கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையாள நாடும் மட்டக்களப்பும்

Page 1


Page 2


Page 3

D60)60LLIT6II BT(BLD LDL L-556III||D
மலையாள நாடும் மட்டக்களப்பும்
வெல்லவுர்க்கோபால்
- 1 - வெல்லவூர்க்கோபால்

Page 4
மலையாள நாடும் மட்டக்களப்பும்
மனுவேத7 வெளியீடு 04
- நூல தரவுகள7 -
நூற்பெயர் : மலையாள நாடும் மட்டக்களப்பும் 66) is : ஒப்பீட்டு ஆய்வு ஆசிரியர் வெல்லவுர்க் கோபால்
(சீ. கோபாலசிங்கம்) பதிப்பு 1ம் பதிப்பு 2007 பிரதிகள் : 1 OOO
கணனி எழுத்தமைப்பு: வி.பி.தீபன் அட்டை வடிவமைப்பு : வி.சுரேஷ்
அச்சுப்பதிவு : ஆதவன் அச்சகம்,மட்டக்களப்பு பக்கங்கள் : 125 விலை ரூபா : 200 =
- 2 - வெல்லவூர்க்கோபால்

(லையாள நாடும் மட்டக்களப்பும்
நூலின் முகப்பு அட்டையில் கேரளத்தின் பழமைவாய்ந்த திருவனந்தபுரம் பத்மநாபா ஆலயமும் மட்டக்களப்பின் பழமை வாய்ந்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரமும். அவற்றின் முன்னால் கேரளத்தின் கதகளியும் மட்டக் களப்பின் வடமோடியும்
- 3 - வெல்லவுள்க்கோபால்

Page 5
மலையாள நாடும் மட்டக்களப்பும்
அமரர் பா. கனகரெத்தினம் அவர்களுக்கு
இருக்கும் போது அந்தப் பெருமை எமக்குத் தெரியவில்லை இடைவெளி யொன்று விழுந்தது இன்று உலகே விடியவில்லை விருட்சம் போல நாம் நிழல் தரலாம்
61,95607/16) 9/nf0562/TLDs/ வேராய் மண்ணுள் இருக்கு மிந்த (562/35Li Lif(562/7LOT
பிரியத்துடன் சமர்ப்பணம்
- 4 - வெல்லவுர்க்கோபால்
 

மலையாள நாடும் மட்டக்களப்பும்
முன்னுரை
பேராசிரியர் சி. மெளனகுரு B.A(Hons), Dip. In Ed., MA, Ph.D.
வரலாற்றை எழுதுவதில் புதைபொருள் அகழ்வாய்வு, கல்வெட்டு, நாணயம், எழுத்தாவணங்கள், பிறநாட்டார் குறிப்புகள் என்பன சரித்திர ஆசிரியர்களுக்கு மூல ஆவணங்களாக அமைகின்றன. இவற்றோடு வாய்மொழி மரபு களையும் மக்கள் வழக்காறுகளையும் உப ஆவணங்களாக பயன்படுத்தும் போக்கும் அண்மைக் காலமாக உருவாகி வருகின்றது.
மட்டக்களப்பின் வரலாற்றை எழுதுவதில் வரலாற்
றாசிரியருக்குரிய பெரும் இடர்ப்பாடு முதற் குறிப்பிட்ட மூல ஆவணங்கள் அதிகம் இல்லாமையே ஆகும்.
மட்டக்களப்பு வரலாற்றை பின்வரும் காலப்பகுதிகளாக Lifdb356)|TLb.
01. புராதன காலப் பகுதி 02. பழைய வரலாற்றுக் காலப் பகுதி 03. சோழர் காலப் பகுதி 04. சோழர் காலத்துக்கும் போர்த்துக்கேயர் காலத்துக்கும்
இடைப்பட்ட காலப் பகுதி
05. போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலப் பகுதி 06. ஆங்கிலேயர் காலப் பகுதி 07. ஆங்கிலேயர் காலத்துக்கு பின்னரான காலப் பகுதி
- 5 - வெல்லவுர்க்கோபால்

Page 6
மலையாள நாடும் மட்டக்களப்பும் இவற்றுள் முதல் நான்கு பகுதிகளுக்கான ஆவணங்களாக திருக்கோவில் கல்வெட்டு, வீரமுனைச் செப்பேடு, சம்மாந்துறைச் செப்பேடு என்பவற்றைவிட வேறு ஆவணங்கள் கிடைக்கவில்லை அதன் பின்னர் வந்த காலங்களுக்குரிய ஆவணங்கள் போர்த் துக்கல்லிலும் ஒல்லாந்திலும் அவ்வவ் மொழிகளிலுள்ளன. அவற்றை தமிழில் கொணரும் முயற்சிகள் எதனையும் ஈழ வரலாற்றாசிரியர்கள் இதுவரை செய்யவில்லை. ஆங்கிலேயரின் சில ஆவணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதனால் 19ம் நூற்றாண்டின் மட்டக்களப்பு வரலாறு பிரகாசமாகத் தெரிகின்றது. இப்பின்னணியில்தான் மட்டக்களப்பு வரலாறு எழுத முனைவோர் தம் பணிகளைத் தொடருகின்றனர்.
காலத்துக்குக் காலம் இங்கு குடியேறிய இந்தியாவைச் சேர்ந்த தமிழ் நாடு, கேரளா, கர்னாடகம், ஆந்திரா, ஒரிசா முதலான பிரதேசக் குலங்களும் இலங்கையின் பிற குலங்களும் அராபிய வணிக குலங்களும் தமக்குள் இணைந்தும் பிணைந்தும் வாழ்ந்ததும் வாழ்வதற்கான நிலப் பகுதிகளை பகிர்ந்து கொண்டதும் ஒரு சமூக அமைப்பாக மாறியதுமே மட்டக்களப்பு வரலாற்று நிகழ்வு போலத் தெரிகின்றது. இவ்வகையில் மட்டக்களப்பின் பண்பாடு ஒரு பல்லினப் பண்பாடு போலமைகின்றது. இப்பண்பாட்டை மென் மேலும் புரிந்து கொள்வதற்கும் அதனை வலுப் படுத்துவதற்குமான முறையில் வரலாறுகள் எழுதப்பட வேண்டியது இன்றைய தேவையாகும்.
வெல்லவுர்க் கோபால் இதுவரை நமக்கு ‘தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும்’, ‘மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம்’ என இரு முக்கிய ஆய்வு நூல்களைத் தந்துள்ளார். உன்னிப்பாகப் படிப் போருக்கு இதுவரை மட்டக் களப் பின் வரலாற்றை எழுதியோருக்குள் இவர் வித்தியாசமானவராகவே தெரிகின்றார். அவரது வரலாற்று ஊகம் நான் முன்னர் குறிப்பிட்டதின்படி இங்கு வந்திணைந்த குலங்கள் தம்மை மட்டக்களப்புச் சமூகமாக ஆக்கிக்கொண்ட பாங்கினையே மையமாகக் கொண்டுள்ளது.
- 6 - வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் நூலுருவாக்கத்திற்கான மூலங்களை அவர் தமிழ் நாட்டிலும் கேரளத்திலும் ஒரிசாவிலும் தேடுகின்றார். அதுபோல் தமிழகத்தில் அவர் தேடியதன் விளைவு வன்னியர் பற்றிய நூலாகும். கேரளாவில் தேடியதன் விளைவுதான் ‘மலையாள நாடும் மட்டக்களப்பும்’ எனும் இந்நூல். இவ்வகையில் மூல ஆவணங்களை தென்னிந்தியாவின் வரலாற்றிலும் பண்பாட்டிலும் தேடும் அவர் முயற்சிகள் மட்டக்களப்பின் வரலாற்றெழுத் தியலுக்கு ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றது.
மட்டக்களப்பின் பிரதான குலமாக முக்குக (முற்குக) குலம் அமைந்துள்ளது. மிகப் பெரும்பான்மையினரான இவர்களின் பெயரிலேயே இத்தேசம் முன்னாளில் அழைக்கப் பட்டதுடன் இவர்களுக்கென ஒரு சட்ட முறையும் இருந்துள்ளது. தாய் வழி உரிமையை வலுப்படுத்தும் அச் சட்ட முறைமை இன்று இல்லை. இச்சமூகத்தினரின் முக்கிய பூர்வீகம் மலையாள நாடு என்பது இன்று நிறுவப் பட்ட உண்மையாகும் . இச்சமூகத்தினருடன் மட்டக்களப்பில் குடியேறிய சில இனக் குலங்களும் மலையாளத்திலிருந்தே இங்கு வந்துள்ளனர். இதனாலேயே மட்டக்களப்பின் பண்பாடெனப்படும் வணக்க முறைகள், வாழ்க்கை முறைகள், கலைகள், பழக்கவழக்கங்கள் உணவு முறைகள், உடைகள் என்பனவற்றில் கேரளாவின் செல்வாக்கைக் காணமுடிகின்றது. தமிழ் நாட்டில் நாம் சென்று பேசும்போது நமது பேச்சு மொழியில் காணப்படும் தொனி அமைவு, உச்சரிப்பு என்பவற்றைக் கவனிக்கும் தமிழ் நாட்டுக்காரர் நீங்கள் கேரளாவா என்றுதான் கேட்கின்றனர்.
வெல்லவுர்க் கோபால் இந்நூலில் கேரள மக்களுக்கும் மட்டக்களப்பு மக்களுக்கும் இடையேயான ஒற்றுமையினை இரண்டு நாடுகளுக்குமிடையே காணப்படும் வழக்காறுகள், சமூகக் கட்டமைப்பு, வழிபாட்டு முறைகள், தொழில்கள், கலைகள் என்பவற்றினடியாக விளக்க முயல்கின்றார். வன்னிமைகளைத் தேடி
- 7 - வெல்லவூர்க்கோபால்

Page 7
மலையாள நாடும் மட்டக்களப்பும்
தமிழ் நாட்டின் மூலைமுடுக் கெல்லாம் அலைந்ததைப்போல மட்டக்களப்பின் முற்குகரையும் அவர்களோடு சார்ந்த ஏனைய குலங்களையும் தேடி கேரளாவின் மூலை முடுக்கெல்லாம் கோபால் அலைந்திருக்கின்றார்.
பட்டங்களைப் பெறுவதற்காகத்தான் பல்கலைக் கழக அறிஞர்கள் பலர் இப்படி அலைவார்கள். ஆனால் கோபால் பட்டத்திற்கும் அப்பால் தனது பிரதேசத்தினது மூலவேர்களைத் தேடி அலைந்துள்ளார், இன்னும் அலைகின்றார். தேடலும் அலைவும் சிந்தனையாளனின் அடிப்படைத் தகமைகள். கோபாலின் சிந்தனை வளர்ச்சியை கடந்த ஐம்பது ஆண்டுகளாக அருகிலிருந்தே பார்க்கின்றேன். அவரது மன முதிர்ச்சியும் அறிவாழமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.
மட்டக்களப்பு வரலாறு தமிழ் நாடு மற்றும் கேரளாவோடு மட்டுமல்ல ஒரிசா (கலிங்கம்) உடனும் பின்னிப் பிணைந்தே யுள்ளது என்பதை அவர் அறிவார். எனவே தமது அடுத்த தேடலையும் அலைவையும் கோபால் ஒரிசாவில் மேற்கோள்ள வேண்டுமென உரிமையோடும் அன்போடும் அவரைக் கேட்டுக் கொள்கின்றேன். அதற்கான உள உடல் வலுவும் தேக ஆரோக்கியமும் அவருக்கு அமையவேண்டுமென வாழ்த்து கின்றேன்.
பேராசிரியர் சிமெளனகுரு தலைவர் - நுண்கலைத் துறை
கிழக்குப் பல்கலைக் கழகம்
-8- வெல்லவூர்க்கோபால்

|லையாள நாடும் மட்டக்களப்பும்
அணிந்துரை
பேராசிரியர் எஸ்.இராதாகிருஷ்ணப் பணிக்கர்
MA, M Lit, M Phil, Ph.D.
கேரளம் என்பது பண்டைய முத்தமிழ் நாட்டின் முதல் நாடாகக் கொள்ளப்பட்ட சேரநாட்டினைக் குறித்துக் கூறுவதாக அமையும். அன்றைய சேரமன்னர்களில் தொடங்கி களப்பிரளர், பல்லவர், பாண்டியர், பெருமாள்கள், பிற்காலச் சோழர், பிற்காலப்பாண்டியர், அயலவர்கள் எனத் தொடர்ந்து அன்னியர் காலத்தையும் உள்ளடக்கி இன்றுவரை அதன் வரலாறு நீளும். கி.மு 4ம் நூற்றாண்டில் பாடலி புரத்துடன் சேர மன்னர்களுக்கும் சங்கப் புலவர்களுக்கும் இருந்த தொடர்புகளும் கி.மு 3ம் நூற்றாண்டில் பாதுகாப்புக் கூட்டமைப்பை உருவாக்கி அதன்மூலம் தமிழக எல்லையில் வைத்தே மோரியர்களை விரட்டியடித்த பெருமையும் சேரர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகவே அமைந்தது. இக்காலத்தே கலிங்கத்திற்கும் ஈழத்திற்கும் இருந்த தொடர்புகளும் வரலாற்றில் பதிவுகளாகவே உள்ளன. ஈழத்தின் தென்கிழக்குப் பெருநிலப்பரப்பாக விளங்கிய மட்டக்களப்பு நாடு கலிங்கரின் செல்வாக்குக்கு உட்பட்டதாக அன்று இருந்த போது கலிங்கரும் சேரரும் மிக்க நட்புறவு கொண்டவர்களாகவே விளங்கினர்.
கி.மு 3ம் நூற்றாண்டில் சேரநாட்டின் இரு படைத் தலைவர்களான சேனனும் கூத்திகனும் இணைந்து அனுராத புரத்தைக் கைப்பற்றியதாக இலங்கை வரலாறு கூறுகின்றது. இதில் கூத்திகன் மட்டக்களப்பில் இருந்து ஆட்சி புரிந்ததை மட்டக்களப்பு
- 9- வெல்லவுர்க்கோபால்

Page 8
மலையாள நாடும் மட்டக்களப்பும் வரலாறு தெளிவுறுத்தும். இதற்கு கலிங்கத் தொடர்புகளும் முக்கிய காரணங்களாக அமைந்திருக்க வேண்டும். இதுமுதல் கொண்டே சேரநாடும் கலிங்க நாடும் மட்டக்களப்பு நாடும் முக்கோணத் தொடர்பில் தங்களுக்குள் ஒரு உறவுப் பாலத்தை உருவாக்கிக் கொண்டுள்ளமை தெரிகின்றது. இதன்படி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரேயே இறுக்கமானதோர் பிணைப்பினை மலையாள நாடும் மட்டக்களப்பு நாடும் பெற்றுக்கொண்டமை புலனாகின்றது.
கவிஞர் கோபால் எழுதிய ‘மலையாள நாடும் மட்டக்களப்பும் எனும் இந்நூல் ஆய்வு அடிப்படையிலான ஒரு ஒப்பீட்டு நூலாகும். இவ்வாறான ஒரு நூலை வெளிக் கொணர்வ தென்பது மிகவும் சிரமத்துடன் கூடிய ஒரு கடின பணியாகும். இதில் உண்மைகளை தேடிப்பிடித்து சொல்லுவதே ஒரு ஆய்வாளனின் கடமையாகவும் குறிக்கோளாகவும் இருக்க வேண்டும். இத்தகைய கோட் பாட்டினை முழுமையாகப் பின்பற்றுபவர் கோபால் என்பதனை “தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும”, “மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம்” போன்ற நூல்கள் நமக்கு உணர்த்தியுள்ளன.
இந்நூலுக்கான தகவல்களைத் திரட்ட அவர் தமிழகத்திலும் கேரளத்திலும் மேற்கொண்ட பயணங் களையும் பட்ட சிரமங்களையும் நான் நன்கு அறிவேன். தேடிக்கிடைத்த தகவல்களை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக என்போன்ற சிலருடன் அவர் அடிக்கடி தொடர்புகொண்டமை அவரது நடுநிலைப் போக்கின் அடையாளமே.
பல நூறு ஆண்டுகள் தொன்மைமிக்க வரலாற்று நிகழ்வுகளை திட்டவட்டமான ஆதாரங்களின் துணை கொண்டு அறுதியிட்டுக் காட்டவேண்டிய பெரும் சோதனைக் களத்துள் தனது பேனாவை மட்டும் நம்பிக்கொண்டு களமிறங்கிய கோபால் பெரும் சாதனையாளனாக வெளிவந்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.
- 10- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
நண்பர் கோபாலை கோவையில் நான் முதன் முதலில் சந்தித்தபோது போர்க்காலச் சூழலில் புலம்பெயர்ந்த ஒரு ஈழத்துக் கவிஞனாகவே எனக்கு அவர் அறிமுகமானார். 1998ல் பேராசிரியர் மீ.இராசேந்திரன் (கவிக்கோ மீரா) வின் சக்தி அலுவலகத்தில் தொடங்கிய எமது நட்பு ஏதோ ஒரு உறவுக்குள் எம்மை வலுவாகப் பிணைத்துவிட்டது. பிற்பட்ட எமது சந்திப்புகள் எல்லாமே மிக்க பயனுள்ளவையாகவே அமைந்தன.
கோபால் பூபாளத்தில் எழுதியிருந்த “தமிழக ஈழ சமூகங்களின் விரிவாக்கம்’ எனும் சிறப்புக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கேரள மரபுவழிச் சமூகங்களில் பணிக்கர், மழவர், நாயர், முக்குவர் போன்றோர் அவரது மட்டக்களப்பு மண்ணில் அடையாளப் படுத்தப்படுகின்ற தன்மையும் சேரத்தின் பாரம்பரிய கலாசார விழுமியங்கள் அங்கு வெகுவாக வேர்கொள்ள வளர்த்தெடுக்கப்பட்டிருக்கின்ற சிறப்பும் அவரது எழுத்தில் படிக்கக்கிடைத்தபோது சேரத்தின் பண்பாட்டுப் பெருமை எனக்குள் ஒரு பெருமிதத்தை உண்டு பண்ணியது.
இந்த நூலைப் பொறுத்தவரை இதன் முக்கியத்துவம் நம்மால் மிகமிக உணரப்படவேண்டிய தொன்றாகும். இதில் வரும் அனைத்து விடயங்களும் மிகுந்த அவதானத்துடன் வெளிக்கொணரப்படுவதை வாசகர்கள் நன்கு உணர்வர். குறிப்பாக கேரளத்தின் சிறப்பினுக்குரியதான மருமக்க தாய மரபுவழி வழக்காறுகள் மட்டக்களப்பின் தாய்வழி முதிச வழக்காறுகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டிருக்கின்ற தன்மையும் பண்டைய போடி முறைமைகள் மற்றும் நாடுடையார், நாடுவழி,வன்னிமை,உடையார் போன்ற நிருவாக கட்டமைப்பு தொடர்பான ஒப்பீடுகளும் ஊரலர் என்னும் ஊர்ப்போடி முறைமைகளும் மிகுந்த அவதானத்துடன்கூடிய தேடலுக்கு உட்பட்டிருப்பதைக் காணமுடியும். கண்ணகித் தெய்வ
-ll - வெல்லவூர்க்கோபால்

Page 9
மலையாள நாடும் மட்டக்களப்பும்
வழிபாடு தொடர்பான அவரது கருத்துக்கள் யாவுமே எமது உடன்பாட்டுக் குரியன.
கோபால் அவர்களின் ஆதங்கமும் விருப்பும் மிகமிக வித்தியாசமானவை. அவரது சமூகப் பார்வை வியாபித்த தன் மை யைக் கொண் டவை. அவரது எழுத்துக் கள் சுயநலப்போக்குக்கு அப்பாற்பட்டவை. தனது சொந்த மண்ணின் மீது அவருக்கு இருக்கின்ற பற்றுதலின் உந்துதலால் வந்த பெருமிதத்தின் வெளிப்பாடே இந்நூல்.
இந்த நூலினை வெளிக்கொணர கோபால் மேற்கொண்ட முயற்சிகள் மிகுந்த பாராட்டுக்குரியவை. இதுபோன்ற நூல்கள் இந்திய-இலங்கை நட்புறவினை மிகவும் வலுப்படுத்தக்கூடியவை என்பதால் இப்பணிகள் தொடர நமது ஒத்துழைப்பும் செயல்பாடுகளும் என்றும் அவசியமானவை.
நாளெல்லாம் நிகழ்த்தப்பட்டுவருகின்ற நீண்டகாலப் போராட்டத்தால் இரத்தக்கறை படிந்துகிடக்கின்ற எங்கள் உறவுகளின் பாரம்பரிய மண் மீண்டும் அமைதிப் பூங்காவாகும் நாளே எம்போன்றவர்களுக்கும் திருநாளாக அமையும். அதற்காகப் பிரார்த்திப்போம். நண்பர் கோபால் அவரது எழுத்துப்பணியை
தொடர்ந்தும் முன்னெடுக்க வாழ்த்துவோம்.
எஸ்.இராதாகிருஷ்ணப் பணிக்கர்
கேரளா (இந்தியா)
- 12- வெல்லவூர்க்கோபால்

LD6006)u JFT6TT bst (BLD LDL-5356ITILD
மலையாள நாடும் மட்டக்களப்பும்
முன்னுரை : 05
அணிந்துரை - : 09
01. நுழை வாயில் : 14 02. மலையாள நாடும் மட்டக்களப்பும் : 9 03. விவசாயத் தலைமைத்துவமும்
நிருவாகக் கட்டமைப்பும் : 49 04. போடி முறைமை : 63 05. மருமக்க தாயமும் தாய்வழி
முதிசமும் : 71 06. கண்ணகி வழிபாடு : 87 07. நிகழ்த்து கலைகள் : 102 08. மந்திரக்கலை : 113
சான்றாவணங்கள் : 122
- 13 - வெல்லவுர்க்கோபால்

Page 10
மலையாள நாடும் மட்டக்களப்பும்
01. நுழை வாயில்
மலையாள நாடும் மட்டக்களப்புமி' எனும் இவ்வொப்பீட்டு ஆய்வு ஒரு புதிய முயற்சியாக அமையினும் இதன் தேவையின் முக்கியத்துவம் காலத்தால் உணரப்பட்டதாகும். மட்டக்களப்பின் வரலாறு அறியப்பட்ட நாள் முதலே அதன் சமூக வரலாற்றுத் தளத்துள் சேரநாடு இணைக்கப்படுவதுவும் அதுமுதல்கொண்டு அதன் பண்பாட்டு அம்சங்களில் மட்டக்களப்பு இறுக்கமாக கட்டுண்டு கிடப்பதுவும் நம்மில் பலர் அறியாததாகும். மட்டக்களப்பின் கல்விமான்களாக இனங்காணப்பட்ட ஒரு சிலரும் இதனை ஒரு சிறு குறிப்பாக கொண்டார்களே தவிர இதுவே மட்டக்களப்புப் பிரதேசத்தின் பாரம்பரிய சிறப்பினுக்கும் பண்பாட்டு அம்சங்களுக்கும் உறுதியான அடித்தளமிட்டது என்பதனை விரிவாக வெளிக்காட்ட முனைந்தாரில்லை. குறித்துச் சொல்லப்போனால் பல்கலைக் கழக மட்டங்களிலே செய்யப்படத்தக்க தேடல்களுக்கும் ஆய்வுகளுக்கும் இவ்விரு பிரதேசங்களிலுமே ஏகப்பட்ட வாய்ப்புகளும் சமூகப் பாரம்பரியப் பண்பாட்டு அம்சங்களும் மலிந்து அகலப்பட்டும் ஆழப்பட்டும் கிடப்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
- 14- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
கேரளத்துக் கிராமங்களில் கால்வைக்கும்போதும் தங்கள் பாரம் பரியங்களை மறந்துபோகாத அம்மக்களோடு உண்டு உறவாடி மகிழும்போதும் நமக்கு ஏற்படுகின்ற இன்ப உணர்வுகளும் அனுபவங்களும் மட்டக்களப்பு மண்ணுக்குள் மீண்டும் மீண்டும் உழன்று வருவதையே நிகர்த்திருக்கும். களப்புகளும் கரைச்சைகளும் வாவிகளும் ஏரிகளுமாய் தெங்கும் வாழையும் நெல்லும் பசுமை கொள்ள காட்சிதரும் விவசாயக் கிராமங்களும் அதில் பெரிதும் சிறிதுமாய் கலந்துகிடக்கும் ஒட்டு வீடுகளும் கூரைவேய்ந்த குச்சி வீடுகளும் சிறிய சிறிய வழிபாட்டுத் தலங்களும் எந்த வேறுபாட்டினையும் நம்மிடையே தோற்றுவிக்காது. வீடுகளின் அமைப்புக்கள் பெரும்பாலும் அருகிலுள்ள தமிழ் நாட்டைப் போலன்றி மட்டக்களப்பு கிராமங்களில் தென்படும் வீடுகளை ஒத்திருப்பதையே 35|T600T6)Tib.
கேரளத்து மக்களின் பேச்சு வழக்கானது அதன் உச்சரிப்பிலும் ஓசை நயத்திலும் மட்டக்களப்பையொத்த தன்மையைக் கொண்டிருப்பதோடு இங்குள்ளதைப்போன்ற பழந்தமிழ் சொல்வளமே அங்குமுள்ளது. தேங்காய்த் துருவல், தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் எனத் தேங்காயையே முக்கியப்படுத்தும் உணவு வகைகளும் தலைக்கு தேங்காய் எண்ணெய் பூசுதலும் சோறு, பால், தயிர் என்பவற்றோடு இனிப்பு மற்றும் கனி வகைகளைக் கலந்து உண்ணுதலும் முழுக்க முழுக்க மட்டக்களப்பாரை நிகர்த்தேயிருக்கும்.
தாய்வழிக் குடிமரபே பிள்ளைக்கு உரியதாவதுவும் சமூக நடைமுறைகள் அனைத்திலும் பெண்ணுக்கே முன்னுரிமை அளிப்பதுவும் திருமணத்தின்பின் பெண் வீட்டிலேயே கணவன் தங்கியிருப்பதுவும் குடிவழி வயிற்றுவார் மரபுகளும் இரண்டு பிரதேசங்களையும் இணைக்கும் முக்கிய நடைமுறைகளாகும்.
வெல்லவுர்க்கோபால் - 15 م

Page 11
மலையாள நாடும் மட்டக்களப்பும்
கேரளத்தின் எல்லையிலே ஒரு சில வருடங்கள் வாழவும் நமது மட்டக்களப்பு வரலாற்றுத் தேடலுக்காக பல நாட்களைக் கேரளத்தில் கழிக்கவும் சமூக வரலாற்றுத்துறை சார்ந்த சில கல்விமான்களுடன் பழகவும் கிடைத்த வாய்ப்புக்கள் வாழ்வின் பெரும் பாக்கியமே. அதன் தொடர்ச்சியே இந்நூலுக்கும் வழிவிட்டிருக்கின்றது.
கவிதைத் தளைக்குள் கட்டுண்டு கிடந்த என்னை, என் ஆர்வத்தைத் தூண்டி ஆய்வு என்னும் அறியாத ஆழக்கடலுக்குள் தள்ளி முக்குளிக்கவிட்டு மூச்சடங்காமல் பார்த்துக்கொண்டிருக்கும் எனது இனிய தமிழகத்து கேரளத்து உறவுகளை எண்ணியெண்ணிப் பெருமைப்படுகின்றேன். அவர்கள் எனக்கு நட்பு என்னும் அரும் கொடையாகக் கிடைத்துள்ளமை என் பிறவிப் பயனே. தமிழகவன்னியரும் ஈழத்து வன்னியரும், மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் என்ற வரிசையில் மலையாள நாடும் மட்டக்களப்பும் நூல் வெளிவருகின்றது.
இந்நூலினை ஆக்க எனக்கு உறுதுணைபுரிந்த நல்லுளங்கள் பல. கேரளத்தின் சிறந்த கல்விமான்களான பேராசிரியர் இராதாக்கிருஷ்ணப் பணிக்கர் அவர்களும் முனைவர் ஜோசப் அன்ரனி அவர்களும் இதில் மிகவும் முக்கிய மாணவர்கள். நண்பர் பணிக்கர் அவர்கள் அவரிடமிருந்த மலையாள நூல்களில் தேவையான அம்சங்களை தமிழ்ப்படுத்தி எனக்கு உதவிபுரிந்தார்கள். அன்ரனி அவர்கள் கேரள வரலாறு தொடர்பான சில ஆங்கில நூல்களை தந்துதவியதோடு ‘நாடுவழி என்னும் கேரளத்தின் உடையார் முறைமை பற்றி நீண்டதோர் விளக்கத்தினையும் தந்திருந்தார். இவர்கள் இருவரும் நான் நன்றி கூறுவதன்மூலம் எமது நட்பின் ஆழத்தைக் கொச்சைப்படுத்துவதை விரும்பமாட்டார்கள்.
- 16- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
ஒன்றை யொன்று வெற்றிகொள்வது காதல்
ஒன்றி லொன்று தோற்றுநிற்பது நட்பு
எனின், தோல்வியென்பது நட்புக்கில்லை.
எனும் எனது
கவிதையடிகளுக்கு எம் நட்பே சான்றல்லவா? இருப்பினும் தேடல்களால் பெறப்பட்டவற்றின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்காக நான் அவர்களுடன் தொடர்பு கொண்டபோதெல்லாம் மனம்கோணாது தங்களது கருத்துக்களைத் தெரியப்படுத்தி என்னை வழிப்படுத்திய அவர்கள் என்றும் என் இதயத்திருப்பர்.
அடுத்து என் கடப்பாட்டுக்கு உரியவர் பேராசிரியர் சி.மெளனகுரு அவர்கள். இளமைக் காலம் முதலே என் எழுத்துலகை நெறிப்படுத்திக் கொண்டிருப்பவர் அவர், வழமைபோல் இந்நூலுக்கும் அவரின் அணிந்துரை அழகு சேர்க்கின்றது.
என் இலக்கியப்பணிக்கு முந்திக்கொண்டு களம் அமைத்துக் கொடுப் பதில் முதன் மையானவர் எனது உறவினரும் சட்டத்தரணியுமான கந்தப்போடி நாராயணபிள்ளை அவர்கள். இந்நூலின் ஆக்கத்திற்கும் அவரின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது. இது தொடர்பான ஆவணங்களைத் தேடி தமிழகத்து கேரளத்து புத்தகக் கடைகளில் நாமிருவரும் அலைந்து திரிந்தமை என்றும் பசுமையான நினைவுகளாகவே இருக்கும்.
எனது உறவினரும் நண்பரும் ஒய்வுபெற்ற வங்கி முகாமையாளருமான விபுலம் க.ஆறுமுகம் அவர்கள் எப்போதுமே எனக்கு பக்கபலமாக இருப்பவர். இந்நூலை வெளிக்கொணர்வதில் அவர் காட்டிய ஆர்வம் மகத்தானது.
- 17- வெல்லவூர்க்கோபால்

Page 12
LD60D6ùu JT6ĩT BT(ĐLf) 1ĐL |_556ĩIt]] |lf
இந்நூலின் எண்ணக்கருவை எனது நெஞ்சில் பதியவிட்டவர் எனது மகளும் கிழக்குப் பல்கலைக் கழக நடனத்துறை விரிவுரையாளருமான கோதாக்சாயினி அவர்கள். கேரளத்தோடு அவருக்கிருந்த கலைத் தொடர்பே இந்நூல் பற்றிய சிந்தனையை என்னுள் தோற்றுவித்தது எனலாம். அதேபோல் எனது மகனும் சென்னையில் பணிபுரிபவருமான பொறியியலாளர் கோ.அரவிந்தன் அவர்கள் இந்நூலுக்கான தகவல்கள் திரட்டுவது தொடர்பில் வேண்டிய அனைத்து உதவிகளையும் எனக்கு செய்துதந்தார்.
எனது நீண்ட கால நண்பர் ஆதவன் வை.வீரசிங்கம் அவர்கள் வழமைபோல் முந்திக்கொண்டு இந்நூலினையும் வெளிக்கொணர தனது பங்களிப்பினை நல்கியவர். இவர்கள் அனைவரும் புகழுரை நாடாதார் எனினும் என்றும் என் நன்றிக்குரியவர்களே.
எனது முன்னைய நூல்களுக்கு தந்த ஆதரவினை இந்நூலுக்கும் வாசகர்கள் நிச்சயம் தருவார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு.
நன்றியுடன் வெல்லவூர்க் கோபால்
(சீ.கோபாலசிங்கம்)
143 / 23,எல்லை வீதி மட்டக்களப்பு (இலங்கை)
- 18- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
02.மலையாள நாடும் மட்டக்களப்பும்
அறிமுகம்
ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் அறிமுகம் என்பது அதன் ஆட்சியதிகாரத்தை மையப்படுத்திய தாகவும் பூகோளப் பின்னிலம், கருவிநுட்பம், மனிதவள இயக்கம், சமுதாய பொருளாதார மாற்றங்கள் என்ற அடிப்படையை முக்கியப் படுத்தியதாகவும் அமைதல் வேண்டும். எனினும் நாமிங்கு கருத்தில் எடுத்துக் கொண்ட மலையாள நாடும் மட்டக் களப்பும் ஒப்பீட்டு அம் சங் களையே முக் கசியப் படுத் தும் தன் மையரில் அமைந்தனவாகையால் அவற்றின் அறிமுகத்தை சுருக்கமாக நோக்குதலே சாலவும் பொருத்தமானதாகும்.
- 19- வெல்லவூர்க்கோபால்

Page 13
மலையாள நாடும் மட்டக்களப்பும்
கேரளம் (சேரநாடு)
懿撫* §ö sig
- 20- வெல்லவூர்க்கோபால்
 

