அடிநிலைவாதம், எதிர்நடப்பியல் முதலியவை பின்னவீனத்துவத்தின் வலியுறுத்தல்களாகின்றன. மேற்கூறிய எதிர்நிலைத் தளங்களிலே தான் பின்னவீனத்துவ ஆக்கங்கள் கால்கோள் கொள்கின்றன. ஏதாவது ஒன்றை முதன்மைப்படுத்த முடியாது என்பதே அவற்றின் உட்பொருளாக அமைகின்றது.
கலை இலக்கிய ஆக்கங்களிலே "இல்லா இடங்கள்” (Non Place) என்ற எண்ணக்கரு பின்னவீனத்துவ வாதிகளுக்கு மிகவும் விருப்புடையதாகவும், கவன ஈர்ப்பை ஏற்படுத்துவதாகவும் விளங்கு" கின்றது. இந்த எண்ணக்கருவை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சமூகவியலாளராகிய மார்க் அக்கே அறிமுகம் செய்துள்ளார். இன்றைய வாழ்க்கையை அவர் “மீ நவீன” (Super Modern) சமூக வாழ்க்கை என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறான மீநவீன சமூக வாழ்க்கையே இல்லா இடங்களை உருவாக்கி வருகின்றது. நவீன மனிதர்கள் தமது நேரத்தின் கூடுதலான அளவை வெவ்வேறு இடங்களிலே கழிக்கத் தொடங்கியுள்ளனர். போக்குவரத்து வண்டிகள், அங்காடிகள், தொழில் நிலையங்கள், பொழுதுபோக்கு இல்லங்கள். இவை எமது சிந்த னைகளிலும், தொழிற்பாடுகளிலும், பண்பாட்டிலும், கலையாக்க முயற்சிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. முன்னைய வளமான பண்பாட்டு நினைவுகளும், நடத்தைகளும் சிதறி
விடுகின்றன.
எமது தற்போதைய அனுபவங்கள் ஏற்கனவே பொதி செய்யப்பட்டு முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அனுபவங்களாக" வுள்ளன. வீதியில் எவ்வாறு போகவேண்டும் வரவேண்டும் எங்கே தரித்து நிற்க வேண்டும், எவ்விடத்தில் எந்த நிலையங்களைக் காணலாம் என்ற ஏற்பாடுகள் பொதிகளாக்கப்பட்டுள்ளன. அவை ஒரு வகையில் தேடல்களையும் ஆக்கத் திறன்களையும் மழுங்கடித்து விடுகின்றன.
நாம் கடந்து செல்லும் இடங்களையே “இல்லா இடங்கள்” என்ற எண்ணக்கரு துல்லியமாகப் புலப்படுத்துகின்றது. இவ்வகை" யில் பின்னவீனத்துவம் மாற்றுச் சிந்தனைகளை வலியுறுத்துகின்றது. சமூகத்தால் விலக்கப்பட்டவற்றை அது முன்னுரிமைப்படுத்துகின்றது. அடக்கி ஒடுக்கப்பட்டவற்றை முக்கியத்துவப்படுத்துகின்றது.
58/சபா ஜெயராசா

ஒரங்கட்டப்பட்டுத் தவிர்க்கப்பட்டவற்றை இலக்கியங்களின் கருப்பொருளாக மாற்றப்படுதலை வலியுறுத்துகின்றது. மைய நிலையி: லுள்ள பெருங் கோட்பாடுகளையும் முன்மொழிவுகளையும் மைய நீக்கம் செய்தல் (Decentering) கலை இலக்கியங்களின் நடத்தைகளாக இருத்தல் வேண்டுமெனவும் பின்னவீனத்துவம் சுட்டிக் காட்டுகின்றது.
சமூகத்தின் பெரும்போக்கான அறிவுசார் மையம் அல்லது அறிகுவியங்களில் இருந்து அகற்றப்பட்ட அறிவுக்கு முதன்மையளிக்" கப்பட வேண்டுமென்ற பூக்கோவின் கருத்தும் முக்கியத்துவப்படுத்” தப்படுகின்றது. குறித்த எந்தவொரு விடயத்தையும் பற்றிய பலநிலை அறிவுச் சிதறல்கள் கலை இலக்கிய வடிவங்களால் வெளிக்கொண்டு வரப்பட வேண்டியுள்ளன.
கலை இலக்கிய ஆக்கங்களில் மையமற்ற கட்டமைப்பை
பின்னவீனத்துவம் முன்மொழிகின்றது. இலக்கிய வடிவங்களின் உட்கூறுகள் தம்முள் ஒருங்கிணைவு கொண்டு தனித்த முழுவடிவமாக அமைந்திருக்கும் என்ற மரபுவழியான அங்கீகரிப்பைப் பின்னவீனத்" துவம் நிராகரிக்கின்றது. முழுமை மற்றும் நிறைவு ஒருங்கிணைப்பு ஆகியவற்றிலிருந்து விடுபட்ட வடிவங்கள் அவர்களின் அங்கீகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. பலகாட்சிகளும் சிதறிய வடிவங்களும் வரவேற்புக்கு உள்ளாக்கப்படுகின்றன. வகை மாதிரிக்கு ஒர் எடுத்துக்காட்டு வருமாறு:
பாடகர் வருகிறார்
பட்டி மன்றிலே குழப்பம்
காகங்கள் தன்னிச்சையாக
இருந்தன.
ஒடத்தின் உள்ளிருந்த
இரும்புத் தொழிற்சாலையிற்
கூத்தும் கும்மியும்.
கடந்த நூற்றாண்டின் அரைப்பகுதிக்குப் பின்னர் மேலெழுச்சி
கொண்ட பின்னவீனத்துவவாதம் ஐரோப்பாவைக் கடந்து உலகெங்கணும் ஏற்படுத்திய பரப்பான அறிகைக் கோலங்கள் அடங்கத் தொடங்கின. பின்னவீனத்துவம் கடனாகப் பெற்றுக்கொண்ட உளப்பகுப்புவாதம், மார்க்சியவாதம், இருப்பியம் முதலியவற்றின் ஆழங்களை அறியும் பொழுது அதன் மொழிக்கவர்ச்சியில் மயங்க முடியாத நிலை ஏற்படுகின்றது.
59/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 33
பின்னவீனத்துவத்தைத் தனித்த ஒரு கோட்பாடாகக் கொள்ள முடியாது என்ற கருத்துக்களும் மேலெழத் தொடங்கியுள்ளன. உல" கை மொழி விளையாட்டாகக் காணும் பின்னவீனத்துவத் தரிசனம் பலமிழக்கத் தொடங்கியுள்ளது. எவற்றையும் திறனாய்வு செய்வ" தோடு பின்னவீனத்துவத்தின் எழுவிசை நின்று விடுகின்றது. மாற்றுலகு ஒன்றை அமைக்கும் வழிமுறைகள் அங்கு வறிதாகவேயுள்ளன. அத்தகைய ஒர் உலகுபற்றி அவர்கள் சிந்திக்கவுமில்லை.
令令令
60/சபா ஜெயராசா

சூழலியல் திறனாய்வு
சூழலியல் திறனாய்வு (Ecocriticism) என்ற அறிகைப்புலம் அண்மைக்காலமாக விரைந்தெழும் வளர்ச்சியைப் பெற்று வருகின்றது. இலக்கிய ஆக்கங்களுக்கும் பெளதிகச்சூழல் அல்லது இயற்பியற் சூழலுக்குமிடையேயுள்ள தொடர்புகளை ஆராய்தல் இதற்குரிய எளிமையான அறிகை வரைபுபடுத்தலாகும். கடந்த நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து இந்தத் திறனாய்வு முறைமை வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது. செறில் குலொத்பெல்ரி என்பவர் இத" னைத் தொடக்கி வைத்தார். 1992ஆம் ஆண்டில் இலக்கிய ஆக்கங்க" ளையும் சூழலியலையும் தொடர்புபடுத்தி ஆராய்வதற்குரிய கழகம் ஒன்று (ASLE) ஆரம்பிக்கப்பட்டது.
இயற்கையைப் புனைத்துரைத்தல், இயற்கை விதிகளுக்கும் மனித நடத்தைகளுக்குமிடையேயுள்ள தொடர்புகளை நயப்படுத்தல் முதலியவை உலகின் செம்மொழி இலக்கியங்களிலே பரவலாகக் காணப்படுகின்றன. ஆயினும், கைத்தொழிற்புரட்சிக்குப் பின்னர் நிகழ்ந்த இயற்கை மீதான தீவிர பறிப்பு நடவடிக்கைகளும் சுரண்டலும் முன்னர் அறியப்படாத புதிய புலக்காட்சிகளை ஏற்படுத்” தலாயின. அதன் வளர்ச்சி நிலைகளே சூழலியல் திறனாய்வுக்கு விசை கொடுத்தது. இங்கிலாந்தில் நிகழ்ந்த அறிகை வளர்ச்சி இத" னைப் "பசுங்கற்கை" (Green Studies) என்ற எண்ணக்கருவாற் குறிப்பிட்டது.
இயற்கைக்கும் இலக்கியங்களுக்குமுள்ள தொடர்புகள் மேலும் விரிவாக்கம் பெற இயற்கைக்கும் பண்பாட்டுக்குமுள்ள தொடர்புகளை ஆழ்ந்து ஆராய்தலும் முன்னெடுக்கப்படலாயிற்று. இலக்கியங்கள் சமூக நிலையாலும், மொழியியல் நிலையாலும் தோற்றம்
61/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 34
பெறுதலை மறுத்துரைத்தல் சூழலியல் திறனாய்வாளரால் முன்வைக்கப்படும் தலையாய அணுகுமுறையாகின்றது. நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவரும் இலக்கியம் தொடர்பான சமூக நிர்ணயிப்புக் கொள்கைகளைத் தகர்க்கும் முயற்சி ஒருவிதத்தில் அமெரிக்காவில் வளர்ந்துவரும் பொருண்மிய நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருதலாகவும் அமைந்துள்ளது.
அங்கு நிகழ்ந்துவரும் பொருண்மியச் செயற்பாடுகள் சமூக அழுத்தங்களைத் தீவிரப்படுத்திவரும் வேளை இலக்கிய வழியான கவனக்குவிப்பைத் திசை திருப்புவதற்கும் சூழலியல் திறனாய்வு கை" கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இயற்கையைப் பண்பாட்டு நடைமுறை என்ற அமைப்பினுள்ளே சுருக்கிவிட முடியாதென்பது சூழலியல் திறனாய்வாளரின் பிறிதொரு கருத்து. சமூக ஏற்றத்தாழ்வுகள் இயற்கையால் அருளப்பட்டவை என்ற கருத்தும் அணுகுமுறைகளும் ஆழவேரூன்றியிருந்தன. ஆட்சி மேலாண்மைக்கும் அதிகாரக் கட்டுமானத்துக்கும் அந்த அணுகுமுறை சார்பானதாக அமைந்திருந்தது. மனிதரை மனிதர் அல்லாதவற்றிலிருந்து கட்டுப்படுத்துவதற்கு இந்த அணுகுமுறை பயன்பட்டது.
இயற்கையையும் பண்பாட்டையும் கறாராக வேறுபடுத்துதலும் அறிகைநிலையிலே கடினமான பணியாகி விடுகின்றது. எடுத்துக்காட்டாக மலையில் நகரம் அமைந்திருக்கும் வேளை ஒரு பகுதியை நகரம் என்றும் இன்னொரு பகுதியை மலையென்றும் கூறுதலில் உள்ள இடர்பாடு நன்கு வெளிப்படுகின்றது.
சூழலியல் திறனாய்வில் இயற்கைக்கும் மனிதருக்கும் இலக்கிய வடிவங்களுக்குமுள்ள தொடர்புகளைக் கண்டறிதல் முனைப்பாக்கம் பெறுகின்றது. அந்நடவடிக்கை பகுப்பாய்வு நிலையிலும் எழுச்சி பெற்று வருகின்றது.
இயற்கையிலிருந்து பண்பாட்டுக்கு நகர்ந்து செல்கையில் ஒன்றின் மீது மற்றையது பதிந்து செல்லும் பின்வரும் அமைப்புக்" களைக் காணலாம்.
(1) புலம் ஒன்று : மனிதர் வாழாத வெளிப்பரப்புக்கள் - எடுத்துக்காட்டாக பாலை நிலங்கள், பெருவெளிகள், கடற்பரப்புக்கள் முதலியவை.
62/சபா ஜெயராசா

(2) புலம் இரண்டு : கம்பீரமான நிலங்கள் எடுத்துக்காட்டாக"
மலைகள், நீர் வீழ்ச்சிகள், ஏரிகள், அடர்காடுகள்.
(3) புலம் மூன்று : கிராமியச் சூழல் - வயல், சிறுகுன்று,
சிறுகாடு முதலியவை.
(4) புலம் நான்கு:இங்கிதச் சூழல் உருவாக்கம் - பூந்தோட்டம்,
இயற்கை வனப்பாக்கம் முதலியவை
புலம் ஒன்று முற்றிலும் இயற்கை வயப்பட்டதாகவும் புலம் நான்கு மனிதர்களின் செயற்பாடுகளை உள்ளடக்கிய பண்பாட்டு வயப்பட்டதாகவும் நகர்ச்சியுற்றுச் செல்வதைக் காணலாம். மனிதப் பறிப்பு முயற்சிகளால் நிகழ்த்தப்படும் புவி வெப்பமாதல் என்ற செயற்பாடு புலம் ஒன்றைத் தாக்குகின்றது. அதாவது, இயற்கை மீது பண்பாட்டை ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறிப்பிடுகின்றது. அதே" வேளை புலம்நான்கு பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவாக்கம் பெற்றதாயினும் சூரியவெளிச்சம், நீர், மண்வளம் முதலியவை இல்லாது பூந்தோட்டங்களை உருவாக்கிவிட முடியாது. இயற்கையும் பண்பாடும் ஒன்றன் மீது மற்றையது பதிவுறுதலை மேற்கூறியவை எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலையில் இயற்கையா அல்லது பண்பாடா என்ற கறாரான பிரிகோட்டினை இடுதல் கடினமான செயற்" பணியாகின்றது.
பதினெட்டாம் நூற்றாண்டின் ஐரோப்பிய இயற்கை இலக்கியங்கள் பெரும்பாலும் புலம்இரண்டு மற்றும் புலம்மூன்று ஆகியவற். றைத் தழுவியே மேலெழுந்தன. பிரித்தானியாவின் "உனக்கவர்ச்சி” (Romantic) இலக்கிய ஆக்கங்கள் இவ்வகை இயற்கைப் பின்புலங்களைக் கொண்டே மேலெழுந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் உளக்கவர்ச்சி எழுத்தாக்கங்களைப் படைத்த வேட்ஸ் வேர்த்தின் ஆக்கங்கள் பெரும்பாலும் புலம்இரண்டை அடிப்படையாகக் கொண்டே எழுந்தன. அதே காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்காவில் உருவாக்கம் பெற்ற "விஞர்சு நிலை" (Transcendentalist) இலக்கியங்கள் புலம்ஒன்றைக் களமாகக் கொண்டே உருவாக்கம் பெற்றுள்ளன. அந்த இலக்கியங்களின் இயல்புக்கும் புலம்ஒன்றின் இயல்புக்கும் நேரடியான இணைப்புக்கள் உள்ளன.
தமிழ் மரபிலே சித்தர் பாடல்களிலே பெருவெளிகளின் செல்வாக்கைக் காண முடியும். “வெட்டவெளியே விடென்றிருப்போருக்குப் பட்டயம் எதுக்கடி" என்பது குறிப்பிடத்தக்கது.
63/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 35
புலம் மூன்று மற்றும் புலம் நான்கு ஆகியவை சாதாரண கதையாக்கங்களுக்கும் இசைப்பாக்களின் (Lyric) ஆக்கங்களுக்கும் பின்நிலைகளாக அமைந்தன. அதேவேளை புலம்ஒன்றும் புலம் இரண்டும் உலகப் பெருங்காவியங்கள் உருவாக்கம் பெறுவதற்குரிய பின்நிலைகளாக அமைந்தன. மனிதர் மீது பிரபஞ்ச இயற்கை வலுக்கள் ஆதிக்கம் செலுத்துதலையே பெருங்காவியங்கள் முன்மொழிந்” துள்ளன. மனிதரை நடுநாயகப்படுத்தி இயற்கை வலுக்களின் மேன்மையை அவற்றிலே புனைந்துரைக்கப்படுவதாக சூழலியல் திற" னாய்வாளர் குறிப்பிடுவர்.
“புரமோதியன்” என்ற தேவதைக் கதைகளில் மனிதரை நடுநாயகப்படுத்தி உட்பொதிந்த ஆழ்ந்த (Deep) சூழலியலே வலியுறுத்த" லுக்கு உள்ளாக்கப்படுகின்றது. மில்டன், ஷெல்லி போன்ற ஆங்கிலக் கவிஞரிடத்தும், ஒருவகையில் பாரதியாரின் குயிற்பாட்டிலும் இந்த இயல்பினைக் கண்டுகொள்ள முடியும். "இயற்கை எப்பொழுதும் இறையியல் வலுவைச் சுமந்து நிற்கும்” என்ற கருத்தும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
சூழலியல் திறனாய்விலே பின்வரும் சிறப்புக் கருத்துக்கள் முன்னெழுந்துள்ளன.
(1) இலக்கியங்களை சூழலிற் கண்ணோட்டத்தில் மீளவாசிப்
புக்கு உட்படுத்துதல். (2) சூழலியல் எண்ணக்கருக்களின் வழியாக இலக்கியங்களை அணுகுதல் எடுத்துக்காட்டாக :வளர்ச்சி" முதிர்ச்சி இயற்" கைச் சமநிலை முதலியவற்றுடன் தொடர்புபடுத்தி நோக்குதல். (3) எழுத்தாளர்கள் எந்த அளவுக்குச் சூழலியல் அறிகையில்
அமிழ்ந்துள்ளார் என்பதைக் கண்டறிதல். (4) இயற்கை வளங்களுக்கும் இலக்கிய உள்ளடக்க வளங்" களுக்குமிடையேயுள்ள பெரும் இணைப்புக்களையும், நுண்ணிய இணைப்புக்களையும் விளங்கிக்கொள்ளல். (5) திரிபுபடுத்தப்படாத நிலையில் இயற்கை எவ்வாறு புனை
யப்பட்டுள்ளது என்பதை இனங்காணல். (6) சமூகக் கட்டுமானவியல், மொழி நிர்ணவியல் முதலியவற்"
றிலிருந்து விடுபடல்.
64/சபா ஜெயராசா

சூழலியல் திறனாய்வுக் கோட்பாடுகள், சூழலியல் திறனாய்வு வரலாறு, சூழலியல் திறனாய்வு வாசிப்பு, சமூகச் சூழலியல், பண்பாட்டுச் சூழலியல், சூழலியற் பெண்ணியம் முதலாம் எண்ணக்" கருக்கள் இத்துறையில் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளன. "பனிப்பாறைகளின் உருகுதலை நோக்கி”, “வெளிச்சத்துக்கு அதீத உணர்ச்சி
கொள்ளல்", "இருளில் நுழைந்த ஒசோன் துவாரம்" முதலாம் புதிய தொடர்கள் இலக்கிய வளத்தில் நுழையத் தொடங்கியுள்ளன.
மேலையுலகிலே தோற்றம் பெற்றுள்ள பின்னவீனத்துவம், மற்றும் சூழலியல் திறனாய்வு முதலியவற்றுக்கிடையே பல இணக்கப்பாடுகள் காணப்படுகின்றன - இலக்கியங்களைத் தகர்த்துப் புதிய வாசிப்புக்கு உட்படுத்துவதுடன் மட்டும் அந்த இணக்கப்பாடு நின்றுவிடவில்லை. நெருக்குவாரம் மிக்க புதிய பொருண்மியச் சூழல் உலகில் தீவிர வளர்ச்சி கொள்ளத் தொடங்கியுள்ள வேளையில் மார்க்சியக் கோட்பாடுகளின் மீள்எழுச்சிக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை மேலைப்புலத்தில் தோன்றியுள்ளது. இந்நிலையில் மாற்" றுக் கோட்பாடுகளின் உருவாக்கத்துக்கு உயர்கல்வி நிலையங்களில் அளிக்கப்பட்டுவரும் உற்சாகங்களின் அறிகை வீச்சுக்களாகப் புதிய கோட்பாடுகளின் உருவாக்கம் மேலெழத் தொடங்கியுள்ளது.
அதேவேளை மேலையுலகில் எழுச்சிபெறத் தொடங்கியுள்ள சூழலியல் திறனாய்வாளர் இந்திய மரபில் சிறப்பாகத் தமிழ் மரபில் தோற்றம்பெற்ற இலக்கியங்களை அணுகியிருக்கின்றனரா என்ற கேள்வியும் எழுகின்றது. தமிழ் இலக்கிய மரபில் இடம்பெற்ற ஐவகை நிலப்பாகுபாடு, ஐந்திணை ஒழுக்கம் முதலியவை சூழலிய" லோடு இணைந்த ஆய்வுகளுக்குரிய வளங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பழந்தமிழ் இலக்கியங்களிலே காணப்படும் இயற்கையின் இணைப்பும் சமூக இயல்பும் ஒன்றிணைந்துள்ளன. இந்நிலையில் சமூக இருப்பை நிராகரித்துத் தனித்து இயற்கை வழியாக மட்டும் பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான தெளிந்த புலக்காட்சியைப் பெற்றுவிட முடியாது என்பதை மனங்கொள்ள வேண்டியுள்ளது. மேலைப்புலத்து இயற்கை சார்ந்த உளக்கவர்ச்சி இலக்கியங்களிலும் இதேநிலை காணப்படுகின்றது.
சூழலியல் திறனாய்வின் ஒரு பரிமாணம் முற்போக்கானதாகக் காணப்பட்டாலும், மறுபரிமாண சமூகப் பறிப்பையும் ஒடுக்கு முறைகளையும் கவனத்திலே எடுக்காதிருத்தலும் குறிப்பிடத்தக்கது.
65/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 36
உயிரிக்கும் சூழலுக்குமிடையேயுள்ள தொடர்புகளை விளக்" கும் சூழலியல் இன்று பலதுறைகளிலும் ஊடுருவத் தொடங்கியுள் ளது. உளவியல், கல்வியியல், அரசியல், பொருளியல், நுகர்ச்சியியல், போன்ற பல்வேறு துறைகளை நோக்கியும் அதன் பரவல் எழுச்சியுறத் தொடங்கியுள்ளது. இவ்வாறான பன்முகப் பரவல் சூழலியல் திற" னாய்வைப் பல தளங்களுக்கு இட்டுச் செல்கின்றது. இந்நிலையிலே சூழலியல் திறனாய்வை முன்னெடுக்கும் பொழுது, சூழலைப் பறிப் புக்கு உள்ளாக்கும் பின்னைய முதலாளியத்தின் செயற்பாடுகளை மறந்துவிடலாகாது. அதாவது, சமூகச் செயற்பாடுகளிலிருந்து சூழ" லை வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
ぐ>ぐ>ぐ>
66/சபா ஜெயராசா

