கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2008.03-04

Page 1

6LT53TU डाङ,
அரச நிதிக் கொள்கை, நாணயக் கொள்கை, செலாவணி வீதக் கொள்கை ஆகியவற் றிற்கும் வெளிநாட்டுத்துறைக் கொள்கைக்கும் 360 Lulo) IGO இணைப்பாக்கத்தின் முக்கியத்துவம்
புதிய கம்பனிகள் சட்டத்திற்கு ஒரு (Up6OsgO)6OD
நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய புதிய கம்பனிகள் சட்டம் தொழில திபர்களுக்கு ஒரு a gig.6O)6OOT
6)InflāSuurT6Tñ 6T6ÖTU6) uñi uTsi?

Page 2
குறிக்கோள் களை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் கடை அதனைக் கொள்கை எனக் குறிப்பிடுகிறோம். எந்தவொரு நாட்டிற்கு கொள்கை உள்ளது. அதேபோன்று எந்தவொரு பொருளாதாரத்திலு செயற்படுகின்றன. இத்துறைகளின் செயற்பாடுகளை அளவிடுவதற் சுட்டெண்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்களை உருவாக்கிக் கொள்வதற்காக பொருளாதாரக் கொள்கைகள் வகுச் Ga5T6T60)5 (Fiscal Policy) Digitb 5T600Tud, GabT6i6)35 (Moneta பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட் படுகடன் செலவினம் ஆகியவற்றின் நெறிப்படுத்தலின் பொருட்டு கொள்கையினுள் நிலையான அல்லது மிதக்கவிடப்பட்ட செலா சந்தையில் தலையிடுவதற்கான செலாவணி வீதக் கொள்கை, ெ கமத்தொழில் கொள்கை, கைத்தொழில் கொள்கை போன்ற பல்வேறு பெறுபேறினை நாட்டின் பொருளாதாரச் செயற்பாடு எனக் கூறுகிறே ஒழுங்குமுறையாக்குவதற்கும் என அரசாங்கத்தினால் பல்வேறு தொழில்துறையின் மூலம் குடும்பங்களின் பயன்ப்ாட்டின் பொருட்டு வ பிரிவை ஒழுங்குமுறையாக்கும் பொருட்டு காலத்துக்குக் காலப விடயமாகும்.
புதிய கம்பனிகள் சட்டமும் அவ்வாறான ஒன்றாகும். சமூகத்தின் ந வழங்குகின்ற பொறுப்பு தொழில்துறைப் பிரிவின் அனைத்து கூட்டி ஒப்படைத்தலுடன் இணைந்த சட்ட விதிகளுடன் கூடிய நிபந்த ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை சட்ட விதிகளில் மிகவும் சிறந்த கம்பனிகளின் நிலைத்திருத்தலின் பொருட்டு திருத்தப்பட்டுள்ளன. 1982 ஆம் ஆண்டிலிருந்து அமுல்படுத்தப்பட்ட 17 ஆம் இலக்க க கம்பனிகள் சட்டம் 25 வருடங்களுக்குப் பின்னரே வருகின்றது. ஆ இது தொடர்பில் இத்தடவை குறிப்பேட்டில் விசேடமாகக் கலந்து
குறிப் GuG ISSN 1391-7676
2008 மார்ச்/ஏப்பிரல்
ஒரு பிரதியின் விலை : ebusT 10.00 வருடாந்த சந்தா : ரூபா 240.00 (தபாற் கட்டணத்துடன்)
தொடர்பூட்டல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி எனக் குறிப்பிடப்பட்ட காசுக்கட்டளைகள்/ காசோலைகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் “குறிப்பேடு" சஞ்சிகையை மாதாந்தம் அஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம்.
பணிப்பாளர், தொடர்பூட்டல் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, த.பெ.இல. 590, கொழும்பு.
“குறிப்பேடு” சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள் கட்டுரை ஆசிரியரின் க

ப்பிடிக்கும் செயல்முறைகளை முழுமையாக நோக்குகின்ற போது பொருளாதாரத்தை நெறிப்படுத்துதல் தொடர்பில் ஒரு பொருளாதாரக் ம் குடும்ப, தொழில்துறை மற்றும் அரசதுறை என மூன்று துறைகள் கு பொருளியல் ரீதியிலான சுட்டெண்களே பயன்படுத்தப்படுகின்றன. அடிப்படையாகக் கொண்டு மிகவும் சிறந்ததொரு சமூக சூழலை கப்படுகின்றன. மேற்படி கொள்கையானது, முக்கியமாக அரச நிதிக் ry Policy) என இரண்டு துறைகளைக் கொண்டுள்ளது. பேரண்டப் டு அரச நிதிக் கொள்கையும், பண நிரம்பல், வட்டி வீதம் மற்றும் நாணயக் கொள்கையும் அமுலாக்கப்படுகின்றது. மேற்படி நாணயக் வணி வீத முறையின் மூலம் அல்லது வெளிநாட்டுச் செலாவணிச் பாருளாதாரத்தில் நிரம்பல் துறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற பட்ட கொள்கைகள் அமுலாக்கப்படுகின்றன. இவ்வாறு செயற்படுவதன் ம். பொருளாதாரச் செயற்பாட்டை மென்மேலும் பலப்படுத்துவதற்கும், லுபட்ட கட்டளைச் சட்டங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. இங்கு ழங்கப்படுகின்ற பணிகள் மிகப் பாரியதாகுமென்பதால் தொழில்துறைப் ) பல்வேறு கட்டளைச் சட்டங்களை அங்கீகரித்தல் சிறந்தொரு
நிலைத்திருத்தலுக்குத் தேவையான பண்டங்கள் மற்றும் பணிகளை ணைக்கப்பட்ட கம்பனிகளிடமும் ஒப்படைக்கப்படுகின்றது. மேற்படி னைகளும் உள்ளன. ஆயினும் 1861 ஆம் ஆண்டில் கம்பனிகள் நிருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லையென்றே அறியவந்துள்ளது. இன்றுவரையிருந்த சட்ட விதிகள் இதன் காரணத்தினாலேயே
$ம்பனிகள் சட்டத்திற்குப் பதிலாக மாற்றீடு செய்யப்படுகின்ற புதிய }து 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டமாகும். ரையாடப்படுகின்றது.
கட்டுரைகள் பக்கம்
அரச நிதிக் கொள்கை, நாணயக் கொள்கை, செலாவணி வீதக் கொள்கை ஆகியவற்றிற்கும் வெளிநாட்டுத்துறைக் கொள்கைக்கும் இடையிலான இணைப்பாக்கத்தின் முக்கியத்துவம் 3.
புதிய கம்பனிகள் சட்டத்திற்கு ஒரு முன்னுரை 9
நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய புதிய கம்பனிகள் சட்டம் தொழிலதிபர்களுக்கு ஒரு உறுதுணை 1 4
வங்கியாளர் என்பவர் யார்? 18
அட்டைப்படம்: பூரீ தர்சன நாரன்பனாவ
நத்துக்களேயொழிய இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களாகாதிருக்கலாம்.
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

Page 3
ళ్లుళ్ల
அரச நிதிக் கொள்கை, நான வீதக் கொள்கை ஆகியவற்
665mGloadigb G60Ujan முக்கியத்துவம்
எஸ். ஆர்.
தொடர்பூட்டல்
அறிமுகம்
ஒரு அரசாங்கத்தினால் அல்லது ஒரு அரசியல் கட்சியினால் அல்லது வேறேதேனுமொரு தொழில் நிறுவனத்தினால் நிறைவேற்றிக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற குறிக்கோள்களை உருவாக்கிக்கொள்ளும் பொருட்டு பயன்படுத்தக் கூடியதாயுள்ள செயல் முறைமைகளை உள்ளடக்கியதான கொள்கைகள் அத்தகைய நிறுவனங்களால் வகுக்கப்படுகின்றன. உதாரணமாக அரசாங்த்துறையை நோக்குகின்றவிடத்து அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்களாக, தொழில்நிலை, உயர் பொருளாதார வளர்ச்சி வீதத்தினைப் பேணிவருதல், வருமான முரண்பாட்டைக் குறைத்தல் மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு பல்வேறு கொள்கைகள் கடைப்பிடிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டலாம் என்பதோடு, மேற்படி குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பயன்படுத்தக் கூடியதாயுள்ள கருவிகளாக நிதிக் கொள்கை, நாணயக் கொள்கை, அரச கொள்கைகள் மற்றும் விலைக் கொள்கை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டலாம். எவ்வாறாயினும் ஒரு பொருளாதாரத்தை நெறிப்படுத்துவதன் ஊடாக பொருளாதாரக் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான கொள்கைகளை வகுக்கின்றபோது இதற்காகச் செயலாற்றுகின்றவர்கள் அத்தகைய பொருளாதாரத்தின் நிரம்பலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கொள்கைகள் அல்லது கேள்வியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கொள்கைகள் அல்லது அந்த இரண்டு துறைகளையும் தெரிவுசெய்ய முடியும். பொருளாதாரத்தின் நிரம்பலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற கொள்கைகளை அமுலாக்கக்கூடிய பல உபாய வழிமுறைகள் உள்ளன. இதில் நாட்டின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதை நிலைக்குத்தாக அல்லது கிடையாக மேற்கொள்ள முடியும். இவ்வாறு நாட்டின் ஒட்டுமொத்தமான உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்தல் நாட்டினுள் நிரம்பல்
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு
 
 

lui 6hanghoa, 666,76)6 of ற்கும் வெளிநாட்டுத்துறைக்
මුග620IUUtTööග්‍රීෂ්ණf
சுமனசேகர
திணைக்களம்
உயர்வதற்குக் காரணமாயமையும் அதேபோன்று நாட்டின் சர்வதேச வர்த்தகத்தின் மூலம் ஏற்றுமதியை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் காரணமாக ஒட்டுமொத்தமான நிரம்பல் விரிவடையும். இதைத் தவிர உற்பத்திச் செலவினத்தைக் குறைப்பதற்குத் தேவையான கொள்கைகள் தொடர்பில் கவனத்தைச் செலுத்துதலும், உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தலும், உழைப்பின் விளைவுத்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான கொள்கைகளை வகுத்தலும் ஒரு நாட்டின் ஒட்டுமொத்தமான நிரம் பலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்களாகுமென்பதைச் சுட்டிக்காட்டலாம். பொருளாதாரத்தின் ஒட்டு மொத்தமான கேள்வியை நெறிப்படுத்துவதுடன் தொடர்புடைய கொள்கைகளை முக்கியமாக நாணயக் கொள்கை, அரச நிதிக் கொள்கை, செலாவன்னி வீதம் மற்றும் வெள்நாட்டுத்துறைக் கொள்கை ஆகிய பிரிவுகளின் கீழ் கலந்துரையாட முடியும். எவ்வாறாயினும் ஒருசில கொள்கைகள், உற்பத்தித் துறையின் முன்னேற்றம் அல்லது பின்னடைவின் ஊடாக மற்றும் கேள்வி அதிகரித்தல் அல்லது பின்னடைவுக்குள்ளாவதன் காரணத்தினால் நாட்டின் ஒட்டுமொத்தக் கேள்வி மற்றும் நிரம்பல் ஆகிய இரண்டு துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு கொள்கை வகுப்போருக்கு இது தொடர்பிலான சிறந்ததொரு அறிவு அவசியமாகும் என்பதோடு, அப்போதைக்குள்ள பொருளாதார நிலைமைகளும் அதேபோன்று முரண்பட்ட் நிலைமைகளின் கீழ் தகுந்த பொருளாதாரக் கொள்கைகளைத் தெரிவு செய்யக்கூடிய ஆற்றலும் இருக்க வேண்டுமென்பதும் இதன் மூலம் தெளிவாகின்றது. கேள்வியை நெறிப்படுத்தக்கூடிய கொள்கைகள் மற்றும் அவற்றை நெறிப்படுத்துவோர் யார் என்பதைப் பற்றியும், அதன் பொருட்டுப்
இடையிலான இடைத்தொடர்புகளும், அவற்றின் இணைப்பாக்கம்

Page 4
மற்றும் இணைப்பாக்கத்தின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளும் விளக்கமாக இக்கட்டுரையின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்றது.
நாணயக் கொள்கையை நெறிப்படுத்தக்கூடிய கருவிகள்
நாணயக் கொள்கை என்பது, நிதியாளுகை நிறுவனங்களால் நாணயக் கையிருப்பு, நாணயத்தின் விலை, மற்றும் கடன் தொகை ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானமாகும் என்பதோடு, இது விலை மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டை நோக்கமாகக் கொண்டுள்ளது. இங்கு நாணயக் கொள்கையை அமுலாக்குவதன் ஊடாக எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு பல்வேறு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் வங்கி வீதம், நியதிச் சட்ட ஒதுக்கு வீதங்களை விதித்தல், திறந்த சந்தைத் தொழிற்பாடுகள், கொள்கை வட்டி வீதத்தை நெறிப்படுத்தல் மற்றும் நாகரிகமான தந்திரோபாயங்கள் போன்ற கருவிகள் அநேகமாகப் பயன்படுத்தப் படுகின்றன.
தற்காலத்தில் மேற்படி கருவிகளில் ஒதுக்கு வீதங்கள், திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் மற்றும் கொள்கை வட்டி வீதத்தை நெறிப்படுத்தல் ஆகியன மிகவும் பிரபல்யமாயுள்ளதைக் காணலாம். நியதிச் சட்ட ஒதுக்கு வீதமாக தற்போது வர்த்தக வங்கிகள் தமது வைப்புகளில் 10 சதவீதத்தை மத்திய வங்கியில் வைப்பிலிடுதல் வேண்டும். இதைத் தவிர மத்திய வங்கி திறந்த சந்தைத் தொழிற்பாடுகளில் ஈடுபடுகின்ற தென்பதை மத்திய வங்கி அறிக்கையின் படி விளக்க முடியுமாயுள்ளது. இதன் மூலம் நிதிச் சந்தையில் நிலவுகின்ற மேலதிக திரவத் தன்மை உள்ளீர்க்கப்படுமென்பதைக் காணலாம். இதற்கிணங்க திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் நாளாந்த மீள் கொள்வனவுக் கொடுக்கல் வாங்கல் ஏல விற்பனையில் ஈடுபட்டதோடு நேர்மாற்று மீள் கொள்வனவு ஏல விற்பனையில் ஈடுபடவில்லை. ஆயினும் நிரந்தர வசதிகளை வழங்குதல் தொடர்ந்து நடைபெற்றது. இவற்றிற்கு மேலதிகமாக நிரந்தர அடிப்படையில் விற்பனை செய்கின்ற ஏல விற்பனைகளும் நடைபெற்றன.
மீள் கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள் கொள்வனவுத் தொழிற்பாடுகளின் பொருட்டு மத்திய வங்கி தம்மிடமுள்ள திறைசேரி உண்டியல்களைப் பயன்படுத்துகின்றது. திறந்த சந்தைத் தொழிற்பாட்டில் பங்கேற்கின்ற ஒரு நிறுவனத்திற்கு தம்மிடம் உள்ள மேலதிகப் பணத்தை இதன் கீழ் மத்திய வங்கியில் வைப்பிலிட முடியுமாயுள்ளது. இங்கு மேற்படி வைப்புகளுக்கு குறைந்தபட்சம் தற்போது 10.5 சதவீத வட்டி கிடைக்குமென்பதோடு, இதன் பொருட்டு மத்திய வங்கியின் பெயரிலுள்ள திறைசேரி உண்டியல் அல்லது அவ்வாறானதொரு உண்டியல் வங்கியின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதென சான்றிதழ் ஒன்று வழங்கப்படும். இது மீளக் கொள்வனவு செய்யப்படும் என்ற அடிப்படையில் வழங்கப்படுமென்பதால், இது ஒரு மீள் கொள்வனவுக் கருவியாக இருக்குமென்பதோடு, பங்கேற்ற நிறுவனத்தின் வைப்புகளுக்கு வழங்கப்படும் ஒரு பிணையாகவும் உள்ளது.
 

