கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எனது பார்வை (விளையாட்டு விமர்சனங்கள்)

Page 1


Page 2

எனது பார்வை
(விளையாட்டு விமர்சனங்கள்)
நூராணியா ஹஸன்
GlouGifug: மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் 1813, பூரணவத்தை, கண்டி.

Page 3
Title of the book
Author
Copy right
Publisher
Printers
Pages
Cover Design First edition
Price
வெளியீட்டு உரிமை
முதற்பதிப்பு வெளியீடு
Enathu Parvai (My View) (Sports review)
Nooraniya Hassan
Author
People Art and Literature Federation 18113, Poornawathe, Kandy
M.J.M. Printers 119, Main Street, Mawanella.
128-16 E. 144
A. Azeez Nizardeen
November 1999
100/=
ஆசிரியர்
நவம்பர் 1999 மக்கள் கலை இலக்கிய ஒன்றியம்
இலங்கை தேசிய நாலகம் ~ வெளியீடுகளில் உள்ள பட்டியல் தரவு
நூராணியா ஹலன் எனது பார்வை நூராணியா ஹஸன். கண்டி: மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், 1999
LJ. &. L5. 21
ISBN 955-8335-00-2 விலை: ரூ. 100.00 1. 796, 358 டி.டி.சி 21 i. தலைப்பு 1. ŚrflašGEL 2. விளையாட்டு
SBN 955-8335-00-2
: எம். ஜே. எம். அச்சகம்
119, பிரதான வீதி, மாவனல்லை
அச்சிட்டாளர்

உள்ளே
பதிப்புரை அணிந்துரை மதிப்புரை ஆசியுரை முனனுரை
200 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் தமிழன் முத்தையா முரளிதரன்
தென்னாபிரிக்க அணியே கடந்த ஆண்டின் ஒருநாள் ஆட்ட சாம்பியன்
கரப்பந்தாட்டம் உதைபந்தாட்டம் என்பன ஆசிய மட்டத்துக்கு வளர்க்கப்பட வேண்டும்
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றப் போவது எந்த அணி?
கட்சுகள் ஆட்டங்களில் வெற்றி பெறச் செய்யும் என்பதை நிரூபித்த ஆசியக் கிண்ண இறுதியாட்டம்
டெஸ்ட்டில் இலங்கை அணி சளைத்தது அல்ல அதனை நிரூபித்த முதலாவது டெஸ்ட்
டெண்டுல்கார் இதுவரை இலங்கையை ஒருநாள் ஆட்டத்தில் தோற்கடித்ததில்லை
ஒருநாள் ஆட்டச் சாதனையை இலங்கை டெஸ்ட்டிலும் தொடருமா?
நியூஸிலாந்தில் நிதானத்துடன் ஆடியிருந்தால் நின்று பிடித்திருக்கலாம்
பக்கம்
V νίί
Xii
xiv
O
25
32
47
56
64
72
7ך

Page 4
அஸ்ஹருதீன் சங்கீதாவை கைப்பிடிப்பாரா? தலைமைப் பதவியை கைநழுவ விடுவாரா?
போட்டிகளின் முடிவைத் தீர்மானிப்பது பந்து வீச்சாளர்களா? துடுப்பாட்டக்காரர்களா?
கிரிக்கெட்டைக் கட்டியாளும் சகலதுறை ஆட்டக்காரர்கள்
துடுப்பாட்ட வீரர்களுக்கு ஆடுகளம் சாதகமாக அமைய வேண்டும்
இலங்கை வீரர்களின் நீதான ஆட்டமே டெஸ்ட் வெற்றிகளை ஈட்டித் தரும்
கிரிக்கெட் உலகை ஆக்கிரமிக்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்
கிரிக்கெட் அணிகளின் வெற்றியில் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு
வெற்றிகளின் பின்னணியில் நிற்கும் விக்கெட் காப்பாளர்கள்
89
95
l()
106
l
6
122

பதிப்புரை
பல இலக்கிய நூல்களை வெளியிட்டு வரும் எமது மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் விளையாட்டுத் துறை சார்ந்த ஒரு நூலினை பதிப்பித்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றது. 1998 ஆம் ஆண்டு ஒரு காலை நேரம் எழுத்தாளரும், இலங்கை வானொலி முஸ்லிம் சேவை பணிப்பாளரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான நூராணியா ஹஎன் அவர்கள் என்னை சந்தித்தார். “லண்டன் ஒவல் மைதானத்தில் 20 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் தமிழன் என்ற பெருமையை முரளிதரன் பெறப்போகின்றார். அச்சாதனையை அவர் படைக்க மு:ன் அவரைப் பற்றிய கட்டுரை ஒன்றை பத்திரிகையில் எழுத வேண்டும் அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தினர்களைப் பற்றியும், குறிப்புக்களை உடன் அனுப்பி உதவுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவரது அந்த வேண்டுகோளை எனது இலக்கியப் பணிகளின் சுமையின் காரணத்தால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. அண்மையில் நூராணியா ஹஸன் அவர்கள் என்னோடு தொடர்பு கொண்டு விளையாட்டுத்துறை சார்ந்த "எனது பார்வை" என்ற நூலினை எழுதியுள்ளேன. இந்நூலில் முத்தையா முரளிதரனுக்கு முக்கியத்துவம் அளித்து அவரைப்பற்றிய நிறைய விடயங்களை எழுதியுள்ளேன். எனது வேலைப் பளு காரணமாக அதனை உடனடியாக வெளிக் கொணர முடியாதுள்ளது" என்றார்.
மலையகம் தந்த வீரர் முரளி என்றவுடன் அந்தப் பணியை எமது கலை இலக்கிய ஒன்றியத்தின் ஊடாக செய்யத் தீர்மானித்து அவருக்கு அறிவித்தேன். அவரின் சம்மதத்தோடு இந்நூலை வெளிக் கொணர செயலில் ஈடுபட்டேன். அதில் வெற்றியும் பெற்றேன்.

Page 5
இந்நூலை ஒர் அழகிய நூலாக பதிப்பித்து உங்கள் கரங்களில் தவழ விட்டுள்ளோம். உங்களின் ஆதரவினைத் தொடர்ந்து எமக்கு அளித்தால் நிறைய நூல்களை மலையக மண்ணில் பூக்க வைக்கலாம்.
நன்றி என்றென்றும்
அன்புடன் உங்கள்
இரா. அ. இராமன், தலைவர், மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், 1873, பூரணவத்தை,
கண்டி.
vi

அணிந்துரை
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுத்துறை முன்னேறிவரும் அளவுக்கு நூராணியா ஹஸனும் அறிமுகமாகி வருகிறார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் பணிப்பாளராகக் கடமையாற்றும் அதேவேளையில், அவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையின் தமிழ் நேர்முக வர்ணனையாளராகவும் விளங்குகிறார். 5:த்துத்துறையிலும் ஈடுபாடு மிக்க அவர், கிரிக்கெட் தொடர்பாகத் திசுகரனிலும் எழுதி வருபவர். அவரது தினகரன் கட்டுரைகள் நtலுருவம் பெற்று வருவது மகிழ்ச்சிக்குரியது.
ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டுத்துறை தொடர்பான நூலின் ஆசிரியரான நூராணியா ஹஸன், இந்நூலிலும் அத்துறை தொடர்பாகத் தான் தினகரன் பத்திரிகையில் எழுதிவந்த கட்டுரைகளைத் தொகுத்தளித்துள்ளார். கிரிக்கெட் தொடர்பான நூலாசிரியரின் ஆர்வமும், அறிவும் நூல் முழுவதும் பளிச்சிடுகின்றன.
நூராணியா ஹஸன் எழுதிச் செல்லும்போது, கிரிக்கெட் தொடர்பான பல விஷயங்களையும் ஆங்காங்கு விளக்கிச் செல்வது, சுவையையும், பயனையும் விளைவிக்கின்றன. குறிப்பாக ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கும், டெஸ்ட் போட்டிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் போன்றவற்றைச் சுட்டிச் செல்வது, வாசகரைக் கவரத்தக்க அம்சமாக உள்ளது. எதிர்காலத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளைவிட, ஒருநாள் போட்டிகளை விரும்பும் நிலை ஏற்படலாம் என்று நூலாசிரியர் கருதுகின்றார். அதில் உண்மை இல்லாமல் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பல சமயங்களில் ரசிகர்களைச் சலிப்படையச் செய்கின்றன.
நூலில் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவம், துடுப்பாட்ட வீரர்களின் முக்கியத்துவம், விக்கெட் காப்பாளரின் முக்கியத்துவம் ஆகியவை
yii

Page 6
பற்றிச் சிறப்பான விளக்கங்களை நூலாசிரியர் அளித்துள்ளார். யார் யார் இத்துறைகளில் சிறந்து விளங்கி வந்துள்ளனர் என்பதையும், கிரிக்கெட் போட்டிகளில் காணப்படும் குறைகளையும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பான கிரிக்கெட் ஆட்டங்களைத் தொடர்ச்சியாக இந்நூல் நிதானமாக விமர்சிக்கின்றது. அதேவேளை கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான உலகளாவிய பார்வையையும் இந்நூல் கொண்டுள்ளமை, இதன் சிறப்பாக விளங்குகின்றது. முத்தையா முரளிதரன் போன்ற சர்வதேச ரீதியல் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரை இந்நூல் மிகச் சிறப்பாக ஆராய்ந்து இனங்காட்டுகின்றது. உண்மையில் முரளிதரன் போன்றவர்கள் இலங்கைக்கு பெறுமையைத் தேடித்தரும் சர்வதேச ரீதியிலான கிரிக்கெட் வீரர் ஆவார்.
கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பான சில சிந்தனைகளையும் இந்நூல் வாசகரிடையே எழுப்புகிறது. கிரிக்கெட் தற்போது இலங்கையில் நகர்ப்புறப் பாடசாலைகளிலேயே முதன்மை பெற்று வருகின்றது. அத்தகைய பாடசாலைகளிலேயே அதற்கான வாய்ப்பு வசதிகள் அதிகமாக உள்ளன. ஆயினும் கிராமப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களும் கிரிக்கெட் ஆட்டத்தில் ஈடுபட்டு, தேசிய மட்டத்திற்கு பிரகாசிப்பதற்கான வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்துகின்றார். இத்தகைய பணியில் இலங்கைக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தனது பங்களிப்பை உரியமுறையில் செய்வதற்கு முன்வரவேண்டுமென நூரானியா ஹஸன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் பற்றியே முதன்மையாகச் சிந்திக்கப்படும் இந்நூலில், பிற விளையாட்டுக்களின் எதிர்கால வளர்ச்சி தொடர்பாகவும் ஆசிரியர் சிந்தித்துள்ளார். கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் ஆகியவை தொடர்பான தமது கருத்துக்களை நூலிற் சுருக்கமாக வரைந்துள்ளார். இவ்விளையாட்டுக்களை ஊக்குவிக்குமுகமாகக் கிராமிய, மாவட்ட மட்டங்களில் சுற்றுப் போட்டிகளைச் சிறிய அளவிலும், பாரிய அளவிலும் ஏற்பாடு செய்து, பரிசுகள் வழங்குவது நன்மை பயக்குமென ஹஸன் குறிப்பிடுகின்றார். அதேவேளை, பயிற்சிப் பாசறைகளை நடத்துவதுடன், பாடசாலைகளுக்கும், விளையாட்டுக் கழகங்களுக்கும் உபகரணங்கள் வழங்குவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் அவர் நூலில் தெரிவித்துள்ளார்.
viii

கரப்பந்தாட்டம் போன்ற தேசிய விளையாட்டின் மூலம் சர்வதேச மட்டத்திற்கு புகழ் பெறுவது ஏனைய விளையாட்டுக்களைவிட முக்கியமானது என்பதையும் நூலாசிரியர் வலியுறுத்திச் சொல்கின்றார். உள்ளுர் மட்டத்தில் அதிகளவு போட்டிகளை நடத்துவதன் மூலமே. இத்தகைய ஆட்டங்களை ஜனரஞ்சகமான விளையாட்டுக்களாக மாற்ற முடியும். மாறாக, வெறுமனே தேசிய அணியொன்றை மாத்திரம் வைத்துக் கொண்டு, சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்க நினைப்பது பகற்கனவே என்பதையும் ஹஸன் அழுத்தமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
எத்தகைய வாசகரும் சுலபமாகவும், சுவாரசியமாகவும் வாசிக்கத்தக்க முறையில் நூலை நூாராணியா ஹஸன் எழுதியுள்ளமை பாராட்டுக்குரியது.
எதிர்காலத்திலும் இதுபோன்ற பல்வேறு நூல்களை ஆசிரியர் தமிழ்கூறு நல்லுலகத்துக்கு வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
கலாநிதி துரை. மனோகரன் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை,
இலங்கை.
ix

Page 7
மதிப்புரை
பிளந்து கட்டுவது என்பது விறகைத்தான். ஆனால் தமிழகத்தில் ஒருவன் சிறப்பாகச் செயல்பட்டால் பொளந்து கட்டுகிறான்’ என்று குறிப்பிடுவார்கள். அந்த அர்த்தத்தில் உலகமெங்கும் கிரிக்கெட்டும் இன்று கிறிக்கட்டிக் கொண்டிருக்கிறது. இதன் பல்வேறு அம்சங்கள் குறித்து 'அம்' என்றால் ஒரு புத்தகம், "இம்' என்றால் இன்னொரு புத்தகம் ஆங்கிலத்திலும் இன்ன பிற மொழிகளிலும் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் தமிழில் அவ்வாறு இல்லையே என்கிற ஆதங்கம் எனக்கு நிறைவே உண்டு. தமிழ்ப் பத்திரிகைகளிலும் துண்டுகளாக - துணுக்குகளாக ஆங்காங்கே அவ்வப்போது சில செய்திகள் வருமே தவிர பல தகவல்களடங்கிய கட்டுரைகள் வருவது மிகக் குறைவு. ஆனால் தம்பி நூராணியா ஹஸன் இந்தக் குறையை பெருமளவு - தன் அரிய முயற்சிகளாலும், கடின உழைப்பாலும், தொடர்ந்து தீர்த்து வந்திருக்கிறார் என்பது மனதுக்கு இதத்தைத் தருகிறது.
நான் 'தினகரனில் கிரிக்கெட் பற்றிய என்னுடைய நினைவுகளைத் தொடராக எழுதிய போதும் சரி, சமீபத்தில் தமிழக ‘சாவி வார இதழில் உலகக் கோப்பை யாருக்கு என்கிற கட்டுரைத் தொடரை வெளியிட்ட போதும் சரி, இவைகளையெல்லாம் சேர்த்து, தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே என்று பல நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். உண்மையை பச்சையாகச் சொல்வதானால் எனக்கு அந்தத் துணிவு இருக்கவில்லை. ஆனால் தம்பி நூராணியா ஹஸனுக்கு இந்தத் துணிவு, ஒரு முறை இருந்தது மட்டுமல்ல இன்றும் தொடர்ந்து இருக்கிறது, எண் பது வியந் து பாராட்டப்படவேண்டிய ஒரு சங்கதி.
இரண்டு நிமிடங்களில் நாம் படித்து முடித்துவிடக் கூடிய ஒரு தகவலை அல்லது புள்ளி விவரத்தைச் சேகரிக்க அவர் என்ன
X

பாடுபட்டிருப்பார் என்பது இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும். அப்படிப் பார்த்தால் அவர் பேனாவில் நிரப்பப்பட்டிருப்பது மையல்ல; வியர்வைத்துளிகள்.
இன்னொரு உண்மையையும் நான் இங்கு சொல்லியாக வேண்டும். இதிலுள்ள பல செய்திகள் ஏற்கனவே பார்த்தது போல, படித்தது போலத் தோன்றுகின்றன. ‘அட்லீஸ்ட்’ எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இந்தப் புத்தகத்தின் அருமை போகப் போகத்தான் தெரியும். இன்னும் ஐந்து ஆண்டு காலத்தில் இது ஒரு தகவல் களஞ்சியமாக, பத்து ஆண்டு காலத்தில் ஒரு அரிய பொக்கிஷமாக மாறும் வாய்ப்பு இதற்கு உண்டு என்று நான் நம்புகிறேன். எனவே தம்பி நூராணியா ஹஸன் தொலை நோக்குடன் செயல்பட்டிருக்கிறார் என்று துணிந்து சொல்லலாம். இளைஞர் அவர், ஆகவே என்னுடைய இந்தக் கூற்றை தன் வாழ்நாளிலேயே அனுபவபூர்வமாகக் கண்டு கொள்ளும் சந்தர்ப்பம் அவருக்கு நிறையவே கிடைக்கும்.
அவரது நல்ல சேவைகள் தொடர இறைவன், அவருக்கு தேர்ந்த, தெளிந்த சிந்தனையையும் நீடித்த ஆயுளையும், திடகாத்திரமான ஆரோக்கியத்தையும் நல்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஹதா ஹாபிஸ்!
வாஞ்சையுடன் எஸ்.எம்.ஏ. ஜப்பார், 6, வடக்குப் பள்ளிவாசல் தெரு சாத்தான்குளம்-628704 தமிழ்நாடு,
இந்தியா.

Page 8
ஆசியுரை
விளையாட்டுத்துறை பற்றிய நூல்கள் பல தமிழில் இல்லை. ஆங்கில மொழியிலேயே பெரும்பாலும் விளையாட்டுத்துறை பற்றிய நூல்கள், சஞ்சிகைகள் பிரசுரிக்கப்படுகின்றன. இதற்கான காரணம் என்ன என்று நிச்சயமாகக் கூறமுடியாது. இந்நிலை காரணமாக தமிழ் பேசும் இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் அக்கறை கொண்டவர்களாயின் ஆங்கிலத்தில் வெளியாகும் பிரசுரங்களையே தவறவிடாது விழுந்து, விழுந்து படிப்பார்கள். பத்திரிகைகளை நாம் நோக்கினால் அவற்றிலும் ஆங்கிலப் பத்திரிகைகளே விளையாட்டுத் துறைக்கு முக்கிய இடம் அளித்து வருவதை நாம் அவதானிக்கலாம். எமது டெயிலி நியுஸ், ஒப்சேவர், ஜலன்ட் பத்திரிகைகளைப் போன்று வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைகள் விளையாட்டுத் துறைச் செய்திகளுக்கும், விமர்சனக் கட்டுரைகளுக்கும் இடம் அளிப்பதில்லை என்பதனை எவரும் ஏற்கவே செய்வர்.
இன்று மாணவர்களிடையே விளையாட்டுத்துறைச் செய்திகளுக்குப் பெருவரவேற்பு உண்டு. ஆனால் தேவைக்கேற்ற பிரசுரங்கள் போதிய அளவு இல்லை. இது பெரும் குறையே. இந்நிலையில் மாவனல்லை நூராணியா ஹஸன் எழுதியுள்ள இந்நூல் பெருவரவேற்புப் பெறும் என்பதில் ஐயமில்லை.
நூராணியா ஹஸன் தமிழ் வாசகர்களுக்கு புதியவர் அல்லர். தினகரன் பத்திரிகையில் நான் கடமையாற்றிய காலத்தில் ஹஸன் பல துறைகளிலும், கட்டுரைகள் எழுதியவர். அரசியல் அமைப்பு, வரலாறு தொடர்பான விஷயங்களில் இவர் எழுதிய கட்டுரைகள் பல்கலைக்கழக மட்டத்தில் கூட வெகுவரவேற்புப் பெற்றன. தினகரனிலேயே விளையாட்டுத்துறை பற்றி எழுத ஆரம்பித்தார். வாசகர்கள் இவரது கட்டுரைகளை பெரிதும் பாராட்டினர்.
xii

இலங்கை வானொலியில் இணைந்து கொண்ட பின்னாலே விளையாட்டு வர்ணனையில் இவர் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். வர்ணனையிலும் புதிய உத்திகளைக் கையாண்டு, பிற வர்ணனையாளருக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றார். பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வு நிலையத்தில் பயின்றதால் வெளிநாட்டுச் செய்தி விமர்சனத்திலும் திறமை மிக்கவர்.
இந்நூலை படிக்கும் போது இவரது எழுத்தாற்றலும், அறிவின் செறிவும் எளிதிற் புலனாகும். வாசகர்கள் இலகுவில் புரிந்து கொள்ளும் விதத்தில் மொழியைக் கையாண்டிருப்பது எத்தகைய வாசகர்களையும் அலுப்புத்தட்டாமல் படிக்கத் தூண்டும். இத்தகைய நூல்கள் இன்னும் பலவற்றை ஆக்கித்தர வேண்டும். இதுவே சிறந்த தமிழ்ப் பணியாக அமையும்.
ஆர். சிவகுருநாதன் தினகரன் - முன்னாள் ஆசிரியர் சட்டத்தரணி,
தலைவர் கலைக்கழக தமிழ் இலக்கியக் குழு
xiii

Page 9
முன்னுரை
என் நேசமிகு வாசகர்களே!
இன்னொரு நூலின் மூலம் உங்கள் உள்ளங்களோடு உறவாடும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கே அனைத்துப் புகழும். இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஆக்கங்கள் அனைத்தும் ஏற்கனவே பத்திரிகையில் பிரசுரமானவை. உங்களில் பலர் படித்தவை.
வாசக, நேயர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, இதனை ஒரு புத்தகமாக வெளிக் கொணர்வதா? இல்லையை? என்று வேலைப் பளுவுக்கு மத்தியில் யோசித்துக் கொண்டிருந்த போதுதான் இந்த வெளியீட்டுக்கான வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.
மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் இதனை தனது வெளியீடாகத் தருவதற்கு விருப்பம் தெரிவித்தது. நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, அவர்களிடமே எனது ஆக்கங்கள் அனைத்தையும் கையளித்தேன். அது புத்தமாக இப்போது உங்கள் கரங்களில் தவழ்கின்றது.
தமிழ் பத்திரிகைகளில் தற்போது விளையாட்டுச செய்திகள் வெளிவருவது போன்று, சில வருடங்களுக்கு முன்பு விமர்சன ரீதியான கட்டுரைகள் வெளிவருவது மிகக் குறைவாகவே காணப்பட்டது. அத்தகைய ஒரு சூழ்நிலையில் எழுதிய ஆக்கங்கள்தான் இந்தப் புத்தகத்தில் உள்ளவை.
நான் விளையாட்டுத் துறை சார்ந்த விமர்சனங்கள் எழுத ஆரம்பித்தது, ஓர் எதிர்பாராத விபத்தைச் சந்தித்தது போன்றதாகும். 1984 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் இங்கிலாந்துச் சுற்றுலா தொடர்பான ஒரு விமர்சனக் கட்டுரையை தினகரனில் எழுதினேன்.
xiv.

அதனைப் படித்துவிட்டு, அப்போதைய தினகரன் பிரதம ஆசிரியர் திரு. ஆர். சிவகுருநாதன் அவர்கள் தொடர்ந்து எழுதும்படி என்னை ஊக்கப்படுத்தினார். அத்தோடு நின்று விடாது, எழுதும் ஆக்கங்களுக்கு சன்மானமும் தந்தது, என்னை மேலும் எழுதத் தூண்டியது.
அந்த வகையில் நான் எழுத ஆரம்பித்து, ஒரு சதாப்தத்துக்கு பின்பு பிரசுரமான கட்டுரைகளையே இந்நூல் தந்துள்ளது. குறித்த கால, சூழ்நிலைகளுக்கு ஏற்ப வரையப்பட்ட கட்டுரைகள்தாம் இவை. தற்போது தரவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.
நான் தொலைக்காட்சி, வானொலியில் நேர்முக வர்ணனை செய்த போதும் கூட, பத்திரிகையில் எழுத ஆரம்பித்ததன் காரணமாகவே இத்துறை சார்ந்த அறிவினை வளர்த்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
அந்த வகையில் நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் இருந்து 3ண் எழுத்துக்குக் களம் தந்து, என்னை வளர்த்த பெருமை தினகரனுக்குண்டு. எனது கட்டுரைகள் வாசகர்களைக் கவரும் :ண்ணற் பக்க அமைப்பினைச் செய்தோரில் ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த அருள்சத்தியநாதனுக்கு முக்கிய பங்குண்டு.
இந்த நூலை நல்ல முறையில் வெளிக் கொணர்வதற்கு பலரும் 18ல்வேறு விதத்தில் தமது பங்களிப்பைச் செய்துள்ளனர். இந்நூலை வெளியிட்டவர்கள் கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தினர். ஆன் தலைவர் திரு. இரா. அ. இராமன் இந்நூல் வெளிவரும் வரை முழுமையாகத் தன்னை ஈடுபடுத்தி உழைத்தவர்.
பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்த் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி துரை. மனோகரன் அவர்கள் வேலைப் பளுவுக்கு மத்தியிலும் நல்லதொரு அணிந்துரையைத் தந்துள்ளார்.
அதே போன்று தென்னிந்தியாவின் பிரபல கிரிக்கெட் விமர்சகர் பத்ருல் மில்லத் அல்ஹாஜ் எஸ்.எச்.எம். ஜப்பார் அவர்கள் தனது மதிப்புரையின் மூலம் எனது ஆக்கத்தை கணிப்பிட்டுள்ளார். தினகரன் முன்னாள் ஆசரியர் சட்டத்தரணி திரு ஆர். சிவகுருநாதன் அவர்கள் வாழ்த்துரையில் ஊக்கம் தந்துள்ளார்.
XV

Page 10
இப்புத்தகத்தை முழுமையாக டைப் செட்டிங் செய்து பக்கங்களை அமைத்துத் தந்தவர். எம்.எஸ்.எம். அஸ்லம், பக்க வடிவமைப்பு எம்.ஏ.எம். அஸ்வர் அழகான புத்தக உருவில் வெளிக் கொணர உதவியவர் M.J.M. அச்சக உரிமையாளர் அல்ஹாஜ் எம்.ஜே.எம். முஸம்மில்.
எப்போதும் போன்று புத்தகத்தை ஒப்பு நோக்கி உதவியவர் கவிஞர் வி. ஜெகதீஸன். ஸிராஜ் எம். ஷாஜஹான், இக்பால் அலி, ஆகியோர் பலவிதத்திலும் உதவினர். எனது எதிர்பார்ப்புக்கு ஏற்றவிதத்தில் அழகிய அட்டைப் படத்தைப் படைத்தவர் கவிஞர் ஏ. அஸிஸ் நிஸாருத்தீன்.
அவர்களுடன் எனது வானொலி, தொலைக்காட்சி நேர்முக வர்ணனைகள் மற்றும் பத்திரிகை ஆக்கங்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான விமர்சனங்களை அவ்வப்போது தந்து, என்னை ஊக்கப்படுத்தும் வாசக, நேயர் நெஞ்சங்களுக்கும் என்றும் எனது நன்றிகள்.
எனது முதல் வெளியீடான "அஸ்கிரிய முதல் லாகூர் வரை நூலுக்கு நீங்கள் தந்த ஊக்கத்தின் வெளிப்பாடகவே இந்த நூல் பிரசவமாகியுள்ளது.
இந்தச் சிறிய நூலை உங்கள் கரங்களில் தவழவிட்டு, உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை ஏற்றுக் கொள்ள எப்போதும் நான் காத்துக் கொண்டே இருக்கின்றேன்.
இதோ எனது பார்வை. உங்கள் பார்வைக்காக!
அன்புடன் நுராணியா ஹஸன் 157, UYANWATTA, DEWANAGALA

200 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் தமிழன் முத்தையா முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் தனக்கெனத் தனியான ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ள முரளிதரன் தனது தனித்துவமான பந்து வீச்சினால் சர்வதேச மட்டத்தில் தனது பெயரை முழுமையாகப் பதித்துள்ளார்.
ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களாக இருந்தாலென்ன, டெஸ்ட் போட்டிகளாயிருந்தாலென்ன அங்கு நிச்சயம் முரளி நன்கு பிரகாசிப்பார். ரசிகர்களைத் தன்பால் ஆகர்சிப்பார்.
முரளிதரனின் புற சுழல் பந்து வீச்சு எவ்வாறு துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளதோ அவரது பந்து தடுப்பும் (பீல்டிங்) அவ்வாறுதான்.
அதனால் தான் முரளிதரன் இலங்கை அணிக்கு என்றும் இன்றியமையாத ஓர் அங்கத்தவர் என்று அணித் தலைவர் அர்ஜுனா அடிக்கடி அடித்துக் கூறுவார்.
டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள் ஆட்டங்களிலும் 100 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றியுள்ள ஒரே இலங்கைப் பந்து வீச்சாளர் முரளிதரன்தான். (சனத் ஜயசூரிய, ஷமிந்த வாஸ் ஒருநாள் ஆட்டத்தில் 100 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளனர்.)
இலங்கை அணிக்கு டெஸ்ட் அந்தஸ்த்து கிடைத்து, 1982ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக முதலாவது டெஸ்ட்டில் ஆடியது முதல், 1998ல் ஒவல் மைதானத்தில் ஆடிய இறுதி டெஸ்ட் வரை எத்தனையோ சுழல் பந்து வீச்சாளர்கள் அணியில் நுழைந்தனர்.
ഞെgfLffഖ

Page 11
எனினும், எந்தவொரு சுழல் பந்து வீச்சாளராலும் நீண்ட நாள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு சில ஆட்டங்களோடு அணியின் கதவுகள் அவர்களுக்கு அடைக்கப்படுவது தவிர்க்க முடியாத நிலை.
கடந்த காலங்களைப் பார்க்கும் போது ஷமிந்த வாஸைத் தவிர வேறு எந்தவொரு வேகப் பந்து வீச்சாளரும் தொடர்ந்தேர்ச்சியாக நின்று தாக்குப் பிடிக்க முடியவில்லை.
ஆனால், முரளிதரன் இவற்றுக்கு எல்லாம் அப்பால் சென்று, முரளி இடம் பெறாவிட்டால் இலங்கை அணியால் டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றியீட்ட முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளார்.
வெற்றி வீரர் முத்தையா முரளிதரன் கை அசைத்து தனத ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றார்.
வளரும் பயிரை முளையிலே இனங்கண்டு கொள்ளலாம் என்பதைப் போன்று முரளிதரனுடைய இளம் பராயத்திலேயே எதிர்காலத்தில் அவர் சாதனைகள் பல படைப்பார் என்பதை காணமுடிந்தது.
ஒவ்வொரு மனிதனதும் எண்ணங்களுக்கு ஏற்பவே அதற்குரிய பிரதி பலனும் கிடைப்பது யதார்த்தம். அந்த வகையில் முரளிதரனுடைய
நூராணியாஹஸன்
 
 

அப்பா எஸ். முத்தையா அவர்களின் நல்லதொரு பிரதிபலிப்புத்தான் முரளி.
எஸ். முத்தையா ஜே.பி. அவர்களை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். மலையகம் தந்த ஒரு தொழில் அதிபர். பல சவால்களைச் சந்தித்து, உயர் நிலையை அடைந்துள்ள ஒரு பெருமகன்.
கலை இலக்கிய ஆர்வலர்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கும் ஒரு புரவலர். மலையகத்தில் இடம்பெறும் அநேக நூல் வெளியீட்டு விழாக்களுக்கு முன்னின்று போஷிக்கத் தயங்காதவர்.
பல சமூக, சமயப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர். இவரது சமூகப் பணிகளைப் பாராட்டி சமூக, இலக்கிய அமைப்புக்கள் அவருக்கு பட்டமளித்து பொன்னாடை போர்த்தி கெளரவித்துள்ளன.
முரளியை எழுத வந்து, அவரது தந்தையைப் பற்றி எழுதிக் கொண்டு போவது அவரது பின்னணியை வாசகர்களுக்கு தருவதற்காகவே. முத்தையா அவர்கள் எப்போதும் பிறருக்கு நன்மை செய்ய எதிர்பர்ப்பது போன்றே மகனையும் வழி நடாத்திச் சென்றுள்ளார்.
முத்தையா - லக்ஷ்மி தம்பதியின் சிரேஷ்ட புதல்வனாக முரளிதரன் 1972 ஏப்ரல் 17ல் கண்டியில் பிறந்தார். அவருக்கு மூன்று சகோதரர்கள். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து, க.பொ.த. உயர்தரம் வரை கற்றார்.
முரளிதரன் தனது சிறு பராயம் முதலே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பாடசாலைப் பருவத்தில் அவரது கிரிக்கெட் ஆர்வம் சரியாக வெளிக் கொணரப்பட்டது. அங்குதான் சாதனைகளுக்கு ஆரம்பப்படி இடப்பட்டது. இரண்டாம் வகுப்புப் படிக்கும்போது அவரது கிரிக்கெட் ஆர்வம் அதிகரித்தது.
எனினும், பாடசாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரம்தான் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது. மாலை வேளைகளில் அவர் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மென்பந்து கிரிக்கெட் ஆடுவார்.
எனது பார்வை

Page 12
முரளியின் தந்தை எவ்வழியோ தாயும் அவ்வழியே. சமூகப் பணிகளில் மக்களுக்காகத் தன்னால் இயன்றவற்றைச் செய்வதற்கு எப்போதுமே தயங்குவதில்லை. அது முத்தையா அவர்களுக்கு தனது பணிகளை நல்ல முறையில் ஆற்றப் பெருந் துணையாக உள்ளது.
தனது எதிர்பார்ப்புக்களை, ஆசாபாசங்களை நன்கு புரிந்து கொள்ளக் கூடிய பெற்றோரைப் பெற்றதன் காரணமாக முரளிக்கு தனது எதிர்காலத்தைச் சிறு வயது முதலே நல்ல முறையில் திட்டமிட்டு எதிர்கொள்வதற்கு வாய்ப்பளித்தது.
இங்கிலாந்தில் சாதனை படைத்த, கண்டி திரும்பிய போது மலையக நடனக் குழு ஊர்வலமாக அழைத்துச் செல்லும் காட்சி
சிறு வயதிலேயே முரளியின் கிரிக்கெட் ஆர்வத்தைப் புரிந்த முத்தையா அவர்கள் நல்லதொரு கல்லூரியைத் தேர்ந்தெடுத்து அவருக்கு விளையாட்டில் மாத்திரமல்ல, கல்வியிலும் கலங்கரை விளக்காகத் திகழ்ந்தார்.
முரளியின் வீட்டுக்கு அருகில் “பேகர் குடும்பமொன்று வசித்தது. அவர்களுடன் முரளிக்கு நெருங்கிய தொடர்பு இப்போதும் அவுஸ்திரேலியா சென்றால் அவர்களைக் காணத் தவறுவதில்லை.
நூராணியாஹஸன்
 
 

