கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 1999.07

Page 1
DSSSS
 


Page 2
IRAN GRENDING MILLS
219, Main Street, Matale, Sri Lankca.
Phone : O66-24 25
鄒 ZS ML L L L L L L L L L L L L L L L L L L L L L L L LSL SS
vijAYA GENERAL stoREs
(AGRO SERVICE CENTRE)
DEALERS AGROCHEMICAL SPRAYERS, FERTLIZER & VEGETABLE SEEDS
No. 85, Ratnajothy Sarawanamuthu Maw atha, (Wolfendhal Street), Colombo 13.
Phone :- 32701 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*ஆடுதல் பாடுதல் சித்தரம் கவியாதரியனைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர்
பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர்"
பசுமையான சில நினைவுகள்
இந்தத் தடவை நான் தமிழகம் சென்றிருந்த சமயம் தான் எனது பிறந்த நாள் இடைப்பட்டது. அந்தப் பிறந்த தினத்தை என்றும் ஞாபகப்படுத்தும் விதமாக நானொரு பதிவு பண்ண எண்ணினேன்.
எனது சுயசரிதை நூல் இங்கு புத்கமாகத் தயார் நிலையில் இருந்தது. அந்த நூலைச்சென்னையில் வெளியிட்டு வைத்தால் என்ன என்றொரு யோசனை என் மனதில் அரும்பு கட்டியது.
அந்த எண்ணத்திற்கு வடிவம் கொடுத்தேன். நர்மதா புத்தக நிலைய அதிபர் ராமலிங்கம் அவர்கள் உற்சாகமாக அதை வரவேற்றுச் செயல்படுத்தினார்.அவரது இன்னொரு நிறுவனமான 'புக் லான்ட் நிலையத்தில் வெளியீட்டு விழாவை வெகு கோலாகலமாக நடத்தி முடித்தார்.
தலைமை வகித்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, புத்தகத்தை வெளியிட்டு வைத்த அசோகமித்திரன், அதைப் பெற்றுக் கொண்ட சா. கந்தசாமி, எனது உழைப்பைப் பாராட்டிப் பேசிய நண்பர் ஜெயகாந்தன் ஆகியோர்களுக்கு எனது வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
மல்லிகையை நேசிக்கும் நெஞ்சங்களை நேரில் கண்டு கதைத்தேன். துரைவி' மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட அனுபவம் என்
நெஞ்சில் என்றும் பசுமையாக உள்ளது.
- டொமினிக் ஜீவா -

Page 3
4-7-99 தினமணிக் கதிரில் வந்த பேட்டி
தமிழகப் படைப்பாளிகள் எங்கே இருக்கிறார்கள்?
எங்கள் இலக்கியப் பார்வையைத் தெரிந்துகொள்ளாமல், எங்களுடைய படைப்பாளிகளை அறியாமல்-ஒரு பரிபூர ணத் தமிழ்வாசகனாக, எழுத்தாளனாக இருக்க முடியாது என்று அழுத்தமாகச் சொல்கிறார் அந்த இலக்கியப்பெரியவர்.
எங்கள் இலக்கியம் என்றால் .?
ஈழத்தமிழ் இலக்கியமும் புலம் பெயர்ந்தோர் இலக்கியமும்,
அந்தப் பெரியவர் .?
டொமினிக் ஜீவா.
அரை நூற்றாண்டு கடந்த இலக்கிய அனுபவத்துக்குச் சொந்தக்காரர். ஒரு சில இதழ்களுடன் காணாமல் போகா மல் 34 வருடங்களாகத் தொடர்ந்து வெளிவரும், இலக்கிய மணங்கமழும் மல் லி கை' இதழின் ஆசிரியர். பதிப்பாளர். ஈழத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளி. விமர்சகர். முற்போக்குச் சிந்தனையாளர்.
தண்ணீரும் கண்ணிரும் என்ற இவ ரது சிறுகதைத் தொகுப்பு 1960ல் இலங்கை சாகித்தியமண்டலப் பரிசு பெற்றது. பாதுகை', 'சாலையின் திருப் பம்', 'வாழ்வின் தரிசனங்கள் - இவரது பிற சிறுகதைத் தொகுதிகள். சமீபத்தில் தனது 50 சிறுகதைகளைத் தொகுத்து
2
"டொமினிக் ஜீவா சிறுகதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார். "ஈழத்திலிருந்து ஒர் இலக்கியக் குரல், தலைப்பூக்கள்', 'தூண்டில்', 'நமது நினைவுகளில் கைலாசபதி ஆகியவை இவரது கட்டுரை நூல்கள். மல்லிகை இதழில் வெளிவந்த முகப்புக் கட்டுரைக ளைத் தொகுத்து மல்லிகை முகங்கள் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிரு க்கிறார். தமிழகத்திலிருந்து தி.க.சி, தொ.மு.சி, நா.வானமாமலை, நீல. பத்ம நாதன் உள்ளிட்ட பலர் மல்லிகையின் முகப்பை அலங்கரித்திருக்கின்றனர். இவரது 'மல்லிகைப் பந்தல் பதிப்பகம் 32 நூல்களை வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்துக்கு ஜிவா அறிமுகமா னது, விஜயபாஸ்கரனின் சரஸ்வதி
இதழ் மூலம்தான். அந்த இதழ் வாயிலா
கத்தான் தமிழகத்துப் படைப்பாளிகளின் தொடர்பும் நட்பும் கிடைத்ததாகச் சொல்கிறார்.
தனது பிறந்த நாளன்று புதிய நூலை வெளியிடுவது ஜீவாவின் வழக்கம். இந்த ஆண்டு பிறந்த நாளை ஒட்டித் (276.99) தனது சுய வரலாற்று நூலை (எழுதப்படாத கவிதைக்கு வரையப் படாத சித்திரம்) சென்னையில் வெளியிட்டிருக்கிறார்.
N.
LID6ioaTMSGODSE
 

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழகம் வந்திருக்கிறார் 73
வயதிலும் சளைக்காமல் சுற்றுகிறார்.
இலக்கிய நண்பர்களைத் தேடிப்போய்ச் சந்திக்கிறார். தமிழக இலக்கிய நிலவர ங்களை ஆர்வம் பொங்கக் கேட்கிறார்.
இத்தனை ஆண்டுகள் நாம் பார்த்த காகிதத் தமிழைவிட அடுத்த பத்தாண் டுகளில் கணினியுகத் தமிழ் பெரும் அற்புதங்களை நிகழ்த்தும் என்கிறார். கணினித் தமிழ் மேம்பாட்டுக்காகத் தமி ழகம் எடுத்துவரும் முயற்சிகள், குறிப் பாகத் தமிழக முதல்வர் கருணாநிதி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பாரா ட்டுக்குரியவை என்று உவகையுடன் சொல்கிறார்.
யாழ்ப்பானவாசியாக இருந்த ஜிவா, இரண் டாண்டுகளுக்கு முன் புதான் கொழும்பில் குடியேறியிருக்கிறார். இரண்டு பெண்கள் - பிரேமா, லதா. இருவருக்கும் கல்யாணமாகிவிட்டது.
ஒருவர் ஜெர்மனியில் இருக்கிறார். மகன்
திலீபன். புகைப்படக்காரர். தந்தைக்கு உதவியாகக் கொழும்பில் இருக்கிறார். ஜீவாவின் மனைவியும் ஒரு மகளும் யாழ்ப்பாணத்தில் உள்ளனர்.
இலக்கிய ஆர்வம் மிக்க கதிர் வாசகர்களுக்காக உங்களுடன் பேச வேண்டுமே. என்றோம். தி.நகரிலுள்ள நர்மதா பதிப் பகத்துக்கு வரச் சொன்னார்.
புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி தொடர்பாக நர்மதா ராமலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்வர், பாதியில் நிறுத்திவிட்டு நம்முடன் உரையாட முன்வந்தார்.
மல்லிகை’ பற்றி.?
மல்லிகை இதழ் இரண்டு மாதங்க ளுக்கு ஒருமுறை வெளியாகிறது. 56 பக்கங்கள். இலங்கைப் பணத்தில் 15 ரூபாய். ஆரம்பித்த புதிதில் ஆயிரம் பிரதிகளுக்குக் குறைவாகத் தான் விற்றது. உச்சக்கட்டமாக 8000 பிரதி களை எட்டியிருக்கிறது. போரின் எதி ரொலியாக விற்பனை குறைந்து, இப்போது 6000 பிரதிகள் வரை விற்ப னையாகிறது. இதுவரை கிட்டத்தட்ட 300 இதழ்கள் வெளிவந்திருக்கும். ஒவ்வொரு ஆண்டும் 120 பக்கங்கள் கொண்ட மலரையும் வெளியிடுகிறோம்.
மல்லிகைப் படைப்பாளிகள் என்று எடுத்துக் கொண்டால், பட்டியல் நீளும். கலாநிதி கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி, முருகையன், நுட்மான், மெளனகுரு, ஜெயபாலன், சமீம், மாத்தளை சோமு, முருகபூபதி என முன்னணி இலக்கியவாதிகள் பலரும் அடங்குவர்.
ஈழத்தல் முற்போக்கு எப்படியிருக்கிறது.?
இலக்கவியர்
ஈழத்தில் முற்போக்கு இலக்கியம் மிகக்காத்திரமாக இருக்கிறது. அதனால் தான் மல்லிகை போன்ற சஞ்சிகைகள் தொடர்ந்து வெளியாகின்றன. முன்பெல் லாம் புதிய நூல்கள் என்றால் யாழ்ப்பா ணத்திலிருந்துதான் வெளிவரும் இன் றைய நிலைமை வேறு. இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வாரம் ஒரு நூல் வெளியாகிறது. முற்று முழு தாகச் சிங்களவர்களால் சூழப்பட்ட பகுதிகளில் வாழும் முஸ்லிம் இளைஞ ர்களும், யுவதிகளும் எழுதத் துவங்கி யிருக்கிறார்கள். இவையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண் டிய முக்கிய மாற்றங்கள்.
NY 3.
| imp၏ဝဓင်္ဂါဆေး၊

Page 4
புலம் பெயர்ந்தோர் இலக்கியம் .?
நேற்றுவரை இந்திய ரூபாயிலும் இலங்கை ரூபாயிலும்தான் தமிழ்நூல் கள் வாங்கப்பட்டன. இன்றைக்கு, டாலர் மூலமும் பவுண்ட் மூலமும் தமிழ் இலக் கியங்கள் வாங்கப்படுகின்றன. அமெரி க்க, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ள்ள புலம் பெயர்ந்த தமிழர்களால் ஏற்பட்டுள்ள மாற்றம் இது. இன்றைய சூழலில், தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் முக்கிய பங்காற்றுவதாகக் கருதுகிறீர்களா..?
நிச்சயமாக தமிழ் நாட்டிலிருந்து ஒரு குடும்பம் வெளிநாட்டுக்குச் சென்றால், அவர்கள் முதலில் செய்யும் வேலை தங்கள் மகளுக்குப் பரதநாட்டியம் கற்று க்கொடுப்பதுதான். குழுவாகச் சேர்ந் தால் முருகன் கோவில் கட்டுகிறார்கள். அதுவே ஈழத்தமிழர்களாக இருந்தால் முதலில் இலக்கிய இயக்கம் துவக்கு கிறார்கள். குழுவாகச் சேர்ந்தால், சிற்றி லக்கிய இதழ்களை வெளியிடுகிறார் கள். காரணம், புலம்பெயர்ந்த ஈழத்து இளைஞர்கள் தங்கள் அடையாளத் தைச் சர்வதேசப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் ஒரு வடிவமாக இருக்கிறது.
அப்படியெனில் தமிழகத்தின் இலக்கியப் போக்கிலும் தமிழர்களின் இலக்கிய ஈடுபாட்டிலும் உங்களுக்குத் திருப்தி இல்லையா?
அப்படிச் சொல்ல முடியாது. எங்களைச் சிந்திக்க வைத்தது பாரதி. கையில் பேனா எடுத்துக் கொடுத்தது புதுமைப்பித்தன். தமிழ்நாட்டு இலக்கிய த்துக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டி ருக்கிறோம். அந்த வகையில் திருப்தி தான். இன்னொரு கோணத்தில் பார்த் தால் வேதனையாக இருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் சந்தித்த யுத்
தக் கொடுமைகள் பாதிப்புகள், துயரங் 356, அரசியல் தாக்கங்கள், அனுபவங் கள் ஒரு புதிய வீச்சுள்ள சிந்தனையை இன்றைய படைப் பாளிகளுக்குத் தந்திருக்கிறது.
அதே நேரத்தில் தமிழகத்துப் படைப்
LIToisagoon நோக்கினால், இன்னும் சுத
ந்திர காலப் போராட்டச் சிந்தனையிலிரு ந்து வெளிவரவில்லையோ என்று தோன்றுகின்றது.
ஏன் அப்படித் தோன்றுகிறது.?
பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தைப் பார்க்கும்போது மிகப் பெரிய மாற்றம் தெரிகிறது. வெகுஜன ஊடகங்கள் பரவல்படுத்தப்பட்டிருக்கும் அளவுக்கு, ஆழப்படுத்தப்படவில்லை. டி.வி.யின் வீச்சை அவதானிக்க முடிகி றது. புதிய,புதிய இளம் எழுத்தாளர்க ளின் படைப்புகளைப் பார்க்கிறேன். எனினும் இவை அத்தனையும் சேர்ந்து ஒரு புதிய தமிழகத்தை உருவாக்குவத ற்குப் பதிலாகக் கலை, இலக்கியத் துறையில் தமிழகம் தேங்கிப் போய்விட் டதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகி றது. அதே சமயத்தில் தமிழகத்தின் இளம் தலைமுறையினர் மீது எனக்கு அபார நம்பிக்கை இருக்கிறது. அவர்க ளது படைப்புகளுக்குத் தகுந்த தளம் அல்லது களம் இல்லை என்பது கண்டு விசனப்படுகின்றேன். சுபமங்களா போன்ற இதழ்கள் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தன. அவையும் இன்று நின்று போய்விட்டன. இந்த இடைவெளியை நிரப்புவது இளந் தலைமுறையின் முக்கிய கடமை.
உலகப் பார்வையில் தமிழம்தமிழ் இலக்கியமும் எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?
தமிழகத் தமிழ், இலங்கைத் தமிழ், சர்வதேசத் தமிழ் என்று எதுவுமில்லை.
DaioaSapa,
 

தமிழ் என்பது தமிழ்தான். நமது தாய் மொழியான தமிழை சர்வதேச அந்தஸ் துக்கு உயர்த்துவதும் அதற்குரிய அங் கீகாரத்தைப் பெற்றுத் தருவதும் நமது பொதுக் கடமைகளுள் ஒன்று. ஒரு காலத்தில் ஆங்கிலம்தான் தொடர்பு மொழியாக இருந்தது. இன்று ஈழத்து இளைஞன் ஒருவன் பிரெஞ்சு மொழி யைப் படித்துவிட்டுத் தமிழ்ச் சிந்தனை யைப் பிரெஞ்சு மொழியில் ஆக்குகி றான். தர்மகுலசிங்கம் என்ற இளைஞன் டேனிஸ் மொழியில் வெளிவந்த படைப் புகளைத் தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கி, 98ல் இலங்கை சாகித்திய மண்டல் பரிசைப் பெற்றான். ஜெர்மன் மொழியில் தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்படுகின்றன. ஆஸ்திரேலியா வில் இன்று தமிழ் இலக்கிய விழாக்கள் பிரமாண்டமாக நடத்தப்படுகின்றன. யார் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி தமிழ் இன்று சர்வதேசத் தலைநகர ங்களில் பேசப்படுகிறது. 36 தமிழ்ச் சஞ்சிகைகள் (சிற்றிலக்கிய ஏடுகள்) ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளிலிரு ந்து வெளிவருகின்றன. இதில் எழுதும் இளைஞர்கள் வீச்சுள்ள புதிய சிந்த னையை நமது மொழிக்குப் பரிமாறுகி றார்கள். இது இந்த நூற்றாண்டின் கடைசிக் கட்டத்தில் ஏற்பட்டுள்ள சர்வ தேசத் திருப்பம் என்று கருதுகிறேன். புலம்பெயர்ந்த தமிழர்கள்தான தமிழ் இலக்கவியத்தை 2ம் நூற்றாணடுக்கு முன்னெடுத்துச் செல்வார்கள் என்று எளப்பொ' சொல்லியிருந்தாராமே. கேள்விப்பட்டீர்களா?
தமிழுக்குச் சர்வதேச அந்தஸ்து கிடைப்பதுதான் முக்கியம். அதற்கான அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் தமிழர்கள் யாராக இருந்தாலும் அவர்க ளுக்குத் தலைவணங்குகிறேன். ஈழத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள்,
N
LIDGWO
தமிழகத் தமிழர்கள் ஆகியோரின் கூட்டு
முயற்சியாக இது இருக்கலாம். அதை விடுத்து, இவர்கள்தான் செய்வார்கள் அல் லது செய்யமுடியும் என்று சொல்வது மொழியை முடக்கிப்போடும் வாதமாகும்.
தமிழகத்துத் தமிழ்தான் எங்கள் ரசனை என்ற நிலை மாறி, ஈழத்துத் தமிழையும் புலம்பெயர்ந்தோர் தமிழை யும் சரிவரத் தெரிந்து கொள்ளாமல், முழுத் தமிழறிவு ஒரு தமிழனுக்குக் கிடைக்க முடியாது. இந்த அறிவைப் பெற்றுக்கொள்வது வளர்ந்து வரும் இளந்தலைமுறைக்கு முக்கியம்
ஈழத் தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்கு கவிதையில் அதிகமிருப்பதற்கு என்ன காரணம்?
போரினால் நிலை குலைந்த வாழ்க் கையும் அன்றாட வாழ்வில் சந்திக்கும் கசப்பான அனுபவங்களும் பெண்களை எழுத வைக்கின்றன. அவர்களின் உண ர்வுகளை வெகு சுலபமாகக் காட்டுவத ற்கு கவிதை வளைந்து கொடுக்கிறது. மேலும் மிக உயர்ந்த கல்வித் தரமும் எங்கள் பெண்களின் சிந்தனைத் தரத்து க்கு ஒத்துப் போகிறது. அதனால் பெண் கள் அதிகம் கவிதை எழுதுகிறார்கள்.
தமிழகத்தில் சிற்றிதழ்கள்.?
தமிழில் சிற்றிலக்கிய ஏடுகளுக்குத் தளம் இல்லை. பொருளாதாரப் பின்புல மும் இல்லை. ஐந்து அல்லது பத்து இதழ்கள் வெளிவந்து மரித்துப் போகின் றன. இதழ்தான் சிற்றிதழே தவிர, அதை நடத்துபவர்களுக்குத் தங்கள் மனதில் மாபெரும் படைப்பாளி என்ற திமிர் இருக்கிறது.
மல்லிகையை மட்டும் தொடர்ந்து இத்னை ஆண்டுகள் உங்களால் எப்படிக் கொண்டுவர முடிந்தது?
5
リ

Page 5
அச்சடிக்கும் வரைதான் அந்த இதழுக்கு நான் ஆசிரியன். அதன் பிறகு ஒரு பண்டத்தின் விற்பனையா ளன். யாழ்ப்பாண வீதிகளில் அலைந்து திரிந்து மல்லிகையை விற்றிருக்கிறேன். இப்போதும் அலைகிறேன். சிற்றிலக்கிய ஏடுகளைப் பொறுத்தமட்டில், ஆசிரியன் முகவரிதான் ஏட்டின் முகவரியாக இருக் கும். ஆனால் மல்லிகைக்குச் சொந்த முகவரி இருக்கிறது. சொந்தமாக கட்ட டமும் அச்சகமும் உண்டு. நான் இல்லா விட்டாலும், மல்லிகை நிச்சயமாக 100வது ஆண்டு மலரை வெளியிடும். அதற்கேற்ற அமைப்பை இப்போதே செய்து வருகிறேன்.
படைப்பு தான் முக்கியம். படைப்பாளி சாதாரணம் என்பது எங்கள் கருத்து. படைப்பைவிட் படைப்பாளி மேலாதிக் கம் செலுத்தினால் மக்கள் மதிக்க
DITLU TF 556.
இங்கே சிற்றிலக்கிய ஆசிரியன்
தன்னை மேதை என்று நினைத்துக் கொள்கிறான். அச்சடிப்பதைத் தவிர, இதழுக்கும் அவனுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை.
காலச்சுவடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"காலச்சுவடு பல விவாதங்களை, கருத்துகளைச் சொல்கிற பத்திரிகை யாக இருக்கிறது. எனினும் சுபமங்களா, தாமரை, சரஸ்வதி போன்ற பத்திரிகைக ளின் எளிமைக்கு மாற்றாக மிக இறுக்க மான மொழிநடையில் வருவதை அவ தானிக்கிறேன். சுபமங்களா மக்களைக் கவர்ந்த அளவுக்குக் காலச்சுவட்டினால் போகமுடியாது. காரணம், சுபமங்களா வில் வந்த பரந்து விரிந்த ஜனநாயக இலக்கியப் பார்வை காலச்சுவட்டில்
குறுகிப் போயுள்ளது என்று கருதுகி
றேன். ஒரு குறிப்பிட்ட சிந்தனைத் தடந்
6
தான் அதில் பிரதிபலிக்கிறது என நம்புகிறேன்.
சிற்றிதழ்கள் சிறக்க என்னதான் வழி?
சுபமங்களாவின் இடத்தைத் தமிழக த்தில் ஒரு சிற்றிலக்கிய ஏடு நிரப்பிப் பூரணப்படுத்த வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். தமிழகத்தில் பலருடனும் பேசியபோது என்னுடைய மன ஆசை யைப் பகிர்ந்து கொண்டேன். சுவைஞர் கள் (வாசகர்களை அவர் அப்படித்தான் அழைக்கிறார்) பல்வேறு பிரதேசங்களி லிருந்து நவீன இலக்கியத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்க ளின் இலக்கியத் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியது நமது எல்லோரின் கடமையாகும். எங்களுடைய அனுபவங் கள் வேறு புலம்பெயர்ந்தோர் அனுபவ ங்கள் வேறு. இந்த மூன்று அனுபவங்க ளையும் எழுத்தின் மூலம் நாம் இணை ப்போமாயிருந்தால் ஒரு சர்வதேசத் தமிழ் இலக்கியம் நமக்குக் கொடையா கக் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
தமிழகத்தில் இளைய தலைமுறையின் பார்வை இலக்கியத்திலிருந்து விலகிச் செல்கிறதா?
பெரிய சங்கடம் டி.வி.தான். இலங் கையிலும் சரி இந்த ஊடகம் இளைஞர் களைக் கட்டிப் போட்டிருப்பதைப் பார்க் கிறேன். இன்னொன்று சர்வதேச கிரிக் கெட் இவைகளை நான் நிராகரிக்கவி ல்லை. சமுதாய வளர்ச்சியின் காலகட் டங்கள் இவை. இதையும் மீறிக் கலை, இலக்கியச் சிந்தனைகளைக் கொணர வேண்டும். ஊடகங்களின் வலிமை இளைஞர்களை ஆட்கொண்ட போதும் கூட, இவை தற்காலிக இடைஞ்சல் தான் எழுத்திலக்கியம் காலங்காலமாக நின்று நிலைக்கப் போகின்ற ஊடகம், அந்த ஊடகத்தைத் தெளிவாகப் பயன்
NYE
DaioaSoar,

படுத்தக் கூடிய பல புதிய எழுத்தாளர் களை நான் தமிழகத்தில் பார்க்கிறேன்.
தமிழகத்தில் நான் பார்க்கும் இன் னொரு முக்கிய மாற்றம், தலித் இலக்கி யத்தின் வீச்சு. தலித் இலக்கியத்தை அவர்கள் கலாசாரத்தின் வெளிப்பாடா கப் பார்க்கிறேன். இந்த விடுதலைப்
போராட்டம் ஒரு பொதுப் போராட்டத்தில்
இணையும்போதுதான பூரணத்துவம் பெறும். ஈழத்தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம்?
நாங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பட்ட கஷ்டங்கள் மூலம் பெற்ற அனுப வங்களை அடைய நீங்கள் பலநூறு ஆண்டுகள் தவமிருக்க வேண்டும். அந்த அளவுக்கு நாங்கள் கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருக்கிறோம். ஆனால் அந்த அனுபவங்களின் முதல் எழுத்தாளன் இன்னும் பிறக்கவில்லை. அடுத்த 30 வருஷங்களில் அவன் பிறப்பான். அப்போது அவன் படைப்பது சர்வதேச இலக்கியமாக இருக்கும்.
சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத் தின் அனுபவங்கள் மட்டுப்படுத்தப்பட்டு விட்டன. ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகுதான் எங்களுக்குப் புதுப்புது அனுபவங்கள் கிடைத்துக் கொண் டிருக்கின்றன.
தமிழ் இலக்கவியத்தவில் யதார்த்தவாத எழுத்துக்கான காலகட்டம் முடிந்துவிட்டது. புதிய இளங்கள் தான் இன்றைய உலகளாவிய பாணி என்று பேசப்படுவது பற்றி.?
பல கோணங்களில் இலக்கியம் பற்றி விவாதிப்பது சந்தோஷம். இறுதி யாக மக்களால் அங்கீகரிக்கப்படுவது தான் நின்று நிலைக்கும். என்னைப் பொறுத்தவரை, யதார்த்தவாதம் தான் மீண்டும் தன்னுடைய தளத்தை நிலை
நிறுத்தும் என்று நினைக்கின்றேன். மணி தனை மனிதனாக்கும் இலக்கியம் தான் மனித குலத்துக்குத் தேவை. அதை யதார்த்தவாதத்தில் காண்கிறேன். ஈழத் தமிழ்ப் படைப்புக்கள் தமிழகத்தில் உரிய அளவுக்குக் கவனிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் உண்டா?
வளர்ந்து வரும் இளம் எழுத்தாளனு க்கு இருக்கலாம். எனக்கு இல்லை. எங்களுடைய படைப்புகளை உருவாக் குவதற்கு எங்களுடைய நாட்டிலேயே தரமான வாசகர்களை உருவாக்கியிருக் கிறோம். எனது கணிசமான நூல்கள் தமிழகத்தில் தான் வெளிவந்திருக் கின்றன.
எனக்குள்ள ஆதங்கம் வேறு.
கைலாசபதி, சிவத்தம்பியின் பெயர் சொல்லாமல் தமிழ் விமர்சனங்கள் இல்லை. எங்களைப் புரிந்துகொள்ளா மல், எங்கள் இலக்கியப் பார்வையைத் தெரிந்து கொள்ளாமல், எங்களுடைய படைப்பாளிகளை அறிந்து கொள்ளா மல், ஒரு பரிபூரண தமிழ் வாசகனாக, விமர்சகனாக, எழுத்தாளனாக இருக்க (ԼՔԼԶեւ III 5l.
பாரீஸில் (சென்னையிலுள்ள பாரிமுனை அல்ல, பிரான்ஸ் தலைநகள்) பஸ் ஸில் ஏறும் ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் தமிழில்தான் பேசுகிறான். ஈழத் தமிழன்தான் அதைச் செய்கின்றான். தமிழ்நாட்டுத் தமிழன் (ONGFUIL LDIITILL LATGŐT.
புலம் பெயர்ந்தோர் இலக்கியம் ஈழத் தமிழ் இலக்கியத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு.?
ஈழத் தமிழ் இலக்கியம், மு னர்
வெறும் தமிழ்ச்சிந்தனையாக இருந்தது. புலம்பெயர்ந்தோர் இலக்கியத்திற்குப்
差。 7.
DaioaSapy,