நேர்மாற்று மீள்கொள்வனவு என்பதன் மூலம், பங்கேற்பு நிறுவனம் எதிர்நோக்குகின்ற ஒரு திரவத் தன்மைப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்காக உள்ள இறுதி நிதியென்பது கருதப்படுகின்றது. இங்கு மத்திய வங்கியிலிருந்து ஏதேனுமொரு பிணையின் மீது கடன் பெறுவதற்கும் கடனை மீளச் செலுத்துகின்ற போது தமது பிணையை மீளப் பெறுவதற்கும் முடியமாயுள்ளதனால் இதனை நேர்மாற்று மீள்கொள்வனவு என அழைக்கிறோம்.
இலங்கை மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு இறுதிக் கடன் கொடுப்போராகச் செயற்படுகின்றது. திரவத் தன்மைப் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள ஒரு வர்த்தக வங்கி இறுதியாகக் கடன் பெறுவதற்கு இலங்கை மத்திய வங்கியிடம் வருகின்றதென்பதே இதன் மூலம் கருதப்படுகின்றது. இங்கு வங்கி வட்டி வீதத்தின் மீது கடன் வழங்கப்படும். பொதுவாக வங்கி வட்டி வீதம் நேர்மாற்று மீள் கொள்வனவு வீதத்தை விட அதிக பெறுமானத்தைக் கொண்டிருக்கும். அதேபோன்று வர்த்தக வங்கிகளில் கடன் வழங்கப்படுகின்றபோது போதியளவில் கடன் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும் முடியுமாயிருக்கும். இவற்றைத் தவிர மீள் நிதியிடல் வசதிகளை வழங்குதலும் வர்த்தக வங்கிகளுடன் கலந்துரையாடி அவற்றின் நிதியியல் தொழிற்பாடுகளை நிர்வகித்தலும் நாணயக் கொள்கைக் கருவியின் கீழ் வருமென்பதோடு, மேற்படி கருவியின் மூலம், ஒட்டுமொத்தமான வங்கி முறைமையினுள் பண நிரம்பலின் மீதான மாற்றங்களின் ஊடாக பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகளைத் தவிர்த்தலே எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச நிதிக் கொள்கைகளை நெறிப்படுத்துகினிற கருவிகள்
அரச நிதித் தொழிற்பாடுகளின்போது, அரச செலவுகளைத் தீர்ப்பதற்கான வருமானத்தைப் பெறுவது எவ்வாறு என்பதே முக்கியமான ஒரு விடயமாக இருக்கும். இதில் வரி விதிப்பின் மூலம் பெறப்படுகின்ற வருமானம் முக்கியமான இடத்தை வகிக்கின்றது. அரச வரிக் கொள்கைகளின் மூலம் அரசிறைத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதேபோன்று அரச துறையினால் சேவைகளுக்கான கட்டணங்கள் அல்லது விலை அதிகரிக்கப்படுவதன் மூலம் அல்லது குறைக்கப்படுவதன் மூலம் அரச வருமானத் துறை மற்றும் செலவுகள் துறையில் தீர்ப்பனவுகளை மேற்கொள்ள முடியும் என்பதையும் இங்கு நினைவூட்டுதல் வேண்டும். அரச வரவு-செலவுத் திட்ட அறிக்கையொன்று தயாரிக்கப்படுகின்றபோது மேற்படி துறைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதை அநேகமாகக் காணலாம். அதேபோன்று நடைமுறைச் செலவு மற்றும் மூலதனச் செலவுக் கட்டுப்பாட்டினை அரச நிதி நெறிப்படுத்தல் கருவியொன்றாகக் குறிப்பிட முடியுமாயுள்ளது.
அரச செலவுகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை யெடுத்தலானது இங்கு கவனத்திலெடுக்கப்பட வேண்டிய ஒரு அரச நிதிக் கொள்கையாகும். இதன் பொருட்டு பல நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதைக் காணலாம்.
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

Page 5
2ళ:## 畿 魏
அதாவது, அரச செலவுகள் துறையை மறுசீரமைத்தல், அரச செலவுகளின் உள்ளடக்கம் தொடர்பில் மீள ஆராய்தல் மற்றும் பொதுச் சேவைகளை வழங்குகின்றபோது செலவுகளைக் குறைத்தல் ஆகியனவாகும். வரவு-செலவுப் பற்றாக்குறையைத் தீர்க்கின்ற முறை அரச நிதியியல் தொழிற்பாடுகளில் ஒரு பிரிவாகும் என்பதைச் சுட்டிக்காட்டலாம். இங்கு மத்திய வங்கியிலிருந்தும் வர்த்தக வங்கிகளிலிருந்தும் கடன் பெறுதல் அல்லது வெளிநாடுகளிலிருந்து கடன் பெறுதல் நடைபெறலாம். இவற்றையும் அரச நிதிக் கொள்கைக் கருவிகளாகச் சுட்டிக்காட்டலாம். அரச கடன் நிர்வாகமானது அரச நிதி நிர்வாகத்தின் பொருட்டு பயன்படுத்தக்கூடிய சிறந்ததொரு கருவியாகும். குறிப்பாக அரச கடன் ஆண்டுதோறும் அதிகரித்தல் பொருளாதார உறுதிப்பாட்டில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு காரணியாகும் என்பதைச் சுட்டிக்காட்டலாம்.
வெளிநாட்டுத்துறைக் கொள்கைகளை நெறிப் படுத்தும் கருவிகள்
இதன் கீழ் வெளிநாட்டுத் துறையின் ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகள் உள்ளடங்குகின்றன. இங்கு ஏற்றுமதிகளை விட அதிகளவிலான இறக்குமதிகளின் காரணத்தினால் தற்காலிக அல்லது தொடர்ச்சியான சென்மதி நிலுவைப் பிரச்சினைகள் உருவாகலாம். செலாவணி வீதத்துடன் தொடர்புடைய கொள்களை ஆக்குதல் இதில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. நிலையான செலாவணி வீத முறை அல்லது மிதக்கும் செலாவணி வீத முறையைப் பயன்படுத்துதல் ஒரு நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளின்படி மாற்றமடையும். அதேபோன்று வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் தலையிடுவதன் மூலமும் அதற்குத் தேவையான சட்டங்களை ஆக்குவதன் மூலமும் வெளிநாட்டுத் துறையைத் தேவையான விதத்தில் அமைக்கலாம். மேலும், செலாவணிக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கைகளை அமைத்தலையும் வெளிநாட்டுத் துறையின் கொள்கைக் கருவியொன்றாகச் சுட்டிக்காட்டலாம். இங்கு இறக்குமதி அல்லது ஏற்றுமதித் துறையில் மாற்றங்களைச் செய்வதற்குத் தேவையாகின்றபோது ஒருசில பண்டங்களின் இறக்குமதி அல்லது ஏற்றுமதியை முன்னுரிமை அடிப்படையில் கட்டுப்படுத்தலாம். அதேபோன்று வெளிநாட்டு வர்த்தகத்தில் வரி விதித்தல் மற்றும் அகற்றுதல் மூலம் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கைகளை நெறிப்படுத்த முடியுமாயிருக்கும். இறுதியாக வெளிநாட்டுக் கடன் நிர்வாகத்தினையும் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கைக்கான தகுந்ததொரு கருவியாக இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும்.
ஏனைய கொள்கைகள்
மேலே குறிப்பிட்டுள்ள பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு மேலதிகமாக வருமானத்துடன் தொடர்புடைய ஒருசில கொள்கைகளையும் சுட்டிக்காட்ட முடியும். இங்கு சம்பளம் மற்றும் வேதனக் கொள்கையும் உள்நாட்டு வர்த்தகக் கொள்கையும் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. உள்நாட்டு வர்த்தகக்
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு
 
 

கொள்கைக் கருவியென்ற வகையில் நிவாரணங்களை வழங்குதல் அல்லது வெட்டுதல் மற்றும் உள்நாட்டு வர்த்தகக் கட்டுப்பாடு தொடர்பிலான சட்டங்களை ஆக்குதல் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டலாம்.
கொள்கை வகுத்தலுக்கான அதிகாரம்
மேலே ஆரயப்பட்ட கொள்கைகளுடன் தொடர்புடைய பொறுப்பு/அதிகாரம் நாட்டிற்கு நாடு வித்தியாசமானதாக இருப்பினும் இலங்கையில் இது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள விதத்தினைக் காட்டலாம். குறிப்பாக அரச நிதிக் கொள்கைகளுக்கான அதிகாரம் அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசாங்கம், உள்ளுராட்சி மற்றும் பிரதேச ஆட்சி உள்ளடங்குகின்றன. நாணயக் கொள்கைகளின் பொறுப்பு மத்திய வங்கிக்கு அல்லது நிதியாளுகை நிறுவனத்துக்கு உரியதாயுள்ளது. இறுதியாக வெளிநாட்டுச் செலாவணி மற்றும் சென்மதி நிலுவைக் கொள்கைகளுக்கான அதிகாரம் இலங்கை மத்திய வங்கிக்கும் அரசாங்கத்துக்கும் உரியதாயுள்ளது.
βραδυφ கொள்கைகளுக்கு 36DuG8U இணைப்பாக்கம் இருக்க வேண்டியது ஏணி?
மேலே சுட்டிக்காட்டப்பட்டவாறு மேற்படி கொள்கைகளின் பொருட்டு பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் பல்வேறாகும் என்பதை நாம் கண்டோம். அதேபோன்று இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற நோக்கங்கள் பல்வகையாகும். மேலும், கொள்கைகள் ஒன்றுடனொன்று விருப்புத் தெரிவின் பிரகாரமும் செயற்படுகின்றன. இதன் காரணமாக மேற்படி கொள்கைகளைத் தனித்தனியாகக் கருத முடியாது. அவற்றை அமுலாக்குகின்ற போது அவற்றுக்கிடையே ஒரு இணைப்பாக்கம் அவசியம் என்பது தெளிவானதொரு விடயமாகும். அதேபோன்று மேற்படி கொள்கைகளைப் பெரும்பாலும் பதிலீடாகவும், குறைநிரப்பியாகவும் அமுலாக்கக் கூடியதாயுள்ளது. மேற்படி கொள்கைகளின் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களைப் பயனுறுதியான விதத்தில் நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு கொள்கைகள், குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளுக்கிடையில் தொடர்பைப் பேணிவருதல் அத்தியாவசியமானதொரு விடயமாகும். அதேபோன்று கொள்கைகளுக்கிடையே ஒன்றுடனொன்று மோதுவதைத் தவிர்க்கும் பொருட்டு இவற்றிடையே தெளிவானதொரு ஒருங்கிணைப்பு இருத்தல் வேண்டும். இவை செயற்படுகின்றபோது ஒவ்வொன்றும் வெவ்வேறாகத் தனி அலகுகளாகச் செயற்படுவதை விட ஒன்றுடனொன்று இணைந்து செயற்படுமாயின் அதன் மூலம் கிடைக்கின்ற பெறுபேறுகள் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும். இதன் காரணமாக ஒரு பொருளாதாரத்தில் இக் கொள்கை களுக்கிடையே இணைப்பாக்கம் நிலவுதல் மிகவும் பயனுள்ள தென்பதைக் காண்கிறோம்.
ஒரு பொருளாதாரம் முக்கியமாக நான்கு துறைகளைக் கொண்டதாயிருக்கும். அதாவது உண்மைத் துறை, நிதித் துறை,

Page 6
அரச நிதித் துறை மற்றும் வெளிநாட்டுத் துறை என்றவாறாகும். இந்த ஒவ்வொரு துறையுடனும் தொடர்புடைய கொள்கைகளை முறையே வருமானக் கொள்கை, நாணயக் கொள்கை, அரச நிதிக் கொள்கை அத்துடன் செலாவணி வீத மற்றும் சென்மதி நிலுவைக் கொள்கை எனக் குறிப்பிடலாம். ஒரு பொருளாதாரம் அபிவிருத்தியடைகின்றபோது மேற்படி அனைத்துத் துறைகளும் அபிவிருத்தியடைதல் வேண்டும். இதன்படி அந்தந்தத் துறைகளின் பொருட்டான கொள்கைகளின் ஊடாக மிகவும் பயனுறுதியான பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்தல் முழு நாட்டினதும் அபிவிருத்திக்கு அத்தியாவசியமானதொரு விடயமாகும். இவ்வாறு நோக்குகின்ற விடத்து ஒட்டுமொத்தமான பொருளாதார அபிவிருத்தியானது அனைத்துத் துறைகளுக்குமான அபிவிருத்தியின் இறுதிப் பெறுபேறாயிருக்கும் என்பதைக் காண்கிறோம். இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய இன்னொரு விடயம் யாதெனில், அரச நிதித் துறையில், உண்மைத் துறையில் மற்றும் நிதித் துறையில் உறுதிப்பாடின்றி செலாவணி வீதத்தின் நெறிப்படுத்தலைச் சிறப்பாக மேற்கொள்ள முடியாதென்பதாகும். அதேபோன்று அரச நிதித் துறை, வெளிநர்ட்டுத் துறை மற்றும் நிதித் துறை ஆகிய துறைகளில் உறுதிப்பாடின்றி உண்மைத் துறையில் உறுதிப்பாட்டை 960Lu முடியாது. இதற்கான உதாரணங்களைச் சுருக்கமாக் காட்டுவதெனில், மேலதிக மூலதனம் நாட்டிற்குள் பெருக்கெடுக்கின்ற போது நாணயக் கொள்கையை மட்டும் கவனத்திலெடுப்பதன் மூலம் சிறந்த பெறுபேறுகள் கிடைக்காது. எதிர்பார்க்கப்படும் நர்ணயக் கொள்கை அதிக வெற்றியை அளிப்பதற்கெனில் அரச நிதிக் கொள்கையும் உதவியாயமைதல் வேண்டும். அதேபோன்று அரச நிதி விரிவாக்கத்தின் மூலம் உருவாகக் கூடிய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரச நிதிக் கொள்கையுடன் நிதிக் கொள்கையையும் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளைப் பெறலாம்.
வெளியிட்டு மற்றும் பணவீக்க இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டான நாணய மற்றும் அரச நிதிக் கொள்கைகள்
நாணயக் கொள்கைக்கும் அரச நிதிக் கொள்கைக்கும் இடையே ஒரு சிறந்த கலப்பு ஏற்படுமெனில் பொருளாதாரத்தின் வெளியீடுகளில் உறுதிப்பாடு உருவாகும். பின்வரும் வரைகோட்டு வரைபடங்களைப் பார்க்கவும். மேற்படி வரைபடத்திற்கிணங்க அரச நிதிக் கொள்கை மற்றும் நாணயக் கொள்கையின் மூலம் YY வரைகோட்டின் ஊடாக சமநிலையானதொரு நிலை உருவாக்கப்படுகின்றது. மேற்படி சமநிலைக் கோட்டிற்கு அப்பால் அதாவது, மேல் பகுதியின் மூலம் பொருளாதாரத்தின் வெளியீடுகளில் மிகை நிலையொன்று சுட்டிக் காட்டப்படுவதோடு அதன் கீழ் பகுதியின் மூலம் பொருளாதாரத்தின் வீழ்ச்சி நிலை சுட்டிக்காட்டப்படுகிறது.
 

வரைகோட்டு வரைபடம் - இலக்கம் 1
MN y
சிறந்த பொருளாதார நிலை
器 வீழ்ச்சியடைந்த பொருளாதார நிலை
Y
நாணயக் கொள்கை
நாணயக் கொள்கை
பின்வரும் 2 ஆம் இலக்க வரைகோட்டு வரைபடத்தின் மூலம் நாணயக் கொள்கைகளினதும் அரச நிதிக் கொள்கைகளினதும் நிலையான கலப்பின் மூலம் பொருளாதாரத்தின் விலை மட்டத்தில் உருவாகின்ற சமநிலையே காட்டப்படுகின்றது. விலை உறுதிப்பாடு PP எனக் காட்டப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் அதாவது இடது பக்கப் பகுதி பொருளதாரத்தின் சுருக்க நிலையைக் காட்டுவதோடு வலது பக்கப் பகுதி பணவீக்க நிலையைக் காட்டுகின்றது.
வரைகோட்டுவரைபடம் - இலக்கம்2
p
பணச்சுருக்கப் பகுதி
பணவீக்கப் பகுதி
நாணயக் கொள்கை
மேற்படி இரண்டு வரைகோட்டு வரைபடங்களையும் ஒன்றிணைத்து பின்வரும் வரைகோட்டு வரைபடத்தைத் தயாரிக்க முடியும். இவ்வரைகோட்டு வரைபடத்திற்கிணங்க Q புள்ளி விலை உறுதிப்பாடு மற்றும் வெளியீட்டு சமநிலையையும் முழுமையான தொழில் நிலையையும் காட்டுகின்றது.
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

Page 7
வரைகோட்டு வரைபடம் - இலக்கம் 3
Y
Υ
நானயக் கொள்கை
பேரணிடப் பொருளாதார சமநிலைக்கும் உணர்மைச் செலாவணி வீதத்துக்கும் இடையிலுள்ள தொடர்பு
உண்மைச் செலாவணி வீதத்தையும் உண்மைக் கேள்வியையும் இரண்டு விதத்தில் விளக்கலாம். அதாவது, வெளிநாட்டுச் சமநிலை மற்றும் உள்ளகச் சமநிலை என்றவாறாகும் பின்வரும் வரைபடத்தின் உதவியோடு இதன் நடத்தைப்பாங்கை சிறப்பாக விளக்கலாம். உண்மைச் செலாவணி வீதத்திற்கும் உண்மை உள்நாட்டுக் கேள்விக்கும் இடையிலுள்ள தொடர்பை வெளிநாட்டுத் துறையின் ஊடாக ஆராய்கின்றபோது CA வரைகோட்டின் மூலம் காட்டப்படுவதோடு, உள்ளக ரீதியில் ஆராய்கின்றபோது YY வரைகோட்டின் மூலம் காட்டப்படுகின்றது. பின்வரும் வளைகோட்டு வரைபடத்திற்கிணங்க மேற்படி இரண்டு வரைகோடுகளை அடிப்படையாகக் கொண்டு வரைகோட்டு வரைபடத்தை 4 பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
வரைகோட்டு வரைபடம் - இலக்கம் பு
CA
I
1Ꮩ
நாணயக் கொள்கை
. நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மற்றும்
பணவீக்க ரீதியிலான தாக்கம் உள்ள பகுதி
I. நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் உற்பத்தியில் பின்னடைவு உள்ள பகுதி
III. நடைமுறைக் கணக்கில் மிகை உள்ளதோடு
வெளியீடுகளில் குறைவைக் காணக்கூடிய பகுதி
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு
 

VI நடைமுறைக் கணக்கில் மிகை உள்ளதோடு
பணவீக்க ரீதியிலான தாக்கம் உள்ள பகுதி
மேற்படி நான்கு பகுதிகளுக்கும் ஏற்ப உண்மைச் செலாவணி விதத்திற்கும் உள்நாட்டுக் கேள்விக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராய்கின்றபோது இதன் மூலம் உருவாகின்ற பொருளாதாரப் பிரச்சினைகள் பல்வேறானவையாகும் என்பதும் அவற்றிற்கான தீர்வுகளும் பல்வேறாகும் என்பதும் தெளிவாகின்றது. இவ்வாறானதொரு நிலைமையில் ஆராயப்படக்கூடிய கொள்கைகள் யாவையென்பதைப் பற்றி விளக்குதல் நன்மையளிக்கும். செலாவணி வீதத்தை இரண்டு சந்தர்ப்பங்களின் கீழ் விளக்கலாம். அதாவது, நிலையான செலாவணி வீதம் மற்றும் மிதக்கும் செலாவணி வீதத்தைப் பேணிவரும் நாடுகள் என்றவாறாகும். நிலையான செலாவணி வீதத்தைப் பேணிவருகின்ற நாடுகளில் அரச நிதிக் கொள்கைகள் உள்ளக சமநிலையில் செய்யக்கூடிய தாக்கம் மிகவும் பலம்பொருந்தியதாக இருக்குமென்பதோடு, வெளிவாரிச் சமநிலை பலவீனமான நிலைமையில் இருக்கும். அவ்வாறான நிலைமையில் நாணயக் கொள்கைகளை மாற்றுவதன் மூலம் வெளிவாரிச் சமநிலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம். மிதக்கும் செலாவணி வீத நிலையின் கீழ் இந்நிலைமை மாற்றமுறுவதைக் காணலாம். மிதக்கும் செலாவணி வீத நிலைமையின் கீழ் நாணயக் கொள்கை உள்ளக சமநிலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு வெளிநாட்டுச் துறைச் சமநிலையில் அதிக தாக்கத்தைக் காட்டாது. அதேபோன்று நிதிக் கொள்கைகள் வெளிவாரிச் சமநிலையில் அதிக தாக்கத்தையும் உள்ளகச் சமநிலையில் பலவீனமான தாக்கத்தையும் காட்டும்.
நிதிக் கொள்கைகளுக்கும் உண்மைச் செலாவணி வீதத்துக்கும் இடையிலான இணைப்பாக்கத்தின் போது பல்வேறு துறைகள் தொடர்பான உள்ளக மற்றும் வெளிவாரிச் சமநிலை பற்றி ஆராயலாம். இவ்வாறானதொரு நிலைமையின் கீழ் நிதிக் கொள்கைகள் உள்ளக சமநிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்பதோடு, செலாவணிக் கொள்கைகள் வெளிவாரிச் சமநிலைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
இவ்விதம் ஆராயுமிடத்து, பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கின்றபோது அவற்றின் இணைப்பாக்கம் மிகவும் முக்கியமானது என்பதைக் காண்கிறோம். சிறந்ததொரு இணைப்பாக்கத்தின் கீழ் செயற்படுகின்ற பொருளாதாரக் கொள்கைகளின் மூலம் பெற முடியுமான பல அனுகூலங்கள் உள்ளன. அதாவது செயற்படுத்தப்படுகின்ற கொள்கைகளின் மூலம் மிகவும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமாயுள்ளமை, கொள்கைகளை அமுலாக்குவதன் மூலம் ஏற்படக்கூடிய பாதகமான பெறுபேறுகளைக் குறைத்துக்கொள்ள முடியுமாயுள்ளமை மற்றும் கொள்கைகளின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ள முடியுமாயுள்ளமை என்பனவாகும்.

