கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2009.09-10

Page 1
綫
t
இலங்கை மத்திய வங்கியின் சமு:
 
 
 
 

INTELIG
LDGuñ 2B tējij 9 - 10 2DD09 GEFGHuhLÜ - GästETITLÜ
க, பொருளாதார இருமாத சஞ்சிகை

Page 2
இலங்கையின் பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறை
நிதி முறைமையின் உறுதித் தன்மையைப் பேணுதல் இலங்கை மத்திய வங்கியின் பிரதானமான குறிக்கோள்கள் இரண்டில் ஒன்றாகும். இக்குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பானதும், நம்பகத் தன்மையுடன் கூடியதும் வினைத்திறன் மிக்கதுமான கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் முறைமையொன்று அவசியமாகின்றது. இவ்விடயத்தைச் சிறப்பாகப் புரிந்துகொண்டு நிதிச் சந்தைத் தொழிற்பாடுகளின் அபிவிருத்திக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதை இலங்கை மத்திய வங்கி தனது பிரதானமானதொரு பொறுப்பாகக் கருதுகின்றது. இப்பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் பல்வேறு கட்டங்களையும் எடுத்துக்காட்டும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள விடயங்கள் அநேகமாகும்.
அதேநேர மொத்தத் தீர்ப்பனவுகள் முறைமை மற்றும் லங்கா செக்கியூ முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமை இதில் முதன்மையானதாக உள்ளது. அதன் பின்னர் பிரதிமைப்படுத்தல் காசோலைகள் தீர்ப்பனவு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தற்போது காசோலைகள் தீர்ப்பனவை இரண்டு தினங்களுக்கு சுருக்கிக் கொள்வதற்கு முடியுமாயுள்ளது. இலங்கை வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவு முறைமையினால் நிறைவேற்றப்படுகின்ற சேவையும் சொற்பமானதல்ல.
பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, அது வெளி உலகுடன் நடத்துகின்ற கொடுக்கல் வாங்கல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற போது மிகவும் பாதுகாப்பானதும் வினைத்திறன் மிக்கதுமானதொரு கொடுப்பனவுப் பொறிமுறையை நோக்கிச் செல்லுதல் அவசியமாகின்றது. இத்தேவையை நிறைவு செய்வதற்கு லங்கா கிளியர் கம்பனியுடன் சேர்ந்து இலங்கை மத்திய வங்கி மேலுமொரு பாரிய கடமையை ஆரம்பித்துள்ளது. அதாவது, எமது நிதி முறைமையின் பொருட்டு பொதுக் கொடுப்பனவு முறைமையொன்றை அறிமுகப்படுத்துதலாகும்.
இலங்கை பொதுக் கொடுப்பனவு முறைமையை அறிமுகப் படுத்துதல் தொடர்பான விளக்கமானதொரு கட்டுரை இத்தடவை 'குறிப்பேடு" சஞ்சிகையில் வெளியிடப்படுகின்றது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு அண்மியதொரு காலத்தினுள் எமது நிதி முறைமையை பலப்படுத்தல் மற்றும் வினைத்திறன் மிக்கதாக ஆக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறான கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் முறைமைகளைப் பற்றி விளக்குகின்ற இக்கட்டுரை பொதுக் கொடுப்பனவுப் பொறிமுறையொன்றின் தேவையை சிறப்பாகச் சுட்டிக்காட்டுகின்றது. பொதுக் கொடுப்பனவுப் பொறிமுறையின் ஊடாக வங்கி முறைமைக்கும் பொதுவாக பொருளாதாரத்திற்கும் கிடைக்கின்ற அனுகூலங்களும் இக்கட்டுரையின் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றன.
கொடுப்பனவு, தீர்ப்பனவுத் தொழிற்பாடுகளின் பொருட்டு ஒழுங்கானதொரு செயல் முறைமை தேவையென்பது தொடர்பில் உலகம் கவனம் செலுத்தியது இன்று நேற்றல்ல. கடந்த நூற்றாண்டின் முதலாவது காலாண்டு பூராகவும் உலக வல்லரசுகள் அவ்வாறான ஒழுங்கான ஒரு வேலைத்திட்டத்தைப் பற்றி சிந்தித்தன. அதனடிப்படையில் செயற்பட்டன. சர்வதேச தீர்ப்பனவுகள் வங்கி ஆரம்பிக்கப்பட்டமை இதற்கான ஒரு பாரிய முன்னெடுப்பாகும். இத்தடவை குறிப்பேடு சஞ்சிகையில் இவ்வங்கியின் ஆரம்பம் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஒரு கட்டுரையும் வெளியிடப்படுகின்றது. பொருளியல் வரலாறு தொடர்பில் ஆர்வம் காட்டுகின்ற கல்வி பெறுவோர்களுக்கு இதில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
“செலாவணிக் கட்டுப்பாடு தொடர்பில் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்’ என்ற தலைப்பினைக் கொண்ட கட்டுரையின் மூலம் இலங்கையில் தற்போது அமுலிலுள்ள செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்ட விதிகள் பற்றிய விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. இங்கு ஓரளவு சுருக்கமாகக் கலந்துரையாடப்படுகின்ற மேற்படி விடயங்கள் பற்றி எதிர்வரும் இதழ்களில் வாய்ப்புக் கிடைக்கின்றவாறு விளக்கமாக எடுத்தியம்புவதற்கு எதிர்பார்க்கிறோம்.

குறிப் GuG ISSN 1391-7676
2009 செப்தெம்பர் /ஒக்றோபர்
ஒரு பிரதியின் விலை: ரூபாய் 10.00
வருடாந்த சந்தா: ரூபாய் 240.00
(தபாற் கட்டணத்துடன்)
தொடர்பூட்டல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி எனக்
குறிப்பிடப்பட்ட காசுக்கட்டளைகள்/ காசோலைகள் பின்வரும்
முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் "குறிப்பேடு”
சஞ்சிகையை மாதாந்தம் அஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம்.
பணிப்பாளர்,
தொடர்பூட்டல் திணைக்களம்,
இலங்கை மத்திய வங்கி,
த.பெ.இல. 590, கொழும்பு.
கட்டுரைகள்: பக்கம்
சர்வதேச தீர்ப்பனவுகள் வங்கி (BIS) பற்றிய விபரங்கள் 03
செலாவணிக் கட்டுப்பாடு தொடர்பில் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள் 11
இலங்கையின் பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறை 17
"குறிப்பேடு" சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள், கட்டுரை ஆசிரியரின் கருத்துக்களேயொழிய இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களா காதிருக்கலாம்.
2009 செப் / ஒக் - குறிப்பேடு

Page 3
சர்வதேச தீர்ப்ப
(BIS) Luhý
வருண சர் தொடர்பாடல்
தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பொருளாதாரத்தின் நாணய உறுதித்தன்மையையும் (Monetary Stability) நிதியியல் உறுதித்தன்மையையும் பேணிவருதலே மத்திய வங்கியின் முதன்மையான பொறுப்பாக உள்ளது. இதற்கான தீர்மானங்கள் அந்தந்த மத்திய வங்கிகளால் சுயாதீனமான விதத்தில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றை ஒருதலைப்பட்சமான விதத்தில் மட்டும் செய்ய முடியாது. முழு உலகமும் பல்வேறான சந்தைகளின் ஊடாக ஒன்றுடனொன்று பிணைந்ததாக உள்ளது. இவ்வாறான சூழலினுள் இறைமையுடன் கூடிய மத்திய வங்கிகளால் தமது இலக்குகளை விதித்துக்கொள்வதைத் தவிர தனித்தனியாக ஒருதலைப்பட்சமான விதத்தில் நாணய மற்றும் நிதியியல் விகிதங்களைத் தீாமானிக்க முடியாது. ஆதலால் நாணய மற்றும் நிதியியல் விகிதாசாரங்களைத் தீர்மானித்தல் ஒரு கூட்டுக் கடமையாக மாறியுள்ளது. மேற்படியான கூட்டுக் கடமைக்கு இடமளிக்கின்ற மத்திய நிலையமாக மாறியுள்ள fab6f முக்கியமானதொரு நிறுவனமாக தீர்ப்பனவுத் தொழிற்பாடுகள் பற்றிய சர்வதேச 6) Ishid (Bank of International Settlements) 66TBig5356 Bg5). BS என்ற சுருக்கப் பெயரில் பிரபல்யமடைந்துள்ள மேற்படி சர்வதேச தீர்ப்பனவுகள் வங்கியை மத்திய வங்கிகளின் வங்கியாகக் குறிப்பிட முடியுமாயுள்ளது. சர்வதேச தீர்ப்பனவுகள் வங்கியின் ஆரம்பம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக சுருக்கமாக விடயங்களை முன்வைத்தல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சர்வதேச கொடுப்பனவுப் பணியின் தேவையை எடுத்துக்காட்டிய முதலாவது பிரச்சினை
ஆஸ்திரிய - ஹங்கேரிய இரட்டை பேரரசின் முடிக்குரிய
இளவரசனான பிரான்ஸ் பர்டினன்ட் (Franz Ferdinand) 1914 ஜூன் மாதம் 28 ஆம் திகதி சர்பியாவில் கொலை
2009 செப் / ஒக் - குறிப்பேடு

னவுகள் வங்கி
ப விபரங்கள்
ந்திரகீர்த்தி
திணைக்களம்
செய்யப்பட்டமையைத் தொடர்ந்து முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாகியது. அது பர்டினனட் இளவரசனின் கொலைக்கு எதிராக ஆஸ்திரிய - ஹங்கேரிய பேரரசுகள் சர்பியாவுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்தபோது சர்பியாவின் நட்பு நாடுகளான வல்லரசுகள் அதன் உதவிக்கு வந்தமையினாலேயே மேற்படி யுத்தம் ஆரம்பமாகியது. முதலாவது உலக மகா யுத்தத்தில் 7 கோடிக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். யுத்தத்தில் குதித்த நாடுகள் தம்மிடமிருந்த செல்வம், அறிவு, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியிலான உற்பத்திகள் அனைத்தையும் மொத்தமாக யுத்த களத்திற்கு அனுப்பி வைத்தன. இப்பெரும் யுத்தத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடிக்கும் அதிகமாகும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இது மனித வரலாற்றில் நடைபெற்ற மிக மோசமான மோதல்களில் ஒன்றாகுமென அறிக்கையிடப்பட்டுள்ளது.
நான்கு உலக வல்லரசுகள் (ஜர்மனி, ரஷ்யா, ஆஸ்திரிய - ஹங்கேரிய பேரரசு மற்றும் ஒட்டோமன் துருக்கி பேரரசு) யுத்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்து யுத்தம் முடிவடைந்தது. ஆஸ்திரிய - ஹங்கேரிய பேரரசும் ஒட்டோமன் துர்க்கி பேரரசும் தமது சுதந்திரத்தை இழந்தன. 1917 இல் வெற்றிவாகை சூடிய ரஷ்யப் புரட்சியின் காரணமாக ரஷ்யப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. சோவியற் சங்கம் ஆட்சிக்கு வந்தது. மத்திய ஐரோப்பாவின் வரைபடம் முழுமையாகவே மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது. பல சிறிய இராச்சியங்கள் உருவாகின. மீண்டும் ஒரு யுத்தம் தோன்றுவதைத் தடுத்தல் உள்ளிட்ட பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு நாடுகளின் சங்கம் (League of Nations) உருவாக்கப்பட்டது.

Page 4
1919 ஜூன் மாதம் 28 ஆம் திகதி (பிரான்ஸ் பர்டினன்ட் கொலை செய்யப்பட்டு சரியாக, ஐந்து வருடங்கள் பூர்த்தியடைகின்ற நாளன்று) கைச்சாத்திடப்பட்ட வர்சேல்ஸ் உடன்படிக்கை (Treaty of Versailles) யுத்த சேதங்கள் தொடர்பாக நட்டஈடு செலுத்துவதற்கு ஜர்மனியை வற்புறுத்தியது. 1921 இல் ஜர்மன் மார்க் 269 பில்லியன் தொகையை ஜர்மனி செலுத்துதல் வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது. (2,790 தங்க மார்க் நாணயக் குத்திகள் தூய்மையான 1 கிலோ கிறாம் தங்கத்திற்கு சமமாகும்.) தூய்மையான 100 மில்லியன் கிலோ கிறாம் தங்கத்திற்கு சிறிதளவு குறைவாயிருந்த மேற்படி நட்டஈட்டை 1984 வரை செலுத்த வேண்டி நேரிடுமெனக் கணிப்பிடப்பட்டிருந்தது. ஆதலால், இது ஒரு நடைமுறைச்சாத்தியமில்லாத தண்டனையாகக் கருதப்பட்டது. இதன் காரணமாக அதே ஆண்டின் இறுதியில் மேற்படி நட்ட ஈட்டுத் தொகையை ஜர்மன் மார்க் 132 பில்லியன் வரை குறைப்பதற்கு நேரிட்டது. அதனையும் 1984 வரை செலுத்துமாறு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தமையால் அதன் நடைமுறைச்சாத்தியத் தன்மை தொடர்பிலும் பிரச்சினை எழுந்தது.
மேற்படி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டன. இதில், 1930 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட "யங் திட்டம் (Young Plan) பிரதானமான தீர்வாகக் கருதப்பட்டது. இது அமெரிக்க நாட்டவரான ஓவன் டி யங் (Owen DYoung) தலைமையிலான ஒரு குழுவினாலேயே சமர்ப்பிக்கப்பட்டது.
சர்வதேச தீர்ப்பனவு வங்கி உருவாகுதல்
ஜர்மனின் நட்டஈட்டை அறவிடுகின்ற ‘யங்’ திட்டத்தை அமுல்படுத்தும் பொருட்டு 1930 இல் சர்வதேச தீர்ப்பனவுத் (og, fisLIII (65(65.535,1601 6ssid (Bank of International Settlement) தாபிக்கப்பட்டது. இது உலகில் உருவாக்கப்பட்ட முதலாவது சர்வதேச நிதி நிறுவனமாகும். மேலும், இது உலகின் மத்திய வங்கிகளுக்கிடையில் ஒத்துழைப்பைப் பேணிவருகின்ற முதன்மையான நிறுவனமாகும்.
பர்லினில் அமைந்திருந்த நட்டஈட்டை அறவிடுவதற்கான 5)glug. 5)6616)3bg.g565 (Agent General for Reparations) 36) D56)6 பொறுப்பேற்பதே சர்வதேச தீர்ப்பனவு வங்கிக்கு ஒப்படைக்கப்பட்ட முதலாவது கடமையாகும். இதற்கிணங்க ஜர்மனியிலிருந்து வருடாந்தம் நட்ட ஈட்டுத் தொகையை அறவிடுதல், அதனோடு தொடர்புடைய நிர்வாகத் தொழிற்பாடுகளை நெறிப்படுத்தல் மற்றும் நட்ஈடு பெறுனர்களுக்கு அதனைப் பகிர்ந்தளித்தல் இதனிடம் ஒப்படைக்கப்பட்டது. இச் செயற்பாட்டை பிரதிபலிக்கின்ற வகையிலேயே வங்கியின் பெயர் முன்மொழியப்பட்டது. நட்டஈடு செலுத்தும் பொருட்டு சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட

கடன் தொகை தொடர்பான பொறுப்பாளராக மற்றும் மத்திய வங்கிகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நிறுவனமாக செயற்படுதலும் இந்நிறுவனத்தை ஆரம்பிப்பதற்குக் காரணமாயிருந்த விடயங்களில் உள்ளடங்குகின்றன.
ஜர்மன் நட்டஈடு தொடர்பான பிரச்சினை படிப்படியாக தீர்ந்துவிட்டமையால் மத்திய வங்கிகளுக்கிடையே ஒத்துழைப்பை வளர்க்கும் பணியின் பக்கம் வங்கி அதிகளவில் கவனம் செலுத்த முற்பட்டது.
Luriggio (Basel)
சர்வதேச தீர்ப்பனவு வங்கி ஆரம்பத்தில் லண்டன், புருசல்ஸ் அல்லது அம்ஸ்டர்டாம் ஆகிய நகரங்களில் ஒன்றிலேயே தாபிக்கப்படுவதற்கு முன்மொழியப்பட்டது. ஆயினும் அது தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு வல்லரசுகளால் முடியாமலிருந்தது. அதன் பின்னர் அனைவரும் சுவிற்சர்லாந்து தொடர்பில் கவனம் செலுத்தினர். அந்நாடு ஒரு சுயாதீனமான பக்கச்சார்பற்ற நாடாகவே கருதப்படுகின்றது. ஆதலால் எந்தவொரு முதன்மையான வல்லரசு நாட்டினதும் தாக்கத்திற்கு உள்ளாகாத ஒரு நாடு என்ற வகையில் அதற்கு சர்வதேச தீர்ப்பனவு வங்கியைத் தாபிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சுவிற்சர்லாந்தினுள் பாசல் அதன் அமைவிடம் காரணமாகவே தெரிவு செய்யப்பட்டது. வங்கி தாபிக்கப்பட்ட காலத்தில் பெரும்பாலான சர்வதேச பயணங்கள் புகையிரதம் மூலம் நடைபெற்றன. கண்டத்தில் அனைத்துத் திசைகளுக்கும் பரவியதான புகையிரதப் பாதைகள் ஒன்றுசேர்கின்ற ஒரு இடமென்ற வகையில் பாசல் நகரத்திற்கு முக்கிய இடம் கிடைத்தது.
மத்திய வங்கிகள் ஆரம்பத்தில், அநாமதேயமாக பிரசித்தியற்ற விதத்தில் தமது கடமைகளைச் செய்கின்ற ஓர் இடத்தை பாசல் நகரத்தில் தாபிப்பதற்கே விரும்பின. Sgb65TU19, b85Jggio (bibj), Grand at Savoy Hotel Universe எனப்படும் கைவிடப்பட்ட ஆறு மாடி ஹோட்டல் கட்டிடம் வங்கியின் இல்லிடமாகத் தெரிவுசெய்யப்பட்டது. அதற்கு பக்கதிலிருந்த Frey's சொக்கலேட் விற்பனை நிலையத்திற்கு மேலால் இருந்த பகுதியும் சவோய் ஹோட்டல் கட்டிடத்திற்குச் சொந்தமாயிருந்தது. வங்கியை அடையாளம் காண்பதற்கான பெயர்ப் பலகை திட்டமிட்டே இடப்படவில்லை. சர்வதேச நிதியியல் உறுதிப்பாட்டிற்கு ஏற்புடையதான அநேகமான தீர்மானங்கள் நகரத்தின் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் அமைந்திருந்த இக்கட்டிடத்தின் மரத்தினாலான அறைகளிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. தங்கக் கொடுக்கல் வாங்கல்களுக்காக வருகை தந்திருந்தவர்கள் சொக்கலேட் விற்பனை நிலையத்தில் கூடினர். மேற்படி அநாமதேயக் கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் ஒவ்வொரு
2009 செப் / ஒக் - குறிப்பேடு

