கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2007.07-08

Page 1
୩
| ôib
U.
 

a 6036. மத்திய வங்கி நாணய நூதனசாலையின் 25
ஆண்டு நிறைவு (10)
சார்க் அமைப்பு (15)

Page 2
லகம் இன்று தனியொரு விளைநிலமாகும். சந்தை 2) பொருளாதரத்தையே கான முடியாத அளவுக்கு @lഖ| எந்தவொரு நாட்டிற்கும் தமது பொருளாதாரத் தேவைகளைத் தனியே சார்ந்திருக்கின்ற நிலைமைக்கு உள்ளாகியுள்ளன. ஒவ்வொரு நா தொடர்புகளைப் பேணிவருகின்றன. ஒரு நாடு ஏனைய நாடுகளுடன் பிரதிபலிக்கின்ற கண்ணாடியாக சென்மதி நிலுவை (Balance of Pay முக்கியமான மூன்று துறைகளாக நடைமுறைக் கணக்கு, மூல முடியும். இத்துறைகள் தொடர்பாக பன்னாட்டு நாணய நிதியத்தில் ஆம் பக்கங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்ற தெரிவு செய் நிலுவை அறிக்கையின் குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
நாடு நடைமுறைக் கணக்
ஐக்கிய இராச்சியம் - 791,509 யப்பான் 165,783 சீனா 160,818 பாகிஸ்தான் - 3463 சிங்கப்பூர் 33,212 ജൂബങ്ങ5 -647
ஒவ்வொரு நாடும் தமது பொருளாதார பலத்தை வெளிக்காட்ட அறிக்கையானது அனைவரினதும் கவனத்திற்கு உள்ளாதல் வே6
குறிப்பேடு ISSN 1391 - 7676
2007 ஜூலை/ஆகஸ்ட்
ஒரு பிரதியின் விலை ரூபாய் 10.00 வருடாந்த சந்தா ரூபாய் 120.00
(தபாற் கட்டணத்துடன்)
தொடர்பூட்டல் பணிப் பாளர், இலங்கை மத்திய வங்கி எனக் குறிப்பிடப்பட்ட காசுக் கட்டளைகள்/ காசோலைகள் பின் வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் “குறிப் பேடு" சஞ சிகையை மாதாந்தம் அஞ சலில் பெற்றுக்கொள்ளலாம்.
பணிப்பாளர், தொடர்பூட்டல் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, த.பெ.இல. 590, கொழும்பு.
“குறிப்பேடு’ சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள், கட் வங்கியின் கருத்துச்
 

யானது, உலகில் தனித்ததொரு சமூகத்தையோ அல்லது bறை ஒன்றுடனொன்று இணைத்து வைத்துள்ளது. இதற்கிணங்க நிறைவேற்றிக்கொள்ள முடியாத அளவுக்கு நாடுகள் ஒன்றிலொன்று டும் தொடர்ந்து ஏனைய நாடுகளுடன் பல்வேறான பொருளாதாரத் பேணிவருகின்ற பொருளாதார உறவு எனப்படுகின்ற தொடர்பைப் ment) அறிக்கை விளங்குகின்றது. சென்மதி நிலுவை அறிக்கையின் தனக் கணக்கு மற்றும் நிதிக் கணக்கு என்பவற்றைக் குறிப்பிட ன் 2006 ஆம் ஆண்டு புள்ளிவிபர அறிக்கையின் 10, 13 மற்றும் 16 யப்பட்ட ஒருசில நாடுகளின் 2005 ஆம் ஆண்டுக்கான சென்மதி
(அனைத்துத் தொகைகளும் ஐ.அ. டொலர் மில்லியனில்)
5 மூலதனக் கணக்கு நிதியியல் கணக்கு
- 4,351 785.454
- 4,878 - 145,007
4,102 - 148,480
202 3,642
- 202 -32,060 250 473
ப் பயன்படுத்துகின்ற சுட்டெண்ணாக உள்ள சென்மதி நிலுவை ண்டும்.
கட்டுரைகள்: பக்கம்
9 அவதானிக்கப்பட வேண்டிய சென்மதி 3
நிலுவை அறிக்கை
e இலங்கை மத்திய வங்கியின் நாணய 9.
நூதனசாலை 25 வருடத்தை நிறைவு செய்கின்றது
9 பிராந்திய பொருளாதார மேம்பாட்டுக்கு 13
ஏணியைப் போன்றுள்ள சார்க் அமைப்பு
அட்டைப்படம்: பூரீ தர்சன நாரன்பனாவ
டுரை ஆசிரியரின் கருத்தக்களேயொழிய இலங்கை மத்திய
களாகாதிருக்கலாம்.
2007 ஜூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 3
அவதானிக்கப்பட
வேண்டிய சென்மதி
நிலுவை அறிக்கை
Balance
Of
Payments
எம்டீஜீரணசிங்க பொருளியல் ஆராய்ச்சித் திணைக்களம்
2007 ஜூலை / ஆகஸ்டு - குறிப்பேடு
k

- ற் கால உலகில் எந்தவொரு பொருளாதாரமும் D தனிமைப்படுத்தப்பட்ட ஒரு பொருளாதாரமாக இருக்காது. அரசியல், லாசாரம், சமூகம் பொருளாதாரம் என்றவாறு பொருளாதாரமும் உலகின் னைய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணிவருகின்றது. இங்கு நாம் ரு பொருளாதாரம் வெளி உலகுடன் பேணிவருகின்ற பொருளாதாரத் தாடர்புகள் பற்றியே கவனம் செலுத்துகிறோம்.
வெளி உலகுடன் மேற் கொள்ளப் படுகின்ற காடுக்கல்வாங்கல்கள் ஒழுங்குமுறையில் பதிவு செய்யப்படுகின்றன. பொதுவாக ஒரு ஆண்டினுள் ஒரு நாடு உலகின் ஏனைய ாடுகளுடன் மேற்கொள்கின்ற அனைத்துக் கொடுப்பனவுகளையும் உலகின் ஏனைய நாடுகளிலிருந்து கிடைக்கின்ற அனைத்துப் பறுகைகளையும் ஒழுங்காக நிதியியல் ரீதியில் பதிவு செய்கின்ற பூவணத்தை சென் மதி நிலுவை அறிக் கையாகக் றிப்பிடுகிறோம்.”
சென்மதி நிலுவை அறிக்கையை பிரதானமான இரண்டு குதிகளாக வகுக்கலாம்.
1. நடைமுறைக் கணக்கு
2. மூலதன மற்றும் நிதியியல் கணக்கு டைமுறைக் கணக்கு டைமுறைக் கணக்கு என்பது சென்மதி நிலுவை அறிக்கையின் தலாவது பகுதியாகும். நடைமுறைக் கணக்கு மேலும் நான்கு உப ணக்குகளை உள்ளடக்கியதாயுள்ளது. வர்த்தகக் கணக்கு, பணிகள் ணக்கு, வருமானக் கணக்கு மற்றும் நடைமுறை மாற்றல் கணக்கு ன்றவாறாகும். நடைமுறைக் கணக்கின் பற்று வரவுகளுக்கு |டையிலான வித்தியாசம் நடைமுறைக் கணக்கு நிலுவை எனக் றிப்பிடப்படும். நடைமுறைக் கணக்கு நிலுவை எதிர்க்கணிய (-) புல்லது நேர்க்கணிய (+) பெறுமதியைக் கொண்டிருக்கலாம். ர்த்தகக் கணக்கு (பண்டங்கள் கணக்கு) ர்த்தகக் கணக்கில் பண்டங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகள் -ள்ளடங்கியிருக்கும். இறக்குமதி அல்லது ஏற்றுமதி டைபெறுகின்றபோது சுங்க அறிக்கைகளில் குறிக்கப்படுகின்ற ண்களுக்குப் புலப்படத்தக்கதாயுள்ள பெளதீக இயல்பைக் கொண்ட ண்டங்களை கட்புலனாகும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகளாகக் றிப்பிடுகிறோம் பண்டங்களின் ஏற்றுமதி வர்த்தகக் கணக்கில் வரவாகப் நியப்படும் என்பதோடு பண்டங்களின் இறக்குமதி வர்த்தகக் கணக்கில் ற்றாகப் பதியப்படும். வர்த்தகக் கணக்கின் வரவு மற்றும் பற்றுக்கு டையிலான வித்தியாசம் வர்த்கக் கணக்கு நிலுவையாகக் றிப்பிடப்படும். ஏற்றுமதி வரவு இற்க்குமதிப் பற்றை விட திகமாயுள்ள சந்தர்ப்பத்தில் வர்த்தகக் கணக்கு நிலுவை நேர்க்கணிய ) பெறுமதியைக் கொண்டிருக்கும் என்பதோடு, இறக்குமதிப் காடுப்பனவுகள் ஏற்றுமதிப் பெறுகைகளை விட அதிகமாயுள்ள ந்தர்ப்பத்தில் வர்த்தகக் கணக்கு நிலுவை எதிர்க்கணிய (-) பறுமதியைக் கொண்டிருக்கும். இலங்கையைப் பொறுத்தவரை பரும்பாலும் வர்த்தகக் கணக்கில் (பண்டங்கள் கணக்கு) பற்றாக்குறை

Page 4
எனப்படுகின்ற எதிர்க்கணிய (-) மீதியையே காணக்கூடியதாக
உள்ளது. 2006 ஆம் ஆண்டில் வர்த்தகக் கணக்குப் பற்றாக்குறை
நிலுவை ரூபா 350,037 மில்லியனாகும். (அ.டொ. 3370 மில்லியன்)
பணிகள் கணக்கு
சென்மதி நிலுவை அறிக்கையின் நடைமுறைக் கணக்கின்
இரண்டாவது பகுதி பணிகள் கணக்காகும். 2006 ஆம் ஆண்டில்
பணிகள் கணக்கின் நேர்க்கணிய மீதி ரூபா. 26,600 மில்லியனாகும்.
(அ.டொ. 257 மில்லியன்). பணிகள் கணக்கில் பின்வரும்
கொடுக்கல் வாங்கல்கள் பதிவு செய்யப்படும்.
1. போக்குவரத்துப் பணிகள் (பயணிகள் கட்டணங்கள், கப்பற்
கட்டணங்கள், துறைமுகப் பணிகள்)
சுற்றுலாப் பணிகள்
தொலைத் தொடர்புப் பணிகள்
கனணி, தகவல் பணிகள்
கட்டிடவாக்கப் பணிகள்
காப்புறுதிப் பணிகள்
ஏனைய வர்த்தகப் பணிகள்
8. அரச செலவுகள் (வேறு எங்கும் குறிப்பிடப்படாத) வருமானக் கணக்கு நடைமுறைக் கணக்கின் மூன்றாவது பகுதி வருமானக் கணக்காகும் வருமானக் கணக்கில் பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் பதிவு செய்யப்படும்.
1, ஊழியர்களின் இழப்பீடு (ஊழியர் சம்பளம், மதியுரைச்
சேவைக் கட்டணங்கள்) 2. நேரடி முதலீட்டு வருமானம் 3. வட்டி மற்றும் ஏனையவை 2006 ஆம் ஆண்டில் வருமானக் கணக்கின் பற்றாக்குறை நிலுவை அமெரிக்க டொர் 388 மில்லியனாகும். நடைமுறை மாற்றல் கணக்கு மாற்றல் என்பது தனித்தரப்பால் மேற்கொள்ளப்படுகின்ற நிதியியல் அல்லது உண்மை உட்பாய்ச்சலாகும். நடைமுறை மாற்றல் கணக்கில் பின்வரும் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளடங்குகின்றன.
1. தனியார் நடைமுறை மாற்றல்கள் 2. அரச நடைமுறை மாற்றல்கள் (நடைமுறை அலுவல்சார்
மாற்றல்கள்)
வெளிநாடுகளில் தொழில் புரிவோர் தமது உறவினர்களுக்கு வாழ்வாதாரத்தின் பொருட்டு அனுப்புகின்ற பணம் தனியார் நடைமுறை மாற்றல்களின் கீழ் வருகின்றன.
அலுவல்சார் மாற்றல்கள் என்பது அரசாங்கத்துக்குக் கிடைக்கின்ற நன்கொடைகள் மற்றும் கொடைகளாகும். 2006 ஆம் ஆண்டில் திரண்ட நடைமுறை மாற்றல்கள் அமெரிக்க டொலர் 2169 மில்லியனாக இருந்ததோடு இதில் அமெரிக்க டொலர் 2068 மில்லியன் தனியார் மாற்றல்களாக இருந்தன. அலுவல்சார் மாற்றல்களின் தொகை அமெரிக்க டொலர் 101 மில்லியனாகும்.
இலங்கையின் வர்த்தகக் கணக்கை நோக்குகின்ற போது நீண்ட காலமாக வர்த்தக நிலுவை எதிர்க்கணிய () பெறுமதியைக் கொண்டுள்ளதென்பது தெளிவாகின்றது. ஏற்றுமதிப் பெறுகைகள் குறைவடைந்தமையும் இறக்குமதிக் கொடுப்பனவுகள் அதிகரித்தமையுமே இதற்கான காரணமாகும். வர்த்தகக் கணக்கு நிலுவை 2005 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலர் -2516 மில்லியனாக இருந்ததோடு 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலர் -3370 மில்லியனாக இருந்தது.

