கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்

Page 1
呜、
ဒွိဋ္ဌိရှို့၍
リ
器蕊
鹦蕊
畿蕊
器
 


Page 2

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்

Page 3

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
கட்டுரைகள், முன்னுரைகள், பேட்டி
தொகுப்பாசிரியர் கலாநிதி செ. யோகராசா
குமரன் புத்தக இல்லம் கொழும்பு - சென்னை
2007

Page 4
வெளியீட்டு எண் : 266
ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - தொகுப்பாசிரியர் : கலாநிதி செ. யோகராசா பதிப்புரிமை (C) 2007 தொகுப்பிற்கு
குமரன் புத்தக இல்லத்தினால் வெளியிடப்பட்டது - 361-1/2, டாம் வீதி, கொழும்பு-12, தொ.பே. 2421388 மி. அஞ்சல் : kumbhasltnet.lk - 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, வடபழனி, சென்னை - 600 026 குமரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது
- 361-1/2, டாம் வீதி, கொழும்பு, 12
Elathu Siruvar Elakkiya Kalanchiyam Edited By. Dr.S. Yogarajah
Copyright (C) 2007 for the collection
Published by Kumaran Book House - 361, 1/2 Dam Street, Colombo – 12,Tel. - 242 1388, E.mail : kumbh GDI sltnet.lk
- 3 Meigai Vinayagar Street, Kumaran Colony, Vadapalani, Chennai - 600 026
Printed by Kumaran Press (Pvt) Ltd. - 361, 1/2 Dam Street, Colombo -12
ISBN 978 - 955 - 659 - 083 - 8

சமர்ப்பணம்
முன்னாள் வடமாநில கல்வி வித்தியாதிபதியும் ஈழத்தின் முதல் சிறுவர்பாடல் தொகுதியான பிள்ளைப்பாட்டு' நூலை வெளியிட்டவருமான கே.எஸ்.அருணந்தி அவர்களுக்கு

Page 5

பொருடளக்கம்
தொகுப்பாசிரியர் குறிப்பு
கட்டுரையாளர் விபரம்
கட்டுரைகள் 1. தமிழ்ப் பாரம்பரியத்தில் சிறுவருக்கான இலக்கியம்
- கா.சிவத்தம்பி 2. தமிழில் குழந்தைக் கவிதைகள்
- க. கைலாசபதி
3. சிறுவர் இலக்கியம்
- க.நவசோதி
4. சிறுவர் இலக்கியம் : சில சிந்தனைகள்
- செ.கணேசலிங்கன்
5. ஈழத்துக் குழந்தைப் பாடல்கள்
- கனக.செந்திநாதன் 6. தமிழ் இலக்கியப் பரப்பில் ஈழத்துக் கவிஞர்களின்
குழந்தைப் பாடல்கள் - எஸ். சிவலிங்கராசா
7. ஈழத்துக் குழந்தைப் பாடல்கள் : ஒரு பார்வை
- த. துரைசிங்கம் 9. ஈழத்துச் சிறுவர் அறிவியல் பாடல்கள்
- செ. யோகராசா
24
41
47
ქ56
62
7O
77

Page 6
viii
10. சிறுவர் உளப்பண்பும் இலங்கையில் தமிழில்
சிறுவர் இலக்கியமும் 83 - ஏ. இக்பால்
11. இலங்கையில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி :
ஒரு கண்ணோட்டம் 95 - செ. யோகராசா
12. ஈழத்தில் சிறுவர் இலக்கியம் வளர்ந்துள்ளதா? 98
- செ. யோகராசா
13. குருவியின் தலை மீது பனங்காயைச் சுமத்தலாமா?:
குழந்தைக் கவிதைகள் பற்றிய சில சிந்தனைகள் II6
- கல்வயல் வே.குமாரசாமி
14. சிறுவர் விமர்சனம் : அனுபவத்தினூடான மனப்பதிவு 122
- செ. யோகராசா
15. யாழ்ப்பாணப் பிரதேசச் சிறுவர் பாடல் வளர்ச்சி :
ஒரு நோக்கு 126 - வே. செவ்வேட்குமரன்
16. மட்டக்களப்புப் பிரதேசத்தில் குழந்தைக் கவிதை வளர்ச்சி 131
- செ. யோகராசா
17. மட்டக்களப்புப் பிரதேசச் சிறுவர் இலக்கியத்தின் 138
முன்னோடி எஸ். இ. கமலநாதன்
- செ. யோகராசா
முன்னுரைகள்
1. ஈழத்தின் முதல் சிறுவர் பாடல் தொகுதியான
"பிள்ளைப்பாட்டு” நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை 145 - கே. எஸ். அருணந்தி
2. சோமசுந்தரப்புலவரது சிறுவர் பாடல் தொகுப்பான
"சிறுவர் செந்தமிழ்” நூலுக்கு எழுதப்பட்ட மதிப்புரை 147 - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

ix
3. திமிலைத்துமிலனின் "அழகுமுல்லை" என்ற
தொகுப்பிற்கு எழுதப்பட்ட அணிந்துரை 154 - அழ. வள்ளியப்பா
4. கல்வயல் வே. குமாரசாமியின் “பாப்பாப்பா”என்ற
நூலுக்கான முன்னுரை I56 - இ. முருகையன்
5. சிறுவன் தர்மேந்திராவின் பாடல்களுக்கான ஒரு முன்னுரை 160
- கா. சிவத்தம்பி
6. சபா. ஜெயராசாவின் "மழலைப்பா” நூலுக்கு
எழுதிய முன்னுரை 164 - மயி லங்கூடலூர் பி. நடராஜன்
7. மு. பொன்னம்பலத்தின் “ஊஞ்சல் ஆடுவோம்”
என்ற சிறுவர் கவிதைத் தொகுதிக்கான முன்னுரை I67 - மு. பொன்னம்பலம்
8. இரத்தினம் அப்புத்துரையின் “மழலைத் தமிழ்ப் பாடல்" 171
என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரை - சோ. பத்மநாதன்
9. செ. யோகநாதன் எழுதிய "தங்கத் தாமரை” நூலுக்கு ‘குழந்தை இலக்கியம்: சில மனப்பதிவுகள்’ என்ற தலைப்பிலான முன்னுரை I74
- செ. யோகநாதன்
பேட்டி
கவிஞர் அம்பி எனும் இ. அம்பிகைபாகன் அவர்களுடனான பேட்டி.
185
பேட்டி கண்டவர்: சதாசிவம் ஜீவா

Page 7
தொகுப்பு ஆசிரியரிடமிருந்து.
நவீன இலக்கியத்துறைகள் வளர்ந்துள்ள ஈழத்துச் தமிழ்ச் சூழலில் சிறுவர் இலக்கியத் துறையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதென்பதனை ஈழத்து இலக்கிய ஆர்வலர்கள் நன்கறிந்திருப்பர். எனினும், ஆரோக்கியமற்ற இந்நிலமைப் பற்றி படைப்பாளிகளோ விமர்சகர்களோ பெற்றோர்களோ எவருமே அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. மாறாக, மேலை நாடுகளில் இத்துறைசார் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்தக் கூடியதாய் உள்ளமை மனங்கொள்ளப்பட வேண்டியது.
எனினும் கடந்த சில வருடங்களாக ஈழத்து இலக்கிய ஆர்வலர்கள் இத்துறையில் கரிசனை காட்ட முற்பட்டுள்ளமை பராட்டிற்குரியது. வடக்கு, கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு சிறுவர் இலக்கியக் கருத்தரங்கு ஒன்றினை முதன் முதலாக 2001ஆம் ஆண்டு நடத்தியிருந்தது. இக்கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை 2002இல் நூலுருவில் வெளியிட்டுமுள்ளது.
எவ்வாறாயினும் சிறுவர் இலக்கியத்துறையில் நாம் எங்கே நிற்கின்றோம் என்று எம்மை நாமே கேட்டுக் கொள்வது அவசியமானது. இவ்வழியில், நூல் விவரப்பட்டியல்கள், தொகுப்பு முயற்சிகள் முதலியன பயன்தரக் கூடியவை. இவற்றின் முக்கியத்துவத்தினை உணர்ந்து கொண்ட குமரன் புத்தக இல்லத்தினர் தமது நீண்ட காலத்திட்டத்தின் முதல் அறுவடையாக ஈழத்தில் இன்று வரை வெளியான சிறுவர் இலக்கியம் தொடர்பான கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட முன்வந்துள்ளதன் வெளிப்பாடே இத்தொகுப்பு முயற்சியாகும்.

xi
இத்தொகுப்பிலே கட்டுரைகள் மட்டுமன்றி முன்னுரைகளும் (ஒரு பேட்டியும்) அவற்றின் முக்கியத்துவம் கருதி இடம் பெற்றுள்ளன. இவை மட்டுமே ஈழத்தில் வெளிவந்துள்ளன என்று எவருமே கருதிவிடமாட்டார்கள். இவை யாவும் ஒரே தரத்தன என்றோ, கூறியது கூறுகின்ற குற்றத்திற்குட்படாதனவென்றோ கூறிவிடவும் முடியாது. சிறுவர் இலக்கியம் தொடர்பான பொதுவான கட்டுரைகளும், ஈழத்தில் இத்துறை வளர்ச்சி பற்றிய கட்டுரைகளுமே கணிசமாக இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நூற் தொகுப்பாளரின் கட்டுரைகள் அதிகமுள்ளமை அவற்றின் முக்கியத்துவம் கருதியே என்பதனை இவற்றை வாசிப்போர் நன்குணர்வர். எவ்வாறாயினும் இத்தொகுப்பு முழுமைத் தன்மையை ஒரளவாவது பெற்றுள்ளது என்றே நம்புகின்றேன்.
இத்தொகுப்பில் முக்கியமான சில கட்டுரைகளை (உதாரணமாக "பயங்கர இரவுகள்” என்ற சிறுவர் கதைத்தொகுப்பு பற்றிய வானொலிக் கலைக்கோலம் நிகழ்ச்சி விமர்சனம்) இணைக்க முயன்றும் இறுதி நேரத்தில் அது கைக்கெட்டவில்லை.
ஈழத்தில் எத்துறைசார்ந்த தொகுப்புகளையும் வெளியிடுவதென்பது மிகக் கடினமான செயலாகும். ஏனெனில், வெளியான நூல்கள் பற்றியும் கட்டுரைகள் பற்றியும் பட்டியல் எதுவும் எம்மிடம் இல்லை.
இந்நிலையில் இத்தொகுப்பினை உருவாக்குவதற்கு உதவியாகவிருந்த நண்பர்கள் பலரையும் இவ்வேளை நினைத்துப் பார்க்கின்றேன். இவர்களுள் மிக அரியநூலான “பிள்ளைப்பாட்டு” (1935) தொகுப்பு நூலினைத் தந்துதவிய எனது முன்னாள் மாணவரும் இந்நாள் கல்லூரி ஆசிரியருமான வே.செவ்வேட் குமரன் குறிப்பிடத்தக்கவர். அனைவரையும் விட நண்பர் க. குமரன் மிகுந்த நன்றிக்குரியவர்.
கிழக்குப் பல்கலைக்கழகம் கலாநிதி செ.யோகராசா
வந்தாறு மூலை மொழித்துறை IO.O8.2OO7

Page 8
கட்டுரையாளர் விபரம்
கே. எஸ். அருணந்தி : முன்னாள் வடமாநில கல்வி அதிகாரி. முப்பதுகளில் சிறுவர் பாடல் போட்டி நடத்தி, 'பிள்ளைப்பாட்டு’ என்ற சிறுவர் பாடல் தொகுப்பு வெளிவர காரணமானவர்.
இ. அம்பிகைபாகன் : முன்னாள் அதிபர், கல்வி அதிகாரி, கவிஞர், நாடகாசிரியர். கிறீனின் அடிச்சுவடு இவரது முக்கியமான நூல்.
ஏ. இக்பால்: முன்னாள் அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்; “கவிஞர்' சிறுகதை ஆசிரியர், விமர்சகர், சிறந்த வாசகர்.
பணி டிதமணி சி.கணபதிப்பிள்ளை : முன்னாள் திருநெல்வேலி சைவ ஆசிரியப் பயிற்சி கலாசாலை, தமிழ் விரிவுரையாளர். ஈழத்து மரபுவழித் தமிழ் புலமையாளர் களுள் முக்கியமானவர்.
செ.கணேசலிங்கன் : ஈழத்தின் மூத்த சிறுகதை, நாவல் எழுத்தளர். யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
கல்வயல் குமாரசாமி :அறுபதுகளில் உருவான புதிய தலைமுறைக் கவிஞர்களுள் கவனத்திற்குரியவர். சிறுவர் இலக்கியகர்த்தா. முன்னாள் உதவி அஞ்சல் அதிபர். தற்போது, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்.

xiii
க.கைலாசபதி : சர்வதேசப் புகழ்ப் பெற்ற புலமையாளர். மார்க்சிய விமர்சன அணுகுமுறையில் சங்க இலக்கியம் தொடக்கம் சமகால இலக்கியம் வரை பல ஆய்வுகள் நடத்தியவர். இவரது "Tamil Heroic Poetry தமிழ் நாவல் இலக்கியம், ஆகிய நூல்கள் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தியவை.
கா. சிவத்தம்பி : சர்வதேசப் புகழ்பெற்ற புலமையாளர். மார்க் ஸிய விமர்சன அணுகுமுறையில் சங்ககால இலக்கியம் தொடக்கம் சமகால இலக்கியம், சமூகம் வரை ஆய்வுகள் செய்து வருபவர்.
எஸ். சிவலிங்கராசா : யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக பணியாற்றும் இவர் அத்துறையின் தலைவருமாவார்.
கனக.செந்திநாதன்: மறுமலர்ச்சிக் காலத்தில் உருவானவர். சிறுகதை, நாவல் துறையில் ஈடுபட்ட இவர், ஈழத்தின் இரசனை முறை விமர்சகர்களுள் முதன்மையானவர், குரும்பசிட்டியைச் சேர்ந்தவர்.
வே. செவ்வேட் குமரன் : கிழக்குப் பல்கலைக்கழக
தமிழ்ச்சிறப்பு பட்டதாரி, கல்லூாரி ஆசிரியர்.
த. துரைசிங்கம்: கல்விப் பணிப்பாளர், சிறுவர் பாடல்
தொகுப்புகள் பலவற்றை வெளியிட்டுள்ளார்.
மயிலங்கூடலூர் பி. நடராஜன் : பல்துறை ஆற்றல் கொண்ட புலமையாளர்; ஒய்வுபெற்ற ஆசிரியர். சிறுவர் இலக்கியத்துறை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருபவர்.
ச. க.நவசோதி : அரசகரும மொழித்திணைக்களத்தில் பணிபுரிந்தவர், இவரது 'ஒடிப் போனவன்' என்பதே ஈழத்தில் முதன்முதல் வெளிவந்த சிறுவர் நெடுங் கதை.
சோ. பத்மநாதன் : அறுபதுகளில் உருவான ஈழத்தின் முக்கியமான கவிஞர். சிறந்த மொழிபெயர்ப்பாளர்; பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை முன்னாள் ஆங்கில விரிவுரையாளர்; அதிபர்.

Page 9
Xiv
மு. பொன்னம்பலம் : ஈழத்தின் அறுபதுகளில் முகிழ்ந்த முக்கியமான கவிஞர், புனைகதை ஆசிரியர், விமர்சகர்.
இ. முருகையன் : ஐம்பதுகளில் உருவான ஈழத்து நவீன கவிதை முன்னோடிகளுள் முக்கியமானவர். நாடக நூல்களின் ஆசிரியர், விமர்சகர். பல்துறைப் பணியாற்றி இறுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளராக விளங்கியவர்.
செ. யோகநாதன் :ஈழத்தில் முக்கியமான புனைகதை ஆசிரியர். இவரது சிறுவர் இலக்கிய துறை சார்ந்த முயற்சிகளில் பல தமிழ்நாட்டிலும் பாராட்டுப் பெற்றவை.
செ.யோகராசா (தொகுப்பாசிரியர்) : நவீன இலக்கியம், ஈழத்து இலக்கியம், தமிழியியல் ஆய்வு, விமர்சனம், பெண்கள் இலக்கியம், சிறுவர் இலக்கியம் என்பன சார்ந்த ஆய்வாளராக செயற்படுவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கலைக்கழக மொழித்துறையில் முதுநிலை விரிவுரையாளராக விளங்குகின்றார்.
அழ.வள்ளியப்பா : தமிழ் உலகில் சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் முக்கிய தடம்பதித்தவர். இவரது 'மலரும் உள்ளம் தொகுப்பே சிறுவர் உளவியல் தோற்றத்திற்கேற்ப வெளிவந்த முதல் சிறுவர்பாடல் தொகுப்பு.

கட்டுரைகள்

Page 10

தமிழ்ப் பாரம்பரியத்தில் சிறுவருக்கான இலக்கியம் - கா.சிவத்தம்பி -
சிறுவர் இலக்கியம் எனும் தொடர் இன்று நம்மிடையே ‘Children's Literature எனப்படும் ஆங்கில தொடருக்கான நியமமான பதமாகியுள்ளது.
ஆனால் "சிறுவர்” எனும் சொற்பயன்பாட்டை நோக்கும் பொழுது அது தொடக்க நிலையில் "சிறுவன்” என்பதற்கான பன்மை வடிவமோ என சந்தேகம் கிளம்புகின்றது. "சிறுவர்” என்ற சொற்கட்டமைப்பினுள் சிறுமியரும் அக்காலத்திலே சேர்த்துக் கொள்ளப்பட்டனரா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. சிறார் (சிறாஅர்) எனும் சொல்லே இரு பாலாரையும் குறித்ததுபோல தோன்றுகின்றது.
இது முக்கியப் பிரச்சினை மையமொன்றினைத் தன்னுள் அடக்கி நிற்கின்றது என்றே கொள்ளல் வேண்டும். ஏனெனில், சங்க இலக்கிய நிலையில் சிறுவயதினர் எனும் குழுவினரை அச்சமூகம் எவ்வாறு நோக்கிற்று என்பது பற்றிய தெளிவு இப்பொழுது நம்மிடையே உள்ள காலத்தால் முந்திய இலக்கியங்களிலே பெரிதும் காணப்படவில்லையென்றே கூறலாம். (கலித்தொகையில் வரும் "சிறுபட்டி” போன்ற சொற்றொடர்கள் விடலைப் பருவத்தினுள் புகும் இளையோர் பற்றி குறிப்பிடுகின்றன எனலாம்; இளையோர் எனும்சொல் தலைவனின் உதவியாளரையே, குறிப்பாக அவருடன் பொருள்வயிற் சென்றோரையே குறித்தது எனலாம்). கிடைத்துள்ள இலக்கியங்களில் தொகைநிலைத் தன்மைக் காரணமாக இப்பண்பு இருக்கலாம். ஆயினும் குழந்தைகள் பற்றி நிறைய குறிப்புக்கள் வருகின்றன.

Page 11
-4 - ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
குழந்தை நிலையிலிருந்து வளர்ந்து சிறுபிள்ளைகளாக விளங்கும் நிலை இப்பாடல்களில் ஒரு பிரச்சினையாக இடம்பெறவில்லை. அதற்கும் அகம் - புறம் என்ற பொருள்மரபு ஒரு காரணமாகலாம்.
திணைமரபுச் சமூகத்தில் ஆண்குழந்தைகள் பெரும்பாலும் குலத்தொழிலையே மேற்கொண்டிருத்தல் வேண்டும். ஒரிடத்திலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் கூத்தர் குலாத்தினுள் அவர்களது சிறார்களும் காணப்பட்டனர் என்ற குறிப்பு மலைபடுகடாத்தில் வருவதாக எண்ணுகின்றேன். சங்க இலக்கியத்தில் சிறுபிள்ளைகளை குறிப்பதற்கு 'மகார்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகன், மகள் என்ற சொல்லுக்கு மகவு என்பது பொதுச்சொல் மகார் என்பது பன்மையைக் குறிப்பதாகும்.
இவ்விடயம் பற்றி இவ்விடத்திற் குறிப்பிடுவதற்கான காரணம் அச்சமூகத்திலுள்ள சிறாருக்கான கல்விப் பயிற்சி யாதேனும் இருந்ததா என அறிவதற்கேயாகும்.
இன்னொரு வகையிற் சொன்னால் அறிவு கையளிப்புப் பற்றிய பிரக்ஞை அச்சமூகத்தில் இருந்ததா என அறிவது அவசியமே.
இவ்வாறான சிந்திப்பு கல்வியெனும் கோட்பாடிடத்து நம்மை இட்டுச்செல்வது தடுக்கமுடியாததாகும். சங்க இலக்கியங்களில் ஆச்சரியமான ஒன்று "கல்வி" என்ற சொல் இடம்பெறாமையாகும். "கல்வி" எனும் சொல் முதன்முதலில் தொல்காப்பிய கற்பியலிலேயே வருகின்றதென வரலாற்றுத் தமிழகராதிக் கூறும். தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் களவியல், கற்பியல், பொருளியல் எனும் இயல்கள் தொடக்கத்திலே இடம்பெற்றிருந்தனவா என்பது பற்றி அறிஞர்கள் சந்தேகங்கிளப்பியுள்ளனர். கல்விபற்றிய கற்பியற் குறிப்பு சந்தேகமானதே. ஏனெனில் அது திருமணம் செய்த ஒருவர் கல்விக்காக மனைவியைப் பிரிந்திருக்கின்ற இயல்பை கூறப்படுகின்றது. தொல் காப்பியம் சங்க இலக்கிய நூல்களுக்குப் பிந்தியதாகவே கொள்ளப் படுகின்றது.
திருக்குறளை நோக்கும் பொழுது அது எல்லாவகையிலும் சங்ககாலத்துக்குப் பிந்தியது அல்லது ஆகக் குறைந்தபட்சம் சங்ககால இறுதியிலேயே தோன்றியிருக்க வேண்டுமென வரலாறு தெளிவாகக் கூறுகின்றது. கல்வி பற்றிய விரிவான விடயநிலைக் குறிப்புக்கள் திருக்குறளில் பொருட்பாலில் அரசு இயலிலேயே இடம்பெறுகின்றன. இறைமாட்சியைத் தொடர்ந்து கல்வியும், தொடர்ந்து கல்லாமையும், அதன் பின்னர் கேள்வியும் பேசப்படுகின்றன. கல்வி,

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 5
கேள்வியினாலேயே அறிவுடமை ஏற்படுகின்றது என்பது திருக்குறள் அதிகார வைப்பு வழியாகத் தெளிவாகின்றது.
இத்தகவல் மிகமுக்கியமானதொன்றாகும். கல்வி அறத்துப் பாலிலே வரும் இறுதியியலிலே சேர்க்கப்பட்டிருப்பதையே இன்றைய நிலையில் நாம் எதிர்பார்ப்போம். ஆனால் அரசு இயலிலே ஏறத்தாழ அரசனுக்கான முதற் தேவையாக எடுத்துக் கூறப்படுகின்றது. திருக்குறளில் வரும் கல்வி, கல்லாமை ஆகிய அதிகாரங்கள் மூலம் வரன்முறையான - விதிமுறையான கல்வியே (Formal Education) பேசப்படுகிறதெனலாம்.
சற்று நிதானமாக நோக்கும்பொழுது அன்றைய சூழ்நிலையில் விதிமுறைக்கல்விக்கானத் தேவை குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை திணைகளிலே நிச்சயமாக வழக்கில் இருந்திருக்காது.
திணைமரபு வரலாற்றினை நீக்கி நோக்கினால் சமண, பெளத்த மதச் செல்வாக்குகளின் நிலையிலேயே விதிமுறையான கல்வி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்பது தெரிகின்றது. பெளத்த, சமண சங்கங்களில் சேருவோருக்கு விதிமுறையான கல்வி அவசியம். பாரம்பரியக் கருத்தின்படி சமண, பெளத்த நிறுவனங் களான பள்ளிகளிலிருந்தே பள்ளிக்கூடம்’ என்றசொல் தோன்றிய தென்பர். இது உண்மையே. பெளத்த சமண முனிவர்கள் தங்கள் பர்னசாலைகளில் இரவிலே துயின்ற (பள்ளி) கூடத்திலேயே பகல் வேளைகளிலே படிக்கும் மரபு நிலவிற்று. அதாவது "பள்ளி” யின் "கூடமே" பள்ளிக்கூடமாயிற்று. ஆனால் இதிலும் ஒரு காலச்சிக்கல் உள்ளது. சமண துறவிகள் தங்குமிடம் என்ற கருத்தினிலே "பள்ளி” எனும் சொல் வருதல் சிலப்பதிகாரத்திலேயே முதன்முதலில் காணப்படுகின்றதென்பர். அதற்கு முன்னர் பள்ளிகொள்ளுதல் என்பது பொதுவாக படுத்துறங்கலையே குறித்தது.
மேற்கூறிய தகவலின்படி சிலப்பதிகார காலத்திலும், அதன் பின்னருமே இந்தப் "பள்ளி" மரபு வந்திருத்தல் வேண்டும் என்று கொள்ளலாம்போலத் தெரிகின்றது. இப்பொழுது பொதுவிலே சிலப்பதிகாரக் காலம் எனக்கொள்ளப்படுவது கி.பி.450-550 ஆகும். இந்நிலைநின்று நோக்கும்பொழுது தமிழ்மரபில் பள்ளிக்கூட மரபு சமண, பெளத்த முக்கியத்துவம் காரணமாக கி.பி ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளிலே செழிப்புடன் வளர்ந்திருத்தல் வேண்டும். சிறுவர் பயிற்றுவிப்புப் பற்றிய மேற்கூறிய குறிப்புக்கள் சிறுவர் கல்வியின் ஓர் அம்சத்தினையே குறிப்பிடுகின்றன. ஆனால் சிறுவர்கள் பற்றி இன்னுமோர் அம்சம் உள்ளது. அது சிறுவருக்காக எழுதப்பட்டவை பற்றியதாகும். இதுபற்றி போதிய விளக்கம் அவசியம். இதன்வழியாகக் கருதப்படுவது சிறுவர்கள் பயில்வதற்கு

Page 12
- 6 - ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
வேண்டிய கருத்துரைகளாகும். இக்கருத்துரைகளை சிறுவர்களின் வயது விளக்கத்திற்கு ஏற்ப ஒழுங்கமைத்தனர். இந்தியமரபில் அறிவுரைகளைச் செய்யுள்வழியாக எடுத்துக்கூறும் ஒரு மரபு உண்டு.
தமிழில் இச்செயற்பாடு எவ்வாறு நிகழ்ந்துள்ளது என்பது பற்றிப் பார்ப்பது அவசியமாகிறது. தமிழின் சனரஞ்சக உதாரணங்களாக "ஆத்திசூடி", "கொன்றைவேந்தன்", " வாக்குண்டாம்”, “நல்வழி", "நன்நெறி" ஆகியவற்றைக் கூறலாம்.
இந்த மரபுக்கான வரலாறு யாது என்பதனை நோக்குதல் அவசியமாகின்றது.
I
இவ்வாறு நோக்கும்பொழுது பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மிக முக்கியமாகின்றன.
வாய்ப்பாடு ரீதியான தமிழிலக்கிய வரலாற்றில் இத்தொகுதி ச, கமருவிய காலத்துக்குரியதுயெனவும் அறஞ்சார்ந்த நூல்க ,ெ னவும் பொதுப்படையாக கூறப்படுவதுண்டு. ஆனால் உண்மை நி360 அதுவல்ல. இவை இத்தொகுதியினுள் நீதிபற்றிய நூல்கள் மாததிரமல்லாமல் அக - புறத்திணை மரபுகள் பற்றிய நூல்களும் உள்ளன. அவற்றை பின்வரும் முறையில் வகுத்துக் கொள்ளலாம் :
Ol. $0.505pair
02. நாலடியார்
03. பழமொழி
04. நான்மணிக்கடிகை
05. திரிகடுகம்
08. சிறுபஞ்சமூலம் நீதி
07. ஆசாரக்கோவை 08. இன்னா நாற்பது 09. இனியவை நாற்பது 10. முதுமொழிக்காஞ்சி II. GJGJIT5) 12. திணைமாலை நூற்றைம்பது 13. ஐந்திணை எழுபது 14. ஐந்திணை ஐம்பது 15. திணைமொழி ஐம்பது அகம் 16. கைந்நிலை 17. கார் நாற்பது
18. களவழிநாற்பது புறம்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 7
நீதி நூல்கள் எனத் தரப்பட்டனவற்றுள் திருக்குறளை மற்றவற்றுடன் சேர்த்து நோக்கல் கூடாது. அதனை சாதாரண அறிவுரை எனக் கொள்ளாது அது அக்காலத்தைய சூழலில் வாழ்க்கை பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை (தத்துவத்தை) எடுத்துக் கூறுவதாகக் கொள்ளல் வேண்டும். இன்னாநாற்பது, இனியெை நாற்பது எனவரும் தலைப்புக்களுக்கான வாசக / கேட்போர் வட்டம் யாதாக இருந்திருக்கலாம் என்று சிந்திக்கத் தூண்டுகின்றது. நாலடியார் பற்றிய மரபுவழிக் கதை, அது சமண அறிவுரைகளாகவே எழுதப்பட்டன என்பதைச் சுட்டுகின்றது. திரிகடுகம், ஏலாதி போன்றவை வாழ்க்கைக்கு மருந்தாக அமையும் கருத்துக்களைக் கூறுவனவாகவே அமையும். ஆசாரக் கோவை இந்துப் பாரம் பரியத்தைச் சார்ந்தது.
திருக்குறள், ஆசாரக்கோவை ஆகியனவற்றை விட்டு மற்றைய "நீதி"நூல்களைப் பார்க்கும்பொழுது இவை சமண, பெளத்த மத இளம் துறவிக்கானவை அல்லது "உபாசக” நிலைச் சிறுவருக்கானவையாக இருந்திருத்தல் வேண்டும். இந்நூல்கள் யாரைநோக்கி எழுதப் பட்டுள்ளன என்ற வினா எழுவது இயல்பே. சமண, பெளத்த முனிவர்களால் தத்தமது தங்குமிடங்களிலே நடத்தப் பெற்ற “பள்ளிக்கூடங்களில்" இவை பயன்படுத்தப்பட்டிருக்குமோ என்ற கருத்து மிகுந்த வலுவுடன் மேற்கிளம்புகிறது.
இவ்வாறு ஊகிப்பதற்கான மிக முக்கியகாரணம் இந்நூல்களின் இலக்குவாசகர்கள் (Target Readers) யாவர் என்பதாகும். ஏற்கனவே கூறியபடி இந்த வாசகர்களை நானில திணை மரபுடன் இணைத்து நோக்க முடியாது. தமிழ் பிராமிக்கல்வெட்டுக்களை நோக்கினால் அவை சமண சமய நிலையங்கள் தனித்தனி இடங்களிலே வைத்துப் பேணப்பட்டன என்பதைக் கூறுகின்றன. அத்தகைய பள்ளிகளில் இளம் துறவிகளுக்கான எடுத்துரைப்புக்களாக இவை அமைந்திருக் கலாம் என்று தோன்றுகின்றது.
இவ்வாறு கூறும் பொழுது ஏற்கனவே சொன்ன வாசகர் கேட்போர் சமூகப் பின்புலம் பற்றிய வினா முக்கியமாகின்றது. இவ்வேளையில் திருக்குறள் அரசியலிலே கல்வி, கல்லாமை பற்றி கூறப்பட்டிருப்பனவற்றை மனங்கொளல் வேண்டும்.
இவ்வாறு சிந்திக்கின்றபொழுது திருக்குறள் அரசர்களுக்கானக் கல்வியைப் பற்றியே பேசுகின்றது எனலாம். கல்வி, கல்லாமையாகிய இரு அதிகாரங்களிலும் கற்கப்படவேண்டிய கற்கைநெறிகள் பற்றிய உள்ளடக்கம் எதுவும் கூறப்படவில்லையெனினும் அந்தக் கல்வி மதச்சார்பற்றது (Secular) என்பதும் அந்தக் கல்வி இல்லாமல் (Learning) "அறிவு" (knowledge) இல்லையென்பதும் தெரிகிறது.

Page 13
8- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
சமண, பெளத்த பள்ளிக்கூடங்களிலே நடைபெற்ற கல்வியின் உள்ளடக்கந்தான் அரசியலில் சொல்லப்படுகின்ற கல்வியின் உள்ளடக்கமாக மாத்திரம் இருக்குமா என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நிச்சயமாக வேறுபட்ட தாகவே இருந்திருக்கும். அப்படியாயின் வரன்முறையானக் கல்வி குறைந்தது இரண்டு மட்டங்களிலே இருந்திருத்தல் வேண்டும். ஒன்று துறவியர் பள்ளிக்கூடங்கள் மற்றது அரசருக்கான பயிற்சிமுறை. இவையிரண்டையும் விட "எழுத்தறிவு" பற்றி இங்கு கூறல் வேண்டும். அது வணிகத் தேவைகளுக்கான எழுத்தறிவாகும். அத்தகைய வணிகத் தேவைகளோடு சம்பந்தப்பட்ட எழுத்துக்கள் தொல்லியல் மூலம் கிடைத்துள்ளன. அவை பற்றி ஐராவதம் மகாதேவன் விளக்குகிறார். இவ்விடயத்தில் நாம் மனங்கொள வேண்டிய மிக முக்கியமான தரவு, அக் காலத்தில் வணிகம் தமிழ் நாட்டில் பெரும்பாலும் சமணர்களோடு சம்பந்தப்பட்டிருந்தது என்பதாகும். சமண நிறுவனங்களுக்கு வணிகர்கள் கொடைகள் வழங்கியுள்ளனர் என்பது ஐராவதம் மகாதேவனின் ஆராய்ச்சி மூலம் தெட்டத் தெளிவாகின்றது. இவ்வுணர்மை மிகமுக்கியமான வரலாற்றுத் தரவை இங்குத் தருகின்றது. அது தமிழ்நாட்டின் தொடக்ககால "எழுத்தி"ன் வளர்ச்சியில் சமண தொடர்பு மிக வலுவாகக் காணப்பட்டது என்பதாகும்.
இதுபற்றி சிந்திக்கும் பொழுது கல்வியின் முக்கிய உள்ளடக்கங்களாக "எண்”ணையும் "எழுத்தை"யுமே அவர்கள் கொண்டிருந்தனர் என்ற உண்மை புதிய தடங்களுக்கு எம்மை இட்டுச்செல்கின்றது. "எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” (குறள்). இது தொடர்பாக மேலும் ஒரு மிக முக்கியமான சொல்வழி வரலாற்று உண்மையினை பதிவுசெய்வது அவசியமாகின்றது. அதாவது தமிழில் பொருட்களை எண்ணுவதற்கும் (Counting), சிந்திப்பதற்கும் (Thinking) "எண்” என்ற ஒரு சொல் அடியே உள்ளது. இது மிக முக்கியமாக ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
சங்கப் பிற்காலத்தில் (கி.பி 250 - 450) சமணம் எவ்வாறு தமிழில் வரன்முறையான கல்விவளர்ச்சிக்கு உதவிற்று என்பதனை மிகமேலோட்டமாக இதுவரை பார்த்தோம். சிறுவருக்கான கல்வி தொழிற்பட்ட சூழல்பற்றி சில தரவுகளை மேற்கூறிய கருத்தாடல் மூலம் அறிந்து கொண்டோம்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் r 9
V
இக்காலப் பிரிவைத் தொடர்ந்துவரும் வைதீகமத எழுச்சி காலத்திலே கல்வி தமிழ்நாட்டில் எவ்வகையில் நிலவிற்று என்பது பற்றி நோக்குவது அவசியமானது.
பொதுவாக, தமிழிலக்கிய வரலாற்று நூல்களில் சங்கமருவிய காலம் எனக்குறிப்பிடப் பெறும் காலத்தின் பின்னர் வரும் பல்லவ, சோழப் பெருமன்னர் காலங்களில் சைவ, வைணவ பக்திப் பாடல்களுக்கும், அரசவை இலக்கியங்களுக்கும், காப்பிய வளர்ச்சிக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காணலாம். இவ்விடத்தில் வற்புறுத்தப்பட வேண்டிய உண்மை யாதெனில் சைவ, வைணவ எழுச்சியும் பல்லவ சோழ ஆட்சிகளும் சைவ, வைணவ குறிப்பாகச் சைவ அம்சங்களுக்கே ஊக்கம் கொடுப்பதை அவதானிக்கலாம். (முற்றிலும் வரலாற்று நிலைநின்று நோக்கும்பொழுது பல்லவ காலத்தினை வரலாற்றாசிரியர்கள் பல்லவ பாண்டியகாலம் என்றே குறிப்பிடுவர். உண்மையில் முதலாம் பாண்டிய பேரரசின் காலம் இதுவேயாகும்.)
மேற்கூறிய பொதுவான அபிப்பிராயத்தினை காப்பிய வளர்ச்சி பற்றிய வரலாறு முற்றிலும் நிராகரித்து நிற்கின்றது. ஐம்பெரும் காப்பியங்கள் (சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவகசிந்தாமணி). ஐஞ்சிறு காப்பியங்களுள் (சூளாமணி, நீலகேசி, யசோதரகாவியம், உதயணன் கதை, நாககுமாரகாவியம்) அடங்குபவையாவும் சமண, பெளத்த மதக்கதைகளே என்பதை மறந்துவிடக்கூடாது. இந்தத்தரவு சைவ, வைணவ மத எழுச்சிக் காலத்திலும் சமண, பெளத்த மடங்கள் முக்கியமான இலக்கியப் பணியிலே ஈடுபட்டிருந்தன என்பதைக் காட்டுகின்றது.
V
தமிழ்நாட்டிற் சமண பெளத்த மடங்களில் தமிழ்பற்றிய உயர்நிலை ஆய்வு நடந்துவந்து கொண்டேயிருந்தது என்பதற்கு தமிழிலக்கண வரலாறு முக்கிய சான்றாகும். தமிழில் முதலாவது இலக்கண நூலை எழுதிய தொல் காப்பியர் சமணர் என்றே ஆராய்ச்சியாளர் கூறுவர். தொல்காப்பியம் தமிழ் முழுவதையும் விதிமுறையாக அறிமுகம் செய்யும் உயர்நிலை ஆய்வு மாணவருக்கான ஒரு நூலாகவே அமைந்தது என்பதனை என்றும் மறந்துவிடக் கூடாது. தொல்காப்பியத்துக்கு பின்வரும் மிகமுக்கியமான இலக்கண நூலான

Page 14
Or ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
வீரசோழியத்தை எழுதியவர் பெளத்தரே (புத்தமித்திரர் 11ம் நூற்றாண்டு). அதனைத் தொடர்ந்து வீரசோழியத்தின் வடமொழிச் சாய்வுக்கெதிரான நல் நூலை (நன்னூல்) பவணந்தி எனும் சமணரே செய்தாரென்பதும் முக்கியமான வரலாற்றுத் தரவாகும்.
ஏறத்தாழ கி.பி 600 முதல் 1300 வரையுள்ள பல்லவ, பாண்டிய, சோழப்பெருமன்னர் காலங்களில் சிறுவர் கல்விக்கான நேரடி இலக்கியத் தரவுகள் இல்லையெனும் அளவுக்கு மிகக்குறைவாக உள்ளன. சற்று நிதானித்து நோக்கும்பொழுது இது நியாயமானவொரு நிலைப்பாடேயாகும். ஏனெனில் சைவ, வைணவக் கோயில்கள் கட்டப் பெற்று அவை ஒழுங்கமைப்பான ஓர் அரச நிர்வாக 0ை:பின் அங்கங்களாக ஒழுங்குபடுத்தப்படுவது சோழப் ருமன்னர் காலத்திலேயே ஆகும். பல்லவ ஆட்சிக்காலத்தின் பிற்கூற்றில் இதற்கான பண்புகள் தொடங்கிவிட்டன என்பதை பலலவகால வரலாறு தெளிவாக்குகின்றது. கோயில் முறைமை நன்கு ஒழுங்கமைக்கப்பெற்ற நிலையில் சைவ/வைணவ கோயிலானது சமூக, பொருளாதார, பண்பாட்டு மையமாக விளங்கிற்று. இத்தகைய கோவில்களில் சமயக்கல்வி புகட்டப் பெற்றதற்கான சான்றுகள் உள்ளன என்பதையும் "தேவாரச் சுற்றுக் கல்லூரி என்ற சொற்றொடர் சோழர் சாசனங்களிலே பேசப்படுகின்றது என்றும் கூறுவர். ஆனால் உயர் கல்வி நிலையத்தைக் குறிக்கும் கல்லூரியெனும் சொல் முதன்முதலில் சீவகசிந்தாமணியிலேயே வருகின்றதென்று வரலாற்றுத் தமிழ்ப் பேரகராதி கூறும். சைவ, வைணவப் பாரம்பரியங்களில் கோயில்களில் சிறுவயதினருக்கும் கல்வி புகட்டப்பட்டிருக்கலாம்.
கோயில் ஒழுங்கமைப்புக்களை பொறுத்தவரையில் இரண்டு அம்சங்கள் முக்கியமாகின்றன. ஒன்று கோயில் ஒழுங்கமைப்பு முறைமையில் சாதி அமைப்புணர்வு நிலவியதன் காரணமாக அடிநிலைப்பட்டோர் கோயில்களுக்குள்ளே சென்றிருக்கவே முடியாது. இரண்டாவதாக பக்தி இயக்கத்தின் தொடக்க காலத்திலே செழுமையாக நிலவிய "பண்” பாரம்பரியம் பிற்காலத்தில் வலுவிழந்து நின்ற பொழுது அப்பாடல் மரபினைத் தெரிந்திருந்தவர் கோயிலுக்குள்ளே செல்லமுடியாதிருந்தார் என்ற மரபுவழிக் கதையை மனத்திருத்தல் வேண்டும். இந்த உண்மையைக் கூறும்பொழுது சமண, பெளத்த மதங்கள் எந்த அளவுக்கு தமிழ் சமூக அமைப்பினை ஊடறுத்து நின்றன என்பது பற்றி நமக்குத் தெரிகிறது. பெரும்பாலான சமண, பெளத்த மதத்தினர் நகர்நிலைப்பட்டவர்களாக, வணிகம் சார்ந்த சமூகங்களைச் சார்ந்தவர்களாகவே இருந்திருத்தல் வேண்டும் என்பதும் நியாயமான வரலாற்று ஊகமாகும். எண்ணையும்
 

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 11
எழுத்தையும் அடிப்படையாகக் கொண்ட கல்விமுறை அடிநிலைச் சமூகங்களுக்கு பரவியிருக்க நியாயமில்லை. மேலும் கல்வியென்பது பிற்காலத்திலே கொள்ளப்படுவது போன்று மதச்சார்பற்றதாக (Secular) கருதப்படவில்லை. எனவே சிறுவர் நிலைப்பட்ட கல்விமரபானது உயர்நிலையினருக்கான குருகுல முறைமையிலே போற்றப்பட்டு வந்திருக்கலாம். மேலும் சோழர்காலத்திலிருந்து சைவ, வைஷ்ணவ மதங்கள் சார்ந்த மடங்கள் முக்கியப்படுவதை அவதானித்தல் வேண்டும்.
சைவமடங்களிலே சிறாருக்கான கல்வியமைப்பு நிச்சியமாக இருந்திருத்தல் வேண்டும். பிராமணரல்லாத மடங்களில் குறிப்பாக தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாழ் ஆகிய மடங்களிலே உயர்நிலைப்பட்ட தமிழாய்வுகள் நடைபெற்றுவந்தன. இந்தப் பாரம்பரியம் ஏறத்தாழ இக்காலம் வரை தொடர்கிறது எனலாம்.
V
ஏறத்தாழ 14ம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டில் விஜயநகர ஆட்சியும் பின்னர் நாயக்கர் ஆட்சிகளும் தெலுங்கு மேலாண்மையும் முன்னிலைப்படத் தொடங்க தமிழ்நிலைப்பட்ட சிறுவர் கல்விபற்றிய சில தரவுகள் கிடைக்கத் தொடங்குகின்றன எனலாம். சைவநிலைப் பட்ட சிறார் கல்வியின் மிகமுக்கியமான சான்றுகளாக அமைவன ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை என்பனவும் வாக்குண்டாம், நல்வழி, நன்நெறி என்றும் குறிப்பிடப்படும் பாடத்தொகுதிகளுமாம்.
இவற்றின் காலம்பற்றிய நிர்ணயப்பூர்வமான ஆராய்ச்சிகள் இருப்பதாகத் தெரியவில்லை. துரதிஷ்டவசமாக வையாபுரிப்பிள்ளைப் போன்றோரின் கவனம் இப்பாடல்களிடத்து ஈர்க்கப்பெறவில்லை.
ஆயினும் இவற்றைநாம் 16ம் 17ம் நூற்றாண்டுகளிலே நிலவிய தமிழ்ச்சிறார் கல்விமரபின் வெளிப்பாடுகளாகக் கொள்ளலாம். ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆதியவை குழந்தை நிலையினருக்கே உரியனவாகும். அறம்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல் . என வருபவை தமிழின் உயிரெழுத்துக்களை அறிமுகம் செய்வனவாகவும் அமைகின்றமையைக் காணலாம்.
இவற்றுக்குமேல் வாக்குண்டாம், நல்வழி, நன்நெறி ஆகியன பாலர்நிலைக்கு மேற்பட்ட சிறுவருக்கானவையாகவே கொள்ளல் வேண்டும். மூதுரைநூல்களின் தொடர்ச்சிக் காரணமாக மேல்நாட்டுக்

Page 15
-12- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
கல்விமுறை தமிழுக்கு கொண்டுவரப்பட்ட பொழுதும், தமிழை பயிற்றுவதற்கான ஆரம்பநிலைச் செய்யுட்களாக பாடப்புத்தகங் களிலே இவை இடம்பெற்று வந்துள்ளன. அம்முறைமை ஏறத்தாழ 1960 வரை நிலவிற்று எனலாம். அதன் பின்னர் மூதுரைகள் வரன்முறையாக தமிழ் பாடப்புத்தகங்களிலே சேர்க்கப்படும் மரபு இல்லாமல் போயிற்று என்று கூறலாம். ஆயினும், பிரித்தானியர் கொண்டுவந்த புதிய கல்வியமைப்பினூடே தமிழ் பயிற்றலுக்கு இப்பாடல்களே பயன்படுத்தப்பட்டன என்பது மனத்திருத்தப்பட வேண்டிய உண்மையாகும்.
சிறுவர் கல்விபற்றிய இன்றைய நோக்கில் இவை மாணவர் நிலைக்கு அப்பாற்பட்ட இலக்கிய இலக்கண வழக்குகளைக் கொண்டனவாகவே உள்ளன என்பது உண்மையே என்பதற்கான நல்ல உதாரணம் பின்வருவதாகும்:
நன்றி ஒருவர்க்குச் செய்தற்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா - நின்று தளரா வளர்த்தெங்கு தாழுணர்ட நீரை தலையாலே தான் தருதலால்
இப்பாடல் இங்கே தரப்பட்டுள்ளது போல பிரித்து எழுதப்படாமல் புணர்நிலையிலேயே கூறப்பட்டன. அந்தமரபின் படி மேற்கூறிய வெண்பாவின் கடைசி அடி "தலையாலே தான்றருத லால்". ஆனால் அக்காலத்தைய கல்விமரபுக்கு இப்பாடல்கள் பெருமுரணற்றனவாகவே விளங்கின என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும்.
சிறுவர்நிலைப்பட்ட அறிவுரைகளாக இருக்கும் இவற்றை நோக்கும்பொழுது இப்பாடல்கள் பல பெண்களை நோக்கிய விழியினைக் கொண்டனவாகவிருப்பதை அவதானிக்கலாம்.
என்று முகமன் இயம்பா தவர் கண்ணுஞ் சென்று பொருள் கொடுப்பர் தீதற்றோர் துன்று சுவை மூவிற் பொலிகுழலாய்! பூங்கை புகழவோ நாவிற் குதவும் நயந்து நீக்க மறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கி னவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்! நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோற் புல்லினுந் திண்மைநிலை போம்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -3-
இத்தகைய விழித்தொடர்களைக் கொண்டு மாணவியரை நோக்கி இவை கூறப்பட்டன என்று கூறுவது சிரமமே. இதனைத் தமிழின் அறிவுரை எடுத்துரைப்பு மரபின் முறையென்று கூறலாம். ஏனெனில் இப்பாடல்களை சிறுமியருக்கான கல்விக்குரியவை என்றுக் கூறமுடியாது. இந்த அறிவுரை மரபினை நோக்கும் பொழுது இத்தகைய பாடல்கள் யாவும் கேள்வி வழியாக மனனஞ் செய்வதற்குரிய பாடல்களே என்பதனையும் மனத்திருத்திக் கொள்ளல் வேண்டும். மூதுரைப் பாடல்களை நோக்கும் பொழுது ஒரு முக்கியமான வினாவொன்றினை தவிர்க்கமுடியாதுள்ளது. அதாவது "வேத அத்யயன” மரபுபோன்று தமிழ் கற்றலில் யாதேனும் ஒரு மரபு போற்றப்பட்டதா என்பதே அவ்வினாவாகும். அத்தகையதொருமரபு இருந்ததென திட்டவட்டமாகக் கூற முடியாது எனினும் அத்தகைய ஒன்று இல்லையென்று கூறுவதும் சிரமமே. ஆறுமுகநாவலர் ஓரிடத்தில் தமிழ்க் கல்விநிலைப்பேற்றிற்கான படிநிலைகளை எடுத்துக்கூறியுள்ளார்.
1. தமிழ் கற்கப் புகுஞ் சைவசமயிகள் முன்னர் பாலபாடங் களைப் படித்துக் கொண்டு, இலக்கணச் சுருக்கத்தைக் கற்றறிந்து இயன்ற அளவு பிழையில்லாமல் எழுதவும் பழகுக. 2. நிகண்டு கற்று, அதனுள் அடங்கிய சொற்களையும் அவற்றின்
பொருள்களையும் அறிந்து கொள்க.
3. திருவள்ளுவர் குறள், நாலடியார் முதலாகிய நீதிநூல்களைப்
பதப்பொருளுடனே கற்றறிந்துகொள்க.
4. சமயதீஷை பெற்றுக்கொண்டு சைவர்களுக்கு இன்றியமை யாச் சிறப்பினவாகிய தேவாரம், திருவாசகம், திருப்பல்லாண்டு என்னும் அருட்பாக்களைப் பண்ணுடன் ஒதவும்.
சிறுவர் நிலையில் நாவலர் பாலபாடமெனும் சொற்றொடரினை பயன்படுத்துவதை நோக்குக. சைவப்பிள்ளைகளுக்கான பாலபாடம் அவராலேயே எழுதப்பெற்றது.
இத்தகைய முறையில் தமிழ்க் கற்கும்போது வடமொழியும் சேர்ந்தே கற்பிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இங்கே விவரிக்கப்படும் கல்விமுறையின் தேர்ச்சிப்படிகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதற்கு உ.வே.சா.வின் ‘என் சரித்திரம்’ மூலமாகவும் சில தரவுகள் கிடைக்கின்றன. பெரும் தமிழ்ப் புலவர்களிடத்தும், சிறுபிள்ளைகளும் படிக்கவரும் மரபு இருந்ததென்பதும் அத்தகைய இளஞ் சிறாருக்கு புலவரின் நம்பிக்கையைப் பெற்ற முதியமாணவர்கள் கற்பிப்ப

Page 16
-4- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
ரென்றும், அம்முதுமாணவருக்கு புலவர் தாமே கற்பிப்பாரென்றும் தெரியவருகின்றது.
பாரம்பரிய சிறார் கல்விபற்றி சிந்திக்கும்பொழுது அக்காலத்தில் நிலவிய திண்ணைப் பள்ளிக்கூட மரபுபற்றி சிறு அளவிலேனும் எடுத்துக்கூறுதல் அவசியமாகும். திண்ணை என்பது அக்காலத்து வீடுகளில் வீட்டின் தலைவாசலுக்கு செல்வதற்கு முன்னர் தலைவாசற் கதவின் இருபுறங்களிலும் காணப்பட்ட மண்ணால் உயர்த்தப்பட்ட மேடையைக் குறிக்கும்.
இத்திண்ணை வீட்டின் எவ்விடத்தில் வரும் என்பதுபற்றி சிறு கருத்துமயக்கம் உள்ளது. மேலே கூறிய கருத்தமைப்பு பெரும்பாலும் யாழ்ப்பாணத்திலுள்ளதாகும். தமிழகத்தில் சில வீடுகளின் வாசலுக்கு முன்னே ஏறத்தாழ தெருவோரத்தோடு திண்ணை அமைக்கப் பட்டிருக்கும். இத்தகைய திண்ணைகளிலிருந்தே கிராமத்தவர்கள் “பலதையும் பத்தையும்” பற்றி பேசிக்கொள்வார்கள். (இதனையே திண்ணைப் பேச்சு என்றுக் கூறுவர்.)
தமிழ் லெக்ஸிகன் திண்ணைப் பாடசாலைக்குத் தரும் விளக்கத்தை நோக்கும்பொழுது (தெருப் பாடசாலை) மேலேக் கூறிய பொதுத் திண்ணைகளே திண்ணைப் பாடசாலைகளின் களமாக அமைந்தன எனக் கொள்ளவேண்டியுள்ளது.
கிராமத்திலுள்ள குழந்தைகள் யாவரும் தாழ்த்தப்பட்ட சாதியினரல்லாத சாதிகளிலிருந்து வரும் மாணவர்களாக இருந்திருத்தல் வேண்டும். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவரே இருப்பார். மாணவர்கள் திண்ணையிலமர்ந்து படிப்பார்கள். இந்தத் திண்ணைப் பள்ளிக்கூட மரபு ஆங்கில ஆட்சிக் கல்விமுறை முற்றுமுழுதாக பரவும்வரை சிற்சில இடங்களிலே தொடர்ந்தும் பேணப்பட்டது.
VIII
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்கூற்றிலிருந்து இந்திய கல்வியமைப்பு மாறுகின்றது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சி இந்திய பாரம்பரிய சமூக அமைப்பைத் தேவையான இடங்களிலே பேணிய அதேவேளையில் சட்டத்தின் ஆட்சி, சட்டத்தின் முன் யாவரும் சமமென்ற கொள்கைகளை தளமாகக் கொண்டு இயங்கத் தொடங்கிற்று.
இக்கட்டத்திலே ‘Children's Literature" என்ற தொடர் பற்றிய அடிப்படைகள் பற்றிய கருத்துத் தெளிவு இருத்தல் அவசியமாகிறது.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -5-
சிறுவர் இலக்கியம் பற்றிய அடிப்படைகளை ஆராயும்பொழுது அதன் பிரதான அம்சமாகக் கருதப்பட வேண்டுவது "குழந்தையை” கண்டறிந்து கொள்வதுதான் (Discovering the Child). குழந்தையைக் கண்டறிதல் என்பது குழந்தையின் மனநிலையில் நின்று அதன் உளத் தொழிற்பாட்டு நிலைநின்று அந்த நியமங்களுக்கேற்ப சிறார்களை மேலும் ஊக்கப்படுத்துவது. அதாவது உண்மையிலேயே குழந்தை உள்ளத்தின் விகசிப்புக்களை உணர்ந்து அது தன்நிலையை, உலகை, சூழலை எவ்வாறு பார்க்கின்றதென்று அறிந்துகொள்வதாகும். குழந்தை அதன் தேடலை மேலும் தூண்டுவதற்கான இலக்கியமே “குழந்தை இலக்கியம்" என்றுக் கூறுவர். குழந்தை நிலைநின்று பார்ப்பதென்பது யாது? அப்படியான எழுத்து யாது? மேல்நாட்டு இலக்கிய மரபிற்கூட சிறுவர் இலக்கியத்தின் தோற்றத்தை 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குரியதாகவே கூறுவர். மேலைநாட்டின் முக்கிய 160LL'il 1556trid, Aesop's Fables, Lewis Carolla$607 Alice in wonderland என்ற படைப்புக்கள் மிக முக்கியமானவையாகும்.
சிறார், முதியோர் உலகின் யதார்த்த தாக்கங்களுக்கு கட்டுப்படாத உலக உண்மையைத் தம் உள்ளத்தால் உணர்ந்து கொள்கின்ற தன்மை உருவாகும். உதாரணமாக Jack and the Bean Stalk (ஜக்கும் பயிற்றங் கொடியும்) எனும் கதையில் அந்த பயிற்றங் கொடியை பிடித்துக் கொண்டு ஜக் விறுவிறுவென ஏறுவான் இறங்குவான். அந்த உலகத்தில் வாத்துக்கள் பேசும், குருவிகள் விளையாடும், மிருகங்கள் தத்தம் கருத்துக்களைக் கூறும்.
உண்மையில் குழந்தையிலக்கியம் பற்றி மேல்நாட்டு நிலைநின்று நோக்கிப் பார்த்தபோது இத்தகைய மரபு நிச்சியமாக நம்மிடையேயுமுள்ளது என்பது தெரிகின்றது. பூரணநிலாவில் தெரியும் இருண்ட பகுதியை ஒளவையார் தடியுடன் உட்கார்ந்திருக்கின்றார் எனும் குழந்தை நிலை நம்பிக்கையை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இதனைவிட, மிருகங்கள் மனிதர்களைப் போல பேசுவதாகச் சித்திரிக்கும் மரபும் உண்டு. பஞ்சதந்திரக் கதை இதற்கான இந்தியநிலை நின்ற நல்ல உதாரணமாகும்.
ஏற்கனவே கூறியபடி இத்தகைய குழந்தைநிலை விளக்கங்கள், சிந்திப்புக்கள் நம்மிடையேயும் இருந்தன. இவ்வாறு நோக்கும்பொழுது குழந்தை இலக்கியத்தின் பிரதான அம்சம் யாதனில் அது குழந்தையின் உளநிலையில் நின்று கற்கவேண்டியனவற்றை எடுத்துக் கூறலாகும்.

Page 17
-16- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
ΙΧ
சிறுவருக்கான எழுத்துக்களின் பண்புகளை நோக்கிய நாம் அடுத்து நவீனநிலையில் தமிழ்ச் சூழலில் சிறுவர் இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கினை பருமட்டாக நோக்குவோம்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரை குறிப்பாக சென்னை மாநில பிரதேசங்களைப் பொறுத்தவரையில் 19ம் நூற்றாண்டில் முனைப் புடன் தொழிற் பட்ட புரட்டஸ்தாந்த இயக்கங்கள் கிறிஸ்தவத்தை பரப்பும் அதேவேளையில் புதிய நிர்வாக கட்டமைப்புக்கு வேண்டிய "முகவராக”வும் அமைந்தன. இந்த ஒட்டுமொத்தமான அரசியற் , சமூக, பணி பாட்டு, வரலாற்று மாற்றத்தினோடேயே சிறுவரின் கல்வி, எழுத்தறிவு பற்றிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
சிறுவர்களை மையப்படுத்திய ஒரு தேவ ஊழிய G)5TLi_ITL-3)È (Missionary Commiunication), 6) 657(Up60) puLIT60 படிநிலைப்பட்ட வகுப்புமுறையினைக் கொண்ட ஒரு கல்விமுறைமையும் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து நிறுவப்படத் தொடங்கவே சிறுவருக்கான எழுத்துக்கள் (Writings) எனும் விடயத்தில் பாரிய வளர்ச்சிகள் ஏற்பட்டன. இந்த நவீனத்தன்மை ஒட்டுமொத்தமான சமூக நவீனமயவாக்கத்துடன் தொடர்புற்று, அதன் ஒர் அங்கமாக விளங்கியது எனும் உண்மையை மறந்துவிடக்கூடாது.
உண்மையில் சிறுவருக்கான எழுத்துக்கள் இக்காலத்திலேயே பல் கிப் பெருகத் தொடங்கின. இந்த ஆய்வுத் தொடர்பாகக் காணப்படும் எடுகோள்கள், செல்நெறி பற்றிப் பார்த்துவிட்டு அவற்றுக்கு மேல் சிறுவர் எழுத்துக்கள் பற்றிய நவீன வளர்ச்சிகளை பருமட்டாக பார்க்க முனைவோம்.
X
இந்த நவீன நிலை வளர்ச்சியானது தமிழகம் இலங்கை ஆகிய இரண்டு நிலைகளிலும் மிகத்துரிதமாகவே ஏற்படுகின்றது. உண்மையில் சிங்கப்பூர், மலேசியாவில் கூட சிறுவருக்கான தமிழ் எழுத்துக்கள் படிப்படியாக முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். குறிப்பாக பாடப்புத்தக நிலையிலும், வகுப்பு நிலையிலும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மிகுந்த அறிவு பூர்வமானவை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். இதனை அவர்களது ஆரம்பநிலை பாடப்புத்தகங்களிலே தெளிவாக காணும் வாய்ப்பு இக்கட்டுரை ஆசிரியருக்கு ஏற்பட்டது.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் 17
சிறுவருக்கான எழுத்துக்களின் நவீன நிலைப்பட்ட வளர்ச்சிகள் தமிழகம், இலங்கை ஆகிய இரண்டு நிலைகளிலும் தனித்தனியாகவும் பொதுப்படையாகவும் பார்க்க வேண்டிய தேவையுள்ளது. கல்வி நிலையில் தனித்துவமான வளர்ச்சிகள் காணப்பட்டனவெனினும் சஞ்சிகைகள் போன்ற அச்சு ஊடகங்கள் நிலையில் தமிழகத்தின் செல்வாக்கு இலங்கையில் பெரிதும் உணரப்பட்டுள்ளதென்றே கூறல் வேண்டும்.
சிறுவருக்கான எழுத்துக்கள் பற்றிய ஆய்விலே மிக முக்கியமாக தமிழிலே எழுதப் பேசப்பெறுவது குழந்தைப் பாடல்களே. இலங்கை, தமிழகம் ஆகிய இரண்டு இடங்களிலும் இவை பற்றிய ஆய்வுகள் உண்டு. ஆனால் சற்று நிதானமாக நோக்கும் பொழுது சிறுவருக்கான எழுத்துக்களில் பாடப்புத்தகங்கள் - அவற்றிலும் பார்க்க முக்கியமாக சஞ்சிகைகள் போன்ற வெளியீடுகள் அதாவது உரைநடை பிரசுரங்கள் - மிக முக்கியமானவையாகும். ஆயினும் குழந்தைப் பாடல்கள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட அளவுக்கு இவை நுணுகி ஆராயப்படவில்லை. உண்மையில் இவையே நுணுகி ஆராயப்பட்டிருத்தல் வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கான மொழிநடையின் ஆழ, அகலங்களை இந்த எழுத்துக்களிலே சிறப்புறக் காணலாம்.
சிறுவருக்கான எழுத்துக்களிலே மேலை நாடுகளில் சிறுமியருக்கான எழுத்துக்கள் என ஒரு விசேட துறை வளர்ந்துள்ளது. Sweet Valley TwinS என வரும் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு வாசிப்புத் தொடர் ஒன்று உண்டென்றும் பெண் குழந்தைகளுக்கென எழுதும் ஆசிரியர்களில் Nancy Drew போன்ற பிரபல எழுத்தாளர் உளர் என்றும் கூறுவர். பெண் குழந்தைகளுக்கென பிரத்தியேகமான ஒர் எழுத்துமுறை உண்டென்றும் கூறுவர். தமிழில் இத்தகைய வளர்ச்சிகள் இன்னும் ஏற்படவில்லை.
(சிறுவர்களுக்கான வானொலி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையில் ஏறத்தாழ 1960களில் இலங்கை வானொலியின் சாதனைகள் மிக முக்கியமானவையாகும். அக்காலத்தில் வானொலி மாமாவாக விளங்கிய எஸ்.சரவணமுத்து இத்துறையிலே பெயர் பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளை ஈட்டியுள்ளார். ஆயினும் சென்னை திருச்சி வானொலி நிலையங்களிலும் கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு வந்தன. நடைபெறுகின்றன. குறிப்பாக மிகச்சிறியப் பிள்ளைகளுக்கான 'பிள்ளைக்கனியமுது' எனும் நிகழ்ச்சி முக்கியமானதாகும்.)