Page 5
நாட்டினதும் நாணயம் மதிப்பிறக்கம் செய்யப்படுதல், மீள்மதிப்பிடப்படுதல், தங்க விலை நிர்ணயிக்கப்படுதல், கரை கடந்த வங்கிகளின் ஒழுங்குமுறையாக்கல் மற்றும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி வீதங்களை அதிகரித்தல்
அல்லது குறைத்தல் ஆகியன முக்கியமானவையாகும். உலகத்திற்கு புதியதொரு பொருளாதார (p65)360)u. அறிமுகப்படுத்துவதற்கு தோள்கொடுக்கின்றவர்கள் இங்கு கூடி தீர்மானங்களை மேற்கொள்கின்றனர் என்பதை பாசல் நகர மக்கள் கூட அறிந்திருக்கவில்லை.
UTSF6)
சுவிற்சர்லாந்து ܝܓܠ
கவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் ஒன்றுசேர்கின்ற நிலப் பிரதேசத்தில் அமைந்திருந்த பாசல் நகரம்
1977 மே மாதத்தில் “பகிரங்கமாக’ (அதாவது ஒரு பெயர்ப் பலகையுடன்) செயலாற்றுவதற்கு, அதன் ஒருசில அங்கத்தவர்களது எதிர்ப்புக்கு மத்தியிலேயே வங்கி தீர்மானித்தது. பிந்திய காலத்தில் சர்வதேச தீர்ப்பனவு வங்கியினதும் சுவிஸ் தேசிய வங்கியினதும் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட கலாநிதி பிரிட்ஸ் லுய்விலர் (Fritz Leuteiler), இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளுதல் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பின் தாம் ஒருபோதும் அது நடைபெறுவதற்கு இடமளித்திருக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார். புதிய தீர்மானத்தின் பிரகாரம், சர்வதேச தீர்ப்பனவு வங்கிக்காக பதினெட்டு மாடிக் கட்டிடமொன்று பாசல் நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டது. தற்போது சுற்றுலாப் பயணிகளின் கவனத்தைக்கூட ஈர்த்துள்ள இப்புதிய கட்டிடம் Tower of Basel என அழைக்கப்படுகின்றது. இக்கட்டிடத்தின் உச்சி மாடியில் அமைந்துள்ள சிற்றுண்டிச் சாலைக்குப் பிரவேசித்தால் சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளினதும் எல்லைகள் ஒன்றுசேர்கின்ற நிலப் பகுதி மிக அழகாக காட்சியளிப்பதைக் காணலாம்.
2009 செப் / ஒக் - குறிப்பேடு
 
 

LL
பெரும் வீழ்ச்சியின் முன்நிலையில்
1930 இல் ஜேர்மன் நட்டஈடு செலுத்தும் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முக்கிய நோக்கத்திற்கமைய தாபிக்கப்பட்ட சர்வதேச தீர்ப்பனவு வங்கி மிகச் சிறந்த முறையில் இப்பணிக்கு உதவியாயிருந்தது. இத்தேவை படிப்படியாக நிறைவு பெறுகின்றபோது சர்வதேச தீர்ப்பனவு வங்கிக்கு புதியதொரு கடமை ஒப்படைக்கப்பட்டது. அது மத்திய வங்கிகளுக்கிடையே ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புகின்ற மற்றும் பேணிவருகின்ற பொறுப்பாகும்.
முதலாவது உலக மகா யுத்தத்தின் காரணமாக ஐரோப்பாவின் பயிர்ச் செய்கை நிலங்கள் யுத்த களங்களாக LDH 3601. எனவே ஐரோப்பாவின் பசியைப் போக்கும் பணியை பொறுப்பேற்பதற்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு இயலுமாயிருந்தது. அந்நாட்டின் விவசாயிகள் (கமத்தொழில் கம்பனிகள்) அதிகளவில் வேலை செய்ய ஆரம்பித்தனர். கமத்தொழிலில் முதலீடு செய்வதற்கு முற்பட்டனர். வங்கிகளிலிருந்து கடன் பெற்ற அவர்கள் புதிய இயந்திர உபகரணங்களைப் பயன்படுத்தி உருவாகியுள்ள அதிர்ஷ்டத்தின் அனுகூலத்தை அதிகரிப்பதற்கு முயற்சித்தனர். புதியதொரு கமத்தொழில் சுபீட்சத்தினால் ஐக்கிய அமெரிக்கா மலர்ச்சியடையத் தொடங்கியது. அந்நாட்டின் பங்குச் சந்தையும் பலம்பொருந்தியதாக முன்னேற்றமடைய ஆரம்பித்தது.
1924 இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பாவின் முன்னர் இருந்த வேலைத் தலங்கள், பயிர்ச் செய்கை நிலங்களை நோக்கி நகர்வதற்கு ஆரம்பித்தன. அதன் பயிர்ச் செய்கை நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பயிர்ச் செய்கை நிலங்களில் பயிர்ச் செய்கை செழிப்பாக நடைபெற ஆரம்பித்ததும் அது ஐக்கிய அமெரிக்காவின் கமத்தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களது உற்பத்திகளுக்கான சந்தையை இழக்க நேரிட்டது. உருவாகி வந்த புதிய நிலைமையினுள் அவர்கள் பெற்ற கடனை மீளச் செலுத்த முடியாத நிலை உருவாகியது. ஆயினும் குருடாயிருந்த பங்குச் சந்தையினால் இதனைக் காண முடியவில்லை. இந்நிலைமை இடையறாது தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் வளர்ச்சியடைந்தது.
1929 செப்தெம்பர் மாதம் 3 ஆம் திகதி டவ் (8 gT66so 3LOL606 (Dow Jones Industrial Average) sig,651 உயர்ந்தபட்ச பெறுமானத்தை (381.17) அறிக்கையிட்டிருந்தது. ஆயினும் அதன் பின்னர் சந்தை ஆட்டம்காணத் தொடங்கியது. ஆயினும் அநேகமானவர்கள் அது ஒரு தற்காலிக நிகழ்வாகும் எனத் தீர்மானித்து அதனை பொருட்படுத்தவில்லை. உண்மையிலேயே சந்தையில் ஒரு விதமான திரிபு நிலையொன்று உருவாகியிருந்தது. பண்டங்களின் சந்தைப்

Page 6
படுத்தல் மற்றும் தொழிற்சாலைகளை நிர்மாணித்தல் பாதிக்கப்பட்டிருந்ததொரு நிலைமையினுள் பங்குச் சந்தை வளர்ச்சியடைந்து வந்தது. ஆயினும் ஆறுதலடைவதற்கு - மனக் கலக்கமின்றி இருப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. “சந்தை தானாகவே திருந்திவிடும்” என அடம்ஸ் ஸ்மித் கூறியிருந்தார்.
ஆயினும் ஒக்றோபர் 24 ஆம் திகதி நினைத்திராத ஒரு விடயம் நடைபெற்றது. அது ஒரு வியாழக்கிழமையாகும். தற்போது அதனை "இருண்ட வியாழக்கிழமை" (Black Thursday) எனக் குறிப்பிடுகிறோம். இத்தினத்தில் பங்குரிமையாளர்கள் தமக்குரிய பங்குகளை விரைவாக விற்பனை செய்வதற்கு போட்டியிட்டனர். விற்பனைக் கட்டளைகளால் வியாபாரப் பரிமாற்றம் நிரம்பி வழிந்தது. காளைச் சந்தை (Bul Market) திடீரெனக் கரடிச் சந்தையாக (A Bear Market) LDITSlugs. J.P. Morgan p Girós L. LITsful நிதி நிறுவனங்களின் தலையீட்டுடன் வெள்ளிக்கிழமையன்று சந்தையை உறுதிப்படுத்தக் கூடியதாயிருந்தது. பீதியிலிருந்து விடுபட்டோமென்ற நம்பிக்கையில் வார இறுதி கழிந்தது. திங்கட்கிழமை (ஒக்றோபர் 28) நிலைமை மேலும் தீவிரமடைந்தது. "இருண்ட செவ்வாய்க்கிழமையும்' (Black Tucsday) உதித்தது. அது பாரிய வீழ்ச்சியின் ஆரம்பமாகும்.
சந்தையை வழிப்படுத்துகின்ற காளையும் கரடியும்
- — ---------------------------- ܪܝܓܝ ܢܟܝ - ) --
காளையானது எதனையும் பாராது முன்னோக்கிச் செல்லும் இயல்பைக் கொண்டது. Lists (353. சந்தையில் பிரவேசிக்கின்ற முதலீட்டாளர்கள் பெருமளவு இலாப எதிர்பார்ப்புடன் செயற்படுகின்ற போது அதனை காளைச் சந்தை எனக் குறிப்பிடுகிறோம். கரடி ஆபத்தைத் தவிர்த்துச் செல்வதில் திறமையாசாலியாகும். இலாபம் பற்றிய எதிர்பார்ப்பு குறைவடைகின்ற போது முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து விலகிச் செல்வதற்கு முற்படுவார்கள். அப்போது அதனை கரடிச் சந்தை எனக் குறிப்பிடுகிறோம். ஜேர்மனியில் பிரான்க்பர்ட் பங்குப் பரிமாற்றத்தின் முன்புறமாக செதுக்கப்பட்டுள்ள காளையினதும் கரடியினதும் சிலைகள் மேலேயுள்ள படத்தில் காணப்படுகின்றன.
அந்தப் பாரிய இருண்ட தினத்திற்கும் நவெம்பர் 13 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தினுள் ஐக்கிய அமெரிக்கப் பொருளாதாரம் டொலர் 3,000 கோடியை இழந்தது.
 
 

1930 இல் அந்நாட்டின் தேசிய வருமானம் டொலர் 8,700 கோடியிலிருந்து டொலர் 7,500 கோடி வரை குறைவடைந்தது. 1931 ஆம் ஆண்டானது அதனை டொலர் 5,000 கோடி வரை வீழ்ச்சியடையச் செய்தே முடிவடைந்தது. அடுத்த ஆண்டு மீதியாக டொலர் 4,200 கோடி குறிப்பிடப்பட்டிருந்தது. 1933 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வருமானம் டொலர் 4,000 கோடியாக இருந்தது.
நாட்டின் நிலைமை சாதகமானதல்ல என்று சனாதிபதி கெல்வின் குலீஜ் (Calvin Coolidge) அறிவித்தார். மாபெரும் பொருளாதார வீழ்ச்சி உருவாகியது.
மாபெரும் பொருளாதார வீழ்ச்சியினால் உலகத்தில் பஞ்சம் உருவாகியது. விலை மற்றும் நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு தொடர்பில் உலக மட்டத்தில் கவனம் செலுத்துகின்ற ஒருவரின் பணியை பொறுப்பேற்பதற்கு சர்வதேச தீர்ப்பனவு வங்கிக்கு நேரிட்டது.
ஐரோப்பிய மத்திய வங்கிகளின் தங்க ஒதுக்குகளை மிக இலகுவாகவும் பாதுகாப்பாகவும் வைப்பிலிடுவதற்கு சர்வதேச தீர்ப்பனவு வங்கியில் இடமளிக்கப்பட்டதன் காரணமாக அது படிப்படியாக மத்திய வங்கிகளின் வங்கியாக மாறியது. நாளுக்கு நாள் தீவிரமடைந்த பொருளாதார வீழச்சியின் வேதனையால் ஆஸ்திரியா, ஹங்கேரியா, யூகோஸ்லாவியா மற்றும் ஜேர்மனி ஆகியன அச்சமடைந்திருந்தன. உலகளாவிய நிதியியல் முறைமை ஆபத்துக்கு உள்ளாகி முறிவடைவதற்கு இடமளிக்காது பாதுகாக்கும் பொருட்டு முன்நிலையிலிருந்த மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் முன்வந்தனர். இதன் பொருட்டு ஒன்றுசேர்வதற்கான சந்தர்ப்பத்தை சர்வதேச தீர்ப்பனவு வங்கி ஏற்பாடு செய்தது. இதற்கிணங்க சர்வதேச தீர்ப்பனவு வங்கி உலக பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புகின்ற சவாலை ஏற்றுக்கொண்டது. ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி ஒதுக்கு வங்கி சர்வதேச தீர்ப்பனவு வங்கியின் பணிகளில் பங்கேற்பதையோ, அதன் பங்குகளை ஏற்றுக்கொள்வதையோ தனிமைப் போக்கினைக் கொண்டிருந்த அமெரிக்க காங்கிரஸ் உத்தியோக ரீதியில் அங்கீகரிக்காதிருந்த போதிலும் ஒதுக்கு வங்கியின் தலைவர் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் பாசலில் நிற்பதைக் காண முடியுமாயிருந்தது. (அக்காலகட்டத்தில் அமெரிக்க காங்கிரஸ் First National City வங்கியின் மீதே பூரண நம்பிக்கை வைத்திருந்தது. 1812 ஆம் 5,6061196) Jubidds ULL City Bank of New York 561601st First National City Bank of New York GT60T GLJurf ("LILL.g5). இன்று உலகம் பூராவும் பரவியுள்ள சர்வதேச வர்த்தக வங்கிகளில் முதலிடத்தைப் பெறுவதற்கு சிட்டி வங்கியினால் (Citibank) இயலுமாயுள்ளது.)
2009 செப் / ஒக் - குறிப்பேடு

Page 7
இரண்டாவது உலக மகா யுத்தம் ஆரம்பமாதல்
1939 செப்தெம்பர் முதலாம் திகதி ஜேர்மனி போலாந்தை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து இரண்டாவது உலக மகா யுத்தம் ஆரம்பித்தது. நாடுகள் ஒன்றுடனொன்று யுத்தத்தில் ஈடுபட்டிருக்கையில் சர்வதேச தீர்ப்பனவு வங்கி பாசல் நகரத்தில் தொடர்ந்தும் செயற்பட்டது. உண்மையிலேயே அப்போது அதன் மாதாந்தக் கூட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. ஜேர்மனிய நாசிச இராணுவம் ஐரோப்பிய காலனித்துவ நாடுகளிலிருந்து களவாடிய தங்கக் கையிருப்புகளை சர்வதேச தீர்ப்பனவு வங்கியின் ஊடாக தூய்தாக்கலுக்கு உட்படுத்துவதாக 1944 இல் செக் இராச்சியம் குற்றம்சாட்டியது. சர்வதேச தீர்ப்பனவு வங்கியை உடனடியாக ஒழிக்க வேண்டுமென்ற பிரேரணையொன்று அவ்வாண்டின் ஜூலை முதலாம் திகதியிலிருந்து ஜூலை 22 ஆம் திகதி வரை thji. 666' 1961 D666T G6) is 6,667L6 (Mount Wasington) ஹோட்டலில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் நாணய மற்றும் நிதி அலுவல்கள் பற்றிய மாநாட்டிற்கு (பிரட்டன்வூட் மாநாடு) சமர்ப்பிக்கப்பட்டது. இது செக் இராச்சியத்தின் குற்றச்சாடடின் அடிப்படையிலாகும். இப்பிரேரணைக்கு ஐக்கிய அமெரிக்கா (Up(p60bLDuJT607 ஆதரவைத் தெரிவித்தது. மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட இணக்கப்பாட்டின் பிரகாரம் தாபிக்கப்படுகின்ற பன்னாட்டு நாணய நிதியத்திற்கு (IMF-International Monetary Fund) சர்வதேச தீர்ப்பனவு நடவடிக்கைகளையும் நாணயத் தீர்ப்பனவு நடவடிக்கைகளையும் ஒப்படைக்கலாம் என்பதே இப் பிரேரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களின் கருத்தாக இருந்தது.
உலகளாவிய bT600Tu வழிப்படுத்தல் ýD-LjffUU வழிமுறையொன்றை விதிப்பதற்கும் அமுலாக்குவதற்குமான தேசிய எல்லைகளைத் தாண்டிச் செல்கின்ற அமைப்பொன்றை (தேசிய தீர்ப்பகத்தின் தோற்றத்தைக் கொண்ட) தாபித்தல் ஐக்கிய நாடுகள் அமைப்பைப் போன்றதொரு சர்வதேச முகவராண்மையினால் சனநாயக ரீதியில் நிறைவேற்ற முடியாது. தாம் கட்டியெழுப்பிய நிறுவனத்தை ஒழிப்பதற்கு மத்திய வங்கிகள் இணங்கவில்லை. இதன் பெறுபேறாக அமெரிக்காவை முதன்மையாகக் கொண்ட பிரேரணை இறுதியில் தோல்வியடைந்தது.
ஆதலால் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் கொந்தளிப்புகளுக்கு மத்தியில்கூட அழிந்துவிடாது தனது நிலைத்திருத்தலைப் பேணிக்காப்பதற்கு சர்வதேச தீர்ப்பனவு வங்கியினால் இயலுமாயிருந்தது.
உலக மகா யுத்தத்தின் பின்னர்
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் சர்வதேச தீர்ப்பனவு வங்கி மீண்டும் மிகவும் பலம் பொருந்தியவாறு
2009 செப் / ஒக் - குறிப்பேடு