Page 8
ళ్లి వ్లో థ్రోఫి 森リ撃縁義窯な議慈接鶏義露
பொருளாதாரக் கொள்கைகளை இணைப்பாக்கம் 66Fuju (86jadqpuj6um umf?
வரை, மற்றும் அவற்றை மதிப்பாய்வுகளுக்கு உள்ளாக்கின்ற போது, அதேபோன்று மதிப்பாய்வின் பின்னர் அவற்றைத் திருத்துகின்ற போது ஆகிய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் அவற்றில் சிறந்ததொரு இணைப்பாக்கம் இருத்தல் வேண்டும். இந்த இணைப்பாக்கத்தை செய்ய வேண்டியவர் யார்? குறிப்பாக கொள்கை வகுப்பவர்கள் இதனைச் செய்தல் வேண்டும் என்பதைப் புதிதாகக் கூற வேண்டியதில்லை. அதேபோன்று கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்பவர்களும் கொள்கைகளுக்கிடையே சிறந்ததொரு இணைப்பாக்கம் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். அத்துடன் கொள்கையை அமுலாக்குபவர்களும் அதேபோன்று கொள்கைகளை மதிப்பாய்வுக்கு உள்ளாக்குபவர்களும் கொள்கைகளுக்கு இடையிலான இணைப்பாக்கம் தொடர்பில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
கொள்கை இணைப்Uாக்கம் வெற்றியளிப்பதற்கு இருக்க வேண்டிய காரணிகள்
கொள்கை இணைப்பாக்கம் வெற்றியளித்துள்ளதென்பதைத் தீர்மானிக்கின்ற பல காரணிகள் உள்ளன. கொள்கைகள் ஒன்றுடனொன்று முரண்படாதிருத்தல், அவற்றின் தொடர்ச்சியான நிலைத்திருத்தல், நம்பகத்தன்மை, அவற்றின் பொருந்துந் தன்மை, அமுல்படுத்துபவர்களின் திறமை, நிறுவனங்களின் வினைத்திறன், தகுந்த சட்டப் பின்னணியொன்று இருத்தல் மற்றும் தர ரீதியிலான தரவுகளை தேவையான போது பெற்றுக்கொள்ளக் கூடிய ஆற்றல் ஆகியன இவற்றில் முக்கியமானவையாயுள்ளன. உதாரணமாக நோக்குகின்ற விடத்து நாணயக் கொள்கையின் பொருட்டு நிதிக் கொள்கைகளில் நம்பகத் தன்மை இருத்தல் முக்கியமானதாகும் எனக் கருதலாம். அதேபோன்று கொள்கை வகுப்பது தொடர்பில் நம்பகத் தன்மை இருத்தலும் அவை வெற்றியளிப்பதற்குப் பெருமளவு ஏதுவாயமையும்.
கொள்கை இணைப்பாக்கத்திலுள்ள Uரச்சினை கள்
கொள்கை இணைப்பாக்கத்தின் போது பிரதானமானதொரு பிரச்சினையாக இருப்பது அத்தகைய பொருளாதாரக் கொள்கைகளின் நோக்கங்கள், இலக்குகள் மற்றும் கொள்கைகளின் நெறிப்படுத்தல் முறைமையிலுள்ள சிக்கலான தன்மையாகும்.
8

ఫ్లోస్రిబ్లిళ్లభ#భ్యళ్ల##ళ్లజోళ్ల
அதன் சிக்கலான நிலை அதிகரிக்க, அதிகரிக்க இணைப்பாக்கம் இலகுவாக இருக்காது. அதேபோன்று பொருளாதாரக் கொள்கைகளின் எதிர்பார்க்கப்படும் கால கட்டங்கள் பல்வேறாயிருத்தலும் அதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற இன்னொரு பிரச்சினையாகும் என்பதைச் சுட்டிக்காட்டலாம். கொள்கை அமுலாக்கலின் போது கொள்கைகளுக்கிடையே இடைத் தொடர்புகள் இல்லாதிருப்பதன் மூலம் கொள்கைகளின் மூலம் எதிர்பார்க்கப்படும் பெறுபேறைப் பெற்றுக்கொள்ள முடியாமற் போகலாம். இதற்கு அத் தொழிற்பாடுகளிலுள்ள மாற்றமுறும் இயல்பும் காரணமாயுள்ளது. அதேபோன்று கொள்கைகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் நெகிழ்வுத் தன்மையற்றதாயிருத்தலும், கொள்கை மாறிகளின் கடுமையான தன்மையும் இணைப்பாக்கத் தொழிற்பாடுகளுக்குள்ள தடைகளாயுள்ளன. ஒருசில நிறுவனங்களோடு செயற்படுகின்றபோது அவற்றின் சட்டவிதிகள் கடுமையாயிருப்பின், அது அந்நிறுவனத்தின் தொழிற்பாடுகளுடன் தொடர்புடையதாக இணைப்பாக்கத்திற்கு பல்வேறான தடைகளாக இருக்குமென்பது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியதொரு பிரச்சினையாகும். கொள்கைளின் உள்ளடக்கத்தை சிறந்த முறையில் புரிந்துகொள்ளாமை மற்றும் கொள்கைகள் தொடர்பிலான மூட நம்பிக்கைகளும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு இடையிலான இணைப்பாக்கத்திற்குத் தடையை ஏற்படுத்தும்.
சில சந்தர்ப்பங்களில் ஒருசில கொள்கைகள் அமுலாக்கப் படுகின்றபோது பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படாமல் இருக்கலாம். அதேபோன்று கொள்கைகள், கருவிகள், திறமை மற்றும் சட்டப் பின்னணி ஆகிய விடயங்கள் தேவையான அளவு இல்லாமையினால் பல பிரச்சினைகள் இணைப்பாக்கச் செயற்பாடுகளின் போது உருவாகலாம். அதேபோன்று தெளிவான பெறுபேறுகள் உத்தேச அல்லது செயற்படுத்தப்படுகின்ற கொள்கைகளில் இல்லாதிருப்பின் அதுகூட கொள்கை இணைப்பாக்கத்திற்கு ஒரு பிரச்சினையாக இருக்கும். உள்ளக ரீதியில் மட்டுமன்றி வெளிநாட்டு ரீதியில் நடைபெறுகின்ற பொருளாதார மாற்றங்களின் காரணமாகவும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. மேற்படி நிலைமைகளின் கீழ் கொள்கைகளுக்கிடையிலான இணைப்பாக்கம் மிக முக்கியமானதாகும் என்பதை அவதானிக்கலாம். அதேபோன்று இது ஒரு இலகுவான விடயமாகவும் இருக்காது. மேலும், தர ரீதியிலான தரவுகளைப் பெறுவதிலுள்ள கஷ்டமும் கொள்கை இணைப்பாக்கத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். மேற்படி அனைத்துப் பிரச்சினைகளையும் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனில், கொள்கைகளின் மூலம் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை எதிர்பார்க்கலாம்.
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

Page 9
புதிய கம்பனிகள் முன்து
வின்சன் மர்ல
2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க புதிய கம்பனிகள் சட்டம் தற்போது அமுலிலுள்ளது. இது 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்திற்குப் பதிலாக 25 ஆண்டுகளின் பின்னர் பதிலீடு செய்யப்படுகின்ற ஒரு புதிய சட்டமாகும். மேற்படி சட்டத்தின் உள்ளடக்கம் தொடர்பாக எழுதப்படுகின்ற இக் கட்டுரை அதற்கான ஒரு முன்னுரையாகவும் அமையலாம். "கம்பனி" எண்ணக்கரு தொடர்பில் தெளிவானதொரு அறிவைப் பெறாது கம்பனிகள் சட்டத்தின் உள்ளடக்கடத்தைப் புரிந்துகொள்ளுதல் கஷ்டமாகும். இதற்கிணங்க, கம்பனிகள் என்றால் யாது? கூட்டிணைக்கப்பட்ட ஒரு கம்பனியின் முக்கியத்துவம் என்ன? தொழில் விஸ்தீரணத்தின் பொருட்டு கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள் எந்த வகையில் உதவியாயமையும்? தொழில் அமைப்பு முறை என்ற வகையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளின் சாதகமான மற்றும் பாதகமான நிலைமைகள் யாவை? என்பவற்றை ஆராய்வதற்கு கட்டுரையின் முதற் பகுதி ஒதுக்கப்படுகிறது. கட்டுரையின் இரண்டாம் பகுதியின் மூலம் புதிய கம்பனிகள் சட்டம் அங்கீகரிக்கப்படும் வரை இலங்கையின் கம்பனிகள் சட்டங்களின் கடந்த கால வரலாறு தெளிவுபடுத்தப்படுகிறது.
கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள் எண்ணக்கரு
மனிதனுக்குத் தேவையான பண்டங்கள் மற்றும் பணிகள் முறைமையொன்றை வழங்குவதற்கு வளர்ச்சியடைந்த பல்வேறு வகையான வர்த்தகத் தொழில்முயற்சிகளிடையே (Business Enterprises) கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளே முக்கிய இடத்தை வகிக்கின்றன. பழைய எளிமையானதும் அதேபோன்று பிரபல்யமானதுமான தொழில் அமைப்பு முறையான தனி D flap Dust 6Ti Ggirls) (pubfassist (Sole Proprietors) விரிவடைகின்றபோது அவற்றின் பிரதிகூலங்களைத் தவிர்க்கும் பொருட்டு கூட்டுத் தொழில் முயற்சிகள் (Partnership) உருவாக்கப்பட்ட போதிலும் அதைவிட கூட்டிணைக்கப்பட்ட 35th Glassi (Incorporated Companies) Gig Too 6iss Tisabi fig, முக்கியமாயுள்ளன.
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு
 

சட்டத்திற்கு ஒரு
botJ
பின் பர்னாந்து
கம்பனி என்றால் யாது என்பதைப் பற்றி 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத்திலோ அல்லது 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கச் சட்டத்திலோ தெளிவாக வரைவிலக்கணம் அளிக்கப்படவில்லை. புதிய சட்டத்தின் 529 (1) ஆவது வாசகத்தின் பிரகாரம் ஒரு கம்பனி என்பது சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட ஒரு கம்பனியாகும் அல்லது அப்போதைக்குள்ள ஒரு கம்பனியாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று அப்போதைக்குள்ள ஒரு கம்பனி என்பது 1861 ஆம் ஆண்டின் இணைந்த பங்குத் தொகுதிக் கம்பனிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அல்லது 1897 ஆம் ஆண்டின் இணைந்த பங்குத் தொகுதி வங்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அல்லது (145 ஆம் அத்தியாயமான) கம்பனிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அல்லது 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட ஒரு கம்பனி எனக் கருதப்படும்.
கம்பனிகள் சட்டத்துடன் தொடர்புடைய விசேட நீதிமன்றத் தீர்ப்புகளிலும் கூட்டிணைக் கப்பட்ட கம்பனிகளுக்கு வரைவிலக்கணமளிப்பதற்குத் தேவையான கருவிகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, ‘சொலமன் எதிர் வரையறுக்கப்பட்ட சொலமன் கம்பனி வழக்கு’ (Solaman Vs. Solaman Co. Ltd Case) ep6ob g5leb sä5u (666T "saluq6D601556 air D 6from Ldisastb” (Veil of Incorporation) என அழைக்கப்படுகின்ற "ஒரு கம்பனி சட்டத்தின் முன்னிலையிலி ஒரு தனி நபராவார்" எனக் குறிப்பிடப்பட்டிருத்தல் ஒரு கம்பனியை அடையாளம் காண்பதற்கு முக்கியமானதாயிருக்கும். இந்தக் கூற்றின் பிரகாரம் ஒரு கம்பனி அதன் உரிமையாளர்களான பங்கு உரிமையாளர்களினதும் அதேபோன்று கம்பனியை நிர்வகிக்கின்ற பணிப்பாளர்களதும் சுயாதீனமான ஒரு அலகாக அமையும். இதற்கிணங்க கம்பனியின் சொத்துக்கள், பொறுப்புக்கள் மற்றும் ஏனைய உடன்படிக்கைகள் ஆகியன கம்பனிக்கு உரியவையாக இருக்கும். இதனால் தனித் தொழிற் முயற்சிகள் மற்றும் கூட்டுத் தொழில் முயற்சிகளில் உள்ள இடர்களைக் குறைப்பதற்கு தொழில் முயற்சிகள் தொடர்பிலான, "உரிமையாளர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ள

Page 10
奚薇荔鬣魏
வரையறுக்கப்பட்ட ABC கம்பனி m> sommuù (Profits)
நிர்வாகத்திற்கான பணிப்பாளர் சபையைத் தெரிவு செய்தல்
Board of Directors)
மூலதனம் (Capital)
பங்குரிமையாளர்கள் - உரிமையாளர்கள்
(Sant Jub (Profits)
பரிரதி தரியேகதி தனி மை பறி நரிய எணி ணக் கரு” கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகள் உலகில் பரவுவதற்குக் காரணமாக அமைந்ததெனக் கருதலாம். இதனை ஒரு வரைபடம் மூலம் காட்டுவோம்.
மேற்படி அனைத்து விடயங்களையும் கவனத்திற் கொண்டு "கூட்டிணைக்கப்பட்ட கம்பனிக்கு" இவ்வாறு வரைவிலக்கண மளிக்கலாம்.
கூட்டிணைக்கப்பட்ட கம்பனி என்பது "கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, அச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க பேணிவரப்படுகின்றதும் சட்டத்தின் முன்னிலையில் ஒரு தனி நபரைப் போன்று கருதப்படுகின்றதுமான தனி நபராக அல்லது பல அங்கத்தவர்களால் பேணிவரப்படுகின்ற பொறுப்பு வரையறுக் கப் பட்ட அல்லது வரையறுக்கப்படாத ஒரு கூட்டிணைக்கப்பட்ட நிறுவனமாக" இருக்கும்.
கூட்டிணைக்கப்பட்ட 62ცნ 65uafusaf முக்கியத்துவம
கூட்டிணைக்கப்பட்ட ஒரு கம்பனியாக கூட்டிணைக்கப் படுவதன் மூலம் ஏனைய தொழில்துறை அமைப்புகளை விட அதிக சிறப்புரிமைகளைப் பெற முடியுமாயுள்ளது.
முதலாவதாக, ஒரு கூட்டிணைக்கப்பட்ட கம்பனிக்கு அதன் அங்கத்தவர்களிடமிருந்து தனித்து நிற்கின்ற சட்ட ரீதியிலான ஒரு நிலை கிடைக்கின்றது. அதாவது, அது "சட்டத்தின் (upaiafa) souls) 9Qs 56th plugTablis" (Legal Identity) கருதப்படும். மேற்படி நிலைமை முதலாவதாக 1897 இல் சலமன் எதிர் சலமன் கம்பனி வழக்குத் தீர்ப்பின் மூலமே அறிமுகப்படுத்தப் பட்டது. இதனால் ஒரு கம்பனி பங்குரிமையாளர்களது பிரதிநிதியாக அல்லது பொறுப்பாளராக ஆகாது. அதைவிடவும் சட்டமுறையான அதிகாரத்தைக் கொண்ட ஒரு நிறுவன வகையாக இருக்கும். அதாவது கம்பனியின்
10
 

