கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2007.05-06

Page 1
இலங்கை மத்திய வங்கியின் சமுக
 
 

9 வளர்ச்சியையும் அபிவிருத்தியையும்
உணர்வதற்கெனில் (6)
9 உலக பொருளாதாரமும் அதன்
பொதுப்போக்கும் (18)
இ யுவான் தொடர்பிலான சண்டை(22)
9 2006 ஆண்டறிக்கையின் சிறப்புக்
குறிப்புகள் (24)
5, பொருளாதார இருமாத சஞ்சிகை

Page 2
பொருள ாதார வளர்ச்சி, பொருளாதார ஆ
ஒன்று வேறுபட்டதும் ஆனால் ஒன்றுடனொன்று தொடர்புெ வளர்ச்சி ஒரு குறுகியகால எண்ணக்கருவாக உள்ளே என்பன மிகவும் நீண்டகால இடைவீச்சினுள் பரவியிரு
பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியின் போது வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியாகும். நீண்டகாலமா மூலம் சமூக வாழ்க்கை மட்டம் உயர் மட்டத்தினை அ6 அபிவிருத்தியாகும்.
பொருளாதார அபிவிருத்தியின் அடிப்படையில் ஒட் பொருளாதார மற்றும் கலாசார மறுமலர்ச்சியை அபி
நீடித்து நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தி அல்லது அவ்வாறான ஒரு விரிவான கருத்தாகும். அதாவது வேகத்தை தொடர்ச்சியாகப் பேணிவருதலாகும்.
இதற்கிணங்க அபிவிருத்தியென்பது ஒரு பல்பரிமாண
வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் அபிவி விடயமல்ல. இங்கு மேலெழுகின்ற கஷடங்கள் தொ வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை அளவிடுதலுடன் முடியுமாயிருக்கும்.
குறிப் GuG ISSN 1391-7676
2007 மே/ஜூன்
ஒரு பிரதியின் விலை : ரூபா 10.00 வருடாந்த சந்தா : ரூபா 120.00 (தபாற் கட்டணத்துடன்)
தொடர்பூட்டல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி எனக் குறிப்பிடப்பட்ட காசுக்கட்டளைகள்/ காசோலைகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் "குறிப்பேடு" சஞ்சிகையை மாதாந்தம் அஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம். பணிப்பாளர்,
தொடர்பூட்டல் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, த.பெ.இல. 590, கொழும்பு.
“குறிப்பேடு” சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள் கட்டுரை ஆசிரியரின்

பிவிருத்தி மற்றும் அபிவிருத்தி என்பவை ஒன்றிலிருந்து
iளதுமான ஒருசில எண்ணக்கருக்களாகும். பொருளாதார தாடு, பொருளாதார அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி க்கின்றதாகும்.
பொருளாதாரத்தில் சேர்க்கப்படுகின்ற பெறுமதியின் க அவ்வாறானதொரு வளர்ச்சியைப் பேணிவருவதன் டைவது தொடர்பில் உருவாகின்ற தாக்கம் பொருளாதார
டுமொத்தமான சமூகத்தினுள் உருவாகின்ற சமூக, விருத்தியெனக் குறிப்பிடலாம்.
உலகளாவிய பொருளாதார அபிவிருத்தி என்பது பெற்றுக்கொள்ளப்பட்ட உயர் பொருளாதார வளர்ச்சி
எண்ணக்கருவாகும்.
ருத்தியை அளவிடுதல் அவ்வளவு இலகுவானதொரு டர்பில் கவனம் செலுத்துவதன் மூலம் பொருளாதார தொடர்புடைய பிரச்சினைகளை அடையாளம்காண
(தொடர்ச்சி 03 ஆம் பக்கம்)
கட்டுரைகள் பக்கம்
பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை அளவிடுதலுடன் தொடர்புடைய பிரச்சினைகள் 3
வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியை உணர்வதற்கெனில் 9
உலக பொருளாதாரமும் அதன் பொதுப்போக்கும் 18
யுவான் தொடர்பிலான சண்டை 22
2006 ஆண்டறிக்கையின் சிறப்புக் குறிப்புகள் 24
அட்டை அலங்காரம்: நீ தர்ஷன நாரன்பனாவ
கருத்தக்களேயொழிய இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களாகாதிருக்கலாம்.
2007 மே/ஜூன் - குறிப்பேடு

Page 3
பொருளாதார வளர்ச்சி
அளவிடுதலுடன் 6
69(b பொருளாதார முறையினுள் வாழ்கின்ற மக்களது வாழ்க்கை நிலையை மிகவும் சிறந்ததாக மாற்றுதல், அல்லது தேவைகளை நிறைவேற்றுகின்ற அளவினை அதிகரிக்கச் செய்தலே அத்தகைய பொருளாதார முறையின் அடிப்படை நோக்கமாகும். இதன் பொருட்டு அத்தகைய பொருளாதார முறையினுள் பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியையும் விநியோகத்தையும் வளர்ச்சியடையச் செய்தல் வேண்டும். அவ்வாறு ஏதேனுமொரு நாடு குறிப்பிட்டதொரு (குறுகிய) காலத்தினுள் மேற்கொண்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியையும் விநியோகத்தையும் அதற்கு முந்திய கால கட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது போதியளவு அதிகரித்திருப்பின் அதனைப் பொருளாதார வளர்ச்சியெனக் கூறுகின்றோம்.
அதேபோன்று நீண்ட காலமாக பொருளாதாரத்தினுள் ஒப்பீட்டளவில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற உற்பத்தி மற்றும் விநியோகத்தின் போதியளவான வளர்ச்சியை பொருளாதார அபிவிருத்தி எனக் கூறுகிறோம்.
தற்செயலாகப் பொருளாதார வளர்ச்சியை அடைவது தொடர்பிலன்றி, உயர் பொருளாதார வளர்ச்சி வேகத்தை தொடர்ந்து பேணிவருதல் தொடர்பிலேயே இன்று கூடுதலான கவனம் செலுத்தப் பட்டு வருகின்றது. இதனை நிலைத்திருக்கத்தக்க அல்லது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி எனக் கூறுகிறோம்.
பொருளாதார வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் அளவிடும் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற பல்வேறான அளவீட்டு முறைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடுதலே இக்கட்டுரையின் அடிப்படை நோக்கமாகும். இதன் பொருட்டு பின்வரும் விதத்தில் கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது. இங்கு முதலாவதாக பொருளாதார வளர்ச்சியை அளவிடுவதன் குறிக்கோள்கள் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டு, தற்போது பயன்படுத்தப்படுகின்ற பிரதானமான அளவீட்டு முறையான மொத்தத் தேசிய உற்பத்தி மற்றும்
2007 மே/ஜூன் - குறிப்பேடு

மற்றும் அபிவிருத்தியை
GSILGOLII னைகள்
அதனைக் கணிப்பிடுவதிலுள்ள பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன. அதன் பின்னர் பெளதீக வாழ்க்கை நிலைச் சுட்டெண் மற்றும் மனித அபிவிருத்திச் சுட்டெண் தொடர்பாகக் கலந்துரையாடப்படும். இறுதியாக பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளைக் காட்டுகின்ற பல்வேறான சுட்டெண்கள் தொடர்பாக சுருக்கமாக ஆராயப்படுகின்றது.
பொருளாதார வளர்ச்சி ஏன் அளவிடப்படுகின்றது?
ஒரு பொருளாதாரம் செல்கின்ற திசையை, அதாவது நேர்மறையான வளர்ச்சியினை அல்லது எதிர்மறையான வளர்ச்சியினை அடைந்துள்ளதா என்பதை அறிந்துகொள்வதே பொருளாதார வளர்ச்சி அல்லது அபிவிருத்தியின் அளவு, மட்டம் தொடர்பில் ஆராய்வதற்கான முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் அத்தகைய நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு அல்லது பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு அதற்கு முந்திய காலகட்டத்தினுள் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் பொருந்தும் தன்மை அல்லது பொருந்தாத் தன்மையினை அறிந்துகொள்வதற்கு முடியுமாயிருக்கும்.
ஒப்பீட்டளவில் உயர் பொருளாதார வளர்ச்சியை அடையப்பெற்ற நாடுகள் அதற்காகக் கடைப்பிடித்த கொள்கைகளை ஆராய்ந்து ஏனைய நாடுகளாலும் அத்தகைய கொள்கைகளைப் பரீட்சித்துப்பார்க்க முடியுமாயுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை அளவிடுகின்ற முறை:
பொருளாதார வளர்ச்சியை அல்லது அபிவிருத்தியை அளவிடுகின்ற முறையானது நிச்சயமாக பொருளாதார வளர்ச்சி அல்லது அபிவிருத்தி என்றால் யாது என்பதற்குப் பொருள் விளக்கமளிக்கின்ற விதத்துடன் பிணைந்துள்ளது. இன்றுவரை பயன்படுத்தப்பட்ட பொருளாதார வளர்ச்சி பற்றிய வரைவிலக்கணங்கள் மற்றும் அளவீட்டு முறைகளை ஆராய்ந்து பார்க்கின்றபோது இதனைத் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.

Page 4
அதேபோன்று பொருளாதார வளர்ச்சி/அபிவிருத்தி என்பதன் மூலம் கருதப்பட்ட விடயம் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்துள்ளதோடு, படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது. இவற்றில் மிகவும் பிரபல்யமடைந்துள்ள ஒருசில முறைகள் கீழே தரப்பட்டுள்ளன.
(A) மொத்த தேசிய/உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி
ஏதேனுமொரு நாடு குறிப்பிட்டதொரு காலகட்டத்தினுள் (பொதுவாக ஒரு வருடத்தினுள்) உற்பத்தி செய்த பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்தப் பெறுமதி அந்நாட்டின் மொத்த உற்நாட்டு உற்பத்தியாகுமெனப் பொருள்கொள்ளப்படுகின்றது.
GDP = C+G+I
GDP = மொத்த உற்நாட்டு உற்பத்தி C R தனியார் நுகர்வு
G - அரசதுறை நுகர்வு
I
தனியார் மற்றும் அரச முதலீடுகள்
மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் அந்நாட்டில் வதிவுடையோர்களால் வெளிநாட்டு ரீதியில் உழைக்கப்பட்ட தேறிய வருமானத்தைக் கூட்டுகின்றபோது மொத்த தேசிய உற்பத்தியைப் பெறலாம். இதன் பொருட்டு ஏற்றுமதி வருமானத்திலிருந்து இறக்குமதிச் செலவைக் கழித்து வருகின்ற தேறிய விளைவு மொ.உ.உயுடன் கூட்டப்படுகின்றது.
GNP = C+G+I+NE (Exports — Imports)
= GDP--NE NE = Net Exports
மொ.உ.உ./மொ.தே.உ. முறைக்கிணங்க தேசிய வருமானத்த்ைக் கணிப்பிடுகின்றபோது பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறைகளினதும் உற்பத்தி தனித்தனியாகக் கணிப்பிடப்படும். இதன் பொருட்டு இதுவரை ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1968 இல் தயாரிக்கப்பட்டு 1993 இல் திருத்தப்பட்டவாறான தேசிய கண்கீட்டு முறையே (System of National Accounts) LJu 66 (65g) rul' (S 6) bgig. 1993 (S6) திருத்தப்பட்டவாறான வகைப்படுத்தலின் பிரகாரம் பொருளாதாரம் 11 துறைகளாகப் பிரித்துக் காட்டப்பட்டது. ஆயினும் இலங்கை மத்திய வங்கி 9 துறைகளின் வகைப்படுத்தலொன்றையே பயன்படுத்துகின்றது. எவ்வாறாயினும், வகைப்படுத்தலின் காரணமாக பொருளாதாரத்தின் பின்னடைவான மற்றும் துரித வளர்ச்சியைக் காட்டுகின்ற துறைகளை அடையாளம் காண்பது இலகுவாகின்றது. இதன் மூலம் கொள்கை வகுப்போருக்கும் வழிகாட்டல்கள் கிடைக்கின்றன. அதேபோன்று பொருளாதாரத்தின் உள்ளமைப்பு ரீதியிலான மாற்றங்களை அடையாளம் காண்பதற்கும் இது உதவியாயமைகின்றது.

மொ.தே.உ. மற்றும் மொ.உ.உ. என்பன பொருளாதார வளர்ச்சியை அளவிடுகின்றபோது தற்காலத்தில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அளவீடுகளாக உள்ளன. இதற்குப் பல காரணங்கள் உண்டு.
1. ஒட்டுமொத்தமான பொருளாதாரத்தினதும் உற்பத்திச் செயற்பாடுகள் இதன் மூலம் கவனத்திற் கொள்ளப்படுவதோடு அது தனியொரு இலக்கத்தின் மூலம் சுருக்கமாகக் காட்டப்படுகின்றது.
2. கணிப்பிடுதலும் விளங்கிக் கொள்ளுதலும் இலகுவான தாயுள்ளது. சிக்கலானதல்ல.
3. ஒவ்வொரு நாடும் இதற்கான தரவுகளை ஒரே செயல்முறைக்கிணங்க சேகரிப்பதன் காரணத்தினால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது இலகுவாயுள்ளது.
4. தொடர்ச்சியாகத் தரவுகள் சேகரிக்கப்படுவதன் காரணமாக தரவுகளைப் பெற முடியுமாயுள்ளது.
ஆயினும் தேசிய வருமானக் கணக்குப் புள்ளிவிபரங்களில் உள்ள பலவீனங்கள் மற்றும் அவற்றைத் தொகுக்கின்றபோது மேலெழுகின்ற பல பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பின்வரும் பலவீனங்கள் பிரதானமானவையாகும்.
(1)இரட்டைக் கணிப்பீடு : இது மரபு ரீதியிலுள்ள ஒரு பலவீனமாகும். ஒரு பண்டங்கள் வகை அல்லது பணிகள் வகை இன்னொரு பண்டங்கள் வகையின் அல்லது பணிகள் வகையின் உள்ளிடாக உள்ள போது அத்தகைய உற்பத்திச் சந்தர்ப்பங்கள் இரண்டிலும் ஒரே பண்டங்கள் அல்லது பணிகள் வகைகள் கணிப்பிடப்படுவதன் ஊடாக இரட்டைக் கணிப்பீட்டுத் தவறுகள் நேரிடலாம். உதாரணமாக, இறப்பர் உற்பத்தியைப் பார்ப்போம். இறப்பர் உற்பத்தியின் இறுதி விளைவாகக் கருதப்பட்டு, இறப்பர் சீட்களின் பெறுமதி தேசிய வருமானத்தில் சேர்க்கப்படுமென்பதோடு, அதே இறப்பர் சீட்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற ரயர்களின் பெறுமதியும் கைத்தொழில் உற்பத்திகளின் கீழ் தேசிய வருமானத்திற்குச் சேர்க்கப்படுமெனில் ஒரே உற்பத்தியை இரண்டு தடவைகள் கணிப்பிடப்படுவதன் மூலம் தேசிய வருமானம் பெரிதுபடுத்திக் காட்டப்படலாம் அல்லது மிகைமதிப்பீட்டுக்கு உள்ளாகலாம். ஆயினும் ஒவ்வொரு உற்பத்திக் கட்டங்களிலும் சேர் பெறுமதி மாத்திரம் கணிப் பரிடப் படுவதன் மூலம் இத் தவறைத் தவிர்த்துக்கொள்ளலாம். இதற்கிணங்க இறப்பர் உற்பத்தியின் இறப்பர் சீட்களின் பெறுமதி கணிப்பிடப்படுவதோடு, ரயர் உற்பத்தியின் போது உள்ளிடென்ற வகையில் இறப்பர் சீட்களின் பெறுமதி நீக்கப்படுமென்பதோடு, இறப்பர் சீட்டை
2007 மே/ஜூன் - குறிப்பேடு

Page 5
ரயராக மாற்றும் பொருட்டு பயன்படுத்தப்பட்ட செயற்பாட்டின் பெறுமதி மட்டுமே கவனத்திற் கொள்ளப்படும்.
(2) கைவிடுதல்கள் : இதுகூட ஒரு மரபு ரீதியிலான பலவீனமாகும். ஒருசில உற்பத்தித் தரவுகளைப் பெறுவதிலுள்ள வசதியீனங்களின் காரணமாக அவற்றின் பெறுமதி தேசிய கணக்குப் புள்ளிவிபரங்களுக்கு சேர்க் கப் படாமல் விடலாம் . சந்தை முறை முன்னேற்றமடையாதுள்ள நாடுகளில் குறிப்பாக இப்பலவீனத்தைக் காண முடியுமாயுள்ளது. ஆயினும் அவ்வாறான சந்தர்ப்பங்களை அடையாளம் கண்டு மதிப்பிடப்படுவதன் மூலம் மேற்படி பலவீனங்களை ஒரளவுக்கு தவிர்த்துக்கொள்ள முடியும்.
(3)நிதியியல் பெறுமதிகள் வழங்கப்படாதுள்ள பணிகள் கணிப்பிடப்படாமை; உதாரணமாக, வீட்டுப் பணிகள், தொண்டர் சேவைகள், சுய உதவித் திட்டங்கள் என்பன பணத்துக்கு நடைபெறாததன் காரணமாக தேசிய கணக்குப் புள்ளிவிபரங்களில் இவை சேர்க்கப்படாமல் இருப்பதற்கு வாய்பபுண்டு. ஆயினும் மேற்படி பண்டங்கள் அல்லது பணிகளுக்கு சந்தை விலையொன்று தீர்மானிக்கப்படாதுள்ள போதிலும் - சந்தையினுடாகப் பரிமாற்றப்படாத போதிலும் பொருளாதாரப் பண்டமென்ற வகையில் அவற்றின் பெறுமதியும் தேசிய வருமானத்தில் பிரதிபலிக்கப்படுதல் வேண்டும்.
(4)நிதியியல் பெறுமதியுடன் கூடியதாகச் சந்தையில் பரிமாறப்பட்ட போதிலும் தேசிய வருமானத்தில் சேர்க்கப்பட வேண்டிய பயனுறுதியுள்ள பெறுமதியைப் பெற்றுத் தராத கொடுக் கல வாங்கலும் தேசிய வருமானத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, குற்றச் செயல்கள், விவாகரத்து வழக்குகள் ஆகியவற்றின் காரணமாக பணப் பெறுமதிகள் பரிமாறப்பட்ட போதிலும், இதன் மூலம் தேசிய வருமானத்திற்குப் பயனுறுதியான எதுவும் சேர்வதில்லை. ஆயினும் வழக்குகளின் பொருட்டு சட்டத் தரணிகளுக்குச் செலுத்தப்படுகின்ற பணத் தொகைகள், களவுகள் மற்றும் குற்றச் செயல்களை ஒழிக்கும் பொருட்டு பாதுகாப்புச் சேவைகளை அமுல்படுத்தல் என்பவற்றுக்கு சந்தைப் பெறுமதி ஊட்டப்படுவதன் காரணத்தினால் இதன் மூலம் தேசிய வருமானம் மிகைமதிப்பீட்டுக்கு உள்ளாகின்றது.
(5) ஒருசில உற்பத்திகளின் காரணமாக தேசிய வருமானத்திற்கு பெறுமதி சேர்க்கப்பட்ட போதிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறுகின்ற வளங்களின் தேய்மானம் மற்றும் அதனாலி சுற்றாடலுக்கு ஏற்படுகின்ற பாதிப்பு ஆகிய எதிர்மறையான
2007 மே/ஜூன் - குறிப்பேடு