எழுச்சிபெற்றது. ஐரோப்பிய நாணயங்களுக்கான தீர்ப்பகமாகச் செயலாற்றுதல் அது நிறைவேற்றிய முதலாவது பணியாக இருந்தது. இதற்கு மேலதிகமாக இது மத்திய வங்கிகள் சந்திப்பதற்கும், கூட்டங்களைக் கூட்டுவதற்குமான கவர்ச்சி கரமான சந்திப்பு நிலையமாகவும் விளங்கியது.
பிரட்டன்வூட் மாநாடு நடைபெறும்வரை உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளின் போது ஒதுக்குப் பணத்தின் பணி பிரித்தானிய பவுணின் மூலமே நடைபெற்றது. நூறு வருடங்களுக்கும் அதிக காலம் நிலவிய இந்த அங்கீகாரம் 1944 இல் முடிவடைந்தது. புதிய இணக்கப்பாட்டினுள் சர்வதேச ஒதுக்குப் பணமாக ஆவதற்கான சிறப்புரிமை ஐக்கிய அமெரிக்க டொலருக்கே கிடைத்தது. இதன் காரணமாக ஏனைய நாணயங்களுக்கு மத்தியில் ‘மன்னனாக இருக்கக்கூடிய சிறப்புரிமை டொலருக்குக் கிடைத்தது.
டொலருக்கு எதிரான முகாம் சக்திபெறுதல்
1960 ஆம் ஆண்டாகின்றபோது சர்வதேச நாணய முறை அரசியல் இழுபறிக்கு மத்தியில் சிக்கியது. 1959 இல் இருந்து 1969 வரையிலான காலத்தினுள் பிரான்ஸ் சனாதிபதியாக 6)(5{bg5 Qg6öIU6ò ởff6ò6rò lọ QdĐff6ò (Charles de Gualle) ஐக்கிய அமெரிக்க டொலர் 'எல்லையற்ற சிறப்புரிமைகளை’ பெறுவதாகக் குற்றம்சாட்டினார். வர்த்தக நிலுவை மற்றும் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம் ஐக்கிய அமெரிக்கா வியட்னாம் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது இந்த சிறப்புரிமையின் காரணத்தினாலாகும் என்பதே அவரது கருத்தாக இருந்தது.
டி கொள்
பிரான்சுக்கு சொந்தமாயிருந்த டொலர்களுக்கு பதிலாக தங்கத்தை வேண்டி நிற்பதற்கும் டி கொள் முற்பட்டார். ஐக்கிய அமெரிக்க டொலருக்குப் பதிலாக தங்க அளவீட்டை” சர்வதேச தீர்ப்பனவுகளுக்குப் பயன்படுத்துவதே அவருக்குத்

Page 8
தேவையாயிருந்தது. டொலருக்கு எதிராக உருவாகிய இந்த எதிர்ப்பே, நாணய அலகொன்றை உருவாக்குதல் தொடர்பில் ஐரோப்பிய கண்டம் முழுவதிலும் பரவிய கலந்துரையாடல் மேலெழுவதற்கு காரணமாயமைந்தது.
ஆயினும் டொலர் அவ்வாறான சிறப்புரிமைகள் எதனையும் பெறுவதில்லை என்பது ஐக்கிய அமெரிக்காவின் கருத்தாக இருந்தது. டொலரின் சர்வதேச வகிபங்கு ஒரு பொறியாக மாறியுள்ளதெனவும் ஏனைய நாடுகள் தமது செலாவணி வீதத்தை விருப்பின் பிரகாரம் மாற்றியமைத்து வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் நன்மை பெறுகின்றார்கள் எனவும் அவர்கள் கருதினார்கள். அக்காலத்தில் ஜப்பான் தனது யென் நாணயத்தை குறைந்த மட்டத்தில் பேணிவந்து ஐக்கிய அமெரிக்காவின் உற்பத்தித் தளத்திற்கு சேதம் விளைவிக்கின்றதென ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
இச்சவாலின் முன்னிலையில் டொலரைப் பாதுகாக்கும் பிரச்சினைக்கு ஐக்கிய அமெரிக்கா முகம்கொடுத்திருந்தது. அந்நாடு அதற்கான தீர்ப்பை சர்வதேச தீர்ப்பனவு வங்கியிடமிருந்தே எதிர்பார்த்தது. இதன்படி தீர்ப்பனவு வங்கிக்கு ஊடாக மிகப் பெருமளவில் தங்கமும் டொலரும் பரிமாறப்பட்டன. பிரட்டன்வூட் மாநாட்டில் தீர்ப்பனவு வங்கியை ஒழிப்பதற்கு முயற்சித்த ஐக்கிய அமெரிக்காவுக்கு அதன் உதவியை நாடி வருவதற்கு நேரிட்டமை விதியின் விளையாட்டாகவே கருதப்பட்டது.
1970 ஆம் தசாப்தத்திலிருந்து
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் 1970 ஆம் தசாப்தத்தின் ஆரம்ப காலம் வரையிலும் சர்வதேச தீர்ப்பனவு வங்கி பிரட்டன்வூட் மாநாட்டின் தீர்மானங்களைச் செயற்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதற்கும் அதனுாடாக நாணயக் கொள்கைத் துறையின் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்குமே அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.
நாணயக் கொள்கைத் துறையில் நிலவிய கலவரம் ஐக்கிய அமெரிக்கா ‘தங்க அளவீட்டினை கைவிட்டதைத் தொடர்ந்து வேறு திசையில் திரும்பியது. கடன் நெருக்கடியும் சர்வதேச எண்ணெய் நெருக்கடியும் இதற்குக் காரணமாக இருந்தது.
1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் அநேகமான லத்தீன் அமெரிக்க நாடுகள் - குறிப்பாக பிரேசில், ஆர்ஜன்ரீனா மற்றும் மெக்சிக்கோ ஆகியன கைத்தொழில்மயமாக்கல் தேவைகளின் பொருட்டும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்

பொருட்டும் சர்வதேச கடன் வழங்கும் நிறுவனங்களிலிருந்து பெருமளவில் கடன் பெற்றன. அக்காலகட்டத்தில் மேற்படி நாடுகள் குறிப்பிடத்தக்களவு பொருளாதார வளர்ச்சியை அடைந்திருந்த நாடுகளாக இருந்தமையினால் அவற்றிக்குக் கடன் கொடுப்பதற்கு எந்தவொரு கடன் வழங்கும் நிறுவனமும் தயங்கவில்லை. 1975 க்கும் 1982 க்கும் இடைப்பட்ட காலத்தில் வர்த்தக வங்கிகளிடமிருந்து லத்தீன் அமெரிக்கா பெற்றிருந்த கடன் தொகை ஆண்டுக்கு 20.4 சதவீத திரண்ட விகித்தல் அதிகரித்தது.
இதன் பெறுபேறாக 1975 இல் 75 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த லத்தீன் அமெரிக்காவின் கடன் தொகை 1982 ஆம் ஆண்டாகின்ற போது 315 பில்லியன் அமெரிக்க டொலர்களாக நான்கு மடங்கையும் விட அதிக அளவில் அதிகரித்தது. இது பிராந்தியத்தின் மொத்த தேசிய உற்பத்தியில் அரைவாசிக்கு சமனானதாகும். 1975 இல் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த கடன் மீளவிரிப்பு 1982 ஆம் ஆண்டாகின்ற போது 66 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.
1947 இல் இருந்து 1967 வரையிலான காலத்தினுள் (ஐக்கிய அமெரிக்க டொர்களில் விலையிடுகின்றபோது) பெற்றோலிய விலை ஆண்டுக்கு 2 சதவீதத்திற்கும் குறைவாகவே அதிகரித்திருந்தது. ஆயினும் 1971 ஆம் ஆண்டின் பின்னர் இந்நிலைமை குறிப்பிடத்தக்களவில் மாற்றமடைந்தது.
பிரட்டன்வூட் உடன்படிக்கையின் பிரகாரம் ஐக்கிய அமெரிக்க டொலரின் பெறுமதி தங்கத்தின் விலையுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆயினும் 1971 ஆகஸ்ட் 15 ஆம் திகதி மேற்படி பிரட்டன்வூட் உடன்படிக்கையிலிருந்து நீங்குவதற்கு அமெரிக்கா நடவடிக்கையெடுத்தது. ‘தங்க அளவீட்டை” கைவிட்ட ஐக்கிய அமெரிக்கா டொலரை சந்தையின் கேள்வி நிரம்பலுக்கு ஏற்ப மிதப்பதற்கு இடமளித்தது. அதற்கிணங்கச் சென்று, பிரித்தானியாவும் ஸ்டேர்லிங் பவுணை மிதப்பதற்கு இடமளித்தது. ஏனைய கைத்தொழில் நாடுகளும் இந்த ஊர்வலத்தில் இணைந்து கொண்டன.
மேற்படி புதிய நடவடிக்கையைத் தொடர்ந்து உருவாகக்கூடிய நிலைமைக்கு முகம்கொடுக்கும் பொருட்டு முன்னர் ஒருபோதும். இல்லாதிருந்த விதத்தில் தமது நாணய ஒதுக்கத்தினை அதிகரிப்பதற்கு (அதாவது நாணயத்தை அச்சிடுவதற்கு) கைத்தொழில் நாடுகள் நடவடிக்கை எடுத்தன. இதன் பெறுபேறாக ஐக்கிய அமெரிக்க டொலரினதும் ஏனைய பலம் பொருந்திய நாணயங்களினதும் பெறுமதி வீழ்ச்சியடைந்தது.
2009 செப் / ஒக் - குறிப்பேடு

Page 9
ஐக்கிய அமெரிக்க டொ 1.
ՑԱԾ -
•9B 吕 800+ *o voo ! 중 -2 600 S
SOC) 雷 400
300 x
20
0 SSSSSSSSiiiSLSSSSSSLSLSSSLSSLeAeTiMeSeiSSSiM i i LSSLSLSLSSSHHSSSSLLLSSL Ys:
盛盤盤鹽盤盤盤發盤盤盔盤盤撥盤發騷盤盤盜器器匯
ஒவ்வொரு வருட இறுதியிலும் அமெரிக்க டொலரின் பெறும
தங்க மில்லி கிறாம்களில் அளவிடப்பட்டுள்ளன. 1970
குறைவடைந்துள்ள விதத்தினை இது தெளிவாக எடுத்துக் க
ஆகஸ்ட் 15 ஆம்
உலக சந்தையில் பெற்றோலியம் அமெரிக்க டொலர் பெறுமதியிலேயே விலையிடப்பட்டிருந்தது. முன்னரைப் போன்று டொலரின் மூலம் பணம் ஈட்டப்பட்ட போதிலும் புதிய போக்கைத் தொடர்ந்து எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த உண்மை வருமானமே கிடைத்தது. ஆதலால், எண்ணெய்க்கு விலையிடுகின்ற புதியதொரு முறையை நாடிச் செல்வதற்கு இவர்களுக்கு நேரிட்டது. இதற்கிணங்க எண்ணெய் பீப்பாயின் விலையை தங்கப் பெறுமதியில் விலையிடுவதற்கு ஒபெக் (OPEC) அமைப்பு தீர்மானித்தது. 1973 ஒக்றோபர் மாதம் 16 ஆம் திகதி ஒபெக் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இத்தீர்மானத்தின் அடிப்படையில் பெற்றோலிய பீப்பாய் ஒன்றின் விலை 5 அமெரிக்க டொலர்களும் 11 சதம் வரை 70 சதவீதத்தால் அதிகரித்தது.
விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளுக்கு பணம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. அப்பணம் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச மட்டத்திலான வங்கிகளிலேயே முதலீடு செய்யப்பட்டது. அவ்வாறு முதலீடு செய்யப்பட்ட பணம் கடன் என்ற வகையில் லத்தீன் அமெரிக்காவை நோக்கிச் சென்றது. இதற்கிடையே 1979 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பாவும் வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தன. இந்நடவடிக்கை லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தின் கடன்பட்டுள்ள நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமது நாட்டினால் தொடர்ந்தும்
2009 செப் / ஒக் - குறிப்பேடு

லாரின் பெறுமதி
தி இவ்வரைபடத்தின் மூலம் காட்டப்படுகின்றது. இப்பெறுமதி ஆம் ஆண்டின் பின்னர் டொலரின் பெறுமதி பெருமளவு ாட்டுகிறது. ஐக்கிய அமெரிக்கா ‘தங்க அளவீட்டினை 1971 திகதி கைவிட்டது.
கடனை மீளனிப்புச் செய்ய முடியாதென மெகசிக்கோ நாட்டின் நிதி அமைச்சர் ஜேசஸ் சில்வா ஹர்ஷொக் (Jesus Silva Herzog) அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேச வர்த்தக வங்கிகள் லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு கடன் வழங்குவதை மட்டுப்படுத்தின. ஒருசில வங்கிகள் அதனை முழுமையாகவே கைவிட்டன.
இந்நெருக்கடியின் முன்னே நாட்டு எல்லைகளை ஊடறுத்து நடைபெறுகின்ற மூலதனப் போக்கினை முகாமைத்துவம் செய்கின்ற சவால் உருவாகியது. இப்பணிக்கு தலைமைத்துவம் வழங்குகின்ற பொறுப்பும் சர்வதேச தீர்ப்பனவு வங்கியிடமே ஒப்படைக்கப்பட்டது.
வங்கி மேற்பார்வை தொடர்பான பாசல் குழு
uggs (3Ushgir (g)(p (G10-Group of 10) 665ug 11 நாடுகளின் கூட்டமைப்பொன்றாகும். 1962 இல் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, யப்பான், கனடா, சுவீடன், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியன ஒன்றிணைந்து தாபித்த பத்துப் பேரின் குழுவில் 1964 இல் சுவிற்சர்லாந்தும் இணைந்துகொண்டது. இந்த பதினோராது ஆள் இணைந்த போதிலும் குழுவின் பெயர் மாற்றப்படவில்லை. பிரட்டன்வூட் மாநாட்டின் தீர்மானத்தின் பிரகாரம் பேணிவரப்பட்ட நிலையான செலாவணி வீத முறையை கைவிட்டு மிதக்கும் செலாவணி வீத முறையை