燃赛畿鹫穆签蕊籍
பெயரால் வழக்குத் தாக்கல் செய்வதற்கும், அதற்கெதிராகச் செய்யப்படுவதற்கும் முடியுமாயிருக்கும்.
இரண்டாவதாக, கூட்டிணைக்கப்பட்ட ஒரு கம்பனியின் பங்குரிமையாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்புகளே SOdie5b. (Limited Liability) epilogs, urtigrfloLDu JT6 if தமக்குரிய பங்குக்காக செலுத்தாத ஏதேனுமொரு தொகைப் பணம் இருப்பின் பொறுப்பு அத்தொகைக்கு மட்டும் வரையறுக்கப் பட்டிருக்கும் என்பதாகும். பிணையினால் வரையறுக்கப்பட்ட கம்பனியாயிருப்பின் அத்தகைய பொறுப்பு வாக்குறுதியளிக்கப் பட்டுள்ள பணத் தொகைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாயிருக்கும் என்பதாகும். மேற்படி வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கோட்பாட்டின்படி பங்குரிமையாளர்களது பிரத்தியேக ஆதனங்கள் கம்பனியின் கடனை அடைக்கும் பொருட்டு நீதிமன்றக் கட்டளையின் மூலம் தடை செய்யப்படலாகாது.
மூன்றாவதாக, கூட்டிணைக்கப்பட்ட ஒரு கம்பனிக்குத் தொடர்ச்சியானதொரு நிலைத்திருத்தல் உள்ளது. (Continuity ofExistence)அதாவது, பங்குரிமையாளர்கள் இறந்தால் அல்லது விலகினால் கம்பனியின் நிலைத்திருத்தலுக்கு அதன் மூலம் எவ்விதப் பாதிப்பும் நேரிடாது. இங்கு பங்குரிமையில் ஒரு மாற்றம் மட்டுமே நிகழும். "கம்பனியின் அங்கத்தவர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் கம்பனி எப்போதும் நிலைத்திருக்கும்" எனக் கூறப்படுவதும் உண்டு.
நான்காவதாக, மூலதனத்தை அதிகரிக்கும் பொருட்டு, கூட்டிணைக்கப்பட்ட கம்பனிக்கு பங்கு வெளியீட்டின் மூலம் பங்கு மூலதனத்தை (Share Capital) கட்டியெழுப்ப முடியுமாயுள்ளது. இதற்கிணங்க சிறியதொரு பங்குத் தொகையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் பொது மக்களுக்கு அதன் பங்குரிமையாளர்களாவதற்கான வாய்ப்புக் கிடைக்கின்றது.
ஐந்தாவதாக, கூட்டிணைக்கப்பட்ட ஒரு கம்பனியில் ‘உரிமையும் கட்டுப்பாடும் பிரிந்திருத்தல்" (Seperation of Ownership and Control) (3 DgQLDTQ (pdfu JLDT60T 6Lu IIDIgb. பங்குடைமையாளர்கள் உரிமையாளர்களாவர். பணிப்பாளர் சபை அதன் நிர்வாகத்தை மேற்கொள்ளும். இதன் காரணத்தினால் கூட்டிணைக்கப்பட்ட ஒரு கம்பனியின் ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் நிதிக் கூற்றுக்களும் “பகிரங்கப்படுத்தப்பட்ட" மற்றும் "அறிவிக்கப்பட்ட" என வகைப்படுத்தப்படும்.
ஆறாவதாக, சட்டத்தினால் (சட்டமொன்றின் மூலம்) கட்டுப்படுத்தப்படுகின்ற (Legal Control) இயல்பும் கூட்டிணைக்கப்பட்ட ஒரு கம்பனியின் மேலுமொரு முக்கியமான விடயமாகும். பதிவு செய்யப்படுவதிலிருந்து கலைத்தல் வரையிலான விடயங்கள் குறித்த சட்டத்தின் பிரகாரம் நடைபெறுதல்
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

Page 11
மேற்படி ஆறு விடயங்களையும் "கம்பணிகள் முறையின் சாதகமான பண்புகள்" எனவும் குறிப்பிடலாம்.
தொழில்துறை விரிவாக்கத்திற்கு கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளி உதவியாயமைகினிற விதம்
* பெரும் மூலதனத்தைத் திரட்டுவதன் மூலம் தொழில்துறை உலகில் பிரவேசித்து பாரிய அளவில் தொழில்துறைகளை பேணிவர முடியுமாயுள்ளமை,
* சிறிய முதலீட்டாளர்களின் சேமிப்புகள் தொழில்துறைகளில் ஒன்றுதிரள்வதன் மூலம் தொழில்துறைகளை ஆரம்பிக்க (plquis Tuj6il 6T60)LD.
* நியதிச் சட்டமுறையிலான பிரத்தியேகத் தன்மை, வரையறுக் கப்பட்ட பொறுப்பு ஆகியன காரணமாக முதலீட்டாளர்கள் கவரப்படுவதன் மூலம் தொழில்துறையை முன்னெடுத்துச் செல்ல முடியுமாயுள்ளமை.
* தொழில்துறையில் நிதியியல் பலத்தின் உறுதியான மட்டத்தில் இருப்பதன் காரணமாக மிகச் சிறந்த முகாமையாளர்களையும் ஊழியர்களையும் பங்கேற்கச் செய்வதன் மூலம் தொழில்துறையை விரிவாக்க முடியுமாயுள்ளமை,
* தொழில்துறையிலுள்ள நிதியியல் பலத்தின் உறுதியான தன்மை, வினைத்திறனுடன் கூடிய முகாமைத்துவம் ஆகியன காரணமாக பாரிய அளவிலான கருத்திட்டங்களுக்கு அச்சமின்றி முன்வருவதற்கு முடியுமாயுள்ளமை.
* வெளிநாட்டுச் சந்தையில் பிரவேசித்தல் இலகுவாயிருத்தல்.
* ஏனைய தொழில்துறை உரிமைகளிலிருந்தும் முகாமைத்து வத்திலிருந்தும் பிரிந்து நிற்பதன் காரணத்தினால் முகாமைத்துவம் வினைத்திறனுடையதாயிருத்தல்.
* அரச அங்கீகாரம் உயர் மட்டத்தில் உள்ளதன் காரணமாக
நிதியங்களைத் திரட்டுதல் இலகுவாயிருத்தல்.
தொழில்துறை அமைப்புமுறை எனிற வகையில் கூட்டிணைக்கப்பட்ட கம்னிகளினி பிரதிகூலங்கள்
* ஆரம்பிப்பதற்கான செலவினம் அதிகமாயிருத்தல்.
* கம்பனிகள் சட்டத்தின் கட்டளைகளுக்கு இணங்க செயலாற்ற
வேண்டியிருத்தல்.
* அண்மிய மேற்பார்வைக்கு உள்ளாதல். (Closely Regulated)
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

eeMOeeZeeeeeYeeekLeeeieSeeYZZLkeeeLezekeeeeYeeeeeeLeeeSOeeZYZZeeeY0SemkLkeez
* விபரமாக அறிக்கைகளையும் கணக்குகளையும் வைத்திருக்க
வேண்டியுள்ளமை.
* ஆண்டறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளமை. * நட்டம் (இழப்புகள்) தொழில் துறையினுள்ளேயே
தேங்கியிருத்தல்.
* சிறிய பங்குரிமையாளர்களால் நிர்வாகத்தில் தொடர்பு
கொள்ளக்கூடிய இயலுமை குறைவாயிருத்தல்.
இலங்கையினி கம்பனிகள் சட்டங்களினி கடந்த கால வரலாறு
கம்பனிகள் சட்டங்களுக்கான அடித் தளமானது அண்ணளவாக கி.பி. 1600 இல் பெரிய பிரித்தானியாவிலேயே உருவாகியது. இலங்கையில் 1853 ஜூலை மாதத்தில் இணைந்த பங்குக் கம்பனிகள் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே கம்பனிகள் உருவாகின. இதற்கான தத்துவம் குடியியல் கட்டளைச் சட்டத்தின் (Civil Law Ordinance) மூலமே வழங்கப்பட்டது. 1861 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க கம்பனிகள் கட்டளைச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு பிரித்தானியாவின் கம்பனிகள் சட்டம் இலங்கைக்கும் ஏற்புடையதாக்கப்பட்டது. மேற்படி கட்டளைச் சட்டம் பல தடவைகள் திருத்தப்பட்டது. 1861 ஆம் ஆண்டின் கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை 823 ஆகும்.
இலங்கையின் கம்பனிகள் தொடர்பில் 1938 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்கச் சட்டமே அடுத்து முக்கியமானதாயிருந்தது. இச்சட்டம் 1929 ஆம் ஆண்டின் இங்கிலாந்தின் கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்டதாகும். பின்னர் இச்சட்டத்திற்கு பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1964 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க கம்பனிகள் (திருத்தச்) சட்டம் மற்றும் 1974 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கம்பனிகள் (திருத்தச்) சட்டம் என முக்கியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாறாயினும் 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம் இலங்கையில் அங்கீகரிக்கப்படும் வரை இச் சட்டமே அமுலிலிருந்தது. 1938 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க கம்பனிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை 1வது அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
11

Page 12
毅
1 வது அட்டவணை 1938 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கம்பனிகள்
பதிவு
கம்பனிகளின் வகை செய்யப்பட்டகம்பனிகளின்
எண்ணிக்கை
தனியார் கம்பனிகள் 878 பொதுக் கம்பனிகள் 1159 பிணையினால் வரையறுக்கப்பட்ட
கம்பனிகள் 50
சங்கங்கள் 90
வரையறுக்கப்படாத கம்பனிகள் OS வெளிநாட்டுக் கம்பனிகள் 06 மொத்தம் 1113
மூலம்: கம்பனிகள் பதிவாளர் அலுவலகம்
திறந்த பொருளாதாரம் ஆரம்பமானதைத் தொடர்ந்து இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம் 1982 ஜூலை மாதத்திலிருந்து இலங்கையில் அமுலாக்கப்பட்டது. இலங்கைக்கே உரியதான புதியதொரு சட்டம் அங்கீகரிப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு ஏதுவாயமைந்த பல காரணிகள் உள்ளன. முதலாவதாக, 1960 இல் இருந்து 1977 வரை அமுலிலிருந்த மூடிய பொருளாதார முறைக்குப் பதிலாக சந்தையை அடிப்படையாகக் கொண்ட சுதந்திர சந்தைப் பொருளாதார முறையொன்று இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டமையைக் குறிப்பிடலாம். இதன் காரணமாக கம்பனிகள் போன்ற நவீன தொழில் அமைப்பு எண்ணக்கருக்களை புதிய பொருளாதார முறைக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டிய தேவை எழுந்தது. இரண்டாவதாக, அதுவரையிருந்த கம்பனிகள் சட்டம் பிரித்தானிய சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்ததன் காரணத்தினால், உள்நாட்டு மரபுகளுக்கு ஏற்றவிதத்திலான கம்பனிகள் சட்டமொன்றை அமைக்க வேண்டிய தேவையைச் சுட்டிக்காட்டலாம். மூன்றாவதாக, அத்தருண மாகின்றபோது அபிவிருத்தியடைந்த நாடுகளின் கம்பனிகள் எண்ணக்கருவுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டவற்றை இலங்கைக்கு ஏற்புடையனவாக்குகின்ற தேவையைச் சுட்டிக்காட்டலாம் கரைகடந்த கமம்பனிகள், வதியாதோர் கம்பனிகள் உருவாகியமை அதன் பெறுபேறுகளாகும். நான்காவதாக, நீண்ட காலமாக இலங்கையின் கம்பனிகளின் உரிமையில் தொடர்பு கொண்டிருந்த உயர் வகுப்பினரான பங்குரிமையாளர்களுக்கு மேலதிகமாக சிறிய பங்குரிமையாளர்களின் கைகளுக்கும் கம்பனிகளின் உரிமையை விஸ்தரிப்பதன் தேவை எழுந்தமையைச் சுட்டிக்காட்டலாம். ‘மக்கள் கம்பனி’ போன்ற எண்ணக்கருக்கள் இதன் காரணமாகவே உருவாக்கப்பட்டன.
12
 

1982 ஆம் ஆணிழனி 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தினி மூலம் இலங்கையினி கம்பனிகள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள்
O1.
02.
O3.
05.
06.
07.
08.
O9.
10.
கம்பனியின் இயல்பை வெளிப்படுத்தல். பொதுக் கம்பனி தவிர்ந்த ஏனைய அனைத்துக் கம்பனிகளும் அதன் இயல்பை அடைப்புக்குறிக்குள் காட்டுதல் வேண்டும். உதா:- வரையறுக்கப்பட்ட ABC (தனியார்) கம்பனி
குறிக்கோள்களை வகைப்படுத்தியிருத்தல் உதா : அடிப்படைக் குறிக்கோள்கள். துணைக் குறிக்கோள்கள், ஏனைய குறிக்கோள்கள்
உரிமையை விஸ்தரிப்பதற்கு 'மக்கள் கம்பனிகள்’ அறிமுகப்படுத்தப்படுதல்.
கரைகடந்த கம்பனிகள்’ அறிமுகப்படுத்தப்படுதல்.
இலங்கைக்கு வெளியே கூட்டிணைக் கப்பட்டு, இலங்கையினுள் தொழில் களை நடத்துகின்ற வரையறுக்கப்பட்ட கம்பனிகள் அறிமுகப்படுத்தப்படுதல்.
பணிப்பாளர்கள், செயலாளர்கள் நியமிக்கப்படுதல் பற்றிய புதிய விடயங்கள் உள்ளடக்கப்படுதல்.
நாட்டின் நலனைக் கருதி தனியார் கம்பனிகள் பொதுக் கம்பனிகளாக மாற்றப்படுதல்.
கம்பனிகள் நிதியமொன்று அறிமுக்கப்படுத்தப்படுதல். சட்டத்தின் 425 ஆம் வாசகத்தின் பிரகாரம் 1982 ஜூலை 02 ஆம் திகதி மேற்படி நிதியம் தாபிக்கப்பட்டதோடு, பெறப்படும் வருமானத்தில் 2/3 இந்நிதியத்திற்கு வரவு வைக்கப்படும். எஞ்சிய தொகை திரண்ட நிதியத்தில் வரவு வைக்கப்படும். கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தின் செலவுகள் இந்நிதியத்திலிருந்தும் ஒதுக்கீட்டுச் செலவுகளின் கீழ் திரண்ட நிதியத்திலிருந்து கிடைக்கும் நிதி ஏற்பாடுகளிலிருந்துமே ஏற்கப்படும்.
கம்பனியின் புத்தகங்களைப் பரிசோதிப்பதற்கு ஆலோசனை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுதல். கம்பனிகள் சட்டத்தை மீளாய்வு செய்வதற்கு ஆலோசனை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுதல்,
1982 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டத்தின் கீழ் 2005.12.31 ஆம் திகதியன்று பதிவு செய்யப்பட்டிருந்த கம்பனிகளின் எண்ணிக்கை 2 வது அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

Page 13
LLLSkSSSkLkkSSkLeeeeeeSYzAeSeYYkLkLSYeSLeSek000zSeSeLeAeeyyyykSySeYZeYZZZYzkSYYY000EkSkZYYZZYzeYZZeLSeLeeZeSeeSLSYkekeSkLSSLLS
2 வது அட்டவணை 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள
கம்பனிகள்
O பதிவு செய்யப் கம்பனிகளின் வகை பட்டகம்பனிகளின்
எண்ணிக்கை
தனியார் கம்பனிகள் 44380 பொதுக் கம்பனிகள் 1289 பிணையினால் வரையறுக்கப்பட்ட கம்பனிகள் 230 சங்கங்கள் 1423* கரைகடந்த கம்பனிகள் 8 வெளிநாட்டுக் கம்பனிகள் 654 மக்கள் கம்பனிகள் 346
மொத்தம் 4.8403
1982 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியடைகின்ற இத்தருணமாகின்றபோது மிகவும் பிரபல்யம்வாய்ந்த கம்பனிகள் வகையாக வரையறுக்கப்பட்ட தனியார்
மூலம்: கம்பணிகள் பதிவாளர் அலுவலகம்
3 65 2005 இல் மாத்திரம் பதிவு ெ சன பெப் மார் 1 ஏப்  ே
தனியார் கம்பனிகள் 249 30 420 331 3
பொதுக் கம்பனிகள் 6 4 O 7
பிணையினால் வரையறுக்கப்பட்ட
கம்பணிகள் 2 5 4 2
சங்கங்கள் 8 21
மக்கள் கம்பனிகள் 5
கரைகடந்த கம்பனிகள்
வெளிநாட்டுக் கம்பனிகள் 3 4 3
மொத்தம் 267 33 460 35 4
கம்பனிகள் பதிவாளர் அலுவலகம்
புதிய கம்பனிகள் சட்டத்தை அமுலாக்குகின்ற முக்கியமான பணி, 2007 ஆம் ஆண்டில் தமது 56 வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்ற கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர 1891 ஆம் ஆண்டின் 16
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

8ಜ್ಜಿ&ಜ್ಜಿ
கம்பனிகளே உள்ளன. 2005.1231 ஆம் திகதியன்று உள்ளவாறு 44,380 வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, 2005 ஆம் ஆண்டில் மாத்திரம் இதில் 10% வீதம், அதாவது 4296 பதிவு செய்யப்பட்டிருந்தது. (03வது அட்டவணையைப் பார்க்கவும்). வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனிகள் இவ்வாறு பிரபல்யம் பெறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. (i) தொழில துறை உரிமையை குடும் ப உறவினர்களுக்கிடையேயும் நண்பர்களுக்கிடையேயும் பேணிவர முடியமாயுள்ளமை, (i) இலாபத்தைக் குறிப்பிட்ட ஒருசிலருக்கு இடையே பகிர்ந்துகொள்ள முடியுமாயுள்ளமை, (ii) ஆரம்பிக்க இலகுவாயுள்ளமை (iv) சட்டரீதியிலான தாக்கங்கள் குறைவாயுள்ளமை (V) தொழில்துறையின் நிர்வாக அதிகாரத்தை குறிப்பிட்ட ஒருசிலருக்கு இடையே வைத்திருக்க முடியுமாயுள்ளமை, (iv) பிரத்தியேகத் தன்மையைப் பாதுகாக்க முடியுமாயுள்ளமை, அடுத்து ‘சங்கம்' பிரபல்யம் பெற்றுள்ளது. அவை 154 உள்ளன. மக்கள் கம்பனிகள் 140 உள்ளன என்பதோடு அவை மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளன. பொதுக் கம்பனிகள் 76 உள்ளன என்பதோடு நான்காம் இடத்தை வகிக்கின்றன. 2005 ஆம் ஆண்டில் பிணையினால் வரையறுக்கப்பட்ட கம்பனிகள் 45 பதிவு செய்யப்பட்டிருந்தன என்பதோடு 43 வெளிநாட்டுக் கம்பனிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
PU66D600
சய்யப்பட்டிருந்த கம்பனிகள்
ஜான ஜூலை 1 ஆக செப் ஒக் நவெ திசெ | மொத்
74 424 368 362 430 363 281 384 4296
3 6 7 10 6 3 3 76
5 5 6 4 4. 5 2 45
15 16 15 O 2 10 9 16 54
3 58 62 6 3 140
• O
7 5 6 4 3 5 43
O
459 401 451 59 394 31 409 4754
மூலம்: கம்பனிகள் பதிவாளர் திணைக்களம்
ஆம் இலக்க சங்கங்கள் கட்டளைச் சட்டம், 1935 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க சீட்டிழுப்புக் கட்டளைச் சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க பொது ஒப்பந்தங்கள் சட்டம், 1987 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க அரச கூட்டுத்தாபனங்கள் அல்லது தொழில் முயற்சிகளை பொதுக் கம்பனிகளாக மாற்றுகின்ற சட்டம் ஆகியவற்றை அமுலாக்குதலும் திணைக்களத்தின் ஏனைய பணிகளாகும்.
13

