கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2008.05-06

Page 1
இலங்கை மத்திய வ: தொடர்பூட்டல் தினைக்களம்
 

臧 மத்திய வங்கியின் சமூக, பொருளாதார இருமாத சஞ்சிகை
மலர் -0 విత్రా 2008 GD ఖలింగ్

Page 2
உணவுப் பணவீக்கம் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பித்து, 2007 ஆம் ஆண்டு முழுவதிலு பொருளாதரம் அண்மிய வரலாற்றில் கண்டிராத விதத்தில் உணவு அபிவிருத்தியடைந்துவரும் மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுக உணவுப் பொருட்களின் விலையில் துரித அதிகரிப்பே அதற்க உருவாக்கப் பட்ட உணவுப் பிரச்சினை பொருளாதாரத்தின் மீது ஏற்ப ஒருசிலர் இதனை பொருளாதாரங்களை முடிவைக் காணமுடியாத ஆழிப் பேரலையைப் போன்றுள்ளதெனக் கூறுகின்றனர்.
அதிகரித்துச் செல்கின்ற உணவுப் பொருள் விலைகளின் முன்னிலை வீழ்கின்றனர். இது போசாக்கின்மை தொடர்ந்து பரவுவதற்கும் குற உள்ளாக்குவதற்கும் காரணமாயமைந்துள்ளது. போசாக்கின்மை சு: மட்டத்தினை வீழ்ச்சியடையச் செய்வதற்கும் நேரடியாகக் காரண பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஏற்கவேண்டி வருகின்ற சுகா பயன்பெறத்தக்க மனித வளம் பலவீனமடைந்து மெலிந்து போ6 மறைமுகமாகவும் ஒரு நாட்டிற்கு ஏற்படுகின்ற பாதிப்பு சிறியதல்ல
உணவு விலை அதிகரிப்பதற்கு ஏதுவாயமைந்த பல காரணங்க எரிபொருள் விலை இதில் பிரதானமானதாகும். காலநிலை மாற்றங்களி வறட்சி, வெள்ளப் பெருக்கு சூறாவளி ஆகியவற்றிற்கு விளை நில எரிபொருள் விலை அதிகரிப்பினதும் உணவு விலை அதிகரிப்பின கூடியதாக இருந்தது. பெற்றோலிய விலை அதிகரிப்பைத் தொடர்ந்து நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. உயிரின எரிபொருளை உற் பரபரப்பூட்டுவதுமான விடயமாக மாறியுள்ளது. வயிற்றுப் பசியில் 6
இந்நிலைமையினுள் உலக கவனம் உணவுப் பாதுகாப்பின்பால் உணவு அமைப்பு ஆகிய சர்வதேச நிறுவனங்கள் கூட பசிக்கு எத எதிர்கால உணவுத் தேவையை நிறைவு செய்யக்கூடிய வழிவகை
இந்த அனைத்து விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலுக்காக
குறிப் Gu6 SBN 1391-7676
2008 மே/ஜூன்
ஒரு பிரதியின் விலை : eBIT 10.00 வருடாந்த சந்தா ரூபா 240.00 (தபாற் கட்டணத்துடன்)
தொடர்பூட்டல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி எனக் குறிப்பிடப்பட்ட காசுக்கட்டளைகள்/ காசோலைகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் "குறிப்பேடு" சஞ்சிகையை மாதாந்தம் அஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம்.
பணிப்பாளர், தொடர்பூட்டல் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, த.பெ.இல. 590, கொழும்பு.
“குறிப்பேடு" சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள் கட்டுரை ஆசிரியரின் 8

ம், 2008 ஆம் ஆண்டின் முதல் ஒருசில மாதங்களிலும் உலக பிரச்சினைக்கு முகம்கொடுத்துள்ளது. குறை அபிவிருத்தியடைந்த, ள் பலவற்றில் நடைபெற்ற மற்றும் நடைபெற்று வருகின்றதான ான காரணமாகும். மேற்படி உணவு விலையேற்றத்தின் மூலம் டுத்தியுள்ள மற்றும் ஏற்படுத்தி வருகின்ற அழுத்தம் எவ்வளவெனில், அதள பாதாளத்தில் வீழ்த்துகின்றதும் நாசமாக்குகின்றதுமான ஒரு
பில் வறுமையில் வாடுகின்ற மக்கள் மென்மேலும் அதளபாதாளத்தில் ப்ெபாக சிறுவர்களது நிலவுதலையும் வளர்ச்சியையும் ஆபத்துக்கு காதாரப் பிரச்சினைகள் பலவற்றிற்கு வழிவகுப்பதோடு, இது அறிவு மாயமைகின்றது. மேலும், சீர்கெட்டு, நலிவடைந்துள்ள உடலைப் தாரச் செலவு அதிகரிப்பதன் மூலம் நிதி ரீதியில் நேரடியாகவும், பதன் மூலம் உருவாகின்ற பொருளாதார நட்டத்தின் காரணமாக
).
5ள் உள்ள போதிலும், அதிவிரைவாக அதிகரித்துச் செல்கின்ற ன் தாக்கமும் பாரதூரமானதாகும். எதிர்பாரா விதமாக உருவாகுகின்ற ங்களும் அறுவடைகளும் இரையாகி வருகின்றன. எவ்வாறாயினும், தும் நேரடியான தொடர்புகளைக் கடந்த காலத்தில் அவதானிக்கக் பல்வேறான மாற்று வலுசக்தி மூலங்கள் தொடர்பில் பெரும்பாலான பத்தி செய்வதற்கான மாற்று வழிமுறை இதில் பிரதானமானதும் வாகனத்தை ஒட்டிச் செல்வதை அனுமதிக்க யாரால்தான் முடியும்? செலுத்தப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக திரான புதியதொரு வேலைத்திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி ககள் பற்றி ஆராய்வதற்கு முனைந்துள்ளன.
இத்தடைவ "குறிப்பேடு" ஒதுக்கப்படுகின்றது.
கட்டுரைகள் பக்கம்
உலக உணவுப் பிரச்சினை 3
வறுமைத் தீ பரவுவதைத் தடுப்பதற்கு.
உணவுப் பாதுகாப்பைப் பற்றிச் சிந்திப்பதற்கான காலம். 15
கேன்ஸின் கதை 2
அட்டைப்படம்: பூரீ தர்சன நாரன்பனாவ
ருத்துக்களேயொழிய இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களாகாதிருக்கலாம்.
2008 மே / ஜூன் - குறிப்பேடு

Page 3
2006 ஆம் ஆண்டில் ஆரம்பித்து, 2007 ஆம் ஆண்டு முழுவதிலும், 2008 ஆம் ஆண்டின் முதல் ஒருசில மாதங்களிலும் உலக பொருளாதாரம் அண்மிய வரலாற்றில் கண்டிராத விதத்தில் உணவுப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. குறை அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடைந்துவரும் மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகள் பலவற்றில் நடைபெற்ற மற்றும் நடைபெற்று வருகின்றதான உணவுப் பொருட்களின் விலையில் துரித அதிகரிப்பே அதற்கான காரணமாகும். மேற்படி உணவு விலையேற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்ட உணவுப் பிரச்சினை பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்தியுள்ள மற்றும் ஏற்படுத்தி வருகின்ற அழுத்தம் எவ்வளவெனில், ஒருசிலர் இதனை பொருளாதாரங்களை முடிவைக் காணமுடியாத அதள பாதாளத்தில் வீழ்த்துகின்றதும் நாசமாக்குகின்றதுமான ஒரு ஆழிப் பேரலையைப் போன்றுள்ளதெனக் கூறுகின்றனர்.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் நுகர்வோர் தமது வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமானதொரு தொகையை உணவுக்காகச் செலவிடுகின்றார்கள் என்பதோடு, கைத்தொழில் நாடுகளில் இது ஏறத்தாழ 10-20 சதவீதமாகும். ஆதலால் உணவு விலை அதிகரிப்பானது குறை அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் மீது தீவிர அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
2008 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதத்தில் செனகலில் கோதுமை விலை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடப்படுகையில் இரண்டு மடங்காக இருந்ததோடு, இறுங்கின் விலை 56 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. நைஜீரியாவில் இறுங்கு மற்றும் மிலட் விலைகள் இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு மடங்காக இருந்தது. சூடானில் கோதுமை விலை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 90 சதவீதத்தால் அதிகரித்ததோடு, சோமாலியாவின் வட பகுதியில் கோதுமை மாவு விலையின் அதிகரிப்பானது கடந்த வருட விலையைப் போன்று மூன்று மடங்காக இருந்தது. உகண்டாவில் சோளத்தின் விலை 2007 ஆம் ஆண்டு செப்தெம்பர் மாத விலைகளுக்கு ஒப்பீட்டளவில் 2008 மார்ச் மாதத்தில்
2008 மே / ஜூன் - குறிப்பேடு
 

அதிகரிப்பானது 65 சதவீதமாயிருந்தது. எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் சோளத்தின் விலை அதிகரிப்பானது கடந்த வருடத்துடன் ஒப்பிடப்படுகையில் இரண்டு மடங்காக இருந்தது. கோதுமை விலையின் அதிகரிப்பானது 42 சதவீதமாகும். மொசாம்பிக்கில் மார்ச் மாதமாகின்றபோது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடப்படுகையில் சோளத்தின் விலை அதிகரிப்பானது 43 சதவீதமாகும். பிலிப்பைனில் அரிசி விலை 2008 முதல் மூன்று மாதங்களினுள் 50 சதவீதத்தால் அதிகரித்தது. பங்களாதேஷில் அரிசி விலை அதிகரிப்பு 66 சதவீதமாக இருந்தது.
ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் 1990 ஆம் ஆண்டிலிருந்து தயாரிக்கப்படுகின்ற உலக உணவு விலைச் சுட்டெண் 2005 ஆம் ஆண்டுடன் ஒப்பிடப்படுகையில் 2006 ஆம் ஆண்டில் 9 சதவீதத்தால் அதிகரித்ததோடு, 2007 ஆம் ஆண்டில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடப்படுகையில் அதன் அதிகரிப்பு 23 சதவீதமாயிருந்தது. பாற்பொருள் உணவு விலைகள் அதிகரிப்பின் சராசரியானது ஏறத்தாழ 80 சதவீதமாக இருந்ததோடு, மரக்கறி மற்றும் விலங்கு எண்ணெய் விலைகள் 50 சதவீதத்தாலும், தானியங்களின் விலைகள் 42 சதவீதத்தாலும் அதிகரித்தது. சீனியின் விலை மாத்திரம் 32 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. (01வது அட்டவணை). 2007 ஆம் ஆண்டில் காணக்கூடியதாக இருந்த மேற்படி விலை அதிகரிப்பின் போக்கை 2008 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும் காணக்கூடியதாக இருந்ததோடு, 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உணவு விலைச் சுட்டெண் 218.4 ஆக இருந்ததோடு அதுவரை அறிக்கையிடப்பட்ட அதிகூடிய சுட்டெண்ணாக விளங்கியது.

Page 4
01 வது அ உலக உணவு வி
உணவு
விலைச்
சுட்டெணி
2000 92.7
2001 94.5
2002 94.
2003 102.3
2004 14.4
2005 7.3
2006 27.4
2007 57.4
2007 ஏப்பிரல் 4.7
(3D 44.4
ஜூன் 51.2
స్దా66) 55.8
ஆகஸ்ட் 1616
செப்தெம்பர் 71.4
ஒக்றோபர் 75.3
நவெம்பர் 80.6
திசெம்பர் 1873
2008 சனவரி 96.3
பெப்ரவரி 25.8
LDTff & 28.4
ஏப்பிரல் 28.2
இவ்வாறு உணவு விலைகளின் விரைவான அதிகரிப்பானது, போதியளவு வருமானத்தையும் உணவையும் பெறாத உலக சனத்தொகையில் 1/6 ஆக (854 மில்லியன்) உள்ள வறிய மக்களை மேலும் வறுமையின்பால் இட்டுச் செல்வதற்குக் காரணமாயமையும் என்பதோடு, இது அநேகமான நாடுகளில் அரசியல் கலவரங்கள் மற்றும் உறுதியற்ற நிலைக்கும், பல்வேறான சமூகப் பிரச்சினைகளை உருவாக்குவதற்கும் காரணமாயமைந்துள்ளது. கெமரூன், புர்கினா ஃபாசோ, எகிப்து ஆகிய நாடுகள் உட்பட அநேகமான நாடுகளில் உணவு விலை அதிகரிப்பானது அரசியல் துறையில் சூடானதொரு நிலைமையை உருவாக்கியதோடு, ஹய்ட்டியில் இந்நிலைமை பிரதமர் ஜெக்விஸ் எடுவாட் அலக்சி பதவியிலிருந்து நீங்கவேண்டிய அளவுக்கு தீவிரமடைந்தது.

ட்டவணை
லைச் சுட்டெண்
விலங்கு,
இறைச்சி பாற்பொருள் மரக்கறி
விலைச் விலைச் விலைச் விலைச் விலைச்
சுட்டெண் சுட்டெண் சுட்டெண் சுட்டெண் சுட்டெண்
100 106 87 72 05
100 7 89 72
96 86 97 9 88
105 05 O1 105 9
118 30 7 92
121 45 06 109 7
5 138 124 7 90
21 247 172 74 29
9 23 148 50 25
99 222 150 6 2
20 252 59 70 9
120 277 60 175 3.
23 287 7 8 126
124 290 95 90 25
22 297 20 202 28
126 302 203 22 130
123 295 224 226 37
126 28 238 250 54
128 278 28 273 | 73
132 276 280 285 69
136 266 284 276 6
மூலம்: ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு
உலக உணவு விலைகள் அதிகரிப்பதற்கான காரணம்
இதற்கு முன்னர் உலக உணவு விலை அதிகரிப்பு பெரும்பாலும் காலநிலையுடன் தொடர்புடையதாக இருந்ததோடு, அவ்வாறு விலைகள் அதிகரித்துச் செல்லல் எப்போதும்போல் மிகத் தற்காலிகமானதும் குறுகிய காலத்தைக் கொண்டதாகவும் இருந்தது. ஆயினும், தற்போதைய நிலை இதற்கு முற்றிலும் மாற்றமானதாக உள்ளது. உணவுப் பிரச்சினைக்கான காரணத்தைக் குறிப்பிடுகின்ற அபிவிருத்தியடைந்த நாடுகளின் ஒருசில தலைவர்கள், மிக அதிக சனத் தொகையைக் கொண்டுள்ள அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் அண்மைக் காலத்தில் உருவாகிய பொருளாதார சுபீட்சத்தைத் தொடர்ந்து வறுமையிலிருந்து மீண்டுள்ள புதிய
2008 மே / ஜூன் - குறிப்பேடு

Page 5
மத்தியதர வகுப்பினரின் நுகர்வு முறையில் உருவாகியுள்ள மாற்றங்களின் ஊடாக உணவுக்கான கேள்வி அதிகரித்துள்ளமை இவி வாறு உணவு விலைகள் அதிகரிப் பதறி குக் காரணமாயுள் ளதெனக் கூறுகின் றனர். மறுபுறம் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் இதற்குப் பதிலளிக்கும் வகையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளமையும் அபிவிருத்தியடைந்த நாடுகள் உணவுப் பயிர்களை உயிரின எரிபொருள் உற்பத்தியின் பொருட்டு பயன்படுத்துதலும் உணவு விலைகள் அதிகரிப்பதற்குக் காரணமாயுள்ளதெனக் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பாக மதிநுட்பத்துடன் கருத்துத் தெரிவிப்பவர்கள், உலக உணவு விலைகள் அதிகரிப்பதற்கான காரணமாக, ஒருசில விடயங்களைக் குறிப்பிடுகின்றனர்.
காலநிலை அனர்த்தங்கள் மற்றும் சிவில் கலவரங்கள் காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமை,
எண்ணெய் விலை அதிகரித்தல் மற்றும் மாற்று வலுசக்தி மூலமாக உயிரின எரிபொருள் பயன்பாட்டின்பால் கவனம் செலுத்தப்பட்டு உணவுப் பயிர்கள் எரிபொருள் உற்பத்தியின் பொருட்டு பயன்படுத்தப்படுதல்.
ஆசிய நாடுகளில் உருவாகிய புதிய பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் உலக சனத்தொகை அதிகரிப்பின் மூலம் உணவுக்கான கேள்வி அதிகரித்துள்ளமை.
காலநிலை அனர்த்தங்களும் சிவில் கலவரங்களால் நிரம்Uல் துறை பாதிக்கப்படுதலும்.
விலை அதிகரிப்புடன் தொடர்புடைய நிரம்பல் துறையின் காரணியாக, பெரும்பாலானவர்கள் காலநிலை அனர்த்தங்களின் காரணமாக உற்பத் தி வீழ்ச்சியடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றனர். தானிய வகைகள் ஏற்றுமதியில் முதலிடத்தை வகிக்கின்ற அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்காவில் 2006/2007 ஆம் ஆண்டுகளில் நிலவிய கடும் வரட்சிக் காலநிலை, வட ஆபிரிக்காவைப் பாதித்த வெள்ளப் பெருக்கு, சீனாவில் ஏற்பட்ட கடுமையான பனிப் படிவு வீழ்ச்சி மற்றும் ஐரோப்பாவின் கடுமையான உஷ்ணக் காலநிலை ஆகியன உணவு உற்பத்தியில் ஓரளவு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும், உணவு விலைகளின் அதிகரிப்பு உணவுப் பற்றாக்குறையினால் மாத்திரம் உருவாகியதல்ல என்பது உலக உணவு உற்பத்தி தொடர்பான தரவுகளை ஆராய்கின்றபோது தெளிவாகின்றது. (02 வது அட்டவணையைப் பார்க்கவும்.)
2008 மே / ஜூன் - குறிப்பேடு

