கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொல் ஈனுங் கொற்றம்

Page 1

(نقاہ قسrnuٹی, ategalترجہ 2)
ா. யோண்சன் ராஜ்குமார்

Page 2


Page 3

கொல் ஈனுங் கொற்றம்
கூத்துருவ நாடகம்
அளிக்கையும் - விளைவுகளும்
யோ. யோண்சன் ராஜ்குமார்
ଗରାଗୀifi}; திருமறைக்கலாமன்றம்
238 பிரதான வீதி, யாழ்ப்பாணம். Tel. & FaX: 021-222 2393 E-mail:cpateam(a).sltnet.lk Website: www.cpartsteam.com

Page 4
நூல் விடயம்
ஆசிரியர்
பக்கங்கள்
முதற் பதிப்பு பதிப்புரிமை வெளியீடு அச்சுப்பதிப்பு
கணினி சார்ந்தவை
வடிவமைப்பு அட்டைப்படம்
விலை
Name of Book
Author Page's First Edition CopyRight Published by
Print by
Computer
Layout
Cover Designing Price
:கொல் ஈனுங் கொற்றம் :கூத்துருவ நாடகம் : யோ, யோண்சன் ராஜ்குமார்
425, நாவலர் வீதி, யாழ்ப்பாணம். : xvi + 100 = 116
: GLJJ6) is 2006 :யோ, யோண்சன் ராஜ்குமார் :திருமறைக்கலாமன்றம் : ஏ.சி.எம். அச்சகம்
464 ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம். : ஜெயந்த் சென்ரர்
28, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம். :கி. செல்மர் எமில்
: அ. ஜுட்சன்
: 2OO/=
: KOLL INUM KORRAM (Traditional Tamil Play) : J. Johnson Rajkumar : xvi + 100 = 116 : February 2006 : J. Johnson Rajkumar : Thirumarai Kalamanram
(Centre for Performing Arts) : A.C.M. Press,
464, Hospital Road, Jaffna. : Jeyanth Centre,
28, Martyn Road, Jaffna. : C. Selmar Emil : A. Judeson : 200/=
SBN 955-9262-28-9
559 1262
 

oصh]<ح<2 ہلال o۳71ص\ سکھیے۔
பாலப்பருவத்தே கதை சொல்லித் தந்தவள் கலை எண்ணில் விதையாக வேர்கொள்ளச் செய்தவள் கூத்தின் அகரத்தை அகத்திலே பதித்தவள் பார்த்துக் கைதடிடிப் பண்புகள் பல ஓதி “பண்டிதnைய் ஆகு’ என வாழ்த்தி விடைதந்து வில்Oைகத்தே சென்று உறைந்தவள்
Gld SlöIOlÖOfl
டேவிற் றோ8ழுத்துவுக்கு.

Page 5
முன்னுரை
2003 செப்ரெம்பரில் திருமறைக் கலாமன்றத்தால் யாழ் நகரில் நிகழ்த்தப்பட்ட நாட்டுக்கூத்து விழாவின்போது காத்திரமான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் ஈழத்தமிழர்களின் கலைச் சொத்தாகிய கூத்தினை எவ்வாறு பேணி, காத்து, வளர்த்து, அடுத்த தலைமுறையினருக்கு கையளிப்பது என்ற விவாதத்தில் பற்பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. திருமறைக் கலாமன்ற தூரநோக்கின் செயற்திட்டத்தை விளக்கும் வகையில் மூன்று தளங்களைக் கொண்ட திட்டம் பற்றிய கருத்து மன்றத்தின் பெயரால் முன்வைக்கப்பட்டது.
முதல் நிலையாக, கிராமங்களில் பெரும்பாலும் சடங்குடன் இணைந்த கூத்து வடிவங்கள் தத்தமது தனித்துவங்களுடனும், கிராமியப் பண்புகளுடனும் பாதுகாக்கப்பட வேண்டும்; ஊக்குவிக்கப்படவேண்டும்.
இரண்டாவது நிலையாக, கூத்துக் கலைஞர்களும், ஆய்வாளர்களும் இணைந்து பல்வகைக் கூத்துக்களை ஆவணப்படுத்தியும் அவைகளின் தன்மைகளை ஆய்வுக்குட்படுத்தியும், அதன் மூலம் சமகால, வருங்கால மாணவ, மாணவியர், ஆய்வாளர்கள், கலைஞர்கள், நமது மண் தந்த கலைச்சொத்தின் பல்வேறு வடிவங்களை அறியவும், ஆய்வுசெய்யவும், பாதுகாக்கவும் ஆய்வுக் களத்தை உருவாக்கவேண்டும். இம்முயற்சி பல்வேறு இடங்களிலும் இத்துறை சார்ந்த பல்வேறு அமைப்புக்களாலும் நடத்தப்படவேண்டும். கண்காட்சியகம், ஆவணக் காட்யகம் முதலியவைகளை நிறுவுதலும் இதில் அடங்கும். மேலும், கலைஞர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்களுக்கு இடையிலான திட்டமிட்ட ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
○下の யோ. யோண்சன் ராஜ்குமார் トームーイ
 

மூன்றாவது நிலையில், புதிய படைப்புக்களை 'தேர்வாய்வு முறையில் தயாரித்து அளிக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்படவேண்டும்.
இம்மூன்று தளங்களிலும் வெவ்வேறு வீச்சுடன் கடந்த நாற்பது ஆண்டுகளாக திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் செயற்பட்டு வந்துள்ளனர். கூத்துக்களைக் காத்தும், வளர்த்தும், மெருகூட்டியும், கலைகளினூடாக சமூக மேம்பாட்டுக்காக உழைத்து வந்தனர். இன்னும் இப்பணிக்காக தம்மை அர்ப்பணித்தும் வருகின்றனர்.
கூத்துக் கலையைப் பொறுத்தமட்டில் யாழ் திருமறைக் கலாமன்றத்தால் பல கூத்து விழாக்களும், கூத்து கலைஞர் ஊக்குவிப்பும், கெளரவிப்பும் பல்வகைப்பட்ட ஈழத்துக் கூத்துக்களின் அரங்கேற்றமும், போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. 'கூத்துக் கலைச்சொல் அகராதி ஒன்றின் ஆக்கத்திற்கு முதலாக முன் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், அறுபதுகளில் உரும்பிராயில் மேடையேற்றப்பட்ட மூவேந்தள் என்னும் கூத்துத் தொடக்கம் 'சிங்ககுலச் செங்கோல், அனைத்தும் அவரே', 'நீ ஒரு பாறை', 'செந்தூது', 'ஜெனோவா', 'சோழன் மகன்', 'கம்பன் மகன் ஊடாக 'கொல் ஈனுங் கொற்றம் வரை யாழ். திருமறைக் கலாமன்றத்தால் பல்வகைக் கூத்துக்கள் எழுதப்பட்டு தயாரிக்கப்பட்டு மேடையேற்றப்பட்டுள்ளன. இவைகளுள் பல தேர்வாய்வு முறையில் அரங்கேற்றப் பட்டன. 'செந்தூது அசைவற்ற திரைப்படக்காட்சிகளுடன் ஒன்றிணைக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. அனைத்தும் அவரே', 'நீ ஒரு பாறை, போன்றவை எளிமைப்படுத்தப்பட்ட சொல்லாக்கத்துடன் ஆற்றுகை செய்யப்பட்டன. நாட்டுக்கூத்து, இசைநாடகம், நவீன நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட மூன்று வடிவங்களில் இலங்கையிலும், ஐரோப்பிய நாடுகளிலும் 'ஜனோவா அரங்கேற்றப் பட்டது. இவ்வரிசையில் உருவாகியதே "கொல் ஈனுங் கொற்றம்'
இக்கூத்து திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குநர் யோண்சன் ராஜ்குமார் அவர்களால் படைக்கப்பட்ட முதிர்ந்த கலை விருந்து. இதில் ஈழ மண்ணின் தென்மோடி, வடமோடி, காத்தான் என்று வித்தகள்களால் இலக்கணம் வகுக்கப்பட்டவை, மன்னாரினதும், மட்டக்களப்பினதும், முல்லை நகரினதும், யாழ்ப்பாணத்தினதும், மலையகத்தினதும், வட்டுக்கோட்டையினதும் கைகோத்தலில் களிநடனம் புரிகின்றன. ஈழமண்ணின் கிராமிய ஒலிகள் பார்ப்போரின் காதுகளில் தேனாகப் பாயும்; இம்மண்ணில் மலர்ந்த ஆட்ட அசைவுகள் கண்ணுக்கு விருந்தாக அமையும்; இளம் நடிகர்களின் நடையும், நடிப்பும், உடையும், உச்சரிப்பும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்; நமது தேசிய கலைச்சொத்தின் 'அழகுகளை அளந்தும், பிழிந்தும், இணைத்தும், பிணைத்தும் கலப்படமற்ற காவியமொன்றினை யோண்சன் ராஜ்குமார் சமைத்துள்ளார்.
நடிகள் ஒன்றியத்தின் தயாரிப்பான 'கந்தன் கருணை' நாடகம் ஒரு மைல்கல். இந்நாடகம் தார்சிஸியஸ், மெளனகுரு போன்றவர்களால் தயாரிக்கப்பட்ட போது அதிலும் கூத்துக்கலையின் ஒருசில பாங்குகள் ஒன்றிணைக்கப்பட்டிருந்தன. அவ்வொன்றிணைப்பு திட்டமிட்டு நடந்ததொன்று அன்று. சந்தர்ப்ப சூழ்நிலையால் நிகழ்ந்ததொன்றென நாடக வல்லுனர் கூறுவர். 'கொல் ஈனுங் கொற்றம் படைப்பு வடிவத்தின் பல்வகைப் பாங்குகளின் செறிவும் நிறைவும், தேர்வாய்வு முறையில் செய்யப்பட்ட நோக்கும் 'கொல் ஈனுங் கொற்றத்தின்’ தனித்துவத்தைக் கோடிட்டுக்
காட்டுகின்றன. イエート
கொல் ஈனுங் கொற்றம் ?ހއ... '"' ...............’

Page 6
யோண்சன் ராஜ்குமார் கூத்துக்கலை பற்றிய பன்முக அறிவும், ஆற்றலும் பொருந்திய தனிப்பெரும் கலைஞன். இவரில் காணப்படும் கருத்து நிலைத் தெளிவும், செய்முறை அனுபவமும் இவரின் படைப்புத்திறன்களை அளிக்கை செய்ய இவருக்குத் துணை நிற்கும் பயிற்சிபெற்ற இளம் கலைஞர் பலமும் இத்துறைசார்ந்த வேறு ஒருவருக்கு உண்டா என்பது கேள்விக்குறியே. இவை அனைத்தையும் பொருத்தி நிற்கும் கலைப்பணிவும், கொள்கைப்பிடிப்பும் இவரது படைப்புக்களை மேலும் மெருகூட்டி நிற்கின்றன. s
இப்புதிய படைப்பு தாம் அறிந்த இலக்கண வரையறைக்குள் அடங்கவில்லை என்ற ஆதங்கம் ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ளது. இலக்கணங்கள் பற்றி விவாதிக்கலாம். இலக்கியங்கள் பற்றி விமர்சிக்கலாம். ஆயின், புத்தம் புதிய படைப்புகளுக்கு இவைகள் தடைகளாக இருக்கக்கூடாது. சில துறைகளில் உள்ளவர்கள் சிலகுறுகிய இலக்கணங்களை வகுத்து வைத்து தமது வரையறைக்கு அப்பால் வெளிப்படும் ஆக்கங்களைப் புறக்கணிக்கும் பண்பு கிணற்றுத் தவளை மனப்பான்மையை இங்குள்ள ஆய்வாளர் சிலரில் விதைத்துள்ளது என்பது கவலைக்குரியது. கலைத்துறையில் தமக்கு சமனாக அல்லது போட்டியாக உள்ளவர்களை மதித்துப் போற்றும் மனப்பக்குவமும், காழ்ப்புணர்ச்சியற்று, குணம் குற்றம் நாடி சிறிய படைப்புக்களையும் எடைபோட்டு அலசி ஆராயும் திறனும் நம்மவருள் வளர்த்தெடுக்கப்படின் 'கொல் ஈனுங் கொற்றம்' போன்ற தரமான நிகழ்ச்சிகள் தாராளமாகத் தோன்றும்.
கூத்துக்கலைக்கு எதிர்காலம் உண்டா என்ற கேள்விக்கு 'கொல் ஈனுங் கொற்றத்தின் அளிக்கை ஆணித்தரமான விடையைத் தந்துள்ளது. இதன் தயாரிப்பிலும் மேடையேற்றத்திலும் இளம் தலைமுறைகளின் அர்ப்பணிப்புக்கலந்த பங்களிப்பு வியப்பிற்கும், போற்றுதற்கும் உரியது. பார்த்துச் சுவைத்து மறக்கமுடியாத ஓர் அரங்க அனுபவமாக இதனைக் கணித்து நிற்கின்ற இளைஞர்கள் பலரின் ஈடுபாடும் பெரும் நம்பிக்கையை ஊட்டுகின்றது. சமகால இளம் தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்து எடுப்பது கடினமாக உள்ள ஒரு சூழ்நிலையில் கணிசமான இளந் தலைமுறையினர் இவ் அரங்க நிகழ்ச்சியால் கவரப்பட்டு நிற்பது “இக்கலைச் சொத்து நமதே” என்று நாளை வருபவரும் அடையாளம் காட்டுவதற்கு வழி வகுத்து நிற்கின்றது எனக் önb6)Tib.
பேராசிரியர் நீ. மரியசேவியர் அடிகள் இயக்குநர், திருமறைக் கலாமன்றம்.
யோ, யோன்சன் ராஜ்குமார் سلہحلا

அணிந்துரை
திருமறைக் கலாமன்றத்தின் செயற்பாடுகளைத் தவிர்த்து ஈழநாட்டின் கலைவளர்ச்சியை ஆய்வுசெய்ய முடியாது. ஈழத்துத் தமிழ் மக்களின் பண்பாட்டு பாரம்பரிய வேர்களைக் கண்டறிந்து 'அந்த வேருக்கு நீர் பாச்சும் பணியைத் திருமறைக் கலாமன்றம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகச் செய்துவருவதை யாவரும் அறிவர். ஈழத் தமிழரின் கலை பண்பாட்டு ஊடாட்டங்களை இலங்கையின் மற்றைய பாகங்களில் வழங்கிவரும் கலை பண்பாட்டு முயற்சிகளுடன் ஒப்பிட்டு நோக்குவதற்கும், ஆராய்வதற்கும் யாழ். திருமறைக் கலாமன்றம் வழிவகுத்து வருகின்றது. இந்தக் கலைப் பயணத்திற்குக் 'கால்கோள் இட்டு, உந்து விசையாக வணக்கத்துக்குரிய கலாநிதி நீ மரியசேவியர் அடிகளார் வழிவகுத்து இயங்கி வருகின்றார். திறமை, ஒழுங்கு, ஒழுக்கம், கட்டுப்பாடு, புரிந்துணர்வு, கூட்டுப்பொறுப்பு, ஆர்வம் முதலானவற்றைத் திருமறைக் கலாமன்றத்திலே ஒருங்கே தரிசிக்கலாம். திரு. யோ. யோண்சன் ராஜ்குமார் திருமறைக் கலாமன்றத்தின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றுகின்றார். 'ஆடலும், பாடலும் அமைவரும் ஆசானாகத் திகழும் இவர், அடிகளாரின் அடிச்சுவட்டிலே சிறப்பாகத் திறமையாகப் பணியாற்றி வருகின்றார். 'ஆடலும் பாடலும் அழகும்' என்ற இந்த மூன்றின் ஒன்றும் குறைவுபடாத யோண்சன் ராஜ்குமார் புலம் பெயர் நாடுகளிலும் தம் புகழ் நிறீஇயவர். கலை ஆர்வலராகத் தேடலிலும் தெளிதலிலும் குறையா ஊக்கத்துடன் செயற்படும் யோண்சன் எழுதித் தயாரித்து, நெறியாள்கைசெய்து அரங்கேற்றிய 'கொல் ஈனுங் கொற்றம்' எனும் கூத்துருவ நாடகத்தினைப் பார்த்து மகிழ்ந்த பல்லாயிரம் இரசிகள்களுள்
நானும் ஒருவன்.
கால் ஈனுங் கொற்றம்

Page 7
அரங்கிலே ஆடப்பட்ட இக்கூத்துருவ நாடகம் இன்று நூலாக வெளிவருகின்றது. நாடகங்களிலே படிப்பதற்கென எழுதப்படுபவையும் உண்டு. அரங்காற்றுகைக்காக எழுதப்படுபவையும் உண்டு. எப்படியிருப்பினும், நாடகம் ஒன்றை அரங்கிலே கண்டு மகிழ்வதைப்போல நூலுருவிலே படித்து இன்புற முடியாது என்றே எண்ணுகிறேன். என்னதான் இருந்தாலும் நாடகம் அரங்கிற்குரியதே. ஆற்றுகைக்குப் பயன்படுத்த, அதை ஆவணமாகப் பேணவேண்டிய பொறுப்பு நுாலுருவில் வெளிவந்தாலே சாத்தியமாகும். காட்பியங்களைப் படித்துச் சுவைப்போர் அருகிவரும் இக்காலத்திலே காட்பியக் கதையை மெருகூட்டி, அரங்க நிகழ்வாக்கிப் பார்வையாளர்களுக்கு வழங்குவது காலத்தின் தேவையாகும். இந்தவகையில் யோண்சனின் 'கொல் ஈனுங் கொற்றம்' காலத்தின் தேவையென்பது சொல்லாமலே போதரும். பழந்தமிழ் இலக்கியங்களை, புராண இதிகாசங்களைச் சமகால வாழ்வியலுடன் இணைத்து நோக்கும் வழக்காறும் எம் இலக்கியப் பரப்பிலே உண்டு. பாரதியின் பாஞ்சாலி சபதம், புதுமைப்பித்தனின் சில சிறுகதைகள் முதலானவை இந்த வகைக்கு உதாரணமாகச் சுட்டக்கூடியவை. பழமையின் 'உள்ளுரம்' புதுமையின் வளர்ச்சிக்கு உதவுமாற்றைப் புலப்படுத்தக் கொல் ஈனுங் கொற்றம்' போன்ற எழுத்துருவங்கள் இன்னும் வெளிவர வேண்டும்.
"தொன்மை மறவேல்', 'தோற்பன தொடரேல்' என்ற நீதி போதனையை இக்கூத்துருவ நாடகத்தினுாடு காணமுடிகிறது. கம்பராமாயணத்தை அடியொற்றித் தமது கற்பனையையும் கலந்து, சமூக எதிர்பார்ப்புக்கு இயைவுபட இக்கூத்துருவ நாடகத்தினை யோண்சன் நகர்த்திச் செல்லுகின்றார்.
பந்தியிற் பந்தியிற் படையை விட்டு அவை சிந்துதல் கண்டு வருந்துதல் மந்திரமன்று', என்று கம்பன் தமது இராம காதையிலே கூறியதை இராவணனுக்கு ஊடாக யோண்சன் அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
கும்பகள்ணனைக் குவிமையப்படுத்தி உருவான இந்த நாடகத்திலே கம்பனின் கைவண்ணங்களையும் ஆங்காங்கே அளவறிந்து யோண்சன் பயன்படுத்தியுள்ளார். கும்பகள்ணன் இராவணன் சந்திப்பு, கும்பகள்ணன் விபீஷணன் போர்க்களச் சந்திப்பு முதலானவை கம்பராமாயணத்தின் உன்னதமான உச்சங்களிற் சில. இவற்றை அரங்க நிகழ்வாக்கும் ஆற்றல் எல்லோருக்கும் எளிதில் கைகூடுவதன்று. யோண்சன் மிகச் சிறப்பாக இந்த உச்சப்பகுதியைக் கையாண்டமைதான் அவரின் ஆற்றலின் வெளிப்பாட்டிற்குச் சாட்சியாகும்.
“செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம்தேறி வம்பிடத் தெரியல் எம்முன் உயிர்கொண்ட பகையை வாழ்த்தி அம்பிட்டுத் துன்னங்கொண்ட புண்ணுடை நெஞ்சொடு ஐய கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல்கொண்டேன்”
என்று போர்க்களத்திலே கும்பகர்ணன் கூறுகிறான். தமையனின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய பின்னரே செஞ்சோற்றுக் கடனுக்காகப் போர்க்களத்திலே உயிர் துறக்கிறான். 'கொல் ஈனுங் கொற்றத்தின் உயிரோட்டமாக அமையும் பாடுபொருள் காவியச் சுவையை அரங்கினுாடு எமக்கு அளிக்கின்றது. ஆணவம், கள்வம் முதலானவற்றின் தோல்வியை அல்லது வீழ்ச்சியை அழகுடன் புலப்படுத்தும் யோண்சன் தமது நோக்கு நிலையையும்
யோ, யோண்சன் ராஜ்குமார் ~പ'-'

இந்நாடகத்தினுாடு தெரியப்படுத்தியுள்ளார். சபையோர் கூறுவதாக ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்:
"போதும் மன்னா போதுமே மன்னா
போர் வேண்டாம் மன்னா .
தர்மமே தவறும் போர்கள்
வென்றதில்லை வையகத்தே.”
காவிய, புராணக் கதைகளைச் சமகால வாழ்வியலோடு பின்னிப் பிணைத்துத் தரும்பொழுது அது பார்வையாளர்களாலே - வாசகள்களாலே கவரப்படும் தகுதியைப் பெற்றுவிடுகின்றது.
யோண்சன் ராஜ்குமார் தமிழ் நாடகத்திற்கு - கூத்துக்கு நிறையச் செய்யக்கூடிய ஆற்றல் உடையவர் என்பதை நான் நன்கு அறிவேன். இன்னும் இன்னும் இத்துறையிலே புதிய பரிமாணங்களையும் அவர் எய்தவேண்டுமென்று வாழ்த்துகின்றேன்.
03.01.2006 பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா தலைவர்,
தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
கொல் ஈனுங் கொற்றம் سس حد

Page 8
ojöcey
கலைக்கான பணியில் நாற்பதாண்டுகளைக் கடந்து பயணிக்கும் திருமறைக்கலாமன்றம் தொடர்ச்சியாகமுன்னெடுத்துவருகின்றசெயற்பாடுகள் பல; அவற்றுள் ஒன்றாக அமைவது 'நூல் வெளியீடுகள்’ ஆகும். காலத்தின் தேவைக்கேற்பவும், ஈழத்தமிழரின் பாரம்பரிய கலை இலக்கிய வடிவங்களை அரங்கிலே ஆற்றுகை செய்வதுடன் மட்டும் நின்றுவிடாது அவை காலத்தால் அழிவடைந்துசெல்லாது, நூலுருவில் ஆவணப்படுத்தும் முகமாகவும் இதுவரை பல நாடக,கூத்துநூல்களை வெளியிட்டுள்ளதிருமறைக்கலாமன்றம்கடந்த 2005 ஆம் ஆண்டில் தனது நாற்பதாவது ஆண்டு நிறைவு விழாவை “கலைச் சங்கமமாக’ விழாவெடுத்து சிறப்பித்தபோது வெளியிட எண்ணியிருந்த நூல்களில் முக்கியத்துவம்மிக்கதாக ‘கொல்ஈனுங்கொற்றம்’ என்றஇந்தகூத்துருவ நாடகநூல் அமைந்திருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் அதே ஆண்டில் இந்நூலை வெளியிட இயலாது போனாலும் இப்பொழுது வெளியிடுவதையிட்டு திருமறைக்கலாமன்றம் பெரும் மகிழ்ச்சிஅடைகின்றது.
‘கொல்ஈனுங் கொற்றம் கூத்துருவநாடகம்திருமறைக்கலாமன்றத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு எமது மன்றத்தின் பிரதி இயக்குநரும், யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் பாடசாலையின் ஆசிரியரும், ஈழத்து நாடகச் ஆழலில் தொண்ணுாறுகளில் முகிழ்ந்தெழுந்து பலரது கவனத்தையும் ஈர்ந்துள்ள இளைய தலைமுறை அரங்கவியலாளர்களில் ஒருவருமான யோ, யோண்சன் ராஜ்குமார் அவர்களின் எழுத்துரு, நெறியாள்கையில் உருவாகியதாகும்.
ஈழத்தமிழரின் தனித்துவமான கலைவடிவம் என்று கூறத்தக்க நாட்டுக்கூத்தைஅதன் பிறப்பு நிலையிலேயே வைத்துப் பேணுவதா அல்லது
○エト யோ, யோண்சன் ராஜ்குமார் | Yسمس کہح
 

காலத்திற்கு ஏற்ப புதிய மாற்றங்களை உள்வாங்கி அதில் மாற்றங்களைக் கொண்டு வருவதா என்ற வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இக் காலத்திலேயே ஈழத்தமிழர்களுக்கென்ற தனித்துவமான தேசியக் கலைவடிவம் ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியமும் உணரப்படுகின்றது. இந்தத் தேவையை நிறைவு செய்யும் முயற்சியாக அவ்வப்போதுசில பரீட்சார்த்தங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் - அவற்றிலிருந்து ஒருபடிமேலே சென்றுஅனைவரது பார்வையையும்தன்பக்கம்திருப்பியஅரங்காற்றுகையாக ‘கொல் ஈனுங் கொற்றம்’ அமைந்துள்ளது. இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. ‘இதய சுத்தியுடன் தம் பார்வையை முன்வைக்கும் எவரும் இதனை ஏற்றுக் கொள்வர். எனினும் இத்தகைய முயற்சிகள்‘சிலரால் செய்யப்பட்டால்மட்டும் விழுந்தடித்துக்கொண்டுபோற்றிப் புகழ்கின்ற ஒரு வித மாயத் தன்மையில் இருந்து இன்னமுமே முற்று முழுதாக விடுபட்டுப் போகாத எமதுஅரங்கப்புலத்தில் இந்தச் சகிப்புத்தன்மைகூடகடினமானதுதான்.
‘கொல் ஈனுங் கொற்றம் கூத்துருவ நாடகம் - ஈழத்தில் காணப்படும் பல்வேறு பிரதேசக்கூத்துமரபுகளையும் ஒன்றிணைத்து புதிய கலைவடிவமாகதயாரிக்கப்பட்டபடைப்பு. இதன் முதல் மேடையேற்றம் ‘தேசிய நாடக விழா - 2004 இல், கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஜோண்டிசில்வா அரங்கில் இடம்பெற்றது. 12ஆவது மேடையேற்றம் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் பின்னரும் யாழ்ப்பாணத்திலும், இதர பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக மேடையேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், மீளவும்ஆரம்பமாகிய ‘போர்ச்சூழல்’அதற்கான சாத்தியங்களை பின்தள்ளிவிட்டது.எனினும், குறுகிய காலத்திற்குள்ளேயே ஈழத்தின் பல பிரதேசங்களிலும் மேடையேற்றப்பட்டு நாட்டுக்கூத்துஅண்ணாவிமார்கள், அரங்கக்கலைஞர்கள் எனப்பலராலும்பார்க்கப்பட்டஒரு ஆற்றுகையாக இது அமைகின்றது. மேடையேற்றப்பட்ட இடங்களில் எல்லாம் மிகுந்த வரவேற்புக்களையும், பாராட்டுக்களையும் பெற்ற கூத்துருவநாடகமாக இது விளங்குகின்றது. இதனை இந்நூலில் இடம்பெற்றள்ள விமர்சனங்கள், பார்த்தோர் உரைத்தவை மூலமாகவும் அறிந்துகொள்ளமுடியும்.இந்நாடகத்தைநூலாக வெளியிடமுனைந்ததன்முக்கியநோக்கமே கூத்து சார்ந்த பரீட்சார்த்த முயற்சிகள் நிகழ்கலைகளாக அரங்கோடு அழிந்துபோகாது ஆதாரப்படுத்தப்பட்டு, இம்முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோருக்கு உதவும் என்ற நோக்கத்திற்காகவே.
இளம் வயதிலேயே எமது மன்றத்திலும் பாடசாலைகள் மற்றும் பல இடங்களிலும் பல நாடகங்களையும் நாட்டுக் கூத்துக்களையும் எழுதி நெறியாள்கை செய்துள்ள யோ.யோண்சன்ராஜ்குமார் அவர்களின்நூலுருப்பெற்று அச்சில் வெளிவரும் இரண்டாவது படைப்பாக இது அமைகின்றது. இதற்கு முன்பாக, அவரது முதலாவதுநூலான 'கம்பன் மகன்’ என்றநாட்டுக்கூத்துநூலைகடந்த 2003 ஆம் ஆண்டில் வெளியிட்ட திருமறைக்கலாமன்றம், அவரது இரண்டாவது நூலாக ‘கொல் ஈனுங் கொற்றம்’ என்ற கூத்துருவ நாடக நூலை இவ்வாண்டில் வெளியிடுகின்றது.இவரது இந்த இரண்டுநூல்களுமே புதிய படைப்பாக்கங்கள் என்ற வகையில் தனிச் சிறப்பை பெற்று நிற்கின்றன. “கம்பன் மகன்’ - ஏற்கெனவே,வழக்கில் உள்ள நாட்டுக் கூத்துக்களுக்கு அப்பால் புதிதாக எழுதப்பட்ட நாட்டுக் கூத்து. இதனை அண்ணாவியார்அ.பேக்மன்ஜெயராசாவின்உதவியுடன் இவர்எழுதியிருந்தார்.‘கொல்ஈனுங் கொற்றம் பல பிரதேசக்கூத்து மரபுகளையும் உள்ளடக்கி புதிதாக எழுதப்பட்ட படைப்பு:இந்த வகையில் அரங்கவியலில் ஆழ்ந்தபுலமையும்,ஈடுபாடும்,சிறந்தஎழுத்தாற்றலும் மிக்கவரான
(אה;א־1, கொல் ஈனுங் கொற்றம் سس"“ہحلا

Page 9
யோ.யோண்சன்ராஜ்குமார்அவர்களிடம் இருந்துதிருமறைக்கலாமன்றமும்,எமதுசமூகமும் இன்னும் பல புதிய படைப்புக்களை எதிர்பார்த்துநிற்கின்றது. அவர் அதனை நிறைவேற்றுவார் என்பது எமது திடமான நம்பிக்கை. அந்த நம்பிக்கையுடன், எமது மன்றத்தின் அரங்கச் செயற்பாட்டில் ‘கொல் ஈனுங் கொற்றம்’ என்ற படைப்புக்கூடாக புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ள அவரை மனப்பூர்வமாக வாழ்த்தி, இந் நூலை மன்றம் வெளியிடுகின்றது. “கொல்ஈனுங்கொற்றம்' அரங்கில்பெற்றவரவேற்பை, நூலிலும் பெறும்எனநம்புகின்றோம்.
கி. செல்மர் எமில் ஊடக இணைப்பாளர், திருமறைக் கலாமன்றம், யாழ்ப்பாணம்.
Cun. Quinonser pnabeðudaf " سحا

என்னுரை
ஈழத்தின் பாரம்பரிய நாடகவடிவமான 'கூத்து எமது தேசியச் சொத்து என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் நடைமுறையில் இதன் உன்னதம் உணரப்படவில்லை. கிராமியத்தின் கருவறையில் அதன் சடங்கு, கலாசார கூறுகளுடன் இரண்டறக் கலந்துகிடக்கும் இக்கூத்து வடிவம், நவீன நாகரீக தொழில்நுட்ப அறிவியல் விசையின் வேகத்தில் அள்ளுண்டு போகும் கிராமியத்தின் முகவரிகளோடு இறப்பின் அபாயத்தில் வாழும் கலை என்ற யதார்த்தமே என்னுள் உணரப்படுகின்றது. அந்திமத்தை நோக்கி நகரும் இக் கலைவடிவம், இன்றைய இளஞ்சந்ததியினருக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் கையளிக்கப்பட வேண்டுமாயின் அதன் வகைத்தூய்மை கெடாது புதிய படைப்பாக்க நுட்பங்களுடாக மீளுயிர்ப்புச் செய்யப்பட வேண்டுமென்ற உணர்வின் உந்துதலே 'கொல் ஈனுங் கொற்றம்' என்னும் இப்பரீட்சார்த்த நாடகவாக்கத்தின் நோக்கமாகும்.
அளிக்கை நிலையை இலக்காகக்கொண்டு வடிவம் பெற்ற இந்நாடகம் இவ்வெளியீட்டினுடாக இலக்கிய வடிவம் பெறுகின்றது. எனினும் அளிக்கைப் பரிமாணாத்திலேயே இதன் முழுமை தங்கியுள்ளது. எனது முதலாவது வெளியீடான 'கம்பன் மகன்' நூலை வெளியிட்ட திருமறைக் கலாமன்றமே இந்த வெளியீட்டினையும் அச்சு வாகனமேற்ற முன்வந்துள்ளது. அதற்காக இயக்குநர் தந்தை கலைத்தூது மரியசேவியர் அடிகளுக்கும், திருமறைக் கலாமன்றத்திற்கும் நான் என்றும் நன்றி உடையவனாவேன்.
நாட்டுக்கூத்தைப் பொறுத்தவரையில் கிராமங்களில் அவற்றினை மீளவும் சூல்கொள்ளச்செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
ト“ーイ கொல் ஈனுங் கொற்றம்

