கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறிப்பேடு 2010.01-02

Page 1
இலங்கை மத்திய வங்கி தொடர்பூட்டல் திணைக்களம்
 


Page 2
GIUGs செலவுத் and 6156նւրt
កាហ្វ្រិដ្ឋំ ព្រោយ ឆ្នា ទ្រៀវ ឆ្នា தீர்க்கும் முறை ஆகியன பற்றிய விபரங்கள் அரச வரவு ត្រា២៦១ម៉្លេះ ម្ល៉ោះ ហ្ស៊ូ ប្រយែស្យ அநேகமாக இவ்வறிக்கை குறித்த செலவின ஆண்டு ஆரம்பமாவதற்கு முன்னரே ព្រោម៌ ឆ្នា கப்பட்டு நிறை வேற்றப்படும் முன்னைய ஆண்டின் நவெம்பர் மாதத்தில் இவ்வறிக்கையைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப் பித்தல் நடைமுறையிலுள்ள வழக்கமாகும் அதன் பின்னர் அது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திசெம்பர் மாதத்தின் நடுப்பகுதியாகின்றபோது நிறைவேற்றப்படும் சில நேரம் இந்தக் கால கட்டம் சிறிதளவு மாற்றமடையலாம். எவ்வாறாயினும் இதனை நிறைவேற்றாது அரச தொழிற் LI65606iն 6L6jioմյ Աplգաց, 6ւյ6ւ ԹԺ6Ù6:13, 5ււմ,
என்பது ஒரு அரசாங்கத்தின் நிலைத்திருத்தலை தீர்மானிக்
ទាំងប្រែ ១ឆ្នាយ៉ាបាឡី ម្ល៉ោះវាចាយយ៉ាងច្រាំ១g
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் XVI ஆம் அத்தியாயத்தின் (148 தொடக்கம் 54 வரையிலான உறுப்புரை பிரகாரம் அரச நிதி தொடர்பான முழுமையான அதிகாரத்தைப் பாராளுமன்றம் கொண்டுள்ளது. அரசாங்கத்தின் அனைத்து வருமானங்கள் மற்றும் Glgaಷ್ರ திரட்டு நிதியத்திற்கு 61, வைக்கப்படுதல் ប៊្រុយែ ឆ្នា பாராளுமன்றத்தினால் git GLDIGigi நிறைவேற்றப்படுவதன் மூலம் மட்டுமே திரட்டு நிதியிலிருந்து நிதியைப் பெறக் கூடியதாயிருக்கும் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கையொப்பமிடுகின்ற @ខ្លាំថ្ងៃ பத்திரத்தின் கீழ் திரட்டு நிதியத்திலிருந்து நிதியைப்
பெறுதல் இவ்வாறான நடைபெறுகின்றது. 1931 ឍ - ធ្ឫត្វ ឲ្យធ្វើ கெடுப்புகள் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டு நிறை
ព្រូបង្រៀនភាព
ச வரவு செலவுத் திட்டம் வரவு செலவுத் திட்ட செயற்பாடுகள் ឆ្នា அரச நிதித் தொழிற்பாடுகள் பற்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLSLLLLLL
ឆ្នា ផ្ទះសំណុំគ្រឿងញ៉ង តាព្រាហ៊ូ ត្រថ្ងៃក្លា, ប្រ៊ូកាញ័យ விடயங்களாகும் இதற்கான வசதியேற்பாட்டை நோக்கமாகக் கொண்டு இத்தடவை குறிப்பேட்டில் இது தொடர்பில் ពទ្ធ័ கலந்துரையாடுகின்ற ថ្ងៃ ព្រោ வெளியிடப்பட்டுள்ளது கணக்கு வாக்கெடுப்பு மற்றும் அதன் பொருளாதாரத் தாக்கம் தொடர்பாக கலந்துரையாடுகின்ற கட்டுரை மேற்படி விடயத்திற்கான ஒரு குறைநிரப்பியாகும். புதிதாக நியமிக்கப்படும் அரசாங்கத்திற்கு புதியதொரு வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதற்கு வாய்ப்பளித்து கணக்கு வாக்கெடுப்பொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் முறையானதொரு கலந்துரையாடலில் ஈடுபடுதல் காலத்தின் தேவையாகும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப் பேடு ISSN 1391 - 7676
2010 ஜனவரி /பெப்ரவரி ஒரு பிரதியின் விலை: ரூபாய் 10.00 வருடாந்த சந்தா: ரூபாய் 240.00
(தபாற் கட்டணத்துடன்)
தொடர்பூட்டல் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கி எனக் குறிப்பிடப்பட்ட காசுக்கட்டளைகள் / காசோலைகள் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் "குறிப்பேடு” சஞ்சிகையை மாதாந்தம் அஞ்சலில் பெற்றுக்கொள்ளலாம்.
பணிப்பாளர், தொடர்பூட்டல் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, த.பெ.இல. 590, கொழும்பு.
கட்டுரைகள்: Udisastb
கணக்கு வாக்கெடுப்பும் அதன் பொருளாதாரத்
தாக்கமும் O3 அரச வரவு செலவுத் திட்டமும் வரவு செலவுச்
செயற்பாடும் O8
மிகைத் திரவத் தன்மை முகாமைத்துவம் 11
நிதியியல் இடையீட்டின் கடமைப் பொறுப்பு 16
"குறிப்பேடு" சஞ்சிகையில் இடம்பெறும் கருத்துக்கள், கட்டுரை ஆசிரியரின் கருத்துக்களேயொழிய இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்களா காதிருக்கலாம்.
2010 ஜன / பெப் - குறிப்பேடு

Page 3
கணக்கு வாக்கெடுப்பு
பொருளாதாரத் தாக்க
கணக்கு வாக்கெடுப்பு
எதிர் காலத்தில் குறிப்பிட்டதொரு காலகட்டத்திற்காக (பொதுவாக அடுத்துவரும் ஆண்டிற்காக) அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்ற அரசாங்கத்தின் நிதிக் கொள்கைக் கூற்றை அரச வரவு செலவுத் திட்டமெனக் குறிப்பிடுகிறோம். இதில் அரச நிதித் தொழிற்பாடுகள் பற்றிய புள்ளிவிபர ரீதியிலான மதிப்பீடுகளும் உள்ளடங்கியிருக்கும். ஏதேனுமொரு சிறப்பியல்பான காரணத்தினால் எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க முடியாமற் போகின்ற போது அரசாங்கத்தின் தொழிற்பாடுகளைத் தொடர்ச்சியாகப் பேணிவருவதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகளுக்கான மதிப்பீட்டுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுதல் கணக்கு வாக்கெடுப்பாகும். ஒருசில மாதங்களை உள்ளடக்கக் கூடியவாறே இவ்வாறான நிதி ஏற்பாடுகள் பெறப்படும். வரவு செலவுத் திட்ட அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்வதற்கு போதியளவு BIT6)Lib இல்லாதிருத்தல், (உ-ம்: தேர்தல் காலகட்டம்) அல்லது திடீர் அனர்த்த நிலைமையொன்று உருவாகுதல் (உ-ம்: யுத்த நிலைமை) அல்லது அப்போதைக்குள்ள நிலைமையின் கீழ் வரவு செலவுத் திட்ட அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க முடியாதுள்ள போது கணக்கு வாக்கெடுப்பு சமர்ப்பிக்கப்படலாம்.
வரவு செலவுத் திட்டத்திற்கும் கணக்கு வாக்கெடுப்புக்கு இடையிலுள்ள வேறுபாடுகள்
வரவு செலவுத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் கணக்கு வாக்கெடுப்பில் பல வேறுபாடுகள் உள்ளன. வரவு செலவுத் திட்டத்தில் அரசிறை, செலவுகள், வரவு
2010 ஜன / பெப் - குறிப்பேடு

உதேனி திலகரத்ன
பொருளியலாளர்
பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்
செலவுப் பற்றாக்குறை மற்றும் அதனைத் தீர்க்கின்ற முறை அத்துடன் அதன் பொருட்டான முன்மொழிவுகள் ஆகிய பல விடயங்கள் உள்ளடங்கியிருந்த போதிலும், கணக்கு வாக்கெடுப்பில் பொதுவாக அரச செலவுகளை மட்டுமே குறிப்பிடுதல் வேண்டும். எவ்வாறாயினும், ஒருசில கணக்கு வாக்கெடுப்புகளில் அரச செலவுகளுக்கு மேலதிகமாக அரசிறை மற்றும் கடன் பெறுவதற்கான தேவை ஆகியனவும் குறிப்பிடப்பட்டிருக்கும். உ-ம்: 2001 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு வாக்கெடுப்பில் மொத்த அரசிறை ரூபா 7,510 கோடியாகவும் உச்சக் கடன் எல்லை ரூபா 535 கோடியாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வரவு செலவுத் திட்டம் ஒரு ஆண்டு காலத்திற்கு ஏற்புடையதாயிருப்பினும் கணக்கு வாக்கெடுப்பு 3 தொடக்கம் 4 மாதம் வரையிலானதொரு குறுகிய காலகட்டத்திற்கு மட்டுமே சமர்ப்பிக்கப்படும். வரவு செலவுத் திட்டம் நீண்ட காலம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்ற போதிலும் கணக்கு வாக்கெடுப்பு குறுகியதொரு காலத்தினுள் (ஏறத்தாழ 4 நாட்கள் வரை) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். வரவு செலவுத் திட்டத்தைப் போன்று கணக்கு வாக்கெடுப்பில் கொள்கை முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படுவதில்லை. மேலும், கணக்கு வாக்கெடுப்புக்குரிய குறித்த செலவுகளும் உட்புகுத்தப் பட்டு முழு ஆண்டுக்குமான வரவு செலவுத் திட்டம் பாராளு மன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும்.
கணக்கு வாக்கெடுப்பு தொடர்பான சட்ட ஏற்பாடுகள்
இலங்கையின் அரசியலமைப்பின் XVII ஆம் அத்தியாயத்தின் 148 தொடக்கம் 154 வரையிலான உறுப்புரைகளில் அரச நிதித் தொழிற்பாடுகளின் கட்டுப்பாடு

Page 4
தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 148 ஆம் உறுப்பரையின் மூலம், அரச நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாடு பாராளுமன்றத்திற்கு உரித்தாயுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 149 (1) ஆம் பிரிவின் மூலம், அரசாங்கத்தின் அனைத்து அரசிறை மற்றும் பெறுகைகள் திரட்டு நிதியத்திற்கு வரவு வைக்கப்படுதல் வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 150 (1) மற்றும் (2) ஆம் பிரிவுகளின் மூலம், பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட ஒரு பிரேரணையின் மூலமன்றி ஏதேனுமொரு நிதியை திரட்டு நிதியத்திலிருந்து செலவு செய்தலாகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் (ஒதுக்கீட்டுச் சட்டம்) பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் கையொப்பத்தின் கீழான அதிகாரப் பத்திரத்தினால் வழங்கப்படும் தத்துவத்தின் அடிப்படையிலேயே திரட்டு நிதியிலிருந்து நிதி செலவிடப்படுதல் வேண்டுமென்பது பொதுவான வழக்கமாக உள்ளது.
எவ்வாறாயினும், கணக்கு வாக்கெடுப்பு சமர்ப்பிக்கடுகின்ற விதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட விதிகள் நேரடியாகவே அரசியலமைப்பில் அல்லது பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளில் அல்லது நிதிப் பிரமாணங்களில் குறிப்பிடப்படவில்லை. ஆதலால் ஏதேனும் விசேட காரணத்தின் அடிப்படையில் அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்காது அதற்குப் பதிலாக கணக்கு வாக்கெடுப்பைச் சமர்ப்பித்தல் அரச நிதி தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வழக்கமாக உள்ளது. அரசியலமைப்பில் அரச நிதி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளை விரிவாக நோக்குகின்ற போது கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 150 (2) ஆம் பிரிவை இதற்கு ஏற்புடையதாக்கிக் கொள்ளலாம். ஆளும் கட்சியினால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற கணக்கு வாக்கெடுப்பு மீது எதிர்க் கட்சிக்குத் தேவையாயின் வாக்கெடுப்பொன்றைக் கோரலாம், வரவு செலவுத் திட்டத்தைப் போன்றே கணக்கு வாக்கெடுப்பும் பாராளுமன்றத்தில் சாராதன பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம்.
கணக்கு வாக்கெடுப்பின் உள்ளமைப்பு
கணக்கு வாக்கெடுப்பில் ஒருசில மாதங்களுக்கான (பொதுவாக 3 அல்லது 4 மாதங்களுக்கான) அரச மீண்டெழும் செலவினம் மற்றும் மூலதனச் செலவினம் உள்ளடங்கியிருக்கும். மீண்டெழும் செலவினம் மற்றும் மூலதனச் செலவினத் தொகைகளைத் தீர்மானிப்பதற்கு விசேடமான சட்ட விதிகள் கிடையாது. நடைமுறை ஆண்டின் செலவின மதிப்பீட்டிற்கு

(ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கு) சமவிகிதாசாரத்தில் அடுத்துவரும் ஆண்டின் குறிப்பிட்ட ஒருசில மாதங்களுக்காக செலவிடக் கூடிய உச்ச எல்லையைத் தீர்மானித்தலே பொதுவாக நடைபெறுகின்றது. எவ்வாறாயினும் செலவினத் தொகை மற்றும் அதன் உள்ளடக்கம் தொடர்பான இறுதித் தீர்மானம் நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராலேயே மேற்கொள்ளப்படும்.
மேலும், கணக்கு வாக்கெடுப்பு சமர்ப்பிக்கப்படுகின்ற கால கட்டத்திற்கான எதிர்பார்க்கப்படுகின்ற முற்பணக் கணக்குத் தொழிற்பாடுகளுக்கான உச்ச எல்லைகளும் அதில் உள்ளடங்கியிருக்கும். அதேபோன்று, அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் அரசிறையும், அக்காலகட்டத்திற்கான அரசாங்கத்தின் கடன் பெறும் தேவையும் கணக்கு வாக்கெடுப்பில் உள்ளடங்கியிருக்கலாம். 1982 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மேற்படி கடன் பெறும் உச்ச எல்லையைத் தீர்மானிப்பதற்கு ஏற்படையதாக உள்ளது. இதைத் தவிர, தற்கால பொருளாதாரப் போக்குகள் மற்றும் சவால்கள் தொடர்பான சுருக்கமானதொரு விபரமும் கணக்கு வாக்கெடுப்பில் குறிப்பிடப்பிடப்பட்டிருக்கும்.
2010 கணக்கு வாக்கெடுப்பு
2010 ஆம் ஆண்டின் முதலாவது நான்கு மாதத்தின் பொருட்டு கணக்கு வாக்கெடுப்பொன்றைச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை 2009 ஒக்றோபர் மாதம் 06 ஆம் திகதி தீர்மானித்தது. அரசாங்கம் 2010 ஆம் ஆண்டுக்கான வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக கணக்கு வாக்கெடுப்பைச் சமர்ப்பிக்குமென சபாநாயகர் 2009 ஒக்றோபர் மாதம் 08 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். அமைச்சரவை 2009 ஒக்றோபர் மாதம் 14 ஆம் திகதி கணக்கு வாக்கெடுப்பின் செலவுத் தொகைகள் பற்றி தீர்மானித்ததோடு, 2009 நவெம்பர் மாதம் 03 ஆம் திகதி கணக்கு வாக்கெடுப்பை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தது. இத்தடவை இலங்கையின் 11 வது கணக்கு வாக்கெடுப்பே சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பிரகாரம், மேற்படி கணக்கு வாக்கெடுப்பில் ரூபா 19,748 கோடி மீண்டெழும் செலவினமும், ரூபா 15,899 கோடி மூலதனச் செலவினமும், ரூபா 622 கோடி முற்பணக் கணக்குகளின் உச்ச எல்லை மதிப்பீடுகளும் உள்ளடங்கியிருந்தன.
2010 ஆம் ஆண்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் கணக்கு வாக்கெடுப்பின் செலவு மதிப்பீடுகளைக் கணிப்பிடுகின்ற போது 2008 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் முதலாவது அட்டவணையின் கீழ் 2009 ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் ஒவ்வொரு அமைச்சு, திணைக்களம் மற்றும் நிறுவனம் தொடர்பிலும் ஒதுக்கியுள்ள
2010 ஜன / பெப் - குறிப்பேடு