02 வது அட்டவணை
உலக தானிய உற்பத்தியும் நுகர்வும் 1960 - 2007
(மெ.தொ.மில்லியன்)
ஆண்டு உற்பத்தி நுகர்வு
1960 824 85 1961 800 87 1962 850 838 1963 858 852 1964 906 896 1965 905 932 1966 988 957 1967 104 988 1968 052 020 1969 1063 1069 1970 1079 108 1971 77 50 1972 14 74 973 1253 23 () 1974 203 90 1975 237 22 1976 1342 273 1977 1319 320 1978 1145 380 1979 140 46 1980 429 440 1981 1482 1458 1982 1533 1475 1983 469 15() 1984 1632 1549 1985 646 553 1986 1664 60 1987 1600 1640 1988 550 62 1989 1673 1677 1990 1768 1707 1991 709 7 3 1992 1785 737 1993 - 711 739 1994 756 762 1995 1708 1739 1996 1873 1808 1997 1878 1821 1998 876 835 1999 1872 1855 2000 1843 857 2001 1874 1902 2002 820 1909 2003 1863 1935 2004 2047 1992 2005 209 2020 2006 1987 2049 2007(எதிர்வு கூறப்பட்ட) 2087 2099
மூலம்: ஐக்கிய அமெரிக்க வேளாண்மை திணைக்களம்

Page 6
இயற்கை அனர்த்தங்களைப் போன்றே ஒவ்வொரு நாடுகளினதும் உள்நாட்டுப் பிரச்சினைகளும் உற்பத்தியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உள்நாட்டு நுகர்வுத் தேவையை விஞ்சுகின்ற அளவு அரிசியில் மிகை உற்பத்தியினைச் செய்கின்ற பாகிஸ்தான், பிலிப்பைன், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சிவில் கலவரங்கள் இவ்வாறு நிரம்பல் துறை பாதிக்கப்படுவதற்குக் காரணமாயமைந்துள்ளன.
உயிரின எரிபொருள் உற்பத்தியினர் பொருட்டு உணவுப் Uயிர்களைப் பயனர்Uடுத்துதல்
1970 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட பசுமைப் புரட்சியைத் தொடர்ந்து வேளாண்மை உற்பத்தி சம்பிரதாயபூர்வமான அறிவிலிருந்தும், சேதனப் பசளையைப் பயன்படுத்துவதிலிருந்தும் நீங்கி, புதிய இயந்திர உபகரணங்கள், இரசாயன உரம் மற்றும் வேளாண்மை இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதன்பால் அதிக சார்புநிலையைக் காட்டியது. உரம் மற்றும் ஏனைய விவசாய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் ஊடாக அதிக அறுவடையைப் பெறுவதற்கு இயலுமாயிருந்த போதிலும் அதன் தவிர்க்க முடியாத பெறுபேறாக, சர்வதேச சந்தையில் உள்ளீடுகளின் விலைகள் அதிகரித்து உள்நாட்டு உற்பத்திச் செலவு அதிகரிப்பதில் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. உற்பத்தியின் ஆரம்ப கட்டத்தில் இருந்து இறுதி உற்பத்தி நுகர்வோரைச் சென்றடையும் வரையிலான அனைத்துவித செயற்பாடுகளும் பல்வேறு விதத்தில் சர்வதேச சந்தையுடன் பிணைந்துள்ளமையால் இப் பிரச்சினையிலிருந்து விடுபட முடியாதுள்ளது.
ஆதலால் உலக பெற்றோலிய சந்தையில் எப்போதும் நடைபெறுகின்ற விலை அதிகரிப்பு வேளாண்மைத் துறையின் உற்பத்தியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. 2008 மே மாதமாகின்றபோது உலக சந்தையில் எண்ணெய்ப் பீப்பாய் ஒன்றின் விலை 129 அமெரிக்க டொலராக இருந்ததோடு, பெற்றோலிய விலை அதிகரிப்பானது நேரடியாகவே போக்குவரத்துச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், இதனால் உற்பத்தியின் பல்வேறு கட்டங்களின் செலவு அதிகரிப்பதன் மூலம் உணவு விலைகள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைகின்றது. பெற்றோலிய விலை தொடர்ச்சியாக அதிகரிக்கின்ற போது அதன் பெறுபேறாக உலகம் மாற்று வலுசக்தி மூலங்களின்டால் கவனம் செலுத்தியது. இதற்கிணங்க சோளம், கரும்பு போன்ற உணவுப் பயிர்களின் மூலம் எதனோல் உற்பத்தி செய்யப்படுதலும், சோயா அவரை மற்றும் பாம் ஒயில் மூலம் உயிரின டீசல் உற்பத்தி செய்யப்படுதலும் உலகில் பிரபல்யமடைந்தது. சோளத்தின் மூலம் எதனோல் உற்பத்தி செய்வதில் ஐக்கிய அமெரிக்காவே முதலிடம் வகிக்கின்றது.
2000 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா 16 மில்லியன் மெற்றிக் தொன் சோளத்தை எதனோல் உற்பத்திக்காகப் பயன்படுத்தியதோடு, 2007 ஆம் ஆண்டாகின்றபோது மேற்படி தொகை மொத்த சோள உற்பத்தியில் 1/4 ஐ விட அதிக

பெறுமானத்தைப் பெற்று 86 மில்லியன் மெற்றிக் தொன் வரை அதிகரித்திருந்தது. (03 வது அட்டவணை)
03 வது அட்டவணை ஐக்கிய அமெரிக்காவின் சோள உற்பத்தி உயிரின எரிபொருள் உற்பத்தியின் பொருட்டு சோளத்தைப் பயன்படுத்துதலும் சோளத்தின் ஏற்றுமதியும் 1980 - 2007
(மெ.தொ.மில்லிடன்)
ஆண்டு உற்பத்தி உயிரின எரிபொருள் உற்பத்தியின் ஏற்றுமதி
பொருட்டு பயன்படுத்துதல்
1980 69 6
1981 2O6 2 5
1982 209 4 46
1983 O6 4 48
1984 95 6 47
1985 225 7 3
1986 209 7 38
1987 18 7 44
988 125 7 52
1989 19 8 6()
1990 2O2 9 44
1991 190 O 4()
1992 24 1 42
1993 6 2 34
1994 255 l4 55
1995 88 () 57
1996 235 46
1997 234 12 38
1998 248 13 5()
1999 240 4 49
2000 252 16 49
2001 24 18 48
2002 228 25 4()
2003 256 30 48
2004 300 34 46
2005 282 41 55
2006 268 55 55
2007 316 86 5()
மூலம்: ஐக்கிய அமெரிக்க வேளாண்மை திணைக்களம்
2008 மே / ஜூன் - குறிப்பேடு

Page 7
உலக சோள உற்பத்தியில் 40 சதவீதத்தினை ஐக்கிய அமெரிக்காவே உற்பத்தி செய்கின்றது. அங்கு அயோவா மாநிலத்தில் மட்டும் நடைபெறுகின்ற சோள உற்பத்தி கனடாவின் மொத்தத் தானிய உற்பத்தியை விஞ்சும் அளவுக்கு உள்ளது. அதேபோன்று உலக சோள ஏற்றுமதியில் 70 சதவீத பங்களிப்பை ஐக்கிய அமெரிக்காவே வழங்குகின்றது. வருடாந்தம் ஐக்கிய அமெரிக்காவின் சோள ஏற்றுமதியாளர்கள் 55 மில்லியன் தொன், அதாவது உலக தானிய ஏற்றுமதியில் அண்ணளவாக 1/4 க்குப் பங்களிப்புச் செய்கின்றது. ஐக்கிய அமெரிக்காவின் வருடாந்த தானிய ஏற்றுமதியானது கனடா, அவுஸ்திரேலியா, ஆர்ஜன்டீனா ஆகிய நாடுகளின் தானிய ஏற்றுமதியின் மொத்தத் தொகையை விட அதிகமாகும். உயிரின எரிபொருள் உற்பத்தியின் பொருட்டு சோளம் பயன்படுத்தப்படுவதன் மூலம் சோள ஏற்றுமதி வீழ்ச்சியடைந்ததோடு, அதன் பெறுபேறாக 2007 ஆம் ஆண்டில் உலக உணவு ஒதுக்கம் 57 நாட்கள் நுகர்வுக்கு போதியளவுக்கு வீழ்ச்சியடைந்தது. இது 34 வருடங்களுக்குப் பின்னர் அறிக்கையிடப்பட்ட மிகவும் கீழ்மட்டப் பெறுமானமாகும். (04 வது அட்டவணை)
04 வது அட்டவணை உலக தானிய நுகர்வும் ஒதுக்கமும், 1960 - 2007
(மெ.தொ.மில்லியன்)
ஆண்டு நுகர்வு ஒதுக்கம் ஒதுக்கம் போதுமாயுள்ள
நாட்கள் 1960 85 2O3 9
96. 87 182 81
1962 838 90 83
96.3 852 93 83
964 896 94 79
965 932 59 62
966 957 89 72
1967 988 23 79
1968 O20 244 87
1969 069 228 78
1970) 108 193 64
197 50 28 69
1 972 174 8O 56
1973 230 92 57
1974 90 99 6
1975 22 29 66
1976 273 28O 80
977 320 278 77
1978 380 338 88
1979 46 328 84
1980 440 3O8 78
98 458 33 83
1982 1475 389 96
1983 50 348 85
984 1549 428 O
1985 553 58 122
2008 மே / ஜூன் - குறிப்பேடு

1986 60 572 3()
1987 640 527 7 1988 l62 449 O 1989 1677 439 96 1990 1707 492 ().5 99 | 713 483 ()3 1992 1737 58 109 1993 739 482 () 1994 762 476 99 1995 1739 436 9
1996 808 487 98
997 1821 54 ()8 1998 835 58() 15 999 855 584 5 2000 1857 564 200 1902 533 ()2 2002 1909 439 84 2003 1935 354 67 2004 1992 404 74 2005 2020 390 7() 2006 2049 323 57 2007{எதிர்வு 2099 305 53
கூறப்பட்ட)
மூலம்: ஐக்கிய அமெரிக்க வேளாண்மை தினைக்களம் உலகில் புதைபடிவ எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு மாற்றீடாக உயிரின எரிபொருள் பயன்பாட்டின் பால் பிரவேசிக்கின்றபோது அது சுற்றாடல் நேயம்மிக்க இயல்பைக் கொண்டிருந்த போதிலும் இன்று இந்நிலைமை முற்றாக மாற்றமடைந்துள்ளது. உயிரின எரிபொருள் பயன்படுத்தப்படுகின்ற போது எண்ணெய் எரிவதால் நடைபெறுகின்ற சுற்றாடல் மாசடைதல் நடைபெறாதிருப்பினும் இது புதைபடிவ எண்ணெய்ப் பயன்பாட்டை விடப் பாதகமான விளைவுகளை இன்று உலகின் முன்னிலையில் தோற்றுவித்துள்ளது.
உயிரின எரிபொருள் உற்பத்தியின் பொருட்டு பயன்படுத்தப்படும் பயிர்களைப் பயிரிடுதல் பெரும்பாலான நாடுகளின் கிராமியத் துறையில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வருமானம் அதிகரிப்பதற்கும் காரணமாயமைந்துள்ளது. சோளத்தை எரிபொருளாக மாற்றுவதன் மூலம் அயோவாவில் 50,000 பேருக்குத் தொழிலும் 2 பில்லியன் டொலர் வருமானமும் உருவாகியுள்ளது. அதேபோன்று அட்பிரதேசம் கடந்த வருடத்தில் 7.5 பில்லியன் லீற்றர் எதனோலை உற்பத்தி செய்துள்ளதோடு, இது ஐக்கிய அமெரிக்காவின் மொத்த எதனோல் உற்பத்தியில் நூற்றுக்கு 30 வீதமாகும். ஆயினும் இதன் பொருட்டு பயிர்ச் செய்கைக் காணிகளாக காடுகள் பயன்படுத்தப்படுவதன் மூலம் நடைபெறுகின்ற காடழிப்பு, ஈரழிப்பு நிலங்கள் மற்றும் புல்

Page 8
நிலங்களின் அழிப்பு உலகிற்குப் பெருமளவு காபனை விடுவிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது. உலகிற்கு காபனை வெளியேற்றுவதில் காடழிப்பு 20 சதவீதம் பங்களிப்புச் செய்கின்றது.
இந்தோனேசியா உயிரின டீசல் உற்பத்தியின் பொருட்டு பாம் ஒயில் மரங்களை உற்பத்தி செய்வதற்காகக் காடுகளைத் துப் புறவாக்கியுள்ளதன் மூலம் உலகிற்குக் காபனை வெளியேற்றுகின்ற பிரதானமான நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. Wettand International நிறுவனத்தின் அறிக்கைகளின் பிரகாரம் உலகிற்குக் காபனை வெளியேற்றுவதில் 21 வது இடத்திலிருந்த இந்தோனேசியா இன்று மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது. அதேபோன்று பிறேசில் நான்காவது இடத்தை வகிக்கின்றது.
பிரேசில் கரும்பின் மூலம் எதனோல் உற்பத்தி செய்வதோடு ஐக்கிய அமெரிக்காவுடன் ஒப்புநோக்குகின்றபோது உலக உயிரின எதனோல் உற்பத்தியில் 80 சதவீதத்தை விட அதிகளவு பங்களிப்புச் செய்கின்றது. 2007 ஆம் ஆண்டில் மேற்படி றுெமானம் 88 சதவீதமாயிருந்தது. பிரேசில் வருடாந்தம் 19 பில்லியன் லீற்றர் உயிரின எதனோலை உற்பத்தி செய்வதோடு அந்நாட்டின் போக்குவரத்து எரிபொருள் தேவைப்பாட்டில் 45 சதவீதத்தினை இதன் மூலம் நிறைவு செய்கின்றது. இதைத் தவிர பிரேசில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, இந்தியாவுக்கு சீனாவுக்கு மற்றும் யப்பானுக்கு உயிரின எரிபொருளை ஏற்றுமதியும் செய்கின்றது. அதேபோன்று பிரேசில் சோயா அவரை மூலம் உயிரின டீசல் உற்பத்தியையும் மேற்கொள்கின்றது. இதன் காரணமாக அமேசன் காடுகளைத் துப்புறவு செய்தல் துரிதமாக நடைபெறுகின்றது. 2007 ஆம் ஆண்டின் இறுதி 06 மாதத்தினுள் பிரேசிலில் 300,000 ஹெக்றயார் மழைக் காடுகள் அழிக்கப்பட்டிருந்ததன் மூலம் இந்நிலைமையின் பாரதூரமான தன்மை தெளிவாகின்றது.
இதற்கிணங்க தற்போது உயிரின எரிபொருள் பயன்பாடு உலக எண்ணெய்ப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைவதை விட வேறு பல பிரச்சினைகளை உருவாக்குவதாக உள்ளது. இது 800 மில்லியன்களாக உள்ள வாகன உரிமையாளர்கள் மற்றும் 850 மில்லியன்களான பட்டினியாலும் போசாக்கின்மையாலும் வாடுகின்ற உலகின் வறிய மக்களிடையே ஒரு மோதலாக LDTSugit 615. SUV (Sports Utility Vehicle) 6Trf GUTC56 it தொட்டியொன்றை நிரப்புவதற்குத் தேவையான எதனோல் உற்பத்தியின் பொருட்டு அவசியமாகின்ற தானியங்களின் அளவு தனி ஒருவரின் வருடாந்த தானிய நுகர்வுத் தேவைக்குச் சமனாகும். இதனால் உலகின் பொருளாதார ஏணிப் படிகளின் கீழ் நிலையிலுள்ளவர்களின் நுகர்வானது வாழ்வதற்குத் தேவையான அளவை விடக் குறைவாயிருத்தல் இதிலுள்ள ஆபத்தாக உள்ளது.