Page 14
நெகிழ்வுத் தன்மை கம்பனிகள் சட்டம் (
൮) ) []
Gráf... eludir
பொருளாதார ஆராய்
முகவுரை
1861 மற்றும் 1938 ஆம் ஆண்டுகளில் முறையே அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டுப் பங்குத் தொகுதிக் கம்பனிகள் கட்டளைச் சட்டம் மற்றும் கம்பனிகள் கட்டளைச் சட்டங்களின் பின்னர் நடைபெற்ற படிப்படியான வளர்ச்சியின் பெறுபேறாக 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட 1985 ஆம் ஆண்டின் கம்பணிகள் சட்டம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டத்தில் இருந்த அடிப்படைப் பண்புகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, இரண்டரைத் தசாப்த காலத்தின் பின்னர் 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்திற்குப் பதிலாக 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க புதிய கம்பனிகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2006 ஒக்றோபர் மாதத்தில் பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்ற இச்சட்டம் 2007 மே மாதம் 03 ஆம் திகதியிலிருந்து வலுவுக்கு வந்தது. பணிப்பாளர்கள், பிரதம பங்குதாரர்கள், சிறுபான்மை பங்குதாரர்கள் மற்றும் கடன்காரர்கள் உட்பட அனைத்துத் தரப்பினர்களினதும் பாதுகாப்பினை அதிகரிக்கும் பொருட்டு இலங்கை அரசாங்கத்தினால் புதிய கம்பனிகள் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
மேற்படி புதிய கம்பனிகள் சட்டத்தின் விசேட பண்புகளை ஒவ்வொன்றாகப் பின்வருமாறு நிரல்படுத்தலாம்.
2007 ஆம் ஆண்டினி o7 ஆம் இலக்க கம்பனிகளி சட்டத்தினி விசேட பணிபுகள். 1. உளதாயிருக்கும் அனைத்துக் கம்பனிகளும் மீண்டும் பதிவு
செய்யப்படுதல் வேண்டும். (487 வது வாசகம்) 2. அமைப்புக் கூட்டிணைப்புப் பத்திரம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படாது என்பதோடு, அமைப்பு அகவிதிகள் கம்பனியின் அகவிதிகளாகப் பயன்படுத்தப்படும் (13-18 ஆம் வாசகம்) 3. கம்பணிகள் தாபிக்கப்படுகின்றபோது நோக்கங்களைக்
குறிப்பிடுதல் அத்தியாவசியமாக இருக்காது.
14

யுடன் கூடிய புதிய
தொழிலதிபர்களுக்கு IgI6OD6OOT
லி பிரியசாந்தி
ச்சித் திணைக்களம்
11.
12.
3.
. கம்பனி போதியளவு மாற்றங்களுக்கு அல்லது போதியளவு
15.
16.
அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட விதிகள் (Doctrine ofUltra wires) நீக்கப்பட்டுள்ளன. மக்கள் கம்பனிகள் தொடர்ந்தும் இருக்காது. (485 வது வாசகம்)
தனிப் பங்குதாரர் கம்பனிகளைத் தாபிக்க முடியும் (4(2) வது
வாசகம்) சிறுபான்மைப் பங்குதாரர்கள் பாதுகாக்கப்படும் (93 மற்றும் 87 வது வாசகங்கள்) கூறப்பட்ட மூலதன எண்ணக்கரு (58 வது வாசகம்)
பங்குகளுக்கான பெயரளவிலான பெறுமதி இருக்காது (49
(4) வது வாசகம்)
பணிப்பாளர் சபை பங்குகளை வழங்குகின்ற போது
பிரதிபயனைத் தீர்மானித்தல் வேண்டும் (52 வது வாசகம்) பங்குதாரர்களுக்கு விநியோகித்தல் (56 வது வாசகம்) மிகைப் பங்குகள் வழங்கப்படமாட்டாது. பங்கிலாபங்கள் பகிர்ந்தளிக்கப்படுதல் (60 வது வாசகம்)
கொடுக்கல் வாங்கல்களுக்கு ஏற்புடையதான கடனிறுக்க வகையுடைமைப் பரீட்சிப்பை (Solvency Test) நடத்துதல் வேண்டும் (57 வது வாசகம்) கூறப்பட்ட மூலதனத்தைக் குறைத்தல் வேண்டும் (59 வது வாசகம்) கம்பனியின் சொத்துக்களின் பெறுமதியில் நூற்றுக்கு 50க்குச் சமமான அல்லது அதை விட அதிகமாயுள்ள கொடுக்கல் வாங்கல்களின் பொருட்டு விசேட தீர்மானமொன்று அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். (185 வது வாசகம்)
ஆறு மாதங்களுக்குள் கணக்கு அறிக்கைகளைத் தயாரித்தல்
வேண்டும். (150 வது வாசகம்)
பணிப்பாளர்களின் கடமைகள் பற்றி தெளிவாக
அறிமுகப்படுத்தப்பட்டிருதல் வேண்டும். (187-220 வது வாசகம்)
கணக்காய்வாளர்களின் பதவி விலகல் பற்றிய மேலதிக
விபரங்கள் வெளிப்படுத்தப்படுதல் வேண்டும் (16 வது வாசகம்)
2008 மார்ச் / ஏப்பிரல் குறிப்பேடு

Page 15
భభ్యష్ఠభళ్ల భభ##########భట్ట #ళ్లఖళ్లభ%%
20. கம்பனிகள் பிணக்குகள் சபையொன்று தாபிக்கப்படுதல் (36.16 (6tb. (Companies' Disputes Boards) (507-510 oug) வாசகம்)
உள்ளடக்கம்
புதிய கம்பனிகள் சட்டத்தின் வாசகங்களைத் தழுவியதாகத்
தரப்பட்டுள்ள மேற்படி விடயங்கள் பற்றிய விபரங்களைச்
சுருக்கமாகப் பின்வருமாறு காட்டலாம்.
1. 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் அண்ணளவாக 65,000 கம்பனிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, இதில் அதிகளவிலான கம்பனிகள் தற்போது செயலிழந்துள்ளன. ஆதலால் புதிய கம்பனிகள் சட்டம் வலுவுக்கு வந்த தினத்திலிருந்து 12 மாத காலத்தினுள் உளதாயிருக்கும் அனைத்துக் கம்பனிகளும் பதிவு செய்யப்படுதல் வேண்டும். கம்பனிகள் பதிவாளருக்கு இதன் பொருட்டு விண்ணப்பித்தல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க அவர் புதிய கம்பனிப் பதிவிலக்கம் ஒன்றையும் புதிய சான்றிதழொன்றையும் வழங்குவார். கம்பனிகள் பதிவாளர் மேற்படி புதிய இலக்கத்தை கம்பனிகள் பதிவேட்டில் உட்புகுத்துவார்.
ஏதேனுமொரு கம்பனி குறித்த காலத்தினுள் இத்தேவைப்பாட்டிற்கு இணங்கச் செயற்படாதவிடத்து. அதாவது தம்மை மீண்டும் பதிவு செய்யாதிருப்பின் கம்பனிகள் பதிவாளர் அக் கம்பனியின் பெயரை மூன்று மொழிகளிலும் நாளாந்தப் பத்திரிகைகளில் வெளியிடுவார். அவ்வாறு வெளியிடப்பட்டு 6 மாத காலத்தினுள் குறித்த கம்பனி சட்டத்திற்கு இணங்கச் செயற்படாதிருப்பின் கம்பனிகள் பதிவாளர் கம்பனிகள் பதிவேட்டிலிருந்து கம்பனியின் பெயரை பதிவழிப்பார் (Write oft). அவ்வாறு பதிவழிக்கப்படும் கம்பனிக்குரிய அனைத்துச் சொத்துக்களும் அரசாங்கத்துக்குச் சொந்தமாகும்.
2. மேற்படி புதிய சட்டத்தின் மூலம் அமைப்புக் கூட்டிணைப்புப் பத்திரம் தொடர்ந்து பயன்படுத்தப்படுதல் இரத்துச் செய்யப்படுமென்பதோடு, அதற்குப் பதிலாகக் கம்பனியின் அகவிதிகளாக அமைப்பு அகவிதிகளே பயன்படுத்தப்படும். அமைப்பு அகவிதியின் மூலம் குறிப்பாக கம்பனியின் குறிக்கோள்கள், பங்குதாரர்களது உரிமைகள் மற்றும் கடப்பாடுகள் அத்துடன் கம்பனியின் முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் ஆகிய விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகள் காட்டப்படலாம். இதன்படி அமைப்பு அகவிதியானது கம்பனிக்கும் அதன் பங்குதாரர்களுக்கும் இடையிலான ஒரு உடன்படிக்கையாகச் செயற்படும்.
3. புதிய கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம், கம்பனிகள் தாபிக்கப்படுகின்றபோது குறிக்கோள்களைக் குறிப்பிடுதல் அத்தியாவசியமாக இருக்காது. ஆயினும், கம்பனியின் அகவிதிகளில் கம்பனியின் குறிக்கோள்கள் காட்டப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அக் குறிக்கோள்களில் உள்ளடங்காத ஏதேனுமொரு தொழிலை அல்லது நடவடிக்கையை மேற்கொள்ளுதல் மட்டுப்படுத்தப்படும்.
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

4. இதுவரை வலுவிலிருந்த சட்டத்தின் பிரகாரம் கம்பனியின்
குறிக்கோள்களாக அமைப்புக் கூட்டிணைப்புப் பத்திரத்தில் காட்டப்படாதுள்ள ஒப்பந்தங்கள்/கொடுக்கல் வாங்கல்கள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக அமையும். அதாவது அத்தகைய கொடுக்கல் வாங்கல்கள் செல்லுபடியற்றதாகும். இக் காரணத்தினால் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட விதி அநேகமான சந்தர்ப்பங்களில் கருத்து வேற்றுமைக்கு உள்ளானதொரு விடயமாக இருந்தது.
புதிய கம்பனிகள் சட்டத்தின் கீழ் அமைப்புக் கூட்டிணைத்தல் பத்திரமொன்று அவசியமாகாதென்பதால், கம்பனியினால் எந்தவொரு தொழிலையும், நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியுமாயுள்ளது. ஆயினும் ஏதேனுமொரு கம்பனிக்கு அமைப்பு அகவிதிகளில் தமது தொழிலை வரையறுத்துக் காட்டுவதற்குத் தேவையாயிருப்பின் அவ்வாறு செய்வதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. கம்பனியின் அங்கத்தவர்களால் அங்கீகரிக்கப்பட்ட விசேட தீர்மானமொன்றின் மூலமாகவன்றி அத்தகைய குறிக்கோள்களை மாற்ற முடியாது.
புதிய கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் வரையறுக்கப்பட்ட கம்பனிகள், உத்தரவாதத்தால் வரையறுக்கப்பட்ட கம்பனிகள் மற்றும் வரையறுக்கப்படாத கம்பனிகள் என 3 வகையான கம்பனிகள் மட்டுமே உள்ளதென்பதோடு, 1982 ஆம் ஆண்டின் பழைய கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் இருந்த மக்கள் கம்பனிகள் தொடர்ந்தும் இருக்காது. தற்போதுள்ள மக்கள் கம்பனிகள் வரையறுக்கப்பட்ட கம்பனிகளாகக் கருதப்படும்.
1982 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம், ஏதேனுமொரு கம்பனியைப் பொதுக் கம்பனியாகத் தாபிப்பதற்கெனில், அற்கான ஆகக்குறைந்த பங்குதாரர்களின் எண்ணிக்கை 7 ஆக இருக்குமென்பதோடு, தனியார் கம்பனியாயின் ஆகக்குறைந்த பங்குதாரர்களின் எண்ணிக்கை 2 ஆகும்.
புதிய கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் ஒரு கம்பனியின் பங்குதாரர்களின் எண்ணிக்கை இரண்டு பேருக்குக் குறைவாயிருத்தலாகாது. ஆயினும், பங்குதாரர் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்குகளை வைத்திருக்கின்றவரான திறைசேரியின் செயலாளராக அல்லது கூட்டுத்தாபனமாக (தனி அலகு என்றவாறு) அல்லது தனி ஆள் ஒருவராக இருக்குமிடத்து மட்டும் ஒரு கம்பனியில் தனிப் பங்குதாரர் ஒருவர் இருக்க முடியும். இதற்கிணங்க, எந்தவொரு தனி ஆளினாலும் ஒரு கம்பனியை ஆரம்பிக்க முடியுமென்பதோடு, அத்தகைய கம்பனிகள் சட்டத்தின் முன்னிலையில் வலுவுடையதாக இருக்கும்.
. கம்பனியின் பங்குகளில் ஒன்றை அல்லது அதற்கு அதிகமானவற்றை குறித்த காலத்தினுள் உரித்தாகக் கொண்டுள்ள, பங்குதாரர் பெயர்ப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர் பங்குதாரர் என அழைக்கப்படுவார். எவரேனுமொரு நபர் கம்பனியின் பங்குதாரராக இருப்பதால் மாத்திரம் அக் கம்பனியின் ஏதாவது செயலுக்கு, ஏதாவது
15

Page 16
தவறுகைக்கு அல்லது கடப்பாட்டுக்கு உள்ளாக மாட்டார். பங்குதாரரின் பொறுப்பானது அமைப்பு அகவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள எவையேனும் பொறுப்புக்கு மட்டுப்பட்டதாயிருத்தல் வேண்டும்.
அதேபோன்று கம்பனியின் தொழில்கள் தொடர்பான வரையறைகள் மாற்றப்படுகின்றபோது, பாரிய கொடுக்கல் வாங்க்ல்களை அங்கீகரிக்கின்ற போது மற்றும் கம்பனியை ஒன்றிணைத்தல் அங்கீகரிக்கப்படுகின்ற போது சிறுபான்மைப் பங்குதாரர்களுக்குத் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு உரிமை உள்ளது.
1982 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம், அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் மற்றும் வழங்கப்பட்ட பங்கு மூலதனம் என மூலதனம் இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருந்தது. அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனமானது கம்பனியின் அங்கீகாரத்தைப் பெற்ற கம்பனியால் வழங்க முடியுமான ஆகக்கூடுதலான பங்கு மூலதனப் பெறுமதியாகும்.
புதிய கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம், கம்பனிக்குரிய கூறப்பட்ட மூலதனம் என்பது, (அ) பங்குகள் வழங்கப்படுதல் தொடர்பில், அத்துடன்
(ஆ) பங்குகள் மீதான அழைப்பு தொடர்பில்
கம்பனியால் பெறப்பட்ட அல்லது கம்பனிக்கு வருமதியான அத்துடன் செலுத்தப்படற்பாலதான எல்லாத் தொகைகளினதும் கூட்டு மொத்தத் தொகை எனப் பொருள்படும். காசு தவிர்ந்த வேறு பிரதிபயனுக்காகப் (Consideration) பங்கொன்று வழங்கப்படுகின்றவிடத்து, பணிப்பாளர் சபை அதன் காசுப் பெறுமதியைத் தீர்மானித்தல் வேண்டும்.
கம்பனியின் அமைப்புக் கூட்டிணைப்புப் பத்திரத்தில் மூலதன வாசகத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அனைத்துப் பங்குகளுக்கும் பெயரளவிலான பெறுமதி அல்லது சம பெறுமதியொன்று (Par Value) பழைய கம்பனிகள் சட்டத்தின் கீழ் இருந்தது. அநேகமான கம்பனிகளில் மேற்படி சம பெறுமதி ரூபா 10/- ஆகும். அதேபோன்று 1982 ஆம் ஆண்டின் சட்டத்தின் பிரகாரம் கழிவு வழங்குவதன் அடிப்படையில் பங்குகள் வழங்கப்படவும் முடியாது. 2007 ஆம் ஆண்டின் புதிய கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் ஒரு கம்பனியின் பங்கெதுவும் பெயரளவிலான அல்லது சம பெறுமதியைக் கொண்டிருத்தலாகாது.
பங்குகள் வழங்கப்படுவதற்கு முன்னர் பணிப்பாளர் சபை குறித்த
பிரதிபயன் பற்றி முடிவு செய்தல் வேண்டும். அதேபோன்று அவ்வாறு முடிவு செய்யப்பட்ட பிரதிபயனானது கம்பனிக்கும் ஏலவேயுள்ள பங்குதாரர்களுக்கும் நீதியானதெனவும் நியாயமானதெனவும் தீர்மானித்தல் வேண்டும். பங்கொன்று எந்தப் பிரதிபயனுக்காக வழங்கப்படுகின்றதோ அந்தப் பிரதிபயன் கம்பனியின் காசு, வாக்குறுதிப் பத்திரங்கள், எதிர்காலச்
16
 

11.
14.
స్రిళ్లనీళ్లజోళ్లజోళ్లపిళ్ల##########
சேவைகள், ஏதேனும் வகையினதான ஆதனம் அல்லது கம்பனியின் வேறு பிணையப் பொறுப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கலாம். அதேபோன்று பணிப்பாளர் சபை பிரதிபயனை வழங்கியதிலிருந்து இருபது நாட்களுக்குள் பங்குகளின் பிரித்தொதுக்குகையைச் செய்தல் வேண்டும்.
கம்பனி எவரேனுமொரு பங்குதாரருக்கு விநியோகித்தலை செய்யுமுன்னர் அதற்கெனப் பணிப்பாளர் சபையினால் அதிகாரமளிக்கப்படுதல் வேண்டும். மேலும், அது பங்குதாரர்களினால் சாதாரண தீர்மானமொன்றின் மூலம் அங்கீகரிக்கப்படுதலும் வேண்டும். விநியோகித்தலொன்று நடைபெற்றதன் பின்னர் கடனிறுக்கவகையுள்ளமைப் பரீட்சிப்பைக் கம்பனி மேற்கொள்ளுதல் அவசியமாகும் அவ்வாறு செய்யாதபோது பங்குதாரர் மேற்படி விநியோகத்தை நன்னோக்கத்துடனும் அது தொடர்பிலான நம்பிக்கையுடனும் பெற்றுக்கொண்டுள்ள சந்தர்ப்பங்களைத் தவிர கம்பனிக்கு அத்தகைய பங்கிலாபங்களை மீண்டும் பங்குதாரர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாது.
பழைய கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் மிகைப் பங்குகளை
வழங்கும் பொருட்டு பணிப்பாளர் சபைக்கு அதிகாரமளிக் கப்பட்டிருந்த போதிலும் புதிய கம்பனிகள் சட்டத்தின் கீழ் பிரதிபயனின்றி பங்குகள் வழங்கப்பட முடியாதென விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விலைப் பிரதிபயனின்றி ஒரு கம்பனியினால் பங்குகளை வழங்கும் பொருட்டு 2 கட்டங்களைக் கொண்ட மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமாயுள்ளது. முதலாவதாக கம்பனி பங்கிலாபங்களை அறிவித்தல் வேண்டும் இரண்டாவதாக அத்தகைய பங்கிலாபங்களை வழங்குதல் பங்குகளைப் போன்று வழங்கப்படுதல் வேண்டும். மேற்படி பங்கிலாபங்களின் வழங்குதல் கூட நூற்றுக்கு 10 வீத தடுத்து வைத்தல் வரிக்கு உட்பட்டதாயிருக்கும்.
பங்கிலாபம் என்பது கம்பனியின் பங்குகள், கம்பனியினால்
அடையப்பெற்றவைகள் அல்லது விடுவிக்கப்பட்டவைகள் தவிர்ந்த இலாபங்களிலிருந்து நடைபெறுகின்ற விநியோகித்தல்களாகும். 1982 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் சிறந்த திரண்ட நட்டமின்றிக்கூட (Without good accumulated losses) (35 dui (fl. L. sa,600i Lq 6i இலாபங்களிலிருந்து பங்கிலாபங்களைச் செலுத்தலாம்.
ஆயினும், புதிய கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் பங்கிலா பங்களைச் செலுத்துவதற்கெனில் கம்பனிக்குரியதாக நேரிடையான ஒதுக்கீடுகள் (Positive reserves) இருக்க வேண்டும்.
கடனிறுக்கவகையுள்ளமைப் பரீட்சிப்பு புதிய கம்பனிகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான பண்புகளில் ஒன்றாகும்.
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