Page 10
அது அத்தியாவசியமானது. அதேவேளை அதன் எச்சங்களில் நின்று தேடல்களும், ஆய்வுகளும், ஆவணமாக்கங்களும் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன், புதியன பிறப்பிக்கும் பரீட்சார்த்தங்களும் அதனுடன் சமாந்தரமாக மேற்கொள்ளப்படவேண்டும். 2003ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றம் நடத்திய நாட்டுக்கூத்து விழாவும், அதில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளும் இதன் கனதியை நன்குணர்த்தின. இந்த நாடகத்தின் விரைந்த பிறப்பாக்கத்திற்கு ஒருவகையில் அந்தக் கருத்தமர்வில் உரையாடப்பட்ட விவாதங்களும் காரணம் எனலாம். அதேவேளை 2004ஆம் ஆண்டு தேசிய நாடகவிழாவில் மேடையேற்ற ஒரு நாடகத்தை தந்துதவுமாறு திருவாளர் கலைச்செல்வன் அவர்கள் கேட்டபோது இந்த எண்ணம் செயல்வடிவம் பெற்றது. தேசிய நாடகவிழாவில் நாடகத்தின் மூலம் யுத்தத்தின் விளைவை தலைநகரில் வெளிப்படுத்தவேண்டுமென்ற எண்ணத்தின் வெளிப்பாடே இதன் கதைத்தெரிவாகும். 2002ஆம் ஆண்டு யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளுக்காக தென்மோடிக்கூத்துமரபில் என்னால் தயாரிக்கப்பட்ட கும்பகர்ணன் கூத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடுபொருளில் இந்த நாடகத்தை எழுதினேன். என் எண்ணம் செயல்வடிவம் பெற ஒருவகையில் காரணமாக இருந்த திரு. கலைச்செல்வன் நன்றிக்குரியவர்.
பல கூத்துக்களையும் ஒன்றிணைக்கும் இந்த முயற்சியானது ஏற்கெனவே “கந்தன் கருணை" போன்றவற்றில் நடந்த முயற்சியே. ஆயினும், இன்று இதன் அவசியம் அதிகம் உணரப்படுகின்றது. தமிழ்த்தேசியம் பற்றிச் சிந்திக்கும் நாம் மொழியடையாளத்தால் ஒன்றுபட்டு நின்றாலும், பிரதேச அடையாளங்களால் பிளவுண்டு போயுள்ளோம். எனவே, இதற்குள் ஒரு பொதுமையை தேடும் பரீட்சார்த்த முயற்சியே இது. இந்த வடிவ உருவாக்கத்திற்கு ஒன்றுமில்லாமையில் இருந்து வெறும் இலக்குடன் இப்பணியை நான் ஆரம்பிக்கவில்லை. கடந்தகால எனது 'கூத்துக்களின் கற்றல் வெளிப்பாடும், தேடலும் திருமறைக் கலாமன்றமென்ற களமும் இந்தமுயற்சிக்கு எனக்கு துணைபுரிந்தன எனலாம்.
சிறிய வயதில் இருந்தே எனது பேத்தியார் டேவிற் றோசமுத்துவின் கூத்துசார் பரம்பரை ஆளுமை என்னையும் பற்றிக்கொண்டது. எனது கிராமமாகிய நாரந்தனையில் விடிய விடிய ஆடப்பட்ட எத்தனையோ கூத்துக்களை அவரின் மடியில் படுத்துறங்கிப் பார்த்த அனுபவம் பாலப்பருவத்தில் இருந்தே எனக்குக் கிட்டியது. இடப்பெயர்வோடும், யுத்தகால நீட்சிகளோடும், இறந்துபோன என் கிராமத்தின் கூத்துப்பாரம்பரியம் எனக்குள்ளும் தூர்ந்துபோனது. 90களின் தொடக்கத்தில் நான் திருமறைக் கலாமன்றத்தில் இணைந்தபோது, அந்த ஆர்வம் மீளவும் தூண்டப்பட்டது. எனது குருவான அபிரான்சீஸ் ஜெனம், எனக்கு கூத்திலும், நாடகத்திலும் தூண்டுசக்தியாக நின்றார். அவரது நெறியாள்கையில் நான் நடித்த 'எதிர்கொள்ளக் காத்திருத்தல்', 'நெஞ்சக்கனகல் போன்ற கூத்துவடிவங்கள் இணைந்த நாடகங்கள், வடமோடி - தென்மோடி ஆடல்களையும், பாடல்களையும் நான் பயிலும் முதற்களங்களாக இருந்தன. அதேபோல் திருமறைக் கலாமன்றத்தில் நடத்தப்பட்ட பல நாடகப் பட்டறைகளில், ஜீ. பி. பேர்மினஸ் போன்றோரிடம் பல்வேறு ஆடல்களைக் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக எனது ஆர்வத்தை இனங்கண்ட அண்ணாவியார் பேக்மன் ஜெயராசா, அண்ணாவியார் பாலதாஸ் ஆகிய இருவரும் தென்மோடிக் கூத்துமரபை முறையாகக் கற்றுத் தந்ததுடன், பல தென்மோடிக் கூத்துகளில் நடிப்பதற்கான சந்தர்ப்பங்களையும் அளித்தனர். இவர்கள் தந்த ஊக்கம் நடிப்பில் மட்டுமன்றி, பாடசாலைகளில் புதிய
1. N.
யோ. யோண்சன் ராஜ்குமார்

கூத்துக்களை எழுதி நெறிப்படுத்தும் முனைப்பிற்கும் பெருந் தூண்டுகோலாக இருந்தது. மனுநீதிச்சோழன், ஏகலைவன், கும்பகர்ணன், அறங்காத்தான், வனத்துறவி, கம்பன் மகன் போன்ற கூத்துக்களை இந்த ஊக்கத்திலேயே எழுதி மேடையேற்றினேன்.
தொடர்ந்து இந்தக் கூத்துப் பயில்வோடு, 92இல் திருமறைக் கலாமன்ற நாடகப் பயிலகத்தால் நாம் தயாரித்த நீதிகாத்தான்’ என்ற சிந்து நடைக்கூத்தின் தயாரிப்போடு இணைந்து நின்றமையும், நடித்ததுமான அனுபவமும், பின்னர் பாடசாலைகளுக்கு சிந்து நடைக்கூத்தை பழகக் கிடைத்த சந்தர்ப்பங்களும் அதனை அறியவைத்தது. 93இல் மெற்றாஸ் மயிலின் நெறியாள்கையில் கோவலன் கூத்திலும், 97இல் "வேழம்படுத்த வீராங்கனையிலும் நடித்த அனுபவங்கள் முல்லைத்தீவு கோவலன் கூத்தினை அறியும் சந்தர்ப்பங்களாயின. அதேவருடம் அருள்திரு. ஜெறோம் லம்பேட்அவர்களின் நெறியாள்கையில் திருமறைக் கலாமன்றத்தில் உருவாக்கிய புரட்சித்துறவி என்ற கூத்தின் தயாரிப்போடு முழுமையாக ஈடுபட்ட அனுபவம் மன்னார் தென்பாங்கு கூத்துப்பற்றிய அறிமுகத்தைத் தந்தது. இவற்றோடு திருமறைக் கலாமன்றம் இயங்கும் பிராந்தியங்களோடு அடிக்கடி கொள்ளும் தொடர்புகளும் இணைந்து செயற்படும் அனுபவப் பரிவர்த்தனைகளும், மன்னார், வன்னி, வவுனியா, மட்டக்களப்பு, மலையகம், திருகோணமலை என 20 பிராந்தியத் தொடர்புகளும், பேராசிரியர் சரச்சந்திரா உள்ளிட்ட சிங்களக் கலைஞர்களுடன் மன்றத்துக்கூடாக இணைந்து செயற்பட்ட அனுபவங்கள் எல்லாமிணைந்தே உருவாக்கப் பணியில் துணைநின்றன எனலாம்.
நாடகம் அளிக்கை நிலையில் பெற்ற வெற்றியின் பின்னால் திருமறைக் கலாமன்ற 40 வருட பாரம்பரியத்தின் விளைபயன் தங்கியிருந்தது என்றால் அது மிகை அல்ல. அனுபவமும், ஆற்றலும், அர்ப்பணிப்பும் மிக்க திருமறைக் கலாமன்றக் கலைஞர்கள் என்றவளம் நான் நினைத்ததனை எல்லாவகையிலும் செயற்படுத்த கூடியதாக இருந்தது. எனவே இந்த வெற்றியின் பெரும்பங்கினர் அவர்களே. அளிக்கையில் என்னுடன் துணைநின்ற அனைத்துக் கலைஞர்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்ளுகிறேன்.
இந்நாடகமானது இராமாயணத்தை அரங்கில் ஆற்றும் நோக்குடனோ அதன் வரலாற்றை நாடகமாக்கும் நோக்குடனோ அல்லது இலங்கை வரலாற்றை எழுதும் நோக்குடனோ எழுதப்படவில்லை. தர்மம் இல்லாத யுத்தம் என்றும் வெற்றி பெறாது என்ற உண்மையையும், அவ்வாறான யுத்தத்தை நடத்தும் எந்த அரசும் கும்பகள்ணன் போன்ற பெறுமதிமிக்க மனித உயிர்களை கொன்றொழிக்கின்ற கூற்றுவனாக இருக்கும் என்ற யதார்த்தத்தையும் வலியுறுத்தும் நோக்குடனே இந்த நாடகத்தை எழுதினேன். எழுத்துருவிலும் இதன் கனதி உணரப்படுமென்று நம்புகின்றேன். இது ஒரு பரீட்சார்த்த முயற்சியென்பதால் இதுபற்றிய ஆன்றோரின் கருத்துக்களை அறிய ஆவலாய் உள்ளேன். இவ்வெளியீட்டுப் பிறப்பாக்கத்திற்கு பல வகையிலும் ஒத்துழைத்தவர்கள் என்றும் என் நன்றிக்குரியவர்கள். குறிப்பாக, என்னை இனங்கண்டு என் வளர்ச்சிக்கான அனைத்தையும் செய்து, ஊக்குவித்து வருகின்றவரும், இதனை அச்சேற்றத் தூண்டியதுடன், அதற்கான ஒழுங்குகளையும் செய்து, முன்னுரையையும் தந்துதவியவ ருமான என்றும் என் வணக்கத்துக்குரிய இயக்குநர் தந்தை மரியசேவியருக்கும், ஆலோசனைகள் தந்தும், அச்சுவேலைகளை முழுமையாக பொறுப்பேற்றும் வெளிக்கொணர்ந்த மன்ற ஊடகப் பொறுப்பாளர் நண்பன் கி. செல்மர் எமில் அவர்களுக்கும், நூலைப் பார்வையிட்டுத் திருத்தங்கள் செய்துதந்த மதிப்பிற்குரிய
/イエト_ ʻ~*Y~ʼ கொல் ஈனுங் கொற்றம்

Page 11
பண்டிதர் கடம்பேஸ்வரன் அவர்களுக்கும், கணினிசார் வேலைகளைச் சிறப்பாக செய்துதந்த 'ஜெயந்த் சென்ரர் நிறுவனத்தினருக்கும் மற்றும், அச்சுவாகனமேற்றிய ஏ.சி.எம். அச்சகத்தாருக்கும், அட்டைப்படத்தை வடிவமைப்புச்செய்த நண்பன் ஜ"ட்சனுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இன்னும் சிறப்பாக எனது வளர்ச்சியில் என்றும் ஊக்கமளித்து வருகின்ற திருமறைக் கலாமன்ற மூத்த உறுப்பினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
நிறைவாக, என் கலைச்செயற்பாடுகளை ஊக்குவித்தும், ஊன்றுகோலாக நின்று உறுதுணையும் தரும் எனது தாயார், குடும்பத்தினர், மனைவி றுஜந்தா அனைவருக்கும் எனது சிறப்பான நன்றிகளைத் தெரிவித்து நிற்கிறேன்.
யோ. யோண்சன் ராஜ்குமார்
793 (425), நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.
28.01.2006
யோ, யோண்சன் ராஜ்குமார் <~... '"' ''' "......ހالله"

9 (as 69 s
GTGTLsses.O
1. அளிக்கை O2 - 63
“கொல் ஈனுங் கொற்றம்
நாடக பாடம்
11. அளிக்கைப்பதிவுகள் 64 - 67
அரங்காடியோர் அரங்கேறிய திகதிகள்
III. ബിങ്ങാണഖയ്ക്കേണ് 68 - 10O
1. தயாரிப்பு அனுபவம் 2. நடிப்பு அனுபவம் 3. பார்த்தோர் உரைத்தவை 4. ஊடக விமர்சனங்கள்

Page 12
6/125GP2

‘வகால் ஒனுங் வகாற்றம் றாடம்ே முடம்
இராமாயணத்திலுள்ள கும்பகர்ணன்வதைபடலத்தை அடிப்படையாகக்கொண்டு புதிய வியாக்கியானத்துடன் இந்நாடகம் ஆக்கப்பட்டுள்ளது. பல்வேறு கூத்து மரபுகளிலுள்ள பாடல்கள், ஆடல்கள் போன்றவை தேவைக்கேற்ப இணைக்கப்பட்டுள்ளன.
பாத்திரங்கள்
கும்பகர்ணன் இராவணன் விபீஷணன் இராமன் இலட்சுமணன் சுக்கிரீவன்
மண்டோதரி மாலியவான்
கட்டியகாரன் மல்லர்கள் - ஐவர் பாடுநர் குழு - சிலர்
படைவீரர்கள் - பலர்
கொல் ஈனுங் கொற்றம்

Page 13
காப்பு
திருவுருவு தரித்து மனுவானவரே
மரிமகனே மகிமை மிகுமாபரனே குருசிலுயிர் தந்துலகை காத்த நின்னைத் ,
தோத்தரித்தோம் திருவடிகள் சிரம்பணிந்தே அருமுயிர்கள் அழித்த சமர் அவலமதை
அரங்கினிலே ஆடல் கதையிலோத பெரு விருப்புக் கொண்டெழுந்தே இங்குவந்தோம்
பரம திரிதேவனெமை காப்பதாமே
தோடையம்
ஆதியோ டந்தமில்லா சோதியே
அகிலம தாண்டிடும் அருள் வடிவே
நீதியை ஒதிட நாதியையே
தந்திட வாராய் தேவா
ஆன்றவர் பாடிய காதையிலே
கூறிய நீதியை ஆடிடவே
ஆடரங்கேற்றினோம் ஆண்டவனே
அருள்பொழிவாய் தேவா
கம்பன் செய் காவியப் பாவினிலே
கும்பகர்ணன் கதைப் பாங்கினையே
கூத்துருவத்திலே ஆற்றிடவே
ஆவியை தாராய் தேவா
யோ, யோண்சன் ராஜ்குமார் كس " حلا

able - 1
(திரை விலக மேடையில் மெல்லிய செம்மையான ஒளி அரங்கை நிறைக்கிறது. மேடையின் பின் பகுதியில் பெரிய முரசு ஒன்றும், போர் வேலி ஒன்றும் காட்சிப் படிமமாய் வெளித்தெரிகின்றன. முரசை அறையும் பாவனையில் வீரன் ஒருவன் உறைநிலையில் நிற்கிறான். தொடர்ந்து முரசு முழங்கும் ஒலிக்கேற்ப முரசை அறைபவன் அபிநயம்செய்து உறைநிலைப்படுவான். அதன்பின் பாடற் குழுவினர் ஆடியவாறு அரங்கில் நுழைவர். அதன்பின் கட்டியகாரன் அரங்கில் தோன்றுவான்.)
கட்டியகாரன் வரவு
கட்டிய காரனும் வந்தேனே - கதையுரைக்க கட்டிய காரனும் வந்தேனே,
கையினில் ஏட்டுடன் கருத்தினை ஒதிட
காளையர் பூவையர் கூடவே துணை வர
கூத்தரங் காமிதில் காதையை கோத்திட
பாத்திர மாகவே பாங்குடன் வந்திட்டேன்
トーイ கொல் ஈனுங் கொற்றம்

Page 14
கம்பனவன் செய்த காவியம் தன்னிலே
கால மறிந்து பொருளதைத் தேடியே
கண்டு எடுத்த கதைதன்னை பாடியே
கூத்துருதன்னிலே பார்த்திடத் தந்திட்டோம்.
(கட்டியன் வரவைத் தொடர்ந்து பாடுநர் வரிசையாய் நிற்க
கட்டியகாரன்:
கட்டியன் முன்வந்து கதை உரைப்பான்)
ஆசரியம்
நீதியே தவறிடும் கோன்மையால் பூமியே புழுதியாய் மாறிடும் கோலம் நாதியே இல்லா நல்லுயிரெல்லாம் நலிந்துமே சாகிடும் சோகம்.
போரினால் திருமோ பெரும்பகை பாரிலே பூவொடு பிஞ்சுதான் பலியென ஆகுமே பெருவலி வீரனும் அறிவுடை தீரனும் அழிந்திடும் விதிவலை சமரதே.
அதன் பொருளுரைத்திட அரங்கிதிலேறியே ஆடலே செய்திடத் துணிந்தோம் அறமதை உணர்ந்தோன் அளவிலா மறவோன் குணமதன் குன்று கும்பகர்ணன்.
கருப்பொருள் அவனே பருப்பொருள் பலவே பகர்ந்திடல் எங்களின் கடனதே பெரும் பொருளறிந்தே சிரமதிலுணர்ந்தே சேதியை கொண்டேகுவீரே.
சபையோர் பாடல்:
தன்னன்னா தனனன்னா - தன்ன தனனன்னனா தனதன்னன்னா.
பூமியிலே போரதனால் - பலி ஆனவர்கள் ஆயிரமாயிரம் பலமுடையோர் பலர் திறமுடையோர் பலர்
யோ, யோண்சன் ராஜ்குமார் C 6

பயனுடையோர் பலர் அறமுணர்ந்தோர் பலர் அவர் நிலையை ஒதவந்தோம் - கும்ப கர்ணன் கதை கூறவந்தோம் சபை தன்னன்னா தனனனனா தன.
(பாடுநர் பாடியவாறு
மேடையின் முன் வலதில் வரிசையாய் அமர்வர்.
கட்டியகாரன்:
கட்டியன் கதை உரைப்பான்)
இராகவன் தேவியை இராவணன் கவர்ந்தான் சீதையை மீட்டிடும் போரது மூண்டது வானரப் படையுடன் இராமனும் தம்பியும் பேரணை கட்டியே புகுந்தனர் இலங்கையில் ஆயிரமாயிரம் காளையர் சேனைகள் அழிந்திடும் அவல யுத்தமே ஆரம்பமானது அறம்பிறழ்ந்த போரை ஆங்காரமாய்ச் செய்திட இலங்கேஸ்வரன் எழுந்தான்.
(பின்னணியில் சங்கொலியும் யுத்த அனர்த்தத்தின்
கட்டியகாரன்:
இசையும், ஓசைகளும் எழுகின்றன)
இராஜாதி இராஜன் இராஜ மார்த்தாண்டன் இராஜ கெம்பீரன் இராஜ குலத்திலகன் இலங்காபுரி வேந்தன் இராவனேஸ்வரன் போரிற்கு வருகிறார்.
(இராவணன்யுத்தத்திற்குச் செல்லும் பாவனையில்
தேரில்
வருவதாய் அபிநயித்தவாறு அரங்கில் நுழைவான்.
பரிவாரங்கள் தேர்ச்சக்கரங்களைப்போல் அவனைப்பின்தொடரும்)
○ァート கொல் ஈனுங் கொற்றம் گسس ح

Page 15
இராவணன் வரவுத்தரு
தாதா கிட தரிகிட தோம் தக தனத்த நொம் தக தனத்த நொம் தக தாகு தாகு தெய்ய திகு திகு திகு தெய்ய தத்தளாங்கு தக தரி கிட தொம் நம் தத்தளாங்கு தக தரி கிட தொம் நம்
இராவணன்:
லங்கா புரி கிரியென உறை முடி
இராவணேசனை யாரெதிர்ப்பரோ
மங்காப் புகழ் உறைந்த நம் நாட்டிலே
இராகவன் படைகொண்டு வருவதோ
படைகள் குடைசரிய
கடலில் முடி உருள
மடைகள் உடைத்தவரை
மாளச் செய்வேனே
தாதா கிட தரிகி.
தவமே கண்டஞ்சிய சங்கரன்
கொடுத்த வாளினால் தொடுக்கும் போரிலே
தசமெளலிகள் எழுப்பும் மூச்சிலே
விடுக்கும் அம்புகள் திசைகள் அலையவே
கடுகி வரு படைகள்
நடுங்கி குடல் சரிய
உடலைக் கிழித்தவரை
ஒடச் செய்வேனே.
வீணைக் கொடியோன் என் வீரத்தை அறியாத இராகவன் படைகளும், வானரக் குடிகளும் வீழுவாரெந்தன் வாளினால் இன்றே. மலைகளைப் பெயர்த்த புஜம்; அவர் நிலைகளைத் தகள்க்கும். போர்செய்ய வந்தவருயிர்கள்; விடைபெற்றுச் செல்லும். யாரங்கே! படையெங்கே!!.
தொடர்க என் அடி பின்னே...!
○エト யோ, யோண்சன் ராஜ்குமார் Y<محسبہ

(பின்னணியில் சங்கு முழங்கி, யுத்தப் பேரிகை இசை ஒலிக்க இராவணன், படைகளுடன் போருக்குச் செல்லுவான். சபையோர் ஓடிவந்து அரங்கின் குறுக்கே நின்று பாடலினூடாக அபிநயத்தால் யுத்தத்தை வெளிப்படுத்திநிற்பர்)
சபைத் தரு
தனத்த தானா தன தன தானினா தனத்த தானா தன தன தானினா
கொற்றவன் இராவணன் சொற்படி சமரது உக்கிரமாகவே வந்தது இலங்கையில் சுற்றமதிர்ந்திடச் சங்கு முழங்கிடக் கேளுங்கோ
தனத்த தானா தன தன தானினா தனத்த தானா தன தன தானினா
அரிபரிகாரியென பல படை களமதில் சமரிடை புகுந்திடப் பெரும்பகை மூண்டது நெறிபிழை போரிலே உயிர்பலபோகுது பாருங்கோ
(இசை திடீரென எழுந்து ஓய்கின்றது. மேடை ஒருகணம் மெளனத்துள் உறைய சோகமாய் இசை ஒலிக்கிறது)
விருத்தம்
கட்டியகாரன்:
வாரணம் பொருத மார்பன் வரைதனை எடுத்த தோளான் நாரதர் புகழ்ந்த நாவான் போரிலே நலிந்து போனான் பாரத வேந்தன் ராமன், தொடுத்த கணை தனிலே தோற்றான் (அவன்) நாளது கழிந்து நாளை போரிட வாராயென்றான்
(சபையோர் இரக்கத்துடன் நிற்க, போரில் தோற்ற இராவணன் தள்வுடன் நடந்து வருதல்)
○5-ト கொல் ஈனுங் கொற்றம் ސ............................~~~

Page 16
sts
இராவணன்:
போர்க்களத்தே நான் விழுந்தேன் - புஜ பலமதனை நான் துறந்தேன்.
மூர்க்கமுடன் போர் புரிந்தேன் - முழு வீரமுமே நான் இழந்தேன்
மானமதை நான் இழந்தேன் - மணித்
தேரதையும் களம் இழந்தேன்
கானமிசை நாவிழந்தேன் - கரன்
வாள்தனையும் கைநெகிழந்தேன்
ஆன்றோர் வாய்ப்புகழ் இழந்தேன் - அவர்
அருமொழியின் பொருள் துறந்தேன்
இன்றே போய் நாளை வாராய் - என்று உயிர் ஈந்தான் ஈனனானேன்.
(இராவணன் சோகமாய் அரங்கின் மத்தியில் அமர்ந்திருக்க,
சபையோர் சூழ்ந்துநின்று உரையாடுவர்)
சபையோர்:
1 :
இராவணேசா நீயா தோல்வி கண்டனை?
2: குபேரனை வென்று முடி அன்று சூடினாய்
காலனே கண்டு களம்விட்டு ஓடினான்!
3: கைலாய மலை கூடக் கண்டஞ்சுமே! - நீ
களம் விட்டு வெறுங்கையாய் மீண்டதெங்கனம்?
4: தேவரை வென்ற நீ தோற்று வந்ததென்ன?
5: தவஞ் செய்து பெற்றதெல்லாம் எங்குபோனது?
6: சிவன் தந்த சித்து எல்லாம் என்னவானது?
1 : மானிடர் உந்தனை வென்றதெங்ங்ணம்?
சிந்தித்துப்பார் நீ செய்த பிழை தெரியும்
எல்லோரும்:
சிந்தித்துப்பார். நீ செய்த பிழை தெரியும்?
(இராவணன் கோபாவேசத்துடன் எழுதல்)
1o N
யோ. யோண்சன்ராஜ்குமார் | Yسمس“ہح

இராவணன்:
இல்லை. இராவணேசன் தோற்கவில்லை! வீணைக் கொடியோன் என் வீரத்தை யாரும் விலை பேச முடியாது!!
கட்டியகாரன்:
இன்னும் நீ மாறவில்லை. இன்னும் நீ மாறவில்லை. அறம் பிறழ்ந்து போர் செய்தாய் அதன் பயனை இன்று காணுகின்றாய்.
வசன கவி
அறமதைப் பிறழ்ந்து முறைதனை விடுத்து சமரதைப் புரிந்தாய் பிழைதனைச் செய்தாய் சுயநலப் போரிது பொது நலங் காத்திடு சீதையை சிறைவிடு நீதிதனைக் காத்திடு
5ds
சபையோர்:
போதும் மன்னா போதுமே மன்னா போர் வேண்டாம் மன்னா போதும் மன்னா போதுமே மன்னா
தர்மமே தவறும் போர்கள்
வென்றதில்லை வையகத்தே கர்வமே துறந்து நீயும்
கொன்றிடுஞ் சமர் விடுப்பாய் சர்வமே உறையும் தேவன்
கர்மமே அறிவான் கேளாய் போர் தவிர்! பகை தொலை!
சீதையை சிறைவிடு!
போதும் மன்னா.
(இராவணன் தனித்து நிற்க சபையோர் பாடியவாறு இடங்களில் சென்று அமர்வர்)
கொல் ஈனுங் கொற்றம் اس “ ”ہحلا

Page 17
விருத்தம்
கட்டியகாரன்:
போரிலே வெற்றி என்றும் பெற்றிடல் வழமையாமோ தோல்வியைக் கண்ட வேந்தன் துவண்டுமே போனான் அந்தோ. பகையதை விடுத்தே மன்னன் சீதையை விடுவிப்பானோ..? போர் வெறி கொண்ட நெஞ்சில் பூக்குமோ புன்னகை பாரீர்.
(சபையோர் ஜதியோடு பாடலை இசைக்க மாலியவான் ஆட்டத் தருவுடன் அரங்கில் நுழைவார்)
மாலியவான் வரவு
சபைத்தரு
தன னன்ன னாதன்ன தன னன்ன னாதன்ன தன னன்ன னாதன்ன தனனா
யோ. யோண்சன் ராஜ்குமார் །། །།
 

சித்தமுரைத்திட மூத்த முதியவர்
இராவணனைக் காண வந்தார்
உடலும் உணர்வும் தணலாயெரிய தடுமாறும் நடையுடன் மாளிகை நாடி மன்னனைத் தேற்றிட மள மள வெனவே
சித்தமுரைத்திட மூத்த முதியவர் இராவணனைக் காண வந்தார்
(மாலியவான் - இராவணனை சந்தித்தல்)
மாலியவான்:
இராவணா. தேவர்கள் பலரைத் தோற்றோடச் செய்த நீயா துவண்டு கிடப்பது? போர் தவிர்த்திடப் போதனை செய்தோம் கேட்டில நீ.
இராவணன்:
போதும் தாத்தா, வெந்திட்ட புண்ணிலே வேல் பாய்ச்ச வேண்டாம்.
மாலியவான்:
நொந்து கிடந்தால் எல்லாம் முடிந்தனவா..?
இராவணன்:
குழப்பாதீர்கள்! இப்போ செய்வதென்ன, செப்புங்கள்!
தரு மாலியவான்:
மூர்த்திகள் மூவரைத் தோற்றோடச் செய்தாய் நீ
ஆற்றாமையால் வருந்தி அழவோ தேவர்கள் ஏவல்கள் செய்திடச் செய்தாயே
தேம்பி அழலாமோ மைந்தனே
இராவணன்:
எனதன்பு நேசரே ஏதென்று ஒதுவேன் யாதுமிழந்தேனே போரிலே உயிர் தந்து நாளை வா என்று உரைத்தானே
உள்ளந் துடிக்கிறதே தந்தையே
《། །། །། ༦།l 3།) கொல் ஈனுங் கொற்றம்

Page 18
மாலியவான்:
இராவணா. கூற்றுவனையே ஆடல்கொண்ட அந்த கும்பகர்ணனை நீ மறந்துவிட்டாயா..?
56
கும்பகர்ணன் உந்தன் கூட இருக்கையில்
வெம்பி மனமுடைந்து அழவோநி
உம்பர்கள் அஞ்சிடும் வீரனாம் தம்பியை
வெம்போர்க் கனுப்பிடுவாய் விரைந்தே
(இராவணன் மகிழ்வுடன் பாடுதல்)
இராவணன்:
நெஞ்சிலினித்திடும் நல்லுரை தந்திரே
நன்றி உரைத்திடுவேன் தந்தையே மிஞ்சும் புய வலி கொண்ட என் சோதரன்
கொன்று அழித்திடுவான் பகையை
வி O
மாலியவான்:
எண்ணியே துணிக கருமம்
துணிந்தபின் எண்ணலிழுக்கே
அண்ணலாம் உன்னை என்றும்
கண்ணிலே கொண்ட கன்னன்
திண்ணிய வீரங் கொண்டோன்
திறல்நிறை கும்ப கர்ணன்
கண்ணியங் கொண்ட திரனை
கலங்கிடா தனுப்பி வைப்பாய்
இராவணன்:
தாத்தா. அரிய கருத்தை உரிய பொழுதில் எடுத்துரைத்தீர்கள். தோல்வியின் துயர் என் கண்களை மறைத்து விட்டது. இன்று போய் நாளை வா என்றவனை, நாளை போய் என் சோதரன் சந்திப்பான்.
14 N யோ, யொண்சன் ராஜ்குமார் كسلاح

DrsuarTGör:
உடனே போருக்கு ஆயத்தம் செய்! நான் வருகின்றேன்.
(மாலியவான் அரங்கைவிட்டு வெளியேற இராவணன் ஆரவாரிப்பான்)
இராவணன்:
யாரங்கே!.
(வீரன் ஓடிவருதல்)
கவி
மெய்மறந்து தான்மயங்கித்
துரங்குகின்ற தம்பிதன்னை
தாமதங்க ளேதுமின்றித்
தேடினேனென் றோதுவீரே.
(மன்டோதரி சோகமாய் அரங்கிற்கு வருதல்)
கவி
சபையோர்:
உதரமதில் உறையும் பெரு நெருப்புடனே
உத்தமியாள் மண்டோதரியும் சிகரமென நின்ற திரு மன்னவன் தன்
சிந்தையிலே தெளிவுதரச் சபைபுகுந்தாள்.
மண்டோதரி:
போர்சென்ற மன்னவன் மீள்கின்ற வரையிலும், தீ சுமந்து வாழுகின்ற பெண்களாகிய எங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள் மன்னா!
இராவணன்:
எந்த நேரத்தில் என்ன வார்த்தை கூறவேண்டுமென்று உனக்குத்
தெரியாதா மண்டோதரி.?
15 N
கொல் ஈனுங் கொற்றம் كسيك حلا

Page 19
மண்டோதரி:
போதும் மன்னா நீங்கள் போருக்குச் சென்று பழியோடு மீண்டதும் போதும்.; பலிகொண்ட காளையர் உயிர்களும் போதும். அறந்தவறி நாம் செய்கின்ற போருக்கு இளவல் கும்பகள்ணனையும் பலியாக்கத்தான் வேண்டுமா?
இராவணன்:
மண்டோதரி ஏன் உளறுகின்றாய். இதுவரை இலங்கேஸ்வரன் கண்ட போர்கள் எத்தனை? இன்று மட்டும் நீ ஏன் இப்படி..?
莎西
மண்டோதரி:
வெந்து அழிந்து மடிந்தவர் கண்டும் போர் வேண்டுமோ - இங்கு நைந்து வருந்தி உயிர்கள் மரிப்பதும் நியாயமோ
இராவணன்:
அஞ்சி நடுங்கி ஒதுங்கி ஒழிந்திடலாகுமோ - எம்மை மிஞ்சும் பகை வீழ வீரமுணர்த்திடல் வேண்டாமோ..?
மண்டோதரி:
மன்னா இலங்கேஸ்வரன் வெல்லப்பட முடியாதவன். அது எனக்குத் தெரியும். ஆனால்.
5ds
நீதி மறந்த போர் நானிலந் தன்னிலே வெல்லுமோ - அந்தப் பேதை சீதை தன்னை விட்டுவிட்டால் பகை நீளுமோ
இராவணன்:
கோழையெனப் புவி காறியுமிழ நான் வாழ்வதோ - தம்பி காளை கும்பகர்ணன் நாளை பகையோட்டி வெல்லுவான்
மண்டோதரி:
உத்தமனாம் தம்பரி கும்பகர்ணன் சமர் ஆடவோ - நாளை சுற்றமெல்லாங் கூறும் குழு பழியது வேண்டுமோ.
《། ། யோ, யோண்சன் ராஜ்குமார் ༦། 19 །ཕྱི་

இராவணன்:
மண்டோதரி இன்று உனக்கு என்ன நடந்துவிட்டது.
இன்னிசை
மண்டோதரி:
குற்றமில்லா கோவெனவே சுற்றமெல்லாம் சொன்ன உங்கள் கொற்றமதே கேடு சூழ்ந்து பற்றழிந்தே வீழுவதோ நற்றவத்தினாலே பெற்ற நல்வரங்கள் அத்தனையும் தப்பிதத்தினாலழிந்தே தேசமது வாடுவதோ
மன்னா. மாற்றான் மனைவியை சிறைவைத்திருப்பது நீங்கள்! அவளை மீட்க வருவது அவர்கள். அவர்கள் செய்வது தர்மயுத்தம். நீங்கள் செய்வது அதர்மயுத்தம்! இதில் நீங்கள் வெல்ல முடியாதென்பதை ஏன் உணர மறுக்கின்றீர்கள்..? அவர்களுக் குரியவளைக் கொடுத்துவிட்டால், அவர்கள் ஏன் யுத்தம் செய்யப்போகிறார்கள். உங்களின் கோபத்திற்கு எங்கள் தேசத்தைப் பலியிடுவது எந்தவகையில் நியாயம்?
இராவணன்:
மண்டோதரி கொதிக்கும் உள்ளத்துடன் தோல்வியால் துவண்டு. வந்தபகை சாயும்வரை தணியாதவெறியுடன் குமிறிடும் எனக்கு மீண்டும் மீண்டும் தி மூட்டாதே! சென்றுவிடு. நான் போரிற்கனுப்பப்போவது எனது உடன் பிறப்பை.
மண்டோதரி:
ஆம் இன்று கும் பகர்ணன். நாளை மகோதரன். பின்பு இந்திரஜித்தன். போர் ஆடஆடப் பகடை போல் பலியாகப்போவது எமது மக்கள் தானே.
இராவணன்:
மண்டோதரி என்னைக் குழப்பாது சென்றுவிடு.
《 །། கொல் ஈனுங் கொற்றம் 17-2ܢ)

Page 20
(மண்டோதரி சோகமாக வெளியேறுகிறாள்)
கட்டியகாரன்:
வேந்தனே பொறுமைகொள்! உன் தேவியவள் வார்த்தையின் உண்மைத் தீ உன்னைச் சுடவில்லையா? அதர்ம யுத்தத்தால் அழிவது அப்பாவி உயிர்களே. ஆதலால் உண்மையை உணர்ந்திடு! போரதை விடுத்திடு.
இராவணன்:
மலைகளைத்தகர்த்த வீரம், மும்மூர்த்திகளைத் துரத்திய வீரம், காலனையே வென்ற வீரம், கலங்கப்போவதில்லை. பகைவரின் குருதியில் குளிக்கும் வரை என்கோபம் தணியப்போவதில்லை.!!
(இராவணன் சந்நதங்கொண்டு ஆடி வெளியேறுவான். மண்டோதரி வேதனையுடன் பின்செல்வாள்)
யோ, யோண்சன் ராஜ்குமார் Nسے ”“ہح

காடீசி-3
கட்டியகாரன்:
கறை ஏதுமறியாத பொறையாளு நாதன்
இறைதூதர் சதியாலே துயில்கின்ற தீரன் உறை வீரம் சிறைகொண்ட நிறை மாணவீரன்
உறங்குமனை தனைநாடி படைநூறு செல்லும்
(மல்லர்கள் கும்பகர்ணனை எழுப்பச் செல்லுதல்)
சபையோர்:
தாகு தாகு தெய்ய தத்துமி தாகிட தக தீம் தனா - - தீம் திமி திமி தெய்ய தக்கிட தோம் தரிகிட தித்த தோம்
திரு
மல்லன் 1:
மாளிகை தனை நாடிச்செல்லுவோம்
மான வீரனைத் துயில் எழுப்பிட
மன்னன் கட்டளை மனதில் கொண்டுமே
மல்லர் நாங்களே செல்வோம் வாருமே
1o N SS LSLS SASLLLS SS SSSSL கொல் ஈனுங் கொற்றம் اسے “ہحN