தாக்கங்கள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக, வனங்களிலிருந்து வெட்டுமரங்கள் பெறப்படுகின்ற போது அல்லது இரத்தினக் கல் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற போது நடைபெறுகின்ற வளங்களின் அழிவினை மீளப் பெறும் பொருட்டு மேலும் பல வருடங்கள் பெருமளவு முதலீடுகளைச் செய்ய வேண்டும். ஒருசில உற்பத்திகளின் காரணமாக சுற்றாடலில் சேர்க்கப்படுகின்ற நச்சுக் கழிவுப் பொருட்களின் காரணமாக ஏற்படுகின்ற சுற்றாடல் அழிவுக்குத் தீர்வு காண்பதற்கு பெரியதொரு செலவை ஏற்க நேரிட்ட போதிலும் அதுகூட தேசிய வருமானத்தைக் கணிப்பிடுகின்றபோது கவனத்திற் கொள்ளப்படுவதில்லை.
(6) தேசிய கணக்குப் புள்ளிவிபரங்கள் தயாரிக்கப்படுகின்ற போது சந்தைப் பெயரளவிலான அல்லது அங்கீகாரம் பெற்ற விலைகளே பயன்படுத்தப் படுகின்றன. உண்மையிலேயே நடைமுறையிலுள்ள விலைகள் - கள் ளச் சந்தை விலைகள் - கவனத்தறி கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக தேசிய வருமானம் குறைமதிப்பீட்டுக்கு உள்ளாகின்றது.
(7)தேசிய கணக்குகளின் மூலம் வருமானப் பகிர்விலுள்ள முரண்பாடுகள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. தேசிய வருமானத்தின் அளவைத் தவிர அது பகிர்ந்தளிக்கப் படுவதிலுள்ள முரண்பாடுகள் பிரதிபலிக்கப்படுவதில்லை. மேற்படி நிலைமையின் கீழ் தலா வருமானத்தை நாட்டின் வாழ்க்கை நிலையைப் பிரதிபலிக்கின்ற யதார்த்தபூர்வமான அளவீடாகக் கருத முடியாதுள்ளது.
(8) ஏதேனுமொரு நாடு குறிப்பிட்டதொரு காலகட்டத்தினுள் வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று நுகர்வுச் செலவுகளை ஈடுசெய்கின்ற போது தேசிய வருமானம் அதிகரிக்கின்றது. ஆயினும் அதனைத் தொடர்ந்து நடைபெறுகின்ற கடன் படு தன்மை அதிகரித்தல் வருமானத்தின் மூலம் பிரதிபலிக்கப்படுவதில்லை. அதேபோன்று வெளிநாட்டு வளங்களின் தேய்மானமும் இதன் மூலம் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை.
(9) தேசிய வருமானத்தைக் கணிப்பிடுகின்றபோது பெளதீக ரீதியில் கணிப்பிட முடியுமாயுள்ள பண்டங்களின் உற்பத்தியும் பணிகளும் மட்டுமே கவனத்திற் கொள்ளப்படுகின்றன. மனிதனின் உளத் திருப்திக்குரிய விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. இதுகூட இதிலுள்ள ஒரு குறைபாடாகும்.
(10)மேற்படி விடயங்களைத் தவிர நாடுகளுக்கிடையே ஒப்பிடப்படுகின்ற போது நடைபெறுகின்ற பலவீனங்களும் உள்ளன. அதாவது, ஒவ்வொரு

Page 6
நாட்டினதும் பண்டங்களின் தர ரீதியிலான வித்தியாசங்கள் தேசிய கணக்குகளில் பிரதிபலிக்கப்படுவதில்லை.
மேலே தரப்பட்டுள்ள காரணங்களுக்கு இணங்க நோக்குகின்றவிடத்து, மொத்த தேசிய அல்லது உள்நாட்டு உற்பத்தியை அல்லது அதனைப் பயன்படுத்தி கணிப்பிடப்படுகின்ற தலா மொத்தத் தேசிய உற்பத்தியை, ஒரு நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை அளவிடும் பொருட்டு அல்லது நாடுகளுக்கிடையே ஒப்பிட்டுப் பார்க்கும் பொருட்டு துல்லியமான சுட்டெண்ணாக ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
(B) பெளதீக வாழ்க்கை நிலைச் சுட்டெண்
(The Physical Quality of Life Index - PQLI)
மொத்த உள்நாட்டு உற்பத்தி/தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகிய சுட்டெண் களின் மேலே காட்டப்பட்டவாறான குறைபாடுகளின் காரணமாக ஒரு நாட்டின் உண்மையான வாழ்க்கை நிலையை மற்றும் அதன் வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்ற மிகவும் தத்ரூபமான ஒரு சுட்டெண்ணை உருவாக்குகின்ற தேவை மேலெழுந்தது. இத்தகைய முயற்சியின் பெறுபேறாக POLI உருவாகியது. இது மூன்று சுட்டெண்களை ஒன்றிணைத்ததன் மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு சுட்டெண்ணாகும். அத்தகைய மூன்று சுட்டெண்களும் யாதெனில்,
1. கல்வி அறிவு - வயதுவந்தோர்களது கல்வி அறிவு ஆற்றல். (இதன் மூலம் கல்வி மட்டம் பிரதிபலிக்கப்படுகின்றதெனக் கருதப்படுகின்றது).
2. சிசு மரண வீதம் - பிறந்து ஒரு வருட காலத்தினுள் நடைபெறுகின்ற மரணங்களின் எண்ணிக்கையைக் கவனத்திற் கொண்டு சுகாதார நிலை மற்றும் போசாக்கு மட்டம் வலியுறுத்தப்படுகின்றது.
3. பிறப்பில் வாழ்நாள் எதிர்பார்ப்பு - இதன் மூலம் பெரும்பாலும் வாழ்க்கைக் கொள்ளளவு பிரதிபலிக்கப்படுகின்றது. அதாவது சுகாதாரம் மற்றும் போசாக்கு மட்டமாகும். மேற்படி மூன்று சுட்டெண்களும் 0-100 வரையிலான வீச்சிடையில் புள்ளிகள் வழங்கப்பட்டு அதன் சராசரிப் பெறுமதி கணிப்பிடப்படுகின்றது. இதன் மூலமும் 0-100 இன் பெறுமதியே கிடைக்கின்றது.
இரண்டு சுட்டெண்களின் மூலம் ஒரே விடயமான சுகாதாரம் மற்றும் போசாக்கு மட்டம் தொடர்பில் கவனம்

செலுத்தப்பட்டுள்ளமை மேற்படி சுட்டெண்ணில் உள்ள பிரதானமான குறைபாடாகும்.
ஆதலால் மேற்படி சுட்டெண் விமர்சனத்துக்கு உள்ளாகியது. ஆயினும் தலா மொ.தே.உயின் மூலம் கவனத்திற் கொள்ளப்படாதுள்ள ஒருசில நிதியியல் அல்லாத விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளமை சுட்டெண்களைத் தயாரித்தல் தொடர்பில் ஒரு முற்போக்கான நடவடிக்கையாகுமெனக் கருதப்படுகின்றது.
(C)மனித அபிவிருத்திச் சுட்டெண்
(Human Development Index - HDI)
மனித அபிவிருத்திச் சுட்டெண், வாழ்நாள் எதிர்பார்ப்பு, சிசு மரண வீதம், எழுத்தறிவு, கல்வி மட்டம் ஆகியன வாழ்க்கை நிலையின் உலக அளவிலான சமநிலையான ஒரு அளவீடாகும். இது மனித நலனோம்புகை, குறிப்பாக சிறுவர் நலனோம்புகை தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும். இந்த அளவீட்டின் மூலம், கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகின்ற நாடு அல்லது நாடுகள் அபிவிருத்தியடைந்துள்ளதா, அபிவிருத்தியடைந்து வருகின்றதா, அல்லது அபிவிருத்தியடை யாததா என்பது தீர்மானிக்கப்படுகின்றது.
மேற்படி சுட்டெண்ணில் சேர்த்துக்கொள்ளப்படுகின்ற அளவீடுகளுக்குரிய வாழ்நாள் எதிர்பார்ப்பு தொடர்பான அளவீட்டின் மூலம் வாழ்க்கையின் பாதுகாப்பான நிலைமை அல்லது உடலாரோக்கியம் கவனத்திற்கொள்ளப்படுகின்றது. எழுத்தறிவு அத்துடன் ஆரம்ப, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைமட்டங்களில் கல்வி பெறுகின்ற எண்ணிக்கை கவனத்திற் கொள்ளப்படுவதன் மூலம் அறிவு, கல்வி மட்டம் என்பன அளவிடப்படுகின்றன. கொள்வனவுச் சக்தி ஒப்புமை எனப்படுகின்ற, ஒரு பண அலகின் மூலம் கொள்வனவு செய்யக்கூடிய பண்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற முறைக்கு இணங்க தலா வருமானத்தைக் கவனத்திற்கொள்வதன் மூலம் வாழ்க்கை நிலை எடுத்துக்காட்டப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற அனைத்து நாடுகளின் பொருட்டும் மேற்படி சுட்டெண் ஆண்டுதோறும் தயாரிக்கப் படுகின்றது.
மேற்படி சுட்டெண் தயாரிக்கப்படுகின்ற முறை பற்றிய கணித ரீதியிலான மாதிரியொன்று கீழே தரப்பட்டுள்ளது. இங்கு பயன்படுத்தப்படுகின்ற பொது சமன்பாடு யாதெனில்: மனித அபிவிருத்திச் சுட்டெண் அண்மைக் காலமாக நிலையானதாக உள்ள போக்கைக் காட்டுகின்றதென்பது அடையாளங் காணப்பட்டுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் அபிவிருத்தியானது தொடர்ச்சியாக முண்னேறிச்
2007 மே/ஜூன் - குறிப்பேடு

Page 7
Country (x)-min(x max (x)-min(x) = Country (X) X in
X = குறித்த நாட்டின் சுட்ெ min(x) = நாடுகளுக்கு இடையி: max(X) = நாடுகளுக்கு இடையி:
(1) வாழ்நாள் எதிர்பார்ப்பு பற்றிய சுட்டெண்
LE 25 என்பது குறைந்தபட்ச வாழ்நாள் எதிர் ஆயுட்காலமாகும்.
85 என்பது அதிகபட்ச வாழ்நாள் எதிர்பார் ஆயுட்காலமாகும்.
74 - 25 85-25 = 0.82 ஆகும் (2) கல்விச் சுட்டெண்
= 2XALI +
3
ALI = வயது வ GER = | 356ö65 Gl
2004 ஆம் ஆண்டில் இலங்கைக்குக் கிை
ALI - ALR X2
100 3 =
GER = GER x 1 =
100: 3
(3) GDP gil GL6031 - Log (GDPpC) - 1 Log (40,000) - I
HIDI = (1) +(2)(3) = 0.8
3
இதன்படி 2004 இல் இலங்கைக்குக் கிடைத்த HD பெற்றுள்ளது.
2007
மே/ஜூன். குறிப்பேடு

dex
டண் பெறுமதி லான குறைந்தபட்சப் பெறுமதி லான அதிகபட்சப் பெறுமதி
= LE — 25
85 - 25 = Life Expeafatim பார்ப்பைக் கொண்ட நாட்டின் சராசரி
ப்பைக் கொண்ட நாட்டின் சராசரி
lxGER 3
ந்தோர்களுக்கு இடையிலான எழுத்தறிவு பறுவோர் வீதம்
டத்த பெறுமதி
90.4 x 2 = 0.60 100 3
„Og (100) log (100) = 0.61
2+0.83+0.61 = 0.753
3 1 பெறுமதி 0.753 ஆகுமென்பதோடு இது 93 வது இடத்தைப்

Page 8
செல்கின்ற அதேநேரம் குறைஅபிவிருத்தி நாடுகளில் பொருளாதார நிலை வீழ்ச்சியடைவதன் ஊடாக ஒன்றுடனொன்று சமநிலையாயுள்ளமையே அதற்கான காரணமாகும் , அபிவிருத்தியடைந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிகூட, உப சஹாரா - ஆபிரிக்கப் பிராந்தியத்திலும், தென் ஆசியாவிலும் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் பின்னடைவைக் காட்டுகின்றதோடு, அபிவிருத்தியடைந்து வருகின்ற ஏனைய நாடுகளில் மிகச் சிறிய அளவில் வளர்ச்சியினைக் காணக்கூடியதாயுள்ளதென்பது மனித அபிவிருத்திச் சுட்டெண் அறிக்கைகளின் மூலம் தெரியவருகின்றது. மனித அபிவிருத்திச் சுட்டெண்ணின் 0.5 ஐ விடக் குறைவான பெறுமதியைக் கொண்டுள்ள நாடுகள் அபிவிருத்தியடையாத நாடுகளாகக் கருதப்படுகின்றன. இதன் கீழ் வருகின்ற 31 நாடுகளில் 29 நாடுகள் ஆபிரிக்கப் பிராந்திய நாடுகளாகும். (ஹயிட்டி மற்றும் யேமன் தவிர) ஆபிரிக்க நாடுகளில் அதிக பெறுமதியைப் பெற்றுள்ள நாடுகளாக உப சஹாரா பிராந்தியத்தைச் சேர்ந்த தென் ஆபிரிக்காவும் கயானாவும் விளங்குகின்றன. இங்கு ம.அ.சு. பெறுமதி 0.653 ஆகும்.
மனித அபிவிருத்திச் சுட்டெண் இலக்கம் 0.800 ஐ விட அதிகமாயுள்ள, அதிகூடிய வளர்ச்சியை எட்டியுள்ள நாடுகளாக வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும் மற்றும் கிழக்கு ஆசியாவிலும் உள்ள நாடுகள் விளங்குகின்றன. அதேபோன்று அபிவிருத்தியடைந்து வருகின்ற ஒருசில நாடுகளும் கிழக்கு ஐரோப்பாவிலும், மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும், கரிபியன் பிராந்தியத்திலும் மற்றும் எண்ணெய் வளம் அதிகமாயுள்ள அராபிய தீபகற்பகத்திற்குரிய நாடுகளும் விளங்குகின்றன.
மனித அபிவிருத்திச் சுட்டெண் முக்கியமாக பொருளாதார வாழ்வில் வரையறுக்கப்பட்ட ஒருசில துறைகளை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளது. அதாவது, சுகாதாரம், போசாக்கு, கல்வி மற்றும் வாழ்க்கை நிலை எனப்படுகின்ற வருமானம் ஆகிய துறைகளை மட்டுமே என்பதை மேலே குறிப்பிட்டுள்ளோம். மேற்படி அனைத்துத் துறைகளும் பொருளாதார வாழ்வில் திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட ஒரு பக்கத்தை அல்லது ஒருசில பக்கங்களை மட்டுமே சித்தரிக்கின்றன. உலக உதவி வேலைத்திட்டத்தின் பொருட்டு சுகாதாரம், கல்வி, போசாக்கு ஆகிய அடிப்படை மனித தேவைகளைக் கவனத்திற்கொள்கின்றபோது மேற்படி துறைகள் முக்கியமானவையாக இருக்கலாம். ஆயினும், முதலீடுகள், அரசியல் மற்றும் ஏனைய துறைகளின் பொருட்டு மனித அபிவிருத்திச் சுட்டெண்ணின் மூலம் போதியளவு விளக்கம் கிடைப்பதில்லை. ஆதலால் அத்தகைய ஒவ்வொரு பணியின் பொருட்டும்