மலையாள நாடும் மட்டக்களப்பும்
கேரளம்
கேரளத்தின் அறிமுகம் என்பது அதன் பல்வேறு கட்டங்களை உள்ளடக்கியதாக அமையும். பண்டைத் தழமிழகத்தின் ஒரு அங்கமாக விளங்கிய சேரநாடு நீண்ட வரலாற்றுப் பெருமையைக் கொண்டதாக அமையினும் அது பற்றிய முக்கிய தகவல்கள் கி.மு 4ம் நூற்றாண்டு முதல்கொண்டே பெறத்தக்கவையாகவுள்ளன. கேரளத்தின் வரலாற்றை கி.மு 4ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 8ம் நூற்றாண்டு வரையான சேரநாட்டின் வரலாறு, கி.பி 9ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 12ம் நூற்றாண்டு வரையான கேரளத்தின் மத்திய கால வரலாறு, (Medival age of Kerala) கி.பி 13ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட வரலாறு எனப் பிரித்துப்பார்ப்பதே பொருத்தமானதாகும்
கேரளத்தின் வரலாறு தொடர்பாக கே.வி.கிருஷ்ண ஐயர், எல்.ஏ.கிருஷ்ண ஐயர், சி.ஏ.இன்னாஸ், வில்லியம் லோகன், ஏ.சிறிதர மேனன், கே.பி.பத்மநாப மேனன், ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாத், எம்.ஜி.எஸ் நாராயணன், கே.எம். பணிக் கர், இளம் குளம் குஞ்சன்பிள்ளை, பி.கே.கோபாலகிருஷ்ணன், கே.தாமோதரன், ஏ.கே.போடிவாள் கே.மாதவன் நாயர், ரி.கே.கெங்காதரன், எஸ்.இராதாகிருஷ்ணப் பணிக்கர் போன்ற ஆய்வாளர்கள் சிறப்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் பேராசிரியர் குஞ்சன் பிள்ளை மற்றும் பேராசிரியர் கெங்காதரன் ஆகியோர் கேரளம் தொடர்பான நூல்களை மலையாளம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதியிருப்பதோடு பல ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளனர்.
கேரளத்தின் வரலாற்று நூல்கள் பொதுவாக கி.பி 8ம் நூற்றாண்டு வரையான தகவல்களைத் தமிழகத்தின் சங்க
-21 - வெல்லவுர்க்கோபால்

Page 14
மலையாள நாடும் மட்டக்களப்பும்
இலக்கியங்களைச் சார்ந்தே பதிவுசெய்துள்ளன. ஒருகால் கேரளத்தின் வரலாறாகக் கருதப்பட்டதும் கேரளத்துப் பிராமணர்களின் வரவினை முக்கியப் படுத்தியதுமான கேரள உற்பத்தி மற்றும் “கேரள மகாத்மியம்’ போன்ற நூல்களின் நம்பகத்தன்மை குறித்து இன்றைய ஆய்வுகளில் அவை புறம் தள்ளப்பட்டேயுள்ளன. விஷனு பரசுராமனாக அவதார மெடுத்தபின்னர் கடலிலிருந்து ஒரு பெருநிலப்பரப்பை பெயர்த்தெடுத்து கேரளத்தை உருவாக்கி அதில் பிராமணர்களை குடியமர்த்தியதான உண்மைக்கு புறம்பான பல தகவல்களை அவை கொண்டிருப்பதைக் காணலாம்.
மலையாள நாட்டின் அறிமுகத்தை பண்டைத் தமிழகத்தின் வரலாற்றிலிருந்து ஆரம்பிப்பதே பொருத்தமானதாக அமையும். தமிழகம் சேரநாடு, சோழநாடு, பாண்டிநாடு எனும் முடியுடை மூவேந்தர்தம் நாடுகளாத் திகழ்ந்தது. இவர்களில் அன்று முதன்மை மிக்கவர்களாக விளங்கிய சேரர்கள் மேலைக் கடற்கரை வெளியை ஆட்சிசெய்தனர். சேரல் என்பது மலை எனப் பொருள்படும் என்பதால் சேரநாடு மலைநாடு எனவும் அழைக்கப்பட்டது. "வேழமுடைத்து மலை நாடு’ எனச் சேரநாட்டை ஒளவையார் சிறப்பித்துக் கூறுவார்.
தொடக்ககாலத்தே சேரநாட்டின் தலை நகர்களாக வஞ்சிமா நகரும் கரூரும் நிலைபெற தொண்டியும் முசிறியும் துறைமுக நகரங்களாக விளங்கின. கிரேக்கர், யவனர், அரேபியர் போன்றோரின் சிறந்த வர்த்தக மையமாக முசிறித் துறைமுகம் புகழோடு விளங்கியது. வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புக்களைக் கொண்டு இன்றைய கொடுங்களுரே முசிறியெனத் துணியலாம்.
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி.
- 22 - வெல்லவுர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
என அகநாநூறு முசிறியின் பெருமை பற்றிப் பேசும். அன்றைய சேர நாட்டின் எல்லைகள் குறித் து பெருந்தொகைப்பாடலொன்று;
வடக்குத் திசைபழனி வான்கிழ் தென்காசி குடக்குத் திசைகோழிக் கோடாம் - கடற்கரையின் ஒரமோ தெற்காகு முள்ளெண் பதின்காதச் சேரநாட் டெல்லையெனச் செப்பு
எனக்கூறும்.
பண்டைய சேரநாடே ஏனைய இரு நாடுகளிலும் அதிக நீளத்தைக் கொண்டது.அகலத்தில் மிகக் குறைந்த இந்நாடு எண்பது காத நீளத்தையுடையது. ஒரு காதம் என்பது பத்து மைல்களாகும்.
நீள அகலத்தை ஓரளவு சராசரியாகக்கொண்ட சோழநாடு இருபத்து நான்கு காதத்தைக் கொண்டிருந்தது.
கடல்கிழக் குத்தெற்கு கரைபொரு வெள்ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம் - வடதிசையில் வேணாட்டுப் பண்ணை யிருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் செப்பு
எனச் சோழ நாட்டுச் சதகம் எல்லை வகுத்துக் கூறும்.
மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிப் பிரதேசங்களை உள்ளடக்கிய பாண்டி நாடு ஐம்பத்தி ஆறு காதம் நீளத்தைக் கொண்டிருந்தது.
வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவெளியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார் ஆண்ட கடல்கிழக்கா மைம்பத்தாறின் காதம் பாண்டிநாட் டெல்லை பகர்
- 23 - வெல்லவுர்க்கோபால்

Page 15
மலையாள நாடும் மட்டக்களப்பும்
எனப் பெருந்தொகை பாண்டி நாட்டின் எல்லை குறித்துக் கூறும். முத்தமிழ் நாடுகளான இவை காலத்துக்குக் காலம் தனித்தும் இணைந்தும் நிலைபெற தொண்டை நாடும் கொங்கு நாடும் தனி அலகுகளாக மிளிர்ந்தன.
இதனிடையே தனது காலத்தே பன்னிரு தமிழ் வழங்கு நாடுகள் இருந்தமை பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுவார். இதனைப் பழந்தமிழ்ப் பாடலொன்று விளக்கிநிற்கின்றது.
தென்பாண்டி குட்டம் குடம்கர்க்கா வேண்பூழி பன்றியரு வாவதன் வடக்கு - நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிரு நாட்டெண்
என அப்பாடல் விரித்துக் கூறும்.
இதன்படி 01. 6560iil IT600iip 02 குட்டநாடு 03.குடநாடு 04. கர்க்கா நாடு 05. வேணாடு 06. பூழி நாடு 07 L/60iisailb/706 08:அருவாநாடு 09 அருவா வடதலைநாடு 10 சத நாடு 11. LD606 sB/706 12. புனல் நாடு
எனஅவற்றைத்துணியலாம்.
தமிழ் வழங்கு பன்னிரு நாடுகளில் வேணாடு, கர்க்கா நாடு, குட்டநாடு, குடநாடு, பூழிநாடு, ஆகிய ஐந்து நாடுகளை சேரநாடு கொண்டிருந்தது. இவை இன்றைய கேரள நாட்டைப் பொறுத்தவரை விழிஞ்சத்திற்கும் கொல்லத்திற்குமிடையே வேணாடும் வேணாட்டின் வடபால் கர்க்கா நாடும் கர்க்கா நாட்டின் வடபகுதி குட்டநாடும்
-24- வெல்லவூர்க்கோபால்

(D6D)6NDŲ J FT 6 T bĪT BLID LDL... ajb 356 üJ || LO
இன்றைய திரிசூர் மாவட்டமும் மலபாரின் தென்பகுதியும் இணைந்து குடநாடும் மலபாரின் வடபகுதி பூழிநாடாகவும் விளங்கியதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.
ஆட்சியமைப்பு
சங்க இலக்கியச் சான்றுகளின்படி சேரமன்னர்களின் வரலாற்றுக் காலத்தை கி.மு 4ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். சேர மன்னர்களைப் பற்றி பதிற்றுப் பத்து முதல்கொண்டு பல சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதைப் பார்க்கலாம். முடியுடை மூவேந்தர்களில் சேரர்களே தனி இலக்கியப் பாடல்களால் சிறப்பிக்கப்பட்டவர்களாகின்றனர். சேர நாட்டினை சேரலாதன் மரபினரும் பொறையர் மரபினரும் ஆண்டனர். பொறையர் சேரத்தின் வடபகுதியில் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். இவர்கள் மலைப் பகுதியில் வாழ்ந்தவர்களாதலின் விற்போரில் மிகச் சிறந்து விளங்கினர். இதனாலேதான் சேரநாட்டினர் விற்கொடியின் சிறப்பினுக்கு உரியவர்களாயினர். சங்க இலக்கியங்களில் பல சேர மன்னர்கள் சிறப்பிக்கப் பட்டாலும் பதிற்றுப் பத்து குறிப்பிடும் பத்துச் சேரர்களே பெரும் புகழுக்குரியவர்களாகின்றனர். உதியன் சேரலாதன் எனும் மன்னனே பழமைமிக்க சேரமன்னன் என அறியவருகின்றது. மாமூலனாரால் புகழ்ந்து பாடப்பட்ட இம் மன்னன் பாடலியை இருக்கையாக்கி கலிங்கத்தை யாண்ட நந்த மன்னருடன் மிக்க நட்பினைக் கொண்டிருந்தவனி. இவனுக்குப்பின் இவனின் மகன் நெடுஞ்சேரலாதன் ஆட்சிக்கு வந்தான். இமய வரம்பன் என
- 25- வெல்லவூர்க்கோபால்

Page 16
மலையாள நாடும் மட்டக்களப்பும்
இவன் போற்றப்பட்டமையால் வடக்குவரை இவன் பெரும்புகழ் பெற்றிருந்தான் என அறியலாம். இவன் காலத்தே கலிங்கமும் தமிழகமும் மிக்க நெருக்கத்தைக் கொண்டிருந்தன. கி.மு 320 வாக்கில் கலிங்கத்துள் நுழைந்த மோரியப் படைகளை விரட்டியடிக்க சேரப் படைகளைக் கலிங்கத்துக்கு அனுப்பி மகா பத்ம நாதனுக்குப் பேருதவி புரிந்தான் என வரலாறு இவனுடைய பெருமை பேசும். கி.மு 3ம் நூற்றாண்டில் நடந்த சோழ நாட்டுப்படையெடுப்பில் இவன் கொல்லப்பட்டான்.
இதன்பின் நெடுஞ் சேரலாதனின் தம்பி செல்கெழு குட்டுவன் ஆட்சிப் டிொறுப்புக்கு வந்தான். இவனே கொற்றவை வழிபாட்டினை சேர நாடெங் கும் முக் கசியப் படுத் தரியவன் . ஐநுT g கிராமங்களைக்கொண்ட உம்பற்காட்டுப் பிரதேசத்தை சேரத்துடன் இணைத்துக் கொண்டவனும் இவனே.
செல்கெழு குட்டுவனுக்குப் பின்னர் நர்முடிச் சேரல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தான். நன்னனை போரில் தோற்கடித்து பூழிநாட்டை இவன் கைப்பற்றினான். இவனுக்குப் பின்னர் வேல்கெழு குட்டுவன் ஆட்சிக்கு வந்தான். மேற்குக் கடலில் நீண்ட நாட்களாக கடல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கொள்ளையர்களை அழித்து தமிழகத்தை உலக வாணிப மையமாக மிளிரச்செய்த பெருமை இவனையே சாரும். மேலும் பழையனை வெற்றிகொண்டு மோகூரைப் பணியவைத்தவனும் இவனே. கலையார்வம் மிக்கவனான இவன் காலத்தே கூத்தும் பாட்டும் சேரத்தில் சிறப்பிடம் வகித்தது. மக்களின் வறுமை போக்கி நல்லாட்சி புரிந்தவனான இவனை ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் எனப் புலவர்கள் புகழ்ந்து பாடியுள்ளனர்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குப் பின் சேரநாட்டில் அரசியல் மாற்றங்கள் தென்பட்டன. பூழி நாட்டுடன் கொங்கு நாடும் சேரரின் பிடிக்குள் இருந்தன. இதன்பின் செல்வக் கடுங்கோ வாழியாதன்
- 26 - வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும் ஆட்சி பீடம் ஏறினான். இவனுக்கு முன்னர் அந்துவன் சேரன் போன்றவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தமைக்கான தகவல்கள் கிடைக் கப்பட்டாலும் வரலாற்றில் இவை சரியாகப் பதிவுசெய்யப்படவில்லை. வாழியாதன் காலத்தே பெளத்த மதம் சேரத்தில் தடம் பதிக்கத் தொடங்கியது. இதன்பின் சேரத்தில் அரசுகட்டில் ஏறியவன் கோஆதன் எனும் செல்லிரும்பொறையாவான். கரூருக்கு அண்மையிலுள்ள புகழுர் கல்வெட்டு இவன் பெருமை பற்றிப் பேசுகின்றது.
கோஆதனுக்குப் பின் அவனுடைய புதல்வன் பெரும் சேரல் இரும்பொறை ஆட்சிக்கு வந்தான். வலிமை பொருந்திய சேரப் படையை இவன் கொண்டிருந்தான். தகடூர் கோட்டையை தகர்த்தவனும் இவனே. இவனுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவன் இளம் சேரல் இரும்பொறை. இளஞ்சேரலைத் தொடர்ந்து கி.மு 3ம் நூற்றாண்டில் மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஆட்சி பீடம் ஏறினான். இவனே கடலூர் கிளார் மூலம் ஐங்குறு நூறைத் தொகுப்பித்தவன். இதன்பின் குட்டுவன் கோதை, திருக்குட்டுவன், கோக்கோதை மார்பன் போன்றவர்கள் சேர நாட்டினை ஆண்டனர்.
கி. பி 1ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேரலாதன் முடிசூடினான். இவனுக்கும் சோழன் மகள் நற்சோணைக்கும் பிறந்தவனே செங்குட்டுவன். இவனைப்பற்றிய செய்திகளை சிலப்பதிகாரம் விரிவாகக் கூறும். சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் செங்குட்டுவனின் தம்பியாவார். கி.பி 2ம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சிசெய்த செங்குட்டுவன் இலங்கை வேந்தன் 1ம் கஜபாகுவின் காலத்தவன்.இவனாலேயே கண்ணகி வழிபாடு தோற்றம் பெற்றது. கற்புக்கரசி கண்ணகிக்கு சிலைவைத்து கோவிலெடுத்ததோடு முத்தமிழ் நாடும் ஈழமும் அவள் பெருமைபேச கால் கோளிட் டவன். கொடுங்கோளுரி லுள்ள ஒற்றை முலைச்சியம்மன் எனும் பகவதி கோவிலே இவனால் கட்டப்பட்ட முதல் கண்ணகி கோவிலாகும். இவன் காலம் முதல் கி.பி 6ம்
- 27- வெல்லவூர்க்கோபால்

Page 17
மலையாள நாடும் மட்டக்களப்பும்
நூற்றாண்டுவரை சேரர்களின் ஆட்சிகுறித்த தகவல்கள் பெறப்படவில்லை. செங்குட்டுவனுடன் சேரலாதன் பரம்பரை ஆட்சி முடிவுற்றதாகவே கருத வேண்டி யுள்ளது.
கி.பி 3ம் நூற்றாண்டு தொடக்கம் கி. பி 6ம் நூற்றாண்டு வரையான காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனக் கொள்ளப்படுவதால் இக் காலத்ததை களப்பார் (களப்பிரர்) d5 T6)LD என்றே வரலாறு குறிப்பிடுகின்றது. களப்பார் குறித்து ஆய்வாளரிடையே முரண்பாடுகள் தென்பட்டாலும் மைசூரின் பேலூர் கல்வெட்டுத் தொடர்பிலும் பெரிய புராணம் தரும் மூர்த்தி நாயனார் கதையாலும் நம்பி திருவிளையாடல் மூலமாகவும் இவர்கள் கன்னட நாட்  ைடச் சார்ந்தவர்கள் என்ற முடிவுக் கே வரவேண்டியுள்ளது.வேள்விக் குடிச்சாசனமும் இதற்கு சான்று பகர்வதாகவேயுள்ளது. இக்காலத்தே சைவம் புறம்தள்ளப்பட்டு சமணமும் பெளத்தமும் சேரத்தில் தலையெடுக்கலாயின. அத்துடன் சமஸ்கிருதமயமாக்கலும் படிப்படியாக விரிவுபடலாயிற்று.
கி.பி 575ல் பாண்டியன் கடுங்கோ தெற்கிலிருந்து களப்பார்களை விரட்டியடித்த பின்னர் பாண்டியப் பேரரசினை நிறுவினான். எனினும் சேரத்தில் வேணாடு போன்ற சில பகுதிகள் கட்டுப்பாடற்ற ஆட்சியமைப்பை மீண்டும் உறுதிப்படுத்தலாயின. கி.பி 7ம் நூற்றாண்டின் பின்னர் பாண்டியர் சேரருக் கிடையேயான கூட்டுமுயற்சி சேரநாட்டின் தனித்துவமான ஆட்சிக்கு அடிகோலியது.
கி. பி 800 தொடக்கம் கி.பி 1100 வரையான காலத்தை (335J6155661 LD555uJ BTGoub (Medival Age of Kerala) 6T66Tusi. 3560)6OT இரண்டாவது சேர சாம்ராச்சியம் என (29 Chera Empire) பேராசிரியர் இளம்குளம் குஞ்சன்பிள்ளை கருதுவார். பெருமாள்களின் ஆட்சிக் காலம் என வரலாற்றில் குறிப்பிடப்படும் இக்காலம் குலசேகர
- 28- வெல்லவுர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
ஆழ்வாரின் ஆட்சி முதற்கொண்டு ராமவர்மன் குலசேகரன் ஆட்சிக் காலம்வரை பதின்மூன்று ஆட்சியாளர்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பிற்பட்ட ஆய்வுகளைக்கொண்டு மகோதாய புரத்தை இருக்கையாக்கி ஆட்சிசெய்த பெருமாள் ஆட்சியாளர்களின் காலம் கி.பி 800 தொடக்கம் 1122 வரையானதென முனைவர் எம். ஜி.எஸ். நாராயணன் கூறுவார்.
வாழப்பள்ளி செப்பேட்டை ஆதாரப்படுத்தி இதில் முதலாவது ஆட்சியாளராக சிறி இராஜசேகரத் தேவர் எனும் சேரமான் பெருமாள் நாயனார் (கி.பி 800 - 844) குறிப்பிடப்படுகின்றார். கி.பி 844- கி.பி 870 வரை தானுரவி குலசேகரனின் ஆட்சிக்காலம் அமைகின்றது. இவனை கேரள கேசரி எனப் புகழ்வர். இவனது ஐந்தாவது ஆட்சியாண்டில் எழுதப்பட்ட தரிசப்பள்ளி செப்பேட்டைக் கொண்டு வேணாட்டின் ஆட்சியாளனான ஐயன் அடிகள் பற்றியும் கி. பி. 9ம் நூற்றாண்டில் ஏற்பட்ட கிறிஸ்தவத் தொடர்புகள் பற்றியும் அறிய முடியும். இக்காலத்தே சிரியன் கிறிஸ்தவர்களால் கொல்லம் புகழ்பெற்ற வர்த்தக நகரமாக மிளிர்ந்தது. தானுரவியின் ஆட்சிக்காலம் கேரள வரலாற்றில் மிகவும் உச்ச நிலையில் வைத்து கணிக்கப்படத்தக்கதாகும்
தானுரவியின் பின்வந்த ஆட்சியாளர்களாக விஜயராம வர்மா (கி.பி 870- 900) ரவி கோட்ட வர்மா (கி.பி 900 - 917) கோட்ட ரவி வர்மா (கி.பி 917 - 947) இந்து கோட்டா (கி.பி 947962) பாஸ்கர ரவி மனுக்குலாதியன் (கி.பி 962-990) ஆகியோர் மகோதாயபுரத்தை தலை நகராகக்கொண்டு ஆட்சி புரிந்தவர்களாவர். எனினும் கி.பி 1000ல் எழுதப்பட்ட கொச்சி செப்பேட்டின்படி கோவர்த்தன மார்த்தாண்டன் வேணாட்டின் ஆளுனராகவும் கோட்ட சிறிக்காந்தன் வெண்பொழி நாட்டின் ஆளுனராகவும் இராயின் சாத்தன் வள்ளுவ நாட்டின் ஆளுனராகவும் மாணவியன் ஏரலநாட்டின் ஆளுனரானவும் கோட்ட ரவி நெடும் பொறை நாட்டின் ஆளுனராகவும் செயல்பட முருகன் சாத்தன் கிழக்குப் பகுதி படைத் தலைவனாகவும் இருந்துள்ளமை தெரிகின்றது. இக்காலம்
- 29- வெல்லவூர்க்கோபால்

Page 18
மலையாள நாடும் மட்டக்களப்பும்
சோழராட்சிக் காலத்தை குறிக்குமாதலால் இவ்வாளுனர்கள் நாடுடையார்களின் (நாடுவழி) தொடர்வழி வந்தவர்கள் என்றே கொள்ளவேண்டியுள்ளது.
இக்காலம் சோழர்கள் எழுச்சிபெற்ற காலம். கி. பி 985ல் அருண்மொழித்தேவன், இராஜராஜ சோழன் எனும் பெயரில் முடிதரித்தான். பாண்டி நாட்டின் மீது படையெடுத்து வெற்றிகொண்ட பின்னர் தனக்கு எதிராக பாண்டியருக்கு உதவி புரிந்த சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மன் மீது அவன் பார்வை திரும்பியது. சேரப் படைகளை கடுமையாகத் தாக்கி முக்கிய படைத்தளமாக விளங்கிய விளிஞ்சத்தை தகர்த்து திருவனந்த புரத்தை வெற்றிகொண்டு காந்தளுரையும் கைப்பற்றினான். குமரி.சுசீந்திரம், கோட்டாறு உள்ளிட்ட பகுதிகளை “இராஜராஜ தென்னாடு’ எனப்பெயரிட்டான்.
பாஸ்கர ரவி கொல்லத்தில் பதுங்கியிருந்ததை அறிந்துகொண்டதும் இராஜேந்திரன் தலைமையிலான சோழப் படைகள் கொல்லத்தை தாக்கித் தகர்த்தன. கொடுங்கோளுருக்கு முன்னேறியபின் உதகைக் கோட்டையை உடைத்தெறிந்து சேரத்தை வசப்படுத்தினர். இதன்பின் பாஸ்கர ரவிவர்மன் பற்றிய தகவல்கள் வரலாற்றில் பதிவுசெய்யப் படவில்லை. பின்னர் சோழரின் பார்வை ஈழத்தை நோக்கித் திரும்பியது. சுமார் நூறு ஆண்டுகள் சோழரின் ஆதிக்கம் சேரத்தில் நிலைநிறுத்தப்பட்டதாகவே கொள்ளவேண்டும்.
குலோத்துங்கனின் ஆட்சிக்காலத்தே சோழப் படைகளை நாஞ்சில் நாடுவரை பின்தள்ளி கொல்லத்தை தென்வஞ்சி என்ற பெயரில் இருக்கையாக்கி மீண்டும் சேரர்களின் ஆட்சியை ராமவர்மன் நிலைநிறுத்தினான். சோழருக்கு எதிரான அவ்வெற்றியில் தற்கொலைப் படையான சாவேற்றுப் படையின் (Suicide Squad) செயல்பாடு மிக முக்கியத்துவம் பெற்றிருந்த தென்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
-30- வெல்லவூர்க்கோபால்

|லையாள நாடும் மட்டக்களப்பும்
கி.பி 1122ல் பெருமாள்களின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது அவர்கள் காலத்தே உருவான நாடுடையார் (நாடு வழி) செயல்பாடுகளும் ஆலயங்களை மையப் படுத்திய கிராமிய ஆட்சி அமைப்புகளும் நூற்றுவர் படையணிகளின் பாதுகாப்பு கட்டமைப்பும் மேலும் வலுப்பெறலாயின.
பெருமாள்களின் ஆட்சிக் காலத்தே வேர்கொண்டு துளிர்விட்ட மருமக்க தாய’ முறை இதன்பின் வலுவோடு கிளைவிட்டு பரவலாயிற்று. நாடுடையார் வழிவந்தோர் பெருமாள் ஆட்சிக்காலத்தே பிரிக்கப்பட்ட பதினொரு பிரிவுகளையும் மையப்படுத்தி ஆட்சி நிருவாகக் கட்டமைப்பை செயல் படுத்தினர். இதனிடையே பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சியும் இடையிடையே ஆதிக்கம் செலுத்தவே செய்தது.
மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (கி.பி 1268– 1310) 20ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு அவன் கொல் லத்தைக் கைப்பற்றியதைக் குறிப்பிடுகின்றது. கி.பி 1311ல் தமிழகத்தில் நிகழ்ந்த அலாவுதீன் கில்சியின் தளபதி மாலிக் கபூர் மேற்கொண்ட முஸ்லிம் படையெடுப்பை வேணாட்டின் அதிபதியாகவிருந்த இரவி வர்மன் முறியடித்து அவனை வேகவதி ஆற்றங்கரை வரை துரத்தியதாக பூந்தமல்லி கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
கி.பி 1510ல் விஜயநகரப் பேரரசனான கிருஷ்ண தேவராயன் ஆட்சிக்காலத்தே விஜய நகரத்துக் குட்பட்ட ஆட்சியாளர்களாகவே சேரர்கள் செயல்பட்டனர். கி.பி 1530ல் வேணாட்டின் அதிபதி புலிபூதலவீரன் பாண்டி நாட்டின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். பின்னர் சீவல்ல பாண்டியன் தஞ்சை நாயக்கரின் துணைகொண்டு பூதலவீரனை விரட்டியதாக பாண்டிய நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஏனைய பத்து நாடுகளையும்விட வேணாடே நீண்டகால வரலாற்றுச் சிறப்பினுக் குரியதாக விளங்கியதெனலாம்.
-31 - வெல்லவுர்க்கோபால்

Page 19
மலையாள நாடும் மட்டக்களப்பும்
இதனிடையே ஐரோப்பியரின் (போர்த்துக்கீசர்) இந்தியவருகையும் கேரளத்தினுாடாகவே இடம்பெற்றிருகின்றது. 1498 மே 27ம் நாள் போர்த்துக்கேய மாலுமி வாஸ்கோடகாமா தனது கூட்டத்தாருடன் கள்ளிக் கோட்டையில் கால்வைத்தான். வர்த்தக நோக்கில் வந்த அவர்கள் பின்னர் மதம் பரப்பவும் நாடுபிடிக்கவும் முற்பட்டனர். கொச்சியைப் பிடித்துக்கொண்ட அவர்கள் 1508ல் கோழிக்கோட்டை நோக்கிப் புறப்பட்டனர்.
சாமூரின் மன்னன் கொடுத்த பதிலடி அவர்களை திசைமாறி ஓடச்செய்தது. அதன்பின் பல ஆண்டுகள் ஐரோப்பியர் இந்தியாமீது ஆதிக்கம் செலுத்த முற்படவே யில்லை. எனினும் போர்த்துக்கேயர் கோவாவை இருக்கையாக்கி கடலாதிக்கத்தை நிலைநாட்டியதோடு மதத்தையும் பரப்பினர். பிற்காலக் கேரளத்தின் மிக்க வீரம் பொருந்திய மன்னர்களாக கோழிக்கோட்டையாண்ட சாமுரின் மன்னர்கள் விளங்கினர்.
இதன் பின்னர் தென்னிந்தியாவின் ஏனைய மானிலங்களைப் போன்றே கேரளத்திலும் ஆட்சி முறைமை விளங்கியது. போர்த்துக்கேயரைத் தொடர்ந்து ஒல்லாந்தர், பிரான்சியர், ஆங்கிலேயர் என ஐரோப்பியர் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர். எனினும் கி.பி 9ம் நூற்றாண்டில் உருவான நாடுவழி எனும் நாடுடையார் நிருவாக கட்டமைப்பும் மருமக்க தாய நடைமுறைகளும் கி.பி 19ம் நூற்றாண்டுவரை தொடரவே செய்தன.
-32 - வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
சமூகக் கட்டமைப்பு
தொடக்ககால கேரளத்தின் சமூகக் கட்டமைப்பு பண்டைத் தமிழகத்தின் திணைச்சமூக அமைப்பையே கொண்டிருந்தது. தென்னிந்திய மரபுவழிச் சமூகத்தினரான நாகர்கள் கேரளத்தின் பல பகுதிகளிலும் வாழ்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாகர் சமூகத்தின் முக்கிய பிரிவினரே நாயர் எனக்கூறும் ஆய்வுகளும் கேரளத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல் மற்றும் சமூகவியல் ஆய்வுகளில் மலவேடர், மலையரசர், உல்லடர், மலப்பண்டாரம், மலப்புலையர், கணிக்கர், இருளர்,பணியர், காடவர், முத்துவனார், குறும்பர், பறையர் போன்ற ஆதிக்குடிகளே கேரளத்தின் புராதன மக்களாக அறிமுகமாகின்றனர். நாயர், பணிக்கர், முக்குவர், நாடார், பரவர் போன்றவர்கள் மரபுவழிச் சமூகத்தினராவர். பணியரைப் பணிக்கர் என்றும் காடவரை வன்னியர் என்றும் சில சமூகவியல் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. தாய்த்தெய்வ வழிபாடும் நாக வழிபாடுமே பண்டைய கேரள சமூகங்களின் முக்கிய வழிபாடாக அமைந்திருந்தது.
தமிழகத்திலிருந்தும் ஏனைய பகுதிகளிலிருந்தும் பல குடிமரபினர் கேரளத்தை நோக்கி இடம் பெயர்ந்தனர். இவ்வாறு காலத்துக்கு காலம் இடம்பெயர்ந்தவர்களில் நம்பூதிரிகள், பிள்ளைகள், பிராமணர், மேனன், கம்மாளர், செட்டிகள் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் நம்பூதிரிப் பிராமணர்கள் முதன்மை நிலைக்குரியவர்கள். இவர்களது காலம் குறித்த கணிப்பீடுகளில் முரண்பாடுகள் தென்படுவதைப் பார்க்கின்றோம். கி.மு 3ம் நூற்றாண்டிலேயே இவர்கள் இங்கு வந்துற்றதாக கே.பி.பத்மநாப மேனன் கருதுவார்.
'Bramin migration to Kerala' 606 GTQg5u 6665uib (SouT3661 (William Logan) நம்பூதிரிகளின் குடியேற்றம் கி.பி 8ம் நூற்றாண்டிலேயே இடம் பெற்றதாக கூறுவார். சில ஆய்வாளர்களின்
-33 - வெல்லவுர்க்கோபால்

Page 20
மலையாள நாடும் மட்டக்களப்பும்
முடிவின்படி கடம்ப மன்னன் மயூரவர்மனால் கி.பி 4ம் நூற்றாண்டில் இவர்கள் உத்தரப்பிரதேசத்திலிருந்து அழைத்து வரப்பட்டு வட கனரா ஊடாக கேரளத்தில் குடியமர்த்தப்பட்டதாக கருதப்படுகின்றது. இவர்கள் இங்கு முப்பத்தியிரண்டு ஊர்களில் குடியமர்த்தப்பட்டதாக பிற்பட்ட வரலாறுகள் தெரிவிக்கின்றன. கேரளத்துச் சமூகங்களில் முதன்நிலை பேணியவர்களாகவே இவர்கள் இன்றுவரை அடையாளப் படுத்தப்படுகின்றனர்.
இதனிடையே இங்கு வாழும் ஈழவர் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவிய போதும் சேர நாட்டிற்கும் ஈழத்திற்கும் இருந்த நீண்டகால உறவின் நிமித்தம் அன்று ஈழத்திலிருந்து இங்குவந்து குடியேறிய மக்களே ஈழவர்; என்ற கருத்தே கேரளத்தில் இன்று வலுப்பெற்றுள்ளது.
மொழியும் இலக்கியமும்
கேரளம் அதன் தொடக்காலம் முதல்கொண்டு கி.பி 8ம் நூற்றாண்டு வரையும் செந்தமிழின் செழுமைக்குள்ளேயே தன்னை வளப்படுத்தி வந்துள்ளது. சங்கத் தமிழின் சொல்வளமானது இன்னும் கூட அங்கு ஆட்சிசெய்தே வருகின்றது. பண்டைய ஊர்ப்பெயர்களின் சிறப்பு தமிழ் மொழியின் வரலாற்றுப் பெருமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. எனினும் நீண்டகால ஆரியமயமாக்கல் தன்மை கேரளத்தை முற்றாகப் பீடித்திருந்தமை வரலாற்றில் உணரப்பட்டதாகும்.
கேரளத்தின் மத்திய காலமான கி.பி 9ம் நூற்றாண்டு முதல்கொண்டு வலுப்பெற்ற சமஸ்கிருத மொழித்தாக்கம் தமிழில்
た -34- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மணிப்பிரவாள ஊடுருவலாக மாறி ஒரு புதிய மொழி வடிவத்திற்கு வித்திட்டது. அதனது படி நிலை வளர்ச்சியே மலையாள மொழியாக உருக்கொண்டது. எனினும் அதன் முழுமையை கி.பி 13ம் நூற்றாண்டிலேயே காணமுடிகின்றது.
அலைவளமும் மலைவளமும் மிக்க கேரளம் கலை வளத்தாலும் பெருமை பெற்றதே. ஆடலும் பாடலும் சேரத்தில் சிறப்பிடம் பெற்றமையை பண்டைய வரலாறு புலப்படுத்தும். பல சங்க இலக்கியங்கள் அங்கு தோற்றம் பெற்றுள்ளன. சிறந்த தமிழ் காப்பியமான இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் சேரநாடு தந்த பெரும்கொடை எனலாம். கூத்து, குரவை, துள்ளல், கூடியாட்டம் போன்ற ஆரம்ப வடிவங்கள் விரிவுபட்டு இன்று கதக்களி, மோகினி ஆட்டம், ஒட்டம் துள்ளல், சாக்கியர் கூத்து, கிருஷ்னாட்டம், ராமனாட்டம், திரையாட்டம், தெய்யம், காளியாட்டம் எனப் பல்வேறு வடிவங்களாக மலர்ந்துள்ள மையை இன்று காணமுடியும்.
இன்றைய கேரளம்
பண்டைய சேரநாட்டின் எல்லைகளை இன்றைய கேரளம் முற்று முழுதாக கொண்டிருக்கவில்லை. எனினும் இந்திய உப கண்டத்தில் அராபியக் கடலுக்கும் மேற்குமலைத் தொடருக்கும் இடைப்பட்டு 38863 சதுரக் கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்டமைந்துள்ளது. இதனை முழு இந்திய நிலப்பரப்பில் சராசரியாக ஒரு சதவீதம் எனக்கொள்ளலாம். மலையாளத்தை
வெல்லவூர்க்கோபால் - 35 شد.