வர்த்தகக் கணக்கின் நிலுவை எதிர்க்கணிய (-) பெறுமதியைக் கொண்டிருந்த போதிலும் ஒருசில சந்தர்ப்பங்களில் நடைமுறைக் கணக்கின் நிலுவை நேர்க்கணிய (+) பெறுமதியைக் கொண்டிருக்கலாம். நடைமுறைக் கணக்கின் ஏனைய விடயங்களான பணிகள், வருமானம் மற்றும் நடைமுறை மாற்றல்கள் ஆகிய கணக்குகளில் நேர்க்கணிய (+) மீதி அறிக்கையிடப்படுதலே இதற்கான காரணமாகும். இதனால் வர்த்தகக் கணக்கு நிலுவை எதிர்க்கணிய (-) பெறுமதியைக் கொண்டிருந்த போதிலும் நடைமுறைக் கணக்குக்குரிய ஏனைய கணக்கு மீதிகளின் கூட்டுத்தொகை (பணிகள், வருமானம் மற்றும் நடைமுறை மாற்றல்கள்) பண்டங்கள் கணக்கின் பற்றாக்குறையை விஞ்சுகின்ற நேர்க்கணிய (+) மீதியாயிருப்பின் நடைமுறைக் கணக்கு நிலுவை நேர்க்கணிய (+) பெறுமதியைக் கொண்டிருக்கும்.
நடைமுறைக்கணக்கின்உள்ளமைப்பைக்காட்டுகின்றபாய்ச்சல்வரைபடம்
நடைமுறைக் கணக்கு
வர்த்தக பணிகள் வருமானக் நடைமுறை மாற்றல்கள்
பண்டங்கள் பண்டங்கள் பணிகள் பனிகள் வருமான வருமான தனியார் அலுவல்சார் இறக்குமதி ஏற்றுமதி வரவு பற்று வரவு g
us பற்று வரவு பற்று
நடைமுறைக்கணக்கின் மாதிரி (கற்பனைத் தொகைகளின் மூலம்) அனைத்துத் தொகைகளும் ரூபா மில்லியனில்
1. வர்த்தக நிலுவை -500
ஏற்றுமதிப் பெறுகைகள் 300 இறக்குமதிக் கொடுப்பனவுகள் 800 2. பணிகள் கணக்கு 200 பெறுகைகள் 500 கொடுப்பனவுகள் 300 3. வருமானக் கணக்கு -125
பெறுகைகள் 75 கொடுப்பனவுகள் 200 4. வர்த்தக, பணிகள் மற்றும்
வருமானக் கணக்கு நிலுவை (1+2+3) -425 5. நடைமுறை மாற்றல்கள் 350 தனியார் (தேறிய) 200 அலுவல்சார் (தேறிய) 50 6. நடைமுறைக் கணக்கு நிலுவை (4+5) -75
2006 ஆம் ஆண்டில் இலங்கையின் பண்டங்கள் கணக்கின் பற்றாக்குறை அமெரிக்க டொலர் -3370 மில்லியனாக இருந்த போதிலும் நடைமுறைக் கணக்கு நிலுவையாக அமெரிக்க டொலர் -1334 மில்லியனே இருந்தது. பணிகள் கணக்கில் அமெரிக்க டொலர் +257 மில்லியன் மீதியும் நடைமுறை மாற்றல்கள் கணக்கில் அமெரிக்க டொலர் +21 69 மில லியன் மீதயும் அறிக்கையிடப்பட்டிருந்தமையே இதற்கான காரணமாகும்.
மூலதன மற்றும் நிதியியல் கணக்கு
மூலதன மற்றும் நிதியியல் கணக்கு என்பது சென்மதி நிலுவை அறிக்கையின் இரண்டாவது பகுதியாகும். அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் கிடைக்கின்ற மூலதன மாதிரியிலான
2007 ஜூலை 1 ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 5
அளிப்புகள் மூலதன மாற்றல் கணக்கில் பதிவு செய்யப்படும் என்பதோடு அரசாங்கத்துக்கும் தனியார் துறைக்கும் கிடைக்கின்ற கடன்களும் முதலீடுகளும் நிதியியல் கணக்கில் பதிவு செய்யப்படும். 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலர் 291 மில்லியன் மூலதன மாற்றல்கள் கிடைத்ததோடு கடன்கள் மற்றும் முதலீடுகளாக அமெரிக்க டொலர் 1517 மில்லியன் கிடைத்தது.
மூலதன மற்றும் நிதியியல் கணக்கில் பதிவு செய்யப்படுகின்ற கொடுக்கல்வாங்கல்கள்
மூலதனக் கணக்கு
மூலதன மாற்றல்கள் நிதியியல் கணக்கு
நீண்டகால
நேரடி முதலீடுகள் தனியார் நீண்ட கால அரச நீண்ட கால குறுகிய கால
நானாவித முதலீடுகள் தனியார் குறுகிய கால அரச குறுகிய கால வர்த்தக வங்கிச் சொத்துக்கள் வர்த்தக வங்கிப் பொறுப்புகள்
திரண்ட நிலுவை திரண்ட நிலுவை எனப்படுவது, ஏதேனுமொரு திட்டவட்டமான கால கட்டத்தினுள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செய்யப்படுகின்ற அனைத்துக் கொடுப்பனவுகளுக்கும், ஏனைய நாடுகளிலிருந்து அந்நாட்டிற்கு உட்பாய்ச்சப்படுகின்ற அனைத்து பெறுகைகளுக்கும் இடையிலான வித்தியாசமாகும். நடைமுறை, மூலதன மற்றும் நிதியியல் கணக்கு நிலுவைகளின் கூட்டுத்தொகையே திரண்ட நிலுவையில் உள்ளடங்கியிருக்கும். திரண்ட நிலுவையில் உருவாகின்ற பற்றாக்குறை அல்லது மிகைக்கு ஏற்பவே சென்மதி நிலுவையில் பற்றாக்குறை அல்லது மிகை அடையாளம்காணப்படும். அதாவது திரண்ட நிலுவையில் எதிர்க்கணிய () பெறுமதி உள்ளதெனில் சென்மதி நிலுவையில் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படும் என்பதோடு, திரண்ட நிலுவையில் நேர்க்கணிய (+) பெறுமதி உள்ளதெனில் சென்மதி நிலுவையில் மிகையொன்று உள்ளதாகக் கூறப்படும்.
சென்மதி நிலுவை அறிக்கையில் அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களும் கணக்கீட்டு முறையின் இரட்டைப் பதிவு கணக்கீட்டு முறைக்கு இணங்கவே பதிவு செய்யப்படுகின்றன. இதற்கிணங்க நாட்டினுள் உட்பாய்ச்சப்படுகின்ற அனைத்துப் பெறுகைகளும் சென்மதி நிலுவை அறிக்கையில் வரவுப் பதிவுகளாகவும், நாட்டிலிருந்து வெளிப்பாய்ச்சப்படுகின்ற அனைத்துக் கொடுப்பனவுகளும் பற்றுப் பதிவுகளாகவும் கணக்குப் பதிவு செய்யப்படும். உதாரணமாக, ஏற்றுமதிப் பெறுகைகள் வரவுப் பதிவுகளாகக் கணக்குப் பதிவு செய்யப்படுமென்பதோடு இறக்குமதிக் கொடுப்பனவுகள் பற்றுப் பதிவுகளாகக் கணக்குப் பதிவு செய்யப்படும்.
கணக்குப் பதிவு செய்யப்படுகின்ற இயல்பைப் பொறுத்து சென்மதி நிலுவை அறிக்கையின் வரவுப் பதிவுகள் அல்லது
2007 ஜூலை / ஆகஸ்டு - குறிப்பேடு

பற்றுப் பதிவுகள் ஒன்றுடனொன்று சமமாக இருக்குமாதலால் சென்மதி நிலுவை அறிக்கையின் இறுதியில் நிச்சயமாக சமநிலையானதாக இருக்கும். சென்மதி நிலுவை அறிக்கை நிச்சயமாக சமநிலையானதாக இருந்தபோதிலும் சென்மதி நிலுவைப் பற்றாக்குறை தொடர்பிலும் பேசப்படுகின்றது. திரண்ட நிலுவையின் பற்றாக்குறை அல்லது மிகைக்கு இணங்கவே சென்மதி நிலுவை அறிக்கையின் பற்றாக்குறை அல்லது மிகை தொடர்பில் கலந்துரையாடப்படும். திரண்ட நிலுவையில் பற்றாக்குறை நிலவுமெனில் சென்மதி நிலுவைப் பற்றாக்குறை எனவும், திரண்ட நிலுவையில் மிகையொன்று நிலவுமெனில் சென்மதி நிலுவையில் மிகையொன்று உள்ளதெனவும் கூறப்படும்.
சென்மதி நிலுவை அறிக்கையின் மாதிரி (அனைத்துத் தொகைகளும் ஐ.அடொ. மில்லியனில்)
1. வர்த்தக நிலுவை -3370 ஏற்றுமதி 6883 இறக்குமதி 10253 2. பணிகள் கணக்கு (தேறிய) 257 பெறுகைகள் 1625 கொடுப்பனவுகள் 368 3. வருமானக் கணக்கு (தேறிய) -389
பெறுகைகள் 3 கொடுப்பனவுகள் 700 4. வர்த்தக, பணிகள் மற்றும் வருமானக்
கணக்கு நிலுவை (1+2+3) -3502 5. நடைமுறை மாற்றல்கள் (தேறிய) 270 தனியார் (தேறிய) 2069 அலுவல்சார் (தேறிய) O 6. நடைமுறைக் கணக்கு நிலுவை (4+5) -1332 7. மூலதனக் கணக்கு 360 தனியார் மூலதன மாற்றல்கள் (தேறிய) 290 அலுவல்சார் மூலதன மாற்றல்கள் (தேறிய) 70 8. நிதியியல் கணக்கு 500 நீண்ட கால (தேறிய) 800 நேரடி முதலீடுகள் 400 தனியார் நீண்ட கால (தேறிய) 300 அரச நீண்ட கால (தேறிய) 100 குறுகியகால 700 நானாவித முதலீடுகள் (தேறிய) 100 தனியார் குறுகிய கால (தேறிய) 300 வர்த்தக வங்கிகள் (தேறிய) 50 அரச குறுகிய கால (தேறிய) 150 9. ரூபாய்ப் பெறுமதி சீராக்கம் 2OO 10. தவறுகளும் விடுபாடுகளும் 300 11. திரண்ட நிலுவை (6+7+8+9+10) - 1028 12. நாணய அசைவுகள் 十i028

Page 6
சென்மதி நிலுவை அறிக்கையின் நடைமுறைக் கணக்கில் பற்றாக்குறை நிலவிய போதிலும், எப்போதும் திரண்ட நிலுவையில் பற்றாக்குறை ஏற்படாது. நடைமுறைக் கணக்கில் ஏற்படுகின்ற பற்றாக்குறை மூலதன மாற்றல் கணக்கின் மூலம் அல்லது நிதியியல் கணக்கின் மூலம் ஈடுசெய்யப்படுமெனில் திரண்ட நிலுவையில் மிகையொன்றே உருவாகும்.
உதாரணமாக 2005 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலர் 650 மில்லியன் பற்றாக்குறையொன்று நடைமுறைக் கணக்கில் இருந்த போதிலும் திரண்ட நிலுவை அமெரிக்க டொலர் 501 மில்லியன் மிகையாக இருந்தது. அமெரிக்க டொலர் 250 மில்லியன் மற்றும் அமெரிக்க மொலர் 974 மில்லியன் மிகையொன்று முறையே மூலதன மாற்றல் கணக்கிலும் நிதியியல் கணக்கிலும் உருவாகியிருந்தமையே இதற்கான காரணமாயிருந்தது.
சென்மதி நிலுவை அறிக்கையில் நடைமுறைக் கணக்கிற்கும் தேசிய கணக்குகளுக்கும் இடையிலுள்ள தொடர்பு
தனியார் நுகர்வு, பொது நுகர்வு மற்றும் மொத்த உள்நாட்டு மூலதன ஆக்கம் ஆகியவற்றை ஒன்றாகக் கூட்டுவதன் மூலமே
மூடிய பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டுச் செலவு கணிப்பிடப்படுகின்றது.
மொத்த உள்நாட்டு = தனியார் + பொது நுகர்வு + மொத்த உள்நாட்டு
செலவுகள் நுகர்வு மூலதன ஆக்கம்
(GIDE) (C) (G) (I)
GIDE R C -- G - I
மொத்த உள்நாட்டுச் செலவுடன் பண்டங்கள் மற்றும் காரணிகளல்லாத பணிகளின் ஏற்றுமதி கூட்டப்பட்டு பண்டங்கள் மற்றும் காரணிகளல்லாத பணிகளின் இறக்குமதி கழிக்கப்படுவதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மீதான செலவுகள் பெறப்படுகின்றன.
மொத்த உள்நாட்டு மொத்த பண்டங்கள் மற்றும் பண்டங்கள் மற்றும்
உற்பத்தி மீதான - உள்நாட்டுச் + காரணிகளல்லாத - காரணிகளல்லாத
செலவுகள் செலவு ஏற்றுமதி இறக்குமதி
GDP = GDE + XI - MI
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மீதான செலவுகளுடன் வெளிநாட்டு தேறிய காரணி வருமானத்தை (F) கூட்டுவதன் மூலம் மொத்த தேசிய உற்பத்தியின் மீதான செலவு பெறப்படுகின்றது. காரணிப் பணிகளுக்காக (வட்டி, இலாபம் மற்றும் பங்கிலாபம்) இந்நாட்டிற்குக் கிடைக்கின்ற வருமானத்திலிருந்து, காரணிப் பணிகளின் பொருட்டு இந்நாட்டினால் உறப்பட்ட கொடுப்பனவுகள் கழிக்கப்படுவதன் மூலமே வெளிநாட்டு தேறிய காரணி வருமானம் கணிப்பிடப்படுகின்றது.
(F = Fx – Fm)
மொத்த தேசிய = மொத்த உள்நாட்டு + வெளிநாட்டுத் உற்பத்தியின் உற்பத்தியின் தேறிய மீதான செலவுகள்
(GNP) மீதான செலவுகள் காரணி
(GDP)
வருமானம் (F) GNP = GDP + F

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விபரத்தைப் பின்வருமாறு 5T'L6 Tub.
GIDE=C+G+
GDP = C+G++XI+MI
GNP = GDP+F
சென்மதி நிலுவை அறிக்கையின் நடைமுறைக் கணக்கில்
உள்ளடங்குகின்ற பண்டங்கள் கணக்கு மற்றும் பணிகள் கணக்குகளின் மீதிகளே மேலே குறிப்பிடப்பட்டுள்ள விபரத்தில் பண்டங்கள் மற்றும் காரணிகளல்லாத பணிகள் எனக் கருதப்படுகின்றன. வெளிநாட்டுத் தேறிய காரணி வருமானம் எனக் கருதப்படுவது நடைமுறைக் கணக்கில் உள்ளடங்கியுள்ள வருமானக் கணக்கின் மீதியாகும்.
நடைமுறைக் கணக்கிற்கும் தேசிய கணக்கிற்கும் இடையே நிலவுகின்ற தொடர்பை பின்வருமாறும் காட்டலாம்.
மொத்த = மொத்த + நடைமுறைக் - தேறிய தேசிய உள்நாட்டுச் கணக்கு நடைமுறை உற்பத்தி செலவு நிலுவை மாற்றல்கள்
நடைமுறைக் கணக்கு மீதியிலிருந்து தேறிய நடைமுறை மாற்றல்கள் கழிக்கப்படுவதன் மூலம் பண்டங்கள், பணிகள் மற்றும் வருமானக் கணக்குகளின் மீதியே பெறப்படுகின்றது.
மொதே.உ = மொஉஉ+ பண்டங்கள் பணிகள் மற்றும்
வருமானக் கணக்கு நிலுவை
மொத்த = மொத்த + நடைமுறைக் - தேறிய - வருமானக் உள்நாட்டு உள்நாட்டு கணக்கு நடைமுறை கணக்கு உற்பத்தி செலவு நிலுவை மாற்றல்கள் நிலுவை
நடைமுறைக் கணக்கு மீதியிலிருந்து தேறிய நடைமுறை மாற்றல்களும் வருமானக் கணக்கு மீதியும் கழிக்கப்படுவதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகள் கணக்கின் மீதி பெறப்படுகின்றது. அதாவது:
மொஉஉ = மொஉசெ. + பண்டங்கள் மற்றும் பணிகள்
கணக்கு நிலுவை
மேலே தரப்பட்டுள்ள விளக்கங்களுக்கு இணங்க மொத்த உள்நாட்டுச் செலவுடன் பண்டங்கள் மற்றும் பணிகள் கணக்கின் மீதியைக் கூட்டுகின்றபோது மொத்த உள்நாட்டு உற்பத்தி கிடைக்கின்றது. இதற்கிணங்க ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட மொத்த உள்நாட்டுச் செலவு அதிகமாயிருப்பின் அதே அளவில் சென்மதி நிலுவை அறிக்கையில் பண்டங்கள் மற்றும் பணிகள் கணக்கில் பற்றாக்குறையைக் காணலாம். அதேபோன்று மொத்த உள்நாட்டுச் செலவை விட மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாயிருப்பின் அதே அளவில் பண்டங்கள் மற்றும் பணிகள் கணக்கில் மிகையினைக் காணலாம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் வெளிநாட்டுத் தேறிய காரணிகள் வருமானத்தைக் கூட்டுவதன் மூலமே மொத்த உள்நாட்டு உற்பத்தி
2007 ஜூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 7
மொத்த தேசிய உற்பத்தியாக மாற்றப்படும். வெளிநாட்டுத் தேறிய காரணி வருமானம் என்பதன் மூலம் வருமானக் கணக்கு மீதியே கருதப்படும் என்பதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் வருமானக் கணக்கு மீதி கூட்டப்படுவதன் மூலம் மொத்தத் தேசிய உற்பத்தி பெறப்படுகின்றது.
மொத்த தேசிய = மொத்த உள்நாட்டு + வெளிநாட்டு தேறிய உற்பத்தி உற்பத்தி காரணி வருமானம்
மொத்த தேசிய = மொத்த உள்நாட்டு + வருமானக் கணக்கு
உற்பத்தி உற்பத்தி நிலுவை
ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் மொத்தத் தேசிய உற்பத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாயிருப்பின் அதற்குச் சமமான விதத்தில் நடைமுறைக் கணக்கின் வருமானக் கணக்கு மீதியில் மிகையொன்று உள்ளதென்பதும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட மொத்த தேசிய உற்பத்தி குறைவாயிருப்பின் அதற்குச் சமமான விதத்தில் வருமானக் கணக்கில் பற்றாக்குறையொன்று உள்ளதென்பதுமே இதன் மூலம் தெளிவாகின்றது.
சென்மதி நிலுவை மிகையின் பொருளாதார எதிர்விளைவுகள் சென்மதி நிலுவை அறிக்கையில் திரண்ட நிலுவையில் மிகையொன்று உருவாகுமெனில், அதனை சென்மதி நிலுவை மிகையாகக் குறிப்பிடுகிறோம். சென்மதி நிலுவை மிகையொன்று உள்ள சந்தர்ப்பத்தில் பின்வரும் பொருளாதார எதிர்விளைவுகள் உருவாகலாம்.
1. வெளிநாட்டுச் சொத்துக்களின் தொகை அதிகரித்தல். 2. வெளிநாட்டுச் சொத்துக்கள் அதிகரிப்பதன் மூலம் பண நிரம்பலில் விரிவாக்க ரீதியிலான தாக்கமொன்று உருவாதலும் அதன் மூலம் பண நிரம்பல் அதிகரித்து பணவீக்க நிலைமையொன்று உருவாதலும். 3. வெளிநாட்டுச் செலாவணி வீதத்தின் பெறுமதி
அதிகரிப்பதற்கு காரணமாயமைதல். 4. இறக்குமதியின் பொருட்டான வெளிநாட்டு ஒதுக்குகளின்
போதுமைக் காலம் அதிகரித்தல்.
சென்மதி நிலுவை நிதியிடல் சென்மதி நிலுவை அறிக்கையில் பற்றாக்குறை அல்லது மிகை ஏற்படுமிடத்து அத்தகைய பற்றாக்குறையை அல்லது மிகையைத் தீர்க்கும் முறையே சென்மதி நிலுவை நிதியிடல் என்பதன் மூலம் கருதப்படும்.
சென்மதி நிலுவை அறிக்கையின் நிதியியல் கணக்கு எனும் பகுதியிலுள்ள திரண்ட நிலுவையில் பற்றாக்குறை உள்ள போது வெளிநாட்டு ஒதுக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது வெளிநாட்டு ஒதுக்குகள் போதியதாயில்லாதவிடத்து வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதன் மூலம் அத்தகைய பற்றாக்குறையைத் தீர்க்கும் முறை காட்டப்பட்டிருக்கும். அதேபோன்று சென்மதி நிலுவையில் ஒரு மிகை உள்ளபோது அத்தகைய மிகையை,
2007 ஜூலை / ஆகஸ்டு - குறிப்பேடு

