கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
Page 1
| LIT) கண்ணிக்குயிலின
பட்டக் கற்கைநெறி மாண
கலாநிதி மனே
1ண்மணி சண்முகதாஸ்
Page 2
Page 3
பாரதியின் கண்ணிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
Page 4
பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
(Uட்டக் கற்கைநெறி மாணவர்க்கான ஓர் உசாத்துணை நூல்)
கலாநிதி மனோனிமனி சண்முகதாஸ்
குமரன் புத்தக இல்லம் கொழும்பு - சென்னை
2OOS
Page 5
வெளியீட்டு எண்: 343 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு (பட்டக் கற்கைநெறி மாணவர்க்கான ஓர் உசாத்துணை நூல்)
- கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் டு
பதிப்புரிமை டு 2009, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
குமரன் புத்தக இல்லத்தினால் வெளியிடப்பட்டது. 361, 1/2 டாம் வீதி, கொழும்பு-12, தொ.பே. 2421388, மி. அஞ்சல்: kumbhgsltnet.lk 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, வடபழனி சென்னை - 600 026
குமரன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.
361, 1/2 டாம் வீதி, கொழும்பு-12,
Pāratiyiņ Kaņņikkuyilin Iņņicaip Pātu by: Dr. Manonmane Sanmukathas (C)
Edition: 2009
Published by Kumaran Book House
- 361, 1/2 Dam Street, Colombo - 12, Tel. - 2421388, E.mail: kumbh G?sltnet.lk - 3 Meigai Vinayagar Street, Kumaran Colony, Vadapalani, Chennai - 600 026
Printed by Kumaran Press (Pvt) Ltd. - 361, 1/2 Dam Street, Colombo -12
ISBN 978-955-659 - 157- 6
என்னுரை
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞரான பாரதியின் கவிதைகள் எளிய நடையில் அமைந்தவை. இனிய ஓசை நயமும் கொண்டவை. பொதுமக்கள் விரும்பும் மெட்டுகள் கொண்டவை. மகாகவி என்று சிறப்பிக்கப்பட்டவர். பாரத சமுதாயத்தைப் பற்றிய சிந்தனையோடு இறுதிவரை வாழ்ந்தவர். தேசப்பற்றையும் விடுதலை வேட்கையையும் மக்கள் உள்ளத்திலே படியப் பல கவிதைகள் இயற்றியவர். பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட விரும்பியவர். அந்தப் பாரதியை அறிமுகம் செய்யும் முயற்சியே இந்நூலாக்கம்.
பாரதியாரின் பாடல்களில் "குயில் பாட்டு" ஒரு தனித்துவமான சிறந்த கவிதைப் படைப்பாகும். அவர் அதைப் பாடுவதற்கு ஆங்கில மொழிப்புலமையால் ஆங்கிலக் கவிதைகளைப் படித்தமையே காரணம் என்று கருதப்படுகிறது. அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் ஆங்கிலமொழிக்கல்வி செல்வாக்குப் பெற்றிருந்தது. தனது சிறுவயதில் ஆங்கிலக் கல்வி கற்கச் சென்றதையும் அதனால் தான் பட்ட அவலத்தையும் "சுயசரிதை” என்னும் பாடலில் பதிவு செய்துள்ளார். தனது வாழ்க்கையின் ஒரு காலகட்டத்து நிகழ்ச்சிகளைப் பாரதி சுயசரிதையாகப் பாடியது அவருடைய பிறிதொரு நெடும்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
"குயில் பாட்டு" பாரதி பாடிய முப்பெரும் பாடல்களில் ஒன்று. அப்பாடலைப் பற்றிப் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பாரதியின் பிள்ளைப் பிராயத்துக் காதல் ஆங்கிலக் கல்வி கற்க அவர் வேறிடம் சென்றமையால் நிறைவேறாமல் போயிற்று. அடிமனதில் அக்காதலை அவர் புதைத்து வைத்திருந்தார். அந்த உணர்வை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக்கி குயில் பாட்டைப் பாடியுள்ளார். அதனை விளக்கும்
Page 6
vi
நிலையில் இச்சிறுநூல் உருவாக்கம் பெறுகிறது. இரு கட்டுரை களாக சுயசரிதையும் குயில் பாட்டும் நோக்கப்பட்டுள்ளன. பாரதியின் நிறைவேறாத காதலின் பதிவும் பிற்காலத்தில் அக்காதல் பற்றிய அவரது கனவும் எனது நோக்கிற் புலப்பட்டன. அதை எழுத்துருவாக்கியுள்ளேன்.
இச்சிறு நூல் இன்னொரு இலக்கையும் கொண்டுள்ளது. பாரதியின் படைப்புகளைப் பாடநெறியாகக் கற்க இளந்தலை" முறையினருக்கு ஒரு சிறு கைநூலாகவும் பயன்படும். நாம் சுவைத்த இலக்கியங்களை எமது வழித்தோன்றல்களும் எடுத்துப் படிக்கவேண்டும் என்பதே எமது வேணவா. சென்ற காலத்தின் பழுதிலாத்திறனை உணர்ந்து இனி வரும் எதிர்காலத்தின் சிறப்பையும் இளைஞர் காண இந்நூலில் இயன்றவரை முயற்சி நடந்துள்ளது.
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
பொருளடக்கம்
என்னுரை /
பாரதியின் சுயசரிதை l
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 19
பாரதியார் கவிதையின் பெண்மை: மரபுநிலையும் புரட்சிநிலையும் 51
உசாத்துணை நூல்கள் 64
Page 7
பாரதியின் சுயசரிதை
பாரதியின் பின்னணி
20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய விடுதலை இயக்கம் தமிழ்நாட்டில் பரவலாயிற்று. இந்திய விடுதலைப் போரின் வரலாற்றிலே 1906 முதல் 1920 வரையுள்ள காலப்பகுதியைச் சிறப்பித்துக் கூறும் வழக்கம் உண்டு. ஏனெனில் இக்காலத்திற்றான் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் ஒன்றிணைந்தன. தமிழகத்திலே தேசியமும் தமிழும் இரண்டறக் கலந்தன. இக்காலத்தில் கவிஞர்கள் புரட்சியைப்பற்றிப் பாடத் தொடங்கினார்கள். தாய் மொழியிலே வளம் பெற்றிருந்தவர்கள் தேசப்பற்றால் உந்தப்பெற்று எழுத்துக்களிலே தம் கருத்துக்களைப் பொறிக்கத் தொடங்கினர். இதனால் பிரதேச மொழிகளிலே வார இதழ்களும் நாளிதழ்களும் வரத் தொடங்கின.
சிறு வயதிலேயே கவி எழுதும் ஆற்றல் பெற்றிருந்த பாரதி இக்காலம் தொட்டுத் தேசியக் கவியாக மாறுகிறார். இத்துடன் பாரதியுகமும் தமிழ்நாட்டில் தோன்றுகின்றது. விடுதலையே தமது மூச்செனக் கொண்டு வாழ்ந்த பாரதியின் கவிதைகளில் அதுவே பிரதிபலித்தது. நாட்டு விடுதலைக்குச் சமூக முன்னேற்றம் அவசியம் என்று கொண்ட பாரதி மேனாட்டுச் சமூகத்தோடு தமது சமூகத்தை ஒப்பிட்டு தம் சமூகக் குறைகளைத் தமது கவிதை" களிலே எடுத்துரைக்க முற்பட்ட புரட்சிவாதியாக விளங்கினார். பெண்ணுரிமை, சாதி பற்றிய ஏற்றத்தாழ்வு, முரண்பாடுகளின் ஒழிப்பு, வறுமை, விதிபற்றிய கவிதைகளும், கட்டுரைகளும் விடுதலை நோக்கின் பல்வேறு அம்சங்களாகத் தோன்றின.
பழைய இலக்கியங்களிலே இருந்து தேசிய உணர்வூட்டும் பாடல்களைத் தொகுத்ததால் பாரதத் தாய்க்கு அர்ப்பணிக்கப் பாரதி முயன்றமை அவர் சொல்லாலே வெளிப்பாடாகின்றது.
Page 8
2 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னி) ப் பாட்டு
“எமது தாய் நாடாகிய பாரதாம்பிகையின் பெருமையை வர்ணித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகளை ஒரு மாலையாகப் புனைந்து பதிப்பிக்கக் கருதியிருக்கின்றேனாதலின் பண்டைத் தமிழ் நூல்களில் பாரத நாடு முழுவதினையும் ஒருங்கே புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களை, அறிஞர்கள் தெரிந்” தனுப்புவார்களாயின் அவர்மாட்டு மிகவும் கடப்பாடுடையவனாவேன்"
பாரதியார் இத்தகையதொரு வேண்டுகோளை விடுத்தது 1906ஆம் ஆண்டு ஆகும். ஆனால் அவரது வேண்டுகோள் நடைமுறைப் படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக அவரே தேசியக் கவியாக மாறிவிட்டார். அவரது மாற்றம் “பாரதி சகாப்தம்" என்று சொல்லத்தக்க ஒரு காலகட்டத்தையே தமிழ் இலக்கிய வரலாற்றில் தோற்றுவித்தது எனலாம். தேசிய கவிஞர் பரம்பரையின் முன்னோடியாக அப் பரம்பரையைத் தோற்றுவித்த" வராகவும் பாரதி விளங்குகிறார்.
சுயசரிதையின் காலம்
பாரதி எழுதிய தேசபக்தி மணக்கும் பாடல்களின் முதற்தொகுப்பு 1908-ம் ஆண்டு ஜனவரி மாதம் "ஸ்வதேச கீதங்கள்" என்ற பெயரால் வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு 1909-ம் ஆண்டு "ஜன்ம பூமி” என்ற பெயரில் வெளிவந்தது. 1910-ம் ஆண்டு நவம்பர் மாதம் "மாதா வாசகர்” என்ற பெயரில் மூன்றாவது தொகுப்பு வெளிவந்தது. இத்தொகுப்பில் வெளியான பாடல்கள், மகாசத்தி, மகாசக்திக்கு விண்ணப்பம், காளிக்கு சமர்ப்பணம், மகாசக்திக்கு சமர்ப்பணம், நான், மனத்திற்குக் கட்டளை, தெளிவு, ஸ்வசரிதை, ஜாதிய கீதம், பாரதமாதா, திருப்பள்ளியெழுச்சி, கிருஷ்ணன் மீது ஸ்துதி என்பன என்று ம.பொ.சி. விடுதலைப் போரில் "தமிழ் வளர்ந்த வரலாறு" என்னும் நூலிற் குறிப்பிட்டுள்ளார். இம் மூன்றாவது நூலிலே “சுயசரிதை” என்னும் பாடல் நூற்றுப்பதினைந்து செய்யுட்கள் கொண்டதாகும் என அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதியாரின் சுயசரிதைப் பாடல் நாற்பத்தொன்பது பாடல்களின் தொகுப் பெனச் சாலினி இளந்திரையன் தமது "வாழ்க்கை வரலாற்று இலக்கியம்" என்னும் நூலிற் குறிப்பிட்டுச் சொல்கின்றார். பாரதி பாடல்களைத்
பாரதியின் சுயசரிதை 3
தொகுத்துப் "பாரதி நூல்கள்" என்ற பெயரில் 1931ஆம் ஆண்டு வெளியிட்ட பாரதி பிரசுராலயத்தார் தமது முன்னுரையில்,
"பாரதி அறுபத்தாறு" இவைகளெல்லாவற்றிலும் சிறந்த நூல். இதில் சினத்தின் கேடு, தேம்பாமை, பொறுமையின் பெருமை, கடவுள் எங்கே இருக்கிறார், தாய் மாண்பு முதலிய அனேக விஷயங்களைப் பற்றித் தமதபிப்பிராயத்தை வெளியிட்டிருப்பினும் ஸர்வமத சமரஸம் என்ற பகுதி பாரதியாரின் மதக்கொள்கைகளையும், வேதாந்தத்தையும் நன்கு விளக்குகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலிப்பகுதியில் பெண் விடுதலைக் காதலின் புகழ், விடுதலைக் காதல் போன்ற காதல்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், பற்பல பதிப்புக்களை வெளியிட்டவர்கள் புதிய புதிய பாடல்களைச் சேர்த்துப் பொருள் வகுப்புச் செய்து கொண்டமையேயெனக் கைலாசபதி கூறுகிறார்.
"உதாரணமாகக் கண்ணன் கண்ணம்மா என்னும் பெயர்கள் வரும் பாடல்கள் சிலவற்றைத் தனிப் பாடல்களாகப் பாரதியார் இயற்றி இருக்கிறார். அவற்றையெல்லாம் கண்ணன் பாட்டு என்னும் தொகுதியிலே பிற்காலத்தவரான பதிப்பாசிரியர்கள் சேர்த்தமைத்துக் கொண்டனர். அதுபோலவே ஸ்வசரிதையும் பிற பாடல்களும் என்ற பெயரில் (1910-ம் ஆண்டு) வெளியான சிறு தொகுதியில் எத்தனையோ மாற்றங்கள் செய்து பிந்திய பதிப்பாசிரியர்கள் வெளியிட்டு வருகின்றனர். "ஸ்வசரிதை” என்று பாரதியார் வழங்கிய தொடர் சுயசரிதை என்று சென்னை அரசாங்கப் பதிப்பிலும் (அதைப் பின்பற்றிய சக்தி வெளியீட்டிலும்) “தன் வரலாறு” என்று உபதலைப்பாக மேர்க்குரி புத்தகக் கொம்பனிப் பதிப்பிலும் மாற்றம் பெற்றுள்ளமையை நோக்கு மிடத்து இன்று நாம் படிக்கும் பாரதிபாடல்கள் எந்தளவுக்கு மூலபாடத்தை ஒத்தன என்பது நியாயமான வினாவாகும். இன்று சுயசரிதையிற் சேர்க்கப்பட்டிருக்கும் பாரதி அறுபத்தாறு என்னும் பகுதி முந்திய பதிப்பில் வேதாந்தப் பாடல்கள் என்னும் தலைப்பில் வெளிவந்ததாகத் தெரிகின்றது. இப்படிப் பற்பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
பதிப்பாசிரியர்களது பதிப்புக்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பாரதிபாடலைப் பற்றிய அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்துவனவாக இன்றுள்ளமையைக் கைலாசபதியின் கருத்து வலியுறுத்
Page 9
s பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
துவதற்குச் சான்றாகப் பாரதி நூல்கள் காவியங்கள் என்றும் பாரதி பிரசுராலயத்தினரது பதிப்பிலே ஸ்வசரிதை என்றும் பகுதி விடப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. ம.பொ.சி. சுயசரிதைப் பாடல்களிலே இணைத்துக் கூறுகின்ற பாடற் பகுதிகள் - இந்நூலிலே பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியிலே இணைக்கப்பட்டுள்ளன. அதனால் ம.பொ.சி. குறிப்பிடுகின்ற “மாதா வாசகம்" என்னும் பெயரில் வெளிவந்த தொகுப்பிற்கும் க.கைலாசபதி குறிப்பிடுகின்ற ஸ்வசரிதையும் பிறபாடல்களும் என்னும் தொகுப்பிற்குமுள்ள பாடபேதத்தை நாம் இலகுவில் உணரக் கூடியதாக இருக்கின்றது. இருதொகுப்புக்களும் ஒரே ஆண்டு (1910) வெளிவந்த போதும் மாறுபட்டனவாக விளங்கு கின்றன. எனவே பதிப்பாசிரியர்களது முயற்சியினால் பாரதியின் பாடல்கள் தொகுப்புக்களாக வெளிவரும் போது மாறுபட்டிருக்க வேண்டும் என்ற ஒரு அடிப்படைக் கருத்தை வைத்துக் கொண்டே பாரதியின் சுயசரிதைப் பாடல்கள் பற்றிய ஆராய்வினை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையிலே சுயசரிதைப் பாடல்களுக்கும் பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் அமைந்த பாடல்களுக்கும் இடையேயுள்ள பொருளமைதி வேறுபட்ட அடிப்படையிலும் இதனை நோக்கவேண்டியது அவசியமாகும். ஒரே கவிஞன் பாடிய இருவேறுபட்ட பாடற் பகுதிகள் அவை: யென்பதைப் பாடற் பொருளமைதி கொண்டு உய்த்துணர முடிகின்றது. ஆனால் இவ்விரு பகுதிகளில் ஒன்று கவிஞனின் வாழ்க்கைச் சம்பவங்கள் சிலவற்றின் தொகுப்பாகவும் மற்றது பல்வேறு விடயங்கள் பற்றிய அவனது அபிப்பிராயங்களாயும் காணப்படுகின்றது.
சுயசரிதையிற் காணும் வாழ்வு
பாரதியின் சுயசரிதையில் அமைந்த பாடல்களைப் படிக்கும் போது அவர் வெறுப்பும் அவநம்பிக்கையும் கொண்ட ஒரு சூழலால் அப்பாடல்களை எழுதியுள்ளார் போலத் தோன்றுகின்றது. "வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய மறைவலோர் தம் உரை பிழையன்று காண்” என்று ஆரம்பிக்கும் பாரதி தம் சுயசரிதைக் குறிப்பினை "எந்த மார்க்கமும் தோன்றில எண் செய்கேன் ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே’ என்று முடிக்கின்றார். இறுதியாக உள்ள மூன்று பாடல்களும் இக்குரலில்
பாரதியின் சுயசரிதை 5
வெவ்வேறு படிவங்களாகவே அமைகின்றனவெனலாம். பாரதி 1882-ம் ஆண்டு பிறந்தவர் 1921-ல் இறந்தார். முப்பத்தொன்பது ஆண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த காலப் பகுதியில் ஏறக்குறைய 20 அல்லது 25 வயதளவில் தனது சுயசரிதைப் பாடல்களைப் பாடியிருக்க வேண்டும். ஏனெனில் இப்பாடற் பதிப்பு 1910-ல் வெளிவந்தது. எனினும் அவர் சுயசரிதையை எழுதியபோது தமது முழுதான வாழ்வின் அனுபவங்களைக் கூறமுடியாத நிலையில் குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிப் பார்த்துள்ளாரெனலாம். அவ்வாறு பார்க்குமிடத்து அவர் கடந்த கால வாழ்வின் முக்கிய நிகழ்ச்சிகளாகச் சிலவற்றை மதித்திருக்கிறார். அவற்றையே சுயசரிதைப் பாடல்களாக வடித்துள்ளார். முக்கியமாகத் தமது பத்தாவது வயது தொடக்கம் தந்தை மறைந்துபோன பதினாறாவது வயதுவரை நடந்த நிகழ்ச்சிகளையே குறிப்பிட்டுள்ளார். எவ்வாறு குறிப்பிடும் போதும் மூன்று முக்கிய நிகழ்ச்சிகளையே குறிப்பிட முற்பட்டுள்ளார் எனலாம். அவையாவன, பாரதியின் முதற்காதல், திருமணம், ஆங்கிலக் கல்வி முயற்சி என்பன. இம்மூன்று நிகழ்ச்சிகளும் பாரதியின் உள்ளத்தில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன என்பதை அவர் கவிதைகளிலே காண முடிகின்றது. பாரதியின் வாழ்வுக் காலத்தைப் பத்துப் பத்து ஆண்டுகளாகப் பகுக்கும் போது சுயசரிதையில் அவர் குறிப்பிடுகின்ற வாழ்வுக்காலம் மூன்றாவது பத்தாண்டுக்குள் அடங்கு" கின்றது எனலாம்.
சாதாரண மனிதனின் வாழ்வுக் காலத்திலே இக்காலப் பகுதியை இளமையின் ஆரம்பகாலமென்று பகுத்துக் கூறலாம். ஆனால் பாரதியின் சுயசரிதைக் கவிதைகள் இவ்வாறு கொள்வ தற்குச் சான்று சிரமத்தைத் தருகின்றன. அவரது பாடல்களின் பொருளமைதி அவரை ஒரு முதிர்ந்தவராகக் காட்டுகின்றது.
உலகெலாமோர் பெருங் கனவஃதுளே
உண்டுறங்கியிடர் செய்து செத்திடும் கலகமானிடப்பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலுங் கனவாகும்
என்ற பாரதியின் கூற்று வாழ்க்கை முற்றையும் ஆராய்ந்த அனுபவமிக்கவர் குரலாகவே தென்படுகின்றது.
Page 10
6 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
காதல் வாழ்வும் அனுபவமும்
குழந்தைப் பருவத்திலே ஏற்பட்ட தன் காதலைப் பற்றிப்பாடியுள்ள பாடல்கள் பிள்ளைக்காதல் எனப் பதிப்பாசிரியர்கள் வேறுபடுத்திப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பாரதியின் பத்து வயதிலே ஒன்பது வயதுச் சிறுமி ஒருத்தியைக் கண்டு காதல் கொண்டதாகப் பாடுகின்றார்.
ஒன்பதாய பிராயத்த ளென்விழிக்
கோது காதைச் சகுந்தலை யொத்தனள் என்பதார்க்கும் வியப்பினை நல்குமால்
என்செய்கேள் பழியென்மிசை யுண்டுசொல் அன்பெனும் பெருவெள்ளமிழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே முன்புமாமுனிவோர் தமை வென்றவில்
முன்னரேழைக் குழந்தையென் செய்வனே
என்னும் பாரதியின் உள்ளத் துணர்வுகள் வயதுக்கு மேற்பட்டிருந்ததை உணர்த்துகின்றன. காதலுணர்வுகளைப் பற்றி அவர் வருணிக்கின்ற பகுதிகளும் இதனையே வலியுறுத்தி நிற்கின்றன. எனினும் அவர் மனதிற் கொண்ட இவ்வுணர்வின் அடியிலே வேறொரு உணர்வும் இருந்ததைக் குறிப்பாகப் புலப்படுத்துகின்றார். தான் காதலியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையினை
நீரெடுத்து வருவதற்கவள் மணி
நித்திலப் புன்னகைச் சுடர்வீசிடப் போரெடுத்து வருமதன்முன் செலப்
போகும் வேளை யதற்குத் தினந்தோறும் வேரெடுத்துச் சுதந்திர நற்பயிர்
வீழ்ந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம் சீரெடுத்த புலையியற் சாரர்கள்
தேசபக்தர் வரவினைக் காத்தல்போல்
என்று குறிப்பிடுகின்றார். பாரதியின் எண்ணத்தோடு கலந்திருந்த விடுதலைக் காதல் உணர்வினை இங்கே காணமுடிகின்றது. தந்தையின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கியிருந்த போதும் கன்னியைக் கண்டு ஆவல் கொண்டபோதும் சுதந்திரமென்ற ஒரே உணர்வுடன் அவர் வாழ்ந்ததை உணர்த்த முற்படுகிறாரெனலாம்.