சோளத்தை அடிப்படையாகக் கொண்ட உணவை பிரதானமான உணவாக உட்கொள்கின்ற நாடுகளே முக்கியமாக உணவு விலை அதிகரிப்பினால் பிரதானமாக பாதிப்புக்கு உள்ளாகின. இவ்வாறான 20 க்கும் அதிகமான நாடுகள் உள்ளதோடு, அதில் மெக்சிகோவில் சோளத்தினால் தயாரிக்கப்படுகின்ற டோடிலாஸ் (Tortillas) எனும் ரொட்டி வகையின் விலை 60 சதவீதத்தினால் அதிகரித்ததன் மூலம் கோபமடைந்த மெக்சிக்கோ நாட்டவர்கள் 75,000 க்கும் அதிகமானோர் விலைகளைக் கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து வீதியிலிறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் அனுபவிக்கின்ற அழுத்தம் அரசியல் நிலைப்பாடின்மைக்கும் காரணமாயமைந்துள்ளதோடன்றி சமூக வாழ்க்கை பல்வேறு விதத்திலும் பாதிக்கப்படுவதற்கும் ஏதுவாயமைந்துள்ளது. தானியங்களை இறக்குமதி செய்கின்ற இந்தோனேசியா, எகிப்து, அல்ஜீரியா, நைஜீரியா மற்றும் மெக்சிகோவில் உணவு விலைகள் அதிகரித்துள்ளமை உணவு கொள்ளையடிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. அதிகரிக்கின்ற வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற விதத்தில் வருமானத்தைப் பெறுவதற்காக தொழில்களுக்குச் செல்லவேண்டி நேரிடுவதால் ஒருசில நாடுகளில் பாடசாலை மாணவர்களின் கல்வி கூட சீர்குலைந்துள்ளது.
உலக சனத்தொகையில் ஏறத்தாழ 40 சதவீதமான சனத்தொகையைக் கொண்டுள்ள சீனா, இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதானமான உணவு சோளத்தை அடிப்படையாகக் கொண்டதாயில்லாத போதிலும் சோளத்தின் விலை அதிகரிப்பு மறைமுகமாக இந்நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அவர்கள் நுகர்வு செய்கின்ற பால், முட்டை, சீஸ் ஆகிய அனேகமான உணவு வகைகள் மறைமுகமாக சோள உற்பத்தியுடன் தொடர்புபட்டதாயிருப்பதனாலாகும். தானியங்கள் மற்றும் சோயா அவரை விலைகள் அதிகரித்ததன் தாக்கத்தினால் கடந்த வருடத்துடன் ஒப்பிடப்படுகையில் 2008 சனவாரி மாதத்தில் பன்றி இறைச்சியின் விலை 20 சதவீதத்தாலும் முட்டை விலை 10 சதவீதத்தினாலும் அதிகரித்தது.
ஆசிய (bstG5656fa' உருவாகிய பொருளாதார மலர்ச்சியும் சனத்தொகை அதிகரிப்Uனால் உணவுக்கான கேள்வி அதிகரித்தலும்.
ஆசிய பிராந்தியத்தின் பாரிய நாடுகளான சீனாவிலும் இந்தியாவிலும் உருவாகிய புதிய பொருளாதார மலர்ச்சியைத் தொடர்ந்து பல மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர். 1990 இல் இந்தியாவின் மத்திய வகுப்பு சனத்தொகையின் வளர்ச்சி
2008 மே / ஜூன் - குறிப்பேடு

Page 9
மொத்த இந்திய சனத்தொகையின் நூற்றுவிதமாக 9.7 சதவீதமாக இருந்தது. சீனாவில் இந்த நூற்றுவீதம் 8.6 சதவீதமாகும். 2008 இல் முறையே மேற்படி வளர்ச்சி 30 சதவீதமாகவும் 70 சதவீதமாகவும் உள்ளது. உருவாகியுள்ள புதிய மத்திய வகுப்பு சனத்தொகையின் நுகர்வு முறையும் வருமான வளர்ச்சியைத் தொடர்ந்து மாற்றமடைந்தது. 1985 இல் சீனாவின் தலா வருடாந்த இறைச்சி நுகர்வு 20 கி.கிறாமாக இருந்ததோடு, 2007 ஆம் ஆண்டாகின்றபோது இது 50 கி.கிறாம் வரை அதிகரித்திருந்தது. மேற்படி நுகர்வு முறையின் மாற்றத்தின் மூலம் நுகர்வுக்கான உணவின் கேள்வி அதிகரிப்பிலும் மறுபுறம் கால்நடை உற்பத்திக்குத் தேவையான தானியக் கேள்வி அதிகரிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் ஒரு கிலோ கிறாம் இறைச்சியை உற்பத்தி செய்ய சராசரியாக 8 கிலோ கிறாம் தானியம் தேவைப்படுவதனாலாகும். ஒரு கிலோ கிறாம் கோழி இறைச்சியை உற்பத்தி செய்வதற்கு 2 கிலோ கிறாம் சோளம் மற்றும் சோயா அவரை தேவைப்படுவதோடு, ஒரு கிலோ கிறாம் பன்றி இறைச்சியை உற்பத்தி செய்ய 5-7 கிலோ கிறாம் விலங்கு உணவும் ஒரு கிலோ மாட்டிறைச்சி உற்பத்திக்கு 8 கிலோ கிறாம் உணவும் தேவைப்படுகின்றது. அதேபோன்று இறைச்சிக்கான கேள்வியின் ஊடாக தானியங்களின் விலை அதிகரிப்பதைப் போன்றே சீஸ் மற்றும் வெண்ணெய்க்கான கேள்வி அதிகரிப்பு பால் உற்பத்தி அதிகரிப்பதற்குக் காரணமாய் அமைவதோடு அதுகூட மறுபுறம் தானிய விலைகள் அதிகரிப்பதற்கு ஏதுவாயமைகின்றது.
இவ்வாறு நுகர்வு முறை மாற்றமடைவதன் மூலம் கேள்வி அதிகரிப்பதும் உலக சனத்தொகை அதிகரிப்புக்குப் போதிய விதத்தில் உற்பத்தி அதிகரிக்காமையும் உணவு விலைகள் அதிகரிப்பதற்கு ஏதுவாயமைகிறது.
ஆயினும் ஒட்டுமொத்தமாக நோக்குகின்ற விடத்து உலகில் வேளாண்மை உற்பத்தியில் பெரும் பின்னடைவைக் காண்பதற்கில்லை. உலக வேளாண்மை உற்பத்தி சென்ற வருடம் 2 சதவீதத்தால் அதிகரித்தது. ஆயினும் வேளாண்மைப் பயிர்களுக்கு 2005 ஆம் ஆண்டுக்கு முன்னிருந்த குறைந்த விலைகளின் காரணமாக பெரும்பாலான நாடுகளில் வேளாண்மைக்குப் பயன்படுத்த முடியுமாயுள்ள காணிகள் பயிர்ச்செய்கைகளிலிருந்து நீங்குகின்ற ஒரு போக்கைக் காணக்கூடியதாக இருந்தது. இன்றேல் அக்காணிகள் வேளாண்மையல்லாத வேறு விடயங்களுக்காகப்
பயன்படுத்தப்பட்டன.
உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கைகளின் பிரகாரம் சோவியற் சங்கம் வீழ்ச்சியடைந்ததன்
2008 மே / ஜூன் - குறிப்பேடு

பின்னர் முன்னர் வேளாண்மையின் பொருட்டு பயன்படுத்தப்பட்ட 24 மில்லியன் ஹெக்றயார் காணிகள் தற்போது வேளாண்மை நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை.
கடந்த காலத்தின் நுகர்வு முறையின் மாற்றங்களின் ஊடாக உணவுக்கான கேள்வி துரிதமாக அதிகரித்த சீனா மற்றும் இந்தியாவில் சனத்தொகையும் வருமானமும் அதிகரித்த போதிலும் அதற்கு ஏற்ப உற்பத்தி அதிகரிக்கவில்லை. எவ்வாறாயினும் ஏனைய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளைப் போலன்றி சீனாவும் இந்தியாவும் அரிசி மற்றும் கோதுமையைப் பொறுத்தவரை தன்னிறைவு மட்டத்தில் உள்ளன. ஆயினும் இறைச்சி நுகர்வுக்கான சீனாவின் போக்கினை நோக்குகின்றவிடத்து எதிர்காலத்தில் சீனா கால்நடைகளுக்கான உணவின் பொருட்டு தானியங்களை இறக்குமதி செய்கின்ற நிலைமைக்கு உள்ளாவதற்கு வாய்ப்புள்ளது.
உலகில் மிகப் பெருமளவு வறியோர் சனத்தொகை இந்தியாவிலேயே வசிக்கின்றனர். ஆயினும் மத்திய வகுப்புச் சனத்தொகையின் நுகர்வு முறை மாற்றமடைந்துள்ளது. மறுபுறம் வருடாந்த சனத்தொகை வளர்ச்சி வீதம் 2 சதவீதமாக இருக்கின்றபோது இந்தியாவின் வேளாண்மை உற்பத்திகள் ஒரு சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. ஆயினும் அதிகரித்துவருகின்ற கேள்வியை உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நிறைவேற்றிக்கொள்கின்ற ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. ஒரு ஏக்கர் காணியிலிருந்து அவர்கள் பெறுகின்ற விளைச்சல் சீனா ஒரு ஏக்கர் காணியிலிருந்து பெறும் விளைச்சலில் பாதிக்குச் சமனாகும். 1970 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வழியமைத்த இந்தியாவின் விவசாய விஞ்ஞானி ஒருவரான எம்.எஸ் ஸ்வாமிநாதனின் கருத்துப்படி இன்று இந்தியாவின் வேளாண்மை உற்பத்தி அதன் இயலளவில் நூற்றுக்கு 30-40 வீதமாக உள்ளது. சீனாவின் இந்த இயலளவு நூற்றுக்கு 95 வீதம் ஆகும். ஆதலால் உணவுக்கான அதிகரித்துவரும் கேள்வியை உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நிறைவேற்றிக்கொள்வதற்கு சிலநேரம் இந்தியாவால் முடியுமாயிருக்கும்.
சீனாவைப் பொறுத்தவரை, அதன் வேளாண்மை நிலங்கள் கைத்தொழில்மயமாக்கலுக்கும் குடியேற்றங்களுக்கும் இரையாதல் ஒரு சவாலாக உள்ளது. அங்கு உள்நாட்டு உணவுற்பத்தியின் பொருட்டு குறைந்தபட்சம் 463,000 சதுர மைல்கள் தேவைப்படுகின்றன. கடந்த வருடம் அவர்களது பயிர் செய்யக்கூடிய காணிகளின் அளவு 470,000 சதுர மைல்கள் வரை வீழ்ச்சியடைந்தது. ஆதலால் இக்காணியின் அளவை சிறப்பான மட்டத்தில் வைத்திருத்தல் ஒரு சவாலாக உள்ளது.

Page 10
இதைத் தவிர 2008 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட காலநிலை அனர்த்தங்களும் மேற்படி சவாலை ଗତujöyଣ୍ଡି கொள்வதற்குத் தடையாக அமைந்துள்ளது. சனவாரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தென் சீனாவில் பல பிரதேசங்கள் கடும் குளிர், பனி மழை மற்றும் பனிப் படிவு வீழ்ச்சி ஆகியவற்றிற்கு உள்ளாகின. இது அந்நாட்டின் 100 மில்லியன் சனத்தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அநேகமான வேளாண்மைப் பயிர்கள் அழிவுற்றதோடு, சீன வேளாண்மை அமைச்சின் கூற்றுப் பிரகாரம் உணவு சமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற எண்ணெய் உற்பத்தியின் பொருட்டு பயிரிடப்படும் Rapeseed எனும் பயிர்ச் செய்கையில் 410,000 ஹெக்றயார் முற்றாக அழிவுற்றுள்ளது. பொருளாதார ரீதியில் நேரடியாக ஏற்கவேண்டி வந்த நட்டம் 100 பில்லியன் யுவான் (13.8 பில் லியன் அமெரிக்க டொலர்) என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் எல்லையை அண்மியதாகவுள்ள வியட்னாம் பிரதேசமும் கடும் குளிர் காலநிலையை எதிர்கொண்டதோடு, அங்கு பயிர்ச் செய்கைக் காணிகள் 150,000 ஹெக்றயார் அழிவுற்றன. அதேபோன்று 90,000 பண்ணைக் கால்நடைகள் இறந்துள்ளன. எவ்வாறாயினும் உள்நாட்டு நுகர்வின் பொருட்டு வேளாண்மை உற்பத்திகளை அதிகரிப்பதற்கான கடும் தேவையை சீனாவும் இந்தியாவும் அடையாளம் கண்டுள்ளதென்பதை, இவ்விரண்டு நாடுகளிலும் இவ்வாண்டு வேளாண்மைத் துறையின் பொருடடு வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையின் மூலம் தெளிவாகின்றது. இதற்கிணங்க சீனாவின் வரவு-செலவுத் திட்டத்தில் 20 சதவீதத்தாலும், இந்தியாவில் 30 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறையின் பொருட்டான ஆசிய பிராந்தியத்தின் மிகப் பெரும் நாடுகளின் மேற்படி முதலீட்டை சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜோசிம் வொன் பிரவுன் (Joachim Von Braun) மிக சரியானதும் சாதகமானதுமான ஒரு நடைமுறையாகு மெனக் கூறுகிறார்.
இதைத் தவிர 70 ஆம் தசாப்தத்தில் ஆரம்பிக்கப்பட்ட பசுமைப் புரட்சி மற்றும் நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தகமும் உலக பொருளாதாரத்தை உணவுப் பிரச்சினையின்பால் இட்டுச் செல்வதற்குக் காரணமாக அமைந்துள்ளது. மேற்படி இரண்டு போக்குகளிலும் உற்பத்தியின் அனைத்துக் கட்டங்கள் மற்றும் விநியோகச் செயற்பாட்டின் போது வலுசக்தி, இரசாயன உள்ளிடுகள் மற்றும் அதிகளவிலான போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை
10

ஏற்க நேரிடுதல் இதற்கான காரணமாகும். பசுமைப் புரட்சி மற்றும் சுதந்திர வர்த்தகத்தின் மூலம் உள்நாட்டு ரீதியில் தன்னிறைவுடனான பொருளாதாரம் பரஸ்பர ரீதியில் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் பொருளாதாரமாக மாறியதோடு, ஒருசில நாடுகள் இன்று அவர்களது உணவுத் தேவையில் நூற்றுக்கு 80-90 சதவீதத்தினை இறக்குமதி மூலம் நிறைவு செய்துகொள்கின்றன. இதனால் சர்வதேச சந்தையின் விலை ஏற்றத் தாழ்வுகளிலிருந்து விலகியிருப்பதற்கு பெரும்பாலான நாடுகளால் முடியாதுள்ளது.
உணவு விலை அதிகரிப்புக்கு முகம்கொடுக்கும் பொருட்டு உலகின் பெரும்பாலான நாடுகள் பல்வேறு விதத்திலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான், வியட்னாம் எகிப்து, பிரேசில், சர்பியா, யுக்ரேன் மற்றும் சாம்பியா ஆகிய நாடுகள் உள்நாட்டு நுகர்வுத் தேவையின் பொருட்டு உள்நாட்டு உற்பத்திகளை வைத்திருப்பதற்காக ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆயினும் மேற்படி நடவடிக்கை சர்வதேச சந்தையில் மேலும் உணவு விலை அதிகரிப்பதற்குக் கர்ரணமாக அமைந்துள்ளது. மலேசியா உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதோடு, இந்தோனேசியா, மொங்கோலியா, மொரொக்கோ மற்றும் துர்க்கி ஆகிய நாடுகள் இறக்குமதித் தீர்வை வரிகளை நீக்குதல் மற்றும் குறைத்தலை மேற்கொண்டுள்ளன. சீனா, இந்தியா, ரஷ்யா, ஆர்ஜன்றீனா, மொரொக்கோ, எகிப்து, மெக்சிகோ, ஜோர்தான், சிம்பாப்வே, பெனின் மற்றும் செனகால் ஆகியன நேரடி சலுகைகளை வழங்குதல் மற்றும் விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
எவ்வாறாயினும் உணவுக்கான கேள்வி அதிகரிப்பதன் மூலம் உருவாகின்ற தாக்கம் மிகவும் கடுமையாகுமாதலால், இது வேளாண்மைத் துறைக்குப் புதிய சவால்களை உருவாக்கிய போதிலும் இதனை வேளாண்மைத் துறையின் எழுச்சிக்கான வாய்ப்பாகவும் ஆக்கிக்கொள்ளலாம். விலைகள் அதிகரிப்பதன் மூலம் உருவாகின்ற அழுத்தம் குறுகிய காலத்தினுள் தீர்க்கப்படாது என்பதோடு, பகுப்பாய்வாளர்களது கூற்றுப்படி உணவு விலைகள் குறைவடைவதற்கு குறைந்தபட்சம் ஒரு தசாப்த காலமாவது எடுக்கலாம். அதிகளவிலான வேளாண்மை உற்பத்திகளுக்கான விலைகள் விவசாயிகளது வருமானத்தை அதிகரிக்கச் செய்வதற்கும், தொடர்ந்தும் வேளாண்மைத் துறையில் முதலீடுகளுக்கான ஊக்கம் அதிகரிப்பதற்கும் காரணமாக 960)LDuj6)Tib.
2008 மே / ஜூன் - குறிப்பேடு

Page 11
அநேகமான நாடுகளில் மக்களது உணவு வேளை தயார் செய்யப்படுகின்ற போது கூடுதலான முக்கியத்துவம் தானிய உணவுகளுக்குக் கிடைக்கின்றது. ஆயினும் தற்போது உருவாகியுள்ள உணவுப் பிரச்சினையின் முன்னிலையில் குறிப்பாக தானிய உணவுகளின் விலைகள் வானளவு உயர்ந்து வருகின்றன. உதாரணமாக அண்மையில் அதிகரித்த கோதுமை மாவு, அரிசி மற்றும் சோள விலைகளைக் குறிப்பிடலாம்.
இலங்கையில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்ற உணவுகளில் அரிசி மற்றும் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் பல்வேறு உணவு வகைகள் உள்ளடங்குகின்றன. பிரதானமான உணவு வேளையின் பொருட்டு இவை முக்கியமாக உள்ளடங்கியிருப்பதன் காரணமாக தேவையானளவு மாச்சத்தை உள்ளிர்ப்பதற்கான வாய்ப்பு இவற்றை நுகர்வோருக்குக் கிடைக்கின்றது. சராசரி நாளாந்த கலரித் தேவையில் அண்ணளவாக 75 சதவீதம் இதன் மூலம் நிறைவு செய்யப்படுகின்றது.
எவ்வாறாயினும், மேற்படி தேவையான குறைந்தபட்ச உணவையாவது பெற்றுக்கொள்ள முடியாதுள்ள பலர் இன்று
2008 மே / ஜூன் - குறிப்பேடு
 

