கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2011.08.18

Page 1
ៅ  ைவெளியீடு ܝ ܒ ܒ ܐ ܕ ܐ క్టె ఇంద్రం 269 వ్ర (28g)
கர வருடம் ஆவணித்
கைதழ வீரகத்த
பொன் பயிர்களும் வளம் சேர்க்கும் செய்
தவழக் காட்சியளிப்பது கைதடியூர் பண்டைய பாரம்பரியத்தைப்
பணும் கைதடியில் மூலைமுடுக்குகள்
ந்துள்ளன. அத்துடன் பல சித்தர்
 

5 ឆ្នាថា 1ஆம் జ్ఞా
2011) el5ւIII. 50.0
கைதடி மக்களை ஆசிர்வதித்துள்ளனர். கைதடி வீரகத்திப் ព្រឹក្សានាយក ஆலய அயலில் யோகர்சுவாமிகள் மார்க்கண்டு களை s குடிசையில் அமர்த்தித் தாமும் சிலவேளைகளில் தங்கி, சோல்பரிப் பிரபுவின் மகன் சந்தசுவாமியையும் இருத்தியமை
ய்ந்த கைதடி விரக்த்தி விநாயகர்
னகு நூற்றாண்டு காலப் புராதனமானது állt. 17th
جی
ក្ffff
ற்றைகள் வளர்ந்த மரங்கள் மற்றும்

Page 2
இந்துசாதனம் 18C
அப்பகுதியில் மாடுமேய்ப்பதும் விறகு வெட்டுவதும் குழைஅறுப்பதும் அந்த அயலில் இருந்த குடிமக்களின் வழமையான பழக்கங்கள் ஆகும். ஒருநாள் இவ்விடத்தில் மூதாட்டி ஒருத்திகுழை அறுத்துக் கொண்டிருந்தபோது கொக்கியில் இருந்த கத்தி, கட்டுத்தளர்ந்து இருந்ததால் கழன்று நிலத்தில் விழுந்தது. அப்பொழுது மற்றொரு புறத்தில் மாடுமேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனைக் கூப்பிட்டு, தன்னிடமிருந்த மற்றைய கத்தியைக் கொடுத்து, பற்றையை வெட்டி அகற்றித் தன்னுடைய கொக்கிக் கத்தியை எடுத்துத்தருமாறு அம்மூதாட்டி கேட்டார். அப்படிச் சிறுவனும் பற்றையை வெட்டும்போது "கணிர் என்ற பெரியதொரு சத்தம் கேட்டது சிறுவனது கையும் தவறுதலாக வெட்டப்பட்டுக் கத்தியும் உடைந்துவிட்டது. அப்பொழுது அங்கே ஒரு விநாயகர் சிலை காணப்பட்டது. கத்திபட்டதால் அதன் கையில் ஒரு தழும்பும் காணப்பட்டது. இவ்வதிசயத்தைக் கண்ட மூதாட்டியும், சிறுவனும் உடனே அக்காணிச் சொந்தக்காரனான வேலப்ப முதலியாருக்குத் தெரிவித்தனர். வேலப்ப முதலியார் அச்சுற்றாடலிலுள்ள பற்றைகளை நீக்கி ஒரு ஆலயத்தை நிறுவி எல்லோரும் வழிபட வழி செய்தார். பிள்ளையாரின் கையில் தழும்பு காணப்பட்டதால் "கைதறிப் பிள்ளையார்" என அழைக்கப்பட்டார். இச்சிறிய கோயிலே காலமுன்னேற்றத்தில் விரிவடைந்து மூன்று வீதிகளைக் கொண்ட பெரிய கோவிலாக "கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில்" எனப்பிரசித்தி பெற்று விளங்குகின்றது.
இவ்வாலயத்திற்கு எதிரே இருக்கும் கண்டி வீதியில் உள்ள "புதன் கழிப்பாலம்" அக்காலத்தில் தனியாகப் பயணம் செய்வோர் மனதில், குறிப்பாக இராக் காலத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால், வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தைப் பரிபாலித்த சரவணமுத்து மணியகாரர் என்பவர் வீரகத்தி விநாயகரை நினைத்து வழிபாடியற்ற, புதன்கழிப் பாலத்துக்கு அண்மையில் ஒரு கொட்டிலில் விநாயகரை வைத்தார். இதனால் அவ்வழி செல்லும் எவரும் அச்சமின்றிப் பயணித்தனர். அத்துடன் புதன்கழிப் பாலத்தை கட்ட மேற்பார்வை செய்த ஆங்கிலேய பொறியியலாளர் ஜி.எம். பாசன் என்பவர் பாலத்திற்கருகிலிருந்த
காணியில் பெரிய பங்களாவில் வசித்து வந்தார். பல தடவை யானை
புராணப் படலம் ெ ஆலய பிரம்மோற்சவ குரு சி
(
 

B2O கர ஆவணி 01
வடிவில் தோன்றித் தன்னை விக்கினங்களிலிருந்து விநாயகர் காப்பாற்றியதால் தாம் ஊரைவிட்டுச் செல்லும்போது தாம் இருந்த காணியைக் கைதடிப்பிள்ளையார் கோவிலுக்குத் தருமசாதனமாக அவர் கொடுத்துச் சென்றதை இன்றும் கைதடி மக்கள் நினைவு கூர்வர். புதன்கழிப் பாலத்திற்கு அருகிலிருந்த விநாயகருக்கு வட்டுக்கோட்டையிலிருந்து வயேர்திபர் ஒருவர் நடந்துவந்து விளக்கேற்றி வழிபடுவார். அவர் உடல் நிலை தளர்ந்ததால் அப்பணியை நிறைவேற்ற முடியாமல் வருந்தியவேளை ஓரிரவு விநாயகர் அவர் கனவில்வந்து "வருந்தாதே நான் உன்னிடம் வருகிறேன்" எனக்கூறினார். மறுநாள் காலை கைதடிக்கு வந்த வயோதிபர் விநாயகரை இறுகத்தழுவி வணங்கி மெதுவாகத்துக்கி தனது உடுக்குவளையில் வைத்துச் சுமந்து கொண்டு வட்டுக்கோட்டையில் வைத்து வழிபட்டார். அதுவே இன்று வட்டுக் கோட்டையில் "உடுக்குவளை பிள்ளையார் கோயில்" எனப்பெரிய
கோயிலாகத் திகழ்கிறது.
ஒருமுறை கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயிலிற்கு அண்மையிலிருந்த காணியில் பெருமளவில் உப்பு விளைந் திருந்தது. அதனால் அந்த உப்பை அழிக்கும்படி அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அப்போதைய மணியகாரரான முத்துக்குமார சுவாமி முதலியார் அந்த உப்பை ஏழை மக்கள் அள்ள அனுமதித்து விட்டார். இதை அறிந்த வெள்ளைக்கார அரச அதிபர், முத்துக் குமாரசுவாமி மணியகாரருக்கு எவ்வித முன்னறிவித்தலும் கொடுக்காது உப்பளத்தைப் பார்க்கத் திடீரென வந்துவிட்டார். முத்துக்குமாரசுவாமி மணியகாரர் நாள்தோறும் காலை பிள்ளை யார் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டுத்தான் தமது காரியத்தைத் தொடங்குவார். அன்றும் அரச அதிபரிடம் அனுமதிபெற்று, ஆலயத்தில் வழிபாடாற்றி உப்பளத்தைப் பார்க்க அரச அதிபரின் வருகையை நினைத்து அச்சமுற்று "உன்னை நினைக்க நீசெய்யும் வஞ்சகத்தை என்னென்று சொல்லித் துதிப்பேன் விநாயகனே. பன்னொன்று கோடிகள் சுரந்திட்டாலும் கண்ணின்று காப்பாய் கைதை நகர்க் காவலனே" என்ற இப்பாடலைப்பாடி மழை பெய்யுமாறு பிள்ளையாரை இரந்து நின்றார். என்னே! அற்புதம். கணப்பொழுதில் "சோ" எனப் பெரும்மழை சிலமணி பொழிந்தது.
தாடக்கி வைக்கின்றார். வழனி ஜெயந்திநாதக் குருக்கள்
2

Page 3
இந்துசாதனம் 8.
மழை பெய்ததால் உப்பளத்தைப் பார்ப்பதில் பிரயோசனமில்லை என
அரச அதிபரும் திரும்பிச் சென்றார்.
கைதடி விநாயகர் ஆலயம், பிள்ளையார் சிவன் என இரட்டைக் கருவறை கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது. இவ்வாறு இரட்டைக் கருவறைகள் கொண்ட ஆலயங்கள்அரிதாகவே காணப்படுகின்றன. இவ்வகையில் நல்லூர் கைலாசபிள்ளையார், நல்லூர் சிவன் கோயில், காரைநகர் ஈழத்துச் சிதம்பரம், மல்லாகம் பழம்பிள்ளையார் என்பன இலங்கையிலும் மதுரை மீனாட்சி அம்மன்
ஆலயம் தமிழகத்திலும் குறிப்பிடத்தக்கனவாகும்.
இரட்டைக் கருவறைகளுள் - வலப் பக்கக் கருவறையில் விநாயகப் பெருமானும், இடப் பக்கக் கருவறையில் சிவலிங்க உருவில் இராமலிங்கஸ்வாமியும் வீற்றிருந்து அருள்பாலிக் கின்றனர். சுவாமிக்கு அண்மையில் பர்வதவர்த்தனி அம்பாளின் தெற்கு நோக்கிய சந்நிதி இருக்கின்றது. அம்பாள் சந்நிதியுடன் இணைத்து பூரீவெங்கடேசப் பெருமாளின் திருவுருவம் கிழக்கு நோக்கிப்பிரதிஷ்டைசெய்யப்பெற்றுள்ளது.
1988ஆம் ஆண்டில் நடைபெற்ற புனராவர்த்தன கும்பாபிஷே கத்தின்போது, பர்வதவர்த்தனி அம்பாளின் புதிய சிலா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பெற்றது. உள்வீதியில் வடக்குப் பக்கத்தில் வெட்டிய புதிய திருமஞ்சனக் கிணற்றுக்கு முன்பாக அமைக்கப் பெற்ற புதிய கோயிலில் பழைய அம்பாள் விக்கிரகம் இடம்பெற்றுள்ளது.
வசந்த மண்டபத்துக்கு மேற்கே உருவாக்கப்பட்ட கோயிலில் சிவகாமி அம்பாள் சமேத சிதம்பர நடராஜப்பெருமான் தாமிர விக்கிரகமாக அருள்பாலிக்கின்றார். தெட்சணாமூர்த்தி விக்கிரகத்தையும் இங்கேதரிசித்துநிறைவடையலாம்.
வள்ளி தேவசேனாசமேத சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், நாகதம்பிரான் - வைரவர் ஆகியோருக்குத் தனிச் சந்நிதானங்கள் உண்டு. முதன் முதலில், பற்றைக்குட் கண்டெடுக்கப்பட்ட, தழும்புள்ள பிள்ளையார் சிலை, கொடித்தம்பத்துடன் பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ளது.
தினமும் ஆறு காலப் பூசைகள் நடைபெறும் இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் இரண்டு பிரம்மோற்சவங்களுக்கும் மேலாக, கந்தசஷ்டி விழா-சூரசம்ஹாரம், கஜமுகாசுர சம்ஹாரம், யமசம்ஹாரம் முதலிய பல திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.
அற்புத விநாயகரான கைதடி வீரகத்திப்பிள்ளையார் ஆலயம் சிறந்த தெய்வீகச் சூழலில் அமைந்துள்ளது. இவ் வாலயத்தில் தெய்வ சாந்நித்யம் நிறைந்துள்ளதற்கு அடையாளமாக மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம், சித்தர்களின் வருகை, அவர்களின் சமாதி என்பன ஆலயச் சூழலில் அமைந்துள்ளன. கடையிற்சுவாமிகள் அருளாசிபெற்ற ஆறுமுகம் என்பவரால் அமைக்கப்பெற்ற தீர்த்த மடத்தில் அவர் கடையிற் சுவாமிகளிடம் அருளாசிபெறும் படமும் இடம்பெற்றுள்ளது. மேலும் மார்க்கண்டு சுவாமிகள் தேர்த்திருவிழாவிலன்று அதிகாலை மூன்று மணிக்கே சென்று தேரை அலங்காரம் செய்யும் அடியவர்களுக்கு

82O கர ஆவணி O
அறிவுரைகள்கூறி தாமே நேரில் நின்று கண்காணிக்கும் காட்சியும் உண்டு. இப்பணி சுவாமிகள் சமாதியாகும்வரை செய்த பணிகளி லொன்றாகும்.
விழாக்களுக்குக் குறைவில்லாத இவ்வாலயத்தில் பிள்ளை யார் மகோற்சவம் சித்திரைப் பூரணையைத் தீர்த்தமாகவும் சிவன் மகோற்சவம் ஆடிப் பூரணையைத் தீர்த்தமாகவும் கொண்டது. மகோற்சவக் காலத்தில், மகோற்சவம் தொடங்குமுன் பிரதம சிவாச்சாரியாரை குடை, கொடி, ஆலவட்டத்துடன் வீட்டிலிருந்து கோவிலுக்கு அழைத்து வருவதும் மகோற்சவம் நிறைவுற்றதும் அதே மரியாதைகளுடன் அவரை அழைத்து வீட்டில் விடுவதும் வேறொரு கோயில்களிலும் காணாத சிறப்பம்சமாகும். அதேபோல், தினமும் மகோற்சவம் தொடங்குவதற்கு முன்னரும், நடந்து முடிந்த பின்னரும் உற்சவத் திருமேனிகளுக்கு அபிஷேகங்கள் நடப்பது இங்கு வழமையாகும்.
வீரகத்திவிநாயகரின் அண்மைக்கால அற்புதம்
1995ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாளன்று முன்னறி வித்தலின்றி இடம்பெற்ற வலிகாமம் இடப்பெயர்வு, அங்கு வாழ்ந்த மக்களின் நெஞ்சங்களில் என்றும் நீங்காது பதிந்திருக்கும் நிகழ்வாகும். இந்நிகழ்வினால் அங்கிருந்து புறப்பட்ட மக்கள் கால்போன திசையிலே சென்று, தென்மராட்சி, வடமராட்சிப் பகுதிகளிலும் அவற்றிற்கு அப்பால், வன்னிப் பெருநிலப்பரப்பிலும் குடியமர வேண்டிய நிலைக்குள்ளாகினர்.
அவ்வேளையில் கைதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் சிலர் தஞ்சம் புகுந்ததுடன் இவ்வாலயத்துக்குச் சொந்தமான காணிகளில் அமைத்த கொட்டில்களிலும் தங்கியிருந்து நலிவுற்று வாழ்ந்தனர். வேதனையில் வெந்த மக்கள் தமக்கொரு விடிவுகாண விரும்பி, வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு நேர்த்தி வைத்தனர். அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு விரைவில் மீளச்செல்வதற்கு விநாயகப் பெருமான் திருவருள் செய்யவேண்டுமெனப் பெருமானிடம் விண்ணப்பம் செய்தனர். தமது வேண்டுகோள் நிறைவேறுதற் பொருட்டு கோயில் நிர்வாகத்தினரின் அனுசரணை யுடன் தாமும் நிதிதிரட்டி விசேட அபிஷேக ஆராதனைகள் செய்தனர்.
வேண்டுவார் வேண்டுவதை ஈயும் விநாயகருக்கு மேற்குறிப்பிட்ட ஆராதனை நிறைவுற்று ஒரு வாரம் முடிவதற்கு முன், எவரும் எதிர்பாராத சூழ்நிலை ஒன்று உருவாகியதன் விளைவாக, 1996 ஏப்ரல் 19ஆந் திகதி வெள்ளிக்கிழமை வலிகாம மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் செல்லவேண்டுமென்ற அறிவித்தல் விடுக்கப்பட்டது. விநாயகரின் அற்புத சக்தியை வியந்த மக்கள் பெருமகிழ்வுடன் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் சேர்ந்தமை வரலாற்றில் ஒரு முக்கிய செய்தியாகும். இதனைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் ஆலய ஆண்டுப் பெருவிழா (பிரமோற்சவம் 1996 ஏப்ரல் 22ஆந்திகதி ஆரம்பமாகி, பன்னிரண்டு (12) நாள்கள் நடைபெற விநாயகப் பெருமான் நல்லருள் பாலித்தமை மறக்கவொண்ணா நிகழ்வாகும். இந்த அற்புத நிகழ்வைக் கண்டு அடியார்கள் மெய்சிலிர்த்த காட்சி கண்ணைவிட்டுநீங்காது. 人

Page 4
இந்துசாதனம் 8.O
அகில இலங்கைச் ை
நீண்ட இடைவெளியின் பின், யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் "அகில இலங்கைச் சைவ மகாநாடு" இவ்வாண்டு ஆடி 20, 21, 22 ஆகிய திகதிகளில் யாழ் நீராவியடி நாலவர் ஆச்சிரம மண்டபத்திற் சிறப்பாக நடைபெற்றது.
பழைமை வாய்ந்த வண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டிற் கலந்து கொண்ட மகாநாட்டுப்பிரமுகர்கள், மங்கள வாத்திய இசையுடன் ஊர்வலமாக மகாநாட்டு
மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
அகில இலங்கைத் திருமுறை மன்றத் தலைவர் பண்டிதர் வ பேரின்பநாயகம் அவர்களின் திருமுறை ஒதலுடன் மகாநாட்டு
நிகழ்ச்சிகள் தொடங்கின. தேவாரஇசைமணி, பண்ணிசைச் செல்வர், துறைசை ஆதீனத் திருமுறைத் தோன்றல் இ. திருஞானசம்பந்தன் அவர்களின், பண்ணிசைச் கச்சேரி, சபையின் சைவப் பிரசார அமைச்சர், சைவப் புலவர் மு.திரு ஞானசம்பந்தபிள்ளை அவர்களின் வரவேற்புரை, நல்லை ஆதீன முதல்வர் பூரீலழரீசோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் அவர்களின் அருளுரை ஆகியவற்றின் பின்னர், மகாநாட்டுப் பெருந்தலைவரும் சித்தாந்தச்செம்மலுமான முனைவர் நல்லூர் சா.
" அன்பே சிவமாய்", "என்ற பொருளிலான
சரவணன் அவர்கள் தன் தலைப் பேருரையை நிகழ்த்தினார். பொருளாளர்இ.
தவகோபால் அவர்களின் நன்றியுரையுடன் முதலாம் நாள்
 

i2O கர ஆவணி 01
=வ மகா நாடு -2011
நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
இரண்டாம் நாட் காலை நிகழ்ச்சிகள் சுந்தரமூர்த்திநாயனார் குருபூஜையின் பின்னர், யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறைப் பேராசிரியர் கலைவாணி இராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றன. அ.இ.திருமுறை மன்றத்தைச் சேர்ந்த சி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின்திருமுறை ஒதல், சபை உறுப்பினர் இ. குகதாசன் அவர்களின் வரவேற்புரை ஆகியவற்றின் பின்னர், " சைவமும் பெண்மை என்ற பொதுத் தலைப்பில் நடைபெற்ற
கருத்தரங்கில் யாழ்- பல்கலைக் கழக வருகை விரிவுரையாளர்
மனோன்மணி சண்முகதாஸ் (சமூக வாழ்வியலில்) இந்துநாகரிகத்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் நாச்சியார் செல்வநாயகம் (நாளாந்த வாழ்வியலில்) இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் சுகந்தினி பூரீமுரளிதரன் (கல்வி வாழ்வியலில்) ஆகியோர் தத்தம் கருத்துக்களை வெளியிட்டனர். "சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றுவாய்மை " என்ற தலைப்பில் முனைவர் சா. சரவணன் ஆற்றிய சிறப்புரையுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. பிற்பகல் நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்றவர் சைவப் புலவர் மு. திருஞானசம்பந்தபிள்ளை, திருமுறை ஒதியவர் அ. இ. திருமுறை மன்றத்தைச்சேர்ந்த செ. தவராசா, தலைமை யுரையைத் தொடர்ந்து "சுந்தரர் செந்தமிழ்" பற்றிப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும் "சொற்றமிழ் பாடு" பற்றி கோப்பாய்

