கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2011.11

Page 1
50வது ஆண்டை நோக்கி.
SK 66
ஆசிரி
படைப்புக்க படைப்பாளிகளை ே
நவம்பர் 2011
 

SS), 4
யர்: டொமினிக் ஜீவா
ளை விட -
அதிகம் நேசிப்பவர்!
விலை 40/-

Page 2
திருடீன சேவை
15 வருடத் திருமணசேவை நிறைவினை முன்னிட்டு வேல் அழுதன் பாரிய சேவைக் கட்டணக் குறைப்பு
Sl Jb.
விவரங்களுக்குத் தனிமனித நிறுவநர், சுயதெரிவுமுறை
முன்னோழ முத்த புகழ் பூத்த சர்வதேச, சகலருக்கு மான திருமண் ஆலோசகர் / இற்றுப்படுத்துநர் குரும்ப
சி.ழயூர் , மாமியழ வேல் அமுதறுடன் திங்கள், புதன் வெள்ளி மாலையிலோ, சனி, ரூாயிறு நண்பகலி லேயோ தயங்காது தொடர்புகொள்ளலாம்
தொலைபேசி: 48.73929, 23.60694, 236.0488
சந்திப்பு: முன்னேற்பாடு ஒழுங்குமுறை
முகவரி: 8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப் பக்கம், 33ஆம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பு-06
சுலப மணமக்கள் தெரிவுக்குச் சிறந்த முறை சுயதெரிவுமுறையே ரம்மிய மணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாயெழு வேல் அமுதனே!
 

ஆடுதல்பாடுதல் சித்திரம் கவி
gag:RuMIMISMU ss888IBM:ssifiso ga siirsnið #3 i 3 širiš i liši 3ini
ஈன நிலை கண்டு துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாரா ட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ் சிகை மல்லிகை, இதனை நாடாளுமன்றப் பதிsேtடாE ஐன்ஸ்ார்ட் (04, 7 2001) பதிவு செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ஆ8ணப்படுத்தியுமுள்ளது. அத்துடன் உலக வரலாற்றில் முதன் முதலில் சலு னுக்குள் இருந்து வெளிவந்த இலக்கியச் சஞ்சிகையும் மல்லிகையே தான்!
50 - ஆவது ஆண்டை நோக்கி. நவம்பர்
590 ഠ/%' ീസ്യു
வரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல- அ * ஆரோக்கியமான இலக்கிய இயக்
க்கு எழுதியவர்களே பொறுப்பானவர்கள்
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Te: 232O721
mallikaiJeeva@yahoo.com
سمیہ سمه என் முன் அநுபவங்கள்
அன்றைய எழுத்தாளன் என்ற கால கட் டத்தை விட, மல்லிகை ஆசிரியன் என் கின்ற முறையில் எனது அநுபவங்கள் தின சரி விரிவடைந்து கொண்டே போகின்றன.
- புதுப் புது அநுபவங்கள்! புதுப் புது இலக்கிய நட்புறவுகள்.
நான் பேனா பிடித்த காலகட்டத்திலும் சரி, சஞ்சிகை ஒன்றின் ஆசிரியராக மலர்ந்த
சரி,
வடமாகாணத்தான் தான்.
5 T6A) 5Ľ L-5šlgy)|LĎ நானொரு
எழுதிக் கொண்டிருந்த கால கட்டங் களிலும், பின்னர் சஞ்சிகையின் ஆசிரிய ராகப் பரிணமித்த வேளையிலும் மாதம் ஒருதடவை தலைநகருக்கு - கொழும்பிற்கு - வந்து செல்வேன். இருந்தும் நானொரு யாழ்ப்பாணத்தான் தான்.
யுத்த நாசகாரம் என்னைச் சூழ்ந்து அடிக்கடி திக்குமுக்காட வைத்திருக்கிறது. நான் வாழ்விடமாகக் கொண்ட இல்ல மும், எனது தொழிலகமாகக் கொண்டு இயங்கி வந்த இவ்விருவிடங்களுமே ராணு வத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது, இரவுக் கிரவே அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டோம்.
இந்த நெருக்கடிகளைக் கண்டு நான் அஞ்சவில்லை. மருளவில்லை.
மின்சாரம் திடீரென நிறுத்தப்பட்டு விட் டது. சஞ்சிகை வெளிக்கொணர ஆமான சாதனங்கள் இல்லை. கடதாசித் தட்டுப் பாடு. அடுத்து என்ன செய்வது என்று ஒன்றுமே தெரியாத அவலச் சூழ்நிலை.
மாணவர்கள் பயன்படுத்தும் கொப்பி
களை வாங்கி, நடுவே இணைக்கும்