அந்த பேகர் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சிறிய மைதானமிருந்தது. அங்குதான் முரளி சிறுவர்களுடன் மென் பந்து கிரிக்கெட் ஆடுவார். சிறுவயதிலேயே ஏனையோரைவிட அவர் பிரகாசித்தார். ே
முரளியின் சகோதரர்களான ரீரதன், சஸிதரன், பிரபாகரன் ஆகிய மூவருமே ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினர் எனினும், முதல்த்தரப் போட்டிவரை தொடரவில்லை. தந்தை வழியே வர்த்தகத்
க்கும் போதுதான் கடினப்பந்து (லெதர் பைப் பெற்றார். ஆறாம் வகுப்பிலிருந்து $கு உதவியாயிற்று 11 வயதாக முன்பே ல் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
திரு. பெர்னான்டோ ஆரம்பத்தில் த்தார். முரளி 13 வயதை
ந்து வீச்சில் திறமை காட்டியதை
ழல் பந்து வீச ஊக்கப்படுத்தினார்.
வேகப்பந்து வீசவே , அடையும்போது அவர் சுழ இனங்கண்ட பயிற்றுநர் பு
ரம் ஓடி, புற சுழல் பந்து (ஒவ்ஸ்பின்)
த்தோடு பாத சுழல் (லெக்ஸ்பின்)
ஆரம்ப வருடத்தில் ஒரு சகலதுறை ஐந்தாவது வீரர்) இடம் பெற்றார்.
வெகு விரைவிலேயே குறுகிய வீசக் கற்றுக் கொண்டார் வீச்சிலும் திறமை காட் ஆட்டக்காரராகவே அணியில்
தற்போது முரளி பத்தாவது அல்லது பதினோராவது வீரராகவே (சில சமயம் ஒன்பதாவது வீரர்) துடுப்பெடுத்தாட வருவார். எனினும் பாடசாலைப் பருவத்தில் அவர் துடுப்பாட்டத்திலும் திறமை காட்டினார்.
இலங்கைத் தேசிய அணியில் பல சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் அங்கம் வகிப்பதனால் முரளியின் துடுப்பட்டம் அவசியமானதல்ல. அதனால் அவர் கூடியளவு பந்த வீச்சிலேயே கரிசனை செலுத்தி தன்னை நன்கு வளர்த்துக் கொண்டார்.
பாடசாலைப் போட்டிகளில் அவர் நுழையும் போது பாடசாலை அணியில் திறமை மிகு பல வீரர்கள் இருந்தனர். அதிலும் குறிப்பாக புற சுழல் பந்து வீச்சாளர்களின் தேவை அவசியமானதாக இருக்கவில்லை.
எனது பார்வை

Page 13
ருவன் கல்பகே, பியால் விஜேதுங்க போன்றோர் அணியில் இடம் பெற்றதனால் முரளிக்கு பந்து வீசுவதற்கான வாய்ப்பு அரிதாகவே கிடைத்தது. இவ்விருவரும் பாடசாலை அணியிலிருந்த வெளியேற, பந்த வீச்சின் முழுப் பொறுப்பும் முரளியின் கரங்களுக்கக கிடைத்தது.
ஓய்வாக இருக்கும் ஒரு சந்தர்ப்பம்
பாடசாலைப் பருவ ஆட்டத்தில் 1990 இல் 109 விக்கெட்டுக்களையும் 1991 இல் 127 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார். இதன் மூலம் தேசிய மட்டத்தில் அவரது பெயர் அடிபட ஆரம்பித்தது.
அவரது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பெயர்தான் கல்லூரி அதிபர் ஏப்ரஹாம் ஸ்டீவன் அவர்கள். முதல்த் தரப் போட்டிகள்
நூராணியாஹஸன்
 
 

வரை முரளியை அழைத்துச் சென்றவர் அவர்தான். எப்போதும் அன்பாகப் பழகி வழிகாட்டினார்.
பாடசாலை போட்டிகளின் போது முத்தையா குடும்பத்தினர் போட்டிகளைக் கண்டு களிக்கச் செல்லத் தவறுவதில்லை. தனது குடும்பத்தார் மைதானம் வரை வருவது பள்ளி மாணவன் முரளிக்கு நல்ல தெம்பூட்டியது.
முரளியின் பாட்டிக்கு (முத்தையா அவர்களின் தாய்) அவரில் நல்ல பிடிப்பு முரளி ஆடும் ஆட்டங்கள் என்றால் இப்போதும் தொலைக்காட்சியை விட்டு விலகிக் கொள்ளமாட்டார். 80 வயதைத் தாண்டிய பின்பும் பேரனின் ஆட்டத்தில் அவ்வளவு அக்கறை.
அதைவிட இன்னொரு முக்கிய விடயம், ஒவ்வொரு அணி வீரர்களினதும் தோற்றத்தைப் பார்த்து, அவரை இனங்கண்டு, பெயரை உச்சரிக்கும் ஆற்றல் பாட்டிக்கு உண்டு.
பாடசாலைப் பருவ ஆட்டங்களில் எதிரணித் துடுப்பாட்ட வீரார்கள் முரளியின் பந்து வீச்சைப் புரிந்து கொள்வதில் மிகுந்த சிரமப்பட்டனர். இதன் காரணமாக மாணவனாக இருக்கும் போதே முதல்த் தரப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது.
அவுஸ்திரேலிய அகடமி அணிக்கெதிரான போட்டியில் 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இங்கிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி, மெதுவாக டெஸ்ட் அணியின் கதவுகளைத் தட்டினார்.
1992ல் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக கெத்தாராம அரங்கில் நடந்த டெஸ்ட்டில் ஆடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. கிரேக் மக்டெமெட்தான் அவரது பந்து வீச்சுக்குப் பலியான முதலாவது துடுப்பாட்ட வீரர். இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில் நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து வந்த டெஸ்ட் தொடர்கள் படிப்படியாக உலக அரங்கில் அவரது பெயரை உச்சரிக்க வழி வகுத்தன. நல்ல முறையில் பந்து வீசி, தன் பெயரைப் பதித்துக் கொண்டார். இலங்கை அணியில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
எனது பார்வை

Page 14
முரளிதரன் எவ்வளவுதான் புகழின் உச்சிக்கே சென்றாலும் தன் தந்தையைப் போன்றே அடக்கமான சுபாவத்தைக் கொண்டவர். எதையுமே அலட்டிக் கொள்ளாதவர். அதிகம் கதைக்கமாட்டார். கேட்ட கேள்விகளுக்குச் சுருக்கமாகப் பதில் சொல்வார்.
ஆனால், எல்லாவற்றையும் செயலில் காட்டுபவர். பந்தினால் பதில் சொல்பவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருக்கமாட்டார்.
a வெள்ளத்தில் மிதந்திருக்கும் முரளி
சிரித்த முகத்துடனே எப்போதும் காட்சியளிப்பார். தனது பந்து வீச்சுக்கு சிக்ஸர்கள் பட்டாலும் பொருட்படுத்தமாட்டார். அவரது தீட்சண்யமான பார்வை அடுத்த விக்கெட்டை வீழ்த்துவதிலேயே இருக்கும்.
அவரது சிறந்த பண்பினால்தான் இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள அனைவருமே அவரில் மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். அவர் சாவால்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் அவற்றைச் சமாதியாக்கிவிட துணை புரிபவர்கள் அவரது சக அணிச் சகோதரர்கள்தான்.
முரளிதரன் திறமையாகப் பந்து வீசும் போதெல்லாம் அவரது பந்து
நூராணியாஹஸன்
 
 

செயல்பட்டு வந்துள்ளனர். எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடுவர்களின் குற்றச்சாட்டுக்களை நிரூபணம் செய்ய முடியவில்லை.
முரளியின் புகழை உலகின் உச்சத்துக்கு ஏற்றியவர்கள் அவுஸ்திரேலியர்கள்தான். அவுஸ்திரேலிய நடுவர் டரல் ஹெயார் அவரின் பந்து வீச்சில் பிழை பிடிக்கப் போய் உலகின் கவனம் முரளியின் பக்கம் திரும்பியது.
நடுவர் டரல் ஹெயார் பந்து வீச்சில் குறைபிடித்ததன் மூலம் இலங் கையினி கிரிக் கெட் வளர்ச் சிக் கு மாபெரும் சேவையாற்றியுள்ளதாக ஒரு தடவை அர்ஜூனா சுட்டிக் காட்டினார்.
ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவிலும் அதனைத் தொடர்ந்து நியூசிலாந்திலும்தான் அவரது பந்து வீச்சில் குறை கண்டனர். பந்தை வீசி எறிவதாக (சக்கிங்) குற்றஞ் சுமத்தினர்.
1995-96 களில் அவுஸ்திரேலியாவுக்கான சுற்றுலாவில் நடுவர் டரல் ஹெயார் முரளியின் பந்து வீச்சு முறையற்றது என்றார். 14 தடவைகள் "நோ போல்" (பந்திலி) பந்துக்கான சமிக்ஞையைக் காட்டினார். பாத சுழல் பந்து (லெக்ஸ்பின்) வீசிய சந்தர்ப்பத்திலும்கூட 'நோ போல்’ பிடித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் முரளியை மறுமுனையிலிருந்து பந்து வீசுவதற்கு அர்ஜூனா அழைத்தார். மறுமுனை நடுவர் பந்து வீச்சில் எதுவிதக் குறையும் காணவில்லை. எனினும், முரளி துவண்டு விடவில்லை. மன உறுதியுடன் செயல்பட்டார்.
முரளிக்கு எதிரான குற்றச்சாட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, பல்வேறு கோணங்களில் அவரது பந்து வீச்சும் பரிசீலிக்கப்பட்டது. முடிவில் அவரது பந்து வீச்சில் எதுவிதக் குறையுமே இல்லை என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபணமானது.
பொதுவாக மேற்கு உலகில் எப்போதும் ஆசிய நாட்டு வீரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் எழுந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு முன்பும் இந்திய, பாகிஸ்தானிய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பல தடவைகள் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
எனது பார்வை

Page 15
இந்த வகையில் நடுவர்கள் மாத்திரமன்றி கிரிக்கெட் ரசிகர்கள்கூட கூக்குரலிட்டு முரளியின் கவனத்தைத் திசை திருப்ப முனைந்தனர். எனினும், இவைகளைக் கண்டு சற்றும் மனந் தளர்ந்துவிடாது, தனது இலக்கை அடைவதையே இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டார்.
முரளிக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதெல்லாம் பயிற்றுநர் டேவ் வட்மோர், அணித் தலைவர் அர்ஜூனா ரணதுங்க இலங்கை கிரிக்கெட் கட்டுபாட்டுச் சபை அதிகாரிகள் அனைவருமே ஒருமுகத்துடன் செயற்பட்டனர்.
தனக்களித்த வரவேற்புக்கும் பாராட்டுக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றுகின்றார்.
கடந்த வருடம் (1998) இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்ட சந்தர்ப்பத்தில்கூட, இங்கிலாந்து அணியின் பயிற்றுநர் லொயிட்ஸ் முரளியின் பந்து வீச்சில் குறைபிடிக்க முனைந்து, தன் மீதே சேற்றைப் பூசிக் கொண்டார்.
அப்போட்டியில் முரளி 682 பந்துகள் வீசியபோதிலும் அனுபவமிக்க நடுவர் டேவிட் ஷபர்ட், எட்நிகலஸ் ஆகியோர் பந்து வீச்சில் எதுவிதக் குறையும் பிடிக்கவில்லை. இங்கிலாந்தின் பத்திரிகைகளும் லொயிட்ஸின் கூற்றை விமர்சித்தன.
நூராணியாஹஸன்
 
 

இந்த வருடம் (1999) ஜனவரியில் அடிலேடில் இங்கிலாந்துடன் நடந்த ஒருநாள் ஆட்டத்திலும் நடுவர் ரோஸ் எமர்ஸன் முரளியின் பந்து வீச்சில் குறை கண்டார். "நோபோல்’ பிடித்தார்.
அர்ஜூனாவின் விளக்கத்தை அவர் ஏற்கவில்லை. எனவே, அர்ஜுனா அணி வீரர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு களத்திலிருந்து வெளியேறினார்.
இந்தச் சந்தர்ப்பத்தைத் தொடர்ந்து இலங்கைக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, மேற்கு அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தைக் கேட்டுக்கொண்டதற்கிணங்க, முரளியின் ஒத்துழைப்புடன் பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முப்பரிமாணப் படங்களும் 14 தெரிப்பு முறையிலும் படங்கள் பிடிக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் அவரது பந்து வீச்சு முறை விஞ்ஞான ரீதியாக ஆழ்ந்த முறையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்ந விஞ்ஞான ரீதியான பரிசோதனையில் முரளியின் 'ஒவ்ப் பிரேக் "ட்ரொப் ஸ்பின்' 'லெக்பிரேக்' என்பனவற்றில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முடிவு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலுக்கும் பின்பு அறிவிக்கப்பட்டது.
“இந்தப் பரிசோதனையின் போது முரளியின் பந்து வீச்சில் எதுவிதத் தவறும் இல்லை என்பது நிரூபணமானது. பரிசோதனையின் முடிவு தெளிவானது” என்று விஞ்ஞானக் குழுவுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் புறுஸ் எலியட் தெரிவித்தார்.
முரளிக்கு எதிராக நடுவர்கள் குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் பொறுமையை இழக்கவில்லை. நடுவர்களுடன் வாதாடச் செல்லவில்லை. அவரது உயர் பண்புக்கு நல்லதொரு உதாரணப் பருக்கை இது.
நடுவர்களின் தீர்ப்புக்கள் நிச்சயமானதாக இருந்தாலோ இல்லாவிட்டாலோ சிறந்ததொரு விளையாட்டு வீரர் என்ற வகையில் முரளி அவற்றை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு, அவற்றுக்கு
எனது பார்வை

Page 16
முரளியின் வெளிநாட்டுக்கான முதலாவது சுற்றுலா 1993-94 களில் இந்தியாவுக்கு எதிரானதாகும். மூன்று டெஸ்ட்டுக்களைக் கொண்ட அத்தொடரில் 420 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
தனது பந்து வீச்சுக்குப் பலியாகப் போகும் அடுத்த தடுப்பாட்ட வீரர் யாரென்று சிந்திக்கின்றாரோ? எனினும், 1995-96களில் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட சுற்றுலாவில் மூன்று டெஸ்ட்டுக்களில் 410 ஓட்டங்களுக்கு 15 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். இத்தொடரைத் தொடர்ந்து அவரது புகழ் உயர்ந்தது.
உள்நாட்டில் அவர் மிகுந்த திறமை காட்டியது 1997-98 களில் ஸிம்பாப்பேயிக்கு எதிராக ஆடிய போட்டிகளிலாகும். இரண்டு
நூராணியாஹஸன்
 
 

டெஸ்ட்டுக்களைக் கொண்ட தொடரில் 262 ஓட்டங்களுக்கு 17 விக்கெட்டுக்களைக் கைப்பறினார்.
அவரது டெஸ்ட் வாழ்க்கையில் சாதனைக்குரிய பந்து வீச்சு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டிலாகும். ஒவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட்டில் 220 ஓட்டங்களுக்கு 16 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் ஒரு டெஸ்ட்டில் 16 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஐந்து பந்து வீச்சாளர்களுள் ஒருவராகத் தன் பெயரையும் சேர்த்துக் (GT60õTLIT.
ஓர் இனிங்ஸில் 9 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய ஏழாவது வீரர் என்ற முத்திரையையும் பதித்தார். (65 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்)
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் முரளியின் பங்களிப்பு அளப்பரியது. அவரது முழுமையான பங்களிப்பின்றி கடந்த ஐந்து வருட காலத்துக்குள் இலங்கை எந்தவொரு டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெறவில்லை.
முரளி எப்போதும் அடக்கத்துடனே இருப்பார். இங்கிலாந்தில் டெஸ்ட்டில் சாதனை புரிந்து விட்டு வந்தபோது, கண்டி நகரில் அளித்த மாபெரும் வரவேற்பை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார். பின்னர் தந்தையின் வேண்டுகோளை ஏற்றுச் சம்மதித்தார்.
அந்தச் சந்தர்ப்பத்திலும் தனது கல்லூரியையும் ஆரம்பப் பயிற்றுநர் சுனில் பெர்னாண்டோவையும் அவர் மறந்து விடவில்லை. கல்லூரிக்கும் பயிற்றுநருக்கும் அன்பளிப்பாகத் தலா ஐம்பதினாயிரம் ரூபா வீதம் வழங்கினார்.
முத்தையா அவர்கள் தனது மகனை கல்வியில் உயர் நிலையை அடையச் செய்து, ஒரு சிறந்த தொழில் அதிபராக மாற்றவே ஆரம்பத்தில் இலட்சியமாகக் கொண்டிருந்தார். அதற்காக இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றுக்கு அனுமதிக் கட்டணமும் செலுத்தினார்.
எனினும், முரளி கிரிக்கெட்டில் முழுமையாக ஈடுபட்டதன் காரணமாக தொழில் முயற்சிகளை மறந்தார். அவரது சொந்தத் தொழில்
எனது பார்வை

Page 17
நடவடிக்கைகளை தம்பிமார் நிருவகிக்கின்றனர். முரளி தொழிலதிபர் ஒருவராக வராவிட்டாலும் உலகம் போற்றும் கிரிக்கெட் வீரராக வந்ததில் தந்தைக்கு பெருமகிழ்ச்சி.
முரளி முடியுமான அளவு விளையாடி, சாதனைகள் பல படைத்து, பிறந்த மண்ணுக்கு புகழ் சேர்க்க வேண்டும் என்பதே தந்தையின் 96) T.
இலங்கை அணிக்கு தலைமை தாங்கும் தகைமை முரளிக்கு உண்டு. எனினும், “பதவிகள் முக்கியமல்ல; பங்களிப்புத்தான் முக்கியமானது" என்று அவரது அப்பா முத்தையா அவர்கள் கூறுகின்றார்.
முரளி தனது பெற்றோரிடம் மிகுந்த அன்பு செலுத்துபவர். வீட்டில் இருக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது தாயுடன் கூடியளவு ஒட்டிக் கொண்டிருப்பார். சிறு வயதிலிருந்தே அவருக்கு அம்மாவிடம் கூடியளவு நெருக்கம்.
முரளி எந்தப் போட்டியில் கலந்து கொள்ளச் செல்லும் போதும்
தவறமாட்டார்கள். அநேக சந்தர்ப்பங்களில் கோயிலுக்குச் சென்று பிரார்த்திப்பர்.
முரளிக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் எழும் போதெல்லம் அவரது தாய் அவரை ஆறுதல்படுத்துவார். வாய்மையே எப்போதும் வெல்லும் என்பதை உணர்த்துவார். தனது மகனின் திறமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார்.
முரளி உலகின் எந்தக் கோணத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் ஆடினாலும் ஓய்வு நேரங்களில் அம்மா, அப்பாவுடன் கதைத்து, தன் திறமைகளை, சாதனைகளைப் பகிர்ந்து கொள்ளத் தவறமாட்டார்.
முரளியின் ஆரம்ப காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தற்போது அவர் போட்டிகளில் மிகச் சிறப்பாக திறமை காட்டுவதைத் காணக் கூடியதாக உள்ளது.
முதல் 50 விக்கெட்டுக்களையும் கைப்பற்றுவதற்கு அவருக்கு 13
போட்டிகள் தேவைப்பட்டன. எனினும், இறுதி 50 விக்கெட்டுக்களையும கைப்பற்றுவதற்கு 5 டெஸ்ட்டுகள் மாத்திரமே தேவைப்பட்டன.
murrrrrrreporfomorpor aipagnan papño
 

முரளிதரன் தற்போது 42 டெஸ்ட்டுகளில் 203 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். தற்போதுதான் 27 வயதை எட்டிப் பிடித்திருக்கும் முரளிக்கு சாதனைகள் பல புரிய இன்னும் காலமுண்டு.
எனினும் துரதிர்ஷ்டவசமாக இலங்கைக்கு வருடத்தில் கிடைக்கும் டெஸ்ட்டுக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. அது அவரது சாதனைக்குத் தடையாக உள்ளது.
அன்பு அம்மா, அப்பாவுடன் 1999 செப்டம்பர் ஆரம்பமாகும் வரை எதுவித டெஸ்ட்டிலும் ஆடும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைக்கவில்லை. முரளிக்கு 60 டெஸ்ட்டுகளில் ஆடும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் உலகில் மிகக் கூடுதலான டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்திய புற சுழல் பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்திருப்பார்.
புற சுழல் பந்து வீச்சாளரான லான்ஸ் கிப்ஸ் (மேற்கிந்திய தீவு) 79 டெஸ்ட்டுகளில் ஆடி 309 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இரண்டாமிடத்தில் இருக்கும் முரளிக்கு 203 விக்கெட்டுக்கள்.
அடுத்த நூற்றாண்டு பிறந்த பின்பாவது கூடுதலான டெஸ்ட்டுகளில் ஆடும் வாய்ப்பு இலங்கை அணிக்கு கிடைத்தால் அது முரளிக்கு பெரும் உந்து சக்தியாக அமையும்.
எனது பார்வை

Page 18
முரளிக்கு தனது இறுதி 100 டெஸ்ட் விக்கெட்டுக்களையும் கைப்பற்ற 15 டெஸ்ட்டுகளே தேவைப்பட்டன. 1998 அவரது டெஸ்ட் வாழ்க்கையில் மறக்கு முடியாத ஆண்டாகும். அவ்வருடம் 8 டெஸ்ட்டுகளில் ஆடி 68 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 98ல் வேறு எவரும் இச்சாதனையைப் புரியவில்லை.
முரளியின் பந்து வீச்சைப் பற்றி பலரும் புகழ்ந்துள்ளனர். “பளிங்குத் தரையில்கூட நல்ல சுழற்சியைப் பெறக் கூடியவர். அத்தகைய சுழற்சியை வேறு எந்தப் பந்து வீச்சாளராலும் பெற முடியாது” என்று இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ரீகாந்த் தெரிவித்தார்.
உலகிலுள்ள எந்தவொரு பிரபல துடுப்பாட்ட வீரருக்கும் எதிராக மிகவும் அச்சுறுத்தலாகப் பந்து வீசக் கூடிய ஒருவர்தான் முத்தையா முரளிதரன். டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றியீட்டுவதற்கு அவரது பங்களிப்பு இன்றியமையாததாகும்’ என்று பிரபல கிரிக்கெட் விமர்சகர் ட்டோனி கிரேக் கூறுகின்றார்.
இவ்வாறு பலராலும் புகழப்படும் முரளிதரன் இலங்கை மக்கள் அனைவரினதும் அன்பை வெகுவாக வென்றெடுத்தவர். அணியின் தலைமைப் பதவிகூட அவரைத்தான் சென்றடைய வேண்டுமென எதிர்பார்ப்பவர்கள் பலர் உளர்.
முரளியின் பந்து வீச்சின் போது துடுப்பாட்ட வீரர் மாத்திரமல்ல விக்கெட் காப்பாளரும் மிக அவதானமாக இருக்க வேண்டும். துள்ளி வரும் பந்து எப்படி அதன் திசையை மாற்றிக் கொள்ளும் என்பதை எவராலும் தீர்மானிக்க முடியாது.
விக்கெட் காப்பாளர் ரொமேஷ் கலுவித்தாரனவுக்கு முரளியின் பந்து வீச்சு என்றால் மிகுந்த குஷிதான். கலுவித்தாரன அடிக்கடி முரளியின் பெயரை உச்சரித்து, அவரை ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார்.
முரளியின் பந்து தடுப்பு (பீல்டிங்) சிறந்ததா? அல்லது பந்து வீச்சு சிறந்ததா? என்று வாதப் பிரதி வாதங்கள் நடந்தால் ஒரு முடிவெடுப்பது கடினம். அதற்குக் காரணம் அத்தகு திறமையான பந்து தடுப்பாகும்.
நூராணியாஹஸ்னி
 

அவர் பந்து தடுக்கும் பகுதியில் பந்து மேலெழுந்து (கட்ச்) சென்றால் துடுப்பாட்ட வீரர் நடுவரின் தீர்ப்பு வரை நிற்கத் தேவையில்லை. நிச்சயம் அவர் அவுட், முரளி தனது பந்து வீச்சில் பாய்ந்தெடுக்கும் (ரிட்டேன் கட்ச்) அலாதியானது.
கடந்த ஆறாவது ஆசியக் கிண்ணப் போட்டியின்போது இந்திய வீரர் அஸாருத்தீன் அடித்ததை பவுண்டரி எல்லைக்கு அருகில் வைத்து முரளி பிடித்தது அற்புதமானது. ஆட்டமிழந்து அரங்கம் நோக்கிச் செல்லும் அஸாருத்தீன் ரசிகர்களுள் ஒருவராக கைதட்டி தனது மகிழ்சியைத் தெரிவித்தார்.
‘நான் கிரிக்கெட் உலகினுள் நுழையும் போது 200 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்ற வேண்டுமென்ற ஆசையையே என்னுள் வளர்த்துக் கொண்டிருந்தேன். 27 வயதாகும் எனக்கு, நிச்சயம் 300 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற முடியும்.’
“இங்கிலாந்து அணிக்கு எதிராக இறுதியாக ஆடிய டெஸ்ட்டில் நான் கைப்பற்றிய 16 விக்கெட்டுக்களை என் வாழநாளில் மறக்க முடியாது. பாடசாலைப் பருவத்தில் கூட இத்தகைய திறமையை நான் காட்டவில்லை.”
இப்படிக் கூறும் முரளிதரன், இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு முன்பு கலந்து கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட்டுகளில் 16 விக்கெட்டுக்களும் நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட்டுகளில் 19 விக்கெட்டுக்களும் கைப்பற்றி திறமை காட்டிய போதும் இலங்கையினால் வெற்றி பெற முடியவில்லை.
131 டெஸ்ட்டுக்களில் 434 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி நிலை நாட்டியுள்ள கபிலின் சாதனையை முறியடிக்கும் எண்ணம் உண்டா என்று கேட்டபோது மெதுவாகப் புன்முறுவல் பூத்தார்.
“இத்தகைய சாதனையைப் பற்றிச் சிந்திப்பது நீண்ட தூரத்தில் தான் உள்ளது. ஒவ்வொரு டெஸ்ட்டிலும் கூடிய விக்கெட்டுக்களைக் கைப்பற்றி வெற்றியீட்ட முயல வேண்டும். கபிலின் சாதனையை முறியடிக்க எமக்கு வருடத்தில் அதிக அளவு டெஸ்ட்டுகள் தேவை' என்றார்.
எனது பார்வை

Page 19
"கிரிக்கெட்டில் மாத்திரமல்ல எந்தவொரு விளையாட்டையும் வெறி றிபெற வேணி டும் என ற நோக்கத்திலே நாணி விளையாடுகின்றேன். வெற்றி பெறாவிட்டால் அது என்னைப் பாதிக்கும். விக்கெட்டுக்களைக் கைப்பற்றாவிட்டாலும் பாதிக்கும். அதுவே எனக்கு ஓர் உந்து சக்தியாக மாறும்.”
"கிரிக்கெட்டில் தொடர்ந்து கற்க வேண்டும். ஆரம்ப 20 அல்லது 30 விக்கெட்டுக்களை இலகுவாக வீழ்த்தலாம். அதற்குக் காரணம் துடுப்பாட்ட வீரர்கள் பந்து வீச்சைப் புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். அதன் பின்னர் 100 விக்கெட்டுக்கள் வரை செல்வது மிகக் கடினமாகும்.
'பந்து வீசும் சந்தர்ப்பங்களில் அனுபவ முதிர்ச்சிமிகு வீரர்களான அர்ஜூன, அரவிந்தவிடம் கலந்தாலோசிப்பேன். பந்து தடுப்பாளர்களை நிறுத்தும் விதம் பற்றி புறுளில் யாட்லியிடமும் கதைப்பேன். பிரசன்னா, திலிப் தோஷி போன்ற பிரபல வீரர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இப்படிக் கூறும் முரளிதரன் ஒரு புற சுழல் பந்து வீச்சாளராக இருந்த போதும் பாத சுழல் பந்து வீசி 7 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். அவரது பாத சுழல் பந்து வீச்சுக்கு பலியான முதல் வீரர் தென்னாபிரிக்க ஜோன்றி ரோஸ்ட். அவர் 1993ல் சரவணமுத்து விளையாட்டரங்கில் “போல்ட்' செய்யப்பட்டார்.
டெஸ்ட் போட்டியில் முரளி கைப்பற்றிய முதல் விக்கெட் (முதல் டெஸ்ட்டில்) அவுஸ்திரேலியா வீரர் கிரேக் மெக்டமெட்டுடையது. அவர் எல்.பி.டப்ளியு முறையில் ஆட்டமிழந்தார்.
50வது விக்கெட் (13வது டெஸ்ட்டில்) இந்திய வீரர் நவ்ஜோர் சிங் சிதுவினுடையது. அவர் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
100வது விக்கெட் (27வது டெஸ்ட்டில்) நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் பிளமிங்குடையது. அவர் போல்ட் செய்யப்பட்டார்.
150வது விக்கெட் (36வது டெஸ்ட்டில்) ஸிம்பாப்பே வீரர் கை விட்டோலினுடையது. அவர் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
நூராணியாஹஸன்
 

200வது விக்கெட் (42வது டெஸ்ட்டில்) இங்கிலாந்து வீரர் டொமினிக் கோக்குடையது. அவர் பிடி கொடுத்த ஆட்டமிழந்தார்.
203 விக்கெட்டுக்களில் 105 கட்சுகள் மூலமும், 53 போல்ட் செய்யப்பட்டும், 22 எல்.பி.டப்ளிவ் முறையிலும், 12 பந்து வீசி தானே பிடி எடுத்ததன் மூலமும், 10 ஸ்டம்ப் செய்யப்பட்டும் 1 ஹிட் விக்கெட் மூலமும் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
அஸ்கிரிய முதல் லாஹர் வரை நூல் வெளியீட்டு விழாவின் போது முரளிதரனின் அப்பா எஸ். முத்தையா அவர்கள் நாலாசிரியரை பொன்னாடை
போர்த்தி கெளரவிக்கின்றார்.
42 டெஸ்ட்டுகளில் 2173.2 ஓவர்கள் பந்து வீசி (352 ஓட்டமற்ற ஓவர்கள்) 5464 ஓட்டங்களைக் கொடுத்து 203 விக்கெட்டுக்களைக் கைப் பற்றியுள்ளார். சிறப்பானது 65 ஓட்டங்களுக்கு 9
எனது பார்வை

Page 20
விக்கெட்டுக்கள். சராசரி 26.91 இனிங்ஸில் 5 விக்கெட்டுக்கள் 16 தடவைகள், போட்டியில் 10 விக்கெட்டுக்கள் 2 தடவைகள்.
முரளிதரன் ஒருநாள் ஆட்டங்களில் மிகச் சிறப்பாக ஆடி சாதனை படைத்துள்ளார். ஏழாவது உலகக் கிண்ணப் போட்டிகள் முடிவுறும் போது ஒருநாள் ஆட்டங்களில் அவர் 157 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
ஏழாவது உலகக் கிண்ணப் போட்டி முடிவுறும் போது ஒருநாள் ஆட்டங்களில் மிகக் கூடுதலான விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இலங்கைப் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். அதற்கு அடுத்து சனத் ஜயசூரிய 151 விக்கெட்டுக்கள்.
ஒருநாள் போட்டிகளில் பொதுவாக அவர் இரண்டு அல்லது மூன்று விக் கெட் டுக் களைக் கைப் பற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதனால் அவரது பங்களிப்பு இலங்கை அணிக்கு இன்றியமையாததாகும்.
அவரது பந்து வீச்சில் மற்றொரு முக்கிய அம்சம் சிக்கனமாக (இகோணமிக்கலி) பந்து வீசுவதாகும். ஓர் ஒவருக்கு சராசரியாக நான்கு ஓட்டங்கள் அளவிலேயே அவர் கொடுப்பதுண்டு. இது இலங்கை அணிக்கு மிகச் சாதகமானது.
ஒருநாள் போட்டிகளில் முரளி விக் கெட் டுக் களைக் கைப்பற்றாவிட்டாலும் கூட துடுப்பாட்ட வீரர்கள் கூடுதலான ஓட்டங்களைப் பெறத் தடையாகப் பந்து வீசுவது அவரது திறமைக்கு நல்ல எடுத்துக்காட்டு.
அதே போன்று அவரது சிறந்த பந்து தடுப்பினால் (பீல்டிங்) எதிரணி வீரர்கள் பெறக்கூடிய 15 முதல் 20 ஓட்டங்களைத் தடுக்கக் கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு.
உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவு பெறும் போது முரளிதரன் 115 போட்டிகளின் 52 இனிங்ஸ"களில் 24 தடவைகள் ஆட்டமிழக்காது ஆடி, 167 ஓட்டங்கள் பெற்றுள்ளார். மிகக்கூடிய ஓட்டம் 18 ஆகும். 53 கட்சுகளைப் பிடித்துள்ளார்.
நூராணியாஹஸன்
 

பந்து வீச்சில் 50 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 1038.3 ஓவர்கள் பந்து வீசி, 4380 ஓட்டங்களைக் கொடுத்து, 157 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். அவரது சிறப்பான பந்து வீச்சு 23 ஓட்டங்களுக்கு 5 விக் கெட்டுக்கள். 3 தடவைகள் 4 விக்கெட்டுக்களும் 2 தடவைகள் 5 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார்.
கடந்த 1998ல் இங்கிலாந்துக்கான சுற்றுலாவைத் தொடர்ந்து இங்கிலாந்து கவுண்டு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு முரளியைத் தேடி வந்தது. லங்காஷெயர் அணி அவரை அரவணைத்துக் கொண்டது.
கவுண்டி போட்டிகளில் தான் அங்கம் வகிக்கும் லங்காஷெயர் அணிக்கு தனது பங்களிப்பை மிகச் சிறப்பாக வழங்கி வருகின்றார். அந்த அணியில் இதுவரை எவரும் படைக்காத சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்தப் பருவ ஆட்டம் முடிவதற்குள் ஆறு போட்டிகளில் ஆடி 777 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 66 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். சராசரி 11.77 ஆகும்.
இந்தப் பருவகால ஆட்டத் தொடரில் 5 போட்டிகளில் 10 விக்கெட்டுக்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளார். 8 இனிங்ஸ"களில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளார்.
முரளிதரனர் கவுணர்டி போட்டிகளின் காட்டிய திறமை இவ்வாறுதான் அமைந்துள்ளது.
வொரிக் ஷெயர் அணிக்கெதிராக 44 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள், 73 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள், மொத்தம் 117 ஓட்டங்களுக்கு 14 விக்கெட்டுக்கள்.
சரே அணிக்கெதிராக 87 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள், 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள், மொத்தம் 157 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்கள்.
சசெக்ஸ் அணிக்கெதிராக 73 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள்,
61 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள், மொத்தம் 134 ஓட்டங்களுக்கு 13 விக்கெட்டுக்கள்.
எனது பார்வை

Page 21
கிளமோகன் அணிக்கெதிராக 104 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள், 72 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள், மொத்தம் 176 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்கள்.
ஹம்ஷெயர் அணிக்கெதிராக 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட், 114 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள், மொத்தம் 135 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்கள்.
டர்பிஷெயர் அணிக்கெதிராக 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள், 39 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள், மொத்தம் 61 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுக்கள்.
முரளிதரன் 1998ம் ஆண்டு ஆரம்பத்தில் இங்கிலாந்து மண்ணில் 34 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். தற்போது மொத்தம் 100 முதல்த்தர விக்கெட்டுக்களைக் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளார்.
கவுண்டி போட்டிகளில் அவர் காட்டி வரும் திறமை காரணமாக லங்காஷெயார் வாழ் மக்களின் கவனத்தை அவர் பெரிதும் ஈர்த்துள்ளார். அதேபோன்று இங்கிலாந்து பத்திரிகைகளும் வெகுவாகப் புகழ்ந்துள்ளன.
இங்லிஷ் காடியன் பத்திரிகை முரளிதரனின் பந்து வீச்சை லாவகமான படத்துடன் பிரசுரித்து இவ்வாறு எழுதியது. "முரளிதரன் பந்து வீசும் விதம் சர்ச்சைக்குரியதாக இல்லாது இருக்கலாம். ஆனால், அதன் பெறுபேறு அற்புதமானது."
முரளிதரனின் சுழற்சி (ஸ்பினிங்) சரித்திரத்துக்குச் செல்கிறது. புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கின்றது. என்றும் காடியன் தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தது.
லங்காஷெயரின் பயிற்சியாளராக இருந்த டேவ் வட்மோர் கருத்துத் தெரிவிக்கும் பொது “உலகின் முன்னணி பந்து வீச்சாளராகும் திறன் முரளிக்கு உண்டு. அவர் ஒரு புரட்சிகரமான பந்து வீச்சாளர் எந்தப் பிரபல துடுப்பாட்ட வீரரையும் திணர வைக்கக் கூடியவர்.”
லங்காஷெயரில் முரளிதரன் ஆடும் போட்டிகளைக் கண்டு களிக்க பெருந் திரளான ரசிகர்கள் வருவதுண்டு. அதற்கு முக்கிய காரணம்
நூராணியாஹஸன்
 