Page 21
மலையாள நாடும் மட்டக்களப்பும்
முதல் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகவும் கொண்டுள்ள கேரளத்தின் தலைநகரம் திருவனந்த புரமாகும். இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்பன இங்கு முக்கிய மதங்களாகவுள்ளன.
மேற்கு மலைத்தொடர்களாலும் கணவாய்களாலும் சூழப்பட்ட கேரளாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட ஆறுகள் ஓடி வளம் செய்கின்றன. 250 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட பாரதப் புழாவும் 228 கிலோமீற்றர் நீளத்தைக்கொண்ட பெரியாறும் 176 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட பம்பை ஆறும் 168 கிலோமீற்றர் நீளத்தைக்கொண்ட சாளிஆறும் அதில் முதன்மை யானவை.
திருவனந்தபுரம், கொல்லம், பதனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் -கொச்சி, திரிசூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வேணாடு, கண்ணுார், கசரக்கோடு ஆகிய பதிநான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ள கேரளா இந்திய நாட்டின் கல்வியறிவுமிக்க முன்னேறிய மாநிலமாகவே கருதப்படுகின்றது.
-36 - வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டக்களப்பு
- 37- வெல்லவூர்க்கோபால்

Page 22
மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டக்களப்பு
ஈழத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்காய் அமைந்த பண்டைய மட்டக்களப்பானது வடக்கே வெருகல் ஆறு தொடக்கம் தெற்கே மாணிக்க கங்கை வரையும் வியாபித்திருந்தது. கிழக்கே வங்காள விரிகுடாவும் மேற்கே வெல்லசை ஊவா மலைத் தொடரும் அதன் மறு எல்லைகளாய் அமைந்தன. சுமார் 140 மைல் நீளத்தையும் 48 மைல் அகலத்தையும் உள்ளடக்கியிருந்த இப்பிரதேசம் நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகிய நால்வகை நிலங்களையும் கொண்டு மிளிர்ந்தது.
இதன் நில அமைவில் மக்கள் பெருமளவில் செறிந்து வாழுகின்ற நெய்தலும் மருதமும் கேரளத்தின் நில அமைவினை ஒத்திருப்பதை அவதானிக்கமுடியும். மேலும் அதனையொத்த கடற்கரை, மணற்றிட்டுக்கள், முகத்துவாரங்கள், சதுப்பு நிலங்கள், களப்புகள், கரைச்சைகள், வண்டற் படிவுகள், களிமண் படிவுகள், செம்மண் திட்டுக்கள், செங்கற் படைகள், நைசுப் பாறைகள், குன்றுகள் என மேல்நோக்கிச் செல்லுகின்ற இயற்கையோடியைந்த வளமான நில அமைப்பையே இப்பிரதேசம் கொண்டுள்ளது. மட்டமான களப்பு நிலப் பகுதி இது என்பதால் மட்டக்களப்பு என்னும் பெயர் இதற்கு அமைவதாயிற்று.
பண்டைய வரலாற்று ஆவணங்கள் இப்பிரதேசத்தை தென்னிலங்காபுரி என்றே குறிப்பிடுகின்றன. ஈழம் சேரன் தீவு (Serandiv) எனவும் மட்டக்களப்பு ‘மலையர் குகநாடு’ எனவும் வரலாற்றில் பதிவாகியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மலையர் என்பது மலைநாட்டினரான சேரத்துக் குடிகளையும் குகர் என்பது கலிங்கத்துக் குடிகளையும் குறிப்பிடுவதாக அமையும். மட்டக் களப்பை போர்த்துக்கேயர் 'மட்டக் கொளா’ என்றே அழைத்தனர். பின்வந்த ஒல்லாந்தர் அதனை “பட்டிக்கொலோ’ - 38- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
(Batticaloa) என அழைக்கலாயினர். ஒல்லாந்தர் Maவை Baஎன்றே உச்சரிக்கும் வழக்கம் உடையவர்கள். Mianmar ஐ Burma 6160|6|Lồ Mumbai $g Bambai 6I.6016)|Lib COinmuthur $g Coimbatore எனவும் மாற்றியவர்கள் இவர்களே.
ஆட்சியதிகாரம்
மட்டக்களப்பின் ஆட்சியதிகாரங்களும் காலக் கணிப்புகளும் முழுமையான ஆய்வுகளுக்கு உட்படாத போதும் அறிமுக நிலைப்பட்ட தேடல்கள் விரிவாக முன்னெடுக்கப் பட்டுள்ளன. எஸ். ஒ. கனகரெத்தினம், எவ். எக்ஸ். சி. நடராசா, வி.சி. கந்தையா, பேராசிரியர் சி. மெளனகுரு, வெல்லவுர்க்கோபால், ஞா.சிவசண்முகம், க.தங்கேஸ்வரி, நா.நவநாயகமூர்த்தி, பூ, மா.செல்லத்துரை, க.தா.செல்வராச கோபால், போன்றவர்களுடன் இன்னும் சிலரால் எழுதப்பட்ட நூல்கள் மட்டக்களப்பை தெரிந்துகொள்ள பெருமளவு உதவியாவுள்ளன.
பண்டைய காலத்தே ஈழத்தில் குபேரனின் ஆட்சியும் பின்னர் இராவணன், விபீடணன் போன்றோரின் ஆட்சியும் இடம் பெற்று அதன்பின் பன்னெடுங்காலம் ஈழம் பாழ்பட்டுக் கிடந்ததாக புராணங்கள், இதிகாசங்கள், சங்க இலக்கியங்கள் போன்றவை கூறுகின்றன.
தென்னிலங்காபுரியென அழைக்கப்பட்ட இராவணனின் கோட்டை கொத்தளங்கள் திருக்கோவிலின் கிழக்காக கடற் பிரதேசத்தே அமைந்திருந்ததென கர்ண பரம்பரையாக இப்பிரதேச மக்கள் நம்பிவருகின்றனர். திருக்கோவிலுக்கு அண்மையில் அமைந்து கடலலைகள் தொட்டுநிற்கும் உகந்தை மலையில் வருடந்தோறும் இராவணனின் நினைவாக தீபம் ஏற்றும் நீண்டகால நடைமுறையானது
இதன் அர்த்தப்பாட்டுக்கு வலு சேர்ப்பதாகவேயுள்ளது.
- 39- வெல்லவூர்க்கோபால்

Page 23
மலையாள நாடும் மட்டக்களப்பும்
கி.மு 3ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மட்டக்களப்புப் பிரதேசத்தில் குழுநிலை ஆதிக்கம் மிக்கவர்களாக இயக்கர், நாகர் என்போரும் அதன் பின்னர் திமிலரும் வாழ்ந்தமையை இதுவரையான தேடல்கள் புலப்படுத்தியுள்ளன. இயக்கர் நாகர் வழிவந்தவர்களான வேடர்கள் இன்றும் இப்பிரதேச எல்லகைளில் வாழ்வதை அவதானிக்கமுடியும். கி.மு 3ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட வரலாறு பெரும்பாலும் கலிங்கத்தையும் பண்டைத் தமிழகத்தையும் பின்னிக் கிடப்பதைக் காணலாம்.
மட்டக்களப்பின் தொடக்ககால அரசுப்பிரிவை முக்கியப்படுத்தும் தன்மையில் அதன் ஆட்சியாளனாக சேரநாட்டின் தளபதி கூத்திகனை (கி.மு 236-214) மட்டக்களப்பின் பூர்வீகசரித்திரம் இனம் காணுகின்றது. இவன் பண்டைய மட்டக் களப்பான சம்மான்துறையை இருக்கையாக கொண்டிருந்தவன்.
கூத்திகனது ஆட்சிக்காலத்தே பெருமளவு சேரத்துக் குடிகள் மட்டக்களப்பில் குடியேறியதாக பண்டைய வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இதன் பின் அனுராதபுர ஆட்சியாளர்களான மகா குல நாகன், சோரநாகன் ஆகிய நாகமன்னர்களின் ஆட்சிக்குள் மட்டக்களப்பு வருகின்றது. அதன் பின்னர் கலிங்கனான இரஞ்சலனும் தொடர்ந்து சிறிகுலனும் மட்டக்களப்பில் அதிகாரம் செலுத்தியவர்களாக அறியவருகின்றனர். அவர்களது வழிவந்த வாரிசு ஆட்சியில் கி.மு 32ல் வாகூரனும் கி. பி 1ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரசன்னசித்துவும் அதிகாரத்தில் இருந்துள்ளனர். இதன் பின் வரும் ஆடகசெளந்தரியின் வரலாற்றில் கி.பி 1ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மிக நீண்டதொரு காலம் அவளது ஆட்சிக் காலமாக குறிப்பிடப்படுவதைப் பார்க்கின்றோம். இதில் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் நம்பகத்தன்மை அற்றவையாகவே உள்ளமையால் அவளது ஆட்சிக் காலத்தின் பின்னர் கி.பி 261 வரை மட்டக்களப்பு அனுராதபுரியின் ஆட்சியிலேயே இருந்துள்ளதாக கருதவேண்டியுள்ளது.
- 40- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
அனுராதபுரியை தலைமை இடமாகக்கொண்டு ஆட்சிசெய்த சிலப்பதிகாரம் குறிப்படும் கஜபாகுவின் ஆட்சிக்காலமும் (கி.பி 108 - கி.பி 131) இதனுள்ளேயே அடங்கியதாகும். இவனே சேரன் செங்குட்டுவன் எடுத்த கண்ணகி விழாவில் பங்குகொண்டதோடு கண்ணகி வழிபாட்டினை (பத்தினித் தெய்வம்) இலங்கைக்கு அறிமுகப்படுத்தியவனுமாவான். இவன் அழைத்துவந்த சேரத்துக் குடிகளில் ஒரு பிரிவினர் மட்டக்களப்பில் குடியேறியதாக தகவல்கள் கூறுகின்றன.
கி. பி 3ம் நூற்றாண்டின் பின்னர் உன்னரசுகிரி தோற்றம்பெற மட்டக்களப்பு இரு பிரிவுகளாக மாறுகின்றது. இக்காலத்தே மட்டக்களப்பு பிரசேதுவாலும் உன்னரசுகிரி சிங்ககுமாரனாலும் நிருவகிக்கப்படுகின்றது.
இவர்களுக்குப் பின்னர் மட்டக்களப்பு தினசேனனிடமும் உன்னரசுகிரி சிறி சிங்கனிடமும் வாரிசு முறையில் செல்கின்றது. பின்னர் கி.பி 4ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மட்டக்களப்பை ஒரே நாடாகக்கொண்டு தினசேனனின் மகன் பானு ஆட்சிப் பொறுப்புக்கு வருகின்றான். அவனைத் தொடர்ந்து பானுவின் மகன் அமரசேனனும் அதன்பின் அவனின் மகன் குணசிங்கனும் ஆட்சிப் பொறுப்புக்கு வருகின்றனர்.
கி.பி 4ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலிங்க இளவரசி உலகநாச்சியின் மட்டக்களப்பு வரவு இடம்பெறுகின்றது. தாளங்குடா கோவில்குளத்தை இருக்கையாகக்கொண்டு மண்முனை ஆட்சிப்பிரிவு அவளுக்காக உருவாக்கப்படுகின்றது.
உலகநாச்சியால் மேற்கொள்ளப்பட்ட மண்முனைக் குடியேற்றத்தின்போது தொழில்பிரிவுச் சமூகங்கள் உள்ளிட்ட கலிங்கக் குடிகள் இங்கு அழைத்துவரப்பட்டன. அதன் பின்னர் கி. பி 630 வரையும் அனுராதபுரியின் ஆட்சியின்கீழ் மட்டக்களப்பு செல்கின்றது. கி. பி 630 தொடக்கம் கி. பி 750 வரையான
- 41 - வெல்லவுர்க்கோபால்

Page 24
மலையாள நாடும் மட்டக்களப்பும்
காலத்தே கலிங்கனான வங்கலாடனும் அவன் சந்ததியினரும் மட்டக்களப்பை பரிபாலிக்கின்றனர். இதன்பின் பொலநறுவை இராசதானி தோற்றம் பெற அதன் நிதிய அதிபர்கள் மட்டக்களப்ன்ப நிருவகிக்கின்றனர். அதன்பின் மட்டக்களப்பு சிற்றரசு நிலையில் அனுராதபுர ஆட்சியின்கீழ் செயல்பட்டமைக்கான தகவல்கள் பெறப்படுகின்றன. கி. பி 10ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வடகிழக்குப்பிரதேசம் உட்பட அனுராதபுரத்தை சோழர்கள் கைப்பற்றியதோடு பொலநறுவை ஜனநாதமங்கலம் என்ற பெயரில் அவர்களது தலைநகராக மாற்றப்படுகின்றது.
இது தமிழகத்தில் இராஜராஜ சோழரின் ஆட்சிக் காலமாகும். இதன்போது கலிங்கனான தர்மசிங்கன் மட்டக்களப்பில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தான். அதன்பின்னர் சோழர்களின் நிருவாக ஆட்சியராக கலிங்கர் வழிவந்த கதிர்சுதன், மதிசுதன், நாதன் ஆகியோர் வாரிசு முறையில் செயல்பட்டனர். சுமார் எழுபத்தியேழு ஆண்டுகள் சோழர் ஆட்சியிலிருந்த மட்டக்களப்புப் பிரதேசத்தில் தமிழக சமூகங்களின் பரவலான குடியேற்றங்கள் இடம் பெற்றதோடு நிருவாகச் செயல்பாடுகள் மற்றும் பண்பாட்டு அம்சங்களில் பெருமளவு மாறுதல்கள் தென்படலாயின. சேரநாட்டின் மரபுவழி வழக்காறுகள் மென்மேலும் வலுவடையத் தொடங்கின. சோழராட்சி 1ம் விஜயபாகுவின் கைக்குமாறிய கி.பி 1074 முதல் 1215 வரையான 145ஆண்டுகள் மட்டக்களப்பு பொலநறுவையின் மேலாதிக்கத்திலேயே இருந்தாலும் சோழரின் ஆட்சிக் காலத்தே அறிமுகமான உடையார் முறைமை போன்ற நிருவாகக் கட்டமைப்புகள் மேலும் தொடரவே செய்தன.
கி. பி 1215ல் கலிங்க மாகோன் ஈழத்தின் பெருநிலப்பரப்பைக் கைப்பற்றி தோப்பாவை என்ற பெயரில் பொலநறுவையை இராசதானியாக்கியபோது கலிங்கத் தொடர்பில் இறுக்கமாகவிருந்த மட்டக்களப்பு ஈழத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பிரதேசமாக மாறியது. யாழ்ப்பாணம், வன்னி, புத்தளம் பிரதேசங்களைப்போல் மட்டக்களப்பும் ஏழு வன்னிமைப் பிரிவுகளாக
- 42 - வெல்லவூர்க்கோபால்

D60)6)u JT6T 5TCBLD LDL 556TLD
மாற்றம் பெற்றது. இங்கு வாழ்ந்த அனைத்து சமூகங்களும் ஏழேழு குடிப் பிரிவுகளாக வகுக்கப்பட்டன.
நாடுகாடுப்பற்று, பாணமைப்பற்று, அக்கரைப்பற்று, சம்மாந்துறைப்பற்று, கரவாகுப்பற்று, மண்முனைப்பற்று, ஏறாவூர்ப்பற்று எனப் பிரிக்கப்பட்ட வன்னிமைப் பிரிவுகளுக்கு வன்னியன” என்ற நிருவாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் பாலகோத்திர படையாட்சி வன்னியர்கள் எனும் பிரிவைச் சார்ந்தவர்களாயிருந்தனர். இக்காலத்தே தமிழும் சைவமும் மீண்டும் முதல் நிலை பெற்றன. சேரத்தின் மருமக்கதாயத்தை யொத்த தாய்வழி முதிசம்’ என்னும் முற்குக தேசவழமை வழக்காறுகள் மேலும் விரிவடையலாயின. ஆலயங்களை மையப்படுத்தி அவற்றை அண்டி வாழ்ந்த சமூகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இதனால் இப்பிரதேசத்தே கட்டுக்கோப்பான ஒரு சமூகத்தளம் மிக்க உறுதியோடு கட்டியெழுப்பப்படலாயிற்று.
சுமார் நாற்பது ஆண்டுகள் கலிங்க மாகோனின் ஆட்சியிலிருந்த மட்டக்களப்பு கி.பி 1255ல் பொலநறுவை ஆட்சியாளர்களின் கீழ் வந்தது. எனினும் மாகோன் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வன்னிமை நிருவாகம் உட்பட்ட சில நிருவாக முறைகள் நாடு சுதந்திரம் அடையும் வரை தொடரவே செய்தது.
கி.பி 14ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் மட்டக்களப்பு கண்டி அரசின்கீழ் வந்தபோது அவர்கள் தங்கள் பிரதிநிதிகளாக நான்கு திக்கு அதிபர்களை நியமித்தார்கள். பொலநறுவையில் தலைமையாளராக தி சாபதி என்னும் பெயரில் ஒருவர் நியமிக்கப்பட்டார். திக்கதிபர்களாக ஏறாவூர்ப் பகுதிக்கு படையாட்சி குலத்தவரும் மண்முனைப் பகுதிக்கு கலிங்க குலத்தவரும் சம்மாந்துறைப் பகுதிக்கு பணிக்கர் குலத்தவரும் பணிபுரிந்தனர். உன்னரசுகிரிக்கு சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். கி.பி 16ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இவர்களது வாரிசுத் தலைமைத்துவம் நீடிக்கலானது. கி. பி 1520ல் மாருதசேனன் என்னும் பெயரில் பொலநறுவையின் திசாபதியாக நியமிக்கப்பட்ட கலிங்க குலத்தைச்
- 43- வெல்லவுர்க்கோபால்

Page 25
மலையாள நாடும் மட்டக்களப்பும்
சேர்ந்த பங்குடாவெளி கண்ணாட்போடி திக்கதிபர்களின் துணையுடன் மட்டக்களப்பை தனியரசாக்கினான். தனது ஆட்சியதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கில் மட்டக்களப்புக்கு மதம் பரப்ப வந்த பாதிரிமார் ஊடாக கோவாவிலிருந்து செயல்பட்ட போர்த்துக்கீச தலைமையுடன் இவன் தொடர்புகளைக் கொண்டிருந்தான். இதன்போது ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களால் இவனது மகனும் தாய்வழிப் பணிக்கர் குலத்தவனுமான எதிர்மன்னசிங்கன் கி.பி 1540வாக்கில் மட்டக்களப்பின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.
எதிர்மன்னசிங்கனின் ஆட்சியில் மட்டக்களப்பு நாடு: உன்னரசுகிரி, மட்டக்களப்பு, போர்முனைநாடு, மண்முனை, ஏறாவூர் என ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதோடு வன்னிமை நிருவாகமும் மீண்டும் செயல்படலானது. இவன் காலத்தே மகாபாரதக் கூத்து தமிழகத்திலிருந்து இங்கு அறிமுகமானதோடு துரோபதையம்மன் வழிபாடும் தோற்றம் பெற்றது. இவனது ஆட்சி 1585 வரை நீடித்தது. கி. பி 1622ல் போர்த்துக்கீசர் வசம் வரும்வரை மட்டக்களப்பு நாடு வன்னிமைகளின் நிர்வாகத்தில் கண்டியின் மேலாதிக் கத்திலேயே தொடர்ந்திருந்தது.
1622ல் மட்டக் களப்பை தங்களது கையில் எடுத்துக் கொண்ட போர்த்துக் கேயருக்கு வரி அறவீடே முக்கியமானதாக அமைந்திருந்தமையால் நிருவாக கட்டமைப்பை நிலைப் படுத் துவதல் அவர்கள் பெரிதளவு அக் கரை கொள்ளவில்லை. எனினும் வரி அறவீடு தொடர்பில் மட்டக்களப்பின் போடிமாரிடமிருந்து பாரிய எதிர்ப்பினுக்கு அவர்கள் முகம் கொடுக்கவே செய்தனர். கி. பி 1637ல் ஒல்லாந்தர் மட்டக்களப்பில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர். எனினும் அடிக்கடி ஒல்லாந்தரின் ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பலைகளும் கிளர்ச்சிகளும் எழவே செய்தன.
ஒல்லாந்தரின் மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் சில முக்கிய போடிமார் கொல்லப்பட்டனர். சிலர் மட்டக்களப்பின்
- 44- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
திறந்தவெளிச் சிறையாக அன்று கருதப்பட்ட சிறையாத் தீவிலும் (எருமைத்தீவை அடுத்த சிறு தீவு போடிமாரை சிறைவைத்ததால் சிறையாத் தீவானது)சிலர் கொழும்பிலும் சிறைவைக்கப்பட்டனர். இன்னும் சில போடிமாரின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. கி. பி 1700ல் ஒல்லாந்தர் கண்டியுடன் செய்துகொண்ட ஒப்பந்தப் பிரகாரம் போடிமாருடன் சமரசத்தை ஏற்படுத்திக்கொண்டு ஆட்சி அதிகாரம் மற்றும் நீதி நிருவாகங்களில் சம வாய்ப்பினை போடிமாருக்கு அளித்தனர். இறுதியாக 1766 கார்த்திகை 06ம் திகதி ஒல்லாந்தர் வழங்கிய தலைமைப் போடிகள் நியமனத்தின்படி மட்டக்களப்பின் வட பகுதியான மண்முனைக்கு காலிங்கா குடியைச் சேர்ந்த அருமைக் குட்டிப் போடியும் தென்பகுதியான பாணமைக்கு பணிக்கனார் குடியைச் சேர்ந்த கந்தப்போடியும் பதவியேற்றனர்.
1802ல் ஆங்கிலேயர் ஒல்லாந்தரிடமிருந்து மட்டக்களப்பைக் கைப்பற்றினர். ஒல்லாந்தரின் கோட்டையானது ஆங்கிலேயரின் கச்சேரி என்னும் நிருவாகச் செயலகமாக மாறியது. எனினும் மட்டக்களப்பின் ஆட்சியாளராக (Collector) நியமனம் பெற்ற ஜோசப் சிமித்தால் மட்டக்களப்பை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலையே ஆரம்பத்தில் இருந்தது. வரி அறவீட்டுக்கு எதிராக போடிமார் தொடுத்த கிளர்ச்சி தொடர்ந்தும் விஸ் வருபம் எடுத்தது. கொழும் பிலிருந்து அழைக்கப்பட்ட லெப்ரினன் கேர்னல் ஆர்தர் ஜோன்ஸ்ரன் தலைமையிலான ஆங்கிலேயப் படையை இரண்டு மாதங்கள் மட்டக்களப்பில் நிலை நிறுத்தியே போடிமாரின் கிளர்ச்சியை அவனால் அடக்கமுடிந்தது.
ஒல்லாந்தர் காலத்தே வழக்கிலிருந்த தலைமைப்போடி "மற்றும் நிலமைப்போடி பதவிகள் ஆங்கிலேயர் காலத்தே மீண்டும் வன்னிமைகளாகவும் உடையார்களாகவும் மாறின. மட்டக்களப்பு பதின் மூன்று வன்னிமைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. நாடுகாடுப்பற்றின் ஒரு பகுதி விந்தனைப்பற்றாக உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் தங்களுக்கு சார்பாக செயல்பட்ட போடிமார்களையே
- 45- வெல்லவூர்க்கோபால்

Page 26
மலையாள நாடும் மட்டக்களப்பும்
வன்னியர்களாகவும் உடையார்க ளாகவும் நியமித்தனர். இவர்கள் முதன்முலில் 1824ல் மக்கள் கணக்கெடுப்பொன்றை நடத்தினர். சாதி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இக்கணக்கெடுப்பு 1827ல் உத்தியோக பூர்வ அறிக்கையாக வெளியிடப்பட்டது. வேகம் பற்று, விந்தனைப்பற்று மற்றும் மன்னம்பிட்டி பகுதியை உள்ளடக்கி வெருகல் தொடக்கம் கட்டகாமம் வரையான மட்டக்களப்பு பிரதேசத்தில் 21791 தமிழரும் 8288 இஸ்லாமியரும் 2026 சிங்களவரும் அன்று வாழ்ந்துள்ளமை அவ்வறிக்கைமூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மட்டக்களப்பிலிருந்து மன்னம்பிட்டிப் பிரதேசம் பிரிக்கப்பட்டு பொலநறுவை மாவட்டத்துடனும் வேகம் விந்தனைப் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு மாத்தளை மற்றும் மொனறாகலை மாவட்டங்களுடனும் இணைக் கப்பட்டதோடு பணி டைய மட்டக்களப்பின் மிகுதிப் பிரதேசம் 1960ன் பின் மட்டக்களப்பு அம்பாரை என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு இன்று மட்டக்களப்பு குறுகி நிற்கின்றது.
- 46- வெல்லவூர்க்கோபால்

LD60)6NDU FT6T bĪT (BLfD DEL 35356TŮJLLD
சமூகக் கட்டமைப்பு
மட்டக்களப்பு சமூகக் கட்டமைப்பு பொதுவாக ஒன்றை யொன்று உள்வாங்கிய தன்மையினையே கொண்டிருக்கின்றது. கி. மு 3ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சமூகங்களாக இயக்கரும் நாகரும் அடையாளப்படுத்தப் படுகின்றனர். அதன் பின் திமிலர் என்னும் மீனவர் சமூகம் வாழ்ந்துள்ளமையை வரலாறு பதிவுசெய்துள்ளது. பின்னர் கி. மு 3ம் நூற்றாண்டு தொடக்கம் கலிங்கத்திலிருந்தும் சேர சோழ பாண்டிய நாடுகளிலிருந்தும் காலத்துக்கு காலம் வெவ்வேறு நடவடிக்கைகளால் மக்கள் வளம் நிறைந்த மட்டக்களப்பை நாடினர். அதன் பின் மட்டக்களப்பு பல்வேறு தமிழர் குழுக்களின் ஒன்றுபட்ட சமூகத் தளத்துள் தன்னை இறுக்கமாக்கிக்கொண்ட பிரதேசமாக நிலைநிறுத்திக்கொண்டது.
இங்கு நீண்டகால ஆதிக்கமிக்க நிலவுடமைச் சமூகமாக முற்குக சமூகம் வளர்ச்சிபெற்றதால் கேரளத்தின் ஆதிக்கம் மிக்க நிலவுடமைச் சமூகமாக விளங்கிய நாயர் சமூகத்தின் மருமக்க தாயம்’ நடைமுறையினை அடியொற்றிய தாய்வழி முதிசமும் அதன் சட்டவாக்கமான முற்குக தேசவழமைச் சட்டமும் மட்டக்களப்புச் சமூகங்களை நெறிப்படுத்தும் வரன்முறைகளாக அமைந்தன.
இன்றைய தமிழ் நாடு மற்றும் கேரளாவின் சாதிப்படி நிலைக்கும் மட்டக்களப்பின் சாதிப்படி நிலைக்கும் பாரிய வேறுபாடுகள் தென்படுவதை நம்மால் அவதானிக்கமுடியும். மட்டக்களப்பில் வரையறை செய்யப்பட்ட சமூகங்களிடையே பொதுவாக சமூக உறவுகள் பேணப்படுவதில்லையெனினும் இங்குள்ள நீண்டகால வரண் முறைகளை உள்ளடக்கிய வரலாற்றில் சமூமங்கள் ஒன்றையொன்று ஒதுக்காமல் பொதுவான - 47- வெல்லவூர்க்கோபால்

Page 27
மலையாள நாடும் மட்டக்களப்பும்
நிகழ்வுகளில் இணைந்து தங்கள் தங்கள் பங்களிப்புகள் ஊடாக நெறிதவறாது ஒற்றுமையினை நிலை நிறுத்தி வாழ்ந்துள்ளமை வரலாற்றில் உறுதி செய்யப்பட்டதாகும்.
- 48- வெல்லவுர்க்கோபால்
 

மலையாள நாடும் மட்டக்களப்பும்
03 விவசாய தலைமைத்துவமும்
நிருவாகக் கட்டமைப்பும்
உலக வரலாற்றில் பொதுவாக மன்னராட்சியின் (Gayuj6)LJT (B356f 6) விவசாய சமூகத் தலைமைத்துவங்கள் (Chieftains of Agricultural Communities) (paisaću ug5g5/6)JLb பெற்றவையாகவே விளங்கின. உயர்மட்ட அரசு நிருவாகச் செயல்பாடுகள் முதல் கீழ்மட்ட சமூக நிருவாக செயல்பாடுகள் வரை அவற்றின் செல்வாக்கு வலுப்பெற்றிருந்தமையினை ஆய்வுகள் ரீதியாக அறியமுடியும். தொடர்புபட்ட ஆட்சியாளர்கள் அல்லது தொடர்புபட்ட சமூகங்கள் வாழும் நாடுகள் அல்லது பிரதேசங்களில்
அமைப்பு ரீதியான அவற்றின் ஒத்த தன்மையை அவதானிக்கமுடியும்.
பண்டைய முத்தமிழ் நாடுகளில் முதன்மை பெற்றதாக விளங்கிய சேரநாடு அதன் மத்திய கால தொடக்கமாக கொள்ளப்படுகின்ற கி. பி 9ம் நூற்றாண்டு முதல்கொண்டு பல்வேறு சமூக அரசியல்நிலை மாற்றங்களினூடே கேரளா எனும் மலையாள நாடாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும் ஆழப் பதிந்துவிட்ட அதன் சமூக வழக்காறுகளும் பண்பாடுகளும் நீண்டதொரு வரலாற்றுக் காலத்தே வலுவோடு நிலைபெற்றிருந்தமையை ஆய்வுகள் புலப்படுத்தும். ஈழத்தின் மட்டக்களப்பும் பண்டைத் தமிழகத்தின் சேரநாடும் நீண்ட காலமாக தமக்குள் ஒரு இறுக்மான பிணைப்பினைக் கொண்டிருந்தன. கி. மு 320ஐ மையப் படுத்தியதாக இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் கலிங்க வேந்தர் மகா பத்மநாதனுக்கும் ஏற்பட்ட நல்லுறவு இரு நாடுகளுக்குமான உறவுப்பாலமாக பல நூறாண்டுகள் நீடிக்கவே செய்தன.
- 49- வெல்லவூர்க்கோபால்