Page 6
பிறகுதான் சர்வதேசச் சிந்தனையாக மாறியிருக்கிறது. இப்போது எங்கள் சிந் தனைகளும் அவர்களுக்குப் போகிறது. யாழ்ப்பாணத்திலுள்ள "கொக்குவில் என்ற சுருட்டுத் தொழில் கிராமம் ஜெர்மன் மொழியில் பேசப்படுகிறது. கடுதாசி இலக்கியத்தைவிடக் கணினி யுக இலக்கியத்தில் இது வேகமாக நடக்கும். தமிழ்ப் படைப்பாளிகளிடம் உள்ள குழு ഥ0/ിഞഥ Lഴ്സി.?
மனிதர்களே.
Bruja,6061 விற்றும் காசு சம்பாதிக்கலாம் நாய் விற்ற காசு குரைக்கப் போவதில்லை
பூக்களை விற்றும்
காசு சம்பாதிக்கலாம் பூ விற்ற காசு மணக்கப் போவதில்லை
ஆனால் -
தமிழன் இருக்கும் இடமெல்லாம் குழு இருக்கும். குழு இருக்கும் இடமெ ல்லாம் மோதல் இருக்கும். மோதல் இருக்குமிடமெல்லாம் துவேஷம் இருக் கும். துவேஷம் இருக்குமிடத்தில் ஆக்க பூர்வமான சிந்தனை பிறக்காது. குழு வாக இருப்பதில் தவறில்லை. மற்றவர்க ளின் சிந்தனை மீது ஆதிக்கம் செலுத் துவது தான் தவறு. ஆரோக்கியமான சிந்தனையாளன் இந்தக் குழு வாதத் துக்குக் கட்டுப்படமாட்டான்.
நன்றி மறந்தவர்களுக்கு
யார் நினைக்கிறார்கள்
இரவில் சூரியனை?
எல்லா மாலைகளும் சந்திரனின் கழுத்தில்தான்
யார் நினைக்கிறார்கள் பகலில் சந்திரனை? எல்லா மாலைகளும்
சூரியனின் தோளில்தான்
யார் நினைக்கிறார்கள்
அமாவாசையிலாவது சூரியனையும் சந்திரனையும்?
எல்லா மாலைகளும்
தேவைப்படுகிறார்கள் மனிதர்களும் இருளின் கைகளில்தான்!
சொர்க்கத்திற்கு!
pció
 

எதிரொலிகள் 18-7-99 தினமணிகதிர்
ஈழத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளி, விமர்சகள், உலகு தழுவிய முற்போக்குச் சிந்தனையாள் டொமினிக் ஜீவாவின் சீரிய கருத்துக்களைத் திறம்படத்தொகுத்து வழங்கியுள்ளர், சுகதேவ் இது ஓர் அரிய தமிழ் இலக்கியப் பணியாகும் உளமார்ந்த பாராட்டுகள் திகசி நெல்லை
தமிழகப் படைப்பாளிகள் எங்கே இருக்கிறர்கள்? - என்ற டொமினிக் ஜீவாவின் பேட்டி அருமை. ஈழத்தில் இலக்கியம், புலம்பெயர்ந்த தமிழர்களின் முக்கிய நிலை, தமிழகத்தில் இ GÖTsig இலக்கியப் பார்வை, தமிழகத்தின் இலக்கியப் போக்கிலும் தமிழர்களின் இலக்கிய ஈடபாட்டிலும் உங்களுக்குத் திருப்தியா என்ற கேள்விகளுக்கு ஜீவாவின் பதில்கள் மிகவும் சக்தி வாய்ந்தனவாக அமைந்திருக்கின்றன. தமிழ்ச்செல்வம், சிங்கப்பூர்
படைப்பாளியை விடப்படைப்புதான் முக்கியம் அவ்வாறின்றிப்படைப்பாளி மேலாதிக்கம் செலுத்தினால் மக்கள் மதிக்க மாட்டர்கள் என்ற டொமினிக் ஜீவாவின் கூற்றில் நியாயம் இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்களிடம் உள்ள மனப்பான்மை பற்றி அவர் கூறியதை நம் தமிழ் எழுத்தாள்கள் சிந்தித்துப் பர்க்க வேண்டும் எனத் தன்மனத்தில் பட்டதை ஒளிக்காமல் சொன்ன டொமினிக் ஜீவா பாராட்டுக்குரியவர்
மின்னல்காந்தன், அம்மாப் பேட்டை
டொமினிக் ஜீவாவின் நேர்காணல் அருமை "100 ஆண்டுகள் ஓர் இலக்கிய இதழை நடத்துவேன்என்ற அவரது நம்பிக்கை தமிழகச் சூழலில் அதிமனிதச் செயல் போலத் தோன்றுகிறது. தமிழ் எழுத்தாளர்களின் குழு மனப்பான்மை என்னும் தலைக்கணம் - சிந்தனைத் தேக்கம்- தமிழர்களின் ஆங்கில அடிமை மோகம் முதலியண்புகளைக் குறித்த அவரது கருத்துக்கள் சாட்டையடிகள்
தமிழ்முடி சேகர், காரைக்கால்
பலவித'இஸங்களின் பெயரால் அறிவுஜீவிகள்(!) நவீனத்தமிழ் இலக்கியத்தைச் சோதனைக்குள்ளாக்கி,
வாசகர்களையும் சோதிக்கின்றனர். இவர்களுக்கு மனிதனை மனிதனாக்கும் இலக்கியமே இப்போது தேவை
யதார்த்தவாதத் தளமே இதற்குப் போதும் என்ற டொமினிக் ஜீவாவின் கருத்து நல்ல வழிகாட்டும்
சி.இரவிச்சந்திரன், கல்பாக்கம்
1960 என நினைவு - அப்போது சென்னை வந்த ஜீவா, திருவல்லிக்கேணியில் இலக்கிய அன்பர்கள் கூட்டத்திலும் இது போன்றே முரட்டுத்தனமாக விமர்சித்தார். தமிழ் இலக்கியம் வளர்க்கும் ஆசான்கள் ஈழத்துக்காரர்களே, அவர்களுக்கு நிகர் இங்கு எவரும் இல்லை என்றார். இன்னும் அவர் கருத்து மாறவில்லை என்பது வேதனையளிக்கிறது.
இலக்கியச் செய்திகள் இலக்கிய ஏடுகளில்தான் வரும் என்ற நிலை இன்று இல்லை. தினமணி போன்ற நாளேடுகளில் இலக்கியம், எழுத்தாளர்கள் குறித்த செய்திகள் முதல் பக்கத்திலேயே வெளிவருகின்றன. தினமணியின் இணைப்பான 'தினமணிகதிர் வார இதழில் இலக்கியத்துக்கென்றே தனிப்பக்கம் ஒதுக்கியுள்ளனரே இது போன்ற செய்திகள் தமிழ் நாட்டின் இலக்கிய வளர்ச்சியின் அங்கம் இல்லையா? வடபழநீகு வரதராஜன், சென்னை
NY
DaioaSadas

Page 7
ܘܽ
لاايان
ప్రత్త హో
ஈழத்துச் சிறுகதை முன்னோடிகள்
2000 ஆண்டுடன் நவீன தமிழ்ச்சிறு கதைகள் 95 ஆண்டுகள் வயதை அடைகின்றது என்பதை அறியும்போது நமது இருப்பினைத் தெரிந்துகொள்ளும் ஆவல் இயல்பாகவே ஏற்படுகின்றது. தமிழ்ச்சிறுகதை இலக்கிய வரலாற்றில் சுப்பிரமணியபாரதியார், வ.வே.சு.ஐயர், அ. மாதவையா ஆகிய மூவரையும் தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகளாகக் கொள்வது மரபாகவிருந்து வந்தது. நீண்ட காலமாக விமர்சகர்கள் வ.வே.சு. ஐயரையே தமிழ்ச் சிறுகதையின் மூல வராகவும், அவரது “குளத்தங்கரை அரசமரம்" என்ற கதையிலிருந்து சிறுகதை வரலாற்றினைத் தொடங்குவ தும் வழக்கமாகவிருந்தது. அவரது சிறுகதைகள் 1915க்கும் 1917க்கும் இடைப்பட்ட காலவேளையில் எழுதப் பட்டன. அவற்றின் தொகுப்பே மங்கைய ற்கரசியின் காதல் ஆகும். வ.வே.சு.ஐயர் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் உருவ அமைதியும் கற்பனைச்செறிவும் நிஜத்தன்மையும் குளத்தங்கரை அரச மரத்திலேயே காணப்படுகின்றனவென் பது பலரது கருத்தாகும். (சா.கந்தசாமி - 1988). ஆனால், "வருடக்கணக்கை வைத்துப் பார்த்தாலும் சரி, இலக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அளவிட்டாலும் சரி தமிழின்
நவீன சிறுகதை சுப் பிரமணிய
O
பாரதியிடமிருந்தே துவங்குகிறது. 1905 இல் அவர் சக்கரவர்த்தினியில் எழுதிய துளசிபாயி என்ற ராஜபுத்திர கன்னிகை யின் சரித்திரம் தமிழின் முதல் நவீனச் சிறுகதை என்று நம்ப இடமிருக்கிறது" (மாலன் - 1993), சுப்பிரமணியபாரதியின் காக்காய்ப் பார்லிமென்ட், காற்று ஆகி யவை சிறந்த சிறுகதைகளாக அடை யாளங் காணப்பட்டிருக்கின்றன. அவர் சிறுகதையை வ.வே.சு ஐயரைப்போல ஒரு இலக்கிய வடிவமாகவோ, மணிக் கொடிக்காரர்களைப் போலச் சுத்தக் கலைவடிவமாகவோ கொள்ளவில்லை. தனது சிறுகதைகளை சமூக விமர்சன த்திற்கான ஒரு ஊடகமாகப் பயன்படுத் தியுள்ளாரென இன்றைய ஆய்வாளர் கருத்துத் தெரிவிக்கின்றனர். (மாலன் - 1993). 1920 - 1925 காலகட்டத்தில் அ.மாதவையாவின் சிறுகதைகள் வெளி வந்தன. தமிழ்நாட்டின் தமிழ்ச் சிறுகதை மூலவர்களாக இந்த மூவரையும் பாரதி, வ.வே.சு. ஐயர், மாதவையா கொள்வதில் தவறில்லை. ஆனால் தமி ழின் முதற் சிறுகதை ஆசிரியர் எவ ரென ஆராயும்போது அந்தப் பெருமை ஈழத்து எழுத்தாளர் ஒருவருக்குரியதாக மாறிவிடுவதைக் காணலாம்.
1841 ஆம் ஆண்டு தொடக்கம் உதயதாரகை என்ற பத்திரிகை,
Daioasapa,
 
 

இதுவே ஈழத்தின் முதலாவது பத்தி ரிகை, வெளிவருகிறது. இதன் ஆசிரியர் களாக முதலில் கறோல் விசுவநாதபிள் ளையும், பின்னர் 1860களில் ஜே.ஆர். ஆனால்ட் சதாசிவம்பிள்ளையும் விளங் கினர். இப்பத்திரிகையில் ஆனால்ட் சதாசிவம்பிள்ளை பல சிறுகதைகளை எழுதியுள்ளார். நாவலரின் சமகாலத்தவ ரான ஆனால்ட் சதாசிவம்பிள்ளையின் சிறுகதைத் தொகுதி ஒன்றினைப் பற்றிப் பேராசிரியர் க. கைலாசபதி மல்லிகைக் கட்டுரையொன்றில் தொட்டுக் காட்டியுள் ளார். உதயதாரகையில் அவரால் எழுத ப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பாக இது இருக்கவேண்டும். மேலும் ஈழத்து எழுத்தாளரான ஈழகேசரி சோ. சிவபாத சுந்தரமும் தமிழக எழுத்தாளரான சிட்டி யும் இணைந்து எழுதி வெளியிட்டிருக் கும் தமிழ்ச் சிறுகதைகள் என்ற ஆய்வு நூலில், வ.வே.சு. ஐயர், பாரதியார், மாதவையா ஆகிய மூவரையும் சிறு கதை மூலவராகக் கொள்கின்ற இலக கிய மரபினை மாற்றி அமைத்து, தமிழ் கூறும் நல்லுலகில் ஆனால்ட் சதாசிவம் பிள்ளையே சிறுகதையின் முன்னோடி என நிறுவியுள்ளார்கள். எனவே, தமிழ் சிறு கதையின் வருடக் கணக்கினை வைத்துப் பார்த்தாலும் சிறுகதைக்குரிய உருவ அமைப்பு, உள்ளடக்கம் என்பவ ற் றினை வைத்துப் பார்த்தாலும் ஆனால்ட் சதாசிவம்பிள்ளையே தமிழ்ச் சிறுகதையின் பிதாமகர் ஆகின்றார். (ஆடலிறை மயிலங்கூடலூர் நடராஜன்) இது குறித்து மேலதிக ஆய்வுகள் மேற் கொள்ளப்படல் வேண்டும். ஆனால்ட் சதாசிவம்பிள்ளையின் சிறுகதைகள் நவீன பாங் கானவையா எண் பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஈழத்துச் சிறுகதை வரலாறு, ஒப்பீட் டளவில் காலத்தால் முந்தியதாகும். ஆனால்ட் சதாசிவம்பிள்ளையின் சிறு
கதைத் தொகுதியைத் தொடர்ந்து இரு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள் ளதாக அறியப்படுகின்றது. பண்டிதர் சந்தியாகோ சந்திர வர்ணம் பிள்ளை "கதாசிந்தாமணி" என்றொரு கதைத் தொகுதியை 1875 ஆம் ஆண்டில் வெளியிட்டார். இதில் ஏழு சிறுகதைகள் அடங்கியிருந்தன. தம்பிமுத்துப்பிள்ளை என்பவர் "ஊர்க் கதைகள்' என்ற தொகுதியையும், ஐதுருஸ் லெப்பை மரைக்கார் என்பவர் "ஹைதர்ஷா சரித் திரம்" என்ற கதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளனர். ஊர்க் கதைத் தொகுதியில் 101 கதைகள் இருப்பதாக அறியப்படுகின்றது. (கனக செந்திநாதன் 1964) எனவே ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மூலவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே மரபுவழியை மீறி, ஆரம்பச் சிறுகதை வடிவத்தில் கதைகளைப் படைத்துள் ளனர் எனத்துணியலாம்.
ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற் றினைக் காலரீதியாகவும் நவீன சிறு கதை வடிவ ரீதியாகவும் ஆராய்விற்கு எடுக்கும்போது, ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளாக க. திருஞானசம்பந்
தன் (சம்பந்தன்), சி. வைத்திலிங்கம்,
இலங்கையர்கோன் ஆகிய திருமூலர் கள் கொள்ளப்பட்டு வருகின்றனர். சிறு கதை வரலாற்றினை விபரிக்க முயலும் விமர்சகர்கள் அனைவரும் இந்த வரன் முறையை ஒரு வாய்ப்பாட்ாகவே ஒப்பி த்து வருகின்றனர். ஆனால், இந்த மூவ ருக்கும் முன்னரேயே ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை மரபினை ஒரளவு ஆரோக்கிய மாக முன்னெடுத்துச் சென்ற சுயா என்ற சு. நல்லையா, ஆனந்தன், பாணன் ஆகிய மூவரும் கவனத்திற்கெடுக்கப் படாது விடப்பட்டனர். இவர்களுடன் சோ. சிவபாதசுந்தரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்றாலும் அவர்
1
DaioaSadas

Page 8
ஆரம்ப காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க சிறுகதைகளை எழுதவில்லை. நமது சிறுகதைத் திருமூலர்களுக்குப் பின்னர் அவர் எழுதிய சிறுகதைகளே கணிப்பி ற்கு உள்ளாக்கப்படத்தக்கன. சுயா, ஆனந்தன், பானன் ஆகிய மூவரில் சுயா 1936 இலிருந்து 1957 வரை தொட ர்ந்து எழுதி வந்திருக்கின்ற போதிலும் அவரது சிறுகதைகளின் வடிவிலும் உள்ளடக்கத்திலும் அவரின் வளர்ச்சி நிலை தெரியவில்லை. அவர் ஆரம்பத் தில் வரித்துக் கொண்ட சிறுகதை பற்றிய நிலைப்பாட்டிலிருந்து சற்றும் விலகி வரவில்லை. சுயா எழுதிய ஏறக் குறைய 40 சிறுகதைகளும் இந்தக் கருத்துக்குத் தக்க உதாரணங்களாம். அதே வேளை 1938களில் எழுத ஆரம் பித்த ஆனந்தன் என்ற பண்டிதர் சச்சிதானந்தன் ஏறக்குறைய பத்து சிறு கதைகள் வரையில் 1944 வரையிலான காலகட்டத்தில் எழுதிய பின்னர் கவிதைத் துறையிலும் காவியப்படைப்பி லும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள் ளார். இந்த மூவரும் நவீன சிறுகதை வடிவத்தினை நன்கு புரிந்து கொண்டு படைப்புத் துறைக்கு வந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.
சுயா, பாணன், ஆனந்தன் ஆகிய மூவரில் ஆனந்தன் குறிப்பிடத்தக்கவர். அவர் ஹரிஜனங்களின் கண்ணிர், நான் அசுரனா?, அவிந்த தீபம், தண்ணீர்த் தாகம், சாந்தியடையுமா? முதலான கதைகளை எழுதியுள்ள போதிலும் அவர் எழுதிய தண்ணிர்த்தாகம் என்ற சிறுகதைக்காகவே கணிக்கப்பட வேண் டியவராகிறார். ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் தண் ணிர்த் தாகம் ஒன்றாகும். அது எழுதப்பட்ட காலகட்ட த்தையும், அது கூறுகின்ற சமூகச் செய் தியையும் கவனத்திற்கெடுக்கும் போது வியப்பும் பெருமிதமும் ஏற்படும். யாழ்ப் 12
செய்தியும்
பாணச் சமூகத்தின சாதியக் கொடு மையை முதன்முதல் கருப்பொருளா க்கி மக்கள் முன் தூக்கிவைத்தவர் அவர் சமூகத்தின் 6 julið ਤੇ ਥ னையை அவர் கையாண்டிருக்கும் முறைமையும் அதனூடாக அவர் கூறும் 1956களின் பின்னரும் ஈழத்தின் நவீன சிறுகதை ஆசிரியர்க GITT GÒ GODSEuJTGITIÚILJL (6 6 JCIbēÉ6ốTABg5!.
சுயா, பாணன், ஆனந்தன் ஆகியோர் சிறுகதை இலக்கிய உலகில் காலடி எடுத்து வைக்கும் முன்னர் ஈழத்தின் நவீன சிறுகதைப் பரப்பு வெற்றிடமாக இருந்ததெனக் கொள்ள முடியாது. பல எழுத்தாளர்கள் தம் அறிவுக்கும் திறனு க்கும் ஏற்ற விதத்தில் சிறுகதைகளை எழுதிப் பார்த்துள்ள சங்கதியை மறந்து விடக்கூடாது. 1931 இல் மலையகப் பத்திரிகையாளரான கொ.நடேசையர் ஒரு இராமசாமி சேர்வையின் சரிதம் என்றொரு சிறுகதையை எழுதியுள்ளார். 1933இல் அளவெட்டி த. சிவலிங்கமென் பார் பறைச்சேரியில் தீ விபத்து என் றொரு சிறுகதையை எழுதியுள்ளார். இவரிடம் சிறுகதைக்குரிய வடிவமுள் ளது. பொன்.குமாரவேற்பிள்ளை, பரிதி, நவாலியூர் சத்தியநாதன், எ.சி. இராசையா, வண்ணை வை.சி.சின்னத் துரை, சுமாதி போன்ற சிலர் சிறுகதை களை எழுதிப் பார்த்துள்ளனர். ஈழ கேசரி போன்ற பத்திரிகைகளில் அவை பிரசுரமாகியுமுள்ளன.
தமிழகத்தில் டாக்டர்.உ.வே. சுவாமி நாதையர் போன்ற பண்டிதர்கள் தாமும் சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தில் பங்கு கொண்டிருக்கின்றனர். சுவாமி நாதையரின் தருமம் தலைகாக்கும் என்ற சிறுகதை விமர்சகர்கள் சிலரால் விதந்துரைக்கப்பட்டு வருகின்றது. அதே போல ஈழத்திலும் இலக்கியக் கலாநிதி
Daño68a3D35
 

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, குரு
கவி ம.க.வே.மகாலிங்கசிவம் ஆகியோர் சிறுகதைகளை எழுதியுள்ளனர் என்பது வியத்தற்குரியது. பண்டிதமணி கணபதி ப்பிள்ளை ஈழகேசரியில் 1938ம் ஆண்டு "நவபாரதம்" என்ற சிறுகதையை ஜ்யோதிர்மகிஷம் சாதேவ சாஸ்திரியார் என்ற புனைப் பெயரில் எழுதியுள்ளார். ஆசிரிய கலாசாலையையும் அதன் நடவடிக்கைகளையும் அதில் சம்பந்தப் பட்டவர்களையும் வைத்துக் குறிப்பாக இச்சிறுகதை ஆக்கப்பட்டிருக்கின்றது. அக்கால யாழ்ப்பாணத்துப் பிரமுகர்க ளின் முகமூடிகள் இச்சிறுகதையில் கிழிக்கப்பட்டிருக்கின்றன. ஆடலிறை மயிலங்கூடலூர் நடராஜன் என்பவர், ஈழகேசரி ஆண்டுமலர் 1939 இல் குரு கவி ம.க.வே.மகாலிங்கசிவம் என்பவ ரால் எழுதப்பட்ட "அன்னைதயை என்ற படைப்பினை தக்கதொரு சிறுகதையாக அடையாளங் கண்டுள்ளார். சமயச் சார் புக் கதையென்னும் உருவமும் உள் ளடக்கமும் சமூகச்சார்பும் இதனைத் தக்க சிறுகதையாக்கி உள்ளனவென் பது அவரின் கருத்தாகும்.
ஈழத்தின் தமிழ்ச் சிறுகதை மூலவர் களாக இதுவரை காலமும் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சி.வைத்தியலிங் கம், இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகிய மூவரும் ஈழத்தின் தமிழ்ச் சிறு கதைக்குப் புத்துக்கமும் புதிய வடிவ மும் வழங்கியவர்கள் என்பதில் ஐயமி ல்லை. சி.வைத்தியலிங்கம், இலங்கைய ர்கோன் ஆகிய இருவரும் ஆங்கிலப் புலமை வாய்ந்தவர்கள். நவீன சிறு கதையின் மேலைத்தேயப் பண்புகளை யும் வளர்ச்சி நிலைகளையும் தெரிந்தவ ர்கள். ஆதலால் அவர்களின் சிறுகதை களில் வடிவமும் உள்ளடக்கமும் நன்கு விரவிக் காணப்பட்டன. சம்பந்தன் அவர்கள் தமிழும் வடமொழியும் நன்கு
கைவரப் பெற்றவர். அத்தோடு நவீன சிறுகதையின் தார்ப்பரியங்களைத் தெரி ந்தவர். இவர்கள் மூவரும் அக்காலகட் டத்தில் தமிழகத்தில் சிறுகதைத்துறை யில் சாதனைகளைப் புரிந்த எழுத்தா ளர்களான புதுமைப்பித்தன், கு.ப.ராஜ கோபாலன், பி.எஸ்.ராமையா, மெளனி, ந.பிச்சமூர்த்தி முதலானோரின் சிறு கதைகளையும் கலைமகள், ஆனந்த விகடன், கிராமஊழியன், மணிக்கொடி, சூறாவளி, சக்தி முதலான சிறுகதை களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழகப் பத்திரிகைகளையும் வாசிப்ப வர்களாகவும் இருந்துள்ளனர். அவர்கள் படைத்த கதைகளில் இவர்களின் தாக்கமும் செல்வாக்கும் இருந்திருப்ப
தைக் காணமுடியும். எனவேதான் இந்த
மூவரினதும் சிறுகதைகள் நவீன சிறு கதையின் அழுத்தமான பண்புகளைத் தம்முள் கொண்டிருக்கின்றன.
ஈழத்தின் தமிழச் சிறுகதைத்துறைக்கு புது நீர்ப்பாய்ச்சிய சி.வைத்தியலிங்கம் ஏறக்குறைய இருபத்தைந்து சிறுகதை கள் வரையில் எழுதியுள்ளார். ஆங்கில, சமஸ்கிருத மொழிகளில் நல்ல தேர்ச்சி உடையவராக விளங்கியமை அவரு டைய சிறுகதைகள் சரியான தடத்தில மையவும், உரைநடையை கவிதா பண் போடு பயன்படுத்தவும் உதவியிருக்கின் றன. இவரது சிறுகதைகளில் தமிழக எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் எழு த்துக்களின் செல்வாக்கினைக் காண லாம். கு.ப.ரா போல மனவுணர்வுகளு க்கு முக்கியம் கொடுத்துத் தனது சிறு கதைகளைப் படைத்துள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் தென்னிந்தியப் பத்திரிகைகளை மனதிற்கொண்டு எழுதப்பட்டவை. ஆதலால் பெரும் பா லான சிறுகதைகளில் தூய தமிழ் நடை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அவரின் பல சிறுகதைகள் சரித்திரக் கதைகளா
13
DioG&Das

Page 9
கவும் உள்ளன. ஈழகேசரி, கலைமகள், ஆனந்தவிகடன், கிராமஊழியன் ஆகிய இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. ரவீந்திரன் என்ற புனைபெயரிலும் எழுதியுள்ளார். இவரது சமூகச் சிறுகதைகளில் கிராமிய மக்க ளின் அன்றாட வாழ்க்கையின் அம்சங் கள் மண்வாசனையோடு கலந்திருக்கும். கங்காகிதம், பாற்கஞ்சி, நெடுவழி, மூன்றாம் பிறை என்பன இவரது சிறந்த சிறுகதைகள் எனலாம். ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களுக்குப் பின்னர் 1990ல் சி.வைத்தியலிங்கத்தின் சிறுகதைகள் பதினேழு தொகுக்கப்பட்டு "கங்காகிதம்" என்றபெயருடன் வெளிவந்தது. இதனை சோ.சிவபாதசுந்தரம் தொகுத்துள்ளார். தமிழக அண்னம் வெளியீட்டினர் பதிப்பித்துள்ளனர்.
இலங்கையர்கோனின் (த.சிவஞான சுந்தரம்) கல்விப்பின்னணியும் காரியாதி காரியாகக் கடமை செய்த நிர்வாகப் பின்னணியும் அவரது சிறுகதைப் படைப்புக்களின் நவீன பண்புகளையும் களங்களையும் நிர்ணயித்திருக்கின்றன. ஆங்கில இலக்கியத்தின் செல்நெறி களை இலங்கையர்கோன் நன்கு தெரிந் திருந்தமையால் அவரது சிறுகதைக ளில் உணர்வுபூர்வமான சித்திரிப்புகளு க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தன. கலைமகள், பாரதத்தாய், சக்தி, சூறா வளி ஆகிய தமிழக ஏடுகளிலும் ஈழகே சரி, கலைச்செல்வி, ஈழநாடு, வீரகேசரி, தினகரன் முதலான ஈழத்து ஏடுகளிலும் நிறைய எழுதியுள்ளார். தமிழ்ச்சிறுக தைத் துறைக்கு வலுவூட் டிய மணிக் கொடியின் கடைசிக்கால இதழ்களில் இலங்கையர்கோனின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இவரால் படைக்கப் பட்ட சிறுகதைகளில் 'வெள்ளிப் பாத ரசம் ஈழத்தின் உன்னத மான கதைக ளில் ஒன்றாகக் கணிக்கப்படுகின்றது.
14
இந்த மண்ணின் வாசனை நன்கு செறி ந்த சிறுகதை அதுவாகும். வஞ்சம், கடற்கரைக் கிளிஞ்சல் என்பன சிறப் பான ஏனைய சிறுகதைகளாகும். இவ ரது பதினைந்து சிறுகதைகளின் தொகு ப்பாக வெள்ளிப் பாதசரம் உள்ளது.
தமிழ்ச்சிறுகதைகளுக்கு அழுத்த மான காவிய மரபினைத் தந்தவர் சம்பந் தனாவார். கலைமகள், கிராமஊழியன், மறுமலர்ச்சி, ஈழகேசரி, ஆகிய பத்திரி கைகளில் இருபதிற்கு மேற்பட்ட சிறு கதைகளை சம்பந்தன் படைத்துள்ளார். ஈழத்துச் சிறுகதைகளில் உருவமும் உள்ளடக்கமும், அழகாகவும் ஆழமாக வும் அமைவதற்குச் சம்பந்தன் அவர்க ளின் ஆரம்பகாலச் சிறுகதைகள் வழி கோலின எனலாம். இவரின் கதைகளில் எக்காலத்திற்கும் பொருந்துவதற்கான மனிதனின் அடிப்படைப்பண்புகள் அழி யாத உருவில் எழுந்திருப்பதால் இவ ரின் இலக்கியப்பாதை செம்மையானதா கவும் தனித்துவமானதாகவும் அக்கால த்திலேயே விளங்கின. மனித உணர்வு களையும் மன அசைவுகளையும் மனோ தத்துவமுறையில் அணுகி அவற்றின் சிறப்புக்களைக்கலையாக்கிய பெருமை சம்பந்தனுக்குரியது. (செம்பியன் செல்வன்-1998). சம்பந்தனின் சிறு கதைகளில் ஆத்மதத்துவ விசாரணை மிக அழுத்தமாகப் பதிந்திருக்கும் 1938களில் சிறுகதைத்துறைக்கு வந்த சம்பந்தனை முழுமையாகச் தெரிந்து கொள்வதற்கு அவரின் சிறுகதைத் தொகுதி ஒன்றில்லாதிருந்தமை பெருங் குறையாகும். அவரின் சிறுகதைகளில் பத்தினை 1998ல் சம்பந்தன் சிறுகதை கள் என்ற பெயரில் செங்கை ஆழியா னும் செம்பியன் செல்வனும் தொகுத்து வெளியிட்டனர். அவரின் ஏனைய சிறு கதைகளும் (இன்னொரு பத்திருக்கும்) தொகுப்பாக வெளிவரல் வேண்டும்.
DaioaSadas
 