வறுமைத் தீ பரவுவதை தடுப்பதற்கு.
விசாகா களுபோவில மனித வளத் திணைக்களம்
சமூகத்தில் உள்ளனர். எமது நாட்டில் தனியொருவர் ஒரு நாளைக்கு அண்ணளவாக 2118 கலரியினைப் பெற்றுக்கொள்கிறார் என்பதோடு, இது சராசரியாக வளர்ந்த ஒருவரின் கலரித் தேவையான 2550 கலரிகளை விடக் குறைந்ததொரு பெறுமானமாகும். வறுமையில் வாடுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை 152 சதவீதமாயுள்ளதோடு, அத்தகைய மக்களிடையே போசாக்குப் பற்றாக்குறை மிகத் தீவிரமாக நிலவுகின்றதென்பது இரகசியமல்ல.
2007 ஆம் ஆண்டினுள் சீனியைத் தவிர அனைத்து பிரதானமான உணவு வகைகளினதும் விலைகள் அதிகரித்தன என்பதை நாம் அறிவோம். இதனால் அதிகரிக்கின்ற உணவு விலைகளின் முன்னே வறுமையில் வாடுகின்ற மக்கள் மென்மேலும் அதள பாதாளத்தில் வீழ்கின்றார்களென்பது தெளிவாயுள்ளது. இது போசாக்கின்மையை மென்மேலும் அதிகரிக்கச் செய்வதிலும், குறிப்பாக சிறுவர்களது போசாக்கு மட்டத்தை வீழ்ச்சியடையச் செய்வதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகும். போசாக்கின்மை அநேகமான சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிகோலும் என்பதோடு, இது அறிவு மட்டத்தை வீழ்ச்சியடையச் செய்வதிலும் நேரடியான காரணியாக உள்ளது. மேலும் மெலிந்து தளர்ந்துள்ள உடம்பைப் பராமரிப்பதற்கு ஏற்கவேண்டி நேரிடுகின்ற சுகாதாரச் செலவு அதிகரிப்பதன் மூலம் நிதி ரீதியில் நேரடியாகவும், பயனுள்ள மனித வளம் பலவீனமடைந்து மெலிந்து செல்வதன் மூலம் உருவாகின்ற பொருளாதார நட்டத்தின் காரணமாக மறைமுகமாகவும் ஒரு நாட்டிற்கு ஏற்படுகின்ற இழப்பு சிறியதல்ல.
தற்போது அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் உணவு விலைகள் பெருமளவு அதிகரித்துச் செல்லுதல் அந்நாடுகளில் பணவீக்கத்தை உருவாக்குகின்ற பிரதானமான காரணியாக மாறியுள்ளது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் மொத்த நுகர்வுச் செலவில் அதிகளவு உணவுக்காகச் செலவிடப்படுகின்றதென்பது இரகசியமல்ல. இலங்கையில் மாத்திரம் மேற்படி பெறுமானம் நுகர்வுக் கூடையில் 47 சதவீத நிறையைக் கொண்டுள்ளது. மேற்படி பெறுமானம் முறையே எத்தியோப்பியா, சீனா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் 57, 31 மற்றும் 10 சதவீத பெறுமானத்தைக் கொண்டுள்ளது. மேற்படி நிலைமை உணவுப் பணவீக்கம் (Foodflation) என்ற விசேட
11

Page 12
எண்ணக்கருவை உருவாக்குமளவுக்கு கடுமையானதாக மாறியுள்ளது.
ஐக்கிய நாடுகளது உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் பிரகாரம் 2007 இல் மாத்திரம் உணவு விலைச் சுட்டெண் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது முன்னைய ஆண்டின் பெறுமதியை விட 400 சதவீதத்துக்கும் அதிகமாயிருப்பதாலேயே இதன் பாரதூரமான தன்மை புரிகின்றது. இவ்விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லுதல் மிகவும் துர்ப்பாக்கியமான நிலையாக உள்ளது. இதை மேலும் துறைவாரியாக ஆராய்கின்ற போது கோதுமை விலை 2000 ஆம் ஆண்டிலிருந்து 300 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்பதையும், சோளத்தின் விலை 200 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்பதையும் காணக்கூடியதாயுள்ளது. இவை அனைத்தையும் தாண்டுகின்ற விதத்தில் அரிசியின் விலை நினைத்திராத விதத்தில் அதிகரித்தமையை கடந்த காலத்தில் அவதானிக்கக் கூடியதாயிருந்தது. அது மட்டுமன்றி ஏனைய பயிர் வகைகளினது விலைகளும், பால், இறைச்சி ஆகிய விலங்கு உற்பத்திகளின் விலைகளும் பெருமளவு அதிகரித்துள்ளன.
உணவு விலை அதிகரிப்பதற்கு ஏதுவாயமைந்த பல காரணிகள் இருந்த போதிலும், அதி வேகமாக அதிகரித்துச் செல்கின்ற எரிபொருள் விலை இதில் பிரதானமானதாகும். காலநிலை மாற்றங்களின் தாக்கமும் பாரதூரமானதாக உள்ளது. எதிர்பாரா விதமாக உருவாகிய வறட்சி, வெள்ளப் பெருக்கு, சூறாவளி ஆகியவற்றுக்கு விளை நிலங்களும், அறுவடைகளும் பலியாகி வருகின்றன. எவ்வாறாயினும், எரிபொருள் விலை அதிகரித்தலினதும் உணவு விலை அதிகரித்தலினதும் நேரடித் தொடர்பை கடந்த காலத்தினுள் அவதானிக்கக் கூடியதாயிருந்தது. பெற்றோலிய விலைகள் அதிகரிப்பதைத் தொடர்ந்து பல்வேறு மாற்று வலுசக்தி மூலங்கள் தொடர்பில் பெரும்பாலான நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. உயிரின எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான மாற்று வழிமுறை இதில் பிரதானமானதும் பரபரப்பூட்டுவதுமான விடயமாக உள்ளது.
01 வது வரைபடம் உணவு விலைகளின் அதிகரிப்பு (2000 - 2008)
A ض محيي . . محمي 号 // , is so 8 , 9ޙ 墨 ء محہ ‘安 貂 / g 1 w * . ------- Δ. g . . ... -
2. リーエ
2006 (சனவரி - திசெம்பர் 2007 (சனவரி - திசெம்பர்)
一量一 {39b سه Aس அரிசி ܟܚܗܝ- கோதுமை
12

உயிரின எரிபொருள்களில் உயிரின டீசம் (Bio Dease) மற்றும் எதனோல் பிரதானமானதாகும். உயிரின டீசல் என்பது எமக்குப் பழக்கப்பட்ட கனிய டீசலுக்குப் பதிலிடாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு எரிபொருள் வகையாகும். இவற்றை உற்பத்தி செய்வதற்கு மரக்கறி எண்ணெய்யும், விலங்கு எண்ணெய்யும் பயன்படுத்தப்படுகின்றன. எதனோல் என்பது வாகனங்களை ஒட்டிச் செல்வதற்கு கனியப் பெற்றோலுக்குப் பதிலாகப் பயன்படுத்துகின்ற ஒரு எரிபொருள் வகையாகும். இது அனேகமாக சீனியைக் காய்ச்சுவதன் மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றது. எதனோலை உற்பத்தி செய்வதற்கான சீனி அதற்கெனவே உற்பத்தி செய்யப்படுகின்ற சோளம், கோதுமை போன்ற தானிய வகைகள் மற்றும் வைக்கோல், பொப்லர் மற்றும் விலோ மரங்களின் கூழ் ஆகியவற்றை பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்படுகின்றது. உயிரின டீசலை உற்பத்தி செய்வதற்கு பாம் எண்ணெய், சோயா எண்ணெய் உட்பட ஏனைய மரக்கறி எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கிணங்க மேற்படி எரிபொருள் வகைகளை உற்பத்தி செய்யும் பொருட்டு உணவுக்காகப் பெற முடியுமாயுள்ள அறுவடைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகின்றது. எரிபொருளுக்கு அதிக கேள்வி நிலவுகின்ற இக்காலகட்டத்தில் அதிகமாகப் பணத்தை ஈட்டுவதில் விவசாயிகள் ஈடுபடுவது அதிசயமானதல்ல. உணவுக்காகப் பயன்படுத்த முடியுமாயுள்ள பயிர்கள் எரிபொருளை உற்பத்தி செயப் வதற்குப் பயன்படுத்தப்படுதலே அதன் பெறுபேறாக உள்ளது. மேற்படி எரிபொருளை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்ற பயிர்கள் அதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ள பயிர்ச் செய்கைகளாக உற்பத்தி செய்யப்படுவதென்பது உண்மையாயினும், உணவுப் பயிர்களை பயிரிடுவதற்காகப் பயன்படுத்த முடியுமாயுள்ள வளங்களை, மேற்படி பயிர்ச் செய்கையின் பொருட்டு பயன்படுத்துதலே பிரச்சினையாக உள்ளது.
பெருமளவு உணவு உற்பத்திக்குப் பங்களிப்புச் செய்த நாடுகள் அதிக வருமானத்தை எதிர்பார்த்து விவசாயிகளை உயிரின எரிபொருளை உற்பத்தி செய்வதற்குத் தேவையான பயிர்களைப் பயிரிடுவதற்கு ஊக்குவித்துள்ளன. இது இன்னமுமே நடைபெறுகின்றது. ஐக்கிய அமெரிக்கா அந்நாட்டு விவசாயிகளுக்கு உயிரின எரிபொருளின் பொருட்டு சோளம் பயிரிடுவதற்கு சலுகைகளை வழங்குகின்றது. இதன் பெறுபேறாக உணவுக்காகப் பெற முடியுமாயிருந்த சோளம், கோதுமை, சோயா ஆகியவற்றின் அளவு குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது. 2008 ஆம் ஆண்டின் கடந்த சில மாதங்களினுள் மாத்திரம் மொத்த சோள உற்பத்தியில் 30 சதவீதம் எதனோல் உற்பத்தியின் பொருட்டு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு நேரடியாகவே உணவு விலைகள் அதிகரிப்பதற்கு இவ் விதத்திலேயே காரணமயமைந்துள்ளது. இந்த விடயம் மறைமுகமாகவும் உணவு விலைகள் அதிகரிப்பதற்குக் காரணமாயமைந்துள்ளது. எவ்வாறெனில், பாரிய அளவில் உணவு உற்பத்தி செய்கின்ற நாடுகள் மூலதன நுட்ப முறையில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றன. அந்நாடுகளில் பயிர்ச் செய்கைக்கு எரிபொருள் ஒரு அதியாவசியமானதொரு பொருளாகும். உணவு உற்பத்தியின் செலவினம் அதிகரிப்பதை இதனால் தவிர்க்க முடியாதுள்ளது.
2008 மே / ஜூன் - குறிப்பேடு

Page 13
மேலும், போக்குவரத்து, கிருமி நாசினிகள், உரம் ஆகியவற்றுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளமை மேலும் வேளாண்மை உற்பத்திகளின் செலவினம் அதிகரிப்பதற்குக் காரணமாயமைந்துள்ளது.
உணவு விலைகள் அதிகரித்துச் செல்லுதல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற நாடுகளுக்கு வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பமாக உள்ளது. ஆயினும், நடைமுறை ரீதியல் நோக்குகின்றபோது உண்மை இதற்கு மாற்றமாக உள்ளது. இதற்கு முன்னர் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டிருந்த நாடுகள் கூட தற்போது உணவுப் பொருள் ஏற்றுமதியைத் தடை செய்துள்ளன. இன்றேல் மட்டுப்படுத்தியுள்ளன. இந்த விடயம் இறக்குமதி செய்யப்படுகின்ற உணவில் தங்கி வாழுகின்ற நாடுகளுக்குப் பெரும் பாதிப்பாக உள்ளது. மேலும், இந்நிலைமையின் கீழ் முக்கியமாக மிகவும் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகளவினை உணவுக்காகச் செலவிட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொருள் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு தாங்கக்கூடியதொன்றல்ல. அவர்களுக்கு தமது நுகர்வைக் குறிப்பிடத்தக்களவில் குறைத்துக்கொள்ள நேரிடுமென்பதில் சந்தேகம் கிடையாது. இதன் மூலம் உருவாகக் கூடிய போசாக்குப் பற்றாக்குறையின் காரணமாக சுகாதாரப் பிரச்சினைகள் எழுவதைத் தவிர்க்க முடியாது.
இவ்வாறான நாடுகளின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை சீர்குலைப்பதற்கு இந்நிலைமைகள் காரணமாக அமையுமென்பதில் சந்தேகம் இல்லை. உணவு ஏற்றுமதியை மட்டுப்படுத்திய நாடுகளில் ஆர்ஜண்டீனா, பொலீவியா, காம்போஜ், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, கசகஸ்தான், மெக்சிகோ, ரஷ்யா, தாய்லாந்து, யுக்றேன், வெனிசியுலா மற்றும் வியட்நாம் ஆகியன முன்னிலையிலுள்ளன. இந்நாடுகள் இத்துடன் நின்றுவிடாது உணவுப் பொருள் இறக்குமதிக்கு விதித்திருந்த மட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
இலங்கை அரசாங் கமும் தற்போது அரிசி ஏற்றுமதியை நிறுத்தியுள்ள தோடு, அநேகமான உணவுப் பொருட்கள் இறக்கு மதிக்கான வசதிகளைச் செய்துள்ளது. இதற்கு மேலதிகமாக நாட்டினுள் உணவுப் பொருட்களை வீட்டுத்தோட்ட மட்டத்தில் பயிரிடுவதற்கு ஊக்கமளித்து உணவுப் பிரச்சினைக்கு | ד- t முகம் கொடுப்பதற்குத் 1950 1975 2C தயாராயுள்ளது. மேற்படி நடவடிக்கையின் ஊடாக நாட்டினுள் உணவுற்பத்தியை சிறிதளவேனும் அதிகரிக்க முடியுமாயிருப்பின், தற்போதுள்ள உணவுப் பிரச்சினையின் முன்னிலையில் இது சிறிதளவிலாவது நிவாரணமாயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கு மேலதிகமாக ஒருசில
உலக சனத்தொகை
2008 மே / ஜூன் - குறிப்பேடு
 

உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அமுலாக்குவதிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலைகளின் மீது கட்டுப்பாட்டு விலையை விதிப்பதன் மூலம் அல்லது இறக்குமதி ஏற்றுமதிக் கொள்கைகளை மாற்றுவதன் மூலம் உணவுப் பிரச்சினைக்கு குறுகியகாலத் தீர்வுகளை வழங்க முடியுமாயுள்ளது எவ்வாறாயினும் விலைக் கட்டுப்பாட்டின் மூலம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கு போதியளவு மேலதிக உணவுப் பொருள் நாட்டினுள் கையிருப்பில் இருத்தல் வேண்டும். இன்றேல் போதியளவு உணவுப் பொருட்கள் சந்தைக்குப் பெருக்கெடுப்பதற்கு நடவடிக்கையெடுத்தல் வேண்டும். இவ்வாறானதொரு செயற்பாடு இல்லாதவிடத்து செயற்கையான உணவுப் பற்றாக்குறை உருவாகக்கூடிய ஆபத்து மேலெழக்கூடும். கடந்த காலத்தில் நாம் இதனை ஓரளவுக்கேனும் அனுபவித்தோம். விலைக் கட்டுப் பாட்டு நடவடிக் கை குறுகியகால ரீதியில் பயனுள்ளதாயிருப்பினும் நீண்டகால ரீதியில் பயன்படுத்துதல் பொருத்தமானதல்ல. நீண்ட கால ரீதியில் கட்டுப்பாட்டு விலையைப் பேணிவருவதன் மூலமும் இறக்குமதி ஏற்றுமதியினைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உற்பத்தியினதும் சந்தையினதும் சுதந்திரத்திற்கு விலங்கிடப்படுதலே நடைபெறும். சந்தையினுள் ஒழுங்கற்றவிதத்தில் தளம்பலை உருவாக்குவதற்கு இது காரணமாயமைவதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் அவர்கள் மேலும் உற்சாகத்தை இழக்க நேரிடலாம். விவசாயிகளுக்குத் தமது உற்பத்திகளை அதிகரிப்பதற்குத் தேவையான விலைச் சமிக்ஞைகளை வழங்குவதற்கு கட்டுப்பாட்டு விலையினால் முடியாதிருக்கும். மேலும், வளங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதில் முரண்பாடும், அதாவது அனாவசியமான தரப்பினர்களுக்கு அதிக நுகர்வு ஆற்றலை வழங்குவதற்கும் இது வழியமைக்கும். அத்தகைய அதிக விலைகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியுமான நுகர்வோர்களைக் கூட இதன் கீழ் போசிப்பதற்கு நேரிடும்.
தற்போது பெரும்பாலான நாடுகளில் பணவீக்கம் அ த காரி ப ப த ற கு ஏதுவாயுள்ள பிரதானமான காரணியாக உணவு விலைகளைக் குறிப்பிட முடியுமாயுள்ளது. இது சமூக அமைதியின்மையை உருவாக்கி பல பிரச்சினை களுக்கும் வழியமைத் துள்ளது. இது விசேட மானதொரு பணவீக்கக் காரணியாகும். ஆதலால் பொதுப் (3 Lu J 60oi L i . பொருளாதார நடவடிக்கை 00 2025 2050 களின் மூலம் இதனைத் தீர்ப்பதற்கு முயற்சித்தல் வெற்றியளிக்காதிருக்கலாம். ஏனெனில் அத்தகைய விசேட நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதற்கு விசேடமான நடவடிக்கைகளேயொழிய பொது நடவடிக்கைகள் பொருந்தாததனாலாகும்.
வளர்ச்சி (பில்லியன்)
13