Page 28
மலையாள நாடும் மட்டக்களப்பும்
ஆதிரேயனார், மாமூலனார், மோசிகீரனார் போன்ற சங்கப் புலவர்கள் கலிங்கப் பெருநகராம் பாடலியைப் போற்றிப் பாடியதும் மோரியப் படையெடுப்பில் பாடலி வீழ்ச்சியுற்று தனநந்தர் கொல்லப்பட்டதும்
பணியா மையின் பகைதலை வந்த மாகெழு தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்தர்
என மாமூலனார் மோரியரை இழித்துப் பாடுவதும் இலக்கியச் சான்றுகளாயுள்ளன.
முதன் முதலாக கலிங்கர் மட்டக்களப்பில் காலூன்றிய காலமாக கொள்ளப்படுகின்ற கி. மு 3ம் நூற்றாண்டின் பின்பும் கலிங்கர்கள் சேரர்களுடன் கொண்டிருந்த நெருக்கமான தொடர்பே மட்டக்களப்பும் சேரநாடும் பிணைப்புற கால்கோளாய் அமைந்தது. அதனைத் தொடர்ந்து கலிங்கக் குடிகளுடன் சேரக்குடிகளும் மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்துள்ளமை தெரிகின்றது. பண்டைய மட்டக்களப்பை இருக்கையாக்கி ஆட்சிசெய்த சேர நாட்டுத் தளபதி கூத்திகனின் ஆட்சிக்காலம் முதல்கொண்டு கலிங்கர் ஆட்சிக்காலம், சோழர் ஆட்சிக்காலம், மாகோன் ஆட்சிக்காலம் போன்றவை தொடர்ச்சியான குடியேற்றங்களுக்கு வழிகோலின. கி. பி 9ம் நூற்றாண்டில் கேரளத்தில் தலையெடுத்த விவசாய நிலவுடமைத் தலைமைத் துவக் கட்டமைப்பு மட்டக் களப்பு பிரதேசத்தே சோழராட்சியல் அறிமுகமாகி மாகோன் ஆட்சியில் விரிவுபட போதிய காரணங்கள் தென்படவே செய்கின்றன.
- 50- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
நாடுடையார் (நாடுவழி) அமைப்பும் உடையார் வன்னியனார் அமைப்பும்
கேரளம்
கி.பி 9ம் நுTற் றாணி டில் மா கோட்டையை (மாகோதயபுரம்)இருக்கையாக்கி பிற்பட்ட சேரர்களான பெருமாள்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபோது நிருவாகத்தை இலகுவாக்க கேரளத்தில் புதிய அரசியல் பிரிவுகளை உருவாக்கினர். ஆரம்ப காலத்தே;
01.கொளத்துநாடு 02.புறக்கீழ்நாடு 03.குறும்பொறை நாடு 04. வெண்பொழிநாடு 05. இராம வளநாடு 06. ஏரலநாடு 07. வள்ளுவ நாடு 08. நெடும் பொறையூர் நாடு 09. கீழ்மலை நாடு 10.வேணாடு 11. நன்றுளா நாடு
எனப் பதினொரு நாடுகள் உருவாக்கப்பட்டன. இவற்றை நிருவகிக்க நாடு வழிகள்’ நியமிக்கப்பட்டனர். ‘நாடுவழி’ எனும் சங்கத் தமிழ் நாடுடையவர் எனப் பொருள்படுவதாகும். பல ஊர்களை உள்ளடக்கிய இந் நாடுகளின் சீரான நிருவாகச் செயல்பாடுகளால் அரசு முறைமை உடனடியாக சகல மட்டத்தினரையும் சென்றடையவும் வரி அறவீடுகள் துரிதமாக்கப்படவும் வழி பிறந்தது. அன்றைய காலத்தே இதுபோன்ற அமைப்புகள் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் செயல்பாட்டில் இருந்தாலும் கேரளத்தில் இம்முறைமை வலுவோடு செயல்பட்டதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
-51 - வெல்லவூர்க்கோபால்

Page 29
மலையாள நாடும் மட்டக்களப்பும்
சேர நாட்டின் நாடுவழி அமைப்பினை அடியொற்றியே சோழநாட்டிலும் உடையார் அமைப்பு முறை உருவானதென்பது பொதுவான கருத்தாகும். பாண்டி நாட்டில் இவ்வமைப்பு ‘நாட்டாண்மை’ எனப் பெயர்பெறுவதாயிற்று. இதுவே மருவி நாட்டாமை ஆனது. பல பட்டிகளை (ஊர்களை) உள்ளடக்கிய இவ்வமைப்பின் நாட்டாண்மைகள் அவர்களுக்குரிய ஊர்களின் எண்ணிக்கையை பொறுத்து எட்டுப்பட்டி ராசா, பத்துப்பட்டி ராசா, பதினெட்டுப்பட்டி ராசா என அழைக்கப்பட்டனர்.
நாடுடையார்கள் பொதுவாக செல்வாக்குமிக்க நிலவுடமைத் தலைமைத்துவம் சார்ந்தவர்களாவே இருந்தனரெனப் பொதுவாகக் கருதப்பட்டாலும் உண்மையில் இவர்களது பின்னணி எது என்பதில் பல்வேறு வியாக்கியானங்கள் தற்போது எழத் தொடங்கியுள்ளன. ஜோசப் அன்ரனி போன்ற சில புதிய தலைமுறை ஆய்வாளர்களின் அக்கறை இதில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. மன்னர்களும் அவர்களது ஆண் வாரிசுகளும் விரும்பிய பெண்கள் மூலம் பலதார மணங்களை மேற்கொள்ளும் உரிமையினை அன்று கொண்டிருந்தனர். எனினும் அவர்களது சத்திரிய வாரிசுகளே அரசுரிமையினைப் பெற்றிருந்தனர். இதனால் ஏனைய சூத்திர குல வாரிசுகளின் எதிர்காலம் கருதி அவர்களுக்கு நிலவுடமைகளை வழங்கினர். ‘சமந்த சத்திரியர்கள்’ என அழைக்கப்பட்ட இவர்களே காலப்போக்கில் நிலவுடமைத் தலைமைத்துவம் சார்ந்தவர்களாக மாறினர்.
நாடுவழிகள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் பேராசிரியர் இளம்குளம் குஞ்சன்பிள்ளை முக்கியமானவர். தன்னால் பெறப்பட்ட கல்வெட்டுக்களையும் இல்க்கியச் சான்றுகளையும் நெறிப்படுத்தி பதின்மூன்று பெருமாள் மன்னர்களின் ஆட்சி முறையினையும் அதனுாடு காலத்தையும் கணிப்பீடு செய்த இவர் அப்போதைய நாடுவழிகள் பற்றியும் சிறப்பாக விளக்கியுள்ளார்.
- 52- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மலையாள மொழியில் எழுதப்படட சேர சாம்ராச்சியம் ஒன்பதும் பத்தும் நூற்றாண்டுகளில்’ எனும் நூல் இது தொடர்பான பல தகவல்களைக்கொண்ட மலையாள மொழியில் எழுதப்பட்ட முதல்
b|T6) 6T60T6)(Tib.
இந்நூலினை அடியொற்றியும் சில திருத்தங்களைச் செய்தும் அறிவுபூர்வமான கோட்பாடுகளை உள்ளடக்கியும் முனைவர் 6TD-23.6T6t). BTU Tuj600T66, The Perumals of Kerala' 615)|LD BJT6560601 வெளிக்கொணர்ந்தார்.மேலும் பலர் மத்திய கால கேரளாவின் ஆட்சிமுறைமை மற்றும் சமூகக் கட்டமைப்புகள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர் 56TT5 '6J.ggul JUGöT "Social Revelution in a Kerala Village" 6 6ò. 6J. E(b 6g 60I ggufi “Kerala and her People” கே.பி.பத்மநாபமேனன்"History of Kerala" கே.எம்.பணிக்கர்"History of Kerala” 616rü.g)JT5T aál(b6260TÜU60íldbasi "Social Change in Kerala” 6J.(335.(3LJITLọ6)JT6T, “Keralathile Karsaga Prasthanathinta Oru Lagu Charithiram" போன்றோர் விளங்குகின்றனர். இவர்களது நூல்கள் பல்வேறு தகவல்களைப் பதிவு செய்துள்ளமையை காணலாம்.
இதனிடையே நாடுவழிகளின் நியமனம் தொடர்பிலும் அவர்களது செயல்பாடுகள் குறித்தும் அரசின் மிக்க செல்வாக்குப் பெற்றவர்களாக விளங்கிய நம்பூதிரிப் பிராமணர்கள் முழுமையாக எதிர்த்தனர். நாடுவழிகள் மன்னருக்கு அடுத்த நிலையில் தலையெடுப்பதையும் அதன் மூலம் தாங்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதையும் நம்பூதிரிக்ள் விரும்பவில்லைதுவங்கள் அவர்களைக்கொண்டே உருவாக்கப்பட்டன.
- 53 - வெல்லவூர்க்கோபால்

Page 30
மலையாள நாடும் மட்டக்களப்பும்
நம்பூதிரிப் பிராமணர்கள் வாழ்ந்த முப்பத்தியிரண்டு ஊர்களான:
01. 60)LJugOJTi 02. திரூர் 03. பொன்னாணி 04. மாஞ்சேரி 05. திரிசிவப் பேரூர் 06. சாமுண்டா 07. அவிட்டப் புதுார் 08. ஐராங்குளம் 09. களவுர் 10. செங்கம நாடு 11. உதியனுார் 12. எட்டுமனுார் 13. கட்டமுறி 14. திருவள்ளா 15. செங்கண்ணுார் 16. வெண்மணி 17. பெரும்சாலூர் 18. கரந்தொழா 19. பன்னியூர் 20. FFFT60TLD51356)|b 21. பெருவனம் 22. இருஞ்சலக்குடா 23.பரவுர் 24. மூளித்தானம் 25. அத்தாவூர் 26. இளிவியம் 27. கழுதநாடு 28. குமாரநல்லூர் 29. அறன்முளா 30. கிடங்கனுார் 31. கவியூர் 32. நீர்மண்ணு
ஆகிய ஊர்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சமூகத் தலைமைத்துவ நிலையிலுள்ள நான்கு நம்பூதிரிப் பிராமணர்கள் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டனர். அவர்களின் வாரிசுகள் தொடர்ந்தும் அப்பதவிகளை வகித்தனர்.
ஏனைய பதினொரு நாடுகளைப் பொறுத்தவரை ஒரு நாடுடையாரின் பதவிக்காலம் அவரது வயோதிபத்தாலோ அல்லது இறப்பினாலோ அன்றேல் ஆட்சியாளர்களின் நடவடிக்கையாலோ முடிவுக்கு கொண்டுவரப்பட்டால் அவரது சகோதரி வழி மருமக்களில் மூத்தவரே அப்பதவிக்கு உரியவராவார். இது மருமக்க தாய நடைமுறையினைப் பின்பற்றியதாக அமைந்தது. சமூக ஒழுக்கம், பாதுகாப்பு, குற்றவியல் விசாரணைகள், தண்டனைகள், விவசாய வரிகள், அறவீடுகள் போன்றவற்றை நாடுடையார்கள் மேற்கொண்டனர். பாதுகாப்பு மற்றும் வரி அறவீடுகள் தொடர்பில் முக்கிய வேழாண் சமூகத்தினரான நாயர்களே நியமிக்கப்பட்டனர்.
- 54- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
வரி அறவீடுகள் நெல்லாகவோ பிற விளைபொருட்களாகவோ அமைந்தன. அறவீடுகளின் ஒரு பகுதி நாடுவழிகளின் நிருவாகச் செயல்பாடுகளுக்குச் செல்ல மறுபகுதி அரசுக்கு அனுப்பப்பட்டது. கி.பி 9ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நடைமுறையின் பிரதிபலனாக பெருமாள் ஆட்சியாளர்களின் பதின்மூன்றாம் வாரிசான சேரமான் “பெருமாளின் ஆட்சிக்காலமாகக் கொள்ளப்படும் கி.பி 12ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நாடுடையார் அமைப்பு சில சீர் திருத்தங்களைப் பெற்றதோடு மிக்க வலுவுள்ளதாகவும் மாற்றமடைந்தது. இராஜராஜசோழன், இராசேந்திர சோழன் போன்றோரின் படையெடுப்பும் ஆட்சிமாற்றமும் இடையே சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் சேரரின் ஆட்சியினை மாற்றிவிட்டபோதும் நாடுடையார் முறைமை தொடரவே செய்தது. எனினும் சோழர்களுக்கு வரி செலுத்தும் சிற்றரசர்களாகவே இவர்கள் செயல்பட்டனர்.
கி.பி.12ம் நூற்றாண்டில் சேரப்பெருமாள்களின் ஆட்சி முடிவுற்றபோது நாடுடையார்கள் மிக்க ஆதிக்க நிலையை எட்டினர். பெருமாள் ஆட்சியாளர்களால் இவர்கள் பொறுப்பில் விடப்பட்ட அரசுக்காணிகளுக்கும் இவர்களே உரித்தாளர்க ளாயினர். தங்கள் தங்கள் நாடுகளின் சகல வளங்களையும் தங்கள் கைக்குள்ளேயே எடுத்துக்கொண்ட இவர்கள் அவற்றின் பாதுகாப்பின் நிமித்தம் வலுலான ஆயுதப்படையையும் உருவாக்கினர்.
கி.பி. 849ல் தானுரவி குலசேகர மன்னனால் எழுதப்பட்ட தரிசப்பள்ளி செப்புப்பட்டயமே முதன்முதலில் நாடுடையாரின் செயல்பாடுகள் குறித்துப்பேசுவதாகும். ஐயன் அடிகள் எனும் நாடுடையார் பற்றி இப்பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லா நாடுடையார்களும் பொதுவாக பிராமணர்களை மதித்தே வந்தனர். நாடுவழியிலிருந்து ஆதிக்கம் பெற்று கோழிக்கோட்டி லிருந்து ஆட்சிபுரிந்த சாமோரின் மன்னர்கள் குறித்து கே.வி.கிருஷ்ன 2gust 66, d5(g) b(BUTg5 (The Zamorins of Calicut - 1938) பசுக்களையும் பிராமணர்ளையும் பாதுபாப்பதில் சாமோரின் மன்னர்கள் உறுதிகொண்டவர்களாயிருந்தனர் எனக்குறிப்பிடுவார்.
-55- வெல்லவுள்க்கோபால்

Page 31
மலையாள நாடும் மட்டக்களப்பும்
பெரும்பாலும் நாயர் சமூகத்தினரைக் கொண்டு நாடுடையார்களால் உருவாக்கப்பட்ட படையணிகள் நூற்றுவர்’ என அழைக்கப்பட்டனர். நூறின் எண்ணிக்கையை கொண்டதாக இப்படையணிகள் விளங்கியதால் இப்பெயர் அமைவதாயிற்று. இருநூறு பேரைக்கொண்ட படையணி இருநூற்றுவர் எனவும் முன்னுTறு எனின் முன்னுற்றுவர் எனவும் எண்ணுாறு பேரைக் கொண்டமைந்தது எண்ணுற்றுவர் எனவும் பெயர் பெறுவதாயிற்று. மிகவும் வலுவான நிலையிலிருந்த நாடுடையார்கள் சாவேற்றுப் படையெனும் தற்கொலைப் படையினையும் கொண்டிருந்தார்கள். இதனை தேஸ்ற்றன் தனது அறிக்கைகளில் Sucide Squad' எனக்குறிப்பிடுவார். இவ்வீரர்கள் ‘சாவார்’ எனும் பெயராலும் அழைக்கப்பட்டனர். கேரள சமூக வரலாற்றாசிரியர்களின் ஆய்வுகளின்படி நாடுடையார் (நாடுவழி) முறைமையானது கி.பி 1734 வரை நீடித்திருப்பது தெரிகின்றது.
- 56- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு பிரதேசத்தைப் பொறுத்தவரை கி.பி 10ம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 11ம் நூற்றாண்டின் முற்பகுதி தொடக்கம் இதுபோன்ற அமைப்புகள் தோற்றம் பெற்றிருக்க வாய்ப்புள்ளதாகவே கருதலாம். இதற்கு சோழராட்சி வழியமைத்துக் கொடுத்திருக்கமுடியும். கி. பி 9ம் நூற்றாண்டில் சேரநாட்டில் உருவான நாடுவழி அல்லது நாடுடையார் அமைப்பையே இந்நிருவாக முறைமை முழுக்க முழுக்க கொண்டிருந்தது. 1215க்குப் பின் கலிங்க மாகோனால் அறிமுகப்படுத்தப்பட்ட வன்னிமை முறைமையும் சேரநாட்டின் நாடுடையார் அமைப்பினையே ஒத்ததாகும்.
அனுராதபுரத்தைக் கைப்பற்றி பொலநறுவைவரை படை நகர்த் திய சோழருக்கு மட்டக் களப்புப் பிரதேசத் தை தமதாக்கிக்கொள்வதில் பாரிய பிரச்சனைகள் எழுந்திருக்கும் எனக் கருதமுடியவில்லை. கலிங்கக் குடிகளுடன் பண்டைத் தமிழகத்தின் பழந்தமிழ் குடிகளையும் கொண்டிருந்த மட்டக்களப்பின் கட்டகாமம் (மாணிக்ககங்கை) வரையிலான பெருநிலப்பரப்பை எவ்வித சேதமுமின்றி அவர்கள் தமதாக்கிக் கொண்டனர் என்றே அறியப்படுகின்றது. மட்டக்களப்பு சிற்றரசுப் பிரிவுகளைக் கொண்டிருந்த நிலையில் பொலநறுவையிலிருந்து செயல்பட்ட சோழரின் அரசுப் பிரதிநிதி தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் ஆலோசனைகளைப் பெறவும் வரி அறவீடுகளை மேற்கொள்ளவும் வேண்டி மட்டக் களப்புப் பிரதேசத்தை ஏழு உடையார் பிரிவுகளாகப்பிரித்து தங்கள் பிரதிநிதிகளை நியமித்திருந்தான். இவர்களையே மட்டக் களப்பின் பூர்வீக ஏடுகள் சோழ மன்னனின் ஏழு மந்திரிகள் எனக்குறிப்பிடுகின்றன. சோழராட்சியின்போது மட்டக்களப்பில் கிராம நிருவாக முறைமை உருவாகவும் நில அளவைகள், பங்கீடுகள் மற்றும் பிணக்குகளைத் தீர்த்தல், சமூகப் பண்பாட்டுப் பேணல்கள், குற்றச் செயல்களுக்கான தண்டனை வழங்கல் போன்றவை விரிவுபடவும் உடையார் முறைமை பெரும் வாய்ப்பாக அமைந்தது என்றே கூறவேண்டும்.
- 57. வெல்லவுர்க்கோபால்

Page 32
மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டக்களப்பில் சோழராட்சி முடிவுற்ற காலத்தே மாணிக்க கங்கைப் பகுதிக்கு கட்டகாமனும் அக்கரைப்பற்றுப் பகுதிக்கு ஆகு ராகுவும் கர வாகுப் பகுதிக் கு நீல வணி னனும் மண்முனைப்பகுதிக்கு புலியமாறனும் மண்முனை வட பகுதிக்கு வவுணசிங்கனும் ஏறாவூர்ப் பகுதிக்கு சத்துவண்டனும் வாகரைப் பகுதிக்கு கொட்டக்கச்சனும் இப்பதவிகளை வகுத்தவர்களாக நமக்குக் கிடைக்கின்ற பூர்வீக சரித்திர ஏடுகளில் பரவலாகக் காணமுடிகின்றது.
கி.பி 1070ல் சோழராட்சி முடிவுற்று பின்னர் மாகோன் பொலநறுவையினை கைப்பற்றும் வரையான 145 ஆண்டுகள் பெரும்பாலும் இடைப்பட்ட ஆட்சியாளர்களின் மேலாதிக்கத் திலேயே மட்டக்களப்பு இருந்திருக்கவேண்டும். விஜயபாகு கி.பி 1070ல் சோழராட்சியைக் தனதாக்கிய பின்னரும் பாதுகாப்பு மற்றும் நிருவாக முறைகளில் சோழரின் ஆட்சிப் பிரதிநிதிகளையே பெரும்பாலும் திரும்பவும் நியமித்திருந்தான் என்பதோடு பின்வந்த ஆட்சியாளர்களும் பொதுவாக சோழர்களின் நிருவாக முறைகளையே பின்பற்றினார்கள் என்பதால் உடையார் நிருவாகச் செயல்பாடுகள் தொடர்ந்திருந்ததாகவே கொள்ளவேண்டும். கி.பி 1215ல் கலிங்கமாகோன் பொலநறுவையைக் கைப்பற்றி தோப்பாவை என்ற பெயரில் அதனை இருக்கையாக்கியபோது மட்டக்களப்பின் ஏழு பிரிவுகளையும் வன்னிமை என்ற பெயரில் அவற்றைத் தொடரச் செய்தான். அதேபோல் தனது ஆட்சிக் குட்பட்ட பிரதேசங்களை வடக்கு, வடமேற்கு,வன்னி எனப்பிரித்து அவற்றிலும் ஏழேழு பிரிவுகளை உருவாக்கினான்.
மட்டக்களப்புப் பிரதேசம் நாடு காட்டுப் பற்று, பாணமைப் பற்று, அக்கரைப் பற்று, சம்மாந்துறைப் பற்று, கரவாகுப் பற்று, மண்முனைப் பற்று, ஏறாவூர்ப் பற்று என ஏழு பிரிவுகளைக் கொண்டிருந்தது.
- 58- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
இதில் வெல்லசை, முப்பனை (மொனாறாகலை), மாணிக்ககங்கை உள்ளிட்ட பிரிவு நாடுகாடுப் பற்று எனவும் அக்கரைப்பற்றுப் பிரிவு பாணமைப் பற்று, அக்கரைப்பற்று என இரு பிரிவுகளாகவும் கரவாகுப் பிரிவு கரவாகுப் பற்று, சம்மாந்துறைப் பற்று என இரு பிரிவுகளாகளாகவும் மண்முனைப் பிரிவு.மண்முனை வட பிரிவு ஆகியவை மண்முனைப் பற்று எனவும் ஏறாவூர்ப் பிரிவு, வாகரைப் பிரிவு ஆகியவை ஏறாவூர்ப் பற்று எனவும் மாற்றமடைந்தன.
கேரளத்தின் நிருவாகப் பிரிவுகள் நாடுகள் என்றும் அதன் தலைமையாளிகள் நாடுவழிகள் அல்லது நாடுடையார்கள் என்றும் தொடர்ந்தும் அழைக்கப்பட மட்டக்களப்பின் நிருவாகப் பிரிவுகள் உடையார் பிரிவுகள் என்றும் வன்னிமைப் பற்றுக்கள் என்றும் தலைமையாளிகள் உடையார் என்றும் வன்னியனார் என்றும் அழைக்கப்பட்டனர். எனினும் மட்டக்களப்பில் பெறப்படும் பூர்வீக ஏடுகளைக்கொண்டு பார்க்கின்றபோது பிறிதொரு காரணத்தையும் இதற்கு சாதகமாக்கிக் கொள்ளமுடியும்.
கலிங்க மாகோன் தோப்பாவையில் (பொலநறுவை) தனது ஆட்சி பீடத்தை நிறுவி செயல்பட்ட காலத்தே அதனை அண்டிய பகுதிகளில் 'வேளக்காரர்’ எனும் படையாட்சி வன்னியர் நிருவாகப் பொறுப்பாளர்களாக விளங்கினர். முத்துக்கல் (மன்னம்பிட்டி) மற்றும் வாகரையை உள்ளடக்கிய ஏறாவூர்ப் பகுதிக்குரிய நிருவாகப் பொறுப்பு படையாட்சி குலம் எனும் வன்னிய குலத்தவரிடமே நீண்ட காலமாக இருந்துவந்துள்ளது.
மட்டக்களப்பில் கலிங்க மன்னர்களின் வாரிசுகள் ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் பிரதேச நிருவாகச் செயல்பாடுகள் பூபால கோத்திர வன்னியப் படையாட்சியரிடமே இருந்தது. நிலவுடமைத் தலைமைத்துவக் காரர்களான இவர்களுக்கும் கேரளத்தின் நிலவுடமைத் தலைமைத்துவக் காரர்களான சமந்த சத்திரியர்களுக்கும் உள்ள ஒற்றுமை குறித்து மிக ஆழமாகப் பார்ப்பது அவசியமாகின்றது. மேலும் இதனோடு தொடர்புபட்டதாக
- 59- வெல்லவுர்க்கோடால்

Page 33
மலையாள நாடும் மட்டக்களப்பும்
சேரத்திலிருந்து கொங்குநாடு ஊடாக இடம்பெயர்ந்து திருச்சிக்கு மேற்கே காவிரிக்கு வடபால் குடியேறி “மழவர் நாடு’ என அன்று அழைக்கப்பட்ட இன்றைய அரியலூர் பெரம்பலூர் பிரதேசங்களின் நிலவுடமையாளர்களாகவும் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக உடையார் மற்றும் பாழையக் காரர்களாகவும் விளங்கிய வன்னியர் குலத்தினரான மழவர் குறித்தும் பார்ப்பது அவசியமாகின்றது. குறித்த இம்மூன்று பிரிவினரதும் செயல்பாடுகளில் ஒத்த தன்மை தென்படுவதும் தலைமைத்துவ மாற்றங்கள் தாய்வழி மருமக்கள் வாரிசு முறையில் அமைவதும் கவனத்தை ஈர்ப்பதாகும். மழவர் என்றும் மழவராயர் என்றும் தமிழகத்தில் குறிப்பிடப்படும் இவ் வன்னியப் பிரிவினர் மட்டக்களப்பில் மழவர் குடியினரென்றும் மழவராயன் குடியினரென்றும் அழைக்கப்படுகின்றனர். சேர மன்னன் அதியமானை சங்கப் புலவரான ஒளவையார் மழவ பெரும என புறநானூற்றுப் பாடலொன்றின் மூலம் விழித்துப் பாடுவதும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
மட்டக்களப்புப் பிரதேசத்தின் பாரம்பரிய சமூகப் பண்பாட்டுக் கோலங்களை வெளிக்கொணரும் ஒரே களமாக இன்றும் திகழ்ந்துகொண்டிருப்பது கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரமாகும். அது சார்ந்த தகவல்கள், ஆவணங்கள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்குள்ள பங்கு தடுக் கும் முறைக் கல் வெட் டில் வன்னிபங்கள் தங்களைக் குறித்து வெளிப்படுத்தும் பாடல் ஆய்வாளர்தம் கவனத்தை ஈர்ப்பதாகும்
நெறி தவறார் சுயநாடு காளிகட்டம் நீர்குலமே படையாட்சி உழுது ணுண்போன் செறி கமழு மாகலிங்க வாச னெங்கள் திறத்தோரை படைத் துணைக்கி தலைவராக்கி
குறிப்பறிந்து வன்னிபங்கள் குலமேயென்று குகப்பட்டத் தரசது கொண்டோர் நாமே
- 60- வெல்லவுர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
இப்பாடலில் வரும் சுயநாடு காளிகட்டம்’ எனும் அடி குறித்து ஆய்வாளர்கள் பெரிதும் கவனம் செலுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் தொல்லியல்துறைப் பணிப்பாளரும் வன்னியர் குறித்த கி.பி 9ம் நூற்றாண்டுக்குரிய மதுரை - கருங்காலங்குடிக் கல்வெட்டுத் தொடக்கம் முன்னுாறு வரையான கல்வெட்டுக்களை ஆய்வுசெய்தவருமான பேராசிரியர் நடன காசிநாதன் தனது 'வன்னியர் நூலில் இது குறித்து விளக்கியுள்ளார். வன்னியர் பண்டைத் தமிழகத்தின் ஒரு மரபுவழிச் சமூகத்தினர் என்பதால் மேற்கு வங்கத்தின் கல்கத்தாவோடு இதனை தொடர்புபடுத்த முடியாதென்பது அவரது கருத்தாகும். பண்டைய சீர்காழிப் பகுதியில் படையாட்சி வன்னியர் முக்கியத்துவம் பெற்றவர்களாக விளங்கினர் என்பதால் பங்கு தடுக்கும் இக்கல்வெட்டுப் பாடலில் வரும் காளிகட்டம் என்பது சீர்காழியையே குறிப்பிடுவதாக அவர் கூறுவார். ஈழத்தில் வாழுகின்ற கேரளத்துச் சமூகங்கள் தொடர்பில் மிக்க ஆர்வம் கொண்டுள்ளவரான பேராசிரியர் இராதாகிருஷ்ணப் பணிக்கர்; நடன காசிநாதனின் கருத்தை மறுதலிக்கமுடியாதெனினும் பண்டைய சேரத்தின் வன்னியர் சமூகம் குறித்தும் கவனம் கொள்ள இதில் வாய்ப்புண்டு ’ எனக் கருதுவார். நாயர் சமூகமும் மழவர் சமூகமும் வேளாண் தொழிலையே மேற்கொண்டவர்கள் என்பதால் மட்டக்களப்பு சமூகத்தளத்தினுள் இதுகுறித்த ஆய்வு அவசியம் என்பது பணிக்கரின் வலியுறுத்தலாகும்.
அன்னியர் ஆட்சியில் மட்டக்களப்பின் வன்னிமைப் பிரிவுகள் அவர்களது வசதி மற்றும் ஆட்சிச் சூழலுக்கேற்ப சிற்சில மாற்றங்களுக்கு உட்படலாயின. விவசாய நிலங்கள் விரிவுபட்டு மக்கள் குடியேற்றங்களும் பரவலான போது எண்ணிக்கையிலும் அவை அதிகரிக்கப் பட்டன. மட்டக்களப்பு நாடு; மட்டக்களப்பு மாவட்டம், அம்பாரை மாவட்டம், மொனராகலை மாவட்டம், பொலநறுவையுடன் இணைக்கப்பட்ட மன்னம்பிட்டிப் பிரதேசம்,
- 6 - வெல்லவூர்க்கோபால்

Page 34
மலையாள நாடும் மட்டக்களப்பும்
மாத்தளையுடன் இணைக்கப்பட்ட வெல்லசைப் பிரதேசம் எனப் பிரிக்கப்படுவதற்கு முன்னதாக பதின்மூன்று வன்னிமைப் பிரிவுகளைக் கொண்டிருந்தது.
கி.பி 1622 முதல் போர்த்துக்கேயர் மட்டக்களப்பின் ஆட்சியாளர்களாக வந்தபோது வன்னிமைகளின் உதவியுடனேயே தங்கள் நிருவாகத்தை நிலை நிறுத்த வேண்டியிருந்தது. பின்வந்த ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயரும் அதனையே பின்பற்றினர். எனினும் வன்னிமைகளின் கட்டமைப்பில் பல மாற்றங்களை தங்கள் அதிகார பலத்தினால் மேற்கொண்டனர். இதன்போது வன்னியர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்தாலும் காலப்போக்கில் அதிகார பலத்திலிருந்து விடுபட்டவர்களாவே ஆகினர். மேலும் ஆங்கிலேயர் தமது ஆட்சியில்; குறிப்பிட்ட சமூகநிலை என்றில்லாமல் தங்களுக்கு சார்பானவர்களை மட்டுமே வன்னியர்களாகவும் உடையார்களாகவும் நியமித்தனர்.
இலங்கையின் மகா தேசாதிபதியாக பதவி வகித்த சேர் எட்வேட் பார்ன்ஸ் 1824ல் இலங்கையின் முதலாவது மக்கள் கணக்கெடுப்பை நடாத்தினார். சாதி அடிப்படையிலான அக் கணக்கெடுப்பு 1827ல் உத்தியோக பூர்வ அறிக்கையாக வெளியிடப்பட்டது. அதில் அதிகார நிலைக்குரிய வன்னியப் பிரிவினராக 259 பேர் இருந்துள்ளமை தெரிகின்றது.
வன்னியனார் மற்றும் உடையார் அமைப்புக்கள் இலங்கை சுதந்திரம் அடையும்வரை செயல்பாட்டில் இருந்துள்ளன. இன்றைய நிலையிலும் இங்குள்ள அனேக பிரதேசச் செயலாளர் பிரிவுகள் முன்னைய வன்னிமைப் பிரிவுகளை மையப்படுத்தியே பிரிக்கப்பட்டும் பெயரிடப்பட்டும் உள்ளமை ஒரு முக்கிய அம்சமாகும்.
- 62 - வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
04. மட்டக்களப்புக்கும்
LD60D6DU JT6TbTL6G5 Lb உரித்தான போடி முறைமை
கேரளத்தின் மத்தியகாலம் முதல்கொண்டு அங்கு உருவான சமூகக் கட்டமைப்பும் அவற்றின் மாறுதல் போக்கும் பண்டைய தமிழகத்தின் சமூகக் கட்டமைப்பிலிருந்து படிப்படியாக வேறுபட்டுச் செல்லும் தன்மையினை சோழராட்சிக் காலத்தைத் தொடர்ந்து மட்டக்களப்புப் பிரதேசமும் கொண்டிருப்பது தெரிகின்றது. இது மாகோனின் ஆட்சிக் காலத்தில் மேலும் வலுப்பெறுவதை அறிந்துகொள்ளலாம். பொதுவாக கேரளத்தின் நாடுடையார் (நாடு வழி), ஊரலர் (ஊர்த் தலைவர்), போடிவாள், போடி போன்ற தலைமைத்துவங்களைப் போன்றே மட்டக்களப்பின் வன்னியனார், உடையார், ஊர்ப்போடி, போடிகள்,போடி என்ற தலைமைத்துவ அமைப்பு விளங்குகின்றது.
கேரளத்தின் போடிவாள் (போடுவாள்), போடி என்ற ஈற்றுப் பெயர் குறிக்கும் சிறப்புத் தன்மையினையே மட்டக்களப்பின் போடிகள், போடி என்ற ஈற்றுப் பெயர் கொண்டிருந்தது. சேரநாட்டை ஒட்டியதாக பெருமளவு விவசாய நிலங்களைக் கொண்டிருந்த இன்றைய தமிழ் நாட்டின் திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் தென் மதுரைப் பிரதேசங்களிலும் இதற்கான அடையாளங்கள் தென்படவே செய்கின்றன. அங்கே போடி என்பது கெளரவப் பெயர் மாத்திரமன்றி விருதுக்குரிய பெயராகவும் விளங்கியிருக்கின்றது.
நாயக்கர் ஆட்சியில் “போடி’ என்பது விருதுக்குரிய பெயராகக் கொள்ளப் பட்டிருப்பதை போடிநாயக் கன் ஊர் வரலாறு
- 63 - வெல்லவூர்க்கோபால்