Page 5
இந்துசாதனம் 8.
ஆசிரியர்கலாசாலை விரிவுரையாளர் ச. லலிசன் அவர்களும், சுந்தரமூர்த்திசுவாமிகளின் மெய்ப் பொருட் செல்வம் பற்றி முனைவர் சா. சரவணன் அவர்களும் சொற்பெருக்காற்றினர். சுருதி வேந்தன் அ. ஜெயராமன், லயஞான பூபதி க. சுவாமிநாத சர்மா ஆகியோருடன் இணைந்து இசைக் கலைமாமணி திருமதி விஷ்ணுப்பிரியாரட்ணகுமார் பண்ணிசை விருந்தளித்தார். சைவபரிபாலன சபைச் செயலாளர் தி. மாணிக்கவாசகர் நன்றியுரை
வழங்கினார்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் மூன்றாம் நாட் காலை நிகழ்ச்சிகள், திருமுறை ஒதலுடன் தொடங்கின. நிர்வாக சபை உறுப்பினர்கள் சைவப் புலவர் கா. கமலநாதன் வரவேற்புரை
நிகழ்த்தினார்.
உடல், உளமேம்பாடு, ஆன்ம ஈடேற்றம் சமூக இணைப்பு, மனித நேயம் ஆகியவற்றுக்குச் சைவநெறிகாட்டும் வாழ்வியல் எவ்வாறு உதவுகின்றது என்பது பற்றி முறையே கிழக்குப்பல்கலைக் கழக இந்துநாகரிகத்துறை விரிவுரையாளர் கலாநிதி எஸ். முகுந்தன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்கள் மு. கெளரிகாந்தன், சலலிசன், சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை ஆசிரியர் கு. பாலசண்முகன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இறுதியாகத் "தமை உடையதன் உணர்வாளர்" பற்றி முனைவர்
நல்லூர் சா. சரவணன் சொற்பெருக்காற்றினார்.
*S$-
 

82O கர ஆவணி O
மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள், சைவபரிபாலனசபைத் தலைவர்
சிவநெறிப்புரவலர் த. சண்முகலிங்கம் தலைமையில் நடை பெற்றன. திருமுறை ஒதல் தலைமையுரை ஆகியவற்றைத் தொடாந்து "சைவமும் நாமும் " பற்றிய, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஒய்வு நிலை விரிவுரையாளர் கலாநிதி செ. திருநாவுக்கரசு அவர்களின் சொற்பொழிவும், "சைவ சித்தாந்த மேம்பாட்டிற்கு ஈழத்தவர்களின் பங்களிப்புப்பற்றிய யாழ். பல்கலைக் கழக இந்துநாகரிகத்துறைத் தலைவர்,பேராசிரியர் மா. வேதநாதன் அவர்களின் சொற்பொழிவும் இடம்பெற்றன. முனைவர் சா. சரவணன் "பொய்காட்டா மெய்" பற்றிச் சிறப்புரை நிகழ்த்தினார்.
சைவபரிபாலன சபைத் தேர்வுச் செயலாளர் பொ. கமலநாதன் அவர்களின் நன்றியுரையுடன் மூன்று நாள் விழா இனிதே நிறைவடைந்தது. - yS -

Page 6
இந்துசாதனம் 8O
யாழ் - சைவபரிபாலனசபையினரால் இவ்வாண்டு ஆ ஆச்சிரம மண்டபத்தில் நடத்தப்பெற்ற அகில இலங்ை சென்னைப் பல்கலைக்கழகச் சைவசிந்தாந்தத்துறையி சென்னை விவேகானந்தாக் கல்லூரித் தமிர்த்துறைத் சரவணன் ஆற்றிய தலைமைப் பேருரையைப் பெருமை
GBIGňTABLI EflanILDITU...
பேரன்பைப் பெருக்கும் தொண்டுக் குலத்தோர்க்கு வணக்கம்!
தெ Tன்னெறியாய் உலகம் முழுமையும் பரவியிருப்பதாய்
உள்ள சைவநெறி தென்னாட்டு உடைமையாக நின்றது. அதிலும், நடைமுறையில் திறமாயும் ஊற்றமாயும் இலங்கையை அடிப்படையாகக் கொண்டே சைவநெறி எண்ணப்பெறுகிறது.
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் அவர்களின் வளமார் தொண்டின் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டில் அத்தகைய திறம் துலங்கியது. இன்னும் ஆறுமுகநாவலர் அவர்களின் காலம் உலகந் தழுவிய அளவில் சைவ விழிப் புணர்ச்சிக் காலமாகவும் அமைந்தது.
காலந்தோறும் தமிழை வளர்த்தெடுத்த சைவத்தின் தொண்டில், அச்சு ஊடக மாற்றத்திற்கேற்ப நவீன காலத் தமிழையும் சைவத்தால் புதுக்கிப்பணி செய்தவர் நாவலர் அவர்கள். இவ்வகையால் சைவ மறுமலர்ச்சிக் காலமாகவும் நாவலர் காலம்
விளங்கியது.
நாவலரால் உண்டான சைவ விழிப்புணர்ச்சி தொடரவும் சைவ மறுமலர்ச்சி பரிணாமப்படவும் நாவலர் அவர்களின் தொண்டுக்கு உருவம் கொடுத்தாற் போல நாவலர் அவர்கள் மறைந்த பத்தாண்டுகள் கழித்து ஏற்படுத்தப்பட்டது சைவபரி பாலனசபை (1888).
இச் சபை நடத்தும் அகில இலங்கைச் சைவ மாநாட்டிற்கு என்னை அழைப்பித்த வகையில் திருவருளுக்கும் நாவலர் பெருமான் வழித் தொண்டிற்கும் சைவ ஆர்வலர்களுக்கும் இலங்கை அன்பர்கட்கும் நன்றியுடையேன்!
தனது காலத்துச்சின்னஞ்சிறிய மனிதரிலிருந்து வேறுபட்டுப்
புதுமையில் அடிபட்டுப் போகாமலும் பழைமையில் அமிழ்ந்து
போகாமலும் இரண்டையும் தரம் பிரித்து இனங் கண்டு புதுவழி
 

32O கர ஆவணி O
த் திங்கள் 20ஆம் 21ஆம் 22ஆம் நாள்களில் நாவலர் கச்சைவ மகாநாட்டில் மாநாட்டுப்பெருந் தலைவரும் ன் முன்னைநாள் முழுநேர வருகைப் பேராசிரியரும்,
துணைப்பேராசிரியருமான முனைவர் நல்லூர் சா. புடன் வெளியிடுகின்றோம்.
சித்தாந்தச் செம்மணி, முனைவர் நல்லூர் சா. சரவணன்
கண்ட' (நாவலர் பற்றி கைலாசபதி, குமரன் புத்தக இல்லம், 2005, பக்கம் -26) யாழ்ப்பாண நல்லூர் ஆறுமுகநாலவர் அவர்களின் தொண்டு சைவ உலகத்திற்கு உறைப்பாக அமைந்தது.
யாழ்ப் பண் இசைக்கும் பாணன் (யாழ்ப்பாணன்) ஒருவன் இடைகழிநாட்டு நல்லூரில் இருந்தான். அவன் பெயர்நத்தத்தன்' என்பது. அவன் பாடிய நூல் சிறுபாணாற்றுப்படை என்ற நூல். இது சங்க இலக்கியமான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
அந்த யாழ்ப்பாணனின் இடைகழிநாட்டு நல்லூரே என் ஊர். (தற்போது தமிழ் நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டத்தில் உள்ளது)
இந்த யாழ்ப்பாணத்தில் 'அகில இலங்கைச் சைவமா நாட்டுத் தலைமை உரைக்கு அழைப்பு வந்தது. நவீன சைவ நாட்டின் தலைமையக அழைப்புத் தவிசைத் தள்ளவோ தட்டவோ வல்லார் யாரே!
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே
- திருமந்திரம், அன்புடைமை -1
எனும் திருமூலர் வாக்கு உண்மையை அறியும் நோக்கில் இத் தலைமையுரை அமைகிறது.
அன்பே சிவமாய் அமர்ந்திருத்தல் ஒரு நிலை அனுபவம். அதற்கான முறை அன்பே சிவம் என்பதை அறிதல். 'அறிதல் என்பது முறையாகவும் அமர்ந் திருத்தல்' என்பது அடையும் நிலையாகவும் கூறப் பட்டிருக்கின்றன. அறியப்படும் ஒன்றே இருத்தலுக்கும் உரியதாக இருக்கிறது. அது தான் அன்பே சிவம் என்பது. இதை அறிதலையும் பின்னர் இதில் இருத்தலையும் பற்றி விளக்குகின்றது அப்பாடல்.
பொருளும் பொருள் உண்மையும்
உலகில் உள்ள எந்தப் பொருளும் தனித்த பொருள் அல்ல. எல்லாம் கூட்டுப் பொருள்களே. தனித்த பொருளைப் பார்ப்பது என்பது அணுக்களைப் பார்ப்பதில் மட்டுமே முடிந்திருக்கிறது. அதுவும் குறைந்த பட்சம் இரண்டு பொருட்களால் (எலக்ட்ரான், புரோட்டான்) ஆனது. அதனைப் பிரித்துப் பார்க்கும் போது ஆற்றல் மட்டுமே தெரியவருகிறது. இந்த எல்லைவரை பெளதிக அறிவியல் வளர்ந்திருக்கிறது. ஆற்றலாக அறியும் போது மின்காந்த சக்தி, காந்த சக்தி, ஈர்ப்புச் சக்தி என ஆற்றல்கள்

Page 7
இந்துசாதனம் 8.
அறியப்படுகின்றன. அவை வேறு எனவும் சொல்லப் பட்டு ஒன்றே எனவும் துணியப்பட்டு வருகின்றன.
ஒரு மரக்கட்டை இருக்கிறது. அதை வெட்டிக் கிழித்துப் போட்டால் விறகு, அதை எரித்தால் வருவது நெருப்பும் சாம்பலும், பார்க்கப்பட்ட ஒரு பொருள் அப்படிச் சிதைக்கப்பட்டு அருவமாகிறது. இந்த அருவத்தின் இறுதித் தன்மையைத்தான் அணுக்கள் எனப் பார்க்க முடிந்தது. கூட்டுப் பொருள்களால் ஆனதே அணுப் பொருளும் என்ற ஆய்வும் உள்ளது. எந்தப் பொருளும் தனிப் பொருளாக இன்றி கூட்டுப் பொருளாகவே பார்க்கப்படுகின்றது என்பதும், கூட்டுப் பொருளின் பிரிப்பு அருவப் பொருள் நிலை ஆவது என்பதும் பொருளுண்மையாக அறியப்படுகின்றன.
பொருளும் அறிவும்
உலகப் பொருள்களில் இயல்பாகவே வேறுபாட்டு நிலைக்கு இலக்காக இருப்பது உயிர்த்தன்மை. இந்த உயிர்த்தன்மை பற்றிய அறிவியல் ஆய்வானது முடிவு ஒன்றினை எட்டுவதற்கு முன்னேறிக் கொண்டு செல்கிறது.
மேலே, உலகப் பொருள்களின் பொருண்மைத் தன்மை குறித்து சில முடிவுகளைக் கண்டோம். உருவப் பொருளானது படிப்படியாக அருவத் தன்மையைப் பெறுவது என்பது ஒரு முடிவு. அருவத் தன்மையில் உள்ள பொருளை ஏற்பதிலும் ஆற்றல் உடைய பொருளாக அதைப் பயன்படுத்துவதிலும் சிக்கல் இல்லை. ஆற்றலையே பொருளாக, தனித்த ஒன்றாக முடிவு செய்வதில் இடர் உண்டு.
பொருளின் உருவத்தன்மையின் மூல நிலையாக இருப்பது அருவத் தன்மை என்பது முடிவு. அந்த அருவத் தன்மை படிப்படியாக அருவத் தன்மையின் அருவத் தன்மை என்பது போல மேலும் மேலும் அருவத் தன்மையாகிறது. இறுதியில் அதன் அனுபவம் ஆற்றலாக உணரப்படுகிறது. , இந்த ஆற்றலின் பொருண்மை உண்மை குறித்த வினா இருந்து கொண்டே இருக்கிறது. கதிர் வீச்சு, அலை ஆற்றல் என்பதுபோல அந்த ஆற்றலின் போதான பொருண்மை மாற்றங்கள் விவரிக்கப் படுகின்றன. இங்கே, இந்த முடிவு நோக்கிய உண்மைத் தன்மையை ஆராய்வது நம் பணி அன்று. ஆனாலும் இந்த முறைமையில் நாம் கொள்ளும் உண்மை ஒன்று உண்டு. அதாவது, பொருளின் அருவத் தன்மையும் அருவப் பொருளின் மாற்றமான ஆற்றல் தன்மையும் பொருள் தன்மையை உறுதி செய்வன எனும் முடிவு ஆகும்.
பொருளைப் பற்றி முடிவு செய்யும் முறை சுட்டி அறியும் முறை. அந்த முறைக்கு உட்பட்டனவே அனைத்துப் பொருள்களும். அதற்கு உட்பட்ட யாவும் கூட்டாகவே இருக்கின்றன. இந்தக் கூட்டுத் தன்மை அடிப்படைய உயிர்த் தன்மைக்கு ( தனிப் பொருண்மை) மாறான ஒன்று ஆகும். கூட்டுத் தன்மையில் பொருளாகின்ற எல்லாமே அறிவில்லாத (சடம்) பொருள்களே. இதற்கு மாறான ஒற்றைத் தன்மையே அறிவுத் தன்மை. இது சுட்டி அறியப்படாத தன்மையானது.
உருவப் பொருளாகப் பார்க்கப்படுவனவற்றிக்கு மூல மாக அருவத் தன்மை உண்டு என்பதால் அருவப் பொருள் என்ற

8.2O கர ஆவணி 01
அளவில் பொருள் இருப்புக்கான உண்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்தப் பொருள் இருப்பு உண்மையின் முறையில் அறிவுப் பொருளின் அருவப் பொருண்மை உண்மையை விளங்கிக் கொள்ளலாம். இது உருவப்பொருளின் அருவமூலம் போல இல்லாமல் அதனுடைய ஆற்றல் அருவம் போல ஒற்றைத் தன்மையானது என்பதை உணர வேண்டும். இந் நிலைமை யிலேயே பொருளைக் கடந்த அறிவுப் பொருள் உண்மை குறித்த இருப்பையும் விளங்கிக் கொள்ளலாம். அருவமான அறிவுப் பொருள் உண்மை ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையில் கடவுளையும் ஆன்மாவையும் ஆகிய உருவப்படாத இரண்டு புலன் கடந்த பொருள்களாக விளக்கியுள்ளது சைவ சித்தாந்தம்.
அன்பும் சிவமும் அன்பு என்னும் சொல்லுக்கு ஒரு பொருள் உண்டு. அன்புக்கு 'சிவம் என்ற பொருளையும் சொல்லலாம் என்று திருமூலரின் திருமந்திரம் சொல்லுகிறது.
அன்பே சிவமாவது என்ற தொடரால் கூறப்படுவது அன்பின் பொருள் சிவம் என்பதாகும். இத்தொடரையும் இதனோடு ஒட்டிய அப்பாடலின் பிற தொடர்களையும் இணைத்து, அன்பின் பொருளாக சிவம் வருகிறதா? அன்பும் சிவமும் இரண்டா? ஒன்றா? என்பவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும்.
அன்பு என்பது பண்பில் வெளிப்படுவது, சிவம் என்பது அப்படி அல்ல; அறிவான பொருள். அது ஒரு கடந்த நிலைப் பொருள் (JairsioGL6ioTLéi) Lifsóly - Transcendental reality).
அன்பு என்பதைச் சிவத்தின் பண்பு என்று விடை கூறிவிட முடியாது! அப்படிச் சொல்வதற்கு இன்னும் சில காரிய விளக்கங்கள் தேவை!
உடைமையும் உரிமையும் அன்பு என்பதை ஒருகுணமாகக் கொள்ளலாமா? என்பது
முதல் ஆய்வு
குணம் என்பது'உடைமையாகவும்'உரிமையாகவும் அமையும். அதுபற்றிச் சில விளக்கங்களைத் தெளிவோம்.
நெருப்பின் தன்மை வெம்மை. இந்த வெம்மை என்பது உரிமைக் குணம், வெம்மை இல்லையேல் அது நெருப்பாக இல்லாத ஒன்றே. இவ்வகையில் இது விட்டு நீங்காத குணம்.
விறகு ஒரு பொருள். இந்தப் பொருளில் நெருப்புத் தன்மையும் உண்டு. இந்த நெருப்புத் தன்மையை அதிலிருந்து பிரித்து எடுக்கிறோம். அதற்குப் பயன்படும் முறையே விறகை எரிப்பது என்பது.
பிரிக்கப்படும் தன்மை உடைமைக் குணம் ஆகும். பிரிக்கப்பட முடியாதவாறு பொருளாம் தன்மையாக இருப்பதே உரிமைக் குணம் எனப்படும்.
сөөцb шейцb பண்பு என்ற தமிழ்ச் சொல் நேரடியாக குணத்தைக் குறிக்கப்
பயன்படுவது அன்று. அது சமூகத் தன்மை அடிப்படையில் செயற்பாடுகளை விளக்கப் பயன்படுவது.