வெளிநாட்டு ஒதுக்குகள் அதிகரிக்கின்ற விதத்தில் பயன்படுத்தப்படுதலும் நிதியிடலில் காட்டப்பட்டிருக்கும்.
சென்மதி நிலுவைப் பற்றாக்குறையைத் தீர்த்தல். சென்மதி நிலுவைப் பற்றாக்குறையை நிதியிடும் பொருட்டு பின்பற்றப்படுகின்ற வழிமுறைகளைப் பிரதானமாக இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் காட்டலாம்.
1. குறுகிய கால வழிமுறைகள் 2. நீண்ட கால வழிமுறைகள்
குறுகிய கால வழிமுறைகள் சென்மதி நிலுவைப் பற்றாக்குறையை நிதியிடும் பொருட்டு பிரயோகிக்கப்படும் வெளிநாட்டு ஒதுக்குகளைப் பயன்படுத்துதல், பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்து கடன் பெறுதல் ஆகியன குறுகிய கால வழிமுறைகளின் கீழேயே வருகின்றன.
நீண்டகால வழிமுறைகள் சென்மதி நிலுவைப் பற்றாக்குறையொன்று உருவாகுவதற்கு, நாட்டினுள் உட்பாய்ச்சப்படுகின்ற வருமானங்கள் குறைவடைந்து நாட்டிலிருந்து வெளிப்பாய்ச்சப்படுகின்ற செலவுகள் அதிகரிப்பதே காரணமாய்மைகின்றது. ஆதலால் சென்மதி நிலுவைப் பற்றாக்குறையைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு அல்லது மிகையை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு செயலாற்றுகின்ற போது கட்டாயமாக நாட்டிற்குக் கிடைக்கின்ற பெறுகைகளை அதிகரிக்கச் செய்து நாட்டிலிருந்து வெளியே செல்கின்ற கொடுப்பனவுகளைக் குறைத்துக்கொள்ளுதல் வேண்டும். இதன் பொருட்டு பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம்.
1. சென்மதி நிலுவை அறிக்கையில் பற்றாக்குறையொன்று உருவாவதற்கு, நடைமுறைக் கணக்கின் பண்டங்கள் கணக்கினுள் உருவாகின்ற பாதகமான நிலைமைகளே பிரதானமான காரணமாக அமைகின்றது. ஏற்றுமதிப் பெறுகைகள் குறைவடைந்து இறக் குமதிக் கொடுப்பனவுகள் அதிகரிப்பதன் காரணமாகவே மேற்படி பாதகமான நிலை உருவாகும். ஒருசில வருடங்களின் இலங்கையின் வர்த்தக நிலுவை எனப்படுகின்ற பண்டங்கள் கணக்கின் மீதிகள் கீழே தரப்பட்டுள்ளன. (ஐ.அ. டொலர் மில்லியனில்)
2003 2004 2005 2006 வர்த்தக நிலுவை -1539 -2243 -2516 -3370 (பண்டங்கள் கணக்கின் மீதி)
இலங்கையின் வர்த்தக நிலுவை தொடர்ந்து அதிகரித்து வருவதென்பதையே இதன் மூலம் காணக்கூடியதாயுள்ளது. ஏற்றுமதி வரவுகள் குறைவடைந்து இறக்குமதிச் செலவுகள் அதிகரிக்கின்ற போதே வர்த்தக நிலுவை உருவாகின்றது. ஆதலால் வர்த்தக மிகையொன்றை உருவாக்கிக் கொள்கின்ற போது அல்லது வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைத்துக்கொள்கின்ற போது ஏற்றுமதி வருவாய்களை அதிகரிக்கச் செய்து இறக்குமதிச் செலவுகளைக் குறைத்தல் வேண்டும். இதன் பொருட்டு பின்வரும் வழிமுறைகளைக் கையாள முடியும்.
1. ஏற்றுமதிய்ைப் பல்வகைப்படுத்தல் 2. மரபு ரீதியிலான ஏற்றுமதிகளை ஊக்குவித்தல் 3. வரி ஒதுக்கீட்டு முறை, பிணையக் களஞ்சிய வசதிகள், வரி விடுவிப்புகள் ஆகிய அரச நிதியியல் ஊக்குவிப்புகளை வழங்குதல்.

Page 8
4. ஏற்றுமதியை முன்னிட் டான உற்பத்திகளை
ஊக்குவித்தல். 5. முதலீட்டு மேம்பாட்டு வலயங்களைத் தாபித்தல். 6. ஏற்றுமதி உற்பத்திக் கிராமங்களைத் தாபித்தல். 7. வெளிநாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை
மேற்கொள்ளுதல். 8. ஏற்றுமதி விருது வழங்கல் ஆகியன மூலம்
ஏற்றுமதியாளர்களை ஊக்குவித்தல். 9. இறக்குமதிப் பதிலீட்டுக் கைத்தொழில்களை
முன்னேற்றுதல். 10. அத்தியாவசிய இறக்குமதிகளைத் தவிர ஏனைய இறக்குமதிகளை ஆர்வமிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 11. அத்தியாவசியமல் லாத இறக் குமதிகளைக்
கட்டுப்படுத்தல்.
சென்மதி நிலுவை அறிக்கையை சாதகமான நிலைமைக்கு மாற்றிக்கொள்கின்ற போது பண்டங்கள் கணக்கின் மீதிகள் மட்டுமன்றி ஏனைய கணக்குகளின் மீதிகளையும் சாதகமான நிலைமையில் பேணி வருதல் முக்கியமாகும். இதன் பொருட்டு பின்வரும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.
1. துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய
தொழிற்பாடுகளை விரிவாக்குதல். 2. சுற்றுலாத்துறை பெறுகைகளை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு அதனோடிணைந்த தொழிற்பாடுகளை விரிவாக்குதல், 3. வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளை விரிவடையச்
செய்தல், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவித்தல். 5. உள்நாட்டு விலையிலான பணவீக்கத்தைக்
கட்டுப்படுத்தல். 6. நாணயத்தை மதிப்பிறக்கம் செய்தல்.
நாணய மதிப்பிறக்கத்தின் மூலம் சென்மதி நிலுவைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணல். நாணய மதிப்பிறக்கம் என்பதன் மூலம், உள்நாட்டு நாணயத்தின் வெளிநாட்டுப் பெறுமதியைக் குறைத்தலே கருதப்படுகின்றது. மதிப்பிறக்கம் செய்யப்படுகின்ற போது வெளிநாட்டு நாணய அலகொன்றின் பொருட்டு செலுத்தப்பட வேண்டிய உள்நாட்டு நாணய அலகின் தொகை அதிகரித்தலே நடைபெறுகின்றது. இதன் காரணமாக ஏற்றுமதி விலைகள் குறைவடைதலும் நடைபெறும். ஆதலால் ஏற்றுமதிகளுக்கான கேள்வி அதிகரித்து ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும். அதேபோன்று இறக்குமதிகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய விலைகள் அதிகரிப்பதன் காரணமாக இறக்குமதிகளுக்கான கேள்வி குறைவடைந்து இறக்குமதிகளின் பொருட்டு செய்ய வேண்டிய கொடுப்பனவுகள் குறைவடைகின்றன. வர்த்தக நிலுவை சாதகமான நிலைமைக்கு மாறுதலே இதன் பெறுபேறாகும்.

ஆயினும் சென்மதி நிலுவைப் பிரச்சினைக்குத் தீர்வாக நாணய மதிப்பிறக்கம் செய்யப்படுகின்ற போது இலங்கை தொடர்பில் வலுவிலுள்ள ஒருசில வரையறைகள் (தடைகள்) உள்ளன.
1. இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு நெகிழ்வுத் தன்மையற்ற
கேள்வியே உள்ளதென்பது. ஒரு பண்டத்தின் விலை குறைவடைகின்ற போது அதனை விட அதிக வேகத்தில் கேள்வி அதிகரிக்காதிருப்பின் ஏற்றுமதி வருமானம் குறைவடையும். ஆதலால் நாணய மதிப்பிறக்கம் வெற்றியளிப்பதற்கெனில் ஏற்றுமதிகளுக்கு நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய கேள்வி இருத்தல் வேண்டும்.
2. குறுகிய காலத்தில் ஏற்றுமதி நிரம்பலை அதிகரிக்க
முடியாதுள்ளமை. விலை குறைவடைகின்ற போது உருவாகின்ற கேள்வியின் அதிகரிப்பின் மூலம் சாதகமானதொரு நிலைமையை அடைவதற்கெனில், விரைவாக நிரம்பலை அதிகரிக்கச் செய்தல் வேண்டும். இலங்கையின் ஏற்றுமதிகளைப் பொறுத்தவரை உயர் மட்டத்திலான சேர் பெறுமதியொன்று மரபு ரீதியான கமத்தொழில் ஏற்றுமதிகளுக்கே உள்ளன. கம ஏற்றுமதிகளின் நிரம்பலைக் குறுகிய காலத்தில் அதிகரிக்கச் செய்தல் கடினமாயுள்ளதன் காரணத்தினால் நாணய மதிப்பிறக்கத்தின் குறிக் கோள்களை நிறைவேற்றிக் கொள்ளுதல் கடினமானதாயிருக்கும்.
3. இறக்குமதிகளின் பொருட்டு நெகிழ்வுத் தன்மையற்ற கேள்வி
நிலவுகின்றமை.
நாணய மதிப்பிறக்கத்தின் போது வெளிநாட்டு நாணய அலகொன்றின் பொருட்டு செலுத்தப்பட வேண்டிய உள்நாட்டு நாணய அலகுகளின் தொகை அதிகரிப்பதனால், இறக்குமதிப் பண்டங்களின் விலை அதிகரிக்கும். இறக்குமதிப் பண்டங்களின் விலை அதிகரிக்கின்ற போது இறக்குமதிகள் தொடர்பில் உள்ள கேள்வி குறைவடைவதன் காரணமாக இறக்குமதிச் செலவுகள் குறைவடையுமென, நாணய மதிப்பிறக்கத்தின் போது எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதிச் செலவுகள் குறைவடைவதற்கெனில், இறக்குமதிகள் பேரில் உள்ள கேள்வி இறக்குமதி விலைகள் அதிகரிக்கின்ற வேகத்தை விட அதிக வேகத்தில் குறைவடைதல் வேண்டும். ஆயினும் இலங்கை இறக்குமதி செய்கின்ற பண்டங்களில் அதிக சதவீதமானவை அத்தியாவசியப் பணடங்களுக்கு உரித்தானவையாயுள்ளன. அத்தியாவசியப் பண்டங்களுக்கு நெகிழ்வுத் தன்மையற்ற கேள்வியே நிலவுகின்றது. இதன் காரணமாக கேள்வியின் அளவு, பண்டத்தின் விலை அதிகரித்த அளவை விட குறைந்த வேகத்திலேயே குறைவடையும். ஆதலால் நாணய மதிப்பிறக்கத்தின் பின்னர் இறக்குமதிகள் தொடர்பில் ஏற்கவேண்டி நேரிடுகின்ற செலவு முன்னரை விட அதிகரிக்கலாமென்பதால் பிரச்சினை மேலும் தீவிரமடையலாம்.
4. விலைப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாதிருத்தல்.
நாணய மதிப்பிறக்கத்தின் போது நாணயத்தின் பெறுமதி குறைவடைவதன் காரணமாக உள்நாட்டுப் பண்டங்களின்
2007 ஜூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 9
விலைகள் அதிகரிப்பதன் ஊடாக நடைபெறுகின்ற விலைப் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாதிருப்பின் நாணய மதிப்பிறக்கத்தினால் எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் இருக்கும்.
2006 ஆம் ஆண்டின் சென்மதி நிலுவை அறிக்கை 2005 ஆம் ஆண்டில் ஐ.அடொலர் -2516 மில்லியனாயிருந்த பண்டங்கள் கணக்கின் மீதிக்கு ஒப்பீட்டளவில் 2006 ஆம் ஆண்டில் பண்டங்கள் கணக்கின் மீதி ஐ.அ. டொலர் -3370 ஆக இருந்தது. 2006 ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருமானத்தின் அதிகரிப்பு 64 சதவீதமாயிருந்ததோடு, இறக்குமதிச் செலவுகளின் அதிகரிப்பு 15.7 சதவீதமாயிருந்தது. இதற்கிணங்க, ஏற்றுமதி வருமானம் அதிகரித்த வேகத்தை விட அதிக வேகத்தில் இறக்குமதிச் செலவுகள் அதிகரித்தமையே பண்டங்கள் கணக்கின் பற்றாக்குறைக்குக் காரணமாயிருந்தது. இறக்குமதிச் செலவுகள் அதிகரிப்பதற்குப் பின்வரும் விடயங்கள் ஏதுவாயிருந்தன.
1. இடைநிலைப் பண்டங்களின் இறக்குமதி 12.1
சதவீதத்தால் வளர்ச்சியடைந்தமை, 2. முதலீட்டுப் பண்டங்களின் இறக்குமதி 20.1
சதவீதத்தால் வளர்ச்சியடைந்தமை. 3. நுகர்வுப் பண்டங்களின் இறக்குமதி 20.5 சதவீதத்தால்
வளர்ச்சியடைந்தமை. 4. பெற்றோலியம், சீனி, பால் உற்பத்திகள், கோதுமை, உரம், மற்றும் இரசாயன உற்பத்திகளின் இறக்குமதி விலைகள் அதிகரித்தமை.
2005 ஆம் ஆண்டில் ஐ.அடொலர் 338 மில்லியனாக இருந்த பணிகள் கணக்கின் மிகைக்கு ஒப்பீட்டளவில் 2006 ஆம் ஆண்டில் பணிகள் கணக்கின் மிகை ஐ.அடொலர் 257 மில்லியனாக இருந்தது. 2005 ஆம் ஆண்டில் ஐ.அ. டொலர் - 299 மில்லியனாக இருந்த வருமானக் கணக்கின் பற்றாக்குறை மேலும் வளர்ச்சியடைந்து 2006 ஆம் ஆண்டில் ஐ.அ. டொலர் -388 மில்லியனாக இருந்தது. இதன் பெறுபேறாக பண்டங்கள், பணிகள் மற்றும் வருமானக் கணக்குகளின் மீதி, 2005 ஆம் ஆண்டின் ஐ.அ டொலர் 2478 மில்லியனுக்கு ஒப்பீட்டளவில் 2006 ஆம் ஆண்டில் ஐ.அ டொலர் -3502 மில்லியனாக விளங்கியது.
2005 ஆம் ஆண்டில் ஐ.அ. டொலர் 1738 மில்லியனாக விளங்கிய தனியார் மாற்றல்கள் மிகை 2006 ஆம் ஆண்டில் ஐ.அ. டொலர் 2068 மில்லியன் வரை அதிகரித்தது. அதேபோன்று 2005 ஆம் ஆண்டில் ஐ.அ. டொலர் 93 மில்லியனாக விளங்கிய அலுவல்சார் மாற்றல்களின் மிகை 2006 ஆம் ஆண்டில் ஐ.அ. டொலர் 101 மில்லியனாக இருந்தது. நடைமுறை மாற்றல்கள் கணக்கில் நிலவிய மேற்படி மிகையின்
2007 ஜூலை / ஆகஸ்டு - குறிப்பேடு