Page 18
- 18- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
ஏற்கனவே கூறியபடி தமிழில் நவீனகாலத்தில் குழந்தைகளுக்கென எழுதப்பெற்ற கவிதைகள் பற்றிய ஆய்வுகள் நிறைய உண்டு. தமிழக நிலையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவரின் பின்னர் அழ. வள்ளியப்பா போன்றோர் பற்றிய ஆய்வுகள் நிறைய உள்ளன. இலங்கை நிலையில் பாப்பா பாட்டு தொகுப்பின் முக்கியத்துவம் பற்றி பலர் பேசியுள்ளனர். உளவியலைத் தமது சிறப்பு ஆய்வுத் துறையாக மேற்கொண்டிருந்த காலஞ் சென்ற அருநந்தியவர்கள் பாப்பா பாட்டுத் தொகுப்பிற் காட்டிய ஆர்வம் மிக முக்கியமானதாகும். நவாலியூர் சோமசுந்தரப் புலவரை தலைசிறந்த குழந்தைக் கவிஞராக போற்றும் மரபு நம்மிடையே உண்டு. "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை", "கத்தரித் தோட்டத்து வெருளி" முதலிய பல சிறந்த குழந்தைப் பாடல்களை அவர் எழுதியுள்ளது உண்மையெனினும் அவரை முற்றுமுழுதாக ஒரு குழந்தைக் கவிஞராக மாத்திரமே கொண்டுவிடுதல் முடியாது. சைவ சித்தாந்த கருத்தினை வைத்து அவர் எழுதியுள்ள "உயிரிலன் குமரன்” எனும் நாடகமும் அவருடைய கவிதை நூலான "தந்தையார் பதிற்று பத்தும்" மிக முக்கியமானவையாகும். சைவ சித்தாந்தத்திலே ஆழமான அறிவுடையவர் எனும் பெயர் அவருக்கிருந்தது. இவை யாவற்றுக்கும் மேலாக தாம் வாழ்ந்த காலத்தில் குறிப்பாக பிற்பகுதியில் ஏற்கனவே தமிழை நன்கு பயின்றிருந்த தமிழ் ஆர்வலர்களுக்கான ஆசிரியராகவும் விளங்கினார்.
குழந்தைக் கவிஞர்கள் பற்றி கவனம் செலுத்தப்படுகின்ற அளவுக்கு அக்கவிதைகள் பாடல்களாக அமைகின்ற தன்மைபற்றி இதுவரை நன்கு நோக்கப்படவில்லை என்றே கூறவேண்டும். ஒலிநாடா முறைமை மிகச் சனரஞ்சகமாக வளர்ந்துள்ள இன்றைய நிலையிலும் குழந்தைப் பாடல் தொகுதி எதுவும் வெளியிடப்பெற்றதாகத் தெரியவில்லை. ஒலி நாடாக்களைக் கேட்டு பிள்ளைகள் தனித்தும் ஒருமித்தும் பாடல்களை வாய்விட்டுப்பாடும் மரபு இன்னும் நம்மிடையே வரவில்லையென்றே கூறல் வேண்டும். குழந்தைப்பாடல்கள் தொடர்பாக தமிழ் மக்களிடையே மிகப் பாரிய குறைபாடொன்றுள்ளது. அதாவது தமிழ் மக்களிடையே வாய்மொழி நிலையில் நிலவும் குழந்தைப் பாடல்களை சரிவரப் பேணி அவற்றினுடைய பாடல்முறையினைச் செப்பம் செய்து அப்பாடல்களை சனரஞ்சகப்படுத்தும் முறைமை நம்மிடையே இல்லை. உதாரணமாக சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ என்ற பாடல் முழுமையுடன் பயிலப்படுவதில்லையென்றே சொல்ல வேண்டும். ஆனால் ஆங்கில, சிங்கள மக்களிடையே இப்பண்பு கிடையாது.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -19
அவர்கள் தங்களது வாய்மொழி மரபிலே நிலவும் பாடல்களைச் செப்பமான இசைப் பாடல்களாக ஒழுங்கமைத்துள்ளனர். உதாரணத்துக்கு, சிங்களமக்களிடையே நிலவும்
“டிகிரி டிகிரி டிகிரி லியா கலெத் அரங் லிந்தட கியா லிந்த வடகர கபரகொயா ககுல காபு தியபெறியா"
இப்பாடலிலே ஆச்சரியம், நகைச்சுவை என்பவற்றைக் காணலாம்.
இக்கட்டுரை ஆசிரியர் பலவருடங்களுக்கு முன் தமிழ் பாடநூற் சபை உறுப்பினராக இருந்தபொழுது ஆரம்ப வகுப்பு வாசிப்பு நூல் ஒன்றில் "கீச்சு கீச்சு தாம்பூலம்..” என்ற வாய்மொழிப் பாடலை நூலில் வரும் பாடல்களில் ஒன்றாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனைக் கூறியபொழுது பலர் அதனை விரும்பவில்லை. இருப்பினும் பரீட்சார்த்தமாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் நூல் வெளியானதன் பின்னர் அது மாணவர்களினாலே பெரிதும் விரும்பப்பட்டதென்பது தெரியவந்தது.
குழந்தைக் கவிஞர்கள் பற்றிய ஆய்வுகள் பல உள்ளன. தேசிக விநாயகம்பிள்ளை, அழ.வள்ளியப்பா, சோமசுந்தரப்புலவர், சத்தியசீலன் எனவரும் குழந்தைப் பாடலாசிரியர்கள் பற்றி பலவிடயங்கள் எழுதப்பட்டுள்ளனவெனினும் இவர்களுடைய கவிதைகள் சிறார்களின் மனதை எவ்வாறு கவருகின்றன என்பது பற்றியோ, குறிப்பாக அவர்களது மொழிநடை (மொழித்தேர்வு) பற்றியோ நுண்ணிதான ஆய்வுகள் செய்யப்படவில்லையென்றே கூறல் வேண்டும். பெரும்பாலான குழந்தை இலக்கியம் பற்றிய வரலாறுகள், தரவுகளைத் தருவனவாகவே அமைகின்றன. உணர்மையில் குழந்தைக் கவிதைகளிலே காணப்படும் படிமப்பயன்பாடு பற்றிய ஆய்வுகளை இக்கட்டுரை ஆசிரியர் வாசிக்கவில்லை.
சம்பந்தப்பட்ட கவிஞர்களின் சிறுவருக்கான பாடல்களில் சந்தம், மொழித்தேர்வு என்பன அவர்களுடைய பாடலின் கவர்ச்சிக்கு பிரதான தளமாக அமைகின்றமையைக் காணலாம். உதாரணமாக சோமசுந்தரப்புலவரின் சூழற் சித்திரிப்பு, தேசிக விநாயகம் பிள்ளையின் சொற்பயன்பாடு மற்றும் சந்த ஓட்டம்

Page 19
- 20- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
(உதாரணமாக அம்மா! என்ற வியப்புக் குறியை அவர் பயன்படுத்தும் முறைமை) ஆதியன பற்றி அதிகம் சிந்திக்கப்படுவதில்லை.
இவ்வகையில் நோக்கும்பொழுது குழந்தைப்பாடல்களை எழுதிய கவிஞர்கள் பற்றிய ஆய்விலே பாரதியாருக்குரிய இடம் நன்கு மதிப்பிடப்பெற்றுள்ளதா என்பதும் கேள்விக்குரிய ஒரு விடயமாகவேயுள்ளது. பாரதியின் கவித்துவ பன்முகப்பாட்டினை அவரது குழந்தைகளுக்கான கவிதைகள் வெகு அற்புதமாகக் காட்டுகின்றன.
பாரதி தான் வாழ்ந்த காலத்து சமூகநிலைகளை உள்வாங்கி தமது ஆக்கங்களை எழுதியுள்ளமையால், பலவேளைகளில் அவரது பாடல்களுள் இது சிறுவருக்கானது, இது சிறுவருக்கானதல்ல என்று வரையறுத்துக் கூறமுடியாதுள்ளது. இத்தகைய ஒர் இடர்பாட்டுக்கு நல்ல உதாரணம் ‘கொட்டு முரசே என்ற பாடலாகும். அப்பாடலின் முற்பகுதி சாதிசமய பிரச்சினைகளைக் கூறிவிட்டு பின்பகுதி அந்த விடயத்தை உருவகிப்பது போல பூனையின் பல்வேறு நிறக்குட்டிகள் பற்றி குறிப்பிடுவது மிக முக்கியமான ஒன்றாகும். பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ கூட மனங்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். குழந்தைநிலை கவித்துவக் கவர்ச்சிக்கான பாரதியின் ஆளுமைபற்றிய விளக்கங்கள் மிக அவசியமாகும்.
சிறுவருக்கான நவீன எழுத்துக்களில் மிக முக்கியமாகப் பேசப்பட வேண்டியவை சிறுவருக்கென எழுதப்படுவனவாகிய உரைநிலை எழுத்துக்களாகும். இவற்றினை மூன்று நிலைப்பட நோக்கலாம்.
1. கல்விப் பயில்வு வழியாகவரும் பாடப்புத்தக அமைப்பு. 2. சிறுவர்களுக்கான சஞ்சிகைகள். 3. சிறுவருக்கான புனைகதைசாரா எழுத்துக்கள்.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி கிறிஸ்தவமத அறிமுக வாயிலாகவே பாலர்களுக்கான பாடப்புத்தகம் எழுதப்படலாயின. கிறிஸ்தவர்களே இதைத் தொடக்கி வைத்தார்கள். இலங்கையிலே அமெரிக்க மிஷன் "பாலபோதம்” என்ற நூலினை வெளியிட்டதாக அறிகிறோம். அதனைப் பின்பற்றியே ஆறுமுக நாவலர் "பாலபாடம்" என்ற நூல்தொடரினை அமைத்துக் கொண்டார்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் 2
தமிழ் மொழிப் பாடம் மற்றும் பிறபாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் குழந்தைகளின் உளவளர்ச்சிக்கேற்ப எழுதப்பட வேண்டியது அவசியமாகின்றது. (இதுபற்றி பேசும்பொழுது ஒரு முக்கிய விடயத்தை குறிப்பிடுவது அவசியமாகிறது - அதாவது மொழிவழியாகவே மாணவர்கள் கணிதம் போன்ற பாடங்களை கிரகித்துக் கொள்ளுகின்றனர் என்ற உண்மை மிக முக்கியமானது. பலர், 'பிள்ளைக்கு வாசிப்பெழுதலிலும் பார்க்க கணிதமே முக்கியம்’ என்று கூறும் அறியாத் தன்மையை இன்றும் பல குடும்பங்களிலே காணலாம்)
இதன் காரணமாக பாடப்புத்தக எழுதுமுறை மிக முக்கியமான ஒன்றாகும். சொல்தேர்வு மாத்திரமல்லாமல் வாக்கிய அமைப்பும் மிக முக்கியமான ஒன்றாகும். அடிநிலை பாடப்புத்தகங்களில் சிக்கலான வாக்கிய அமைப்புக்களைப் பயன்படுத்தல் கூடாது. எல்லா நிலைகளிலும் "உள ஒட்ட”த்துக்கும் "எழுத்து" ஒட்டத்துக்கும் இயைபிருத்தல் அவசியம். அது பாலர்நிலையில் மிகச் செவ்விதாகப் போற்றப்படல் வேண்டும். தெரிந்ததிலிருந்து தெரியாததற்கு இட்டுச் செல்லும் பொழுதுதான் அறிவு வளர்கிறது. பாடப்புத்தக அமைப்பில் இவ்விடயம் பிரக்ஞைபூர்வமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிறுவருக்கான உரைநிலை எழுத்துக்களில் ஒரு மட்டத்தில் சஞ்சிகைகளும் நூல்களாக எழுதப்படுவனவும் முக்கியமாகின்றன. இன்னொரு மட்டத்தில் சிறுவருக்கான கதைகள், கதைகள் சாரா விடயநிலை எழுத்துக்கள் முக்கியமாகின்றன.
சிறுவர் சஞ்சிகைகள் பல் கிப் பெருகியுள்ளன. இச்சஞ்சிகைகளிலே கதைகளும் கதைசாராத விடயங்களும் எடுத்துக் கூறப்படுகின்றன. இந்நிலை, சிறுவர்களுக்கென மாத்திரம் வெளியிடப்பெறும் சஞ்சிகைகளில் மட்டுமல்லாது சில பொதுவான சஞ்சிகைகளிலும் குழந்தைகளுக்கென சிலபக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். வெகுசனரஞ்சகமுள்ள இச்சஞ்சிகைகளிலே இப்பணி பு குறைவாகவே காணப்படுகின்றது. சிறுவர் சஞ்சிகைகளுள் 1930 களின் பின்னர் வெளிவந்தனவற்றுள் "பாப்பா மலர்”, “அம்புலிமாமா”, “கோகுலம்", "சுட்டிவிகடன்" ஆகியன சனரஞ்சகமானவையாகும். இவற்றுள் அம்புலிமாமா பத்திரிகை உற்று நோக்கப்படவேண்டிய ஒன்றாகும். ஏறத்தாழ 18 இந்திய மொழிகளிலே வெளியாகும் இந்த சஞ்சிகையிலே

Page 20
-22- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
கதைகளின் எடுத்துரைப்பிலே ஒரு பாரம்பரியத் தன்மை காணப்படுவதை அவதானிக்கலாம். வர்ணச்சித்திரங்களிலும் இத்தன்மை நன்கு புலப்படுகின்றன.
சிறுவர்களுக்கான புனைகதை சாரா எழுத்துக்கள் வானொலி, தொலைக்காட்சி போன்ற விடயங்களைப் பற்றியனவாக பெரிதும் காணப்படுகின்றன. சிறுவர்களுக்கான நீண்ட நவீன கதைகள் இப்பொழுது வெளியிடப்பெறுகின்றன. வாணி டு மாமா என்பவருடைய கதைகள் ரஞ்சககவர்ச்சி உடையனவாக கூறப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக நோக்கும் பொழுது சிறுவருக்கான உரைநிலை எழுத்துக்கள் தமிழிலே வளர்ந்துள்ளன என்றே கூறவேண்டும். இவ்வளர்ச்சியின் உதாரணமாக அமைவது குழந்தைகள் கலைக்களஞ்சியமாகும். இது ஒரு மிக முக்கியமான நூல் தொகுதியாகும்.
ΧΙ
இறுதியாக ஒரு விடயத்தினை அழுத்திக்கூற வேண்டும். சிறுவருக்கான மொழி நடைப்பற்றியோ சிறுவர் நூல்களிலே காணப்பெறும் மொழிநடைப்பற்றியோ வேண்டிய ஆய்வுகள் இன்றும் மேற்கொள்ளப்படவில்லையென்றே கூறவேண்டும்.
மேலும் சிறுவர்களுக்கான எழுத்துக்கள் பற்றி பேசும்பொழுது ஏற்கனவே கூறியபடி வாக்கிய அமைப்புப்பற்றி மிகக் கவனமாக இருத்தல் வேண்டும். சிக்கல் நிறைந்த இலக்கண அமைப்புக்களை கையாள்வதில் மிகுந்த நிதானம் வேண்டும்.
ΧIΙ
இதுவரை, மிக மிகச் சுருக்கமாக, சிறுவருக்கான எழுத்துக்கள் பற்றி நோக்கினோம். ஆனால் தமிழிலே சிறுவர்களின் எழுத்துக்களை ஊக்குவித்து அவற்றை பிரசுரவட்டத்துக்கு கொண்டுவருவது பற்றிய சிந்தனை நம்மிடையே இன்னும் வளரவில்லை. நாம் சிறுவருக்கான எழுத்துக்கள் பற்றி சிந்திக்கின்ற அளவுக்கு சிறுவரின் எழுத்துக்கள் பற்றி கவனம் செலுத்துவதில்லை.
இத்துறையில் ஹிட்லர் காலத்து கெடுபிடிகள் பற்றி ஜேர்மன் மொழியிலே எழுதப்பெற்ற “ADiary ofAnne Frank’ என்பது மிகப் பிரசித்தமான நூலாகும். இது பல ஐரோப்பிய மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -23
தமிழ்நாடு, இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட கடல்கோள் அநுபவத்தை தளமாகக் கொண்ட குழந்தைகளின் மனப்பதிவுகள் மிக அற்புதமாக இருந்திருக்கும். நாமும் நமது குழந்தைகளுக்கு புத்திமதி வழங்குவதிலே காட்டுகின்ற ஆர்வமளவு அவர்களது புத்திக்கூர்மைக்கு இடம்கொடுப்பதில்லை என்ற கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

Page 21
தமிழில் குழந்தைக் கவிதைகள்
- கலாநிதி க.கைலாசபதி -
பாடவிதான அபிவிருத்தி நிலையத்தைச் சேர்ந்த ஆரம்பக் கல்விப் பிரிவு அதிகாரிகள் சிலர், சில மாதங்களுக்கு முன் முதலாந்தரத்திற் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான சேவைக்காலப் பயிற்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். அப்பயிற்சித் திட்டத்தை அமைத்த குழுவுக்கு ஆலோசனைகள் வழங்குமாறு அழைக்கப் பட்டிருந்தேன். ஒரு கூட்டத்திலே குழந்தைகளுக்குரிய பாடல்களைப் பற்றிய ஆய்வு நடந்தது. ஆரம்ப வகுப்புகளில் பலகாலம் படிப்பித்து அநுபவம் வாய்ந்த ஆசிரியர் சிலரது குழந்தைக் கவிதைகள் பரீசீலனை செய்யப்பட்டன. முதல் கூட்டத்திலே பெரும்பாலான கவிதைகள் பொருத்தமற்றனவாய்க் கணிக்கப்பட்டன. அதைக் கண்ட பொழுது தமிழிலே உள்ள குழந்தைக் கவிதைகள் பற்றிப் பொதுவாகச் சிந்திக்கலாயினேன்.
தமிழில் சிறுவர் இலக்கியம் என்று சிறப்பாகக்கூறக்கூடியது ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. அதிலும் பாலர்களுக்கேற்ற பாட்டுக்கள் படைப்போர் வெகு சிலர் என்றே கூறவேண்டும். குழந்தைகளுக்காகக் கவிதை எழுதுவதைத் தனது பிரதான "தொழிலாக”க் கொண்டவர். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா ஒருவரே; நூல்களும் சிலவே. இவற்றுடன் பொதுவான கவிதைத் தொகுதிகளில் குழந்தைகட்கென ஒதுக்கிய பகுதிகள் சில உண்டு. இவற்றை வைத்துக்கொண்டு பார்க்கும்பொழுது தேசிகவிநாயகம் பிள்ளை, சோமசுந்தரப்புலவர், அழ. வள்ளியப்பா, வேந்தனார், மு. நல்லதம்பி, ர. அய்யாசாமி, வாணிதாசன், நாக. முத்தையா, க. வீரகத்தி, இ. நாகராஜன், அம்பி, சத்தியசீலன், தமிழோவியன், மலேசியா முரசு நெடுமாறன் என்பவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியோராய் இருக்கின்றனர்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் ー25
இக்கட்டுரையை வரலாற்று நோக்கில் நான் எழுதவில்லை யாயினும், கால ஒழுங்கு பற்றிய செய்தியொன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். ஈராயிரம் வருட இலக்கிய வரலாற்றை நோக்குகையில் சான்றோர் செய்யுள்கள் செய்த காலத்திலிருந்து சது.சு. யோகியார் வரையில் குழந்தைகளைப் பற்றிய பாடல்கள் ஏராளமாக இருப்பது கண்கூடு. ஆனால் கண. முத்தையா கூறுவது போல, "குழந்தைகளுக்காகவென்றே எழுதப்பட்ட பாடல்களோ, கதைகளோ இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இல்லையென்றே கூறலாம். (குழந்தைக் கவிதைகள் நாக. முத்தையா, 1960 பதிப்புரை) பொதுவாகவே தமிழ்க் கவிதையைப் புதுநெறியில் இட்டுச் சென்ற மகாகவி பாரதியார்தானி இத்துறையிலும் முன்னோடியாக விளங்குகிறார். அவர் இயற்றிய "புதிய ஆத்திசூடி", "பாப்பாப்பாட்டு” முதலியன தமிழுக்குப் புதியனவே. எனினும் பாரதியின் போக்கும் நோக்கும் குழந்தைக் கவிகளை முழுமையாகத் தழுவவில்லை. விடுதலைப் போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கவிஞர், போர்க்குணமிக்க பாடல்களையே எழுதினார். பாரதி மரபில் வந்தவர்களே குழந்தைப் பாடல்களைப் பிரக்ஞை பூர்வமாகச் செழுமைப் படுத்தினர். பாலர்களுக்கேற்ற சிறுபாட்டுக் களைக் கொண்ட தொகுப்பு நூல் திருத்தமான முறையில் இலங்கையிலேயே முதன்முதல் (1935) வெளிவந்தது, அக்காலத்திலே வடபெரும்பாக வித்தியாதரிசியாயிருந்த க.ச.அருள்நந்தி அவர்களது கேள்விப்படி வட இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தாரால் வெளியிடப்பெற்ற பிள்ளைப்பாட்டு, குழந்தை இலக்கியத்துறையில் விதந்து கூறவேண்டிய ஒரு சாதனையாக அமைந்தது என்பதில் ஐயமில்லை. உளவியல் அறிஞராயும் இலக்கிய ரசிகராயும் இருந்த அருள்நந்தி அவர்கள், அந்நூலுக்கு எழுதிய முகவுரையில் முக்கியமான சில கருத்துக்களைக் கூறியிருந்தார்:
பாஷையையும் நற்போதனைகளையும் சிறுபராயத்திற் கற்பிக்கும் ஆசிரியர்கள் தாளம், இராகம், அபிநயம் முதலியவற்றில் பாலர்களுக்குப் பெரியவிருப்பம் உணி டென்றும், தங்கள் சீவியத் தோடு சம்பந்தப்படாத விஷயங்களை அவர் மனம் நாடாதென்றும் உணர்ந்திலரேல் அவ்வாசிரியரது முயற்சியாற் பெறப்படும் பயன், எதிர்நோக்குடைய இருவர் ஒருவழிச் செல்ல முயல்வதனாற் பெறப்படும் பயனை ஒக்குமென்க. பாலர்களின் இவ்வியற்கை விருப்புக் களையறிந்து அவைகளுக்கிணங்கக் கற்பிப்பரேல் பாஷை விருத்தியடைவதும் போதனைகள் நன்கு மனதிற்பதிவதும் மாத்திரமல்லாமல், இன்பச்சுவை நுகர்ச்சியும் உளவளர்ச்சியும் சிறப்பெய்தும்.

Page 22
-26- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
இத்தகைய முறைகளுக்கேற்ப செய்யுட்கள் போதியன தமிழ்ப் பாஷையில் இதுகாறும் இயற்றப்பட்டில. இப்பெருங் குறையை நீக்கும்படி யான் பலரோடு ஆலோசனை செய்து எடுத்த முயற்சியின் பேறே இச்சிறு நூலாகும்.
சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இவ்வுரை இன்னும் பலருக்குப் பயன்தரவல்ல செய்திகளைக் கொண்டுள்ளமை மனங்கொளத் தக்கதே. ஈழத்தில் இலக்கிய இரசனை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்துள்ள அருள்நந்தி அவர்களின் முன்னோடி முயற்சி தமிழ் கூறு நல்லுலகத்தின் பாராட்டுதலுக்கு உரியது என்பதை இதற்கு மேலும் எடுத்துக்கூற வேண்டியதில்லை என்று எண்ணுகிறேன். கம்பன் காவியத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், கம்பனை உளவியல் நோக்கிலிருந்து நோக்கிச் சுவைத்து வந்தார். பிறர்க்கும் அதை உணர்த்தி வந்தார். இத்தகைய தகைமைகளுடனேயே குழந்தைப் பாடல்களை ஊக்குவித்து நல்வழி காட்டினார்.
மலரும் மனம் (எம்.ஸி.எம். ஸுபைர்) என்னும் குழந்தைப் பாடல் நூலுக்குத் தமிழகக்கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதியுள்ள முன்னுரையிலே, இவ்வரலாற்றுச் செய்தியை மறவாமல் குறிப்பிட்டுள்ளமை பாராட்டுக்குரியதொன்றாகும்.
தமிழ் நாட்டில்கூட இதுவரை செய்திராத ஒரு சாதனையை 30 ஆண்டுகளுக்கு முன்பே (1935 ஆம் ஆண்டிலே) யாழ்ப்பாணத்தில் செய்து காட்டினர். பல கவிஞர்கள் இயற்றிய குழந்தைப் பாடல்களைத் தொகுத்துக் கல்வி அதிகாரியாய்த் திகழ்ந்த திரு.கே. எஸ்.அருள்நந்தி எம். எஸ்ஸி, அவர்கள் வட இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கச் சார்பில் பிள்ளைப்பாட்டு என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டதைத்தான் குறிப்பிடுகிறேன். எளிய நடையில், இனிய பல சந்தங்களில், பிள்ளைகள் உள்ளம் கவரும் பாடல்களை அத்தொகுப்பில் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தவர்களுள் நானும் ஒருவன். . அவர் காலத்திலும் அவருக்குப் பின்னரும் ஈழத்தில் குழந்தைப் பாடல்கள் இயற்றிக் குழந்தைகளுக்கு இன்பம் ஊட்டிய கவிஞர் பலர்.
பிள்ளைப்பாட்டு என்ற தொகுப்பு நூல் மூலமாக க.சோமசுந்தரப் புலவர், மா. பீதாம்பரம், ச. பஞ்சாட்சர ஐயர், ஜே. எஸ். ஆழ்வாப்பிள்ளை முதலியோருடைய கவித்துவ சக்தி தமிழுலகில் பிரசித்தி பெற்றது என்பதும் இவ்விடத்தில் மனங்கொளத்தக்கதே.
இவ்வரலாற்றுச் செய்தியைப் பூவண்ணன் அவர்களும்
குறிப்பிட்டிருக்கிறார்:

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் 27
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கை எண்ணற்ற குழந்தைக் கவிஞர்களை ஈன்றெடுத்தது. அந்தக் கவிஞர்களின் குழந்தைப் பாடல்களை அப்போதே ஒன்று திரட்டி கே.எஸ்.அருள்நந்தி என்பவர் பிள்ளைப்பாட்டு என்ற பெயரில் வெளியிட்டார். குழந்தை இலக்கியம் கொடிகட்டிப் பறக்கும் நம் நாட்டில் 1970இல் தான் அப்படிப்பட்ட குழந்தைக் கவிதைத்தொகுதி வெளிவந்துள்ளது.
சோமசுந்தரப் புலவர், ஸுபைர், கோசுதா, சரணாகையூம் முதலிய இலங்கைக் கவிஞரைப் பற்றிக் கூறுமிடத்தில் பூவண்ணன் மேற்கண்டவாறு எழுதியிருக்கிறார்.
ஏறத்தாழ நான்கு தசாப்தங்களுக்கு மேலாக, குழந்தைப் பாடல்கள் பிரக்ஞை பூர்வமாக எழுதப்பட்டு வந்திருப்பினும், “குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் தமிழில் நல்ல பாடல்களை எழுதுபவர்கள் மிகமிகக் குறைவாகவே காணப்படுகின்றனர்.” (குழந்தைக்கவிதைகள், நாக.முத்தையா, பதிப்புரை) பொதுவாகப் பார்க்குமிடத்து, தமிழில் உள்ள குழந்தைப் பாடல்களிற் பெரும்பாலானவை எளிமைப்படுத்தப்பட்ட முதியோர் பாடல்கள் தாம். அறவியல் நோக்கு, அதீத போதனைப்பண்பு இவையே சிறுவர் இலக்கியத்தின் பிரதான இயல்புகளாகக் காணப்படுகின்றன. அதாவது, முதியோர் இலக்கியத்திற் காணப்படும் பண்புகள் பல இங்கும் பிரதிபலிக்கின்றன எனலாம். ஆங்காங்கே, குதூகலம் நிரம்பிய, வியப்புணர்ச்சியும் ஆர்வமும் நிறைந்த, மகிழ்ச்சியூட்டும் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. எனினும் குழந்தை உள்ளத்திற்குத் திருப்தியளிக்கும் பாடல்கள் குறைந்த வீதத்தினவே.
ஈழத்து நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் "கத்திரித்தோட்டத்து வெருளி”, “ஆடிப்பிறப்பு” என்பவை இவ்வகையில் பிரசித்தி பெற்றவை. "செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்கு," தனது மலரும் மாலையும் என்ற கவிதைத்தொகுதியை உரிமையாக்கியுள்ள கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் குழந்தைப் பாடல்களில், "அப்பம் திருடின எலி,” “பொம்மைக் கலியாணம்”, “எலிக்கலியாணம்", “பசுவும் கன்றும்" முதலியன குதூகலமும் வேடிக்கையும் குழந்தை உள்ளக் கற்பனையும் கொண்டவை. "கவிமணி அவர்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ஏற்பட்ட தேவையின் நிர்ப்பந்தத்தினாலேயே இத்துறையில் கவனம் செலுத்தியிருக் கிறார்கள்." (நாக.முத்தையா, மு.கு.நூல்) பொதுவாகவே குழந்தைப் பாடல்களும் ஏனைய குழந்தை இலக்கிய வடிவங்களும் பள்ளி ஆசிரியர்களால் பெருமளவிற்கு வளர்க்கப்பட்டு வந்துள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.

Page 23
- 28- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
இவ்விடத்திலே மலேசியா முரசு நெடுமாறன் வெளியிட்டுள்ள இளந்தளிர் (1969) என்னும் சிறுவர் பாடல் தொகுதி குறிப்பிடத் தக்கதாயுள்ளது. திரு.ர.ந.வீரப்பன் அந்நூலின் முன்னுரையில் கூறியுள்ளதுபோல, மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் பயன்படுத்து வதற்காக எழுதப்பட்ட அப்பாடல்கள் "பிள்ளைகளின் வயதுக்கும் அறிவுக்கும் ஏற்ப தொகுக்கப்பட்டிருக்கின்றன. பாடல்களை அபிநயத்தோடு இசைப்பயிற்சியாகக் கற்பிப்பதற்கும், பாடிப்பாடி இயலையும் இசையையும் பயிலும் வகையில் இவை மிகவும் எளிமையாக அமைந்துள்ளன" கவிஞர் நெடுமாறன் பள்ளித் தமிழாசிரியர் என்பதும் நினைந்து கொள்ளக் கூடியதே. "ஆட்டுக்குட்டி”, “பட்டம்", "பசு”, “அணில்", "ரப்பர் மரமே", "சிட்டுக்குருவி", "வானவில்", "கொக்கு" முதலிய பாடல்கள் சந்தமும் எளிமையும் பொருட்பொருத்தமும் உடையனவாய் உள்ளன.
உண்மையில் நவீன கல்வி வளர்ச்சியின் ஒரு பகுதியாகவே குழந்தை இலக்கியமும் உருப்பெற்று வந்துள்ளது. இது எதிர்பார்க்கக் கூடியதே. ஏனெனில் பழங்காலத்திலும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி முதலிய நீதிநூல்கள் குழந்தைகளின் பாடநூல்களாகவே இடம் பெற்று நிலைபேறடைந்தன. கிரேக்கம், இலத்தின் முதலிய மேற்கு நாட்டு மொழிகளிலும் இதே வளர்ச்சிப் போக்கைக் காணலாம். இந்நூற்றாண்டில் தமிழில் புகழ் பெற்ற குழந்தைக் கவிஞரிற் பெரும்பாலானோர் பள்ளிக்கூட ஆசிரியராய் இருந்தவர்களே. எடுத்துக்காட்டாக, க. வீரகத்தியின் தங்கக்கடையல் என்னும் நூலைக் குறிப்பிடலாம். தமிழ்ப்பண்டிதரும் அருங்கலை வினோதருமான வீரகத்தி, தனது குழந்தைகளுக்குப் பாட்டெழுதும் முயற்சியாக ஆரம்பித்துப் பல சுவைமிக்க பாடல்களை இயற்றியுள்ளார். குழந்தைகளின் மனோபாவத்தையும் அக்கறைகளையும் ஆர்வத்தையும் நன்கறிந்து எழுதப்பட்ட பாடல்கள் அவை. "வண்ணாத்திப்பூச்சி", "பந்து", "வண்டு", "அம்புலி”, “பலூன்", "பாவை", "பச்சைக்கிளி", "மாம்பழம்" என்பன சில பாடல்களின் தலைப்புகள். "பலூன்" பாடலில் சில பகுதிகள் இங்கு நோக்கத்தக்கவை:
வண்ண வண்ணப் பலூன்கள் வடிவு கொண்ட பலூன்கள் கண்ணை அள்ளும் பலூன்கள் கடைகள் எங்கும் பாரீர்!

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் a 29
பலூன்காரன் வருவான் பாட்டி வாங்கித் தருவாள்
பள்ளித் தோழரோடு நான் பறக்க விட்டுப் பாடுவேன் வண்ண.
வாயில் வைத்து ஊதி வான வெளியில் விட்டால் பாயும் அங்கு மிங்கும் பந்து போலே அடிப்பேன் வணிண.
அளவு மிஞ்சி ஊதினேன் அது வெடித்துப் போச்சுதே அழகில் மிக்க ஆசை அடடா அதுவே தீமை வண்ண.
இவற்றைப் போலவே அழ. வள்ளியப்பாவின் “கோயில்யானை", “லட்டும் தட்டும்”, “என்ன நடக்குமோ?” என்பன குறிப்பிடத்தக்கன வாயுள்ளன. இவற்றிலெல்லாம் மென்மையான நகைச்சுவை இழையோடுகிறது. ஈழத்துக் கவிஞர் அம்பியின் "தவழும் தம்பி", “காகமும் நரியும்", "அன்புள்ள அண்ணன்”, “கொக்கரக்கோ”, “நரியின் தந்திரம்" முதலியன (அம்பிப்பாடல், பக். 11, 33, 36, 37,39) குழந்தையுள்ளத்தை அறிந்த நிலையில் எழுதப்பட்டனவாயுள்ளன. தமிழோவியன் எழுதியுள்ள குழந்தைப் பாடல்களும் (பாட்டுப்பூ 1967) விதந்துரைக்க வேண்டியன. முன்னுரையில் ஆசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார்:
குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் புத்தகத்தின் பாட்டுக்களை பண்ணோடு பாடும்போது பாட்டுக்களை எழுதிய நான் அடையும் மகிழ்ச்சி அளவிடமுடியாது அல்லவா?. உங்கள் நினைவுச் சக்திக்கு ஏற்றவாறு சில பாட்டுக்கள் தான் மனப்பாடம் ஆகலாம். அதுவே என்க்குப் போதும். உங்கட்கு இந்தப் பாடல்கள் படிக்கச் சுவையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்து விரும்பிப் படிப்பீர் களானால், உங்கள் அன்புக்கு நான் பாத்திரமாகின்றேன்.
குழந்தைகளின் உளவியல் நிலையை மனங்கொண்டு கவிஞர் எழுத முயன்றிருத்தல் அவர் வார்த்தைகளிலிருந்து ஒரளவு புலப்படுகிற தல்லவா? “பொம்மை", "பட்டாசு", "பாட்டுப்பூ", "மாட்டு வண்டி" முதலியன உள்ளடக்கத்திலும் உருவகத்திலும் குழந்தைகளுக்கு ஏற்றனவாய் அமைந்துள்ளன. மேலே காட்டிய பாடல்கள் எடுத்துக் காட்டுக்களே அன்றி முழுமையான பட்டியலில் அடங்குவன அல்ல.

Page 24
30- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
இத்தகைய விதிவிலக்குகளைத் தவிர்த்தால் (இவற்றிலும் சிற்சில குறைபாடுகள் இல்லாமலில்லை) பெரும்பான்மையான பாடல்கள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் அச்சில் வார்க்கப்பட்டவையாகவே உள்ளன. நீதிபோதனைகளை ஒரளவு எளிமைப்படுத்திய வடிவத்தில் தருவனவாய் இருக்கின்றன:
அதிகா லையிலே எழுவோமே அன்புடன் கடவுளைத் தொழுவோமே அவதா னத்துடன் படிப்போமே அவசிய கருமம் முடிப்போமே அருமைப் பெற்றோர்களைப் போற்றிடுவோம் ஆசிரியரையும் ஏத்திடுவோம்.
(பிள்ளைப்பாட்டு, பக். 26-7)
காலை எழுவோம் எழுவோமே காலைக் கடனை முடிப்போமே நூலை எடுத்துப் படிப்போமே தலையை வாரி முடிப்போமே.
கல்வி கற்க வேண்டும் - கைத் தொழிலும் கற்க வேண்டும் கல்விச் செல்வம் போலே - கைத் தொழிலும் செல்வ மாமே.
(இனிக்கும் பாட்டு, வாணிதாசன், (பக். 31,48)
அறவியல் அக்கறையும் அதீத போதனைப் பணி பும் இவ்வடிகளில் புலனாகின்றன அல்லவா?
இ. நாகராஜனின் சிறுவர் பாடல் நூலுக்கு அமைந்த முன்னுரை, தமிழில் சிறுவர் பாடல் பற்றிப் பெருவழக்காயுள்ள கருத்துக்கு வகைமாதிரியான எடுத்துக் காட்டாயுள்ளது:
எமது பண்பாட்டினின்றும் விடுபட்டுச் சென்று கொண்டிருக்கும் இன்றைய சமுதாயச் சிறுவர்களுக்கு வாழைப்பழத்தை உரித்து ஊட்டுவதுபோல இப்பாடல்கள் தமிழர் பண்பாட்டின் தனிச் சிறப்பை எடுத்தியம்புகின்றன. சிறுவர் நெஞ்சைப் பண்படுத்தி அன்பெனும் பயிரை வளர்க்கும் பாடல்கள் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஊட்டவல்ல பாடல்கள், அறிவைப் புகட்டவல்ல பாடல்கள் என்று அறுபத்தொரு அரிய பாடல்களைக் கொண்ட
இந்நூல்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் r3
இவ்வாறு முதியோருக்குக் கவிகள் பாடும் வி. கந்தவனம் முன்னுரையில் முழங்குகிறார்: இங்கே குழந்தைக் கவிஞரை பண்பாட்டுக் காவலராக விவரித்திருப்பது கவனித்தற்குரியது. இப்படித்தான் பிள்ளைப்பாட்டு இருத்தல் வேண்டும்; இதுதான் குழந்தை இலக்கியத்தின் முதலும் முடிவுமான பணி என்ற தோரணையில் எழுதிக் கொண்டு போகிறார் கந்தவனம். சிறுவர் பாடல் தொகுதியில் முதற்பத்துப் பாடல்களும் "ஆன்ம வளர்ச்சிக் குரியவை" என்று பாடல்களை வகைப்படுத்தும் முன்னுரை ஆசிரியர், இப்பொருள் குழந்தைகளின் மனப்பக்குவத்துக்கு எத்துணை பொருத்தமுடையது என்பதைக் கிஞ்சித்தும் சிந்திப்பதாய்த் தெரியவில்லை.
முதியவர்களது கண்ணோட்டத்திலே குழந்தைகளுக்குப் போதிக்கும் பொழுது பொருந்தாமை காரணமாக நேர்மையின்மை தோன்றக் காணலாம். அதாவது குழந்தைகளுக்குரிய அனுபவத்தில் பொய்மையும் போலித்தன்மையும் புகுந்துவிடுகின்றன. காக்கையைப் பற்றிப் பாடும் நாகராஜன், அதன் செயல்கள் குழந்தைகளது பழக்கங்கட்கு முன்னுதாரணம் என்ற கருத்தில் பாடிச் செல்கின்றார்.
உற்றவரை அழைத் திடாமல்
உணவை யதுண் ணாது பெற்றவரைப் பேணியது பிரியமாக வாழும் தோட்டி வேலை செய்தே யெங்கும்
தூய்மை யாக்கும் காக்கை நாட்டில் வாழும் போலி யில்லா
நல்ல தொண்டன் தம்பி.
மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்பொழுது குழந்தைகளுக்குக் காகத்தைக் காட்டி அறிவூட்டும் சிறுபாடலாகத் தோன்றக் கூடுமாயினும், சிறிது கூர்ந்து கவனித்தால், "தொண்டன், போலி” என்ற முதியோருலகச் சொற்களைக் குழந்தையின் பிஞ்சு மனத்தில் திணிக்கும் முயற்சியைக் கண்டு கொள்ளலாம். இதனையே பொருந்தாமை என்கிறோம். “காகமுறவு கலந்துண்ணக் கண்டீர்” என்று தானே முந்திய புலவன் ஒருவனும் பாடினான்.
இதே தொகுதியில் உள்ள கடல் என்ற பாடலையும் ஜேம்ஸ் polar) (James Reeves) 6T65i Litij 6TCupg5u 5L6) (The Sea) 6T67 g)/Lh குழந்தைப் பாட்டையும் உதாரணத்திற்கு ஒப்பிட்டுப் பார்ப்போம்; ஒரு சோறு பதம் தானே.

Page 25
- 32- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
அலைகள் பலவும் சேர்ந்தோடி
அசையும் செயலில் அழகைப்பார்
நிலையே இல்லா நெஞ்சம் போல்
நித்தம் இரையும் குரலைக்கேள்.
என்று தொடங்கி, அலைகள் தோன்றி அழிந்து மறுபடி பிறப்பது, படகுகள் செல்வது, காற்று உடம்புக்கு இதம் தருவது என்ற நைந்துபோன செய்திகளை அடுக்கிவிட்டு, நீலக்கடலின் காட்சிகளால் நெஞ்சம் குளிரும் நிலையைக் குழந்தைகள் உணர்வர் என்று கூறி முடிக்கிறார் கவிஞர். கற்பனைக்கோ, பாவனைக்கோ, வேடிக்கைக்கோ இங்கு இடமில்லை. நிலையில் லா நெஞ்சத்துக்கும் கடல் அலைகளுக்கும் ஒப்புமை கற்பிக்கப்படுகிறது. நிலையற்ற தன்மை பற்றிய உணர்ச்சி பெரும்பாலும் உள்ளதுபவத்தால் பெறப்படுவது. அதற்கு நிரம்பிய முதிர்ச்சி வேண்டும். இங்கே இத்தகைய உவமையை ஆசிரியர் பயன்படுத்தியிருப்பது பொருத்தமற்றது என்பதில் ஐயமில்லை. இதனையே எளிமைப்படுத்தப்பட்ட முதியோர் கவிதை என மேலே குறிப்பிட்டோம். மனத்தைப் பற்றிய ஆய்வு குழந்தைகட்கு எப்படித் தெரியப்போகிறது?
ஜேம்ஸ் றிவ்ஸ் தனது கவிதையில், கடலைப் பெரிய ஒரு நாயாக உருவகப்படுத்துகிறார். முற்றுருவகமாகப் பாடல் முழுதும் அது வியாபித்து நிற்கிறது.
The sea is a hungry dog, Giant and grey. He rolls on the beach all day, With his clashing teeth and shaggy jaws.
Hour upon hour he gnaws, The rumbling, tumbling stones And “Bones, bones, bones, bones' The giant sea-dog moans, Licking his greasy paws.........
பாடலின் தொடக்கமே குழந்தைகளின் ஆர்வத்தையும் களிப்பையும் தூண்டி வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. கவிதையின் இறுதிப்பகுதி அற்புதமாயமைந்துள்ளது.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -33
But on quiet days in May or June, When even the grasses on, the dune Play no more their reedy tune, With his head between his paws He lies on the sandy shores, So quiet, so quiet, he scarcely snores.
குழந்தைக் கற்பனை வளம் நிறைந்தது; அதிசயமானது; புதுமையானது. அந்த அதிசயமான, புதுமையான, வளம் நிரம்பிய கற்பனை உள்ளத்தை விளங்கிக் கொண்டு எழுதப்பட்ட பாடல் இது எனலாம். கண்ணாரக் காணும் புலன்கள் உணர்ந்து அறியும் உலகத்தை வினோதமான கற்பனையுடன் சேர்த்து இங்கு காண்கின்றோம்.
தமிழ்ச் சிறுவர் பாடல்களில் இன்னுமோர் அம்சம் பெரியோர்கள் பற்றிய "சரிதப்" பாடல்கள் அளவுக்கு மீறி இடம் பெறுவதாகும். உதாரணமாக அழ. வள்ளியப்பா, நேரு, காந்தி, ஒளவை முதலானோர் பற்றியும், நாக. முத்தையா, மறைமலையடிகள், திரு. வி. க., பாரதியார் பற்றியும், சோமசுந்தரப்புலவர், நாவலர் பற்றியும் வெற்றிவேல் விநாயகமூர்த்தி (பாலர் பாமாலை, 1964) நாவலர், விபுலாநந்தர், றொபட்புரூஸ், பாரதியார், காந்திஜி முதலானோர் பற்றியும் பாடியிருப்பனவற்றைக் காட்டலாம். இப்பாடல்களிலும் படிப்பினைகளை வற்புறுத்தும் போதனைப் பண்பே தலைதுாக்கி நிற்கக் காணலாம்.
ஆனால் குழந்தைகளுடைய இலக்கியம் என்று குறிப்பிடும் போது, அது அவர்களுக்குரியதாயும் அவர்களுடையதாயும் இருக்க வேண்டும். இவ்விடத்திலே எல். ஆர்.மக்கொல்வின் என்பார் கூற்று ஒன்றை எடுத்தாள விரும்புகிறேன்.
குழந்தைகளின் நலனுக்காக உற்சாகத்துடன் பாடுபடும் நாமெல்லோரும், எதிர்காலத்தைப் பற்றிக் களி மிகுதியான விருப்பார்வம் உடையவராயுள்ளோம்; இறுதி இலட்சியங்களில் நாட்டமுள்ளவராயிருக்கிறோம். ஆனால் அதிர்ஷ்டவசமாகக் குழந்தைகளுக்கு அத்தகைய நாட்டம் இல்லை. நல்ல காலமாகவும் பொருத்தமாகவும் அவர்களுக்கு நிகழ்காலத்திலேயே விருப்பார்வம் அதிகம். எனவே இலக்கியத்தின் மூலம் சிறுவர், சிறுமியர் உடனடியாக மன மகிழ்ச்சியையும் பயனையும் உள்ளக் கிளர்ச்சியையும் செயல்வோட்டத்தையும் பெறக்கூடிய வாய்ப்பை நாம் செய்ய முடியுமானால், எதிர் காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்ல. அது தானே நன்றாயமையும்.
(Libraries for Children, p. 15)

Page 26
-34- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
குழந்தைப் பாடல்கள் குறித்துக் கொள்கை அடிப்படையில் எழுதும் போது பலரும் குறைபாடற்ற முறையிலேயே எழுதுவர். குழந்தையின் மனப் பாங்கு, உளவியல், கற்பனை, எளிமை எல்லாவற்றையும் கவிஞர் மனங்கொள்ள வேணி டியதன் அத்தியாவசியத்தைப் பிசகாத முறையில் எடுத்துரைப்பர். உதாரணமாக, சோமசுந்தரப்புலவருடைய குழந்தைப் பாடல்கள் சிலவற்றைக் கோவைசெய்து (விளக்கக் குறிப்புக்கள், அரும்பத உரை முதலியவற்றுடன்) வெளியிட்ட சோ. இளமுருகனார் (சிறுவர் செந்தமிழ், 1955) தனது பதிப்புரையில் குழந்தைப் பாடல்களின் "இலக்கணம்” இத்தகையது என விவரித்துள்ளார். எனினும் நடைமுறையிலோ இவர்களெல்லாம் சொல்லிய கொள்கைக்கு முரணாகவே பாடல்கள் தயாரிப்பர். “குழந்தைக்கவிஞர்" என்று பாராட்டுப்பெற்ற அழ. வள்ளியப்பாகூட, “பாடிப்பார்” என்ற பாட்டில், கடினமான இலக்கண முறைகளை அநுசரித்து எழுதியிருப்பது ஆச்சரியமாயிருக்கிறது. தா, ஆ, லா, பா ஆகிய எழுத்துக்களை மடக்கு அணிக்கு இயையச் சிக்கலான முறையில் கையாண்டு பாடியுள்ளார். இப்பாடல் (மலரும் உள்ளம், 1961, பக்.219) குழந்தைகட்கு உரியது என்பதற்கு எத்தகைய அடையாளமும் இல்லை.
குழந்தைப் பாடல்களைப் பற்றி “இலட்சியமான" முறையில் பதிப்புரை எழுதிய இளமுருகனார், சோமசுந்தரப் புலவரின் "ஆடிப்பிறப்பு” என்னும் அருமையான பாடலைச் சிறுவர் செந்தமிழ் தொகுதியில் பதிப்பிக்கும் பொழுது, சிற்சில சொற்களை இலக்கண விதிப்படி திருத்தியமைத்திருப்பது சுவாரசியமாயுள்ளது. "இறுதி இலட்சியத்தின்” இறுக்கமான பிடியை இது காட்டும். 1935 இல் வெளிவந்த பிள்ளைப் பாட்டு தொகுப்பில்,
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே
என்றிருக்க, இளமுருகனார் பின்னர் வெளியிட்ட தொகை நூலிலே,
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே
என்னும் அடி புணர்ச்சி விதிகளுக்கேற்ப "ஆனந்தந்தோழர்களே” எனத் திருத்தஞ் செய்யப்பட்டுள்ளது. முதற்பதிப்பிலுள்ளதே குழந்தைகட்கு இயல்பாயமையும் உச்சரிப்பு ஆகும்.
நாட்டார் பாடல்களிலும் குழந்தைகளுக்கென்று வேடிக்கைப் பாட்டுக்கள், விளையாட்டுப் பாடல்கள், விடுகதைப் பாடல்கள் முதலியன காணப்படுகின்றன. கண்ணாமூச்சி, சடுகுடு, ஆடும் -

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -35
ஒநாயும் முதலிய பல பாடல்கள் சிறுவர் விளையாட்டுக்களின் போது பாடல்கள் இடம் பெற்று வந்திருக்கின்றன. குழந்தைகளின் சொல்வளத்தைப் பெருக்கவும் உச்சரிப்பைச் செம்மைப்படுத்தவும் பாடல்கள் உண்டு. நா. வானமாமலை சொல்வது போல, “இவற்றில் பொருளைவிட சந்தப்பயிற்சியும் சொற்பயிற்சியுமே முக்கியமாகக் காணப்படுகின்றது" (தமிழர் நாட்டுப் பாடல்கள், 1964, பக். 133). இலக்கண சுத்தமான செந்தமிழில் சிறுவர் பாடல்களை அமைக்க விரும்புபவர்கள் இவற்றைப் புறக்கணிப்பதில் வியப்பு எதுவும் இல்லை. ஆயினும், "கதை கதையாம் காரணமாம்", "ஆண்டாரே ஆண் டாரே எங்கே போனாய்?", "சுண் டெவிராசனுக்குக் கலியாணமாம்” என்று தொடங்கும் பாடல்கள் கிராமச் சிறுவரிடையே பிரபலமானவை. இவற்றில் பல, உணர்வோடு குழந்தைப் பாடல்கள் இயற்றிய தற்காலக் கவிஞருக்கும் முனி மாதிரிகளாய் அமைந்திருக்கின்றன. உதாரணமாக, தேசிகவிநாயகம் பிள்ளை பாடியுள்ள “பொம்மைக் கலியாணம்", "எலிக் கலியாணம்" என்பன (மலரும் மாலையும், பக். 66, 67 நாட்டுப் பாடல்களின் எதிரொலிகளே.
க. வீரகத்தி இயற்றியுள்ள "சாய்ந்தாடு பாப்பா" என்னும் பாடல், மரபு வழிவரும் "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” என்ற நாட்டுப் பாடலின் வழி வந்தது என்பதில் தடையில்லை. தமிழோவியனின் "மழையே! வா, வா, வா"என்னும் பாடலும் இத்தகையதே. தற்காலத் தமிழ்க் கவிதைக்கு நாட்டார் பாடல்கள் வலிவும் வனப்பும் ஊட்டுவதைப் போலவே குழந்தைப் பாடல்களுக்கும் ஜீவசத்து அளித்து வருகின்றன. அவற்றின் ஒசை நயமும் இனிமையும் காலத்தால் மெருகூட்டப் பட்டவையல்லவா?
தமிழில் குழந்தைப் பாடல்கள் குறித்து எழுதியிருப்போரிற் பெரும்பாலானோர் "இலக்கிய" நயம் வாய்ந்த "செந்தமிழ்”ப் பாக்களை மனங்கொண்டிருந்தனர் என்பது அவர் கட்டுரைகளைப் படிப்போருக்குப் புலனாகும். குழந்தைப் பாடல்களுக்கும் நாட்டார் பாடல்களுக்கும் இருக்கக் கூடிய இருக்க வேண்டிய தொடர்பு குறித்து அவர்கள் சிந்தித்திருப்பதாகவும் தெரியவில்லை. எடுத்துக் காட்டாக "குழந்தை இலக்கியம்” என்ற கட்டுரையில் கனக - செந்திநாதன், "இலக்கியப் பாடல்கள், அபிநயப்பாடல்கள், கிராமியப் பாடல்கள்” என்று பொதுப்படையாகக் கூறியுள்ளாரெனினும், அக்கட்டுரையிலே நாட்டுப்பாடல்களின் முக்கியத்துவத்தைச் சிறிதேனும் விவரிக்கவில்லை. பத்தொடு பதினொன்றாகவே "கிராமியப்பாடல்" குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தனிநபர்

Page 27
-36- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
ஒருவருடைய குறைபாடாகவும் அறியாமையாகவும் நாம் கருத வேண்டியதில்லை. ஏனெனில் இன்றும் தமிழிலக்கிய இரசிகர்களிற் பலர் நாட்டுப் பாடல்களை உதாசீனம் செய்வது வெறுமனே ஒர் இலக்கியப் பிரச்சினை மட்டுமன்று. அது ஒரு சமூகவியற் பிரச்சினையுமாகும்.
பொதுவாக எல்லாச் சமுதாயங்களிலும் வழக்கிலுள்ள நாட்டுப் பாடல்களிலே கணிசமான பகுதி குழந்தைகள் சம்பந்தமானவையாகும். இவற்றைப் பற்றுக் கோடாகக் கொண்டு, புதிய புதிய ஆக்கங்களைச் செய்வதற்கு ஏற்ற மனப் பக்குவம் வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் சமூகவியல் அறிவுடையராய் இருத்தல் அவசியம். திரு. அழ. வள்ளியப்பா நாட்டுப் பாடல்களின் இன்றியமையாமையை வலியுறுத்தி வந்திருக்கிறார்:
புதிய குழந்தை இலக்கியத்தை ஆர்வத்துடன் வளர்க்கும் நாம், பரம்பரை பரம்பரையாக நம்மிடையே வாய்மொழியாக வளர்ந்து வந்த பழைய குழந்தை இலக்கியத்தை மறந்துவிடக் கூடாது. விளையாடும் போதும் சாப்பிடும்போதும் பிராணிகளைக் காணும் போதும் இயற்கையை வர்ணிக்கும்போதும் குழந்தைகள் பாடிவந்த நாடோடிப் பாடல்கள் எத்தனை எத்தனையோ. அவற்றையும் தொகுத்து அழகிய வர்ணப் படங்களுடன் வெளியிட வேண்டியதும் முக்கியமானதாகும்.
(சரஸ்வதி, ஜனவரி, 1959)
வளர்ந்தோர் கவிதைக்கும் சிறுவர் பாடலுக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ளாமையும் விளங்கிக் கொள்ள முயலாமையுமே தமிழில் குழந்தை இலக்கியம் படைக்க முற்படுவர் பலர் தோல்வி காண்பதற்குரிய அடிப்படை ஏதுக்களாம். ஜேம்ஸ் ரீவ்ஸ் இரத்தினச் சுருக்கமாக இதனை விளக்கியிருக்கிறார்.
முதியோர் கவிதைக்கும் சிறுவர் பாடல்களுக்கும் இலகுவில் வரையறை செய்து காட்டக்கூடிய பிரதான வேறுபாடு ஒன்றுண்டு. அது என்னவெனில், முன்னையது முதிர்ந்த மனங்களின் அக உலகினைத் துருவி ஆய்ந்தறிகின்றது. பின்னது புலன்களுக்குப் புலனாகும் புறவுலகை, வெளியுலகினை நாடி அறிகிறது.
(How to Write Poems for Children, 1971, p.5)
இத்தொடர்பிலேயே கதைப் பாடல்கள் சிறுவருக்குப் பெரிதும் உகந்தனவாய் அமைகின்றன. கருத்துக்களிலும் பார்க்க நிகழ்ச்சிகளும் காட்சி வருணனைகளுமே கதைப்பாடல்களில் இயல்பாய் இடம் பெறுவன. பிள்ளைப்பாட்டு, அம்பிப்பாடல், குழந்தைக்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் 37.
கவிதைகள் ஆகிய நூல்களில் சிறந்த கதைப் பாடல்கள் சிலவற்றைக் காணலாம். கதைப் பாடல்களைப் பற்றி எழுதும்போது ர. அய்யாசாமி அவர்களைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சென்னையில் வானொலி அண்ணாவாகப் பல வருடங்கள் பணிபுரிந்த அவர் நாட்டுப் பாடல்களைச் சேகரிப்பதிலும் குழந்தைகளுக்குக் கதைப் பாடல்கள் எழுதுவதிலும் தனித்துவமான பங்களிப்புச் செய்துள்ளார். குழந்தைகளுக்கு நாடோடிப் பாடல்கள் என்ற நூலையும் வெளியிட்டிருக்கிறார். பாலராமாயணம் (1967), சிறுவர் சிலம்பு (1974), மோகன காந்தி என்பன தமிழில் குறிப்பிடத்தக்க சாதனைகள். இசையுணர்வும் இலக்கிய நயமும் வாய்க்கப்பெற்ற அய்யா சாமியால் தமிழில் குழந்தை இலக்கியம் பல வழிகளில் வளப்பம் அடைந்தது என்பது கூறப்பட வேண்டிய உண்மையாகும். கதைப் பாடல்கள் குறித்து பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை பயனுள்ள கருத்தைக் கூறியிருக்கிறார்:
செய்யுட் பாடங்களின் மீது குழந்தைகளுக்கு அவாவுண்டாகும் படி செய்தல் வேண்டும். இது அழகான கதைப் பாட்டுக்களினாலேதான் இயலும். சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய பாடல்கள் மிகப்பல வேண்டும். சரித்திரம் பற்றிய "நாவல்களையும்", "பாடல்களையும்" தொடர்புபடுத்திக் குழந்தைகளைக் கற்கும்படி செய்தல் வேண்டும். இங்ங்னம் செய்தால் சரித்திரப் பாடத்தைக் குழந்தைகள் மிகவும் விரும்பிக் கற்பார்கள். இப்பாடல்களேயன்றி கடல், மலை, நாட்டு வளம் முதலிய இயற்கை வளங்களைக் குறித்து வரும் பாடல்களையும் பறவை, விலங்கினம் பற்றி வரும் பாடல்களையும் குழந்தைகள் விரும்புவர்.
அண்மையில் இலங்கையிலே குழந்தைப் பாடல்களில் பலருக்கு மீண்டும் ஊக்கம் பிறந்துள்ளது. இதுவரை ஏறத்தாழ முப்பது குழந்தைக் கவிதை நூல்கள் இலங்கையில் வெளி வந்திருப்பதாகத் தெரிகிறது. ச. அமிர்நாதருக்கு சாகித்தியப்பரிசும் கிடைத்துள்ளது. ஆயினும் பொதுவான குறைபாடுகள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றையே மேலே விவரித்தோம். இத்துறையில் திறனாய்வுக் கட்டுரைகளும் திறனாய்வு நூல்களும் அருந்தலாகவே உள்ளன. ஆரவார இரசனைக் கட்டுரைகளே ஏராளம். பொதுவில் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் குழந்தை இலக்கியத் திறனாய்வு வெகு சிலரையே ஈர்த்துள்ளது. பூவண்ணன் எழுதிய குழந்தை இலக்கிய வரலாறு (1960), சிறுவர் இலக்கியச் செல்வர்கள் (1976) என்பன தமிழில் எழுதியுள்ள குழந்தைக் கவிஞர்களின் சாதனைகளை ஒரளவில் மதிப்பீடு செய்திருக்கின்றன. பாடல்களின்

Page 28
- 38- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
சிறப்புகளை விளக்குவதே பூவண்ணனின் பிரதான நோக்கமாகும். அதாவது அவரே கூறியிருப்பது போல பாநலன் பாராட்டும் முயற்சியையே அவர் மேற்கொண்டுள்ளார். குழந்தை இலக்கியக் கோட்பாடுகளை அவர் அதிகம் அலசியிருப்பதாய்க் கூற முடியாது. குழந்தை இலக்கியம் (1973) என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் ஒன்றும் வெளி வந்தது. அதில் கவிதை பற்றி எழுதிய கி. வா. ஜகந்நாதன் மேலோட்டமாகவே விஷயங்களைக் கூறிச் செல்கிறார்.
இலங்கையிலே குழந்தைப் பாடல்கள் குறித்து எழுதப்பட்டிருக்கும் விவரண - விமரிசனக் கட்டுரைகளை நோக்குமிடத்துச் சில குறிப்பிட்டுச் சொல்லக்கூடியனவாய்க் காணப்படுகின்றன. என் கண்ணில் பட்டவற்றுள் கனக.செந்திநாதன் எழுதிய "குழந்தை இலக்கியம் (கவிதைகள்)” (1966), "பிரதம வகுப்புக்களுக்கான ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்” (1971), நியாஸ்புர்கான் பீ எழுதியுள்ள "சிறுவர் இலக்கியம்"(1971) என்பன பலரும் படித்துப் பயன்பெறத் தக்கவை எனக்கூறுவேன். 1965 ஆம் ஆண்டு பூரீலங்கா சாகித்திய மண்டலம் நடாத்திய குழந்தை இலக்கியம் பற்றிய கருத்தரங்கு குறிப்பிடத்தக்கது. அக்கருத்தரங்கில் "இலங்கையிற் சிறுவர் (தமிழ்) இலக்கியம்” என்னும் பொருள் குறித்து செ. வேலாயுதபிள்ளையும் "குழந்தைப்பாட்டு" குறித்துச் செல்வி அசாரியாஜமீல் என்பாரும் சமர்ப்பித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. திரு. வேலாயுதபிள்ளை பின்வருமாறு குறிப்பிட்டார்:
சிறுவர் பொருள் விளங்கிப் படிக்கும்போதே இலக்கியத்திற் சுவை காண்பர். சிறுவர் இலக்கியங்களில் அளவுக்கு மிஞ்சி அறங்களையும் நீதிகளையும் புகட்டும் மரபொன்று தொன்று தொட்டே தமிழில் இருந்து வருகின்றது. குழந்தைகளின் உள்ளத்தை உணராமலும், குழந்தைகளின் வேட்கைகளை நிறைவேற்றாமலும், முதிர்ந்தவர்கள் தங்கள் மனம் போனவாறு குழந்தைகளுக்கு நூல் எழுதித் தங்கள் கருத்துக்களையும் நியதிகளையும் வலிந்து குழந்தைகளின் மனத்தில் திணித்து விடுகின்றார்கள்.
இக்குறிப்புரைக்கு எடுத்துக் காட்டாக சிறுவர் செந்தமிழ் தொகுப்பைச் சுட்டலாம். இத்தொகுப்பிலுள்ள, "கதிர்காமம்", "நூறாண்டு வாழ்தல்", "கலையரசி ஐம்பருவம்", "தாரமாய்த் தாயானாள் கை”, “பஞ்சக்கூழ்” என்பன எவ்வாறு நோக்கினும் சிறுவர் பாடல்கள் அல்ல; செந்தமிழ்ப் பாடல்களாயிருத்தல் கூடும். ஆனால் "குழந்தைகளின் உள்ளத்தை உணர்ந்தவர்” தொகுத்தவையல்ல. இவை முதிர்ந்தவர்களுக்கு ஏற்றன. பொருளாலும் பாடிய முறையாலும் கூட இவை சிறுவர்களுக்கென இயலாது. உதாரணமாக

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 39
உயிரிளங்குமரன் நாடகம் என்ற நூலிலிருந்து பெயர்த்து "சிறுவர் செந்தமிழில்" அமைத்துள்ள "பூஞ்சோலை" என்னும் செய்யுட்பகுதி, "உலக முவப்ப வலனேர்பு திரிதரும்.” என்று தொடங்கும் திருமுருகாற்றுப்படை அடியை நினைவூட்ட வல்லதாய் இருக்கிறதேயன்றி குழந்தையின் உள்ளத்துக்கு உகந்ததாகக் கூறவியலாது.
இவ்விடத்திலே பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, "சிறுகுழந்தைகளுக்குச் செய்யுட் பாடங்கள்” என்ற கட்டுரையிற் கூறியுள்ளது பொருத்தமாயுள்ளது:
குழந்தைகளின் மனநிலைக்குத் தக்கபடி அவர்கள் பாடி மகிழ்தற்கு உரியனவாய் அவர்களின் பொருட்டு இயற்றிய பாடல்களே பாடப் புத்தகங்களில் இடம் பெறுதல் வேண்டும். இப்படி அவர்களுக்கு உரியனவையன்றி, அவர்கள் பற்றி எழுதிய பாடல்கள் இடம் பெறத் தகாதவை. பிள்ளைத் தமிழ்ப் பாடல்களால் குழந்தைகளை மகிழ்விக்க முடியுமா?
இச் சந்தர்ப்பத்திலே முக்கியமான செய்தி ஒன்று சிந்திக்க வேண்டியதாயுள்ளது. மேலைநாட்டு முன்னேற்றம் நம்மவரால் கூர்ந்து அவதானிக்கத்தக்கதாயும் பல விஷயங்களில் பின்பற்றத் தக்கதாயும் இருத்தல் உண்மையே. ஆயினும் இது குறித்து நாம் விழிப்பாகவும் இருத்தல் இன்றியமையாதது. கலை, இலக்கியத்தின் பெரு வளர்ச்சியின் ஒர் அம்சமாகத் தவிர்க்க இயலாதவாறு, வணிக நோக்கு குழந்தை இலக்கியத்தையும் ஆட்டிப்படைக்கிறது. பிரபல சோவியத் விமர்சகர் செர்கேய் மிகால்கோவ் நாம் மனங்கொள்ள வேண்டிய வற்றை விவரித்துள்ளார்:
குழந்தைகள் எதைப் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் அறிவது மிகவும் அவசியமாகும். பல ஆண்டுகளாகக் குழந்தை இலக்கியத்தில் நான் ஈடுபட்டுள்ளேன். மேலைநாடுகளில் குழந்தை இலக்கியங்கள் வியாபாரப் பொருளாகவே கருதப்படுகின்றன. புத்தகத்தில் என்ன அடங்கி இருக்கின்றது என்பது பற்றி வியாபாரிகளுக்குக் கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை யெல்லாம் புத்தகம் நிறைய விற்பனையாக வேண்டும் என்பது தான். அதனால்தான் குற்றவாளிகள், நவநாகரிகத் திருடர்கள், பாங்கர்களைக் கவரும் இளம் அழகு மங்கையர், சொகுசான வாழ்க்கை நடத்தும் பணக்காரக் கனவான்கள் போன்றவர்களைப் பற்றிய குழந்தைப் புத்தகங்கள் மேலை நாடுகளில் ஏராளமாக வெளிவருகின்றன. இம்மாதிரியான புத்தகங்களைப் படிக்கும் சிறுவர்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பர் என்பது தெளிவாகும்.