Page 8
இந்துசாதனம் 8O
அன்புடை9ை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு
- பண்புடைமை-2 எளிமை உடையதாகவும், எவரிடத்தும் இருப்பது மான ஒன்றாகவும் பண்பு குறித்து பண்புடைமை அதிகாரத்தின் முதல் குறட்பா கூறுகிறது. அதன் பின்னர் கூறப்பட்டதே மேலுள்ள குறட்பா.
அன்பு எனும் உடைமையாலும், நல்ல குடிப்பிறப்பு எனும் விளக்கப்பாடு உடைய செயல்களின் அடிப் படைகளாலும் பண்பு விளங்குகிறது என்பது மேல் குறட்பாவின் சாரம். இதன் வழி பண்பு மதிப்பீடு செய்யப்பட்டதாக உள்ளதை அறியலாம். இங்கே பண்பு என்பதை குணச் செயல் பாடு எனப் பொதுப்படக் கொள்ளாமல் சற்றே விழுமியப்பட்ட குணத் தண்மைகள் எனக் கொள்ள வேண்டும்.
அன்பும் ஆன்மாவும்
அன்பு எனும் குணம் ஆன்மாவுடன் எப்படிப்பட்ட தொடர்பு
உடையது? என்பதை விளங்கிக் கொள்வோம்.
அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு
திருக்குறள், அன்புடைமை-3 இதில், அன்பு உயிருடன் இணைந்திருக்கிற நிலை யானது, உயிரானது உடம்பொடு இணைந்திருக்கிற தன்மையைப் போன்றது எனக் கூறப்படுகிறது.
அடுத்து உயிரின் வாழ்நிலை என்பது அன்பின் வழியது என்றும், அப்படி இல்லை என்றால் எலும்பும் தோலும் போர்த்திய உடம்பாகத்தான் அது இருக்கிறது என்றும், கூறப்பட்டது. இதனைக் குறிப்பிடும் குறட்பா,
அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு என்பு தோல் போர்த்திய உடம்பு
- திருக்குறள், அன்புடைமை-10
என்பது, உயிரின் வாழ்வு எப்படி வேண்டுமானாலும் அமையும்.
ஆனால் அது அன்பை வெளிப்படுத்துவதாக இருந்தால் தான் உயிர் வாழ்வு என்பதாகும்.
இன்னும் அன்புடன் இணைத்து உயிரைப் பல முறை களில் விளக்குகிறது திருக்குறள்.
எலும்பு இல்லாத புழுவை வெயிலானது காய்த்து அழிப்பது போல அன்பு இல்லாதவரை 'அறம் அழிக்கும் என்றும், அன்பு இல்லாத வாழ்வு வலிய பாலை வாழ்வு என்றும் உயிரும் அன்பும் இணைத்துக் கூறப்படும்.
அறத்திற்கே அன்பு சார்பு என்பஅறியார் மறத்திற்கும் அஃதே துணை
- திருக்குறள், அன்புடைமை -6
என்ற குறட்பா அன்பானது அறம், மறம் எனும் இரு வேறு தன்மைகளுக்கும் உடைமையாக, ஆவதை விளக்குவது. இதில் உயிரிடத்து அன்புக்குரிய இடம் குறித்த வினா வுக்கான விடைக்குத் தெளிவு இல்லை. அறம், மறம் இரண்டும் சமூக

B2O கர ஆவணி 01
மதிப்பீடுகள், இவற்றிற்கும் அன்பு எனும் குணம் உடைமை ஆகிறது. இங்கே அன்பு உயிருக்கு வேறானவற்றிலும் உடைமைத் தன்மை பெறுவதால் அன்பை உயிருக்கான உரிமைக் குணமாக முடிவுசெய்ய இடமில்லை.
அன்பும் இன்பமும்
அன்பு பற்றிய கருத்தில் திருக்குறள் தரும் முடிவு குறிப்பிடத்தக்கது. இன்பத்தைப் பெறுதல்' என்பது சிறப்பான ஒன்று என்றும் அது 'அன்புற்று அமர்ந்த ஒரு நிலை என்றும் கூறுகிறது.
அன்புற்று அமர்ந்தவழுக்கு என்பவையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
- அன்புடைமை -5
அன்பைச் செயற்படுத்தியதனால் அன்பைப் பெற்ற ஒரு நிலை கிடைக்கிறது; இதுதான் இன்பம் பெற்றார் நிலைக்குரிய சிறப்பாக அமைவது என்பது அதன் பொருள்
அன்பும் நட்பும்
பொருளால், உழைப்பால், கல்வியால் என வேண்டிய செயற்பாட்டு வகைகளில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இந்தக் தொடர்புகள் எல்லாம் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. இக்காரண முறைகளைக் கடந்து தொடர்பு கொள்ளும் ஒரு முறைதான் நட்புக் கொள்வது. இந்தநட்பில் தேவை என்பது துளியும் சம்பந்தப்படாத ஒரு மூலத் தன்மைதான்'அன்பு என்பது.
நட்பு என்பது மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் ஒரு உறவு முறை. ஆனால் இது மற்ற உறவுகளைப் போன்றதன்று. எந்தத் தேவையும் எந்த உரிமையும் இல்லா நிலையிலும்கூட இது இயங்கும். வேலை, கல்வி என்பது போலவும் பிறப்புச் சார்பு போலவும் எந்தக் காரணத்தன்மையும் இல்லாத போதும் இந்தத் தொடர்பு இயங்கும். அப்படிப்பட்ட காரணத் தன்மைகளில் அது இயங்கும்போது அந்த உறவு சிறக்கும். அப்படி இயங்குவதற்குரிய காரணத் தன்மை தான் அன்பு இதனை இன்னும் விரிவாக விளக்குகிறது திருக்குறள்.
அன்பு ஈனும்ஆர்வம் உடைமை அது ஈனும் நண்பு என்னும் நாடாச் சிறப்பு
- அன்புடைமை -4 நட்பு என்பது எந்த ஒரு தேவையையும் உள்ளே கொண்டிராத ஒன்று. இதன்மூலம் செயற்கரிய செய்யப்படும் என்பதெல்லாம் பின் விளைவுகள். ஆனால் முன் நிலைக் காரணமாக எந்தத் தேவைகளும்இரா.
அன்பானது முதலில் ஆர்வமாகச் செயல்படுகிறது. அந்த ஆர்வத்தின் செயற்பாடாக நட்பு அமைகிறது. இந்த ஆர்வமானது தேவை எனும் நாட்டம் உடைய ஒன்று அன்று. அன்பின் தன்மையை அனுபவத்திற்கு உட்படுத்துவதாக அமையும் நட்புக்கு மூலமான ஒரு நிலை அது.
பொதுவாக, நட்பு என்பது உயிர்ப் பொருள்கள் மீதான அன்பின் செயற்பாடாக அமைந்தது ஆகும். அடுத்து உயிரில்லாத பொருள்களின் மீதான அன்பின் செயற்பாட்டையும் ஆராய்வோம்.
உவுரும்.

Page 9
இந்துசாதனம் 8.
551.
552.
553.
554.
555.
556.
557.
558.
559.
560.
து -இதில் ༣༽ سمصر
* நாவலர் சரிதமோது
கவிஞர் திரு. இ. இ
(இந்துசாதனம் - 2011 ஆடி 11
சிவனுரையாக மத்தே செய்திட விதிக்கப் பெற்ற பவமறு சரியையோடு பாருறு கிரியை கூட தவமளியோக மெல்லாம் தார்பதி புண்(ணி)யமாகும் சிவனது ஞானஞ் சேரச்சிறந்ததே யென்று தேரீர்.
அரனளி சுருதி தன்னில் அளிவகையாக மெல்லாம் புரபசு புண்(ணி)யமாகும் புகலுமெய்ஞ்ஞானம் வந்தே வரமெனு யோக மின்றேல் வாழ்வினிற் கூடிடாது பரவிடுயோக மோசெய் கிரியைகளின்றிக் கூடா.
கிரியைகளவையோ மேவும் சரியைக ளின்றிக் கூடா சரியைக ளான்மாவுக்குத் தந்திடும் சிவசா லோக்யம் கிரியைகள் புரியத்தானே கூடிடும் சிவசா மீப்யம் புரிதரு யோகங் கூட்டும் சிவசாரூப்யத்தை யென்றும்
திருதருஞான மோசிவசாயுச்(சி)ய மதனை ஈயும் தருபெருயாக மோடுதஎைாபசு புண்(ணி)ய மெல்லாம் வருமருஞ் சுவர்க்கமொன்றே வழங்கிடுமென்றும் நீவிர் மருவிடுமுலகிலென்றும் மனதினில் வையுமென்றார்
பகுமுறையிவைகளெல்லாம் பாரநட்டித்தல் தேரல் வகுமுறை கல்விகேள்வி வாய்த்திடினின்றிக் கூடா வெகுமுறை வித்(தி)யா சாலை விளைவித்தல் சமய சாரம் தகுமுறை பிரசங்கித்தல் தருமமென்றுணர்தீரென்றார்.
இவைகளை விருத்திசெய்தால் இரும்புவிபுண்ணியம் சேரும் தவறிடின் பாவ மேதான் பாரினிற் கூடுமென்றும் நவசிவதத்(து)வ விவேக விருத்திசுலோகங்காட்டி அவைபிரமான மென்றே அவையினர் தேரச் சொன்னார்.
சாத்திரஞ்சொல்லல் சைவப் பிரசாரஞ் செய்த லெல்லாம் காத்திர புண்(ணி)ய மோடுகளிச்சிவஞானங்காட்டும் நேர்த்தியுள்கருவியாகநிலமமை தரும மென்றே சீர்த்தியுளறிவு மிக்காரலதறிவாரோ மற்றோர்.
அறிவுளரான போது மரிதுவிப் பணிகட்கீதல்
குறைவடை கோவிற்கென்றால் கொடுத்திடுவார்கள் யாரும் அறமளிபணிகள் சிவனாராலயம் நிகழ்த்தலாலே நிறைவுறு மாறு செய்தால் நினைவுகள் கூடுமென்றார்.
ஆதலிற் கீலமான ஆலயமவையை மீண்டும் பூதலம் புதுக்காவிட்டால் பொல்லாங்கு குழு மென்றே ஒதிய வழியி லாக்க ஒருப்படுசபையினார்க்கு போதிய நிதியை வாரின் புண்ணியம் சேருமென்றார்.
திருப்பணி செய்குவார்க்கு சிவனினையுன்னிச்செம்பொன் விருப்புடனிகுவார்கள் வீட்டினைப் பெறுவரென்றும் திருப்புனை மாந்தரீந்த திருநிதிவாங்கிச்செய்வார்
கருப்புகமாட்டா ரென்றம் காண்பிரமாணம் சொன்னார்.
 

)82O கர ஆவணி 01
ம் நற்றமிழ் மாலை TTToooēFu IIT JöötsjöITaf6ör
ஆம் பக்கத்தின் தொடர்ச்சி.)
561.
562.
563.
564.
565.
566.
567.
568.
569.
570.
திருந்திடுமடியர் சேரும் திரவிய மதைமூன்றாக்கி வருந்திருவதிலொர் பாகம் வாழ்வினுக் காக்கிமீதை தருந்திருப்பணிகளாற்றத் தருகுதல் கடனதென்றே அருந்திருவாகமங்கள் அருளினும் மஃது வரிதே.
நீங்கருஞ்சைவ ரேயுலோபியராயிடாதே தீங்கவையகல வாரித்திருப்பணிக்கியன்ற மட்டும் தாங்கரும் நிதியையீந்தால் தழைத்தது பெருகிச் சபையார் ஈங்கெடுபுண்ணி)ய மெல்லாம் இனிதுறக் காணுமென்றார்.
வந்துலகுள்ளார் யாரும் வழங்கிடுந் தரும மென்ன குந்தகமறிந்திடாதே கொடுக்கிறீரியன்ற மட்டும் தொன்நிதியதனைக் கொண்டு தொடங்குவர் சிலரே பெற்ற அந்நிதி முழுதும் பணிக்காயளிப்பவர் மிகச் சில்லோரே.
பண்ணிடக் கருதுவாரும் பலித்திடுங்காலம் மட்டும் திண்ணமொடிருத்தலாற்றார் திருப்பணியதன்முன்மாண்டல் எண்ணிய முடிக்க மாட்டார் எண்ணெழுத்தறிவிலாரும் நண்ணிட வஞ்சு வாரும் நடப்பரோ விதியின் போக்கில்.
வருந்தியங்குழைப்பை நீவீர் வழங்கினிரென்ற போதும் அருந்தவப் பணிகட்காங்கே அணைவது சிறிதேயாகும் இருந்திடுந் நிலையை நோக்கின் இத்திருப்பணிகட்காக தருந்திருவதையோ ராளே தனித்திடநடத்தலாகும்.
தருமநல்முறையுஞ் சார்பும் சாற்றிடுநரலில் வல்லோர் மருவுமல் வழியிலாற்ற மாநிதியவையளித்தே பொருளுடை மாந்தர் தாமே புகலவை முடிப்பதாலே இருதிறத்தாருஞ்சேர்ந்தேயிணைந்தொரு சபையைாக்கி
கருதுவிதானமாக்கிகாண்வழியவைகளாற்றின் விரவிடுதரும மெல்லாம் விதிமுறை முடிவதோடு பொருளது முழுதுஞ்சேரும் புண்ணி)யத்துக் காதலாலே தருமம தாற்றுதற்கு யாவரும் சபையிற் சேர்வீர்.
இந்தநற்பணிகளாற்ற இயன்றதையளிப்பமென்றே சிந்தையில் நினைந்த போதே சிவத்திரவியம தாகும் அந்தநற்பொருளைப் பின்னே அளித்தில ராயிற் சென்றே குந்தகராகியெரிவாய் கொடுநரகழுந்து வாரே.
இப்படிநூல்களெல்லா மெடுத்துரை செய்வதாலே செப்பருந்தருமம் காக்கச் சிறிதளவேனும் பொருளை எப்பெருந்தடைவந்தாலு மெழுமுள வச்சத்தோடு ஒப்பிடுமன்பினோடு உதவிடல் வேண்டுமென்றார்.
புண்ணிய பாவஞ்செய்தலுடன்படலதைச் செய்வித்தல் நண்ணிடு மூன்றுந் தம்முளொத்திடுமாதலாலே எண்ணிய தளித்தும் வாய்ப்பின் இனவுறவோர்க்குந் தருமம் பண்ணிடுமாறுமூக்கிப்பாரினில் முயலுமென்றார்.
( ۔۔۔وھارv){ سoلc)

Page 10
இந்துசாதனம் 8O
பெய்யுரை
முநீலழுநீ காசிவாசி முத்
2ர்ெ என்றால் என்னென்ன இருக்க வேண்டும் எனச் சிந்தித்தால், நல்லசாலை இருக்க வேண்டும்; ஊரைச் சுற்றிச்சோலை இருக்கவேண்டும்; கல்விச் சாலை இருக்க வேண்டும் என்றவாறு ஒவ்வொருவர் சிந்தனையிலும் பெரியபெரிய பட்டியல்கள் உருவாகும். இவையெல்லாம் இம்மை வாழ்க்கைக் கானவை. மறுமையைச் செழுமையாக வரவேற்கவும், கடைத் தேற்றத்தை நோக்கிக் கணிசமான அளவு முன்னேறவும், எந்த வசதி தேவையோ, அது கட்டாயம் ஊரில் இருக்கவேண்டும். அந்தக் கட்டாயத் தேவைதான் திருக்கோயில், திருக்கோயில் என்றால் சிவன் கோயிலைத்தான் குறிக்கும். பெருமாள் கோயில்களை விண்ணகரம் என்பதும், சிவன் கோயில்களைத் திருக்கோயில்
என்பதும் கவி சம்பிரதாயம்.
"கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்" என்ற " என்ற "கொன்றை வேந்தன்" அடியையும் அறிந்து ை செயற்பாடுகளைச் சரியாக மேற்கொள்கின்றனர்? அப்பர் அடிப்படையாகக் கொண்டு, அடியார்கள் ஆலயங்களு என்ன, என்ன பணிகள், வழிபாடுகளில் ஈடுபடவேண்டு ஆதீன முதல்வர். "மெய்யுரை" என்ற தலைப்பிலே பதினெ இக்கட்டுரையை நன்றியுடன் மறுபிரசுரஞ் செய்கின்றோ
திருக்கோயில் இல்லாத ஊரைத் திரு இல்லாத ஊர் என்று திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். திரு என்பது, அழகு, செல்வம், தெய்வீகம், மேன்மை என்று பல பொருள்களையுடைய சொல் லாகும். இதன்படி, திருக்கோயில் ஊருக்கு அழகு, திருக்கோயில் இருந்தால்தான் ஊரிலுள்ளவர்களுக்குச் செல்வம் கொழிக்கும்; திருக்கோயிலால் ஊரில் தெய்வீகம் தாண்டவமாடும். விதிவழிப்பட்ட துன்பங்கள் மேன்மையாகும். ஊருக்கும், ஊருக்கு வருபவர்களுக்கும்கூட மேன்மைகள் அளிப்பன திருக்கோயில்களே என்பனவான செய்திகளை அறியலாம். திருக்கோயில் இல்லாத ஊர், இத்தனை நலங்களையும் பெறாது என்றதுடன், அது ஊரல்ல; அடவி; காடு என்றார். மரங்கள் அடர்ந்தது அடவி, அத்துடன் கொடு விலங்குகளும் மிகுந்தது காடு.
"திருக்கோயில் இல்லாத திருஇல் ஊர் அடவிகாடு" என்பது அப்பர் வாக்கு. திருக்கோயிலின் தெய்வீகத்தை ஊர் மக்கள் எப்படித் துய்க்க வேண்டும்? என ஒரு வினா எழுப்பினால், 'ஊர் மக்கள் சுவாமி திருமேனியருகில் சென்று பூசைபண்ண வேண்டும் என்று அவசரக்காரர்கள் வார்த்தைகளை உதிர்ப்பார் கள். அத்தனைபேரும் அர்ச்சனை பண்ணத் தொடங்கினால் நிலைமை என்னவாகும் என்ற சாத்தியமின்மையை வேண்டு மானால் விட்டுவிடுவோம். திருநாவுக்கரசு சுவாமிகள் வேறெங்
கேனும் விளக்கம் சொல்லியிருக்கிறாரா? என்று பார்க்கக் கூடவா

B2O கர ஆவணி 0
*
ά
துக்குமாரசுவாமித்தம்பிரான் சுவாமிகள்
முடியாது?’தாமே பூசிப்பது நேரே பூசிப்ப்து என்றெல்லாம் ஏதேனும் குழப்ப வாதங்கள் புறப்பட்டு விடுமோ என்ற தீர்க்க தரிசனமான ஐயத்துடன், அடுத்த பனுவலிலேயே விளக்கம் சொல்லியருளினார்.
"ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில்" என்ற தொடரில் விடைவருகிறது. திருக்கோயிலை வலம்வருவது ஊர் மக்களின் கடமை. ஒருகாலும் என்பது ஒரு முறையாவது என்ற பொருள் தருகிறது. நாள்தோறும் ஒருமுறையாவது திருக்கோயிலை வலம்வர வேண்டும் என்பது கருத்து. வலம் வருவது என்பது வலம்வந்து வழிபடுவதைக் குறிக்கும். இதனைத் தம்பிரானார் கோயில் வலங்கொண்டு, திருமுன் தாழ்ந்து எழுந்து (பெரி.கழ.செ.17) என்ற சேக்கிழார் திருவாக்கால் உணரலாம். எழுந்து என்றதனால், தாழ்தல் நிலம்தோய வணங்குதலைக்
உலகநீதி"யையும் "ஆலயந் தொழுவது சாலவும் நன்று" வைத்திருப்பவருள் எத்தனை பேர் அவை உணர்த்தும் பெருமான் அருளிய திருத்தாண்டகங்களுள் இரண்டை க்குச் செல்லவேண்டியதன் அவசியத்தையும், யார், யார் ம் என்பதையும் தெளிவுபடுத்துகின்றார் திருப்பனந்தாள் ாராவது தொடராக "பூரீகுமரகுருபரர்" இதழில் வெளியான
ம்.
குறித்ததாகிறது. நாளும் திருக்கோயிலுக்குச் சென்று வலம்வந்து விழுந்து கும்பிடாதவர்களைத் திருநாவுக்கரசு சுவாமிகள், இறப்பதற்கே பிறப்பெடுத்தவர்கள்’ என்கிறார்.
திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்புகலூரிலிருந்து பாடி யருளிய தனித் திருத்தாண்டகங்களுள் முதலாவதாகிய அப்பன்நீ எனத் தொடங்கும் தனித்திருத்தாண்டகத்தின் ஐந்து, ஆறாம் பனுவல்கள் ஒருபொருள் தொடர்ச்சியுடையன. ஐந்தாம் பாடலில் திருக்கோயிலின் இன்றியமையாமை ஒரு தொடரில் சொல்லப் பட்டது. ஆறாம் பாடலில் திருக்கோயிலில் மக்கள் என்ன செய்ய
வேண்டும் என்பது ஒரு தொடரில் சொல்லப்பட்டது. அதேபோல,
"திருவெண்ணிறு அணியாத திருஇல் ஊரும் அடவி, காடே" என ஐந்தாம் திருப்பனுவலில் சொல்லப்பட்டது.
'அருநோய்கள் கெடவெண்ணிறு அணியாராகில் அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே" என்று திருவெண்ணிறு அணிய வேண்டும் என்பதை ஐந்தாம் பனுவலிலும், ஏன் அணியவேண்டும் என்ற காரணத்தை ஆறாம் பனுவலிலும் திருநாவுக்கரசு சுவாமிகள் தெளிய உரைத்தார். - இதுவரை பக்திமார்க்கத்தில் நுழைவதற்கான முதற்படிநிலை
எனலாம்.
-->