Page 3
இணைப்புக் கம்பிகளை அகற்றிவிட்டுச் சில காலம் கொப்பித் தாள்களில் மல்லிகையை வெளியிட்டு வந்தேன்.
இந்தப் படுமோசமான யுத்த அவலச் சூழ்நிலையிலும், போக்குவரத்தே மட்டுப் படுத்தப்பட்ட காலகட்டத்திலும் மாதா மாதம் கொழும்பு மாநகர் வந்து திரும்ப வேண்டிய கட்டாயத் தேவை இருந்தது.
- இவை அனைத்தையும் ஒரளவு சமாளித்துக் கொண்டு, கொழும்புக்கு வந்து திரும்பினேன்.
இந்த இடைக்கால யுத்த அவலநிலை யைக் காரணமாக வைத்துத் தற்காலிகமாக மல்லிகையை இடைநிறுத்திப் பாருங் கள் எனச் சில நெருங்கிய இலக்கிய நண்பர்கள் ஆலோசனை சொல்லிப் பார்த்தனர்.
என் இலக்கிய ஆவேசம் இந்த ஆலோ சனைகளை ஒப்புக்கொள்வதை மறுத்தது. தொடர்ந்து முயற்சி செய்ய வற்புறுத்தியது.
எல்லா வழிகளிலுமிருந்து வரும் பண வருமானம் திடீரென அடைக்கப்பட்டு விட்டது. வருமானமற்ற நிலை.
என்னுடன் மல்லிகைக்குப் பலகால மாகத் தொண்டுழியம் செய்துவந்த சகோ தரனின் மாதாந்தச் சம்பளப் பிரச்சினை மண்டையைப் குடைந்து தள்ளியது.
(3Lumi (6 is
அடுத்த என்ன செய்வதென்றே தெரி யாத அவல நிலை. இரவுபடுத்தால், தூக்கம் வராத தினசரிச் சூழ்நிலை.
என்ன செய்வது? இனிமேல் என்ன செய்வது? துணிச்சலாக முடிவெடுத்தேன். கொழும்பிற்குப் போவதுதான் சரியான மார்க்கம், ஒரிரவு முடிவெடுத்தேன்.
வீட்டாருக்கு இதில் சிறிதுகூட விருப்ப
மில்லை. மகன் திலீபன் பேராதனைப் பல் கலைக்கழக மாணவன். மனத் துணிச்சல் காரன்! திட்டமிட்டு செயலாற்றுபவன்.
"நீங்கள் இப்ப எடுத்த முடிவுதான் சரி யான முடிவு எதற்கும் பயப்படாமல் துணிந்து இறங்குங்கள்” என உற்சாகமூட்டி என்னை ஊக்கப்படுத்தினான்.
ஒர் இரவு புறப்பட்டு, கொழும்பு மாநகர் வந்தடைந்தேன். ப்புத்தம் பின் நின்று துரத்தியது.
கையில் சில மல்லிகைப் பந்தல் வெளி யீடுகள். பையில் நானெழுதும் பேனா. இவற் றுடன் ஒருநாள் திங்கட்கிழமை காலை ՑՖԱ) மணியளவில் கொழும்பு மாநகர் வந்து சேர்ந்தேன்.
கைவசம் எத்தகைய திட்டமேதும் இல்லை. அடுத்து என்ன செய்வது? என் பதே கேள்விக்குறியாக மனதில் தொக்கி நின்றது.
- இருந்தும், நெஞ்சில் எந்தவிதமான பதட்டமும் இல்லை.
நான் உளப்பூர்வமாக விசுவசிக்கும் இலக்கிய நேசிப்பு எனக்கேற்ற தகுந்த வழி காட்டும் என மனப்பூர்வமாக நம்பியே, கொழும்பு மாநகரில் காலடி வைத்தேன்.
இனித் தொடர்ந்து கொழும்பு மாநகரை வாழ்விடமாகக் கொண்டு இயங்கி வர வேண்டும் என நெஞ்சார்ந்த நினைப்புடன் செயலாற்றத் தொடங்கி விட்டேன்.
படைப்பாளிக்கு அவன் அவன் பிறந்து வளர்ந்த மண்தான் சொர்க்கம்! ஆனால், இலக்கியச் சஞ்சிகையாளனுக்கோ தலை நகர்தான் பல வகைகளிலும் வசதி வாய்ப் புக்களைப் பெருக்கித் தரும்.
مسد که یعہمسسقصیل>