முரளிதரன் டெஸ்ட் தொடர்களில் புரிந்த சாதனைகள்.@ĠU LIITĥeosuus«bs
ƐnƐotůஎதிரணிTOM|RWBA5W 10W 1992-93 அவுஸ்திரேலியா273.10122554 2/10956.25 1992-93 நியூசிலாந்து152.10915674/13422.28 1992-93 இங்கிலாந்து161.001517354/11834.60 1993-94匈部岛uT247. 10121364 4/13634.00 1993-94 தென் ஆபிரிக்கா3174, 104735616 5/10122.252 1993-94 மேற்கிந்திய தீவுகள்115.5044744/4711,75 1993-94 இந்தியா3143.2021420125/16235.00| 1994-95 பாகிஸ்தான்|47.00616511/123 165.00 1994-95 smóllöUITŮ(86);287.002816832/6056.00 1994-95 நியூசிலாந்து286.003514175/64 20.141 1995-96 பாகிஸ்தான்3137.4026410155/68 27.331 1995-96 அவுஸ்திரேலியா292.00103483 2/224 116.00 1996-97 smóliburtüß6ų2105.3027195145/3313.92| 1996-97 நியூசிலாந்து281.001724163/4340. 16 1996-97 பாகிஸ்தான்153.00199866/9816.331 1996-97 மேற்கிந்தியத் தீவுகள்298.0032247| 65/3415.412 1997-98 இந்தியா2148.003136994/9941.00 1997-98@5弱uT2121.0039 31133/74 103.66 1997-98 smósuþLIITỪß6J2141.4050362177/9415.4121 1997-98 தென்ஆபிரிக்கா2139.5030400165/6325.00|留 1997-98 நியூசிலாந்து3155.0041376195/3019.782留 1997-98 இங்கிலாந்து1 113.50 41 22016 9/65 13.75 2 1 மொத்தம்42 2173.2035254642039/6529.91162函 T = QL6möĽ O= 96 lůM- மேடின் R= ஓட்டங்கள்W= விக்கெட் B= சிறப்பானதுğ
A= சராசரி 5W= இனிங்ஸில் 5 விக்கெட்டுகள்10W= போட்டியில் 10 விக்கெட்டுகள்

Page 22
அவர் பந்தை எவரும் வியக்கும் வண்ணம் அற்புதமாக சுழற்றுவதாகும்.
இந்தப் பருவகால ஆட்டத்தில் முரளி காட்டிய திறமை காரணமாக இன்னொரு வருடத்துக்கு தொடர்ந்து ஆடுவதற்கு லங்காஷெயர் அணி அவரை அழைத்துள்ளது.
இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் ஆடும் வாய்ப்புப் பெற்ற இலங்கையின் முதலாவது பந்து வீச்சாளரும் இரண்டாவது டெஸ்ட் வீரரும் அவர்தான். அவருக்கு முன்பு அரவிந்த டி சில்வா கெண்ட் அணிக்காக ஆடினார்.
முரளிதரன் பந்து வீச்சில் காட்டும் திறமை அவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருப்பதை எடுத்துக் காட்டுகின்றது. நிச்சயம் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்ல ஒரு நாள் ஆட்டங்களிலும் அவர் சாதனைகள் பல படைப்பார்.
50 ஆண்டுகளுள் முரளியின் சாதனைகளை வேறு எந்த வீரரும் படைக்கவில்லை.
முத்தையா முரளிதரன் இலங்கைக்குக் கிடைத்த ஒரு சொத்து! கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்த ஒரு முத்து!
வானொலி மஞ்சரி ஒக்டோபர் 1998. (ஆக்கம் விரிவாக்கப்பட்டுள்ளது.)
{ 0- நூராணியாஹஸன்
 

தென்னாபிரிக்க அணியே கடந்த ஆண்டின் ஒரு நாள் ஆட்ட சாம்பியன்
கிரிக்கெட் ரசிகர்களிடையே டெஸ்ட் போட்டிகளை விட ஒரு நாள் சர்வதேச ஆட்டங்களே கவர்ச்சி கொண்டவையாக விளங்கி வருகின்றன.
தினகரன் வார மஞ்சரியில் வெளியான முன்னைய கட்டுரைகளில் இந்த உண்மை ஏற்கனவே வலியுறுத்தப்பட்டிருந்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
இலங்கை அணி உலகக் கிண்ணத்தைக் சுவீகரித்ததன் காரணமாக இலங்கையே மிகச் சிறந்த அணி என்று பலர் கூறுவதுண்டு. ஆனால்,
உலகின் சிறந்த அணி எது என்று தீர்மானிப்பதற்கு இதுவும் ஒரு சிறந்த தரவு என்பது உண்மையானாலும், இதை மாத்திரம் ஒரு தரவாக கிரிக்கெட் விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
கிரிக்கெட் உலகில் உள்ள அனைத்து நாடுகளுடனும் மோதி வெற்றியீட்டி கிண்ணத்தைச் சுவீகரிப்பதென்றால் அதைவிட இன்னொரு சிறந்த அணி இருக்க முடியாதுதான். ஆனால்.
அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டாது; கூடிய வெற்றிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டிகளில் தெரிவாகி அதில் வெற்றி பெறுவதன் மூலம் மாத்திரம் ஓர் அணி சாம்பியனாகத் தெரிவு செய்யப்படுவதால், வெற்றி பெறும் அந்த அணி சிறந்த அணியாகிவிடமுடியுமா?
உலகின் சிறந்த அணியாக இல்லாவிட்டால் எவ்வாறு உலகச் சாம்பியனாவது என்றொரு கேள்வி எழுவது இயல்பானதே.
எனது பார்வை حصہ r O )

Page 23
நடந்து முடிந்துள்ள உலகக் கிண்ணப் போட்டிகளை எடுத்துக்கொண்டால் 1983, 1987, 1992 ஆம் ஆண்டுகளில் வெற்றியீட்டிய அணிகள் தமது வெற்றியை கொஞ்சமும் எதிர்பாராத நிலையிலேயே பெற்றுக்கொண்டன என்பது கவனிக்கத்தக்கது.
எனினும் 1975, 79, 96 களில் எதிர்பார்க்கப்பட்ட அணியே வெற்றியீட்டியதைக் காணலாம். எனவே உலகச் சாம்பியன் ஆனதற்காக அந்த அணியை உலகின் சிறந்த அணியாகக் கருதுவதற்கில்லை.
இந்த வகையில் பார்க்கும் போது தற்போது ஒரு நாள் ஆட்டத்தில் உலகச் சாம்பியனாக உள்ள இலங்கை அணி உலகின் மிகச் சிறந்த அணியா? என்ற கேள்வி எழுகிறது.
பல போட்டிகளில் இலங்கை அணியைத் தோற்கடித்த பாகிஸ்தான். அணியா? அல்லது பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்த தென்னாபிரிக்கா அணியா? மிகச் சிறந்த அணி என்ற கேள்வியும் எழவே செய்கிறது.
ஆகவே, சிறந்த அணி எது என்பதை கடந்த வருடம் போட்டிகளில் கலந்து கொண்ட அணிகளின் திறமையை அடிப்படையாகக் கொண்டு கணிப்பதே சிறந்தது.
ஒரு நாள் ஆட்டங்களை எடுத்துக் கொண்டால் மிகக் கூடுதலான ஒரு நாள் ஆட்டங்கள் கடந்த வருடமே இடம் பெற்றன.
கடந்த வருடம் முடிவுறும்போது 125 ஒரு நாள் போட்டிகள் நடந்து முடிந்திருந்தன. இவற்றுள் மிகக் கூடுதலாக ஆடிய அணி பாகிஸ்தான் அணி.
அதற்கடுத்ததாக இந்தியாவும் (32), தென்னாபிரிக்காவும் (30) இடம் பெறுகின்றன. அதே வேளை இலங்கைக்கு நாலாவது இடம் கிடைக்கின்றது. (29) போட்டிகள்.
இப்போட்டிகளில் மிகக் கூடுதலான வெற்றிகளை பெற்ற நாடு தென்னாபிரிக்கா. அந்நாட்டு அணி பெற்றுள்ள வெற்றிகளின் எண்ணிக்கை இருபத்தைந்து.
நூராணியா ஒறஸன்
 

அதற்கு அடுத்தபடியான இடம்தான் உலகச் சாம்பியனான இலங்கைக்கு கிடைக்கின்றது. 29 போட்டிகளில் 18 வெற்றிகள், 10 தோல்விகள், ! சமமானது. வெற்றி வீதம் 63.79%
மூன்றாம் இடத்தைப் பெறும் பாகிஸ்தான் அணி 38 போட்டிகளில் 23 வெற்றிகள், 15 தோல்விகள் வெற்றி வீதம் 60.52%
அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் சராசரி வெற்றி வீதமாக 50%ஐக் கொண்டுள்ளதால் இரண்டு அணிகளும் நான்காவது இடத்தைப் பெறுகின்றன.
இஜாஸ் அஹமட்
அவுஸ்திரேலியா 26 போட்டிகளில் 13 வெற்றிகள் 13 தோல்விகள். மேற்கிந்தியத் தீவு 20 போட்டிகளில் 10 வெற்றிகள், 10 தோல்விகள் ஏனைய டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள நான்கு நாடுகளும் வெற்றிக்கான சராசரி வீதம் 50ஐ விட குறைவாகவே பெற்றுள்ளன.
நியூசிலாந்து அணி 22 போட்டிகளி வெற்றிகளை ஈட்டியுள்ளது. தோல்வி எண்ணிக்கை 12 வெற்றி தோல்வி இல்லாமல் முடிந்த ஆட்டம்
எனது பார்வை

Page 24
ஒன்று. வெற்றி வீதம் 43.18% வரிசைப்படி ஆறாவது இடத்தை வகிக்கின்றது.
இந்தியா 32 போட்டிகளில் பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கை 13. தோல்விகள் 18. ஓர் ஆட்டத்தில் பெறுபேறுகள் இல்லை. வெற்றி வீதம் 42.18 சதவீதம். பெற்றுள்ள இடம் ஏழு.
கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து சற்றும் எதிர்பாராத விதமாக எட்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 20 போட்டிகளில் 7 வெற்றிகளையும், 12 தோல்விகளையும், ஒரு பெறுபேறற்ற ஆட்டத்தையும் அது பெற்றது. வெற்றி வீதம் 3750%
இறுதியாக டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஸிம்பாபே 9 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 15 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்ற அந்த அணி 12 தோல்விகளைச் சந்தித்தது. வெற்றி வீதம் 20%.
டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெற்றி வீதம் 20% ஆக இருப்பதால் 9 ஆவது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றது. 5 போட்டிகளில் ஒரு வெற்றி, 4 தோல்விகள்.
பதினோராவது இடத்தைப் பெறும் கென்யா 8 போட்டிகளில் 1 வெற்றியையும் 7 தோல்விகளையும் பெற்றது. வெற்றிவீதம் 12.50%.
நெதர்லாந்து 5 போட்டிகளில் ஆடி அனைத்திலும் தோல்வி அடைந்தது. இந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது இன்று ஒரு நாள் ஆட்ட உலகில் உத்தியோகப்பற்றற்ற சம்பியனாக இருப்பது தென்னாபிரிக்காதான்.
எனினும் கடந்த வருடம் தென்னாபிரிக்காவுடன் கலந்து கொண்ட ஒரே ஒரு போட்டியில் இலங்கை தென்னாபிரிக்காவை தோற்கடித்தது.
கடந்த வருட தரவுகள் இவ்வாறு இருக்கையில் இவ்வருடம் அணிகளின் நிலை வேறு விதமாக அமையக் கூடியதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன.
அவுஸ்திரேலியா அணி பென்ஸன் அன்ட் ஹேஜஸ் (இவ்வருடம் கால்டன்
அன்ட் யுனைட்டட்) ஆரம்பித்த கடந்த 17 வருட காலத்துள் முதன்முறையாக இறுதிப் போட்டிற்கு தகைமை பெறவில்லை.
( ) длутке илт буретај

இது இவ்வாறிருக்க பாகிஸ்தான் அணி தனது சிறந்த பந்து வீச்சினால் முதல் இரு இறுதிப் போட்டிகளிலும் மேற்கிந்திய தீவு அணியை தோற்கடித்து கிண்ணத்தைச் சுவீகரித்தது.
இந்த வருட அணிகளின் நிலையை நோக்கும் போது உலகில் உள்ள மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களைக் கொண்ட அணி பாகிஸ்தான் என்பதில் எவருக்கும் கருத்து முரண்பாடு இருக்க முடியாது.
ஆரம்ப வலது, இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் வக்கார் யூனுஸ், வஷம் அக்ரம், பாத சுழல் பந்து வீச்சாளர் முஸ்தாக் அஹமட், புற சுழல் பந்து வீச்சாளர் சக்லின் முஸ்தாக் ஆகியோர் அணியில் உள்ளனர்.
இவர்களுள் வக்கார் யூனுஸாக்கு நிகராக பெறுபேற்றின் அடிப்படையில் முன்நிற்பவர் தென்னாபிரிக்கா வீரர் அலன் டொனால்ட் மாத்திரமே.
பாத சுழல்பந்து வீச்சாளர்கள1டையே கம்பியூட்டர் கணிப்பின் அடிப்படையில் முஸ்தாக் அஹமடுக்கே முதலிடம் கிடைத்துள்ளது. அடுத்த இடம் அனில் கும்பிலிக்கும் மூன்றாவது இடம் ஷேன் வோனுக்கும் கிடைக்கிறது.
எனினும் உலகில் தற்போதுள்ள புற சுழல்பந்து வீச்சாளர் சக்லின் முஸ்தாக்தான் என்பதில் கிரிக்கெட் விமர்சகர்களிடையே கருத்து வேறுபாடில்லை. கடந்த வருடம் ஒருநாள் ஆட்டங்களில் மிகக் கூடுதலான விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்து வீச்சாளரும் அவர்தான்.
32 ஆட்டங்களில் 289 ஓவர்கள் பந்து வீசி 1270 ஓட்டங்களுக்கு 65 விக்கெட்டுக்களை முஸ்தாக் பெற்றார். (சராசரி 1953) அதற்கு அடுத்ததாக அனில் கும்லி 32 போட்டிகளில் ஆடி 61 விக்கெட்டுக்களைப் பெற்றுக் கொண்டார். (சராசரி 20.11)
வக்கார் யூனுஸ் 34 போட்டிகளில் பெற்ற விக்கெட்டுகளின் எண்ணிக்கை அறுபது. (சராசரி 22:46) அலன் டொனால்ட் 20 போட்டிகளில் பெற்ற விக்கெட்டுக்கள் ஐம்பத்தொன்று. (சராசரி 1543)
இந்த வகையில் பார்க்கும் போது பாகிஸ்தானின் வெற்றியின் பின்னணியில் பந்து வீச்சாளர்களே இருப்பதைக் காணமுடியும்.
எனது பார்வை -( )

Page 25
இது இவ்வாறு இருக்க இங்கிலாந்து-ஸிம்பாபே அணிகளுக்கிடையிலான ஒருநாள் ஆட்டத்தொடரில் ஸிம்பாபே வெற்றி கண்டதால் இங்கிலாந்தின் நிலை கேள்விக்குரியதாகியுள்ளது.
அதாவது கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து டெஸ்ட் நாடுகளிடையே இறுதி இடத்துக்கு தள்ளப்படுமா? என்பதுதான் அந்தக் கேள்வி
கடந்த வருடம் எட்டு வீரர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான ஒருநாள் ஓட்டங்களை பெற்றனர். இவர்களில் கூடுதலான ஒட்டங்களைப் பெற்றுள்ளவர் இந்திய அணித் தலைவர் சச்சின் டெண்டுல்கார்.
டெண்டுல்கார் 32 போட்டிகளில் ஆடி 1611 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். கூடிய ஒட்டம் 137 சராசரி 53.70 சதம் 6 அரைச்சதம் 9 என அவரது பட்டியல் செல்கிறது.
ஸஹிட் அன்வர் 35 போட்டிகளில் ஆடி 1592 ஓட்டங்களைப் பெற்று ள்ளார். கூடிய ஒட்டம் 115 சராசரி 53.06 சதம் 3. அரைச்சதம் 10. கரி கேள்ஸ்டன் 29 போட்டிகளில் ஆடி 1442 ஓட்டங்களைப் பெற்றார். கூடிய ஒட்டம் ஆட்டமிழக்காது 188 சராசரி 57.68 சதம் 6 அரைச்சதம் 4.
இஜாஸ் அஹமட் 37 போட்டிகளில் 1275 ஓட்டங்கள் பெற்றார். கூடிய ஒட்டம் 117. சராசரி 41.12 சதம் 1. அரைச்சதம் 9.
அரவிந்த டி. சில்வா 29 போட்டிகளில் பெற்ற ஒட்டங்களின் எண்ணிக்கை 1188 ஆகும். கூடிய ஒட்டம் 145, சராசரி 49.50 சதம் 4 அரைச்சதம் 5.
அமீர் சுஹைல் 29 போட்டிகளில் 1068 ஓட்டங்கள். கூடிய ஒட்டம் 111. சராசரி 46.04 சதம் 3. அரைச்சதம் 5.
மாக் வோ 25 போட்டிகளில் 1059 ஓட்டங்கள். கூடிய ஒட்டம் 130. சராசரி 46.04. சதம் 3. அரைச்சதம் 3.
டரல் கலினன் 24 போட்டிகளில் 1034 ஓட்டங்கள், கூடிய ஒட்டம் 124. சராசரி 57.44. சதம் 3. அரைச்சதம் 5.
நம்மிகக்கூடுதலான போட்டிகளில் பாகிஸ்தானிய, இந்திய வீரர்கள்ே ஆடியுள்ளனர். - - - -
{ i D , நூராணியாஹஸன்
 

இஜாஸ் அஹமட் 37, ஸஹிட் அன்வர் 35. ஸலீம் மலிக், வக்கார் யூனுஸ் 34. அஸாருத்தீன், டெண்டுல்கார், ரீநாத், மொங்கியா, ஜடேஜா, சக்லின் முஸ்தாக் ஆகியோர் 32. குரொஞ்ஞே, பிரசாத் 30.
பந்து சேகரிப்பில் கூடுதலானோ,ை ஆட்டமிழக்கச் செய்துள்ள விக்கெட் காப்பாளர் ரொமேஷ் களுவித்தாரன. எண்ணிக்கை 37 (25 பிடி 12 6t)Lib)
இயன்ஹீலி 36 (26 பிடி 7 ஸ்டம்ப்) முயின்கான் 36 (23 பிடி 13 ஸ்டம்ப்). டேவ் ரிச்சாட்ஸன் 29 (26 பிடி 3ஸ்டம்ப்). நாயன் மொங்கியா 29. (18 பிடி 11 ஸ்டம்ப்)
பந்து தடுப்பாளர்களிடையே கூடுதலான கட்சுக்களை பிடித்தோர்களில் அஸாருத்தின் (20) பிலமிங் (16) குரொஞ்ஞே (16) கும்லி (16) ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்த வகையில் கடந்த வருட தரவுகளையும் இந்த வருட ஆரம்பத்
தரவுகளையும் ஒப்பிட்டு நோக்கும் போது முதன் நிலை வகிக்கக் கூடிய அணி தென்னாபிரிக்காதான் என்பது துலாம்பரமாகத் தெரிகிறது.
அதற்கடுத்தபடியாக இலங்கை, பாகிஸ்தான், அணிகளும் மேற்கிந்திய தீவு, அவுஸ்திரேலியா அணிகளும் இடம் பிடித்துக் கொள்கின்றன. சிறந்த அணி எது என்ற தெரிவின் போது அணிகளின் சராசரி வென்ற வீதம் மிகவும் முக்கியமானதாகும்.
சரி, இனி இந்த ஆண்டில் எந்த அணி ஒரு நாள் ஆட்டங்களில் சிறந்து விளங்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தினகரன் 26 ஜனவரி 1997
سمعہ
;
iš
எனது.பார்வை ( )

Page 26
கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம் என்பன ஆசிய மட்டத்துக்கு வளர்க்கப்பட வேண்ரும்
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டின் தாக்கம் நகர், கிராமப்புற வேறுபாடின்றி பரவி இருப்பதைக் காணமுடிகிறது.
கிராமச் சிறுவர்கள் பெரும்பாலும் மென்பந்து மூலமே கிரிக்கெட் ஆடி வருகின்றனர். கடினப் பந்தை பயன்படுத்தி ஆடும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை.
பொதுவாக நகர்புற பாடசாலைகளிலேயே கிரிக்கெட் ஆடுவதற்கான வாய்ப்புக்கள் மாணவர்களுக்குக் கிடைக்கின்றன.
கிரிக்கெட் ஆட்டத்துக்கு ஏனைய ஆட்டங்களைப் போலன்றி அதிகளவு பணம் செலவு செய்ய வேண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கிராமப் புற பாடசாலை மாணவர்களுக்கோ அல்லது பின்தங்கிய பிரதேச இளைஞர்களுக்கோ கிரிக்கெட்டில் ஈடுபடக்கூடிய வாய்ப்புக்கள் குறைவு.
என்றாலும் தமது ஆர்வத்தைத் தணித்துக் கொள்வதற்காக வயல்வெளிகளிலும் தெருவோர மைதானங்களிலும் ஆடி வருகின்றனர்.
தற்போது சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்கும் இலங்கை அணியில் இடம் பெறும் வீரர்கள் நகர் சார்ந்த கல்லூரிகளில் படித்தவர்களாக உள்ளனர்.
கிராமப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களும் கிரிக்கெட் ஆட்டத்தில்
ஈடுபட்டு, தேசிய மட்டத்தில் பிரகாசிப்பதற்கான வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
{ 0- நூராணியாஹஸன்

இந்தப் பணியில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தனது பங்களிப்பை உரிய முறையில் செய்வதற்கு முன்வர வேண்டும்.
கிரிக்கெட் கிராம மட்டத்தில் இன்னும் வளர்ச்சியடையாத நிலையிலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கின்றது.
எமது நாட்டின் தேசிய விளையாட்டு எது என்று கேட்டால் பதில் சொல்லத் தெரியாதவர்கள் சர்வதேசக் கிரிக்கெட் வீரர்களின் பெயர்ப்பட்டியலை கடகடவென ஒப்பிக்கும் தன்மை கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
கிசிக்கெட்டின் நிலை இவ்வாறு இருக்க எமது நாட்டின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தைப் பற்றி உரிய முறையில் சிந்தித்திருக்கின்றோமா?
கரப்பாந்தாட்டத்தை வளர்ச்சி அடையச் செய்வது என்பது அவ்வளவு கடினமான ஒரு வேலையல்ல. சிரமமின்றி முன்னெடுத்துச் செல்லலாம்.
கிரிக்கெட்டைப் போன்று ஆரம்ப முதலீடாக பெருமளவு பணத்தை கரப்பந்தாட்டத்தை ஆரம்பஞ் செய்ய செலவளிக்கத் தேவையில்லை.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ஆடுகளத்தை உருவாக்க பெரும் பணம் தேவை. கரப்பந்தாாட்டத்துக்கு சிறியதொரு இடமே போதும்.
கரப்பாந்தாட்டத்துக்கு ஒரு வலையும் பந்தும் மாத்திரமே தேவைப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை பாடசாலை மட்டத்திலும் கிராம மட்டத்திலும் அபிவிருத்தி செய்வது கடினமானதொன்றல்ல.
எந்தவொரு நாடாயினும் தமது நாட்டின் தேசிய விளையாட்டுக்கு முதன்மை இடம் கொடுத்து, அதனை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பது இயல்பு.
இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் கரப்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனலாம்.
67zg5 UTitazvav

Page 27
வியாபார நிறுவனங்களும் கரப்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு அனுசரணையாக தமது பங்களிப்பை வழங்கலாம்.
இதற்காக கிராம, மாவட்ட மட்டத்தில் சுற்றுப் போட்டிகளை சிறியளவிலும் பாரிய அளவிலும் ஏற்பாடு செய்து பரிசுகள் வழங்குவது உற்சாகமூட்டக் ಲಿàlQLlg5,
அதே போன்று பயிற் சிப் பாசறைகளை நடத்துவதுடன் பாடசாலைகளுக்கும் கழகங்களுக்கும் உபகரணங்களைக் கொடுக்கலாம்.
இன்றும் கூட கிராமப் புறங்களிலும் கடலோரப் பகுதிகளிலும் வளர்ந்தோர் மத்தியில் கரப்பந்தாட்டம் செல்வாக்குப் பெற்றிருப்பதைக் காண முடியும்.
சாப் விளையாட்டுப் போட்டிகளில் கரப்பந்தாட்டம் இடம் பெறுகின்ற போதிலும் இலங்கை அணிக்கு இன்னும் தங்கப் பதக்கம் பெற முடியவில்லை.
எனினும் இலங்கை மகளிர் அணி 1991 ஆம் ஆண்டு இடம் பெற்ற சாப் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது.
நூராணியா ஹஸன்
 
 

தேசிய விளையாட்டின் மூலம் சர்வதேச மட்டத்தில் புகழ் பெறுவது ஏனைய விளையாட்டுக்களை விட மிக முக்கியமானதாகும்.
நடந்து முடிந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை வலைப்பந்தாட்ட அணி இரண்டாவது தடவையாக சம்பியனானது.
ஆசிய வலைப் பந்தாட்டப் போட்டிகள் முதன் முதலாக 1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது மலேசியா வெற்றியீட்டியது: இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றது.
1990 ஆம் ஆண்டு, இலங்கை ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் மலேசியாவை 46-40 என்ற புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இம்முறையும் இறுதிப் போட்டியில் இலங்கை அணி மலேசியாவை எதிர்கொண்டு, 49-42 என்ற புள்ளி வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ஆரம்ப போட்டியில் மாலைதீவை 103-12 என்ற புள்ளிகளாலும் இந்தியாவை 86-14 புள்ளிகளாலும் சிங்கப்பூரை 44-39 புள்ளிகளாலும் மலேசியாவை 49-35 புள்ளிகளாலும் தோற்கடித்தது.
அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை இலங்கை 57-24 என்ற புள்ளிகளால் தோற்கடிக்க சிங்கப்பூரை மலேசியா 60-52 என்ற புள்ளிகளால் தோற்கடித்தது.
இந்த வகையில் இலங்கை வலைப்பந்தாட்ட அணி மிகச் சிறப்பான முறையில் ஆசியப் போட்டியில் பிரகாசித்துள்ளதைக் காணமுடியும். இது தொடர வேண்டும்.
வலைப்பந்தாட்டமும் பாடசாலை மட்டத்தில் ஊக்கப்படுத்துவது இலகுவானதாகும். கரப்பந்தாட்டத்தைப் போன்றே ஆரம்பச் செலவுகள் மிகக் குறைவு.
வலைப்பந்தாட்டத்தைத் திட்டமிட்ட ரீதியில் வளர்ப்போமானால் எதிர் காலத்தில் இலங்கை சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்கும் வாய்ப்பைப் பெறும்.
எனது பார்வை

Page 28
உள்நாட்டு மட்டத்தில் அதிகளவு போட்டிகளை நடத்துவதன் மூலமே மக்கள் மத்தியில் இவ்வாட்டத்தை ஜனரஞ்சகமான ஒரு விளையாட்டாக மாற்ற முடியும்.
மாறாக வெறுமனே தேசிய அணியொன்றை மாத்திரம் வைத்துக் கொண்டு, சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்க நினைப்பது பகற்கனவே!
இது இவ்வாறு இருக்க கத்மண்டுவில் நடைபெறும் சாய் உதைபந்தாட்டப் போட்டியில் இலங்கை அணி துரதிர்ஷ்டவசமாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகவில்லை.
அரை இறுதிப் போட்டியில் எவரும் எதிர்பாராத விதமாக மாலைதீவுடன் தோல்வியடைந்தது.
மாலைதீவுடன் இதுவரை இலங்கை நான்கு தடவைகள் தோல்வியடைந்துள்ளது. ஒரே ஒரு தடவை மாத்திரம் 1993 இல் (3-1 கோல்களால்) வெற்றியீட்டியது.
மாலைதீவு சர்வதேச உதைபந்தாட்டப் பட்டியலில் 176 ஆவது இடத்தை (கடைசியில் இருந்து மூன்றாவது) வகிக்கிறது. இலங்கை 126 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை உதைபந்தாட்ட போட்டியில் துரித வளர்ச்சி காண வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் அதிக அக்கறை காட்டப்பட வேண்டியது அவசியம்.
இலங்கையில் முன்பெல்லாம் பிரபலமான ஒரு விளையாட்டாகவே உதைபந்தாட்டம் பிரகாசித்தது. இப்போதும் நகரப்புறங்களில் அது செல்வாக்கு இழக்கவில்லை.
கொழும்பிலும் பிரதான நகரங்களிலும் நடைபெறும் போட்டிகளை கண்டு களிக்க திரளும் பார்வையாளர்களைப் பார்க்கும் போது இந்த
உண்மையை தெரிந்து கொள்ளலாம்.
ஆனாலும் உதைபந்தாட்டத்தை தேசிய மட்டத்தில் வளர்ப்பதற்கு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
( ) நூராணியா ஹஸன்

சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளிலும் ஜனரஞ்சகமான ஒரு விளையாட்டாக உதைபந்தாட்டம் உள்ளது.
இந்நிலையில் சர்வதேச மட்டத்தில் இல்லாவிட்டாலும் ஆசிய மட்டத்திலாவது பிரகாசிப்பதற்கு எமது நாட்டில் போதிய திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
கிரிக்கெட் ஆட்டத்தோடு நின்றுவிடாது, உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் போன்ற மக்களுக்கு பரிச்சயமான விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்து, ஆசிய மட்டத்தில் சிறக்க, காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
தினகரன் 21 செப்டம்பர் 1997
எனது பார்வை -( )

Page 29
ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றப் போவது எந்த அணி ஆறாவது உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கைக்கு ஆறாவது ஆசியக் கிண்ணமும் வசப்பருமா?
ஆறாவது ஆசியக் கிண்ணப் போட்டி நாளை கொழும்பில் ஆரம்பமாகின்றது. போட்டிகள் ஆர். பிரேமதாஸ, எஸ்.எஸ்.ஸி. அரங்குகளில் நடைபெறவுள்ளன.
இக்கட்டுரை எழுதும் போது கொழும்பில் நிலவும் வானிலை ஆட்டங்களுக்கு மழை இடையூறாக அமையலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஆசியக் கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளுமே பெருத்த எதிர்பார்ப்புடன் களத்தில் குதித்துள்ளன.
உலகச் சம்பியனான இலங்கை இறுதியாகக் கலந்து கொண்ட (ஷார்ஜா, இந்தியா) இரண்டு சுற்றுப் போட்டிகளிலுமே வெற்றியீட்டியது. இரண்டு போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணி இறுதி ஆட்டங்களில் இலங்கையிடம் தோல்வி கண்டது.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் அண்மைக் காலத்தில் ஒருநாள் ஆட்டங்களில் பிரகாசிக்கக் கூடிய வாய்ப்பு அந்த அணிக்குக்
கிடைக்கவில்லை.
இந்தியாவில் நடைபெற்ற பெப்ஸி சுதந்திரக் கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டிக்கே இந்தியா தெரிவாகவில்லை.
இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எந்தவிதத்திலாவது ஆசியக் கிண்ணத்தை சுமந்து செல்லும் நோக்கிலேயே வருகின்றன.
(s) gillustrazofuzuat pav6ti;

இந்தத் தடவை உலகக் கிரிக்கெட் கவுன்ஸில் (ஐ.ஸி.ஸி) கிண்ணத்தை வென்றெடுத்துள்ள பங்களாதேஷம் முன்னைய வருடங்களை விட அதிக எதிர்பார்ப்புடன் களத்துக்குள் பிரவேசித்துள்ளது.
ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் இதுவரை பத்துப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள போதிலும் ஒரு போட்டியிலாவது வெற்றிபெறவில்லை.
முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டி 1984 ஏப்ரலில் சார்ஜாவில் நடைபெற்ற போது இந்தியா வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆசியக் கிண்ணம் 1986 மார்ச், ஏப்ரலில் இலங்கையில் நடைபெற்ற போது இலங்கை வெற்றி பெற்றது.
1988 அக்டோபர், நவம்பரில் பங்களாதேஷிலும் 1990 டிசம்பர் 91 ஜனவரியில் இந்தியாவிலும் 1995 ஏப்ரலில் சார்ஜாவிலும் நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவே வெற்றி பெற்றது.
இது வரை பாகிஸ்தானுக்கு ஒரு போட்டியிலேனும் வெற்றி பெறக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இந்தியா இதுவரை 13 போட்டிகளில் ஆடி 10 வெற்றிகளும் 3 தோல்விகளும் பெற்றன.
இலங்கை 16 போட்டிகளில் ஆடி 10 வெற்றிகளும் 6 தோல்விகளும் பெற்றது.
பாகிஸ்தான் 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகளும் 6 தோல்விகளும் கண்டுள்ளது.
பங்களாதேஷ் 10 போட்டிகளில் ஆடி 10 தோல்விகளையே சந்தித்துள்ளது.
ஒவ்வொரு அணியும் பெற்றுள்ள கூடிய ஓட்டங்கள்:-
பாகிஸ்தான் 45 ஓவரில் 284-3 சிட்டாக்கொங்கில் பங்களாதேஷ"க்கு எதிராக 29-10-1998.
இலங்கை 45 ஓவரில் 271-6 டாக்காவில் இந்தியாவுக்கு எதிராக 29-10-1998.
எனது பார்வை

Page 30
பாகிஸ்தான் 50 ஓவர்களில் 266-9 ஷார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக 07-04-1988.
இந்தியா 44 ஒவரில் 254 டாக்காவில் இலங்கைக்கு எதிராக 29-101988.
பங்களாதேஷ் 45 ஓவரில் 178-9 கல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக 31-2-1990.
ஆசியக் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவின் வெற்றிகளுக்கு பின்னால் நின்ற தலைவர் அஸ்ஹருதீனுடன் நால் ஆசிரியரும் முன்னாள் அமைச்சர் ரொனி டி மெல்லும் காணப்படுகின்றனர்.
குறைந்த ஓட்டம் பங்களாதேஷ் 35.3 ஓவரில் 94 மொரட்டுவையில் பாகிஸ்தானுக்கு எதிராக 31-03-1986.
இலங்கை 41 ஒவரில் 96 ஷார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக 08-041984.
பாகிஸ்தான் 39.4 ஓவரில் 134 ஷார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக
3-04-1984.
நாராணியா ஹஸன்
 
 