காரணமாக பண்டங்கள், பணி றும் வரும்ான்க் கணக்கில் நிலவிய ஐ.அ டொலர் -3502 மில்லியனாக இருந்த பற்றாக்குறை ஐ.அ. டொலர் -1334 மில்லியன் வரை குறைவடைந்தது.
ஆயினும் 2006 ஆம் ஆண்டில் நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறையான ஐ.அ. டொலர் -1334 மில்லியனை, 2005 ஆம் ஆண்டில் நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறையான ஐ.அ. டொலர் 650 மில லியனுடன் ஒப் புநோக்குகையில் குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்பாகும். நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறை மொ.உ.உ.யின் வீதமாகக் கருதப்படுமிடத்து 2005 ஆம் ஆண்டில் 2.8 சதவீதமாயிருந்ததோடு, 2006 ஆம் ஆண்டில் 4.9 சதவீதமாயிருந்தது.
2006 ஆம் ஆண்டில் சென்மதி நிலுவை அறிக்கையில் நடைமுறைக் கணக்கினுள் ஐ.அ. டொலர் -1334 மில்லியன் பற்றாக்குறை அறிக்கையிடப்பட்டது. ஆயினும் மூலதன மற்றும் நிதியியல் கணக்கினுள் அறிக்கையிடப்பட்ட ஐ.அ. டொலர் 1807 மில்லியன் மிகையின் காரணமாக இறுதியில் திரண்ட சென்மதி நிலுவையினுள் ஐ.அ. டொலர் 204 மில்லியன் மிகை
அறிக்கையிடப்பட்டது. (1வது புள்ளிவிபரக் குறிப்பைப் பார்க்கவும்)
1 வது புள்ளிவிபரக் குறிப்பு சென்மதி நிலுவை தொடர்பான அண்மைக் காலத் தகவல்கள் (அனைத்துத் தொகைகளும் ஐ.அ. டொலர் மில்லியனில்)
2002 2003 2004 2005 2006
1. வர்த்தக நிலுவை -1406 -1539 -2243 -256 -3370 ஏற்றுமதி 4699 533 5757 6347 6883 இறக்குமதி 6106 6672 8000 8863 0253 2. பணிகள் (தேறிய) 295 399 49 338 257 பெறுகைகள் 1268. 1411 1527 1540 1625 கொடுப்பனவுகள் 974 102 108 1202 1368 3. வருமானம் (தேறிய) -252 - 172 -204 -299 -388 பெறுகைகள் 75 70 57 35 3. கொடுப்பனவுகள் 328 341 360 335 700 4. வர்த்தகம், பணிகள் மற்றும்
வருமானம் (1+2+3) - 1364 -32 -2028 -2478 -3502 5. நடைமுறை மாற்றல்கள்(தேறிய) 1128 124 1380 1829 21.69 தனியார் மாற்றல்கள் 1097 1205 350 736 2068 அலுவல்சார் மாற்றல்கள் 31 36 30 93 101 6. நடைமுறைக் கணக்கு (4+5) .236 -71 -648 -650 - 334 7. மூலதன மாற்றல்கள் 65 74 64 250 291 8. நிதியியல் கணக்கு 379 648 567 974 1517 நீண்ட கால 326 722 680 798 906 குறுகிய கால 53 -75 - 12 76 60 9. ரூபாய்ப் பெறுமதி சீராக்கம் 93 - - - 10. தவறுகளும் விடுபாடுகளும் 38 148 -189 -72 -270 11. திரண்டநிலுவை(6+7+8+9+10) 338 502 -205 50 204 12. நாணய அசைவுகள் -338 -502. 205 -501 -204
மூலம்: மத்திய வங்கி அறிக்கை - 2006

Page 10
நிமல் லாலிதரத்னசேகர உதவி நாணயக் கண்காணிப்பாளர் நாணயத் திணைக்களம்
1O
த்திய வங்கி LDஅவர்களது மெல் அவர்களா கட்டிடத்தின் நில வங்கித்தொழில் வங்கியின் நாண நிறைவு செய்தது
நூதனசா6ை பண்டையகால U6)(36).jpg) buffa Lj600T60)LU35T6) வைக்கப்பட்டிரு பல்வேறு நபர்க நூதனசாலைக்கு நபர்களிடமிருந்து வங்கிகளிடமிருந்து மற்றும் தாள் வைக்கப்பட்டுள்ள
 

மத்திய வங்கி BrigaOTFITGANGI) 25 ளை நிறைவு செய்கின்றது
யின் ஆளுநராகப் பதவி வகித்த கலாநிதி வர்ணசேன இராசபுத்ரம் அழைப்பின் பேரில், முன்னாள் நிதி அமைச்சர் கெளரவ ரொனி த ல் 1982 ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி பழைய மத்திய வங்கிக் ) மாடியில் திறந்து வைக்கப்பட்ட (தற்போது மத்திய வங்கியின் கல்வி ஆய்வுநிலையத்தில் தாபிக்கப்பட்டுள்ள) இலங்கை மத்திய ய நூதனசாலை 2007.04.20 ஆம் திகதியன்று 25 ஆண்டுகளை J.
) ஆரம்பிக்கப்பட்டபோது இலங்கை மத்திய வங்கிக்கு உரித்தாயிருந்த நாணயக் குத்திகள் மற்றும் தாள்களும், கடன் அடிப்படையில் ளிடமிருந்தும் தேசிய நூதனசாலையிலிருந்தும் பெறப்பட்ட மற்றும் பெறுமதிமிக்க நாணய வகைகளும் காட்சிக்காக தன. அதேபோன்று பின்னர் இலங்கை மத்திய வங்கி நாட்டின் ரிடமிருந்தும் நாணயங்களைக் கொள்வனவு செய்தது. மேலும், பெரும் தொகையான நாணயங்கள் அன்பளிப்பாக பல்வேறு Iம் கிடைத்ததோடு, பல்வேறு நாடுகளின் பல்வேறு மத்திய பம் கிடைக்கப்பெற்ற பெரும் தொகையான மாதிரி நாணயக் குத்திகள் நாணயங்கள் மத்திய வங்கியின் நாணய நூதனசாலையில் I60T.
2007 ஜூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 11
இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள நாணய நூதனசாலை பாதுகாட்புக் காரணங்களுக்காக 1989 ஆம் ஆண்டிலிருந்து ராஜகிரியவில் அமைந்துள்ள வங்கித்தொழில் கல்வி ஆய்வு நிலையத்தில் தாபிக்கப்பட்டது. இதனால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தருகின்ற நாணயங்களைச் சேகரிப்பவர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் கல்வி நடவடிக்கைகளின் பொருட்டு வருகை தருகின்ற பாடசாலை மாணவர்களுக்கும் எவ்வித இடையூறுமின்றி மேற்படி நூதனசாலையை இலகுவாகப் பார்வையிட முடியுமாயுள்ளது.
இலங்கையின் கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்க அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் வரலாறு, தொழில் கல்வி ஆகிய பாடங்களில் இலங்கையின் நாணயக் குத்திகள் மற்றும் நாணயத் தாள்கள் தொடர்பாகவும் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், பாடசாலை மாணவர்களிடையே இலங்கையின் பண்டையகால நாணயக் குத்திகள் மற்றும் நாணயத் தாள்கள் பற்றிய கற்கை தொடர்பில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று உயர் தர மாணவர்களின் விசேட கருத்திட்டங்கள் தொடர்பாகவும் பெரும்பாலான மாணவர்கள் இலங்கையின் நாணயங்கள் தொடர்பிலான கருத்திட்டங்களைச் சமர்ப்பிக்க முற்பட்டுள்ளனர். இதனால் அநேகமான பாடசாலை மாணவர்கள் தமக்குத் தேவையான விபரமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு மேற்படி நூதனசாலைக்கு வருகை தருகின்றனர்.
பண்டையகால காசுகள் மற்றும் நாணயத் தாள்கள் ஒரு நாட்டின் பழைமைவாய்ந்த மரபுரிமை, சமூக நாகரிகம், மற்றும் சு பீட் சத் தைப் பிரதிபலிக் கினி ற கணிணாடியைப் போன்றதாகுமென்பதால் இது மிக முக்கியமானதொரு தேசிய வளமாகும்.
தற்போது இலங்கையின் பல்வேறு நிறுவனங்களால் சில நாணய நூதனசாலைகள் பேணிவரப்படுகின்றன. அவற்றில்,
1. இலங்கை வங்கி நாணய நூதனசாலை 2. சேமிப்பு வங்கி நாணய நூதனசாலை 3. மக்கள் வங்கி நாணய நூதனசாலை 4. ஹட்டன் நஷனல் வங்கி நாணய நூதனசாலை ஆகியன
உள்ளடங்குகின்றன.
இவற்றுக்கு மேலதிகமாக மிகப் பெரும் தொகையான பண்டையகால நாணயங்களின் திரட்சியொன்றை, தேசிய நூதனசாலைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான கொழும்பு, அநுராதபுரம் மற்றும் காலியில் அமைந்துள்ள நூதனசாலைகளில்
எவ்வாறாயினும் மேற்படி அனைத்து நூதனசாலைகளில் இலங்கை மத்திய வங்கியின் நாணய நூதனசாலை சிறப்பியல்புவாய்ந்ததாயுள்ளது. ஏனெனில், அங்கு அரிதான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் பெரும் தொகையான பண்டையகால காசுகள் மற்றும் நாணயத் தாள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு மேலதிகமாக மேற்படி நூதனசாலைக்கு உரித்தான காசுகள் மற்றும் நாணயத் தாள்களைப் பயன்படுத்தி நாட்டின் பல பாகங்களிலும் காசுகள் மற்றும் நாணயத்
2007 ஜூலை / ஆகஸ்டு - குறிப்பேடு

தாள்கள் உள்ளடங்கிய நடமாடும் கண் காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதனால் நாட்டின் பல பாகங்களிலுமுள்ள மக்களுக்கு இலங்கையில் பயன்படுத்தப்பட்ட பண்டையகால காசுகள் மற்றும் நாணயத் தாள்களைப் பார்வையிட்டு அது தொடர்பான அறிவையும் தெளிவையும் பெற்றுக்கொள்ள முடியுமாயுள்ளது.
நாணய நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கண்காட்சிப் பொருட்கள் தொடர்பான சுருக்கமான விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
(1) பண்டமாற்றுமுறையிலிருந்து மின்னியல் நாணயம் வரையிலான
நாணய முறையின் வளர்ச்சி
உலகில் நாணய முறை வளர்ச்சியடைந்த விதம் இதன் மூலம் வெளிக்காட்டப்படுகின்றது. பண்டையகால மனிதர்கள், பண்ணை உற்பத்திகள், விலங்குகள் மற்றும் பண்டங்களை பண்டமாற்றுச் செய்துகொண்ட முறை உருவங்கள் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று தற்போது பயன்பாட்டிலுள்ள கடன் அட்டைகள், பற்று அட்டைகள் மற்றும் நானாவித அட்டை வகைகள் அத்துடன் பல்வேறு வங்கிகளிலிருந்தும் வெளியிடப்பட்ட காசோலைகள் ஆகியனவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
(2) அனுராதபுர காலகட்டத்தில் இந்நாட்டில் பயன்படுத்தப்பட்ட
நாணய வகைகள் ஏறத்தாழ கி.மு. 3 வது நூற்றாண்டிலிருந்து கி.பி. 8 வது நூற்றாண்டு வரையில் அனுராதபுரத்தை இராசதானியாகக் கொண்டு ஆட்சி நடத்திய பல்வேறு மன்னர்களால் வெளியிடப்பட்ட பண்டையகால சிங்கள நாணயங்கள் (கஹவனு), பெளத்த சக்கர நாணயங்கள், ஸ்வஸ்திக நாணயங்கள், சதுர வடிவிலான நாணயங்கள், லக்ஷ்மி நாணயங்கள் மற்றும் பண்டையகால சிங்கள தங்க நாணயங்கள் (ரன் கஹவனு) என்பவற்றை இங்கு காணலாம். அதேபோன்று அன்று உரோம வர்த்தகர்களல் இந்நாட்டுக்கு எடுத்து வரப்பட்ட உரோம நாணயங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. (3) பொலனறுவைக் காலகட்டத்தில் இந்நாட்டில் பயன்படுத்த
-IIIL 5TGOIL 356 மேற்படி காலகட்டத்தில் தென் இந்திய திராவிட ஆக்கிரமிப்புகளை மிக அதிகமாகக் காணக்கூடியதாயிருந்ததோடு, அதன் பெறுபேறாக சேர, சோழ, பல்லவ மற்றும் சேது நாணயங்கள் நாட்டினுள் பயன்படுத்தப்பட்டதோடு, அத்தகைய நாணயங்களையும் இங்கு காணலாம். அதேபோன்று 1 வது விஜயபாகு மன்னரிலிருந்து தம்பதெனிய காலகட்டத்தின் 1 வது புவனெகபாகு மன்னரின் காலம் வரையிலும் மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணய வகைகளில் ஒருசில நாணயங்களான விஜயபாகு வெள்ளிக் காசு, 1 வது பராக்கிரமபாகு, நிஷ்ஷங்கமல்ல, லீலாவதி இராணி, சஹஸ்ஸமல்ல, தர்மாசோக தேவ, i வது பராக்கிரமபாகு, புவனெகபாகு மன்னர்களது செப்புக் காசுகள் மற்றும் வெண்கலக் காசுகளையும் காணலாம்.
11