Page 5
நிதி ஏற்பாடுகளில் 1/3 க்கு சமமான நிதி ஏற்பாடுகளை 2010 ஆம் ஆண்டின் முதலாவது 4 மாதங்களுக்காக ஒவ்வொரு செலவினத் தலைப்பு தொடர்பிலும் ஒதுக்கியுள்ளது. இதைத் தவிர 2009 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பாதுகாப்பு, வீதி அபிவிருத்தி, பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மின்சாரம் வழங்கல், விடுவிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கான நலனோம்புகை நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக மேலதிக நிதி ஏற்பாடுகள் வழங்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடுகளில் 1/3 க்கு சமமானதொரு தொகையும் குறித்த அமைச்சுகளின் செலவின எல்லைகளில் உள்ளடங்கியுள்ளது.
கணக்கு வாக்கெடுப்பின் பொருளாதாரத் தாக்கம்
கணக்கு வாக்கெடுப்பின் கீழான அரச செலவினத் தொகை முன்னைய ஆண்டின் குறித்த செலவின மதிப்பீடுகளுக்கு சமவிகிதாசாரத்தில் தீர்மானிக்கப்படும் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. ஆதலால், அரச மீண்டெழும் செலவினத்தைப் போன்றே, மூலதனச் செலவினமும் ஒரு வகையில் கட்டுப்படுத்தப்படுகின்றது என்பதைக் காணலாம். மீண்டெழும் செலவினத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இது நல்லதொரு நிலைமையாகும் எனக் கருத முடியுமாயிருப்பினும், மூலதனச் செலவினமும் இவ்வாறு கட்டுப்படுத்தப்படுதல் பிரச்சினைக்குரியதாகும். ஏனெனில், பொருளாதாரத்தினால்
2010 ஜன / பெப் - குறிப்பேடு
 

எதிர்பார்க்கப்படுகின்ற நடுத்தர கால மற்றும் நீண்ட கால உயர் பொருளாதார வளர்ச்சியை அடையும் பொருட்டு அரச முதலீடுகளைத் தொடர்ச்சியாக அதிகரிக்க வேண்டும் என்ற தேவைப்பாட்டினாலாகும். மூலதனச் செலவு முன்னைய ஆண்டின் மூலதனச் செலவு மதிப்பீட்டுக்கு சமவிகிதாசாரத்தில் தீர்மானிக்கப்படுவதன் மூலம் அரச முதலீட்டை எதிர்பார்க்கின்றவாறு அதிகரிக்க முடியாமற் போவதால் பொருளாதார வளர்ச்சி இலக்கினை அடையப்பெறுதல் சிரமமாக அமையும். மேலும், அரசாங்கத்தினால் கணக்கு வாக்கெடுப்புடன் தொடர்புடைய ஆண்டுக்கு முன்னைய ஆண்டில் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடுகளில் எந்த மதிப்பீடு, கணக்கு வாக்கெடுப்பின் செலவினத் தொகைகளிலிருந்து தீர்மானிப்பதற்கு பயன்படுத்தப்படும் என்பது கவனத்திலெடுக்கப்பட வேண்டிய மேலுமொரு விடயமாகும். இதற்கிணங்க, ஏதேனுமொரு ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடுகளை அவ்வாறே அடுத்துவரும் ஆண்டின் கணக்கு வாக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளுதல் அத்தியாவசியமாயிருக்காது என்பதோடு, அதனுடாக செலவுகளும் பெருமளவில் அதிகரிக்க இடமுண்டு. அதேபோன்று தேர்தல் காலத்தில் பெருமளவு நிவாரணங்களை வழங்குகின்ற வரவு செலவுத் திட்டமொன்றைச் சமர்ப்பிப்பதற்குப்
பதிலாக கணக்கு வாக்கெடுப்பைச் சமர்ப்பித்தல் சிறந்ததொரு அரச நிதியியல் நடைமுறையாகுமெனவும் கூறலாம். O

Page 6
இலங்கையில் கணக்கு
1931.09.2 1931.09.2
1970.09.10 1970.09.12 3 மீண்டெ
1982.11.02 1982.11.02 மீண்டெ
ষ্টু
1994.11.22 1994.11.25 30.0
 
 
 

வாக்கெடுப்பின் வரலாறு
ஜூன் மாதத்தில் அரச
6 பிரதிநிதிகள் சபைக்கு வரவு
செலவுத் திட்டமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும் ஜூலை மாதம் வரை பிரதிநிதிகள் சபை தனது அலுவல்களை ஆரம்பிக்காதிருந்தமை
.ழும் மற்றும் மூலதனச் வரவு செலவுத் திட்டத்தைத் னம் bLIFT 792.4 தயாரிப்பதற்கு போதியளவு பன் காலம் இல்லாதிருந்தமை ாக் கணக்கு உச்ச
): ரூபா 949.1 மில்லியன்
ழும் செலவினம்: ரூபா 69| 1982.10.20 ஆம் திகதி 1ன் மூலதனச் செலவினம்: சனாதிபதித் தேர்தல் 4 பில்லியன் நடைபெற்றதோடு, பொதுசன ாக் கணக்கு உச்ச கருத்துக் கணிப்பும் அதே
ரூபா 2.1 பில்லியன் ஆண்டில் நடைபெற இருந்தமை
ழும் செலவினம்: ரூபா ல்லியன் மூலதனச்
பாராளுமன்றத் தேர்தல் 1994.08.16 ஆம் திகதி
னம்: ரூபா ல்லியன் நடைபெற்றதோடு, சனாதிபதித் ாக் கணக்கு உச்ச எல்லை: தேர்தல் 1994.11.09 ஆம் திகதி 6 பில்லியன் நடைபெற்றமை
2010 ஜன / பெப் - குறிப்பேடு

Page 7
2000.12.05 2000.12.08
2009.11.03 2009.11.05
2010 ஜன / பெப் - குறிப்பேடு
 
 

டெழும் செலவினம்: ரூபா பில்லியன் மூலதனச் வினம்; bUIT 56.6 லியன் பணக் கணக்கு உச்ச லை: ரூபா 5.3 பில்லியன்
வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதற்குப் போதியளவு காலம் இல்லாதிருந்தமை.
Tடெழும் செலவினம்: - ரூபா
5 பில்லியன் மூலதனச் நியமிக்கப்படவிருந்த லவினம்: ரூபா 1590 அரசாங்கத்திற்கு லியன் புதியதொரு வரவு பணக் கணக்கு உச்ச செலவுத் திட்டத்தைச் லை: ரூபா 62 பில்லியன் சமர்ப்பிப்பதற்கு
வாய்ப்பளித்தல்.

Page 8
இரச வரவு செ வரவு செலவுச்
கமல் மு உதவிப் ட அரச நிதிக் கொள்ை
நிதி, திட்டமி
அறிமுகம்
குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தினுள், பொதுவாக ஓர் ஆண்டினுள் ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படும் வருமானம், அதே ஆண்டினுள் ஏற்க வேண்டியிருக்கும் செலவினம், வருமானத்தைத் தாண்டியதொரு செலவினம் உள்ளபோது அத்தகைய பற்றாக்குறையை நிதியிடுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை, மிகை இருப்பின் அத்தகைய மிகையைப் பயன்படுத்துகின்ற விதம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகத் தயாரிக்கும் ஒரு மதிப்பீட்டை அரச வரவு செலவுத் திட்டம் எனக் குறிப்பிடுகிறோம். எதிர்வரும் ஆண்டுக்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் கொள்கைகள் உள்ளடங்கிய மேற்படி அறிக்கை அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனமாகும். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் XVI ஆம் அத்தியாயத்தின் (148 தொடக்கம் 154 வரையிலான உறுப்புரை) பிரகாரம் அரச நிதி தொடர்பான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உரித்தாயுள்ளது. ஆதலால் அரசாங்கம் வருமானத்தைத் திரட்டுதல், கடன் பெறுதல், செலவழித்தல் மற்றும் கடனை திருப்பிச் செலுத்துதல் ஆகிய தொழிற்பாடுகளுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுதல் வேண்டும். அதேபோன்று அரசாங்கத்தின் அனைத்து வருமானங்கள், பெறுகைகள் மற்றும் செலவுகளை ஏற்றல் ஆகியன திரட்டு நிதியத்தின் ஊடாக நடைபெறுதல் வேண்டும். 149 (1) ஆம் உறுப்புரைக்கமைய திரட்டு நிதியம் என்பது, “குறித்ததொரு விடயத்திற்காக சட்டத்தினால் ஒதுக்கப்படாததும், குடியரசுக்கு உரித்தானதுமான அனைத்து நிதியங்களும் ஒன்று சேர்ந்து” உருவாகியுள்ள ஒரு நிதியமாகும். அதன் ஏற்பாடுகளின் பிரகாரம் “அனைத்து அறவீட்டு வரிகள், தீர்வை வரிகள், வரிப்பணம், கட்டணங்கள் ஆகிய வழிகளின் மூலம் கிடைக்கின்ற வருமானமும், குறித்ததொரு விடயத்திற்காக ஒதுக்கப்படாதுள்ளதான குடியரசுக்குரிய ஏனைய அனைத்து வருமானங்கள் மற்றும் பெறுகைகளும் திரட்டு நிதியத்திற்குச் செலுத்தப்படுதல் வேண்டும்”. பாராளுமன்றத்தினால் சட்டமொன்று நிறைவேற்றப்படுவதன் மூலமே திரட்டு நிதியத்திலிருந்து நிதியைப் பெறலாம். அரசியலமைப்பின் 150 ஆம் உறுப்புரையின் பிரகாரம் நிதி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கையொப்பமிடுவதன்

லவுத் திட்டமும் F செயற்பாடும்
னசிங்க
பணிப்பாளர் ககள் திணைக்களம்
6b 960). D&FS,
மூலம் செலவுகளை ஏற்பதற்கான தத்துவம் கிடைக்கும். 150(3) ஆம் உறுப்புரையில் காட்டப்பட்டுள்ளவாறு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர், பாராளுமன்றம் கலைக்கப்படுமிடத்து, அரச பணிகளுக்காக ஏதேனும் நிதித் தொகை தேவையாயுள்ளதாக சனாதிபதி கருதுவாராயின் அத் தொகையை திரட்டு நிதியிலிருந்து வழங்குமாறும், செலவிடுமாறும் கட்டளையிடுவதற்கு சனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தல் நடைமுறை ஆண்டின் இறுதிப் பகுதி வரையிலான கால கட்டம் பூராவும் செயற்படுத்தப்படும் பல கட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இங்கு ஒழுங்கானதொரு செயல்முறை பின்பற்றப்படும். ஒட்டுமொத்தமான வரவு செலவுத் திட்ட செயற்பாட்டினுள் நாட்டிற்கு பல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும். குறிப்பாக 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தின் பிரகாரம் நாட்டின் அனைத்துத் தரப்பினர்களின் பங்கேற்புடனும், அவர்களை (p(960)LDUITEB அறிவூட்டுகின்ற விதத்திலும் பகிரங்கத் தன்மையுடன் கூடியதாக இலக்கிடப்பட்ட அரச நிதிச் சுட்டெண்களின்பால் நெறிப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு பல வெளியீடுகள் வெளியிடப்படும். அச்சட்டத்தின் பிரகாரம், வரவு செலவுத்திட்ட செயல்முறை பற்றிய அறிக்கை, வரவு செலவுத் திட்டம், பொருளாதார மற்றும் அரச நிதி நிலைமை பற்றிய அறிக்கை, வரவு செலவுத் திட்ட நிலைமை பற்றிய இறுதி அறிக்கை (ஆண்டறிக்கை) ஆகியன மூலம் பொது மக்களை அறிவூட்டல் நோக்கமாயுள்ளது.
அரச வரவு செலவுத் திட்டச் செயற்பாட்டின் போது அமைச்சரவை, பாராளுமன்றத்தின் ஆளும் கட்சியினதும் எதிர்க் கட்சியினதும் ஏனைய உறுப்பினர்கள், திறைசேரி உத்தியோகத்தர்கள், மத்திய வங்கி உள்ளிட்ட ஏனைய திணைக்கள மற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினர்களும் தீவிரமாகப் பங்கேற்பார்கள்.
வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரையிலான ஒட்டுமொத்தச் செயற்பாடு
2010 ஜன / பெப் - குறிப்பேடு

Page 9
தொடர்பாகவும் சுருக்கமானதொரு விளக்கத்தை வழங்குதல் இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வரவு செலவுத் திட்டச் செயற்பாட்டின் ஆரம்பமும் வரவு செலவுத் திட்டத்தின் முதலாம் மதிப்பீடும்
பொதுத் திறைசேரியின் உத்தியோகத்தர்களால் அடிப்படை வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டுடன் தொடர்புடைய பேரண்ட மட்டத்திலான ஒரு மதிப்பீடு தயாரிக்கப்படுதல் வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது கட்டமாகும். இதற்கிணங்க மொத்த வருமானம், செலவுகள் என்றவாறு பிரதானமான புள்ளிவிபரங்கள் அடங்கிய நடுத்தரகால வரவு செலவுத் திட்ட வரைச்சட்டகம் தயாரிக்கப்படும். இதில் தேசிய மற்றும் சர்வதேச பொருளாதாரப் போக்குகள் மற்றும் அரச நிதிச் சட்டங்கள் (அரச நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டம் ஆகியன) கவனத்திற் கொள்ளப்படும். மேற்படி நடுத்தரகால வரவு செலவுத் திட்ட வரைச்சட்டகமும் உள்ளடக்கப்பட்டு வரவு செலவுத் திட்டங்களைக் கோரல் எனும் சுற்றறிக்கையொன்று அரசின் அனைத்துச் செலவுகள் மற்றும் வருமான அலகுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். குறித்த நிறுவனங்களிலிருந்து முறையாக உரிய மதிப்பீடுகளை வரவழைப்பதே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. வரவு செலவுத் திட்டக் கோரிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை பரிசீலிப்பதன் மூலம் இவ்வாறு அழைக்கப்படும் தகவல்கள் பற்றிய விளக்கத்தைப் பெறலாம். வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயாரித்தல் தொடர்பான வழிகாட்டிகள் மற்றும் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டிய அங்கீகரிக்கப்பட்ட படிவங்கள், நாட்டின் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், எதிர்காலத்தில் நாடு முகம்கொடுக்க நேரிடுகின்ற தடைகள், மதிப்பீடுகளைத் தயாரிக்கின்ற போது கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் ஆகியன அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றைத் தவிர காலத்துக்குக் காலம் அறிமுகப்படுத்தப்படுகின்ற முகாமைத்துவ மற்றும் ஏனைய நியமங்களும் வேலைத் திட்டம் தொடர்பான தகவல்களும் உள்ளடக்கப்படும்.
வரவு செலவுத் திட்டத்தைக் கோருகின்ற போது மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய மாதிரி காட்டப் பட்டிருக்கும். மேற்படி LDTgff பன்னாட்டு நாணய நிதியத்தினால் சமர்ப்பிக்கப்படுகின்ற சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அரச நிதியியல் அறிக்கையிடல் மாதிரிகளுக்கு இணங்கியொழுகின்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வருமான மற்றும் செலவின வகைப்படுத்தல் மற்றும் பகுப்பாய்வுக்கு வசதியாக இருக்கக்கூடியவாறு சமர்ப்பித்தல் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மத்திய அமைச்சுக்களினதும் செயலாளர்கள் (பிரதான பொறுப்புக்கூறும் உத்தியோகத்தர் என்ற வகையில்) தமது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களிலிருந்து செலவின/வருமான மதிப்பீடுகளை வரவழைத்து பொதுத் திறைசேரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்தைக் கோருகின்ற தொழிற்பாடுகள் நடைபெறுகின்ற அதேநேரம் பாராளுமன்றத்தின் அனுமதியின் பேரில் குறித்த வரவு செலவுத் திட்ட கால அட்டவணை
2010 ஜன / பெப் - குறிப்பேடு