பாரதியின் சுயசரிதை 7
பாரதியின் பிள்ளைக் காதலுணர்வுகளின் வெளிப்பாட்டுக் கவிதைகளாகப் பதினாறு கவிதைகள் அப்பகுதியில் அமைந்” துள்ளன. அப்பாடல்களில் கூறப்பட்டுள்ள காதல் உணர்வுகளின் தன்மை கொண்ட பாடல்களாகக் கண்ணன் பாட்டுத் தொகுதியில் அமைந்துள்ளன, காதலன் காதலி பாடல்கள் அமைந்துள்ளன. சுயசரிதையில் அவர் கூறுகின்ற அதே கருத்துக்களைக் கண்ணன் பாட்டிலும் கூறியுள்ளார்.
"கன்னிமீதுறு காதலின் ஏழையேன் கவலையுற்றனன் கோடியென் சொல்லுகேன்"
என்று பாரதி சுயசரிதையிற் பாடியது போலவே "கண்ணன் என் காதலனில்" அவ்வுணர்வுகளின் தன்மைகளை விரிவாக்கிப் பாடுகிறார்.
உண்மைக் காதல் கொண்ட பின்னர் பாவம், தீமை, பழி எதையும் நோக்குவதற்கில்லையென்றும் பண்டைக்காலத்துத் தேவ மனிதர் போலவே தான் காவல், கட்டு, விதி, வழக்கெல்லாவற்றையும் பாரதி விட்டுவிட்டதாகக் கூறும் செய்தியைக் "கண்ணம்மா என் காதலியில்” விரித்துரைக்கிறாரெனலாம்.
பாரதியின் காதல் பற்றிய கருத்துக்களும், உணர்வுகளும் சுயசரிதைப் பாடல்களில் புலப்பட்டிருப்பது போலவே ஏனைய காதற் பாட்டுக்களிலும் புலப்பட்டு நிற்கின்றன. குயிற் பாட்டில் வருகின்ற
ஒன்றேயதுவாய் உலகமெலாந் தோற்றமுறச் சென்றே மனைபோந்து சித்பிந் தனதின்றி நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ? தறிபடுமோ யாரறிவார்?
என்னும் அடிகள் பாரதியின் கவிதைக் கருவைக் காட்டி நிற்கின்றன. சிறந்த காதற் பாட்டுக்களைப் பாரதி பாட அவரது வாழ்க்கை" யனுபவமும் ஒரு காரணமாக அமைவதைச் சுயசரிதைப் பாடல்கள் எமக்குணர்த்தி நிற்கின்றன.
கல்வி வாழ்வும் அனுபவமும்
பாரதி வரலாற்றை எழுதிய ஏனையோர் பாரதியின் முதற் காதலைப் பற்றி எதுவும் குறிப்பிட்டாரில்லை. ஆனால் அவரது திருமணம் பற்றிய கருத்து எல்லோராலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Page 11
8 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
செல்லம்மாளைத் திருமணம் செய்வதற்கு முன்னர் பிள்ளைக் காதல் வயப்பட்டதைப் பாரதி தனது சுயசரிதையிற் கூறியிராவிடின் அவரது காதற் கவிதையின் ஊற்று காணப்படாததொன்றாகவே இருந்திருக்கும். அவர் முதற் காதல் பற்றிய நிகழ்ச்சியின் பின்னர் தனது ஆங்கிலக் கல்வி பற்றிய வரலாற்றினைப் பாரதி குறிப்பிடுகின்றார். பாரதியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் ஆங்கிலக் கல்வி பெறுவதைப் பெரும் வரப்பிரசாதமாகக் கருதி வாழ்ந்தனர். ஆனால் பாரதி அதனைத் தனக்கேற்பட்ட விபத்தென்று கருதி வருந்துகின்றார்.
சூதிலா உளத்தினன் எந்தை தான்
சூழ்ந்தெனக்கு நலஞ் செயல் நாடியே ஏதிலார் தரும் கல்விப்படுகுழி
ஏடுயுய்தற் கரிய கொடுப்பிலம் தீதியன்ற மயக்கமும் ஐயமும்
செய்கையாவினுமேய சிரத்தையும் வாதும் பொய்மையும் என்ற விலங்கினம்
வாழும் வெங்குகைக் கென்னை வழங்கினன்
என்று தன்மீது அன்பு கொண்ட தந்தையார் தம்மைப் பள்ளிக்கு அனுப்பிய செய்தியைக் குறிப்பிடுகிறார். தான் அவ்வாறு படிக்கச் சென்றதால் அடைந்த தீமைகள் பலவென்று காட்டுகின்றார். தன் பொழுதெல்லாம் வீணே கழிந்ததாகவும், மெய் அயர்ந்து விழி குழிவிழுந்து, வீரம் தொலைந்து, உள்ளம் நலிந்து, படித்த பொருள்களிலே தெளிவில்லாமல், ஐயங்கள் அதிகரித்து, சுதந்திர உணர்வு செத்து, தன் அறிவு அலைகடலில் அகப்பட்ட துரும்பென அலைந்ததாகக் கூறுகின்றார். அந்த அனுபவத்தைக் கவிதையிலே வடித்த பாரதியார் முடிவுரையாக,
செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது
தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன நலமோரெட்டுணையும் கண்டிலேனிதை
நாற்பதாயிரங் கோயிலில் சொல்லுவேன்
என்னும் கவிதை உருவெடுத்துள்ளது. தன்னுடைய முன்வினைப் பயன்களினாலும், தேவி பாரத அன்னையின் அருளினாலும் தான் அப்பேரிருளிலிருந்து பிழைத்து விட்டதாகப் பெருமூச்செறிகிறார் பாரதி.
பாரதியின் சுயசரிதை 9
ஆனால் பாரதி தம் வாழ்க்கையில் ஆங்கிலத்தைப் பின்னர் கற்றார். அதனால் நன்மையும் அடைந்திருக்கிறார். ஆங்கில மொழியிற் சரளமாகப் பேசவும் சுவையாக எழுதவும் திறமை பெற்றவராக விளங்கினார். 1914-ம் ஆண்டில் “பொன்வால் நரி" என்ற பெயரில் நகைச்சுவை பொதிந்த கட்டுரையொன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அக்கட்டுரை ஆங்கிலம் படித்தவர்களாற் பெரிதும் பாராட்டப்பட்டதாகும். இதே ஆங்கில மொழியின் அறிவினால் பாரதி ஷெல்லி, கீட்ஸ் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளைப் படித்துச் சுவைக்கும் வாய்ப்பினைப் பெற்றார். "ஷெல்லியின் கில்டு” என்று ஒரு சங்கம் அமைத்தது மட்டுமன்றிச் ஷெல்லிதாசன்' என்ற புனைபெயரைத் தமக்குச் சூட்டியும் கொண்டவர். பாரதி ஆங்கில மொழியிலே சில கவிதைகளையும் எழுதியுள்ளார். நம்மாழ்வார் ஆண்டாள் ஆகியோரின் கவிதைகள் சிலவற்றையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். இதைவிட ஆங்கிலப் பத்திரிகைகளிலே பல கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இத்தனை விதமாக ஆங்கில மொழியிலே தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பாரதி தனது சுயசரிதைப் பாடலில் "தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தது" என்று குறிப்பிடுவது சிந்தனைக்குரியதாகவே காணப்படுகின்றது.
பாரதி தனது கவிதை வடிவங்களிலே மேலை நாட்டு வடிவங்களையும் கையாண்டுள்ளார். மேலை நாட்டு இலக்கியத்திலே 'Lyric என்று சொல்லப்படும் தன்னுணர்ச்சிப் பாடல்களையும் பாரதி இயற்ற முற்பட்டுள்ளார். தன் சொந்தமான நிலையை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு இத்தகைய பாடல் வடிவத்தைப் பாரதி கையாண்டுள்ளார். "நல்லதோர் வீணை செய்தே. "சுட்டும் விழிச்சுடர்தான்" போன்ற பாடல்களை இவ் வகைப் பாடல்களுக்கு உதாரணமாகக் கூறலாம். இப்பாடல்" களிலே தன்னுணர்ச்சிப் பாடல்களின் தன்மை பெரிதும் அமைந்து காணப்படுகின்றது.
ஆங்கிலக் கல்வியை வெறுப்பதாகச் சுயசரிதையிற் கூறும் பாரதியே தனது தமிழ்த் தாய் என்னும் கவிதையில்
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்தவளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
Page 12
O பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக்கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமீசை யோங்கும்
என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கருத்துக்கள் பாரதியின் மனநிலை வேறுபாட்டைப் புலப்படுத்துவனவாக அமைகின்றன. இங்கு “பாரதியின் சுயசரிதம்" ஒரு குறிப்பிட்ட நோக்கிலும் கசப்புணர்ச்சியிலும் எழுதப்பட்டிருப்பது என்ற சாலினியின் கருத்து ஒத்தமைவதாக விளங்குகின்றது.
பாரதியாரைப் பொருத்தமட்டில் அவர் ஆங்கிலம் கற்பதை வெறுக்கவில்லையென்றே கருதக் கிடக்கின்றது. அவரது கவிதைகளும் கட்டுரைகளும் பாரதி ஆங்கில மொழியின் செல்வாக்கைத் தான் எதிர்த்தார் என்பதைக் காட்டுகின்றன. பாரதியின் காலத்திலே ஆங்கில மொழியின் ஆதிக்கத்திற்கெதிராகப் பாரத கலாசாரத்திற்கேற்ற ஒரு புதிய கல்விமுறை வகுக்கப்பட்டது. அதற்குத் தேசியக் கல்வி என்று பெயர் தரப்பட்டது இத்தேசியக் கல்வியிலும் ஆங்கில மொழியின் ஆதிக்கம் ஊடுருவுவதைப் பாரதி வெறுத்தார் எனலாம்.
"தமிழ் நாட்டில் தேசியக் கல்வியென்பதாக ஒன்று தொடங்கி அதிற் பாஷையைப் பிரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி, இங்கிலீஸ் மூலமாகவும் தமிழ் ஒருவித உபபாஷையாகவும் ஏற்படுத்தினால் அது தேசியம் என்பதன் பொருளுக்கு முழுவதும் விரோதமாக முடியுமென்பதில் ஐயமில்லை. தேச பாஷையே பிரதானமென்பது தேசியக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்துவிடக் கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகின்ற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டில் இருந்து பரிபூரண ஸஹாயத்தை எதிர்பார்க்க வேண்டு" மானால் இந்த முயற்சிக்குத் தமிழ்ப் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறிவிக்க வேண்டும் என்று கூறும் அவரது கருத்து இதனை வெளிப்படுத்திக் காட்டுகின்றது. தமிழினம் பாரதி மீது கொண்ட காதல்தான் அவரை ஆங்கில மொழியைப் பற்றிச் சுயசரிதையில் "ஆரியர்கிங்கரு வருப்பானது" என்று குறிப்பிட வைத்ததெனலாம். “சாதிகளில்லை" யடி பாப்பா" என்று பாப்பாப் பாட்டில் அறிவுரை கூறும் பாரதி சுயசரிதையில் ஆரியர் என்று பிரித்துப் பேசுவது வியப்பாகவே இருக்கின்றது.
பாரதியின் சுயசரிதை III
திருமணமும் காதலும்
பாரதியின் சுயசரிதையில் அவ்ர் தனது திருமணம் பற்றிக் கூறுகின்ற செய்திகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைகின்றன. காதலைப் பற்றிப் பல பாடல்களைப் பாடிய பாரதி, அது கைகூடாவிடில் சாதலே வழியெனக் குயிற்பாட்டிற் கூறிய பாரதி, சொந்த வாழ்க்கையில் அத்தத்துவம் பயனற்றது என்பதையே புலப்படுத்தியுள்ளாரெனலாம். தான் காதலித்த பெண்ணை மணம் முடிக்காமல் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் பாரதிக்கேற்பட்டது.
ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழநெஞ்சிடை ஊன்றி வணங்கினன் ஈங்கோர் கன்னியைப் பன்னிரண்டாண்டனுள்
எந்தை வந்து மணம் புரிவித்தனன் தீங்கு மற்றிதிலுண்டென்றறிந்தவன்
செயலெதிர்க்கும் திறனிலனாயினேன் என்று தனது சுயசரிதையிற் கூறிச் செல்வது நடைமுறை வாழ்க்கையை நன்கு புலப்படுத்துகிறதெனலாம். சமுதாய ஏற்றத்தாழ்வுகளும், பொருளாதாரப் பிரச்சினைகளும் சேர்ந்து காதல் மணத்தைத் தடுக்கின்ற இந்தக் காலத்திலே பாரதியின் கூற்று தீர்க்கதரிசனம் என்று கொள்ள முடியாது. சொந்த வாழ்க்கையில் இலட்சியங்கள் கைகூடாமற் போவதுண்டு என்றே நினைக்கத் தோன்றுகின்றது. ஆனால் இதே பாரதி காதல் திருமணத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.
காதலினால் மானிடர்க்குக் கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலைதீரும் காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாகும்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைகளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர் உலகத்திரே
ஆஃதன்றோ இவ்வுலகத் தலைமையின்பம் காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம்.
என்ற பாரதியின் பாடல் அவர் சுயசரிதையிற் குறிப்பிடும் நடைமுறைக் கொள்கையோடு மாறுபட்டதாகவே அமையுந் தன்மையதெனலாம்.
Page 13
I2 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
வாழ்வின் விதி
பாரதியின் சுயசரிதையிலே அவர் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையே கூற முற்படினும் அவற்றையே தனது மனத்தின் அடித்தளத்தில் கொண்டு ஏனைய பாடல்களையும் பாடியுள்ளாரெனலாம். அவரது பாடல்களிலே இக் கருத்துக்கள் வெளிப்படை யாகவும் மறைமுகமாகவும் பரந்து காணப்படுகின்றன. உதாரணத் திற்கு விதிபற்றிய அவரது கருத்தினை எடுத்துக் கொண்டால் “பார்மிசை ஊழ்கடந்து வருவதும் ஒன்றுண்டோ" எனப்பாரதி தன் சுயசரிதையில் எழுப்பிய கேள்வியின் விடையாகப் பல பாடல்களைப் பாடியுள்ளாரெனலாம். அக்கவிதைத் தொகுதியிலேயே "விதியே. விதியே” என்று ஒரு பாடல் அமைந்துள்ளது. இப்பாடலின் தொடக்க அடி பதிப்புக்களிலே குறிக்கப்படவில்லை. அதற்குரிய காரணத்தை இங்காய்வது விரித்துரைக்க முற்படுமாதலால் தவிர்க்கப்பட்டுள்ளது. இப்பாடலில் "விதியே விதியே தமிழ்ச் சாதியை என்ன செய்யக் கருதியிருக்கிறாயடா?” என்று கேள்வி கேட்கும் பாரதி பல்வேறு பாடல்களில் விதி பற்றிய கருத்துக்களைப் பொறித்துள்ளார்.
"மெய்க்குங் கிருதயுகத்தினையே
கொணர்வேன் தெய்வவிதியிஃதே"
என்று தார்மீக ஆவேசத்தோடு கூறும் பாரதியே
"விதியுண்டு தொழிலுக்கு விளைவுண்டு குறைவில்லை விசனப் பொய்க்கடலுக்கு குமரன் கணையுண்டு”
என்று அமைதியும் காண்கிறார். பாரத நாட்டில் பண்டைக் காலத்தில் விதியின் சதியால் விளைந்த ஒரு போரிற்குக் காரணமான நிகழ்ச்சியைத் தமது கவிதைகளின் வாயிலாகப் "பாஞ்சாலி சபதத்தில்" காட்டுகிறார்.
சதி செய்தார்க்குச் சதிசெயல்
வேண்டும் என் மாமனே - இவர் தாமென் அன்பன் சராசந்தனுக்குமுன் எவ்வகை
விதிசெய்தார் அதை என்றும் என் உள்ளம்மறக்குமோ
என்று துரியோதனன் வாயிலாகவும்,
"விதிசெய்யும் விளைவினுக்கே - இங்கு வேறு செய்வார் புவிமீதுளரோ"
பாரதியின் சுயசரிதை - 13
விதி விதி விதி மகனே -இனி வேறெது சொல்லுவனட மகனே கதியுறுங் காலமன்றோ - இந்தக் கயமகனென நினைச் சளந்துவிட்டாள்? என்று திருதராட்டினன் வாயிலாகவும்,
இங்கிவை யாவும் தவறிலா - விதி
ஏற்று நடக்கும் செயல்களாம் சங்கிலியொக்கும் விதிகண்டீர் - வெறுஞ்
சாத்திரமன்று சத்தியம் - விதி போன்று நடக்குமுல கென்றே கடன்
போற்றி ஒழுகுவர் சான்றவர் எனத் தருமன் வாயிலாகவும்,
குலமெலா மழிவெய்திடற் கன்றோ சூத்திரத் துரியோதனன் தன்னை நலமிலா விதி நம்மிடை வைத்தனன்
என விதுரன் வாயிலாகவும்,
விதியோ கணவரே அம்மிமிதித்தே யருந்ததியைக் காட்டியெனை வேதச் சுடர்த் தீமுன்னர் வேண்டி மணஞ்செய்து பாதகர் முன்னிந்நாட் பரிசளித்தல் காண்பீரோ?
என்று திரெளபதி வாயிலாகவும் பாரதி விதியின் பால் வேறு வடிவங்களைக் காட்ட முற்பட்டுள்ளாரெனலாம். தன் சொந்த வாழ்வில் அவர் விதியைக் கண்ட தன்மைகளின் வெளிப்பாடுகளே இவையெனலாம். விதியின் விளைவு கண்டஞ் சாது வீரங் கொண்டவனாகப் பாஞ்சாலியின் கணவனாகிய அர்ச்சுனனைக் காட்டப் பாரதி முற்பட்டுள்ளார்.
தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லுமெனுமியற்கை மருமத்தை நம்மாலே உலகம் கற்கும் வழிதேடி விதியிந்தச் செய்கை செய்தான் கருமத்தை மேன்மேலும் காண்போம் இன்று கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம்மாறும் தருமத்தை அப்போது வெல்லக் காண்போம் தனுவுண்டு காண்டீவமதன் பேர் என்றான்
Page 14
14 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
என்று அருச்சுனன் முழங்குவது பாரதியின் எண்ணத்தையே வெளிப்படுத்துகின்றது. வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் அமைதியைக் காணக் கவிஞன் முற்படுகின்றான். அதற்குத் துணையாக அவர் விதியையும் அழைக்கத் தவறவில்லை. பேராற்றல் படைத்த கவிஞனாகப் பாரதி சிறப்படைந்திருந்தாலும் தானும் ஒரு சாதாரண மனிதனே என்பதையும் அவர் மறந்தாரில்லையென்பது இங்கு நினைவு கூரத்தக்கதாகும். தமிழ் மொழிக்குப் புதிய உயிர்தருதல் வேண்டிக் காவியத்தைப் பாட முற்பட்ட பாரதி சமூகத்திற்கும் ஊக்கம் கொடுக்க முற்பட்டுள்ளார். பழைமையை எடுத்துப் புதிய கோணத் திலே பார்வையிடச் சமூகத்திற்கு வழிகாட்டியுள்ளார். தன் சரிதை மட்டுமல்லத் தனித்தனி ஒவ்வொருவரது சரிதையும் சமூகத்திற்குத் தெரிந்திருக்க வேண்டுமென்று பாரதி கருதிப் போலும் இதனைப் பாடியுள்ளார். கர்மவிதியென்பது உண்மையின் உருவமேயென்பது அவரது அபிப்பிராயமாக இருந்திருக்க வேண்டும். பகவத்கீதை கூட இதனையே வலியுறுத்துகின்றது. தத்தம் தலைவிதியை நிர்ணயிக்கும் சுதந்திரம் மனிதனுக்கு உண்டு என்ற கொள்கையில் பாரதிக்கிருந்த நம்பிக்கையும் இங்கு புலப்படுகின்றது. விதியின் மேல் பழியைப் போட்டு அறியாமையாக இருந்த சமூகத்திலே அதற்குக் காரண காரிய ரீதியான விளக்கத்தைப் போதிக்க முற்படுகின்றார்.
தாழ்வுபெற்ற புவித்தலக் கோலங்கள்
சரத மன்றனல் யானும் அறிகுவேன் பாழ்கடந்த பரதநிலை யென்றவர்
பகரும் அந்நிலைபார்த்திலன் பார்மிசை ஊழ் கடந்துவருவது மொன்றுண்டோ
உண்மை தன்னிலோர் பாதியுணர்ந்திட்டேன்
என்று தன் சுயசரிதையை ஆரம்பித்துள்ளார்.
பின்வந்த சுயசரிதை
பாரதியைப் போன்று தனது வாழ்க்கை வரலாற்றினையெழுதப் புகுந்த இன்னொரு தமிழறிஞர் வ.உ.சி. ஆவர். இவரெழுதிய சுயசரிதை 1946-ம் ஆண்டு வெளிவந்தது. இந்தச் சுயசரிதை முழுவதும் அகவற் பாவால் அமைந்தது. நாட்டுச் சிறப்பு, நகரச்சிறப்பு, குடும்ப வரலாறு என்னும் மூன்று சிறுபகுதிகளைத்
பாரதியின் சுயசரிதை 15
தொடக்கமாகக் கொண்டு அவரது பிறப்பு முதல் அவர் 1912-ல் சிறையினின்றும் விடுதலை பெற்றது வரையிலான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக விவரிக்கப் படுகின்றன. தனது பிறப்பைப் பற்றிய செய்திகளைக் கூறும் போது முந்திய கனவுகளையோ அன்றேல் தீர்க்க தரிசனங்களையோ இணைக்காது உண்மைத் தன்மையுடன் கூறிச் செல்லும் வ.உ. சி.யின் வரலாறு பாரதியின் சுயசரிதையோடு இப்பண்பிலே ஒற்றுமைப்படுகின்றதெனலாம்.
தனது குறைகளை வ.உ.சி. தம் பொறுப்பிலே ஏற்றுக் கொள்கிறார். "மதுரநாயகம் என்னும் மாணிறை புலவன் சதுரமாயெனக்குச் சாற்றினனாயினும் என்னுடைக் குறையால் இடறினேன் பரீட்சையில்” என்பது முதல் கப்பல் கொம்பனிக் கூட்டாளிகள் இவரை விலக்கிவிட்டு பின்னர் ஏஜெண்டாக நியமித்தபோது அதையும் ஏற்றுக் கொண்டதை “நன்றென மொழிந்தேன் நாணம் விடுத்தே" என்று நினைவு கூருவது வரை தமது குறைகளை மறைக்காமல் பேசுகின்றாரெனலாம். சிறையில் அவர் வாழ்வு முழுவதும் சுயசரிதையிலே விபரிக்கப்படுகின்றது. பெரும் பகுதி அவர் சிறைவாழ்க்கையில் இருந்தபோதே எழுதப்பட்டமையால் தான் அங்கு பெற்ற அனுபவங்களை விரிவாக அவர் குறிப்பிடுகிறாரெனலாம்.