கதை உரைப்பியல்
கதை (Story) கதைநெறி (Plot) ஆகியவை தனித்துவமான எண்ணக்கருக்கள் கதையுரைப்பு இயல் (Naratology) அல்லது எடுத்துரைப்பியல் என்பது தனிக்கதைகளை வாசித்தலும், பொருள் கோட" லும் என்பவற்றுடன் கட்டுப்பட்டவை அன்று. கதை இயல்பின் எண்ணக்கருவை அறிதலும் பண்பாட்டு நடைமுறை என்ற வகையில் அதனை விளங்கிக்கொள்ளலும் கதையுரைப்பு இயலிற் சிறப்பிடம் பெறுகின்றன. கதை என்பது நடந்தவற்றின் நேர்நிலைத் தொடர்ச்சி களைக் குறிப்பிடும். கதைநெறி என்பது கதை எவ்வாறு ஒழுங்" கமைப்புக்கு உள்ளாகிப்பொதிசெய்யப்பட்டுத்தரப்பட்டுள்ளது என்பதை நோக்குகின்றது. கதையுரைப்பு இயல் கதைநெறி மீதே கூடிய கவனக்குவிப்பை ஏற்படுத்துகின்றது.
கதை மற்றும் கதைநெறி முதலியவற்றை வேறுபடுத்தி ஆய்வு செய்யும் முயற்சிகள் திறனாய்வாளரின் முன்னெடுப்புக்கு உட்பட்டு வந்துள்ளன. ரூசியாவின் உருநிறையியற் (Formalist) கோட்பாட்டாளர் கதையை “பபுலா" என்றும், கதைநெறியை "சூஜே" என்றும் குறிப்பிட்டு வேறுபடுத்த முயன்றனர். கதை நெறிப்பாடே கூட்டு மொத்த விளைவை ஏற்படுத்தவல்லது என்பதை வலியுறுத்தினர்.
தொன்மையான கிரேக்கக் கல்வியில் கதையுரைப்பு இயல் பற்றிய சிந்தனைகள் ஆழவேரூன்றியிருந்தன. கதையின் இயல்பு பற்றிக் கூறவந்த அரிஸ்டோட்டில் கதைப் பாத்திரங்களும் அவற்றின் வினைப்பாடுகளும் கதையாக்கத்துக்குரிய இன்றியமையாத கூறுகள் எனக் குறிப்பிட்டார். வினைப்பாடுகள் வழியாகவே பாத்திர இயல்பைக் கண்டுகொள்ள முடியும். அதாவது, கதைநெறியின் வழியாகவே
67/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 37
அதனை அறிந்துகொள்ள முடியும். கதைநெறியில் மூன்று பண்புகள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார் அவையாவன :
* துன்பியல் நாடகக் கதைகளில் இருந்து கண்டறியப்பட்ட
பாவவினைப்பாடு அல்லது குறைபாடு (Fault)
* உண்மை நிலையை உணர்ந்தறிதல் அதாவது தன்னி
லையை இனங்காணல்.
* நன்மைகள் மீளத் திரும்புதல்.
வீரர்களின் வீழ்ச்சியைக் குறித்து நிற்கும் துன்பியல் நாடகங்களின் கதைகள் உருவாக்கப்பட்ட கதைநெறி பண்புகள் தொடர்ச்சியான ஆய்வுகளுக்கு உட்பட்டு வருகின்றன.
கதைநெறி பற்றிய ஆய்வில் ரூசிய உருநிறையியற் கோட்பாட்" டாளராகிய விளாடிமிர் புரொப் வழங்கிய கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன. ரூசியநாட்டார் கதைகளிலே "அமைப்புகள்” மீள மீள வருதலை அவர் கண்டறிந்தார். புரொப்பின் கருத்துக்களை அடியொற்றி லெவி ஸ்ராஸ் தொன்மக் கதைகளை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தினார்.
ரூசிய நாட்டார் கதைகளை ஆராய்ந்தவேளை புரொப் முப்பத்தொரு தொழிற்பாடுகள் அவற்றின் உள்ளமைந்திருத்தலை இனங்காட்டினார். அவ்வாறான முப்பத்தொரு பண்புகளிலே தெரிவு செய்யப்பட்டவற்றை அடியொற்றியே உருவாக்கப்பட்டமையை அவர் சுட்டிக்காட்டினார். அப்பண்புகள் வருமாறு:
(1) குடும்ப உறுப்பினர்களுள் ஒருவர் வெளிநீங்கி வராதுவிடல். (2) கதைத் தலைவருக்கு தடை சமர்ப்பிக்கப்படுதல். (3) தடை மீறப்படுதல். (4) வில்லன் தலைவனின் பலத்தை வேவுபார்த்தல் (5) வில்லன் தகவல்களைப் பெற்றுக்கொள்ளல் (6) வில்லன் ஏமாற்றும் செயற்பாடுகளில் ஈடுபடல் (7) பாதிப்புக்கு உள்ளான சிலர் எதிரிக்கு உதவுதல்
(8) வில்லன் தனது ஆற்றலால் குடும்பத்துக்குத் தீங்கிழைத்தல் - குடும்பத்தினர் சில வேண்டுதல்களைக் கொண்டிருத்தல்
68/சபா ஜெயராசா

(9) தேவை உணரப்பட்டுக் குடும்பத்தினர் கதைத் தலைவரை
நாடுதல் (10) தேவை நாடுபவர் தலைவருக்கு இணக்கம் தெரிவித்தல் (11) கதைத் தலைவர் வீட்டை விட்டு நீக்குதல் (12) கதைத் தலைவர் தாக்கப்படுதலும் அவர் மாயவித்தை
முகவரை நாடுதலும் (13) அதிருஷ்டம் தருபவருக்கு எதிராகக் கதைத் தலைவர்
தொழிற்படல் (14) கதைத் தலைவர் மந்திரவித்தை முகவரின் ஆற்றலைப்
பயன்படுத்துதல்
(15) கதைத் தலைவர் இடம் மாற்றப்படல் (16) கதைத் தலைவரும் வில்லனும் மோதுதல் (17) கதைத் தலைவர் உறுதிபெறல் (18) வில்லன் தோற்கடிக்கப்பட்ல் (19) ஆரம்பநிலை அதிருஷ்டமின்மை ஒழிக்கப்படல் (20) கதைத் தலைவர் திரும்புதல்
(2) கதைத் தலைவர் இணக்கப்பாட்டுக்கு உட்படுத்தப்படுதல் (22) பின்தொடரிலிருந்து கதைத் தலைவர் பாதுகாக்கப்படல்
(23) கதைத்தலைவர் தம்மவரால் இனங்காணப்படாமை (24) பொய்த் தலைவர் ஒருவர் தம்மை நிலை நிறுத்தமுயலுதல்
(25) கடினவேலை ஒன்று கதைத் தலைவருக்குத் தரப்படல் (26) அந்தச் செயற்பணி நிறைவேற்றப்படல்
(27) கதைத் தலைவர் இனங்காணப்படல் (28) பொய்த்தலைவர் வெளிப்படுத்தப்படல் (29) கதைத் தலைவருக்குப் புதிய தோற்றம் கொடுக்கப்படல் (30) தலைவர் திருமணம் செய்தலும் முடிசூதலும்
69/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 38
மேற்கூறிய அடிப்படைகளைப் பொறுக்கியெடுத்துக் கதையாக்" கத்தை மேற்கொண்டு விடலாம் என்று புரொப் கூறுகின்றார். இத" னை மேலும் விளக்க முயன்ற புரொப் ஏழு வினைப்படும் தளங்க" ளையும் குறிப்பிட்டுள்ளார். அவை:
* வில்லன்
வழங்குனர் உதவி செய்பவர் இளவரசியும் தந்தையும்
கொண்டுவந்து தருனர்
கதைத் தலைவர்
பி) பொய்த் தலைவர்
மேற்கூறிய ஏழுவினைத் தளங்களையும் வைத்துக்கொண்டு கதை நெறியை உருவாக்கிவிட முடியும் என்பது அவரது கருத்து.
கதையுரைப்பியலில் சிறப்புப் பங்களிப்பைச் செய்த திறனாய்வாளருள் ஒருவராக ரோலன் பார்தீஸ் விளங்குகின்றார். “வெளிக்காட்டல்" அல்லது "நாடகப்படுத்தல்" என்ற எண்ணக்கருவில் அவரு" டைய ஆழ்ந்த ஈடுபாடு முன்னெடுக்கப்பட்டது. வாசகர்களுக்கு நாட கப்பாங்கிலே காட்ட முனைதல் என்ற செயற்பாட்டில் மாயைத் தோற்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இவை பார்த்தல், கேட்டல் என்ற புலன் தொழிற்பாடுகளுடன் இணைந்த மாயைத் தோற்றங்க" ளாக்கப்படுகின்றது இதிலிருந்து வேறுபடுவது தொடர்புபடுத்தல் என்பதாகும். தகவல்களை வினைத்திறனுடன் இணைத்தல் இந்நட" வடிக்கையிற் சிறப்பிடம் பெறுகின்றது. முன்னையது "உருநிலைப்பு” (Mimesis) என்றும் பின்னையது "தொடுநிலைப்பு” (Diegetic) என்றும் கூறப்படும். உருநிலைப்பு மெல்லசைவாகவும் தொடு நிலைப்பு விரைவு அசைவாகவும் நிகழும். இவை இரண்டும் கதையுரைப்பி யலில் எடுத்தாளப்படுகின்றன.
உருநிலைப்புப் பயன்பாடு நீண்ட கதையாக்கத்துக்குத் துணை செய்யும். தொடுநிலைப்பு குறுங்கதையாக்கத்துக்குத் துணை செய்யும். அடுத்ததாக கதையுரைப்பின் குவியப்பாடு முக்கியத்துவம் பெறுகின்றது. பாத்திரத்தின் உள்நிகழும் குவியப்பாடு (Focalisation) அதன் சிந்தனை மற்றும் உணர்வுகளுடன் தொடர்புடையது. வெளி
70/சபா ஜெயராசா

நிகழும் குவியப்பாடு புற நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையது. கதை உரைப்பவர் நடந்தவற்றைப் புறநிலையுடன் சொல்லும் புறநிலை விபரிப்பாளராகவும் இருக்கலாம் அல்லது தன்னிலையைக் கலக்கும் அகநிலை விபரிப்பாளராகவும் இருக்கலாம்.
கதையுரைப்பில் "காலம்" கையாளப்படும் முறைமை, கதை எவ் வாறு பொதிசெய்யப்படுகின்றது என்பதுடன் தொடர்புடையது பொதி செய்யப்பட்ட (Packed) முறைமை, முதலாம் நிலைக் கதைக்கூறல் இரண்டாம் நிலைக் கதைக்கூறல் என இருவகைப்படும். பொதி செய்யப்படலில் முதலாவதாக இடம்பெறுவது முதலாம் நிலைக் கதை கூறலாகின்றது. பிரதானமாக இடம்பெறும் கதைகூறல் “இரண்டாம் நிலைக்கதை கூறல்” எனப்படும்.
கதை உரைப்பில் பொதுவாக அடுக்கமைவு மொழி பயன்படுத்" தப்படுதல் உண்டு. ஒரே எண்ணக்கருவைப் பல சொற்களாற் கூறுதல் “அடுக்கமைவு மொழி" எனப்படும்.
இவ்வாறாக, சமகால இலக்கிய ஆய்வில் கதை உரைப்பியல் என்ற துறை ஆழ்ந்து விரிந்து வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
இலக்கியத் திறனாய்விலே கதையுரைப்பியல் நுட்பங்களை அறிந்துகொள்ளல் முக்கியமான செயற்பாடாக விளங்குகின்றது. தமிழகத்தில் வளர்ச்சி பெற்ற கதையுரைப்பியல்நுட்பங்கள் பிரசங்கக் கலையிலும், வழக்காடு மன்றங்களிலும் செல்வாக்குச் செலுத்தி வருதல் குறிப்பிடத்தக்கது.
71/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 39
எழு நடையியல்
எழுநடையியலை (Stylistics) ஒரு கோட்பாடாகக் கொள்வதா அல்லது ஒரு நடைமுறை வடிவமாகக் கொள்வதா என்ற வினா அவ்வப்போது எழுப்பப்படுதல் உண்டு. இலக்கிய ஆக்கங்களின் மொழி யியல் சார்ந்த தொழில்நுட்பப் புனைவுகளைக் கண்டறிதலும் விளக்குதலும் எழுநடையியலின் சிறப்பார்ந்த இலக்குகளாக அமைகின்றன. இலக்கியப் படைப்பின் கூட்டுமொத்தமான கருத்து வெளிப்பாடுகளுக்கும் உறுவிளைவுகளுக்கும் (Effects) மொழியின் பயன்பாடு இங்கு ஆழ்ந்து நோக்கப்படுகின்றது. மொழியின் பலநிலைப் பரிமாணங்கள் தொகுத்துத் தரிசிக்கப்படுகின்றன.
தாராண்மை மானிடவியல் இலக்கியக் கோட்பாட்டாளர் தமது அணுகுமுறைகளில் எழுநடையியலுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இலக்கிய வரலாற்றில் இடம்பெற்ற சொல்லாடற் கலை (Rhetoric)யுடன் தொடர்புடைய புதிய வடிவமாக எழுநடையியல் தோற்றம் பெற்றுள்ளது. பொருத்தமான சொற்களைத் தெரிந்தெடுத் தல் விவாதத்துக்குரியவாறு சொற்களைக் கட்டமைப்புச் செய்தல், உச்ச உறுவிளைவுகளைத் தருமாறு மொழியமைப்பை மேற்கொள்ளல், முதலிய சொல்லாடற் கலையின் பரிமாணங்கள் எழுநடையியலுக்கும் ஏற்புடையவையாகக் காணப்படுகின்றன.
இடைக்காலக் கல்வி வரலாற்றில் சொல்லாடற் கலை அனைத்து வாண்மையினருக்கும் வேண்டப்படும் அறிவுருவமாக வற்புறுத்தப்" பட்டது. அரசியல்வாதிகள், சட்டவல்லுனர்கள், ஆசிரியர்கள், திருச்சபைப் போதகர்கள், தூதுவர்கள் என்ற அனைவரும் சொல்லாடற் கலையறிவு பெற்றிருத்தல் வேண்டுமெனச் சுட்டியுரைக்கப்பட்டது. மொழியின் ஆழ்ந்த பண்புகளை அணுகி நோக்குதல் அங்கே சிறப்
72/5urt 6guy IT FIT
 

பிடம் பெற்றிருந்தது. மொழியியல் படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்க சொல்லாடற் கலையின் பல பரிமாணங்களைத் தன்னகத்தே உள்வாங்கிக் கொள்ளத் தொடங்கியது.
இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற திறனாய்வு விசைகள் எழுநடையியலின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் உற்சாகம் தந்தன. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் ரூசியாவில் வளர்ச்சிபெறத் தொடங்கிய உரு நிறையியலாளர் (Formalists) மொழிக்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தலாயினர். மேலும், பிராக் மொழி யியல் வட்டத்தினரும், செக்கோஸ்லவாக்கிய மொழியியலாளர் ஜாக்கோப்சன் அவர்களும், எழுநடையியல் எண்ணக்கருவின் முக்கியத்துவத்தைக் குறித்துரைத்தனர். இவற்றின் தொடர்ச்சியாக 1958ஆம் ஆண்டில் எழுநடையியல் தொடர்பான மாநாடு இந்தியானா பல்கலைக்கழகத்திலே கூட்டப்பெற்றது. அம்மாநாட்டின் கருத்துக்களும் கட்டுரைகளும் “மொழியின் எழுநடை" என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது.
மொழியியல் சார்ந்தோர் மற்றும் மொழியியல் சாராதோர் ஆகியவற்றுக்கிடையே எழுநடையியல் தொடர்பான கருத்து முரண் பாடுகள் ஆரம்ப நிலையில் காணப்பட்டன. மொழியின் வடிவமைப்பு, கட்டமைப்பு, மற்றும் கருத்துக்கையளிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்திய மொழியியலாளர் பின்னர் எழுநடையியல் ஆய்வுகளையும் ஒன்றிணைத்துக் கொள்ளத் தொடங்க, இலக்கியத் திறனாய்வாளர் முன்னெடுத்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் எழுநடையியலில் மேலும் பல வளர்ச்சிநிலைகள் ஏற்படலாயின. பெண்ணியம், அமைப்பியல், பின்னமைப்பியல் முதலாம் துறைகளை நோக்கி அதன் பரிமாணங்கள் விரிவாக்கம் செய்யப்படலாயிற்று. பரந்த அகல்விரி ஒன்றிணைபபின் வழியாக "புதிய எழுநடையியல்" என்ற திறனாய்வு அறிபொருள் உருவாக்கப்பட்டது.
திறனாய்வு அறிகையின் மூடிய வாசிப்பையும் (Close Reading) எழுநடையியலையும் வேறுபடுத்தி விளக்கலாயிற்று. மூடிய வாசிப்பு இலக்கிய மொழியையும், சமூகப் பொதுமொழியையும் வேறுபடுத்தி நோக்குகின்றது. இலக்கிய மொழியை முற்றிலும் ஓர் அழகியற் பொருளாகவே மூடிய வாசிப்பு நோக்குகின்றது. இதற்கு மாறுபாடான வகையில் எழு நடையியலாளரின் அணுகுமுறைகள் அமைந்” துள்ளன. எழுநடையியலாளர் இலக்கிய மொழிக்கும், நாளாந்தம்
73/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 40
பயன்படுத்தும் மொழிக்குமிடையே இணைப்பு நிலைகளை வலியுறுத்துகின்றனர். இலக்கியமொழி என்பது தனித்துவமான அழகியற் கோபுரம் என்பதைத் தள்ளுபடி செய்கின்றனர்.
எழுநடையியலாளர் மொழியியல் ஆதாரங்களை அடியொற்றி இலக்கிய ஆக்கங்கள் தொடர்பான புதிய கருத்துக் கோடல்களை முன்வைக்கின்றனர். எவ்வாறாக இலக்கியக் கருத்துருவாக்கம் நிகழ்த் தப்படுகின்றது என்பது பற்றி பொது விபரங்களைக் கண்டறிவதில் அவர்கள் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
அவர்களின் சிறப்பார்ந்த அணுகுமுறைகளைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
(1) நூலியத்தை (Text) மொழியியல் நுட்பங்களின் அடிப்படை
யில் ஆராய்தலும் விளக்குதலும்.
(2) புறவயமான மொழியியல் தரவுகளின் வழியான அணுகு"
முறைகளுக்குச் சிறப்பிடம் தருதல்.
(3) வசன இலக்கணம், நூலிய இலக்கணம் முதலியவற்றுக்கும்
மேலாக எழுநடையியலாளர் நகர்ந்து செல்லல்.
(4) நூலியத்தையும் அதற்குரிய இலக்குகளையும் முழுமையாக நோக்கி அவற்றின் ஆக்கத்துக்குரிய காரணிகளை ஆராய்ந்து στCιρέ56υ. கலைப்படைப்புகளின் சூழமைவு அழுத்தங்களிலும் எழுநடை யியலாளர் ஆழ்ந்த கவனம் செலுத்துதல் குறிப்பிடத்தக்கது. வினைச் சொற்களின் "வினைz/டுந7லை" (Transitivity) இவர்களாற் குவியமாக்கப்படும் ஒரு சிறப்பார்ந்த எண்ணக்கருவாக விளங்கு" கின்றது. குறிப்பிட்ட ஒரு வினைச் சொல்லின் இயன்றளவான கோல வீச்சுக்களைக் (Range of Patterns) கண்டறிதல் வினைப்படு நிலையின் பொருளாகின்றது.
அவர்களின் கவனத்துக்குரிய பிறிதோர் எண்ணக்கருவாக தாழ்நிலைச் சொல்லாக்கல்” (Underlexicalisation) அமைகின்றது. குறிப்பிட்ட எண்ணக்கருவை விளக்குவதற்குப் போதுமான சொல் அமைப்புக்களைப் பயன்படுத்தாமையை இது விளக்குகின்றது. பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தாது கருகலான, நொதும" லான மற்றும் செறிவு குன்றிய சொற்களைப் பயன்படுத்துதலை இது குறிப்பிடுகின்றது.
74/சபா ஜெயராசா