പ്രത്നഗ്രര @ണ്ഡശ്രecം്രീ
நினைக்க நினைக்க ஆச்சரியம் கலந்த விசித்திரமாக இருக்கின்றது. SSLLLLLSSLLLSSSLLLSLLLSqSqSqSqLSL0qLSLLLSqqSqSqSqLSLLLLSLLSSSLSSLLSLSLSSSSSASLSLLLSLLSLLSLSqSqALSqSqSqSqSqSqSqSqSqSLLSSLSLLS எரிச்சலூட்டுவதாகவுமுள்ளது.
ருநீ லங்கா சாஹித்திய மண்டல ஆண்டுப் புத்தகப் பரிசளிப்பு விழாவுக்காயினும் சரி, அல்லது இந்து கலாசாரத் திணைக்களத்தினர் நடத்தும் விழாவுக்காயினும் சரி, பொதுவாக இந்த மண்ணில் மக்களால் அங்கீகரிக்கப் பெற்ற எழுத்தாளர்களுக்கோ அல்லது படைப்பாளிகளுக்கோ அழைப்பிதழ் ஏதும் கிடைக்கப் பெறவேயில்லை.
இந்த அலட்சியமான ஒதுக்கீட்டுக்கு அடிப்படைக் காரணம்தான், என்ன?
இந்த மண்ணில் ஆண்டாண்டு காலங்களாக மக்களுக்காக இலக்கியம் படைத்து வந்த படைப்பாளிகளின் நீண்டகாலப் போராட்டத்தின் வடிவம்தான் முறி லங்கா சாஹித்திய மண்டலத்தின் வருகை.
1960இல் முதன் முதலில் படைப்பு இலக்கியத்திற்கான பரிசைப் பெற்றுக் கொண்டவர்தான் மல்லிகை ஆசிரியர். அத்துடன் பல ஆண்டுக் காலமாக அதன் கமிட்டி உறுப்பினராகவும் இயங்கி வந்துள்ளார். தொடர்ந்து இந்த மண்ணில் 47 ஆண்டுக் காலங்களாக மல்லிகை என்ற மாத இதழை வெளியிட்டு வருகிறார். ஆனால், அவருக்கே அழைப்பிதழ் இல்லை.
அத்துடன் இந்துக் கலாசார அமைச்சினால் சமீபத்தில் ஏற்பாடு செய்து தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பிரித்தானியர் ஆட்சியும், நவீன மயமாக்கலும் என்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள இந்த நாட்டுப் படைப்பாளிகளுக்கு அழைப்பே அனுப்பப்படவில்லை.
இந்த ஒதுக்குதலுக்கு அடிப்படைக் காரணம்தான் என்ன?
அலட்சியமா? அல்லது திட்டமிட்ட காயினிடறலா?
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்த இலக்கிய நிறுவனங்கள் பொறுப்புடன் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
கடந்த அரை நூற்றாண்டு காலங்களுக்கு மேலாக, இலக்கியத்திற்கென்றே விலை கொடுத்து வாழும் எழுத்தாளர் சக்தி எப்படிப்பட்டதென்பதை உணர்ந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதே சம்பந்தப்பட்டவர்களுக்கும் நல்லது. இலக்கியத்திற்கும் நல்லது.