Page 35
மலையாள நாடும் மட்டக்களப்பும்
தெளிவுபடுத்துகின்றது. இன்றைய தேனி மாவட்டத்தில் கேரளத்தின் எல்லையில் பெருமளவு விவசாய நிலப்பரப்பைக் கொண்டமைந்த பேரூர் போடிநாயக்கன் ஊர். பண்டைத் தமிழகத்தில் இப்பிரதேசம் சேரநாட்டுடனேயே இணைந்திருந்தது. திருமலை நாயக்கர் LDg5. 60) U 60D ULI ஆண் ட காலத் தே சில 6. f6) FTuj குக்கிராமங்களைக்கொண்ட இப்பகுதியில் இரவு வேளையில் புலியொன்று புகுந்து கால்நடைகளைக் கொன்று தின்பதோடு LD55606TuqLD தொல்லைக்குள்ளாக்கியது. உயிருக்கு அஞ்சிய அம்மக்கள் மாலைபட்டதும் அப்பகுதியிலிருந்து வெளியேறி அயல் கிராமங்களில் தஞ்சமடைவது வழக்கமானது. இதனால் சிலர் நீண்டதூரம் நடந்துசென்று மதுரையை அடைந்து மன்னனிடம் முறையிட்டனர். இதைக்கேட்ட மன்னன் தனது படை வீரரில் துணிச்சல் மிக்கவனான நாயக்க வீரன் ஒருவனை அம்மக்களோடு அனுப்பிவைத்தான். அவ்வீரன் புலியுடன் போரிட்டு அதனைக் கொன்று அம்மக்களுக்கு பாதுகாப்பளித்தான். அவனுக்கு மன்னன் போடி நாயக்கன்’ என விருதளித்ததோடு அப்பகுதிக்கு “போடி நாயக்கன் ஊர்’ எனப் பெயரும் சூட் டி அவனையே அதற்கு பாளையக்காரனாகவும் நியமித்தான். இது அண்மைக் காலத்தைய வரலாறாகும்.
மட்டக்களப்பைப் பொறுத்தவரை போடி எனும் பெயர்ச்சிறப்பு இன்றுவரை மதிப்புடனேயே கருதப்படுகின்றது. அரை நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம்வரை போடி என்ற ஈற்றுப் பெயரைக்கொண்டு தங்கள் பிள்ளைகளுக்குப் பெயரிடுதலை இப்பிரதேச விவசாயப் பெருங்குடியினர் ஒரு பெருமையாகவே கொண்டிருந்தனர். மட்டக்களப்புப் பிரதேசத்தின் நீண்டகால நிலவுடமைச் சமூகமாக விளங்கிய முற்குகர் சமூகத்தினையே இப்பெயர் குறிப்பதாக அன்று அமைந்திருப்பினும் பிற்பட்ட காலத்தே நிலவுடமை யாளர்களாக விளங்கிய அனைத்துச் சமூகத்தினருமே போடியார் என்ற ஈற்றுப்பெயர்ச் சிறப்பினுக்கு உரியவராயினர்.
கேரளத்தைப் பொறுத்தவரை போடி என்ற ஈற்றுப்பெயர் இல்லாதுபோக; பிராமணர்களால் முன்வைக்கப்பட்டு பின் சோழ
- 64- வெல்லவுர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
சேர பாண்டிய மன்னர்களால் பின்பற்றப்பட்ட சாதிப் பெயரை ஈற்றுப்பெயராக வைக்கும் தன்மையே காரணமாயிற்று. இதன்பின்னரே கேரளத்தில் நம்பூதிரி, ஐயர், பிள்ளை, மேனன், நாயர், பணிக்கர், நாடார், நம்பியார் எனச் சாதீய ஈற்றுப் பெயர்கள் இடம்பெறலாயின. எனினும் ஆலய நிருவாகக் கட்டமைப்பினுாடாக அவற்றின் அகப்புறச் செயல்பாடுகளுக்கு உரியவர்களாக விளங்கிய அகப்போடிவாள் மற்றும் புறப்போடிவாளும் திருவிதாங்கூர் மன்னன் மார்த்தாண்ட வர்மனால் (1729 - 1758) பழிதீர்க்கும் நோக்குடன் பதவி ஒழிக்கப்பட்ட திருவனந்தபுரம் பத்மநாபா ஆலயத்தின் நிருவாகப் பொறுப்பிலிருந்த போடிமாரும் பிற்பட்ட காலத்திலும் போடிமாரின் சிறப்புக் குறித்து அறிய சான்றாகவுள்ளனர். (The Religious activities of the Pathmanaba Temple were under the Custody of the "Yogathil Podimar" the Uralar of the temple Evalution of the Kerala History and Culture- Prof. T. K. Gengatharan) "G3u J Tabib” 6T6öTLg5] ga4,6uuu நிருவாகத்தைக் குறிப்பதாகும். யோகத்தில் போடிமார் (Yogathi Podimar) என்பது ஆலய நிருவாகத்திற்குரிய போடிமார் எனப்பொருள்படும்.
கேரளத்தின் நிலவுடமையாளர்களான இப்போடிமார் பற்றியும் அவர்களது செயல்பாடுகள் பற்றியும் வெளிநாட்டுப் பயணிகள் தங்களது குறிப்புகளில் விரிவாக எழுதியுள்ளனர். 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கேரளத்தில் தங்கியிருந்த போர்த்துக்கல் நாட்டவரான (6(3Bi UTi(8UT3T 616óTu6) if g560Tg5) b|T656) (A Description of the Cast of Africa and Malarbar-Durate Barbosa - Published in 1866 : London) கேரளத்தின் போடி முறைமை பற்றி விரிவாக விபரித்துள்ளார். அவர் தங்கியிருந்த காலத்தே கேரளத்தில் இருவித போடி அமைப்பு தோற்றம் பெற்றிருந்ததையும் மன்னப்போடி - புலப்போடி (Mannapoedy-Pulapoedy) எனும் உயர்வுதாழ்வு குறித்த அவற்றின் தோற்றப் பாடு பற்றியும் அவர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.
வெல்லவூர்க்கோபால் - 85שי

Page 36
மலையாள நாடும் மட்டக்களப்பும்
நிலவுடமையாளர்களான போடிமாரின் காணிகளில் போடிமார் அல்லாதவர்களும் தாழ்ந்த சாதியினரும் கூலிகளாகப் பணிபுரிவர். இவர்கள் போடிப் பரம்பரையினருடன் குறிப்பாக அவர்களின் பெண்களுடன் பழகுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டதோடு அது பெரும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டது. எனினும் சில சந்தர்ப்பங்களில் தடைகளையும் மீறித் தவறுகள் நடந்துவிடுவதுண்டு. இதன்போது வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் ஊரலர் (ஊர்ப் போடியார்) தலைமையில் மக்கள் கூடி அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்றுவர். குறித்த தாழ்ந்த சாதி ஆண்மகனை ஒரு கம்பத்தில் கட்டி எல்லோரும் பார்க்கும் படியாக ஊர்ச் சந்தியில் தொங்க விடுவர். பின்னர் ஊரைச் சுற்றி அவனைக் கொண்டுவருவர். அதன்பின் அப்பெண்ணை ஊரின் எல்லையில் நிறுத்தி தடியால் அடித்தோ கல்லால் எறிந்தோ அவள் விரும்பிய அவ்வாண் மகனுடன் ஊரைவிட்டு விரட்டுவர்.
இதில் கவனத்தில் கொள்ளப்படத்தக்க முக்கிய அம்சம் யாதெனில் அப்பெண்ணுக்குப் பிறக்கும் வாரிசுகள் கேரளத்தின் “மருமக்க(ள்) தாயம்’ சட்டப்பிரகாரம் தாய்வழிச் சொத்துக்கு உரித்துடையவர் என்பதே. இதனால் அவர்கள் புலப்போடி (புலையர் - போடி) சாதி குறைந்த போடி எனத் தந்தை வழித் தொடர்பில் பெயரிடப் பட்டு தாய் வழிச் சொத்தான தராவத்துக்கும் (தரா வத்து - பரம்பரைச் சொத்து) உரித்துடையவ ராயினர்
மன்னப் போடி என்பது (மன்னன் - போடி) உயர்வு நிலை குறித்து வந்ததாகும். மன்னப்போடி - புலப்போடி அமைப்பின் செயல்பாடானது மனிதாபி மானத்துக்கும் சமூகப் பண்பாட்டுக்கும் அப்பாற்பட்ட நடை முறையாகப் பலராலும் கருதப்பட்டமையால் கோட்டயம் மன்னனாகவிருந்த கேரளவர்மனால் 1696ல் முற்றாக நீக்கப்பட்டதாக கேரள வரலாற்றில் பதிவுசெய்யப் பட்டுள்ளது.
- 66 - வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
கேரளத்தின் போடி பற்றிய ஆங்கில மொழிமூல வரலாற்றுக் குறிப்புகள் அனைத்தும் போடி என்பதனை ‘பெடி’ என்றே குறிப்பிடுவதைக் காணமுடியும். இது போர்த்துக்கீசரின் ஆட்சியின்பின் ஏற்பட்ட மாற்றமாகும். பின்வந்த ஒல்லாந்தரும் இதையேதான் பின்பற்றி யிருக்கின்றனர். மட்டக் களப்பிலும் இத்தன்மையினையே அவதானிக்கமுடியும். போர்த்துக்கீசரால் தயாரிக்கப்பட்ட ‘தோம்பு’ எனும் பதிவேடுகளில் போடி என்பது "Paedy’ என எழுதப்பட பின்வந்த ஒல்லாந்தர் அதனை ‘பெடி” (Pedy) என எழுதவும் அழைக்கவுமாயினர். மட்டக்களப்பில் ஒல்லாந்தரால் வழங்கப்பட்ட தலைமைப் போடிகளுக்கான நியமனக்கடிதங்களிலும் போடி என்பதனை பெடி என்றே எழுதியுள்ளனர்.
1776 கார்த்திகை 6ம் திகதி மட்டக்களப்பின் வட பகுதிக்கு தலைமைப் போடியாக நியமிக்கப்பட்ட காலிங்கா குடி அருமைக்குட்டிப்போடியின் நியமனக் கடிதத்திலும் தென் பகுதியின் தலைமைப் போடியாக நியமிக்கப்பட்ட பணிக்கனார் குடி கந்தப் போடியரின் நியமனக் கடிதத் தரிலும் இதனை அவதானிக்கமுடியும். இக்கடிதப் பிரதிகளை எவ்.எக்ஸ்.சி. நடராசாவால் தொகுக்கப்பட்ட ‘மட்டக்களப்பு மான்மியத்திலும் ஏ.ஆர்.எம்.சலிமால் எழுதப்பட்ட ‘அக்கரைப் பற்று வரலாற்றிலும் காணமுடியும். வி.சி.கந்தையாவும் தனது மட்டக்களப்பு தமிழகத்தில் (பக்கம் 103) இதுபற்றி விளக்கியுள்ளார்.
மட்டக்களப்புப் பிரதேசத்தைப் பொறுத்தவரை போடிமார் மிக்க மதிப்புக்குரியவர்களாகவே வாழ்ந்துள்ளனர். கி.பி 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தே மட்டக்களப்பைக் கைப்பற்றிய போர்த்துக்கீசர் போடிமாரின் பாரிய எதிர்ப்புக்கு முகம் கொடுக்கவேண்டியவா களாகவேயிருந்தனர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தே போடிமாருடன் அவர்கள் பெருமளவு முரண்பட நேர்ந்தாலும் பின்னர் உள்ளுர் நிருவாகச் செயல்பாடுகளில் போடிமாரிடம் ஆட்சியைப் பகிர்ந்தளித்து தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினர். இதன்
- 67- வெல்லவூர்க்கோபால்

Page 37
மலையாள நாடும் மட்டக்களப்பும்
பிரதிபலனாகவேதான் இரு தலைமைப் போடி முறையும் அவர்களின் கீழ் ஊர்ப் போடிகள் முறையும் செயல்பாட்டுக்கு வந்தது. பண்டைய நிருவாக முறைகளைப் பின்பற்றி மட்டக்களப்பின் நிலவுடமைச் சமூகமாகவிருந்த முற்குகப் போடிகளுக்கே இவர்கள் நிருவாகச் செயல்பாட்டு உரிமையை அளித்தனர். , ஒல்லாந்தரிடமிருந்து மட்டக்களப்பை ஆங்கிலேயர் கைப்பற்றிய காலத்திலும் போடிமாரை எதிர்த்து தங்களது ஆட்சியை நிலைநிறுத்த முடியாத சூழ்நிலையில் நிலமைப் போடிகள் மற்றும் வன்னியனார் உடையார்களையும் நியமித்து தங்களது ஆட்சியைத் தொடர்ந்தனர். எனினும் 1850க்குப் பின்னர் தங்களுக்கு சார்பானவர்களையும் கிறிஸ்தவத்தை தழுவியவர்களையும் ஆங்கிலேயர் நிருவாகப் பதவிகளில் இருத்தினர். இதனால் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக மட்டக்களப்புப் பிரதேசத்தில் நிலைபெற்றிருந்த விவசாய நிலவுடமைச் சமூகத் தலைமைத்துவக் கட்டமைப்பான போடி முறைமை ஒழிக்கப்பட்டதென்றே கூறவேண்டும். எனினும் போடி, போடிமார் என்ற சொற்பிரயோகத்தின் மதிப்பும் மரியாதையும் பெருமளவு விவசாய நிலங்களைக் கொண்ட மட்டக்களப்பின் படுவான்கரைப் பிரதேசத்தில் இன்றும் நிலைபெறவே செய்கின்றது.
- 68- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
வயல் பணியாளர் wr முல்லைக்காரர்
விவசாய நில புலங்களை முக்கியப் படுத்தியதான வாழ் க் கை முறையினை கேரளாவும் மட்டக் களப்பும் கொண்டிருந்தமை இதுவரை எம்மால் அறியப்பட்டதாகும். கேரளம் அதனது பூகோள அமைப்பில் அலைவளம், நிலவளம், வனவளம், மலைவளம் எனும் நானில அமைப்பினைக் கொண்டிருந்தது. மட்டக்களப்பைப் பொறுத்தவரை மலைவளம் அருகியும் கடல் வளத்துடன் மருதநிலக் கொடையான நில வளம் மிக விசாலித்தும் அமைந்தது. மருத நில மக்களின் விவசாயச் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக விளங்கியவர்கள் முல்லை நிலத்தவராவர். இந்நடைமுறைகள் தமிழக வரலாற்றில் புதிய கற்காலம் முதற்கொண்டு விரிவுபட்டதை வரலாறு தெளிவுறுத்தும். உழவுக்குரிய ஏரும் அதை இழுப்பதற்கான எருதும் முல்லை நிலத்தவரிடமே யிருந்தது. காலப்போக்கில் வேழாண் நிலங்களின் பணியாளர்களாக முல்லைக் காரர்கள் மாறக் காரணம் அவர்களிடமிருந்த இவை யிரண்டுமாகும். இவர்கள் அன்று நிலத்தை உழுது பண்படுத்திக் கொடுப்பதற்கான கூலியினை நெல்லாகவோ பிற தானியங்களாகவோ பெற்றுக்கொண்டனர்.
பிற்பட்ட காலத்தே விளைச்சலின் பின் கூலி கொடுக்கும் முறைமையும் அறிமுகமானது. இது விளைச்சலில் குறிப்பிட்ட பங்குவீதமாகவும் அமைந்தது. படிப்படியாக வேழாண் மக்களிடத்தே நிலவுடமை யாளர்கள் உருவானபோது புதிய கூலிமுறையும் அறிமுகமானது. பணியாளர்கள் தங்கள் உழைப்பின் திறமையால் தங்களை வளர்த்துக் கொள்ளவும் இது வழிகோலியது. காலப்போக்கில் நிலவுடமையாளர்களான போடிமார் தங்கள் பணியாளர்களுக்கு தங்களின் வயலில் ஒரு பகுதியை கூலிக்காக செய்கைபண்ணும் முறையினைக் கொண்டுவந்தனர். இது கேரளத்தில்
- 69- வெல்லவூர்க்கோபால்

Page 38
மலையாள நாடும் மட்டக்களப்பும்
பணியாளர் விருத்தி’ எனவும் மட்டக்களப்பில் 'முல்லை வயல்' அல்லது 'முல்லைக்காரன் வயல்' எனவும் நிரந்தரப் பெயரால் அழைக்கப்படலாயிற்று.
பணியாளர் அல்லது முல்லைக்காரன் என்பவர் போடியாரின் மிக நெருங்கியவராகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் விளங்கினார்.விவசாய நிலங்களை சிறப்பாக பராபரிக்கும் பொறுப்புடன் கூலியாட்களைக் கொண்டு வயல் வேலைகளை மேற்கொள்ளும் கடமையும் அவருக்கிருந்தது. கேரளத்தில் வழக்கிலிருக்கும் பணியாளர் விருத்தி எனும் சொற்பிரயோகம் பணியாளருக்கு இனாமாக வளங்கப்படும் காணி எனப் பொருள்படும். மட்டக்களப்பில் உடமையாளரின் காணி போடி வயல்’ என அழைக்கப்பட கேரளத்தில் இது 'நாயர் காணி’ என அழைக்கப்படலாயிற்று. மட்டக் களப்பில் அழைக்கப்படும் முல்லை வயல்' அல்லது 'முல்லைக்காரன் வயல்’ என்பது சங்க காலச் சிறப்புக்குரியதென்பதே ஆய்வாளர்தம் கருத்தாகும்.
- 70- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
05.மருமக்க(ள்) தாயமும்
தாய்வழி முதிசமும்
g5 Tuj6)lf LDUL (Matrilineal System) 6T6öTLugil U60p60)LDuJT60T சமூகங்களின் நீண்டகாலப் பண்பாட்டினை அடியொற்றிவந்த பேணுகையாகும். இவ்வழக்காற்றின் பெருமையினை பரத நாட்டைப் பொறுத்தவரை முத்தமிழ் நாட்டின் முதன்மைபெற்ற சேரநாடு எனப்படும் கேரளத்திலும் ஈழத்தே மட்டக்களப்பு பிரதேசத்திலும் சிறப்பாகக் காணமுடியும். மட்டக்களப்பில் தனித்துவம் மிக்கதாக விளங்கிய முற்குக தேச வழமைச்சட்டம் கேரளத்தின் மருமக்க(ள்) தாயத்தையே முழுக்க முழுக்க அடியொற்றியதாகும். அத்தோடு புத்தளப் பிரதேசத்தில் முற்குக தேசவழமைச் சட்டம் Q9(5 நீண்டகால நடை முறைக்குள் இருந்தமைக்கு கேரளத்தின் தாக்கமே பிரதான காரணம் எனலாம். சேரத்திலிருந்துவந்த சில முக்கிய சமூகங்கள் மட்டக்களப்பு மற்றும் புத்தள சிலாபப் பிரதேசங்களில் விரிவுபட்டும் ஆதிக்கமுற்றும் விளங்கியமையே இதுபோன்ற பேணுகைகள் நிலைபெற வாய்ப்பாக அமைந்தன.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் தாய்வழி மரபுகளின் தோற்றம் பற்றியோ அல்லது அவற்றின் தன்மைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியோ இதுவரை யாருமே விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. மானிடவியல் மற்றும் சமூகவியல் தொடர்பான கற்கை நெறிகள் இந்திய நாட்டில் விரிவுபட்டிருப்பதைப்போல இங்குள்ள உயர் கல்வி நிறுவனங்களில் விரிவுபடாமையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமையலாம். கேரளத்தைப் பொறுத்தவரை கடந்த அரை நூறாண்டுகளாக இக்கற்கைகள் பல்கலைக்கழக மட்டத்தில் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளமை தெரிகின்றது.
-71 - வெல்லவூர்க்கோபால்

Page 39
மலையாள நாடும் மட்டக்களப்பும்
மருமக்க(ள்) தாயம்
தாய்வழி மருமக்களின் உரித்து எனப் பொருள்படும் மருமக்க தாயம் (தாயம் - உரித்து) கேரளத்தின் மத்திய காலம் முதலாக நடைமுறைகளில் இருந்துள்ளது என்பது பல ஆய்வாளர்களின் கருத்தாகும். கேரள சமூக வரலாறு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட எல். கே. பாலரெத்தினம், எல். ஏ. கிருஷ்ண ஐயர் போன்ற சமூகவியலாளர்கள் தாய்வழி மரபுகளின் முக்கியத்துவம் மிக்க மருமக்க(ள்) தாயம் நீண்ட காலம் முதலே கேரளத்தின் பண்டைய சமூகங்களின் பேணுகையில் இருந்து வந்துள்ளதாக அவர்களது ஆய்வுகளில் குறிப்பிடுகின்றனர். (Evolution of Kerala History and Culture -page-189: T.K.Gengatharan)
சென்னை மாநில சட்ட நிருவாகக் குழுவின் உறுப்பினராகவிருந்து அதன்பின்னர் கேரளம் திருவனந்தபுரத்தில் சட்டத் தொழில் புரிந்த சட்ட மேதை பத்மநாப மேனன்; 1908ல் திருவாங்கூர் மருமக்க(ள்) தாய விசாரணைக் குழுவின் உறுப்பினராக அன்றைய ஆங்கில அரசால் நியமிக்கப்பட்டபோது அவர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையல் கேரளத்தின் தாய்வழி மரபான இம்முறைமை சேரமான் ஆட்சிக்காலத்துக்கு பிற்பட்டே சிறப்பான நடைமுறைக்கு வந்ததாக குறிப்பிடுகின்றார். (Kochi Rajya Charithram - Malayalam 1912, K. P. Pathmanabamenan) Sg ஈழத்தில் கலிங்க மாகோனின் (கி.பி 13ம் நூற்றாண்டு) ஆட்சிக்காலமாகும்.
கேரளத்தின் மருமக்க(ள்) தாயம் தொடர்பான அண்மைய ஆய்வுகளின் படி இவ்வழக்காறுகள் விவசாயப் பெருங் குடியினரான நாயர் சமூகத்தில் பெருமாள்களின் ஆட்சிக்காலத்திலேயே (கி.பி 9ம் நூற்றாண்டு) நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் அவர்களது ஆட்சி முடிவுற்ற கி.பி 12ம் நூற்றாண்டுக்குப் பின்னர் சமூக
- 72- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டத்தில் எல்லா நிலையிலும் விரிவுபட்டிருக்க வேண்டுமெனவும் கருதுகின்றனர். பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் இதன் சரியான அடையாளங்கள் கி. பி 9ம் நூற்றாண்டிலேயே வெளிப் படுவது ஒப்புக்கொள்ளப் பட்டதாகும்.
உலகின் பல்வேறு சமூகங்களின் குடும்ப உறவு முறைகள் தொடர்பாக அறிவியல் ரீதியான கற்கை நெறிகளை ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொண்ட தலைசிறந்த சமூகவியலாளர்களான மோர்கன் மற்றும் ஏஞ்சல் போன்றோர் மிகவும் முற்பட்ட காலம் முதலே உலகில் தாய்வழி மரபுகள் தோற்றம் பெற்றதெனவும் அவற்றிலிருந்தே சமூக அல்லது குடும்பத் தலைமைத்துவம் உருவானதெனவும் கருதுகின்றனர். எனினும் இதில் இந்திய நாட்டில் கேரளத்தில் உருவான மருமக்க(ள்)தாயமும் ஈழநாட்டில் மட்டக்களப்பில் உருவான தாய்வழி முதுசமும் அண்மைக் காலம் வரை நடைமுறைக்கு உட்பட்டிருந்ததை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் மரபுவழியாக விவசாயத்தை மேற்கொண்டிருந்த நிலவுடமைச் சமூகமாக முற்குக சமூகம் அடையாளப்படுத்தப்படுவதைப் போன்றே கேரளத்தில் நாயர் சமூகம் அடையாளப்படுத்தப் படுகின்றது. கேரளத்துச் சமூகங்களில் கி. பி 9ம் நூற்றாண்டுமுதல் காராளர்களான நாயர்களே சமூக நிலையில் முக்கியத்துவம் பெற்றவர்களாக விளங்கினர். எனினும் பண்டைய சேர நாட்டினதும் கலிங்க நாட்டினதும் சோழ நாட்டினதும் மரபுவழிச் சமூகங்களது ஒருங்கிணைப்பாக முற்குக சமூகம் அடையாளப் படுத்தப்படுவதைப் போன்று நாயர் சமூகம் அடையாளப்படுத்தப் படவில்லை. கேரளத்துச் சமூக ஆய்வுகளின்படி நாயர் என்போர் பல்வேறு வகுப்புக்களைக் கொண்ட ஆதித் திராவிட இனமான நாகரில் விவசாய சமூகமாக உருவான பிரிவினர்’ என்பதாகவே வெளிப்படுத்தப்படுகின்றனர்.
-73 - வெல்லவூர்க்கோபால்

Page 40
மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டக்களப்பின் அனைத்துச் சமூகங்களையும் ஒருங்கிணைக்கும் தேசத்துக் கோவிலான கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரத்தில் பெறப்படும் தகவல்களில் நாயர் பற்றியும் மலையாள முக்குவர் பற்றியும் குறிப்பிடப்படுவதால் மலையாள முக்குவருடன் நாயர் சமூகமும் மட்டக்களப்புச் சமூகங்களுள் இணைப்புற்றிருக்கவே செய்யும். மலையாள முக்குவர் தொடர்பில் நீதியரசர் சேர் அலக்ஸாந்தர் ஜோன்ஸ்ரன் என்பவரின் கருத்தை நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும். இவர் 1800க்கு சற்று முன்னும் பின்னும் கேரளத்தயுைம் உள்ளடக்கிய சென்னை மாநிலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின் முக்கிய நீதித்துறை அலுவலராகப் பணியாற்றியவர். ஆங்கிலேயர் இலங்கையை தங்களது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும் நீதித் துறைக்குள் பணியாற்ற அழைக்கப்பட்ட சில ஆண்டுகளில் இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டவர். சிறந்த சட்டமேதையான இவர் மட்டக்களப்பு முற்குகர் தொடர்பில் முதன் முதலில் ஆய்வுகளை மேற்கொண்டவர். “பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டு மலபாரிலிருந்து (கேரளா) இங்கு வந்து மட்டக்களப்பிலும் புத்தளத்திலும் குடியேறியவர்களே இவர்கள்’ என்பதே இவரது முடிவாகும்.
Mukkuvars of Batticaloa centuries ago came from Malabar coast and settled in Puttalam and Batticaloa in the Eastern Province, they not only became proprietors of the almost all the lands in the Province but they gradually acquired the complete Government of the Province. The Mukkuvars may be considered the first native in any part of Asia who were authorized by a European Government to become members of a Legislative Assembly of the Government of their own Country - infect it consisted of a Provincial Council of which all the head of the Mukkuvars families of the Districts were members of the Government of their own province.
Sir Alexander Johnston -Ceylon Native Laws and Customs
-74 - வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மருமக்க(ள்) தாயத்தின்படி கேரளத்திலுள்ள பரம்பரைச் சொத்துக்கள் மற்றும் நன்கொடைச் சொத்துக்கள் யாவும் மாதாவழிச் சொத்துக்களாகக் கொள்ளப்பட்டு இவற்றின் பங்கீடுகள் அனைத்தும் பெண்வழி சார்ந்ததாகவே அமைந்திருந்தது. சகோதரி வழி ஆண்மக்களே இச் சொத்துக்களின் பராபரிப்பு உரிமையினைக் கொண்டிருந்தனர். எனினும் சில வரலாற்று ஆசிரியர்கள் இது குறித்த ஒருசில அம்சங்களில் தங்களுக்குள் முரண்படவும் செய்தனர்.
பெருமாள்களின் ஆட்சிக் காலத்தே ஏற்பட்ட சோழர்தம் ஆதிக்கத் தன்மையின் விளைவாகவே ஆண் பராபரிப்பு தலைமைத்துவம் மருமக்க(ள்)தாயத்துள் ஊடுருவியதாக பேராசிரியர் g6Tubg56TLD g56,566, LiaigO)6T (Studies in Kerala History -1970) கருதும் வேளையில் கேரளத்தின் தாய்வழி மரபின் தொடர்ச்சியாகவே சமூகத் தலைமைத்துவம் அல்லது குடும்பத் தலைமைத் துவத்தைக் கொள்ளவேண்டுமென கே.பி. பத்மநாப மேனன் (History of Kerala - 1962) குறிப்பிடுகின்றார். எனினும் பண்டைய கேரளச் சமூகங்களின் வளர்ச்சியில் ஏற்பட்ட எழுச்சியின் புதிய மாறுதல் அல்லது உந்துதலே கி. பி 9ம் நூற்றாண்டினைத் தொடர்ந்து தனித்தன்மை மிக்க இவ் வழக்காற்றுக்கு வித்திட்டிருக்கவேண்டுமே யன்றி வேறு எக்காரணமும் அமையமுடியாதென்பது கே.எஸ்.மத்தியூ போன்ற (Society in Medieval Malabar, 1997) புதிய தலைமுறை ஆய்வாளர்களின் முடிவாகத் தெரிகின்றது.
கேரளத்தைப் பொறுத்தவரை கி.பி 4ம் நூற்றாண்டுவாக்கில் குடியேறி விரிவாக்கம் பெற்று பின்னர் தந்தை வழிப் பேணுகையை முதன்மைப்படுத்திய நம்பூதிரிப் பிராமணர்களின் செல்வாக்கு தாய்வழி மருமக்க(ள்) தாயத்துள் ஊடுருவிய தன்மையினையும் அதன்மூலம் உணரப்பட்ட வேறுபாட்டின் முக்கியத்து வத்தையும் இங்குநாம்
- 75- வெல்லவுர்க்கோபால்

Page 41
மலையாள நாடும் மட்டக்களப்பும்
கவனத்தில் கொள்ளவேண்டும். பிரமாஸ் வம்’ எனப்படும் பிராமணர்களுக்கு உரித்தாக கொள்ளப்பட்ட காணிகளின் உரிமையாளர்களாக மாறிய நம்பூதிரிகள் தங்களது சொத்துக்கள் தங்கள் சமூகத்திலிருந்து சிதறுண்டு போகாமல் தடுப்பதற்காக தங்களது சொத்துக்களுக்கு வாரிசு உரிமை கொண்ட மூத்த புதல்வர்களை நம்பூதிரிச் சமூகத்தில் முறையான திருமண பந்தத்திற்கான கட்டாய நிலைக்கு உட்படுத்தினர். இளைய புதல்வர்களை “சம்பந்த முறை” எனும் பெயரில் நாயர் சமூகப் பெண்களை தாரமாய் கொள்ள அனுமதித்தனர். நாயர் சமூகத்தில் பிறக்கும் தங்கள் பிள்ளைகளை மருமக்க(ள்)தாய முறைக்கு உட்படுத்துவதன் மூலம் அவர்களைப் பராபரிக்கும் பெரும் பொறுப்பிலிருந்து நம்பூதிரிகள் விடுபடும் வாய்ப்பையும் பெற்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் நம்பூதிரிகளுக்கான பிரமாஸ்வம் எனும் தந்தைவழிச் சொத்துக்களை இவர்களின் பிள்ளைகள் அனுபவிக்கும் உரிமை மறுக்கப்பட்டமையே. அத்தோடு நம்பூதிரிகளை மணம் முடித்த நம்பூதிரிப் பெண்கள் கணவன் வீட்டில் வாழும் உரிமையினைக் கொண்டிருக்க நம்பூதிரிகளை மணம் முடித்த நாயர் பெண்களுக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டதோடு தொடர்ந்தும் தாய் வீட்டிலேயே தங்கி வாழவேண்டியவள் களாயினர். அத்தோடு நம்பூதிரி ஈற்றுப் பெயர் மறுக்கப்பட்டு நாயர் ஈற்றுப் பெயரையே பிள்ளைகள் கொண்டிருந்தனர்
மருமக்க(ள்)தாய நடைமுறையில் நாயர் சமூகத்தின் பரம்பரைச் சொத்துக்களை சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் சகோதரிகளின் பிள்ளைகள் அனுபவிக்கும் உரிமையால் நம்பூதிரிகளை மணம் முடித்த நாயர் பெண்களும் அவர்களின் பிள்ளைகளும் அச்சொத்துக்களின் வாழ்நாள் பங்காளிக ளாயினர். இது தந்தைமாரான நம்பூதிரிகளைப் பொறுத்தமட்டில் அவர்களது வாழ்நாளில் உழைத்து வாழவேண்டும் என்ற அவசியத்தை அவர்களுக்கு உண்டுபண்ணவில்லை.
இப்பரம்பரைச் சொத்துக்களின் வருமானம் 'தரா வத்து என்ற பெயரால் அழைக்கப்படலானது. 'தரா என்பது பரம்பரைக்
- 76- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
காணியையும் வத்து என்பது அதில் விளையும் நெல்லையும் குறிப்பிடுவதாக அமையும். எனினும் பின்னர் அச்சொத்துக்களே தராவத்து என்ற பெயருக்குரியதாயிற்று. மருமக்க(ள்)தாயமும் தராவத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. தென் இந்தியாவுக்கு வருகைதந்த வெளிநாட்டறிஞர்கள் இவற்றை கேரளாவின் “சமூகப் பாரம்பரியம் மிக்க தனித்துவமான தன்மைகள்’ எனக் குறிப்பிட்டனர். ஆங்கிலேயரான புச்சன் பிரான்சிஸ் தனது பிரயாணக் குறிப்புகளில் (AJourney from Madras through Mysore, Canara and MalabarBuchen Francis, 1803– London) 9g|Liß 6ńss6)JTõ5 6ss6Tä586u166IITff.
முசாகா காவியத்தை எழுதிய அத்துல கி. பி 11ம் நூற்றாண்டில் முசாகா அரச வம்சத்தினரும் சொத்துடமையில் மருமக்க(ள்)தாய மரபினையே பின்பற்றியதாகக் குறிப்பிடுகின்றார். கி. பி 11ம் நூற்றாண்டைத் தொடர்ந்து கேரளத்தின் ஏனைய சில முக்கிய சமூகங்களும் இம்மரபினை பின்பற்றியுள்ளமை தெரிகின்றது. பிற்பட்ட காலத்தே நாயர் சமூகத்துடன் இச் சமூகங்கள் கொண்டிருந்த பிணைப்பும் சம்பந்தம்’ மூலம் உருவான நடைமுறைகளும் மருமக்க(ள்)தாய முறைமைகள் கேரளத்தில் மென்மேலும் விரிவுபடக் காரணமாய் அமைந்தன. •
இதனிடையே மருமக்க(ள்) தாய நடைமுறைகள் கேரளத்தை அண்டிய தென்காசி போன்ற பாண்டி நாட்டு எல்லைப் பகுதிகளிலும் நடைமுறையில் இருந்தமைக்கான சான்றுகள் நாம் மேற்கொண்ட ஆய்வுகளில் வெளிப்படவே செய்கின்றன. இதற்கான காரணம் இப்பகுதிகள் காலத்துக்கு காலம் சேரநாட்டுடன் இணைந்திருந்தமையே. “திருக்குற்றாலக் குறவஞ்சி’யைப் பாடி தென்காசி திருக்குற்றால நாதர் ஆலயத்தில் அரங்கேற்றிய திரிகூட ராசப்ப கவிராயருக்கு கொல்லம் ஆண்டு தை மாதம் பதினோராம் நாள் (1717) மதுரை மன்னர் சிறி விஜய ரங்க சொக்கநாத நாயக் கரால் செப் புப் பட்டயம் எழுதி வழங்கப் பட்ட நிலக்கொடையான, குற்றாலம் மேலைச் செம்பகக்கா பகுதியின்
- 77- வெல்லவுள்க்கோபால்