எதிர்பார்க்கப்படுகின்ற துறைகளைப் பிரதிபலிக்கின்ற தனித்தனியான சுட்டெண்கள் தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறான ஒருசில சுட்டெண்களுக்கான உதாரணங்கள் வருமாறு:
Doing Business - (The World Bank Group) Index of Economic Freedom (The Heritage Foundation) Economic Freedom of the World (The Fraser Institute) International Country Risk Guide (The PRS Group) Labour Market Indicators (M. Rama & R. Artecona) Global Competitiveness Index
Global Peace Index
இக்கட்டுரையின் மூலம் மேற்படி ஒவ்வொரு சுட்டெண் தொடர்பாகவும் அவற்றின் நோக்கங்கள், கணிப்பீட்டு செயல்முறை, பயன்பாடு என்பன பற்றிக் கலந்துரையாடுதல் எதிர்பார்க்கப் படவில்லை. ஆயினும், ஒவ்வொரு நோக்கத்தின் பொருட்டும் தனித்தனியான சுட்டெண்கள் பயன்படுத்தப் படுவதென்பதையும், எதிர்காலத்தில் ஒவ்வொரு நோக்கத்திற்கும் இணங்க மென்மேலும் சுட்டெண்கள் உருவாகலாம் என்பதையும் இறுதியாக வலியுறுத்துதல் வேண்டும்.
உசாத்துணை :
Abbr. - Gross Domestic Product Card David, Freeman Richard B. (2002) What have two decades of British economic reforms delivered? World Bank Policy Research Paper NBER Working Paper. 8801 Human Development Report 2006 - Meaning and Measurement of Economic Development. Loayza V, Oviedo Ana Maria, Serven Luis (2004 — Regulation and Macroeconomic Performance Physical quality-of-life index-http://en.wikipedia.org Vaknin Sam - Can Gross Domestic Product figures be trusted?
What's wrong with The GDP?http://dieoff.org
ஐ.எச்.எம்.எஸ். ஹேரத் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர் புள்ளிவிபரவியல் திணைக்களம்
2007 மே/ஜூன் - குறிப்பேடு

Page 9
வளர்ச்சி மற்றும்
உணர்வத
அறிமுகம்
இலங்கையினுள் இன்று பல்வேறு ஊடகங்களின் ஊடாகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி பற்றிய ஒரு உரையாடல் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. இத்தகைய பல்வேறான உரையாடல்களின் மூலம் நாட்டின் பல வேறு சமூகப் படித் தரங்களின் எண் ணங்கள் வெளிப் படுத் தப் பட்டு வருகனி றன. இவர்களில அரசியல் வாதிகள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பொருளியலாளர்கள் அதேபோன்று பொதுமக்களும் உள்ளனர். மேற் படி அனைவருடைய ஆய்வுக்கும் உள்ளாகியிருப்பது, இலங்கை மத்திய வங்கியினால் 2007 மார்ச் மாதம் 30 ஆந் திகதி அதிமேதகு சனாதிபதியும் கெளரவ நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் அவர்களால் சட்டத் தேவையின் அடிப்படையில் கையளிக்கப்பட்ட 2006 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கை தொடர்பாகவும், அதன் மூலம் விபரிக்கப்பட்டுள்ள 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சி தொடர்பாகவும், விலை மட்டங்கள் அதிகரித்ததன் காரணமாக உருவாகின்ற பணவீக்கம் தொடர்பாகவும், வங்கி வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளமை மற்றும் கடன் பெறுகின்ற முறை தொடர்பாகவும், 2006 ஆம் ஆண்டின் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் நடத்தைப்போக்கு தொடர்பாகவும், அச்சந்தர்ப்பத்தில் மேலெழுந்த சவால்கள் மற்றும் அதற்கு முகம்கொடுத்து விலை உறுதிப்பாட்டையும் நிதியியல் முறையின் உறுதிப்பாட்டையும் பேணிவந்தமை தொடர்பாகவுமாகும்.
2007 மே/ஜூன். குறிப்பேடு

அபிவிருத்தியை ற்கெனில்
நாடு தொடர்பாகவும் உள்நாட்டுப் பொருளாதாரம் தொடர்பாகவும் எவருக்கேனும் தேவையாயுள்ள விளக்கமான தரவுகள் உள்ளடங்கியுள்ள பிரபல்யம் பெற்ற ஒரு மூலாதாரமான மத்திய வங்கி ஆண்டறிக்கை கையளிக்கப்பட்ட 2007.03.30 ஆந் திகதி மத்திய வங்கியின் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மத்திய வங்கி ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கூற்றிலிருந்து ஒரு பந்தியை, அறியாதோர் அறிந்துகொள்ளும் பொருட்டும், அறிந்தவர்களின் மேலதிக அறிவின் பொருட்டும் கீழே குறிப்பிடுதல் மிக முக்கியமானதாக இருக்கலாம்.
‘இலங்கையின் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் மத்திய வங்கியின் தனித்துவத்தினை ஒரிரு அம்சங்களின் ஊடாகவே அடையாளம் காண்கின்றனர். அதில் ஒன்று நாட்டினுள் பயன்படுத்தப்படுகின்ற நாணயத் தாள்களும் நாணயக் குத்திகளுமாகும். மற்றையது இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையாகும். அவ்வாறெனில் மத்திய வங்கியில் பணியாற்றுகின்ற எம் அனைவரினதும் தனித்துவமான, ஒரு மரத்திற்கு தோல் இணைந்திருப்பதைப் போன்றுள்ள மேற்படி ஆணிடறிக்கையானது இலங்கை மத்திய வங்கியின் மகத்துவம்மிக்க ஒரு உற்பத்தியாகும்.’
2006 பொருளாதாரத்தின் போக்கு
ஒரு வருடம் கழிந்து நான்கு மாதங்கள் செல்வதற்கு முன்னர் குறித்த ஆண்டின் பொருளாதாரத்தின் போக்கைப்

Page 10
பற்றிய விளக்கமான அறிக்கை நிதியியல் மேலாண்மை எனப்படும் மத்திய வங்கியினால் கெளரவ நிதி அமைச்சருக்குக் கையளிக்கப்படுதல் வேண்டும். அத்தகைய சட்டத் தேவையை நிறைவேற்றுகின்ற வகையில் உரிய தினத்திற்கு ஒரு பஞ்சாங்க மாதத்திற்கு முன்னர் 2006 ஆம் ஆண்டின் பொருளாதாரம் தொடர்பான விளக்கமான அறிக்கை நிதி அமைச்சருக்குக் கையளிக் கப்பட்டமை அதில் தொடர்புகொண்டிருந்த பணியாளர்களது செயற்பாட்டின் வளர்ச்சியானதொரு நிலைமையாகும். அவர்களது கடும் அர்ப்பணிப்பாகும். 2006 ஆம் ஆண்டின் ஆண்டறிக்கைக்கு இணங்க, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.4 சதவீதமாகும். இது 2005 ஆம் ஆண்டில் நிலவிய 6.00 சதவீதத்தை விட அதிகரித்ததொரு வளர்ச்சியாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகின்றபோது 1.4 சதவீத வளர்ச்சிகரமான மாற்றம், பொருளாதாரத்தின் எந்தத் துறைகளின் ஊடாக ஏற்பட்டதென்பதை அறிந்துகொள்வதன் மூலம் வள்ர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி ஆகிய பரந்த துறைகள் தொடர்பிலான அறிவைப் பெற்றுக்கொள்ள முடியுமாயிருக்கும்.
வளர்ச்சி துறைவாரியான வகைப்படுத்தலுக்கு இணங்க
பொருளாதார வளர்ச்சி தொடர்பில் கவனத்தைச் செலுத்துகின்ற வகையில், 2005 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பிரதானமான துறைகளின் வளர்ச்சியைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். அதாவது 2005 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் துறைவாரியான வகைப்படுத்தலின் படி கமத்தொழில் 1.9 சதவீதமாகவும், வெளியீட்டுக் கைத்தொழில் 8.3 சதவீதமாகவும், பணிகள் துறை 6.2 சதவீதமுமாக விளங்கியது. மேற்படி வளர்ச்சி வீதங்களுக்கு இணங்க 2005 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத் தி 6.0 சதவீதமாயிருந்ததென அறிக்கையிடப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் துறைவாரியான வகைப்படுத்தலின் படி கமத்தொழில் 4.7 சதவீதமாகவும், வெளியீட்டுக் கைத்தொழில் 7.2 சதவீதமாகவும், பணிகள் துறை 8.3 சதவீதமாகவும் விளங்கியது. மேற்படி வளர்ச்சி வீதத்திற்கு இணங்க 2006 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதமாக இருந்தது.
ஆராய்ச்சி ரீதியிலும், ஆய்வு ரீதியிம், பிணைப் பொறுப் புடனுமி , அர்ப் பணிப் புடனுமி 6J 60) 60T uJ நிறுவனங்களிலிருந்து திரட்டப்படுகின்ற தரவுகள், விஞ்ஞான
10

ரீதியில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இதற்கிணங்க 2006 ஆம் ஆண்டில் கமத்தொழில் 1.9 சதவீதத்திலிருந்து 4.7 வரை வளர்ச்சியடைந்துள்ளது. கடற்றொழில் உற்பத்திகள் மிக அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டமையே இதற்கான அடிப்படைக் காரணமாயிருந்தது. சுனாமியின் தாக்கத்தினால் 2005 இல் எதிர்மறை -42.2 ஆக விளங்கிய கடற்றொழில் துறையானது 2006 ஆம் ஆண்டில் 51.7 சதவீதமாக அதிகரித்தமை பாரியதொரு வளர்ச்சியாகும் என்பதைக் காணலாம். இதைத் தவிர, கமத்தொழில் துறையின் மேம்பாட்டின் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறான செயல்முறைகள், மானியங்கள் ஆகியன மற்றும் சந்தை வசதிகளின் காரணமாக வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாயுள்ளது.
கைத்தொழில் துறையில் சிறியதொரு பின்னடைவைக் காணக்கூடியதாயுள்ளது. 2005 ஆம் ஆண்டில் நிலவிய 8.3 சதவீத வளர்ச்சிகரமான நிலைமை 2006 ஆம் ஆண்டில் 7.2 சதவீதமாக விளங்கியது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சிறியதொரு பின்னடைவாகும் என்பதைக் காணலாம். (மத்திய வங்கி ஆண்டறிக்கையின் தரவுகள் மேலே குறிப்பிடப் பட்டவாறு விஞ்ஞான ரீதியிலான ஒரு பகுப்பாய்வேயொழிய, வெளிவாரியான நபர்களை மகிழ்விக்கும் பொருட்டு போலியான தகவல்களைக் காட்டாது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.)
2006 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு பணிகள் துறையின் பங்களிப்பும் அதிக பெறுமானத்தைக் காட்டுகின்றது. 2005 ஆம் ஆண்டில் 6.2 சதவீதமாக இருந்த பணிகள் துறை 2006 ஆம் ஆண்டில் 8.3 சதவீதம் வரை வளர்ச்சியடைந்துள்ளது. சுற்றுலா, தொலைத் தொடர்பு, துறைமுகம், தொழில்துறை, கட்டிடவாக்கம், நிதியியல் மற்றும் சொத்துக்கள் துறைகளின் வளர்ச்சிகரமான நிலைமை இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம்.
அன்றாடம் உலகின் முன்னிலையில் வேலை உலகமொன்றே செயற்படுவதாயுள்ளது. வேலைகளின் திரட்சி என்பது மனித நுகர்வு மட்டம் அதிகரிப்பதென்பதாகும். நுகர்வின் உயர் மட்டம் என்பது நுகர்வோரின் வாழ்க்கை முறையின் வளர்ச்சியாகும். வாழ்க்கை முறையின் வளர்ச்சியென்பது நாளைய தினத்துக்கான கேள்வியின் அழுத்தமாகும். கேள்விக்கு ஏற்ற நிரம்பலின் பொருட்டு பண்டங்களும் பணிகளும் உற்பத்தி செய்யப்படுதல் வேண்டும். அத்தகைய பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்தியின் போக்குகள் எனப்படுகின்ற பகுப்பாய்வு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியேயன்றி வேறெதுவுமல்ல.
2007 மே/ஜூன் - குறிப்பேடு

Page 11
இது உண்மையான தகவல்களின் அடிப்படையில் விஞ்ஞான ரீதியில் மற்றும் அறிவியல் ரீதியில் நடைபெறுகின்ற ஒரு பகுப்பாய்வாகும். இதற்கிணங்க 2006 இல் பேரண்டப் பொருளாதார வளர்ச்சிப் பண்புகள் பலவற்றைக் காண்பதற்கு முடியுமாயுள்ளமை ஒரு தற்செயலான விடயமல்ல.
வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி
பெரும்பாலானவர்கள், பெரும்பாலான் விடயங்களைப் பற்றி பெரிதளவு அறியாது, பெருமளவு போலிக் கருத்துக்களை சமூக சரீரத்தில் திணிக்கின்றனர். இதன் பெறுபேறாக பெரும்பாலும் சமூக சரீரம் நோய்வாப்படுகின்றது. பொருளாதார விடயங்கள் தொடர்பில் செய்யப்படுகின்ற பெரும்பாலான விளக்கங்களுக்கும் மேற்படி விடயம் ஏற்புடையதாகவுள்ளது. பெரும்பாலும், பெரும் பாலானவர்கள் மத்திய வங்கி ஆண்டறிக்கையில் உள்ளடங்கியுள்ள பெரும்பாலான விடயங்கள் தொடர்பாக செய்கின்ற பெரும் பாலான விளக்கங்களும் பெரும்பாலும் சரியானவையாக இருக்காது. குறிப்பாக பொருளாதாரம் தொடர்பாக காணப்படுகின்ற தரவுகளைப் பகுப்பாய்வு செய்கின்ற போது அத்தகைய பகுப்பாய்வுகள் ஒருசில வரையறைகளினுள் இருந்தே செய்யப்படுகின்றன என்பதை நினைவில் இருத்திக்கொள்ளுதல் வேண்டும். இது பொருளியல் பகுப்பாய்வின் போது சர்வதேச ரீதியில் கடைப் பிடிக் கப்படுகின்ற ஒரு கட்டாயமான விதிமுறையாகும். இதைப் பற்றி விபரம் அறிந்தவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். குறிப் பிட்டதொரு காலகட்டத்தில் பொருளாதாரத்தினுள் நடைபெறுகின்ற வளர்ச்சி மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஓரிரண்டு இலக்கங்களில் காட்டுவதிலுள்ள மிகக் கஷடமான நிலைமையின் காரணத தரினாலேயே பெரும்பாலுமி இ வி வாறு செய்யப்படுகின்றது. இவ்வாறு காட்டப்படுகின்ற இலக்கங்கள் அல்லது புள் ளி விபரத் தரவுகளின் மீது கவனம் செலுத்தப்படுமெனில், அது “வளர்ச்சியா’ (Progress), அல்லது பொருளாதார வளர்ச்சியா (Economic Progress), இன்றேல் GL BIT (b6TT 35T U EDL f6i (EbġħġSu JT (Economic Development), அல்லது அபிவிருத்தியா (Development) என்பதை உரிய விதத்தில் அறிந்துகொள்ள முடியும். குறுகிய கால ரீதியில், நடுத்தர கால ரீதியில், நீண்ட கால ரீதியில் என்றவாறு நடைபெறுகின்ற ஒரு சில நிலைமைகளின் இயல் பு ஒன்றிலிருந்து ஒன்று மாற்றமானதாக இருக்கும். பொருளாதார அபிவிருத தயும் அவி வாறானதே. பொருளாதார அபிவிருத்தியானது நீண்ட காலமாக பொருளாதார சரீரத்தினுள்
2007 மே/ஜூன். குறிப்பேடு

நடைபெறுகின்ற ஒரு விஸ்தரிப்பாகும். பின்னர் அத்தகைய விஸ்தரிப்பானது முழுச் சமூகம் பூராவும் ஓடிப் பெருக்கெடுத்துப் பரவியதன் பின்னர் உணரக்கூடிய ஒரு விடயமாகும். வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி என்பன ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட எண்ணக்கருக்களாகும். இதற்கிணங்க அபிவிருத்தி என்பது பல்பரிமாண எண்ணக் கருவாகும் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். சிக்கலாக விளங்குகின்ற மேற்படி ஒருசில விடயங்களை விளங்கிக்கொள்ளும் பொருட்டு எளிமையான ஒரு உதாரணத்தைக் காட்டலாம். சிறியதொரு செடிக்கு இன்று உரமும் நீரும் இட்டு நாளைய தினம் அச்செடி நன்றாக வளர்ந்துள்ளதா என்பதைப் பார்ப்போமேயானால் வளர்ச்சிகரமான ஒரு மாற்றத்தைக் காண முடியாது. அவ்வாறு குறுகிய கால ரீதியில் காணக்கூடிய வளர்ச்சியைக் காண முடியாமல் இருக்கும். காலப்போக்கில் கிளைகள் பரப்பியதன் பின்னர் தெளிவாகக் காணலாம். வளர்கின்ற சுற்றாடல், நீர், காற்று, சூரிய ஒளி, நோய்த் தடுப்பு ஆகிய அனைத்துக் காரணிகளினதும் பெறுபேறாகவே அது ஒழுங்காக வளர்ச்சியடையும். பொருளாதார வளர்ச்சிச் சுட்டெண்கள் மற்றும் அபிவிருதி த ஆகய எணர் ணக் கருக் களு மி இவ்வாறானதொன்றாகும்.
பணவீக்கமும் 2006 ஆண்டறிக்கையும்
இக்காலகட்டத்தில் ‘பணவீக்கம் மிகவும் பிரபல்யமான ஒரு சொல்லாக உள்ளது. பொருளியல் விற்பன்னர்கள் பெரும் புத்துணர்ச்சியோடு பணவீக்கம் தொடர்பாக கோட்பாட்டு ரீதியில் விடயங்களை கற்றிருக்கலாம். ஆயினும் இது தொடர்பாக அநேகமானவர்களால் கூறப்படுகின்ற தவறான விடயங்களும் அறிவுபூர்வமல்லாத விடயங்களுமே தாராளமாகக் காண்பதற்கும் கேட்பதற்கும் கிடைக்கின்றன.
வெளிவரிக் காரணிகள் (எண்ணெய் விலை அதிகரித்தல்) மீது அல்லது உள்வாரியான காரணிகள் (வெள்ளப் பெருக்கு, மண் சரிவு) மீது திடீரென பண்டங்கள் மற்றும் பணிகளின் ஒருசில விலை மட்டங்கள் குறுகிய கால ரீதியில் அதிகரித்தலைப் பணவீக்கமாக ஒருசிலர் குறிப்பிடுவதற்குப் பழகியுள்ளனர். அவ்வாறு திடீரென மேலே கூறப்பட்ட ஒரு அல்லது ஒருசில காரணிகளின் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை மட்டம் குறுகிய கால ரீதியில் அதிகரித்தலை பணவீக்கமாகக் குறிப்பிடுதல் சரியானதாக இருக்காது.
11