Page 29
-40- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
குழந்தைகளின் வயது, மூளை வளர்ச்சி, மொழித்திறன், ஆற்றல் ஏற்புடைமை இவற்றையெல்லாம் கவனத்திற்கொண்டு சீரிய பாடல்களை எழுதியோர் பொதுவில் குறைவு என்பதை மேலே எடுத்துரைத்தேன். ஆயினும் எண்ணிக்கையை நோக்கினால் ஏராளமானோர் எழுதியிருப்பது புலனாகும். பெரியவர்களுக்குப் பாடல்கள் இயற்றிய தமிழ்க் கவிஞர்கள் பலர் சிறுவர் பாடல்களையும் அவ்வப்போது எழுதினர். பாரதி சிறுவர்களுக்குப் பாடல்கள் எழுதியதைப் பின்பற்றி அவருக்குப் பின் வந்த கவிஞர்களும் குழந்தைப் பாடல்கள் எழுத முற்பட்டிருக்கின்றனர். பாரதி பரம்பரையில் பாரதிதாசன், கம்பதாசன், தமிழ் ஒளி, தமிழழகன், தமிழ்வேள், சுப்பு ஆறுமுகம், மின்னூர் சீனிவாசன், சக்திக்கனல், யாழ்ப்பாணன். தமிழண்ணல் முதலியோரும் மற்றும் பலரும் குறைந்தது ஒரு தொகுதியாகிலும் வெளியிட்டிருக்கின்றனர். இவற்றிற் பல குழந்தை இலக்கியத்தின் பாற் கொண்ட "ஆசை பற்றி" இயற்றப்பட்டவை என்று கூறி அமைதி காண்பதே பொருத்தமாகும்.
இறுதியாக ஒன்று கூறலாம். சிறுவர் கவிதைகள் பற்றிச் சொல்லிய குறைபாடுகள் சிறப்பாகக் குழந்தை இலக்கியத்துக்குப் பொருந்துமாயினும், கூர்ந்து கவனிக்கும் பொழுது, இவை பொதுவாகத் தமிழிலக்கியத்தில் நிலை கொண்டுள்ள குறைபாடுகளே என்பது புலனாகாமற் போகாது. அறவியல் பண்பாட்டுச் சுமைகளைத் தாங்கும் வாகனமாகவே இலக்கியம் இன்னும் பலரால் கருதப்படுகிறது என்பதற்கு இது மறைமுகமான சான்று ஆகும்.
நன்றி : நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்

சிறுவர் இலக்கியம்
- க.நவசோதி -
“பள்ளிச் சிறுவர் சிறுமியர்கள் பாடிப் பாடி மகிழ்வெய்த தெள்ளத் தெளிந்த செந்தமிழில் தேனார் கவிகள் செய்து தரும்"
எனும் வாழ்த் தாரம் தமிழகத்துக் குழந்தைக் கவிஞருக்குக் கவிமணியினாற் சூட்டப்பெற்றதாயினும் அப்புகழ் ஆரத்திற்குத் தகைமைசான்ற கவிஞர் பலரை பொதுவாக ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகும் சிறப்பாகச் சிறுவர் இலக்கியப் பூங்காவும் - பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியி லிருந்து இற்றைவரையிலான இத்துறையின் வளர்ச்சி முற்பட்ட காலத்திற் காணாததொன்றாம். சிறுவர் இலக்கிய வளர்ச்சித் துறையில் முன்னோடியான ஆக்கப் பணியில் ஈடுபட்ட பெருமையும் ஈழத்திற்கு உரியது.
சிறுவர் கதைகள்
உரைநடைத் துறையில் சிறுவர் இலக்கியத்தின் முன்னோடியெனக் கொள்ளத்தகும் தகைமை நல்லைநகர் ஆறுமுக நாவலருக்கு (1822-1879) உரியது. நாவலரின் காலத்தின் பின்னரே சிறுவர் இலக்கியத்தின் மும்மணிகளான மறைமலையடிகள் (18761950) கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை (1876-1954) பாரதியார் (18821921) ஆகிய மூவரின் இலக்கியப்பணியும் தமிழகத்தில் சிறப்புற்றுத் திகழ்வுற்றது. இனிவழங்குநடை, வன்ன நடை, வசன நடையே எனக் கண்ட நாவலர், தாம் இயற்றிய பாலபாடம், சைவவினாவிடை, இலக்கணச் சுருக்கம், பெரியபுராண வசனம், திருவிளையாடற் புராண வசனம் ஆகிய நூல்களிடையே சிறுவருள்ளும் அறிவாலும்

Page 30
-42· ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
வயதாலும் வேறுபாடுற்றோர் இருப்பதை உணர்ந்து அதற்கமைந்த பேதங்களைக் கொண்டதான உரைநடையை அமைத்தார். இரண்டாம் பாலபாடத்தின் கண்ணதான இருபத்தொருகதைகளும் சிறுவர்க்கான சிறுகதை அமைய வேண்டிய முறையை நன்கு காட்டுவனவாகும்.
சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவன கதையும் பாட்டும் ஆகும். கதைத்துறையில் ஈழநாட்டின் வளர்ச்சி தமிழகத்தோடு ஒப்பிடக்கூடியதன்று. எனினும், நாவலரின் நெறியிற் பாட நூல்களாகவும் துணைப்பாட நூல்களாகவும் பல நூல்கள் எழுந்தன. இவை ஏற்கனவே வடமொழியிலும் தமிழிலும் அமைந்த இதிகாச புராண காவியங்களின் சுருக்கங்களாகவும், அவற்றின் கிளைக் கதைகளாகவுமே இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குமாரசுவாமிப்புலவர் சிறுவர்களுக்காக கீதோபதேசத்தையும், இளைஞர்க்காகச் சிசுபாலசரிதம் என்ற கதை நூலொன்றையும் எழுதியுள்ளார். ஈழத்தாய் ஈன்ற செந்தமிழ் முனிவன் வண. பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி ஆகிய அழகுசுந்தர தேசிகர், இலகு நடையில் இராமன் கதை, பாண்டவர் கதை என்னும் இரு நூல்களையும் எழுதினார். சிறுவர்க்கு இனிய நூல் படைக்குமிடத்து, இயற்கைக்கு மிஞ்சியும் மாறுபட்டுள்ள கதைகளை மெய்க்கதை போல எழுதிய கற்றலாகாத கதைகளைக் களைந்து, கதையைச் சுருக்கி அமைத்தனர். இளையோராயினும் தமிழ் கற்கப் புகுமிடத்துப் புதுச்சொற்களையும் சொற்றொடர்களையும் அறிதல் வேண்டுமெனும் நோக்கிற் பெரும்பான்மை இயற்சொல்லும், சிறுபான்மை திரிசொல் வடசொல்லும் விரவியனவாய் இந்நூல்களைப் படைத்தனர். வட இலங்கைத் தமிழ் நூற்பதிப்பகம் மொழியறிவு வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இராஜாதேசிங்கு, தமயந்தி, சாவித்திரி, குலேசர் சரித்திரம் எனும் கதை நூல்களைப் பள்ளிச் சிறுவர்களுக்காக வெளியிட்டது.
ஈழத்துச் சிறுவர் இலக்கியத்தில் ஒரேயொரு நாவலாக க. நவசோதி எழுதிய “ஓடிப்போனவன்” நாவலைக் குறிப்பிடலாம். நாவலின் முதலாவது பதிப்பில் (1968) அறநூல் வாசகங்களையும் சிறுவர்களுக்கான அறிவுரைகளையும் அத்தியாயங்களின் தொடக்கம் தாங்கியிருந்தபோதும் இரண்டாவது பதிப்பில் (1972) அவை நீக்கப்பட்டமையும், ஈழத்து மண்வாசனையும் சூழலும் சிறுவரின் பள்ளிவாழ்க்கையும் ஒடிப்போனவன் நாவலின் சிறப்புப் பண்புகளிற் சிலவாகும். தமிழகத்தில் கண்ணன் வெளியீடாக வெளிவந்த ஆர்வி, தே. பார்த்தசாரதி, லெயோ யோஸ்ப், ப.கி. மூர்த்தி போன்ற எண்ணற்ற

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -43
குழந்தை எழுத்தாளர்களின் நாவல்கள் சிறுவர்களைப் பற்றியே அமைந்திருந்தமை இங்கு மனங்கொளத்தக்கது.
அணி மைக் காலத்தில் தனிப்பட்ட நிறுவனமொன்றின் முயற்சியால், இளஞ்சிறாருக்கென "தப்பியோடிய தோழர்கள்", "குரங்கின் தீர்ப்பு”, “பாடசாலைக்குச் சென்ற யானை", "கிளிப்பிள்ளை” போன்ற கதைப் புத்தகங்கள் வண்ணச் சித்திரங்களோடு வெளியிடப்பட்டுள்ளன. உலகப் பெரியார்களின் இளமைக் காலத்தில் இடம்பெற்ற சுவையான நிகழ்ச்சிகளைச் சிறுவர்கள் அறியுமாறு "இளமைப்பருவத்திலே" எனும் நூலை எழுதியுள்ளார் எம். ஏ. ரஹற்மான். உலகப் புகழ்பெற்ற மேனாட்டுக் கதைகளைத் தமிழில் மொழி பெயர்த்து எழுதிய முயற்சியும் ஈழத்தில் இடம் பெற்றுள்ளது. இத்துறையில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை எழுதிய “நீரரமங்கை” "பூஞ்சோலை” எனும் கதை நூல்களையும், சோ. நடராசன் எழுதிய "விநோதனின் சாகசம்" எனும் கதை நூலையும் குறிப்பிடலாம். சிங்களச் சிறுவர் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்ற சில நாவல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சியிலே சரோஜினி அருணாசலம் ஈடுபட்டுள்ளார்.
சிறுவர் பாடல்கள்
ஈழத்துச் சிறுவர் இலக்கியத்திற் கதைகள் பெற்றிராத முக்கியத்துவத்தினைப் பாடல்கள் பெற்றுள்ளன. ஈழத்துக் கல்விக் கூடங்களில் பயின்ற தமிழ்மொழி நூல்களில் தமிழ் மூதாட்டி ஒளவையாரின் வாக்குண்டாம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, உலக நாதரின் உலகநீதி, அதிவீரராம பாண்டியரின் வெற்றி வேற்கை, விளம்பிநாகரின் நான்மணிக்கடிகை, வள்ளுவரின் குறள் உட்பட்ட அறநூல்கள் வகித்து வந்த இடத்தினைத் தமிழகத்தினைப் பொறுத்த வரையில் கவிமணி, பாரதி, சுத்தானந்தபாரதி, நாமக்கல் கவிஞர், பெ.தூரன், அழ. வள்ளியப்பா ஆகியோரின் குழந்தைப்பாடல்களும் ஈழத்தைப் பொறுத்தவரையில் முத்தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி, சோமசுந்தரப்புலவர், வேந்தனார் என்போருடைய குழந்தைப் பாடல்களும் படிப்படியாகப் பெற்று வந்துள்ளன.
சிறுவர்களுக்கேற்ற பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூல் செம்மையான முறையில் ஈழத்திலேயே முதன் முதல் 1935இல் வெளிவரலாயிற்று. வட பெரும்பாக வித்தியாதரியாயிருந்த க. ச. அருள்நந்தி அவர்களது பெருமுயற்சியினால் வட இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தாரால் வெளியிடப்பட்ட “பிள்ளைப்பாட்டு” எனும்

Page 31
-44- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
இந்தநூல் சிறுவர் இலக்கியத்துறையில் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும். ஈழத்தில் குழந்தைக் கவிஞர்களின் ஆற்றலை வெளிக்கொணர்ந்த “பிள்ளைப்பாட்டு” நூல்மூலம், பதின்மூன்று கவிஞர்களை இலக்கிய உலகு அறியலாயிற்று. இவர்களுள், மா. பீதாம்பரம், சோமசுந்தரப்புலவர் ஆகிய இருவரும் குறிப்பிடத் தக்கவராவர். குழந்தைகளின் வயதுக்கேற்ற பாடல்கள் தரம்பிரிக்கப் பட்டுள்ளமை இத்தொகுப்பு நூலின் தனிச்சிறப்பாகும்.
தமிழகத்தின் கவிமணி, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா ஆகியோருடன் ஒப்பிடக்கூடியவர்களாகச் சோமசுந்தரப்புலவர், முதுதமிழ்ப் புலவர். மு. நல்லதம்பி, வித்துவான் க. வேந்தனார் ஆகிய ஈழத்துக் கவிஞர்களைக் கூறலாம். நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்களிற் பல "சிறுவர் செந்தமிழ்” எனும் தனிநூலில் வெளிவந்துள்ளன. ஈழத்துத் தேசிய கீதத்தினைத் தமிழில் யாத்த முதுதமிழ்ப் புலவரின் சிறுவர் பாடல்கள் "இளைஞர் விருந்து" என்ற நூலாக 1958 ஆம் ஆண்டில் வெளிவரலாயிற்று. இவர் தமிழாசானாகப் பணியாற்றிய சாகிறாக் கல்லூரி மாணவர் படித்தற்பொருட்டு "தமிழ்ப் பாடல்கள்” எனும் நூலையும் 1937ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளனர். வித்துவான் வேந்தனாரின் எளிமையும் கருத்து வளமும் செந்தமிழ் இனிமையும் ஒருங்கு நிறைந்த சிறுவர் பாடல்களைக் "கவிதைப் பூம்பொழில்” எனும் நூலில் காணலாம். 1964 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூலில் "கற்பனைக் காதல்", "அவனும் அவளும்" எனும் இரு காவியங்களும் இடம் பெற்றுள்ளன. சிறுவர்களின் உள்ள உவகைக்கு ஊட்டமளிக்கும் பல பாடல்களை இம்மூவருடைய நூல்களிற் காணலாம்.
இந்நூல்களை விட, ஈழத்திலே குழந்தைக் கவிஞர்களின் தனி நூல்களாக, யாழ்ப்பாணனின் பாவலர் கீதம், வெ. விநாயக மூர்த்தியின் பாலர் பாமாலை, இ. நாகராஜனின் சிறுவர் பாடல், எம். வூபைரின் மலரும் மனம், இ. அம்பிகைபாகனின் அம்பிப் பாடல் என்பன வெளிவந்துள்ளன. குழந்தைகளுக்குக் குதூகலமும் மகிழ்வும் ஊட்டவல்ல ஏனைய ஈழத்துக் கவிஞர்களுள் கந்தவனம், ஆடலிறை, திமிலைத்துமிலன், சச்சிதானந்தன், சாரணாகையூம், வீரகத்தி முதலியோர் குறிப்பிடத்தக்கவராவர். கோப்பாய் பெண்கள் அரசினர் ஆசிரியர்கலாசாலைப் பேராசிரியை செல்வி செளந்தரம் சந்தன நங்கை கந்தப்பு அவர்கள், தமிழ் நாட்டினதும் ஈழத்தினதும் குழந்தைக் கவிஞர்களின் பாடல்களுக்கு இசை அமைத்துத் தொகுத்து “செந்தமிழ்ச் சிறுவர்களே சேர்ந்து பாடுவோம்” எனும் பெயரிட்டு வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு தேனமுது இலக்கிய மன்றத்தினர்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -4 5
ஈழத்து இளம் கவிஞர்களது நாற்பத்தொரு குழந்தைப் பாடல்களைத் தொகுத்து “கனியமுது" எனும் நூலாக வெளியிட்டுள்ளனர்.
பிறமொழிச் சிறுவர் பாடல்களைத் தமிழில் அறிமுகப்படுத்தும் பணியில் சில முயற்சிகளைக் கூறலாம். கு. இராமச்சந்திரன், க. நவசோதி ஆகியோர் முறையே ஆங்கிலப் பாடல்களையும் சிங்களப்பாடல்களையும் தமிழில் மொழி பெயர்த்தும் தழுவியும் படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் நாட்டைச் சேர்ந்த பதின்மூன்று கவிஞர்களினதும் ஈழநாட்டின் பன்னிரு கவிஞர்களினதும் குழந்தைப் பாடல்களைச் "சிறுவர் கவிநயம்" எனும் கட்டுரைத் தொடரில் ஈழநாடு இதழில் இரசிகமணி கனக. செந்திநாதன் அறிமுகஞ்செய்து வைத்த பணி தமிழகத்திலும் இடம் பெறாத தென்பது சுட்டியுரைக்கற்பாலது.
எனினும், தமிழில் சித்திரக் கதைகள், வரலாறு, நாடகம், கலைகள், அறிவியல் துறைகளில் ஈழத்துச் சிறுவர் இலக்கியம் பின்தங்கிய நிலையிலேயே இன்றுமுளது. இது போன்ற பல்வேறு துறைகளிலும் சிங்கள மொழியில் சிறுவர் இலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சியினைப் போல் தமிழில் சிறுவர் இலக்கியத்துறை வளர்ச்சி பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
சிறுவர் சஞ்சிகைகள்
சிறுவர் இலக்கிய வளர்ச்சித் துறையில் சஞ்சிகைகள் மகோன்னத பணியாற்றலாம் என்பதற்குத் தமிழ் நாட்டின் "அம்புலிமாமா” இதழும் "கண்ணன்" இதழில் தொடர்கதைகளாக வெளிவந்து நூலுருப்பெற்ற எண்ணற்ற நெடுங்கதைகளுமே தக்க சான்றுகளாகும். ஈழத்தில் வெளிவரும் பத்திரிகைகளில் அவ்வப்போது சிறுவர்களுக்கான பகுதிகள் தோன்றி மறைவதைப் போன்றே சிறுவர் சஞ்சிகைகளும் தோன்றி மறைந்துள்ளன. தமிழகத்திலும் அணில், பாப்பா, பாப்பா மலர், டமாரம், கரும்பு, மத்தாப்பு, பூஞ்சோலை, கண்ணன் போன்ற சஞ்சிகைகள் தோன்றி மறைந்துள்ளதைப் போன்றே ஈழத்திலும் மலர்ந்து மறைந்துள்ள சஞ்சிகைகள் ஏராளம். சிறுவர்களுக்காக இலங்கையில் முதன் முதலில் "பாலியர் நேசன்" எனும் பத்திரிகை அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவரின் முயற்சியால் 1859 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1924 ஆம் ஆண்டில் மிகச்சிறந்த முறையில் "பாலர் மித்திரன்” என்ற பத்திரிகை வெளிவந்தது. இதையடுத்து அவ்வப்போது வெளிவந்த சுரபி, மாணவமணி, சிறுவர் உலகம், தமிழ் மாணவன், வெண்ணிலா, மாணவர்முரசு, வெற்றிமணி

Page 32
- 46- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
எனும் சஞ்சிகைகள் இயற்கை மறைவு எய்தின. குழந்தை இலக்கியத்தினை எளிதிற் படைத்துவிடல் இயலாது என்பதையே இச் சஞ்சிகைகளின் மறைவும் அறைவனவாம்.
- நன்றி. நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நினைவுமலர் (1974).

சிறுவர் இலக்கியம் சில சிந்தனைகள்
- செ.கணேசலிங்கன் -
பிறப்பும் மொழியும்
சிறுவர் இலக்கியம் என்னும் போது "சிறுவர் என்பவர் யார்?" என்பது முதல் வினா. அடுத்து அவர்க்குரிய இலக்கியம், என்பதன் வடிவம், ஆக்கம் பற்றியதாகக் கொள்ளலாம்.
சிறுவர் என்பவரின் வயது, மன வளர்ச்சி, மூளை வளர்ச்சியின் நிலை பற்றி நாம் கருத்தில் கொள்ள வேண்டும் இலக்கியம் படைக்க முன்னர்.
பிறந்த காலத்திலிருந்து குழந்தையின் உடல் வளர்ச்சி மட்டுமல்ல மூளை வளர்ச்சியும் தொடர்கிறது. சத்துணவு, சுற்றாடல் முதலியன மூளை வளர்ச்சிக்குத் துணை புரிகின்றன. தக்க கண் பார்வை ஏற்பட சில மாதங்கள் ஆகலாம். ஆயினும் ஒலி வேறுபாடுகளைக் கிரகிக்கும் ஆற்றல் பிறப்புடன் ஏற்படுகிறது.
ஒழுங்குபடுத்திய ஒலி இசையாகிறது. இசையை குழந்தைகளே விரும்புகின்றன. தாலாட்டுப்பாடி குழந்தைகளைத் தூங்க வைப்பது உலக மரபு. இது தற்போது அருகிவருவதற்குப் பல காரணங்களைக் கூறலாம். யந்திர மயப்படுத்திய கசெட், ரேடியோ, டிவி போன்ற நவீன இசைகளுக்கும் குழந்தைகள் செவிமடுப்பதைக் காணலாம்.
பிறப்புடன் இளம் மூளையிலேயே சுற்றாடல், சூழல், சம்பவங்களைக் கிரகிக்கும் குழந்தை நாளடைவில் பெயர்ச்சொற்களை மழலையாகப் பேச முயல்கிறது. பின்னர் வினைச் சொற்கள், அதன் பின்னர் பெயர் வினையான சொற்கள், வசனங்கள் எனத் தொடரும். சொல், எழுத்து, பொருள் என்பன இலக்கண ஆய்வு முறை என்பதை அறிவோம். தற்போது அவற்றைத் தவிர்ப்போம்.

Page 33
- 48- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
விஞ்ஞானப்பூர்வமான ஆய்வு
மூளை, மனம் பற்றிய விஞ்ஞானப் பூர்வ ஆய்வுகள் இன்று உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன.
அடுத்து மொழியியல் பற்றிய ஆய்வுகளும் முடிவுகளும். மொழி, வசனம் அமைக்கும் போன்றன மனித இனம் அனைத்திற்கும் ஒரே பண்பு இயல்பானது என்றார், நோம் சொம்ஸ்கி என்ற மொழியியல் அறிஞர்.
சிக்மன் பிராய்டு என்ற மனோதத்துவ அறிஞரின் கூற்றுகளை குழந்தைகளின் மூளை, மனவளர்ச்சிக்கும் நாம் ஒப்பிட்டறியலாம்.
பிராய்டே நனவு மனம், நினைவிலிமனம் என மூளையின் தன்மையை இரண்டாகப் பிரித்துக் காட்டியவர். மூளையின் பெரும் பகுதி நினைவிலி மனம் எனவும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் மூளையின் சிறுபகுதியே நினைவுமனம் எனவும் வகுத்துக் கூறினார். நினைவு மனம் என்பதை விழிப்பு நிலை எனலாம். 2,sidia;556 Conscious mind, Unconscious mind 676igo Jogp16) iii.
சிறுவயதிலிருந்தே நாம் காணும், பேசும், உணரும் விஷயங்களையெல்லாம் நினைவிலி மனதிலேயே பதித்து வைக்கிறோம். தேவை ஏற்படும் போதெல்லாம் அங்கிருந்து சொல், பேச்சு, எழுத்து, பொருள்களை நினைவு மனதிற்கு எடுத்துக் கொள்கிறோம்.
உதாரணமாக, குழந்தைகள் கூட பிரிந்திருந்த தாய், தந்தை, சகோதரர், வீட்டுக்கு வந்து போவோர்களை உடனே இனம் கண்டு, முறை கூறி அழைப்பதைக் காண்கிறோம். நினைவிலி மனதில் பதிந்தவற்றையே நினைவில் கொணர்வர்.
சிறுவர்கள் கேட்பவை, பார்ப்பவை, கற்பவற்றை நினைவில் மனதிலேயே தேக்கி வைக்கின்றனர். அவை படிப்படியாக சேகரிக்கப்பட்டு தேவைக்கேற்ப நினைவு மனத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன.
சிறுவரும் கனவு காண்பர். இரவில் எழுந்து அழலாம். நரி வெருட்டுகிறது என்போம். சிறுவர் கண்ட கனவுகள் ஊமை கண்ட கனவே. காலப்போக்கில் இவ்ஊமைக்கனவுகள் பிரதிபலிக்கலாம் என்பார் பிராய்டு.
மேலே கூறப்பட்ட விஞ்ஞான உண்மைகளை முன்வைத்து சிறுவர் இலக்கியத்தின் தேவைகள், அமைப்புகள் பற்றி நாம் கற்கலாம். சிறுவரது வயது என்பது பிறந்த நாளிலிருந்து மாதம், வருடம் எனக் கணக்கிடுவது மட்டுமல்ல, மனவளர்ச்சியின் வயது, தன்மையையும் நாம் வேறாகக் கணித்துக் கொள்ளல் வேண்டும்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் r 49
ஐந்து, ஆறு வயதில் கிரகிக்கும் அறிவை இன்றைய போட்டிச் சமூகத்தில் மூன்று, நாலு வயதிலேயே திணிக்க முயல்வதைக் காணலாம். இவ்வயதில் ஒராண்டாக மூளையில் திணிக்கப்படுவதை சிறுவர் தமது ஆரம்ப கல்வியான ஆறுவயதில் சிலமாதங்களிலேயே கற்றுவிடுவர்.
சிறுவர் பேனா, பென்சில் பிடித்து குறிப்பிட்ட இடத்தில் எழுதும் திறமையை நாலுவயதிலேயே அறிந்து கொள்வர் என உளவியலாளர் கூறுவர். எழுதும் கையும் பார்வையும் அவ்வயதிலேயே ஒருங்கிணையும் என்பர். அதன் முன்னர் வலிந்து பழக்குவது வீண் சிரமம் மட்டுமல்ல சிறுவனின் மனவளத்தின் இயல்பையும் பாதிக்கும்.
பிராய்டின் கோட்பாடுகள் நிலைபெற்ற பின்னர் உளவியல் ரீதியாக சிறுவரின் மனவளர்ச்சியை அளப்பதற்கும், மேம்படுத்துவதற்கு உதவும் வழிகளை நாம் கற்றுக் கொள்ள முடியும். சிறுவரின் செயல், பேச்சு ஆகியவற்றின் அடிப்படை நோக்கங்களையும் ஆய்ந்து அறிய முடியும். காரணமின்றி அழுவதன் பின்புலத்தை ஊகிக்க முடியும். தம்மேல் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் சிறுவர் விழிப்பாயிருப்பர். தவறின் அவர்கள் தமது உணர்ச்சி மொழிகளைப் பயன்படுத்துவர். தொடர்ந்து அழுவர்.
சிறுவர் வேனிடுவது
சிறுவர் இலக்கியம் என்னும்போது சிறுவர்க்குரிய பாடல், படங்கள், கதைகள், கட்டுரைகளையே முதலில் கருத்தில் கொள்கிறோம். பதினைந்து இருபது வருடங்களின் முன்னர் சிறுவர்க்காக எழுதப்பட்ட, பாடப்பட்டவற்றையே இன்றும் சிறுவர் இலக்கியத்தில் திணிக்க நாம் முயல்கிறோம். ஆனால் இன்றைய சிறுவர் வளரும் சூழல், பார்வையைப் பறிக்கும் படங்கள், ரேடியோ, கசெட், டிவி கார்ட்டுன்கள், கேட்கும் காதல் பாட்டிசைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
மூன்று வயதிலிருந்தே இவர்களின் முதலாவதாக கவனத்தை ஈர்ப்பது, கவர்வது கார்ட்டூன் படங்களின் வேகமான ஒட்டங்கள், அவற்றின் மூலம் கூறப்படும் கற்பனைக் கதைகள் என்பன ஆகும். வீட்டில் டிவி இல்லாத பிள்ளைகள் அடுத்த வீட்டில் கவரப்படுகின்றனர். வீடுகளில் பெற்றாருடன் டிவி பார்ப்பதில் சிறுவரின் போராட்டங்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கூடப்பாடங்களில் கவனம் செலுத்துவதற்காக கண்டிப்பாக கட்டுப்படுத்தும் போதும் சிறுவர் மீறுகின்றனர். அடம்பிடித்து வெற்றியடைகின்றனர். பெரும்பாலான நடுத்தரவர்க்கப் பெற்றார்

Page 34
-50- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
"டிவி கேம்ஸ்" - விளையாட்டுக்களுக்கு அனுமதி வழங்குகின்றனர். இசையுடன் வேகமாக இயங்கும் கார்ட்டூன் மனிதர், படங்களில் சிறுவர்கள் மெய் மறந்து மணிக்கணக்காக தமது நேரத்தைக் கழிக்கின்றனர். - கார்ட்டூன் படங்கள்
இந்தக் கார்ட்டூன் படங்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் யந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு உலகச் சந்தையில் விற்கப்படுகின்றன. இவற்றைத் தயாரிக்கும் செலவு, முதலீடு மிகப் பெரிது. இங்கே சாதாரண திரைப்படத்தயாரிப்பாளராலும் கார்ட்டுன் படங்களுக்கு முதலீடு செய்ய முடியாது. அதே வேளை இங்கே சிறுவர்களுக்கு, "நேரக்கடத்தலுக்காக” வணிக நோக்கில் டிவி நிலையங்கள் உள்ளூருக்கு ஏற்ப மொழி மாற்றம் செய்தும் இவற்றை வழங்குகின்றனர். அன்றாட பள்ளிக்கூடக் கல்வியிலும் பார்க்க சிறார்கள் இவற்றாலேயே அதிகம் கவரப்படுகின்றனர்.
இப்படங்கள் கூறும் கதைகள், சம்பவங்கள், பாத்திரங்கள் யாவும் நமது நாட்டிற்கு உரியவை அல்ல. அந்நியமான நவீன யந்திர மயப்பட்ட கலைப்படைப்புகளில் நாள்தோறும் சில மணிநேரம், பல மணிநேரம் சிறுவர் அழுத்தப்படுகின்றனர். தலையை வேறுபுறமே திருப்பாது சிறார்கள் சின்னத்திரையோடு கட்டுப்பட்டிருப்பதைக் காணலாம். பெரும்பாலும் எலி, பூனை, நாய், சிங்கம், பறவைகளே சணி டைபோட்டு வேகமாக துரத்துவதையும் வெற்றி, தோல்வியடைவதையும் இக்கார்ட்டுண்களில் காணலாம்.
சிறு சிறு கதைகளே இங்கு கையாளப்படுகின்றன. இவற்றைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதிலும் சிறுவர் சோர்வடைவதில்லை, கார்ட்டுன் வடிவமாக கதைகள் கூறும் நூல்களும் நவீன இலக்கியச் சந்தையில் குவிந்துள்ளன. சிறுவரும் விரும்பிப் படிப்பர்.
இது ஒரு புறம், மறுபுறம் சினிமா. தியேட்டரில் மட்டுமல்ல சின்னத்திரையில், இக்கதைப்படங்கள் ஒருபுறம், "சோப்ஒப்பரா” என்ற வகையான தொடர் கதைப் படம் மறுபுறம், பிரபல பாடல்களோடு இணைந்த காதல் காட்சிகள் மற்றொரு புறம், சிறுவருக்கு வேண்டாத காட்சிகள், ஆயினும் சிறுவரும் ஆர்வத்தோடு பார்க்கின்றனர்.
பாடல் என்றால் சினிமாப்பாடல்களைச் சிறுவர் கேட்டு மகிழ்வது மட்டுமல்ல தாமே முணுமுணுத்துப் பாடுவர். சினிமாக் கதைகள் பாத்திரங்களில் மெய்மறப்பர். மேலும் பிரபல நடிகை, நடிகர்களின் விசிறியாகப் பேசுவர். ரஜனியின் விசிறியாக மாறி அவர் படங்களைப் பார்ப்பதற்கு வற்புறுத்தி பெற்றோரை அழைத்துச்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -51
செல்வர். "ரஜனி ஸ்ரைல்" என அவரது அசைவுகள், சண்டைக் காட்சிகளை தாமே நடிப்பர். பல்வேறு நடனங்களை, இசைகளைக் கேட்டு தாமே இசைக்கேற்ப நடனமாடுவர். பெற்றோரும் தமது பிள்ளைகளின் நடனத்தை ரசிப்பர். சிறுவரைப் பாராட்டுவர்.
சிறுவர்க்கும் பாடல் என்றால் சினிமாப் பாடல், கதை என்றால் சினிமாக் கதை, காட்சிகள் என்றால் சினிமாக் காட்சிகள், போற்றும் வீர புருஷர்கள் என்றால் பிரபல சினிமா நட்சத்திரங்கள் என்றாகிறது. இத்தகைய சூழலில், சிறுவர்களே தாம் பிடித்த பாத்திரங்கள் பற்றியே பேசிப் பிரிந்து சண்டைபோடுவர். மேலும் சினிமா நட்சத்திரங்களின் உடைகளை, பொருட்களை அடம்பிடித்து தமக்கும் வேண்டுவர்.
புதிய சமூகச் சூழலில்
இத்தகைய புதிய சமூகத்தில் சிறுவர் இலக்கியத் தேவை பற்றி நாம் ஆராய வேண்டியவர்களாக உள்ளோம்.
இன்றைய சிறுவர்களின் நேரம், பொழுதுபோக்கு யாவும் பெற்றோரிலிருந்து அந்நியப்பட்ட நிலையிலேயே உள்ளன. பெற்றார் வேலைக்குப் போக பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவர்; விளையாடச் செல்வர். மற்றைய நேரங்களில் சின்னத்திரையில் கட்டுப்படுவது. இத்தகைய போக்கில் பெற்றாரின் பிடியிலிருந்து சிறுவர்கள் தூரச் சென்று விடுவது மற்றொரு பிரச்சினை.
இன்றும் நாம் சிறுவர் பாடல் என்று பல தசாப்தங்களின் முன்னர் சோமசுந்தரப் புலவர் எழுதிய பாடலைப் பயிற்ற எண்ணுகிறோம்.
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம்.
ஆடிப் பிறப்பு என்றால் என்ன? அதற்கு விடுதலை விடுவார்களா? கூடிப் பனங்கட்டிக் கூழ் என்றால் என்ன?
இவ்வாறு நாம் அனுபவப்படாத அறியாத விஷயங்கள் பற்றி சிறுவர் கேட்கலாம். விடைகூறி விளக்குவது சிரமம். பயன் தராது.
இது போலவே நகரில் வாழும் பிள்ளைகளுக்கு நிலாச் சோறு ஊட்டுவதாக,
“நிலா நிலா ஒடிவா, நில்லாமல் ஓடிவா," “அம்மா சுட்ட தோசை அழகான தோசை," “ஓடி விளையாடு பாப்பா நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா"

Page 35
-52- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
என்பன போன்ற பாடல்களை சிறுவர் இலக்கியமாக கற்பிக்க முயல்கிறோம்.
இவற்றில் எத்தனை தூரம் வெற்றி பெற முடியும், சிறுவர்க்குப் பயன்தர முடியும் என்பன சிந்திக்க வேண்டியவை. அதே வேளை மாற்று வழிகளும் ஆராயப்படவேண்டும்.
புதிய போக்குகள்
இவ்வாறெல்லாம் வேகமாக மாறிவரும் சூழலில் சிறுவர் இலக்கியம் பற்றி நாம் ஆழமாக ஆராய வேண்டி உள்ளது. இங்கு இரண்டு முக்கிய விஷயங்கள் உள.
ஒன்று, புதிய சூழ்நிலைகளில் சிறுவர் ஆர்வமாகப் படிக்கக் கூடியவை, கேட்கத்தக்கவை ஆகியவற்றைத் தேர்ந்து கொள்வது. இரண்டாவதாக அவற்றைப் படைப்பது. நாம் விரும்பியவற்றை எல்லாம் படைத்து இவர்கள் மேல் திணித்து விட இயலாது.
வீடுகளிலே சிறுவர்களுக்கு டிவி பார்ப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. டிவி பார்க்கும் நேரங்களைப் பெற்றார் ஒரளவு கட்டுப்படுத்தலாம். ஆகவே சிறப்பாக, பள்ளிக்கூடங்களின் பங்கு முதன்மையானது. ஏனெனில் எல்லாப் பிள்ளைகளுமே சிறுவர் நிலையில் பள்ளிக் கூடங்களுக்குச் செல்வர். அங்கே கல்வி சார்ந்து, சிறுவர் இலக்கியம் சார்ந்து பாடங்கள், வர்ணச் சித்திரங்கள், கதைகள், நாடகங்கள், நடனங்கள், நாட்டியங்கள் கற்க, கற்பிக்க வாய்ப்புகள் உள. இங்கு பாடப்புத்தகங்களும் முக்கிய இடம் பெறுகின்றன.
பள்ளிக் கூடங்களில் சமயபோதனை, அவை சார்ந்த அறநெறிகள், ஒழுக்க நடைமுறைகளும் பயிற்றப்படுகின்றன. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் மட்டுமல்ல தேவார திருவாசகங்கள், பைபிள், குரான் கதைகளும் ஒழுக்க நெறியின் கட்டுப்பாடுகளும் கற்பிக்கப்படுகின்றன.
ஆகவே பள்ளிக் கூடங்களில் சிறுவர் இலக்கியத்திற்கு முக்கிய பங்கு உள்ளது.
நான்கு, ஐந்து வயதுவரை சிறுவர் பள்ளிக்கூட அமைப்புக்குள் நுழைய வாய்ப்பில்லை. வீட்டார் தகுதி, போன்றவற்றால் நர்ஸரி போன்ற தனியார் நிறுவனங்களில் வாய்ப்புள்ளவர் நுழையலாம்.
பாடங்கள், பாலர் கதைகள், அபிநயங்களே இங்கு முதன்மை பெறலாம். வர்ணங்கள் தீட்டவும், அகர வரிசைச் சொற்களையும் எழுதப் படிக்கக் கற்பிக்கலாம்.
எழுத்தாளர் ஒசைநயமுள்ள பாடங்களையே சிறுவர்க்காக

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 53
எழுத வேண்டும். பெரிய எழுத்தில் படங்களுடன் நூல்கள் பதிப்பிக்கப்படல் வேண்டும். வுசன கவிதைக்கு இங்கு இடமில்லை.
ஆங்கிலத்தில்
ஆங்கிலத்தில் “நர்ஸரி ரிதம்” என இத்தகு குழந்தைகளுக்கு ஏராளமான வர்ணப் படங்களுடன் பாடல் நூல்கள், கதைப்புத்தகங்கள் பதிக்கப்படுகின்றன. "டுவின்கிள் டுவின்கிள் லிட்டிள் ஸ்டார்” (TwingleTwingle Little Star), ஜாக் அன் ஜில் வென்ட் együ5 gólač” (Jack and Jill went up The Hill) GuT6.jp606) ஒசைநயத்திற்காகவே இன்றும் கற்பிக்கப்படுகின்றன. "ஜாக் அன் ஜில்"என்பவை அந்நியப் பெயர்கள். சிறார் வேண்டாத விரும்பாத செயல்கள். ஆங்கிலத்தில் சிறுவர் நூல்கள் அழகாகப் பதிக்கப்பட்டபோதும் விலையும் அதிகமாக உள்ளன. பெரும் பாலோர் விலையைப் பாராது சிறுவர்க்குப் பயன்படும் என இவற்றை வாங்கிக் கொடுப்பர். ஆங்கிலத்தின் பரந்த சந்தை காரணமாக பதிப்பகத்தார் அழகாக, தடித்த அட்டையுடன் இவற்றை வெளியிடுகின்றனர். தமிழ் மொழியில் சிறுவர் நூல்கள் மலிவான போதும் பெற்றார் தம் பிள்ளைகளுக்கு வாங்கித் தரத் தயங்குகின்றனர்; பிற குழந்தைகளுக்கும், தம்பிள்ளைகளுக்கும் பிறந்த நாள் பரிசாக ஆங்கில நூல்களையே அதிக விலை கொடுத்து வாங்கி வழங்குகின்றனர்.
படைப்பாளர்
சிறுவர் இலக்கியம் படைப்போருக்கு இவ் ஆங்கில நூல்கள் வழிகாட்டியாக அமையும். ஆயினும் அவற்றின் உட்பொருள் எப்போதும் நமது சமூகப் பணி பாட்டையும் அவற்றின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இரண்டாவது கட்டமாக பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் சிறுவர்க்கு ஏற்ற பாடங்கள், கதைகள் இலக்கியமாகப் படைப்பதாகும். இவற்றை 6-7, 8-10 என வயதோடு ஒட்டி தரம் பிரிக்கலாம்.
பள்ளிக்கூடங்களில் சிறுவர் படிக்கும் வயது, வகுப்பை ஒட்டி பாடத்திட்டங்களை வகுத்திருப்பர். பாடங்களும் பெரும்பாலும் அரசால் பதிப்பிக்கப்பெற்று இலவசமாக வழங்கப்படலாம். இத்தகைய சூழலில் சிறுவர் இலக்கியம் படைப்போரும் தமது ஆக்கங்களை வகைப்படுத்த வேண்டியவர் ஆவர்.
கட்டுரையின் ஆரம்பத்தில் கூறப்பட்ட உளவியல் பார்வையை சிறுவர் இலக்கியம் படைப்போர் மறந்துவிடக் கூடாது; சிறுவரின்

Page 36
- 54- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
சிந்தனையைத் தூண்டத்தக்கதான கலை, இலக்கியங்களை சிறுவரின் மண்வளத்தை மனதிற் கொண்டு படைக்க முயல வேண்டும்.
சிறுவர் இலக்கியம் படைப் போர் முக்கியமாக இரு கோட்பாடுகளைக் கொண்டிருப்பது பயன்தரும் ஒன்று, உண்மையை தமது படைப்பில் தெரிவிக்க வேண்டும். அடுத்தது அவற்றின் மூலம் சிறுவரின் அறிவும் ஆர்வமும் மேம்பட வேண்டும்.
உண்மைகளைக் கூறும் நோக்கத்தை ஏற்கும்போது அதீதக் கற்பனைகளை தம் படைப்பில் புகுத்தி விடவேண்டியதில்லை.
சிறுவர் பெரும்பாலும் இன்று பார்க்கும் கற்பனையான தேவதைக் கதைகள், பயமுறுத்தும் பேய் பிசாசுகள், பூதங்கள், தீவிர அரக்கன் போன்ற கற்பனையான மாமனிதன் பற்றிய பாத்திரங்களை தவிர்த்து விடல் வேண்டும்.
இத்தகைய கோலியாத் மனிதர் போன்ற கதைகள் ஆங்கிலம் மூலம் வந்த கதைகளே. தேவதைகள் பறக்கும் சக்தி கொண்ட மந்திரக் கதைகளும் அவ்வாறே நுழைந்தன. (இவற்றின் திரிபாகவே அதீத மந்திரத்திறமை கொண்ட ஹரிபொட்டர் கதைகளை சிறுவர்க்குத் திணித்து மேல்நாடுகளில் பாராட்டி சந்தைப் பண்டமாக்கியுள்ளனர்.) நமது மரபில் புராண, இதிகாசக் கதைகளே பெரும்பாலும் திரிக்கப்பட்டு சிறுவர்க்கும் சந்தையாக்கப்பட்டுள்ளது. மகாபாரதம், இராமாயணம், பெரியபுராணம், கந்த புராணங்கள் இவற்றிற்கு அத்திவாரமாக வாய்ப்பளிக்கின்றன.
மனிதரே உயர்ந்தவர்
அடுத்தது, அதீதக் கற்பனையான ஈசாப் கதைகள். இவற்றில் பேச்சாற்றல் கொண்ட மிருகங்களும் பறவைகளும் கற்பனைக் கதைகளுக்குப் பாத்திரமாயின. மேல் நாட்டாரிலும் இத்தாக்கம் ஏற்பட்டது வியப்பல்ல. இப் பாத்திரங்கள் கார்ட்டூன் கதைகளுக்குத் தீனியாகி இன்றும் ஆதிக்கம் செலுத்துகின்றன. தமிழில் புகுந்ததும் வியப்பல்ல.
ஆறறிவு படைத்த மனிதனே உயர்ந்தவன். அவன் மூலம் சிறுவர்க்கு உண்மைக்கதைகளை, யதார்த்த சம்பவங்களைக் கூறி நல்லறிவூட்ட முடியும். இத்தகைய உண்மைச் சிறப்பை விட்டு சிங்கம், எலி, நாய், பூனை, கழுதை, எருமை, பாம்பு, கீரி, பறவைகள் மூலம் அறிவூட்டும் கதைகள் எனக் கூறி நாமே நம்மையும் சிறுவர்களையும் ஏமாற்றி வருகிறோம் என்றே கூறவேண்டும்.
வீட்டு மிருகங்கள் பறவைகளைக் குழந்தைகள் விரும்புவது இயல்பே. நாய், பூனை, பசு, கோழி, கிளி ஆகியன குழந்தைகளோடு

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -55
பழகி கீழ்ப்படிவாக நெருங்கிப் பழகுபவை. அதனால் அவை மூலம் அறிவுரைகள் கூற முயல்வது அதீதக் கற்பனையே. அவற்றைப் பேசவைப்பதுடன், ஒடி விளையாடி, சண்டை போடுவது ஆகியன கார்ட்டுன் கதைகளாக திரிக்கப்படுகின்றன.
நரி தந்திரமான காட்டு மிருகம், நாய் நன்றியுள்ள வீட்டுப் பிராணி, கிளிபேசுவது, நரி திராட்சைப் பழத்தை விரும்பும், கீரியும் பாம்பும் சிங்கமும் புலியும் எதிரிகள் என்றெல்லாம் கற்பித்து அவற்றைப் பேசச் செய்வதாக கவிதைகளும், கார்ட்டுன் படங்களும் தயாரிக்கப்படுகின்றன.
இவையெல்லாம் சிறுவர்க்கு அவசியமா, அறிவு தருபவையா, இவற்றுக்கு மாற்றான மனிதக் கதைகள் இல்லையா என்பன உளவியல் ரீதியாக ஆராயப்படல் வேண்டும்.
நிலப்பிரபுத்துவ பண்டைய காலங்களில் சிருட்டிக்கப்பட்ட இக்கதைகள் இன்றைய சூழலில் அதீதக் கற்பனைக் கதைகளே, அறிவூட்டுபவையல்ல. இவைஅறிவை மேம்படுத்தத் தக்கவை என உளவியலாளரால் கூறி நிரூபிக்க முடியுமா?
அழகியல் பற்றி அண்மையில் அறிஞர் ஒருவர் கூறியதை மீண்டும் வலியுறுத்த வேண்டும்.
சிறுவர்க்கும் யதார்த்தமான உணர் மைக் கதைகளை பாடல்களைப் படையுங்கள், அவற்றின் மூலம் சிறுவர்களின் அறிவு மேம்பட வேண்டும். அவை மூலமே அழகியல் என்ற உயர்ந்த நிலையைப் பாடல்களும் கதைகளும் எட்ட முடியும்.

Page 37
ஈழத்துக் குழந்தைப் பாடல்கள்
- கனக. செந்திநாதன்
ஏடு தூக்கிப் பள்ளியில் இன்று பயிலும் சிறுவரே நாடு காக்கும் தலைவராய் நாளை விளங்கப் போகிறார்.
என்று குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடுகிறார். உண்மை. இந்த உண்மையை உணராத பலர் குழந்தைகளைப் பார்த்துப் "படி, படி” என்கிறார்களேயொழிய “என்ன படிக்கிறது” என்பதை அவதானிக்கிறார்கள் இல்லை. "குழந்தை படிக்கிறது” என்பது முக்கியமானது அன்று. "எதைப் படிக்கிறது” என்பதுதான் முக்கியம். பாடசாலைகளிலே படிக்குங் குழந்தைகள் அங்கே படிப்பிக்கும் இலக்கியப் பாடல்கள், அபிநயப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், சிறுகதைகள் என்பவற்றோடு திருப்தி அடைந்து விடுவதில்லை. வீடு திரும்பியதும் அன்னையிடமோ, பாட்டியிடமோ சென்று கதைகளையும் பாடல்களையும் கேட்கப் பிரியப்படுகிறார்கள்.
சிறிது வாசிக்கத் தெரிந்த பிள்ளைகள் அகப்பட்ட புத்தகம், பத்திரிகைகளை வாசிக்கத் தொடங்கி விடுகிறார்கள். கல்லூரிகளில் படிக்குஞ் சிறுவர்கள் பத்திரிகைக் கடைகளிலே தொங்கும் சிறுவர் பத்திரிகைகளையும் அவர்களுக்கென ஏமாற்றி விற்கும் கொலை, கொள்ளை, துப்பறியும் கதைகளையும் ஆர்வத்தோடு படிக்கிறார்கள். சிறுவர்களின் உடல் நலத்தைப் பற்றிக் கவலைப்படும் பெற்றோர்கள் சிறுவர்களின் உளப் பண்பாடு இவற்றாற் பாதிக்கப்படும் என்னும் உண்மையை அறிகின்றார்களில்லை. மேல்நாடுகளிலே இப்படிக் கொலை, கொள்ளைக் கதைகளைப் படித்த சிறுவர்களே பெரும்பான்மையான குற்றங்களைச் செய்கிறார்கள் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் நாடு மாத்திரம் அதற்கு விதிவிலக்கா?

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 57.
எனவே, இளம் உள்ளங்களை மாசுபடுத்தும் இவ்வகை இலக்கியங்களை நாம் அறவே ஒழித்துக்கட்ட வேண்டும். அதற்கு வழி என்ன?
"அவற்றைப் படியாதே" என்று குழந்தைகளிடஞ் சொல்லிப் பயனில்லை. எதைச் செய்யாதே என்று குழந்தைகளிடம் வற்புறுத்துகிறோமோ அதையே விடாப்பிடியாய் ச் செய்வது குழந்தையின் இயல்பு. எனவே, அவர்கள் வாசிக்கக் கூடிய நூல்கள் பலவற்றை நாம் ஆக்கி அவர்கள் கையிற் கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட நூல்கள் குழந்தையின் மனதைக் கவர வேண்டும்; பணி பாட்டை உயர்த்த வேணடும், படைப்புத்திறனை ஊக்க வேண்டும்; கற்பனையைப் பெருக்க வேண்டும்; அறிவை வளர்க்க வேண்டும்; ஆசையைத் தூண்ட வேண்டும்.
குழந்தைகளுக்காக எழுதப்படுங் கதைகளில் அன்பு, சகோதரத் துவம், ஒற்றுமை, பொறுமை, பிறர்க்குதவி செய்யும் பண்பு, நாட்டை நேசிக்குங் குணம் முதலிய விடயங்கள் அழுத்தமாக வற்புறுத்தப்பட வேண்டும். பெரியோர் சரிதங்களும் பிறநாட்டுக் குழந்தைகள் வரலாறும் பிராணிகளின் வாழ்க்கை முறைகளுங் கதைகளைப் போல எழுதப்பட வேண்டும். உப்புச் சப்பற்ற பாடப் புத்தகங்களைப் போல எழுதினால் அவற்றைக் குழந்தைகள் திரும்பியும் பார்க்க மாட்டார்கள்.
எழுத்தாளர்கள் என்று பெயரெடுத் தோர் எல்லோரும் குழந்தைகளுக்கு உரிய முறையிலே எழுதக் கூடியவர்கள் அல்லர். குழந்தைகளுக்கு எழுதுவதற்குத் தனித் திறமை வேண்டும்.
குழந்தைகள் என்று பொதுவாக அழைத்தாலும் வயதுக் கிரமப்படி பாப்பா, குழந்தை, சிறுவன், வாலிபன் என மாணவப் பராயத்தை வகுக்கலாம். ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குத் தெரிந்த சொற்கள், அநுபவங்கள், எண்ணங்கள், இரசிகத் தன்மை என்பன வேறுபட்டனவாகவே இருக்கும். இவற்றை அவதானித்து, "இன்ன பருவத்தை உடைய குழந்தைகளுக்காக இதை எழுதுகிறேன்" என்ற எண்ணத்தோடு எழுத வேண்டும். இப்படியான எண்ணத்தோடு குழந்தைகளுக்கான கதைகளை எப்படி எழுதவேண்டும் என்பதைப் பலர் ஆராய்ந்து கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
முதலாவது பருவம், ஒன்று முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகள். இவர்களை எடுத்துக்கொண்டால் தாம் கேட்கும் கதைகளை எப்படி இரசிக்கிறார்கள் என்பதை இவர்களாற் சொல்ல முடியாது. ஆனால், அண்ணன், அக்கா முதலியோர் சொல்லுங் கதைகள் அதன் மனதிற் பதிவாகிறதென்பது உண்மை. தாலாட்டும்

Page 38
- 58- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
டபிற பாட்டுக்களும் அதன் மனதிற் பதிந்து குழந்தையைப் பண்படுத்துகிறது என்பதையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும்.
மூன்று வயது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகள் தான் கதை கேட்பதில் ஆர்வங்காட்டுபவர்கள். மிருகங்கள், பறவைகள் கதைதான் இவர்களுக்கு அதிகமாகப் பிடிக்கும். மிருகங்கள், பறவைகளின் பேச்சுப் போலச் சொல்ல வேண்டும். சொன்ன சொற்களும் வசனங்களும் திரும்பத் திரும்ப வருவது நல்லது. பஞ்சதந்திரக் கதைகளில் தெரிந்தெடுத்த கதைகளை நாம் உபயோகிக்கலாம். ஆனால், "இந்தக் கதையின் மூலம் நாம் அறிவது என்னவென்றால்.” எனப் போதனையோடு முடிக்கக் கூடாது.
ஆறு வயதுக்கும் எட்டு வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகள் கற்பனை மிகுதியாகக் கொண்டவை. இக்காலகட்டத்திற் கற்பனைக் கதைகளை நாம் சொல்லலாம். கொலை, கொள்ளை, கற்பழித்தல் போன்ற கதைகளை அறவே நீக்கிவிட வேண்டும். தாய் தந்தையரை அவமானப்படுத்துங் கதைகளையுஞ் சொல்லக்கூடாது.
எட்டு வயது தொடக்கம் பன்னிரண்டு வயதுவரை உள்ள காலம் குழந்தையின் வீரதீரச் செயல்கள் நிரம்பிய காலமாகும். இந்தக் காலகட்டச் சிறுவர்களுக்கு எழுதுங் கதைகளில் வேகம் இருக்க வேண்டும். அபாயமும் அதிலிருந்து மீளுந் தீரமும் இருக்க வேண்டும். அஞ்சாமை, அன்பு, அருள் மிளிர வேண்டும். இராமாயண, பாரதக் கதைகள் இப்பருவத்திற்கு ஏற்றவை. வீரர்களின் சரித்திரம், பிறநாடுகளைக் கண்டு பிடித்தோர், அற்புதங்கள் செய்தோர், விஞ்ஞானத்திற் புதுப்புதுக் கண்டுபிடிப்புச் செய்தவர்கள் கதைகளை இவர்கள் விரும்பிப் படிப்பார்கள்.
பன்னிரண்டு வயதுக்குப் பின் சிறுவனின் உடலில் மாறுதல் ஏற்படுவது போல உள்ளத்திலும் மாறுதல் ஏற்படுகிறது. வீட்டைவிட்டு வெளியேறி, தான் படித்தவற்றைக் கண்டறிய முயல்கிறான். தன்னைச் சோதிக்கத் துடிக்கிறான். காதல் உணர்ச்சி அரும்பத் தொடங்குகிறது. இக்காலத்திலே தான் பெற்றோரும் ஆசிரியரும் கவனமாயிருத்தல் வேண்டும். தகுந்தபடி வழிகாட்டல் வேண்டும். இவர்கள் வாசிக்கும் நூல்களிற் கவனஞ் செலுத்த வேண்டும்.
எல்லாம் சரிதான், சொல்வது எளிது. செய்வது தான் கடினம். இப்படியான நூல்கள் - குழந்தைக்கேற்ற நூல்கள் - தமிழில் இருக்கின்றனவா? முக்கியமாக ஈழத்துக் குழந்தைகளுக்கேற்ற கதைகள், ஈழத்து எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை எங்கே இருக்கின்றன? என்று நீங்கள் முணுமுணுப்பதும் எனக்குத் தெரிகிறது.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் ー59
ஒன்றுமட்டும் நிச்சயம். சாகித்திய மண்டலம் குழந்தைகளுக் கேற்ற புத்தகப் பரிசை (1000 ரூபாவை) ஐந்து வருடம் தொடர்ந்து கொடுக்கட்டும். அதன் விளைவு அதிகமாக இருக்கும் என்பது நிச்சயம். குழந்தைகள் எல்லாவற்றிலும் பார்க்கக் கவிதைகளையே அதிகம் விரும்பும் என்பது உண்மை. குழந்தைப் பாடல்கள் சில விசேட தன்மை பொருந்தி இருந்தால்தான் அவர்கள் அதைப் படிப்பர். குழந்தைகளுக்காகப் பாடும் கவிஞர்கள் சில விடயங்களை ஞாபகத்தில் வைத்திருத்தல் நன்று.
இலகுவான சொற்கள். எளிமையான மெட்டு. தாளம் போட்டுப் பாடக்கூடியனவாய பாடல்கள். சூழலிற் கண்டும் கேட்டும் அநுபவிக்கும் பொருள். நல்ல கதைகள்.
வந்த சொற்களே மீண்டும் மீண்டும் வருதல்.
அபிநயம் செய்யக்கூடிய பதங்கள்.
என்பன அவற்றிற் சிலவாகும்.
இப்படியான குழந்தைப் பாடல்களை நாம் படிப்பித்தால், அடிக்கடி ஞாபகஞ் செய்வித்தால், காணும் இடங்களிலெல்லாம் எழுதிப் படங்களுடன் தூக்கினால் சினிமாப் பாடற் பைத்தியத்தை ஒரளவு ஒழித்துக் கட்ட முடியும்.
இவ்வளவு வருடங்களாக நாம் இலக்கிய, அபிநயப் பாடல்களைப் படிப்பிக்கவில்லையா? "அம்மா மெத்தப் பசிக்கிறது" தொடக்கம் அழ. வள்ளியப்பா வரை படிப்பித்துவிட்டோமே என்று நீங்கள் கூறுவது என் காதில் விழுகிறது. உண்மை. ஆனாலும், இன்னும் சிறப்பாக, உண்மையான அக்கறையுடன் செய்ய வேண்டுமென்பது தான் என் ஆசை, அவா. அதற்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் என்ன செய்தல் வேண்டும்?
பழைய பாடல்களிலேயே சுற்றிச் சுற்றி வராமற் புதிய பாடல்களைச் சொல்லிக் கொடுத்தல் வேண்டும். தேசிகவிநாயகம் பிள்ளையோடும், அழ. வள்ளியப்பாவோடும் குழந்தைப் பாடல்கள் முடிந்துவிடவில்லை. பாரதியார் கவிதைகளுக்குப் பிறகு முந்நூற்றைம்பது கவிதைத் தொகுதிகள் வரை வெளிவந்திருக்கின்றன. (350 கவிதைத் தொகுதிகளை நானே வைத்திருக்கின்றேன்.) அவற்றுள் அறுபது நூல்கள் குழந்தைப் பாடல்கள். அவற்றின் அட்டவணையை விரிவஞ்சிக் கொடுக்க முடியவில்லை.

Page 39
-60- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
அவற்றை நீங்கள் தேடிப்பிடித்து, இன்ன வயதுக் குழந்தைக்கு இந்த இந்தப் பாடல்கள் ஏற்றவை என்று அட்டவணை செய்து படிப்பிக்க வேண்டும். ஒவ்வொருவராலும் இப்படிச் செய்ய முடியாவிட்டால், விடுமுறைக் கழகங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். பழைய பாட்டுக்களோடும் வாசிப்புப் புத்தகங்களோடும் திருப்தியடைந்துவிட்டால் சிறுவர்கள் தமது மனப் பூரிப்புக்காகப் பாடும் பாடல்களை நாம் முறியடிக்கவே முடியாது.
குழந்தை இலக்கிய முயற்சிகளில் ஈழம்தான் முன்னணியில் நிற்கிறது. 1859ஆம் ஆண்டிலே அமெரிக்கமிஷன் பாதிரிமார் யாழ்ப் பாணத்தில் பாலியர் நேசன் என்ற சிறுவர் பத்திரிகை நடத்தினார்கள்.
தமிழ்நாடு குழந்தை இலக்கியம், முக்கியமாகக் கவிதைகள் பற்றிச் சிந்திக்கு முன்பே ஈழத்தில் இது தோன்றி வளரத் தொடங்கிவிட்டது.
பல பாடல் தொகுதிகளை ஈழத்துச் சான்றோர்கள் தொகுத்து வெளியிட்டு நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். 1918ஆம் ஆண்டிலே, இற்றைக்கு (1974) 56 வருடங்களுக்கு முன்பே, வித்தியாதிகாரி அவர்களின் விருப்பத்தின் படியும் அனுமதிப்படியும் இலங்கை அரசாட்சியாரின் பிரதான தமிழ் முதலியாராகிய ச. வைத்தியநாதரால் தமிழ்ப் பாலபோதினி என்ற குழந்தைப் பாடல்களின் அபிநயப் பாடல்களின் தொகுதியொன்று தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு இத்துறையில் கால் எடுத்து வைக்க எத்தனையோ வருடங்களுக்கு முன்பே ஈழம் முயற்சித்துள்ளது பெருமைப்படத்தக்க தாகும்.
இந்தத் தமிழ்ப் "பாலபோதினி”யைப் பற்றிச் சில குறிப்புக்கள்
39 ee
தர வேண்டியது அவசியம். "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு", "கைவீசம்மா கைவீசு", "கையின் விரல் ஐந்துமொன்றாய்”, “என்தாயே என்தாயே", "குண்டிடுக்கி குடுகுடுக்கி" முதலிய சிறந்த பாடல்களை உள்ளடக்கிய இருபத்தைந்து பாட்டுக்கள் இந்நூலில் இருக்கின்றன. சில பாடல்கள் எக்காலத்திலும் புளிக்காமல் பாடக்கூடிய அருமையான பாடல்கள். அவற்றை நாம் மீண்டும் வழங்கச் செய்தல் வேண்டும்.
இந்தத் "தமிழ்ப் பாலபோதினி” முயற்சியைப் போலவே வடபெரும்பாக வித்தியாதரிசியாக கே. எஸ். அருணந்தி அவர்கள் இருந்த காலத்தில் ஆசிரிய சங்கங்களின் உதவியுடன் போட்டி யொன்றை ஏற்படுத்தி, 1935இல் பிள்ளைப்பாட்டு என்ற தொகுதியை வெளியிட்டார்கள். "ஆடிப்பிறப்பு”, “கத்தரி வெருளி" முதலிய சோமசுந்தரப் புலவரின் சிறந்த பாடல்களையும் மா.பீதாம்பரம் அவர்களதும் பிற நல்ல ஆசிரியர்களதும் பாடல்களையும் அத்தொகுதியிற் காணலாம்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 6 -
1940ஆம் ஆண்டு தமிழ் ஆசிரியர் பாடசாலைகளிற் படிப்பித்தற்கு மாதிரிச் செய்யுட்கள் என்ற தலைப்போடு ஒரு சிறு நூலை அரசாங்கமே வெளியிட் டது. இத்தொகுப்பிற் பல படித்தரங்களுக்குரிய பாடல்கள் வகுக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன. மிகச் சிறிய குழந்தைகளுக்காக "சாய்ந்தாடம்மா", "அன்புடைய தாயே", "ஓடிவிளையாடு பாப்பா", "பச்சைமலை பவளமலை" என்ற பாடல்கள் காணப்படுகின்றன.
இந்தத் தொகுதிகளை அடுத்து கோப்பாய் மகளிர் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகிய சந்தன நங்கை அவர்களது செந்தமிழ்ச் சிறுவர்களே சேர்ந்து பாடுவோம் என்ற நூலை அவசியம் குறிப்பிட வேண்டும். அருமையான தேவையான முயற்சி அது.
இப்படியான தொகுதிகளை வெளியிட விரும்புபவர்களின் உபயோகத்திற்காக, ஈழத்துக் குழந்தைப் பாடல் நூல்களின் அட்ட வணையை ஈழத்துத் தமிழ்நூல் வழிகாட்டியிற் கொடுத்துள்ளேன். இந் நூல்கள் என்பார்வையுள் அகப்பட்டவை. அகப்படாத சிலவும்இருக்கலாம். குழந்தை இலக்கியத்துக்காக, முக்கியமாக, கவிதைகளுக்காக ஈழத்துப் பத்திரிகைகள் செய்த தொண்டு மகத்தானது. அதற்கு அடியெடுத்து வைத்த பெருமை ஈழகேசரியையும் அக்காலத்தில் அதன் ஆசிரியராக இருந்த சோ. சிவபாதசுந்தரம் அவர்களையும் சேரும். 1939ஆம் ஆண்டிலேயே சிறுவர்களுக்காக ஒரு பகுதியை ஒதுக்கி (கல்வி மலர்) பலரை ஊக்கி எழுத்தாளராக்கினார், சிறப்பு மலர் ஒன்றையும் வெளியிட்டார்.
குறிப்பிடக் கூடிய குழந்தைப் பாடல்களைப் பலர் எழுதியுள்ளார்கள். மா. பீதாம்பரன், சச்சிதானந்தன், திமிலைத்துமிலன், அம்பி, இ. நாகராசன், சோ. தியாகராசன், செ. கதிரேசர் பிள்ளை, வ. இளையதம்பி, பண்டிதர் வீரகத்தி, தம்பு உபாத்தியாயர் முதலியோர் குறிப்பிடத்தகுந்தோர். பத்திரிகைக் குவியலிலுள்ள நல்ல குழந்தைப் பாடல்களைத் தேடிப் பிடித்து வெளியிட்டால் மிக உபயோகமாக இருக்கும்.
ஆசிரிய மாணவர்களே நாங்கள் ஆசிரிய கலாசாலையில் படிக்கும் போது இப்படியான கதைகள், பாடல்களைத் தொகுத்து வைத்திருந்தோம்.
அந்தப் பழக்கம் இன்னும் என்னை விடவில்லை. ஆசிரியர்கள் உபயோகத்துக்காகவுங் குழந்தைகள் உற்சாகமாகப் பாடுவதற்காகவும் ஏற்ற பாடல்களை நான் அவ்வப்போது அட்டவணைகளாகத் தந்திருக்கின்றேன்.
1974

Page 40
தமிழ் இலக்கியப் பரப்பில் ஈழத்துக் கவிஞர்களின் குழந்தைப் பாடல்கள்
- கலாநிதி எஸ். சிவலிங்கராசா -
தோற்றுவாய்
தமிழ் இலக்கியப் பரப்பிலே குழந்தை இலக்கியம் மிகப் பழங்காலந் தொட்டே நிலவி வந்துள்ளது. பொதுவாக இலக்கியத் தோற்றத்திற்காகக் கூறப்படும் காரணிகளையே குழந்தை இலக்கியத் தோற்றத்திற்கான காரணிகளாகவும் கொள்ளலாம். இலக்கியத் தோற்றத்திற்கு வாய்மொழி மரபும் ஒரு வலுவான காரணியாகக் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் குழந்தை இலக்கியமும் வாய்மொழி மரபுவழியாகவே வந்திருக்க வேண்டும். எமது பண்பாட்டிலே "பாட்டி கதை சொல்லும்” மரபும், தாய், பாட்டி முதலானோர் “மழலை கேட்டுப்” பாடும் மரபும் நீண்ட நெடுங்காலமாகவே வழங்கி வருகின்றது. குழந்தை இலக்கியத் தோற்றத்தின் ஊற்றுக் காலாக இவற்றைக் கொள்ளலாம்.
குழந்தைகளுக்காகப் பெரியவர்களாற் பாடப்படும் வாய்மொழிப் பாடல்களையும், குழந்தைகள் கூடிக் குலாவி விளையாடும் போது தாமாக ஆக்கிப் பாடும் பாடல்களையும் நாட்டுப்பாடல்களிலே பரக்கக் காணலாம். எழுத்துருப் பெறாத நாட்டார் பாடல்களிலே பெருமளவுக்குக் குழந்தைப் பாடல்கள் காணப்படுகின்றன.
பழந்தமிழ் இலக்கியங்களிலே குழந்தைகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றனவே யன்றிக் குழந்தை இலக்கியம் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. தமிழிற் குழந்தை இலக்கியம் தொல்காப்பியர்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் 63
காலத்தில் இருந்தே வழங்கி வந்துள்ளது எனக் கருத இடமுண்டு. தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியல் 485 ஆவது நூற்பாவும், அந்நூற்பாவுக்குப் பேராசிரியர் தரும் விளக்கவுரையும் தமிழிற் குழந்தை இலக்கியம் வழங்கி வந்ததென்பதை அரண் செய்கின்றது.
குழந்தை மனம் இசையால் மிகு இலகுவாக ஈர்க்கப்படும் தன்மை வாய்ந்தது என்பர். தாலாட்டு இசையோடு இசைவு படப் பழகிய குழந்தை காலப் போக்கில் ஒத்திசையுள்ள இலகுவான பாடல்களை வாய்விட்டுப் பாடத் தொடங்குவதையும் அவதானிக்கலாம்.
தாய்மார்கள் குழந்தைகளின் குதூகலத்திற்காக,
அம்புலி DIT DIT 6T 6T 6UIT அழகிய சொக்கா கொண்டு வா வா வா
என்று பாடுவதை இன்றும் காணலாம். ஒசைநயமும், வாய்ப்பாட்டு ரீதியாகத் திரும்பத் திரும்ப இடம்பெறும் சொற்களும், கட்புலன்சார் கவினும் குழந்தையின் ஆர்வத்தைத் தூண்டிவிடக் குழந்தை தானாகவே பாடத்தொடங்குவதும் உண்டு.
வாய்மொழி மரபாக முகிழ்த்த குழந்தைப் பாடல்கள் ஏனைய இலக்கியங்கள் போலவே எழுத்திலக்கிய மரபுடன் இணைந்து பயிலத் தொடங்கிய தெனலாம். வாய்மொழிமரபினை முற்றும் விட்டுவிடாது செந்நெறிப் பாங்கையும் உள் வாங்கித் தமிழ்க் குழந்தைப் பாடல்கள் வளரத் தொடங்கின எனலாம்.
தமிழில் தோன்றிய குழந்தைப் பாடல்கள் ஒரளவுக்கு அறிதல் முறையையும், பெரும்பாலும் புத்தி புகட்டுவதனையுமே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தன. தமிழின் ஆரம்ப காலக் குழந்தை இலக்கியங்கள் என்று கூறப்படும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலியன அற நீதிக் கருத்துக்களைப் போதிப்பவையாகவே காணப்படுகின்றன. ஆத்திசூடி அகரவரிசையில் அமைந்துள்ளதை அவதானிக்கலாம். குழந்தை அகரவரிசையை அறிவதனுாடு அறக் கருத்துக்களை அறிய வேண்டும் என்பதும், அறக் கருத்துக்களினூடு அகரவரிசையை நினைவுபடுத்த வேண்டும் என்பதும் ஆத்திசூடியின் பிரதான நோக்கமெனலாம்.
அக்காலச் சூழ்நிலையிலும், கல்வி முறையிலும், கற்கத் தொடங்கும் வயதெல்லையிலும் இக் கருத்துநிலை சாத்தியமானதாக இருந்திருக்கலாம். ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி, கல்வி ஒழுக்கம் முதலியன "அருளிச் செய்யப்பட்டன” என்று கூறும் பொழுதே அதன் பொருட்பரப்பு இலகுவாகப் புலனாகின்றது.

