கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2009.07-08

Page 1

க, பொருளாதார இருமாத சஞ்சிகை

Page 2
சுவர்க்கத்தின் சுவை. இலங்கைத் தீவு அளவில் சிறியதாயிருப்பினும் அது உலக வரலாற்றினுள் வெறுமனே மேலுமொரு தீவு அல்ல. பண்டைய காலத்திலும், பல்வேறு காரணங்களல் எமது நாடு உலக மக்களது பெரும் கவனத்தை ஈர்த்த முக்கியமானதொரு நிலப்பரப்பாக விளங்கியது. ஏறத்தாழ கி.பி. 150 இல் உரோமில் வசித்து வந்த டொலமியினால் வரையப்பட்ட உலக வரைபடத்தின் மூலமும் இது தெளிவாகின்றது. பெரும்பாலும் சரியான கோணங்கள் மற்றும் திசைகளைக் கொண்டதாக வரையப்பட்ட இவ்வரைபடத்தில் இலங்கையானது அளவில் மிகப் பெரியதாகத் தெரியக்கூடிய வகையிலேயே வரையப்பட்டுள்ளது. மத்திய தரைக் கடல் பிரதேசத்தையும், ஐரோப்பாவையும் மற்றும் மத்திய கிழக்கையும் மிகப் பாராட்டத்தக்க விதத்தில் எடுத்துக்காட்டியுள்ள டொலமி இலங்கையைக் காட்டுகின்றபோது அதனைப் பெரிதாகக் காட்டியது ஏன்? அதற்கான காரணம் மிகத் தெளிவாக உள்ளது. அது வேறு எக்காரணத்தினாலுமல்ல, டொலமிக்கு முற்பட்ட காலத்திலிருந்துகூட உலக மக்களிடையே இலங்கை தொடர்பாகவிருந்த பெரும் வரவேற்பினாலாகும்.
இந்நாடு வெறுமனே ஒரு தீவு மட்டுமல்ல. பல்வேறான அதிசயங்கள், விலை மதிக்க முடியாத வளங்கள் நிறைந்த ஒரு நாடாகும். உயிர் பல்லினத் தன்மையைப் பொறுத்தவரை எமது நாடு உலக மட்டத்தில் மதிப்பைப் பெற்றுள்ளது. நிலப்பரப்பு நீளத்திலும் அகலத்திலும் சிறியதாயிருப்பினும் மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நதிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எரி மலைகளே பாலைவனங்களே அற்றது. சூறாவளிகளுக்கும் நில நடுக்கங்களுக்கும் உள்ளவதில்லை. வருடம் முழுவதும் சூரிய ஒளியைப் பெறுகின்றது. என்றும் பசுமையாயுள்ளது.
பண்டைய காலத்தில் தொலை தூரக் கிழக்கிலிருந்து மேற்கு வரை பரவியிருந்த கடல் வழியிலான பட்டுப் பாதையில் மத்தியில் அமைந்திருப்பதன் அனுகூலமும் எமது நாட்டுக்கு உரித்தாயுள்ளது. மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வருகைதந்த வணிகர்களும், நாடுகளைக் கண்டுபிடிப்போரும் இந்நிலத்தில் சந்தித்துக் கொண்டனர். வணிகர்கள் இங்கு வருகைதந்தது போக்கு வரத்தின் போது சந்திக்கின்ற ஒரு தங்குமிடமாகக் கருதியல்ல. இந்நாட்டிலிருந்து எண்ணிலடங்காப் பொருட்களை பெறக்கூடியதாக இருந்தமையினாலாகும்.
இந்நாட்டில் முத்துக்கள் கிடைத்தன. இரத்தினக் கற்கள் கிடைத்தன. இவை அனைத்தையும் தாண்டிச் செல்கின்ற வகையில் இந்நிலத்தின் சுவை பல்வேறான பயிர்களின் ஊடாக வெளிப்பட்டது.
அனைத்து உயிரினங்களும் உணவில் தங்கி வாழ்கின்றன. அனைத்து இனங்களும் தமது உணவை உற்பத்தி செய்யக் கூடியவையாயுள்ளன. ஆயினும் அந்த உணவுக்குச் சுவையூட்டக்கூடியவை, அவற்றின் தரத்தை வளப்படுத்தக்கூடியவை இப்புவியின் அனைத்துப் பிரதேசங்களிலும் கிடைப்பதில்லை. பண்டைய காலத்திலிருந்தே உலகத்திற்குச் சுவையையும் தரத்தையும் உற்பத்தி செய்துகொடுப்பதற்கு எம்மால் முடியுமாயிருந்தது. இது சுவையை உற்பத்தி செய்கின்ற ஒரு சொர்க்க பூமியாகும். எமது இந்த முக்கியத்துவத்தினை பண்டைய காலத்திலிருந்தே பல்வேறு இனத்தவர்களும் அறிந்திருந்தனர். அந்த இரகசியத்தை அறிந்திருந்தவர்கள் ஏனைய இனத்தவர்களிலிருந்து அதனை மறைப்பதற்கு முற்பட்டனர். அந்த இரகசியம் வெளிப்பட்டபோது அதன் அனுகூலத்தைப் பெறுவதற்கு யுத்தம் புரிந்தனர். இந்த நாட்டைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடினர். எமது நாட்டின் முக்கியத்துவத்தை நாம் அறியாதுள்ளோம். இப்போது நாம் இது இன்னொரு தீவு மட்டுமே என்றுதான் புரிந்துவைத்துள்ளோம். இந்த அறியாமையிலிருந்து நீங்குவதற்கான காலம் வந்துள்ளது. நாம் எம்மை அறியாதிருக்கும் வரை எமக்கு எமது முன்னேற்றத்தை உருவாக்கிக்கொள்ள (Մ)լգայո5l. இத்தடவை குறிப்பேடு" இதழின் மூலம் நாம் அதற்கானதொரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளும் முக்கிய நோக்கத்துடனேயே 'கறுவா’ பற்றிய தகவல்களை சமர்ப்பிக்கிறோம்.

குறிப் GuG ISSN 1391-7676
2009 ஜூலை /ஆகஸ்ட் ஒரு பிரதியின் வில்ை: ரூபாய் 10.00 வருடாந்த சந்தா: ரூபாய் 240.00 (தபாற் கட்டணத்துடன்)
தொடர்பூட்டல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி எனக் குறிப்பிடப்பட்ட காசுக்கட்டளைகள்/ காசோலைகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் "குறிப்பேடு” சஞ்சிகையை மாதாந்தம் அஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம்.
பணிப்பாளர், தொடர்பூட்டல் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, த.பெ.இல. 590, கொழும்பு.
கட்டுரைகள்: பக்கம்
கட்டுக் கதைகளினுள் மறைக்கப்பட்ட கறுவா பற்றிய கதை 3
இலங்கை சுற்றுலாக் கைத்தொழிலின் நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்திக்கு. 11
நாணயக் கொள்கை: உறுதியாக்கற் கொள்கை என்ற வகையில் அதன் செயற்பாடும் தாக்கமும் - II 16
பொருளாதாரப் பின்னடைவு 21
“குறிப்பேடு" சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள், கட்டுரை ஆசிரியரின் கருத்துக்களேயொழிய இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களாகாதிருக்கலாம்.
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 3
கட்டுக் கதைகளினு
கறுவா பற்
வினிதா (og5 TLTLITL6)
அறிமுகம்
இன்று போலவே பல நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இலங்கை மேற்கு, கிழக்கு ஆகிய இரு திசைகளினதும் வெளிநாட்டவர்களது தீவிர கவனத்திற்கு உள்ளாகியிருந்த ஒரு தீவாக இருந்தது. பல நாடுகளிலும் புகழ்பெற்று விளங்கிய மிகத் தரமான கறுவா மற்றும் ஏனைய வாசனைத் திரவியங்கள், யானைகள், முத்துக்கள் மற்றும் இரத்தினங்கள் அத்துடன் இலங்கையின் புவியியல்
ரீதியிலான அமைவிடம் ஆகியன இதற்குக் காரணமாக இருந்தது. வெளிநாட்ட வர்களைக் கவர்ந்த, இலங்கைக்கே
உரியதான கறுவாப் பயிர்ச் (OJuj60)35 மேலைத்தேய ந | ட ட வ ர் க ள ன
கவனத்தை ஈர்ப்பதற்குக்
காரண மாயமைந்த
காரணங்களில் பிரதானமானதாகும். இலங்கையின் கரை யோரப் பிரதேசங்கள் ஒல்லாந்தர்களின் கட்டுப் பாட்டின் கீழ் வந்த உடனேயே கிறிஸ்தவ சீர்திருத்தச் சபையின் பிரசாரத்தின் பொருட்டு வருகைதந்த மதகுரு பிலிப்புஸ் பெல்டியஸ்ஸின் ‘இலங்கையின் வரலாறு’ எனும் நூலில் இது தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ”. ஆயினும் இவை அனைத்தையும் விட மிகச் சிறந்ததும் இந்நாட்டில் மாத்திரம் செழிப்பாக வளர்கின்றதுமான விலை கூடிய கறுவா, ஒல்லாந்தர் மற்றும் போர்த்துக்கேயர் ஆகிய இரண்டு இனத்தவர்களும் கைப்பற்றுவதற்கு பல ஆண்டுகாலம்
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு
 

1ள் மறைக்கப்பட்ட
]றிய கதை
ஹேரத் திணைக்களம்
போராடிய ஹெலன் எனும் செல்வம்மிக்க திருமணப் பெண்ணைப் போன்றவளாவாள். ஒல்லாந்தில் மிகவும் உயர்வாகக் கருதப்படுகின்றதும் ஒரு இறாத்தல் மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றதுமான இந்நாட்டில் வளர்கின்ற கறுவா உண்மையிலேயே தூய்மையானதாகும்.” உலகின் ஏனைய பெரும்பாலான நாடுகளுடன் ஒப்பிடுகையில்
இலங்கை புவியியல்
ரீதியில் சிறியதொரு *مو. As } చ & bTLT35 இருப்பினும்
அதன் வெளிநாட்டுத் தொடர்புகள் தொடர்பான
வரலாறு U60ö60)LU
A SIT6) D வரை நீண்டு
செல்கின்றது. அத்தகைய நீண்டகால வரலாற்றினுள் 喜 & அராபியர்களால் செரந்திப் & என்றும் கிரேக்கர்களால்
晝 轰 தப்ரொபேன் என்றும்
劾 அழைக்கப்பட்ட இந்
நாட்டுடன் அவர்கள்
பல்வேறான வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டனர்.
பல நூற்றாண்டு காலமாக அநேகமாக உலகின் அனைத்து நாகரிகங்களிலும் கறுவா ஒரு வாசனைத் திரவிய மாகவும், ஒளடத மாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எகிப்து, உரோம் மற்றும் சீனாவில் கறுவா பயன் படுத்தப்பட்டுள்ளமை தொடர்பான வரலாறு மிகப் பண்டையகாலம் வரை செல்கின்றது. இந்நாடுகளில் கறுவா தங்கத்தை விடப் பெறுமதியான ஒரு பொருளாகக் கருதப்பட்டது. ஆதலால்

Page 4
பண்டைய காலத்தில் நாடுகளைக் கண்டு பிடிப்பதில் கறுவா மரமும் பிரதானமானதொரு காரணமாயமைந்தது. எகிப்து மற்றும் உரோம் உணவுகளைச் சுவையூட்டும் பொருட்டும், ஒளடதமாகவும் கறுவாவைப் பயன்படுத்தியுள்ளன. இதற்கு மேலதிகமாக எகிப்தில் கறுவா ஒரு பானமாகவும், இறைச்சியை பழுதடையாமல் நீண்ட காலம் வைத்திருக்கும் பொருட்டு பக்றீரியா வளர்ச்சியைத் தடுப்பதற்காகவும், சடலங்களைப் பழுதடையாது வைத்திருப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதென அறியக்கிடைத்துள்ளது. உரோமர்கள் மரணச் சடங்குகளின்போது தகன நடவடிக்கைகளின் பொருட்டும் கறுவாவைப் பயன்படுத்தியுள்ளனர். ஆயினும் மத்திய காலத்தில் மிக அரிதாக இருந்த கறுவா, அப்போது வாழ்ந்த ஐரோப்பாவின் மன்னர்கள் மந்திரிமார்கள் மற்றும் ஏனைய பணக்கார உயர் வகுப்பினர்களால் மாத்திரம் பயன்படுத்த முடியுமாயிருந்த ஒரு பொருளாக விளங்கியது. கறுவாப்பட்டைகளைப் பயன்படுத்துதல் செல்வந்தர்களின் சுபீட்சத்தை வெளிக்காட்டுகின்ற ஒரு அடையாளத்தைப் போன்றிருந்தது. உரோமப் பேரரசராக இருந்த நீரோ தனது இறந்த மனைவியின் தகனக் கிரியைகளுக்காக நகரத்தின் ஒரு வருடகால கறுவாப்பட்டை நிரம்பலுக்குச் சமமான அளவு பெருந்தொகை கறுவாப்பட்டைகளைப் பயன்படுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், Lj60ö60)Luj காலத்தில் கறுவா வர்த்தகத்தின் ஏகபோக உரிமை அராபிய வர்த்தகர்கள் மத்தியிலேயே சுழன்றுகொண்டிருந்தது. கறுவா வியாபாரத்திலிருந்து கிடைத்த அதிக இலாபம் தமது கைகளிலிருந்து நழுவி விடாது பாதுகாக்கும் பொருட்டு அதன் வர்த்தக ஏகபோக உரிமையை பாதுகாக்க வேண்டியிருந்ததோடு அதன் காரணமாக வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் இரகசியமாக நடைபெற்றன. இதற்கிணங்க கறுவா மரம் இருக்கின்ற இடத்தை ஒருபோதும் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடாதிருக்குமளவுக்கு அவர்கள் கவனமாயிருந்தனர். அவ்வாறு கறுவா உற்பத்தி தொடர்பான மூலாதரங்கள் இரகசியமாகப் பேணி வரப்பட்டதன் காரணமாக அது தொடர்பில் பல்வேறு கட்டுக் கதைகள் உருவாகியிருந்தன.
கறுவா தொடர்பான கட்டுக் கதைகள்
{ba}6JTi Luis006 (Cinnamon Bird) s)(3b5LDIT60T கட்டுக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிசயமான பாரிய கற்பனைப் பறவையொன்றாகும். இப்பறவையை சினமொல்கஸ் (Cinnamolgus) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரசித்திபெற்ற கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரொடோடஸ் (Herodotus) அவரது “The History” எனும் நூலில் கறுவா மற்றும் கறுவாப்

பறவை தொடர்பாக பின்வரும் கட்டுக் கதையொன்றைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். இதன்படி, அராபியாவில் வசித்த மேற்படி கறுவாப் பறவைகள், கறுவா மரம் வளர்கின்ற அறியாததொரு நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கறுவாத் தடிகளின் மூலம் தமது கூட்டை அமைத்தன. ஆயினும் அத்தகைய கூடுகள் மனிதர்களால் செல்ல முடியாத கடும் மலைச் சரிவுகளிலேயே அமைக்கப்பட்டன. கறுவாப் பறவைகள் கூடு கட்டுவதற்குப் பயன்படுத்திய கறுவாத் தடிகளைப் பெறுவதற்கு விரும்பிய அராபியர்கள் மாடுகள் மற்றும் மிருகங்களைக் கொலை செய்து, அந்த மிருகங்களின் இறைச்சியைப் பெரிய துண்டுகளாக வெட்டி, அத்தகைய இறைச்சித் துண்டுகளை கூட்டைச் சுற்றிலுமுள்ள சுற்றாடலில் போட்டுவிட்டார்கள். அப்போது பறந்து வரும் மேற்படி கறுவாப் பறவைகள் இந்த பெரிய இறைச்சித் துண்டுகளை கூடுகளுக்கு எடுத்துச் சென்றதும் அவற்றின் சுமை தாங்க முடியாது கூடுகள் உடைந்து விழுந்தன. இவ்வாறு உபாய வழிமுறையின் ஊடாகக் கறுவாத் தடிகளைப் பெற்ற அராபியர்கள் அவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தனர்.
S9rfl6Mö(BLTÜL6ò (Aristotle) Gn. SÐ61.Jg5] Historia Animalium (History of Animals) 6īggub (bsT6ô6ò @gbib5 9.J676|| சமமான கட்டுக் கதையொன்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
கறுவா சம்பந்தமாக பீனிக்ஸ் (Phonix) பறவையுடன் தொடர்புடைய எகிப்திய கட்டுக் கதையொன்று பின்வருமாறு. பீனிக்ஸ் என்பது தங்க நிறம் மற்றும் செந்நிறத்தைக் கொண்ட இறக்கைகளுடன் கூடிய நெருப்புப் பறவையொன்றாகும் (Firebird). இந்தப் பறவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிக காலம் வாழ்வதாக நம்பப்படுகின்றது. வாழ்நாளின் இறுதிக் கட்டமாகும் போது பீனிக்ஸ் பறவை கறுவாப் பட்டைகளைப் பயன்படுத்தி ஒரு கூட்டைக் கட்டும். இறுதிக் கூடு தீப்பற்றி எரியும் என்பதோடு அத்துடன் பறவையும் எரிந்து சாம்பலாகிவிடும். இன்னொரு கட்டுக் கதையில், அறியாத ஒரு நாட்டில் பிசாசுகள் மற்றும் இறக்கைகளுடன் கூடிய பெரிய பாம்புகள் நிறைந்துள்ள சேறு நிறைந்த சதுப்பு நிலத்தில் இருந்த கறுவா மரங்கள், இந்த அதிசயமான விலங்குகளால் எப்போதும் பாதுகாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உரோம நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானி 6Ọ(Cb6JJITGOT î6î6áî (Pliny) g560īgi Naturalis Historia (Natural History) எனும் நூலில் மேற்படி கட்டுக் கதைகளை விட வித்தியாசமானதொரு கருத்தை முன்வைக்கின்றார். இவரது கருத்துப்படி கறுவா தொடர்பான இவ்வாறான கட்டுக்
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 5
கதைகள், கறுவாவின் விலையை மேலும் உயர்த்துவதற்காகக் கட்டியெழுப்பப்பட்டவையாகும்.
இலங்கையின் கறுவா வர்த்தகத்தின் ஏகபோக உரிமையை மேலைத்தேய நாடுகள் கைப்பற்றுதல்
போர்த்துக்கேயர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட கறுவா ஐரோப்பிய நாடுகளுக்கு அரேபிய வர்த்தகர்கள் மூலமாகவே அனுப்பப்பட்டது. அரேபிய வர்த்தகர்கள் கறுவா தொடர்பான வர்த்தக ஏககோக உரிமையை நீண்ட காலம் பாதுகாத்தனர். ஆயினும் 16 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் (BTG)|Q. எடுத்து வைத்த லொரன்சோ டி அல்மேதா முதற்கொண்ட போர்த்துக் கேயர்கள் பல நூற்றாண்டுகளாக நிலவிவந்த மேற்படி வர்த்தக ஏகபோக உரிமையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர். அப்போதுகூட இலங்கை உலகில் புகழ்பெற்ற ஒரு தீவாக இருந்ததோடு, தற்செயலாகப் போன்று நடைபெற்றதாயிருப்பினும் மேற்படி இலங்கை விஜயத்தையிட்டு இவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். போர்த்துக்கேயர்கள் இத்தீவில் காலடி எடுத்து வைத்தமையைக் கேள்வியுற்ற காடினல் சபை இதனை விழா எடுத்துக் கொண்டாடியுள்ளனர் என்பது அறிக்கையிடப்பட்டுள்ளது. இவர்கள் இதன் பொருட்டு உரோம நகரத்தில் விசேட ஊர்வலமொன்றையும் வத்திக்கானில் விசேட ஆராதனையொன்றையும் நடத்தினர்.
அன்று ஆட்சி அதிகாரம் தொடர்பில் உறுதியற்றதும் நெருக்கடியானதுமான 560)6)6OLD60)u எதிர்கொண்டிருந்த கோட்டே இராச்சியத்தின் மன்னரை கீழ்ப்படிய வைத்த போர்த்துக்கேயர்கள் தமக்கு ஆண்டொன்றுக்கு 400 பஹார் (50 தொன்) கறுவா தருவதாயிருப்பின் மன்னரினதும் இலங்கைத்
காலனித்துவ காலகட்டத்தில் கறுவாக்
கட்டுகளை கட்டுபவர்கள்
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு
 