இந்தியா 42.4 ஒவரில் 169 ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக 07-04-1995.
ஆசியக் கிண்ணப் போட்டியில் இதுவரை இலங்கை, பங்களாதேஷ் வீரர்கள் எதுவித சதங்களையும் பெற்றதில்லை.
சதம் பெற்றுள்ளோர். 124* இஜாஸ் அஹமட் (பாக்) பங்களாதேஷ"டன் சிட்டாகொங் 29-10-1998.
112* சசின் டென்டுல்கார் (இந்) இலங்கையுடன் ஷார்ஜாவில் 09-04-1995.
105 முயீனுஸ் அதிக் (பாக்) பங்களாதேஷ"டன் சிட்டாகொங் 29-10-1988. 104* நவ்ஜோத் சிது (இந்) பங்களாதேஷ"டன் சந்திகாரில் 25-12-1990.
கூடிய ஒட்டம 89 அரவிந்த டி சில்வா (இல) பங்களாதேஷ"டன் கல்கதாவில் 31-12-1990.
78* அதார் அலிக்கான் (பங்) இலங்கையுடன் கல்கதாவில் 31-12-1990.
பந்து வீச்சு அப்துல் காதிர் (பாகிஸ்தான்) 8 போட்டிகள் 416 பந்துகள் 251 ஓட்டங்க
ளுக்கு 17 விக்கெட்டுக்கள் சராசரி 14,76 சிறப்பானது 3-15,
ரவி ரத்னாயக்க 7 போட்டிகள் 438 பந்துகள் 315 ஓட்டங்களுக்கு 15 விக்கெட் சராசரி 21.00 சிறப்பானது 4-32.
கபில் தேவ் (இந்தியா) 7 போட்டிகள் 328 பந்துகள் 195 ஓட்டங்களுக்கு 15 விக்கெட்டுக்கள் சராசரி 13.00 சிறப்பானது 4-31,
வஷம் அக்ரம் (பாக்) 9 போட்டிகள் 433 பந்துகள், 216 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்டுக்கள் சராசரி 18.00.
அர்ஜுன ரனதுங்க 15 போட்டிகள் 378 பந்துகள் 257 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்டுக்கள் சராசரி 23:36,
எனது பார்வை
é Ar - -

Page 31
சிறப்பான பந்து வீச்சு ஆக்கிப் ஜாவெட் (பாகி) 9 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் ஷார்ஜாவில் இந்தியாவுக்கு எதிராக 07-04-1995
அர்ஷாட் ஐயூப் (இந்) 9 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக 31.10-1998.
வஷம் அக்ரம் (பாக்) 9 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள். மொரட்டுவையில் பங்களாதேஷ"க்கு எதிராக 02-11-1988.
முத்தையா முரளிதரன் 8.2 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள். ஷாஜாவில் பங்களாதேஷ"க்கு எதிராக 06-04-1995.
கபில்தேவ் (இந்தியா) 9 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள். கல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக 04-11-1991.
சைபுல இஸ்லாம் (பங்களாதேஷ்) 10 ஒவர்களில் 36 ஒடடங்களுக்கு 4 விக்கெட்டுக்கள் ஷார்ஜாவில் இலங்கைக்கு எதிராக 06-04-1995.
கெளசீக் அமலீன் (இலங்கை) 9 ஓவர்களில் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள் கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிராக 06-04.1986ல்.
விஜேகுணவர்தன (இலங்கை) 9 ஓவர்களில் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள். டாக்காவில் இந்தியாவுக்கு எதிராக 29-10-1998.
ஆசியக் கிண்ணப் போட்டியில் இதுவரை இந்திய வீரர் கபில் தேவ் மாத்திரமே ஹற்றிக் (தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுக்கள்) கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளார்.
அவர் 1991 இல் கல்கத்தாவில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இச் சாதனையைப் படைத்தார்.
ஆசியக் கிண்ணப் போட்டியில் கடந்தகாலச் சாதனைகள் இவ்வாறு இருக்கையில் இவ்வருடம் நாளை போட்டிகள் ஆரம்பமாகின்றன.
நாளை ஆரம்பமாகும் ஆறாவது ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பெரும்பாலும் சுழல் பந்து வீச்சாளர்களே கூடிய செல்வாக்குச் செலுத்தக் கூடியவர்களாக இருப்பர்.
K. :) நூராணியா ஹஸன்

உலக மட்டத்தில் பிரகாசிக்கக் கூடிய சுழல் பந்து வீச்சாளர்கள் இல்லாத நிலையிலே பங்களாதேஷ் இங்கு வந்துள்ளது.
எனினும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கையில் உலக மட்ட சுழல் பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
தற்போது உலகில் உள்ள மிகச் சிறந்த சுழல் பந்து வீச்சாளர் (ஒவ்ப் ஸ்பின்) யார் என்றால் அது நிச்சயம் ஷக்லின் முஸ்தாக்தான்.
ஒருநாள் ஆட்ட வரலாற்றில் மிகக் குறைந்த போட்டிகளில் சக்லின் முஸ்தாகே 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய பெருமை பெறுகின்றார்.
அத்தோடு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மிகச் சிக்கனமாக (இகோனமிக்கிலி) பந்து வீசுபவரும் ஸ்க்லின் முஸ்தாக்தான்.
அதே போன்று அடுத்த முன்னணி புறசுழல் பந்து வீச்சாளர் யார் என்றால் வாதப் பிரதிவாதமின்றி முத்தையா முரளிதரன் என்றே பதில் வரும்.
எந்த ஒரு ஆடுகளத்தையும் தனக்கு ஏற்ற விதத்தில் சாதகமாக்கிப் பந்து வீசும் அபார ஆற்றல் முரளியின் விரல்களுக்கு உண்டு.
பளிங்குத் தரையாக இருந்தாலும் அதில் சிறப்பான சுழற்சியைப் பெறக்கூடிய வீரர் ஒருவர் என்றால் அது முத்தையா முரளிதரன் என்பது நிதர்சனம்.
பாத சுழல் பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரையில் முதல் தரப் பந்து வீச்சாளர்கள் இருவர் இடம் பெறுகின்றனர்.
பாகிஸ்தான் வீரர் முஸ்தாக் அஹமட் மிகச் சிறப்பாகப் பந்து வீசுபவர். அவருக்கு சற்றும் சளையாதவர் இந்திய வீரர் அணில் கும்ள்ே.
இவர்களுடன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளில் பல பகுதி நேரச் சுழல் பந்து வீச்சாளர்களும் இடம் பெறுகின்றனர்.
இந்த வகையில் இவ்வருட ஆசியக் கிண்ணப் போட்டியில் சுழல் பந்து
வீச்சாளர்களின் பாதிப்பு பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என் கணிப்பு.
எனது 1ார்வை

Page 32
வேகப் பந்து வீச்சைப் பொறுத்த வரையில் எதுவித கேள்வியுமின்றி பாகிஸ்தானுக்குத்தான் முதன்மை இடத்தை வழங்க வேண்டியுள்ளது.
இன்று உலகிலுள்ள மிகச் சிறந்த ஆரம்ப, இடது, வலது கை வேகப் பந்து வீச்சாளர்களான வஷம் அக்ரமும் வக்கார் யூனுஸ"ம் பாக். அணியில் இடம் பெறுகின்றனர்.
கடந்த பெப்சி சுதந்திரக் கிண்ணப் போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசிய ஆகிப் ஜாவிட் மற்றொரு பந்து வீச்சாளர்.
நான் இந்தக் கட்டுரையை எழுதும் போது அணிகளின் விபரம் வெளியிடப்பட்டிருந்த போதும் இறுதி முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இந்திய அணியில் வெங்கடேஷ் பிரசாத், அபே குருவில்லா, ஜவாகல் ரீநாத் (அநேகமாக ஆடுவார்) ஆகியோர் அனுபவத்தில் கூடிய பந்து வீச்சாளர்கள்.
இலங்கை அணியில் ஷமிந்த வாஸ் மிகச் சிறந்ததொரு பந்து வீச்சாளர். கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் டெண்டுல்காருக்கு மெய்டன் ஒவர் (ஒட்டமற்ற ஓவர்) போட்ட ஒரே பந்து வீச்சாளர்.
அவருடன் மறுமுனையில் சஜீவ டி சில்வா நிச்சயம் சிறப்பாகப் பந்து வீசுபவர். சஜீவ ஒருநாள் ஆட்டங்களுக்கு மிகப் பொருத்தமானவர்.
புஷ்பகுமார மேற்கிந்திய தீவில் மிகச் சிறப்பாகப் பிரகாசித்த போதிலும் ஒருநாள் ஆட்டங்களுக்கு அவ்வளவு பொருத்தமானவர் அல்ல என்பது என் கணிப்பு.
ஏனெனில் கடந்த காலங்களில் நேர்த்தியாக (லைன் அன்ட் லென்த்) பந்து வீசுவதில் அவர் மிகவும் சிரமப்பட்டார்.
துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் பங்களாதேஷில் கூட நல்ல பல துடுப்பாட்ட வீரர்கள் இடம் பெறுகிறார்கள்.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் அணிகளில் உலக மட்ட கிரிக்கெட் வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளார்கள்.
நூரானியா ஹஸன்
 

இப்போட்டியில் கூட ஜயசூரிய, அன்வர்,அப்ரிடி, டெண்டுல்கார் ஆகியோர் ஆட்ட முடிவை தீர்மானிப்பதில் கூடிய பங்காற்றுவர் என்பது என்
(UDL96).
இந்திய அணியின் கதவுகள் மீண்டும் அஸாருதீனுக்குத் திறக்கப்பட்டிருப்பது இளம் வீரர்களுக்கு தடையாக இருந்தாலும் இந்திய அணியின் பயணத்துக்கு ஆரோக்கியமானது.
ஒருநாள் ஆட்டங்களில் கூடிய அனுபவங்களையும் நுணுக்கங்களையும் கொண்ட, குறுகிய ஓட்டங்களை (சோர்ட் ரன்) பெறுவதில் தேர்ச்சி பெற்ற வீரர் அஸார்.
எது எவ்வாறு இருப்பினும் துடுப்பாட்ட வீரர்களை எதுவிதத்திலும் குறைவாக மதிப்பிட முடியாது.
அணித் தலைவர்கள் என்ற வகையில் அனுபவத்தில் நல்ல முதிர்ச்சி பெற்ற, ஆளுமையுடன் கூடியவர் அர்ஜுனா ரணத்துங்கதான்.
அதற்கு அடுத்ததாக வஷிம் அக்ரத்தையும் சசின் டெண்டுல்காரையும் குறிப்பிடலாம்.
எனினும் குழு ஒருமைப்பாடு என்ற வகையில் அணியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் அர்ஜுன மாத்திரம் என்பது இரகசியமல்ல.
பாகிஸ்தான் அணியின் அமிர் சொகைல் மீண்டும் வருகை தந்திருப்பது துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் பாகிஸ்தானுக்குப் பலத்தைக் கொடுத்துள்ளது.
எது எவ்வாறு இருப்பினும் வெற்றி அடைவதை அணிகளுக்கு புள்ளியிட்டு நிகழ்தகவின் அடிப்படையில் நோக்கின் வெற்றிக்குரிய வாய்ப்புக்கள் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் என்ற வகையிலே 9|60LDub.
தற்போது அணிகளின் வெற்றி வாய்ப்புக்களை கணிக்கும் போது இலங்கை-பாகிஸ்தான் அணிகளே இறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகும் வாய்ப்புண்டு.
676g5/ Titzev

Page 33
அதற்காக இந்தியாவுக்கு இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் தகுதி இல்லை என்று கூற முடியாது.
இவ்வருடம் இலங்கையில் இரண்டாவது தடவையாக நடைபெறும் ஆசியக் கிண்ணப் போட்டியில் மீண்டும் வெற்றி பெறக் கூடிய அதிக வாய்ப்புக்கள் இலங்கைக்கே உள்ளன.
எனினும் கிரிக்கெட் என்பது வெறுமனே திறமையை மாத்திரம் கொண்டதல்ல. அதிர்ஷ்டத்துடன் கூடியது.
ஆறாவது ஆசியக் கிண்ணத்தை எந்த அணி சுமக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தினகரன் 13 ஜூலை 1997.
یہسہ منافقیپیڈیا
நூரானியா ஹஸன்
 

கட்சுகள் ஆட்டங்களில் வெற்றி பெறச் செய்யும் என்பதை நிரூபித்த ஆசியக் கிண்ண இறுதியாட்டம்.
ஆசியக் கிண்ணப் போட்டியில் நாம் எதிர்பார்த்தது போன்றே இலங்கை அணி மிக இலகுவான வெற்றியீட்டியது.
ஆறாவது உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட இலங்கை அணி ஆறாவது ஆசியக் கிண்ணத்தையும் தனதாக்கிக் கொண்டிருக்கிறது.
உலகக் கிண்ணப் போட்டியைப் போலவே ஆசியக் கிண்ணப் போட்டியிலும் இலங்கை அணி எந்தவொரு ஆட்டங்களிலும் தோல்வியடையவில்லை.
சார்ஜா, இந்தியா சுதந்திர பெப்ஸி கிண்ணம், இப்போது ஆசியக் கிண்ணம் என தொடர்ச்சியாக மூன்று பெரும் வெற்றிகளை இலங்கை அணி ஈட்டியுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டியைத் தொடர்ந்து வந்த போட்டிகளை நோக்கும் போது இலங்கை மிகவும் மகத்தான வெற்றிகளைக் கண்டுள்ளது.
உலகச் சம்பியனாகிய இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தானிய அணிகளை நோக்கும் போது அவ்வணிகள் தொடர்ந்து இவ்வாறு திறமை காட்டவில்லை.
உலகச் சம்பியனான பின்பு, இதற்கு முன்பு தொடர்ச்சியாக திறமை காட்டிய ஒரே அணி மேற்கிந்திய தீவு அணி மாத்திரம் தான்.
1992இல் உலகச் சம்பியனான பாகிஸ்தானினால் இதுவரை ஆசியக் கிண்ணத்தைச் சுவீகரிக்க முடியவில்லை.
எனது பார்வை

Page 34
அதே போன்று 1983ம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணியைத் தோற்கடித்து வெற்றியீட்டிய இந்தியாவும் தொடர்ந்து பிரகாசிக்கவில்லை.
உலகக் கிண்ண போட்டியைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவு அணி இந்தியாவுக்கு மேற்கொண்ட சுற்றுலாவில் இந்தியா 0-5 என்ற நிலையில் தோல்வியுற்றது.
1987 உலகச் சம்பியனான அவுஸ்திரேலியா அணி ஒருநாள் ஆட்டங்களில் அவுஸ்திரேலியாவுக்கு வெளியே குறிப்பிடத்தக்கவாறு பிரகாசிக்கவில்லை.
இந்நிலையில் உட்லகச் சம்பியன் பட்டத்தைச் சுமப்பதற்கு மிகவும் தகுதியான அணி இலங்கை தான் என்பதை மீண்டும் உலகுக்கு நிரூபித்துள்ளது.
அன்று மழை இடையூறாக இருந்திராவிட்டால் பெரும்பாலும் இந்திய அணியே வெற்றி பெற்றிருக்கும்.
பங்களாதேஷ"டனான போட்டியில் காட்டிய திறமையால் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் தகைமையைப் பெற்றது.
பங்களாதேஷ் அணி முன்னைய இரண்டு போட்டிகளிலும் காட்டிய திறமை யை இநீ தியாவுடனான ஆட் டத் தி ல காட் டத் தவறியமையினாலேயே இந்தியாவின் பக்கம் வெற்றி சாய்ந்தது.
கடந்த வாரக் கட்டுரையை வெள்ளி மாலை எழுதிக் கொண்டிருந்த போது இறுதிப் போட்டி சனிக்கிழமை நடைபெறுமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது.
எனினும் இலங்கை அணிக்கும் வானிலைக்கும் ஏதோ உடன்பாடு இருக்கின்றனவோ, என்னவோ, இலங்கை அணி கலந்து கொண்ட
நான்கு போட்டிகளிலும் மழை இடையூறு செய்யவில்லை.
இறுதிப் போட்டி நடந்தது சனிக்கிழமை என்பதனால் அரங்கம் முழுமையாக நிரம்பி வழிந்தது. சுமார் 32,000 பேர்.
நூராணியா ஹஸன்
 

பணம் கொடுத்து, டிக்கெட் பெற்று காலை 9.00 மணி முதலே காத்திருந்த ரசிகர்களுக்கு தாம் கொடுத்த பணத்துக்கு ஏற்ற ஆட்டத்தை கண்ட திருப்தி நிச்சயம் இருக்கும்.
நாணய சுழற்சிக்கு தயாராகிய போது அர்ஜுனா ரணத்துங்கா, சசின் டெண்டுல்கார் இருவரது உள்ளத்திலும் இரு முரண்பட்ட தீர்மானங்கள்!
டெண்டுல்கார் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றால் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தே வந்திருந்தார்.
அர்ஜூனா ரணத்தங்க, ஹஷானி திலக்கரத்ன, சனத் ஜயசூரிய
மறுபுறமாக அர்ஜூனா ரணத்துங்க நாணய சுழற்சியில் வெற்றி பெற்றால் முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கவிருந்தார்.
நாணய சுழற்சியில் எவர் வெற்றி பெற்றிருந்தாலும் இருவரும் எதிர்பார்த்தது நடந்தே இருந்திருக்கும்.
இறுதிப் போட்டிக்கு தயார் செய்யப்பட்டிருந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடுவதன் மூலம் சாதக விளைவை டெண்டுல்கார் எதிர்பார்த்தார்.
எனது பார்வை

Page 35
டெண்டுல்காரின் தீர்மானம் கடந்த வருடம் உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் அஸார்தீன் எடுத்த தீர்மானத்துக்கு ஒப்பானதாக அமைந்துவிட்டது.
பொதுவாக இரண்டாவதாக துடுப்பெடுத்தாடுவதையே இலங்கை அணி விரும்புகிறது. ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியிலும் அதனையே எதிர்பார்த்தது.
இலங்கை அணி, இந்தியா சற்றும் எதிர்பாராத விதத்தில் மிக இலகுவாக இலக்கை அடைந்தது. சிறப்பான எட்டு விக்கெட் வெற்றியைப் பெற்றது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சனத் ஜயசூரியாவும் மாவன் அத்தப்பத்துவும் ஒவருக்கு சராசரி 8,9 என்ற ரீதியில் நல்லதொரு அடித்தளத்தை இட்டுச் சென்றனர்.
மாவன் அத்தப்பத்து ஒருநாள் ஆட்டத்துக்கு மிகப் பொருத்தமான, ஜயசூரியாவுக்கு நல்ல முறையில் ஈடு கொடுத்து, ஆடக் கூடியவர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
இறுதிப் போட்டியில் சிறப்பாட்டக்காரராகத் தெரிவு செய்யப்பட்டதுடன் தான் கலந்து கொண்ட நான்கு போட்டிகளுள் இரண்டாவது தடவையும் தெரிவானார்.
இன்று உலகில் உள்ள மிகச் சிறந்ததொரு துடுப்பாட்ட வீரராகக் கணிக்கப்படும் அரவிந்த டி சில்வாவுக்கு மகிழ்ச்சி தரக் கூடிய ஒரு தொடராக இத்தொடர் அமையவில்லை.
எனினும் அர்ஜ"னா ரணத்துங்காவுக்கு நல்லதொரு தொடராக அமைந்துவிட்டது. தான் ஆடிய ஆட்டங்களில் எல்லாம் சிறப்பாகப்
பிரகாசித்தார்.
குறுகிய ஓட்டங்களை விரைவாக எப்படிப் பெறுவது என்பதை ஏனைய அணிகளுக்கு இத்தொடரில் நல்ல முறையில் உணர்த்தினார்.
அரவிந்த டி சில்வாவைப் போன்றே சசின் டெண்டுல்காருக்கும் இத்தொடர் மகிழ்ச்சியைத் தரவல்லதாக அமையவில்லை.
நூராணியா ஹஸன்
 

முதன் முறையாக அணித் தலைவராக கடந்த சிங்கர் கிண்ணப் போட்டியில் சசின் டெண்டுல்கார் இலங்கை வந்து, தோல்வியைச் சுமந்து சென்றார்.
இப்போதும் இரண்டாவது விஜயத்திலும் அதே கதைதான்! அவரது தலைமைத்துவத்துக்கு ஆப்பாகவும் இது அமையலாம்.
டெண்டுல்காரின் தலைமைத்துவம் பற்றி அணிக்குள் திருப்தி குறைவு. தலைவருக்குரிய அனுபவத்தையும் ஆளுமையையும் டெண்டுல்கார் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெப்ஸி சுதந்திரக் கிண்ணப் போட்டியில் இந்திய அணியில் இடம் பெறாத அஸார்தீன் ஆசியக் கிண்ணப் போட்டியில் நல்ல முறையில் பிரகாசித்தார்.
ஆசியக் கிண்ணப் போட்டியில் பூரீநாத் கலந்து கொள்ளாத குறைபாடு பளிச்செனத் தென்பட்டது. ஏனைய பந்து வீச்சாளர்களும் எதிர்பார்த்தவாறு திறமை காட்டவில்லை.
இறுதிப் போட்டியில் மேலதிகத் துடுப்பாட்ட வீரர்களுக்குப் பதிலாக மேலதிக சுழல் பந்து வீச்சாளர் ஒருவரை அணியில் சேர்த்திருந்தால் இந்தியா கூடிய பயனைப் பெற்றிருக்கும்.
டெண்டுல்கார் பந்து தடுப்பாளர்களை (பீல்டர்ஸ்) நிறுத்திய விதமும் இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான விளைவைப் பெற்றுக் கொடுத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி பெற்றுக் கொண்ட ஒட்ட எண்ணிக்கையான 239ஐ இந்த ஆடுகளத்தில் மிகவும் குறைந்த ஒட்ட எண்ணிக்கை என்று கூற முடியாது.
பரிசளிப்பு விழாவில் டெண்டுல்கார் கூறியது போன்று 1000 ஓட்டங்கள் எடுத்தாலும் இலங்கை அணிக்கு ஒரு (உண்மையில் அவ்வாறு செய்வது சாத்தியமில்லை) சவால் அல்ல என்பதும் சிந்திக்க வேண்டியது.
இந்தியப் பந்து வீச்சாளர்களுக்கு எதுவித வாய்ப்புமே கொடுக்காத விதத்தில் இலங்கை வீரர்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினார்கள்.
எனது பார்வை

Page 36
என் வாழ்க்கையில் நான் பார்த்த கிரிக்கெட் ஆட்டங்களில் மிகவும் சிறந்த பந்து தடுப்பைக் கண்டது ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் தான்.
முத்தையா முரளிதரன் அஸார்தீனை ஆட்டம் இழக்கச் செய்வதற்கு பிடித்த கட்சை ரசிகர்கள் மட்டுமல்ல முரளியும் இலகுவில் மறக்கமாட்டார்.
வீட்டிலிருந்து அந்த ஆட்டத்தைக் கண்டு களித்த முரளியின் அப்பா திரு. முத்தையா நிச்சயம் அந்த அற்புதமான பிடியைக் கண்டு மனம் நெகிழ்ந்து போயிருப்பார்.
ரொஷான் மஹாநாமவின் பிடியைத்தான் சற்றும் குறைவாக மதிப்பிட முடியுமா? ருவன் கல்பகே, அரவிந்த டி சில்வா அனைவரினதும் மறக்க முடியாத கட்சுகள் தான்.
உண்மையில் இலங்கை வீரர்கள் இத்தகைய கட்சுகள் மூலம் ஆட்டமிழக்கச் செய்வார்கள் என்று இந்திய வீரர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
*கட்சர்ஸ் வின் மட்சர்ஸ்’ என்பதை இலங்கை வீரர்கள் மீண்டுமொருமுறை நிரூபித்தார்கள்.
அஸார்தீன் ஆட்டமிழந்து செல்லும் போது அவரது முகத்தில் ஒரு திருப்தி இருந்தது. சிறப்பான ஒரு பிடியின் மூலம்தான் ஆட்டமிழந்தேன் என்பதில்!
உலகிலுள்ள மிகச் சிறந்த பந்து சேகரிக்கும் அணிகளுள் ஒன்றாக இலங்கையைக் குறிப்பிடுவதைவிட, மிகச் சிறந்த அணிதான் என்று குறிப்பிடலாம்.
இறுதிப் போட்டியில் வர்ணனை செய்த ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற பிரபல வர்ணனையாளர்கள் அந்த கட்சுகளை வெகுவாக புகழ்ந்தார்கள்.
ஒருநாள் ஆட்டங்களில் பந்து தடுப்பு மிகவும் முக்கியமானதாகும். இறுதிப் போட்டியில் இலங்கையின் சிறப்பான பந்து தடுப்பினால் குறைந்தது 30 ஓட்டங்களையாவது தடுத்திருப்பார்கள்.
நூராணியாஹஸன்
 

இந்திய அணியில் சிறப்பாக பந்து தடுப்பவர்கள் கூட வழமை போன்று பிரகாசிக்கவில்லை.
ஆசியக் கிண்ணப் போட்டி முடிவோடு இந்திய அணியின் சுற்றுலா இலங்கையில் ஆரம்பமாயிருக்கிறது. இரண்டு டெஸ்ட்டுகள், மூன்று ஒருநாள் ஆட்டங்கள்.
முதலாவது டெஸ்ட் நேற்று ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இரண்டாவது டெஸ்ட் 9ம் திகதி எஸ்.எஸ்.ஸில் நடைபெறும்.
இந்த டெஸ்ட் போட்டிகள் இரண்டு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதைக் காணமுடியும்.
டெண்டுல்காரைப் பொறுத்தவரையில் தலைமைத்துவத்தை ஏற்ற பின்பு வெளிநாடொன்றில் டெஸ்ட் தொடரொன்றில் வெற்றியீட்டியது கிடையாது.
இந்தத் தொடரில் இந்திய அணி தோல்வியடையுமாயின் நிச்சயம் அவரது தலைமைத்துவத்துக்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் ரமகாந் தேசாய் ஏலவே டெண்டுல்காரின் பத்திரிகை அறிக்கையில் அதிருப்தியுற்றுள்ளார்.
இலங்கைச் சுற்றுலாவுக்கு தனக்கு “பீ” அணியே கிடைத்திருப்பதாக முன்பு டெண்டுல்கார் சாடியிருந்தார். எனினும் தான் அவ்வாறு கூறவில்லை என்று மறுக்கின்றார்.
கடந்த மேற்கிந்திய, இங்கிலாந்து சுற்றுலாவில் டெண்டுல்காரின் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தோல்வியுற்றது.
அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த அஸார்தீன் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது டெண்டுல்காருக்கு விடுக்கும் முதல் அபாய சமிக்ஞையாகும்.
தனது தலைமைத்துவத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் எந்த விதத்திலும் இலங்கைக்கு எதிரான இத்தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டும்.
எனது பார்வை

Page 37
இலங்கை அணியைப் பொறுத்தவரையில் இதுவரை இலங்கை அணி கலந்து கொண்டுள்ள 74 டெஸ்ட்டுகளில் 9 டெஸ்ட்டுகளில் மாத்திரமே வெற்றி கண்டுள்ளது.
அர்ஜுனா ரணதுங்க தலைமையில் 41 டெஸ்ட்டுகளில் இதுவரை 7 வெற்றிகளைப் பெற்றுள்ளதோடு, 15 தோல்விகளையும் அடைந்துள்ளது. 19 வெற்றி தோல்வியில்லை.
இன்று உலகிலுள்ள அணித் தலைவர்களிடையே 40 டெஸ்ட்டுகளுக்கு மேல் தலைமை தாங்கிய அனுபவம் உள்ள தலைவர் இருவரே உள்ளனர்.
ஒருவர் அர்ஜுனா, மற்றவர் இங்கிலாந்து வீரர் மைக் அதேர்ட்டன். அதேர்ட்டன் 42 டெஸ்ட்டுகளில் தலைமை தாங்கி 11 வெற்றி 13 தோல்வி, 18 வெற்றி தோல்வியில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு தடவைதான் இந்தியாவுக்கு எதிராக (1985 இலங்கையில்) டெஸ்ட் போட்டியொன்றில் வெற்றி கண்டுள்ளது.
அந்த வகையில் எந்த விதத்திலாவது இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை வெற்றி பெறுவது அவசியமாகின்றது.
டெண்டுல்கார் இந்தியாவின் முதன்மை துடுப்பாட்ட வீரர் என்ற போதும் ஆசியக் கிண்ணப் போட்டியில் எதிர்பார்த்தவாறு பிரகாசிக்கத் தவறினார்.
அதனைவிட இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவரின் அணியுடனான மூன்று தின ஆட்டத்திலும் அவரது துடுப்பாட்டம் எடுபடவில்லை.
இந்நிலையில் தனிப்பட்ட வகையில் டெண்டுல்கார் தனது துடுப்பாட்டத்திலும் கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.
மேற்கிந்திய தீவில் பிரகாசிக்காத அஸாருதீனுக்கும் தனது துடுப்பாட்டத்தைச் சீர்செய்து கொள்ள இத்தொடர் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
நூராணியா ஹஸன்
 

இத்தொடரில் அஸாருத்தீன் தனது பழைய திறமையை வெளிக் கொணராவிட்டால் நிரந்தரமாகவே ஒய்வுபெறக் கூடிய நிலை எழலாம்.
இத் தொடர் முரளிதரனுக்கும் கும்ளேக்கும் இடையிலான சுழல் பந்து வீச்சுப் போட்டியான ஒரு தொடராகவும் அமையலாம்.
உலகச் சம்பியன் பட்டத்தைச் சுமந்த பின்பு எந்தவாரு டெஸ்ட் போட்டியிலும் உள்நாட்டில் இலங்கை தோல்வியுற்றது கிடையாது.
2000ம் ஆண்டில் சிறந்த டெஸ்ட் அணியாக உருப்பெறுவதற்கு இத் தொடரில் இலங்கை அணி வெற்றி பெறுவது மிக மிக அவசியமாகும்.
இரண்டு அணிகளினதும் துடுப்பாட்ட வரிசையைப் பார்க்கும் போது இரண்டு அணியையும் சற்றும் குறைவாக எடை போட முடியாது.
எனினும் ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமையக் கூடியதாக இருப்பது பந்து வீச்சாளரின் ஆதிக்கத்திற்கு முக்கியத்துவமளிக்கின்றது.
அர்ஜுனா ரணதுங்க ஒருநாள் ஆட்டத்தை போன்று சாதனை படைப்பாரா?
சசின் டெண்டுல்கார் தனது தலைமை கிரீடத்தைப் பாதுகாத்துக் கொள்வாரா?
டெஸ்ட் தொடர் முடியும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
தினகரன் 03 ஆகஸ்ட் 1997
எனது பார்வை

Page 38
டெஸ்ட்டில் இலங்கை அணி சளைத்தது அல்ல அதனை நிரூபித்த முதலாவது டெஸ்ட்
இந்திய-இலங்கை அணிகளுக்கிடையே ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் சாதனைகளுக்குரிய டெஸ்ட்டாக முடிவடைந்தது. இந்த டெஸ்ட்டை ஒருபோதும் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.
ஒருநாள் ஆட்டங்களில் உலக சாதனைகள் பல புரிந்த வீரர்களைக் கொண்ட இலங்கை அணி டெஸ்ட்டிலும் இப்போது புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருநாள் ஆட்டப் போட்டியில் மிகக் கூடுதலான ஓட்டங்களைப் பெற்று. சாதனை படைத்துள்ளது இலங்கை என்பது பழைய கதை.
கடந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் கென்னிய அணிக்கு எதிராக கண்டி அஸ்கிரிய மைதானத்தில் 398 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது.
எதிர்காலத்தில் இச் சாதனையை எந்தவொரு அணியும் முறியடிப்பது இலகுவானதல்ல. அவ்வாறு முறியடிப்பின் ஒவருக்கு 8 ஓட்டங்கள் பெற வேண்டும்.
அதே போன்றுதான் இப்போது டெஸ்ட் போட்டியில் மிகக் கூடிய
ஓட்டங்களைப் பெற்றுள்ள இலங்கையின் சாதனையை முறியடிப்பது இலகுவானதல்ல.
நூராணியா ஹஸன்
 

சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் எந்தவொரு உலக அணியினாலும் முறியடிக்கப்படாதிருந்த இச் சாதனையை இலங்கை இலகுவாக முறியடித்துவிட்டது.
அதுவும் மிகச் சிறந்த ஐந்து பந்துவீச்சாளர்களைக் கொண்ட இந்திய அணிக்கு எதிராக இச்சாதனை எழுந்துள்ளது பெருமைக்குரிய விடயம்தானே.
அனில் கும்லே, வெங்கடேஷ் பிரசாத், அபே குருவில்லா, செளஹான், குல்கர்னி போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களை இலங்கை எதிர்கொண்டது.
இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 537 ஓட்டங்களைப் பெற்ற போது இரண்டாவது இனிங்சிலும் இலங்கையைத் தொடர்ந்தாடப் பணிக்க டெண்டுல்கார் தயாராகவிருந்தார்.
இந்த ஆடுகளத்தைப் பொறுத்த வரையில் பந்து வீச்சாளர்களுக்கு எதுவித சாதக விளைவையும் தரவல்லதாக அமையாதிருந்தது ஒரு பெரும் குறையாகும்.
இத்தகைய ஆடுகளங்கள் டெஸ்ட் போட்டிகளுக்கு பொருத்தமற்றது என்று ரஞ்சித் பெர்ணான்டோ, இயன் ஷபல் போன்ற பிரபல நேர்முக வர்ணனையாளர்கள் கருதுகின்றனர்.
எனினும் ஆடுகளத்தை வைத்து, எவரும் இலங்கையின் சாதனையை எடை போட முடியாது. இதே ஆடுகளத்தில் தான் இந்திய அணியும் துடுப்பெடுத்தாடியது.
ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் இடையே மிகுந்த வேறுபாடுகள் இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
ஒருநாள் ஆட்டங்களில் இரு அணிகளுக்கும் கிடைப்பது 100 ஓவர்கள். அது மாத்திரமன்றி துடுப்பாட்டக்காரர்களின் நலன்கள் கூடுதலாகப் பேணப்படுகின்றன.
டெஸ்ட் போட்டிகள் அவ்வாறன்று. ஐந்து தினங்களில் 450 ஓவர்களுக்கு குறையாத பந்து வீச்சுக்களுக்கு இரு அணிகளும் முகம் கொடுக்க வேண்டும்.
எனது பார்வை

Page 39
பந்து வீச்சாளர்களுக்கு “பவுன்ஸர்' போன்ற நன்மைகளுண்டு. இத்தகைய ஐந்துநாள் ஆடும் டெஸ்ட்டுக்கள் வெற்றி தோல்வியின்றி முடிவடைவது உண்மையில் அர்த்தமற்றதுதான்.
எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆடுகளங்களை அமைக்கும் போது பந்து வீச்சாளர், துடுப்பாட்டக்காரர் இரு சாராருக்கும் சமபலன் தரத்தக்கதாக அமைப்பது வரவேற்கத்தக்கது.
சாதனை படைத்த ஜயசூரிய, மஹாநாமவின் வெற்றிக் களிப்பில் பங்கெடுப்போர்
அர்ஜூனா உட்பட கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை நிருவாகிகள்.
இன்றேல் ஏலவே ஒரு நாள் ஆட்டத்தினால் கவர்ச்சியிழந்திருக்கும் டெஸ்ட்டுக்களில் இருந்து ரசிகர்கள் தூரமாகிவிடும் ஆபத்து உருவாகலாம்.
எது எவ்வாறு இருப்பினும் ஒருநாள் ஆட்ட சாதனை வீரர் சனத்
ஜயசூரிய தனது இறுதி இலக்கை அடைய முடியாது போனது கவலைக்குரியதே.
நூராணியா ஹஸன்
 
 