Page 12
அவ்வாறெனில், பணவீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளின் ஒட்டுமொத்தமான விலை மட்டத்தில் நடைபெறுகின்ற தொடர்ச்சியான அதிகரிப்பாயிருக்கும். ஏதேனுமொரு காலகட்டம் முழுவதும் தொடர்ச்சியாக விலை மட்டம் அதிகரிப்பதாயிருக்கும். பணி டங்கள் மற்றும் பணிகளுக்கான கேள்வி, உற்பத்தியின் வளர்ச்சியை விட அதிக வேகத்தில் விரிவடைதல் இதற்கான காரணமாகும். அதாவது, நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கும் பண நிரம்பலின் விரிவாக்கத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசமாகும் என இதற்கு இன்னொரு விதத்தில் விளக்கமளிக்கலாம். மொத்தத் தேசிய உற்பத்தியை விட அதிகமாக பண நிரம்பல் விரிவடையுமெனில் அதன் எதிர் விளைவு பணவீக்க ரீதியிலான அழுத்தமாயிருக்கும்.
பணவீக்கத்தைப் பற்றி உரையாடுகின்ற போது கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெணி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டேயாதல் வேண்டும். இங்கு 1952 ஆம் ஆண்டே அடிப்படை ஆண்டாக உள்ளது. இதற்கிணங்க கொழும்பு நகர சபை ஆளுகைப் பிரதேசத்தில் 445 குடும்பக் கூறுகளில் குறைந்த வருமானம் பெறுகின்ற நாற்பது சதவீதமான (40%) குடும்பங்களின் வாழக்கை மட்டமே காட்டப்பட்டுள்ளது. மேற்படி விலைச் சுட்டெண்ணின் பிரகாரம் உணவு பானங்களின் பொருட்டு 61.9 சதவீதமும், மின்சாரம் மற்றும் எரிபொருளின் பொருட்டு 4.3 சதவீதமும், வீட்டு வாடகையின் பொருட்டு 5.7 சதவீதமும், ஆடை அணிகளின் பொருட்டு 9.4 சதவீதமும், நானாவித விடயங்களின் பொருட்டு 18.7 சதவீதமும் என்றவாறு நிறையேற்றப்பட்டுள்ளது. மேற்படி விலைச் சுட்டெண் 1952 ஆம் ஆண்டிலிருந்து நிலவி வருவதால் இதில் டீசல், பெறி றோ ல , எரி வாயு ஆகய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. இதில் மண்ணெண்ணெய் மட்டுமே ஏற்புடையதாகக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிணங்க டீசல் ஒரு லீற்றரின் விலை 5-6 ரூபாவால் அதிகரித்தாலும் அதற்கு சமமான விதத்தில் பணவீக்கம் அதிகரிப்பதில்லை. மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கின்ற போது அதற்கு நிறையேற்றப்பட்டுள்ளதன் பிரகாரம் மட்டுமே பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால் பணவீக்கம் தொடர்பாக உரையாடுகின்ற போது விலை அதிகரிக்கின்ற விடயம் யாது என்பதைப் பற்றியும், அதற்கு ஏற்றப்பட்டுள்ள நிறையைப் பற்றியும் அதன் மூலம் ஒட்டுமொத்தமான சுட்டெண்ணில் ஏற்படுகின்ற தாக்கத்தைப் பற்றியும் சிறந்த அறிவைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். ஏதேனுமொரு விதத்தில் பணவீக்கம் பூச்சியமாகக் காட்டப்பட்டிருப்பின் அதன் கருத்து யாதெனில் விலை மட்டம் சமனாயுள்ளதென்பதாகும்.
12

அதேபோன்று பணவீக்கம் எதிர்மறையான மட்டத்திற்கு வருதல் பணச் சுருக்கமாயிருக்கும். இந்த மட்டம் ஒரு நாட்டிற்கு எந்த வகையிலும் சாதகமானதாக இருக்காது. ஆதலால் பணவீக்கத்தை முதலீட்டுத் தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் குறைந்த மற்றும் தாக்குப் பிடிக்கக்கூடிய மட்டத்தில் பேணிவருதலே பணவீக்கத்துக்கான சிறந்த தீர்வாக இருக்கும். பணவீக்கம் குறைந்த வருமானம் பெறுகின்றவர்களின் மிக மோசமான எதிரியாக இருக்குமென்பதோடு, இது மிகவும் அதிகமாயிருப்பதும், மிகக் குறைவாயரிரு ப் பதும் பாதகமானதொரு பணி பாக இருக்குமென்பதே அநேகமான பொருளியலாளர்களின் கருத்தாகும். இலங்கை மத்திய வங்கியின் பிரதானமானதொரு குறிக்கோளாக உள்ள விலை உறுதிப்பாட்டைப் பேணிவரும் பொருட்டு துல்லியமான பணவீக்க அளவீடொன்று இருத்தல் மிகவும் முக்கியமானதாகும். ஆதலால், பொருளாதார அபிவிருத்திக்கு ஏதுவாயமைகின்ற முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும், குடும்பத் துறை தொடர்பிலும் ஒரு அதிர்ச்சி ஏற்படாத வகையில் விலை மட்டத்தை உறுதியாகப் பேணிவருவதற்குத் தேவையான விஞ்ஞான ரீதியிலான பின்னணி மத்திய வங்கியினால் அமைக்கப்படுகின்றது.
கிராமியத் துறையும் பணவீக்கமும்
சமூகக் கட்டமைப்பினை நோக்குகின்றபோது இலங்கையின் கிராமியச் சமூகமானது விரிவான விதத்தில் பரந்துள்ளது. கிராமியத் துறையானது கம உற்பத்தியின் மத்திய துறையாகவும் விளங்குகின்றது. பல்வேறான மானிய வசதிகள் மற்றும் கடன் வசதிகள் வழங்கப்படுவதன் மூலம் கிராமியத் துறையரின் உறி பத த மேமி பாட்டினி பொருட் டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மிகவும் விரிவானதொரு விளக்கம் 2006 மத்திய வங்கி ஆண்டறிக்கையின் இரண்டாவது பகுதியின் xlix பக்கத்தில் காணப்படுகின்றது.
பொருளாதாரத்தினுள் உள்ள பணவீக்க ரீதியிலான அழுத்தம் கிராமியத் துறையினாலும் உணரப்படுவதென்பது உண்மையாகும். தனிநபர்களின் இயல்பான தேவைகள் எனப்படுகின்ற உள்ளவா (Drives) எனக் காட்டக்கூடியதாயுள்ள அடிப்படைத் தேவைகளான உணவு பானங்கள், நித்திரை, ஓய்வு மற்றும் ஏதேனுமொரு காலகட்டத்தில் உருவாகின்ற பாலியல் தேவைகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் திருப்தியடையக்கூடிய விதத்தில் செயலாற்றுதல் பொதுவான மனித இயல்பாகும். இதற்கிணங்க நகரத் துறையின் நுகர்வு
2007 மே/ஜூன் - குறிப்பேடு

Page 13
முறையை அவதானித்து புதிய பண்டங்கள் மற்றும் பணிகளின் நுகர்வு தொடர்பில் கிராமியத் துறையினது ஈடுபாட்டைக் காணமுடியுமாயுள்ளமை அதிசயமானதொன்றல்ல. தொடர்பாடல் துறை நவீனமயமாதல், தொழில் மற்றும் கல்வி வாய்ப்புகள் விரிவடைந்தமை, கட்டிடவாக்கம் மற்றும் அதனோடிணைந்த பயன்பாடுகள் வளர்ச்சியடைந்தமை ஆகிய பல்வேறு காரணங்களால் கிராமியத் துறையில் நிலவிய மந்தகதியிலான வாழ்க்கை முறை நவீனமயமாக்கல் அலைகளினால் அசைவுற்றுள்ளது. இதன் பெறுபேறாக நுகர்வு முறையினுள் விரிவடைதலைக் காணமுடியுமாயுள்ளது.
குறிப்பாக மேல் மாகாணத்தில் காணக்கூடியதாயுள்ள மேம்பாடு, வினைத்திறன், மறுமலர்ச்சி மற்றும் கொள்ளளவை ஏனைய மாகாணங்கள் பொதுவானதொரு தாமதத்தின் பின்னரே உணர்கின்றன. நாட்டின் தலா வருமான மட்டம் அமெரிக்க டொலர் 1355 ஆகியமை தொடர்பாகவும், நடுத்தர வருமானம் பெறுகின்ற ஒரு நாடாக ஆகியுள்ளமை தொடர்பாகவும், ஆர்வத்துடன் கேள்வியெழுப்புகின்ற பெரும்பாலான சமூகப் படித்தரங்கள் இது தொடர்பாக சந்தேகத்துடன் கூடியதொரு மனப்பான்மையையே காட்டுகின்றன. மேல் மாகாணத்தில் காணக்கூடியதாயுள்ள தாராளமான பொருளாதார வாய்ப்புகளின் காரணமாகவும் அதன்பால் சாய்கின்ற போக்குள்ளவர்களின் ‘வினைத்திறன்’ காரணமாகவும் அவர்களது வருமான மட்டம் அதிகரிக்கின்றது. தனித்தனியாக எடுத்து நோக்குவோமெனில், ஒருசிலரது வருடாந்த தலா வருமானம் பெரும்பாலும் அமெரிக்க டொலர் 1355 அல்ல அமெரிக்க டொலர் 13500 ஐத் தாண்டியும் செல்கின்றது. அதேபோன்று மேல் மாகாணத்திலிருந்து தொலைவிலுள்ள பெரும்பாலான கிராமியத் துறைகளின் வருடாந்த தலா வருமானம் அமெரிக்க டொலர் 200 ஐ விடக் குறைவான மட்டத் தல உள் ள சநீ தர்ப் பங்கள் அநேகமாயிருக்கலாம். மேற்படி தலா வருமானத்தில் காணக் கூடியதாயுள்ள துறைவாரியான வித்தியாசத்தின் காரணமாக (இக் கட்டுரையினி இனி னோரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு) ஒரு கேள்வி அழுத்தம் உருவாகியுள்ளது. இதற்கிணங்க கிராமியத் துறை தொடர்பில் பணவீக்க ரீதியிலான அழுத்தம் தாக்கத்தை ஏற்படுத்துமென்பது உண்மைக்கு முரணானதல்ல. ஆயினும் பணவீக்கம் தொடர்பாக மேல் மாகாணத்தில் அநேகமாகக் காணக்கூடியதாயுள்ள ஆர்ப்பாட்டங்கள், பகிஷ்கரிப்புகள், கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றைக் கிராமியத் துறையில் அவ்வளவாகக் காண முடியாதுள்ளமைக்கான காரணம், மிகைநுகர்வு முறைக்குச் சாய்கின்ற போக்கு மந்தகதியில்
2007 மே/ஜூன். குறிப்பேடு

நடைபெறுவதேயன்றி பணவீக்க அழுத்தம் உணரப்படாமையின் காரணத்தினால் அல்லாதிருக்கலாம்.
அதேபோன்று கிராமியத் துறையின் உற்பத்தி மென்மேலும் விரிவடையும் பொருட்டு வழங்கப்படுகின்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை முன்னேற்றுதலும் மந்தகதியிலான இயல்பையே கொண்டுள்ளது. நாட்டின் வருமானப் பகிர்விலுள்ள முரண்பாடு தொடர்பில் ஒருசில அறிவுபூர்வமான துறைகளின் மூலமும் தொழிற் சங்கங்களின் மூலமும் எழுப்பப்படுகின்ற தர்க்கங்கள் வாதங்களுக்குப் பின்னணியாக, மேல் மாகாணத்திற்கு வெளியேயுள்ள சமூகப் படித்தரங்களும் மேல் மாகாணத்திலேயே உள்ள குறைந்த வருமானம் பெறுகின்ற படித்தரங்களுமே அடிப்படையாக அமைந்துள்ளன. தலைநகரத்துக்கு வெளியேயுள்ள கிராமியத் துறைகளுக்கு அபிவிருத்தியின் நன்மைகள் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமியத் துறையின் சிறு கைத்தொழில் கருத்திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஆரம்பத் திட்டமிடல்கள் தயாரிக்கப்பட்டுள்ள கம நகும எனப்படும் கிராம எழுச்சி மற்றும் மக நகும எனப்படுகின்ற வீதி அபிவிருத்தி ஆகிய பாரிய கருத்திட்டங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். இதன் மூலம் கிராமிய உற்பத்திகளுக்கான சந்தை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளும் அதேபோன்று தொழில் வாய்ப்புகளும் அதிகரித்து வருமான வழிவகைகள் விரிவடையும். வருமான வழிகளை விரிவாக்குதலும், வருமானப் பகிர்வு முரண்பாட்டினைக் குறைத்தலும், தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்தலும், நுகர்வு முறையை விரிவாக்குதலுமே கம நகும போன்ற கருத்திட்டங்களின் அடிப்படை நோக்கமாகும். அத்துடன் இதன் மூலம் வளர்ச்சியினதும் அபிவிருத்தியினதும் நன்மைகளை உணரச் செய்தலுமாகும். அப்போது பணவீக்க ரீதியிலான அழுத்தம் குறைவடையும் என்பது பிராந்திய மற்றும் சர்வதேச அனுபவங்களின் ஊடாகத் தெளிவாகின்றது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு
இலங்கை மத்திய வங்கியினால் நிதி தமும் அமுலாக்கப்படுகின்ற நிதிக் கொள்கைத் தீர்மானங்களின் காரணமாக பண நிரம்பலின் விரிவாக்கம் குறைக்கப்படுகின்றது. மத்திய வங்கியினால் அவ்வாறானதொரு நிதிக் கொள்கை அமுலாக்கப்படாதிருப்பின், நிரந்தரமாக நிலவுகின்ற பணவீக்க நிலைமையுடன் கூடிய ஒரு கடும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதற்கு சமூகத்திற்கு நேரிடும்.
13

Page 14
கடுமையான நிதிக் கொள்கைகள் அமுலாக்கப்படுவதன் மூலம் நிதிச் சந்தையிலுள்ள மேலதிக திரவத் தன்மை உள்ளீர்க்கப்படுகின்றது. இதன் மூலம் கேள்வி அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகின்றது. அதேபோன்று கொள்கை வட்டி வீதம் அதிகரிக்கப்படுவதன் ஊடாகவும், குறுகிய கால ரீதியில் நிறுவனத் துறையின் கடன் வழங்கல் பலவீனமடைந்து நாணய விரிவாக்கம் குறுகியகால ரீதியில் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறான மதினுட்பத்துடன் கூடிய நடவடிக்கைகளின் காரணமாக கேள்வி அழுத்தத்தின் மூலம் உருவாக்கப்படுகின்ற பணவீக்க ரீதியிலான அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதனை 2006 ஆண்டறிக்கையை ஆராய்வதன் மூலம் அறியக்கூடியதாயுள்ளது.
பணவீக்கத்துக்குப் பொறுப்புக் கூடறவேண்டியவர்கள்
பணவீக்கம் என்பது பொதுமக்களது பிரதானமான இரண்டு பகைவர்களில் முதலாம் இலக்கப் பகைவனாகும். தொழிலின்மை பணவீக்கத்துக்கு மட்டுமே இரண்டாவதாயுள்ளது. அண்மைக்கால வரலாற்றைப் பார்க்கின்றபோது பணவீக்கம் மக்களின் பகைவனாகச் செயலாற்றியுள்ள விதத்திற்கு போதியளவு உதாரணங்கள் உள்ளன. முதலாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஜேர்மனியில் பணவீக்க வீதம் ஒரு மில்லியன் (1,000,000) சதவீதத்தைத் தாண்டிச் சென்றது. அண்மைக் காலத்தில் பொலீவியாவில் 25,000% வீதமாகவும், ரஷ்யாவில் 2000% வீதமாகவும் இஸ்ரேலில் 1500% வீதமாகவும் துர்க்கியில் 1500% வீதமாகவும் இருந்ததோடு, தற்போது சிம்பாப்வே நாட்டில் பணவீக்க வீதம் 3700% வீதமாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இவை போலியான அறிக்கைகள் அல்ல. சிப்பாப்வே ரிசேவ் வங்கியின் ஆளுநரின் கூற்றுப்படி பணவீக்கம் அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதித்துள்ள எச்.ஐ.வீ. தொற்று நோயாகும். இதற்கிணங்க பணவீக்க நிலைமைக்குப் பொறுப்புக் கூறவேண்டிய பல தரப்பினர்கள் உள்ளனர் என்பதைக் கவனத்திற்கொள்ளுதல் வேண்டும்.
இடையறாது, தொடர்ச்சியாக பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை மட்டம் அதிகரித்துச் செல்வதாயிருப்பின் அதற்கான பொறுப்பை முழுச் சமூகமும் ஏற்றல் வேண்டும். முழுச் சமூகத்திலும் பெரும்பாலானவர்கள் உயர் மட்டத்திலான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த போதிலும் , பிரதியுபகாரமாக நாட்டின் பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியின் பொருட்டு பங்களிப்புச் செய்ய மாட்டார்கள். இல்லாவிடின் நுகரப்படுகின்ற வளங்களை விடக் குறைவான விதத்திலேயே பங்களிப்புச் செய்கின்றனர். அர்ப்பணிப்புடன்
14