Page 17
జ్ఞణ్ణిళ్ల
1. கம்பனிக்கு தமது சாதாரண தொழில் துறைச் செயற்பாடுகளின்போது செலுத்தப்பட வேண்டிய கடனைச் செலுத்துவதற்கான ஆற்றல் இருப்பின், அத்துடன்
14. கம்பனியின் சொத்துக்களின் பெறுமதி அதன் பொறுப்புக்கள் மற்றும் கூறப்பட்ட மூலதனத்தின் மொத்தத்தை விட அதிகமாயிருப்பின்
அக் கம்பனி கடனிறுக்கவகையுள்ளமைப் பரீட்சிப்பை நிறைவு செய்துள்ளதெனக் கருதுதல் வேண்டும். இதன் பொருட்டு பணிப்பாளர் சபையினால் சட்டத்தின் பிரகாரம் தயாரிக்கப்பட்ட கம்பனியின் மிகப் புதிய நிதிக் கூற்று அல்லது சொத்துக்கள், பொறுப்புக்களுக்கான நியாயமானதொரு மதிப்பீடு அல்லது அவற்றின் பெறுமதியை மதிப்பிடுகின்ற வேறேதேனுமொரு முறை கவனத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்.
ஒரு கம்பனி விநியோகித்தலை, கூறப்பட்ட மூலதனக் குறைப்பை அல்லது கம்பனியின் பங்குகளையே கொள்வனவு செய்யும் பொருட்டு நிதி உதவிகளை வழங்குவதற்கு முன்னர் கடனிறுக்கவகையுள்ளமைப் பரீட்சிப்பை மேற்கொள்ளுதல் வேண்டும்.
15. ஒரு கம்பனியினால் தமது கூறப்பட்ட மூலதனத்தை தமக்குத் தேவையான அளவு வரை குறைப்பதற்கு முடியும். இதன் பொருட்டு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க விசேட தீர்மானமொன்றை அங்கீகரித்தல் அவசியமாகும். மேற்படி தீர்மானத்தை அங்கீகரிப்பதற்கு 60 நாட்களுக்கு முன்னர் அது தொடர்பில் பகிரங்க அறிவித்தலொன்று செய்யப்படுதல் வேண்டும்.
மூலதனம் குறைக்கப்பட்டதன் பின்னர் அத் தொகையைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டு அது தொடர்பாக 10 அலுவலக நாட்களினுள் பதிவாளருக்கு அறிவித்தல் வேண்டும்.
16. அடையப்பெறுவதற்கு முன்னர் கம்பனியின் சொத்துக்களின் பெறுமதியில் நூற்றுக்கு 50 வீதத்துக்குச் சமமான அல்லது அதை விட அதிக பெறுமதியைக் கொண்ட சொத்துக்களை அடையப்பெறுகின்ற கொடுக்கல் வாங்கல்கள் பிரதானமான தொரு கொடுக்கல் வாங்கலாகக் கருதப்படுவதற்கெனில் விசேட
தீர்மானமொன்றின் மூலம் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.
சொத்துக்கள் என்பதில் பண்டங்கள் ரீதியிலான அல்லது மூலப் பொருட்கள் ரீதியிலான எந்தவொரு சொத்தும் உள்ளடங்கும்.
17. கம்பனியின் கொடுக்கல் வாங்கல்களைத் துல்லியமாகவும் தெளிவாகவும் அறிக்கையிடுகின்ற கணக்கு அறிக்கைகள் ஒவ்வொரு கம்பனியினாலும் ஐந்தொகைத் திகதிக்குப் பின்னர் 6 மாத காலத்தினுள் தயாரிக்கப்படுதல் வேண்டும். அத்தகைய கணக்கு அறிக்கைகள் இலங்கையில் வைத்திருக்கப்படுதல் வேண்டும் என்பதோடு, தேசிய பொருளாதாரத்தின் அல்லது கம்பனியின் பங்குதாரர்களது நன்மையை முன்னிட்டு அவ்வறிக்கை பொருத்தமற்றதாக அமைகின்ற ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில், கணக்கு அறிக்கைகளை இலங்கைக்கு
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு
 

8.
20.
வெளியே வைத்திருப்பதற்கு பதிலாளர் விசேட அனுமதியை வழங்கலாம்.
பணிப்பாளர்களுடைய கடமைகள் மற்றும் பொறுப்புகள் 1982 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப் படுவதில்லை என்பதோடு, அது தொடர்பான தகவல்களை கம்பனிகள் தொடர்பான பொதுச் சட்டத்திலிருந்தே பெற்றுக் கொள்ள முடியுமாயிருக்கும்.
புதிய கம்பனிகள் சட்டத்தின் பிரகாரம் கம்பனியின் பணிப்பாளர்களது கடமைகளும் பொறுப்புகளும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இதன்படி சட்டத்தின் ஏதாவது ஏற்பாடு அல்லது கம்பனி அகவிதிகளில் உள்ளடங்கியுள்ள ஏதேனும் ஏற்பாடு மீறப்படுகின்ற விதத்தில் அல்லது கவனயீனமான விதத்தில் கம்பனியின் பணிப்பாளர் ஒருவர் செயற்படலாகாது.
கணக்காய்வாளர் ஒருவர் தமது பதவியிலிருந்து இராஜினாமாச்
செய்வாராயின் அவர் தமது இராஜினாமா அறிவித்தலுடன் கம்பனியின் பங்குதாரர்களதும் கடன் கொடுத்தோரினதும் கவனம் செலுத்தப்படுதல் வேண்டுமெனக் கருதுகின்ற விடயங்கள் தொடர்பான ஒரு கூற்றை கம்பனிக்கு ஒப்படைத்தல் வேண்டும். அவ்வாறான விடயங்கள் இல்லையெனக் கருதுவாராயின் அவ்வாறான விடயங்கள் இல்லையென்பதற்கான ஒரு கூற்றை கம்பனிக்கு ஒப்படைத்தல் வேண்டும். கம்பனி இச்சந்தர்ப் பத்திற்கேற்ற விதத்தில் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றின் ஒரு பிரதியை ஒவ்வொரு பங்குதாரருக்கும் மற்றும் பதிவாளருக்கும் அனுப்புதல் வேண்டும். இக்கூற்றை ஒப்படைக்க கணக்காய்வாளர் தவறுமிடத்து அவர் தவறிழைத்தவராவார் என்பதோடு, இதன் பொருட்டு ரூபா 2 இலட்சத்தை விஞ்சாததொரு அபராதத் தொகையைச் செலுத்த வேண்டி நேரிடும்.
கம்பனிச் சட்டம் மற்றும் நிர்வாகம் தொடர்பில் அனுபவமுள்ள நபர்கள் மூன்று பேருக்குக் குறையாததும் ஐந்து பேரை விஞ்சாததுமான எண்ணிக்கையைக் கொண்ட கம்பனிகள் பிணக்குகள் சபையொன்று தாபிக்கப்படுதல் வேண்டும் மேற்படி சபை வர்த்தக, வாணிப அமைச்சரால் தாபிக்கப்படும்.
புதிய கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகள் அமுலாக்கப் படுகின்றபோது உருவாகின்ற அல்லது ஏதேனுமொரு கம்பனியின் தொழிற்பாடுகள் மற்றும் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பிணக்குகள் தொடர்பில் மேற்படி சபை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
1982 ஆம் ஆண்டின் 17 ம் இலக்க கம்பனிகள் சட்டத்திற்குப் பதிலாக 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்படுவதன் ஊடாக தொழில் நேயம்மிக்க சுற்றாடலொன்றை உருவாக்குதல் எதிர்பார்க்கப் பட்டது. மேற்படி புதிய கம்பனிகள் சட்டம் பழைய கம்பனிகள் சட்டத்தை விட நெகிழ்வுத் தன்மையுடன் கூடியதாக இருப்பதன் காரணத்தினால் தொழில் முயற்சியாளர்களால் தமது நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.
17

Page 18
t: '}', '(?:%్న#####ఃస్య###ళ్ల
స్టోఫళ్లమ్డ్వాళళ్లక్ష్భజ్జోభళీ
Sul luGT
2 Lume5 6
பிரதேச அபிவிருத்
பொருளாதார, நிதியியல், தொழில்நுட்ப மற்றும் சமூக மாற்றங்களுடன் உலகம் வேகமாக முன்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றது. நவீன பொருளாதாரத்தின் அனைத்துப் பொருளாதாரச் செயற்பாடுகளினதும் மத்திய நிலையமாக வங்கி செயற்படுகின்றது. நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் இணைந்து வர்த்தகத்தின் சிறப்பியல்புவாய்ந்த ஒரு அம்சமாக உள்ள வங்கிமுறை வர்த்தகம், கைத்தொழில், கமத்தொழில் போன்ற ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளின் அளவிலும் விளைவுத்திறனிலும் நடைபெற்றுள்ள புரட்சிகரமான முன்னேற்றத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கி முறையை பொருளாதார செயற்பாட்டின் ஒரு துறையாக மாத்திரமன்றி, பொருளாதாரத் தொழிற்பாடுகளின் விரிவான பரம்பலின் முன்னோடியாகவும் கருத முடியமாயுள்ளது. வங்கி முறையுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டிராத ஒருவரது பொருளாதாரத் தொழிற்பாடுகளிலும் வங்கி முறையானது நேரடியான அல்லது மறைமுகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. வங்கிச் செயற்பாடுகளின்றி தற்கால சமூகத்தின் சிக்கலான நடவடிக்கைகளை பேணிவர முடியாத அளவுக்கு சமூகத் தொழிற்பாடுகளுக்கும் வங்கி முறைக்கும் இடையே இடைத்தொடர்ப்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஆதலால் முதலாவதாக வங்கியாளர் என்றால் யார் என்பதை விளக்குவதற்கு நியதிச் சட்டங்கள், வழக்குச் சட்டங்கள், வங்கி முறைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பல்வேறு நூலாசியர்களது கருத்துக்கள் மற்றும் பொருளியலாளர்கள் வங்கி முறை தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆகியன பற்றி ஆராய்தல் பயனுள்ளதாக இருக்கும்.
முதலாவதாக நியதிச் சட்டத்தின் கீழ் வங்கியாளரைப்
பற்றி விளக்கியுள்ள விதத்தினை ஆராய்வோம். உலகில் அனேகமான நாடுகள் வங்கி முறை தொடர்பாக சட்டங்களை
18
 

Teff LGuff unif?
ஹட்டிஆரச்சி
தித் திணைக்களம்
ஆக்கியுள்ளதோடு, வங்கியாளரைப் பற்றி விளக்குவதற்கு அச்சட்டங்களின் மூலம் முயற்சியெடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேய வங்கித் தொழில் சட்டத்தின் அடிப்படை மூலாதாரமாகக் கருதப்படுகின்ற 1882 ஆம் ஆண்டின் செலாவணிப் பத்திரங்கள் சட்டத்தின் இரண்டாவது வாசகம் வங்கியாளர் என்பதற்கு பின்வரும் விளக்கத்தை வழங்கியுள்ளது. "வங்கியாளர் என்பதில், வங்கித் தொழிலில் ஈடுபட்டுள்ள, கூட்டிணைக்கப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்படாத அல்லது தனிநபர் குழுமமொன்று உள்ளடங்கும்" மதிப்புமிக்க சட்ட வரைஞர் ஒருவரான சேர் மகன்சி சாமஸால் ஆக்கப்பட்ட 1882 ஆம் ஆண்டின் செலாவணிப் பத்திரங்கள் சட்டத்தின் மூலம் வங்கியாளரைப் பற்றி விளக்கப் பட்டுள்ள விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அதன் பின்னர் கூட சட்ட வரைவுகள் தயாரிக்கப்படுகின்ற போது வங்கி அல்லது வங்கியாளரைப் பற்றி விளக்கமளிப்பதற்குத் தவறியுள்ளதாக கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது.
1938 ஆம் ஆண்டின் கம்பனிகள் கட்டளைச் சட்டத்தின் 333 வது வாசகம் வங்கிக் கம்பனி என்பதை பின்வருமாறு விளக்கியுள்ளது. "காசோலையின் மூலம், நாணயக் கட்டளையின் மூலம் அல்லது காசுக் கட்டளையொன்றின் மூலம் மீளப் பெறுவதற்கு உட்பட்டவாறு, நடைமுறைக் கணக்கு மீது அல்லது வேறு விதத்தில் பண வைப்புக்களை பொறுப்பேற்பதை தமது பிரதானமான தொழிலாகப் பேணிவருகின்ற ஒரு கம்பனி" வங்கிக் கம்பனியாகும் என விளக்கியுள்ளது. வங்கியாளர் தொடர்பான மேற்படி இலங்கையின் சட்ட விளக்கம், வங்கித் தொழில் சட்டம் தொடர்பான சிறப்புக்குரிய நூலாசிரியர்களது மதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பில் நூலாசிரியர்களது கருத்துக்கள் பற்றி மேலும் கலந்துரையாடப்படும்.
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

Page 19
இலங்கையில் மட்டுமன்றி உலகின் ஏனைய நாடுகளும்
சட்டங்களை இயற்றுவதன் மூலம் வங்கித் தொழிலுக்கு விளக்கமளித்துள்ளன. 1949 ஆம் ஆண்டில் இந்தியாவில் இயற்றப்பட்ட வங்கித்தொழில் சட்டத்தின் மூலம் வங்கித் தொழில் என்பதற்குப் பின்வருமாறு விளக்கமளித்துள்ளது. "வங்கித் தொழிலைப் பேணிவருகின்ற ஒரு கம்பனி வங்கிக் கம்பனியாயிருக்கும் என்பதோடு, உற்பத்தி அல்லது வர்த்தகத்தில் ஈடுபடுத்துவதற்கு தமது தொழிலின் நிதியிடலின் பொருட்டு மக்களிடமிருந்து பண வைப்புக்களைப் பொறுப்பேற்கும் எந்தவொரு கம்பனியும் வங்கித் தொழிலில் ஈடுபடுவதாகக்" கருதப்படமாட்டாது. இவ்வாறு நோக்குகின்றவிடத்து நியதிச் சட்டம் வங்கித் தொழிலைக் குறிப்பிடுகின்றபோது ஓரளவு பின்னடைவான இயல்பைக் காட்டுகின்றதென்பதைக் காணலாம்.
இதற்கு முன்னர் குறிப்பிட்டுள்ளவாறு 1938 ஆம் ஆண்டின் கம்பனிகள் கட்டளைச் சட்டத்தின் 333 வது வாசகத்தின் பிரகாரம் வங்கிக் கம்பனியொன்றுக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கம் ஏனைய சட்ட விளக்கங்களை விட பாராட்டத்தக்கதாயுள்ளது. அடுத்து இலங்கையின் நிலைமையை மேலும் ஆராயும் பொருட்டு 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம் விதிக்கப்பட்டமை மற்றும் அதன் பின்னர் உருவாகிய நியதிச் சட்ட ரீதியிலான வளர்ச்சி தொடர்பில் கவனம் செலுத்துதல் முக்கியமாயிருக்கும். 1982 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டத்தின் XIV பகுதியில் வங்கிகளுடன் தொடர்புடைய ஏற்பாடுகள் காட்டப்பட்டுள்ளன. அப்பகுதியின் 411 வது வாசகம் பின்வருமாறு கூறுகின்றது. "வங்கிக் கம்பனி என்பதன் மூலம் கீழே தரப்பட்டுள்ள தொழில் வகைகளில் ஒன்று அல்லது அதற்கு அதிகமானவற்றில் ஈடுபட்டுள்ள போதிலும் காசோலைகள், நாணயக் கட்டளைகள் அல்லது காசுக் கட்டளைகள் மூலம் அல்லது வேறு விதத்தில் மீளப் பெறுதல் உட்பட, வைப்புப் பணங்களைப் பொறுப்பேற்றலைத் தமது பிரதானமான தொழிலாகப் பேணிவருகின்ற கம்பனியாகும்" எனக் கருதப்படும். மேற்படி விளக்கத்தில் காட்டப்பட்டுள்ள ஏனைய தொழில் வகைகள் பின்வருமாறு.
(1) பணத்தைக் கடனாகப் பெறுதல், திரட்டுதல் அல்லது பொறுப்பேற்றல், பணத்தைக் கடனாக வழங்குதல் அல்லது முற்பணத் தொகைகளைச் செலுத்துதல், செலாவணி உண்டியல்கள், உத்தரவாதப் பத்திரங்கள், கூப்பன்கள், நாணயக் கட்டளைகள், கப்பற் சரக்குப் பத்திரங்கள், உரிமப் பத்திரங்கள், எதிரீட்டுப் பத்திரங்கள், அத்தாட்சிப் பங்குகள் மற்றும் ஏனைய சாதனப் பத்திரங்கள் ஆகியவற்றைத் தயாரித்தல், வரைதல், பொறுப்பேற்றல், கழிவிடல், கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் ஆகிய அனைத்துத் தொழிற்பாடுகளும், வெளிநாட்டு
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு
 