சதுரமாகச் சர்க்காரொடுபல சண்டைகள் புரிந்து தன்திறம் நாட்டி எண்டிசையும் புகழ் இயம்பிட நிற்கும் நமது பாஞ்சால நாயகன் சரிதமும் எமதுளம் களித்திட இன்பொடு கேட்டோம்
என்று அவர் கூறும் போது தனதுள்ளத்திலே சிறைவாழ்வில் ஏற்பட்ட இன்ப நிகழ்ச்சிகளை எவ்வாறு இணைத்துக் கொண்டார் என்பது புலப்படுகின்றது.
இன்னும் பாரதியைப் போலவே தனது கல்வி பற்றி வ.உ.சி.யும் குறிப்பிட்டுச் சொல்கின்றார்.
திருவள்ளுவரின் தெய்வ மாமறையின் பெருவளக் குறள்சில பேணிப்படித்தேன் நந்தாது விளங்கும் நற்சங்க நூல்களுள் சிந்தாமணியும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் மற்றுஞ் சிலவும் துணிவோ டெடுத்துத் தொடங்கினேன். முடித்திலேன்
Page 15
16 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
என்று அவர் கூறும்போது அவரது உண்மையான உள்ளத்தைக் காணமுடிகின்றது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிப் புலமையும், சங்க இலக்கியங்கள் ஐம்பெருங் காப்பியங்கள், புராண இதிகாசங்கள், நீதிநூல்கள், வேதாந்த நூல்கள் ஆகியவற்றில் நல்ல பயிற்சி பெற்ற பின்னரே வ.உ.சி. நாற்பதாண்டுச் சிறைத் தண்டனையைப் பெற்றார். இதனால் அச்சந்தர்ப்பத்திலே தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூரும்பொழுது, தாம் அவ்வக்காலங்களிலே கொண்டிருந்த உணர்வுகளையும் அவர் வெளிப்படுத்திக் காட்டுகின்றார்.
பாரதியும், வ.உ.சி.யும் நண்பர்களாக இருந்த போதும் சில சந்தர்ப்பங்களிலே கருத்துப் போரிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அவற்றைப் பற்றிய செய்திகள் அக்காலத்தில் வெளிவந்த “ஞானபானு” என்னும் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன. ஆனால் பாரதியின் சுயசரிதை காலத்தால் முந்தியதாக அமைகின்றது. இதனால் பாரதியின் சுயசரிதை வ.உ.சி.க்கு ஒரு வழிகாட்டியாக அமைந்ததுவோ என்றும் எண்ண முடிகின்றது. ஆனால் இரு சுயசரிதைகளிலும் அமைப்பிலே வேறுபாடுமுண்டு. வ.உ.சி. பழைய புராண மரபினைத் தமது சுயசரிதையிலே கையாள முற்பட்டிருக்கிறார். பாரதியோ தன் வாழ்க்கையின் சில அம்சங்களை மட்டுமே சுட்டிக் காட்ட முற்படுகின்றார். தன் வாழ்க்கையில் தன்னை மாற்றத்திற்காளாக்கிய நிகழ்ச்சிகளை மனத்தில் வைத்துப் பேண முற்பட்டிருக்கிறார். அதுவே அவரது கவிதை ஆற்றலுக்குக் காரணமாக இருந்ததென அறிஞர் கருதுகின்றனர்.
பாரதியார் இருவகை வாழ்வு வாழ்ந்து வந்தார். ஆனாலும் இரு கவலைச் சுமையுடனும் வருந்தினார். இவர் தம் வாழ்வு துன்பப் புயலில் அலைக்கப்பட்டாலும் இவரது வாழ்வில் நலம் கோடைக் கால இலைகள் போலவும் உதிர் கனி போலவும் போக்கும் வரவுமுள்ளதாயிருந்தது. இவரது ஊன் வாழ்விற் பொருட்செல்வம் இறைக்க இறைக்க ஊறுதலில்லாது மடைவாய் திறந்த நீர்போல் வழிந்தோடியது. சிறிது எய்ப்பினில் வைப்பாக இருந்தாலும் மாற்றற்கரிய கவலைக்கு மனக்கவலைக்குத் தூதாக நின்று வறுமையினை வளர்த்தது. எனினும் எளிமையே இவரது அறி. வாற்றலை மலரச் செய்து பாவாழ்வில் ஆக்கம் அளித்தது. "கவலை வயப்பட்டாலும் பாரதியார் நாட்டன்பில் தமதுள்ளத்தைப் பறிகொடுத்து வெறிபிடித்தவர் போலத் தனது ஆக்க சக்தியினையும்
பாரதியின் சுயசரிதை 17
உரம் பெற்ற உணர்வினையும் பிணைத்துக் கவியணி செய்வாரா
யினார்"
என்ற சோமசுந்தரப்பிள்ளையின் கருத்து பாரதியின் கவிதைகளின் வளத்திற்குக் காரணத்தை உணர்த்தி நிற்கின்றதெனலாம். இங்கு பாரதியின் கற்பனாசக்தியும் கவித்திறனும் பொலிவு பெற விளங்கும் குயிற்பாட்டிலே அவர் கூறுவது கவனத்திற்குரியதாகும்.
முன்னிக் கவிதை வெறிமூண்டே நனவழியப் பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே.
அவரது நெடும் பாட்டாகக் குயிற்பாட்டு வந்தமைய இதைவிட வேறு காரணம் தேட வேண்டுமா? தன் வாழ்க்கை அனுபவமும், கவிதையும் எவ்வாறிருந்ததென்பதை அவர் எடுத்துக்காட்டும் பாங்கு சிறப்பானது.
உண்மைக் கவிஞனாக்கியது
கவிதைக்கு ஜீவ ஊற்றாக இருப்பது வாழ்க்கை, கவி வாழ்க்கையில் இருந்தே தன் ஆவேசத்தைப் பெறவேண்டும். வாழ்க்கையில் மறைந்துள்ள புதுச் சக்திகளைத் தன் உள்விழியாற் கண்டு அனுபவித்து அவற்றிற்குப் புது "உருவந்தந்து வெளிப்படுத்துவதே கவிஞன் கலை. தமிழ்க் கவிதை பல்லாண்டுகளாக இந்த இரகசியத்தை மறந்திருந்தது. அதனால் கவிதையின் ஜீவ ஊற்று அடைபட்டிருந்தது. அவ்வடைப்பைத் திறந்துவிட்டு மக்களின் வாழ்க்கையிற் பாய்ச்சி அதைச் செழுமைப்படுத்த வேண்டி" யிருந்தது. பாரதி இப் பணியினைத் தமது 28-வது வயதிலேயே மேற்கொண்டார்.
பாரதியார் பத்தாண்டுகள் புதுவையில் இருந்த காலத்திற்றான் அவரது படைப்பின் பெரும் பகுதிகள் வெளிவந்தன. வேதாந்தப் பாடல்கள், சக்திப் பாடல்கள், பெண் விடுதலைப் பாடல்கள், சுயசரிதை, வசனகவிதை முதலியவையும், கண்ணன் பாட்டு, குயிற்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய மூன்று சிறு காப்பியங்களும் இக்காலத்திற்றான் வெளிவந்தன. அரவிந்தர், வா. வே. சு. ஐயர் போன்றோரது நட்பு பாரதியைத் தேசிய கவியாகவும் தமிழ் மொழிக்குப் புத்துருவம் தந்த தேசிய வாதியாகவும் மாற்றியதெனலாம்.
Page 16
18 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
பாரதி பாடிய சுயசரிதையே பாரதியின் உண்மை உருவத்தை எமக்குப் புலப்படுத்துகின்றதெனலாம். பாரதியை அவன் கவிதா சக்தியின் வளர்ச்சியை இனங்கண்டு கொள்ளப் பாரதி குறிப்பிட்ட சுயசரிதை நிகழ்ச்சிகள் உதவுகின்றன. தந்தையின் மரணம் பாரதியின் உலகியல் அறிவு வளர வழிவகுத்தது. அறிவுள்ள மகனாகி ஆண்டவன் அருளை வேண்டவும் வைத்தது. அதுவே அவர் பாடிய சுயசரிதையின் இறுதிப் பாடலும் ஆயிற்று.
அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம் பொறிகளின்மீது தனியரசாணை
பொழுதெலாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம் கருமயோகத்தில்
நிலைத்திடல் என்றிவையருளாய் குறிகுணமேதும் இல்லாதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே.
கண்ணிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
முன்னுரை
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய இணையற்ற கவி பாரதி என்றால் மிகையாகாது. மானுடத்தைப் பாடிய, மக்கள் கவியாக விளங்கி மகாகவியாக மலர்ந்தவர். செந்தமிழ்க்கவிதையின் செல்நெறியை மாற்றிப் புதுமைக் கவிஞரெனப் புகழ் பெற்றவர். புதுமையான எண்ணங்களால் புரட்சிக் கவி ஆனவர். பல்துறைக் கவிதைகளை நல்கிய கவிஞானி. புதியதொரு தமிழகத்தை உருவாக்கப்பாடிய கவிக்குயில். புரட்சி உணர்வையும் தேசப் பற்றையும் பாரதியின் பாடல்கள் பரப்பின. சுதந்திரக் கனவை எழுப்பத் தமிழ்த் தீப்பொறியை எழுப்பிக் காட்டுத்தியாய்ப் பாட்டுகளைப் பாடிய பாவலர். சுதந்திரப் போரில் பாரதியின் பாடல் ஆற்றிய பங்களிப்பை அளவிட்டுக் கூறமுடியாது.
பாரதியார் பாடல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டபோது 5 வகைப்பாட்டில் அடக்கப்பட்டன. பக்திப்பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், தன்வரலாறும் பிறபாடல்களும், கற்பனையும் கதைப் பாடல்களும், பொதுமையான பாடல்கள் என அவற்றைக் குறிப் பிடுவர். வேறுசிலர் பாரதியார் பாடல்களைத் தேசிய கீதங்கள், பல்சுவைப்பாடல்கள், காவியங்கள், தனிப்பாடல்கள் எனவும் வகைப்படுத்துவர். காவியங்கள் என்றும் முப்பெரும் பாடல்கள் எனவும் குறிப்பிடப்படும் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலிசபதம் என்று மூன்று பாடலும் நெடும்பாடல் என்ற வகைப்பாட்டிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வகைப்பாடுகள் பதிப்பாசிரியர்களின் காலத் தேவைக்கேற்றவாறு தோன்றியுள்ளன. முப்பெரும் பாடல்களையும் பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த போது பாடினாரெனக் கருதப்படுகிறது. தமிழகத்தை விட்டுத் தலைமறைவு வாழ்க்கை நடத்திய போது பாரதி பாடிய
Page 17
2O பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
பாடல்களில் குயில் பாட்டு ஒரு தனித்துவமான படைப்பு எனலாம். கண்ணன்பாட்டு, இந்தியா முழுவதற்குமே கண்கண்ட தெய்வமாக விளங்கிய தெய்வம் கண்ணனைப் பல்வேறு நிலைகளிலே பாவனை செய்து பாடப்பட்டுள்ளது. பாஞ்சாலி சபதம் பாரதமாதாவை அந்நியராதிக்கத்திலிருந்து மீட்க மக்களுக்கு அறிவூட்டும் எண்ணத்துடன் பாடப்பட்டுள்ளது. குயில் பாட்டு பாரதியின் உள்ளத்து நினைவுகளை ஒருங்கிணைத்துக் காட்டும் பாடலாகவுள்ளது.
செந்தமிழ்ப்பாட்டு என்றவகையில் குயில் பாட்டைப் பற்றிப் பாரதியே அறிமுகவுரையாகப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாடலின் அமைப்புக்குப் பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றும் நெட்டைக்கனவின் நிகழ்ச்சியே காரணமென்கிறார் பாரதி. கவிஞனின் கற்பனை ஆற்றலால் ஒரு படைப்பு உருவாக்கப்படும் போது கவிஞன் உள்ளத்திலே உறைந்து கிடக்கும் உணர்வும் அதற்குக் காரணமாக அமையலாம். குயிலொன்றின் இன்னிசையைக் கேட்ட புலவன் உள்ளத்தில் என்றோ ஆழப்புதைத்த உணர்வலை மேற்கிளம்புகிறது. அது கற்பனையாகப் படர்கிறது. தொடர் கவிதையாக ஓர் அருமையான படைப்பாக மலர்கிறது. பாரதியின் குயில் பாட்டின் உருவாக்கத்திற்கு ஆங்கிலக் கவிஞன் ஹீட்சின் "வானம்பாடி" என்ற கவிதை காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது. பாரதி வாழ்ந்த சூழலும் காலமும் ஆங்கிலப் புலமையின் செல்வாக்கும் இதற்கு வாய்ப்பாக இருந்தன எனக் கருதப்படுகிறது. ஆனால் பாரதியின் குயிற்பாட்டை மரபான தமிழ்க்கவிதையின் உள்ளடக்கத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது புதிய கருத்துப் புலப்படுகிறது.
பாரதி பன்மொழிப் பயிற்சியுடைய கவிஞர். ஆனால் தமிழ்மொழி மீது அளவிறந்த பற்றுடையவர். இதற்கு அவரது பாடல் சான்றாக உள்ளது.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்வீர் தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும். (பாரதி : தமிழ் : 1)
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 2I
தமிழ் மொழியை உலகம் அறியச் செய்ய வேண்டும் என்ற விருப்பு அவருக்கிருந்தது. அந்த விருப்பினைக் குயில் பாட்டு என்னும் நெடும் பாடலில் தெளிவுபடுத்தியுள்ளார். பாரதியின் உள்ளத்தில் நீண்ட காலமாக இருந்த நினைவின் நிழலைக் கற்பனை ஆற்றலாலும் தமிழ் மொழி ஆற்றலாலும் குயிற்பாட்டாகப் பாடி உலகிற்கு அளித்தார். அவருடைய அற்புதமான படைப்பின் தனித்துவத்தையும் சிறப்பையும் ஒரு புதிய நோக்கில் காண முனைவதே இவ்வெழுத்துருவின் இலக்காகும்.
1. பாரதியின் கேள்விக் கணைகள்
குயிற்பாட்டுப் பாரதியின் கற்பனையில் தோன்றிய அற்புதக் காட்சியாகும். அதனைக் கவிதையாகப் பாடுவதற்கு விந்தைக் குரலுக்குமேதினியீர் என் செய்கேன்? என்று ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். குயிலின் பாட்டு ஒன்று அவர் காதில் கேட்டது. அந்தப் பாட்டைக் கேட்க நேர்ந்த சூழலைப் பற்றிக் கவிதை பாடும் பாரதிக்கு ஒர் ஐயம் ஏற்படுகிறது. தனது அநுபவத்தை எல்லோரும் உணரவேண்டும் என விரும்புகிறார். கவிஞன், தான் கவிதை எழுத வேண்டும் எனத் தூண்டப்படுவதை எல்லோரும் அறிய வேண்டும் என்பது பாரதியின் நோக்கமாக உள்ளது. தன்னைக் கவர்ந்த சூழலை எல்லோரும் மனக் கண்ணிலே காணும்படி சொற்சித்திரங்களாக வரைந்து காட்டியுள்ளார். முதலில் புதுவை நகரைக் காட்சிப்படுத்துகிறார்.
காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் மோகனமாஞ்சோதிபொருந்திமுறை தவறா வேகத்திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
(பாரதி:குயிற்பாட்டு:1-6)
காலை நேரம். இளங்கதிரவனின் கதிர்வீச்சு. அதன் தோற்றம். நீலநிறமான கடல் ஒரு நெருப்புப் போன்ற மணியை எதிர் கொள்வது போன்ற தோற்றம். மோகனமான சோதி கடல் முழுவதும் படிந்திருக்கிறது. அப்போது முறை தவறாமல் அடுக்கடுக்காக வேகமாக அலைகள் புரண்டு வந்து தழுவுகின்ற வளமான கடற்கரை பொருந்திய "தென்புதுவை" என்னும் அழகிய
Page 18
22 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
நகரம். அலைகள் புரண்டு வரும் போது “வேதப் பொருள் பாடி வருவதாக”ப் பாரதி கூறுவது கவனத்திற்குரியது. கடலலையின் ஒலி அதை உற்றுக் கேட்பவருடைய மனநிலைக்கேற்ப அவர் காதில் ஒலிக்கும் தன்மையுடையது. பாரதியின் "புயற்காற்று" என்னும் தனிப்பாடலில் "கடல் குமுறுது" என்று பாடியுள்ளார். குயிற் பாட்டில் அவருடைய மனநிலையில் அதிகாலையில் நாளும் பொழுதும் கேட்ட வேதத்தின் ஒலி நினைவின் நிழலாய் நிற்கிறது. பாரதி அநுபவித்த காலைப் பொழுதுகளைப் புதுவையிலும் நினைவில் சுமந்து வாழ்ந்ததை இதன் மூலம் உணரமுடிகிறது. மறைந்து வாழும் நிலையில் இழந்தவற்றை மீட்டுப் பார்க்கும் பாரதி பாடிய குயில் பாட்டு அவருடைய உணர்வுகளைத் துல்லியமாகவே வெளிப்படுத்தியுள்ளது.
தென் புதுவைக்கு மேற்கே சிறு தொலைவிலுள்ள ஒரு மாஞ்சோலை. பல்வேறு பறவைகள் வந்து தங்குமிடம். வேடர் வந்து வேட்டையாடும் சோலை. இங்கு வருகின்றவர்கள் “பறவை சுடும் வேடர்" எனப் பாரதி கூறியுள்ளார். வேட்டைக்கு யாரும் வராத “விருந்துத்திருநாளில்” தான் பாரதி அங்கு சென்றதாகப் பாடுகிறார். அடுத்து அவர் காட்டுகின்ற சொல்லோவியம் இது.
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில் வீற்றிருந்தே ஆண்குயில்கள் மேனி புளகமுற ஆற்றலழிவு பெற உள்ளத்தணல் பெருக சோலைப் பறவையெலாம் சூழ்ந்து பரவசமாய்க் காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்தது போல் மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல் போல் வானத்து மோகினியாள் இந்த வுரு வெய்தித் தன் ஏற்றம் விளக்குதல் போல் இன்னிசைத் தீம்பாடலிசைத்திருக்கும்.
(பாரதி:குயிற்பாட்டு:12-21)
குயில் பாடுகின்ற காட்சி. பறவைகள் அதை மெய்மறந்து கேட்டிருக்கும் பாங்கு. பாரதியின் உள்ளத்தில் அமைத்துக் கொண்ட ஒர் இசையரங்கம் எனலாம். பாடுவது பெண்குயில். மெய்மறந்து ஆண்குயில்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. காலைக் கடன்களைச் செய்யப் போகாமல் சோலைப் பறவைகள் எல்லாமே பரவசமாய்க் குயிலின் பாடலைக் கேட்கின்றன.
ஆண்குயில்கள் மேனி புளகமுற்றிருக்கின்ற காட்சி பாரதியின்
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 23
கவிதைக் கண்களுக்குத் தெளிவாய்த் தெரிகிறது. கவிதையின் தன்மையைக் கூறப் பாரதி இக்காட்சியை ஒரு வாய்ப்பாகக் கொள்ளுகிறார். பாடலைக் கேட்கும் போது ஏற்படும் அநுபவத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறார். இனிய அமுதத்தைக் காற்றிலே பரவ விட்டால் அது எங்கும் கலந்து எல்லோரும் சுவைக்க உதவும். இசை மின்னற் கீற்றின் சுவைபோல மெல்லிதாய் ஆழமாய் எங்கும் இனிமையாய் பரவும் தன்மையது. இயற்கைச் சக்திகளான காற்றும் மின்னலும் மனிதரால் நன்கு உணரப்பட்டவை. எனவே அவற்றை அநுபவிக்கின்ற தன்மை" யோடு இசையையும் இணைத்தால் அதன் பயனைப் பாமரரும் அறிய முடியும் எனப் பாரதி கருதினார்.
முன்னிக்கவிதை வெறி மூண்டதால் நனவழியப் பாடுவ" தாகப் பாரதி குயிற்பாட்டிலே கூறுகிறார்.
"பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டைக் கனவினிகழ்ச்சியிலே - கண்டேன்”
என்னும் பாரதியின் கூற்று கவிஞர்களின் இயல்பைக் கூறுவதாக உள்ளது. சாதாரண மனிதர்களைப் போலல்லாமல் கவிஞர்கள் பட்டப்பகலிலேயே நீண்ட கனவுகளைக் காணும் இயல்புள்ளவர்கள். குயில் பாட்டுத் தன்னுடைய பட்டப்பகற் கனவு எனப் பாரதி கூறும் போது அது அவருடைய ஆழ்மனதில் புதைந்து கிடந்த உணர்வொன்றின் வெளிப்பாடு என்பதையும் காட்டுகிறது. இதனை உறுதிப்படுத்துவது போல சில கேள்விக் கணைகளையும் கவிதையிலே தொடுத்துள்ளார்.
மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ?
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ? நாதக் கனவில் நம்முயிரைப் போக்கோமோ? அன்று நான் கேட்டதமரர்தாங் கேட்பரோ?
குயிலும் தானும் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தனக்கு மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வருமோ என்று கேட்கிறார். குயிலைக் காதலித்துக் களிப்புடன் வாழ்வோமோ என ஏங்குகிறார். இசை இன்பத்தில் மூழ்கி நாதக் கனவிலே உயிரைப் போக்" கோமோ எனப் பாரதி கேட்பது அவருடைய நிறைவேறாத ஆசை ஒன்றையே நினைவூட்டுவதாக உள்ளது. குயிற்பாட்டின் பொருள் முழுவதும் தனக்குத் தெளிவாகத் தெரியும் என்றும் ஆனால்
Page 19
2-1 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
அப்பொருளை உலகத்தவருக்கு எடுத்துரைப்பதற்குரிய வியப்பான குரல் ஒன்று இல்லையே என வருந்துகிறார். குயில் ஒரு பறவை. கவிஞர் மனிதன். ஆனால் இருவரும் இணைந்து வாழ்வது சாத்திய மற்றது. குயிலுக்குத் தன் உருவை மனித உருவாக மாற்ற முடியாது. பாரதியாலும் பறவையாக மாறமுடியாது. இத்தகைய ஒரு கற்பனைக்கு பாரதிக்கு மனதில் இருந்த நிறைவேறாத பிள்ளைக் காதல் பற்றிய எண்ணமே காரணமாக இருந்திருக்க வேண்டும்.