சி.வைத்திலிங்கம், இலங்கையர் கோன், சம்பந்தன் ஆகிய மூவரும் ஈழத் தின் தமிழ்ச் சிறுகதைத்துறைக்கு ஆற்றிய பணியையும் பங்களிப்பையும் மறந்துவிட முடியாது. ஈழகேசரிப் பத்திரி கையின் மூலம் சிறுகதைத்துறைக்குப் புகுந்த இவர்கள் தமது கீர்த்தியை நிலைநாட்டியது தமிழகப் பத்திரிகைகள் மூலந்தான் என்ற சோ. சிவபாதசுந்தரத் தின் கூற்று ஏற்புடையதன்று. ஏனெனில் இலங்கையர்கோனின் முதற் சிறுகதை யானது மரியமதலேனா 1930 களில் கலைமகளில் வெளிவந்துள்ளது. மேலும் ஈழகேசரியில் சி.வைத்தியலிங்க த்தின் சிறுகதைகள் வெளிவருவதற்கு முன்னரேயே கலைமகளில் வெளிவந்து ள்ளன. சம்பந்தனின் முதற்படைப்பான தாராபாய் 1938 களில் கலைமகளில் வெளிவந்துள்ளது. எனவே இந்த மூன்று எழுத்தாளர்களும் தங்களது இலக்கியப் பணிக்குத் தமிழகப் பத்திரி கைகளை முழுமையாகப் பயன்படுத்தி யதோடு ஈழகேசரியையும் தளமாகக் கொண்டிருக்கின்றனர் என்பது ஏற்ற கூற் றாகும். இவர்கள் மூவரையும் ஈழகேசரிக் குழுவினைச் சேர்ந்த படைப்பாளிகள் என்று கொள்வதில் தவறில்லை. இவர் களது கணிசமான படைப்புக்கள்,
சி.வைத்தியலிங்கத்தின் பதினொரு சிறு
கதைகளும், இலங்கையர்கோனின் பத்துச் சிறுகதைகளும், சம்பந்தனின் ஐந்து சிறுகதைகளும் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. சம்பந்தன் ஈழகேசரி யில் அருட்செல்வன் என்ற புனைப் பெயரிலும் எழுதியுள்ளார்.
ஈழத்தின் இம்மூன்று எழுத்தாளர்கள் பற்றி பேராசிரியர் க. கைலாசபதி குறிப் பிடும் பொழுது, "இவர்கள் மறுமலர்ச்சி இலக்கியத்தையோ, இலக்கியத்தின் உட்பிரிவுகளையோ புதிய புதிய பரீசில னைகளையோ அதிகம் வளர்த்தனர்
NY 15
என்று கூறுவதற்கில்லை. ஆங்கில விமர் சகர்கள் கூறும் ரோமாண்டிசம் என்னும் கனவுலகக்காட்சிகளில் ஈடுபடச் செய் யும் இலட்சிய பூர்வமான சிந்தனைகளி லும் உணர்ச்சிகளிலும் மயங்கி எழுதி னர் என்று தான் சொல்லலாம்” என்ற கூற்றில் அவ்வளவு தூரம் உண்மை யிருப்பதாகத் தெரியவில்லை. இவர்கள் மூவரினதும் சிறுகதைகள் தொகுப்புக்க ளாக வெளிவந்திருக்கும் இக்காலவே ளைகளில் அவர்களின் சிறுகதைகள் பற்றி மதிப்பீடு மறுபரிசீலனைக்குள்ளாக வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அவர்கள் படைத்த அத்தனை படைப்பு க்களும் ரோமாண்டிசப்பண்பு கொண் டவை என ஒதுக்கிவிட முடியாது. இவர் களால் படைக்கப்பட்ட வெள்ளிப்பாத சரம், கடற்கரைக் கிளிஞ்சல், மச்சாள், பாற்கஞ்சி, நெடுவழி, அவள், பிரயாணி முதலான சிறுகதைகள் கனவுலகக் கற்பனைகள் அல்ல. இந்த மண்ணில் ஆழமாகக் காலூன்றி எழுதப்பட்ட மண் வாசனைப் படைப்புக்கள். சம்பந்தனின் சிறுகதைகளில் பேச்சுவழக்கு அவ்வ ளவு தூரம் முக்கியம் பெறவில்லை என்றாலும் இலங்கையர்கோன் அந்த வழக்கினை அளவாகவும் கலைத்துவத் தோடும் கையாண்டுள்ளார். இவர்கள் ஒரு பத்தாண்டு காலத்தில் ஏற்படுத்திய சிறுகதைத்துறையின் தாவலை ஐம்பது வருடங்களாக எழுதிவரும் இன்றைய சிறுகதைகளில் ஒரு பெரும் பாய்ச்சலா கக் காணமுடியவில்லை என்பது ஏற்பதற்குச் சங்கடமானதாயினும் மெய்மையானது.
ஈழத்துத் தமிழ்ச்சிறுகதைத் துறை யின் முன்னோடிகளென 1949 ஆம் ஆண்டிற்கு முன் எழுதிய தலைமுறை யைச் சேர்ந்தவர்களைக் குறிப்பிடலாம். ஈழத்துச் சிறுகதைத்துறையில் ஏராளமா னவர்கள் இனங் காணப் படுகின்ற
DaioaSadas

Page 10
வேளைகளில் குறுகிய கால அளவின தான ஆய்வுப்பகுப்பு ஏற்றதாகவில்லை.
இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐந்து
தசாப்தங்களில் சிறுகதைத் துறைக்குப் பங்களிப்புச் செய்தவர்களில் இருபத் தைந்து எழுத்தாளர்கள் இனங்காணப் பட வேண்டியவர்களாவர். சுயா, பாணன், ஆனந்தன், சோ.சிவபாதசுந்தரம், சி.வைத்தியலிங்கம், சம்பந்தன், இலங் கையர்கோன், பவன், சி.வி.வேலுப்பி ள்ளை, அ.செ.முருகானந்தன், சோதியா கராஜன், நவாலியூர் சோ. நடராஜன், வரதர், அ.ந.கந்தசாமி, கனக செந்தி நாதன், சு.வே, நாவற்குழியூர் நடராஜன், இராஜ அரியரத்தினம், கே.கணேஸ், கசின், சொக்கன், அழகு சுப்பிரமணியம், க.இராஜநாயகன், தாழையடி சபாரத் தினம், கு.பெரியதம்பி ஆகிய இருபத் தைந்து படைப்பாளிகளே அவர்களாவர்.
ஈழத்தமிழ்ச் சிறுகதையின் முன்னோ டிகளென இந்த இருபத்தைந்து எழுத் தாளர்களையும் கொள்ள முடியுமா என்ற கேள்வி நியாயமானதாகும், ஏனெ னில் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட அ.செ.முருகானந்தன், வரதர், சொக்கன், க.இராஜநாயகன், அ.ந.கந்தசாமி ஆகி யோர் மறுமலர்ச்சி எழுத்தாளர்களாக நீண்ட காலமாக அடையாளங் காணப்ப ட்டவர்கள். 1946 பங்குனி மாதத்திலிரு ந்து 1948 ஐப்பசி மாதம் வரை மொத்த மாக 24 இதழ்கள் மறுமலர்ச்சிச் சஞ்சி கையாக வெளிவந்தது. தமிழகத்தில் மணிக்கொடிக்காலம் போல ஈழத்தில் மறுமலர்ச்சிக் காலம் அடையாளம் காணப்பட்டது. ஈழகேசரியில் நிறையவே எழுதிய படைப்பாளிகள், மறுமலர்ச்சிப் பத்திரிகையிலும் எழுதியுள்ளனர். இவர் கள் ஈழகேசரிப் பண்ணையில் உருவா கியவர்கள் என்பதில் சந்தேகமில்லை. மறுமலர்ச்சிச் சஞ்சிகையில் அ.செ.முரு கானந்தனின் சில சிறுகதைகள் வெளி
வந்தன. ஆனால் ஈழகேசரியில் அவரின் பதினெட்டு சிறுகதைகள் பிரசுரமாகி இருந்தன. வரதரின் சிறுகதைகள் ஈழகேசரியில் பதின்மூன்று வரையில் வெளிவந்துள்ளன. வரன், வரதர், தி.ச.வரதராசன் எனப் பல பெயர்களில் ஈழகேசரியில் எழுதியுள்ளார். மறுமலர்ச் சியில் வெளிவந்த 52 மொத்தச் சிறு கதைகளில் பத்தளவில் அவருடை யவை. ஈழகேசரியில் 14 சிறுகதைகள் எழுதிய சொக்கன் மறுமலர்ச்சியில் ஒரே ஒரு சிறுகதை எழுதியதன்மூலம் எப்படி மறுமலர்ச்சி எழுத்தாளரானார் என்பது வியப்பானது. ஈழகேசரியில் 11 சிறு கதைகள் எழுதியிருக்கும் சு.வே, மறு மலர்ச்சியில் மூன்று உருவகக் கதை கள் எழுதியிருக்கிறார். சில விமர்சகர்க ளால் ஈழகேசரிப் பண்ணையில் வளர் ந்த எழுத்தாளராகவும், சிலரால் மறுமல ர்ச்சி எழுத்தாளராகவும் கணிக்கப்படும் அ.ந. கந்தசாமி ஈழகேசரியில் 1942 இல் குருட்டு வாழ்க்கை என்ற தனது ஆரம்பக்கதையொன்றினை மட்டுமே எழுதியுள்ளார். மறுமலர்ச்சியில் அ.ந. கந்தசாமியின் ஒரு சிறுகதைதானும் வெளிவரவில்லை. மறுமலர்ச்சி இயக்க த்துடன் அவர் இருந்தார் என்பதற்காக அவரை மறுமலர்ச்சி எழுத்தாளராக இனங்காண்பது இலக்கிய வரலாற்றுத் தவறாகும். உண்மையில் மறுமலர்ச்சிச் சஞ்சிகை மூலம் உருவாகிய எழுத்தா ளர்களென கு. பெரியதம்பியையும் தாழையடி சபாரத்தினத்தையும் மட்டுமே குறிப்பிட முடியும் மறுமலர்ச்சி சஞ்சிகை
நடாத்திய சிறுகதைப் போட்டியில்
இரண் டாம் பரிசினைப் பெற்ற சிறுகதைத் துறையில் பிரவேசித்த கு. பெரியதம்பி அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சியில் அம்மாண் மகள், குழந்தை எப்படிப் பிறக்கிறது, காதலோ காதல், எட்டாப்பழம், மனமாற்றம்,
16 NY
மல்லிகை
 

வீண்வதந்தி ஆகிய ஆறு சிறுகதை களை எழுதியுள்ளார். அவை சிறுகதை க்குரிய இலட்சணங்களைக் கொண் டவை. மெல்லிய மன உணர்வுகளை
எளிதான வசனநடையில் கூறும் ஆற்
றல் பெரியதம்பியிடம் இருந்தன. அவர் கதை சொல்பவராகவிருந்தாலும் ஒப்பள வில் அக்காலகட்டத்தின் சிறப்பான சிறுகதை ஆசிரியராக விளங்கியுள்ளார். விமர்சகர்களின் பார்வையில் இவர் அகப்படாது போனமை விசனத்திற்குரி யது. தாழையடி சபாரத்தினத்தின் சிறப் பான சிறுகதைகளாகக் கருதப்படும் ஆலமரம், தெருக்கீதம், ஆகிய இரண் டும் மறுமலர்ச்சியில் வெளிவந்துள்ளன.
தமிழகத்தில் சிறுகதைத்துறைக்கு மணிக்கொடி எப்படி புத்துக்கம் அளித் ததோ அதேபோல ஈழத்தில் சிறுகதைத் துறைக்கு மறுமலர்ச்சி புதியதொரு உத் வேகத்தை அளித்துள்ளது. உலகளா
விய தரத்திற்கு மறுமலர்ச்சியின்
சிறுகதைகள் அமையாவிட்டாலும் அவை வெளிவந்த காலகட்டத்தில் சிறு கதையின் வடிவத்தையும் செழுமையை யும் புரிந்து கொண்டு படைக்கப்பட்ட ஆக்கங்களாக உள்ளன. எனவே, மறும
லர்ச்சிச் சஞ்சிகையிலும் எழுதிய படை
ப்பாளிகளையும் ஈழத்தமிழ்ச் சிறுகதை வரலாற்றின் முன்னோடிகளெனச் சேர்த்துக் கொள்வதில் நியாயமுள்ளது.
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்க ளில் இருவராக இனங்காணப்படும் பாணன், பவன் ஆகியவர்கள் எவரெனத் தெரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது. இவர்கள் இருவரதும் சிறுகதைகள் மன தைப் பிடித்துக் கொள்ளும் மனிதாபி மானப் பிரச்சனைகளையும் சமூகத்தின் ஒரு களத்தினை அற்புதமாகக் காட்டும் தன்மையையும் கொண்டிருக்கின்றன.
அ.செ.மு. என்ற முருகானந்தன்
ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்குப் பெருமை கட்டிய எழுத்தாளர். அவரது வண்டிச்சவாரி ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் ஒன்றாகும். யாழ்ப்பான த்தின் மண்வாசனையை அற்புதமாகச் சித்திரிக்கின்றது. அவரது சிறு கதை கள் யாழ்ப்பாணச் சமூகக் களத்தில் மட்டுமன்றி மலையகக் களத்திலும் வரையப்பட்டிருக்கின்றன. புகையில் தெரிந்த முகம், காளிமுத்துவின் பிரஜா வுரிமை, மனிதமாடு என்பன அவரின் சிறந்த ஆக்கங்கள். கருவுக்குகந்த வார் த்தைகளைப் பாசாங்கற்ற முறையில் தேர்ந்தெடுக்கும் கலையை அவரது சிறு கதைகளில் காணலாம்.
ஈழத்தின் முன்னோடி எழுத்தாளர்க ளில் ஒருவராகக் கருதப்படும் சோ. சிவபாதசுந்தரம் தான் எழுதியவற்றிலும் பார்க்க ஈழகேசரியின் ஆசிரியராக விளங்கிய காலவேளைகளில் உருவாக் கப்பட்ட சிறுகதை எழுத்தாளர்கள் பலராவர். அவ்வாறான பெருமை இராஜ அரியரத்தினத்திற்குமுரியதாகும். இவர் கள் இருவரும் எழுதிய சிறகதைகள் எண்ணிக்கையில் குறைவாயினும் தரமா னவை. சிவபாதசுந்தரத்தின் ஆனந்த விகடன் சிறுகதையான தோட்டத்து மீனாட்சி குறிப்பிடத்தக்க சிறுகதையா கும். இராஜஅரியரத்தினத்தின் வெள்ளம் என்ற சிறுகதை ஈழத்தின் உன்னதமான சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படும். ஈழகேசரியில் 1945 இல் வயலுக்குப் போட்டார் என்ற தலைப்புடன் வெளி வந்தது. முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படவேண்டியவர் சோ. தியாக ராஜன் ஆவார். சோ. சிவபாதசுந்தரத் தின் சகோதரரான இவர் சூழ்நிலைக ளைக் காட்சிப்படுத்தி விபரிப்பதில் வல்லவராக விளங்கியமையை அவரது
並
mabóà

Page 11
சிறுகதைகளிலிருந்து அறிய முடியும். கலைச்செல்வி சிற்பி அவர்கள் கருது வதுபோல, சோ. தியாகராஜனின் இன் னொரு புனைப்பெயர் "பரிதி" என்பதா யின் சோ. தியாகராஜனின் சிறுகதைப் படைப்பின் காலகட்டம் 1934 ஆம் ஆண் டிற்குரியதாக மாறிவிடும். ஈழகேசரியில் பரிதி (அதாவது சோதி) என்ற புனைப் பெயரில் சில நல்ல சிறுகதைகளைத் தந்துள்ளார். எதிர்பாராதது என்ற சிறு கதை அவ்வகையில் விதந்துரைக்கத் தக்கதாகும்.
நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகனாகிய நவாலியூர் சோ. நடராஜன் எழுதிய பல சிறுகதைகளில் சிறப்பான இடத்தினைப் பெறுவது கற்சிலை என்ப தாகும். நவாலியூர் சத்தியநாதன் என்ப தும் இவராயின் இந்த முன்னோடியின் சிறுகதைப்பிரவேசக்காலம் 1934 ஆக மாறிவிடும். மாலினி, அபயன் ஆகிய சிறுகதைகள் சத்தியநாதன் என்ற பெய ரில் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன.
கனக செந்திநாதன், சு.வே.நாவற் குழியூர் நடராஜன் ஆகியோர் 1943களில் சிறுகதைத் துறைக்கு வந்தவர்களாவர். கவிஞராகக் கணிக்கப்பட்டிருக்கும் நாவற்குழியூர் நடராஜன் ஈழகேசரியிலும், மறுமலர்ச்சியிலும் சில சிறுகதைகளை எழுதியுள்ளார். கவிதா பூர்வமான நடை இவருக்குரியது. தமிழ் ஆசிரியரான கனக.செந்திநாதன் சிறு கதைத்துறையி லும், விமர்சனத்துறையிலும் ஆற்றிய பணி அதிகம். இவர் ஈழகேசரியில் "யாழ்ப்பாடி' என்ற புனைப்பெயரில் எழுதிய ஒரு பிடிசோறு என்ற சிறுகதை இவருக்கும் ஈழத்துச் சிறு கதைத் துறைக்கும் பெருமை சேர்த்ததாகும். செம்மண், கூத்து, வெண்சங்கு என்பன கனக செந்திநாதனின் மணியான சிறு கதைகள், நுண்ணிய அவதானிப்புடன்
8
கூடிய களவிபரணையையும் சமூக வாழ்வின் அவலங்களையும் இருப்பை யும் சித்திரிக்கும் திறனும் கொண்டன வாக கனக செந்திநாதனின் சிறுகதை கள் விளங்குகின்றன. சு.வே என்ற சு. வேலுப்பிள்ளை ஈழத்தின் முன்னோடிக
ளில் ஒருவர். பதினொரு சிறுகதைகள்
வரையில் ஈழகேசரியில் எழுதியுள்ளார். உருவகக்கதைத்துறையின், ஈழத்தின் முன்னோடி இவராவார். மண்வாசனை, வெறி, கிழவனும் வத்தகக்கொடிகளும் (இச்சிறுகதையின் ஆரம்ப தலைப்பு - கிடைக்காத பலன்) ஆகியன சு.வே. அவர்களின் தரமான சிறுகதைகளாகும்.
"சொக்கன் பழைய எழுத்தாளர். சோ. சிவபாதசுந்தரம், சம்பந்தன், இலங் கையர்கோன், சு.வே. வரதர், கண்க செந்திநாதன் வரிசையில் இடம்பெற்ற வர். பின்பு பொன்னுத்துரை, டானியல், டொமினிக் ஜீவா சந்ததியோடு ஒன்றான வர். அதைத் தொடர்ந்து யோகநாதன், பெனடிக்பாலன், செங்கை ஆழியான், செம்பியன் காலத்தில் அவர்களுடன் நின்றவர். இப்போதும் புதிய இளமையு டன் எழுதிக் கொண்டிருப்பவர். (நந்தி1972). 1947 களில் சிறுகதைத்துறைக் குள் வந்த சொக்கன் இன்னும் சிறு கதை எழுதிக் கொண்டிருக்கின்ற இளம் சந்ததியோடு எழுதிக்கொண்டிருக்கிறார். கடல், ஒழுங்கை, இழப்பு என்பன சொக்கனின் சிறந்த கதைகளாகும். சம் பவமும் மொழியும் முக்கியமெனக் கரு துபவர் சொக்கன் கருத்தும் கவர்ச்சியும் வாய்ந்த வசனநடையையும் சமுதாயப் பார்வையைத் தெளிவும் அவரது சிறு கதைகளில் காணலாம். சொக்கன் போலவே சு. இராஜநாயகன் அவர்க ளும் 1947 இலிருந்து 1998 வரை தொட ர்ந்து எல்லாப் பரம்பரையினருடனும் சிறு கதைகளை எழுதி வந்தவர். சமூக அநீதிகளுக்குக் குரல் தந்த முற்போக்
LDGLOGSGADES
 

காளரான இராஜநாயகத்தின் சிறுகதை களில் பொத்தல், நாகதோசம் என்பன சிறந்த கதைகளாம். தெரிந்த சொற்க ளைப் பயன்படுத்தி நனவோடை உத்தி யில் எழுதியவர் இராஜநாயகன். இந்த இருவரதும் சமகாலத்தில் சிறுகதைத் துறையில் பிரவேசித்து 1957 வரை தொடர்ந்து சிறுகதைகளை எழுதியவர் கசின் எனப்படும் க.சிவகுருநாதன் ஆவார். கசினின் சிறுகதைகளில் கருப் பொருளாகக் குடும்ப உறவுகளே முக்கி யம் பெற்றன. ஈழகேசரியில் மட்டும் இவரின் பதினான்கு சிறுகதைகள் வெளிவந்துள்ளன. அவற்றுள் வண்டி யில் வளர்ந்த கதை, மணியோசை, ஒரு சொட்டுக் கண்ணிர் ஆகியன சிறப் பானவை. கசின் அவர்கள் நிறையவே எழுதியுள்ள போதிலும் நவீன சிறு கதைப் போக்கின் தடத்தினை ஏனைய முன்னோடிகள் போல நன்கு தெரிந்து பிரயோகிக்கவில்லை. இயல்பான கதை சொல்லும் பாங் கில் தண் சிறு கதைகளை நகர்த்தியுள்ளார்.
1945 களில் சிறுகதைத் துறைக்கு வந்த இன்னொரு முன்னோடி எழுத்தா ளர் கே.கணேஷ் ஆவார். முற்போக்காள ரான அவர் எழுதிய சிறுகதைகள் மிகச் சொற்பமாகும். எனினும் அவரின் சத்திய போதிமரம் குறிப்பிடத்தக்க ஒரு சிறு 5605,
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் ஆங்கிலத்தில் தமிழ்மக்களது சமூக வாழ்க்கையையும் நடவடிக்கைகளையும் சமூகவியற் பண்புகளையும் சிறுகதைக ளாக்கிய இருவர் முன்னோடிகளாகவுள் ளனர். ஒருவர் மலையக எழுத்தாளரான சி.வி.வேலுப்பிள்ளை. மற்றவர் அழகு சுப்பிரமணியம். சி.வி.வேலுப்பிள்ளை 1930களில் எழுத்துலகில் பிரவேசித்த வர். மலையக மக்களின் சமூக வாழ்க்
கையின் இடர்களையும் அவற்றின் போராட்ட உணர்வுகளையும் உழைக் கப் பிறந்தவர்கள் என்ற ஆங்கிலச் சிறு கதைத் தொகுதியில் சிறுகதைகளாக
வெளியிட்டார். சி.வி.வேலுப்பிள்ளையின்
பார்வையும் பரிவும் மலையக மக்களில் நிலைத்திருப்பதுபோல அழகு சுப்பிர மணியத்தின் பார்வையும் பரிவும் யாழ்ப் பாண மண்ணில் நிலை கொண்டிருப்ப தைக் காணலாம். அவரின் சிறுகதை கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு சமூக மாந்தரை உலகச் சிறுகதை அரங்கிற் குக் கொண்டு வந்தன. அவரின் கணித வியலாளன் உலக இலக்கியத்தின் உன்னத சிறுகதைகள் என்ற தொகுதி யில் இடம்பிடித்திருக்கின்றது.
இருபதாம் நூற்றாண்டின் அந்தத்தில் வந்து நின்று கொண்டிருக்கும் நமக்கு நமது சிறுகதைத்துறையின் வளர்ச்சி நிலையை மதிப்பீடு செய்வதற்கு தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளின் கதை களைக் கவனத்திற்கெடுப்பது அவசிய மாகின்றது. மாடியை அடைவதற்குப் படிகளில் ஏறியே ஆகவேண்டும். ஈழத்து ச் சிறுகதை முன்னோடிகள் என என்னால் இனங்காணப்பட்ட இருபத்தை ந்து படைப்பாளிகளில் ஒரு சிலரது சிறுகதைகள் தொகுப்புக்களாக வெளி வந்துள்ளன. இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம், சி.வைத்தியலிங்கத் தின் கங்காகிதம், சம்பந்தனின் சிறு கதைகள், வரதரின் கயமை மயக்கம் (வரதர் கதைகள்), அ.செ. முருகானந்த னின் மனிதமாடு, இரசிகமணி கண்க செந்திநாதனின் வெண்சங்கு, சு.வேலுப் பிள்ளையின் மண்வாசனை, தாழையடி சபாரத்தினத்தின் புதுவாழ்வு, சொக்க னின் கடல், கசினின் சிறுகதைகள் என்பன சிறுகதைத் தொகுதிகளாகவுள் ளன. அ.ந.கந்தசாமி, சு.இராஜநாயகன், சுயா, ஆனந்தன், பவன் முதலானோரின்
N 19
DaioaSapas

Page 12
சிறுகதைத் தொகுதிகளும் வெளிவரில் ஈழத்தின் சிறுகதைத்துறையின் இருப்பி னைக் கணிப்பிட உதவியாக அமையும்.
ஈழத்தின் சிறுகதை முன்னோடிகள் இந்த மண்ணில் ஆழக்காலூன்றி நின்று சமூகத்தினைப் பார்த்தார்கள் என்பது அவர்களின் சிறுகதைகளிலிருந்து புலனாகின்றது. கற்பனை ரதத்திலேறி சஞ்சரிக்கின்ற சிறுகதைகள் ஏராளமாக அவர்களிடம் இருக்கின்ற போதிலும் தாம் வாழ்கின்ற சமூகத்தின் பிரச்சினை களையும் தீர்வுகளையும் சமூகப்பொறுப் போடு பல தரமான சிறுகதைகளில் சித்திரித்துள்ளனர் என்பதை மறுத்தற் கில்லை. சமூகத்தின் எரியும் பிரச்சி னைகள் அவர்களின் சிறுகதைகளில் வெளிவந்திருக்கின்றன. குடும்ப உறவுக ளின் ஊடலும் கூடலும் மிக நளினமாக அவர்களின் சிறுகதைகளில் பரவியிருக் கின்றன. வாழ்க்கையில் நம்பிக்கையை யும் திருப்தியையும் ஊட்டத்தக்க செய்திகளை அவர்கள் தம் சிறுகதைக ளில் பெய்திருக்கின்றனர். அவர்களின் சிறுகதைகளில் சொல்லிய விடயங்களி லும் சொல்லாத சங்கதிகள் பல தொக்கி நிற்கின்ற திறனைக் காண லாம். நம்பிக்கை வறட்சியை அவர்க ளின் கதைகள் ஏற்படுத்தாது வாழ்க்கை யில் ஒரு பிடிமானத்தினை அவை சுட்டி நிற்கின்றன. இலக்கியத்தேடலும் கலை யழகும் ஆங்காங்கு விரவியுள்ளமை மறுப்பதற்கில்லை. அவர்கள் சமூகத்தி னைப் புரிந்து கொண்டு சமூகத்திற்காக எழுதினார்கள்.
நமது சிறுகதை முன்னோடிகளின் படைப்புக்களை ஆராயும்போது, அவை நம்மைப் புடமிடுவதற்கான சந்தர்ப்பங்க ளைத் தருகின்றன. சிலவேளைகளில் வளர்ச்சி என்ற பெயரில் நாம் கட்டி வைத்திருக்கும் போலியான கட்டுமானங்
20
N
களைத் தகர்க்கவும் செய்யலாம். போதாமைகளை உணர்த்தவும் செய்ய லாம். போலித்தனங்களை உதறவும் செய்யலாம். எவ்வாறெனினும் உமது பழைய வற்றை ஆவணப்படுத்தி மீளாய்வு செய்வதென்பது எம்மைப்
புடமிடுவதற்கு இட்டுச் செல்லும்
என்பதை நாம் மறந்து விடக்கூடாது" எண் ற எனது நண்பன் சுந் தரம் டிவகலாலாவின் மறுமலர்ச்சிக் கதைகள் நூலின் பதிப்புரை வாசகங் கள் மீண்டும் நினைவில் வருகின்றது.
விடை தெரியா வினா
- அஷரப் சிஹாப்தின் -
தத்தித் திரிகையில் தாயார் கேட்டார்.
பத்து வயதில் பாட்டி கேட்டார்.
LTL g|T60)6)ulo) வாத்தியார் கேட்டார். Teen age 9,60Tg5 lb தந்தையார் கேட்டார். Tuition முடிந்ததும் தோழன் கேட்டான். அலுவலகத்தில் அதிகாரி கேட்டார்.
மணமாகியதும் LD60)606i (835 LT6i.
பின்னர் எனது புதல்வன் கேட்டான். தெருவைத் தொட்டதும் ராணுவம் கேட்டது. எங்கே போகிறாய்?" S),LDITLibநான் எங்கே போகிறேன்?
LIDáŝo68a3Da-E
 