வங்கிப் பத்திரங்கள் உட்பட வெளிநாட்டு நாணயத்துடன் தொடர்புடைய அனைத்துத் தொழிற்பாடுகளும், முதலீடுகளை அடையப்பெறுதல், முறிகள், பங்குச் சான்றிதழ்கள் அல்லது
வேறு பிணையங்களுடன் தொடர்புடைய அனைத்துத் தொழிற்பாடுகளும், பெறுமதியான பொருட்களைப் பொறுப்பேற்றல் மற்றும் பாதுகாப்பு நம்பிக்கைப் பொறுப்புகள் தொடர்பான தொழிற்பாடுகளைப் பேணிவருதல் ஆகிய தொழிற்பாடுகள்.
(2) அரசாங்கத்தின் அல்லது உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும்
ஏனைய நபர்களது முகவராகச் செயற்படுதல்.
(3) பொது மற்றும் தனியார் கடன் உடன்படிக்கைகள் தொடர்பிலான
அனைத்துத் தொழிற்பாடுகளும்.
(4) அரசாங்கத்தின், ஒரு கம்பனியின் ஒரு கூட்டுத்தாபனத்தின் அல்லது ஒரு சங்கத்தின் பங்குகள், பங்குத் தொகுதிகள் அல்லது எதிர்மறைப் பத்திரங்கள் வழங்குதல், மேம்படுத்தல், அமுலாக்கல், காப்புறுதி, கப்பற்பொருட் காப்பீடு, உள்ளடங்கிய தொழிறப்பாடுகள் மற்றும் முகாமைத்துவத்தில் பங்கேற்கின்ற தொழிற்பாடுகள்.
(5) அப்போதைக்குள்ள அல்லது புதிதாக உருவாகின்ற தொழில்துறைகளுக்கு அல்லது கைத்தொழில் மேம்பாட்டுக்கு பணம் வழங்குதல்.
(6) ஏதேனுமொரு கம்பனி அல்லது தொழில்துறை தொடர்பில் ஏற்புடையதான சொத்துக்கள் தொடர்பான உரிமைகோரல்கள் அல்லது சிறப்புரிமைகளைக் கொள்வனவு செய்வதிலிருந்து அதற்கும் அப்பாற்பட்ட சொத்துக்களின் நிர்வாகம், விற்பனை மற்றும் பணம் அறவிடுதல்.
(7) நம்பிக்கைப் பொறுப்புகளைச் செயற்படுத்துவதற்குப் பொறுப்பேற்றல், நிறைவேற்றுனராக, பொறுப்பாளராக செயற்படல் அல்லது சொத்துக்களை நிர்வகித்தல்.
(8) முகாமைத்துவ ஆலோசனைச் சேவைகளில் ஈடுபடல், வங்கித் தொழில், கணக்கீடு, மதிப்பீடு செய்தல், கருத்திட்டம் மற்றும் கடன்களின் மதிப்பீடு மற்றும் அதனோடிணைந்த விடயங்கள் தொடர்பாகப் பயிற்சியளித்தல்.
(9) குத்தகை உரிமை, முதலீடுகள், குத்தகைக்கு விடல், களஞ்சியப்படுத்தல் தொழிற்பாடுகளில் ஈடுபடுதலும் அபிவிருத்தியின் பொருட்டு நடுத்தர மற்றும் நீண்டகாலக் கடன்கள் வழங்குதலும்,
19

Page 20
eeeSeeeeOZZZeyZZZeSZZeZkZZLZSeeeeZeeZZYeZZeYeeeSZSSeeSSeeZSeZZZSeSSZZ
1982 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டத்தின் 421 ஆம் வாசகம் "வங்கித் தொழிலுக்கு" பின்வருமாறு வரைவிலக்கணம் அளித்துள்ளது. "வங்கித் தொழில்" என்பதன் மூலம் மேலே குறிப்பிடப்பட்ட 411 வது வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில் வகைகளில் ஏதேனும் ஒன்றை அல்லது அதற்கு அதிகமானவற்றை பேணிவருகின்றதாயினும், இல்லாதிருப்பினும் காசோலை, நாணயக் கட்டளை அல்லது காசுக் கட்டளையின் மூலம் அல்லது வேறு விதத்தில் பணத்தை மீளப் பெறுதலின் கீழ் பண வைப்புக்களைப் பொறுப்பேற்கின்ற தொழில் எனக் கருதப்படுகின்றது.
தற்போது 1982 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டத்திற்குப் பதிலாக 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க புதிய கம்பனிகள் சட்டம் வலுவிலுள்ளது. அதன் பொருள் கோடல் வாசகத்தில் (529) "உரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கி" என்பது, உரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கி ஒன்றாகத் தொழிலைக் கொண்டுநடாத்துவதற்கு 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, வங்கித் தொழிற் சட்டத்தின் கீழ் உரிமம் ஒன்று வழங்கப்பெற்ற கம்பனி என்று பொருளாகும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று புதிய கம்பனிகள் சட்டத்தில் வங்கித் தொழில் அல்லது கம் பணிகள் பற்றி அதிகளவு விளக்கம் குறிப்பிடப்படாதிருப்பதற்கான காரணம், 1982 ஆம் ஆண்டின் பின்னர், 2007 ஆம் ஆண்டு புதிய கம்பனிகள் சட்டம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் மூலம் வங்கித் தொழிலுடன் தொடர்புடைய விடயங்களை ஒழுங்குமுறையாக்குவதற்கும், நிருவகப் பதற்கும் , அதனோடிணைந்த அல்லது இடைநேர்விளைவான விடயங்களின் பொருட்டு ஏற்பாடு செய்வதற்குமான சட்ட நிலைமையை ஒழுங்குமுறையாக் கியுள்ளதன் காரணத்தினால் ஆகலாம்.
அடுத்து 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தினாலும், 1995 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க வங்கித் தொழில் திருத்தச் சட்டத்தினாலும் உருவாகியுள்ள வளர்ச்சிகரமான நிலைமையைக் கவனத்திற்கொள்ளுதல் பயனுள்ளதாயிருக்கும். 1988 ஆம் ஆண்டின் வங்கித் தொழில் சட்டத்தின் 16 (1) வது வாசகத்தின் பிரகாரம் உரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கியைத் தவிர வேறு எந்தவொரு பகிரங்கக் கம்பனியும் அதன் பெயரின் ஒரு பகுதியாக அல்லது அதனை விளக்குகின்றவாறு ‘வங்கி’, ‘வங்கியாளர்", அல்லது ‘வங்கித் தொழில்’ என்ற சொல்லை அல்லது அதனால் அமையப்பெற்ற சொற்களை அல்லது வேறு மொழியில் அதற்குச் சமமான சொற்களைப் பயன்படுத்துதல் கூடாது என்பதோடு, எந்தவொரு உரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கியும் தமது பெயரின் ஒரு
20
 

燃簽繼徽燃簽
பகுதியாக இச் சொற்களில் ஆகக் குறைந்தது ஒன்றையாவது பயன்படுத்துவதாக இருந்தாலொழிய இலங்கையினுள் வங்கித் தொழிலில் ஈடுபடுதலாகாது. மேலும், வங்கித் தொழில் சட்டத்தின் 16 (2) வது வாசகத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு தொழில் நிறுவனமும், தனி நபரும், தனி நபர் குழுவும் ஏதேனுமொரு தொழிலைக் கொண்டுநடாத்தும் பொருட்டு அதன் அல்லது அவரது பெயரின் ஒரு பகுதியாக அதனை விளக்குகின்றவாறு ‘வங்கி’, ‘வங்கியாளர்’, அல்லது ‘வங்கித் தொழில்’ என்ற சொல்லை அல்லது வேறு மொழியில் அதற்குச் சமமான சொற்களைப் பயன்படுத்துதல் கூடாது. இதற்கிணங்க வங்கித் தொழில் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கூட எவராலும் தாம் விரும்பியவாறு வங்கி என்ற சொல்லைப் பயன்படுத்த முடியாது என்பதோடு, சட்ட ரீதியிலல்லாத ஒரு விடயமாகவும் இருக்கும். வங்கித் தொழில் சட்டத்தின் 85 வது வாசகத்தின் மூலம் மேலே குறிப்பிடப்பட்ட 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம், அச்சட்டத்தின் XIV ஆம் பகுதி நீக்கப்பட்டுள்ளதோடு, வங்கித் தொழில் சட்டத்தின் 86 ஆம் வாசகத்தின் பொருள் கோடலின் கீழ் வங்கித் தொழில் என்பதற்குப் பின்வருமாறு விளக்கமளித்துள்ளது.
"வங்கித் தொழில்" என்பதன் மூலம் வேண்டுகோள் விடுக்கின்ற போது காசோலைகள், நாணயக் கட்டளைகள், காசுக் கட்டளைகள் மூலம் அல்லது வேறு விதத்தில் செலுத்தப்பட வேண்டிய பண வைப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பொது மக்களிடமிருந்து நிதியங்களைத் திரட்டுகின்ற தொழில் மற்றும் அத்தகைய நிதியங்களை முழுமையாக அல்லது பகுதியளவில் முற்பணம் முதலிடு அல்லது சட்டத்தினால் அல்லது மரபு ரீதியிலான வங்கி நடைமுறைகளினால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள வேறு ஏதேனும் தொழிற்பாடுகளின் பொருட்டு ஈடுபடுத்துதல் கருதப்படுகின்றது.
1988 ஆம் ஆண்டின் வங்கித் தொழில் சட்டத்திற்கு 1995 ஆம் ஆண்டில் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டதோடு, 1995 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க வங்கித் தொழில் திருத்தச் சட்டத்தின் மூலம் உரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளுக்கு மேலதிகமாக உரிமமளிக்கப்பட்ட சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் ஆரம்பிக்கப்படும் பொருட்டு சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் வங்கித் தொழிலைக் கொண்டுநடத்துகின்ற மற்றும் வைப்புகளை ஏற்கின்ற மற்றும் அத்தகைய பணத்தை முதலீடு செய்கின்ற தொழிலைக் கொண்டுநடத்துகின்றவர்கள் (உரிமமளிக்கப்பட்ட சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள்) ஏதேனுமொரு மொழியில் "வங்கி", "வங்கியாளர்", அல்லது "வங்கித் தொழில்"
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

Page 21
YZYeekeYeYYzeee ekeeeYSZkk0YYZeYeLeYzeYeYezeZSesL0SYkeeSkLkLee0zLeLeYYeYeeeYYYekkYLSLS
ஆகிய சொற்களில் எதனையும் அக்கம்பனியின் பெயரின் அல்லது விளக்கத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துதல் வேண்டும்.
மேற்படி வளர்ச்சிகரமான சட்ட நிலைமையின் பிரகாரம் மரபு ரீதியிலான வங்கித் தொழிலை நடத்தி வருகின்ற நிறுவனங்களுக்கு மேலதிகமாக சிறப்பியல்புவாய்ந்த வங்கி முறையொன்று உருவாகியுள்ளதென்பதைக் காணலாம்.
அடுத்து வங்கி முறையின் அறிமுகம் தொடர்பில் வழக்குகள் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள பங்களிப்பை ஆராய்தல் வேண்டும். இங்கு எமக்குக் காணக்கூடியதாயுள்ள வெளிநாட்டு வழக்குத் தீர்ப்புகள் பல உள்ளன. ஸ்டபர்ட் எதிர் ஹென்றி (1850) வழக்கில், ஏதேனும் ஒரு நபர் வங்கியாளராக இருப்பதற்கெனில் அவரது தொழில்துறை நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பெரும் பகுதி வங்கித் தொழிற்பாடுகளைக் கொண்டதாயிருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு, பங்குத் தொகுதி இடைத்தரகு மற்றும் நாணய இடைத்தரகுப் பணிகளில் ஈடுபடுகின்றதும், ஓரளவுக்கு வங்கித் தொழிற்பாடுகளில் ஈடுபட்டுகின்றதுமான ஒருவர் வங்கியாளராக மாட்டார் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டேவிஸ் எதிர் கெனடி (1869) வழக்கில், ஒரு வங்கியை அடையாளம்காணும் பொருட்டு “சாதாரண அறிவுள்ள நபர் ஒருவர் வங்கியாளரின் தொழில்துறை எனக் கூறுமளவுக்கு தொழில் நடத்திவரப்பட்டதா’ என்பது முக்கியமாகும் என நீதிமன்றப் பிரபு கிரிஸ்ரியன் குறிப்பிடுகிறார். ஹெலிபெக்ஸ் யூனியன் எதிர் விலி ரைட் (1875) வழக்கில விசேடமாகக் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் யாதெனில், வங்கியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியிலான சிறப்புரிமைகள் மற்றும் சுதந்திரம் அத் தொழிலின் உயர் நிலையை அடிப்படையாகக் கொண்டுள்ளதோடு, அதன் மூலம் அச்சிறப்புரிமை மற்றும் சுதந்திரம் நியாயப்படுத்தப்படுகின்றது என்பதாகும் வங்கித் தொழிலை ஏனைய தொழில்துறைகளுடன் தொடர்புபடுத்துகின்றவர்கள் தொடர்பில் மேற்படி சிறப்புரிமை மற்றும் சுதந்திரம் தொடர்பான கோட்பாடு ஏற்புடையதாகாது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கியாளர் என்பவர் யார் என்பதைப் பற்றி இலங்கையில் விசாரிக்கப்பட்ட உயர் நீதிமன்ற வழக்குத் தீர்ப்பு ஒன்று தொடர்பில் அடுத்து ஆராயப்படுகின்றது. வருமான வரி ஆணையாளர் எதிர் வரையறுக்கப்பட்ட செட்டினாத் வங்கி (1946) - 47 புதிய சட்ட அறிக்கை (NLR) 95 வழக்கின் சம்பவ விடயங்கள் பின்வருமாறு. இலங்கையில் 1932 ஆம் ஆண்டின் வருமான வரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வருமான வரிச் சலுகைகள்
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

வங்கிக் கம்பனிகளுக்கேயொழிய சாதாரண வர்த்தகத்
தொழிற்பாடுகளைப் பேணிவருகின்ற கம்பனிகளுக்கு வழங்கப்படவில்லை. செட்டினாத் வங்கியின் இலங்கைக் கிளையின் மூலம் அதன் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பீடு செய்யப்பட்ட பணத் தொகை தொடர்பில் வருமான வரிச் சலுகைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இங்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள வருமான வரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ், செட்டினாத் வங்கியின் இலங்கையில் அமைந்துள்ள வங்கிக் கிளை வதியாதோர் வங்கியாகும் என்பது நிரூபிக்கப்பட வேண்டியிருந்த அடிப்படை விடயமாக இருந்தது.
இங்கு, வரையறுக்கப்பட்ட செட்டினாத் வங்கியின் இலங்கைக் கிளை ஒரு வங்கியா, இல்லையா என்பது உயர் நீதிமன்றத்தின் முன் இருந்த தீர்க்கப்பட வேண்டிய விடயமாக இருந்தது. வங்கியினால் முன்வைக்கப்பட்ட பிரதானமான தர்க்கம் யாதெனில்,
(1) வங்கி என்ற சொல்லுக்கு விரிவானதொரு வரைவிலக்கணம்
வழங்கப்பட வேண்டும் என்பது.
(2) கம்பனி எந்தவொரு வங்கித் தொழிலிலும் ஈடுபடுவதற்கான
போதுமையைக் கொண்டுள்ளது என்பது.
(3) வங்கியாளரால் நிறைவேற்றப்படுகின்ற அனைத்துத் தொழிற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதைக் காட்டவேண்டிய அவசியமில்லை என்பது.
(4) காசோலைகள் தொடர்பான தொழிற்பாடுகள் கட்டாயமாகச்
செய்யவேண்டிய அவசியமில்லை என்பது.
(5) வங்கித் தொழிற்பாட்டின் பொருட்டு உண்டியல்களின் கழிவிடல்
போதியதாயுள்ளது என்பது.
‘வங்கியாளர் என்பது இலாபமீட்டும் நோக்கத்துடன் ஏனையோர்களின் பணம் தொடர்பில் செயலாற்றுகின்ற ஒருவராகும் என்ற அயர்லாந்துச் சட்டமே மேற்படி தர்க்கத்திற்கு அடிப்படையாக இருந்தது. அடுத்து வருமான வரி ஆணையாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிரதானமான தர்க்கம் யாதெனில், ஒரு வங்கியினால் ஆற்றப்படுகின்ற பல்வேறு தொழிற்பாடுகள் இருக்கலாமெனினும், பணம் கடனாக வழங்கப்படுவதன் மூலம் மட்டும் அதன் தொழிற்பாடுகள் வங்கித் தொழிற்பாடுகளாக ஆகாது என்பதாகும். இதை அடிப்படையாகக் கொண்டு செட்டினாத் வங்கியின் தொழிற்பாடுகள் வங்கித் தொழில் அல்லாத இயல்பைக் கொண்டுள்ளதால் அதனை வதியாதோர் வங்கிக் கம்பனியாகக் குறிப்பிட முடியாதெனவும், அதனை ஒரு வதியாதோர் வர்த்தகக்
21