Page 11
இந்துசாதனம் 8C
இந்தப்படியைத் தாண்டும்போது, 'நான் பக்தனாகி விட்டேன்; சுவாமி கோயிலில் நானே பூசைபண்ணவேண்டும். இனி நான் சொல்வது சாத்திரம்' என்றெல்லாம் பக்குவம் இல்லாத சிலருக்கு ஆணவம் தலைக்கேறும் அபாயமும் உண்டல்லவா? ஏனென்றால் கோயிலுக்குப் போகும் பழக்கம் வந்தவுடன், சில பக்திப் பனுவல்களைப் படித்தோ, கேட்டோ மனனமாகக்கூடும். ஏதோ ஒலியெழுப்பிப் பூக்களைப் போடுவது அர்ச்சனை என்பதாகப் பிறழப் புரிந்துகொண்டு, நாமும் அப்படிச் செய்தாலென்ன என ஆணவம் முறுக்கேறும். அப்பர் சுவாமிகள் இசைப் பாடல்கள்,
பாடுவதற்குரியன'என்றார் அக்கருத்தை,
'பருக்கோடிப்பத்திமையால் பாடா ஊரும்'அடவி, காடே!
என்றருளினார். பருக்கோடி - பருத்த உடம்பை வளைத்து. எல்லோருடைய உடம்புமா பருத்திருக்கும் என்று சிந்தித்தால், அவர் குறிப்பிட்டது ஆணவக் கொழுப்பை என்பது புலப்படும். ஆணவத்தை ஒழித்திடுதல் அவ்வளவு எளிமையானதன்று. அது தலைதூக்காமல் வளைக்கவாவது செய்யலாமல்லவா? ஆணவம் வளைந்தால், பக்தி நிமிரும். பக்தியின் செம்மாப்புடன் பாடவேண் டும். பாட்டுக்களைப் படிக்க முடியுமே தவிரப்பாடுவதற்கான இசை வாய்ப்பில்லையே என ஏங்குவார்க்கும், பாடுவதுடன் பிறபக்திப்படி நிலைகளில் உயர்ச்சியடைய விரும்புவார்க்குமாகத் திருநாமம் ஐந்தெழுத்தும் செப்பு தலையும் தீவண்ணார் திறம் ஒருகாற் பேசு தலையும் ஆறாம் திருப்பாட்டுள் வற்புறுத்துகிறார்.
மக்கள் தொகை அதிகமான ஊர்களானால், நாள்தோறும் அனைவரும் கூடுவது நெரிசலைத்தான் உண்டாக்கும். குனிந்து பணிந்து பக்திப் பாடல்கள் பாடவும், ஒரிடத்தில் அமர்ந்து சிவத் தியானம் செய்து திருவைந்தெழுத்தை ஜெபிக்கவும். சிவ கதைகள் பேசவும் உரிய சூழல் குறைவாகிவிடும்.அதனால்,
'பாங்கினொடு பலதளிகள் இல்லா ஊரும் அடவி காடே என்றார் திருநாவுக்கரசர். ஊரின் பல பாகங்களிலும் தனித்தனிக் கோயில்கள் இருந்தால், ஒரே நேரத்தில், ஒரே கோயிலில் நெரிசல் ஏற்படாது. அவரவர் மனஇலயிப்புக்கு ஏற்றவாறு கோயிலைத் தெரிவுசெய்துகொண்டு மேலெழுதியவாறு வழிபடவும் வாய்ப்பு ஏற்படும். 'பாங்கினொடு - அழகுடன் என்றும் பொருள் சொல்லலாம். கோயில்கள் கலையழகுடன் இருக்க வேண்டும்
என்பது அதன் கருத்து.
புலர் விடியல்காலத்திலே சுவாமி திருப்பள்ளியெழுச்சி யின்போது வெண்சங்கம் ஊதுவார்கள். திருப்பள்ளியெழுச்சி மங்கலங்களைத் தெரிவித்து சேந்தனார், சங்குவாத்தியம் முழங்கு தலையும் குறிப்பிட்டுள்ளார். நேரம் தெரிந்துகொள்ளப்போதுமான வசதிகள் இல்லாத அக்காலத்தில் கோயிலின் சங்கொலி கேட்டு மக்கள் நாழிகையைத் தெரிந்துகொண்டார்கள். பெருமானைத் திருப்பள்ளியெழுச்சி செய்வது, மக்களுக்கு நாழிகையைத் தெரிவிப்பதுடன் சிவசிந்தனையைத் தொடங்கிவைப்பது எனப் பலநிலைப் பயன்களைத் தரும் பணியாகையால், வெண்சங்கு வாத்தியத்தை விருப்போடு ஊதவேண்டும் என்றருளினார்
அப்பர்சுவாமிகள்.

82O கர ஆவணி 01
‘விருப்போடுவெண்சங்கம் ஊதா ஊரும்'அடவி, காடே என்பதனால் இச்செய்தியை அறியலாம்.
சிவபெருமானுக்கு நித்திய வழிபாடுகள் செய்வித்து மகிழ்வது மட்டும் போதுமானதன்று. ஆகமங்களில் நைமித்திக வழிபாடுகள் பற்றியும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. திருவள்ளுவரும் 'சிறப்பொடு, பூசனை’ என்று நித்திய நைமித்தி கங்களைக் குறிப்பிடுகிறார். (காண்க - பரிமேலழகர் உரை விளக்கம்) நாடோறும் திருக்கோயில் வழிபாடு செய்விப்போர், பெருவிழாக்களையும் செய்விக்க வேண்டும் என்ற கருத்து வருமாறு விதானங்கள், வெண்கொடி வேண்டும்' என்று
அருளினார்.
'விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும் அடவி, காடே என்ற தொடர், போந்த செய்தியாக வற்புறுத்துவது, பெருந்திரு விழாக்கள் நடத்தித் திருக்கோயில் பொலிவை அனுபவிக்க
வேண்டும்; சிவனருளை ஆரப்பருக வேண்டும் என்பனவேயாகும்.
ஊரில் வாழும் மக்களின் பன்முக நலன்களுக்காகத் திருக்கோயில் தேவை. ஊரவர் அனைவரும் பிணிபோக்கும் மருந்தாகிய திருவெண்ணிறு அணிய வேண்டும். ஊரவர் யாவரும் நாளொன்றுக்கு ஒருமுறையேனும் திருக்கோயிலுக்குவந்து, திருச்சுற்றுகளில் வலம்வந்து பெருமானை, நிலன்உற வணங்க வேண்டும். உடம்பை வளைத்துப் பக்தியுடன் திருப்பனுவல்களைப் பாடவேண்டும்; திருவைந்தெழுத்தை ஜெபிக்க வேண்டும்; இறைவன் திறங்களைப் பேசவேண்டும். ஒர் ஊரில், கலையழகுமிக்க பலகோயில்கள் இருக்க வேண்டும். புலர் விடியற் பொழுதிலேயே சிவசிந்தனை தொடங்க வேண்டும். திருக்கோயில்களில் நித்திய வழிபாடுகள் நடைபெறுவதோடு நைமித்திக வழிபாடுகளும் நடைபெற வேண்டும் என்னும் அரிய செய்திகளை, இவை இல்லாத - நடைபெறாத - ஊர்கள் ஊர்களல்ல எனவும், அவை அடவிகள்; காடுகள் எனவும், இவை செய்யாதவர்கள் பிறந்த பிறப்பு, நோயில் நொந்து, மீண்டும் மீண்டும் பிறந்தும் செத்தும் ஊழல் எடுத்த பிறப்பு எனவும் இரண்டு திருத்தாண்டகப் பனுவ்ல்களில் இணைத்து அறிவித்தருளிய அப்பர்சுவாமிகள், அவரவர்கள் இல்லங்களில் சிவம் பெருக்கும்பணிக்காகச் சொன்னதை இனிப்பார்ப்போம்.
இல்லுறை கடவுட் பூசை இருவகைப்படும். ஒன்று சிவதீட்சை பெற்றுக் குருஉபதேசித்தபடி பூசிப்பது. இரண்டாவது, தீட்சை பெறாதவர்களும், குளித்த பிறகு, உணவு உண்பதற்கு முன் பூசிப்பது. தீட்சை பெறாதவர்கள சாங்கோபாங்கமாகப் பூசிக்க முடியாது. தாமறிந்த பக்திப்பாடல்களைச் சொல்லிக்கொண்டு தூப, தீப நைவேத்தியங்களைச் செய்வர். இதிலே ஒரேஒரு கட்டுப்பாடு உண்டு; தினமும் செய்யவேண்டும் என்பதே அது. தீட்சை இல்லையாகையால் வீட்டிலுள்ள யாராயினும் மாறிமாறிப் பூசிக்க லாம். அசுபகாரிய தினங்களில் மட்டும் பூசையை நிறுத்தவேண்டும். இந்தப் பூசையில் எல்லா அங்கங்களும் இருக்க வேண்டும் என்பதில்லை. சக்திக்கேற்ப அமையலாம். தீப ஆராதனையோ, நைவேத்தியம் செய்வதோ இல்லையென்றாலும் கூட ஒரு பச்சிலை யாவது சுவாமிக்குச் சார்த்துங்கள்' என்று இல்லுறை தெய்வ
தொடர்ச்சி 14ஆம் பக்கத்தில்

Page 12
இந்துசாதனம் 8.O
திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமமே ஆழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம் இந்து சாதனம் Hindu Organ
e-mail: editorGhindu organ.com
கர வGல ஆவணி மீ" 1ஆம் உ (8.28.29r)
ஆக்கபூர்வமாகச் செயற்படுங்கள்
முழுமுதற் கடவுளம் முக்கட் சிவனாரின் முடிவிலா ஆற்றல் அருளிய முதுசெIம்மாக முகிழ்த்தவரே யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் என்பதையும்
தான் கற்ற கல்வியாலும் பெற்ற அனுபவங்களாலும் உற்ற தொடர்புகளலும் சைவசமயமே மெய்ச் சமயம் என்பதை எவ்வித
சந்தேகமோ தடுமாற்றமோ இன்றி அவர் பூரணமாக உணர்ந்து கொண்டார் என்பதையும்
தன் பிரசங்கங்கள், பிரசுரங்கள், பிரமச்சரிய வாழ்க்கை போன்றவற்றால்
சைவத் தமிழ் மக்களிடையே அவர் ஏற்படுத்திய சமய விழிப்புணர்ச்சி- சாத்வீக எழுச்சி-போன்றவற்றின் கூட்டுச் சக்தியே பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் "யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை"யை உருவாக்கியது என்பதையும்
சைவ அறிஞர்கள், சமயச் சான்றோர்கள், கல்விமான்கள், நியாயவாதிகள், சைவ அன்பர்கள் போன்ற பல தரப்பட்டோர் அதன் உறுப்பினர்களகச் செயற்பட்டனர் என்பதையும்
நாமமது சைவரெனக் கொள்வதுடன் மட்டும் திருப்திப்படுதலும் பெருமைப்படுதலும் நமக்கோ நாட்டுக்கோ நம் சைவ சமயத்துக்கோ எவ்வித மேம்பாட்டையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தமாட்டாது என்பதை வலியுறுத்தி
நலம் கிளர் சிந்தனை, கருத்து - நலம் தருசொற்கள், பேச்சு - நலம் விளை செயல்கள், சேவைகள் - ஆகியவற்றின் முறையான - நேர்மையான - நெருக்கமான - இணைப்பில் வாழும் நடைமுறைச் சைவர்களை உருவாக்கி - உற்சாகப்படுத்தி - உத்தமர்களக அவர்கள் உயர்வதற்கு வழிகாட்டிஉதவும் வகையில்
காலத்துக்குக் காலம் - இடத்துக்கு இடம். சமயப் பிரசங்கங்கள் - சைவ மகாநாடுகள்-நடத்துவதன்மூலமும்
ofolar Du groosooruph eigpairporth, Hindu Organ assu Lഴ്ചി(ബut ിഖങfuിBഖഴ്ത്ത് പ്രബന്ധ്ര -
 

82O கர ஆவணி 01
சைவமக்களிடையே சமய உண்மைகளையும் தத்துவ விளக்கங்களையும் இனிய, எளியநடையில் எடுத்துக் கூறியும்
சைவ சமயப் பரீட்சைகள், பேச்சு, கட்டுரைப் போட்டிகள், பண்ணிசைப் போட்டிகள் மூலம் குறிப்பிட்ட ஒரு பருவத்தினரை உற்சாகப்படுத்தி அவர்களின் சமய அறிவை அபிவிருத்திசெய்தும்
சைவ வாழ்க்கை வாழ்வதற்கு உதவி செய்து உறுதிப்படுத்தும் வகையில் மிகப்பெரிய அளவில் சமயதீட்சை வழங்கும் நிகழ்ச்சி களைஏற்பாடுசெய்தும்
நாவலர் பெருமானின் உறுதியான சைவப் பற்றிலிருந்து ஊற்றெடுத்த உள்ளக் கருத்துக்களை நன்குணர்ந்து அவற்றை நடைமுறைப்படுத்துவதில் யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை என்றுமே முன்னணியில் நிற்கின்றது என்பதையும்
பணிவுடனும் அடக்கத்துடனும் அனைவருக்கும் நினைவுட்ட விரும்பும் நாம் -
சைவ ஆலயங்களிலுள்ள பஞ்சலோக விக்கிரகங்கள், பெறுமதி மிக்க நகைகள், விளக்குகள் போன்றவை திருடப்படுவதும், படை முகாம்களுக்கு அண்மையிலுள்ள ஆலயங்களில் திருடுபவர்கள் கூட சட்டத்தின்பிடிக்குட் சிக்காமலிருப்பதும்
ஊரைச் சுற்றிப் பார்த்து உல்லாசமாகப் பொழுதைப் போக்கும் நோக்குடன் தமிழ்ப் பிரதேசங்களுக்குவரும் தென்னிலங்கைப் பிரயாணிகள் சைவ&ஆலயங்களிற் பின்பற்றப்படும் ஆசார நடை முறைகளைப் புறக்கணித்து, ஆலயங்களின் புனிதத்தைக் குறைப் பதைக் கண்டிப்பதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ முடியாமலிருப்பது சைவத்தமிழ் நெஞ்சங்களைக் குடைந்துகொண்டிருப்பதும் -
தமிழ் இளைஞர்கள் சிலரும் - மேற்போந்தவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு - விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதும்
மதுவுக்கும் பிறபோதைப் பொருட்களுக்கும் அடிமையாகும் நமது இளைஞர்கள் வீதிகளிலும் பகிரங்க இடங்களிலும் கூடி நின்று - மாணவிகளையும் பெண்களையும் பெரியவர்களையும் இழித்தும் பழித்தும் இம்சைப்படுத்தியும் ஒருவித குரூர மகிழ்ச்சி அடைவதும்
படைவீரர்களின் வழிபாட்டுக்கு வசதியும் வழியும் செய்து கொடுப்பதாகக் காட்டிக் கொண்டு, சந்திகளிலும் சந்தைகளிலும் நிற்கின்ற அரச மரங்களின் கீழ் புத்தர் சிலைகள் வைக்கப் படுவதும்
தமிழர் பிரதேசத்தில் - தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தவை எனப் பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களுட் பல. பெளத்த மதத்துடன் தொடர்புடையவை எனக்காட்ட முயல்வதும்
அடிக்கடி நடைபெறும் நிகழ்ச்சிகளக அதிவேகமாக மாறிவருவதையும் சுட்டிக்காட்டி
சைவசமயத்துக்கும் சைவப் பண்பாட்டுக்கும் விடுக்கப்பட்டு வரும் இத்தகைய அச்சுறுத்தல்களைக் கண்டும் காணாதவர் களாய் - உணர்ந்தும் உணராதவர்களாய் - தொடர்ந்தும் மெளனம்
சாதிக்காமல்
இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கும் - அழிவிலிருந்தும் நெளிவிலிருந்தும் சைவசமயத்தையும் சைவத்தமிழ்ப் பண்பாட்டையும் காத்து - மீண்டும் ஒரு புதுமலர்ச்சியையும் புத்தெழுச்சியையும் உருவாக்குவதற்கும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடும்படி யாழ். சைவபரிபாலன சபை உட்பட, அனைத்துச் சைவ நிறுவனங்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
人

Page 13
இந்துசாதனம் 18C
இந்து சமயத் தத்துவங்களுட் தனிச் சிறப்புப் பெற் முறைகள் போல், வடமொழி மூலமுடையதன்று; ஆ. வேலுப்பிள்ளை. பல்லாண்டுகளின் முன் “திருக் இந்தக் கட்டுரை.
சைவசித்தாந்தம் தமிழர் க
ரெலாற்றுக் காலத்தில், தமிழர் என்றும் ஒரே மதத்தவராக இருந்ததற்குச் சான்றில்லை. ஆனால் தமிழர் மிகப்பெரும்பா லோரின் சமயமாகப் பல நூற்றாண்டுகளாக இந்துமதம் இருந்து வருகிறது. இந்துமதத் தமிழரில் சைவர் பெரும்பாலோர். சைவரில் பெரும்பாலோர் சைவசித்தாந்தத்தைத் தம்நெறியாகக் கொள்கின்றனர். சோழர் காலப் பிற்பகுதியிலும் இரண்டாவது பாண்டியப் பேரரசு காலத்திலும் சைவசித்தாந்த நூல்கள் பதினான்கு தமிழில் எழுந்தன. ஆதீனங்கள் மடங்கள் எழுச்சி பெற்ற நாயக்கர் காலத்திலும் சைவசித்தாந்தத்தை எடுத்து விளக்கும் எத்தனையோ நூல்கள் தோன்றின. விசய நகரநாயக்கர்கால - ஐரோப்பியர் காலத் தமிழிலக்கியங்களில் சைவசித்
தாந்தக் கருத்துக்கள் மலிந்து காணப்படுகின்றன.
சைவசித்தாந்தம் தமிழர் கண்டநெறியா அல்லது வடமொழியி லிருந்து தழுவப்பட்டதா என்று ஒரு ஐயம் அறிஞர் சிலரிடையே நிலவுகிறது. இந்திய உபகண்டத்தில் எத்தனையோ தத்துவமுறைகள் தோன்றின. அவை யாவும் வடமொழி மூலத்தில் காணப்படுகின்றன. அதைப் பற்றி ஐயுறுவாரில்லை. சைவ சித்தாந்தம் என்ற ஒரே தத்துவமுறை மாத்திரம் தமிழில் தோன்றியிருக்க முடியுமா? வடமொழியில் உள்ள இரெளரவ ஆகமத்தில் பாசவிமோசனப் படலத்தில் சிவஞானபோதத்திலுள்ள தமிழ்ச் சூத்திரங்களுக்கு நேரிடையான வடமொழிச் சூத்திரங்கள் காணப்படுகின்றன. எதிலிருந்து எது மொழிபெயர்க்கப் பட்டிருக்கலாம்? தமிழிலுள்ள சைவசித்தாந்த சாத்திரங்கள், வடமொழிச் சொற்கள், கருத்துக்கள், தத்துவங்கள் முதலியவற்றை நிறைய எடுத்துக் கையாளுகின்றன. இத்தியாதி காரணங்களால் சைவசித்தாந்தமும் ஏனைய இந்திய தத்துவமுறைகள் போல வடமொழி மூலமுடையது போலும் என்ற கருத்து அறிஞர் சிலரிடையே காணப்பட்டது.
சைவசித்தாந்தத்தின் முதனூல் சிவஞானபோதம், அதை இயற்றியவர் மெய்கண்டதேவர், வேளாளர் குலத்திற் பிறந்த அவருக்கு வேதாகமக் கருத்துக்களை எப்படி அறிந்து கொண்டிருக்க முடியும் என்று அன்னார் வினாவெழுப்புவர். மெய்கண்டதேவர் வரலாற்றிலிருந்து அவர் பரஞ்சோதிமுனிவரிடம் உபதேசம் பெற்றது தெரிகிறது. மெய்கண்டதேவர் தனக்கு வேண்டிய வடமொழியறிவைப் பரஞ்சோதி முனிவரிடமிருந்து பெற்றிருக்கலாம்.
சைவசித்தாந்தம் என்ற ஒரே தத்துவமுறை தமிழிற் தோன்றியது புதின மேயல்லாது, தென்னிந்தியாவில்