இவர்களால் எடுத்தாளப்படும் பிறிதொரு எண்ணக்கருவாக “தொடு நிலைப்படுத்தல்” (Colocation)விளங்குகின்றது. எதிர்பார்க்கப்படும் சொற்கள் மீண்டும், தொடர்ந்து இடம்பெறுதலை இந்த எண்ணக்கரு விளக்குகின்றது. சொல் அல்லது சொற்றொடர் எதிர்பார்ப்புக்களை அறிகை நிலையிலே தூண்டிவிடும் செயற்பாடாக இந்த ஏற்பாடு அமைகின்றது.
எழு நனடயியலை நிறுவுவதற்குரிய வேறு பல எண்ணக்கருக்" களையும் தளங்களையும் பயன்படுத்துகின்றனர். அவ்வாறான எண்ணக்கருக்களுக்குரிய ஓர் எடுத்துக்காட்டாக "ஒட்டியுறைதல்" (Cohesion) என்பதைக் குறிப்பிடலாம். வசனங்கள் என்ற வரையறைகளையும் மீறிச் சென்று பல வசனங்களையும் இணைத்து இயக்கவல்ல சொற்களின் இயல்வடிவங்களைக் கண்டறிதல் இங்கே முனைப்புப் பெறுகின்றது. ஒட்டியுறைதல் இடம்பெறா நூலியம் செம்மை வனப்புக் குன்றிய பிதிர்வுகளைக் கொண்டதாக அமைந்து விடலாம்.
இலக்கியத் திறனாய்வில் எழுநடையியல் அணுகுமுறை மாறு: பட்ட புலக்காட்சிகளைத் தோற்றுவிப்பதற்குத் துணை செய்கின்றது. திறனாய்வில் மட்டுமன்றி மொழியியல் துறையிலும் அதன் செல்வாக்குகள் இடம்பெற்று வருகின்றன. இச்சந்தர்ப்பத்தில் ஒரு சிறப்பார்ந்த கருப்பொருளை உளங்கொள்ளல் வேண்டியுள்ளது. தமிழ்மரபில் இடம்பெறும் சொற்பொருள் உரைத்தல், சொல்லெடுத்துச் சுவைகாணல், சொல் நயமுரைத்தல் முதலிய ஒற்றைப் பரிமாண நிலைகளில் "எழுநடையியல்" அடக்கப்பட முடியாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு அடக்குதல் அதன் ஆளுமையை விளங்கிக்கொள்ள முடியாத அபத்தமாகிவிடும் என்பதை உளங்கொள்ள வேண்டியுள்ளது.
எழுநடையுடன் தொடர்புடைய சிறிய அலகுகள் மற்றும் பெரிய அலகுகள் ஆகியவை அண்மைக் காலத்து ஆய்வுகள் வழியாக ஆழ்ந்து நோக்கப்படுகின்றன.
令令令
75/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 41
குறியியல்
அழகியல் நோக்கிலும், சமூக உளவியல் நோக்கிலும் குறியியல் (Semiology) விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. சமூக இருப்பும், சமூகத்தளமும், சமூகஇயக்கமும் குறியியலின் தோற்றத் துக்குரிய கட்டமைப்புக்களாக அமைகின்றன. மொழியே அறியாத சிறுவர்களை எவ்வித மொழியும் பேசாத ஒரு சூழலில் வளரவிடப்பட்டால் அவர்கள் தமக்குரிய மொழியையும், குறிகளையும் உருவாக்" கிக் கொள்வார்கள் என்பதிலிருந்து சமூக இடைவினைகளின் முக்கியத்துவம் வெளிப்படுகின்றது. சமூக இயக்கத்தின் மத்தியிலே மனித உறவுகளை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கும், சூழலைப் பகுத்தாராய்ந்து விளங்கிக்கொள்வதற்கும், உடலுழைப்பை நெறிப்படுத்திக் கொள்வதற்கும் “எண்ணக்கருவாக்கம்” (Concept Formation) என்ற செயற்பாடு இடம்பெறலாயிற்று. எண்ணக்கருவாக்கத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் சொற்களே குறியீடுகள் (Symbols) ஆகின்றன. குறியீடுகள் படிமக்குறிகள் (cons) சுட்டிகள் (Index) எண்கள் என்றவாறு தொடர்பாடலின் அனைத்துக் கூறுகளும் குறியியலின் பாற்படும்.
புறவயமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு மட்டுமன்றி அகவயமான தொடர்பாடல்களுக்கும் குறிகள்ே துணை நிற்கின்றன. இலக். கியவாக்கங்களும், கலையாக்கங்களும் குறிகள் என்ற கால்களைக் கொண்டே எழுந்து நடமாடுகின்றன. குறிகளை ஒழுங்குற அமைக்" கும் செயற்பாடு நிரற்கோடல் (Coding) அல்லது சங்கேதப்படுத்தல் என்று குறிப்பிடப்படும். இதுவே தொடர்பாடலின் அடிப்படைப் பரி மாணமாகின்றது. சமூக வாழ்க்கையின் பன்முகப்பாடு விதம்விதமான நிரற்கோடலாக்கத்தைத் தூண்டிய வண்ணமுள்ளது. குறித்த
76/JLJIT 6sguyrigiT
 

ஒரு மொழியைப் பேசும் மக்கள் கூட்டத்தினர் "அச்சில் வார்த்து எடுத்தாற் போன்று” ஒரே வார்ப்பாகச் சொற்களைக் கட்டமைப்புச் செய்து பேசுதல் இல்லை விதம்விதமாகப் பேசிக் கொள்கின்றார்கள். விதம்விதமான நிரற்கோடல்களை ஆக்கிக் கொள்வதற்குரிய உளவியல் விசைகளையும் தெரிவுகளையும் குறிகள் கொண்டுள்ளன.
நிரற்கோடற் செயல்முறைகளின் அடிப்படையாக இலக்கிய ஆக்கங்கள் அல்லது நூலியங்கள் (Texts) உருவாக்கப்படுகின்றன. நூலாசிரியர் நிரற்கோடல் ஆக்குனராகவும், வாசகர் நிரற்கோடல் குலைப்பவராகவும் (Decoder) விளங்குகின்றனர். குறிகளின் உள்ளார்ந்த தொடர்புகளின் ஒழுங்கமைப்பினால் நூலியம் ஆக்கம் பெறு கின்றது. இந்த ஒழுங்கமைப்பு பல்வேறு வியாக்கியானங்களைத் தர வல்லது. “குறிகளின் விளையாட்டால்"இலக்கிய ஆக்கங்கள் இடம்" பெறுகின்றன. அந்த விளையாட்டு பல்வேறு ஆக்கங்களைத் தரவல்" லன. இந்நிலையில் "இலக்கியத்தை ஆக்கியவர் இறந்து விடுகின்றார்” என்ற கருத்தைக் கட்டமைப்புக் குலைப்புக் கோட்பாடு (Deconstruction) முன்மொழிகின்றது. ஒட்டுச்சித்திரங்களிலே பல்வேறு துண்டுகளும் துணிக்கைகளும் ஒட்டப்படுதல் போன்று பல்வேறு குறிகள் ஒட்டப்பட்டு, நூலியங்கள் ஆக்கப்படுகின்றன. இந்த "ஒட்டு” பன்மை விளக்கங்களுக்கு இடமளிக்கின்றது.
மொழியில் இடம்பெறும் குறிகளின் பொருள் ஒரு குறி மற்றைய குறியுடன் கொண்ட தொடர்பினால் ஆக்கம் பெறுகின்றது. அகராதி. யில் அல்லது சொல்லியத்தில் ஒரு சொல்லின் பொருளை நாம் தேடும் பொழுது அதற்குப் பதிலாக இன்னொரு சொல்லையே (குறியை யே) தேடுகின்றோம். அதாவது, குறிகள் வேறு பிரித்தறியும் செயற்" பாட்டைப் புரிந்து கருத்துக் கையளிப்பை நிகழ்த்துகின்றன. ஆண்பெண்ணல்ல என்பதனால் ஆண் என்பதன் பொருள் உணர்த்தப்படுகின்றது. குறிகளின் ஒழுங்கமைப்பு "வேறுபாடுகளின் உருவாக்கம்" (Producing Differences) என்றும் குறிப்பிடப்படும். சமூக முரண்பாடுகள் சமூகம் பற்றிய விளக்கத்தை அல்லது புலக்காட்சியைத் தெளிவுபடுத்துகின்றது. அவ்வாறே குறிகளின் முரண்பாட்டாக்கங்கள் கருத்தமைவைக் கையளிக்கின்றன.
மேலும், விளக்குவதாயின், குறி என்பது கருத்துக் கையளிப்பின் ஒர் அலகாக அமைந்துள்ளது. அந்த அலகு இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. ஒன்று அதன் பெளதிக பரிமாணம். அதாவது, அதன் ஒலி வடிவம் அல்லது வரிவடிவம் பெளதிகப் பரிமாணமா
77/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 42
கின்றது. இந்நிலையில் அது குறிப்பான் (Signifier) என்றும் அழைக்கப்படும். மற்றையது அதன் கருத்துக் கையளிப்புப் பரிமா" ணம் அது குறிப்பீடு (Signified) என்றும் அழைக்கப்படும். பின்லாந்தைச் சேர்ந்த மொழியியலாளராகிய சசூர் இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டார். அதாவது, ஒரு மொழிச் செயலமைப்பில் குறிகள் உள்ளடங்கியிருக்கும் பொழுதுதான் குறிகள் பொருளுடையதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார். இந்நிலை" யில் மொழி என்ற செயலமைப்பை உருவாக்கிய சமூக இருப்பும், சமூக உளவியற் பாங்கும் குறிகளிலே செல்வாக்குச் செலுத்துதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
தெரிதா என்பாரும் போத்திரியார் என்பாரும் குறிகளின் நெகிழ்ச்சிப்பாங்கான திரவத்தன்மையினையும், இயக்கப்பண்பையும் தமது ஆய்வுகளிலே தெளிவுபடுத்தியுள்ளனர். குறிகள் பற்றிய பின்கட்டமைப்புவாதிகள் மேலும் ஒரு கருத்தை முன்வைத்துள்ளனர். மொழியிலிருந்து குறிகள் தமக்குரிய கருத்தாக்கத்தைப் பெறுவதில்" லை என்றும், உரைவினைகளில் (Discourses) இருந்தும் சூழமைவி லிருந்துமே குறிகள் கருத்தாக்கத்தை நிகழ்த்துகின்றன என்பதும் அவர்களுடைய வலியுறுத்தல்களாக அமைகின்றன. இக்கருத்து பூக்கோவினால் ஆழவலியுறுத்தப்பட்டது.
கல்வியியல் மற்றும் மொழியியல் நோக்கில் குறியியல் தொடர்பான வகைப்பாட்டு ஆய்வுகள் முன்வைக்கப்பட்டன. அவை:
* egypóleo).55FITi (gögóluluab (Cognitive Semiology) ce fluofileo)Gvás (gögóluíluGö (Formalist Semiology)
d 65/TLil JITL-sp (515uiuas (Communication Semilogy) அறிகைசார் குறியியல்
அறிகை சார் குறியியல் என்பது எண்ணக் கருவாக்கச் செயல்" முறையுடன் இணைந்தது. அதாவது, குறியென்பது ஒன்றுக்குப் பதி லீடாக நிற்கும் இயல்பால் பொருள் வெளிப்படுத்தப்படுகின்றது. அதாவது, பதிலீடாக நின்று அறிவுக்கையளிப்பை அது எவ்வாறு மேற்கொள்கின்றது என்பது இத்துறையில் ஆராயப்படுகின்றது.
சிறுவயதிலிருந்தே சமூக இடைவினைகளை ஏற்படுத்தும் பொழுது குறிகளை விளங்கிக்கொள்ளும் திறன்களையும் அவற்றை இயக்கிக் கொள்ளும் திறன்களையும் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்
78/சபா ஜெயராசா

கின்றனர். தொடர்ந்தும், படிப்படியாகவும் குறிகளின் பிரபஞ்சத்தில் வாழப் பழகிக் கொள்கின்றனர். அல்லது வாழ்வதற்குப் பழக்கப்படுத்தப்படுகின்றனர். வாழ்வதற்குப் பழக்கப்படுத்தும் செயல் கல்வி யால் முன்னெடுக்கப்படுகின்றது. நியம நிலைக்குறியியல்
குறி என்பது தன்னையன்றி பிற ஏதோ ஒரு பொருளைக் குறிப்பிட்டு உணர்த்தவல்லது. புலன்களால் அறியப்படத்தக்கது. சமூகத்தின் உழைப்பினால் குறிகள் வடிவமைக்கப்படுகின்றன. அது அசைந்து செல்லும் வாகனத்துக்கு ஒப்பானது. அது வாகனமாகவும் வரன்முறையாகவும் செயற்படுதலை நியம நிலைக்குறியியல் ஆய்வுக்கு உட்படுத்துகின்றது. இதன் அடிப்படையிலேதான் இலக்" கண நூல்களும், தருக்க நூல்களும் எழுச்சி பெற்றன. குறிகளை வகைப்படுத்தலும், பகுத்தாரய்தலும் நியமநிலைக்குறியியல் ஆய்வில் இடம்பெறத் தொடங்கின. தமிழ் மரடரில் இதன் வளர்ச்சியை முதலிலே தொல்காப்டரியத்திலே காணமுடியும். உரையாசிரியர்கள் குறிகளின் நடைமுறைப் பயன்களைக் கண்டறியலாயினர்.
தொடர்பாடற் குறியியல்
சமூக இயக்கத்திலிருந்து பிரிக்கப்பட முடியாததாயிருக்கும் தொடர்பாடல் பரிமாணங்கள் வழியாகக் குறிகளை ஆய்வுக்கு உட்படுத் துதல் கடந்த நூற்றாண்டிலிருந்து தீவிர வளர்ச்சிபெறும் அறிகைத் துறையாக முகிழ்த்துள்ளது. எழுத்து மொழிசாராத குறிகள் வாயி லான கருத்துக்கையளிப்பு, உடற்குறிகள் வழியாக நிகழ்த்தப்படும் கருத்துக்கையளிப்பு, கருத்துக்கையளிப்பில் நிகழும் இடைவெளிகள் குறுக்கீடுகள் முதலியவை இத்துறையில் ஆய்வுப் பொருள்களாக்கப்பட்டுள்ளன.
உளவியல் நோக்கிலே குறிகளை ஆராய்ந்தவர்களுள் உளப்பகுப்பு உளவியலாளர் முதற்கண் குறிப்பிடத்தக்கவர்கள். மனிதரின் ஆழ்மனம் அல்லது நனவிலி மனத்தைக் கனவுக்குறிகள் வாயிலாக அறிந்துகொள்ள முடியும் என்ற கருத்தை சிக்மன்ட் பிராய்டு முன்மொழிந்தார். தொன்மங்கள் (Myths) கூட்டு நனவிலியின் குறிகளாக அமைவதாக கார்ல் யுங் குறிப்பிட்டார். இத்துறையில் மேலும் ஆய்வுகளை மேற்கொண்ட லகான் என்பார் குறிக்கும் அது குறிக்கும் பொருளுக்குமிடையேயுள்ள தொடர்பு நேரானது அன்று எனவும்
79/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 43
அந்தத் தொடர்பு நனவிலி மனத்தினால் தீர்மானிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மெய்யியலிற் பயன்கொள்வாதியாக விளங்கும் பியர்ஸ் (18321914) கடந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில் குறிகள் பற்றிய கருத்துக்களைத் தமது தளத்தில் நின்று விளக்கலானார். கருத்துக் கையளிப்பு என்பது குறி, வியாக்கியானம், விடயம் என்ற மூன்று பரிமாணங்களுக்கும் இடையில் நிகழும் சிக்கலான தொடர்புகளைக் கொண்டது என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு குறியும் அவற்றைப் பயன்படுத்துவோரிடையே வேறுவேறு அர்த்தங்களை உருவாக்கி விடும் பண்புடையது. சமூக இருப்பின் வேறுபாடுகள் பொருள் கோடலிலும் வேறுபாடுகளைத் தோற்றுவிக்கின்றன.
குறியியலில் பெருமளவு ஆய்வுகளை மேற்கொண்டவர்களுள் சசூர் முக்கியமானவர். குறியில் உள்ளடங்கும் குறிப்பான் மற்றும் குறிப்பீடு ஆகியவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகள் அவரின் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன. குறிப்பான் என்பது புலன்களால் அறியப்படத்தக்க வெளிப்படையான வடிவம் குறிப்பீடு என்பது ஒவ்வொருவரது உள்ளத்திலே தோற்றுவிக்கப்படும் கருத்தாக்கம். ஒரே சமூக இருப்பைக் கொண்ட ஒரே மொழியைப் பேசும் மக்கள் குறிப்பானுக்கு ஒரே கருத்துருவாக்கம் செய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் மொழி வழியான கருத்துறவாடல் நிகழ்த்தப்படுகின்றது. சசூரின் இந்தக் கருத்தை உளப்பகுப்பு வாதிகளும், பின்னவீனத்துவ வாதிகளும் நிராகரிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றனர்.
நவீன தொடர்பாடலின் வளர்ச்சிப் பின்புலத்தில் நிரற்கோடல் முறைமை விரிவாக நோக்கப்படுகின்றது. நிரற்கோடல் என்பது தொடர்பாடல் நிலைப்பட்ட சமூகப் பணியை மேற்கொள்கின்றது. அது பெறுவோரிடத்துக் கருத்தமைவை மேற்கொள்வதற்கு உதவுகின்" றது. நிரற்கோடல்கள் அவற்றுக்குரிய வாய்க்கால் (Channel) வழி வழியாகக் கொண்டு செல்லப்பட்டு அச்செய்தியைப் பெறுவோரி டத்து வழங்கப்படுகின்றது. அடுக்கு நிலையையும், தொடரிணைப்பு நிலையும் கொண்டதாக நிரற்கோடல் அமைப்பாக்கம் பெறும். அடுக்கு என்பது குறிகளைக் கொண்ட களஞ்சியமாகும். எழுத்து மொழியின் அடுக்காக எழுத்துத் தொகுதி அல்லது நெடுங்கணக்கு அமையும். கணித மொழியின் அடுக்காக எண்கள் அமையும். ஒவிய மொழியின் அடுக்காக வண்ணங்கள் அமையும் ஓர் அடுக்கில் உள்ள குறிகளுக்குப் பொதுவான பண்புகளும் காணப்படும். அடுக்கில்
80/சபா ஜெயராசா