Page 41
-64 ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
தமிழ்க் கவிதை மரபிலே புதுமைகள் செய்த பாரதிகூட "புதிய ஆத்திசூடி" ஒன்றை ஆக்கினான். பழைய ஆத்திசூடியின் வைரமான பாரம்பரியத்திலிருந்து விடுபட முடியாதவனாகவே பாரதியும் காணப்படுகின்றான். பாப்பாப் பாட்டுக்கள் பாட, ஆத்திசூடி மரபினைப் பேணியமை குழந்தைப் பாடல்கள் கொண்டிருந்த மரபிறுக்கத்தினையே காட்டி நிற்கின்றதெனலாம்.
ஈழத்துக் குழந்தைப் பாடல்கள் பாடல்களின் வரலாறு:
யாழ்ப்பாண மன்னர்கள் காலத்திற்கு முந்திய செந்நெறி இலக்கியப் பாரம்பரியத்தை அறிந்து கொள்வதற்கான சான்றுகள் கிடைக்காமை ஈழத்து இலக்கிய வரலாற்றாய்வாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினையாகும். 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிவரை குழந்தை இலக்கிய வகைபற்றி ஈழத்து அறிஞர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை. கல்வித் தேவையைக் கொண்டு 19 ஆம் நூற்றாண்டுத் தமிழறிஞர்கள் சிலர் உரைநடையிற் குழந்தைகளுக்கான சிறிய கதைகளை எழுதியுள்ளனர். ஆறுமுகநாவலர், ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை ஆகியோர் இந்த வகையில் விதந்து குறிப்பிடப்பட வேண்டியவர்கள். 1859 ஆம் ஆண்டு பாலியர் நேசன் என்ற பெயரில் சிறுவர்களுக்கான பத்திரிகை யொன்றை அமெரிக்க மிஷனரிமார் ஆரம்பித்தனர். இப்பத்திரிகையிலும் உரைநடையில் கதைகளும், நீதி போதனைகளும் ஆத்திசூடி முதலானவையும் இடம் பெற்றன வேயன்றிக் குழந்தைப் பாடல்கள் இடம்பெறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. 19ஆம் நூற்றாண்டில் குழந்தைப் பாடல் தொகுதிகள் வெளிவந்தமை பற்றிஅறிய முடியவில்லை. இதே காலப் பகுதியிலே தமிழ் நாட்டிலும் குழந்தைப் பாடற் தொகுதிகள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
குழந்தை இலக்கிய வரலாற்றிலே ஈழநாட்டிற்குச் சிறப்பானதோர் இடமுண்டு, குழந்தைப் பாடல்கள் என்ற உணர்வோடு முதன்முதலிலே குழந்தைப் பாடற் தொகுதி யொன்று 1918 ஆம் ஆண்டு ச. வைத்தியநாதர் என்பவரால் வெளியிடப் பட்டுள்ளது. இக் குழந்தைப் பாடற் தொகுதி பற்றிக் கனக.செந்திநாதன் பின்வருமாறு குறிப்பிடுவர் :
தமிழ் நாடு குழந்தை இலக்கியம், முக்கியமாகக் கவிதைகள் பற்றிச்
சிந்திக்கு முன்பே ஈழத்தில் இது தோன்றி வளரத் தொடங்கி விட்டது. பல பாடற் தொகுதிகளை ஈழத்துச் சான்றோர் தொகுத்து வெளியிட்டு

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -65
நமக்கு வழி காட்டியிருக்கின்றார்கள். 1918 ஆம் ஆண்டிலே வித்தியாதிகாரி அவர்களின் விருப்பத்தின்படியும் அனுமதிப்படியும் இலங்கை அரசாட்சியாரின் பிரதான முதலியாராகிய ச.வைத்தியநாதரால் தமிழ்ப் பாலபோதினி என்ற குழந்தைப் பாடல்களின் அபிநயப் பாடல்களின் தொகுதியொன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு இத்துறையில் கால் எடுத்து வைக்க எத்தனையோ வருடங்களுக்கு முன்பே ஈழம் முயற்சி செய்துள்ளது. பெருமைப்படத் தக்கதாகும்.
தமிழ்ப் பாலபோதினியைத் தொடர்ந்து 1935 ஆம் ஆண்டு க.ச.அருணந்தியவர்களாலே தொகுக்கப்பட்ட பிள்ளைப்பாட்டு எனும் பாடற் தொகுதி விதந்து குறிப்பிடப்பட வேண்டியது. வட இலங்கைத் தமிழாசிரியர் சங்க வெளியீடாக வந்த பிள்ளைப்பாட்டு நூலின் பதிப்புரையிலே சங்கத் தலைவர் சி. சுவாமிநாதன் அத்தொகுப்பின் தேவைபற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
பாலர்களுக்கேற்ற சந்தவின்பம் உள்ள சிறு பாட்டுக்கள் இதுகாறும் திருத்தமான முறையில் தமிழில் வெளிவரவில்லை. இப்படிப்பட்ட பாட்டுக்களைப் பாடக் கூடிய சக்தி பலரிடத்திலிருந்தும், அச்சக்திகளைக் கூட்டி முடிக்கத் தக்க ஒருவர் இன்மையால் அது பயன்படவில்லை. இப்பொழுது வடபெரும்பாக வித்தியாதரிசி பூரீமாந், கே. எஸ். அருணந்தி M.Sc அவர்களின் அபாரசக்தியினால், பலருடைய கவித்துவ சக்தியும் ஒன்று கூட்டப்பட்டுப் பிள்ளைப்பாட்டு என்ற இப் புத்தகமாகப் பரிணமித்திருக்கின்றது. *
ஈழத்துத் தமிழாசிரியர்களை ஊக்குவித்து அவர்களிடையே குழந்தைப் பாடற் போட்டியொன்றினை நடத்திப் பரிசுக்குரியவை யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவையே இப் பிள்ளைப்பாட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியிற் கலந்து கொண்ட பாடல்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு, சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர், நவநீதகிருஷ்ண பாரதியார், பண்டிதர் மகாலிங்கசிவம், பண்டிதமணி, சி. கணபதிப்பிள்ளை முதலானோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அக்காலத்துப் புகழ் பெற்று விளங்கிய தமிழறிஞர்கள் இப்பாடல்களைத் தேர்ந்தெடுத்தமையும் குறிப்பிடக்கூடியது.
குழந்தைகளின் இயல்புகள், சூழல், விருப்பு முதலானவற்றோடு அவர்களுக்கு நற்போதனையையும் வழங்க வேண்டும் என்ற கருத்தினை இதன் தொகுப்பாசிரியர் கொண்டிருந்தார். கல்வியாளனாகவும் உளவியல் கற்றவராகவும் விஞ்ஞான அறிவுடையவராகவும் திகழ்ந்த அருணந்தி இப்பாடற்தொகுதி பற்றிக்

Page 42
-66- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
குறிப்பிடுவது ஈழத்துக் குழந்தைப் பாடல்களின் நோக்கினையும் போக்கினையும் அறிய உதவுகின்றது :
யாம் பாலர்களைப் பயிற்றுங்கால் அவர்களது உளநிலை, விருப்பு வெறுப்புக்கள், ஆற்றல்கள் ஆகியன பொருட்படுத்தப்படாது மழுங்கப்படுகின்றன. பாலர்களது இயற்கைக்குப் பொருந்த அவர்களை நன்கு வளர்ச்சி பெறச் செய்யாததினால் அவர்களது இக்கால சீவியம் பங்கமுறுவதன்றி அவ்விதமே அவர் பிற்கால சீவியமும் பங்கமுறுமென்பது உளநூல் ஆராய்ச்சி வழியாகவும் அனுபவ வாயிலாகவும் யாம் அறிந்துள்ள பேருண்மையாகும் . பாஷையையும் நற்போதனைகளையும் சிறுபராயத்திற் கற்பிக்கும் ஆசிரியர்கள் தாளம், இராகம், அபிநயம் முதலியவற்றில் பாலர்களுக்குப் பெரிய விருப்பம் உணர்டென்றும், தங்கள் சீவியத் தோடு சம்பந்தப்படாத விஷயங்களை அவர் மனம் நாடாதென்றும் உணர்ந்திலரேல் அவ்வாசிரியரது முயற்சியாற் பெறப்படும் பயன், எதிர்நோக்குடைய இருவர் ஒருவழிச் செல்ல முயல்வதனாற் பெறப்படும் பயனை ஒக்குமென்ப."
குழந்தைகளின் மனநிலையை மனங்கொண்டு இப் பிள்ளைப்பாட்டுத் தொகுக்கப்பட்டது என்பதனை மேற்காட்டிய பகுதி தெளிவுபடுத்துகின்றது.
குழந்தைகளின் வயது, அறிமுறைத் திறன், கொண்ணிலை, உளவியல் முதலானவற்றை மனங்கொண்டு பகுதி ஒன்று, பகுதி இரண்டு என இப்பிள்ளைப்பாட்டு பகுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இயற்கைக் காட்சிகள் (அம்புலி, கடல், சூரியன்),
வளர்ப்புப் பிராணிகள் (நாய், பூனை, ஆட்டுக்குட்டி), விழாக்கள், கொண்டாட்டங்கள் (தேர், தீபாவளி, தைப்பொங்கல், ஆடிப்பிறப்பு), விளையாட்டுக்கள் (பந்து, பட்டம் விடுதல்) குடும்ப உறவினர் (அம்மா, அப்பா, பாட்டி) முதலானவையே பெரும்பாலும் இப்பாடற் றொகுதியின் பாடு பொருளாக அமைந்துள்ளன.
அறநெறி போதிக்கும் கதைப் பாடல்களும், பாடல்வழி அபிநயித்து நடிக்கக்கூடிய நாடகத் தன்மையைக் கொண்ட பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
பாடிய கவிஞர்களும் அவர்களின் ஆற்றலும்
அழகுணர்வு, ஆச்சரியம், மகிழ்ச்சி, அறம் முதலானவை மேலோங்கிக் காணப்படும் இப்பாடல்களைப் பதின் மூன்று கவிஞர்கள் எழுதியுள்ளனர். ஈழத்துக் குழந்தைப் பாடல் மரபுக்கு வளமும் வனப்பும் சேர்த்த நவாலியூர் சோமசுந்தரப்புலவரின்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -67.
"ஆடிப்பிறப்பு", "கத்தரி வெருளி" முதலான பாடல்கள் இத் தொகுதியிலே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடக்கூடிய அம்சமாகும். முதலாம்படி (Grade - 1) மாணவர்களுக்கென மா. பீதாம்பரம் எழுதிய (முதற்பரிசு பெற்ற) பாடல்களுள் ஒன்றை வகை மாதிரிக்குச் சுட்டிக் காட்டலாம்.
ஆலமரம் ஆல மரம் அழ கான ஆல மரம் பாலர் நாங்கள் ஆடல் பாடல் பழக நல்ல ஆல மரம்.
ஈழத்துக் குழந்தைப் பாடல் வரலாற்றிலே அருணந்தி தொகுத்த பிள்ளைப்பாட்டுக்கு அழியாததோர் இடமுண்டு என்று துணிந்து கூறலாம். 1930 -40 களில் புகழ்பெற்று விளங்கிய குழந்தைக் கவிஞர்களின் பாடல் மரபே கால தேச வர்த்தகமானத்திற்கேற்ப மாற்றமடைந்து இன்றுவரை ஒடிக் கொண்டிருக்கின்றது.
இக்காலப் பகுதியிலே தோன்றிய ஈழகேசரியும் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றியுள்ளது. இந்தப் பத்திரிகையில் பாலர் பகுதி என ஒன்று ஆரம்பிக்கப்பட்டு, அப்பகுதியிலே பாலர்களுக்கான பல்வேறு விடயங்களும் பிரசுரிக்கப்பட்டன. பெருமளவு குழந்தைப் பாடல்கள் இப்பகுதியிலே இடம் பெற்றமையும் குறிப்பிடக்கூடியது.
ஈழத்துக் குழந்தைப் பாடல் வரலாற்றிலே சோமசுந்தரப் புலவருக்கு அடுத்த தலைமுறையினராக, யாழ்ப்பாணன் கவிஞர் செல்லையா, வேந்தனார், இதம், கனக செந்திநாதன் முதலியோர் விதந்து குறிப்பிடப்பட வேண்டியவர்கள். யாழ்ப்பாணனின்,
ஆட்டுக் குட்டி எந்தன் குட்டி அருமையான சின்னக் குட்டி ஒட்ட மோடி வந்திடுவாய் உனக்கு முத்தந் தந்திடுவேன்.
என்ற பாடலும்,
தம்பி நாங்கள் கோயில் கட்டிச்
சாமி ஒன்றை உள்ளே வைத்து
கும்பிட் டிங்கு பூசை செய்வோம்
கூடி ஆடிப் பாடிக் கொள்வோம்.
எனத் தொடங்கும் அபிநயப்பாடலும், கவிஞர் செல்லையாவின்,

Page 43
- 68- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
அம்மா வெளியே வா அம்மா
அழகாய் மேலே பாரம்மா
சும்மா இருந்த சந்திரனைத்
துண்டாய் வெட்டின தாரம்மா!
என்ற பாடலும், வேந்தனாரின்,
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா பாலைக் காய்ச்சி சீனி போட்டுப் பருகத் தந்த அம்மா.
என்ற பாடலும் இன்று வரை நின்று நிலைப்பனவாகக் காணப்படுகின்றன.
இவர்களைத் தொடர்ந்து இ. நாகராசன், பா. சத்தியசீலன், வீரகத்தி, இராசையா முதலியோர் குழந்தைப் பாடல்கள் எழுதுவதில் அதிக ஆர்வம் காட்டினர். இ.நாகராசாவின் "பட்டுச் சட்டையும்" வீரகத்தியின் "பலூனும்" நின்று நிலைக்கும் தன்மை வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. சத்தியசீலன் சமூக மாற்றத்தினை மனங்கொண்டு “ஐஸ்கிறீம்" கெலிகொப்ரர் முதலான தலைப்புக்களில் குழந்தைப் பாடல்கள் எழுதியுள்ளமையும் குறிப்பிடக்கூடியது.
முற்குறிப்பிட்டவர்களின் சம காலத்தவர்களாக இருந்த போதிலும், இன்று தொடர்ந்து குழந்தைப் பாடல்கள் எழுதுபவர்களாக ஆடலிறை, துரைசிங்கம், சரணாகையூம், கல்வயல் குமாரசாமி, சபா. ஜெயராசா முதலானோரைக் குறிப்பிடலாம்.
சபா.ஜெயராசாவின் பாடல்கள் குழந்தைகளின் உளவியற் பாங்குக்கு ஏற்ப, அவர்களுக்குரிய சொல்லாட்சியுடன் அமைந்துள்ளமை குறிப்பிடக்கூடியது.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் குழந்தைப் பாடல்கள் 1950 களிலேயே தோற்றம் பெறுகின்றது என்று செ. யோகராசா குறிப்பிடுகின்றார். இப்பிரதேசத்தின் குழந்தைக் கவிஞர்களாகத் திமிலைத் துமிலன், ஆரையூர் அமரன், திமிலை மகாலிங்கம், நாகூர் பாவா முதலானோரைக் குறிப்பிடலாம். பெரும்பாலும் பத்திரிகை களிலே இவர்களது குழந்தைப் பாடல்கள் வெளியாகியுள்ளன.
கைலாசபதி கருத்து
பொதுவாகப் பேராசிரியர் க. கைலாசபதி குழந்தை இலக்கியம்
பற்றிக் குறிப்பிடும் கருத்து, ஈழத்துக் குழந்தைப் பாடல்களுக்கும்
பொருந்துவதாக உள்ளது. அவர் கூற்றின் ஒரு பகுதி பின்வருமாறு:

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 69
குழந்தைகளின் வயது, மூளை வளர்ச்சி, மொழித்திறன் ஆற்றல், ஏற்புடைமை இவற்றை யெல்லாம் கவனத்திற் கொண்டு சீரிய பாடல்களை எழுதியோர் பொதுவில் குறைவு. சிறுவர் கவிதைகள் பற்றிச் சொல்லிய குறைபாடுகள் சிறப்பாகக் குழந்தை இலக்கி யத்திற்குப் பொருந்துமாயினும் கூர்ந்து கவனிக்கும் பொழுது இவை தமிழ் இலக்கியத்தில் நிலைகொண்டுள்ள குறைபாடுகளே என்பது புலனாகாமற் போகாது. அறவியல் பண்பாட்டுச் சுமைகளைத் தாங்கும் வாகனமாகவே இலக்கியம் இன்னும் பரவலாகக் காணப் படுகின்றது என்பதற்கு இது மறைமுகமான சான்று ஆகும். "
ஈழத்துக் குழந்தைக் கவிதைகளைத் தொகுத்து நோக்குமிடத்துப்
பேராசிரியர் க. கைலாசபதியின் கருத்து ஒரளவுக்குப் பொருந்துவதாகவே காணப்படுகின்றது. எனினும் அண்மைக் காலத்தில் வெளிவரும் சிறுவர் பாடல்களுக்கு இக்குறைபாடு பொருந்தாது என்றே கூறவேண்டும். நவீன அச்சியந்திரத்தின் செயற்பாடுகள் (கணினி அச்சு முறை) காரணமாக, படங்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் கவர்ச்சி நிறைந்தவையாக வெளிவருகின்றன.
ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றின் பலமான ஒர் பகுதியாகக்
குழந்தைப் பாடல்கள் அமைகின்றன என்ற கருத்தினை விரிவாக ஆராய்தல் வேண்டும்."
குறிப்புக்கள்
1.
செந்திநாதன், கனக, ஈழத்துக் குழந்தைப் பாடல்கள். குரும்பசிட்டி சன்மார்க்க சபை வெளியீடு - 1988 சுவாமிநாதன். சி. பதிப்புரை. பிள்ளைப்பாட்டு - 1935 வ.இ.த.ஆ.சங்க வெளியீடு. இரண்டாம் பதிப்பு: 1941.
மேற்படி, முன்னுரை.
மேற்படி, முன்னுரை. யோகராசா.செ. மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழாமலர் - 1994. கைலாசபதி, க, நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், பக்கம் - 75-76. இக்கட்டுரையில் பாடல் உதாரணங்கள் விரிவஞ்சி விடுவிக்கப் பட்டுள்ளன.
- 15.10.1999 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிலே வாசிக்கப்பட்ட கட்டுரை.

Page 44
ஈழத்துக் குழந்தைப் பாடல்கள்
ஒரு பார்வை - கவிஞர் த. துரைசிங்கம் -
வித்துவான் க. வேந்தனார்
ஈழத்துக் குழந்தைக் கவிதை முன்னோடிகளுள் தமக்கெனத் தனியான முத்திரை பொறித்தவர் வித்துவான் க. வேந்தனார். ஏ(mனயோரின் பாடல்களுக்கு இல்லாத சில சிறப்புக்களை இவரது பாடல்களில் காணலாம். மிக மிக எளிமையான சொற்கள், அழகான சந்தங்கள், அபிநயத்துடன் குழந்தைகள் பாடத்தூண்டும் சக்தி கொண்டவை இவரது பாடல்கள்.
பெற்ற அன்னையின் அன்பைப் பெரிதும் மகிழ்ந்து பிள்ளை பாடுவதாக அமைந்த பாடல் ஒன்றைப் பார்ப்போம்.
அம்மா
காலைத் தூக்கி கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா பாலைக் காய்ச்சிச் சீனிபோட்டுப் பருகத் தந்த அம்மா.
புழுதி துடைத்து நீரும் ஆட்டிப் பூவுஞ் சூட்டும் அம்மா அழுது விழுந்த போதும் என்னை அணைத்துத் தாங்கும் அம்மா. அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி அழிவு செய்த போதும் பிள்ளைக் குணத்தில் செய்தானென்று பொறுத்துக் கொள்ளும் அம்மா.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -71
பள்ளிக் கூடம் விட்ட நேரம் பாதி வழிக்கு வந்து துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித் தோளில் போடும் அம்மா. பாப்பா மலர்ப் பாட்டை நானும் பாடி ஆடும் போது வாப்பா இங்கே வாடா என்று வாரிக் கொஞ்சும் அம்மா.
அன்னையின் அன்பினைக் கொஞ்சுமொழி பேசும் குழந்தை வாயிலாகக் கூறும் கவிஞர் மற்றொரு பாடலில் வீட்டில் வளரும் சின்னப் பூனையொன்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
சின்னப்பூனை சின்னச் சின்னப் பூனை சிறந்த நல்ல பூனை என்னைப் பார்த்துத் துள்ளும் எங்கள் வீட்டுப் பூனை
வட்டமான கண்கள் வண்ண மான செவிகள்
கட்டை யான கால்கள் காட்டும் நல்ல பூனை
உண்ணும் சோறும் பாலும் ஊட்டி வளர்த்த பூனை கண்ணைப் போன்ற பூனை கட்டிக் கரும்புப் பூனை.
வீட்டில் வளரும் பூனையைப் பற்றிய குழந்தையின் அவதானிப்புக்களைப் பாடலில் படம் பிடித்துக் காட்டும் கவிஞர் அதன் தோற்றம், செயல்கள், குழந்தை அதன் மீது கொண்ட பாசம் அனைத்தையும் தெளிவாகக் கூறும் வகையில் பாடல்களை வளர்த்துச் சென்றுள்ளார்.
குழந்தைப் பாடல்களை மட்டுமன்றிக் கவிநயம் மிக்க பல்வேறு பாடல்களையும் வித்துவான் வேந்தனார் பாடியுள்ளார். அவர் நாடறிந்த நல்ல பேச்சாளர். பல பாடநூல்களைப் படைத்தவர்.

Page 45
-72- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி
பாரதி என்றொரு தாமரை பூத்தது பாரத நாடெனும் வாவியிலே - அதன் சீரிதழ் ஆயிரம் செங்கதிர் போலொளி செய்து விளங்குது பூமியிலே.
என்று பாரதியின் புகழ் பாடியவர் முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி. சிறந்த கவிஞரான இவர், கவித்துவம் மிக்க பல பாடல்களை இயற்றியவர். இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர். குழந்தைகளுக்கான பாடல்கள் பலவற்றை எழுதியவர். எடுத்துக்காட்டாக, உறங்கும் குழந்தையைத் தாய் துயில் எழுப்பும் வகையில் அவர் யாத்த பாடல் ஒன்றை நோக்குவோம்.
துயில் எழுவாய் கிளியே
புலர்தல் தொடங்கியதே பொழுது கிளம்பியதே அலர்மா மலர்க்கொழுந்தே - கிளியே அயரா தெழுவிரைந்தே.
கமல மலர் விரியும் கா வெங்கும் புள்ளியம்பும் குமுத மலர் குவியும் - கிளியே கொழுந் தேனே கணிவளராய்.
அன்பே என்ஆருயிரே அன்புக் களஞ்சியமே பொன் பூத்த பூங்கொடியே - கிளியே போதும் துயில் எழுவாய்.
வட்டுக்கோட்டையிற் பிறந்து கொழும்பு சாஹிராக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராய் அமர்ந்து இருபத்தெட்டு ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் தமிழார்வத்தை வளர்த்தவர் முதுதமிழ்ப் புலவர். இலங்கையின் சுதந்திர விழாவையொட்டி நடத்தப்பட்ட மரதன் ஒட்டப் பாடற் போட்டியில் “மணித்தாய் நாடும் மரதனோட்டமும்” என்னும் இவரது பாடல்கள் முதற் பரிசினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -73
தமிழ் நாடு திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தால் 1948 ஆம் ஆண்டிலே முதுதமிழ்ப்புலவர் என்னும் பட்டமளித்துக் கெளரவிக்கப் பெற்ற கவிஞர் இவராவார்.
இவர் பாடநூல்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளார். இவரது புலமைத்திறனை இளைஞர் விருந்து என்னும் கவிதை நூலில் நன்கு காணலாம். சிறுவர்களுக்கான பல்வேறு பாடல்களை இவர் படைத்துள்ள போதிலும், அவற்றிற் பெரும்பாலானவற்றைப் பெறமுடியாதுள்ளமை கவலைக்குரியதே.
அல்வாயூர் மு. செல்லையா
ஈழம் தந்த சிறந்த கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் அல்வாயூர் கவிஞர் மு. செல்லையா குழந்தைகளின் உளங்கவரும் பாடல்கள் பல படைத்தவர். யாழ். மாவட்டத்தில் உள்ள அல்வாய் என்னும் ஊரில் தோன்றிய இவர், 1938 ஆம் ஆண்டு முதல் "ஈழகேசரியில்" "அநு-சுயா” என்னும் புனைபெயரில் நகைச்சுவைக் கட்டுரைகள் பல எழுதிப் புகழ் பெற்றவர். காந்தியக் கொள்கையில் ஊறித் திளைத்த இக் கவிஞர் தமிழ் மரபு வழுவாத வகையில் கவி படைத்தவர்.
இலங்கை வானொலி நடத்திய கவிதைப் போட்டியில் "புதிய வண்டு விடுதூது" பாடித் தங்கப் பதக்கப் பரிசு பெற்ற பெருமைக் குரியவர். கவியரங்குகள் பலவற்றில் கவிபாடிக் கற்றோரின் பாராட்டுதல்களைப் பெற்றவர். கவிஞரின் குழந்தைப் பாடல்கள் அற்புதமானவை. அவை படிக்கும் குழந்தைகளையே பாடவைக்கும் பண்புடையன.
வானத்திலே வெண்ணிலாவைப் பார்த்த குழந்தையொன்று தன் தாயை அழைத்து வினா எழுப்பும் விந்தையினைப் பாருங்கள்.
சந்திரன்
அம்மா வெளியே வா அம்மா அழகாய் மேலே பாரம்மா சும்மா இருந்த சந்திரனைத் துணர்டாய் வெட்டின தாரம்மா? வட்டத் தோசை சுட்டது போல் வானில் இருந்த சந்திரனை துட்டச் சிறுவன் யாருடைத்தான்? சொல்வாய் உண்மை தோன்றிடவே

Page 46
-74- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
மட்டிப் பயலவன் வெட்டிவிட்டு மற்றப் பாதியை எங்கெறிந்தான்? கிட்ட மினுங்கும் கட்டியெல்லாம் வெட்டிய மிச்சத் துண்டுகளோ?
குழந்தை வானத்திற்பார்த்த பிறைச் சந்திரனையும் அதனையொட்டி அக்குழந்தையின் உளத்திற் தோன்றிய ஐயங்களையும் குழந்தையின் நிலையில் நின்று தாமும் குழந்தையாக மாறிக் கவிஞர் இக்கவிதை களைப் பாடியுள்ளமை போற்றுதற்குரியது. பண்பட்ட கவிஞராலேயே இத்தகைய பாடல்களை ஆக்க முடியும் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. பிறை நிலவின் அயலில் மின்னும் நட்சத்திரங்களை, வெட்டிய மிச்சத் துண்டுகளோ? என்று குழந்தை கேட்கின்றது. கவிஞரின் உருவகத்திறனுக்கு இது ஏற்ற உரைகல்லாகத் திகழ்கிறது.
"ஓர் உண்மையான குழந்தைப் பாடல் பெரியவர்களுக்கும் உகந்த பாடலாகிறது" என்னும் சோவியத் அறிஞரின் கூற்றுக்கமைய இப்பாடல் குழந்தைகள் மட்டுமன்றிப் பெரியவர்களும் படித்து இன்புறத்தக்கது எனலாம்.
வளர்பிறை, குமரவேள் பதிகம் ஆகிய நூல்களில் இவரது கவித்திறனை நாம் நன்கு காணலாம்.
பண்டிதர் க. வீரகத்தி
"தங்கக் கடையல்" என்னும் நூல் மூலம் குழந்தைகள் விரும்பும் தங்கமான பாடல்களைத் தந்தவர் பண்டிதர் க. வீரகத்தி. சிறந்த தமிழாசான். இலக்கண இலக்கிய வல்லுநர். கரவெட்டியில் வாணி கலைக் கழகம் நிறுவிக் கல்விப் பணியாற்றியவர். இவரது குழந்தைப் பாடல்கள் எளிமையான சொற்களும் அழகான சந்தமும் கொண்டவை. பிள்ளைகள் தாமாகவே விரும்பிப் பாடிடும் தன்மை கொண்டவை. பந்து விளையாட விரும்பும் பாலன் ஒருவன் அப்பா தந்த பந்தைக் கையில் வைத்துக் கொண்டு பாடுகிறான்.
பந்து பந்து பந்து பந்து பாலர் ஆடும் பந்து வட்ட வட்டப் பந்து வானை முட்டும் பந்து.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -75.
அப்பா தந்த பந்து
அருமை யான பந்து
ஓங்கி ஓங்கி அடிப்போம்
ஒடி ஒடிப் பிடிப்போம்.
துள்ளிப் பாயும் பந்து
மெல்ல ஒயும் பந்து
பாலர் நாங்கள் கூடுவோம்
பந்த டித்து ஆடுவோம்.
பாலர்கள் பந்தாடும் நிகழ்வினைப் பக்கம் நின்று பார்க்கும்
வகையில் அமைந்த இப்பாடல்கள் பிஞ்சு உள்ளங்களைப் பெரிதும் ஈர்க்கும் தன்மையன. இதனாலேயே ஈழத்துக் குழந்தை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகப் பண்டிதர் க. வீரகத்தி பரிமளிக்கிறார். பாலர்களின் உள்ளங்கவரும் பாடல்கள் பலவற்றை அவரது "தங்கக் கடையல்” நூலில் நாம் நன்கு காணலாம்.
செல்வி செளந்தரம் சந்தனநங்கை கந்தப்பு
சிறுவர்கள் பாடி ஆடி ஆனந்திப்பதற்குரிய அரிய பல பாடல்களைப் படைத்தவர்களில் கோப்பாய் அரசினர் மகளிர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் தமிழ்த்துறை விரிவுரையாளராகத் திகழ்ந்த செல்வி செளந்தரம் சந்தன நங்கை கந்தப்பு குறிப்பிடத் தக்கவர். பாலரைப் பயிற்றும் ஆசிரியைகளுக்குப் பாலர் பாடல்களை அறிமுகப்படுத்திய தோடு இலங்கை வானொலி கல்வி ஒலிபரப்பில் "சேர்ந்து பாடுவோம்” என்னும் நிகழ்ச்சியைச் சிறப்புற நடத்தி பாலர்களின் உள்ளங்களில் அழியா இடம் பெற்றவர் இவர். நல்ல இலக்கிய இரசிகர். தமிழ்ப்பணிக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்தவர். குழந்தைகளின் இன்ப உணர்ச்சிக்கு ஏற்றவாறு அவர்கள் பாடி மகிழ்ந்து அனுபவிக்கக் கூடிய சில பாடல்களைத் தொகுத்து, ஏற்ற இசையமைப்புக்களையும் (மெட்டுகள்) அமைத்து “செந்தமிழ்ச் சிறுவர்களே சேர்ந்து பாடுவோம்” என்னும் நூலை 1954 ஆம் ஆண்டிலேயே வெளியிட்டவர்.
இந்நூலில் இவரது பாடல்கள் மட்டுமன்றி ஈழத்து, தமிழகத்துக் குழந்தைக் கவிஞர்களது சுவை மிகு பாடல்கள் பலவும் இடம் பெற்றுள்ளன.
செல்வி செளந்தரம் சந்தனநங்கை கந்தப்புவின் குழந்தைக் கவியாற்றலுக்கு எடுத்துக் காட்டாக இரு பாடல்களை இங்கு

Page 47
-76- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
காண்போம். குழந்தைகள் முன் பள்ளிக்குச் செல்கின்றார்கள். அங்கு
காணும் ஊஞ்சலில் அமர்ந்து பாடுகிறார்கள்.
பள்ளிப் பிள்ளைகள் நாம் கூடும் பாடசாலை பாருமே தள்ளி ஊஞ்சல் ஆடிடுவோமே துள்ளித் துள்ளிப் பாடிடு வோமே.
குழந்தைகள் எதனையும் செய்து பார்க்க விரும்புபவர்கள். அச்சம் என்பது அவர்கள் மனதில் தோற்றுவதில்லை. பிறர் பயமுறுத்தினாலேயே பயம் கொள்வர். மரத்தில் உள்ள பழங்களைப் பறித்துண்ண விரும்பினர் கண்ணனும் கமலனும். மரத்தில் ஏறினர். சிறிய கொப்பொன்றில் இருந்தனர். பழங்களைப் பறித்து உண்டனர். திடீரெனக் கொப்பு முறிந்தது. "தொப்" பென்று நிலத்தில் விழுந்தனர். பக்கத்தே நின்று பார்த்தவர் போல் பாடல் தருகிறார் கவிஞர்.
கண்ணன் கமலன் மரத்தின்மேல் கனி பறித்து உண்டனர் கொப்பு முறிந்து வீழ்ந்திடத் “தொப்"பென்று வீழ்ந்தனர். இத்தகைய பாடல்கள் பலவற்றை ஆக்கியதோடு அவற்றை ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியைகளுக்குக் கற்பித்து அவர்களைப் பாடச் செய்ததோடு பாடசாலைகளிலும் பாடவழி செய்தவர் செல்வி செளந்தரம் சந்தனநங்கை கந்தப்பு. அவரது இப்பணி என்றும் நன்றியுடன் போற்றத்தக்கது எனலாம்.
- நன்றி : "ஈழத்துக் குழந்தைப் பாடல்கள் - ஒரு பார்வை" என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

ஈழத்துச் சிறுவர் அறிவியல் பாடல்கள்
- கலாநிதி செ. யோகராசா -
ஈழத்துச் சிறுவர் இலக்கியத் துறையில் சிறுவர் பாடற்பிரிவே ஒரளவு வளர்ச்சி கண்டுள்ளது. ஈழத்தின் முதற் சிறுவர் பாடல் தொகுப்பு 1918 இல் வெளிவந்ததென்பர் சிலர். எனினும், 1935இல் வெளியான "பிள்ளைப்பாட்டு" தொகுப்பே இத்துறையில் ஆழமான தடங்களை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும், ஏறத்தாழ 75 ஆண்டுக்கால வளர்ச்சி கண்டுள்ள சிறுவர் பாடல் துறையில் சிறுவர் அறிவியல் பாடல் எய்தியுள்ள வளர்ச்சி பற்றிச் சுருக்கமாக நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாறு நோக்கும் போது, குறைந்த எண்ணிக்கையிலான சிறுவர் பாடல்களின் வரவினையே காணமுடிகின்றது. இவ்விதத்தில் சி. அகிலேஸ்வர சர்மா, மு. நல்லதம்பி, மஹாகவி, கவி, கண்டி மு. இராமச்சந்திரன், ச. அருளானந்தம், வ. இராசய்யா, மாவை வரோதயன், த. துரைசிங்கம், ஆடலிறை, மு. பொன்னம்பலம், சிதம்பரபத்தினி, வளவைவளவன் மனோ. பற்குணம், ராணி பூரீதரன், வாகரைவாணன், இக்பால் அலி ஆகிய சிலரே இவ்வேளை நினைவிற்கு வருகின்றனர்.
மேற்குறிப்பிட்ட கவிஞர்களின் பாடல்களை ஆழமாக நோக்கும் போது, மின்சாரம், வானொலி, தொலைபேசி, கணினி, ஈமெயில் முதலான அறிவியல் கண்டுபிடிப்புக்கள் பற்றியே அதிகமாகப் பாடியுள்ளமை புலப்படுகின்றது. இவ்விதத்தில் மின்சாரம் பற்றி முதன் முதல் பாடியவர் மூத்த கவிஞர்களுள் ஒருவராகிய மு. நல்லதம்பி எனில் -மெயில் பற்றி அண்மையில் பாடியவரும் மூத்த கவிஞருள் ஒருவராகிய தில்லைச்சிவனே. இவரது சுவைமிகு பாடல் பின்வருமாறு :

Page 48
-78- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
மரதன் ஒட்ட மெயிலின் பின்னால் குதிரை கோச்சு மெயில் பெற்றோம் குதிரை வேகம் குறைவு என்றே கொண்டு வந்தார் மெயில் ரயில்.
“சீச்சி" எங்கள் அவசரத்தை தெரிந்து கொள்ளாச் சுடுமூஞ்சி கோச்சி விட்டு விமானத் தபால் போட்டோம் விரைந்து போகவே.
விமானம் வீட்டு முற்றத்திலே விசில் அடித்தா மெயில் தரும்? ஞானத் தாலே இருந்த இடத்தில் நாங்கள் செய்தி அறிகிறோம்.
கண்கள் இமைக்கும் நேரத்திலே கணினி தரும் "ஈமெயில்" மண்ணின் இந்தச் சாதனையை மனோ வேகம் என்பாரோ?
விஞ்ஞானிகள் பற்றி எழுந்துள்ள பாடல்கள் சிலவே. இவ்விதத்தில் கண்டி மு. இராமச்சந்திரன் சற்று அதிகமாக எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அவரெழுதிய பாடலொன்று இங்கு இடம் பெறுகின்றது.
மரத்திலிருந்து காய்கனி - அங்கே தரையில் விழக் கண்டே மர்மம் விளக்கிய - மா மனிதன் யாராம்? மர்மம் விளக்கிய மா மனிதன் யாராம்?
ஐய்செக் நியூட்டன் - என்ற அறிவுடையோனே புவியீர்ப் பென்றே - கண்டு புகன்ற மனிதனாம் எப்படி இப் புவி - ஆம் ! எடை எனப் போட்டதோ? அப்படி யல்லேன் - நானறி

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -79
யாததோ கடலே! என்று கூறிய - எம் ,
இனியன் நியூட்டனே!
அறிவியல் விளைவினால் உருவான புகைவண்டி, கப்பல், விமானம் பற்றி அதிக பாடல்கள் எழுந்திருப்பதுணி மையே. எனினும், விண்வெளிக்கப்பல் பற்றிய அத்தகைய ஆக்கங்கள் குறைவு. இவ்விதத்தில் "அப்பலோ - 8" பற்றிய "கவீ” யின் பாடல் குறிப்பிடத்தக்கது. விண்வெளிப் பயண முயற்சி பற்றிய வரலாறு, அதனால் ஏற்படும் பயன் பற்றி விரிவாக எடுத்துரைக்கும் இந்நெடும் பாடல் பின்வருமாறு முடிகின்றது.
"இமயத்தில் புலிபொறித்த பழங்கதையைத் தம்பி இனியேனும் சொல்லாதே இது பெரிய வெட்கம்" பிரபஞ்ச இயக்கம் - கிரகங்கள் - ஐம்பூதங்கள் முதலியன பற்றி உருவான பாடல்களும் அரிதே. இவ்விதத்தில் முற்குறிப்பிட்ட "பிள்ளைப் பாட்டு" தொகுப்பிலுள்ள (அகிலேஸ்வர சர்மாவின்) "பூமியை அறிதல்" என்ற பாட்டே முதலில் எழுந்த ஆக்கமெனலாம். அண்மையில் மனோபற்குணம் எழுதியுள்ள பஞ்சபூதங்கள் பற்றிய பாடல் நாடகபாணியிலுள்ளமை கவனத்திற்குரியது.
இயற்கையின் செயற்பாடுகள் பற்றி எழுந்துள்ள பாடல்களுள், செயன்முறை ஊடாக அவற்றுக்கு விளக்கமளிக்க முற்படும் ச. அருளானந்தத்தின் ஆக்கங்கள் கவனத்திற்குரியவை. எ.டு
கடலும் உப்பும்
"கடற்கரையில் சிறுவர்கள் கலத்தில் நீரை அள்ளினர் அடுப்பில் தீயை மூட்டினர் அதிலே கலத்தை வைத்தனர் அடுப்பின் தீயின் வெப்பத்தால் அசைந்து நீரும் கொதித்தது அடுத்து மூடி அசைந்தது அருமை பாடம் புரிந்தது கொதிக்கக் கொதிக்க நீருமே குறைந்து கொண்டு போனது அதிக வெப்பம் கண்டதால் ஆவி ஆகிப் பறந்தது

Page 49
- 80- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
கலத்தை எடுத்துப் பார்த்தனர் கலத்துள் உப்பைக் கண்டனர் குலுக்கிக் கூத்து ஆடினர் கற்ற பாடம் புரிந்தனர்".
ஆரம்பத்திலே நான் குறிப்பிட்ட அறிவியல் கண்டுபிடிப்புக்கள் பற்றி எழுந்தவை அவற்றின் வரவு, பயன் என்பன பற்றியே பேசுகின்றன. மாறாக, அவை அவ்வாறு செயற்படுவதற்கான காரணம் பற்றி எடுத்துரைப்பனவல்ல. அவ்வாறான பாடல்கள் மிக அரிதாகவேயுள்ளன. எனினும், இ. சிவானந்தன் இப்பொருள் பற்றி பல பாடல்கள் எழுதியுள்ளமையும் "கண்டறியாதது” என்ற தலைப்பிலே அது நூலுருப் பெற்றுள்ளமையும் பலரது கவனத்தை ஈர்க்கத் தவறிய விடயங்களாகும். நாட்டார் பாடல் மெட்டிலே - உரையாடல் பாங்கிலே - அமைந்த அந்நூலின் பாடல்கள் அனைவரும் படித்தறிய வேண்டியவை. அவற்றிலுள்ள பாடல்களைச் சில ஆய்வாளர் சிறுவர்களுக்கேற்றவை என்று கூறினும், அவ்வாறு கூறுவது கடினமே. (கவிஞரும் சிறுவர்க்காக அவற்றை இயற்றவில்லை.) ஆயினும், வாசகர் சிந்தனைக்காக ஒரு பாடலின் ஒரு பகுதி இங்கு இடம் பெறுகிறது.
Goujuubarcofo
கந்தையா: ஆசுப்பத்திரியிலே நான் அடிக்கொருகால் கண்டிருப்பன் நேசுப்பெட்டைகள் வந்து காச்சல் அளப்பதனை கண்ணாடிக் குழாய்க்குள்ளே கச்சிதமாய்ச் செய்து விட்டான் என்னவிதமாக இது வெப்ப நிலை காட்டும்?
வடிவேலு: இரசவிழை இதற்குள்ளே இருப்பதனைப்
பார்த்தாயா? சூடுற்ற பதார்த்தங்கள் விரிவடைதல் அறிவாய் நீ விரிவடையும் பாதரசம் மேலேறிச் சென்றிடுமே.
எவ்வாறாயினும், முன்னர் சுட்டியது போன்று சிறுவர் அறிவியல் பாடல்களின் வரவு குறைவாயினும் கிடைத்துள்ள பாடல்களையும்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -81 -
மேலே கூறியவற்றையும் வைத்துக் கொண்டு பின் வரும் மதிப்பீட்டினை முன்வைக்கலாம்:
(1) கணிசமானவை, வெறும் தகவல் தெரிவிப்பதாகவே உள்ளன.
(ii) சிறுவர் உளவியலுக்கமைவானவை அரிதாகவே காணப்படு
கின்றன.
அதேவேளையில் தமிழ் நாட்டில் இத்தகைய பாடல்கள் அதிகமெழுகின்ற போது இங்கு ஏன் குறைவாக எழுகின்றன என்றொரு கேள்வியும் எழுகின்றது. அதற்கு இவை விடையாகலாம் :
(அ) அறிவியல் கல்வி பரவலடையாமை.
(ஆ) இவ்விடயத்தில் படைப்பாளர்களுக்கு நாட்டமில்லாமை.
(இ) இயற்றுவது கடினமாகவுள்ளமை.
(ஈ) மரபுவழிச் சிந்தனைகளுக்கு ஆட்பட்டுள்ளமை.
எவ்வாறாயினும் வலுமிக்க ஊடகமொன்றின் முக்கியத்துவம் கவிஞர்களால் உணரப்படாமையும் எழுதப்படாமையும் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவின் வெளிப்பாடாகவுள்ளது. இது பற்றி ஆழ்ந்து சிந்திப்பது அவசியமானது.
இறுதியாக, அறிவியல் பாடலொன்றின் "அறிவியல்" நோக்கும், வெளிப்பாட்டு முறைமையும் எவ்வாறிருக்க வேண்டுமென்பதைத் திறம்படக் காட்டும் பாடலொன்றினை இங்கு தருவது பொருத்தமானது. மு. பொன்னம்பலம் எழுதிய அது பின்வருவது:
அம்புலியின்பூபாலன்
பூபாலா பூபாலா எங்கே போனாய்? பூமிக்கு அப்பாலே நானும் போனேன்.
பூமிக்கு அப்பாலே எங்கே போனாய்? அம்புலியைத் பார்த்துவர நானும் போனேன்.
அம்புலியில் என்னென்ன பார்த்து வந்தாய்?
பார்ப்பதற்கு அங்கொன்றும் இல்லை. ஒளவைப் பாட்டி கூட, நான்போக ஒளிந்து கொண்டாள்.
பாட்டி என்று நம்முன்னோர் எதனைச் சொன்னார்?

Page 50
- 82
ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
அம்புலியின் பாறைகளைக் கண்டு சொன்னார். அம்புலியில் நீ என்ன அறிந்து வந்தாய்? அந்தரத்தில் நான் நின்றேன் கொஞ்சநேரம். காற்றில்லை நீரில்லை உணவுமில்லை கதைப்பதற்கும் ஆள்கூட அங்கே இல்லை. ஆளில்லா ஊருக்கா இத்தனை போட்டி? ஆளிருக்கும் ஊர்களுக்கு உதவி செய்வோம். அப்புறம் நாம் அம்புலிக்கும் பயணம் செய்வோம்.

சிறுவர் உளப்பண்பும் இலங்கையில் தமிழில் சிறுவர் இலக்கியமும்
- ஏ. இக்பால் -
பாலர் இலக்கியம், பிள்ளை இலக்கியம், முன் குமரர் இலக்கியம் எனச் சிறுவர் இலக்கியத்தைப் பிரித்தாண்ட போதும், பொதுவாகக் குழந்தை இலக்கியம், பால்யர் இலக்கியம், சிறுவர் இலக்கியம் எனப் பேசப்படுவதையே அநேகம் அறிகிறோம். குறிப்பிட்ட ஒரு பராயத்தையுடைய வயதினரையே இப்பெயர்கள் அடையாளப்படுத்தும். இலங்கையில் தமிழில் சிறுவர் இலக்கிய முயற்சிகள், சிறுவர் இலக்கிய வெளிப்பாடுகள் பற்றிப் பேசப்படுவதற்கு முன், பால்யப் பருவத்தினரை வயதடிப்படையில் பிரித்து அப்பிரிவினருடைய உளவியல் பணி புகளைக் கணக்கெடுத்தல் மிக அவசியமாகும். இலங்கையில் கற்றல் தொடர்புடன்தான் சிறுவர் இலக்கியம் முளையிடுவதையும் கல்வி வளர்ச்சியுடன் சிறுவர் இலக்கியம் ஒன்று படுவதையும் அவதானிக்கலாம். ஆதலால், பாடசாலைப் பாட நூல்களில் பால்ய வயதினரின் பாடநூல்கள் எவ்விதம் அமைய வேண்டும் என்பதைக் கணக்கெடுத்தல் முக்கியமானது.
குழந்தை பிறந்து ஆறு திங்கள் வரை ஒரே வகையான நடத்தைக் கோலங்களையே அது கொண்டிருக்கும். பருவத்துக்குப் பருவம் இந்நிலை மாற்றமடையலாம். ஆனால், பொதுப்பண்பில் வேறுபடுவ தில்லை. ஆறு திங்கள் வரை குழந்தைகளின் நடத்தைக் கோலம் மாறிக் கொள்ளும் இயல்பு. ஆறாம் வருடம் வரையும் நடக்கும் என்பதையும் மனத்திலிருத்தல் வேண்டும். ஆனால், குழந்தைகளின் முழுத்திறனும் மூன்றாம் வயதிலேயே வெளிப்படும். அப்பருவக் குழந்தைகள் தாயின் பேச்சைவிடத் தம் பேச்சையே உரத்துச் சத்தமிட்டு ஒலிப்பர். குழந்தை இலக்கியம் தனது பணியைத் தொடங்கும் பருவம் இதுதான்.
ஒன்று தொடக்கம் மூன்று வயதுவரை இளங்குழவிப் பருவம் எனலாம். இப்பருவத்தினரிடம் அழுதல், பிறரிடம் எண்பது சதவீதம்

Page 51
r 84- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
அன்பு காட்டல், நாணம் கொள்ளுதல், தாமே பேசுதல் இவை யாவும் ஒரே நிலையில் நிற்கும். இரண்டு வயதுக் குழந்தை செயற்பாடுகளிலேயே கவனம் செலுத்தும். அவைகளே அதன் பேச்சு, மொழி என ஊகிக்கலாம். குழந்தை கைகளை நீட்டுவதே அதன் மொழிக் கூறுகளில் ஒன்றுதான்.
மூன்று வயது தலைமைத்துவத்தை நாடும் வயது. நேசித்தல், கோபம் கொள்ளுதல், கொடுத்தல், கொடுக்க மறுத்தல் ஆகிய இயல்புகளைப் புறம் காட்டும் மொழியென நாம் கொள்ளலாம். இப்பண்பை மூன்று வயதுக் குழந்தை பெறுகிறது. இக்காலத்தே முரண்பாடுகள் எழும்போது, மடைமாற்றம் செய்வது அவசியம். மூன்று வயதினர் காணல், கேட்டல், வெளிப்படுத்தல் மூலம்தான் அவர்களது ஆசைகளை நிறைவேற்றுகின்றனர். தான் கற்ற பாடல்களின் ஒசைநயத்துடன் பொருளற்ற பாடல்களை உண்டாக்கிப் பாடுவார்கள். கற்பனைக் கதைகள், பாடல்கள் இவர்களுக்கு மிக விருப்பமுடையன. உருவாக்கிக் கொள்ளும் சிந்தனை ஆற்றல் இவர்களுக்கில்லை.
நான்கு தொடக்கம் பன்னிரண்டு வயது வரை முதிர்குழவிப் பருவம் எனலாம். நான்கு வயதுப் பாலகன் கபடமற்ற மனமுடையோன். பல செயல்களைச் செய்வார்கள். கதைகளைக் கூறும்போது புழுகுவார்கள். அளவுக்கு மிஞ்சி அலம்புவார்கள். பயமுறுத்திப் பேசுதல், ஒவ்வொரு செயலுக்கும் காரணம் காணுதல் போன்ற வேலைகளை அதிகமாகச் செய்வார்கள். இந்த வயதுப் பாலகர்கள் பாலர் கீழ்ப் பிரிவில் தான் கல்வி கற்பார்கள். 1996களுக்கு முதல் இலங்கையில் இவ்வகுப்பிலிருந்தே கல்வி ஆரம்பமானது. இப்போது இவ்வயதினர் முன்பள்ளிக்குரியவர். அரசினரோ முன்பள்ளி நடத்துவதில்லை. ஆதலால், வீடு, பிரத்தியேகப் பாடசாலைகளே இவர்களுக்கு இப்போது தஞ்சம் எனலாம். இவ்விரு இடங்களிலும் இவர்களது வயது, உளப்பண்பு நோக்கிக் கல்விச் செயற்பாடுகள் நடக்குமா? என்பது கேள்விதான்.
ஐந்து வயதுப் பாலகர் நான்கு வயதினரைவிடச் சற்று முதிர்ந்த உள்ளமுடையவர்கள். காட்சிகளிலே மிகுந்த கருத்தைச் செலுத்துவார்கள். சிந்தித்த பிற்பாடே இவர்கள் கதைப்பார்கள். பாடசாலையில் பயின்ற பாடல்களை மகிழ்வுடன் வீட்டிலும் வெளியிலும் பாடிக் காட்டுவார்கள். எளிய கருத்துக்களை எளிமையான சொற்களில் மீண்டும் மீண்டும் வரக்கூடியதாகப் பாடி மகிழ்வார்கள். வேடிக்கையாக மறுமொழி கூறுவதும், அதனை மற்றவர் ஏற்பதும் இவர்களுக்கு இன்பம் பயப்பனவாகவிருக்கும்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 55
இவர்களுக்கு நான்கு முதல் ஆறு வரிகளுக்குட்பட்ட பாடல்கள்தான் ஏற்றவை. எழுத்து, உரைநடையாகில் இரண்டு அல்லது மூன்று சொற்களில் உள்ள தொடர்களே ஏற்றவையாகும். ஒவ்வொரு பந்தியும் நான்கு வரிகளுக்குக் கூடக்கூடாது. இவ்வயதுக் குழந்தைகள் 2250 சொற்களஞ்சியப் பெருக்கமுடையோர் என உளவியலாளர் கருதுகின்றனர்.
ஐந்து வயதுக் குழந்தைக்கு அச்சம் தரும் மாயாஜாலக் கதைகள் தேவையில்லை. ஒழுக்கமுறைத் தார்மீகங்களை நேரடி அணுகுமுறையாய்க் காட்டுதல் வேண்டும். இந்த வயதுதான் இலங்கையில் தற்போது பாடசாலையில் சேரும் வயது. ஆறு வயதுக்குப் பின் அச்சம் தரும் கதைகளைச் சொல்லலாம். அறிவியல் அறிஞர்கள் பற்றிய வரலாற்றுச் சிறப்புக்களை எடுத்துக்கூறி ஊட்டி வளர்க்கும் பருவம் ஆறாவது வயதுதான். ஆறாவது வயதில் குழந்தைகள் எல்லாவகையிலும் மாற்றமடைந்தவர்களாகக் காணப்படுவார்கள். இவர்களது உள்ளக் கிடக்கையை அறிதல் கடினமானதாக இருக்கும். பொதுவாகக் குழந்தைகளின் முழுக் குணங்களும் ஐந்தாண்டு முடிவதற்குள் அநேகமாக முற்றி விடுகின்றன. \,
குழந்தை இலக்கியத்திற்கான வயதெல்லையை ஐந்து படிகளாக வகுக்கலாம்.
(1) O - 3 (2) 3 - 5 (3) 5 - 8 (4) 8 - 12 (5) 12 - 14
என்பவைகளே அப்படிகள். ஆறு தொடக்கம் எட்டு எனும் மூன்றாம் படிநிலையில் அவர்களுடைய கவனம் விளையாட்டில் தான் அதிகமிருக்கும். நூல்களைத் தேடிப் படிக்கும் ஆர்வமும் எழக்கூடிய வயதிது. செய்திகளை அறிவது, பெரிய அளவிலான படங்களைப் பார்ப்பது, மனப்பாடம் செய்வது இயல்பாக எழும் வயதிது. இவர்களது சொற்களஞ்சியப் பெருக்கம் 3600 எனும் அளவுக்கு எழும்.
நாம் கவனத்தில் கொண்ட சிறார்கள் நான்கு வயது தொடக்கம் பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்களே. இவர்கள் பொதுவாக ஆராய்ச்சி மனப்பான்மை உடையவர்கள். கற்பனை செய்வதில் வல்லவர்கள். இவர்களது கற்பனை யுலகம் துன்பமற்ற காந்தர்வ " சுவர்க்க உலகமே. ஐந்து - பன்னிரண்டு எனும் இவ்வேழு ஆண்டுகளிலும் இன்ப உலகத்தையே இவர்கள் தரிசிப்பார்கள். கண்கண்ட காட்சிகள் யாவற்றையும் இவர்கள் நினைவிலேயே வைத்திருப்பார்கள். இந்த எல்லை நான்காவது படிக்குள்ளானது.

Page 52
-86- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
இப்படிக்குள் நிற்பவர்கள் கருத்துக்களை அமைத்துக்கொள்வார்கள். நன்றாகப் படிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். சுற்றுச் சூழலை அறிந்து பழகும் தன்மையுடையவர்கள். ஆறு முதல் பத்து வரிகள் கொண்ட பாடல்களைப் படித்து முடிக்கும் திறமை பெற்றவர்கள். விளையாட்டுப் பாடல், வரலாற்று நிகழ்ச்சிகளில் விருப்பமுடையவர்கள். உயர்ந்த பணி பாட்டை வளர்க்க வேண்டுமெனும் ஆர்வம் அரும்பத் தொடங்கும் வயது இது. இக்காலத்தேதான், உயர் பண்புகளைக் கிளறி வளர்க்கக் கூடிய பாடப் புத்தகங்கள் இவர்களுக்கு அமையவேண்டும். இவர்களுக்கான இலக்கியங்களைக் கற்பனையைத் தூண்டி இன்பம் பயக்கும் கதைகள், பாடல்கள், வசன ரூபத்திலும் கவிதை வடிவிலும் எழுதப்பட வேண்டும். பன்னிரண்டு வயதுக்குட்பட்ட தூய மனத்தவராகிய பால்யர் கனவிலும் நனவிலும் காணுங் காட்சிகள் அற்புதக் காட்சிகள் தான் என்பதை அறிதல் மிக அவசியமே முக்கியமானதொன்று, இவர்களது வாசிப்புப் புத்தகங்கள் எளிமை, இனிமை, மகிழ்ச்சி பயக்கக் கூடியனவாக மிளிர வேண்டும். குழந்தைகளின் புலன்களுக்கு எட்டாத விடயங்களை அவர்களுக்குப் புரியுமென்று நினைத்துப் புத்தகத்திலே அமைத்தல் அறவே கூடாது. ஐந்து வயது நிரம்பாத குழந்தைகளுக்கும் அதற்கு மேல் ஆறு ஏழு வயதுச் சிறுவர்களுக்கும் விளக்கமானதும், தெளிவானதும், கண்களைக் கவரக் கூடியதுமான படங்கள் வரைந்து காட்டப்பட வேண்டும். குழந்தைகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் கதைகள்தான் குழந்தைகளுக்குரிய நூல்களில் இடம்பெறுதல் வேண்டும். ஈசாப் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், துன்பியல் முடிவும் துரோகச் செயல்களுமுள்ள கதைகள் சேர்க்கப்படவே கூடாது. அநேகமாக எங்கள் தலைமுறையினர் இந்தக் கதைகளையே படித்தோம். இக்கதைகளின் செயற்பாடுகள் எங்களது தலைமுறையினர் மத்தியிலே பிரதிபலிப்பதை இப்பொழுது ஆய்வு செய்யலாம்.
ஐந்தாவது படிநிலையிலுள்ள பன்னிரண்டு பதினான்கு வயதுக்குட்பட்டோர் கருத்துக்களைச் செயற்படுத்த முற்படுவார்கள். பொருள் நயம், இனிய சந்தங்களைச் சுவைத்து இன்புறுவார்கள். உயர்ந்த கற்பனை வளமும் புத்தம் புதிய எண்ணங்களையும் உடையவர்களாகத் திகழ்வார்கள். இவர்களுடைய பேச்சில் நகைச்சுவை இழையோடிக் காணப்படும். மனதுக்கு இன்பம் பயக்கும் செய்திகளைப் பேசுவதில் மிகுதியாக நேரத்தைக் கழிப்பார்கள். வீரதீரக் கதைகளையும், மாயாஜாலம், துப்பறியும் கதைகளையும் விரும்பிப் படிப்பார்கள். உடல் வேகமாக வளரும் இப்பருவத்தில் நல்ல பணிகளுக்காக இவர்களது மனவெழுச்சியை மடைமாற்றம்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -87.
செய்தால் எதிர்கால நற்பணிகளுக்கு இவர்களைப் பயன்படுத்தலாம். இக்காலத்தேதான் நேர்மையாகப் போராடும் பண்புகளையும், நல்வழி, நீதிநெறி பற்றிய இலக்கியங்களைப் படிக்கத் தூண்ட வேண்டும். நாற்பது வரிப் பாடல்களைப் பாடி முடிக்கும் தன்மையுடையவர் களாகத் திகழ்வார்கள். எதையும் திணிக்காமல் இப்பருவ நிலைப் படிகளுக்கேற்ப நூல்களைத் தேர்ந்து வழங்கினால் ஆர்வத்துடன் விரும்பிப் படிப்பார்கள்.
குழந்தை வளரும் சூழலின் மொழிதான் குழந்தை மொழி. சூழ்நிலை விரிவுக்கேற்ப சொற்களஞ்சியம் பெருகும். குழந்தை இலக்கியம் படைப் போர் குழந்தை பயன்படுத்தும் மொழி இயல்பையும் பிராந்திய வழக்குகளையும் அறிய வேண்டியது முக்கியமெனலாம். சொல்லமைப்பு, தொடர்நடை, கட்டொழுங்குள்ள நூல்களே முதிர் குழந்தைப் பருவத்தினருக்கு ஏற்றவையாகும். எந்தக் குழந்தை படிக்கப் போகின்றதோ அவர்களின் வயது வரம்புக்குரிய மொழித் திறனை அறிதல் அவசியம். வயது வரம்புக்கேற்ற கருப்பொருள், சொற்கள், தொடர்கள் என்பனவற்றைக் கையாள்தல் அவசியம். உயர்தனிச் செம்மொழி அறிமுகப்படுத்த வேண்டும். கொச்சையான வழுஉச் சொற்களைக் கையாளக் கூடாது. முதிர் குழந்தைப் பருவம் முடிவுற்றால் இளமைப் பருவம் தொடங்கிவிடும். குழந்தைகளின் உலகுக்குள் புகும்போது வளர்ந்த வயதுவரைத் தேடிச் சேர்த்த பட்டறிவுகள் அனைத்தையும் நீக்கிவிட்டுத் தாமும் குழந்தையாக அவர்களை உற்று நோக்க வேண்டும்.
குழந்தைக் கவிஞர் ஒருவர் அகன்ற அறிவுக் கண்களால் குழந்தைகளைப் பார்க்க முயற்சிக்கக் கூடாது. குழந்தைக்குரிய அறிவு, ஆர்வம் மிக்க ஆசைக் கண்களால் பார்த்து இலக்கிய மழலை மொழியை மொழிதல் வேண்டும். குழந்தைக்கெனத் தேர்ந்து தள்ளுவன; தள்ளிச் சொல்லுவன; சொல்லும் ஆற்றல் உடையவர் களாற்றான் குழந்தை இலக்கியம் படைக்க முடியும்.
குழந்தையின் மனவளர்ச்சியுடன் ஒட்டியும், குழந்தையின் குருத்து மூளை தாங்குவனவற்றை ஆக்கியும், குழந்தையின் மொழிக்குரிய தன்மையை அறிந்தும், தன் மனநிறைவுக்கல்லாது குழந்தையின் மனநிறைவுக்கேற்ப இலக்கியம் படைப்போரே குழந்தை இலக்கியப் படைப்பில் வெற்றிபெறுவார்கள். அநுபவத்தின் மூலம் கற்கும் முறை கல்வியில் இடம்பெறுவதற்கு மேற்கூறியவைகள் மிகப் பயனளிக்கும்.
இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பால்ய வயதினர்கள் ஒரே சமூகத் தன்மை உடையவர்களல்லர். சூழல், பண்பாடு, கல்வி

Page 53
- 88. ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
வளர்ச்சி ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்பட்டவர்கள். இவற்றை யெல்லாம் கணக்கிலெடுத்து இன்னும் விரிவாகச் சிந்தித்து குழந்தைகளின் எண்ணக்கரு (concept) வளரக் கூடியதாக குழந்தை " சிறுவர் இலக்கியம் இருக்க வேண்டும்.
சிறுவர்களுக்கான பாடநூல், அதில் சேர்க்கப்படும் குழந்தை இலக்கியம் பற்றி நான் ஓர் ஆசிரியனாக இருந்தபடியால் சுருக்கமாகக் கூறியுள்ளேன். சிறுவர் இலக்கியம் இலங்கையில் எவ்விதம் வளர்ந்துள்ளது, அதன் வளர்ச்சி எதுவரைக்கும் சென்றுள்ளது என்பதை இனிப் பார்ப்போம்.
இலங்கையில் ஒர் அதிசயம், பட்டப்பின் படிப்பில் கல்வி டிப்ளோமாச் செய்த எந்த ஓர் ஆசிரியரும் ஆரம்பக் கல்வி பெறும் சிறார்களுக்குக் கற்பிப்பதில்லை. கல்வித் திணைக் களமும் இவ்விசயத்தில் அக்கறை காட்டியதாகத் தெரியவுமில்லை. மேல்நாடுகளுக்கும் இலங்கைக்குமுள்ள பாரிய வித்தியாசமிது. ஆகையினால், சிறுவர் இலக்கிய முயற்சிகள் மேல்நாட்டில் வளர்ச்சியுற்ற காலத்தைச் சற்று நோக்குவோம்.
குழந்தை இலக்கியம் பற்றி ஆய்வு செய்த மேல் நாட்டறிஞர்கள் சிலரை இங்கே பார்ப்போம்:
1. ஜோன் ஹென்றி பெஸ்டலோஸி 1746 - 1826 2. ஜோன் பிரட்றிக் கேர்பார்ட் 1776 - 1841 3. பிரட்ரிக் புரோமஸ் (ஜேர்மனி)
4. மரிய மொன்ரிசூரி அம்மையார் 1870 - 1952 5. ஜி. ஸ்டான்லிஹோல் 1844 - 1924 6. அல்பிரட்பினே (பிரான்ஸ்) 1857 - 1911 7. ஜீன்பியாஸே 1896 - 198O 8. புறுநூனர் 1915 - 1982
இவர்களது ஆய்வுகளின் பயன் குழந்தை இலக்கியம் மிகவும் வளர்ச்சி பெறக் காலாகியது என நாம் துணியலாம். உலகமே உற்று நோக்குமளவுக்கு இவர்கள் செயற்பட்டனர்.
இலங்கையில் தமிழில் குழந்தை இலக்கியம் / சிறுவர் இலக்கியம் வளர்வதற்குக் கிறிஸ்தவர் வருகை மிக முக்கியமெனலாம். நாங்கள் ஒளவைப் பிராட்டியையும், உலக நாதனையும், மகாகவி பாரதியையும் குழந்தை இலக்கிய முன்னோடிகள் எனக் கொண்டாலும், இவர்கள் வளர்ந்தவர்களுக்கு குழந்தைகளுக்கான அறிவுறுத்தலைச் சொன்னதாகவே கொள்ள முடியும். இலங்கையில்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -89
“பாலதீபிகை” எனும் கிறிஸ்தவ சமயம் சார்ந்த சிறுவர் சஞ்சிகையே ஒரளவு சிறுவர் இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தது. என்றாலும், தமிழ்நாட்டுக்கு எவ்வளவோ காலத்துக்கு முந்தியே 1918இல் இலங்கை அரசாட்சி முதலியாரான ச. வைத்தியநாதர் என்பவர் முதன் முதல் “குழந்தைப் பாட்டுத் தொகுதி" ஒன்றை வெளியிட்டுச் சிறுவர் இலக்கியத்தில் காலடி ஊன்ற இலங்கைத் தமிழரைத் தூண்டினார். இதையிட்டு நாம் அதிகம் பெருமைப் படலாம். இதற்கு முன்புதான் ஆறுமுக நாவலரது "பாலபாடம்" (1822 - 1879) சிறுவர்களுக்கான கல்விசார் நூலாகச் சமயம் சார்ந்து வெளியானது. இம்முயற்சி போலவே அறிஞர் சித்தி லெவ்வை அவர்களும் தான் நிர்மாணித்த பாடசாலைகளுக்கான தமிழ் முதற் புத்தகம், அறபுத் தமிழ் முதலாம், இரண்டாம் புத்தகம் ஆகியவற்றை எழுதி வெளியிட்டார். இப் புத்தகங்கள் யாவும் "கற்கும் பாலகர்களுக்கேற்ற சிறப்புடையன” எனப் பாராட்டி 1891இல் வித்தியாபதியின் நிர்வாக அறிக்கை விதந்துரைத்தது.
சிறுவர்கள் அறிவை வயதுக்கேற்ப விருத்தி செய்யவும், பொழுது போக்கை இன்பமாக இயல்பாக்கவும், கலையார்வம், அதில் ஈடுபாடு, அவற்றில் இரசனை என்பன ஏற்படவும் குழந்தை இலக்கியம் சமூகத் தேவையாகின்றது; நாட்டின் தேவையும் ஆகின்றது. இக்கல்வித் தேவையை நோக்கி வடபெரும்பாக வித்தியா தரிசியாகக் கடமையாற்றிய கே.எஸ். அருணந்தி அவர்கள் சிறுவர் பாடல் போட்டியொன்றை நடத்தினார். அப்போட்டி பாலர் இலக்கியம், பிள்ளை இலக்கியம் என இரு பிரிவுகளாக நடந்தது. பாலர் இலக்கியப் போட்டியில் முதலாம் இடத்தை மா. பீதாம்பரமும், இரண்டாம் இடத்தை சி. அகிலேச சர்மாவும் மூன்றாம் இடத்தை சோமசுந்தரப் புலவரும் பெற்றனர். பிள்ளை இலக்கியப் போட்டியில் முதலாவது இடத்தை சோமசுந்தரப் புலவரும், இரண்டாம் இடத்தை மா. பீதாம்பரமும், மூன்றாம் இடத்தை எஸ். தங்கசாமியும் பெற்றனர்.
இப்போட்டியில் கலந்த பாடல்களை 1935இல் "பிள்ளைப் பாட்டு” எனத் தொகுத்து வெளியிட்டனர். இதைத் தொகுக்கக் காலானவர் கே. எஸ். அருணந்தி அவர்கள்தான். தொகுக்கும் முயற்சியில் மா. பீதாம்பரம் அதிக ஈடுபாடு கொண்டார். வட இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் இத்தொகுதியை வெளியிட்டது. இப்போட்டியில் கலந்த பாடல்களைத் தெரிவு செய்யும் தேர்வுக்குழு மிகக் காத்திரமானதெனலாம். சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர், நவநீத கிருஷ்ணபாரதி, பண்டிதர் மகாலிங்கம், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஆகியோரே அக்குழுவில்