Page 14
வறிய மக்களை இலக்காகக் கொண்ட சமூகப் பாதுகாப்பு வேலைத் திட்டங்களை இதற்கான உதாரணமாகக் காட்டக் கூடியதாக உள்ளது. இலங்கையில் செயற்படுத்தப்படுகின்ற சமுர்த்தி வேலைத்திட்டம் இச்சேவையை வழங்குகின்றது. எவ்வாறாயினும் இவ்வாறான வேலைத்திட்டங்களை ஏற்கனவே செயற்படுத்தாதுள்ள நாடுகள் அவ்வாறானவற்றை ஆரம்பித்து செயற்படுத்தினாலும் அதிலிருந்து பெறுபேறுகளைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். ஆதலால் குறுகிய கால ரீதியில் கடுமையானதொரு கொள்கையான ஏற்றுமதிக் கட்டுப்பாடு மற்றும் இறக்குமதிக்கான பதிலீடுகளின்பால் கவனத்தைச் செலுத்தலாம். மேலும் உதவி வழங்கும் அமைப்புகள் இவ்வாறான நாடுகளுக்கு வழங்குகின்ற உதவிகளை, சமூகப் பாதுகாப்பு, சிறுவர் மற்றும் போசாக்கு ஆகியவற்றுடன் தொடர்புடைய அபிவிருத்திப் பணிகளை முன்னிட்டு ஈடுபடுத்துதல் அதிகளவு பெறுபேறுகளுக்குப் பங்களிப்பதாயிருக்கும். மறுபுறம், அபிவிருத்தியடைந்த நாடுகள் உள்நாட்டு ரீதியில் உயிரின எரிபொருளை உற்பத்தி செய்யும் பொருட்டு வழங்குகின்ற நிவாரணங்களை நிறுத்திவிட்டு, பிறேசில் போன்ற வினைத் திறன்மிக்க விதத்தில் உயிரின எரிபொருளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றவர்களுக்கு தமது சந்தைகளின் வாயில்களைத் திறந்துவிடுதல் வேண்டும். அமெரிக்காவில் உயிரின எரிபொருள் நிவாரணத்தைப் போன்றே, ஐரோப்பாவில் எதனோல் மற்றும் உயிரின டீசலின் 爱 பொருட்டு வழங்கப்பட்ட ஒரு ஆண்டினுள் தானிய நிவாரணங்கள் உலக உணவுச் (2007 LDITñi ğf - சந்தைச் சகி தரிகளை திரிபுபடுத்துவதற்கு ஏதுவாய மைந்த வழிதவறச் செய்கின்ற கொள்கையென்பது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. மேலும் அதே நிவாரணம், நுகர்வின் பொருட்டு பயிரிடப்படுகின்ற அறுவடைகளின் மது மறைமுகமானதொரு வரியாகச் செயற்பட்டு உணவு விலைகள் அதிகரிப்பதற்குப் பங்களிப்புச் செய்துள்ளது. ஆதலால் அ பரி விருத தய டை நீ த நாடுகளின் விவசாயிகளை (8g-T6 TLD அரிசி ( "மானியங்கள் கிடைக்கின்ற வேளாண்மைப் பயிர்களின்” பேரிலன்றி, சந்தையில் அதிக வருமானத்தைப் பெறக்கூடிய நுகர்வுக்கான வேளாண்மைப் பயிர்களின்பால் ஈடுபடச் செய்தல் வேண்டும். மேலும், அபிவிருத்தியடைந்த நாடுகள் வேளாண்மை உற்பத்திகளின் மீது விதித்துள்ள வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாக்கிக் கொள்ளல் வேண்டுமென்பதோடு, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு அவர்களுடன் சமமட்டத்தில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளித்தல் வேண்டும். இதன் மூலம் உலக உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு அவர்களாலும் பங்களிப்புச் செய்ய முடியுமாயிருக்கும்.
14
 

நீண்ட கால ரீதியில் வேளாண்மைத் துறையை வளர்ச்சியடையச் செய்யும் பொருட்டு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டிய சில துறைகள் உள்ளன. விவசாய ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துதல், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், சிறு கமக்காரர்களது சந்தைத் தொடர்பாடல் வசதிகளை மேம்படுத்துதலின் மீது முதலீடு செய்தல் ஆகியன இவற்றில் பிரதானமானவையாகும். மேலும், உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், மண் பாதுகாப்பு, களஞ்சிய வசதிகளை மேம்படுத்துதல், உற்பத்தி நெறிப்படுத்தல் செயற்பாட்டை போதியளவு அபிவிருத்தி செய்தல் ஆகியனவும் முக்கியமாகும்.
மேற்படி விடயங்கள் அனைத்தையும் கவனத்திற்கொண்டு, உணவுப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களது (குறிப்பாக வறிய மக்களது) வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய கொள்கை ரீதிலான ஒருசில நடவடிக்கைகளை அடையாளம்காணலாம். அவையாவன,
01. முழுமையான சமூகப் பாதுகாப்புத் திட்டமொன்றின் மூலம் குறுகிய மற்றும் நடுத்தரகால அடிப்படையில் வறிய மக்களது போசாக்குத் தேவைகளை ஆகக்குறைந்த மட்டத்திலாவது நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை
யெடுத்தல்.
விலையின் அதிகரிப்பு 02. விவசாய விஞ்ஞானம் 2008 DΠήά.) மற்றும் தொழில்நுட்பத்தை
27
மேம்படுத்துதலும் அதேபோன்று தேசிய மற்றும் சர்வதேச மட்டத் தரில சந்தைப் பிரவேசத்தின் பொருட்டு ஈடுபடுதலின் ஊடாக நீண்டகால ரீதியரில் நிரம் பலை அதிகரிப்பதற்கு நடவடிக்கை யெடுத்தலும்.
03. உயிரின எரிபொருளை உற்பத்தி செய்யும் பொருட்டு உணவுக்குப் பொருத்தமான பொருட்களைப் பயன்படுத் துகின்ற மற்றும் உணவுப் பயிர்ச்
39FsuJIT கோதுமை செய்கைக்குப் பொருத்தமான
வேளாண்மைக் காணிகளைப்
பயன்படுத்துகின்ற முறையினை மாற்றுதல்.
04. உணவு உற்பத்தியின் மற்றும் சந்தைப்படுத்தலின் போட்டிநிலைக்கு வழிவகுக்கின்ற விதத்தில் தற்போது அபிவிருத்தியடைந்த நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடைகளை நீக்குதல்.
மேற்படி கொள்கை ரீதியிலான விடயங்களை அமுலாக்க முடியுமாயிருப்பின் உலகில் வாழும் அனைவரினதும் நாளைய தினம் மிகவும் சிறப்பாக அமையுமென்பதில் சந்தேகமில்லை. தற்போதைய பிரச்சினையின் வேதனையானது, அதில் கவனம் செலுத்துவதற்கான காலம் வந்துள்ளதென்பதை எமக்கு உணர்த்துகின்றது. மேலும் தாமதிக்கக் கூடாது. ெ
2008 மே / ஜூன் - குறிப்பேடு

Page 15
உணவுப் பாதுக சிந்திப்பதற்கான
ஐ நிலங்கா சமிந்தனி
நாணயத் திணைக்களம்
“ஒவ்வொரு உயரிாரினமும் உண வரிலேயே தங்கியிருக்கின்றது", உணவு என்பது மனிதனது ஒரேயொரு தேவையாக இல்லாதிருப்பினும் அது அவனது தேவைகள் பட்டியலில் முதன்மையான தேவையாகும். உணவுக்கு வேறு மாற்றீடுகள் கிடையாது. முழு மனித வளமும் அதன் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. உணவு வெறுமனே ஒரு வர்த்தகப் பண்டமாக இல்லாது ஏனைய அனைத்துப் பண்டங்கள் மற்றும் பணிகளையும் தாண்டிச் சென்று முதலிடத்திலிருப்பது இதனாலாகும். ஆதலால் உணவுப் பிரச்சினை தற்கால உலகில் மிக முக்கியமான மானிடப் பிரச்சினையாகும் எனக் கூறுவதில் தவறில்லை.
கடந்த பல வருடங்களினுள் அரசி மற்றும் தானியங்கள் உட்பட பிரதானமான உணவுப் பொருட்களின் விலை மட்டங்கள் துரிதமாக அதிகரித்ததோடு, தொடர்ந்தும் அதிகரித்துச் செல்கின்றது. அதேபோன்று அண்மிய எதிர்காலத்தில் இவ்விலைகள் வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்குமளவுக்கு காரணிகளைக் காணவும் முடியாதுள்ளது. இந்நிலைமையினுள் உலகில் பல நாடுகள் உணவுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக உணவுப் பிரச்சினையின் பிரதானமான பண்புகளாக, உணவு நிரம்பல் மட்டுப்பட்டுள்ளமை, கேள்வி அதிகரித்துள்ளமை மற்றும் அதன் காரணத்தினால் உணவு விலைகள் அதிகரித்துள்ளமையை அடையாளம்காண முடியுமாயுள்ளது. குறிப்பாக 200 கோடி மக்களுக்கும் அதிகமானதொரு சனத்தொகையைக் கொண்டுள்ள சீனாவினதும் இந்தியாவினதும் துரித மற்றும் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி வேகத்தின் காரணமாக தலா வருமானம் அதிகரித்துள்ளமையைத் தொடர்ந்து நுகர்வு முறை மாற்றமடைந்துள்ளமையும் ஒட்டுமொத்தமான உணவின் நுகர்வு அதிகரித்துள்ளமையும், போசாக்குமிக்க உணவுக்கான கேள்வி விரிவடைந்துள்ளமையுமே உணவுக்கான விலை அதிகரிப்புக்குப் பிரதானமான காரணமாக அமைந்துள்ளது. நிரம்பல் போக்கினை நோக்குகின்ற போது உயிரின எரிபொருளுக்கான (Bio Fuel) மூலமாக சோளம் போன்ற உணவு உற்பத்திகள் பயன்படுத்தப்படுவதைப் போன்றே, வேளாண்மை நிலங்கள் மற்றும்
2008 மே / ஜூன் - குறிப்பேடு
 
 

காப்பைப் பற்றிச்
56b. . . . . . . . . .
ஏனைய விவசாய வளங்கள் உயிரின எரிபொருள் உள்ளீடுகளை உற்பத்தி செய்யும் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற போக்கினையும் காணக்கூடியதாயுள்ளது. சந்தைக்கு வழங்கப்படுகின்ற உணப் பொருளின் நிரம்பல் குறைவடைவதில் இது பெருமளவு பங்களிப்புச் செய்துள்ளது. அதேபோன்று காலநிலை மாற்றங்களும், இயற்கை அனர்த்தங்கள், அரசியல் கொள்கைத் திருத்தங்கள், சிவில் யுத்தங்கள், நகரமயமாக்கல் மற்றும் கைத்தொழில்மயமாக்கல் காரணமாக விவசாய வளங்கள் மட்டுட்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் வேளாண்மை உள்ளீடுகளின் விலை மட்டங்கள் அதிகரித்துள்ளமை ஆகிய காரணிகளின் காரணமாக உலகின் முன்னணி வகிக்கும் உணவு உற்பத்தி செய்கின்ற நாடுகளில் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமையும் உலக உணவு நிரம்பல் குறைவடைவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
உலக சனத்தொகையில் அரைவாசியையும் விட அதிகமானோரின் பிரதானமான உணவாகவுள்ள அரிசியைப் பொறுத்தவனு, இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்து உலக உணவு விலை 50 சதவீதத்தையும் விட அதிகரித்துள்ளது என்பதைக் காணலாம். அரிசி ஏற்றுமதி செய்கின்ற நாடுகளின் சனத்தொகை அதிகரித்துள்ளமை, சீனா, இந்தியா மற்றும் கொரியா ஆகிய உலகில் மிகப் பெரிய பொருளாதாரங்களைக் கொண்டுள்ளதும் அரிசியை பிரதானமான உணவாகக் கொண்டுள்ளதுமான நாடுகளுக்கு உலக அரிசி நிரம்பலில் அதிகளவு செல்லுதல், உலக கோதுமை மாவு விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அதற்கானதொரு மாற்றீடாக ஆசிய நாடுகளில் அரிசிக்கான கேள்வி அதிகரித்துள்ளமை மற்றும் இயற்கை அனர்த்தங்களின் காரணமாக நிரம்பல் பாதிக்கப்பட்டுள்ளமை ஆகியன உலக அரிசி விலை அதிகரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒட்டுமொத்தமாக நோக்குகின்றவிடத்து, அரிசி விலை அதிகரித்தலானது, முக்கியமாக நிரம்பல் குறைவடைந்துள்ளதை விட கேள்வி அதிகரித்துள்ளமையால் நடைபெற்றுள்ளதென்பதைக் காணக்கூடியதாயுள்ளது.
15

Page 16
அரிசி உள்ளிட்ட தானிய உற்பத்தியும் நுகர்வும் வறிய நாடுகளுக்கு மிக முக்கியமாயுள்ளது. குறைந்த வருமானம் பெறுகின்ற நாடுகளின் கலரித் தேவையில் 63 சதவீதம் தானிய உணவுகளின் மூலமே நிறைவு செய்யப்படுகின்றது. ஆசிய நாடுகளின் கலரித் தேவையில் மூன்றில் ஒரு பங்கிற்கு அரிசி பங்களிப்புச் செய்கின்றது. இலங்கை உள்ளிட்ட அரிசி உற்பத்தி செய்யும் ஆசிய நாடுகளில் அநேகமானவை தமது உணவுத் தேவையில் அதிக பங்கினை அரிசியின் மூலம் நிறைவு செய்து கொள்கின்றன.
ஆதலால், அரிசி உள்ளிட்ட தானியங்களின் விலை அதிகரிப்பானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏனெனில், இவர்கள் தமது நுகர்வுச் செலவில் குறிப்பிடத்தக்கதொரு பங்கினை உணவு நுகர்விற்காக செலவிடுவதனாலாகும். அதேபோன்று குடும்ப அலகொன்றின் மாதாந்தச் செலவில் அரைவாசிக்கும் அதிகமான அளவு உணவுக்காகச் செலவிடப்படுவதால் உணவு விலை அதிகரிப்பானது, பெரும்பாலான குடும்ப அலகுகளின் வாழ்க்கைச் செலவைக் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கச் செய்து பொது வாழ்க்கையைச் சிக்கலுக்குள்ளாக்கியும் பாதிப்புக்குள்ளாக்கியும் இறுதியில் சமூக விரக்திக்கு வழிவகுக்கின்றது. குறை அபிவிருத்தியுடைய நாடுகளில் அநேகமானவை உணவு உற்பத்தியில் தன்னிறைவு மட்டத்தை விடக் குறைந்த மட்டத்தில் உள்ளதோடு, இறக்குமதி உணவின் மீது கடுமையாகத் தங்கியிருப்பதன் காரணத்தினால் உலக உணவு விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இறக்குமதி விலைகள் அதிகரித்து சென்மதி நிலுவையில் பாதகமானதொரு நிலை உருவாகுதலும் நாணயத்தின் பெறுமதி மதிப்பிறக்கம் அடைதலும் இறுதியில் பொருளாதார சமநிலை சீர்குலைதலும் நடைபெறுகின்றது.
இலங்கையினர் நிலை எனின?
இலங்கையைப் பொறுத்தவரை உலகின் ஏனைய வறிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நல்லதொரு நிலையில் இருப்பினும், உலக உணவு விலை அதிகரிப்பதன் பெறுபேறுகளை இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்து மிகத் தெளிவாக இலங்கையும் அனுபவிக்கவேண்டி நேரிட்டது. குறிப்பாக கடந்த சில மாதங்களினுள் கோதுமை மாவு மற்றும் அரிசி விலை துரிதமாக அதிகரித்தமை பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் கடும் விவாதத்துக்கு உள்ளான ஒரு காரணியாக அமைந்தது.
2007 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ரூபா 3500 க்கும் ரூபா 40.00 க்கும் இடையில் இருந்த உள்நாட்டு அரிசி விலை மட்டம் 2007 ஆம் ஆண்டின் இறுதியில் துரிதமாக அதிகரித்து 2008 ஏப்பிரல் மாதமாகின்ற போது ரூபா 7200 க்கும் ரூபா 8000 க்கும் இடையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டது. அரசு உச்ச விலையை விதித்ததைத் தொடர்ந்து மே மாதத்திலிருந்து விலை
16