Page 21
(மேடையின் இடது புறத்தே சென்று மறைந்து, ஓடிவந்து வீழுவர்)
மல்லன் 2:
மாமிச மலை போன்ற மன்னவன்
மூச்சிலே உடல் பேச்சிழக்குதே பாய்ச்சலாய் உடன் ஒடித்தப்பியே
வாரணப் படைகொண்டு செல்லுவோம்
(மீண்டும் முயன்று தோற்று மீள்வர்)
மல்லன் 3:
ஆனையும் பரிவாரமும் மிதித்தோடியும்
துயில்தான் கலையல்ல தானைகள் படை ஆயுதங்களை
கொண்டுமே கரன் குடி எழுப்புவோம்
மல்லன் 1:
களை எடுக்குது! மல்லன் 2:
பயம் பிடிக்குது மல்லன் 3:
கண்ணனின் விழி மல்லன் 4:
மடல் திறக்கல்ல
வேறு தரு மல்லன் 4:
எல்லா வழியும் செய்து முடித்தோம்
மல்லா மல்லர்களே - எங்கள் பொல்லா வேந்தன் பொறி விழியது
விரியக் காணலையே
மல்லன் 5:
ஆனைகள் தானைகள் கொண்டு மிதித்தோம்
அசையவே இல்லை - பல
_イエト யோ, யோண்சன் ராஜ்குமார் ༦༤ 20)།>2

வாதைகள் பீடைகள் செய்து களைத்தோம் (துயில்)
கலையவேயில்லை
(மீண்டும் ரோசம்பொங்க எழுந்து)
மல்லன் 1:
வில்லெடுப்போம்! மல்லன் 2:
6.იJრr6)6708ტGწuიrdb! மல்லன் 3:
மல்லெடுப்போம்! மல்லன் 4:
மழு எடுப்போம்! மல்லன் 5:
சிலை எடுப்போம்! மல்லன் 6:
கணை தொடுப்போம்! மல்லன் 1:
வீரமே புரி திரரே
பரிவாரமாய் எழுவீர் - வெகு காரமாய் மழு சூலமே
தரித்தே வதைத்திடவே.
D) oõ5
மல்லன் 4:
இத்தனை படை கொண்டு சிண்டியும்
சத்தியன் விழி மடல் விரியல்ல மெத்தவும் மழு சூலமோடவன்
கட்டுடல் சிதைத்தே எழுப்புவோம்.
கட்டியன்:
உறங்குகின்ற கும்பகன்ன உங்கள் மாய வாழ்வெலாம் இறங்குகின்ற தின்றுகா ணெழுந்திரா யெழுந்திராய் கறங்குபோல விற்பிடித்த காலதூதர் கையிலே உறங்குவா யுறங்குவா யினிக்கிடந்துறங்குவாய்
(கம்பராமாயணம்)
ܔ ̄ ܐ ܕ ܐ .
༦། 21 །> கொல் ஈனுங் கொற்றம்

Page 22
சபையோர்:
கும்பகள்னன்:
(கும்பகர்ணன்துயில் கலைதல் இருவர் திரை பிடித்துவர, சங்குகள் முழங்க கும்பகள்ணன் வரவு இடம்பெறும்)
சந்ததத் தாழிசை
சங்குடன் மணியெழுந்து சங்கை செய்து பாடவே
பொங்குமா கடல் நுரைகள் பூவெனத்துமியவே
தங்குமஞ்சமே விடுத்து தூயவன் எழுந்தனன்
ஏங்கியே திகைத்த தேவர் அஞ்சியே நடுங்கவே
திரு
அண்டமது கலங்க மண்டலமே நடுங்க
கண்டோர் அலறி அஞ்சி ஒடி ஒழிந்து விட
எண்டிசையுமுடல் கண்டு மருண்டு விழ
விண்ணில் தலை விசிற வீரன் சபையில் வந்தேன் விழி கண்டு அலறுண்டு மொழி கண்டு அலமந்து உம்பர் ஒடவே உரனுடைக் கும்ப கர்ணனும் வந்தேனே
விண்ணை இடறு மெளலி வெளியை நிறைத்த மேனி
கண்கள் வீசும் கனல் கண்டே கடவுளரும் அஞ்சி நடுங்கி விழ விஞ்சு வீரமெழவே
விரைந்து துயரில் கலைந்து எழுந்து சபையில் வந்தேன்.
குடமோடு மதுவுண்டு கடகங்கள் சோறுண்டு அண்ணல் அழைத்த சேதி அறிய விரைந்து செல்வேன்.
(கும்பகர்ணன் கொலுவுடன் ஆடிச்செல்ல மல்லர்கள் மருண்டு ஓடி மறைவர்)
12 N.
யோ, யோண்சன் ராஜ்குமார் トーニーイ

காடீசி - 4
(சபையோர் பாடலைப்பாட இருவேறு கோணங்களில் இராவணன், கும்பகள்ணன் மன இயல்பு வெளிப்படுத்தப்படுகிறது)
சபைத்தரு
கும்பகர்ணன் அன்போடண்ணனைக் காணவந்தான்
அவன் இல்லம் நாடி இராவணனோ அவன் வரவைப் பார்த்திருந்தான்
பகை வெல்லல் நாடி சமரே செய்திடச்சாவு அழைத்தது கூற்றுவனாய் அண்ணன் வீற்றிருந்தான் - சபை
கும்பகர்ணன்.
(இராவணனும் கும்பகர்ணனும் சந்தித்தல்)
கும்பகர்ணன்:
அண்ணா!
திரு இராவணன்:
வாராய் என் சோதரனே - நேச
திரனே வீரனே கும்பகர்ணா
கொல் ஈாைங் கொற்றப் (~23 سس கால் ஈனுங் கொற்றம்

Page 23
பாராய் உன் தேசமதை - உந்தன்
தேவை உணர்ந்தேனே என் திருவே
கும்பகர்ணன்:
தாயாய் என்னைக் காப்பவனே - அண்ணா
எந்தனின் தேவையேன் வந்ததுவோ சேயாய் உன்னை நான் பணிந்தேன் - எந்தன்
தேவையை ஒதிடுவீர் அறிய.
இராவணன்:
நிந்தை ஒன்று வந்ததடா - தம்பி
உந்தன் அண்ணன் சமர் தோற்றேனடா வந்த பகை மண்ணினிலே இன்னும்
இறுமாந்திருக்குது என் சோதரனே.
(கும்பகர்ணன் கோபத்துடன் கழிநெடில் இசைத்தல்)
கழி நெடில்
கும்பகர்ணன்:
அண்டமிடியுண்டதோ கண்டமுடையுண்டதோ மண்டலமுடைந்துருண்டதுவோ கண்டவர் கண்டுமே நையாண்டி செய்யவோ கொண்ட பகை மண்ணில் வாழ்வதா எண்டிசை ஆண்ட புகழ் மண்ணோடு மாள்வதோ மன்றாடும் நிலையாவதோ
சிந்து
யாரவன் படைகொண்டு வந்தவனோ - மண்ணில் வந்து குழுரைத்துமே சங்கரித்தவனோ
ஆழி சூழ் கடல் மீதிலேயவர் நாழிகை கடந்தேகியே வர தாழியில் உயிர் போக்கிடாமலே கோழையாய்ப் படை காத்து நின்றதோ
(யாரவன்.)
CS S CS S CLLL S S0LL 124 N யோ. யோண்சன் ராஜ்குமார் سہ حلا

சோதரன் சமர் தோற்று வந்தனனோ - எதிரியவர்
சாதனை புரிந்தேக விட்டிடவோ
வீரராம் மற திரரே நிறை தீவதாம் லங்கா புரியிலே மீறியே படை கொண்டு வந்தவர் சாகிடச் சமர் செய்து மீளுவேன்.
ரும்பகர்ணன்:
ஐயனே என் சினம் எல்லை மீறுகின்றது. எம் மண்மீது போர் தொடுத்திருப்பது யார்? உடனே அவன் சிரங் கொண்டுவந்து உங்கள் பாதத்திற்குப் படியாக்குகிறேன்.
இராவணன்:
உன்னுடைய சீற்றமும், சினமும் என் வீரச் செருக்கையே உயர்த்துகின்றது தம்பி! எம்மீது போர்தொடுத்திருப்பது தசரதன் புத்திரன் இராமனும், சுக்கிரீவனின் வானர சேனைகளும்.
(கும்பகர்னன் அதிர்ச்சியடைதல்)
கும்பகர்ணன்:
ஒ. சிறி இராமனா. அப்படியானால் நீ இதுவரையும் சீதையை விடுதலை செய்யவில்லையா! ஏன் இந்தப் பெண் பழியைச் சுமக்கின்றாய்?
இராவணன்:
(5budsfr000T/T
(கும்பகர்ணனின் வார்த்தை கேட்டதும் இராவணன் சந்நதங்கொண்டு ஆடி ஓய்வான்)
கொச்சகம் கும்பகர்ணன்:
ஆனதோ பெருஞ்சமரும் அழகு நிறை சானகியும் ஏனோ சிறையதனால் விடுகை பெறவில்லையண்ணா
トー二ーイ கொல் ஈனுங் கொற்றம்

Page 24
மாற்றான் மனையவளை கவர்ந்திடுதல் முறைமையதோ வேற்றான் மகளுனக்கேன் விடுதலை செய் சோதியனே!
5ds கும்பகர்ணன்:
ஐயனே சோதரனே
அறநெறி மறந்திடவோ ஜானகி தன்னை நீயும்
விடுதலை செய்வாயே
இராவணன்:
புத்தியா செப்பிட வந்தாய்
பித்தமா சிந்தையிற் கொண்டாய் யுத்தமே கண்டுநீ யஞ்சி
எத்தனாய் மாறுகின்றாயோ
கும்பகள்ணன்:
சாவதோ சமரதோ
அஞ்சிடேன் சோதரனே அறமில்லா சமரினில் யாரும்
வென்றாருண்டோ கூறாய் இராவணன்:
திட்டமாய் நம்பிய நீயும்
மட்டமாய் மாறியதென்ன இட்டமாய் ஊனுடலுண்டு
பட்டமரம் போல் சாய்வாய்
(இராவணன் கோபமாய் உரைத்தல்)
கவி
பெரு வலி வீரனென்று பெருமை யான் கொண்டிருந்தேன் சிறுமையாய் பேசிச் சினமதை தந்தாய் நீயே யோ, யோண்சன்ராஜ்குமார் -C26)

போதும் உன் புகன் மதி இனிமேல் புசித்திட உணவதுண்டு போயுடன் தூங்குவாயே
(கும்பகர்ணன் வருந்துதல்)
ஆசரியம்
கும்பகர்ணன்:
அண்ணலே சோதரா வன்மொழி போதுமே சின்னவன் தானே செப்பினேன் வார்த்தை எண்ணமே ஒதினேன் எதிர்த்துமே இயம்பினேன். பொறுதியே பொறுதியண்ணா
மண்ணது உண்டிடும் இவ்வுடல் உன்னதே உந்தனுக்காக நான் மடிதலும் முறையதே கண்ணதாய் உன்னையே எண்ணியோர் வார்த்தையை இயம்பிடுவேன் இடந்தருவாய்
உன்னுடை தம்பியான் இப்பெரும் போரிலே பொருதியே மாண்டழிந்துற்றால் போரிடல் பிழையெனப் பொறுதியாய் உணர்ந்துடன் சீதையை சிறை விடுப்பாய் அண்ணலே
கும்பகர்ணன்:
அண்ணா! இந்த உடலும் உயிரும் உன்னுடையவை! உனக்காக மடியும் கடனெனக்குண்டு. நான் உயிருடன் இருக்க நீ போர் செய்யச்சென்றதே தவறு! நான் போர்க்களம் புகுந்தேன். ஆனால், ஒன்றைமட்டும் உணர்ந்துகொள்! ஒருவேளை நான் இறந்தால். அவர்கள் வெல்வதற்கரியவர்கள். உன்னாலும் அவர்களை வெல்லமுடியாது. உடனே சீதையை சிறைவிடுத்து உன்னைக் காத்துக்கொள்! ஏனெனில், இலங்காபுரி தலைவனின்றித் தவித்திடுதல் தவறு. நான் வருகின்றேன்!
( gnausoleir:
தம்பி! என்னை மன்னித்துவிடு. ஆத்திரத்திலே அறிவிழந்து வார்த்தைகளால் உன்னைத் துன்பப்படுத்தி விட்டேன். -C27) கொல் ஈனுங் கொற்றப்
கால ஈனுங் கொறறம

Page 25
இலங்கேஸ்வரன் வெல்வான். இராகவன் படையழித்து என் தம்பி மீள்வான், வெற்றியுடன் திரும்பி வா..!
(இராவணன் பெரும் ஆரவாரத்துடன் வீரரை அழைத்து கும்பகள்னனுக்கு போர் உடை அணிவித்து நிற்பான்)
இராவணன்:
இசலி
திடமோடு வாழு நிலைபேறு கொண்ட திருவான உருவே வீரா என் உயிர் உந்தனொடு உலகஞ்சி வீழ படை கொண்டு செல்வாய் சீலா பகை வென்று வீர கொடி கொண்டு ராஜ சமராடி வாடா என் திரா அருளோடு ஆசி நிறைவோடு தந்தேன் புகழோடு போவாய் புயலாய்
(இராவணன் ஆசியின் பின் கும்பகள்ணன் போருக்குப்
சபையோர்:
போகும்வரையில் ஆடிச் செல்வான்)
சாவு அழைத்திடச் சமரே செய்யவந்தான்
கொடைக்கன்னன் இவனே
காவு முயிர்தனை தந்திடத்தான் புகுந்தான் மான வீரன் இவனே
தேவர்கள் அஞ்சிடப்
பஞ்சமர் கெஞ்சிட
புழுதி எழுந்து
புயலாய் மாறிட
சாவு அழைத்திட.
யோ. யோண்சன் ராஜ்குமார் ^سے ہح

als Is5 – 5
ஆசரியம்
கட்டியகாரன்:
தவறெனத் தெரிந்தும் போர் தவிர்த்திடாத் தீரனாய் போர்க்களம் வந்து புகுந்தான் அறமதை உணர்ந்தும் மறமதை விரும்பி பாசத்தால் படை கொண்டான்
(சங்கு முழங்க, படைவீரரும் கும்புகள்ணனும் ஆடல்த் தருவில் போருக்குப் போவதாய் அபிநயம் செய்வர். சபையோர் பாடல் இசைப்பர்)
சபையோர்:
தா தா கிடசோம் தக தரி கிடதக தாதா கிடசோம் தக்கச் சோம் திந்த தாகிட தக்கச் சோம் நீந்த தாகிட
எண்டிசையும் அதிர கண்டோரெல்லாம்
அஞ்சி நடுங்கி விழ
மண்டலமே மிரள கும்பகர்ணன்
புகுந்திட்டான் போர்க்களமே
トーーイ கொல் ஈனுங் கொற்றம்

Page 26
தாம் தெய்ய தாம் தளாங்கு தரிகிட
தாகு தாகு தாகுதா தாகிட சொம்தரி தாகு தாகு தாகுதா தாகிட சொம்தரி தாகிட சொம்தரி தரிகிட சொம்தரி தாகிட சொம்தரி தரிகிட சொம்தரி தக்கச் சோம் தீம்த தாகிட தக்கச் சோம் தீம்த தா கிட
திக்கெட்டுமே புழுதி எழுந்தலம்ப
கொட்ட மடித்தலறி முரசதிர
பட்டமர மெனவே பகைசரிய
கும்பகர்ணன் புகுந்தான்
தாம் தெய்ய தாம் தளாங்கு தரி கிட
கூற்றுவனே தோற்றவனாம்
மாற்றலரின் கூற்றுவனாம் போர்க்களத்தே ஆர்த்தெழுந்து
கும்பகர்ணன் தோற்றினான் தாம் தாம் தாம் தக்க சொம் தத்தரி கிட (4) தக்க சோம் தளாங்கு தரிகிட
கட்டியகாரன்:
புழுதியது மேலெழுந்து போர்ப்பரணி பாட
பறைமுரசு பதறிஒலி பாரெங்கு மதிர குன்றனய வீரனவன் கொல்கருவி யோடு
சென்றவகை கண்டுதிகில் கொண்டு படையோடும்
யோ, யோண்சன் ராஜ்குமார் سے کہحلا

asses - 6
இராமன் கொலு
(இராமன், இலட்சுமணன், சுக்கிரீவன், விபீஷணன்
சபையோர்:
இராமன்:
சபையில் தோன்றுதல்)
தக, தக, தக.தக. தக. தாம், தாகிட தரிகிட தோம் தக தாம், தாகிட தரிகிட தோம் தக தத்தளாங்கு தக, தக தக தக தாம், தாகிட தரிகிட தோம் தக தாம், தாகிட தரிகிட தோம் தக தத்தளாங்கு தக, தக தக தக தித்தளாங்கு தக, திகு, திகு, திகு தாம் தெய்யதாம் தளாங்கு ததிகிணதொம்
தர்மம் நிலை பெறவே - மண்ணதனில்
அதர்மம் அழிந்திடவே - வெம்போர்புரி
வீரர் திகழ்படை சூழப் புவியினில்
சமர்செய் களமதில் கொலுவில் வந்தேனே
கொல் ஈனுங் கொற்றம் سے “تہح^(

Page 27
இரவியின் குலத்தில் - உதித்திட்ட
சிறிராகவன் நானே - எனதுயிர்
இரதியாம் சீதையை சிறை மீட்டிடவென
படை கொண்டெழுந்திட்டோம் பொழுதிதிலே தான்
இலட்சுமணன்:
அண்ணல் அடி தொடர - அன்னையவள்
ஆணையின் நெறி வழியே - இந்நாள் வரை இணையே பிரிந்திடா துணையாய் வருமிளங்
காளையாம் இலக்குவன் சபையின் வந்தேனே
சுக்கிரீவன்:
வானரர் படை முதல்வோன் - வளமிகு
வாலியின் உடன் பிறந்தோன் - இராகவனின் வரமே நிறைந்திட சமரே புரிந்திட
வந்தேன் சபைதனில் சுக்கிரீவன் நானே
விபீஷணன்:
இலங்கா புரி ஆளும் - இலங்கேஸ்வரன்
குலங்காத் திடுங் கோமான் - எந்நாளுமே துலங்கு மறநெறி பிறழாதுயிர்பெற
உறவை உதறிய விபீஷணன் நானே
(பின்னணியில் பேரிரைச்சலுடன் ஒலி எழும்ப அனைவரும் மேடையின் முன் இடதுபுறத்தை ஆச்சரியத்துடன் நோக்குவர்)
சுக்கிரீவன்:
சிறி ராமா எங்கள் படைகள் அஞ்சி நடுங்குமளவிற்கு புயலெனக் களம் புகுந்துள்ள, அந்தப் புதியவனின் தோற்றம் அமைந்துள்ளது.
இராமன்:
புரிகின்றது சுக்கிரீவா சற்றுப்பொறு. விபீஷணா. இன்று போர்க்களமே அதிர்ந்து நிற்பது உனக்குத் தெரிகின்றதா? அங்கே புழுதி மேலெழ போர்க் கொடியுடன் படைகொண்டு வந்திருப்பவன் uTT?
GBuun. Gulumcismercir TareizesLDmi -32 س T<( யா, யோண்சன் ராஜ்குமார் | <سس ح

இராமன்:
AfsnşaBOTGör:
இராமன்:
தடு
புவி கண்டு நடுங்கிடப் புயலாய் மோத
படை கொண்டு வந்திடும் வீரன் யாரோ
செவி மோதும் குரலோசை புதிதே நண்பா
அதி திரங் கொண்டானே காளை யாரோ
அசுரரும் தேவரும் அஞ்சும் அண்ணல்
மாசற்ற மாவீரன் கும்பகர்ணன்
ஆண்டரை காலங்கள் துரங்கும் ஐயன்
அன்புடை எந்தனின் சோதரனே
காருண்யனே கும்ப கன்ன னென்றால்
கோரச்சமர் செய்தல் தேவைதானா
ஆரண்யம் மீதிலே சென்று நீரும்
அறங்கூறி அழைத்துவா அன்புடனே
இப்போதே சென்றவர் தன்னை நாடி
செப்பிடுவேன் நீதிமொழி சிறி ராமா
ஒப்பற்ற வீரனாம் கும்பகர்ணன்
தப்பற்ற என் வார்த்தைக் கொப்புவானே
விபீஷணா கும்பகர்ணன் உன்வார்த்தைக்குச் செவிமடுப்பானோ?
afhoşGRIT:
சந்தேகம் வேண்டாம் ஐயனே. எமது குலத்தின் சொத்தென உயர் குணத்துடன் வாழ்பவன் தான் கும்பகர்ணன், அவனைப்பற்றிச் சொல்லுகிறேன் கேளுங்கள்.
MaeşGOOTT:
தீத்த்
பக்தி மிகு சத்தியன் என் அண்ணன் - அவன்
நித்தியத்தை நாடித் தவம் செய்தான்
○エト) கொல் - கால் ஈனுங் கொற்றம் اس تہحN

Page 28
சக்தி மிகு தேவர் செய்த சதியால் - அண்ணன்
நித்திரையைச் சொத்தெனவே கொண்டான்
அண்ணன் தேவி தன்னைச் சிறை செய்தான் - அதைக் கண்டு கும்பகர்ணன் மனம் நொந்தான்
சீறி எழுந்து சினந்து உரைத்து சீதையை விடுதலை செய்யவுணர்த்தி அறமுரைத்தான் அண்ணன் கும்பகர்ணன் - அந்த மறவீரனைக் காத்தல் எங்கள் கடனே
இராமன்:
இத்தகைய நற்பண்புகளைக் கொண்ட கும் பகர்ணன் ஏன் யுத்தத்திற்கு வந்தான்! என்பதுதான் என் சந்தேகம் சரி.
கவி
அறமுணர் பெரியோய் நீயும் அதி விரைவாகவே சென்று புறமது காண வந்த பலமுடை தீரன் தன்னை தவறென நிலையுணர்த்தி திரும்பிட வழி வகுத்து உறவதன் உயிர் காத்து உடனிங்கு ஏகுவீரே.
விபீஷணன்:
அப்படியே சென்று வருகின்றேன்.
(தாளத் தருவுக்கு ஏற்ப விபீஷணன் ஆடியவாறு வெளியேறுவான்)
சுக்கிரீவன்:
சிறிராமா கும்பகர்ணனின் உயரிய குணங்களை அறியும்போது அன்னவள் போருக்கு வந்தது ஆச்சரியமாக உள்ளது. ஆனதனால் விபீஷணனின் சொல்லைக்கேட்டு மனம் மாறுவானா. அவன்.?
CCS SSSLSS S SLS S SLSL ○エトの யோ. யோண்சன் ராஜ்குமார் トー一イ

இராமன்:
இல்லை. கும்பகர்ணன் மனம் மாறக் ஈடியலின் அல்ல. அவன் தாமத்தை நன்குணர்ந்தவன். அதேவேளை தன்னைக கொடையாக்க வலல உறுதியையும் கொண்டவன்தான். அவன் மாறப போவதில்லை. எமக் குப் பேராபத் தாகவே ஆகக் கூடியவன . எனினும் , அறந்தேர்ந்தவனன்றோ, முயலுதல் நம் கடன் என்றாலும்.
இலட்சுமணன்:
என்றாலும் என ஏன் நிறுத்திவிட்டீர்கள். விபீஷணனைத் தூது விட்டிருக்கவேண்டியதில்லை.
இராமன்:
ஏனெனில், எம்மை நாடி வந்த விபீஷணன். தனது நற்குணங்கொண்ட அண்ணனை நாம் இரக்கமற்றுக் கொன்று விட்டோமென்று பழி உரைக்கக் கூடாதல்லவா? அவனே அதை உணர்ந்து திரும்ப வேண்டுமென்பதற்காகவே அவனை அனுப்பிவைத்தேன். போரென்று வந்துவிட்டால் பொல்லானும் ஒன்றுதான், புண்ணியனும் ஒன்றுதான்.
கக்கிரீவன்:
சிறி ராமா. உனது ஞானத்தை என்ன வென்று சொல்வது?
(அனைவரும் தாளத்துடன் வெளியேறுதல்)
ーイ கொல் ஈனுங் கொற்றம்

Page 29
asses - 7
(விபீஷணன் கும்பகர்ணனை தேடிச் செல்லுதல் பாடலை சபையோர் பின்னணியில் இசைப்பர்)
தரு
சபையோர்:
சோதரனைக் காணவென்றே - போர்க் களமதிலே நடந்து தம்பி வாறான் ஆவல் கொண்டே வாறான்
பகை முடித்தே போர் நிறுத்த - தம்பி பேரவாவே கொண்டெழுந்தான் சமர்க்களத்தே
அறம் உரைத்திடவே
(விபீஷணனை இராவணனின் படைகள் பெரும் ஆரவாரத்துடன் சூழுதல், தாளத் தருவுக்கு ஏற்ப ஆவேசத்துடன் ஆடல்கோலம் செய்வர்)
யோ. யோண்சன் ராஜ்குமார் Nسے ہح
 

போர்வீரர்:
ஆடல் தரு
தெய் தக்க தெய் தக்க தீம் தக்க தீம் தக்க தெய் தக்க தெய் தக்க தீம் தக்க தீம் தக்க தாகிட தீம்தரி தரிகிட தோம்தரி
விருத்தம்
பேதையேபார் உன்னையே பதைத்துயிர் கொல்லுவோமே துரோகியாம் உன்னையின்று துடித்திடக் கொல்லுவோமே
தெய் தக்க தெய் தக்க தீம் தக்க தீம் தக்க தெய் தக்க தெய் தக்க தீம் தக்க தீம் தக்க தாகிட தீம்தரி தரிகிட தோம்தரி
போர்க்களம் வந்து உளவு பார்க்கவா தனித்து வந்தாய் போக்கிடமின்றி நீயும் சாக்காடிதிலே சாவாய்
(வீரர்கள் கோபாவேசத்துடன் விபீஷணனைச் சூழ்ந்து
கட்டியகாரன்:
கொல்லுவதற்கு எத்தனித்தல், கட்டியன் குறுக்கிட்டுத் தடுத்தல்)
ஆசரியம்
பொறுதியே கொள்வீர் உயிரையே கொல்லலீர் அமைதியின் தூதனைக் கொன்றிடல் முறையோ போரிடல் தவிர்த்திடப் பொறைதனை உரைத்திட போர்க்களம் வந்துற்றான் அறிவீர்
137 -) கொல் ஈனுங் கொற்றம் &ސ " " ............~~

Page 30
அறமதை உணர்ந்து அமைதியை விரும்பி அன்புடை அண்ணனை ஆற்றிட வேண்டி துணிந்து இக்களத்திலே வந்துற்ற வீரனை கொன்றிடா தனுப்பி வைப்பீர்.
வீரன் 1:
இவனா அமைதியின் தூதன். அமைதியின் பெயரால் எம்மை அடிமையாக்க வந்தவன்.
கட்டியன்:
கடுஞ் சொல் தவிர்ப்பீர். உண்மை கொடிது. உலகில் அதனுடன் போரிட்டு வாழ்வதும் கடிது. அவன் காண வந்தது சோதரன் கும்பகர்ணனையே.
வீரன் 2:
ஆமாம் கும்பகர்ணனைக் காண வந்து அவன் மூளையைச் சலவை செய்து, அவன் போர்க் குணத்தை மாற்ற வந்த இவன் தூதன் அல்ல துரோகி. கொல்லப்பட வேண்டியவன்.
கட்டியன்:
கொழுந்துவிட்டெரியும் போர்வெறியைத் தணிப்பீர் அறம் பிறழ்ந்த போரிடத்துக் குருடராய் இருப்பவள் நீவீர்.
வீரன் 3:
இல்லை. வந்தேறுபடைகள் எங்களைக் கொல்வதா..? கொற்றவன் எவ்வழி குடிகள் நாம் அவ்வழி. தத்துவம் உரைக்கும் நேரம் இதுவல்ல. விலகிடுவீர். கொல்லெனக் கை துடிக்குது. இவன் தலை உருளும் கொல் செயல் முடிப்போம்.
கட்டியன்:
ஒ. கொல் ஈனுங் கொற்றமே, கோர அரசென்றால் குடிகள் பாவமுறும் என்ன செய்யும்?
(படைகள் சூழ்ந்து விபீஷணனைக் கொல்வதற்கு வியூகம் அமைத்தல்.
யோ, யோண்சன் ராஜ்குமார் سمس ہ~لا

கும்பகர்ணன் வருதல் கண்டு படை விலகிச் செல்லல் கும்பகர்ணன் விபீஷணன் சந்திப்பு)
nasaoTair:
அண்ணா!
கும்பகர்ணன்: தம்பி!
பாடல்
கும்பகர்ணன்:
எங்கு வந்தாய் தம்பி எங்கு வந்தாய் - இந்த
இடர்க்களத்தே நீயும் எங்கு வந்தாய் - (எம்) இனத்திலொரு வீரன் உயிர்தரிப்பான் என்று
இனிதிருந்தேன் நீயேன் இங்கு வந்தாய்
விபீஷணன்:
அற முணர்ந்தாய் அண்ணா நெறி தெரிந்தோய் - பின்பேன்
சமரிடவே நீயும் களமெழுந்தாய் முறைதவறி அண்ணன் பிறன்மனையை கொண்டான் தவறுணர்ந்தோய் நீயேன் களம் புகுந்தாய்
கும்பகர்ணன்:
விபீஷணா எமது குலமே அழிந்துபோகும் அபாயம் காத்திருந்தும், நீ ஒருவனாவது எமது இனத்தில் மிஞ்சி நிற்பாயென்று மகிழ்ந்திருக்கிறேன் நான். நீயோவென்றால் உன்னைக் கொன்றிடக் காத் தருக்கும் செருக் களத் தரில் தன் னந் தனியனாயப் வந்திருக்கிறாய்..?
eleaseolgir:
அண்ணா. நீ ஏன் போருக்கு வந்தாய்? அறத்தின் வழி பிறழாது வாழும் நீ எமது இனத்தின் விலைமதிக்கமுடியாத சொத்து. அளவிடற்கரிய பலத்தைக் கொண்ட நீ எமது மண்ணின் எதிர்காலம். அறமற்ற இந்தப் போரில் நீ வெல்லமுடியுமென்றா இந்தப் படையைக் கொண்டு வந்தாய்? வேண்டாமண்ணா போரை விடு.
139 N கொல் ~പ് - கால் ஈனுங் கொற்றம்

Page 31
கும்பகர்ணன்:
விபீஷணா நான் செய்வது தர்மமற்ற யுத்தம்தான். ஆனால் என் சோதரனுக்காகப் போரிட்டு இறக்கும் மரணமும் எனது கடமைக்குரியதே.
விபீஷணன்:
இல்லையண்ணா. இந்தப் போரில் உன்னை நான் சாகவிடமாட்டேன்.
rešo விபீஷணன்:
விடமாட்டேன் அண்ணா நான்விட மாட்டேன் விடமாட்டேன் அண்ணா நான்விட மாட்டேன் உந்தன் பொன்னுயிர் போக்கிடும் போரது மூண்டிட விடமாட்டேன் அண்ணா நான்விட மாட்டேன்.
கும்பகர்ணன்:
வரமாட்டேன் தம்பி நான்வர மாட்டேன் வரமாட்டேன் தம்பி நான்வர மாட்டேன் செய்கடன்தீர்க்கவேஎன் உயிர் போக்குவேன் வரமாட்டேன் களம் விட்டு வரமாட்டேன்
விபீஷணன்:
போரே செய்ய வந்திட்டாலும் பொங்கும் கோபம் கொண்டிட்டாலும் - உந்தன் பொன்னுயிர் போரிலே போகிட என்றும் - நான் விடமாட்டேன் அண்ணா நான் விடமாட்டேன்.
கும்பகர்ணன்:
சமர் செய்தே நொந்திட்டாலும் சாவதனைக் கண்டிட்டாலும் - நானும் செய்கடன்தீர்க்கவே என்னுயிர் போக்குவேன் வரமாட்டேன் களம் விட்டு வரமாட்டேன்
விபீஷணன்:
அண்ணா தயவு செய்து நான் சொல்லுவதைக் கேள். அந்த சிறி ராமச்சந்திரமூர்த்தி தர்மத்தின் மொத்த வடிவம்.
- - “S யோ, யோண்சன் ராஜ்குமார் )40ܢ «

இசலி
தர்மமே தங்கிடு இராமரின் திருப்பாதம் வந்துமே நீ அடைந்துற்றால் உந்தனை மன்னவனாக்குவானண்ணனே என்னுடன் வந்தருள்வாய் நெஞ்சிலே வஞ்சமேயற்ற என் சோதரா வந்திடு என்னுடன் போர்க்களம் விட்டே நிந்தையே தந்திடுஞ் சண்டையை விட்டுடன் பரீ இராமனைச் சேருவாயே.
(கும்பகர்ணன் கோபாவேசத்துடன் சந்நதங்கொள்ளல்)
தும்பகர்ணன்:
கழிவுநடில் சிந்து
நீர்க்கோல வாழ்வை நச்சி
நெடிது நாள் வளர்த்த அண்ணன் போர்க்கோலம் செய்து விட
புறக்கோலங் கொண்டு மாறி பகையோடு கைகோர்த்துப்
புல்லனாய் மாறுவேனோ. பழியோடு பகை சேரும்
போதை போல் ஆகுவேனே.
சிந்து
இப்படியும் சொல்லலாமோ - பணிமறந்து தப்புடன் நடக்கலாமோ
உண்ணுட உணவுடன் உறையுளும் அளித்த வீரன் என்னுடன் பிறந்த அண்ணன் எந்தையெனக் காத்த வண்ணன் சொல்லையும் மீறுவேனோ செஞ் சோற்றுக் கடன் செய்திட மறப்பேனோ இப்போ நீயும் செப்பிய மொழிகளினை
கொல் ஈனுங் கொற்றம் سسسسس""ح

Page 32
எப்படிப் பொறுத்திடுவேன் அற்பனைப் போல் எந்தனையும் தப்பிதமா செய்யச் சொன்னாய்
இப்படியும்.
விகக்கள்
செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்ச் செல்வம்தேறி வம்பிடத் தெரியல் எம்முன் உயிர்கொண்டி பகையை வாழ்த்தி அம்பிட்டுத் துன்னங்கொண்ட புண்ணுடை நெஞ்சொடு ஐய கும்பிட்டு வாழ்கிலேன் யான் கூற்றையும் ஆடல்கொண்டேன்
(étbUჟიrupიru600rð)
(கும்பகர்னன் கோபாவேசத்தோடு)
கும்பகர்ணன்:
விபீஷணா. போதும் உன் வார்த்தைகள். சென்றுவிடு.
விபீஷணன்:
அண்ணா அவசரப்படாதே. உன்னை நான் நன்றாக அறிவேன். நீ அறமுணர்ந்தவன்; அண்ணன் இறந்தபின் மண்ணை ஆள வேண்டியவன். இராவணன் தன் போர் வெறிக்கு உன்னையும் பலியிடத் துணிந்தான் என்பதை நீ ஏன் உணரவில்லை.
கும்பகர்ணன்:
தம்பி. தர்மம் உணர்ந்தவன் நீ தான்; நீ அறவழியிலே சென்றாய் அது தவறில் லை. ஆனாலி நான் உயிரோடிருந்து யாருக்கென்னலாபம். பாதிக்காலம் தூக்கத்திலேயே கழிந்து விடுகிறது. இராவணன் தொடுத்திருப்பது அறமற்ற போர்தான் அதற்காக அவனைத் தனித்து விட்டு வரலாமோ..? தவறு செய்தாலும் அவன் என் சகோதரன். அவனுக்காக இறப்பதில்தான் எனக்குப்
பெருமை இருக்கிறது. அது மட்டுமல்ல நான் இப்போரிலே மாண்டால் தான் அவனும் தன் இயலாமையை உணர்வான். அதன் பின் சீதையை சிறை விடுவிக்கவும் கூடும். செஞ் சோற்றுக் கடன் தீர்க்காத மானிட வாழ்வென்ன வாழ்வு என்னை மன்னித்து விடு. நீ. சென்று வா.
(கும்பகர்ணன் வேகமாக வெளியேறுதல்)
142 N யோ, யோண்சன்ராஜ்குமார் سس ح

aagawai:
அண்ணா இதுதான் உன் முடிவா? ஆனால் ஒன்றுமட்டும் உறுதி! உன்னை இந்தச் சமரிலே நான் இழக்கமாட்டேன். சென்று வருகிறேன்.
(விபீஷணன் சோகத்துடனும், தோல்வி உணர்வுடனும் தள்நடை பயில்வான். சபையோர் பாடல் இசைப்பள்)
PaceluGuurrñir:
நெஞ்சில் சுமை கொண்டு சென்றனன் - அண்ணன்
கொண்ட நெறி கண்டு வெம்பரினன் போரைத்தடுத்திடப் போந்தனன் - பாவம்
ஏதுமியலாது மீண்டனன்
நீதி மறந்திட்ட போரிலே - உயர்
மானிடம் மாண்டிடும் வீணதாய்
சாந்தி நிலைத்திட வேண்டியே - செய்யும்
சங்கதி தோற்றிடும் உண்மையே
トーーイ கொல் ஈனுங் கொற்றம்