Page 54
-90- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
இருந்தவர்களாம். சோமசுந்தரப் புலவரின் "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை", வேந்தனாரின் "காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா", கனக. செந்திநாதனின் "ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி” ஆகிய பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. சிறுவர் உலகில் இன்றுவரை இப்பாடல்கள் சிறகு கட்டிப் பறந்தன. பறக்கின்றன எனக் கூறமுடியும்.
அக்காலம் "உதய தாரகை”, “இந்து சாசனம்" ஆகிய பத்திரிகைகள் பாலர் வட்டாரம் எனும் பகுதியைத் தொடங்கின. "ஈழகேசரி" பாலர் அரங்கு எனப் பாலர் பகுதியைத் தொடங்கியது. இவற்றிலெல்லாம் சிறுவர் இலக்கியங்கள் வெளிவரத் தொடங்கின. இப்பகுதியில் எழுதியவர்கள் பிற்காலத்தில் இலங்கையின் பிரபல ஆக்க எழுத்தாளர்களாக மாறிய வரலாறு தெளிவானது. சிறுவர் இலக்கிய கர்த்தாக்களாக பிரபல்யம் வாய்ந்தவர்களின் பெயர்ப்பட்டியல் தருவது இங்கு முக்கியம். சோமசுந்தரப் புலவர், மா. பீதாம்பரம், வேந்தனார், கனக. செந்திநாதன், கவிஞர் செல்லையா, இ. நாகராசன், பஞ்சாட்சர சர்மா, கே. எஸ். ஆழ்வாப்பிள்ளை, ச. சின்னத்தம்பி, மு. நல்லதம்பி, க. வீரகத்தி, அல்வாயூர் செல்லையா, செ. யோகநாதன், அம்பி, பா. சத்தியசீலன், கவிஞர் ஐயாத்துரை, எம்.ஸி.எம். வூபைர், சாரணா கையூம், ச. அருளானந்தம், திமிலைத் துமிலன், திமிலை மகாலிங்கம், நாகூர் ஏ. பாவா, ஏ. இக்பால். ஆரையூர் அமரன் இப்படி இன்றுவரைத் தொடரலாம். இப்பெயர்ப்பட்டியல் இன்னும் நீளும். நீண்டபோதும் இவர்களை அடையாளப்படுத்தும் ஆக்கங்களுமுள்ளன. க. வீரகத்தியின் "தங்கக் கடையல்", அம்பியின் "அம்பி பாடல்", துரைசிங்கத்தின் "கதைப்பாடல்", ச.அருளானந்தனின் “காட்டில் கலவரம்","காகமும் தம்பியும்" கல்வயல் குமாரசுவாமியின் "பாப்பாப் பாடல்கள்” என்பன குறிப்பிடத்தக்க படைப்புக்களாகும். இலங்கையின் தேசியப் பத்திரிகைகளான "தினகரன்", "வீரகேசரி", "தினக்குரல்", "நவமணி போன்ற பத்திரிகைகள் சிறுவர் பகுதியைத் தொடர்ந்து வாராவாரம் நடத்துகின்றன. சிலவேளை சிறுவர்களுக்குகந்ததாக அவற்றில் வரும் ஆக்கங்கள் இல்லா விட்டாலும், சிறுவர் இலக்கிய கர்த்தாக்களை உருவாக்கும் பணிக்கு வித்திடுகின்றன எனலாம். தொலைக்காட்சியில் "சிறுவர் அரங்கு”, வானொலியில் "வானொலி மாமா”, “சிறுவர் மலர்” என்பவை குழந்தைப் பாடல்களையும், நாடகங்களையும் விளை வித்திருக் கின்றன.
1960க்குப் பின்னெழுந்த சிறுவர் இலக்கியங்களை கணக்கெடுத்தல் அவசியமெனலாம். 1962இல் சிறுவர்களுக்கான

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 9
பயங்கரக் கதையை "மந்திரக் கண்ணாடி” எனத் தில்லை நடராசன் வெளியிட்டார். 1964இல் வெற்றிவேல் விநாயக மூர்த்தி "பாலர் பாமாலையை" வெளியிட்டார். 1970இல் அரசு வெளியீடு "நமது செல்வம்” சிறுவர் நூலை வெளியிட்டது. “ஓடிப் போனவன்", "விநோதனின் சாகஸம்", "செத்துப்போன சின்னத்தம்பி", "ஜாதகக் கதைகள்” மொழிபெயர்ப்பு என்பன நவசோதி, கதிரேசன் என்பவர்களால் வெளியாகின.
செ. யோகநாதன் பத்து நூல்களுக்கதிகமாகக் குழந்தைகளுக்காக எழுதியிருக்கின்றார். 512 பக்கங்களைக் கொண்ட குழந்தைக் கதைக் களஞ்சியம் அழ. வள்ளியப்பாவின் முன்னுரையுடன் வெளிவந்தது. சூரியனைத் தேடி வந்தவன் 400 பக்கங்களைக் கொண்டது. அற்புதக் கதைகள், அதிசயக் கதைகள், தெரியுமா உங்களுக்கு?, கண்ணன் என் கண்ணன் ஆகிய நூற்களை நர்மதா வெளியிட்டிருக்கின்றது. சின்னஞ்சிறு கிளியே - கவிதை, நாடகம், கதை நூலை 1986களில் இந்திய மத்திய அரசு பரிசுக்காகத் தேர்வு செய்தது. தங்கத்தாமரை, அன்பான சிறுவர்களே, வடிவில்லாத வாத்துக்குஞ்சு என்பன செ. யோகநாதனின் சிறந்த படைப்புக்களெனலாம். விஞ்ஞானம் சார்ந்த அறிவியல் சிறுவர் நூல்களை மகேசன் வெளியிட்டிருக்கிறார். 1986களில் குணராசா “சூரியனின் கதை" விஞ்ஞான ரீதியில் வெளியாக்கினார்.
“எமது நாட்டில் கிடைக்கும் சிறுவர்களுக்கான நூல்களில் சிறுவர்களைப் பற்றி எழுதுகிறார்களேயன்றி, சிறுவர்களுக் கெழுதுகிறார்களில்லை" எனப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் ஒரு சிறுவர் நூல் வெளியீட்டின் போது இறுக்கமாக விமர்சித்தார். இவரைப் போல் கல்வியியலாளரான கு. சோமசுந்தரம் அவர்கள் "சிறுவர்களுக்காக எழுதப்படும் நூல்களில் சிறுவர் உளவியல், அவர் நாட்டம், சூழல் ஆகியவை பிரதிபலிப்பதாக இல்லை" என்கிறார். இவர்களின் கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள முடியுமோ இல்லையோ சிந்திக்கத் தூண்டுகின்றார்களல்லவா? இச்சிந்தனை வெளிப்பாடு இப்பொழுது வரும் சிறுவர் இலக்கியங்களில் தொனிப்பதைக் காணலாம். வயது நோக்கிச் சிறுவர் இலக்கியம் எழுதப்பட வேண்டும் என்பதை அதிகம் சுட்டிக் காட்டியவர் சபா. ஜெயராசா அவர்கள்தான். இவரது குழந்தை இலக்கிய ஆய்வுகள் கணக்கில் எடுக்கப்பட வேண்டியவைகளே. ஆனால், அண்மையில் வெளியான அவரது குழந்தை உளவியல் நூல் விளங்கிக் கொள்ளுதல் கஷ்டமானதே!
சிறுவர்களுக்கான நாடகத்தை “சிறுவர் சல்லாப நாடகம்” என முதன்முதலில் சோமசுந்தரப் புலவர் மேடையேற்றினார். பேராசிரியர்

Page 55
-92 ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
சி. மெளனகுரு 1986களில் யாழ்ப்பாணம் டொன்பொஸ்கோவில் சிறுவர்களைக் கொண்டே “தப்பி வந்த தாடி ஆடு” எனும் நாடகத்தை அரங்கேற்றினார். "ஸ்கூல் தியேட்டர்" பற்றிய நுணுக்கமறிந்தவர் பேராசிரியர் மெளனகுரு அவர்கள். இந்நாடகம் பாலேந்திராவினால் லண்டனில் பல இடங்களில் மேடையேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இதே மோடியில் "வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள்" நாடகத்தையும் பாலேந்திரா மேடையேற்றியிருக்கின்றார். இதற்கு முன்பே 1979களில் சண்முகலிங்கத்தின் "கூடி விளையாடு பாப்பா" நாடகத்தைப் பெரியவர்களைக் கொண்டு தாசீஸியஸ் சிறுவர்களுக்காக மேடையேற்றினார். இதுவும் சிறுவர்களுக்கான அரங்கு உத்திகளில் ஒன்று. தற்காலம் சிவசேகரம் பிரேமளாவின் "சிறுவர்களுக்கான நாடகங்கள்”, “பாட்டும் கூத்தும்" என வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதிலுள்ள நாடகங்களும் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்வியியல் கல்லூரி, தர்கா நகரில் போதனாசிரியராக இருக்கும் பொ. சத்தியநாதன் சிறுவர்களுக்கான நாடகங்களை நவீன அரங்கு முறையில் ஆசிரிய போதனாளர்களைக் கொண்டே நடித்துக் காட்டி வெற்றி பெற்றிருக்கின்றார். அவரது இம்முயற்சி நாடளாவிய விதத்தில் பரவ வேண்டியது அவசியம். வி. என். எஸ். உதயச் சந்திரன் வானொலி சிறுவர் மலரில் சிறுவர் நாடகங்களை எழுதி நடிப்பித்தார். அப்பயன்பாட்டிற்குரிய நாடகங்களை “சிறுவர் நாடகங்கள்" என நூலாக்கியுமுள்ளார். இவரது “மரத்தடி நிழலில்" எனும் சிறுவர் உரையாடல் தமிழுக்கு வந்த முதல் உத்தியெனலாம். இந்த உத்தி சிறுவர் இலக்கியத்தில் இன்னும் கையாளப்படவில்லை. அண்மையில் வெளியான இவரது “பாட்டும் படமும்” சிறுவர் பாடல்கள் நூல், வயதுக்கேற்ற பாடல்களை அடங்கியது.
1963களில் வெளியான சாரணா கையூமின் "சிறுவர் பாடல்களும்”, எம்.ஸி.எம். ஸுபைர் அவர்களின் “குழந்தைப் பாடல்கள்" நூலும் குறிப்பிடக்கூடிய முக்கியம் வாய்ந்தவை. மூன்றாந்தர ஆசிரியர் வழிகாட்டியில் இவர்களது பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளமை குறித்துக்காட்ட வேண்டிய ஒன்றே. 1995களில் 1998களில் வெளியான "சந்தனக் கிண்ணம்", "புதிய பூக்கள்” வ.இராசையா அவர்களால் புனையப்பட்டு வெளியிடப்பட்ட சிறுவர் பாடல்களாகும். இந்நூல்கள் உளவியல், மொழி என்பனவற்றைச் சுட்டிக்காட்டி எழுந்தனவாகும். தேசியக் கல்வி நிறுவகத்தின் கண்டி மத்திய நிலையத்தில் 1999 - 2002 கல்விமாணிப் பட்டக் கற்கை நெறிக்குட்பட்டோர் “முத்துப் பரல்கள்” என சிறுவர் பாடல்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 93r
தொகுதியொன்றை வெளியிட்டுள்ளனர். எம். ஜே. நஜீபுல்லாஹற் இதைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார். கல்வி உளவியலுடன் சம்பந்தப்பட்டவர்களால் எழுதப்பட்ட சிறுவர் பாடல்களிவை. இவ்வித வரவே கல்வி உலகத்திற்கு அவசியமானது. "ஆயிரம் கொக்குகள்", "அமுதனின் உலகம்" எனும் சிறுவர் கதை நூல்களை யோ. சத்தியன் எனும் இளைஞர் தந்துள்ளார். "அமுதனின் உலகம்" ரஷ்ய மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுதராஜ் என்பவரும் தற்காலம் சிறுவர்களுக்கான கதை இலக்கியம் படைக்கின்றார். அவரது “காட்டில் வாழும் கரடி நாட்டுக்கு வந்த கதை" குறிப்பிடத்தக்கது. அண்மையில் வெளியாகியுள்ள அநேக சிறுவர் இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் எப்படி எழுதக்கூடாதோ அதற்கு உதாரணங்களாகும். அவற்றை வெளியில் காட்ட நான் விரும்பவில்லை. சிறுவர் இலக்கியம் அறிந்தோர் சோதித்துப் பார்க்கலாம். இதில் புதினம் என்னவென்றால், இந்நூல்களுக்கு முன்னுரை வழங்கி ஏற்றிப் போற்றியிருப்போர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள். அவர்களின் சிறுவர் இலக்கிய அறிவுக்கும், உளவியல் அறிவுக்கும் இந்நூல்கள் தான் எடுத்துக்காட்டோ என வியக்கச் செய்கின்றது. எனவே, இவ்விஷயத்தில் தாரதம்மியம் நோக்க வேண்டுமென பேராசிரியர்களைக் கேட்க வேண்டிய கடமைப்பாடுடையேன்.
குழந்தை இலக்கிய நூல்கள் ரஷ்ய மொழியிலிருந்தும் ஆங்கில மொழியிலிருந்தும் நிறையத் தமிழுக்கு வந்தன. தற்போது தரமான நூல்களின் வரவு குறைவானதே. மொழிபெயர்ப்பு நூல்கள் குறைவாகவேயுள்ளன. 1982களில் "மார்கா" நிறுவனம் "சமுத்திர உலகம்” The Ocean World மொழிபெயர்ப்பு நூல் வெளியானது. இவ்வித நூல்களைத் தற்காலம் காண்பது அரிதே."குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே” எனும் டாக்டர் ஹேய்ம் ஜி இனோட்டோவின் நூலை தமிழில் எஸ். கே. விக்னேஸ்வரன் தந்துள்ளார். மூன்றாவது மனிதன் வெளியீடான இந்நூல் குழந்தை இலக்கியம் ஆக்குவோருக்கும் பெற்றோருக்கும் மிகப் பயன் உடையது.
சிறுவர் இலக்கியம் படைப்போர் பாடசாலைத் தொடர்பு அல்லது பாலரைக் கற்பிக்கும் ஆசிரியர் தொடர்புடையோராய் இருத்தல் அவசியம். பாலகுமாரன் பிள்ளை என்பவர் கூறுகின்றார்: "மாஸ்டர் சிவலிங்கத்தின் குழந்தைத்தன இலக்கியத்தைப் படித்த எனது மகனை வைத்தியசாலையில் சேர்க்க வேண்டி வந்தது" என்று. எனவே, சிறுவர்களைச் சிறுவர் இலக்கியம் படைப் போர்

Page 56
- 94- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
காப்பாற்றியாக வேண்டும். தற்காலம் வரும் அநேக சிறுவர் இலக்கியம் பதினான்கு - பதினெட்டு வயதினருக்கே அநேகம் படைத்திருக்கின் றார்கள். இதனைக் கவனத்தில் எடுத்து குழந்தைக்குரிய குழந்தை இலக்கியக் களஞ்சியமொன்றைக் குழந்தைக் கல்வியில் கரிசனையுடையோர் ஆக்குதல் அவசியம்.
ஒலிநாடாக்களிலும் சிறுவர் பாடல்கள் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடக்கூடியதே. வித்தியா பூரீ ரங்கநாதன் கர்நாடக இசையில் சிறுவர் பாடலை வெளியிட்டுள்ளார். இலங்கை வானொலி தமிழ்ச் சேவை ஒன்று வெளியிட்டுள்ளது. குழந்தைப் பாட்டு எழுதமுடியாதவர்களது பாடல்களும் இதிலுள்ளது. யாழ்ப்பாணம் பொன்னம்மாவும் வெளியிட்டுள்ளார். 1985களில் தேசிய கல்வி நிறுவகத்தின் இசைப்பகுதி வெளியிட்டுள்ளது. எம்.எச்.எம். ஷம்ஸ் "வண்ணத்திப் பூச்சி" என வெளியிட்டுள்ளார். இலங்கை வானொலியும், தேசியக் கல்வி நிறுவனத்தின் இசைத்துறைப் பகுதியும் வெளியிட்டுள்ளவைகள் சிறுவர் பாடலைப் பிரதிபலிப்பதாக உள்ளன. மற்றவை உச்சரிப்பு, பொருள் முரண், சொற்கடினம் என்பனவற்றை அதிகம் கொண்டுள்ளன.
தற்காலம் சிறுவர்களை நோக்கி வெளிவரும் சஞ்சிகைகளின் தொகை அதிகம். 1975களில் "கண்மணி", "மதனன்" சஞ்சிகைகளும், 1980களில் "அர்ச்சுனா”வும் யாழ்ப்பாணத்தில் வெளிவந்தன. ஓரளவு அவை தரம் பேணி நின்றன. தற்காலம் அரசாங்கப் பரீட்சைகளை நோக்கிப் பணம் பண்ணும் நோக்குடன் அதிக சஞ்சிகைகள் வெளிவருகின்றன. "பிஞ்சு”, “அணில்", "காற்றாடி", "பூங்கா" என்றெல்லாம் படையெடுப்பதைக் காணலாம். "பூங்கா" வைத் தவிர மற்றவற்றை எடைபோடுதல் கடினம். "அரும்பு” எனும் சிறுவர் அறிவியல் ஏடு ஐந்து வருடங்களுக்கு மேலாக வெளிவருகின்றது. அதன் 30ஆவது இதழ் இப்போது வெளியாகிவிட்டது. இது ஒரு தரமான சிறுவர் சஞ்சிகை. சிங்களத்தில் சிறுவர் பத்திரிகைகள் அதிகம் வெளிவருகின்றன. "விஜய” எனும் சஞ்சிகை மிகத் தரமானதெனலாம். எம். டி. குணசேனா சிறுவர்களுக்காக ஒவ்வொரு நாளும் ஒரு நூலை வெளியிடுகின்றது. ஒரு வருடத்தில் ஐந்தாறு நூல்களாவது தமிழில் சிறுவர்களுக்காக வெளிவர முயற்சி எடுக்க வேண்டும். "ஆப்த நண்பர்கள்” எனும் சிங்கள மொழியிலுள்ள சிறுவர் நாவலை சிட்னி மாகஸ் டயஸ் எழுதியுள்ளார். இந்நாவலை எம். எஸ்.பாஹிம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இம்முயற்சி போல் சிங்கள மொழியிலுள்ள சிறுவர் இலக்கியங்களைத் தமிழிலும், தமிழ்மொழிச் சிறுவர் இலக்கியங்களைச் சிங்களத்திலும் பரிவர்த்தனை செய்வது மிக அவசியமெனலாம்.

இலங்கையில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி ஒரு கண்ணோட்டம்
- கலாநிதி செ. யோகராசா -
சிறுவர் இலக்கியம் பற்றிச் சிந்திப்பவர் பலரும் சிறுவர்களது வயது, மனவளர்ச்சி, மொழியாற்றல் என்பவற்றிற்கேற்ப சிறுவர் இலக்கியம் அமைய வேண்டும் என்று வற்புறுத்தத் தவறுவதில்லை. ஆயினும் தமிழில் சிறுவர் இலக்கியம் பற்றிய இத்தகைய பார்வை நவீன கல்வி வளர்ச்சியுடன் நவீன இலக்கிய முயற்சிகளுடன் தொடர்புபட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. தமிழில் சிறுவர் இலக்கியமானது குறிப்பாக சிறுவர் கவிதையைப் பொறுத்த வரையில் இந்நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்திலிருந்து ஆரம்பமாகின்றது எனலாம்.
அதே வேளையில் தமிழ் இலக்கியப் பாரம்பரியநிலை நின்று நோக்கும் போது சிறுவர் இலக்கிய முயற்சிகள் நீண்டகால வரலாறு கொண்டன. அவை இருவகைப்பட்டன: (1) நாட்டார் இலக்கிய மரபு சார்ந்தவை (ii) எழுத்து இலக்கிய மரபு சார்ந்தவை. நாட்டார் இலக்கிய மரபில் செல்வாக்குற்று விளங்கிய சிறுவர் பாடல்களும் - விளையாட்டுப் பாடல்கள், வேடிக்கைப் பாடல்கள், விடுகதைகள் முதலியன - சிறுவர் பாடல்கள், கதைகள் சேகரிப்பதில் ஆர்வங்காட்டாமை விசனத்திற்குரியதாகும். எழுத்து இலக்கிய மரபில் செல்வாக்குப் பெற்று வந்துள்ளவை ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலியன என்பதை நாமறிவோம். பாரம்பரிய கல்விமுறையில் இவை பெற்றிருந்த செல்வாக்கு, இன்றைய நவீன கல்வி முறையிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக சிறுவர் பாடநூல்களிலும் சிறுவர் இலக்கிய முயற்சிகளிலும் அது ஏற்படுத்திய - ஏற்படுத்தி வருகின்ற - பாதிப்பு கணிசமானது என்பதனை மனத்திலிருத்திக் கொண்டு நவீன சிறுவர் இலக்கிய முயற்சிகள் பற்றிக்

Page 57
-96- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
கவனிப்போம். வசதி கருதி பின்வருமாறு வகைப்படுத்தி நோக்குவது பயனுடையது. (அ) சிறுவர் கவிதை (ஆ) சிறுவர் கதை (இ) சிறுவர் நெடுங்கதை (ஈ) சிறுவர் நாடகம் (உ) சிறுவர் சஞ்சிகை.
-2-
சிறுவர் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் முதல் முயற்சி இலங்கையில் 1918 ஆம் ஆண்டில் நடைபெற்றது. திரு. சு. வைத்தியநாதர் தமிழ்ப்பாலபோதினி என்ற குழந்தைப் பாடல்கள், அபிநயப் பாடல்களின் தொகுதியை வெளியிட்டார். எனினும் 1935 இல் வெளியான பிள்ளைப் பாட்டு என்ற தொகுப்பு முயற்சியே பலராலும் பாராட்டப்படுவது. அவ்வேளை கல்வி அதிகாரியாக விளங்கிய க. அருள்நந்தி என்பவரது முயற்சியினால் வெளிவந்த அத்தொகுப்பு மூலம் சோமசுந்தரப்புலவர் பிரபல்யமடையலானார். (மா. பீதாம்பரம், சி.அகிலேஸ்வரசர்மா, ஜே. எஸ். ஆழ்வாப்பிள்ளை முதலானோரும் இக்காலத்தில் அறிமுகமானவரே) புலவரது கவிதைகள் குழந்தைகளுக்கேற்றவாறு எளிமையும் இனிய சந்தமும் ஒசையும் கொண்டமைந்தன. யாழ்ப்பாணப் பிரதேச மண்வாசனை யையும் கமழச் செய்தன. அதே வேளையில் அரும்பதங்களும் கடினமான சொற்புணர்ச்சியும் கொண்ட கவிதைகள் அவரால் எழுதப்பட்டுள்ளன. அல்வாயூர் மு. செல்லையா, மு.நல்லதம்பி முதலானோரும் இக்காலகட்டத்தில் சிறுவர் கவிதைகள் எழுதத் தொடங்கினர். இவர்களுக்கும் வேந்தனார், யாழ்ப்பாணன் முதலானோருக்கும் அதிகமெழுதாவிடினும் ஈழகேசரி களமமைத்துக் கொடுக்கின்றது. மறுமலர்ச்சிக் குழு சார்ந்த மஹாகவி, செ. கதிரேசப்பிள்ளை ஆகியோரது சிறுவர் கவிதைகள் எளிமை மிகுந்தும் போதனை குறைந்தும் காணப்படுகின்றன.
ஐம்பதுகளில் எழுதத் தொடங்கியோருள் கவீ (பண்டிதர். க. வீரகத்தி) குறிப்பிடத்தக்கவர். அவரது கவிதை ஒன்று யப்பான் சக்கரவர்த்தியின் பரிசினைப் பெறுகின்றது. மேற்கூறிய கவிஞர் பலரும் யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவராவர். மட்டக்களப்பு, மலையகம் முதலான பிரதேசங்களிலும் இக்காலப் பகுதியில் சிறுவர் கவிதை முயற்சி அரும்புகின்றது. மட்டக்களப்பின் முன்ன்ோடியாக வித்துவான் கமலநாதன் விளங்குவதும் ஆரையூர் அமரனின் கவிதைகள் அம்புலிமாமாவில் வெளிவந்தமையும் கவனத்திற்குரியன வாகின்றன. திமிலைத் துமிலனும் ஆரையூர் அமரனும் தமிழகத்தின் சிறந்த குழந்தைக் கவிஞராக அழ. வள்ளியப்பாவின் பாராட்டுக்களைப் பெற்றவர்களாகின்றனர். மலையக முன்னோடிகளுள் ஸ0 பைர்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -97
குறிப்பிடத்தக்கவர். ஆயினும் அறுபதுகளளவில் சிறுவர் கவிதை எழுதத் தொடங்கிய காத்தான்குடி நாகூர்பாவா மட்டக்களப்பு மண்வாசனை கொண்ட கவிதைகள் தந்தவர் என்ற விதத்தில் விதந்துரைக்கப்பட வேண்டியவர். 1965 இல் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த கனியமுது என்ற கவிதைத் தொகுப்பு, "பிள்ளைப்பாட்டு" தொகுப்பிற்கு அடுத்ததாக வெளியான பல கவிஞர்களது கவிதைகள் அடங்கிய தொகுப்பு என்ற பாராட்டிற்குரியது. விதிவிலக்கான ஒரு சில கவிஞர்களது கவிதைகள் தவிர எழுபதுகளின் நடுக் கூறுவரை வெளியான பெரும்பாலான சிறுவர் கவிதைகள் பின் வரும் பண்புகளைப் பெற்றிருந்தன.
(1) அறப்போதனை அவற்றின் அடிநாதமாக ஒலித்தன. (2) பிரசாரம் வெளிப்படையாக அமைந்திருந்தது. (3) உளவியல் நோக்கு அனுசரிக்கப்படவில்லை. (4) இலக்கண விதிகள் முதன்மை பெற்றிருந்தன. (5) உள்ளடக்கம் குறிப்பிட்ட வட்டத்துள்ளும்.
(எ-டு: மிருகங்கள், பறவைகள், விளையாட்டுகள், குடும்ப
உறவுகள், அறம், பண்பாடு) வெளிப்பாட்டு முறை ஒரே பாணியிலும் காணப்பட்டன.
3
இனி சிறுவர் கதை வளர்ச்சி பற்றிக் கவனிப்போம். பாடநூல்களைக் கவனத்தில் எடுப்பதாயின் ஆறுமுகநாவலரது பால பாடங்களில் இடம் பெற்றுள்ள கதைகள் முதன் முயற்சி எனலாம். தவிர்த்து நோக்கும் போது "மறுமலர்ச்சிக் காலத்து" பஞ்சாட்சர சர்மா இலங்கையின் சிறுவர்கதை முன்னோடியாகின்றார். சிறுவர் கதைகள் எழுதியவர் என்பதை விட, சிறுவர்களுக்கு கதை சொல்லி வருபவர் என்ற விதத்தில் மாஸ்டர் சிவலிங்கம், விஞ்ஞானிகள் பற்றிய வாழ்க்கை வரலாற்றினை எழுதியவர்கள் என்ற விதத்தில் இளம்பிறை ரஹ்மான், இரா. சந்திரசேகரம், குறள்வழிக் கதைகள் எழுதியவர் என்ற விதத்தில் ந. மகேசன் முதலான சிலரே இலங்கையின் சிறுவர் கதாசிரியர் என்று கூறத் தக்கவர். இதற்குக்காரணம் யாது? பலரும் நன்கறிந்த சமயக் கதைகள் (உபநிடதக் கதைகள், இராமகிருஷ்ண பரம ஹம்சரது கதைகள்) இதிகாசக் கதைகள் (இராமாயணம், மகாபாரதம்)

Page 58
ஈழத்தில் சிறுவர் இலக்கியம் வளர்ந்துள்ளதா?
- கலாநிதி செ. யோகராசா -
சில குறிப்புகள்
சிறுவருக்கான இலக்கியம் பலவகைப்படுமாயினும், பின்வரும் வகையிலான சிறுவர் இலக்கியங்களே இங்கு கவனிக்கப் படுகின்றன.
சிறுவர் பாடல் சிறுவர் கதை சிறுவர் நெடுங்கதை சிறுவர் அறிவுநூல் மொழிபெயர்ப்புகள்
சிறுவர் சஞ்சிகை
மேலும் மேற்கூறிய வகையான சிறுவர் இலக்கிய முயற்சிகள் ஒவ்வொன்றும் பின்வரும் விதங்களில் இங்கு நோக்கப்படுகின்றன.
* ஒவ்வொரு துறையிலும் எத்தகைய வளர்ச்சி காணப்படு
கின்றது?
* வளராமைக்கான காரணங்கள் யாவை?
* அடுத்த கட்டம் எத்தகையது?

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் r) 9
வளர்ச்சி பற்றி. சிறுவர் பாடல்
அன்று வைத்தியநாத தேசிகர் (1918) தொடக்கம் இன்று மண்டூர் தேசிகன் (2002) வரை ஈழத்தில் சிறுவர் பாடல்கள் இயற்றியோர் பலருளர்; சிறுவர் பாடல் தொகுப்புகளும் பல வெளியாகியுள்ளன. எண்ணிக்கையில் மட்டுமன்றி ஏனைய வகை சிறுவர் இலக்கிய முயற்சிகளுடன் ஒப்பிடும் போது தரத்திலும் சிறுவர் பாடல் துறையே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எய்தியுள்ளது. எனினும் இத்தகைய வளர்ச்சி தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது அல்லது மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும் போது எவ்வளவுதூரம் திருப்தி தருகின்றது என்றொரு கேள்வி எழுகின்றது. ஏனெனில் சிறுவர் பாடல் வளர்ச்சிநிலையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இவற்றுள் பின்வருவன முக்கியமானவை.
சிறுவர் உளவியல் புறக்கணிக்கப்படுதல்
சிறுவர் இலக்கியம் எவ்வகையைச் சார்ந்திருப்பினும் சிறுவர் உளவியலுக்கேற்ப அமைந்திருக்க வேண்டுமென்பதில் இரு வேறு கருத்திற்கிடமில்லை. பியாஜே உட்பட உளவியலறிஞர் பலர் சிறுவர் வயது எல்லை, வயது ரீதியான பாகுபாட்டுமுறை, ஒவ்வொரு பருவத்திலும் சிறுவரது நடத்தைகள் என்றவாறு பல கருத்துக்களை வற்புறுத்தி வந்துள்ளனர். சிறுவர் இலக்கிய முயற்சியிலிடுபடுவோர் இவை பற்றி அதிக புலமை பெற்றிருக்க வேண்டுமென்று நான் கூற முன்வரவில்லை. ஆயினும் , ஒரளவாவது உளவியலறிவு பெற்றிருக்க வேண்டுமென்பதனை மறுப்பதற்கில்லை.
எனினும், தமிழில் - தமிழ் நாட்டில் - நானறிந்த வரையில், "மலரும் உள்ளம்"(அழ. வள்ளியப்பா, 19-5) என்ற ஒரே ஒரு தொகுப்பு மட்டுமே சிறுவர் உளவியல் முதன்மைப்படுத்திய பாகுபாட்டிற்கமை வாக வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏனைய தொகுப்புகள் அவ்வாறு அமையாவிடினும், ஏதோ ஒரு வகைக்குரிய சிறுவர் பருவத்தினை மனங்கொண்டு அதற்கமைய பல தொகுப்புகள் வெளி வந்துள்ளன; வெளிவருகின்றன.
மாறாக, ஈழத்தில் அண்மையில் வெளிவந்த ஒரு தொகுப்பு வயது அடிப்படையில் அமைந்திருப்பினும் நுணுகி நோக்கும் போது “வயது மீறலே” அதில் வெளிப்படுகின்றது. தவிர்ந்த ஏனைய தொகுப்புகள் எவையும் சிறுவர் உளவியலுக்கு ஏற்றவாறு வயது ரீதியில் அமைந்திருக்கவில்லை. பதிலாக பல குறைபாடுகளைப் பெற்றுள்ளன.

Page 59
r100- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
இனினோசை இடம் பெறாமை
சிறுவர்கள் இசையோடு படிப்பதற்கேற்ற பாடல்களையே விரும்புவர் என்பது தெளிவு. எனினும் இசைப்பண்பு அமையாத பாடல்கள் அண்மைக்காலம் தொடக்கம் அதிகரித்து வருகின்றன. பாடல்களில் மோனையும் எதுகையும் இடம் பெறுவது இசையோடு பாடுவதற்கு அத்தியாவசியமானது. மாறாக, சிறுவர் பாடலாசிரியர் பலர் மோனையையே முதன்மைப்படுத்துகிறார்களேயன்றி எதுகையை ஏறெடுத்தும் பார்ப்பதற்கில்லை.
от (6).
அம்மா சுட்ட தோசையோ அழகாய் வானில் தெரிகிறது தொட்டுக் கொள்ளச் சம்பலோ நிலவின் உள்ளே இருக்கிறது."
மேலுள்ள பாடலில், மோனை கூட முழுமையாக பேணப்பட வில்லை. எதுகையும் மோனையும் இணையும் போது தான் இசையோடு படிப்பதோ இலகுவாக மனதில் பதிவதோ சாத்தியமாக முடியும். இன்றுள்ள சிறுவர் பாடலாசிரியர் பலர் எதுகை, மோனையின் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்கவில்லை என்றே கூற வேண்டும். அவர்களது மொழி (சொற்களஞ்சியம்) வறுமை, கற்பனையாற்றல் குறைபாடு என்பன ஒரு புறமிருக்க, புதுக்கவிதை எழுதுவோர் பலர் சிறுவர் பாடல் துறையை எட்டிப் பார்க்கின்ற நிலையும் இதற்கான இன்னொரு காரணமாகின்றது. காரணங்கள் எவையாயினும் சிறுவர் பாடல்கள் பல இசையோடு பாட முடியாதுள்ளன என்பதே எமது கவனத்திற்குரியது.
நேரடியான அறப்போதனை
பெரும்பாலான பாடல்களில் அறப்போதனை நேரடியாக வெளிப்படையாக அமைந்துள்ளமை கண்கூடு. ஆயின், அவ்வாறு சிறுவர் பாடல்களிலே அறப்போதனை இடம்பெறும்போது அது நேரடியாக அமைவது சிறுவர் உளவியலுக்குப் பொருந்தி வருவதன்று. “இதனைச் செய்”, “இதனைச் செய்யாதே" என்று நேரடியாகப் போதனை செய்யும் போது சிறுவர்கள் அதற்குச் செவிசாய்க்க மாட்டார்கள். அவ்வாறு நேரடியாகப் போதனை செய்யாமல் வெவ்வேறான உத்திமுறைகளைப் பயன்படுத்தி (எ.டு: காட்சி, சம்பவம், சிறுவர் கூற்று) அவற்றை எடுத்துரைப்பதே பொருத்தமானது.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -O-
உள்ளடக்கம் குறிப்பிட்ட வட்டத்துளமைதல்
ஈழத்தில் வெளியான சிறுவர் பாடல் தொகுப்புகளை நுணுகி நோக்கும் போது, அவற்றிலுள்ள பெரும்பாலான பாடல்கள் ஒரே விடயம் பற்றியே பேசுவதனை அவதானிக்கலாம். சிறுவர் பாடல்களில் பால் குடிக்கும் பூனை இன்று வரை குடித்துக் கொண்டிருக்கிறது: கிளி இன்று வரை கூட்டுக்குள் சிறையிருக்கிறது; (சில சமயம் பறந்து வருகின்றது.) நிலா, “அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா" (பாடல்களிலே) எமக்குக் கிடைக்கும் தோசைக்ஷட நன்கு புளித்துப் போன தோசை தான். இவ்வாறு கூறும் போது இரு விடயங்களை எடுத்துரைக்க விரும்புகின்றேன்.
அ. இத்தகைய பொருள்கள் உள்ளடக்கமாக அமையக் கூடாதென்பதில்லை. அவ்வாறாயினும், அவை புதிய பார்வையைப் பெறல் வேண்டும்.
ஆ. புதிய விடயங்கள்/பொருள்கள் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும். மாறாக பெரும்பாலான தொகுப்புகளில் இடம்பெறும் பெரும்பாலான பாடல்கள் முற்கூறிய விடயங்களையே கொண்டுள்ளன.
வெளிப்பாட்டு முறை ஒரே பாணியில் அமைதல்
உள்ளடக்கம் மேற்கூறியவாறு ஒரே வட்டத்துள் அமைவது மட்டுமன்றி, வெளிப்பாட்டு முறையும் ஒரே பாணியில் இடம் பெற்றுவிடுகின்றது. "பச்சைக்கிளியே பறந்து வா", "நிலாநிலா ஒடிவா", "மியா மியா பூனையார்” என்ற பாணியில் அமையாத கிளியையோ நிலாவையோ பூனையையோ காண்பது இன்று வரை அரிதாகவே
உள்ளது. இலக்கண வழுக்கள் இடம் பெறுதல்
நூல்களில் இலக்கண வழுக்கள் இடம் பெறுவது இயன்றவரை தவிர்க்கப்படல் வேண்டும். அதுவும் சிறுவர் நூல்களிலே (காரணம் எதுவாயினும்) இலக்கண வழுக்கள் என்ற பேச்சிற்கே இடமிருக்க முடியாது. அவற்றை பின்னிணைப்பாகத் தருவதனைக் கூட ஏற்பதற்கில்லை.(கல்வி அதிகாரிகளின் அணிந்துரைகளுடன் அண்மையில் வெளிவந்த நூலொன்றிலே கூட அதிக வழுக்கள் இடம் பெற்றமையையும் அவ்வழுக்கள் ஒட்டப்படாமலும் தனியொரு தாளிலே தரப்பட்டுள்ளமையும் இவ்விடத்தில் நினைவிற்கு வருகின்றது.) ஏனெனில், இவ்வாறு வழுக்களுடனமையின்

Page 60
-102- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
அதனாலேற்படும் பாதிப்புகள் அனந்தம் என்பதனை விரித்துரைக்க வேண்டியதில்லை.
மொழிப் பிரயோகம் பற்றி தெளிவான நோக்கின்மை
இவ்விதத்தில் பின்வரும் விடயங்களை இங்கு குறிப்பிடுவது அவசியமாகின்றது.
(அ) இலக்கண விதிகளைக் கடுமையாக அனுசரித்தல் . அதாவது
சொற்புணர்ச்சி, சொற்பிரிப்பு என்பனவற்றில் கூடிய கவனஞ் செலுத்துதல். எ.டு: “வான்நிலாவே வா" இவ்வாறு அமைவது சிறுவர் பாடல்களுக்கு உகந்ததன்று.
(ஆ) கடினமான அல்லது மிகக் கடினமான சொற்கள் இடம்
பெறுதல்.
தவிர ஆங்கிலச் சொற்கள், பேச்சு மொழிச் சொற்கள் என்பனவற்றை எந்தளவு தூரம் கையாளலாம் என்ற விடயம் பற்றியும் (ஏனெனில் இன்றைய பாடல்களில் அவை அதிகம் இடம் பெறுகின்றன) நாம் நன்கு சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
அவசரக் கோலங்கள்
அண்மைக்காலமாக, சிறுவர் இலக்கியத்துறையில் (பெருமளவு சிறுவர் பாடல்களிலும், ஒரளவு சிறுவர் கதைகளிலும்) புத்தெழுச்சி ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. முன்னைய குறைபாடுகளுள் சில (எ-டு: நூலமைப்பு) ஒரளவு அகன்று வருகின்றன. மாறாக, புதிய குறைபாடுகள் தலைகாட்டத்தொடங்கியுள்ளன. போட்டி நோக்கிலும், புதுமை நோக்கிலும் குறிப்பிட்ட காலத்துள் வெளியிட வேண்டுமென்ற நோக்கிலும் (சில சமயம், பரிசிலுக்கு அனுப்பப் பிந்திவிடுமென்ற நோக்கிலும்) சிறுவர் பாடலாசிரியர்கள் செயற்படுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. ஒரு உதாரணத்தினை மட்டும் குறிப்பிட்டால் போதுமென்று கருதுகின்றேன். பின்வரும் பாடல்பகுதிகளைக் கவனிக்க:
நீலக்கடல் நெளியுது நீண்டு கரை குளிக்குது
பரந்து கடல் கிடக்குது பகலில் வெப்பம் பெறுகுது

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் O3
கப்பல் ஒன்று கடலிலே காற்றைக் கிழித்துப் போகுது
மெல்ல வானம் இருளுது வெட்டி மின்னல் அடிக்குது.
மேலே தரப்பட்டவை ஒரே தலைப்பிலமைந்த வெவ்வேறான பாடல்கள் என்று ஒருவர் கருதக்கூடும். உண்மை அதுவன்று, இவை வெவ்வேறான தலைப்புகள் கொண்ட வெவ்வேறான பாடல்களின் ஆரம்பப் பகுதிகளாகும். இங்கு கவனிக்க வேண்டியது யாதெனில், கவிஞர் குறிப்பிட்டதொரு தலைப்பிலே எழுத முனைந்தமையாகும். இதனால் அவை செயற்கைப் பாங்கான பாடல்களாகி விடுகின்றன. (முன் ஒரிடத்தில் குறிப்பிட்டது போன்று சிறுவர் பாடல்கள் ஒரே பாணியில் வெளிப்படுவதற்கு இவையும் சிறந்த எடுத்துக் காட்டுகளாகி விடுகின்றன.)
நூற் பிரசுரம் சார்ந்த குறைபாடுகள்
சிறுவருக்கான நூல்கள் பிரசுர வடிவமெடுக்கின்றபோது பெரியோருக்கான நூல்கள் போலன்றி (அச்சிடுகின்ற) தாள், எழுத்து அளவு, வர்ணம், உட்புற, வெளிப்புறச் சித்திரங்கள்/ஓவியங்கள், வெளி அட்டை என்றவாறு ஒவ்வொரு அம்சத்திலும் சிறுவரைக் கவர்கின்ற விதத்தில் வெளிவருவது மிக அவசியமானதொன்று. இவ்விதத்தில "சிறுவர் செந்தமிழ்” தொடக்கம்" "நானே அரசன்" வரையில் படிப்படியானதொரு வளர்ச்சி முறை காணப்படுகின்ற தெனினும் அத்தகைய நிலை மகிழ்ச்சியைத் தருவதன்று.
ஒரு உதாரணம் கூறி இதனை விளக்க முடியும்: இப்போது வெளிவருகின்ற நூல்களில் சித்திரங்கள் இடம் பெறினும் அவற்றுள் கணிசமானவை அழகியல் நோக்கில் கவனிப்பிற்குரியனவல்ல. ஏனெனில் பல நூல்களை உற்று நோக்கும் போது அவற்றிலே வாழ்த்து மடல்கள், பாடநூல்கள் என்பவற்றிலே ஏலவே வெளி வந்த படங்கள், சித்திரங்கள் என்பன மறு அவதாரம் எடுத்திருப் பதையும் புதியனவெனில் சிறுவர் மனத்தைக் கவர்ந்து கொள்ள முடியாதவிதத்தில் (எ-டு: பொருத்தமற்ற வர்ணம், விகாரமுகம்) அமைந்திருப்பதையும் கவனிக்க முடிகின்றது.

Page 61
-104- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
சிறுவர் கதை
ஈழத்திலே சிறுவர் கதை முயற்சி பற்றிச் சிந்திக்கும் போது ஆறுமுக நாவலரது "பாலபாடம்" என்ற பாடநூலிலே சில சிறுவர் கதைகள் இடம் பெற்றிருந்தமை நினைவிற்கு வருகின்றது. அவை நகைச் சுவைப் பண்புடையனவாக இருந்ததாகவும் நினைவு. அவற்றை விடுத்துப் பார்க்கின்ற போது நாற்பதுகளிலே மறுமலர்ச்சிக்குழு சார்ந்தவரான பஞ்சாட் சரசர்மா எழுதிய சிறுவர் கதைகள் கவனத்துக்குரியன வாகின்றன. பஞ்சாட்சரசர்மா தொடக்கம் பாலகிருஷ்ணன் வரையான, ஏறத்தாழ 40 ஆண்டுகால சிறுவர் கதைத் துறையின் வளர்ச்சி, மழலை நிலையிலேயே காணப்படுகின்றது. சிறுவர் நெடுங்கதைத் துறை வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது சிறுவர் கதைத்துறை எண்ணிக்கை ரீதியில் ஒரளவு திருப்தி தரக்கூடுமாயினும் தர ரீதியில் அவதானிக்கும் போது ஏற்படுவது அதிருப்தியே.
பயமுறுத்தும் பாங்கு
சிறுவர் கதைகளைப் பொறுத்தவரையில் பெருமளவில் வெளி வருவன, மர்மக் கதைகள், துப்பறியும் கதைகள், துணிகரச் செயற்பாட்டுக் கதைகள் என்பனவே. இவற்றையும் சிறுவர் உளவியலுக்கேற்ப எழுத முடியுமாயினும் இவை அவ்வாறமையாமல் வியாபார நோக்கும் அறியாமையும் புகழார்வமும் விரவிநிற்க வெறும் பொழுது போக்கு ஆக்கங்களாகவே அமைந்து விடுகின்றன. அதற்குமப்பால் சிறுவர்களைப் பயமுறுத்தும் கைங்கரியத்தையும் செய்துவிடுகின்றன. எ-டு: பின் வருவன சிறுவர் கதை தொகுப்பொன்றிலே° இடம் பெற்றுள்ள படைப்புகளாகும்.
பயங்கர இரவு மனித மண்டை ஒடு மாலைநேர மர்மக் கிழவன் எருமைத்தீவு மர்மம் பேய்க்கிழவன் மறு அவதாரங்கள்
மேற்கூறியவாறான படைப்புகள் தவிர, மறு அவதாரம்
எடுக்கின்ற பல படைப்புகளும் உள்ளன. இவற்றை இரு வகைப்படுத்தலாம்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -105
1. உபநிடதக்கதைகள், இராமகிருஷ்ண பரமஹம்சரின் கதைகள், மகாபாரத, இராமாயணக் கதைகள் முதலியன. இவை வெளி வருவது அத்தியாவசிய மென்பதிலே மறு பேச்சிற்கிடமில்லையாயினும் இவை புதிய உருவாக் கங்கள், நூல்கொள்வனவு முயற்சி என்பனவற்றிற்கு ஒரளவு தடையாக உள்ளன என்றே கூறத் தோன்றுகின்றது.
· sa ce
2. "நரியும் காகமும்", "பாட்டியும் வடையும்", "பிராமணனும் புலியும்" முதலியன சிறுவர் கதைத்துறையைப் பழைய தடத்திலேயே செல்ல வைப்பதில் இவற்றின் பங்கும் கணிசமானது. (இவற்றையும் புதிய பார்வையில் நோக்க முடியுமென்பது ஒரு புறமிருக்க) இவற்றை மீறி புதிய சிந்தனைகள் புதிய விடயங்கள் என்பவை கொண்ட படைப்புகள் வெளிவருவது அரிதாகவே நிகழ்கின்றது.
ஏனைய குறைபாடுகள்
மேற்கூறிய அவதானிப்புகள் தவிர சிறுவர் பாடல்கள் பற்றி முற்கூறிய குறைபாடுகள் சிறுவர் கதைத்துறைக்கும் ஏற்புடையனவே.
சிறுவர் நெடுங்கதை
ஈழத்தில் இத்துறையின் தோற்றம் மிகப் பிற்பட்டதே (நவசோதியின் ஒடிப் போனவன் 1968). நவசோதி தொடக்கம் குணநாதன் வரையில் எமது கவனத்துக்குரிய மிகச் சிலர் (அது தவிர அநு. வை. நாகராசன், சண்முகலிங்கன், செங்கை ஆழியான், அருளானந்தம்). இத்துறையின் வளர்ச்சி ஒரு மாதக் குழந்தையின் நிலை என்றே கூறக்கூடியது.
குப்பைக் குவியல்கள்
ஈழத்திலே இத்துறையைக் கணிசமாக ஆக்கிரமித்துள்ளவை, தழுவலாகவும் மொழிபெயர்ப்பாகவும் தமிழ் நாட்டிலிருந்து "ராணி காமிக்ஸ்", வேதாளன் கதைகள் என்ற தொடர்களாக வெளிவருகின்ற படைப்புகளாம். வெறும் குப்பைக் குவியல்களான இவை சித்திரக் கதைகளாக அமைவதால் சிறுவர்களை இலகுவில் ஈர்த்துவிடுகின்றன; பொழுதுகள் அவமே கழிந்துவிடுகின்றன.

Page 62
-106- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
ஏனைய குறைபாடுகள்
தவிர சிறுவர் பாடல்கள் பற்றி முன்னர் கூறிய குறைபாடுகள் சிறுவர் நெடுங்கதைத்துறைக்கும் பொருந்தி வருவனவே.
சிறுவர் அறிவு நூல்கள்
விஞ்ஞானம், தொழில்நுட்பம், உளவியல், சுற்றுச்சூழல், வரலாறு, புவியியல், பெரியோர் வரலாறு முதலான துறைகள் சார்ந்த சிறுவர் நூல்களின் அத்தியாவசியம் பற்றி அதிகம் கூறவேண்டிய தில்லை. ஆயினும், ஈழத்தில் இத்துறை வளர்ச்சி எத்தகையதென்று சிந்திக்கும் போது ஏற்படுவது அதிகவிசனமே.
சிறுவர் சஞ்சிகைகள்
குறிஞ்சி மலர் போன்றுதான். ஈழத்தில் சிறுவர் சஞ்சிகைகளும்
பூத்திருக்கின்றன. "நட்சத்திரமாமா”, “அர்ச்சுனா”, “மழலை என் செல்வம்", (அண்மைக் காலங்களில்) "பிஞ்சு", "அணில்", "போது” முதலாக வெளி வந்து அற்பாயுளிலே மடிந்த, வெளி வந்து கொண்டிருக்கின்ற சிறுவர் சஞ்சிகை முயற்சி எவ்விதத்திலும் திருப்தி தருவதன்று. ஏனெனில் ஒரு புறம் பெரியோருக்குகந்த ஆக்கங்களும் மறுபுறம் பரீட்சை வினாக்கள், பொது அறிவு வினாக்கள், விடுகதைகள், சிறுவரது சித்திரங்கள், பயனற்ற சித்திரக் கதைகள், மாணவர் மன்ற உறுப்பினர் விவரங்கள் என்பனவே அவற்றை அலங்கரிப்பது கண்கூடு.
சிறுவர் மொழிபெயர்ப்புகள்
மொழிபெயர்ப்பு ஒரு வித இலக்கிய முயற்சியே என்பதும், அதன் முக்கியத்துவமும் தமிழ் இலக்கியச் சூழலில் இன்னமும் சரியாக உணரப்படவில்லை. எந்தமொழியின் இலக்கியத்தில் அதிக மொழி பெயர்ப்பு நிகழ்ந்துள்ளதோ அந்தளவிற்கு அம்மொழியின் இலக்கிய முயற்சிகள் வளம் பெற்றிருக்குமென்பார். க. நா. சு. இன்னொரு விதமாகக் கூறின், ஈழத்திலே சிறுவர் மொழிபெயர்ப்பு இலக்கிய முயற்சிகள் (சில சிங்கள மொழிபெயர்ப்புகளும் சோவியத் நாட்டுச் சிறுவர் இலக்கிய மொழி பெயர்ப்புகளும் நீங்கலாக ) வளராத நிலையிலே காணப்படுகின்றமை சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகின்றது. இவ்வாறு வளராமைக்கு அதன் பயன்பாடு சரியாக உணரப்படாமை முக்கியமானதொரு காரணமாகின்றது. மொழி பெயர்ப்புக்களூடாக புதிய சிந்தனை, புதிய கற்பனை, புதிய நோக்கு, புதிய உத்திமுறை முதலியன வளர முடியுமென்பதில் ஐயமில்லை.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -107
வாசகர் மத்தியிலே அதிகம் பரவாவிடினும் கலாநிதி நான்ஸிபரன் எழுதிய "ஒரு குட்டி யானைக்கு துணிவு வந்தது" என்ற சிறுவர் நெடுங்கதை ஈழத்து சிறுவர் எழுத்தாளர் சிலரைப் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை கூறியவற்றைச் சுருக்கமாக நினைவுகூருவோமாயின், சிறுவர் இலக்கியம் வளர்ச்சியுறாத நிலையில் அமைந்திருப்பது புலப்படவே செய்கின்றது. இன்னொரு விதமாகக் கூறின், சிறுவர் ஆக்கங்கள் தருகின்ற கவிஞரோ எழுத்தாளரோ தாம், சிறுவர் நிலையில் நின்று சிறுவருக்காக எழுதுகின்ற நிலைமை இன்னமும் திருப்திதரக் கூடிய விதத்தில் ஈழத்தில் உருவாகவில்லை எனலாம்.
வளராமைக்கான காரணங்கள்
நிலைமை மேற்கூறியவாறு பரிதாபத்திற்கிடமானதெனில் ஏன் வளரவில்லை என்று சிந்திக்க வேண்டியது தவிர்க்க இயலாததாகி விடுகின்றது.
தமிழ்ச் சமூகத்தின் மனப்பாங்கு
உயர் உத்தியோகத்தினை மனங்கொண்டு தமது பிள்ளைகளை உயர்கல்விநோக்கி ஆற்றுப்படுத்துவதே உயர் - உயிர் - இலட்சியமாகக் கொண்டவர்களான தமிழ்ப் பெற்றோர் தமது பிள்ளைகள் படிப்புத் தவிர்ந்த ஏனைய துறைகளில் (எ-டு: பொது வாசிப்பு, இலக்கிய சிருஷ்டி, கலை நாட்டம்) ஈடுபடுவதனைக் கிஞ்சித்தேனும் பொறுக்க முடியாத மனப்பாங்குடையவர்கள். இத்தகைய அவப்பேறான சூழ்நிலையில் சிறுவர் இலக்கியங்களை வாங்குவதிலோ படிக்கச் செய்வதிலோ கரிசனை கொள்ளாத நிலையில் - இலக்கிய முயற்சிகள் முளையிலேயே கருகி விடுகின்றமை வியப்புக்குரியதன்று. மாறாக நகரத்தில் வாழுகின்ற தமிழ்ப் பெற்றோர் ஆங்கிலமொழிச் சிறுவர் இலக்கியங்களை வாங்குவதில் ஆர்வங்காட்டுவதும் இத் தொடரில் சிந்திக்கத்தக்கதே. கல்வித்துறைச் செயற்பாடுகள்
பாடசாலைக் கல்வியில் ஆக்கத்திறன் முதலியன இருப்பினும் ஆரம்ப வகுப்புச் சிறுவர்களுக்கு சிறுவர் இலக்கியங்கள் மிக அவசியமாயிருப்பினும் கற்பிக்கும் ஆசிரியர்கள் நடைமுறையில் அவற்றில் ஆர்வங்கொள்வதில்லை. பாடத்திட்டத்தை உரிய காலத்தில் முடிப்பதென்பதும் மாணவர்களைப் போட்டிப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்துவதென்பதுமே அவர்களது தலையாய இலட்சியங்க ளாகவுள்ளன.

Page 63
O8- ஈழத்துச சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
இவ்வாறே, உளவியற் கல்வி என்பது ஆசிரியர்களது டிப்ளோமா / விசேட பயிற்சிநெறி என்பனவற்றின் போது கற்பிக்கப் பட்டாலும் (அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலே தான்) அதில் தெளிந்த புலமையோ நடைமுறையில் அவற்றைப் பிரயோகிப்பதென் பதோ காணப்படுவதில்லை. அவ்வாறிருப்பின் சிறுவர் இலக்கிய கர்த்தாக்களாக உள்ள ஆசிரியர்களது படைப்புக்களில் முற்கூறிய குறைபாடுகள் இடம்பெறாமல் இருக்குமல்லவா? (எனினும், ஈழத்துச் சிறுவர் இலக்கிய கர்த்தாக்களில் கணிசமானோர் பாடசாலை ஆசிரியர்கள் அல்லது ஏதோ விதத்தில் கல்வித் துறையுடன் நெருங்கிய தொடர்புடையவர்களென்பது இவ்விடத்தில் கவனத்திற்குரியது.)
மறுபுறம் தனியார் கல்வி நிறுவனங்களின் ஆதிக்கம் சிறுவர் இலக்கிய வளர்ச்சிக்கும் பல விதங்களில் (சிறுவர்களது படிப்புச்சுமை, ஒய்வின்மை, மேலதிக வாசிப்பின்மை, ஆரோக்கியமான பொழுது போக்குகளில் ஈடுபாடு கொள்ள வாய்ப்பின்மை) தடையேற் படுத்துவதாகக் காணப்படுவதையும் புறக்கணிப்பதற்கில்லை.
எழுத்தாளர் நிலை
பல்கலைக்கழகத்தில் உள்ள "பகுதி நேர விரிவுரையாளர்கள்” போன்று (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கூட “பகுதி நேர அரசியல்வாதிகளே") ஈழத்து எழுத்தாளரில் பெரும்பாலானோர் "பகுதிநேர எழுத்தாளர்களே" (அதற்குக் காரணமுண்டென்பது வேறு விடயம்). சிறுவர் இலக்கிய கர்த்தாக்களும் இத்தகையவர்களே. இதன் பாதகமான நிலை யாதெனில் சிறுவர் ஆக்கங்களும் பல அவசரக் கோலங்களாகவோ உற்பத்திப் பண்டங்களாகவோ அரைகுறை அவியல்களாகவோ உருவாகி விடுவதுதான்.
பொதுவாகவே ஈழத்து எழுத்தாளரில் கணிசமானோர் வாசிப்பு ஆர்வம் / பழக்கம் / பயிற்சி கொண்டவரல்லர். இங்கு சிறுவர் இலக்கிய எழுத்தாளர் பலர் கற்பனை வரட்சியுடையோராகவும், ஒரே வட்டத்துள் அலைந்து திரிபவர்களாகவும், "போலச்செய்பவர்" களாகவும் விளங்குவதற்கான காரணங்களுள் அவர்களின் வாசிப்பு வறுமை முக்கிய பங்கு வகிக்கிறது.
தவிர சிறந்த, மேலைத்தேய எழுத்தாளர்களுள் பலரோ, இந்திய எழுத்தாளரில் சிலரோ, குறிப்பிடத்தக்க சிறுவர் இலக்கிய எழுத்தாளர் களாகவும் விளங்குகின்றார்கள் (எ-டு : சத்யஜித்ரே, இவர் ஒரு சிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர் சிறந்த ஒவியக் கலைஞர்) ஈழத்தின் நிலைமை இதற்கு முற்றிலும் மாறானது என்பது நாமறிக்ககே.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -IO 9
இனி, ஈழத்து எழுத்தாளர்களுக்கான சமூக அங்கீகாரம் பற்றிச் சிந்திப்பின் அதுவும் அதிருப்தி தருமொன்றே. உண்மை அதுவாயின் ஈழத்துச் சிறுவர் இலக்கிய கர்த்தாக்களுக்கான சமூக அங்கீகார மென்பது மேன்மேலும் அதிருப்தி தரக்கூடியதாகவே உள்ளது. இந்நிலையில் படைப்பிற்கான உந்துதலும் குன்றிவிடுமன்றோ.
நூல் வெளியிட்டு முயற்சிகள்
அண்மைக்கால அச்சு ஊடக மாற்றம் - கணினிப் பயன்பாடு " நூல் வெளியீட்டு முயற்சியை இலகுவானதாகவும் அழகுடைய தாகவும் ஆக்கியுள்ளது. இதனால் ஏனைய துறைகள் போன்று இத்துறையிலும் அதிக நூல்கள் வெளிவருவதை அவதானிக்க முடிகின்றது. எனினும் இத்தகைய நூல்களுள் இடம் பெறும் இலக்கண வழுக்களின் தொகை அதிகரிப்பதும், விலை கூடியிருப்பதும் வியாபாரநோக்கு நன்கு செயற்படுவதும் அதிருப்தி தரும் விடயங்களே. இனி, நூல்கள் வெளிவருமளவிற்கு கொள்வனவு செய்தல் / விற்பனை அதிகரித்துள்ளதா என்று சிந்திப்பின் அதில் எதுவித முன்னேற்றத்தையும் காண்பதரிது. மட்டக்களப்பிலுள்ள உயர் கல்வி நிறுவனமொன்று அந்நிறுவனத்தில் பணிபுரிந்த படைப்பாளியொருவரது (அந்நிறுவனத்தின் இலக்கியச் சங்கம் வெளியிட்ட) நூலினையே நூல் நிலையத்துக்கு வாங்காமை "அதிசயம்" ஆனால் உண்மை என்ற தலைப்பிற்குரிய விடயமாகும்.
அசமத்துவ வளர்ச்சி
ஈழத்து தமிழ்ப் பேசும் பிரதேசங்களைப் பொறுத்தவரையில் குறிப்பாக ஆங்கிலேயரது ஆட்சிக் காலந் தொடக்கம் அசமத்துவ நிலையிலான வளர்ச்சி இடம் பெற்று வந்துள்ளது. இத்தகைய அசமத்துவ நிலை இலக்கிய வளர்ச்சிப் போக்கிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இன்னொரு விதமாகக் கூறின், சிறுவர் இலக்கியத்துறையின் குறையையும் நிறையையும் அசமத்துவ நிலையை ஏற்று அந்நிலையில் நின்று கொண்டு அணுகுவதும் அவசியமாகின்றது. மற்றொரு விதமாகக் கூறின், அசமத்துவ நிலை காரணமாகவும் சில பிரதேசப் படைப்புக்களில் குறைகள் மலிந்து காணப்படுவது தவிர்க்க இயலாததாகின்றது.

Page 64
-O- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
சமகாலச் சமூக மாற்றங்கள் அரசியல் நெருக்கடிகள்
குறிப்பாக எண்பதுகள் தொடக்கமான தமிழ்ப் பேசும் மக்களது வாழ்வு, இருப்புப் பற்றிய அச்சம், அகதிநிலை, இடப்பெயர்வு, முதலியனவற்றோடிணைந்த வாழ்வாகியுள்ளமை வெளிப்படையான விடயமே. இத்தகைய அவலம் மிகு சூழல் எல்லோரையும்போல் சிறுவர்கள், பெற்றோர்கள், சிறுவர் இலக்கிய கர்த்தாக்கள் ஆகியோரையும் பாதித்துள்ளமையும் சிறுவர் இலக்கியத் தளர்ச்சிக்கானதொரு அடிப்படைக் காரணமாகின்றது.
வெகுசனத் தொடர்பு ஊடகப் பாதிப்பு
குறிப்பாக, தொண்ணுாறுகள் தொடக்கம் தொலைக்காட்சி, வானொலி ஊடகங்களில் தனியார் ஒளி, ஒலிபரப்புச் சேவையாளரின் ஆதிக்கம் விசுவரூபமெடுத்து வருவதும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தமிழ்ச் சமூகம் பெரும் கலாசார சீரழிவிற்குட்படுவதும் நாடறிந்த இரகசியமே. பின்வருவன நான் கண்ட கேட்டறிந்தவற்றுள் சில.
மட்டக்களப்பில் உள்ள ஒரு சிறுமி அப்பியாசக் கொப்பியின் பின் புறத்தில் (பேனா எழுதுகின்றதா என்று பார்ப்பதற்காக) அப்பாஸ் பெயரினை எழுதுதல். மலையகத்தில் 2 வயதுக் குழந்தைக்காக "அவள் வருவாளா?” பாடலை விரும்பிக் கேட்டல். யாழ்ப்பாணத்தில் நடிகர் விஜய் வாழ்க்கை வரலாற்று நூல் ஆவலோடு வாசிக்கப்படுதல். இன்னொரு மாணவர் "வோக்மன்"ஐ மாட்டியவாறு “சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” என்ற பாடலை மனதிலே பதித்தல். சினிமாப் பாடல்களுடாக "பொது அறிவு" (!) ஞானம் புகட்டுதல். TVயில் மாறுவேடம் தாங்கி சிவனாக வரும் சிறுவன் அவ்வேளை தனது கழுத்திலுள்ள பாம்பு பற்றி ஏளனஞ் செய்தல்.
மேற்கூறியவாறான துர்ப்பாக்கியமான நிலையில் - சிறுவரதும்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -II
பெற்றோரதும் இரசனை எங்கோ சென்று விட்ட நிலையில் - (சுடலைக்கு அடுத்ததாக ) TVயின் முன் சமரசம் (பால், வயது, இனம், மதம், சாதி பேதமற்ற சமரசம்) உலாவுகின்ற நிலையில் - சிறுவர் இலக்கியம் ஆரோக்கியமாக வளருமென்று எதிர்பார்ப்பது பேதமையன்றி வேறில்லை!
அடுத்த கட்டம் நோக்கி.
இதுவரை ஈழத்துச் சிறுவர் இலக்கியம் சார்ந்த குறைபாடுகள், அவற்றிற்கான காரணங்கள் என்பன பற்றி அவதானித்தோம்.
இனி, ஆரோக்கியமான அடுத்த கட்ட வளர்ச்சி பற்றிச் சுருக்கமாகக் கவனிப்போம்.
குறைபாடுகள் களையப்படுதல்
சிறுவர் இலக்கியப் பிரிவுகள் சிலவற்றின் முற்சுட்டப்பட்ட குறைபாடுகள் படிப்படியாகக் களையப்படுவது முதற் கணி அவசியமாகின்றது.
புதிய பிரிவுகளின் வளர்ச்சி10
ஈழத்துச் சிறுவர் இலக்கியம் புதிய பல பிரிவுகளை நோக்கி வளர வேண்டியுள்ளது. எ-டு:
(அ) கதைப் பாடல்: ஏலவே எழுதப்பட்டுள்ளவற்றுள்
பெரும்பாலானவை பழைய கதைகளே.
(ஆ) இசையும் கதையும் தழுவியவை: பெரும்பாலான சிறுவர்கள் விரும்பும் இப்பிரிவில் ஈழத்தில் எழுத்தாளரின் நாட்டம் குறைவாகும்.
(இ) NURSERYRHYMES ஈழத்தில் இத்தகைய பாடல்கள் சிறந்த
முறையில் எழுதப்பட்டுள்ளமை அரிதே.
(ஈ) பாலர் கல்விப் பாடல்கள்: (பாடல்களுடாக ) கல்விப்
போதனைக் குதவுவதும் மிக அவசியமானது.
(உ) சித்திரக் கதைகள்: குழந்தைகள் பெரிதும் விரும்பும்
இப்பிரிவும் வளராத நிலையிலேயே உள்ளது.