வேலை செய்யாது, உற்பத்தியைக் கூட அதிகரிக்காது மிகைநுகர்வினை எதிர்பார்த்தல் பணவீக்கத்துக்குக் காரணமாயமையுமெனி ப ைத பெரும் பாலானவர்கள் அறியாதுள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்தமான சமூகமும், சமூகத்தின் பொதுப் பகைவனின் வளர்ச்சிக்கு இடமளித்து வருகின்றதென்பது கண்கூடான ஒரு உண்மையாகும்.
அவ்வாறெனில் இலங்கை மத்திய வங்கி, அரச வங்கிகள், நிதிக் கம்பனிகள், நிதிய முகாமையாளர்கள், வர்த்தகர்கள், நிதிச் சந்தைச் செயற்பாட்டாளர்கள், தரகர்கள், உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்கள், குடும்பத் துறை மற்றும் நுகர்வோர் ஆகிய அனைத்துத் துறைகளும் பணவீக்கத்தின் வளர்ச்சி மற்றும் இருப்புக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாவார்கள்.
வளர்ச்சியை உணருதல் அல்லது உணராதிருத்தல்
முழுமையான அல்லது முழுமையற்ற இரண்டு கால வீச்சுகளுக்கு இடையே, தேசிய உற்பத்தியினுள் பல்வேறு சிக்கலான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒருசில மாற்றங்கள் நடைபெறலாம். அவ்வாறான மாற்றங்களைப் பிரதானமாக குறுகிய கால மற்றும் நீண்ட கால மாற்றங்களாக அடையாளம் காண முடியுமாயுள்ளது. இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பீட்டு ரீதியிலான தகவல்கள் மற்றும் புள்ளிவிபரத் தரவுகளின்படி, குறிப்பிடப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு இடையிலான நேர்மறையான பொருளாதார வளர்ச்சியாகக் காணப்படுகின்ற 7.4 சதவீத வளர்ச்சியானது பல்வேறான சமூகப் பிரிவுகளுக்கு இடையிலும் பல வேறு கணி னோட் டங் களிலும் கேளிர் விக்கு உள்ளாக்கப்படுகின்றது. அவ்வாறான கேள்விகள் நீதியானதும் நியாயமானதுமாகும். இதன் மூலம் ஆழமானதொரு கலந்துரையாடல் கட்டியெழுப்பப்படுகின்றது. இதன் மூலம் மிகவும் துல்லியமான தகவல்கள் உறுதி செய்யப்பட்டு அறியப்படாத விடயங்கள் இருப்பின் அவை அறியப்பட்டு சிக்கல்கள் தீர்க்கப்படும்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2006 ஆம் ஆண்டில் 7.4 சதவீதமாக உள்ளதென அறிக்கையிடப்பட்டிருந்த போதிலும், இது சமூகத்தினால் உணரப்படாதிருப்பது ஏன்? என பெரும்பாலானவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்குச் சமமான கேள்வி எழுப்பும் முறையொன்று யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் ஐரோப்பா முழுவதிலும் ஏற்பட்டது. அப்போது கேன்சிய
2007 மே/ஜூன் - குறிப்பேடு

Page 15
பணவீக்கப் பகுப்பாய்வு விளக்க முறைகள் கூட ஏளனம் செய்யப்பட்டதாக அறியவருகின்றது. ஆயினும் பேராசிரியர் (856ir dair How to pay for the war 61 g) Lib 96.6007 gig56) காணப்படுகின்ற விடயங்கள் அப்போது வருமானப் பகுப்பாய்வு மற்றும் பணவீக்கத்துக்கான காரணத்தை விளக்குவதற்கு ஓர் உதவியாயமைந்ததெனி பது இரகசியமான தல ல. இக் காலகட்டமாகின்ற போது இலங்கையின் சமூகப் பின்னணியைக் கவனத்திற் கொண்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க ரீதியிலான அழுத்தம் தொடர்பாக ஏதேனுமொரு மட்டத்திலான அறிவியல் விளக்கமொன்றை வழங்குவதற்கு மேற்படி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களும் வழிகாட்டியாக அமையலாம். இதற்கிணங்க, இன்னோரிடத்தில் பணவீக்க ரீதியிலான அழுத்தம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பண நிரம்பலின் விரிவாக்கத்தின் மூலம் உருவாக்கப்படுகின்ற 'மிகைக் கேள்வி’ எனப்படுகின்ற ‘கேள்வியின் இழுவை'யும், உற்பத்திக் காரணிகளின் செலவினம் அதிகரிப்பதால் நடைபெறுகின்ற ‘செலவினத்தின் மூலம் உருவாகின்ற தள்ளுதலும்’ வலியுறுத்தி ஒதுக்கி வைக்கப்படக்கூடிய ஒன்றல்ல. பொருளாதார வளர்ச்சி நேரடியாக உணரப்படுவதில்லை என வாதிடப்பட்ட போதிலும், பேரண்டப் பொருளாதாரத்தினுள் உருவாக்கப்படுகின்ற வளர்ச்சியின் மூலம் ஒட்டுமொத்தமான நிலைமையினுள் ஏதேனுமொரு விரிவாக்கல் நடைபெற்றுள்ளமை இதன் மூலம் உறுதிப்படுத்தப் படுவதேயன்றி புறக்கணிக்கப்படுவதில்லை.
கேள்வி விரிவாக்கல் காரணிகள்
2006 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டப் பிரேரணைகளுக்கு இணங்க, அரச சேவையின் மீள் வகைப் படுத்தலும் , பகுதிகளாகப் பிரிக்கப்படுதலும் நடைபெற்றது. அதன் பின்னர் அனைத்துச் சேவைகள் மற்றும் பதவிகளின் பொருட்டு புதிய வரைவிலக்கணமளித்தலின் அடிப்படையில், புதியதொரு சம்பளக் கட்டமைப்பு அமுலாக்கப்பட்டது. இதன் மூலம் அண்ணளவாக 30 சதவீதம் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. தனியார் துறையினதும் ஆகக் குறைந்த பெயரளவிலான சம்பளச் சுட்டெண் பெறுமானங்கள் அண்ணளவாக 2 சதவீதம் அதிகரித்தது. அதேபோன்று முறைசாரா தனியார் துறையின் சம்பளச் சுட்டெண்களும் 2006 ஆம் ஆண்டில் 8-13 சதவீத வீச்சிடையில் அதிகரித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு நிலவிய மொத்த தொழில்புரிவோர் எண்ணிக்கையானது 6.8 மில்லியனில் இருந்து 2006 ஆம்
2007 மே/ஜ"ன். குறிப்பேடு

ஆண்டில் 7.1 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதேபோன்று தொழிற்படை 2005 ஆம் ஆண்டில் 92.8 இல் இருந்து 2006 ஆம் ஆண்டில் 93.5 வரை வளர்ச்சியடைந்துள்ளதைக் காணலாம். (மத்திய வங்கி ஆண்டறிக்கை 74 ஆம் பக்கம்) இதற்கிணங்க 2005 ஆம் ஆண்டில் 7.2 சதவீதமாயிருந்த தொழிலின்மையானது 2006 ஆம் ஆண்டில் 6.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்தமை மிகைக் கேள்வி எனப்படுகின்ற கேள்வியின் விரிவடைதலுக்குக் காரணமாயமைந்துள்ளதென்பது மிகத் தெளிவாகும். மேலும் சம்பளம் அதிகரித்தமை மற்றும் தொழில்புரிவோர் அதிகரித்தமை வளர்ச்சியின் அலைகளையே எடுத்துக் காட் டு கண் றன. மேற் படி அலைகளால உருவாக்கப்படுகின்ற அதிர்ச்சியினை அவர்கள் உணர்கின்றனர். இதற்கிணங்க பண்டங்கள் மற்றும் பணிகள் தொடர்பில் மேலதிகக் கேள்வி அழுத்தமும் விரிவடைதலும் உருவாகியுள்ளது. ஆதலால் இவர்களுக்கு வளர்ச்சியின் நன்மைகள் உரித்தாகவில்லையெனக் கூற முடியாது. அது மட்டுமன்றி ஏனைய துறைகளுக்கும் அவ்வாறே உள்ளது. ஒட்டுமொத்தமான சமூகத்தையும் பேரண்டப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் ஆராய்வோமெனில், சமூகத்தின் நுகர்வு அதிகரித்துள்ளமையைத் தெளிவாகக் காணலாம். தொடர்பூட்டல், போக்குவரத்து, உணவு பானங்கள், ஆடை அணிகள், பயணங்கள், பொழுதுபோக்கு ஊடகங்கள், கல்வி, சுகாதாரச் சேவை, கட்டிடவாக்கம், வீதிகள், சுற்றுலாச் சேவைகள் ஆகிய அனைத்துத் துறைகளும் விரிவடைந்துள்ளன. ஒருசில அறிவுபூர்வமான துறைகளிலிருந்து கூட, 2006 ஆம் ஆண்டு பெற்றோலிய விலைகள் அதிகரிக்கவில்லை எனக் கூறப்பட்டிருப்பினும், 2005 ஆம் ஆண்டில் 2008 (ஆயிரம்) ஆக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட மசகெண்ணெய்ப் பீப்பாய்க்களின் எண்ணிக்கை 2006 ஆம் ஆண்டில் 2153 (ஆயிரம்) ஆக வளர்ச்சியடைந்துள்ளதென்பது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க பெற்றோலியத்துக்கான செலவினமான 2005 ஆம் ஆண்டின் ரூபா 77,686 மில்லியன் தொகையானது 2006 ஆம் ஆண்டில் ரூபா 106,977 மில்லியனாக அதிகரித்துள்ளமை போலியானதல்ல. மேற்படி மசகெண்ணெய் கொள்வனவு செய்கின்ற விகிதாசாரம் 2005 ஆம் ஆண்டில் 26.5 சதவீதத்திலிருந்து 2006 ஆம் ஆண்டில் 37.7 சதவீதம் வரை 11.2 சதவீதத்தால் அதிகரித்துள்ளமை போலியானதல்ல என்பதை குறித்த நிறுவன அறிக்கைகளை பரிசீலனை செய்வதன் மூலம் அறிந்து கொள் ள முடியுமாயிருக்கும்.
2006 ஆம் ஆண்டில் நிலவிய 7.4 சதவீத பொருளாதார வளர்ச்சி ஒட்டுமொத்தமான சமூகத்தினாலும் இவ்வாறே
15

Page 16
உணரப் பட்டது. இதன் மூல மி , நுகர்வு முறை அதிகரித்துள்ளதென்பது தெளிவாகின்றது. மேற்படி புள்ளிவிபரத் தரவுகளும், தகவல்களும் உண்மையிலேயே நிலவுகின்ற தரவுகளையும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. உண்மைத் துறை, வெளிநாட்டுத் துறை, அரச நிதியியல் துறை, நிதித் துறை மற்றும் சமூக பொருளாதார நிலைமைகள் பற்றிய, மத்திய வங்கி ஆண்டறிக்கையில் விளக்கமான தகவல்கள் உள்ளடங்கியுள்ள ஏறத்தாழ பதினைந்து சிறப்புக் குறிப்புகளையும் வாசிப்பதன் மூலம் விளக்கமின்மையைப் போக்கிக்கொள்ளலாம்.
பொருளாதாரமும் பத்தாண்டு தூரநோக்கும்
மூவாயிரமாம் ஆண்டு ஆரம்பமாகியதைத் தொடர்ந்து உலக பொருளாதார வல்லரசுகளால் முழு உலகம் சார்பிலும் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிணங்க, குறித்த ஆயிரமாம் ஆண்டில் ஈட்டிக்கொள்ளப்பட வேண்டிய ஒருசில இலக்குகள் தொடர்பாக பொருளாதாரத் துறையும் , தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளது. இது ஒட்டுமொத்தமான உலகினதும் பொருளாதாரத் திட்டமாக உள்ளது. இதற்கிணங்க வறுமையைக் குறைத்தல் மற்றும் வருமானப் பகிர்வு முரண்பாட்டினைக் குறைத்தல் அடிப்படைத் தூரநோக்காயுள்ள தென்பது பகிரங்கமானதொரு விடயமாகும். ஆயிரமாம் ஆண்டினுள் குறித்த இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு திட்டம் வகுத்து அமுலாக்குகின்ற பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திட்டமிடல் என்பது சமூகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு ஊர்தியாகும். அதேபோன்று ஒரு சக் தியாகவும், ஒளியாகவும் , பிரகாசமாகவும் விளங் குகன் றது. தட் டத் தரின் அமம் சங் களை நிறைவேறி றிக் கொள் வதன் மூலம் இலக் கை நிறைவேற்றிக்கொள்ள முடியுமாயிருக்கும். அர்ப்பணிப்பும் வழிகாட்டலுமே தேவைப்படுகின்றது. நாட்டின் நிதியியல் மதியுரையாளர் என்றவகையில் மத்திய வங்கியானது எப்போதும் அப்போதைக்குள்ள அரசாங்கத்துக்கு மதியுரை வழங்குகின்றது. குறித்த இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு முன் ஆய்வுகளும் பின் ஆய்வுகளும் நடைபெறும். முழுமையான சுதந்திரமான ஒரு நிறுவனமென்ற வகையில் அவ்வாறு செயலாற்றுதல் மத்திய வங்கியின் கடமை மட்டுமன்றி முழுமையான ப்ொறுப்பாகவும் உள்ளது.
16.

இதற்கிணங்க ஒட்டுமொத்தமான பொருளாதாரத்தினதும், குறிப்பாக கிராமியத் துறையினதும் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் துரிதமாக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பத்தாண்டுத் தூரநோக்கு’ எனப்படும் நீண்டகால வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளின்பால் கவனம் செலுத்துதல் மத்திய வங்கியின் ஒரு பொறுப்பாகும். இது அரசாங்கத்தின் பிரதம பொருளியல் மதியுரையாளர் என்ற வகையில் இலங்கை மத்திய வங்கிக்குரியதொரு தேசிய பொறுப்புமாகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு புத்தாயிரமாம் ஆண்டின் இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருளாதார ரீதியிலான முயற்சிக்கு பங்களிப்புச் செய்தலுமாகும். இது வறுமையைக் குறைக்கின்ற முயற்சியின் பொருட்டுத் தேவையான அடிப் படை நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதாகும். இது நாட்டின் பிரதானமான பொருளாதாரத் திட்டமாகும். ஆதலால் நாட்டின் பிரதானமான நிதியியல் மதியுரையாளர் என்ற வகையில் இலங்கை மத்திய வங்கிக்குரியதொரு பொறுப்பாகவும் இதனைக் கருதுதல் வேண்டும்.
616IIữở đì60)Uu!tổ é9IÚl6ildbổđốl6)[UUJUD உணர்வதற்கெனில்
ஒரு நாட்டின் செயலுTக்கம் மிக்க குழுவினரது அர்ப் பணிப் பின் ஒருமுகத் தன்மையே பொருளாதார வளர்ச்சியாகும். திட்டவட்டமான ஒரு காலகட்டத்தில் காணக் கூடியதாயுள்ள பண்டங்கள் மற்றும் பணிகளின் உண்மைப் பெறுமதியை வளர்ச்சி’ எனவும்’ அத்தகைய வளர்ச்சியின் பெறுபேறாக நீண்ட கால ரீதியில் உணரப்படுகின்ற வளர்ச்சியை "அபிவிருத்தி’ எனவும் எளிமையான விதத்தில் குறிப்பிடலாம்.
பொருளாதார வளர்ச்சியை ஒரே தடவையில் ஒட்டுமொத்தமான சமூகமும் உணர்வதற்கெனில், தற்போதுள்ள வளர்ச்சி வேகம் மாற்றமடையாது பல வருடங்களுக்கு தொடர்ச்சியாகப் பேணிவரப்படுதல் வேண்டும் என்பது பொருளியலாளர்களது கருத்தாகும். சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஞ்ஞான ரீதியிலான நியமங்களின் படி கணிப்பிடப்படுவதெனில், அடையப்பெற்றுள்ள வளர்ச்சி வேகத்தைத் தொடர்ச்சியாகப் பேணிவர வேண்டிய ஆண்டுகளின் எண்ணிக்கையை உங்கள் அறிவின் பொருட்டு பின்வருமாறு காட் டலாம் . அதாவது பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாயிருப்பின், அத்தகைய வளர்ச்சி வீதத்தை 14 ஆண்டுகள் தொடச்சியாக நிலையாகப் பேணிவருதல் வேண்டும்.
2007 மே/ஜூன் - குறிப்பேடு