@* "تقسيمات
ஒரு பிரதியின் முனுைமுனுைப்புக்கள்
கவிதையை மக்களிடம் கொண்டு போகும்ஆசை எல்லா கவிஞர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதற்கான ஊடகம் எதுவென்று கண்டுபிடிப்பது இன்றைய கவிஞனின் கடமையாகிறது.
கவிதையை மக்களிடம் கொண்டு போவதில் திரையிசைப்பாடல்களின் பங்கு அதிகம் போல் பிரமை ஒன்று இருக்கிறது. ஆனால், கவிதையை அது சீரழிவுக்கு கொண்டு போய்விட்டது என்பது தான் சரி1
பிறகு என்ன மார்க்கம்?
கவிதையை மக்களிடம் கொண்டு (8LITE.
கவியரங்க மேடைகள்!
அந்த நாளில் கவியரங்கங்கள் நன் றாக ரசிக்கப்பட்டன என்றும், இடைக் காலத்தில் கவியரங்குகளுக்கு மவுசு குறைந்து விட்டது என்றும், இப்பொழுது கவியரங்கங்களுக்கு மவுசு வந்து விட்டது என்றும் பேசப்படுகிறது.
"மவுசு கூடவுமில்லை!
குறையவுமில்லை!
அன்றும் சரி
இன்றும் சரி
கவியரங்கம் என்ற வடிவத்தின் தன்மையும் வெளிப்பாட்டுப் பாங்கும் மாறிவிட்டன என்னவோ உண்மைதான். "கவிதா நிகழ்வுகள் காலத்தின் தேவை
யாக முன்நிற்கின்றன. இடைப்பட்ட காலத்தில் கவியரங்கத்திற்கு மவுசு குறைந்ததற்கு காரணம்- அன்று பாடப் பட்ட பாடுபொருள் மனசுக்கு நெருக்க மாக இருக்கவில்லை என்பதுதான் சரி யான காரணம். இன்று வாழ்வுநிலை மாறிவிட்டது. அதன் பிரச்சனைகளைத் தான் பாடவேண்டிய நிர்ப்பந்தம் கவிஞ னுக்கு. ஆகையால் இன்று கவியரங்கக் கவிதா நிகழ்வுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு. உதாரணத்திற்கு கம்பன் கழக இரு கவியரங்குகளில் நிறைந்து காணப்பட்ட கூட்டம். மேலும், அடியேனின் அனுபவத்தின் வழியாக கண்டது. இலங்கையின் தென்பகுதி - நீர்கொழும்பு, அட்டுபூகம, மினுவாங் கொடை, நாரமல மற்றும் பிற இடங்க ளில் கவியரங்கக் கவிதைகளை மக்கள் வரவேற்கும் விதம்
அரங்கக் கவிதைகளில் சொல்லும் முறைமை முக்கியத்துவம் பெறுகிறது என்று சொன்னாலும் சொல்ப்படுகின்ற விடயம் இன்றைய பிரச்சனையாக இருக்கும்பொழுது பார்வையாளனின் கவனம் கவிதை அரங்கின்மீது படிகிறது.
இந்த அரங்க முயற்சிகள் தான்
வீச்சான கவிதைகளின் வாசகர்களின்
தொகையைக் கூட்டும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.
並 2.
ipcoaಣಾ

Page 13
Ց)|516ւI60)J
மேடையைக் கவிதையாகப் பயன்
படுத்தும் கவிஞர்கள் கவியரங்கத்திற் கான கவிதைகளின் வெளிப்பாட்டுப் பாங்கினை - அதாவது கவிதை உட் கொண்டிருக்கும் செய்தி பார்வையாள னிடம் இலகுவாக சென்று அடையும் வகையிலான வழி முறையை தம் வசம் வைத்திருப்பது நல்லது.
*
நிறையவே தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள் நமக் காக வந்துவிட்டன. சந்தோஷமாய் இருக்கிறது. 24 மணித்தியாலமும் தமிழ் கேட்டு (கெட்டு) கொண்டிருக்கிறது. (சோகமாகவும் இருக்கிறது)
பல இளைஞர்கள், முஸ்லிம் பெண் கள் அறிவிப்பாளர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை தொலைபேசி நிறுவனத்திற்கு இந்தத் தனியார் வெகுசன தொடர்பு சாதனங்க ளால் நல்ல வருமானம் வெறுமனே - சினிமாப்பாட்டுகளை மட்டுமே ஒலி பரப்பாமல்/ஒளிப்பரப்பாமல் அதன் மூலம் சினிமா பாடல் ரசிகர்களை புத்தி சாலிகளாக மாற்றும் நல்ல காரியத் தையும் இந்த நிலையங்கள் செய்து வருகின்றன. பாடசாலைக்கு போக வேண்டிய நேரத்தில் மாணவ மாணவி கள் தொடர்பு கொண்டால் அத் தொடர்பை அறுத்து விடுவது நல்ல விடயம்தான்.
சினிமாப் பாடல்களுக்கு அப்பாலும் இன்னும் பரவலான விடயங்களில் இந்த நிலையங்கள் கவனம் செலுத்த வேண் டும். எந்தெந்த நிகழ்ச்சிகளுக்கு எவர் எவர் பொருத்தமானவர்கள் எனத் தேடி கண்டுபிடித்து நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும் அறுவைகளை தவிர்க்க வேண்டும் பல புதிய குரல்கள் புதிய 22
திறமைகளையும் இந்த ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. ஆனாலும், எந்த நிகழ்ச்சியை எந்த நேரத்தில் ஒலிபரப்புவது/ஒளிப்பரப்புவது என்பதை உணர்ந்து நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்க வேண்டும்.
இல் லையென்றால் பின் வரும் சம்பவம் போன்ற சம்பவங்கள் தமிழ்பேசும் மக்கள் வீடுகளில் நடந்து கொண்டிருக்கும்.
சம்பவம் இதுதான்.
ஒரு நாள் காலை வேளை - ஒரு நண்பனை அவசரமாக காணச் சென் றேன். காலையிலே வீட்டில் அவனுக் கும் மனைவிக்கும் சண்டை காரணம் கேட்டு அறிந்தேன். அவன் வேலைக்குப் போக அணிந்து செல்லும் சேர்ட்டை மனைவி ஜயின் பண்ணி வைக்காமல் தனியார் வானொலி நிலையத்துடன் தொடர்பு கொண்டு பாட்டு விரும்பி கேட்டு கொண்டிருந்தாளாம்.
வீட்டுக்கு வீடு
வானொலி தமிழ் ஒலிக் கதான் வேண்டும்
அதனால் வீட்டுக்குள் வீட்டுக்குள் சண்டை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது தனியார் வானொலி தொலைக்காட்சி நிலையங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. இல்லையா?
女
இலக்கிய கூட்டங்களுக்கு ஆட்கள் குறைவாகவே வருகிறார்கள் என்ற குறை நம் எல்லோருக்கும் இருக்கிறது. "பிரமாண்டமான தயாரிப்புகளாக ஒழுங் கமைக்கப்படும் கூட்டங்களுக்கு, கூட் டம் நன்றாகவே சேர்கிறது என்று தான்
NY
DaioaSoar,

சொல்ல வேண்டும். தனிநபர் அமைப்பு கள் (ஒரே ஒருவர் இருப்பார் அமைப்பா ளராக) ஒழுங்கு செய்யப்படும் கூட்டங்க ளில் கூட்டங்களே வருவதில்லை.
ଶ୍ରେଗୋit?
இலக்கிய வாதிகள் கூட்டும் கூட்டத் திற்கு ஆட்கள் வராமல் இருப்பதற்கு முக்கிய காரணம், கூட்டம் ஒழுங்குசெய் யும் So&Soவுடன் இலக்கிய ரீதியான உடன்பாடின்மை அல்லது So&SO இலக் கியவாதியுடன் உடன்பாடு கொண்டவர் கள் பெண்டாட்டி பிள்ளைகளுடன் Gale Face, Zoo க்கோ போய் இருப்பார்கள். (ஏனெனில் ஞாயிற்றுக்கிழமைகளில் தானே நமது பெரும்பாலான கூட்டங்கள் நடக்கின்றன) இலக்கியவாதிக்கு அதி கம் கூட்டம் அவசியமில்லை. ஏனெனில் அவன் கற்பனைவாதி-வந்திருக்கும் 10 பேரை பார்த்து ஒவ்வொருவரும் 100 பேருக்கு சமம் என மனச்சமாதானம் பண்ணிக் கொள்வான். அதை பகிரங்க மாய் சொல்லி "கொஞ்சப்பேர் வந்திருக் கும் கூட்டத்திற்கு வந்திருக்கிறோமே” என உள்ளுக்குள் வருந்திக் கொண்டிரு க்கும் வருகை தந்தவனை சந்தோஷப் படுத்தி விடுவான்.
சிலபேர் இலக்கியத்தின் மீது மிகவும் ஆர்வம் கொண்டு இலக்கியக்காரர்களு டன் சரியான தொடர்பு இல்லாத நிலை யில் கூட்டம் ஒழுங்கு செய்வோர் நிலை ரொம்பவும் மோசம். அவர்கள் மண்டபத் திற்கு, மைக்குக்குச் செலவழிக்கும் பணமும் விரயம். இதில் மேலே அத்த கைய ஒருவருக்கு ஒரு பத்திரிகை நிருபர் அல்லது புகைப்படப்பிடிப்பாளர் பாய்ந்துவிட்டால் மேற்படி நண்பர் ஒழுங்குசெய்த (அதே 10பேர் வந்த கூட்டத்தை தான் சொல்கிறேன்) கூட்டத் திற்கு வந்த 10 பேரை படம் பிடித்து "so&s0 ஒழுங்கு செய்த கூட்டத்திற்கு
வருகை தந்த கூட்டத்தினரின் ஒரு பகுதியை காணலாம் என்று பட குறிப்பு வேறு போட்டு மேற்படி நண்பர்களை வீணாய் செலவழிக்க ஊக்கப் படுத்துவார்கள்.
இன்னொரு அவலமும் இருக்கிறது. மேற்படி நண்பரின் நண்பர் ஒரிருவர், மினுவாங்கொடைபாணந்துறை போன்ற ஏதாவதொரு தூரத்து இடத்திலிருந்து 10 பேருக்கு பேசி போவார்கள்.
வருகை தருவது 10 பேராக இருக் கட்டும். பேச்சாளர்களாக வரும் நண்பர் களும் அரைத்த மாவையே அரைக்கி றார்கள். அது அவர்கள் பிழை இல்லை என்று தான் சொல்வேன். கூட்டம் ஒழுங்கு செய்யும் நண்பர்களின் தவறு தான் அது மீண்டும் மீண்டும் ஒரே பேச்சாளர்களை அழைத்துக் கொண்டி ருந்தால் இப்படிதான் நடக்கும். கூட்டம் ஒழுங்கு செய்த நண்பர் தனக்கு நண்பர் என்பதனால் பேச்சாளர் நண்பர் மறுதலி க்கமுடியாமல் 10பேருக்கு பேசவருவார். அந்த 10பேரிலும் 5 பேர்தான் இலக்கிய வாதி மற்ற 5 பேர் கூட்டம் ஒழுங்கு செய்தவரின் நண்பர்களாக இருப்பார் கள். அவர்களுக்கு நாம் பேசும் "இலக் கியபளாய்" விளங்காது. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று இலக்கிய கூட்டங்கள். 10பேரில் 5பேராக உட்கார்ந்து இலக்கி யவாதிகளுக்கு அன்றே வேறு இலக் கிய கூட்டத்திற்கும் போக வேண்டும். "நாம் 5 பேர் எழுப்பி விட்டால் 5 மிஞ்சு வார்கள் பாவம் சுட்டம் ஒழுங்கு செய்த நண்பர்” என நேசத்தின் காரணமாக உட்கார்ந்து இருப்பார்கள்.
இலக்கியவாதிகளுக்கும் இலக்கியத் தின் ஆர்வம் கொண்டவர்களிடமும் நாம் வேண்டுவது இதுதான். இன்றைய யுகம் இயந்திரயுகம் நேரம் பொன்னானது இலக்கியத்தின் பேரால் பணத்தையும்
/நேரத்தையும் வீணடிக்காதீர்கள் , paioaboats

Page 14
ஈழத்து இலக்கியவாதிகளின் இனிய நண்பர்களில் ஒருவரான புத்தகக்கடை பூபாலசிங்கம் தம்பதியினரின் கடைசிப் புத்திரியான செல்வி முல்லை அவர்களுக்கும் திரு.குமாரசாமி தம்பதிகளின் புதல்வன் செல்வன் தயானந்தன் அவர்களுக்கும் சமீபத்தில் கொழும்பில் புதிய கதிரேசன் மண்டபத்தில் திருமணம் மிகமிக விமரிசையாக நடந்தேறியது.
மல்லிகையின் மனமார்ந்த பாராட்டுக்களை மணமக்களுக்குத்
தெரிவிப்பதி
ஈழத்து இலக்கியவாதிகளின் பெருமதிப்பைப் பெற்றுக்கொண்டவரான ‘துரைவி? பதிப்பக துரை விஸ்வநாதன் தம்பதியினரின் புதல்வி ஆனந்தச்செல்வி அவர்களுக்கும், திரு. சர்வா ரெட்டி தம்பதியினரின் புதல்வர் சரவணகுமார் அவர்களுக்கும் 176.99 அன்று திருச்சியில் திருமணம் வெகு கோலாகலமாக நடைபெற்றது.
புதுமணத் தம்பதிகளை மல்லிகை மனம் மகிழ்ந்து வாழ்த்துகின்றது.
எழுத்தாளர்களினது பேரன்பைப் பெற்றுக்கொண்ட திரு. சுந்தரம் டிவகலாலா தம்பதியினரின் புதல்வி அம்பிகை அவர்களுக்கும் போமன் தம்பதிகளின் மகன் விக்டர் ஜீவரட்ணம் போமன் அவர்களுக்கும் 10.7.99 அன்று கொழும்பு புதிய
கதிரேசன் மண்டபத்தில் மிகச் சிறப்பாகத் திருமணம் நடைபெற்றது.
மணமக்களுக்குச் சகல செளபாக்கியங்களும் கிடைக்க வேண்டுமென
மல்லிகை வாழ்த்துகின்றது.
கம்பன் கழகக் குடும்ப உறுப்பினரும் திரு.இ கனகசபை தம்பதியினரின் புதல் வருமான ரகுபரன் அவர்களுக்கும் திரு கே.கே. சோமசுந்தரம் தம்பதியினரின் புதல்வி சிவாநந்தி அவர்களுக்கும் 14.7.99 கொழும்பு மயூராபதி
சுப்பம்மாள் மண்டபத்தில் மங்களகரமாகத் திருமணம் நடைபெற்றது.
திருமணத் தம்பதிகளை மனமகிழ்ச்சியுடன் வாழ்த்துவதில் மல்லிகை
பெருமையடைகின்றது.
 

L L L L L S L S S L S L SS S
27.6.99 ஞாயிறு அன்று வடக்கு உஸ்மான் சாலையிலுள்ள ந்யூ புக் லாண்ட்ஸ் மண்டபத்தில் மாலை 6 மணி யளவில் மல் லி கை ஆசிரியரும் ஈழத்தின் பிரபல எழுத்தாளருமான டொமினிக் ஜீவா அவர்களினது 73 - வது பிறந்த நாளையொட்டி அன்னாரால் எழுதி 'மல்லிகைப் பந்தல் பிரசுரத்தின் மூலம் வெளிவந்திருந்த அவரது சுய சரிதை நூலான எழுதப்படாத கவிதை க்கு வரையப்படாத சித்திரம் புத்தகத் தின் வெளியீட்டு விழா மிகக் கோலாக லமாக நடந்தேறியது.
இப்புத்தகத்தின் வெளியீட்டுக்குத் தமிழகத்தின் பிரபல நாவலாசிரியர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தலைமை தாங்கிச் சிறப்பித்தார்கள்.
அவர் தமது தலைமையுரையில் மிக அழகாகவும் கவர்ச்சியாகவும் எழுத்துப் பிழைகளற்றும் இந்த நூல் இலங்கை யில் அச்சியற்றப் பெற்றுள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும். அத்துடன் ஒரு புதுமை என்னவென்றால் இலங்கையில் மல்லிகைப்பந்தல் மூலம் வெளிவந்து ள்ள இந்த வாழ்க்கைச் சரித நூலுக்கு
D6
தப்படாத கவிதைக்கு
வரையப்படாத சித்திரம்
錢
քրքրքրքրքրքրքրքրքրքրքրքրքրքրքրքր
சென்னையில் இங்கு இன்று எனது தலைமையில் வெளியீட்டு விழா நடை பெறுவது பெரும் புதுமையாகும். அதிலும் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவாவினது 73 வது பிறந்த தினத்தின் ஞாபகார்த்தமாக இந்நூல் வெளியிடப்படுவது ஒரு சிறப்பம்சமாகும் எனக் குறிப்பிட்டார்.
பிரபல நாவலாசிரியர் அசோகமித் திரன் இந்த நூலை வெளியிட்டு வைத்தார். சிறுகதை, நாவல், கவிதை என நூல்கள் வெளிவந்து கொண்டிருக் கும் இந்தக் காலத்தில் ஒர் எழுத்தாள னுடைய சுய வாழ்க்கை வரலாறு வெளிவருவது வரவேற்கத்தக்கதாகும். அதிலும் ஓர் இலங்கைத் தமிழ் எழுத்தா ளரின் நூலை இங்கு வெளியிட்டு வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன என்றார்.
அசோகமித் திரண் வெளியிட்டு வைத்த நூலின் முதற்பிரதியை, இந்த ஆண்டு இலக்கியத்திற்காக சாஹித்திய அகடமிப் பரிசைப் பெற்றுக் கொண்டவ ரான திரு.சா.கந்தசாமி பெற்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்ததுடன் நூலின்
25
リ。

Page 15
சிறப்பம்சங்களையும் தொட்டுக் காட்டிப் @L円6TT前,
அதன் பின்னர் தமிழகத்தின் தலை சிறந்த படைப்பாளியான ஜெயகாந்தன் அவர்கள் கருத்துரை வழங்கினார்.
டொமினிக் ஜீவாவும் நானும் சரஸ்வதி
காலத்து எழுத்தாளர்கள். அவரையும் அவரது சிந்தனைகளையும் நான் சரஸ்வதி மூலம்தான் முதன் முதலில் தெரிந்து கொண்டவன். நாற்பது ஆண்டு களுக்கு மேலாக நாமிருவரும் நல்ல
நண்பர்கள். இவரும் சார்புநிலை எழுத்
தாளர்தான். இந்த நூல் படைப்பிலக்கிய மல்ல. படைப்பிலக் கியவாதியின்
சொந்த வாழ்க்கையை விஸ்தாரமாக
விவரித்துச் சொல்லும் படைப்பு அப்படி யொரு வாழ்க்கைச் சரித நூலை இலங் கையில் உருவாக்கி, தனது 73 - வது பிறந்தநாள் ஞாபகார்த்தமாக அதைச் சென்னைக்குக் கொண்டு வந்து இங்கு அதன் வெளியீட்டு விழாவை இங்கு வெகு சிறப்பாக நடத்த உதவிய நண்பர் ஜீவாவை நீண்ட கால நண்பன் என் கின்ற முறையில் மனமாரப் பாராட்டுகின்றேன்' என்றார்.
தனது ஏற்புரையில் நூலாசிரியர் டொமினிக் ஜிவா தெரிவித்ததாவது: எனது நெஞ்சுக்கு நெருக்கமானவர்கள் இங்கு நேரடியாக வந்து இவ்வெளியீட்டு விழாவில் பங்குபற்றியதையிட்டும் என்னைக் கனம் பண்ணிக் கெளரவித்த தையிட்டும் மெய்யாகவே பெருமைப்படு கின்றேன். இந்தக் கெளரவம் எனக்கான தனிக் கெளரவமாக நான் கருதவி ல்லை. எனது தேசத்தின் சகல எழுத் தாளர்களையும் கனம்பண்ணியதாகவே இதைக்கருதி ஏற்றுக்கொள்ளுகின்றேன்.
இலங்கையில் இந்த நூலை உரு வாக்கும் காலத்திலேயே இந்தப் புத்தக த்தைச் சென்னையில் எனது பிறந்த
26
\?
நாள் ஞாபகார்த்தமாக வெளியிட்டு, வெளியீட்டுவிழா நடத்த வேண்டும் என்ற ஆதார முயற்சியின் வெளிப்பாடாக நான் திட்டமிட்டுக் காரியமாற்றினேன்.
இங்கு இந்த நூல் வெளியிட்டு வைக்கப்படுவது எனது வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நாளாகும். அதிலும் எனது இளமைக் காலம் தொட்டே என்னுடைய நண்பராக விளங் கிவரும் நண்பர் ஜெயகாந்தன் இந்த விழாவுக்கு வருகை தந்து என்னை வாழ்த்திப் பேசிப் பாராட்டியது என் வாழ் க்கையில் என்றுமே மறக்க முடியாத சம்பவமாகும். என் நெஞ்சைச் சிலிர்க்க வைக்கிறது.
என்னைத் தெரிந்தவர்களும் என்னை நெஞ்சார நேசிப்பவர்களும் தமிழகத்தில் நிறையப் பேர் உள்ளனர். அதிலும் மல்லிகைச் சஞ்சிகையின் சுவைஞர்கள் அவர்களில் அநேகர். அவர்களது கைகளுக்கு எனது வாழ்வு சென்றடைய வேண்டும் என்பதும் இந்த வெளியீட்டு விழாவின் உள் ஆதார நோக்கங்களில் ஒன்று.
தமிழக, ஈழத்து, மலேசிய , சிங்கப்பூர், புலம் பெயர்ந்த அத்தனை சிந்தனாவாதிகளின் ஒருங்கிணைப்பின் மூலம்தான் நாம் நமது மொழியை ஒரு புது யுகத்திற்குரிய பாஷையாக உரு வாக்க முடியும் என நம்புபவன் நான். அடுத்து வரவிருக்கும் கணனி யுகத்தி ற்கு நம்மை, நமது மொழியை ஈடுகொடு
த்து வாழ நாமனைவரும் இணைந்து
பிணைந்து இயங்கிச் செயல்படுவது தான் சரியான மார்க்கமாகும்.
தியாகராயநகர் இலக்கியச் சங்கத் தின் ஒத்துழைப்புடன் நர்மதா அதிபர் ராமலிங்கம் இவ்விழாவைச் சிறப்பிக்க எடுத்துக் கொண்டுள்ள முயற்சியை அனைவரும் பாராட்டினர்.
DaioaSadas
 

கோடை அகன்று குளிர் சூழ்ந்த வேளையில், ஈழத்தின் மலையக குளிர் | 60) LD60) U JULÓ LIGT 60) LD60DULJLL LÊ IS) TESI (35 வாழும் மக்களின் தரிசனங்களையும் தமது எழுத்தில் பதிவு செய்து கவனத் திற்குள்ளான படைப்பாளி திரு ஞான சேகரன் இங்கு வருகை தந்தார்.
முற்கூட்டியே கடிதம் எழுதிப் புறப் பட்டிருந்தால் விரிவான இலக்கிய விழாவே நடத்தியிருக்கலாம். ஆனால், அவர், சிட்னியிலிருந்து தொலைபேசி யில் தகவல் தந்த பின்பே - அவுஸ்தி ரேலியாவில் அவர் பாதம் பதிந்திருக்கி றது என்பதை அறிய முடிந்தது.
"மெல்பனுக்கு வாருங்கள், இலக்கிய சந்திப்பு ஒழுங்கு செய்வோம்" என அழைப்பு விடுத்தேன்.
வருகை தந்தார். எமதில்லத்தில் நடந்த சுவையான இலக்கிய சந்திப்பி லும் கலந்து கொண்டார்.
அவுஸ்திரேலியாவில் தமிழ் உலகம், Tamli World eläluu 95 pä56)6T (666s யிட்டவரும், தமிழ் மொழி இலக்கண
ஆய்வுகளில் கணனியூடாக ஈடுபடுபவரு
மான வைத்திய கலாநிதி பொன்.சத்திய நாதன், சட்டத்தரணி செ.ரவீந்திரன், 'உதயம்' பத்திரிகிைன் வெளியீட்டாளர்
Dr.நடேசன், கலைஞர் மாவை நித்தியா னந்தன், இலக்கிய ஆர்வலர் திரு.சிவ சம்பு, அவுஸ்திரேலிய விக்டோறியா மாநில இலங்கைத் தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி சுழரீஸ்கந்த ராசா, எழுத்தாளர்கள் திருமதிகள் அருண் விஜயராணி, புவனா இராஜரட் ணம், பாமினி செல்லத்துரை, இலக்கிய ஆர்வலர் எஸ்.ஏ.குணரட்ணம், தமிழகத் திலிருந்து வருகை தந்த திரு. மலைய ப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்துள்ள திருஞானசேகரனின் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் சந்திப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஈழத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த ஞானசேகரன் - மலையகத்தில் நீண்ட காலம் வாழ்ந்து குருதிமலை, லயத்துச் சிறைகள், கவ்வாத்து முதலான நாவல் களை மலையக மக்களின் வாழ்வுப் பின் னணியுடன் வெளியிட்டவர். அத்தோடு புதிய சுவடுகள் என்ற நாவலை வடமாகாணப் பின்னணியுடன்
அங்கு எரியும் பிரச்சனையாகத் திகழ்ந்த சாதிப்பிரச்சனையை பகைப் புலமாகக் கொண்டு படைத்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பு காலதரிசனம் சிறுகதைத் தொகுதியை வழங்கியவர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்பு மல்லிகைப்பந்தல் இவரது சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறது.
並 27
LDGLOGSGODāES