82O a5 eaarif OI
றுள்ள சைவ சித்தாந்தம், ஏனைய இந்திய தத்துவ அது தமிழர் கண்ட தத்துவம் என்கிறார் பேராசிரியர் கேதீஸ்வரம் சிவராத்திரி சிறப்பு மலரில் வெளியானது
கண்ட நெறியா?
கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை
தத்துவமுறைகள் தோன்றியது புதினமல்ல, இந்திய தத்துவ ஆசிரியர்களில் ஈடிணையற்றவராகக் கருதப்படும் சங்கரர், இன்றைய தமிழ் நாடு கேரளத்தின் எல்லை யிலுள்ள கல்லடியில் தோன்றியவரே. இவர் நிறுவிய ஏகான்ம வாதத்துக்கு எதிராக விசிட்டாத்துவிதம் என்ற தத்துவமுறையைத் தோற்றுவித்த இராமானுசர் தமிழ் நாட்டின் வடபகுதியைச் சேர்ந்தவரே. இவ்விரண்டு தத்துவமுறைகளையும் மறுத்து, மூன்றாவது வேதாந்த தத்துவ முறையாகிய துவிதத்தை நிறுவிய மாதவர் வாழ்ந்த பதினான்காம் நூற்றாண்டிலிருந்து தென்னிந்தியாவில் வேதாந்த விசாரணை தீவிரமாக நடைபெற்றது ஐயமின்றித் தெரிகிறது. வேதாந்த தத்துவங்களை நிறுவியோர் யாவரும் வடமொழியையே பயன்படுத்தினர். இந்தச் சூழ்நிலையிலே, தமிழர் பெரும்பான்மையோரினதும் சோழப் பேரரசரினதும் சமயமும் பக்திமார்க்கத்தை அடிப்படையாயுடையதுமாய சைவத்திற்கு ஒரு தத்துவமுறை வகுக்கப்பட்டதும், அத்தத்துவத்தை எடுத்துக்கூறும் நூல்கள் நிறைய வடமொழிச் செல்வாக்குடையனவாக இருப்பதும்
ஆச்சரியப்படத்தக்கணவல்ல.
பல்லவர் காலத் தமிழகத்திலேற்பட்ட சைவசமய மறுமலர்ச்சி, சைவத்தின் பொற்காலமாக விளங்கிய சோழர்காலம் இவையே சிவஞானபோதம் எழுந்த காலத்தின் தமிழ்நாட்டுச் சூழ்நிலை. பெளத்த, சமண சமயங்களின் தாக்குதலுக்கு எதிர் நிற்கலாற்றாது, ஒடுங்கி வந்த சைவத்திற்குப் புத்துயிரும், புத்துணர்ச்சியும் ஊட்டி, சைவத்தைத் தமிழர் பெரும்பாலோரின் சமயமாக நிலைநிறுத்திய சமயாசாரியர் வரலாறு, சிவஞானபோதம் எழுதப்படுவதற்குப் பெருந்துணை செய்ததாகத் தெரிகிறது. முதலாம் இராசராசன் காலத்து நம்பியாண்டார் நம்பி, தேவாரங்களைத் தேடித்தொகுத் துத் திருமுறைகளாக வகுத்தமைத்தார். 12ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் வாழ்ந்த சேக்கிழார், தேவாரம் பாடிய மூவர்களின் வரலாற்றை உள்ளடக்கிப் பெரியபுராணம் பாடிவைத்தார். 9ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதியினராய் கருத்தப்படும் மணிவாசகரின் வரலாறும் திருவாசகமும் மெய்கண்டார் காலவழக்கிலிருந் திருக்கவேண்டும். ஆகவே 13ஆம் நூற்றாண்டினராய மெய்கண்ட தேவர், நாயன்மார் வாழ்க்கை வரலாறுகளில் தோய்ந்து. சிவஞான போதம் செய்தாரெனல் எவ்வகையிலும் பொருத்தமுடையதே.
சைவசமயாசாரியர் வரலாறு உயிர்கள் இறைவனையடை வதற்குக் கடக்கவேண்டிய படிகளைக் கூறுவதில் மெய்கண்டா ருக்குத் துணை செய்திருப்பதாகத் தோன்றுகிறது. நால்வரும், பக்திமார்க்கத்தில் நின்று இறைவனைப் பாடியபோதும், அவருள்

Page 14
இந்துசாதனம் 8O
ஒவ்வொருவரும் ஒவ்வொருபடியில் நின்று, இறைவனை யேத்தின ராகத் தெரிகிறது. சைவசித்தாந்தம் கூறும் நால்நெறிகளாவன - சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. இவை முறையே தாசமார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனவும் படும். சன்மார்க்கத்தால் முத்தியை அடைவதே மிகஉயர்ந்தபடி, நான்கு படிகளிலும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் என்போர் நின்றதாகக் கருதப்படுகின்றனர். பல்லவர்காலப் பக்திப் பாடல்களில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த சமயக் கருத்துக்களைத் தொகுத்து வகுத்து, சூழ்நிலைக்கேற்ப


Page 15
இந்துசாதனம் 18C
சமயப் பண்பாட்டு நோக்கி
(இந்துசாதனம் - 2011ஆடி இதழ் 23° பக்கத் தொடர்ச்சி.)
gF) வன் இருபத்தெட்டு ஆகமங்களையும் அருளிச் செய்தான் என்பதனை ஆகமச் சிறப்புப்பாயிரத்தில் திருமூலர் "அஞ்சனமேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்" என்கிறார். இவ்விருபத்தெட்டு ஆகமங்களுக்கும் முறையான உபதேசக் கிரமம் கூறப்படுகின்றது. சிவனின் ஐந்து முகங்களி னின்றும் ஐந்து முனிவர்களுக்கு உபதேசிக்கும் முகமாக ஆகமங்கள் தோன்றியதாக மரபுண்டு. இவ்வாகமங்கள் உபதேச கிரமத்தின்படி ஒவ்வொரு தலைமுறைக்கும் வழங்கப்பட்டு வந்துள்ளதை உணரமுடிகிறது. இந்த வகையில் ஆகமங்களோடு தொடர்புற்ற ஒரு ஞானகுரு பரம்பரையே உபதேசகிரமமாக உருவாகி வந்துள்ளதை உணரலாம். இந்தக் கிரமத்தின்படி சதாசிவமூர்த்தி ஆகமங்களை அனந்ததேவருக்கு உபதேசித் தருளியதாகவும் அனந்த தேவர் பூரீகண்டருத்திரருக்கும், பூரீகண்டருத்திரர் திருநந்திதேவருக்கும் திருநந்திதேவர் சனற்குமார முனிவருக்கும் முனிவர்களால் மனுடனுக்கும் மனுடரால் மனுடருக்கும் குருபரம்பரையாய் உபதேசிக்கப்பட்டு
உலகத்தில் பரவுவனவாய் உள்ளன.
நைமிசாரண்ய வனத்திலிருந்த முனிவர்களுக்கு வியாசரால் உபதேசிக்கப்பட்டனவாகப் புராணங்கள் எழுந்தன. தேவஉபநிடதங் களில் கூறப்பட்ட கருத்துக்களை பாமர மக்களும் எளிமையாகப் புரிந்து அனுசரிக்கும் வகையில் புராணங்கள் எளிமையாகவும், இலகுவாகவும் கதாபாத்திரங்கள் மூல-உப கதைகள் மூலமாகவும் கருத்துக்களை வெளிப்படுத்தின. பழமையான வரலாறுகளின் தொகுப்புப் பெட்டகங்களாகத் திகழும் புராணங்கள் ஒருவகையில் கருத்துக்களை மக்களுக்கு விளக்கும் உபதேச நூலாக விளங்கு கின்றன எனலாம். அறிவியல், சமயவியல் சார்ந்த கருத்துக்களை புராண இலக்கியங்கள் உபதேச மொழிக்கருத்துக்களாக பாமர மக்கள் மனங்களில் விதைத்துச் செல்கின்றமை சிறப்பிற்குரிய தொன்றாகும்.
பாண்டவர்களது குருவாக விளங்கியவர் துரோணர். இவர் சகல வித்தைகளையும் அஸ்திரப் பிரயோகங்களையும் அவர்களுக்குத் தெளிவாகக் கற்றுக்கொடுத்தவராவார். ஏகலைவன் என்ற வேடன் துரோணரிடம் தன்னைச் சீடனாக ஏற்கும்படி கூற அவர் மறுத்ததன் விளைவாக தன்குடிசையிலே துரோணரின் உருஒன்றைச் செய்து வைத்து மானசீகமுறையில் மிகுந்த குருபக்தியுடன் வில்வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தான். குருவின் மீது கொண்ட எல்லையற்ற பக்திக்கு மகாபாரதம் கூறும் இக்கதை சிறந்த எடுத்துக் காட்டாகும்.
பாரத யுத்தத்தின்போது அர்ச்சுனனின் தேர்ச்சாரதியாக கடமைபுரிந்தவர் கிருஷ்ண பரமாத்மா. உறவுசார்ந்த உணர்வுகளால் உந்தப்பெற்ற அர்ச்சுனன் போர்க்களத்தின் மத்தியில் தடுமாறும் உணர்வுடன் தத்தளித்தவேளை தத்துவப்பிழிவாகக் கிருஷ்ணர்

82O கர ஆவணி 01
ல் உபதேசம்
GoF6DIů LỊoo6oňr : f. JIOGOOTTITFIT B.A (Hons)
"கீதோபதேசம்" நிகழ்த்தினார். தானே அனைத்தும் என்று உபதேசித்ததுடன் விஸ்வரூபம் எடுத்து, காட்சிச்சான்றாகவும் உணர்த்தியருளினார். போர்க்களத்திற்கு போர் புரிவதற்காக வந்த அர்ச்சுனன் போர் புரிதலையும், எதிரிகளை அழிப்பதையும் தனது கடமையாகச் செய்து முடிக்கவேண்டுமேயொழிய அதன் பலன் களைப் பற்றி சிந்திக்கலாகாது என்பதுதான் கிருஷ்ணரின் போதனையாகும். "உன்னுடைய உரிமை, செய்யும் காரியம் மட்டுமே. காரியத்தின் முடிவும் பயனும் உன்உரிமையல்ல. பயனில் ஆசை செலுத்தி எதையும் செய்யாதே. இதைச் சொன்னேன் என்று செய்யவேண்டியன செய்யாமல் சும்மா இருந்துவிடுவதில் மனம் செலுத்தாதே. பற்று வைத்துக் கொள்ளாமல் பகையை அகற்றிச் செய்வதைச்செய். நிறைவேறுவதும் நிறைவேறாமல் போவதும் ஆகிய இரண்டையும் ஒன்றாகக் கருதிச்செய். இந்தச் சமநிலைக்கே யோகம் என்று பெயர். செய்யும் செயலில் உள்ள பயனில் ஆசைப் படாமல் துறந்த வாழ்க்கை நடாத்தும் அறிஞர்கள் பிறவித்தளை யினின்று விடுபட்டு நோயற்ற உயர் பதவியை அடைவார்கள்." இவை கண்ணனுடைய உபதேச வார்த்தைகளாக உள்ளன. இங்கு சூழ்நிலையும், இடமும், மனோநிலையும் கீதோபதேசத்துக்கு ஏதுவாக அமைந்தமையும் கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். கீதோபதேசக் கருத்துக்கள் இன்றய வாழ்வியலிலும் சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து ஒலித்துக்கொண்டிருக்கும் உபதேச மொழிகளாக உள்ளன.
"மோனம் என்பது ஞான வரம்பு" என்ற முதுமொழிக்கேற்ப அமைந்திருக்கும் இறைமூர்த்தம் தெட்ஷணாமூர்த்தம் ஆகும். இறைவன் தெட்ஷணாமூர்த்தியாக கல்லாலமரத்தின் கீழமர்ந்து சனகாதி முனிவர் நால்வருக்கும் ஞான உபதேசம் செய்தருளியமை இங்கு குறிப்பிடற்பாலது. சனகாதி முனிவர் நால்வருக்கும் ஞானத் தில் தெளிவில்லாது போகவே தெட்ஷணாமூர்த்தியிடம் ஞான உபதேசம் பெற்றனர். "ஞானம் நாவினாலே நவிலற் பாலதன்று" என்னும் நிலையிற் சுட்டுவிரலைப் பெருவிரலுடன் சேர்த்து சின்முத்திரை காட்டினார். (சித் + முத்திரை - சின்முத்திரை) சித் - அறிவு (ஞானம்), முத்திரை - அடையாளம். ஞானத்தின் அடையாளமே சின்முத்திரையாகும்.
இங்ங்னம் சின்முத்திரையைக் காட்டி மோனநிலையில் உபதேசம் செய்யும் நிலை ஆழ்ந்தகன்று நுண்ணியதாக விளங்கும் ஞானநிலையைச் சுட்டுகின்றது. ஞானம்பெற, கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிஷ்டை கூடுதல் எனும் நான்கு அங்கங்கள் படிமுறையாகக் கூறப்பட்டுள்ளன. இறைவனைப் பற்றி அறியு முகமாக அவன் பற்றிய அறிவைக்கேட்டல் முதற்படியாகும். ஆன்மீக ஞானம் கைநிறையப் பெற்றவரிடம் இருந்துதான் ஞானத்தைக் கேட்டறியமுடிகின்றது. இதுவும் உபதேசவடிவம்தான்.
மேலே கூறிய தெட்ஷணாமூர்த்தி வடிவம் இந்துப் பாரம்
பரியமாக இருப்பினும், இந்துக்கல்விப் பாரம்பரியமாக இருப்பினும் -- S»

Page 16
இந்துசாதனம் 8.O
குருதத்துவச் சிறப்பினையே உணர்த்தும். இறைவன் தெட்ஷணா மூர்த்தி வடிவிலே குருவாகத்தோன்றி சனகாதிநால்வருக்கு உரிய சிவஞானத்தை மோனநிலையினாலும், சின்முத்திரையாலும் உபதேசம் செய்தருளிய வகையில் இம்முனிவர் பரம்பரை திருக்கைலாய குருபரம்பரை என்று அழைக்கப்படுகின்றது.
பிரணவப் பொருளின் திருப்பெரு வடிவமாயுள்ளவர் சிவபெருமான். சிவன் முருகனிடம் ஒரு பக்குவமுள்ள சீடன் போலவே பணிவுடன் பிரணவப் பொருளை மந்திர உபதேசமாகப் பெற்றார். பிரணவப் பொருளான சிவபெருமான் பிறிதொரு பிரணவ வடிவாகத் தோன்றிய கந்தப்பெருமானிடம் பிரணவப் பொருளை உபதேசித்தருளுமாறு வேண்டியதும் தந்தைக்கு மகன் உபதேசம் செய்தமையும் உபதேச வடிவத்தின் உயர்நிலையாகும். இத்தகைய நிகழ்ச்சிகள் யாவும் திருவேரகமாகிய சுவாமிமலையிலே நிகழ்ந்தன. தந்தைக்கு உபதேசம் புகட்டிய வகையிலேயே முருகன் "சுவாமி நாதன்'எனும் திருப்பெயரைக் கொண்டு விளங்குகின்றான்.
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய்குகனே" என்று அருணகிரியார் போற்றுவதும் களித்தற்குரியது.
அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் முருகனால்
ஆட்கொள்ளப்பெற்றவர். முருகன் தனக்குக் குருவாக வந்து உபதேசித்த பெருமையைக் கந்தரனுபூதியில் அருளணுபவ நிலையில் பின்வருமாறு கூறுகின்றார்.
"செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இருசொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே" என்றவாறு முருகன் அருட்குருவடிவாகித் தோன்றி "சும்மா இரு" என்று உபதேச மந்திரமொழி அருளப்பெற்றதும் அவர் பெற்ற அருளனுபவநிலை வெளிப்படுத்தப்படுகின்றது. மேலும் ஒரு தெய்வநலச் சூழலில் முருகன் அருணகிரி நாதரிடம் உபதேச மொழியைப் புலப்படுத்தியுள்ளார் என்பதனை,
"நாதா குமரா நமவென்றரனார்
ஒதாயெனவோதிய தெப்பொருள்தான்
வேதா முதல்விண்ணவர் சூடுமலர்ப்
பாதாகுறயின் பதசேகரனே" என்றவாறமைந்த கந்தரனுபூதிப் பாடலினுடாகக் காண முடிகின்றது.
திருப்பெருந்துறையில் குருந்தமர நிழலில் இருந்தவாறு இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றவர் மாணிக்கவாசகர். பக்குவப் பட்ட ஆன்மாக்களை இறைவன் குருவடிவிலேயே ஆட்கொள்வான் என்பதற்கு மாணிக்கவாசகரின் நிகழ்வு தக்கசான்றாகும். இறைவா நானாக உன்னிடம் வரவில்லை, நீயே என்னை உன்பக்கம் மாற்றி ஈர்த்துக் கொண்டாய் என்ற செய்தியினை "ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே" எனும் சிவபுராணச் செய்யுள் மூலம் வெளிப்படுத்துகின்றார்.
1.