Page 17
அப்போது அபிவிருத்தியின் தாக்கத்தை அனைத்து சமூகப் படித்தரங்களும் உணரும். அதேபோன்று மொத்தத் தேசிய உற்பத்தியின் வளர்ச்சி 6 சதவீதமாயிருப்பின் 12 ஆண்டுகளிலும், வளர்ச்சி 7 சதவீதமாயிருப்பின் 10 ஆண்டுகளிலும், வளர்ச்சி 8 சதவீதமாயிருப்பின் 9 ஆண்டுகளிலும், வளர்ச்சி 10 சதவீதமாயிருப்பின் 7 ஆண்டுகளிலும் என்றவாறு நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தி ஒட்டுமொத்தமான சமூகத்தாலும் உணரப்படும். இதற்கிணங்க 7.4 சதவீத வளர்ச்சி வேகத்தைத் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் பேணிவர முடியுமாயிருப்பின் நிலைத்திருக்கத்த்க்க வளர்ச்சியின் தாக்கத்தை அனைவரும் உணர்வார்கள். இதனை நாட்டிலுள்ள அனைத்து பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்தியாளர்களால் மட்டுமே செய்யக்கூடியதாயுள்ளது. வழிகாட்டல், மதியுரை வழங்கல், உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல், கொடுப்பனவு தீப்பனவு முறைமையின் வினைத்திறனைப் பேணிவருதல், செலாவணி வீதத்தைப் பேணிவருதல், முதலீட்டு வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய விரிவான துறைகளின் நெறிப்படுத்தலை மட்டுமே மத்திய வங்கியினால் மேற்கொள்ள முடியும்.
2006 ஆம் ஆண்டின் மத்திய வங்கி ஆண்டறிக்கையை ஒழுங்காகவும் ஆழமாகவும் ஆராய்வதன் மூலம், பொருளாதார வளர்ச்சியின் முறையை அறிந்துகொள்ள முடியுமாயிருக்கும். தேவையாயிருப்பின் இரண்டு வருடங்கள் ஒப்பீடு செய்ததன் பின்னர் வளர்ச்சியை அறிந்துகொள்ள முடியும். ஒரு எளிய உதாரணத்தின் மூலம் காட்டுவதெனில், 2005 ஆம் ஆண்டின் தமது வருமானம் மற்றும் நுகர்வு முறையையும், 2006 ஆம் ஆண்டின் வருமானம் மற்றும் நுகர்வு முறையையும் உண்மையிலேயே நேர்மையான விதத்தில் ஒப்பீடு செய்து பார்ப்பதன் மூலம் தம் மாலேயே அறிந்துகொள்ள முடியுமாயிருக்கும். நாட்டில் ஓரளவு பணவீக்கமும் பணவீக்க
2007 மே/ஜூன். குறிப்பேடு

அழுத்தமும் உள்ளதென்பதையும், அதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள காரணிகள் தொடர்பாகவும் மேலே கலந்துரையாடினோம். அதேபோன்று நித்தமும் பெறப்படுகின்ற உண்மையான தரவுகளின் அடிப்படையில், பகுப்பாய்வு செய்து கணிப்பிடப்பட்ட காரணிகளுக்கு இணங்க பொதுவான பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாகும். இந்த வளர்ச்சி நாட்டின் பேரண்டப் பொருளாதார அமைப்பினுள்ளேயே இருக்கின்றது. அதனைப் புரிந்துகொள்வதற்கு இந்த எளிய உதாரணம் போதுமானதாயிருக்கும்.
கடல் உவர்ப்புச் சுவையைக் கொண்டுள்ளது. அங்கு ஒரு பெரும் நீர்ப்பரப்பு உள்ளது. அதில் நாள்தோறும் உலகம் பூராவுமுள்ள ஆறுகளின் நீர் சேர்கின்றது. எமது தீவைச் சுற்றிலுமுள்ள சமுத்திரமும் அவ்வாறானதே. மகாவலி, களுகங்கை, களனி, வளவை, நில் வலா, ஜிங்கங்கை ஆகியனவும் பெயர் குறிப்பிடப்படாத ஏனைய அனைத்து ஆறுகளும் ஆரைநரம்பு நீர் வடிகாலமைப்பு முறையில் தீவைச் சுற்றிலுமுள்ள சமுத்திரத்தில் நீரைச் சேர்க்கின்றன. அத்தகைய நீர் சேர்வதன் மூலம் சமுத்திரத்தின் நீர் மட்டம் ஓரளவு அதிகரிக்கின்றது. ஆயினும் .? ஆயினும் மேற்படி நீர் அதிகரிப்பதைக் கண்ணால் காண முடியாது. கையால் தொட்டுப் பார்க்க முடியாது. அதேபோன்று மகாவலி கங்கை நீர் என்றோ அல்லது நில்வலா கங்கை நீர் என்றோ சமுத்திரத்தில் கலந்துள்ள நீரை பிரித்து அதன் அளவினைக் கணிப்பிட முடியாது. ஆயினும் நீர் விரிவடைந்துள்ளது. அதனை நீர் உணர்கின்றது. சமுத்திரம் உணர்கின்றது.
பொருளாதார வளர்ச்சி வேகம் உணரப்படுவதும் அவ்வாறே.
அமரபால கரசிங்க ஆரச்சி
உதவிப் பணிப்பாளர் தொடர்பூட்டல் திணைக்களம்.
17

Page 18
உலக பொருள பொதுப்ே
அறிமுகம்
உலகின் எந்தவொரு நாடும் முகம்கொடுக்கின்ற பிரதானமான பொருளாதாரப் பிரச்சினைகள் சில உள்ளன. எதனை எவ்வளவு உற்பத்தி செய்தல் வேண்டும் என்பது அதில் முதலாவதாகும் வளங்கள் மட்டுப்பட்டதாயுள்ளதன் காரணத்தினால் மேற் படி பிரச் சினைக் குப் பெரும்பாலான நாடுகள் முகம்கொடுக்கின்ற போது மிகவும் கவனமாகச் செயலாற்ற வேண்டி வருகின்றது. இதற்குத் தீர்வு காண்பதானது அந்நாட்டில் அமுலிலுள்ள பொருளாதாரக் கட்டமைப்பில் தங்கியுள்ளது. குறிப்பாக திறந்த பொருளாதார முறையினுள் பற்றாக்குறையாயுள்ள வளங்களைப் பயன்படுத்துகின்ற விதம் மூடிய பொருளாதார முறையை விட வித்தியாசமானதாயிருக்கும்.
முதலாவது பிரச்சினைக்கு முகம் கொடுத்து, தீர்மானிக்கப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளை எவ்வாறு உற்பத்தி செய்தல் வேண்டும் என்பது இரண்டாவது பிரச்சினையாகும். அதாவது தெரிவு செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளை வரையறுக்கப்பட்டதாயுள்ள வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதாகும். வேறு விதத்தில் கூறுவதெனில், உற்பத்திக் காரணிகளை பண்டங்களை உற்பத்தி செய்யும் பொருட்டு பயன்படுத்துகின்ற விதமாகும். உற்பத்திக் காரணிகளின் உரித்துடைமைகளின் இயல்பைப் பொறுத்தும் அதேபோன்று அப்போதைக்குள்ள தொழில்நுட்ப அறிவைப் பொறுத்தும் பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்கின்ற முறை தீர்மானிக்கப்படும். இங்கு நாட்டில் நிலவுகின்ற பிரதானமான பொருளாதாரப் பிரச்சினை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும். உதாரணமாக, தொழிலின்மைப் பிரச்சினை நிலவுமெனில், உழைப்பை அதிகமாகப் பயன்படுத்தக்கூடிய உற்பத்தி முறைகளைப் பிரயோகிப்பது தொடர்பில் பொருளாதாரத் திட்டம் வகுப்போர் கவனம் செலுத்துவார்கள். எவ்வாறாயினும் உற்பத்திச் செலவுகளைப் போன்றே உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்களைப் பெற்றுக்கொள்வதிலுள்ள வசதி தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்படும்.
யாருக்காக உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பது ஒரு பொருளாதாரம் முகம்கொடுக்கின்ற மூன்றாவது பிரச்சினையாகும். வேறு விதத்தில் க்கூறுவதெனில், உற்பத்திகள் மற்றும் சேவைகள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன என்பதே இதன் மூலம் கூறப்படுகின்றது. இதற்கிணங்க ஒரு நாட்டின் வருமான முரண்பாடும் வறியோர் செல்வந்தர்களுக்கிடையிலான இடைவெளியும் தீர்மானிக்கப்படும்.
18

ாதாரமும் அதன் போக்கும்
மேற்படி மூன்று பிரச்சினைகளுக்கும் பல்வேறான பொருளாதாரங்களும் பல்வேறு விதத்தில் முகம்கொடுக்கின்றன. பெரும்பாலும் உலகின் பொருளாதாரங்கள் உறுதியானதாக இருக்காது. இது காலத்துக்குக் காலம் இடைக்கிடை மாற்றமடையும். மேற்படி மாற்றமுறும் இயல்பின் காரணமாக ஒரு பொருளாதாரத்தின் வீழ்ச்சியையோ அல்லது முன்னேற்றத்தையோ எதிர்பார்க்கலாம். அதேபோன்று மேற்படி பொருளாதாரங்கள் ஒன்றுடனொன்று தொடர்புபட்டதாக உள்ளன. எந்தவொரு நாட்டினாலும் தனியே நிலைத்திருக்க முடியாது. பொருளாதாரங்களுக்கு இடையே வளப் பகிர்விலுள்ள முரண்பாட்டினாலும், அரசியல் மற்றும் சமூகக் காரணிகளாலும் உலக பொருளாதாரத்தில் முரண்பாடொன்று நிலவுகின்றது. நாடுகளுக்கு இடையே நிலவுகின்ற தொடர்பின் காரணமாக பண்டங்கள் மற்றும் பணிகளின் பரிமாற்றமும் அதன் மூலம் பொருளாதாரங்களின் இணைப்பாக்கமும் நடைபெற்றுள்ளது. உலகில் தொழிநுட்ப அறிவு முன்னேற்றமடைந்துள்ளமை மேற்படி நாடுகளுக்கு இடையே நிலவுகின்ற தொடர்புகளுக்குப் பெரும் உதவியாக அமைந்துள்ளது.
நாடுகளின் வகைப்படுத்தல்
நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளைப் பகுப்பாய்வு செய்கின்ற போது உலக வங்கியானது தலா மொத்தத் தேசிய Ð BuğßGODULK3uu (Gross National Income per Capital) BTGEB56îGÖT வகைப்படுத்தலின் பொருட்டு அளவீடாகப் பயன்படுத்துகின்றது. இதற்கிணங்க ஒவ்வொரு பொருளாதாரமும் தாழ் வருமானம் பெறும் நாடுகள், நடுத்தர வருமானம் பெறும் நாடுகள், மற்றும் உயர் வருமானம்பெறும் Stel நாடுகள் என்றவாறு பிரதானமான மூன்று பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. நடுத்தர வருமானம் பெறுகின்ற நாடுகள் மீண்டும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படும். அதாவது தாழ் நடுத்தர வருமானம் மற்றும் உயர் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் என்றவாறாகும். இந்த நாடுகளை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் எனக் குறிப்பிடுகிறோம். எவ்வாறாயினும், வருமான மட்டத்திற்கு இணங்க கணிப்பிடுகின்ற போது 2005 ஆம் ஆண்டு பெறப்பட்ட வருமானத்திற்கு இணங்க தலா வருமானமாக அமெரிக்க டொலர் 875 அல்லது அதை விடக் குறைவாகப் பெற்ற நாடுகளே தாழ் வருமானம் பெறுகின்ற நாடுகளாகக் குறிப்பிடப்படுகின்றன. தாழ் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளின் வகையில் அமெரிக்க டொலர் 876 - 3,465 ஐப் பெறுகின்ற நாடுகளும் உயர் நடுத்தர வருமானத்தின் கீழ் அமெரிக்க டொலர் 3,466 - 10,725 ஐ வருமானமாகப் பெறுகின்ற நாடுகளும்
2007 மே/ஜூன் - குறிப்பேடு

Page 19
உள்ளடங்குகின்றன. உயர் வருமானத்தைப் பெறுகின்ற நாடுகளாக தலா வருமானமாக அமெரிக்க டொலர் 10.726 அல்லது அதை விட அதிக வருமாத்தைப் பெறுகின்ற நாடுகள் விளங்குகின்றன.
தாழ் வருமானம் பெறும் நாடுகள்
ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ்
பெனின்
பூட்டான்
பாகினா பாசோ
ւI([56ծlլգ காம்போஜ்
கமரூன் மத்திய ஆபிரிக்க
குடியரசு
கொமரொஸ்
கொங்கோ
ஐவரி கோஸ்ட் எரித்திரியா எதியோப்பியா
5bum
6T66
கினியா
கினி பிசவ்
ஹைட்டி இந்தியா
கென்யா
கொரிய குடியரசு 60)85ñigeğ6mü (Kyrgyz)
6)T(86 IT
லெசோதோ
லைபீரியா
(DL5ൺ6്
மாலாவி
LDIT65
மொரிடானியா
(3LDIT6)(3LT6 IIT
மொங்கோலியா
மொசாம்பிக்
மியன்மார்
நேபாளம் நிகரகுவா
நைகர் நைஜீரியா பாகிஸ்தான் பபுவா நியுகினியா
ருவண்டா
சாயோ டொம்மற்றும்
பிரின்சிபே
செனெகல்
சியராலியோன் சொலமன் தீவுகள்
சோமாலியா
சூடான்
தஜிகிஸ்தான்
தன்சானியா திமோர் லெஸ்டே
டோகோ
உகண்டா
உஸ்பெகிஸ்தான்
வியட்னாம்
யேமன் குடியரசு
gFTub suum
சிம்பாப்வே
தாம் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள்
அல்பேனியா அல்ஜீரியா
அங்கோலா
ஆர்மேனியா
அசர்பைஜான்
பெலாருஸ்
பொலீவியா
பொஸ்னியா மற்றும்
பிரசீல்
us)(335furt
கேப்வர்டே
சீனா
கொலொம்பியா
கியூபா
ஜிபொட்
டொமினிகன் குடியரசு
ஹர்க்சோகோவினா ஈக்வடோர்
(Ցլգա ՄՑ
ஈராக்
2g Duilds. BIT
ஜோர்தான்
பரகுவே
பேரு
பிலிப்பைன்
ரூமேனியா
2007 மே/ஜூன்- குறிப்பேடு
எகிப்து
எல்செல்வடோர்
Lીg? ஜோர்ஜியா கெளதமாலா
குயானா
ஹொன்டுராஸ்
இந்தோனேசியா
ஈரான் இஸ்லாமிய
(ՑԼգս IVՑi
தாய்லாந்து
GLT6örust
டியுனிசியா

கஸகஸ்தான் கிரிபனி
மெசடோனியா
மாலை தீவு மாஷல் தீவுகள் மைக்ரோனீசியா நமீபியா
சமோசா
சர்பியா மற்றும் மொன்டிநீக்ரோ
இலங்கை சூரினாம் சுவாசிலாந்து
சிரியா அராபி
டர்க்மெனிஸ்தான் யுக்ரேன்
வனுவாட்டு வெஸ்ட் பேங்க் மற்றும்
F
9 (uff (bcbó6g 6ldbuds GOTib. Gugitib (bsidb86i
அமெரிக்கன் சமோயா
SJ GOTTLIT
அன்டுவா மற்றும்பர்புடா ஹங்கேரியா
ஆர்ஜன்ரீனா
பாபடோஸ்
பெலிக்சே
பொட்ஸ்வானா
சிலி
கொஸ்டாரிகா
குரோஷியா
செக் குடியரசு
GLTroofs.T
ஈக்வடோரியல் கினியா
எஸ்டோனியா
கபொன்
உயர் வருமானம் பெறும் நாடுகள்
அன்டோரா
அருபா
அவுஸ்திரேலியா அவுஸ்திரியா
பஹாமாஸ்
பஹரேன்
பெல்ஜியம்
பர்முடா
புருனாய் ஒருசலாம்
856,
யேமன் தீவுகள் செனல் தீவுகள்
சைப்பிரஸ்
டென்மார்க்
பயரோ தீவுகள் பின்லாந்து
பிரான்ஸ்
லெட்டீவியா
லெபனான்
லிபியா
லிதுவேனியா
p(86).fuurt
முரிட்சன்
மயொட்டே
மெக்சிக்கோ
வடமரியானா தீவுகள்
ஒமான்
LIGO6)
LIFILDT
ஜேர்மனி
கிரீஸ்
கிரீன்லாந்து
குவாம்
ஹொங்கொங் (சீனா)
ஐஸ்லாந்து
ஐஸல் ஒப் மேன்
இஸ்ரேல்
இத்தாலி
ஜப்பான்
கொரியா
குவைற்
லிட்ரென்சிரெனே
லக்சம்பர்க்
மெகாசெப் (சீனா)
வோல்டோவா
மொனாக்கோ
போலந்து
ரஷ்யா
சீசெல்ஸ்
சுலோவக் குடியரசு
தென் ஆபிரிக்கா
சென்ற் கிற்ஸ் அண்ட்
நெவிஸ்
சென்ற் லுசியா
சென்ற் பின்சன்ற்
அண்ட் த கிரனாட்ன்ஸ்
டிரினிடாட் மற்றும்டொபாகோ
துருக்கி
உருகுவே
வெனிசியுலா குடியரசு
நெதர்லாந்து நெதர்லஸ்லேன்
அன்ட்ல்ஸ்
நியூ அலடோனியா நியூசிலாந்து
நோர்வே
போர்த்துகல்
போட்டோரிகோ
சண்மார்கோ
சவுதி அரேபியா சிங்கப்பூர்
சுலோவேனியா
சுவீடன்
ஐக்கிய அரேபியா
ஐக்கிய அமெரிக்கா
வர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரிக்கா)
மூலம்: உலக வங்கி
19