Page 16
ஆயினும் இவரது எந்தவொரு கதையும் ഥേീൺ (ിഖങിഖ] ഖിബ്ലെ, 61ങ]
வியப்பான தகவலையும் இந்தப் புதிய
தொகுதி வாயிலாகத்தான் அறியமுடிகி றது என்று ஞானசேகரனை அறிமுகப் படுத்திப் பேசினேன்.
தொடர்ந்து இலக்கியக் கலந்துரை யாடல் நடைபெற்றது.
கேள்விகளும் எழுப்பப்பட்டன. 60 சதவீதமான அந்நிய செலாவ ணியை இலங்கைக்குப் பெற்றுத் தரும்
மலையகம் வாழ் தமிழ் மக்கள் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், வேலைவாய்
ப்பு வசிப்பிடம் முதலான அடிப்படைத் தேவைகளில் மிக மிகப் பின்தங்கியிருக் கும் போது - அதற்கான அடக்குமுறை வாழ்வுக்கு எதிராகபோராடி உரிமையை நிலைநாட்டும் போர்க்குணம் மலையக த்தில் தோன்றத் தவறியதற்கான தாற்ப ரியம் யாது? என்றவினா எழுப்பப்பட்டது சரியான தலைமை மலையக மக்க ளுக்கு கிட்டாமல் போனதும் - தொழிற் சங்கங்களே ஏட்டிக்குப் போட்டியாகச் செயல்பட்டு - அம்மக்களின் போர்க்குண த்தைப் பலவீனப்படுத்தி இருக்கக்கூடும்
என்ற பதிலும் பகிரப்பட்டது.
மலையகத் தமிழ் மக்கள் வாழும் சூழ்நிலையும் சுற்றுச்சூழல் அவர்களின் உணர்வுகளைச் சிறைப்படுத்தி இருப்ப தும் சுட்டிக் காட்டப்பட்டது.
எனினும் - ஈழத்து இலக்கிய வளர்ச் சிக்கு மலையகப் படைப்புகள் வழங்
கிய பங்களிப்பு குறித்தும் கலந்துரை யாடலில் விரிவாக பேசப்பட்டது.
ஞானசேகரன் தமது புதிய சிறு கதைத் தொகுதியில் மலையக மக்க ளின் வாழ்வை மாத்திரம் சித்திரிக்கா மல், கூர்மையடைந்து நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இனப்பிரச்சனை சம்பந்தப்பட்ட கதைகளையும் பதிவு செய்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப் படும் கலை, இலக்கிய, தமிழ் கல்விப் பணிகளையும் ஈழம் வாழ் மக்களின் புனர்வாழ்வுக்காக மேற்கொள்ளப்படும் பொதுப் பணிகளையும் ஞானசேகரன் கேட்டறிந்து கொண்டார்.
விக்டோறியா மாநிலத்தில் இயங்கும் பாரதி பள்ளிக்கும் அவர் விஜயம் செய்தார். திருமதி பாலம் லஷமணன் அவர்களையும் சந்தித்தார்.
ஞானசேகரனின் அவுஸ்திரேலியப் பயணம் பயன் மிக்கதாக இருந்தது என்றே கருதலாம்.
இது இவ்விதமிருக்க - எழுத்தாளர் திருமதி பாமினி செல்லத்துரை எழுதிய 'சித்தார்த்தனின் சிதைவு நாவல் வெளியீடு இங்கு விரைவில் நடைபெற உள்ளது.
அண்ணாவியார் இளையபத்மநாத னின் நெறியாளர் கையில் ஒரு பயணத்தின் கதை', 'வட்டக்களரியில் இங்கு அரங்கேறவுள்ளது.
டொமினிக் ஜீவா சிறுகதைகள் 50 சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு நூல் முக்கியமாக பள்ளிக்கூட, கல்லூரி, பல்கலைக்கழக நூல்நிலையங்களில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம் - இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியிடு -
28
DaioaSadas
 

ElenLui 2 liesi direi
பெக்கோ வகைத் தேயிலைக்குப் பெயர் போனது ஷோலன்ட். அதனாலே பெயர் பெற்றவர் தோட்டத்துரை. அவரு டைய பங்களா மேட்டுப் பாங்கான நிலத் திலே பச்சைப் பசேலென்ற புல்வெளிச் சூழலில் அமைந்திருந்தது. பங்களாவை பராமரித்திட நான்கு தினக் கூலி வேலையாட்கள் அமர்த்தப்படுவதுண்டு.
பெரியசாமியே பங்களாவின் நிரந்த ரக் கூலியாள். துரையினதும் துரைசா னியினதும் மனம் கோணாமல் நடந்திடு வான். ஆதலினால் மாதம் முழு நாட்க ளும் பெயர்ப் பதிவு கிடைத்திடும். தோட்டத்துரை வெட்டும் விஷயம் பெரியசாமிக்குப் புரியும் வாய்ப்பே கிடை யாது. ஏனையவர் சிலவேளைகளில் பூங்கொம்பர்களை வெட்டி வேலை செய் வார்கள். பட்டர் ட்புறுTட் மரத்திலேறிப் பழங்களைப் பிடுங்கிக் கொடுப்பார்கள். குரோட்டன் செடிகளைக் கத்தரித்துப் பசளையிட்டுப் போவார்கள். தினந் தோறும் பங்களாவை சுற்றும் குரங்குக ளாகவே தோட்டத்துரை கருதுவார்.
பெரியசாமியின் ஒரே மகன் பாலகிரு வஷ்ணன். பசறையிலேயுள்ள பங்களா ஒன்றில் வேலைக்கு விட்டிருந்தான். போலியோ வந்ததால் பாலகிருஷ்ண னின் கால்கள் சற்றே முடங்கிப் போயின. இயல்பான பால்ய வாழ்வினை வாழ முடியவில்லை. -
பசறை பங்களாவிலே தன் பிள்ளை
யைப் பார்த்திடப் போகும் வேளைகளில் அந்த பங்களாவின் சொகுசிலே தன் பிள்ளை மயங்கிக் கிடப்பதை அறிந்து பூரித்துப் போவான். "இந்த தொரேக்கு நூறு சொக்சு தினமும் கழுவ வேணும்" என்றெல்லாம் தன் பிள்ளை சொல்லும் போது பல்லெல்லாம் தெரியும்படி சிரித் திடுவான். அதே பிஞ்சு விரல்களினால் பல வண்னவண்ண காலுறைகள் கழு வப்பட்டு நிரை நிரையாகக் கொடியில் காயப்போட்டிருப்பது கண்டு திருப்தி கொண்டிடுவான். மொத்தத்தில் பெரிய சாமிக்கான ஒரே வாரிசு உருவாகிவிட்ட pിഞ് ഞ സെ ഞഥ uി ബ് மனநிம் மதி அடைந்திடுவான்.
தன்னுடைய தந்தையின் உழைப் பிலே ஒரு வேளைக்கு பானும் பருப்பும் உண்ணக்கூட வழியில்லாமல் வீட்டிலிரு ந்து முழுலயத்திலிருந்தும் விரட்டாக் குறையாக இத்தனை தூரத்து பங்களா வில் எடுபிடியாக்கிய தாற்பரியம் பால கிருஷ்ணனுக்குப் புரிய நாளாகலாம்.
ஷோலன்ட் தோட்டப் பள்ளிக்கூடம் என்று சொல்லிட ஏதுமேயில்லை. பிள் ளைப்பேறு மடுவம் ஒன்று தானிருந்தது. லுணுகலைக்குள் நடந்து சென்றால் சிங்கள மகாவித்தியாலயம் கண்ணில் படும். தாய்மொழி மூலம் உயர் கல்வி கற்றிடும் வாய்ப்பே அரிதிலும் அரிது. எனினும் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் செக்றோல் பதிவிருந்தால் அக்குடும்பத்
29
LDGLOGSGODāES

Page 17
துப் பிள்ளை பத்தாம் வகுப்புவரை படிக் கக் கூடிய சாத்தியம் இருக்கவே செய் தது. மூன்று பேர் உழைத்தால் குடும் பம் சிதறாமல் இணைந்திருந்தது. ஒரு வரே உழைத்தால் எல்லோருமே பட்டினி கிடக்க வேண்டியிருந்தது.
தோட்டத்துப் பிள்ளைகள் மழையில் நனைந்து தோய்ந்து தண்ணிர் சொட்டச் சொட்ட தொலை நடையில் வருவார் கள் பனி மூட்டத்திலும் அவர்களது வெள்ளைச் சீருடை அழுக்குகள் தெட்டத் தெளிவுடன் தெரியும்.
மலையின் உச்சிக் குகைக் கோவி லில் தில்லைக்காளி இருப்பதாகச் சொல்லிக் கொள்ளுவார்கள். சாமி கும்பிடுவில் தோட்டத்துரை கம்பீரமாக உச்சிக்குகை வரை ஏறி வந்து களஞ்சி யத்தையும் வாங்கிக் கொண்டார். பாதையின் மருங்கில் திரும்பிக் கீழே பார்த்தால் தலையே சுழலும், கிடுகிடு பள்ளம் வந்த துரை பொடி ஹமதுரு வோடு சேர்ந்து புது விகாரை எழுப்பிட அடிக்கல்லினையும் நாட்டினார். பேதமில் லாத் தோட்டத் தொழிலாளர் கலகலப் பில் கரகோசம் செய்தார்கள். சலாம் (3LITLLITssä56T.
கரீழே இருந்தபடி கரக மாடிக் கொண்டும் காவடியாடிக் கொண்டும் உச்சிக்கு வருவார்கள். புத்தாடைகளும் புதிய வேட்டிகளும் சாமிகும்பிடுவை ஆர்ப்பாட்டமாக்கிவிடும். நள்ளிரவுவரை கசிப்பு விநியோகம் தொடரும். பெண் கள் கண்டுகொள்ள மாட்டார்கள். அன் றைய தினம் பக திக குரிய தினமாகிவிடும்.
பாலகிருஷ்ணன் சாமி கும் பிடு நாளில் ஒலிபெருக்கியில் மிகத் தாராள மாக ஒலிக்கும் சினிமாப் பாடல்களில் திளைத்து விடுவான். காகிதப்பூச் சரங் கள் மலைக்கேறும் பாதையில் கம்பங்க
30
ளில் கட்டப்பட்டேயிருக்கும். குறுக்கும் நெடுக்குமாகத் தென்னோலைத் தோர ணங்கள் கிளுகிளுப்பையும் புத்துணர்ச் சியையும் பரப்பும்.
ஆடம்பரம் கொடி கட்டிப் பறந்திடும் பசறை பங்களாவில் தான் சேர்ந்தது அதிர்ஷ்ட தேவதையின் கடாட்சத்தாலே தான் என்றெல்லாம் பாலகிருஷ்ணனுக் குத் தோன்றியது. அங்கு குளிர்சாதனப் பெட்டி நிறையப் பழங்கள், பட்டர்கட்டி, 6ഖങ്ങിങ്ങuക് റ്റ, ജൂൺ5[റ്റ്. (LIL-1) திறந்தவுடன் வெளிர் ஆவி வெளிவந் தது கண்டெல்லாம் பாலகிருஷ்ணன் ஆச்சரியம் அடைந்தான் துரைசானி கட்டளையிட்டால் மாத்திரமே குளிர்சாத னப் பெட்டியில் கைவைப்பான். எவ்வ ளவோ மனஆசை வந்தாலும் வெண் ணெய்க் கட்டிகளைக் கடித்துச் சுவைக் கும் அவகாசம் அவனுக்குக் கிட்டுவதா யில்லை. இரவில் தனிமையில் குளிர்ப் பெட்டிமீது கண் போனாலும் நேர்மை அவனைக் கண்காணித்துத் தடை போட்டிடும்.
சிவப்புத் தரையில் கண்ணாடி போல் அவன் முகம் தெரியும் பளபளப்பாக்கிட ஓர் எந்திரம் இருந்தது. மின்விசையில் "கிர்கிர் சத்தத்தில் இயங்கிடும். இரண்டு நாட்களுக்கொரு தடவை எந்தி ரத்தால் மெழுகுவது அவன் வேலை.
குளியலறைக்குள் நுழைந்தால் குப் ரென்ற சுகந்தமே பரவி ஈர்க்கும். பளிங் குத் தொட்டியில் அவன் பிஞ்சு விரல் கள் கறை அகற்றிப் பேணிடும். கைக்கு அடக்கமாக அதே தொட்டியோடு வெள்ளி ஷவர் பைப் வைக்கப்பட்டிருக் கும். முகத்திற்கு நேராகப் பிடித்து ஸ்பிரே அழுத்தியதும் பன்னீர் தெளித் தது போல் அவன் முகமெல்லாம் தண்ணீர் விழுந்தது. புதுமை கண்டு தனக்குள் பாலகிருஷ்ணனால் சிரிக்கத்
IDର୍ତoତdas,

தான் முடிந்தது. சக லயத் தோழர்களு க்கு இவை பற்றி எல்லாம் தீர விளக்க இப்போதே ஏற்பாடு செய்து கொண்டான்.
பங்களா வாசலில் தோட்டத்துரை வரவும் கணக்குப்பிள்ளை ஓடோடி வரவும் சரியாக இருந்தது. பெரியசாமி காதுகளைக் கூர்மையாக்கினான்.
"என்னா மேன் பணியக் கனக்கில ஏன் கொழுந்தில்லை"
"தொரே கொழுந்துக் கூடைக்குள் ளால கல்லையும் வைச் சுத் தான் நெறுக்கணும். அப்பத்தான் நோமுக்கும் மேலை வருற கொழந்தை வெட்டாம (QL. JufT (8L TIL GOTLD 6T 600T (84 g5 6.DTL LLIT L 160iji 60o16OTTIFFICE.”
"யாரடா அவன் கலாட்டா செஞ்ச”
"வீரசாமி வேலு கருப்பையா."
பட்டியல் கொடுத்தான் கணக்குப்
படபடவென உள்ளே வருவதைக் கண்ட பெரியசாமி சுதாரித்துக் கொண் டான். அவசர அவசரமாக செல்போ னைத் தூக்கி பிரதம கிளார்க்கரை லொறியுடன் வரும்படி தோட்டத்துரை பணித்தார்.
பிரளயம் நடக்கப்போகின்ற அறிகுறி தெரிந்தது. பெரியசாமி வெளிக்கதவால்
வெளியேறி பணியக்கணக்கு லயன்க ளில் விபரத்தைச் சொல்லி வைத்தான்.
ஆவேசம் கொண்ட மனிதமிருகம் போல் லொறியில் தானே தாவி ஏறி டிரைவரை மிரட்டி இறக்குவித்தார். கே.பியும் சீ.சியும் பயத்தால் நடுநடுங்கி வார்த்தைகளை வெளிக் கொண்டுவர வழியில்லாமல் தத்தளித்தார்கள்.
பணியக் கணக்கில் கல்லுக்கட்டிய படி நின்ற வீராசாமியையும் வேலுவை யும் கருப்பையாவையும் கயிற்றால் கட்டி லொறியில் ஏற்றினார்.
மலைக்கோவில் அமைந்த கிடுகிடு பள்ளம்வரை லொறி போவதை அனை த்துத் தோட்டத் தொழிலாளர்களும் கவ னித்தனர். பெரியசாமி ஊடாக தி பரவுவது போல செய்தி பரவிக் கொண்டிருந்தது.
பாதை விளிம்பில் லொறியை நிறுத்திக் குலுக்கினார் தோட்டத்துரை. கதவு திறந்த நிலையில் கயிற்றால் கட்டப்பட்ட மூவரும் கிடுகிடு பள்ளத் தில் தலைதெறிக்க விழுத்தப்பட்டனர். வீசி எறிந்த தக்காளிப் பழங்கள் போல் மூவரின் உடலமும் சிதறுண்டன.
மலைமுகட்டில் நடப்பதை நேருக்கு நேராகப் பார்த்துக் கொதிப்படைந்த அ ைன வ ரும் வீரியத தால நெருப்பானார்கள்.
வெளிவந்து விற்பனையாகின்றது
டொமினிக் ஜீவாவின் சிங்களச் சிறுகதைகள்
பத்தர பிரசூத்திய 14 சிறுகதைகளின் தொகுப்பு இது ஒரு மல்லிகைப்பந்தல் வெளியீடு
NY
DataSapa.

Page 18
لافا کي په స్త్రలో گھوویہ
ஆரம்பகால ஈழத்துத் தமிழ் நாவல்கள்
இருபதாம் நூற்றாண்டுக்குச் சற்று முன்னதாக, பத்தொன்பதாம் நூற்றாண் டின் இறுதிப் பகுதியில் தோற்றம் கொண்டது தமிழ்நாவல் என்னும் புதிய இலக்கியத்துறை.
தமிழில் நாவல் அறிமுகப்படுத்தப் பட்டதற்கு முக்கியமானதொரு காரண மாகக் கூறப்படுவது "ஐரோப்பிய இலக் கிய வடிவமான நாவல் , அதன் முக்கியத்துவம் கருதி தமிழுக்கும் கொண் டுவர வேண்டும் என்னும் பிரக்ஞையினாலேயே என்பதாகும்.
ஆங்கிலேயரின் அரசியல் விஸ்தரிப் பும் ஆக்கிரமிப்பும் கீழைத் தேசத்தவரா கிய நமக்கு எத்தனையோ தீமைக ளைத் தந்திருக்கலாம். ஆனால் அத் தனை தீமைகளையும் ஈடு செய்யும் விதத்தில் ஒரு நன்மையையும் செய்திரு க்கிறது. அது தான் ஆங்கிலக்கல்வி
அந்த ஆங்கிலக் கல்வியும் கூட சமுதாயத்தின் எல்லா மட்டத்தினருக் கும் கிடைத்ததாகச் சொல்ல முடியாது. சமுதாயத்தின் மேல் மட்டத்திலிருந்த ஒரு சிலருக்கு மட்டுமே அது கிடைத் தது. இந்தியாவிலும் சரி இலங்கையி லும் சரி முழு மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்து ஆங்கில அறிவு பெற்றவர்கள் மிக சொற்பமான வர்கள் தான் என்றாலும் அதன் பாதிப்பு பெரிதாகவே இருந்தது.
32
வெளி உலகை மேலை நாடுகளின் வளர்ச்சிகளை புது நாகரீகங்களை, எழுத்தின் உன்னதங்களை அது இவர் களுக்குக் காட்டத் தொடங்கியது. ஒரு சக்தியை ஊட்டியது. இந்தப் புது சக்தி யின் தாக்குதல்களுக்கு ஆளாகி, எதிர் நிற்க முடியாமல் சரிந்த எத்தனையோ வறட்டு கட்டுமானங்கள், வேலிகள், ஆகியவற்றில் முக்கியமானது தமிழின் பழைய கவிதை மரபு. புலவர்களும், பண்டிதர்களும் மேலோர்களும் தங்களு க்கு மட்டுமே புரியும் படியாக எழுதிக் கொண்டும், மறைத்து வைத்துக் கொண் டுமிருந்த அந்தப் பழைய செய்யுள் மரபை புராண காவிய மரபை உடைத்
தெறிந்து கொண்டு உரைநடை என்னும்
ஒரு புதிய வடிவை தமிழுக்களிக்கும் ഖസ്മെഥ ജൂഴ്ന്ന ജൂട്ടക്റ്റിസെഥ കണ്ണൂ, ണൃ, சிந்தனை கொண்டவர்களுக்கிருந்தது.
உரைநடையில் படைப்பிலக்கியங்க ளைப் படைக்க முடியும் என்பதனை வீரமாமுனிவர் தமது "பரமார்த்தக் குரு வின் கதை" மூலம் காட்டியிருந்தாலும் அதன் பிறகு 1% நூற்றாண்டுகளுக்குப் பின்னரே தமிழின் முதல் நாவலெனப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மாயூரம் முன் சீப் வேதநாயகம் பிள்ளையவர்களின் "பிரதாப முதலியார் சரித்திரம் 1876ல் வெளிவந்திருக்கிறது.
"இங்கிலீஷ், ിjitജ് സെ முதலிய
NY7
IDଉଁଠଗତର ୬ଅs

பாஷைகளைப் போல தமிழில் வசன காவியங்கள் இல்லாமலிருப்பது பெருங் குறையே. இந்தக்குறை நீங்க வேண்டு மானால் சகலரும் ஆங்கிலத்தையும் தமிழையும் படிக்க வேண்டும். ராஜ பாஷையையும் சுதேச பாஷையையும் நன்றாகக் கற்றவர்களாலன்றி மற்றை யோரால் வசன காவியங்களை எழுதக் கூடுமோ, வசன காவியங்களால் அன்றி செய்யுள்களால் ஜனங்கள் திருந்த முடியுமா? ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாதிருந்தால் அந்தத் தேசங்கள் இவ்வளவு முன்னேற் றம் கண்டிருக்க முடியுமா? அதே போல் தமிழிலும் வசன காவியங்கள் வராத வரை இந்தத்தேசமும் சரியான சீர்திருத் தம் அடையாது என்பது நிச்சயம்" என்று வேதநாயகம் பிள்ளை தனது
முன் னுரையில் குறித்துள்ள தில்
இருந்தே "ஆங்கிலத்தில் பிரபல்யம் மிகுந்து உன்னத நிலையில் இருக்கும் நாவல் தமிழிலும் வரவேண்டும் என்னும் பிரக்ஞை காரணமாக. என்னும் கருத்து தமிழ் நாவலின் தோற்றத்துக்கான மையமாகக் கூறப்படுகின்றது.
ஆனால் செய்யுளைப் படித்து ஜனங் கள் திருந்துவார்களா வசன காவியங் கள் வராதவரை நமது நாடு சீர்திருந் துமா! என்னும் கேள்விகளுக்கான பதிலும் நாவலின் தோற்றத்துக்கான முதன்மைக் காரணங்களே.
மக்களின் முன்னேற்றம் - நாட்டின் முன்னேற்றம் போன்ற கருத்துக்கள் உரைநடையின் வளர்ச்சியால் உண்டா கும் என்னும் கருத்து இதன் மூலம் முன்வைக்கப்படுகின்றது.
உரைநடை வாசிப்பின் மூலம் மக் களை சீர்திருத்துவது என்பது எழுத்தை மக்கள் மயப்படுத்துவது என்பதின் நோக்கமே ஆகும்.
"இந்த என்னுடைய வசன காவியத் தில் தவறேதும் இருப்பின் வாசகர்கள் அன்பு கூர்ந்து பொறுத்தருள வேண்டும்" என்றும் ஆசிரியர் குறித்துள்ளார்.
இதிலிருந்தும் ஒரு உண்மை புலப்படுகிறது.
பழந்தமிழ்க் கவிதைகளைப் போல் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே இருந்து விடாமல் எழுத்து பரவலான மக்களிடம் செல்ல வேண்டும் என்பது வும் எழுதுபவனுக்கும் வாசகனுக்கும் ஒரு நெருக்கம் இருக்க வேண்டும் என்ப துவும் நாவலிலக்கியக்கத்தின் தோற்ற த்தால் முன் வைக்கப்படுகின்றது.
முதல் ஐந்து தமிழ் நாவல்கள் என்னும் தன்னுடைய நூலில் க.நா.சு.
1. வேதநாயகம்பிள்ளை
(பிரதாப முதலியார் சரித்திரம் 1876)
2. பி.ஆர். ராஜமய்யர்
(கமலாம்பாள் சரித்திரம் 1894)
3. S). LDTS560)6)Ju III
(பத்மாவதி சரித்திரம் 1898)
4. எஸ்.எம்.நடேச சாஸ்திரி
(தீனதயாளு 1902)
5. தி.ம. பொன்னுசாமிப்பிள்ளை
(ELD6)T3, 1903)
ஆகியவை பற்றி எழுதியுள்ளார். இதிலும் கூட 1902 ல் தீனதயாளு எழுதிய நடேச சாஸ்திரி தன்னுடைய நாவலே தமிழின் முதல் நாவல் என்று குறித்துள்ளார். இந்த நூலின் முன்னு ரையில் இந்த நூற்றாண்டின் (20ம் நூற்றாண்டின்) முதல் தமிழ் நாவலான இந்த தீனதயாளுவின் முன்னுரையை இப்படி ஆரம்பிக்கின்றார். "ஒரே ஒரு ஊரில் ஒரு புருஷன் ஒரு பெஞ்சாதி
* 33
IDଉଁଠତoଅs

Page 19
என்று ஆயிரம் கதைகள் இதுவரையில் எழுதப்பட்டிருக்கின்றன என்று. முந்திய மூன்று நாவல்களுமே பிரதாப முதலி யார் - கமலாம்பாள் - பத்மாவதி ஆகி யோரது சரித்திரமாகவும், "தீனதயாளு" அப்படி இல்லாமலும் இருப்பதால் தன்னுடையதே "நாவல்" மற்றவைகள் சரித்திரம் என்று பண்டித நடேச சாஸ்திரி எண்ணியிருக்கலாம்.
வேதநாயகம்பிள்ளை கிறீஸ்தவர். "சமய நம்பிக்கையையும் ஒழுக்க மேம்பாட்டையும் போதிக்கவே இதை எழுதினேன் என்றார் அவர் மதம் பரப்பும் கிறிஸ்தவ மிஷனரிமாரின் தொனியும் இதில் தெரிகிறது.
ஆனால் தீனதயாளு எழுதிய நடேச சாஸ்திரி, வாசிப்பவர்கள் கண்ணீர் விட கிள்ளிவிட்டுக் கொண்டே கதை கூறுவதில் சமர்த்தர். முந்திய மூவரை விடவும் இவருக்கு வாசகர்கள் அதிகம் என்று குறிக்கின்றார் க.சா.சு.
தொடர்கதைகளும் நாவல் அந்தஸ் துக்குரியனவே என்பதை நிரூபிப்பது தமிழின் இரண்டாவது நாவலாகிய ராஜமய்யரின் கமலாம்பாள் சரித்திரம். தொடர்கதையாக வெளிவந்த முதல் நாவலும் இதுவே. விவேக சிந்தாமணி யில் 1893ல் இருந்து 1895 வரை தெட்ச ணையாக வந்தது இந்த நாவல் என்றெ ழுதுகின்றார் டாக்டர் இரா தண்டாயுதம்,
பேராசிரியர் அமரர் கைலாசபதியும் கமலாம்பாள் சரித்திரத்தையே பிரதாப முதலியார் சரித்திரத்தை விடவும் தகுதி யான நாவலாகக் குறிப்பிடுகின்றார்.
ஈழத்து இலக்கிய முன்னோடிகள் என்னும் தன்னுடைய நூலின் முன்னு ரையில் கலாநிதி கைலாசபதி "ஈழத்து இலக்கிய முன்னோடிகள் பற்றி எழுதும் போது தமிழக இலக்கியம் பற்றியதாக
34.
வும் அது அமைந்து விடுவது வியப் பான தொன்றுதான். இந்தியாவுக்கும் இலங்கைக்குமான பழந் தொடர்புகள் இறுக்கமானவை. போக்குவரத்து வசதி களும்; தொடர்பியற் சாதனங்களும் மிக அருகலாக இருந்த அக்காலத்தில் தமிழகத்திலும் ஈழத்திலும் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் நெருங்கிய தொடர்பு களைக் கொண்டிருந்தனர். அடிக்கடி சந்தித்து பரஸ்பரம் உணர்வை பரிமா றிக் கொண்டனர். இன்று நாம் நம்பமுடி யாத அளவில் இது நடைபெற்றிருக் கிறது என்றெழுதுகின்றார்.
ஈழத்துத் தமிழ் நாவலின் ஆரம்ப காலமும் ஏறத்தாழ இதே 19ஆம் நூற் றாண்டின் இறுதிக்காலமாகவும் இருப் பதை நாம் கைலாசபதி அவர்களின் இக்கூற்றுடன் இணைத்தும் பார்க்கலாம்.
இலங்கையின் ஆங்கிலேய ஆட்சி யும், ஆங்கிலக் கல்வியும், உத்தியோ கம் பார்க்கும் ஒரு நடுத்தர வர்க்கத்தை உருவாக்கத் தொடங்கியிருந்தது. அதே வேளை கிறிஸ்தவ மதம் பரப்பும் மிஷ னரி இயக்கத்தின் ஆங்கிலக் கல்விப் பணியும் மரபு வழி வந்த தமிழ்க் கல்வி வளர்ச்சியும் பலரை எழுத்துலகில் ஈடுபட வைத்தது.
தமிழகத்திலும் சரி, ஈழத்திலும் சரி நாவல் என்னும் பெருங்கதையினை வழங்கியவர்கள் கிறிஸ்து சமயத்தை சேர்ந்தவர்களே என்று சுவாமி ஞானப்பிர காசர் கூறியதை மேற்கோள் காட்டி அங்கே வேதநாயகம் பிள்ளை இங்கே எஸ்.இன்னாசித்தம்பி என்று தன்னுடைய ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி என் னும் நூலில் "ஊசோன் பாலந்தைக் கதை (1890) என்னும் இன்னாசித்தம்பி யின் நாவலையே ஈழத்தின் முதல் நாவ லாக அறிமுகம் செய்கின்றார் அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள்.
DaoaSaja,