உள்ள குறிகளை ஒருங்கிணைத்து முழுமையாக்குதல் ஒருங்கி ணைப்பாகும். எடுத்துக்காட்டாக, அடுக்கில் உள்ள எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்து சொல்லாக்கம் செய்தல் “தொடரிணைப்பு" ஆகின்றது.
நிரற் கோடலமைப்பு தொடர்மியமாக (Analogue) அமையலாம் அல்லது நுண்பிரிகைகளாக (Digital) அமையலாம். நூலியத்தை விளங்கிக் கொள்வதற்கு இந்த இரண்டு வகையான அணுகுமுறை" களும் துணை நிற்கின்றன. தொடர்மிய நிரற்கோடல் ஒரே அலகிடல் முறையால் தெளிவாகப் பிரித்தறிய முடியாததாக இருக்கும். வேறு பட்ட அளவுப் பாய்ச்சலையும் தொடர்ச்சியான பண்பையும் அது கொண்டிருக்கும். தொடர்ச்சியாக ஒருவர் சிரித்துக்கொண்டிருத்தல் தொடர்மியப்பண்பை வெளிப்படுத்தும். மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் பிரித்தறியக் கூடியது நுண்பிரிவு நிரற்கோடலாக்கம் எனப்படும்.
தமிழர்களது அழகியல் அறிகையில் குறிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. உடலுழைப்பிலே கைகள்தான் ஒப்பீட்டளவிற் கூடுதலான பயன்பாட்டைக் கொண்டுள்ளன. இதனால், தொடர்பாடலிலும் கைகள் சார்ந்த குறியீடுகளே மேலோங்கியிருந்தன. குறியைக் “கை” என்று குறிக்கும் சொல் பயன்படுத்தப்பட்டது. “எழிற்கை”, “தொழிற்கை" முதலிய சொற்கள் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளன. கையின் மேலாண்மையை வலியுறுத்தியே சடங்குகளிலே "காப்பு" இடம்பெறலாயிற்று. கைகளின் உழைப்புச் செயல்முறையை அடியொற்றியே ஏனைய அழகியல் தொடர்பாடற் குறிகள் வளர்ச்சி பெற்றன. "கைவழி நயனம் செல்ல" என்ற தொடர் இங்கு இணைத்து நோக்குதற்குரியது.
உடற்குறிகளை நிரற்கோடற்படுத்திக் கூத்துக்களையும், ஒலிக்" குறிகளை ஒன்றிணைத்து “குரவை"யும் தமிழர் அழகியல் அறிகையில் உருவாக்கம் பெற்றன. குரவை என்பது தூய இசை இதிலிருந்தே பண் அல்லது இராகம் பிறப்பாக்கம் பெற்றது. கட்டுப்பாடுகளுடன் ஒலிக்குறிகளை நிரற்கோடலாக்கம் செய்யும் வடிவமாக “குரவை" அமைந்தது. இந்தச் செயற்பாடே இராகங்களின் கட்டுமானத்துக்கும் அடைப்படையாகின்றது. விலங்குகளை விரட்டக்குரல் எழுப்பல், கால்நடைக்காப்பிற் குரல் எழுப்பல், இல்லப்பராமரிப்பில் குரல் எழுப்பல் என்றவாறான செயற்பாடுகளை அடியொற்றியே "ஆச்சியர்க் குரவை" நிரற்கோடலாக்கம் இடம்பெற்றது.
81/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 44
மனித உடற்குறிகளை மாதிரிகையாகக் கொண்டு தமிழர் வாழ்" விடம் அமைக்கப்படலாயிற்று. வாழ்விடம் கட்டுதலைத் தொடக்கும் நிகழ்ச்சி"கால்”கோள் என்ற நிரற்கோடலாற் புலப்பட்டது. வாழ்விட அடிப்பாகம் கால் எனவும் கூரை தலை எனவும், நடுப்பகுதி இடையெனவும் குறிப்பிடப்பட்டது. நடுப்பகுதியின் கட்டுமானம், "இடைவரிச்சு” எனவும் "இடைக்கட்டு” எனவும் அழைக்கப்பட்டது. நடுக்கூரை ‘தலைப்பாவுகை” எனப்பட்டது.
மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும் பொழுது, தமிழர் தம் குறியமைப்பில் உடலும் உடற்றொழிற்பாடுகளும் ஆதி நிலையில் முக்கியத்துவம் பெற்றிருந்தமையைத் தரிசிக்க முடிகிறது. உடற்றொழிற்பாடுகள் பெளதிகநிலை முரண்பாடுகளில் இருந்தும் சமூகநிலை முரண்பாடுகளிலிருந்தும் தோற்றம் பெறுகின்றன. முரண்பாடுகள் உடலியக்கத்தைத் தொழிற்பட வைக்கும் பொழுது அவற்றை அடியொற்றி எழும் குறிகள் மற்றைய குறியீடுகளுக்குரிய மறுதலிப்பாக எழுச்சிபெறுகின்றன. எடுத்துக்காட்டாக, "போ” என்ற குறி “வா” என்பதற்கு முரணாக எழுகின்றது. ஒழுங்கற்ற ஒலிக்கோப்பின் எதிர்க்குறியாகவே குரவையும், பண்ணும் இராகங்களும் தோற்றம் பெற்றன. ஒரு குறி மற்றையதின் பதிலாகவும் அமைகின்றது.
இவ்வாறாக, குறிகளின் ஆக்கத்தை அடியொற்றி, மொழியும், அழகியலும், பண்பாடும் வளர்ச்சியடையலாயின. குறிகளின் மானிடத்தளங்களை ஆராய்தல் மேலும் விளக்கங்களுக்கு இட்டுச் செல்லும்.
கற்றல் - கற்பித்தல் என்ற செயற்பாடுகள் குறிகளையும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட நிரற் கோடல்களையும் கொண்டே நிகழ்த்தப்படுகின்றன. இந்நிலையிற் குறியியல் என்பது கல்வியியலில் விதந்து ஆராயப்படும் துறையாக மேலெழுந்துள்ளது. குறிகள் மற்றும் நிரற்கோடல் பற்றிய விளக்கம் கற்பித்தலை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்குத்துணை செய்யும். குறிகள் பற்றிய அடிப்படை விளக்கம் மாணவர்களுக்கும் இன்றியமையாதது. ஒவ்வொரு பாடத்துறை" யிலும் தெளிவான எண்ணக்கருவாக்கத்தை வளர்த்துக் கொள்ளல் குறிகள் பற்றிய விளக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளமை தொடர்ந்து நினைவு கொள்ளத்தக்கது.
அழகியல் சார்ந்த தொடர்பாடல் குறிகளின்றிச் சாத்தியமற்றதாகிவிடும் அழகியல் நிலைப்பட்ட தொடர்பாடலும், குறிகளும் சமூக இருப்பின் விளைபொருள்களாகவே மேலெழுகின்றன.
82/சபா ஜெயராசா

குறிகள் பற்றிய ஆய்வு திறனாய்வில் முக்கியத்துவம் பெற்றுள்ளமை போன்று நவீன உளவியலிலும் அதிக முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. வண்குறிகள், மென்குறிகள் என்ற பாகுபாடு அண்மைக்காலத்து ஆய்வுகளிலே குறிப்பிடப்படுகின்றது. எழுதில் இனங்காணப்பட முடியாத மனித வெளிப்பாடுகள் வன்குறிகளாகக் கொள்ளப்படுகின்றன. உளவியலாளரும் திறனாய்வாளரும் வன்குறிகளில் ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தி வருகின்றனர்.
ぐ>ぐ>ぐ>
83/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 45
பின்காலனியத் திறனாய்வு
1990ஆம் ஆண்டைத் தொடர்ந்து வளர்ச்சியுறத் தொடங்கிய திற" னாய்வுக் கோட்பாடாக பின்காலனியம் நிமிர்ந்தெழுந்துள்ளது. பிரித்" தானிய ஏகாதிபத்தியம் காலனித்துவ நாடுகளிலே பன்முகமான பண்பாட்டுத் தாக்கங்களை ஏற்படுத்தியது. மொழி, கலை, இலக்கி யங்கள், சிந்தனை முறைமை, அரசியல்நோக்கு, கல்வி முறைமை, மனித உளப்பாங்குகள், நடை,உடை,பாவனை என்ற பலதுறைகளில் அவற்றின் செல்வாக்குகள் ஊடுருவியுள்ளன. இந்நிலையில் தேசிய அடையாளங்கள், இனத்துவ இனங்காணல்கள், பால்நிலை, அகவய எழுச்சி முதலியவை அறிபொருட்களாக மேலெழுந்துள்ளன.
மேலையுலகம் அறிமுகப்படுத்திய நவீனத்துவப் பரிமாணங்களும், மேலைப்புல அறிவொளிப் பரிமாணங்களும், கட்டுமானக் குலைப்புக்கும், தகர்ப்புக்கும் உள்ளாக்கப்படுகின்றன. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஒரங்கட்டப்பட்டவை மீள்எழுச்சி கொள்ளத் தொடங்கியுள்ளன. காலனித்துவம் வழங்கிய அல்லது உருவாக்கிய பெரும் உரையங்கள் அல்லது பெருங்கதையாடல்களின் தகர்ப்பை அடியொற்றி பின்காலனியக் கோட்பாடு எழுச்சிகொள்ளத் தொடங்கியுள்ளது.
அகிலமனிதன், அகிலவரலாறு முதலியவை தள்ளுபடி செய்யப்பட்டு அவற்றின் இடங்களை உள்ளூர் அடையாளங்கள் கைப்பற்றத் தொடங்கியுள்ளன. இவ்வாறான புதிய நிலவரங்களை அடியொற்றிய புலக்காட்சியைப் பின்காலனிய இலக்கியங்களும், திறனாய்வும் உரையாடல்களும் முன்னெடுத்து வருகின்றன.
84/சபா ஜெயராசா
 

ஏட்வேட்செட், ஹோமிபாபா,காயரிஇஸ்பிவக், பில் அஸ்கொரப் மற்றும் செல்டென் முதலியோர் பின்காலனியத் திறனாய்வைப் பலகோணங்களில் அணுகி விபரித்துள்ளனர். ஐரோப்பாவை நடுநாயகப்படுத்தி உருவாக்கப்பட்ட பெருங் கருத்துக்கள் தொடர்பான தகர்ப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருதல் தனித்துவமான தரிசனமாகக் காணப்படுகின்றது. கீழை உலகின் இலக்கியங்களும் வளமான கருத்துக்களும் ஐரோப்பிய மையப்பாட்டில் ஒதுக்கி வைக்கப்பட்ட தாழ்நிலையில் இருந்து வந்துள்ளன. அவர்களும் அவர்களின் ஆக்கங்களும் அடையாளம் காணப்படாத அநாமதேய நிலைக்கு ஐரோப்பியர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டன. இவை பற்றிய உணர்வு பூர்வமான கருத்தாடல்களைப் பின்காலனியத் திறனாய்வு முன்னெடுத்து வருகின்றது.
மேலைப்புல எழுத்தாளர்களும், கவிஞர்களும் உருவாக்கிய ஆக்கங்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகளைத் தாழ்ந்த நிலையில் நோக்கி யுள்ளமையும் பகுப்பாய்வின் வழியாக வெளிப்படுத்தப்பட்டு வரு கின்றன. யீட்சின் கவிதைகளே இதற்குச் சான்றுகளாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. (Sailing to Byzantoum -1927) அதாவது, பின்காலனியத் திறனாய்வு நோக்கிலே யீட்ஸ் மீள்வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
காலனித்துவ ஆட்சிக்காலத்து ஆசிரிய ஆபிரிக்கநாட்டு எழுத்தாளர்களிடத்து இருமை நிலைகள் காணப்படுதலும் பின் காலனியத் திறனாய்வாளரினால் வெளிப்படுத்தப்படுகின்றது. ஒரு புறம் தமது அடையாளங்களைக் காட்ட முயலுதலும், மறுபுறம் ஐரோப்பிய மேலோங்கலோடு இணைந்து நிற்றலும் இருமைக் கோலங்களாகின்றன. நைஜீரிய நாவலாசிரியர்களிடத்து இப்பண்புகள் காணப்படுதல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை இரட்டை நிலைப்போக்கு என பின்காலனிய திறனாய்வாளர் குறிப்பிடுவர்.
காலனித்துவ காலத்தில் எழுத்தாக்கங்களை மேற்கொண்ட கலாயோகி ஆனந்த குமாரசாமி அவர்களின் எழுத்தாக்கங்களிலும் மேற்குறிப்பிட்ட இருமை நிலைகளைக் காணமுடியும். அவர் எழுதிய "சிவநடனம்" என்ற நூல் ஒருபுறத்தே சைவசமய அடையாளத்தை வெளிப்படுத்தியது. மறுபுறம் ஐரோப்பாவிலே பெரும் எழுச்சி கொண்ட “இருப்பியம்" தொடர்பான நீண்ட ஆக்கத்தினையும் அவர் அந்த நூலிலே இணைத்திருத்தலும் குறிப்பிடத்தக்கது.
85/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 46
காலனித்துவத்துக்கு உட்பட்ட நாடுகளின் எழுத்தாக்கங்களில் மூன்று தளங்களைக் கொண்ட படிமலர்ச்சியைக் காணமுடியும். அவை:
* முதலாவது படிநிலை ஐரோப்பிய எழுத்தாக்கங்களை எது" வித மாற்றங்களுமின்றி அவ்வாறே மொழிபெயர்த்து எழுதியமை.
* இரண்டாவதாக, அவற்றைத் தழுவி குறித்த உள்ளூர்ப் பண்பாடுகளுக்கு ஏற்றவாறு ஆக்கங்களை மேற்கொள்ளல்.
* மூன்றாவதாக, அவற்றிலிருந்து விடுபட்டு சுயாதீனமான ஆக்கங்களை மேற்கொள்ளல். சிறுகதை, நாவல் போன்ற துறைகளிலே இவர்கள் திறமைசாலிகளாகி விடுகின்றனர்.
மேற்கூறியவற்றுடன் தொடர்புடைய குறுக்கு நிலைப் பண்பாட்டு இடைவினைகளை இனங்காட்டுதலும் பின் காலனிய திறனாய்வில் முன்னெடுக்கப்படுகின்றன.
பின்காலனியத்திலே தோற்றம்பெற்ற ஆங்கிலநாட்டு எழுத்” தாளர்கள் இணைப்பு, பன்முகப்பாங்கு, வித்தியாசமான அணுகு" முறைகள் முதலியவற்றைப் புனையலானார்கள். பாலியல் அரசியல் (Sexual Politics) அவர்களது எழுத்தாக்கங்கள் சிலவற்றில் மேலோங்கத் தொடங்கின. மூடப்பட்டிருந்த பெண்களின் ஆளுமை வீச்சுகள் எழுத்தாக்கங்கள் வழியாக வெளிக்கொண்டு வரப்படலாயின. பால்நிலை, மார்க்சியநோக்கு, பாலியலின் புதிய வடிவங்கள் முதலியவை எழுத்தாக்கங்களிலே தெறித்தெழத் தொடங்கின.
தொகுத்து நோக்குகையில் பின்வரும் சிறப்புப் பண்புகளைப் பின்பாலனியத் திறனாய்வுகளிலே கண்டுகொள்ள முடியும்.
(1) மேலைப்புல பெரும் இலக்கியங்களால் உருவாக்கம் செய்யப்பட்ட "அகிலப் பண்டரியலை” (Universalism) நிராகரித்தல். (2) அகிலப் பண்பியலின் மட்டுப்பாடுகளை வெளிப்படுத்துதல். (3) ஆசிய ஆபிரிக்க நாடுகளின் பல்லின தனித்துவ அடையா" ளங்கள் வெளிப்படுத்தப்படாமையைச் சுட்டிக்காட்டுதல்.
(4) ஓரங்கட்டப்பட்ட பண்பாட்டுப் பிரதிநிதித்துவத்தைப்
பரிசீலித்தல்.
86/சபா ஜெயராசா

(5) காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் தொடர்பான இயல்புகளை வெளிப்படுத்தாது மெளனமாகியும் ஒதுங்கியும் எவ்வாறு இலக்கிய ஆக்கங்கள் நின்றன என்பதைக் கண்டறிதல்.
(6) பண்பாட்டுப் பல்லினப்பாடுகள் திரிபுபடுத்தப்படாது எவ் வாறு புனைந்துரைக்கப்படுகின்றன என்பதைத் திறனாய்வு செய்தல்.
(7) ஒரேநேரத்தில் அல்லது ஏக காலத்தில் தனிமனிதரும், குழுக்களும் பணி பாட்டுப் பன்முகப்பாடுகளுக்குள் அடங்கியிருக்கும் பன்முகவியலை (Polyvalency) புளகாங்கித்து வரவேற்றல்.
(8) எல்லைப்படுத்தல் நிலை, பண்மைநிலை மற்றையதெனக் குறிக்க்ப்பட்ட "மற்றைய நிலை” (Otherness) முதலியவற்றில் உள்ளடங்கியிருக்கும் ஆற்றல்களையும் விசைகளையும் கண்டறிந்து நேர்முக வெளிப்பாடுகளுக்குள் கொண்டு வருதல். உலக வரலாற்றில் மார்க்சியத்துக்குப் பின்னர் தோற்றம்பெற்ற திறனாய்வுக் கோட்பாடுகளில் அதன் செல்வாக்குகள் நேரடியாக" வோ, மறைமுகமாகவோ ஊடுருவி நிற்றலைக் காணமுடியும். காலனித்துவ காலத்தில் ஒடுக்கப்பட்டவற்றை அல்லது மறைக்கப்பட்டவற்றை வெளிக்கொண்டுவரும் பின்காலனியத் திறனாய்வு உந்தலில் மார்க்சியத்தின் நேரடியான செல்வாக்கின் உட்கவிப்பைக் காணமுடியும். பின்காலனியத் திறனாய்வாளரால் எடுத்தாளப்படும் டி.எச்.லோரன்ஸ் அவர்களது எழுத்தாக்கங்களிலும் மார்க்சியத்தின் கவிப்பைக் காணமுடியும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விளைவுகளும், காலனித்துவ நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் சிறப்பாக இங்கிலாந்தில் வாழ்வோரது எழுத்தாக்கங்களும், அவர்களிடத்துக் காணப்படும் பண்பாட்டுக் கோலங்களும், இருமைத் தன்மையான இயல்புகளும் பின்காலனியத் திறனாய்வுச் சிந்தனையாக்கங்களுக்குப் பின்விசைகளாக அமைந்துள்ளமையைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
காலனித்துவ காலத்தில் ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலிருந்த வளங்கள் காலனித்துவ ஆட்சியாளரால் பெரும் பறிப்புக்கு
87/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 47
உள்ளாக்கப்பட்டன. அதன் விளைவாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிறப்பாக இங்கிலாந்து, பிரான்சு முதலாம் நாடுகள் செல்வச் செழிப்பை அனுபவிக்கலாயின. அந்தச் செழிப்பு அந்நாடுகளின் சிந்தனை முறைமைகளிலும் இலக்கிய ஆக்கங்களிலும் செல்வாக்குகளை ஏற்படுத்தின. அவர்களின் மேலாதிக்க உளப்பாங்கு கல்வியிலும் இலக்கியங்களிலும் ஏதோ விதமாக பிரதிபலித்து நின்றன. பின்காலனிய இலக்கியங்களில் அவ்வாறான புலக்காட்சிகளில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.
உலக மயமாக்கல் தீவிரமாக வளர்ந்துவரும் சமகாலச் சூழமை" வில் பின்காலனியத் திறனாய்வை மேலும் விரிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. உலகமயமாக்கலையும், நவீன நுகர்ச்சிச் சமூ" கத்தையும், பின்னைய முதலாளியத்தையும், பின்காலனியத் திற" னாய்வாளர் எவ்வாறு நோக்குகின்றனர் என்பது முக்கியத்துவம் பெறத்தொடங்கியுள்ளது.
பின்காலனியம் தனித்துவமான ஒரு திறனாய்வுத் துறையாக வளர்ச்சி பெற்றாலும், அதன் மீது மார்க்சியம் மற்றும் பின்னவீனத் துவம் ஆகியவற்றின் செல்வாக்குகள் இழையோடியிருத்தலைத் தரிசிக்க முடிகிறது.
令令令
88/சபா ஜெயராசா