Page 10
கடைப்பிடிப்பதற்கு 1971 திசெம்பர் மாதத்தில் இந்த பத்துப் பேரின் குழுவே உடன்படிக்கை செய்து கொண்டது. மேலே விபரிக்கப்பட்டுள்ளவாறு அப்போது ஐக்கிய அமெரிக்கா தங்க அளவீட்டினை கைவிட்டு நான்கு மாதத்திற்கு அண்மியதொரு காலம் கடந்திருந்தது.
1974 இல் பாசல் நகரத்தின் சர்வதேச தீர்ப்பனவு வங்கியில் கூடிய பத்துப் பேரின் குழுவின் மத்திய வங்கி ஆளுநர்கள் வங்கி மேற்பார்வை தொடர்பான பாசல் குழுவை (BCBS- Basel Committee on Banking Supervision)
தாபிப்பதற்குத் தீர்மானித்தனர்.
வங்கி மேற்பார்வைக்குப் பயன்படுத்துகின்ற செயல் முறைமைகளை ஆக்குதல் பாசல் குழு எனப் பிரசித்தி பெற்றுள்ள இந்நிறுவனத்தின் கடமையாகும். இதன் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அநேகமான செயல் முறைமைகள், விதப்புரைகள், இணக்கப்பாடுகள் உலகம் பூராவும் பயன்படுத்தப்படுகின்றன. இன்று எப்போதும் கலந்துரையாடப்படுகின்ற பாசல் II இணக்கப்பாடு இதில் முக்கியமானதாயுள்ளது.
இக்குழு ஆண்டுக்கு நான்கு தடவைகள் பாசல் நகர சர்வதேச தீர்ப்பனவு வங்கியில் கூடுகின்றது.
எவ்வாறாயினும், சர்வதேச தீர்ப்பனவு வங்கி (BIS), வங்கி மேற்பார்வை தொடர்பான பாசல் குழு (BCBS) ஆகியன ஒரு நிறுவனமோ அல்லது ஒரு நிறுவனத்தின் இரண்டு பிரிவுகளோ அல்ல. இவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட தனியான இரண்டு நிறுவனங்களாகும். ஆதலால், இந்த வங்கி மேற்பார்வைக் குழு தொடர்பான விடயங்கள் தனியானதொரு கட்டுரையின் மூலம் ஆராயப்படுதல் வேண்டும்.
சர்வதேச வர்த்தக வங்கியின் மாற்றமுறும் வகிபாகம்
மேற்படி அனைத்து விடயங்களுக்கும் ஏற்ப, சர்வதேச தீர்ப்பனவு வங்கியின் மூலம் உலகளாவிய நாணய மற்றும் நிதித் துறையின் உறுதிப்பாட்டின் பொருட்டு நிறைவேற்றியுள்ளதும் நிறைவேற்றப்படுகின்றதுமான பணிகள் சொற்பமல்லவென்பது தெளிவாகின்றது. 1930 ஆம் ஆண்டிலிருந்து பாசல் நகர சர்வதேச தீர்ப்பனவு வங்கியைத் தழுவியதாக மத்திய வங்கிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு வளர்ச்சியடைந்துள்ளது. அன்றிலிருந்து மத்திய வங்கி ஆளுநர்களும் மத்திய வங்கியினதும் ஏனைய நிறுவனங்களினதும் நிபுணர்களும் ஒன்றாகச் சேர்ந்து நடத்திய கலந்துரையாடல்கள் மற்றும் மாநாடுகள் இதற்கு வழியமைத்தது. இவ்வொத்துழைப்புக்கு உதவி வழங்கும் பொருட்டு தீர்ப்பனவு வங்கி நாணய மற்றும் நிதியியல், பொருளியல் துறைகள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றது. இதைத் தவிர
10

பொருளாதார மற்றும் நிதித் துறைகளுடன் தொடர்புடைய முக்கியமான புள்ளிவிபரங்களைத் திரட்டி, கோவைப்படுத்தி விநியோகிக்கிறது.
எவ்வாறாயினும், வங்கி தொடர்பாக அநேக விமர்சனங்களும் உள்ளன. அவை அனைத்தையும் பற்றிக் கலந்துரையாடுவதற்கு இது உகந்த தருணமல்ல. 1966 இல், Tragedy and Hope: A History of the Wold in Our Time Gig)|ib பெயரில் ஒரு நூலை எழுதி வெளியிட்ட கரொல் க்விக்லி (Carol Quigley) தெரிவித்த ஒரு கருத்தினைக் கூறி இக்கட்டுரையை முடிவுறுத்துகிறேன்.
Tragedly
"..முழு உலகினதும் பொருளாதாரம் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசியல் கூட்டமைப்புகளை நிருவகிக்க இயலுமான விதத்தில் தனி நபர்களுக்கு சொந்தமான உலகளாவிய நிதிக் கட்டுப்பாட்டு முறையொன்றை உருவாக்குதல் வரை தொலைதூரத்திற்குப் பரவியதான ஒரு நோக்கம் நிதியியல் முதலாளித்துவவாதிகளிடம் இருந்தது. எப்போதும்போல் நடத்தப்பட்ட சந்திப்புகள் மற்றும் மாநாடுகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கைகளின் மூலம் அவர்களது தேவையின் நிமித்தம் தோற்றுகின்ற உலகின் மத்திய வங்கிகளின் ஊடாக பிரபுத்துவ முறையின் அடிப்படையில் மேற்படி முறையைக் கட்டியெழுப்புவதற்கு
முயற்சியெடுக்கப்பட்டது. தனிநபர் கூட்டமைப்புகளைப் போன்று உலகின் மத்திய வங்கிகளினால் பேணிவரப்பட்டதும் நிருவகிக்கப்பட்டதுமான சுவிற்சர்லாந்தின் LIFT F656)
அமையப்பெற்றுள்ள சர்வதேச தீர்ப்பனவு வங்கி இப்பணியில் முன்னணியில் இருந்தது.”*
2009 செப் / ஒக் - குறிப்பேடு

Page 11
செலாவணிக் கட்டுப்பாடு
வேண்டிய
நிசாதி தெe
உதவி செலாவணிச் செலாவணிக் கட்டுப்பா
உங்களது நாளாந்த தொழில்துறை வாழ்க்கையிலும் அதேபோன்று பொது வாழ்க்கையின் ஒருசில நடவடிக்கைகளின் போதும் வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களில்
ஈடுபடுவதற்கு நேரிடும். அவ்வாறான வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கலின் பொருட்டு வலுவிலுள்ள dy வரையறை பற்றிய விடயங்களைக் குறிப்பிட்டு
வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களை சட்ட வரையறையினுள் மேற்கொள்வதற்குத் தேவையான அறிவுட்டலை வழங்குதல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
செலாவணிக் கட்டுப்பாடு
செலாவணிக் கட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, β)(b நாட்டிற்கான வெளிநாட்டு நாணயங்களின் உள்நோக்கிய e)160)||1*(6456i (Inward remittances) LDösbIIb Q6)16ï)(35'Töfluj S)SOILIlīGeB6st (Outward remittances) GlgblILsst 6d Q(b அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சட்ட ஒழுங்குவிதிகள் பிரதானமாக செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்ட விதிகளின் ஊடாக எடுத்துக்காட்டப்படுகின்றன.
1953 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம்
வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களின் பொருட்டு வலுவிலுள்ள அடிப்படைச் சட்ட ஆவணமாக 1953 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் உள்ளது. அரச முகவரென்ற வகையில் இலங்கை மத்திய வங்கியின் செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் மேற்படி சட்டத்தின் ஏற்பாடுகளை அமுலாக்குகின்றது. செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் அடிப்படை வாசகங்கள் மற்றும் அச்சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஏனைய முதன்மையான ஒழுங்குவிதிகள் பற்றி இக்கட்டுரையின் மூலம் விளக்கமளிக்கப்படுகின்றது.
இலங்கையில் செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்ட விதிகளை அமுலாக்குகின்ற நிறுவனம்
1949 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 106(2) ஆம் வாசகத்தின் பிரகாரம் அரச முகவராகச் செயலாற்றுகின்ற இலங்கை மத்திய வங்கி மேற்படி செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்ட விதிகளை அமுலாக்ககின்றது. இதன் பொருட்டு இலங்கை மத்திய
2009 செப் / ஒக் - குறிப்பேடு

தொடர்பில் அறிந்திருக்க விடயங்கள்
ன்னகோன்
கட்டுப்பாட்டாளர் ட்டுத் திணைக்களம்
வங்கியின் செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் தாபிக்கப்பட்டுள்ளது.
செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்ட விதிகளின் வளர்ச்சி
வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் 1950-1960 தசாப்தத்தினுள் நாட்டில் கடுமையானதொரு செலாவணிக் கட்டுப்பாடு நிலவியது. ஆயினும் சர்வதேச ரீதியில் வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து மற்றும் திறந்த பொருளாதாரக் கொள்கை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டுச் செலாவணிச் சட்டங்களும் படிப்படியாகத் தளர்த்தப்பட்டது. வெளிநாட்டுச் செலாவணிச் சட்ட விதிகளின் வளர்ச்சியை நோக்குகையில் 1994 மிக முக்கியமானதொரு ஆண்டாகக் கருதப்படுகின்றது. அவ்வாண்டு u6160T (6 bI607u itu (International Monetary Fund-IMF) யாப்பின் 08வது வாசகத்தை அங்கீகரிப்பதற்கு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதைத் தொடர்ந்து பன்னாட்டு நடைமுறைக் G35|TGd556)6) TElab6) b6fail (International Current Transactions) பொருட்டு நிலவிய வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாடு முற்றாக நீக்கப்பட்டது.
அடிப்படை வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல்வாங்கல் வகைகள்
வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கல்கள் அவை நடைபெறுகின்ற சந்தைக்கு ஏற்ப அதாவது, நாணயச் சந்தை, மூலதனச் சந்தை, முறிகள், பங்குகள், உருவாக்கப்பட்ட என்பவற்றுக்கு அமைய அவற்றை விரிவான இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன, பன்னாட்டு நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பன்னாட்டு மூலதனக் கொடுக்கல் வாங்கல்கள் (International Capital Transactions) 6T6öp6JTBT(5tb. பன்னாட்டு நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்கள்
பண்டங்கள் மற்றும் பணிகள் வர்த்தகத்துடன் தொடர்புடைய வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்கள் முக்கியமாக பன்னாட்டு நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்களாகக் குறிப்பிடப்படுகின்றன. பண்டங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியின் பொருட்டான கொடுப்பனவுகள் மற்றும் பெறுகைகள், பண்டங்களை ஏற்றிச் செல்லல் கட்டணங்கள்,
11

Page 12
வெளிநாட்டுப் பயணங்களுக்காகப் பணம் பெறுதல் (கல்வி, சுற்றுலா, மருத்துவ சிகிச்சை பெறுதல்), தொடர்பாடல் நடவடிக்கைகளுக்கான கட்டணங்கள் மற்றும் வர்த்தக சின்னங்களைப் பயன்படுத்தலுடன் தொடர்புடைய உரிமப் பத்திரக் கட்டணங்கள் ஆகியன பன்னாட்டு நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்களுக்கு உதாரணங்களாகும்.
பன்னாட்டு முலதனக் கொடுக்கல் வாங்கல்கள்
நிதி மற்றும் நிலையான சொத்துக்களை அடையப் பெறுதலுடன் தொடர்புடைய கொடுப்பனவுகள் இதில் உள்ளடங்குகின்றன. இதன்படி இலங்கையில் வதிவுடைய bt. IsiGb6i (Persons Residant in Sri Lanka) óf Digub நிலையான சொத்துக்களை அடையப்பெறுவதற்காக மேற்கொள்கின்ற கொடுப்பனவுகள், இலங்கையில் வதிவுடைய நபர்கள் வெளிநாடுகளில் மேற்கொள்கின்ற முதலீடுகள் மற்றும் வெளிநாட்டவர்கள் இலங்கையில் மேற்கொள்கின்ற முதலீடுகள் அத்துடன் இலங்கையில் வதிவுடைய நபர்கள் வெளிநாடுகளிலிருந்து பணத்தைக் கடனாகப் பெறுதல் ஆகியன மூலதனக் கொடுக்கல் வாங்கல்களில் முக்கியமாவை களாயுள்ளன. இவ்வாறான மூலதனக் கொடுக்கல் வாங்கல்களின் பொருட்டு செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் அனுமதியைப் பெறுதல் வேண்டும்.
1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற செலாவணிக் கட்டுப்பட்டு & L- விதிகளின் தளர்த்துகைகளின் பிரகாரம் மேலே குறிப்பிடப்பட்ட நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய அனைத்து வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களுக்கும் உரிமம்பெற்ற 6) ligjobb வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நாணயங்களை வழங்குகின்றபோது வங்கி தனது தற்றுணியை உரிய விதத்தில் பயன்படுத்தி குறித்த வேண்டுகோளினதும் கொடுக்கல் வாங்கலினதும் துல்லியத் தன்மையை உறுதி செய்துகொள்ளல் வேண்டும்.
நபரொருவரின் வதிவுடைமையை தீர்மானிக்கின்ற (p60)до
செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை முழுமையாக நோக்குகின்ற போது, இலங்கையில் வதிவுடைமையைக் கொண்ட நபரொருவருக்கும் வெளிநாட்டில் வதிவுடைமையைக் கொண்ட நபரொருவருக்கும் இடையில் நடைபெறுகின்ற வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடையவற்றையே அது அடிப்படையாகக் கொண்டுள்ளது. எவரேனும் நபரொருவர் இலங்கையில் வதிவுடைமையைக் GeBlf 60iiL (56) UFICE (Resident in Sri Lanka) 666)g வெளிநாட்டில் வதிவுடைமையைக் கொண்ட ஒருவராக (Resident Outside Sri Lanka) ab(b5'LIL (3660ö (BDTG6l6őILg5 1972 SÐb ஆண்டில் வெளியிடப்பட்ட 15007 ஆம் இலக்க வர்த்தமானியின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவே தீர்மானிக்கப்படுகின்றது.
முக்கியமாக எவரேனுமொரு நபரின் நிரந்தர வதிவிடம் இலங்கையிலாயிருப்பின் அவர் இலங்கையில் வதிவுடைய ஒருவராகவும், நிரந்தர வதிவிடம் வேறொரு நாட்டிலாயிருப்பின் வெளிநாட்டில் வதிவுடைய ஒருவராகவும் கருதப்படுவார்.

வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்யக் கூடிய நிறுவனங்கள்
செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 5வது வாசகத்தின் பிரகாரம் அதிகாரம்வாய்ந்த வெளிநாட்டுச் செலாவணி வர்த்தகர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஒரு வர்த்தக வங்கியிலிருந்து பன்னாட்டு நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்களுக்கான வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்ய முடியுமாயுள்ளது. உதாரணமாக வெளிநாடொன்றில் சுற்றுலாப் பயணத்தை மேற்கொள்வதற்கு, கல்வியின் பொருட்டு செல்வதற்கு மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகச் செல்வதற்கு தேவையான வெளிநாட்டு நாணயங்களை வர்த்தக வங்கியிலிருந்து கொள்வனவு செய்தல் வேண்டும். இதன் பொருட்டு செல்லுபடியான கடவுச் சீட்டு, விமானப் பயணச் சீட்டுகள் மற்றும் தேவையை உறுதி செய்கின்ற ஏனைய ஆவணங்களை வங்கிக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியிலிருந்து உரிமம் பெற்றுள்ள நாணயப் பரிமாற்று நிறுவனங்களிலிருந்தும் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்ய முடியுமாயுள்ளது. ஆயினும் அத்தகைய நிறுவனங்களால் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்காகச் செல்கின்ற இலங்கையில் வதிவுடைய நபரொருவருக்கு வெளிநாட்டு நாணயத்தை விற்பனை செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, தனி ஒருவருக்கு மொத்தம் 2000 அமெரிக்க டொலர்களை மட்டுமே அவ்வாறு விற்பனை செய்ய முடியும்
பயணிகள் காசோலைகளை (Travelers Cheques) விற்பனைசெய்வதற்கு இலங்கைமத்திய வங்கியின் அனுமதியைப் பெற்றுள்ள பயண முகவர் நிறுவனங்களிலிருந்தும் பயணிகள் காசோலைகளைக் கொள்வனவு செய்ய முடியும். நாணய பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் பயண முகவர் நிறுவனங்கள் மூலம் குறித்த வாடிக்கையாளரது வேண்டுகோளின் உண்மைத் தன்மை, பயணம் மேற்கொள்கின்ற நாடு, வெளிநாட்டில் தங்கியிருக்கின்ற காலம் ஆகிய விடயங்கள் ஆராயப்படுதல் வேண்டுமென்பதோடு விற்பனை செய்யப்படுகின்ற வெளிநாட்டு நாணயத் தொகையினை குறித்த வாடிக்கையாளரது கடவுச் சீட்டில் குறிப்பிடுதலும் வேண்டும்.
உங்களிடமுள்ள வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்ய முடியுமான நிறுவனங்கள்
எந்தவொரு வர்த்தக வங்கிக்கும்
நாணயப் பரிமாற்றத் தொழிலில் ஈடுபடுவதற்கு இலங்கை மத்திய வங்கியிலிருந்து அனுமதி பெற்றுள்ள நாணயப் பரிமாற்ற நிறுவனங்களுக்கு
உங்களிடமுள்ள வெளிநாட்டு நாணயங்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்து இலங்கை ரூபாய்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு, குறித்த பணம் உங்களுக்குக் கிடைத்த விதம், உங்களது ஆளடையாளம் ஆகிய தகவல்களை மேற்படி நிறுவனங்களுக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.
2009 செப் / ஒக் - குறிப்பேடு