இதே நூலுக்கு முன்னுரை எழுதிய பண்டிதர் மு. கணபதிப்பிள்ளையோ “யான் அறிந்த வரையில் ஊசோன் பாலந்தைக் கதைக்கு முன்னதாகவே "காவலப்பன் கதை" என்ற மொழிபெயர் ப்பு நாவல் யாழ்ப்பாணத்தில் 1856ல் வெளியிடப்பட்டிருக்கின்றது என்கின்றார். ஊசோன் பாலந்தைக் கதை ORSON ANDVALENTINE என்னும் போர்த்துக் கேய நெடுங்கதையின் தழுவல் என் னும் காவலப்பன் கதை PARLEY THE PORTER என்னும் ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு என்றும் அறியும்போது வேதநாயகம் பிள்ளையின் நாவலுக்கு முன்னதாகவே (20 வருடங்கள்) வந்த காவலப்பன் கதையை ஈழத்துக்கு மட்டு மன்றி தமிழின் முதல் நாவலாக ஏன் கொள்ளக் கூடாது என்னும் சந்தேகமும் எழுகிறது. இந்தக் கேளிர் வி நியாயமானது தான்.
இந்த சந்தேகங்களுக்கு மத்தியில் திரு. எஸ். எம். காமல்தீன் அவர்கள் 1885ல் வெளிவந்த சித்திலெவ்வை மரைக்கார் எழுதிய அசன்பேயுடைய கதையே ஈழத்தின் முதல் நாவல் என்று தினகரன் வாரமஞ்சரி மூலம் அறியத் தருகின்றார். (22.10.1972)
தமிழின் முதல் நாவலாசிரியராக வேதநாயகம்பிள்ளை ஏற்றுக் கொள்ளப் பட்டது போலவே ஈழத்தின் முதல் நாவலாசிரியராக சித்திலெவ்வை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்.
ஈழத்தில் பிறந்து தமிழகம் சென்று கல்விகற்று பலதுறைகளில் சிறந்து விளங்கியவரான திருகோணமலை த. சரவணமுத்துப்பிள்ளை மோகனாங்கி என்றொரு நாவலை 1895ல் எழுதினார். இதுவும் ஈழம் சம்பந்தப்படாத ஒரு நாவல்.
9 தேம்பாமலர் -
எந்த ஒரு காலகட்டத்திலும் அந்தக் காலகட்ட வாழ்க்கையின் பிரதிபலிப்பா கவே இலக்கியம் இருக்கவேண்டும், நியாயத்தின் பக்கம் நின்று காலத்தி னைப் பதிவு செய்யும் கம்பீரம் எழுத்து க்கு இருக்க வேண்டும் என்னும் இலக்கி யக் கொள்கைகள் மெது மெதுவாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாவல்களில் தோன்றத் தொடங்கின. காலமும் களமும் பிரதானமாக பிந்தி வந்த நாவல் களில் இடம் பெறத் தொடங்கின.
சமயப் பிரசாரம் சமயம் பாதுகாப்பு சமூகச் சீர்திருத்தம் போன்றவை மக்கள் மத்தியில் பரவத் தொடங்கிய இக்காலப் பகுதியில் அந்த அந்த நோக்கங்களு க்கு ஏற்றதொரு பிரச்சாரக் கருவியாக நாவல் பயன்படுத்தப்பட்டது. ஆகவே மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைக ளைப் பொருளாகக் கொண்டு நாவல் கள் எழுதப்படவேண்டியது தவிர்க்க முடியாததாகிறது.
9 நொறுங்குண்ட இதயம்
- மங்களநாயக தம்பையா - 1914 9 புனிதசீலி - ஓ.எம்.ஐ. ஆசீர்வாதம்
- 1927 (Rev. Brother)
- 1929 0 ஞானபூரணி
- 1933 ஆகிய நாவல்கள் கிறிஸ்துவ மதப்பிரச் சாரத்தை மையமாகக் கொண்டவை.
0 காசிநாதன் நேசமலர் - LD . (8 61 .
திருஞானசம்பந்தபிள்ளை - 1924 6 கோபால நேசரத்தினம்
திருஞானசம்பந்தபிள்ளை - 1927
இந்து சாதனம் பத்திரிகையின் ஆசி
ரியராகத் திகழ்ந்த திருஞானசம்பந்தப் பிள்ளையின் இந்த நாவல் கள்
* 35
LDGioGSGRODZE

Page 20
கிறீஸ் தவப் பிரச் சாரம் செய்த சுவாமிமார்களின் தோல் விகளைப் பிரதானப் படுத்துகின்றன.
கோபாலன் என்ற வாலிபனை கிறீஸ் தவனாக மதம் மாற்ற தன்னுடைய LD560) 6T அவனுடன் பழகவிடும் பாதிரி யார் அந்தப் பழக்கமே காதலாகி மகள் சைவத்துக்கு மாறிவிடுவதைக் கண்டு ஏமாற்றமடைவதை கூறும் நாவல் கோபால நேசரத்தினம் "20ம் நூற்றாண் டின் ஆரம்பத்தில் உச்சத்தில் இருந்து சமயப்பிரசாரங்கள் குறையத் தொடங் கியபின் சமூகப்பிரச்சனைகள், அரசியல் சீர்திருத்தங்கள், கல்வி வளர்ச்சி என் பன முக்கிய இடம் கொள்ளுகின்றன.
இடைக்காடர் என்னும் புனைபெய ரில் நாவல்கள் எழுதிய தநாகமுத்து அவர்கள், அந்தக்காலத்து வரதராசனார் என்று குறிப்பிடுகின்றார் சில்லையூர் செல்வராசன். பாடசாலை - ஆசிரியர்
மாணாக்கர் என்பதைச் சுற்றியே அவருடைய நாவல்கள் இருந்ததால் இருக்கலாம்.
நீலகண்டன், 1925, சித்தகுமாரன், 1925, ஆகிய இரண்டு நாவல்களை எழுதியுள்ள இடைக்காடரின் சொந்த ஊர் இடைக்காடு. பழந்தமிழ் இலக்கிய த்திலும் இடைக்காடர் என்னும் பெயர் இருப்பது இவருக்கும் தொரியுமாகை யால் அந்த இலக்கிய கெளரவம் கருதி இடைக்காடர் என்றே தனது பெயரை வைத்துக் கொண்டார்.
1925 ல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சு க்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட நாவல் நீலகண்டன். "ஓர் சாதி வேளாளன்” என்னும் உபதலைப்புடனேயே நாவல் வெளியாகி இருக்கிறது.
"இது சாதியபிமானம் இன்னதென்று விளங்காது தம்மிற்றாழ்ந்தவர்களை
36
இம்சை செய்பவர்களுக்கு புத்திபுகட்டும் நோக்கமாகவும், ஏனையோர்க்கு நம்மவ ர்களின் உண்மையான சாதிநிலை இன்னதென உணர்த்தும் நோக்கமாக வும் எழுதப்பட்ட ஒர் கற்பனா கதை" என்று நாவலின் முகவுரையில்
ஓரிடத்தில் குறிக்கின்றார் இடைக்காடார்.
"அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் தற்கால மாதிரியான கற்கள் பரப்பிய வீதிகள் மிகச்சிலவேயாகும். அவைகள் பெரும்பாலும் நெடுந்தூரம் செல்லும் வீதிகளே. மற்றயவைகள் மண்வீதிகள். மிகவும் ஒடுக்கமானவை. அவைகளின் இரு மருங் கும் மரங் கள டர் நீ து வளர்ந்திருக்கும்.
ஆங்கிலேயர் இலங்கையை ஆளத் தொடங்கிய அந்த வரலாற்றுக்கு முந்திய கால சூழ்நிலையை வாசகனுக் கறிவிக்கும் பண்பு இந்த எழுத்துக்க ளில் மிளிர்வதைக் காணலாம்.
நாவலின் கதாநாயகனான நீலகண் டன் யாழ்ப்பாணத்துக் கிராமமொன்றிலி ருந்து இடம்பெயர்ந்து அனுராதபுரம் கண்டி என்று சுற்றி வருவதையும் தேச சஞ்சாரம் செய்வதனால் அறிவு விருத்தி பெறுவதையும் பாடசாலைகள் நிறுவி, பணிபுரிவதையும் நாவல் சித்திரிக்கிறது.
இந்நாவலின் ஆசிரியர் நாகமுத்து வும் (இடைக்காடர்) பாடசாலை தாபித் துப் பணிபுரிந்தவர் என்பது கவனத்தில் கொள்ளக் கூடியது. 1913ல் யாழ்ப்பா ணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தை ஸ்தாபித்தவர் இவரே.
நாவலின் கதாநாயகன் நீலகண்டன் ஓரிடத்தில் இப்படிச் சிந்திக்கின்றான். தான் நிறுவிய வித்யாசாலை தனியொ ருவர் பராமரிப்பில் இருப்பது அதன் வளர்ச்சியைத் தடுக்கும். ஆகவே
並
pābabಹಾà

அதை ஒரு ப ஞ சாயத் தாரிடம் கையளிக்க வேண்டும்” என்று.
1913ல் நாவலாசிரியர் நாகமுத்து நிறுவிய வைத்தீஸ்வர வித்தியாலயம் 1917ல் ராமகிருஷ்ண மிஷன் பொறுப் பில் விடப்பட்டது என்பதுவும் மனம் கொள்ளத்தக்கது.
இலங்கையில் ராமகிருஷ்ண மிஷன் பொறுப்பேற்று நடத்திய முதல் வித்தியாலயமும் இதுவே.
நீலகண்டன்; சித்தகுமாரன் ஆகிய இரண்டு நாவல்களையும் "சிறிய வினோ தக் கதைகள்" என்னும் நூலையும் எழுதி வெளியிட்டதன் மூலம் கிடைத்த கீர்த்தியை விட வைத்தீஸ்வர வித்தியா லயத்தை தாபித்தமையால் அவர் ஈட்டிய புகழ் அதிகம் என்று குறிக்கின் றார் அமரர் பேராசிரியர் கைலாசபதி அவர் கள் (ஈழத்து இலக கசிய முன்னோடிகள்) v
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்வி த்துறையில் ஊக்கத்துடன் பணியாற்றி யவர்களும் கல்விக்கூடங்கள் நிறுவியர் களுமே பெரும்பாலும் இலக்கியத்துறை யிலும் பணியாற்ற முன் வந்துள்ளதை
வரலாறுகள் காட்டுகின்றன. மகாஜனக்
கல்லூரி தாபகர் பாவலர் துரையப்பா பிள்ளை, வண்ணார்பண்ணை வைத்தீஸ் வராவை தாபித்த நாவலாசிரியர் நாகமுத்து ஆகியோர் சிறந்த உதாரணங்கள்.
தமிழ்ப்பரோபகாரி என்று போற்றப் பட்ட சி.வை. தாமோதரம்பிள்ளை அவர் களின் இளைய சகோதரரான தமிழறி ஞர் சி.வை.சின்னப்பாபிள்ளை எழுதிய "வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம்" என்னும் நாவலின் முதல்வ னான வீரசிங்கனும் (1905) யாழ்ப்பாண த்தை விட்டு இடம்பெயர்ந்து அனுராத
புரம் சென்று சிங்களவருடன் நட்பு கொணர் டு வர தர செயல கள் செய்கின்றான்.
"வீரசிங்கன்'. "விஜயசீலம்' "உதிர பாசம்" "இரத்தின பவானி என்று கூடுத லான நாவல்களை எழுதி ஈழத்திலும் நாவல் வாசிக்கும் ஒரு வாசகர் பெருக்கத்தை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.
பொதுவாக இரத்தபாசம் என்று சொல்லப்படும் சொற்றொடரை தனது நாவலுக்குத் தலைப்பாக இடும்போது கூட "உதிரபாசம்” என்று செந்தமிழ் நடைக்கு அவர் கொடுக்க முயலும் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. அக்காலத்தே புகழ்பெற்ற தமிழறிஞர் சி.வை.யின் சகோதரன் நான் என்னும் தமிழ்ப்பண்பும் தெரிகிறது.
இடைக்காடருக்கு முன்னதாகவே சி.வை.சின்னப்பாபிள்ளையின் வீரசிங் கன் நாவல் வந்திருப்பதையும் நாம் கவனத்தில் கொண்டால் இடைக்காட ரின் "நீலகண்டன்’ நாவலின் கதா நாயகன் தேசசஞ்சாரம் செய்வதன் தாற்பர்யத்தைப் புரிந்து கொள்ளலாம்.
அசன்பேயுடைய சரித்திரம் நாவலின் கதாநாயகன் அரசகுமாரன். அவனும் உலக சஞ்சாரம் செய்கின்றவனாகவே இருக்கின்றான்.
ஆரம்பகால நாவலாசிரியர்கள் பலரும் மேல்நாட்டு நாவல்களை வாசித்த ஒரு அருட்டுணர்வில் நாவல் எழுதியவர்களே.
1. 5 T6)l 60Lü LJ 6öi
மொழிபெயர்ப்பு 2. அசன்பேயுடைய சரித்திரம் - 1890 மிஸர் தேசத்து அரசகுமாரனின் சரிதை.
கதை - 1856
* 37
மல்லிகை

Page 21
ஊசோன் பாலந்தைக் கதை 1891 மொழிபெயர்ப்பு. -
மோகனாங்கி 1895 தமிழ் நாட்டின் நாயக்கராட்சி கால வரலாற்று செய்திகளை தொகுத்தெழுதப்பட்ட நாவல். இந்த நாவல் அந்த நாட்களி லேயே செல்வாக்கு பெற்றிருந்தது. பள்ளிக்கூடங்களில் பாடநூலாகப்
படிப் தற்கு இது 1919ல் ஒரு சுருக்கிய பதிப்பாக வெளியிடப்பட் டிருக்கிறது. சுருக்கிய பதிப்பாக வந்த நூலின் பெயர் "சொக்கநாத நாயக்கர்” என்று மாற்றப்பட்டது. (ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி.
சில்லையூர் செல்வராசன்)
(மிகுதி அடுத்த இதழில்)
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்
業
Happy pHOTO
Excellent Photographers for Wedding, Portraits & Child Setting
... .
300, Modera Street, Colombo - 15. T. Phone : 52.6345
38 NY
மல்லிகை
 
 
 
 
 
 
 
 

ఖళxm
缀 &ჯა.
அது அசைந்தது. அசைவிலிருந்து உயிர் என்று தெரிந்தது. வெண்கருமை யும் சாம்பலும் பூசிய நிறம் பொட்டாய், புள்ளியாய், சில சமயம் ஒளிக்கிற்றாய் வேகம் கொண்டது. கண்ணில் பட்டும் படாமலும் நொழுந்தியது. கணப் பொழுகளில் அங்கு, இங்கு என எங்கும் வியாபகங் கொண்டது.
எங்களுக்கு முதலில் அது என்ன என்பதே தெரியாமல் இருந்தது.
"மூஞ சூறுக் குஞ்சு போலை." மனைவி கூறினாள்.
"குஞ சா. குட் டியா? நான்
குழம்பினேன்.
"மூஞ்சூறு பகலிலை வராது. இது பகலிலையும் ஒடித்திரியுது. எலிக்குஞ் சாய்த்தானிருக்கும்"
"எதெண்டாலும், சனியன் வெட்டிக் கொட்டி, எச்சில் படுத்திப் போடுது. இந்தா, இந்த அடுக்குப் பெட்டியை வெட்டி, ரவையை உருசி பாத்திருக் குது. இந்த "பிளாஸ்ரிக்” டப்பாவைக் கூட வெட்டிப்போட்டுது. புழுங்கல் அரிசி இருந்த பொலித் தீன் பையையும் நன்னிப் பாத்திருக்குது."
"எல்லாத்தையும் வெளியிலை
°签矮
(UDI26) ooo
க. சட்டநாதன்
...ఖ போட்டா இப்பிடித்தான் நடக்கும். "பான்ரிக் கபேர்டிலை" எடுத்து வையும்"
"g (b. பூனைக் குட் டியா வது வேணுமப்பா. அவள் விநயமாகக் (8ELLT6i.
"வரதனிட்டையும். பாஸ்கரனிட்டை யும் சொல்லியிருக்கிறன்."
"பெட்டைக்குட்டி எண்டாலும் பரவா யில்லை. அது வந்தாத்தான் இந்தப் பீடை ஒழியும் போலை."
"பெரிய எலியள் இரை எடுக்க இரவி லைதான் வரும். இது விருத்தெரியாமல், இரவு பகல் பாராது பரபரக்குது."
"ஒரு குஞ்சல்ல, ஒரே அளவிலை ஒரு கிளை காலி இருக்கும் போலை. எலி ஒரு சூலிலை ஒம்பது பத்துச் சுமக்குமாம்."
அதை அருகில் இருத்தி, அதனு டைய பொசு பொசு உடம்பையும், வட்ட க்கண்களையும், சிப்பிக்காதுகளையும் பட்சமாய்த் தொட்டுத் தொட்டுப் பார்த்துப் பேசவேண்டும் போலிருந்தது எனக்கு கருமையாய் நீண்டு கூர்மை கொள்ளும் வால் மட்டும் ஏனோ அருவருப்புத் தருவதாயிருந்தது.
並 39
DaioaSadas

Page 22
"எலி கிறீச்சிடுகுது'
"இல்லை ரதி. சத்தம் மாதிரி.
அவள் என்னை ஒரு மாதிரிப் பார்த்தாள்.
ஏதோ சிரிப்புச்
நான் செவிப்புலனைக் கூர்மைப்படுத் திக் கொண்டேன். எலி என்னுடன் ஆரவாரமாய்ப் பேசியது:
'பட்சமாய் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துப் பேசவேணுமா..? இது, புளுகு பொய். என்னைக் காணும் போதெல்லாம் உன்ரை மனசு விகாரப் பட்டு, கொலை வெறி கொள்ளுது. கையிலை அகப்படுகிற தடி தண் டோடை கோணங்கித்தனமா, கையை யும் காலையும் உதறியபடி, எனக்குப் பின்னாலும் முன்னாலும் ஒடித்திரி யிறை. ம். இத்தனைக்கும் நீ பெரிய. படிச்ச மனிசன்."
ரதியைப் பார்த்தேன், அவள்
மெளனமாக இருந்தாள்.
எலி பேசியது உறுதியானதும், மெலிதான பய உணர்வு என்னுள் ஜிவ் எனப் பற்றிப் படர்ந்தது. உடல் லேசாக வெடவெடத்தது.
ഥണiഖഥ, "ൺf5.ൺf5.ൺf5'.'
"ஒரு அவிள். ஒரு பருக்கை. அதுக்குத்தானே. இப்பிடி ஆலாய்ப் பறக்கிறன் . கண்டும் காணாமை இருந்தாலென்ன? இந்தச் சின் ன. இத்தினி வயித்துக்குத் தானே இந்தப் LITGL 606ОПШD."
முன்னால் வந்து, கால்களைத் தூக்கித் தனது சின்ன வயிற்றை எக்கிக் காட்டியது. ஒரு குழந்தையாகிக் கெஞ்சியது.
"அதுக்கு, இத்தனை கிரிசை கெட்ட தனமான ஆர்ப்பாட்டமா..? போறஇடம் வாற இடமெல்லாம் மூத்திரமும் புளுக்கையுமாய்."
"என்ன பிசத்தலப்பா.யாரோடை கதை."
ଟା ରi Lify 60). LD 60) u s), 6) 6i
கலைத்தாள்.
நாளும் பொழுதும் எலி பற்றிய எண்ணந்தான் மனசை ஆக்கிரமித்துக்
கொண்டது. தெருவில் காலாற நடக்கும்
போதும், வழியில் காணும் நண்பனுடன் கதைக்கும்போதும், தற்செயலாய்க் கண்ட அழகியின் கீழ்க்கண் ஜாடை மதுரத்தில் திழைக்கும் போதும் எலியின் உரசலும், சொர சொரப்பும், ஈரக்கசிவும் பிணத்தைத் தொட்டதான உணர்வையே என்னுள் ஏற்படுத்தியது.
நான் அவசர அவசரமாகப் பான்ரி யைத் திறந்து, ஒரு பிடி அரிசியை எடுத்து, பாத்ரூம் சுவரோடும், ஸ்டோர் ரூமுக்கு முன்னாலும், தண்ணிர்க்குழா யின் கீழும் தூவினேன்.
அதைப்பார்த்த அவள் கூறினாள்.
"நல்ல யோசனையப்பா . கொஞ்சம் பிழிஞ்ச தேங்காய்ப்பூவும் வைக்கலாம். வந்து கொறிச்சுப் பாத்திட்டுப் போயிடும் . அங்கை இங்கை எண்டு ஓடி வீட்டை அசிங்கப்படுத்தாது ."
"கொறிச்சிட்டுப் போகுதோ, இல்லை நாலைக் கூட்டிக் கொண்டு வந்து குடும் பம் நடத்துதோ . ஆருக்குத் தெரியும். காலையிலை தான் பார்க்க வேணும்"
இரவுச் சாப் பாடு ஆனதும் , படிப்பதற்கோ, எழுதுவதற்கோ ஆர்வம் ஏதுமில்லாமல் படுக்கையில் சரிந்தேன். நுளம்புத் தொல்லைக்கு மோட்டீன்
40 NY
mæÊæä

கொயில் கூடக் கொழுத்தவில்லை. அயர்ந்து போன சமயம் பார்த்து எனது இடது விலாப்புறத்தைத் தழுவியபடி,
ஏதோ குறுகுறுத்தது. அருவருப்புடன்
எழுந்து, ரோச்சை அடித்துப் பார்த்தேன். படுக்கையில் அந்தச் சின்னஞ்சிறு தவ்வல். கண்கள் பளிச்சிட, வெட்டும் பற்கள் முன் துருத்த, என்னைப் பார்த் துக் கெக்கலி கொட்டிச் சிரித்தது. நான் தாக்குவதற்கு எதை எடுக்கலாம் என மல்லாடியபோது, அது "உனக்கும் பெப்பே, உன் அப்பனுக்கும் பெப்பே." எனக் கூறியபடி, கட்டிலில் இருந்து குதித்து, இறங்கி ஓடியது.
ரதியைப் பார்த்தேன். அவள் அயர் ந்து தூங்கியபடி. பகல் முழுவதும்
அடித்துக் கொடுத்த அலுப்பு அவளு க்கு பாவம் அவள் என நினைத்துக்
கொண்டேன். நரைத்த புகை மூட்டத்தி
னுள் ஒடுங்கிப் போனதான மயக்கம். தெளிவில்லாத நிலை. மந்திரவசப்பட்ட வன் போல எழுந்து நடந்தேன். காற்றில் மிதப்பது போல இருந்தது. கால்களை எட்டி எட்டிப் போட்டபடி நடந்தேன். ஏதோ ஈர்ப்புவிசையின் மையப்புள்ளியுள் இழுத்து வீசப்பட்டதான தவிப்பு. பின்னால் ரதியும் அள்ளுண்டு வந்தாள். சிறகடிக்கும் பட்டாம்பூச்சியின் பரவசம் அவளுக்கு தோற்றத்திலும் அவள் அப்படித்தானிருந்தாள்.
அந்த ஒளிக்கிற்று அடுக்களைப் பக்கம் இருந்துதான் வந்தது. பான்ரி கபேர்ட்டுக்கு மேலாக, கிழக்குச் சுவரோ ரம் பொன்னொளிர் சோதிப்பிரபை: அதன் நடுக்கொள்ள, இரண்டு மதர்த்த எலிகள். தழுவியபடி எலிகள் புணர்ந்து நான் பார்த்ததில்லை. ஆர்வத்துடன் அணுகினேன். மிக நெருக்கமாய்ச் சென்று பார்த்த பொழுது, அவ்வெலிக ளின் உடலில் மெலிதான அதிர்வு,
முயக்க மதர்ப்பு, இனிய அனுபூதி நிலை திடீரென என்னுள் இருந்த மிருகம் விழித்துக் கொண்டது. கொலை வெறியுடன் அங்கும் இங்கும் ஓடினேன். கதவுத் தடுப்புச் சட்டம்தான் கையில் கிடைத்தது. ஒரு அசுர பலத்துடன் ராஜ சுகத்தில் திளைத் திருந்த அந்த எலிகளின்மீது வீசி எறிந்தேன்.
மின்னலாய்ப் பேரொளி பலத்த ஓசையுடன் பக்கத்தில் ஏதோ விழுந்தது போல. “பொம்மர் பொழிந்த குண்டா..? ஷெல் லா..? புரிபடாமல் தவித்த பொழுது, எனது உடல் பிளவுபட்டு, குருதிக் கலவையுடன் , துணி டு துண்டகா நாலாபக்கமும் சிதறியது.
சதைக்குவியலாகக் கிடந்த என்னை ரதி வாரி எடுத்து, மடியில் போட்படி கதறி அழுதாள்.
நான் என்ன பாண்டுவா..? அவள். அவள் குந்தியா..? அல்லது மாத்ரியா..? எலிகள் ரிஷியும் ரிஷிபத்தினியுமா..?
புகை மூட்டம் லேசாக நீங்க, சுயம் புரிந்தது. வியர்வையில் உடம்பு தெப்ப மாய் நனைந்திருந்தது. பக்கத்தில் ரதி எதுவித சலனமும் இன்றித் துங்கிக் கொண்டிருந்தாள். அவளது வலது கரம் மட்டும் எனது மார்பில் விழுந்து கிடந்தது.
அதிகாலையில் மீளவும் அயர்ந்த பொழுது, மீளவும் கனவுகள். சற்று வித்தியாசமான காட்சிகள்.
அது நமது ஊர் மாதிரி இல்லை. அனந்தமூர்த்தியின் சமஸ்காராவில் வரும் அக்கிரகாரம் மாதிரி இருந்தது. எங்கு பார்த்தாலும் எலிகள் பொத்துப் பொத்தென்று விழுந்து செத்துக் கொண் டிருந்தன. நாரணப்பா மாதிரி ஒரு உரு வம் பிணமாகக் கிடந்தது. அவனுக்குப்
NY 4.
ID6069.503,

Page 23
பக்கத்தில் சுடரும் பொற்குடம் போல, தலைவிரி கோலத்தில் மறுகணம் காட்சி மாறியது. நாரணப்பா இல்லை அது எனது உடல் கிடப்பது போலவும், எனது மனைவி ரதி அருகிரு ந்து புலம்புவது போலவும் இருந்தது. பக்கத்திலும் அழுகுரல் யாரது குணமா. வரதனா. சுகிர்தாவா. சாந்தியா. உயிர் மாய்ந்த உடல்கள் தூரம் தூரமாய் உருத்தெரியாமல் சிதைந்து, வடிவம் கெட்டுக் கிடந்தன.
பட்டவேம்படி வைரவர் கோவில் பக் கம் கோவில் பூசகர் கிடந்தார்; கனிந்து, கரைந்து, வெடித்த வெள்ளரிப்பழம் போல. திருமணமாகாதவர், யாரோ ஒருத்தி அவருக்கு அருகாக அழுது புலம்பியபடி. அவரது காதலியா, அல்லது. எல்லாமே குழம்பிய நிலை யில் ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிந் தது, எலிகளால் கொள்ளை நோய் ஊருக்குள் வந்துவிட்டது என்பதுதான் Ց|5l.
இது எப்படி. எப்படிச் சாத்தியமா கியது.? எலிகள் ஒன்றாய். பத்தாய். நூறாய். ஆயிரமாய். ஒரு பேரலை யாய். எள்ளுப்பொட்டை மணற்பரப்பில் கொட்டியது போல, ஊருக்குள் படை எடுத்து விட்டனவா..? சிறிசாயும் பெரிசா யும் விஸ்வரூபம் கொண்டும் - கோணங் கித் தனமான தொள தொள அங்கிக ளுடன், கனத்த பூட்சுகள் தடதட என சப்திக்க, எரிதழல் உமிழும் கைத்தடிக ளைச் சுழற்றியபடி நடந்தன. விடைத் துப் பருத்த தமது விதைகளைக் கால்களில் தாங்கியபடி, எதிர்ப்படும் எல்லாப் பெண் எலிகளையும் தேடித் தேடி மடக்கிப் புணர்ந்தன. புணர்ச்சி யால் எங்கும் இரத்தக் கசிவும் மரண ஒலமுமே மிஞ்சியது. ஒரு பக்கம் பிணங்கள் விழுந்து கொண்டிருந்தன.
42
சந்திரி.
எலிகளும் கூடவே அதீத புணர்ச்சியால் செத்து மடிந்தன.
இது கொள்ளை நோய்தான்.
வீட்டின் முன்னால், பின்வளவில், அரசடியில், மதவடியில், மில்லடியில், மடத்தடியில், இலந்தை வனத்தில், பட்ட வேம்படியில், சாட்டியில், மாதா கோவில் பக்கமாக தெரிகின்ற முகங்கள் சில, தெரியாதன சில ஊதிப் பருத்து, உருமாறி, வெடித்து, தயிர்வெள்ளை யாய் கட்டிமஞ்சளாய் சீழ் வடிய, கிழை த்த கொம்புகளையும் தாங்கி, நெளியும் புழுக்களுடன் உடல்கள் எங்கும் சிதறிக் கிடந்தன.
தமது ஊரின் அடையாளங்கள் அனைத்தையுமே துடைத்து, வழித்துத் தடம் தெரியாமல் நாசப்படுத்தத்தான் இந்தக் கொள்ளை நோய் இங்கு வந்ததா..?
நான் நிலை குலைந்து, மனம் பதறியபோது, காட்சி மீளவும் மாறியது.
அமைதியான நீர்ப்பரப்பு, சிற்றலைக ளின் சிறு நடனம் தெளிவும் துல்லிய மும் நிறைந்த அந்த நீர்ப்பரப்பு - அதன் அடித்தளம் வரை பளிங்கியது. எங்கோ வானத்தில் இருந்து விழுந்த நீர்த்தி வலை - பேட்டை நினைத்துப் பரவசித்த ஆண்பறவையின் ஸ்கலிதத் துளியா அது நீர்ப்பரப்பைச் சலனித்தது. அத் திவலை தோற்றுவித்த நீர்வளையம் பெரிதாகியது. அதனுள்ளே ஒன்று. அதனுள் இன்னொன்று. அடுத்து ஒன்று எனப் பல நீர்வளையங்கள். அவற்றைப் பிளந்தபடி வெள்ளிப் பந்து, பாதரச உருண்டை பூமிப்பந்து போல. அதன் மேலாக அவன், அந்த அழகன் தோன் றினான். எல்லாமே கண்கட்டு வித்தை போல இருந்தது.
NY
ແວວຕົວກ