2. பிள்ளைக் காதல்
பாரதி பாடிய தன்வரலாற்றில் பிள்ளைப்பிராயக் காதலைப் பற்றிப் பாடியுள்ளார். பாடும் போது அதனையும் கனவென்று குறிப்பிடுகிறார். அந்தக் கனவு தூக்கத்திடைத் தோன்றியதன்று. நனவிடை நிகழ்ந்தது என்று கூறுகிறார். பிள்ளைப் பிராயக் காதலை அவர் ஒளிக்க விரும்பவில்லை. மென்னடையும் இன் சொல்லும் கருவிழியும் மேனியெங்கும் நறுமலர் மணமும் கொண்ட கன்னிப் பெண்ணைக் கண்டு காதல் வெறி கொண்டதாகக் கூறுகிறார். தனது உணர்வுகளை பாரதி ஒளிக்க விரும்பவில்லை.
ஒன்பதாய பிராயத்த ளென் விழிக்
கோது காதைச் சகுந்தலை யொத்தனன் என்பதார்க்கும் வியப்பினை நல்குமால்
என்செய்கேன் பழியென் மிசை யுண்டுகொல் அன்பெனும் பெரு வெள்ளமிழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்திட வல்லரே? முன்பு மாமுனிவோர் தமை வென்றவில்
முன்னரேழைக் குழந்தையென் செய்வனே?
(பாரதி : சுயசரிதை : 6)
ஒன்பது வயதுப் பெண் குழந்தையைக் கண்டு பாரதி காதல் கொண்டதைப் பற்றிச் சொல்லும் போது தன்னுடைய நிலையை வெளிப்படையாக விளக்க விரும்புகிறார். அந்தப் பெண் சிறு பெண்ணாகத் தோன்றவில்லை. சகுந்தலை போலத் தோன்றுகிறாள். இத்தகைய ஒர் உணர்வு நிலையை அச்சந்தர்ப்பத்தில் பாரதி கொண்டிருந்தார் என்பது எல்லோருக்கும் வியப்பைத் தரக்கூடும் என அவரே கூறுகிறார். தன்மீது பழி ஏதுமில்லையென்றும் அன்பு என்னும் வெள்ளத்தில் தான் அள்ளுண்டு போனதை மறைக்காமல் குறிப்பிட்டுள்ளார். முற்காலத்தில் காமனுடைய வில்லின் ஏவலால்
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 25
தோற்றுப் போய்த் துறவை மறந்தனர் பலர். அவர்களோடு ஒப்பிடும் போது ஏழைக்குழந்தையான நான் என்ன செய்வேன் என்று பாரதி பாடுவது இங்கு கவனத்திற்குரியது. காதல் என்பது உடல் தொடர்பானது என்ற எண்ணத்தோடு வாழ்ந்ததைப் பிற்காலத்தில் பாரதி எண்ணிப் பார்த்துள்ளார். பழைய வாழ்வியல் பற்றிய செய்திகளைத் தன் வரலாறாகப் பாடும் போது பதிவு செய்துள்ளார். அவளைச் சந்திப்பதற்காக அவள் தண்ணிர் எடுத்து வரும் போது காத்திருந்ததையும் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வருந்தியதையும் கவிதையாகப் பாடியுள்ளார். தனது காத்திருப்பதை அவர் வருமாறு பாடியுள்ளார்.
நீரெடுத்து வருதற் கவள் மணி
நித்திலப்புண் ணகை சுடர் வீசிடப் போரெடுத்து வருமதன் முன் செலப்
போகும் வேளை யதற்குத் தினந்தொறும் வேரெடுத்துச் சுதந்திர நற்பயர்
வீந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம் சீரெடுத்த புலையியற் சாரர்கள்
தேசபக்தர் வரவினைக் காத்தல் போல்
(பாரதி; சுயசரிதை :9)
அவளைக் காண்பதற்காகக் காத்திருக்கும் உணர்வுக்கு உவமை" யாக அவர் கூறும் விடயம் அவருடைய தேசபக்தியைக் காட்டு" வதாக உள்ளது. மேலும் “காமனம்புகள் என்னுயிர் கண்டவே", "புலனழிந்து புத்துயிரெய்துவேன்", "கவலையுற்றன கோடியென் சொல்லுகேன்" என அவர் தனது காதலுணர்வை வெளிப்படுத்தி யுள்ளார். ஒரு பக்கத்துக் காதலுணர்வு என அவர் கருதியிருந்த வேளை அவளும் தன்னை விரும்புவதை உணர்ந்ததையும் நயமாகப் பாடியுள்ளார்.
ஆதிரைத் திரு நாளொன்றிற் சங்கரன்
ஆலயத் தொரு மண்டபந்தன்னில் யான் சோதி மானொடு தன்னந்தனியனாய்ச்
சொற்களாடியிருப்ப மற்றாங்கவள் பாதி பேசி மறைந்த பின் தோன்றித்தன்
பங்கயக் கையில் மை கொணர்ந்தே ஒரு சேதி நெத்தியில் பொட்டு வைப்பேன் என்றாள்
திலதமிட்டனள் செய்கையழிந்தனன்.
(பாரதி:சுயசரிதை:19)
Page 20
26 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
கோயில் மண்டபத்தில் சந்திக்கின்ற வேளை நடந்த ஒரு விடயத்தை மிகவும் நயத்தக்க நாகரிகத்தோடு கூறுகிறார். பேச்சளவில் இருந்த தொடர்பை இளமைநிலை காரணமாக எழுந்த உணர்வுநிலையால் உந்தப்பட்டுச் செய்கையழிந்ததையும் குறிப்பிட்டுள்ளார். “பொட்டு வைப்பேன்" என்றவளுடைய கூற்றை அவளுடைய அநுமதியாக ஏற்றுக் கொண்ட தனது மனப் பக்குவத்தைப் பிற்காலத்திலும் நினைந்து பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய இனிய சூழலில் பாரதியின் தந்தையார் அவரை ஆங்கிலமொழிப் பயிற்சிக்காக அனுப்புகிறார். ஆங்கிலக்கல்வி பாரதியின் உள்ளத்தில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. பார்ப்பனப் பிள்ளை யொன்றை மீன் விற்பதற்கு அனுப்புவது போல இருப்பதாகப் பாடியுள்ளார். கல்வி கற்கச் சென்ற விடத்தில் மனம் ஒன்றாமல் வருந்தினார். தந்தைக்குச் செலவு ஏற்பட்டதே யொழிய அவர் கல்விநிலையில் முன்னேற்ற மில்லை. அவர் பிள்ளைக் காதலும் கைகூடவில்லை.
பாரதி பத்துவயதில் பிள்ளைக்காதல் வயப்பட்டவர். அந்தக் காதலை ஆழமாக நெஞ்சில் புதைத்துக் கொண்டார். பின்னர் பன்னிரண்டாம் வயதில் தந்தையின் ஒழுங்கின்படி பிறிதொரு பெண்ணை மணம் செய்தார். தந்தையை எதிர்க்கும் துணிவற்ற பாரதி தன்னிலையை மனம் நொந்து குறிப்பிடுகின்றார்.
மற்றோர் பெண்ணை மணஞ் செய்தபோழ்து முன்
மாத ராளிடைக் கொண்டதொர் காதல்தான் நிற்றல் வேண்டுமெனவுளத் தெண்ணிலேன்
நினைவையேயிம் மணத்திற் செலுத்திலேன் முற்றொடர்பினிலுண்மை யிருந்ததால்
மூண்ட பின்னதோர் கேளியென் றெண்ணினேன் கற்றுங் கேட்டு மறிவு முதிருமுன்
காதலொன்று கடமை யொன்றாயின.
(பாரதி:சுயசரிதை:36)
காதல் வயப்பட்டவர் அது கை கூடாமல் பிறிதொரு மணம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் அவர் நிலை எவ்வாறிருக்குமெனப் பாரதி கூறுவது தனது சொந்த அனுபவத்தை எல்லோருக்கும் அறிவிப்பது போலுள்ளது. செல்லம்மாவுடன் அவர் நடத்திய இல்லறம் ஒரு கடமையாகவே அமைந்தது. இங்கு கவிஞர் ஒரு நல்லுரை செய்யும் ஞானிபோலச் செயற்படுகிறார். கல்வி
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 27
மூலமாகவோ அன்றேல் கேள்வி மூலமாகவோ வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்களை எப்படி ஏற்றுக்கொள்வது என வழிப்படுத்துகிறார். கடமையாகச் சிலவற்றை ஏற்றுக்கொண்டு வாழவேண்டியது எமது கடமையாகும். பாரதி பாடிய சுயசரிதையில் அவரது பிள்ளைக்காதல் பற்றிய மனப்பதிவுதான் குயில்பாட்டு என்னும் புதிய தொரு பாடலைப் பாடுவதற்குத் தூண்டியுள்ளது.
3. குயிற்பாட்டின் அமைப்பு
நெடும்பாட்டான குயில் பாட்டைப் பாரதி பாடிய போது அதற்கென ஒர் அமைப்பையும் கையாண்டுள்ளார். பாரதி பாடலைப் பதிப்பித்தோரும் அதனை மனங்கொண்டுள்ளனர். குயில் ஒன்றின் கதையைப் பாட வந்த பாரதி முதலில் அதை அறிமுகம் செய்கிறார். அதன் பின்னரே குயிலின் காதற்கதையைத் தொடருகிறார்.
குயிலினர் அறிமுகம்
பாரதி அறிமுகம் செய்யும் குயில் ஒரு புதுமையான படைப்பாகும். ஆண் குயில் பாடும் மரபைப் பாரதி மாற்றிப் பெண் குயில் பாடுவதாக அறிமுகம் செய்கிறார். பேடைக்குயில் பாடும் போது ஆண்குயில்கள் மேனி புளகமுற ஆற்றல் அழிவுபெற உள்ளத்தில் அனல் பெருகக் கேட்டிருக்கும் நிலை பாரதியின் கற்பனையின் புதுமையாகும். இங்கே குயிலை ஒரு குறியீடாக்கியுள்ளார் என்றே கூறலாம். அழகான பெண்ணொருத்தி பாடும் போது ஆண்கள் தம்மை மறந்து கேட்டிருக்கும் நிலையையே இங்கு சுட்டியுள்ளார். "மேனிபுளகமுறுதல்", "ஆற்றல் அழிதல்", "உள்ளத்தில் அனல் பெருகல்" என்னும் அநுபவங்களைத் தான் உண்மையில் அநுப" வித்தது போல வருணித்துள்ளார். சோலைப் பறவைகளும் குயிலின் பாட்டை பரவசமாகக் கேட்டிருந்ததாகப் பாரதி பாடியிருப்பது அவர் சுட்டிய பொருளை மேலும் தெளிவுபடுத்து வதாக உள்ளது. இன்னிசைத் தீம்பாடல் ஒன்றைக் கேட்போரது பரவசத்தைக் காட்டி இசை மனிதனை மட்டுமல்ல பறவை களையும் மயக்கும் தன்மையுடையது என விளக்கியுள்ளார்.
Page 21
28 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
குயிலின் உருவத்தை அடுத்துக் குறிப்பிட்டுள்ளார். வானத்து மோகினியே குயிலுருவம் பெற்று வந்துள்ளாளோ என ஐயம் தோன்றுவதாகக் குறிப்பிடுகிறார். விண்ணில் வாழ்வோருக்கே தமக்கு வேண்டும் உருவத்தை எடுக்கும் ஆற்றல் உண்டு. இங்கு பாடும் குயிலின் குணவியல்பைக் காட்ட அவ்வாறு சிறப்பித்துக் கூறியுள்ளார். குயிலின் தகைமையைக் குறிப்பிடும் போது "கன்னிக்குயில்” என்று சிறப்புற வேறுபடுத்திக் கூறியிருப்பது நோக்குதற்குரியது. அதனால் அப்பேடைக்குயிலைக் காதலிக்க விரும்புகிறார். அதற்காக மனிதவுருவை விட்டுக் குயிலுருவம் பெறவிரும்புகிறார். பாரதி குயிலைக் கண்ட இடத்தையும் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். குயில் பாடிய மாஞ்சோலையை அதன் அமைவிடத்தைக் கூறும் போது காவிய மரபு நிலை நின்று மாஞ்சோலை பற்றி வருணிக்கிறார். கடற்கரையிலே அமைந்த சோலையாக இருப்பதால் பறவைகள் வந்து தங்கிச் செல்ல வாய்ப்பான இடமாகக் காட்டுகிறார். பறவைகளை வேட்டையாடுபவர் பலர் அங்கு வருவதால் அடர்த்தியான சோலை என்பதையும் உணரவைக்கின்றார்.
குயில் பாடுகின்ற வேளை பற்றிய குறிப்பு பாரதியின் கற்பனைத்திறனுக்கு ஒரு சிறந்த சான்றாகும். வழக்கமாகப் பறவையினம் விடியற் காலையிலேயே எழுந்து மக்களைத் தமது ஒலிப்பால் எழுப்பும் தன்மையுடையவை. ஆனால் இன்னிசையிலே பேடைக்குயில் பாடிய போது அவை தம்முடைய காலைக் கடனிலே கருத்தின்றிக் கேட்டுக்கொண்டிருந்தன எனப் பாரதி கூறும் போது குயில் பாடும் பாட்டின் சிறப்பையும் உய்த்துணர வைக்கின்றார்.
குயில் பாடிய பாட்டு
குயில் பாட்டில் மிகவும் சிறப்பான பகுதி குயில் பாடிய பாட்டாகும். குயிலை அறிமுகம் செய்யும் போது அதனுடைய பாட்டிலே தொகுக்கப்பட்ட பொருள் எல்லாவற்றையும் தன்னால் விளங்கிக் கொள்ளமுடிந்தது எனக் கூறுகிறார். எனவே குயிலின் மொழியைத் தமிழில் மொழி பெயர்த்துத் தருவது போலப் பாவனை செய்து பாடியுள்ளார். அது வருமாறு:
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 29
காதல் காதல் காதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல். (காதல்)
அருளே யாநல்லொளியே ஒளிபோ மாயின் ஒளிபோமாயின் இருளே இருளே இருளே. (காதல்)
இன்பம் இன்பம் இன்பம் இன்பத்திற்கோ ரெல்லை காணில்
துன்பம் துன்பம் துன்பம். (காதல்)
நாதம் நாதம் நாதம்
நாதத் தேயோர் நலிவுண்டாயின்
சேதம் சேதம் சேதம். (காதல்)
தாளம் தாளம் தாளம் தாளத்திற்கோர் தடையுண் டாயின் கூளம் கூளம் கூளம். (காதல்)
பண்ணே பண்ணே பண்ணே பண்ணிற்கே யோர் பழுதுண் டாயின் மண்ணே மண்ணே மண்ணே. (காதல்)
புகழே புகழே புகழே புகழுக் கேயோர் புரையுண் டாயின் இகழே இகழே இகழே. (காதல்) உறுதி உறுதி உறுதி உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்
இறுதி இறுதி இறுதி (காதல்)
கூடல் கூடல் கூடல்
கூடிப் பின்னே குமரன் போயில்
வாடல் வாடல் வாடல். (காதல்)
குழலே குழலே குழலே
குழலிற் கீறல் கூடுங் காலை
விழலே விழலே விழலே. (காதல்) மேற்காட்டிய பாடல்களில் குயிலின் பாடு பொருள்களைப் பாரதி வகுத்துக் காட்டுகிறார்.
அருள், இன்பம், நாதம், தாளம், பண், புகழ், உறுதி, கூடல், குழல் என ஒன்பது பொருள் பற்றிப் பாட்டு அமைந்துள்ளது.
Page 22
3O பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
இப்பொருள்கள் பற்றிப் பாடு முன்னர் காதல் பற்றிக் குயில் பாடுகிறது. காதல் போனால் சாதல் தான் முடிவு என்ற கருத்து இங்கு முன்வைக்கப்பட்டுள்ளது. காதல் அருள் தரும் தன்மையது. ஆனால் காதல் நிறைவேறாவிடில் வாழ்வே இருள் சூழ்ந்ததாகி விடும். காதலினாற் பெறும் இன்பமும் இணையற்றது. ஆனால் அந்த இன்பத்திற்கும் ஒர் எல்லை தோன்றிவிட்டால் பின்னர் துன்பந்தான். இதே போன்று இசையோடு தொடர்பு கொண்ட நாதம், தாளம், பண், குழல் போன்றவையும் ஏதாவது இடுக் கண்வரின் குழம்பிவிடும் தன்மையன. புகழ் என்னும் பண்பும் இத்தகையதே. அதில் ஒரு சிறுகுற்றம் வரினும் அது இகழாகிவிடும். மனதிலே ஏற்படும் உறுதி நிலை தளரின் அதுவே சிலருக்கு இறுதியாகிவிடும். கூடலால் இழைபவர் நிலையும் இத்தகையதே. கூடிப்பிரியின் பெருந்துன்பத்தால் வாடும் நிலையே ஏற்படும். குழலிசையும் கேட்பதற்கு நன்றாக இருக்கும். அந்த இசையிலே ஒரு கீறல் ஏற்படுமாயின் அது விழலாகிவிடும்.
குயிலின் பாடலில் ஒரு தனிப்பொருள் தொக்கு நிற்பதைப் பாரதி காட்ட முனைகிறார். பறவையின் பாடல் என்பதால் ஒழுங்கு நிலையில் ஒரு வேறுபாடு காணப்படுகிறது. இன்னிசை யால் புகழ்பெறும் ஒருவருக்கு நாதம், தாளம், பண், குழல் என்பன பக்கபலமாக அமைய வேண்டும். இன்பமும் கூடலும் வாழ்க்கைக்கு உறுதிதருபவை. புகழும் இசைக்கு வேண்டுவதே. எல்லாவற்றிற்கும் 'அருள் வேண்டும். வாழ்க்கையில் ஒளியைத்தரவல்லது அருட்குணமே. எந்த முயற்சியிலும் காதலுடன் ஈடுபடும் போது அருளுணர்வோடு இருக்க வேண்டும். இன்றேல் உள்ளமுடைந்துவிடும். சாதலே சிறந்த வழியாகத் தோன்றும். குயிற் பாட்டில் பாரதி உலக வாழ்வின் தன்மையை உணரவைக்கப் புதிய கற்பனை ஒன்றைப் பயன்படுத்தியுள்ளார்.
இசைக்கு வேண்டிய பக்கபலமான கருவிகளின் தன்மை" யைக் கூறும் போது குயிலை ஒரு கவிஞனாக உருவகிக்கின்றார். பெண்குயிலின் இனிய இசை அரங்கேற்றத்திற்கு அணையாகக் கூறும் விடயங்கள் அதனை நன்கு விளக்கி நிற்கின்றன. குயில் பாடும் பாடற் பொருளைப் பாரதி பிறிதொரு நிலையிலும் உய்த்துணரச் செய்கிறார். காதலின் தன்மையைப் பாடவந்த குயிலை ஒரு அழகிய இளம்பெண் எனக் கருத வைக்கிறார். கன்னிப் பெண்ணொருத்தியின் காதல் நிலையைக் குயிலின்
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 3五
வாழ்க்கை வரலாறாகக் கற்பனை செய்கிறார். புதுச்சேரியில் செல்லம்மாவுடன் கடமைக்காக இல்லறம் நடத்தும் மன நிலையைக் குயிற்பாட்டிலே பொதிந்துள்ளார். அவருடைய ஆழ் மனதில் உறங்கிக் கிடந்த பிள்ளைக் காதலுணர்வு மேற்கிளம்பிய ஒரு காலை வேளையை கற்பனையாக்கி அதனால் ஏற்பட்ட உள்ளத்தாக்கத்தால் குயிலின் காதற் கதையாகப் பாடியுள்ளார்.
குயிலின் காதற்கதை
குயிலின் காதற் கதை பாரதியின் புதுமையான கற்பனைக் கதையாகும். அதைப் பாரதி கூறும் முறைமையும் புதுமையானது. இனிய பாடலைப் பாடிய குயிலை விட்டு எல்லாப் பறவைகளும் பறந்து விட்டன. குயில் மட்டும் தனியாகத் தலைகுனிந்தபடி மரக்கிளையில் இருக்கிறது. கவிஞர் பாரதி குயிலின் சோகநிலை கண்டு அருகே போய்,
பேடே திரவியமே பேரின்பப் பாட்டுடையாய் ஏழுலகு மின்பத் தியேற்றுந் திறனுடையாய் பீழையுனக் கெய்திய தென் பேசாய் எனக் கேட்கிறார். குயில் அவர் கேட்பதற்குக்
"காதலை வேண்டிக் கரைகின்றேன் இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்"
எனப் பதில் கூறுகின்றது. இத்தகைய முன்னோடி உரையாடல் ஒன்றைக் கற்பனை செய்து குயிலின் காதற்கதையைக் கேட்பதற்குரிய சூழலை ஏற்படுத்துகின்றார். தன் மனத்திலே குயிலால் ஏற்பட்ட பரிவை உரையாடலால் வெளிப்படுத்துகிறார். இன்பமான இசைபாடி எல்லோரையும் மகிழ்விக்கும் குயிலுக்கு என்ன துன்பம் என்று அறியும் ஆவல் அவருக்கு ஏற்பட்டதாகக் கூறிக் குயிற்பாட்டைப் படிக்க வாசகரைத் தூண்டுகிறார். குயிலிடம் அவர் கேட்கும் முறைமை பறவையென்ற நிலை யிலன்றி ஒரு பரிவுணர்வால் கேட்பது போலத் தோன்றுகிறது.
வானத்துப் புள்ளெல்லா மையலுறப் பாடுகிறாய்
ஞானத்திற் புட்களிலு நன்கு சிறந்துள்ளாய் காதலர் நீயெய்துகிலாக் காரணந்தான் யாது?
Page 23
32 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
குயிலின் காதற்கதையைக் கேட்பதற்குரிய காரணத்தைக் கவிஞரே கூறிவிடுகிறார். தன்னுடைய காதல் அநுபவம் ஒன்றைக் கூறுவதற்காக வாய்ப்பான கதை கூறும் களமொன்றை அமைக்கின்றார். பறவையாக இருந்தபோதும் மனித நிலையில் பரிவோடு உசாவும் பக்குவத்துடன் கதைகேட்பதற்கான உணர்வு நிலையையும் ஏற்படுத்த எண்ணுகிறார். குயிலின் காதற் கதை வெறும் கற்பனைக்கதை மட்டுமல்ல. கவிஞருடைய அநுபவமும் கலந்த கதையாக இருப்பதை அவர் கேட்கின்ற கேள்விகளே உணர்த்துகின்றன. காதலர் நீ எய்துகிலாக் காரணந்தான் என்ன வென்று கேட்கும் போது அவர் உள்ளத்திலே நீண்டகாலமாக நெருடிக் கொண்ட நினைவின் நிழல் தெரிகிறது.