Page 33
ais sil-leá9 - 8
(விபீஷணன் இராமனைச் சந்தித்தல்)
இராமன்:
விபீஷணா நீ ஆவலோடு உன் சோதரனைத் தேடிச் சென்றாய் இன்று வாடிய வதனத்துடன் வந்திருக்கின்றாய் உன்னைக்கண்டதும் நிலைமையை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன்.
கொச்சகம்
விபீஷணன்:
ஆவல் கொண்டே அண்ணனாரை
காண வென்றே களமதிலே
காவல் மீறிச் சென்றேன் அங்கே
கலங்கி வாடி வந்தேனிங்கே
இராவணேசன் வார்த்தை தன்னை
மீறிடாத சோதரனும்
போரதிலே மாண்டொழிய
சித்தமானான் சோதியனே
(இராமன் தாளத்துக்கேற்ப கோபத்துடன் ஆடித் தணிதல்)
LSL SSSSSSS سس AA<( யோ, யோண்சன் ராஜ்குமார் Nހ " "ބ"
 

இராமன்:
சமரிலே சாகிடும் அவனுடைய தலைவிதியை யார்தான் மாற்ற முடியும்?
விபீஷணன்:
அப்படிச் சொல்லாதே சிறி ராமா. நீ எனக்கொரு வாக்குறுதி தரவேண்டும்.
இராமன்:
என்ன வாக்குறுதி விபீஷணா?
விபீஷணன்:
இராமன்:
விபீஷணன்
திரு
தர்மமே நிறை தலைவா ராமா - கும்ப கர்ணனுயிர் காருமையா நேசா
செய்கடனைத் தீர்க்கவென்றே போர்க்களத்தே சாக வந்தான் உண்மையுடைய சோதரனை காத்திடவே வேண்டுமையா.
யுத்தமே புரிய வந்தான் அண்ணன் - நாங்கள் சத்தமின்றிச் செல்லலாமோ கண்ணா
சமரென்றால் சமர் செய்வோம் சரணென்றால் சாந்தமாவோம் பேராண்மை கொண்டே போரில் தவறேன் நான் உன்மேல் ஆணை
மெத்தவும் உறுதியுடை கர்ணன் - அவன் சித்தமது மாறிடாது வர்ணா இலங்கா புரி தன்னை ஆள தேவை அவன் நாளை ஐயா எந்த நிலை வந்தபோதும் கொன்றிடாதே காருமையா
○エト) SSSSSSSS கொல் ஈனுங் கொற்றம் سے "ہحلا

Page 34
இராமன்:
யுத்தமதை நத்தி வந்தான் அண்ணன் - போரில் செத்திடுவான் உத்தமனே கேளாய்
சத்தியமே தானறிந்தும் யுததமதை நாடி வநதான முத்தியவன் தானடைய இத்தரையில் நானழிப்பேன்
இராமன்:
விபீஷணா. உன்னுடைய வேண்டுதல் எனக்கு விந்தையாக இருக்கின்றது. போரிட வரும் கும்பகர்ணனை கொன்றிடாது காத்தல் எந்த வகையில் நியாயம்?
விபீஷணன்:
ஐயனே, கும்பகள்ணன் வெல்லற்கரியவன். ஆனால், இது தர்மமற்ற யுத்தமென்பதால் அவனால் நிச்சயமாக வெல்ல முடியாது. அவனை நீ வெற்றிகொள். ஆனால், கொன்று விடாதே!
இராமன்:
அதை எப்படி உறுதியாகக் கூறமுடியும் விபீஷணா.
பாடல்
விபீஷணன்:
நீல வண்ணா இராமநாதா
நீதியை அறிந்த வேதா - எந்தன்
சின்ன அண்ணன் கும்பகர்ணன்
இந்த மண்ணின் சொந்தமையா
பேராண்மையே கொண்ட வீரா
அண்ணனுயிர் காருமையா
இராமன்:
விபீஷணா என்னைச் சோதிக்காதே நான் இப்போது உனக்கு எந்த உறுதி மொழியையும் தர முடியாது.
adhangarorGir:
இன்று போய் போரிற்கு நாளை வா என்று இராவணனுக்கு நீதானே
யோ, யோண்சன் ராஜ்குமார் ༦ 46>ཕྱི་

கூறினாய். அன்று காட்டிய பேராண்மையை இன்றும் காட்டும்படி தானே கேட்கிறேன்.
இராமன்:
ஆம் உன் அண்ணனைக் கொல்லாது அனுப்பியபடியால்தான் இன்று உன் சின்னண்ணனை போருக்கு அனுப்பி வைத்துள்ளான். gFf கலங்காது செல் களநிலைக்கு ஏற்ப உன் வேண்டுகோள் ஏற்கப்படும்.
(இராமன் வேகமாக வெளியேற, விபீஷணன் மிகுந்த சோகத்துடன் மறுபுறமாக வெளியேறுதல்)
கொல் ஈனுங் கொற்றம் ألكسس حلا

Page 35
asInEleá9 - 9
(சபையோர் மீளவும் அரங்கில் நின்று கதையுரைப்பள்)
ஆசரியம் கட்டியன்:
போரது தடுத்திடப் போனவர் தோற்றனர் பொருதிடும் போர் வெறி தணிந்தில லங்கையில் இராவணன் படைகளும் ராகவன் சேனையும் ஆர்த்தெழுந் தமர் களம் ஏகினாரே
சபையோர்:
1: அந்த விடிகாலை. இன்னுமொரு அஸ்தமனத்தின் ஆரம்பம்
2: அறமுணர்ந்து போர் தவிர்த்திடப் புகன்று
தோற்றபின் போருக்கே வந்திட்டான் - ஒரு காளை.
8: கலங்கிடா நெஞ்சன்; கடைசி உயிர்த்துளியையும்
களத்திலே கரைத்திடும் உரமேறிய உள்ளத்தோன்;
○エの
யோ. யோண்சன் ராஜ்குமார்
 

: பகையினால் அன்றி பாசத்தால் படைகொண்டு
போர்க்களம் வந்துற்றான்.
s: தன் தேவியை மீட்டிட வந்துற்ற வீரனும்
போர்தவிர்த்திடப் பான்மைகள் செய்தான்.
தூதுகள், தோற்றன;
1: துவேஷமோ நீங்கில.
ஆசளியம்
கட்டியன்:
கோரமாய் மூண்டதே போரதே மீண்டும் புஜபலம் பார்த்திடும் பரணியாய் பூமியில் ஆனைகள் தானைகள் அரி பரி சேனைகள் புயலெனப் புகுந்தனரே.
(போர் தொடங்குதல் - சபையோர் பாடலைப்பாடியவாறு இருப்பிடத்திற்கு வர, சங்கு, முரசமதிர போர்க்காட்சி ஆரம்பமாகும்)
(இரு படைகளும் வெவ்வேறு ஆடல் கோலத்துடன் வேகமாக நுழைவர்)
60)
தனத்த தானா தனதன தானினா தனத்த தானா தனதன தானினா
கொற்றவன் இராவணன் சொற்படி சமரது உக்கிரமாகவே வந்தது இலங்கையில் சுற்றமதிர்ந்திடச் சங்கு முழங்கிடக் கேளுங்கோ
தனத்த தானா. வானர சேனைகள் வலி மிகு தானைகள் விரைந்து போர்க்களம் எழுந்து வந்தனர் ஆனை கரி பரி வாரமெழுந்தது பாருங்கோ.
தனத்த தானா.
கால் ஈனுங் கொற்றம்

Page 36
(இரு படைகளும் மோதுதல் - பாடல் தருவிற்கேற்ப வெவ்வேறு திசைகளில் போர்க்காட்சி நடைபெறும்)
வீரன்:
சண்டையே புரி வந்த வானர மிண்ட்ரே அறிவீர் - படை கொண்டே ஓடிடுவீர் - அன்றேல் மண்டியேயிடுவீர் - இன்றேல் கண்டதுண்டமாய் கொன்று போட்டுமே வென்று மீண்டிடுவோம் - உடன் சென்று போய் மறைவீர்.
கக்கிரீவன்
ராமரின் படை சண்டை கண்டுமே அஞ்சிடாதுணர்வீர் - என்றும் துஞ்சிடாதறிவீர் - எம்மை மிஞ்சிடீர் புரிவீர் - மற வீரரின் அதி திரமே நிறை போரிலே மடிவீர் - உடன் ஒடியே மறைவீர்
(பாடல் இசைத் தருவுக்கு ஏற்ப வேறுபட்ட கோலங்களில் யுத்தம் நடைபெறும். சுக்கிரீவனின் படைகள் கும்பகர்ணனின் படைகளை தோற்கச் செய்தல். கும்பகர்ணன்போரில் தோன்றுதல் கும்பகர்னனும் இலட்சுமணனும் மோதல்)
கும்பகர்ணன்:
இராகவன் தம்பி நீ. அந்த இராவணன் தம்பி நான் வென்று போர் தன்னிலே யார் வல்லவர் பார்க்கல்லாம்
இலட்சுமணன்:
தூக்கத்தின் மன்னனே நீ பார்க்கத்தான் போகிறாய் யார் பராக்கிரமம் வென்றிடும் போர் தன்னிலே காணுவாய்.
1so N. Cun, Cunekoek pngbSuomst トー一イ

தும்பகர்ணன்:
என்னுடனா போரிட வந்தீர் - அடாவீரரே என்னுடனா போரிட வந்தீர்
வீரமதுந்தனை வீழ்த்திடுமே - புஜ திரமதால் பகை ஒட்டிடுவேன் - வெகு காரமதாய் கணை ஏற்றிடுவேன் - உயிர் காவி மறைந்து ஒழிந்திடுவீர் சீறி எழுந்த விரிந்த சமர்தனில்
பாறி விழுந்து அழிந்து மடிந்திட
என்னுடனா.
(வானரப் படைகள் தோற்று வருந்திட இராமன் தோன்றுதல். இராமனுக்கும், கும்பகர்னனுக்குமிடையே ஆடல்போர் இசைக்கேற்பநடைபெறுகிறது)
5ts
СЈпшpєй:
சத்தியனே சமர் உற்றிட வந்தனை
நித்திய நித்திரை கொண்டிட எண்ணமோ இத்தரை மீதினில் உன்தலை பந்தென
வந்து விழுந்திடு முந்தி நகர்ந்திடு
கும்பகர்ணன்:
உத்தமனே தவ நித்தியனே - நான்
செத்திடினும் சமர் விட்டு நகர்ந்திடேன் எத்தனை உன் படை அத்தனையும் விடு
கொன்று அழித்து நான் வென்று முடித்திட
(கும்பகர்னனின் படைகள் அழிதல்)
கொல் ஈனுங் கொற்றம் سلاح |

Page 37
வேறு தரு
இராமன்:
வீரனே சென்று மறைந்திடு உன்னுயிர் காத்து நிறைந்திடு வீசிடு பாணமதுந்தனை வீழ்த்திடலின் முன்னே.
(கும்பகர்ணன் விடாது சண்டை செய்தல். அவனது கை துண்டாடப்படல்)
கும்பகள்ணன்
அங்கங்கள் துண்டுகளாயினும் பங்கமே வந்து மடியினும் கொண்ட போர்க் கோலமே மாறிடேன் வென்றுபார் வேதியனே நீ
(மற்றைய கையும் ஒருகாலும் துண்டிக்கப்படல். கும்பகர்ணன் ஒற்றைக்காலுடன் போரிடல்)
&F555d
இராமன்:
அறமது நிலை பெற பகையது அழிந்துற போர் புரிந்திட ஏகி சிலையென உனதுடல் பிளந்துயிர் போக்கிட கணையது ஏகினேனே
கும்பகர்ணன்:
ஊனுடலுடைந்தொரு காலொடு போர் புரியும் இழிநிலையது வரினும் எனதுயிர் துளியது இருந்திடு வரையினும் புறமுதுகிடுகிலேனே.
<エトの யோ, யோண்சன்ராஜ்குமார் <سس ح

(கும்பகர்ணன் ஒற்றைக் காலுடன் கோரமாய்யுத்தம் செய்தல்)
Dompsir:
விபீஷணா என்னை மன்னித்து விடு! இராவணனோ உயிர்காத்து ஓடினான். கும்பகர்ணனோ இறுதிமூச்சு உள்ளளவும் சண்டை செய்கிறான். அவனைக் கொல்லாது போரில் வெல்ல முடியாது!
56 gyrruDesir:
தொடுகணை பலவுனை தறித்துயிர் வதைத்துமே சலித்திடாதிருப்பவனே விடுகணையிது உனை விரைந்துயிர் போக்கிடும் சென்று வா சோதியனே
(இராமன் அம்புகும்பகர்ணனை வீழ்த்துகின்றது. கும்பகர்ணன் போரில் விழுந்து இறத்தல். இராகவன் படைகள் அணிவகுத்து மரியாதைசெய்து திரும்புதல். சபையோர் ஓடிவந்து கும்பகர்னனை சூழநின்று சோகமாய் பாடுவர்)
கொல் ஈனுங் கொற்றம் كسسT<"

Page 38
asses - O
அகவல்
கட்டியன்:
இணையில்லா வீரன் போரில்
இறந்தனன் காணிர் இங்கே
கருணையால் கார் இருண்டே
கண்ணிர் சொரிந்ததையே
நிலமகள் துயர் மிகுந்தே
நெடியவன் உடல் சுமந்தே
வருந்தினாள் வையகமே
அதிர்ந்ததே அறிகுவீரே
விபீஷணன்:
அண்ணா நீ சொன்னபடி மாண்டனையோ..? அண்ணா. இராவணா உன்னுடைய சொந்த நலனுக்காய் சோதரனை கொன்றுவிட்டாயே. இத்தோடு உன் போர் வெறி தீருமா?
(இராவணன் அலறியபடி வருதல்)
யோ, யோண்சன் ராஜ்குமார்
 

கொச்சகம்
இராவணன்:
தர்ம முரைத்த தனி வீரன் சமராடித் தரையினிலே
சரிந்தா போனான் தாயகமே பதிலுரையாய் கர்வமுடை எந்தனது கதி அழிந்துபோனதையா
கடனழித்தே உன்னுயிரை களமளித்த காவியமே
தடு
மடிந்தனையோ மாவீரனே போர்முகத்திலின்றே - உன்னை கொன்று பழி நான் சுமந்தேன் என்னவனே திரா!
அறமுரைத்தாய் அண்ணனுக்கே அன்புடைய சீலா - உன்னை அம்புகொண்டு யாரழித்தார் என்னுடைய வீரா!
வெட்டியுன்னை யார் தறித்தார் சோதரனே நேசா - உந்தன் கட்டுடலை ஏன் சிதைத்தார் காருண்யனே வாசா!
இராவணன்:
என் தம்பியைக் கொன்றவர், சாகிடும் வரையிலும் என் சினம் தீராது.! போர். போர்.
60)
இலங்கேஸ்வரா. நிறுத்து! இன்னமும் நீ திருந்தவில்லை. நேற்றைய போரில் தோற்று வந்தனை. ஆயினும் நீ பாடம் படித்தில! இன்றைய போரில் இளவலை இழந்தனை. இதிலும் நீ பாடம் படித்தில! போர்தந்த பாடங்கள் ஏன் உன்னைச் சுடவில்லை! மீண்டும் மீண்டும் பாடமது கற்றிடவா புகுந்து நின்றனை?
இராவணன்:
இல்லை. அவர்களுக்கு பாடம் புகட்டுகின்றேன். எங்கே என்மகன்
இந்திரஜித்தன்..!
(சபையோர் ஓடிவந்து மறித்தல்)
《། ། ༦།55།) கொல் ஈனுங் கொற்றம்

Page 39
சபையோர்:
இராவணன்:
போதும் மன்னா போதுமே மன்னா போர் வேண்டாம் மன்னா போதும் மன்னா போதுமே மன்னா
நீதியே பிழைத்த தையா போரதே விடுத்திடையா நாசமாய் உயிர்கள் சாகும் நீசச் சண்டை வேண்டாமையா பாசமுடை தேசந்தன்னை பாதுகாத்தல் வேண்டுமையா போர் தவிர் பகை தொலை சிதையை சிறை விடு.
போதும் மன்னா
கல்வெட்டு
அட்டகிரி அத்தனையும் வெட்டவெளியாகினும் துட்டரவர் உடன்பிறப்பை துண்டுதுண்டாயாக்கினும் கட்டுடலை வெட்டியவர் கண்ணணெதிரே போடினும் பட்டமரமொத்தவனாய் பாயிலே சரிகிலேன் நட்டமென உயிரிழந்து நாசமாய் ஆகினும் விட்டுவிடேன் பகைவரது கொட்டமேயடக்குவேன்
சநததம
எத்திசையும் எழு வித்தகர் வந்திங்கு சத்தமே செய்திடினும் செத்தவராயிரம் இத்தரை விழினும் யுத்தம் நிறுத்திடனே.
சக்தி மிகுந்திட்ட தசரதன் புத்திரர்
சித்தங்கொண்டே வரினும் - அவர்
முத்தியடைந்திடச் செய்வேன் சமர் சீதையை சிறைவிடேனே.
இலங்கை வேந்தன் இழப்பைக் கண்டு கலங்குபவனல்ல. எதிரியை முறியடித்து, என் வீரத்தை அவர்க்குணர்த்தும்வரை ஒயப்போகின்ற வனுமல்ல. போர்.! போர்.!
1ss. N
யோ. யோண்சன் ராஜ்குமார் トーーイ

(கோரமாய் ஆடல் புரிந்தவாறு இராவணன் வெளியேறுதல்)
கட்டியன்:
சபையோர்:
கோரச்சமராடும் கொற்றமே கொல்லிந்து நீ ஆளும் காலமது நிலையாது காலை புலரும் உன் களங்கத்தின் விலையும் தெரியும்!
(சபையோர் அரங்கில் நின்று பாடல் பாடுவர்)
த்டு
பூமியிலே போரதனால் - பலி ஆனவர்கள் ஆயிரமாயிரம் பலமுடையோர் பலர் திறமுடையோர் பலர் பயனுடையோர் பலர் அறமுணர்ந்தோர் பலர் அவர் நிலையை ஒதிநின்றோம் - கும்ப கர்ணன் கதை கூறிநின்றோம் சபை
மங்களங்கள் ஒதிடுவோம் - மண்ணில் சாந்தியதே தங்கிடவே எங்கும் மங்களமே மங்களமே - சுப மங்களமே மங்களமே
வாழி பாருதல்
வாழியதே புவி வாழியதே - பொல்லாப் பகையழிந்தே நீதி வாழியவே
நீதியுடை அமைதி வந்திடவே - நாமும் ஒதிடுவோம் சிந்து பாவினிலே
மானிடத்தைக் கொல்லும் போரழிந்தே - மண்ணில் மாண்புடைய சாந்தி தோன்றிடவே,
முற்றும்
கால் ஈனுங் கொற்றம்

Page 40
கொல் ஈனுங் கொற்றம் கூத்துருவ நாடகத்திற்குப் பயன்படுத்தப்படீடபாடல் மெடீடுக்களரும், ஆடற் தருக்களறம்
1. காப்பு விருத்தம்,பாடல், பக்.04
"ஆதியோடந்தமில்லா."
2. கட்டியகாரன் வரவு தரு, பக்.05 "கட்டியகாரனும் வந்தேனே."
3. கட்டியன் கதையுரைத்தல், பக்.06
"நீதியே தவறிடும்."
4. F60)u(Surf LuTL6), Uds.06
"பூமியிலே போரதனால்.
5. இராவணன் வரவு, பக்.08
"லங்காபுரி கிரியென."
6. சண்டைத்தரு, பக்.09
"கொற்றவன் இராவணன்."
7. கட்டியன் விருத்தம், பக்.09
"வாரணம் பொருதமார்பன்."
யாழ்ப்பாண தென்மோடி மரபு மெட்டு :- தோடையம் மூலம் :- மரியதாசன், பக். - 01
மன்னார் வடபாங்கு மரபு மெட்டு :- "கலிலேயாவின்."
மூலம் - புரட்சித்துறவி
யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
மெட்டு :- ஆசிரிய விருத்தம் மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக். - 55
மன்னார் தென்பாங்கு மரபு மெட்டு : “இஸ்ராயேலின்." மூலம் :- புரட்சித்துறவி
யாழ்ப்பாணம் தென்மோடி மரபு மெட்டு :- "துணிவோடே." மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக். - 13
மன்னார் தென்பாங்கு மரபு மெட்டு : “அரிந்து பகைவர். (p6)lb :- இலங்கேஸ்வரன்
மட்டக்களப்பு வடமோடி மரபு
மெட்டு :- விருத்தம்
"தண்டத்தை கையிலேந்தி." மூலம் :- இராவணேசன், பக்.23
8. இராவணன் தரு, பக்.10
"போர்க்களத்தே நான் விழந்தேன்"
9. கட்டியன் கவி, பக்.11 "அறமதை பிறழ்ந்து."
10 சபையோர் பாடல், பக்.11
சிந்து நடைக்கூத்து மரபு மெட்டு : “பால் இந்தா பெற்றி பெற்றி" (p6)b :- காத்தவராயன்
யாழ்ப்பாணம் தென்மோடி மரபு மெட்டு - வசன கவி மூலம் :- கண்டி அரசன்
யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
"போதும் மன்னா.” மெட்டு : "கேடு செல்ல போகுமோ." மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக் - 20
_イエト
யோ, யோண்சன் ராஜ்குமார் ༦༤ 58 །>>)

கட்டியன் விருத்தம், பக்.12 மன்னார் தென்பாங்கு மரபு
“போரிலே வெற்றி என்றும்." மெட்டு :- விருத்தம்
மூலம் - புரட்சித்துறவி
12. மாலியவான் வரவு, பக்.13 முல்லைத்தீவு கோவலன் கூத்துமரபு
"சித்தமுரைத்திட." மெட்டு :- “பணிக்கர் சிகாமணி."
ep6)b :- வேழம்படுத்த வீராங்கனை
13 இராவணன் மாலியவான், பக்.13 யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
“மூர்த்திகள் மூவரை." மெட்டு : “அன்பு மதியுரை.”
eyp6)Lib :- LD60Tb8LuT6d DMFĒJG56ðu ub, Luis. - 02
14. இராவணன் கவி, பக்.15 யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
"மெய்மறந்து தான்மயங்கி." மெட்டு : கவி
15. இராவ. மண். உரையாடல்,பக்.16 முல்லைத்தீவு கோவலன் கூத்து மரபு
"வெந்து அழிந்து.' மெட்டு :- "செல்வத்துரைத்தனம்’
மூலம் :- கோவலன் கூத்து, பக். - 117
16. மண்டோதரி, பக்.17 யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
"குற்றமில்லா கோவெனவே." மெட்டு - "இன்னிசை வாட்டியுமை."
மூலம் ;. மரியதாசன், பக். - 93
17. மல்லர்கள் வரவு, பக்.19 யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
"மாளிகைதனை." மெட்டு :- “கண்டி அரசனுரைத்தபடியே”
ep6)b - கண்டியரசன், பக். - 73
18. மல்லர் பாடல் (வேறு), பக்.20 D60d6dul J35 Lb 35FTLD6ST Güngög5 LDIJL
"எல்லாவழியும் செய்து." மெட்டு :-"பொல்லாநல்லோர் கனவு கண்டேன்"
மூலம் :- காமன் கூத்து
19. சபையோர் தரு, பக்.22 தென்மோடி மரபு
"சங்குடன் மணியெழுந்து." மெட்டு :- சந்ததத் தாழிசை மூலம் :- தேவசகாயம்பிள்ளை
20. கும்பகர்ணன் வரவு, பக்.22 தென்மோடி மரபு
"அண்டமது கலங்க மண்டல.”மெட்டு :- "கூனற்ற வளைசங்கு."
ep6)lb 1. தேவசகாயம்பிள்ளை, பக். - 80
21. சபைத்தரு, பக்.23 மன்னார் தென்பாங்கு
"கும்பகர்ணன் அன்போடு." மெட்டு : “நூறுகோடி பேர்கள்"
ep6)Lib :- இராவணேசன்
22. கும்பகர். இராவணன் தரு, பக்.23 தென்மோடி மரபு
"வாராயப் என் சோதரனே." மெட்டு :- "வாராய் என் வஞ்சகியே”
மூலம் :- ஜெனோவா
"59 S
N- 11 கொல் ஈனுங் கொற்றம்

Page 41
23. கும்பகர்ணன் கோபத்தரு, பக்.24 தென்மோடி மரபு
"அண்டமிடியுண்டதோ..." மெட்டு :- கழிநெடில் தரு “வெற்றிமண்.”
ep6)b - கண்டி அரசன், பக். - 106
24. கும்ப. இராவ. விவாதம், பக்.26 தென்மோடி மரபு
‘ஐயனே சோதரனே.” மெட்டு :- "ஆழிப்பார் அரசரெனக்கிணை"
மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக். - 73
25. இராவணன் கோபம், பக்.26 தென்மோடி மரபு "பெருவலி வீரன்." மெட்டு :- கவி
26. கும்பகர்ணன் உரை, பக்.27 தென்மோடி மரபு
"அண்ணலே சோதரா." மெட்டு : ஆசிரிய விருத்தம்
27. இராவணன் சூழுரை, பக்.28 தென்மோடி மரபு
"திடமோடு வாழு." மெட்டு :- இசலி "எனதன்பு நேச.”
மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக். - 108
28. சபையோர் தரு, பக்.28 மன்னார் தென்பாங்கு மரபு "சாவு அழைத்திட." மெட்டு :- “யாரடா நீ.” மூலம் :- புரட்சித்துறவி
29. கும்ப, போர்க்களம் புகுதல்,பக்.29 முல்லைத்தீவு கோவலன் கூத்து மரபு
"எண்டிசையுமதிர." மெட்டு :- "தெப்பக்கயிறெடுத்து."
(p6)lb . வேழம்படுத்த வீராங்கனை
30. இராமன் கொலு, பக்.31 மட்டக்களப்பு வடமோடி வரவு
"தாம் தாகிட." மெட்டு :- இராசவரவு ஆட்டக்கோலம்
ep6)lb :- இராவணேசன், பக். - 22
31. வரவுப்பாடல்கள், பக்.31 தென்மோடி மரபு
"தர்மம் நிலை பெறவே." மெட்டு : “அதியுக்ரமலோலன்”
மூலம் :- தேவசகாயம்பிள்ளை, பக். - 07
32. இராமன் விபீ. உரையாடல்,பக்.33 மட்டக்களப்பு தென்மோடி மரபு
"புவிகண்டு நடுங்கிட." மெட்டு : "அசைவற்ற இசைபெற்ற.."
மூலம் :- அனுவுத்திரன், பக்
33. விபீஷணன் தரு, பக்.33 முல்லைத்தீவு கோவலன் கூத்து மரபு
"பக்திமிகு சத்தியன்." மெட்டு : “ஆலமரத்தின் கொப்பிலை."
மூலம் :- கோவலன் கூத்து, பக். - 125
34. இராமன் உரை, பக்.34 தென்மோடி மரபு
'அறமுணர் பெரியோயப்." மெட்டு :- கவி
-(160)
யோ. யோண்சன்ராஜ்குமார் سح

35.
36.
37.
38.
39.
40.
41.
A2.
碑3。
geousurf list L6), UdS.36 சிந்து நடைக் கூத்து மரபு “சோதரனைக் காண." மெட்டு - "ஆதிசிவன் மைந்தனல்லோ.”
ep6)lb :- காத்தவராயன்
போர்வீரர் சுற்றிவளைத்தல்,பக்.37 மன்னார் தென்பாங்கு மரபு
"பேதையேபார் உன்னையே." மெட்டு :- விருத்தம்
மூலம் - புரட்சித்துறவி
கட்டியன் தரு, பக்.37 தென்மோடி மரபு
“பொறுதியே கொள்வீர்.” மெட்டு :- ஆசரியம்
விபீஷணன் கும்ப சந்திப்பு,பக்.39 சிந்துநடைக் கூத்து மரபு
"எங்கு வந்தாய் தம்பி." மெட்டு :- "மஞ்சளல்லோ மஞ்சள்."
(p6)b :- காத்தவராயன்
விபீஷ. கும்ப, தர்க்கம், பக்.40 சிந்துநடைக் கூத்து மரபு
"விடமாட்டேன்." மெட்டு : “விடமாட்டேன்."
ep6) b :- காத்தவராயன்
விபீஷணன் தரு, பக்.41 தென்மோடி மெட்டு "தர்மமே தங்கிடு." மெட்டு :- "இசலி "எனதன்பு நேச.”
(p6)tb :- தேவசகாயம்பிள்ளை, பக். - 108
கும்பகர்ணன் தரு, பக்.41 தென்மோடி மரபு “நீர்க்கோல வாழ்வை நம்பி." மெட்டு :- கழிநெடில் சிந்து
"இப்படிக் கெறுவுமாச்சோ ep6)lb - விஜயமனோகரன், பக். - 21
சபையோர் பாடல், பக்.43 கோவலன் கூத்து மரபு “நெஞ்சில் சுமை கொண்டு." மெட்டு :- "சொல்லக்கேளும்.”
மூலம் :- கோவலன் கூத்து
விபீஷணன் தரு, பக்44 தென்மோடி மரபு "ஆவல் கொண்டே அண்ணனாரை" மெட்டு :- கொச்சகம்
மூலம் :- மரியதாசன், பக். - 14
இராமன் விபீ. தர்க்கம், பக்.45 மன்னார் தென்பாங்கு "தர்மமே நிறை தலைவா." மெட்டு :- "மெத்தவும் கெறுவுடைய..."
மூலம் :- இலங்கேஸ்வரன்
விபீஷணன் வேண்டல், பக்.46 தென்மோடி மரபு
"நீலவண்ண இராமநாதா." மெட்டு :- "கொண்டு வந்தேன்" (நடைசாரி)
ep6)tb : இடமில்லை
<-- 61 كـ
கொல் ஈனுங் கொற்றம் سس"<"

Page 42
46.
47.
48.
49.
SO.
5.
52.
53.
54.
55.
56.
57.
கட்டியன் தரு, பக்.48 "போரது தடுத்திட போனவர்."
சபையோர் சண்டைத்தரு, பக்.49 "கொற்றவன் இராவணன்."
வீரர் சண்டைத்தரு, பக்.50 "சண்டையேபுரி வந்தவான்ர."
கும்பகர்ணன் சண்டைத்தரு,பக்.51 "என்னுடனா போரிட."
இரா. கும்ப. சண்டைத்தரு, பக்.51தென்மோடி
"சத்தியனே சமர்.”
சண்டைத்தரு வேறு, பக்.52 "வீரனே சென்று மறைந்திடு."
சண்டைத்தரு வேறு, பக்.52 "அறமது நிலைபெற."
af60)L(Surf se66)lb, Luds.54 "இணையில்லா வீரன்."
இராவணன் துன்பம், பக்.55 "தர்மமே உரைத்த."
இராவணன் துன்பம் தரு, பக்.55 "மடிந்தனையோ..."
சபையோர் தரு, பக்.56
"போதும் மன்னா."
இராவணன் சூழுரை, பக்.56 "அட்டகிரி."
யோ. யோண்சன் ராஜ்குமார்
C62)
தென்மோடி மரபு மெட்டு :- ஆசரியம் ep6)lb :- கம்பன் மகன்
மன்னார் தென்பாங்கு மரபு மெட்டு :- "தனத்த தானா." மூலம் :- இலங்கேஸ்வரன்
தென்மோடி மரபு மெட்டு : “கண்டமெங்கிலும்.”
மூலம் - மனம்போல் மாங்கல்யம், பக். - 12
யாழ்ப்பாணம் வடமோடி மரபு
மெட்டு "stairst LT 5...' மூலம் :- தர்மபுத்திரன்
LDJIL மெட்டு :- “தேனிலவதைகளை." மூலம் :- சங்கிலியன்
தென்மோடி மரபு மெட்டு : “ஆழிப்பார்.” ep6)lb - தேவசகாயம்பிள்ளை
தென்மோடி மரபு மெட்டு :- சந்தத விருத்தம் ep6)lb :- மரியதாசன், பக். - 3
தென்மோடி மரபு மெட்டு :- அகவல் மூலம் :- தேவசகாயம்பிள்ளை
தென்மோடி மரபு மெட்டு :- "கொச்சகம்"
சிந்துநடைக் கூத்துமரபு மெட்டு - "முதலாம் படி ஏறியல்லோ." மூலம் :- காத்தவராயன்
யாழ்ப்பாணம் தென்மோடி மரபு (UITL6 - 10)
யாழ்ப்பாணம் தென்மோடி மரபு மெட்டு :- கழிநெடில் (மு.பா.இல. 42)

58
59.
60.
. இராவணன் சூழுரைத்தரு, பக்.56 யாழ்ப்பாணம் தென்மோடி மரபு
“எத்திசையுமெழு." மெட்டு :- சந்தத விருத்தம் (மு.பா.இல. 53)
சபையோர் தரு, பக்.57 மன்னார் தென்பாங்கு "Liu (86)...' மெட்டு :- (மு.பா.இல. 04)
வாழி பாடுதல், பக்.57 கோவலன் கூத்து மரபு
மெட்டு : “மங்களமே” மூலம் :- கோவலன் கூத்து, பக். - 227
நாடக ஆக்கத்திற்கான மூலநூல்: கம்பராமாயணம், (வை.மு.கோ. பதிப்பு).
கொல் ஈனுங் கொற்றம் ألكسس كأحد

Page 43

“அறம் பிறழ்ந்து போர் நயந்து ஆளுகை செய் கொற்றம் திறன்கள் நிறை இன்னுயிர்கள் கொன்றொழிக்கும் கூற்றம்’
கொல் ஈனுங் கொற்றம்
கூத்துருவ நாடகம்
அறங்காடியோர்.
பி. யூல்ஸ் கொலின் செ. வசன்பேக் ஏ. ஆர். விஜயகுமார் அ.தயான் இ. ஜெயகாந்தன் யே. விமல்ராஜ்
தை. யஸ்ரின் ஜெலூட் யோ. யஸ்ரின் பேனாட்
அ. அன்று யூலியஸ் ப. வரகுணன்
ஆ. சர்வலோகநாதன் யோ. யோண்சன் ராஜ்குமார்
ஜே. ஜெயகாந்தன் லி. யூனிஸ் ஜெனிசியா
யோ. அருள்ராஜ் தை. சுஜானந்தி
அ. மேரிஜீவிதா இ. மோகனராஜ் ஸ். றெஜி லூசியா . ങ്ങേ பி. சிந்துப்பிரியா அ. ரஜீவ் டொ. பற்றீசியா ஜோ. ஜெஸ்ரின்
0. றெ. அருள் தர்மினி ச. தாசன சா. ஜிவாஜினி
வே, ஒமெக்சன் அ. யூடிற் றீகலினா அ. யசிதரன் இ. துஷாந்தினி இ.இ. சுமன் ஏ. அன்ரனற் ஜொபினா பு. றொபேட் சுதர்சன் பா. கமலேஸ்வரி லோ. சதீஸ்குமார் சா.வி. மேரி சாளினி ம. ரொனி ஜெயச்சந்திரன் ப. கியூறிட்டா வே. சுமன்ராஜ் வி. திவ்யா
15 N.
トーーイ கொல் ஈனுங் கொற்றம்