B2O கர ஆவணி 0
மாணிக்கவாசகருக்குச் சிவபிரான் குருவடிவாக வந்து குருந்த மரத்தின் கீழ் பிரணவ மந்திர உபதேசம் செய்தார். இவ் உபதேசத்தை மாணிக்கவாசகர் பக்திப் பாங்குடன்
ஏற்றுக்கொண்டு உய்திகண்ட சிறப்பினை.
"நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாயின் அமுதமாய்த்தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந்து எனதுள்ளம் புகுந்(து) அடியேற்கு அருள்செய்தான் ஊரனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே"
என்றவாறு வெளிப்படுத்துகின்றார். மேற்கொண்டு தாம் ஞான உபதேசம்பெற்ற பெரும் பேற்றினை நன்றியுணர்வுடன் நினைவு சுடர்கின்றார்.
"அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையைச் சிறுமையென்றிகழாதே திருவடியிணையைப் பிறவினை அறியா நிழலது போலு முன்பின்னாகிமுனியாது அத்திசை என்பு நைந்துருகிநெக்கு நெக்கேங்க அன்பெனும் ஆறு கரையது புரள நன்புலன் ஒன்றிநாதனன்று அரற்றி" எனப் போற்றித்திருவகவலில் கூறிச் செல்லும் பாங்கு போற்று தற்குரியது. இவ்வகையிலே மாணிக்கவாசகரது அருளணுபவ நிலைகளைச் சிந்தித்துப் பார்க்கும்போது ஆன்மீக உலகினில் ஞானகுருவின் இன்றியமையாத் தன்மை புலப்படும். குருவருள் இன்றித் திருவருள் இல்லை என்கின்ற சித்தாந்திகளது உண்மை முடிவு மாணிக்கவாசகரின் வாழ்வியலினுTடாக அறிந்துணர முடிகின்றது.
பட்டினத்தடிகள் பாடல்கள் தனிச்சிறப்பு மிக்கனவாகவும் எல்லோர் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றனவாகவும் விளங்கு கின்றன. இவரது வாழ்வியல் கூறுகள் ஏனையோரது வாழ்க்கை முறைகளில் நின்றும் வேறுபட்டவை. அவரது பலதிறப்பட்ட பாடல் களிலும் அறிவுரைக் கருத்துக்கள் அருளுரைகளாக வெளிப்படு கின்றன. பட்டினத்து அடிகளார் தமது நெஞ்சினை சீடராக்கி அதற்குத் தாமே குருவாக இருந்து உபதேசம் செய்கின்றார். எடுத்துக்காட்டாக "நெஞ்சொடுபுலம்பல்" எனும்பாடற்பகுதியில்
"முன்னம் நீசெய்ததவம் முப்பாலும் சேரும் அன்றிப் பொன்னும் அணிதிகழும் பூவையும் அங்கே வருமோ? தன்னைச் சதமாகச் சற்குருவைப் போற்றாமல் கண்ணற்ற அந்தகன் போல் காட்சியுற்றாய் நெஞ்சமே"
ஊண் பொதிந்த காயம் உளைந்த புழுக்கூட்டைத் தான் சுமந்து அல்லால் நீ சற்குருவைப் போற்றாமல் கான் பரந்த வெள்ளம் கரைபுரளக் கண்டு ஏகி மீன் பரந்தாற் போலே விசாரமுற்றாய் நெஞ்சமே"
என அமைந்த பாடல்கள் இவரது குருதத்துவத்தைப் புலப்படுத்துகின்றன.
மேலும் தான் இருந்த காலங்களில் இறைவனைப் போற்றி அவன் திருவடியைச் சென்று சேரப்பெற்றிருக்கலாம். மாறாக
வி ளிடச் G b, in G ○
லைமகளடதது அங்காடி நாய போலவும, தாவாரம தோறும
6

Page 17
இந்துசாதனம் 18. C
தலைபுகுந்த நாய் போலவும் அலைந்து திரிந்து இளமைக்
காலங்களை கழித்துவிட்டேனே என நெஞ்சோடு புலம்பி
நெஞ்சிற்கு உபதேசம் செய்கின்றார். சான்றாக,
"மண்காட்டிப் பொன்காட்டி மாய இருள்காட்டிச் செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல் கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில் சிக்கி மிக அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே"
"பூவாணர் போற்றும் புகழ்மதுரைச் சொக்கரது சீர்பாதம் போற்றிச் சிவலோகம் போகாமல் தாவாரம் தோறும் தலைபுகுந்த நாய்போலே ஆகாத நெஞ்சமே அலைந்து திரிந்தாயே"
என்றவாறாக அமைந்த பாடல்கள் யாவும் உபதேச வார்த்தைகளின்
உன்னத வடிவங்களாகவே உள்ளன.
பட்டினத்து அடிகள் தம் நெஞ்சுக்கு வழங்கிய அறிவுரைகளைப் போன்று உலக மக்களுக்கும் வழங்கிய அருளுரைகள் நினைத்து போற்றுதற்குரியன.
"ஒன்றென் றிரு தெய்வம் உண்டு
என்றிரு உயர் செல்வம் எல்லாம் அன்றென்றிரு பசித்தோர் முகம்
பார்! நல்அறமும் நட்பும் நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு மனமே!உனக்கே
உபதேசம் இதே"
என அப்பாடல் அமைந்துள்ளது. இங்கு மனித வாழ்வின்
உயர்வுக்கான அரிய, பெரிய, உயரிய கருத்துக்களை தம் நெஞ்சத் திற்கு அறிவுறுத்தும் பாங்கில் உலகத்தவர்க்கு உபதேசித் துணர்த்தியுள்ளார். நல்வாழ்விற்குரிய தெய்வவுண்மை, செல்வம் நிலையாமை, ஈதல், நட்பு, நடுவுநிலைமை, நம்பிக்கை முதலியவற்றை உணருமாறு செய்தருளியுள்ளார். இந்நிலையில் நின்றேதாயுமானவரும்.
"நித்தன் பரமகுரு நேசத்தால்-சுத்தநிலை
பெற்றோமே நெஞ்சே! பெரும் பிறவிசாராமல்
கற்றோமே மோனக் கரு"
எனத் தம் நெஞ்சுக்கு உபதேசம் செய்கின்றார். தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்று உபதேசம் புகட்டியவரும் அவரே.
திருமூலநாயனார் குருமரபில் வந்த மெளன குரு என்பவர்
தாயுமானவ சுவாமிகளுக்கு உபதேசம் செய்தவராவர்.
"மந்த்ர குருவே யோக தந்த்ரகுருவே மூலன் மரபில் வரு மெளன குருவே"
என்றவாறு மெளனகுரு வணக்கத்தில் குறிப்பிட்டுச் செல்கின்றார். மெளனகுரு வடிவாய்த் தாயுமானவர் காண எழுந்தருளிய
ஞானாசாரியார், வாயால் உபதேசம் நவிலாமல் சைகையால்
*S-

82O கர ஆவணி 01
உபதேசம் வழங்கியருளினார். வேதாகமத் துணிபு ஒன்றே எனச் சுட்டியதுடன் சிவஞானசித்திநெறியை மெளனத்தின் வாயிலாகக் காட்டியருளினார். மேலான சிவஞான ஆலமர்ச் செல்வன் கல்லால மரத்தின் கீழ் நால்வருக்கு அருளிய திறத்தையும் தாயுமானவர் நினைவுகூர்ந்து உய்யுமாறு மெளனகுரு குறிப்பால் உணர்த்தி யருளினார். நல்லாற்றுப்படுத்தப்பட்ட தாயுமானவர் இறைவனையே
குருவாக வரித்த நிலையில்.
"மணியேயென் கண்ணேமா மருந்தே நால்வர்க் கன்றாலின் கீழிருந்து மோனஞானம் அமைத்த சின்முத்திரைக் கடலே"
என்றுபாடிச் செல்வதைக் காணலாம். இதனால் வாயாலன்றியும் சைகையாலும் உபதேசம் புரியலாம் என்பது தெளிவாகும். ஆகை யால் உபதேசங்கள் என்பது வார்த்தையால் மட்டும்தான் வெளிப் படுத்தலாம் என்பதன்றி சைகை என்ற குறிப்புணர்த்துதலினாலும் வெளிப்படுத்தலாம் என்பது தெளிவு. எனவேதான் சமயாசாரி யார்களினது உயர் வாழ்வியலும் நல்வாக்குகளும் உபதேச
வடிவங்களாக நம் கண்முன் உலாவருகின்றன.
வைணவ சமயவுலகம் போற்றும் தலைசிறந்த ஆசாரியராகத் திகழ்பவர் ழநீராமானுஜர் ஆவார். வைணவர்கள் போற்றும் ury Dry Biafu மகாமந்திரமான அட்சாட்சர மந்திரத்தை திருக் கோட்டியூர் நம்பியிடம் பெற்றுக்கொள்வதில் அக்கறை கொண்டி ருந்தார். பல நாட் சிரமங்களின் பின்னரே இராமானுஜருக்கு திருக்கோட்டியூர் நம்பியவர்கள் மந்திரோப தேசம் செய்தார். பல தடவை சென்றபோது உபதேசிக்காது இராமனுஜரைத் திருப்பி யனுப்பிய நம்பி பதினெட்டாவது முறையும் அலையச் செய்த பின்னரேதான் மந்திரோபதேசம் செய்தார். இந்த நிலை ஒருவகை யில் குருவின் உயர்நிலையைப் பறைசாற்றுவதாய் உள்ளது. அதாவது சீடனுக்குப் பக்தி வைராக்கிய நிலையேற்பட்ட பின்னர் தான் உபதேசம் புரிதல் வேண்டும் என்ற கோட்பாடு புலப்படுகிறது. அவ்வாறு கடினப்பட்டு தாம் பெற்ற பரம இரகசிய மகாமந்திரத்தை குருவின் ஆணையையும் மீறி திருக்கோட்டியூர் ஆலய கோபுரத்தின் மீதினின்று யாவரும் கேட்குமுகமாக உரத்த குரலில் உபதேசம் செய்தார் இராமானுஜர் இச்செயல் திருக்கோட்டியூர் நம்பியின் செவிகளுக்கு எட்டவே கடுஞ்சினம் கொண்டு. இராமானுஜரை வரவழைத்து, "இதன்விளைவு என்ன தெரியுமா?" என அதட்டலானார். ஆனால் இராமானுஜரோ பணிவுடன்.
"ஆம் தெரியும் சுவாமி உங்களது ஆணையைமீறி இதனை நான் கூறியிருக்கிறேன். எனில் நான் நரகம் செல்வேன். ஆனால் இதனை ஒதிக்கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரும் பிறவிப் பிணி தீர்த்துக் கொள்வார்கள். இந்நிலையில் நானொருவன் மட்டுமே நரகலோகம் செல்வேனானால் அது எனக்குப் பரம திருப்தியே" என பதிலுரைத்தார். இந்நிலையில் இராமானுஜரது உயரிய சிந்தனையை வியந்து அனைவரினதும் மீட்சிக்காகப் பாடுபடுகின்ற நீர்தான் வைணவர் எனத் திருக்கோட்டியூர்நம்பி புகழ்ந்து போற்றினார்
என்பது வரலாறு தரும் பதிவாகும். வளரும்
X-e-

Page 18
இந்துசாதனம் 8C
குழந்தைப்பேறு, தெய்வச்செயல் என்ற நம்பிக்கை யில் சமயத்துடன் இணைந்த சில கட்டுப்ப செயற்பட்டனர்.
சமயம் ஒரு வ
rజో 春 譚*
கலாநிதி மனோன்ம مستقرایی
சிெவசமயம் ஒரு வாழ்வியல் என்பதைப் பலரும் உணர்வ தில்லை. மனித வாழ்வியல் பிறப்புத் தொடக்கம் இறப்புவரை ஒரு வரையறைப்பட்டதாக அமையவேண்டும் என்ற நோக்கமே நமது முன்னோரின் செயற்பாடாக இருந்தது. அதனால் வாழ்வியலோடு, வழிபாட்டு நடைமுறைகளையும் சிறப்பாக இணைத்துள்ளனர். "குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே" என்ற முதுமொழி எம்மிடையே இன்றும் வழக்கிலுள்ளது. ஒரு குடும்பத்திலே குழந்தைப்பேறு என்பது இறையருளால் கிடைப்பது என்ற நம்பிக்கை நம்முன்னோரிடம் ஆழப்பதிந்திருந்தது. அதனால் வழிபாட்டு நடைமுறைகளில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது.
குழந்தைப்பேறு தொடர்பாகச் சில கட்டுப்பாடுகள் அன்று வகுக்கப்பட்டன. ஒரு பெண் கருவுற்றால் குழந்தையைப் பெற்றெடுக்கும்வரை அவளை விடும் சமூகமும் மிகுந்த மதிப்போடு கவனித்தன. வீட்டில் கணவன், ஏனைய உறவுகள், நட்பு என்பன இணைந்து குழந்தையின் வரவுக்காகச் செயற்பட்டன. கருவுற்ற பெண்ணின் உணவு, உடை, உறையுள், உளநலம் என்பவற்றில் எல்லோரும் கண்ணும் கருத்துமாயிருப்பர். சமய நிலையில், கருவுற்ற பெண் கோயிலுக்குச் செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் அவள் நலமாகக் குழந்தையைப் பெற்றெடுக்க அவளைச் சார்ந்தவர்கள் வழிபாட்டு நடைமுறைகளைப் பேணிவந்தனர்.
பெண்ணினுடைய கணவன் தாடிவளர்க்கும் நடைமுறை இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இன்று இந்த நடைமுறை நகைப்புக்கு உரியதாகலாம். ஆனால் நம்முன்னோர், மனைவி கருவை வயிற்றிலே தாங்கியிருக்கும்போது கணவனும் அதைப்பேணவேண்டும் என எண்ணினர். தன்னுடைய முகம் தன்கடமையை நினைவூட்டும் எனக் கணவன் செயற்பட்டான். அவனுடைய பரத்தைமை ஒழுக்கத்தையும் இந்நடைமுறை தடை செய்வதாக அமைந்திருந்தது. கணவனைக் காண்போர் அவன் மனைவி கருவுற்றிருப்பதை உடனடியாக உணர்ந்து கொள்வர். குழந்தை பிறந்து குழந்தையின் தலைமுடிகளையப்படும்போதுதான் கணவனுடைய தாடியும் களையப்படும். குழந்தை பிறந்து துடக்குக் கழிவு வரை கணவன் வழிபாட்டு நடைமுறைகளில்
பங்குகொள்வதில்லை. என்ற நிலைப்பாடும் இருந்தது.
குழந்தை பிறக்கும்போது தாய் மிகவும் கஷ்டப்பட்டால்
*$-
t
 
 
 

8.2O கர ஆவணி 01
நம்முன்னோரிடமிருந்தது. அதனால் வாழ்க்கை ாடுகள், நடைமுறைகளை வகுத்து அவர்கள்
ாழ்வியல் -29
னி சண்முகதாஸ்
தெய்வத்திற்கு நேர்த்தி வைக்கப்படும் நடைமுறை வழக்கிலிருந்தது. கிராமப் புறங்களில் இன்றும் இந்நடைமுறை உண்டு. மகப்பேற்றின் போது பெண்ணின் துன்பத்தைத் தீர்க்கவேண்டு மெனக் கோயில் வாசலிலே பறைமுழக்கம் செய்விப்பர். தாயும், சேயும் நலமாக வேண்டி தெய்வத்திடம் பறை முழக்கம் செய்யும்போது அம்முழக்கத் தைக்கேட்ட ஊரவர் அனைவருமே தெய்வத்திடம் மனம் இரங்கி வழிபட்டு நிற்பர். ஒரு பெண்ணின் துன்பம் உடனடியாகத் தீர ஊர் முழுவதும் வழிபடும் வாழ்வியல் எம்மவரிடையே நிலைத்திருந்தது.
நவீன மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் தெய்வ வழிபாட்டின் மூலம் உள்ளத்தை உறுதிப்படுத்தும் பண்பாடு பேணப் பட்டது. இசையால் இறைவனின் அருளைப் பெறலாம் என்ற நம்பிக்கை எம்மவரிடையே இருந்தது. கோயில் வழிபாடு மக்களின் கூட்டுவழிபாடாகச் சமுகநலன்பேணும் நடைமுறையாக விளங்கி யது. குழந்தைக்கு முடியிறக்கல் ஒரு கோயிலில் செய்வது என்ற நேர்த்தியும் குழந்தையின் பிறப்பு வேளையிலே செய்யப்பட்டது. குழந்தை பிறந்து நாற்பத்தோராம் நாள் கோயிலுக்கு எடுக்குதல் என்ற நடைமுறை பேணப்பட்டு வந்துள்ளது. இந்நடைமுறை சிற்சில சாதியடிப்படையில் வேறுபட்டமைந்துள்ளது. ஆனால் பொதுவாகக் குழந்தை பிறந்து நற்பத்தோராம் நாள் வழிபாட்டு நடைமுறையில் பங்கேற்பதற்குப் பெண்ணுக்கு வசதியான நாளாக் அமைவதால் இந்நடைமுறை இன்றுவரை பேணப்பட்டு வருகிறது.
இன்று குழந்தைப்பேற்றைத் தெய்வச் செயல் என்று கூறுவது மூடநம்பிக்கை எனக்கேலி செய்யப்படுகிறது. குழந்தைப்பேறு தொடர்பான நடைமுறைகளும் பேணப்படுவதில்லை. நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்களும் கோயில் திருவிழாக்களிலே வந்து நிற்கின்றனர். மேலைத்தேசப் பெண்களைப்போல வாழ்வியலை மாற்றிக்கொண்டு நடமாடுகின்றனர். கணவன்மாரும் அவர் களுக்கு ஆதரவு தந்து நிற்கின்றனர். இயற்கையான உடல்நலப் பேணல் என்று ஒன்று இருப்பதைப் பலர் மறந்துவிட்டனர். உலக மயமாதல் என்ற நவீன கருத்தாக்கத்தில், எம்முன்னோர் வகுத்த வாழ்வியலைப் புறந்தள்ளும் செயற்பாடுகளே பெருகி வருகின்றன. ஆனால் இயற்கையோடிசைந்த சமய வாழ்வியலை மீண்டும் தேடிச் செல்ல மனிதன் முற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதும்
உண்மையே.
‹-ለ(>” --------->

Page 19
இந்துசாதனம் 8.O
நானே எனக்கு நண்பன்
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், நாம் ஆற்றும் ஒவ்வொரு செயலுக்கும் காரணமாக இருப்பது எமது மனம். அவற்றால் ஏற்படும் விளைவுகளால் குழப்பமடைவதும் எமது மனம், எமது எண்ணங்களின் ஒட்டமே மனம் ஆகும். எனவே, எண்ணங் கள் அற்ற தியானநிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அமைதி என்பது ஏற்கனவே உள்ளது. அது செயலினால் குழப்பப் படுகிறது.
எண்ணங்கள் அடங்க மனக்கட்டுப்பாடும் அதிலிருந்து மனஒருமைப்பாடும் அமைதியும் ஏற்பட தியான நிலையை ஒருவன் அடைகின்றான்.
எனவே, மன அமைதிக்கேற்ப காரியங்களை ஆற்ற வேண்டும். அதுவேகர்மயோகா எனப்படும். அதாவது கர்மங்களை, செயல்களை ஏன் செய்கிறோம் என நினைத்துச் செய்தால், அமைதியும் இன்பமும் நோக்கிய தேடுதல் ஆகஇருக்கும். செய்யும் கருமத்தைச் சரியா என சரிபார்த்துச் செய்தால், சரியான முடிவை அடைய, மனம் அமைதி அடையும். அமைதியைக் கெடுக்கும் செயல்களை விலக்க வேண்டும்.
யார் ஒருவன் விருப்புவெறுப்பு இல்லாமல் கடமையில் ஈடுபடுகிறானோ அவன் யோகி ஆவான். விருப்பு இருந்தால் செய்யக்கூடாததையும் செய்வோம். வெறுப்பு இருந்தால் செய்யக்கூடுமானதையும் செய்யமாட்டோம்.
ஆத்மாவினால் ஆத்மாவை உயர்த்த வேண்டும்; தாழ்த்தக் கூடாது. நமக்கு நல்லதை விரும்புபவன் நண்பன். அது நட்பின் ஆழத்தைப் பொறுத்தது. ஆனால் எந்நேரத்திலும் நட்பு உடைந்து விடலாம்; மறைந்தும் விடலாம். எப்பொழுதும் நமக்கு நல்லதையே விரும்புபவன் நாமே. நாம் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறோம். அதை எதுவும், எவரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே நமக்கு நாமே நண்பன்.
உடலுக்கு, மனதுக்கு பங்கம் ஏற்படலாம்; உணர்ச்சி பாதிக்கப்படலாம்; இவை எல்லாம் நம்மால் நமக்கு ஏற்படுபவை. மற்றவர்கள் எமக்கு செய்யும் தீங்கு இப்பிறவியில் அகன்றுவிடும். ஆனால் ஒரு தவிர்க்க முடியாத நிலையில் நாம் ஒரு பிழையை செய்துவிட்டால், அது மீண்டும் பிறவிகளை எடுக்க வைக்கும். நானே செய்த வினை என்னுடன் பல பிறவிகளுக்குத் தொடரு கிறது.எனவே எனக்கு எதிரியும் நானே.
நம்மை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும்; தாழ்த்திக் கொள்ளக்கூடாது. முடியாது என்று எதையும் நினைக்கக்கூடாது. ஒரு பெரிய பாறாங்கல்லை முதுகில் கட்டிவைப்பதைப் போன்றது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது. நமது ஆற்றலை நாம் அறிந் திருப்பதில்லை. அது உண்மையில் எல்லையற்றது. எமது எண்ணங்களால் இவ் ஆற்றலுக்கு எல்லைகளை நாமே உருவாக்கு கின்றோம். பின், எமது செயற்பாடுகளால் எமது எல்லையை நாம்