புதிய வரலாற்றியலும் 4. பண்பாட்டுப் பொருண்மிய வாதமும்
"புதிய வரலாற்றியல்” (New Historicism) என்பது ஐக்கியஅமெரிக்காவிலே தோற்றம்பெற்ற அரசியற் கோட்பாடாகும். அமெரிக்கத் திறனாய்வாளராகிய ஸ்ரீபன் கிறீன்பிலட் அவர்கள் 1980ஆம் ஆண்டில் எழுதிய நூல்களிலும் கட்டுரைகளிலும் அக்கருத்தியல் வெளியரும்பத் தொடங்கியது. அதற்கு முன்னதாக 1970ஆம் ஆண்டில் ஜே.டபிள்யு லிவர் எழுதிய கட்டுரைகளிலும் அதன் மலர்ச்சி ஏற்படலாயிற்று. புதிய வரலாற்றியலுக்கு இணைகரமாகப் பிரித்தானி யாவில் "பண்பாட்டு பொருண்மிய வாதம்" (Culturalmaterialism) எழுச்சி பெற்றது. திறனாய்வாளர் கிரெகாம் கோல்டர்னெஸ் அதனை அறிமுகம் செய்தார்.
புதிய வரலாற்றியல் வாசிப்பு முறையிலே மாறுபட்ட அணுகு" முறையை முன்வைத்துள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதியில் உரு” வாக்கம் பெற்ற இலக்கியங்களையும், இலக்கியமல்லா எழுத்தாக்கங்களையும் "சமதரத்திலான" வாசிப்புக்கு உட்படுத்த வேண்டுமென்ற கருத்து அந்த அணுகுமுறையால் முன்வைக்கப்பட்டது. இலக்கிய எழுத்தாக்கங்களுக்கு முன்னுரிமை கொடுத்தலும் சிறப்பித்து நோக்கு" தலும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இலக்கிய எழுத்தாக்கங்கள் மற்றும் இலக்கியம் சாரா எழுத்தாக்" கங்கள் தொடர்பான தவறான கண்ணோட்டம் இந்நாட்டிலும் காணப்படுகின்றது. அதாவது, ஒருவருடைய ஆற்றல் வெளிப்பாட்" டுக்குச் சான்றாக இலக்கிய ஆக்கங்கள் மட்டுமே என்று கருதப்பட்ட" மையால் விஞ்ஞானக் கல்வியிலே தீவிர ஈடுபாடு காட்டியோரும் செய்யுள்/ கவிதை எழுதும் முயற்சியை முன்னெடுத்தனர்.
89/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 48
"ஆக்க இலக்கியம் படைப்பவர்களே சிறப்புக் கொண்டவர்கள்திறனாய்வாளர் அவர்களுக்குப் பின்னர் வரவேண்டும்" என்றவாறு “அறியாத்தனத்தால்" மேடைகளிலே பேசித் திரிவோரும் உள்ளனர். மேலும், இலக்கியம் சாரா வாசிப்பு உலகம் முழுவதும் அதிகரித்துச் செல்வதையும் அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
இலக்கிய எழுத்தாக்கங்களுக்கும் இலக்கியம் சாரா எழுத்தாக்" கங்களுக்கும் சமகணிப்புக் கொடுக்கப்படல் வேண்டுமென புதிய வரலாற்றியல் தெளிவுபட விளக்குகின்றது. நூலியத்தின் வரலாற்றுப் பண்பும், வரலாற்றின்நூலியப்பண்பும் திறனாய்வாளர் லூயிமொன்றோஸ் அவர்களால் இத்தொடர்பிலே விளக்கப்பட்டது. இாண்டுக்கு" மிடையே இணைந்த விருப்புக் காட்டப்படல் வேண்டும் என்பதே அதன் உட்பொருளாயிற்று.
ஐரோப்பிய காலனித்துவ விரிவாக்கம் நிகழ்ந்து கொண்டிருந்த வேளை அங்குதோற்றம் பெற்ற இலக்கியப் படைப்புக்களிலும் இலக்கியம் சாராப் படைப்புக்களிலும் காலனித்துவ உளப்பாங்கு சமாந்தரமாக ஊடுருவி நின்றது. அவ்வாறே, இந்திய சுதந்திரப் போராட்ட காலத்திலே தோற்றம்பெற்ற இலக்கியப் படைப்புக்களிலும் விடுதலை உணர்வுகள் சமாந்தரமாக இடம்பெற்றமை குறிப்பிடத்" தக்கது. இத்தகைய இணக்கப்பாடு “இணைந்த நூலியம்" (Cotext) என்ற எண்ணக்கருவால் புலப்படுத்தப்படும்.
பழைய வரலாற்றியல் இலக்கியப் படைப்புக்களுக்கும் இலக்கி யம் சாராப் படைப்புக்களுக்கும் சமகணிப்புக் கொடுக்கவில்லை. ஆனால், புதியவரலாற்றியல் திறனாய்வில் சமகணிப்புக் கொடுக்கப்பட்டது. புதிய வரலாற்றியல் சிந்தனை தெரிதா முன்மொழிந்த நூலி யம் பற்றிய கருத்தை ஏற்றுக்கொள்கின்றது. நூலியத்துக்கு அப்பாற்" பட்டது எதுவுமில்லை அனைத்தும் நூலியம் என்பதே அந்தக் கருத்” தாகும். நூலியம் கருத்தியலுடன் இணைந்தது. அதேவேளை குறித்த காலத்துக்குரிய உரைவினைப்பாட்டுடன் தொடர்புடையது. அத்" துடன், மொழியால் ஆக்கம் செய்யப்பட்டது. மேற்குறித்த மூன்று வழிச் செயல்முறைகளால் நூலிய ஆக்கம் மேலெழுகின்றது. அதற்" குரிய மொழிப்பின்னலமைப்பு வேறுவேறுபட்ட பொருள் கோடல்" களுக்கு இடமளித்த வண்ணமிருக்கும்.
புதிய வரலாற்றியல் எதிர் நிறுவனப்பாடு (Anti Establishment) கொண்டது. தனியாள் சுதந்திரத்துக்கு, இடமளிப்பதுடன் அனைத்து விதமான விலகல்களுக்கும் வேறுபாடுகளுக்கும் இடமளிக்கின்றது.
90/சபா ஜெயராசா

அரச அதிகாரத்தின் ஊடுருவலைத் துல்லியமாக வெளிப்படுத்துகின்றது. இந்தத் தளத்தில் புதிய வரலாற்றியல் சிந்தனைகளுக்கும், மிசேல் பூக்கோவின் சிந்தனைகளுக்குமிடையே ஒப்புமைகளைக் காணமுடியும். அரசின் அதிகாரப் படிமத்தைப் பூக்கோ ஒரே நேரத்" திலே பலவற்றைப் பார்க்கும் "பலநிலைப்பார்வை" (Panoptic) என்று குறிப்பிட்டார். அதாவது, சிறைச்சாலைகளின் கட்டட வடிவமைப்பு பலநிலைப் பார்வைக்கு உகந்ததாக அமைந்திருந்தது. வட்ட வடிவ மான அமைப்பின் மத்தியில் இருந்துகொண்டு ஒவ்வொரு கூட்டி" லுமுள்ள கைதிகளை அதிகாரியாற் கண்காணித்துக்கொள்ள முடியும். அரசின் கருத்து வினைப்பாட்டுச் செயல்வடிவமாக அது அமை" கின்றது. கருத்து வினைப்பாடு என்பது வெறுமனே பேச்சோ, எழுத்” தோ சொல்லாடலாவோ அமைவதில் ல அது கருத்தியலுடன் (Ideology) இணைந்த உளச்செயலமைப் Mental Set) என்று பூக்கோ குறிப்பிட்டுள்ளார்.
புதிய வரலாற்றியல் பின்அமைப்பியல் சிந்தனைகளோடு பல தளங்களில் இணங்கிச் செல்கின்றது. பின்கட்டமைப்பியல் இறுக்கமான மொழிநடையால் தனது கருத்தை வெளிப்படுத்துகின்றது. ஆனால், புதிய வரலாற்றியல் தனது கருத்து வெளிப்பாட்டுக்கு எளிய நெகிழ்ச்சியான மொழியைப் பயன்படுத்துகின்றது.
பண்பாட்டுப் பொருண்மியவாதம் வரலாற்று வரைபியலின் அரசியலாக்கம் பெற்ற வடிவமாகக் கொள்ளப்படுகின்றது. பண்பாட்" டுப் பொருண்மியவாதம் என்ற எண்ணக்கருவை 1985ஆம் ஆண்டில் ஜொனாதன் டொலிமோர் அவர்களும் அலன் சின்பில்ட் அவர்களும் முதலிலே பயன்படுத்தினர். அந்த எண்ணக்கரு நான்கு பண்புக் கூறுகளை உள்ளடக்கி நிற்கின்றது. அவை:
* வரலாற்றுச் சூழமைவு
* கோட்பாட்டு முறைமை
9 அரசியற் கவிப்பு
* நூலியப் பகுப்பாய்வு
உன்னத இலக்கியப் படைப்புக்கள் அவை உருவாக்கப்பட்ட கால எல்லைகளையும் கடந்து நீடித்து நிற்கின்றன. அத்தோற்றப் பாட்டை விளங்கிக்கொள்வதற்கு வரலாற்றுச் சூழமைவை இணைத்து நோக்க வேண்டியுள்ளது. கோட்பாட்டு முறைமையில் பழைய தாராண்மை மானிடக் கருத்தியலைக் கைவிடுதலும்,
91/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 49
அமைப்பியல் மற்றும் பின்னமைப்பியல் ஆகியவற்றை முன்னெடுத் தலும் குறிப்பிடப்படுகின்றது. அரசியற்கவிப்பு என்பதில் பழைமை பேணும் கிறிஸ்தவ நோக்குக் கைவிடப்படலும் மார்க்சியம் மற்றும் பெண்ணியம் முன்னெடுக்கப்படலும் சுட்டிக் கூறப்பட்டுள்ளன. நூலியப் பகுப்பாய்வில் அதன் நடைமுறைப்பாங்கு குறித்துரைக்" கப்படுகின்றது.
பண்பாட்டுப் பொருண்மியவாதம் என்ற தொடரில் பண்பாடு என்ற எண்ணக்கரு அனைத்து வகையான பண்பாட்டுக் கூறுகளையும் உள்ளடக்கி நிற்கின்றது. அதாவது, நவீன தொலைக்காட்சிப் பண்பாடும் அதில் உள்ளடக்கப்படுகின்றது. உயர்ந்த பண்பாடு மட்டுமன்றி தாழ்ந்த பண்பாடும் கருத்திலே கொள்ளப்படுகின்றது. பொருண்மியவாதம் என்பது எண்ணமுதல் வாதத்தை நிராகரித்து நிற். கின்றது. பண்பாடு என்பது பொருண்மிய மற்றும் அரசியல் இயல்புகளை எளிதாகவோ, நேராகவோ தெறித்துக்காட்டுதல் இல்லை. ஆனால், அவற்றைவிட்டுப் பிரிந்து சுயாதீனமாக இயங்குவதும் இல்லை.
பிரித்தானிய இடதுசாரி திறனாய்வாளராகிய ரேமன் வில்லியம்ஸ் தந்த கருத்துக்களை பலவற்றைப் பண்பாட்டுப் பொருண்மிய வாதம் உள்வாங்கிக் கொள்கின்றது. அவ்வாறு உள்வாங்கப்பட்ட ஒரு முக்கியமான கருத்து"உணர்வுகளின் கட்டமைப்புக்கள்” (Structures of Feeling) என்பதாகும். இது ஒருவகையில் பூக்கோ குறிப்பிடும் “கருத்து வினைப்பாடு” என்ற எண்ணக்கருவுக்கு அது ஒப்பானதாகும். உணர்வுகளின் கட்டமைப்பு என்பது ஒருவர் வாழ்ந்தும் அனுபவித்தும் வந்த பெறுமானங்களின் கருத்தாக்கத்தைக் குறிப்பிடு" கின்றது. அதிலே கருத்தியல் வலிமை உட்பொதிந்திருக்கும்.
புதிய வரலாற்றியலுக்கும், பண்பாட்டுப் பொருண்மிய வாதத் துக்குமிடையே கருத்துநிலையில் சிலவேறுபாடுகளும் காணப்படுகின்றன. அந்த வேறுபாடு அரசியல் நம்பிக்கை உறுதியை அடிப்படையாகக் கொண்டு மேலெழுகின்றது. புதிய வரலாற்றில் பெரு” மளவிலே புதிய கட்டமைப்பியல் சிந்தனைகளை உள்வாங்கி உரு வாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பண்பாட்டுப் பொருண்மியவாதம் அத்தகைய முடிவை மேற்கொள்ளவில்லை.
வரலாறுகளை மீளெடுத்தலும் இலக்கிய வடிவம் தோற்றம் பெற்ற பறிப்பு நிலைச் சூழமைவினைக் கண்டறிதலும் பண்பாட்டுப் பொருண்மியவாதத்தில் முனைப்புப் பெறுகின்றன.
92/சபா ஜெயராசா

உலகின் புதிய கருத்தியலாக்கங்கள் மார்க்சிய சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வதைக் கண்டறிதலுக்கு பண்பாட்டுப் பொருண்மியவாதம் பொருத்தமான எடுத்துக்காட்டாகவுள்ளது.
கல்வியியலில் நிகழ்ந்துவரும் புதிய வளர்ச்சிகளும், புதிய மாற்றங்களும், அதேவேளை சமூகத்தில் நிகழ்ந்து வரும் புதிய மாற்றங்களும், விலகல்களும் ஒன்றிணைந்த முறையிலே புதிய சிந்தனை வடிவங்களுக்கு இட்டுச்செல்கின்றன.
令令令
93/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 50
தாராண்மை மானிடவாதம்
1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுமெருகு கொண்டு மேலெழுந்த இலக்கியக் கோட்பாடாகத் "தாராண்மை மானிடவாதம்” அமைகின்றது. அதில் "தாராண்மை" மற்றும் "மானிடவாதம்” என்ற இரண்டு எண்ணக்கருக்கள் இணைப்புக் கொண்டுள்ளன. அரசியல் எழுபொருட்களில் எதிலும் சாயாது அரசியல் முற்கவிப்பு இன்றிச் செயற்படலைத் “தாராண்மை" என்ற எண்ணக்கரு புலப்படுத்துகின்றது. மானிடவாதம் என்பதும் அதே கருத்தையே புலப்படுத்து கின்றது. ஆனால், சில எதிர்மறை அணுகுமுறைகளையும் வலியுறுத்” துகின்றது. மாக்சியம்சாராமை, பெண்ணியம்சாராமை, கோட்பாடு சாராமை முதலியவை எதிர்மறை அணுகுமுறைக்குச் சில எடுத்துக்" காட்டுகள்.
ஆங்கிலம் ஒரு புலமைக்கல்வி நெறியாக வளர்ச்சியடைந்த வரலாற்றை அறிந்துகொள்ளல் தாராண்மை மானிட வாதத்தை விளங்கிக் கொள்வதற்குரிய முன் நிபந்தனையாகக் கொள்ளப்படுகின்றது.
இங்கிலாந்தின் உயர்கல்வி பன்னெடுங் காலமாக இங்கிலாந்துத் திருச்சபையின் தனியுரிமையாக இருந்தது. ஒக்ஸ்போட், கேம்பிறிச் ஆகிய இருபெரும் பல்கலைக்கழகங்களும் பல்வேறு சிறிய கல்லூரி களை அமைத்து துறவிமாடங்கள் போன்று இயங்கி வந்தன. துறவி களுக்குரிய கட்டளைகள் அங்கே கற்பிப்போருக்கும் விடுக்கப்பட் டன. பிறசமயம் சார்ந்தோர் அங்கே கல்வி கற்பதற்கு இடமளிக்கப்படவில்லை. ஆங்கிலம் உயர்கல்வியிலே கற்பிக்கப்படவில்லை. கிரேக்கம், இலத்தீன் ஆகிய செம்மொழிகளே கற்பிக்கப்பட்டன. துற" விகளாக வருவதற்குரிய கல்வி ஒழுங்கமைப்பே காணப்பட்டது.
94/சபா ஜெயராசா
 

1826ஆம் ஆண்டில் அந்த நிலை மாற்றமடையத் தொடங்கியது. 1828ஆம் ஆண்டில் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம் கற்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. எல்லாச் சமயத்தினரும் கற்பதற்குரிய வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
1840ஆம் ஆண்டில் ஆங்கிலப் பேராசிரியராக நியமனம் பெற்ற எப்.டி.மொறிஸ் என்பார் "தாராண்மை மானிடவாதம்” என்ற எண்ணக்கருவைத் தமது விரிவுரையிலே அறிமுகம் செய்தார். ஆங்கிலக்கல்வி சமூக வினைப்பாட்டு எழுச்சிக்கு அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். மத்தியதர வகுப்பினரின் விழுமியங்களின் வெளிப்பாட்டுக்கு இலக்கியங்களின் அவசியத்தை ஆழ்ந்து வலியுறுத்திய அவர் ஆங்கிலத்தின் சாராம்சத்தை மத்தியதர வகுப்பினரே பிரதிபலிப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.
ஆங்கிலக்கல்வி சமூக அந்தஸ்தின் சின்னமாயிற்று. பொருள் வழியாகச் சமூக அந்தஸ்தை ஈட்ட முடியாதிருந்த மத்தியதர வகுப்பினருக்கு ஆங்கிலக் கல்வியே அந்தஸ்து நிலை நிறுத்தலுக்கு உதவி யது. ஆங்கில இலக்கியம் கற்றல் சமயம் கற்றலுக்குப் பிரதியீடாக இங்கிலாந்தில் வளர்ச்சியுறலாயிற்று. இலண்டன் பல்கலைக்கழகத்" தின் விரிவாக்கல் நடவடிக்கைகள் ஆங்கில இலக்கியம் கற்பித்தலை மேலும் விரிவுபடுத்தலாயிற்று. அந்த விரிவாக்க நடவடிக்கைகளின் பின்னரே ஒக்ஸ்போட் பல்கலைக்கழகமும் கேம்பிறிச் பல்கலைக்" கழகமும் முறையே 1894ஆம் ஆண்டிலும் 1911ஆம் ஆண்டிலும் ஆங்கில இலக்கியம் கற்பித்தலை ஆரம்பித்தன.
ஆங்கில இலக்கியங்களைக் கற்பதனால் சுவைத்தலும், பரிந்துணர்வும், மனித மனங்களிலே வளம்பெறும் என்றும் மனம் பரந்து விரிந்து செழுமை பெறும் என்றும் வரலாற்றுப் பேராசிரியர் எட்வேட் பிறீமன் அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் முன்வைத்த கருத்துக்கள் தாய்மொழி இலக்கியக் கல்விக்கும் தாராண்மை வாதத்துக்குமிடையேயுள்ள தொடர்புகளைக் கண்டுகொள்ள உதவுகின்றன.
இலக்கியக் கல்வியை மொழியோடு இணைத்துக் கற்க வேண்டும் என்ற கருத்தும் பிரித்தானியாவில் வலுப்பெறலாயிற்று. ஆயினும், ஐ.எறிச்சாட் அவர்கள் ஆங்கில இலக்கியம் கற்பித்தலை மொழி கற்பித்தலில் இருந்து வேறுபடுத்தியதுடன் நடைமுறைத் திறனாய்வை (1929) அறிமுகப்படுத்திய முன்னோடியாகவும் விளங்குகின்றார். நூலியத்தை வரலாற்றிலிருந்தும் சூழமைவி
95/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 51
லிருந்தும் வேறுபடுத்திக் கற்கும் அணுகுமுறை அவரால் வலியுறுத்தப் பட்டது. இத்தகைய பின்னணியில் தாராண்மை மானிடவாதம் மேலும் எழுச்சி பெறலாயிற்று.
தாராண்மை மானிடவாத இலக்கிய நோக்கு பின்வரும் தனிச்சிறப்புக்களைக் கொண்டது.
(l)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
இலக்கியம் கால அடைவுகளுக்குள்ளே கட்டுப்படாத பொருண்மை கொண்டது. மனித இயல்பின் மாறாப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது என்ற கருத்தியலை முன்னெடுத்தல். இலக்கிய நூலியம் தனக்குரிய கருத்தை உள்ளடக்கி நிற்கின்றதென்ற முன்மொழிவு. நூலியத்தை விளங்கிக் கொள்வதற்கு அதனை வரலாறு, சூழமைவு முதலியவற்றிலிருந்து பிரித்துத் தனித்துவமாக நோக்குதல் வேண்டும். அதாவது, “அதனை அதுவாக” நோக்குதல் வலியுறுத்தப்படுகின்றது. மனித இயல்பு என்றும் மாறாப் பண்பு கொண்டது. அத" னைப் பராமரித்தலே இலக்கியங்களின் கடமையாக இருத்தல் வேண்டுமன்றி புத்தாக்கங்களும் புதிய கண்டு பிடிப்புக்களும் அல்ல என்ற கூற்று. இலக்கியம் தனிமனித தனித்துவமும் சாராம்சமுடையதுமென்ற வலியுறுத்தல். இலக்கியத்தின் நோக்கம் வாழ்க்கையை வளமாக்குதலும், மனித விழுமியங்களுக்கு மதிப்பளித்தலும் என்ற விளக்கங்கள். உருவமும் உள்ளடக்கமும் பிரித்தறிய முடியாது ஒன்றி. ணைந்து நிறைவு பெற்றிருத்தல் வேண்டுமென்ற குறிக்" கோள். அனுபவங்களுக்கு மதிப்பளித்து உண்மைப்படுத்துதல், தன்னிலைக்கு நேர்மையாக நடத்தல், ஒத்துணர்வை வலுப்படுத்துதல் முதலியவற்றைச் சிறப்புப்படுத்தல். இலக்கியங்கள் வழியாகக் கருத்துக்கள் வெளிப்படையாக விளக்கிக் கூறப்படலாகாது என்பதை வற்புறுத்துதல்.
96/சபா ஜெயராசா