Page 12
(4) கோட்டே காலகட்டத்தில் இந்நாட்டில் பயன்படுத்தப்பட்ட
நாணயங்கள் vi வது பராக்கிரமபாகு மன்னருக்கு உரியதாகக் கருதப்படுகின்ற சிங்கக் காசுகளையும் இங்கு காணக் கூடியதாயுள்ளது. இலங்கையர்களின் தேசிய கொடியில் உள்ள பிடரிமயிருள்ள சிங்கத்தின் உருவத்தை நாணயத்தில் காண முடியுமாயுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகையால் இந்நாணயம் மிகவும் விசேடமானதாகும். இதற்கு முன்னர் பிடரிமயிரற்ற சிங்கத்தின் உருவமொன்றை மஹசென் காலகட்டத்தில் இருந்த சிங்க நாணயத்தில் காணலாம். (5) கண்டிய காலகட்டத்தில் இந்நாட்டில் பயன்படுத்தப்பட்ட
நாணயங்கள் இக்காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட நாணய வகைகளில் பொன் மற்றும் வெள்ளிப் பணம் காசுகளையும், வராகன் எனப்படும் பொன் காசுகளையும் வெள்ளி லாரீன் காசுகளையும் காணக்கூடியதாயுள்ளது. ஏறத்தாழ நான்கு அங்குலம் நீளமான வெள்ளிக் கம்பியைத் தட்டியெடுத்துத் தயாரிக்கப்பட்டுள்ள லாரீன் எனப்படுகின்ற காசுகளும் அராபிய வர்த்தகர்களால் இந்நாட்டில் கொடுக்கல்வாங்கலின் பொருட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதோடு, பின்னர் போர்த்துக்கேயர் மற்றும் இலங்கையர்களும் இதற்கு சமமான நாணயங்களை நாட்டினுள் உற்பத்தி செய்துள்ளனர். (6) ஒல்லாந்தரது ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் பயன்படுத்த
iILILL 5TGOYLLI 5356
ஒல்லாந்தர்கள் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றியிருந்த காலத்தில் (அதாவது கி.பி. 1638 - 1798 வரையிலான காலத்தினுள்) மேற்படி ஆட்சியாளர்கள் அவர்களுக்குச் சொந்தமாயிருந்த கரையோரப் பிரதேசங்களின் பயன்பாட்டின் பொருட்டு அவர்களது நாணயக் குத்திகளையும் நாணயத் தாள்களையும் வெளியிட்டுள்ளனர். அவர்களால் வெளியிடப்பட்ட காசுகள் துட்டுகள் என அழைக்கப்பட்டன. அதேபோன்று இலங்கையில் வெளியிடப்பட்ட முதலாவது தாள் நாணயத்தின் நிழற் பிரதியையும் இங்கு காணமுடியுமாயுள்ளது. (7) ஆங்கிலேயர்காலத்தில் இந்நாட்டில் பயன்படுத்தப்பட்டநாணய
வகைகள் பிரித்தானிய ஆட்சியாளர்களால் கி.பி. 1796 - 1872 வரையிலான காலத்தினுள் இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட காசுகளான 4 துட்டு, 1 துட்டு மற்றும் 1/2 துட்டு நாணயங்கள் ஆங்கிலேயர்களது பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியினால் வெளியிடப்பட்ட கம்பனி ரூபாய் என அழைக்கப்படுகின்ற வெள்ளி ரூபா, ரூபாவில் 1/96 மற்றும் ரூபாவில் 1/48 நாணயக் குத்திகள், இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட அணா மற்றும் பைசா காசுகள், வெள்ளி ரிக்ஸ் டொலர் காசு மற்றும் துட்டுக் காசு என்பவற்றையும் காணக்கூடியதாயுள்ளது. அதேபோன்று ஆங்கிலேயர்கள் அவர்களது காலனித் துவ நாடுகளில் பயன்படுத்தும் பொருட்டு அறிமுகப்படுத்திய பார்த்திங் 1, பார்த்திங் 1/2, பார்த்திங் 1/4 செப்புக் காசு, வெள்ளி 4 பென்ஸ், மற்றும் 1 1/2 பென்ஸ் காசுகளையும் 1 பென்ஸ் மற்றும் 1/2 பென்ஸ் வெண்கல மற்றும் செப்புக் காசுகளையும் 2 அணா வெள்ளிக் காசையும் இங்கு காணக்கூடியதாயுள்ளது.
பிரித்தானிய ஆட்சியாளர்களால் 1872 சனவரி 01 ஆம் திகதி தொடக்கம் இலங்கையில் பயன்படுத்தும் பொருட்டு ரூபாய், சதம் முறை அறிமுகப்படுத்தப்பட்டதோடு, இதற்கு முன்னர்
12

பயன்படுத்தப்பட்ட நாணய வகைகள் பின்னர் இரத்துச் செய்யப்பட்டன. மேற்படி புதிய ரூபாய், சதம் முறையின் கீழ் சதம் 1/4 மற்றும் சதம் 1/2 நாணயக் குத்திகளும் வெளியிடப்பட்டன. அதேபோன்று செப்பு சதம் 1 மற்றும் சதம் 5 (வட்டம்) அத்துடன் வெள்ளி சதம் 10, சதம் 25, சதம் 50 மற்றும் ரூபாய் நாணய குத்திகளும் வெளியிடப்பட்டன. மேற்படி சதம் 50, 25, 10, 5, 1/2, 1/4 நாணயக் குத்திகள் இலங்கையின் பயன்பாட்டுக்கெனவே தயாரிக்கப்பட்டதோடு, ரூபாய் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளினதும் பயன்பாட்டின் பொருட்டு உற்பத்தி செய்யப்பட்டது. ரூபாய், சதம் முறையின் ஆரம்ப ஆண்டாக கி.பி.1872 ஆம் ஆண்டு இருந்தமையினாலேயே இலங்கை நாணய வரலாற்றில் இது முக்கியமான ஒரு ஆண்டாக விளங்குகின்றது. (8) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட சாதாரண
நாணயக் குத்திகள் 1948 இல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் நாணயக் குத்திகள் முறையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. 1943 இல் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பித்தளை கலந்த உலோகத்தினால் தயாரிக்கப்பட்டிருந்த சதம் 50,25,10,52 நாணயக் குத்திகளுக்குப் பதிலாக 1963 இல் இருந்து ரூபாய் 1, சதம் 50 மற்றும் சதம் 25 செப்பு/நிக்கல் கலப்பு உலோகத்தினாலும், சதம் 1 மற்றும் 2 அலுமினியத்தினாலும் வெளியிடப்பட்டது. அதேபோன்று 1978 தொடக்கம் சதம் 10 மற்றும் சதம் 5 அலுமினிய உலோகத்தினாலும் வெளியிடப்பட்டது.
மத்திய வங்கி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வெளியிடப்பட்ட அனைத்து நாணயக் குத்திகளும் மேற்படி நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் பின்வரும் நாணயக் குத்தி வகைகள் உள்ளன. அதாவது
(i) Viவது ஜோர்ஜ் மன்னரின் உருவத்தின் மேல் பகுதியுடன் கூடிய நாணயக் குத்தி
(ii) இலங்கையின் அரச சின்னத்துடன் கூடிய
நாணயக் குத்தி
(iii) இலங்கை குடியரசுச் சின்னத்துடன் கூடிய
நாணயக் குத்தி
(9) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ஞாபகார்த்த
நாணயக் குத்திகள்
இலங்கை நாணய வரலாற்றில் புதியதொரு பக்கத்தின் ஆரம்பம் கி.பி. 1957 இல் நடைபெற்றது. அதாவது, இலங்கை மத்திய வங்கியினால் முதலாவது ஞாபகார்த்த நாணயக் குத்தி வெளியிடப்பட்டமையாகும். மேற்படி முதலாவது ஞாபகார்த்த நாணயக் குத்தியாக இருப்பது புத்த பிரான் பரிநிர்வாணம் எய்தி 2500 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூரும் முகமாக வெளியிடப்பட்ட இலங்கையின் முதலாவது ரூபாய் 5 வெள்ளி நாணயக் குத்தியும், முதலாவது ரூபாய் 1 செம்பு/நிக்கல் நாணயக் குத்தியுமாகும். மேற்படி புத்தர் விழாவுக்கான ரூபாய் 5 வெள்ளி நாணயக் குத்தி உள்நாட்டு-வெளிநாட்டு நாணயக் குத்தி சேகரிப்பவர்களுக்கிடையே மிகவும் பிரசித்திபெற்றதும் வரவேற்பைப் பெற்றதுமான ஒரு ஞாபகார்த்த நாணயக் குத்தியாக விளங்குகின்றது.
இலங்கை மத்திய வங்கி பல்வேறான 23 சம்பவங்களை முன்னிட்டு வெளியிட்டுள்ள 32 ஞாபகார்த்த நாணயக் குத்திகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
2007 ஜூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 13
(10) இந்நாட்டில் கிடைக்கப்பெற்றுள்ள பல்வேறான பண்டையகால
நாணய வகைகள இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் கிடைக்கப்பெற்றுள்ள பல நாணயங்கள் நாணய நூதனசாலையில் காட்சியின் பொருட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றிடையே வட இந்திய நாணயங்கள், பிரித்தானிய இந்திய நாணயங்கள், முகம்மதீய செப்புக் காசுகள், தென் இந்திய பணம் காசுகள், இந்திய-கிரேக்க நாணயங்கள், இந்திய ரூபாய், அரை ரூபாய், பென்ஸ் காசுகள், பார்த்திங் காசுகள், இந்திய அக்பார் ரூபாய், 6 பென்சுகள், ஒல்லாந்த வெள்ளி டியூக்றன், இந்திய குஷான் காசு, ஸ்பானிய வெள்ளி டொலர், ஸ்பானிய செப்புக் காசு, பிரெஞ்சு செப்புக் காசு, இலங்கையின் சதம் 18 1/2 காசு, பல்வேறான வர்த்தக கம்பனிகளால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தகக் குறியீடுகள் மற்றும் சீனக் காசுகளும் உள்ளடங்குகின்றன. (11) பிழைகளுடன் கூடிய நாணயங்கள் இதன் கீழ் ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானிய காலகட்டங்களுக்குரிய அச்சுப் பிழைகளுடன் கூடிய நாணயங்கள், மாற்று ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ள நாணயங்கள் மற்றும் குறைபாடுகளுடன் கூடிய குறிப்புகள், ஒன்றின் மீது ஒன்று அச்சிடப்பட்டிருத்தல், மத்திய புள்ளியிலிருந்து விலகி அச்சிடப்பட்டுள்ளவை ஆகிய குறைபாடுகளுடன் கூடியதாக கி.பி. 1734 இல் இருந்து 1955 வரையிலான காலத்துக்குரிய பல்வேறு குறைபாடுகளுடன் கூடிய நாணய வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
(12) விருதுகளும் பதக்கங்களும். இலங்கை மத்திய வங்கியின் நாணய நூதனசாலைக்கு அன்பளிப்பாகக் கிடைத்த இலங்கை மற்றும் ஏனைய பல்வேறு நாடுகளுக்குரிய பல்வேறான பதக்கங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் அரிதான பதக்கங்கள் மற்றும் விருது வகைகள் உள்ளன.
(3) பல்வேறான நாடுகளின் நாணயத் தொகுதிகளும் நாணய
வகைகளும உலகின் பல்வேறு நாடுகளினாலும் வெளியிடப்பட்டுள்ள நாணய வகைகள் மற்றும் நாணயத் தொகுதிகளின் திரட்சியும் மத்திய வங்கியின் நாணய நூதனசாலையில் உள்ளது. இவற்றில் மிகவும் முக்கியமான நாணயங்கள் காட்சியின் பொருட்டு வைக்கப்பட்டுள்ளன. (14) பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்ற பொலிமர்
நாணயததாளகள 1998 சுதந்திர தின பொன் விழாவின் பொருட்டு வெளியிடப்பட்ட ரூபா 200 பெறுமதியைக் கொண்ட பொலிமர் எனப்படுகின்ற மூலப்பொருளின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஞாபகார்த்த நாணயத் தாள் இலங்கையின் முதலாவது ஞாபகார்த்த நாணயத் தாளாகும். மேற்படி நாணயத் தாள் உட்பட பல்வேறு நாடுகளுக்குமுரிய பல பொலிமர் நாணயத் தாள்கள் காட்சியின் பொருட்டு வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று பொலிமர் நாணயத் தாள் அச்சிடப்படுகின்ற பல்வேறு சந்தர்ப்பங்கள் இங்கு காட்டப்பட்டுள்ளன. (15) நாணயக்குத்திதயாரிக்கப்படுகின்ற பல்வேறான சந்தர்ப்பங்கள் நாணயக் குத் திகள் தயாரிக் கப்படுகின்ற போது பயன்படுத்தப்படுகின்ற பல்வேறான அச்சு வகைகள் மற்றும் உலோக வகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று நாணயக் குத்தியொன்று உருவாக்கப்படுகின்ற போது முதலாவது சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்படும் "பிளாஸ்டர் ஒப் பரிஸ்’ அச்சும் இவற்றிடையே உள்ளது.
2007 ஜூலை / ஆகஸ்டு - குறிப்பேடு

(16) நாணயத்தாள் உற்பத்தி செய்யப்படுகின்ற பல்வேறு
355TLILIS35.6M நாணயத் தாள்களை அச்சிடும் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற அச்சுத் தகடுகள் மற்றும் அவற்றை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் ரோலர் அச்சுகளையும் இங்கே பார்வையிடலாம். (17) பிரித்தானியரது ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் பயன்படுத்தப்பட்ட பல்வேறான கூப்பன்கள் பிரித்தானியர்களது ஆட்சிக் காலத்தில் சிறு தேயிலைத் தோட்டங்களின் கொடுப்பனவுகளின் பொருட்டு தேயிலைக் கூப்பன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் பொருட்டு பயன்படுத்தப்பட்ட கி.பி. 1935 - 1941 வரையிலான காலத்தினுள் சிறு தேயிலைத் தோட்டச் சொந்தக்காரர்களின் பொருட்டு வெளியிடப்பட்ட தேயிலைக் கூப்பன்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. (18) இந்நாட்டில் பயன்படுத்தப்பட்ட பல்வேறான சான்றிதழ்கள்
மறறும உண2யல வகைகள இதன் கீழ் பங்குத் தொகுதிச் சான்றிதழ்கள், காசோலைகள், திறைசேரி உண்டியல்கள், பொறுப்பு முறிகள், பிணையங்கள், மற்றும் பயணிகள் காசோலை ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. (19) இரத்துச் செய்யப்பட்ட நாணயத்தாள்கள் 1970 கூட்டு முன்னணி அரசாங்கத்தின் முன்னாள் கெளரவ நிதி அமைச்சர் கலாநிதி என்.எம். பெரேரா அவர்களது கருத்துப்படி சட்ட ரீதியிலல்லாத பல்வேறு வழிவகைகளின் மூலம் பல்வேறான நபர்களாலும் சம்பாதிக்கப்பட்ட பணத்தை ஒழுங்குமுறையான நாணயச் சுற்றோட்டத்திற்குள் கொண்டுவரும் குறிக்கோளுடனும் மற்றும் வரி மோசடிகள், ஏய்ப்புகளை தடுக்கும் பொருட்டும் 1976.10.26 ஆம் திகதிக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த ரூபா 50 மற்றும் ரூபா 100 நாணயத் தாள்கள் இரத்துச் செய்யப்பட்டன. இதன் கீழ் wi ஜோர்ஜ் மன்னரின் உருவப்படத்துடன் கூடிய நாணயத் தாள் தொகுதி, i வது எலிசபெத் இராணியின் உருவப்படத்துடன் கூடிய நாணயத் தாள் தொகுதி, பண்டாரநாயக்கவின் உருவப்படத்துடன் கூடிய நாணயத் தாள் தொகுதி, பராக்கிரமபாகுவின் உருவப்படத்துடன் கூடிய நாணயத் தாள் தொகுதி மற்றும் இலங்கை அரச சின்னத்துடன் கூடிய நாணயத் தாள் தொகுதிக்குரிய (1970.10.26 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்பட்ட) ரூபா 100 மற்றும் ரூபா 50 நாணயத் தாள்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய நாணயத் தாள்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. (20) பிரித்தானியர்களது ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட
நாணயத தாளகள கி.பி. 1796 தொடக்கம் 1948 வரையிலான பிரித்தானியர்களது ஆட்சிக் காலத்தில் நாட்டினுள் கொடுக்கல்வாங்கலின் பொருட்டு வெளியிடப்பட்டிருந்த பல்வேறான நாணயத் தாள் வகைகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அக்காலகட்டத்தில் நாணயம் வெளியிடுதல் பிரதானமாக மூன்று விதத் தில நடைபெற்றுள்ளதென்பதைக் காண்லாம்.
(1) 1796 இல் இருந்து 1844 வரை பொதுத் திறைசேரியினால்
வெளியிடப்பட்ட நாணயத் தாள்கள் (2) 1845 இல் இருந்து 1884 வரை தனியார் வங்கிகளின்
மூலம் வெளியிடப்பட்ட நாணயத் தாள்கள் (3) 1885 இல் இருந்து 1949 வரை நாணய ஆணையாளர் சபையினால் வெளியிடப்பட்ட நாணயத் தாள்கள்
13