துறைமுகங்களினதும் பாதுகாப்பு தொடர்பில் முன்வருவதற்கு விருப்பம் தெரிவித்தனர். ஆட்சியதிகாரத்தைப் பொறுத்தவரை மிகவும் பலவீனமான நிலையிலிருந்த கோட்டே இராச்சியத்தின் மன்னர் போர்த்துக்கேயர்களின் மேற்படி பிரேரணைக்கு இணக்கம் தெரிவித்து அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். இதற்கிணங்க போர்த்துக்கேயர்கள் தமக்குக் கட்டணமாகக் கிடைக்கின்ற கறுவாப் பட்டைகளைக் களஞ்சியப்படுத்தும் பொருட்டு ஒரு பண்டகசாலையையும் நிர்மாணித்தனர். அக்காலகட்டத்தில் கறுவாவை வெளிநாட்டுச் சந்தைக்கு எடுத்துச் செல்வதில் ஈடுபட்டிருந்த அரேபிய வர்த்தகர்கள் போர்த்துக்கேயரின் மேற்படி வருகையினால் கடுமையாகக் கோபமடைந்தனர். இது தொடர்பில் போர்த்துக்கேயர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் மோதல்கள் உருவாகிய போதிலும் போர்த்துக்கேயர்கள் அராபிய வர்த்தகர்களை விஞ்சிச் சென்று அதிகாரத்தைப் பலப்படுத்திக்கொண்டனர். படிப்படியாக கரையோரப் பகுதியை கைப்பற்றிய போர்த்துக்கேயர்கள் கறுவா வர்த்தகத்தின் ஏகபோக உரிமையைத் தம் வசப்படுத்திக் கொண்டனர். இதன் மூலம் இவர்கள் பெருமளவில் இலாபம் ஈட்டினர்.
ஆயினும் 17 ஆம் நூற்றாண்டாகின்ற போது இலங்கையின் கறுவா வர்த்தகத்தின் ஏகபோக உரிமையைப் பெறுவது தொடர்பில் ஒல்லாந்தர்கள் கவனம் செலுத்தினர். இக்காலகட்டமாகின்ற போது இலங்கையின் ஆட்சி அதிகாரம் வீழ்ச்சியடைந்திருந்தோடு கண்டீய இராச்சியத்தை ஆட்சி புரிந்த இரண்டாவது ராஜசிங்க மன்னர், முழு இலங்கைத் தீவினதும் ஆட்சியை தம்வசப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இருந்தார். ஆயினும் கரையோரப் பகுதிகளின் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த போர்த்துக்கேயர்கள் இதற்குத் தடையாக
மரபு ரீதியிலான கறுவா பதனிடல்

Page 6
இருந்தனர். இதனால் கண்டீய இராச்சியத்தின் மன்னரைப் போர்த்துக்கேயர்களிடமிருந்து பாதுகாப்பதற்கும், அதன் சார்பில் கறுவா மற்றும் ஏனைய வர்த்தகப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கும் ஒல்லாந்தர்கள் இணக்கம் தெரிவித்தனர். உடன்படிக்கையின்படி, ‘.போர்த்துக்கேயர்களின் பயங்கர மான மற்றும் கொடுரமான செயல்களிலிருந்து சிங்கள மாமன்னரின் பேரரசை ஒல்லாந்தர்கள் எக்காலத்திலும் பாதுகாத்தல் வேண்டும், ‘.பணத்தின் மூலம் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்குப் பதிலாக மாமன்னரின் பேரரசில் உற்பத்தி செய்யப்படுகின்ற கறுவா, மிளகு, கராம்பு, இன்டிகோ, மெழுகு, அரிசி மற்றும் ஏனைய வர்த்தகப் பண்டங்களின் மூலம் கொடுப்பனவுகளைச் செய்ய முடியும். இதில் காட்டுக் கறுவா மற்றும் தரம் குறைந்த கறுவா உள்ளடங்காது. (பல்டியஸ்). இவ்வாறு ஒல்லாந்தர்கள் போர்த்துக்கேயர்களிடமிருந்த கறுவா தொடர்பான ஏகபோக உரிமையை உரித்தாக்கிக் கொள்ளும் போராட்டத்தை ஆரம்பித்தனர். 1640 இல் ஒல்லாந்தர்கள் போர்த்துக்கேயர்களின் வர்த்தக ஏகபோக உரிமையை நிறுத்தினார்கள் என்பதோடு 1658 இல் போர்த்துக்கேயர்களை முற்றாக இலங்கையிலிருந்து துரத்திவிட்டு љрjбШТ வர்த்தகத்தை முழுமையாகவே அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். அதன் பின்னர் ஒல்லாந்தர்கள் கறுவாப் பயிர்ச் செய்கையை முன்னேற்றும் பொருட்டு ஐக்கிய கீழைத்தேய இந்திய வர்த்கக் கம்பனியை (Vereenidge Oost Indishe Compagnie - VOC) GibbsT"Gö535 GabsT60ötG வந்தனர். அதேபோன்று கறுவாப் பட்டை தட்டுபவர்களை நிருவகிக்கும் பொருட்டு தனியானதொரு படைப் பிரிவையும் ஈடுபடுத்தினார்கள். கறுவாப் பட்டை தட்டுபவர் ஒருவர் ஒல்லாந்தர்களுக்காக 12 ரோப் கறுவாப் பட்டையை அதாவது 52-62 இறாத்தல்களை தட்டுதல் வேண்டும். ஆனால் இதற்காக உள்நாட்டு கறுவா தட்டுபவர்களுக்கு எவ்விதக் கூலியும் வழங்கப்படவில்லை என்பதோடு, அவர்களுக்குத் தேவையான அரிசி, உப்பு ஆகியவை மட்டும் வழங்கப்பட்டன. அதுவரை கறுவா தானாகவே வளர்கின்ற காட்டுப் பயிராக இருந்த போதிலும் ஒல்லாந்தர்கள் கறுவா மரங்களைப் பயிரிடுவதற்கும் ஏனைய இடங்களுக்கு பயிர்ச் செய்கையை விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்தனர். இதன்படி மருதானை, அவரிவத்தை மற்றும் கதிரான ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு புதிதாக கறுவாப் பயிர்ச் செய்கையில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
கறுவா வர்த்தகத்தின் மூலம் ஈட்ட முடியுமாயிருந்த அதிக இலாபத்தின் காரணமாக ஒல்லாந்தர்கள் கறுவா தொடர்பில் மிகக் கடுமையான ஏகபோக உரிமையொன்றை நாட்டினுள் உருவாக்கினர். இதன்படி எவ்விடத்திலாவது

தானாகவே வளரும் கறுவா மரமொன்றைக் கூட வெட்டி வீழ்த்துதல் தடைசெய்யப்பட்டது. தமது வீட்டுத் தோட்டத்தில் அல்லது தமக்குச் சொந்தமான வேறு ஏதேனும் காணியில் கறுவா மரமொன்று தானாக வளர்ந்திருப்பின் கட்டாயமாக அதைப்பற்றி கறுவாப் பயிர்ச் செய்கை அட்தியட்சகருக்கு அறிவிக்க வேண்டியிருந்தது. அத்தகைய கட்டளையை மீறியவருக்கு அபராதத் தொகையைச் செலுத்துவதற்கு அல்லது வேறு தண்டனைகளை அனுபவிப்பதற்கு நேரிட்டது. நாட்டின் எவ்விடத்திலாவது வளர்கின்ற ஒவ்வொரு கறுவா மரமும் ஒல்லாந்தர்களுக்குச் சொந்தமானதாகக் கருதப்பட்டது. கறுவா மரங்கள் வளர்ந்திருக்கின்றனவா என்பதைப் பரிசோதிக்கும் பொருட்டு தனியார் காணிகள் மற்றும் வீட்டுத் தோட்டங்களுக்கு கறுவாப் பட்டை தட்டுபவர்களை அனுப்பி வைப்பதற்கு கறுவா அத்தியட்சகருக்கு அதிகாரம் இருந்தது. ஏதேனுமொரு காணியில் அவ்வாறு கறுவா மரமொன்று காணக்கிடைப்பின் அதனை உடனடியாக வெட்டி பட்டைகளை ஒல்லாந்த அரச பண்டகசாலைக்கு கொண்டுசெல்ல முடியுமாயிருந்தது. இதன்படி ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் கறுவா மரம் அரசாங்கத்துக்குச் சொந்தமான பெறுமதிமிக்க சொத்தாகக் கருதப்பட்டது. கறுவா அறுவடை அதிகரித்த சில சந்தர்ப்பங்களில் விலை குறைவடைவதைத் தடுக்கும் பொருட்டு ஒல்லாந்தர்கள் உற்பத்தி செய்யப்பட்ட கறுவாப் பட்டைகளை தீயிலிட்டு அழித்தனர்.
எவ்வாறாயினும், ஒல்லாந்தர் ஆட்சியின் பின்னர் இலங்கை ஆங்கிலேயர்களது ஆட்சியின் கீழ் வந்து ஒருசில வருடங்களின் பின்னர் உலகில் கறுவாப் பட்டை உற்பத்தி தொடர்பில் இலங்கை பெற்றிருந்த ஏகபோக உரிமையை படிப்படியாக இழக்கத் தொடங்கியது. 9 60õ60) DuJT60T கறுவாவாக (Real Cinnamon) கருதப்பட்ட இலங்கையின் கறுவாவுக்குப் பதிலீடாக கவழியா கறுவா சந்தைக்கு வந்ததோடு அவை ஒப்பீட்டளவில் விலை குறைவாயிருந்தன. கறுவா வர்த்தகத்தின் மூலம் இலாபம் ஈட்டலாம் என்பதைக் கண்ட இந்தியா மற்றும் ஜாவா ஆகிய நாடுகளும் கறுவா உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தன. இதன் மூலம் கறுவா உற்பத்தி அதிகரித்து விலை வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதற்கிணங்க 1835 இல் 9 சிலிங் 9 பென்ஸ"களாக இருந்த ஒரு இறாத்தல் கறுவா 1840 இல் 5 சிலிங்களாக குறைவடைந்தது. மேற்படி விலை வீழ்ச்சி இலங்கையின் கறுவா உற்பத்தியில் மிகப் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1835 இல் 1 சிலிங்காக இருந்த கவழியா ஒரு இறாத்தல் 1841 இல் 6 பென்ஸ"கள் வரை குறைவடைந்ததன் காரணமாக நுகர்வோர் விலை குறைந்த
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 7
கவரியாவைக் கொள்வனவு செய்வதற்கு முற்பட்டனர். இது இலங்கையின் கறுவா உற்பத்தி குறைவடைவதற்கு பெருமளவு ஏதுவாயமைந்தது. காலனித்துவ ஆட்சியாளர்கள் ஏனைய பெருந்தோட்டப் பயிர்கள் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்த ஆரம்பித்ததன் மூலம் கறுவா உற்பத்தியின் வீழ்ச்சி மென்மேலும் தீவிரமடைந்தது.
இன்றைய போக்கு
கறுவா மரத்தின் பிறப்பிடம் இலங்கையாயிருந்த போதிலும் தற்போது இந்தியா, வியட்னாம், பிரேசில், மடகஸ்கார், சீனா, இந்தோனேசியா, மலேசியா, பங்களாதேஷ், எகிப்து உள்ளடங்கலாக பல நாடுகள் வர்த்தகப் பயிராகக் கறுவாவை உற்பத்தி செய்கின்றன. ஆயினும் இப்பயிர்ச் செய்கையில் பெருமளவு, கறுவாவுக்குப் பதிலீடாக உள்ள கவழியா கறுவாவாகும். இலங்கைக் கறுவா எனப்படுகின்ற
01 வது அ உலகில் இலங்கைக் கறுவாவின்
2000 200 2002 மெக்சிக்கோ 5, 16.4 5,178.2 4,637.2 4 ஐக்கிய அமெரிக்கா 882.4 932.5 966.3 பேரு 60.5 846 637.6 கொலொம்பியா 596.7 477.7 607.5 ஸ்பெயின் 35.8 345.5 389.7 கெளதமாலா 437.7 34.5 356. 引6ö 2004 229.5 8.4
ஜர்மனி 168.9 65.6 164.9 B6. O. 2.2 .9 அவுஸ்திரேலியா 12.3 85.4 27. இத்தாலி 40 24.4 06.2 இந்தியா ஐக்கிய இராச்சியம் O8.8 9.8 90.6 நெதர்லாந்து 52.7 24.6 70.6 சுவிட்சர்லாந்து 84.9 53.0 68.9 ஆர்ஜன்ரீனா 1234 117.2 71.8 பிரான்ஸ் 30.6 13.3 17.9 பொலீவியா 10.8 274.6 56.5 நிக்கரகுவா 90.7 O3.6 90.0 ஈக்வடோர் 3360 353. 400.4 தென் ஆபிரிக்கா 16.2 29.3 35 பெல்ஜியம் 40 யப்பான் 20.3 43 17.6 ஏனைய நாடுகள் 436.5 626.2 638.7
மொத்தம் 10, 103.00 10,443.70 10,834.40 ll,C
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

9 60öï60)DuJT607 5ûBl6)TT dño01{3LDITLDLb difloù6îlastib (Cinnamomum Zeylanicum) எனும் விஞ்ஞானப் பெயரால் அழைக்கப்படுகின்ற கறுவா மரத்திலிருந்தே பெறப்பட்டது. இச் சொல் பண்டைய காலத்தில் வெளிநாட்டவர்கள் இலங்கையை அழைத்த சிலோன் என்பதிலிருந்து பிறந்ததாகும். இக்கறுவா உலகிலேயே அதிசிறந்த கறுவாவாகக் கருதப்படுகின்றது. ஆயினும் இன்று சந்தையில் அநேகமாக கஷியா (Cinnamomum Cassia) மரத்திலிருந்து பெறப்பட்ட கறுவாவையே காண முடியுமாயுள்ளது. உலக கறுவாச் சந்தையில் 85 சதவீதத்தை மேற்படி கவழியா கறுவா உள்ளடக்குகின்றது. இதன்படி இலங்கைக் கறுவா எனப்படுகின்ற உண்மைக் கறுவா உலக சந்தையில் 15 சதவீதத்தையே பிரதிநித்துவப்படுத்துகின்ற து. அதேபோன்று உலக சந்தையில் மேற்படி இலங்கைக் கறுவா நிரம்பலில் 90 சதவீத பங்களிப்பை இலங்கையே கொண்டுள்ளது. இலங்கைக் கறுவாவை இறக்குமதி செய்கின்ற
|ட்டவணை
பிரதானமான இறக்குமதியாளர்கள்
மெற்றிக் தொன்
2003 2004 2005 2006 2007 2008 889.8 5,525.7 6,152.4 5,621.3 6,294.50 5,951.30 366.5 1461. 1470.5 1,396.3 1,301.90 1,229.00 |006.8 478.7 858.5 830. 694.3 8 .
727.2 79.2 675.5 800.6 446.5 695.3 428.3 360.6 367.8 408.0 397.5 399. 347.7 216.3 3744 358.3 326.0 284.7 1444 150. 189. 2042 222.6 1848 154.7 135.5 139.5 16.4 279.7 1774 3.7 6.8 2.2 4.3 28.9 4.5 35.6 52.2 840 83.8 17.2 84.0 142. 45.8 109.7 24.4 142.5 149.9 239.8 26.2 36.5 34.6
7.7 16.0 80.0 7.0 103.7 45.5 23.7 47.3 59.7 06.0 57.4 162.7 74.2 28.9 25.0 63.2 67.3 60.5 93.7 109. 106.6 98.3 7.7 50.2 9.3 37.6 7.4 40.8 38. 39.0 347.7 309.8 34.8 280.4 283.9 357.4 97.9 28.3 73.4 16.6 69.0 56.5 402.5 547.2 485.4 609.0 587.6 604.
19.3 33.2 6.4 32.5 45.3 5.7 4.0 3.9 5.7 19.9 5.0 2.6 7.3 26.0 63.2 68.8 52.7 563.5 747.7 356.7 537.3 497.4 5010
22.90 1 1,3914012,355.70 12,333.90 13,138.10 12,273.00
மூலம் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை இலங்கை மத்திய வங்கி