அவரது சாதனையைப் பார்க்க 30 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் கூடியிருந்தனர். இலங்கையில் டெஸ்ட் போட்டியொன்றுக்கு இவ்வளவு பார்வையாளர்கள் என்றால் அதிசயம்தானே!
எனினும் அத்தனை பேருக்கும் பெரும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. எனினும் அர்ஜூனாவினதும் அரவிந்தவினதும் வேகத் துடுப்பாட்டம் காத்திருந்தோருக்கு சற்று ஆறுதலைத் தந்தது.
கடந்த வருடம் 96 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வார மஞ்சரியில் நான் எழுதிய கட்டுரையில் "சனத் ஜயசூரிய எதிர்காலத்தில் சாதனைகள் பல புரிவார்” என்று குறிப்பிட்டது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கும்.
சனத் ஒருநாள் ஆட்டங்களில் மாத்திரம் பிரகாசிக்கக் கூடியவர் என்று கருதியோருக்கு டெஸ்ட்டுக்கு மிகப் பொருத்தமானவர்தான் என்பதை அவர் இப்போது நிரூபித்துள்ளார்.
இந்தப் போட்டியில் இலங்கைச் சாதனை, உலகச் சாதனை என நிறையப் புதிய சாதனைகளை கிரிக்கெட் உலகம் பெற்றுக் கொண்டது.
இந்தத் தொடரில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் குல்கர்னி தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது பந்தில் விக்கெட் கைப்பற்றிய முதல் இந்தியரானார்.
\
அதுவரை 11 வேறு நாட்டு வீரர்கள் இச்சாதனையைப் படைத்துள்ளனர். இதற்கு முன்பு இச்சாதனையைப் படைத்துள்ள வீரர்கள் வருமாறு:-
ஏ. கொனின்ஹம் (அவு) 1894-95, எம். பிராட்லி (இங்) 1899, ஜி. ஆர்னோல்ட் (இங்) 1903-04, ஜி. மக்குலே (இங்) 192223 , டபிள்யூ. டேட் (இங்) 1924, எம். ஹெண்டர்ஸன் (நியூசிலாந்து) 1929-30, டி. ஸ்மித் (நியூசிலாந்து) 1932-33, எப். ஜோன்ஸன் (மே.இ) 1939, ஆர். ஹோர்வேர்த் (இங்) 1947, இன்டிகாப் அலாம் (பாக்) 1959-60.
முஹம்மத் அசார்தீன் தனது 18வது டெஸ்ட் சதத்தைப் பெற்று, இரண்டாவது கூடிய சதம் பெற்ற இந்திய வீரரானார். முதலாவது இடத்தில் இருப்பவர் சுனில் கவாஸ்கர் (34 சதங்கள்)
எனது பார்வை

Page 40
இந்தியா இலங்கைக்கு எதிராக இலங்கையில் பெற்றுள்ள கூடிய ஒட்டம் 537க்கு 8 விக்கெட். இதற்கு முன்பு 446 ஓட்டங்கள் 1993-94களில் சரவணமுத்து விளையாட்டரங்கில்.
அர்ஜுனா ரணத்துங்க தனது டெஸ்ட் வாழ்க்கையில் 4000 ஒட்டங்களை பூர்த்தி செய்திருக்கிறார். அத்தோடு 42 ஆவது டெஸ்டுக்கு தலைமை தாங்கியிருக்கிறார்.
இரண்டாவது தினம் ஆட்டம் நிறுத்தப்படும் போது 12 ஓட்டங்கள் பெற்றிருந்த ஜயசூரிய மூன்றாவது தினம் ஆட்டம் நிறுத்தப்படும் போது 175 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
நான்காவது தினம் ஆட்டம் நிறுத்தப்படும் போது 326 ஓட்டங்கள் பெற்றிருந்தார். ஐந்தாவது தினம் ஆட்டம் ஆரம்பமான போது எதிாபார்ப்பு சாதனைக்குரியதாக இருந்தது.
எனினும் எந்தவொரு இடத்திலும் சனத் சாதனையைப் பற்றி அலட்டிக் கொண்டது கிடையாது. ஒன்றன் பின் ஒன்றாக ஓட்டங்களைக் குவிப்பதை நோக்காகக் கொண்டிருந்தார்.
340 ஓட்டங்களைப் பெற்ற போது அனைவரினதுமே எதிர்பார்ப்பு அதிகரித்தது. பிரைன் லாராவின் சாதனையை முறியடிக்க இன்னும் 36 ஒட்டங்களே தேவைப்பட்டன.
எனினும் எதிர்பாராத விதமாக சனத் ஆட்டமிழந்தார். சாதனைக்குரிய அந்தப் பொன்னான நினைவுக்கு மத்தியில் அவரது கண்களில் இருந்து கண்ணிர் கசிந்தது.
அந்த அரங்கமே அப்படியே ஸ்தம்பித்துப் போனது. வீதிகளில் சில இடங்களில் வாகனங்கள் திடீரென தடைப்பட்டன. ரசிகர்களுக்கு வெற்றிக்கு மத்தியில் கிடைத்த இத்தோல்வியை ஜீரணிப்பது கடினமாகவிருந்தது.
உண்மையில் ரசிகர்கள் ஆட்டத்தோடு ஊன்றிப் போய் இலங்கை மைந்தனின் சாதனைக்காக ஒருமித்த மனத்தோடு ஏங்கியிருந்ததுதான் இதற்குக் காரணம்.
நூராணியா ஹவன்
 

அந்த இரண்டு தினங்களுமே மாத்தறை பகுதி மக்களுக்கு பெருவிழாவாக அமைந்திருந்தது. பட்டாசு கொளுத்தி ஜயசூரியாவின் சாதனையைக் கொண்டாடினார்கள்.
இந்த டெஸ்ட்டில் ஜயசூரிய பல சாதனைகளைப் படைத்தார். இந்தியாவுக்கு எதிராக மிகக் கூடிய ஒட்டம் பெற்ற வீரர் என்ற பெருமை.
எந்தவொரு நாட்டுக்கும் எதிராக இலங்கை வீரர் ஒருவர் பெற்ற மிகக் கூடுதலான ஓட்டம், இலங்கை வீரர் ஒருவர் பெற்ற முதலாவது முச்சதம்
ஒரே போட்டியில் முச்சதம், இரட்டைச் சதம், சதம், அரைச் சதம் என அனைத்துமே பெறப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்று நான் கருதுகின்றேன்.
ரொஷான் மஹானாம தனது டெஸ்ட் வாழ்க்கையில் மிகக் கூடுதலான ஒட்ட எண்ணிக்கை பெற்று, தொடர்ந்தும் டெஸ்ட் அணியின் அங்கத்துவத்தை உறுதி செய்து கொண்டார்.
இறுதியாக நடந்த பல டெஸ்ட் போட்டிகளில் அவர் பிரகாசிக்காததன் காரணமாக அவரது ஸ்தானத்துக்கு புதியதொரு துடுப்பாட்டக்காரர் நுழையும் வாய்ப்பு இருந்தது.
மஹேல ஜயவர்தன தனது கன்னி டெஸ்ட்டிலே நல்லதொரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டார். ரஸல் ஆனலுக்குப் பின்பு இவ்வருடம் டெஸ்ட் அணியில் அறிமுகமான இரண்டாமவர் இவர்.
இலங்கை அணி இந்தப் போட்டியில் ஏற்படுத்தியுள்ள சில சாதனைகளை முறியடிக்க சில சமயங்களில் எத்தனையோ தசாப்தங்கள் செல்லலாம்.
ஓர் இனிங்ஸில் 953 ஓட்டங்கள் பெறுவது இலகுவானதல்ல. சாதனையை
நிலைநிறுத்த வேண்டும் என்று ஆடினாலும் அது இலகுவான காரியமல்ல.
அதே போன்று சனத், ரொஸானின் 576 ஓட்டத்துக்கான இணைப்பாட்டத்தை முறியடிப்பது என்பதும் சுலபமான ஒன்றாக அமைந்து விடாது.
எனது பார்வை

Page 41
தொடர்ந்து 12 மணித்தியாலத்திற்கு மேல் விக்கெட்டில் தரித்திருந்து ஆடிய முதல் துடுப்பாட்டச் சோடியும் இவர்கள் இருவரும் தான்.
கடந்த காலங்களில் இலங்கை மீது இருந்த விமர்சனம்தான் டெஸ்ட் போட்டிகளில் தரித்திருந்து, துடுப்பெடுத்தாடும் நிதானம் இல்லை என்பது. அது இப்போது பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிச்சயம் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி இன்னும் பல புதிய சாதனைகளைப் படைக்கும்.
இலங்கை அணியின் சாதனையைத் தொடர்ந்து அவர்களுக்கு காணி வழங்கி கெளரவித்திருக்கும் அரசை ரசிகர்கள் நிச்சயம் பாராட்டுவார்கள்.
இலங்கை அணியின் சாதனை இத்தோடு நின்றுவிடாது. இதனை ஓர் ஆரம்பமாக வைத்து டெஸ்ட் வெற்றிகளுக்கு உழைக்க வேண்டும்.
நேற்று எஸ்.எஸ்.ஸியில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.
நிச்சயமாக ஆர். பிரேமதாஸ் அரங்கைப் போன்ற ஓர் ஆடுகளம் எஸ்.எஸ்.ஸியில் அமையாது. முடிவொன்றைத் தரக் கூடிய வாய்ப்பு உண்டு.
இரண்டு அணித் தலைவர்களுமே தமது பந்து வீச்சாளர்களையும் பந்து தடுப்பாளர்களையும் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் இரண்டாவது டெஸ்ட்டில் ஒரு முடிவைக் கண்டு கொள்ள (փtԳԱթb.
டெண்டுல்காரின் தலைமைத்துவத்துக்கு இப்போது பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. அதனிலிருந்து மீள இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டும்.
இலங்கையைப் பொறுத்த வரையில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது வெற்றியையும் தொடரில் வெற்றியையும் பெற இது நல்ல வாய்ப்பு.
முடிவு எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்த பார்ப்போம்.
நூானியா ஹஸன்
 

இதுவரை 300க்கு அதிகமான ஓட்டங்களைப் பெற்றோர்:
375 பிரையன் லாரா (மே.இ) இங்கிலாந்துடன் சென். ஜோன்ஸில் 1993-94 365* ஜி. எஸ். சோர்பஸ் (மே.இ) பாகிஸ்தானுடன் கிங்ஸ்டனில் 1957-58 364 எல். ஹட்டன (இங்கிலாந்து) அவுஸ்திரேலியாவுடன் ஒவலில் 1938 இல் 340 சனத் ஜயசூரிய இந்தியாவுடன் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் 1997-98இல் 337 ஹனீப் முஹம்மத (பாகிஸ்தான்) மே.இ. தீவுடன் பிரிஜ்டனில் 1957-586ზ 336* டப்ளியூ. ஆர். ஹட்மன்ட (இங்கிலாந்து) நியூசிலாந்துடன் ஒக்லன்டில் 1932-33. 334 டி.ஜி. பிரட்மன (அவுஸ்திரேலியா) இங்கிலாந்துடன் லீட்ஸில் 1930 இல், 333 ஜி. ஏ. கூச் (இங்கிலாந்து) இந்தியாவுடன் லோட்ஸில் 1990ல். 325 சந்ஹம் (இங்கிலாந்து) மே.கி. தீவுடன் கிங்ஸ்டனில் 1929-30. 311 ஆ.பி. சிம்ஸன (அவு) இங்கிலாந்துடன் மன்செஸ்டரில் 1964. 310* ஜே.எச். எட்ரிச (இங்கிலாந்து) நியூசிலாந்துடன் லீட்ஸில் 1965இல்,
(* அடையாளமிடப்பட்டது ஆட்டமிழக்காது என்பதை குறிக்கும்)
தினகரன் 10 ஆகஸ்ட் 1997
எனது பார்வை

Page 42
டெண்ருல்கார் இதுவரை இலங்கையை ஒருநாள் ஆட்டத்தில் தோற்கடித்ததில்லை!
இந்திய-இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட்டுகளைக் கொண்ட தொடர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
கடந்த உலகக் கிண்ணப் போட்டியை தொடர்ந்து இலங்கையில் நடந்த எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தோல்வி யடைந்ததில்லை.
டெஸ்ட் போட்டிகளின் விகிதாசாரத்தைப் பார்க்கும் போது பொதுவாக 50 வீதத்துக்கும் மேலானவை வெற்றி தோல்வியின்றி முடிவடைவதைக் காணமுடியும்.
ஐந்து தினங்கள் நடைபெறும் ஒரு டெஸ்ட்டில் முடிவைக் காணமுடியாது இருப்பது ரசிகர்களின் ஈடுபாட்டைக் குறைப்பதாக உள்ளது.
ஒருநாள் ஆட்டங்களைப் போன்று இறுக்கமான கட்டுப்பாடுகள் இல்லாததொரு தன்மை உடையதாக இருப்பதும், இதற்கொரு காரணமாகும்.
பொதுவாக ஒருநாள் ஆட்டங்களில் பந்து வீச்சாளர்களுக்கு சுதந்திரமாகப் பந்து வீசும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. பல விதிமுறைகளைப் பேண வேண்டியுள்ளது.
குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர்களுக்கு “பவுன்சர்” விக்கெட்டை
விட்டு தூர விலகிச் செல்லும் "அவுட் சுஹங்” பந்துகளை வீச முடியாதுள்ளது.
நூராணியா ஹஸன்
 

எனினும் டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்த வரையில் எவ்வகையில் பந்து வீசப்பட வேண்டும் என்ற ஒரு விதிமுறை கிடையாது.
டெஸ்ட் போட்டிகளில் “சிலிப்” பகுதிகளில் மூவரையும் “கலி"யில்
ஒருவரையும் பந்து தடுப்பதற்கு நிறுத்துவதன் மூலம் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல பயனைப் பெற்றுக்கொள்கின்றனர்.
எனினும் சுழல் பந்து வீச்சாளர்களைப் பொறுத்த வரையில் இந்த நன்மை டெஸ்ட்டில் கிடைக்கின்றது என்று சொல்வதற்கில்லை.
குறிப்பிடும் அளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத நிலையில் ஐந்து தினங்கள் ஆடி, ஒரு போட்டியில் முடிவு காண முடியாதிருப்பது திருப்தி தரக்கூடியதல்ல.
எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டியிலும் சில வரையறைகளை விதிப்பதன் மூலமே போட்டிகளில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இது விடயத்தில் கூடியளவு கரிசனை எடுக்க வேண்டும். இன்றேல் டெஸ்ட் போட்டிகளில் கவர்ச்சியிழந்துவிடும்.
டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் ஒருநாள் ஆட்டங்களைப் போலன்றி பாரம்பரியமாக ஆடி வரும் ஆட்டம் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
ஒருநாள் ஆட்டத்துக்கு வெறும் 25 வருட வரலாறுதான் உண்டு. அதுகூட எதிர்பாராத விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறவிருந்த டெஸ்ட், மழை காரணமாக கைவிடப்பட்டு, ரசிகர்களுக்காக ஆடிய ஒரு போட்டியின் மூலம் அறிமுகமானது.
இந்த அவசரமான, வேலைப் பளுவான உலகத்தில் ஐந்து தினங்கள் டெஸ்ட் ஆட்டமொன்றை கண்டு களிக்கும் வாய்ப்பு எவருக்கும் இல்லை. அவ்வாறுதான் டெஸ்ட் போட்டிகளைக் கண்டு களிக்கச் சென்றும் அவை வெற்றி தோல்வியின்றி முடிந்துவிடின் அவர்களுக்கென்ன பயன்?
இந்த நிலையில் டெஸ்டுக்களை ரசிகர்களைக் கவரும் வண்ணம் கொண்டு செல்லும் பொறுப்பு அணித் தலைவர்களுக்கு உண்டு.
எனது பார்வை

Page 43
இந்த வகையில் இலங்கை அணித் தலைவர் அர்ஜூனா தக்க தருணத்தில் நல்லதொரு முடிவை எடுத்து, இந்திய அணியை இரண்டாவது இனிங்ஸில் ஆட அழைத்தார்.
சில சமயங்களில் அவரது அந்தத் தீர்மானத்தால் இலங்கை அணி தோல்வியுறக் கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கலாம்.
ஏனெனில் இந்திய அணிக்கு 373 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கு 103 ஓவர் பந்து வீச்சு வழங்கப்பட்டிருந்தது.
இதனை வேறுவிதமாகச் சொல்வதாயின் ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 3.6 ஓட்டங்களைப் பெற்றால் போதுமானது.
இத்தகைய ஓர் இலகுவான இலக்கை பிரபல துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்குக் கொடுத்தது ஒரு முடிவோடுதான்.
உண்மையில் இந்திய அணி வெற்றியை இலக்காகக் கொண்டு ஆடியிருந்தால் நிச்சயம் போட்டியில் ஒரு முடிவு கிடைத்திருக்கும்.
நான்காவது நாள் 13 ஓவர்கள் பந்து வீச்சுக்கு முகம் கொடுத்த போது இந்திய அணி 49 ஓட்டங்களைப் பெற்று, சராசரி 37 ஐ தாண்டியிருந்தது.
எனினும் ஐந்தாவது தினம் ஆட்டம் ஆரம்பமாகி, முதலாவது விக்கெட் சரிந்ததுடன் ஒட்ட வேகம் குறைய ஆரம்பித்தது.
இரண்டாவது, மூன்றாவது விக்கெட்டுக்கள் சரிந்தவுடன் வெற்றியை நோக்கிச் செல்லும் எண்ணத்தையே இந்திய அணியினர் கைவிட்டனர்.
வியாழன் இரவு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இந்தியா-இலங்கை வீரர்களுடன் ஒரு சந்திப்பை ஜனசக்திக் காப்புறுதியாளர்கள் ஏற்படுத்தியிருந்தனர்.
அங்கு நான் ட்டோனி கிரேக்குடன் உரையாடிய போது “டெஸ்ட் போட்டிகளில் இத்தகைய முடிவுகள் வரக் கூடாது" என்று கூறினார்.
"அவுஸ்திரேலிய அணிக்கு இத்தகைய இலக்குக் கிடைத்துள்ள
சந்தர்ப்பங்களில் ஒரே ஒரு தடவைதான் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.”
KD நூானியா ஹஸன்

“ஒரு முடிவைப் பெறுவதற்கு முயல வேண்டும். இலங்கை அணிக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருந்தால் நிச்சயம் ஒரு முடிவைக் கண்டிருப்பார்கள்” என்றார் ட்டோனி.
எது எவ்வாறு இருப்பினும் டென்டுல்காரின் பக்கம் நின்று சிந்திப்பின் இப்போது அவர் நிச்சயம் தோல்வியைத் தேடிக்கொள்ள விரும்பமாட்டார் என்பது நிச்சயமே.
இதுவரை இலங்கை-இந்தியா அணிகளுக்கிடையே 16 டெஸ்ட்டுக்கள் நடைபெற்று, 8 வெற்றி தோல்வியின்றி முடிய 7ல் இந்தியாவுக்கும் ஒன்றில் இலங்கைக்கும் வெற்றி கிடைத்துள்ளது.
கிரேக் சபலின் கருத்துப்படி இலங்கை அணியின் பந்து வீச்சை சற்றுச் சீர்படுத்திக் கொண்டால் டெஸ்ட்டிலும் பிரபல்யமிக்க அணியாக மாறும்.
எது எவ்வாறு இருப்பினும் இந்தத் தொடர் இலங்கை வீரர்களுக்கு சாதனை படைக்கக் கூடிய ஒரு தொடராக மாறிவிட்டது.
அர்ஜுனா ரணதுங்க, அரவிந்த டி சில்வா ஆகிய இருவருக்கும் டெஸ்ட் போட்டிகளில் 4000 ஒட்டங்களைப் பூர்த்தி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.
எஸ்.எஸ்.ஸி. ஆடுகளம் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதக விளைவைத் தரத்தக்கதாக அமைக்கப்பட்டிருந்த போதும் எவரும் பயன்பெறவில்லை.
தனது மூன்று வேகப் பந்து வீச்சாளர்களும் புதிய பந்தினால் கூட நல்ல பயனைப் பெறத் தவறிவிட்டதாக அர்ஜுனா ரணத்துங்க குறைபட்டார்.
இரண்டு டெஸ்ட்டுகளிலும் பந்து வீச்சாளர்களுக்கு எதுவித சாதக விளைவும் கிடைக்காதது பற்றி சிலர் நடுவர்களையும் விமர்சித்ததுண்டு.
இரண்டு டெஸ்ட்டுகளிலும் ஒரே ஒரு எல்.பி.ட்பளியூ தீர்ப்பு மாத்திரமே வழங்கப்பட்டது. அது முதலாவது டெஸ்ட்டில் ரொஸான் மஹானாமவுக்கு எதிராக.
எனது பார்வை

Page 44
தொலைக்காட்சியைப் பார்த்து நாம் நடுவர்களை விமர்சிக்க முடியாது. எனினும் தொலைக்காட்சியால் எமக்கு ஓரளவு முடிவுக்கு வரக் கூடியதையும் மறுப்பதற்கில்லை.
இலங்கையின் சிரேஷ்ட நடுவரான KT பிரான்ஸிஸ், கட்டுரை ஆசிரியருடன் முன்னால் ராஜாங்க அமைச்சர், ஆரம்ப நேர்முக வர்ணனையாளர் அல்ஹாஜ் A.H.M. அஸ்வர் அவர்கள்
"கட்சர்ஸ்" வின் மட்சர்ஸ் என்று கடந்த கட்டுரையில் குறிப்பிட்டேன். அதே போன்று கிடைத்த பிடிகளை நழுவ விட்டதனால் வெற்றியும் நழுவி விட்டது.
இரண்டாவது டெஸ்ட்டின் முதலாவது இனிங்ஸில் சசின் டெண்டுல்காரின் இரண்டு பிடிகள் நழுவின. அதனால் அவர் சதத்தைத் தாண்டினார்.
அதே போன்று இரண்டாவது இனிங்ஸில் முஹம்மது அஸார்தீனின் மூன்று பிடிகள் கோட்டை விடப்பட்டன. அஸார் சதம் பெற்றதோடு இந்தியாவும் தோல்வியிலிருந்து மீண்டது.
உலகிலுள்ள மிகச் சிறந்ததொரு பந்து தடுக்கும் அணியாகக் கருதப்படும் இலங்கை பந்து தடுப்பில் இவ்வாறு நடந்து கொண்டது பெருங் குறையாகும்.
அரவிந்த டி சில்வா முதலாவது இனிங்ஸில் 146 ஓட்டங்களும்
இரண்டாவது இனிங்ஸில் 120 ஓட்டங்களும் பெற்று, இரண்டு இனிங்ஸில் முதல் சதம் பெற்ற முதல் இலங்கையரானார்.
நூராணியா ஹஸன்
 
 
 

இதே வேளை கடந்த பாகிஸ்தானுடனான டெஸ்டில் இரண்டு இனிங்ஸிலும் ஆட்டமிழக்காது (138, 103) சதம் பெற்று, இத்தகு சாதனை படைத்த முதல் வீரரானார். 9
இரண்டு தடவைகள் இரண்டு இனிங்ஸிலும் இதற்கு முன்பு பல வீரர்கள் சாதனை படைத்துள்ளார்கள் அவர்கள் வருமாறு:-
வோல்ட் (மே.இ), ஹேர்பேர்ட் (இங்கிலாந்து), ஹெட்லே (மே.இ.), கிரக்ஷபல், அலன் போடர் (அவுஸ்திரேலியா), சுனில் கவாஸ்கர் (இந்தியா) மாத்திரம் இச்சாதனையை மூன்று தடவை படைத்துள்ளார்.
சனத் ஜயசூரியாவும் அரவிந்த டி சில்வாவும் மூன்றாவது விக்கெட்டுக்காக 218 ஓட்டங்களை இணைப்பாட்டமாகக் கொண்டிருந்தனர்.
இதற்கு முன்பு மூன்றாவது விக்கெட்டுக்கான சிறப்பான இணைப்பாட்டம் 176. சந்திக்க ஹதுரு சிங்கவும் அரவிந்த டி சில்வாவும் 1995-96 பைஸலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக.
இதற்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக மூன்றாவது விக்கெட்டுக்கான சிறப்பான இணைப்பாட்டம் 153. றோய் டயஸ"ம் துலிப் மென்டிஸும் சென்னையில் 1982-83இல்.
சனத் ஜயசூரிய 199 ஓட்டங்கள் பெற்ற நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். அவர் இதற்காக 226 பந்துகளுக்கு முகம் கொடுத்தார்.
ஒரு நிலையில் வேகமான டெஸ்ட் இரட்டைச் சதம் பெறும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. இங்கிலாந்து இயன் பொதம் 1982இல் இந்தியாவுக்கு எதிராக 220 பந்துகளில் இரட்டைச் சதம் பெற்றார்.
சனத் ஜயசூரிய இவ்வருடம் 1000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதல் வீரர். இவ்வருடம் அவர் 8 டெஸ்ட்டுகளின் 15 இனிங்ஸ்"களில் 1114 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.
ஒரு வருடத்தில் கூடிய ஒட்டம் பெற்றுச் சாதனை படைத்துள்ளவர் மேற்கிந்திய வீரர் விவியன் ரிட்சர்ட்ஸ். 1976இல் அவர் 1710 ஓட்டங்களைப் பெற்றார்.
எனது பார்வை

Page 45
இந்திய அணியுடன் இவ்வருடம் மூன்று டெஸ்ட்டுகளில் இலங்கை ஆடவுள்ளது. அத்தொடரில் சனத் ஜயசூரிய அச்சாதனைக்காக முயற்சிக்கலாம்.
அதே வேளை அரவிந்த டி சில்வா இவ்வருடம் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற 7 ஓட்டங்கள் இருக்கையில் ஆட்டமிழந்தார்.
இந்த வகையில் பார்க்கும் போது இந்த டெஸ்ட் தொடரில் சாதனை படைக்க வாய்ப்புக் கிடைத்த ஒரு தொடர் என்றே கூற வேண்டும்.
எது எவ்வாறு இருப்பினும் எதிர்கால டெஸ்ட் போட்டிகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதில் நல்ல பயிற்சி கிடைத்தது.
டெஸ்ட் போட்டிகள் இவ்வாறு இருக்கையில் இன்று மாலை ஆரம்பமாகும் ஒருநாள் போட்டியும் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் பெறுகின்றது.
உலகக் கிண்ணப் போட்டியைத் தொடர்ந்து இந்தியாவில் இலங்கையை தோற்கடிக்கும் பெரிய வாய்ப்பொன்றும் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.
அதனைவிட டெண்டுல்காரின் தலைமையில் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் இலங்கையே வெற்றி கண்டுள்ளது.
சுதந்திரக் கிண்ணத்தைத் தொடர்ந்து, ஆசியாக் கிண்ணப் போட்டிகளிலும் இலங்கையிடம் இந்தியா முழுமையாகத் தோல்வி கண்டது.
இந்த வகையில் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் ஆட்டத் தொடரில் எவ்வாறாவது இந்தியா வெற்றி பெற வேண்டியுள்ளது.
எனினும் விமர்சகர்களின் கருத்துப்படி ஒருநாள் ஆட்டங்களில் இலங்கையை தோற்கடிப்பது இலகுவான ஒரு காரியமல்ல.
இந்தியாவைப் பொறுத்த வகையில் நல்ல துடுப்பாட்ட வீரர்களும் பந்து வீச்சாளர்களும் உள்ளார்கள். அவர்களது அணுகு முறையிலே வெற்றி தங்கியுள்ளது.
நூராணியா ஹஸன்
 

இலங்கையின் பிரபல வீரர்கள் அனைவரும் சிறப்பான நிலையில் உள்ளதனால் இந்திய பந்து வீச்சாளர்களுக்குச் சிரமமாக இருக்கும்.
எது எவ்வாறு இருப்பினும் வெற்றி எவர் பக்கம் என்பதை இன்றிரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
தினகரன் 17. ஆகஸ்ட் 1997
எனது பார்வை

Page 46
ஒரு நாள் ஆட்டச் சாதனையை இலங்கை டெஸ்ட்டிலும் தொடருமா?
சிங்கர் கிண்ணப் போட்டித் தொடரில் தோல்வியுறாத நிலையில் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை உலக சம்பியன் நிலையிலேயே இன்றும் உள்ளதை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
பொதுவாக ஒரு நாள் ஆட்டங்களைப் பொறுத்த வரையில் உலகிலுள்ள எந்தவொரு அணிக்கும் நிகரற்ற விதத்தில் இலங்கை அணி திகழ்வதை எவரும் மறுப்பதற்கில்லை.
முன்னாள் டெஸ்ட் வீரர் இயன் சபலின் கருத்துப்படி ஒரு நாள் ஆட்டத்தில் இலங்கை அணிதான் முதன்மை நிலையில் உள்ளது. இயன் சபல் சிங்கர் கிண்ணப் போட்டியில் நேர்முக வர்ணனையாளராக கடமையாற்றினார்.
அவர் 75 டெஸ்ட்டுகளில் ஆடி ஐயாயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்ற அனுபவமிக்கவர். அவரின் கருத்துப்படி டெஸ்ட் போட்டிகளில் எமது பந்து வீச்சை அபிவிருத்தி செய்ய வேண்டி உள்ளது.
தற்போது இலங்கை அணியில் சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன் ஆகிய இருவரையும் தவிர்த்துப் பார்த்தால் டெஸ்ட் ஆட்டங்களுக்கு அனுகூலமான பந்து வீச்சாளர்கள் கிடையாது.
எதிர்காலத்தில் நல்லதொரு வேகப் பந்து வீச்சாளராக வருவதற்குரிய அறிகுறி ரவீந்தா புஷ்பகுமாரிடம் காணப்படுகிறது. எனினும் டெஸ்ட்டுகளில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு அவர் நிறைய பயிற்சி பெறவேண்டியுள்ளது.
நூானியா ஹஸன்
 

இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் பாத சுழல் பந்து வீச்சு முக்கிய இடம் பெறுகின்றது. கடந்த இங்கிலாந்துச் சுற்றுலாவில் இதனை முஸ்தாக் அஹமட் நிரூபித்தார்.
எமது அணியில் பாத சுழல் பந்து வீச்சாளருக்கான வெற்றிடம் நீண்ட காலமாக இருந்து வருகின்றது. ஒருநாள் ஆட்டங்களைப் போன்று பகுதி நேரப் பந்து வீச்சாளர்களின் உதவியோடு டெஸ்ட்டுகளில் வெற்றி பெற முடியாது.
உலக டெஸ்ட் அணிகளைப் பொறுத்த வரையில் நிலையான நான்கு பந்து வீச்சாளர்கள் இடம் பெறுவது வழக்கமாக உள்ளது. ஏனென்றால் அது அவசியமானது.
எமது அண்மைக்கால டெஸ்ட் வெற்றிகளைப் பொறுத்த வரையில் அவற்றுள் சமிந்தவாஸ், முத்தையா முரளிதரன் ஆகிய இருவரினதும் பங்களிப்பு முக்கியமாக உள்ளது.
இன்று உலக மட்டத்தில் நோக்கும் போது பந்து வீச்சாளருக்கான ஓர் இடைவெளி பலநாடுகளிலும் காண்ப்படுகின்றது. இலங்கையை விட பல தசாப்தங்களுக்கு முன்பு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இந்தியாவின் நிலையும் அவ்வாறுதான்.
பாடசாலை மட்டத்திலே இருந்து திறமையானோரை தேர்ந்தெடுத்து, முறையான பயிற்சி கொடுப்பதன் மூலமே அடுத்த நூற்றாண்டில் எமது டெஸ்ட் கிரிக்கெட்டின் நிலையை உயரச் செய்ய முடியும்.
இன்று இலங்கை அணியில் பல உலக மட்ட 9 துடுப்பாட்ட வீரர்கள் உள்ளனர். வேறு விதமாகச் சொன்னால் துடுப்பாட்டத்தில் அங்கசம் பூரண அணியாக உள்ளது.
ஒரு நாள் ஆட்டத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, நீண்ட இடைவெளிக்குப் பின்பே சிம்பாபே அணியுடன் டெஸ்ட்டில் கலந்து கொண்டுள்ளது. இதனால் ஐந்துநாள் ஆட்டத்துக்கு தம்மை ஆட்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
"ஒருநாள் ஆட்டங்களில் உப கண்ட சூழ்நிலைக்கு ஏற்பவே இலங்கையால் வெற்றிபெற முடியும்.” என்று அவுஸ்திரேலியா அணி பதில் தலைவர் இயன் ஹீலி நாடு திரும்பிய பின் கூறியுள்ளார்.
எனது பார்வை

Page 47
அவுஸ்திரேலியா ஆடுகளங்களில் இலங்கை அணியின் நுணுக்கங்களைக் கையாண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற முடியாது என்றும் ஹீலி குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் உலகில் உள்ள எந்த ஆடுகளங்களிலும் தம்மால் வெற்றிபெற முடியும் என்பதை கடந்த காலங்களில் இலங்கை அணி நிரூபித்துள்ளது.
சாதனைகள் பல படைத்துள்ள இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்
மறுபுறத்தில் இலங்கை அணி திறமை மிகு அணி என்பதையும் இயன் ஹீலி ஏற்றுக் கொள்கின்றார். இது கீழே விழுந்தும் மீசையில் மண்படாத கதையாகத்தான் உள்ளது.
முன்னைய வாரங்களில் வாரமஞ்சரியில் நான் எழுதிய கட்டுரையில் ஒவ்வொரு அணியினதும் நிலையைக் கணிப்பிட்டு இலங்கை அணிதான் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டும் என்று எழுதியது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கும்.
நூராணியா ஹஸன்
 
 

அதே போன்று இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் இந்திய அணிதான் மோதும் என்று எழுதிய எனது கணிப்பீடு பிழையாக அமைந்து விட்டதே என்றும் வாசகர்கள் எண்ணலாம்.
ஆனால் கடந்தவாரங்களில் ஒருநாள் பந்து தடுப்பின் (பீல்டிங்) முக்கியத்துவத்தை நான் எழுதி இருந்தேன். அதாவது ஆங்கிலத்தில் சொல்வதாயின் "கட்சர்ஸ் வின் மட்சர்ஸ்” கட்சுகளின் மூலமே ஆட்டங்களில் வெற்றிபெற முடியும்.
இந்திய, அவுஸ்திரேலிய போட்டியில் மூன்று பந்துகள் இடைவெளியிலே வெற்றிபெற்றது. இந்தப் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்த, வானொலியில் கேட்ட வாசகர்களுக்கு இந்தியாவின் தோல்விக்குக் காரணம் புரிந்திருக்கும்.
இந்திய அணி முக்கியமான இரண்டு கட்சுகளை நழுவ விட்டது. குறிப்பாக ஸ்டீவ் வோவினது கட்சையாவது பிடித்திருந்தால் நிலைமை நான் எழுதியவாறு அமைந்திருக்கும்.
இலங்கையில் பந்து தடுப்பின் உன்னத நிலையை கடந்தவாரம் எழுதியிருந்தேன். இறுதிப் போட்டியில் ரொஸான் மஹானாம, முத்தையா முரளிதரன் ஆகியோர் பிடித்த கட்சுகளை இலகுவில் மறக்க முடியுமா?
இலங்கை, சிம்பாபே அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் ஆரம்பமாகி இரண்டாவது நாள் முடிவின் போதுதான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. இலங்கை அணியை 349 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்துவதில் சிம்பாப்பே பந்து வீச்சாளர்கள் தமது திறமையினை வெளிக் கொணர்ந்து விட்டார்கள்.
கடந்த வார மஞ்சரியில் எழுதியது போன்று ஒலங்கோ, ஸ்ராங், ஸ்ரீக் ஆகியோர் இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்குப் பெரும் சவாலாகப் பந்து வீசினார்கள்.
இலங்கை அணியின் முதலாவது இனிங்சில் அர்ஜுனா ரணத்துங்க, ரொமேஷ் களுவிதாரன, அசங்க குருசிங்க ஆகியோரைத் தவிர ஏனையோர் திறமை காட்டவில்லை.
குமார் தர்மசேன, தான் நல்லதொரு சகலதுறை ஆட்டக்காரர் என்பதை ஆட்டமிழக்காது 42 ஓட்டங்கள் பெற்று மீண்டும் நிரூபித்தார்.
எனது பார்வை