Page 44
இசைக்கலைஞர்கள்
66th
GBajL 9 edL. 8ůueCDeor
அரங்கப் பொருட்கள்
ஊடகத் தொடர்பு
நிர்வாக உதவி
நெறியாக்க உதவி
எழுத்துருவாக்கம் நெறியாள்கை
மேற்பார்வை
தயாரிப்பு
யோ, யோண்சன் ராஜ்குமார்
அ. பாலதாஸ் தை. யஸ்ரின் ஜெலூட் கு. அற்புதன் ஜே. அன்ரன் நீ. பிஸ்மார்க் எஸ். பெகின் பீ. சே. கலீஸ்
அ. ஜோசப் அ. அன்ரன் மரியசேவியர் அ. அன்ரன் எமிலியானுஸ் கொ. விஜயச்சந்திரன் அ. றொசான் பீ. பொறிஸ் பேக்கர்
ஜே. இக்னேசியஸ் அ. அன்று யூலியஸ் தை. யஸ்ரின் ஜெலூட் வே. சுமன்ராஜ்
ஜி.பி. பேர்மினஸ்
அ. அன்று யூலியஸ்
ஜே. ஜெயகாந்தன்
கி. செல்மர் எமில்
கொ. கரன்சன்
அண்ணாவியார்அ. பாலதாஸ் அண்ணாவியார் அ. பேக்மன் ஜெயராசா தை. யஸ்ரின் ஜெலூட்
ம. சாம் பிரதீபன்
யோ. யோண்சன் ராஜ்குமார்
அருள்திரு. நீ. மரியசேவியர் அடிகள்
திருமறைக் கலாமன்றம், யாழ்ப்பாணம்
KO 66 D

‘கொல் ஈனுங் கொற்றம் - கூத்துருவ நாடகம்
Coca-DLCLUib(DùULL6&LmilabGin
1. 18.12.2004
2. 02.07.2005
3. 31.07.2005 -
4. O7.08.2005
5. 28.08.2005
6. 30.08.2005
7. 21.09.2005
8. 14.10.2005
9. 15.10.2005
முதல் மேடையேற்றம் ; தேசிய நாடகவிழா - 2004, ஜோண் டி சில்வா அரங்கு, கொழும்பு - 07
திருமறைக் கலாமன்றம் 40ஆவது ஆண்டு நிறைவு - கலைச் சங்கமம் நிகழ்வு, புதிய கதிரேசன் மண்டபம், கொழும்பு - 04.
திருமறைக் கலாமன்றம் 40ஆவது ஆண்டு நிறைவு - கலைச் சங்கமம் நிகழ்வு, மன்ற திறந்த வெளியரங்கு, பிரதான வீதி, யாழ்ப்பாணம்.
இளங்கலைஞர் மன்ற மண்டபம், நல்லூர், யாழ்ப்பாணம்.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலக கலாசார விழா, பிரதேசசபை கலாசார மண்டபம், மானிப்பாய், யாழ்ப்பாணம்.
தமிழ்த்தேசியத் தொலைக்காட்சி ஒளிப்பதிவு, தேசிய கல்வியியற் கல்லூரி, கோப்பாய், யாழ்ப்பாணம்.
சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான நிறுவனத்தின் சமாதான தின கலை விழா, மன்ற அரங்கு, யாழ்ப்பாணம்.
தேசிய கல்வியியற் கல்லூரி, வவுனியா.
- கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, மட்டக்களப்பு.
10. 16.10.2005 - வேதநாயகம் மண்டபம், மட்டக்களப்பு (அனுசரணை: மட்டக்களப்பு
திருமறைக் கலாமன்றம்)
11. 17.10.2005 - தி/விவேகானந்தா கல்லூரி, உவர்மலை, திருகோணமலை.
(அனுசரணை: திருகோணமலை திருமறைக் கலாமன்றம்)
12. 18.10.2005 - நகரசபை மண்டபம், மன்னார். (அனுசரணை: மன்னார்
திருமறைக் கலாமன்றம்)
《། 2 འོ།།
○_"7っ கொல் ஈனுங் கொற்றம்

Page 45

குறுயாரிப்பு அனுபவம்
யோ. யோண்சன் ராஜ்குமார்
முன்னுரை
ஈழத்தமிழர்களின் நாடகக்கலை முதுசொம் என்ற வகையில் நாட்டுக்கூத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது தமிழ்த்தேசியம் என்ற சிந்தனையாக்கத்தின் ஒரு விளைவு எனலாம். ஆனால் இந்தக் கூத்துவடிவம் தனக்கான அழகியல் வன்மையை தொடர்ந்து தக்கவைத்துள்ளதா என்பது கேள்விக்குரியதாகும். எமக்கான தனித்துவங்களைத் தேடி இனங்காணும் பயணத்தில் எமக்கான கலைக்குரிய முகமாகவும் முகவரியாகவும் கூத்துக்கள் நிராகரிக்க முடியாதவையாக நிற்கின்றனவே தவிர அவை தன்னிறைவைக் கண்ட கலைகளாக இல்லை என்பதே யதார்த்தமாகும். பிரதேச வடிவவேறுபாடுகள், பிற அரங்க வடிவங்களின் உள்நுழைவுகளால் ஏற்பட்ட பிறழ்வுகள், கிராமங்களின் இறப்பு, போர் அனர்த்தங்கள், இடப்பெயர்வுகள், உலகமயமாக்கலின் விளைவுகள், எதிர்வினைகள் போன்றபலவும் கூத்தின் தனித்துவ அழகியல் முனைப்பை நோக்கிய நகள்வில் சிக்கல்களை ஏற்படுத்தி நிற்கின்றன. இதனைப்பற்றி ஆராய்வதுடன் இதற்கு விமோசனம் காணமுயன்ற எனது பரீட்சார்த்த முயற்சியாகிய 'கொல் ஈனுங் கொற்றம்' என்ற கூத்துருவ நாடகத்தின் தயாரிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொள்வதுமே இக்கட்டுரையாக்கத்தின் நோக்கமாகும்.
வரலாற்று மீள்பார்வை
கூத்துக்கள் கிராமங்கள் தோறும் சடங்காகவும், வாழ்வியல் அம்சங்களில் நிராகரிக்கமுடியாத கூறாகவும் பண்பாட்டு அடையாளங்களிலொன்றாகவும் பேணப்பட்டது மட்டுமன்றி கிராமியத்தின் ஜனரஞ்சக வடிவமாக நிகழ்த்தப்பட்டு வந்தது என்பதனை யாவருமறிவர். ஆனால் 15ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஏற்பட்ட காலனித்துவ மாற்றங்கள் புதியவைகளைக் கொண்டுவந்து கொட்டியும், நகரமயமாக்கத்தை சிருஷ்டித்தும், மத்தியதரவர்க்கமென்ற ஒன்றை தோற்றுவித்தும் வந்ததன் விளைவு, கூத்துக்களை அருகச்செய்து கிராமங்களை நோக்கி விரட்டியது. கிராமியப்பண்பு விலக, விலக கூத்தும் அருகத் தொடங்கியது. அதேவேளை கிறிஸ்தவ நாடகமரபு, பார்ஸிய நாடகமரபு, நவீன நாடகமரபு (உரைநடை), சினிமா. எனப்பலவும் உள்நுழைய, கூத்து; நாகரீகமற்ற பழமை வடிவம்' என்ற மனப்பதிகை மேலெழுந்தது. அதேவேளை வளர்ச்சியடையாத கிராமங்கள் மட்டும் இதனைப் பேணியபோது அதன் செம்மை கைநெகிழத்தொடங்கியது. சில கிராமங்கள் பல புதிய அரங்கக் கவர்ச்சியை கூத்துக்குள் உள்ளெடுத்து ஜீரணித்தன. சிலகிராமங்கள் பழமையைப் பேணுகிறோம் என்று பழையதாகவே அவற்றைப்பேணத் தொடங்கின. இதனால் சமூகம் வளர்ந்தளவுக்கு கூத்து வளராது, கிராமங்களுக்குள்ளேயே கூத்துப் பயில்விலும், இரசனையிலும் பாரிய சந்ததி இடைவெளி தோன்றியது. அதேநேரம் கூத்தினை ஆடியவர்களின் ஒழுக்கயினம் கூத்தின் கெளரவத்தையும் பாதித்தது. மறுதலையாக செம்மைமிக்க பார்ஸிய நாடகங்களும், நவீன நாடகங்களும், சினிமாவும்
с 69 R. - - - - e - MA - * a
கொல் ஈனுங் கொற்றம்

Page 46
மக்களின் இரசனை ஆர்வத்தை தமக்கென அபகரித்துக் கொண்டன. இதனால் அவை மக்களின் செல்வாக்கைப் பெற்ற ஜனரஞ்சக வடிவங்களாகின. கூத்துக்கள் பாரிய பின்னடைவை நோக்கி நகர்ந்தன. இந்த நகர்ச்சியை தடுத்தாட் கொண்டவராக அந்த யுகசந்ததியில் பேராசிரியர் வித்தியானந்தன் வந்தார்.
எழுச்சிபெற்ற தமிழ்த்தேசியப்புலமும், பேராசிரியர் சரச்சந்திராவின் சிங்கள புத்தாக்க நாடகப்பணிகளும் பேரா.வித்தியானந்தனை தூண்டின. இதன் விளைவாக மட்டக்களப்புக் கூத்து புத்தாக்கம் செய்யப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 'கூத்து எமது தேசிய வடிவம் என்ற உணர்திறனை வித்தியானந்தனின் செயலாக்கங்கள் உணர்த்தின. கிராமங்கள் தோறும் 'கூத்து எழுச்சி படிப்படியாக ஏற்பட்டது. ஆனால், அதேவேளை வித்தியானந்தன் செய்த கூத்துப் புத்தாக்கம் ஐரோப்பியப் பார்வைப்புலத்துக்குள் நின்று செம்மையாக்கம் பெற்றதனால் கூத்துப் பாதிக்கப்பட்டும், பாரிய விமர்சனங்களைத் தோற்றுவித்தும் பக்கவிளைவுகளை உருவாக்கின. ஆனால் வித்தியானந்தனின் கூத்துச்செயற்பாடு இல்லையென்றால் கூத்தின் சுதேசிய முக்கியத்துவம் உணரப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே.
பேரா. வித்தியானந்தனின் செயல் வீச்சில் இருந்து எழுச்சிகண்ட கூத்து அதன் அடுத்ததளத்துக்கு அவர் மாணவர்களாலேயே நகர்த்தப்பட்டது. கூத்தின் உள்ளடக்கங்களை சமூகமயப்படுத்தியும், வடிவக்கூறுகளை நவீன நாடகங்களுக்கு பயன்படுத்தியும் கூத்துக்களில் புதிய தளங்களை சிருஷ்டித்தனர். சங்காரம், கந்தன்கருணை, பொறுத்தது போதும் போன்றவை இதன் உதாரணங்கள். இதன் வளர்ச்சிக்குப்பின் குறிப்பாக, எண்பதுகளுக்குப்பின் இம்முயற்சிகள் தேக்கங் கண்டன. கலவரங்கள், போர், இடப்பெயர்வு, புலப்பெயர்வு என சூழ்ந்த வாழ்வின் முற்றுகைக்காலத்தில் கூத்து புத்துணர்ச்சியற்று மீளவும் தளர்ந்தும், பிரச்சார ஊடகமாக பயன்படுத்தப்பட்டு அழகியலை இழந்தும் நலிந்தது. சில தனிநபர்களினதும், ஒருசில நிறுவனங்களினதும் பிரயத்தனங்களால் அதன் உயிர்காக்கப்பட்டாலும் அது தன்னளவில் பழமையை நோக்கி நகர்ந்தது.
ஆனால் தொண்ணுறுகளின் பின் புலம்பெயர்ந்த எம்மவரின் தமிழ் அடையாளத்தேடுகை, விடுதலைப்போராட்ட முதிர்ச்சியில் சுதேசியங்களைத் தகவமைக்கும் நோக்கு, உலகமயமாக்கலின் எதிர்ப்புணர்வு போன்ற பலவும் இணைந்து கூத்தின் முக்கியத்துவம் நோக்கிய சூழலை மீளவும் தோற்றுவித்து வருகின்றது. அதேநேரத்தில் பெருகிவரும் தொழில்நுட்பக் கலைகள், குறிப்பாக தொலைக்காட்சி, சினிமா, கணினி மயப்பட்ட இணையத் தொழிற்பாடுகள் போன்ற பலவும், இயந்திர அறிவியல் சார் புதிய இரசனையைநோக்கி சமூகத்தை நகள்த்தும் அபாயகரமான சூழலும் மையங்கொள்ளுகின்ற பின்னணியில் கூத்து தொடர்பாக பின்வரும் செயற்பாடுகள் அவசரமாகவும் அவசியமாகவும் செய்யப்படவேண்டியவையாக உள்ளன.
கூத்தின் இன்றைய தேவை
கூத்தினைப் பொறுத்தவரையில் அதன் எதிர்கால நன்மை நோக்கில் இச்செயற்பாடுகள் அவசியப்படுகின்றன:
* கூத்து செம்மையாக்கம் செய்யப்படவேண்டும். அதாவது இன்று எஞ்சிய நிலையில் இருந்து, மரபின் சுவடுகளை மீள்கண்டுபிடிப்புச் செய்து அதனைப் பூரணத்துவப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
C SSSSSSS S SLS SLSL 17 N. யோ. யோண்சன் ராஜ்குமார் Y-Y-1

9 கூத்தின் மரபுவழிப்பட்ட தொன்மங்களை ஆவணப்படுத்துதல் வேண்டும். ஆய்வுகள், தொல்பொருட்பேணுகை ஒலி, ஒளிப்பதிவாக்கங்கள், நூல்பதிப்புகள் எனப் பல்வேறு செயற்பாடுகளால் இவ்ஆவணமாக்கல் நடைபெறவேண்டும். 9 'சாஸ்திரியமாக்குகின்ற முயற்சியில் ஈடுபடுதல். அதாவது கூத்தினை பரதம் போன்ற செவ்வியல் வடிவமாக விஞ்ஞான பூர்வமாக ஒழுங்கமைப்புச் செய்து பயில்தகைமையை நோக்கி நகர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளல். 3) கிராமியச் சூழல்களுக்குள் மீளவும் கூத்துப்பயில்வு இடம்பெறத்தக்க
முனைப்புகளை ஏற்படுத்த வேண்டும். கூத்தினைத் தளமாகக் கொண்டு புதிய பரீட்சார்த்தங்களை மேற்கொள்ளல். அதாவது கூத்தின் வடிவம், உள்ளடக்கம், அளிக்கைமுறை, அரங்கு போன்ற அனைத்தின் தனிமங்களையும் மூலதனமாக வைத்து இந்த நூற்றாண்டின் சவால்களுக்கு முன் நிறுத்தும் வகையிலான முறைமையை கண்டு பிடித்தல்வேண்டும். இவ்வாறான பன்முகப்பட்ட செயற்பாடுகள் பல்வேறு தளங்களில் மேற்கொள்ளப்படும்போதே கூத்தின் எதிர்காலம் நிச்சயப்படுத்தப்படும் என்பதுடன், இந்த நூற்றாண்டின் உலக வளர்ச்சியின் கலைச் சமநீரோட்டத்தில் எமது கலை முதுசமும் இணையும்.
ஆனால் இந்த முயற்சிகளுக்கு பல விடயங்கள் சவாலாக உள்ளன.
எதிர்கொள்ளும் சவால்கள்
3) கூத்தினை ஆடுகின்ற பிரதேசங்களில் பன்மைத்தன்மையான கூத்துக்கள், தனித்துவங்கள் காணப்படுகின்றன. இதனால் ஒரு முகப்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில் பல சிக்கல்கள் உள்ளன. பன்மைத்தன்மை ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற யதார்த்தம் உணரப்படும் அதேவேளை பிரதேசவாதங்களைத் தோற்றுவிக்கும் அபாயத்தை இவை கொண்டுள்ளன என்பதும் உண்மையாகும். * கூத்துப்பேணுகை தொடர்பான சிந்தனைகளில் கருத்தொருமை இன்றிய முரணும்
வாதவிவாதங்களும் பலகாலமாக நீடிக்கின்றன. 3) மூத்த தகுதிவாய்ந்த அண்ணாவிமாரின் இழப்புக்கள், புதிய சந்ததியாக்கம் பெருமளவில் நடைபெறாமையினால் ஏற்பட்ட இடைவெளி, தற்போது ஆடுவோரிடம் முழுமையும், தகுதியும் குறைந்து காணப்படுகின்றமை, 3) கூத்தின் அழகியல் வன்மை குறைந்து கிராமத்தவர்களே கூத்தினை ஆடும்
மரபு வெகுவாகக் குறைந்து வருதல். * மூன்றாம் தர சினிமா போன்ற மலினப்படுத்தப்படும் இரசனைகளுக்கு அதிகம்
பழக்கப்பட்டுப்போன இரசிகள் குழுமம். என பலவிடயங்கள் இன்றைய கூத்தரங்க செயற்பாடுகளுக்கு சவாலாக உள்ளன. இவற்றை வென்று கூத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டுமென்பது இன்றைய தேவையாக உள்ளது.
இந்தப்பின்னணியில் கூத்தில் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக திருமறைக் கலாமன்றத்தினால் 'கொல் ஈனுங் கொற்றம்' தயாரிக்கப்பட்டது. இதனை எழுதி,
கொல் ஈனுங் கொற்றம் أسس سمحلا

Page 47
நெறியாக்கம் செய்தவகையில் பெற்ற அனுபவமானது கூத்தின் வளர்ச்சியை நோக்கி பிரக்ஞை பூர்வமாக ஈடுபடுபவர்களுக்கு பயன்படும் என்ற நோக்கில் இதன் அனுபவத்தினை முன்வைக்கின்றேன்.
“கொல் ஈனுங் கொற்றம்" தயாரிப்பு அனுபவம்
2003ஆம் ஆண்டு திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் 'கூத்துவிழா' பெரியளவில் நடத்தப்பட்டது. இந்த விழாவில் இடம்பெற்ற கருத்தமர்வுகளில் கூத்துப்பேணுகை தொடர்பான பல விடயங்கள் வாதவிவாதங்களுக்குட்பட்டன. இக்கருத்தமர்வு கூத்துப்பணிகளில் அவசரமும் அவசியமுமாக ஈடுபடவேண்டுமென்ற முனைப்பினை ஏற்படுத்தியது. இதில் குறிப்பாக, ஒன்றுபட்டு ஏற்கக்கூடிய கூத்துவடிவம் எமக்கில்லை என்ற உண்மை அழுத்தம் பெற்று நின்றதுடன் பல பிரதேச மரபுகளையும் இணைத்து பரீட்சார்த்தமாக ஒன்றை ஆக்கினால் என்ன என்ற உணர்வுத் தூண்டுகை அதில் ஏற்பட்டது. அதேவேளை இவ்வாறான முயற்சிகள் ஏற்கெனவே நடைபெற்றதன் வரலாற்றையும் அறிய முடிந்தது. தாசீசியஸின் நெறியாள்கையில் உருவான ‘கந்தன் கருணை இவ்வாறான ஒன்று என்பதனை அறிந்திருந்ததுடன் திரு. தாசீசியஸ் தமது நேர்காணலில் "இந்த முயற்சிகள் தொடரப்படவில்லை; தொடரப்பட்டிருந்தால் எமக்கென ஒரு பொதுவடிவம் இப்போது இருந்திருக்கும்” (ஆற்றுகை-11) என்று கூறியதன் கூற்று ஆழப்பதிந்தது. அதேவேளை கூத்தின் எதிர்காலம் குறித்து நடந்த கூத்துவிழாக் கருத்தமர்வின் இறுதியில் பேரா.மரிய சேவியர் அடிகள், பேரா.மெளனகுரு ஆகியோரின் கருத்துக்களும் இந்தச் செயற்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தின.
இவ்வாறான எண்ணம் கருக்கொண்டிருந்த சூழலில் தேசிய நாடக சபையின் சார்பாக கலைஞள் கலைச்செல்வன் அவர்கள் தேசிய நாடகவிழாவுக்கென ஒரு நாடகத்தை தந்துதவுமாறு கேட்டிருந்தார். எனவே, தென்பகுதி மக்கள் மத்தியில், ஊசலாடிக்கொண்டிருந்த சமாதான முயற்சிகள் தொடர்பாக ஒரு செய்தியை கூறவேண்டும்மென்று நினைத்ததுடன், எமது மரபுவழி கூத்து வடிவத்திலேயே அதனைச் சொல்லவேண்டும் என்றும் எண்ணங்கொண்டதன் விளைவாகவே "கொல் ஈனுங் கொற்றம் உருவாகிறது.
அறமற்ற யுத்தம் என்றுமே வென்றதில்லை என்ற உண்மையை பாடுபொருளாக்கி மனதில் நிறைந்த கும்பகள்ணன் பாத்திரத்தை கதைப்பொருளாகக்கொண்டு யுத்த முனைப்பில் அழியப்போவது கும்பகள்ணன் போன்ற அருமருந்தன்ன உயிர்கள்தான் என்ற பொருள் வெளிப்பட நாடகத்தை ஆக்கியதுடன், ஈழத்தின் பலபிரதேச கூத்துமரபுகளிலுமிருந்து பொருத்தக்கூடிய ஆடல்கள், பாடல்கள், அளிக்கை முறை ஆகியவற்றை ஒன்றிணைத்து மரபுவழிப்பட்டோரும் ஏற்கக்கூடிய வகையில் 'கூத்துருவ நாடகம்' என்ற புதிய பெயர்ப்பதத்தினையும் இட்டு மேடையேற்றினோம்.
உருவாக்க படிமுறை
ஏற்கெனவே வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளுக்காக நான் எழுதிய தென்மோடி மரபில் அமைந்த கும்பகர்ணன் கூத்துப்பிரதியை மூலப்பிரதியாகக்கொண்டு இதன் எழுத்தாக்கத்திற்குள் நுழைந்தேன். அடிக்கடி பல்வேறு கூத்துக்களின் ஒலி, ஒளி நாடாக்களை கேட்டும் பார்த்தும் அவற்றை வாலாயமாகக்கொண்டு பொருத்தமான
யோ. யோண்சன் ராஜ்குமார் トム二ーイ

சந்தர்ப்பங்களுக்கு பொருத்தமானவற்றை இணைப்பதற்கு முயற்சி எடுத்தேன். யாழ்ப்பான தென்மோடி நாட்டுக்கூத்தோடு சிறிய வயதில் இருந்தே பரீட்சயம் இருந்த காரணத்தால் அதன் தளத்தில் நின்றே இதன் கட்டிஎழுப்பலை மேற்கொண்டேன். அதேவேளை திரு. பிரான்சிஸ் ஜெனம் அவர்களின் நாடகப்பட்டறைகளில் பங்குபற்றியும், அவரது நெறியாள்கையில் நான் நடித்த 'நெஞ்சக்கனகல்', 'எதிர் கொள்ளக் காத்திருத்தல்' ஆகிய நாடகங்களிலும் பயிற்றுவித்த வடமோடி கூத்தின் ஆட்டக்கோலங்கள் அருட்திரு ஜெறோம் லம்பேட் அடிகளின் புரட்சித்துறவி' - மன்னர் தென்பாங்கு கூத்துத் தயாரிப்பில் இணைந்து பணியாற்றிய அனுபவம், மெற்றாஸ்மயில் அவர்களின் நெறியாள்கையில் 'கோவலன் கூத்தில் நட்டுவனாக, "வஞ்சிப்பத்தனாக நடித்தும் பின்னர் "வேழம்படுத்த வீராங்கனையில் நீலப்பணிக்கனாக நடித்தும் பெற்றதான அனுபவங்களுடான முல்லைத்தீவுக் கூத்துமரபின் பரீட்சயம், திருமறைக் கலாமன்றத்திற்கு தயாரித்த நீதிகாத்தான், அறங்காத்தான், சிந்துநடைக்கூத்து தயாரிப்பு, நடிப்பு அனுபவம், திருமறைக் கலாமன்றத்தின் பிராந்திய மன்றங்களின் தொடர்பினால் பெற்ற அனுபவங்கள் உதாரணமாக, ஹப்புத்தளை திருமறைக் கலாமன்றத்தின் கலைஞர்கள் ஊடாக பெற்ற 'காமன் கூத்து பற்றிய அறிமுகம் என பலவும் இணைந்து இந்த நாடக உருவாக்கத்தின் பாடல், ஆடல் அளிக்கைத் தெரிவுக்கு துணை தந்தன. அண்ணாவியர் பேக்மன் ஜெயராசா இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றதுடன் தனது ஆலோசனைகளையும் தந்துதவினார்.
இதன் உருவாக்கத்தில் கட்டியகாரனின் வரவு மன்னார் தென்பாங்கு மரபில் அமைய, இராவணன், கும்பகர்ணன் வரவுகள் யாழ்ப்பாணம் தென்மோடி மரபிலும், கும்பர்கணன் யுத்தத்திற்குச் செல்வது முல்லைத்தீவு கோவலன் கூத்துமரபிலும், இராமனின் கொலு மட்டக்களப்பு வடமோடிக்கூத்துமரபிலும், விபீஷணன், கும்பகள்ணன் சந்திப்பினை சிந்து நடைக்கூத்து மரபிலும், யுத்தக்காட்சியில் பல மரபுகளும். என அமைத்தும், விருத்தங்களை ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒவ்வொரு கூத்துமரபிலும் என தேவையின் பொருத்தத்துக்கேற்ப பயன்படுத்தினோம். மொத்தத்தில் யாழ்ப்பாண தென்மோடி, வட்டுக்கோட்டை வடமோடி, மட்டக்களப்பு வடமோடி, மன்னார் தென்பாங்கு, மலையக காமன் கூத்து, யாழ்ப்பாண சிந்துநடைக் கூத்து ஆகிய மரபுகளை உள்வாங்கினோம்.
தயாரிப்பில் ஈடுபடத்தொடங்கியதும் பயிற்சி பெற்ற திருமறைக் கலாமன்ற கலைஞர்களின் வளம் எமது பணியை இலகுவாக்கியது. குறிப்பாக, பிரதான பாத்திரங்களான கும்பகர்ணன், இராவணன் பாத்திரங்களை ஏற்ற யூல்ஸ்கொலின், விஜயகுமார் ஆகியோர் முதிர்ச்சி பெற்ற கலைஞர்களாகவும், பெளதீக தோற்றத்திலும், குரல் வெளிப்பாட்டிலும் மிகவும் பொருத்தமாக இருந்ததுடன் எமது பணியை இலகுவாக்கினர். அவ்வாறே இராமன், விபீஷணன் பாத்திரங்களை ஏற்ற ஜெயகாந்தன், யஸ்ரின் ஜெலூட், கட்டியகாரன் பாத்திரம் ஏற்ற அன்று யூலியஸ் போன்ற இளம் நடிகர்கள் அனைவரும் பாடுதல், ஆடுதல், நடித்தல் ஆகிய அனைத்திலும் திறமை வாய்ந்தவர்களாக இருந்ததால் பணி இலகுவாகியதுடன் ஏனைய கலைஞர்களை அவர்களுடன் இணைப்பதும் சுலபமாக இருந்தது. எனவே, பல கூத்துக்களை ஒன்றிணைக்கும் கடினபணி திருமறைக் கலாமன்ற நடிகள் வளத்தாலும் அண்ணாவியார் பேக்மன் ஜெயராசா, அண்ணாவியார் பாலதாஸ் ஆகியோரின் உதவியினாலும் இலகுவாக செயல்வடிவம் பெற்றது.
○エト கொல் ஈாைங் கொற்ாப் கொல் ஈனுங் கொற்றம் کسب حالا |

Page 48
கூத்தின் ஒத்திகைக்காலத்தில் ஏற்பட்ட புதிய சிந்தனைகளால் அதன் வடிவம் மேலும் மேலும் செம்மைபெற்றது எனலாம். உதாரணமாக, முதலில் கட்டியகாரன் பாத்திரத்தை கதை சொல்லும் பாத்திரமாகவே அமைத்தோம். ஆனால், போகப்போக காலங்கடந்து கதைஞரோடு உரையாடும் பாத்திரமாகவும், தர்க்கிக்கும் பாத்திரமாகவும் மாற்றினோம். அவ்வாறே கோரசையும் பயன்படுத்தினோம். இதனால் கோரஸ் வலிமையானதாக மாறியது. அவ்வாறே, திரைபிடித்து பாத்திரத்தை அரங்கிற்கு கொண்டுவருதல், சபையோரே யுத்தத்தை செய்து காட்டுபவராக மாறுதல் என பல புத்தாக்கங்களை அளிக்கை முறையில் இணைத்தோம்.
இவ்வாறே இசையில் மாற்றங்களை கொண்டுவரமுயன்று ஹார்மோனியம், மிருதங்கத்துடன் ஜெண்டை, மத்தளம், ட்றம், ஒர்கன், சங்கு, உடுக்கு ஆகிய வாத்தியங்களையும் இணைத்தோம். இந்த புதிய இசைக்கருவிகளை இணைத்தமை நாடக ஓட்டத்திலும், உணர்வோட்டத்திலும் அதிக கனதியை கொண்டுவந்ததனை உணர்ந்தோம். இளம் இசையமைப்பாளர் அற்புதன் மிகச்சிறப்பாக ஒத்துழைத்தார்.
அவ்வாறே வேட உடையிலும் அதிக கவனத்தைச் செலுத்தினோம். கதகளியின் வேடஉடை எவ்வாறு பல சுதேசிய வடிவங்களில் இருந்து உருவாகியது என்பதனையும் கரந்' அவர்கள் அதனை மீள் கண்டுபிடிப்புச் செய்ய எடுத்த முயற்சிகள் பற்றியும் அறிந்திருந்ததுடன், கூத்துவிழாவில் பேசிய திரு. பாலசுகுமார் கூத்தின் ஆஹார்யத்தை கண்டுபிடித்தால் ஏனையவற்றை கண்டுபிடிப்பது இலகு என்று கூறிய கருத்துக்களையும் ஏற்ற மனநிலையில், பார்ஸிய மரபில் இருந்து விலகிய எமது கூத்து மரபுகளுக்குரிய பின்னணிக்குள் நின்று வேட உடை விதானிப்பினை உருவாக்க முனைந்தோம். குறிப்பாக கும்பகர்ணன், இராவணன் பாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். தெருக்கூத்து, வடமோடி நாட்டுக்கூத்து ஆகியவற்றின் வடிவங்களை உள்வாங்கி முடி, கைப் புயங்கள் போன்றவற்றை அமைத்ததுடன் சிறிய கரப்பு, அதன் கீழ் பார்ஸிய செட்டிக் கொடுக்கு என பரீட்சார்த்தமாக வடிவமைத்தோம். திரு. பிரபா இப்பணியை சிறப்பாக மேற்கொண்டார். அவ்வாறே சபையோர், கட்டியகாரர் போன்ற பாத்திரங்களுக்கும் ஏனைய பாத்திரங்களுக்கும் வேட உடைகளை வடிவமைத்தோம். அவ்வாறே காட்சி அமைப்பிலும் ஒரு பெரிய முரசினையும், இராணுவ வேலியொன்றையும் கருத்துருவ வெளிப்பாட்டுக்கமைவாக அமைத்தோம்.
இவ்வாறு உருவாகிய கூத்துருவ நாடகம் முதன்முதல் கொழும்பில் மேடையேற்றப்பட்டபோது அதிக வரவேற்பைப் பெற்றது. ஜெரோம் டி சில்வா உட்பட பல சிங்கள, தமிழ் நாடகக் கலைஞர்கள் இதனைப் பாராட்டினார்கள். அதன்பின் இலங்கையின் பல பாகங்களிலும் மேடையேறியபோது பேரா. மெளனகுரு உட்பட கூத்தரங்கில் பிரக்ஞைபூர்வமாக செயற்பட்ட பலரும் இந்த வடிவத்தை வரவேற்றார்கள், பாராட்டினார்கள், சிலர் விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். ஆனால், கூத்தில் பரீட்சார்த்தங்களை பிரக்ஞைபூர்வமாக மேற்கொண்டால் நிச்சயமாக பொதுவாக எல்லோராலும் ஏற்கப்படக்கூடிய ஒரு வடிவம் உருவாகும் என்ற உண்மை எம்மால் உணரப்பட்டது.
முடிவுரை
எனவே கூத்தின் எதிர்காலத் தேவை நோக்கில் சிந்திக்கும்போது
-- - - - - - - 174 TN யோ, யோண்சன் ராஜ்குமார் N-1

ஆக்ககள்த்தாக்கள், எல்லை கடந்து செயற்படும் கூட்டு முயற்சியில் நிச்சயமாக எமக்கான ஒரு பொது வடிவை உருவாக்க முடியும். அது "தேசிய வடிவம்' என அழைக்கப்பட வேண்டிய அவசியமில்லை. மாறாக பல சுதேசியங்கள் உள்ளிட்ட, புதிய வடிவமாவது மேற்கிழம்பும். பேரா. சரச்சந்திரா இதனை தனது செயல்களால் நிருபித்துக் காட்டினார். தமிழில் முன்பு கூறப்பட்டுள்ள பன்முகப்பட்ட கூத்துச் செயற்பாடுகளில் ஒன்றாக இதனையும் ஏற்புடையவர்கள் செய்துபார்க்க வேண்டும். அவ்வாறான முயற்சிகளின் விளைபயனில் எமக்கான தனித்துவ அரங்கு மேற்கிழம்பலாம்.
ஆற்றுகை டிசெம்பர் 2005, இதழ் 13
கொல் ஈனுங் கொற்றம்