Page 65
-2- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
புதிய உள்ளடக்கங்களில் நாட்டம்
எ-டு:
அறிவியல் வளர்ச்சி தொழில்நுட்பவளர்ச்சி சுற்றுச் சூழல் பெரியார் வரலாறு
வரலாறு புவியியல் சமகால வாழ்வியல் (ஊடே சிறந்த விழுமியங்களை முன் வைத்தல்.) நவீன உபகரணங்களின் பயன்பாடு
எ-டு: ஒலிநாடாக்கள், ஒலிப்பேழைகள் வெளியிடுதல். ஈழத்தில் இதுவரை 4 ஒலி நாடாக்கள் - திருமதி ரங்கநாதன், ஷம்ஸ் ஆகியோரும் இலங்கை வானொலி, வடக்கு - கிழக்கு மாகாண கல்வி அமைச்சு என்பனவும் வெளியிடப்பட்டுள்ளன. இத்தகைய ஒலி நாடாக்களோடு ஒலிப்பேழைகள் புலம் பெயர் தமிழர் சிலரது முயற்சியால் வெளிவந்துள்ளன.
புதிய ஆய்வுகள்
இதுவரை கூறப்பட்ட சிறுவர் பிரிவுகள் பற்றி ஆழமான ஆய்வுகளை மேற்கொள்வதோடு, ஏனைய பிரிவுகள் பற்றிய ஆய்வுகளிலும் (எ-டு: சிறுவர் அரங்கு, சிறுவர் வானொலி) ஈடுபடுவது அவசியம்.
கருத்தரங்குகள்
ஈழத் தமிழ் சூழலிலே முதன் முதலாக நடைபெற்ற
இக்கருத்தரங்கு அவ்விதத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதான
அதேவேளையில், தொடர்ந்தும் இத்தகைய கருத்தரங்குகள் நடப்பது
இன்றியமையாததாகும்.
நூல் வெளியிடுதல்
ஈழத்துப் படைப்பாளர் பலரது சிறுவர் இலக்கிய ஆக்கங்கள் (எ-டு: ஐம்பதுகளிலேயே அம்புலிமாமாவில் எழுதிய ஆரையூர் அமரனின் சிறுவர் பாடல்களின் தொகுப்பு) நூலுருப் பெறுவதோடு,

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -13
முன்னர் வெளியானவை மறுபதிப்புக் காண்பதும் இன்றைய ஆய்வுலக, பாடசாலை ஆசிரிய உலக தேவையாகின்றது.
புதிய துறைகளின் கவனம்
* குழந்தைகள் களஞ்சியம் (எ-டு: மேலை நாட்டில் LIFE நிறுவனம் குழந்தைகளுக்காக 10 களஞ்சியங்களை வெளியிட்டுள்ளது).
* குழந்தைகள் அகராதி (எ-டு: மேலை நாட்டில் LADY BIRD நிறுவனம் இத்துறையில் கூடிய கவனம் செலுத்தி இத்தகைய நூல்களை வெளியிட்டுள்ளது). * குழந்தைகளுக்கான பதிப்பகம்.
py,660J
இறுதியாக எனது ஆய்வுரையை ஏற்றதொரு சிறுவர் பாடலுடன் முடிப்பது பொருத்தமானதென்று கருதுகின்றேன்." பாடலின் சிறப்புகளை நீங்களாகவே அறிந்து கொள்ள முடியு மென்பதில் எனக்கு ஐயமில்லை.
அம்புலியில் பூபாலன்
“பூபாலா பூபாலா எங்கே போனாய் பூமிக்கு அப்பாலே நானும் போனேன் ' பூமிக்கு அப்பாலே எங்கே போனாய்? அம்புலியைப் பார்த்துவர நானும் போனேன்.
அம்புலியைப் பார்த்துவர எப்படிப் போனாய்? அமெரிக்கா செய்துவிடும் கப்பலில் போனேன். அம்புலியில் என்னென்ன பார்த்து வந்தாய்? பார்ப்பதற்கு அங்கொன்றும் இல்லை, ஒளைவைப் பாட்டியாரும் நான் போக ஒளிந்து கொண்டாள். பாட்டி என்று நம்முன்னோர் எதனைச் சொன்னார்? அம்புலியின் பாறைகளைக் கண்டு சொன்னார்.
அம்புலியில் நீ என்ன அறிந்து வந்தாய்? அந்தரத்தில் நான் நின்றேன் கொஞ்ச நேரம்

Page 66
-14- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
காற்றில்லை, நீரில்லை, உணவுமில்லை கதைப்பதற்கு ஆள்கூட அங்கே இல்லை. ஆளில்லா ஊருக்கா இத்தனை போட்டி? ஆளிருக்கும் ஊர்களுக்கு உதவி செய்வோம்.
அடிக்குறிப்புகள்
l. ஈழத்தில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி தொடர்பான ஆய்வுகள் போதியளவு நடைபெறவில்லை.இவ்விதத்தில், இவ்வாய்வாளரது பின்வரும் ஆய்வுகள் கவனத்திற்குரியவை.
இலங்கையில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி ஒரு கண்ணோட்டம், பண்பாடு, மலர் 8 - இதழ் 01.03.1998 சித்திரை, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், பக். 22 - 25 மட்டக்களப்பு பிரதேசத்தில் குழந்தைக் கவிதை வளர்ச்சி மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழா மலர், மட்டக்களப்பு 1994, பக். 2-5. 2. மன்னார் அமுது, பாலர் கவிதைகள் ஐம்பது, மன்னார் மு.ப 1998. 3. ராணி சிறீதரன், தேன்சிட்டு, மீரா பதிப்பகம், கிருலப்பனை. மு.ப.
03.09.2000 L I. 15.
4. மன்னார் அமுது, மு.கு.நூ.
5. அருளானந்தம். ச. கடலும் காவிரியும், அருள் வெளியீடு,
திருகோணமலை, மு.ப. 01.01.1998. 6. சோமசுந்தரப் புலவர், சிறுவர் செந்தமிழ். 7. நான் அரசன் - சிறுவர் பாடல்கள் (தொகுப்பு) பாரதி வெளியீட்டகம்,
தெஹிவளை, மு.ப. செப். 1995. 8. சிவலிங்கம், மாஸ்டர், பயங்கர இரவு, உதயம் பிரசுராலயம்,
மட்டக்களப்பு, மு.ப. பங்குனி 1993. 9. சிறுவர்களோடு உரையாடி, பரிசோதனை முயற்சிகளிலீடுபட்டு,
அவ்வடிப்படையில் எழுதப்பட்ட இரு நூல்கள் அண்மையில்
வெளியாகியுள்ளமை அனைவரது கவனத்திற்குமுரிய விடயமாம்.
எழுதியவர்: கலாநிதி ஜெயராசா நூல்கள் :
(1) பாலர் கதைகள், வெளியீடு: நகர்ப்புற அடிப்படைச் சேவைகள் நிகழ்ச்சித் திட்டம் (யுனிசெவ்), மாநகரசபை, யாழ்ப்பாணம். மு.ப. 1999.

IO.
11.
ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -115
(i) பாலர் பாடல்கள்(?) இந்நூல் இவ்வாய்வாளரது பார்வைக்குக்
கிடைக்கவில்லை.
(ஈழத்து தமிழ் சிறுவர் இலக்கிய வளர்ச்சியில் எழுத்தாளர் செ. யோகநாதனின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அன்னாரது புதல்வர் சஞ்சயனும் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறியப்படு கின்றது). இவ்விதத்தில் செ.யோகநாதன் எழுதிய தங்கத்தாமரை (அட்மிரல் பதிப்பகம், கொழும்பு, மு.ப. 27.12.1999) என்ற நூலின் முன்னுரை (கட்டுரை) குறிப்பிடற்பாலது.
"நான் அரசன்" மு.கு.நூ. இப்பாடலை இயற்றியவர், மு. பொன்னம்பலம். ப.11.
- நன்றி : தமிழில் சிறுவர் இலக்கியம்: ஆய்வரங்கக் கட்டுரைகள் (2002).
வெளியீடு: பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்.

Page 67
குருவியின் தலை மீது பனங்காயைச் சுமத்தலாமா? குழந்தைக் கவிதைகள் பற்றிய சில சிந்தனைகள்
- கல்வயல் வே. குமாரசாமி -
உலக மொழிகள் எல்லாவற்றிலும் கவிதைக்குச் சிறப்பான இடம் வழங்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்த ஒன்றே. அதே போல் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கவிதைக்குத் தனிச்சிறப்பான அந்தஸ்து உண்டு. அத்தோடு அது தனக்கெனத் தனித்துவமானதொரு நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளது. அதே வேளை அதன் முக்கிய கூறுகளுள் ஒன்றான குழந்தைக் கவிதை பற்றி நோக்குமிடத்து அதன் படிமுறை வளர்ச்சிகள் இன்னமும் சரியான முறையில் ஆராயப்படவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.
குழந்தைக் கவிதைகள் பற்றி அவ்வப்போது வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்துப் பார்க்கும் போது தமிழில் இத்துறை பற்றிய தெளிந்த சிந்தனைகள் குறைந்த பட்சமாவது முன் வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயினும் அவை முழுமையான ஆய்வொன்றுக்கு வழிகாட்டக்கூடியன என்பது மறுக்க முடியாத உண்மையே. நாட்டுப் பாடல்களையும், தாலாட்டுப்பாடல்களையும், கிராமியப் பாடல்களையுமே பெரும்பாலானோர் குழந்தைக் கவிதைகளாகக் கருதி வந்துள்ளனர். இரசிகமணி கனக. செந்திநாதன் அவர்கள் எழுதியுள்ள, “குழந்தை இலக்கியம்” என்ற கட்டுரை இதற்குச் சான்றாகும். இன்னொரு வகையினர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை போன்ற அறநெறி உபதேச நூல்களையும் குழந்தை இலக்கியமாகக் கருதி வந்துள்ளனர். சிறுவர் இலக்கியத்திற்கும் குழந்தை இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றிய தெளிவின்மையும் இதற்கோர் முக்கிய காரணமாகும் எனலாம்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -117
குழந்தைகளும் சிறுவர்களும்
ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்குட்பட்ட பராயத்தினரைக் குழந்தைகளாகவும், அதற்கு மேற்பட்ட பராயத்தினரைச் சிறுவர் களாகவும் அவர்களது உளவியல், அறிவியல், மனவளர்ச்சிகளைக் கருதி மேலை நாட்டறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளனர். எட்டு வயதுக்கு குறைந்தவர்களையும் எம்மவர் தவ்வல், மழலை, குழந்தை, பாலர், பிள்ளை என வகுப்பாருமுளர். இத்தகைய பருவத்தினருக்கு ஏற்ற பொருந்தக் கூடியவற்றையே குழந்தைக் கவிதைகள் என்று கூறலாம்.
எளிமையும் இசைக்கோலமும், சொற்சிக்கனமும், பழகு மொழியும் அபிநயிக்கத் தூண்டும் ஒசையும் அமைந்தனவாகக் குழந்தைக் கவிதைகள் இருத்தல் வேண்டும்.
ஆகவே குழந்தைக் கவிதைகளைப் புதிதாக எழுதுவதற்கு ஏற்ற மனப்பக்குவமும், சமூகவியலறிவும், இன்றியமையாதன என்பது தெளிவு. அத்தோடு அவை குழந்தை உளவியலறிஞர்களினதும், நிபுணர்களினதும் ஆய்வு முடிவுகளை அடியொற்றி அமைந்திருக்க வேண்டியதும் வேண் டற் பாலதொன்றாகும். குழந்தைகளின் மனப்பக்குவத்தை உணர்ந்து தெளிந்து அவர் தம் கருத்துக்கும் காட்சிக்கும் வேண்டியவாறு புதிய ஆக்கங்கள் அமைதல் அவசியம். குழந்தையின் வயது, மூளை, அபிவிருத்தி, வளர்ச்சி. மொழித்திறன், ஆற்றல் முதலிய இன்னோரன்ன பிறவற்றையெல்லாம் அவதானத்திற் கொண்டு படைக்கப்பெற்றாலே அவை தனிச் சிறப்புக் கொண்டு மிளிரும்.
இதுவரை வெளிவந்துள்ள குழந்தைக் கவிதைகளை நோக்குமிடத்து இத்தகைய பண்புகள் அவற்றில் மிக அருகியே காணப்படுகின்றன. குழந்தைக் கவிதைகள் குழந்தைகள் தங்கள் புலன்களுக்குப் புலப்படுகின்ற புற உலகத்தையும், காட்சிக் கோலங்களையும் விரும்பித்தேடி அறிகின்றனர் என்பார் ஜேம்ஸ் றிவ்ஸ். முதிர்ந்தோர் கவிதைகளுக்கும், சிறுவர் கவிதைகளுக்கும், குழந்தைக் கவிதைகளுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடுகளைப் பற்றிய தெளிவான விளக்கமின் மையும் விளங்கிக் கொள்ள முயலாமையுமே தமிழில் சிறந்த குழந்தைக் கவிதைகள் ஆக்கப்படாமைக்கு ஒரு முக்கிய காரணி எனலாம். இதன் விளைவு குழந்தைக் கவிதை ஆக்க முற்படுபவர்கள் குழந்தைத்தனமான கவிதைகளை எழுதிவிடுகின்றனர். இச்செயல் இத்துறையில் தோல்வியை ஈட்டிக் கொடுப்பதுமல்லாமல் வளருஞ் சந்ததியினருக்கும் பல்வேறு துறைப்பட்ட இடைஞ்சல்களையும் உருவாக்கிவிடுகின்றது.

Page 68
-1.8- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
குழந்தைகள், விஞ்ஞானத்துறை ஈட்டத்தின் பாதிப்பினால் மக்கள் தொடர்பு சாதனங்களான றேடியோ, தொலைக்காட்சி, வீடியோ படக்காட்சி முதலியவற்றின் மூலமும், தன் சூழலின் மூலமும் புதிய சொற்களைச் சேகரித்து அவற்றைப் பிரயோகிக்க முற்படும்போது குழந்தைகளை அறிவறிந்தவர்களாகக் கருதி, அவர்களின் பொருள் பற்றிய பூரண அறிவில்லாத வெறும் சொற் பிரயோகங்களை மனதில் கொண்டு ஆராய்ந்தறியாது அவர்களுக்கான படைப்புக்களில் புதிய கலைச் சொற்களையும், கடின பதங்களையும் கையாளுகின்றனர். இதனால், வெறும் காட்சிமட்டத்திலான அவர்களின் அறியும் அவாவும் பார்வை நோக்கில் புதிய மனக் குழப்பத்தையும், மலைப்பையும் தெளிவுநிலையை ஏற்படுத்து வதற்குப் பதிலாக குழப்பநிலையை ஏற்படுத்தி விடுகின்றனர்.
உபதேச மொழிகளையும், அறிவுரைகளையும், தத்துவக் கருத்துக்களையும் திணித்துக் குழந்தைக் கவிதைகளை எழுதி விடுபவர்களுமுள்ளனர். குழந்தைக் கவிதைக் கோட்பாடுகளை விலக்கியும் விலகியும் இப்படி இவர்கள் செய்வதனாலே, அறிவில் முதியோர்களினாலேயே விளங்கிக் கொள்ளமுடியாத தடித்தமான இப்படைப்புகளை அறிவு முதிராத இச் சின்னஞ் சிறிசுகள் எவ்வாறு சுவைக்கவும் புரிந்து கொள்ளவும் முடியும்? இதனையே முருகையன் அவர்கள் குறிப்பிடும்போது,
இன்று நவீன மொழிகள் யாவற்றிலும் உலகமெங்கும் சிறுவர்களுக்கென நூல்கள் இயற்றப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. அச்சிறுவர் நூல்கள் மிகுந்த அக்கறையுடன் பக்குவமாகப் படைக்கப் படுகின்றன. இவற்றுட் சிறந்தவை, குழந்தைநிபுணர்களின் ஆய்வு முடிவுகளை அடியொற்றியே இயற்றப்படுகின்றன. ஏனெனில் இன்றைய ஆய்வாளர்கள் உளவியற்றுறையிலே பல நுண்ணிய உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். இவ் உண்மைகளைத் தழுவி எழும் சிறுவர் நூல்களே அப்பருவத்துச் சிறுவர்களுக்குப் பொருத்த முடையனவாய் அமையும். இல்லையெனில், சிறுவரின் உளவியல் வளர்ச்சிக்கு ஒவ்வாத உள்ளடக்கமும், உருவமும் உடையனவாக அப்படைப்புக்கள் தோன்ற இடமுண்டு.
என்று மிகவும் நுணுக்கமாகக் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு கவனிக்கற்பாலதே. குழந்தைகளின் மனோநிலையை ஆராய்ந்தறியாது அவர்களுக்குப் புலப்படாதவற்றை வலிந்து திணிப்பது மிகவும் பேராபத்தானது. கருத்தியல்பான சிந்தனைகளை குழந்தைகளிடம் கட்டியடிப்பதனால் ஏற்படும் விளைவு நன்மைகளை விடத் தீமைகளே அதிகமாக இருக்கும். அன்றியும் அறவுரைகளையும்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -19
உபதேச மொழிகளையும் கிரகித்துக் கொள்ளும் திறன் அவர்களுக்கு இருக்கும் என்பதும் சந்தேகத்திற்குரியதொன்றாகும்.
மனங்கொள்ளாப் பெருஞ்சுமை
இன்று காணப்படும் குழந்தைப் பாடல்களில் அநேகமானவை நான்கைந்தெழுத்துக்களை இகந்த பல எழுத்துக்களாலான பெரிய சொற்களைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. இன்னுஞ்சில, பெரிய கவிதைகளாக உருவத்தால் மிகைப்படுத்தப்பட்டுக் காணப்படுகின்றன. இவை சின்னஞ்சிறிசுகள் மனங்கொள்ள முடியாத பெருஞ்சுமைகளாகவுள்ளமை பெருங்குறைபாடாகும். வளரிளம் பருவத்தினர்களாலேயே மனனஞ் செய்யமுடியாத தன்மை வாய்ந்தவற்றை குழந்தைகளிடம் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?
கட்புலனுக்குத் தெளிவாகக் கூடிய காட்சியையும் கருத்தையும் கொண்ட அழகிய கோலங்களைப் பற்றியதாகவும் அல்லது அவற்றைச் சார்ந்ததாகவும் தான் குழந்தைகளின் மனவோட்டம் அமைந்திருக்கும். ஆகவே அவர்களுக்காகப் படைக்கப்படும். பாடல்கள் காட்சிப் பொருட் சார்பும், நிகழ்ச்சிகளும் வருணனைகளும் இயல்பாக இடம் பெற்றிருப்பதவசியமாகின்றது. அத்தோடு சூழல்களை உறவு முறைகளோடு இயைய நோக்கும் பாலரின் பக்குவ உணர்வுகள் பிணைந்தனவாகிய சொல்லோவியங்களாகப் பாடப்பட்டனவற்றைக் குழந்தைகள் விரும்பி மனம் கொள்வர்.
குழந்தைப் பாடல்களில் கையாளப்படும் சொற்பிரயோகத்திலும் கூடுதலான கவனம் செலுத்தப்படுவதில்லை என்றே கூறலாம். கட்டை, குட்டை போன்ற சொற்களைக் கையாளுமிடத்துச் சொற்களைச் சேகரிப்பதில் அதி நாட்டமுடைய குழந்தைப் பருவத்தினர் அவற்றை உடனடியாகவே அவற்றின் பயன்புரியாத வகையில் பிரயோகிக்க முனைவர். உதாரணமாக கட்டை என்ற சொல்லைக் கட்டை வாத்தியார். கட்டை ரீச்சர் என்றெல்லாம் கையாளத் தலைப்படுவர். எனவே பதப்பிரயோகங்களைப் பொறுத்தவரையில் எத்தகைய நிதானம் வேண்டியதொன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே அவர்கள் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய வழக்கிலுள்ள எளிமைச்சொற்களைக் கையாண்டே படைப்புகள் வெளிவர வேண்டும்.

Page 69
- 20- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
குழந்தைகள் விரும்பும் பாடல்கள்
மனங்கவரவைக்கும் ஒசை ஒலி வடிவங்களடங்கிய இசைக் கோலப்பாடல்களையே குழந்தைகள் பெரிதும் விரும்பி வரவேற்கும் மனப்பண்புடையோராகக் காணப்படுகின்றனர் என்பர் குழந்தை உளவியல் ஆய்வாளர். இஃது ஒர் நிதர்சன உண்மையே. உள்ளத்திற்கு உவகையூட்டும் ஒசை நிரம்பிய பாடல்களையே குழந்தைகள் தாமாக, விரும்பிப்பாடுகின்றனர். அவர்களை அறியாமலே ஒருமுறை கேட்டளவிலேயே அவர்கள் அப்பாடலை இசை ஒட்டத்தின் தூண்டலாகிய ஒசைக்கு ஆட்பட்டு முணுமுணுக்கத் தொடங்கி விடுகின்றனர். இவற்றுக்கு உறுதுணையாயிருப்பவை நாட்டார் பாடல்களில் காணப்படுகின்றதாகிய மெட்டுக்களே. இந்த ஒசை மெட்டுக்களை எடுத்தாளும் போது முறிவேற்படாமலும், சிக்கல்கள் அற்றதாகவும் தெளிவான ஒட்டமுடையதாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும். அன்றேல் இவை பாடலைச் சரிவரப் பாட முடியாத இக்கட்டுகளைப் பாலப்பருவத்தினருக்கு உருவாக்கிவிடும்.
குழந்தைகளின் மனப்பக்குவத்திற்கு ஏற்றபடி பாடல்கள் பாடத்தக்கதாக அமைவதோடு அவர்கள் அபிநயம் செய்து ஆடக்கூடியதாகவும் தூண்டக்கூடிய காட்சிக்கோலங்களையும் செயற்பாடுகளையும் தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். பாடல்களில் உஷ், புஷ், இஸ் போன்ற பலவித ஒலிக்கோலங்களையும் எழுப்பக் கூடிய நெகிழ்ச்சித்தன்மை நிரம்பிய பாடல்களைக் குழந்தைகள் செய்முறையில் பாடிக்காண்பிக்கும்போது புதிய உற்சாகத்தை அடைவதோடு பொருளையும் சரிவர உணரத் தலைப்படுகின்றனர்.
பாடல்களின் இலகுத்தன்மையும் லாவகமும் அவர்களைச் சுயேச்சையாகவே படிக்கத்துரண்டும். காட்சி, செயல், ஒலிக் கோலங்களும், ஒசை ஒழுங்கும் பாலர்களை அறியாமலே அவர்களைத் தூண்டித் தாமாகவே கருத்தூன்றி அவற்றுள் ஒன்றிப் படிக்க வைத்து விடுகின்றன. இயற்கை வனப்புகளையும், பட்சி, விலங்கு மற்றும் பார்வையில் அன்றாடம் தட்டுப்படும் பொருட்கள் முதலியனவை களையும் அழகிய சொல்லோவியங்களுள் சிறைப்படுத்தியனவாய் விளங்கும் பாடல்களைக் குழந்தைகள் பெரிதும் விரும்புவர்.
குழந்தை இலக்கியம் இன்று.
குழந்தைக் கவிதைகளின் தன்மை இன்னவாறு தான் அமைய வேண்டுமென வரையறுத்துக் கூற முயன்றாலும் அத்தகைய பண்புகளுக்கமைவான படைப்புக்கள் அருகியே காணப்படுகின்றன.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -121
வெறும் வியாபார நோக்கிலான படைப்புக்கள் நாளாந்தம் தமிழ்க் குழந்தைப் பாடல் பரப்பை மிகவும் நெருக்கடியான சூழ்நிலை யொன்றுக்குள் தள்ளிக் கொண்டு வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இன்று, தமிழில் குழந்தைக் கவிதைகளுக்கிருக்கும் தேவையை உணரத்தலைப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, குழந்தைகள் எதைப்படிக்க வேண்டும். எப்படிப்பட்டனவற்றை அவர்களுக்கு படிக்கக் கொடுக்க வேண்டும் என்பனவற்றைப் பற்றியெல்லாம் சற்றேனும் சிந்திக்காது, அவர்களுக்கு சிறிதளவேனும் ஒவ்வாதவற்றையெல்லாம் அச்சிட்டு வெளியிட்டு வருகின்றார்கள். இவர்களுக்கெல்லாம் வருங்காலச் சந்ததியினரைப் பற்றிய அக்கறை இல்லை. அவர்களின் முக்கிய நோக்கம் பணம் பண்ணுதலே. இவர்களுக்கெல்லாம் அனுசரணையாக விளம்பர சாதனங்களும் கைகொடுத்து உதவுவதனால் மக்கள் எளிதில் ஏமாற்றப்பட்டு விடுகின்றார்கள்.
குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட அறிஞரும், ஆய்வியலாளரும், விமர்சகர்களும், சமூக நிறுவனங்களும் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தினாலன்றி குழந்தை இலக்கியத்தையும் ஆட்டிப் படைக்க முயலும் இந்த வியாபாரப் போக்கையும் நிறுத்துதல் கடினம். மேலைத்தேயங்களிலும் இன்று இத்தன்மை வாய்ந்த வியாபார அட்டகாசம் குழந்தை இலக்கியத்தில் செல்வாக்குச் செலுத்திவருவதாக சோவியத் விமர்சகரான சொகேய் மிகால் கோவ் குறிப்பிட்டுள்ளார்.
வெறும் "முதுகு சொறியும்” விமர்சனங்களும், முகஸ்துதி பண்ணும் முன்னுரைகளும், அறியாமையோடு கூடிய அணிந்துரை களும் இக் குழந்தைக் கவிதைத் துறையில் இறங்கி உழைக்க முன் வருபவர்களுடைய கூர்மையை மழுங்கடிக்கச் செய்து விடுகின்றன. ஆகவே ஆரோக்கியமான குழந்தைக் கவிதைகளை எமது குழந்தைத் தலைமுறையினருக்கு வழங்க வேண்டுமேயானால் இத்துறை பற்றிய சிறந்த புலமையும் தெளிவும் இன்றியமையாதன என்பது தெளிவு, சுருங்கக்கூறின் பாலர்களுக்கேற்ற சிறந்த உன்னத படைப்புக்கள் தற்போது ஏற்பட்டுள்ள இலக்கிய விழிப்பு நிலையில் நிச்சயம் கிடைக்கும் என்பது மட்டும் உண்மை.
- நன்றி: முரசொலி. 07.12.1986.

Page 70
சிறுவர் விமர்சனம் அனுபவத்தினூடான மனப்பதிவு - கலாநிதி செ. யோகராசா -
“சிறுவர் விமர்சனம்” என்ற மேற்குறித்த தலைப்பினை நோக்குகின்ற இலக்கிய ஆர்வலர் அப்படி ஒன்று இருக்கின்றதா என்று வியப்படையவோ குழப்பமடையவோ கூடும். எனவே முதலில் அது பற்றித் தெளிவுபடுத்த வேண்டும். இங்கு சிறுவர்களிடமிருந்தே சிறுவர் இலக்கியப் படைப்புக்கள் பற்றிய (எ-டு: சிறுவர் பாடல், சிறுவர் கதை) அபிப்பிராயங்களைக் கேட்டறிந்து கொள்வதனையே சிறுவர் விமர்சனம் என்று நான் கருதுகின்றேன்.
மேலும் இங்கு தெரிவிக்கும் கருத்துக்கள் எனது அனுபவத்தி னுாடாகப் பெறப்பட்டவையாகும். அதாவது, அவ்வப்போது எனது நான்கு வயது மகளின் சில செயற்பாடுகளை அவதானித்த தனுTடாகவும், அவள் தெரிவித்த அபிப்பிராயங்களூடாகவும் பெறப்பட்டவையாகும்.
அவளின் செயற்பாடுகளை உற்று அவதானித்ததன் ஊடாக பெறப்பட்டவற்றுளொன்று சிறுவர் உலகம் மிக வித்தியாசமானது என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.
அது யாது? கடந்த சில மாதங்களின் முன்னர் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு நகருக்கு விடுதலைப் புலிகள் முதன்முதலாக வந்திருந்தார்கள். அவ்வேளை "விடுதலைப் புலிகள் வருகின்றார்கள்” என்றதும் மகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி, நேரே பார்க்க வேண்டும் என்ற அங்கலாய்ப்பு; பொங்கிவழியும் மகிழ்ச்சிப் பிரவாகம்; அதேவேளை அவர்கள் வந்த பின்னர் ஏமாற்றம்.
அது ஏன்? அதாவது "விடுதலைப் புலிகள்” என்று அவள் நினைத்தது காட்டிலே வாழ்கின்ற உண்மையான புலிகளையே! அவையே வர இருக்கின்றன என்று அவளது பிஞ்சு உள்ளம்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -123
எண்ணியிருந்தது. அதனாலே தான் அவளுக்கு ஏமாற்றம். ஆனால், ஓரளவாவது சிறுவர் உளவியல் அறிந்த நான் அதனை உணர்ந்திருக்க வில்லை. இங்கு நான் வலியுறுத்த விரும்புவன, சிறுவர் உலகம் வித்தியாசமான உலகம் என்பதை சிறுவர் இலக்கியம் எழுத முற்படுவோர் சிறுவர் உளவியலை நன்கு அறிந்திருக்க வேண்டும். அது மட்டுமன்றி, அது பற்றி தெளிவு பெறுவதற்கு சிறுவர்களோடு நெருங்கிப் பழக முன்வர வேண்டும் என்பனவாம்.
சிறுவர் உலகம் மேற்கூறியவாறிருக்கின்றபோது, சிறுவர் எழுத்தாளரது உலகம் எத்தகையது என்பதனை உணரக்கூடிய வாறானதொரு அனுபவமும் மகளுடாக எனக்கு ஏற்பட்டது. அண்மையில் வெளிவந்த தொகுப்பிலே உள்ள (யானை பற்றிய) சிறுவர் பாடலொன்றினை மகளுக்குப் படித்துக் காட்டினேன். அதன் ஒரு பகுதி இது.
“வாழ்வின் அதன் நம்பிக்கை
வளர்ந்து இருக்கும் தும்பிக்கையில் நீர்குடிக்கும் காட்சிகள் குட்டிபோடும் சிரத்தைகள் எல்லாமே நன்றுதான் நம்பிக்கையும் வென்று தான்"
இப்பாடல் மகளின் மனதை ஒரு சிறிதளவாவது ஈர்க்கவில்லை. காரணம் உங்களுக்குப் புலப்பட்டிருக்கும். சிறுவரைக் கவரக் கூடியவாறான இன்னோசை, இனிய சந்தம் என்பன இப்பாடலில் இடம் பெற்றிருக்க வில்லை! (அது மட்டுமன்றி பாடலில் விடயத் தெளிவும் காணப்படவில்லை) குறிப்பிட்ட ஆசிரியர் தமது பாடலை சிறுவர்களிடம் ஏலவே படித்துக் காட்டியிருப்பின் இவ் இமாலயத் தவறு ஏற்பட்டிருக்காதல்லவா?
மேலே சிறுவர் இலக்கியம் தொடர்பாக, எனது அனுபவங் களூடாக உணர்ந்து கொண்ட இரு விடயங்களைக் குறிப்பிட்டேன். இனி சிறுவர்களுக்கு நாம் இலக்கியம் படைக்கும் போது அது பாடலோ கதையோ எதுவாக இருந்தாலும் - மொழிப் பிரயோகத்தில் கவனம் செலுத்துவதன் அவசியம் தொடர்பான எனது அனுபவங் களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
தபாற்காரன் வருகின்றான் தபாற்காரன் வருகின்றான்"

Page 71
- 124- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
என்ற சிறுவர் பாடலொன்றினை மகள் நன்கு அறிந்திருந்தாள். அப்பாடலில் யாதேனும் பிழை இருப்பதாக அன்று வரை எனக்குத் தெரியவில்லை. இதனிடையே எமக்குத் தபால் விநியோகம் செய்கின்ற தபாற்காரருடன் ஏலவே மகளுக்கு நல்ல தொடர்பு. மாமா - மருமகள் என்று கூப்பிடும் அளவிற்கு நல்ல தொடர்பு. இப்பின்னணியில் சடுதியாக ஒருநாள் மேற்குறித்த பாடலில் தபாற்காரன் என்று வரக்கூடாது என்று அவள் கூறினாள். உண்மைதான். அப்படிக்கூறுவது மரியாதைக் குறைவு என்று ஏதோ ஒரு விதத்தில் அவள் உணர்ந்திருந்தாள். அதனை, அப்பாடலை இயற்றியவரோ நானோ நிச்சயமாக இதற்கு முன் உணர்ந்திருக்க மாட்டோம்! மேற்கூறிய வாறான பல பாடல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது ஒருபுறமிருக்க, இதனோடு தொடர்புபட்ட இன்னொரு உண்மை மனத்தைக் குடைகின்றது. அதாவது "பிள்ளைகள், பெரியோர்களை மதிக்க வேண்டும்" என்று அடிக்கடி சொல்லுகின்ற நாம் - அது பற்றி பாடல்கள், கதைகள் எழுதுகின்ற நாம் - எங்களை அறியாமல் எமது படைப்புகளூடே மரியாதைக் குறைவான - பண்பாடற்ற விடயங் களைத் தெரியப்படுத்தி வருகின்றோம்.
சிறுவர் பாடல்களில் இடம் பெறும் சொற்றொடர்கள் சிறுவர் பாடுகின்ற வசதிக்கேற்ப பிரித்தோ சேர்த்தோ இடம் பெற வேண்டும். எனினும், தற்போது வெளிவரும் பாடல்கள் பலவற்றை மகளுக்கு அறிமுகப்படுத்தும்போது அப்பாடல்கள் அதற்கு எதிர்மாறாக அமைந்தமையால் எனக்கேற்பட்ட இடர்ப்பாடுகளையும் இவ்வேளை உங்களுடன் பகிர்ந்துகொள்வது அவசியமே.
சிறுவர் கதைகள் தொடர்பான அனுபவமொன்றினையும் எடுத்துரைப்பது பொருத்தமானது. சிறுவர் படைப்புக்களில், பேய், பிசாசு, இரத்தம் முதலிய குறிப்புக்கள் ஒரளவாவது இடம் பெற்றாலும் கூட, இவ்வயதுச் சிறுவர்கள் இவற்றினைப் பெருமளவு விரும்புவ தில்லை என்பது "பயங்கர இரவுகள்” என்ற தொகுப்பிலுள்ள சிறுவர்கதைகளை வாசித்துக் காட்டியபோது எனக்கேற்பட்ட அனுபவமாகும். அதே வேளையில் மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும். துன்பமான முடிவுள்ள சிறுவர் கதைகளையும் அவர்கள் விரும்பத் தயங்குவதை என்னால் உணர முடிந்துள்ளமை உங்கள் கவனத்திற்குரியது.
பொதுவாக சிறுவர்களுக்குரிய படைப்புக்கள் எவ்வகையினவாக இருந்தாலும் படங்கள் (சித்திரங்கள்) இடம் பெற வேண்டுமென்று அடிக்கடி கூறப்படுவது பலரும் நன்கு அறிந்த விடயமே. எனினும், சிறுவர்களோடு பழகும் போதுதான் அதனுடைய முக்கியத்துவத்தை

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -25
நன்கு உணர முடிகின்றது. உதாரணமாக, சிறுவர் பாடலொன்றில் ஒன்பது மிருகங்கள் பற்றிய விடயம் இடம் பெற்றிருந்தது. ஆனால் அந்தப் பாடலுக்குப் படம் வரைந்தவர் ஏழு மிருகங்களின் படங்களைத்தான் வரைந்திருந்தார். இதை அவதானித்த எனது மகள், "ஏன் மீதி இரண்டு மிருகங்களும் வரையவில்லை" என்று கேட்டாள். இதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனினும் சிறுவர்களை ஏமாற்றுவது கடினம் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
சிறுவர்கள் தமது நூல்களில் படங்கள் அதிகம் இடம் பெற வேண்டும் என விரும்புகின்ற அதே வேளையில், எழுத்தாளர்கள் ஒரிரு வர்ணங்களிலேயே (இன்னும் தெளிவாகக் கூறினால் கறுப்பு, வெள்ளை என்பனவோ ஒரே ஒரு வர்ண மோ) பெரும்பாலும் படங்களைப் போடுகின்றனர். எனினும் சிறுவர்கள் அவற்றை விரும்புவதில்லை என்பதே எனது அனுபவமாகின்றது.
ஆக, சிறுவர்கள் உலகம் வித்தியாசமான தனி உலகமாகவுள்ளது என்பதை மேற்கூறிய எனது அனுபவங்களினூடாக உங்களால் உணர்ந்து கொள்ள முடிந்திருக்கும். எனவே சிறுவர் இலக்கியம் படைப்பவர் சிறுவர் உளவியல் உணர்ந்திருக்க வேண்டும் என்பது மட்டுமன்றி சிறுவர்களுடன் ஊடாடுவதனூடாகவே அதில் தெளிவு பெற முடியும் என்றும் கருதுகின்றேன். எனவேதான் சிறுவர் இலக்கியம் படைத்த பின்னர் சிறுவர்களிடமே அவற்றைக் கொடுத்து அவர்களது அபிப்பிராயங்களை அனுசரித்து தமது படைப்புக் குறைபாடுகள் பலவற்றை நிவர்த்தி செய்து கொள்ள முடியும் என்கின்றேன். அதனைச் சிறுவர் விமர்சனம் என்று அழைப்பதில் தவறில்லை என்றும் கருதுகின்றேன்.
இறுதியாக, பொருத்தம் கருதி இன்னொரு விடயத்தைக் குறிப்பிடலாம். கடந்த சில வருடங்களாக தமிழ் நாட்டிலிருந்து "சுட்டி” என்ற பெயரில் சிறந்த சிறுவர் சஞ்சிகையொன்று வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பதும், அவ்வப்போது இச்சஞ்சிகையின் படைப்புக்கள் பற்றிய அபிப்பிராயங்களை அதன் ஆசிரியர் குழுவினர் சிறுவர்களிடமிருந்து அறிந்து கொள்கின்றார்கள் என்பதும், அதற்கேற்ப சஞ்சிகையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதுமே அதுவாகும்.
- நன்றி : ஞானம்

Page 72
யாழ்ப்பாணப் பிரதேசச் சிறுவர் பாடல் வளர்ச்சி ஒரு நோக்கு
- வே. செவ்வேட்குமரன்
தமிழில் சிறுவர் பாடல் வளர்ச்சி என நோக்கும் போது அது கால்கோள் கொண்ட ஆரம்பகாலங்களில் தமிழகத்தை விட ஈழமே கணிசமான பங்களிப்பினைச் செய்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தை மையமாகக் கொண்டே சிறுவர் பாடல் நூல்கள் பல வெளிவந்துள்ளமையினை அறிய முடிகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வரவோடு ஏற்பட்ட சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு மாற்றங்களின் அடியாக தமிழில் ஏற்பட்ட நவீனகரமான மாற்றங்களில் எல்லாம் யாழ்ப்பாணம் முன்னிலை வகித்தது போன்றே தமிழ் சிறுவர் பாடல் வளர்ச்சியிலும் யாழ்ப்பாணம் அதிக பங்களிப்பைச் செய்துள்ளது. இதனால்தான் ஈழத்தின் சிறுவர் பாடல் வளர்ச்சி என்பது பெரும்பாலும் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஆய்வாகவே அமைந்து விடுகின்றது.
தமிழில் வெளிவந்த முதலாவது சிறுவர் பாடல்நூலாக இருப்பது யாழ்ப்பாணம் தம்பிமுத்துப்பிள்ளை என்பவர் 1886 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட "பாலியக் கும்மி" எனும் நூலாகும். இந்நூல் வெளிவந்து ஐம்பத்திரண்டு வருடங்களின் பின்னரேயே தமிழகத்தின் முதல் சிறுவர் பாடல் நூலான "மலரும் மாலையும்" வெளிவந்திருட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பாலியக்கும்மிக்கு முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் 1918இல் ச.வைத்தியநாதரால் “தமிழ்ப்பால போதினி” என்ற குழந்தைக் கவிதை நூல் வெளிவந்துள்ளது. இதில், "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு", "கைவீசம்மா கைவீசு”, “என் தாயே எண்தாயே”, “குண்டிடுக்கி

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் 127.
குடுகுடுக்கி” போன்ற சிறந்த பாடல்களும் அடங்கியிருந்தன.
இதனைத் தொடர்ந்து 1935 ஆம் ஆண்டில் வடபெரும்பாக வித்தியாதரிசியாக இருந்த கே. எஸ். அருணந்தி அவர்களது கேள்விப்படி வட இலங்கை தமிழாசிரியர் சங்கத்தால் "பிள்ளைப்பாட்டு” எனும் குழந்தைப்பாடல் தொகுதி யொன்று வெளியிடப்பட்டது. இது பன்னிரண்டு குழந்தைக் கவிஞர்கள் இயற்றிய எழுபத்திரண்டு பாடல்களை உள்ளடக்கியுள்ளது. இவ்வாறு குழந்தைக் கவிஞர்கள் பலருடைய சிறந்த பாடல்களின் தொகுதியாக முதலில் வெளிவந்தது பிள்ளைப்பாட்டே. இது வெளி வந்து முப்பத்தைந்து ஆண்டுகளின் பின்னரே தமிழகத்தில் இப்படிப்பட்ட தொகை நூலான “முத்துக்குவியல்" வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு குழந்தை இலக்கியப் போட்டியை முதலில் நடத்திய பெருமையும் யாழ்ப்பாணத்திற்கே உரியதாகும். சிறுவர்களது வயது, அறிவு, கொண்ணிலை, உளவியல் முதலானவற்றை மனம் கொண்டு தமிழாசிரியர்களிடையே குழந்தைப் பாடல் போட்டி நடத்தப்பட்டு பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் தமிழ் சிறுவர் பாடலின் தோற்றம் வளர்ச்சியில் முதல் சிறுவர்பாடல்நூல், முதல் சிறுவர்பாடல்தொகுதி, முதல் சிறுவர் பாடல் போட்டி என அனைத்து அம்சங்களிலும் யாழ்ப்பாணம் முன்னிலை பெற்று நிற்பதைக் காணமுடிகின்றது.
அடுத்து யாழ்ப்பாணப் பிரதேசத்தில் சிறுவர் பாடல்கள் எழுதிய கவிஞர்கள் என நோக்கும் போது 1950க்கு முன் சிறுவர் பாடல்கள் எழுதியவர்களாக மா. பீதாம்பரம், சி. அகிலேசசர்மா, க. சோமசுந்தரப்புலவர், எஸ். தங்கசாமி ஐயர், ச. பஞ்சாட்சரஐயர், ஜி. ஜெ.எஸ். ஆழ்வாப்பிள்ளை, ஜெ. கே. சின்னத்தம்பி முதலியோர் முதலில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். இவர்களது சிறுவர் பாடல்கள் "பிள்ளைப்பாட்டு" தொகுதியிலும் வெளிவந்துள்ளன.
ஆலமரம் ஆலமரம் அழகான ஆலமரம் பாலர் நாங்கள் ஆடல் பாடல் பழகநல்ல ஆலமரம்.
எனும் மா. பீதாம்பரத்தினது பாடல் பாலப்பருவ குழந்தைகளுக்குரிய பாடல்களுக்கு சிறந்த உதாரணம் எனலாம். இது போன்றே இக்கால கட்ட கவிஞர்களில் சோமசுந்தரப் புலவர் குறிப்பிடத்தக்கவர். "தங்கத்தாத்தா” என அழைக்கப்படும் இவர் ஈழத்தின் சிறுவர் பாடல்

Page 73
-128- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
முன்னோடியாவார். இவரது பாடல்கள் தேசிக விநாயகம்பிள்ளையது பாடல்களுடன் ஒப்பிடப்படுபவை. இவரது “ஆடிப்பிறப்பு" , "கத்தரிவெருளி” "சாய்ந்தாடம்மா" போன்ற பாடல்கள் இன்றும் சிறுவர்களது நாவில் தவழ்வது இவரது சிறப்பிற்கு உதாரணம் எனலாம்.
இதன்பின் 1950 களில் குழந்தைப் பாடல்கள் எழுதியவர்களாக அல்வாயூர் மு. செல்லையா, க.வேந்தனார், சந்தனநங்கை கந்தப்பு, க. வீரகத்தி முதலியோரைக் குறிப்பிடலாம். "செந்தமிழ்ச்சிறுவர்களே சேர்ந்து பாடுவோம்” எனும் 1955 இல் வெளிவந்த சந்தன நங்கையின் நூலும் "சிறுவர் செந்தமிழ்” (1955) எனும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் நூலும், மு. நல்லதம்பி 1958 இல் வெளியிட்ட "இளைஞர் விருந்து" எனும் கவிதைத் தொகுப்பில் உள்ள "குழந்தை இன்பம்" எனும் பகுதியும், அல்வாயூர் மு.செல்லையாவின் "வளர்பிறை" (1952) எனும் தொகுப்பில் உள்ள வளர்பிறை எனும் பாடலும் இக்காலத்தில் வெளிவந்த குழந்தைப் பாடல் தொகுப்புகளுக்கு நல்ல உதாரணங்களாகும்.
அம்மா வெளியே வா அம்மா அழகாய் மேலே பாரம்மா சும்மா இருந்த சந்திரனைத் துண்டாய் வெட்டின தாரம்மா?
எனும் மு. செல்லையாவின் “வளர்பிறை" எனும் பாடல் சிறந்த மழலைப் பாடலாகும்.
1960 களில் சிறுவர் பாடல்கள் எழுதியவர்களில் அ. இ. ஏரம்பமூர்த்தி, இ. நாகராசன், இ. அம்பிகைபாகன், இ. சிவானந்தன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். வேந்தனாரின் "கவிதைப் பூம்பொழில்" (1964) எனும் நூலில் உள்ள "குழந்தை மொழி” எனும் பகுதி அம்பிகைபாகனின் "அம்பிப்பாடல்" (1969), இ. சிவானந்தனின் "கண்டறியாதது" (1960) என்பன இக்காலத்து வந்த குறிப்பிடத்தக்க சிறுவர் பாடல் நூல்களாகும்.
அன்புப் பாலர் சேருங்கள் அம்பிப் பாடல் பாடுங்கள் அண்ணா அக்கா வாருங்கள் அமுதப்பாடல் பாடுங்கள். எனும் அம்பியின் பாடல் இக்கால குழந்தைப் பாடல்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்நூலே முதன்முதல் சிறுவர்க்கேற்ற

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 29
பெரிய படங்களுடன் வெளிவந்த நூலாகும். இதே போன்று இக்காலத்து வந்த இ. சிவானந்தனின் "கண்டறியாதது" எனும் சிறுவர் பாடல் தொகுப்பும் குறிப்பிடத்தக்கது. இது சிறுவர்களுக்கான அறிவியற் பாடல் தொகுப்பாக உள்ளது. தங்கக் கடையலில் ஜம்பத்தேழு குழந்தைப் பாடல்கள் உள்ளன. இவரின், 1970களில் க. வீரகத்தியின் "தங்கக் கடையல்", பா. சத்திய சீலனின் "மழலைத் தமிழ் அமுதம்" எனும் இரு தொகுதிகளும் குறிப்பிடத்தக்கவை.
"பந்து பந்து பந்து
பாலர் ஆடும் பந்து"
எனும் பாடல் சிறந்த மழலைப் பாடல் எனலாம்.
1980 களின் பின் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் மிக அதிகமான குழந்தைக் கவிஞர்கள் தோற்றம் பெற்றதோடு மிக அதிகமான தொகுதிகளும் வெளிவந்தன. எண்பதுகளின் முன்னர் எழுதத் தொடங்கிய செ. கதிரேசப்பிள்ளை, சி. கார்த்திகேசு, மயிலங்கூடல் த. கனகரத்தினம், பா. சத்தியசீலன், ஆடலிறை போன்றோர் எண்பதுகளின் பின்னரும் சிறுவர் பாடல்களை எழுதி வருகின்றனர். அத்தோடு த. துரைசிங்கம், சுக. ஜீவன், மலர்சின்னையா, சிதம்பரபத்தினி, கோப்பாய் சிவம், யாழ். ஜெயம், சபா. ஜெயராசா, வளவை வளவன் போன்ற புதியவர்களும் இக்காலத்தில் சிறுவர் பாடல்களை எழுதி வருகின்றனர். இதில் பா. சத்தியசீலன், த. துரைசிங்கம் போன்றோர் தலா பத்திற்கும் மேற்பட்ட சிறுவர் பாடல் நூல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மழையே போங்கோ நாளைக்கு வாங்கோ பப்பி யோடே வண்ணன் விளையாடப் போறான் மழையே போங்கோ நாளைக்கு வாங்கோ.
எனும் பாடல் பா. சத்தியசீலனின் சிறுவர் பாடலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.
இவ்வாறு வெளிவந்த எல்லா சிறுவர் பாடல்களையும் நோக்கும் போது, அவை பெரும்பாலும் தமது கற்பித்தல் தேவைகளுக்காக தமிழாசிரியர்களால் பெரும் பாலும் எழுதப்பட்டவையாகவே உள்ளன. ஒசை, சந்தம் மிக்கவையாக சிறுவர்களை இலகுவில் கவரத் தக்கவையாக இப் பாடல்கள் பெரும்பாலும் அமைந்துள்ளன.

Page 74
-130- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
எனினும் சிறுவர்கள் எனும் பராயத்தினுள் உள்ள பல்வேறு வயதுப் பிரிவினர்க்கும் அதாவது மழலை, பாலர், குழந்தை, சிறுவர் என அவர்களது வயது வேறுபாட்டு அடிப்படையில் அவ்வவ் வயதுப் பிரிவினர்க்கு உரிய உளவியல் தன்மைக்கு ஏற்ப வெளிவந்த பாடல்கள் மிகக் குறைவு எனலாம். குறிப்பாக மழலைப் பாடல்கள் என சொல்லத்தக்க பாடல்கள் பெரிதும் வெளிவரவில்லை என்றே கூற வேண்டும். இவ்வகையில் சபா. ஜெயராசா குறிப்பிடத்தக்கவர். இவரது "பாலர்கல்விப் பாடல்" முன்னாரம்பப் பள்ளி சிறார்களின் உடல், உள்ளம், மனவெழுச்சி, அழகியல் உணர்வு, ஆக்கத்திறன் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பரிசோதனை முயற்சியாக எழுதப்பட்டுள்ளது. இதற்கு,
“பறவைகள் போலக்
கைகள் அசைப்போம் Lunt (65 பாட்டு பாடுக பாட்டு வலமும் இடமும் கைகள் அசைப்போம் பாடுக பாட்டு Lunt Gas LunT L ʼ G6ʼ
எனத் தொடரும் அசைவுகளுடன் பாடத்தக்க பாடல் குறிப்பிடத் தக்கதாகும்.
இதனைவிட இறந்தவரின் நினைவாக வெளியிடப்படும் நினைவு மலர்களும் குழந்தைப் பாடல்கள் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. குறிப்பாக நாற்பத்தைந்து நினைவு மலர்கள் (கல்வெட்டு) சிறுவர் பாடல் தொகுதிகளாக வெளிவந்துள்ளமை யாழ்ப்பாணத்திற்கே உரிய தனிச் சிறப்பாகும். இவ்வகையில் மயிலங் கூடலூர் பி. நடராஜன் (ஆடலிறை) குறிப்பிடத்தக்கவர். இவர் இருபதிற்கும் மேற்பட்ட நினைவு மலர்களைச் சிறுவர் பாடல் தொகுப்புகளாக வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு யாழ்ப்பாணப் பிரதேசத்தில் பெருந்தொகையான சிறுவர் பாடல் தொகுப்புகளும், சிறுவர் பாடல் கவிஞர்களும் தோன்றியுள்ள போதும் அறிவியல் பாடல்களின் வரவு குறைவாக இருப்பதும், சிறுவர்களது வயதுப் பிரிவிற்கேற்ப தரம் பிரித்து வெளியிடப்படாமையும், சிறுவர்களைக் கவரத்தக்க வண்ணப் படங்களுடன் வெளியிடப்படாமையும் மிக முக்கியமான குறைபாடுகளாக உள்ளது எனலாம்.
- இதுவரை பிரசுரிக்கப்படாத கட்டுரை

மட்டக்களப்புப் பிரதேசத்தில் குழந்தைக் கவிதை வளர்ச்சி
- கலாநிதி செ. யோகராசா -
தமிழ் நாட்டில் குழந்தைக் கவிதை வளர்ச்சி குறுகியகால வரலாறு கொண்டதாகும். இலங்கையின் நிலையும் அத்தகையதே. அதே வேளையில் குழந்தைக் கவிதை முயற்சி இலங்கையிலேயே முதன் முதலில் (1918) நிகழ்ந்துள்ளதென்பது வரலாறாகிவிட்டதொரு உண்மை. எனினும், இதனால் நாம் பெருமையுறுவதற்கு எதுவுமே இல்லை. ஏனெனில், இன்று இலங்கையை விட தமிழ் நாட்டிலே குழந்தை இலக்கியம் பன்முகப்பட்ட வளர்ச்சிநிலையைக் கண்டுள்ளது. குழந்தைக் கவிதையும் துரிதமானதும் குறிப்பிடத்தக்கதுமான வளர்ச்சி நிலையை எட்டியுள்ளது. இலங்கையின் இத்தகைய ஆரோக்கியமற்ற சூழலில் மட்டக்களப்புப் பிரதேசக் குழந்தைக் கவிதை பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது பயனுடைய முயற்சியன்றோ!
மட்டக்களப்புப் பிரதேசத்தில் குழந்தைக் கவிதையின் பிறப்பு ஐம்பதுகளிலே இடம் பெறுகின்றதென அறிய முடிகின்றது. இவ்விதத்தில் ஆரையூர் அமரன், திமிலைத்துமிலன் ஆகியோர் அதன் "பெற்றோர்" ஆகின்றரெனலாம். தொடர்ந்து, வெற்றிவேல் வினாயக மூர்த்தி, திமிலை மகாலிங்கம், நாகூர் பாவா, செ. குணரத்தினம் முதலானோர் இத்துறைக்குள் வந்து சேர்ந்தனர்.
மேற்கூறியவாறு குழந்தைக் கவிதையானது பிறந்து தளர்நடை பயின்றதற்கான சூழல் எத்தகையது? அவ்வேளை, "சுதந்திரன்” தொடக்கம் "தினபதி” வரையிலான இலங்கைப் பத்திரிகைகள் மட்டுமன்றி "அம்புலிமாமா", "பாலபாரதி” முதலான தமிழ்நாட்டுச் சஞ்சிகைகளும் குழந்தைக் கவிதைகளை வரவேற்றுப் பிரசுரிக்கும் நிலை காணப்பட்டதனை அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலை, பயிலும் ஆசிரியர்களை இத்தகைய

Page 75
-132. ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
முயற்சிகளில் ஈடுபடுத்திற்று. இலக்கிய மன்றங்களில் சிலவும் (எ-டு: தேனமுத இலக்கிய மன்றம்) இத்துறையில் ஆர்வங் காட்டின. இத்தகைய பின்னணியில், தமிழ் நாட்டின் முக்கிய குழந்தைக் கவிஞரான அழ. வள்ளியப்பாவின் வருகை இத்துறையில் ஈடுபட்ட கவிஞர்களுக்கு உத்வேகமளிப்பதாகவும் அமைந்து விடுகிறது. ஐம்பதுகள் தொடக்கம் எழுபத்தைந்து - எண்பதுகள் வரையில் மட்டக்களப்பில் குழந்தைக் கவிதை வளர்ச்சியுற்றமைதற்கான ஆரோக்கியமான சூழல் இதுவேயாகும்.
மேற்கூறிய கவிஞர்களது கவிதைகள் பற்றிக் கவனிப்பதற்கு முன் குழந்தைக் கவிதைகளின் தனித்துவமான இயல்புகள் பற்றி நினைவு கூர்வது அவசியமாகிறது. அவை யாவை?
குழந்தைகளுக்கு நன்கு பிரியமான விடயங்கள் பற்றி (எ-டு : பறவைகள், விலங்குகள்) பாடப்பட வேண்டும். அவர்களது வாயில் நுழையக் கூடியதும் பிரித்தெழுதப்பட்டதுமான சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். இனிய சந்தம், ஒசை என்பன இடம் பெறவேண்டும். இனிமைக்கு ஊறுதரும் யாப்பமைதிகள் தவிர்க்கப்பட வேண்டும். கவிஞர் நவீன உளவியலறிவு பெற்றவராய் விளங்குவது அவசியமாகின்றது. அத்துடன் குழந்தைகளின் செயற்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பவராயிருக்க வேண்டும். அனைத்தையும் விட கவிஞர் குழந்தைகளுக்காக “குழந்தை நிலை"யிலிருந்து கவிதை இயற்ற வேண்டும். மேலும் குழந்தைக் கவிதைத் தொகுப்புகள் வண்ணப் படங்கள் நிறைந்தனவாகவும் , எழுத்துப் பிழைகள் இடம் பெறாதனவாகவும் வெளி வருவது அவசியமாகிறது. இத்தகைய அம்சங்களை மனங்கொண்டு முற்கூறிய கவிஞர்களின் கவிதைகள் பற்றி சுருக்கமாக அவதானிப்போம்.
ஆரையூர் அமரன் ஏறத்தாழ 150 குழந்தைக் கவிதைகள் இயற்றியுள்ளதாக அறிய முடிகிறது. இவற்றுள் பெரும்பாலானவை குழந்தைக் கவிதைகள் பற்றிய மேற்கூறிய அம்சங்களுக்கு அமைவானவை. இலங்கைப் பத்திரிகைகளில் மட்டுமன்றி தமிழ்நாட்டுச் சஞ்சிகையான அம்புலிமாமா, பாலபாரதி ஆகியவற்றிலும் இவரது சில கவிதைகள் வெளியாகியுள்ளன. அம்புலி மாமா (மே, 1951) வெளிவந்த "ஆட்டுக்குட்டியாரே" என்ற கவிதை இவ்வாறு ஆரம்பிக்கின்றது.
“துள்ளித் துள்ளிப் பாயாதே வெள்ளை ஆட்டுக்குட்டியரே பள்ளம் மேடு இருக்குமே பாய்ந்தால் கால்கள் உடையுமே”

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -133
இவரது கவிதைகள் பற்றி அழ. வள்ளியப்பா வழங்கிய சிறப்புரையின்
ஒரு பகுதி:
குழந்தைகளின் வயதுப் பிரிவுகளுக்கு ஏற்ப பல நல்ல பாடல்களை இயற்றித் தந்துள்ளார் கவிஞர் திரு. ஆரையூர் அமரன். குழந்தை களுக்கு மிகவும் பிடித்த பொருட்களைப் பற்றி குழந்தைகள் தாமே விரும்பிப் பாடும் இனிய எளிய முறையிலே பாடல்கள் யாவும் அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.
எனினும் இவரது குழந்தைக் கவிதைத் தொகுப்பு ஒன்றாவது இன்றுவரை வெளிவராமை விசனத்திற்குரியதாகும். “குழந்தை ஒலி" என்ற தலைப்பில் ஒரு தொகுப்பிற்கான அட்டைப்படம் கூட சில வருடங்களுக்கு முன் தயாராயிருந்ததாக அறிய முடிகிறது. அதற்கு அழ. வள்ளியப்பா வழங்கிய சிறப்புரையே மேலே இடம் பெற்றது. யாது காரணமோ அத்தொகுப்பு பின்னர் வெளியிடப்படவில்லை.
திமிலைத் துமிலனின் ஆரம்ப காலக் கவிதைகள் எவையும் பார்வைக்குக் கிடைக்கவில்லை. அவரது குழந்தைக் கவிதைகளுள் சில “முல்லை" (1986) என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளன. இவற்றிலுள்ள குழந்தைக் கவிதைகளுள் சிலவற்றிலே குழந்தைகளுக்குச் சற்றுக்கடினமான சொற்புணர்ச்சிகள் காணப்படுகின்றன. தொகுப்பில் எழுத்து வழுக்களும் ஆங்காங்கு தலை நீட்டுகின்றன. சில கவிதைகளின் தலைப்புகள் நீண்டு காணப்படுவதோடு உள்ளடக்கத் திற்குப் பொருத்தமற்றனவாகவுள்ளன. (உ.ம்: வாலை வாலை ஆட்டி ஆட்டி வள்வள் என்னுமே) இவ்வாறான ஒரு சில குறைபாடுகள் தவிர ஏனைய விதங்களில் முற்குறிப்பிட்ட குழந்தைக் கவிதைகளுக்குரிய அம்சங்களே "முல்லை"யில் காணப்படுகின்றன. கதைப்பாடல்கள் புதிய கதைகளைக் கொண்டமைகின்றமையும் கவனிக்கத்தக்கது. திமிலைத் துமிலன் சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய (1959) குழந்தைக் கவிதைப் போட்டியிலே பரிசு பெற்றவரென்பதும் நினைவு கூரப்பட வேண்டியதே. இவரது கவிதைகள் பற்றிய அழ. வள்ளியப்பாவின் அணிந்துரையின் ஒரு பகுதி பொருத்தம் கருதி எடுத்தாளப்படுகிறது.
“பட்டுச் சட்டை போட்டுவிடு பையத் தோளில் மாட்டிவிடு பொட்டும் அழகாய் வைத்துவிடு போகும் முன்போர் முத்தமிடு” என்று ஒரு குழந்தை அம்மாவிடம் கூறுகிறது. அக்குழந்தை உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டும் போது கவிஞர் தமது குழந்தை உள்ளத்தையும் நன்கு காட்டி விடுகிறார் நமக்கு.