Page 13
வர்த்தக வங்கிகள் மற்றும் அதிகாரம்வாய்ந்த நாணயப் பரிமாற்ற நிறுவனங்களல்லாத வேறு நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்தல் மற்றும் அவற்றின் மூலம் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்தல் செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 52 ஆவது வாசகத்தின் கீழ் தண்டனைக்குரியதொரு குற்றமாகும்.
வெளிநாட்டு நாணயங்களை கையிருப்பில் வைத்திருத்தல்
செலவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 6(5)) வாசகத்தின் பிரகாரம் செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயங்களைக் கையிருப்பில் வைத்திருக்க முடியாது. ஆயினும் 2007 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் இது தொடர்பில் வலுவிலுள்ள சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, எவரேனுமொருவர் வெளிநாட்டுச் சுற்றுலாவின் பொருட்டு கொள்வனவு செய்துள்ள வெளிநாட்டு நாணயங்களில் பயன்படுத்தாது எஞ்சியுள்ள பணத் தொகையில் 2000 அமெரிக்க டொலர்களை அல்லது வேறேதேனும் பரிமாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டு நாணயத்தில் அதற்குச் சமமானதொரு தொகையினை தமது கையிருப்பில் வைத்திருக்கலாம்.
அதேபோன்று வெளிநாட்டில் தொழில்புரிந்து ஈட்டியுள்ள தொகையிலும் 2000 அமெரிக்க டொலர்களை அல்லது வேறேதேனும் பரிமாற்றம் செய்யப்பட்ட நாணயத்தில் அதற்குச் சமமானதொரு தொகையை எந்தவொரு கால எல்லை வரையிலும் தமது கையிருப்பில் வைத்திருக்கலாம்.
இதனைத் தவிர வேறு நோக்கங்களுக்காக கொள்வனவு செய்யப்படும் வெளிநாட்டு நாணயங்களை 90 நாட்களினுள் ரூபாய்களுக்கு பரிமாற்றம் செய்தல் வேண்டும். இதைத் தவிர நாணயப் பரிமாற்றக் கம்பனிகளால் கொள்வனவு செய்யப்பட்ட
வெளிநாட்டு நாணயங்கள், கொள்வனவு செய்யப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் வங்கியில் வைப்பிலிடப்படுதல் வேண்டுமென்பதோடு, தாம் விற்பனை செய்கின்ற
பொருட்களுக்கு அல்லது வழங்குகின்ற சேவைகளுக்காக வெளிநாட்டு நாணயங்களில் பெறப்படும் கொடுப்பனவுகள் அத்தேதியிலிருந்து மூன்று தினங்களுக்குள் குறித்த நிறுவனத்தினால்/ நபரினால் வங்கியில் வைப்பிலிடப்படுதல் வேண்டும்.
இலங்கைக்கு எடுத்துவர முடியுமான வெளிநாட்டு நாணயத் தொகையின் அளவு
எவ்வளவு தொகை வெளிநாட்டு நாணயங்களையும் இலங்கைக்குள் எடுத்துவர முடியும் என்பதோடு அவ்வாறு எடுத்துவரப்படுகின்ற தொகை 15,000 அமெரிக்க டொலர்களைத் தாண்டுவதாயிருப்பின் அதனை இலங்கைச் சுங்கத்திற்கு வெளியிடுதல் வேண்டும். அதேபோன்று எடுத்துவரப்படுகின்ற பணத் தொகையில் வெளிநாட்டு நாணயத் தாள்களாக 5000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தொகையினை மீளக் கொண்டுசெல்வதற்கு எதிர்பார்க்கப்படுமெனில் எடுத்துவரப்
2009 செப் / ஒக் - குறிப்பேடு

படுகின்ற பணத்தொகை 15,000 அமெரிக்க டொலர்களுக்குக் குறைவாயிருப்பினும் அதனை சுங்கத்திற்கு வெளிப்படுத்துதல் வேண்டும்.
நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்களின் பொருட்டு வெளிநாட்டு நாணயங்களை வழங்குகின்ற அதிகாரம் வர்த்தக வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலினதும் தேவைக்கு ஏற்ப குறித்த பணத் தொகையை அவ்வங்கி தீர்மானிக்கும். அவ்வாறு நடைமுறைக் Gab[T(Baibabab alfrid56babaihai (Current Transactions) GLITI(56 அனுமதிபெற்ற வெளிநாட்டுச் செலாவணி வர்த்தகர்கள் கொள்வனவு செய்த வெளிநாட்டு நாணயங்களையும் மூலதனக் கொடுக்கல் வாங்கல்களின் (Capital Transactions) பொருட்டு செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் அங்கீகாரத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட வெளிநாட்டு நாணயங்களையும் நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லலாம். அவ்வாறு கொண்டுசெல்லப்படும் தொகை 10,000 அமெரிக்க டொலர்களை விஞ்சியதாயிருப்பின், அதனை இலங்கைச் சுங்கத்திற்கு வெளிப்படுத்தல் வேண்டும்.
வதிவுடையோரல்லாதோருக்கு கொடுப்பனவுகளைச் செய்தல்
செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 7(அ) வாசகத்தின் பிரகாரம் இலங்கையில் வதிவுடையோராயுள்ள ஒருவர் வதிவுடையோரல்லாத ஒருவருக்கு கொடுப்பனவொன்றைச் செய்வதற்கு செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் அனுமதியைப் பெறுதல் வேண்டும்.
(3LD(86) குறிப்பிடப்பட்டுள்ளவாறு நடைமுறைக் கொடுக்கல் வாங்கலொன்றின் பொருட்டு கொடுப்பனவைச் செய்வதற்கு அவ்வாறானதொரு விசேட அனுமதியைப் பெற வேண்டிய அவசியமில்லை என்பதோடு அதன் பொருட்டு அனுமதி வழங்குவதற்கு அதிகாரம்பெற்றுள்ள ஒரு வர்த்தக வங்கியின் ஊடாக அத்தகைய கொடுக்கல் வாங்களை மேற்கொள்ளலாம்.
ஆயினும் மூலதனக் கொடுக்கல் வாங்கலொன்றின் பொருட்டு கொடுப்பனவைச் செய்வதற்கு செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் அனுமதியைப் பெறுதல் வேண்டும்.
இலங்கையினுள் வெளிநாட்டு நாணயங்களிலான கொடுக்கல் வாங்கல்கள்
இலங்கையினுள் அதிகாரம்வாய்ந்த வர்த்தக வங்கியொன்றல்லாத நபரொருவரிடமிருந்து வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்தல், கடனாகப் பெறுதல், விற்பனை செய்தல், கடனாகக் கொடுத்தல் அல்லது பெறுதல் ஆகிய வெளிநாட்டு நாணயக் கொடுக்கல் வாங்கலின் பொருட்டு செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் அனுமதியைப் பெறுதல் அவசியமாகும். வெளிநாட்டவர்களுக்கு பண்டங்களை விற்பனை செய்தல் மற்றும் பணிகளை வழங்குதல் தொடர்பில் குறித்த கொடுப்பனவுகளை வெளிநாட்டு நாணயத்தின் மூலம்
13

Page 14
பெறுவதற்கு செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 5(1) வாசகத்தின் கீழ் ஹோட்டல்கள், இரத்தினக் கல் மற்றும் தங்க நகை விற்பனை நிலையங்கள், தீர்வை வரிகளற்ற கடைகள் ஆகிய நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கியினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பண்டங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
பண்டங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பில் வலுவிலுள்ள அடிப்படை ஒழுங்குவிதிகள் இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளரால் வெளியிடப்பட்டுள்ளதோடு, செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம், குறித்த வெளிநாட்டுச் செலாவணிக் கொடுப்பனவுகள் மற்றும் பெறுகைகள் தொடர்பிலேயே ஏற்புடையதாயுள்ளது.
பண்டங்களை ஏற்றுமதி செய்யும் பொருட்டு செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் அனுமதியைப் பெறுதல் அவசியமாகாது. ஏற்றுமதி வருமானத்தை இலங்கைக்கு எடுத்துவருதல் கட்டாயமல்லவென்பதோடு, அவற்றை வெளிநாட்டு வங்கி களிளேயே வைத்திருக்கலாம். ஆயினும் அப்பணத் திலிருந்து வெளிநாட்டுச் சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்வதற்கு அனுமதி öl60)LuIgbi. இலங்கைக்கு எடுத்துவருகின்ற ஏற்றுமதி வருமானத்தை ஏற்றுமதியாளர்களின் வெளிநாட்டு |bí16Öölu lỏi, “Đ6001öđồ6ũ (Exporter’s Foreign Currency Account) 6ìIJ6)ị வைக்கலாம்.
பண்டங்களை இறக்குமதி செய்தல் நாட்டின் வர்த்தகக் கொள்கையின் கீழ் நடைபெறுதல் வேண்டும். ஏற்றுமதி செய்யக்கூடிய மற்றும் இறக்குமதி செய்யக்கூடிய பண்டங்கள் எவை என்பதை இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளரே தீர்மானிப்பார். 10,000 அமெரிக்க டொலர்களுக்குக் குறைவான இறக்குமதிகளின் பொருட்டு முற்பணத் தொகையொன்றைச் செலுத்தலாம். பிரத்தியேக பாவனையின் பொருட்டு 3000 அமெரிக்க டொலர் பெறுமதியைத் தாண்டாத பண்டங்களை இறக்குமதி செய்யலாம். இதைத் தவிர இறக்குமதிக்கான கொடுப்பனவைச் செய்வது தொடர்பிலான கொடுப்பனவு நிபந்தனைகள் (Payment Terms) இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளரால் விதந்துரைக்கப்பட்டுள்ளன.
5L6 eli6oLa5 Gil (Credit Card) Libpi eli6oLa56 (Debit Card) easu fair Gofugio BITGOOTurf LifiDITibD அட்டைகள் (Electronic Fund Transfer Cards) தொடர்பில் ஏற்புடையதாயுள்ள செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள்
வெளிநாடுகளில் பயன்படுத்த இயலுமானவாறு வழங்கப் பட்டுள்ள கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் மூலம் தமது பிரத்தியேக நடைமுறைக் கொடுக்கல் வாங்கல்களின் பொருட்டு மட்டுமே கொடுப்பனவுகளைச் செய்யலாம். உதாரணமாக வெளிநாட்டில் தாம் அல்லது தமது குடும்ப அங்கத்தவர்கள் பெற்றுள்ள தங்குமிட வசதிகளுக்கான கொடுப்பனவுகளைச் செய்தல், தமது கல்வி

நடவடிக்கைகளுக்கான பரீட்சைக் கட்டணங்கள் போன்ற கொடுப்பனவுகளைச் செய்தல், வெளிநாட்டில் பிரத்தியேகப் பயன்பாட்டிற்காகக் கொள்வனவு செய்துள்ள பண்டங்களுக்கான கொடுப்பனவைச் செய்தல் ஆகிய பிரத்தியேகச் செலவுகளுக்கு மட்டுமேயாகும்.
பன்னாட்டு முலதனக் கொடுக்கல் வாங்கல்கள்
இலங்கையில் மேற்கொள்ள முடியுமான வெளிநாட்டு முதலீடுகள்
செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 10 வது வாசகத்தின் பிரகாரம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள கம்பனிகளின் பங்குகளை வெளிநாட்டவர்களுக்கு வழங்குதல் செலாவணிக் கட்டுப்பாட்டாளரின் அனுமதியின் பேரிலேயே நடைபெறுதல் வேண்டும். ஆயினும் 2002 ஆம் ஆண்டில் செலாவணிக் கட்டுப்பாட்டாளர் வழங்கியுள்ள பொது அனுமதியின் பிரகாரம் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கைக் கம்பனிகளின் பங்குகளில் 100% வரை முதலீடு செய்யலாம். ஒருசில தொழில்துறை நடவடிக்கைகள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறக்கப்படவில்லை எனபதோடு, மேலுமொரு பகுதியில் முதலீடு செய்தல் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. (மேற்படி தகவல்கள் 2002 ஏப்பிரல் 19 ஆம் திகதிய 1232/14 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகையில் உள்ளடங்கியுள்ளன.) மேற்படி முதலீடுகளுக்கான பணத்தை அனுப்புதல் பங்கு முதலீட்டு வெளிவாரி ரூபாய் கணக்கு (Share Investment External Rupee Account - SIERA) ஊடாக நடைபெறுதல் வேண்டும். இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளின் பெறுகைகளை ஊக்குவிக்கும் பொருட்டு மேற்படி தளர்த்துகை நடைபெற்றுள்ளது.
இலங்கையர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்தல்
இலங்கையர்கள் வெளிநாடுகளில் நிதியியல் மற்றும் நிலையான சொத்துக்களில் முதலீடு செய்யும் பொருட்டு நிதி அமைச்சரின் அங்கீகாரத்தைப் பெறுதல் வேண்டும். அதற்கான உரிய விண்ணப்பப் பத்திரம் செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணம் மற்றும் ஏனைய தகவல்கள் தொடர்பாக செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவிக்கும். செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் விதப்புரையுடன் குறித்த விண்ணப்பம் நிதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்படும் என்பதோடு செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 17 வது வாசகத்தின் பிரகாரம் அதற்கு நிதி அமைச்சரின் அங்கீகாரம் பெறப்படுதல் வேண்டும்.
வதிவுடைய நபர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வெளிநாட்டு நாணயக் கடன்களைப் பெறுவதற்குள்ள சாத்தியத் தன்மை
இலங்கையில் வதிவுடைமையைக் கொண்டுள்ள ஒருவர் வெளிநாட்டிலிருந்து கடன் பெறுதல் செலாவணிக் கட்டுப் பாட்டாளரின் அங்கீகாரத்தின் பேரில் நடைபெறுதல் வேண்டும்.
2009 செப் / ஒக் - குறிப்பேடு

Page 15
வெளிநாட்டில் வசிப்பதற்குச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஒருவரால் எடுத்துச்செல்ல முடியுமான வெளிநாட்டு நாணயத் தொகையின் அளவு
வெளிநாடொன்றில் வசிப்பதற்காக குடும்ப அல கொன்றினால் அல்லது தனிநபர் ஒருவரால் (குடும்ப அலகுடன் செல்லாத) 150,000 அமெரிக்க டொலர்களை எடுத்துச் செல்லலாம். இது இலங்கையில் உள்ள தமது சொத்துக்களை விற்றுப் பெற்ற பணமாகவோ வேறு வருமானங்கள் மூலம் கிடைத்த பணமாகவோ இருக்கலாம். இவ்வாறு நிரந்தரமாக வசிக்கும் பொருட்டு வெளிநாட்டுக்குச் செல்வது தொடர்பில் சத்தியக் கடுதாசியொன்றையும், உண்ணாட்டு அரசிறைத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட வரிசெலுத்துகைகளிலிருந்து விடுதலைபெற்றதற்கான சான்றிதழையும் இதன் பொருட்டு வர்த்தக வங்கிக்கு சமர்ப்பித்தல் வேண்டும். 150,000 அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமாயுள்ள பணம் குறித்த நபரின் பெயரிலான கணக்கில் வரவுவைக்கப்பட்டு அது மூடப்பட்ட &b6OOTöbbf76b (Blocked Account) Lß60ŐT(BIIb (o Luís II (BIIb. இக்கணக்கிலிருந்து ஆண்டுக்கு 20,000 அமெரிக்க டொலர்கள் வரை தாம் விரும்பிய நாட்டிற்கு அனுப்பீடு செய்வதற்கு கணக்கு உரிமையாளர்க்கு முடியுமாயுள்ளது.
நாணயப் பரிமாற்ற நிறுவனங்கள்
செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 5 (1) வாசகத்தின் கீழ் வெளிநாட்டு நாணயங்களைக் கொள்வனவு செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள கம்பனிகளுக்கு குறித்த உரிமப்பத்திரத்திலுள்ள நிபந்தனை களின் கீழ் அத்தொழிலில் F(BLIL-6)TLD. இவ்வுரிமப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நாணயச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அளவீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளை நிறைவு செய்தல் வேண்டும். இதன் பொருட்டு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமாயிருத்தல் வேண்டுமென்பதோடு செலுத்தித் தீர்க்கப்பட்ட மூலதனம் ரூபா 10 மில்லியனாயிருத்தல் அவசியமாகும். குறைந்த LIGib கம்பனியின் இரண்டு பணிப்பாளர்கள் ଶuff) செலுத்துகின்றவர்களாயிருத்தல் வேண்டுமென்பதோடு, ரூபா 500,000 வங்கிப் பிணையொன்றையும் விண்ணப்பிக்கின்ற கம்பனி சமர்ப்பித்தல் வேண்டும்.
பிரதானமான வெளிநாட்டு நாணயக் கணக்கு வகைகள்
பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் ஈடுபட்டுள்ள தொழில்கள் மற்றும் அந்நிறுவனங்களின் தொழில்துறை இயல்புகளைப் பொறுத்து அந்தந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விசேடமான வெளிநாட்டு நாணய கணக்குகளைப் பேணி வருவதற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இவற்றில் வெளிநாட்டுத் தொழில்களில் ஈடுபட்டுள்ள மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையின் பிரசைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வதிவற்றோர் G6)i6sibfT(6 5600Tulé d560OTéb(5 (Non Resident Foreign Currency Account NRFC) (pg,66T60)LDuJIT6015 Tg5b. NRFC கணக்குக்கு மேலதிகமாக, இலங்கையில் வதிவுடைய
2009 செப் / ஒக் - குறிப்பேடு