Page 42
மலையாள நாடும் மட்டக்களப்பும்
கருப்புக்காட்டைச் சேர்ந்த ஊத்துமேடு எனும் நன்செய் புன்செய் நிலங்கள் இராசப்பக் கவிராயரின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி வழியிலோ அன்றேல் பிள்ளைகள் வழியிலோ சேராமல் மருமக்க(ள்) தாய நடைமுறைக்கு அமைவாக தாய் வழி (பெண்வழி) காணியாக இருந்துவருவது நல்லதோர் உதாரணமாகும்.
இது முழுக்க முழுக்க மட்டக்களப்பின் தாய்வழி முதுசமான முற்குகச் சட்டத்தில் உரிமை வகை 1ம் பிரிவில் சொல்லப்படுகின்ற
“ஒரு தலைமைக் காரனுக்கு இராசாக்களால் கிடைத் திருக்கின்ற உறுதி ஒப்பந்தங்களும் முதுசமான ஊர்க்காணி உடைமைகளும் அந்தத் தலைமைக் காரணுக்குப் பிற்காலம் அவன் சகோதரங்களுக்கும் மருமக்களுக்கும் தாய்வழி முதுச மாய்ச் சேரும்”
எனும் சட்டப்பிரிவினுக்கு உட்பட்டிருப்பதைக் காணலாம்.
மிக நீண்ட காலமாக நாயர் சமூகத்தினுக்குரிய தராவத்து எனும் பரம்பரைச் சொத்துக்களின் பராபரிப்பும் தலைமைப் பொறுப்பும் குடும்பத்தில் மூத்த பெண்ணிடமே ஒப்படைக்கும் வழக்கம் இருந்துவந்தது. அவர் “தராவத்தம்மா’ என்னும் பெயராலேயே அழைக்கப்பட லானார். காலப்கோக்கில் ஏற்பட்ட நடைமுறைச் சிக் கல்கள் மற்றும் அச் சொத்துக் களை பாதுகாத் து பராபரிக்கவேண்டிய பொறுப்புக்கள் காரணமாக தராவத்தம்மாவுடன் “தராவத்துக்காரன்’ எனும் ஆண் தலைமைத்துவமும் உருவானது. இது வயது மூப்பின் அடிப்பட்ையில் தாய் மாமன் மற்றும் சகோதரிவழி மருமகன் எனும் உறவு முறைக்குள் வருவதாக அமைந்தது.
கி பி 17ம் நூற்றாண்டுவரை சிறப்பாகப் பேணப்பட்ட மருமக் க(ள்) தாய நடைமுறைகள் ஐரோப் பியரால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த வரி அறவீடுகள், பொருளாதார மற்றும் விவசாயக் கொள்கைகள், சமூக சட்ட திட்டங்கள், ஆங்கிலக் கல்வி முறைகள் என்பவற்றால் படிப்படியாக
வெல்லவூர்க்கோபால் مــ 78 -

மலையாள நாடும் மட்டக்களப்பும்
தளர்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டது. தென்னிந்தியாவின் ஏனைய பகுதிகளையும் விட கேரளத்தில் ஏற்பட்ட விரைவான சமூக மாறுதல்கள் பாரம்பரியம் மிக்க நாயர் சமூகத்திலும் பெரும் மாற்றங்களை தோற்றுவித்துவிட்டது. ஆரம்ப காலத்தே ஐரோப்பியரின் செயல்பாடுகளுக்கு ஆதரவு நல்காத நாயர் சமூகம் ஏனைய சமூகத்தவர்கள் பலரும் கிறிஸ்தவர்களாக மாறி ஆங்கிலக் கல்வியிலும் தேர்ச்சி பெற்று அரசின் வாய்ப்பு வசதிகளையெல்லாம் பெற்று மிக்க மேம்பாடுற்றபோது சூழ்நிலையை அனுசரித்து பெரும்பாலும் இந்துக்களாவே வாழ்ந்துகொண்டு ஆங்கிலக் கல்வியில் ஆர்வம்காட்டலாயினர்.
காலப்போக்கில் நாயர் சமூகத்தில் ஏற்பட்ட புதிய நடைமுறைக் கல்வி எழுச்சியும் அரசுத் தொழில்துறை வருமானமும் “சுய உழைப்பு வருவாய்’ எனும் புதிய பாதைக்குள் அவர்களை இட்டுச்சென்றது. மருமக்க(ள்) தாய தராவத்துக் காணிமூலம் பெறப்படும் வருமானத்திலும் பல மடங்கு வருமானத்தினை சுய உழைப்பு அவர்களுக்கு ஈட்டிக் கொடுக்க தராவத்தின்பால் அவர்களுக்கிருந்த அக்கறை படிப்படியாக விடுபடலானது.எனினும் நம்பூதிரிகளின் சம்பந்தம் திருமணம் சட்ட பூர்வமாக ஏற்றுக்கொள்ளாத தன்மையில் நம்பூதிரித் தந்தைகளின் தேட்டங்கள் அவர்களின் நாயர்குலப் பிள்ளைகளுக்கு செல்வது தொடர்ந்தும் தடுக்கப்பட்டது.
கி. பி 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியைத் தொடர்ந்து கேரளம் புதிய மாறுதல்களைக் கண்டபோது ஒருபுறத்தே மருமக்க(ள்) தாய நடை முறைச் சிக் கல் களாலும் மறுபுறத்தே சம்பந்த மணமுறையாலும் நாயர் சமூகத்தினர் தங்களது சொத்துடமைப் பாதிப்பினையும் மறுபுறத்தே நம்பூதிரித் தந்தைவழி வருமான இழப்பினையும் எதிர்நோக்கினர். இதனால் நாயர் சமூகத் தலைவர்கள் பலர் ஒன்றுசேர்ந்து 1869ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பந்த மணமுறையினை சட்ட பூர்வமாக அறிவிக்கக்கோரி ஒரு வழக்கினை
- 79- வெல்லவூர்க்கோபால்

Page 43
மலையாள நாடும் மட்டக்களப்பும்
தாக்கல் செய்தனர். நம்பூதிரிப் பிராமணர்களின் செல்வாக்கால் உயர் நீதிமன்றம் அம்மனுவை நிராகரித்ததோடு சம்பந்தம் திருமணம் சட்டபூர்வமானதல்ல எனவும் தீர்ப்பளித்தது. 1879ல் உருவாக்கப்பட்ட 'மலபார் திருமணச் சங்கம் இதனை சட்டபூர்வமாக்கக் கோரி ஆங்கில அரசை நாடியது. இதிலும் எதுவித பலனும் நாயர் சமூகத்துக்குக் கிட்டவில்லை.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநில சட்ட நிர்ணய F6ODL Ju î6ò (Legislative Assembly — Madras) D -ABIÜLîGOTIUTT6î(bb5 நம்பூதிரித் தந்தை வழிவந்த நாயர் சமூகத்தவரான சேர் சி.சங்கரன் நாயர் சம்பந்த மணமுறைப் பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார். அங்கும் பிராமணர்களின் செல்வாக்கு அப் பிரேரணையை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட்டது. எனினும் சங்கரன் நாயர் தனது முயற்சியைக் கைவிடவில்லை. ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அவரது விடாமுயற்சியின் பலனாக அப்போதைய ஆங்கில அரசு 1896ல் சம்பந்த மணமுறையை பதிவுத் திருமணமாக்கவும் நம்பூதிரித் தந்தையரின் சொத்துக்களில் பாதிப்பங்கு அவர்களது நாயர் குலப் பிள்ளைகளுக்கு சென்றடையவும் வழி பிறந்தது.
20ம் நூற்றாண்டின் தொடக்கம் முதலே மருமக்க(ள்) தாயத்துக்குட்பட்ட காணிகள் தொடர்பான உரிமைப் பிரச்சனைகள் பரவலாக எழத் தொடங்கின. புதிய நடைமுறைகள் மற்றும் சமூகச் சீர்திருத்தங்களுக்கு உட்பட்ட கேரளத்து மக்கள் அதிலும் குறிப்பாக நாயர் சமூகத்தினர் கூட்டுக் குடும்ப வருமான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சுயவருமான வாழ்க்கைக்கு மாறிய பின்னர் அவர்களது தராவத்து (பரம்பரைச் சொத்து)க்களின் அனுபவிப் பாளர்களாக முன் னர் பரா பரிப் புப் பொறுப்பிலிருந்தவர்களின் வாரிசுகளே இருந்ததுடன் காலப்போக்கில் அக்காணிகளையும் கையகப்படுத்தினர். இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளின் பிரதிபலிப்பு முதலில் திருவாங்கூர் அரசில் எதிரொலித்தது. இதில் தீர்வு காணும் நோக்கில் 1912ல் முதலாவது நாயர் சட்டமூலம்; (1st Naya Act - 1912) அங்கு உருவாக்கப்பட்டு
- 80 - வெல்லவுர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மருமக்க(ள்) தாய மரபுகளுக்கு ஏற்றவாறு பெறப்படும் வருமானம் அனைத்தும் உரியவர்களுக்கு சென்றடைய வழி பிறந்தது.
1920ல் நிறைவேற்றப்பட்ட கொச்சி நாயர் சட்டமூலம;
( Kochi Nayar Regulation Act - 1920) DCBLD55(6in) g5Tuj சொத்துக்களின் பராபரிப்பாளர்களான தராவத்துக்காரர்’களின் ஆதிக்கப் போக்கை பெருமளவு கட்டுப்படுத்துவதாக அமைந்திருந்தது. எனினும் இதில் பிரச்சனைகள் நீண்டுகொண்டு சென்றதால் 1933ல் சென்னை சட்ட நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட மருமக்க(ள்) 5TU 3Ú L elp60556öTLJt9 (Marumakka Thayam Act – 1933) தராவத்து எனப்படும் தாய்வழிப் பரம்பரைச் சொத்துக்கள் யாவும் உரியவர்கள் அனைனவருக்கும் F LDLDITE பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என வலியுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடை முறையிலிருந்த தாய்வழி மரபான மருமக்க(ள்) தாயம் கேரளத்திலிருந்து விடுபட்டுப் போயிற்று. எனினும் “தாயக் காணி’என்ற பெயரில் கேரளத்துக் கிராமப் புறங்களில் அழைக்கப்படுகின்ற வயற்காணிகள் இன்னும்கூட மருமக்க(ள்) தாயத்தின் சிறப்பினை பறைசாற்றுபவையாகவேயுள்ளன.
-81 - வெல்லவுர்க்கோபால்

Page 44
மலையாள நாடும் மட்டக்களப்பும்
தாய்வழி முதுசம்
மட்டக்களப்புப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அதன் சமூகப் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்கள் பண்டைய கேரளத்தின் (சேரநாடு) ஒத்த தன்மையைக் கொண்டிருப்பதை காணமுடியும். அறியப்பட்ட மட்டக்களப்பு வரலாற்றின் தொடக்க காலமான கி. மு 3ம் நூற்றாண்டிலும் மற்றும் கி.பி. 2ம் நூற்றாண்டு, 5ம் நூற்றாண்டு, 6ம் நூற்றாண்டு, 10ம் நூற்றாண்டு, 11ம் நூற்றாண்டு 13ம் நூற்றாண்டிலும் சேரநாட்டிற்கும் மட்டக்களப்பிற்கும் இருந்த தொடர்பினை இதுவரை பெறப்பட்ட மட்டக்களப்பின் வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
மழவர், பணிக்கர், மலையாள முக்குவர் மற்றும் நாயர் என்போர் சேர நாட்டிலிருந்து இங்கு வந்தவர்களில் முக்கிய சாதியினராவர். கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரத் தகவல்களில் நாயர் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருப்பதால் கேரளத்து நாயர் சமூகத் தொடர்பினை மட்டக்களப்புச் சமூகத்தளம் கொண்டிருப்பது உறுதியாகின்றது. இச்சமூகங்களின் பிணைப்பே கேரளத்தின் தாய்வழி மரபுகளை மட்டக்களப்பில் வலுவோடு வளர்த்தெடுக்க முக்கிய காரணங்களாய் அமைந்தன. பண்டைக் காலம் முதலே கலிங்கத்திற்கும் சேரத்திற்கும் இருந்த இறுக்கமான தொடர்பும் மட்டக்களப்பையும் கேரளத்தையும் இணைக்க
- 82- வெல்லவுர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
உதவியுள்ளமையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மட்டக்களப்பு “மலையர் குக நாடு’ என அழைக்கப்பட்டதின் அர்த்தப்பாடு இதன்மூலம் வெளிப்படவே செய்யும். மலையர் என்பது மலை நாட்டினரான சேரத்துக் குடிகளையும் 'குகர்’ என்பது கலிங்கக் குடிகளையும் அடையாளப்படுத்தும்.
கேரளத்தில் கி. பி 9ம் நூற்றாண்டு தொடக்கம் உருவான பெருமாள் மன்னர்களது ஆட்சிக்காலத்தே நம்பூதிரிப் பிராமணர்கள் பெரும் செல்வாக்குப் பெற்றவர்களாக மாறினர். அவர்களால் உண்டான சாதிப் படிநிலையால் கேரளத்தின் பண்டைய சமூக அமைப்பு உயர்வு தாழ்வு போன்ற குறிப்பிடத்தக்க பெரும் சமூக மாற்றத்துக்கு உட்படலாயிற்று. எனினும் மட்டக்களப்பின் சமூக அமைப்பைப் பொறுத்தவரை சோழர் ஆட்சிக் காலத்தே இந்நிலை புகுத்தப்பட்டிருப்பினும் அது பெருமளவு வலுப்பெற்றிடவில்லை. மட்டக்களப்பு சமூதத் தளம் ஆரம்பம் முதலே ஒன்றையொன்று உள் வாங் கரிக் கொண் டு வலுவோடு தம் மை ப் பிணைத்துக்கொண்டமையே இதற்கான காரணமாய் அமையும். இத்னால் கேரளத்திலிருந்து அறிமுகமான தாய்வழி மரபுகள் மேலும் வலுவடைந்து “முற்குக தேசவழமைச் சட்டம்’ எனும் அந்தஸ்த்தைப் Quip607. BT6Dü (BUTööl6b (päg55ö 3FLLub” (MukkuWas Law) எனும் பெயரை இது பெறுவதாயிற்று.
இலங்கையில் உயர் நீமன்ற வழக்குரைஞராகப் பணிபுரிந்த eÉÉ36ou of...Lij (3LIT (Mukkuwas Law - C. Brito 1876), a L6606) bit 61.3.L56iu plb60LJuJIT (Laws and Customs of Tamils of Ceylon H.W.Thambiah) B6)TÉg5 (GL66) (Mukkuwa Vannimai - Dr. Dennis B Mc Gilwary). (p606016 if 6T6m). III (86) bgb6 (கீழைத்தேய மரபுவழிச் சட்டங்கள்) ஆகியோர் மட்டக்களப்பின் தாய்வழி வழக்காறுகளைக் கொண்ட இச் சட்டம் குறித்து வெகுவாக
-83. வெல்லவூர்க்கோபால்

Page 45
மலையாள நாடும் மட்டக்களப்பும்
ஆராய்ந்தனர். இதில் எச்.டபிள்யூ. தம்பையா தவிர்ந்த மூவரும் வெளிநாட்டவராவர். நமக்குக் கிடைக்கின்ற சரியான தகவல்களின்படி பண்டைய மட்டக்களப்புப் பிரதேசத்தில் வெல்லசை, விந்தனை உட்பட தம்பன் கடவை (மன்னன்பிட்டி) தொடக்கம் கட்டகாமம் வரையும் திருகோணமலைப் பிரதேசத்தில் கொட்டியாரப் பற்று, தம்பலகாமம் பற்று, கட்டுக்குளம் பற்றிலும் புத்தளப் பிரதேசத்திலுள்ள எல்லா ஏழு பற்றுக்களிலும் கி. பி 18ம் நூற்றாண்டு வரையான ஒரு நீண்ட காலத்தே முக்குகச் சட்டம் ஒரு முழுமையான செயல்பாட்டில் இருந்துள்ளமை தெரிகின்றது.
முக்குகச் சட்டத்தில் தாய்வழிச் சோம், தாய்வழி முதுசம், தேட்டம் என்பவற்றிற்கு கொடுக்கப் பட்டிருக்கின்ற வியாக்கியானம் முழுக்க முழுக்க மருமக்க(ள்) தாயத்ததை ஒத்திருப்பதை அவதானிக்க முடியும். தாய்வழி முதுசக் காணிகள் மட்டக்களப்புப் பிரதேசத்தில் பரவணி முதுசம், பரவணிக் காணி, முக்குவ முதுசம், முக்குவக் காணி என அழைக்கப்பட்டதைப் போன்று கேரளத்தில் இது தராவத்து, தாயக்காணி, நாயர் காணி, மருமக்க காணி, நாடு காணி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டமை தெரிகின்றது.
கேரளத்தின் மருமக்க(ள்) தாயத்திலும் மட்டக்களப்பின் முக்குகச் சட்டத்திலும் நடப்புக் காலத்தே இருக்கும் பரம்பரைச் சொத்துப்போக அக்காலத்தே பெறப்பட்ட அல்லது தேடப்பட்ட சொத்து "தேட்டம்’ என்ற பெயரினைப் பெறும். அது பின்னர் மாதாவழி முதுசமாக (கேரளத்தில் தாயக்காணி) மாறும். பராபரிப்பு முறை ஆரம்பத்தில் தாயிலிருந்து மூத்த மகனுக்கும் அதன் பின்னர் அடுத்த மகனுக்கும் செல்லும். அதன்பின் வயது முறைக்கேற்ப பெண் மக்களின் மகன்மாருக்கு (தாய்வழி மாமா மருமகன்) எனக் கைமாறும். இதன் முக்கியத்துவம் என்னவெனில் தாய் வழி முதுசத்தின் பராபரிப்பு உரிமை சகோதரிகளைச் சார்ந்தே
-84 - வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
பெண்வழியாய் அமையும் என்பதே. இதனாலேயே கேரளத்திலும் மட்டக்களப்பிலும் திருமணமான பெண் கணவன் வீடு செல்லாமல் தாய்வீட்டில் தங்கும் நிலமை உருவானது.மேலும் “ஆண்வழி நின்று போம் பெண்வழி இருந்து போம்” எனும் மட்டக்களப்பாரின் தாய்வழி முதுசச் சொத்துடமை பற்றிய முதுமொழியினைக் கேரளத்தாரும் பின்பற்றவே செய்தனர். இதன் அர்த்தப்பாடு யாதெனில் முதுசச் சொத்துக்கள் மாமன் மருமகன் வழியில் நின்றாலும் பெண்வழியிலேயே அது நிலையாக இருக்கும் என்பதே.
மட்டக்களப்பில் கி.பி 17ம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் நிலவுடமையாளர்களான போடிமாரின் ஆதிக்கம் படிப்படியாக ஐரோப்பிய ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டபோது இரு சாராருக்குமிடையே அடிக்கடி மோதல்களும் பிரச்சனைகளும் எழுந்தவண்ணமே யிருந்தன. கிறிஸ்தவ மிசனறியூடான ஆங்கிலக் கல்வியை நாடவோ மதம் மாறவோ போடிகள் துளியேனும் விரும்பினரல்லர். தொடக்க காலத்தே முக்குகச் சட்டத்தின் சில பிரிவுகளை தங்கள் நீதித் துறையரில் ஐரோப் பியர் ஏற்றுக்கொண்டபோதும் பிற்பட்ட ஒல்லாந்தர் ஆட்சியிலும் பின் ஆங்கிலேயர் ஆட்சியிலும் அது முற்றாகவே நீதித் துறையிலிருந்து அகற்றப்பட்டது. அன்றைய காலகட்டத்தே யாழ்ப்பான தேசவழமைச் சட்டமும் கண்டிய தேசவழமைச் சட்டமும் நடைமுறையிலிருந்தும் தாய்வழி மரபான முக்குகத் தேசவழமைச் சட்டம் இலங்கையின் நீதித் துறையில் முக்கியத்துவம் பெறாது போனமைக்கு இதன் தாற்பரியங்களை வெளிப்படுத்தவல்ல கல்விமான்களோ அன்றேல் தலைமைத்துவ அரசுப் பணியாளர்களோ மட்டக் களப்புப் பிரதேசத்தில் உருவாகாமல் போனமையே முக்கிய காரணமாகும்.
ஆங்கிலேயர் ஆட்சியில் தாய்வழி முதுச வழக்காறுகள் படிப்படியாக வழக்கொழிந்து போனாலும் போரதீவு மற்றும் வவுணதீவுப் பகுதிகளில் இதன் அடையாளங்கள் பிற்பட்டும் தென்படவே செய்தன. மட்டக்களப்பு இலுப்பையடிச்சேனை என்னும்
- 85- வெல்லவுர்க்கோபால்

Page 46
மலையாள நாடும் மட்டக்களப்பும்
இடத்திலுள்ள தாய்வழிக் காணியொன்றின் உருத்து தொடர்பில் மட்டக்களப்பு உயர் நீதிமன்றத்தில் 07.02.1916ல் தொடரப்பட்ட 4260ம் இலக்க வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தாய்வழி முதுச வழக்காற்றிற்கு (முக்குகச் சட்டம்) சார்பானதாகவே அமைந்திருந்தது. மிக அண்மைக் காலமான 1990ல் பராபரிப்பாளரிடம் கைமாறிப்போன கோவில்போரதீவு தென்கண்டம் வெளிப்பற்றிலுள்ள தாய்வழிக் காணியொன்று உரித்துடைய சகோதரிகளுக்கு சமாதான முறையில் சமமாகப் பங்கிட்டளிக்கப்பட்டமை இன்றும் மட்டக்களப்பில் தாய்வழிப் பாரம்பரியத்தை நிலை நிறுத்துவதாக அமைந்தது.
பண்டைய சேர நாட்டின் மருமக்க(ள்) தாயமும் மட்டக்களப்பின் தாய்வழி முதுசமும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டு நிலைபெற்ற வழக்காறாக அமைந்திருப்பினும் கி. பி 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இருந்த இறுக்கம் பிற்பட்ட காலத்தே தளர்வடைந்தமைக்கும் பின்னர் படிப்படியாக உறவறுந்து போனமைக்கும் கேரளத்தில் விரிவடைந்த பிராமண ஆதிக்கமும் ஆரியமயமாக்கல் தன்மைகளுமே முக்கிய காரணங்களாயின. முத்தமிழ் நாடுகளில் முதன்மை பெற்று விளங்கிய சேரநாடு பிற்பட்ட காலத்தே தமிழில் மணிப்பிரவாளம் கலந்து மலையாள மொழியை தனக்காக உருவாக்கிக் கொள்ளவும் கேரளா’ எனப் பெயர் மாற்றம் பெறவும் ஆரியமயமாக்கலே வழியமைத்துக் கொடுத்தது. எனினும் நீண்ட காலப் பண்பாட்டுக் கோலங்களாக ஆழப்பதிந்து நிலைபெற்றுவிட்ட தாய்வழி முக்கியத்துவம் கொண்ட சமூகக் கட்டமைப்பு, பேச்சு ஒலிவடிவம், உணவுப் பழக்கவழக்கம், வாழிட முறை, வழிபாட்டு முறை, மந்திர மாந்திரிகச் செயன் முறைகள் போன்றவை இரு பிரதேசங்களுக்குமுரிய நீண்டகால இறுக்கமான பிணைப்பின் பெருமையினைக் காலம் தோறும் பேசிக்கொண்டேயிருக்கும்.
-86 - வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
06.கண்ணகி வழிபாடு
மனித சமூகம் தன்னை உணரத் தொடங்கிய காலம் முதலே வழிபாடும் தோற்றம் பெற்றது. பய உணர்விலிருந்து விடுபட பக்தி உணர்வு அவனுக்கு வேண்டியதாயிற்று. அதுவே காலப்போக்கில் அவனது தேவைகளை ஈடுசெய்யும் வாய்ப்பாகவும் மாறியது. மலையையும் நதியையும் கடலையும் குளத்தையும் மரங்களையும் அண்டி வாழ்ந்த மனிதன் அந்த இயற்கை நிலைகளிலேயே தெய்வங்கள் இருந்து அவற்றின் சக்திகள் மூலம் அனைத்தையும் புரிவதாக நம்பியபோது உருவானதே சக்தி வழிபாடு. அதுவே தாய்த் தெய்வ வழிபாடாக மலர்ந்தது. இவ்வாதி வழிபாட்டில் இணைந்ததாக வளர்ந்த இன்னுமொரு வழிபாடான நாக வழிபாடும் தாய்த் தெய்வ வழிபாட்டில் அடக்கமே. மனிதன் வாழ்ந்த இயற்கைச் சூழலில் அனைத்து உயிரினங்களிலும் பார்க்க மிகுந்த பய உணர்வை உருவாக்கியது பாம்புகளே. இதிலிருந்து மீட்சிபெற நாக வழிபாடே அவனுக்கு உறுதுணையானது.
கேரளத்தின் பண்டைய வழிபாடுகள் குறித்து பல அறிஞர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர். ஆரியமயமாக்கல் தன்மையானது திராவிடரின் பக்திமார்க்கத்தே, தென்னிந்திய நிலப்பரப்பில் ஏனைய பகுதிகளை விடவும் கேரளத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியபோதும் தாய்த் தெய்வ வழிபாட்டின் ஆணிவேரை அதனால் அறுத்தெறிய முடியவில்லை என்றே கூறுவர். நாக வழிபாடானது நாக தேவதை, நாக கன்னிகை, நாக லக்சுமி, நாகம்மா, நாக பூஷணி எனத் தாய் தெய்வ வழிபாடாக மாறிய பின்னர் கொற்றவையும் கடலம்மனும் நாக தேவதையும் சேரநாட்டின்
- 87- வெல்லவூர்க்கோபால்

Page 47
மலையாள நாடும் மட்டக்களப்பும்
பண்டைய வழிபாடாக மிளிர்ந்தன. போர்த் தெய்வமாக கொற்றவையும் கடலோரக் காவல் தெய்வமாக கடலாட்சியம்மனும் விவசாயப் பெருங்குடியினரின் நம்பிக்கைத் தெய்வமாக நாகதேவதையும் நிலைபெறலாயிற்று. கேரளத்தின் காராளர் சமூகமான நாயர் சமூகம் நாகர் இனத்தின் முக்கிய பிரிவினர் என்பதாலேயே அவர்களின் முதன்மை பெற்ற வழிபாடாக நாக வழிபாடு விளங்கியதென்பது மறுபக்கம் ஆய்வாளர்தம் உடன்பட்ட கருத்தாகவும் உள்ளது. நாக வழிபாட்டின் பெருமையினை கேரளத்து விவசாயக் கிராமங்களில் இன்றும் சிறப்பாக காணமுடிவதைப் போன்று மட்டக்களப்பின் விவசாயக் கிராமங்களிலும் சிறப்பாகக் காணமுடியும். அதேபோல் சேரநாட்டில் முன்னர் சிறப்பான வழிபாட்டிலிருந்த கடலாட்சியம்மன் வழிபாடு மற்றும் மாமாங்கத் தீர்த்தம் என்பனவும் இன்று மட்டக்களப்பு மக்களின் வழிபாட்டிலிருப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
கி. பி 2ம் நூற்றாண்டு தொடக்கம் சேரத்து மக்களின் இன்னுமொரு மிக முக்கிய வழிபாடாக இடம்பிடித்துக்கொண்டது கண்ணகி வழிபாடாகும். சேரலாதன் ஆட்சியாளர்களில் புகழ்பெற்ற பெரும் ஆட்சியாளனாக விளங்கியவன் சேரன் செங்குட்டுவன். அவன் வஞ்சிமாநகரில் கண்ணகிக்கு சிலைநாட்டி விழாவெடுத்தது முதல் கண்ணகி எனும் மாதரசி வழிபாட்டுக்குரிய ஒரு தெய்வமாக ஆக்கப்பட்டாள்.
சோழநாட்டின் தலைநகராம் பூம்புகாரில் உதயமாகி பாண்டி நாட்டின் தலைநகராம் மதுரைமாநகரில் நீதிகேட்டுச் சுட்டெரித்து பின் சேரத்துத் தலைநகராம் வஞ்சிமாநகரில் குளிர்ச்சியுற்று தெய்வமான கண்ணகி எனும் தமிழணங்காள் பண்டைத் தமிழகத்தின் கற்பரசியாகவே போற்றப்பட்டவள். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா வெடுத்ததையும் அவ்விழாவில் இலங்கை வேந்தன் கயபாகு கலந்து கொண்டதையும்செங்குட்டுவனின் தம் பியான இளங் கோவடிகள் எழுதிய சிலப் பதிகாரம் பெருமைப்படுத்திக் கூறும்.
- 88- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெரும்கிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்சூழ் இலங்கை கயபாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நந்நாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீகு என்றே வணங்கினர் வேண்ட தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்
என்பது அப்பாடல் அடிகளாகும்.
மேலும் சிங்கள பெளத்த வரலாற்று ஆவணங்களில் ஒனறாகக் கொள்ளப்படும் 'இராஜவளி’ யும் கயபாகு வேந்தனின் வரலாறு கூறும் கஜபாகு கத்தா”வும் சேரன் செங்குட்டுவன் எடுத்த கண்ணகி விழாவில் கயபாகு கலந்துகொண்டமைக்குச் சான்றளிக்கும். விழாவில் கலந்துகொண்டு திரும்பிய கயபாகு வேந்தன் கண்ணகியின் காற்சிலம் பொன்றினைக் கொண்டுவந்தான் என்றும் பின்னர் இலங்கையின் பல இடங்களிலும் “பத்தினித் தெய்வம்” என்ற பெயரில் கண்ணகிக்கு கோவிலெடுத்தான் என்றும் அவை குறிப்பிடும். இலங்கையில் கண்ணகிக்கு முதன்முதலில் கட்டப்பட்ட கோயிலாக அங்க ணா மைக் கடவை கண் ண கரி அம் மண் கோவில் குறிப்பிடப்படுகின்றது. மட்டக்களப்பில் பாடப்படும் உடுகுச் சிந்திலும் இதுகுறித்த தகவல்களைக் காணலாம். கண்டியில் கொண்டாடப்படும் ‘எசலப் பெரகரா’வும் முன்னர் பத்தினித் தெய்வத்திற்குரிய விழாவாகவே நீண்டகாலமாகக் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.
முன்னர் சிங்கள மக்களின் வழிபாடாக விளங்கிய பத்தினித் தெய்வ வழிபாடே கண்ணகி வழிபாடு என்ற பெயரில் கண்டியிலிருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப் பட்டதாக பொதுவாகக் கருதப் பட்டாலும் கயபாகு வேந்தனின்
89- வெல்லவுர்க்கோபால்