Page 76
-134- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
சிறுவயது தொட்டு கவி புனையும் ஆற்றல் கொண்டவரான (பாலர் பாமாலை முன்னுரை) வெற்றிவேல் விநாயக மூர்த்தியின் இரு தொகுப்புகள் வெளிவந்துள்ளன: பாலர் பாமாலை (1964) பொதுப் பாமாலை (1993) இவற்றுள் முதற்தொகுப்பில் அறப்போதனைப் பண்பு அளவாகவுள்ளது. எனினும் கவிதைகள் பலவும் ஒரே பாணியில் அமைந்துள்ளமை தொகுதி வடிவில் காணும் போது குறைபாடாகவே தெரிகிறது. "பொதுப் பாமாலை" முற்றிலும் மாணவருக்கான அற நூலாகத் திகழ, பாலர் பாமாலை முற்கூறிய குழந்தைக் கவிதை அம்சங்கள் பலவற்றையும் கொண்டுள்ளது. இவற்றுள் சிலவற்றிற்கு படங்களே தலைப்பாகவுள்ளமை பாராட்டத்தக்கது. இத்தொகுப் பிலுள்ள கவிதையொன்றின் ஆரம்பம் பின்வருமாறு:
"ஒன்றும் ஒன்றும் (இ)ரண்டு ஊதிப் பறக்கும் வண்டு இரண்டும் ஒன்றும் மூன்று எங்கள் விரலைப் போன்று”
அகமது குட்டிப் புலவர் தொடக்கம் அண்மைக்கால அன்ஸார் வரையில் குறிப்பிடத்தக்க கவிஞர்கள் பலரைத் தந்துள்ள காத்தான் குடிப் பிரதேசத்தைச் சார்ந்தவர் நாகூர் ஏ. பாவா. இவரது குழந்தைக் கவிதைகள் நமது செல்வம் (1976) என்ற பெயரில் நூல்வடிவம் பெற்றுள்ளன. குழந்தைக் கவிதை பற்றிய தெளிவு மிக்கவரான (ஆதாரம்: நமது செல்வம் என்னுரை, பக்.11) நாகூர் பாவாவின் குழந்தைக் கவிதைகள் முற்கூறிய குழந்தைக் கவிதைக்குரிய அம்சங்களைப் பெற்று விளங்குவது வியப்புக்குரியதன்று. சோமசுந்தரப் புலவர் யாழ்ப்பாணப் பிரதேச மண்வாசனையை வெளிப்படுத்தும் குழந்தைக் கவிதைகள் எழுதியது போன்று நாகூர் பாவா மட்டக்களப்புப் பிரதேச மண்வாசனை கமழும் சில கவிதைகளைத் தந்துள்ளமை (எ-டு: மரமுந்திரி, கற் பண்பாய், களிகம்பு, கப்பல் விற்றான் கொட்டை) விதந்துரைக்கப்பட வேண்டியதே. கப்பல் விற்றான் கொட்டை கவிதையின் ஒரு பகுதி இது: "ஒட்டு முந்திரிக் கொட்டை ஒற்றைக் கணிபோல் நெட்டை சுட்டுத் தட்டினால் ரெட்டை மட்டக்களப்புக் கொட்டை”
"நமது செல்வம்" தொகுப்பின் நூலமைப்பும் பாராட்டுக்குரியதாகும்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் ーI 35
திமிலை மகாலிங்கத்தின் குழந்தைக் கவிதைகளுள் சில, “புள்ளிப் புள்ளி மானே” என்ற தொகுப்பாக (1991) வெளிவந்துள்ளன. இதிலுள்ள பல கவிதைகளும் குழந்தைக் கவிதைகளுக்குரிய முற்குறிப்பிட்ட அம்சங்கள் பொருந்துமாறு அமைந்துள்ளன. இத்தொகுப்பு வெளிப்படுத்தும் இரு சிறப்பான அம்சங்களுள்ளன. சமகால விடயங்கள் கவிதைப் பொருளாகின்றமை, ஒன்று (எ-டு: கவசவாகனம், அதிரடிப்படை). அறிவியல் விடயங்கள் அறிமுகப் படுத்தப்படுகின்றமை, மற்றொன்று (எ-டு: அறிவியல்). "கவச வாகனம்" என்ற கவிதையிலிருந்து ஒரு பகுதி இங்கே இடம் பெறுகின்றது.
கவச வாகனம் வருகிறது கவலையீனமாய்த் திரியாதீர் அவசரமாகப் போகிறது அபாயம் ஏதோ நடக்கிறது
ஆமைபோலே இதன் தோற்றம் அதற்கு நடுவே போர்வீரன் தேவை வந்தால் படபடென்று திசைகள் நான்கும் வெடிபாயும்
இத்தொகுப்பு, வர்ணப் படங்களுடன் அழகாக வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குழந்தைக் கவிதை வளர்ச்சி தொடர்பாக திமிலை மகாலிங்கம் இன்னொரு விதத்திலும் கவனிப்புக்குரியவராகின்றார். தேனமுத இலக்கிய மன்றத்தின் தலைவராக இருந்த வேளையில் "கனியமுது" (1965) என்ற குழந்தைக் கவிதைத் தொகுப்பு நூலொன்றினை (இலங்கையிலுள்ள குழந்தைக் கவிஞர்களது 41 கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன.) வெளிக்கொணர்ந்துள்ளார்; நாகூர் பாவா குழந்தைக் கவிதை முயற்சியில் ஈடுபடுவதற்கும் ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளார்.
பலதுறைகளிலும் கால் பதித்துள்ள செ. குணரத்தினம் குழந்தைக் கவிதைத் துறையையும் விட்டு வைக்கவில்லை. ஏறத்தாழ 50 கவிதைகள் எழுதியுள்ள இவரது படைப்புகளுள் சில இலங்கை வானொலியில் ஒலி பரப்பாகியுள்ளன; தமிழ் நாட்டு "ராணி" சஞ்சிகையிலும் பிரசுரமாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான "பாலர் பாடல்கள்” (புத்தொளி 1980) என்ற தொகுப்பு நூலிலும் இவரது கவிதை ஒன்று இடம்பெற்றுள்ளது. இவரது குழந்தைக் கவிதைகளும் முற்கூறிய குழந்தைக் கவிதைக்குரிய

Page 77
-136- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
அம்சங்கள் பொருந்துமாறு காணப்படுகின்றன. இவை வெவ்வேறு
பாணியில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
"என் னருமை மாமா” என்ற தலைப்பில் சுதந்திரனில்
பிரசுரமான கவிதை இவ்வாறு தொடங்குகிறது:
"துள்ளி ஒடும் நதியினிலே தூண்டில் போடும் மாமா - எனக்கு வெள்ளியைப்போல் மீன் பிடித்து விற்கத் தாங்க மாமா"
குழந்தைக் கவிதைகள் அதிகமாக எழுதிய மேற்கூறிய ஆறு கவிஞர்கள் தவிர அவ்வப்போது குழந்தைக் கவிதைகள் ஒரு சில எழுதிய மட்டக்களப்பு கவிஞர்கள் சிலரும் விதந்துரைக்கப்பட வேண்டியவர்களே. இவ்விதத்தில் ஆ. தங்கராசா, எம். எஸ். பாலு, ஏறாவூர் தாவூத், மட்டுநகர் முத்தழகு, ஆனந்தன், கலியுவன் முதலானோர் நினைவுக்கு வருகின்றனர்.
சுருங்கக் கூறின் ஒப்பீட்டு ரீதியில் கவனிக்கும்போது மட்டக்களப்பு பிரதேச குழந்தைக்கவிதைத்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளது எனலாம். அது மட்டுமன்று இங்கு வெளியான கவிதைகளில் அறப்போதனைப் பண்பு குறைவாகக் காணப்படு வதனை அவதானிக்கும் போது அத்தகைய வளர்ச்சி ஆரோக்கிய மானதாக அமைந்துள்ளமையும் புலப்படுகின்றது.
ஆயினும் என்ன? கடந்த சில ஆண்டுகளாக மட்டக்களப்பு பிரதேசக் குழந்தைக் கவிதைத் துறையானது மிகவும் பின்னடைவான நிலையிலேயே காணப்படுகின்றது என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இத்தகைய நிலை வந்துற்றது ஏன்?
ஒரு புறம், பத்திரிகைகள், சஞ்சிகைகளில் குழந்தைக் கவிதைகளுக்கென முன்னர் போன்று போதிய இடம் ஒதுக்கப்படு வதில்லை என்பதனை அவதானிக்க முடிகிறது. மறுபுறம், குழந்தை இலக்கிய நூல் பிரசுர முயற்சிகள் அதிக பொருட் செலவை நாடி நிற்பன என்பது தெளிவு. திமிலைத்துமிலன் 1961 இல் வெளியிட வேண்டிய தொகுப்பினை 1986இல் வெளியிட்டமையும் முன்னர் குறிப்பிட்டது போன்று ஆரையூர் அமரன் அட்டைப்படத்துடன் தயாரித்து வைத்திருந்த நூலினைப் பின்னர் வெளியிடாமையும் இவ்விடத்தில் நினைவுக்கு வருகின்றனவல்லவா?
அவை மட்டுமல்ல; தமிழில் குழந்தை இலக்கிய முயற்சிகளுக்கு போதியளவு சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பதும் ஜீரணிக்க வேண்டிய உண்மையாகும். குழந்தைகள் குழந்தை இலக்கியங்களை

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -137
வாசிக்க வேண்டியதன் அவசியத்தை உணராத முதிர்ச்சியடையாத பெற்றோரே அதிகளவில் காணப்படுகின்றனர். ஆழ்ந்து நோக்கும் போது இவர்களும் இருவகையினர். குழந்தைகள் தமது பாடநூல்களை மட்டுமே படிக்க வேணி டுமென்று கருதுவோர் ஒரு சாரார். குழந்தைகளுக்கேற்ற வீடியோ திரைப்படங்களை வாங்காமல் தமக்கேற்ற திரைப்படங்களை வாங்கி தமது பிள்ளைகளையும் அவற்றைப் பார்க்க வைக்கும் பெற்றோர் இன்னொரு சாரார். ("கொண்டையிலே தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையிலே என்ன பூ?” என்று பாடாத குழந்தைகள் உளரா?)
அதிகமேன்? மட்டக்களப்பு சிறுவர் நூலகத்திற்குச் செல்லும் சிறுவர்கள் எத்தனை பேர்? அங்குள்ள சிறுவர்க்கான நூல்கள் எத்தகைய நிலையிலுள்ளன?
ஆக, தேக்க நிலையிலுள்ள மட்டக்களப்பு பிரதேசக் குழந்தை இலக்கிய முயற்சிகள் மீண்டும் உத்வேகம் அடைவதற்கு மாஸ்ரர் சிவலிங்கம் மணிவிழா நிகழ்வுகளாவது வழி வகுக்க வேண்டாமோ?
- நன்றி: மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழாமலர், மட்டக்களப்பு (1994).

Page 78
மட்டக்களப்புப் பிரதேச சிறுவர் இலக்கியத்தின் முன்னோடி எஸ்.இ.கமலநாதன்
- கலாநிதி செ. யோகராசா -
சிறுவர் இலக்கியத்தினுள் முதன்மை பெறும் சிறுவர் பாடல் முயற்சி ஈழத்திலேயே முதன் முதல் (1918) நிகழ்ந்துள்ளதென்பதும் (கல்வி அதிகாரியாகவிருந்த க. அருள்நந்தி அவர்களினால் தொகுக்கப்பட்டு) 1935 இல் வெளிவந்த “பிள்ளைப் பாட்டு" தொகுப்பு தமிழில் சிறப்புற வெளிவந்த முதற்தொகுப்பாகின்றதென்பதும் இலக்கிய ஆர்வலர் பலருமறிந்த விடயங்களாம். இத்தொகுப்பினுள் இடம் பெற்ற கவிஞர்களுள் பலரும் சிறந்த சிறுவர் பாடல்கள் இயற்றிய முன்னோடியான சோமசுந்தரப் புலவரும் யாழ்ப்பாணப் பிரதேசஞ் சார்ந்தவர்களாக அமைய, மட்டக்களப்புப் பிரதேச சிறுவர் பாடல் முன்னோடி யார் என்பது பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமானது.
சில வருடங்களுக்கு முன்னர் "மட்டக்களப்புப் பிரதேசத்தில் குழந்தைக்கவிதை வளர்ச்சி" (மாஸ்டர் சிவலிங்கம் மணிவிழா மலர் - 1994) பற்றி எழுதிய கட்டுரையொன்றிலே மட்டக்களப்புப் பிரதேச சிறுவர் பாடல் முன்னோடிகளாக (சமகாலத்தில் எழுதியவர்களாகவுள்ள) ஆரையூர் அமரன், திமிலைத்துமிலன் ஆகியோரை இனங்கண்டு குறிப்பிட்டிருந்தேன். ஆயினும், இக்கவிஞர்களுக்கு முன்னரேயே எஸ்.இ.கமலநாதன் என்பவர் சிறுவர் பாடல்கள் எழுதியுள்ளதாக அண்மையில் அறிய முடிந்தது. எனவே இவரது சிறுவர் பாடல்கள் பற்றிக் கவனிப்பது பயனுடைய முயற்சியாகும். இதற்கு அனுசரணையாக சிறுவர் பாடல்களின் தனித்துவமான பண்புகள் பற்றி முதலில் நினைவு கூர்வது நன்று. அவையாவன:

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -139
1. சிறுவர்களுக்கு விருப்பமான பொருள் பற்றியதாக (எ-டு:
பறவை, மிருகம், பூக்கள் ) அமைய வேண்டும்.
2. இன்னோசையும் இனிய சந்தமும் இசைத்தன்மையும் இடம்
பெற வேண்டும்.
3. சொற்கள் எளிமையுடனும், இயன்றவரை சொற்புணர்ச்சி
யின்றியும் இடம் பெற வேண்டும்.
4. இனிமைக்கு ஊறு தரும் யாப்பமைதி தவிர்க்கப்பட வேண்டும்.
5. கவிஞர் குழந்தை உளவியல் பற்றிய அறிவுடையவராயிருக்க
வேண்டும்.
மேற்கூறிய பண்புகளின் அடிப்படையில் எஸ்.இ.கமலநாதனின் சிறுவர் பாடல்கள் பற்றி சுருக்கமாக அவதானிப்போம்.
கவிஞரது பாடல்களுள் ஒருசில சிறுவர்களுக்கு நன்கு விருப்பமான மிருகங்கள் பற்றியன. இத்தகையவற்றுள் ஒன்றான "புவனாவின் பூனைக்குட்டி” என்ற பாடல் (தினகரன் 19.09.1948) பின்வருமாறு ஆரம்பிக்கின்றது.
"புவனா வளர்த்த பூனைக் குட்டி துள்ளி ஆடுதே - அதைப் பார்த்திருந்த எலிகளெல்லாம்துள்ளி ஒடுதே"
சிறுவர்களுக்கு விருப்பமான மற்றொரு படைப்பு தின்பண்டம் பற்றியது. அது இரு பாடல்கள் மட்டும் கொண்டது :
"அண்ணா அக்கா பலகாரம் ஆச்சி தந்த பலகாரம் இ.ஈ.உ.ஊ என்றதால் எனக்குத் தந்த பலகாரம்
அண்ணா அக்கா வாருங்கோ ஆச்சியிடம் ஒடுங்கோ இ.ஈ.உ.ஊ என்னுங்கோ இனிய பலகாரம் தின்னுங்கோ.
(ஜூலை 1948)
சிறுவர் பாடல்கள் எழுதுவோர் பாடல்கள் ஊடே சிறுவர்களது மொழி ஆற்றல், எண் ஆற்றல் என்பவற்றை விருத்தி செய்ய

Page 79
-140- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
விழைவதுண்டு. மேலுள்ள பாடலிலும் சிறுவரது மொழியாற்றலை வளர்க்கும் நோக்கு வெளிப்படுவது கவனிக்கத்தக்கது.
தவிர, கவிஞரது பாடல்களிலே பொதுவாக மோனையை விட, எதுகை முதன்மை பெறுவதனையும் அது இயல்பானதாகவும் பொருத்தமானதாகவும் அதிகளவிலும் இடம் பெறுவதனையும் அவதானிக்க முடியும். எ-டு:
“சின்னச் சின்னக் காலை வைத்து மெல்லப் போகுதே - சோறு தின்ன வந்த எலியை எல்லாம் கொல்லப் போகுதே.
வட்ட வட்டக் கண்ணை அது
வெட்டிப் பார்க்குதே - சட்டி
பெட்டிக்குள் இருந்த எலிகள்
ஒட்டிப் பார்க்குதே".
(புவனாவின் பூனைக்குட்டி) மேற்கூறியவற்றினை விட, இவரது பாடல்களில் பிறிதொரு
சிறப்புமுள்ளது. நாட்டார் (விளையாட்டுப்) பாடல்களைப் பின்பற்றி எழுதுகின்ற முயற்சியே அதுவாகும். எ-டு:
"கீச்சிக் கீச்சித் தம்பலம்
கீயா மாயாத் தம்பலம்
ஆச்சி வாயில் தம்பலம்
அப்பா கையில் சம்பளம்".
மேற்கூறிய பாடலின் தொடர்ச்சியும் இவ்விடத்தில் எடுத்தாளப்பட வேண்டியது. அது பின்வருமாறு:
ஏய்த்துப் போட்டேன் ஆச்சியை ஒழித்துப் போட்டேன் குச்சியை ஆச்சி தோற்றுப் போச்சுதே எனக்கு வெற்றி ஆச்சுதே.
மேலுள்ள பாடலிலே இறுதி ஈரடிகளும் கவனத்திற்குரியன. இவற்றில் பேச்சு மொழிப்பிரயோகங்கள் இடம் பெற்றுள்ளமையும் (மூன்றாம் அடியில்) ஆச்சியை அஃறிணையாகக் கருதுவதும் சிறுவர்களின் மன உணர்வு இயல்பான முறையிலே வெளிப்படு வதனை உணர்த்தி நிற்கின்றன.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -4-
கவிஞர் நளினமான - இனிமையான - உயர்வான கற்பனை
யாற்றலும் அதற்கேற்ற மொழியாட்சியும் கைவரப் பெற்றவரென் பதற்கு குழந்தை பற்றி அவரெழுதியதொரு பாடல் ஒரளவு சான்று பகர்கின்றது. "இம்மையில் இன்பம்" என்ற அப்பாடலின் சில பகுதிகள் இவ்வாறு அமைந்துள்ளன.
“தேனிலே தோய்த் தெடுத்த
தீஞ்சுவைக் கீதமேற்றி
மேனி சிலுக்க வைத்தாய் - குழந்தாய்
நெஞ்சு கணிய வைத்தாய் (குழந்தாய்)
கரும்பின் சுவை அமுதும் கம்பன் கவி அமுதும் அரும்பு முன் புன்னகை தான் - குழந்தாய் இம்மையில் இன்பமடி". (குழந்தாய்)
பொதுவாக சிறுவர் பாடல்களில் போதனை இடம்பெறுதலென்பது தவிர்க்க இயலாததாகிவிட்டது. இக்கவிஞர் பாடல்களிலும் (கிடைத்த" வற்றுள்) கணிசமானவை அவ்வாறமைந்தவை. "உண்மையிலே சொல்லிடுவாய்" என்ற பாடலின் ஆரம்பப் பகுதி இதற்குதாரணமாக மட்டுமன்றி இன்னொரு காரணத்திற்காகவும் கவனத்திற்குரியது :
"சண்டைகள் வந்தாலும் - குழந்தாய் குண்டுகள் வீழ்ந்தாலும் மண்டையுடைந்தாலும் - குழந்தாய் உண்மையே சொல்லிடுவாய்"
(1.6. 1947)
மேலுள்ள பாடல் நாற்பதுகளளவில் ஜப்பானியர் குண்டு வீச்சு இலங்கையில் இடம் பெற்ற அச்சம் நிலவிய சூழலின் பிரதி பலிப்பாதல் வேண்டும்.
எஸ் . இ. கமலநாதனின் சிறுவர் பாடல்கள் அதிகம் இயற்றியதாக அறிய முடியவில்லை. ஆயினும் அவரால் எழுதப் பட்டவை ஆய்வு நோக்கிலே கவனத்திற்குரியவை என்பது இதுவரை எடுத்துக் கூறியவற்றிலிருந்து புலப்படுமென்றே கருதுகின்றேன்.
எஸ். இ. கமலநாதன் சிறுவர் பாடல் துறையிலே மட்டுமன்றி வேறு பல விதங்களிலும் குறிப்பாக கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் பல எழுதியவரென்ற விதத்தில் கவனத்திற்குள்ளாக்கப்படுவது அவசியமானது. எழுத்துலக நுழைவின் ஆரம்ப நிலையில் அவரெழுதிய

Page 80
-142. ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
"தமிழ்” எழுத்துச் சீர்திருத்தம் (சுதந்திரன் 22.7.51 ல் வெளியான இவ்வாய்வுக்கட்டுரை பலரது கவனத்தைக் கவர்ந்தது என்பது ஒரு புறமிருக்க, ஈழத்தில் வெளியான முதல் ஆய்வுமாகலாம்) பின்னர் எழுதிய “இலக்கியத்திறனாய்வு” (கலை அமுதம் - 1964 அட்டாளைச் சேனை அ. மு. ஆ. ப. கலாசாலை), அண்மையில் எழுதிய "பாரத அம்மானை" (மட்டக்களப்பு பிரதேச சாகித்திய விழா நினைவு மலர் - 1993) என்றவாறு அத்தகைய பட்டியல் நீண்டு செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பேசப்பட்ட எஸ். இ. கமலநாதன் என்பவர் வேறுயாருமல்லர்.பலராலும் நன்கறியப்பட்ட வித்துவான் சா.இ.கமலநாதனே ஆவார்.

முன்னுரைகள்

Page 81

ஈழத்தின் முதற் சிறுவர் பாடல் தொகுதியான “பிள்ளைப்பாட்டு” நூலுக்கு எழுதிய முன்னுரை
- கே.எஸ்.அருணந்தி -
எங்கள் பிற்கால சீவியம் இளம் பராயத்தில் யாம் பெறும் அனுபவங்களில் பெரிதுந் தங்கியிருக்கிறதென்பதை நாம் நன் குணர்ந்திலேம் என்பது எங்கள் பாலர்களை எம்மில்லங்களிலும் கல்விக் கழகங்களிலும் நடத்தும் முறைகளை உற்று நோக்குமிடத்து நன்கு விளங்கும். வரப்போகின்ற பிற்கால சீவியத்துக்குச் சிறுபராயம் ஆபத்தாகலாம் என்பதை மாத்திரம் நோக்கி யாம் பாலர்களைப் பயிற்றுங்கால் அவர்களது உளநிலை, விருப்பு, வெறுப்புக்கள், ஆற்றல்கள் ஆகியன பொருட்படுத்தப்படாது மழுங்கப்படுகின்றன. பாலரது இயற்கைக்குப் பொருந்த அவர்களை நன்கு வளர்ச்சி பெறச் செய்யாததினால் அவர்களது இக்கால சீவியம் பங்கமுறுவது மன்றி, அவ்விதமே அவர் பிற்கால சீவியமும் பங்கமுறு மென்பது உளநூல் ஆராய்ச்சி வழியாகவும் அனுபவ வாயிலாகவும் யாம் அறிந்துள்ள பேருண்மையாகும். ஆதலின் பாலர்களது பிற்கால சீவியம் மேம்பாடடைவதை இலக்காகக் கொண்டு கல்வி முறைகளைத் தெரிந்தெடுக்குமிடத்து அம்முறைகள் அவர்களது இயல்புகளுக்கும் இணக்கமுடையனவா என்று சிந்தித்தல் நல்லாசிரியர்களது கடனாகும்.
பாஷையையும் நற்போதனைகளையும் சிறுபராயத்திற் கற்பிக்கும் ஆசிரியர்கள் தாளம், இராகம், அபிநயம் முதலியவற்றில் பாலர்களுக்குப் பெரிய விருப்பம் உண்டென்றும், தங்கள் சீவியத்தோடு சம்பந்தப்படாத விஷயங்களை அவர் மனம் நாடாதென்றும் உணர்ந்திலரேல் அவ்வாசிரியரது முயற்சியாற் பெறப்படும் பயன், எதிர்நோக்குடைய இருவர் ஒருவழிச் செல்ல முயல்வதனாற் பெறப்படும் பயனை ஒக்குமென்க. பாலர்களின் இவ்வியற்கை விருப்புக்களையறிந்து அவைகளுக்கிணங்கக் கற்பிப்பரேல் பாஷை

Page 82
-146- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
விருத்தியடைந்தும் போதனைகள் நன்கு மனதிற் பதிவதும் மாத்திரமல்லாமல் இன்பச் சுவை நுகர்ச்சியும் உளவளர்ச்சியும் சிறப்பெய்தும்.
இத்தகைய முறைகளுக்கேற்ற செய்யுட்கள் போதியன தமிழ்ப் பாஷையில் இதுகாறும் இயற்றப்பட்டில. இப்பெருங்குறையை நீக்கும்படி யான் பலரோடு ஆலோசனை செய்து எடுத்த முயற்சியின் பேறே இச்சிறுநூலாகும். இம்முயற்சியிற்துணை புரிந்த பேரறிவாளர் பலர். முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுகளைப் பெறுவதற்கு உரியவர் யார் யார் என்று ஆய்ந்து தம் கருத்தைக் கூறிய பெரியார்களாகிய பூரீமத் சுவாமி விபுலானந்தர், சுவாமி ஞானப்பிரகாசர், பண்டிதர் வே. மகாலிங்கசிவம், கவிஞர் நவநீத கிருஷ்ண பாரதியார், பண்டிதர். சி. கணபதிப்பிள்ளை ஆகிய இவர்களுக்கும், எனது உத்தியோகத் துணைவரும் தமிழ்ப் பாஷையின் முன்னேற்றத்திற்காக உழைத்தலைத் தம் சீவியம் பேரிலக்காகக் கொண்டு குன்றாப் பேரூக்கத்துடன் இத் துறையிலும் எனக்கு உதவி புரிந்த பூரீமாந் தி. சதாசிவஐயர் அவர்களுக்கும், இந்நூலை அச்சிட்டு வெளியிடுதற்கு முன்வந்து பரிசுப் பணத்தையும் முன்கொடுத்து தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் இந்நாட்டு முன்னேற்றத்திற்கும் பேருதவி செய்த வட இலங்கைத் தமிழாசிரியர் சங்கத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றி உரியதாகுக.

சோமசுந்தரப்புலவரது சிறுவர் பாடல் தொகுப்பான “சிறுவர் செந்தமிழ்” நூலுக்கு எழுதப்பட்ட மதிப்புரை
- பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை -
“செந்தமிழ் மக்களே வாரீர்” என்று ஒரு தமிழ்க் குரல் கேட்கின்றது. பழக்கமான குரல். “கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம், கொழுக்கட்டை தின்னலாந் தோழர்களே” என்று முன்னொருநாட் கூப்பிட்ட குரல் அந்தக்குரல். "தெய்வக்குழந்தைகளே எங்கள் தெய்வத்தமிழ் மொழிச் சீரினைத் தேரீர்” என்று பின்னையும் இனிக்கின்றது அந்தக்குரல்.
அதோ! தமிழ்த்தாத்தா காட்சியளிக்கின்றார். வங்கத் தாத்தாவை அறிந்திருக்கின்றீர்கள். நமது தாத்தா தங்கத்தாத்தா. தங்கம் என்றால் ஈழம். ஈழம்- இலங்கை. தாத்தாக்கள் எப்போதுந் தாடியிலே வெகு கவனம். மருந்துக்குங் கறுப்பில்லாத வெள்ளித்தாடிக்குக் கண்ணுாறு வந்துவிடுமோ வென்று தான் சதா பயம். எங்கள் தங்கத்தாத்தாவின் புத்தியைப் பாருங்கள் தாடியறுந்த கதையுடன் வருகிறார். குழந்தைகளே காரியம் விளங்குகின்றதா? தங்கமான தமது வெள்ளித்தாடியைக் கண்ணுாறு பார்த்து விடுவீர்களாம் கையாற் பிடித்து இழுத்து விடுவீர்களாம்; தாடியறுந்த கதை, குழந்தைகளுக்குக் கறுத்தப் பொட்டுப்போலத் தம் மைக் கண்ணுாறு படாமற் பாதுகாக்குமாம். கத்தரித் தோட்டத்துக்குக் கண்ணுாறு வராமல் வெருளி கட்டிவைத்த தாத்தாவின் புத்தியென்ன புத்தி! தங்கப் புத்தி.
தாத்தாவின் ஹாஸ்யத்தை ஒருக்காற் கேளுங்கள். "எங்கே யெங்கே ஒடுகிறாய் அம்புலியே" என்று தமது மாசுமறுவில்லாத தாடியைக் காட்டி உங்கள் அம்புலியை ஒட்டிக் கலைக்கிறார் தாத்தா. மாசுமறுவுள்ள அந்த அம்புலி சற்றே நின்று கூடக் கதைக்காமல், குளித்திட்டு வரும் பொருட்டு, “நான் கடல் மேல் ஒடுகிறேன் பிள்ளைகளே” என்று சொல்லிக் கொண்டோடுகின்றது. தாத்தாவின்

Page 83
-148- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
தாடியைப் பார்த்துப் பார்த்து ஒடுகின்றது. பாவம்! அம்புலியின் கறுப்பு எப்படி வெளுக்கப்போகின்றது. காகம் குளித்து முழுகித்தானே வருகின்றது. இன்னுங் கொக்காகவில்லையே! எப்படியிருக்கிறது, தாத்தாவிடத்திலே அம்புலி படுகிறபாடு. தாத்தாவுக்குத் தாடி நரைத்து விட்டது. ஆண்ாற், கருத்துக்கள், கற்பனைகள் நரைக்கவில்லை. இளமைக் கட்டோடு மிளிர்கின்றன. அவைகளுக்கு நரை திரை மூப்புக்கள் இல்லை. s
"முதியோரைக் கனம் பண்ண வேண்டும்" என்றல்லவா உங்கள் பாட்டியுங்களுக்குப் போதித்திருக்கின்றாள். தமிழ்த்தாத்தாவைச் சூழ்ந்து தாழ்ந்து பணிந்து உங்கள் மரியாதையைச் செலுத்துங்கள். தாத்தா உங்களுக்குக் கொடுப்பதற்கு எத்தனையோ இனிக்கிற நல்ல பண்டங்கள் கொண்டு வந்து வைத்திருக்கின்றார். தாத்தாவுக்குக் குழந்தைகளென்றால் உயிர். அதோ! செந்திநாதனைப் பாருங்கள்! அவல் முடிச்சுக் கண்ட கண்ணன் போல வருகின்றான்.
மலர்ந்த முகமும் குளிர்ந்த விழியும் வாயிற் சிரிப்பும் மனத்திலே கலந்த மகிழ்வுமாக நீவருங் காரண மென்ன தோழனே
என்று அவனை நிறுத்தி விசாரியுங்கள்.
மாம்பழம் நல்ல மாம்பழம் அப்பா வாங்கித் தந்த மாம்பழம் மாம்பழம் இது காணக் காண வாயினிக் கிற மாம்பழம்
செந்தி வாயூறுகின்றான். தாத்தா முதலில் உங்களுக்கு மாம்பழம் வழங்குகின்றார்.
தீம்பழ மிதைச் சீவி வெட்டிச் சிரித்துச் சிரித்துத் தின்னுங்கள் “அருமையான மாம்பழம், இன்பமுடனே தருவேன். தெய்வம், இருக்குமிடத்தைக் கூறுவாய்" என்று தனித்தனியொவ்வொரு கேள்வி தாத்தா கேட்பார். கவனம்! காசு பணம் குழந்தைகளிடங் கேட்கிற வழக்கம் தாத்தாவுக்கில்லை.
செல்வக் குழந்தைகளே! உங்களுக்கு நித்திரை வந்தால், ஆராரோ ஆரிவரோ கூடத் தாத்தா பாடிச்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 49
சீருஞ் சிறப்புந் திருவும் பெருகவந்த ஆரும் விரும்பும் அருமருந்தே கண்வளராய் மாமி அடித்தாளோ மாமனார் ஏசினாரோ பூவிற் சிறந்த செல்வப் புத்தமுதே கண்வளராய்
என்று உங்களைக் கண்வளரச் செய்து வைப்பார் தாத்தா. பொழுது புலரமுன்னே உங்களை நித்திரையினின்றும் எழுப்பியும் விடுவார் தாத்தா. காலையில்,
மன்னிய மலர்வகை சிரிப்பன போல வாய்மலர் கின்றன வண்டுகளூதும்: அன்னங்கள் தாமரை மார்மிசைத் தாவும் அழகிய குயிலினம் மகிழ்வுறக் கூவும்
தாத்தாவின் அருமையை யின்னுங் கேளுங்கள். “தயிர்க் கடலிலே வெண்ணெய் போன்ற” சந்திரன் “எண்ணிரண்டு கலையுடனே எழுந்து நிலாப்" பொழிவான். அந்தவேளையில் வெள்ளை மணலிலே தாத்தா இருந்து கொண்டு, உங்கள் மிருதுவான காதுகள் ஊறவூறப் "பருத்தித்துறை யூராம், பவளக்கொடி பேராம்" என்று இனிய நறியபாட்டிலே சுவையான கதைகளுஞ் சொல்லுவார். "ஏராயம் புடைசூழ இருந்து தன்னைப் புளுகும் பூராய மாமுதலியார்” கதையைக் கேட்டுப் புலாலுண்பதை நீக்கிவிடுங்கள். "பிள்ளையைப் போல் வளர்த்துப் பின்னையந்தச் சண்டாளர். துள்ளித் துடிதுடிக்கத் துண்டாக வெட்டின. வாயில்லாச் சீவனின்", மாதா பட்டபாட்டைக் கேளுங்கள் அப்போது புலாலுண்பதை நீங்கள் முற்றாய் நீக்கிக் கொள்வீர்கள்.
கொழுக்கட்டை மறந்தவன் கதையைச் சற்றே வாயிலிட்டுப் பாருங்கள். ஆடிப்பிறப்பில்லாத காலங்களிற் கொழுக்கட்டை கிடைத்து விடுகின்றது. "பல்லுக்கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே, பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே” இது ஆடிக் கொழுக்கட்டை "அம்மாவின் கொழுக்கட்டை" "இல்லம் ஏகும் வழியெல்லாம் இனிக்க இனிக்க மறவாமற் செல்வமாமி கொழுக்கட்டை தின்னத் தின்ன ஆசை"யுடையது மாமியின் கொழுக்கட்டை.
தாத்தாவுக்கு ஒரு கோழிச் சேவல், ஒரு முகட்டெலி, ஒரு பூனை இவ்வளவும் போதும். தாத்தா ஒரு சினிமாச் செய்துவிடுவார். "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்" அல்லவா? இலவுகாத்த கிளிபோல இனியாருங்காத்திருக்க வேண்டாம். நீங்கள் பெரிய அதிர்ஷ்டசாலிகள். தாத்தா உங்களுக்கென்றே பிறந்தவர். எனினும், பெரியவர்களுக்கும் நல்ல உயர்ந்த நீதிகளைச் சொல்லுகிறார்.

Page 84
-150- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
"தோற்றிய திதியே” என்று ஒரு தொடர் சிவஞான போதத்திலே முதற் சூத்திரத்தில் வருகின்றது. "திதி" என்ற வார்த்தைக்கு "நிலை" என்று பொருள். காணப்பட்டு நிலைக்கின்ற பொருள்கள் எல்லாம், தாமே தோன்றி நிலைப்பவைகள் அல்ல ஒரு கருத்தாவால் தோற்றுவிக்கப்பட்டவைகள். உலகம் ஆதிபகவன் முதற்று.
குயில்கள் கூவுகின்றன , மயில்கள் ஆடுகின்றன ; மனிதன் பாடுகின்றான்.
குயில்களைக் கூவச்செய்தது எது? மயில்களை ஆடச் செய்தது எது? மனிதனுக்கு எப்படிப்பாட வருகின்றது?
நிலையான பொருள்களென்று நாம் கட்டி அணைப்பவைகள் எல்லாம் கணந்தோறும் நிலை பெயர்ந்து விகாரம் அடைகின்றன. உலகம் தோன்றி நின்று அழியவும், தனக்கு ஒன்றுமின்றி, அந்த உலகமாயும் அதே சமயத்தில் வேறாயும் விகாரமின்றி ஒருத்தி இருக்கின்றாள். அவள் இயற்கை அன்னை. அவள் புன்முறுவலில் உலகம் பூத்துக் காய்த்துக் கணிகின்றது. அவளின்றி அணுவும் அசையாது.
புலவன் அவள் திருவிளையாடலைக் கண்டு களிக்கின்றான்; தித்தித்து அமுதூறுகின்றான்.
ஒரு சமயத்தில் ஒருவனை வள்ளலாக்கி வழங்குவிக்கின்றாள்; மற்றொருவனைத் தலைக்குமேலே கை காட்டுவிக்கின்றாள். இரண்டு இடத்திலும் ஒரே ஒருத்தியின் கூத்தைக்கண்டு களிக்கின்றான் புலவன். அவன் வாயிற் கவிதை துள்ளிக் குதிக்கின்றது.
கல்லாத ஒருவனை நான் கற்றாயென்றேன் இல்லாது சொன்னெனுக் கில்லை யென்றான் யானும் என்றன் குற்றத்தா லேகின்றேனே
என்கின்ற கவிதையில் "திருப்தி” என்கின்ற மதுத்துளி எத்தனை துளிர்க்கின்றது.
சொல்லுக் கட்டும் புலவரைக் கண்டக்கால்
தூறிப் பாய்ந்து கதவை அடைத்தெதிர்
மல்லுக் கட்டும் மடையர்
உலகத்துப்பலர் இருக்கலாம். அதனால், புலவன் புண் அடைவதில்லை. அப்படிச் சந்தர்ப்பத்தில் எழுகின்ற கவிதையே, அருமந்த ஆண்குழந்தையாய் அவனைக் களிப்பிக்கின்றது. நயவஞ்சகர்களைப் பாடநேர்ந்து விடுமோ என்று தான் புலவனுக்கு நெஞ்சிலே புண் உண்டாகின்றது.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 1 51
தன் கீழ்க் குழந்தைக் குத் தன் உயிரையே அர்ப்பணஞ் செய்கின்ற வாழைக்கு வஞ்சகம் ஏது வஞ்சகம் என்று ஒன்றை வாழையறியாது. அது முதல் வள்ளல். இயற்கை அன்னை எந்தப்பக்கத்துக்கு அசைக்கின்றாளோ, அந்தப்பக்கத்துக்கு அசைந்து கொடுக்கின்றது வாழை. வஞ்சக மனிதனைப்போல அன்னையின் கருத்துக்கு மாறாகத் தனக்கு என்று ஒன்று வைத்திருப்பதில்லை வாழை. அதன் முள்ளந்தண்டே எத்துணைப் பரிசுத்தமானது. அத்தண்டிலேதானே அது பழுத்துக் கணிகின்றது. அத்தண்டைக் "குரு" என்றே உலகங் கொண்டாடுகின்றது.
வஞ்சகமற்றதும், அன்னையின் வழியின் நடப்பதும், வள்ளலும், குருவுமான வாழையைக் கண்டால் புலவனுக்கு எப்படியிருக்கும் புலவன் நாவில் கவிதை ஊறுமா? ஊறாதா?
இன்றல நாளை எட்டுநாள் இன்னும் சென்றுவா என்று செல்வர்
ஒருவர் நமது புலவரை வஞ்சகமற்ற வாழையாகிய முதல் வள்ளலிடம் ஆற்றுப்படுத்துகின்றார். அந்த மனிதமரத்துக்கும் புலவர் நன்றி தெரிவித்துவிட்டு வள்ளலாகிய வாழையை அணுகுகின்றார்.
நெட்டுயிர்ப் பெறித்து நிழல் புகுந்தியங்கும் வழியிளைப் பொழிய மகிழ்ந்தனன் இருந்துழி
புலவர் தம்மை மறந்து வாழை நிழலில் மகிழ்ந்திருக்கின்றார்.
இலண் என்னு மெஷ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள
என்ற அருமைத்திருக்குறளிலும், அதன் உரை நுட்பங்களிலும் அந்த வாழை பயின்றிருக்க வேண்டும் என்பதில் சற்றேனுஞ் சந்தேகம் இல்லை. வாழை பரீட்ஷைக்குப் படிக்கிற வழக்கமில்லாதது. ஆயினும், எங்கேயாவது ஒரு க்ங்கம், படித்தவர்களின் தரமறிந்து பட்டம் வழங்கலாம் என்ற நம்பிக்கையினால், குறித்த வாழை திருக்குறளும் உரையும் படித்திருக்கலாம் போலும்!
என்ன நடக்கின்றது. வாழையையும் புலவரையுஞ் சற்றே
எட்டிப் பாருங்கள்!
மானார் தொடையென மற்றவணின்ற
தேனார் கதலிச் செழும்பழம் ஊழ்த்து
வண்டமிழ்ப் புலவன் மடிமிசைச் சிலவிழக்

Page 85
-152. ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
கண்டென இனிக்குங் கனியெடுத் தருந்தி வெம்பசி தணிதலும் மேன்முகம் நோக்கி அடுக்குச் சுடரைக் கிழக் கிட்டன்ன பழுக்குலை தூக்கி நெறிப்பட நின்றாய் வாழி வாழி வானவர் மகளென
ck cK. k <
யாரை கொல் யாதுநின் வரவெனை வாழ்த்துதற் கேது வென்றலும் யானொரு புலவன் வறுமை துரப்ப வந்தனன் இருமையும் பெருமை நிறுத்தும் வள்ளியோர் போலக் குறிப்பினிற் கொடுத்துக் கொடும்பசி கள்ைந்தனை மனமது குளிர வாழ்த்தினன் நினைஎன
என்றிங்ங்னங் கவிதா சம்பாடணங்களில் நடம் புரிகின்றது. வாழை புலவர் வறுமைக்கிரங்கிக் கண்ணிர் (கள் + நீர்) வடிக்கின்றது.
வருந்தலை வாழியென் றோதித்
திருந்திய தமிழ்வலோன் சென்றனன் நெறியே புலவர் உவப்பத்தலைக்கூடி உள்ளப்பிரிகின்றார்.
அப்பால், அப்பொழுது அலர்ந்த "பூ" ஒன்று முருகு
கொப்பளிக்கின்றது. புலவரின் கால்கள் புவிவருக்குத் தடைச்சட்டம் விதிக்கின்றன. புலவர் "திருமுருகு" உடள சம்பாடணந் தொடங்கு கின்றார். "திரு முருகு” புலவர்களென்றால் திருவாய் மலரத் தொடங்கி விடுகின்றது.
புலவர்கள் காணுகின்ற திருமுருகுப் பூ கோட்டுப் பூ கொடிப்பூ அன்றி இருதய குளப்பூப் போலும் தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார் மனனேர் பெழுதரு வாணிற முகனே
" திருமுருகு
தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார் - புலத் துறைபோகிய புலவன்மார் இந்தச் செந்தமிழ்ச் சோலை சிறப்பாகச் சிறுவர்க்கென்றே செய்யப்பட்டிருக்கின்றது. இந்தச் சோலையிலே எவருடைய

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 153
உத்தரவுமின்றி நீங்கள் உட்பிரவேசிக்கலாம். துணிந்து பிரவேசியுங்கள். அங்கே, "கண்கவர் காட்சிகள் ஒருபுறம்" "செவிநுகர் கனிகள் ஒருபுறம்” "வாயூறும் பண்டங்கள் ஒருபுறம்" "சுகந்த பரிமளப்பூக்கள் ஒருபுறம்" "செந்தமிழ்ழொடு விரவிய மந்த மாருதம் ஒரு புறம்" "இனிய அழகிய கருத்துக்கள் ஒரு புறம்” “நறிய செஞ்சொல் நடையொருபுறம்" “வண்ணமுஞ் சந்தமும் ஒரு புறம்” எங்கே பார்த்தாலும் அங்கங்கே பழைமையும் இனிமையுங் கலந்த செந்தமிழ் பரிமளிக்கின்றது. இவற்றுக்கு மத்தியிலே, செந்தமிழ்ச் சோலையின் நடுநாயகமாகி, ஒரு சலியாக் கற்பகதருப் போல, எங்கள் தங்கத் தாத்தா உங்களை வரவேற்கும் முறையில், அமைதி குடி கொண்டவுள்ளத் தோடமர்ந் திருக்கின்றார்.
அன்னநடை பிடியினடை யழகுநடை
யல்லவென வகற்றி யந்நாட் பன்னுமுது புலவரிடைச் செய்யுணடை
பயின்ற தமிழ்ப் பாவை யாட்கு வன்னநடை வழங்குநடை வசனநடை
எனப்பயிற்றி வைத்த வாசான் மன்னுமருள் நாவலன்றன் னழியாநல்
லொழுக்கநடை வாழி வாழி.
என்று நாவலனாரைப் பாடிய நவாலியூர்ப் பாவலனார் அல்லவா உங்கள் தாத்தா. இன்றைய ஈழத்துப் புலவர் சிரோன்மணி எங்கள் தாத்தா வென்று அவர் புகழைப் புட்பாஞ்சலி செய்து போற்றுங்கள்! அவரின் தூய செந்தமிழ்ப் பாடல்களைப் பாடுங்கள்! பாடியாடுங்கள்! இனியுங்களுக் கென்னகுறை? நீங்களெல்லாம் இனிக் கவிஞர்கள்.
இரவு விடிந்தது கேளிர் - தமிழ் இளவள ஞாயி றெழுந்தது பாரீர் பரவுதற் கோடிநீர் வாரீர் - வந்து பணிமின்கள் படிமின்கள் பயமில்லைப் பாரீர்
செந்தமிழின் வாழை திருமுருகு பூவிளங்கப் பைந்தமிழின் சோலையொன்று பணிசெய்தார் -
முந்தொருநாள் வண்ணானின், வார்த்தை யென்றோர் வண்டமிழின் செய்யுளினால் மண்ணாடு கொண்ட மகான்.
- நன்றி: தினகரன்,14. 06.1953

Page 86
திமிலைத்துமிலனின் “அழகுமுல்லை” என்ற தொகுப்பிற்கு எழுதப்பட்ட அணிந்துரை - அழ. வள்ளியப்பா -
ஈழ நாட்டில் இன்பத் தமிழில் குழந்தைகளுக்காகப் பாடும் கவிஞர் பலர் உண்டு என்பதைத் தமிழகம் நன்கறியும். அவர்களிற் சிலரது கவிதைகளைப் பாடிப்பாடிப் பரவசமடைந்திருக்கிறேன் நான்.
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே
என்ற பாடலைப் பாடாத குழந்தைகளோ, கேள்விப்படாத பெரியவர்களோ, ஈழநாட்டில் இல்லை என்பதும் எனக்குத் தெரியும். அப்பாடலைப் பாடிய, சோமசுந்தரப் புலவரவர்கள், கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையவர்களைப் போல, இக்கால ஈழத்து இளங்கவிஞர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்கள். அவர்கள் வழி பற்றிப் பாடுவோருள், திரு. "திமிலைத்துமிலன்" அவர்களும் ஒருவர். இவரது குழந்தைப் பாடல்களை, அவ்வப்போது பத்திரிகைகளில் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இப்போது இவரது கவிதைகள் ஒரு தொகுப்பாக வெளிவந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.
பட்டுச் சட்டை போட்டுவிடு
பையைத் தோளில் மாட்டிவிடு
பொட்டும் அழகாய் வைத்துவிடு
போகும் முன்போர் முத்தமிடு

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 155
என்று ஒரு குழந்தை அம்மாவிடம் கூறுகிறது. அக் குழந்தை உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டும்போது, கவிஞர் தமது குழந்தை உள்ளத்தையும் நன்கு காட்டி விடுகிறார் நமக்கு.
செயற்கரிய செய்த பெரியவர்களைப் பற்றி இக்காலக் குழந்தை கள் அறிய வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த கவிஞர், அவர்களிற் சிலரைப்பற்றிப் பாடியுள்ளார். நாவலர் பெருமானைப் பற்றிப் பாடும்போது, நாவினிக்கப் பாடுகின்றார்.
சைவம் தழைக்கவில்லை - தமிழ் உரை
தத்தித் தவழவில்லை.
தெய்வம் நினைத்ததடா - ஆறுமுகத்
தென்றல் உதித்ததடா.
"சிலு சிலு"வென வீசும் தென்றலைப் போலவே, இக்கவிதையின் போக்கும் இருக்கிறதல்லவா?
திரு. "திமிலத்துமிலன்" அவர்கள், குழந்தை இலக்கிய வளர்ச்சிக்காகப் பத்தாண்டுகளாகப் பணியாற்றிவரும் சென்னை, குழந்தை எழுத்தாளர் சங்கத்தின், பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“வழி தவறிய வண்டு” என்ற இவரது கவிதை, 13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கேற்ற, சிறந்த கவிதையெனத் தேர்ந்தெடுக்கப்பெற்று, 1959 நவம்பரில் சென்னையில் நடைபெற்ற முதலாவது குழந்தை இலக்கிய மாநாட்டில் பதக்கப் பரிசு பெற்றது. தாய்நாட்டின் பாராட்டைப் பெற்ற, இக்கவிஞரின் கவிதைத் தொகுதி சேய்நாட்டுக் குழந்தைகளுடன், தாய்நாட்டுக் குழந்தைகளுக்கும் பெரும் பயன் அளிக்கும் என நம்புகின்றேன்.
- 3.7.1960

Page 87
கல்வயல் வே. குமாரசாமியினர் “பாப்பாப்பா” என்ற நூலுக்கான முன்னுரை
- இ. முருகையன் -
சிறுவர்களுக்கெனத் தனிவகையான இலக்கியம் படைக்கப்படல் வேண்டுமென்னும் எண்ணம் தமிழ் மக்களுக்கு புதியதொன்று அன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை முதலிய ஆக்கங்கள் இவ்வெண்ணத்தின் வெளிப்பாடேயாம். இந்நூல்கள் பல்வேறு வயதுப் பருவத்துச் சிறுவர்களுக்கு ஏற்றன எனக் கருதி, முன்னோரால் இயற்றி அளிக்கப்பட்டன. பண்டைத் தமிழ் இலக்கிய மரபில், இச் சிறுவர் பாடல்களுக்குத் தனியானதோர் இடமுண்டு.
தமிழின் பண்டைய மரபு அவ்வாறாக, இன்று நவீன மொழிகள் யாவற்றிலும் உலகமெங்கும் சிறுவர்களுக்கென நூல்கள் இயற்றப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. அச்சிறுவர் நூல்கள் மிகுந்த அக்கறையுடன் பக்குவமாகப் படைக்கப்படுகின்றன. இவற்றுட் சிறந்தவை, குழந்தை உளவியலில் நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்களின் ஆய்வு முடிவுகளை அடியொற்றியே இயற்றப்படுகின்றன. ஏனெனில் இன்றைய ஆய்வாளர்கள் உளவியற்றுறையிலே பலநுண்ணிய உண்மைகளைக் கண்டறிந்துள்ளனர். இவ்வுண்மைகளைத் தழுவி எழும் சிறுவர் நூல்களே அவ்வப்பருவத்துச் சிறுவர்களுக்குப் பொருத்தமுடையனவாய் அமையும். இல்லையெனில் சிறுவரின் உளவியல் வளர்ச்சிக்கு ஒவ்வாத உள்ளடக்கமும் உருவமும் உடையனவாக அப்படைப்புக்கள் தோன்ற இடமுண்டு.
தமிழில் எழுந்துள்ள சிறுவர் இலக்கியங்கள் பலவற்றில் இக்குறைபாடு உண்டு. உதாரணமாக, சோமசுந்தரப்புலவரின் சிறுவர் செந்தமிழ் எனும் நூலிலே பெரும்பாலான பாடல்கள், வளர்ந்த முதியவர்களுக்கே ஏற்றனவாக உள்ளன. சுப்பிரமணிய பாரதியாரின் பாப்பாப் பாட்டுக் கூட இவ்வித "ஒவ்வாமையை" உடையதாகும். எடுத்துக் காட்டாக "நீதி உயர்ந்த மதி கல்வி/ இவை நிறைய

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -157.
உடையவர்கள் மேலோர்” என்று பாரதியார் பாப்பாவை நோக்கிப்பாடுகிறார். நீதி, மதி, கல்வி என்னுஞ் சொற்களாற் குறிக்கப்படும் எண்ணக் கருக்களைக் கிரகிக்கும் வல்லமை பாப்பாக்களுக்கு இருக்குமோ என்பது சந்தேகமே. ஏனெனில் இவை எல்லாம் கருத்தியல்பானவை. ஆனால் குழந்தைகள் எனிலோ, காட்சிப் பொருள்களைப் பற்றிய எண் ணக் கருக்களையே பெரும்பாலும் ஈட்டியோராக இருப்பர். அவர்கள் தூல சிந்தனைப் பருவத்தினர். கருத்தியல்பான எண்ணக் கருக்கள் நியம சிந்தனைப் படுவத்தாருக்கே ஏற்றவையாகும். அதாவது வயதில் மூத்தோருக்கே அவை நன்கு விளங்கும். அதனாலே தான் குழந்தைகளுக்கு அல்லது பாப்பாக்களுக்கு என்று படைக்கப்படும் கதைகளும் பாட்டுக்களும் துாலமான காட்சிப் பொருட் சார்பு உடையனவாக இருத்தல் முக்கியமாகிறது.
கல்வயற் கவிஞர் வே. குமாரசாமி அவர்களின் "பாப்பாப்பா" இந்த வகையிலே சிறுவர்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக உள்ளது. இதிலே எல்லாமாகப் பதினாறு பாடல்கள் உள்ளன. அவை அனைத்திலும் காட்சிப் பொருட்சார்பு மிகவும் முனைப்பாகக் காணப்படுகின்றது. உதாரணமாக முதலாவது பாடலை எடுத்துக் கொள்ளலாம். அசைகின்ற சுளகு போலுஞ் செவிகள், தூங்க விட்ட தும்பிக்கை சுவரைப் போன்ற பாரிய உடம்பு - இவையெல்லாம் குழந்தைகளின் கிரகிப்புக்கு வசமாகக் கூடிய இலகுவான எண்ணக் கருக்களைச் சுட்டுஞ் சொற்களாக உள்ளமை கவனிக்கத்தக்கது.
பதினோராம் பக்கத்தில் வரும் பூனைக்குட்டியார் குழந்தைகளுக்கு மிகவும் பழக்கமானவர். பட்டுப் பூனைக்குட்டி பஞ்சுப் பூனைக்குட்டி என்னும் சொற் சேர்க்கைகள் பரிச உணர்வுப் படிமங்களை குழந்தைகளின் அநுபவப் புலத்துள் அடங்கும் கற்பனை மனக்காட்சிகளைத் தோற்றுவிக்கும் தன்மை வாய்ந்தன. பளபளக்கும் கண்களைக் காட்டுதல், பால் குடிக்கும்போது கண்ணை மூடுதல், எலி பிடிப்பதற்காகப் பதுங்குதல், தாவிப் பாய்தல், காலை நக்கி முகத்தைக் கழுவுதல் என்பன பூனைக்குட்டியாரின் செயல்களிற் சில. இச்செயல்களைக் கூறுஞ் சொல்லோவியங்கள் குழந்தைகளைக் கவருந் தன்மை வாய்ந்த காட்சிப் படிமங்களாகும்.
இறுதிப் பாடலின் இறுதிவரிகள். கவிஞர் எத்துணை நுணுக்கமான சிரத்தையுடன் இப்பாடல்களைப் பாடியுள்ளார் என்பதற்குச் சான்றாக மிளிர்கின்றன. குருவி அக்கா ஆனவள் தத்தித் தத்தி முற்றத்துக்கு வருகிறாள். தனது சொண்டால் இறகைக்கோதி சரிப்படுத்தி விடுகிறாள். கொஞ்ச நெல்லைக் கொத்திக் கொத்தி எடுத்து

Page 88
-158. ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
மெல்லத் திண்னுகிறாள். அவ்வாறு தின்னும் குருவி அக்காவை குஞ்சுத்தம்பி பிடிப்பதற்குப் போகிறான். குருவி அக்கா பயந்து பறந்து போய் விடுவாள் என்று நாம் எதிர்பார்க்கக் கூடும். ஆனால் கவிஞர் காட்டும் குருவி அக்கா அவ்வாறு பயப்படவில்லை, பறக்கவில்லை. அப்படியானால் என்ன செய்கின்றாள்? கொஞ்சம் தத்தி இருக்கிறாள். ஏன் அப்படி? குஞ்சுத்தம்பி உண்மையிலே மிகவும் சிறுபிள்ளையாக இருந்திருக்க வேண்டும். பாப்பாவின் தம்பி தானே. ஆமாம் பாப்பாப்பா பாடும் பாப்பாவின் தம்பி எழும்பி நடக்கவோ, ஒடித் துரத்தவோ, இயலாத சின்னஞ்சிறு குஞ்சுத் தம்பி. ஒருவேளை, தவழவும் இயலாத தம்பியாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட தம்பிக்கு அஞ்சுவாளா அக்காள் - அதாவது குருவி அக்காள்? மாட்டாள். ஆசையினாலேதான் அவள் அஞ்சிப் பறந்து போய் விடாமல், கொஞ்சம் தத்தி இருக்கிறாள். தத்தி இருந்த அளவிலே தம்பி எதுவுஞ் செய்ய மாட்டாத நிலை. ஆகையினால் ஆபத்து இல்லை. உண்மையான உலகியல் அனுபவத்தோடு ஒத்துப்போகும் தன்மை யினை நாம் இப்பாடலிற் பார்க்கிறோம். இவ்வாறான நடப்பியல் நுணுக்கமும் நம்பகத்தன்மையும் கவிஞர் குமாரசாமியின் பாடல்களில் உள்ள சிறப்பியல்புகளாகும்.
வேறுமொரு கோணத்திலிருந்து இப்பாடல்களை நாம் பார்க்கலாம். நிலாத்தோணி, இடி மின்னல் என்னும் பாடல்களைத் தவிர ஏனையவை எல்லாமே விலங்குகளைப் பற்றியனவாய் இருக்கின்றன. யானை,கொக்கு, நத்தை, ஈ, தவளை, அணில், ஆமை சிங்கம், கோழி, பூனை, வண்டு, நண்டு, ஆடு, குருவி ஆகியன யாவும் இப்பாடல்களில் இடம் பெறுகின்றன. இப்பல்வேறு உயிரினங்களின் தோற்ற வேறுபாடுகளையும், நடத்தை வினோதங்களையும் நோக்கி வியப்பும் மகிழ்ச்சியுங் கொள்ளுதல் பாப்பாக்களின் இயல்பாகும். பாப்பாக்களின் அவ்வித அனுபவத்தோடு, மனித உறவாடலின் பாற்படும் அனுபவங்களையும் இணைத்துக்காட்டுகின்றார் கவிஞர். இவ்விலங்குகளை தாத்தாவாகவும் மச்சாளாகவும் அண்ணாவாகவும் மாமாவாகவும் அக்காவாகவும் பாவனை செய்து பாடல்கள் யாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உறவின் முறையை வெளிப்படையாகக் கூறாத தருணங்களிலே கூட, சிங்கத்தார், ஈயார், நத்தையார், நண்டார் என்றவாறு அஃறிணை விலங்குப் பெயர்கள் பலவும் உயர்திணை விகுதி பெற்று வருகின்றன. இவ்வாறு வருவதால், அவையும் மனித உறவாடலுக்கு உரியனவாகக் குழந்தை மனங்களின் பொருட்டுப் பாவனை செய்யப்படுகின்றன.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 159
இவ்வித உறவாடல், இயற்கையோடு இசைந்த ஒன்றின் உணர்வுக்கு உதவுகின்றது என்பது கவனிக்கத்தக்கது.
மேற்காட்டிய பண்புகளை உடையதாயிருப்பதால், கவிஞர் வே. குமாரசாமி அவர்களின் "பாப்பாப்பா" குழந்தைத் தமிழ்ப் பாடல் இலக்கியத்துக்கு ஒர் உயரிய முன்னுதாரண மாகவும் சிறந்த பங்களிப்பாகவும் திகழ்கின்றன. ஆகையால் இது குழந்தை நலனில் அக்கறையுள்ள அனைவராலும் விரும்பி வரவேற்கத்தக்கது.
இவ்வித குழந்தை இலக்கியங்கள் பல வண்ணப்படங்களுடன் வெளிவருமாயின் பொன்னினாற் செய்த பூ, நறுமணமும் பெற்றது போல் அமையும். அடுத்து வரும் பதிப்புகளில் அவ்வித காட்சிப் பொலிவினையும் “பாப்பாப்பா” பெறுதல் வேண்டும். இப்பொழு துள்ள வடிவத்திலேயே இந்நூல் பயன் மிகவுடைய படைப்பு என்பதில் ஐயமில்லை.
- 1984

Page 89
“குழந்தைகளின் கவிதைகளும் குழந்தைகளுக்கான கவிதைகளும்” என்ற தலைப்பில் சிறுவண் தர்மேந்திராவின் பாடல்களுக்கான தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி -
தர்மேந்திரா யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியில் ஆறாம் வகுப்பிற் படிக்கும் ஒரு சிறுவன். இயற்கை ஆற்றல் பெற்ற இச்சிறுவனின் இரண்டாவது வெளியீடு இது.
தர்மேந்திராவின் தகப்பன் நண்பர் தர்மகுலசிங்கம் தனது மகனின் படைப்பாற்றலின் வெளிப்பாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மகனுடன் வந்து என்னிடம் இந்தத் தொகுதியில் வரும் பாடல்களின் கையெழுத்துப் பிரதியினைத் தந்தார். முடியுமானால், முன்னுரையாகச் சில வரிகளாவது தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவரின் முதற் பாடல் நூல் வெளியீட்டு விழாவிற் பங்கேற்ற எண் நண்பன் கவிஞர் கலாநிதி செ. சுந்தரம்பிள்ளை முன்னர் (அந்நூல் வெளியீட்டின் பொழுது ) இச்சிறுவன் பற்றிக் கூறியவை நினைவிற் கிளம்பின.
பாடல்களை வாசிக்கும்பொழுதுதான் இத்தகைய ஒரு தொகுதிக்கு முன்னுரை எழுதுவதிலுள்ள சிக்கற் பாடுகள் தோன்றின. ஒரு புறத்தே ஆற்றலுள்ள ஒரு சிறுவன் அவருக்குப் பின்னே தன் மகனிடத்தும் இலக்கியத்திலும் மிக்க ஆர்வம் கொண்ட ஒரு தகப்பன். (அவரே ஒரு இளைஞன் தான்). மறு புறத்தில் தமிழிற் குழந்தைப்பாடல் பற்றி நிலவும் "தப்பபிப்பிராயங்கள்” குழந்தைகள் எழுதும் கவிதைகளுக்கும் குழந்தைகளுக்கான கவிதைகளுக்கும் வேறு பாடுகாட்டாத ஒர் இலக்கியப் பண்பாடு.
இந்தப் பண்பாட்டின் தாக்கம் காரணமாகத் தர்மேந்திராவின் படைப்பாற்றல் பாதிக்கப்பட்டுள்ளதை இந்தத் தொகுதியின் கையெழுத்துப் பிரதியினை வாசிக்கும் பொழுது உணர்ந்தேன்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -61
இவற்றிற்கிடையே "முன்னுரை” பற்றிய சில எதிர்பார்ப்புக்களும் உள்ளன. முன்னுரை வாழ்த்துரையாகவே அமைதல் வேண்டு மென்பது, மிக்க முதிர்ச்சி பெற்ற எழுத்தாளர்களே விரும்பும் ஒன்றாகும்.
இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு "மெளனம்", "செயலின்மை" ஆகிய ஆயுதங்களை மேற்கொள்ளாது இந்தச் சிறுவனின் எதிர்காலத்துக்காகவும், நமது தமிழ்க் கல்வி பாரம்பரியத்திற் காணப்படும் ஒரு குறைபாட்டை வன்மையாக எடுத்துக் கூறுவதற்காகவும் இந்த முன்னுரையை மிகச்சுருக்கமாகவே எழுத வேண்டும் என்று கருதுகின்றேன்.
நமது பாரம்பரியத்தில் "கவிதை” சாரா விடயங்களையும் "செய்யுள்” வடிவிலே எடுத்துக்கூறும் ஒரு மரபுண்டு. இதற்குக் காரணம் இந்தியக் கல்வி மரபு. இங்கு மாட்டு வாகடம் கூடச் செய்யுள் வடிவில் - அதாவது யாப்பு முறைமையில் - அமைந்திருக்கும். யாப்பின் அமைதிக்கு வேண்டிய சகல அம்சங்களும் அந்தச் செய்யுளுக்குண்டு. யாப்பினைச் செய்யுளியற்றலிற் பிரதானப்படுத்தும் ஒரு படிப்பித்தல் மரபில், யாப்பே செய்யுளாகி விடுகின்றது. உண்மையில் இன்று மரபுக் கவிதை என்பது அடிப்படையில் அணியிலும் பார்க்க யாப்பையே அழுத்திக் கூறுகின்றது.
இந்தச் சிக்கற்பாட்டுக்கு மேல் இன்னுமொரு இடர்பாடு உண்டு. சிறுவர்களுக்கான பாடல்கள் அறத்தைப் போதிப்பனவாக விருத்தல் வேண்டும் என்றும் ஒரு கருத்து உண்டு. (நல்வழி, நன்னெறி). குழந்தைகளுக்கு நற்குணங்கள் போதிக்கப்படுவது மிக மிக அவசியமான ஒன்றாகும். பிரச்சினை என்னவென்றால் அதனை எப்படி போதிப்பது என்பதே. இந்த வினாபற்றி அதிகம் சிந்திக்காது, எட்டு வயது மாணவக் குழந்தைக்கு,
நன்றி யொருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று (தருங்) கொல் எனவேண்டா.
(அடிக்கோடிட்ட சொற்களின் அமைப்புக்களை நோக்குக)
படிப்பிக்கின்றோம் (உண்மையில் படிப்பிப்பதாக நினைக்கின்றோம்.)
பின்னர், இந்த நல்வழி, நன்னெறிச் செய்யுள் மரபே குழந்தைகளுக்கான செய்யுள் மரபென்று எண்ணிக் கொண்டு விட்டோம். அதனால் தற்காலத்தில், தமிழில் குழந்தைப்பாடல்கள் எழுதுவது மிகச் சிரமமான ஒரு காரியமாகவுள்ளது. அழ.