தயாரிக்கப்படும் என்பதோடு, அவ்விடயங்களை உள்ளடக்கி அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படும். இதன் மூலம் வரவு செலவுத் திட்டச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான அனுமதி எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையே வரவு செலவுத் திட்டத்தைக் கோருவதுடன் தொடர்புடைய மதிப்பீடுகள் பொதுத் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதோடு அந்த மதிப்பீடுகள் தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் குறித்த உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் நடைபெறும். வரையறுக்கப்பட்ட வளங்களிலிருந்து 2.38FLDL- நலனோம்புகையையும் அபிவிருத்தியையும் அடையப்பெறுகின்ற விதத்தினைத் தீர்மானிப்பதற்காக அனைவருக்கும் மத்தியில் மேற்படி ஒழுங்குமுறையான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் உரிய திருத்தங்களுடன் இறுதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தயாரிக்கப்படும் என்பதோடு இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படும். இதன் மூலம் வரவு செலவுத் திட்டப் பிரேரணைகள் இன்றி குறித்த அனைத்து அரச நிறுவனங்களினதும் வருமானம்/செலவு மற்றும் நிதியிடல் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் மேற்படி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் என்பதோடு வர்த்தமானியின் மூலம் பொதுமக்களுக்காக வெளியிடப்படும். இதில் ஒவ்வொரு செலவு அலகுக்குமான செலவு தனித் தனியாகச் சமர்ப்பிக்கப்படும். இது தொடர்பில் பொது மக்களுக்கு தமது எதிர்ப்புகள் இருப்பின் அத்தகைய எதிர்ப்புகளை ஏழு நாட்களுக்குள் முன்வைக்க முடியுமாயிருக்கும்.
வரவு செலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீடு
வரவு செலவுத் திட்ட இரண்டாவது மதிப்பீடு அல்லது 'வரவு செலவுத் திட்ட உரை' இதன் பின்னர் வருகின்ற பிரதானமான அம்சமாகும்.
இங்கு நிதி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பார். வரவு செலவுத் திட்ட உரையைத் தயாரிக்கின்றபோது நாட்டின் அனைத்து மக்களினதும் முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்கள் கவனத்திற் கொள்ளப்படும். அரச நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்தின் பிரகாரம் பரந்தளவில் மக்கள் பங்களிப்பைப் பெறுதல் இதன் நோக்கமாகும். இதைத் தவிர மத்திய வங்கி மற்றும் ஏனைய நிறுவனங்களிலிருந்து பெறப்படுகின்ற வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கி விரிவான அடிப்படையில் வரவு செலவுத் திட்ட உரை தயாரிக்கப்படும்.
எதிர்வரும் வருடத்திற்கான நாட்டின் அபிவிருத்திப் பாதை இதன் மூலம் வெளிப்படுத்தப்படும். வரவு செலவுத் திட்ட உரையினுள் உள்ளடங்கியுள்ள விடயங்களில், தற்போது நடைமுறையிலுள்ள கொள்கைகளின் செயலாற்றுகை, வளங்களின் முகாமைத்துவம் மற்றும் எதிர்காலத்திற்கான அபிவிருத்தித் திட்டம் முக்கியமாக முன்வைக்கப்படும். இதைத் தவிர நாட்டின் பொருளாதாரத்தில் ஒவ்வொரு உப துறைகளிலும் உருவாகின்ற பிரச்சினைகள், சவால்கள் மற்றும் முன்வைக்கப்படுகின்ற தீர்வுகள் இதில் உள்ளடங்கியிருக்கும். நாட்டில் சிறந்ததொரு வரி முறையைத்

Page 10
தாபித்தல், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கச் செய்தல் ஆகியன வருமான முன்மொழிவுகளின் முக்கியமான குறிக்கோளாயிருக்கும். சிறந்ததொரு வரி முறையானது அதனுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினர்களினதும் நன்மைக்குக் காரணமாயமையும். ஆதலால் அனைத்து அரசாங்கங்களும் சிறந்ததொரு வரி முறையை உருவாக்கிக் கொள்வதற்கான முன்மொழிவுகளை வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் சேர்த்துக்கொள்ளும். மேற்படி முன்மொழிவுகளின் மூலம் அப்போதைக்குள்ள வரிகள் மற்றும் வீதங்களை திருத்துதல் அல்லது நீக்குதலைப் போன்றே புதிய வரிகள் மற்றும் வீதங்கள் அறிமுகப்படுத்தப்படும். மறுபுறம் செலவின முன்மொழிவுகளின் போது உயர் பொருளாதார வளர்ச்சியையும், அபிவிருத்தியையும் உருவாக்கி அதன் மூலம் மக்களை வளம்பெறச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. தனியார் துறைக்கு ஒப்பீட்டளவில் அரச துறையின் வினைத்திறனை உருவாக்குதல், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் உயிர் நாடியாகக் கருதப்படுகின்ற தனியார் துறைக்குத் தேவையான வசதிகளை வழங்கல், கமத்தொழில் உள்ளிட்ட நாட்டின் உள்நாட்டுக் கைத்தொழில்களைப் பாதுகாத்தல், நாட்டின் முதலீடுகளை அதிகரிக்கச் செய்தல் ஆகிய பேரண்ட மற்றும் நுண்பாகப் பொருளாதார, சமூக நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளல் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் தொழில்துறை நடவடிக்கைகளை ஊக்குவிக்கக்கூடிய வகையில் வரி விலக்களித்தல் மற்றும் வரிச் சலுகைகளை வழங்கல், அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் பல்வேறான நிவாரணங்களை வழங்கல், பொது மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொருட்டு எரிபொருள் விலைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பண்டங்களின் விலைகளைக் குறைத்தல் ஆகியவற்றுக்கான முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்படும். இதைத் தவிர சமூக ரீதியில் முக்கியமான ஏனைய துறைகள் சார்பிலும் பல்வேறு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும். உதாரணமாக, போதைப் பொருள் தவிர்ப்புக்கான வேலைத்திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். வருமானம், செலவினம் என பிரித்துக்காட்டப்பட்ட போதிலும் இந்த அனைத்து வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் அமுலாக்கலின் இறுதியில் ஒரு நாடென்ற வகையில் சுபீட்சத்தை அடையும் பொருட்டு பல்வேறு விதத்தில் பங்களிப்புச் செய்யும். இவற்றைத் தவிர வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான மாற்றம் ஒரு பற்றாக்குறையாக உள்ள போது அத்தகைய பற்றாக்குறையை நிதியிடும் பொருட்டு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு ரீதியிலும், சந்தையிலிருந்து மற்றும் சந்தையல்லாத விதத்திலும் கடன் பெறுகின்ற உச்ச எல்லைகள் பற்றிய முன்மொழிவுகளும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடங்கியிருக்கும். அதேநேரம் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் பற்றிய விளக்கமானதொரு கூற்றும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும். மேற்படி வரவு செலவுத் திட்ட மதிப்பீடு ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களையும் இரண்டு தொகுதிகளையும் கொண்ட பாரியதொரு நூலாகும்.
10

வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவதற்கு முன்னர் முதலாவது மதிப்பீட்டின் போது ஏதேனும் மக்கள் எதிர்ப்புகள் தோன்றியிருப்பின் அவற்றுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டு தீர்த்து வைக்கப்படும். இதற்கு ஏறத்தாழ ஒரு மாத காலம் கிடைக்கும். அதன் பின்னர் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். மேற்படி விவாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலாவது கட்டத்தில் வரவு செலவுத் திட்டத்தை ஒட்டுமொத்தமாக நோக்கி அதனடிப்படையில் விவாதம் மேற்கொள்ளப்படும். இவ்விவாதம் 5-7 நாட்கள் வரை நடைபெறுமென்பதோடு, இது வரவு செலவுத் திட்ட இரண்டாம் மதிப்பீடு எனக் குறிப்பிடப்படும்.
வரவு செலவுத் திட்ட (பரிசீலனை) முன்றாம் மதிப்பீடு
வரவு செலவுத் திட்ட மூன்றாம் மதிப்பீடு எனப்படுகின்ற குழு நிலையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது கட்டத்தின் விவாதம் ஆரம்பமாகும். இங்கு வரவு செலவுத் திட்டம் தனித் தனியாக குறித்த தலைப்புகளின் கீழ் விளக்கமாகக் கலந்துரையாடப்படும். ஏறத்தாழ 26 நாட்களினுள் இரண்டாம் மதிப்பீடும் மூன்றாம் மதிப்பீடும் முடிவடைதல் வேண்டும். மேற்படி மூன்றாவது மதிப்பீட்டின் போது பாராளுமன்றம் ஒரு குழுவாகக் கூடி கலந்துரையாடலை மேற்கொள்ளும் என்பதோடு, இறுதி வாக்கெடுப்பு தீர்க்கமானதொன்றாக அமையும். இவ்வாக்கெடுப்பின் மூலம் அப்போதைக்குள்ள அரசாங்கத்திற்கு எதிர்வரும் ஆண்டுக்கான தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைப்பதனாலேயே அவ்வாறு நடைபெறும். அதன் பின்னர் மேலும் மூன்று தினங்கள் திருத்தங்களைச் சேர்த்துக்கொள்வதற்காக அவகாசம் வழங்குதலும் அதன் பின்னர் சபாநாயகர் கையொப்பம் இடுவதன் மூலம் சட்டமாக ஆகுதலும் நடைபெறும். அதற்குப் பின்னர் நிதி அமைச்சருக்குச் சமர்ப்பிக்கப்படுகின்ற அதிகாரம் வழங்குகின்ற கடிதத்தில் அவர் கையொப்பமிடுவதன் மூலம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒப்பதலளிக்கப்பட்ட நிதியைச் செலவிடுவதற்கான அதிகாரம் கிடைக்கும். அதன் பின்னர் தயாரிக்கப்படுகின்ற நிதி அளவுக் கூற்றுகளின் பிரகாரம் நிதியை விடுவித்தலும் செலவழித்தலும் நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடங்கியுள்ள அடிப்படை விடயங்கள் மற்றும் குறித்த ஒப்புதலளிக்கும் செயல்முறை இக்கட்டுரையின் மூலம் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. இங்கு தேவையான சட்ட விடயங்களும் சுருக்கமாக விளக்கப் பட்டுள்ளது. இது பெருமளவு ஆட்களின் பங்களிப்புடன் நாட்டின் எதிர்காலத்தை முன்னிட்டு சமர்ப்பிக்கப்படுகின்ற, முக்கியமானதொரு ஆவணமாகும். இதன் பொருட்டு ஒழுங்கு முறையிலான ஒரு செயல்முறை கடைப்பிடிக்கப்படும். O
2010 ஜன / பெப் - குறிப்பேடு

Page 11
மிகைத்
திரவத்தன்மை
முகாமைத்து
இன்றுள்ள அநேகமான பொருளாதாரங்களில், குறிப்பாக அபிவிருத்தியடைந்து வருகின்ற மற்றும் எழுச்சி பெறுகின்ற பொருளாதாரங்களில் வங்கி முறைமையினுள் தொடர்ச்சியாக மிகைத் திரவத்தன்மை வளர்ச்சியடைந்துள்ளது. மேற்படி மிகைத் திரவத்தன்மையைச் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தல் அத்தகைய நாடுகளின் மத்திய வங்கிகள் முகம்கொடுக்கின்ற பாரியதொரு சவாலாகும். இலங்கையிலும் தற்போது மிகைத் திரவத்தன்மை வளர்ச்சியடைந்துள்ளது. மூன்று தசாப்தங்களாக நிலவிய பயங்கரவாதம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை வளர்ச்சியடைந்து, இலங்கை அரச பிணையங்களில் முதலீடு செய்வதற்கு காட்டிய ஆர்வம் அதிகரித்தமை இந்நிலைமை உருவாவதற்கு முக்கியமாகப் பங்களிப்புச் செய்துள்ளது. தற்போது அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்களில் வட்டி வீதம் பூச்சியத்தை நெருங்கியுள்ளமையும், இலங்கைக்கு பன்னாட்டு நாணய நிதியத்திலிருந்து துணைநில் கடன் வசதிகள் கிடைத்துள்ளமையும், இந்நிலைமை வளர்ச்சியடைவதற்குக் காரணமாயமைந்தது. ஒரு நாட்டில் மிகைத் திரவத் தன்மை நிலைமை தொடர்ந்து நிலவுதல் அந்நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றியும், அத்தகைய மிகைத் திரவத்தன்மையின் முகாமைத்துவத்திற்கு மத்திய வங்கியினால் மேற்கொள்ள முடியுமாயுள்ள உபாய முறை மற்றும் அவ்வாறான சந்தர்ப்பங்கள் உருவாவதை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றியும் இக்கட்டுரையில் ஆராய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
திரவத்தன்மைக்கு விளக்கமளித்தல்
மிகவும் எளிமையான விதத்தில் கூறுவதெனில், ஏதேனும் ஒரு சொத்தை விரைவாகப் பணமாக (பரிமாற்ற ஊடகமாக) மாற்றுவதற்குள்ள இயலுமையே திரவத்தன்மை என்பதன் மூலம் கருதப்படுகின்றது. இதன் பிரகாரம் மிக அதிகமான திரவத்தன்மையைக் கொண்ட சொத்தாக பணம் விளங்குகின்றது. எவ்வாறாயினும், கனடா மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டேவிட் லோங்க்வர்க் பின்வருமாறு திரவத்தன்மையை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் காட்டுகின்றார்.
1. பேரண்டப் பொருளாதாரத் திரவத்தன்மை எனப்படுகின்ற வட்டி வீதம், கடன் நிலைமை, பணம் மற்றும் கடன்களின் மொத்தக் கூட்டுத் தொகை உள்ளிட்ட ஒட்டுமொத்தமான நிதி நிலைமையைக் கவனத்திற்கொள்ளல்.
2010 ஜன / பெப் - குறிப்பேடு