Page 48
மலையாள நாடும் மட்டக்களப்பும்
ஆட்சியிருக்கையான அனுராதபுரியிலிருந்து முல்லைத்தீவின் வற்றாப்பழைக்கும் அதன்பின் கடல் மார்க்கமாக மட்டக்களப்பிற்கும் கண்ணகி சிலைகள் கொண்டுவரப்பட்டதான கருத்தும் நிலவவே செய்கின்றது.
மட்டக்களப்பின் “தெற்குப் பிரதேசத்தில் உள்ள அக்கரைப்பறறு - பட்டிநகர் கண்ணகி அம்மன் கோவில் கி. பி 2ம் நூற்றாண்டிலமைந்த முதல் ஆலயமெனவும் தொடக்க காலம் முதலே அது பத்தினியம்மன் ஆலயம் என அழைக்கப்பட்டதெனவும் அதில் ‘சிங்களப் பத்ததி முறையில் பூசைகள் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பின்னர் இவ்வாலயத்தின் உரிமைப் பிரச்சனை தொடர்பில் கல் முனை உயர் நீதிமன்றம் சேரத்துக்குடிகளான பணிக்கினார் குடியினருக்கும் மழவரசன் குடியினருக்கும் பராபரிப்பு உரிமையினை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்ததாகவும் ஏ.ஆர்.எம்.சலிம் எழுதிய அக்கரைப்பற்று வரலாறு (1ம் பதிப்பு) கூறுகின்றது. இவ்வாலயத்தில் சிங்களப் பத்ததி முறை நடைமுறையிலிருந்ததை நாடு காடு பரவணிக் கல்வெட்டின் மூலமும் அறிந்துகொள்ள முடிகின்றது.
-90 - வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மேலும சிங்கள மொழியில் எழுதப்பட்ட சிலம்புக் கத்தார் ‘பத்தினிப் படிமா’ போன்ற நூல்களும் பத்ததி முறைகளும் கண்ணகி வழிபாடானது பத்தினி வழிபாடு எனும் பெயரில் சிங்கள மக்களின் பாரம்பரியமிக்க நீண்டகால வழிபாடாக இருந்துள்ளமையை மெய்ப்பிக்கின்றன.
கி. பி 8ம் நூற்றாண்டை மையப்படுத்திய காலத்தில் பாண்டி நாட்டிலிருந்து கண்ணகி வழிபாடு பரப்பப்பட்டமைக்கும் சான்றுகள் தென்படவே செய்கின்றன. எனினும் மிக முக்கியமாக மட்டக்களப்பில் ஏற்பட்ட குடியேற்றங்களை அவதானிக்கும்போது பெருமளவு சேரத்துக் குடியேற்றங்களே இடம் பெற்றுள்ளமை தெரியவரும். கி.பி 2ம் நூற்றாண்டைத் தொடர்ந்து காலத்துக்கு காலம் பல தடவைகள் மட்டக்களப்புக்கு வந்துற்ற அம் மக்களால் கண்ணகி வழிபாடு விரிவாக முன்னெடுக்கப்பட போதிய வாய்ப்புக்கள் இருந்துள்ளமையை மறுத்துரைக்கமுடியாது. இன்று மட்டக் களப்புப் பிரதேசத்தே ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊர்களில் கோயில்கொண்ட தமிழ்த் தெய்வமாகவே கண்ணகி விளங்குகின்றாள். வருடந்தோறும் வைகாசித் திங்களில் சகல கோவில்களிலும் மிக்க சிறப்பாக கண்ணகிக்கு விழா வெடுக்கப்படுகின்றது. கதவு திறத்தல் (கும்ப ஸ்தாபனம்), கல்யாணச் சடங்கு, தீ மிதித்தல், குளித்தி பாடி கும்பம் சொரிதல் போன்றவை முக்கிய நிகழ்வுகளாக இடம் பெறும். மேலும் மட்டக்களப்புப் பிரதேசத்தே எழுந்த கோலாட்டம், கொம்புமுறி, வசந்தன், கரகம் போன்ற நாட்டார் கலைகளிலும் கண்ணகி மையப்படுத்தப்படுவதைப் பார்க்கின்றோம். இவ்வாடற் கலைகள் கண் ண கி விழாக் களில் இடம் பெறுவது உள்ளத்தை கொள்ளைகொள்ளுவதாக அமையும்.
-91 - வெல்லவூர்க்கோபால்

Page 49
மலையாள நாடும் மட்டக்களப்பும்
ஆங்கிலேயர் ஆட்சியில் மட்டக் களப்பிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்
பட்டுள்ள கண்ணகி (பத்தினியம்மன்) சிலை
- 92- வெல்லவூர்க்கோபால்
 

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டக்களப்பில் பழமைவாய்ந்த வந்தாறுமூலை கண்ணகி ஆலயம். இங்கு நேரடியாக கண்ணகித் தெய்வம் காட்சி கொடுத்ததாக ஐதீகம்
-93 - வெல்லவூர்க்கோபால்

Page 50
மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டக்களப்பு காரைதீவு கண்ணகி ஆலயம் இது சோழராட்சிக் காலத்தில் ராஜராஜேஸ்வரி ஆலயம் என அழைக்கப்பட்டதான தகவல்களுண்டு
- மட்டக்களப்பில் முதன்மைபெற்ற கண்ணகி வழிபாடு பண்டைத் தமிழகத்தில் குறிப்பாக அது உருவான கேரளத்தில் அருகிவிட்டமைக்கு இன்றைய தமிழக ஆய்வாளர்களும்
- 94 - வெல்லவூர்க்கோபால்
 

LD60)6)u JT6T BITCBLD LDL L35856TCIL Lib
வைத்தியநாதன் போன்ற கேரள ஆய்வாளர்களும் பல காரணங்களை முன்வைக்கின்றனர். கி. பி 2ம் நூற்றாண்டு முதல்கொண்டு சேரநாட்டிலும் பின்னர் பாண்டிநாடு, சோழநாடு, தொண்டைநாடு என்பவற்றிலும் தொடர்ந்து கன்னட நாட்டிலும் வழிபாட்டுக்குரிய தெய்வமாக்கப்பட்ட கற்பரசி கண்ணகி பல்லவர் ஆட்சியின் பிற்காலம் முதல்கொண்டு தொண்டை நாடு மற்றும் சோழ நாட்டிலும் அதன் பின் பாண்டிய மற்றும் சேரநாட்டிலும் படிப்படியான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டுமென்பதே அவர்களின் ஒத்த கருத்தாகவுள்ளது. 2005ல் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் ஒருவாரகாலம் இடம்பெற்ற சிலப்பதிகாரக் கருத்தரங்கில் இதுதொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன.
பண்டைத் தமிழகத்தே மிக்க சிறப்போடு விளங்கிய கண்ணகி வழிபாடு வேறு வழிபாடுகளுக்குள் உள்வாங்கப்படவும் படிப்படியாக வழக்கொழிந்து போகவும் தமிழகத்தில் மிகத் தெளிவாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஆரியமயமாக்கல் தன்மையும் கூடவே கண்ணகி வாழ்ந்ததாகச் சொல்லப்படும் காலத்தே காவிரிப்பூம் பட்டினத்தில் ஜைன மதமே நிலை பெற்றிருந்ததால் கண்ணகி சைவமதத்தினை சார்ந்திருக்க முடியாது என்ற ஐயப்பாடுமே முக்கிய காரணங்களாக அமையலாமென குறித்த கருத்தரங்கில் முன்வைக்கப் பட்டன. எனினும் கண்ணகி ஒரு தமிழ்ப் பெண்என்பதுவும் ஒரு முக்கிய காரணமாக கொள்ளப்படத் தக்கதே என்பது பேராசிரியர் இராதாக் கிருஷ்ணப் பணிக்கரின் கருத்தாவுள்ளது.
கி.பி 8ம் நூற்றாண்டைத் தொடர்ந்து தமிழகத்தில் வழிபாட்டிலிருந்த பல கண்ணகி கோவில்கள் படிப்படியாக வெவ்வேறு பெயர்களாய் மாற்றம் கண்டன. சோழநாட்டில் ராஜராஜேஸ்வரி அம்மன், பகவதி அம்மன் மற்றும் செங்காளத்தி அம்மன் எனவும் பாண்டிநாட்டில் செல்வத்தம்மன் மற்றும் பகவதி அம்மன் எனவும் சேரநாட்டில் பகவதி அம்மன், கொடுங்களுள் பகவதி மற்றும்
-95 - வெல்லவூர்க்கோபால்

Page 51
மலையாள நாடும் மட்டக்களப்பும்
மலையாள பகவதி எனவும் தொண்டை நாட்டில் பகவதி அம்மன் மற்றும் துர்க்கா எனவும் கொங்கு நாட்டில் கொடுங்களுர் பகவதி, வஞ்சி அம்மன் மற்றும் வலங்கை அம்மன் எனவும் மாறியதாக தமிழக ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல் சோழராட்சிக் காலத்தே தென் மட்டக்களப்பில் காரைதீவு எனும் பேரூரில் கோவில் கொண்ட கண்ணகிக்கு ராஜராஜேஸ்வரி எனப் பெயர் சூட்டப்பட்ட தகவலும் உண்டு. இதனை சோழ நாட்டின் தாக்கமாக கொள்ளலாம்.
மதுரை மாநகர் கண்ணகியின் சீற்றத்துக்கு உட்பட்டதால் பாண்டி நாட்டில் நீண்ட காலமாக மாரி மழை குன்றி வறுமை மிஞ்சிக் கிடந்ததாகவும் பின்னர் பாண்டிய மன்னனும் மக்களும் கண்ணகிக்கு விழாவெடுத்து வணங்கியதாகவும் அதன் பின்னர் மழை குறைவின்றிப் பெய்து பாண்டி மக்கள் செல்வத்தில் செழித்ததாகவும் இதனாலேயே கண்ணகி அம்மன் பாண்டிநாட்டில் செலவத்தம்மனாக வணங்கப்பட்டு வருவதாகவும் கூறுவர். மதுரை மரீனாட் சரி அம் மன் ஆலயத் தற்கு அணி மையில் கோவில் கொண்டிருக்கும் செல்வத் தம் மனே பண்டைய வழிபாட்டிற்குரிய கண்ணகி அம்மன் என்பது இங்குள்ள பெரியவர்களின் கருத்தாகும்.
சேரன் செங்குட்டுவனால் கண்ணகிக்கு எடுக்கப்பட்ட முதல்கோயிலே கொடுங்களுரிலுள்ள பகவதி அம்மன் கோவில் என்பது ஆய்வாளர்களின் முடிவு. இங்குள்ள அம்மன் ஒற்றை மார்போடு தென்படுவதால் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வரை “ஒற்றை முலைச்சியம்மன் கோவில்” என்றே இவ்வாலயம் அழைக்கப்பட்டதாக இதனை தனது சிறு வயதுமுதலே அறிந்துவைத்திருக்கும் ஆய்வாளர் கே.ஆர்.வைத்திய நாதன் கூறுவார்.
வைத்தியநாதன் கேரளத்துக் கோவில்களைப் பற்றி பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியவர். “Temple and Legends
-96 - வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
of Kerala’ என்ற நூலில் இவ்வாலயம் பற்றிய பல தகவல்களை அவர் தந்துள்ளார். இவ்வாலயத்தில் தென்படும் அம்மனின் இன்னுமோர் சிறப்பு என்னவெனில் பலநூறு வருடங்களைக் கடந்தும் கற்சிலைபோல் காட்சிதரும் இச்சிலை முற்றிய பலாமரத்தினால் பொழியப் பட்டு மூலிகைக் குழம் பினால் பூசப் பட்டு செப்பனிடப்பட்ட -தென்பதே.
சேர சாம்ராச்சியத்தின் வரலாற்றுப் பெருமைமிக்க தலைமையிடமாகவும் புகழ்பெற்ற துறைமுக நகரமாகவும் விளங்கியது கொடுங்களுராகும். பண்டையகால கிரேக்க வர்த்தகர்களால் முசுரி என இது அழைக்கப்பட்டது. திருவாஞ்சிக் குளம் என்ற பெயரினையும் இந்நகரம் கொண்டிருந்தது. பலநூறு ஆண்டுகால வரலாற்றுப் புகழ்மிக்க சிவாலயமும் இங்கு உண்டு. சிவனையே வழிபட்டுவந்த செங்குட்டுவன் அவனது ஐம்பத்தைந்து வருட நீண்ட ஆட்சிக்காலத்தின் நடுப்பகுதியில் கொடுங்களுரில் கண்ணகிக்கு கோவிலெடுத்தது முதற்கொண்டு அவளைக் ‘கொடுங்களுர் அம்மா’ எனவும் “சேரத்தின் காவல் தெய்வம்’ எனவும் போற்றி வழிபடலானான். கேரளத்து மக்களின் நீண்டகால வழிபாட்டிற்குரிய ஒரே கோவிலாகவே இது இன்றுவரை விளங்குகின்றது. இடைப்பட்ட காலத்தே கைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற முஸ்லிம் படையெடுப்பாளர்கள் பல வழிபாட்டுத் தலங்களை அழித்தபோதும் கொடுங்களுர் கண்ணகி ஆலயம் எவ்வித பாதிப்புமின்றி நின்று நிலைபெறவே செய்தது.
- 97- வெல்லவூர்க்கோபால்

Page 52
மலையாள நாடும் மட்டக்களப்பும்
ܠ ܐܚܕ܀
முதன்முதலில் சேரத்தில் (கொடுங்களுரில்) சேரன் செங்குட்டுவனால் கண்ணகிக்கு கட்டப்பட்ட கோவில்
இன்று கொடுங்களுர் பகவதி என அழைக்கப்படும் இவ் வொற்றை முலைச்சி அம்மனுக்கு மலையாள மீன மாதத்து (பங்குனி) பரணி நாள் வரை ஏழு நாட்கள் பெருவிழா நடைபெறும். இன்றும்கூட
-98 - வெல்லவூர்க்கோபால்
 

மலையாள நாடும் மட்டக்களப்பும்
கேரளத்து முக்கிய நிகழ்வுகளில் பன்னிரண்டு மாதங்களும் இராசிப் பெயரிலும் நாட்கள் நட்சத்திரப் பெயரிலும் சுப கருமங்கள் சங்கராந்தி பெயரிலும் குறிக்கப்படுவதைக் காணலாம். கொடுங்களுர் அம்மனின் ஏழு நாள் திருவிழா 'பரணி விழா என்றே அழைக்கப்படுகின்றது. அதற்கு முன்னர் அறுவடைக் காலத் தில் பொங் கல் பண்டிகையையொட்டி நான்கு நாள் விழா மகர சங்கராந்தியிலிருந்து நடைபெறும். இதனை அம் மக்கள் தலைப்பொலி என அழைக்கின்றனர். இவ் விழாக்களில் சாதி வேறுபாடின்றி கேரளத்து மக்கள் கலந்துகொள்கின்றனர். வைசூரி, வெப்பு, அம்மை, கண்ணோய் போன்ற நோய்கள் வராமல் மக்களை காத்து நாட்டில் மழை பெய்வித்து பெரும் விளைச்சலைத் தருபவளாக இவ்வம்மன் விளங்குவதால் இவ்விழாக்களில் நாட்டின் நாலாபக்கமுமிருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் குழுமுகின்றனர். முன்னர் பரணி விழாவில் பெருமளவில் சேவல்கள் பலியிடப்பட்டதாக தகவல்கள் உண்டு. இப்போது இவை நேர்த்தியாகவே பெறப்படுகின்றன. இவ்வாலயப் பூசைகளை நாயர் சமூகத்தைச் சேர்ந்த பூசகர்களே காலம் காலமாக மேற்கொள்கின்றனர். விழா முடிவுற்ற பின்னர் ஒரு முக்கிய விடயத்தை நம்மால் அவதானிக்கமுடியும். விழாவைத் தொடர்ந்து பரணிக்கு மறுநாள் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் நம்பூதிரிப் பூசகர் ஒருவரால் ஆகம முறைப்படியான ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் கிரியைகள் இடம்பெறுகின்றன. கண்ணகி வழிபாட்டினை நம்பூதிரிகள் ஏற்றுக் கொள்ளாமைக்கான அடையாளமாகவே இச் செயல் ஆய்வாளர்களால் கருதப் படுகின்றது. அத்து அை இக்க்லே
கோயம்புத்துாரிலுள்ள கொடுங்களுர் கோவிலிலும் கரூர் வஞ்சியம்மன் மற்றும் வலங்கையம்மன் கோவிலிலும் இக்காலத்திலேயே விழாக்கள் இடம்பெறுகின்றன. சென்னையை அடுத்த திருவொற்றியூர் சிவாலயத்திற்கு பக்கத்தே அமைந்துள்ள அம்மன் ஆலயமும் பண்டைய கண்ணகி அம்மன் ஆலயமாகவே கொள்ளப்படுகின்றது. கொடுங்களுர் அம்மனின் விழாக்காலத்தே இங்கும் சிறப்பாக விழா இடம்பெற்றதாக இதன் பண்டைய வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 99- வெல்லவூர்க்கோபால்

Page 53
மலையாள நாடும் மட்டக்களப்பும்
கேரளத்தை அண்டியதும் முன்னர் சேரநாட்டுடன் இணைந்திருந்ததுமான இன்றைய தமிழ் நாட்டின் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயமும் முன்னர் கண்ணகி அம்மன் ஆலயமாகவே விளங்கியதென அதுதொடர்பான தகவல்கள் கூறுகின்றன. இவ்வாலய வருடாந்த விழாவில் தமிழக மக்களுடன் கேரள மக்களும் திரளாகப் பங்கேற்று அம்மனை வழிபடும் சிறப்பினை இன்றும் காணலாம்.
இதனிடையே தமிழறிஞர் வி. சி. கந்தையா எழுதிய மட்டக்களப்புத் தமிழகம்’ நூலிலும் அண்மையில் கனடாவில் வெளிவந்த க.தா.செல்வராஜ கோபால் எழுதிய ‘மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடு’ நூலிலும் தஞ்சையிலுள்ள செங்காளத்தியம்மன் கோவில் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சோழப் பேரரசின் காலத்தே ஈழத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட ரோகணத்து மன்னன் 5ம் மகிந்தனின் அரசியின் வேண்டுகோளின் பேரில் தனது நாட்டில் அவள் வணங்கிய பத்தினித் தெய்வத்திற்கு தஞ்சையில் கோயில் கட்டப்பட்டதாகவும் ‘சிங்கள நாச்சியம்மன் கோவில்’ என அன்று அழைக்கப்பட்ட அவ்வாலயம் காலப்போக்கில் செங்காளச்சியம்மன் - செங்காளத்தியம்மன் என மருவிவிட்ட தாகவும் அவை தெரிவிக்கின்றன. நாம் அங்கு மேற் கொண்ட ஆய்வுகளில் இத் தகவல் கள் உறுதி செய்யப்படவில்லை. மாறாக இவ்வாலயத்தினை கண்ணகியோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வரலாற்று ரீதியாக தஞ்சைப் பெரிய கோவிலுக்கு பல ஆண்டுகள் முற்பட்டதாகக் கருதப்படும் இவ்வாலயத்தை சோழரின் ஈழத்துப் படையெடுப்போடு இணைத்துப் பார்ப்பது சரியாகத் தென்படவில்லை என்பதே தஞ்சைமண்ணைச் சேர்ந்த பேராசிரியர் கவிஞர் தஞ்சை வளவன் மற்றும் பேராசிரியை காயத்திரி வைத்தியநாதன் போன்ற கல்விமான்களின் கருத்தாகவுள்ளது. செங்காளத்தியம்மன் பெயரில்
- 100- வெல்லவுர்க்கோபால்

tD60D6òu JT6II [BT{ĐLf) LDL Lđ556ÎTỦIL|[[D
நூற்றுக்கணக்கான ஆலயங்களை தமிழ்நாட்டில் இன்றும் நம்மால் காணமுடியும் என்பதையும் தங்களது கருத்துக்கு அவர்கள் சான்றாக முன்வைக்கின்றனர்.
காலச்சூழல், ஆட்சிமாற்றங்கள், ஆரிய மயமாக்கலின் விளைவு போன்றவற்றால் இன்றைய கேரளத்திலும் தமிழகத்திலும் பண்டைய பெருமைக்குரிய கண்ணகி வழிபாடு வெவ்வேறு சக்தி வழிபாடுகளாக மாறிவிட்டபோதும் கண்ணகியின் பிறப்பிடமான நாகை மாவட்டம் பூம்புகாரில் அமைந்துள்ள கண்ணகி ஆலயத்தில் மிக்க சிறப்பாக கொண்டாடப்படும் ஆடி விழாவும் மட்டக்களப்புப் பிரதேசமெங்கும் முழுமைநிலைப்பட்ட கண்ணகி வழிபாடும் அதனை உருவாக்கித் தந்த மலையாள நாட்டை காலம் தோறும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
- 101 - வெல்லவூர்க்கோபால்

Page 54
மலையாள நாடும் மட்டக்களப்பும்
07. நிகழ்த்து கலைகள்
நிகழ்த்து கலைகள் மனிதர்களது வாழ்க்கைச் சூழல், வாழ்க்கைப் பிரச்சனைகள், தெய்வ வழிபாடு என்பவற்றின் கூட்டுப் படைப்பாகவே வடிவம் கொள்கின்றன. மரபு வழியாகவே நிகழ்த்தப்பட்டுவரும் இக்கலைகள் அதே சமயம் சமூகத்தின் இயக்கத்தினையும் உள்வாங்கி வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் தம்மை புத்தாக்கம் செய்து மக்களிடையே செல்வாக்குப் பெற்றவையாகவும் உள்ளன. இவை பொதுவாக வட்டாரத் தன்மை மிக்கவையெனினும் தத்தமக்கென்று மரபுவழிப்பட்ட பண்பாட்டு எல்லை களையும் பார்வையாளர்களையும் கொண்டவை.
பண்பாட்டு எல்லைகளை பிரதேசத் தன்மை கொண்டோ அன்றேல் நிலக் கூறுகளைக்கொண்டோ பாகுபடுத்த முடியாது. மக்கள் குழுக்களது வழிபாட்டு மரபுகள், சாதீயத் தன்மைகள், தொழில்கள், பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டே பண்பாட்டு எல்லைகள் அமையும். நிலவியல் கூறுகள் தொடக்கச் சூழலில் ஒரு காரணியாகத் தென்படினும் காலப் போக்கில் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் மக்கள் தத்தமது பண்பாடு சார்ந்த வாழ்விடங்களை விட்டுவிட்டு வெவ்வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் குடிபெயர்ந்தே வந்துள்ளனர். பெருவாரியான மரபுகளின் அடிப்படையில் அவர்களது பண்பாட்டு நிலைக்களங்களை ஒரளவேனும் இனம்காணமுடீயும். இவற்றுக்குள்ளும் சிறுசிறு பண்பாட்டுக் குழுக்கள் தென்படுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இப்பண்பாட்டுக குழுக்களும் தனித் தனிக் கலைவடிவங்களைக் கொண் டவையாகவே இருந்திருக்கும்.
- 102- მიიზიაouitä(8+mumინ

D60)6OUJT6T [5T(BLfD LDLȬTT LILLD
பொதுவாக நிகழ்த்து கலைகள் சடங்கியல் தன்மை மிக்கவை என்பதனால் அக்கலை வளங்கும் பண்பாட்டில் அம்மக்களது சமய்ச் சடங்குச் சூழலே அடித்தளமாக அமையும். நாடகங்களின் தோற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டவர்களில் முக்கியத்துவம் பெற்றவரான ஜோர்ச் தோம்சனின் கருத்துக்கள் இங்கு உற்று நோக்கத் தக்கவை.
"சடங்கு முறைகள் புராதன கால மந்திரச் செயல்களை மிகவும் அதிகமாக நினைவுகூரும் தன்மை கொண்டவை. இத்தகைய சடங்குகள் தன்னறிவுள்ள பாவனைகளின் வெளிப்பாடாக இருந்ததனால் நாடகத் தன்மை கொண்டதாகவும் அமைந்தன. இவற்றை சமூகத் தொழிலாகக் கொண்டிருந்த மந்திர கணத்தினர் அறிவியல் வளர்ச்சியின் மேலிட்டால் தமது புராதன தொழிலை விட்டுவிட்டு ஊர்கள் தோறும் சென்று ஆடிப்பாடி பிழைக்கும் நடிகர்களாக மாறினர். பண்டைய கிரேக்கத் தினதும் ஐரோப்பிய நாடுகளினதும் நாடகக் கலையானது சடங்குகளிலிருந்து தோற்றம் பெற்றதைப் போன்றே கீழ்த்திசை நாடுகளின் நாடகக் கலையும் புராதன காலச் சடங்குகளிலிருந்தே கருக்கொண்டிருக்க வேண்டும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை”
எனக்கூறுவார் கலைகள் சடங்குகளிலிருந்தே தோற்றம் பெற்றன என்ற கருத்தினை பொதுவாக இன்று யாவரும் ஏற்றுக்கொள்ளவே செய்கின்றனர்.
சடங்குகளிலிருந்து நாடகம் தோற்றம் பெற்றதைப் போல நாடகத்திலிருந்து சடங்கும் தோற்றம் பெற்றிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மட்டக்களப்பில் துரோபதை யம்மன் சடங்கின் தோற்றுவாய் இதற்கு உதாரணமாக அமையும். மாருதசேனனுக்குப்பின் (பங்கிடான்வெளி கண்ணாப்போடி) 1540 வாக்கில் மட்டக் களப்பின் சிற்றரசுப் பொறுப்புக்கு வந்த அவனது மகன் எதிர்மன்னசிங்கனின் காலத்தில் கொங்கு நாட்டிலிருந்து தனது நாடகக் குழுவோடு மலையாள நாட்டிற்கும் பின்னர்
- 103- வெல்லவூர்க்கோபால்

Page 55
மலையாள நாடும் மட்டக்களப்பும் மட்டக்களப்பிற்கும் வந்த தாதன் கடற்கரை வெளியில் ஆலமர நீளலில் தொடர்ந்தாற்போல் பதினெட்டு நாட்கள் மகா பாரதக் கதையினை மன்னனுக்கும் மக்களுக்கும் நிகழ்த்திக் காட்டியபோது அது கண்டு மகிழ்ந்த மன்னன் தாதன் குழுவினருக்கு பொன்னும் பொருளும் கொடுத்து வாழ்த் தியதோடு ஆண்டுதோறும் அதேகாலத்தில் அதேயிடத்தில் பதினெட்டு நாட்கள் மகாபாரதக் கதையினை நாடகமாக நடாத்த ஏற்பாடு செய்தானெனவும் அதனடிப்படையிலேயே அங்கு துரோபதையம்மன் வழிபாடு தோற்றம் பெற்றதோடு பாணி டவரின் இருப்பான அந்த இடம் பாண்டிருப்பானதெனவும் அது தொடர்பான தகவல்கள் கூறுகின்றன. இதனை தாதன் கல்வெட்டுப் பாடல்கள் மூலமும் உறுதிசெய்து கொள்ளலாம். இந்நிகழ்வானது சடங்கிற்கும் நாடகத்திற்கும் உள்ள பிணைப்பினை வெளிக்காட்டுவதாக அமையும்.
பண்டைய முத்தமிழ் நாடுகளில் ஒன்றாக விளங்கிய மலையாள நாட்டில் ஆடற் கலை மிகவும் உன் னத நிலையிலிருந்ததை வரலாறு தெளிவுறுத்தும். பதிற்றுப் பத்து பெருமைப்படுத்தும் மன்னர்களில் ஒருவனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் காலம் முதல் (கி.மு 2ம் நூற்றாண்டு) கூத்துக்கலை அங்கு சிறப்பிடம் பெற்றிருந்தமையை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியமுடியும். கி.பி 2ம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவனின் தம்பியான இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரக் காப்பிய நூல் கூத்தைப்பற்றி தெரிந்துகொள்ள நமக்குக்கிடைத்த பெரும் கொடை எனலாம்.
பண்டைய கேரளத்தில் கோவில்களை மையப் படுத்திய சமூகங்களே ஆடற்கலை வளர்ச்சியில் பெரும் பங்களிப்பினை நல்கின. இதில் கூத்தும் கூடியாட்டமும் மிக முக்கியத்துவம் பெற்றன. மத்திய கால கேரளத்திலும் இவற்றின் வளர்ச்சி வியாபித்தேயிருந்தது.
- 104- வெல்லவுள்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
கூத்தின் சிறுவடிவமாக (குறுங்கூத்து) பட்டகம்’ விளங்கியது. மிக்க நுட்பத் திறனைக் கொண்ட சாக்கியர் கூத்து (சாக்கைக் கூத்து) பண்டைய சேரநாட்டில் சிறப்புற்று விளங்கியதை சிலப் பதிகாரம் விரித்துக் கூறும் சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களிலும் சாக்கைக் கூத்து பற்றிய செய்திகளைக் காணலாம். நாட்டுப்புறக் கலைஞர்களிடம் தோன்றிய சாக்கைக் கூத்து கோயில் கலைஞர்களிடம் வளர்ந்து செழித்து ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்பட்டதோடு கூடியாட்டம், சீதங்கன் துள்ளல் மற்றும் பறையன் துள்ளலை உள்ளடக்கிய ஒட்டம் துள்ளல், பாம்புத் துள்ளல், பறையர் களி, புலையர் களி, பகவதிப் பாட்டு, கைகொட்டிக் களி, கோலம் துள்ளல், கொத்துமுறியாட்டம், என்பவற்றோடு செவ்வியல் கலையாக வடிவெடுத்துள்ள கதகளி போன்ற கலைகளாக சீராக்கம் பெற்றுள்ளமையை ஆய்வுகள் புலப்படுத்தும். கேரளத்தில் தொடர்ந்தாற்போல் எட்டு நாட்கள் ஆடப்படும் கிருஷ்னாட்டம் மற்றும் இராமனாட்டம் போன்ற கூத்துக்கள் பெரும்பாலும் கதகளியின் சாயலிலேயே தென்படுவதைக் காணலாம். கைகொட்டிக் களியையும் கதகளியையும் உள்வாங்கி தமிழகத்தின் பரத நாட்டியத்தையும் இணைத்துக்கொண்டு வடிவெடுத்ததே (3upTas68fuJITL Lub.
கதகளி அதன் அமைப்பியலில் இரு வடிவங்களைக் கொண்டிருந்தமை தெரிகின்றது. தமிழகத்தின் தெருக் கூத்து வடக்கத்தி - தெற்கத்தி எனவும் மட்டக்களப்பின் கூத்து வடமோடி - தென்மோடி எனவும் பிரித்தழைக்கப் படுவதைப் போன்று கதகளிப் பாணியும் அதன் ஆரம்பம் முதலே வடக்கன் சித்தா - தெக்கன் சித்தா (வடக்குப் பாணி - தெற்குப் பாணி) என இரு பிரிவுகளைக் கொண்டிருந்தமை தெரிகின்றது. தெய்யாட்டம் (தெய்வ ஆட்டம்), திரையாட்டம் அல்லது காளியாட்டம், முடியேத்து அல்லது காளி நாடகம் போன்ற கூத்து வடிவங்களும் கேரளக் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்ற ‘சாவீது நாடகமும் கேரளத்தின் கூத்துக்கலை வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மிகப் பரந்த அரங்கில் இடம்பெறும் சாவீது நாடகம் கிறிஸ்தவ
- 105- வெல்லவுர்க்கோபால்

Page 56
மலையாள நாடும் மட்டக்களப்பும்
வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டது. கி.பி 17ம் நூற்றாண்டில் கேரளத்து கூணன்குறிச்சி கிறிஸ்தவ ஆலயத்திற்கு வருகைதந்த கிறிஸ்தவ அறிஞர்களான வேதநாயகம் பிள்ளை மற்றும் சின்னத்தம்பி ஆகியோரால் இந்நாடகம் மேலும் சிறப்பாக மெருகூட்டப்பட்டதாக அதன் வரலாறு தெரிவிக்கின்றது. திருவிதாங்கூர் பகுதியில் புகழ்பெற்ற “மார்க்கம் களி’ என்னும் கிறிஸ்தவ ஆடற்கலையும் ஒரு கூத்து வடிவமாகவே தென்படுகின்றது.
மட்டக்களப்பைப் பொறுத்தவரை சோழராட்சிக் காலம் முதலே கூத்துக் கலை வளர்ச்சியுற சாதகமான சூழ்நிலை தென்படினும் கி.பி 16ம் நூற்றாண்டிலேயே பாண்டிருப்பில் மகாபாரத நாடகத்தின் அறிமுகம் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. மேலும் கி.பி 17ம் நூற்றாண்டை மையப்படுத்திய மட்டக்களப்பில் கூத்துக் கலை வளர்ச்சியுற மிகுந்த வாய்ப்பிருந்தமையை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பண்டிதர் வி.சி.கந்தையா, பேராசிரியர் சு.வித்தி யானந்தன், புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை, கல்விமான் எஸ்.வி.ஓ.சோமநாதர், தமிழறிஞர் அருள் செல்வநாயகம், பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றவர்கள் மட்டக்களப்பின் கூத்துக்கலை பற்றி விரிவான கட்டுரைகளை எழுதியிருந்தனர். பேராசிரியர் சி.மெளனகுரு 1983ல் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காக எழுதிய ‘மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்’ எனும் நூலே இதற்கான முதல் முயற்சியாக அமைந்தது. இதரில் நிறைவான தகவல் கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் மட்டக்களப்பின் வடமோடி - தென்மோடிக் கூத்துக்கள், விலாசம், மகுடிக் கூத்துக்கள், பறைமேளக் கூத்து மற்றும் வசந்தன் போன்றவை விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் இதனையொத்த கேரளத்து கலை வடிவங்களுடன் ஒப்புநோக்கத்தக்கவையாகவே யுள்ளன. இவை தனித் தனியாக விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவது அவசியமானதாக அமையினும் இந் நூலின் தேவை கருதி சில அம்சங்களை மட்டும் ஒப்புநோக்குவதே பொருத்தமானதாகும்.
- 106- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டக்களப்பையும் மலையாள நாட்டையும் பிணைக்கும் கலைவடிவங்களில் கேரளத்துக் கதகளியுடன் மட்டக்களப்பின் வடமோடிக் கூத்தினை நம்மால் இணைத்துப்பார்க்கமுடியும். இவை இரண்டிலும் இடம்பெறும் தர்க்கத் தரு மற்றும் சண்டைத் தரு போன்றவை ஒத்த தன்மையைக் கொண்டிருப்பதை நம்மால் அவதானிக்கமுடியும். மேலும் அரசர்க்கான உடையலங்காரத்தில் வடமோடிக்கலைஞர்கள் அணியும் ‘கரப்புடுப்பு அமைப்பினையே கதகளியும் கொண்டுள்ளது. தலைக் கிரீடத்தைப் பொறுத்தவரை மிகவும் உயரமான முடியினை கதகளிக் கலைஞர்கள் அணிவதைப் போன்று இரு புறத்திலும் பெரிதளவான காதுகளைக்கொண்டு கோபுர வடிவில் இரண்ட்டி உயரம் வரையில் அமைக்கப்பட்ட கிரீடங்களையே வடமோடிக் கூத்து அரசர்கள் அணிந்தனர். முகம் மற்றும் உடல் உறுப்புகளில் பூசப்படும் வண் ணங்களும் பாத் தரப் படைப்பினுக்கேற்றவாறே இரண்டு கூத்துக்களிலும் பொதுவாகத் தென்படுகின்றது.
- 107- வெல்லவூர்க்கோபால்