Page 8
நாடுகளில் மெக்சிக்கோ முதன்மை வகிக்கின்றது. அந்நாடு இலங்கையின் மொத்த கறுவா ஏற்றுமதியில் 50 சதவீதத்தைக் கொள்வனவு செய்கின்றது. (01வது அட்டவணை)
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் கமத்தொழில் அமைப்பின் அறிக்கைகளின் பிரகாரம் உலக கவழியா கறுவா உற்பத்தியில் ஏறத்தாழ 40 சதவீதத்தை இந்தோனேசியா உற்பத்தி செய்கின்றது. அதேபோன்று சீனா மலேசியா ஆகிய நாடுகளும் கஷியா கறுவாவை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்ற நாடுகளாக உள்ளன. உலக சந்தையில் கவழியா கறுவாவின் விலை இலங்கைக் கறுவாவின் விலையிலும் நான்கு மடங்கை விடக் குறைவானதாயுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூட உலக கறுவாச் சந்தையின் விலைகளின் நிலைமை இதை விட அதிக மாற்றமானதாக இருக்கவில்லை. பல்டியஸ்ஸின் கூற்றுப்படி '.இலங்கையில் ஒரு பஹார் கறுவாவை (ஒரு பஹார் என்பது 480 இறாத்தல்கள்) 50 அல்லது 60 ரியால்களுக்கு விற்பனை செய்ய முடியுமாக இருந்த போதிலும் காட்டுக் கறுவாவுக்கு 10 அல்லது 12 ரியால்களே கிடைத்தன.
தற்போது இலங்கையில் கறுவாப் பயிர்ச் செய்கை நடைபெறுகின்ற நிலத்தின் பரப்பளவு அண்ணளவாக 26,000
2 வது அட்டவணை இலங்கையின் வருடாந்த கறுவா உற்பத்தி, ஏற்றுமதியின் அளவு மற்றும் பெறுமதி 1999-2008
ஆண்டு 。燃。 9ಠ್ಠಲನ್ನು ஏற்றுமதிப் பெறுமதி
1999 12,220 10,486 3,530
2000 12,320 10,103 3,442
2001 12,615 10,444 3,784
2002 12,920 10,837 4,303
2003 13,018 11,025 4,335
2004 12,805 11,391 4,728
2005 13,382 12,365 5,855 2006 12,994 12,334 6,879
2007 13,362 13, 138 8,380 2008 13,427 12,273 8,948
elpGuib. Economic and Social Statistics of Sri anka 2009 Central Bank of Sri Lanka

ஹெக்ரயார்களாகும். இது சிறு காணிச் சொந்தக்காரர்களுக்குரிய ஒரு பயிராக உள்ளது. கறுவாப் பயிர்ச் செய்கையுடன் கூடிய ஒட்டுமொத்தக் காணிகளில் 97 சதவீதமானவை ஒரு ஹெக்ரயாருக்கும் குறைவான சிறு காணித் துண்டுகளாக உள்ளன. இலங்கையில் கறுவாப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை அண்ணளவாக ஒரு இலட்சமாகும். வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித் தருவதில் நான்காம் இடத்திலுள்ள ஏற்றுமதிப் பயிர் கறுவாவாகும். இலங்கையின் வருடாந்த கறுவா உற்பத்தி 15,000 மெற்றிக் தொன்களாக உள்ளதோடு, இதில் ஏறத்தாழ 78 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. (02வது அட்டவணை)
கறுவாப்பட்டைச் சுருள்கள், சிறிய சுருள் துண்டுகள், சிப்ஸ், பெதரின், இலை எண்ணெய் மற்றும் கறுவாப்பட்டை எண்ணெய் ஆகிய பல்வேறு வடிவங்களில் இலங்கையின் கறுவா ஏற்றுமதி செய்யப்படுகின்றது. எவ்வாறாயினும் கறுவா விலைகளில் குறிப்பிடத்தக்களவு பின்னடைவையும் பயிரிடப்படுகின்ற நிலப் பரப்பில் குறைவையும் காண முடியாதிருப்பினும் (03வது அட்டவணை) இலங்கையின் கறுவாக் கைத்தொழில் தற்போது பல பிரச்சினைகளையும் எதிர்நோக்கியுள்ளது.
03 வது அட்டவணை கறுவா பயிரிடப்பட்ட நிலத்தின் பரப்பளவு மற்றும் ஏற்றுமதி விலைகள் 1999-2008
ஆண்டு பயிரிடப்பட்ட நிலத்தின் ஏற்றுமதி விலைகள்
பரப்பளவு (ஹெக்றயார்) (ஒரு கிலே! கிறம் - ரூபt) 1999 24,570 336.73
2000 24,671 340.69
2001 24,568 362.31
2002 25,355 397.07
2003 26, 110 393.2
2004 25,086 415.06
2005 26, 102 473.5
2006 25,615 557.7
2007 25,756 637.83 2008 26,768 729.09
typootb: Economic and Social Statistics of Sri lanka 2009 Central Bank of Sri Lanka
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 9
இதில் பிரதானமான பிரச்சினை, அதிகளவிலான உற்பத்திச் செலவினமாகும். பெரும்பாலும் உற்பத்திச் செலவினத்தில் அரைவாசியை கறுவா பதனிடுபவர்களுக்குச் செலுத்துவதற்கு காணிச் சொந்தக்காரர்களுக்கு நேரிடுகின்றது. இதைத் தவிர பயிர்ச் செய்கையின் பராமரிப்புக்காகவும் குறிப்பிடத்தக்களவு செலவினத்தை ஏற்க நேரிடுவதால் கைத்தொழிலின் செலவினம் உயர் மட்டத்தில் நிலவுகின்றது. கறுவாப் பயிர்ச் செய்கையை சிறந்த முறையில் பராமரிப்பதாயிருப்பின் ஒரு ஏக்கர் பயிர்ச் செய்கையிலிருந்து ஆண்டொன்றுக்கு சராசரியாக 400-500 கிலோ கிறாம் விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியுமாயுள்ளது. ஆயினும் உரம் போன்ற உள்ளீடுகளின் அதிகளவிலான விலைகளின் காரணமாக சிறு காணிச் சொந்தக்காரர்களால் பயிரின் பராமரிப்பை சிறந்த முறையில் மேற்கொள்ள முடியாதுள்ளது. ஆதலால் இவர்களது வருடாந்த சராசரி கறுவா உற்பத்தி ஒரு ஏக்கருக்கு ஏறத்தாழ 200 கிலோ கிறாழுக்கு மட்டுப்பட்டதாயுள்ளது. கடந்த பல வருடங்களாக ஏற்றுமதிக் கமத்தொழில் திணைக்களத்தினால் கறுவாப் பயிர்ச் செய்கை முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உற்பத்தி மேம்பாட்டின் பொருட்டு புதிதாக கறுவா பயிரிடுதல், மீள்பயிர்ச் செய்கை மற்றும் பயிர்ச் செய்கைக்கான புனர்வாழ்வளிப்பு ஆகிய பயிர்ச் செய்கை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. மேற்படி நடவடிக்கைகளை அமுலாக்கும் பொருட்டு நிதியுதவி, தொழில்நுட்ப அறிவு மற்றும் நடுகைப் பொருட்களை வழங்குதல் மூலம் கறுவா பயிரிடுபவர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கறுவாப் பயிர்ச் செய்கை முகம்கொடுத்துள்ள சவால்களை வெற்றிகொள்ளும் பொருட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ள மானிய வேலைத்திட்டங்களின் கீழ் 2008 ஆம் ஆண்டில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு தொழிற்படு மூலதனத் தேவையை முன்னிட்டு சலுகை வட்டி வீதத்தின் கீழ் கடன் வழங்குதல் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கறுவாப் பயிர்ச் செய்கையாளர்களிடமிருந்து உத்தரவாத விலையின் கீழ் கறுவா கொள்வனவு செய்யும் பொருட்டு விசேட ஊக்குவிப்புக் கொடுப்பனவுத் திட்டமொன்றும் செயற்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும் உள்நாட்டு ரீதியில் கறுவா உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகின்ற அதேவேளை இதற்கு நேரொத்த வகையில் ஏற்றுமதி வளர்ச்சியின் பொருட்டும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியுள்ளது. தேயிலைப் பயிர்ச் செய்கை பிரித்தானியர்களால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

போதிலும் இன்று உலக தேயிலைச் சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு கிடைத்துள்ள இடத்திற்கு சமமானதொரு நிலைமையை உலக கறுவாச் சந்தையில் உறுதிசெய்வதற்கு, இலங்கைக்கே உரியதான கறுவா உற்பத்திகளால் முடியாதுள்ளதென்பதைக் காணக் கூடியதாயுள்ளது. இதில் கறுவா உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தலும், அதன் தரம் பற்றிப் பிரசாரம் செய்தலும் வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இலங்கையின் கறுவா உற்பத்திகளின் தரம் தொடர்பிலான நம்பகத்தன்மை வெளிநாட்டுச் சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, அவ்வாறான பாதகமான நிலைமைகளைத் தவிர்க்கும் பொருட்டு கறுவா உற்பத்தி மற்றும் பதனிடலை அவற்றின் தரத்தை பாதுகாக்கின்றவாறு மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதன் பொருட்டு ஏற்றுமதிக் கமத்தொழில் திணைக்களத்தினால் கறுவா அறுவடை செய்கின்றவர்களுக்குப் பயிற்சியளிக்கின்ற வேலைத்திட்டமொன்றின் ஊடாக உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு பயிற்சி நடவடிக்கைகளின் பொருட்டு கறுவா பதனிடல் பயிற்சி நிலையமொன்றும் தாபிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையின் கறுவாவுக்கு பதிலீடாக உலக சந்தையில் பெருமளவில் விற்பனை செய்யப்படுகின்ற கவழியாவின் (சினமோமம் கஷியா) விலை உண்மைக் கறுவாவின் விலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த LDL-556) நிலவுகின்றது. அதேபோன்று கவியா உற்பத்திகளில் குமரீன் எனும் புற்றுநோயை உருவாக்கக்கூடிய இரசாயனச் சேர்க்கைகள் அதிகளவில் உள்ளடங்கியுள்ளதென்பது தெரியவந்துள்ளது. மேலும், அண்மைக்கால கற்கைகளின் மூலம் வெளிவந்துள்ளவாறு கறுவாவில் ஒளடதப் பெறுமதிவாய்ந்த கூட்டமைவுகள் பல உள்ளடங்கியுள்ளன. இவ்வாறான காரணங்களால் இலங்கைக் கறுவாவுக்கு உலக சந்தையில் கேள்வியை அதிகரிக்கச் செய்யக்கூடிய ஒரு பின்னணி நிலவுகின்றது. 2007 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இருந்து பெரும்பாலான நாடுகள் முகம்கொடுத்துள்ள நிதி நெருக்கடியின் தாக்கம் இலங்கைக் கறுவாவின் ஏற்றுமதியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும் நெருக்கடிக்கு உள்ளான நாடுகளின் பொருளாதாரம் சுமுக நிலையை அடைவதைத் தொடர்ந்து உலக சந்தையில் இலங்கைக் கறுவாவுக்கான கேள்வி மீண்டும் சுமுக நிலைக்கு வரும். ஆயினும் தற்போதைய கேள்வியைப் பாதுகாக்கும் பொருட்டும் அதனை மேலும் அதிகரிக்கச் செய்யும் பொருட்டும் பண்டைய காலத்தைப் போன்று, உலக சந்தையைக் கைப்பற்றக்கூடிய விதத்தில் கறுவாவின் தரத்தை அதிகரிக்கச்

Page 10
செய்தலே நிறைவுசெய்ய வேண்டிய பிரதானமான
விடயமாக உள்ளது.
2010 ஆம் ஆண்டாகின்றபோது இலங்கைக் கறுவாவின் ஏற்றுமதியை 5 சதவீதத்தால் (3000 மெற்றிக் தொன்) அதிகரிக்கச் செய்வதை இலக்காகக் கொண்டு ஏற்றுமதிக் கமத்தொழில் திணைக்களம் புதிய
கறுவா உற்பத்திகள் கறுவா உற்பத்திகள் தொடர்பாக சாதாரண உள்நாட்டு நுகர்வோரிடமுள்ள அறிவு கறுவாப் பட்டை மற்றும் கறுவா எண்ணெய்க்கு மாத்திரம் மட்டுப்பட்டதாயுள்ளது. ஆயினும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சில கறுவா உற்பத்திகள் உள்ளன.
கறுவா குழல்கள் (முழுமையான குழல்கள்) (Cinnamon Quills (Full tubes)) நன்றாக முதிர்ச்சியடைந்த கறுவா மரத்திலிருந்து பெறப்படுகின்ற, வெளிப்புறத் தோல் நீக்கப்பட்ட உட்புறப் பட்டை இவை ஒன்றன்மேல் ஒன்று வைக்கப்பட்டு சிறந்தமுறையில் இணைக்கப்பட்டு உட்புறத் துவாரம் அதே வகைக் கறுவாவிலிருந்து பெறப்பட்ட சிறு துணிக்கைகளைக் கொண்டு நிறப்பப்படுகின்றது. அதன் பின்னர் மறைக்கப்பட்ட ஒரு இடத்தில் காற்றில் உலர்த்தியெடுக்கப்படும்.
dispot gp6, goir(6356 (Cinnamon Quillings (broken tubes)) முழுமையான குழல்களிலிருந்து உடைந்த பகுதிகள்

அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றைத் தற்போது ஆரம்பித்து வைத்துள்ளது. இதில் உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தல், சந்தைத் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் அறுவடைகளைப் பதனிடுபவர்களுக்குப் பயிற்சியளித்தல், பதனிடும் அலகுகளை நவீனமயப்படுத்தல் ஆகிய துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
6pgasai (Cinnamon Featherings)
கறுவாப்பட்டைக் குழல்கள் தயாரிக்கப்படுகின்றபோது பட்டையிலிருந்து உடைந்து விழுகின்ற மிகச் சிறிய பகுதிகள். இதில் நிச்சயிக்கப்பட்ட ஒரு அளவினைக் கொண்ட துணிக்கைகளும் உள்ளடங்கலாம்.
qigoofds63).35856 (Cinnamon Chips)
முதிர்ச்சியடைந்த, (9BläbőBLDI601 அகற்ற (pigufIgb புறத் தோலுடன் கூடிய பட்டைகள். இவற்றை அகற்ற முடியாதுள்ளதால் சுரண்டி நீக்கப்படுகின்றது. சர்வதேச தரங்களுக்கு ஏற்ப மேற்படி உற்பத்திகளுடன் வேறு எந்தப் பொருளும் கலக்கப்படக்கூடாது.
86Ojisastu' L sport (Ground Cinnamon) ஒரே வகையான கறுவா அரைக்கப்பட்டுத் தயாரிக்கப்படுகின்ற கறுவாத் துாள்.
(upg6DIDurgOT asport (Whole Cinnamon) கறுவா தூள் தவிர்ந்த சந்தையிலுள்ள ஏனைய அனைத்து கறுவா உற்பத்திகளும்.
.6hTidfoo (Foxing) வெளிப்புறம் சிவப்பு மண் நிற தழும்புகளுடன்கூடிய கறுவாப்பட்டை
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 11
O O O இலங்தை சுற்றுலாக் ை
நிலைத்திருக்கத்தக்க அபி
அறிமுகம்
உலகின் மிகப் பெரியதும் அதேபோன்று துரிதமான வளர்ச்சியுடன் கூடியதுமான கைத்தொழிலாக சுற்றுலாக் கைத்தொழில் அறிக்கையிடப்பட்டுள்ளது. அதேபோன்று இது உலகில் மிக அதிகளவு தொழில்களை உருவாக்கக்கூடிய கைத்தொழிலாகவும் உள்ளது. இவ்வாறு உலக பொருளாதாரத் தில் மிக முக்கியமானதொரு கடமையை நிறைவேற்றுகின்ற சுற்றுலாக் கைத்தொழில், 2008 ஆம் ஆண்டில் 1.8 சதவீதத்தால் வளர்ச்சியடைந்தது. உலக பொருளாதாரத்திலும் அதேபோன்று இலங்கையின் பொருளாதாரத்திலும் சுற்றுலாக் கைத்தொழிலுக்கு விசேடமானதொரு இடம் உரித்தாகின்றது.
1977 ஆம் ஆண்டில் இருந்து இலங்கையின் பொருளாதாரம் கமத்தொழில் மற்றும் கைத்தொழில் ஆகிய இரண்டு துறைகளிலும் தங்கியிருத்தலுக்கு அப்பால் சென்று அதிகளவில் பணிகள் துறையில் தங்கியிருக்கும் போக்கினைக் காட்டுகின்றது. இதன்படி, 2008 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணிகள் துறையின் பங்களிப்பு 59.5 சதவீதமாக இருந்தது. அதேபோன்று சுற்றுலாத் துறையானது பணிகள் துறையில் குறிப்பிடத்தக்க பிரதானமான அங்கமாக உருவாகி வருகின்றது. இது 2008 ஆம் ஆண்டில் 342 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை வருவாயாகப் பெற்று வெளிநாட்டுச் செலாவணியைப் பெற்றுத் தருகின்ற மூலங்களில் நான்காவது இடத்தை வகித்தது. (1 வது அட்டவணையைப் பார்க்கவும்)
1. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு முந்திய சந்தர்ப்பங்கள் மட்டும்
கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன. 2. இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2008
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