GD
குமாரி தீரசிங்க பிரதிப் பணிப்பாளர் உள்நாட்டு அலுவல்கள் திணைக்களம்
2. சந்தைத் திரவத்தன்மை எனப்படுகின்ற ஏதேனும் நிதிச் சொத்தை அதன் பெறுமதியில் தாக்கம் ஏற்படாத வகையில் எவ்வளவு அவசரமாக கொள்வனவு செய்ய அல்லது விற்பனை செய்ய முடியுமாயுள்ளது என்பது,
3. ஐந்தொகைத் திரவத்தன்மை எனக் கருதப்படும் ஏதேனும் ஐந்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ள பணம் போன்ற சொத்துக்கள்
மத்திய வங்கி தனது நாணயக் கொள்கையை, முதலில் குறிப்பிட்டுள்ள பேரண்டப் பொருளாதார திரவத்தன்மை எனப்படுகின்ற பணச் சந்தைத் திரவத்தன்மைச் செலவின முகாமைத்துவத்தின் ஊடாகவே முகாமைத்துவம் செய்கின்றது. சந்தையினுள் தேவையான அளவை விட குறைந்தளவு அல்லது அதிகளவு திரவத்தன்மை நிலவுதல் நாணயக் கொள்கை முகாமைத்துவத்திற்கு சாதகமானதாக இருக்காது. பணச் சந்தையினுள் திரவத்தன்மையானது அதிசக்திவாய்ந்த பணம் அல்லது நாணயத் தளம் அல்லது ஒதுக்குப் பணம் எனக் குறிப்பிடப்படுகிறது.
மிகைத் திரவத்தன்மையை அடையாளம் காணல்
மத்திய வங்கி பணச் சந்தையிலிருந்து திரவத் தன்மையை மீள உள்ளிர்ப்பதை விட அதிகளவில் வங்கி முறைமைக்கு தொடர்ச்சியாக பாய்ச்சப்படுமெனில் அப்போது வங்கி முறைமையினுள் மிகைத் திரவத்தன்மை உருவாகும். மத்திய வங்கியினுள் அத்தியாவசியமாக தடுத்து வைத்திருக்க வேண்டிய ஒதுக்குத் (Required Reserve) தொகை தாண்டிச் சென்றுள்ளதென்பது இதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது.
திரவத்தன்மை அதிகரிப்பதற்கு காரணமாயமைகின்ற
பிரதானமான மூன்று மூலாதாரங்கள் வருமாறு:
1. வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கு திரட்சியடைதல்
2. கடன் நிதியிடல்
3. திரவத்தன்மைப் பற்றாக்குறைக்கு முகம்கொடுத்த
வங்கிகளை விடுவித்தல்
அண்மைக் காலமாக அநேகமான பொருளாதாரங்களில் மிகைத் திரவத்தன்மை நிலைமைகள் உருவாவதற்கு, வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சல் அதிகரித்தமையின் காரணமாக வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கு வளர்ச்சியடைந் தமை பிரதானமாக ஏதுவாயமைந்தது. செலாவணி ஒதுக்கு
11

Page 12
வளர்ச்சியடைவதற்கு ஏதுவாயமைகின்ற காரணிகளாக ஏற்றுமதி வருமானம் (வர்த்தகக் கணக்கின் ஊடாக), அரசாங்கம் அல்லது தனியார் துறை வெளிநாட்டுக் கடன்களைப் பெறல், வெளிநாட்டு (359 (pg565G-56i (Foreign Direct Investment), 56ft L3b6f (Grants), Goj6sybst(B 96) iG356i (Foreign Remittances) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். உள்ளக மற்றும் வெளிவாரிப் பேரண்டப் பொருளாதார சமநிலையின்மையின் காரணமாக மிகைத் திரவத்தன்மை உருவாகின்றதென ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, சீனாவின் ஏற்றுமதி வருமானம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தமையினால் வர்த்தகக் கணக்கில் மிகை உருவாகியிருந்த போதிலும், உள்நாட்டு நுகர்வு குறைவடைந்தமையினால் மிகைத் திரவத்தன்மை உருவாகியுள்ளது. எவ்வாறாயினும், வெளி நாட்டுச் செலாவணிப் பாய்ச்சல்களின் காரணமாக சுதந்திரமாக மிதக்கவிடப்பட்ட செலாவணி வீதங்களுடன் &ռlգա] பொருளாதாரங்களில் உள்நாட்டு நாணயங்களில் தாக்கம் ஏற்படாதென்பதோடு, ஏனைய செலாவணி வீதங்களுடன் கூடிய பொருளாதாரங்கள் உள்ளிட்ட அபிவிருத்தியடைந்து வருகின்ற மற்றும் எழுச்சி பெறுகின்ற பொருளாதாரங்களுக்கு வெளிநாட்டுச் செலாவணியின் உட்பாய்ச்சல் முக்கியமாக அமையலாம். அதாவது, அத்தகைய பொருளாதாரங்களின் நடைமுறை மற்றும் மூலதனக் கணக்குகளுக்கு ஏனைய விதத்தில் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சப்படுதலுக்கு ஒப்பீட்டளவில் இத்தகைய வெளிநாட்டுச் செலாவணியின் உட்பாய்ச்சல் உயர் பெறுமானத்தைக் கொண்டிருப்பின் அல்லது பணவீக்கத்தைக் குறைந்ததொரு பெறுமானத்தில் பேணிவரும் எதிர்பார்ப்புடன் செலாவணி வீதம் நிலையாகப் பேணிவரப்படுமெனில் அல்லது ஏற்றுமதிப் போட்டிநிலையைப் பேணிவருதல் முக்கியமானதெனக் கருதப்படுமெனில் அப்போது அத்தகைய பொருளாதாரங்களில் மத்திய வங்கியின் தலையீடு அவசியமானதாயிருக்கும். ஒரு பொருளாதாரத்திற்கு வெளியிலிருந்தான வெளிநாட்டுச் செலாவணியின் உட்பாய்ச்சல் அதிகரிப்பதைத் தொடர்ந்து செலாவணி வீதம் அதிகரிக்குமென்பதோடு அத்தகைய நிலைமை ஏனைய நாடுகளுடன் போட்டி நிலையைப் பேணிவருவதற்கு தடையாக அமையும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் செலாவணி வீதத்தை நிலையான மட்டத்தில் பேணிவரும் பொருட்டு மத்திய வங்கி சந்தையிலிருந்து வெளிநாட்டுச் செலாவணியைக் கொள்வனவு செய்யும் என்பதோடு, இச்செயற்பாடு சந்தையில் உள்நாட்டு நாணயத்தின் அளவு (திரவத்தன்மை) அதிகரிப்பதற்குக் &TJ600ILDITu 160)LDuÖ.
அரசிறைக்கும் அரச செலவுக்கும் இடையிலான இடைவெளி எப்போதும் மாற்றத்திற்கு உள்ளாகும். வருமானத்தை விட செலவு அதிகரிப்பதன் மூலம் உருவாகின்ற வரவு செலவுப் பற்றாக்குறையை நிதியிடும் பொருட்டு அரசாங்கம் கடன் பெறுவதற்கு அல்லது அரச சொத்துக்களை விற்பதற்கு (உதாரணமாக தனியார்மயமாக்கல்) நேரிடுகின்றது. கடன் பெறுதல் உள்நாட்டு மூலங்களைப் போன்றே வெளிநாட்டு மூலங்களிலிருந்தும் அல்லது அந்த இரண்டு மூலங்களிலிருந்தும் நடைபெறலாம். உள்நாட்டு மூலங்களிலிருந்து கடன் பெறுதல் அநேகமாக அரச பிணையங்களை விற்பனை செய்வதன் மூலம் நடைபெறுமென்பதோடு, தனியார் துறை கடன் மூலங்களில் பற்றாக்குறை உருவாகும்போது அரசாங்கம் மத்திய வங்கியிலிருந்து கடன் பெறுவதற்கு முற்படும்.
இச் செயற்பாட்டை கடன் நிதியிடல் எனக் குறிப்பிடுவதோடு அதைத் தொடர்ந்து புதிதாக வெளியிடப்பட்ட
12

நாணயம் சந்தையில் பிரவேசிக்கும். எவ்வாறாயினும், சுயாதீனமான மத்திய வங்கி எண்ணக்கரு பிரபல்யமடைகின்ற போக்கு அதிகரித்ததைத் தொடர்ந்து கடன் நிதியிடல் செயற்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது. உதாரணமாக, மாஸ்ட்ரிச் உடன்படிக்கை (Maastricht Treaty) கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளுக்குரிய மத்திய வங்கிகள் அரசாங்கத்துக்கு கடன் வழங்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.
ஏதேனுமொரு வர்த்தக வங்கி உள்ளக நிதி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள போது அவ்வங்கியின் குறுகிய கால திரவத்தன்மைக்கான கேள்வி அதிகரிக்கலாம். அவ்வாறான நெருக்கடியான இடர்நேர்வுக்கு உள்ளாகியுள்ள வர்த்தக வங்கிகளால், வங்கிகளுக்கிடையிலான அழைப்புப் பணச் சந்தையின் ஊடாக திரவத் தன்மைத் தேவையை நிறைவு செய்துகொள்ளல் சிரமமாயிருக்கும். திரவத்தன்மை மிகை நிலவிய போதிலும் ஏனைய வர்த்தக வங்கிகள் கடன் வழங்குவதற்கு தயக்கம் காட்டுவதே இதற்கான காரணமாகும். ஆயினும் “இறுதிக் கொடுப்போன்’ என்ற வகையில் இத்தகைய வங்கிகளின் திரவத்தன்மைத் தேவையை நிறைவு செய்வதற்கு மத்திய வங்கிக்கு நேரிடுகின்றது. அவ்வாறான கடன் வழங்கல் மிகைத் திரவத்தன்மையொன்றை உருவாக்குவதற்குக் (BITU600TLDFTul60)LDuib.
மிகைத் திரவத்தன்மையின் தாக்கம்
மிகைத் திரவத்தன்மை நிலவுதல் மத்திய வங்கியின் ஐந்தொகையில் சொத்துக்கள் அதிகரிப்பதற்குக் காரணமாயமைகின்ற போதிலும் அது கொடுப்பனவு முறைமையின் முறிவுக்குக் காரணமாக அமையாது. ஆயினும், மிகைத் திரவத்தன்மை நிதிக் கொள்கை அனுப்பல் பொறிமுறைக்கு இடையூறு விளைவிக்கலாம். பண அனுப்பல் பிரதானமான மூன்று வழிமுறைகளின் ஊடாக நடைபெறும் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
(1) வட்டி வீதத்தின் ஊடாக (2) செலாவணி வீதத்தின் ஊடாக (3) கடன் வழங்கல் ஊடாக
(1) வட்டி வீதத்திலான தாக்கம்
மத்திய வங்கி நாணயக் கொள்கையைச் சிறந்த முறையில் செயற்படுத்துவதாயிருப்பின் அது வங்கிகளுக் கிடையிலான வட்டி வீதங்களின் மூலம் அனேகமாக பிரதிபலிக்கும். மிகைத் திரவத்தன்மை நிலவுகின்றபோது ஆரம்ப கட்டத்தில் அனுப்பல் பொறிமுறை வீழ்ச்சியடைவதற்கு அல்லது பலவீனமடைவதற்கு ஏதுவாயமையலாம். அதாவது, இதன் உடனடித் தாக்கத்தின் காரணமாக குறுகியகால வட்டி வீதம் வீழ்ச்சியடையும். இது வர்த்தக வங்கிகளுக்குப் பாதகமானதொரு நிலைமையாகும். இதன் காரணமாக விளைவுத்திறனை அதிகரிக்கச் செய்து வருமான நட்டத்தை ஈடுசெய்யும் நோக்கத்துடன் வர்த்தக வங்கிகள் ஆபத்தான கடன் வழங்கல்களுக்கும் முற்படலாம்.
(2) செலாவணி வீதத்திலான தாக்கம்
அநேகமாக உள்நாட்டு நாணயம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள சந்தர்ப்பத்திலேயே மிகைத் திரவத்தன்மை செலாவணி வீதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிநாட்டு நாணயங்களைக் கைவசம் வைத்திருப்பதற்கு பொதுமக்கள்
2010 ஜன / பெப் - குறிப்பேடு

Page 13
அதிக விருப்பினைத் தெரிவிப்பார்களாயின் அவ்வாறான சந்தர்ப்பத்தில் இந் நிலைமை மேலும் பாரதூரமானதாக அமையலாம். இதன் மூலம் உள்நாட்டு நாணயம் மேலும் அழுத்தத்துக்குள்ளாகி பணவீக்கம் அதிகரித்தல் துரிதமடையும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மிகைத் திரவத்தன்மை தொடர்ந்து இருக்குமாயின் மத்திய வங்கி தேறிய கடனாளியாக மாறுமென்பதோடு, அதன் குறுகிய காலக் கடன்களை மீள அறவிடுதல் பிரச்சினைக்கு உள்ளாகும். மத்திய வங்கி வட்டி வீதத்தை அதிகரிக்காதிருப்பின் பங்கேற்பு நிறுவனங்கள் நிதிச் சந்தைத் தொழிற்பாடுகளில் பங்கேற்பதற்குத் தயக்கம் காட்டும். மிகைத் திரவத்தன்மை வர்த்தக வங்கிகளில் ஒரு சிறு பகுதிக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாக உள்ளபோது மேலதிகப் பிரச்சினைகள் உருவாகலாம். இந்நிலைமையை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய வங்கி தலையீடு செய்தல் எவ்வளவு தூரத்துக்கு வெற்றியளிக்கும் என்பதும், பணச் சந்தை எவ்வளவு தூரத்துக்கு அபிவிருத்தியடைந்துள்ளது என்பதுமே முக்கியமானதாயிருக்கும்.
இதைத் தவிர மிகைத் திரவத்தன்மை நிலவுதல் மத்திய வங்கியின் செலவினம் அதிகரிப்பதற்குக் காரணமாயமையும் என்பதோடு, திரவத்தன்மைப் பற்றாக்குறை உள்ளபோது அது மத்திய வங்கிக்கு இலாபகரமானதாக அமையும். மத்திய வங்கியின் வருடாந்த இலாபம் அரசாங்கத்துக்கு வரவு வைக்கப்படுவதால் மிகைத் திரவத்தன்மையின் காரணமாக உருவாகின்ற நட்டம் அரசாங்கம் அடைகின்ற நட்டமாக இருக்கும்.
திரவத்தன்மையை எதிர்வுகூறல்
ஒரு நாட்டின் வங்கி முறைமையினுள் நிலவுகின்ற திரவத்தன்மையின் இயல்பை (மிகை/பற்றாக்குறை) எதிர்வுகூறலின் மூலம் தீர்மானிக்கலாம். மத்திய வங்கிக்கு உரித்தான ஒரு பொறுப்பாகவுள்ள உள்நாட்டு நாணயத்தின் உறுதித் தன்மையைப் பாதுகாப்பதற்கு சந்தைத் திரவத்தன்மை தொடர்பில் நித்தமும் பரிசீலனை செய்தல் அவசியமாகும். சந்தைத் திரவத்தன்மை தேவையான அளவைத் தாண்டிச் செல்லல் அல்லது குறைவடைதல் ஆகிய இரண்டில் எதுவாயிருப்பினும் நாணயக் கொள்கையை பேணிவருதல் சிரமத்துக்குள்ளாகும். நிதியியல் முறைமையினுள் திரவத் தன்மைப் பற்றாக்குறை நிலவுகின்ற போது போதியளவு திரவத்தன்மையை வழங்குவதற்கும், மிகை நிலவுமெனில் மிகையை உள்ளிர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மத்திய வங்கியின் பொறுப்பாகும். இதன் பொருட்டு மத்திய வங்கி பிரதானமாக நாணயக் கொள்கைக் கருவிகளைப் பயன்படுத்தும். அதிகளவில் பயன்படுத்தப்படும் கருவியாக, திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் (Open Market Operations) விளங்குகின்றன. மேற்படி தொழிற்பாடுகளின் வினைத்திறன் எதிர்வுகூறலின் துல்லியத் தன்மையிலேயே தங்கியுள்ளது.
மிகைத் திரவத்தன்மை முகாமைத்துவத்தின் பொருட்டு பயன்படுத்தக்கூடிய மரபு ரீதியிலான கருவிகள்
1. திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் -
(i) அரச பிணையங்களைப் பயன்படுத்துவதன் முலம்
மத்திய வங்கி நாணயக் கொள்கைகளை
நடைமுறைப்படுத்துகின்றபோது அநேகமாகப் பயன்படுத்துகின்ற
2010 ஜன / பெப் - குறிப்பேடு