குயிலும் அவருடைய கேள்விக்குப் பதிலளிக்கும் பக்குவம் அவரை காதல் நினைவில் திளைக்கச் செய்கிறது. பறவைக் குலத்தில் பிறந்தாலும் தேவர்கருணையாலோ அல்லது தெய்வத்தின் சினத்தால் எல்லோருடைய பேச்சு மொழியையும் எளிதாக உணரும் பேறுபெற்றதாகக் குயில் கூறுகிறது. எல்லோருடைய பாட்டிலும் நெஞ்சைப் பறிகொடுக்கும் தன்னுடைய இசை விருப்பையும் எடுத்துக் கூறுகிறது. அத்துடன் கவிஞரான பாரதியைக் கண்டவுடன் தன் மனத்திலேற்பட்ட விருப்பையும் வருமாறு கூறுகிறது.
நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர் மஞ்சரே என்றன் மனநிகழ்ச்சி காணிரோ காதலை வேண்டிக் கரைகின்றேன் இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்.
இதனைக் கேட்டவுடன் கவிஞரின் உள்ளத்தில் புதிய தோர் இன்பச் சுரங்கம் உள்ளத்திடையும் உயிரிடையும் தோன்றிய தெனக் கூறுகிறார். குயிலின் காதலை அவர் ஏற்றுக் கொள்கிறார். பிள்ளைக் குயிலின் பேச்சால் அவர் மனமும் காதலால் இணைகிறது. எனவே அவரும்
"காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல்
சாதலோ சாதலெனச் சாற்றுமொரு பல்லவி"
எனக்கூறுகிறார். இருவரும் காதல் வயப்பட்ட நிலையில் நேரம் போவதே தெரியாமல் நின்றிருந்த போது, மற்றைய பறவை" களெல்லாம் மீளவும் வந்து சேர்ந்துவிட்டன. சோலையெலாங்
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 33
கலகலவென ஒலி எழுந்தது. இதன் மூலம் மாலைக்காலமாகியது உணர்த்தப்படுகிறது. இருவரும் பிரிய வேண்டிய வேளை வந்துவிட்டது. குயில் அவ்வேளையில் கவிஞரிடம் தன் மனந்திறந்து பேசுகிறது.
காதல் வழிதான் கரடுமுரடாமென்பர் சோதித் திருவிழியீர் துன்பக்கடலினிலே நல்லுறுதி கொண்டதோர் நாவாய் போல் வந்திட்டீர் அல்லலற நும்மோ டளவளாய் நான் பெறுமிவ் விண்பத்தினுக்கும் இடையூறு மூண்டதுவே அன்பொடு நீரிங்கே அடுத்த நான்கா நாளில் வந்தருளல் வேண்டும் மறவாதீர் மேற்குலத்தீர் சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல் ஆவிதரியேன் அறிந்திடுவீர் நான்கா நாள் பாவியிந்த நான்குநாள் பத்துயுக மாக்கழிப்பேன் சென்று வருவீர் என் சிந்தையொடு போகின்றீர் சென்று வருவீர்.
காதலைப் பற்றிக் குயில் சொல்லும் கருத்துகள் யாவும் பாரதி சொல்லவிழைந்த செய்திகளே. பிள்ளைப் பராயத்தில் தன் உள்ளங் கவர்ந்த பெண்ணைப் பிரிய நேர்ந்த போது அவள் கூற விரும்பியதைக் குயிலின் குரலூடாகக் கூறுகிறார். ஆங்கிலக் கல்விப் பயிற்சிக்காக அவளைப் பிரிய நேர்ந்த போது பாரதியை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் பிரிந்திருப்பாள். ஆனால் தந்தையோ அவருக்கு வேறு திருமணம் செய்து வைத்து விட்டார். காதலைப் பற்றிய பாரதியின் சொந்த அனுபவம் இங்கே பேசப்படுகிறது. நான்கா நாள் வரும்படி கூறுவது இதனை உணர்த்துகிறது. பிரிவின் வேதனையைப் பொறுக்க முடியாமல் "நான்கு நாளையும் பத்துயுகமாகக் கழிப்பேன்" எனக் குயில் கூறுவது பாரதியின் சுயசரிதையில் தன்னிலை பற்றிக் கூறுவதை ஒத்துளது.
கன்னி மீதுறு காதலினேழையேன்
கவலை யுற்றன கோடியென் சொல்லுகேன் பன்னியாயிரங் கூறினும் பக்தியின்
பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ?
(பாரதி:சுயசரிதை:14)
Page 24
31 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
மாஞ்சோலையில் குயிலைக் கண்டபோது அவர் நோக்கிய நோக்கினைக் குயில் குறிப்பிடும் போது அவர் உள்ளத்தில் இருந்த காதற்குறிப்பும் புலப்படுத்தப்பட்டுள்ளது. "நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்” என்ற குயிலின் கூற்று மூலமாகத் தன்னுடைய பழைய காதலியின் நிலையையும் செயலையும் பாரதி நினைவுக்குக் கொண்டு வருகிறார்.
"சென்று வருவீர் எனத் தேறாப் பெருந்துயரங் கொண்டு சிறுகுயிலுங் கூறி மறைந்தது காண்."
எனப் பாரதி குயில் மாஞ்சோலையிலிருந்து பிரிந்து செல்வதைக் குறிப்பிட்டுள்ளார். -
“ஆங்கோர் கன்னியைப் பத்துப்பிராயத்தில் ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்"
(பாரதி:சுயசரிதை:35)
என்று பாரதி சுயசரிதையில் குறிப்பிட்டிருப்பது அவருடைய உள்ளத்தின் ஆழத்தில் அக்காதல் படிந்திருப்பதை உணர்த்துகிறது. குயில் பாட்டில் அவ்வுணர்வு மேலும் தலைதூக்குகிறது. அதனால் கற்பனை நிலையில் அக்காதல் பற்றி எண்ணிப் பார்க்கிறார்.
குயிலைக் கண்ட காட்சியைக் கனவு என்று எண்ணாமல் உண்மை நிகழ்வு போலத் தாம் அநுபவித்த துயரத்தைக் கூறுகிறார். இருபது பேய் பிடித்தவன் போல் காமனால் தாக்குண்ட நிலையைக் கூறுகிறார்.
கொம்புக் குயிலுருவம் கோடி பல கோடியாய் ஒன்றே யதுவாய் உலகமெலாந் தோற்றமுற சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?
(பாரதி:குயிற்பாட்டு)
குயிலின் நினைவுகொண்டு தான்பட்ட துன்பத்தைக் கூறும் போது பாரதியின் நினைவு பழைய காதலில் திளைக்கின்றது. கற்பனை உணர்வாக அன்றி உண்மையாகத் தான் அநுபவித்த முன்னைய துன்பநிலையையே நினைவு கூர்ந்துள்ளார். அதனால் அவர் குயில் மீது கொண்ட காதல் மானிடக்காதல் போலத் தோற்றுகிறது.
"நான்கா நாள் வருவீர்” என்ற குயிலின் அழைப்பை மறந்து அடுத்த நாளே குயிலைக் காணும் அவாவுடன் மாஞ்சோலைக்கு
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 35
வருகிறார். கரை கடந்த வேட்கையுடன் கோணமெலாஞ் சுற்றி மரக்கொம்பை நோக்கி வருகிறார். அங்கே சின்னக்குயில் ஒர் ஆண்குரங்கிற்கு முன்னால் இருந்து காதற் பாடலைப் பாடிக் கொண்டிருக்கின்றது. அப்போதைய சிறுகுயிலின் தோற்றத்தை பாரதி வருமாறு காட்டுகிறார்.
மாயக்குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல் விம்மிப் பரிந்து சொல்லும் வெந்துயர்ச் சொல் கொண்டதுவாய் அம்மாவோ மற்றாங்கோ ராண் குரங்கு தன்னுடனே ஏதேதோ கூறியிரங்கு நிலை கண்டேன்.
(பாரதி:குயிற்பாட்டு)
பாரதியின் குயிற்பாட்டு இப்பகுதியில் அவருடைய உள்ளக்கிடக்கையைப் புலப்படுத்தும் ஒரு திருப்பு நிலையாக அமைந்” துள்ளது. தன்னோடு காதல் உணர்வைப் பகிர்ந்து கொண்ட குயில் குரங்கோடு காதல் உணர்வைப் பகிர்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறார். குரங்கின் அழகைக் குயில் சிறப்பாகச் சொல்லும் காட்சியைப் பாடலிலே விரிவாகவே பாடியுள்ளார். மனிதருக்கும் குரங்கிற்கும் உள்ள வேறுபாட்டைக் குயிலின் மொழியிற் கூற விழைந்துள்ளார். பெண் குயில் தனது காதல் மொழியால் குரங்கின் மேன்மையைக் குறிக்கும் செய்திகள் இதனை உறுதி செய்கின்றன.
மேனியழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும் கூனி யிருக்கும் கொலு நேர்த்தி தன்னிலுமே வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ?
வானரரையும் மனிதரையும் குயில் ஒப்பிட்டுக் கூறும் போது கவிஞர் குயிலின் குணவியல்பை வெளிப்படுத்துகிறார். முதலில் கவிஞரிடம் பேசிய அதே காதல் வார்த்தைகளைக் குரங்கிடமும் கூறும் குயிலின் மனநிலையில் ஓர் ஒழுக்கப் பிறழ்வு இருப்பதைச் சுட்டுகிறார். குரங்கும் குயிலின் இனிய மொழி கேட்டுக் கண்ணைச் சிமிட்டிக் காலாலும் கையாலும் மண்ணைப் பிறாண்டி எங்கும் வாரி இறைத்துத்தன் காதற்களிப்பை வெளிப்படுத்துகிறது. குயிலிடம்
ஆசைக்குயிலே அரும்பொருளே தெய்வதமே
பேசமுடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்
Page 25
36 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
காதலினாற் சாகும் கதியினிலே என்னை வைத்தாய் எப்பொழுது நின்னை இனிப் பிரிவதாற்றுகிலேன் இப்பொழுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்
எனக் கூறும் சொற்கள் குரங்கின் உள்ளத்தியல்பை வெளிப்படுத்தி நிற்கின்றன. குரங்கின் காதல் உடல் பற்றிய தென்பதைக் கவிஞர் உணர்த்த முயல்கிறார். கவிஞர் குயில்மிது கொண்ட காதலுக்கும் குரங்கு குயில் மீது கொண்ட காதலுக்கும் வேறுபாடிருப்பதையும் காட்ட முனைகிறார். வானரப் பேச்சிலே குயில் பேசியதைக் கவிஞர் அறியும் ஆற்றலைப் பெற்றிருந்தார். அதனால் குயிலின் மீது கோபம் கொள்கிறார். தன்னிடம் பேசிய காதல் மொழிகளைக் குரங்கிடமும் பேசும் பெண்குயிலின் செயலால் கவிஞருக்கு ஏற்படும் உளத்தாக்கம் அவருடைய கவிதையிலே வெளிப்படை யாய்த் தோன்றுகிறது. அதனால் பெண்ணால் அறிவிழக்கும் பித்தருக்கும் காதலைப் போற்றுங் கவிஞருக்கும் பெண்களுக்கும் மாயக் குயிலின் செய்கையை எடுத்துரைத்து நெறிப்படுத்த முயல்கிறார். குரங்கைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தன் கைவாளை எடுத்து வீசுகிறார். குரங்கு வாளுக்குத் தப்பி ஓடிவிடுகிறது. குயிலும் மறைந்து விடுகிறது. கவிஞர் சோர்ந்து போய் விட்டார். குயிலின் செயற்பாட்டை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை மரபாக ஏற்றிருந்த அவருக்குக் குயிலின் செயல் மன அழற்சியைக் கொடுத்தது. வீட்டுக்கு வந்தவர் மூர்ச்சையாகி விட்டார். விடியற் காலையிலே மாஞ்சோலைக்குச் சென்று வந்தவர் மயக்கமுற்றுக் கிடப்பது கண்டு நண்பர்கள் கவலையுற்றனர். மயக்கந் தெளிந்ததும் கேள்விமேல் கேள்விகள் கேட்கின்றனர். கவிஞரோ மறுமொழி கூறாமல் துயிலில் ஆழ்ந்துவிட்டார்.
இந்தத் துன்ப நிலையிலிருந்து விடுபடுவதற்கு வழிபாடே கைகொடுத்தது எனக் கூறுகிறார்.
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து விண்ணை வெளியாக்கி விந்தை செயுஞ் சோதியினைக் காலைப் பொழுதினிலே கண்விழித்து நான் தொழுதேன் நாலு புறத்துமுயிர் நாதங்களோங்கிடவும் இன்பக் களியிலியங்கும் புவி கண்டேன்.
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 37
காலையில் கண் விழித்துக் கதிரவனைத் தொழுதவுடன் மீண்டும் கவிஞர் உலக நடப்புகளில் தம்மை இணைத்துக் கொள்கிறார். “காலைப் பொழுது" என்னும் பாரதியாருடைய தனிப்பாடலில் இதனை விரிவாகப் பாடியுள்ளார்.
"காலை யிளவெயிலிற் காண்பதெலா மின்ப மன்றோ."
(பாரதி:காலைப்பொழுது:23)
புள்ளினங்களின் செயற்பாடுகளையெல்லாம் கண்காணிக்கின்ற இயல்பு பாரதியிடம் இருந்தது. மன்னப் பருந்து, சிறுகாக்கை, சின்னக்குருவி, பச்சைக்கிளி, புட்கள் எனப் பறவையினங்களின் வேறுபட்ட மகிழ்வான ஒலிகளைக் கேட்கும் வழக்கந்தான் மாஞ்சோலைக் குயிலையும் நெருங்கிச் சென்று பழக வைத்தது. கற்பனைப் பாடலில் குயிலைப் பற்றிப் புதுமையாகப் பாரதி பாட நேர்ந்தமைக்கும் இதுவே காரணம். குயிற்பாட்டு பாரதியின் சொந்த அனுபவங்களையும் உள்ளடக்கியுள்ளதெனக் கருதுவதற்கும் இப்பழக்கமும் ஒரு சான்றாகிறது. குயிலின் மீது கவிஞர் கொண்ட விருப்புத் தொடர்ந்து மறுநாளும் அவரை மாஞ்சோலைக்குப் போகத் துரண்டுகிறது. அடுத்த நாள் காலையில் புலவர் தன்னையறியாமலே குயில் மீது கொண்ட காதலில் மாஞ்சோலையை நோக்கிப் போகிறார். குயிலைக் காணவில்லை. ஏனைய பறவைகளையும் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடுகிறார். சோலையின் மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளையில் நீலக்குயில் இருந்து நீண்ட கதை சொல்வதையும் கீழே ஒரு கிழக்காளை மாடு அக்கதையை ஆவலுடன் கேட்பதையும் காண்கிறார். அப்போது அவர் தன்னிலையைத் தனக்கு ஏற்பட்ட கோபத்தைக் கவிதையாகப் பாடுகிறார்.
கண்டேன் வெகுண்டேன் கலக்கமுற்றேன் நெஞ்சினால் கொண்டேன் குமைந்தேன் குமுறினேன் மெய்வெயர்த்தேன் கொல்லவாள் வீசல் குறித்தேன் இப்பொய்ப்பறவை சொல்லுமொழி கேட்டதன் பின் கொல்லுதலே சூழ்ச்சி
நேற்றுக் குரங்குடன் பேசியது போலவே இன்று கிழமாட்டுடன் குயில் பேசுவதை அவரால் பொறுக்க முடியவில்லை. எனவே மறைந்து நின்று பேச்சைச் செவிமடுக்கிறார். புதிய பொன்போன்ற குரலிலே புதிய மின்னல் போன்ற சொற்களைப் பொதிந்து குயில் கூறும் செய்திகளைக் கேட்டுநிற்கிறார்.
Page 26
38 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
குயிலின் குரலில் இருந்த காந்தம் போன்ற உணர்வு சொற்களில் வெளிப்படுகிறது. மாட்டின் உருவத்தைப் பற்றிப் பெருமையாகவும் அழகாகவும் கூறும் குயிலின் உணர்வு பாரதி யின் உள்ளத்திலே இருந்த ஒரு விடயத்தை வெளிப்படுத்துகிறது. பெண்களின் சொல்லாற்றலால் மயங்கிவிடும் காளையரைப் பற்றிச் சொல்ல விரும்பியதைக் குயிலின் பாட்டால் கூறுவது போலத் தண்கற்பனையாகப் பாடியுள்ளார். “காளையர் தமுள்ளே கனமிகுந்தீர் ஆரியரே" எனக் குயில் அழைப்பது இதனைப் புலப்படுத்துகிறது. அதேவேளையில் விலங்கினத்தைச் சேர்ந்த மாட்டின் சிறப்பையும் உணர்த்த முயல்கிறார். குயில் தன்னுடைய காதலைத் தானாகவே வெளிப்படுத்துகிறது.
காளை யெருதரே காட்டிலுயர் வீரரே தாளைச் சரணடைந்தேன் தையலெனைக் காத்தருள்வீர் காதலுற்று வாடுகின்றேன் காதலுற்ற செய்தியினை மாதருரைத்தல் வழக்கமில்லை யென்றறிவேன் ஆனாலு மென்போ லயூர்வமாங் காதல் கொண்டால் தானா வுரைத்த லன்றிச் சாரும் வழியுளதோ? பெண்கள் காதலைத்தாமே ஆண்களிடம் கூறும் மரபு முன்னர் இல்லை. அதனைப் பாரதி இங்கு எடுத்துக் கூறுகிறார். கற்பனையான பாட்டாக இருந்தாலும் ஒரு பண்பாட்டு நெறி நின்று பாட விழைகிறார். புதுமைப் பெண்ணைப் புரட்சியான சிந்தனை" களோடு படைக்க முயன்ற பாரதி மரபு மீறலை மிக நயமாகக் குயிற்பாட்டிலே காட்டியுள்ளார். கவிஞர் காதல் கொண்டகுயிலி ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறையை மீறும் புதுமைப் பெண்ணினத்தின் முன்னோடியாக அமைவதை இங்கு காணலாம். துணிவோடு தன்னிலையைக் கூறும் குயிலி தான் விரும்பியபடி விரும்பிய ஆடவனைக் கண்டு காதல் கொள்ளும் சுதந்திரத்தையும் பெற்றுள்ளது.
மாட்டோடு காதல் கதை பேசிய குயிலைக் கவிஞர் கொல்லாமல் குரங்கையும் மாட்டையும் கொல்ல நினைப்பது பாரதியின் புதுமையான தொரு சிந்தனையை விளக்கி நிற்கிறது. ஆண்களின் நிலையை ஒரு புதிய முறையில் விளக்குகிறார். தான் காதல் கொண்ட குயிலின் பால் குரங்கும் மாடும் விருப்பம் கொள்வதற்கு குயிலின் இன்னிசைப்பாட்டே காரணம் என நிலைநாட்ட முயல்கிறார். தன்னைப் போலவே அவையும்
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 39
குயிலின் பாட்டால் மனம் மயங்கிக் குயில் மேல் விருப்பம் கொள்ளும் யதார்த்த நிலையை விளக்குகிறார். அதனால் கவிஞர் கிழக்காளை மாட்டையும் கொல்ல முடியாமல் மயங்குகிறார். காளை மாட்டின் மேல் வாளை வீசியபோதும் அது அதன்மேற் படவில்லை. குயிலும் மறைந்துவிட்டது. வீட்டுக்குத் திரும்புகிறார். வழி நெடுக சொற்றைக் குரங்கும் தொழுமாடும் தனக்கு எதிரிகளானதை எண் ணி வருந்துகிறார். வீட்டிற்கு வந்து கண்ணிரண்டையும் மூடிக் கடுந்துயிலில் ஆழ்ந்து விடுகிறார்.
நான்காம் நாள் கவிஞர் காலையில் கண்விழித்து குயிலின் நினைவு வர வானத்தைப் பார்க்கிறார். அங்கே அந்தக் கானக்குயில் பறந்து திரிவதைக் காண்கிறார். அதுவும் அவரைச் சோலைக்கு அழைத்துச் செல்கிறது. கவிஞருக்கு முன்னே பறந்து சென்று மாஞ்சோலையின் மரக்கிளையில் வீற்றிருந்து பழைய காதற் பாடியது. அது கண்ட கவிஞர் அருகில் சென்று குயிலை ஏசுகிறார்.
நீசக்குயிலே நிலையறியாப் பொய்மையே ஆசைக்குரங்கினையும் அன்பாரெருதினையும் எண்ணி நீபாடும் இழிந்த புலைப்பாட்டை நண்ணியிங்கு கேட்க நடத்தி வந்தாய் போலும்.
கோபத்தால் அவர்குரலில் குயிலின் மீதிருந்த வெறுப்பு வெளிப்படுகிறது. குரங்கிற்கும் மாட்டிற்கும் பாடிய இழிந்த கேவலமான பாட்டை நான் உன்னருகிலிருந்து கேட்கவேண்டும் என்று எண்ணி இங்கே கூட்டி வந்தாய் போலும் எனத் தனது பொறாமையைப் புலப்படுத்துகிறார். பாரதியின் மானிட உணர்வு இங்கு முனைப்புப் பெற்றிருக்கிறது. பெண்ணொருத்தி பல ஆண்களுடன் பழகுவதைப் பாரதி இயல்பன்று என வரையறை செய்யமுயல்கிறார். அக்காலத்தில் இந்தியாவில் மேலைத்தேசப் பண்பாடு பரவிக் கொண்டிருந்த காலம். மக்களின் நடையுடை பாவனை செயற்பாடு என்பன மாற்றமடைந்து கொண்டிருந்த காலம். ஆண்களும் பெண்களும் நெருங்கிப் பழகும் பண்பாடு ஒன்றும் தலையெடுத்திருந்தது. இத்தகைய சூழல் பாரததேசத்தின் பண்பாட்டைச் சீர்குலைத்துவிடுமெனப் பாரதி எண்ணினார். அத்தகைய எண்ணத்தால் அவர் மனதில் குயிற்பாட்டுப் பற்றிய உருவாக்கம் கருவாகிற்று. பெண்குயில் தன்னையும் குரங்கையும் மாட்டையும் ஒரே நேரத்தில் விரும்பு குணஇயல்பு பெற்றமை" வதற்கு இதுவே அடிப்படையான காரணம் எனக் கருதலாம்.
Page 27
40 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
இதனை உறுதி செய்வதாக பாரதி பாடிய குயிலின் பூர்வ ஜன்மக்கதை இடம் பெற்றுள்ளது.