தத்தொழிலின்
விருத்திக்கு O O. O. O. O. O. O. O.
அருண பண்டார தீகல பொதுப் படுகடன் திணைக்களம்
01வது அட்டவணை இலங்கையின் பிரதானமான வெளிநாட்டுச் செலாவணி மூலங்கள் வெளிநாட்டுச் செலாவண் வருவாய்கள் (ஐ.அ.டொலர் மில்லியன்)
மூலம் 2007 2008 1. புடவைகளும் ஆடைகளும் 3,340 3,469
2
வெளிநாட்டுத் தொழில் புரிவோர்களின் வருவாய் 2,502 2,918
3. தேயிலை 1025 1,272
4. சுற்றுலா வருவாய்
385 342. இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2008
இலங்கை சுற்றுலாத் துறைக்கு பொருத்தமான அனைத்துக் காரணிகளையும் கொண்டுள்ள ஒரு நாடாகும். ஆண்டு முழுவதும் கிடைக்கின்ற சூரிய ஒளி, பல்வேறான காலநிலை வலயங்கள், உயிர் பல்லினத் தன்மையுடன் கூடிய சுற்றாடல் முறைமை, 2500 வருட கால பெருமைமிகு வரலாற்றின் தொல்பொருள் சான்றுகள் மற்றும் விழுமியங்கள் நிறைந்த உள்நாட்டு ஆகிய காரணிகள் உண்மையிலேயே இலங்கையை சுற்றுலாத் துறையினுள் ஒரு சுவர்க்க பூமியாக மாற்றுகின்றது. மேற்படி அனுகூலமான நிலைமைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார முறையிலிருந்து பெறக்கூடியதாயுள்ள அனுகூலங்களின் ஊடாக வறுமையை ஒழித்தல், தொழிலின்மையைக் குறைத்தல், உயர் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அடையப்பெறுதல், வரவு செலவுப் பற்றாக்குறையைக் குறைத்தல், சென்மதி நிலுவையை திருப்திகரமானதொரு மட்டத்திற்கு கொண்டுவருதல் ஆகிய
11

Page 12
இலக்கை அடைவதற்கான இயலுமையும் கிடைக்கின்றது. இவ்விடயங்களை முன்னிட்டு இலங்கை அரசாங்கம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சினை முன்னிலைப்படுத்தி பாரியதொரு பொறிமுறையினை அமுலாக்கி வருகின்றது. சுற்றுலாக் கைத்தொழிலின் பொருட்டு அதிகளவு உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டு காலம் பயங்கரவாதத்திற்குப் பலியாகியிருந்தது. அப்பிரதேசங்களையும் விடுவித்து ஒரே நாடு என்ற வகையில் பெருமையுடன் முன்னேறுவதற்குத் தயாராகியுள்ள இச்சந்தர்ப்பம் சுற்றுலாக் கைத்தொழிலின் எதிர்காலத்திற்கும் பலமானதொரு அடிப்படையைச் சேர்த்துள்ளது. இவ்வாறான சிறந்த சூழ்நிலை உருவாகியுள்ள மற்றும் உருவாகி வருகின்ற ஒரு சந்தர்ப்பத்தில் சுற்றுலாக் கைத்தொழிலின் நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தியை முன்னிட்டு மேலும் சில விடயங்களைக் கலந்துரையாடுதல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கைச் சுற்றுலாத்துறையின் தற்காலப் போக்குகள்
2003 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை இலங்கைச் சுற்றுலாத்துறையில் ஒரு விதத்திலான மலர்ச்சியைக் காண முடியுமாயிருந்தது. மேற்படி ஆண்டுகளில் வருடாந்தம் சுற்றுலாப் பயணிகளது வருகை 5 இலட்ச எல்லையைத் தாண்டியதாயிருந்தது. ஆயினும் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளது வருகையில் ஒரளவு பின்னடைவைக் காணக்கூடியதாயிருந்தது. (2வது அட்டவணை) வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையால் சுற்றுலாப் பயணிகளது வருகையில் சாதகமானதொரு அதிகரிப்பு அண்மிய எதிர்காலத்தில் உருவாகுமென்பதில் சந்தேகம்
2வது சுற்றுலாத் துறையின்
விடயம்
சுற்றுலாப் பயணிகள் வருகை விடுதி அறைகளின் எண்ணிக்கை சுற்றுலாப் பயணி ஒருவரிலிருந்தான பெறுகை (வருடாந்த) சுற்றுலாப் பயணி ஒருவர் வந்து தங்கியிருக்கின்ற சராசரி நாட்கள் சுற்றுலாப் பயணிகளிலிருந்தான மொத்த வருவாய் ரூபா. மில்லியன்
12

இல்லை. இவ்வாறானதொரு சூழலில் 2010 ஆம் ஆண்டளவில் சுற்றுலாக் கைத்தொழில் அடையப்பெற வேண்டிய இலக்குகள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. மேற்படி ஆண்டில் குறைந்தபட்சம் பத்து இலட்சம் சுற்றுலாப் பயணிகளது வருகை எதிர்பார்க்கப்படுவதோடு, சுற்றுலாக் கைத்தொழிலை இலங்கையின் பிரதானமான வெளிநாட்டுச் செலாவணி மூலமாக மாற்றுதல், ஒரு சுற்றுலாப் பயணியின் சராசரி நாளாந்த செலவினை 155 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்தல், சுற்றுலா விடுதி அறைகளின் எண்ணிக்கையை 25,000 வரை அதிகரித்தல் ஆகியன ஏனைய பிரதானமான இலக்குகளில் உள்ளடங்குகின்றன.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடையப்பெறும் பொருட்டு தற்போது சுற்றுலாத் துறையிலுள்ள வசதிகளின் போதுமாந்தன்மையை அண்ணளவாக 100 சதவீதம் அதிகரிக்க வேண்டியுள்ளது. சுற்றுலாக் கைத்தொழிலை உயர் சந்தையுடன் கூடிய ஒரு கைத்தொழிலாக மாற்றியதன் பின்னர் அது பிரதானமான வெளிநாட்டுச் செலாவணி மூலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
டேவிட் ரிகாடோவினால் சமர்ப்பிக்கப்பட்ட ‘ஒப்பீட்டு அனுகூலக் கோட்பாட்டின்’ (அதாவது ஏதேனுமொரு பொருளை உற்பத்தி செய்கின்ற போது அல்லது பணியினை வழங்குகின்றபோது ஏனைய நாடுகளை விட பெறக்கூடிய அனுகூலமான நிலைமைகளைப் பயன்படுத்துதல்) அடிப்படையில் ஆராய்கின்றபோது இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழில் நாட்டின் பொருளாதார சுபீட்சத்திற்கு பாரியதொரு கடமையை ஆற்றக்கூடிய சாத்தியத்தன்மையைக் கொண்டுள்ளது.
அட்டவணை
போக்குகள் 2003 - 2008
2003 2004 2005 2006 2007 2008
500,642 566,202 549,308 559,603 494,008 438,475
4,137 14,322 13,162 14,218 14,604 14,793
65,536 74.283 66,223 76,100 86, 175 84,598
10.1 8.7 10.4 10 9.5
32,810 42,059 36,377 42,586 42,571 37,094
மூலம்: இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை - 2008
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 13
ஆயினும் இதன் பொருட்டு ஒழுங்கானதொரு வேலைத்திட்டத்தின் தேவை குறிப்பிடத்தக்கதாயுள்ளது. 90 ஆம் தசாப்தத்தின் இறுதி வரை மரபு ரீதியிலான சுற்றுலாக் கைத்தொழிலில் ஈடுபட்டுவந்த இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழில் இன்று அதற்கு அப்பால் சென்று பல்வேறு துறைகளின் ஊடாக வளர்ச்சியடைவதற்கு முயற்சிக்கின்ற போக்கினைக் காட்டுகின்றது. இதன்படி 'அதிசயம் நிறைந்த df3u gSol' (Sri Lanka Small Miracle) 676öıp 96ÖLuJIT6IIü பெயரை இலங்கைக்குப் பெற்றுக்கொடுத்து 660)6OTu போட்டியிடும் நாடுகளிடையே முன்னேறுவதற்கான வழிகள் திட்டமிடப்படுகின்றன.
இலங்கையின் சுற்றுலாக் கைத்தொழிலுக்கான எதிர்கால சவால்கள்
இலங்கை சுற்றுலா அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள இலக்குகளை அடைகின்றபோது
சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்ததான ஒரு கூற்றாடல் நாட்டினுள் நிலவுதல் மிக முக்கியமானதொரு தேவையாகும். இதன் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள், குறிப்பாக நெடுஞ்சாலைகள் முறைமையிலுள்ள குறைபாடுகள் மற்றும் குப்பை கூளங்கள் போன்ற பிரச்சினைகளுக்குத் துரிதமாகத் தீர்வு காண வேண்டியுள்ளது. தொடர்பாடல், விமான நிலையம் மற்றும் துறைமுகம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்கனவே ஓரளவு முழுமையான செயலாற்றுகை மட்டத்தை அடைந்துள்ளன. மேற்படி இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பல்வேறு விதத்திலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேற்கு மற்றும் கிழக்குக் கரையோரப் பகுதிகளைத் தழுவிய பிரதேசங்கள் மற்றும் நாட்டின் உட்பகுதியிலுள்ள பிரதேசங்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு சுற்றுலா வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதன் பொருட்டு காணிகளைச் சுவீகரித்தலும் அநேகமாக நடைபெற்றுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்படி விடயத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னர் பல சவால்களை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. மேற்படி கருத்திட்டங்களுக்கு நேரொத்த வகையில் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலா விடுதிகளை நிர்மாணிக்கும் பொருட்டு முதலீட்டாளர்கள் ஏற்கனவே முன்வந்துள்ளமை நல்லதொரு அடையாளமாகும். அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத் துறையின் பொருட்டு உருவாகக்கூடிய அதிக கேள்வியிலிருந்து பயன் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பாரிய அளவிலான முதலீடுகளின் பொருட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வேண்டியுள்ளது.
நிர்மாணிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகளினதும் வசதிகள், உயர் சந்தையைக் கொண்ட சுற்றுலாக் கைத்தொழிலின் பொருட்டு பொருத்தமான தரங்களுடன் கூடியதாக இருத்தல் அத்தியாவசியமானதொரு
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

விடயமாகும். இதன் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் விதப்புரை தேவைப்படுதல் பாராட்டத்தக்கதொரு விடயமாகும். மேலும் தற்போதுள்ள சுற்றுலா விடுதிகளின் அறைகளையும் அவ்வாறானதொரு மட்டத்திற்கு கொண்டுவரும் பொருட்டு ஒருசில சுற்றுலா விடுதிகளின் முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. நெடுஞ்சாலைகள் முறைமையின் பொருட்டு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியினுடான கடன்கள் மற்றும் அளிப்புகளின் மூலம் அரசாங்க தலையீடுகள் நடைபெற்ற போதிலும் தொடர்ந்தும் தனியார் துறையின் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இலங்கைக்குப் பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்கானதொரு வேலைத்திட்டம் தேவைப்படுகின்றது. இதன் பொருட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தல், வெற்றிகொள்ளவேண்டிய மேலுமொரு சவாலாக உள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத் துறையின் பொருட்டு உருவாகக் கூடிய அதிக கேள்விக்கு முகம் கொடுப்பதற்கும் அதேபோன்று முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கும் முதலில் அப் பிரதேசங்களின் மக்கள் வாழ்க்கையை சுமுக நிலைக்குக் கொண்டு வருதல் இலங்கை அரசாங்கம் முகம் கொடுத்துள்ள பிரதானமானதொரு சவாலாக உள்ளது. தற்போது அமுலாக்கப்பட்டு வருகின்ற 'வடக்கின் வசந்தம் மற்றும் 'கிழக்கின் உதயம்' ஆகிய பாரிய அபிவிருத்திச் செயற்பாடுகளின் ஊடாக முதலீட்டாளர்களுக்கு சாதகமானதொரு போக்கு தொடர்பான செய்தியே கிடைக்கின்றது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் வெளிநாடுகளில் நடத்தப்படுகின்ற பாரிய பிரச்சார வேலைத் திட்டங்களும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு உதவியாயமைந்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக சுற்றுலாக் கைத்தொழிலில் போதியளவு வளர்ச்சி ஏற்படுமென்பதில் சந்தேகமில்லை. ஆயினும், உயர் சந்தையுடன் கூடிய சுற்றுலாப் பயணிகளது வருகை மற்றும் அதிக நாட்கள் தங்கிநிற்கின்ற சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆகிய தர ரீதியிலான வளர்ச்சியுடன் கூடிய சுற்றுலாத் துறையின் பொருட்டு அவை எவ்வளவு தூரத்திற்கு உதவியாயமைகின்றன என்பது விசேடமாக ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இது தொடர்பாக ஆராய்கின்றபோது சுற்றுலாக் கைத்தொழிலின் தரமான வளர்ச்சி 69(b. விதத்தில் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளதென்பதைக் காண முடியுமாயுள்ளது.
இன்று எமது போட்டியாளர்களாக மாறியுள்ள மாலை தீவு, தாய்லாந்து, இந்தியா, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு மேலைத்தேய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்கின்ற போக்கை காண முடியுமாயுள்ளது.
மேற்படி சவாலின் முன்னிலையில் இலங்கைச் சுற்றுலாத் துறை ‘ஒப்பீட்டு அனுகூல கோட்பாட்டின் படி சென்று தமக்கு அனுகூலமான ஒரு நிலைமையை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு செயற்பட வேண்டியுள்ளது. இதற்கிணங்க

Page 14
இலங்கையின் சுற்றுலாத் துறையானது எமது நாட்டின் குறைவற்ற இயற்கை வளங்கள், கலாசார மரபுரிமைகள் மற்றும் அறிவு நிறைந்த மற்றும் பண்பாட்டுடன் கூடிய மனித வளம் அத்துடன் தற்போதுள்ள பெளதீக வளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் புதிய எண்ணக்கருக்களின் ஊடாக செயற்படுகின்றமையைக் காண முடியுமாயுள்ளமை சாதகமானதொரு பண்பாகும். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, இலங்கைக்கு புதியதொரு அடையாளப் பெயரை பெற்றுக் கொடுத்து அதற்குப் பொருத்தமான விதத்தில் இலங்கையின் இயற்கை, கலாசார, மனித மற்றும் பெளதீக வளங்களின் அடிப்படையிலான பல்வேறு சுற்றுலா நிகழ்ச்சிகளின்பால் கவனம் செலுத்துதல் முக்கியமானதொரு விடயமாக உள்ளது. இதற்கு உதாரணமாக சுற்றாடல் நேயம்மிக்க சுற்றுலா (Echo - Tourism), கலாசாரச் சுற்றுலா (Cultural - Tourism), 6 Jé Gaguigiouslds, E. JisbO316)T (Adventure - Tourism), சுகாதார நோக்கம் கொண்ட சுற்றுலா (Health Tourism), pg5lb Fribb disigo).T (Religious – Tourism), மற்றும் மாநாடுகள், கருத்தரங்குகள் அத்துடன் கண்காட்சிகள் GET silio T60, Jibolo).T (MICE - Tourism, Meeting Incentives, Conference and Exhibitions) gau161360B3 சுட்டிக் காட்டலாம். ஆயினும் எமது கலாசார மரபுரிமைகள் அழிவுக்குள்ளாகியுள்ளமை மேற்படி சிறந்த போக்கின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகின்ற எதிர்பார்ப்புகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கையின் சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தை முன்னிட்டு தெரிவு செய்யப்படுகின்ற பெரும்பாலான புதிய பகுதிகள் எமது இயற்கை வளங்கள் மற்றும் தொல்பொருளியல் பெறுமதிமிக்க வரலாற்றுப் புகழுடன் கூடிய மரபுரிமைகள் மீதே தங்கியுள்ளன. ஆயினும், இன்று இந்த வரலாற்றுப் புகழ்மிக்க மற்றும் இயற்கை மரபுரிமைகளின் நிலைத்திருத்தல் கடும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது. விதிக்கப்பட்டுள்ள ஒருசில சட்டங்களுக்கு மத்தியில் கூட நடைபெறுகின்ற மேற்படி தேசிய குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு தெளிவானதொரு தேசிய வேலைத்திட்டம் தேவைப்படுகின்றது. அத்தேவையினை நிறைவேற்றும் பொருட்டு நாட்டினுள் கடுமையானதொரு சட்ட முறைமை இருத்தல் வேண்டும். தற்போதுள்ள தளர்வான சட்டங்கள் இப்பாரிய அழிவைத் தடுப்பதற்குப் போதியதாயில்லை. பிரதேச ரீதியில் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களாவது முன்வராதிருப்பின் தமது பிரதேசத்தினுள் சுற்றுலாத் துறை கண்ணெதிரே அழிவுறுவது நிச்சயம். இதன் பொருட்டு பிரதேச ரீதியில் ஏதேனுமொரு விதத்திலான நிர்வாக அதிகாரங்களுடன் கூடிய ஆர்வம்காட்டும் அனைத்துத் தரப்பினர்களும் (Stake Holders) உள்ளடங்கிய நிர்வாகக் கட்டமைப்பொன்றை தாபித்தல் ஒரு விதத்தில் தீர்வாக அமையலாம்.
அதேபோன்று பல் முடிவிடத்தைக் கொண்ட நாடென்ற வகையில் பல்வேறான அனுபவங்களைப் பெறுவதன் மூலம் ஏனைய போட்டியாளர்களுக்கு எதிராகப் பெற முடியுமான ஒப்பீட்டு அனுகூலத்தைப் பெற்றுக்கொள்ளும்
14