Page 49
நடிப்பு அனுபவம்
பி. யூல்ஸ் கொலின்
நான் இதுவரை பல நாடகங்கள் நடித்துள்ளேன். குறிப்பாக நாட்டுக்கூத்துக்கள் இருபத்தைந்துக்கு மேல் நடித்துள்ளேன். பல அண்ணாவிமாரின் கீழ் நடித்துள்ளேன். எனினும் அண்மையில் நடித்த 'கொல் ஈனுங் கொற்றம்' என்னும் கூத்துருவ நாடகம் எனக்குத் தந்த அனுபவமானது மறக்கமுடிய்ாதது. காரணம், கூத்தின் ஒரு வளர்ச்சிக் கட்டத்தை அதில் நான் பார்த்தேன்.
குறிப்பாக, கூத்திற்கு ஒரு புத்துயிர்ப்புச் செய்வது போல சில கூத்துக்களை யோண்சன் மேடையேற்றினார். அவற்றில் ஏற்கெனவே இரண்டு கூத்துக்களில் நடித்திருந்தேன். முதலாவது ‘சிங்ககுலச் செங்கோல் இது இயக்குநர் மரியசேவியர் அடிகளாரால் எழுதப்பட்டு யோண்சனால் நெறியாள்கை செய்யப்பட்டது, இதிலே அவர் தென்மோடிக்கூத்தில் புதிய ஆட்ட வடிவங்களை மீளக்கண்டுபிடித்துச் சேர்த்ததுடன், பாரம்பரிய கூத்திற்குரிய கரப்புடுப்பு, கைப்புஜங்கள் போன்ற பலவற்றையும் இணைத்திருந்தார். அதிலும் பிரதான பாத்திரமாகிய "கோலியாத் பாத்திரத்தினை நான் ஏற்றிருந்தேன். இரண்டாவதாக அவரது எழுத்துருவிலும் நெறியாள்கையிலும் அமைந்த ஏகலைவனில் துரோணச்சாரியாராக நடித்திருந்தேன். அதிலும் ஆட்டங்கள் சீசெய்யப்பட்ட தென்மோடி ஆட்டக்கூத்தாக அதனை அமைத்திருந்தார். இவை இரண்டிலுமிருந்து ஒரு பாய்ச்சலைப் போல கொல் ஈனுங் கொற்றத்தை தயாரித்தார். அந்த நடிப்பு அனுபவத்தை இந்தக் கட்டுரைக்கூடாக பகிர்ந்து கொள்கிறேன்.
இந்நாடகத்தை எழுதும் போதே சில பாத்திரங்களை மனதில் வைத்து எழுதியதாக குறிப்பிட்ட நெறியாளர் யோண்சன்; அதில் கும்பகர்ணனாக என்னையே நினைத்து எழுதினேன் எனக் கூறியபோது, அந்தப் பாத்திரத்தை வடிவாகச் செய்யவேண்டுமென்ற மனநிலை எனக்குள் எழுந்தது. ஆனால் நாடகம் ஒத்திகை ஆரம்பித்த போது நான் சுகவீனத்துடன் மருத்துவமனையில் இருந்தேன். அங்கு சுகம் விசாரிக்க வந்த யோண்சன் அவர்கள், விரைவில் சுகம் பெற்று வரவேண்டுமென்று கூறியதுடன் வேறுபட்ட ஆட்டங்கள் பழகவேண்டி இருக்கும் என்று ஆர்வத்தினை ஊட்டி, பல கூத்துமரபுகளை ஒன்றிணைத்து ஒரு பரிட்சர்த்தமாக ஆக்க முற்படுவதாகவும் எல்லோருடைய ஒத்துழைப்பும் இருந்தால்தான் அதனைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும் என்றும், தனது எண்ணங்களைக் கூறிநின்றார். இயக்குநர் மரியசேவியர் அடிகளைப் போல ஒவ்வொரு அங்கத்தவர்களையும் அளந்து நிறுத்தி வைத்திருக்கும் இதன் நெறியாளர் எவரிடம் எத்திறமை உண்டு அதனை எவ்வாறு வரவழைக்க முடியும் என்பதனை நன்கு அறிந்திருந்தார். எனவே அவரது வார்த்தைகள் தந்த உற்சாகத்துடன் விரைவாக சுகம் பெற்று ஒத்திகைகளுக்குச் சென்றேன்.
ஒத்திகைக்குச் செல்லும்போது எனது மனதில் இருந்த கேள்வி வடமோடி, தென்மாடி, வசந்தன் எனப் பல வடிவங்களையும் ஒன்றிணைக்கும் போது, அவை அழகாக ஒன்றிணையுமா? ஒன்றினை ஒன்று மேவாதா? என்ற எண்ணங்களுடன் சென்ற எனக்கு ஆச்சரியமே காத்திருந்தது கும்பகர்ணன் யுத்தத்திற்குப் புறப்படுவது முல்லைத்தீவுப் பாங்கிலும், இராமர் கொலு வடமோடியிலும், இராவணன் வரவு தென்மோடியிலும்,
SLS SLS SLLLL SSL ○エトの யோ, யோண்சன் ராஜ்குமார் トームーイ

கும்பகள்ணன் விபீஷணன் சந்திப்பு சிந்துநடையிலும் என்று, ஆடலும் பாடலும் அந்தந்தக் காட்சிகளுக்கு மிகவும் பொருந்தத்தக்க பாணியிலும் அமைக்கப்பட்டு நடிக்கும் நாமே இரசிக்கும்படியாக அமைந்திருந்தன. நானும் ஆர்வத்துடன் ஒத்திகைகளில் பங்கு கொண்டேன்.
எனது வரவு தென்மோடி மரபிலும், யுத்தகளத்துக்கு செல்லும் காட்சி முல்லைத்தீவு வஞ்சிப்பத்தனின் வரவு ஆட்டவடிவத்திலும், போர் வடமோடி தென்மோடி வடிவங்களிலும் அமைந்திருந்தன. சில பரிச்சயமான பாடல்கள், பல பரிச்சயமற்ற ஆடல்கள் இவற்றைப் பயில்வது என்பது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. இளம் நடிகர்களான பயிலக மாணவர்கள் விரைவாகப் பழகி விறுவிறுப்பாக ஆடிக்கொண்டிருந்தார்கள். எனது வயதும் உடல் நிலையும் உடனடியாக அந்த ஆடல்களை உள்வாங்குவதற்குச் சிரமத்தைத் தந்தாலும், நெறியாளர் யோண்சன் தட்டிக்கொடுத்து படிப்படியாக என்னையும் இளைஞர்களுக்குச் சளைத்தவனல்ல என்பதனை நிரூபிக்கத்தக்க வகையில் விரைவாக தனது எண்ணத்திற்குக் கொண்டு வந்தார். உண்மையில், போருக்குச் செல்லும் 'வஞ்சிப்பத்தனின் ஆடல் தரு மிகவும் சிரமமாக இருந்தாலும், பின்பு எனக்கு லாவகமாக அது வந்ததன்பின் ஆடுவதில் மகிழ்வும் நிறைவும் பிறந்தது.
இவ்வாறு ஆடல்களிலும், பாடல்களிலும் கவனம் செலுத்திய நெறியாளர், படிப்படியாக பாத்திரவாக்கத்தினைத் தூண்டினார். வெறும் ஆடல் பாடல்களுக்கப்பால், ஆடல் பாடல் நுட்பங்களுகக்குள் பாத்திரப்பண்புகளை கொண்டுவருவதற்கு அதிக பிரயாசைப்பட்டார். எனக்கு அது அவ்வளவு சிரமத்தினைத் தரவில்லை. ஏற்கெனவே நடித்த நாடகங்களின் அனுபவங்களும், பெற்ற பயிற்சிகளும் அதனை இலகுபடுத்தின. ஆனால் கதாசிரியனும் நெறியாளனும் ஒரே ஆளாக இருக்கும் போது அவரது எண்ணத்தினை செயற்படுத்த துடிப்பதினை ஒத்திகைகளில் நன்கு அனுபவித்தோம்.
ஆழமாக, ஒத்திகையில் தொடர்ந்து ஈடுபட்டபோதுதான் நாடகத்தின் ஆன்மா போன்ற அதன் நோக்கம் படிப்படியாக எம்மால் உணரப்பட்டது. கும்பகள்ணனின் வரலாற்றுக்கூடாக, பல விடயங்களை நெறியாளன் சொல்கிறான் என்பதனை உணரமுடிந்தது. கட்டியகாரனின் உரையில கூறப்படும் "கருப்பொருள் அவனே பருப்பொருள் பலவே." என்ற பாடல் வரிகள் எமக்கு அதனை உணர்த்தின. யோண்சனின் எழுத்தாளுமை, பாடல் வரிகள், உரையாடல்கள் அனைத்திலும் நிறைந்திருந்தது. அது மட்டுமன்றி நெறியாள்கையில் அவர் செய்த புதுமைகள் பலவும் நாளுக்குநாள் ஒத்திகைகளில் உருவாகிய முறைமையானது எம்மை வியக்க வைத்தது.
பிற்பாட்டுக் குழுவினரை ஆரம்பத்தில் பிற்பாட்டுப் பாடுவோராகத் தான் பாவிக்கிறார் என்றிருந்தோம். ஆனால் பின்பு அவர்களும் நாடக பாத்திரங்களோடு உரையாடுவார்கள், அறிவுரை சொல்வார்கள், ஆடல்கள் செய்வார்கள் இப்படி பல தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டார்கள். கட்டியகாரனும் அடிக்கடி வந்து கதையை நகள்த்துவார். நாடகமும் கூத்தும் இணைகின்ற தன்மையை நாம் அதற்குள் கண்டோம். சில ஆடல் கோலங்களில் நடிகர்கள் சொன்ன ஆலோசனைகளையும் ஏற்று அவற்றை நாடகத்துடன் பொருத்தமுற இணைத்துக் கொண்டு சென்றார்.
இவ்வாறு நாடகத்தின் ஒவ்வொரு காட்சிகளும் உருவாக்கப்பட்டதன் பின் பின்னணி இசைக்கலைஞர்களை நாடகத்துடன் இணைத்தார். ஹார்மோனியம், மிருதங்கம் ஏற்கெனவே ஒத்திகையில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஒர்கன், ஜெண்டை, தபேலா,
○万下の கொல் ஈனுங் கொற்றப் கால் ஈனுங் கொற்றம் همسس " "حالا |

Page 50
சங்கு என ஒவ்வொரு இசைக்கருவிகளையும் பொருத்தமுற இணைந்த ஏறத்தாழ ஆறு இசைக்கலைஞர்கள் இக்கூத்துச் செயற்பாட்டில் இணைந்து நின்றனர். திரு. கு. அற்புதன் நெறியாளனின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, தனது கற்பனைகளை நன்கு செயற்படுத்தினார். ஏற்கெனவே யோண்சனின் 'ஸ்பாட்டக்கஸ் நாடகத்திற்கு அற்புதன் அற்புதமாக இசை வழங்கியவர், ஆனால், இது கூத்து. மரபுவழித்தன்மைகளை மேவாமல் இசை இழையோட வேண்டுமென்று நெறியாளர் விரும்பினார். அதனை அற்புதன் மிகச்சிறப்பாகச் செயற்படுத்தினார். இசை இணைந்தபோது எமது ஆடற்கோலங்களிலும், நிலைகள், விடுதுறைகள், தீர்மானந்தீர்த்தல்கள் என்பவற்றில் சில மாறுதல்கள் செய்யப்பட்டன. ஆரம்பத்தில் அத்திருத்தங்கள் சிரமத்தைத் தந்தாலும் பின்னர் அவை பயிற்சிக்கூடாக இலகுவாக்கப்பட்டன. சில காட்சிகளில் இசை தந்த உணர்வுகள் நடிப்பதற்கும் உற்சாகத்தைத் தந்தன. உதாரணமாக, போர்க்காட்சிகளில் சங்கு, ஜெண்டை ஒலிகள் இணைந்து தந்த உற்சாகம் எமது நடிப்புக்கு உரம் சேர்த்தன.
இவ்வாறு ஆடல், பாடல், நடிப்பு பின்னணி இசை என நெறியாளர் ஒவ்வொரு விடயங்களிலும் கவனம் செலுத்தி மேற்கொண்ட ஒத்திகைகள் ஓரளவு நிறைவைத் தந்தாலும், நெறியாளனுக்கு நிறைவு வரவில்லை. அவர் நாடகத்தை கோர்வைப்படுத்தி, ஆடல்கள், அசைவுகளை லயழர்வமாக ஒருங்கிணைப்பதில் அதிககவனம் எடுத்தார். அவ்வாறு செய்கின்ற போது அவர் சில பாடல்களையும் காட்சிகளையும் துண்டித்தார். அதுவரை ஒத்திகை மேற்கொண்ட, எமக்கு அது வேதனையைத் தந்தாலும், ஆழமாக யோசித்த போது நாடக ஓட்டத்தின் வெற்றிக்கு அந்தத் துண்டாக்குதல் சரியானதுதான், என்ற தெளிவைப் பெறமுடிந்தது. இவ்வாறு ஒத்திகைகள் நகர்ந்தபோது நான் மட்டுமன்றி, ஏனைய நடிகர்களும், மிகுந்த ஆர்வத்துடன் இரசித்து இரசித்து நடித்த அனுபவம், இந்த கொல் ஈனுங் கொற்றம் நாடகத் தயாரிப்பில் பெற முடிந்தமை மறக்கமுடியாத அனுபவமாகும்.
நாடக உருவாக்ககால அனுபவங்களின் விளைவுகளை உண்மையில், ஒவ்வொரு நாடக மேடையேற்றத்திலும் நாம் அனுபவித்தோம். கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய ஒவ்வொரு மாவட்டத்திலும் இதனை மேடையேற்றியபோது எமக்குக் கிடைத்த பாராட்டுக்கள் சொல்லி முடியாதவை. என்னுடைய கதாபாத்திரத்தை பெரும்பாலும் எல்லா மேடைகளிலும் பாராட்டினார்கள். நடித்துக் கொண்டிருக்கும் போதே பார்வையாளர்களின் இருப்புகளும் அவர்களின் இரசனையின் வெளிப்பாடுகளும் எமக்கு நிறைவையும் உற்சாகத்தினையும் தந்தன. எமது இயக்குநர் மரியசேவியர் அடிகளை இலகுவில் திருப்திப்படுத்த முடியாது. ஆனால், இந்நாடகத்தை அவர் வலுவாக பாராட்டினார். அவர் மட்டுமன்றி பேராசிரியர் மெளனகுரு, விரிவுரையாளர்கள் பாலசுகுமார், ஜெயசங்கர், பல அண்ணாவிமார்கள், கலைஞர்கள் என கூத்துச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பலரும் பாராட்டியபோது உண்மையிலேயே நாடகத்தின் வெற்றியை எம்மால் உணரமுடிந்தது. அந்தவகையில் நான் நடித்த நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களில் நல்ல நிறைவைத் தந்த சில நாடகங்களில் ஒன்றாக 'கொல் ஈனுங் கொற்றம் அமைந்தது என்றால் அது மிகையல்ல.
யோ, யோண்சன் ராஜ்குமார் السكك حلا

முயர்த்குேள் உரைத்குவை
முதல் முயற்சி ஆனால் பெரும் பாய்ச்சல்
இந்நாடகம் 'கூத்துருவ நாடகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. கூத்து வடிவத்தில் அமைந்த ஒரு நாடகம் இதுவாகும். இலங்கையில் தமிழர்கள் வாழுகின்ற பிரதேசங்கள் எல்லாவற்றிலும் கூத்து ஆடப்படுகின்றது. மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் என எல்லாப் பிரதேசங்களிலும் கூத்துக்கள் ஆடப்படுகின்றன. பல கூத்து வகைகள் எம்மிடம் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் பிரதேச தனித்துவம் மிக்கவையாக ஆடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அறுபதுகளில் பேராசிரியர் வித்தியானந்தன் மட்டக்களப்புக் கூத்தை பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்று அதனை ஒரு தேசிய வடிவமாக மாற்றுவதற்கு முயற்சிகள் செய்தார். அப்போதுதான் இராவணேசன் பிறந்தது. கடந்த நாற்பது வருடங்களாக பலரும் இத்துறையில் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு ஈடுபடுபவர்கள் மத்தியில், ஒரு தேசியக்கூத்து வடிவத்தை உருவாக்க முடியாதா என்ற ஆதங்கமே எல்லோரிடமும் எழுந்தது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூத்துவிழாவில் இதுபற்றி நாம் விவாதித்தோம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், வன்னி ஆகிய பிரதேசங்களில் வழங்கி வரும் கூத்து வடிவங்களை இணைத்து பரிட்சார்த்தமாக யாராவது ஒரு கூத்துவடிவத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தோம். அதை யாராவது செய்யவேண்டுமென்றும் கூறினோம். திரு. யோண்சன் ராஜ்குமார் அந்தச் சவாலை ஏற்றிருக்கின்றார்.
இந்தக் கூத்துருவ நாடகம் பெரும்பாலும் எல்லாக் கூத்து வடிவங்களையும் இணைத்த ஒரு வடிவமாகக் காணப்படுகின்றது. அதற்காக, தனித்தனிப் பிரதேசக் கூத்துக்கள் கீழே போகின்றன என்று அர்த்தமில்லை. அவை அவை தம்மளவில் வளரும். பொதுவாக ஒரு தேசியக்கூத்துரு வளருகின்ற போது எல்லாக் கூத்து வடிவங்களையும் எடுத்துக்கொண்டு வளரும். அந்தவகையில் இந்தக் "கொல் ஈனுங் கொற்றம்' என்னும் நாடகத்தை ஒரு தேசிய கூத்துவடிவமென்றும் அழைக்கலாம்.
இதில் இராவணன், கும்பகர்ணன் என்ற இரு பாத்திரங்களைக் காணலாம். போர் பற்றிய சிந்தனை அங்கே வருகின்றது. இரண்டு பாத்திரங்கள் தங்களின் மன அவசங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். கும்பகர்ணன் வருகின்ற போது முல்லைத்தீவு ஆட்டப்பூாணியிலே வருகிறார். பாடல்கள், அகவல்கள் பெருமளவில் யாழ்ப்பாணப் பாணியில் அமைந்திருக்கிறது. இராவணன் வரவு பல ஆட்ட முறைகளையும் ஏற்றதாக இருக்கும். இராமனின் வரவு மட்டக்களப்பு வடமோடி வடிவத்தில் அமையும். கும்பகள்ணன், விபீஷணன் உரையாடல் காத்தான் கூத்துப்பாணியிலே அமையும். இவ்வாறு பல வடிவங்களை ஒன்றிணைத்த ஒரு பாரிய முயற்சியை திரு யோண்சன் அவர்களும், திருமறைக் கலாமன்றத்தினரும் மேற்கொண்டுள்ளனர்.
இதிலே இராவணனாக நடிக்கின்ற விஜயன் அவர்கள் எண்பதுகளில் யாழ்ப்பாணத்தில் நான் மேடையேற்றிய சங்காரத்தில் இன அரக்கனாக நடித்தவர். கும்பகள்ணனாக நடித்தவர், யாழ்ப்பாணத்தில் நாம் இராவணேசனை தயாரிக்க முயற்சித்த வேளை, கும்பகள்ணனாக தெரிவு செய்யப்பட்டவர். இன்று இருபது வருடங்களிற்குப்
トーイ கொல் ஈனுங் கொற்றம்

Page 51
பின் அவர்களையெல்லாம் சந்தித்த போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நேற்றைய தினம் இந்த நாடகத்தை நான் பார்த்தேன். மிகவும் மகிழ்ந்துபோயிருந்தேன். நாடகத்தைப் பார்க்கும் போது அதை நீங்களும் உணர்வீர்கள்.
ஆனால் இந்த முயற்சியில் நாம் பல படிகள் கடந்து செல்லவேண்டி
இருக்கிறது. அதனை அவர்களும் உணர்வார்கள். நமது மண்ணுக்குரிய கலைகளை வைத்துக்கொண்டு ஒரு தேசியக் கூத்து வடிவத்தை உருவாக்குவதற்கான பயணம் மிகவும் நீண்டது. அந்தப்பயணம் அறுபதாம் ஆண்டிலிருந்து பேராசிரியர் வித்தியானந்தனால் ஆரம்பிக்கப்பட்டு. எங்களுக்கூடாக வந்துகொண்டிருக்கிறது. இந்தப்பயணத்தில் தற்போது திரு. யோண்சன் இன்னொருபடி முன்சென்றிருக்கிறார். எல்லோரும் இந்தப் பயணத்தில் அவருக்குக் கைகொடுக்க வேண்டும். இத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவேண்டும்.
கொல் ஈனுங் கொற்றமென்ற இந்த நாடகம் எமக்குப் பல விடயங்களைக் கூறும். நிறைவாகக் கூறுவதானால் இம்முயற்சி முதல் முயற்சி, கன்னிமுயற்சி ஆனால், ஒரு பெரும் பாய்ச்சல்.
பேராசிரியர் சி. மெளனகுரு
கிழக்குப் பல்கலைக்கழகம்,
tolt .45a5677ty (16.10.2005, மட்டக்களப்பு வேதநாயகம் மண்டபத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்)
|
சமகால களநிலையைத் தொட்ட நாடகம்
வாழ்வின் விழுமியங்களை எடுத்துக் கூறுபவையாகவும், கடந்த கால வரலாற்றை மீள்பார்வை செய்யத்துண்டுவனவாகவும், ஆன்மீகத் தத்துவங்களை மனித மனங்களில் விதைக்கும்போதே ஒரு நாடக அளிக்கை பூரணத்துவம் பெறுகின்றது. அதாவது தனது இலக்கை அடைகின்றது. அந்த வகையில் அண்மையில் திருமறைக் கலாமன்றத்தால் மேடையேற்றப்பட்ட "கொல் ஈனுங் கொற்றம்' என்னும் கூத்துருவ நாடகம் இலக்கை அடைந்து முழுமைபெறுகின்றது.
பொழுதுபோக்குக்காக அளிக்கைகள் அரங்கேறிய காலம் போய், மனிதத் தேடலை நோக்கி நகரும் காலமிது. கவிச்சக்கரவர்த்தி கம்பனின் இராமாயணத்திலுள்ள கும்பகர்ணன் வதைபடலத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய வியாக்கியானத்துடன் இக் கூத்துருவ நாடகம் ஆக்கப்பட்டுள்ளது. இது ஒரு வசன நாடகமாக இருந்தால் இந்தளவு வெற்றிபெற்றிருக்குமா என்பது சந்தேகமே. முதல் காட்சியிலேயே முரசறைபவனின் வருகையும் முரசறையும் தன்மையும் யுத்த கள நிலைக்கு பார்வையாளரை அழைத்துச் செல்கிறது.
பல்வேறு கூத்து மரபுகளின் பாடல்களை காதுக்கு இனிமை சேர்க்கும் இராகங்களுடன் அமைத்து பல தரப்பட்ட ஆட்டங்களையும் அற்புதமாக ஆடவைத்து அளிக்கை செய்த இதன் நெறியாளர் திரு. யோ, யோண்சன் ராஜ்குமார் பாராட்டத்தக்கவர். இவரது பின்புலத்தை நோக்கும்போது இவரது தாய்வழி கூத்துசார் பாரம்பரியமும் தனது மானசீக ஆசானாகக் கொண்டிருக்கும் தலைக்கோல் திரு. பிரான்சிஸ் ஜெனமும் காரணமாக யோ, யோண்சன் ராஜ்குமார் Cso)

இருக்கலாம். "எனக்கு கூத்தில் பரிச்சயம் இல்லை. இருப்பினும் எனது நண்பர் திரு. பிரான்சிஸ் ஜெனம் அவர்களின் நட்புரிமையோடு கூடிய வற்புறுத்தலின் பெறுபேறாக என்னால் தயக்கத்தோடு எழுதப்பட்டவை. அவ்வேளை நண்பர் என்னைக் கசக்கிப்பிழிந்து இக் கூத்துக்களில் சிலவற்றை எழுதுவித்தார்.” என குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் 'எதிர் கொள்ளக் காத்திருத்தல் நூலில் எழுதியுள்ளார். அத்தகைய ஆளுமை மிக்க பிரான்சிஸ் ஜெனத்தின் சாயல்களை திரு. யோண்சன் ராஜ்குமாரில் கண்டு ஆனந்தப்படுபவன் நான். 'கொல் ஈனுங் கொற்றம்' அவரின் வெளிப்பாட்டுக்குச் சிறந்த சான்று.
கும்பகர்ணன் வதைபடலம் எமக்கு மிகவும் பரிச்சயமானதாக இருந்தாலும் சொல்லும் முறைக்கு ஒரு மதிப்பு உண்டு. கிரேக்க அரங்கில் "கோரஸ்' எவ்வாறு அவலச்சுவை நாடகத்தில், நாடகத்துள் இணைந்து பங்காற்றுமோ, அவ்விதம், கட்டியகாரனையும், கோரசையும் கொண்டு கதையை நகர்த்திய முறைமையும், அவற்றை நெறிமுறையுடன் பயன்படுத்திய தன்மையும் நாடகத்திற்குச் சிறப்புச் சேர்த்தது. ஒரு அளிக்கையின் வெற்றிக்கு பெரும் பங்காற்றுவது பாத்திரத் தெரிவே. அந்த வகையில் இந் நாடகத்தின் பாத்திரத் தெரிவு மிகவும் சிறப்பாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இராவணனும், கும்பகள்ணனும் ஒருவரை ஒருவர் அணைக்கும்போது கம்பன் எழுதி வைத்தான் "நின்ற குன்றொன்று இருந்த குன்றொன்றைத் தழுவியது” என்று அதனை அரங்கினில் கண்டோம்.
இராவணன் தன்பரிவாரங்களுடன் தேரிலே யுத்தத்திற்கு வரும் காட்சி அற்புதமாக அமைக்கப்பட்டிருந்தது. திரு. ஏ. ஆர். விஜயகுமாரின் பாடல்களும் ஆட்டமும், அங்க அசைவும், முக பாவனையும் மிக மிக அற்புதம். அதே போன்று கும்பகள்ணனாக வந்த திரு. எவ். யூல்ஸ் கொலினும் உரிய தோற்றத்தோடு ஆடியும் பாடியும் தன் முக பாவனையாலும் சபையோரை மிகவும் கவர்ந்தார். கட்டியகாரனும் ஒரு கட்டியகாரன் எவ்வாறு தோன்றலாமோ அவ்வளவில் நிறைவுபட்டு நின்றார்.
இராமனாக வந்த திரு. இ. ஜெயகாந்தனுக்கு ஆட்டம் அவருடன் இசைந்து போகவிட்டாலும் தனது இனிமையான குரலாலும் கன கச்சிதமான இராமன் தோற்றத்தாலும், நடிப்பாலும் பாத்திரத்தை பூரணப்படுத்தியிருந்தார். அதே போன்று விபீஷணனாக வந்த திரு. தை. யஸ்ரின் ஜெயலூட்டின் குரல், நடிப்பு, ஆட்டம் அத்தனையும் அவருக்கு சிறப்பாகக் கைகொடுத்தது. எல்லாப் பாத்திரங்களையும் குறிப்பிடாவிட்டாலும் ஒவ்வொரு பாத்திரங்களும் நாடகத்தின் முழுமையில் அழகு சேர்த்தன. ஒவ்வொரு காட்சிகளும் மனதில் பதியும் விதமாய் அமைக்கப்பட்டிருப்பதும் இந் நாடகத்தின் சிறப்பாகும் விபீஷணன் தன் உடன் பிறப்பு கும்பகர்ணனுக்காக இராமனிடம் பரிந்து பேசி பின்வருமாறு வேண்டுகின்றான். "அன்று காட்டிய பேராண்மையை இன்றும் காட்டும்படிதானே கேட்கிறேன்" அதற்கு இராமன் "சரி கலங்காது செல். களநிலைக்கு ஏற்ப உன் வேண்டுகோள் ஏற்கப்படும்” என்று கூறும்போது சபை எதிர்வினை காட்டியது. அரங்கினர் கைதட்டி ஆரவாரம் செய்த காட்சிகளில் இதுவும் ஒன்று. அது எம் சமகால களநிலையைத் தொட்டது. இதில் பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களும் தத்தமது பாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
அதே போன்று அரங்கின் பின்னால் செயல்பட்ட இசையமைப்பாளர்கள், வேடஉடை பொறுப்பாளர்கள், அரங்கப் பொறுப்பாளர்கள், உதவி நெறியாளர்கள், ஒலி, ஒளி பொறுப்பாளர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இது ஒரு
1 N. கொல் ஈாைங் கொற்றப் கால் ஈனுங் கொற்றம் اس“ ”ہحN

Page 52
மாபெரும் கூட்டு முயற்சி. இத்தகைய ஒரு பாரிய படைப்பு உருவாக திரு. யோண்சன் ராஜ்குமாரை 'கம்பன் மகன்' போன்ற கூத்துக்களை எழுதத்துாண்டி ஊக்கமளித்த அண்ணாவியார் அ. பேக்மன் ஜெயராசா, எமது மன்ற இயக்குநர் பேராசிரியர் நீ. மரியசேவியர் அடிகளர் எனப்பலர் திரு. யோன்சன் ராஜ்குமாருக்கு கொடுத்த ஊக்கமும் தன்னம்பிக்கையுமே காரணம். திரு. யோண்சன் ராஜ்குமாரிடம் உள்ள நாட்டுக் கூத்தின் பரந்த ஆளுமையை இனங்கண்ட இயக்குநர் மரியசேவியர் அடிகள் தனது காலத்தில் இவரைக் கொண்டு சிதறிப் போய்க் கிடக்கும் நாட்டுக்கூத்து கலைஞர்களை ஒன்று திரட்டி நாட்டுக்கூத்துக் களஞ்சியம் ஒன்றை உருவாக்கவும் எண்ணியுள்ளார். ஒரு மனிதனின் உள்ளுறைபவனை மற்றொரு மனிதனின் உள்ளத்திற்கு காட்டுவதுதான்
கலை. அது இங்கு 'கொல் ஈனுங் கொற்றம்' அரங்கில் நிதர்சனமாகியது.
இந் நாடகத்தைப் ப்ர்த்த பேராசியர் சி. மெளனகுரு அவர்கள் குறிப்பிடுகையில், "கூத்துருவ நாடகமாகிய கொல் ஈனுங் கொற்றம், கூத்துருவ வரலாற்றில் ஒரு பாய்ச்சல்” என்றார். பலமேடை கண்டு பலராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கொல் ஈனுங் கொற்றத்தை தந்த நெறியாளர் திரு. யோண்சன் ராஜ்குமாருக்கு எனது பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும்.
கலாபூஷணம் ஜி. பி. பேர்மினஸ் குருநகர். D
எம் அனைவரையும் நாடகம் கவர்ந்து வைத்திருந்தது
".பல கூத்து மரபுகளையும் ஒன்றிணைப்பதில் எனக்கு அதிக உடன்பாடு இல்லாத நிலையில் "கொல் ஈனுங் கொற்றம்' நாடகத்தைப் பார்வையிடச் சென்றேன். 'இது ஒரு பரிட்சர்த்த முயற்சியென்றும்; அந்தந்தப் பிரதேச மரபுகள் வகைத்தூய்மையுடன் பேணப்படவேண்டும். அதே வேளை கூத்தின் எதிர்கால வளர்ச்சி கருதி இவ்வாறான முயற்சிகள் செய்யப்பட வேண்டும்' என்ற நெறியாளரின் முன்னுரை என்னைக் கவர்ந்து, நாடகத்திற்குள் என்னை உள்ளித்தது.
நமது தாயகத்தின் பல பாகங்களிலும் பரவலாக ஆடப்படுகின்ற வடமோடி, தென்மோடி, வசந்தன், காத்தவராயன் என பிரபல்யம் பெற்ற பல மரபுகளில் இருந்தும் பொருத்தமான ஆடல் பாடல்களை தெரிந்தெடுத்து நாடகப் போக்கிற்கேற்ப இரசனைக்குரியதாக ஒருங்கிணைத்து ஒரே மேடையில், குறுகிய நேரத்துக்குள் மக்கள் முன் அளித்த முறைமையானது மிகவும் பாராட்டப்படத்தக்கது.
நாடகத்தின் அமைப்பு, கதைப்பின்னல், பாணி, பின்னணி, இசை, வேடஉடைகள் என அனைத்துமே பாராட்டப்பட வேண்டியவை. சிறப்பாக இராவணன், கும்பகள்ணன், இராமன், மண்டோதரி, விபீஷணன் போன்ற பாத்திரங்கள் அனைத்தும் சிறப்பான பொருத்தப்பாட்டோடு இருந்ததுடன் ஒவ்வொருவரின் நடிப்பும் மெய்ப்பாடுகளும் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தன. அதேவேளை, கதையை நகள்த்திய கட்டியகாரன் நாடகத்தின் நல்லதொரு கண்டுபிடிப்பு மட்டுமன்றி அவரின் நடிப்பும் பாபமும், பாடல் திறனும் நாடகத்திற்கு சிறந்த ஊட்டத்தினைக் கொடுத்துக் கொண்டிருந்தன. ஆயினும் பாடல் குழுவிலுள்ள பெண்களை நிற்கவைத்தமை மனதில் நெருடலைத் தந்தது.
இரண்டு மணித்தியாலங்கள் பார்வையாளர் தம்மை மறந்து நாடகத்துடன் ஒன்றிணைந்திருந்தமையும், சிறுவர், முதியவர்கள் என அனைவரையும் நாடகம் கவர்ந்து
யோ, யோண்சன் ராஜ்குமார் N-1

வைத்திருந்தமையும் இந்த நாடக வெற்றிக்கு சிறந்த சான்றாகக் கொள்ளலாம்.
உண்மையில் இதன் அளிக்கையும் உத்திகளும் பெரிய வெற்றிக்குரியது. அந்த
வகையில் திருமறைக் கலாமன்றம் திருப்தி அடையலாம். ஒரு சிலர் இதனை எல்லாம்
கலந்த ‘சாம்பார்’ எனக் குறை கூறலாம். ஆனால் பழரசக்கலவையாக இரசித்து சுவைத்திருந்தால் இதனை மிகவும் பாராட்டியே திருவார்கள்.”
அ. அந்தோனிமுத்து
ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர்.
Dങ്ങിങ്ങff.
D
எம்மை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது
இந்தக் கூத்துருவ நாடகம் எம்மை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. தேசிய அரங்கினை உருவாக்குதல் என்ற கருத்து நிலையுடன் எனக்கு உடன்பாடு இல்லாது விடினும், இந்த அளிக்கை முறையும் பாத்திரங்களின் பொருத்தப்பாடும் இதுவரை யாரும் செய்யாத அளவுக்கு சிறப்பாக இருந்ததனை குறிப்பிட வேண்டும். கூத்தினை எந்தளவுக்கு கையாளலாம் என்ற திறந்த கற்பனையோடும், பொருத்தப்பாடுகளோடும் இதன் நெறியாளர் இந் நாடகத்தினைப் படைத்துள்ளார். நான் நினைக்கிறேன் கூத்துப்பற்றிய
பரீட்சார்த்தங்களை திருமறைக் கலாமன்றமே செய்யமுடியும். செய்யவும் வேண்டும்.
என். பார்த்திபன் 6ifle/60 Tu T6mi, தேசியக் கல்வியியற் கல்லூரி, வவுனியா.
D
கூத்தில் விருப்பங்கொள்ளவைத்த நாடகம்
“எவரையும் கவரக்கூடிய வகையில் "கொல் ஈனுங் கொற்றம் அமைந்திருந்தது. கதையைத் தொகுத்த விதமும் வெவ்வேறு கூத்து மரபுகளை பொருத்தமுற இணைத்த முறையும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. கூத்தின் ஆடல்களை அவ்வவ் கூத்து மரபினர்தான் ஆடமுடியும் என்ற எண்ணத்தை முறியடித்து நல்ல பயிற்சியும், கட்டுப்பாடும் இருந்தால் எவரும் எதையும் ஆடலாம் என்பதனை இது நிரூபித்துள்ளது. இன்று தொலைக்காட்சி, சினிமா என்று அலையும் பார்வையாளர்களும் கூத்தில் விருப்புக்கொள்ள வைத்த நாடகம் இது. பாத்திரங்களை பொருத்தமுற தேர்ந்தெடுத்தமையும், புதிய இசை வளங்களைப் பயன்படுத்திய முறையும் நாடகத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம் எனலாம்.”
அண்ணாவியார் அ பேக்மன் ஜெயராசா கொழும்புத்துறை
தேசிய நாடக வடிவத்துக்குரிய தொடக்கம்
“.பல நாடக மேடைகளில் ஏறியவனென்ற வகையின் அனுபவத்தில்
கூறுகின்றேன். இந்தக்கூத்து நாட்டுக்கூத்து வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை. ஒரு
கொல் ஈனுங் கொற்றம் استہحN