குயில் முற்பிறப்பிலே வேடர் குலத்தலைவன் மகளாகப் பிறந்து மாடன் என்னும் அவளுடைய மாமன் மகனுக்குத் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். மாடனில் குயிலி மையல் கொள்ளவில்லை. அவனுடைய காதல் வருத்தத்தைக் கண்டு சகிக்கமுடியாமல் மாலையிட வாக்களித்திருந்தாள். இவ்வேளையில் நெட்டைக்குரங்கன் என்பவனுக்கு நேரான பெண் வேண்டி அவனுடைய தந்தை மொட்டைப்புலியன் குயிலின் தந்தையிடம் கேட்ட போது அவனும் கொடுப்பதாக உறுதியுரை செய்து விட்டான். இதையறிந்த மாடன் குயிலிடம் வந்து சினத்துடன் பேசுகிறான். அப்போது குயிலி ஒரு வழி கூறுகிறாள்.
காயுஞ் சினந்தவிர்ப்பாய் மாடா கடுமையினால் நெட்டைக்குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும் கட்டுப்படி அவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும் மாதமொரு மூன்றில் மருமஞ் சில செய்து பேதம் விளைத்துப் பின்னிங்கே வந்திடுவேன் தாலிதனை மீட்டுமவர் தங்களிடமே கொடுத்து நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே பெற்றிடுவேன் நின்னிடத்தே பேச்சுத்தவறுவனோ மற்றிதனை நம்பிடுவாய் மாடப்பா
நெட்டைக் குரங்கனுக்கு மனைவியாக நேர்ந்தாலும் தான் மாடனிடம் மூன்று மாதத்தில் திரும்பிவிடுவதாக குயிலி ஆறுதல் கூறுகிறாள். அவள் கூறும் வழி முன்னர் பாரதி சொன்ன பண்பாட்டுக்கு முரண்பட்டதாக உள்ளது. குயில் பாட்டில் இப்பகுதி பாரதியின் பெண்மை பற்றிய ஒரு புற நிலையாக அமைந்துள்ளது. ஒரு பெண் திருமணம் முடிந்தபின்னர் தன் கணவனாகத் தாலி கட்டி ஏற்றுக் கொண்டவனைப் பிரிந்து செல்வதற்குத் தானே திட்டமிடுவதாகப் பாரதி கற்பனை செய்து பாடியிருப்பது கவனித்தற்குரியது. திருமணம் மிடுவதாகப் பாரதி கற்பனை செய்து பாடியிருப்பது கவனித்தற்குரியது. திருமணம் செய்து கணவன் வீட்டில் வாழும் போது ஏதாவது மர்மமான செயற்பாடுகள் மூலம் குடும்பத்திலே வேறுபாட்டை ஏற்படுத்தி மீண்டும் மாடனுடன் சேர்ந்து வாழ வந்து விடுவதாகக் குயிலி கூறுகிறாள். அது மட்டுமல்ல நெட்டைக் குரங்கன் கட்டிய
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 41
தாலியைக் கழற்றி அவனிடமே கொடுத்துவிட்டு வருவதாகவும் கூறுகிறாள். நாலிரண்டு மாதத்தில் மாடனையே நாயகனாக அடைவேன் என்றும் கூறுகிறாள். இத்தகைய ஒரு காதல் நிலையைக் குயில் பாட்டிலே கூறும்போது மரபு மீறிய ஒரு தன்மையைப் பாரதி வெளிப்படுத்துகிறார். ஆணுக்குப் பெண் கூறும் புதிய உறுதி மொழி புதுமைப் பெண்ணின் எண்ணத்தில் ஏற்பட்ட புரட்சிப் பாங்கைச் சுட்டுவதாக உள்ளது.
மேலும் இக்குயிலியின் செயற்பாட்டில் பாரதி காதலை விடக் காம உணர்வுக்கு முதலிடம் கொடுக்க முனைகிறார். மாடனுக்கு உறுதிமொழி செய்து கொடுத்த சில நாள்களின் பின்னர் பெண் குயிலி தன் தோழியருடன் காட்டிற்கு விளையாடச் செல்கிறாள். அங்கு வேட்டைக்கென வந்த சேரமானுடைய அருமை மகன் அவளைக் கண்டு மையல் கொள்கிறான். குயிலியும் மன்னனைக் கண்டவுடன் மாமோகம் கொள்கிறாள். பாரதி இருவருடைய நிலையையும் நேரில் கண்டது போலப் பாரதி கூறுவது குறிப்பிடத்தக்கது.
“நின்னையவன் நோக்கினான் நீயவனை நோக்கி நின்றாய் அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்து விட்டீர்”
இங்கு மீண்டும் மரபு வழிப்பட்ட நிலையில் காதல் உணர்வைப் பாடியுள்ளார். பிள்ளைப் பராயத்துக் காதல் நினைவுடன் பாடுகிறார். காதல் வயப்பட்டுநின்ற நிலையைச் சுயசரிதையில் வருமாறு பாடியுள்ளார்.
ஆவல் கொண்ட அரும் பெறற் கன்னிதான்
அன்பெனக்கங்களித்திட லாயினாள் பாவம் தீமை வழியேதும் தேர்ந்திடோம்
பண்டைய தேவர் யுகத்து மனிதர்போற் காவல் கட்டு விதி வழக்கென்றிடும்
கயவர் செய்திகளேதுமறிந்திலோம்.
(பாரதி; சுயசரிதை:17)
காதல் வயப்பட்டவருக்குக் காவல், கட்டு, விதி வழக்கு ஏதும் இல்லை என்ற உணர்வே மேலோங்கி நிற்கும். சிறுபருவத்தினரின் உள்ளத்தில் அவ்வுணர்வு தோன்றும் போது மற்றையதெல்லாம் மறந்து போகும். இது பாரதியின் பட்டறிவு. அதனையே குயில் பாட்டிலும் பாடியுள்ளார் என்பது தெளிவாக அறியக்கிடக்கின்றது.
Page 28
42 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
குயில் பாட்டில் அதன் பழம்பிறப்பில் இத்தகையதொரு நிலை ஏற்பட்டதாகக் கூறும் பாரதி இளமையில் இது தவிர்க்க முடியாத ஒன்று என விளக்கமுயன்றுள்ளார். குயிலியும் மன்னனும் இளமை நிலையில் இன்புற்றிருந்ததை நெட்டைக் குரங்கனும் மாடனும் நேரிற் காண நேர்கிறது. நெட்டைக்குரங்கன் மரபுநிலை ஏசுகிறான்.
பட்டப் பகலிலே பாவிமகள் செய்தியைப் பார் கண்ணாலங் கூட இன்னுங் கட்டி முடியவில்லை மண்ணாக்கி விட்டாள் என் மானந் தொலைத்துவிட்டாள் நிச்சியதாம்பூலம் நிலையா நடந்திருக்கப் பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப் பார்த்தாயோ
நெட்டைக்குரங்கன் சமுதாய மரபு நிலையைக் குயிலி மீறி விட்டதைச் சுட்டிக்காட்டுகிறான். திருமணத்திற்கு முன்னர் ஓர் ஆணும் பெண்ணும் உடற்சுகம் காண்பது தவறு என்பது பாரதி வாழ்ந்த காலத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு நிலையான வரையறையாக இருந்தமையை இங்கு எடுத்துரைக்கின்றார். இத்தகைய மரபு மீறிய செயலுக்குக் கொலைத் தண்டனை வழங்க மாடனும் நெட்டைக்குரங்கனும் தீர்மானிக்கின்றனர். வாளை வீசிச் செல்கின்றனர். இக்காட்சியைப் பாரதி மிகத் துல்லியமாகச் சொற்களிலே வரைந்து காட்டியுள்ளார்.
காவலன்றன் மைந்தனுமக் கன்னிகையுந் தானுமங்கு தேவசுகங்கொண்டு விழியே திறக்கவில்லை ஆவிக் கலப்பினமுத சுகந்தனிலே மேவியங்கு மூடி யிருந்த விழி நான்கு ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி ஓங்கும் பொறிகளுதிர்க்கும் விழி நான்கு.
பெண் ஒருத்தியின் வரம்பு மீறிய இச்செயற்பாட்டைப் பாரதி குயிலியின் மூலம் எடுத்துக் காட்டுகிறார். பெண்ணின் கற்பின் திண்மை ஒழுக்கநிலையுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தமையால் அதனை அவள் மீறும் போது ஆண்கள் எத்தகைய எதிர்ப்பினைக் காட்டுவார்கள் என்பதை பாரதி அவர்களின் பிரதிநிதியாக நின்று பேசும் இடம் இதுவென்று கூறின் மிகையாகாது. "ஆவிக்கலப்பின் அமுத சுகம்" எனப் பாரதி கூறுவது காதல் நிலையைவிடக் காம உணர்வைச் சுட்டுவதாக உள்ளது. இளம் உள்ளங்களின் உளநிலையை இங்கு சிறப்பாக வெளிப்படுத்திக் காட்டுகிறார்.
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 43
மூடிய நான்கு விழிகளைக் கண்டு பொறிகள் உதிர்க்கும் நான்கு விழிகள் சினங்கொண்டதாகப் பாரதி கூறுவது ஆண்களின் மனநிலையை நன்கு சுட்டிக் காட்டுவதாக உள்ளது.
எனினும் மன்னன் குயிலியிடம் ஒரு உறுதிமொழி செய்து கொடுத்ததாகப் பாரதி குறிப்பிட்டிருப்பது இங்கே கவனத்திற்குரியது.
நின்னயன்றிப் பெண்ணை நினைப்பேனோ விணிலே என்னை ஐயுறுதல் எதுக்காம் இப்பொழுதே நின் மனைக்குச் சென்றிடுவோம் நின்வீட்டிலுள்ளோர் பால் என் மனதைச் சொல்வேன் எனது நிலை யுரைப்பேன் வேதநெறியில் விவாகமுனைச் செய்து கொள்வேன் மாதரசே என்று வலக்கை தட்டி வாக்களித்தான்
பண்டைக்காலத்து மணமுறை ஒன்றைப் பாரதி இங்கு எடுத்தாண்டுள்ளார். ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் விருப்புக்கொண்டால் ஆண் உறுதிமொழி செய்து பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ளும் மணமுறை ஒன்று அப்போது நடைமுறையில் இருந்தது. அதையே இங்கு மன்னனும் செய்கிறான். ஆனால் குயிலியின் பெற்றோரிடம் பேசி வேத முறைப்படி பின்னர் விவாகம் செய்வேன் என்று வாக்களிக்கிறான். இது பாரதி வாழ்ந்த காலத்து மண நடைமுறையையே அவர் விரும்பினார் என்பதை விளக்கி நிற்கிறது. திருமணம் பற்றிய கருத்தில் பாரதி பழைய மரபையே பேண முற்படுவதையும் இதனால் உணரமுடிகிறது.
குயிலியின் காதலன் மன்னன் மாடனையும் நெட்டைக் குரங்கனையும் வாளால் கொல்கிறான். மன்னர் உடல் சோர விழுகிறான். அவனை மடியில் வாரியெடுத்து வாய்புலம்பிக் கண்ணிர் பொழிகிறாள். அப்பொழுது மன்னன் கண்விழித்து அவளிடம் வருமாறு கூறுகிறான்.
பெண்ணே இனி நான் பிழைத்திடேன் சில கணத்தே ஆவி துறப்பேன் அழுதோர் பயனில்லை சாவிலே துன்பமில்லை தையலே இன்னமும் நாம் பூமியிலே தோன்றிடுவோம் பொன்னே நினைக் கண்டு காமுறுவேன் நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன் இன்னும் பிறவியுண்டு மாதரசே இன்பமுண்டு நின்னுடன் வாழ்வனினி நேரும் பிறப்பினிலே
Page 29
44 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
அவனுடைய உண்மைக்காதலை இங்கே கூறுகிறான். இனி வரும் பிறவி எல்லாம் குயிலியுடன் வாழவிரும்புகிறான். இவ்விடத்தில் பாரதியின் உள்ளத்திலே புதையுண்ட காதல் மீண்டும் வெளிப்படுகிறது. அதனால் குயில் பாட்டில் மன்னன் மீண்டும் குயிலியைப் பறவையாக மீண்டும் காண்பதாகக் கற்பனை செய்து பாடி" யுள்ளார். பழம்பிறப்பைக் குயிலின் பாட்டால் உணர்ந்து காதல் கொள்வதாகப் பாட்டை அமைத்துள்ளார். மாடனையும் நெட்டைக்குரங்கனையும் குரங்காகவும் காளை மாடாகவும் மாற்றியுள்ளார். தன்னையே மன்னனின் மறுபிறவியாக்கியுள்ளார். குயிலின் பழம்பிறப்புக்கதையைக் கவிஞரே கேட்கிறார்.
குயில் கதையை முடித்து மீண்டும் கவிஞரிடம் காதலை வேண்டி நிற்கிறது. கவிஞர் மனம் இளகுகிறது.
மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு முன்பு வைத்து நோக்கியபின் மூண்டுவரும் இன்பவெறி கொண்டதனை முத்தமிட்டேன் கோகிலத்தைக் காணவில்லை
ஆண்களின் உள்ளப் பாங்கை இங்கே சுட்டிக் காட்டுகிறார். காமத்திற்கே முதலிடம் கொடுக்கும் குணவியல்பைப் புலப்படுத் துகிறார். “மூண்டு வரும் இன்ப வெறி” என்ற தொடரால் இதனைப் புலப்படுத்தியுள்ளார். மேலும் கவிஞர் குயிலைக் கையில் வைத்து முத்தமிட்டவுடன் குயில் மறைய பெண்ணொருத்தி எதிரே நிற்கிறாள். அவளைக் கண்டவுடன் மோகப்பெருமயக்கத்தில் சித்தம் மயங்கிச் சிலபொழுதிருந்ததையும் காமச் சுவைபடவே பாடி" யுள்ளார்.
பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண்டாங்கனே நண்ணித் தழுவி நறுங்கள் விரிதழனினையே முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெரு மயக்கத்தில் சித்தம் மயங்கிச் சில போழ் திருந்த பின்னே
எனினும் பாடலின் முடிவில் எல்லாமே கனவு எனப் பாடலை முடிக்கிறார். பாரதியின் பாடலில் பிறிதொரு புதிரையும் இணைத்துள்ளார். தன்னுடைய கற்பனையின் சூழ்ச்சியென்றே கூறுகிறார். எனினும் இப்பாடலை யாரேனும் வேதாந்தமாக இப்பாடலைக் கருதிப் பொருளுரைக்க இடமுண்டானாற் கூறிரோ என முடித்திருப்பது சற்று விந்தையாகவே உள்ளது.
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 45
4. பாரதியின் புலமைத்திறன் வெளிப்பாடு
பாரதியின் குயில்பாட்டு எழுதப்பட்ட காலம் 1914 - 1915 என்று கூறப்படுகிறது. ஆனால் 1923 இல் தான் நூலாக "குயில்" என்ற தலைப்பில் பாரதி பிரசுராலயத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பதிப்பின் முன்னுரையில் நூல் பற்றி வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
நூல் மிகவும் சிறியதே. ஆயினும் இதில் ஒரு சிறந்த கற்பனைக் காவியத்தின் பண்புகள் பல மிளிர்வதைக் காண்கிறோம். முற்றிலும் இன்பவளம் பெற்ற காட்சிகள், கதை சொல்வதற்கென்றே அமைந்துள்ள அகவல் நடை, இணையற்ற வேகம், கவர்ச்சி, கதைசொல்லும் அழகு, ஒப்பற்ற வருணனை, உவமை, சொற் சித்திரங்கள், கதை துவங்கும் சோலை, குரங்கு, மாடு, சூரியோதயம், சங்கீதம் எல்லாவற்றிற்கும் சிகரமாகக் குயிலின் தோற்றம் இவற்றின் வருணனைகள் தமிழ் மொழிக்கே வெற்றி யளிக்கின்றன.
(குயில் முன்னுரை) டாக்டர் மு.வரதராசன் குயில் பாட்டுப்பற்றிய குறிப்பு வருமாறு அமைந்துள்ளது:
குயில் பாட்டு ஒரு கற்பனைக் களஞ்சியம். காதல் பற்றிய புதிய படைப்பு. அதில் வரும் தலைவன் கவிஞரே. அவருடைய காதலே குயில்.
(தமிழிலக்கிய வரலாறு:ப.347)
குயில் பாட்டைப்பற்றி தங்கப்பா வருமிாறு கூறுகிறார்.
குயிற்பாட்டு பாரதியாரின் பிறபாடல்களைப்போல் வாழ்க்கைச் சிக்கல்களைப் பாடவில்லை. வறுமைக் கொடுமை பற்றியோ, பெண்ணடிமைத்தனம் பற்றியோ, விடுதலைப் போராட்டம் பற்றியோ, சாதிக்கொடுமை, ஏற்றத்தாழ்வுகள் பற்றியோ சீறி எழவில்லை. குமுறிக் கொந்தளிக்கவில்லை. கற்பனைத்தேரில் நம்மை ஏற்றிக் கிறங்க வைக்கும் பாட்டின் கள்வெறிக் கூத்துக்கும் நினைவின் நெருப்புச் சுவை கட்கும் இசையின் வியப்புறுத்தல் கட்கும் பாட்டின் இன்பத்துள்ளல் கட்கும் படைப்பின் ஒளிச் சிதறல் கட்கும் உணர்வின் குழைவிற்கும் அன்பின் நெகிழ்விற்கும் காதற் சிலிர்ப்பிற்கும் நம்மை அழைத்துச் செல்கின்றது.
(பாரதி சிந்தனைப் பண்ணை)
Page 30
46 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
பாரதியின் புலமைத்திறனுக்குக் குயிற்பாட்டு நல்லதொரு சான்றாகும். இப்பாட்டு அவருடைய சொந்தக் கற்பனை. சின்னஞ்சிறிய கரிய குயிலொன்றைக் கதைத் தலைவியாக்கிக் குறுங்காவியம் ஒன்றை அழகாகப் பாடியுள்ளார். தனது கதைத் தலைவிக்குப் பாடலிலே பல அடைமொழிகளைக் கொடுத்துள்ளார்.
பெட்டைக்குயில் பிள்ளைக்குயில் ஆசைக்குயில்
ஒற்றைக்குயில் நீலக்குயில் குட்டிப் பிசாசுக்குயில் மாயக்குயில் சிறுகுயில் பொய்க்குயில் கானக்குயில் மைக்குயில் செத்தைக்குயில் சின்னக்குயில் நீசக்குயில் வன்னக்குயில் எத்துக்குயில் வஞ்சக்குயில் சாதிக்குயில் அருங்குயில் விந்தைச்சிறுகுயில் சின்னக்கருங்குயில் மென்குயில் கொம்புக்குயில் பெண்குயில்
பாரதியின் இசை பற்றிய கருத்துக்களையும் குயிற்பாட்டிலே இணைத்துள்ளமை அவருடைய புலமைத்திறனின் பிறிதொரு வெளிப்பாடாகும். தனது உள்ளத்தைக் கவர்ந்த இசைகளைப் பற்றிப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். அதனைக் குயிலின் கூற்றாக அமைத்துள்ளார்.
கானப் பறவை கலகலெனும் ஒசையிலும் காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும் ஆற்றுநீரோசை அருவியொலியினிலும் நீலப்பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும் ஒலத்திடையே உதிக்கும் இசையினிலும் மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப்பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும் ஏற்ற நீர்ப்பாட்டின் இசையினிலும் நெல்லிடிக்கும் கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ணமிடிப்பார்தஞ் சுவை மிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப்பாட்டினிலும் வாயின் குழலோடு வீணை முதலா மனிதர் வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 47
பாரதி தனது பாடல்களின் இசைப் பணி பை எங்கிருந்து மீட்டுருவாக்கம் செய்தார் என்பதைக் குயிற்பாட்டில் விளக்கி யுள்ளார். மக்கள் விரும்பும் இசைப்பாடல்களை ஆக்கவேண்டும் என்பதே பாரதியாரின் விருப்பம். அவ்விருப்பத்தை நிறைவேற்றவே குயிற்பாட்டை இன்னிசைப் பாட்டாகப் பாடியுள்ளார். குயில் பாடிய காதற்பாடல்களில் நாதம், தாளம், பண், குழல் போன்ற" வற்றின் பணிபுநிலை பற்றிய குறிப்புகளை இதற்காகவே இணைத்துள்ளார். பேரின்பம் தருவது பாட்டு. ஏழுலகும் இன்பம் பெற வைப்பது. உள்ளத்தை உருக்கும் இசையைக் குயிலின் குரலால் காட்டுகிறார். பாட்டுத் திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திட எண்ணிய பாரதியின் நோக்கை நிறைவேற்ற எழுந்ததே குயிற்பாட்டு எனில் மிகையாகாது. இசையையும் இசைக்கருவி. களையும் பற்றிய தனது எண்ணத்தைப் பாரதி குயிற் பாட்டிலே பதிவு செய்து வைத்துள்ளார். இசைத்திறமையோடு பேச்சாற்றலும் பெற்ற கருங்குயிலி எல்லோருடைய மனதையும் கவரும் அழகையும் பெற்றிருந்தது. காளை மாட்டையும் குரங்கையும் குயில் வருணித்துப் பேசும் பகுதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. w
குயிற்பாட்டில் வரும் மாஞ்சோலையின் இயல்பான நடப்பியல் சூழலைப் பாரதி தன் கதைக்களமாக்கியுள்ளார். நாட்டுப்புறவியல் நிலையில் குயிலின் பாத்திரப்படைப்பை அமைத்து அதனை ஒரு மறக்க முடியாத பாத்திரமாக்கியுள்ளார். "குயிற் பாட்டின் குணசித்திரசக்திபாரதியின் மற்றக் காவியங்களில் காணப்படாத ஒன்று" எனக் கு.ப.ரா. குறிப்பிட்டு உள்ளார். குயிற்பாட்டில் குறிப்பிடப்படும் வேடர்குலத்தாரின் திருமணமுறை நாட்டார் வாழ்வியல் நடைமுறைப் பதிவாக உள்ளது. வேடர் திருமணமுறையுடன் வேந்தர் திருமணமுறையும் கூறப்பட்டுள்ளது. ஈற்றில் காந்தர்வ மணத்தை வேதமுறைப்படி செய்வது என்ற குறிப்பு மூலம் பாரதி அந்தணச் சாதியின் சாத்திர சடங்குமுறை" களையும் பேணமுயன்றமையை நன்கு உணரமுடிகிறது.
பாரதியின் குயில்பாட்டில் குயிலியின் பாத்திரப் படைப்பில் உள்ள நடப்பியலை சி. கனகசபாபதி வருமாறு எடுத்துக் காட்டியுள்ளார்.