Page 48
பொதுவாக டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை ஐந்து நாட்கள் தொடர்ந்து ஆடவேண்டும் என்பதை எண்ணத்தில் கொண்டு ஆட வேண்டும். ஐம்பது ஓவர்கள் என்ற நிலையில் இருக்கக் கூடாது.
2000 ஆம் ஆண்டில் உலகில் உள்ள முன்னணி டெஸ்ட் அணியாக மிளிர்வதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்வரும் டெஸ்ட்டுகளிலே நிரூபிக்க முடியும்.
சிம்பாப்பே டெஸ்ட் தொடரை தொடர்ந்து இலங்கை அணி பல போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளது. முதலில் கென்யாவில் நடைபெறும் ஒருநாள் ஆட்டத்தில் ஆடும்.
அப்போட்டியில் தென்னாபிரிக்கா, கென்யா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து சார்ஜாவில் நடைபெறும் போட்டிகளிலும் இலங்கை கலந்து கொள்ள உள்ளது.
சார்ஜா போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன. சார்ஜாப் போட்டியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இலங்கை வரவுள்ளது.
பாகிஸ்தான் சுற்றுலா இலங்கையில் முடிவடைந்ததுடன் இலங்கை அணி நியூஸிலாந்துக்கும் அதனைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கும் சுற்றுலா மேற்கொள்ளும்.
எனவே ஒருநாள் ஆட்டங்களில் போன்றே டெஸ்ட் போட்டிகளிலும் திறமை காட்டுவதற்கு ஐந்து தினங்களும் நல்ல முறையில் ஆடுவதற்கு அணியைப் பலப்படுத்த வேண்டியுள்ளது.
தினகரன் 15 செப்டம்பர் 1996
நூராணியா ஹஸன்
 
 

நியூஸிலாந்தில் நிதானத்துடன் ஆடியிருந்தால் நின்று பிடித்திருக்கலாம்.
நியூஸிலாந்து டெஸ்ட் பயணத்தின் தோல்விகளை சுமந்து கொண்டு, இலங்கை சார்ஜா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை டெஸ்ட் தொடரில் 2-0 நிலையில் தோல்வி அடைந்துள்ளதோடு ஒரு ஆட்டத் தொடரை 1-1 என்ற ரீதியில் முடித்துக் கொண்டுள்ளது.
இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கைக்கு வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளும் வாய்ப்பு இருந்த போதும் அதனை நழுவவிட்டனர். இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றிருந்த நியுஸிலாந்து அணி அந்தத் தோல்வியினை இலங்கையுடனான வெற்றியால் மறைத்துக் கொண்டது.
இங்கிலாந்து அணிக்கு ஸிம்பாப்பேயில் பிரகாசிக்க முடியாது போன குறையை நியூஸிலாந்தில் நிறைவு செய்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதற்கு முன்பு வெளிநாடு ஒன்றில் இறுதியாக 1991-92 களிலேயே இங்கிலாந்து டெஸ்ட் தொடரொன்றில் வெற்றியீட்டியுள்ளது.
அதுவும் நியூஸிலாந்துக்கு எதிராக 2-0 என்ற நிலையில். இங்கிலாந்து இந்த வருடம் 5 டெஸ்ட்டுகளில் ஆடியுள்ள போதிலும் இன்னும் தோல்விகளைச் சந்திக்கவில்லை.
இந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஏனைய அனைத்து நாடுகளும் (பாகிஸ்தான் தவிர) தோல்விகளைச் சந்தித்துள்ளன. இந்த வகையில் பார்க்கும் போது இந்த வருடம் இதுவரை நடைபெற்றுள்ள கணிப்பீடுகளின்படி விகிதாசார அடிப்படையில் முதன்மையில் இருப்பது இங்கிலாந்துதான்.
எனது பார்வை

Page 49
நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் ஒக்லாந்தில் நடந்த முதலாவது டெஸ்ட்டிலும் இங்கிலாந்துக்கு வெற்றியீட்டும் வாய்ப்பு இருந்தது. எனினும் 10 வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காத இணைப்பாட்டத்தைக் கொண்டிருந்த அஸ்லே, மொரிஸன் ஆகியோர் அந்த வெற்றியை தடுத்தனர்.
அவர்கள் இருவரும் இணைந்து 10வது விக்கெட்டுக்காக 106 ஓட்டங்களை இணைப்பாட்டமாகக் கொண்டிருந்தனர். (அஸ்லே) (ஆ, இ) 102 மொரிஸன் (ஆ, இ) 26 ஓட்டங்கள். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10வது விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டத்தைக் கொண்ட 13வது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முண் பு 10வது விக்கெட்டுக்கு 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாகக் கொண்டவர்கள் அவுஸ்திரேலியா வீரர்கள் இருவர்.
அவர்கள் இங்கிலாந்துக்கு எதிராக 1901-02 களில் மெல்பேர்னில் 120 ஓட்டங்களை இணைப்பாட்டமாகக் கொண்டிருந்தனர். (டப் 104 ஆம்ஸ்ரோங் (ஆ, இ) 45 ஓட்டங்கள்).
அதனைத் தொடர்ந்து 1903-04 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து வீரர்களான போஸ்டர், ரோட்ஸ் ஆகியோர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரர்க சிட்னியில் 130 ஓட்டங்களை இணைப்பாட்டங்களாகக் கொண்டிருந்தனர்.
இதுவரை பத்தாவது விக்கெட்டுக்காக மிகச் சிறப்பான இணைப் பாட்டத்தைப் பெற்றுள்ளவர்கள் நியூஸிலாந்து வீரர்களான ஹாஸ்டிங், கொலின்ஜ் ஆகியோர்.
அவர்கள் இருவரும் 1972 / 73 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒக்லண்டில் 151 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். (ஹாஸ்டிங் 110, கோலின்ஜ் (ஆ, இ) 68 ஓட்டங்கள்).
அதே போன்று 1976-77களில் பாகிஸ்தான் வீரர்களான வஸீம் ராஜா (71) வாஷிம் பாரி (ஆ, இ) 60 ஆகியோர் பிரிஜ் டவுனில் மேற்கிந்திய தீவுக்கு எதிராக 133 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர்.
இவ்வாறு 10வது விக்கெட்டுக்காக சதத்துக்கான இணைப்பாட்டத்தைப் பெறுவதானால் அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு கிடைப்பதுடன தோல்வியிலிருந்து மீளவும் முடிகின்றது.
நூராணியா ஹஸன்
 

இத்தகைய சந்தர்ப்பங்களில் மிக நீண்ட நேரம் விக்கெட்டில் தரித்திருந்து குறைந்த ஓட்டங்களைப் பெறுவதையும் காணமுடியும். இங்கிலாந்து அணிக்கெதிராக அண்மைய 10வது விக்கெட்டுக்கான நியூசிலாந்து வீரர் மொரிஸனின் ஆட்டம் மிக மெதுவானதாக அமைந்தது.
மொரிஸன் 166 நிமிடங்கள் விக்கெட்டில் தரித்திருந்து, 133 பந்துகளுக்கு முகம் கொடுத்து, 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். ஏற்கனவே மொரிஸனின் பெயரில் இன்னொரு சாதனையுண்டு. அதாவது டெஸ்டுகளில் கூடுதலான 0 (பூச்சியத்தை) பெற்று ஆட்டமிழந்தவர் 6T60TLg).
ற ".
ബിuചേ வீரர் அண்டி பிளவர் தனத சகோதரர் கிராண்ட் பிளவருடன்
இதற்கு முன்பு மொரிஸன் 1990-91களில் பாகிஸ்தானுக்கு எதிராக பைஸலாபாத்தில் 242 நிமிடங்கள் விக்கெட்டில் தரித்திருந்து 25 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். இதே போன்று 1946-47களில்
இங்கிலாந்தைச் சேர்ந்த ஈவன்ஸ் 10 ஓட்டங்கள் பெற 133 நிமிடங்கள் தேவைப்பட்டன. (அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலேட்டில்).
எனது பார்வை

Page 50
இந்தியாவைச் சேர்ந்த யவர் பால் சர் மா 1980-81களில் அவுஸ்திரேலியாவுக்கெதிராக அடிலேட்டில் 12 ஓட்டங்கள் பெறுவதற்காக 169 நிமிடங்கள் விக்கெட்டில் தரித்திருந்தார்.
நியூசிலாந்து மார்டின் குரோ 1983-84களில் இலங்கைக்கு எதிராக மொரட்டுவையில் 19 ஓட்டங்கள் பெறுவதற்காக 217 நிமிடங்கள் விக்கெட்டில் தரிந்திருந்தார்.
1996-97களில் சிம்பாபேயைச் சேர்ந்த அண்டி பிளவர் பாகிஸ்தானுக்கு எதிராக ஷெய்க்புரவில் 18 ஒட்டங்கள் பெறுவதற்கு 210 நிமிடங்கள் தேவைப்பட்டது.
இந்த வகையில் பார்க்கும் போது டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில் நீண்ட நேரம் விக்கெட்டில் தரித்திருப்பதன் மூலமும் முடிவுகளை மாற்றலாம். இலங்கை-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இலங்கை வீரர்கள் இன்னும் சற்று நிதானமாக ஆடியிருந்தால் முடிவு வேறாக அமைந்திருக்கலாம்.
ஒருநாள் ஆட்டங்கள் போன்று டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாது. டெஸ்ட்டின் அணுகுமுறை வேறாக உள்ளது. மிக நீண்டநேரம் விக்கெட்டில் தரித்திருப்பதன் மூலம் அணிக்கு ஒரு ஸ்திரமான நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
பல ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இனிங்ஸ்ஸை ஆரம்பித்து, முடிவு வரை ஆட்டமிழக்காது இருந்திருப்பதைக் காண்கின்றோம். அதே போன்று தனது அணியைத் தோல்வியில் இருந்து மீட்பதற்காக அல்லது வெற்றியை நோக்கி இழுத்துச் செல்வதற்காக அணித் தலைவர்கள் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்த சந்தர்ப்பங்கள் உண்டு.
பல சந்தர்ப்பங்களில் அணி குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோதும் அணித் தலைவர்கள் ஆட்டமிழக்காது இருந்துள்ளனர்.
இந்த வகையில் அண்மைய நியூஸிலாந்து சுற்றுலாவில் இங்கிலாந்து 228 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போது மைக் அத்தர்டன் 94 ஓட்டங்கள் பெற்று, ஆட்டமிழக்காது இருந்தார்.
நூரானியா ஹஸன்
 

1982-83களில் பாகிஸ்தானுக்கு எதிராக பைஸலாபத்தில் இந்தியா 286 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்தபோது, அணித் தலைவர் சுனில் கவாஸ்கர் ஆட்டமிழக்காது 127 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
1970-71களில் டில்லியில் அவுஸ்திரேலியா 107 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தபோது, அவுஸ்திரேலியா அணித் தலைவர் லோரி ஆட்டமிழக்காது 49 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
அதேபோன்று 1970-71களில் அவுஸ்திரேலியா சிட்னியில் இங்கிலாந்துக்கு எதிராக 116 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தபோது, அணித் தலைவர் லோரி ஆட்டமிழக்காது 60 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
1991ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி லீட்ஸில் மேற்கிந்தியத் தீவுக்கு எதிராக 252 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்த போது ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆடிய இங்கிலாந்து அணித் தலைவர் கிரஹம் கூச் 154 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காது இருந்தார்.
இந்த வகையில் ஓர் அணியின் வெற்றியில் அந்த அணித் தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. தமது அணியைத் தோல்வியிலிருந்து மீட்பதற்கு அவர்கள் இறுதி வரை முயற்சி எடுக்க வேண்டும்.
10வது விக்கெட்டின் இணைப்பாட்டம் போன்றே ஆரம்ப விக்கெட்டுகளுக்கான இணைப்பாட்டமும் சிறப்பானதாக இருந்தால் எதிரணிக்கு அச்சுறுத்தலாக அமையும்.
இந்த வகையில் அனைத்து விக்கெட்டுக்குமான சிறப்பான இணைப்பாட்டம் 467 ஓட்டங்களாகும். இது மூன்றாவது விக்கெட்டுக்காக நிலைநாட்டப்பட்டுள்ளது.
1990-91களில் நியூஸிலாந்தின் அன்றோ ஜோன்ஸ், மார்டின் குரோ ஆகியோர் இலங்கைக்கு எதிராக வெலிங்டனில் இதனை நிலை நாட்டினர்.
அவுஸ்திரேலிய பொன்ஸ் போர்ட், பிரட்மன் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக 457 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர். (1934 ஒவலில் இங்கிலாந்துக்கு எதிராக)
எனது பார்வை

Page 51
பாகிஸ்தானின் ஜாவிட் மியன்டாட், முதஸ்ஸர் நஸார் ஆகியோர் 198283களில் இந்தியாவுக்கெதிராக ஹைதராபாத்தில் 3வது விக்கெட்டுக்காக 451 ஓட்டங்களைப் பெற்றனர்.
இவ்வருடம் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளவர்கள் அவுஸ்திரேலிய ஸ்டீவ் வோ, பிலவட் ஆகியோர் தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஜொஹனஸ் பேர்க்கில் ஐந்தாவது விக்கெட்டுக்காக 385 ஓட்டங்கள்.
1985-86களில் பாகிஸ்தானின் ஜாவிட் மியன்டாட், காசிம் ஒமர் ஆகியோர் பைசலாபாத்தில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது விக்கெட்டுக்காக 397 ஓட்டங்களைப் பெற்றனர்.
1955-56களில் இந்தியாவின் மன்காட், பி. றோய் ஆகியோர் நியூஸிலாந்துக்கெதிராக சென்னையில் முதலாவது விக்கெட்டுக்காக 411 ஓட்டங்களைப் பெற்றனர்.
இவ்வாறு இங்கு நான் குறிப்பிடாத இன்னும் பல சிற, இணைப்பாட்டங்கள் காணப்படுகின்றன. உதாரணத்துக்கு சிலவற்றைத் தந்துள்ளேன். எது எவ்வாறு இருப்பினும் ஓர் அணியின் ஸ்திரத் தன்மைக்கு சிறந்த இணைப்பாட்டங்கள் அவசியமாகின்றன.
இரண்டு வீரர்கள் குறைந்தது இரட்டைச் சதத்துக் கான இணைப்பாட்டத்தையாவது பெற்றுத் தந்தால்தான் போட்டியில் சாதக விளைவை எதிர்பார்க்க முடியும். சதத்துக்கான, இரட்டை சதத்துக்கான இணைப்பாட்டத்தைப் பெறுவதற்கு மிகுந்த நிதானத்துடனும் அவதானத்துடனும் ஆடுவது அவசியம்.
தினகரன் 30 மார்ச் 1997
நூானியா ஹஸன்
 
 

அஸ்ஹருதீன் சங்கீதாவை கைபிடிப்பாரா? தலைமைப் பதவியை கைநழுவ விருவாரா? இங்கிலாந்துச் சுற்றுலா அதனைத்திர்மானிக்கும்!
இந்திய அணி கிரிக்கெட் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த சுற்றுலா இந்திய அணியைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
ஒரு புறத்தில் இந்திய அணி உலகக் கிண்ணப் போட்டியைத் தொடர்ந்து இழந்துள்ள அதன் கீர்த்தியை மீட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.
மறுபுறத்தில் இந்தியா அணி தலைவர் முஹம்மது அஸ்ஹருதீனின் எதிர்காலம் இந்த இங்கிலாந்து சுற்றுலாவில்தான் தீர்மானிக்கப்படவுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு வெற்றிகரமாக மேற்கொண்ட சுற்றுலா 1986ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டதாகும். அந்தச் சுற்றுலாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டத் தொடர்களில் இந்திய அணி வெற்றியீட்டியது.
முஹம்மத் அஸ்ஹருதீன் இந்திய அணிக்கு சிறந்ததொரு தலைமைத்துவத்தை கொடுத்துள்ளார். குறிப்பாக 80களின் பின்பு நீண்டகாலம் தொடர்ச்சியாக தலைவராக இருந்து வருகின்றார்.
இந்தியாவின் தலைமைத்துவம் 80களின் பின்பு ஒரு ஸ்திரமான நிலையில் காணப்படவில்லை. தொடர்ந்து பல தலைவர்கள் மாறி, மாறி வந்துள்ளனர்.
80ஆம் ஆண்டு தசாப்தத்தில் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆகிய இருவருக்கிடையேயும் தலைமைப்பதவி சங்கீதக் கதிரைபோன்றே அமைந்திருந்தது.
எனது பார்வை

Page 52
ஒருவர் பின் ஒருவர் மாறி, மாறி அமர்த்தப்பட்டனர். 83ஆம் ஆண்டு உலகக் கிண்ண வெற்றியுடன் கபில்தேவ் நிலை ஸ்திரமாகிய போதும் 85 இல் இலங்கை சுற்றுலாவைத் தொடர்ந்து கேள்விக்குறியாகியது.
கபில் தேவைத் தொடர்ந்து ரவிசாஸ்திரி, வென்சாக்கர், ரீகாந்த் எனப் பலர் குறுகிய காலம் தலைவராக அமர்த்தப்பட்டிருந்து பின்பு அணியிலிருந்தே நீக்கப்பட்டனர்.
இந்த வகையில் 1990களில் தலைமைப் பதவி ஏற்ற முஹம்மத் அஸ்ஹருதீன் கடந்த ஆறு வருடங்களாகப் பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்தவாறு தனது தலைமைக் கிரீடத்தைச் சுமக்கின்றார்.
அவரது தலைமையின் கீழேயே இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் கூடுதலான வெற்றிகளைக் கண்டுள்ளது.
அதிலும் அண்மைக்காலம் வரை அஸ்ஹருதீனின் துடுப்பாட்டத்தில் எதுவித குறைவும் ஏற்படவில்லை, தலைமைத்துவம் அவருக்கு ஒரு பாரமாக இருக்கவில்லை. சீரான முறையில் இந்திய அணியை வழி நடாத்திப் பல வெற்றிகளுக்கு இட்டுச் சென்றார்.
எனினும் அண்மையில் இந்தியா கலந்து கொண்ட வில்ஸ் உலகக் கிண்ணப் போட்டி, சிங்கர் கிண்ண போட்டி, சார்ஜா போட்டிகளில் அவர் பிரகாசிக்கவில்லை.
இதற்கு பயிற்சியின்மையோ அல்லது இயல்பாகவே உடலியல் ரீதியாக கிரிக்கெட் ஆடுபவர்களுக்கு ஏற்படும் தளர்வாகவும் இருக்கலாம். எனினும் அத்தகைய தளர்வு நிரந்தரமானதல்ல.
எனினும் உளவியல் ரீதியான காரணங்களும் இதில் தாக்கம் செய்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக அண்மைக் காலமாக அஸ்ஹருதீனின் பெயருடன் ஹிந்தி நடிகை சங்கீதாவின் பெயரும் அடிபடுகிறது.
இதற்கு முன்பு இவ்வாறுதான் ஹிந்தி நடிகை அம்ரிதாவுடன் ரவிஸாஸ்திரியின் பெயர் அடிபட்டு காற்றோடு கலந்தது வாசகர்களின் ஞாபகத்தில் இருக்கலாம். அதேபோன்று இம்ரான்கான் சீனத் அமன் விடயமும் தெரிந்ததே.
நூராணியா ஹஸ்னி
 

முஹம்மத் அஸ்ஹருதீனின் இந்தத் தொடர்பு சம்பந்தமாக பலரும் ஆச்சரியப்படுகின்றனர். அதற்குக் காரணம் சிறந்ததொரு சமய குடும்ப சூழ்நிலையில் அவர் வளர்ந்ததாகும். அவர் மைதானத்திலோ மைதானத்திற்கு வெளியிலோ எந்தவித வம்புகளிலும் மாட்டிக் கொள்ளாதவர்.
இதனால் அவரைப்பற்றி பத்திரிகைகளும் விமர்சித்தது கிடையாது. ஐந்து நேரமும் தொழுகையை (இறை வணக்கம்) நேரம் தவறாது நிறைவேற்றுபவர். ஏனைய வீரர்களைப் போன்று "கிளப்' நடனங்களுக்கு செல்வதோ மது அருந்துவதோ கிடையாது.
அஸ்ஹருதீன் நடிகை சங்கீதாவுடன் (திருமணத்தின் பின்பு)
அவரது குடும்பம் செழிப்பான புகழ்மிக்க குடும்பம். அவரது மூதாதையர்கள் ஆசாரமானவர்கள். அத்தகைய வம்சத்தில் வந்து யாரும் எதிர்பாராத விதமாக வழிமாறிவிட்டார்.
சங்கீதா பிஜ்லானியுடன் சேர்ந்து சுற்றும் போது ஒரு பத்திரிகைக்காரர் புகைப்படம் எடுத்ததற்கு எரிச்சலடைந்து அவரை அடித்தும் விட்டார்.
எனது பார்வை -(85)

Page 53
உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டி காரணமாக இப்பிரச்சினை பெரிதாக எழவில்லை. எனினும் தற்போது அவரது தலாக் (மணவிலக்கு) தொடர்பாக பத்திரிகைகள் எழுதுகின்றன.
உலகிக்கிண்ணப் போட்டியில் இந்தியா தோல்வியுற்ற போது, அஸ்ஹருதீன் தோல்வியுற்றதற்கான கிண்ணத்தை பெறச் சென்ற போது, அரங்கம் அதிர்ந்தது.
"அஸ்ஹருதீன் ஹாய். ஹாய். சங்கீதா பாய்.பாய்."1 அன்று இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் அஸ்ஹருதீனினதும் சங்கீதா பில்ஜானியினதும் தொடர்பே என்று முழு இந்தியாவுமே நினைத்தது.
அஸ்ஹருதீனின் விவாகரத்து தொடர்பாக செய்தி சேகரிக்க ஹைதராபாத்திலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற பத்திரிகை யாளருக்கு அவரது தந்தை வெகுவாக ஏசியுள்ளார். "அஸார் தொடர்பாக பத்திரிகைகள் எழுதுபவை அனைத்தும் பொய். அவை பத்திரிகைகள் கட்டிய கதை" என்று கூறியுள்ளார்.
அவரது மனைவி கருத்துத்தெரிவிக்கும் போது "அஸார் சிறந்த பக்தியுள்ள முஸ்லிம். அந்த நிலையில் இருந்து அவர் என்றும் மாறமாட்டார். அதனால் அவர் பற்றிய கதையை நான் ஏற்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
சங்கீதாவிடமிருந்து இதுபற்றிக் கேட்டபோது "அஸ்ஹருதீன் எனது நெருங்கிய நண்பர். அவர் விருந்துகளில் பார்ட்டிகளில் என்னைச் சந்திப்பார்”. அதனைவிட எதனையும் கூற சங்கீதா மறுக்கின்றார்.
அஸ்ஹருதீன் பத்து வருடங்களுக்கு முன்பு பெற்றோர் பேசியபடி நெளரினை மணந்து கொண்டார். அவரது அழகிய மனைவியுடன் இதுவரை திருமண வாழ்வில் எதுவித பிணக்குகளும் ஏற்பட்டில்லை. விளையாடும் குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டினார். தனது மகனான அப்பாஸிடம் ஏராளமான பிரியம்.
ஸஹிர் அப்பாஸைப் போன்றே கிரிக்கெட் வீரராக மாற்ற வேண்டுமென்று அடிக்கடி மனைவியிடம் சொல்வார். சங்கீதா பிஜ்லானி மோகத்தில் சிக்குண்டுள்ள அஸ்ஹருத்தீன் தனது நற்பெயருக்கும் அந்தஸ்துக்கும் ஏற்பட்டுள்ள களங்கத்தை உணரும் நிலையில் இல்லை.
நூரானியா ஹஸன்
 

அஸ்ஹருத்தீனின் குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு எதிராகவே உள்ளனர். அவரது மனைவி நெளரினும் துபாயிலுள்ள பெற்றோரிடம் செல்லாது அஸ்ஹருடைய பெற்றோரிடமே உள்ளனர்.
எது எவ்வாறு இருப்பினும் கடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவரது உள்ளத்தில் வீசிய புயலின் வெளிப்பாடு தெரிந்ததாக சில விமர்சகர்கள் எழுதுகின்றனர். தொடர்ந்தும் தனது தலைமைத்துவத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் இந்த இங்கிலாந்து சுற்றுலாவில் அவர் வெற்றியீட்டியே ஆக வேண்டும்.
1993ல் இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா இங்கிலாந்துடன் வெற்றி கண்டது. அத்தகைய ஒரு வெற்றியைத்தான் இந்தியா மீண்டும் எதிர்பார்க்கின்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் தேர்ச்சி பெற்ற ஏழு துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுகின்றனர்.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணியை விட உயர்ந்த நிலையிலேயே காணப்படுகின்றது. எனினும் அணியில் நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது பற்றி கபில் தேவ் உட்பட பலர் விமர்சித்துள்ளார்கள். அதிலும் நால்வருமே பாத சுழல் பந்து வீச்சாளர்கள்.
இங்கிலாந்தின் ஆடு களங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற விதத்திலே அமைக்கப்பட்டுள்ளதைக் காண முடியும். எனினும் இந்திய அணியில் ஒரே வேகப்பந்து வீச்சாளராக இடம் பெற்றிருப்பவர் ஜவஹால் ரீநாத் மாத்திரமே. அவருடன் வெங்கடேஷ் பிரசாத்தும் இடம் பெறுகின்றார்.
கூட்டு மொத்தமாகப் பார்க்கும் போது இங்கிலாந்து அணியைவிட இந்திய அணி பலம் வாய்ந்த ஓர் அணியாகக் காணப்படுகின்றது. இங்கிலாந்து அணிக்கெதிராக அஸ்ஹருத்தீன் பொதுவாக திறமை காட்டியுள்ளார்.
1984 ஆம் ஆண்டு தனது கன்னி டெஸ்ட்டுகள் மூன்றிலும் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று சதங்கள் பெற்று சாதனை புரிந்தார். அத்தோடு 1990ல் இங்கிலாந்திற்கு மேற்கொண்ட சுற்றுலாவிலும் அஸ்ஹருதீன் இரண்டு சதங்கள் பெற்றார்.
எனது பார்வை LSq qSqqS SSLSLSS LLLLLL AAA AASTMqSMSLTSLS SLSLSL ( )

Page 54
எது எவ்வாறு இருப்பினும் அஸ்ஹருதீன் தொடர்ந்து இந்திய அணிக்கு தலைமை தாங்குவதும் அவரது அங்கத்துவ ஸ்திரத்தனமையும் இத்தொடரிலேயே தீர்மானிக்கப்படும்.
இத்தொடரில் அவர் தோல்வியுறுவாராயின் அவரது கிரிக்கெட் எதிர் காலம் கேள்விக்குறியாகும் என்பதில் எது வித சந்தேகமுமில்லை. சங்கீதா பிஜ்லானியின் தொடர்பால் அஸ்ஹருதீனின் சொந்த வாழ்வில் வீசிய புயலின் எதிரொலி கிரிக்கெட் வாழ்விலும் தொடருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தினகரன் 12 மே 1996.
நூரானியா ஹஸன்
 
 

போட்டிகளின் முடிவைத் தீர்மானிப்பது பந்து வீச்சாளர்களா? துருப்பாட்டக்காரர்களா?
ஒரு கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாகச் செயற்படுகிறவர்கள் பந்து வீச்சாளர்கள் என்றால் அக்கருத்துடன் எவரும் முரண்படமாட்டார்கள். ஒரு அணி சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்டிருக்காவிட்டால் டெஸ்ட்டுகளிலோ ஒருநாள் ஆட்டங்களிலோ அந்த அணி வெற்றி பெறுவது சுலபமானதாக இருக்காது.
மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தாலும் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு போதுமானதாக அமையாவிட்டால் அவ்வணியால் பிரகாசிப்பது கடினமானதாகிவிடும்.
சிம்பாபே அணியைச் சேர்ந்த எட்டோ பிரான்டஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆடி சிறப்பாக திறமை காட்டினார். கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் பிராண்டஸின் ஆட்டத் திறமையை பயன்படுத்திக் கொள்ள முடியாது போனதால் சிம்பாபே அணிக்கு அது பலவீனமான நிலையை தோற்றுவித்தது.
எனினும் இங்கிலாந்துக்கு எதிராக அண்ைமையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் ஆட்டத்தில் மிகச் சிறப்பாக ஆடிய அவர் தன் திறமையை வெளிப்படுத்தினார்.
அந்த போட்டியில் 28 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியது மாத்திரமன்றி ஒரு ஹெற்றிக்கையும் பெற்று, ஒருநாள் ஆட்டத்தில் ஹெற்றிக் பெற்ற 10வது வீரர் என்ற பெருமையையும் பெறுகின்றார். இதற்கு முன்பு ஒருநாள் ஆட்டங்களில் 9 வீரர்கள் ஹெட்ரிக் பெற்றுள்ளனர்.
எனது பார்வை

Page 55
முதலாவது ஹெற்றிக் பெற்றவர். ஜலாலுத்தீன் (பாகிஸ்தான்) 1982இல் ஹைதராபாத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இதனை நிலை நாட்டிக் கொண்டார்.
புரூஸ்ரீட், ஷேட்டன் ஷர்மா, வசீம் அக்ரம், கபில் தேவ், அகீப் ஜாவிட், டெனி மொரிஸன், வக்கார் யூனிஸ், சக்லின் முஸ்தாக், அன்தனி ஸ்டோர்வோர்ட் ஆகியோர் ஹற்றிக் பெற்ற ஏனையோர்.
இறுதியாக இந்தச் சாதனையைப் படைத்தவர் அவுஸ்திரேலிய வீரர் அன்தனி ஸ்டோர்வோர்ட். அவர் இஜாஸ் அஹமட், முஹம்மட் வசீம், முயின்கான் ஆகியோரை தொடர்ச்சியாக ஆட்டம் இழக்கச் செய்தார்.
ஹெற்றிக் பெற்றுள்ளோரில் சக்கிலின் முஸ்தாக்கை தவிர ஏனைய அனைவரும் வேக, மத்திம வேகப் பந்து வீச்சாளர்கள். பாகிஸ்தானியர் மூவர், இந்தியர் இருவர், அவுஸ்திரேலியர் இருவர், நியுசிலாந்து, சிம்பாபே தலா ஒருவர் என்று இவர்களை வகைப்படுத்தலாம்.
வசீம் அக்ரம் இருமுறை ஹெற்றிக் பெற்றுள்ளார். ஷேட்டன் சர்மா உலகக் கிண்ணப் போட்டியில் (1987இல் நியூசிலாந்துக்கு எதிராக நாக்பூரில்) ஹெற்றிக் பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
சிறப்பான பந்து வீச்சாளருடன் ஹெற்றிக் பெற்ற ஒரே வீரர் என்ற பெருமையை அகீப் ஜாவிட் பெறுகின்றார். (37 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகள் ஷார்ஜாவில் 1990இல்).
சிம்பாபே வீரர் பிரன்டாஸ் அந்த நாடு பெற்றுக் கொண்ட மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர். அவரது ஹெற்றிகில் ஆட்டமிழந்தோர் பிரபல துடுப்பாட்ட வீரர்களான நிக்னெயிட், ஜோன் கிரவ்லி, நஸார் ஹ"சைன் ஆகியோர்.
அதே போன்று 1992 ஆம் ஆண்டு உலகிக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கெதிராக இவர் மிகத் திறமையாக பந்து வீசி, கிரஹம் கூச், இயம் பொத்தம், போன்ற பிரபல வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்தார்.
தற்போது சிம்பாப்பே அணியில் உள்ள பிரயான் ஸ்ராங், ஹென்றி ஒலங்கா போன்றோரின் வளர்ச்சியில் பிரன்டஸ்ஸாக்கு நிறையப் பங்களிப்பு
நூராணியா ஹஸன்
 

உண்டு. தற்போது 33 வயதான பிரன்டஸ் நிச்சயம் சிம்பாபே அணியின் வளர்ச்சியில் கூடிய பங்களிப்பு செய்யக் கூடியவராக விளங்குகிறார்.
அணிகளின் தோல்விகளைத் தடுப்பதில் துடுப்பாட்ட வீரர்களுக்கு எவ்வளவு பங்களிப்பு உண்டோ அதே போன்று எதிர் அணியின் வெற்றியைக் கடுப்பதில் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது.
வெற்றியை நெருங்கும் வேளையில் பந்து வீச்சாளர்களின் ஆற்றலினால் அந்த வெற்றிகள் தடுக்கப்படுவதுண்டு.
பகுப் , பங்களில் எதிரணி துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆடி
அவுஸ்திரேலிய சுழல் பந்த வீச்சாளர் ஷேன் வோன்
இந்த வகையில் இங்கிலாந்து, ஸிம்பாப்வே அணிகளுக்கிடையே அண்மையில் முடிவடைந்த டெஸ்ட் குறிப்பிடத்தக்கதொன்றாகும். இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது.
இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு 37 ஓவர்களில் 205 ஓட்டங்களைப் பெறவேண்டியிருந்தது. எனினும் 6 விக்கெட் இழப்புக்கு 204 ஒட்டங்களையே அதனால் பெறமுடிந்தது.
எனது பார்வை Po po se u se

Page 56
இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சமமான (610 ஓட்டங்கள்) ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும் சரிசமமாக (Tied) முடிந்த போட்டியாக இதைக் கருதுவதற்கில்லை.
அதற்குக் காரணம் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து விட்டமையாகும். 1940ம் ஆண்டின் 22வது சட்டத்தின் 4ஆவது ஷரத்தின் மூலம் இத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. 1948ம் ஆண்டுக்கு முன்பு இத்தகைய நிலைகளில் சரிசமமாக முடிந்ததாகவே கருதப்பட்டது.
இங்கிலாந்து அணியின் இரண்டாவது இனிங்ஸில் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆடியுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அதாவது ஒவருக்கு அவர்கள் 5.51 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.
இது ஒருநாள் போட்டிகளுக்கு நிகரான ஓட்ட வேகமாகும். ஸிம்பாப்வே பந்து வீச்சாளர்களும் நல்ல முறையில் பந்து வீசியதன் காரணமாகத்தான் இங்கிலாந்து அணியின் வெற்றியைத் தடுக்கக் கூடியதாக இருந்தது.
ஏனென்றால் பொதுவாக தற்போது ஒருநாள் ஆட்டங்களில் ஒருவருக்கு 5 முதல் 6 ஓட்டங்கள் வரை பெறுவது வழக்கமாகிவிட்ட ஒன்றாக மாறியுள்ளது. இங்கிலாந்து அணி வெற்றிக்காக வேகமாகத் துடுப் பெடுத்தாடிய வேளையில் அதனைத் தடுத்தது ஸிம்பாப்வே அணியின் சிறப்பான பந்து வீச்சே!
முதன் முதல் போட்டியொன்றில் இத்தகைய சூழ்நிலை ஒன்று எதிர்கொள்ளப்பட்டது 1948-49 களில் இந்திய, மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையே பம்பாயில் நடைபெற்ற போட்டியிலாகும்.
இந்தியா வெற்றி பெறுவதற்கு 361 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்தது. எனினும் இந்தியாவால் 8 விக்கெட் இழப்புக்கு 355 ஓட்டங்களையே
பெற முடிந்தது.
இதேபோன்று 1963இல் இங்கிலாந்து மேற்கிந்தியதீவுக்கிடையில் லோட்ஸில் நடந்த டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற, 234 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த போதும் 9 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்களையே பெற முடிந்தது.
1968-69களில் அடிலேடில் அவுஸ் திரேலிய-மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா 360 ஓட்டங்கள்
நூரானியா ஹஸன்
 