Page 53
தேசிய நாடக வடிவத்துக்குரிய தொடக்கம் என்று இதனைக் கூறலாம். அந்தளவுக்கு இந்த நாடகம் தென்மோடி, சிந்துநடை, மன்னார், மட்டக்களப்பு என பலமோடிகளை ஒன்றிணைத்து மிகச்சிறப்பாக ஆக்கப்பட்டுள்ளது. கூத்து இனி வாழும் என்ற நம்பிக்கையை கொல் ஈனுங் கொற்றம் தருகின்றது. யோண்சன் ராஜ்குமார் எமது கூத்து உலகின் எதிர்காலமாகத் திகழுகின்றார். திருமறைக் கலாமன்றத்தினரைத் தவிர இவ்வாறான
கூத்துக்களை வேறெவரும் தயாரிக்க முடியாது.”
எஸ். எண். சி. நாதன்
கூத்துக்கலைஞன், வவுனியா
கூத்து வடிவத்தை இக்காலத்திலும் இரசிக்க வைக்கலாம்.
". கூத்து வடிவத்தை இக்காலத்திலும் இரசிக்க வைக்கலாம் என்பதற்கு, 'கொல் ஈனுங் கொற்றம்' நல்ல உதாரணம். பல கூத்துக்களை இணைத்தல் என்ற தேர்வாய்வு உண்மையில் இங்கு வெற்றி பெற்றுள்ளது. ஆடல், பாடல், நடிப்பு, பாத்திரப் பொருத்தங்கள், வேடஉடை, இசை என ஒவ்வொரு விடயங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. அந்தவகையில் இந்நாடகத்தை நான் நன்றாக இரசித்தேன். ஆனால் இந்நாடகத்தின் பாடு பொருளுடன் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. அதாவது இராவணனை ஒரு யுத்த விரும்பியாகவும் விபீஷணனை சமாதானத் தூதுவனாகவும்
சித்திரித்த முறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.”
கவிஞர் சு. வில்வரத்தினம் திருகோணமலை D
கூத்து அல்ல நாடகம்
". கொல் ஈனுங் கொற்றம், நன்றாக இருந்தது. ஆனால் இதை ஏன் கூத்துருவ நாடகமென்று போடவேணும், நாடகம் என்றே போடலாம். 'கூத்து' என்ற சொல்லை இதற்கு பயன்படுத்துவதனை நான் எதிர்க்கிறேன்."
அண்ணாவியார் சி. ஞானசேகரம் சிலாமுனை, மட்டக்களப்பு
O
நான் விரும்பி ரசித்த கூத்து
“எனக்கு "தேசிய வடிவம்' என்று சொல்வதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் கூத்து, 'கொல் ஈனுங் கொற்றம்’ போன்ற கலைத்துவங்களோடு படைக்கப்பட்டால்தான் எதிர்காலத்தில் உயிர்வாழும். உண்மையைச் சொன்னால் பல வருடங்களுக்குப் பின்பு நான் விரும்பி இரசித்த கூத்து இதுதான்.”
கவிஞர் தில்லைமுகிலன் திருகோணமலை
யோ, யோண்சன் ராஜ்குமார் | Nمحسب"ہح

jāizlo5)ī505Ī
ஒரு தேசிய அறங்கின்தேடலை நோக்கி. ‘கொல் ஈனுங் கொற்றம்
தேசிய அரங்கை நோக்கிய ஒரு நகள்வின் தொடர்ச்சி "கந்தன் கருணையின்" பின்னர் நீண்ட இடைவெளியைத்தாண்டி யாழ். திருமறைக் கலாமன்ற திறந்த வெளியரங்கில் யோண்சன் ராஜ்குமார் எனும் இளைய தலைமுறைக் கூத்தாளரால் மேடையேற்றப்பட்டுள்ளது.
தென்பாங்கு, வடபாங்கு, மன்னார்ப் பாங்கு, முல்லைத்தீவு மோடி, வாசாப்பு, வட்டுக்கோட்டைக் கூத்து என எமது ஆய்வாளர்கள் தொடக்கிவிட்ட சொற்றொடர் வாய்ப்பாடாக மாறி பழமையில் ஊறிப்போன நம் பரம்பரைக்கு இதில் காலத்திற்கேற்ற மாற்றத்தையோ மறுமலர்ச்சியையோ ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு மனப்பாங்கை உருவாக்கி விட்டிருப்பது உண்மையாயினும், இன்றைய உலகின் அதிவேக நாகரிக மாற்றத்திற்குட்பட்டு கிராமங்களும் அதன் வாழ்க்கை முறைகளுமே மாறிக்கொண்டிருக்கும் பொழுது கிராமத்தின் கலைகளும் அந்த மாற்றத்தை ஏற்க மறுப்பது அதன் வளர்ச்சிக்கு பாதகமாகவே அமையும்.
கூத்து வளரவேண்டும், வாழவேண்டும் என நாம் விரும்பினால் அடுத்த பரம்பரைக்கு அது எடுத்துச் செல்லப்படவேண்டும். இன்றைய இளைய பரம்பரை அதை நாட வேண்டும். நாளைய பரம்பரை அதில் நாட்டம் கொள்ளவேண்டும். கூத்தின் ஆடல், பாடல், தாளக்கட்டு போன்ற அதனது அடிப்படைத் தன்மைகள் மாறாதிருக்க ஏனைய விடயங்களில் காலத்திற்கேற்ற மாற்றம் புகுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் யோண்சன் ராஜ்குமாரின் 'கொல் ஈனுங் கொற்றம் ஒரு புதுமையை புகுத்தி இருக்கின்றது. பழைய கூத்தாளர் பேசும் மரபு, பண்பாடு, பாரம்பரியம், வேர் என்பனவெல்லாம் கூத்தின் பெயரால், சாதி என்ற சேற்றுக்குள் புதைந்திருப்பவையே என்பதை, காத்தவராயனும், பறைமேளக் கூத்தும், வட்டுக்கோட்டைப் பாங்கும் இன்றைய இளைய சந்ததியினருக்கு புரியவைக்கும்போது அதை அவர்கள் நாடமறுப்பதில் தவறு என்ன. அன்று ஒரு சில பிரதேசங்களில் ஒரு சில கூத்துக்களில் அரசனுக்கு 'உரலே சிம்மாசனம்; என்னே தமிழன் பண்பாடு? இந்த இலட்சணத்தில் இன்றைய தமிழ் இளைஞன் எப்படி ஐயா கூத்தை நாடுவான். மட்டு நகர் இளைஞன் எப்படி அந்த மேளத்தை அடிப்பான்? ஆசனத்தை மாற்றுங்கள்; மேளத்தின் தோற்றத்தை மாற்றுங்கள்; மேளம் அடிக்கிறவனின் உடை நடையை மாற்றுங்கள்; அந்த மேளம் அடிப்பவனின் வாழ்க்கை முறையையே மாற்றுங்கள்; எங்கள் கூத்து வளரும். வாழும். இங்கே யோண்சன் ராஜ்குமார் இந்த வட்டங்களுக்குள் இருந்து இந்தக் கூத்தினை வெளியே எடுத்து புதுஇரத்தம் பாய்ச்சியிருக்கிறார்.
இன்றைய அறுபது வயது கூத்தாளர் சிலர் தாங்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் பார்த்த கூத்தினை அப்படியே மேடையேற்ற விரும்புவதும் அதை இன்றைய இளம் சந்ததிக்கு திணிக்க விரும்புவதும் கூத்துக்கலையை சாகடிப்பதற்கான முதல்
கால் ஈனுங் கொற்றம்

Page 54
முயற்சி எனலாம். பரதக் கலை தொட்டு உலகின் அனைத்துக் கலைகளும் கால மாற்றத்தின் வேகத்திற்கும், பின் நவீனத்துவ வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து வளர்ந்து செல்லும் இக்கால கட்டத்தில் கூத்துக் கலையை பிடித்திருக்கும் பிரதேசக் கெடுபிடிகள், மோடிகள், பாங்குகள், சாதி வட்டங்கள், சமயக் கிரியைகள் இந்தக் கலையை சாகடித்துக் கொண்டிருக்கின்றன. இதனை 'கொல் ஈனுங் கொற்றம் உடைத்திருக்கின்றது. இங்கே யோண்சன் ராஜ்குமார் மேற்கூறிய பிரதேச வேறுபாடுகளை எல்லாம் புறம்தள்ளி ஈழத்தமிழ் பிரதேச கூத்துக்கலையின் சிறப்பம்சங்களையெல்லாம் உள்வாங்கி அந்த ஆட்டங்களும், இராகங்களும், தாளக் கட்டுக்களும் தத்ரூபமாக ஒரு கூத்தில் சங்கமிக்க வைத்தமை ஒரு தேசிய அரங்கின் தேடலுக்கான வாசற்கதவை திறந்து விட்டமை போன்றே தெரிகின்றன.பழமையைப் பேணிக் கொண்டே புதுமையைத் தொட்ட ஒரு புதிய வடிவமாக இது இருந்தது. அது மட்டுமல்லாமல் இன்றைய யுத்த அரக்கத்தனத்தின் கொடுமையை அனுபவித்த மக்கள் மத்தியில் இராவணன், கும்பகள்ணனை இராமன் மீது போர் தொடுக்கத் தூண்டும் காட்சிதனை கூத்தின் கருவாக எடுத்துக் காட்டியமை, நீதிகோரும் எம்மக்களை யுத்தத்தால் அடக்கி அழித்த நடப்பியல் நிகழ்வு, நெஞ்சில் ஒரு முள்ளாகக் குத்தி எம் உணர்வைத்தட்டியது. கள்நாடக யக்ஷகானமும்', கேரளாவின் கதகளியும், மேலைத்தேய பலே நடனமும் இலங்கையின் கண்டி நடனமும் புதிய வடிவம் பெற்ற காரணத்தினாலேயே இன்றும் அழியாது அழகுடன் திகழ்கின்றன. இன்றைய இளைஞர்களும் அதை நாடுகிறார்கள். பரதக் கலைகூட இதற்கு விதி விலக்கல்ல. பால முரளி கிருஷ்ணாவும், ஏ.ஆர்.ரகுமானும் கர்நாட சங்கீதத்தில் புதுமையை புகுத்துவதே இளம் சந்ததி அதை காவிச்செல்ல வேண்டும் என்பதற்காகவேதான்.
'கொல் ஈனுங் கொற்றத்தில் அது கூத்தாயினும் மேடைச் சமநிலை பேணலில் நவீன அரங்கியல் நுட்பம் பேணப்பட்டமையும், ஆடை அணிகலன், ஒப்பனை என்பவற்றின் நிறத் தேர்வில் நவநாகரிக வடிவமைப்பு நுட்பத்தை கையாண்டமையும், இசையில் பழைய மரபு வாத்தியங்களும் நவீன வாத்தியங்களும் ஒன்றிணைந்தமையும், பின்புல இசையானது நவீன அரங்கியல் பாணியில் பார்வையாளரை மேடை நிகழ்வுகளோடு ஒன்றிக்க வைத்தமையும் எங்கள் பாரம்பரிய கூத்துக்கலையை இன்றைய தளத்தில் நின்று பார்க்க வைத்ததுடன் எமது இளம் சந்ததியை இக் கலையில் நாட்டம் கொள்ளவைக்கும் ஒரு நல்ல முயற்சியாகவும் அமைந்தது.
நெல்லை நடராஜா வீரகேசரி - வார வெளியீடு - 21.08.2005
யோ, யோண்சன் ராஜ்குமார் NY-1

‘கொல் ஈனுங் கொற்றம் கூத்துருவநாடகம்
கிராமங்களில் இருந்த நாட்டுக் கூத்தை மக்கள் மயப்படுத்தி நகரிற்குக்கொண்டு வந்ததுடன் நகரத்தவர்களையும் கூத்தாட வைத்த பெருமை பேராசிரியர் சு.வித்தியானந்தனையே சாரும். அவரே கிராம ரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்த கூத்தை ஒன்றித்து வர்க்க வேறுபாடுகளைக்களைந்து நாட்டுக்கூத்தை புது மெருகுடன் வாழவைத்தவர்.
இன்றைக்குப் பல வருடங்களுக்கு முன்னர் நாட்டுக்கூத்துக் கலையையும் கலைஞர்களையும் அரவணைத்து கூத்துக் கலையை ஆவணப்படுத்தும் பெருமுயற்சியை திருமறைக் கலாமன்றம் மேற்கொண்டது. அதில் பாரிய வெற்றியையும் கண்டது. கூத்துக் கலையை நவீன மயப்படுத்தி அதற்குள் மக்களை உள்வாங்கி வருகின்ற பெரும் பணியை கலாநிதி கலைத்துாது நீ.மரியசேவியர் அவர்களும் அவரது உருவாக்கமான கலைஞர்களும் மேற்கொள்கின்றனர்.
கூத்துக்கலையை தனியே அரங்காற்றுகையுடன் நிறுத்திவிடாது நூல் வடிவில் ஆவண மாக்குவதுடன் கூத்துக் கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களது வெளிப்பாடுகளை கருத்தாடல்கள், பயிற்சிப் பட்டறைகள் ஊடாக செயற்படுத்தி வருகின்றமையால் ஆரோக்கியமான கூத்துச் சமூகத்தை தோற்றுவித்துள்ள அதேநேரம் 40 வருடங்களாக பாரம்பரிய கலை வடிவங்களின் வளர்ப்புப் பெற்றோராகவும் செயற்பட்டுவருகின்றது திருமறைக் கலாமன்றம்.
திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் கூத்துக்கலையை நேர்த்தியாக, அதேநேரம் புதுவித உத்திகளுடன் கையாள்வதில் இன்றுள்ளவர்களிடையே முதன்மையானவர். 'கொல் ஈனுங் கொற்றம்' எனும் கூத்துருவ நாடகத்தை ஜூலை மாதம் 31 ஆம் திகதி திருமறைக் கலாமன்ற திறந்தவெளி அரங்கில் பார்த்தோம். அக்கூத்துருவ நாடகம் தொடர்பான நேர்நோக்கை வாசகள்களுடன் பகிர்ந்துகொள்வோம்.
இராமாயணத்தில் இடம்பெறுகின்ற கும்பகர்ணன் வதைப்படலத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கதையோட்டத்துடன் நகரும் கூத்துருவ நாடகத்தை எழுதி நெறியாள்கை செய்தவர் பிரதி இயக்குநர் யோ, யோண்சன் ராஜ்குமார். முற்றிலும் வேறுபட்ட வகையில் கூத்திற்குள் மக்களையும் மக்களிற்குள் கூத்தையும் உட்புகுத்தியள்ளார் என்பதனை பார்வையாளர்களது சம்பாஷனையும் நாடகத்தை அவதானித்த முறையும் கோடிட்டுக் காட்டுகின்றது. யாழ்ப்பாணத்து கிறிஸ்தவக் கூத்துக்களையும் தென்மோடிக் கூத்தினையும் பார்த்திருந்த நாம் முற்றிலும் வேறுபட்ட கூத்துச் சூழலிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
இராமனின் மனைவியான சீதையை சிறைவைத்துள்ள இராவணன் மீது தர்மப்போர் புரிய வரும் இராமனிற்கு இராவணன் தம்பி விபீஷணன் துணை நிற்கிறான். இராமனிற்கும் இராவணனிற்கும் இடையே போர் நடைபெறுகின்றது. போரில் தோல்வியுற்ற இராவணன் தன்னிலை இழந்திருந்த வேளை கும்பகள்ணனை போரிற்கு அனுப்புவதும், போர்க்களத்தில் விபீஷணன் கும்பகள்ணனை (சகோதரர்கள்) போர் வேண்டாமென திரும்பிப்போக வலியறுத்துகிறான்.
- ح - سی
༦༤ 87། ཕྱི་ கொல் ஈனுங் கொற்றம்

Page 55
இதனை ஏற்றுக்கொள்ளாத கும்பகர்ணன் போரிட்டு இறப்பதும், இதன்பின் இராவணன் தன் மகன் இந்திரஜித்தை போர்க்களத்திற்கு அனுப்புவதற்கு அழைப்பதுமாக கதையோட்டத்தை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார் நெறியாளர். இக் கூத்துருவ நாடகத்தின் தென்மோடி, வடமோடி, வடபாங்கு, தென்பாங்கு, சிந்துநடை, இசைநாடகம் என இவற்றை உள்ளடக்கியதான ஆடல் பாடல்களைத் தழுவியுள்ளது. இவ் அளிக்கையில் 25 கலைஞர்கள் பங்குகொண்டனர்.
ஒவ்வொரு கலைஞர்களும் தாம் ஏற்ற பாத்திரத்தை மிகத்திறமையாகக் கையாண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர் என்பதற்கு சபையோரின் பாராட்டுதல்களும் அமைதியான அவதானிப்புக்களுமே தக்கசாட்சிகளாகவுள்ளன. பாத்திரத்தெரிவு, வேடஉடை, ஒப்பனை இவற்றில் திருமறைக் கலாமன்றம் சோடை போனதில்லை என்பதை மீண்டும் நிரூபித்தது. இராமன், இராவணன், கும்பகர்ணனின் பாத்திரத்தெரிவு, கதையின் நாயகர்களையே எம்முடன் உரையாட வைத்த உணர்வை ஏற்படுத்தியது.
கட்டியகாரனும், பின்னணிப்பாடகள் குழுவினரும் அரங்கின் இடது கரையை அலங்கரித்து கதையை நகர்த்திச்செல்கின்றனர். இராவணனின் சுயநலன் கருதிய சுயகெளரவத்திற்கான போராகவே கும்பகர்ணன் வதைபடலம் அமைகின்றது. இறுதிவரை போரிடுவதே என்ற இராவணனின் போர்க்குணத்தையும், தன் பக்க நியாயத்தை போரின் மூலமாகவே நிறைவேற்றலாம் என்ற எண்ணக் கருக்களிற்கு அமையவே கதை நகர்கின்றது. இழப்பைக் கண்டு கலங்குபவனல்ல இலங்கை வேந்தன். எதிரியை முறியடித்து மண்ணைவிட்டுத் துரத்தும்வரை ஒயப்போவதில்லை. போர். போர். இவ்வசனமே இராவணனின் கதாபாத்திரத்தை தெளிவுபடுத்துகின்றது. இராமனின் பாத்திரமேற்ற யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவனான இரத்தினசிங்கம் ஜெயகாந்தன் பாத்திரமாக மாறி தன் பங்களிப்பை வழங்கியதனை அவதானிக்க முடிந்தது. மனைவியை மீட்கும் வாஞ்சையுடன் யுத்தம் புரிபவனாக மிக அற்புதமாகத் தான் ஓர் இளம் கலைஞர் என்பதை பொய்ப்பித்தார் ஜெயகாந்தன். இராவணன், கும்பகள்ணன் ஆகிய இருவரும் அனுபவமுள்ள கலைஞர்கள் என்பதை நடிப்பாற்றலாலும் பாடல் வசனங்களை பிரித்தியம்பும் உச்சரிப்பினாலும் வெளிப்படுத்தி நிற்கின்றனர்.
கலைஞானச் செல்வன் என விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்ட ஏ.ஆர். விஜயகுமார், யூல்ஸ் கொலின் இருவருமே இராவணன், கும்பகர்ணன் பாத்திரமேற்று அரங்கை மட்டுமல்ல அவையோரையும் ஆட்சிசெய்தனர்.
இக்கூத்துருவ நாடகத்தை எழுதி, நெறியாள்கை செய்த யோ, யோண்சன் ராஜ்குமார் பல நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்தபோதிலும் இக் கலைஞர்களில் அநேகரைக் கொண்டு 'கம்பன் மகன்' என்ற நாட்டுக்கூத்தையும் நெறியாள்கை செய்துள்ளார். அந்நாட்டுக்கூத்து பலரது பாராட்டுதல்களைப் பெற்றதுடன் நூல் வடிவமும் பெற்றுள்ளது. 'கொல் ஈனுங் கொற்றம்' என்ற கூத்துருவ நாடகமும் இவ்வருட இறுதியில் நூல் வடிவம் பெறவுள்ளதாகவும் அறியமுடிகிறது.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் கூத்துருவ நாடகத்தின் வாயிலாகப் பார்வையாளரைக் கட்டிப்போட்ட கலைஞர்களும், நெறியாளரும் பாராட்டப்படுவதுடன், ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கெளரவிக்கப்பட வேண்டியவர்கள். காலத்திற்கு அமைவாக கலைஞரின் விருப்பறிந்து படைத்தளித்த இந்நாடகம் கொழும்பில் இரு
. . . . . . . . 188 N யோ, யோண்சன் ராஜ்குமார் N-1

தடவைகளும், நல்லூர் இளம் கலைஞர் மன்றத்திலும் அரங்கு கண்டுள்ளது.
இவ்வாறான இனிய கலைவடிவங்களினுடாகவே எம் பாரம்பரிய கலைவடிவங்களை மக்கள் மயப்படுத்தி, மக்களையும் கூத்தையும் ஒன்றிக்கச் செய்யலாம் என்பதற்கு "கொல் ஈனுங் கொற்றம்" முன்னுதாரணமாகவுள்ளது. இப்படியான கலைவடிவங்களே காலத்தின் தேவையாகவுமுள்ளன.
ஈழவன்
ஈழநாதம் - வெள்ளிநாதம் 2 - 8 செப்ரெம்பர் 2005
கொல் ஈனுங் கொற்றம் كس ک<"

Page 56
கும்பகர்ணவின் அகச்சிறப்பை விளக்கும் ‘கொல் ஈனுங் கொற்றம் திருமறைக்கலாமன்றத்தின் அற்புதத் தயாரிப்பு
மானவீரன் கும்பகர்ணன் பற்றி தமிழ் உலகம் அவ்வளவாக அறிந்ததில்லை. கவிச்சக்கரவர்த்தி கம்பனின் அழியாத பாத்திரப் படைப்பில் கும்பகர்ணனே பொற்கிரீடமாவான்! எமது இன்றைய கலை உலகம் இராடினையும், சீதையையும், இராவணனையும், மண்டோதரியையும், இலக்குவனையும், இந்திரஜித்தனையும் அறிந்த அளவிற்கு ழான வீரன் கும்பபகள்ணனை அறியவில்லை; அதோடு ஆற்றுகைகளும் குறிப்பிடத்தக்கவாறு வெளிவரவில்லை.
இதன் பின்னணியில்தான் யாழ் திரும்றைக் கலாமன்றத்தினர் நாற்பதாவது ஆண்டின் சிறப்பு நிகழ்வாக 'கொல் ஈனுங் கொற்றம்' என்ற கூத்துருவ நாடகத்தினை பிரமாண்டமான முறையில் தயாரித்து பல இடங்களிலும் ஆற்றுகை செய்து வருகின்றனர். இதில் சமகாலத்துடன் ஒன்றிக்கும் கருத்துக்களும் காணப்படுவது சிறப்பம்சமாகும். "போர் வேண்டாம் அறமற்ற யுத்தம் பயனற்றது, நீதியற்ற போர் நிலைக்காது உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டே போனால் சீதை என்ற சமாதானப் பெண்ணை மீட்கும் போர் தவிர்க்க முடியாதது என்ற சாராம்சத்தை கொண்ட கருத்தியல் ரீதியான பார்வையை இதில் காணமுடிகிறது.
அழகியல் தன்மைகளை நோக்கும்போது யாழ்ப்பாணக் கூத்து வடிவங்களான வடமோடி, தென்மோடி, சிந்துநடை, வசந்தன், ஒயிலாட்டம் உட்பட மன்னார், மட்டக்களப்பு மலையகக் கூத்து மரபுகளில் அமைந்த ஆடல் - பாடல்களை ஒருங்கிணைத்து தமிழர்களுக்கு உரித்தான கலைவடிவத்தைக் கண்டு பிடிக்கும் தேடல் வரவேற்கத்தக்கதொன்று. தமிழர்களின் தனித்துவமான கலைவடிவம் என்ன? என்று சர்வதேசத்தினர் கேள்விக்கு பதிலளிக்கும் 'கொல் ஈனுங் கொற்றம்' என்ற அற்புதமான படைப்பு திருமறைக் கலாமன்றத்தின் நாற்பதாவது ஆண்டின் மைற்கல்லாக அமைகிறது. கும்பகர்ணன் வதைபடலத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய வியாக்கியானத்துடன் 'கொல் ஈனுங் கொற்றம்' என்ற கூத்துருவ நாடகத்தை அழகியல் மற்றும் விறுவிறுப்புத்தன்மைகளிற்கமைய எழுதி, நெறியாள்கை செய்திருந்தார் யோயோண்சன் ராஜ்குமார். இதில் பல இடங்களில் மரபுகளைத் தழுவியும், புதுமைகளைப் புகுத்தியும் எழுத்துருவாக்கம் அமைந்ததை; நாடகத்தை சுவைக்கின்றபோது விளங்குகின்றது.
"பூமியிலே போரதனால் - பலி ஆனவர்கள் ஆயிரமாயிரம்: பல முடையோர் பலர் திறமுடையயோர் பலர், பயனுடையோர் பலர் அறமுணர்ந்தோர் பலர், அவர் நிலையை ஒதவந்தோம், கும்பகள்ணன் கதை கூறவந்தோம்" என்று பிற்பாட்டுப் பாடுவோரும் சபையோராக கட்டியம் கூறியதன் பின் இராவணன் போரிற்குச் செல்வதோடு நாடகம் விறுவிறுப்படைகின்றது.
கும்பகர்ணனை போரிற்கு அனுப்புமாறு இராவணின் தாத்தா மாலியவான் கூறியதையடுத்து, நான்கு மல்லர்களை கும்பகர்ணனை எழுப்பிவருமாறு அவனது
0 S SSL SL SL С оo , யோ. யோண்சன் ராஜ்குமார் سمس کہحلا

மாளிகைக்கு மன்னன் அனுப்புகின்றான். துயில் கொள்ளும் கும்பகள்ணனை மல்லர்கள் படாதபாடுபட்டுத் தூக்கம் கலைக்கும் காட்சி நகைச்சுவையாகவும், இரசனைத் தன்மையுடனும் அமைந்திருந்தது.
"ஆனதோ பெருஞ்சமரும் அழகு நிறைச் சானகியும் ஏனோ சிறையதனால் விடுகை பெறவில்லையண்ணா." என்று தொடரும் கொச்சகத்தில் கற்பின் செல்வியை விடுவிக்குமாறு கூறுவதில் அவனது அறச்சினம் வெளித்தெரிகின்றது! அவன் போர்க்களம் புகமுன் "அண்ணா என்னை அவர்கள் வென்றுவிட்டால் உன்னை அவர்கள் வெல்வது எளிதாகிவிடும்” என்று எச்சரிப்பதில் அறச்சிறப்பு கோடிட்டுக் காட்டப்படுகின்றது. சாவு அழைத்திட சமர்க்களம் புகுந்துள்ள கும்பகள்ணன் படைகள் (தா தா கிடதோம் தரிகிட தா தா கிடதோம்) என்ற தாளக் கட்டுக்களுடன் வேகமாகவும் கூத்து நடனமாடுவதும் இராமன் படைகள் (தாம தகிட தரிகிட தோம் தக) என்ற மென்மையான பாத்திர வரவுகளும் பிற்பாட்டுக்காரர்கள் பாடலோடு சல்லரி - சங்கொலி, ரம்ஸ், மிருதங்கம், தபேலா, ஹார்மோனிய வாத்தியங்களின் துணையோடு சண்டைக் காட்சிகள் நடிப்புத் திறன்களோடு இணைந்து அமர்க்களப்படுத்தியது.
"கொல் ஈனுங் கொற்றமே, கோர அரசென்றால் குடிகள் பாவம் என்ன செய்யும்?"
என்ற கேள்விக்கனைகளில் புதிய வியாக்கியானம் வெளிப்படுகின்றது! நிறைவில் கடைசி உயிர் உள்ளவரை சமராடி மடிகின்றான் கும்பகர்ணன் போர் காட்சியில் வாள். *தா:ம் கைக்கவசம், அம்புவில் அத்தனையோடும் யூத்தத்திற்கு கை:ண்ட ஆட்ட முறைகள் சிறப்பாயிருந்தது. இராமனின் அம்புகள் தம்பியை நவீழ்த்தியதை அறிந்த இராவணன் மீண்டும் போர் வெறி கொண்டு "என் தம்பிபைக் கொன்றவர் சாகிடும் வரையிலும் என் சினம் திராது எங்கே என் மகன் இந்திரஜித்தன் போர். பேர்." என்று கத்துகின்றான் இதுவே நாடகத்தின் உச்சம்.
கும்பகர்ணன், இராவணன், இராமன் பாத்திரங்களில் நடித்தவர்கள் தமது பாத்திரச் சிறப்பை வெளிப்படுத்தியுள்ளனர்! ஒரு அசல் சுக்கிரீவனை காணமுடிந்தது, விபீஷணன், இலட்சுமணன், மாலியவான், மண்டோதரி ஆகிய பாத்திரங்கள் முகபாவங்களை வெளிக்காட்டினர்!
கட்டியகாரன், பாடல் குழுவினர், படைவீரர் தமது பணியைச் சிறப்புற ஆற்றியுள்ளனர். அதோடு பின்னணி இசை அமைப்பும் அற்புதமாக இருந்தது. வேட உடை, ஒப்பனை மரபுகளைத் தழுவியதாகவும் ஒலி, ஒளி அரங்க விதானிப்புக்கள் நவீன முறையிலும் கையாளப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் கூட்டு முயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு 'கொல் ஈனுங் கொற்றம் கூத்துருவ நாடகம். அதோடு பிற்பாட்டுக்காரர்கள் இன்னும் தங்களை வளப்படுத்திக்கொள்ள இடமுண்டு!
ஒரு கலைப்படைப்பானது ஒரு விடயத்தை பல கருத்துக்களோடு தொடர்புபடுத்திக் காட்டும்போதுதான் அந்தவிடயம் அனைத்து இரசனை மட்டத்தினரையும் சென்றடைவதோடு காலத்தால் நிலைத்தும் நிற்கின்றது. இத்தகைய சிறப்புக்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டு பார்ப்போரை பல முனைகளில் சிந்திப்பதற்கு தூண்டியது 'கொல் ஈனுங் கொற்றம்' என்றால் அது மிகையாகாது.
ஜோ. ஜெஸ்ரின் வலம்புரி 08.10.2005
19 N. CS L S AASSSLLLLL S S LL SLS ト-ームーイ கொல் ஈனுங் கொற்றம்

Page 57
‘கொல் எனுங் கொற்றம் கூத்துருவ நாடகம் ஒரு பார்வை
“நிதியே தவறிடும் கோண்மையால் - பூமியே புழுதியாய் மாறிடும் மாயம் நாதியே இல்லா நல்லுயிரெல்லாம் நலிந்துமே சாகிடும் சோகம்”
என்ற பாயிரத்துடன் ஆரம்பித்த, திருமறைக் கலாமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட "கொல் ஈனுங் கொற்றம்' என்னும் கூத்துருவ நாடகத்தை இரு தடவைகள் பார்க்கின்ற சந்தர்ப்பம் கிட்டியது. இதன் உருவநிலையிலும், உள்ளடக்க நிலையிலும் சமகால அரங்கப்போக்கில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக்கொண்டு காணப்படுகின்றமையை உணரமுடிகின்றது. விமர்சனத்துக்குரிய நல்ல நாடகம் என்ற வகையில் இதனைப்பற்றி எழுத முற்படுகின்றேன்.
'கூத்துருவ நாடகம்’ என்ற பெயர்ப்பதம் இந்த நாடக வகைக்குப் புதிதாக இடப்பட்டிருந்தது. நாட்டிய நாடகம்', 'இசை நாடகம்', என்று பல்வேறு முதன்மைக் கலைகளின் அடிப்படையில் பெயர் வழங்கப்படுதல் புதிதல்ல. ஆனால் கூத்துமரபை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரீட்சார்த்த முயற்சி என்ற வகையில் இவ்வாறான பெயர் வழங்கல் வரவேற்கப்படக்கூடியதே. காரணம், இதில் பல கூத்து மரபுகள் இணைக்கப்பட்டிருந்ததுடன் தனியே கூத்து என்றால் மரபுசார்ந்தோரின் எதிர்ப்பையும், நாடகம் என்றால் அதன் கூத்து வடிவப் பண்பையும் நிராகரிக்கவேண்டி இருந்திருக்கும். எனவே நெறியாளர் இரண்டுக்கும் பொதுவான பதத்தை இணைத்துப் பயன்படுத்தியுள்ளார். கூத்தினை பரீட்சார்த்த முயற்சியாக அணுக முற்படுபவர்கள் இப்பெயர் பதத்தினை கையாள முடியும்.
‘கொல் ஈனுங் கொற்றம்’ நாடகம் பின் வரும் வகையரில் முக்கியத்துவப்படுத்தக்கூடியது. 1. கூத்துப் புத்தாக்க முயற்சியின் ஒரு நீட்சியாகப் பல கூத்துமரபுகளை ஒன்றிணைத்தமை. 2. கூத்தின் சட்டகத்துக்குள் நின்று நவீன அரங்கச் சிந்தனைகளை நோக்கிய ஒரு
பாச்சலாய் அமைந்தமை. a.
3. காவியப் பொருளை சமகாலப் பிரச்சினைகளுக்குப் புதிய விளக்கமாக அளித்தமை.
கூத்துப் புத்தாக்க முயற்சியின் நீட்சி
தமிழர்களின் மரபுவழிப்பட்ட தேசிய வடிவம் கூத்துத்தான் என்பதை உணர்ந்து கொண்ட பேராசிரியர் வித்தியானந்தன் அதன் புத்தாக்கத்திற்கு வழி சமைத்தார். அவரால் கிராமத்தில் இருந்து பல்கலைக்கழக அரங்கிற்கு கூத்து கொண்டு செல்லப்பட்டு பல்வேறு வகையிலும் புத்தாக்கம் செய்யப்பட்டு மேடையேற்றப்பட்டது. இது முதல் முயற்சி, அதன் பின் அவரின் மாணவர்களான பேராசிரியர் மெளனகுரு போன்றோர் கூத்தின் வடிவத்துக்குள் சமகாலப் பாடுபொருளை இணைத்தனர். இது இரண்டாவது முயற்சி, அதற்குபின் மூன்றாவதாக கூத்தின் கூறுகளை நவீன நாடகங்களுக்குப் பயன்படுத்தினர்.
----, -e-. ... 8- e. (^— 92 `ა Chlum, Gulunstevašryngeudrtř السكك حلا