Page 22
கம்பனியென்று குறிப்பிடுதலே பொருத்தமாகும் எனவும் வருமான வரி ஆணையாளர் மேலும் விவாதித்தார்.
இரு தரப்பினர்களினதும் விவாதங்களைக் கவனத்திற்கு எடுத்த உயர் நீதிமன்றம் அந்த வங்கிக் கிளை ஒரு வங்கியாளரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கின்றபோது, 1938 ஆம் ஆண்டின் இலங்கை கம்பனிகள் கட்டளைச் சட்டத்தின் 333 ஆம் வாசகத்தையே கவனத்திற்கொள்ளுதல் வேண்டுமெனத் தீர்மானித்தது. அந்த வாசகத்தில் காணப்படுகின்ற 'காசோலையின் மூலம், நாணயக் கட்டளையின் மூலம் அல்லது காசுக் கட்டளையின் மூலம் அல்லது மீளப் பெறுவதன் கீழ், நடைமுறைக் கணக்கின் மீது அல்லது வேறு விதத்தில் பண வைப்புகளைப் பொறுப்பேற்பதைத் தமது பிரதானமான தொழிலாகப் பேணிவருகின்ற ஒரு கம்பனி என்பதை விரிவாக விளக்கிய உயர் நீதிமன்றம் மேற்படி வாசகத்தில் செட்டினாத் வங்கி உள்ளடங்காததன் காரணத்தால் இவ்வங்கிக் கிளை ஒரு வங்கியாளரல்ல எனத் தீர்மானித்தது. அக்காலகட்டத்தில் இலங்கை உயர் நீதிமன்றத்தின் வழக்குகள் மேன்முறையீட்டின் பொருட்டு இங்கிலாந்தின் கோமறைக் கழக நீதிமன்றத்திற்கே சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வழக்கும் கோமறைக் கழக நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்யப்பட்டதோடு, அங்கும் இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. வங்கியாளர் தொடர்பிலான விளக்கம் இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்க நீதிமன்றங்களில் மதிப் பிற்கும் கெளரவத்திற்கும் உள்ளாகியுள்ளதென்பது இங்கு விசேடமாகக் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு விடயமாகும்.
இதனை ஒரு விசேடமான சந்தர்ப்பமாக விளக்கலாம். ஏனெனில், வங்கித் தொழிலின் ஆரம்பம் இங்கிலாந்தில் நடைபெற்றதோடு, இது காலனித்துவ காலகட்டத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையைத் தொடர்ந்தே இலங்கையை வந்தடைந்த்து. ஆயினும், வங்கியாளர் யார் என்பதைப் பற்றி இங்கில்ாந்தில் Gikan இல்லாதிருந்த சட்ட ரீதிலான மற்றும் நீதிமன்ற விளக்கமொன்று வழங்கப்பட்டதன் மூலம் அது தொடர்பில் ஆங்கிலேயர்களினதும் ஏனைய இனத்தவர்களினதும் கவனத்தை ஈர்ப்பதற்கு இலங்கைக்கு முடியுமாயிருந்தமை நாம் பெற்ற ஒரு வெற்றியாகும் எனக் குறிப்பிடலாம். இதற்கிணங்க, காணக்கூடியதாயுள்ள மேலுமொரு முக்கியமான விடயம் யாதெனில், வங்கியாளராக ஆகும் பொருட்டு காசோலைகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்தல் அத்தியாவசியமானதொரு அம்சமாக உள்ளதென்பதாகும். அத்துடன் காசோலைகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்யாத மற்றும் காசோலைகளைச் சேகரிக்காத ஒரு வங்கி இருக்க முடியாதென்பதற்கே நீதிமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
22

1966 ஆம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்ட இங்கிலாந்தின் ஒரு வழக்கான வரையறுக்கப்பட்ட யுனைடற் டொமினியன்ஸ் டிறஸ்ட் எதிர் கிறிக்வுட் வழக்கின் போது மேற்படி நிலைமை வேறொரு பக்கம் திரும்பியது. அந்நாட்டின் மிகப் பெரிய நிதிக் கம்பனியொன்றான மேற்படி கம்பனியினால் கட்டளையிடப்பட்ட சில செலாவணிப் பத்திரங்களின் பிணையின் மீது வேறொரு கம்பனிக்கு கடன் தொகையொன்று வழங்கப்பட்டிருந்ததோடு கடன் பெற்ற கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு கிறிக்வுட் செலாவணிப் பத்திரங்களில் புறக்குறிப்பிட்டிருந்தார். கடன் பெற்ற கம்பனி ஒழிக்கப்பட்டதன் பின்னர் செலாவணிப் பதிதரங்களில் புறக்குறிப்பிட்டவர் என்ற வகையில் பிரதிவாதிக்கு எதிராக கடன் தொகையை அறவிடும் பொருட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இங்கு, முறைப்பாட்டாளரான யுனைடற் டொமியன் டிரஸ்ட் கம்பனி பணம் கடனாக வழங்குபவர்களின் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத அனுமதி பெறாத கம்பனியாக இருந்தமையால் சட்ட விரோதமாக வழங்கப்பட்ட கடன் தொகை அச்சட்டத்தின் கீழ் வலுவிழந்ததும் அறவிட முடியாததுமாகுமென்பதே பிரதிவாதியின் வாதிடலாயிருந்தது. அதேபோன்று. வங்கியாளரேயொழிய கடன் வழங்குபராக தாம் இல்லாததன் காரணத்தினால் கடன் கொடுப்பவர்களது சட்டத்தின் கீழ் தான் வருவதில்லையென்பதே முறைப்பாட்டுக் கம்பனியின் வாதிடலாயிருந்தது. இங்கு மேற்படி கம்பனி ஒரு வங்கியாளரா? இல்லையா? என்பதையே நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டியிருந்தது. ஒரு வங்கியாளரால் செய்யப்பட வேண்டிய அடிப்படை விடயங்கள் அக் கம்பனியின் தொழில்துறை நடவடிக்கைகளிடையே காணப்படவில்லையாயினும், ஒரு வங்கிக்குக் கிடைக்க வேண்டிய சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு ஏனைய வங்கிகள் மற்றும் அரச திணைக்களங்கள் போன்ற பொறுப்புவாய்ந்த நிறுவனங்களால் நீண்ட காலமாக இக் கம்பனி ஒரு வங்கியாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமையின் காரணத்தினாலும், வங்கி என்ற சொல்லின் மூலம் நாட்டு மக்கள் அதனை ஒரு வங்கியாகக் கருதியமையினாலும், வரையறுக்கப்பட்ட யுனைடற் டொமினியன் டிரஸ்ட் கம்பனி ஒரு வங்கியாகும் என ஆங்கிலேய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஏகோபித்ததல்லாத பிரிந்த தீர்ப்பொன்றின் மூலம் தீர்மானிக்கப்பட்டது. இவ்வழக்குத் தீர்ப்பின் போது, சிறப்பாகச் செயற்படுகின்ற தொழில் நடைமுறையொன்று வர்த்தகர்களால் தாபிக்கப்பட்டுள்ள விடத்து நீதிபதிகள் அம்மரபுக்கு எதிராகச் செல்லலாகாது என்றும், புகழுக்காக ஒருவர் வங்கியாளராக ஆவதைத் தடுக்கலாமென்பதோடு, புகழ் காரணமாக ஒருவர் வங்கியாளராக ஆகலாம் என்றும் டெனிங் பிரபு கூறினார்.
பிற்பட்ட காலத்தில் இத் தீர்ப்புக்கு எதிராக பாரதூரமான விமர்சனங்கள் எழுந்தமையின் காரணமாக இங்கிலாந்தின் 1967
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு

Page 23
姿懿签黎蕊毅
ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டத்தின் 123 வது வாசகத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் உண்மையாகவே வங்கித் தொழிலில் ஈடுபடுவதாக வர்த்தக சபையினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ் ஒருவர் வங்கியாளரா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கின்ற தீர்க்கமான காரணியாக அமைந்தது.
இலங்கையின் நாணய விதிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வங்கி நிறுவனம் அல்லாத எந்தவொரு நிறுவனமும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் எழுத்து மூலமான அங்கீகாரம் இருந்தாலொழிய வங்கி’, ‘வங்கியாளர்’, அல்லது ‘வங்கித் தொழில்’ என்ற சொல் உள்ளடங்கிய பெயரின் கீழ் தாபிக்கப்படுதலோ, பேணிவரப்படுதலோ கூடாது என இலங்கையின் நாணய விதிச் சட்டத்தின் 121 (அ) வாசகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1974 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க நாணய விதி (திருத்தச்) சட்டத்தின் 13 வது வாசகத்தின் மூலம் மேற்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கட்டுரையின் இதற்கு முந்திய அத்தியாயமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1988 ஆம் ஆண்டின் வங்கித் தொழில் சட்டத்திற்கு 1995 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ஆராய்தல் முக்கியமானதாயிருக்கும். இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில், “உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கி’ என்ற பெயரில் "வங்கி’, ‘வங்கியாளர்’, அல்லது ‘வங்கித் தொழில்’ ஆகிய சொற்களில் எதையும் இவ்வுரிமம் பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிக் கம்பனி என்ற பெயரின் அல்லது விளக்கத்தின் பகுதியாக பயன்படுத்தும் பொருட்டு மேற்படி சட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் அங்கீகாரம் பெறப்படுதல் வேண்டும். அத்துடன் 95 ஆம் ஆண்டின் வங்கித் தொழில் திருத்தச் சட்டத்தின் 76 ஈ (1) வாசகத்தின் மூலம் மேற்படி சொற்களில் எந்தவொன்றும் அக்கம்பனியின் பெயரின் அல்லது விளக்கத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க வங்கித் தொழில் (திருத்தச்) சட்டத்தின் விரிவான பெயர் வருமாறு. “வங்கித் தொழிலைக் கொண்டுநடாத்துபவர்களும், வைப்புகளை ஏற்று அத்தகைய பணத்தை முதலீடு செய்யும் தொழிலைக் கொண்டுநடாத்துபவர்களுமான ஆட்களுக்கு உரிமமளிப்பதற்கான நடவடிக்கை முறையொன்றை அறிமுகப்படுத்தி நடைமுறைப் படுத்துவதற்காகவும், அத்தகைய தொழில்கள் தொடர்பான கருமங்களை ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடு
2008 மார்ச் / ஏப்பிரல் - குறிப்பேடு
 
 

செய்வதற்கும், அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்" மேற்படி விரிவான பெயரைக்
கவனமாக ஆராய்கின்றபோது, மரபு ரீதியிலான வங்கித் தொழில்களை நடத்தி வருகின்ற ஆட்ளுக்கு மேலதிகமாக வைப்புகளை ஏற்கின்ற மற்றும் அத்தகைய பணத்தை முதலீடு செய்கின்ற தொழிலைக் கொண்டுநடாத்துகின்றவர்களுக்கும் தமது தொழில் பெயருடன் வங்கி என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.
இதன் கீழ், உரிமமளிக்கப்பட்டுள்ள “உரிமமளிக்கப்பட்ட சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள்", சட்டத்தின் II வது அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. அவையாவன:
1. 1979 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கிச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கி.
2. 1955 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அபிவிருத்தி நிதிக்
கூட்டுத்தாபனம்.
3. 1975 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அரச ஈட்டு, முதலீட்டு வங்கிச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள அரச ஈட்டு, முதலீட்டு வங்கி.
4. 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள தேசிய சேமிப்பு வங்கி.
இவற்றிற்கு மேலதிகமாக இன்று இலங்கையின் மாகாணங்களை மையமாகக் கொண்டு தாபிக்கப்பட்டுள்ள 06 அபிவிருத்தி வங்கிகள் உள்ளன.
1.கந்துரட்ட அபிவிருத்தி வங்கி,
2. ஊவா அபிவிருத்தி வங்கி.
3.ருகுணு அபிவிருத்தி வங்கி.
4.வயம்ப அபிவிருத்தி வங்கி,
5. சப்பிரகமுவ அபிவிருத்தி வங்கி.
6.ரஜரட்ட அபிவிருத்தி வங்கி.
மேலும் சனச அபிவிருத்தி வங்கி, ஃபேன் ஏசியா மற்றும் செலிங்கோ சேமிப்பு வங்கி என்றவாறும் குறிப்பிடத்தக்களவு
23

Page 24
線鱲
உரிமமளிக்கப்பட்ட சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் செயற்பட்டு வருகின்றன.
இதன்படி நோக்குகின்றவிடத்து, தற்போது விருத்தி செய்யப்பட்ட சட்ட நிலைமையின் கீழ் வங்கியாளர் என்பது மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளதென்பதைக் காணலாம். மரபு ரீதியிலான நியதிச் சட்டங்கள் மற்றும் வழக்குச் சட்டங்களின் மூலம் வங் கியாளர் பற்றி விளக்கப் பட்டுள்ள விதத் தின் வரையறைகளிலிருந்து மேலும் முன்னேறிச் சென்று இலங்கையின் சட்டவாக்கத்துறை வங்கியாளர் என்பதற்கு வைப்புகளை ஏற்கின்றதும் அத்தகைய பணத்தை முதலீடு செய்கின்றதுமான தொழிலைக் கொணர் டு நடாத் துகின்ற ஆட்களாலும் பயன்படுத்தக்கூடியவாறு சட்ட வரையறை பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.
அடுத்து வங்கி முறை தொடர்பான நூலாசிரியர்களது கருத்துக்களை ஆராய்ந்து பார்க்கலாம். கலாநிதி ஹாத்தி தனது Law of Banking நூலில் வங்கியாளர் என்பருக்கு இவ்வாறான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். "உரிய வாடிக்கையாளர்களது நடைமுறைக் கணக்குகளில் இருக்கின்ற பணத் தொகைகளைக் குறிப்பிட்டு அவர்கள் காலத்துக்குக் காலம் கட்டளையிடுகின்ற காசோலைகளை மாற் று கண் ற பிணைப் பின் மீது வாடிக்கையாளர்களுக்காக பணத்தை ஏற்கின்ற மற்றும் நாணயக் கட்டளைகளைத் திரட்டுகின்ற பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர் அல்லது ஒரு கம்பனி" என்றவாறாகும். அதேபோன்று பெஜட்டின் Law of Banking (1966) என்ற நூலில் வங்கியாளரைப் பற்றி இவ்வாறு விளக்குகின்றார்.
அதாவது, “நடைமுறைக் கணக்கின் மீது பணத்தை ஏற்கின்ற, நடைமுறைக் கணக்கின் மீது கட்டளையிடப்படுகின்ற காசோலைகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றபோது கொடுப்பனவுகளைச் செய்கின்ற மற்றும் வாடிக்கையாளர்கள் சார்பில் காசோலைகளைச் சேகரிக்கின்ற ஒரு நிறுவனம் அல்லது ஆளொருவர் என்பதோடு, எவ்வித மட்டுப்பாடுகளுமின்றி மேற்படி சேவைகளை அனைவருக்கும் வழங்குகின்ற அதேநேரம் ஏனைய தொழில்துறைகளிலும் ஈடுபடினும், இல்லாதிருப்பினும் அத்தொழில் ஒரு வங்கித் தொழிலாகும்" மேலும் ஹோல்ஸ்பரி பிரபு தனது Halsbury, Laws of England என்ற நூலில் வங்கியாளரைப் பின்வருமாறு விளக்குகின்றார். "வங்கித் தொழில், அதாவது நடைமுறை அல்லது வைப்புக் கணக்குகளின் மீது பணத்தை ஏற்றலையும், வாடிக்கையாளரால் கட்டளையிடப்படுகின்ற காசோலைகளுக்கு கொடுப்பனவுகளைச் செய்வதையும் மற்றும் வைப்பிலிடப்படுகின்ற காசோலைகளைத் திரட்டுவதையும் தமது ஒரேயொரு அல்லது பிரதானமான தொழிலாகக் கொண்டுள்ள ஆளொருவர், ஒரு கூட்டுத் தொழில் முயற்சி அல்லது ஒரு நிறுவனம்" என்றவாறாகும்.
கொழும்பு - 13, 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தையில் இலங்கை மத்திய வங்கி தொடர்பூட்டல்
 

பொருளியலாளர்கள் வங்கியாளரைப் பற்றி விபரித்துள்ள விதத்தினையும் ஆராய்தல் முக்கியமானதாயிருக்கும் இங்கு வங்கித் தொழிலின் அடிப்படையானது எவ்வித இயல்ரீதியான பண்புகளில் தங்கியுள்ளது என்பது விசேடமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். அதாவது, வாடிக்கையாளரின் பணத்தை ஏற்று, அவர் சார்பில் காசோலைகளைத் திரட்டி, வாடிக்கையாளரால் கட்டளையிடப்படுகின்ற காசோலைகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்வதன் மூலம் வாடிக்கையாளரின் கடனை மீளச் செலுத்துவதில் வங்கித் தொழில் தங்கியுள்ளது. இத்தொழிற்பாடுகள் வங்கித் தொழிலை ஏனைய தொழில்களிலிருந்து பிரித்துக் காட்டுகின்ற எல்லையைக் குறிக்கின்றன. இதன்படி, காசோலைகள் தொடர்பான தொழிற்பாடுகள் வங்கியாளரது இயல் ரீதியானதும் சட்ட ரீதியானதுமான தொழிற்பாடாக மாறியுள்ளதென்பதைக் காணலாம். காசோலைகளின் மூலம் கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுகின்ற போது வங்கியாளரைப் பிரித்துக் காட்டக்கூடிய மேலுமொரு விசேட பண்பைப் பற்றி ஆராயலாம். அதாவது, பல்வேறான கொடுக்கல் வாங்கல்களின்போது காசோலைகள் மூலம் ஆட்களுக்கிடையிலான கடன்களைத் தீர்க்கும் பொருட்டு கேள்வி வைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு வங்கி வைப்புகள் கொடுப்பனவு ஊடகமொன்றாக மாறி பணத்தின் மூலம் நடைபெறுகின்ற தொழிற்பாடுகளை நிறைவேற்றுகின்றது. இதன்படி கடன்கள் தீர்க்கப்படுகின்றபோது ஒரு நிதி நிறுவனத்தின் வைப்புகள் பொதுவாகப் பணமாக ஏற்றுக்கொள்ளப்படுமெனில் அவ்வாறான நிறுவனத்தை வங்கியாளராகக் கருதலாம் என்பது பொருளியலாளர்களது கருத்தாகும்.
மேற்படி விளக்கங்களுக்கும், நாணயம் மற்றும் வங்கி முறைகள் தொடர்பான நிபுணர்கள் நாணயம் தொடர்பானதொரு அறிமுகத்தை வழங்குகின்றவாறு, "கடன் தீர்க்கப்படுகின்றபோது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுபவை பணமாகும்’ எனக் குறிப்பிடுகின்ற விளக்கத்திற்கும் இடையே உள்ள தொடர்பு மிக நெருங்கியதொரு தன்மையைக் காட்டுகின்றது. அதாவது, தீர்க்கப்படுகின்றபோது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுமெனில், அத்தகைய வங்கி வைப்புகளைப் பணமாகக் கருத முடியும். இதன்படி நாணயத்திற்கும் வங்கிக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பைக் காணலாம்.
உசாத்துணை நூல்கள்:-
1. வங்கித் தொழில் சட்டமும் நடைமுறையும் - கருணாதாச
ஹேவா மல்லிகா ஆரச்சி
2. Companies Act No-01 of 2007 And The Corporate Law of
Sri Lanka - Dr. Harsha Cabral.
3. இலங்கையின் வணிகச் சட்டம் - கலாநிதி விக்கிரம வீரசூரிய 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டம் மற்றும் 1982ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க கம்பனிகள் சட்டம்
மைந்துள்ள (ஆட்டுப்பட்டித்தெரு) கெளரி அச்சகத்தில் அச்சிடப்பட்டு திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.