அவன் உயரமாய், ஒடிசலாய் இருந் தான். பார்த்ததும் பட்சம் கொள்ளும் தோற்றம். இறுக்கமான சிவப்பு ஆடை அணிந்திருந்தான். தலைப்பாகை மட்டும் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அவனது அகன்ற கண்களில் பிரியமான பார்வை யின் இங்கிதம், உதடுகள் சிவந்து கிடந் தன. முழந்தாளுக்குக் கீழாக சரிந்து வழிந்து கிடக்கும் கரங்கள். மீசையில் லாததால் பெண்மையின் நளினமும் லாவகமும் அவனில் தோய்ந்து கிடந் தது. அவனது வலது கரம் - நீளமான, சற்று அடிப்பாகம் வளைந்த இசைக் கருவி ஒன்றைத் தாங்கி இருந்தது.
சதா காலமும் அவனது உதடுகள் ஏதோ மந்திரத்தை உச்சாடனம் செய்தபடி இருந்தன.
நீர்ப்பரப்பில் இருந்து அவன் தரை க்கு வந்தான். அவனது கவர்ச்சியில் வசப்பட்ட நான், அவனை அண்மித்த வேளை - கண்களைச் சிமிட்டியபடி, எனது பதிலெதையும் எதிர்பாராதவ னாய் , தனது இசைக் கருவியை வாசிக்கத் தொடங்கினான்.
அவனது வாத்தியத்திலிருந்து
அமிர்தவர்ஷமாய் இசை பொழிந்தது.
மின்னொளிர் வெள்ளிப் பூக்களாய், பசுந்தளிரின் பனிக்குளிரின் சொடுக்க லாய், சிறுசிட்டின் அடிவயிற்று மென்சிற கின் மென்தழுவலாய் எங்கும் இசை பொம்மியது.
என்ன அதிசயம்! அவனது அந்த இசையின் பிணிப்பில் ஈர்க்கப்பட்ட எலிகள், தமது பொந்துகளில் இருந்து தொகை தொகையாக வெளிவந்தன. அந்த எலிகள் வெவ்வேறு பருமனில், வெவ்வேறு நிறங்களில் இருந்தன.
வெள்ளை, சாம்பல், சாம்பல் கலந்த
வெள்ளை, கறுப்பு, கபிலம், இளமஞ் சள், கரும்பச்சை, கரும்பச்சையில் கபிலப்புள்ளிகள் என.
அவன் ஊரின் பிரதான வீதிகள் ஒழுங்கைகள், கைஒழுங்கைகள், தோட் டம், துரவு, வயல், வரப்பு, வெட்டைகள், பனந்தோப்புகள், பற்றைக்காடு என எல்லா இடங்களிலும் உலா வந்தான். ஊரில் உள்ள எலிகள் எல்லாமே அவன் பின்னால் வரிசை கட்டின. அவனது இசையில் மயங்கி அவன் பின்னால் திரண்டன. குறிப்பாகப் படையினர் பொதிந்த காப்பரண்களை அண்டிய வளைகளில் இருந்துதான் அதிக அளவில் வந்தன.
அவ்வெலிகளில் சில நடக்கமுடியா மல் தடம் தப்பி நடைபோட்டன. அவை வல்லடி வம் பில் காயப் பட்டவை போலும், சில இளசுகள் அவனது இசைக்கேற்ப நடனமிடவும் செய்தன. சில ஆண் எலிகளும் பெண் எலிகளும் காமவசப்பட்டவையாய் ஒன்றை ஒன்று தழுவியபடி நடந்தன. எலிகள் மட்டுமா..? நானும் அவனது நாத வெள்ளத்தில் கிறங்கி, அவனுடன் அள்ளுண்டு சென் றேன். அவனது வேகத்துக்கு என்னால் ஈடுகொடுத்து நடக்க முடியவில்லை. இருந்தும் விடாக்கண்டனாய் அவனைத் தொடர்ந்தபடி கேட்டேன்:
"நீங்கள் ஹம்லின் நகரத்துப் பைட் பைப்பரா.'
"முட்டாளே. என்னைத் தெரிய வில்லை. நா. நான் உங்கள் ஊரவன் தான். இந்த ஊரின் வாழ்விலும், வளத் திலும், அழுந்தும் துயரிலும் கலந்து கரைபவன் நான்." என்று கூறியபடி பொங்கிப் பொங்கிச் சிரித்தான். அவ னது சிரிப்பொலி அவனது இசைஒலியு டன் போட்டி போட்டது.
NY 43
DaioaSadas

Page 24
அப்பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது. ஜலதாரையின் பிரவாகம் கண்முன்னே கரைபுரண்டது. ஒதுங்கி நின்ற எனது கால்களையும் தழுவியபடி நீர் வெள்ளிக் கீற்றாய் பாய்ந்தது. அந்த ஆற்றின் இருமருங்கும் அடர்ந்த காட்டு மரங்கள். மூர்க்கமான வளர்ச்சி காட்டி, புடைத்துப் பருத்து வசீகரித்தன. அம் மரங்களின் இருள் அடர்ந்த இலைகளி லிருந்து ஒளி கசிந்தது, துளித்துளியாய் தரையில் சிந்தியது, பொன்கட்டியாய் உறைந்தது. என் ஸ்பரிசம் பட்டுப் பணி நீராய் உருகி, மாயமாய் மறைந்தது.
புலன்களை மீறிய போதையில் நனைந்த நான், ஸ்தம்பித்துப் போனேன்.
எலிகளுடன் அந்த இசைவாணனும் ஆற்றில் இறங்கியதைப் பார்த்தேன். ஏகனாய்த் தோன்றியவன், அனேகனா ய்க் காட்சி தந்தான். ஒன்றன்பின் ஒன் றாய், அவனும் எலிகளும் மாறி மாறி நீர்ப்பரப்பில் இறங்கி மறைவதைப் பார்த்தபடி நின்றேன்.
அந்த இசைஞனை மீளவும் பார்க்க வேண்டும் போலிருந்தது. இசையை மீளவும் கேட்க வேண்டும் போலிருந்தது. அழுத்தமாய் உடனிருந்த ஏதோ ஒன்று விலகியதான பரிதவிப்பு.
திடீரென விழிப்புக் கொண்டு, எழு ந்து உட்கார்ந்து கொண்டேன். எல் லாமே பொய்யாய்ப் போனது போலிருந் தது. அந்த மன இறுக்கத்திலிருந்து விடுபட்டவனாய், மனதில் கிளர்ந்த ஒரு வகை வன்மத்துடன்,பகைமை உணர்வு டன் "இன்று அந்த எலிக்குஞ்சுக்குச் சுவர்க்கப்பிராப்திதான்." என்று கறுவிய படி, கதவுச் சட்டத்தையும் ரோச்சையும் எடுத்துக் கொண்டேன். அடுக்களைப் பக்கம்தான் கால்கள் நகர்ந்தன. அடுக் களைக் கதவை மெதுவாகத் திறந்து,
44
ரோச்சை அடித்துப் பார்த்தேன். கறுத்த மணிக் கண்கள் பளபளக்க, அந்தக் குஞ்சு எலி பான்ரி கப்பேர்ட் பக்கமாக இருந்தது. புகட்டை நோக்கி அது தாவி யது. ஏதோ காரணம் பற்றி, ரதி சப்புப் பலகைத் துண்டுகள் சிலவற்றைப் புகட் டின் மேல் போட்டிருந்தாள் புகட்டில் சுவருடன் அவை சார்த்தப்பட்டிருந்தன. அதனுள் அந்த எலி ஒளித்துக் கொண் டது. கையில் இருந்த சட்டம் சப்புப் பலகைத் துண்டின் மீது விழுந்தது. பலகையை அகற்றிப் பார்த்தேன். கட்டைவிரல் அளவுகூட அது இருக்க வில்லை. சடுதியில் அதற்கு முடிவு வந்து விட்டது. வாய்வழி ஒருதுளி இரத்தம் வேறு கசிந்திருந்தது. திடீரென மனசை சுயவெறுப்பு கவ்விக் கொண் டது. அதே சமயம் செய்தது சரி. சரி என்று உள்ளிருந்து ஏதோ அரற்றவும் செய்தது.
"மரணம் வந்த உடனை எலி விறை த்து விடுமாப்பா. இங்கு அது கிடக்கிற கோலத்தைப் பாருங்க.” கூறியபடி ரதி அந்தச் செத்த எலியை எடுத்து வீட்டின் பின் வளவுப் பக்கமாக வீசினாள்.
அந்த எலிக்குஞ்சின் பொசு பொசு உடலும் வட்டக் கண்களும் சிப்பிக் காதுகளும் சிதைந்து, என் அடி மன தில் உறைந்து போனதான உணர்வே என்னுள் மிஞ்சியது.
சமையல் அறையில் இருந்து ரதி விழுந்தடித்தபடி வெளியே ஒடி வந்தாள்.
"ஒண்டில்லை அப்பா. இங்க இன் னும் இரண்டு குஞ்சுகள் ஓடுதுகள்."
எனக்குத் திகைப்பாக இருந்தது. நம்மால் முடியாத காரியம் இது என மனசு மட்டும் சொல்லிக் கொண்டது.
NY
DaioaSapa,
 

dbl2gblD
புலவர் மணியின் புன்னகை தழுவிய மல்லிகை கிடைத்தது. புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களது வித்தகத்துக்குப் பாராட்டுவிழா எடுப்பதிலும், மலர்கள் வெளியிடுவதிலும் மூச்சாக நின்றவர் மருதூர்க்கொத்தன். மல்லிகையின் முகப்பில் ஷரிபுத்தீன் ஹாஜியாரின் முகத்தைப் பதிக்க வேண்டுமென்பது அவரது தணியாத தாகமாக இருந்தது. புலவர்மணியின் முகத்தை மல்லிகை முகப்பில் கண்டதில் மகிழ்ச்சி அடைபவர்களில் மருதூர்க்கொத்தன் முதன்மையானவராக இருப்பார்.
எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் 18வது அங்கம் டொமினிக் ஜீவா அவர்களது கனிந்த காதலை சொல்கிறது. மல்லிகையினதும் மல்லிகைப் பந்தலினதும் ரிஷிமூலம் அர்த்த புஷ்டியானது என்பது இப்போதுதான் புரிந்தது. விதை சிறிது, விருட்சம் பெரிதல்லவா? ஒரு பெண்ணிற்கு துரோகம் செய்ததற்காகத்தான் ஜாஎலை ஆறு மரணத்தின் வாசல் வரைக்கும் ஜீவாவை அழைத்துச் சென்றதோ? பின் மல்லிகைக்கும் மல்லிகைப் பந்தலுக்குமாகத்தான் அந்த சிங்கள வாலிபன் மூலம் ஜீவா
மரண முதலையிடமிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்டாரோ? ஜீவாவின்
வாழ்க்கைப் புத்தகத்தில் சுவாரஸ்யமான பக்கங்கள் இவை. "அப்பா உங்கள் காதல் கதையைச் சொன்னால் தப்பா' திலீபன் இன்னும் என்னென்ன கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள் அப்பாவிடம்?
263 வது மல்லிகை டொக்டரின் கிறுக்கல்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டின. "ஒருநாள் காலை வைத்தியசாலைக்குப் பொடி நடையில் போய்க் கொண்டிருக்கிறேன். ஏழை வைத்தியன்தானே வேறென்ன செய்வது" இது வைத்தியரின் வாசகம். ஏழை வைத்தியன் மாத்திரம்தான் பொடி நடை போடுவாரோ? பணக் கார வைத் தியர்கள் பொடி நடை போடமாட்டார்களா? இங்கு இந்த வாசகம் பிடிக்கவில்லை. ஏன்தான் சிலர் இப்படி தங்களை அடையாளப் படுத்துகின்றார்களோ தெரியவில்லை. இப்படியான தாழ்வு மனப் போக்கிலிருந்து நாம் முதலில் விடுபட
ഖങ്ങi(ഥൺസെഖ[' w
மேமன்கவியின் முணுமுணுப்புகள் நியாயமானவை. "ஓரிரு கூட்டங்கள் அழைப்பிதழில் அச்சடித்த மாதிரி நிமிஷங்களுக்குத் தவறாமல் ஆரம்பமாகி இருப்பதை நாம் கண்டு இருக்கிறோம்" என்று மேமன்கவி சொல்லும் போது பன்னூலாசிரியர் மானாமக்கீன் கண்முன் நிழலாடுகிறார்.
கெக்கிறாவை ஸ்ஹானா கடிதங்கள் பகுதியில் துரைவி அவர்களை நினைவு கூர்ந்திருக்கிறார். எல்லா இலக்கியவாதிகளும் துரைவியின் இலக்கிய சேவையைத்தான் புகழ்ந்துரைப்பார்கள். மாறாக - ஸ்ஹானா
N
LDGioaSaØDas
45

Page 25
துரைவியின் ராணி மில் தயாரிப்புகளை நினைவு கூர்ந்திருக்கிறார். வித்தியாசமான பார்வை அவருக்கு.
புருஷோத்தமன் சிறுகதை எழுதியதன்மூலம், தனக்கு நாவல் எழுதக்கூடிய ஆற்றல் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார். கெக்கிறாவை ஸ்ஹானா கதையை நடத்திச் செல்லும் பாங்கு, பாத்திரங்களின் ஒன்றிணைப்பு எல்லாமே அவர் நாவல் எழுதக்கூடியவர் தான் என்று அடித்துச் சொல்கிறது. "பரஸ்பரம் இரண்டு மொழிகளும் தெரியாததன் காரணமாகத்தான் இந்த நாட்டில் இனப்பிரச்சனை இத்தனை தூரம் வேரூன்றிப் போயிற்று" என்று ஸஹானா புருஷோத்தமன் கதையில் சொல்லும் கருத்தைத்தான் அமைச்சர் அஸ்ரப் மேடைகளில் சொல்லி வருகின்றார். சிங்களம், தமிழ், ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் இலங்கையர்கள் தேர்ச்சி பெற வேண்டுமென்பது அமைச்சரது கருத்து. இதன்மூலம் இனங்களுக்கிடையே பரஸ்பரத்தை உருவாக்க முடியும் என்னும் (அமைச்சரது) கருத்தை இப்படி கலை இலக்கியத்தின் மூலம் பிரசாரப்படுத்துவதும் எழுத்தாளர்களது பணிதான்.
திருமலை சுந்தாவின் நாளையைத் தேடும் மனிதர்கள் கதையில்
வரும் 'கண்ணாடியன் பாத்திரம் கண்ணாடியாக மிளிர்கின்றது. "அனுராதபுரம்
தமிழர் கையில் இருந்து போன மாதிரி திருகோணமலையும் ." இந்த விஷயத்தை தன் பெயருக்கு முன்னால் திருமலையை இட்டு வைத்துக் கொண்ட திருமலை சுந்தா சொல்வது மிகப் பொருத்தம்தான்.
திக்குவல்லை கமால், வழமையைப் போலவே மெய்மையின் எதார்த்தத்தை மின்சாரக்கனவு கதையில் வெளிக் கொணர்கிறார். ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒவ்வொரு பெண் இருக்கின்றாள். பாரி'யை ஆண்பிள்ளையாகவும் மனிதனாகவும் உருவாக்கிய பெண
பாத்திரத்தின் இணக்கம் எடுத்தாளத்தக்கது. அன்றாட நடப்பியல்களைக்
கதைப்படுத்துவதில் திக்குவல்லை கமாலுக்கு என்றும் வெற்றிதான்.
2000 ஆம் ஆண்டை 35வது ஆண்டுமலர் மூலம் நீங்கள் மாத்திரம்தானா
வரவேற்கப் போகிறீர்கள்? மல்லகை எழுத்தாளர்களையும் வாசகர்களையும் ஏன் உங்களோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது.
அன்புடீன்
.g. என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார். (அவர் மல்லிகையின்
புதிய வாசகர்) மல்லிகைக்கு விலை ரூபா 15 குறைந்த கட்டணமாம்.
2000 ஆம் ஆண்டில் விலையில் மாற்றம் செய்யலாம் அல்லவா?
46
DaioaSadas

"சாருமதி” என்றொரு மானுடன்
நமது காலத் தைய மகத் தான கவிஞர்களில் ஒருவரான சாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்) 28.09.98 அன்று இறந்தார் என்ற செய்தி ஈழத்து இலக்கிய உலகினையே கவலைக் கடலில் மூழ்கச் செய்தது. கண்ணிர் சிந்தாத இலக்கிய நெஞ்சங்களே இல்லை. ஆனால் மாதக்காலம் உருண் டோடிவிட்டது. சாருமதியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர் வரித்திருந்த மக் கள் இலக்கியத்தில் நாட்டம் கொண்ட வர்கள் என்ற வகையில் சாருமதியின் பங்களிப்பினைத் தமிழ் கூறும் நல்லுல கிற்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டியது சமகாலத் தேவையாகும்.
ஒருவருடைய வாழ்க்கை அவருடைய குடும்ப மட்டத்திற்கு மேலாக, சமூக வாழ்க்கையில் யாதேனும் ஒன்றின் மட்டத்திலே நிலைக் கப்படுகின்ற தேவை ஏற்பட்டுவிட்டதென்றால் அம் மனிதனின் வாழ்க்கை ஏதோ ஒரு வகை யிலும் அளவிலும் சமூகப் பண்பாடு மிக்கதாகின்றது. அவர்களின் சிந்தனை யில் கொள்ள வேண்டியவற்றை தம் தேவைகளுக்கேற்ப கொள்ள முயற்சிக் கிறார்கள். இதனால் அத்தகையோரின் வாழ்வும் பணியும் இன்றைய நிகழ்வாகி ன்றது. கவிஞர் சாருமதி இவ்வாறுதான் இன்றைய நிகழ்வாகிறார்.
இறந்த மனிதர்களின் வாழ்வும் நினைவுகளும் இன்றைய பிரச்சனைக ளோடு இயைபுடையதாகின்றபோது அவர்கள் பற்றிய தேடல், ஆய்வுகள், மதிப்பீடுகள் என்பன முக்கியத்துவம் உடையதாகின்றது. அவ் வகையில் சாருமதியின் பங்களிப்பினைப் புரிந்து கொள்வதற்கும் ஆய்வு செய்வதற்கும் அவரது கொள்கையை, நடைமுறையை பட்டைதீட்டமுனைந்த சமூகப் பின்புலம் குறித்த தெளிவும் அவசியமானதொன் றாகின்றது. இப் பின்புலத்தில் க. யோகநாதன், சாருமதியாக பரிணாமம் அடைந்த கதை. வரலாற்றினை நோக்குவோம்.
யோகநாதன்
சாரு மத யான சமூகப்பின்புலம் -
அக்காலத்தில் தோழர் கிருஷ்ண குட்டி சுபத்திரன் போன்றோர் தலைமை யிலான மக்கள் இயக்கமானது புதிய தோர் பரிணாமத்தை எட்டியிருந்தது. இவ்வியக்கம் மக்கள் மத்தியில் வேர் கொண்டு கிளை பரப்பிய போது பல் வேறு ஆளுமைகள், புத்திஜீவிகள், ! மாணவர்கள், தொழிலாளர்கள், விவசா யிகள் என தன் நோக்கி வேகமாக ஆகர்ஷித்திருந்தது. அவ்வாறு ஈர்க்கப் பட்ட ஆளுமைகளில் ஒருவர்தான் சாருமதி தமது குடும்பத்தாரின் எதிர்
NY 47
pāಾà

Page 26
பார்ப்புகளுக்கும் முழுக்குப் போட்டு விட்டு, அவர்களின் எதிர்ப்பினையும் கடந்து ஓர் மக்கள் இயக்கத்தில் தன் னை இணைத் துக் கொண் டு செயற்படத் தொடங்கினார்.
1970களில் மட்டக்களப்புப் பிரதேசத் தில் முகிழ்ந்த புதிய அரசியல் முனைப் புக்களின் பின்னணியில் தனது பாத்திர த்தைத் தீர்க்கமாய், தெளிவாய் வகுத் துக் கொண்டவர் சாருமதி வாழ்வில் பல சமரசங்களையும் கைவிட்டு சிதை ந்த, சிதைகின்ற மனித குலத்தின் கம்பீ ரத்தையும், யெளவனத்தையும் தேக்கித் தர முற்பட்டது இவரது வாழ்வு.
காலப்போக்கில் பல தோழர்களின் பிரிவு குறிப்பாக தோழர்கள் கிருஷ்ண குட்டி, சுபத்திரன் ஆகியோரின் மறைவு கள் இலங்கையில் மட்டுமன்று உலக ளாவிய ரீதியிலே இடதுசாரி இயக்கங்க ளின் தளர்ச்சி, வடகிழக்கில் ஏற்பட்ட மிதவாத இயக்கங்களின் வளர்ச்சி, ஆயுத அச்சுறுத்தல் அத்துடன் தனக் குக் கிடைத்த அரசின் சம்பளம் என்பன வற்றுடன் தனது நடவடிக்கைகளுக்கு முழுக்குப் போட்டிருக்கலாம். மக்கள் இயக்கநடவடிக்கைகளையும், தத்துவப் போராட்டங்களையும் முன்னெடுத்த பலர் இம்மாற்றங்களோடு தடம்புரண்டு போக சாருமதி சற்றே அந்நியப்பட்டு மக்கள் நலன் சார்ந்த பதாகையை அவ்வக் காலகட்டங்களில் முன்னெடுத்து வந்துள்ளார்.
இங்கு மிக முக்கியமாகக் கவனிக் கப்பட வேண்டிய ஓர் அம்சம் மேற்குறிப்
பிட்ட அமைப்புகளுடன் செயற்பட்டு
வந்த சாருமதி, அத்தகைய சூழல் இல்லாத காலங்களிலும் நேர்மையுட னும் தீர்க்க தரிசனத்துடனும் செயற் பட்டு வந்தார் என்பதனையே எடுத்துக் காட்டுகின்றது. ஓர் காலகட்டத்தின்
48
இடைவெளியை நிரப்பியவர் சாருமதி என்பதில் இருநிலைப்பட்ட கருத்துக்க ளுக்கு இடமில்லை.
இத்தகைய பின்னணியில் தான் சாருமதியின் இலக்கிய சிந்தனைகளும் செழுமைப்படுத்தப்பட்டன. அவரது பங்களிப்பு பற்றிய அறிமுகத்தினை அறிமுக வசதி கருதி பின்வருமாறு
வகுத்துக் கூற விழைகின்றேன்.
1. கவிஞர்
2. சஞ்சிகை ஆசிரியர்
3. G66 fulf LT6Tri
4. ஆசிரியர்
5. பிறமுயற்சிகள்
கவிஞர்
சாருமதி பல கனதியான கவிதை களை இலக்கிய உலகிற்குத் தந்துள் ளார். இவரது கவிதைகள் குமரன், தீர்த் தக்கரை, நந்தலாலா, வயல், பூவரசு ஆகிய இதழ்களை அலங்கரிப்பதில் சிறப்பான பங்களிப்பினைச் செய்துள் ளது. "கருத்துக்கள் வானத்திலிருந்து வருகின்றவையல்ல. அவை மக்கள் மத்தியிலிருந்தே வருகின்றன." என்ற மக்கள் இலக்கியக் கோட்பாட்டை வரித்துக்கொண்ட கவிஞர் மக்களையே வரலாற்றின் பிரமாக்களாகக் கொண்டு தன்து கவிதையினைத் தீட்ட முனைந் துள்ளார். மார்க்ஸ் பற்றிய இவரது கவிதை இதற்குத் தக்க எடுத்துக்காட் டாகும். அக்கவிதை..!
"முதலாளித்துவத்தின் பொக்குள் கொடியுடன் ஒட்டிப்பிறந்த பாட்டாளி வர்க்கம்தான் உன் தத்துவத்தின் தளம்" கார்க்கியின் வார்த்தைகளில் θηβΒΙ6). தாயின், "உலகிலுள்ள படைப்புக்க
LDGioGSGODSE

ளிலே மேலான படைப்பு மனிதன் ஆகும் அத்தகைய மனித குலத்தின் கம்பீரமே சாருமதியின் கவிதையையும் செழுமைப்படுத்துகின்றது. சாருமதியில் காணக்கிட்டும் மனித நேயம் என்பது இக்கவிஞனின் நுண் உணர்வு மிக்க பரந்த இதயத்தை எமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றது. குறிப்பிட்ட வர்க்கத்தின் போர்முகமாய் வெளிப்படு கின்ற இவரது கவிதைகள் மிகுந்த நிதர்சனங்களாய் விளங்குகின்றது.
இனம், மதம், மொழி, சாதி என்ற வேறுபாடுகளைக் கடந்து நாகரிகத்திற் காயப் அவரது வரிகள் இவ்வாறு அமைகின்றன.
"ஒன்றாய் தொழில் புரிந்தோம் ஓர் அலுவலகமே சென்றோம் என்றாலும் எம்மிடையே
எத்தொடர்பும் இருந்ததில்லை.
பண்டா நீ சிங்களவன் பரம்பரை இனவெறியன் என்றாலும் நானும் குறைவோ என் குரலும் தமிழ் ஈழம்!
சிங்களப் பெருமையில் சிந்தித்து வாழ்ந்த நீ நஞ்சுடன் கலந்தாயென நாளிதழ் சொன்னது.
என்றைக்கும் நானும் உன்போல் நஞ்சிடம் தஞ்சம் புகவேண்டி வருமோ? வறுமையும் வாழ்க்கையும் உனக்கும் எனக்கும் ஒன்றென்பதை என்னால் இப்போதுதான் இனம் காண முடிகிறது.
தனிச் சிங்களப் பெருமைகள் உனது தற்கொலையை தடுக்க முடியாமல் போன போதுதான் எனது "தமிழ்க் கனவுகள்" தகரத் தொடங்கின. என்றாவது ஒரு நாளில் எமது ஆத்மாக்கள் ஒன்றாகியே தீர வேண்டும்.
இனக் குரோதம், வகுப்பு வாத வெறி இவற்றின் மத்தியிலும் ஆங்காங்கு உழைக்கும் மக்களின் உணர்வு வர்க்க அடிப்படையில் தோய்ந்ததாக இருக்க முடியும் என்பதை சாருமதி காட்டி யுள்ளார்.
குறித்த ஓர் காலத்தில் உழைக்கும் மக்களின் போர்க்குணத்தைத் தீவிரமா கப் பாடிய கவிஞர் இனவாதம், இனக் குரோதம் என்பன கேவலமானதோர் அரசியலின் பின்னணியில் மோசமான ஓர் நிலையினை எட்டியபோது அத்த கைய முரண்பாடுகளிலிருந்து அந்நியப் பட்டதும் அதேசமயம் இயங்கியல் பார்வையிலிருந்தும் தடம் புரளாதும் எதிர் கொள்வதைக் காணலாம்.
இவரது கவிதை "தெருவில் பிணங்கள் தூக்கி வீசப்பட்டிருந்தன. அவைகளின் உதிரத் தொடர்புகள் துடித்துக் கதறி ஓர் இனத்தின் கோலத்தை தம் ஒலத்தில் உரித்தாக்கிக் கொண்டன."
இன ஒடுக்குமுறை என்பது வர்க்க விடுதலைக்கு அப்பாற்பட்டது என எதிர் கொண்ட வரட்டு மார்க்ஸ்லியவாதிகளி லிருந்தும், அதே நேரம் வர்க்க விடுதலை சாத்தியமற்றது, இனவிடுத லைப் போராட்டமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு எனக்கொண்டு
NY 49
DGioaSoas