Page 90
-162- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
வள்ளியப்பாவே சிக்கற்பட்டுள்ள ஒரு விடயத்திலே நாம் அதிகம் கூற வேண்டுவதில்லை.
இந்த விடயத்தைத் தொடக்கவேண்டிய இடத்திலேயே தொடக்க வேண்டும்.
இந்த விடயம் சம்பந்தமான இரு உண்மைகளை மனத்திலிருந்து நழுவவிடாது பார்த்துக் கொள்ளல் வேண்டும்.
1. கவிதை "அனுபவம்” சம்பந்தப்பட்டது.
2. கவிதையில் வரும் சொற்கள் குறித்த அனுபவ வீச்சை
காட்டுவனவாகவிருக்கும்.
குழந்தைகள், சிறுவர்களுக்கான பாடல்கள் அவர் "அநுபவத்துக்கு” உட்பட்டதாகவிருத்தல் வேண்டும். அனுபவத்துக்கு அப்பாற்பட்ட கருத்துக்களையோ, சொற்களையோ பயன்படுத்தினால், அவை மனனத்துக்குரியனவாக விருக்குமேயொழிய மனத்துக்குப் பிடிப்பவையாக இருக்காது. இதனால் தான் நம்மில் பலருக்கு, நாம் சின்னவயதிற் பாடமாக்கிய பல பாடல்களின் கருத்துக்கள், நாம் பெரிதும் வளர்ந்த நிலையிலேயே விளக்கம் பெறுகின்றன. (அத்தகைய விளக்கம் ஏற்படும் பொழுது நமக்கு ஏற்படும் சிலிர்ப்பே ஒரு தனி அனுபவமாகும்.)
மரபு பேணப்பட வேண்டும் என்பதற்காக நாம் நல்வழி, நன்னெறிப் பாடல்களையே 9,10 வயதுகளிலே மாணவர் மீது திணிக்கின்றோம்.
இதனால் இன்னுமொரு குறைபாடும் ஏற்படுகின்றது. குழந்தைகள்/ சிறுவர்கள் படைப்பாக்கல் உந்துதல்களினால் தாம் ஏதாவது "இயற்ற" முனைகின்ற பொழுது இந்த "மரபு நிலைப்பட்ட" பிரயோகங்களையே பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.
தங்களையறியாமல் அவர்களும் "மன்னு" போன்ற அசை நிலைகளையும் “விளங்கு", "துலங்கு" போன்ற அடைகளையும் பயன்படுத்தத் தொடங்குவர்.
இத்தகைய ஒரு கல்விப் பண்பாட்டு நிர்ப்பந்தம் அவர்களின் படைப்பாற்றலை உறுஞ் சிவிடுகின்றது. சில வருடங்களில் அந்தப்படைப்பாற்றலே இல்லாது போய் விடும்.
குழந்தைகள்/ சிறுவர்கள் பாடல்கள் எழுதும்பொழுதும், அவர்கள் தம்மிடையே நிலவும் இந்த, குழந்தைகளுக்கான அறப்பாடல்களின் அச்சிலேயே எழுத வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது. இது மனவருத்தத்திற்குரிய தொன்றாகும்,

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் –፲68
தர்மேந்திரா இந்த இக்கட்டு நிலையிற் சிக்குப்படும் ஆபத்து இத்தொகுதியில் தெரிகின்றது. அவர் தமது அனுபவத்திற்கு அப்பாற்பட்ட பொருட்கள் பற்றி தமது அனுபவத்திற்கப்பாலான சொற்கள் மூலம் எடுத்துச் சொல்லும் ஓர் இலக்கியச் சூழலால் நிர்ப்பந்திக்கப்படுகின்றார் என்பது புலனாகின்றது.
இந்தச் சிறுவனிடத்து இயல்பான படைப்பாற்றல் இருக்கிறதென்பது அவரது கதைப்பாடல்கள் மூலம் தெளிவாகின்றது. “பேராசை பெருநட்டம்”, “புத்தியுள்ள பிள்ளை பிழைக்கும்”, "தொப்பி வணிகன்” ஆகியன நல்ல உதாரணங்கள். தென்னை பற்றிய பாடலில் குழந்தை மனதின் கற்பனை அழகாக வெளிப்படுகின்றது.
நம்முன்னுள்ள சவால் இதுதான். தர்மேந்திரா போன்ற சிறுவர்களின் இயல்பான கவிதையாக்க ஆற்றலை மழுங்கடிக்காத முறையில், அந்த ஆற்றலை வளர்த்தெடுப்பதற்கான ஒரு தமிழ் பயிற்றல் முறைமை நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
இது ஆசிரியர்களும் பெற்றோர்களும் சிரத்தை கொள்ள வேண்டிய ஒரு விடயம்.
தர்மேந்திராக்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகின்றது.
இந்தச் சிறுவனின் படைப்பாற்றலை, இவன் போன்ற பல சிறார்களின் படைப்பூக்கத்தை வளர்த்தெடுப்போமாக.
- 1992

Page 91
சபா. ஜெயராசாவின் “மழலைப்பா” நூலுக்கு எழுதிய முன்னுரை
- மயிலங்கூடலூர் நடராஜன் -
குழந்தைகள், சிறுவர்கள், பாலர்கள், மழலைகள் என்ற பல்வேறு பெயர்களில் வயது குறைந்த பிள்ளைகள் அழைக்கப்படுகின்றனர். எனினும், இவற்றை வேறுபட்ட வயதுக்குரிய பெயர்களாக
ஆய்வறிஞர்கள் குறிப்பிடுவர்.
மழலைகள் - 3 - 5 வயது
பாலர்கள் ra 6 - 7 வயது
குழந்தைகள் - 8 - lil G) JuLiġi
சிறுவர்கள் - 12 - 15 வயது
என்பன இப்பாகுபாடுகள் ஆகும்.
பிள்ளைகளுக்கான பாடல்களை மேலே குறிப்பிட்ட வயது அடிப்படையில் முறையே, மழலைப் பாடல்கள், பாலர் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், சிறுவர் பாடல்கள் எனப் பாகுபடுத்தலாம். இப் பாடல் வகைகளில் மழலைகளுக்கான பாடல்கள் மிக அரிதாகவே உள்ளன.
மூன்று வயதுக்கும் ஐந்து வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகளுக்கான மழலைப் பாடல்கள் மிக எளிமையான சொற்களைக் கொண்டவைகளாகவும் சிறியவைகளாகவும் எளிமையான சந்தம் கொண்டவைகளாகவும் அமைய வேண்டும். இவற்றிலுள்ள சொற்கள் மீள மீள வருவதோடு பிள்ளைகளுக்குத் தெரிந்தவையாகவும் அமைய வேண்டும். ஏனைய பருவப் பாடல் நூல்களும் பாடல்களும் அதிக அளவில் வெளிவந்தாலும் மழலைப்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் ーI65
பருவப் பாடல்கள் மிக அரிதாகவே வெளிவருகின்றன. மழலைப் பருவக் கவிதை நூல்களும் குறைவாகவே வந்துள்ளன.
இத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட கவிஞர் ஒருவர் சபா.
ஜெயராசா ஆவர். இவர் “பாலர் பள்ளிப் பாடல்" என்ற பெயரில் மழலைப் பாடல் நூலை 1979 இல் நினைவு மலராக வெளியிட் டுள்ளார். மழலைப் பாடல் துறைசார்ந்த இவரது இரண்டாவது நூலாகப் “பாலர் கல்விப் பாடல்” வெளிவந்துள்ளது. இதனை யாழ்ப்பாணம் மாநகரசபை 1998 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. இவ்விரு நூல்களிலும் "மழலை"என்பது "பாலர்”எனக் குறிப்பிடப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலில் இடம் பெற்றுள்ள "பூச்சு” என்ற நாலாவது பாடல் (ப -4) இது :
இலைகள் இப்போ
பச்சை பூசும்
வானம் இப்போ நீலம் பூசும்
நெருப்பு இப்போ சிவப்பு பூசும்
காகம் இப்போ கறுப்புப் பூசும்
கொக்கு இப்போ வெள்ளை பூசும்.
இம்மழலைப் பாடலை முதலில் படிக்கும் போது இது கவிதையா? என்ற ஐயம் தோன்றும். ஆனால் 3-5 வயதுக்குட்பட்ட மழலைகளுக்கான பாடலின் இயல்புகளை அறியும்போதுதான் இதன் சிறப்பை அறிய முடியும். இலைகள், வானம், நெருப்பு, காகம், கொக்கு என்ற சொற்களுடன் பச்சை, நீலம், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நிறப் பெயர்ச் சொற்களும் இக்கவிதையில் உள்ளன. இவற்றை மாணவர் அறிந்து நினைவிற் பதித்தலே இப்பாடலின் நோக்கம். இப்போ, பூசும் என்ற இரு சொற்களும் திரும்பத் திரும்ப வருகின்றன. மழலைப் பாடலின் முக்கிய பண்பு சொற்கள் மீள மீள வந்து எளிமையாக மழலையரின் நினைவிற் பதித்தலேயாகும். இப்பாடலின் ஒசை மிக எளிமையானது. பாடலின் அளவும் சிறிது. மழலைப்பாடல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு இப்பாடல் சிறந்த எடுத்துக்காட்டாகும். இது மழலையின் முதனிலைப் பாடலாகும்.

Page 92
-166- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
இதன் அடுத்த மழலைநிலைக் கல்விக்கு உதவும் மூன்று மழலைக் கவிதை நூல்களைக் கவிஞர் கல்வயல் வே. குமாரசாமி வெளியிட்டுள்ளார். பாப்பாப்பா, பாடு பாப்பா, பாலர் பா என்பன அவை. இவை மிகச் சிறிய எளிமையான பாடல்களைக் கொண்டுள்ளன.
சேவல் கூவ விடிந்தது கோவில் மணி கேட்டது பாலர் நாங்கள் எழும்பினோம்
காலை வேலை தொடங்கினோம்.
சபா. ஜெயராசா அவர்களின் பாடலில் உள்ளது போல இதிலே சொற்கள் மீள வராவிட்டாலும் இதுவும் மழலைகளுக்குரிய எளிய பாடலே. பிள்ளைக் குத் தனது வாழ்க்கைப் பணிகளை நினைவூட்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பிள்ளைக்குத் தெரிந்த சொற்கள் இதில் அமைந்திருப்பதால் இது மழலையின் நினைவில் நிலைத்திருக்கும்.
பெரும்பாலான குழந்தைக் கவிஞரின் நூல்களில் உள்ள பாடல்கள் பல்வேறு பருவங்களுக்குமுரியவையாக அமைந்துள்ளன. அவற்றுள் சில மழலைப் பாடல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. எனினும், எல்லாப் பாடல்களும் இந்நூலில் இடம் பெற வில்லை.
இன்றைய கல்வி மரபில் மழலைகளும் மழலைப் பள்ளிக்குச் சென்று கற்பதால் அவர்களுக்குரிய மழலைப் பாடல்களும் தனிநூல்களாக அதிக அளவில் வெளிவரவேண்டும். இந்நூல்கள் எளிமையான பாடல்களும் கருத்தை விளக்கும் படங்களும் பெரியளவு எழுத்துக்களும் கொண்டவையாக வெளி வர வேண்டும். குழந்தைக் கவிஞர்கள் இம் முயற்சியில் சிறப்பாக ஈடுபட வேண்டும்.
- நன்றி. திருமதி பரமேஸ்வரி பார்வதிநாதசிவம் நினைவு மலர் (2002).

மு.பொன்னம்பலத்தின் “ஊஞ்சல் ஆடுவோம்” என்ற
சிறுவர் கவிதைத் தொகுதிக்கான முன்னுரை
- மு. பொன்னம்பலம் -
பெரியவர்களுக்கான இலக்கியத்தை விட சிறுவர்களுக்கென இலக்கியம் படைப்பது மிகவும் கடினமானதும் பொறுப்பு வாய்ந்ததுமாகும். எதையும் தம் அறிவின் சேகரிப்புக்குள் இழுத்துக் கொள்ளும் பருவத்தில் இயங்கும் சிறுவர்களுக்கு நாம் கொடுப்பது அவர்களுக்குப் பயன்தரக்கூடியதாகவும் அவர்கள் அறிவின் தளங்களில் விசாரணை அலைகளை எழுப்பி, இன்னும் அவர்கள் அடிமனங்களில் மண்டிக் கிடக்கும் கலையுணர்வுகளைக் கிளர்ந்தெழ வைப்பவை யாகவும் இருக்கவேண்டும். நாம் இங்கே தரும் கவிதைகள் இப்போது தானி பாத்தியை விட்டு முளைவிடும் குழந்தைகளுக்கென எழுதப்படும் ஒத்திசைப்பு பாடல்கள் NURSERY RHYMES வகையைச் சார்ந்தவையல்ல. பாத்தியை விட்டு மேலெழுந்து இன் காற்றில் தலையசைக்கும் தளிர்களுக்கானவையே இவை.
உலகின் எல்லா மொழிகளிலும் இத்தகைய கவிதைகளையும் பாடல்களையும் காணலாம். பெரியவர்களுக்கான நாட்டார் பாடல்களைப் போல் சிறுவர்களுக்கான இத்தகைய பாடல்களும் கிராம மக்களிடையே புழக்கத்தில் உள்ளதை நாம் காணலாம். சில களிப்பூட்டும் வேடிக்கைக் கவிதைகளாகவும் சில அறிவூட்டும் சிந்தனைக்குரிய கவிதைகளாகவும் இருப்பதைக் காணலாம்.
“மழை பொழியுது மந்தளங் கொட்டுது
வேலப்பன் “பெண்டிலை” வெள்ளங் கொண்டோடுது" என்னும் இப்பாடலைப் படிக்கும் போது கிராமத்துச் சிறுவர்கள் "கெக்களம்” கொட்டிச் சிரிப்பர். இது களிப்பூட்டும் வகையைச் சார்ந்தது. இதில் வரும் “வேலப்பன் பெண்டில்" ஒரு வித விகடச் சித்திரத்தை அவர்கள் மனதில் ஏற்படுத்துவதே அதற்குக் காரணம்.

Page 93
-168- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
இரண்டாவது வகையைச் சார்ந்த சிந்தனைக்குரியதாக பின்வரும் கவிதையைக் காட்டலாம்.
“மழையே மழையே மெத்தப் பெய் மண்ணில் வளங்கள் விளங்கப் பெய்"
இதில் வரும் வரிகள் மழையின் மேன்மையை விளங்க
வைப்பனவாக உள்ளன. ஆனால் இது வெளிப்படையான “பிரசாரமாக” இல்லாமல் கவிதையோடு உள்ளிழைக்கப்பட்டவையாக இருப்பது இதன் சிறப்பு. ஆனால் வெளிப்படையான பிரசார ரீதியில் சிறுவர்களுக்கு புத்தி புகட்டுபவையாக அமைவன மூன்றாவது வகை. இதற்குச் சிறந்த உதாரணமாக பாரதியாரின் பாப்பா பாடல்களைக் காட்டலாம்.
ஓடி விளையாடு பாப்பா - நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா - ஒரு குழந்தையை வையாதே பாப்பா.
இது வெளிப்படையான போதனைகள் புகட்டும் வகையைச் சார்ந்தவையாக இருப்பினும் இதில் கையாளப்படும் சொற்கள், அதன் வெளிப்பாட்டுமுறை, அது யாருக்குக் கூறப்படுகிறது என்பவற்றின் பால்பட்டு அது மிகவும் சுவை தருவதாக உள்ளது. இத்தகைய போதனைகள் பெரியவர்களை நோக்கித் திருப்பப்படுமாயின், அவை மு. வரதராசனின் நாவல்கள் போல சோபை இழந்தவையாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
இனி அடுத்ததாக வருவது, சிறியவர்களுக்காக எழுதப்பட்ட போதும் பெரியவர்களாலேயே அதிகம் விரும்பி சுவைக்கப்படும் வகையைச் சேர்ந்தவை. இதை நான்காவது வகை என்றே கூற வேண்டும். இந்த வகைக்கு ஆங்கிலத்தில் LEWIS CARROLL ஆல் எழுதப்பட்ட ALICE IN WONDERLAND என்ற கதையை உதாரணம் காட்டலாம். பாட்டும் உரையாடலும் கவிதையுமாக வரும் இப்படைப்பு, இதன் விநோதமான கற்பனையால் சிறுவர்களைக் கவர்ந்தாலும் இதில் பாவிக்கப்படும் மொழிநடை, உள் கருத்து புத்தி ஜீவிகள், மெய்யியலாளர், மொழியியலாளர் ஆகிய பலரையும் 6ílu 155606) 155606) I. 3656) IITGöp T.S. ELIOT éE.L– MACAVITYA MYSTERY CAT என்ற பெயரில் பூனையொன்றை உருவகித்து, இன்றைய அரசியல் சமூகம், அரச யந்திரம் ஆகியவற்றையெல்லாம் கேலி பண்ணும் விதத்தில் எழுதியுள்ளார். இதுவும் சிறுவர் கவிதைதான்.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -169
இன்னொரு வகையையும் கூறித்தான் ஆகவேண்டும். அதாவது ஒரு வித மர்மமும் சொற்களில் ஒருவகை "வன்முறை"யும் கலந்த சிறுவர் கவிதைகள். இதை ஐந்தாவது வகையென்றே கூற வேண்டும். இந்த வகைக் கவிதைகளுக்கு உதாரணமாக, இன்றைய ஆங்கில நாட்டின் ஆஸ்தானக் கவிஞராகக் கொள்ளப்படும் TED HUGES இன் சிறுவர் கவிதைகளைக் காட்டலாம். EDGAR ALLEN POE வின் கவிதைகள், கதைகளில் காணப்படும் மர்மமும் பீதியும் இதில் வேறு விதத்தில் VIOLENT ஆக வெளிப்பட்டுவருவதைக் காணலாம். TED HUGES, மிருகங்களையும் பறவைகளையும் பற்றி எழுதும் போது அவற்றின் "மிருகத்தன்மையை”, “பறவைத் தன்மையை” வெளிப்படுத்துகின்ற முறைதான் தனியானது.
W.H. AUDEN 6TCupg5u NIGHT MAIL, JAMES HONEYMAN 9,5u கவிதைகள் சிறுவர்களை நேரடியாகக் கவரக் கூடியவை. சிறுவர்களுக்கான முன்னுதாரணக் கவிதைகளாக இவை நிற்கின்றன. இந்த வகையான சிறுவர் கவிதைகளின் பின்னணியில் பார்க்கும் போது தமிழில் வெளிவந்துள்ள சிறுவர் கவிதைகள் பெரியளவு சாதித்தவையாகச் சொல்ல முடியாது. குழந்தைகளுக்கான NURSERY வகைக் கவிதைகளும், சிறுவர் வகைக் கவிதைகளும், கலந்து நிற்கும் கவிதைகள் அனேகம் எழுதப்பட்டுள்ளன. தமிழ் நாட்டுக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் கவிதைகள் இவ்வகையைச் சார்ந்தவை. தேசிக விநாயகம் பிள்ளையின் இன்பியல் - துன்பியல் சார்ந்த மாலைக்காட்சிக் கவிதைகள் பெரியவர்களையும் சிறுவர்களையும் கவர்ந்திழுக்கும் நல்ல கவிதைகள் எனலாம். நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் "கத்தரித் தோட்டத்து வெருளி", "வீமா விமா” ஆகியவையும் சிறுவர்களுக்குரிய நல்ல கவிதைகளே. பா. சத்தியசீலன் குழந்தைகளுக்குரிய ஆக்கங்களிலேயே தன் திறமையைக் காட்டியுள்ளார்.
"ஊஞ்சல் ஆடுவோம்" தொகுப்பில் உள்ள இக்கவிதைகள், களித்தல், கற்றல், வியத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், நாம் மேலே குறிப்பிட்ட பல்வகைத் தன்மை கொண்ட சிறுவர் கவிதைகளை ஆங்காங்கே வெளிக்காட்டுபவையாகவும் அவற்றுக்கு மாறானவை யாகவும் இருக்கின்றன எனலாம். “அகதிச் சிறுவர்” என்ற கவிதை ஏற்கனவே எஸ். ஜெயசங்கரால் அகதிகள் பற்றிய நாடகத்தில் பாவிக்கப்பட்டதும் குறிப்பிடற்குரியது. தாம் வாழும் உலகம் பிரபஞ்சம் என்று சிறுவர் சிந்தனை விரியவும், பின்னர் தம்மை நோக்கி குவியவும் வைக்கும் நோக்கில் தரப்பட்ட கவிதைகளும் இதில் உள்ளன. அதன் வெற்றி தோல்வி காலத்துக்குரியது. மெல்லிதான

Page 94
- Ι7O- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
கவிதையுணர்வும் அழகும் பொருந்திய சிறுவர் கவிதைக்கு பின்வரும் ஆங்கிலக் கவிதையைக் காட்டலாம்:
I WONDER WHY THE GRASS IS GREEN AND WHY THE WIND IS NEVER SEEN
WHO TAUGHT THE BIRDS TO BUILD A NEST AND TOLD THE TREES TO TAKE A REST
OR WHEN THE MOON IS NOT OUITE ROUND WHERE CAN THE MISSING BIT BE FOUND
- 2002

இரத்தினம் அப்புத்துரையின் “மழலைத் தமிழ்ப் பாடல்” என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரை
- சோ. பத்மநாதன் -
சிறுவர் இலக்கியம் படைப்பது பலர் நினைப்பது போல் எளிதான காரியமல்ல. தூக்கணாங்குருவியும் தேனீயும் கட்டும் கூடுகளை வேறு பறவைகளால் கட்ட முடிவதில்லை. சிறுவர்கள் பாடி மகிழத்தக்க பாடல்கள் புனைவது "பெரிய” கவிஞர்களாலும் முடியாது போவதுண்டு.
முதலில் கவிஞன் குழந்தையாக வேண்டும். தன் சூழலை, இயற்கையை, விலங்கு, பறவைகளை, கண்டு வியக்கும், குதூகலிக்கும் உள்ளம் வேண்டும்.
ஒசையால், லயத்தால் இன்புறுவது பிள்ளைகள் இயல்பு. தாளம் போட்டுப் பாடக்கூடிய எளிமையான பாடல்களை அவர்கள் விரும்புவர். வாய்விட்டுப் பாடுவதோடு ஆடவும் செய்வர். "இசையும் அசைவும்” என்ற பாடப்பரப்பு இத்தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
பிள்ளைகளுடைய சொற்களஞ்சியம் பற்றிய பிரக்ஞை நமக்கு இருக்க வேண்டும். “நான் எந்த வயதுப் பிள்ளைகளுக்காக எழுதுகிறேன்? நான் பயன்படுத்தியுள்ள சொற்கள் அப்பிள்ளைகளின் சொற்களஞ்சியத்துக்குள் அமைகின்றனவா?” என்று கவிஞன் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது குழந்தை உளவியல். கவிஞன் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து குழந்தைக்குள் இருந்து பாட வேண்டும். வளர்ந்தோர் உலகம் வேறு, பிள்ளைகள் உலகம் வேறு. பிள்ளைகள் கோபதாபங்களை வைத்துக் கறுவிக் கொண்டிருக்க மாட்டார்கள். “சிறு பிள்ளைகள் வளர்ந்தவர்களைவிடப்புத்திசாலிகள்” என்று சொன்ன தோல் ஸ்டோய் அதை நிரூபிக்க ஒரு கதையே எழுதியிருக்கிறார்.

Page 95
-172- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
அறுவை மருத்துவம் செய்பவர் தன்னையும் தன் கருவிகளையுந் தொற்று நீக்கிக் கொள்வது போல, கவிஞர் தன் “பெரிய மனித தோரணை"யை நீக்கிவிட்டே சிறுவர் பாடல் எழுதக் குந்த வேண்டும். ஒர் உதாரணம் சொல் கிறேன். நெடுங் காலமாக நெஞ்சை நெருடிக்கொண்டிருப்பது.
பாதகஞ் செய்வோரைக் கண்டால் - நீ
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
என்கிறாரே பாரதி. ஒரு பிள்ளையை இவ்வாறு வன்முறைக்கு ஏவலாமா? அந்த வெள்ளை உள்ளத்தில் கவிஞரின் “போதனை” நச்சு விதையாக விழக் கூடுமல்லவா?
சிறுவர்களுக்கென்று எழுதுவது எவ்வளவு சிரமம் என்பதை விளக்க இவ்வளவும் எழுத நேர்ந்தது.
திருமதி இரத்தினம் அப்புத்துரை “மழலைத் தமிழ்ப் பாடல்” என்ற தொகுதியை வெளியிடுகிறார். இயற்கைக் காட்சிகள், பறவை, விலங்குகள், குடும்பம், நட்பு, பாடசாலை, விளையாட்டு, சான்றோர், தெய்வம் முதலிய பாடு பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
வண்ணப் பட்டம் பறக்குதே
வாலை ஆட்டிப் பறக்குதே மேலே மேலே போகுதே
மேகந் தனிலே முட்டுமோ (பட்டம் பறக்குது)
பாப்பாப் பாட்டை நாளும்
படிக்கும் படியாய் எம்மைக் கூப்பிட்டணைத்து மகிழ்ந்து
கூடிப் பாடும் அம்மா (அம்மா எங்கள் தெய்வம்)
என்ற பாடல்கள் பிள்ளையின் அநுபவத்தோடொட்டியவை. "புது நாய்க்குட்டி”, “சின்னத்தம்பி”, “அம்புலிமாமா” என்பன எளிய, இனிய பாடல்கள்.
“காகமும் குயிற்குஞ்சும்” ஒரு கதையாக - நாடகமாக நம் சிந்தனையைத் தூண்டுகிறது. தெரிந்த கதைதான். காகத்தின் கூட்டில் குயில் முட்டை இட்டு விடுகிறது. காகம் அடைகாக்கிறது. குஞ்சு பொரிக்கிறது. அஞ்சுநாள் கழிந்தபின், குஞ்சுகள் பாடத் தொடங்குகின்றன. “கா, கா” என்று பாடத் தெரியவில்லை. “கூ, கூ”

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -173
என்று பாடின. காகம் கொத்தித் துரத்திவிடுகிறது. தாய்மையைப் பகைமை வென்று விடுகிறது.
கிளி, பட்டம் பறக்குது, தம்பி பாட்டுப்பாடு, ஈழத்து மகாகவி, அம்மா எங்கள் தெய்வம், கற்போமே காக்கைக் குணம், தங்க மனசு வாத்தியார், மஞ்சள் நிறத்து மாம்பழம் முதலிய எளிமையான சிறந்த பாடல்களாக அமைந்துள்ளன.
பொட்டு, சின்னத்தம்பி, வந்தது மாரி முதலிய பாடல்கள் மழலைப் பாடல்களாக மிக எளிமையாகவும் மிகச் சிறப்பாகவும் அமைந்துள்ளன.
இக்கட்டுரையின் தொடக்கத்துக்குத் திரும்புகிறேன். இரத்தினம் அப்புத்துரை சைவப் புலவர். அவர் கணவர் ஒரு பண்டிதர். இருவரும் தமிழாசிரியர்களாகப் பணியாற்றியவர்கள். இக்காலத் தமிழ் நடையால் பாதிப் புறாத செந்நெறிப் பாங்கான நடையில் எழுதுகிறார்கள். எழுதக்கூடாதென்பதல்ல. ஆனால், பிள்ளைகளை மனதில் வைத்துக் கொண்டால், இமாசலம், ஆன்மசாந்தி, விசனம், சபலம், அறிந்தனம் முதலிய சொற்களைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது. இதுகூட முடிந்த முடிபல்ல, ஒர் அபிப்பிராயமே.
இரத்தினம் அப்புத்துரை அவர்கள் இத்துறையில் இன்னும் முயற்சி செய்வார் என்றே நம்புகிறேன். சிறுவர் உலகம் அவர் பணியை அவாவி நிற்கிறது.
- 18.02.2003

Page 96
செ. யோகநாதன் எழுதிய “தங்கத் தாமரை”
நூலுக்கு “குழந்தை இலக்கியம் : சில மனப்பதிவுகள்”என்ற தலைப்பிலான முன்னுரை
- செ. யோகநாதன் -
தமிழில் குழந்தை இலக்கியம் வளர்ச்சியடைந்திருக்கும் நிலையினைப் பற்றி சமூக விழிப்புணர்வுள்ளவர்கள் அங்குமிங்குமாகச் சொல்லியும் எழுதியும் வருகின்றார்கள். பெரிய புத்தக நிலையங்களுக்குச் சென்று அங்கு தனியாக அமைக்கப்பட்டுள்ள குழந்தை இலக்கியப் பகுதிகளுக்குச் சென்று பார்த்தால், வியப்பும் அதேவேளையில் இனந்தெரியாத மனக்கவலையும் உண்டாகின்றது. எத்தனை விதமான அழகிய வண்ணப் பதிப்புக்கள், இளம் வயதினருக்குரிய கலைக் களஞ்சியங்கள், கதை, பாட்டுப் புத்தகங்கள், குழந்தைகளுக்கெனவே உருவாக்கப்பட்ட பதிப்பகங்கள், இவை வெளியிடும் நூல்கள் குழந்தைகளின் உளவியலை நன்கு அறிந்த சிறந்த படைப்பாளிகளால் எழுதப்படுகின்றன. இன்றைய அச்சுக்கலையின் சிறப்புக்களையெல்லாம் இந்தப் புத்தகங்கள் உள்வாங்கி வெளியிடுகின்றன. இவற்றின் வசீகரமான வடிவமைப்பே குழந்தைகளிற்கு இந்நூல்களைப் படிக்கும் ஆர்வத்தையும் விருப்பத்தையும் தூண்டி விடுகின்றன; இவர்களைப் புத்தகப் பிரியர்கள் ஆக்குகின்றன. வயது அடிப்படையில் வெளியிடப்படும் இந்தக் குழந்தை இலக்கியங்களை அவற்றின் பொருளுக்காகவும், அழகிற்காகவும் கணிகளில் எடுத்து ஒற்றிக் கொள்ள ஆசை பிறக்கின்றது.
உலகின் புகழ்பெற்ற ஆங்கில குழந்தை இலக்கிய வெளியீட்டாளரான LADYBIRD நிறுவனத்தின் சில நூல்களை நான் தமிழிலே மொழி பெயர்த்து வருகின்றேன். இவற்றை மொழி பெயர்க்கின்ற போது குழந்தை இலக்கியத்தின் வளமும் வனப்பும் என்னைத்திக்குமுக்காட வைத்தன. இந்த அருஞ் செல்வங்களை நமது

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -1.75
குழந்தைச் செல்வங்கள் அறியாமலே போய் விடுகிறார்களே என்ற மனக்கவலை என்னுள்ளே செறிந்து பரவுகிறது. "ஏழைக்கேற்ற எள்ளுருண்டை" என்ற அளவிலாவது நமது தமிழில் குழந்தை இலக்கியங்களை உருவாக்க பதிப்பகங்கள் உருவாக வேண்டுமென விரும்புகிறேன்.
இன்றைய கணினி - இணைய யுகம் அறிவுத்துறையிலே பெரு வெளிச்சத்தைப் படர விட்டிருக்கின்றது. அறிவியல் அற்பதங்கள், அற்புதக் கவிதைகள் (FAIRY TALES) என்ற குழந்தை இலக்கியங்கள் வெளியாக இந்த கணினி - இணைய யுகம் முழு உந்துதலையும் தருகின்றது. உலகின் பலமொழிகளின் குழந்தை இலக்கியங்களும் இந்தப் பாய்ச்சலில் போட்டி போடுகின்றன. இவற்றை நாம் தமிழிற்குக் கொண்டு வரவேண்டும். இதற்கான பதியன்களை தமிழ்ப் பரப்பிலே ஊன்றி, செழித்து வளர முழு முயற்சியும் செய்தாக வேண்டும்.இது நமது இன்றைய, அடுத்த இளந்தலைமுறையினருக்கு அர்ப்பணிப் போடும், தெளிவோடும் நாம் ஆற்ற வேண்டிய பணிக் கடன்.
ஆங்கிலத்தில் வெளியாகும் மேற்குறிப்பிட்ட நூல்களைக் தமது குழந்தைகளுக்கு ஆர்வத்தோடும் பெருமையோடும் வாங்கிக் கொடுக்கின்ற தமிழ்ப் பெற்றோர்கள், தாய் மொழியில் தமது குழந்தைகள் இத்தகைய செல்வங்களைப் பெறவேண்டும் என்று நினைத்ததாகத் தெரியவில்லை. இந்தப் போக்கு நமது அறிவின் அடிமைத்தனம் என்று வாதிட்டு நிறுவ வேண்டியதில்லை.
தாய் மொழிக் கல்வியே சிந்தனைப் போக்கினை ஒழுங்கமைக்கின்ற ஆற்றல் கொண்டது. பத்துவயதிற்குள்ளேயே மனிதனின் ஆளுமைக் குணங்கள் உருவாகிவிடுகின்றன. இந்தப் பத்து வயதிற்குள்ளேயே நமது ஆங்கிலப் பயிற்சி முறைக்கல்வி நமது குழந்தைகளின் அறிவுப் போக்கு, தாய்மொழிப்பற்று, சிந்தனை வளர்ச்சி என்பனவற்றை முடமாக்கி விடுகின்றது. எம்முடைய தலைமுறையின் எல்லா வீழ்ச்சிகளுக்கும் இந்த இடத்திலேதான் நாம் அத்திவாரம் இட்டு விடுகின்றோம்.
குழந்தைகள் கற்பனைச் சிறகடித்துப் பறக்கும் அற்புதங்கள். அவர்கள் எதனுடனும் பேசி மகிழும் இனிமைகள். உயர்திணை, அஃறிணை என்பனவெல்லாம் அவர்களின் மனம் தொடுகின்ற போது உயிர் பெற்று அவர்களோடு பேசும், பாடும், ேைகார்த்து களிப்போடு விளையாடும். அவர்கள் பட்டு நீலவானிலே பறந்து, ஆழ்கடலில் துளாவியெழுந்து, காற்றின் மறைவிலே ஒளிந்து, கையிலே மலைகளை அள்ளியெடுத்துப் பந்து விளையாடும் சித்திரங்கள். உலகிலுள்ள எல்லா

Page 97
-176- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
மனிதனும் தன் பாட்டியிடம் கதைகேட்டு, தனது குழந்தைகளுக்கு கதை சொல்லி வாழ்ந்தவன். நாமும் அப்படி இருந்தவர்களே.
ஐம்பது ஆண்டுகளின் முன்னே குழந்தைகளுக்காக அர்ப்பணிப்போடு தமிழில் குழந்தை இலக்கியம் படைக்கும் முயற்சிகள் செய்யப்பட்டன. அணில், கரும்பு, பூஞ்சோலை, கண்ணன், கோகுலம், ரத்னபாலா போன்ற குழந்தை இலக்கிய இதழ்கள் தமிழகத்தில் வெளியாகின. பெரியவர்களுக்கான இதழ்களில் குழந்தைகளுக்கான வண்ணப் பக்கங்களும் வெளியாகின. அப்போது வெளியிடப்பட்ட கண்ணன், பூஞ்சோலை, அணில், கல்கண்டு மலர்களினைக் கண்களிலே ஒற்றி மகிழ்ந்து படிக்கலாம்.
குழந்தை இலக்கிய வளர்ச்சியில், இலங்கை பல தொடக்கங்களை நிகழ்த்தியிருக்கின்றது. குழந்தைப் பாடல்களை அர்த்தமும் அழகும் கனிய நமது கவிஞர்கள் ஆக்கிக் குழந்தைகள் பாடி மகிழ வழி செய்திருக்கின்றார்கள். தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர் தமிழில் சிறந்த குழந்தைப் பாடல்களைத் தந்தவர். இந்தக் கவிதையின் தொடர்ச்சியை நம்முடைய கவிஞர்கள் முன்னெடுத்த போதும் அது வளம் செறிந்திருக்கவில்லை. இன்னும் செழுமையும் விசாலமும் ஆழமும் கொண்டதாகக் குழந்தை இலக்கியத்தை மாற்றும் உழைப்பு, கணினி - இணைய யுகத்தில் அவசியமாக வேண்டப்படுகின்றது.
எமது குடிசனத்தொகையில் 40 வீதத்தினர் பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே. ஆனால் இவர்களுக்கான பத்திரிகைகள் எத்தனை? வெளியாகின்ற நூல்கள் எத்தனை? ஆறுவயது முதல் அறுபது வயதுள்ளவர்கள் வரை படிப்பதற்காகவே இன்றைய பத்திரிகைகள் வெளியாகின்றன. ஆம்,எமது இளந்தலைமுறைக்கு அத்தனை கலாசார அழுக்கு மூட்டைகளையும் எந்த மனத்தயக்கமுமின்றிப் படிக்கக் கொடுத்து வருகின்றோம். இப்போது அவையெல்லாவற்றையும் விட விஷந்தோய்ந்த தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளை நாம் அளித்து வருகின்றோம். அறிவியல் வருகைகள் நம்மை மேன்மைப்படுத்துவதை அடிச்சர்டாகக் கொண்டவை. நாம் அதைத் தலைகீழாக மாற்றி நமது இளந்தலைமுறையின் வளர்ச்சியினை சேதப்படுத்த கங்கணம் கட்டி நிற்கின்றோம்.
உலகின் ஏனைய மொழிகளில் குழந்தை இலக்கியம் வளமும் வனப்பும் பெற்று வருவதை அறிய முடிகின்றது. முன்னர் சோவியத் குழந்தை இலக்கியங்களின் தமிழ்ப் பதிப்புகள் நமக்கு இதந்தரு நிழல்களாயிருந்தன. இந்தியாவின் "நேஷனல் புக் டிரஸ்ட்”

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -177
அத்திப்பூத்தாற்போல இப்போது சிறுவர் நூல்களை வெளியிட்டுக் கொண்டு வருகின்றது. இங்கே ஆண்டுக்கு இரண்டு நூல்கள் வெளிவருவதே சாதனையாக இருக்கின்றது.
இவ்வேளையில் தமிழில் வெளியாகின்ற பெரிய தினசரிகளின் இணைப்புக்களையும், புத்தகங்களைப் பற்றியும் பார்க்க வேண்டும். இவை இப்போதைய அறிவியல், புதுமைக் கருத்துக்கள் என்பனவற்றைத் தவிர்த்து எல்லாம் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றன. "அம்புலிமாமா” வழியில் புராண, மந்திரஜால மாமா காலக் கதைகளையும் வன்முறைச் சித்திரங்களையும் முதன்மைப்படுத்தி வழங்கி வருகின்றன. குழந்தைகளின் எழுத்தார்வத்தை செம்மைப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களையும் நின்ற இடத்திலேயே நிற்கவைக்கின்றன. அவர்களது கற்பனைவளம், அறிவுத்திறன் ஆகியனவற்றை வளர்ப்பதில் இவை அர்ப்பணிப்போடு கவனம் செலுத்த வேண்டிய வேளை இதுதான். இந்தப் பக்கங்களைத் தயாரித்த அனுபவத்தின் பின்னணியோடு இதைச் சொல்கிறேன். தமிழகத்தின் சிறந்த இதழான "தினமணி"யின் வார இணைப்பான "தினமணிகதிரி"ன் குழந்தைகள் பக்கமான "இளந்தளிர்” பகுதியை, வாராவாரம் நான் தயாரித்துக் கொடுத்தேன். குழந்தைகளிடமிருந்து நிறையப் படைப்புக்கள் வந்தன. அவர்களின் அறிவுத்திறன் பிரமிப்பூட்டியது. அவர்களின் அறிவுப் பசிக்கு சரியான தீனிகொடுக்க வேண்டியிருந்தது. சர்வதேசப் புகழ் பெற்ற "சில்ட்ரன்ஸ் டைஜஸ்ட்” (CHILDRENS DIGEST), "Lólag T” (MISHA), "élgö l i JGei (36) Lü Gö l '...” (CHILDRENS WORLD), "uis 60 LD6i L 6)" (YOUNG MINDS) -95u இதழ்களைத் தொடர்ந்து படித்து அந்த வழியிலே "இளந்தளிர்” பக்கங்களை உருவாக்க வேண்டியிருந்தது. குழந்தை இலக்கிய இதழ்களான "ரத்னபாலா", "இளந்தென்றல்" பத்திரிகைகளின் ஆசிரியனாகப் பணியாற்றிய போது குழந்தை இலக்கியத்தின் விசாலமும், ஆழமும் தெரிந்தது. இவற்றை நமது செல்வங்களுக்கு அள்ளி அள்ளி வழங்க வேண்டுமெனில் கற்றலும், சிந்தித்தலும் மிக மிக அவசியம். எழுத்துப் பயிற்சியும் தேவை.
குழந்தைகளுக்கு எழுதுவது இலேசான காரியமல்ல. அவர்களது மொழியிலே ஆசிரியருக்குத் தேர்ந்த பயிற்சி இருக்க வேண்டும். அவர்களின் பேச்சுமுறையினை அறிவுத்திறனைக் கவனித்து மனதில் பதித்திடல் அவசியம். LADY BIRD நிறுவனம் ஒவ்வொரு வயதுக் குழுவினருக்கும் தனித்தனி வார்த்தை அகராதிகளை வெளியிட்டு வருகின்றார்கள். குழந்தைகளின் மொழியிலே தான் அவர்களுக்கு நாம் எழுத வேண்டும். அவர்களின் உளவியலைப் பற்றிப் பயின்றிருத்தல்

Page 98
-78- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
அவசியம். உளவியல், மொழிநடை, வாக்கிய அமைப்பு என்பவை பற்றிய சிறந்த விளக்கமும் பயிற்சியும் தான் சிறந்த குழந்தை எழுத்தாளரை உருவாக்க முடியும். இத்தகைய உருவாக்கத்திற்கு அர்ப்பணிப்புத்தேவை.
குழந்தைகளின் மனம் மாசேதுமில்லாத வெள்ளைத்துணி போன்றது. அதிலே விழும் வண்ணங்களே அதன் வாழ்வின் போக்குகளைத் தீர்மானிக்கும். அரசு வெளியீடான பாடப்புத்தகம் ஒன்றை அண்மையில் நான் பார்த்தேன். திடுக்கிட்டுப் போனேன். “ஒளவைக் கிழவி நம் கிழவி' என்று இதில் எழுதப்பட்டிருக்கிறது. நாம் ஒளவையாரை பிராட்டி, பாட்டி என்று தான் தலைமுறை தலைமுறையாகச் சொல்லிவந்திருக்கிறோம். வீட்டிலே வயதுமுதிர்ந்த பெண்ணை ஆச்சி, பாட்டி என்று மரியாதையோடு அழைத்து வருகின்றோம். சின்னஞ்சிறு செல்வங்களுக்கு பாட்டியைக் கிழவி என்று சொல்லும்படி இந்த வார்த்தைகள் மூலம் பாடப்புத்தகம் சொல்கிறது. இதை மனதில் வாங்கிக் கொள்ளும் குழந்தை என்ன செய்யும்? வீட்டிலும் வழியிலும் காணுகின்ற பாட்டிகளையெல்லாம் கிழவி என்று தானே அழைக்கும்? இந்தச் சொற்கள் அந்த வெள்ளை மனதில் கறுப்புத்துளிகளையல்லவா அள்ளித்தெளிக்கும். இதைவிட இன்னொரு தளத்திற்கு உயர்ந்திருக்கின்றன வானொலி ஊடகங்கள். தொலைபேசியில் குழந்தை ஒரு பாட்டை விரும்பிக் கேட்கிறது. ஒலிபரப்புகிறேன் என்று பாடலை ஒலிபரப்புகிறார் தயாரிப்பாளர். பாட்டு, "காதலா காதலா" பாட்டு முடிந்ததும் மீண்டும் நளினமான குரலில் ஒலிபரப்பாளர் அவளோடு பேச, அவளும் தாயும் சிரிக்கின்றனர். பிறகு என்ன? அந்தக் குழந்தை கணிகளை அரைகுறையாக மூடிக் கொண்டு விகற்பமான கனவுகளைக் காணுகிறது. இந்த அழுக் கடைந்த சூழலிடையேதான் நமது குழந்தைகள் திக்குமுக்காடும் அவலநிலை தோன்றியுள்ளது. இந்த நிலையிலே தான் அவர்களின் கைதொட்டு சரியான வழிக்கு இட்டுச் செல்லும் தோழமையாக குழந்தை இலக்கியத்தை, ஆரோக்கியமான குழந்தை இலக்கியத்தை நான் அடையாளம் காணுகின்றேன். இத்தகைய குழந்தை இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்க வேண்டிய அவசியமும் இன்று நேர்ந்துள்ளது. இதற்கான பயிற்சிப் பட்டறைகள் தகுதி வாய்ந்தோரால் நடத்தப்படுவது பயனளிக்கும்.
குழந்தைகளுக்கு எழுத வருபவர்களில் மிகப் பலர் பெரியவர்களுக்கு எழுதித் தோற்றுப் போனவர்கள் என்ற அபிப்பிராயமும் உண்டு. வேதனைக்குரிய விஷயமென்னவென்றால், இன்றைக்கு குழந்தைகளுக்காக எழுதி வருகின்ற பலர், இந்த

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் 179
அபிப்பிராயத்தை தமது படைப்புக்களால் உதிர்த்து வருகின்றனர். குழந்தை இலக்கிய இதழிற்குப் பொறுப்பாகவிருந்த அனுபவத்தில் இதை என்னால் ஆணித்தரமாகக் கூறமுடியும். ஒவியர் சங்கர், சத்யஜித்ரே போன்றவர்கள் சாகும் வரையிலும் குழந்தை இலக்கிய இதழ்களை நடத்தி வந்த மேன்மையினை இந்த வேளையில் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சோவியத்குடியரசுகள், மக்கள் சீனம், ஜேர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் நவீன விஷயங்களை உள்ளடக்கிய குழந்தை இலக்கியங்களை மிகப்பெருமளவிலே தமது குழந்தைகளுக்காக வெளியிட்டு வருகின்றன. அதேவேளையில் இவற்றின் அற்புதக் கதைகளும் (FAIRYTALES) குழந்தை இலக்கியப் பரப்பிற்கு அதிகளவு பங்களிப்பைச் செய்திருக்கின்றன. FAIRY TALES என்ற அற்புதக் கதைகள் எவ்வாறு உருவாகின என்பதை இங்கே பார்க்க வேண்டும். உலகில் எல்லாமொழிகளிலும் கதைகள் என்பன வாய் மொழியாகவே சொல்லப்பட்டு வழங்கி வந்தன. அச்சுப்பதிப்பு வருவதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளின் முன்னரே இந்த வாய்மொழிக் கதைகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. இவை சேகரிக்கப்பட்டு தொகுப்புருப்பெற்றதும் நாட்டுப்புறக்கதைகள் (FOLK TALES) என்ற வகுப்பிற்குள் அடக்கப்பட்டன. இவை செம்மைப்படுத்தப்பட்டு மெருகூட்டலுடன் அச்சேறியபோது "அற்புதக்கதைகள்” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றன. ஹான் 960i Ligór (HAND ANDERSON). 5pjuhar) JG55T gJirósói (GRIMMS BROTHERS) ஆகியோர் இக்கதை மரபின் முதன்மையாளர்கள். நமக்கு இப்படி விக்கிரமாதித்தன், பஞ்சதந்திரக் கதைகள், வாய்த்தாலும் சரியான குழந்தை இலக்கிய வடிவத்தை இவை பெறவில்லை.
தமிழில் இப்படி நிறைய நாட்டுப் புறக் கதைகள் வாய் மொழியாய் இயங்கி இப்போது அருகிவரும் நிலையிலே உள்ளன. நாட்டுப் புறப்பாடல்களைச் சேகரிப்பதில் காட்டப்பட்ட ஒரளவு ஆர்வமானது இத்துறையிலே காட்டப்படவில்லை என்பதை இங்கே வேதனையோடு குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். அதேவேளையில், சிங்கள நாட்டுப் புறக்கதைகள் ஆங்கில அரசு அதிகாரி ஒருவரால் “இலங்கை கிராமிய நாட்டுப் புறக்கதைகள்” (VILLAGE FOLDTALES OF CEYLON) என்ற தலைப்பில் ஆங்கிலமொழியில் தொகுக்கப்பட்டு வெளியாகிற்று.சிங்கள மொழியின் குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு இந்தப் பெரிய தொகுப்பு பெரிதும் உதவியிருக்கிறது. இந்தக் கதைகள், குழந்தை இலக்கிய நூல்களாக பெருந்தொகையாக சிங்களத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பல கதைகள், தமிழ்மொழியிலே வழங்கி வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Page 99
-18O- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
குழந்தை இலக்கியத்துறைக்கு நான் வந்ததற்கான முக்கிய காரணம் எனது பிள்ளைகளான சத்யனும், ஜெயபாரதியுமே. இவர்கள் ஆறுவயதிலிருந்தே களைப்பறியா ஆர்வத்துடன் புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆங்கிலத்திலும், தமிழிலும், மொழி பெயர்ப்பாகவும் நான் இவர்களுக்கு வாங்கிக்கொடுத்த குழந்தை இலக்கியங்கள் இவர்களின் வாசிப்புப் பசிக்கு ஈடு கொடுக்கக் கூடியதில்லை. இதைத் தொடர்ந்தே இன்னொரு முறை குழந்தை இலக்கியங்களைத் தீவிரமாகப் படிக்கவும் சிந்திக்கவும் ஆரம்பித்தேன். விளைவாக சர்வதேச இலக்கியங்களைப் பயின்று குழந்தைகளுக்காக எழுத ஆரம்பித்தேன். குழந்தை இலக்கியத்தில் ஒவியங்கள் பெரும்பங்கு வகிப்பவை. இதனால் உலகில் தலைசிறந்த குழந்தை இலக்கிய ஒவியர்களை, குழந்தை இலக்கியங்களில் நான் தேடி அலைந்தேன். சிகரங்களைத் தொட்ட ஆர்தர் ராக்கம், என்னைத் தன் வசப்படுத்தினார். இது போலவே வால்ட் டிஸ்னியும் (WALT DISNEY). இதே போன்ற ஒவியங்களோடு எனது குழந்தை இலக்கியங்கள் அச்சாக வேண்டுமென விரும்பினேன். கனவுகளில் ஆழ்ந்தேன்.
எனது முதல் குழந்தை இலக்கியம், "குழந்தைகள் கதைக் களஞ்சியம்". நானுாறு பக்கங்களிற்கு மேற்பட்ட, ஒவ்வொரு பக்கத்திலும் படங்கள் உள்ள தொகுதி. “மணியன் செல்வன்” அட்டைப்படம். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா முன்னுரை எழுதி, ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டிய தொகுதி இது வெனக் குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தின் சிறந்த ஒவியர்களான டிராஸ்கி மருதுவும், வீர. சந்தானமும் முறையே "எல்லோரும் நண்பர்களே", "சூரியனைத் தேடியவன்" ஆகிய தொகுதிகளுக்கு முழு ஒவியங்களையும் வரைந்து சிறந்த நூல்களாக இவற்றை உருவாக்கினர். "சின்னஞ்சிறு கிளியே” தொகுதிக்கு இவர்கள் இருவரும் ஒவியம் வரைய, பாலுமகேந்திரா தனது கவிதைக் கமெராவால் அட்டைப்படத்தில் ஒவியம் பதித்தார். இவற்றின் தொடர்ச்சியாக "காற்றின் குழந்தைகள்”, “அற்புதக்கதைகள்”, “அதிசயக்கதைகள்” , "மந்திரமா”, “தந்திரமா?”, “நீலப்பறவை”, “தங்கத்தாமரை” என்று தொடரும் எனது குழந்தை இலக்கியங்கள்.
எனது குழந்தை இலக்கியங்கள், இந்த இலக்கியப் பரப்பிற்கு வெளிச்சம் ஏற்றியதாக விமர்சகர்கள் மதிப்பிட்டு தமிழகக் குழந்தை எழுத்தாளர் சங்கம் எனக்கு விருதளித்துக் கெளரவித்தபோது நான் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன். எனக்கு மட்டுமல்ல என்மகன் சத்தியனின் குழந்தை இலக்கிய ஆக்கத்திற்கும் இதே மேடையில்

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -181
தமிழகக் கல்வியமைச்சர் பதக்கம் வழங்கிப் பாராட்டியமையே இரட்டை மகிழ்ச்சிக்குக் காரணம்.
தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சியின் பொருட்டு இன்னும் நிறையவே செய்ய வேண்டியுள்ளது. பெங்களூரில் ஐந்து மொழிபேசும் குழந்தை எழுத்தாளர் மகாநாடு ஒன்று நடைபெற்றது. இந்தி, மலையாளம், கன்னடம். தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளின் படைப்பாளிகள் கலந்து கொண்ட இம்மகாநாட்டில் தமிழக அரசின் பிரதிநிதிகளில் ஒருவனாக நானும் பங்குகொண்டேன். இதில் பங்கு கொண்டவர்கள் தங்கள் மொழிகளில் குழந்தை இலக்கிய சாதனைகளைக் கூறிய போது மிகுந்த ஏக்கம் உண்டாயிற்று. தமிழ்க் குழந்தை இலக்கியம் அறிவியல் கதை சொல்லும் துறைகளில் எவ்வளவு பின்னணியிலே நிற்கிறதென்பதை அறிந்த போது, நமது தலைமுறைகளுக்கு நாம் எத்தனை தவறுகள் செய்கிறோமென்பது தெரியவந்தது. தமிழில் சிறந்த அறிவியல் கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டுமென்ற எண்ணமும் வலுப்பட்டது. LIFE நிறுவனம் 10 தொகுதிகளாக வெளியிட்ட குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை முன் மாதிரியாகக் கொண்டு தமிழில் கலைக்களஞ்சியம் வெளியிட வேண்டுமென்ற கனவு இன்னுங் கனவாகவே இருக்கிறது. உழைப்பும் உறுதியுமிருப்பின் மெய்ப்படாத கனவு உண்டோ?
குழந்தை இலக்கியத்தில் வடிவமைப்பும், வணிணச் சித்திரங்களும் முக்கியமானவை. அழகிய பெரிய எழுத்துக்கள், குழந்தைகளின் கற்பனையை மேலும் தூண்டுகின்ற ஒவியங்கள் என்பனவே குழந்தைகளைப் புத்தக ஆர்வம் கொள்ளச்செய்பவை. இத்தகைய ஒவியர்களும், வடிவமைப்பாளர்களும் தமிழிலே நிறைய உருவாக வேண்டும். மேனாட்டுக் குழந்தை இலக்கியங்களை எடுத்துப்பார்த்தால் அதில் எழுதிய ஆசிரியரின் பெயருக்குச் சமமாக ஒவியரின் பெயரும் இருப்பதைக் காணலாம்.
தமிழில் குழந்தை இலக்கியம் புத்தாயிரமாம் ஆண்டில் உன்னதமாக சிகரங்களைத் தொட்டிட நாம் முயற்சிப்போம். இது காலத்தின் அவசியத் தேவையுமாகும்.
இன்றைய குழந்தைகள் பாட்டையும் கதையையும் சேர்த்து விரும்புகின்றனர். இந்த உளவியல் அடிப்படையிலேயே இன்றைய குழந்தை இலக்கியங்கள், சர்வதேச அடிப்படையில் எழுதப்படு கின்றன. இந்தத் தொகுதியின் கதைகளையும் அதே முன்னுதாரணத் தைப் பின்பற்றியே நான் எழுதியுள்ளேன். குழந்தைச் செல்வங் களுக்கான அவர்களின் மொழியில், கதைசொல்லி இசையோடு பாட்டும் பாடத்தக்கவிதத்தில் இத்தொகுதியை உருவாக்கியுள்ளேன்.

Page 100
-82- ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
தமிழின் சிறந்த ஒவியர்களான ட்ராஸ் கிமருது, கிட்டான் ஆகியோர் இக்கதைகளுக்கு ஒவியம் வரைந்துள்ளனர். குழந்தை இலக்கியத்தின் சிறந்த ஓவியர் ஆர்தர் ராக்கிமின் சிறந்த சித்திரங்களையும், இன்னும் பல குழந்தைகளுக்கான ஒவியங்களையும் இத்தொகுதிக்கு அணியாகப் பயன்படுத்தியுள்ளோம். நமது குழந்தைகள் இவர்களின் ஒவியங்களால் மகிழ்ச்சி அடைவார்கள்.
- நன்றி. தங்கத்தாமரை, அட்மிரல் பதிப்பகம், கொழும்பு, 1999.

பேட்டி

Page 101

குழந்தைக் கவிஞர் அம்பியுடன் ஒரு பேட்டி
- பேட்டி கண்டவர் : சதாசிவம் ஜீவா
(அவுஸ்திரேலியாவில் மிக நீண்டகாலமாக வாழ்ந்து வரும் இ. அம்பிகைபாகன் "அம்பி” என்னும் பெயரில் குழந்தை இலக்கியத்தில் முத்திரை பதித்தவர். 52 வருடங்களுக்கு முன் தினகரனில் எழுதிய சிறுகதை மூலம் எழுத்துலகிற்கு வந்த அம்பி 74 வயதிலும் தளராது இலக்கிய பணியில் குறிப்பாக குழந்தை இலக்கியத்தில் இளமைத் துடிப்போடு செயற்பட்டு வருகிறார். அவருடனான ஒரு சந்திப்பு இது).
கேள்வி: புலம் பெயர்ந்த நாட்டில் உங்களுடைய பணி என்ன?
பதில் : அவுஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள பப்புவ நியூகினி என்னும் நாட்டில் தொலைக் கல்வி கல்லூரியில் கணிதத் துறைத் தலைவராக 12 வருடங்கள் சேவையாற்றி 93ஆம் ஆண்டு ஒய்வு பெற்ற பின்னர் தனியார் நிறுவனமொன்றில் கல்வி கலாசாரம் தொடர்பான வெளியீடுகளுக்கு பொறுப்பாக இருக்கிறேன். குழந்தைகளுக்கும் வளர்ந்தவர்களுக்குமான ஆங்கிலமொழிக் கவிதைகள், உதாரணமாக "லிங்கறிங் மெமறிஸ்” என்ற நாட்டு அரசியல் தலைவர்கள், மேலை நாட்டு கலாசாரம் போன்றவற்றை பின்னணியாக வைத்து கவிதை எழுதி தொகுதியாக வெளியிட்டேன்.
1996ஆம் ஆண்டு எஸ்றிங் ஒவ்போன் என்ற கவிதைத் தொகுதி, சொலமன் தீவுகள் பற்றி சிறுவர்கள், இளைஞர் களுக்குமென வெளியிடப்பட்டதுடன் அந்நாட்டிலுள்ள எல்லா பாடசாலைகளுக்கும் இந்நூல் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. இதற்கு அரசாங்கத்தின் நிதியுதவி

Page 102
-86
கேள்வி:
கேள்வி:
ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
பெறப்பட்டது. மேலும் இதனை முன்னெடுத்துச் செல்ல 2001 ஆம் ஆண்டு அமைச்சரவைக்கு இந் நூல்கள் கையளிக் கப்பட்டுள்ளன.
குழந்தை இலக்கியத்தில் மிகவும் ஈடுபாடுடையவர் என்ற வகையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள மற்றும் இங்குள்ள குழந்தை இலக்கியம் தொடர்பான உங்கள் அவதானிப்பு என்ன?
: இங்குள்ள பாடல்கள் குழந்தைப் பாடலாக இருந்தாலும்
வழங்கும் முறை முக்கியம் பெறுவதில்லை. அதில் அதிக அக்கறையும் கொள்வதில்லை. மேலும் அவசரத்தில் தான் இங்குள்ள குழந்தை இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளில் இவ்வகை இலக்கியங்கள் மீது அவர்கள் அதீத கவனம் கொண்டுள்ளார்கள். அரசாங்கத்தால் வழங்கப்படும் சாகித்திய மண்டலப் பரிசும் குழந்தை இலக்கியத்துக்கு மிகவும் குறைவான வெகுமதியே வழங்கப்படுகிறது. ஆனால், இதற்கு ஊக்கம் அளிக்கக் கூடிய வகையில் அரசாங்க மண்டலங்கள் செயற்பட வேண்டும். இது குழந்தை இலக்கியம் என பாரபட்சம் காட்டாது செயற்பட வேண்டும்.
குழந்தை இலக்கியம் எமது நாட்டைப் பொறுத்த வரையில் குறைவாக உள்ளதே.
: குழந்தை இலக்கியம் எல்லோராலும் படைக்க முடியாது.
அதற்கு முக்கியமாக குழந்தை உளவியல் தெரிய வேண்டும். நல்ல குழந்தை இலக்கியம் படைக்க குழந்தை உள்ளத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தை மொழியில் அவை அமைக்கப்பட வேண்டும். இலகு தமிழில் அமைக்கப்பட வேண்டும். குழந்தைகள் நாடும் பொருட்களை மையமாக வைத்துக் கொண்டிருத்தல் வேண்டும். குழந்தையினை ஈர்த்து, சிந்தித்து செயற்பட வழியமைக்கும் இலக்கியமாக குழந்தை இலக்கியம் இருக்க வேண்டும். அத்துடன் குழந்தை அறிவு வளர்ச்சிக்கும், மனப்பாங்கு விருத்திக்கும் விரும்பத்தக்க நடத்தை மாற்றத்திற்குமாக குழந்தை இலக்கியம் படைக்கப்பட வேண்டும்.

கேள்வி:
பதில்
கேள்வி:
ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் -187
இலகு தமிழ் என்று குறிப்பிட்டீர்கள் ? அது தொடர்பாக.
: குழந்தை இலக்கியத்தைப் படைக்கும் போது நாங்கள் எளிய
சொற்களைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் தூய சிந்தனைப் பருவத்தினர். இவ்வாறான இலக்கியங்கள் காட்சிப் பொருள் சார்ந்ததாக அமைதல் பெரிதும் விரும்பத் தக்கது. காட்சிப் பொருள் சார்ந்தவையாக அமைந்திருக்கும் சொற்களஞ்சியம் மிகநுட்பமாக தெரிவு செய்யப்பட வேண்டும். குழந்தைப் பாடல்கள் வழக்கமாக தாளத்துடன் பாட அல்லது இசைப்பதற்கு ஏற்ற முறையில் அமைதல் வேண்டும். பல்வேறு சந்தங்களில் அமைதல் வேண்டும். கதைப்பாடலாக இருத்தல் வேண்டும். கதைப் பாடல்கள் மூலமாக பல கருத்துக்களை தெளிவாக விளங்கப்படுத்தலாம். வினா எழுப்பி உய்த்தறியும் விடை நொடிப் பாடல் போன்றவை குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதுடன் அவர்களைச் சிந்திக்கவும் உய்த்தறியவும் பல நல்ல கருத்துக்களை குழந்தைகளின் மனதில் பதியவும் செய்யும். மிக முக்கியமாக குழந்தை இலக்கியம் படைப்பவர்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பாடல்கள் குழந்தைகளுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் எழுத, வாசிக்கத் தெரியாத பருவத்தினர் தாள லய இசையோடு அவற்றைப் படிக்கும்போது மனதில் ஆழப் பதிந்து விடும். உதாரணமாக வானொலியில், தொலைக் காட்சியில் ஒலி, ஒளிபரப்பப்படும் பாடல்களைக் கேள்விப் புலனாலேயே மனனம் செய்துகொள்கிறார்கள். இசைக்கவும் தாளத்துக்கேற்ப பாடவும் செய்கிறார்கள். அதேவேளையில் அவர்களுடைய சொற்களஞ்சியம் விருத்தியாகி நல்ல உச்சரிப்பையும் பழகுகிறார்கள். எனவே, குழந்தையின் மொழி வளர்ச்சி விருத்தியடைகின்றது.
தற்கால குழந்தைகளுக்கு குழந்தை இலக்கியத்தைப் பயில்வதற்கான நேரம் பெரும் பிரச்சினையாக உள்ளதே.
: ஆம். அந்தக் காலத்தில் அம்மா, பாட்டி சொன்ன கதைகள்,
பாடல்களை நாம் கேட்டு பயனடைந்தோம். ஆனால், இந்தக் காலத்து குழந்தைகள் அப்படி இல்லை. தொலைக்" காட்சியும் அதனுடன் இணைந்த வீடியோப் பெட்டிகளும் தான் குழந்தைகளின் கவனத்தை ஆக்கிரமித்துள்ளன.

Page 103
-188
கேள்வி:
கேள்வி:
ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
தொலைக்காட்சியிலும் குழந்தைகளுக்கான ஆக்கபூர்வமான
நிகழ்ச்சி இல்லையே?
: உண்மை. ஆங்கிலத்தில் உள்ளது போல பல்வேறுபட்ட
பல்சுவை நிகழ்ச்சிகள், நாடகங்கள் தமிழில் இல்லை. அது பெரும் குறை. அதுவும் விரைவில் தீர்க்கப்படும் என்பதற்கான சான்றுகளும் இல்லை. இதனால் குழந்தைகள் ஒருவித வரட்சியை இத்துறையில் அனுபவிக்கிறார்கள். குழந்தைகளுக்கு கட்புல செவிப்புல காட்சிகள் உள்ளதும் கருத்தைக் கவர்வதும் சிந்திக்கத் தூண்டுவதும், கருத்தை ஈர்த்து நிலைநிறுத்தி வைத்திருக்கக் கூடியதுமான நிகழ்ச்சிகள் தேவை. எமது நாட்டில் அல்லது தமிழ்நாட்டில் இத்தகைய வாய்ப்புக்கள் மிகக் குறைவு.
குழந்தை இலக்கியத்தைப் படைக்கும் சில இலக்கிய கர்த்தாக்கள் பெரியவர்களின் கருத்தைத் திணிக்கின்றார்கள். இதனை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
: பல எழுத்தாளர்கள் குழந்தை உளவியல் அறிவுக்
குறைவாலும் அலட்சியத்தாலும் அல்லது வசதிக்காகவும் முதியோரின் கருத்தை பிள்ளை மீது திணித்து விடுகிறார்கள். இதனால் முதியோர் சொற்களஞ்சியம் குழந்தை இலக்கியத்தில் புகுந்து விடுகின்றது. இது குழந்தையின் மொழி வளர்ச்சிக்கோ, மனப்பாங்கிற்கோ பயனளிக்கப் போவதில்லை. இந்நிலை மாறினால் தான் குழந்தை இலக்கியத்தால் குழந்தைகள் பயன் பெறுவர். எனவே, படைப்பாளிகள் இதை மனம் கொண்டு உழைப்பது அவசியம்.
கேள்வி: பொதுவாக பெற்றோர் தமது ஆசைகளை, அபிலாஷைகளை
பதில்
குழந்தைகள் மீது சுமத்தி விடுகிறார்கள். இது சரியா?
: பெற்றோர் குழந்தைகளை சரியாக வழிப்படுத்துவதென்றால்
தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்கு கருவிகளாக குழந்தைகளைக் கருதக் கூடாது. பேச்சு, நாடக மற்றும் கலைத்துறை பயிற்சிகளின் மூலம் குழந்தையின் இயல்பான நடத்தையையும், இயல்பான திறனையும் கண்டுபிடித்து நேர்மையாக வளர்ப்பதுதான் பெற்றோர் குழந்தைகளுக்கு செய்யக்கூடிய நன்மை.

ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம் - 189
மாறாக மற்ற மாணவர்களின் திறனுடன் ஒப்பிடுவதும், அந்தப் பிள்ளைபோல் தன் பிள்ளையும் திறன் பெற வேண்டும் என்று குழந்தைகளை நெருக்குவதும் உண்மையில் பயன்தர மாட்டாது.
- நன்றி. தினகரன், யூலை 7, 2003.

Page 104


Page 105
ஈழத்துச் சிறுவர் இலக்கியக்க தொகுப்பாகியிார்8கலாநிதிகொேகராஜ
நவீன இலக்கியத்துறைகள் வளர்ந்துள்ள ஈழத் இலக்கியத் துறையின் வளர்ச்சி மிகவும் பின்தங்கி ஈழத்து இலக்கிய ஆர்வலர்கள் நன்கறிந்திருப்பு இந்நிலைமை பற்றி படைப்பாளிகளோ விட எவருமே அதிகம் அலட்டிக் கொள்வதில்லை இத்துறைசார் வளர்ச்சி பிரமிப்பை ஏற்படு மனங்கொள்ளப்பட வேண்டியது.
எனினும், கடந்த சில வருடங்களாக இத்துறையில் கரிசனை காட்ட முற்பட்டுள்ளமை ! சிறுவர் இலக்கியத்துறையில் நாம் எங்கே நிற்கி கேட்டுக் கொள்வது அவசியமானது. இவ்வழியி தொகுப்பு முயற்சிகள் முதலியன முக்கியத்துவத்தினை உணர்ந்து கொண்ட குமரன் ! காலத்திட்டத்தின் முதல் அறுவடையாக ஈழத்த கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட முன் இத்தொகுப்பு முயற்சியாகும். இத்தொகுப்பிே முன்னுரைகளும் (ஒரு பேட்டியும்) இடம் பெற்று
செல்லையா யோகராசா (1949) :
கிராமத்தைப் பிறப்பிமாகக் கொண இளங்கலைமாணி சிறப்புக் கற்கை பல்கலைக்கழகத்திலே (1968-1972) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தி ஆ.வேலுப்பிள்ளையினதும் பேரா வழிகாட்டலில் முறையே முதுகை பட்டங்களைப் பெற்றார். பாடசாலைக்காலத்தில் பெயரில் கவிதை, சிறுகதை எழுதியவர், பல்கலை இல்க்கியம், ஈழத்து இலக்கியம், தமிழியியல் ஆய் இலக்கியம், சிறுவர் இலக்கியம் என்பன சார்ந்த
பல நூல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் க எழுதியுள்ளதுடன் பல தொகுப்பு நூல்களையும் இ தற்போது கிழக்குப் பல்கலைக்கலைக்கழக மொழி விரிவுரையாளராக விளங்குகின்றார்.
(GLDITÖÖ JÄijö GGGD
விடயம் : சிறுவர் இலக்கியம்
 
 
 
 

துச் தமிழ்ச் சூழலில் சிறுவர் ப நிலையில் உள்ளதென்பதனை பர். எனினும், ஆரோக்கியமற்ற மர்சகர்களோ பெற்றோர்களோ , மாறாக, மேலைநாடுகளில் த்தக் கூடியதாய் உள்ளமை
ஈழத்து இலக்கிய ஆர்வலர்கள் பாராட்டிற்குரியது. இந்நிலையில் ன்றோம் என்று எம்மை நாமே ல், நூல் விவரப்பட்டியல்கள், ன்தரக்கூடியவை. இவற்றின் புத்தக இல்லத்தினர் தமது நீண்ட நில் இன்று வரை வெளியான ன்வந்துள்ளதன் வெளிப்பாடே ல கட்டுரைகள் மட்டுமன்றி
56T65.
யாழ்ப்பாணத்தில் கரணவாய் ர்ட இவர் தமது நெறியை கொழும்புப்
பெற்றுக் கொண்டார். ஸ் பேராசிரியர் சிரியர் கா.சிவத்தம்பியினதும் லைமாணி (1991) கலாநிதி (1999) கருணையோகன்' என்ற க்கழகம் சென்றபின்னர் நவீன வு, விமர்சனம், பெண்கள் ஆய்வாளராக வெளிப்பட்டார். கட்டுரைகளையும் வர் வெளியிட்டுள்ளார். த்துறையில் முதுநிலை
fillinu
Ա l17 Ջ : 917 & | FTHU 6
-ca. .།། །།《། T కేక --
۱۹۰۰ : عبارت مهFԱVA: ii A =