கருவியாக 'திறந்த சந்தைத் தொழிற்பாடுகள்’ விளங்குகின்றன. ஏல விற்பனை முறையில் அரச பிணையங்களை விற்பனை செய்தல் அல்லது கொள்வனவு செய்வதன் ஊடாக தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக திரவத்தன்மையை நீக்குவதன் மூலம் அல்லது திரவத்தன்மையை வழங்குவதன் மூலம் நாணயக் கொள்கை இலக்குகளை அடையப்பெறுதல் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் மூலம் நடைபெறுகின்றது. அத்துடன் குறுகிய கால வட்டி வீதத்தின் உறுதித் தன்மையைப் பாதுகாத்துப் பேணிவருவதிலும் கவனம் செலுத்தப்படும். மத்திய வங்கி முதனிலைச் சந்தையிலிருந்து நேரடியாகவே 9J8 பிணையங்களைக் கொள்வனவு செய்கின்ற போது அப் பெறுமதிக்குச் சமமான விதத்தில் திரவத்தன்மை அதிகரிக்கும். மத்திய வங்கிக்கு உரித்தாயுள்ள அரச பிணையங்களை முற்றிலுமாக (Outright) விற்பனை செய்கின்ற போது அதற்குச் சமமான திரவத்தன்மை உள்ளிர்க்கப்படும். ஒரு நாள் (Overnight) அல்லது தவணை (Term) கொடுக்கல் வாங்கல்களின் போது கொடுக்கல் வாங்கலின் இயல்பைப் பொறுத்து (விற்பனை/நேர்மாற்று மீள்கொள்வனவு) திரவத்தன்மை குறைவடைதல் அல்லது அதிகரித்தல் நடைபெறும். இதில் கொடுக்கல் வாங்கல் மீள்கொள்வனவாக (Repurchase) இருப்பின் மத்திய வங்கி பங்கேற்பு நிறுவனங்களிலிருந்து அரச பிணையங்களைக் கொள்வனவு செய்யும். அப்போது கொள்வனவுப் பெறுமதிக்குச் சமமான விதத்தில் திரவத்தன்மை அதிகரிக்கும். நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல் வாங்கலின் போது இதற்கு எதிர்மாறான செயற்பாடு நடைபெறும். இவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் இரண்டாந்தரச் சந்தையிலேயே நடைபெறும். பொதுவாக சந்தைத் திரவத்தன்மை பற்றாக்குறையாக உள்ளபோது LDL (6(3D மீள்கொள்வனவு நடைபெறும். சந்தையில் திரவத்தன்மை மிகை உள்ளபோது ஏல விற்பனை முறையில் நேர்மாற்று மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கலை மேற்கொள்வதன் மூலம் மத்திய வங்கி மேலதிகத் திரவத்தன்மையை தற்காலிகமாக உள்ளிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும். ஒரு நாள் கொடுக்கல் வாங்கலின் போது கொடுக்கல் வாங்கலுக்குப் பிந்திய தினத்திலும், தவணைக் கொடுக்கல் வாங்கல்களின்போது முதிர்ச்சியின் பின்னரும் உள்ளிக்கப்பட்ட திரவத்தன்மை மீண்டும் சந்தைக்கு வரும்.
இதைத் தவிர, ஏதேனுமொரு பங்கேற்பு நிறுவனத்தினால் ஏதேனுமொரு காரணத்தின் அடிப்படையில் மேலே குறிப்பிட்டுள்ள ஏல விற்பனைகளில் வெற்றிகரமாகப் பங்கேற்க முடியாமற் போகின்ற சந்தர்ப்பங்களில் அந்நிறுவனத்துக்கு உரித்தாயுள்ள மிகைத் திரவத்தன்மையை மத்திய வங்கியில் தடுத்து வைக்கின்ற நிலையியல் வசதி” (Standing Facility) வழங்கப்பட்டுள்ளது. நிதி முறைமையின் தேவையின் பிரகாரம் நிலையான வசதியை ஒரு நாள் அல்லது தவணை ரீதியில் பெற முடியுமாயுள்ளதோடு இதற்கு மீள்கொள்வனவு வட்டி வீதம் கிடைக்கும். எவ்வாறாயினும் மிகைத் திரவத்தன்மை தொடர்ந்து நிலவுகின்றபோது அல்லது வளர்ச்சியடைந்து வரும் கால கட்டத்தில் மத்திய வங்கியிடமுள்ள அரச பிணையங்களின் தொகை குறைவடைவதற்கு அநேகமாக வாய்ப்புள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளக் கூடிய வழிமுறைகள் (ii) மற்றும் (i) இன் கீழ் கலந்துரையாடப்படுகின்றது.
13

Page 14
(i) மத்திய வங்கிப் பிணையங்களை
வழங்குவதன் முலம்
மத்திய வங்கியின் வசமுள்ள அரச பிணையங்களின் தொகை முடிவடைந்ததும் திரவத்தன்மையை முகாமைத்துவம் செய்யும் பொருட்டு மத்திய வங்கி தனது பிணையங்களை வழங்க முற்படும். மிகைத் திரவத்தன்மையை உள்ளிர்க்கின்ற செயற்பாட்டின் போது மத்திய வங்கி பிணையங்களைப் பயன்படுத்துகின்ற வழிமுறை அரச பிணையங்களைப் பயன்படுத் துகின்ற முறைக்கு சமமானதாக இருக்கும். ஆயினும், மேற்படி பிணையங்களின் பயன்பாட்டில் நிலவுகின்ற வரையறுக்கப்பட்ட தன்மையின் காரணமாக வர்த்தக வங்கிகள் இதன் பொருட்டு காட்டுகின்ற விருப்பம் அரச பிணையங்களை விடக் குறைந்த மட்டத்தில் உள்ளதென்பதைக் காணக்கூடியதாயுள்ளது.
(i) வெளிநாட்டுச் செலாவணிப் பரிமாற்ற (FX
SWAPS) கொடுக்கல் வாங்கல்களின் முலம்
வெளிநாட்டுச் செலாவணிப் பரிமாற்றக் கொடுக்கல் வாங்கல்களின் போது மிகைத் திரவத்தன்மையைக் கொள்வனவு செய்யும் பொருட்டு வெளிநாட்டுச் செலாவணி பரிமாற்றிக்கொள்ளப்படும். போதியளவு வெளிநாட்டுச் செலாவணி உள்ளபோது இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியுமாயிருக்கும். இவ்வாறான முறையில் திரவத்தன்மை தற்காலிகமாகவே உள்ளீர்க்கப்படும். கொடுக்கல் வாங்கல் முதிர்ச்சியடைந்ததன் பின்னர் மீண்டும் வெளிநாட்டுச் செலாவணி மத்திய வங்கிக்கு வந்துசேரும் என்பதோடு உள்ளிர்க்கப்பட்ட திரவத்தன்மை மீண்டும் வங்கி முறையில் சேர்ந்துகொள்ளும்.
2. நியதிச்சட்ட ஒதுக்கு வீதம்
(Statutory Reserve Ratio)
(3LDG36) கலந்துரையாடப்பட்ட 90. Tuu(p60D3 திரவத்தன்மையை முகாமைத்துவம் செய்கின்ற சந்தைத் தீர்வுகளாயிருக்கும் என்பதோடு சந்தையல்லாத தீர்வுகளையும் பிரயோகிக்கலாம். நியதிச்சட்ட ஒதுக்கு வீதத்தினைப் பயன்படுத்துதல் அவ்வாறான ஒரு முறையாகும். நியதிச்சட்ட ஒதுக்கு வீதத்தினை குறைத்தல்/அதிகரித்தல் மூலம் பணச் சந்தையிலுள்ள திரவத்தன்மையை அதிகரிக்க/குறைக்க முடியுமாயுள்ளது. ஆயினும் நியதிச்சட்ட ஒதுக்கு வீதத்தை அதிகரித்தல் வர்த்தக வங்கிகளின் செலவினம் அதிகரிப்பதற்கும், சந்தைத் திரிபுநிலை உருவாகுவதற்கும் காரணமாயமையலாம் என்பதால் அது அவ்வளவு பிரபல்யம் வாய்ந்ததொரு முறை அல்ல. அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்கள் மிகக் குறைந்த அல்லது பூச்சிய நியதிச்சட்ட ஒதுக்கு வீதங்களைப் பேணிவருகின்றன.
இதைத் தவிர மூலதனப் பாய்ச்சல்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் அரச நிதிக் கொள்கைகளின் மதிநுட்பம் ஆகியன மிகைத் திரவத்தன்மையை உள்ளிர்ப்பதற்குப் பிரயோகிக்க முடியுமாயுள்ள சந்தையல்லாத ஏனைய உபாயமுறைகளாகும். நிதியியல் துறையின் நட்டத்தைக் குறைத்தலானது
1 நாணயக் கொள்கை நோக்கத்தின் பொருட்டு வர்த்தக வங்கிகள் தமது பொறுப்புக்களிலிருந்து குறித்ததொரு வீதத்திற்குச் சமமான வைப்பினை மத்திய வங்கியில் வைப்பிலிடுதல் வேண்டும். அநேகமாக மேற்படி ஒதுக்குகளுக்கு வட்டி கிடைக்காது. தற்போது இலங்கையில் நியதிச்சட்ட ஒதுக்கு விதம் 7 சதவீதத்திற்கு &FIDLDIT(gbLib.
14

மத்திய வங்கியின் ‘இறுதிக் கடன் வழங்குனர்’ என்றவாறு செயற்படுவதன் தேவையை மட்டுப்படுத்துவதாயுள்ளது. மூலதனச் சந்தை அபிவிருத்தியைத் துரிதப்படுத்தல்/ஊக்குவி த்தல் ஊடாகவும் மிகைத் திரவத்தன்மையைக் குறைக்கலாம்.
திரவத்தன்மையைக் குறைப்பதற்கு மேற்கொள்ள முடியுமாயுள்ள மரபு ரீதியிலல்லாத வழிமுறைகள்/ மாதிரிகள்
1.
பெற்றோலிய ஏற்றுமதியின் காரணமாக (நடைமுறைக் கணக்குக்கு பெருமளவில் வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சப்பட்ட) வளைகுடா (கல்ப்) பிராந்திய நாடுகளிலும் அதேபோன்று அசர்பைஜான், நோர்வே, ரஷ்யா, டிறிணிடாற் ஆகிய நாடுகளிலும் வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டுதல் அதிகரித்தது. இதன் காரணமாக அந்நாடுகள் நிலைபேறாக்கல் நிதியமொன்றை தாபித்துள்ளன. மிகைத் திரவத்தன்மையை உள்ளிர்ப்பதற்கு இந்நிதியம் நேரடியாகப் பங்களிப்புச் செய்யாத போதிலும் இத் தொழிற்பாடுகளை இலகுபடுத்த உதவியாயமையும். மிகைத் திரவத்தன்மையின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற பிரதானமான காரணி அரச வெளிநாட்டுக் கடன் பெறுதலாயிருப்பின் அவ்வாறான கடன் பெறுதலை மட்டுப்படுத்தல் பொருத்தமானதாயிருக்கும். வெளிநாட்டுக் கடன் பெறுதலை விட உள்நாட்டுக் கடன் பெறுதலின் செலவினம் அதிகமாயிருப்பினும் வெளிநாட்டுச் செலாவணி வறிதாக்கலின் (Sterilisation) பொருட்டு ஏற்கவேண்டி நேரிடுகின்ற செலவினம் அதிகமாயுள்ளது. ஆதலால் உள்நாட்டுக் கடன் தொடர்பில் கவனம் செலுத்த முடியுமாயிருப்பின் அது திரவத்தன்மை முகாமைத்து வத்திற்குச் சாதகமானதாக அமையும்.
அநேகமான நாடுகளில் மத்திய வங்கிகள் குறிப்பிடத் தக்களவு வெளிநாட்டுச் செலாவணிச் சொத்துக்களை வைத்திருப்பினும் செலாவணி வீதத்தில் ஏற்படுகின்ற பாதகமான தாக்கத்தைக் கவனத்திற் கொண்டு அத்தகைய சொத்துக்களை விற்பனை செய்வதற்குக் கருதுவதில்லை. ஆயினும், போதியளவு வெளிநாட்டுச் செலாவணிச் சொத்துக்கள் உள்ளபோது வெளிநாட்டுச் செலாவணிப் பரிமாற்ற உடன்படிக்கைகளுக்கு உட்படுவதன் மூலம் தற்காலிகமாக மிகைத் திரவத்தன்மையை உள்ளிர்க்க முடியுமாயிருக்கும். இந்தியா, பிலிப்பைன் ஆகிய நாடுகள் இந்த முறையை பயன்படுத்துகின்றன.
வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்கினைக் கட்டியெழுப்பும் செயற்பாடு அரசாங்கத்திற்கு அனுகூலமானதாகும். இதனால் இந்திய அரசாங்கம் மத்திய வங்கிக்கும் அரசாங்கத்திற்கும் இடையே கட்டியெழுப்பியுள்ள இணைப்பாக்கத்தின் ஊடாக திரவத்தன்மையை உள்ளிர்ப்பதற்குத் தேவையான பிணையங்களை நிதி அமைச்சின் மூலம் வழங்குகின்ற முறையொன்றை ஆரம்பித்துள்ளது. மேற்படி முறை (Market Stabilisation Scheme) Golubilaby LDITS, Gsubu (6 வருகின்றது. மேற்படி முறையின் பிரகாரம், பிணையங்களை வழங்கும் அளவு பற்றிய மட்டுப்பாடுகளை விதித்தல் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவதை ஆரம்பத்தில் மேற்கொள்ள முடியுமாயுள்ளது. வளைகுடாப் பிராந்தியத்தின் ஒருசில நாடுகளும் மேற்படி முறையைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளன. இதில்
2010 ஜன / பெப் - குறிப்பேடு