பொருட்டு இவ்வாறான பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றின் தேவை கடுமையாக நிலவுகின்றது. பிரதேச ரீதியில் பன்முகப்படுத்தப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தின் தேவையின் SGT தற்போது மறைவாகவுள்ள பெருமளவிலான மரபுரிமைகளை உலகிற்கு வெளிப்படுத்துவதற்கும் இதன் மூலம் வழி பிறக்கும். அதேபோன்று சிறந்ததொரு முகாமைத்துவத்தின் ஊடாக தர ரீதியில் வளர்ச்சியடைகின்ற ஒரு சுற்றுலாத் துறையின் பொருட்டு நாட்டிலுள்ள அனைத்து விதமான இயற்கை வளங்களையும் பயன்படுத்த முடியுமாவதன் மூலம் கிடைகின்ற அனுகூலங்களும் அதிகமாகும். மேலும், ஏதேனுமொரு பிரதானமான கவர்ச்சிமிகு இடமொன்றை மாத்திரம் மையமாகக் கொண்ட சுற்றுலாக் கைத்தொழிலும் எமது நாட்டில் உள்ளது. ஆயினும் அத்தகைய பிரதானமான சுற்றுலா கவர்ச்சிமிகு இடத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத் துறைக்கு ஏதேனுமொரு பெறுமதியைச் சேர்க்கக்கூடிய ஏனைய இடங்களையும் தொடர்புபடுத்துகின்ற வேலைத்திட்டம் இல்லாமை 69(5. குறைபாடாகும். அவ்வாறானதொரு வேலைத்திட்டத்தின் @@L_町母 வரையறுக்கப்பட்டதொரு கால கட்டத்தின் பொருட்டு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக பயனையும் அதேபோன்று உள்நாட்டு ரீதியில் அதிகளவு அனுகூலத்தையும் பெறலாம் என்பதில் சந்தேகமில்லை.
2008 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து முறையே 10.1 மில்லியன் மற்றும் 15 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்ததோடு, இலங்கை 2010 ஆம் ஆண்டிலேயே ஒரு மில்லியன் இலக்கை நோக்கிச் செல்வதற்கு எதிர்பார்க்கின்றது. நாம் பிராந்திய ரீதியில் மிகவும் பின்னடைந்துள்ளமையையே இது எடுத்துக்காட்டுகின்றது. இந்நிலைமையை ஓரளவுக்காவது தணிப்பதற்கெனில் இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளில் அதிக சதவீதத்தினர் உயர் சந்தையுடன் கூடிய சுற்றுலாத் துறையினுள் வருதல் கட்டாயமானதாகும். ஆயினும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கைகளின் பிரகாரம் சுற்றுலாப் பயணிகள் வருகையின் வளர்ச்சி வேகத்திற்கு ஒப்பீட்டளவில் தரப்படுத்தப்பட்ட சுற்றுலா விடுதிகளின் (Graded Hotels) அறைகள் பயன்பாட்டு வீதத்தில் (Rooms Occupancy Rate) 66 is faf S60606 (ou6óTU60)g(3u காணக் கூடியதாயுள்ளது. பிராந்தியங்களுக்கு இடையிலான (Intra Regional) சுற்றுலாப் Ljuj60olb6it வருகை தொடர்பிலான போக்கு அநேகமாக இதற்கு ஏதுவாயமைந்த காரணியாயிருக்கலாம். ஐரோப்பா உள்ளிட்ட மேலைத்தேய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளது சராசரி நாளாந்தச் செலவுடன் ஒப்பிடுகையில் ஆசிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகளது சராசரி நாளாந்தச் செலவு குறைந்த மட்டத்தில் உள்ளது. ஆதலால் மேற்படி பிராந்தியத்தின் சுற்றுலாப் பயணிகளது வருகையில் வளர்ச்சியைத் தொடர்ந்து சுற்றுலாத் துறையிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தில் அதற்கு சமமான வளர்ச்சியைக் காண முடியாதுள்ளது. இதன் மூலம், சுற்றுலாப் பயணிகளது வருகை அனுகூலமானதாகக் காட்டப்பட்டிருப்பினும் உண்மையிலேயே தர ரீதியிலான வளர்ச்சியில் ஒரு குறைபாடு உள்ளதென்பதே தெளிவாகின்றது.
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 15
அதாவது, அளவு ரீதியில் ஆராய்கின்ற போது சுற்றுலாத் துறையில் உள்ள வளர்ச்சியினை தர ரீதியிலானதொரு வளர்ச்சியாகக் காண முடியாதுள்ளது. இந்நிலைமையை மிகவும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கொண்ட திபெத் நாட்டின் சுற்றுலாக் கைத்தொழிலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அந்நாட்டு சுற்றுலா விடுதிகளில் அறையொன்றுக்கான சராசரிக் கட்டணம் 1,000 டொலர்களைத் தாண்டியதாயுள்ளது. ஆயினும் இலங்கையின் மிகவும் உயர் தரத்திலான சுற்றுலா விடுதியொன்றில் அறையொன்றுக்கான கட்டணம் 500 அமெரிக்க டொலர்களைத் தாண்டாது. இந்த விடயங்கள், எமது நாட்டின் சுற்றுலாத் துறையின் தர ரீதியிலான வளர்ச்சியின் பொருட்டான ஒரு வேலைத்திட்டத்தின் தேவையையே உணர்த்துகின்றன.
மேலும், பாரிய அளவிலான உள்நாட்டு முதலீட்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக் கருத்திட்டங்களை ஊக்குவிக்கின்ற நோக்கத்துடன் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு விதத்திலான சிறப்புரிமைகள் வழங்கப்பட்ட போதிலும், மேற்படி கருத்திட்டங்களுக்கு தனியார் சொத்துக்களைப் போன்றே நாட்டின் கலாசார, இயற்கை, சமூக மற்றும் மதம் சார்ந்த வளங்களை அர்ப்பணிக்க நேரிடுவதையும் காண்கிறோம். இங்கு அவ்வாறான அர்ப்பணிப்புகளைச் செய்கின்றவர்களுக்கு ஏதேனும் நிவாரணங்கள் வழங்கப்படுதல் வேண்டும். அதேபோன்று அப்பிரதேசங்களிலுள்ள அனைவருக்கும் அத்தகைய கருமங்களில் தலையிடுவதற்கான உரிமை உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதோடு, அதற்கான வாய்ப்புகளும் உருவாக்கப்படுதல் வேண்டும். தொழில் வாய்ப்புகள் தாராளமாகக் கிடைப்பதன் மூலம் மாத்திரம் சமூகத்திலுள்ள முரண்பாடுகளை ஒழிக்க முடியாதென்பதால் நிருவாகத்திலும் ஒரளவுக்கு தலையிடுவதற்கு பிரசைகளுக்கு வழியிருக்குமெனில் சமூகத்திற்கு அது உகந்ததாக அமையும்.
தனியார் துறையின் பங்களிப்பு அதிகளவில் தேவைப்படுகின்ற மேற்படி துறை தொடர்பிலான நிருவாகத் தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது தனியார் துறையும் அதில் ஓரளவு பங்களிப்புச் செய்யக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பொன்று தேவைப்படுகின்றது. இலங்கையின் சுற்றுலாத் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு அரச துறையுடன் ஒப்பிடப்படுகையில் மிகப் பாரியதாயுள்ளதால் இதில் ஒரு நியாயமான தன்மை உள்ளதென்பதை நாம் புரிந்துகொள்ளல் வேண்டும். தற்போது அமுலிலுள்ள செஸ் வரி (சுற்றுலாச் சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களினதும் மொத்த விற்பனைப் புரள்விலிருந்து 1% வீத வரி) மற்றும் விமான நிலைய வரி (ஐ.அ.டொ. 5)
2009 யூலை 1 ஆகஸ்ட் - குறிப்பேடு

ஆகியவை உள்ளடங்கிய சுற்றுலா அபிவிருத்தி நிதியத்தில் (Tourism Development Fund).91g.j66. Ursleb6ft 60U g56fu IIf துறை கொண்டுள்ளதால் அவர்களது பங்களிப்பு யாதார்த்த ரீதியானதாகும்.
இதன் பொருட்டு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ள பாரிய அளவிலான கருத்திட்டங்களுடன் பொருந்தச் செய்தல் வேண்டும். அவ்வாறு நேரொத்ததாக அமைகின்ற ஒரு வேலைத் திட்டம் சிறிய அலகுகளாக பிரதேச மட்டத்தில் செயற்படுத்தப்படுவதன் 96T6 அத்தகைய பிரதேசத்தில் சுற்றுலாக் கைத்தொழிலின் மேம்பாட்டுடன் தொடர்புபடுகின்ற அனைத்து ஆர்வம் காட்டும் தரப்பினர்களாலும், அதாவது சுற்றுலாக் கைத்தொழிலுடன் இணைந்த அரச நிறுவனங்கள், சிறிய மற்றும் பாரிய சுற்றுலா விடுதிகள், கைப்பணிக் கைத்தொழிலாளர்கள், சுற்றுலா முகவர்கள் மட்டுமன்றி மிக தாழ் மட்டத்திலான ஆர்வம் காட்டும் தரப்பினர்களான சுற்றுலா வழிகாட்டிகள், முச்சக்கர வண்டிச் சாரதிகள், வாகனங்களை வாடகைக்கு விடுகின்ற நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதிகளை வழங்குகின்ற வீட்டு உரிமையாளர்கள், மற்றும் நினைவுச்சின்ன விற்பனையாளர்கள், ஆகியோராலும் தமது பங்களிப்பை வழங்க முடியுமாயிருக்கும். அதேபோன்று பிரதேசத்தின் மக்கள், சுற்றாடல் அமைப்புகள், தொண்டர் அமைப்புகள், மத அமைப்புகள் மற்றும் மதத் தலங்கள் ஆகிய ஏனைய ஆர்வம் காட்டும் தரப்பினர்களும் இதன் பொருட்டு தமது பங்களிப்பை வழங்குவதன் ஊடாக சமூக, சுற்றாடல், கலாசார ரீதியிலான துறைகளிலிருந்து வருகின்ற தாக்கங்களையும் அதேபோன்று அத்தகைய துறைகள் மீதான தாக்கங்களையும் மிகவும் நட்புறவுடன் கூடிய விதத்தில் தீர்த்துக்கொள்ள முடியுமாயிருக்கும். மேலும், பிரதானமான கவர்ச்சிமிகு இடங்கள் மட்டுமன்றி அதைச் சுற்றிலுமுள்ள ஏனைய மரபுரிமைகளையும் தொடர்ந்து சுற்றுலாத் துறையின்பால் செலுத்தத்தக்கதான கைத்தொழில்கள், அமைப்புகள் மற்றும் நபர்களையும் முன்வரச் செய்வதன் ஊடாக சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் கிடைக்கும். இதன்படி இலங்கை சுற்றுலாக் கைத்தொழில் தேசிய ரீதியில் பாரிய அளவிலான துறையாகவும், பிரதேச ரீதியில் சிறிய கட்டமைப்புகளைப் பிர திநிதித்துவப்படுத்துகின்ற துறையாகவும் கருதப்படக்கூடியவாறு ஒழுங்கானதொரு வேலைத்திட்டத்தின் கீழ் அமுலாக்கப்படுகின்ற ஒரு செயற்திட்டமாக மாறும். இதனுாடாக உருவாகின்ற நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தியுடன் கூடிய கைத்தொழிலின் ஊடாக நாட்டின் பொருளாதாரம் மேலும் பலப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.
5

Page 16
நாணயக் கொள்கை: உறுதியாக்கற் கொள்கை - ولٹاواتaھTa، ترو قاويuسانأعلى
(இக்கட்டுரையின் 1 வது பகுதி கடந்த இதழில் வெ
எதிர்பாரா சுருங்கும் தன்மையிலான / மட்டுப்படுத்தப் பட்ட நாணயக் கொள்கை
ஏதேனுமொரு பொருளாதாரத்தில் சுருங்கும் தன்மையிலான அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நாணயக் G35|T6iGO)85GuJT660B (Contractionary/Restrictive Monetary Policy) கடைப்பிடிப்பதற்கு மத்திய வங்கி, நாணய மேலாதிக்கம் செயலாற்றுவதன் மூலம் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்தமான கேள்வியை குறைப்பதற்கும், விலை DLL. Isldb60)6TT வீழ்ச்சியடையச் செய்வதற்கும் இயலுமாயிருக்கும்.
8வது வரைபடத்தின் (a) பகுதியின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட நாணயக் கொள்கையின் தாக்கம் தெளிவாகின்றது. இங்கு நாணய மேலாதிக்கம் முறிகளை விற்பனை செய்யும் என்பதோடு, அதன் மூலம் வங்கி முறைமையின் ஒதுக்குகள் குறைவடைந்து கடன் நிதியங்களின் நிரம்பல் (S இல் இருந்து S, வரை) குறைவடைந்து வட்டி வீதம் (r, இல் இருந்து I, வரை) அதிகரிக்கின்றது. 8வது வரைபடத்தின் b பகுதியின் மூலம் காட்டப்பட்டுள்ளவாறு உயர் வட்டி வீதத்தின் காரணமாக ஒட்டுமொத்தக் கேள்வி (AD இல் இருந்து AD, வரை) குறைவடைகின்றது. எதிர்பாராவிதமாக ஒட்டுமொத்தக் கேள்வி குறைவடைவதன் ஊடாக உண்மை வெளியீடு (Y இல் இருந்து Y, வரை) வீழ்ச்சியடைந்து பொருளாதாரத்தின் விலை மட்டங்களும் (P இல் இருந்து P, வரை) வீழ்ச்சியடைகின்றது.
6

வகையில் அதன் وعاك
ளியிடப்பட்டது)
அணில் பெரேரா பொருளியலாளர் பொருளாதார ஆராய்சித் திணைக்களம்
விரிவடையும் கொள்கையில் போன்று மட்டுப்படுத்தப் பட்ட நாணயக் கொள்கையினது தாக்கம் பொருளாதாரம் எந்த மட்டத்திலுள்ளது என்ற காரணியில் தங்கியுள்ளது. குறிப்பாக ஒரு பொருளாதாரத்தில் நிலவுகின்ற உயர் கேள்வியின் பெறுபேறாக விலை மட்டம் அதிகரிக்கின்ற ஒரு அழுத்தம் உள்ளபோது பணவீக்கத்திற்கு எதிராகப் i ju j6jtu(655 முடியுமான மிகச் சிறந்த கொள்கையாக மட்டுப்படுத்தப்பட்ட கொள்கை உள்ளது.
9வது வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு ஒரு பொருளாதாரம் முழுமையான தொழில் நிலை மட்டத்திற்கு (Y) அப்பால் செயற்படுகின்ற (Y) சந்தர்ப்பத்தை ஆராயலாம். இங்கு உயர் கேள்வியின் காரணமாக பொருளாதாரத்தின் விலை மட்டம் அதிகரிக்கின்ற ஓர் இடர் நிலவுகின்றது. இதன் பெறுபேறாக வெறுமனே ஒரு பொருளாதார வீழ்ச்சியன்றி உயர் பணவீக்கம் உருவாகலாம். இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பணவீக்க ரீதியிலான அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு தகுந்தவாறு தகுந்த நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நாணயக் கொள்கையைப் பயன்படுத்த முடியுமாயுள்ளது. இதன் பெறுபேறாக ஒட்டுமொத்தக் கேள்வி (AD இல் இருந்து AD, வரை) குறைவடையும் என்பதோடு பொருளாதாரம் பணவீக்க ரீதியிலல்லாத (P) முழுமையான தொழில் நிலை மட்டத்தில் (Y) நீண்டகால சமநிலைக்கு (E) வரும். இதன்படி, உயர் பணவீக்கம் நீண்டகாலத்தில் கட்டுப்படுத்தப்படும்.
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 17
8 வது மட்டுப்படுத்தப்பட்ட நாணயக்
உண்மை
வட்டி வீதம்
MM
(a) கடன் நிதிச் சந்தை
9 வது வரைபடம் வெளியீடு முழுமையான தொழில்நிலை மட்டத்தை விட அதிகரிக்கின்ற போது மட்டுப்படுத்தப்பட்ட நாணயக்
கொள்கை
விலை
. . 1N
p2
pi
yf y1
எவ்வாறாயினும் பொருளாதாரம் முழுமையான தொழில்நிலை மட்டத்தில் உள்ளபோது மட்டுப்படுத்தப்பட்ட நாணயக் கொள்கையைக் கடைப்பிடித்தல் பாதகமானதாக அமையலாம். ஏனெனில், அதன் மூலம் பொருளாதார மந்தநிலை/வீழ்ச்சி ஏற்படலாம் என்பதனாலாகும். 10வது வரைபடத்தின் மூலம் இது தெளிவாகின்றது. பொருளாதாரம் முழுமையான தொழில்நிலை மட்டத்தில் (Y) சமநிலையடையும் என்பதோடு (E) மட்டுப்படுத்தப்பட்ட நாணயக் கொள்கையின் காரணமாக ஒட்டுமொத்தக் கேள்வி (AD இல் இருந்து AD, வரை) வீழ்ச்சியடையும். இதன் பெறுபேறாக உண்மை வெளியீடு முழுமையான சேவை வெளியீட்டு மட்டத்தை விடக் குறைவடையும் (Y இல் இருந்து Y, வரை). இவ்வாறு பொருளாதாரம் முழுமையான தொழில்நிலை மட்டத்தில்
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு
 