மட்டம் ரூபா 6500 க்கும் ரூபா 7000 க்கும் இடையிலான விலை வரை வீழ்ச்சியடைந்தது.
பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றவாறு உலக உணவுப் பிரச்சினை மேலும் அதிகரிக்குமேயொழிய குறைவடையாது. அவ்வாறெனில், இவ்வாறான பிரச்சினைக்குரிய சூழலினுள் இலங்கை முழுமையானதொரு பாதுகாப்பான நிலைமையில் இல்லையெனக் கூறலாம். ஏனெனில், இலங்கையும் தனது உணவுத் தேவையில் குறிப்பிடத்தக்களவினை இறக்குமதி செய்வதோடு, சனத்தொகையில் அதிகமானோர் தமது வருமானத்தில் அண்ணளவாக அரைவாசியை உணவுக்காகச் செலவிடுவதனாலாகும். புதிய கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் பிரகாரம் (CCPl(N) உணவுக்கான நிறையேற்றல் அண்ணளவாக 47% ஆகும். இதில் 28% வீதம் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களையே உள்ளடக்கியுள்ளது. இதன்படி இலங்கையும் உலக உணவுப் பிரச்சினையின் முதலாவது சுற்றிலேயே பாதிப்புக்கு உள்ளகக்கூடிய மட்டத்திலான ஆபத்தில் உள்ளதென்பது தெளிவாகின்றது. இதற்கிணங்க உலக உணவு விலை மட்டம் அதிகரித்தல் இலங்கையின் வரவு-செலவுத் திட்டத்திலும் சென்மதி நிலுவையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி ஒட்டுமொத்தமான ஒரு சமமின்மையின்பால் இட்டுச் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளதென்பதைக் காண்கிறோம்.
02வது வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு 2007 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து படிப்படியாக உணவு இறக்குமதிச் செலவு அதிகரித்து வருகின்றது. 2007 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 99 மில்லியன் அமெரிக்க டொலர்களாயிருந்த உணவு இறக்குமதிச் செலவு 2008 மார்ச் மாதமாகின்றபோது 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அண்ணளவாக 65 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
உலகினி கவனம் "உணவுப் பாதுகாப்பரினி” மீது
தற்போதைய உணவுப் பிரச்சினையின் முன்னிலையில் வறிய நாடுகளைப் பஞ்சத்திலிருந்து விடுவித்தல் மிகக் கடினமானதொரு பணியாக உள்ளதென ஐக்கிய நாடுகளின் உலக உணவு வேலைத்திட்டம் கூறுகின்றது. 2007 ஆம் ஆண்டின் இறுதியாகின்றபோது உலகில் ஏறத்தாழ 37 நாடுகள் உணவுப் பிரச்சினைக்கு முகம்கொடுத்திருந்ததாக அறியவந்துள்ளது. தற்போது கூட உலகம் பூராவும் 860 மில்லியனுக்கும் அதிகமான மனிதர்களும் சிறுவர்களும் பட்டினியில் வாடுகின்றார்களென உலக உணவு அமைப்பு கூறுகின்றது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு (UN), உலக உணவு அமைப்பு (WFO) ஆகிய சர்வதேச அமைப்புகள் பஞ்சத்துக்கு எதிரான புதியதொரு வேலைத்திட்டத்தின் தேவையை வலியுறுத்தி, எதிர்கால
உணவுத் தேவையை நிறைவு செய்யக்கூடிய வழிவகைகள்
2008 மே / ஜூன் - குறிப்பேடு

Page 17
01 வது 6 உள்நாட்டு அரிசி விலையி
100
இநாட்டு அரிசி
இசிவப்புப் பச்சை அரிசி
வெள்ளைப் பச்சை அரிசி 80
சம்பா
60 -
ஜான்-07 ஜூலை-09 ஆ
தொடர்பாக ஆராய்வதற்கு முற்பட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியிலேயே "உணவுப் பாதுகாப்பு" எண்ணக்கரு முழு உலகினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு எனிறால் யாது?
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) வரைவிலக்கணத்தின் பிரகாரம் உணவுப் பாதுகாப்பு என்பது, "செயலூக்கமும் தேகாரோக்கியமும் கொண்டதொரு வாழ்க்கையின் பொருட்டு தனது அன்றாடத் தேவைகளையும் உணவுத் தேவையையும் நிறைவேற்றத்தக்கவாறு, போதியளவில், பாதுகாப்பானதும் போசாக்குமிக்கதுமான உணவைப் பெற்றுக்கொள்வதற்கு அனைவராலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இயலுமாயிருத்தலாகும்."
உலகளாவிய சவாலுக்கு உள்நாட்டுத் தீர்வு அவசியம்
கடந்த காலகட்டத்தினுள் உள்நாட்டு உணவு விலை மட்டம் துரிதமாக அதிகரிப்பதைத் தடுக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை அமுல்படுத்தப்பட்டது. குறிப்பாக
2008 மே / ஜூன் - குறிப்பேடு
 

வரைபடம் ன் போக்கு (2007-2008)
世聞 DT-08 ஏப்-08
க-07 செப்-07 ஒக்07 நவெ-07 திசெ07
அரிசிக்கு உச்ச விலை நிர்ணயிக்கப்பட்டமை அண்மைக் காலத்தில் அதிக கவனத்தைப் பெற்ற விடயமாக இருந்தது. ஆயினும் இவ்வாறான கொள்கைகள் குறுகிய கால ரீதியில் நுகர்வோருக்கு அனுகூலமாயிருப்பினும், அது சந்தை நிரம்பலை ஆர்வமிழக்கச் செய்வதோடு வழங்கப்படுகின்ற பண்டங்களின் தரம் தொடர்பிலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் அதேபோன்று குறைந்த விலை மட்டம் உள்நாட்டு உற்பத்தியாளரை ஆர்வமிழக்கச் செய்வதற்கு வழிவகுப்பதால் விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளின் ஊடாக நீண்டகால உணவுப் பாதுகாப்பினை அடைந்துகொள்ள முடியுமா என்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளதொரு விடயமாகும்.
உணவைப் பொறுத்தவரை தன்னிறைவடைதல் சிறந்த தீர்வாயிருப்பினும், நடைமுறையில் அவ்வாறு செய்வதும் அதனைப் பேணிவருதலும் பிரச்சினைக்குரியதாகும். பண்டைய காலத்தில் "கிழக்கின் தானியக் களஞ்சியம்" என அழைக்கப்பட்ட இலங்கையில் விவசாயத்தின்பால் விவசாயிகளை ஊக்குவிக்கின்ற விவசாய வளங்கள் உருவாக்கப்படுதலைக் காண முடியுமாயிருந்த போதிலும், தற்போதைய நிலை முற்றிலும் மாற்றமாயுள்ளது.
17

Page 18
02 வது உணவு இறக்குமதிச் 200
雷
영 墨 ---
150 器 5 G
100|- ஒ
S. S 函
C3 50 -
O
சன பெப் மார் ஏப் மே ஜூன் ஜூலை
2007
அண்மைக் காலம் வரை வேளாண்மைக்குப் பொருத்தமான நீர்ப்பாசன முறைமை, கமநலச் சேவை நிலையங்கள், கமநலக் காப்புறுதி வேலைத்திட்டங்கள் மற்றும் கமநல ஆலோசனை வேலைத்திட்டங்கள் ஆகியன செயற்பாட்டு மட்டத்தில் இருந்த போதரிலும் தறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கைத்தொழில் துறையின்பால் அதிக கவனம் செலுத்தப்பட்டமை மற்றும் வேளாண்மைத் துறைக்குக் கிடைக்க வேண்டிய கவனம் கிடைக்காதிருந்ததனால், கமநல நேயம்மிக்க சுற்றாடல் கைத்தொழில் நேயம்மிக்க சுற்றாடலாக மாற்றமடைந்தமை, நகரமயமாக்கல் மற்றும் கைத்தொழில்மயமாக்கலின் காரணமாக பெரும்பாலான வேளாண்மை நிலங்கள் துண்டாடப்பட்டமை, உரிய பராமரிப்பு இன்மையால் நீர்ப்பாசன முறைமைகள் சீர்குலைந்தமை, வேளாண்மை நிலங்கள் கைவிடப்பட்டமை ஆகியவற்றைத் தாராளமாகக் காணமுடியுமாயுள்ளது.
எந்தவொரு பொருளாதாரத்திலும் அபிவிருத்திக்குத் தேவையான மனித வளங்கள், மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு நுகர்வின் அடிப்படையிலேயே வலுப்படுத்தப்படும். அதேபோன்று வேளாண்மைத் துறையின் வளர்ச்சிக்குத் தேவையான ஒருசில மூலப்பொருட்கள் வேளாண்மைத துறையிலிருந்தே பெறப்படுகின்றன. அவ்வாறெனில், கமத்தொழில் என்பது மிக அதிகமான நாடுகளின்
18

வரைபடம்
செலவு (2007-2008)
ஆக செப் ஒக் நவெ திசெ சன பெப் மார்
2008
அபிவிருத்திக்குத் தேவையான முக்கிய அடித்தளமாயிருக்கின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகள் வேளாண்மையிலும் மற்றும் பணிகள் துறை தொடர்பிலும் அதேபோன்று கைத்தொழிலிலும் சமமான கவனத்தைச் செலுத்துவது இதன் காரணத்தினாலாகும். ஆயினும், அண்ணளவாக கடந்த 30 ஆண்டுகளினுள் புதிய கைத்தொழில் நாடுகளைப் பின்பற்றி இலங்கை தனது கைத்தொழில் மற்றும் பணிகள் துறை தொடர்பில் அதிக கவனத்தைச் செலுத்தி வேளாண்மைத் துறையைப் புறக்கணித்துள்ளது.
இதனால் வேளாண்மைத் துறையானது வளர்ச்சியடையக் கூடிய மட்டத்தை விட மிக கீழ் நிலை வளர்ச்சி மட்டத்தைக் காட்டுகின்றது. மொத்தத் தேசிய உற்பத்தியின் துறைவாரியான உள்ளமைப்பினுள் வேளாண்மைத் துறையின் பங்களிப்பு துரிதமாக வீழ்ச்சியடைவதற்கு மேற்படி நிலைமையும் காரணமாக அமைந்துள்ளது.
03 வது வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு பொருளாதாரம் திறந்துவிடப்பட்டதன் பின்னர் மொத்தத் தேசிய உற்பத்தியில் வேளாண்மைத் துறையின் பங்களிப்பு படிப்படியாகக் குறைவடைந்து வேளாண்மைத் துறையின் பங்களிப்பு அதிகரித்துள்ளமையும், பின்னர் வேளாண்மை மற்றும் கைத்தொழில் ஆகிய இரண்டு துறைகளையும் விஞ்சுகின்றவாறு பணிகள் துறையின்
2008 மே / ஜூன் - குறிப்பேடு

Page 19
உள்ளமைப்பும் வளர்ச்சியும் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளதனையும் தெளிவாகக் காணலாம்.
03 வது வரைபடம்
60 -
ক্লাির
பணிகள் கைத்தொழில் வேளாண்மை
50
40
30
20
நடைமுறை விலையின் கீழ் மொத்தத் தேசிய வெளியீடுகளின் துறைவாரியான உள்ளமைப்பும் வளர்ச்சியும
உலக உணவு விலை அதிகரிப்பின் போக்கினை குறுகிய காலத்தினுள் தவிர்த்து விடலாம் என எதிர்பார்க்க முடியாத சூழலினுள் உருவாகக்கூடிய பொருளாதார, அரசியல், மற்றும் சமூக ரீதியிலான பாதகமான விளைவுகளைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு உள்நாட்டு உணவு உற்பத்தியை விரைவாக்க வேண்டியுள்ளது. வேளாண்மை அறுவடைகளின் ஆக்கவிளைவினை அதிகரித்துக் கொள்ளக் கூடிய உயர் தொழில்நுட்பச் செயல் முறைமைகள் அறிமுகப் படுத் தப்படுதலும் அமுலாக்கப்படுதலும் நடைபெற வேண்டுமெனினும், புதிய தொழில்நுட்ப செயல்முறைமைகள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக ஏற்படுகின்ற செலவின அதிகரிப்பினால் நடைபெறும் பொருட்களின் விலை அதிகரிப்பு, பொருளாதாரத்துக்கு ஏற்ற மட்டத்தில் இருக்குமா என்பதைப் பற்றியும் கவனம் செலுத்துதல் அத்தியாவசியமாகும். தரத்தில் உயர்ந்த விதை நெல் வழங்கப்படுதல், நீர் முகாமைத்துவம், புதிய அறிவினை களத்திற்கு வழங்குதல், அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பம், களஞ்சிய வசதிகள், விநியோகித்தலை ஒழுங்குமுறையாக்கல் மற்றும் சந்தைப் போட்டி நிலையை முன்னேற்றுதல் ஆகியன நடைபெறுதல் வேண்டும். இதன் மூலம் உற்பத்தியின் அளவினையும் அதேபோன்று உற்பத்தியின் தரத்தினையும் அதிகரிப்பதற்கு உற்பத்தியாளர் முற்படுவார் என்பதோடு நுகர்வோருக்கும் குறைந்த விலையில் தரத்தில் உயர்ந்த உற்பத்திகளைக் கொள்வனவு செய்ய முடியுமாயிருக்கும்.
2008 மே / ஜூன் - குறிப்பேடு
 
 
 
 
 

வேளாண்மைத் துறையின் முன்னேற்றத்தைக் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியாததால் அவசர நிலைமையின் போது போதியளவு உணவுக் கையிருப்பைப் பேணிவருதல் தொடர்பிலும் கவனம் செலுத்துதல் வேண்டும். ஏனைய உணவுப் பொருட்களுடன் ஒப்பிடுகையில் அரிசி மற்றும் தானியங்களை நீண்ட காலம் வைத்திருக்கலாமெனினும் நீண்ட காலத்தினுள் தரம் குறைவதற்கான வாய்ப்பும் உள்ளது. பாதுகாப்பான களஞ்சிய வசதிகளைப் பேணிவருதல், உணவுப் பொருள் ஏற்றுமதிப் பொருளாதாரத்துடன் வர்த்தகத் தொடர்புகளை விஸ்தரித்துக்கொள்ளுதல் மற்றும் இறக்குமதி வரிச் சலுகைகளை வழங்குவதன் மூலம் நாட்டினுள் வருகின்ற உணவுப் பொருட்களின் அளவினை அதிகரிப்பதற்கு நடவடிக்கையெடுத்தல் வேண்டும். ஆயினும் உணவுப் பொருள் இறக்குமதியினை மிகவும் தர்க்கரீதியானதாக்குதல் கட்டாயமாகும். ஏனெனில் காலத்திற்கேற்றதும் போதியளவிலானதுமான பொருந்தாத் தன்மையுடன்கூடிய உணவுப் பொருட்களின் இறக்குமதி உள்நாட்டு உற்பத்திகள் மற்றும் உள்நாட்டு விலை மட்டத்தில் மீண்டுமொருமுறை பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதனாலாகும்.
ஒப்Uட்டுச் செலவின அனுகூலத்தினர் உச்சவரம்பை ஒத்திசைவாக்கல்
உலகம் பூராவும் பெரும்பாலான பொருளாதாரங்கள் ஒப்பீட்டுச் செலவின அனுகூலத்தின் அடிப்படையில் சர்வதேச வர்த்தகத்தின் பங்குதாரர்கள்ாக மாறியுள்ளதொரு சந்தர்ப்பத்தில், பண்டங்கள் மற்றும் பணிகள் இறக்குமதியையும் ஏற்றுமதியையும் ஊக்குவித்து உலகளாவிய சந்தை முறையினுள் சேர்ந்து 30 வருடங்கள் கடந்துள்ள போதிலும் எந்தவொரு பண்டம் அல்லது பணியின் மூலமும் இலங்கை உலக சந்தையில் பேரம்பேசும் அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையைப் பெறாதுள்ளமை கவனம் செலுத்தப்பட வேண்டியதொரு விடயமாகும். ஆயினும் கமத்தொழில் துறையில் தன்னிறைவடையும் நோக்கத்துடன், கைத்தொழில் மற்றும் பணிகள் துறையின் கீழுள்ள பெளதீக மற்றும் மனித வளங்களை வினைத்திறன்மிக்க விதத்தில் மீளப் பகிர்ந்தளிக்க (pLQuJITg5l.
சர்வதேச சந்தையினுள் ஒப்பீட்டுச் செலவின அனுகூலத்தின் உச்சமட்டப் பயனைப் பெறக்கூடிய வகையில் அடையாளம் காணப்பட்ட உள்நாட்டுப் பண்டங்கள் மற்றும் பணிகளை அளவு ரீதியிலும் தரரீதியிலும் மேம்படுத்தக் கூடியவாறு பொருளாதாரத்திற்குரிய வளங்களையும் தொழில்நுட்பத்தையும் சரியான விதத்தில் திசைமுகப்படுத்துதல் முக்கியமாகும். உதாரணமாக இலங்கையுடன் ஒப்புநோக்குகையில் இந்தியா, மியன்மார், வியட்னாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் குறைந்த செலவினத்தின் கீழ் அரிசியை மிகையாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் வருமானத்தைப் பெறுகின்றன. இதற்கிணங்க இலங்கை உள்நாட்டு அரிசி உற்பத்தியில்
19