Page 14
மேற்படி ஒவ்வொரு காலத்திலும் வெளியிடப்பட்ட ரிக்ஸ் டொலர், பவுண் மற்றும் ரூபாய் நாணயத் தாள்களை இங்கு பார்வையிடலாம். அதேபோன்று 1942 இல் வெளியிடப்பட்ட சதம் 5,10,25 மற்றும் 50 உப நாணயத் தாள்களும், 1947 இல் வெளியிடப்பட்ட ரூபா 10,000 நாணயத் தாளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. (21) நாணயக் தத்திகள் மற்றும் தங்கத்தின் நிறையை அளவிடு
65D35 T5 LILIGLIG55IILILL 35JTJi பிரித்தானிய காலகட்டத்தின் ஆரம்ப காலத்தில் நாணயக் குத்திகளை கணிப்பிடுவதற்கான மாற்று வழிமுறையாக நாணயக் குத்திகளின் நிறையை அளவிட்டு வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, உதாரணமாக 1000 நாணயக் குத்திகளின் நிறையை அளவிடுவதன் மூலம், அந்த நிறையில் உள்ளடங்கியுள்ள நாணயக் குத்திகளின் தொகையை மாறாத மதிப் பளவாகக் கொள்ள முடியுமாயிருப்பதனாலாகும். பின்னர் 1000 நாணயக் குத்திகள் வெளியிடப்படுகின்ற போது மிக இலகுவாக அந்த நிறைக்கு நாணயக் குத்திகளை வெளியிட முடியுமாயிருக்கும். இதனை நாணயக் குத்திகளைக் கணிப்பிடுவதற்கு எடுக்கும் நேரத்துடன் ஒப்பிடுகையில், நாணயக் குத்திகளின் நிறையை அளவிட்டு வெளியிடுதல் மிக இலகுவானதாகும் மேற்படி நாணயக் குத்திகளின் நிறையை அளவிடுகின்ற தராசும் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்குப் பயன்படுத்திய ஒரு தராசும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. (22) இலங்தை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பல்வேறு
நாணயத்தாள் தொகுதிகள் கி.பி. 1950 ஆகஸ்ட் 28 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி தாபிக்கப்பட்டதன் பின்னர் இன்று வரை பல்வேறு தொனிப்பொருள்களின் கீழ் வெளியிடப்பட்ட 10 தொகுதிகளுக்கு உரிய நாணயத் தாள்கள் இங்கு காட்சியின் பொருட்டு வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிணங்க,
() vi வது ஜோர்ஜ் மன்னரின் உருவப்படத்துடன் கூடிய
நாணயத் தாள் தொகுதி (ii) i வது எலிசபெத் இராணியின் உருவப் படத்துடன்
கூடிய நாணயத் தாள் தொகுதி
இலங்கை மத்திய வங்கியின் நாணய நூதன தாள்களின் மிகப் பெரியதொரு திரட்சியைu கருவிகளையும் பொதுமக்களின் காட்சிக்காக அறவிடாது மக்கள் சேவையாகப் பேணிவ பாகங்களிலிருந்தும் வருகை தருகின்ற பாட நாணய வரலாறு தொடர்பாக விரிவுரைகள் தாள்களை அடையாளம் காணல் தொடர்பி இன்று வரை வெளியிடப்பட்டுள்ள ஞாப எஞ்சியிருக்கின்ற ஞாபகார்த்த நாணயக் வாய்ப்பளித்துள்ளது.
மேற்படி நாணய நூதனசாலை அலுவல மாலை 4.00 மணி வரை திறந்திருக்குமென்ப வருகை தரும் பாடசாலை மாணவர்கள், ( நேரத்தை ஒதுக்கிக்கொள்வதன் மூலம் அசெ பார்வையிட முடியுமாயிருக்கும்.
14

(iii) இலங்கை அரச சின்னம் பொறிக்கப்பட்ட நாணயத்
தாள் தொகுதி
(iv) பண்டாரநாயக்கவின் உருவப் படத்துடன் கூடிய
நாணயத் தாள் தொகுதி
(v) பராக்கிரமபாகுவின் உருவப் படத்துடன் கூடிய
நாணயத் தாள் தொகுதி
(vi) குடியரசு இலச்சினை பொறிக்கப்பட்ட நாணயத் தாள்
தொகுதி
(vii) இலங்கைக்கே உரியதான விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைக் கொண்ட நாணயத் தாள் தொகுதி
(viii) தொல்பொருளியல் மற்றும் வரலாற்று ரீதியிலான தொனிப்பொருள்களுடன் கூடிய நாணயத் தாள்
@ (ix) வரலாற்று ரீதியிலான தொனிப்பொருள் மற்றும் அபிவிருத்தியை வெளிக்காட்டுகின்ற நாணயத் தாள் தொகுதி (Χ) இலங்கையின் மரபுரிமைகளை பிரதிபலிக்கின்ற நாணயத் தாள் தொகுதி என்பனவாகும். இவற்றில் மிகவும் விசேடமான வெளியீடாக இருப்பது இலங்கைக்கே உரியதான விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைக் கொண்டுள்ள நாணயத் தாள் தொகுதியாகும். இது சர்வதேச நாணயங்களைச் சேகரிப்பவர்களுக்கிடையே மிகவும் பிரபல்யம்வாய்ந்த நாணயத் தாள் தொகுதியாக உள்ளது. மேற்படி அனைத்து நாணயத் தாள் தொகுதிகளும் முன்னேற்றப்பட்ட பாதுகாப்புக் குறியீடுகளுடன் கூடியதாக மிகவும் சிறப்பான வடிவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. (23) பல்வேறு நாடுகளுக்குரிய நாணயத் தாள் வகைகள் இலங்கை மத்திய வங்கியின் நாணய நூதனசாலைக்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் கிடைத்துள்ள பெரும் தொகையான மாதிரி நாணயத் தாள்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குவைற், சவுதி அராபியா, ஐக்கிய அராபிய இராச்சியம், ஓமான், பங்களாதேஷ், இந்தியா, சீனா, நேபாளம், ஐக்கிய அமெரிக்கா, யூரோ மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் நாணயத் தாள் வகைகளும் உள்ளடங்கியுள்ளன.
சாலை நாணயக் குத்திகள் மற்றும் நாணயத் பும், நாணயத்துடன் தொடர்புடைய ஏனைய க வைத்துள்ளதோடு, எவ்விதக் கட்டணமும் ரப்படுகின்றது. அதேபோன்று நாட்டின் பல டசாலை மாணவர்களுக்காக இலங்கையின் ளை நடத்துதல் மற்றும் போலி நாணயத் ல் அறிவுட்டுதலையும் மேற்கொள்கின்றது. கார்த்த நாணயக் குத்திகளில் தற்போது குத்திகளைக் கொள்வனவு செய்வதற்கும்
க நாட்களில் காலை 8.30 மணி தொடக்கம் தோடு, குழுக்களாக தூர இடங்களிலிருந்து நேரகாலத்தோடு அறிவித்து திகதி மற்றும் ளகரியங்கள் எதுவுமின்றி நூதனசாலையைப்
2007 ஜூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 15
பிராந்திய பொருளாதார ே ஒரு ஏணியைப் போன்றுள்
அமரபாலகரசிங்க ஆரச்சி
தொடர்பூட்டல் திணைக்களம்
அறிமுகம் மனிதன் சமூகமயமாகிய நாளிலிருந்து அமைப்பு முறைக்கு உள்ளாகும் போக்கைக் கொண்டிருந்தான் என்பது பொதுவாகத் தெரியக்கூடியதொரு விடயமாகும். மேற்படி அமைப்பு முறையினுள் பொதுச் சமூகத் தேவைகளே ஒன்றுதிரண்டுள்ளன. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் பெரும் வல்லரசுகளின் தலைமையிலும் காலனித் துவ ஆட்சியிலிருந்து விடுதலைபெற்றிருந்த நாடுகளின் பங்களிப்புடனும் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள் உருவாக ஆரம்பித்தன. சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புக்களாக வடிவமையப்பெற்ற மேற்படி அமைப்புகளை குறிப்பாக யுத்த, அரசியல், மத, மற்றும் கலாசார அமைப்புகளாகவும் அதேபோன்று வர்த்தக மற்றும் பொருளாதார அமைப்புகளாகவும் அடையாளம் காணக்கூடியதாயுள்ளது.
அண்மையில் உருவாகிய அவ்வாறான ஒரு பிராந்திய அமைப்பாக சார்க் அமைப்பைக் குறிப்பிடலாம். இது, தென் ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, ஒத்துழைப்பு வர்த்தகம், முதலீடுகள், சமூக அபிவிருத்தி, நட்புறவுடன் கூடிய தலையீட்டின் பொருட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றுதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு என்பவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒரு அமைப்பென்பது தெளிவாகின்றது. சார்க் அமைப்பு பிராந்திய ரீதியில் இவ்வாறான ஒரு அமைப்பின் தேவையை முதலில் சுட்டிக்காட்டியவர், பங்களாதேஷின் சனாதிபதியாக விளங்கிய திரு. ஷியாவுர் ரஹற்மான் ஆவார். அது 1980 ஆம் ஆண்டு மே மாதமளவிலாகும். அதன் பின்னரே இக்கருத்து பிராந்திய நாடுகளின் தலைவர்களது கவனத்தை ஈர்த்தது. இதற் கிணங்க இவ் வாறானதொரு அமைப் பை உருவாக்கிக்கொள்ளும் பொருட்டு ஆரம்பக் கலந்துரையாடல்கள் 1981 ஏப்பிறல் மாதம் 21 தொடக்கம் 23 வரை கொழும்பில் நடைபெற்றன. இதற்கான அடிப்படையை அமைத்துக்கொள்ளும் பொருட்டு பங்களாதேஷ் இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், மாலை தீவு மற்றும் இலங்கை ஆகிய ஏழு நாடுகளினதும் வெளிநாட்டு அமைச்சர்கள் பங்குபற்றினார்கள்.
2007 ஜூலை / ஆகஸ்டு - குறிப்பேடு

மம்பாட்டுக்கு ள சார்க் அமைப்பு
அமைப்பின் குறிக்கோள்கள் அங்கத் துவ நாடுகளுக் கிடையே ஒற்றுமையையும் , நாடுகளுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புதலும், அதன் பொருட்டுத் தேவையான சிறந்ததொரு சூழலை உருவாக்கிக்கொள்ளுதலும் பிரதானமான குறிக்கோள்களாகும் என்பதைக் குறிப்பிடலாம். மேற்படி குறிக்கோள்களை அடிப்படையாகக்கொண்டு அங்கத்துவ நாடுகளுக்கிடையே வர்த்தக தொடர்புகளை விஸ்தரித்து சிறந்ததொரு பொருளாதார சூழலை அமைத்துக்கொள்ளுதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்
இதற் கிணங்க, மேற்படி குறிக் கோள்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு மேற்படி அமைப்புக்கு, தென் ஆசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பு (South Asian Association for Regional Cooperation) 6T60T Guujisu-JULg). இதன்படி பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும் பொருட்டு முக்கியமான ஐந்து துறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. அவ்வாறு விசேட கவனம் செலுத்தப்பட்ட துறைகளையும் அதன் இணைப் பாக்கப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளையும் பின்வருமாறு நிரல்படுத்தலாம்.
(1) இந்தியா - வானிலையியல் துறை (2) பாகிஸ்தான் - தொலைத்தொடர்புத் துறை (3) பங்களாதேஷ் - கமத்தொழில் துறை (4) நேபாளம் - சனத்தொகை மற்றும் சுகாதார
சேவைகள் துறை (5) இலங்கை - கிராமிய அபிவிருத்தித் துறை
அமைப்பின் நோக்கங்கள்
தென் ஆசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பு என கூட்டமையப்பெற்ற அங்கத்துவ நாடுகளின் கூட்டமைப்பில் காணப்படுகின்ற நோக்கங்கள் பிராந்திய ரீதியில் மிகவும் முக்கியமானவையாகும். ஆரம்பக் கலந்துரையாடல்களின் போது தயாரிக்கப்பட்ட சார்க் பிரகட்னத்தில் காண்கின்ற பிரதானமான ஒருசில விடயங்களை பின்வருமாறு தொகுக்கலாம்.
அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றினதும் சுதந்திரம், இறைமை மற்றும் ஆட்புல ஓர்மைப்பாட்டை மதித்தல்.
15

Page 16
O அங்கத்துவ நாடுகளுக்கிடையே சுய நம்பிக்கையை
உறுதி செய்தல், பலப்படுத்தல் மற்றும் வளர்த்தல்.
O அனைத்து மக்கள் பிரிவினரும் கெளரவமாக வாழ்வதற்கு ஏற்பாடு செய்தல் , அவர்களது அனைத் து ஆற்றல் களையும் மேலோங்கச் செய்வதற்கு வாய்ப்பளித்தல், நலனோம்புகையை அதிகரிக்கச் செய்தல், மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தல்.
O ஒவ்வொரு நாடுகளின் மீதும் அதிகாரத்தைப் பயன்படுத்தாதிருத்தல், உள்ளக விடயங்களில் தலையிடாதிருத்தல் மற்றும் பிணக்குகளை சமாதானமான முறையில் தீர்த்தல்.
சமூக முன்னேற்றத்தையும் கலாசார மேம்பாட்டையும் துரிதப்படுத்தல்.
O ஒரு அங்கத்துவ நாட்டின் பிரச்சினை தொடர்பில் ஏனைய அங்கத்தவர்கள் பரஸ்பர நம்பிக்கை, புரிந்துணர்வு மற்றும் மதிப்பீட்டின் பொருட்டு பங்களிப்புச் செய்தல்.
பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான துறைகள் தொடர்பில் பரஸ்பர செயலூக்கம்மிக்க பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குதல்.
O அபிவிருத்தியடைந்து வரும் ஏனைய நாடுகளுடன்
ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புதல்.
பொதுவான முக்கியத்துவம்மிக்க விடயங்கள் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான மாநாடுகள் மற்றும் கரத்தரங்குகளின் போது அங்கத்துவ நாடுகள் பேரில் ஒத்துழைப்பு வழங்குதல்.
O சமமான நோக்கங்களைக் கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் ஒத்துழைப்புடன் செயலாற்றுதல்.
அமைப்புப் பொறிமுறை ஒரு அமைப்புக்கு ஏதேனுமொரு நோக்கம் அல்லது பல நோக்கங்கள் உள்ளன. அவற்றை நிறைவேற்றிக்கொள்ளல் வேண்டும். இன்றேல் அவற்றை அடைதல் வேண்டும். சார்க் அமைப்புக்கும் அவ்வாறான பல நோக்கங்கள் உள்ளன. மேற்படி நோக்கங்களை தம்மிடமுள்ள பலத்தின் அடிப்படையில், அறிவின் அடிப்படையில் நிறைவேற்றிக் கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள உள்ளமைப்புகள் பல உள்ளன. அத்தகைய உள்ளமைப்புகள் பின்வருமாறு.
(1) தொழில்நுட்பக் குழு (2) நிலையியற் குழு (3) வெளிநாட்டு அமைச்சர்களது கூட்டம் (4) நாடுகளின் தலைவர்களது மாநாடு இவ்வமைப்பில் நாடுகளின் தலைவர்களது மாநாட்டுக்கே முக்கிய இடம் உரித்தாயுள்ளது. அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு நாடுகளின் தலைவர்களது மாநாட்டிலேயே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கருத்துக்களும் பிரேரணைகளும் நாடுகளின் தலைவர்களது மாநாட்டுக்குச் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் கீழ் மட்டத்திலான பல கட்டங்களையும் கடந்து வருதல் வேணி டும். மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் பிராந்திய ரீதியில் ஏழு அங்கத்துவ நாடுகளிலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துமாகையால், குறித்த தீர்மானங்களை தீவிர பரிசீலனைக்கு
16