 

வரைபடம் கொள்கையின் குறுகியகால தாக்கம்
விலை
MN AS
-- -- -- ܓܠ- -- - ܚ 01]
p2 LLL L S LSS LSSS LSLSLSS LSS LSSMSS ы
4ー AD1
NAD:
(b) உண்மை வெளியீடு
உள்ளபோது ஒட்டுமொத்தக் கேள்வி குறைவடையுமெனில் அது நீண்ட கால சமநிலையில் தடையை ஏற்படுத்தி வெளியீட்டை வீழ்ச்சியடையச் செய்யும். இதன் மூலம் பொருளாதார மந்தநிலையொன்று உருவாக்கப்படும் என்பதோடு தொழிலின்மை இயற்கையான தொழிலின்மை வீதத்தை விட அதிகரிக்கும்.
10வது வரைபடம் வெளியீடு முழுமையான தொழில்நிலை மட்டத்தில் உள்ள போது மட்டுப்படுத்தப்பட்ட நாணயக் கொள்கை
விலை
மட்டம்
LRAS MN SIRAS
AD1
உண்மை வட்டி வீதம்
நீண்ட கால நாணயக் கொள்கை
அதிகளவு நாணய வளர்ச்சி பணவீக்கத்துக்குக் னணபொருளியலாளர்களிடையே
17

Page 18
கடுமையாக நீண்ட காலமாக கலந்துரையாடப்பட்டு வந்த ஒரு விடயமாகும். இக்கருத்தை உறுதி செய்யும் வகையில் அல்ப்ரட் மாஷல் மற்றும் அர்வின் பிஷர் ஆகிய பொருளியலாளர்கள் BIT600Tuudi, B60sfuji, (35|TLJT68)L (Quantity Theory of Money) முன்வைத்தனர். பண நிரம்பலின் அதிகரிப்புக்கு சமவிகிதத்தில் விலை மட்டமும் அதிகரிக்குமென்பது நாணயக் கணியக் கோட்பாட்டின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product) பற்றிய எண்ணக்கருவை இரண்டு அணுகுமுறைகளின் மூலம் அடையாளம் காண்பதன் ஊடாக நாணயக் கணியக் கோட்பாடு தொடர்பான கருத்தை எளிமையான விதத்தில் புரிந்துகொள்ளலாம். பேரண்டப் பொருளியல் பகுப்பாய்வில்
வருகின்ற ஒட்டுமொத்தக் கேள்வி ஒட்டுமொத்த நிரம்பல் மாதிரியின் படி கவனத்திற் கொள்ளப்படுகின்ற காலகட்டத்தினுள் கொள்வனவு செய்யப்பட்ட இறுதி
உற்பத்திகளின் பெறுமதி; அதாவது வெளியீட்டுக்கும் (Y) விலைக்கும் (P) இடையிலான பெருக்குத் தொகை பெயரளவு மொத்த உற்பத்தியாகும். பொதுவாக இங்கு விலை என்பது பொருளாதாரத்தில் பொது விலை மட்டமாகும் என்பதோடு வெளியீடு என்பதன் மூலம் உண்மை வெளியீடு (அல்லது உண்மை வருமானம்) கருதப்படுகின்றது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியை நாணயக் கையிருப்பின் gGEE தெளிவுபடுத்துதல் இரண்டாவது முறையாகும். அதாவது அப்போதைக்குள்ள நாணயக் கையிருப்புக்கும் (M) நாணயச் சுற்றோட்ட வேகத்துக்கும் (V) இடையிலான பெருக்குத் தொகையின் ஊடாகவும் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரதிபலிக்கப்படுகின்றது. (நாணயச் சுற்றோட்ட வேகம் என்பது, ஆண்டினுள் இறுதி பண்டங்கள் மற்றும் பணிகளைக் கொள்வனவு செய்யும் பொருட்டு ஒரு நாணய அலகு எத்தனைத் தடவைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதாகும்) இதன்படி, விலை, வெளியீடு, நாணயம் மற்றும் சுற்றோட்ட வேகம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை பின்வருமாறு காட்டலாம்.
MVEGDPEPY
சுற்றோட்ட வேகம் பற்றிய எண்ணக்கரு பணக் கேள்வியுடன் தொடர்புபடுகின்றது. கொடுக்கப்பட்டுள்ள ஒரு வருமான மட்டத்தின் கீழ் பணக் கேள்வி குறைவடைகின்றபோது நாணயச் சுற்றோட்ட வேகம் அதிகரிக்கின்றதென்பது கோட்பாட்டு ரீதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உதாரணமாக, ஏதேனும் திட்டவட்டமான/சிறிதளவு பணத்துடன் ஏதேனும் ஒரு தொழில் முயற்சியில் ஈடுபடுகின்றபோது பணக் கேள்வி (பணத்தை மீதியாக கையிருப்பில் வைத்திருத்தல்) குறைவடைகின்றது. அதற்கு நேரொத்த விதத்தில் ஒரு நாணய அலகு கொடுக்கல் வாங்கலின் பொருட்டு பயன்படுத்தப்படும் தடவைகள் (பணச் சுற்றோட்ட வேகம்) அதிகரிக்கும். இதேபோன்று பணக் கேள்வி அதிகரிக்கின்ற போது சுற்றோட்ட வேகம் குறைவடையும்.
விலை மட்டம், வெளியீடுகள், நாணயம் மற்றும் சுற்றோட்ட வேகம் ஆகிய மாறிலிகளின் நடத்தையைப் பொறுத்து, மேற்படி செலாவணிச் சமன்பாட்டு வளர்ச்சி விகிதத்துக்கு ஏற்ப மீண்டும் வரைவிலக்கணமளிக்கலாம்.
8

AM+AV=AP-AY
இதன்படி, பண நிரம்பல் வளர்ச்சி மற்றும் சுற்றோட்ட வேகத்தின் வளர்ச்சி ஆகிய இரண்டினதும் கூட்டுத் தொகை, பணவீக்க வேகத்தினதும் பொருளாதார வளர்ச்சி வேகத்தினதும் கூட்டுத்தொகைக்கு நேரொத்தாக இருக்கும்.
மேற்படி செலாவணிச் சமன்பாட்டின் இருபுறமும் பொருளாதாரத்தின் உண்மைத் துறை மற்றும் நாணயத் துறை பிரதிபலிக்கின்றது. இங்கு வருமானம் (Y) மற்றும் சுற்றோட்ட வேகம் (V) ஆகிய இரண்டும், செலாவணிச் சமன்பாட்டினுள் உள்ள பண நிரம்பலுக்கு புறம்பாக அல்லது ஏனைய நிறுவனக் காரணிகளின் படியே தீர்மானிக்கப்படும். இதன்படி, வருமானம் என்பது, தொழில் நுட்பம், பொருளாதார வளங்களின் அடிப்படை மற்றும் தொழிற் படையின் திறன்கள் ஆகிய வெளிவாரிக் காரணிகளினுடாகவே தீர்மானிக்கப்படும் என்பதோடு அது பண நிரம்பலின் மாற்றங்களுக்கு கூருணர்வுடையதாக இருக்காது. சுற்றோட்ட வேகமானது, வங்கிகள் மற்றும் கடன் அமைப்புகள், வருமானக் கொடுப்பனவுகளின் தடவைகள், போக்குவரத்து வினைத்திறன் மற்றும் தொடர்பூட்டல் வினைத்திறன் ஆகிய நிறுவனக் காரணிகளின் ஊடாகவே தீர்மானிக்கப்படுகிறது. இதன்படி வருமானம் மற்றும் சுற்றோட்ட வேகம் நிலையாதென புகழ்பெற்ற பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அல்லது மிகச் சிறிதளவே மாற்றமடையும் என்கின்றனர். இவ்வாறு வருமானமும் சுற்றோட்ட வேகமும் நிலையானதாயிருப்பின், பண நிரம்பலின் மாற்றத்திற்கு சமவிகிதத்தில் விலை மட்டம் மாற்றமடையும் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இதன்படி, பண நிரம்பலின் வளர்ச்சி என்பது அதற்கு நேரொத்த விதத்தில் பணவீக்கத்தில் நடைபெறுகின்ற அதிகரிப்பாகும். இதற்குப் பின்வருமாறு வரைவிலக்கணமளிக்கலாம்.
AP-AM-AY-AV
தற்காலப் பகுப்பாய்வும் அதன் முக்கியத்துவமும்
நாணயக் கணியக் கோட்பாட்டின் செல்லுபடியான தன்மை பற்றிய தற்காலப் பகுப்பாய்வை ஒட்டுமொத்தக் கேள்வி - ஒட்டுமொத்த நிரம்பல் மாதிரியின் நீண்டகால தாக்கத்தின் ஊடாக தெளிவுபடுத்த முடியும். நாணயக் கொள்கைக்கு விளக்கமளிக்கும் பொருட்டு இதுவரை பயன்படுத்தப்பட்ட ஒப்பீட்டு நிலையான அணுகுமுறையின் மூலம், நாணய நிரம்பலின் வளர்ச்சி அதிகரிப்பதன் ஊடாக பணவீக்க வேகம் அதிகரிக்கின்றதென விளக்கமளிக்கப்பட்டது. எவ்வாறாயினும், பணவீக்கம் என்பது ஒரு தடவை மட்டும் நடைபெறுகின்ற விலை அதிகரிப்பு மட்டுமன்றி அனைத்து விலைகளிலும் நடைபெறுகின்ற தொடர்ச்சியான அதிகரிப்பாகும் என்பதால் அது ஒரு மாற்றமுறும் எண்ணக்கருவாகும். இதன்படி நீண்டகால தாக்கங்களைப் புரிந்துகொள்கின்ற போது மேற்படி மாற்றமுறும் தன்மையைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். 11வது வரைபடத்தின் மூலம் மேற்படி நிலை விளக்கப்பட்டுள்ளது.
11(a) யின் பிரகாரம் பண நிரம்பலின் வளர்ச்சி 3 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகக்
2009 யூலை 1 ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 19
கருதுவோம். ஆரம்பத்தில் 3 சதவீத வருடாந்த வளர்ச்சியைத் தொடர்ந்து விலைகள் 100 இல் நிலையாக இருந்தன. (அதாவது பொருளாதார வளர்ச்சி வேகம் 3 சதவீதமாகவும் பன நிரம்பலின் வளர்ச்சி 3 சதவீதமாகவும் அமைந்ததன் மூலம் விலைகள் நிலையானதாக அமைதல் எனப்படும் பூச்சிய பணவீக்கமாகும்). பண நிரம்பல் அதிகரிப்பதன் மூலம் ஒட்டுமொத்தக் கேள்வி AD இல் இருந்து AD, வரை பெயர்ச்சியடைகின்றது. இதன்படி, முதலில் உண்மை வெளியீடு முழுமையான தொழில் நிலை மட்டத்தைத் தாண்டிச் செல்லும். எவ்வாறாயினும் அசாதாரணமான விதத்தில் குறைந்த தொழிலின்மை மற்றும் பலம்பொருந்திய கேள்வி நிலைமை மூலம் சம்பளம் மற்றும் ஏனைய காரணி விலைகளில் கடும் அழுத்தம் ஏற்படுத்தப்படுவதன் பெறுபேறின் ஊடாக ஒட்டுமொத்த நிரம்பல் AS இல் இருந்து AS, வரை
11 வது வ விலை மட்டம் உயர் நாணய விரிவாக்
محمد
8.0 -
8% S - སྤྱི་ "-ل pilo 邑 60十 S 罰 દિ 4.0 -- 含
경 p105
3%
2.0 --
p;(x)
காலம்
2 3 4
(a) பண நிரம்பலின் வளர்ச்சி
பெயர்ச்சியடையும். இதன்படி, வெளியீடு நீண்டகால சமநிலை மட்டத்திற்கு (E) வருமென்ற போதிலும் விலை மட்டம் P, வரை அதிகரிக்கும். தொடர்ச்சியாக பண நிரம்பல் அதிகரிப்பின் ஒட்டுமொத்த கேள்வி நிரம்பல் பெயர்ச்சியடைந்து E, இலும் அதற்கு அப்பாலும் சமநிலை நிலைமையை உரு வாக்கும். நீண்டகால உயர் பணவீக்கம் இதன் தேறிய பெறுபேறாகும். இதன்படி, உயர் நாணய விரிவாக்கத்தின் நீண்டகால பெறுபேறாக பணவீக்கம் அதிகரிக்கும். எதிர்பாரா நாணய விரிவாக்கத்தின் மூலம் குறுகிய காலத்தில் வெளியீடு மற்றும் தொழில் நிலையில் ஏதேனுமொரு சிறந்த தாக்கம் ஏற்பட இடமிருப்பினும், நீண்டகாலத்தில் இது எவ்விதத்திலும் அனுகூலமானதாக அமையாது. அதாவது, நீண்ட காலத்தில் உயர் நாணய விரிவாக்கத்தின் மூலம் தொழிலின்மையில் குறைவு அல்லது பொருளாதாரத்தின் உண்மை வெளியீட்டில் விரிவாக்கம் ஏற்படாது. இதனை நாணயக் கொள்கையின் நீண்ட BT6No QuusĖlabĪT É660D6D(Long-run Neutrality)660Ti (g5sôůLîlL6MDTub.
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

எதிர்பார்ப்பு நாணயக் கொள்கை
இது வரை சமர்ப்பிக்கப்பட்ட பகுப்பாய்வு முழுமையாகவே நாணயக் கொள்கையின் தாக்கங்கள் எதிர்பாராதது என்பதனையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. இன்றேல் தீர்மானம் மேற்கொள்கின்றவர்கள் நாணயக் கொள்கையின் தாக்கங்களை எதிர்பார்ப்பதற்கு முற்படுவது உண்மையிலேயே அவற்றை காணக் கிடைக்கின்றபோதிலாகும். (உதாரணமாக, கடன்படுவோர் மற்றும் கடன் கொடுப்போர் விலை அதிகரித்தல் ஆரம்பமானதன் பின்னரே உயர் பணவீக்கத்தை எதிர்பார்ப்பார்கள்) விரிவாக்கல் நாணயக் கொள்கைக்கும் பணவீக்கம் அதிகரிப்பதற்கும் இடையே உள்ள முறிவடையாத தொடர்பினைப் புரிந்துகொள்வதற்கு அவர்களால் முடியுமாயிருப்பின் எவ்வாறானதொரு நிலைமை உருவாகும் என்பதை அடையாளம் காணுதல் முக்கியமாகும்.
ரைபடம் கத்தின் நீண்டகாலத் தாக்கங்கள்
LRAS
AS3
AS
AD3
AD2
உண்மை * வெளியீடு
у; b) பண்டங்கள் பணிகள் சந்தை மீதிலான தாக்கம்
பண நிரம்பல் தொடர்பான புள்ளிவிபரங்கள் மற்றும் ஏனைய நாணயக் கொள்கைச் சுட்டெண்கள் தொடர்பில் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளதெனக் கருதுவோம். இங்கு அவர்கள் எதிர்கால பணவீக்கம் தொடர்பிலான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கச் செய்கின்றனர். கடன் கொடுப்போர் கடன் வழங்குவதற்கு அதிகம் பின்வாங்குவார்கள். அதேபோன்று கடன்படுவோர் அப்போதைக்குள்ள வட்டி வீதத்தின் கீழ் அவசர அவசரமாகக் கடனுக்கு விண்ணப்பிப்பார்கள். இவ்விதம் கடன் வழங்குதல் மட்டுப்படுத்தப்படல் மற்றும் கடனுக்கான கேள்வி அதிகரித்தல் மூலம் நாணய வட்டி வீதம் அதிகரிக்கும். இவ்வாறான விலை அதிகரிப்பை (ஒட்டுமொத்த நிரம்பல் மட்டுப்படுத்தப்படல் மற்றும் கேள்வி அதிகரித்தல் ஊடாக) உண்மைச் சந்தையிலும் காண முடியுமாயிருக்கும். காரணிச் சந்தையிலும் நிலைமை இதுவாகவே இருக்கும். உயர் பணவீக்க எதிர்பார்ப்பின் காரணமாக தொழிற் சங்கங்கள்
19