Page 15
நிதி அமைச்சுக்கு தேறிய செலவினமொன்றை ஏற்க நேரிடாது என்பதோடு, ஒரு தரப்பினர் மட்டுமே சந்தையில் பிணையங்களை வழங்கும். எவ்வாறாயினும், சில சந்தர்ப்பங்களில் மத்திய வங்கிக்கு அரசாங்கத்துடன் சிறந்த இணைப்பினை மேற்கொள்வதற்கு சிரமமாக அமையலாம். அரச கடன் வட்டி வீதம் சந்தை வட்டி வீதத்தை விட குறைவாயிருத்தல் சிறந்த நிதியியல் முகாமைத்துவத்திற்கு இடையூறாக அமையுமென்பதோடு, அது மத்திய வங்கியின் சுயாதீனத்திற்கும் இடையூறு விளைவிக்கும். அரச கடன் பாதுகாப்பு மற்றும் வட்டியை சந்தை வட்டி வீதத்திற்கு அண்மித்ததாக வைத்திருப்பதன் மூலம் அரச கடனின் காரணமாக உருவாகின்ற மிகைத் திரவத்தன்மையை இலகுவாக உள்ளிர்ப்பதற்கு உதவியாயிருக்கும். மேலும், கடனை மத்திய வங்கியின் ஐந்தொகையில் பிரதானமான இடத்தில் இடம்பெறச் செய்வதை தவிர்த்தல் மிகைத் திரவத்தன்மை உருவாவதைத் தவிர்க்கும். 5. அரச வைப்புகளை வர்த்தக வங்கிகளிலிருந்து மத்திய வங்கிக்கு மாற்றுவதன் மூலமும் திரவத்தன்மையை உள்ளிர்ப்பதற்கு முடியும். இலங்கையின் அண்மைக் கால போக்குகள்
இலங்கையின் பணச் சந்தையில் திரவத்தன்மை அதிகரிப்பதற்கு பின்வரும் காரணிகள் ஏதுவாயமைகின்றன. 1. மத்திய வங்கி திறைசேரி உண்டியல்களை (முதனிலைச்
சந்தையிலிருந்து) கொள்வனவு செய்தல் 2. மத்திய வங்கி வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து வெளிநாட்டுச் செலாவணியைக் கொள்வனவு செய்தல் 3. அரசாங்கம் பெறுகின்ற வெளிநாட்டுக் கடன்களை மத்திய
வங்கிக்கு விற்பனை செய்தல் 4. மத்திய வங்கியின் இலாபத்தை அரசாங்கத்துக்கு
வழங்குதல் 5. மத்திய வங்கி அரசாங்கத்திற்கு வழங்குகின்ற தற்காலிக
முற்பண எல்லையை அதிகரித்தல்
பின்வரும் காரணிகளின் தாக்கத்தினால் சந்தைத் திரவத்தன்மைப் பற்றாக்குறை உருவாகலாம். 1. மத்திய வங்கியின் வசமுள்ள திறைசேரி உண்டியல்களை
இரண்டாந்தரச் சந்தையில் விற்பனை செய்தல் 2. மத்திய வங்கியின் வசமுள்ள திறைசேரி உண்டியல்கள்
முதிர்ச்சியடைதல் 3. மத்திய வங்கி உள்நாட்டுச் சந்தைக்கு வெளிநாட்டுச்
செலாவணியை விற்பனை செய்தல் 4. வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்தும் பொருட்டு மத்திய வங்கியிலிருந்து வெளிநாட்டுச் செலாவணியைக் கொள்வனவு செய்தல் 5. மத்திய வங்கியிலிருந்து பணம் மீளப் பெறுதல்.
இலங்கையின் அரச பிணையங்களில் முதலீடு செய்யப்பட்ட அநேகமான வெளிநாட்டவர்கள் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தமது முதலீடுகளிலிருந்து அதிகளவு பகுதியை மீளப் பெற்றமை, 2008 செப்தெம்பர் மாதத்திலிருந்து திரவத்தன்மைப் பற்றாக்குறை உருவாவதற்குக்
2010 ஜன / பெப் - குறிப்பேடு

காரணமாக அமைந்தது. மேற்படி நிலைமை 2008 ஆம் ஆண்டின் எஞ்சியிருந்த ஒருசில மாதங்களிலும் 2009 ஆம் ஆண்டின் முதலாவது பகுதியிலும் தொடர்ந்து நிலவியது. சந்தையில் போதியளவு திரவத்தன்மையைப் பேணிவரும் பொருட்டு இலங்கை மத்திய வங்கி ஒருசில நாணயக் கொள்கை வழிமுறைகளை அமுல்படுத்தியது. இவற்றில், நேர்மாற்று மீள்கொள்வனவு மீது விதிக்கப்பட்டிருந்த அபராத வட்டி வீதம் 2009 சனவரி மாதத்தில் 19 சதவீதத்திலிருந்து படிப்படியாகக் குறைக்கப்பட்டு இறுதியில் முழுமையாக நீக்கப்பட்டமை மற்றும் கொள்கை வட்டி வீதம் காலத்திற்குக் காலம் குறைக்கப்பட்டமை, 2008 ஒக்றோபர் 01 ஆம் திகதியிலிருந்து 2009 பெப்ருவரி 27 வரையிலான காலத்தினுள் நியதிச்சட்ட ஒதுக்கு வீதம் 10 சதவீதத்திலிருந்து 7 சதவீதம் வரை மூன்று கட்டங்களில் குறைக்கப்பட்டமை மற்றும் நாணயக் கடிதங்களை ஆரம்பிக்கின்ற போது மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமல்லாத மேலும் பல பண்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆகக் குறைந்தளவு வைப்புத் தேவை நீக்கப்பட்டமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஒரு வர்த்தக வங்கியில் உருவாகிய நெருக்கடியில் தலையீடு செய்வதற்கும் நேரிட்டது. எவ்வாறாயினும், 2009 மே மாதம் நடுப்பகுதியாகின்றபோது நாட்டின் உள்ளகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டமையைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே இலங்கையின் பொருளாதாரம் பற்றிய நம்பிக்கை அதிகித்தது. இதன் மூலம் இலங்கை அரச பிணையங்களிலான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமை, அப்போதிருந்த குழப்ப நிலை படிப்படியாக மாற்றமடைந்து திரவத்தன்மை மிகை வளர்ச்சியடைவதற்குக் காரணமாயமைந்தது. தனியார் அனுப்பீடுகள் படிப்படியாக அதிகரிக்கின்ற போக்கு, சுற்றுலாத் துறை சாதகமான நிலைமைக்கு மீண்டுவருதல், இறைமை முறிகள் வழங்கப்பட்டமை, ஏற்றுமதி வருவாய்கள் சந்தைக்கு வருதல், ஏற்றுமதிச் செலவுகள் குறைவடைந்தமை, ஆகிய காரணிகள் வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சல் அதிகரிப்பதற்கு உதவியாயமைந்தன. இலங்கை மத்திய வங்கி சந்தையிலிருந்து வெளிநாட்டுச் செலாவணியைக் கொள்வனவு செய்தமை திரவத்தன்மை அதிகரிப்பதற்கு மேலும் காரணமாயமைந்தது. 2009 திசெம்பர் மாதத்தில் மிகைத் திரவத்தன்மை உச்ச மட்டத்தை அடைந்தது. இதற்கு முன்னர் அனுபவித்திராத மிகப் பாரிய மிகைத் திரவத்தன்மையை உள்ளிர்க்கும் பொருட்டு வழக்கமான முறைகள் போதியதாயிருக்கவில்லை. இலங்கை மத்திய வங்கிக்கு உரித்தாயிருந்த அரச பிணையங்கள் தொகை முடிவடைந்தமையினால் மத்திய வங்கிப் பிணையங்களை வழங்குவதற்கும் நேரிட்டது. மத்திய வங்கிப் பிணையங்களைப் பயன்படுத்துவதற்கு வர்த்தக வங்கிகள் அவ்வளவு விருப்பம் தெரிவிக்காமையினால் மிகைத் திரவத்தன்மையை தற்காலிகமாக உள்ளீர்க்கக்கூடிய கருவியாகவுள்ள வெளிநாட்டுச் செலாவணிப் பரிமாற்ற கொடுக்கல் வாங்கல்கள் (Foreign Exchange Swaps) முறை இலங்கை வங்கி முறைக்குப் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. மேற்படி வழிமுறைகள் அனைத்தையும் உபாயமுறையில் செயற்படுத்தி குறுகிய கால வட்டி வீதத்தை உறுதியாகப் பேணிவருவதற்கு மத்திய வங்கியினால் இயலுமாயிருந்தது. O
15

Page 16
நிதியியல் இடையீட்டி
நிலுTகா
உதவிப் ட
கொள்கை மீளாய்வு, கண்
அறிமுகம்
பொருளாதாரத்தில் நிதிச் சந்தைக்கு மிக முக்கியமான தொரு இடம் கிடைக்கின்றது. ஏனைய சந்தைகளைப் போன்றே நிதிச் சந்தையும் வாடிக்கையாளர்களுக்கிடையே பரிமாற்றத்துக்கான வசதிகளை வழங்குகின்றது. இச்சந்தையில் நிதியியல் மூலப்பொருள் மற்றும் அவற்றைத் தழுவியதான உற்பத்திகளே கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றன. குடும்ப அலகுகளால் ஈட்டப்படுபவை செலவிடப்பட்ட பின்னர் சேமிப்பு இருக்குமாயின் அது அந்தக் குடும்ப அலகுக்குரிய மிகை நிதி வளமாக இருக்கும். இந்த சேமிப்பை நிதிச் சந்தையில் விற்பனை செய்து இலாபத்தை ஈட்டுவதற்கு அக் குடும்ப அலகிற்கு இயலுமாயிருக்கும். இவ்வாறு மிகை நிதி வளங்களை உடையவர்கள் அவற்றை விற்பனை செய்யும் பொருட்டு நிதிச் சந்தைக்கு எடுத்துவருவார்கள். மறுபுறம் அநேகமான குடும்ப அலகுகளும் தொழில்துறை நிறுவனங்களும் தமது தேவைகளை நிதியிடுவதற்கான போதிய வளங்கள் பற்றாக்குறைக்கு உள்ளாகியிருப்பார்கள். அவர்கள் நிதிச் சந்தைக்கு வந்து அவற்றைக் கொள்வனவு செய்வார்கள். இந்தக் கொடுக்கல் வாங்கல் நேரடியாகவும் நேரடியல்லாத விதத்திலும் நடைபெறும்.
நேரடி நிதிக் கொடுக்கல் வாங்கலின் போது மிகை நிதி வளத்தைக் கொண்டுள்ள ஒருவர் இடையீட்டாளரின் உதவியின்றி அவ்வாறான வளங்கள் தேவையாயுள்ள, ஆயினும் அவை போதியதாயில்லாத ஒருவருக்கு அவற்றை விற்பனை செய்வார். எனினும் நேரடியல்லாத கொடுக்கல் வாங்கலின் போது இடையீட்டாளர் ஒருவரின் சேவை இதற்குக் கிடைக்கும். நிதியியல் இடையீடு என்பது இவ்வாறு இடையீட்டாளர் ஒருவரின் உதவியோடு மேற்கொள்ளப்படுகின்ற நிதியியல் கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய செயற்பாடாகும். இக்கட்டுரையின் மூலம் அத்தகைய நிதியியல் இடையீடு தொடர்பாக சுருக்கமாக ஆராயப்படுகின்றது.
மிகை அலகு மற்றும் பற்றாக்குறை அலகு
ஒரு பொருள்தாரத்தினுள் நிலவுகின்ற செயற்பாட்டு அலகுகள் குடும்பம், தொழில்துறை மற்றும் அரசு ஆகிய உள்நாட்டுத் துறைகளையும் வெளிநாட்டுத் துறையையும் உள்ளடக்கியிருக்கும். இந்த நான்கு துறைகளினதும் பொதுச் செயற்பாட்டின் மூலம் பொருளாதாரம் முன்னோக்கி வழிப்படுத்தப்படும்.
நிதிச் சந்தையிலும் இத்தரப்புகள் செயலூக்கம்மிக்க விதத்தில் தொடர்பு கொண்டிருக்கும். அவர்கள் வசமுள்ள மற்றும் அவர்களுக்குத் தேவையாயுள்ள நிதி வளத்தின்
16

ன் கடமைப் பொறுப்பு
பரணகம
1ணிப்பாளர்
காணிப்புத் திணைக்களம்
இயல்பைப் பொறுத்து இதனை இரண்டு விதத்தில் அடையாளம்காணலாம். இதற்கிணங்க மேற்படி அலகுகளை:
-மிகை அலகுகள்
-பற்றாக்குறை அலகுகள்
எனத் தெளிவாக பிரித்துக் காட்ட முடியும்.
மிகை அலகுகள்: தமக்குக் கிடைக்கின்ற வருமானத்தை விட குறைவாகச் செலவு செய்கின்ற அலகுகளை மிகைப் பிரிவு (கடன் கொடுப்போர்) உள்ளடக்கியிருக்கும். தமது தேவையைத் தாண்டிய வகையில் மிகையை ஈட்டுகின்ற மேற்படி அலகுகளால், அத்தகைய மிகையை 69(5 சொத்தாக, பணமாக வைத்திருக்கலாம். அல்லது தமது தொழில் முயற்சிகளில் முதலீடு செய்ய, இன்றேல் முதலீட்டு வாய்ப்புகள் உள்ள ஆயினும் அதன் பொருட்டு நிதி வளங்கள் பற்றாக்குறையாக உள்ள பிரிவுகளால் உருவாக்கப்படுகின்ற முதலீடுகளுக்கான கேள்வியை நிறைவு செய்ய ஈடுபடுத்தலாம். தமது மிகையைப் பாதுகாத்தல், தமது சொத்துக்களுக்கான போதியளவு திரவத்தன்மையைப் பேணிவருதல் மற்றும் தமது சொத்துக்கள் சார்ப்பாக எதிர்பார்க்கப்படும் வருமானத்தைப் பெறுதல் ஆகியவற்றுக்காக மிகைப் பிரிவு செயற்படும்.
பற்றாக்குறை அலகுகள்: தமக்குக் கிடைக்கின்ற வருமானத்தை விட செலவு அதிகமாகவுள்ள அலகுளை பற்றாக்குறை அலகு (கடன்படுவோர்) உள்ளடக்கியிருக்கும் என்பதோடு, தமது பற்றாக்குறைத் தேவைகளைத் தீர்க்கும் பொருட்டும் அதற்குத் தேவையான கடன்களைப் பெறுவதற்கும் பற்றாக்குறைப் பிரிவு செயற்படும். மேற்படி அலகுகள் பல்வேறான பொருளாதார தொழிற்பாடுகளின் பொருட்டு தொழில்முயற்சிகளை வழங்கக்கூடிய ஆற்றலைக் கொண்டிருப்பினும் அதற்குத் தேவையான நிதியப் பற்றாக் குறைக்கு உள்ளாகியிருக்கும்.
இதன் பிரகாரம், பற்றாக்குறை மற்றும் மிகை அலகுகளுக்கிடையே நடைபெறுகின்ற நிதிய ஒப்படைப்புகளின் ஊடாக அவை தமது தேவைகளை நிறைவு செய்துகொள்ளும்.
நிதிக் கொடுக்கல் வாங்கல்கள்
இவ்வாறு ஒரு பொருளாதாரத்தினுள் உள்ள மிகை அலகுகள் தம்வசம் உள்ள மிகை நிதி வளங்களை பற்றாக்குறை
அலகுகளுக்கு விற்பனை செய்தலும், பொருளாதாரத்தில் நிதி வளங்கள் தொடர்பில் தேவைப்பாடுள்ள பற்றாக்குறை
2010 ஜன / பெப் - குறிப்பேடு