உள்ளாக்குதலே இதன் மூலம் நடைபெறுகின்றது. அதேநேரம் தீவிரமாக ஆராயப்படுகின்றது. ஆதலால் முதலாவதாக தொழில்நுட்பக் குழுவுக்கும், தொழில்நுட்பக் குழுவிலிருந்து நிலையியற் குழுவுக்கும், நிலையியற் குழுவிலிருந்து வெளிநாட்டு அமைச்சர்களது சபைக்கும், வெளிநாட்டு அமைச்சர்களது சபையிலிருந்து நாடுகளின் தலைவர்களது மாநாட்டிற்கும் குறித்த பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு பல கட்டங்களைக் கடந்து வருகின்ற தீர்மானங்கள் தொடர்பாக நாடுகளின் தலைவர்களது மாநாட்டிலேயே இறுதித் தீர்வுக்கு வருவார்கள். நாடுகளின் தலைவர்களது மாநாடு
சார்க் அமைப்பு நிறுவப்படும் வரை மேற்படி நாடுகளுக்கிடையே வர்த்தக நடவடிக்கைகளின் பொருட்டு இரண்டாவதாக இருக்க விரும்பாத போட்டி நிலையொன்று நிலவியது. ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு இல்லாதிருந்தமையால் பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்புகின்ற வழிகள் மூடப்பட்டிருந்தன. மேற்படி அங்கத்துவ நாடுகளிலிருந்து முதனிலைப் பண்டங்களே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு கூட்டமையப்பெற்றதன் மூலம் பண்டங்களை ஏற்றுமதி செய்தல், தேவையான பண்டங்களை கூட்டு முயற்சியில் உற்பத்தி செய்தல், பிராந்தியத்தினுள் சந்தைத் தொடர்புகளை நம்பகத்தன்மையுடன் கூடியதாக ஆரம்பித்தல், வர்த்தகம் தொடர்பிலான உடன்படிக்கைகளுக்கு வருவதற்கான நெகிழ்வுத் தன்மை ஆகிய முக்கியமான பொருளாதார விடயங்கள் பலவற்றையும் நிறைவேற்றிக்கொள்ள முடியுமாயிருந்தது.
அவ்வாறான பரஸ்பர குறிக்கோள்கள் பலவற்றையும் நிறைவேற்றிக்கொள்ளும் அபிலாசைகளுடன் நடைபெற்ற நாடுகளின் தலைவர்களது மாநாடுகள் பற்றிய தகவல்களை பின்வருமாறு நிரல்படுத்தலாம்.
முதலாவது தலைவர்கள் மாநாடு - பங்களாதேஷ் பாக்கா
1985 திசெம்பர் 7-8
+ இரண்டாவது தலைவர்கள் மாநாடு - இந்தியா- பெங்களூர்
1986 நவெம்பர் 16-17 * மூன்றாவது தலைவர்கள் மாநாடு - நேபாளம் - கத்மண்டு
1987 நவெம்பர் 2-4 * நான்காவது தலைவர்கள் மாநாடு - பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் 1988 திசெம். 29-31 + ஐந்தாவது தலைவர்கள் மாநாடு - மாலை தீவு
மாலே 1990 நவெம்பர் 21-23 + ஆறாவது தலைவர்கள் மாநாடு - இலங்கை கொழும்பு
1991 திசெம்பர் 21 + ஏழாவது தலைவர்கள் மாநாடு - புங்களாதேஷ் டாக்கா
1993 ஏப்பிறல் 10-14 * எட்டாவது தலைவர்கள் மாநாடு - இந்தியா. புது டில்லி
1995 (3LD 2-4 + ஒன்பதாவது தலைவர்கள் மாநாடு - மாலை தீவு மாலே
1997 (3LD 12-14 * பத்தாவது தலைவர்கள் மாநாடு - இலங்கை கொழும்பு
ஜூலை 29-31
2007 ஜூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 17
பதினோராவது தலைவர்கள் மாநாடு -நேபாளம் கத்மண்டு
2002 சனவரி 4-6 பன்னிரண்டாவது தலைவர்கள் மாநாடு -
பாகிஸ்தான். இஸ்லாமாபாத் 2004 சனவரி 26 பதின்மூன்றாவது ணுயுணுதலைவர்கள் மாநாடு -
பங்களாதேஷ்- டாக்கா 2005 நவெம்பர் 12-13 பதின்நான்காவது தலைவர்கள் மாநாடுஇந்தியா- புது டில்லி 2007 ஏப்பிறல் 3-4
தென் ஆசிய அபிவிருத்தி நிதியம் ஆரம்ப இஸ்லாமாபாத் மாநாட்டிலிருந்து சார்க் பிராந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொருட்டான ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல் தொடர்பிலேயே நாடுகளின் தலைவர்களது விசேட கவனம் செலுப்பட்டது. வறுமையைக் குறைக்கும் பொருட்டு பல்வேறு கண்ணோட்டத்திலும் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் பல இருந்தன. இதில், ஆரம்ப அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் பொருட்டு வறிய மக்களைப் பங்கேற்கச் செய்தல், 6 தொடக்கம் 14 வயதுக்கு இடைப்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் ஆரம்ப நிலைக் கல்வியை வழங்குதல், குறிப்பாக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ துறையின் பொருட்டு உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற விரிவான துறைகளின்பால் பிராந்திய நாடுகளின் கவனம் செலுத்தப்பட்டது.
இவை அனைத்திற்கும் தேவைப்படுகின்ற 'அபிவிருத்தி நிதியம்’ ஒன்றைத் தாபித்தல் தொடர்பில் ஐந்தாவது நாடுகளின் தலைவர்களது மாநாட்டின் போது கவனம் செலுத்தப்பட்டது. அவ்வாறானதொரு அபிவிருத்தி நிதியம் தாபிக்கப்படுவதன் மூலம் பிராந்தியத்தினுள் ஆரம்பித்து வைக்கப்படுகின்ற ஒவ்வொரு கருத்திட்டத்தின் பொருட்டும் சலுகை நிபந்தனைகளின் கீழ் கடன் பெற முடியமாயிருக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. நிதியத்தை உருவாக்குவதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகளின் பொருட்டு தேசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிகளிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இறுதியில் எட்டாவது சார்க் நாடுகளின் தலைவர்களது மாநாட்டின் போது தென் ஆசிய அபிவிருத்தி p5guib (South Asian Development Fund) g5 Tidssiyu'll gil. மேற்படி நிதியமானது பிராந்தியக் கருத்திட்டங்கள், பிராந்திய நிதியம் மற்றும் சமூக மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய முக்கியமான மூன்று துறைகளை உள்ளடக்கியதாயுள்ளது.
சார்க் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு
கலந்துரையாடப்பட்டவாறு சார்க் அமைப்பானது, பரஸ்பர ரீதியில் அங்கத்துவ நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பைப் பேணிவந்து, பிராந்திய வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்வதற்கும் பொருளாதார ரீதியில் மிகவும் வலுவான நிலைக்கு வருவதற்குமே உருவாக்கப்படுகின்றது. மேற்படி நிலைமைகளை அடையப்பெறும் பொருட்டு பிராந்திய நாடுகளுக் கிடையே பல வேறு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலாவது சார்க் நாடுகளின் தலைவர்களது மாநாட்டை அமைத்து பிரகடனப்படுத்திய டாக்கா மாநாட்டுப் பிரகடனத்தின் மூலம் பிராந்திய பொருளாதார
2007 ஜூலை / ஆகஸ்டு - குறிப்பேடு

ஒத்துழைப்பு தொடர்பில் செய்யப்பட்ட பிரகடனத்தைச் சுருக்கமாக நோக்குவோமெனில், பின்வருமாறு உள்ளது. அதாவது, "வறுமை, தொழிலின்மை, குறை உற்பத்தி, அதிகரித்து வருகின்ற சனத்தொகை ஆகிய பல சவால்களுக்கும் தென் ஆசியா முகம் கொடுத்து வருகின்றது. அத்தகைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பொருட்டு ஒரு சந்தை என்ற வகையில் பிராந்தியத்தின் பலம், மனித மற்றும் பெளதீக வளங்கள், கூற்றாடல் காரணிகள் ஆகியவை தொடர்பில் தெளிவானதொரு விளக்கம் உள்ளது. இதற்கிணங்க பிராந்திய மக்களது நலனோம்புகையின் பொருட்டு மேற்படி காரணிகளை உயர்ந்தபட்சம் பயன்படுத்த முடியும். அதேபோன்று கூட்டு ஒத்துழைப்பின் மூலம் சுய நிலைத்திருத்தலை மேம்படுத்த முடியும். பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தொடர்ந்து நாடுகளின் தலைவர்களது மாநாடுகளில் கருத்துக்களும் பிரேரணைகளும் முன்வைக்கப் பட்டுள்ளன. அவ்வாறு தொடர்ந்து கலந்துரையாடல்கள் நடைபெற்ற போதிலும், பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பாக முற்றிலுமான ஒரு மாற்றம் இலங்கையில் நடைபெற்ற ஆறாவது சார்க் நாடுகளின் தலைவர்களது மாநாட்டிலேயே நடைபெற்றது. இதில் “வர்த்தகம், உற்பத்தி மற்றும் சேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, “பொருளாதார ஒத்துழைப்புக் குழு’ (Committee on Economic Co-operation) நிறுவப்பட்டது. இதன் பெறுபேறாக இரண்டு இணைக் குழுக்கள் உருவாகின.
(1) தென் ஆசிய முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகள் - (g is T). (South Asian Preferential Trade Arrangement-SAPTA) (2) தென் ஆசிய சுதந்திர வர்த்தக வலயம் - (சஃப்தா)
(South Asian FreeTrade Area - SAFTA)
σί5π.(SAPTA) சார்க் அமைப்பின் ஒத்துழைப்பு விடயங்களிடையே பல துறைகள் பொருளாதார ஒத்துழைப்புடன் தொடர்புபட்டவையாகும் தென் ஆசிய முன்னுரிமை வர்த்தக ஏற்பாடுகள் எனப்படுகின்ற சப்தா உடன்படிக்கை பிராந்தியத் தொடர்புகளின் அடிப்படைத் துறைகளில் ஒத்துழைப்பை வளர்க்கும் பொருட்டு உருவாகியதொன்றாகும்.
சப்தா வர்த்தக உடன்படிக்கை 25 வாசகங்களைக் கொண்டதாகும். அங்கத்துவ நாடுகளுக்கிடையே பரஸ்பர ரீதியில் சலுகைகளை வழங்குவதன் மூலம் வர்த்தகத்தையும் பொருளாதார ஒத்துழைப்பையும் மேல் மட்டத்திற்குக் கொண்டு வருதலே மேற்படி வாசகங்கள் உள்ளடங்கியுள்ள உடன்படிக்கையின் நோக்கமாகும். சப்தா உடன்படிக்கையில் உள்ளடங்கியுள்ள கோட்பாடுகளை பின்வருமாறு நிரல்படுத்தலாம்.
(1) அங்கத்துவ நாடுகளின் பொருளாதார மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் சுங்க வரி முறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அனைவருக்கும் சமமான பெறுபேறுகள் கிடைக்கத்தக்க வகையில் பரஸ்பர ரீதியில் சலுகைகளை வழங்குதல் மற்றும் நலன்களைப் பெற்றுக்கொள்ளுதல். (2) குறைந்தபட்ச அபிவிருத்தி மட்டத்தில் உள்ள அங்கத்துவ நாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, அத்தகைய நாடுகளின் விசேட தேவைகளை இனங்கண்டு,
17

Page 18
அந்நாடுகளுக்கு முக்கியமாக இருக்கக்கூடியதான பலம்பொருந்திய முன்னுரிமை உபாய வழிமுறைகள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருதல். (3) மூலப் பொருட்கள், தயாரிப்புப் பண்டங்கள், பகுதியளவு தயாரிப்புப் பண்டங்கள் ஆகிய அனைத்தையும் வர்த்தக உடன்படிக்கையில் சேர்த்துக்கொள்ளல். (4) மேம்பாடு தொடர்பில் கட்டம் கட்டமாகக் கலந்துரையாடுதல், ஆய்வுகளின் மூலம் முன்னேற்றுதல் மற்றும் பரவலாக்கலுக்கு நடவடிக்கை எடுத்தல். (5) தீர்வை வரிகளை நீக்குதல், தடை வரிகள் மற்றும் அதற்கு சமமான தடைகளை நீக்குதல், உரிமப் பத்திரங்கள் மற்றும் பங்கு நியமங்கள் போன்ற தீர்வை வரிகளல்லாத தடைகளை நீக்குதல். (6) நீண்ட கால மற்றும் குறுகிய கால வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நாடுகளுக்கு இடையே வர்த்தகத்துக்கு பரஸ்பர ரீதியில் சலுகைகளை வழங்குதல்.
சப்தா உடன்படிக்கையின் பணிகளைச் செயலூக்கம்மிக்க வகையில் பேணிவரும் பொருட்டு பங்கேற்பாளர்களது குழு (Committee of Participants) 676ð AB GLjuurf6ð 9(5 (35(ug தாபிக்கப்பட்டுள்ளது. அதன் குழு அங்கத்தவர்கள் அங்கத்துவ நாடுகளால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கியிருக்கும். மேற்படி குழு, வர்த்தகம் முன்னேற்றமடைவதன் மூலம் கிடைக்கின்ற பெறுபேறுகளை அனைத்து நாடுகளுக்கும் சமமாகப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பில் வகைப்பொறுப்புடன் செயற்படுதல் வேண்டும். இதற்கிணங்க சப்தா உடன்படிக்கையில் ஏறத்தாழ 2100 உற்பத்திப் பண்டங்கள் சேர்த்துக்கொள்ளப்படுள்ளன. குறிப்பாக இந்தியா சப்தா உடன்படிக்கைக்கு இணங்க தனது அநேகமான உற்பத்திப் பண்டங்களுக்கான தீர்வை வரியல்லாத தடைகள் பலவற்றை நீக்கிக்கொண்டுள்ளமை பிராந்திய ரீதியில் ஏனைய நாடுகளுக்கு ஒத்துழைப்பாக அமைந்துள்ளது. சப்தா உடன்படிக்கை அமுலுக்கு வருகின்றபோது மேற்படி உடன்படிக்கைக்கு உள்ளாகின்ற அனைத்துப் பண்டங்களையும் சார்க் நாடுகளுக்கிடையே சுதந்திரமாக அல்லது சலுகை அடிப்படையில் பரிமாற்றிக் கொள்வதற்கு முடியுமாயுள்ளமை பிராந்திய நாடுகளுக்குப் பெருமளவு ஆறுதல் அளிப்பதாயுள்ளது.
F.üBI (SAFTA)
சர்வதேச பொருளாதார முறையில் உருவாகியுள்ள மாற்றங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துகின்ற சார்க் பிராந்திய நாடுகளின் தலைவர்கள் பிராந்திய வர்த்தக ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கல் வேண்டுமெனத் தீர்மானிக்கின்றனர். இதற்கிணங்க தென் ஆசியாவில் சுதந்திர வர்த்தகப் பிரதேசமொன்றை உருவாக்குதல் தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. இதன் பொருட்டு சார்க் பிராந்திய வெளிநாட்டு அமைச்சர்களினதும் இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டது. புத்தாயிரமாம் ஆண்டாகின்ற போது உலகமயமாக்கல் உலகின் அனைத்து மக்கள் படித்தரங்களுக்கும் புலம்பெயர்ந்துள்ளதனாலும், இதன் மூலம் அநேகமான சமூக சிறப்புரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளமையினாலும், சார்க் பிராந்திய பொருளாதாரச் செயல்
18