(10) திறனாய்வு என்பது நூலியத்தையும் வாசகரையும் ஊடிசைவு செய்யும் நடவடிக்கை என்றும் அதன் பொருட்டு நூலியத்துக்குப் பொருள் கோடலும் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்ற உறுதிப்பாடு
தாராண்மை மானிடவாதம் கலைக்கும் வாழ்க்கைக்குமிடையி. லான முரண்படும் விழுமியங்கள் மீது கவனம் செலுத்துகின்றது. கலை இலக்கியங்களின் அறநோக்கு வற்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றது. அதுவும் பிரசாரமற்ற தளத்திலிருந்தே நோக்கப்படுகின்றது.
மனிதரை மையப்படுத்தும் தொல்சீர் மானிடவாதக் கருத்துக்கள் “அனைத்துப் பொருள்களும் மனிதரை அளவுகோல் இருப்பினராகக் கொள்ளல்" என்ற கிரேக்கச் சிந்தனைகளில் ஆழ்ந்து வேரூன்றியி ருந்தன. நவீன மானிடவாதம் பதினான்காம் நூற்றாண்டின் அரைப் பகுதியிலிருந்து இத்தாலியில் எழுச்சி கொள்ளலாயிற்று. மனிதரின் விதந்தெழும் ஆற்றல்களைப் புனைதல், ஒவியம், சிற்பம் இலக்கி யங்கள் முதலியவற்றிலே ஆழம்பாய்ச்சத் தொடங்கின.
மானிட வாதத்தின் ஒரு முக்கிய பரிமாணம் அறிதல் என்பதைக் காட்டிலும் அனுபவம் என்பதற்கு அதீத இடத்தை வழங்குதலாகும். இலக்கியப் படைப்புக்கள் அனுபவங்களின் வடிவங்களாக வேதரிசிக்கப்பட்டன. இக்காரணத்தால் அறிவுபுகட்டல் இலக்கியங்களில் வெளிப்படையாக இருத்தலாகாது என்ற கருத்து மேலோங்கியது. அனுபவத்தை அறிவின் அளவுகோல்களுக்குள் கொண்டு வருதலும் நிராகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. இலக்கியம் என்பது மனிதரின் அனுபவ வழியான தேவைகளைக் குவியப்படுத்தி நிற்பது என விளக்கப்படலாயிற்று.
தாராண்மைவாதம் பொருளியல் நோக்கில் தலையீடுகள் அற்றநிலையை வற்புறுத்தியது. அந்த நோக்கு இலக்கியத்திலும் தெறித்து நின்றது. அதாவது கருத்தியல்களின் தலையீடுகள் அற்ற நிலையை அது குறித்தது.
1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானியாவில் நிகழ்ந்துவரும் சமூக மாற்றங்களில் கல்விச்செயல்முறையின் வகிபாகம் மேலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அறிவுசார் பொருளாதாரம் (Knowledge Economy) என்ற செயற்பாடு முகிழ்தெழலாயிற்று. இது மத்தியதர வகுப்பினருக்கு மேலும் வாய்ப்பான நிலையை உருவாக்கி
97/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 52
வருகின்றது. இந்நிலையில் மத்தியதர வகுப்பினரின் கலை இலக்கிய எழுச்சிக் குரலாக தாராண்மை மானிடவாதம் (Liberal Humanism) விரிவாக்கம் பெறத் தொடங்கியது. அரசியல் முற்சாய்வுகள் எதுவுமின்றி அரசியற் போராட்டங்களில் இருந்து தம்மை ஒதுக்கிக் கொண்டு தன்னலத்துடன் தமது முன்னேற்றத்தைத் தாமே ஈட்டிக் கொள்வதற்கு தாராண்மை மானிடவாதம், மத்தியதர வகுப்பினருக்கு உவப்பான கோட்பாடாக மாறி வருகின்றது.
வளர்ந்துவரும் மத்தியதர வகுப்பினருக்கு எழுச்சியூட்டக்கூடிய கருத்தியல் உட்பொதிவை தாராண்மை மானிடவாதம் கொண்டுள்ளமையால் அதன் செல்வாக்கு ஐரோப்பிய கலை இலக்கியங்களில் விரிந்து பரவலடையத் தொடங்கியுள்ளது. அதேவேளை அதன் எதிர்ப்பரிமாணங்களும் மட்டுப்பாடுகளும் பலமான நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
令令令
98/சபா ஜெயராசா

பெண்பால் இணைவு மற்றும் மகிழ்விலகல் திறனாய்வு
1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேலைப் புலத்தில் மேலெழுந்த வடிவமாக பெண்பால் இணைவு மற்றும் மகிழ்விலகல் இலக்duds GasTLLJITG) (Lesbian and Gay Literary Theory) -960LDiggs. Gugs இகலிட்டன் மற்றும் ரமன் செல்டென் ஆகியோரது திறனாய்வுக் கட்டுரைகள் இந்தக் கோட்பாட்டின் முன்அறிவித்தல்களாக அமைந்தன. பெண்கள் விடுதலை தொடர்பான கற்கைகள் பல கோணங்களில் வளர்ச்சியடையத் தொடங்கியமையின் விளைச்சலாகவே இக்கோட்பாட்டாக்கம் நிகழ்ந்தது. மேலும், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் இத்துறையைக் குவியப்படுத்தியும், பல்வேறு அறிவுத் துறை களை ஒன்றிணைத்தும் ஒரு முதுமாணிக் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டமையும் சிறப்பார்ந்த புலமை நிகழ்ச்சியாக அமைந்தது.
பெண்பால் இணைவு மற்றும் மகிழ்விலகற் கோட்பாடு மேலைப்புலத்தின் சமூகத்தளத்திலிருந்தும், அரசியற் தளத்திலிருந்தும் மேலெழுந்தது. மேலைப்புலத்தில் வளர்ச்சிபெற்று வரும் கட்டற்ற நுகர்ச்சிச் சமூகத்தினதும் விலகல் நுகர்ச்சி இன்பத்தினதும் வெளிப்பாடாக அது அமைந்தது. இக்கோட்பாட்டை"எதிர்வகைக் கோலம்" என்று குறிப்பிடுதலும் ஆய்வு நோக்கிலே சுட்டிக் காட்டப்படத்தக்கது. எதிர்பால் இணைவுக்குரிய சமூக அங்கீகாரமும் ஒரேபால் உணர்வுக்கு எதிரான சமூகப் பயமூட்டலும், உளவியல் அழுத்தங்களும் இத்துறையில் உரத்த சிந்தனைகளைப் புலமை நிலையிலே தூண்டின.
பெண்ணிய எழுச்சிச் சிந்தனைகளின் ஒரு தொடர்ச்சியாக பெண்பால் இணைவு” வளர்ச்சியடையத் தொடங்கியது. பெண்ணியத் திறனாய்வின் ஒரு பின்னிணைப்பாக முதலில் அது
99/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 53
உருவாக்கம் பெற்றது. பின்னர் ஏற்பட்ட ஆய்வு வளர்ச்சி அதனைத் தனித்துவமான ஒரு திறனாய்வுத் துறையாக வளர்ப்பதற்குத் துணை புரிந்தது. பெண்ணியத் துறையில் ஒரு பிரிவாக அது அங்கீகரிக்கப்படாமையினால் தனிப்பிரிவு என்ற வரையறைக்குள் கொண்டு வரப்பட்டது. இவ்வாறான தனிப்பிரிவை அங்கீகரிக்கத் தவறியமை ஓரங்கட்டப்பட்டவர்களைக் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாத இடைவெளி என்று குறிப்பிடப்பட்டது. புதிய வளர்ச்சியை அங்கீ. கரிக்காத நிலையில் பெண்ணிய ஆய்வாளர்கள் “மீண்டும் ஆண்பிடிக்குள் சென்றுவிட்டனர்" என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது. பெண்பால் இணைவு மற்றும் மகிழ்விலகல் அகிலப்பண்புகொண்ட" வையாக மாற்றப்படல் வேண்டுமென்ற வினைப்பாடு தொடர்ந்து வளரலாயிற்று. பெண்பால் இணைவும் மகிழ்விலகலும் இனம், மதம், மொழி, புலம் ஆகியவற்றைக் கடந்த பொதுத்தன்மை கொண்டவை என்பது அவர்களின் முன்மொழிவு.
செவ்விய பெண்ணியத்தின் நிராகரிப்புக்கு உட்பட்ட இந்தப் புதிய கோட்பாடுகளை அடியொற்றி உருவாக்கப்பட்ட இலக்கியங்களும், திரைப்படங்களும், பொழுதுபோக்கு இன்பத்திலே ஆழ்ந்த செல்வாக்குகளை ஏற்படுத்தலாயின. இவற்றின் தொடர்ச்சியாக தீவிர (Radical) பெண்பால் இணைவு வளர்ச்சியடையத் தொடங்கியது. அண்டிறிணி றிச் என்பார் இத்துறையில் பல கட்டுரைகளை வெளி யிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சில ஆய்வாளர்கள் இத்தகைய தோற் றப்பாட்டினைப் பாலியல் வினைப்பாடாகக் கருதாது பெண்ணிய அரசியல் வினைப்பாடாகவே காட்சி கொள்கின்றனர். பெண்களின் முழுநிறைவான விடுதலைக்குரிய கட்டியமாக அது அமைந்தது.
“பெண்கள் பெண்களை இனங்காணுதல்” என்ற அணுகுமுறை பெண்பால் இணைவுக் கோட்பாட்டில் வலியுறுத்தப்படுகின்றது. பாலியல் மற்றும் பால்நிலை என்பவை இயற்கையானவை என்ற கருத்தும், மாற்றமுறாதவை என்ற அணுகுமுறையும் தள்ளுபடி செய் யப்படுகின்றன. அவை சமூகத்தாற் கட்டுமை (Construct) செய்யப்பட்டவை என்றும் மாற்றத்துக்குள்ளானவை என்றும் முன்மொ" ழியப்பட்டது.
பாலியல் இணைவுக் கோட்பாட்டோடு தொடர்பு கொண்ட" தாக "விந்தை இணைவுக் கோட்பாடு” (Queertheory) தோற்றம் பெற்றது இதுவும் பெண்களின் பாலியல் விடுதலையோடு இணைந்த கோட்பாடாயிற்று. 1990ஆம் ஆண்டில் கலிபோர்னியா பல்கலைக்"
100/சபா ஜெயராசா

கழகத்தில் நிகழ்ந்த மாநாட்டில் விந்தை இணைவுக் கோட்பாடு அங்கீகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. மகிழ்விலகலில் ஈடுபடும் ஆண்களுக்கு (Gay Men) அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கையாகவும் அது அமைந்தது. அதுவும் ஒரு வகையில் ஆண் ஆதிக்கத்தை மீள வலியுறுத்தும் மீள்வடிவம் என்ற கருத்தும் பிறிதொரு கோணத்தில் முன்வைக்கப்பட்டது.
1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் வளர்ச்சியடையத் தொடங்கிய பின்கட்டமைப்பியற் சிந்தனைகள் இத்துறையில் பரவலாக எடுத்தாளப்பட்டன. இருமை எதிர்வுகளை (Binary Opposition)க் கட்டுமானக் குலைப்புக்கு அல்லது தகர்ப்புக்கு உள்ளாக்குதல் வேண்டும் என்ற கருத்தைப் பின்கட்டமைப்பியல் வலியுறுத்தியது. ஆண் - பெண் என்ற இருமைநிலை முடிந்த முடிபு அன்று. "மற்றையதை" அடிப்படையாகக் கொண்டே இருமையின் ஒரு பகுதியை விளக்க முடி" யும். மேலும், அந்த இருமையின் ஏற்றத் தாழ்வுகளும் முடிந்த முடிபானவை அன்று. அந்த ஏற்றத்தாழ்வை மாற்றியமைக்க முடியும். இருமையின் முதலாவதை விடுத்து இரண்டாவதையும் முதன்மைப்படுத்த முடியும். இந்த அடிப்பட்ையிலேதான் எதிர்ப்பால் இணைவு, தன்பாலிணைவு என்ற இருமை நிலைகள் நோக்கப்படல் வேண்டும் என்ற கருத்து மேலெழுந்தது. ஆண் ஆதிக்கத்தைக் குலைப்பதற்கு இந்தக் கருத்துக்கள் எடுத்தாளப்படலாயின. இத்துறையில் ஆழ்ந்த ஆய்வுகளை வெளியிட்டோர் வரிசையில் ஜடித் பட்லர் சிறப்புப் பெற்ற ஒருவராக விளங்குகின்றார்.
ஆண் - பெண் என்ற அடையாளங்கள் சமூக நிலையில் மூலாதாரம் அற்றவை என்ற கருத்தை அவர் தமது வெளியீட்டில் வலியுறுத்தினார். அடையாளம் என்பது தொடர்ச்சியான மாறுதலுக்குரியது என்ற முன்மொழிவு இங்கே எழுச்சி கொண்டது. தன்பால் இணைவு (Homosexuality) என்பது தன்னிலையினுடைய (Self) ஒரு பகுதியென்றும் ஆனால், புறநிலையில் சமூகம் ஏற்றுக் கொள்ளப்படாத பகுதியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
பெண் என்றும் ஆண் என்றும் அடையாளப்படுத்துதல் நீர்ம்" மை கொண்ட செயற்பாடாயிற்று. மகிழ்விலகல் என்பது தொழில், சமூகநிலை, அந்தஸ்து, அதிகாரநிலை, அரசியல் போன்ற பல்வேறு காரணிகளின் தாக்கங்களினால் நிலைத்த பொருளாக அன்றி நீர்ம்மையுறும் பொருளாகிவிட்டது. அந்த எண்ணக்கரு “பெயர்ந்து Gafabgylb (5.5lil IITGir" (Shifting Signifier) -g,565Gd56 p51.
101/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 54
பெண்பால் இணைவு இலக்கியங்களில் மூன்று நிலைகளில் எடுத்தாளப்படுகின்றது. அவை:
* பெண்பால் இணைவில் ஈடுபட்டோரின் படைப்புக்கள்.
* பெண்பால் இணைவு பற்றிய எழுத்தாக்கங்கள்.
* பெண் பால் இணைவு பற்றிய பார்வைகள் அல்லது
தரிசனங்கள்.
இத்துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இலக்கியங்களை அக்காலத்தைய திறனாய்வாளர் நோக்கிய விதத்" துக்கும், சமகாலத்திறனாய்வாளர் நோக்குவதற்குமிடையே வேறுபாடுகள் தோன்றும் சாத்தியப்பாடுகளை அறிகை முறைமை ஏற்படுத் தியுள்ளது.
குறிப்பிட்ட திறனாய்வு நடவடிக்கைகள் பின்வருமாறு அமைகின்றன.
(1) இத்துறையில் செவ்விய ஆக்கங்களை மேற்கொண்டவர்களை இனங்காணுதலும் அடையாளப்படுத்தலும். வோர் - ஜீனியா வூல், விதா சக்விலி வெஸ்ற், டொறோதி றிச்சாட்சன், ரோஸ்மன்ட் லெ."மன், ரட்கிலிவ் ஹோல் முதலியோர் இத்துறையிலே குறிப்பிடத்தக்கவர். (2) பெரும் இலக்கியப் படைப்புக்களில் இடம்பெற்றுள்ள இத்துறை சார்ந்த பதிவுகளை இனங்கண்டு வெளிப்படுத்துதல். (3) இலக்கியங்களிலும் திறனாய்வுகளிலும் இடம்பெற்றுள்ள இறுகிய திண்மமான பாலியல் எல்லைப்பாடுகளைத் தகர்ப்புக்கு உள்ளாக்குதல். வரையறுக்கப்பட்ட வகைப்பாடுகளை மீளாய்வுக்கு உட்படுத்துதல். (4) தன்பால் இணைவு தொடர்பான உளவியல் அச்சத்தை அல்லது தனனிணைவுத் தொடுபயத்தை (Homophobia) நீக்குவதற்குரிய இலக்கியங்களைப் புனைவதற்கு உற்சாகம் தருதல். (5) முதலாம் இரண்டாம் உலகப் போர்களின் போது நிகழ்ந்த
பாலியல் எல்லை உடைப்புக்களைக் கண்டறிதல்.
102/சபா ஜெயராசா

(6) இத்துறையில் முன்னர் நிராகரிப்புக்கு உள்ளான இலக்கிய ஆக்கங்களையும், வடிவங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருதல்.
சுற்றிச் சுற்றிப் பாலியல் தளத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகளாக அவை அமைகின்றன. பாலியல் மட்டும் உலக வாழ்க்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் உள்ளடக்கி நிற்கமாட்டாது. ஆயின், பாலியற் கண்ணோட்டத்தை மட்டும் வலியு றுத்துவோர் அனைத்தும் அதனுள் அடங்கும் என்ற மீள வலியுறுத் தல்களை முன்வைக்கின்றனர். பின்னவீனத்துவம் மற்றும் பின்கட்டமைப்பியல் முதலிய சிந்தனைகளின் வளர்ச்சி பாலியல் கட்டமைப்பிலே புதிய காட்சிகளை உருவாக்கிக் கொள்வதற்குரிய தருக்கங்களை வழங்கியுள்ளது.
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தீவிர எழுச்சி கொள்ளத்தொடங்கிய உலகமயமாதலும் கலையுலகில் எழுந்த படிமங்களின் மிகையான ஆட்சியும் மனிதமனங்களைச் திரிபுபடச் செய்தன. பொருண்மிய ஏற்றத்தாழ்வுகளின் கூர்மைப்பாடுகள், மனித மனங்களைச் சிதைக்கத் தொடங்கின. இவ்வாறான சூழலில் மனித மனங்களில் விகாரப்பாடுகள் தோன்றுதல் உளவியலின் நியதிப்பாடாயிற்று. அவற்றின் பாலியல் தெறிப்புக்கள் புதிய கோட்பாடுகளை ஆக்குவதற்குரிய விசைகளை வழங்கின.
மேலையுலகில் வளர்ச்சிபெற்றுவரும் வர்த்தகத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிப் புனைவுகள் மகிழ்விலகல் உள்ளடக்கங்களை அமைத்து மலினமான இரசனையை வளர்த்து வருதலும் கவனக்குவிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
令令令
103/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 55
g) Goyu III firfluidib திறனாய்வும்
தமிழகத்தில் வளர்ச்சிபெற்ற உரையாசிரியர் மரபில் திறனாய்வின் பரிமாணங்கள் சில உட்பொதிந்திருந்தமையைக் குறிப்பிட வேண்டியுள்ளது. உரைமரபு "நூலை ஒக்கும்உரை, நூற்குஉரை, நூலதுஉரை, நூற்கண் உரை, நூலன்னஉரை, நூலும் உரையும்” என்றவாறு உரைத்தல் வளர்ந்து சென்றது. நூலறிவு, சொல்லறிவு, காலஅறிவு, சமுதாயஅறிவு, மரபுவழிச் சிந்தனைகளின் அறிவு முதலி யவை உரையாசிரியர்களிடத்தே காணப்பெற்றிருந்தன. அவர்க" ளிடத்துக் காணப்பெற்ற புலமை “பொலியக் கோத்த புலமை" என இளங்கோவடிகளாற் சுட்டப்பட்டுள்ளது. நூலாசிரியருக்கு வழங்கப் பட்ட சிறப்புநிலை, உரையாசிரியருக்கும் வழங்கப்பட்டமை தமிழ் மரபிலே காணப்படும் பிரிதொரு பரிமாணமாகின்றது. "நந்தாவுரையை எழுதுதல் எவ்வாறு நவின்றருளே” என்று சிவப்பிரகாசர் உரை முதலின் குறிப்பிட்டார்.
உரையின் வகையியலை மயிலைநாதர் பின்வருமாறு விளக்கிக் கூறுகின்றார்.
(1) இருவகை - தொகுத்துக் கண்ணளித்தல், விரித்துக்
கொணர்ந்துரைத்தல்.
(2) மூவகை "பொழிப்பு, அகலம், நுட்பம்.
(3) அறுவகை - எடுத்துக்கோடல், பதங்காட்டல், பதம்
விரித்தல், பதப்பொருள் உரைத்தல், வினாவுதல், விடுத்தல்.
104/சபா ஜெயராசா
 