Page 17
அலகுகள் தமக்குத் தேவையான நிதி வளங்களை மிகை அலகுகளிலிருந்து பெறுவதும் நடைபெறுமென்பதோடு, இதனுாடாக இரண்டு தரப்புகளும் தமது தேவைகளை பரஸ்பரம் நிறைவு செய்துகொள்ளும்.
மிகைப் பிரிவு - பற்றாக்குறைப் பிரிவு
இவ்வரைபடத்தின் மூலம் இரண்டு பிரிவுகளினதும் தொடர்பு தெளிவாகின்றது. சேமிப்பவரிலிருந்து &ւ6ծ பெறுகின்றவருக்கும் கடன் பெறுகின்றவரிலிருந்து சேமிப்பவருக்கும் நிதியங்கள் பரிமாற்றப்படுகின்ற விதம் இதன் மூலம் எளிமையான விதத்தில் எடுத்துக்காட்டப்படுகின்றது. இந்தத் தொடர்பு நேரடி மற்றும் நேரடியல்லாத என இரண்டு விதங்களைக் கொண்டிருக்கும். நிதியியல் இடையீட்டின் கடமைப் பொறுப்பை புரிந்துகொள்வதற்கு இவற்றை நன்றாக விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
நேரடி நிதிக் கொடுக்கல் வாங்கல்: நேரடி நிதிக் கொடுக்கல் வாங்கல் என்பது கடன் கொடுப்போர் (Lenders) மற்றும் கடன்படுவோர் (Borowers) நேரடியாகவே நிதியத்தைப் பரிமாற்றிக்கொள்ளலாகும். நேரடி நிதிக் கொடுக்கல் வாங்கல் வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை நடைமுறையில் உள்ளதோடு இது பெளதீக ரீதியில் ஒருவரை ஒருவர் சந்திப்பதன் மூலம் அல்லது அவ்வாறு இல்லாத வகையில் நடைபெறும். நேரடி நிதியிடலின் மூலமான நிதியப் பரிமாற்றம் பின்வரும் வரைபடத்தின் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது.
மிகைப் பிரிவு பற்றாக்குறைப் பிரிவு
நிதியங்கள் (கடன் கொடுப்போர்) -> I (கடன்படுவோர்)
ΚΗ -- பிணையங்கள்
வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு மிகைப் பிரிவு தாம் வழங்கிய நிதியங்களுக்காக பற்றாக்குறைப் பிரிவிலிருந்து பிணையாக பிணையங்களைப் பெறும் என்பதோடு சில சந்தர்ப்பங்களில் நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும். இதன்படி நேரடி நிதியிடல் எளிமையான, இலகுவான முறையாக இருக்கும்.
நேரடியல்லாத நிதிக் கொடுக்கல் வாங்கல்
நேரடியல்லாத நிதிக் கொடுக்கல் வாங்கல் என்பது மிகை அலகு மற்றும் பற்றாக்குறை அலகுக்கு இடையே நிதியப் பரிமாற்றம் நிதியியல் இடையீட்டாளர் ஒருவரின் உதவியோடு நடைபெறுவதாகும்.
இதில் நிதியியல் இடையீட்டாளர் பொருளாதாரத்தில் மிகைப் பிரிவையும் பற்றாக்குறைப் பிரிவையும் இணைப்பவராகச் செயலாற்றுவார். இதன் பொருட்டு நிதியியல்
2010 ஜன / பெப் - குறிப்பேடு

நேரடியல்லாத நிதிக் கொடுக்கல் வாங்கல்
வைப்பு நிதியங்கள் கடன் நிதியங்கள் கடன் -) −) கடன் படுவோர் கொடுப்போர் (பற்றாக்குறை மிகை அலகு) இரண்டாந்தர முதல்நிலை 94.:h
பிணையங்கள் பிணையங்கள்
இரண்டாந்தர முதல்நிலை பிணையங்கள் 606&Tujrasai
இடையீட்டாளர் ஏனைய அநேகமான தொழில் துறைகளில் போன்று கொள்வனவையும் விற்பனையையும் மேற்கொள்வார். அதாவது மிகைப் பிரிவிலிருந்து பணத்தைக் கடனாகப் பெற்று (கொள்வனவு செய்து) பற்றாக்குறைப் பிரிவின் பணத்துக்கான கேள்வியை நிறைவு செய்வார் (விற்பனை செய்வார்). பல்வேறு நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்குகின்ற கடன் தொகையும் அவர் மேற்கொள்கின்ற பல்வேறான முதலீடுகளும் அவரது சொத்தாக இருக்கும். அவர் பல்வேறு நபர்களிடமிருந்து மற்றும் நிறுவனங்களிலிருந்து மீளச் செலுத்துகின்ற வாக்குறுதியின் அடிப்படையில் பெறுகின்ற வைப்புப் பணம் எனப்படுகின்ற கடன் தொகை பொறுப்புகளாக இருக்கும். இதன் பிரகாரம் நிதியியல் இடையீட்டாளர் நேரடியல்லாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக பொருளாதார அலகுகளின் நிதிச் சொத்துக்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து சேமிப்பவரினதும் கடன் பெறுகின்றவரினதும் தேவைகளை நிறைவு செய்வார்.
நேரடி நிதியிடலிலுள்ள பிரச்சினைகள்
நேரடி நிதியிடலானது எளிமையானதும் இலகுவானது மான பரிமாற்ற முறையாகத் தென்படினும் பொதுவாக நேரடி நிதியிடல் முறையில் அதற்கே உரியதான பல பிரச்சினைகள் உள்ளன. இதன் மூலம் நிதியங்களை ஒப்படைக்கின்ற வினைத்திறன் மட்டுப்படுத்தப்படும். நேரடி நிதியிடலின் காரணமாக எழுகின்ற அத்தகைய பிரச்சினைகள் கீழே விபரிக்கப்பட்டுள்ளன.
1. பற்றாக்குறை மற்றும் மிகை அலகுகளின் நோக்கங்களிலுள்ள முரண்பட்ட தன்மை: பற்றாக்குறை மற்றும் மிகை அலகுகளுக்கிடையே விருப்பு மற்றும் தேவை தொடர்பில் பொருந்தாத்தன்மை நிலவுகின்றது. உதாரணமாக, பற்றாக்குறைப் பிரிவு நீண்ட கால நோகத்திற்காகவும், மிகைப் பிரிவு குறுகியகால நோகத்திற்காகவும் செயற்படும்.
2. அதிக பரிமாற்ற செலவினம்: தேடல், உறுதி செய்தல், கண்காணித்தல் மற்றும் வலுவாக்கலின் பொருட்டு ஏற்க நேரிடுகின்ற செலவினம்.
3. தகவல் afLDufairgoLDuhair காரணமாக எழுகின்ற பிரச்சினைகள்: பாதகமான தெரிவு மற்றும் பண்பாட்டு உபத்திரவங்கள்
4. அளவு ரீதியிலான பொருந்தாத்தன்மை; பற்றாக்குறை
அலகுக்குத் தேவையான அளவு மற்றும் அதன் பெறுமதி
17

Page 18
சேமிப்புப் பிரிவு வழங்குகின்ற அளவுக்கும் பெறுமதிக்கும் சமமானதாக இல்லாமை,
5. கால ரீதியிலான பொருந்தாத்தன்மை: கொடுக்கல் வாங்கல் நடைபெறுவதற்கு பற்றாக்குறைப் பிரிவும் மிகைப் பிரிவும் தெரிவுசெய்கின்ற கால கட்டம் சமமாயிருக்காமை.
6. இடர்நேர்வு; பற்றாக்குறை அலகு மற்றும் சேமிப்பு அலகு
இடர்நேர்வை நேரடியாக ஏற்க நேரிடுகின்றமை.
நிதியியல் இடையீட்டின் தேவை
தனிநபர் தேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள எளிமை யானதொரு சமூகத்தில் மிகைப் பிரிவு தனது பணத்தை இடுவதன் மூலம் பற்றாக்குறைப் பிரிவின் கேள்வியை நிறைவு செய்யும். ஆயினும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தனிநபர் தேவைகள் சிக்கலாயுள்ள சமூகத்தில் மேற்படி விடயம் எளிமையானதாக இருக்காது என்பதால் நிதிச் சந்தையின் ஊடாக முழுமையான நன்மையைப் பெறுவதற்கு நிதியியல் இடையீடு விசேடமானதொரு கடமையை ஆற்றுகின்றது.
நிதியியல் இடையீட்டாளர்களால் நிறைவேற்றப்படுகின்ற பிரதானமான விடயங்கள்.
- சேமிப்பாளர்களினதும் கடன்பட்டோரினதும் தேவைகளை
சீர்செய்தல்,
- இடர்நேர்வை பரிமாற்றுதல், திரவத்தன்மை மற்றும்
தகவல்களை வழங்கல்.
- பணம் படைத்தல் மற்றும் கொடுப்பனவு முறையை
அமுலாக்கல்.
நிதியியல் இடையீட்டுச் செயற்பாடு
மிகைப் பற்றாக்குறை பொருளாதார அலகு பொருளாதார அலகு
நிதியியல் இடையீட்டா நிதியியல் இடையிட்டாளரின் 6856 பற்றாக்குறை அலகுகளின் QUTússi பொறுப்பகள் (நிதியியல் இடையிட்டாளர்கள் (நிதியியல் இடையிட்டாளர்கள் அப்போதைக்குள்ள பணத்தை அப்போதைக்குள்ள பணத்தை கொள்வனவு செய்யும் பொருட்டு விற்பனை செய்யும் பொருட்டு இடையிட்டு நிதியியல் கருவிகளை முதனிலை நிதிக் கருவிகளைக் வழங்குவார்கள் (விற்பனை கொள்வனவு செய்வார்கள்)
செய்வார்கள்)
நேரடி நிதியிடலிலுள்ள பலவீனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட தன்மையின் காரணமாக நேரடியல்லாத நிதியிடல் வளர்ச்சியடைந்துள்ளது. வர்த்தக வங்கிகள், சேமிப்பு வங்கிகள், அபிவிருத்தி வங்கிகள், காப்புறுதிக் கம்பனிகள், நிதிக் கம்பனிகள், குத்தகைக் கம்பனிகள், பங்குச் சந்தை, ஊழியர் சேம நிதியம், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் நடைமுறையிலுள்ள நிதியியல் இடையீட்டு நிறுவனங்களுக்கு உதாரணங்களாகும்.
18

நிதியியல் இடையீட்டின் கடமைப் பொறுப்பு
எந்தவொரு பொருளாதார முறையிலும் நிதியியல் இடையீட்டாளர்கள் விசேடமானதொரு கடமைப் பொறுப்பை நிறைவேற்றுகின்றனர்.
1. சேமிப்போரையும் (BL6 கேள்வியாளர்களையும்
இணைத்தல்.
2. கொடுக்கல் வாங்கல் செலவினத்தைக் குறைத்தல்
3. தகவல் சமமின்மையால் உருவாகின்ற பிரச்சினைகளைத்
தீர்த்தல்
4. இடர்நேர்வு முகாமைத்துவம்
5. முதிர்ச்சியை மாற்றல் மற்றும் திரவத்தன்மை நிரம்பலை
உறுதி செய்தல்
சேமிப்போரையும் கடன் கேள்வியாளர்களையும் இணைத்தல்
பணத்தைச் சேமிப்பவர்களுக்கும் கடன் பெறுவதற்குத் தேவையுள்ள நபர்களுக்கும் இடையே தொடர்பு ஏற்படாத போது அந்த இரண்டு குழுவினரினதும் தேவைகள் நிறைவேறாது. இங்கு வளங்களை வினைத்திறன்மிக்க விதத்தில் பரிமாற்றிக் கொள்வதற்கு நிதியியல் இடையீட்டாளர்களின் பங்கேற்பு மிக முக்கியமானதாக அமைகின்றது. இதில் மிகைப் பிரிவின் வைப்புகளாகத் திரட்டப்பட்டுள்ள பணம் பற்றாக்குறைப் பிரிவின் கேள்வியை நிறைவு செய்வதற்காக வழங்கப்படும்.
இதற்கு ஒரு உதாரணமாக, உற்பத்திச் செயற்பாட்டின் போது சிறந்த தொழில்முயற்சி மற்றும் முகாமைத்துவ ஆற்றலுள்ள ஆயினும் நிதியப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் தமது முதலீட்டுத் தொழிற்பாடுகளுக்காக மிகைப் பிரிவிலிருந்து பணத்தைக் கடனாகப் பெறுவதை SJTuj6)Tib. முதலீட்டிலிருந்து நன்மைகளைப் பெற்றதன் பின்னர் கடனாகப் பெற்ற தொகையைத் தீர்ப்பதற்கு அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆயினும் கடன் வழங்குகின்றவர்களின் எதிர்பார்ப்பு, மிக விரைவாக தாம் கொடுத்த பணத்தை மீளப் பெறுவதாகும்.
கடன்பட்டோரின் நீண்ட காலத் தேவையும் சேமிப்போரின் குறுகிய காலத் தேவையும் ஒன்றுடனொன்று முரண்படுகின்றதென்பதே இதன் மூலம் கூறப்படுகின்றது. நிதியியல் இடையீட்டாளர்கள் மேற்படி முரண்பட்ட தன்மையைத் தீர்த்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டுகின்ற நோகத்துடனேயே சந்தையில் பிரவேசிப்பார்கள். இதற்கிணங்க, அவர்கள் சேமிப்பாளர்களிடமிருந்து உயர் திரவத்தன்மையைக் கொண்ட இடர்நேர்வுகள் குறைந்த வைப்புகளைப் பெறுவார்கள். அவ்வாறு பெறப்பட்ட நிதியங்களை நீண்டகால, உயர் இடர்நேர்வைக் கொண்ட முதலீட்டுத் தேவைகளின் பொருட்டு கடன் பெறுவோருக்கு வழங்குவார்கள். பாரிய அளவில் இக் கடமையில் ஈடுபடுவதன் காரணமாக சேமிப்பாளர்களின் குறுகியகால வேண்டுகோள்களை குறைவின்றி நிறைவேற்று கின்ற ஆற்றலை நிதியியல் இடையீட்டாளர் கொண்டிருப்பார். பெரும் தொகையான மிகை அலகுகளிலிருந்து அவருக்கு எப்போதும் நிதியங்கள் வந்துசேரும். தம்மிடம்
2010 ஜன / பெப் - குறிப்பேடு