நடைமுறைகளாலும்உலகமயமாக்கலுக்கு இணங்கியொழுகுவதற்கு நேரிட்டது. தென் ஆசிய சுதந்திர வர்த்தகப் பிரதேசம் (South Asian Free Trade Area - SAFTA) Gg5gö 35 6007 stijd5 (36) அமையப்பெறுகின்றது. இதன் மூலம் தீர்வை வரிகள் அல்லது வேறு எவ்விதத் தடைகளுமின்றி அங்கத்துவ நாடுக்ளுக்கு, சார்க் பிராந்தியத்தினுள் சுதந்திரமான வர்த்தகத்திற்கு வாய்ப்புக் கிடைத்தது. சஃப்தா உடன்படிக்கைக்கு உள்ளாவதன் மூலம் நாடுகளுக்கிடையே உருவாகிய கூட்டு இணக்கப்பாடுகளை பின்வருமாறு குறிப்பிடலாம்.
(1) இறக்குமதிகளின் பொருட்டு எவ்விதத் தடைகளுமின்றி
தீர்வை வரிகளை அகற்றுதல். (2) சுங்க நடைமுறைகள் மற்றும் ஆவணப்படுத்தல்களினுள்
ஒருங்கிணைப்பை உருவாக்குதல். (3) துறைமுக மற்றும் போக்குவரத்து வசதிகளை
ஏற்படுத்துதல். (4) வர்த்தகத்துடன் தொடர்புடைய சேவைகளை வழங்குதல், (5) மீளாய்வு மற்றும் கண்காணிப்புப் பொறிமுறையொன்றை
அமைத்தல். (6) இவ்வாறு வழங்கப்படுகின்ற சிறப்புரிமைகள் அனைத்து அங்கத்தவர்களுக்கும் கிடைக்கின்றதென்பதை உறுதி செய்தல். (7) வங்கி வசதிகளை வழங்குதல்.
சார்க் பிராந்திய நாடுகளின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டான சப்தா மற்றும் சஃப்தா உடன்படிக்கைகளின் வெற்றிக்காக மேலும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. மேற்படி உடன்படிக்கைகள் பிராந்திய எதிர்கால ஒத்துழைப்பை வளர்க்கின்ற வலுவான காரணிகளாகுமென்பதை புதிதாகக் கூறவேண்டியதில்லை.
சார்க் பிராந்திய நிதியியல் தொழிற்பாடுகள் சார்க் நிதியியல் சேவைத் தொழிற்பாடுகள் 1998 செப்தெம்பர் மாதம் 09 ஆந் திகதி பிராந்திய மத்திய வங்கி ஆளுநர்களினதும் நிதியியல் தொழிற்பாடுகளுக்குப் பொறுப் பாயுள்ள செயலாளர்களினதும் பங்கேற்புடனேயே ஆரம்பமாகியது. அன்றிலிருந்து குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரண்டு தடவையாவது கூட்டம் நடத்தப்படுதல் வேண்டும். இது அநேகமாக உலக வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் வருடாந்தக் கூட்டங்களுக்கு நேரொத்த விதத்தில் நடைபெறும். தற்போது இவ்வாறான 14 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதோடு, சார்க் பிராந்திய நிதியியல் தொழிற்பாடுகள் பற்றிய அமைப்பின் நோக்கங்களைப் பின்வருமாறு நிரல்படுத்தலாம்.
O சார்க் அங்கத்துவ நாடுகளின் மத்திய வங்கிகளினதும் நிதி அமைச்சுக்களினதும் பணியாட்டொகுதியினரின் சுற்றுப் பயணங்கள் மற்றும் நிரந்தரச் செலாவணித் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளல். O பிராந்திய வங்கித் தொழிற்பாடுகளின் ஐக்கியத்தின் பொருட்டு சட்டங்களை இயற்றுதல் மற்றும் அமுலாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தலும் பிரேரணைகளைச் சமர்ப்பித்தலும்.
2007 ஜூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 19
O மிகவும் வினைத்திறன்மிக்க கொடுப்பனவுப் பொறிமுறையொன்றை உருவாக்கும் பொருட்டு சார்க் பிராந்திய நிதியியல் மற்றும் பரிமாற்றம் பற்றிய ஒத்துழைப்பை உருவாக்கிக்கொள்ளல்.
O சார்க் அங்கத்துவ நாடுகளுக்கிடையே பேரண்டப் பொருளாதார முகாமைத்துவம் பற்றிய நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டு அனுபவங்களையும் கருத்துக் களையும் பரிமாறிக்கொள்ளல்.
O பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி மற்றும் தற்காலிகக் கடன்களைப் பெறும் சர்வதேச முகராண்மைகளின் மூலம் நடைபெறுகின்ற நிதி உருவாக்கல்களிலிருந்து உருவாகக் கூடிய இடர்நேர்வுகள் தொடர்பாகவும், உலகளாவிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் அவற்றின் மூலம் உருவாக்கப்படுகின்ற பிராந்திய முரண்பாடுகள் தொடர்பாகவும் ஆய்வு செய்தல்.
O முடியுமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பரஸ்பர நலன்களை முன்னிட்டு நிதியியல் சேவைகளைத் தாராளமயமாக்கல் தொடர்பான சர்வதேச மாநாடுகளின் ஒன்றிணைந்த செயல் முறைமைகள் மற்றும் மேற்கொள்ளப்படும் பொது நடவடிக்கைகள் தொடர்பில் சார்பு நிலையைக் கொண்டிருத்தல்,
O சார்க் பிராந்திய அங்கத்துவ நாடுகளின் நிதி அமைச்சுகள், மத்திய வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் நிறுவனங்களின் பணியாட் டொகுதியினர்களுக்கான பொருளியல் மற்றும் நிதித் தொழிற்பாடுகள் ஆகிய விடயங்களில் உரிய பயிற்சிகளைப் போறுப்பேற்றல்.
O சார்க் பிராந்திய சிறப்பியல்புகள் மற்றும் நானாவிதக் கண்ணோட்டங்களுடன் கூடிய நிதியியல் கொள்கைகள், செலாவணி வீத சீர்திருத்தங்கள், வங்கி மேற்பார்வை மற்றும் மூலதனச் சந்தையை வழிப்படுத்தல் என்பன பற்றி பயிற்சியளிக்கும் நிறுவன வலையமைப்பின் ஊடாக பரிசீலனை செய்தல்.
O சார்க் பிராந்திய நாடுகளின் பரஸ்பர நலன்களின் பொருட்டு பொருளாதார ஆராய்ச்சிகள் மற்றும் நிதியியல் கூற்றுக்களை மேம்படுத்துதல்.
O சார்க் பிராந்திய அமைச்சரவைக் கூட்டங்கள் அல்லது ஏனைய துறைகளின் மூலம் சார்க் நிதியியல் தொழிற்பாடுகளுடன் தொடர்புடைய எந்தவொரு விடயம் தொடர்பாகவும் வழிகாட்டல் அல்லது வேண்டுகோள் விடுத்தல்,
2007 ஜூலை / ஆகஸ்டு - குறிப்பேடு

14வது நிதியியல் தொழிற்பாடு பற்றிய சந்திப்பு மேற்படி விசேடமான விடயத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'சார்க் நிதியியல் தொழிற்பாடுகள்’ (SAARC FINANCE) குழு தனது மேம்பாட்டை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு நடத்தியுள்ள மாநாடுகளின் எண்ணிக்கை தற்போது நாடுகளின் தலைவர்களது மாடுகளின் எண்ணிக்கைக்குச் சமமாக உள்ளது. இறுதியாக செப்தெம்பர் மாதம் 20 ஆம் திகதி சிங்கப்பூரில் மரீனா மன்டரீன் ஹோட்டலில் நடத்தப்பட்ட மாநாடு பதினாலாவது மாநாடாகும். இதில் சார்க் அங்கத்துவ நாடுகளின் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும், நிதி அமைச்சுக்களின் செயலாளர்களும் பங்கேற்றனர். ஏழு சார்க் பிராந்திய நாடுகளும், புதிதாக இதில் இணைந்த ஆப்கானிஸ்தானும் மேற்படி நிதியியல் தொழிற்பாடு பற்றிய சந்திப்பில் கலந்துகொண்டன என்பதோடு, இதில் பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி சலாஹ"தீன் அஹமட் தலைமை தாங்கினார். இங்கு இணக்கத்திற்கு வரப்பட்ட பல விடயங்கள் உள்ளன. மேற்படி இணக்கப்பாடுகளில் சார்க் பிராந்தியத்தின் கொடுப்பனவு தீர்ப்பனவு முறைமையைச் சீர்திருத்துதல் மற்றும் நவீனமயமாக்கல் தொடர்பான பொறுப்புமிக்க கடமை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோன்று மேற்படி அலுவல்கள் 2007 ஆம் ஆண்டினுள் ஆரம்பிக்கப்படுதல் வேண்டுமென்றும் ஆளுநர்கள் இணக்கத்துக்கு வந்தனர். 2007 ஜூலை மாதம் 05 ஆம் திகதி ஆரம்பமாவது மேற்படி மாநாடாகும்.
சார்க் பிராந்திய நிதியியல் துறையின் கொழும்பு மாநாடு உலகமயமாக்கல் நிகழ்வுக்கும் நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும் இணங்க உலக நிதியியல் துறையில் நடைபெறுகின்ற நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் வளர்ச்சிகரமான நிலையிலேயே நிலவுகின்றது. இதற்கிணங்க உலகம் பூராவும் கொடுப்பனவு தீர்ப்பனவு முறைமை நவீனமயமாக்கப்பட்டும் புதிய கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் செயல் முறைமைகளும் உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டும் மீண்டும் மீண்டும் வடிவமையப்பெற்று வருகின்றது.
இத்துறையில் கொடுப்பனவு தீர்ப்பனவுத் தொழிற்பாடுகளைப் பேணிவருதல் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தென் ஆசிய வலயத்தில் உயர் ஸ்தானத்திலுள்ள நாடென்பது ஏனைய சார்க் பிராந்திய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாகும். இந்த அங்கீகாரத்தை உறுதி செய்கின்ற வகையில் குறித்த மத்திய வங்கி ஆளுநர்கள் 2006 ஆம் ஆண்டு உலக வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டின் இறுதியில் 'சார்க் பிராந்திய மத்திய வங்கி ஆளுநர்களின் பங்கேற்புடன் கொடுப்பனவு தீர்ப்பனவுத் தொழிற்பாடுகளை அமைத்துக்கொள்ளும் பொருட்டு மாநாடொன்றை நடாத்தும்படி இலங்கை மத்திய வங்கியிடம் வேண்டுகோள்
19

Page 20
விடுத்தது. மேற்படி வேண்டுகோளுக்கு இணங்க உள்நாட்டு மற்றும் பிராந்திய கொடுப்பனவு தீர்ப்பனவு முறைமைகளின் முன்னேற்றத்தின் பொருட்டு ஒரு குழுவாகச் செயலாற்றுவதற்கு இயலுமாகும் பொருட்டு பிராந்திய நாடுகளின் பங்கேற்புடன் தயாரிக்கப்படும் நிறுவன ரீதியிலான ஒரு வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. முன்னரைப் போன்று கொடுப்பனவு தீர்ப்பனவு முறையைப் பற்றிக் கலந்துரையாடுவதை விட பிராந்திய கொடுப்பனவு தீர்ப்பனவு முறைமையை திருத்துகின்ற குறிக்கோளுடன் செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பதே விசேடமாக இங்கு இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. நிதியியல் சந்தையில் நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கல்கள் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்ற நிலைமையினுள் கொடுப்பனவு தீர்பபனவு முறைமைகளின் செயற்பாடுகள் சிக்கலானதாக அமைவது இயற்கை. ஆதலால் கொடுக்கல் வாங்கல்களைத் தீர்ப்பனவு செய்கின்ற செயற்பாட்டை வினைத்திறனுடன் மேற்கொள்ளும் பொருட்டு நவீனமயமாக்கப்படல் வேண்டும். ஆதலால் தென் ஆசிய பிராந்திய நாடுகளில் கொடுப்பனவு தீர்ப்பனவுக் குழுவொன்றைத் தாபித்தல் காலத்தின் தேவையாகுமென்பதைக் குறிப்பிட முடியும். அவ்வாறானதொரு (5 (൧ ഞഖg) தாபிக்கும் பொருட்டு "கொழும்பு மாநாடு’ நடைபெற்றதென்பதைக் குறிப்பிடுதல் வேண்டும். ஏனைய பிராந்தியங்களின் பொடுப்பனவுக் குழுக்கள் உலகம் பல்வேறு பிராந்தியங்களாகப் பிரிந்து ஒழுங்கமையப் பெற்றுள்ளதென்பது வெளிப்படையானதொரு விடயமாகும். சமூக, அரசியல், கலாசார ரீதியிலும் அதேபோன்று வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியிலும் குழுக்களாக அமையப்பெற்றுள்ளன. சார்க் பிராந்தியத்திற்கு தற்போது கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் குழுவொன்றுடன் கூடிய அமைப்பொன்று இல்லாத போதிலும், உலகின் ஏனைய பொருளாதார வலயங்களில் அவ்வாறான குழுக்களுடன் கூடிய பல அமைப்புகளைக் காணலாம்.
தென் ஆபிரிக்காவில் உள்ள பல மத்திய வங்கிகள் ஒன்றுசேர்ந்து தென் ஆபிரிக்க அபிவிருத்திக் குழுக் கொடுப்பனவு (pubif (Southern African Development Community Payment Initiative - SADC) என்ற பெயரில் கொடுப்பனவு தீர்ப்பனவுக் குழுவொன்றும் முறையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்கக் கண்டத்திலும் இவ்வாறானதொரு அமைப்பு g.T 3.5 LIL (Birgig), 915), Southern Arizona Mortgage Lenders' Association (SAMLA) 9,5 LĎ. GDI (85 (BLITT GÖT MBI (33 TT6îulup நாட்டிலிருந்து பிரிந்து சென்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், Economic Forum Switzerland Central/Eastern Europe (ESCE) எனும் பெயரில் மேலுமொரு அவ்வாறான அமைப்பை நிறுவிக்கொண்டுள்ளன.
கொழும்பு ~ 13, 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தையில இலங்கை மத்திய வங்கியின்
 

ஆரம்பத்தில் தேசிய 上 கொடுப்பனவுகள்
தீர்ப்பனவுகளுடன் தொடர்புடைய முறைமையை ஒழுங்காக அமைத்துக்கொண்டதன் பின்னர் பிராந்திய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாயுள்ள கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் முறைமையை அமைத்துக்கொள்ளலாம்.
ஆசிய தீர்ப்னவுச் சங்கம் * இலங்கை மத்திய வங்கி பிராந்திய ரீதியில் கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் தொழிற்பாட்டின் பொருட்டு ஆசிய தீர்ப்பனவுச் 3/513555.65 (Asian Clearing Union - ACU) 9)||E|35.5356) UT(3) b. இது தொன்றுதொட்டு வருகின்ற அங்கத்துவமாகும். அதேபோன்று ACU நிறுவனமும் பழைய சங்கமொன்றாகும். மத்திய வங்கி உருவாக்கப்பட்டு பிராந்திய கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் தொழிற்பாடுகளில் ஈடுபடுகின்றபோது ஆசிய தீர்ப்பனவுச் சங்கத்தால் நடைபெற்ற சேவை போற்றத்தக்கதாகும். ஆயினும், உலக நிதியியல் சந்தையிலும் பிராந்திய நிதியியல் சந்தை மற்றும் கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் முறைமையினுள்ளும் நடைபெற்றுள்ள மாற்றங்கள் மற்றும் சிக்கலான நிலைமைகளுக்கு ஒப்பீட்டளவில் நோக்குகின்ற விடத்து ACU நிறுவனம் மிகவும் பழைய மட்டத்திலேயே நிலவுகின்றது. இங்கு பழைய தீர்ப்பனவு முறைகளே உள்ளன. அத்தகைய செயல் முறைகள் மிகப் பழைமைவாய்ந்தனவாகும். இங்கு நிலவுகின்ற இடர்நேர்வும் அநேகமாகும். கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் தாமதமாகின்றன. செயல் நடைமுறைகள் மிகவும் வினைத்திறனற்ற நிலைமையில் உள்ளன. இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்களுக்குச் செய்யப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் மந்தகதியில் நடைபெறுகின்றன. தகவல்களின் உட்பாய்ச்சல் மிகவும் தாமதமாகவே நடைபெறுகின்றது. இந் நிறுவனத்தின் கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் கடந்த காலத்திற்கு ஏற்புடையனவாக இருந்த போதிலும், வேகமாக விரிவடைந்து வருகின்ற தற்கால உலகிற்குப் பொருந்துவதாயில்லை. நிலைமை இவ்வாறாக இருந்த போதிலும், ACUவை மூடி விடுவதற்கு எந்தவொரு அங்கத்துவ நாடும் விரும்பவில்லை. ஆதலால் நவீன தொழில்நுட்ப உலகிற்குப் பொருந்துகின்ற விதத்தில் ACU நவீனமயமாக்கப்படல் வேண்டுமென்பது பெரும்பாலான பிராந்திய பொருளியலாளர்களது கருத்தாக உள்ளது. இக்கருத்தைச் செயற்படுத்துதல் சார்க் பிராந்திய கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் (UD60) 1360)LD60)UU மறுசீரமைக்கின்ற பணிகளுக்குப் பொறுப்பாகவுள்ள குழுவின் பிரதானமானதொரு நோக்கமாகும். அப்போது பிராந்தியத்தின் கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் முறைமை வினைத்திறன்மிக்கதாக மாறி, இடர்நேர்வுகள் குறைவடைந்து பாதுகாப்பான g56T60)LD அதிகரிக்கும்.
ॐ&:*:
மைந்துள்ள (ஆட்டுப்பட்டித்தொரு) கெளரி அச்சகத்தில் அச்சிடப்பட்டு
கருத்துக்களாகாதிருக்கலாம்.