நபர்களுக்கான வெளிநாட்டு நாணயக் கணக்கு (Resident Foreign Currency Account - RFC), 6jiqLD5uJIT6Trias(61555ft 601 வெளிநாட்டு நாணயக் கணக்கு (Exporters Foreign Currency Account – EFC), Qg5 T56). FTs (336061560)6 வழங்குகின்றவர்களுக்கான வெளிநாட்டு நாணயக் கணக்கு (Foreign Currency Account for Professionals – FCAP) sau கணக்குகளும் முக்கியமானவையாயுள்ளன. இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கான வெளிநாட்டு நாணயக் b600Téb(5D (Resident Non National Foreign Currency Account - RNNFC) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
செலாவணிக் கட்டுப்பாட்டுச் FILLb அறிமுகப் படுத்தப்பட்ட காலகட்டத்தில் இலங்கையில் இருந்த வெளிநாட்டு நாணய ஒதுக்குத் தொகை குறைவாயிருந்தமையால், அந்த பற்றாக்குறையாயிருந்த வளமான வெளிநாட்டுச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒருசில செலாவணிக் கட்டுப்பாட்டு விதிகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயினும் இன்று வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களின் இயல்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகிய விடயங்களின் காரணமாக கடுமையாக வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களைக் கட்டுப்படுத்துவதை விட அதற்கான வசதிகளை வழங்குகின்ற பணியினை மத்திய வங்கியின் செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
எவ்வாறாயினும் சட்டத்தின் 51 வது வாசகத்தின் பிரகாரம், செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் ஏற்பாடுகளை மீறுதல் அல்லது சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒழுங்குவிதிகள், கட்டளைகள் அல்லது வழங்கப்பட்டுள்ள உரிமப்பத்திரங்களின் நிபந்தனைகளுக்கு முரணாகச் செயலாற்றுதல் சட்டத்தின் 52 வது வாசகத்தின் கீழ் தண்டனைக்குரியதொரு குற்றமாகும். இக்குற்றத்திற்கு நீதவான் நீதிமன்றத்தில் அல்லது மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுவதன் மூலம் குற்றவாளியாக்கப்படுமிடத்து சிறைத் தண்டனைக்கும் தண்டப் பணத்திற்கும் உள்ளாக நேரிடும்.
சட்டத்தை அறியாதிருத்தல் மன்னிப்பளிப்பதற்குக் காரணமாயமையாததால், தாம் ஈடுபடுகின்ற வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கலின் சட்டரீதியான தன்மை தொடர்பில் செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திலிருந்து அல்லது அதிகாரமளிக்கப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி வர்த்தகர்களாக நியமிக்கப்பட்டுள்ள வர்த்தக வங்கிகளிலிருந்து விசாரித்தறியலாம். இது சட்டத்தை மதித்து நடக்கும் பிரசைகளின் பொறுப்பாகவும் உள்ளது. வெளிநாட்டுச் செலாவணிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்பார்வை செய்து அவை குறித்த சட்ட வரம்பினுள் நடைபெறுவதை உறுதி செய்தலும், அப்போதைக்குள்ள செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்கு நடைமுறைச்சாத்தியமான விதத்தில் வரைவிலக்கணமளித்து நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்து மேற்படி கொடுக்கல்
வாங்கல்களுக்கு வசதியேற்படுத்தலும் செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் தொலைநோக்காக உள்ளது. *
15

Page 16
பங்கு முதலீட்டு வெளிவாரி
பங்கு முதலீட்டு வெளிவாரி ரூபாய் கணக்குகளுக்கு செய்யப்படுகின்ற வரவுகள் மற்றும் பற்றுகள் கீழே தரப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அதிகாரம் வாய்ந்த வர்த்தகர்கள் மேற்படி கணக்குகளுக்குக் கிடைக்கின்ற பற்றுகள் மற்றும் வரவுகள் தொடர்பான எழுத்துமூல சான்றுகளைப் பரிசீலித்தல் வேண்டும்.
பங்கு முதலீட்டு வெளிவாரி ரூபாய் கணக்குக்கான
வரவுகள்
1. உள்வரும் அனுப்பீடுகள்
2. வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள்/கரைகடந்த கணக்குகளிலிருந்தான
மாற்றல்கள்
3. பங்குகளை விற்பனை செய்வதிலிருந்து கிடைக்கின்ற
பணம் மற்றும் பங்குகளிலிருந்து ஈட்டுகின்ற
இலாபங்கள் 4. பங்குக் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய
தரகுப் பணம்
5. பங்குகளைக் கடனுக்குப் பெறுதல் மற்றும் கடனுக்கு வழங்குதல் திட்டத்தின் கீழ் கடன்பட்டோருக்கு பங்குகளைக் கடனுக்கு வழங்கியமைக்காக வதிவற்ற கடன்கொடுத்தோர் பெற்ற கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் 6. மேற்படி திட்டத்தின் கீழ் கடன்பட்டோர் பங்குகளை மாற்றுவதற்குத் தவறுமிடத்து கடன்கொடுத்தோருக்கு பணத்தை வரவு வைத்தல் வேண்டும். பங்கு முதலீட்டு வெளிவாரி ரூபாய் கணக்கிற்கான பற்றுகள் 1. முதலீடுகளுக்கான கொடுப்பனவுகள் 2. பங்குகளுக்கான இலாபங்களை அனுப்பீடு செய்தல் 3. பங்கு விற்பனையின் மூலம் கிடைக்கும் பணத்தை
அனுப்பீடு செய்தல்
4. கணக்கு உரிமையாளரின் உள்நாட்டுச் செலவுகள்.
5.
தரகர்களுக்கு அல்லது வர்த்தக வங்கிகளுக்கான தரகுக் கொடுப்பனவுகள்.
16

etjLITij ab65OTjisej (SIERA)
6. பங்குகளைக் கடனுக்குப் பெறுதல் மற்றும் கடனுக்கு விற்பனை செய்யும் திட்டத்தின் கீழ் வதிவுடையோரல்லாத கடன்படுனர் கடன் கொடுத்தவருக்கு செலுத்திய நிதியங்களும் கட்டணங்களும்.
7. வதிவுடையோரல்லாத கடன்படுனர் வழங்குகின்ற
ஏனைய நிதிப் பிணையங்கள்.
பங்கு முதலீட்டு வெளிவாரி ரூபாய் கணக்கின் (SIERA) மூலம் இலங்கையில் செய்யப்படுகின்ற முதலீடுகளுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் வெளிநாட்டுச் செலாவணி முன்னோக்கிய சந்தையில் செலாவணியின்கொள்வனவுக்காக உடன்படிக்கைகளைச் செய்துகொள்வதற்கு உரிமம்பெற்ற வர்த்தகர்களால் முடியுமாயுள்ளது. கொழும்புப் பங்குச் சந்தை ஏற்பாடுகளுக்கு இயைபான ஒரு காலகட்டம் வரை பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கும் அவற்றுக்கான பணத்தைச் செலுத்தவும் இவ்வசதியினைப் பயன்படுத்தலாம். இக்காலகட்டம் வர்த்தக மற்றும் ஐந்து வர்த்தக நாட்கள் என்ற எண்ணக்கருவின் கீழ் கொடுக்கல் வாங்கல் நடைபெற்ற தினத்திலிருந்து பணம் செலுத்தப்பட்ட தினம் வரை வரையறுக்கப்பட்டிருக்கும்.
முதனிலைச் சந்தையின் பங்குகளுக்காக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அனுப்பும் பணத்தை கரைகடந்த வங்கிக் கூறில் வைத்திருக்கலாம் என்பதோடு, பங்குகளை பகிர்ந்ததன் பின்னர் முதலீட்டாளரின் பெயரில் உள்ள ‘சியரா’ கணக்குக்கு வரவு வைக்கப்படும். பங்கு முதலீட்டு
வெளிவாரி ரூபாய் கணக்கு உரிமையாளர்களால் அதிலுள்ள பணத்திலிருந்து கொழும்புப் LIII(gbėF சந்தையில் பதிவுசெய்யப்பட்ட கம்பனிகளால் வழங்கப்படும் பங்குச் சான்றிதழ்களைக் கொள்வனவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை
அங்கீகரிப்பதற்கு உரிமம்பெற்ற வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. *
2009 செப் / ஒக் - குறிப்பேடு

Page 17
இலங்கை பொதுக் பொறி
பீ.என்.கெளஷ உதவிப் ப கொடுப்பனவுகள், தீர்ப்ட
அறிமுகம்
இலங்கை மத்திய வங்கியின் பிரதானமானதொரு குறிக்கோளான நிதியியல் முறைமையின் சிறந்த செயற்பாடு மற்றும் உறுதிப்பாட்டைப் பேணிவரும்
பொருட்டு பாதுகாப்பானதும், நம்பிக்கையானதும், வினைத்திறன்மிக்கதுமான கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் முறைமையொன்று அவசியமாகின்றது. 2005 ஆம்
ஆண்டின் 28 ஆம் இலக்க கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் சட்டத்தின் மூலம், தீர்ப்பனவுகள் மற்றும் தீர்த்துவைத்தல் முறைமைகளை ஒழுங்குமுறையாக்குதல், இலங்கை மத்திய வங்கயின் பதிவேடுகளின்படி பிணையங்கள், நிதிச் சேவை வழங்குனர்களை ஒழுங்குமுறையாக்குதல் மற்றும் மின்னியல் முறையின் மூலம் காசோலைகளைச் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகிய கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் முறைமையுடன் தொடர்புடைய எந்தவொரு கடமையின் பொருட்டும் விரிவானதொரு பரப்பெல்லையைக் கொண்ட அதிகாரமும் மேலாண்மையும் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் அமுலாக்கப்பட்ட மத்திய வங்கியின் நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட பிரதானமனதொரு குறிக்கோளாக, நிதிச் சந்தைத் தொழிற்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் விளங்கியது. இதற்கிணங்க நிதிச் சந்தையில் நிதியங்களின் பரிமாற்றத்தின் பொருட்டு பாதுகாப்பானதும், வினைத்திறன்மிக்கதுமான கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் முறைமைகளைத் தாபித்தலும் அவற்றைப் பேணிவருதலும் அத்தியாவசியமாக இருந்தது. இது தொடர்பிலான விசேடமானதொரு கடமை 2002ஆம் ஆண்டு சனவரி மாதம் 01 ஆம் திகதி தாபிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் திணைக்களத்தின் மூலம் நடைபெறுகின்றது.
2009 செப் / ஒக் - குறிப்பேடு

கொடுப்பனவுகள்
!pത്ര
ானி பர்னாந்து |ணிப்பாளர்
னவுகள் திணைக்களம்
நாட்டினுள் நடைபெறுகின்ற சிறிய அளவிலான கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகளை தனியொரு மத்திய நிலையத்தினால் ஒழுங்கானமுறையில் நடத்துவதற்கான கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் முறைமை தொடர்பில் தீர்மானம் எடுக்கக்கூடிய உயர் சபையான தேசிய கொடுப்பனவுகள் மன்றம் 2006 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியினால் தாபிக்கப்பட்டது. கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் முறைமையை மேம்படுத்துகின்றபோது முக்கியமானதும், அது தொடர்பில் ஆர்வம் காட்டுகின்றதுமான அனைத்து நிறுவனங்களின் உத்தியோகத்தர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் இம்மன்றம் தாபிக்கப்பட்டது.
கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகளுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் தேசிய கொடுப்பனவுகள் மன்றம் இலங்கை மத்திய வங்கியுடன் சேர்ந்து 2007-2010 வரையிலான காலத்தை உள்ளடக்கியவாறு செயற்பாட்டுத் திட்டத்துடன் கூடிய ஒரு எதிர்கால நோக்கை தயாரித்தது. மேற்படி எதிர்கால நோக்கின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றவாறு பொதுக் GEITGIL6016), Bait out 3(p603 (Common Payment Switch) என அழைக்கப்படுகின்ற அதேநேர கொடுப்பனவுக்ள், தீர்ப்பனவுகள் நடைபெறுகின்ற மின்னியல் முறையொன்று 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். அதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியினால் தற்போது ஒழுங்குமுறையாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் முறைமையைப் பற்றியும், 2009 ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் அறிமுகப்படுத்த உத்தேசமாயுள்ள பொதுக் கொடுப்பனவுகள் முறைமையைப் பற்றியும், அது செயற்படுகின்ற விதத்தினைப் பற்றியும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
17

Page 18
தற்போது இலங்கையில் அமுலிலுள்ள முக்கியமான இரண்டு கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் முறைமைகளாக, இலங்கை மத்திய வங்கியினால் அமுலாக்கப்படுகின்ற ‘லங்கா செற்ல் முறைமை” மற்றும் கொடுப்பனவுக் கருவிகளைத் தீர்ப்பனவு செய்கின்ற தேசிய நிறுவனமான "லங்கா கிளியர் தனியார் கம்பனியினால் அமுலாக்கப்படுகின்ற பிரதிமைபடுத்திய காசோலைகள் தீர்ப்பனவு முறைமை ஆகியன விளங்குகின்றன. 2006 ஆம் ஆண்டில் பிரதிமைப்படுத்திய காசோலைகள் தீர்ப்பனவு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நாட்டினுள் நிலவிய கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் முறைமை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற நியமங்களுக்கு இணங்கிய நிலைக்கு மாற்றப்பட்டது.
‘லங்கா செற்ல்’ இரண்டு பிரதானமான முறைமைகளை உள்ளடக்கியதாக உள்ளது.
(1) ©Gg5GBJ 6Drigg, gif|Lugora (RTGS - Real Time Gross Settlement) (p60p6OLD
பாரிய பெறுமதிகளுடன் கூடிய காலம் தொடர்பில் dh(b600Ti660Luj கொடுப்பனவுகளின் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற இலங்கையின் கொடுப்பனவுகள், தீர்ப்பனவுகள் முறைமை இதுவாகும். வங்கிகளுக்கு இடையிலான நிதியப் பரிமாற்றம் இதன் (p6)lb நடைபெறுகின்றது. வங்கிகளுக்கு இடையிலான அழைப்புப் 1160013 J boob (Inter Bank Call Money Market), sigg Lao)6001 ஆவணங்கள் சந்தை, திறந்த சந்தைத் தொழிற்பாடுகள், மூன்றாந் தரப்பு வாடிக்கையாளர்களது கொடுக்கல் வாங்கல்கள், லங்கா கிளியர் தனியார் கம்பனியின் தீர்ப்பனவு முறைமையின் கீழ் நடைபெறுகின்ற தேறிய பொறுப்புக்கள் தீர்ப்பனவுடன் தொடர்புடைய ரூபாய் கொடுக்கல் வாங்கல்கள் இதன் மூலம் தீர்ப்பனவு செய்யப்படுகின்றன. அதேநேர மொத்தத் தீர்ப்பனவின் போது உருவாகின்ற திரவத்தன்மை இடர்நேர்வைத் தவிர்க்கும் பொருட்டு இம்முறைமையில் பங்கேற்பவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியினால் ஒருநாள் திரவத்தன்மை (Interday Liquidity) வசதி வழங்கப்படுகிறது. 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் முதலாவது காலாண்டில் அதேநேர மொத்தத் தீர்ப்பனவின் ஊடாக தீர்க்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளது.
18

1 வது அட்டவணை
அதேநேர மொத்தத் தீர்ப்பனவுக் கொடுக்கல் வாங்கல்கள் -
முதலாவது காலாண்டு
2008 2009 மொத்த கொடுக்கல்வாங்கல்களின் எண்ணிக்கை 55,423 61505
மொத்த கொடுக்கல் வாங்கல்களின் பெறுமதி (ரூபா பில்லியன்) 6,035 8,923
நாளொன்றுக்கான சராசரி கொடுக்கல்வாங்கல்களின் எண்ணிக்கை 56 1,042
நாளொன்றுக்கான சராசரி கொடுக்கல்வாங்கல்களின் பெறுமதி (ரூபா பில்லியன்) 104 5
மூலம்: இலங்கை மத்திய வங்கி
(2) லங்கா செக்கியூ (LankaSecure) முறைமை
அரச பிணை ஆவணங்களுக்கான மத்திய காப்பகம் (CDS – Cetral Depository Sytem) iDibajib ujiggid,6trip பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை (SSSS - Scripless Securities Settlement System) ஆகியவற்றை லங்கா செக்கியூ முறைமை உள்ளடக்கியுள்ளது. SSSS மூலம் அரச பிணையங்களை இலத்திரனியல் அல்லது பத்திரங்களற்ற விதத்தில் வழங்குவதற்கும் அதேபோன்று அவ்வாறு வழங்கப்பட்ட பிணையங்களின் கொடுக்கல் வாங்கல்களை, கொடுப்பனவுக்கு எதிர் ஒப்படைப்பு (Delivery Vs Payment) என்ற முறையில் தீர்ப்பனவு செய்வதற்கும் தேவையான வசதிகள் வழங்கப்படுகின்றன. CDS மூலம் அரச பிணையங்கள் சந்தையில் முதலீடு செய்கின்ற முதலீட்டாளர்களின் பிணை ஆவணங்கள் கணக்குகளைப் பேணிவருதலும் இதன் மூலம் நடைபெறுகின்றது. 2009 முதலாவது காலாண்டில் முதலீட்டாளர்களின் 60,291 பிணை ஆவணக் கணக்குகள் இருந்ததோடு, 2008 முதலாவது காலாண்டினுள் 46.749 கணக்குகள் இருந்தன. 2009 முதலாவது காலாண்டில் லங்கா செக்கியூ முறைமையின் ஊடாக 143,973 கொடுக்கல் வாங்கல்கள் நடைபெற்றதோடு, இது 2008 முதலாவது காலாண்டில் 127,684 ஆக இருந்தது.
2003/04 ஆம் ஆண்டில் இம்முறைமை தாபிக்கப் பட்டதைத் தொடர்ந்து சார்க் பிராந்தியத்தினுள் ஸ்விப்ட் (SWIFT - Society for Worldwide Interbank Financial Telecommunication) Qg5 TLs LL661 RTGS/SSSS (Up60360)LD60)u செயற்படுத்திய முதலாவது நாடாக இலங்கை விளங்கியது.
பிரதிமைப்படுத்தப்பட்ட காசோலைகள் தீர்ப்பனவு (p6osp65)||D (CITS - Cheque Imaging and Truncation System)
காசோலைகளைத் தீர்ப்பனவு செய்கின்ற தேசிய நிறுவனமான லங்கா கிளியர் தனியார் கம்பனியினால் 2006 ஆம் ஆண்டில் பிரதிமைப்படுத்திய காசோலைகள் தீர்ப்பனவு முறைமை தாபிக்கப்பட்டது. இது தாபிக்கப்பட்டமைக்கான
2009 செப் / ஒக் - குறிப்பேடு