Page 27
தடம்புரண்ட இடதுசாரிகளின் ஊளை களிலிருந்தும் அந்நியப்பட்டு இன ஒடுக்கு முறையினை மார்க்ஸிய நிலை
நின்று நோக்க முற்படுகின்றார் சாருமதி
சாருமதியின் இந்நோக்கும் போக்கு மானது காலநகர்வோடு பரந்து விசாலிக் கின்றது. மக்களை ஒட்டியதாய் கிளை பரப்புகின்றது. இவரது 'சுனி', 'ஒரு கலகக்காரி எனும் கவிதை லோகபா பழங் குடியைச் சேர்ந்த சுனில் கொத்தாவின் தற்கொலை குறித்துப் பாடுகின்றது. வங்காளப் பல்கலைக் கழகமொன்றில் MA கற்கைநெறி மாணவியான இவள் இங்கு இடம்பெற்ற சாதி, பால் ரீதியாக இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிராகத் தற் கொலை செய்துகொண்டாள். இவள் பற்றி அவரது வரிகள் இவ்வாறு பிரவாகம் அடைகின்றது.
மாதவியும் மனிதப் பிறவிதானே கானல் வரி பாடி 5), 6) 60) 6T வேசையென்று சொல்லி 656)gé" (8LJPT601 கோவலன் மட்டுமென்ன கற்புக்கு அரசனா?
இந்து சனாதனம் அசிங்கங்களின் குப்பைத்தொட்டி சுனி அதையே கண்டனம் செய்தாள் தன்னைத் தானே கொன்று போட்ட தாய்! ஆயிரம் ஆண்டுகளாய் செல்லரித் துப் போன இந்திய பண்பாட்டையும், இந்து சனாதனத்தின் பயன்பாடுகளை
யும் தயவு தாட்சண்யமின்றி விமர்சிக்கி
ன்றார். கார்க்கியின் வார்த்தைகளில்
கூறுவதாயின், பொதுவில் சராசரி புத்தி ஜீவிகளின் அரசியல் கடமையான சமூக முரண்பாடுகளை சமரசம் செய் தல், நியாயப்படுத்தல், அழகுபடுத்தல் எனும் புன்மைகளைத்தாண்டி இக்கவிஞ னின் கவிதை தனக்கே உரித்தான ஒளிப்பிழம்பை ஏற்றித் துணிவுடன் நடக்கின்றது.
பெண்ணியம் குறித்துக் கதைத்த போது அதனை வெறுமனே பெண்ணிய த்துடன் மட்டும் நிறுத்தி விடுவதாக அவரது வரிகள் அமையவில்லை. அத னைச் சமூக விடுதலையுடன் இணைத் துத்தர முற்படுகிறார்.
இராச்சியம் வருக. இங்கு வீழ்ந்தோரெல்லாம் மீண்டு எழுக எந்த மனிதர்கட்கும்
9ിളഞഖ இல்லை என்றுதான் மொழிக.
எங்கும் இராமர்கள் திரிக
ஆயின்
எந்த சீதையும் நெருப்பில்
வெந்துபடாது இருக்க,
வேண்டிய வினைகளை சொரிக
சிந்திய குருதியில் குளித்து
வானில் சீக்கிரம்
உதயம் நிகழ்க.
பெண்ணியம் கூறும் பலரும் வாழ்வி லிருந்து அந்நியப்பட்ட வழியினைக் காட்டி நிற்க, இவர் வாழ்வை நிராகரிக் காமல் விரக் தியில் மூழ்காமல் அதேசமயம் பெண்ணை எந்த சமரசத்தி ற்கும் உட்படுத்தாமல் சரித்திர தூரிகை கொண்டு புதிய சித்திரத்தைத் தீட்ட (ប្រា606015966TTT.
பெண் விடுதலையை சமூக விடு
Daioasadas
 
 

மானதொன்றாகும்.
தலையுடன் ஒட்டிப் பார்க்கின்ற கவிஞர் அதனை மரபு, பண்பாடு என்பவற்றுடன் கூடிய வடிவத்தினைக் கொண்டே ஆக்கியிருப்பது கவிதைக்கு மேலும் வலிமை சேர்க்கின்றது. சமூகத்தின் புன் மைகளைச் சாடுகின்றபோது, ஆந்தைக் கூட்டங்களுக்கும், இருளின் ஆத்மாக்க ளுக்கும் எதிராய் இவர் கவித்தீ உமிழ்வது அதிசயமானதொன்றல்ல.
மக்களின் நலனிலிருந்து அந்நியமு றாமல் தீட்டப்பட்டிருக்கும் இவரது கவி தைகளில் காணக்கிட்டும் வாழ்க்கை மீதான காதல், நம்பிக்கை, நேர்மை என்பன திடுக்கிடவைக்கும் அளவுக்கு வளம் சேர்ப்பதாக அமைகின்றது. சித் தாந்த தெளிவும், சிருஷ்டிகரத் திறனும் ஒருங்கிணைந்துள்ளமையே இதற்கான அடிப்படை எனலாம். இவையனைத்தும் சமூக மாற்றங்களின் வரலாற்று ரீதியான நியதியைக் குறித்து நிற்கின்றது. சாரு மதியின் கவிதைகள் யாவும் தொகுக் கப்பட்டு வெளிவரவேண்டியது அவசிய இவை தமிழ்க் கவிதை வளர்ச்சிப் பரிணாமத்திற்கு புதிய இரத்தம் பாய்ச்சும்.
சஞ்சிகை ஆசிரியர்
சாருமதி 90களின் ஆரம்பத்தில்
'வயல்' என்ற இதழை நடத்தி வந்தார்.
இக்காலகட்டத்தில் ஏற்பட்ட மக்கள் இலக்கியப் போக்கினைத் திசைப்படுத் துவதிலும், களம் அமைத்துக் கொடுப்ப திலும் இதன் பங்களிப்பு குறிப்பிடத் தக்கதொன்றாகும். 6 இதழ்களே வெளி வந்தபோதும், மக்கள் இலக்கியத்திற்கு ஆரோக் கியமான பங்களிப்பினை நல்கியுள்ளது.
சஞ்சிகையின் அட்டைப்படத்தில் இலக்கிய கர்த்தாக்களின் படங்களைக் கொண்டு அலங்கரிக்கின்ற மரபினை
தமிழகத்தில் 'சாந்தி, சரஸ்வதி போன்ற இதழ்கள் தோற்றுவித்தன. இதன் தொடர்ச்சியினை நாம் ஈழத்தில் தோன்றிய 'மல்லிகை சஞ்சிகையில் காணலாம். இப்போக்கினை 'வயல்' சஞ்சிகையும் உள்வாங்கியே வெளி வந்தது.
குறிப்பிட்ட ஓர் காலம் வெம்மை சூழ்கொண்ட போது, குறிப்பிட்ட வர்க்க த்தின் போர் முகமாய் ஆர்ப்பரித்து நின்ற தோழர் கிருஷ்ணகுட்டி சுபத்தி ரன் ஆகியோரின் படங்களை அட்டைப் படங்களாக வெளியிடுவதில் முனைப் பைக் காட்டிய 'வயல் சஞ்சிகை தனது தளத்தினையும் தெளிவாகவே இனம் காட்டிக் கொண்டது.
பூவரசு போன்ற இலக்கிய வட்டங்க ளுடன் இணைந்து, பூவரசு என்ற சஞ்சிகையை வெளியிட்டார். பூவரசின் தாரக மந்திரம் இவ்வாறிருந்தது. "கோடயினை வென்றே குடையாகிப் பூமிக்குப் பாலூட்டும் பூவரசுகள்'. இதன் இரண்டாவது இதழின் அட்டைப்படம் இந்தத் தாரகமந்திரத்தையே நினைவூட் டுவதாக அமைந்து காணப்பட்டது. மட்டக்களப்புப் பிரதேச மக்களின் கலை, இலக்கிய உணர்வுகளை இலக்கிய வளர்ச்சியினை முன்னெடுப்ப தில் பூவரசுக்கு முக்கிய இடம் உண்டு.
வெளியீட்டாளர்
ஒரு தொகுப்புப் போடுமளவுக்குக்
கவிதை எழுதிய சாருமதி தனக்கு ஒரு
தொகுப்பைப் போட்டுக்கொள்ளாமல், சுபத்திரன் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டமை அவரது தன்முனைப் பற்ற நாகரிகத்தினைக் காட்டுவதுடன், இன்று மக்கள் இலக்கியத்திற்கு ஆற்றிய முக்கிய பங்களிப்பினையும் எடுத்துக் காட்டுகின்றது.
並 | ,
D੦aਕਯ

Page 28
1960களில் வடக்கில் இடம்பெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது, அதன் அடுத்த கட்ட மான இனவிடுதலைப் போராட்டத்தை யும் இணைத்து முன்னெடுத்திருக்கு மாயின் அத்தகைய போராட்டம் தனக்கு உரித்தான இலக்கிய கர்த்தாக்களை யும், இலக்கியக் கோட்பாடுகளையும் வெளிப்படுத்தியிருக்கும். ஆனால் இப்போராட்டத்திற்கு சேரன் பொன்ற தவறான கவிஞர்கள் கிடைத்தமையால் தான் இன்று மஹாகவி உருத்திர மூர்த்தி போன்றோர் மறு கண்டுபிடிப்புச் செய்யப்படுகின்றனர்.
இன்று மஹாகவி உருத்திரமூர்த்தி யைத் தூக்கிப் பிடிக்கின்ற வாதம் பசுபதி, சுபத்திரன் போன்ற மக்கள் கவிஞர்களை இருட்டடிப்புச் செய்கின்ற முயற்சியாகவே அமைந்து காணப்படுகி றது. மக்கள் இலக்கியக் கோட்பாட்டி னைத் தகர்த்துவதற்கான இப்போராட்ட த்தில் சுபத்திரன் போன்ற மக்கள் கவிஞரின் கவிதைகளைத் தொகுத்து வெளியிடல் சமகாலத் தேவையாகும். இதனையே சாருமதி செய்துள்ளார்.
ஆசிரியர்
சாருமதி மட்டக்களப்புப் பிரதேசத் தில் ஆசிரியராகக் கடமையாற்றியமை யால், மாணவர்கள் மத்தியில் முற்போ க்கு, மார்க்ஸிய சிந்தனைகளைக் கட்டி யெழுப்புவதில் மும்முரமாகச் செயல்பட் டார். பழந்தமிழ் இலக்கண இலக்கியங் களைக் கற்று, பழமையைப் பேணுவதே இலக்கியக் கல்வியெனப் போதித்து வந்த பண்டிதர்களிலிருந்து மாறுபட்டு, சமூகவியல் நோக்கில் இலக்கியம் கற்பித்த ஆசிரியராக சாருமதி காணப் பட்டார். மாணவர்களுக்கு இலக்கியம் சம்பந்தமான குறிப்புக்கள், புத்தகங்கள் என்பவற்றைக் கொடுத்து உதவியது
52
டன், பின்னேரங்களில் மாணவர்கள், நண்பர்களுடன் கூடிக் கலந்துரையா டலை மேற்கொள்வதும், இவரின் நடவடிக்கையாக அமைந்திருந்தது. கொள்கையினை வெறுமனே கல்வி நாகரிகப் போக்காகக் கொண்டு தலை வீங்கித் திரிகின்ற உளநோயாளராக அல்லாமல், அவற்றினை மாறிவருகின்ற உலக சூழ்நிலைக்கு ஏற்ப பிரயோகிக்க வும், புதியதலைமுறைக்குத் தேக்கித்தர முற்படவும் முனைகின்ற செயலாகவே இவரது நடைமுறை அமைந்து 85 T600TL LILL.g5).
பிறமுயற்சிகள்
சாருமதி அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், ஆற்றிய சொற்பொழிவு கள், நண்பர்களுக்கு எழுதிய கடிதங் கள் என்பன தொகுக்கப்பட்டு, வெளியி டப் படல் அவசியமாகும். இவை சாருமதியை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு உதவும்.
சாருமதியின் கட்டுரைகள் அவ்வப் போது வயல், பூவரசு சஞ்சிகைகளில் தலைகாட்டும். பழந்தமிழ் இலக்கிய பரீட்சயமும், நவீன இலக்கிய நோக்கும் சாருமதியில் தெளிவாகக் காணப்பட் டது. இவையாவும் சமூகவியல் பார்வை யைத் தழுவியே எழுதப்பட்ட கட்டுரைக 6TTCB BT 600 TLILILL6ÖI.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்பில் இலக்கிய மேதினம் ஒன்றை நடத்தினார். இதில் திருமதி: சித்திரலேகா மெளனகுரு பெண்ணியம் தொடர்பாகவும், திரு. ந. இரவீந்திரன் சமகால இலக்கியம் குறித்தும் உரை யாற்றினார்கள். மேதினம் பொறுத்து சாருமதியின் தாரக மந்திரம் இவ்வாறு இருந்தது.
"மேதினம் என்பது உழைக்கும்
DaioaSadas

மக்களின் விடுதலைக்குரிய நாளாகும். உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை, இலக்கிய ரீதியாக முன்னெடுத்துள்ள எம்மாலும் இத்தினத் தினை மறந்திருக்க முடியாது”
இத்தகைய சிறப்புமிக்க மேதின த்தை ஈழத்து இலக்கிய வரலாற்றில் நடத்திய பெருமை சாருமதிக்குரியது.
சாருமதி மக்கள் ஐக்கிய முன்ன னிக் கோட்பாட்டினையும் வலியுறுத்திய வர். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழ கத்தில் மாணவராக இருந்த காலம் முதல் இறக்கும்வரை இந்த ஐக்கியப் பாட்டினை வலியுறுத்தியே வந்தார். குறிப்பாக தேசிய கலை, இலக்கியப் பேரவை, புதிய சிந்தனை கலை இலக் கியப் பேரவை, நந்தலாலா இலக்கிய வட்டம் முதலிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
முடிவுரை
கவிஞனாக, ஆசிரியனாக, சஞ்சிகை யாளராக பரிணமித்த சாருமதியின் பங்களிப்பு மகத்தானது. சாருமதி தன் காலகட்டத்தில் எதிர்நோக்கிய முரண்பா
டுகளைக் கண்டு அதற்கு அடங்கிப் போகாமலும், அம்முரண்பாடுகளிலிருந்து விலகி நின்ற தத்துவஞானியாக இல்லா மலும் காணப்பட்ட அவர் அம்முரண்பாடு களை எதிர்கொண்டு அவற்றுக்கான தீர்வினையும் முன்வைக்க முனைந்த சமூக விஞ்ஞானியாகவே காணப்படு கின்றார். எனவே சாருமதி குறித்த கனதியான ஆய்வுகள் வெளிவரவேண்டி யது அவசியமானதாகும். அவரது வெற்றிகள் மட்டுமன்றி, தோல்விகள் கூட அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக அமையும்.
இறுதியாக, நாற்பத்தொரு வயதினை ஒருவரின் இறப்பு வயதாகக் கொள்வது துயரகரமானது. அதுவும் உழைக்கும் மக்களின் பதாகையை உயர்த்திப் பிடித்த இம்மனிதனின் இறப்பு மிகமிகத் gblUBJLDT60Ig5.
சாருமதியின் பாதையினை தடம் புரளாது முன்னெடுத்துச்செல்ல வேண்டி யதே அவரது மாணவர்கள், நண்பர்க ளின் பணியாகும். இதுவே மறைந்த கவிஞருக்கு நாம் ஆற்றவேண்டிய
ஆண்டுச் சந்தா 180/-
தனிப்பிரதி
சுவைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள்

Page 29
650au 1606) Ltfil LHELLED
காத்திரமான படைப்பாளி
முற்போக்கு எழுத்தாளர்
நண்பர் லெமுருகபூபதி அவர்களை நான் கடந்த இரண்டு தசாப்தங்களாக அறிவேன். இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம் அதன் கொழும்புக் கிளை தொடர்பான அலுவல்களில் ஈடு பட்ட போதுதான் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அதுவரைக்கும் நான் அவரை ஒரு சிறுகதை எழுத்தாளர், கலை இலக் கிய ஈடுபாடுகள் மிகுந்த ஒரு பத்திரிகை யாளர் என்று மட்டுந்தான் அறிந்து
ഞഖഴ്ത്തി[j],♔ങ്ങ്,
ஆனால் அவருடன் நெருங்கிப்பழ கிய போதுதான் அவர் எவ்வளவு அடக் கமானவர், மானுட நேயம் மிகுந்தவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
முருகபூபதி அவர்களின் இனிய சுபா வமும், எவரையும் கவரும் உரையாட லும், பிரச்சனைகளை நிதானமாக ஆழ் ந்து ஆராய்ந்து, எவரது மனமும் நோகாது தோழமையுடன் தீர்வுகள் எடுப் பதும் அலாதியானது. வெகு இலகுவாக நண்பர்களை ஈர்த்து வழி நடத்திச் செல் வதில் ஒரு பொறுப்புள்ள தலைவனுக் குரிய குணாம்சங்கள் இயற்கையாக இவரிடம் குடிகொண்டிருப்பதை இவர் இ.மு.எ.ச வின் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது அவதானி த்து வைத்திருக்கிறேன்.
"எழுதுவதோடும் சமூகப்பணி புரிவதி
54
ృతో லீ லெ. முருகபூபதி
லும் காலம் ஒடிக்கொண்டிருக்கிறதே." என்று கேட்டால் -
"நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து எழுதும் அதே வேளை சமூகத்துடனும் ஒன்றிணைந்திருக்க வேண்டும் என்ற பண்பில் ஊறிப் போய்விட்டமையால் எதிலிருந்தும் விடுபடமுடியாத நிர்ப்பந் தங்களுக்கு ஆளாகியிருக்கிறேன்." என்று கூறும் பூபதிக்கு அத்தகைய நிர்ப்பந்தங்களின் அழுத்தத்துக்கும் நெளிவு சுழிவுகளுக்கும் ஆளாகும் போது இவருக கு கதைகள் பிறக்கின்றன. வேகம் என்ற சிறுகதை அத்தகைய சூழலில் பிறந்தது என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.
இப்படியாக பல்வேறுபட்ட சோதனை களை அனுபவித்திருக்கும் அவர், ஒவ்வொரு சிறுகதைக்குப் பின்னணி யாக ஒவ்வொரு கதை இருப்பதை, தெளிவுபடுத்த சமாந்தரங்கள் என்ற இவரது சிறுகதைத் தொகுதியில், கதை கள் பிறந்த கதைகளை விரிவாகக் கூறியுள்ளார்.
இவரது கதைகள் யதார்த்த பூர்வ மாகவும் கலைத்துவம் உள்ள படைப்பு களாகவும் இருக்கும்.
"முருகபூபதி பல சிறுகதை ஆசிரிய ர்களைப் போன்று சமூகத்தினை உள்ள வாறு சித்திரிக்கவில்லை. உணர்ந்து சித்திரிப்பதோடு, இப்படி இருக்கும்
Daioapas
 

சமூகம் எப்படி இருக்க வேண்டும் எனக் காட்டிச் செல்கிறார். அதனால்தான் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் முருகபூபதிக்குரிய இடம் முதல் ஐந்துக் கள் அமைந்துவிடுவது சாத்தியமாகி றது. இவ்வாறு பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியருமான செங்கை ஆழியான் (மல்லிகை 88) கூறியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
1987ம் ஆண்டு இவர் பத்திரிகைத் தொழிலை விட்டுவிட்டு, அவுஸ்திரேலி யாவுக்குச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
கடல் கடந்து சென் றாலும் , இலங்கை நாட்டைச் சேர்ந்த இலக்கிய வாதி இலக்கியம்தான் படைப்பான் என் பதை இவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
கடல் கடந்து சென்றபின் அவரது இலக்கிய ஆளுமை இன்னும் உயர்ந்து செழுமையடைந்திருப்பதை பத்திரிகை, சஞ்சிகை வாயிலாக அவர் வெளிநாடுக ளில் நிகழ்த்தும் கலை, இலக்கிய நிகழ்வுகள் மூலமாகவும், 'வெளிச்சம்' போன்ற சிறுகதைத் தொகுப்புக்கள் மூலமாகவும் அறிய முடிகிறது.
எல்லாமாக அவர் ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார். சுமையின் பங்காளி கள், சமாந்தரங்கள், வெளிச்சம் ஆகி யன சிறுகதைத் தொகுதிகள். 'சுமை யின் பங்காளிகள் இலங்கையின் சாகித் திய மண்டலப் பரிசு பெற்றது. 'நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்', 'இலக்கிய மடல், சமதர்மப் பூங்காவில் ஆகியன கட்டுரைத் தொகுதிகள் பாட்டி சொன்ன கதை என்பது உருவகக் கதைத் தொகுப் பு. "நேர் காண ல களை உள்ளடக்கியது சந்திப்பு என்ற நூல்.
முருகபூபதி போன்ற ஒரு சமூகப் பிரக்ஞையுள்ள முற்போக்கு எழுத்தாளர்
DaioaSapa,
அந்நிய நாடு சென்றும் பல நூல்களை வெளியிட்டும், இலக்கியச் சந்திப்புகள் நடத்தியும் தாய் நாட்டிற்குப் பெருமை சேர்க்கிறார் என்றால் அவர் புலம் பெய ர்ந்து சென்றது சொகுசு வாழ்க்கையை விரும்பியல்ல என்பது நிரூபணமாகிறது.
எழுத்தாளனும் மனிதன்தான். மனித னுக்குச் சில அடிப்படைத் தேவைகள் இன்றியமையாதவை. நம் நாட்டின் தொழில் வாய்ப்புகளால் அவற்றைப் பெறமுடியாது. கடல் கடந்து சென்ற தால்தான் இந்த எழுத்தாள மனிதனுக் குச் சற்றுத் தலை நிமிர முடிந்தது. பல நூல்களை வெளியிடவும் வாய்ப்பு கிட்டியது. இவற்றால், இவர் பிறந்த மண்ணுக்கு மட்டுமல்ல, காத்திரமான பங்களிப்பு செய்து வரும் படைப்பாளி யான இவர், வெளிநாடுகளிலும் முத்திரை பதித்துள்ளார் என்பதுதான் உண்மை,
இனவேறுபாடற்ற மானுட நேயமும், சமூக ஒருமைப்பாடும்தான் இவரது எழுத்துக்களில் விரவிக் கிடக்கும். ஒரு பத்திரிகையாளனாகச் செயற்பட்டாலும் ஒரு நல்ல படைப்பாளியாக இருக்க வேண்டுமென்பதே இவரது இலட்சியம்.
இவரது சிறுகதைகள் அனைத்தும் இல
ங்கை மண்ணை மட்டும் பகைப்புலமா கக் கொண்டவையல்ல. அந்நிய நாட்டு மண்வாசனை கமழும் கதைகளையும் இவர் படைத்திருப்பதால் இவரது ஆக்க ங்கள் சர்வதேச ஒருமைப்பாட்டிற்கும் அடித்தளமிடுகின்றன என்று கூறுவது மிகையல்ல. சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு முற்போக்கு எழுத்தாளனாலேயே இது சாத்தியப்படும்.
"உயிருக்கு நிறம் இல்லை. மதம் இல்லை. இனம் இல்லை. மொழி இல்லை. என் வாழ்வின் தரிசனங்களே
%
நான் எழுதும் கதைகள்." என்று லெமு
55

Page 30
பல சந்தர்ப்பங்களிலும் கூறியிருப்பது இங்கு ஞாபகப் படுத்த வேண்டிய தொன்று. தொகுதிகள் மூலம் தனது எழுத்துத் தகைமையை உலகத் தமிழ் அரங்கில் முத்திரை பதித்துள்ளார்.
இந்தியா, சோவியத் ருஷ்யா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து இலக்கியப் பயணக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.
வீரகேசரியின் ஆசிரியர் குழுவில் கடமையாற்றிய முருகபூபதி அவர்கள் ரஸ்ஞானி' என்ற புனைபெயரில் ஒவ் வொரு ஞாயிறு இதழிலும் பல ரசமான தகவல்களைத் தருவதில் முன் நிற்பார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தில் கலைக் கோலம் நிகழ்ச்சி மூலம் பல இலக்கியவாதிகளின் நெஞ்சங்க ளோடு இணைந்தார்.
1964ம் ஆண்டு இவர் மல்லிகை
ஆசிரியரை ஒரு இலக்கிய மேடையில்
பார்த்தாலும், 1971ம் ஆண்டுதான் முதற் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. 1972ம் ஆண்டு மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பு இதழில் இவரது முதலாவது ஆக்கம் வெளிவந்துள்ளது.
"என் னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியதோடு, தொடர்ந்தும் எனது ஆக்கங்களுக்கு களம் அமைத் துக் கொடுத்தது மல்லிகை. மல்லிகை ஆசிரியரது வழிகாட்டலில் வளர்ந்தவன் நான் மல்லிகையும், மல்லிகைப் பந்தலும் என்றும் என் நெஞ்சை விட்டக லாது" என்று பெருமைப்படுகிறார் முருகபூபதி.
காத்திரமான படைப்பாளியும், பத்திரி கையாளரும் முற்போக்கு எழுத்தாளரு மான லெ. முருகபூபதியிடமிருந்து இலக்கிய உலகம் இன்னும் இன்னும் ஆக்கபூர்வமான இலக்கியப் பங்களி ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
3 雛
எமது அடுத்த இதழ் 魏 மாத்தளைச் சிறப்பிதழ்
தொடர்பு கொள்பவர்கள் தயவு செய்து
கீழ்க்கண்டவருடன் தொடர்பு கொள்ளவும் ஜனாப் எம். எம். பீர்முகம்மது 203/1, மெயின் வீதி,
மாத்தளை
201 - 1/1 பூர் கதிரேசன் வீதி, கொழும்பு 13 என்ற முகவரியைக் கொண்டவரும், ஆசிரியரும், வெயியிடுபவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு - 12 பேர் பெக்ட் அச்சகத்தில்
அச்சிட்டு வெளியிடப்பட்டது
56
N
DataSadas
 
 
 

லக்கிலேண்ட் பிஸ்கட்ஸ் மெனிபெக்சர்ஸ்
நத்தரம்பொத்த குண்டசாலை. தொலைபேசி இல 08 - 224217 232574 பெக்ஸ் இல. : 94 - 8 - 233740
பிஸ்கட் உற்பத்தித் துறையில் பன்னெடுங்கால அனுபவம்,
அன்றும், இன்றும் இல்லங்களிலுள்ள அனைவரது இனிமைச் சுவையும், தெரிவும் லக்கிலேன்ட் பிஸ்கட்ஸ்
இப்போது நவீன இயந்திரங்களினால் சுத்தம், சுகாதாரம் பேணி தயாரிக்கப்படும் லக்கிலேன்ட் உற்பத்திகள் நாடெங்கும் கிடைக்கின்றன.
அவற்றில் சில,
6)ģgŠ(86)6ö DTf
வளரும் குழந்தைகளுக்கு போஷாக்கு தரும் லக்கிலேன்ட் (BLUL DITrs
ng Gogsas (3606TL G16OLD6T U
ஈ லக்கிலேன்ட் கிறீம் கிரேக்கள்ஸ், சோல்ப் கிரக்கள்ஸ்
ஈ லக்கிலேன்ட் ச்செரிஸ் நட்ஸ்
நாவுக்குச் சுவை சேர்த்து, நானிலமெங்கும் புகழ் பரப்பும்
லக்கிலேன்ட் பிஸ்கட்டுகளை எல்லாக் கடைகளிலும் கேட்டு வாங்குங்கள்.
LLL L S L L S L L S L L S SLS L SL S LS SL S L SLLLLS S LL S LL LL LLLLL LL LL SL LL SLLLLS SZSSL SL L S L L SSLSS S L L L L L LSSZ L S L SLL LS SLLLL LL
Luckyland Biscuits:
LLL L S L L S L S L S S L S ZS L S L LL LL SZ L LLLL SS S LS S L S SZ L S L S L L T S S TL T S T S S L T TL

Page 31
மல்லிகைக்கு எமது
PARAEXPOPRC
Expo SNon Tr Sri Lank
 
 
 
 

Ju ly: 1999
வாழ்த்துக்கள்
DUCTS (PVT) LTD.
rte1S of aditional
an Foods