Page 20
ஈடுபடுவதை விட மேற்படி நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்தல் வர்த்தக ரீதியில் அனுகூலமானதாயிருக்கும்.
ஆயினும் உள்நாட்டு ரீதியில் அரிசி உற்பத்தி செய்வதை விட அரிசியை இறக்குமதி செய்தல் அனுகூலமானதாகும் என்ற அடிப்படையில் இருந்து இலங்கையின் பிரதானமான உணவாக உள்ள அரிசி உற்பத்தியிலிருந்து முழுமையாக நீங்குவது அல்லது அத்துறையைப் புறக்கணிப்பது உணவுப் பிரச்சினையின் ஆபத்தை வரவழைப்பதாக இருக்கும். ஏனெனில், தற்போது உலக உணவுப் பிரச்சினையின் காரணமாக, உணவு உற்பத்தி செய்கின்ற நாடுகள் உணவுக்கான ஏற்றுமதி வரியை அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாது ஒருசில உணவுப் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்தும் உள்ளன. இந்தியா பாசுமதி அரிசியைத் தவிர ஏனைய அரிசி வகைகள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடை செய்துள்ளமை மற்றும் ஏனைய முன்னணி வகிக்கும் அரிசி உற்பத்தி செய்யும் நாடுகள் அரிசி ஏற்றுமதியை மட்டுப்படுத்தியுள்ளமை ஆகிய காரணங்களால் உலகளாவிய அரிசியின் நிரம் பல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதைப் போன்றே விலை மட்டமும் அதிகரித்துள்ளது.
முன்னர் குறிப்பிட்டதைப் போன்று உணவு என்பது மனிதனின் அடிப்படைத் தேவையாகும். ஏனைய பண்டங்கள் அல்லது பணிகளைப் போன்று உணவு நுகர்வினைக் கைவிடவோ அல்லது ஒத்திவைக்கவோ ஒருபோதும் முடியாது. இவ்வாறானதொரு பின்னணியினுள், ஒப்பீட்டுச் செலவின அனுகூலத்தினை மட்டும் அடிப்படையாக வைத்து உணவு போன்றதொரு அத்தியாவசியப் பொருளை உள்நாட்டு ரீதியில் உற்பத்தி செய்வதிலிருந்து நீங்கியிருத்தல் பிரச்சினைக்குரியதாக அமையலாம் என்பதையே காணக்கூடியதாயுள்ளது.
உணவுப் பாதுகாப்பு என்பது வேளாண்மைத துறையின்பால் கவனம் செலுத்துவதன் மூலம் மாத்திரம் வெற்றிகொள்ளக் கூடிய ஒரு சவால் அல்ல. உலகளாவிய சந்தையில் மேலுமொரு வாடிக்கையாளர் என்ற வகையில் அனைத்து உற்பத்தித் துறைகளையும் அடிப்படையாகக்கொண்ட சமநிலையான
20

இறக்குமதி, ஏற்றுமதி முறை நிலவுதல் இலங்கையிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியரின் அடித்தளமாயிருத்தல் வேண்டுமென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆதலால் சர்வதேச சந்தையின் கேள்வி, நிரம்பலின் போக்குகள் தொடர்பாக எப்போதும் கவனத்தைச் செலுத்தி, ஒப்பீட்டுச் செலவின அனுகூலத்தினை ஒப்புநோக்கி, விலை மற்றும் தரத்தின் மூலம் மிகவும் போட்டி ரீதியிலான பண்டங்கள் மற்றும் பணிகளை சர்வதேச சந்தைக்குச் சமர்ப்பித்தல் அவசியமாகும்:
உலகளாவிய சந்தைப் போக்கிலிருந்து விடுபட்டு தனிமைப்படுத்தப்பட்ட தன்னிறைவான ஒரு பொருளாதாரம் தொடர்பில் கனவு காண்பதை விட, தேசிய உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரித்துக்கொள்வதன் மூலம் உலகளாவிய விலைத் தளம்பல்களுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய மட்டத்திலான தலா வருமானத்தைக் கொண்ட பலம் பொருந்தியதொரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதலே முக்கியமாகும். இது உணவுப் பாதுகாப்பு மட்டுமன்றி ஒட்டுமொத்தமான பொருளாதாரத்தின் பாதுகாப்பிற்குமான மிகவும் நடைமுறைச் சாத்தியமானதும் நீண்டகால ரீதியிலுமான தீர்வாக இருக்கும். சிங்கப்பூர், யப்பான் ஆகிய நாடுகள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
ஆயினும், இச்சவாலை வெற்றிகொள்வதற்கெனில், அனைத்து உற்பத்தித் துறைகளினதும் ஆக்கவிளைவினை மேம்படுத்தக்கூடிய, நீண்டகால பொருளாதார உபாய வழிமுறைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டமிடல் முறைமையின் தொடர்ச்சியான நிலைத்திருத்தலை உறுதிசெய்தல் மிக முக்கியமாகும். இலங்கையின் அண்மைக்கால வரலாற்றை நோக்குகின்றபோது, எவ்வளவுதான் அபிவிருத்தித் திட்டமிடல்கள் இருந்த போதிலும் அவற்றில் அனேகமானவை தொடர்ந்து பேணிவரப்படாமையால் வளங்கள் விரயமாவதைத் தவிர அபிவிருத்தி இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ளுதல் திருப்திகரமானதொரு மட்டத்தில் இல்லையென்பது தெளிவாகக் காணக்கூடியதாயுள்ள விடயமாகும். ஆதலால், துல்லியமானதும், நீண்டகால ரீதியிலுமான நோக்கினைக் கொண்ட பொருளாதார உபாய வழிமுறைகளின் தொடர்ச்சியான நிலைத்திருத்தலை வலியுறுத்துதலும் அத்தகைய உபாய வழிமுறைகளைச் செயற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுதலுமே மிக முக்கியமான ஆரம்ப நடவடிக்கையாக இருக்கும். ே
2008 மே 7 ஜூன் - குறிப்பேடு

Page 21
லலித் விக்கிரமசிங்க தொடர்பூட்டல் திணைக்களம்
வரையறுக் கப்பட்ட வளங்களை வரையறையற்ற தேவைகளை முன்னிட்டு பகிர்ந்து கொள்வதற்கான மிகவும் தகுந்த செயல்முறைமையினை நிர்ணயிப்பதற்கு எடுக்கின்ற சிக்கலானதொரு முயற்சியென பொருளியல் எனும் சமூக ரீதியிலான விடயத்தைக் குறிப்பிடலாம். மனித அறிவு கூர்ப்பு ரீதியில் வளர்ச்சியடைந்தமையின் ஊடாக நடைபெற்ற விஞ்ஞான மறுமலர்ச்சி மற்றும் இதற்கு நேரொத்த வகையில் நடைபெற்ற தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக வரையறுக்கப்பட்ட வளங்களை நுட்பமான விதத்தில் பயன்படுத்த முடியுமாயுள்ளமை மனிதன் பெற்ற ஒரு வெற்றியாகும். ஆயினும் இதைத் தொடர்ந்து மனித தேவைகளின் இயல்பும் பன்முகத் தன்மையும் இதை விடப் பாரியதொரு வீச்சிடையில் விரிவடைந்துள்ளமையின் காரணமாக பொருளியலினுடாகப் பதில் காண முயற்சிக்கின்ற விடயப் பரப்பும் விரிவானதும் சிக்கலானதுமாக மாறியுள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கைத்தொழில் புரட்சியின் ஊடாக ஐரோப்பாவினுள் மிகப் பாரியதொரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உழைப்புப் பகுப்பினை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகின்ற பாரிய அளவிலான பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தியும், அதன் காரணமாக நடைபெறுகின்ற பாரிய வர்த்தகப் போட்டியும், நிதிச் சந்தை சர்வதேச ரீதியில் அதிக வளர்ச்சியடைந்தமையும் காரணமாக தேசிய பொருளாதாரங்களில் பொருளாதார மற்றும் அரச நிதிச் செயற்பாடுகளை மிகவும் பலம் பொருந்தியதாகவும் உறுதியானதாகவும் பேணிவருவதற்கு உதவியாயமைகின்ற மிகவும் நடைமுறைச் சாத்தியமான பொருளாதார உபாய வழிமுறைகளை உருவாக்க நேரிட்டது. மேற்படி செயற்பாட்டினுள் உருவாகிய அதி விசேடமான மற்றும் உலக மதிப்புக்கு உள்ளாகிய புகழ்பெற்ற ஒரு மனிதனைப் பற்றி சுருக்கமானதொரு வாழ்க்கை வரலாற்றை எழுதுதல் இக்குறிப்பின் நோக்கமாகும்.
2008 மே / ஜூன் - குறிப்பேடு
 
 

(3gT6ör (3D6OTITI" (3a56ÖT6mö (John Maynard Keynes) 1883 ஜூன் மாதம் 05 ஆம் திகதி கேம்பிறிட்ஜ் நகரத்தில் ஹாவே ரோட் எனும் இடத்தில் பிறந்தார். அப்போது கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பொருளியல் விரிவுரையாளர் ஒருவரான ஜோன் நெவில் கேன்ஸ் (John Nevil Keynes) மற்றும் புகழ்பெற்ற நூலாசிரியர் ஒருவரும் சமூக சேவகியுமான புலொறன்ஸ் அடா பிறவுன் (Florence Ada Brown) இவரது பெற்றோர்களாவர். சத்திர சிகிச்சை மருத்துவரும் அதேபோன்று இலக்கியவாதியுமாகப் புகழ்பெற்று விளங்கிய ஜெப்ரி கேன்ஸ் (Geoffery Keynes, 1887-1982) இவரது இளைய சகோதரராவார் என்பதோடு, இளைய சகோதரி மாகரட் (John Margarat, 1890-1974), பெளதீகவியல் தொடர்பில் நோபல் பரிசைப் பெற்ற ஆர்ச்போல்ட் ஹில்லை (Archibold Hill) திருமணம் முடித்திருந்தார். இதற்கிணங்க, புகழ்பெற்ற கல்விமான்களைக் கொண்ட குடும்பச் சூழலை ஜோன் மேனாட் கேன்ஸ் பிறப்பிலேயே பெற்றிருந்தார் என்பது தெளிவாகின்றது.
கேன்ஸ் ஆரம்பக் கல்வியை ஈட்டன் (Eton) பாடசாலையிலேயே பெற்றார். கணிதம், இசைக் கலை, வரலாறு ஆகிய பாடங்களை கேன்ஸ் மிகவும் விரும்பினார் என்பதோடு, அவற்றில் சிறந்த திறமையையும் வெளிக்காட்டினார். கணிதம் படிப்பதற்காக கேன்ஸ் கேம்பிறிட்ஜ் கிங்ஸ் கொலேஜ் (Kings Coleage) பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இங்கு கேன்ஸ"க்கு அரசியல் செயற்பாடுகளில் தொடர்புகொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்ததோடு, இதன் காரணமாக பொருளியல் கற்பதில் அவரது மனம் ஈடுபட்டது. இதற்கிணங்க அப்போது புகழ்பெற்ற பொருளியலாளராக விளங்கிய அல்ப்ரட் மார்ஷலின் (Alfred Marshal) வழிகாட்டலின் கீழ், கணிதத்தையும் இசைக் கலையையும் கைவிட்டுவிட்டு பொருளியலைக் கற்பதில் ஈடுபட்டார். இவரது முதன்மையான ஆசிரியர்களாக ஏ.சி. பிசு (A.C. Pigou) மற்றும் அல்ப்ரட் மாஷல் ஆகியோர் விளங்கினர். மிகச் சிறந்த பொருளியலாளர் ஒருவரின் அறிகுறிகளைக் காட்டும் வகையில் 1905 ஆம் ஆண்டில் கலைமாணிப் பட்டத்தையும் (B.A.) அதன் பின்னர் 1908 இல் முதுகலைமாணிப் பட்டத்தையும் (M.A.)
21

Page 22
பெறுவதற்கு கேன்ஸினால் முடியுமாயிற்று. இதன் பெறுபேறாக கேன்ஸ் கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பொருளியல் விரிவுரையாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். பொருளியல் தொடர்பிலான தனது ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு தனது தனித்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கும் வெளிக்காட்டுவதற்கும் இங்கு கேன்ஸினால் முடியுமாயிற்று. இந்திய நாணயம் மற்றும் நிதி அலுவல்கள் தொடர்பான முடிக்குரிய ஆணைக்குழுவில் அங்கத்தவராக நியமிக்கப்பட்ட கேன்ஸ், இங்கு நடைமுறை ரீதியிலான பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு கோட்பாட்டு ரீதியிலான தீர்வுகளை வெற்றிகரமாக முன்வைத்து தமது திறமைகளை மிகச் சிறப்பான முறையில் வெளிக்காட்டினார்.
நடைமுறைப் பொருளியல் கோட் பாடுகளை உருவாக்குவதில் இவர் வெளிக்காட்டிய திறமை தொடர்பில் மிகப் பெருமளவு பெறுமதியும் கேள்வியும் முதலாவது உலக மகா யுத்தத்தின் போது உருவாகியது. இதற்கிணங்க அரச திறைசேரியினதும் நிதிச் செயலாளரினதும் ஆலோசகராக கேன்ஸ் நியமிக்கப்பட்டார் என்பதோடு, உருவாகியிருந்த நிதி ரீதியிலான மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு தேவையான ஆலோசனைகளை வழங்குதல் இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பொறுப்புகளில், ஐக்கிய இராச்சியத்திற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையிலான கடன் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளைத் தயாரித்தலும், அரிதான நாணய வகைகளைச் சேகரிக்கின்ற வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தலும் உள்ளடங்கியிருந்தன.
’துணிவும் நிபுணத்துவமும் ஒன்றுசேர்கின்ற போது அதிசயமான விடயங்கள் உருவாகும்" எனும் ரொபட் லெகாச்மனின் (Robert Lekachman) கூற்றை உறுதிப்படுத்திய கேன்ஸ் கடும் கஷட நிலைமைகளின் முன்னிலையில் கூட அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றினார். ஸ்பெயினில் பயன்படுத்தப்பட்ட பெசிடாஸ் (PecitaS) எனும் அரிதான நாணய வகையில் ஒரு தொகையைச் சேகரிப்பதற்கு மிகக் கஷ்டங்களுக்கு மத்தியில் கூட இவரால் முடியுமாயிருந்தோடு நிதிச் சந்தையில் உள்ளமைப்பு ரீதியிலான மாற்றமொன்றைச் செய்யும் திடஉறுதியுடன் அந்த நாணயம் அனைத்தையும் விற்பனையின் பொருட்டு சந்தைக்கு வெளியிடுவதற்கு இவர் நடவடிக்கை எடுத்தார். இவரது முயற்சி வெற்றியளித்தது. PecitaS மிக அரிதானதும், சந்தையில் மிகவும் அதிக விலையைக் கொண்ட நாணய வகையாகவும் மாறியது. இப்பாரதூரமான பணியை நிறைவேற்றுவதில் கேன்ஸ் வெளிக்காட்டிய திறமையின் காரணமாக இவர் 1919 ஆம் ஆண்டில் பாரிஸ் சமாதான மாநாட்டின் நிதிப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.
22

மேற்படி பதவியரல்ாது கேன்ஸின் வேகமான பயணப் பளுதக்கு பெரும் ஒளியையும் தாக்கத்தையும் வழங்கியது. முதலாவது உலக மகா யுத்தத்தின் போது பிரித்தானிய நிதித் திணைக்களத்தின் ஆலோசகராகப் பதவி உயர்த்தப்பட்ட கேன்ஸ் 1915 இல் இருந்து 1919 வரை இப் பதவியை வகித்தார். இதற்கு நேரொத்த விதத்தில் பிரித்தானியாவின் நிதிப் பிரதிநிதியாக 1919 இல் பிரான்சில் நடைபெற்ற வர்செல்ஸ் சமாதான மாநாட்டைப் (Verseilles Peace Conference) பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொருளியல் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலுமாயிருந்த இவரது அவதானிப்புகளை, "சமாதானத்தின் QUICB6TTg5TJ 6lgiriogoóT6356ir" (The Economics Consequences of the Peace) 6I 6)]ư) [bIT 6ởì6öĩ (Ip 6u) Lñ , 19 19 6ìg)ILô , "p L6örjLq.d608bis(35 (5 gobgigsb" (A Renision of the Treaty) எனும் நூலின் மூலம் 1922 இலும் வெளியிட்டார். வர்செல்ஸ் சமாதான உடன்படிக்கையின் நிபந்தனைகளின் பிரகாரம் மிகப் பெரும் யுத்த நட்டஈட்டினை ஜர்மன் பெரிய பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்குச் செலுத்த வேண்டுமென விதிக்கப்பட்ட போது ஜர்மன் பிரிநிதிகள் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட புள்ளிவிபரத் தகவல் முறைமையொன்றைப் பகுப்பாய்வு செய்த கேன்ஸ், ஜர்மனிக்கு விதிக்கப்பட்டுள்ள மிகப் பெரும் நட்டஈட்டுத் தொகையைச் செலுத்தும்படி வற்புறுத்துவதன் மூலம் முழு ஐரோப்பியப் பொருளாதாரத்திற்கும் பாதகமான பொருளாதார எதிர்விளைவுகளுக்கு அண்மிய எரிர்காலத்தினுள் முகம்கொடுக்க நேரிடுமெனவும், அதன் மூலம் ஜர்மனியின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைவதற்குக் காரணமாயமையலாம் எனவும் வலியுறுத்திக் கூறினார். மேற்படி எதிர்வுகூறலை உண்மைப்படுத்தும் வகையில் 1923 ஆம் ஆண்டாகின்ற போது நட்டஈட்டின் பங்கீட்டுத் தொகை அதிகமாயிருந்தமையின் காரணத்தினால் ஜர்மன் பொருளாதாரத்தின் பணவீக்க வேகம் கட்டுப்படுத்த முடியாத மட்டத்தை நோக்கி அதிவேகமாக அதிகரித்துச் சென்றது.
ஒப்புமைக் கோட்பாடு தொடர்பில் தத்துவரீதியான மற்றும் புள்ளிவிவரவியல் உறுதிப்படுத்தல்களை உள்ளடக்கிய கேன்ஸின் ஒப்புமை தொடர்பான ஆய்வுக் கட்டுரை (Treatise of probability) 1921 இல் வெளியிடப்பட்டதோடு, உண்மைக்கும் போலிக்கும் இடையிலுள்ள திட்டவட்டமான உண்மைப் பெறுமானங்களை அடையாளம் காண்பதற்கு உதவியாயிருக்கக் கூடிய மிகப் பெறுமதிமிக்க ஆய்வுகளை இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்துவதற்கு இவரால் முடியுமாயிற்று.
1923 இல் வெளியிடப்பட்ட கேன்ஸின் "நிதிச் சீர்திருத்த saulolysis 35 (660" (Tract of Monetary Reform) epolob S6 fi அப்போது ஐரோப்பிய தேசிய பொருளாதாரத்தினால்
2008 மே / ஜூன் - குறிப்பேடு