Page 20
பணவீக்க அதிவிலையொன்றை வேண்டி நிற்பதற்கும், தொழில் வழங்குனர்கள் அதனைச் செலுத்துவதற்கு இணங்கவேண்டியும் நேரிடலாம். இன்றேல், உடன்படிக்கைகளில் வாழ்க்கைச் செலவினைச் சீர்செய்தல் பற்றிய வாசகங்களை சேர்ப்பதற்கும் முற்படுவார்கள். இதன் பெறுபேறாக பணச் சம்பளம் அதிகரிக்கும். இவை அனைத்தின் ஊடாகவும் கருதப்படுவது யாது? உண்மை வெளியீட்டில் எவ்வித மாற்றமும் நிகழாது பணவீக்கம் உருவாகும் என்பதாகும். 12வது வரைபடத்தின் மூலம் இந்நிலைமையை விளக்கலாம்.
12 வது வரைபடம் எதிர்பார்ப்பு நாணய விரிவாக்கத்தின் குறுகிய காலத் தாக்கங்கள்
g) 666.0LD Y வெளியீடு
பொருளாதாரத்தில் தீர்மானங்களை மேற்கொள்பவர்கள் பண நிரம்பலில் ஒரு விரிவாக்கத்தினை எதிர்பார்க்கின்ற போது குறுகியகாலத்திலாயினும் வெளியீட்டின் மீது சாதகமானதொரு தாக்கம் ஏற்படாது. வழங்குனர்கள் தீர்மானம் மேற்கொள்கின்றபோது எதிர்பார்க்கப்பட்ட விலை மட்டங்கள் அதிகரிப்பதைக் கவனத்திற் கொள்வார்கள். அதேபோன்று எதிர்பார்க்கப்பட்ட பணவீக்கம் அதிகரிப்பதன் ஊடாக (சம்பளங்கள் உட்பட) பெயரளவு செலவினம் அதிகரிப்பதோடு, அதன் மூலம் குறுகியகால நிரம்பல் SRAS இல் இருந்து SRAS, வரை மாற்றமடைகின்றது. பெயரளவு சம்பள விலைகள் மற்றும் வட்டி வீதங்கள் அதிகரிக்குமென்பதோடு கேள்வியும் AD இல் இருந்து AD, வரை மாற்றமடையும். இதன் தேறிய பெறுபேறாக, வெளியீடு (Y) மாற்றமடையாது இருக்கின்ற அதேநேரம் பணவீக்கம் (P இல் இருந்து P, வரை) அதிகரிக்கும்.
பொழிப்பு இதுவரை அளிக்கப்பட்ட விளக்கத்தின் ஊடாக முக்கியமான ஒருசில முடிபுகளுக்கு வரக்கூடியதாயுள்ளது. 9 எதிர்பாரா விரிவாக்க நாணயக் கொள்கை குறுகிய 8Ꮟ[Ꭲ6Ꭰ வெளியீடு/தொழில்நிலையை விரிவடையச் செய்யும். எதிர்பாரா சுருங்கும் தன்மையிலான நாணயக் கொள்கை குறுகிய கால வெளியீடு/தொழில்நிலை மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.
9 பொருளாதாரம் தனது இயலளவு மட்டத்தை விட குறைவாக உள்ள போது விரிவாக்க நாணயக் கொள்கையின் ஊடாக கேள்வி விரிவடைந்து பொருளாதாரம் முழுமையான தொழில்நிலை மட்டத்தை நோக்கித் தள்ளப்படும்.
20
 

ஆயினும் விரிவாக்கல் கொள்கையானது பொருளாதார இயலளவு மட்டத்திற்கு அப்பால் செயற்படுவதாயிருப்பின் அதன் பெறுபேறாக பணவீக்கம் உருவாகும். அதேபோன்று பொருளாதாரம் இயலளவு மட்டத்திற்கு அப்பால் உள்ளபோது சுருங்கும் தன்மையிலான நாணயக் கொள்கையொன்று அமுலாக்கப்படுவதன் மூலம் கேள்வியை மட்டுப்படுத்தி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இயலுமாயிருக்கும். மறு புறம், இயலளவு மட்டத்திற்குக் குறைவாயுள்ள ஒரு சந்தர்ப்பத்தில் சுருங்கும் தன்மையிலான கொள்கையை அமுலாக்குவதன் மூலம் பொருளாதார மந்தநிலை உருவா
5600.
• உயர் - தொடர்ச்சியான நாணய விரிவாக்கத்தின் ஊடாக பணவீக்கம் உருவாகின்றது. பொருளாதார வளர்ச்சியை விட அதிக வேகத்தில் பண நிரம்பல் அதிகரிப்பதன் மூலம் கட்டாயமானதொரு பணவீக்கம் உருவாகும்.
0 பணவீக்கம் அதிகரிப்பதன் ஊடாக கடனுக்கு விண்ணப்பிப் பவர்கள் மற்றும் கடன் கொடுப்பவர்கள் பணவீக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதன் காரணத்தினால் நாணய வட்டி வீதம் அதிகரிக்கின்றது.
நாணயக் கொள்கையை உரிய காலத்தில், உரிய வித்தில் செயற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் உறுதித் தன்மையை அடையப்பெறலாம் என்பதே மேற்படி ஒட்டுமொத்தமான பகுப்பாய்வினதும் செய்தியாகும். எவ்வாறாயினும், உரிய காலம் எது என்பது மிகவும் சிக்கலானதொரு பிரச்சினையாகும். அதேபோன்று அதனைத் தீர்மானித்தலும் சிரமமானதொரு விடயமாகும். நாணய மேலதிக்கத்தினால் மிக விரைவாக கொள்கை ரீதியிலானதொரு மாற்றத்தை செய்ய முடியுமாயிருப்பினும், அதன் பெறுபேறுகளை சிறிது காலம் கடந்ததன் பின்னரே காண முடியுமாயிருக்கும். அதேபோன்று எதிர்காலம் தொடர்பாக எதிர்வுகூறுவதிலுள்ள சிரமமான தன்மையும் மேற்படி சிக்கலான நிலையை அதிகரிக்கச் செய்கின்றது. ஆயினும், நாணய மேலாதிக்கத்தின் கொள்கைகளின் பொருட்டு பொருளாதாரத்தின் கூருணர்தன்மை மிகவும் கூர்மையானதாகவும் அதிகாரம் பொருந்தியதாகவும் உள்ளதால் மேற்படி சிக்கல் மற்றும் சிரமமான தன்மை தொடர்பில் அவ்வளவு கவனம் செலுத்த வேண்டியதில்லை.
உசாத்துணை நூல்கள் மற்றும் ஆய்வுகள்
1. Ahuja, H.L., “Macroeconomics, Theory and Policy', S.
Chand and Co.Ltd, New Delhi, 1996 2. Dornbusch, Rudiger; Fischer, Stanly; Startz, Richard;
"Macroeconomics', Irwin/McGraw-Hill; 2003 3. Gwartney, James D; Stroup Richard L.; Sobel Russel S. and Macpherson DavidA., “Economics Private and Public Choice', Thompson South western, USA, 2003 4. Jadhav, Narendra, "Monetary Policy, Financial Stability and Central Banking in India' Macmilliam India Ltd., New Delhi, 2006 5. 'விலை உறுதிப்பாடு, 01 ஆம் இலக்கப் பத்திரம்,
இலங்கை மத்திய வங்கி, 2005
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 21
பொருறாதர
லலித் வி தொடர்பாடல்
பொருளாதாரப் பின்னடைவு (Recession) என்பதன் மூலம் தொழில்துறை வட்டமொன்றின் சுருங்கும் சந்தர்ப்பம் கருதப்படுகின்றது. இது பொருளாதாரச் செயற்பாடுகள் குறைவடைகின்ற ஒரு காலப் பகுதியாகும். ஐக்கிய அமெரிக்காவில் தாபிக்கப்பட்டுள்ள பொருளாதார ஆராய்ச்சி நடவடிக்கைகள் பற்றிய தேசிய பணியகம் (National Bureau of Economic Research - NBER) (SiF606)6OLD60)u 6 solid, விளக்குகின்ற வகையில், பொருளாதாரம் பூராவும் பரவியுள்ள: பொதுவாக உண்மை மொத்த தேசிய உற்பத்தி, உண்மை தனிநபர் வருமானம், தொழில் வாய்ப்புகள் (கமத்தொழில் துறை அல்லாத), கைத்தொழில் உற்பத்தி மற்றும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் ஆகிய துறைகளில் பல மாதங்களாகக் காணக்கூடியதாயுள்ள செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்கதொரு பின்னடைவை பொருளாதாரப் பின்னடைவு எனக் கருதுவதாகக் கூறுகின்றது. நீண்ட காலம் நீடிக்கின்ற ஒரு பொருளாதாரப் பின்னடைவின் பெறுபேறாக பொருளாதார மந்தநிலை உருவாகின்றது.
மொத்த தேசிய உற்பத்தி தொடர்ந்துவருகின்ற இரண்டு காலாண்டுகளிலும் சுருங்குமெனில் (எதிர்க்கணிய வளர்ச்சி அறிக்கையிடப்படுமிடத்து) பொருளாதார பின்னடைவொன்று உருவாகியுள்ளதென்பது அதன் மூலம் காட்டப்படுவதாக பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த எளிமையான வரைவிலக்கணத்தின் மூலம் அமெரிக்காவில் உருவாகிய அநேகமான பொருளாதாரப் பின்னடைவுகளை விளக்குவதற்கு முடியாது.
பொருளாதாரப் பின்னடைவுகளின் பண்புகள்
பொருளாதாரப் பின்னடைவில் பல பண்புகளைக் காணலாம். தொழில்வாய்ப்புகள், முதலீடு, கம்பனிகளின் இலாபம் ஆகிய பேரண்டப் பொருளாதார உப துறைகளில் ஒரே தடவையில் நடைபெறுகின்ற பின்னடைவுகள் பெரும்பாலும் பணச்சுருக்க (Defiation) நிலைமைகளைத் தழுவியதான ஒட்டுமொத்தக் கேள்வி வீழ்ச்சியடைதல், இன்றேல் மிகத் தீவிரமாக ஒட்டுமொத்த விலை மட்டம் அதிகரித்தல் அல்லது பணவீக்க (Inflation) நிலைமையுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சி (p(p60)LDujFTE(86). தேக்கநிலையை அடைதல் (Stagflation) ஆகிய விடயங்களின்
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

á óhegeot Q
க்கிரமசிங்க ) திணைக்களம்
பெறுபேறுகளாக 960) Du J6) b. fabds கடுமையான, நீண்டகாலம் நீடிக்கின்ற தொடர்ச்சியானதொரு பொருளாதாரப் பின்னடைவை பொருளாதார மந்தநிலையெனக் (Economic Depression) குறிப்பிடுகிறோம். எவ்வாறாயினும் பொருளாதாரப் பின்னடைவுக்கும் பொருளாதார மந்தநிலைக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை விளக்குவதற்கான திட்டவட்டமானதொரு வரைவிலக்கணம் கிடையாது. மொத்த தேசிய உற்பத்தி ஒப்பீட்டளவில் 10 சதவீதத்தால் அல்லது அதைவிட அதிகளவில் வீழ்ச்சியடைதல் பொருளாதார மந்தநிலையாகும் என பொதுவாகக் கருதப்படுகின்றது. மிகக் கடுமையான பொருளாதார மந்தநிலை அல்லது அதிபணவீக்கம் (Hyperinflation) ஆகிய நிலைமைகளினால் ஏதேனுமொரு பொருளாதாரத்தில் உருவாகும் அழிவுகரமானதொரு நிலைமைக்கு பொருளாதார வீழ்ச்சி (Economic Collapse) என வரைவிலக்கணம் அளிக்கப்படுகிறது.
பொருளாதாரப் பின்னடைவின் அறிகுறிகள்
பொருளாதாரப் பின்னடைவை அடையாளம்காண்பதற்கு உதவியாகக் கொள்ளக்கூடிய உறுதிசெய்யப்பட்ட அறிகுறிகள் இல்லாத போதிலும் அனுமானமாகப் பயன்படுத்தக் கூடியவைகள் உள்ளன.
ஐக்கிய அமெரிக்காவின் Lifil(35ğ சந்தையில் நடைபெறுகின்ற குறிப்பிடத்தக்களவிலான வீழ்ச்சிகளை அந்நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுகள் தொடர்பான அறிகுறிகளாக பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். எவ்வாறாயினும் 1946 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அமெரிக்க பங்குச் சந்தையில் 10 சதவீதத்தை விட அதிகளவில் நடைபெற்றுள்ள வீழ்ச்சிகளில் ஏறத்தாழ அரைவாசியளவு வீழ்ச்சிகளில் ஐக்கிய அமெரிக்க பொருளாதாரத்தில் பின்னடைவுகள் நடைபெறவில்லை. இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னடைவுகளில் ஏறத்தாழ 50 சதவீதத்தில் பொருளாதாரப் பின்னடைவு ஆரம்பமானதன் பின்னரே பங்குச் சந்தை வீழ்ச்சி ஆரம்பமாகியதென்பது உறுதியாகியுள்ளது.
சமஷ்டி (Federal) ஒதுக்கு வங்கியின் பொருளியலாளர் ஒருவரான ஜொனதன் ரைட் (Jonathan Wright),
21

Page 22
தொடர்ச்சியானதொரு பொருளாதாரப் பின்னடைவைக் கணிப்பிடுவதற்கு கீழ் நோக்கிய விளைவு வளைகோடு (inverted Yield Curve) எனும் முறையைக் கட்டியெழுப்பியுள்ளார். திறைசேரிப் பிணையங்களில் இடப்படுகின்ற நீண்டகால முதலீடுகளை விட அதிக விளைவு குறுகியகால முதலீடுகளின் ஊடாக கிடைக்கின்றபோது கீழ்நோக்கிய விளைவு வளைகோடு உருவாகின்றது. 10 வருடம் மற்றும் மூன்று மாதத்தில் முதிர்ச்சியடைகின்ற பிணையங்கள் மற்றும் ஒதுக்கு வங்கியின் நாளாந்தக் கடன் மீதான வட்டி வீதத்தை (Overnight Rate) அடிப்படையாகக் கொண்டு வளைகோடு இனம்காணப்படுகிறது. மேலும், நியூயோர்க் சமஷடி ஒதுக்கு வங்கியின் பொருளியலாளர்கள் குழுவொன்று பத்து வருட மற்றும் மூன்று மாத பிணையங்களின் வட்டிப் பரம்பலை மாத்திரம் பயன்படுத்தி ஒரு முறையினை அமைத்துள்ளார்கள். பொருளாதாரப் பின்னடைவு ஆரம்பித்து ஏறத்தாழ 6 மாதத்திலிருந்து 18 மாதங்களுக்குப் பின்னர் இதனை அடையாளம் öT缸T முடியுமாயுள்ளதால் இது திட்டவட்டமானதொரு எதிர்வுகூறலாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. 3 மாத கால தொழிலின்மை மற்றும் தொழிலின்மையில் நடைபெறுகின்ற மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள மேலுமொரு எதிர்வுகூறல் முறையொன்று உள்ளது. இதனை பொருளியலாளரான ரிம் கேன் (Tim Kane) கட்டியெழுப்பியுள்ளார். இதனைத் தவிர மேற்படி எதிர்வுகூறலின் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற ஒருசில அம்சங்களைப் பொதுவாகப் பயன்படுத்தி அமைக்கப்படுகின்ற முதனிலைப் பொருளாதாரச் சுட்டெண்ணும் பொருளாதாரப் பின்னடைவுகளை அடையாளம் காண்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
பொருளாதாரப் பின்னடைவுக்கு முகம்கொடுத்தலும் பிரதிபலிப்புக் காட்டுதலும்
பின்னடைவிலிருந்து பொருளாதாரத்தை விடுவிக்கும் உபாய வழிமுறைகள் முக்கியமாக குறித்த கொள்கை வகுப்பவர்களால் கடைப்பிடிக்கப்படும் பொருளியல் குரு குலத்தைப் பொருத்தே தீர்மானிக்கப்படும். பொருளா தாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் பற்றாக்குறை செலவிடல் (Deficit Spending) 2 -l-. IfUL வழிமுறை யொன்றை கடைப்பிடித்தல் வேண்டுமென கேன்சியவாதிகள் ஆலோசனை வழங்குகின்றனர் என்பதோடு, வரித் தளர்வுக் கொள்கையொன்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் மூலதன முதலீடுகளை அதிகரிக்கச் செய்தல் வேண்டுமென நிரம்பல் தரப்பினரின் (Supply Side) பொருளியலாளர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். சுதந்திரச் சந்தைச் சக்திகள் அவ்வாறே
செயற்படுத்தப்படுதல் வேண்டுமென்றும், அரசாங்கம் இதில் எவ்விதத் தலையீடுகளும் செய்தல் கூடாதெனவும் அரச தாராளமய கொள்கையாளர்கள் கூறுகின்றனர்.
அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல் அல்லது மிகக் குறைந்த மட்டத்திலான வரித் தளர்வின் ஊடாக நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி ஊக்குவிப்பதன் மூலம் அவர்களையும் பொருளாதாரச் செயற்பாடுகளில் இணைத்துக்கொண்டு
22

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் சார்பு பொருளியலாளர்கள் முன்மொழிகின்றனர்.
தொழில்துறை உபாய வழிமுறையிலான பரிந்துரை நிபுணர் ஒருவரான காட்டர் ஷெலிங் (Carter Schelling), பரவி வருகின்ற பொருளாதாரப் பின்னடைவுக்கு முகம்கொடுக்கும் பொருட்டு தொழில்துறை நிறுவனங்கள் தீ விபத்திற்கு முகம்கொடுப்பதற்குத் தயாராகின்றவாறு தயாராக வேண்டும் என ஒரு தடவை கூறியுள்ளார். நிலவுகின்ற பொருளாதாரப் பின்னடைவுக்கு முகம்கொடுப்பதற்கும் அதற்கு எதிராக செயற்படுவதற்கும் அவ்வாறான தொழில்துறை சமூகம் தமது வாடிக்கையாளர்களுக்கு உள்ள பலம் தொடர்பில் தொடர்ந்து அவதானித்து வருதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க நுகர்வோருக்கான தமது சேவைகளை மீளத் திட்டமிடுதல் வேண்டும். அபகீர்த்திக்கு உள்ளாகியுள்ள ஊழியர்களை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக மிகவும் செயல்நோக்கம் (Motivatives) கொண்டதும் அதேபோன்று போட்டி ரீதியில் வேலை செய்வதற்கு விருப்பமுள்ளதுமான புதிய ஊழியர்களை நியமித்தல் போன்ற உபாய வழிமுறைகளை இதன் பொருட்டு பயன்படுத்தலாமென அவர் மேலும் முன்மொழிகின்றார். ஒரு தொழில்துறை நிறுவனத்தின் சிறந்த நிலைத்திருத்தலை தீர்மானிக்கின்ற முக்கியமானதொரு அளவீடாக, சிரமமானதும் பாதகமானதுமான கால கட்டங்களை கடக்கின்ற போது அவர்கள் அதன் பொருட்டு பயன்படுத்துகின்ற உபாய வழிமுறைகளின் வெற்றிகரத் தன்மை உள்ளதென அவர் மேலும் கூறுகின்றார்.
தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னடைவு நிலவிய போதிலும் உபாய ரீதியில் துணிவுடனும் விரைவாகவும் அதற்கு முகம்கொடுப்பதற்கு தொழில் முயற்சியாளர்கள் உடனடியாகச் செயற்படுதல் வேண்டும் என்பது அவரது அறிவுரையாகும். இதன் பொருட்டு விதந்துரைக்கப்பட்டுள்ள செயற்பாட்டை இவர் Recession Drill 6T601 GLJust'(66iGITs.
மத்திய வங்கியொன்றின் பொறுப்பும் பிரதிபலிப்பும்
இவ்வாறானதொரு கால கட்டத்தில் ஒரு மத்திய வங்கி பொதுவாக, வட்டி வீதங்களைக் குறைத்தல் போன்ற தனது நாணயக் கொள்கையைத் தளர்த்துகின்ற முறையின் மூலமே பிரதிபலிப்புக் காட்டுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி ஒதுக்கு வங்கி தமது நாட்டில் பொருளாதார மந்தநிலையொன்று ஏற்படுவதற்கான வாய்பினை அடையாளம் காண்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலக்கிடப்பட்ட கூட்டு நிதிய வீதங்களைக் குறைப்பதன் மூலமே பிரதிபலிப்புக் காட்டியுள்ளது. தற்போது நிலவுகின்ற தொடர்ச்சியான பொருளாதாரப் பின்னடைவின் போது மட்டுமன்றி முந்திய சந்தர்ப்பங்களிலும் ஒதுக்கு வங்கி மேற்படி வழிமுறையைக் கடைப்பிடித்தது.
9 1990 ஜூலை 13 ஆம் திகதியிலிருந்து 1992 செப்தெம்பர் 4 ஆம் திகதி வரை அதுவரை 8 சதவீதமாக இருந்த
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