பெறவேண்டியிருந்தது. எனினும் 9 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்களையே பெற்றது.
1974-75களில் இங்கிலாந்து-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே மெல்போர்னில் நடந்த டெஸ்ட்டில் அவுஸ்திரேலியா வெற்றி பெற, 246 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்தது. எனினும் 8 விக்கெட் இழப்புக்கு 238 ஓட்டங்களையே பெற்றது.
1979இல் இங்கிலாந்து-இந்திய அணிகளுக்கிடையே ஒவலில் நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற, 438 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்தது. எனினும் 8 விக்கெட் இழப்புக்கு 429 ஓட்டங்களையே பெறக்கூடியதாக இருந்தது.
1987-88களில் அவுஸ்திரேலிய-நியூசிலாந்து அணிகளுக்கிடையே மெல்போர்னில் நடந்த போட்டியில் அவுஸ்திரேலியா 247 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த போதும் 9 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களையே பெற்றது.
1987-88களில் பாகிஸ்தான்-மேற்கிந்தியதீவு அணிகளுக்கிடையே போர்ட் ஒப் ஸ்பைனில் நடந்த டெஸ்ட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற 372 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்தது. எனினும் 9 விக்கெட் இழப்புக்கு 341 ஒட்டங்களையே பெற்றது. இவை வெற்றி தோல்வியின்றி முடிந்த சில டெஸ்ட்டுகளாகும்.
இத்தகைய சூழ்நிலைகளில் ஆரம்பத்தில் மிக வேகமாக ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முயல்வதுண்டு. எனினும் ஒருநாள் ஆட்டங்களைப் போன்று வேகமாக ஓட்டம் பெற முயன்று விக்கெட்டுக்கள் சரியும் போது மீண்டும் மிக மெதுவாகத் தடுத்தாடுவதையும் காணலாம்.
கடந்த காலங்களில் டெஸ்ட்டுகளில் மிக வேகமாக ஆடிய பல சந்தர்ப்பங்களைக் காணக்கூடியதாக உள்ளது. 1902-03களில் அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக் கிடையே ஜொஹனஸ்பேர்க்கில் நடந்த டெஸ்ட்டில் 306 பந்துகளில் 296 ஓட்டங்கள் பெறப்பட்டது. அதாவது ஒவருக்கு 5.80 ஓட்டங்கள்.
1994இல் இங்கிலாந்து-தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் ஒவலில் நடந்த டெஸ்ட்டில் 213 பந்துகளில் 205 ஓட்டங்கள் பெறப்பட்டது.
எனது பார்வை

Page 57
ஒவருக்கு 5.77 ஓட்டங்கள். 1985-86களில் மேற்கிந்திய தீவு இங்கிலாந்து அணிகளுக்கிடையே சென்ஜோன்ஸில் நடந்த டெஸ்டில் 258 பந்துகளில் 246 ஓட்டங்கள் பெறப்பட்டது. ஒவருக்கு 5.72 ஓட்டங்கள்.
1996-97 களில் புலாவாயோவில் இங்கிலாந்து-ஸிம் பாப்வே அணிகளுக்கிடையே நடந்த டெஸ்ட்டில் 222 பந்துகளில் 206 ஓட்டங்கள் பெறப்பட்டுள்ளது. ஒவருக்கு 5.51 ஓட்டங்கள்.
இது இவ்வாறு இருக்க தற்போது உலகில் உள்ள கிரிக்கெட் அணிகளில் அநேக அணிகளில் இளம் வீரர்களே ஆடிக்கொண்டிருப்பதைக் காணமுடியும்.
பொதுவாக வயதில் குறைந்த வீரர்களையே அணியில் சேர்த்துக்கொள்வது வழக்கம். எனினும் அண்மைய இங்கிலாந்துஸிம்பாப்வே டெஸ்ட்டில் புதிய வீரர் ஒருவர் அறிமுகமானார்.
ஸிம்பாப்வே வீரர் அண்டிவொலர் (37 வருடம் 3 மாதம்) இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது முதலாவது டெஸ்ட்டில் ஆடும் வாய்ப்பைப் பெற்றார். அவரைப்போன்று இன்று சில வயது கூடிய வீரர்கள் உலக அணிகளில் ஆடிவருவதை காணமுடியும்.
அவரைப் போன்று இன்று சில வயது கூடிய வீரர்கள் உலக அணிகளில் ஆடி வருவதைக் காணமுடியும்.
தினகரன் - 02 பெப்ரவரி -1997
நூரானியா ஹஸன்
 
 

கிரிக்கெட்டைக் கட்டியாளும் சகலதுறை ஆட்டக்காரர்கள்
கிரிக்கெட் ஆட்டங்களில் சகல துறை ஆட்டக்காரர்களின் பங்களிப்பு அளப்பரியது. இதனால்தான் அனைத்து அணிகளும் சகலதுறை ஆட்டக்காரர்களைச் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன.
பொதுவாக ஒரு சகல துறை ஆட்டக்காரரினால் இருவரின் பங்களிப்பை நல்ல முறையில் தமது அணிக்காக ஆற்றக்கூடியதாக உள்ளதை நாம் காண்கின்றோம்.
அணியில் இடம்பெறும் சகல துறை ஆட்டக்காரர் ஒருவர் நல்ல பந்து தடுப்பாளராகவும் இருப்பாராயின் அவர் மூலம் அந்த அணி பெறும் சேவை அளப்பரியதாக இருக்கும்.
இந்த வகையில் தற்போதைய உலக கிரிக்கெட் அணிகளை நோக்கும் போது குறிப்பிட்டுக் கூறக்கூடிய முழுமையான சகல துறை ஆட்டக்காரர் எவரும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
90களின் ஆரம்ப தசாப்தத்தில் உலக கிரிக்கெட் அணிகளுக்கு ஆடிய பிரபலமான நான்கு சகல துறை ஆட்டக்காரர்கள் இப்போது முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார்கள். இன்று அவர்களின் நிலையில் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய சகலதுறை ஆட்டக்காரர் ஒருவரை எந்தவொறு அணியும் கொண்டில்லை.
குறிப்பாக நால்வரும் வேகப் பந்து வீச்சாளர்கள். அவர்கள் நியூசிலாந்து
வீரர் ரிசார்ட் ஹட்லி, பாகிஸ்தான் வீரர் இம்ரான்கான், இங்கிலாந்து வீரர் இயன்பொதம், இந்திய வீரர் கபில்தேவ் ஆகியோர்.
எனது பார்வை <9

Page 58
இந்த நான்கு சகலதுறை ஆட்டக்காரர்களும் 350க்கு மேல் டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளதோடு 3000க்கு மேல் ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.
இவர்களுள் பந்து வீச்சில் கபில் தேவ் கூடுதலான விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள போதிலும் முன்னணிப் பந்து வீச்சாளராக திகழ்பவர் ரிசர்ட் ஹட்லியே.
அதே போன்று துடுப்பாட்டத்தைப் பொறுத்த வரையில் இயன்பொதம் 5000க்கு அதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளதோடு 14 சதங்களும் பெற்றுள்ளார்.
பந்து வீச்சு, துடுப்பிாட்டம் ஆகிய இரு துறைகளிலும் அணிக்கு கூடுதலான பங்களிப்பை கபில் தேவ் ஆற்றியுள்ள போதிலும் இதற்காக அவர் கூடுதலான டெஸ்ட்டுகளில் ஆடவேண்டியேற்பட்டது.
பொதுவாக பந்து வீச்சு, துடுப்பாட்டம், பந்து தடுப்பு, அணித் தலைமைத்துவம் ஆகியவற்றுக்குப் புள்ளிகள் வழங்கின், முதலிடம் வகிப்பவர் இம்ரான்கான். இம்ரான் வேகப் பந்து வீச்சாளராக அணியில் அறிமுகமாகிய போதிலும் பிற்காலத்தில் சிறந்ததொரு துடுப்பாட்ட வீரராக அணிக்குச் சேவையாற்றியுள்ளார்.
ரிசார்ட் ஹட்லியைத் தவிர்த்தால் ஏனைய மூன்று வீரர்களும் துடுப்பாட்டத்தில் தத்தமது அணிகளுக்காக நல்ல பங்களிப்புச் செய்துள்ளனர். ஹட்லியும் பல சந்தர்ப்பங்களில் திறமை காட்டியுள்ளார்.
இவர்கள் நால்வரும் பெரும்பாலும் ஆறாவது விக்கெட்டுக்காக ஆடவருவது வழக்கம். பல இக்கட்டான சந்தர்ப்பங்களில் அணிகளைத் தோல்வியிலிருந்து மீட்டுள்ளார்கள்.
1987 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட போது, இலங்கையுடனான டெஸ்ட்டில் ஒரு நிலையில் 90 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை நியுஸிலாந்து இழந்திருந்தது. இந்த இக்கட்டான நிலையில் ஆடுகளத்துள் நுழைந்த ரிச்சர்ட் ஹட்லி ஆட்டம் இழக்காது 150 ஓட்டங்கள் பெற்றார்.
இதே போன்று தான் 1983ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சிம்பாப்பேக்கு எதிராக 16 ஓட்டங்களுக்கு 4
நூராணியா ஹஸன்
 

விக்கெட்டுக்களை இழந்த நிலையில் ஆடுகளத்தில் நுழைந்த கபில் தேவ் 175 ஓட்டங்கள் பெற்று வெற்றியை தமதாக்கிக் கொண்டார்.
1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஆரம்ப விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையிலிருந்த போது, பக்குவமாக அணியை வெற்றியை நோக்கி இழுத்துச் சென்றவர் இம்ரான்கான் தான்.
வேகப் பந்து வீச்சு பற்றி இந்திய வீரர் கபில்தேவுடன் நியூஸிலாந்த வீரர் ரிச்சட் ஹட்லி சொல்லுவத என்னவோ?
பொதுவாக இந்தியா, பாகிஸ்தான், நியுஸிலாந்து, இங்கிலாந்தின் வெற்றிகளில் கூடுதலான பங்களிப்பை அவர்கள் செய்துள்ளார்கள் என்பதை எவரும் வாதப்பிரதிவாதம் இன்றி ஏற்றுக் கொள்வார்கள்.
ஒருவர் பந்து வீச்சில் மாத்திரம் திறமை காட்டும் போது துடுப்பாட்ட வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய நிலை அணிகளுக்கு ஏற்படும்.
எனது பார்வை

Page 59
இதன் காரணமாக அணியில் 6 துடுப்பாட்ட வீரர்களுக்கு மேல் உட்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனினும் அணியில் ஒருவர் அல்லது இருவர் சகலதுறை ஆட்டக்காரராக இருப்பின் நிலை வேறாக இருக்கும்.
பெரும்பாலான அணியில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரர்களாக இருப்பதனால் 8வது விக்கெட் வரை துடுப்பாட்ட வீரர்களைச் சேர்த்துக் கொள்ள முயல்வது இயல்பு.
சகலதுறை ஆட்டக்காரர்கள் அணியில் இடம்பெறாவிட்டால் 6வது விக்கெட்டுடன் துடுப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டு விடுவது அணிகளுக்கு இழப்பாகும்.
ஒருநாள் ஆட்டங்களில் பல துடுப்பாட்ட வீரர்கள் பகுதி நேர பந்து வீச்சாளர்களாகக் கடமையாற்றுவதைக் காண்கின்றோம். பிரதான பந்து வீச்சாளர் இருவரை அல்லது மூவரை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒருநாள் ஆட்டங்களில் வெற்றியீட்டும் பல சந்தர்ப்பங்களை நாம் காண்கின்றோம்.
இலங்கை அணியைப் பொறுத்த வரையில் ஹஷான் திலகரத்ன, ரொமேஷ் களுவித்தாரன, ரொஸான் மஹாநாம ஆகியோரைத் தவிர ஏனையோர் ஒருநாள் ஆட்டங்களில் பந்து வீசக்கூடியவர்கள்.
தற்போது உலகில் உள்ள ஒருநாள் ஆட்டம் ஆடும் அணிகளுக்கு இடையே மேற்கிந்திய தீவு அணியைத் தவிர மற்றைய அனைத்து அணிகளும் எழுவரை அல்லது எண்மரை பந்து வீச அழைப்பதுண்டு.
எனினும் டெஸ்ட் போட்டிகளில் இவ்வாறு வெற்றி பெறுவது இலகுவான காரியம் அல்ல. இந்த வகையில் இலங்கையில் இதற்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் ஆடியோரில் ரவி ரத்நாயக்க குறிப்பிடத்தக்க ஒரு சகல துறை ஆட்டக்காரர்.
ரவிரத்நாயக்க ஆரம்பப் பந்து வீச்சாளராகவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும் இலங்கை அணிக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். அவரது கூடிய டெஸ்ட் ஓட்டம் 90 (இந்தியாவுக்கு எதிராக)
தற்போதுள்ள வீரர்களிடையே சமிந்தவாஸ், குமார்தர்மசேன
ஆகியோருக்கு எதிர்காலத்தில் சகல துறை ஆட்டக்காரர்களாக மிளிர்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.
நூராணியா ஹஸன்
 

இவர்களைவிட சனத்ஜயசூரிய நல்ல முறையில் திறமை காட்டக் கூடியவர். எனினும் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு நாள் ஆட்டங்களில் மிகக் கூடுதலான விக்கெட்டுகளைப் பெற்றுள்ள இலங்கையர் என்ற பெருமை சனத் ஜயசூரியவையே சாரும்.
இந்த வகையில் இந்திய அணியில் நல்லதொரு சகல துறை ஆட்டக்காரராக மிளிர்ந்து வந்த மனோஜ் பிரபாகர் துரதிர்ஷ்டவசமாக கிரிக்கெட் உலகுக்குப் பிரியாவிடை கொடுத்தார்.
பாகிஸ்தான் அணியின் தற்போதைய தலைவர் வஷிம் அக்ரம் இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த சகல துறை ஆட்டக்காரராக மிளிர்கின்றார். வஷிம் அக்ரம், ரிசர்ட் ஹட்லி போன்று எதிர் காலத்தில் திறமை காட்டுவார் என்று பத்து வருடங்களுக்கு முன்பு இம்ரான்கான் கூறியது எவ்வளவு சரியாகி விட்டது.
கடந்த சிம்பாப்பே அணியுடனான டெஸ்ட்டில் வஷிம் அக்ரம் ஆட்டமிழக்காது பெற்ற 257 ஓட்டங்களை இலகுவில் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
அக்ரம் ஆடுகளத்தில் நுழையும் போது பாகிஸ்தான் அணி முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் அறுவரையும் 169 ஓட்டங்களுக்கு இழந்து, ஓர் இக்கட்டான நிலையில் இருந்தது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் ஒரு சகலதுறை ஆட்டக்காரர் செய்ய வேண்டிய சேவையை அவர் நல்ல முறையில் செய்தார்.
டெஸ்ட் போட்டிகளில் கூடுதலான சிக்சர்கள் (12 சிக்சர்கள்) அடித்து சாதனையும் படைத்தார். இதற்கு முன்பு இங்கிலாந்து வீரர் வொலி ஹமன்ட் 1932-33களில் நியூசிலாந்துக்கெதிராக 10 சிக்சர்கள் அடித்தார். அவர் 336 ஓட்டங்களைப் பெற்றார்.
அதே போன்று எட்டாவது விக்கெட்டுக்காக வசிம் அக்ரமும் ஸ்க்லின் முஸ்தாக்கும் இணைந்து 313 ஓட்டங்களைப் பெற்று புதிய சாதனையை ஏற்படுத்தினார்கள்.
இதற்கு முன்பு இங்கிலாந்து வீரர்களான லெஸ் அமெஸ், கபு அலென்
ஆகியோர் 1931இல் நியூஸிலாந்துக்கு எதிராக எட்டாவது விக்கெட்டுக்காக 246 ஓட்டங்களை இணைப்பாட்டமாகக் கொண்டிருந்தனர்.
எனது பார்வை Ki>

Page 60
எட்டாவது விக்கெட்டுக்காக பாகிஸ்தான் வீரர் ஒருவர் பெற்றிருந்த மிகக் கூடுதலான ஒட்டம் 209 ஆகும். 1954-55 களில் நியூசிலாந்துக் கெதிராக இம்தியாஸ் அஹமட் இதனைப் பெற்றிருந்தார்.
இந்த வகையில் வசிம் அக்ரம் நல்லதொரு சகலதுறை ஆட்டக்காரர் என்பதை தற்போது நிரூபித்து வருகின்றார். இதற்கு முன்பு அவரது கூடிய ஒட்டம் 123 (அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 1992இல்) ஆகும்.
இந்தப்போட்டியில் கூட இம்ரான்கானுடன் இணைந்து எட்டாவது விக்கெட்டுக்காக 190 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் தமது அணியைத் தோல்வியில் இருந்து மீட்டுக்கொண்டார்.
பந்து வீச்சாளராக அறிமுகமான அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ்வோ தற்போது சிறந்ததொரு துடுப்பாட்ட வீரராகச் சேவையாற்றுகின்றார். 1987ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் லாகூரில் நடந்த அரை இறுதிப் போட்டியில் ஸ்டீவ்வோ இறுதி ஒவரில் ஸலிம் ஜப்பாரின் பந்து வீச்சில் 18 ஓட்டங்கள் பெற்ற பின்பு மிகப் பிரபலமானார்.
இந்த வகையில் பார்க்கும் போது உலகில் உள்ள கிரிகெட் அணிகளில் சகலதுறை ஆட்டக்காரர்களின் சேவை இன்றியமையாதது என்பது வெளிப்படை.
தினகரன் 27 ஒக்டோபர் 1996
g
நூானியா ஹஸன்
 

துருப்பாட்ட வீரர்களுக்கு ஆடுகளம் சாதகமாக அமைய வேண்டும் ஆட்டங்கள் அப்போதுதான் சுவையாக அமையும்
ஒரு டெஸ்ட் அல்லது ஒருநாள் ஆட்டத்தில் கலந்து கொள்ளும் அணி எத்தனை திறமை வாய்ந்ததாக இருந்தாலும் கூட ஆட்டம் இடம் பெறும் மைதானத்தின் ஆடுகளத்தின் தன்மை, ஆட்ட முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
டெஸ்ட் ஆட்டங்களின் போது போட்டி நடைபெறும் நாட்டைச் சேர்ந்த அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகத் தென்படுவதற்கு காரணம் இதுவே. வெளிநாட்டு அணியொன்று குறித்த ஒரு நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டு போட்டிகளில் இலகுவாக வெற்றி பெற வாய்ப்புக் கிடைப்பதில்லை.
தத்தமது நாட்டு அணிகளின் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு ஆடுகளங்களை அமைத்துக் கொள்கிறார்கள் என்று சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அணிகள் குற்றம் சுமத்துவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இந்தக் குற்றச்சாட்டில் முழுமையான உண்மை இல்லாவிட்டாலும் உண்மை இல்லாமலும் இல்லை. இதை கடந்த கால பெறுபேறுகள் எடுத்துக்காட்டுவதாக உள்ளன.
பொதுவாக ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் ஆடு களங்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதக விளைவு தரத் தக்கதாகவே அமைக்கப்படுகின்றன.
மேற்கிந்திய, இங்கிலாந்து, அவுஸ்திரேலிய ஆடுகளங்கள் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாகவே தயார் செய்யப்படுவதைக் 85FT600T6)stb.
எனது பார்வை

Page 61
இது இவ்வாறு இருக்க சில ஆடு களங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சார்பாக அமைக்கப்படுவதுடன் வேறுசில ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைக்கப்படுவதுண்டு. மேற்கிந்தியத் தீவு ஆடுகளம் எப்பொழுதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே அமைக்கப்படுகின்றது.
அங்கு துடுப்பாட்ட வீரர்களை விட பந்து வீச்சாளர்களே சிறந்த பெறுபேற்றை பெறுகின்றனர். அதற்கு காரணம் மேற்கிந்திய தீவு அணி மிக நீண்ட காலமாக சிறந்த துடுப்பாட்ட வீரர்களைக் கொண்டிருந்த போதிலும் பந்து வீச்சாளர்களிலே நம்பிக்கை கொண்டுள்ளது.
பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் ஆரம்ப காலத்தில் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான விதத்திலே ஆடுகளங்கள் பெரும்பாலும் அமைக்கப்பட்டு வந்தன. எனினும் இம்ரான்கானின் தலைமைத்துவத்தைத் தொடர்ந்து அங்கு நிலைமை மாறிவிட்டது. வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தார்கள்.
இதன் காரணமாக பெரும்பாலான ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற விதத்திலே அமைக்கப்பட்டுள்ளன. எனினும் சுழல் பந்து வீச்சாளர்களும் பலன் பெறக்கூடியதாக உள்ளது.
இதன் விளைவாக இம்ரான்கானைத் தொடர்ந்து, மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானில் உருவாக ஆரம்பித்துள்ளதைக் காணலாம். குறிப்பாக வஷிம் அக்ரம், வக்கார் யூனுஸ், ஆகிப் ஜாவிட், ஸஹிட் நஸிர், முஹம்மத் அக்ரம் எனப் பலரை சுட்டிக் காட்ட முடியும்.
இந்திய அணியைப் பொறுத்த வரையில் மிக நீண்ட காலமாகவே சுழல் பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அங்கு ஆடுகளங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்களின் பிரவேசம் குறைவாக உள்ளது.
இவர்கள் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. கபில் தேவைத் தவிர்த்துப் பார்த்தால் வேறு எந்த வேகப் பந்து வீச்சாளரும் நீண்ட காலம் இந்திய அணியில் தரித்து நின்று தாக்குப்பிடித்ததாக வரலாறு இல்லை.
தற்போது இந்திய அணியில் உள்ள ஆரம்ப வேகப் பந்து வீச்சாளரான பூரீநாத்தும், பிரசாத்தும் உலக மட்டத்தில் பிரகாசிப்பவர்கள் அல்லர்.
நூராணியா ஹஸன்
 

இந்தியாவில் ரஞ்சிக் கிண்ணத்துக்காக பல முதல் தரப் போட்டிகள் நடைபெறுகின்ற போதிலும் ஆடுகளங்கள் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இல்லை.
இதனால் புதிய வேகப் பந்து வீச்சாளர்கள் உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. எனினும் கூடுதலான சுழல் பந்து வீச்சாளர்கள் உருவாகுவதையும் அடிக்கடி அணியில் இடம் பெறுவதையும் காணமுடிகிறது.
徽 雛
பாகிஸ்தானிய சகலதுறை ஆட்டக்காரர் இம்ரான் காண்
அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்ட அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா டெஸ்ட் அணிகள் இந்தியாவின் ஆடுகளங்களை வெகுவாக விமர்சித்துள்ளன. இங்கிலாந்தில் ஆரம்ப காலம் தொட்டே வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான விதத்தில் ஆடுகளங்கள் அமைந்துள்ளன.
இதன் காரணமாக அண்மைக் காலத்தில் ஜோன் எம்பியூரிக்குப் பின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சுழல் பந்து வீச்சாளர்கள் தோன்றவில்லை.
எனது பார்வை

Page 62
அவுஸ்திரேலியாவிலும் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் அண்மைக் காலத்தில் ஷேன் வோனுக்கு ஏற்ற விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆடுகளங்கள் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான விதத்தில் அமையும் போது போட்டியில் நல்லதொரு முடிவினைக் காணமுடியாது என்பது பலரது கருத்து. அண்மையில் முடிவடைந்த சார்ஜா போட்டிகளிலும் இதனைக் காணக் கூடியதாக இருந்தது.
அந்த ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதன் காரணமாக துடுப்பாட்ட வீரர்களுக்கு பிரகாசிக்கவோ ஓட்டங்களைப் பெறவோ முடியாமற் போனது. மிகச் சிறந்த வீரர்களும் குறைந்த சராசரியையே பெற்றனர்.
சிறப்பான பந்து வீச்சினைக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணிக்கு இது சாதகமான முடிவினைக் கொடுத்தது. எனினும் சமபலமிக்க இலங்கை அணியால் அந்த சார்ஜா போட்டித் தொடரில் பிரகாசிக்க முடியவில்லை.
இதேபோன்று அண்மையில் அவுஸ்திரேலியாவில் முடிவுற்ற கால்ட்டன் அன்ட் யுனைட்டட் போட்டித் தொடரும் அமைந்ததைக் காணலாம். பல தடவைகள் மூன்று அணிகளும் இருநூற்றுக்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றன. அங்கு பந்து வீச்சாளர்களே முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.
இறுதி இரண்டு போட்டிகளிலும் மிகக் குறைந்த ஓட்டங்களையே இரண்டு அணிகளும் பெற்றன. முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவு 179 ஓட்டங்களையும், பாகிஸ்தான் 186 ஓட்டங்களையும் பெற்ற அதே சமயம் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 165 ஓட்டங்களையும் மேற்கிந்திய தீவு 179 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.
இதை தொடர்ந்து இந்த இரண்டு ஆடுகளங்களும் ஒருநாள் ஆட்டத்துக்குரிய முறையில் தயார் செய்யப்படவில்லை என்று முறைப்பாடு எழுந்தது.
ஆடுகளங்களைத் தயார் செய்ய முன்பு அக்களம் அனுபவம் கொண்டவர்களினால் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் களம் அமைக்கும் பணி அனுபவம் கொண்டவர்களினால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அபிப்பிராயங்கள தெரிவிக்கப்பட்டன.
ElgitázzfiT 62p6vázi
 

ஒருநாள் ஆட்டங்களைப் பொறுத்த வரையில் துடுப்பாட்டக்காரர்கள் மிகக் கூடுதலான ஓட்டங்களை (குறைந்தது 250) பெறுவதையும் மிக நெருக்கமான முடிவினைத் தருவதையுமே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
போட்டியின் இறுதிக் கட்டம் வரை எந்த அணி வெற்றியீட்டுமோ என்ற ஒரு நிலையையே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். எனினும் தற்போது பல இடங்களில் நடைபெறும் போட்டிகளில் பந்து வீச்சாளர்களின் கை மேலோங்கி இருப்பதனால் ஒருநாள் ஆட்டத்தின்
வாரசியத் தன்மை குன்றி வருகிறது.
ஒருநாள் ஆட்டத்தின் சுவாரசியத் தன்மை குன்றாதிருக்க வேண்டுமானால் அதன் சட்ட திட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது. ஓரிரு பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடிய விதத்தில் ஒருநாள் ஆட்டங்கள் அமையக் கூடாது.
1956 ஆம் ஆண்டு ஒல்ட்ர்போர்டில் ஜிம் லேகர் 19 விக்கெட்டுக்களை டெஸ்ட் போட்டியொன்றில் இத்தகைய சூழ்நிலையில்தான் கைப்பற்றியதாக விமர்சிக்கப்படுவதுண்டு.
1954-55களில் மெல்பேர்னில் நடந்த டெஸ்ட்டில் ஓய்வு தினத்தில் விக்கெட்டின் (ஆடுகளத்தின்) நிலை மாற்றப்பட்டதாக பின்பு விமர்சனங்கள் எழுந்தன.
இதே போன்று அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் 1987ல் நடந்த கராச்சி டெஸ்டில் அந்த ஆடுகளத்துக்கு 10 தினங்களுக்கு மேலாக நீர் விடப்படவில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு.
எனவே இந்த வகையில் எப்போதும் ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்குச் சாதகமாக அமையும் போதே போட்டிகள் சுவாரசியமாக அமையும். இது விடயத்தில் இலங்கையிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
தினகரன் 16 பெப்ரவரி 1997
எனது பார்வை

Page 63
இலங்கை வீரர்களின் நிதான ஆட்டமே டெஸ்ட் வெற்றிகளை ஈட்டித் தரும்
டெஸ்ட் போட்டிகளில் நிதானமாக நின்றுபிடித்து ஆடுவது மிகவும் அவசியம். இந்த அம்சம் பல தடவைகள் இக்கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஆடும் போது இரு வகை உத்திகளை துடுப்பாட்ட வீரர்கள் கையாளலாம். ஒன்று தடுத்தாடுவது மற்றையது எதிர்த்தாடுவது.
ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளைப் பொறுத்த வரையில் அனேகமான நாடுகள் எதிர்த்தாடும் உத்தியைக் கையாள முயல்கின்றன. இதற்கு காரணம் மட்டுப்படுத்தப்பட்ட ஒவர்களுக்குள் எதிரணி எட்டமுடியாத ஒட்ட எண்ணிக்கையைப் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பேயாகும்.
எதிர்த்தாடுதல் அல்லது தாக்குதல் முறை உத்தியைக் கையாளும் வீரர்களுள் இலங்கை வீரர்களான சனத் ஜயசூரிய, ரெமெஷ் கலுவிதாரண ஆகியோர் முதன்மை பெறுகின்றனர். அதேபோன்று பாகிஸ்தானில் ஸஹிட்
அப்ரிடியையும் குறிப்பிடலாம்.
இவர்களை விட இந்த உத்தியைக் கையாளும் பலர் உள்ளனர். ஒருநாள் ஆட்டங்களில் அரவிந்த டி சில்வா, சச்சின் டெண்டுல்கார், ஸஹிட் அன்வர், இஜாஸ் அஹமத், மாக்வோ, ஸ்டீவ் வோ, கரி கேர்ஸ்டன், பிரைன் லாரா போன்றோரும் வேகமாக ஆடுபவர்களே.
எனினும் இவர்கள் ஒருநாள் ஆட்டங்களில் காட்டும் வேகத்தை டெஸ்ட் போட்டிகளில் காட்டுவதில்லை. அங்கு தடுத்தாடும் உத்தியையே கையாளுகின்றனர். இலங்கை அணியைப் பொறுத்தவரையில் தடுத்தாடும் உத்தியை மிகவும் குறைந்தளவில் பயன்படுத்துவதாக பலர் குறை கூறுவதுண்டு.
நூரானியா ஹஸன்
 

பொதுவிக ஐந்து நாட்கள் ஆடவேண்: டெஸ்ப் போட்டிகளை மூன்றோ, நான்கோ நாட்களில் முடித்துக் கொள்க. வண்டிய நிலை இலங்கைக்கு ஏற்படுவதாக பலர் கூறுவதுண்டு. எது எவ்வாறு இருப்பினும் கடந்த காலங்களில் நிதானமாக ஆடாததன் காரணமாகவே டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டது.
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்த வரையில் நீண்ட நேரம் விக்கெட்டில் தரித்திருந்து ஓட்டங்களை சேகரிக்கும் பொறுமை இருக்க வேண்டும். அடிக்கக்கூடிய பந்துகளைத் தெரிவு செய்து அடிப்பதுடன் அடிக்கக் கூடாத பந்துகளைத் தடுத்தாட வேண்டும்.
அதுதான் சாதக விளைவைத்தரும். மாறாக நிதானமிழந்து விரைவாக ஒட்ட எண்ணிக்கையை அதிகரிக்க முயலக்கூடாது. அது எதிரணிக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்து விடும். எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு டெஸ்ட் வீரர் நிதானமிழந்து ஆடக்கூடாது. ஒவ்வொரு பந்தினையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் எப்போதுமே மிக நிதானமாக ஆடி, அணிக்கு நல்லதொரு ஸ்திர தன்மையை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு கட்டிடத்துக்கு அத்தில்ர்ரம் எவ்வாறு முக்கியமானதோ அவ்வாறு தான் ஒரு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியும்.
ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி பதற்றப்படாது பந்துகளை நல்ல முறையில் புரிந்தாடினால் தொடர்ந்து வரும் வீரர்களுக்கு அது உதவியாக அமையும். ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்கள் சரிய ஆரம்பித்தால் மத்திய வரிசைத் துடுப்பாட்ட வீரர்களுக்கு அது மிகுந்த சுமையாக அமையும்.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களுள் சிதத் வெத்தமுனி நல்லதொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பிரகாசித்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மிக நீண்ட நேரம் விக்கெட்டில் தரித்திருந்து ஆடுவது மிக முக்கியமானதாகும்.
இந்த வகையில் இலங்கையின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பிரண்டன் குறுப்பு மிக மெதுவாகப் பெற்ற இரட்டைச் சதத்துக்கான சாதனையையே படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுக்கு சுற்றுலா
எனது பார்வை

Page 64
மேற்கொண்டுள்ள இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் நவஜோத் சிங் சிது இத்தகைய ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.
போர்ட் ஒப் ஸ்பெய்னில் நடந்த டெஸ்ட்டில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நுழைந்த சிது 201 ஓட்டங்களைப் பெறுவதற்கு 671 நிமிடங்கள் விக்கெட்டில் தரித்திருந்தார்.
எனது முன்னைய கட்டுரையில் குறைந்த ஓட்டங்களைப் பெறுவதற்கு கூடிய பந்துகளைச் சந்தித்த வீரர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கும்.
டெஸ்ட் போட்டிகளில் கூடிய ஒட்டம்
மேற்கிந்தியத் தீவுச் சாதனையாளர் பிரைன் லாரா இந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக நீண்ட நேரம் விக்கெட்டில் தரித்திருந்த பெருமை பாகிஸ்தான் வீரர் ஹனீப் முஹம்மதைச் சார்கின்றது.
ஹனீப் முஹம்மத் 1957 -58 மேற்கிந்திய தீவுக்கு எதிராக பிரிஜ் டவுனில் 337 ஓட்டங்களைப் பெறுவதற்காக 970 நிமிடங்கள் (16 மணி 10 நிமிடம்) விக்கெட்டில் தரித்திருந்தார்.
நூராணியா ஹஸன்
 
 

இங்கிலாந்து வீரர் ஹட்டன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1938 ல் ஒவலில் 364 ஓட்டங்கள் பெறுவதற்காக 797 நிமிடங்கள் (13 மணி 17 நிமிடம்) செலவிட்டார்.
இலங்கை வீரர் பிரண்டன் குறுப்பு நியூசிலாந்துக்கு எதிராக 198687களில் கொழும்பில் 201 (ஆ.இ) ஒட்டங்கள் பெற 777 நிமிடங்கள் (12 மணி 57 நிமிடம்) விக்கெட்டில் தரித்திருந்தார்.
மேற்கிந்திய தீவு வீரர் பிரைன் லாரா இங்கிலாந்துக்கு எதிராக 1993-94 களில் 375 ஓட்டங்கள் பெறுவதற்கு 768 நிமிடங்கள் (12 மணி 487 நிமிடம்) விக்கெட்டில் தொடர்ந்தாடினார்.
அவுஸ்திரேலிய வீரர் ஆர்.எம். கூப்பர் இங்கிலாந்துக்கு எதிராக 196566 களில் மெல்பேர்னில் 307 ஓட்டங்கள் பெறுவதற்கு 727 நிமிடம் (12 மணி 7 நிமிடம்) தேவைப்பட்டது.
பாகிஸ்தான் வீரர் சுஹைப் முஹம்மத் நியூஸிலாந்துக்கு எதிராக 198889 களில் வெலிங்டனில் 720 நிமிடங்கள் (12 மணி) விக்கெட்டில் தரித்திருந்து 163 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றார்.
இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் இங்கிலாந்துக்கு எதிராக 1981-82 களில் பெங்களுரில் 172 ஓட்டங்கள் பெறுவதற்கு 708 நிமிடங்கள் விக்கெட்டில் தரித்திருந்தார்.
ஸிம்பாபே வீரர் கிராண்ட பிளவர் பாகிஸ்தானுக்கு எதிராக 1994-95 களில் ஹராரேயில் 201 ஓட்டங்கள் பெறுவதற்கு 660 நிமிடங்கள் விக்கெட்டில் தரித்திருந்தார்.
பாகிஸ்தான் வீரர் காஸிம் ஒமர் இந்தியாவுக்கு எதிராக 1984-85 களில் 210 ஓட்டங்கள் பெறுவதற்காக 685 நிமிடங்கள் விக்கெட்டில் தரித்திருந்தார்.
நியூஸிலாந்து வீரர் கிலன்ட்டேனர் மேற்கிந்திய தீவுக்கு எதிராக 197172 களில் ஜோர்ஜ் டவுனில் 259 ஓட்டங்கள் பெறுவதற்கு 704 நிமிடங்களைச் செலவிட்டார்.
இந்த வகையில் மிக நீண்ட நேரத்தைச் செலவிட்டு இரட்டைச் சதம் (201 ஓட்டங்கள்) பெற்ற வீரர் பிரண்டன் குறுப்பு அவர் 777 நிமிடங்களில் 548 பந்துகளுக்கு முகம் கொடுத்தார்.
எனது பார்வை