Page 23
கடைப்பிடிக்கப்பட்ட பணச் சுருக்க முறையிலான, மூடிய பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். எந்தவொரு நாடும் தமது உள்நாட்டு விலை உறுதிப்பாட்டைப் பேணிக்காக்கும் பொருட்டு தமது பொருளாதாரக் கொள்கைகளை இலக்கிடுதல் வேண்டுமென மிகவும் நுணுக்கமாக இதன் மூலம் தர்க்கங்களை முன்வைத்த கேன்ஸ் இதன் பொருட்டு நெகிழ்வுத் தனி மையுடன் கூடிய செலாவணி முறையொன்று கடைப்பிடிக்கப்படுதல் வேண்டுமெனவும் முன்மொழிந்தார். கடன் வட்டம் தொடர்பான பிரசித்திபெற்ற "விக்செலியன் கோட்பாட்டை” (Wicksellian Theory) பயனுறுதியான விதத்தில் விளக்குகின்ற கேன்ஸின் ”நாணயம் தொடர்பான ஆய்வுக் கட்டுரை" (The Treatise on Money) 669) b (oug3LDg5 failB b|T6) SU605 (6. தொகுதிகளாக 1930 இல் வெளியிடப்பட்டது.
முழு உலகும் ஏற்றுக்கொள்கின்ற பொருளியலாளராக மாறுவதற்கு கேன்ஸ்"க்கு பெருமளவு உதவியாயமைந்தது 1936 இல் வெளியிடப்பட்ட "தொழில் நிலை, இலாபம் மற்றும் நாணயம் (og5 L fl II 60I (OLTgblå (35TL JTG" (General Theory on Monetory, Interst and Money) 669))lb fabó fryb3, b|To T(35lb. (Sg56, மூலம் இவரால் வெளிப்படுத்தப்பட்ட அவதானிப்புகள் அட்போதிருந்த பொருளியல் உதாரணங்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்நூலின் ஜர்மன் மொழியிலான பதிப்புக்கு முன்னுரையொன்றை எழுதுகின்ற கேன்ஸ், தமது நூலின் மூலம் ஒன்றுதிரண்ட உற்பத்திக் கோட்பாடு (Theory of Aggregated Production) பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்படினும், இதனை, சுதந்திர போட்டி அடிப்படையிலான பொருளாதாரக் கோட்பாடுகள் அல்லது மிகவும் திறந்துவிடப்பட்ட (அரச தடைகளற்ற, A Large Degree Of LaisSc7 - Faire) பொருளியல் கோட்பாடுகளுடன் கூடிய பொருளாதார முறைகளை விட ஒரு சர்வாதிகார நாட்டினுள் மிக இலகுவாக அமுலாக்க முடியும் என்பதாக கேன்ஸ் கூறுகிறார். ஐரோப்பாவின் பாரிய பொருளாதாரச் சுருக்கம் (Great Depression) தொடர்பான அவதானிப்புகளின் அடிப்படையில் கேன்ஸ் ஒட்டுமொத்தமான கேள்வி தொடர்பிலான எண்ணக்கருவை கோட்பாட்டு ரீதியில் தொகுத்து மேற்படி நூலின் மூலம் உலகிற்கு வழங்கினார். ஒரு நாட்டின் ஒட்டுமொத்தமான வருமானம் என்பது ஒட்டுமொத்தமான நுகர்வு மற்றும் ஒட்டுமொத்தமான முதலீட்டின் கூட்டுத்தொகையாகும் எனவும், தொழிலின்மை நிலைமையுடன் பயன்படுத்தப்படாத உற்பத்தி இயலளவு உள்ளபோது கூட தொழில் உருவாக்கம் நடைபெறலாம் எனவும் அதனுடாக அதிகரிக்கின்ற வருமானத்தின் மூலம் நுகர்வு மற்றும் முதலீட்டின் மீதான செலவு அதிகரிப்பது மட்டுமே நடைபெறுமெனவும் கேன்ஸ் கோட்பாட்டு ரீதியில் இந்நூலின் மூலம் விளக்கியுள்ளார்.
ஒட்டுமொத்தமான சேமிப்பானது மொத்த வருமானத்தின் மாற்றமுறும் இயல்பாகவே தீர்மானிக்கப்படும் என்பதால் முதலீட்டின்
2008 மே / ஜூன் - குறிப்பேடு

மீது நடைபெறுகின்ற செலவுகள் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைகின்ற குறைந்த வங்கி வட்டி வீதங்கள் உள்ள நிலைமையின் கீழ் கூட ஒரு நாட்டினால் தமது ஒட்டுமொத்தமான சேமிப்புத் தொகையை அதிகரிக்கச் செய்யலாம் என கேன் ஸ் வலியுறுத்துகின்றார். போட்டி ரீதியில் இயக்கச் சக்தியைக் கொண்ட பொருளாதாரத்தில் ஒட்டுமொத்தமான சேமிப்புத் தொகை. இறுதி விளக்கத்தின் போது ஒட்டுமொத்த முதலீட்டுக்குச் சமமாக இருக்குமென்பது கோட்பாட்டு ரீதியிலான விளக்கங்களின் மூலம் இந்நூலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிஉயர் தொழிலின்மை நிலவுகின்றபோது பொது விடயங்களின் பொருட்டு செலவிடுவதற்கு அரசாங்கத்துக்கு நேரிடுகின்ற தூண்டுதல்களின் போது கூட பயன்படுத்தக்கூடியதாயுள்ள ஆக்க விளைவுடன் கூடியதும் அதேபோன்று செயற்பாட்டு ரீதியிலானதுமான பொருளாதாரக் கொள்கைகள் பகுப்பாய்வு ரீதியில் இந்நூலில் தரப்பட்டுள்ளன. தற்கால பேரண்டப் பொருளியல் கோட்பாடுகளின் அடிப்படையாக இந்நூல் உலகம் பூராவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதி ஒருவரான ரூஸ்வெல்ட்டின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் தயாரிக்கப்படுகின்ற போது கேன்ஸின் கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். சனாதிபதி ஹர்ட் 3m376).jsi (Herbert Hover) J. L (83,656m565 (0. T(b6ful 6. கோட்பாடுகளை பின்பற்றிய ஒருவராவார். அப்போதைய (1930) ஐக்கிய அமெரிக்காவின் வரவேற்பைப் பெற்ற சிரேஷ்ட பொருளியலாளர்கள் கூட கேன்ஸின் பொருளியல் கோட்பாடுகளுடன் இணங்கியிருந்தார்கள் என்பதோடு, காலத்தின் போக்கில் இக் கொள்கைகள் உலகம் பூராவும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
1942 ஆம் ஆண்டாகின்றபோது முழு உலகினதும் வரவேற்பைப் பெற்ற புகழ்பெற்ற பொருளியலாளராக விளங்கிய கேன்ஸ் அதே ஆண்டில் சசெக்ஸ் மாநிலத்தின் டில்டனாக (Tilton in the Country of Sussex) GLJJ65 (3356,516m) (Baron Keynes) எனும் கெளரவப் பெயருடன் பிரபுக்கள் சபைக்கு நியமிக்கப்பட்டார்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது யுத்த நடவடிக்கைகளுக்கு எவ்வாறு செலவழிக்கப்பட வேண்டும் (HOW to Pay for the War?) என்பது பற்றிய கேன்ஸின் ஆலோசனைகள் தீர்க்கமானதாக இருந்ததோடு, பணவீக்கம் அதிகரித்து தேசிய பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைவதைத் தவிர்ப்பதற்கெனில் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒதுக்குப் பணத்திற்குப் பதிலாக வரிகளை அதிகரிப்பதன் மூலம் செலவுகள் தீர்க்கப்படுதல் வேண்டும் எனவும் கேன்ஸ் முன்மொழிந்தார். நட்பு நாடுகளின் யுத்த வெற்றிகளைத் தொடர்ந்து யுத்தத்திற்குப் பின்னரான நிவாரண வேலைகளில் கேன்ஸ் அதிகளவு தொடர்புபட்டார். பிறட்டன் வுட் Đ_t_6ổn_jLạđ560)560)u Jg) (Bretton Wood System) g5[[Lĩìgb(gbtồ பேச்சுவார்த்தைகளின் போது பிரித்தானிய தூதுக் குழுவின்
23

Page 24
தலைவராகவும் உலக வங்கி ஆணைக்குழுவின் (World Bank Commission) தலைவராகவும் பெரும் கடமைப்பொறுப்பொன்றை இவர் ஆற்றினார்.
glio (3,353 g5 is U6016.5 grills;560);55 (International Clearing Union) தாபிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட "கேன்ஸ் திட்டம்" (The Keyne's Plan) CUPGULĖ. இவர் நிதிக் கட்டுப்பாட்டின் பொருட்டு முழுமையானதும் துரிதமானதுமான ஒரு தட் டம் தேவையென்பதற்கான காரணங்களைச் சமர்ப்பித்தார். ஒரு உலக மத்திய வங்கியினையும் சர்வதேச தீர்ப்பனவு சங்கத்தையும் தாபிப்பதற்கான உரிய திட்டமிடல்கள் கேன்ஸ் திட்டத்தில் உள்ளடங்கியிருந்தன. அமெரிக்க பொருளியலாளர் ஒருவரான Gạ) mBf GDL j,6mùLİ 6O)6) li} (Harry Dextor White) Jon @ 356ÖT பொருட்டு மாதிரித் திட்டமொன்றை சமர்ப்பித்தார் என்பதோடு, பின்னர் இந் நிறுவனங்கள் தாபிக்கப்படுகின்ற போது அதுவும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கேன்ஸ் தனது வாழ்க்கை வரலாறு தொடர்பாகவும், மிகச் சிறந்த பொருளியலாளர்கள் மற்றும் பாரிய பணச்சுருக்க காலகட்டத்தில் மிகச் சிறந்த பிரதிமைகளாக விளங்கிய கொள்கை வகுப்போர் தொடர்பாகவும் எழுதிய கட்டுரைகள், 1912 இல் இருந்து @6) JJ JJ5|| 3560)6O6OOLDUî6Ò (O)6J6îu îILÜLILL. The Economic Journal சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டன.
ஒபெரா இசைக் கலையையும் நடனத்தையும் மிகவும் விரும்பிய கேன்ஸ், இரண்டாவது உலக மகா யுத்த காலத்தில் தாபிக்கப்பட்ட "கலை நுட்பங்கள் மற்றும் இசையை ஊக்குவிக்கும் 960)Lju î6ò" (Council for the Encouragement of Music & ArtsCEMA) செயற்பாட்டு அங்கத்தவராக விளங்கினார். இதனூடாக u gjöğJ5 J5/T6N)gjöß6Ò (GULLIGứuppb,f(bțbb Royal Opera House, Covent Gardent, Ballet Company at Sadlers 52, 3 J B 60) 6) நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றினார். யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 1946 இல் தாபிக்கப்பட்ட Art Council of Great Britain 6160)|lf 3560)6) நிறுவனத்தைத் தாபிப்பதில் ஸ்தாபகராக விளங்கிய கேன்ஸ் அதன் ஆரம்பத் தலைவராகவும் விளங்கினார் என்பதோடு, இந்நிறுவனத்தை முன்னேற்றுவதற்கான நிதியங்களைப் பெற்றுக்கொள்வதிலும் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
கேன்ஸின் பிரத்தியேக வாழ்க்கைத் தகவல்கள் அவ்வளவு பிரசித்தி வாய்ந்தனவாக இல்லை. சில தகவல்கள் தீய வழியில் பெயர் பெற்றவையாக உள்ளதோடு விமர்சிக்கப்படக் கூடியவையாகவும் உள்ளன. மிகச் சிறந்த கற்பனை ஞானத்தின் காரணமாக ஐரோப்பாவுக்கு மிகவும் அவசியமாயிருந்த ஒரு காலகட்டத்தில் (முதலாவது மற்றும் இரண்டாவது உலக மகா
கொழும்பு ~ 13, 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தையில் இலங்கை மத்திய வங்கி தொடர்பூட்டல்

யுத்த காலத்தில்) கேன்ஸ் எனப்படும் மிகச் சிறந்த இதர் உதித்தார் என்பதோடு, தமது அறிவின் மூலம் பொருளியல் விடயம் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ பொருளாதார முறையின் புனர்வாழ்வுக்காக முழுமையானதும் அதேபோன்று மிகச் சிறந்ததுமான சேவையை இவர் வழங்கினார். தற்போது EJo) உலகம் பூராவும் பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பொருளியல் கற்பவர்கள் இன்னமுமே, 'கேன்சிய பொருளியல் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்ற, இவரால் கோட்பாட்டு ரீதியிலும் பகுப்பாய்வு ரீதியிலும் மிகவும் மேம்படுத்தப்பட்ட பொருளியல் எண்ணக் கருக்களையும் கோட்பாடுகளையுமே கற்கின்றனர்.
கேன்ஸின் சமகாலத்தவரும் அதேபோன்று உலகப் புகழ்பெற்ற அறிஞருமான பெர்ட்றன்ட் ரசல் (Bertrand Russel) ஒரு தடவை கேன்ஸைப் பற்றிக் கூறுகையில், தாம் இதுவரை சந்தித்த மிகச் சிறந்த அறிஞர் கேன்ஸ் ஆவார் எனவும் அவருடன் கலந்துரையாடுவதன் மூலம் தாம் உயிர் பெறுவதாகவும் கூறியுள்ளார். கேன்ஸ்-பெர்ட்றன்ட் சந்திப்பைப் பற்றி, கேன்ஸ் அவரது மனைவியிடம் தான் புகையிரதத்தில் கடவுளைச் சந்தித்ததாக ஒரு தடவை கூறியுள்ளார்.
யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த பொறுப்புமிக்க கடமைகளை, அவருக்கு பிரத்தியேக வாழ்க்கையொன்று இல்லையெனும் அளவுக்கு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றினார். அதிக களைப்பும் வேலைப் பழுவும் காரணமாக தமது வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் இருதய நோயாளராக மாறிய கேன்ஸ் 1946 ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி டில்ரன் நகரத்தில் தமக்குச் சொந்தமான விடுமுறை இல்லத்தில் காலமானார். கேன்ஸின் தந்தையான ஜோன் நெவில் கேன்ஸ் (1852-1949) தமக்கு முன்னரே தமது புதல்வரின் பிரிவைக் காணுமளவு துர்ப்பாக்கியமுடையவராக இருந்தாரென்பதோடு, அவர் கேன்ஸின் மறைவுக்குப் பின் மூன்றாண்டுகள் உயிர் வாழ்ந்தார்.
நாகரிகத் தனி பயணப் பாதையில மனித முன்னேற்றத்திற்குத் தோள்கொடுக்கின்றவர்கள் எப்போதுமே முழு மனித சமுதாயத்திலும் மிகச் சிறியதொரு மாதிரியாகவே உள்ளனர். இரண்டு உலக மகா யுத்தங்களுக்கும் அதற்கு நேரொத்த விதத்தில் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கும் முகம்கொடுத்த ஐரோப்பிய நாகரிகத்தின் புனர்வாழ்வுக்கும் முன்னேற்றத்துக்கும் ஜோன் மேனாட் கேன்ஸ் எனப்படும் நபரினால் ஆற்றப்பட்ட சேவையை மிகத் துல்லியமாக அவதானிக்கின்ற ஒருவர் கேன்ஸின் பிரதிமையை மேற்கூறிய மாதிரியின் ஊடாகக் காண்பார் என்பதில் சந்தேகம்
இல்லை. 3
மைந்துள்ள (ஆட்டுப்பட்டித்தெரு) கெளரி அச்சகத்தில் அச்சிடப்பட்டு திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.