B2O ansu eGaiGarif OI
நானே எனக்கு எதிரி
ராஜினி தேவராஜன்
தாண்டமாட்டோம். முயற்சி முற்றுப்பெற்றுவிடும். "ஆற்றல்" எனப்படும் எல்லையற்ற சக்தி எந்நிலையிலும் உள்ளது. உடல், மனம், புத்தியினால் எல்லை வரை யறுக்கப்படுவதால் வேறுபாட்டைக் காண்கிறோம். எனவே, விழிப்புணர்வுடன் இருந்து, நாமே உருவாக்கிய இந்த தடைகள், உணர்ச்சி களிலிருந்து
விடுபட்டு எம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
உயர்வும், தாழ்வும் பந்தத்தால் ஏற்படுவது. நானே இந்த உடல், மனம், புத்தி என்ற எண்ணத்தால் பந்தம் ஏற்பட்டது. எமது உண்மையான உள்நிறைந்த சொரூபத்துக்கு "பந்தம்" இல்லை. மனத்தாலும், புத்தியாலும் எம்மை உயர்த்தி, தேகத்தோடு கொண்ட ஐக்கியத்தைக் குறைத்துக் கொண்டால், உயர்ந்து கொண்டே செல்வோம். உடலும், மனமும் புத்திக்குக் கட்டுப்படவேண்டும்.
நம்மைப் பற்றி நமக்குத்தான் தெரியும். மற்றவர்கள் நம்மைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும் என, அதற்கேற்ப சில விஷயங்களையே வெளிப்படுத்துவோம். அது மிகவும் கஷ்டம் மிகுந்த சக்தி விரயமாகும். ஆனால், மற்றவர்கள் அதை நடிப்பு என்று நிச்சயம் உணர்வார்கள். இதனால், எதுவித பயனுமில்லை.
நாம் நல்லவர்களாக உண்மையில் மாறவேண்டும்; நடக்கவேண்டும். இது சுலபம், சக்தி விரயம் குறைவு,
யார் ஒருவன் தன் சொரூபத்துடன் ஐக்கியப்பட்டு செயற்படுகின்றானோ, அவன் ஆன்மீக சாதனைகளிலும், லெளகீக வாழ்க்கையிலும் வெற்றி பெறுகின்றான். அவனே தனக்கு நண்பன் ஆவான்.
உணவு, பழக்க வழக்கங்களில் சீரானதாகவும், மனம் அமைதி கட்டுப்பாடு நிறைந்ததாய் ஒருமுகப்பட்டதாகவும், நல்ல எண்ணங்கள் நிறைந்ததாகவும், உடலின் கருவிகள் பயன்படும் நிலையிற் பேணப்பட்டு, எல்லையற்ற ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாகவும் எம்மை நாம் பராமரித்துக் கொள்ள வேண்டும். சீதஉஷ்ணம், சுகதுக்கம், மானஅவமானங்களில்
உறுதியாய் இருப்பவன் தன்னைத்தான் வென்றவனாவான்.
மனமானது விரும்பியவற்றைச் சாரும்போது, வெறுப் பவையும் எம்மைப் பிடித்துக் கொள்ளும், அப்போது வெறுப்பவற்றை ஒதுக்க நினைத்தால், விரும்புபவையும் விலகிச் செல்லும். எனவே, விருப்பு, வெறுப்பு அற்றவன் சமநிலையில் இருப்பான்.
தன்னைத்தானே அறிந்து தன் சொரூபமே சுகம் என்பதை, இந்திரியங்களை அடக்கி நிரந்தர மனஅடக்கம் கொண்டவன் காண்கிறான். அவன் அனைத்திலுமே தன்னைக் காண்கிறான். இதனால் ஒன்றைவிட்டு இன்னொன்றை தாவும் தேவையற்ற வனாய், எதை அடையவேண்டுமோ, அதை அடைந்துவிட்டோம் என்ற நிலையில் இருக்கின்றான். பரிபூரண இன்பத்தை
உணருகின்றான்.
தொடர்ச்சி 20ஆம் பக்கம் பார்க்க

Page 20
இந்துசாதனம் 8.
திண்னபுர அந்தாதி
ஈழத்துச்சிதம்பரம் எனப் போற்றப்பெறும் காரைநகர்த் திண்ண புரத் திருத்தலத்திற் கோயில் கொண்டுள்ள அருள்மிகு செளந்த ராம்பிகை உடனுறை சுந்தரேஸ்வரப் பெருமான் மீது காரைநகர்
கார்த்திகேயப் புலவர் பாடிய "திண்ணபுர அந்தாதி'யையும் செஞ்சொற்கொண்டல் சொ.சிங்காரவேலன் எழுதிய உரையையும், 560LT சைவசித்தாந்த மன்றத்தினர் இரண்டாம் பதிப்பாகச் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.
பூநீலழரீ ஆறுமுகநாவலர் அவர்களின் காலத்தவரான பிரம்மபூரீ கார்த்திகேயப் புலவர், திருமுறைகள், இதிகாசங்கள், காப்பியங்கள், புராணங்கள் போன்றவற்றில் ஆழ்ந்த புலமையும் ஈடுபாடும் கவித்துவ ஆற்றலும் நிறைந்தவர் திருத்தில்லைப் பல்சந்தமாலை, திக்கைத் திரிபந்தாதி, திருப்போசை வெண்பா, நகுலேசுவரி யமக அந்தாதி, வண்ணைத் திரிபந்தாதி, திண்ணபுர அந்தாதி, சூரபன்மன் நாடகம், சந்திரவண்ண நாடகம், கிறித்துமத குடாரம் ஆகியவற்றைச் சைவத் தமிழுலகுக்கு அளித்ததுடன், தந்தையார் பாடிய தன்னை யமக அந்தாதியின் கடைசி முப்பது பாடல்களையும் பாடினார்; தந்தையார் பாடிய குருக்கேந்திரம் என்னும் நாடகத்தைத் திருத்தியும் விளக்கியும் புதுக்கியும் பாடினார். அவருடைய ஆக்கங்களுட் தலைசிறந்ததாகக் கருதப்படுவது "திண்ணபுர அந்தாதி."
சைவசித்தாந்த நூல்களிலும், சமய இலக்கியங்களிலும், தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் வடமொழி இலக்கியப் பாரம்பரியத் திலும் தனக்கிருக்கின்ற, தேர்ந்து தெளிந்த அறிவு, அனுபவங்களின் துணையுடன் இந்நூலுக்கு உரைகண்ட சொ. சிங்காரவேலன், தருமையாதீனப் புலவர்; தமிழாகரர், திருமுறை உரைமணி, செஞ்சொற்கொண்டல் முதலிய கெளரவப் பட்டங்களையும் எம்.ஏ, பி.எச்.டீ (டாக்டர்) போன்ற பல்கலைக்கழகப் பட்டங்களையும் பெற்றவர். திண்ணபுரத்துக்குச் சில தடவை வந்து திண்ணபுரச் சிவபெருமானைத் தரிசித்தவர்; மணிவாசகர் சபையினர் ஆண்டு தோறும் நடத்தும் திருவாசக விழாக்கள் சிலவற்றிற் கலந்துகொண்டுசொற்பெருக்காற்றியவர்.
நானே எனக்கு. 19ஆம் பக்கத் தொடர்ச்சி
விருப்பு வெறுப்புக்கள் எல்லாம் எனக்குள்ளேயே என்று
உணர, யாரெல்லாம் எம்மைப் பற்றி நல்லதை சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லையோ, அவர்கள் என்ன சொன்னாலும் துன்பம் வராது. ஆனால், எதிர்பார்ப்பு இருக்கும் இடத்தில் நல்லதை சொன்னால் சந்தோஷமும், கூடாததை சொன்னால் துக்கமும் ஏற்படுகின்றது. எதிர்பார்ப்பு யதார்த்தம் எல்லாமே எண்ணங்கள். மனம் இரண்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் பதற்றம் அடையும். ஆனால், நாளடைவில் பதற்றம் குறையும்; உண்மையை உணரும்; யதார்த்த வலிமையை உணரும்; எதிர்பார்ப்பு வலிமை குறைந்து கொண்டேபோக துன்பம் குறையும். மனம்
அமைதி அடையும். துன்பம் என்பது வெறும் எண்ணம் என்பது

82O கர ஆவணி 01
"சிவபிரானின் பெருமையை விதந்து போற்றும் முகமாகப் புராணங்கள் கூறும் பல்வேறு பராக்கிரமச் செயல்கள் எல்லாம் திண்ணபுரத்துறையும் பெருமானுக்கே உரியனவாகக் கவி வர்ணிக்கின்றார்" என்றும் "மதுரை போன்ற தனிப்பெருந் திருத்தலங்களில் நிகழ்த்திய லீலைகளையும் அற்புதச்செயல்களை யும் திண்ணபுரப் பெருமான் நிகழ்த்தியதாகச் சில பாடங்கள் வருணிக்கின்றன" என்றும் இவ்வந்தாதியின் உள்ளடக்கத்தைத் தொட்டுக் காட்டும் பேராசிரியர் அமரர் கா. கைலாசநாதக் குருக்கள் (திண்ணபுர அந்தாதி - ஒரு கண்ணோட்டம்) கவியின் இதயத்தை நன்குணர்ந்து அதை வெளிப்படுத்துவதையே உரையாசிரியர் தன் குறிக்கோளாகக் கொண்டுள்ளதையும் சுட்டிக்
காட்டுகின்றார்.
உலகம் உய்ய எழுந்த அருளாளர்கள் பாடிய அருட்பனுவல்கள் வரிசையில் வைத்து எண்ணத் தக்கது "திண்ணபுர அந்தாதி" எனச் சிறப்பிக்கின்றார்கள், திருப்பனந்தார் பூரீகாசிமடம் அதிபர் பூரீலழரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள், சொல்லால் வடிக்க முடியாத சொல்லலங்காரப் பனுவலாகிய "திண்ணபுர அந்தாதி'யை இறவாத புகழுடைய நூலாகக் கணிக்கின்றார், முருக. வே. பரமநாதன். கார்த்திகேயப் புலவர் பற்றிய கலாநிதி ப.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கட்டுரையும் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்களின் அணிந்துரையும், புலவர்களின் கவித்துவ ஆற்றலை விளக்கு வதுடன், வரலாற்றுப் பெறுமதிமிக்க இலக்கியத் தகவல்களையும் தருகின்றன. "தெய்வப் பணியன்றி வேறு பணி அறியா அன்பின் வடிவினர்" ஆகச் செஞ்சொற்கொண்டல் சொ. சிங்காரவேலன் காணும் மெய்யியற் கலாநிதி சிவத்திரு. க. வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் வழிப்படுத்தலில் மிகவும் சிறப்பான முறையில் "திண்ணபுர அந்தாதி"யை வெளியிட்டுள்ள கனடா, சைவசித் தாந்த மன்றத் தலைவர் திரு.தி. விசுவலிங்கம் சைவத் தமிழ்ப் பெருமக்களின் பாராட்டுக்கும் நன்றிக்கும் என்றும் உரியவர். A
- says
புரிந்துவிடும். ஆத்மா வெறும் சாகூஜியாவே இருக்கின்றது என்பதை உணர்ந்துவிடும்.
அனைத்து ஜட, ஜீவராசிகளிலும் உள்நிறைந்திருப்பது அந்தப் "பரமாத்மா" என்ற ஒன்றே, என்னும் மெய்யறிவோடு, வேறுபாடுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் நாம், அதனால் மனஅமைதி குலைந்து கொண்டே போய்க் கொண்டிருக்கும். இந்நிலையில், வேறுபாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமையையே பார்க்கும்போது, மனம் அமைதி அடையும் என்ற முடிவான முடிவை அறிந்து, அதைப் பழக்கிக் கொண்டால், மனத்தை ஒருமைப்படுத்தி பிரபஞ்சத்தோடு ஒன்றுபட்டு இயங்கும்போது நினைத்ததெல்லாம் கிடைக்கும். நமக்கு நாமே நண்பனாவோம் என்பதில் ஐயமில்லை.

Page 21
இந்துசாதனம் 8.O
அவனன்றி ஓர் அணுவும் அசையாது; எல்லாம் அவ போன்றோர்களின் கூற்றுக்களை ஏற்றுக்கொண்டு
கட்டுரையாளர்.
யக்குபவர் யாங்குபவர்
இறைமை நம்மை இயக்குகின்றது. நாம் இயங்குகின் றோம். இறைமையின் கருவியாகவே நாம் செயற்படுகின்றோம். காரணன் கடவுள்; கருவிகளே நாம்; என்ற உண்மையினை உணர்ந்து செயலாற்றும் பொழுது அச் செயல்களால் விளையும் பயன்மீது நமக்குப் பற்று ஏற்படுவதில்லை. எனவே அந்த வினைப்பயன்கள் நம்மைப் பற்றுவதில்லை. நாம் ஒரு கருவியாகத்தானே இருக்கின்றோம் என்ற உணர்வால், தன்னம்பிக்கை, ஊக்கம், ஆர்வம், இவை எல்லாம் குறைந்து விடாவா? விடாமுயற்சியும் வினைத்திட்பமும் தளர்ந்து போகவா? என்ற கேள்விகள் எழலாம். ஆனால் அதற்கு இங்கு இடமே இல்லை. என்கின்றனர் சான்றோர். மாறாக இறைமையின் கருவியாக இயங்குகின்றோம் என்ற உணர்வால் நம் ஆற்றல் பெருகுகின்றது என்கின்றனர் அனுபவத்தால் உணர்ந்த ஆன்மீக சீலர்கள்.
நம் உள்ளத்தில் உறையும் இறைமை எல்லையில்லா ஆற்றல் உடையது. இந்த ஆற்றல் நம் வழியாக வெளிப்பட்டு உலகுக்கு உதவுகின்றது என நாம் உறுதியாக நம்பினால் போதும், அந்த அற்புதமான ஆற்றலின் முழுமையான இயக்கத்தை நாம் காணலாம். என்னுள் புகுந்து இறைவன் இயங்குவதால் என்னால் இயலாதது இனி ஏது என்பார் நம்மாழ்வார். "முடியாதது என எனக்கேல் இனி? முழுஎழ் உலகும் உண்டான் உகந்துவந்து அடியேன் உட்புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி" என்பது அவர் வாக்கு. "கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ" - கூறும் நாவும் நீதான் கரணங்கள் எல்லாம் நீதான் எனப் பாடுவார் மணிவாசகர். இறைவன் ஆட்டுவித்தால் நாம் ஆடுகின்றோம். அடக்கினால் நாம் அடங்குகின்றோம். "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே" என்பார் நாவுக்கரசர். இறைவன்தான் நம்மை இயக்குகின்றான் என்பதை உணராமல் "நான் செய்கின்றேன்" எனது செயல்' என்று நாம் அறியாமையால் ஆடுகின்றோம். அவ்வாறு நம்மை ஆட வைப்பதும் இறைவன்தான் என்பார் மாணிக்கவாசகர். "யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவானாகி" இவ்வாறு இறைவன் நம்மை ஆட்டி வைக்கின்றான்; நாம் ஆடுகின்றோம்; இயக்குகின்றான். நாம் இயங்குகின்றோம். நாம் இயங்குகின்றோம். என்ற மெய்ஞானம்
நமக்கு ஏற்பட்டதும் நாம் செய்யும் செயல்களுக்கெல்லாம் காரணம்,

B2O கர ஆவணி 01
ன் செயல் - என்ற ஞானிகள், சமயச் சான்றோர்கள்
தெளிவான சில விளக்கங்களைத் தருகின்றார்
நயினை நா. யோகநாதன் B.A.
நாம்தான் என்று எண்ணும் அறியாமை விலகுகின்றது. அகந்தையும் அழிகின்றது.
மின்சாரம் பாய்ச்சப்படுவதற்குக் கம்பி சாதனமாக இருப்பதுபோல், இறைமையின் ஆற்றல் இயங்குவதற்கு நாம் ஒரு கருவியாக இருக்கின்றோம். இந்த நம்பிக்கை நம் உள்ளத்தில் உறுதியாகப் பதிந்துவிட்டால் இறைமையின் ஆற்றல் நம் வழியாக இயங்குவதை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.
இறைவன் கர்த்தாவாக இருந்து, தன்னைக் கருவியாக்கிப் பன்னிய நூல் தமிழ் மாலையினைப் பாடிப் பரவ வைத்தான் என்றார் நாவுக்கரசர். "பந்தமறுத்து ஆளாக்கிப் பணிகொண் டாங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து" எனது உரை எல்லாம் இறைவனது உரைதான் என்பார்,ஞானசம்பந்தர். "நிருமலன் எனது உரை, தனது உரையாக நீறணிந்து ஏறுகந்து ஏறிய நிமலன்" தன்னை நன்றாகத் தமிழாலே பாடும்படியாக "என்னை நன்றாய் இறைவன் படைத்தனன், தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே" என்பர் திருமூலர் இதேபோன்று அருணகிரிநாதர், குமரகுருபரர், அபிராமிப்பட்டர் போன்ற பல அருளாளர்களும் தத்தம் அனுபவங்களால் இறைமையின் அருளாற்றலை எமக்கு உணர்த்தி
இருக்கின்றார்கள்.
அமெரிக்க நாட்டில் தலைசிறந்த சிந்தனையாளர் எமர்சன் என்ற ஞானி, "நான் எழுதியவை எல்லாம் என்னுடையன அல்ல. ஏதோ ஒரு ஆற்றல் என்னுள்ளத்தில் புகுந்துக்ாட்டிய கருத்துக்களே என் எழுத்தில் இடம்பெற்றுள்ளன" என்கின்றார். இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கவிஞர் ஜோன் மில்டன் என்பவர். கண்பார்வையற்ற நிலையிலும் அவர் உயர்ந்த காவியங்களைப் படைத்துள்ளார். "இழந்த சுவர்க்கம்" என்பது அவர் இயற்றிய ஞானக் காவியமாகும். தன் இலக்கியப் படைப்புத் திறன்பற்றி அவர் கூறும்போது "திடீரென்று தூக்கத்தில் ஏதோ ஒன்று என் இதயத்தைத் தட்டி எழுப்பும். உடனே என் மகளைக் கூப்பிடுவேன். வெள்ளமாகப் பெருகிவரும் கவிதைகளை வேகமாகச் சொல்லுவேன். அவள் அதை விரைவாக எழுதிக்கொள்வாள்" என்கின்றார். உலகப் புகழ்பெற்ற ஒவியர் பிகாசோ என்பவர், "நான் எந்தச் சித்திரத்தை வரையத் தொடங்கினாலும், ஏதோ ஒன்று என்னுடன் சேர்ந்து வரைந்துகொண்டே இருக்கும்" என்று, தன்