Page 65
அதற்கு அடுத்ததாக இந்திய வீரர் நவஜோத் சிங் சிது 671 நிமிடங்கள் விக்கெட்டில் தரித்திருந்து, 448 பந்துகளுக்கு முகம் கொடுத்து இரட்டைச் சதம் (201 ஓட்டங்கள்) பெற்றார்.
ஸிம்பாபே வீரர் கிராண்ட் பிளவர் 660 நிமிடங்கள் விக்கெட்டில் தரித்திருந்து 520 பந்துகளுக்கு முகம் கொடுத்து, இரட்டைச் சதம் (201 ஓட்டங்கள்) பெற்றார்.
பாகிஸ்தான் வீரர் சுகைப் முஹம்மத் 656 நிமிடங்களில் 411 பந்துகளுக்கு முகம் கொடுத்து இரட்டைச் சதம் (203 ஓட்டங்கள்) பெற்றார்.
இந்த வகையில் பார்க்கும் போது எந்தவொரு அணியினது ஸ்திரத் தன்மைக்கும் துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாக ஆடுவது இன்றியமையாததாகும்.
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்த வரையில் நிதானமாக ஆடக் கற்றுக் கொள்ளாத வரையில் சிறந்ததொரு டெஸ்ட் அணியாக மிளிர முடியாது. இலங்கை அணி ஒருநாள் ஆட்டத்தில் போன்று டெஸ்ட்டிலும் பிரகாசிக்க வேண்டுமாயின் நிதானமாக நீண்ட நேரம் விக்கெட்டில் தரித்திருந்து ஆடுவது அவசியமாகும்.
தினகரன் 13 ஏப்ரல் 1997
நூரானியா ஹஸன்
 
 

கிரிக்கெட் உலகை ஆக்கிரமிக்கும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்
இன்று கிரிக்கெட் உலகில் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களை விட ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒருநாள் ஆட்டங்கள் மூலமே ஏற்பாட்டாளர்களுக்கு ஏராளமான வருமானம் கிடைக்கின்றது. இதற்குக் காரணம் இப்போட்டிகளைக் கண்டுகளிக்க கூடியளவு ரசிகர்கள் வருவதாகும்.
ரசிகர்கள் மத்தியில் ஒருநாள் ஆட்டங்கள் முக்கியத்துவம் பெறுவதன் காரணமாகத்தான் டெஸ்ட் அந்தஸ்து பெறாத நாடுகளில் கூட இன்று ஒருநாள் ஆட்டச் சுற்றுப்போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த வகையில் சிங்கப்பூர், கோலாலம்பூர், ஹொங்கொங், ரொரெண்டோ, நைரோபி போன்ற இடங்களிலும் சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுவிட்டன.
கிரிக்கெட் பிரபலமாகாத கனடாவில் இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றதை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
அதேபோல் சிங்கப்பூர் படாங் விளையாட்டரங்கில் இந்தியா-பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்ற சிங்கர் கிண்ணப் போட்டிகளும் சகலரினதும் ஞாபகத்தில் இருக்கும்.
மிக அண்மையில் கென்யாவில் இலங்கை, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, கென்ய அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சுற்றுப் போட்டியும்
எனது பார்வை

Page 66
முடிந்து விட்டது. தற்போது டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத 22 நாடுகளில் உத்தியோகப் பற்றற்ற கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
1998ஆம் ஆண்டு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியிலும் கிரிக்கெட் சேர்த்துக்கொள்ளப்பட இருக்கிறது.
ஹொங்கொங்கில் அணிக்கு ஆறு பேர் ஆடும் சகல வசதியும் கொண்ட விளையாட்டரங்கு அமைந்துள்ளது. 12000 ரசிகர்கள் இங்கு அமர்ந்து பார்வையிடலாம்.
இவ்வாறு கிரிக்கெட் சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் பெறுவதனால் விளையாட்டுகளை ஒளிபரப்பும் ஈ.எஸ். பி. என். மற்றும் ஸ்டார் டி. வி. அதற்காக கூடுதலான பணத்தைச் செலவிடுகின்றன.
கனடாவின் டொரொன்டோ விளையாட்டரங்கின் ஒளிபரப்பு அதிகாரத்தைப் பெற்றுக் கெள்வதற்கு அடுத்த ஐந்தாண்டுக்கு ஈ.எஸ்.பி.என்.டி.வி. 18 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது.
உதைபந்தாட்டத்துக்கே முழுமையான அந்தஸ்து வழங்கப்பட்டு வரும் மத்தியகிழக்கில் கூட இன்று ஒரு நாள் சர்வதேச கிரிகெட் ஆட்டங்கள் பிரபல்யமாகியுள்ளன. கூடியளவு ரசிகர்களின் பங்களிப்பு காரணமாக இதுவரை ஷார்ஜாவில் 111 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
ஷார்ஜாவில் 1984 ஏப்ரல் 6ல் முதலாவது போட்டி நடைபெற்றது. 1971ல் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி நடைபெற்ற அவுஸ்திரேலியா மெல்பேர்ன் அரங்கில் 90 போட்டிகளும் சிட்னியில் 87 போட்டிகளும் நடந்துள்ளன.
ஷார்ஜாவில் டெஸ்ட் அந்தஸ்துப் பெற்றுள்ள ஒன்பது நாடுகளும் ஆடியுள்ளதோடு டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத பங்களாதேஷம் ஐக்கிய அரபு எமிரேட்டும் ஆடியுள்ளன.
1971 ஜனவரி 5ல் இங்கிலாந்து-அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டு, அங்கு திரண்டிருந்த ரசிகர்களுக்காகவே ஒரு நாள் ஆட்டம் ஆடப்பட்டது.
நூராணியா ஹஸன்
 

அந்த மெல்போர்ன் விளையாட்டரங்கில்தான் முதன் முதல் இங்கிலாந்துஅவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியும் இடம் பெற்றது.
அது தொடக்கம் கடந்த 15ஆம் திகதி ஷார்ஜாவில் நியூசிலாந்துபாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டி வரை 1140 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
பாகிஸ்தானிய வேகப் பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ்
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியே மிகக் கூடுதலான, அதாவது 359 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது. அதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் அணி 343 போட்டிகள், மேற்கிந்திய தீவு அணி 323 போட்டிகள், இந்தியா 300 போட்டிகளில் பங்கு கொண்டுள்ளது.
இது தவிர இங்கிலாந்து 253, நியுசிலாந்து 268, இலங்கை 230, தென்னாபிரிக்கா 104, ஸிம்பாப்பே 59, பங்களாதேஷ் 12, கென்யா 8, யூ.ஏ.ஈ. 7, நெதர்லாந்து 5, கிழக்கு ஆபிரிக்கா 3, கனடா 3 பேரட்டிகளில் கலந்து கொண்டுள்ளன.
எனது பார்வை

Page 67
கடந்த 25 வருட காலத்துள் இவ்வருடமே மிகக் கூடுதலான ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. கடந்த அக்டோபர் 21 ஆந் திகதி பங்களுரில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான போட்டி இவ்வருடம் ஆடிய 100வது ஒருநாள் சர்வதேசப் போட்டியாகும்.
இதற்கு முன்பு 1994 ஆம் ஆண்டு மிகக் கூடுதலான 97 போட்டிகள் இடம்பெற்றிருந்தன. 1971இல் ஒருநாள் போட்டி ஆரம்பமான பின்பு 1983இல் இருந்து 50க்கு அதிகமான ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
1991இல் மாத்திரம் 39 போட்டிகள் இடம்பெற்றன. இந்த வருடம் முடிவதற்குள் சுமார் 120 அல்லது 125 ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
இந்த வருடம் இதுவரை நடைபெற்றுள்ள ஒருநாள் ஆட்டங்களில் மிகக் கூடுதலான போட்டிகளில் இந்தியா (31 போட்டிகள்) கலந்து கொண்டுள்ளது. அதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் 30 போட்டிகளிலும் இலங்கை 29 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளன.
வருடாந்தம் சராசரியாக பாகிஸ்தான் அணியே கூடுதலான ஒருநாள் ஆட்டங்களில் கலந்து கொள்கின்றது. உ-ம் : 1992 (28), 1994 (28) 1989 (27), 1993 (27), 1987 (27), 1989 இல் மாத்திரம் தென்னாபிரிக்கா கூடிய போட்டிகளில் ஆடியுள்ளது. (29).
ஒருநாள் ஆட்டங்களுடன் டெஸ்ட் போட்டிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 1000 டெஸ்ட் போட்டிகள் நடைபெற 100 வருடங்கள் எடுத்துள்ளன. எனினும் 1000 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் நடைபெற ஆக இருபத்தைந்து வருடங்களே எடுத்துள்ளன.
ஒவ்வொரு நாடும் மிகக் குறைந்த அளவிலேயே டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்கின்றன. ஒரு வருடத்தில் 10 டெஸ்ட் போட்டிகளிலாவது கலந்து கொள்வது என்றால் மிகவும் அபூர்வமாக அது நடக்கும். இது ஒருவகையில் குறைபாடாகும்.
எனினும் டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்கள் மிகவும் குறைந்த அளவிலேயே வருகை தருகின்றனர். அண்மையில் ஸிம்பாபே-இலங்கை டெஸ்ட் போட்டிகளின் போது சில சந்தர்ப்பங்களில் 500 பேருக்கும் குறைந்த தொகையினரே பார்வையாளர்களாக இருந்தனர்.
நரானியா ஹஸன்
 

இதற்கு முக்கிய காரணம் டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் விறுவிறுப்புத் தன்மை காணப்படாததாகும். அத்தோடு அநேக டெஸ்ட்டுகள் வெற்றி தோல்வி இன்றி முடிவுறுவதும் மற்றொரு காரணம்.
அணி மையில் சார் ஜா வில் இலங்கை-நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது. இந்த வகையில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் 11 போட்டிகள் மாத்திரமே சமநிலையில் முடிவுற்றுள்ளன.
இதே போன்று 35 போட்டிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன. எனவே ஏனைய போட்டிகள் முடிவைத் தந்துள்ளன. ஆரம்ப நாட்களில் 60, 55 ஓவர்களாக போட்டிகள் (பெரும்பாலும் இங்கிலாந்தில்) நடைபெற்ற போதும் தற்போது 50 ஓவர்களே நடைபெறுகின்றன.
தற்போது பகல் இரவு போட்டிகள் மிகுந்த கவர்ச்சிகரமான ஒரு போட்டியாக உள்ளது. முதலில் அவுஸ்திரேலியா சிட்னி நகரிலே இது நடைபெற்றது. வருடத்தில் கூடுதலான பகல்-இரவு போட்டிகள் அவுஸ்திரேலியாவிலேயே நடைபெறுகின்றன.
எது எவ்வாறு இருப்பினும் ரசிகர்கள் மனதில் இருந்து டெஸ்ட் போட்டிகள் தூர விலகிச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு நிலைமை தொடர்ந்தால் இன்னும் சில தசாப்தங்கள் செல்லும் போது டெஸ்ட் போட்டிகளில் இரசிகர்கள் ஆர்வம் இழந்து விடலாம்.
ஏனென்றால் அனைத்திலும் குறுகிய காலத்தை எதிர்பார்க்கும் இரசிகர்கள் ஐந்து தின டெஸ்ட்டை கண்டு களிப்பதைவிட ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆர்வம் கொள்வதில் ஆச்சரியம் இல்லை.
தினகரன் 24 நவம்பர் 1996
எனது பார்வை ( )

Page 68
கிரிக்கெட் அணிகளின் வெற்றியில் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு
கிரிக்கெட் ஆட்டத்தில் பந்து வீச்சாளருக்குத் தனியான ஓர் இடம் உண்டு. அதற்குக் காரணம் பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு
முக்கியமானது.
அநேக சந்தர்ப்பங்களில் துடுப்பாட்ட வீரர்களை விட பந்து வீச்சாளர்களின் கரங்களில் தான் ஆட்ட முடிவை நிர்ணயிக்கும் சக்தியிருப்பதைக் காண்கின்றோம். பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் திறமை மிகு பந்து வீச்சாளர்களே நல்ல விளைவைப் பெற்றுக்கொள்ள (IplգԱվլb
இன்று உலக கிரிக்கெட் ஆடும் நாடுகளைப் பார்க்கும் போது அனைத்து நாடுகளிலும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுகின்றனர். எனினும் பந்து வீச்சாளரின் நிலை அவ்வாறில்லை
நிலையான பந்து வீச்சாளர்களைத் தொடர்ந்து அணியில் வைத்துக் கொள்ளும் பிரச்சினைக்கு ஓர் இரு அணிகளே முகம் கொடுக்காது உள்ளன. இந்த வகையில் ஆரம்ப காலத்தில் இருந்தே மேற்கிந்திய தீவு கடந்த காலங்களில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளாய் இருந்தால் என்ன. ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளாய் இருந்தால் என்ன. நான்கு வேகப் பந்து வீச்சாளர்களைக் கொண்டிருக்கும். குறிப்பாக மேற்கிந்திய தீவு அணியில் அன்டி ரொபட்ஸ் ஜொயிஸ் கானார், மல்கம் மார்ஸல் போன்ற பிரபல வேகப் பந்து வீச்சாளர்கள் இருந்துள்ளார்கள்.
{ 0- நூரானியா ஹஸன்

தற்போது கூட கேட்லி அம்றுாஸ், கோட்னி வோர்ல்ஸ், பென்ஜமின் போன்ற வேகப் பந்து வீச்சாளர்கள் அங்கம் வகிக்கின்றார்கள். இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள "ஏ" அணியில் கூட கமரன் கபி, ஒட்டில் கிப்ஸன் போன்ற சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
முன்பு அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளிலும் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்கள் தமது அணிகளுக்கு நல்ல பங்களிப்பு செய்துள்ளார்கள். டெனிஸ் லிலி, பொப் வில்ஸ், தொம்ஸன் என பலரது பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மிக அண்மைக் காலத்திலும் நல்ல பல பந்து வீச்சாளர்கள் பங்காற்றியுள்ளார்கள்.
நியூஸிலாந்து வீரர் ரிச்சட் ஹட்லி இங்கிலாந்து வீரர் ஈயன் பொத்தம், பாகிஸ்தானிய வீரர் இம்ரான் கான், இந்தியா வீரர் கபில் தேவ் ஆகியோரை எவரும் மறக்க முடியாது. இந்த நான்கு பேருமே 350 க்கும் மேற்பட்ட விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன் துடுப்பாட்டத்திலும் கூட 3000 ஓட்டங்களைத் (ஹட்லியைத் தவிர) தாண்டியவர்கள்.
இவர்கள் தமது அணியில் வெற்றியில் கூடுதலான பங்களிப்புச் செய்துள்ளதை காண முடியும். எனினும் இவர்களுக்கு தொடர்ச்சியான நிரந்தரமான மறுமுனைப் பந்து வீச்சாளர் இருந்தது கிடையாது.
தற்போது உலக அணிகளை நோக்கும் போது ஆரம்ப வேகப் பந்து வீச்சாளர்களை ஸ்திரமாக அணியில் வைத்துக் கொள்வதில் பல அணிகளும் பெரும் பிரச்சினையை எதிர்நோக்குகின்றன. இந்தியா அரை நூற்றாண்டுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றைக் கொண்ட நாடு எனினும் கபில்தேவின் பின்பு அந்த இடத்தை நிரப்புவதில் சிரமப்படுகின்றது.
அடிக்கடி ஆரம்பப் பந்து வீச்சு சோடியை மாற்றிக் கொண்டுள்ள போதிலும் இன்னும் உலக மட்ட ஸ்திரமான ஒரு வேகப் பந்து வீச்சாளரை இனம் காண முடியவில்லை.
தற்போது அணியில் ஒருவாறு இடத்தைப் பிடித்து நல்ல பங்களிப்பை செய்பவர் றிநாத். அவருடன் புதிய பந்தைப் பகிர்ந்து கொள்ளும்
பிரசாத் இன்னும் உலக மட்ட நிலையை அடைந்து கொள்ளவில்லை.
இலங்கை டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து 1982இல் முதலாவது டெஸ்ட் ஆடியதை தொடர்ந்து பல வேகப் பந்து வீச்சாளர்களை அறிமுகப்படுத்தி
எனது பார்வை -(>

Page 69
உளளது. அவர்களுள் ருமேஷ் ரத்நாயக்க, அசன்த டி மெல், ரவி ரத்னாயக போன்றோர் பல போட்டிகளில் ஆடி திறமை காட்டியுள்ளனர்.
ரவி ரத்னாயக அணியில் இருந்து ஓய்வு பெறும் சந்தர்ப்பத்தில் சிறப்பாக திறமை காட்டினார். அவர் தனது இறுதிப் போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் இருந்துள்ளார்.
2 後
ஹெட்ரிக் பெற்றுச் சாதனை படைத்துள்ள பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர்கள் வக்கார் யூனுஸி, அகீப் ஜாவிட், வசீம் அக்ரம்.
அத்தோடு இந்தியாவுக்கு எதிராக சிதத் வெத்தமுனியுடன் 157 ஓட்டங்களை முதலாவது விக்கெட்டுக்காக கொண்டுள்ளார். அவரது சிறப்பான பந்து வீச்சு பாகிஸ்தானுக்கு எதிராக 88 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்கள்.
இங்கிலாந்து அணியை பொறுத்த வரையில் 90 களுக்கு பின்புள்ள
காலத்தில் குறிப்பாக சொல்லக் கூடிய பந்து வீச்சாளர்கள் எவரும் இல்லை எனலாம். டிபிரிட்டாஸ், ஸ்மோல், டரன்ட் கவ்ப், டொமினிக்
நூராணியா ஹஸன்
 
 

கொக், மார்டின் போன்றோர் இன்னும் உலக மட்டத்துக்கு வரவேண்டியுள்ளது.
நியூஸிலாந்து அணியில் கூட இதே நிலைதான் காணப்படுகின்றது. எனினும் நல்ல பல புதிய இளம் வீரர்கள் இப்போது அறிமுகமாகி வருகின்றனர். குறிப்பாக கிறிஸ் கேண்ஸ், கிரிஸ் ஹரிஸ், டி நாஸ் போன்றோருடன் சற்று சிரேஷ்ட வீரர் டெனி மொரிஸனையும் குறிப்பிட (pigt-LD.
தென்னாபிரிக்கா அணியிலும் நல்ல வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களுள் குறிப்பாக அலன் டொனால்ட் இன்று உலகில் உள்ள மிகச் சிறந்ததொரு வேகப் பந்து வீச்சாளர் அலன் டொனால்ட்டை தவிர பொலாக், மதீவ்ஸ், மக்மிலன் போன்றோரும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்கள்.
இன்று உலகில் உள்ள மிகச் சிறந்த ஆரம்ப வேகப் பந்து வீச்சுச் சோடியைக் கொண்ட அணி பாகிஸ்தானாகும். வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ்தான் அவர்கள்.
வளிம் 300 டெஸ்ட் விக்கெட்டுக்ளையும் வக்கார் 200 டெஸ்ட் விக்கெட்டுக்களையும் கொண்ட இடது கை, வலது கை வேகப் பந்துச் சோடி. இவர்கள் தவிர பாகிஸ்தான் அணியில் வளர்ந்து வரும் பல புதிய வேகப் பந்து வீச்சாளர்களும் இடைக்கிடை அறிமுகமாகி வருகின்றனர்.
அவுஸ்திரேலியா அணியிலும் உலக மட்டத்தில் பேசப்படும் வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லாவிட்டாலும் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். குறிப்பாக போல் ரைபல், பிலமிங், மெக்ராத், மெக்டமெட் போன்றோர் எந்த ஆடுகளத்திலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்கள்.
சிம்பாப்பே அணியில் உள்ள பந்து வீச்சாளர்களுக்கிடையே ஸ்டீக் ஒலன்ங்கா போன்றோர் எதிர்காலத்தில் பிரகாசிக்கக் கூடியவர்கள்.
இவர்களைத் தவிர கடந்த காலங்களில் மிகச் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களும் தோன்றி அணிகளின் வெற்றிகளுக்கு சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார்கள். மிக அண்மைக் காலத்தில் பிரகாசித்த சுழல் பந்து வீச்சாளர்களுக்கிடையே மாய விரலைக் கொண்டவர் என்று வர்ணிக்கப்படும் அப்துல் காதர் குறிப்பிடத்தக்கவர்.
எனது பார்வை

Page 70
தற்போது கூட அநேக அணிகளில் சுழல் பந்து வீச்சாளர்கள் ஒருவர் அல்லது இருவர் இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது. அதிலும் குறிப்பாக பல அணியில் ஒருநாள் ஆட்டங்களின் போது இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவது உண்டு. இன்று உலக மட்டத்தில் நான்கு பாத சுழல் பந்து வீச்சாளர்கள் பிரகாசிக்கின்றனர்.
அவர்கள் தமது அணிகளின் வெற்றிகளில் கூடிய பங்களிப்பு செய்கின்றனர். அவுஸ்திரேலியா வீரர் ஷேன் வோன், பாகிஸ்தானிய வீரர் முஸ்தாக் அஹமட், இந்திய வீரர் அனில் கும்லி, ஸிம்பாபே வீரர் போல் ஸ்ராங் ஆகியோரே தற்போதுள்ள உலக மட்ட பாத சுழல் பந்து வீச்சாளர்கள்.
அண்மைக் காலங்களில் ஒருநாள் ஆட்டங்களாய் இருந்தால் என்ன டெஸ்ட் போட்டிகளாக இருந்தாலும் என்ன இந்த வீரர்கள் தனது நாட்டு அணிகளின் வெற்றிக்கு கூடிய பங்களிப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இவர்களின் சேவை இன்றியமையாத ஒருநிலை இந்த அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஷேன் வோன் மிகக் குறைந்த டெஸ்ட்டுகளில் 39 டெஸ்ட்டுகளில் 200 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர். பாத சுழல் பந்து வீச்சாளர்களைப் போன்று புற சுழல் பந்து வீச்சாளர்களும் அணிகளின் வெற்றிகளுக்கு நல்ல பங்களிப்பு செய்து வருகின்றனர்.
இலங்கை அணியில் முத்தையா முரளிதரன் புற சுழல் பந்து வீச்சினால் பயன் பெற்று வரும் ஒரு வீரர். 100 டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றும் முதலாவது இலங்கையர் என்ற பெருமையை அடுத்த டெஸ்ட் தொடரில் பெறப்போகும் வீரர்.
தனது விரல்களினால் பந்தை அதிசயிக்கத்தக்கவாறு சுழற்றும் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் ஆட்டங்களிலும் நல்ல திறமை காட்டியுள்ளார். பல டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் ஆட்டங்களிலும் அவரது சிறப்பான பந்து வீச்சினால் இலங்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இன்று முரளிதரனின் சேவை இலங்கை அணிக்கு இன்றியமையாததாகி
விட்டது. புதிதாக இலங்கை அணியில் அறிமுகமாகி உள்ள பாத சுழல் பந்து வீச்சாளர் ஜயந்த சில்வாவும் பந்தை சிறப்பாக கையாள்கிறார்.
நூரானியா ஹஸன்
 

அவர் கலந்து கொண்டுள்ள 3 டெஸ்ட்டுகளிலேயே அவர் 14 விக்கெட்டுக்களை கைப்பற்றி இருக்கிறார்.
பாகிஸ்தானில் அண்மைக் காலமாக பிரகாசித்து வரும் சக்லின் முஸ்தாக் மற்றொரு சிறந்த புற சுழல் பந்து வீச்சாளர் எனலாம். இந்த வகையில் நோக்கும் போது டெஸ்ட் போட்டியாக இருந்தால் என்ன ஒருநாள் ஆட்டமாக இருந்தால் என்ன எந்த அணிக்கும் நல்ல பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
தினகரன் 01 டிசம்பர் 1996
எனது பார்வை

Page 71
வெற்றிகளின் பின்னணியில் நிற்கும் விக்கெட் காப்பாளர்கள்
கிரிக்கெட் வீரர்களுக்கிடையே விக்கெட் காப்பாளர்களுக்கென தனியிடம் எப்போதுமே உண்டு. இதற்கு காரணம் ஒரு அணியின் வெற்றியின் பின்னணியில் இருப்பவர்களுள் முக்கிய நபராக விக்கெட் காப்பாளரும் இருப்பதுதான்.
ஒருநாள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக இருந்தால் என்ன டெஸ்ட் போட்டியாக இருந்தால் என்ன விக்கெட் காப்பாளரின் பங்களிப்பு முக்கியமானதுதான்!
இதனால் அணியொன்று தெரிவு செய்யப்படும் போது விக்கெட் காப்பாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். பொதுவாக பல விக்கெட் காப்பாளர்கள் அணியில் நீண்ட காலம் தாக்குப்பிடித்து நிற்பார்கள். வந்த வேகத்தில் மறைந்து விடுபவர்களும் உண்டு.
அநேக அணிகளில் விக்கெட் காப்பாளர்களை ஒரு துடுப்பாட்ட வீரராகவும் கருதியே அணியில் சேர்ப்பது உண்டு. விக்கெட் காப்பில் நல்ல திறமை காட்டுவதற்கு புறம்பாக துடுப்பாட்டம் மூலமும் அணிக்கு பங்களிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பே இதற்குக் காரணம்.
அநேக டெஸ்ட் அணிகளில் இடம்பெறும் விக்கெட் காப்பாளர்கள் துடுப்பாட்டத்திலும் திறமை காட்டுபவர்களாகவே உள்ளனர். இதன் காரணமாக தோல்வியில் முடிவுறக்கூடிய டெஸ்ட் போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ள பல சந்தர்ப்பங்கள் உண்டு.
அதேபோன்று பல டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் காப்பாளர்களின் திறமைமிகு துடுப்பாட்டத்தின் காரணமாக அணிகளுக்கு வெற்றி
நூராணியா ஹஸனி
 

கிடைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளைப் போன்றே ஒருநாள் ஆட்டங்களிலும் விக்கெட் காப்பாளர்களின் துடுப்பாட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஒருநாள் ஆட்டங்களைப் பொறுத்த வரையில் இன்று பலரினதும் கவனத்தை ஈர்த்த ஒரு விக்கெட் காப்பாளர் ரெமேஷ் கலுவிதாரன. ஒருநாள் ஆட்டங்களில் இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக ஆடும் கலுவிதாரன மிக வேகமாக துடுப்பெடுத்து ஆடக் கூடியவர்.
எந்த ஆரம்ப பந்து வீச்சாளர்களுக்கும் எதுவித அச்சமுமின்றி முகம் கொடுத்து ஓட்டங்களைக் குவிக்கக்கூடியவர். இலங்கை அணி ஒருநாள் ஆட்டங்களில் பெற்றுள்ள பல வெற்றிகளுக்கு அடித்தளமிட்டுக் கொடுத்த ஒருவர் என்று கலுவிதாரனவை குறிப்பிடலாம்.
இதே போன்று பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர்களான ரஷித் லதீப், முயின்கான் போன்றோரும் ஒருநாள் ஆட்டங்களில் திறமை காட்டுபவர்கள். முயின்கான் பாகிஸ்தான் அணியில் தற்போது பிரகாசிக்கும் ஒரு விக்கெட் காப்பாளர். பல போட்டிகளில் பாகிஸ்தானை வெற்றியை நோக்கி இழுத்துச் சென்றவர்.
அதே போன்று தற்போதைய உலக அணிகளில் அனுபவத்துடன் கூடிய பங்களிப்பைச் செய்யும் ஒரு விக்கெட் காப்பாளர் அவுஸ்திரேலிய வீரர் இயன் ஹிலி. துடுப்பாட்ட வீரர் என்ற வகையில் இயன் ஹிலியின் பங்களிப்பு ஒருநாள் ஆட்டங்களிலும் டெஸ்ட் போட்டிகளிலும் மறக்க முடியாததாகும்.
ஜக் ரஸல்ஸ் இங்கிலாந்து அணிக்காக நீண்ட நாட்களாக பங்களிப்புச் செய்து வரும் துடுப்பாட்ட விக்கெட் காப்பாளர். பல சந்தர்ப்பங்களில் விக்கெட் காப்பாளர்களிலும் அணிகள் வெற்றியைப் பெறும் சந்தர்ப்பங்கள் இருப்பது போன்று தோல்வியுறும் சந்தர்ப்பங்களும் உண்டு.
பொதுவாக பந்து வீச்சாளர்களின் பங்களிப்பில் பங்காளிகளாக இருப்பவர்களுள் முக்கியமானவர்கள் விக்கெட் காப்பாளர்களே. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்த வரையில் விக்கெட்டுக்குப் பின்னால் இருந்து ‘கட்சுகளைப் பிடிப்பது முக்கியமானதாகும்.
ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரரைப் பொறுத்த வரையில் வாய்ப்புகள் அடுத்தடுத்து அவரை வந்து சேராது. இதனால் அவர் மிஸ் பண்ணிக
எனது பார்வை

Page 72
நீண்ட நேரம் விக்கெட்டில் தரித்திருந்த விக்கெட் காப்பாளரும் தனது கன்னி டெஸ்ட்டிலே இரட்டைச் சதம் பெற்றவரும் ஓர் இலங்கையர். பிரண்டன் குறுப்பு 1986-87 களில் நியூஸிலாந்துக்கு எதிராக கொழுமபில் 201 ஓட்டங்களை ஆட்டம் இழக்காது பெற்றார்.
இலங்கையைச் சேர்ந்த மற்றொரு விக்கெட் காப்பாளரான அமல் சில்வா விக்கெட் காப்பில் மிகுந்த திறமை காட்டியுள்ளார். இவர் ஒரே இனிங்ஸில் ஐந்து ஆட்ட இழப்புக்களைச் செய்தவர். அத்தோடு அவர் பெற்றுள்ள அதிக பட்ச ஒட்டம் 111 ஆகும். அவர் லோட்சில் சதம் பெற்றுச் சாதனை படைத்தவர்.
அண்மைக் காலங்களில் டெஸ்ட்டுகளில் சாதனை படைத்த ஒரு விக்கெட் காப்பாளர் அவுஸ்திரேலிய வீரர் இயன் ஹீலி. அவர் அண்மையில் இரண்டு சதம் பெற்றுள்ளார்.
மேற்கிந்திய தீவுக்கு எதிராக ஆட்டம் இழக்காது 161 ஓட்டங்களும் (கடந்த மாதம் பிரிஸ்பேர்ன்) 125 ஒட்டங்கள் (அடிலேட்). இரண்டு டெஸ்ட்டிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்திய விக்கெட் காப்பாளர் மொங்கயா அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டில்லியில் 152 ஒட்டங்கள் பெற்றார். இது அவரது கூடிய டெஸ்ட் ஓட்டமாகும்.
90 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு 150 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற அடுத்த விக்கெட் காப்பாளர் ஸிம்பாபே வீரர் அன்டி பிலவர் 1994-95 களில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹராரேயில் 156 ஓட்டங்கள் பெற்றார். அந்த டெஸ்ட்டில் ஸிம்பாபே தனது கன்னி டெஸ்ட் வெற்றியையும் பெற்றது.
இந்திய விக்கெட் காப்பாளர் புத்தி குண்டெரின் 1963-64 களில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னையில் 192 ஓட்டங்கள் பெற்றார்.
இறுதியாக இந்த சாதனையை கடந்த மாதம் இங்கிலாந்தின் விக்கெட் காப்பாளர் அலெக் ஸ்டோவெட் படைத்துள்ளார். அலெக்ஸ்டேர்வோர்ட் நியூஸிலாந்துக்கு எதிராக ஒக்லான்டில் 173 ஓட்டங்கள் பெற்று இங்கிலாந்தை வெற்றிக்கு ஈட்டிச் சென்றார்.
1989-90 களில் நியுஸிலாந்து வீரர் இயன் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக ஒக்லான்டில் 173 ஓட்டங்கள் பெற்றார். உலகின் பெருமைக்கு உரிய
நூரானியா ஹஸன்
 

லோட்ஸ் விளையாட்டரங்கில் கூடிய ஓட்டங்கள் எடுத்த விக்கெட் காப்பாளர் மேற்கிந்திய அணியைச் சேர்ந்தவர்.
கிலேட் வோல் கெட் 1950 களில் இங்கிலாந்துக்கு எதிராக லோட்ஸில் (ஆ.இ) 168 ஒட்டங்கள் பெற்றார். தென்னாபிரிக்கா வீரர் டெனிஸ் லின்ட்ஸே 1960-67 களில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஜொஹனஸ் பேர்க்கில் 182 ஓட்டங்கள் பெற்றார்.
டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஒன்பது நாடுகளைச் சேர்ந்த விக்கெட் காப்பாளர்களும் டெஸ்ட்டுகளில் 150க்கு மேல் ஒட்டங்களைப் பெற்றுள்ளனர்.
இந்த வகையில் ஒரு விக்கெட் காப்பாளர் பந்து தடுப்பில் காட்டும் அதே திறமையைத் துடுப்பாட்டத்திலும் காட்டும் போதுதான் அணி
அவர்கள் மூலம் நிறை பயனைப் பெறும்.
தினகரன் 09 மார்ச் 1997
எனது பார்வை

Page 73
நூராணியா ஹஸன்


Page 74
Disses பிரவேசித்து சிறுகதை என்
565 Go LGA
பேராதனைப் விஞ்ஞானத் ঔষ্ঠ6তাঁ। G D தொடர்ந்து ஒலிபரப்புக் get go ous
assessor
செயலாளர், Die SS
ISBN 955.
siad (Ա5ԼII
Cover Design :
 

இலக்கிய ஒன்றியம் நாராணியா எனது பார் வை நூலை ல் பெருமிதம் அடைகின்றது. Tenogo 19795 Sog G Leifer இருக்கும் போது எழுத்துலகில் புதுக்கவிதை, உருவகக் கதை பனவற்றை எழுத ஆரம்பித்தவர். ஆக்கங்களை foi cas ளத் தந்தவர். இப் போது 55 gigon Gun G. Go Go Go கொண்டுள்ளார். slig. 20 பல்வேறு துறைகளில் 1000க்கும் ississi Sigging Tin.
Lovö e5 GoGoes espas é9 UUG துறையில் முதுமாணி இறுகு ooT GUGUT IT es esmî GODES GESTIGDu காண்டிருப்பதோடு, இலங்கை கூட்டுத்தாபனத்தில் முஸ்லிம் பனப்பாளர் பகுவிகி குரிய गाव् 3legi Liljaĝigi DTir... LIGAS புதிய அறிமுகம் செய்து வருகின்றார்.
றளன் ஒரு நல்ல எழுத்தாளர், Go Gibf ups ഖ്ഞ ജuണ് கெல்லாம் அபால் மக்களை இனங்களுக்கு அப்பால் நின்ற
ரிந்த ஒரு நல்ல மனிதர்.
இலக்கிய ஒன்றியம்.
33.35 - O - 2
too,
A Azeez Nizareer