பாரதியின் "குயில்” பாட்டில் வரும் குயிலி முதலில் வேடர்குல வழக்கங்களைப் பின்பற்ற நினைக்கிறாள். அவள் நெட்டைக் குரங்கனை மணந்து கொள்ள வேண்டுமென்று வீட்டில் பேசப்
Page 31
48 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
படுகிறது. ஆனால் அவள் தன் மாமன் மகன் மாடனிடம் மூன்று மாதங்களில் நெட்டைக் குரங்கனை விட்டு வந்து விடுவதாகக் கூறுகிறாள். பிறகு சேர இளவரசன் மேல் கொண்ட காதலால் வேதநெறிச் சடங்குகளுடன் மணம் புரிந்து கொள்வதற்கு ஒப்புக் கொள்கிறாள். குயிலியின் பாத்திரப் படைப்பில் உள்ள நடப்பியல் இதனாற் புலப்படுகிறது.
(பாரதியும் பாரதிதாசனும்: ப.309)
பாரதி வாழ்ந்த காலத்திலிருந்த சாதியமைப்புகளையும் குயிற்பாட்டில் தொட்டுக் காட்டியுள்ளார். வேடன், அரசன், கவிஞர் போன்றவர்களிடையே இருந்த வேறுபாட்டை குயிலுடன் உறவாடிய வகையில் சுட்டிக் காட்டுகிறார். அவரவர் சமூகவழக்க முறைப்படியே ப்ாத்திரங்களும் படைக்கப்பட்டுள்ளன. குயில் எல்லோரையும் இணைக்கும் ஆளுமையைக் கொண்டிருந்தது. பறவையினம் ஏனைய மிருக இனங்களோடு ஒற்றுமையாய்ப் பழகும் நிலையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரதியின் புலமைத்திறனுக்குக் "குயில்" ஒரு சான்றாக உள்ளது. பறவையினங்கள் பல இருக்க பாரதி குயிலைத் தேர்ந்தெடுப்பதற்கு என்ன காரணம் என நோக்கும்போது பொதுவாக ஆங்கிலக் கவிஞனான கீட்சின் கவிதையும் ஒரு காரணமாகக் கொள்ளப்படுகிறது. இசை என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட ஒசையாகும். அதை ஆத்மாவோடு பேசுகிற அந்தரங்கபாஷை என்றும் கூறுவர். குயிலின் ஒசை இனிமை" யாகவும் இருப்பதால் அதனைக் கேட்கும் போது துன்பத்தை மறக்க முடியும் எனப் பாரதி கருதினார். குயில் அடர்ந்த பொதும்பரிலும் மாஞ்சோலைகளிலும் விரும்பி இருக்கும். "மாங்குயில்" என்ற சிறப்புப் பெயரும் அதற்கு உண்டு. கரிய குயில் பெட்டையாக இருக்க முடியாது. சேவலாகத்தான் இருக்கமுடியும் என "சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்" என்னும் நூலில் பி.எல். சாமி குறிப்பிட்டுள்ளார். கருங்குயில் பாடும் போது கூ கூ என்று மிகுந்த ஓசையுடன் மாறிமாறிக் கூவி ஏழாவது அல்லது எட்டாவது தடவை உச்ச இடத்தை அடைந்து உடனே நிறுத்திக் கொள்ளும் எனப்பறவை நூலார் கூறுவர். ஆனால் பாரதியின் இசைக்குயில் ஒன்பது தடவை கூவுவது போலப் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்குயில் பாடும் மரபைக் குயிற்பாட்டில் மாற்றிப் பெண்குயில் பாடுவதாகப் பாரதி பாடலைப் புதுமையாக அமைத்துள்ளார். பெண்குயிலைப் புள்ளிக்குயில்
கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு 49
என்றும் வரிக்குயில் என்றும் மலையாளத்தில் வழங்குவர். ஆண்குயில் காக்கைபோலக் கருமையாக இருப்பதால் காக்கைக் குயில் என வழங்குவர். தேவாரத்தில் புள்ளிக்குயிலை வரிக்குயில் என்று குறிப்பிட்டிருப்பதையும் பி.எல். சாமி எடுத்துக் காட்டியுள்ளார். இக்குறிப்பும் பாரதியின் குயிற்பாட்டில் வரும் குயில்
ஆண்குயில் எனக் கொள்வதற்கு இடம் தருகிறது.
குயிற்பாட்டில் வரும் குயிலை வேதாந்தக் குயிலாகக் கருதுவோரும் உளர். இதனை சரளா ராஜகோபாலன் வருமாறு
விளக்குகிறார்.
குயிலி காதல் வேண்டும் அன்றேல் சாதல் வேண்டும் என்கிறது. பரமாத்மாவிடம் ஜீவாத்மா கொள்ளும் காதலே உண்மைக்காதல். மனம் (குரங்கு) புத்தி (எருது) இவற்றின் வழிச் சென்ற உயிர் மாயையால் மயங்குகிறது. அதனால் பிறவியேற்படுகின்றது. அப்பிறவி உள்ளவரை சாதல் சாதல் தான். அப்பிறவி நீங்கினால் காதல் அதாவது பரமாத்மாவிடம் அன்பு இணைப்பு. அதுவரை சாதல் அல்லது பிறப்பே. எனவே எனக்குச் சாதல் வேண்டாம்.
காதல் வேண்டும் என்கிறது வேதாந்தக் குயிலி.
(காப்பிய மகளிர் : ப.95)
குயிலின் இசைப்பாட்டிலும் தத்துவக் கருத்துகள் உள என்ற கருத்தும் நிலவுகிறது. ஒன்றைப் பற்றி ஒன்று நிற்பதே வாழ்வில் இன்பம் தருவது. பிரிவு பெருந்துன்பம் தருவது என வேதாந்த உண்மையை வலியுறுத்துவதாகக் குயில்பாட்டு அமைந்திருப்பதைச் சரளா ராஜகோபாலன் விளக்கியுள்ளார்.
பாரதியின் குயிற்பாட்டு காதற்பாடலாகவும் முரண்பட்ட காதல் நிலைகளைக் காட்டுவதாகவும் அமைந்திருப்பதற்குப் பாரதியின் உள்ளத்தில் அடங்கியிருந்த பிள்ளைக் காதலே காரணம். நிறைவேறாத காதலால் பாரதி அநுபவித்த மனத் துயரத்தை இசையால் மறக்கமுயல்கிறார். தனது முன்னைய காதலியையே குயிலாக உருவகித்துக் கற்பனையால் தனது மனத்தின் முரண்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். துன்பம் நேர்கையில் இனிய இசையால் அதைப் போக்கலாம் என்று இன்றைய நவீன மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. பாரதியின் மனத்திலிருந்த காதல் பற்றிய ஐயத்தைத் தீர்க்க ஆண்குயிலின் பாட்டைப் பெண் குயிலியின் "காதற் பாட்டாக்கி"ப் பாடியுள்ளார். மூவர் விரும்பும் பெண்ணைத்தான் விரும்பியதாக
Page 32
50 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
காட்டுகிறார். பெண்ணின் உள்ளத்தைச் சற்று மரபுமீறிய நிலையில் கற்பனை செய்து பாடுகிறார். ஈற்றில் வேதாந்தப் பொருளையும் கண்டு கொள்ள முடியுமானால் கண்டு கொள்ளலாம் எனச் சவால் விடுகிறார். எனவே பாரதியின் இப்புதிய பாட்டு காதற்பாட்டாக மட்டுமன்றி அவருடைய கவிச்செருக்கை வெளிப்படுத்தும் அற்புதப் படைப்பாகவும் நின்று நிலவுகிறது என்றால் மிகை unt5Tgl.
பாரதியார் கவிதைகளில் பெண்மை - மரபுநிலையும் புரட்சிநிலையும்
முன்னுரை
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க்கவிஞர் பாரதி. தமிழ்க் கவிதையின் செல்நெறியைத் திசை திருப்பிய புதுமைக் கவிஞர். சமுதாயத்திலே புரட்சியான மாற்றங்களை ஏற்படுத்தக் கவிதையைக் கருவியாகக் கையாண்டவர். பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தை மாற்றியமைக்க முனைந்தவர். இதுவரையும் தோன்றிய உலக மகாகவிகளுள் பாரதியாரைப் போலப் பாமர மக்களை, அடிமைத்தளையில் அகப்பட்டவர்களைக் கவர்ந்திட்ட கவிஞர் எவருமே இல்லை. விடுதலை விரும்பியாய் வீரகாவியம் பாடியவர். மாபெரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் சிந்தனை யாளர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பேசப்படுபவர்கள். அவர்களது படைப்புகள் காலத்தை வென்று நிற்கும் தன்மையன. பாரதி உலகம் அறிந்த ஒரு மக்கள் கவிஞர். அவரது பாடுபொருளும் பரந்ததாகவுள்ளது.
பல்வேறு மொழிகளையும் இனங்களையும் பழக்க வழக்" கங்களையும் சமயங்களையும் தன்னகத்தே கொண்ட பல்தேசிய இந்தியா முழுவதையும் தாயகமாகக் கொள்ளும் எண்ணத்தைப் பாரதியின் தேசபக்திக் கவிதைகள் ஊட்டின. பாரதியின் கவிதை உள்ளம் இயற்கை அழகையும் மானிட உறவுகளையும் பெரிதும் நேசித்தது. பாரதிக்கு முன் தமிழ்க்கவிதை மன்னர் அவையில் மட்டுமே நடமாடியது. வங்கக் கவிஞர் தாகூரைப் போலப் பாரதி, கவிதையை மக்கள் அவையிலே அரங்கேற்றினார். பாரதி கடந்த காலத்திற்கும் வருங்காலத்திற்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்” தியவர்.
Page 33
52 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
பாரதி பல்வேறு மொழிகளைப் பயின்றவர். இந்தி, ஆங்கிலம், வடமொழி, பிரஞ்சு, வங்காளம் முதலிய மொழிகளைக் கற்று அந்தந்த மொழிகளிலுள்ள காவியங்களையும் கவிதை" களையும் ஆராய்ந்த பின்னரே “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியுள்ளார். அதனால் தமிழ்மொழியின் பெருமையை உலகம் அறியவைக்க வேண்டும் என விரும்பினார். "தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகைசெய்தல் வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். அதற்கும் மேலாகத் தனது இலக்கை வருமாறு பாடியுள்ளார்.
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.
பாரதியின் இலக்கு இன்று நிறைவேறி வருகின்றது. இக்கட்டுரை பாரதியின் பெண்மை பற்றிய கருத்துக்களை முன்வைப்பதாக அமைகின்றது.
1. புரட்சிக் கவிஞர் பாரதியின் வாழ்வுச் சூழல்
பாரதியார் 1882 ஆம் ஆண்டு பிறந்தவர். ஐந்து வயது நிறைவதன் முன்னர் அன்னையை இழந்தவர். தந்தை மறுமணம் செய்ததால் சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவர். தந்தையின் கண்டிப்பான வளர்ப்புநிலை பிள்ளைப்பராயத்தில் பாரதியை மனம் வருந்த வைத்தது. அதனை அவருடைய சுயசரிதைப் பாடல் காட்டுகிறது.
வேண்டுதந்தை விதிப்பினுக் கஞ்சியான் வீதியாட்டங்களேதினும் கூடிடேன் தூண்டு நூற்கணத்தோடு தனியனாய் தோழமை பிறிதின்றி வருந்தினேன்.
சிறுவயதிலேயே காவடிச் சிந்துப் பாடல்களில் விருப்பமுடைய வராயிருந்தார். இயற்கைச் சூழலைப் பெரிதும் ரசித்தார். தந்தையின் பணிப்பின் பேரில் ஆங்கிலக் கல்விகற்கச் செல்வதை வெறுத்தார். அதனாற் பொருட்செலவே ஏற்பட்டதெனக் கவிதை பாடினார்.
பாரதியார் கவிதைகளில் பெண்மை . 53
செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது தீதெனக்குப் பல்லாயிரஞ் சேர்ந்தன நலமோ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை நாற்ப தாயிரம் கோயிலிற் சொல்லுவேன்.
(சுயசரிதை)
கவிதையால் தன் வாழ்வியல் அனுபவங்களைப் பாடியவர் பாரதி. இளமையில் தமிழ்மொழியில் அவருக்கிருந்த ஈடுபாட்டை இது உணர்த்துகிறது.
12 வயதில் செல்லம்மாளைத் திருமணம் செய்து இல்லற வாழ்வில் பாரதி ஈடுபட்ட போது அதை ஒரு விளையாட்டாகவே எண்ணியுள்ளார். அக்காலகுலவழக்கப்படி ஒருவரோடொருவர் ஏற்ற பருவம் வரும் வரை பழகும் நிலை விலக்கப்பட்டிருந்தது. அவ்வேளையில் பாரதி தன் உணர்வுகளை செல்லம்மாவிடம் தெரிவிக்க அழகிய பாடல்களைப் பாடியுள்ளார். அண்ணாமலை ரெட்டியாரின் ஆறுமுகன் வேலன் பாடலைப் பாரதி நன்கு சுவைத்துத் தனது பாடல்களையும் பாடினார் போலும்.
பாரதி திருமணம் முடித்த மறு ஆண்டே தந்தை நோய் வாய்ப்பட்டு இறந்தார். அதனால் வறுமை ஏற்பட பாரதி இல்வாழ்வுக்காகப் பொருளிட்டம் செய்ய நேர்ந்தது. அப்போது தன் நிலையை வெளிப்படையாகப் பாடியுள்ளார். மடமைக் கல்வியில் மண்ணும் பயனில்லை எந்த மார்க்கமும் தோன்றில தென்செய்கேன்? ஏன் பிறந்தன னித்துயர் நாட்டிலே?
பின்னர் காசி வாழ்க்கையில் பாரதி பெற்ற கல்வியறிவு பரந்த உள்ளத்தையும் விரிந்த நோக்கையும் கொடுத்தது. அங்கு தன் தோற்றத்தையும் மாற்றிக் கொண்டார். தலைப்பாகை, சட்டை, காலிற் சப்பாத்து என்பன அணிந்து குடுமியையும் திருத்தி அமைத்துக் கொண்டார். 1902ல் எட்டயபுரம் வந்து மன்னர் மாளிகையில் ஆசிரியத் தொண்டு செய்தார். ஆங்கில மொழிப் புலமை வல்லுநர்களான ஷெல்லி, ஷேக்ஸ்பியர், பைரன், கீட்ஸ் போன்றவர்களின் நூல்களை நன்கு கற்றுத்தேறி ஷெல்லிதாசன் என்ற பெயரில் பத்திரிகைகளில் கட்டுரைகளும் எழுதினார்.
புதுவையில் பாரதியாருடைய வாழ்க்கை வேறுபட்டது. "இந்தியா" பத்திரிகைப் பணியைத் தொடர முடிந்தது. இங்குதான் அவருக்குச் சகுந்தலா பிறந்தாள். அரவிந்தர், ரிஷார் போன்றோ
Page 34
54 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
ருடைய நட்பும் கிடைத்தது. வேதங்கள், வேதாகமங்கள், நீதி நூல்கள், இலக்கியங்கள் முதலியவற்றில் அதிக ஈடுபாடு கொள்ள வாய்ப்பேற்பட்டது. பிரஞ்சு மொழியையும் கற்கமுடிந்தது. அங்குள்ள வாழ்வுச் சூழல் முப்பெரும் பாடல்களை இயற்ற உறுதுணையாகவும் இருந்தது.
திருவல்லிக்கேணி பாரதியார் தெய்வவழிபாட்டுச் சூழலாக இருந்தது. தினமும் வழிபாடு செய்யும் பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்ட சம்பவம் அவர் வாழ்வு முடியக் காரணமாயிற்று. வறுமை பாரதியாரின் உடலை வருத்தினாலும் உள்ளம் உறுதியோடிருந்தது. பக்தி உணர்வோடு கவிதைகளை இயற்றி வந்த பாரதி 1921 செப்டெம்பர் 11 ஆம் நாள் இறைவனடியை எய்தினார்.
செல்லம்மாள் பாரதியின் நூலும் பாரதி பாடிய சுயசரிதைப் பாடலும் அவரது வாழ்வுச் சூழலை அறிய ஓரளவு உதவுகின்றன. பாரதியின் வாழ்வுச் சூழல் அவரது கதையாக்கத்தில் பெரும் பங்கு கொண்டிருந்தது. இரினா. என். ஸ்மிர்னோவா என்னும் சோவியத் அறிஞர் பாரதியின் வாழ்க்கைச் சூழல் அவருடைய படைப்புகளில் ஏற்படுத்திய தாக்கத்தை வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரதி கீழ் - மத்தியதர வர்க்கத்திலிருந்து அதாவது ஒரு குறிப் பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் பொதுவான தேசிய நலன்களை வெளியிடும் வர்க்கத்திலிருந்து வந்தவர். பிரதானமாக இதுவே அவரது படைப்பாற்றலின் பலமான அம்சங்களையும் பலவீனமான அம்சங்களையும் தீர்மானித்தது. இது ஒரு புறத்தில் ஆக்கபூர்வமான முற்போக்கான அம்சங்களைக் கொண்டுள்ளது. தமிழ் நாட்டினரின் வளர்ந்தோங்கிவரும் தேசிய விழிப்புணர்வைப் பிரதிபலிக்கிறது. மறுபுறத்திலோ இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் திட்பமற்ற உறுதியற்ற அரசியல் திட்டத்திற்கும் சான்று பகர்கின்றது.
2. பெண்மை பற்றிய எண்ணக் கருக்கள்
பாரதியின் பெண் மை பற்றிய எண் ணக்கருக்களை இனம் காண்பதற்கு அவருடைய கவிதைகளே சான்றாக உள்ளன. இன்று தொகுப்பு நிலையில் கிடைக்கும் பாரதியின் கவிதைகளைத் தேசியகீதங்கள், தெய்வீகப்பாடல்கள், பல்வகைப்பாடல்கள், முப்பெரும்பாடல்கள் எனப் பகுத்து நோக்கலாம். இவற்றுள்
பாரதியார் கவிதைகளில் பெண்மை . ქ55
பெண்மை பற்றிய எண்ணக்கருக்கள் விரவிக் கிடக்கின்றன. பாடலின் தலைப்பாக வெளிப்பாட்டுநிலையிலும், பாடலின் உட்கிடையாக மறைமுகநிலையிலும் அவை அமைந்துள்ளன. தெய்வப் பாடல்களில் பெண் மையை வழிபாட்டுக்குரிய பேராற்றலாக பாரதி பாடியுள்ளார். சக்தி, சிவசக்தி, மகாசக்தி, பராசக்தி, அன்னை, பூலோககுமாரி என வெவ்வேறு வடிவங்களாகக் கவிதையில் பாரதி காட்டுகிறார்.
பெண்மையின் தனிக்கூறுகளைப் பாரதி எடுத்துக்காட்டுவது தனித்துவமானது. தெய்வீக நிலையாக அன்றி மானிட நிலையில் பெண்மையின் இயல்பைப் பாரதி எடுத்துப்பாடுகிறார்.
வாழ்வு பெருக்கும் மதியே சக்தி
மாநிலங் காக்கும் மதியே சக்தி தாழ்வு தடுக்கும் சதிரே சக்தி
சஞ்சலம் நீக்கும் தவமே சக்தி வீழ்வு தடுக்கும் விறலே சக்தி
விண்ணையளக்கும் விரிவே சக்தி ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி
உள்ளத்தொளிரும் விளக்கே சக்தி (சக்தி:3) சிவசக்தியாகப் பாடும் போது தெய்வமாக எண்ணுகிறார்.
"அம்மை சிவசக்தி" எமை அமரர் தம் நிலையினில் ஆக்கிடுவாய்"
(சிவசக்தி:8)
மகாசக்தி, பராசக்தி, பூலோககுமாரி என்னும் பாடல்கள் பெண்மையின் தெய்வீக நிலையை வெளிப்படுத்துகின்றன. மகாசக்தி வெண்பா வழிபாட்டு நிலையில் பெண் மையின் ஆற்றலைப் புலப்படுத்துகின்றன.
தன்னை மறந்து சகல உலகினையும் மன்ன நிதம் காக்கும் மகாசக்தி. அன்னை அவளே துணையென்று அனைவரதும் நெஞ்சம் துவளா திருத்தல் சுகம்.
(மகாசக்தி வெண்பா:1)
இங்கு அன்னைமடியில் கண்ட அத்தனை சுகங்களையும் எண்ணிப் பாரதி பெண்மையைப் போற்றுகிறார். பல்வகைப் பாடல்களில் சமூகம், தனிப்பாடல்கள், சான்றோர், சுயசரிதை
Page 35
ქ56 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
என்னும் பகுதிகளில் மானுடநிலையில் பெண் மை பற்றிய கருத்துக்களைப் பாடும் பாடல்கள் உள்ளன. புதுமைப்பெண், பெண்மை வாழ்க, பெண்கள் விடுதலைக்கும்மி, பெண்விடுதலை, கவிதைத் தலைவி, கவிதைக் காதலி, சந்திரமதி, நிவேதிதா, பிள்ளைக்காதல் என்னும் பாடல்களில் மானுடப் பெண்களின் இயல்பைப் பாடியுள்ளார். தான் வாழும் காலத்துப் பெண்களைக் கண்டு அவர்களின் பேராற்றலை வெளிப்படுத்தப் பாடுகிறார்.
பெண்மையைப் பாடும் போது ஒரு சமத்துவநிலை பேண எண்ணுகிறார்.
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கிஇவ் வையம் தழைக்குமாம்
{புதுமைப்பெண்:4)
"பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை”
(பெண்மை வாழ்க:4)
"கற்பு நிலையென்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்"
(பெண்கள் விடுதலைக் கும்மி:5)
"அறவிழுந்தது பண்டை வழக்கம் ஆணுக்குப் பெண் விலங்கெனும் அஃதே"
(பெண்விடுதலை:2)
“பேச்சுக் கிடமேதடி - நீ பெண்குலத்தின் வெற்றியடி"
(சந்திரமதி:2)
முப்பெரும் பாடல்களில் பெண்ணைக் காதலியாகவும், மனைவியாகவும், பிள்ளையாகவும், தாயாகவும் எண்ணிப் பார்க்கிறார். மனிதவாழ்வியலில் பெண்மையின் உன்னதமான பங்களிப்பை விளக்குகிறார். கண்ணன் பாட்டில் கண்ணன் என்தாய், கண்ணம்மா என் குழந்தை, கண்ணம்மா என் காதலி, கண்ணம்மா என் குலதெய்வம் என்னும் பாடல்கள் இதற்குச் சான்றாக உள்ளன. பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலியின் சபதத்தின் மூலம் பெண்மை வீரத்தை விளக்குகிறார். குயிற்பாட்டில் பேடைக்குயிலாக வந்து மானுடப் பெண்ணாக மாறும் நிலையைப் பாடிப் பெண்மையின் அற்புத ஆற்றலை வெளிப்படுத்துகிறார்.