Page 22
இந்துசாதனம் 8.
அனுபவத்தை வியந்து கூறுகின்றார். நீராவியால் ஒடும் புகையிரத எஞ்சினைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ்வாட் என்கின்ற விஞ்ஞானி. "நானா இதனைக் கண்டு பிடித்தேன். கணத்திலே தோன்றி மறைந்த உள்ளுணர்வு உணர்த்தியது தான் இது" என்கிறார் அவர். இவ்வாறு மெய்ஞானமும் விஞ்ஞானமும் இறைமையால் உணர்த்தப்படுகின்றன. அவற்றை வெளிப்படுத்தும் கருவியாக நாம் இயங்குகின்றோம்.
காவியங்களையும், கலைகளையும், தெய்வீகமானவை என்றுதான் நாம் போற்றுகின்றோம். அவை இறைவன் அருளால், அருளாளர்களால் இயற்றப்பட்டவை என்பதால்தான் நாம் போற்றுகின்றோம். இறைமையில் இசைந்த இதயத்தோடு, ஒருவன் ஒவியம் வரைந்தால், அவனறியாமலே அந்த ஒவியத்தில் உயிரோட்டம் அமைந்துவிடுகின்றது. இறைமையில் தோய்ந்த இதயத்தோடு எழுப்பும், இசையில்கூட தெய்வீக நாதம் ஒலிக்கின்றது.நாம் மெய்மறந்து கேட்டு ரசிக்கின்றோம்.
பழங்காலத்துச் சிற்பங்கள் யாவும் பார்க்கப்பார்க்கத்திகட்டாத படைப்புக்களாகத் திகழ்கின்றன. காரணம் கலைஞனின் சிற்பத்திறன் மட்டுமல்ல. சிந்தனைத் தூய்மையுமாகும். கைத்திறன் மட்டுமல்ல அதனோடு சேர்ந்துள்ள கடவுளின் அருளுமாகும்.
எழில்மிக்க இயற்கைக் காட்சிகளில் எல்லாம் இறைமை இயங்குகின்றது என்பதை மறந்து விடமுடியாது. எனவேதான் அவற்றை எத்தனைமுறை பார்த்து அனுபவித்தாலும் சலிப்பு ஏற்படுவதில்லை. சூரியோதயத்தின் அற்புதம், அந்தி வானத்தின் அழகு, ஓங்கி நிற்கும் மலைகள், ஓடிவரும் நதிகள், பூத்துக் குலுங்கும் செடிகள், பொய்கையில் விரியும் மலர்கள், இவ்வாறான இயற்கைக் காட்சிகளை எத்தனைமுறை கண்டு களித்தாலும் நமக்கு அலுத்துப்போவதில்லை. காரணம்? இயற்கையின் காட்சிகளில் இறைமையின் ஆற்றலையும் அழகையும் உணரும் நம் இதயத்திற்கு அலுப்பும் ஏற்படாது. சலிப்பும் ஏற்படாது.
இதுபோன்றே சிறந்த கவிதை ஒன்றை நாம் உணர்ந்து சுவைக்கும்போது, சொல்லுக்கும் பொருளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றை நாம் உணருகின்றோம். உயர்ந்த ஒவியம் ஒன்றைக் காணும்போதும் அந்த அழகுக் காட்சிக்கு அப்பாற்பட்ட அழகு ஒன்றை நாம் அதில் அனுபவிக்கின்றோம். சிறந்த சிற்பங்களின் சிறப்பு உருவமைப்பில் மட்டும் ஒடுங்குவதில்லை. உருவம் கடந்த உயர் அழகினை நாம் அவற்றில் காண்கின்றோம். உயரிய இசையின் இனிமை அதன் ஒலியில் மட்டுமல்ல அந்த ஒலி, நம்முள் எழுப்பும் உணர்விலும் உள்ளது. எனவேதான், தெவிட்டாத இன்பம் தரும் கலைகள் எல்லாம் தெய்விகக் கலைகள் எனப் போற்றுகின்றோம். "கலையாரு நூலங்கம் ஆயினான் காண், கலை பயிலும் கருத்தன் காண்" என்று இறைவனை ஏத்துவார் நாவுக்கரசர். இறையுணர்வு இல்லாத கலை முயற்சிகளால் ஏற்படும் படைப்புகளில் ரசனைகள் ஏதும் இருக்காது. அவை காகிதப் பூக்கள்போல மணமற்ற மலர்களாக மதிப்பற்றுப் போகின்றன. இறையுணர்வு தோய்ந்துவரும், எழுத்துக்கள் அதைப் படிப்போர் இதயத்தை ஈர்க்கும் ஏற்றம் பெறுகின்றன. அதனால்தான் எழுதுகோலையும் எழுத்தையும் பாரதியார் தெய்வம் என்கின்றார்.
2

08,2O கர ஆவணி O
"இயலுகின்ற சடப்பொருட்கள் அனைத்தும் தெய்வம். எழுதுகோல் தெய்வம். இந்த எழுத்தும் தெய்வம்" என்பார். இவ்வாறு அற்புதமான இலக்கியங்களும், அரிய கலைப் படைப்புக்களும்
இறைமை கலந்த இதயத்தில் எழுந்து இலங்குவனவாகும்.
"என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன்தமிழ்பாடிய ஈசன்" என்னைத் தானாக ஆக்கி என்வழியாகத் தன்னைத் தானே பாடிக்கொண்டான் இறைவன் என்று இறைவனே பாடிய
பாடல்களைத்தாம் "திருவாய்மொழி" என்கின்றார் நம்மாழ்வார்.
உடல் வலிமையுடைய ஒரு சிலர் வன்முறைகளில் இறங்கி கலகத்தை விளைவிக்கின்றனர். இதைக் காணும் காவல்துறை அதிகாரிகள் கலக்கமோ அச்சமோ சிறிதுமின்றி கலகத்தில் ஈடுபட்டவர்களைப் பிடித்துக் கைதுசெய்கின்றனர். ஆயுதபாணி களைக் கண்டு அஞ்சாது, அவர்களை அடக்கும் காவல்துறை அதிகாரிக்கும் அவ்வாறு கடமையாற்றும் துணிச்சல் எவ்வாறு வருகின்றது. அச்சமின்றி அவர் எவ்வாறு செயலாற்றுகின்றார். காரணம் வேறொன்றுமில்லை. அரசின் கருவியாக நான் செயற்படுகின்றேன் என்ற உணர்வும் அந்த உணர்வினால் ஏற்படும் துணிச்சலும் அதிகாரிக்கு அச்சமின்மையை ஊட்டுவிக்கின்றது. வலிமைமிக்க அரசாங்கத்தின் கருவி என்ற எண்ணமே இத்தகைய துணிச்சலை அளிக்கின்றது என்றால் இறைவனின் கருவி நாம் என்ற எண்ணம் நமக்கு எத்தகைய அஞ்சா நெஞ்சத்தையும், மன உறுதியையும் அளிக்கவேண்டும். இறைவன் இதயத்தில் இயங்குகின்றான் என்ற உணர்வோடும் நாம் அவனால் இயக்கப்படுகின்றோம் என்ற எண்ணத்தோடும் வாழ்பவர்கள் எதையும் கண்டும் அஞ்சுவதில்லை. "அஞ்சுவது யாதொன்று மில்லை. அஞ்ச வருவதுமில்லை" என்பார் நாவுக்கரசர். "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்" என்பதும் அவர் வாக்கே. இவ்வாறே "யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்" என்று முழங்குகின்றார் மாணிக்கவாசகர். இறையுணர்வு இசைந்துள்ள இதயத்தில் அச்ச உணர்வுகள் எழுவதற்கு இடமே இல்லை. "இதயத்தில் அச்சம் இருந்தால் இறை உணர்வு இல்லை என்பதே பொருள்" என்பார் காந்தியடிகள்.
சிறிது சிந்தித்தால் நமக்கு ஒர் உண்மை புலப்படும். இயந்திரங்களை இயக்கும் சக்தியை Energy என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். வெப்பத்தை உண்டாக்குவதும் விளக்குகளை எரியச் செய்வதும் இந்தச் சக்திதான். இதனைத் தமிழில் "ஆற்றல்" என்று குறிப்பிடுகின்றோம். விளக்கு எரிவதில் இருந்தும், வெப்பம் எழுவதில் இருந்தும் இயந்திரங்கள் ஒடுவதில் இருந்தும் ஆற்றலின் இயக்கத்தை நாம் காண்கின்றோம். ஆனால் ஆற்றல் என்பதைத் தனித்த ஒரு பொருளாகக் கண்ணால் நாம் காணமுடிவதில்லை. எரியும் விளக்கிற்கும், இயங்கும் இயந்திரத்திற்கும் உயிராக உள்ளது ஆற்றல்தான். இந்த ஆற்றல் இல்லை எனில், விளக்கில் ஒளி இல்லை. இயந்திரத்தில் இயக்கம் இல்லை. இந்தச் சாதாரண ஆற்றலையே நாம் தனித்துக்காண இயலாத நிலையில், இந்த ஆற்றலுக்கு ஆற்றல் அளிக்கும் பேராற்றலான இறைமையினை
நாம் எவ்வாறு காண இயலும்?
--Σ»

Page 23
இந்துசாதனம் 18C
இயற்கைப்பொருள் அனைத்தையும் இயக்கி நிற்பது இறைமை, இறைமையின் ஆற்றலால் இயங்கும் இயற்கைப் பொருட்களை நாம் காண்கின்றோம். ஆனால் இயற்கையை இயக்கும் இறைமையினை நாம் காண முடிவதில்லை. இதேவேளை இயந்திர ஆற்றலுக்கும் இறைமை ஆற்றலுக்கும் உள்ள வேறுபாட்டையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இயந்திரம் வேறு அதனை இயக்கும் ஆற்றல் வேறு. ஆனால் இயற்கைப் பொருளும் இறைமையும் வெவ்வேறானவை அல்ல. இயற்கைப் பொருளும் இறைமையும் மலரும் மணமும்போல, தேனும் சுவையும் போல இசைந்துள்ளன. உருவமுள்ள ஒரு மலரை ஒரு தனிப் பொருளாகக் காணமுடிகின்றது. ஆனால் அதில் அடங்கியுள்ள மணத்தைத் தனித்து நாம் பார்க்க முடிவதில்லை. அதே போல் இயற்கைப்பொருளை நாம் காண்கின்றோம். அதில் மறைந்துள்ள இறைமையினை நாம் காணமுடிவதில்லை."உற்ற ஆக்கையின் உறு பொருள், நறுமலர் எழுதரு நாற்றம் போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்" என்பார் மணிவாசகர். இயற்கை என்பது மலர், இறைமை என்பது அம்மலரில் இசைந்துள்ள மணம். பருப்பொருளான இயற்கை மலரில், நுண்பொருளாக இசைந்து நிலவுவது இறைமை. மணம் புலப்படும் இயற்கையில், புலப்படாது கலந்து இலங்குவது இறைமை என்பது, இயற்கை மலரில் இறைமை மணத்தை நுகர்வதே மெய்யுணர்வாகும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் தினம் தினம் உதயமாகி அஸ்தமித்துக்கொண்டிருக்கிறதே சூரியன். அது என்றைக்காவது சலித்துக்கொண்டிருக்கின்றதா? விடாமல் சுற்றிக்கொண்டி ருக்கிறதே பூமி, அது என்றைக்காவது சலிப்படைந்திருக்கின்றதா? கரைக்கு வந்து வந்து முத்தமிட்டுத் திரும்பிக் கொண்டிருக்கின் றனவே கடல் அலைகள் அவை என்றைக்காவது சலிப்படைந்திருக் கின்றனவா? திரும்பத் திரும்ப ஆற்றுநீர்ப் பருவகாலங்களும் மாறி மாறி ஒடிக்கொண்டிருக்கின்றதே அவை என்றைக்காவது சலிப்படைந்திருக்கின்றனவா? இந்த இயற்கை சலிப்படைந்து ஒரே ஒரு நாள் இயக்கத்தை நிறுத்தினால் உலகம் என்னவாகும்? தொடர்ச்சியாக வீசிக்கொண்டிருக்கும் காற்று கணப்பொழுது நின்றுவிட்டால் அனைத்து உயிரினங்களினதும் உயிர்மூச்சே நின்றுவிடுமன்றோ! யோசித்துப்பாருங்கள் இயங்கு சக்தி என்ற அந்த இறைமை உயிர் நாடியாக இருந்து, இவற்றை எல்லாம் இயக்கிக் கொண்டிருக்கின்றதே என எண்ணும்போது நாம் வியக்க வேண்டியுள்ளது. வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும் தான் கெட்டலினின்றி சலிப்பறியாத்தன்மையனாகி அந்த இறைவன் இயங்கு கர்த்தாவாக இருக்கின்றார்’ என்பார்
மணிவாசகர்.
*SS
எங்கள் சி
திரிபுரம் எரித்தாண்டி :ே திருவோ டுகொண்டாண் மறைமீ திருப்பாண்டி என்புகள் அணிந்தாண்

82O கர ஆவணி 01
இறைமையினை இயற்கையோடு இயைந்த ஆற்றலாகக் கண்டனர் மெய்ஞானிகள். பஞ்சபூதங்களாகவும் பஞ்ச பூதங்களின் பண்புகளாகவும் அப்பண்புகளைப் படைத்த ஆற்றலாகவும் கண்டனர். உள்ளும் புறமுமாய் உள்ளதெல்லாம் தானாகி நிற்கும் பரம்பொருள் உலகப்பொருட்கள் அனைத்திலும் ஊடறுத்து சங்கமமாகியும் அவற்றிற்கும் அப்பாலாகவும் நிற்கின்றது.
"ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணமூன்றாய் மாறாமறை நான்காய் வரும் பூதம் அவை ஐந்தாய் ஆறார் சுவை ஏழோசையோடு எட்டுத் திசை தானாய் வேறாய் உடன் ஆனான் இடம் வீழிம் மிழலையே"
என அழகாகக் கூறுவார் ஞானசம்பந்தர்.
இவ்வாறு சித்தர்களும் ஞானிகளும் அருளாளர்களும் அறிவியல் மேதைகளும் தத்தம் அனுபவங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பேருண்மையானது இயக்கும் கர்த்தாவாக இறைமை இருந்துகொண்டு, இயங்கு கருவியாக ஒவ்வொன்றையும் இயக்கிக்கொண்டிருக்கின்றது என்பதையேயாகும். இதனை நாம் ஆழ்ந்து சிந்தித்து மனம் கொள்ளுவோமாயின் "அவனன்றி அணுவும் அசையாது" என்ற ஆன்மீக உண்மை புலப்படும். ஐம்பூதங்களின் இயக்கத்திற்கும், உலக இயக்கத்திற்கும், ஒவ்வொரு உயிரினங்களின் இயக்கத்திற்கும், ஆறறிவு என்ற பேரறிவைப் பெற்றுள்ள மனித சமூகத்தின் இயக்கத்திற்கும் இங்கு கர்த்தாவாகத் தோன்றாத் துணையாக இருந்து செயற்படும் மாபெரும் சக்தி ஒன்று உள்ளது என்ற யதார்த்தமே தெளிவா கின்றது. அந்த யதார்த்தமே இறைமை என்ற பேரருள் சக்தி என்பது தெளிவு. விறகில் தீயினனாகவும் பாலிற் படுநெய்யாகவும், மறைந்து நிற்கும் மாசற்ற சோதியான இறைவன் - நமது ஊனிலும் உயிரிலும் உள்ளத்திலும் கலந்து நின்று எல்லோரையும் இயக்கிக்
கொண்டிருக்கின்றான் என்பதை
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கிலுள்ளான். வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான் ஏழுண்டத்து அப்பாலான் இப்பாற் செம்பொன் புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதிலுள்ளான் பொருப்புடையான் நெருப்புடையான் காற்றிலுள்ளான் கனத்தகத்தான் கைலாயத்து ச்சியுள்ளான் காளத்தியான் அவன் என் கண்ணுள்ளானே"
என்ற நாவுக்கரசரின் திருத்தாண்டகத்தினைச் சாட்சியாகக் கொண்டு மனம், வாக்குக் காயங்களால் ஏற்று திரிகரண சுத்தியோடு உணர்ந்து கொள்வோமாக. அந்த ஒப்புவமை இல்லாப் பேரருள் சக்தியைப் போற்றி செய்வோமாக. X-1
|வனாண்டி
வரைக் காத்தாண்டி டி தில்லைக் கூத்தாண்டி மான்மழு தரித்தாண்டி
டி எங்கள் சிவனாண்டி,
- கவிஞர். வ. யோகானந்தசிவம்.
23

Page 24
இந்துசாதனம் 8C
HARMONY
Prof. A. Sanmugadas
The Hindu Sages have said that all genuine Spiritual paths are valid and all great religions are like the branches of a treethe tree of religion. This doctrine lays the foundation for the
Hindu ideal of Universal Harmony.
The main doctrine of Hindhuism is dharma. There are four DharmaS: Universal Dharma, Human Dharma, Social Dharma and individual Dharma. All these four DharmaS are in harmony
With One Dharma called Sanatana Dharma.
Harmony in Contradictions is an interesting aspect of Hinduism in all its branches. The form of God Himself exhibits Several contradictions and all of them are in perfect harmony. Lord Shiva, for example, Carries fire in His hand and at the same time the Water that could put out the fire is on His head in the form of Ganga Bhavani. Saint Karaikkal Ammaiyar portrays Him as a form Consisting of all timely changes of a
day. She SayS.
கால்ையே போன்றிலங்குமேனிகடும் பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு மாலை தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு,
"His body Shines like the morning Sky and the holy ash on Him Shines like the mid-day Sky, His tuft of hair is in
Mahatma Gandhi once visited one of the biggest lib
book was issued frequently. The librarian replied that i India has conferred upon the world upon all humanity is of the Srimad Bhagavad Gita. The greatest thinters an another in paying their devout tribute at the shrine ofth
Scholar says: The Bhagavad Gita is this deepest and the
Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalf o Printed at Harikanan Printers, No.424, K.K.S. Road, Jaffna. 18.08.2011
 
 

B2O கர ஆவணி 01
HND THUSSW
Ph.D. (Edinburgh)
the form evening Sky and His throat resembles the
darkneSS.
All changes in a day have sought harmony in the form of LOrc Shiva.
We believe that God is every where but we choose one particular place to do Our Worship. Thought God is said to be without form yet we worship Him in one particular form. God Surpasses all types of praises and yet we praise Him for example, "பக்தியால் (UTS),60601 UGULTty." (I have Sung many Songs because of my Bhakti for you). In one Hindu prayer, a Saint SayS. Oh Lord, forgive three sins that are due to my human linmitations:
Thou art every where, but I worship you here, Thou art without form, butt Worship you in this form, Thou needest no praise, yet offer you these prayerS and Salutations. Oh Lord, forgive three Sins that are to my human limitations.
Here we encounter Several Contradiction but they become harmonised in Our Worship. This aspect of Hindhuism gives us a good lesson to our thought. We Come across Several Contadictions in our day to day life. Hindhuism trains us to harmonise those contradictions and lead a non-complicated
peaceful life.
raries in London and asked the librarian What-Spiritual was the Gita. The greatest gift, the best ble SSing that this Sublime, yet eminently practical, Universal gospel d philosophers of the Occident have vied with one e Gita. Wilhelm von Humboldt, the famous Occidental
npst Sublime production, the World possesses.
the Saiva Paripalana Sabai, No. 450, K.K.S. Road, Jaffna & 1 Day of Avaniththingal). Phone: 0212227678,0213202191