Page 19
அடிப்படை நோக்கங்களாக பின்வரும் விடயங்களைக் (53. Iti 6 (T1b.
(I) கைப்பாட்டு (Manual) முறையிலான காசோலைகள் தீர்ப்பனவுச் செயற்பாட்டுடன் தொடர்புடைய செலவுகளைக் குறைத்தல்.
(II) கசோலைகள் தீர்ப்பனவின் பொருட்டு எடுக்கும் கால வீச்சிடையை இரண்டு நாட்கள் (அதாவது T+1, இதில் T என்பது தீர்ப்பனவின் பொருட்டு லங்கா கிளியர் கம்பனிக்கு காசோலைகள் கிடைக்கும் திகதியாகும் என்பதோடு 1 என்பது அதன் பின்னர் வருகின்ற கடமை நாளாகும்) வரை குறைத்தல்.
(III) கொடுப்பனவுகள் ஊடகத்திற்கு பிரவேசிக்கின்ற போது பிரதேச ரீதியில் உருவாகின்ற முரண்பாடுகளை நீக்குதல்.
2 வது அட்டவனை
காசோலைகள் தீர்ப்பனவு - முதலாவது காலாண்டு
2008 2009 தீர்ப்பனவு செய்யப்பட்ட மொத்த காசோலைகளின் எண்ணிக்கை 55,423 61505
தீர்ப்பனவு செய்யப்பட்ட மொத்த காசோலைகளின் பெறுமதி (ரூபா பில்லியன்) 6,035 8,923
நாளொன்றில் தீர்ப்பனவு செய்யப்பட்ட மொத்த காசோலைகளின் சராசரி 56 1,042
நாளொன்றில் தீர்ப்பனவு செய்யப்பட்ட மொத்த காசோலைகளின் சராசரி பெறுமதி (ரூபா மில்லியன்) 104 151
மூலம்: இலங்கை மத்திய வங்கி
2008 மற்றும் 2009 ஆகிய இரண்டு வருடங்களின் முதலாவது காலாண்டில் காசோலைகள் தீர்ப்பனவு தொடர்பான தகவல்கள் 2 வது அட்டவணையில் தரப்பட்டுள்ளன. முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2009 முதலாவது கலாண்டில் நடைபெற்ற காசோலைகள் தீர்ப்பனவுகளின் நாளொன்றுக்கான சராசரி கொள்ளளவிலும் அதேபோன்று கசோலைகள் தீர்ப்பனவுகளின் நாளொன்றுக்கான சராசரி பெறுமதியிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளமையை இதன் மூலம் தெளிவாகக் காணலாம்.
இதில் மின்னியல் ஊடகம் மூலம் நடைபெற்ற கொடுப்பனவுகளின் வளர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். உதாரணமாக தொலைபேசிகளின் மூலமான கொடுப்பனவுகள், நடமாடும் வங்கிகள்/இணையத்தள வங்கிகளின் வளர்ச்சியைக் குறிப்பிட முடியும்.
2009 செப் / ஒக் - குறிப்பேடு

இலங்கை வங்களுக்கிடையிலான கொடுப்பனவு முறைமை
(SLIPS-Sri Lanka Inter Bank Payment System)
லங்கா கிளியர் தனியார் கம்பனியினால் வர்த்தக வங்கிகள் மற்றும் அவர்களது வாடிக்கையாளர்கள் சார்பாக பேணிவரப்படுகின்ற இலங்கை வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவு முறைமை குறைந்த பெறுமதியைக் கொண்ட நிதியங்களின் பரிமாற்றத்தின் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற பின்தொடர் (Offine) முறையொன்றாகும். மேற்படி SLIPS இன் ஊடாக பற்றுக் கொடுப்பனவுகளும் அதேபோன்று நேரடியான வரவுக் கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. SLIPS தொழிற்பாட்டு செயல்முறையை பின்வருமாறு விளக்கலாம்.
பங்குபற்றுகின்ற நிறுவனங்களால் கொடுப்பனவு அறிவுறுத்தல்கள் லங்கா கிளியர் கம்பனிக்கு மின்னியல் தட்டுகள்/காந்த தட்டுகளின் மூலம் வழங்கப்படும். மேற்படி அறிவுறுத்தல்களைப் பெறுதல் ஒவ்வொரு நாளும் பி.ப. 3.30 மணிக்கு முடிவடையும். தமக்கு வங்கிகளால் சமர்ப்பிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுக்குரிய தகவல்களை லங்கா கிளியர் தனியார் கம்பனி அவை கிடைக்க வேண்டிய வங்கிகளுக்கு அனுப்பி வைக்கும். அதன் பின்னர் இலங்கை மத்திய வங்கியில் அந்நதந்த வங்கிகளுக்குரிய கணக்குகளின் தேறிய பெறுமதி (பற்று மற்றும் வரவு வைத்ததன் பின்னர் இறுதிப் பெறுமதி) கணிப்பிடப்பட்டு அன்றைய தினமே பி.ப. 500 மணிக்கு மின்னியல் மூலம் வழங்கப்படும். இங்கு தீர்ப்பனவுச் செயற்பாடு அதன் பின்னர் வருகின்ற கடமை நாளில் மு.ப. 8.30 மணிக்கு அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் (RTGS) 96IILT35 (3LDBG5II6ft 6 ITUGib. SLIPS D6TLT35 தீர்ப்பனவுக்காகச் சமர்ப்பிக்கப்படுகின்ற கொடுக்கல் வாங்கல் விடயம் ஒவ்வொன்றுக்கும் ஐம்பது சதத்தை லங்கா கிளியர் தனியார் கம்பனி கட்டணமாக அறவிடுகின்றது.
அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் சம்பளம் செலுத்துவதற்காக SLIPS பயன்படுத்தப்படுவதன் காரணமாக அதிகரிக்கின்ற கேள்விக்கு ஏற்ற விதத்திலான சேவையை வழங்கும் பொருட்டு லங்கா கிளியர் தனியார் கம்பனி மேற்படி முறைமையின் சேவைக் கொள்ளளவை 2008 ஆம் ஆண்டில் அதிகரிக்கச் செய்தது.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளின் முதலாவது காலாண்டில் SLIPS ஊடாக நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தரவுகள் 3 வது அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
19

Page 20
3 வது அட்டவணை
2008 மற்றும் 2009 ஆண்டுகளின் முதலாவது காலாண்டில் SLIPS கொடுக்கல் வாங்கல்கள்
2008 2009
தீர்ப்பனவு செய்யப்பட்ட மொத்த கொடுக்கல் வாங்கல்களின் எண்ணிக்கை 55,423 6,505
தீர்ப்பனவு செய்யப்பட்ட மொத்த கொடுக்கல் வாங்கல்களின் பெறுமதி (ரூபா மில்லியன்) 6,035 8,923
தீர்ப்பனவு செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின்
ாளொன்ாறுக் f நாடினானறுககான சராசர் 56 1,042
தீர்ப்பனவு செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் நாளொன்றுக்கான சராசரி பெறுமதி (ரூடா மில்லயன்) 04 15
மூலம்: இலங்கை மத்திய வங்கி
கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் முறைமையின் போக்குகள் மற்றும் எதிர்காலத் தேவைகள்
அனைத்து நவீன பொருளாதாரத்திலும் கொடுக்கல் வாங்கல்களில் துரித வளர்ச்சியொன்று நிலவுகின்றமை மற்றும் அதிகளவில் இலத்திரனியல் முறைகள் பயன்படுத்தப்படுவதன் காரணமாக கொடுப்பனவுகள் முறைமையில் நடைபெறுகின்ற மாற்றங்கள் பாதுகாப்பானதும் வினைத்திறன்மிக்கதுமான ஒரு பின்னணியில் நடைபெறுதல் வேண்டும். இது நிதியியல் முறைமையின் சிறந்த செயற்பாட்டை முன்னிட்டு பெரிதும் அவசியமாயுள்ளது. கொடுப்பனவுகளைச் செய்கின்றபோது வாடிக்கையாளர்கள் மிகவும் வினைத்திறனுள்ள கொடுப்பனவு ஊடகமொன்றைத் தெரிவு செய்கின்ற போக்கையும் கொடுப்பனவுப் பணிகளை வழங்கும் பொருட்டு ஏற்பாட்டாளர் (Providers) அதிக பொருளாதார அனுகூலமுள்ள ஊடகத்தைத் தெரிவு செய்கின்ற போக்கையும் காட்டுகின்றனர்.
நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்ற பொருளாதாரச் செயற்பாட்டினுள் உருவாகின்ற பல்வேறான கொடுப்பனவு ஊடகங்களைப் பலப்படுத்தும் பொருட்டும் இலங்கையை ஆசிய பிராந்தியத்தில் நிதிச் சேவைகளை வழங்குகின்ற மத்திய நிலையமாக மாற்றுகின்ற இலக்கினை அடையப்பெறும் பொருட்டும் வினைத்திறன்மிக்க கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் முறைமையொன்றைப் பேணிவருகின்ற கூட்டுமுயற்சியிலான நேரடி செயற்பாட்டுக் கட்டமைப்பொன்றின் தேவை உருவாகி வருகின்றது.
இலங்கையின் வங்கி முறையினால் தற்போது பயன்படுத்தப்படுகின்ற இலங்கை வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவுகள் முறைமைகளின் மூலம் நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கல்கள் கடந்த வருடத்தின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடப்படுகின்றபோது தெளிவாகவே
20

அதிகரிப்பைக் காட்டுகின்றன. (3 வது அட்டவணை) தற்போது மேற்படி முறையின் மூலம் நடைபெறுகின்ற மாதாந்தக் கொடுக்கல் வாங்கல்களில் அண்ணளவாக 70 சதவீதம் சம்பள ஒப்படைப்புகளாகும். அரச மற்றும் தனியார் துறையின் நிறுவனங்கள் சம்பளம் செலுத்தும் பொருட்டு இலங்கை வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவு முறைமையைப் பயன்படுத்துவதன் காரணமாக எதிர்காலத்தில் மேற்படி முறையின் மூலம் நடைபெறும் கொடுக்கல் வாங்கல்கள் மேலும் அதிகரிக்கும்.
அதேபோன்று மின்னியல் முறைகளைப் பயன்படுத்தி நடைபெறுகின்ற கடன் அட்டைகள் (Credit Card), வரவு அட்டைகள் (Debit Card) மற்றும் பயன்பாட்டுக் கட்டணப் பட்டியல்கள், மீண்டுவரும் கொடுப்பனவுகள் (காப்புறுதி, வரி, வரிப்பணம்) ஆகியன தொடர்பில் பொதுமக்களிடையே அதிக விருப்பத்தைக் காணமுடியுமாயுள்ளது. மேலும், தன்னியக்க டெலர் இயந்திரம் போன்ற மின்னியல் வங்கிக் கொடுக்கல் வாங்கல்களின் பொருட்டு பயன்படுத்தக்கூடிய பல்வேறான ஊடகங்கள் பரவி வருகின்றன. அதேபோன்று தற்போது மின்னியல் அரச நிருவாக (e-Governance) அணுகுமுறை தாபிக்கப்படுதலும், அரசாங்கத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் சார்பில் மின்னியல் நிதியங்களின் பரிமாற்ற உடன்படிக்கைகள் பரவி வருதலும் நடைபெறுகின்றன.
மேலும் மின்னியல் கொடுக்கல் வாங்கல்களின் போது (Electronic Transactions) கொடுக்கல் வாங்கலின் இரகசியத் தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு சட்டக் காப்பினை வழங்கும் நோக்கத்துடன் டிஜிடல் சான்றிதழ்களை விநியோகிப்பதற்கு லங்கா கிளியர் தனியார் கம்பனி இலங்கை மத்திய வங்கியினதும் இலங்கையின் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மையினதும் (ICTA - Information and Communication Technology Agency) g(86)T36060Tuloit பேரில் "லங்காசைன் (LANKASIGN) எனும் பெயரில் மின்னியல் கையொப்பத்தை அத்தாட்சிப்படுத்துகின்ற (3D6).T60516OLD GuJIT6örgl (Certification Authority) 2009 (3D மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையின் பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறை
2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையைத் தாபிக்கின்ற நடவடிக்கைகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன. இலங்கை மத்திய வங்கி, லங்கா கிளியர் தனியார் கம்பனியுடன் சேர்ந்து இலங்கை பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையைத் தாபிப்பதற்கு உத்தேசமாயுள்ளது. இதன் மூலம் வங்கிகளுக்கிடையில் நடைபெறுகின்ற சிறு அளவிலான கொடுப்பனவுகளுடன் தொடர்புடைய நிதியங்களின் பரிமாற்றம் தொடரறாது, அதேநேரத்தில் பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் நடைபெறுதல் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு தினத்தில் பல்தரப்பு தேறிய
2009 செப் / ஒக் - குறிப்பேடு

Page 21
g5si 606 (Multilateral NetSettlement) (6g5T(5GLT6örg இலங்கை பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்படும். மேற்படி தேறிய தொகுப்பு இறுதியில் இலங்கை மத்திய வங்கியினால் செயற்படுத்தப்படுகின்ற அதேநேர மொத்தத் தீர்ப்பனவு முறைமையின் (RTGS) மூலம் குறித்த வங்கிகளின் நடைமுறைக் கணக்குகளுக்கு பற்று அல்லது வரவு வைக்கப்படும். இலங்கை பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையில் அங்கத்துவமானது முதற் சந்தர்ப்பத்தில் இலங்கை வங்கிகளுக்கிடையிலான கொடுப்பனவு முறைமையில் உள்ள பங்கேற்பு நிறுவனங்களுக்கு, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு மற்றும் தேசிய சேமிப்பு வங்கிக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனைய நிதி நிறுவனங்களுக்கு அங்கத்துவம் வழங்குவதையிட்டு இலங்கை மத்திய வங்கியினாலும் லங்கா கிளியரினாலும் பின்னர் ஆராயப்படும். பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையின் ஊடாக நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கல்களிலுள்ள தகவல்களின் இரகசியத் தன்மை, நம்பகத் தன்மை மற்றும் முழுமையான தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட லங்காசைனில் டிஜிடல் சான்றிதழ்களைப் பயன்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறை ஆரம்பிக் கப்படுதல்
இலங்கை பொதுக் கொடுப்பனவுகள் பொறி முறையை அமைக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதனைச் செயற்படுத்துவதை மூன்று கட்டங்களில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதலாவது 85 Lib: தற்போது 6LIT செயற்படுத்தப்படுகின்ற பின்தொடர் (Offline) நிலையிலுள்ள இலங்கை வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவு முறைமையை A 6au(Jaé
தொடரறா (Online) நிலைக்குள்ளாக்குதல் இதன் கீழ் நடைபெறும். ஆரம்ப கட்டத்தின் கீழ் உரிமம்பெற்ற ஏழு வர்த்தக வங்கிகளைப் பங்கேற்கச் செய்வதற்கும் அதன் வெற்றியைப்
A அனுப்பீட் பொறுத்து எதிர்காலத்தில் அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளையும் வழிப்படுத் இதில் இணைத்துக்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
வழிப்படுத்
இரண்டாவது கட்டம்: இக்கட்டத்தின் கீழ் கட்டணப் பட்டியல்களைச் செலுத்துதல், உள்வரும் அனுப்பல்கள் (Inward Remmitancces) ஆகியவற்றுக்கான வசதிகள் வழங்கப்படும்.
2009 செப் / ஒக் - குறிப்பேடு
 
 

மூன்றாவது கட்டம்: இக்கட்டத்தின் போது பிரத்தியேக 9,6760Lu 16 (36odbEgbgbjL6ö (PIN – Personal Identification Numbers) கூடிய கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் மின்னியல் காசோலைகளைக் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடிய ஆற்றல் வழங்கப்படும்.
இலங்கை பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையைத் தாபிக்கும் பொருட்டு செலவாகும் பணத்தை மீளப் பெறும் வழிவகையாக, அங்கத்துவத்தைப் பெறுகின்ற ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் ஒருதடவை மாத்திரம் பெற்றுக்கொள்ளப்படும் அங்கத்துவக் கட்டணமொன்றையும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களுக்கும் விதிக்கப்படுகின்ற கட்டணமொன்றையும் அறவிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 1வது வரைபடத்தின் மூலம் இலங்கை பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையின் கட்டமைப்பு மிக எளிமையான விதத்தில் காட்டப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் நலன்பெறுநரின் வங்கிக்கு (B வங்கி) நிதியங்களைப் பரிமாற்றுமாறு தமது கணக்கு உள்ள வங்கிக்கு (A வங்கி) தேவையான அறிவுரைகளை வழங்குவார். அதன் பின்னர் கொடுக்கல் வாங்கலை பிறப்பிக்கின்ற A வங்கி, அதனை லங்கா கிளியர் ஊடாக அனுப்புவதற்கு இலங்கை பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறை வலையமைப்பைப் பயன்படுத்தும். லங்கா கிளியர் இக் கொடுக்கல் வாங்கலைக் குறித்துக்கொண்டதன் பின்னர் லங்கா கிளியரில் உள்ள பிரதானமான தொடரறா வழியின்
1வது வரைபடம்
துக் கொடுப்பனவுகள் பொறிமுறையின் கட்டமைப்பு
இலங்கை மத்திய வங்கி
வங்கி இடைமுகப்பு மொடியூல் 1.
தேறிய பிரதான வழிப்படுத்தி தீர்ப்பனவு
லங்கா கிளியர் பொதுக் கொடுப்பனவுகள் சேவையகம்
தி அரண் 「アーー -
21