பாரதியார் கவிதைகளில் பெண்மை . 57
தின்றிடப் பண்டங்களும் - செவி
தெவிட்டறக் கேட்க நற்பாட்டுகளும்
ஒன்றுறப் பழகுதற்கே அறி
வுடைமெய்த் தோழரும் அவள் கொடுத்தாள்.
(கண்ணன் என் தாய்:7)
இங்கு தாய்மையின் குணத்தில் பெண்மையின் பண்புநலனைக் காட்டுகிறார்.
சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா செல்லக் களஞ்சியமே என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
(கண்ணம்மா என் குழந்தை:1) இங்கு பெண் குழந்தைப் பேற்றைச் சிறப்பித்துள்ளார். பாயு மொளி நீயெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு தோயும் மது நீயெனக்கு தும்பியடி நானுனக்கு வாயுரைக்க வருகுதில்லை வாழி நின்றன் மேன்மையெல்லாம்.
(கண்ணம்மா என் காதலி:1)
இங்கு காதலியின் உணர்வுநிலையைக் காட்டுகிறார்.
குயிற் பாட்டில் பாரதியின் பெண்மை பற்றிய எண்ணக்கரு வேறுபட்ட வடிவிலே வெளிப்பட்டுள்ளது. காதல் பற்றிய கற்பனைக் கனவைப் பாடுவதன் மூலம் பெண்மையின் காதல் நிலையை விளக்குகிறார். மானுடக்காதல் நிலை நின்று கன்னிக் குயிலொன்றின் காதலைப் பாடுகிறார்.
கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர் இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய் மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ இனிதிக் குயிற் பேட்டை என்றும் பிரியாமல் காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ நாதக் கனவிலே நம்முயிரைப் போக்கோமோ?
(குயிற்பாட்டு:குயில் 25-30)
காதல் உணர்வு மேலோங்க மானுட உருவை விடுத்துக் குயிலுருவம் பெற விரும்பும் பாரதியின் பாட்டில் மறை பொருளாகப் பெண் மையின் பணி புநலன் பேசப்படுகிறது. பொருந்தாக் காதல் நிலையில் பேதுறும் ஆண்மகனாக நின்று
Page 36
53 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
கவிஞர் பாடும் போது பெண் மையின் அவலநிலையையும் ஒருகால் எண்ணிப் பார்த்தமையை உணரமுடிகின்றது.
பாரதி பெண் மை பற்றி ஆழமாகவும் அகலமாகவும் எண்ணிப் பாடியுள்ளார். தான் வாழ்ந்த காலச் சூழலிலும் வளர்ந்த சூழலிலும் பெண்மையை மீட்டுருவாக்கம் செய்ய முற்பட்டார். அது அவருடைய கவிதையில் புதுமையான மரபினைத் தொடக்கு" வதற்கு முக்கிய காரணமாக அமைந்ததெனலாம். மக்கள் மனதில் பெண்மை பற்றிய மரபான எண்ணங்களை நீக்கிப் புதுநெறியில் காலத்தின் தேவைக்கேற்ப வழிப்படுத்த முயன்றார்.
3. மரபு பற்றிய கண்ணோட்டம்
பெண்மை பற்றிய மரபான கண்ணோட்டம் பாரதிக்கு இருந்துள்ளது. "முன்னோர் நூலின் முடிபொருங்கொத்து பின்னோன் வேண்டும் விகற்பங்கூறல்" என்னும் இலக்கணத்திற்கமைய பாரதியின் கவிதைகளிலும் பண்டைய மரபு பேணப்பட்டுள்ளது. பண்டைய இலக்கணமான தொல்காப்பியம் பெண்மையின் நிலையை ஆண்மைக்கு ஒத்ததாகவே விளக்கி நிற்கிறது.
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவ நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளர்ந்த ஒப்பினது வகையே.
(தொல்:மெய்ப்பாட்டி)
இல்வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் செயற்படுத்தவேண்டிய பண்புகளையும் தொல்காப்பியம் வருமாறு சுட்டியுள்ளது.
காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.
(தொல்:கற்பியல்)
சங்க இலக்கியங்களிலும் பெண்மை தாழ்த்தப்படவில்லை. ஐங்குறு நூற்றின் காப்புச் செய்யுளில் வரும் நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் என்னும் அடியும்
"பெண்ணுரு ஒரு திறனாகி நின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினுங் கரக்கும்" என,
பாரதியார் கவிதைகளில் பெண்மை . 59
புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தில் வரும் அடிகளும் இதனை உணர்த்தி நிற்கின்றன. பின் வந்த ஆழ்வார்களும் இறைவனைப் பெண் மை கலந்த ஆண்மையாகப் பாவனை செய்து பாடியுள்ளனர். நாயன்மார் பாடல்களிலும் “வேயுறு தோளிபங்கன்" "பண்ணினேர் மொழியாளுமை பங்கரோ" "அம்மையே அப்பா" "காதன் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்" போன்ற அடிகள் இப்பண்புக்குச் சான்றாக உள்ளன.
பிற்காலத்தில் இச் சமநிலைப் பணிபு பேணப்படாது பெண்மை தாழ்த்தப்பட்டது. பெண் கல்வியும் கலைத்திறனும் கவித்திறனும் மங்கின. அதனை மீண்டும் கொணரவேண்டுமென்பதே பாரதியின் நோக்கமாயிற்று. பொய்யான காரணங்களைக் கொண்டு பெண்மை பேணப்படாமை கண்டு கொதித்" தெழுந்து கவிதை பாடுகிறார்.
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப்பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில் மாட்டும் வழக்கத்தைக் கொண்டுவந்தே வீட்டினிலெம்மிடங் காட்ட வந்தாரதை வெட்டி விட்டோமென்று கும்மியடி.
(விடுதலைக் கும்மி)
"புதுமைப்பெண்” என்னும் கவிதையில் பெண்களுக்குச் சுதந்திரம் வழங்குதல் பாரத நாட்டின் கடமையென்று குறிப்பிட்டுள்ளார். மாதர் சமத்துவம் பற்றிய கருத்துப் பல பாடல்களிலே காணப்படுகிறது. சுதந்திர நாட்டில் பெண்களும் சுதந்திரமாக இருக்க" வேண்டும் எனப் பாரதி கருதினார். நாடு அடிமைப்பட்டதற்குப் பெண் அடிமைப்பட்டதே காரணம் என எண்ணினார். பெண் விடுதலை, பெண் விடுதலைக்கும்மி, புதுமைப்பெண் முதலிய பாடல்களில் இக்கருத்து அழுத்தமாகக் காணப்படுகிறது.
பெண் சமத்துவமின்மை உலகெங்கும் இருப்பதையும் பாரதி கண்டித்தார். அதனை வருமாறு தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று தமிழ் நாட்டில் மாத்திரமே யல்லாது பூமண்டல முழுதிலும் பெண்ணைத் தாழ்வாகவும் ஆணை மேலாகவும் கருதி நடத்தும்
Page 37
60 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
முறைமை ஏற்பட்டிருப்பது முற்றிலும் தவறு. அது துன்பங்களுக்கெல்லாம் அஸ்திவாரம். அநீதிகளுக்கெல்லாம் கோட்டை கலியுகத்திற்குப் பிறப்பிடம்.
(இந்தியா:2.5.1908)
இந்நிலையை மாற்ற மரபான பெண்மை நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே பாரதியின் முடிவு. பாரதியின் சம காலத்தவர்களான திரு.வி. கல்யாணசுந்தரமுதலியார், வ.வே. சு. ஐயர் போன்றோர் பண்டைய மரபான பெண்மையை முற்றாக மாற்ற விரும்பவில்லை. வ.வே.சு. ஐயர் பெண்களின் மரபான கடமைகளைப் பேண விரும்புகிறார். ஆனால் பாரதியின் மரபு பற்றிய கண்ணோட்டம் வேறுபட்டதாயுள்ளது. பெண்மைக்குப் பொருத்தமற்ற வரையறைகள் செய்வதை வெறுத்தார். பெண்ணின் தெய்வீக ஆற்றல் பற்றிய மரபான கோட்பாட்டை அவர் புறந்தள்ளவில்லை. அவளை உயர்ந்த இடத்தில் வைப்பதற்கு அது தேவை. பாரத தேசத்தின் விடுதலைக்குப் பெண் மையின் உழைப்பும் தேவை என்பதை உணர்த்தினார். இதனால் பாரதியின் கவிதைகளில் ஒரு புதிய புரட்சி நிலையின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் காணமுடிகிறது.
4. புரட்சி நிலையின் தோற்றமும் வளர்ச்சியும்
பாரதியின் "புதுமைப் பெண்" என்னும் கவிதை அவரது புரட்சிப் போக்கினை விளக்கிநிற்கிறது. புதுமைப் பெண்ணின் சொற்களும் செய்கைகளும் கலியுகத்திற்கு மட்டுமே புதிதாக உள்ளன. ஆனாலவையாவும் வேத காலத்திலிருந்தே வழக்கிலிருந்தவை தான். வேதமுறைப்படி செயற்படாமையால் கேடு விளைந்தது என்ற பாரதியின் கூற்று அவருடைய புரட்சி நிலையின் ஊற்றை நன்குணர வைத்துள்ளது.
நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்
எனப் புதுமைப் பெண்ணின் தோற்றத்தைப் புரட்சிகரமாகக் காட்டியுள்ளார். வீட்டு வாழ்வை விட்டு வீரப் பெண்களாய் நாற்றிசை நாடுகளுக்கும் புதுமைப் பெண் செல்வாள். தேசமோங்க
பாரதியார் கவிதைகளில் பெண்மை . 61
உழைப்பாள். அத்துடன் மூத்த பொய்மைகளை அழித்து மூடக்கட்டுகளைத் தகர்ப்பாள். மானிடருடைய செய்கைகள் யாவற்றையும் கடவுளர்க்கினிதாய்ச் சமைப்பாள் எனப்பாரதி கூறுவது அவரது அடிமனதில் உறைந்து கிடக்கும் வழிபாட்டு மரபைக் காட்டுகிறது. அதனால் அப்பெண்ணைப் பராசக்தி யென்றே பாடுகின்றார்.
போற்றி போற்றிஜயஜய போற்றி இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே மாற்றி வையம் புதுமையுறச் செய்து
மனிதர் தம்மை அமரர்களாக்கவே ஆற்றல் கொண்ட பராசக்தி அன்னை நல்
அருளினா லொரு கன்னிகையாகியே தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.
(புதுமைப்பெண்)
“பெண்கள் விடுதலைக்கும்மி" என்னும் பாடலில்
காதலொருவனைக் கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினுங் கைகொடுத்து மாதரறங்கள் பழைமையைக் காட்டிலும்
மாட்சிபெறச் செய்து வாழ்வமடி
எனப் பாடுவதும் பாரதியின் புரட்சி நிலையின் வளர்ச்சியைக் காட்டுவதாக உள்ளது. பழைமையான வாழ்வியல் அறங்களை முற்றாக நீக்கிவிடாமல் அவற்றையும் இணைத்தே புதுமையான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே பாரதியின் விருப்பம். "பாஞ்சாலி சபதம்" இதனை நன்கு உணர்த்துகின்றது. பெண் உரிமையை மக்களிடையே வலியுறுத்தவே பாரதி இதனைப் பாடினார். ஒரு புதுமையான ஆக்கமாக காப்பிய மரபுநிலையில் ஒரு புதிய வளர்ச்சி நிலையாக இதனை ஆக்கியுள்ளார். தேச பக்தியின் சின்னமாகப் பாஞ்சாலியைப் படைத்துள்ளார். பாரதத் தாயின் அடிமை நிலையைத் தெளிவு படுத்தப் பெண்மையை இழிவு செய்த இதிகாசக் கதையை எடுத்தாண்டுள்ளார். பாரத நாடு விடுதலை அடைந்த பின்னரும் பாரதியின் பாஞ்சாலி சபதம் பெண்மையின் சிறப்பைப் புரட்சி மனப்பான்மையின் வளர்ச்சி நிலையை உணர்த்தும் புதிய காவியமாக நிலைபெற்று விட்டது. வியாசரின் பாஞ்சாலி பாரதியின் கவிதையில் புதுமெருகு
Page 38
62 பாரதியின் கன்னிக்குயிலின் இன்னிசைப் பாட்டு
பெற்றுள்ளாள். பாரதியாருடைய முழுக்கவிதைகளிலும் இணைந்து நிற்கும் பெண்மை பாஞ்சாலி சபதத்தில் தனிச்சிறப்புப் பெற்றுள்ளது. இதிகாச நிகழ்ச்சி ஒன்றைத் தமது சமகால அரசியல் நிலையை விளக்கப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார்.
மண்விடுதலைக்குப் பெண்விடுதலை பெறல் வேண்டும் என்பதே பாரதியின் நோக்கமாகும். பாரத நாட்டுப் பெண்குலத்தின் பிரதிநிதியான பாஞ்சாலி பாரத காலத்தில் கூறிய சபதம் பாரதி காலத்திலும் நிறைவேறாதிருந்தது. பாரத நாட்டுப் பெண்களின் அடிமைத்தளையை அறுக்க வேண்டும் என்ற பாரதியின் விருப்பமே பாஞ்சாலி சபதத்தைப் பாட வைத்தது.
ஆடை குலைவுற்று நிற்கிறாள் - அவள்
ஆவென்றழுதுதுடிக்கிறாள் - வெறும் மாடு நிகர்த்ததுச்சாதனன் - அவள்
மைக்குழல் பற்றியிழுக்கின்றான் - இந்தப் பீடையை நோக்கினன் வீமனும் - கரை
மீறி எழுந்தது வெஞ்சினம் - துயர் கூடித் தருமனை நோக்கியே - அவன்
கூறிய வார்த்தைகள் கேட்டிரோ?
என்று பாரதி காட்டும் காட்சி மக்கள் மனத்தை வீறு கொள்ள வைத்தது. ஒரு சபதம் பூணத்தூண்டியது. அவமானப்படுத்தப்பட்ட பாஞ்சாலியின் சபதம் இந்தியாவின் நிலையை உருவகப்படுத்திக் காட்டியுள்ளது. சபதத்தை நிறைவேற்றி முடிப்பது வரப்போகும் பாரத நாட்டின் விடுதலையை உருவகப்படுத்துகிறது. எனவே பாரதியின் புரட்சியும் அதன் வளர்ச்சியும் நாட்டின் விடுதலையை நோக்கியே சுழன்றன. பெண்மையின் பெயரால் சுதந்திரத்தையும் பாரதி தொழுகின்றார். பாரதப் போரின் அடிப்படைத்தத்துவம் பெண்மையின் நலனை வெளிப்படுத்துவதே. பாஞ்சாலியின் சபதமே பாரதப் போருக்குத் தகுந்த காரணமாயிற்று. அதே போலப் பாரத நாட்டின் விடுதலைக்கும் பெண்மையின் விடுதலை வேண்டும் எனப் பாரதி எண்ணினார்.
தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை மருமத்தை நம்மாலே யுலகங் கற்கும்.
என்னும் அடிகள் பாரதியின் நம்பிக்கையையுணர்த்தி நிற்கின்றன. வழிபாட்டு நிலையில் பாரதி பெற்றிருந்த ஒர் அமைதி அவருடைய
பாரதியார் கவிதைகளில் பெண்மை . 63
கவிதைகளின் ஊற்றாக இருந்துள்ளது. பெண்மையின் பேராற்றலை வெளிப்படுத்தும் பாரதி இடைக்காலத்தில் பெண்மை மதிப்பிழந்து போனதையும் பாடியுள்ளார்.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சிலமூடர் - நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக் காட்சி கெடுத்திடலாமோ? பெண்களறிவை வளர்த்தால் - வையம்
பேதமை யற்றிடுங் காணிர்
(முரசு. 9-10)
பெண்களின் அறிவாற்றலை வெளிக்கொணரத் தடையாயிருப்பவர் களையும் பாரதி எண்ணிக் கவிதையிலே இனங்காட்டியுள்ளார். பெண் சமத்துவம் வீட்டு விடுதலைக்கும் நாட்டு விடுதலைக்கும் இன்றியமையாதது. பாரதி பாடிய பெண்மை உலகம் முழுவதும் உணரப்பட வேண்டிய ஒர் உயர்ந்த கருத்தாகும். பாரதிக்கு முன்னர்த் தோன்றிய தமிழ்க்கவிதை மரபான ஒரு பெண்மை யையே அறிமுகம் செய்தது. ஆனால் பாரதியோ மரபான பெண்மையோடு புதுமைப்பெண்ணையும் அறிமுகம் செய்தமை சிறப்புடையது. இது பின்வந்த கவிஞர்களுக்கு ஒரு புதிய மரபைத் தொடர விழிவகுத்தது. பாரதிதாசன், தேசிகவிநாயகம்பிள்ளை போன்றவர்களுடன் இப்பண்புநிலையை ஒப்பிட்டு நோக்கும் ஆய்வு நிலையையும் தோற்றுவித்தது.
பெண்மையின் முழுமையான தோற்றத்தையும் ஆற்றலின் படிமுறை வளர்ச்சி நிலைகளையும் பாரதியின் கவிதைகள் காட்டுகின்றன. குழந்தை, குமரி, மனைவி, தாய், முதியோள், தெய்வம் எனப் பல்வேறு வடிவங்களில் பெண்மையைப் பாரதி பாடியமையே இதற்குச் சான்றாகும். பெண்மையால் உலகம் அடையும் நன்மையைப் பாரதியின் கவிதைகள் நன்கு விளக்கி யுள்ளன. பாரத தேசத்தையே பெண்ணாக நோக்கிய பாரதியின் கவிதைத்தொண்டு காலத்தை வென்று நிற்கும் தன்மையது.
Page 39
உசாத்துணை நூல்கள்
மகாகவிபாரதியார் கவிதைகள் (தொகுப்பு), சென்னை, 1990. சுந்தரம் ப. மீ, டாரதியார் வரலாறும் கவிதையும், சென்னை, 1954.
மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள் (கட்டுரைத் தொகுப்பு),
சோவியத் நாடு பிரசுரங்கள், 1982.
சரளா இராசகோபாலன், பாரதியின் பாஞ்சாலிசபதம், சென்னை, 2000. பத்மநாதன், ரா. அ. சித்திரபாரதி, சென்னை, 1957. பாஞ்சாலிசபதம், பாரதி பிரசுராலயம், 1924. சோமசுந்தரபாரதி, ச, பாரதியார் சரித்திரம், சென்னை, 1928. பாரதி டபிறந்தார், கல்கி பாரதிபதிப்பகம், சென்னை, 1954. யதுகிரி அம்மாள், பாரதிநினைவுகள், சென்னை, 1954
தூரன், பெ, பாரதிதமிழ், சென்னை, 1954. அருணாசலம், க., பாரதியார் சிந்தனைகள், கொழும்பு, 2003, கண்ணன், ஆர்.கே. புதுநெறிகாட்டிய பாரதி சென்னை, 1965. கைலாசபதி, க, இருமகாகவிகள், சென்னை, 1962.
கோதண்டராமன், 1. பாரதியுகம், நாகபட்டினம், 1961. சிவஞானம், ம.பொ. பாரதியாரின் பாதையிலே, சென்னை, 1974. சுத்தானந்த பாரதியார், பாரதி விளக்கம், சென்னை, 1944, சுப்பிரமணிய ஐயுர், ஏ.வி. கவிபாரதிநினைவுகள், திருநெல்வேலி, 1969. ராஜகோபாலன், கு.பா., பாரதியின் கவிதை, சென்னை, 1953.
கனகசபாபதி, சி, பாரதியும் பாரதிதாசனும் ஒப்பியல் திறனாய்வு,
சென்னை, 1980.
Page 40
Page 41
பாரதியின் கண்ணிக்குயிலின் கலாநிதி மனோன்மணி சண்முகதா
இருபதாம் நூற்றாண்டின் இணைய சிறப்பிக்கப்பட்டவருமான பாரதியில் அமைந்தவை. இனிய ஓசை நயம் கொள் மெட்டுகள் கொண்டவை.
பாரதியாரின் பாடல்களில் "குயி சிறந்த கவிதைப் படைப்பாகும். பாரதிய ஆங்கிலக் கல்வி கற்க அவர் வேறிடம் போயிற்று. அடிமனதில் அக்காதலை அந்த உணர்வை வெளிப்படுத்த ஒரு பாடியுள்ளார். அதனை விளக்கும் வை பெற்றுள்ளது. இரு கட்டுரைகளாக பா குயில் பாட்டும் இந்நூலில் நோக்கப்பட இச்சிறு நூல் பாரதியை அறிய விருப் பாரதியின் படைப்புகளைப் பாடநெறி ஒரு சிறு கைநூலாக அமையும்.
மனோன்மணி சண்முகதாள சிறப்பு இளங்கலைமாணிப் பல்கலைக்கழகத்திலும் முது
இவர் ஜப்பானில் உள்ள ஹக்சுயின் 1 பணியாற்றியவர். 'குறுந்தொகை: ஒரு சி.வை. தாமோதரம்பிள்ளை; ஒர் ஆ அகராதி தந்த சதாவதானி உட்பட ப ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றி வருகி
GjDJÖ j55 66üGli
விடயம்: தமிழ் இலக்கியம்
இன்னிசைப் பாட்டு
ற்ற கவிஞரும் மகாகவி என்று ன் கவிதைகள் எளிய நடையில் ண்டவை. பொதுமக்கள் விரும்பும்
ல் பாட்டு" ஒரு தனித்துவமான பின் பிள்ளைப் பிராயத்துக் காதல் சென்றமையால் நிறைவேறாமல் அவர் புதைத்து வைத்திருந்தார். வாய்ப்பாக்கி குயில் பாட்டைப் கையில் இச்சிறுநூல் உருவாக்கம் ாரதியின் சுயசரிதையும் அவரின் ட்டுள்ளன.
ம்பும் பொதுநிலை வாசகர்களுக்கும், யாகக் கற்கும் மாணவர்களுக்கும்
ஸ் (1943): தமிழ்த் துறையில் பட்டத்தினை பேராதனைப் கலைமாணி, கலாநிதி பல்கலைக்கழகத்திலும் பெற்ற பல்கலைக்கழகத்தில்
நுண்ணாய்வு', ய்வு நோக்கு', 'தமிழ்மொழி ல ஆய்வு நூல்களையும், ட்டுள்ள இவர் தற்போது தமிழ்த்துறையில் வருகை
ன்றார்.
978-955-659-157-6
978-9556591576 விலை ரூபா 175,00