Page 19
வந்துசேர்கின்ற மற்றும் தம்மிடமிருந்து வெளியேறுகின்ற நிதியப் பாய்ச்சல்களை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதையே அவர் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்குத் தேவையான அறிவையும் ஆற்றலையும் அவர் கொண்டிருப்பார். இந்தக் கடமையின் ஊடாக பிரதிபலன்களை ஈட்டுவதற்கு நிதியியல் இடையீட்டாளர், பெறப்பட்ட நிதியங்களுக்காகச் செலுத்துகின்ற வட்டிக்கும் வழங்கப்பட்ட நிதியங்களுக்காக அறவிடுகின்ற வட்டிக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையே பயன்படுத்துவார்.
கொடுக்கல் வாங்கல் செலவினத்தைக் குறைததல
இடையீடு நிதிச் சந்தையில் பரிமாற்ற செலவினத்தைக் குறைப்பதற்கு ஏதுவாயமையும். பரிமாற்ற செலவினத்தை பிரதானமான நான்கு பகுதிகளின் கீழ் விளக்கலாம்.
1. (85L6) GSFG)6,607b (Search Cost): (56 (535(5 g5601.gif மிகைப் பணத்தை முதலீடு செய்வதற்குப் பொருத்தமானதும், அதேபோன்று பொருளாதார ரீதியில் இலாபகரமானதுமான கருத்திட்டங்களைத் தெரிவு செய்வதற்காக ஏற்கவேண்டி வருகின்ற செலவினம்.
2. DgBig Gafugb6f) Qaf6)660Tib (Verification Cost): கடன் கொடுத்தோருக்கு கடன்பட்டோரால் வழங்கப்பட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு ஏற்க நேரிடுகின்ற செலவினம்.
3. கண்காணித்தல் செலவினம் (Monitoring Cost): மிகைப் பிரிவு மிகைப் பணத்தை முதலீட்டின் பொருட்டு விடுவித்ததன் பின்னர் அப் பணம் குறித்த அந்த முதலீட்டிற்கே பயன்படுத்தப்பட்டதா என்பதை அறியும் பொருட்டு பின்ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்க நேரிடுகின்ற செலவினம் (பணத்தைக் கடனாகப் பெறுகின்ற நிறுவனங்கள் அல்லது நபர்கள் அவை தமக்குச் சொந்தமான பணம் அல்லாததால், கவனமின்றி வாக்குறுதியளித்த கருத்திட்டங்களில் இடாது திடீர் இலாபத்தைப் பெற்றுத் தரக்கூடிய இடர்நேர்வுடன் கூடிய தொழில்முயற்சிகளில் இடுவதற்கு வாய்ப்புள்ளதன் காரணத்தினாலாகும்.)
4. வலுவாக்கல் செலவினம் (Enforcement Cost): கடன்பட்டவர் கடன் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் பிரகாரம் செயற்படாதபோது கடன்கொடுத்தவர் அவரை அப்பணியில் FF(6UL வைப்பதற்காக ஏற்க நேரிடுகின்ற செலவினம்.
மேற்படி செலவினம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு, இப் பணியிலுள்ள பாரிய அளவிலான இயல்பே இடையீட்டாளருக்கு உதவுகின்றது. பாரிய அளவில் நிதிச் சந்தையில் பிரவேசிக்கின்ற போது அலகுக்கான செலவைக் குறைத்துக்கொள்வதற்கும், மிகப் போட்டி ரீதியிலான முறையில் தமது சேவைகளை வழங்குவதற்கும் நிதியியல் இடையீட்டாளரால் இயலுமாயிருக்கும். போட்டி ரீதியில் சேவை வழங்குகின்ற நிதியியல் இடையீட்டாளர்களின்பால் சேமிப்பாளர்களும் கடன் பெறுவோரும் ஈர்க்கப்படுவார்கள்.
2010 ஜன / பெப் - குறிப்பேடு

ஆதலால், முதலீட்டின் பொருட்டு பொருத்தமான பொருளாதார ரீதியில் பயனுள்ள கருத்திட்டங்களைத் தெரிவு செய்தல் அவருக்கு மிக இலகுவான விடயமாகும். தேவையான தகவல்களைப் பெறுகின்ற விதிமுறைகள் சிறப்பாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளதால் கடன்படுவோரின் தகவல்களின் துல்லியத்தன்மையை உறுதிசெய்தலையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும். கடன்படுவோர் வாக்குறுதி அளித்துள்ளவாறு செயற்படுகின்றாரா என்பதை அவரால் குறைந்த செலவினத்தில் கண்காணிக்கவும் இயலுமாயிருக்கும். அவ்வாறில்லையென்பது கண்டறியப்படுகின்றபோது அதற்குத் தேவையான நிர்ப்பந்தங்களைச் செய்வதற்கும் அவருக்கு அதிகளவு செலவினம் தேவைப்படாது. இதன்படி சேமிப்பாளர்களிடமிருந்து பெற்று கடன்படுவோருக்கு வழங்கப்பட்டுள்ள நிதியத்தை வட்டியுடன் சேர்த்து மீள அறவிடுகின்ற பணியை சிறந்த முறையில் குறைந்த செலவினத்தில் நிறைவேற்றவும் நிதியியல் இடையீட்டாளருக்கு இயலுமாயிருக்கும். ஒவ்வொரு நாட்டிலும் நிதியியல் முறைமையின் உறுதித் தன்மையை உறுதிசெய்யும் பொருட்டு செயற்படுகின்ற ஒழுங்குமுறையாக்கல் நிறுவனங்களிலிருந்து கிடைக்கின்ற சட்ட உதவிகளும் நிதியியல் இடையீட்டாளரின் பணியை இலகுபடுத்துகிறது.
தகவல் சமமின்மையினால் உருவாகின்ற பிரச்சினைகளைத் தீர்த்தல்
கொடுக்கல் வாங்கலில் தொடர்புபடுகன்ற இரண்டு தரப்பினர்கள் தம்வசமுள்ள தகவல்களின் அடிப்படையில் அவ்விடயத்தை சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆயினும் அநேகமாக குறிப்பிட்ட இரண்டு தரப்பினர்களும் தகவல்கள் சமமின்மைப் பிரச்சினையினால் நெருக்கடிகளுக்கு முகம்கொடுப்பார்கள். இந்நிலைமைக்கு கொடுக்கல் வாங்கலில் தகவல் சமமின்மையென வரைவிலக்கணம் அளிக்கப்படுகின்றது. இந்த நிலைமையின் கீழ் சில சந்தர்ப்பங்களில் விற்பனையாளர் கொள்வனவாளரை விட தகவல்களைப் பொறுத்தவரை வளம் மிக்கவராயிருப்பார். சில சந்தர்ப்பங்களில் கொள்வனவாளர் விற்பனையாளரை விட தகவல்களை அறிந்தவராயிருப்பார். ஆதலால் அதிக தகவல்களை அறிந்துள்ளமையின் நன்மை ஒரு தரப்புக்கு மட்டும் கிடைக்கலாம். தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பும் சிறந்த முறையில் அறிவூட்டப்பட்டுள்ளமையின் காரணமாக மேற்படி தகவல் சமமின்மையினால் உருவாகின்ற பிரச்சினைகள் மறைந்து வருகின்றன. ஆயினும் இது இன்னமுமே முற்றாக முடிவடையவில்லை. நிதிச் சந்தையும் இப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது.
தகவல் சமமின்மை இரண்டு அடிப்படைப் பிரச்சினை களுக்கு காரணமாயமைகின்றது. இதில் முதலாவது, பாதகமான தெரிவாகும். இரண்டாவது பண்பாட்டு உபத்திரவமாகும்.
பாதகமான தெரிவு
முழுமையில்லாத தகவல்களின் அடிப்படையில் நின்று செயற்படுகின்றபோது பாதகமான தெரிவுக்கான வாய்ப்பு அதிகமாகும். தேடல் மற்றும் உறுதிசெய்தலின் செலவினத்தின் காரணமாக கொடுக்கல் வாங்கலுக்கு முன்னர் அனைத்துத் தகவல்களையும் சேகரித்தல் சிரமமானதொரு விடயமாக 960)LDub. ஆதலால் அப்போதைக்குள்ள
19

Page 20
தகவல்களின் அடிப்படையில் நின்று மேற்கொள்ளப்படுகின்ற தெரிவு முழுமையான ஒன்றாக இருக்காது. முதலீட்டின் பொருட்டு பொருத்தமற்ற தரப்பினர்களைத் தெரிவு செய்வதும், அவ்வாறான தரப்பினர்களுக்கு கடன் வழங்கி மீள அறவிட முடியாத இடர்நேர்வுக்கு முகம்கொடுக்க நேரிடுவதும் இதன் காரணத்தினாலாகும். இந்த இடர்நேர்வைக் குறைத்துக்கொள்ளும் பொருட்டு நிதியியல் இடையீட்டாளர்கள் கடன் பகுப்பாய்வினை மேற்கொள்வார்கள். ஆயினும், நிதியியல் இடையீட்டு நிறுவனங்களாலும் பாதகமான தெரிவுப் பிரச்சினையிலிருந்து (JD(UQ6ÕDLDUUTTG5 விடுபட (LDLQUTg5). இலவசமாக நன்மைகளை அனுபவிக்கின்ற பிரச்சினையே இதற்கு முக்கியமான ஏதுவாயமைந்துள்ளது. ஒரு தரப்பு முயற்சித்து, செலவினத்தை ஏற்று தகவல்களைச் சேகரித்துள்ளபோது ஏனைய தரப்பினர்கள் அவற்றை விலை செலுத்தாது அனுபவித்தல் இப்பிரச்சினையாகும். அப்போது போட்டி ரீதியில் முதலீட்டில் ஈடுபட முடியாமற்போகும். செலவினத்தைக் குறைக்கின்ற உபாய வழிமுறையில் ஈடுபடுவதற்கு இது காரணமாயமையும். இதன் பெறுபேறாக போதியளவு தகவல்கள் இன்றி முதலீட்டில் ஈடுபடுவதற்கு நேரிடும். அது பாதகமான தெரிவாக அமையலாம்.
பண்பாட்டு உபத்திரவம்
நிதிச் சந்தையில் நடைபெறுகின்ற கடன் கொடுக்கல் வாங்கலில் பெறப்பட்ட பணத் தொகையை கையாளுதல் பற்றிய அனைத்துப் பொறுப்புகளும் கடன்பட்டோர் பேரில் ஒப்படைக்கப்படுகிறது. அந்தப் பொறுப்பு உரிய விதத்தில் நிறைவேற்றப்படுகின்றதா என்பதை ஆராய்ந்து, பெறப்படுகின்ற தகவல்களின் அடிப்படையில் நிதியியல் இடையீட்டாளர் செயலாற்றுவார். இதன் பொருட்டு இடையீட்டாளருக்கு தேடல் மற்றும் வலுப்படுத்தலுக்கான செலவை ஏற்க நேரிடும். தேடல் செலவினம் கடன்பட்டவர் உரிய விதத்தில் செயலாற்றுகின்றாரா என்பதை ஆராய்வதற்காகும். வலுவாக்கல் செலவினம், அவ்வாறு செயலாற்றாதிருப்பின் அவரை உரிய வழிக்கு ஆற்றுப்படுத்துவதற்காகும். இந்த இரண்டு கடமைகளும் ஒழுங்காக நடைபெறாதபோது 35L6öTLJLL6) is தனது தற்றுணியின் அடிப்படையில் செயலாற்றுவதற்கு முற்படுவார். தமது நிதிச் சொத்து முதலீட்டுக்கு அர்ப்பணிக்கப்படவில்லை யாதலால் கவனமற்ற, இடர்நேர்வுமிக்க விடயங்களில் ஈடுபட அவர் தயங்கமாட்டார்.
தமது சொத்து முதலீட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பின் அவர் அவ்விதம் செயற்படமாட்டார். அப்போது அவர் மிகவும் கவனமாயிருப்பார். இவ்வாறு கடன்பட்ட ஒருவர் மற்றைவர்களுடைய சொத்துக்கள் தொடர்பில் கவனமின்றிச் செயலாற்றுதல் பண்பாட்டுக்கு முரணானதொரு செயலாகும். இச்செயற்பாட்டை பண்பாட்டு உபத்திரவமாகப் பெயரிட்டுள்ளது இதன் காரணத்தினாலாகும். இதன் ஊடாகவும் பெற்ற கடன் தொகையை மீளச் செலுத்துவதற்கு தடையாயமைகின்ற ஒரு இடர்நேர்வே உருவாகின்றது.
தேடல் மற்றும் உறுதி செய்தல் வழிமுறையின் மூலம் பாதகமான தெரிவுப் பிரச்சினையையும் தேடல் மற்றும் வலுப்படுத்தல் வழிமுறையின் மூலம் பண்பாட்டு உபத்திரவத்தையும் குறைத்துக்கொள்வதற்கு நிதியியல் இடையீட்டாளர்களால் இயலுமாயுள்ளது.
s
கொழும்பு - 13, 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவ: அச்சிடப்பட்டு இலங்கை மத்திய வங்கி தொடர்

இடர்நேர்வு முகாமைத்துவம்
நிதியியல் சந்தை மிகவும் மாற்றமுறும் இயல்பைக் கொண்டதாகும். அதன் செயற்பாடுகளால் உருவாக்கப்படுகின்ற துரிதமான மற்றும் இடர்நேர்வுமிக்க ♔|ഞ്ഞ9ബ5ഞണ| எதிர்பார்த்திருத்தல் வேண்டும். அதேபோன்று அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்படுதல் வேண்டும். நிதியியல் இடையீட்டாளர் இவ்விடயத்தின் முக்கியத்துவத்தை அறிந்துள்ளமையினாலேயே இடர்நேர்வு முகாமைத்துவத்தில் ஈடுபடுகிறார். இதில் கடன் இடர்நேர்வே முக்கியமானதாக உள்ளது. பெற்ற கடனை மீளச் செலுத்தத் தவறுகின்றமையினால் இந்த இடர்நேர்வு உருவாகின்றது. நிதியியல் இடையீட்டாளர் கடன் தரப்படுத்தல் மற்றும் பல்வேறான உபாய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமே இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்கின்றார். இதைத் தவிர சந்தை இடர்நேர்வு, வட்டி வீத இடர்நேர்வு ஆகிய பல்வேறான இடர்நேர்வுகளுக்கு முகம்கொடுப்பதற்கு நிதியியல் இடையீட்டாளருக்கு நேரிடுகின்றது. பல்வேறு விதத்தில் தயாரிக்கப்பட்ட நிதியியல் கருவிகளைச் சந்தைக்கு முன்வைப்பதன் மூலம் மேற்படி அனைத்து இடர்நேர்வுகளையும் முகாமைத்துவம் செய்ய அவர் முற்படுவார்.
முதிர்ச்சியை மாற்றல் மற்றும் திரவத்தன்மை நிரம்பலை உறுதி செய்தல்
குறுகிய கால ரீதியிலேயே மிகைப் பிரிவு தமது மிகையைப் பாதுகாப்பதற்கும், அதன் திரவத்தன்மையைப் பேணிவருவதற்கும், மிகையை முதலீடு செய்வதன் மூலம் நலன்களைப் பெறுவதற்கும் எதிர்பார்க்கின்றது. ஆயினும் பற்றாக்குறைப் பிரிவு தமது பற்றாக்குறையை நிதியிடும் பொருட்டு பெறப்பட்டுள்ள கடனைத் தீர்ப்பதற்கு நீண்ட காலத்தை வேண்டிநிற்கும். மேற்படி முதிர்ச்சியடையும் பிரச்சினை நிதியியல் இடையீட்டு நிறுவனங்களால் சிறந்த முறையில் தீர்த்து வைக்கப்படுகின்றது. அவர்கள் சேமிப்புப் பிரிவுக்கு தமது சேமிப்புகளை வேண்டிநிற்கின்ற போது வழங்கக்கூடியவாறு, கடன்பட்டோர் முதலீடு செய்துள்ள கருத்திட்டங்களின் நலன்கள் கிடைக்கின்ற காலத்தை கவனத்திற் கொண்டு கடனைச் செலுத்துவதற்குப் பொருத்தமான காலத்துடன் இணங்குவதன் மூலமும் திரவத்தன்மை வழங்கலை உறுதி செய்வதன் மூலமும் இரண்டு பிரிவுகளினதும் கால மாற்றப் பிரச்சினையை சிறப்பாகத் தீர்த்துவைக்கின்றனர்.
இதன்படி நோக்குகின்றபோது, நிதியியல் முறைமையினுள் நிதியியல் இடையீடு சிறப்பியல்பு வாய்ந்த தொரு கடமையை நிறைவேற்றி, பொருளாதாரத்தில் வளங்கள் ஈடுபடுத்தப்படுவதை வினைத்திறன்மிக்கதாக ஆக்குகின்) தென்பது தெளிவாகின்றது. இது பொருளாதாரத்தின் உண்ை உற்பத்தி அதிகரிப்பதற்கு, முழுமையான தொழில் நிலைக்கு வருமானப் பரம்பல் முரண்பாடு குறைவடைவதற்கு, இறுதியா, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மற்றும் அபிவிருத்திக்கு உதவியாயமைகின்றது. O
த்தையிலமைந்துள்ள (ஆட்டுப்பட்டித்தெரு) கெளரி அச்சகத்தில் பூட்டல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.