Page 20
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள்
மேற்படி அறிக்கையின் பிரகாரம் 2005 ஆம் ஆண்டில், தாழ் வருமானத்தைக் கொண்ட 54 பொருளாதாரங்களும், தாழ் நடுத்தர வருமானத்தைக் கொண்ட 58 பொருளாதாரங்களும் உயர் நடுத்தர வருமானத்தைக் கொண்ட 40 பொருளாதாரங்களும் உயர் வருமானத்தைக் கொண்ட 56 நாடுகளும் இருந்துள்ளன. இதற்கிணங்க அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களின் எண்ணிக்கை 152 ஆகும். இந்நாடுகளில் பொருளாதாரத்தைப் போன்றே அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டதாக இருந்த போதிலும் ஒருசில சிறப்பான பொதுப் பண்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேற்படி நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் மாற்றம் ஒட்டுமொத்தமாக கீழ் மட்டத்தில் நிலவுகின்றமை இதில் பிரதானமான பண்டாகும். இதைத் தவிர உழைப்பின் விளைவுத்திறன் கீழ் மட்டத்தில் நிலவுகின்றது. இதற்கிணங்க குறைந்து செல்கின்ற எல்லை விளைவுக் கோட்பாட்டின் மூலம் சுட்டிக் காட்டப்படுகின்ற தத்துவத்திற்கு இணங்க நிலம் மற்றும் மூலதனம் ஆகிய காரணிகள் நிலையாக இருக்கும்போது உழைப்பை அதிகமாக ஈடுபடுத்துவதன் மூலம் உழைப்பில் கிடைக்கின்ற எல்லை விளைவு ஓரளவு குறைவடையும். மேற்படி இயல்பை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ஊடாக விளக்குவதெனில், பெளதீக மூலதனம் அல்லது நிருவாக அனுபவம் குறைவாயிருப்பதால் உழைப்பின் மூலம் பெறக்கூடிய உயர்ந்தபட்சப் பயன் கிடைக்காதென்றே கூறமுடியுமாயிருக்கும். இது அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடப்படுகின்றபோது காணக்கூடியதாயுள்ள குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் என்பதே பொருளியல் நிபுணர்களின் கருத்தாகும் இதைத் தவிர உழைப்பவர்களது மற்றும் நிர்வாகிகளது சுய முன்னேற்றத்திற்கான தேவை, அவர்களிடம் உள்ள கருத்துக்கள், புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆற்றல் மற்றும் தேவைப்பாடுகள், ஒழுக்கம் மற்றும் தொழில் திருப்தி மற்றும் உடனலம் ஆகிய விடயங்களும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தலா உண்மை வருமானம் கீழ் மட்டத்தில் நிலவுகின்றமை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் காணக்கூடியதாயுள்ள மேலுமொரு பிரதானமான பண்பாகும். வருமானப் பரவலிலுள்ள சமமின்மையும், குடிசனத் தொகையில் அதிக சதவீதமானோர் ஏழ்மையினால் அல்லது வறுமையினால் பாதிக்கப்பட்டிருத்தலும், கல்வி மற்றும் எழுத்தறிவு கீழ் மட்டத்தில் நிலவுகின்றமையும், பாடசாலையை விட்டுச் செல்கின்ற சதவீதம் அதிகரித்து வருதலும், கல்வித் துறையில் இருக்கின்ற பாட நெறிகள் அந்நாட்டின் பொருளாதார அபிவிருத்தியுடன் பிணைந்ததாயில்லாதிருத்தலும், ஏனைய பண்புகளாகுமெனச் சுட்டிக்காட்டலாம்.
ஒட்டுமொத்தமாக நோக்குகின்றவிடத்து மேற்படி நாடுகளின் சனத்தொகை அதிகரிப்பு வேகம் ஓரளவு உயர் மட்டத்தில் நிலவுகின்றமையும் காணக்கூடியதாயுள்ள ஒரு பண்பாகும். பொதுவாக பிறப்பு வீதம் மற்றும் இறப்பு வீதம் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடப்படுகின்ற போது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உயர் மட்டத்தில் நிலவுகின்றது. அதேபோன்று தொழிலற்றோர் மற்றும் குறைதொழில் புரிவோரும் உயர் மட்டத்தில் நிலவுகின்றது. இவற்றிடையே, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் கமத்தொழில் உற்பத்தியானது தங்கிவாழும் கமத்தொழிலில் அதிகளவு தங்கியிருத்தலும் வெளிநாட்டு
20

வர்த்தகத்தின் போது முதனிலைப் பண்டங்களின் ஏற்றுமதி உயர் மட்டத்தில் நிலவுகின்றமையும் மேலுமொரு சிறப்பியல்புவாய்ந்த பண்பாக உள்ளது. இக்காரணங்களினால் அநேகமாக மேற்படி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்கள் சர்வதேச தொடர்புகளின் மீது அதிகளவில் தங்கியிருத்தலும், இதனுடாக உலக பொருளாதாரத்தின் நெருக்கடிகளுக்கு முன்னே மேற்படி நாடுகள் பாதிப்புகளுக்கு உள்ளாதலும் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாக உள்ளது. இதற்கிணங்க அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளினதும் முழு உலகினதும் பொருளாதாரத்துக்கு இடையே மிகத் தெளிவான ஒரு தொடர்பு உள்ளதென்பதைக் காணலாம்.
உலக பொருளாதாரத்தின் அண்மைக்கால போக்குகள்
2006 ஆம் ஆண்டின் முதலாவது பகுதியில் உயர் வருமானம் பெறும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3.1 சதவீதமாக இருந்ததோடு, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை ஒட்டுமொத்தமாக நோக்குகின்ற போது இது இரண்டு மடங்காக இருந்தது. அதாவது 7 சதவீதமாகுமென எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஒருசில ஆண்டுகளினுள் மிக அதிக வளர்ச்சி வேகத்தைக் கொண்ட நாடுகளைப் பொறுத்தவகையில் வட்டி வீதம் தாழ் மட்டத்தில் நிலவியன்மயையும் உலகளாவிய திரவத்தன்மை பிரதானமாக இதன் பொருட்டு உதவியாயமைந்தமையையும் காணலாம்.
எவ்வாறாயினும், ஒருசில நாடுகளில் பணவீக்க ரீதியிலான அழுத்தங்கள் உருவாகியுள்ளமையைக் காணலாம். எண்ணெய் ஏற்றுமதி நாடுகளிலும் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் உயர் சேமிப்பு மற்றும் பணவீக்க ரீதியிலான அழுத்தங்களின் காரணமாக நீண்ட கால வட்டி வீதங்கள் வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்காரணங்களைக் கவனத்திற் கொண்டு 2008 ஆம் ஆண்டாகின்ற போது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. உயர் வருமானம் பெறுகின்ற நாடுகளைப் பொறுத்தவரை உள்நாட்டுச் சந்தை வளர்ச்சி வேகம் எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தை விட வீழ்ச்சியடைந்துள்ளமை மேலும் பொருளாதார வளர்ச்சி குறைவடைவதற்குக் காரணமாக அமையலாம் என்பதோடு, இது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
2006 ஆம் ஆண்டில் உலக சந்தையில் மசகெண்ணெய்யின் விலை அமெரிக்க டொலர் 75 வரை அதிகரித்த போதிலும் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (World Gross Domestic Product) 3.9 சதவீதமாக விளங்கியது. இது 2005 ஆம் ஆண்டில் நிலவிய 3.5 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் ஓரளவு வலுவானதாகும் என்பதைக் காணலாம். அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரங்கள் ஓரளவு விரிவடைந்தமையே இதற்கான பிரதானமான காரணமாக இருந்தது. சராசரியாக உலக வெளியீடுகளில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் 38 சதவீதமானவற்றிக்குப் பங்களிப்புச் செய்கின்றன. மேற்படி நூற்றுவீதம் 2030 ஆம் ஆண்டாகின்றபோது 51 சதவீதமாக அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. 10.4 சதவீதமான சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி அபிவிருத்தியடைந்து வரும் ஒரு நாடென்ற வகையில் பிரதானமான இடத்தை வகிக்கின்றது. இது உலக பொருளாதார வளர்ச்சிக்கு 0.5 சதவீத பங்களிப்பை வளங்குகின்றதென்பது முக்கியமானதொரு விடயமாகும்.
2007 மே/ஜ"ன் - குறிப்பேடு

Page 21
2005 ஆம் ஆண்டில் நிலவிய 4.3 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகின்றபோது 2006 முதல் ஆறு மாத காலத்தினுள் உலக கைத்தொழில் உற்பத்திகளின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது. 2006 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழில் உற்பத்தி 5.6 சதவீத வேகத்தில் வரிவடைவதற்கு ஆரம்பித்தது. ஐரோப்பாவின் உயர் வருமானம் பெறுகின்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 2006 முதற் பகுதியில் அதிக வேகத்தைக் கொண்டிருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி முதல் இரண்டு காலாண்டுகளிலும் 3.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்தது.
தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டுச் செலவுகளிலான துரித வளர்ச்சியே இதற்கான பிரதானமான காரணமாக விளங்கியது. எவ்வாறாயினும் மேற்படி வருடத்தின் மூன்றாவது காலாண்டில் பிரான்ஸின் முதலீட்டுச் செலவுகள் வீழ்ச்சியடைந்தமையும், ஏற்றுமதிகள் வலுவிழந்ததினாலும் ஐரோப்பாவின் உயர் வருமானத்தைப் பெறுகின்ற நாடுகளின் ஒட்டுமொத்தமான அபிவிருத்தி வேகம் 2 சதவீத மந்தகதியிலான இயல்பைக் காட்டியது. இப்பிராந்தியத்தின் 2006 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்தமான பொருளாதார வளர்ச்சி வேகம் 2.5 சதவீதமாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
2005 ஆம் ஆண்டில் ஜப்பானின் வெளியீடுகள் அதிகரிப்பதற்கு ஆரம்பித்ததோடு 2006 ஆம் ஆண்டில் 2.9 சதவீதத்தால் வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஏற்றுமதிகளின் வளர்ச்சி பலவீனமாயிருந்த போதிலும் மூன்றாவது காலாண்டில் முதலீட்டுச் செலவுகள் அதிகரித்தமையின் காரணமாக வளர்ச்சியைக் காட்டியது.
இதற்கிடையே மசகெண்ணெய் விலை அதிகரித்தமை கைத் தொழில் நாடுகளின் பொருளாதாரத்தில் அதிக முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது. அதேபோன்று நிதியியல் கொள்கைகளின் தாராளமயமாக்கல் காரணமாக ஐக்கிய அமெரிக்காவின் மொத்த தேசிய உற்பத்தி 2007 ஆம் ஆண்டில் 2.1 சதவீதத்தால் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதோடு, இது 2008 ஆம் ஆண்டில் 3.0 சதவீதமாகலாமென கணிப்பிடப்பட்டுள்ளது.
தென் ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 2006 ஆம் ஆண்டில் 8.2 சதவீதமாகுமென மதிப்பிடப்பட்டிருந்தது. அதேபோன்று மேற்படி பிராந்தியத்தில் நுகர்வோர் வலுசக்திக்கான விலைகளின் பொருட்டு நேரடியான மற்றும் மறைமுகமான
குறிப்பு 02
உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி
மதிப்பீடு எதிர்பார்ப்புகள் |960-80, 1980-2000 2004 2005 --ബ്- ത്ത 2006 2007 2008 2008-30
ஒட்டுமொத்தமான உலக
பொருளாதாரம் 4.7 3.0 4. 3.5 3.9 3.2 3.5 2.9
உயர் வருமானம் பெறுகின்ற நாடுகள் 4.5 2.9 3.3 2.7 3.1 24 2.8 24
பிவிருக்கியடைர் :"* 62 34 72 66 7.0 64 61 40
வறிய ஆசிய
பிராந்தியம் 3.7 5.4 8.0 8. 8.2 7.5 7.0 4.3
2007 மே/ஜூன். குறிப்பேடு

மானியங்கள் வழங்கப்படுவதன் மூலம் பணவீக்க ரீதியிலானதொரு அழுத்தம் ஏற்பட்டுள்ளதோடு அரச வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறை உயர் மட்டத்தில் இருந்தது.
அரசியல் பிரச்சினைகள் இருந்த நேபாளத்தைத் தவிர வலயத்தின் ஏனைய நாடுகளில் ஆண்டின் முதற் பகுதியில் அபிவிருத்தி சாதகமானதாயிருந்தது. இந்தியா 2006 ஆம் ஆண்டின் முதற் காலாண்டின் போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.3 சதவீத வளர்ச்சியைக் காட்டியதோடு இதில் கைத்தொழில் மற்றும் பணிகளின் ஏற்றுமதி அதிக பங்களிப்பை வழங்கியது.
பாகிஸ்தானின் கைத்தொழில் உற்பத்தி 12 சதவீதத்தால் வளர்ச்சியடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2006 ஆம் ஆண்டின் முதற் பகுதியில் நடைபெற்ற தென் ஆசிய பிராந்தியத்தின் ஏற்றுமதிகள் 30 சதவீத வளர்ச்சியைக் காட்டுகின்றன. இதற்கிடையே காலநிலை சாதகமாயிருந்தமையின் காரணமாக 2006 ஆம் ஆண்டினுள் கமத்தொழில் உற்பத்தியில் அதிகரிப்பைக் காணக்கூடியதாயுள்ளது. மாலை தீவில் சுற்றுலாத் தொழில் வளர்ச்சியடைந்தமை, சுனாமி அனர்த்தத்தின் பின்னர் கட்டிடவாக்கத் தொழில் வளர்ச்சி கண்டமை ஆகியன காரணமாக அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 19 சதவீதத்தால் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பூட்டானில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புதிய நீர் மின்வலு நிலையத்தின் காரணமாக உற்பத்தி 10 சதவீதத்தால் அதிகரிக்கலாம். காஷ்மீர் நில நடுக்கம், யுத்தச் செலவுகள் அதிகரித்தமை என்பன காரணமாக பாகிஸ்தானின் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதம் அதிகரித்துள்ளமை மேற்படி பிராந்தியத்தினுள் காணக் கூடியதாயுள்ள விசேடமான விடயங்களாகும். அத்துடன் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு நேரொத்த வகையில் நிதியியல் மற்றும் நாணயக் கொள்கை பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் 2006 ஆம் ஆண்டின் ஏப்பிறல் மாதத்தில் அதன் பணவீக்கத்தை 6.2 சதவீதம் வரை வீழ்ச்சியடையச் செய்வதில் வெற்றிகண்டதோடு இது ஒற்றோபர் மாதத்தில் 8.1 சதவீதம் வரை மீண்டும் அதிகரித்தது. எவ்வாறாயினும் ஒட்டுமொத்தமான பிராந்தியத்தினுள் மசகெண்ணெய் விலை அதிகரிப்பின் பாதகமான விளைவுகள் முழுமையாகவே நுகர்வோர் மீது சுமத்தப்பட்டது. இதன் பெறுபேறாக பிராந்திய நாடுகளின் வெளிநாட்டுத் துறை எதிர்மறையான பங்களிப்பை பொருளாதார வளர்ச்சியில் காட்டியது. எவ்வாறாயினும் 2008 ஆம் ஆண்டில் மேற்படி பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவீதமாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
உசாத்துணை நூல்கள்
1. Michel P Tedero — “Economic Development” 2. Prospect for the Global Economy - the World Bank
3. WWW. Worlbank.org
எஸ்.ஆர். சுமனசேகர
சிரேஷ்ட உதவிப் பணிப்பாளர்
தொடர்பூட்டல் திணைக்களம்.
21

Page 22
யுவான் தெ ᏧᏑiᎣᏥ
IDக்கள் சீனாவில் பயன்படுத்தப்படுகின்ற நாணயம் உத்தியோக ரீதியில் ரன்மின்பி என்றே அழைக்கப்படுகின்றது. ஆனால் அனைவருக்கும் பழக்கப்பட்ட பெயர் யுவான் ஆகும். உலக பொருளாதார மேடையில் தற்போது நீண்ட காலமாக நடைபெற்று வருகின்ற ஒரு விவாதத்திற்கு அடிப்படையாக, மேற்படி யுவான் நாணயத்தின் பெறுமதி தொடர்பான விடயம் உள்ளது. இவ்விவாதத்தில் பிரதானமான தரப்பினர்களாக சீனாவும் ஐக்கிய அமெரிக்காவும் விளங்குகின்றன. சீனா தனது நாணயத்தை திட்டமிட்டே குறைந்த பெறுமதியில் பேணிவருகின்றதென்பது ஐக்கிய அமெரிக்கா சீனா மீது தொடுக்கின்ற குற்றச்சாட்டாகும். ஆதலால், யுவானின் பெறுமதியை 40 சதவீதத்தாலாவது அதிகரித்தல் வேண்டுமென ஐக்கிய அமெரிக்கா முன்மொழிகின்றது.
யுவானின் பெறுமதி பற்றிய மேற்படி சண்டை தற்போது மூன்று தசாப்தங்களுக்கு அண்மிய காலமாக நடைபெறுகின்ற சீனாவின் துரித பொருளாதார வளர்ச்சியின் காரணமாக உருவாகியதாகும். 1994 ஆம் ஆண்டிலிருந்து சீனா தனது நாணயத்தை அமெரிக்க டொலருடன் பிணைக்கப்பட்ட நிருவகிக் கப் பட்ட மிதக் கும் செலாவணி வீதப் பொறிமுறைக்கிணங்க கையாளுகின்றது. மேற்படி கால கட்டத்தினுள் சீனாவின் வர்த்தக மிகை மற்றும் வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கு ஒன்றுதிரள ஆரம்பித்தது. பொதுவாக மிகப் பெரும் வர்த்தக மிகையும் பாரிய வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கும் தேசங்களுக்கிடையே வர்த்தக மோதலுக்கு வழிவகுக்கின்றன. ஆதலால், சீன அரசாங்கத்தினால் யுவான் மதிப்பிறக்கம் செய்யப்பட்டு பேணிவரப்படுவதாலேயே மேற்படி நிலைமை உருவாகியுள்ளதென்பது ஏனைய நாடுகளின் கருத்தாகும்
2002 ஆம் ஆண்டிலிருந்து ஒருசில நாடுகள் - குறிப்பாக, யப்பான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா யுவானின் செலாவணி வீதம் தொடர்பில் சீனாவின் மீது நிர்ப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. சீனாவும் மேற்படி நிர்ப்பந்தங்களுக்கு ஓரளவு செவிமடுத்து செயலாற்றி வருவதைக் காணக்கூடியதாயுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி சீன மக்கள் வங்கி (அந்நாட்டின் மத்திய வங்கி) யுவானின் பெறுமதியை 2 சதவீதத்தால் அதிகரிக்கச் செய்தது. இதற்கிணங்க டொலருக்கு எதிரான செலாவணி வீதம் யுவான் 8.11 ஆக மாறியது. எவ்வாறாயினும் சீனாவின் மேற்படி ‘ஆரம்ப, படிப்படியான மற்றும் நிருவகிக்கத்தக்க கொள்கையினுள் யுவானின் நாளாந்தப் பெறுமதி 3 சதவீதத்துக்கு
22