Page 57
LD60)6DUT6LT BİT(BLD |LDLLğbö956-TÜİL|LİD
கேரளத்தின் கதகளிக் கூத்து
- 108- வெல்லவுர்க்கோபால்
v
 

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டக்களப்பின் வடமோடிக் கூத்து
- 109- வெல்லவூர்க்கோபால்

Page 58
மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டக்களப்பினில் கீழ்த்தட்டு மக்களால் ஆடப்பட்டுவந்த மிகப் பழமைவாய்ந்ததான மகுடிக் கூத்து இரு சாராரையும் இணைக்கும் தன்மை மிக்கது. மலையாள நாட்டவர் மட்டக்களப்பில் குடியேறிய வரலாற்றுப் பதிவினை நாசுக்காக வெளிப்படுத்தும் தன்மையினை இதன் கதையம்சம் கொண்டுள்ளது. மேலும் இருவரிடமும் தென்பட்ட மந்திர வித்தாண்மை இங்கு முக்கியத்துவம் பெறும். இதில் தென்படும் ஆட்ட முறைகள் பொதுவாக கேரளத்தின் சாக்கியர் கூத்து, கைகொட்டிக் களி, பறையன் துள்ளல் போன்றவற்றின் நெளிவு சுளிவுகளை கொண்டமைவதை அவதானிக்கலாம். இதனுடைய கதையம்சம் குறித்துப் பார்ப்பது இங்கு பொருத்தமானதாக அமையும்.
‘மலையாளத்திலிருந்து ஒண்டிப் புலியும் அவனது மனைவி காமாட்சியும் தம்பி கங்காணிக் குறவனும் அவனின் மனைவி மீனாட்சியும் மட்டக்களப்பிற்கு வருகின்றனர். வரும் வழியில் சிலரும் அவர்களுடன் சேர்ந்துகொள்கின்றனர். மட்டக்களப்பை அவர்கள் வந்தடைந்ததும் அங்குள்ள மந்திர த நீ தரிரங்களையும் ம குடி விளையாட் டுக் களையும் பார்க்கின்றனர். மட்டக்களப்பாருக்கு ஒரு பிராமணக் குரு தலைமை தாங்குகின்றான். அவனுக்குப் பக்கபலமாக ஒரு சீடப்பிள்ளையும் கஞ் சாச்சாமி ஒருவனும் ஊமைச் சாமி ஒருவனும் ஐந்து பிராமணப் பிள்ளைகளும் இருக்கின்றனர்.
மட்டக்களப்பாருக்கும் மலையாளத்தாருக்குமிடையே போட்டி ஆரம்பமாகின்றது. தான் வைத்திருக்கும் ஐந்து சிறிய மடைகள், ஒரு வட்டா மடை மற்றும் பூரண கும்பத்தினை தனது மந்திரக்கட்டுப்பாடுகளையும் மீறி மலையாளத்தவர் எடுக்கவேண்டுமெனவும் அப்படி எடுத்தால் கொடிக்கம்பத்தில் கட்டியிருக்கும் பணப்பை ஒண்டிப் புலிக்கு சொந்தமாவதுடன் மலையாளத்தவர் மட்டக்களப்பில் குடியேறலாம் எனவும் பிராமணன் கூறுகின்றான். மலையாளத்தவர் இதில் தாங்கள் வென்றால் பிராமணன் தன் கூட்டத்துடன் மட்டக்களப்பைவிட்டு வெளியேறவேண்டு மென கோரிக்கை விடுத்துப் பந்தயம்
- l l 0- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
கட்டுகளின் றனர். நீணி ட போட்டியரின் டரின் னர் சகல மடைகளையும் மலையாளத்தவர் எடுக்க தோற்றுப்போன பிராமணன் தன் கூட்டத் தாருடன் மட்டக் களப்பைவிட்டு வெளியேறுகின்றான்”
(மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் பேராசிரியர் சி.மெளனகுரு, பக்கம் : 180, 181)
இதன் கதையம்சம் குறித்து கவனம் செலுத்துவது இங்கு பொருத்தமானதாக அமையும். இதில் பிராமணக் குருமீது வெளிப்படுத்தப்படும் காழ்ப்புணர்ச்சி கேரள சமூக வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவதாகும். கி பி 8ம் நூற்றாண்டின் பின்னர் மத்திய கால கேரளத்தில் முதன்மை நிலைக்கு தலையெடுத்த பிராமணர்களால் அதன் புராதன சமூகங்கள் புறம்தள்ளப் பட்டதோடு கீழ்த்தட்டு சமூகங்களாகவும் மாற்றம் கண்டன. குறிப்பாக பல்தொழில் குழுக்களைக் கொண்டிருந்த பறையர் சமூகத்தின் புரோகிதத் தொழிலும் அவர்களால் பறிக்கப்பட்டிருந்தது. கேரளத்தின் கீழ்த்தட்டு மக்களின் கூத்து அம்சங்களை முக்கியமாக உள்வாங்கியிருக்கும் மகுடிக் கூத்து மட்டக்களப்பிலும் பெரும்பாலும் கீழ்த்தட்டு மக்களின் கூத்துக்கலையாகவே வளர்த்தெடுக்கப் பட்டதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மட்டக்களப்பின் பறைமேளக் கூத்தும் இங்கு முக்கியத்துவம்
எழுப்பப்படும் தாள லயங்கள் போன்றவை நவீனப்படுத்தப்படாத தமிழகத்தின் தப்பாட்டத்தினையும் கேரளத்தின் பறையன் துள்ளல், பறையன் களி போன்றவற்றின் முக்கிய அம்சங்களையும் உள்வாங்கியிருப்பதனை இதில் உணரமுடியும்.
- 11 1 - வெல்லவூர்க்கோபால்

Page 59
மலையாள நாடும் மட்டக்களப்பும்
புராண இதிகாசக் கதையம்சங்களைக்கொண்டு குறுங் கூத்து வடிவமாக வெளிப்படும் கேரளத்தின் ‘பட்டகம் பெரும்பாலும் மட்டக் களப்பின் 'விலாச’த்தை யொத்த அமைப்பாகவே விளங்குகின்றது.
பொதுவாக ஏனைய வாழ்வியல் தன்மைகளைப் போன்றே நிகழ்த்து கலைகளிலும் மலையாள நாடும் மட்டக்களப்பும் ஒன்றுக்குள் ஒன்று பின்னிக்கிடப்பதை இதன்மூலம் நம்மால் உணர்ந்துகொள்ளமுடிகின்றது.
- 1 12- வெல்லவூர்க்கோபால்

LD60)60u jT6II bfT(BLD LDL Läbě6{{[]Lls)
08. மந்திரக் கலை
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப”
என்பது தொல்காப்பியர் கூற்று. நமது
பழம்பெரும் கலைகளுள் தனிச்சிறப்பு வாயந்ததும் மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாததுமாக மந்திரக்கலை விளங்கியது. முனிவர்களும் ஞானிகளும் ஆகம நூல்களில் இறைவழிபாட்டு முறைகளை மந்திரமாக அமைத்துக்கொடுத்தனர். நோய் மற்றும் வறுமையிலிருந்து விடுபடவும் தொழில், தனம், பூமி, வாகனம், செல்வாக்கு, அதிகாரம் என மனித வாழ்வில் விரும்பி ஏற்கக்கூடிய தேவைகள் அனைத்தையும் மந்திர சக்தியால் நிறைவேற்றமுடியும் என்பதும் இன்றும் பொதுவாக நம்பப்பட்டே வருகின்றது. நன்மையின் பால் அமைந்த மந்திரக் கலை காலப்போக்கில் தீமைக்கும் பயன்படும் கருவியாகவும் மாற்றப்பட்டது. பில்லி, சூனியம், ஏவல் போன்ற மந்திரச் செய்கைகள் இதன்பால் தோன்றியவையாகும்.
பொதுவாக மந்திரங்கள் யந்திரங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். மந்திரமும் யந்திரமும் உடலும் உயிரும் என்பது மந்திரக்கலை நிபுணர்களின் கருத்தாகும். மந்திரங்களுக்குரிய தேவதைகளுக்கு ஏற்றவாறே யந்திரங்கள் அமையும். அவை முக்கோண வடிவிலோ சதுரவடிவிலோ வட்டவடிவிலோ அன்றேல் ஒன்றிலொன்று இணைந்ததாகவோ அமையலாம். இதில் வட்டவடிவி லானவை சக் கரமென்றும் ஏனையவை அட்சர மென்றும்
- 13- வெல்லவூர்க்கோபால்

Page 60
மலையாள நாடும் மட்டக்களப்பும்
அழைக்கப்படும். செப்புத் தகடுகளில் யந்திரங்கள் வரையப்பட்டு அவற்றிற்கான மந்திரங்களை உச்சாடனம் செய்து உருக்கொடுத்து பூசைசெய்யும்போது அவற்றில் மிகுந்த சக்தி உருவாவதாக நம்பப்படுகின்றது.
மலையாள நாடும் மட்டக்களப்பும் மந்திர வித்தாண்மையில் நீண்டகால சிறப்புக்குரியவை. இவ்விரு பிரதேசங்களிலும் குரு சீடப் பரம்பரையினை நம்மால் அவதானிக்கமுடியும். மட்டக்களப்பில் மலையாள மந்திரங்களின் தாக்கம் நீண்ட காலமாக மிக்க வலுப்பெற்றவையாகவே உள்ளன. இதனை அவற்றின் உச்சரிப்பு, ஒலிவடிவம், சொற்கட்டு, யந்திர வரைவு இவற்றைக்கொண்டு ஒப்புநோக்கமுடியும். மட்டக்களப்பில் தமிழ் மந்திரங்கள், மலையாள மந்திரங்கள், தமிழும் மலையாளமும் கலந்த மந்திரங்கள், சமஸ்கிருத மந்திரங்கள் என்பவை தென்படுவதைப் போல கேரளத்தில் மலையாள மந்திரங்கள், தமிழும் மலையாளமும் கலந்த மந்திரங்கள், சமஸ்கிருத மந்திரங்கள் என்பவை செயல்முறையில் உள்ளன.
மந்திரக் கலையும் சோதிடக் கலையும் கேரளத்தில் வலுப்பெற இன்றும் முக்கிய பங்காற்றிக் கொண்டிருப்பவர்களில் நம்பூதிரிகள் தவிர்ந்த குறிப்பிடத்தக்க பலர் அங்குள்ள பணிக்கர் சமூகம் சார்ந்தவர்களாகவேயுள்ளனர். தமிழ் நாட்டிலும் இவர்களே இத்துறைகளில் மிக்க செல்வாக்குப் பெற்றவர்கள். மட்டக்களப்புப் பிரதேசத்தில் மலையாளத்தின் வழக்காறுகளும் பண்பாடுகளும் பல நுாறு ஆணி டுகளாக நின்று நிலை பெறுவதற்கு குறிப்பிடத்தக்கதான பங்களிப்பினை நல்கியுள்ளமை இவர்களைச் சார்ந்த தாகவேயுள்ளது.
கேரளத்திலும் மட்டக்களப்பிலும் மந்திரங்களின் பாவனை பெரும்பாலும் ஒத்த தன்மை வாய்ந்தன வாகவேயுள்ளன.
- 1 14- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
நோயுற்றவர்களுக்கு வேப்பிலை அடிப்பது தொடக்கம் திருநீறு போடுதல், திருநீறு ஒதிக் கொடுத்தல், தண்ணிர் ஓதிக் கொடுத்தல், பால் பழம் சீனி சோறு போன்றவை ஓதிக்கொடுத்தல் நீற்றுப் பூசணி, வாழை மரம், வாழைக்காய் போன்றவை வெட்டிக் கழித்தல்; பேயோட்டுதல், வீடு வளவு காவல் பண்ணுதல் பலி கொடுத்தல் டோன்றவற்றை மந்திரவாதிகள் செய்யும் தன்மையில் எந்தவிதமான வேறுபாடுகளும் தென்படுவ தில்லை. ஒருவரை நீண்ட காலமாக பீடித்திருக்கும் நோய்களுக்கு ஏதேனும் ஒரு துஷட தேவதையோ அல்லது எதிராளிகளால் மேற்கொள்ளப்படுகின்ற பில்லி, சூனியம், ஏவல், படு செய்கை போன்றவையோ காரணமாகிவிடுவதாக இவர்கள் கருதிச் செயல்படு கின்றனர். குழந்தையொன்று பால் அருந்தாது போனாலும் அருந்திய பால் செமிபாடு அடையா திருப்பினும் கண்ணுாறு, காத்தணை என ஏதேனும் காரணம் கற்பித்து இவர்கள் மந்திரங்கள் மூலமே இவற்றைக் குணப்படுத்த முனைகின்றனர். நம்பிக்கையும் உளவியல் பாங்குமே நோய்கள் குணமாவதற்கு காரணமாய் அமைவதாக இதற்கு விளக்கமளிக்கப்பட்டாலும் மந்திரங்களை உருக்கொடுத்து தொடர்ந்து அவற்றை உச்சரிப்பதன் மூலம் ஒரு சக்தி அதற்குள் உருவாவதை அதனை நேரில் அவதானிக்கும்போது நம்மால் மறுத்துரைக்க முடியாதுள்ளது.
இழப்பு, நோய், துன்பம் மற்றும் களவு என்பன தொடர்பில் மைபார்த்தல், குறி சொல்லுதல் மற்றும் கட்டுச் சொல்லுதல் போன்றவைளும் மந்திரக் கலைக்குள் அடங்குவதாகவே உள்ளது. விரும்பியதை சாதிக்கவும் விரும்பியதை அடையவும் வேண்டியவர்கள் அல்லது முக்கியஸ்தர்களை நம் வசம் இழுக்கவும் வசிய மந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. கணவன் - மனைவி, காதலர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களை இணைக்கவோ பிரிக்கவோ மந்திர சக்திக்கு முழு வலிமை இருப்பதாகவே இரண்டு பிரதேச மக்களும் இன்றுவரை நம்புகின்றனர். எதிரிகள் மற்றும் நாம் விரும் பாதவர்களை வீழ்த்தவும் தொல் ல  ைப் படுத்தவும் செயப் கையென பொதுவாக
- 5- வெல்லவூர்க்கோபால்

Page 61
மலையாள நாடும் மட்டக்களப்பும்
அழைக்கப்படுகின்ற சூனியம், பில்லி, ஏவல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.இதன் போது தலைமுடி, எலும்பு, தலையோடு, காலடி மண், உடுதுணியின் பாகம், உடும்பு, சேவல், எலுமிச்சம்பழம் போன்றவை செய்கையின் ஏவல் பொருளாக அமைகின்றன. நல்ல காரியங்களுக்கு நாம் அன்றாடம் வணங்கும் தெய்வங்களை துணையாகக் கொள்ளுவதைப்போல கெட்ட காரியங்களுக்கு துஷ்ட தேவதைகளை முன்னிறுத்துகின்றனர்.
மட்டக்களப்பில் இருளன், மருளன், காடேறி, கரையாக்கன், குறும்பரையன், சுடலை வைரவன், கங்கை வைரவன், மோகினிப் பேய், பிடாரி, பேச்சி, பிணந்தின்னி போன்ற துவடிட தேவதைகள் அடையாளப்படுத்தப் படுவதைப்போல கேரளத்தில் இருசி,காட்டேறி, குறும்பறை, பேச்சி, மாடாசாமி, மருளன், கருப்பசாமி, முனி, பிடாரி,மோகினிப் பிசாசி, சுடலை மாடன், பூதம், பிணந்தின்னி, சுடலை வைரவன் போன்றவை அடையாளப்படுத்தப்படுவதைக் 35|T600T6)Tb.
பொதுவாக மந்திரவாதி என்றாலே மக்களிடம் ஒரு பயஉணர்வு தென்படும். எனினும் கேரளத்துக் கிராமங்களிலும்சரி மட்டக்களப்புக் கிராமங்களிலும் சரி மந்திரமே மருந்தாகத் தென்படுவதால் மந்திரவாதிகள் கிராமச் சமூகக் கட்டமைப்பில் இன்றும் முக்கியத்துவம் பெற்றவர்களாகவே உள்ளனர். மெத்தப்படித்த மந்திரவாதிகளை உயர்நிலையில் வைத்துப் பார்க்கும் தன்மை இவ்விரு பிரதேசத்தாரிடமும் இன்னும் இருக்கவே செய்கின்றது.
- 1 16- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
கேரளத்திலும் மட்டக்களப்பிலும் வழக்கிலுள்ள பல மந்திரங்கள் அவற்றின் சொற்கட்டிலும் அமைப்பிலும் ஒத்த தன்மையைக் கொண்டிருப்பதை நம்மால் அவதானிக்க முடியும். இவற்றில் சில மந்திரங்களை ஒப்புநோக்குவது இங்கு பொருத்தமாக அமையும். கேரளத்தின் பாலக்காடு பகுதியில் வழக்கிலுள்ள ஒரு வேப்பிலையடிக்கும் மந்திரம் மட்டக்களப்பின் வெல்லாவெளி மற்றும் மண்முனைப் பகுதிகளில் ஒரு சில சொல் வேறுபாடுகளுடன் வழக்கிலிருப்பது தெரிகின்றது. இம் மந்திரம் தமிழகத்தின் எல்லையான கூடலூரை அண்மித்த நாடுகாணியைச் சேர்ந்த மாந்திரிக சோதிடர் ராசப் பணிக்கரிடம் பெறப்பட்டதாகும். ராசப் பணிக்கரின் தந்தையார் குமரப் பணிக்கரும் (குட்டிப் பணிக்கர்) பாட்டனார் கேசவப் பணிக்கரும் (பெரிய பணிக்கர்) பாலக்காட்டுப் பகுதியில் புகழ் பெற்ற மாந்திரிக சோதிடர்களாக விளங்கியவர்கள்.
கேரளத்தில்
ஓம் பரமேஸ்வரி மலையாள பகவதி! ஆதிசக்தி அனந்ததாயி அம்மே வா! உத்தாண்ட வீரி உமா மகேஸ்வரி சத்ரு சங்காரி சாம்பவி சடாதரி நவ துர்க்கா மகா காளி ஐயும் கிலியும் ஜவ்வும் அம்மே! அம்மே! ஜவ்வும் கிலியும் ஐயும் ஜாடு ஜாடு
சண்டாள தோசங்களை கொல்லு கொல்லு இருசு காட்டேறி ஏவல் பில்லி சூனியம் எரிஎரி தறிதறி முறிமுறி அடிஅடி ஆவேசு ஆவேசு ஓம் சுவாகா!
- 117- வெல்லவுர்க்கோபால்

Page 62
மலையாள நாடும் மட்டக்களப்பும்
மட்டக்களப்பில்
ஓம் அங்காள பரமேஸ்வரி ஆனந்த பைரவி ஆதிபரா சக்தியே வா! வா! உத்தாண்ட வீரி உமா மகேஸ்வரி சத்துரு சங்காரி சாமுண்டி வா! வா! ஐயும் கிலியும் சவ்வும் அகோரமா காளி வா! சண்டாளர் தோசங்களையெல்லாம் சாடு சாடு இருளி காடேறி ஏவல் சூனியம் அனைத்தையும் அண்ட பகிரண்டமும் நடுநடுங்க அறுத்தெறி அறுத்தெறி கட்டு கட்டு வெட்டு வெட்டு ஓம் சுவாகா!
மட்டக்களப்பின் தென் பிரதேசமான அக்கரைப்பற்றுப் பகுதியில் பெறப்பட்ட ஒரு பழைமையான சுளுக்கெடுக்கும் மந்திரம் மலையாள வடிவத்தில் அமைந்திருப்பது மிகவும் முக்கியத்துவம் பெறுவதாகவுள்ளது.
சுளுக்கெடுக்கும் மந்திரம்
ஓம்,அங்குல சுளுக்குல உண்டலை கொடம்
உலகுமளே சாமி தண்டெடு குதிச்சி ஓடிப்போ தடியெடு தடிமேலே புடி புடி மேலே கருப்பு ஜகை சட்டை
வெட்டைக்கிப் போ! கட்டு சுளுக்கு ஓடு ஒடு நசி நசி மசி மசி
ஓம் சுவாகா!
- 1 18- வெல்லவுர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
கேரளத்தைப்போல் மட்டக்களப்பிலும் பரம்பரை பரம்பரையாக மாந்திரிகத்தையும் சோதிடத்தையும் இணைத் தொழிலாக்கி வாழ்ந்துவரும் பலரை இன்றும் காணமுடியும். மட்டக்களப்பு கோவில்போரதீவைச் சேர்ந்த சோதிடமணி (ஆஞ்சநேயர் சோதிட நிலையம்) க.திருநாவுக்கரசு இதற்கு நல்லதோர் உதாரணமாகும். இவரது தந்தையார் சிவசிறி வீ.கணபதிப்பிளளையும் இதில் சிறந்த ஆர்வம் மிக்கவர். இவரது தாய்வழி மாமன்மாரான பரதேசிக்குருக்கள் மற்றும் வேலுப்பிள்ளை குருக்கள் ஆகியோர் மலையாள மாந்திரிகக் கலையில் சிறந்த வித்தாண்மை பெற்றவர்களாக விளங்கியவர்கள். சோதிடமணி திருநாவுக்கரசும் இத்துறைக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். அவரிடம் தமிழும் மலையாளமும் கலந்த பல மந்திரங்கள் பாவனையிலிருப்பதைக் காணமுடியும். ஏனைய மந்திரங்களிலும் இம் மந்திரங்கள் மிக்க சக்திமிக்கவை என்பது அவரது அனுபவ வாயிலாக வெளிவரும் கருத்தாகும். அவரிடமிருந்து பெறப்பட்ட மூன்று சிறிய மந்திரங்களை இங்கு உதாரணப்படுத்துவது பொருத்தமாக அமையும்.
பயந்த குழந்தைக்கு உச்சாடனம்
செய்யும் மந்திரம் -01
ஓம் மலையாள பகவதி !
ஆக்குற உச்சாடு பாலதேவதா! உன் பேரைச் சொன்னவுடன் சகல பூத பிசாசுகளும் ஒயும் பாறே போயனே என்று கொக்கரித்து ஐயும் கிலியும் ஜவ்வும் மாலமணி நினைத்த காரியத்தில வந்து நில் ஓம் சுவாகா!
- 1 19- வெல்லவூர்க்கோபால்

Page 63
மலையாள நாடும் மட்டக்களப்பும்
மந்திரம் -02
ஓம் நமசி வய!
ஓம் நமசி வய!
உன் பேரச் சொன்னவுடன் ஓடு ஒடு நே போயதே ஐயும் கிலியும் ஜவ்வும் மவ்வும் நசி நசி ஓம் நமசி வய உன் பேரைச் சொல்லி ஓடு ஒடு பேயே ஒடு பிசாசே ஒடு காத்தே ஓடு கறுப்பே ஒடு ஓம் நமசி வய உன் திரி சூலத்தால் குத்து குத்து விரட்டு விரட்டு முறி முறி நசி நசி ஓம் சுவாகா!
பயிர்களைப் பாதுகாக்கும் மந்திரம்
ஓம் நமோ பகவதி
பத்துத் திக்கும் கட்டி பதினாறு கோணமுங் கட்டி தொண்ணுாற்றாறு சுவாசமும் மடக்கிக் கட்டி அதனிடையில் பட்டால்" பன்றி பெருச்சாளி பல்லு க்டிச்சுண்டு தலையறுத்துப் போ அம்மே 1 ஓம் சுவாகா!
- 120- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
இதேபோல் வெல்லாவெளி சிறி முத்துமாரியம்மன் ஆலய அர்ச்சகர் சிவசிறி சி. மகாலிங்கசிவம் தனது தந்தையாரைப் பின்பற்றி சோதிடக் கலையிலும் மந்திரக் கலையிலும் மிக்க ஈடுபாடு கொண்டவராக விளங்குகின்றார். தமிழும் மலையாளமும் கலந்த பல மந்திரங்களை இவரும் பாவனைக்குட்படுத்துவது தெரிகின்றது.
இவ்வாறு தமிழும் மலையாளமும் கலந்த பல மந்திரங்களை மட்டக்களப்புப் பகுதிகளில் பரவலாகக் காணமுடியும். இன்றைய அம்பாரை மாவட்டத்திலுள்ள பண்டைய கிராமங்களில் வாழும் மரபுவழிச் சிங்கள வரிடையேயும் மலையாள மந்திரங்களின் தாக்கம் இருந்தேவந்துள்ளது. பொதுவாக திராவிடர்தம் மரபுவழிப் பண்பாட்டு அம்சங்களுள் இறுக்கமாகக் கட்டுண்டு கிடக்கும் மலையாள நாடும் மட்டக்களப்பும் மந்திர மாந்திரிக சோதிடக் கலைக்குள்ளும் தம்மை பிணைத்துக் கொண்டமை அவற்றின் ஒத்த தன்மையின் அடையாளமாகவே அமையும். W
- 121 - வெல்லவூர்க்கோபால்

Page 64
மலையாள நாடும் மட்டக்களப்பும்
சான்றாவணங்கள் தமிழ் நூல்கள்
O1.
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
O9.
1O.
11.
i2.
13.
14.
15.
16.
17.
13.
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
26.
27.
அனந்த கிருஷ்ண ஐயர் திருவாங்கூர் பழங்குடிகளும் சாதிசளும்
அனந்த கிருஷ்ண ஐயர் :
இராமநாதன், ஆறு கந்தையா, வி.சி. சலீம், ஏ.ஆர்.எம்.
ஷாவடிகான், ஏ.என்.எம்.
சிவசண்முகம், ஞா.
செல்வம், வே.தி.
செல்வம், வே.தி.
தாக்சாயினி, கோ நடன காசி நாதன்
நடராசா, எவ்.எக்ஸ்.சி.
மெளனகுரு, சி மெளனகுரு, சி மெளனகுரு, சி பாவேந்தன், எஸ். ராமேஷன், ஆர். வெல்லவுர்க் கோபால் வெல்லவுர்க் கோபால் வெல்லவுர்க் கோபால்
அகநாநூறு குறுந்தொகை சிலப்பதிகாரம் சோழநாட்டுச் சதகம் தொல்காப்பியம்
கொச்சின் பழங்குடிகளும் சாதிகளும் நாட்டுப்புறக் கலைகள்
மட்டக்களப்புத் தமிழகம் : அக்கரைப்பற்று வரலாறு
புத்தளம் வழலாறும் மரபுகளும் மட்டக்களப்பு குகன்குல வரலாறும்
மரபுகளும் ; பண்டைத் தமிழகத்தின் சமுதாய
உருவாக்கம் தமிழக வரலாறும் பண்பாடும் : இந்திய மரபுவழி ஆடற்கலைகள்
வன்னியர் ; மட்டக்களப்பு மான்மியம்
: அரங்கியல் : ஈழத்து தமிழ் நாடக அரங்கு : மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்
* கீழைத்தேய மரபுவழிச் சட்டங்கள்
அரியலூர் மழவராயர்கள் ; மட்டக்களப்பு வரலாறு ஒரு அறிமுகம் :தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் :தமிழக -ஈழ சமூகங்களின் உருவாக்கம் (கட்டுரை-பூபாளம் 2001- இந்தியா)
நமட்டார் நிகழ்த்து கலைகள் - களஞசியம்
பதிற்றுப் பத்து பெருந்தொகை
- 122- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
மலையாள நூல்கள்
மொழிபெயர்ப்பு-உதவி: பேராசிரியர் எஸ்.ஆர்.கே.பணிக்கர்
01.இளம்குளம் குஞ்சன் பிள்ளை கேரள சரித்திரத்திலே
இருளத்தஞ்ச ஏதுக்கள்
02.இளம்குளம் குஞ்சன் பிள்ளை சில கேரள சரித்திர பிரஸ்னங்கள் 03.இளம்குளம் குஞ்சன் பிள்ளை சேர சாம்ராச்சியம் ஒன்பதும்
04.
O5.
O6.
O7.
O8.
O9.
பத்தும் நூற்றாண்டுகளில்
கேசவமேனன், கே. பி. கழிஞ்ச காலம் கோபாலகிருஷ்னன், பி. கே. கேரளத்தின்ர சம்ஸ்காரிக
சுரித்திரம்
தாமோதரன், கே. கேரள சரித்திரம்
நாராயணன், எம். ஜி. எஸ் : கேரள சரித்திரத்தின்ர அதிஸ்தான
சிலகல்
பத்மநாபமேனன், கே. பி. கொச்சிராஜ்ய சரித்திரம்
போடிவாள், ஏ. கே. கேரளத்திலே கர்ஷக பிரஸ்தானத்
-தின்ர ஒரு லாகு சரித்திரம்
- 123- வெல்லவூர்க்கோபால்

Page 65
மலையாள நாடும் மட்டக்களப்பும்
ENGLISHBOOKS
01. Ауарат. A, Social Revelution in a Kerala History 02. Barbosa Durate A Description of the cast of Africa and
Malabar 03. Buchanan Francis : A Journey from Madras through Mysore,
Canara and Malabar 04. Elamkulam Kunchanpillai : Studies in Kerala History 05. Gangadharan, TK, : Evolution of Kerala History and Culture 06. Gangatharan, TK Kerala Art 07. Innes, C.A. : Malabar 08. Krishna Iyer, L.A. Kerala and her people 09. Krishna Iyer, K. V. . The Zamorians of Calicut 10. Mathew, K.S. Society of Medival Malabar 11. Narayanan, M.G.S. Aspects of Ariyanization in Kerala 12. Narayanan, M.G.S. Mourian problem in Sankam Liturature 13. Narayanan, M.G.S. The Perumals of Kerala 14. Padmanabamenan, K.P. History of Kerala 15. Panikkar, K.M. : History of Kerala 16.Ragava lyankar . Some Aspects of Kerala and Tamil Culture 17. Srithara Menan,A. : A Survey of Kerala History 18. Vydhiyanathan, KR. : Temples and Legends of Kerala 19. William Logan : Malabar Manuel
20. DISCOVER KERALA- MRM PUBLICATIONS
- 124- வெல்லவூர்க்கோபால்

மலையாள நாடும் மட்டக்களப்பும்
நூலாசிரியரின் நூல்கள்
O1.
O2.
O3.
04.
O5.
O6.
O7.
O8.
O9.
மட்டக்களப்பு வரலாறு ஒரு வட கிழக்கு சாகித்திய விருது
11.
கன்னி மலர்(கவிதைகள்) : சாகித்திய மண்டலச் சிறப்பு
-விருது (மாணவர் பிரிவு) முல்லை (கவிதைகள்) ஒரு கண்ணிர்க் காவியம் (கவிதைகள்) கொக்கட்டிச்சோலை தான்தோன்றிச்சரம் : இந்து கலாசார
(தல வரலாறு) அமைச்சின் விருது
முற்றுப் பெறாத காவியம் : வட கிழக்கு சாகித்திய விருது
இதய சங்கமம் (கவிதைகள்)
நெஞ்சக் கனல் (குறுங்காவியம்)
தமிழக வன்னியரும் ஈழத்து வன்னியரும் (ஆய்வு)
சுனாமி ஒரு மீள் பார்வை (அறிவியல்)
அறிமுகம் (ஆய்வு) : யாழ் - இலக்கியவட்ட விருது
மட்- கலாசாரப் பேரவையின் சிறந்த ஆய்வாளர் விருது
மலையாள நாடும் மட்டக்களப்பும்
வெளிவரவுள்ளவை
01. முழுமை பற்றிய சிந்தனைகள் 02. வெல்லவுர்க் கோபால் கவிதைகள்
- 25 - வெல்லவூர்க்கோபால்

Page 66


Page 67


Page 68
தமிழக அறிஞர்கள் பார்வை
ஈழத்துக் கவிஞர்களுள் என்னோடு நெ மாகிக்கொண்டவர் தம்பி கோபால் இ மின்னுக்கு அவர் வந்தது ஒரு புது இனை எனக்குத்தந்தது தனது எழுத்து லேயே என்னைச்சிறைப் பிடித்துக் கொன் கோபால் தொடர்ந்தும் ಓಣ,ಕ್ರŠ தமிழுக்குத் தரவேண்டும்
- கவிஞர் நீராட
பேராசிரியர் மீ ராஜேந்திரன் (20)
கோபால் அவர்களது தேடல்கள் உணர்வு பட்டும் அகலப்பட்டும் நிற்பது அவரது புதிய பரிமாணத்தை தோற்றுவிக்கின்றது.
ീബ് ബ് ഉണ്ണ
முனைவர் வே.இராமகிருஷ்னன் (2002) MA MEd PhD。
முகங்கள் பற்றிய தேடல்களைப் பதிவாக்கிக் கொண்டுள்ள நிலைப்பாடு ஆய்வாளனுக்கும்
ாளனாக அவரை அடையாளப்படுத்துகின்ற
பேராசிரியர் இராசத்திரசேகரன் (20) *SóMA*毽PhD
ஈழத்தவி எனத் தமிழகத்தில் அறியப்பட்ட கோபால் ஒரு உணர்வு பூர்வமான களுடன் கூடிய ஆய்வாளனாக இத்தை புதிய சிந்தனையாளனாக நம்முன் வியாட கவிஞர் பாவேந்தன். 霧 : : MA。BLPhö
அச்சகம், ©g 5, | Tel 065-2222076
 
 
 
 

5ளுக்கு அப்பால் ஆழப் முகப் பார்வையில் ஒரு அது படிப்போர்க்கு பல பும் ஏதுவாகின்றது
கொள்வதில் கோபால்
ப்பால் ஒரு சிந்தனை $.
கவிஞர் வெல்லவூர்க் கவிஞனாக கோட்பாடு னக்கும் மேலாக ஒரு த்து நிற்கின்றார்