(4) ஏழுவகை பொழிப்பு, அகலம், நுட்பம், நூல் எச்சம், பதப்பொருள் உரைத்தல், ஏற்புழிக் கோடல், எண்ணல்,
(5) பத்துவகை - சொல்லே, சொல்வகை, சொற்பொருள், சோதனை, மறைநிலை, இலேசு, எச்சம், நோக்கே, துணிவே, கருத்தே செலுத்துதல்.
(6) பதினான்குவகை - சூத்திரம் தோற்றல் சொல்வகுத்தல், சொற் பொருள் உரைத்தல், வினாவுதல், விடுத்தல், விசேடங்காட்டல், உதாரணங் காட்டல், ஆசிரிய வசனங்காட்டல், அதிகார வரவு காட்டல், தொகுத்து முடித்தல், விரித்துக்காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்தல்.
இவ்வாறாக, உரைபற்றிய பகுப்பாய்வு நோக்கும், பகுப்பாய்வை நுண்ணியதாக்குதலும் மயிலை நாதரது அறிகை முறைமையில் மேலோங்கி நின்றன. (வீரசோழியம் - 178)
இறையனார், இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர், நச்சினார்க்கினியர், மயிலைநாதர், சங்கரநமச்சிவாயர், சிவஞானமுனிவர், ஆறுமுகநாவலர் என்போரை உள்ளடக்கிய நீண்ட உரையாசிரியர் மரபு காணப்படுகின்றது. திறனாய்வு தொடர்பான தமிழர்களின் அறிகை முறை" மையை அறிந்து கொள்வதற்குரிய ஆக்கங்களாக இவர்களின் உரைகள் அமைந்துள்ளன. உரைநூல்களும் விவாதிக்கப்பட்டு அரங்" கேற்றத்துக்கு உள்ளாக்கப்பட்ட செய்திகள், திறனாய்வின் பிறிதொரு பரிமாணத்தைக் காட்டுகின்றன.
உரையாசிரியரின் திறனாய்வு முறைமையில் “நயத்தல்" என்பது சிறப்பார்ந்த பண்பாக அமைந்திருந்தது. நூல்நயம், பாநயம் போன்ற புலக்காட்சிகள் மேலோங்கியிருந்தன. சொற்சுவை, பொருட்சுவை போன்ற தொடர்களும் வழக்கிலிருந்தன. நூலின் சிறப்புப் பரிமாணங்களை நன்னூலார் பின்வருமாறு விளக்குகின்றார்.
105/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 56
சுருங்கச் சொல்லல்
விளங்க வைத்தல்
நவின் றோர்க்கு இனிமை
நன்மொழி புணர்தல்
ஓசை யுடைமை
ஆழம் உடைத்தாதல்
முறையின் வைப்பே
2d 6)55 D66)6) 65))
விழுமியது பயத்தல்
விளங்கு உதாரணத்து ஆக்குதல்.
இங்கே நூலின் அழகும் சிறப்புக்குமுரிய பரிமாணங்கள் பகுப்பாய்வின் வழி எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
நூலின் நேர்ப்பரிமாணங்களையும், எதிர்ப்பரிமாணங்களையும் நோக்கி அவர்கள் முடிவுகளுக்கு நகர்ந்தமை, திறனாய்வின் பிறிதொரு பண்பைச் சுட்டிக்காட்டுகின்றது. தமிழ் மரபில் இச்செயற்பாடு குணம்நாடல், குற்றம்நாடல், மிகைநாடல் என்ற தொடர்களால் அழைக்கப்பட்டது. (குறள் 504) உரையாசிரியரால் நூல்கள் மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்பட்டமை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒரு பண்பாகின்றது. இலக்கிய மதிப்பீடுகள் அகவய நோக்கில் மேற்கொள்ளப்படல் வேண்டுமா புறவய நோக்கில் மேற்கொள்ளப்படல் வேண்டுமா என்பது நீண்ட விவாதமாக இருந்து வருகின்றது. அகவயம், புறவயம் என்ற பிரிகோடுகளை அமைத்தல் அபத்தமானது என்ற கருத்தை பின்னவீனத்துவத் திறனாய்வாளர் முன்வைத்துள்ளனர். தமிழ் மரபிலே நூலாசிரியர் துலாக்கோலின் நிலைக்கு ஒப்புமையாக்கப்பட்டுள்ளனர். அதாவது, விருப்பு வெறுப்பின்றிப் பனுவலை நோக்கலும் குறித்துரைக்கப்பட்டுள்ளன. இதனை நன்னூலார் “மெய்ந் நடுநிலை" என்று குறிப்பிட்டுள்ளார்.
உரையாசிரியரிடத்து திறனாய்வின் பிறிதொரு பரிமாணமாகிய ஒப்பியல் நோக்கும் காணப்பட்டது. வடநூல் தமிழ்நூல் ஒப்பீடு பிதிர்த்தெழும் தோற்றப்பாடாகவுள்ளது. அடியார்க்கு நல்லார் வடமொழி நூல்களில் இருந்து ஒப்புமைகாட்டிக் காவியப் பண்புகளை விளக்கியமை குறிப்பிடத்தக்கது. நச்சினார்க்கினியார், பேராசிரியர் முதலியோரிடத்தும் இப்பண்பு மேலோங்கியிருந்தது.
106/சபா ஜெயராசா

உரையாசிரியரிடத்துக் காணப்பெற்ற பிறதிறனாய்வுப் பரிமாணங்களாக முழுமைநோக்கும், பகுதிநோக்கும் அமைந்திருந்தன. முன்நோக்குதலும், பின்நோக்குதலும் முழுமைநோக்கில் இடம்பெற்றிருந்தன. தமிழ் மரபில் இது “சிங்கநோக்கு” எனப்பட்டது. எடுத்துக்காட்டாக, தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற பகுதிகளைக் கொண்டிருந்தாலும், ஒரு பகுதிக்கு உரை எழுதியோர் முப்பெரும் பகுதிகளையும் ஆழ்ந்து நோக்கியே தமது உரைகளைத் தந்தனர்.
பலகோணங்களிலே இலக்கியங்களை நோக்குதலும், தமிழ் உரையாசிரியர்களிடத்துக் காணப்படும் திறனாய்வுப் பரிமாணமாகக் கொள்ளப்படுகின்றது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தைப் பலகோணங்களிலே நோக்கியுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது. காப்பிய வடிவமைப்பு, கதையினதும், நிகழ்ச்சிகளினதும் ஒருங்கிணைப்பு, நிகழ்ச்சிகளினதும், இடம், காலம் என்ற பலகோணங்களிலே பார்த்தல் அவரிடத்துக் காணப்படும் அறிகைச் சிறப்பாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் உரையாசிரியர் மரபு வளர்ச்சியுற்று வரும்வேளை மேலையுலகில் அதற்குச் சமாந்தரமாக சொல்லாடற் கலை (Rhetoric) ஆய்வறிவாளர்களிடையே வளர்ச்சியுறலாயிற்று. உரைமரபும், சொல்லாடற் கலைமரபும் ஒரே வடிவினதாக இல்லாவிடினும் அவற்றிடையே சில பொதுப் பண்புகள் இழையோடி இருத்தலைக் குறிப்பிட வேண்டியுள்ளது. மொழி வழியான வாதங்களை ஒழுங்க" 60LD556) (Organization of Arguments) 3.J60iiL969/5(5(upifu -9|tyநிலையான பொதுப்பண்பு ஆகும். மொழியின் விஞ்ஞானம் என்ற வகையில் தருக்க நிலைப்பாடும், இலக்கண நிலைப்பாடும், சொற்களின் பொருட் பிறப்பாக்கமும் இருவடிவங்களுக்குமுரிய பொதுக் கூறுகளாகவுள்ளன.
விவாதங்களை ஒழுங்கமைக்கும் பொழுது மேலைப்புலச் சொல்லாடற் கலையில் பின்வரும் ஐந்து பகுதிகள் மீது கவனம் செலுத்தப்படலாயிற்று. அவை :
* அறிமுகம்
பி) எடுத்துரைப்பு -> நிரூபித்தல்
107/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 57
* வேண்டியவிடத்து மறுத்துரைத்தல்
* முடிவுக்கு வருதல்
இவ்வாறான அணுகுமுறை அச்சொட்டாக இல்லாவிடிலும் வெவ்வேறு நிலைகளில் உரையாசிரியர்களிடத்து வளர்ச்சியுற்றமை
யைக் காண முடியும். உலக அறிவுப் பரப்பில் நிகழ்ந்த தருக்க சிந்த" னைகளின் வளர்ச்சியை இந்த ஒப்புமைகள் எடுத்துக்காட்டுகின்றன.
மறுபுறம் மெய்யியலின் ஒரு துறையாகவும், சமய அறிகையின் ஒரு பிரிவாகவும் வளர்ச்சி பெற்ற அளவையியல் அல்லது தருக்கவியல் அணுகுமுறைகளுக்கும் உரையாசிரியரின் எடுத்துரைப்புக்" களுக்குமிடையே ஒப்புமைகள் காணப்படுதலையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. இலக்கிய விளக்கங்களைக் குவியப்படுத்தியே உரையாசிரியரின் தருக்க முன்னெடுப்புக்கள் அமைந்தன. அறிவு வளர்ச்சியோடிணைந்த தருக்கவியலை நூலியங்களுக்குப் பயன்படுத்துதல் அல்லது செயற்படுத்துதல் என்ற அறிகைத் தொழிற்பாட் டினை உரையாசிரியர் முன்னெடுத்தனர்.
சொல்லாடற்கலை நுட்பங்கள் மற்றும் தருக்கக் கலை நுட்பங்கள் முதலியவை இலக்கியத் திறனாய்விலும் படிப்படியாகப் புகுந்தன.
காலனித்துவக் கல்வி முறைமையின் கவிப்பு எமது அறிகை முறைமையின் ஆழ்ந்த வேர்களைக் கண்டறியச் செய்ய முடியா நிலைக்குத் தள்ளிவிட்டது. திறனாய்வுக் கலையின் பரிமாணங்கள் தமிழ் மரபிலும் காணப்பட்டமை ஆழ்ந்த நோக்கினுக்குரியது.
令令令
108/சபா ஜெயராசா

மரபுவழி இந்தியத் திறனாய்வு
இந்தியாவின் மரபுவழித் திறனாய்வு மரபுநாடகவியலை அடிப்படையாகக் கொண்டு மேலெழுந்தது. பரதமுனிவரால் எழுதப்பெற்ற நாட்டிய சாஸ்திரம் நாடகம் பற்றிய பன்முகப் பரிமாணங்களை விளக்கியதுடன் திறனாய்வு அணுகுமுறைகளையும் முன்வைத்" துள்ளது. இந்தியாவின் பண்பாட்டுத் தளத்தில் திறனாய்வு வேர்கள் ஆழ்ந்து ஊடுருவியிருந்தன.
நாடகத்தின் நோக்கம் இரசத்தை உருவாக்குதலாகும். இரச உருவாக்கம் அபிநயத்தால் ஆக்கப்படுகின்றது. நடிகரால் உருவாக்" கப்படுகின்ற சுவை, பார்வையாளரிடத்து ஏற்படுத்தும் செல்வாக்குப் பற்றிய நோக்கு இந்தத் திறனாய்வு அறிகையிலே மேலோங்கியிருந்தது. சுவையை உருவாக்குவதற்கு அபிநயங்களின் பயன்பாடு விரிந்த முறையில் விளக்கப்பட்டது. அபிநயம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. அவை :
* உறுப்பு வழியான உய்ப்பு - ஆங்கிகம் * உரைவழியான உய்ப்பு - வாசிகம் * உடம்பில் தோன்றும் உய்ப்பு - சாத்விகம் -> ஆடை அணிகலன் வழி
உருவாக்கப்படும் உய்ப்பு - ஆகார்யம் இரசமானது விபாவம், அனுபாவம், வியபிசாரி பாவம், ஸ்தாயிபாவம் முதலியவற்றின் இணைப்பால் உருவாக்கப்படுகின்றது. பாத்திரங்களும் சூழமைவும் விபாவத்தில் உள்ளடங்கு" கின்றன. தமிழ் மரபில் இது "கூத்துக்கட்டு" எனப்படும். உடலிலே
109/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 58
தோற்றம்பெறும் வேறுபாடுகள் அனுபாவம் எனப்படும். தமிழ் மரபில் இது "மெய்க்கட்டு” எனப்படும். வியாபிசாரி பாவம் உள்ளத்தின் ஊசலாடும் உளநிலையைக் குறிப்பிடும். தமிழ் மரபில் இது "அத்த" கைக்கு நடிப்பு" என்றழைக்கப்படும். ஸ்தாயி பாவம் என்பது நிலை மனவெழுச்சித் தெறிப்பைக் குறிப்பிடும். அனைத்து அழகியற் கூறுகளை உள்ளடக்கிநிற்பதும், அனைத்துக் கலைகளுக்கும் அடிப் படையாக விளங்குவதும் நாடகமே, என்ற நோக்கு இந்திய மரபில் வலுப்பெற்றிருந்தது. கிரேக்கத் திறனாய்வுச் சிந்தனைகளும், இந்தியத் திறனாய்வு மரபும் நாடகங்களை அடியொற்றி மேலெழுந்தமை வாழ்" வியல் ஆதாரங்களின் இணைப்பைப் புலப்படுத்தும்.
நாடகம் வழியாக உருவாக்கப்படும் சுவையின் பயன் அவலங்களில் மூழ்கியிருக்கும் மனிதருக்கு அவற்றிருந்து விடுபட வைக்கும். உணர்வையும், நிம்மதியையும் மனஆறுதலையும் உருவாக்கித் தருத" லாகும். நாடகத்தின் நற்பாத்திரங்கள் அனுபவிக்கும் தாக்கங்கள் பார்ப்போரிடத்துக் கழிவிரக்கத்தைத் தோற்றுவிக்கின்றன. கிரேக்க நாடகத் திறனாய்வாளர் அரிஸ்ரோட்டில் இதனை "கத7ர்சிவப்” என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் மரபில் இது "உற்றறி உணர்வு" எனப்படும்.
இந்தியத் திறனாய்வு மரபில் “அணியியல்" சிறப்பார்ந்த இடத்தைப் பெறும் பிறிதொரு பரிமாணமாகும். காவியத்துக்கு அழகு சேர்ப்பது அணியென்று விளக்கப்பட்டது. சுவையைப் புலப்படுத் துவதற்கு அணிகள் துணை நிற்கின்றன. நாடகங்கள் திறனாய்வுக்கு உட்படுத்தியமை போன்று இந்திய மரபிலே தோற்றம் பெற்ற காவி. யங்களும் உட்படுத்தப்பட்டன. முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை என்றவாறு செய்யுள் வகைப்படுத்தப்பட்டது. தொடர்நிலைச் செய்யுள் வடிவிலே காவியம் உருவாக்கப்பட்டது. காப்பியத் தின் மேம்பட்ட வடிவமாகப் பெருங்காப்பியம் தோற்றம் பெற்றது. வாழ்த்துடன் ஆரம்பிக்கும் பெருங்காப்பியம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பயப்பதாயமைக்கப்பட்டது. காப்பிய நாயகன் உலகோர்க்கு உயர்ந்த எடுத்துக்காட்டாளனாய் இருத்தல் வேண்டும். மலை, கடல், நாடு, வளர்நகர் பருவம், இருசுட" ரேற்றம் என்ற பொருள்கள் தழுவி வருணனைகள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றது. விவாகம், முடிசூட்டு, விளையாட்டுக்கள், புலவி, கலவி, புத்திரர்களைப் பெற்றெடுத்தல், தூது, போர், மந்திராலோசனை முதலியவற்றை உள்ளடக்கியதாய்
110/சபா ஜெயராசா

பல்வேறு சுவைகளைக் கொண்டதாய், மெய்ப்பாடுகளை உடையதாய், காவியம் இருத்தல் வேண்டுமென தண்டியாசிரியர் விளக்கம் தந்துள்ளார். அத்துடன், செய்யுளின் அழகைச் சிறப்பிக்கும் சொல்லணி, பொருளணி முதலியவற்றையும் விளக்கியுள்ளார்.
அணி பற்றி விளக்க வந்த நூல்களுள் தண்டியலங்காரம் சிறப்புப் பெறுகின்றது. முன்னதாக தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அணி உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொருளணி, சொல்லணி என்றவாறு அணிபாகுபடுத்தப்படுதல் உண்டு. உவமை அணி, உருவகஅணி, வேற்றுப்பொருள் வைப்புஅணி, உயர்வு நவிற்சிஅணி, தற்குறிப்பேற்றஅணி, ஐயவணி, புகழாப்புகழ்ச்சி அணி, மயக்கஅணி, சிலேடைஅணி போன்றவை இலக்கியங்களிலே பரவலாக இடம்பெற்றுள்ளன. இவற்றுள் உவம அணியே விதந்து பேசப் பொருளாக இந்தியத் திறனாய்வு மரபிலே காணப்படுகின்றது. பண்பு, தொழில், பயன் ஆகிய மூன்று அடிப்படைகளும் உவமம் உருவாக்கப்படும். உவமையை அடிப்படையாகக் கொண்டே உருவகம் தோற்றம் பெறுகின்றது. பெரியதை மேலும் பெரிதுபடுத் தியும், சிறியதை மேலும் சிறிதாக்கியும் கூறல் உயர்வு நவிற்சியாகின்றது. இயல்பான ஒரு தோற்றப்பாட்டின் மீது கவிஞர் தமது கருத்தினை ஏற்றிக் கூறுதல் தற்குறிப்பேற்ற அணியாகின்றது. ஐயப்பாட்டுடன் ஒரு நிகழ்ச்சியை அல்லது பொருளைக் கூறுதல் ஐய அணியாகின்றது. பழித்துரைப்பது போன்று விதந்து புகழ்தல் புகழாப் புகழ்ச்சி அணியாக உருவெடுக்கின்றது.
இந்தியத் திறனாய்வு மரபிற் குறிப்பிடத்தக்க பிறிதொரு சிந்தனையின் வழியாகத் "தெனிக்கோட்பாடு” ஆக்கம் பெற்றது. ஆனந்தவர்த்தனர் (கி.பி.850) எழுதிய “தவனியா லோகம்” என்ற நூலுக்கு அபிநவகுப்தர் எழுதிய “லோசனா” என்ற விளக்கவுரையில் தொனிக் கோட்பாடு ஆராயப்படுகின்றது. இரசம் காவியத்துக்கு உயிராகக் கொள்ளப்படுதலை ஏற்கமுடியாதென்றும் தொனியே காவிய ஆத் மாவென்றும் தொனிக் கோட்பாட்டாளர் விளக்குவர். காவியத்தின் உள்ளடங்கிய விசையாக அமையும் தொனியை, பொருள் தொனி, அணித்தொனி, இரசத் தொனி என்று பாகுபடுத்தும் மரபும் காணப்பட்டது.
காவியம் என்ற பெரும் வடிவத்தினால் அல்லது நாடகத்தினால் உருவாக்கம் பெறும் இரசம் என்பதை சிறிய செய்யுளுக்கும் பிரயோகித்தல் விரிவாக்கம் பெற்றது. அதன் வழியாக தொனி
111/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 59
முக்கியத்துவப்படுத்தப்படலாயிற்று. வெளிப்படையாக அன்றிக் குறிப்பால் பொருளுணர்த்தலும், சுவையூட்டுதலும் கவர்ச்சிகரமான கூறுகளை உள்ளடக்கிநிற்பதும் தொனியின் பரிமாணங்களாகின்றன. இரசாதி அலங்காரம், வஸ்து ஆகிய பண்புகளைத் தொனி உள்ளடக்கிநிற்கும்.
இந்தியத் திறனாய்வு மரபு செய்யுள் மற்றும் கவிதைகளின் அமைப்பியலை அடியொற்றியே மேலெழலாயிற்று. கவிதையின் கட்டமைப்பை அடியொற்றி ஒளசித்தியக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. கவிதைக்கென வரையறுக்கப்பட்ட பண்புகள் வரன்முறை" யாகவும் தக்கவாறும் ஒழுங்கமைக்கப்படுதல் ஒளசித்யமாகின்றது.
தொல் சமூகங்களில் மட்டுமன்றி நிலமானிய சமூகத்திலும் கவி தையே மேலோங்கிய இலக்கிய வடிவமாக அமைந்தது. நாட்டார் மரபில் வேர்பதித்து ஆழ்ந்து எழுந்த கவிதை வரன்முறையான கல்விச் செயற்பாடுகளின் வீச்சுக்குள் கொண்டுவரப்பட்ட வேளை அதன் இலக்கணக் கட்டுமானத்தின் மீது தீவிர கவனம் செலுத்தப்பட லாயிற்று. அதன் அடிப்படையிலேதான் “செய்யுள்” என்ற எண்ணக்கரு தோற்றம் பெறலாயிற்று. மேலைப் புலத்திறனாய்வாளர் செய்யுள் (Verse) மற்றும் கவிதை (Poetry) என்ற எண்ணக்கருக்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டுவர். இந்திய மரபிலும், தமிழ் மரபிலும் கவிதை நாட்டாரியல் வேர்களிலிருந்து தோற்றம் பெற்றது. அதேவேளை செய்யுள் வடிவம் உயர்ந்தோரின் அல்லது மேட்டுக்குடியினரின் வரன்முறையான கல்வி வழியாகத் தோற்றம் பெற்றது.
மரபுவழி இந்தியக்கலை இலக்கியத் திறனாய்வு மரபு இந்துமதக் கோட்பாடுகளைத் தழுவி நின்றது. பரம்பொருளைப் புனைதல், கர்மமும் மறுபிறப்பும் எடுத்தாளப்படுதல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருள்களையும் இயம்புதல், வேதங்களை அளவீடாகக் கொள்ளுதல், செய்யும் தொழிலை செம்மைப்பட ஆற்றுகை செய்தல், செயல்வழி, பக்திவழி, ஞானவழி என்பவற்றால் மெய்ப்பொருள் தேடல், சமய ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தல், ஆன்மாவின் இயல்பை விபரித்தல் முதலிய இந்து சமய அடிப்படை கள் கலை இலக்கியங்களிலே இடம்பெற்றன. அவற்றை அடியொற்றிய திறனாய்வு மரபும் வளர்ச்சியுற்றது.
உண்மை, அறம், அன்பு, உயிருக்கு இன்னா செய்யாமை, முத" லாம் கண்ணோட்டங்களில் இலக்கியப் பாத்திரங்கள் மதிப்பீடு
112/சபா ஜெயராசா

களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையைக் கண்டுகொள்ள முடிகின்றது. அறத்தின் வெற்றியே கலை இலக்கியங்களின் நடுவன் பொருளாக்கப்பட்டது. இவற்றை அடியொற்றியே கி.மு.200 தொடக்கம் கி.பி.300 ஆண்டுகள் வரை பெரும் இதிகாசங்கள் தோற்றம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மரபு வழித்திறனாய்வு மரபில் ஒருபுறம் இலக்கண விளக்கங்களின் ஆட்சியும் இன்னொருபுறம் சமய விளக்கங்களின் ஆட்சியும் மேலோங்கியிருந்தன. அடித்தள மக்களின் அறிகைக் கோலங்களும் நாட்டார் உளப்பாங்குகளும் பெருமளவில் நிராகரிப்புக்கு உட்பட்டிருந்தன. நிலமானிய சமூக அமைப்பும், அரசுகளும் மேலோங்கியோரின் சிந்தனைகளையே மீளவலியுறுத்தின. அதன் காரணமாக வரன்முறையான இலக்கணங்களை அடியொற்றியும், வரன்முறையான சமயக் கோட்பாடுகளை அடியொற்றியும் கலை இலக்கியத் திறனாய்வு மேலோங்கியது.
令令令
113/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 60
வரன்முறை சார்ந்த கல்வியோடு திறனாய்வுக்கலை ஒன்றி. ணைந்திருந்தமையால் அக்கல்வியை நுகரக் கூடிய அனுகூலம் மிக்க வகுப்பினரே அதில் ஈடுபடக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தனர். சமூக அடுக்கமைவுக்கும் கல்விச் செயற்பாடுகளுக்குமுள்ள தொடர்புகளைக் கண்டறியும் அறிகைச் செயல்முறை கார்ல்மார்க்சின் (1818 -1883) சிந்தனைகளோடு எழுச்சி பெறலாயிற்று. முன்னதாக சார்ல்ஸ் டாவினுடைய "இயற்கைத் தெரிவு” என்ற கோட்பாடு உயிரினங்களின் படிமலர்ச்சியை அடியொற்றி உருவாக்கம் பெற்றது. டார்வி னுடைய கோட்பாடு சமூகவியல் தளத்திலும் பயன்படுத்தப்பட லாயிற்று. றிச்சார்ட் டவுக்கின்ஸ் என்ற ஆய்வாளர் மனித நடத்தை" களை உயிரியலுடன் தொடர்புபடுத்தி விளக்கியமையும், எட்வேட் வில்சன் எழுதிய "சமூக உ2%யல்" (Socio Biology) என்ற சர்ச்சைக்குரிய நூலும் மத்தியதர வகுப்பினரை விளக்குவதற்குரிய சில பரிமாணங்களைக் கொடுத்தன.
மனிதருடைய மரபணுக்கள் இயல்பாகவே தன்னலப் பாங்கு" டையவை என்ற கருத்தை றிச்சார்ட் டவுக்கின்ஸ் வெளியிட்டார். உயிரியல் வழியாக விளக்கப்பட்ட தன்னல மேலோங்கல் என்பது சமூகவியலுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தன்னலப்பாங்கு (Selfish) மற்றும் தன்னிலை ஓங்கல் (Ego) முதலிய ஆளுமைக் கூறுகள் ஒப்பீட்டளவில் மத்தியதர வகுப்பினரிடத்து மிகையாக இடம்பெற்றுள்ளன என்ற கருத்தும் உண்டு. ஆனால், உயிரியல் ஆய்வாளர்கள் தன்னலவியல்பின் சமூகத்தளத்தை அணுகத் தவறி விட்டனர்.
114/சபா ஜெயராசா
 

சமூக அடுக்கமைப்பு பற்றிய தரிசனத்தை மார்க்சியம் வெளிப்படுத்தியது. அடுக்கமைப்பு என்ற வடிவம் அடிப்படையில் பொருண்மிய இயல்புடன் தொடர்புடைமை மார்க்சியத்தாற் குறித்துரைக்கப்பட்டது. மார்க்சியம் குறிப்பிட்ட பொருண்மியத் தளத்தை தனித்து ஒற்றைப் பரிமாணத்திலே சுருக்கி அறிகை கொள்ளல் "மலினமாக்கிய" அணுகுமுறையாகிவிடும். உற்பத்தியோடு சம்பந்தப்பட்ட பல்வேறு இயல்புகள், விநியோகத்தின் பன்முக இயல்புகள், செல்வப் பகிர்வில் நிகழும் தந்திரோபாயங்கள், சூட்சுமங்கள், பகிர்வைத் தாராண்மைப்படுத்துவதுபோற் காட்டி மேற்கொள்ளும் பறிப்புக்கள், நுகர்ச்சிக் கோலங்களை விரிவாக்குதலும், தூண்டுதலும் என்றவாறு பன்முகப் பரிமாணங்களை நோக்குதல் வழியாகவே சமூக அடுக்கமைவையும் மத்திய தரத்தினரது நிலையையும் விளங்கிக்கொள்ள (tՔւգսյւb.
பறிப்பை மேற்கொள்ளும் வகுப்பினருக்கும், பறிப்புக்கு உள்ளாகும் வகுப்பினருக்கும், இடை நடுவில் மத்தியதர வகுப்பினர் உள்ளமையால் இருமை இயல்புகள் கொண்ட வகுப்பினராக அமைகின்றனர். தொழிற்புரட்சியின் ஒருவித சமூக விளைவினராக அவர்கள் தோற்றம் பெற்றனர். சமூக அடுக்கமைப்பில் மேலெழுந்து செல்ல முடியாத தவிப்புநிலை அவர்களிடத்து நீடித்த உளவியற் செயற்பாடாகவுள்ளது. அவ்வாறான உளவியற் பதகளிப்பு நிலையோடு அவர் களின் கலைஇலக்கியப் பங்களிப்பு இணைந்து இடையுறவு கொள்கின்றது.
மத்தியதர வகுப்பினரது சொத்தாகவும் அவர்களின் விழுமிய வெளிப்பாட்டுக்குரிய வடிவமாகவும் இலக்கியம் அமைந்திருத்தல் பிரித்தானியாவின் சமூக அடுக்கமைப்பை அடியொற்றி பேராசிரியர் எப்.டி.மொறிஸ் அவர்களால் (1840) வெளிப்படுத்தப்பட்டது. தொழி லாளர்கள் தமது உணவுக்கும் இருப்புக்கும் தமது முழுநேர உழைப்பைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் கலை இலக்கியத் துறை" களில் தமது கவன ஈர்ப்பைக் கொள்ளல் கடினமாக இருந்தது.
சமூக அடுக்கமைப்பில் மேலுயர்ந்தோர் தமது உயர்கல்வியை இலத்தீன் கிரேக்கம் முதலிய செம்மொழிகளில் மேற்கொள்ள மத்தியதர வகுப்பினரே தமது கல்வியிலும் எழுத்தாக்கங்களிலும் ஆங்கிலமொழியைப் பயன்படுத்தும் மரபு பிரித்தானியாவிலே காணப்பெற்றது. இவ்வகையில் மேலைப் புலத்துச் சமூகத் தோற்றப்
115/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 61
பாட்டுக்கும், தமிழ் மரபுக்குமிடையே பல ஒப்புமைகளைக் காணமுடியும்.
மேலைப்புலத்துத் தொன்மையான அரங்கியல் வளர்ச்சியில் மேலோங்கியோருக்குரிய அரங்கு மற்றும் அடுக்கமைப்பின் தாழ்ந்” தோருக்கும் அடிமைகளுக்குமான அரங்கு என்ற முரண்பாடான நிலை காணப்பட்டது. அடிமைகளின் அரங்கு தடை செய்யப்பட்ட நிகழ்ச்சிகளும் ரோமாபுரியில் இடம்பெற்றன. தமிழகத்திலும் “வேத்தியல்", "பொதுவியல்" என்ற இருமைப்பாடு கூத்துமரபிலே காணப்பட்டது. உயர்ந்தோர் ஆடல்கள் அரச அவைகளிலும், பெரும் ஆலயங்களிலும் இடம்பெற்றன. அடிநிலை மக்களின் ஆடல்கள், சிறுதெய்வ வழிபாடுகளோடு இணைந்திருந்தன. மேலைப்புலத்து உயர்குடியினர் இலத்தீன் மொழியில் உயர்கல்வியைக் கற்” றமை போன்று தமிழகத்து உயர்குடியினர் சம்ஸ்கிருத மொழியிலே கல்வியைக் கற்றனர். அடிநிலை மக்களிடமிருந்து உயர்குடியினர் தம்" மை வேறுபடுத்திக் கொள்வதற்கும் அவ்வாறான கல்வி ஏற்பாடு வாய்ப்பானதாக இருந்தது.
மேலைப்புலக் குடியேற்றவாதம் அல்லது காலனித்துவ ஆட்சி ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளிலே மத்தியதர வர்க்" கத்தினரைத் தோற்றுவித்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் பிரித்" தானியர் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஆங்கிலக்கல்வி வளர்ச்சி, சுதே" சிகளை அரச உத்தியோகங்களிலே பணிக்கு அமர்த்தியமை, தனி யார் கம்பனிகளின் வளர்ச்சியோடு ஆங்கிலம் கற்றோர் ஊதியம் பெறும் தொழில்களைப் பெற்றுக்கொண்டமை முதலியவை மத்தியதர வகுப்பினரது தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தன.
மத்தியதரத்தினரது இயல்புகளை விளக்குவதற்கு சமூகவியலாளர் எழுகுழ7ம் (Elite) என்ற எண்ணக்கருவையும் பயன்படுத்” துவர். எழுகுழாத்தினர் இருவகையாகப் பாகுபடுத்தப்படுவர். அப்பாகுபாட்டுப் பிரிவினர் வருமாறு:
=> தேசிய எழுகுழாத்தினர். * பிரதேசம் அல்லது தனித்தனி புலங்களைச் சார்ந்த எழு
குழாத்தினர்.
முற்று முழுதாக ஆங்கிலக்கல்வி வழியாகவும், உயர் பதவிகள் வழியாகவும் தலைநகரிலே சொத்துரிமை கொண்ட இயல்பின் வழி
116/சபா ஜெயராசா

யாகவும் தேசிய எழு குழாத்தினர் தோற்றமும் வளர்ச்சியும் பெற்றனர். தமது ஆக்கத்திறன்களையும் அறிவு வெளிப்பாடுகளையும் வெளிப்படுத்துவதற்கு அவர்கள் ஆங்கிலமொழி ஊடகத்தையே பெருமளவு பயன்படுத்தினர். சைமன்காசிசெட்டி, கலாயோகி ஆனந்தகுமாரசாமி, சேர்.பொன்னம்பலம், அருணாசலம், சேர். பொன்.இராமநாதன் முதலியோர் இந்நாட்டின் பிரித்தானிய ஆட்சிக்காலத்துத் தேசிய எழுகுழாத்தினராகின்றனர்.
ஆனால், பிரதேச எழுகுழாத்தினர் அவர்களின் இயல்புகளில் இருந்து வேறுபட்டவர்களாக இருந்தனர். இவர்கள் தாய்மொழி யுடன் ஆங்கிலம் கற்றவர்களாகவும், அல்லது தனித்துத் தாய்மொழி யில் மட்டும் ஆற்றல் பெற்றவர்களாகவுமிருந்தனர். இவர்களே தாய்மொழியில் இலக்கிய அடையாளங்களைப் பதித்தனர். தாய்மொழி யில் நாவல், சிறுகதை, திறனாய்வு முதலியவற்றைப் புனைந்த முன்னோடிகளாக ஆங்கிலமும் தமிழும் கற்றவர்களே விளங்கினர். இராஜமையர், வ.வே.சு.ஐயர், புதுமைப்பித்தன் என்றவாறு அவர்களின் பட்டியல் விரிவடைகின்றது. இலங்கையிலும் இலங்கையர்கோன், சம்பந்தன், பண்டிதர் சச்சிதானந்தன் என்ற முன்னோடிகளை இவ்வகையிலே சுட்டிக்காட்டலாம்.
கல்வி வழியாக நிலைக்குத்துச் சமூக அசைவியத்தை அனுபவித்தல், என்ற செயற்பாட்டுடன், எழுத்தாக்கங்களில், ஈடுபடலும், பொதுவாழ்வில் ஈடுபடலும் பொறுத்தவரை அந்தஸ்தைக் குறிப்பதற்குரிய சின்னங்களாயின. மத்தியதர வகுப்பினரின் பிறிதொரு சாரார் தாம் பெற்ற ஆங்கிலக்கல்வியின் வழியாக ஐரோப்பாவில் எழுந்த கூட்டுறவுச் சிந்தனைகள் மற்றும் மார்க்சியச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டனர். மார்க்சியக் கண்ணோட்டம் அவர்களது திறனாய்வுகளிலும் இலக்கிய ஆக்கங்களிலும் ஊடு பரவியது. இவர்க" ளைத் தனித்த ஆய்வுக்கு உட்படுத்துதலே பொருத்தமானது.
பொதுவாக மத்தியதர வகுப்பினரது செயற்பாடுகள் பின்வரும் கோலங்களில் ஒன்றையோ பலவற்றையோ அடியொற்றி அமைந்தன.
(1) அதீத தன்னல மேலோங்கல்.
(2) சந்தர்ப்பவாதப் பண்புகள் இழையோடி நிற்றல்.
117/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 62
(3)
(4)
(5)
(6)
பறிப்புக்கு உள்ளாகும் பொழுது தொழிலாளர் பக்கமும் அனுகூலம் கிடைக்கும் பொழுது, ஒடுக்குவோர் பக்கமுமென ஊசலாட்டங்களைக் கொண்டிருத்தல். தமது நலன்களின் பொருட்டு பிரதேசவாதம், சமயவாதம் முதலியவற்றை முன்னெடுத்தல். அரசியல் மற்றும் பணி பாட்டு இடைத்தலைமைத்துவத்தைப் பெற முயற்சித்தல். தாம் பெற்றுக்கொண்ட வளமான எழுத்தறிவைப் பயன்படுத்தி இலக்கியப் புனைவுகளை முன்னெடுத்தல்.
மேற்கூறிய இயல்புகளின் அடிப்படையாக மத்தியதர வகுப்பினரின் இலக்கியத் திறனாய்வுக் கோலங்கள் பின்வருமாறு அமைந்தன.
(1)
(2)
(3)
(4)
(5)
திறனாய்வின் ஊசலாடும் போக்கு - அதாவது ஒருபுறம் ஒடுக்கப்பட்டோரின் கண்ணோட்டத்தை அணுகுதலும், இன்னொருபுறம் ஒடுக்குவோருக்குச் சாதகமான கருத்தி யலுக்கு ஆதரவு தருதலும். சந்தர்ப்ப வாதத்தையும் திறனாய்வையும் ஒன்றிணைத்தல். மத்திய தரவகுப்பினருக்குரிய மொழிவிதிகளையும் மொழி விளையாட்டையும் (Language Game) அடியொற்றி நாட்டார் இலக்கியங்களையும், ஒடுக்கப்பட்டோரின் இலக்கி யங்களையும் அணுகுதல். மீ நடப்பியல் (Hyperreal) படிமங்களைச் சிலாகித்துப் பேசுதல்.
மேலோங்கிய அறிவை அடியொற்றித் திறனாய்வில் அதிகாரத்தை நிலைநிறுத்துதல்.
மத்தியதர வர்க்கத்திலிருந்து மார்க்சியக் கருத்தியலுக்குள் வந்தோர் தனித்து ஆராயப்படத்தக்கவர்கள். தமது கல்வி வழியாகப் பெற்றுக்கொண்ட மார்க்சிய அறிகையை மாணவர்களுக்கும் தொழி. லாளர்களுக்கும் கையளிப்புச் செய்த நடவடிக்கையில் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். தமிழிலே "செப்பமான” திற
118/சபா ஜெயராசா

னாய்வு மரபு வளர்வதற்கு மார்க்சிய அறிகை பல பரிமாணங்களிலே பங்களிப்புச் செய்யலாயிற்று. அதேவேளை திறனாய்வுக் கலையைச் சந்தர்ப்பவாதத்தோடு இணைத்த மார்க்சிய சிந்தனையாளரும் உளர்.
令令令
119/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 63
திறனாய்வுக்
கலைச் சொற்கள்
Abstraction
Anomie
Aphasia
Attitude
Behaviourism
Biological Rhythm
Bricolage
Catharsis
Cognition
Cyborg
DeConstruction
Discourse
Double Coding
ECOCriticism
அருவமாக்கல்
சமூகச் சிதைவு
மொழிச் சிதைவு
உளப்பாங்கு
நடத்தையியல்
உயிரியல் ஒழுங்கிசை
இணக்கல்
கழிவிரக்கத் துய்ப்பு
அறிகை
பொறியுடல்
கட்டுமானக் குலைப்பு/தகர்ப்பு
கருத்து வினைப்பாடு
இருநிலைக் கோடல்
சூழலியல் திறனாய்வு
120/சபா ஜெயராசா

Enlightenment
Epist emology
Existentialism
Functionalism
Hedonism
Hyperreality
ldealism
Intertextuality
Late Capitalism
Lesbian
Metanarrative
Narratology
Newhistoricism
Pluralism
Post Colonialism
Pragmatism
Realism
Schema
Signified
Simulation
அறிவொளி ஓங்கல்
அறிவாய்வியல்
இருப்பியம்
தொழிற்பாட்டியம்
இன்பவியம்
மீநடப்பு
எண்ணவியல்
ஊடு நூலிய நோக்கு
பினெழு முதலாளியம்
பெண்பாலிணைவு
பெரும் உரையம்
கதையுரைப்பியல்
நவவரலாற்றியல்
பன்மையியல்
பின்காலனியம்
பயன்கொள்வாதம்
நடப்பியல்
அறிகைத்திரட்டு
குறிப்பான்
படிமத்தின் படிமம்
121/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 64
Structuralism அமைப்பியல்
Stylistics - எழுநடையியல்
Text - நூலியம்
Transformation - 560)@LDTippud
ぐ>ぐ>ぐ>
122/சபா ஜெயராசா

REFERENCES
Bal, Mieke, Narratology, Introduction to Theory of Narrative (University of Torronto Press, 1997)
Barthes, Roland, A Roland Barthes Reader, ed. Susan Sontag
(Vintage, 1993)
Birch, David Language, Literature and Critical Practice, Ways
of Analysing Text (Routledge, 1989)
Coyle, Martin, et al eds. Encyclopedia of Literary Criticism
(Routledge, 1990)
Culler; Jonathan, Structuralist Poetics (Routledge, 1975)
Docherty, Thomas, ed. Postmodernism, A Reader (Columbia
University Press, 1993)
Dollimore, Jonathan, Sexual Dissidence Augustine to Wilde,
Fread to Focault (Clareden, 1991)
Eagleton, Terry, Literary: An Introduction (Black Well, 1996)
Freud, Sigmund, Case Histories (Volume eight in the Penguin
Freud)
123/இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்

Page 65
Gardner, Helen, In Defence of the Imagination (Oxford Uni
versity Press 1984)
Gifford, Terry, Green Voices, (Manchester University Press,
1995)
Lilly, Mary, Lesbian and Gay Writing, (Macmillan, 1990)
Mulhern, Francis, ed. Contemporary Marxist Literary Criti
cism, (Longman, 1992)
Peter, Barry, Beginning Theory, (Manchester University Press,
2007)
Said, Edward, Culture and Imperialism (Vintage, 1994)
Tallack, Douglas, ed. Literary Theory at Work, Three Texts (Bats
ford, 1987)
令令令
124/சபா ஜெயராசா


Page 66


Page 67
பேராசிரியர் முனைவர் "கல்வியியல் துறைசார் அத்துறைசார் விருத்தியி வகித்து வருபவர் கலை தத்துவம் எனப் பல்வே புலங்களுடன் ஊடாடி செழுமை மற்றும் அறி "புலமைமரபு" எத்தகை துல்லியமாக வெளிப்ப தத்துவம் பற்றிய தொட புதிய அறிவுருவாக்கப் ஈடுபட வைப்பதுடன், ! பொருள்கோடல் சார்ந் அர்த்தப்பாடுகளை நோ குவிக்கவும் செய்கிறது. ஆய்வுக் களங்கள் நோ கொள்ளத் தூண்டுகிறது
இன்றுவரை கல்வி உல முனைவர் சபா ஜெயர உயிர்ப்புமிகு புலமைய திகழ்கின்றார்.
 

சபா.ஜெயராசா தமிழில் ந்த நூல்கள் பல எழுதி, ல் முதன்மையான பங்கு , இலக்கியம், உளவியல், று துறைசார் வருபவர். இவற்றின் ஆ, ஆய்வு யாவும் இவரது யது என்பதைத் தனித்துக் நித்தும். மேலும், கலை ர் விசாரணை, இவரை பணியில் முழுமையாக கல்வியின்
து புதிய புதிய ாத்திக் கவனம் தொடர்ந்து புதிய க்கியும் கவனம்
ISBN 7-55-57-L-5
TgFT
ாளராகவே -
|
5 l bל 5 l, "b 55ר bלי