Page 23
நிதிய வீதத்தை 3 சதவீதம் வரை குறைத்தது. (19901991 பொருளாதாரப் பின்னடைவு இக்காலகட்டத்திற்கு உரித்தாகின்றது.)
9 6 சதவீதமாக அதுவரையிருந்த நிதிய வீதத்தை 1995 பெப்ருவரி 1 ஆம் திகதியிலிருந்து 1998 நவெம்பர் 17 வரையிலான கால கட்டத்தினுள் 4.75 சதவீதம் வரை குறைத்தது. 2000 மே 16 ஆம் திகதியிலிருந்து 2003 ஜூன் 25 வரையிலான காலத்தினுள் அதுவரை 6.5 சதவீதமாயிருந்த நிதிய வீதத்தை 1 சதவீதம் வரை குறைத்தது. (2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொருளாதாரப் பின்னடைவு இக்காலத்திற்கு உரியதாகும்).
9 அதுவரை 5.25 சதவீதமாக இருந்த நிதிய வீதம் 2006 ஜூன் 29 ஆம் திகதியிலிருந்து 2008 ஒக்றோபர் 8 வரையிலான கால கட்டத்தினுள் 1.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
ஆயினும் கடந்த இரண்டு தசாப்தங்களினுள் நடைபெற்ற பல பொருளாதார பின்னடைவுகளின் எண்ணிக்கையும் மொத்த தேசிய உற்பத்தியில் நடைபெற்ற பின்னடைவுகளின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைவடைந்துள்ள ஒரு போக்கைக் காணக்கூடியதாயுள்ளதால் அமெரிக்க ஒதுக்கு வங்கியினால் காலத்திற்கேற்ப நாணயக் கொள்கையில் மேற்கொண்ட வட்டி வீத சீர்செய்தல்கள் மூலம் மந்தநிலையை சிறந்த முறையில் கட்டுப்படுத்த முடியுமாயிருந்ததென்பது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எவ்வாறாயினும் இவ்வாறான நிதியியல் தளர்வின் காரணமாக நிதியியல் சந்தைக்கு மேலதிகத் திரவத்தன்மையொன்று உட்பாய்ச்சப்படுவதன் பெறுபேறாக நுகர்வோர் மென்மேலும் கடன் பொறியில் சிக்குவதாக வாதிடுகின்றவர்களும் உள்ளனர். ஐரோப்பிய வங்கியின் உத்தியோகத்தர்கள் சிலர் விடய அடிப்படையிலான ஒரு ஆராய்ச்சியின் மூலம், வரையறையின்றி பண நிரம்பலில் நடைபெறுகின்ற வளர்ச்சிக்கும், வளர்ச்சியின் பின்னர் உருவாகக்கூடிய பொருளாதாரப் பின்னடைவின் அளவுக்கும் இடையே தொடர்புகள் உள்ளதென சுட்டிக்காட்டியுள்ளனர்.
பங்குச் சந்தையும் பொருளாதாரப் பின்னடைவுகளும்
பங்குச் சந்தையில் நடைபெறுகின்ற பின்னடைவுகளின் காரணமாகவும் பொருளாதாரப் பின்னடைவுகளை எதிர்பார்க்கலாம். 1948 ஆம் ஆண்டின் பின்னர் உருவாகிய 10 பொருளாதாரப் பின்னடைவுகளும் பங்குச் சந்தையில் நடைபெற்ற வீழ்ச்சிகளின் காரணமாகவே உருவாகியுள்ளன. சில சந்தர்ப்பங்களில் பொருளாதாரப் பின்னடைவுகள் சந்தை வீழ்ச்சி நடைபெற்ற உடனேயே உருவாகியுள்ளன. மேலும் சில சந்தர்ப்பங்களில் ஏறத்தாழ 13 மாதங்கள் கடந்ததன் பின்னரே உருவாகியுள்ளன. சராசரியாக 5.7 மாதங்கள் கடந்ததன் பின்னராகும். எவ்வாறாயினும் மேற்படி காலத்தினுள் அமெரிக்க Ussigó g b60)guigO)6i (DJIA-Dow Jones Investment) நடைபெற்ற 10 சதவீதத்தைத் தாண்டிய வீழ்ச்சிகள் 10 இன்
2009 யூலை / ஆகஸ்ட் - குறிப்பேடு

பின்னர் பொருளாதாரப் பின்னடைவுகள் ஏற்படவில்லை என்ற விடயத்தை இங்கு விசேடமாகக் குறிப்பிடுதல் வேண்டும்.
பொருளாதாரப் பின்னடைவொன்று உருவாவதற்கு முன்னர் பொதுவாக சொத்துக்கள் சந்தை பலவீனமடையும். எவ்வாறாயினும் சொத்துக்கள் சந்தையில் நடைபெறுகின்ற இவ்வாறான வீழ்ச்சிகள் சில சந்தர்ப்பங்களில் பொருளாதாரப் பின்னடைவு தீர்ந்ததன் பின்னர் கூட நீண்ட காலம் நிலைத்திருக்கலாம். தொழில்துறை சுழற்சி தொடர்பாக முன்கூட்டியே தவறுகளற்ற விதத்தில் எதிர்வுகூறல் மிகச் சிரமமான விடயமாகும் என்பதால் அநேகமாக காலத்திற்கேற்ற முதலீடுகளின் ஊடாக பொருளாதார வட்டத்திலிருந்து அனுகூலங்களைப் பெற முடியாதுள்ளது.
பொருளாதாரப் பின்னடைவொன்று நிலவுகின்ற காலத்தில் நிதிச் சேவைகள், D( bbgbl8ÍT மற்றும் புகையிலை வர்த்தகத்துடன் தொடர்புடைய பங்குகள் அதிக பங்கிலாபங்களைக் காட்டுகின்றன. எவ்வாறாயினும் பொருளாதாரம் சிறந்த நிலைக்குத் திரும்ப ஆரம்பித்ததும் அதிக வளர்ச்சியுடன் கூடிய பங்குகளைக் கொண்ட தொழில் முயற்சிகள் விரைவாகவே நன்நிலையை அடைகின்றன. அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களுக்கு உள்ள கேள்வியின் நெகிழ்வுத் தன்மை எந்த நிலைமையின் கீழும் அவ்வளவு பெயர்ச்சியடையாதிருத்தல் அதற்கான காரணமாகும்.
ஏதேனுமொரு முதலீட்டுத் தொகுதியை சர்வதேச பங்குப் பிணையங்களினுள் பல்வகைப்படுத்தலுக்கு உள்ளாக்குவதன் மூலம் மிகப் பாதுகாப்பைப் பெற முடியுமாயிருக்கும். எவ்வாறாயினும் அமெரிக்க பொருளாதாரத்துடன் தொடர்புகளைக் கொண்டுள்ள பொருளாதாரங்களில் கூட அமெரிக்க பொருளாதாரப் பின்னடைவு கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவு
பல்வேறு பொருளியலாளர்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1854 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அமெரிக்கப் பொருளாதாரத்தில் விரிவடைதல் மற்றும் சுருங்குதல் என்றவாறு அடையாளம் காணப்பட்டுள்ள 32 சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளன. இக் கால கட்டங்களின் சராசரி 17 மாத சுருக்கம் மற்றும் 38 மாத விரிவாக்கம் என்றவாறு கணிப்பிடப்பட்டுள்ளது. 1980 இற்குப் பிந்திய கால கட்டத்தை அவதானிக்கின்ற போது நிதிக் காலாண்டு அல்லது அதனை விட அதிக காலம் நிலவிய எதிர்க்கணிய வளர்ச்சி (சுருங்குதல்) அறிக்கையிடப்பட்ட 8 கால கட்டங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதோடு, இதில் 3 "பொருளாதாரப் பின்னடைவுகளாக' கருதப்படுகின்றன.
இவற்றுக்கு மத்தியில், 1991 இல் இருந்து 2000 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தினுள் 37 நிதிக் காலாண்டுகள் பூராகப் பரவிய சாதனை படைக்கத்தக்க பொருளாதார
23

Page 24
வளர்ச்சியினை ஐக்கிய அமெரிக்கா அடைந்துள்ளது. இது அறிக்கையிடப்பட்டுள்ள மிக நீண்ட வளர்ச்சிக் காலமாகும். கடந்த 3 பொருளாதாரப் பின்னடைவுகளில் 2 தொடர்ந்து வந்த இரண்டு காலாண்டுகளைத் தாண்டிச் சென்ற பின்னடைவுகளாக அறிக்கையிடப்பட்டுள்ளதோடு, 2001 ஆம் ஆண்டில் உருவாகிய பின்னடைவு தொடர்ந்துவந்த இரண்டு காலாண்டுகள் பூராக பரவியதொன்றாக இருக்கவில்லை. இதனுள், ஒரளவு பலவீனமானதாயிருந்த போதிலும் பொருளாதார வளர்ச்சிக் கால கட்டங்களும் உள்ளடங்கியிருந்தன.
ஐக்கிய அமெரிக்கப் பொருளாதாரத்தின் தற்போதைய பின்னடைவு
2008 ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க நிதி மற்றும் அடகுச் சந்தையில் பாரியதொரு நெருக்கடி நிலைமை உருவாகியது. கடனை மீளச் செலுத்துவதற்கான ஆற்றல் குறைந்த உப முதனிலை (Sub Prime) துறைக்கு வீடு சொத்துக்கள் அடகு முறையின் கீழ் வழங்கப்பட்ட ஏறத்தாழ ஆயிரம் பில்லியன் கடன் தொகையை மீள அறவிட முடியாதிருந்தமை மேற்படி நெருக்கடி உருவாவதற்குக் காரணமாயமைந்தது. தனியார் தொழில் முயற்சிகளின் அடிப்படையில் செயற்படுகின்ற அமெரிக்கப் பொருளாதாரத்தில் பல முதனிலை தொழில் நிறுவனங்கள் மேற்படி நிதி நெருக்கடிக்கு உள்ளாகின. இதில் மிகப் பெரும் நட்டத்தை ஏற்க வேண்டி நேரிட்ட நிறுவனங்களில் சிட்டி குரூப் (City Group) LD3QBILD GILDíîGÒ GÓ6õTë (Mril Linch) glaĝuu கம்பனிகளுக்கு நேரிட்ட நட்டம் முறையே 55 பில்லியன் டொலர்கள் மற்றும் 52 பில்லியன் டொலர்களாகும்.
(12 டிறிலியன் டொலர்களைத் தாண்டிச் சென்ற ஒட்டுமொத்த தொகுதிக் கடன் வழங்கலில் ஐக்கிய அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் 260 பில்லியன் டொலர்களும், ஐரோப்பாவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் 227 பில்லியன் டொலர்களும், ஆசிய நிறுவனங்கள் 24 பில்லியன் டொலர்களும் ஏற்கனவே நட்டம் அடைந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.) நெருக்கடிக்கு உள்ளாகிய நிதிக் கம்பனிகளுக்கு கைகொடுக்கும் பொருட்டு அமெரிக்க சமஷ்டி ஒதுக்கு வங்கி ஒருசில நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன்படி வீழ்ச்சியடைந்த Bear Stems கம்பனியை JP மோகன் கம்பனி கொள்வனவு செய்வதற்காக ஒதுக்கு வங்கி நிதி வசதிகளை அளித்தது. ஐக்கிய அமெரிக்காவில் நான்காவது மிகப் பாரிய கம்பனியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற Lechman Brothers நிறுவனம் தமது முறிவு நிலையை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அதனை அமெரிக்க வங்கி (Bank of America) கொள்வனவு செய்து Él(Ib6) lélj55) 6) (IbéÉlgöT135). Fedric Mac LDi303|Lb Fannie Mea ஆகிய பாரிய தொழில்துறை நிறுவனங்களும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டன. அமெரிக்க காப்புறுதித் துறையில் முதனிலை நிறுவனமாகக் கருதப்படுகின்ற American Insurance Group — AIG 40 î6ù6óu J6őT GILT6ADIŤ FG160DE5ä5
கொழும்பு - 13, 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மா6 அச்சிடப்பட்டு இலங்கை மத்திய வங்கி தொட
 

கடனொன்றை அரசாங்கத்திடம் வேண்டி நின்றதைத் தொடர்ந்து இக் கம்பனியும் இடர் நிலைக்கு உள்ளாகியுள்ளதென்பது வெளிவந்தது. இக்காப்புறுதிக் கம்பனி வீழ்ச்சியடையுமெனில் அமெரிக்க மற்றும் சர்வதேச நிதித் துறையில் பாரியதொரு வீழ்ச்சி ஏற்படலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான முதனிலை அரசாங்கங்கள் 5ԼD5] சர்வதேச நிதி ஒதுக்குகளை டொலர்களில் பேணிவருகின்ற அதேநேரம் அப்பணத்தினை அமெரிக்க பிணையங்களில் முதலீடு செய்துள்ளன என்பதோடு யப்பான், சீனா, இந்தியா ஆகியன இதில் முன்னிலையில் உள்ளன. ஆதலால் ஐக்கிய அமெரிக்காவின் நிதித் துறை ஏதேனுமொரு வீழ்ச்சிக்கு உள்ளாகின்ற போது சர்வதேச நிதித் துறை மிகப் பாரதூரமானதொரு நிலைக்கு உள்ளாகும் என்பதை தவிர்க்க (UDLQU JITg5l.
உப முதனிலை கடன் கொடுத்தோர் தம்மிடமுள்ள முதலீட்டுத் தொகுதிகளை முறிகளாக பங்குச் சந்தையில் விற்பனை செய்வதற்கு ஆரம்பித்ததைத் தொடர்ந்து மேற்படி நிலைமை மேலும் தீவிரமடைந்தது. பங்குச் சந்தையில் வாடிக்கையாளர்களிடையே கைமாறிய முதலீட்டுத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு மிகச் சிக்கலான உருவாக்கப்பட்ட நிதிக் கருவிகள் உருவாகின. இதன் பெறுபேறாக ஒவ்வொருவரும் பெற்றுள்ள இலாப நட்டங்களை துல்லியமாக மதிப்பிடுவதற்கு (UDL9 UTJ) அளவுக்கு அமெரிக்க நிதி மற்றும் அடகுச் சந்தைத் துறை சிக்கலான நிலைமைக்கு உள்ளாகியது. அமெரிக்காவைத் தழுவியதாக நடைபெற்று வருகின்ற இந்த வீழ்ச்சி சர்வதேச நிதி மற்றும் பங்குச் சந்தை வலையமைப்புக்கு மட்டுமன்றி, அமெரிக்க பொருளாதாரத்தின் பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்திச் செயற்பாட்டிலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஐக்கிய அமெரிக்காவினுள் குறை தொழில்நிலையொன்று வளர்ச்சியடையத் தொடங்கியதோடு, தனிநபர் வருமானம் குறைவடைந்தமையின் காரணமாக குறிப்பாக அத்தியாவசியமல்லாத பண்டங்களுக்கான சந்தைக் கேள்வியும் வீழ்ச்சியடையத் தொடங்கியது. குறிப்பாக யப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பிய கைத்தொழில் நாடுகளின் பூர்த்தி (G)agFu'JuLI['ILIL’L பண்டங்களுக்கான பிரதானமான சந்தையாகவிருந்த அமெரிக்கப் பொருளாதாரத்தில் உருவாகிய மேற்படி வீழ்ச்சியின் காரணமாக அந்நாடுகளிலும் பாரிய உற்பத்திக் கம்பனிகள் மிக இடர் நிலைக்கு உள்ளாகின.
அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்கனவே நடைபெற்று வருகின்ற இப்பின்னடைவு தொடர்ந்தும் நிலவக்கூடியதொன்றென பல்வேறு பகுப்பாய்வாளர்களும் விளக்கமளித்துள்ளனர். சனாதிபதி பரக் ஒபாமா செயற்படுத்துகின்ற புதிய நிதி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் ஊடாக மீண்டும் அமெரிக்கப் பொருளாதாரம் சுமுக நிலையை அடையுமென ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
த்தையிலமைந்துள்ள (ஆட்டுப்பட்டித்தெரு) கெளரி அச்சகத்தில் ர்பூட்டல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.