IL-ÎIoor6or
6)
அதிகமாக அசைவுறுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை. 2005 ஜூலை 21 ஆம் திகதி தொடக்கம் 2006 ஜூலை 18 ஆம் திகதி வரையிலான ஒரு வருட காலத்தினுள் யுவானின் பெறுமதி மேலும் 137 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது. இதற்கிணங்க டொலருக்கு எதிரான புதிய செலாவணி வீதம் யுவான் 8 ஆக மாறியது.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியிலிருந்து திசெம்பர் இறுதியாகின்ற போது யுவான் 7.8 என்றவாறு செலாவணி வீதம் அதிகரித்தது. இது மூன்று மாதத்தில் 2.5 சதவீத அதிகரிப்பாகும். மேலும் இந்த ஆண்டு சனவரி தொடக்கம் மே மாத ஆரம்பம் வரை யுவானின் பெறுமதி மேலும் அதிகரித்தது. அதாவது டொலருக்கு எதிராக யுவான் 7.695 என்றவாறாகும். இதற்கிணங்க 2005 ஜூலை 21 தொடக்கம் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதியாகின்ற போது யுவானின் பெறுமதி அண்ணளவாக 7 சதவீதத்தால் அதிகரித்தது. அதாவது டொலருக்கு யுவான் 8.27 என்ற பெறுமதி யுவான் 7.695 என்றவாறு மாறியதன் மூலமாகும்.
யுவானின் பெறுமதி அதிகரித்தல் உண்மையிலேயே சீனாவின் ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2004 ஆம் ஆண்டில் 35.4 சதவீதமாயிருந்த ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி 2005 ஆம் ஆண்டு 28.4 சதவீதமாக மாறி 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. 2006 ஆம் ஆண்டின் முதற் பகுதியில் இது மேலும் 3 சதவீதத்தால் குறைவடைந்து 25.2 சதவீதமாக விளங்கியது. 2006 ஆம் ஆண்டை மட்டும் கவனத்திற்கொள்கின்ற போது ஏற்றுமதி வளர்ச்சி 23 சதவீதமாக இருக்கவேண்டியிருந்தது. எவ்வாறாயினும் 2006 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 14 ஆம் திகதி சீனாவினால் வரிச் சலுகை முறை நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டமையின் காரணமாக ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டவாறு வீழ்ச்சியடையவில்லை. பழைய ஏற்றுமதி வரிச் சலுகை முறையின் இறுதித் தினமான திசெம்பர் 14 ஆம் திகதிக்கு முன்னர் தமது ஏற்றுமதித் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்றுமதியாளர்கள் முனைந்தனர். இதன் பெறுபேறாக 2006 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டினுள் சாதனைபடைக்கத்தக்க விதத்தில் ஏற்றுமதித் துறை அதிக வளர்ச்சியைக் கண்டது. இதற்கிணங்க 2006 ஆம் ஆண்டு அறிக்கையிடப்பட்ட 27.2 சதவீத வளர்ச்சியின் மூலம் சுட்டிக்காட்டப்படுவது, யுவானின் பெறுமதி அதிகரித்தமை சீனாவின் ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. வெறுமனே
2007 மே/ஜூன் - குறிப்பேடு

Page 23
ஒரு சிறப்புரிமையை இழப்பதற்கு முன்னர் முடியுமான அளவு அனுபவிப்பதற்கு ஏற்றுமதியாளர்கள் முனைந்தமையையே இது எடுத்துக்காட்டுகின்றது.
எவ்வாறாயினும் சீனாவின் ஏற்றுமதித் துறையில் நடைபெற்ற மேற்படி வளர்ச்சி ஐக்கிய அமெரிக்காவின் தேவைப்பாடுகளுக்குச் சாதகமானதாக இருக்கவில்லை. 2006 ஆம் ஆண்டு திசெம்பர் 14-15 ஆகிய இரு தினங்களிலும் நடைபெற்ற சீன் - ஐக்கிய அமெரிக்க உபாய வழிமுறையிலான பொருளாதார மாநாட்டில் ஐக்கிய அமெரிக்காவின் கவலை வெளிப்பட்டது. இங்கு ஐக்கிய அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் ஹென்றி போல்சன், 2007 ஆம் ஆண்டில் யுவானின் பெறுமதி 5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமெனக் கூறினார். அதாவது 2007 ஆம் ஆண்டின் இறுதியாகின்றபோது டொலரின் செலாவணி வீதம் யுவான் 7.44 ஆதல் வேண்டுமென்பதாகும்.
ஐக்கிய அமெரிக்காவால் விடுக்கப்படுகின்ற மேற்படி அழுத்தத்தை சீனா வேறு விதத்திலேயே விபரிக்கின்றது. இங்கு வரலாற்றிலிருந்து விடயங்களைச் சமர்ப்பிக்கின்ற வகையில் சீனத் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற விளக்கம் மிகவும் ரசனைக்குரியதாக உள்ளது. ஐக்கிய அமெரிக்காவானது வெளிநாட்டுப் பொருளாதாரங்கள் வலுவடைகின்றபோது இதற்குச் சமமான விதத்தில் இதற்கு முன்னரும் செயற்பட்டுள்ளதாக சீனா கூறுகின்றது. 1970 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்கா பொய்ஷ மார்க்கின் பெறுமதியை அதிகரிக்குமாறு ஜேர்மனியை நிர்ப்பந்தித்தது. 1960 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு எதிரான செலாவணி வீதமாக டொய்ஷ மார்க் 4.2 விளங்கியது. இது 1990 ஆம் ஆண்டுகளாகின்றபோது டொய்ஷ மார்க் 1.5 வரை 64 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது. அதேபோன்று 1980 ஆம் ஆண்டுகளில் யென் நாணயத்தின் பெறுமதியை அதிகரிக்குமாறு ஐக்கிய அமெரிக்கா யப்பானை நிர்ப்பந்தித்தது. இதன் பெறுபேறாக 1985 இல் டொலருக்கு எதிராக இருந்த யென் 263 செலாவணி வீதம் 1988 ஆகின்றபோது யென் 128 என்றவாறு 51 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது. ஆயினும் ஐக்கிய அமெரிக்கா இன்னமுமே ஜேர்மனி மற்றும் யப்பானுடன் மேற்கொள்கின்ற கொடுக்கல் வாங்கல்களின்போது வர்த்தப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவுக்கு ஜேர்மனியுடன் டொலர் 295 பில்லியன் மற்றும் யப்பானுடன் டொலர் 81.3 பில்லியன் வர்த்தகப் பற்றாக்குறை இருந்தது. 2006 ஆம் ஆண்டாகின்றபோது இவை முறையே டொலர் 478 பில்லியன் மற்றும் டொலர் 88.5 பில்லியன் வரை அதிகரித்தது. யூரோவுக்கும் டொலருக்கும் இடையிலுள்ள தொடர்பும் இதற்கு இரண்டாம்தரமானதல்ல. 2002 சனவரி மாதம் இறுதியாகின்றபோது யூரோ 1 டொலர் 0.86 க்கு சமமானதாக இருந்தது. இது 2006 சனவரி 01 ஆம் திகதியாகின்றபோது டொலர் 129 வரை (அதாவது 50 சதவீதத்தால்) அதிகரித்தது. ஆயினும் 2001 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவுக்கு யூரோ பிராந்தியத்துடன் இருந்த டொலர் 54 பில்லியன் வர்த்தக நிலுவை 2005 ஆம் ஆண்டாகின்றபோது டொலர் 91.5 பில்லியன் வரை (அதாவது, 70 சதவீதத்தால்) அதிகரித்தது.
2007 மே/ஜூன். குறிப்பேடு

மேற்படி விடயத்தின் அடிப்படையில், ஒரு நாட்டின் வர்த்தக நிலுவையை குறைத்துக்கொள்வதற்கு ஏனையவர்களின் நாணயத்தின் பெறுமதியை அதிகரிக்குமாறு நிர்ப்பந்திக்கின்ற மரபுவழியிலான சர்வதேச வர்த்தக நடைமுறையைக் கவனத்திற்கொண்டு இற்றைப்படுத்தப்படுதல் வேண்டுமென சீனா கூறுகின்றது.
மேலும், யுவானின் பெறுமதி அதிகரித்ததன் பெறுபேறாக ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டுச் சந்தையில் பண்டங்களின் விலையும் அதிகரித்து வருகின்றது. 2006 திசெம்பர் நத்தார் பண்டிகை காலத்தில் ஐக்கிய அமெரிக்காவினுள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட புடவைகள் மற்றும் ஆடைகள் விலை 5 சதவீதத்தாலும், விளையாட்டுப் பொருட்களின் விலை 10 சதவீதத்தாலும் அதிகரித்தது. ஐக்கிய அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதிகளில் பெருமளவானவை ஐக்கிய அமெரிக்க நுகர்வோரின் நாளாந்தத் தேவைகளை நிறைவு செய்கின்றன. இந்த விடயத்தின் அடிப் படையில் , யுவானின் பெறுமதி துரிதமாக அதிகரிக்கப்பட்டமையின் காரணமாக ஐக்கிய அமெரிக்காவின் சாதாரண நுகர்வோரும் பாதிப்புக்கு உள்ளாகலாம் என சீனா கூறுகின்றது.
சீனாவின் உதவிக்கு ஐக்கிய அமெரிக்க - சீன வர்த்தகர் சபையும் கூட்டுச்சேர்ந்துள்ளது. மேற்படி சபையில் சீனாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 256 பல்தேசிய கம்பனிகள் உள்ளடங்குகின்றன. யுவானின் பெறுமதி துரிதமாக அதிரித்துச் செல்வதன் மூலம் தமது தொழில்துறை நடவடிக்கைகளில் பாதகமான தாக்கம் ஏற்படலாம் என அவர்கள் அச்சப்படுகின்றனர். ஆதலால், யுவானின் செலாவணி வீதம் ஒப்பீட்டளவில் நிலையானதாக இருக்க வேண்டுமென்பது அவர்களது கருத்தாகும்.
எவ்வாறாயினும், தற்போதுள்ள நிலைமைகளை ஆராய்ந்து பார்க்கின்றபோது, யுவானின் பெறுமதி மேலும் அதிகரிப்பதை எதிர்காலத்தில் காணலாம் என்பது தெளிவாகின்றது. இதன் காரணமாக சீனாவின் ஏற்றுமதித் துறையில் பெரும் வீழ்ச்சியொன்றை எதிர்பார்க்கலாம். இதனால், சீனாவின் வர்த்தக மிகையில் குறைவினையும் காணக் கூடியதாக இருக்குமென்பதில் சந்தேகமில்லை. ஆயினும், மேற்படி மாற்றங்களின்பால் சீனா வழக்கமான விதத்தில் படிப்படியாகவே முன்னேறிச் செல்லும். ஏற்றுமதித் துறையின் வீழ்ச்சி நேரடியாகவே தமது நாட்டின் தொழில் நிலையில் தாக்கத்தை ஏற்படுத்துமென்பது சீனாவுக்கு தெளிவானதொரு விடயமாகும். உலகில் மிக அதிகமான சனத்தொகை வாழ்கின்ற நாடாகிய சீனாவுக்கு தொழிலின்மை பற்றிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க நேரிடுவதென்பது சிறியதொரு விடயமல்ல. ஆதலால் யுவான் தொடர்பிலான சண்டை தொடர்ந்தும் சில காலங்களுக்கு நீடித்திருக்குமென்பதில் சந்தேகம் இருக்காது.
வருண சந்திரகிர்த்தி புள்ளிவிபரவியல் திணைக்களம்,
23

Page 24
2006 ஆண்டறிக்கை
2006 ஆண்டறிக்கையில் வழக்கமான விதத்தில் 15 சிறப்புக் உள்ளடக்கப்படுவதன் ஊடாக, ஆண்டறிக்கையின் மூலம் மேே கற்கையை எளிய முறையில் வழங்குதலும், ஆண்டினுள் செ எதிர்வரும் ஆண்டுகளினுள் மேலும் வளர்ச்சியடையத்தக்கதான து எதிர்பார்க்கின்றது.
2006 ஆண்டறிக்கையில் மத்திய வங்கியின் பிரதானமானதொரு போது ஆராயப்படுகின்ற பணவீக்கம் தொடர்பான 4 சிறப்புக் குறி
2007 இலும் அதற்கு அப்பாலும் பணவீக்க அழுத்தங்க பணவீக்கத்தினைச் சிறந்த முறையில் காட்டும் அளவி மையப் பணவீக்கம் (சிறப்புக் குறிப்பு 9)
விலைத் தளம்பலுக்கு எதிராக எண்ணெய் இறக்குமதிக
மத்திய வங்கி ஆண்டறிக்கை வெளியிடப்படுகின்ற போது ெ கவனம் செலுத்துகின்றனர். ஆதலால் எதிர்காலத்தில் மேற்படி அதற்கான தயார் நிலை மற்றும் கொள்கைகள் தொடர்பில் 2 சி
1. பத்தாண்டு கால அபிவிருத்திக் கட்டமைப்பு 2006 - 2 2. முக்கிய பொருளாதாரக் கொள்கை மாற்றங்களும் வழி
மத்திய வங்கியானது நிதியியல் துறையின் உயர் ஸ்தானமாக உறுதிப்பாடு மற்றும் நீடித்த நிலைத்திருத்தலை முன்னிட்டு மத்திய இது தொடர்பில் கவனத்தைச் செலுத்துகின்ற வகையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன.
வங்கிகளில் பொதுமக்களின் நம்பகத்தன்மையை வலுட் தென்னாசியாவில் வட்டி வீச்சு மற்றும் வட்டிவீத எல்ை வங்கிகளின் பங்கு உரிமையாண்மையினுடைய ஒழுங்கு நுண்பாக நிதியியல் நிறுவனங்கள் சட்டத்தின் வரைபு
நிதியியல் குழுமங்களின் கண்காணிப்பு (சிறப்புக் குறிட்
மத்திய வங்கி வெளிநாட்டுத் துறை தொடர்பிலும் கவனம் தயாரித்தல், அலுவல்சார் வெளிநாட்டு ஒதுக்குகளைப் பேணிவ பங்கேற்றல் ஆகிய துறைகள் தொடர்பாக கவனம் செலுத்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
1. பொருளாதாரச் சிக்கல்களும் மூலதனக் கணக்கை மே
குறிப்பு 6)
2. குடிபெயர்ந்த இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்தான
(சிறப்புக் குறிப்பு 7)
இதைத் தவிர பொருளாதார வளர்ச்சியில் மிகவும் அத்தியாவசிய சிறப்புக் குறிப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
1. உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான அரச தனியார் கூட்
கொழும்பு ~ 13, 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தையி இலங்கை மத்திய வங்கி தகவல் தி

* リリ
பின் சிறப்புக் குறிப்புகள்
குறிப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேற்படி சிறப்புக் குறிப்புகள் லழுப்பப்படுகின்ற ஒருசில கருத்துக்கள் தொடர்பில் மேலதிகக் பற்படுத்தப்பட்ட சிறப்பியல்புவாய்ந்த துறைகள் தொடர்பாகவும் துறைகள் தொடர்பாகவும் அறிமுகம் செய்வதையுமே மத்திய வங்கி
குறிக்கோளாகவுள்ள விலை உறுதிப்பாடு தொடர்பான விளக்கத்தின் ப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ளைக் கையாளுதல் (சிறப்புக் குறிப்பு 1) டலொன்றிற்கான தேவை (சிறப்புக் குறிப்பு 5)
களைக் காப்பிடுதல் (சிறப்புக் குறிப்பு 4)
பரும்பாலானவர்கள் பொருளாதார வளர்ச்சி வீதம் தொடர்பிலேயே பொருளாதார வளர்ச்சிப் போக்கு எவ்வாறானதாக இருக்கும், றப்புக் குறிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
016 (சிறப்புக் குறிப்பு 3) முறைகளும் 2006-2007 (சிறப்புக் குறிப்பு 15)
க் கருதப்படுகின்றது. ஆதலால் நிதியியல் துறையின் அபிவிருத்தி, வங்கியின் மீது சுமத்தப்பட்ட அதிகாரம் பயன்படுத்தப்படுகின்றது. 5 சிறப்புக் குறிப்புகள் இத்தடவை ஆண்டறிக்கையில்
படுத்தல் (சிறப்புக் குறிப்பு 2) ல தொடர்பான ஒப்பீட்டின் பூரணப்படுத்தல் (சிறப்புக் குறிப்பு 10)
படுத்தல்கள் (சிறப்புக் குறிப்பு 12)
(சிறப்புக் குறிப்பு 13)
니 14)
செலுத்துகின்றது. குறிப்பாக சென்மதி நிலுவை அறிக்கையைத் ருதல், வெளிநாட்டுச் செலாவணிச் சந்தைத் தொழிற்பாடுகளில் |வதன் காரணமாக, அது தொடர்பில் 2 சிறப்புக் குறிப்புகள்
லும் திறந்து விடுவதற்கான முற்தேவைப்பாடுகளும் (சிறப்புக்
பண அனுப்பல்களை உயர்த்துவதற்கான தேவைப்பாடு
மான காரணிகள் தொடர்பிலும் மத்திய வங்கி 2006 ஆண்டறிக்கையில்
டாண்மைகள் (சிறப்புக் குறிப்பு 8)
கே.பி.என்.எஸ். கருணாகொட
0மைந்துள்ள (ஆட்டுப்பட்டித்தெரு) கெளரி அச்சகத்தில் அச்சிடப்பட்டு ணைக்களத்தால் வெளியிடப்பட்டது.