அதன் பின் நான்காவதாக கூத்தை பரதத்துடன் இணைக்கும் சில பரீட்சார்த்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வரன்முறைப் பாரம்பரியத்தில் ஒரு நீட்சியாக 'கொல் ஈனுங் கொற்றம்' இன்னொரு தளத்திற்கு கூத்தினை நகள்த்தியுள்ளது.
அதாவது 'ஒரு தேசியம்' பற்றி பலரும் பலவாறாக பேசுகின்ற இக்கால கட்டத்தில் பல பிரதேச கூத்து மரபுகளையும் பரீட்சார்த்தமாக ஒன்றிணைக்க ஆசிரியர் முற்பட்டுள்ளார். அந்த முயற்சியில் அவர் கணிசமான அளவில் முன்னேறியுள்ளார் என்பதற்கு இப்படைப்பு சான்று பகள்கின்றது. யாழ்ப்பாணத்தின் தென்மோடியை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சிந்து நடை, வடமோடி, மட்டக்களப்பு வடமோடி, மன்னார் தென்பாங்கு, முல்லைத்தீவு கோவலன் கூத்து, மலையகக் காமன் கூத்துப் போன்ற பல வடிவங்களையும் நெறியாளர் வலிந்து கொண்டுவந்து இணைக்காமல் சம்பவங்களின் பொருத்தப்பாட்டுடன் இடங்கண்டு இணைத்துள்ளார். இந்த இணைப்பு, துருத்திக் கொண்டும், தனிமைப்பட்டும் நிற்காமல் பலவறக்கலந்துள்ளது. பேராசிரியர் கூறும் 'சுவைபடவந்தன வெல்லாம் ஓரிடத்தே வந்தனவாகக் தொகுத்துக் கூறல் இங்கு நடந்துள்ளது. கூத்துக்களின் இணைப்புப்பற்றி விரும்பாதவர்கள் கூட இந்த ஒருங்கிணைப்பைக் குறை சொல்லமுடியாதவாறு இணைப்பு வலிமை பெற்றுள்ளது. உதாரணமாக நோக்குகையில், இராவணனின் வரவு தென்மோடி மரபில் அமைய, இராமர் கொலு வடமோடியில் அமைகிறது. கும்பகள்ணன் - விபீஷணன் சந்திப்பு சிந்து நடையில் அமைகிறது. ‘விருத்தங்கள் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒவ்வொரு மரபின் தன்மையில் பாடப்படுகிறது, தென்மோடி 'கொச்சகம் பாடப்பட அதன் தருவாக சிந்துநடை இணைகின்றது. இவ்வாறு பலவற்றை ஒன்றிணைத்தமைக் கூடாக கூத்துக்கள் பிரதேச வழக்குகளால் வேறுபட்டு நின்றாலும், அதன் அளிக்கைப்பண்பு ஓரிடத்தில் ஒன்றுபடுகின்றது என்ற யதார்த்தத்தை நிரூபித்து "தேசிய வடிவமாக கூத்து ஆக்கப்படலாம் என்ற முயற்சிக்கு ஒரு முதற்கல்லாக இந்நாடகம் அமைந்துள்ளது.
கூத்தின் சட்டகத்துக்குள் நின்று நவீன அரங்கச் சிந்தனைகளை நோக்கிய ஒரு பாச்சலாய் அமைந்தமை
மற்றைய சிறப்பம்சம் யாதெனில் 'கூத்து' என்ற மரபுவடிவத்தின் கதைப்பின்னலுக்குள் நின்று நவீன சிந்தனைகள், ஐரோப்பிய அரங்கின் தாக்கங்கள் போன்றவற்றை பொருத்தம் கருதி இணைப்புச் செய்தமை பாராட்டப்பட வேண்டியது. கூத்தின் யாப்பு என்று கூறத்தக்க காப்பு, கட்டியமுரைத்தல், பாத்திரவரவுகள், படர்க்கையிலான அறிமுகம், சபையோரின் பங்களிப்பு, மங்களம் என்று விரியும் கதைப்பின்னலை நாடகத்தில் அவ்வாறே கையாண்டதுடன் 'கட்டியகாரனை சூத்திரதாரிபோல நாடகத்தின் கதையை நகள்த்தும் எடுத்துரைஞனாகவும், கிரேக்கத்தின் கோரசைப்போல, அக்காலப் பாத்திரங்களுடன் காலங்கடந்து உரையாடும் பண்போடும் படைத்திருந்தமை மிகச்சிறந்த உத்தி மாத்திரமல்ல எமது நாடக மரபுக்கும் புதிது. அதேபோல் கிரேக்கத்தின் கோரஸ் எவ்வாறு அக்கால அவலச்சுவை நாடகங்களின் அளிக்கையுடன், உரையாடி, உறவாடி, விவாதித்து, ஆறுதல் கூறி, பாடல்பாடி, ஆடல் நிகழ்த்தி பல கோணங்களில் செயற்பட்டதோ அதேபோல் இங்கும் ஒரே மாதிரியான வேட உடை அணிந்த பாடற்குழுவினர் பயன்படுத்தப்பட்டனர். இது கிரேக்கத்தை நினைவுபடுத்தினாலும், எமது மரபு வழிக் கூத்தின் சபையோர் ஆற்றிய பணியாகவுமுள்ளது. அது மட்டுமன்றி இசையில் ஏற்படுத்திய மாற்றங்களும் குறிப்பிடத்தக்கவை.
༦༤ 23 །) கொல் ஈனுங் கொற்றம்

Page 58
ட்றம், மிருதங்கம், சங்கு, ஜெண்டை, ஒர்கன், உடுக்கு என பல இசைக்கருவிகளை தேவைகருதி பயன்படுத்திய விதம் கேள்விப்புலத்தில் ஒரு படிம உருவாக்கத்தை ஏற்படுத்தி நின்றது. அதுமட்டுமன்றி வேடஉடை விதானிப்பானது, எமது பகட்டாரவார உடையில் நின்றும், யதார்த்தப்பண்பில் நின்றும் வேறுபட்ட ஒரு எளிமை உள்ளிட்ட கலாபூர்வமான தெரிவாக இருந்தது. கோரஸ் குழுவினரின் ஒரே பண்பான உடைகள், ஏனைய பாத்திரங்களின் உடைகள் போன்றவற்றை குறிப்பிட்டாலும், இராவணன், கும்பகள்ணனின் வேட உடை விதானிப்பு எமது மரபுக்குரிய உடையின் தேடல் தயாரிப்பு போல தெருக்கூத்தினை ஒத்த கிரீடமுடி, புஜக்கிரீடம், இடுப்பில் சிறிய கரப்பு உடை, காலில் பார்ஸிய மரபு 'தார்பாச்சு' என பலவும் பொருத்தமுற இணைந்து நின்றதுடன், தெருக்கூத்தின் சில ஒப்பனைக் குறிகளுடன் மேற்கொண்ட ஒப்பனை ஈறாக சிறப்பான முத்திரையைப் பதித்து நின்றது.
அவ்வாறே காட்சி விதானிப்பில் பயன்பட்ட குறியீட்டுப் படிமம், நாடகத்தின் பாடுபொருளை வெளிப்படுத்தி நின்றது. யுத்தத்தின் குறியீடான முரசினை பெரிய அளவில் வைத்ததுடன் பக்கங்களில் இராணுவ வேலியும் இருபுறமும் XX வடிவத்தில் ஈட்டிகளின் அமைவும் "யுத்தம் தவறு என்று சுட்டுமாப்போல் காட்சிதந்தது.
இவ்வாறு பல பழமையான விடயங்களையும், புதுமையான விடயங்களையும் நவீன சிந்தனையுடன் முன்வைத்த விதம் நாடகத்தின் வெற்றிக்கான முக்கிய காரணம்
(5D.
காவியப் பொருளை சமகாலத்துக்குரிய பாடுபொருளாக்கியமை
வடிவ நிலையில் மட்டுமன்றி உள்ளடக்க நிலையிலும் இந்நாடகம் வரவேற்கப்படுவதற்குக் காரணம் சமகாலத்துக்குரிய செய்தியை நாடகம் பேசியது ஆகும். அன்றைய பாரதத்தின் இழிநிலையை விளக்க பாரதி, மகாபாரத்தின் "பாஞ்சாலிசபதத்தை முன்வைத்ததுபோல இராமாயாணத்தின் கும்பகர்ணன் வதைப்படலத்தை ஆசிரியர் கையாளுகின்றார். 'அறம் பிறழ்ந்த யுத்தம் வென்றதில்லை என்ற உண்மையை இந்த நாடகத்துக்கூடாக சொல்லியது மட்டுமன்றி. அறமற்ற யுத்தம் தொடர்ந்தால் கும்பகள்ணன் போன்ற பெறுமதி வாய்ந்த மனித உயிர்கள் அழிக்கப்படும் என்ற பேருண்மையை புதிய வகையில் ஆசிரியர் முன்வைக்கின்றார். "இலங்கை வேந்தன்' கொலையை ஈன்றெடுக்கும் கொற்றமாக ஆசிரியர் அவனை சித்தரித்து கதையின் நகள்வனைத்துக்குள்ளும், உரையாடல்களுக்குள்ளும் எமது சமகால அரசியல் சூழல் நிழலிடச் செய்கிறார். 'அறம் பிறழ்ந்து போர் நயந்து ஆளுகை செய் கொற்றம் திறன்கள் நிறை இன்னுயிர்கள் கொன்றொழிக்கும் கூற்றம்' என்ற ஆசிரியரின் பாடு பொருள் பற்றிய குறள் அவரின் நோக்கத்தை தெளிவாக எடுத்தியம்புகின்றது.
இராவணனை ஆசிரியர் நோக்கிடும் விதம் வேறுபாடானது. கம்பனை ஒத்த வகையில் நோக்கியது மட்டுமல்ல, அதன் இன்னொரு படி முன்சென்று "அதர்ம யுத்தம் செய்யும் சுயநலவாதியாக சித்திரிக்கின்றார். மண்டோதரி செய்யும் உரையாடலில் அவரின் ஆதங்கம் அதிகம் வெளிப்படுகின்றது. “மன்னா அவர்கள் செய்வது தர்ம யுத்தம், நீங்கள் செய்வது அதர்ம யுத்தம். மாற்றான் மனைவியை கவர்ந்து வைத்திருப்பது நீங்கள். அதனை மீட்க வருவது அவர்கள். அவர்களுக்குரியவளைக் கொடுத்து விட்டால் அவர்கள் ஏன் யுத்தம் செய்யப் போகிறார்கள்.” என்ற வரிகள் ஆயிரம் அர்த்தம் பொருந்தியவை. ஈழத் தமிழரின் ஆதங்கத்தின் வெளிப்பாடுகள்.
*,- 194 N. யோ, யோண்சன் ராஜ்குமார் سبب” ہحلا

போதும் மன்னா போதுமே மன்னா
போர் வேண்டாம் மன்னா
போதும் மன்னா போதுமே மன்னா.
யுத்தம் தந்த மிச்சம் உடன் பிறப்புகளின் இழப்பு மட்டும்தான் என்பதனை கும்பகள்ணனின் அவல இறப்புக்கூடாக ஆசிரியர் சித்திரிக்கின்றார். எனவே சமாதானத்தை தேடுங்காலத்தில் இக்கூத்தில் அதற்கான வழியை நாடக ஆசிரியன் சிறப்பாக எடுத்துரைக்கின்றார்.
பாத்திரப் பொருத்தமும் நடிப்பும்
நாடக வெற்றியின் உயிர் நாடி எனக் கொள்ளத்தக்கது இந் நாடகப் பாத்திரங்களும், அவற்றைத் தாங்கிய நடிகர்களும் ஆகும். இலக்கிய நிலையில் படித்த பாத்திரங்களை யதார்த்த பூர்வமாக கண்முன் கொண்டு வருவதில் ஆசிரியர் வெற்றிபெற்றுள்ளார். திருமறைக் கலாமன்றம் என்ற பெரும் நிறுவனத்தின் வளம் அவருக்குக் கை கொடுத்திருக்கிறது. இராவணன் என்றால் இவ்வாறு தான் இருப்பான் என்று சொல்லத்தக்க வகையிலும், கும்பகர்ணன் இவன்தான் என்று உரைக்கும் வகையிலும் இராவணன், கும்பகர்ணன், இராமன், விபீஷணன், சுக்கிரீவன், மண்டோதரி என ஒவ்வொரு பாத்திரங்களும் பெளதீக நிலையில் செதுக்கிப்படைத்தது போல பொருத்தப்பாட்டோடு தெரிவு செய்யப்பட்டது மட்டுமன்றி பயிற்றுவிக்கப்பட்டுமிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நடிகர்கள் அனைவரும் நன்கு பாடக் கூடியவர் களாகவும் , நடிக்கக்கூடியவர்களாகவும், ஆடக்கூடியவர்களாகவும் இருந்தமையே நாடகத்தை பார்ப்போரின் மனங்களைக் கவர்ந்து வைத்திருந்தமைக்கான அடிப்படைக் காரணமாகும். திருமறைக் கலாமன்றத்தின் கலைஞர்கள் வளம், பாரம்பரியமான உருவாக்க முயற்சிகள் போன்ற பலவற்றுாடும் நகர்ந்து வந்த மன்றத்தின் நடிப்பு சார்ந்த வளர்ச்சியை, இந்நாடகத்தின் பாத்திரங்கள் ஒவ்வொன்றினதும் நடிப்பாக்கச் சிறப்பில் இருந்து அறிந்து கொள்ளமுடியும்.
கூத்தின் எதிர்காலத் தேவையை நோக்கி.
மற்றொரு முக்கிய அம்சம் யாதெனில், கூத்தினைப் பார்த்த பார்வையாளர்கள் எல்லோரும் கூத்துடன் ஒன்றித்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக இளைஞர்கள், சிறுவர்கள் முதலாக அவ்வாறு ஒன்றித்திருந்தனர். இது இந்தக் கூத்தின் மற்றொரு வெற்றிகரமான செயற்பாடு ஆகும். நாட்டுக்கூத்தினை விரும்பிப் பார்க்கின்ற இளைஞர் சமூகம் இன்று பெருமளவில் அருகிவிட்டது. கிராமங்களிலேயே இன்று அவ்வாறான சூழலே காணப்படுகின்றது. எனவே கூத்தை இளைய சந்ததியினரும் சுவைக்கத்தக்க வகையில் மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும். "கொல் ஈனுங் கொற்றம் அந்த இலக்கை நிறைவேற்றி இருக்கின்றது. ஒவ்வொரு விடயங்களும் செம்மையாக்கப்பட்டு சிறந்த நெறியாக்க வன்மையுடன் வெளிப்பட்ட நாடகம் பார்வையாளரை இரண்டு மணிநேரமும் கட்டிவைத்திருந்தது. நாடகம் முடிந்ததும் நிறைவோடு உரையாடிச் சென்றோரையே அவதானிக்க முடிந்தது. அந்த வகையில் இந்நாடகம் கூத்தின் எதிர்காலத்திற்கு நல்லதொரு சகுனமாக
ன்வைக்கப்பட்டிருக்கின்றது.
(UD 1905 C95 D கொல்
கால் ஈனுங் கொற்றம்

Page 59
எனவே ஒட்டுமொத்தமாக நோக்குகையில் ஒரு இளைய தலைமுறை நெறியாளனால் எழுதி நெறிப்படுத்தப்பட்ட 'கூத்துருவ நாடகம்' என்ற புதிய வடிவம் எமது நாடக வரலாற்றில் நல்லதொரு வரவு. எமது மரபு வழிக் கலைகளின் வேர் கெடாது, பார்ப்போரின் இரசனை குறைவுபடாது, பிரதேசவாதங்களை உடைத்து, பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுமையாய் அளிக்கை வன்மையுடன் முன்வைக்கப்பட்ட இந்நாடகம் பாராட்டப்பட வேண்டியது மட்டுமன்றி, தொடர்ந்து தொடரப்பட வேண்டிய ஒரு முயற்சியுமாகும்.
நிறைவாக, சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுதல் எதிர்கால வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமையக்கூடியது. இசையானது நாடகத்துடன் வன்மையாக பிணைக்கப்பட்டிருந்தாலும் சிலவேளைகளில் அதிக இரைச்சலைத் தந்தது. அது மட்டுமன்றி நாடகத்தின் வளர்ச்சி, சிக்கலோடு இசையும் நகர்ந்து இசையும் தனக்கான ஒரு உச்சத்தை கொண்டிருத்தல் அவசியமானது. ஆனால் இங்கு அந்த உச்சம் இரண்டு மூன்று இடங்களில் வருவதால் தனித்துவம் இழக்கப்பட்டுக் காணப்பட்டது. அத்தோடு போர்க் காட்சியில் வந்த இரு போர் வீரர்கள், சுக்கிரீவன் போன்றோரின் குரல் ஒட்டு மொத்த நடிகர்களில் இருந்து சற்று பலவீனமுற்று இருந்தது. உரைஞர்களின் இருத்தலும் அவர்களின் வேட உடையும் சரச்சந்திராவின் "மனமே" நாடகத்தை நினைவுபடுத்தியது. அத்தோடு பாத்திரங்களுக்கான ஆடல்கள், தீர்மானம், தீர்த்தல்கள் போன்றவை செம்மைப்பாட்டோடு இருந்தது போல கூத்துக்குரிய சில முத்திரை பாவங்களைய்ம் இனங்கண்டு இணைந்திருப்பின் நாடகம் இன்னுமொரு படி சாஸ்திரியத்தில் செழுமையடைந்திருக்கும். முடிவாக, நல்லதொரு நாடகத்தை தந்த திருமறைக் கலாமன்றத்திற்கும், இதன் நெறியாளருக்கும் கலை உலகு கடமைப்பட்டுள்ளது, தொடர்ந்தும் இம்முயற்சி ஊக்கம் பெற ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு நல்குதல் வேண்டும்.
நா. திருச்செல்வம் കങ്ങബupങ്കb ஜூலை - டிசெம்பர் 2005
யோ. யோண்சன் ராஜ்குமார் گسس ح

எதிர்காலக்கூத்துலகிற்கான பாதையை அகலத்திறந்த நாடகம்
அண்மைக் காலமாக திருமறைக் கலாமன்றத்தின் மற்றுமொரு வெற்றிப்படைப்பாக மேடையேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற கொல் ஈனுங் கொற்றம்' கூத்துருவ நாடகம் கூத்துலகில் தனியிடத்தைப் பிடித்திருப்பதுடன் அனைவரது பார்வைக்கும் உட்பட்டிருக்கின்றது.
இக்காலம்; ஈழத்தின் தமிழ்த் தேசியம் பற்றியும், மொழிசார் பண்பாடுகள் பற்றியும் ஆழமாகவும், பல திசைகளிலும் சிந்திக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலப்பகுதியாகும்.
தமிழ் தேசியத்துக்கென்று தனித்துவ நாடக வடிவமாக பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டுக் கூத்தினை தனித்துவமாக பேணுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின்போது, எமது பிரதேசத்தில் காணப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட கலாசாரம் நாட்டுக்கூத்தினையும் ஒரு பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றியிருந்தது. இந்நிலையில், தமிழ்த் தேசியத்திற்கான தனித்துவமான ஒரு வடிவத்தினை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையும், அதேநேரம் "தேசியவடிவம்' என்ற சிந்தனையுடன் செயற்படும்போது எமது பன்மைப் பிரதிநிதித்துவமும், தனித்துவமும் இழக்கப்பட்டு விடுமோ என்ற அபாயத்தையும் எண்ணியிருக்கின்ற நேரம் இது. இன்னொரு பார்வையில், மாறி வருகின்ற வலைப்பின்னல் உலகில் நகரமயமாதல், கிராமியத்தொலைவு, உலகமயமாக்கலின் தீவிர உள்நுழைவு என்பவற்றின் மத்தியில் கூத்தரங்கினை இன்றைய உலகத்திற்கேற்ப நவீனப்படுத்த வேண்டும் (மா)? என்ற சிந்தனைக்குரிய நேரமும் இதுதான். பழைய காலங்கள் கழிந்துபோய், நவீன காலங்களுக்குள் நுழைகின்றபோது எதையுமே ஒரு நவீனத் தன்மையுடன் நோக்கியே பழக்கப்பட்ட எம் மக்கள் மத்தியில், எம் பாரம்பரியக் கூத்துமரபினை தலைநிமிர்த்தி நிறுத்த வேண்டிய சவாலை செயற்படுத்த வேண்டிய நேரமும் இதுவே.
இவ்வாறு, கூத்துக்கலை பற்றிய நவீனத்துவ தேசியவடிவத்துக்கான சிந்தனைகள் வலுப்பெற்று இருக்கின்ற நேரத்தில் நமக்குக் கிடைத்திருக்கும் "கொல் ஈனுங் கொற்றம்' இவை அனைத்திற்கும் மத்தியில் பழைமையில் ஒரு புதுமையைப் புகுத்தி, வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமையைத் தேடத்துடிக்கின்ற கலைஞனின் இதயத்துடிப்பாகவும், மனப்பிரசவமாகவுமே தெரிகின்றது.
‘தேசிய வடிவம்' என்பது சாத்தியமா?
ஈழத்தவர்களுக்கு நாட்டுக்கூத்தில் ஒரு தேசிய வடிவம் தேவை என்பது வெறும் பண்பாட்டுப்பிரச்சினை மட்டுமன்றி ஒரு அரசியல் பிரச்சினையாகவும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது. எங்கள் மத்தியில் இருக்கின்ற பிரதேசவாதத்தின் மத்தியில் தேசியத்தை நாடும்பொழுது அப்பிரதேசங்களின் வடிவத்தைவிட்டு நடுவடிவத்துக்கு வரத்தான் வேண்டுமா? என்ற பிரச்சினையும் உணரப்பட்டுள்ளது.
இதே நேரம் உலகத்தின் எல்லா அரங்குகளும் எவ்வாறு உருவாகி இருக்கின்றன என்ற வரலாற்று அனுபவங்களை திரும்பிப்பார்க்கும் போது, யக்ஷகாணம், கதகளி
கொல் ஈனுங் கொற்றம்

Page 60
எவ்வாறு கர்னாடகம், கேரளத்திற்கென்று தேசிய வடிவமாக மாற்றம் பெற்றன. பல மூலங்களிலிருந்து பெறப்பட்ட கலையம்சங்கள் ஒன்றிணைக்கப்பட்டதனாலேயே இது சாத்தியமானது.
அதே போன்று நாமும், நம் தனித்துவமான ஆட்டமுறைகள், மெட்டுக்கள், சந்தங்கள், அரங்க அமைப்பு, மேடையில் உள்ளிடுகை, வெளிச்செல்லல், உடையமைப்புக்கள், ஒலி, ஒளிநுட்பங்கள், கதையோட்டத்தில் வசனங்கள், இசையினை பொருத்தத்திற்கேற்ப இணைத்து பரீட்சார்த்தமாக ஒரு முழுமையான கலைவடிவினை உருவாக்குகின்ற போது அது பலரது பார்வையிலும், எண்ணத்திலும் முட்டிமோதி இறுதியில் நமக்குரிய தேசிய வடிவமாக உருப்பெறலாம். இவ்வாறு பல மரபுகளையும் பொருத்தமுற ஒன்றிணைக்கும் போது ஒரு தனித்துவமான 'கலைமரபு நமக்கென உருவாகும்.
இந்நிலையில், எழுத்தாளர் யோ, யோண்சன் ராஜ்குமார் அவர்களது எழுத்துருவாக்கத்திலும், நெறியாள்கையிலும் உருவாகியிருக்கின்ற "கொல் ஈனுங் கொற்றம்' மேற்கூறிய கலைவடிவுக்கு அத்திவாரமிட்டிருக்கின்றது. இவ் எழுத்தாளர் திருமறைக் கலாமன்றத்தின் வழிவந்த பல மூத்த அண்ணாவி மார்களுடன் நீண்டகாலம் இணைந்து கூத்துக்களுடன் நன்கு பழக்கப்பட்டவர். குறிப்பாக பிரான்சிஸ் ஜெனம் அவர்களுடன் நீண்டகாலம் இணைந்து இத்துறையில் ஈடுபட்டவர். தேசியக் கலை மரபுக்கான முயற்சியில் ஒரு கலைஞன் ஈடுபடும்பொழுது எல்லாக் கூத்து மரபுகளையும் செரித்துக்கொண்டு ஏதோ ஒரு கணத்தில் பற்றி எரிகின்ற படைப்புச்சூழலில், அவன் கண்டு பிடிக்கின்ற வடிவமே ஒரு தனித்துவ வடிவமாக மேற்கிழம்ப முடியும்.
இவ்வகையில் இவரது இக்கூத்துருவ நாடகம் கூட அப்படியானதொரு அனுபவத்தினதும் ஆதங்கத்தினதும் வெளிப்பாடே. அத்துடன் இம்முயற்சியின்போது அனைத்து பன்மைப்படுத்தப்பட்ட கூத்துமரபுகளும் இவரது கூத்தில் கையாளப்பட்டிருக்கின்றமை, கூத்தினை ஒருமுகப்படுத்தும் சாத்தியப்பாட்டினை எடுத்துக்காட்டியுள்ளது.
'கொல் ஈனுங் கொற்றத்தில் அனைத்துப் பிரதேச மரபுகளும் பொருத்தத்திற்கேற்ப ஒன்றிணைந்திருப்பதுடன் சில தனித்துவமான நுணுக்கங்களும் புகுத்தப்பட்டுள்ளன. சிலவற்றைக் குறித்துக் காட்டினால், இக்கூத்தின் ஆரம்பத்தில் கட்டியகாரன் வரவைத்தொடர்ந்து (தென்மோடி மரபு) வருகின்ற பாடுநர் குழு, கதையோட்டத்தின் இடையில் முன்வைக்கின்ற பாடல்கள், வசனங்கள் சபையோரின் மனநிலையைச் சுட்டிக்காட்டுவதுடன், மேடையில் இவர்கள் முன்னிலையில் காட்சி தருவது கிரேக்க காலத்து திறந்தவெளியரங்குகளில் இடம் பெற்ற கோரஸ் எனப்பட்ட பாடற்குழுவினை ஞாபகப்படுத்துகின்றது. இது ஒரு அற்புதமான நவீனத்துவம் நோக்கிய இணைப்பாகும். அதைப்போன்று கும்பகள்ணன் அழைத்து வரப்படுகின்ற காட்சியும் எமது பழைமையை ஞாபகப்படுத்துவது மட்டுமன்றி உடையலங்காரங்களில் கூட தனித்துவமான நுணுக்கங்கள் பேணப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு எமது பிரதேச கூத்து மரபுகளை பரீட்சார்த்தமாக ஒன்றிணைத்து எல்லோரும் ஏற்கும் வகையில் அமைத்தல் என்ற எண்ணத்தை நிறைவேற்றும் அதேவேளை, கூத்தினை இன்றைய நவீன உலகிற்குள் வாழத்தக்க செம்மைப்பாட்டுடன் இணைத்தல் அவசியம் என்ற தேவையும் உணரப்படுகின்றது. அவ்வாறு நடைபெறாதுவிடில், கூத்து தனிமைப்பட்ட ஒருசில குழுமங்களுடன் முடங்குவதுடன்
يح و حمص . யோ. யோண்சன் ராஜ்குமார் G98 །>ཕྱི་

நூதனசாலைக்குரியதாகவும் மாறிவிடும். எனவே கூத்தினை சந்ததிக்கடத்துகை செய்யும் அதேவேளை நவீன இரசனைகளின் வளர்ச்சிநோக்கிய சவால்களில் முகங்கொடுக்கவும் செய்யவேண்டும். இதனையும் "கொல் ஈனுங் கொற்றம்" பரீட்சார்த்தமாக செயலாக்கம்செய்து நிரூபித்திருக்கின்றது. இன்றைய காலத்தின் இரசனைகளின் மாற்றத்திற்கேற்ப வேகத்தையும், இரசனை ஒன்றிப்புக்களையும் தாங்கி நிற்கின்றது . அதே நேரம் ஆற்றுகையின் சமகால முக்கியத்துவம் பற்றிச் சிந்திக்கும்போது கொல் ஈனுங் கொற்றம் அதன் கதைத்தெரிவிலும், பாடுபொருளிலும், ஈழத் தமிழரின் இன்னல்மிக்க போர்ச்சூழலில், தர்மமற்ற போர் வெல்வதில்லை என்ற தர்மத்தை, இராமாயாணத்தின் கும்பகள்ணன் வதை படலத்தை அடிப்படையாகக்கொண்டு படைத்திருப்பதுடன், அதற்கு சமகால விடய தொடர்பையும் ஏற்படுத்தி நிற்கின்றது. தொன்மங்களை காலத்தின் தேவைகருதி பயன்படுத்துதல் இரட்டிப்பான கலைத்துவ அனுபவத்தினைத் தரும். அதனை இந்த நாடகத்திலும் சுவைக்கமுடியும். கம்பராமாயணத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்த கதை எமது நாட்டின் ஈழப்பிரச்சினையுடன் ஒன்றிணைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு இறுதியில் நம்மிடம் புதுமையுடன் வந்தடைந்திருக்கின்றது. இது எழுத்தாளன் கதையை வடிவமைத்த சாதுரியத்துக்கும், படைப்பாளுமைக்கும் கிடைத்த வெற்றியாகும். இக்கூத்தில் அதனை குறித்துக்காட்டினால்:
தர்மமே தவறும் போர்கள் வென்றதில்லை வையகத்தில் கர்வமே துறந்து நீயும் கொன்றிடுஞ் சமர் விடுப்பாய் சர்வமே உறையும் தேவன் கர்மமே அறிவான் கேளாய் போர் தவிர்! பகை தொலை! சீதையைச் சிறைவிடு!
இங்கு சந்தமும், கவிவசனமும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. இன்னொரு இடத்தில் மண்டோதரி கேட்பாள்:
நிதி மறந்த போர் நானிலந்தனில் வெல்லுமோ. அந்தப்பேதை சீதை தன்னை விட்டுவிட்டால் பகை நீளுமோ என்று கேட்பதில் இலங்கையின் இனப்பிரச்சினையின் விடிவுக்குரிய முடிவு தொனிக்கிறது.
அவர்கள் செய்வது தர்ம யுத்தம் அவர்களுக்குரியவளை கொடுத்துவிட்டால் அவர்கள் ஏன் யுத்தம் செய்யப்போகிறார்கள்.
என்ற வார்த்தைகள் சமகால பொருத்தம் நோக்கிய பாடுபொருளை நேரடியாகவே சுட்டுகின்றன.
இவ்வாறு எழுத்தாலும், கவியாலும், அளிக்கை முறையாலும் கவர்ச்சிகரமாக அழகுபடுத்தப்பட்டு, புதியதொரு கருவினையும், முடிவினையும் காலம் உணர்ந்து சொல்லிநிற்கின்றது 'கொல்ஈனுங் கொற்றம்'.
C99 C கொல்காைங்கொற்றம்
கால் ஈனுங் கொற்றம்

Page 61
முடிவாக, "நாமும் நமக்கோர் நலியாக் கலையுடையோம், நாமும் நிலத்தினது நாகரீக வாழ்வுக்கு நம்மால் இயன்ற பணிகள் நடத்திடுவோம்.” என்று மஹாகவி கூறுவதைப்போல நமக்கென கூத்தில் தேசியவடிவத்தினை உருவாக்க வேண்டுமென்று அனைவரும் அவசரமாகவும், வேகமாகவும் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, ஈழத்து கூத்துலகிற்கு மகுடம் சூட்டியதுபோலவும் நமக்கென ஒரு கலை' என்று அனைவரும் பெருமையுடன் சொல்லிக் கொள்ளவும் வைக்கின்றது "கொல் ஈனுங் கொற்றம்'.
கூடவே புதுமையான ஆற்றுகைகளை எதிர்பார்த்து நவீனத்துவப் பார்வையுடன் அரங்கிற்குள் வரும் பார்வையாளர்களையும் தன்னுடன் இணைத்து அனைவரது மனங்களிலும் சவால்மிக்க எதிர்கால கூத்துலகிற்கான பாதையை அகலத்திறந்து விட்டிருக்கின்றது. இவற்றிற்கு இத்தனை குறுகிய காலத்துள் "இலங்கையின் பல பிரதேசங்களிலும் அதுகண்ட மேடையேற்றங்களும் அங்கிருந்த அரங்கப் பார்வையாளர்களின் மனங்களுமே சாட்சியாகும்.
யூ. பி. அ. றஞ்யித்குமார் ஆற்றுகை டிசெம்பர் 2005 இதழ் 13.
யோ, யோண்சன் ராஜ்குமார் Y~ YYl~1 ́


Page 62


Page 63
". யோண்சன் ராஜ்குமார் கூத்துக்கலை பற்றிய ஆற்றலும் பொருந்திய தனிப்பெருங் கலைஞன். இ6 கருத்து நிலைத்தெளிவும், செய்முறை அனு! படைப்புத் திறன்களை அளிக்கைசெய்ய இவருக்கு பயிற்சி பெற்ற இளங்கலைஞர் பலமும் இத்து ஒருவருக்கு உண்டா என்பது கேள்விக்குறியே. இ பொருந்தி நிற்கும் கலைப்பணிவும், கொள்கைப் படைப்புக்களை மேலும் மெருகூட்டி நிற்கின்றன . ரோசிரியர் அந்நடுநீ T
இயக்குநர்
திருமறைக் கலாமன்றம்
ఢ
நமது கூத்துமரபுகளைக் கொண்டு ஒரு தேசி மிக நீண்ட பயணம் அந்தப்பயணம் அறுபதுகள் எங்களுக்கூடாக வந்து கொண்டிருக்கிறது. இன் ராஜ்குமார் இன்னொரு படி முன்சென்றிருக்கின் பெரும் பாச்சல் எல்லோரும் இப்பணிக்கு ஆதரவு ரோசிரியர் சி மாதிரு தலைவர் நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கழைக்கழகம்,
.திரு. யோயோண்சன் ராஜ்குமார் திருமறைக் பணியாற்றுகின்றார். ஆடலும் பாடலும் அமைவரு அடிச்சுவட்டிலே சிறப்பாகத் திறமையாகப் பணி அழகும் என்ற இந்த மூன்றின் ஒன்றும் குறைவுபட நிறீஇயவர் கலை ஆர்வலராகத் தேடலிலும் செயற்படும் யோண்சன் எழுதித் தயாரித்து, நெ ஈனுங் கொற்றம்’ என்னும் கூத்துருவ நாடகத்தினை நானும் ஒருவன்.”
ரோசிரியர் எர்.சிவரிங்ஜராசா தலைவர் தமிழ்த்துறை, யாழ்ப்பாணப்பல்கழைக்கழகம்,
g
பல்வேறு கூத்து மரபுகளின் பாடல்களை கா அமைத்து பலதரப்பட்ட ஆட்டங்களையும் அற்புத நெறியாளர் திரு. யோண்சன் ராஜ்குமார் பா நோக்கும்போது இவரது தாய்வழி கூத்துசார் பா கொண்டிருக்கும் தலைக்கோல் பிரான்சிஸ் ஜெனழு பிரான்சிஸ் ஜெனத்தின் சாயல்களை யோண்சன் நான் 'கொல் ஈனுங் கொற்றம் அவரின் வெளிப்பு ஆறாதுனத ஜீ பி போகினர்
மூத்த கலைஞர்
திருமறைக் கலாமன்றம்
Design & Print. Judeson. O777. 446973

பன்முக அறிவும், வரில் காணப்படும் பவமும் இவரின் தத் துணைநிற்கும் றை சார்ந்தவேறு வை அனைத்தும் பிடிப்பும் இவரது
பகூத்துவடிவத்தை உருவாக்குவது என்பது பில் பேரா வித்தியானந்தனில் ஆரம்பித்து று அந்தப் பயணத்தில் திரு. யோண்சன் றார். இது முதல் முயற்சி பாரிய முயற்சி தரவேண்டும்.'
கலாமன்றத்தின் பிரதிப் பணிப்பாளராகப் ம் ஆசானாகத் திகழும் இவர் அடிகளாரின் ரியாற்றி வருகின்றார் ஆடலும் பாடலும் ாத இவர் புலம்பெயர் நாடுகளிலும் தம்புகழ் தெளிதலிலும் குறையா ஊக்கத்துடன் மியாள்கை செய்து, அரங்கேற்றிய 'கொல் ா பார்த்து மகிழ்ந்த பல்லாயிரம் ரசிகர்களில்
துக்கு இனிமை சேர்க்கும் இராகங்களுடன் மாக ஆடவைத்து அளிக்கை செய்த இதன் ராட்டத்தக்கவர். இவரது பின்புலத்தை ரம்பரியமும், தனது மானசீக ஆசானாகக் Dம் காரணமாக இருக்கலாம். ஆளுமைமிக்க ராஜ்குமாரில் கண்டு ஆனந்தப்படுபவன் ாட்டுக்கு சிறந்த சான்று. '
ISBN 955-9262-28-9