Page 22
பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையின் மூலம் கொடுப்பனவுகள் பற்றிய செய்தியை எடுத்துச் செல்கின்ற போது நடைபெறும் தொழில்நுட்ப செயற்பாடு மேற்படி வரைபடம் மூலம் விளக்கப்படுகின்றது.
வங்கி இடைமுகப்பு மொடியூல் -Bank interface Module
இது வங்கி முறைமையையும் பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையையும் இணைக்கின்ற இடைமுகப்பாகச் செயலாற்றும்.
| Jgst 60 oup LIGig - Main Router
லங்கா கிளியரின் பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறை வலையமைப்பின் வங்கிகளுக்கிடையே செய்திகளைப் பரிமாற்றிக் கொள்வதற்கு பெளதீக ரீதியில் இக்கருவியின் மூலமே தொடர்புகொள்ளப்படுகின்றது. இதைத் தவிர ஒவ்வொரு வங்கிக்கும் தமக்குரியதான வழிப்படுத்தியொன்று இருத்தல் வேண்டும். உதாரணமாக, A வங்கியின் ஒரு கிளையிலிருந்து B வங்கியின் ஒரு கிளைக்கு ஆவணக் கோப்பொன்றை ஆற்றுப்படுத்துவதற்கெனில் அது முதலாவதாக A வங்கியின் பிரதான அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்தப்படும். அங்கிருந்து அது B வங்கியின் பிரதான அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்தப்படும். ஆயினும் இந்த அனுப்பல் நேரடியாக நடைபெறாது. A வங்கியின் பிரதான
நிறுவனத்தின் கனணி வலையமைப்பு
22
 

அலுவலகம் B வங்கியின் பிரதான அலுவலகத்துடன் லங்கா கிளியரின் வழிப்படுத்தின் ஊடாகவே தொடர்புபடுத்தப்படும். அதன் பின்னர் B வங்கியின் பிரதான அலுவலகம் அந்த ஆவணக் கோப்பை குறிப்பிட்ட கிளைக்கு ஆற்றுப்படுத்தும். இந்த அனைத்துச் செயற்பாடுகளுக்கும் 2 செக்கனிலிருந்து 4 செக்கன் வரையிலான சிறியதொரு நேரமே எடுக்கின்றது. இதன் பொருட்டு லங்கா கிளியரின் வழிப்படுத்தியும் A மற்றும் B வங்கிகளின் வழிப்படுத்திகளும் ஒன்றுடனொன்று தொடர்புபடுத்தப்படும்.
தீ அரண் (Firewal)
தீ அரண் (Firewall) என்பது கணணி முறைமையிலுள்ள ஒரு அம்சமாகும் என்பதோடு இதன் மூலம் முறைமையின் முழுப் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. இதன் கீழ் தகவல்களைப் பாதுகாத்தல், வெளிவாரி நபர்கள் பிரவேசிப்பதை பரிசோதித்தல் மற்றும் அனுமதியற்ற பிரவேசங்களைத் தடுத்தல் ஆகியன நடைபெறுகின்றன. தீ அரணை கனணி முறைமையின் பாதுகாப்பாளராகக் குறிப்பிடலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு மேலதிகமாக, முறைமைக்கு உள்வருகின்ற மின்னியல் கடிதங்கள் மற்றும் ஏனையவை தொடர்பில் கவனமாக ஆராய்ந்து அனாவசியமானவற்றை நீக்குவதற்கும், அவசியமானவற்றை மாத்திரம் ஆற்றுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கும்.
2009 செப் / ஒக் - குறிப்பேடு

Page 23
பொதுக் கொடுப்பனவுகள் சேவையகம் - CPS Server
பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையின் பிரதானமான கனணி இதுவாகும். இதில் மென்பொருட்களின் மூலம் பொறிமுறையுடன் தொடர்புகொள்கின்ற சேவை பெறுனர் பிரயோகத்தினை (Client Application) அதேநேரத்தில் பெற்றுக்கொள்ள முடியுமாயுள்ளது.
மெய்நிகர் பிரத்தியேக வலையமைப்பு (PN - Virtual private Network)
ஏதேனுமொரு தகவலின் உரிமையாளரால் அதனை தமது வலையமைப்பிலுள்ள ஏனையவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் பகிர்ந்துகொள்வதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இதன் சிறப்பம்சம் யாதெனில், பொது இணையத்தள ஊடகத்தினுள் உருவாக்கப்பட்ட வழியின் ஊடாக இதனை மேற்கொள்வதாகும். இந்த வழிகள் வன்பொருள் அல்லது விசேடமாக ஒதுக்கப்பட்டவைகள் (அதாவது, மெய்நிகரானவை) அல்ல. குறித்த தரப்பினர்களிடையே மாத்திரம் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கு பயன்படுத்தப்படுமாகையால் இது பிரத்தியேக வலையமைப்பொன்றாகும். வன்பொருள், பெளதீக ரீதியிலான வழிகள் பயன்படுத்தப்படாமையால் இது மெய்நிகர் வலையமைப்பொன்றாகும்.
G5óu árůILIGOII Gagasai (Net Settlement)
வங்கிகள் தொடர்ந்து கொடுப்பனவு அறிவுரைகளை பொறிமுறை வலையமைப்புக்கு ஆற்றுப்படுத்துகின்றன. அப்போது வலையமைப்பு வங்கிகளின் தேறிய தீர்ப்பனவுகளைத் தயாரிக்கும். பல்தரப்பு அல்லது இருதரப்பு என்றவாறு தேறிய தீர்ப்பனவு கணிப்பிடப்படுகின்றது. ஒரு கொடுப்பனவு வட்டத்தின் இறுதியில் (அநேகமாக நாளின் இறுதியில்) மத்திய வங்கியின் அதேநேர மொத்தத் திர்ப்பனவு முறைமையின் ஊடாக இறுதித் தேறிய மீதி தீர்ப்பனவு செய்யப்படும். மூன்று வங்கிகளுக்கிடையே தேறிய தீர்ப்பனவு கணிப்பிடப்படுகின்ற விதம் கீழே காட்டப்பட்டுள்ளது.
3வது வரைபடம்
B வங்கி
−2
ரூபா 50 மில்லியன்
/
ரூபா 60 மில்லியன் ரூபா 75 மில்லியன்
C வங்கி
A வங்கியின் தேறிய திர்ப்பனவு ரூபா மிேல்லியனாகும் அது தேறிய கடன் கொடுத்தோராகும்) B வங்கியின் தேறிய தீர்ப்பனவு ரூபா 25 மில்லியனாகும் (அது தேறிய கடன் பட்டோராகும்) C வங்கியின் தேறிய தீர்ப்பனவு ரூபா 15 மில்லியனாகும் (அது தேறிய கடன் கொடுத்தோராகும்)
2009 செப் / ஒக் - குறிப்பேடு
 
 
 

இலங்கை பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையின் கொடுக்கல் வாங்கல் பரிமாற்றத்தின் போது நான்கு செய்தித் தரங்கள் (Message Classes) பயன்படுத்தப்படுகின்றன.
606UT660:
E. 5g & Gaugab6ft (Financial Messages)
seglas TU D6slds(5lb Gafulgeb6ft (Authenticate Messages)
BLDL& Gauglassi (Reversal Messages)
6,606)u60)LDL& Gdulgeb6ft (Network Messages)
நிதிச் செய்திகளின் கீழ் அனுப்பீடு செய்யும் வங்கியின் கணக்கு உரிமையாளரது கணக்கில் உள்ள பணம் போதியதாயிருப்பின் அங்கீகாரம் கிடைத்தத்ன் பின்னர் தொடரறா (Online) நிலையிலெனில் நேரடியாக நலன்பெறும் வங்கியின் கணக்கு உரிமையாளரது கணக்குக்கு மேற்படி பணத்தொகை மாற்றப்படும். ஆயினும் பின்தொடர் (Ofine) சந்தர்ப்பத்தின் போது அனுப்பீடு செய்யும் வங்கியினால் அனுப்பப்படும் செய்தி வெற்றிகரமாகக் கிடைத்ததென்பதை அறிவிப்பதற்கு செய்தியொன்று அவ்வங்கிக்கு அனுப்பப்படும். Sgs si6), Gaguig5 (p60360LDu T(35tb (Single Message System) என்பதோடு அதன் பின்னர் கோப்புப் பரிமாற்றங்கள் நடைபெறாது.
ஆயினும் அதிகாரமளிக்கும் செய்திகளின் போது இரட்டை செய்தி முறைமையே பயன்படுத்தப்படும். இங்கு முதலாவதாக அனுப்பீடு செய்யும் வங்கியின் கணக்கு உரிமையாளரது கணக்கில் போதியளவு பணம் இருப்பின் அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர் நேரடியாக நலன்பெறும் வங்கியின் கணக்கு உரிமையாளரது கணக்குக்கு பணம் மாற்றப்படுவதில்லை. மேற்படி அதிகாரமளிக்கும் செய்திகளின்போது கோப்புப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இரட்டைச் செய்தி முறைமையொன்றை வழிப்படுத்தலே நடைபெறும்.
புறமறிப்புச் செய்திகளின்போது தொடரறா சந்தர்ப்பத்தில் முன்னர் அதிகாரமளிக்கும் செயற்பாடு இரத்துச் செய்யப்ப்டும். ஆயினும் பின்தொடர் சந்தர்ப்பத்தில் புறமறிப்புச் செய்தியை வெற்றிகரமாக ஒப்படைக்கின்ற மற்றும் புறமறிப்புச் செய்தியொன்று குறித்த தரப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்தி முறையாக பரிமாற்றிக்கொள்ளப்படும். தரப்பினர்களுக்கிடையே நடைபெறுகின்ற அலுவலின் போது அந்த ஒவ்வொரு தரப்பும் அதற்குப் பொறுப்புக் கூறுதல் வேண்டும். அதனை உறுதி செய்வதற்கு அந்த அனைத்து தரப்புகளிடமும் பாதுகாப்புத் திறப்புகள் இருக்கும். இப் பாதுகாப்புத் திறப்புகள் பரிமாற்றத்திற்கும் அதேபோன்று வலையமைப்பில் பிரவேசிப்பதற்கும் வலையமைப்பின் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தப்படும்.
23

Page 24
மேற்படி புதிய பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையை செயற்படுத்துவதன் ஊடாக வங்கி முறைமைக்குக் கிடைக்கின்ற அனுகூலங்களை பின்வருமாறு குறிப்பிடலாம்.
வருமானம் அதிகரித்தல்
பாரிய கொள்ளளவினைக் கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் நடைபெறுதல், 9D 95TTU 600TLDT Gb, கட்டணப் பட்டியல்களைச் செலுத்துதல், கடன் அட்டைகள், வரவு அட்டைகள் ஊடாக நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்கள்,
உள்வரும் அனுப்பல்கள், g-LDU6 Id, கொடுப்பனவுகள், 560)6)u IIT60T கொடுப்பனவுகள், வங்கிக் கருமபீடங்கள் திறந்திருக்கும் நேரங்களில் வாடிக்கையாளருடன்
தொடர்புகொண்டு நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கல்களின் போது தொடர்புடைய கட்டணங்களைச் சேமிப்பதற்கும் அத்தகைய சேவைகளில் ஈடுபடுகின்ற ஊழியர்களை வருமானம் ஈட்டக்கூடிய வேறு செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கும் முடியுமாயிருக்கும். ஏனெனில், கொடுக்கல் வாங்கல்களை அதிகரிக்கச் செய்வதைத் தூண்டுவதற்கு கிழமையின் எந்தவொரு நாளிலும், எந்தவொரு நேரத்திலும் (24X7) பிரவேசிப்பதற்கு மேற்படி தொடரறா அதேநேர தீர்ப்பனவு (lp60).360)LD D g56ýslu ITU 160)LDu|i).
தொடரறா தகவல்கள் நிலவுதல்
இதன் மூலம் வங்கிகளின் தேறிய தீர்ப்பனவு நிலைமை, கொடுக்கல் வாங்கல்களின் நிலைமை மற்றும் தேவையான அறிக்கைகள் ஆகியவற்றை தேவையான சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் கிடைக்கின்றன.
தொழிற்பாடுகளின் வினைத்திறன் அதிகரித்தல்
கைப்பாட்டு (Manual) முறையிலான பணிகள் குறைவடைவதன் மூலம் தவறுகள் குறைவாயிருத்தலும் கொடுக்கல் வாங்கலுக்குச் செலவாகின்ற கட்டணங்கள் குறைவடைதலும் இம்முறையின் மூலம் நடைபெறுகின்றது. அதேபோன்று பிரதானமான வங்கி முறைமையின் ஊடாக நேரடியான தொடர்புகள் இருப்பதாலும், எதிர்கால வங்கி உற்பத்திகள் தொடர்பில் சிறந்ததொரு அறிவு கிடைப்பதன் மூலமும் தொழிற்பாட்டு வினைத்திறன் அதிகரிக்கலாம். மேலும், கொடுக்கல் வாங்கல்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைப்பதோடு, கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக்கூடிய நம்பிக்கையான வழிமுறையும் இதன் மூலம் கொடுபனவுகள் முறைமையில் சேர்ந்துகொள்ளும்.
வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்ற
அனுகூலங்கள்
இலங்கை பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையின்
மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகள்
கொழும்பு - 13, 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவ அச்சிடப்பட்டு இலங்கை மத்திய வங்கி தொட

வழங்கப்படுகின்றன. தமது கொடுக்கல் வாங்கல்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும் வங்கிகளுக்கு g)6TILIT Ob மேற்கொள்வதற்கான பல்வேறு பிரவேச முறைகளை (உதாரணமாக, தன்னியக்க டெலர் இயந்திரம், மின்னியல் வங்கிகள், தொலைபேசி வங்கி முறைமைகள்) பயன்படுத்த முடியுமாயுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவையின் பொருட்டு நாளின் எந்தவொரு நேரத்திலும் (24X7) பிரவேசிக்கக்கூடியதாயுள்ளது. அதேபோன்று கொடுக்கல் வாங்கல்கள் மிகத் துரிதமாக நடைபெறுவதால் வாடிக்கையாளர்களுக்கு தமது பணத்தொகை பற்றி திட்டவட்டமாக மதிப்பிட முடியுமாயுள்ளதோடு முதலீடுகள் மற்றும் செலவுகள் தொடர்பாக சிறந்ததொரு திட்டத்தைத் தயாரித்துக்கொள்ளவும் இயலுமாயிருக்கும்.
பொருளாதாரத்திற்குக் கிடைக்கின்ற அனுகூலங்கள்
இலங்கையின் பொருளாதாரத்திற்கு மேற்படி இலங்கை பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறையின் 961 ILT5 LJ6) அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இலங்கையின் கொடுப்பனவுகள் தீர்ப்பனவுகள் முறைமையின்
திரவத்தன்மை அதிகரிப்பதோடு அதன் மூலம் பொருளாதாரச்
செயற்பாடுகளில் துரித வளர்ச்சியை ஏற்படுத்தலாம். மேற்படி
பொதுக் கொடுப்பனவுகள் பொறிமுறை உருவாக்கப்பட்டதன்
மூலம் எதிர்கால வங்கிமயமாக்கலின் அபிவிருத்திக்கு, அதாவது மின்னியல் காசோலைகள், தொலைபேசிப் பணம் ஆகியவற்றுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாகும். தென் ஆசிய பிராந்தியத்தில் செயற்படுத்தப்படுகின்ற முதலாவது கொடுப்பனவுகள் பொறிமுறையின் g) floo)LDUITGITUTI(5lb கெளரவமும் இலங்கைக்குக் கிடைக்கும். *
உசாத்துணை:
i. Implementation of the Sri Lanka Common Payment Switch (SLCPS) and Certification Authority (CA) for the Banking Sector by Lanka Clear (Pvt) Ltd, Mrs. J Mampitiya (Assistant Governor, CBSL)
ii. New Payment System Development, Mr Sunimal
Weerasooriya (GM/CEO Lanka Clear)
iii. இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை - 2008
iv. Payment Bulletin, First Quarter 2009, Volume 9: No - 1,
CBSL -
V. WWW.lankaclear.com
vi. www.icta.lk
ந்தையிலமைந்துள்ள (ஆட்டுப்பட்டித்தெரு) கெளரி அச்சகத்தில் பூட்டல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது. -