Page 4
9|L60 Llullb
-திக்குவல்லை கமால்
பலாலி ஆசிரிய கலாசாலைப் பயிற்சிக் காலம் தந்த உள், வெளி இலக்கிய உறவு
இன்றுவரை நீடித்து நிலைப்பதை நினைத்துப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அத்தகையதொரு உறவுக்காரராகவே மூதூர் முகைதீனைப் பார்க்கிறேன்.
மூதூர் என்றவுடன் வ.அ.இராசரத்தினமும் தோணியும் ஞாபகம் வரும் காலம் அது. அந்த மகா படைப்பாளியையும் அவர் வாழ்புலத்தையும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற வேட்கையில் கிடந்த எனக்கு, முகைதீன் நல்ல தீனியாக அமைந்தார். அது அவரோடு மட்டும் எல்லைப்பட்டு விடாது எம்.ஐ.எம்.மஷ்ஹர், அமானுல்லா, உபைதுல்லா, கலை மேகம் இபுராஹிம், அகாக்கான் என்று விரிந்து சென்றது.
தினபதி சிறுகதைத் திட்டத்தின் மூலம் அறிமுகமாகிய போதும், அவ்வப்போது சிறுகதை, உருவகக் கதைகளென்று எழுதியபோதும், தன்னையொரு கவிஞனாகவே முகைதீன் நிலைநாட்டிக் கொண்டுள்ளார்.
"முத்து என்ற புதுக்கவிதைக் குறுந்தொகுப்பே இவரது முதலாவது வெளியீடு. அதில் எனது கருத்துரையும் இடம்பெற்றுள்ளது. எழுபதுகளில் ஏற்பட்ட புதுக்கவிதைப் பிரவாகத்தின் வெளிப்பாடென்று இதனைக் குறிப்பிடலாம்.
முகைதீனோடு ஏற்பட்ட தொடர்பின் காரணமாகப் பின்னர் மூதூர் செல்ல நேர்ந்தது. திருமணத்தின் பின் மனைவியோடு கடல் கடந்து சென்ற மிக நீண்ட பயணம் அது.
இலக்கிய உலகில் வளர்ந்துவரும் இளம் பிரபலமான எனது வரவை அறிந்து, ரசிகர்கள், முகைதீன் வீட்டைச் சுற்றி வளைத்துவிட்டார்கள். நீண்ட நேரம் இலக்கியக் கருத்தாடல் நடைபெற்றது. அடுத்தநாள் மூதூரின் இயற்கை வளத்தைச் சைக்கிளில் அழைத்துச் சென்று காண்பித்தார்கள். பஸ்ஸேறிச் சென்று சேருவிளையையும் சுற்றி வந்தோம். அப்படியொரு காலம்' என்று மெய்சிலிர்க்க வைக்கின்றது.
வ.அ. இராசரத்தினத்தை அவரது வீட்டுக்குச் சென்று நேரில் சந்திக்கக் கூடிய வாய்ப்பு அங்கு கிட்டியது. அவரோடு மிக நெருக்கமாகச் செயற்பட்டு இலக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இவர் மூதூர் மண்ணின் இலக்கியத் தொடர்ச்சியையும் சுமந்து நிற்பவர்.
மல்லிகை நவம்பர் 2011 & 4
 

மூதூர் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்று, இளம் தலைமுறையினரை அரவணைத் துச் செயற்பட்டு வருகிறார்.
பல்வேறு மட்டங்களில் நடாத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் பங்குபற்றி, ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளார். காலசார அமைச்சு, அரச ஊழியரிடையே நடாத்திய போட்டிகளில் பல தடவை பரிசு பெற்றுள்ளார். தகவம் சிறுகதைத் தேர்வில் பரிசு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவரது தகைமையை மதிப்பீடு செய்து இலங்கை அரசு 'கலாபூசணம்’ பட்ட மளித்து கெளரவித்துள்ளது.
இவரது கவிதைகள் ஆங்கில, சிங்கள மொழிகளில் மொழி பெயர்த்து பிரசுரிக்கப் பட்டுள்ளன.
காலாதிகாலமாக தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றாக உறவாடி வாழ்ந்த பூமியே, மூதூர். இனத்துவ மோத லால் ஏற்பட்ட கொடுமையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. "பிட்டும் தேங்காய்ப் பூவும்" என்பது முகைதீனின் கவிதைத் தொகுதியொன்றின் பெயராகும். இந்த மகுடக் கவிதை கூட தமிழ்முஸ்லிம் உறவையே பேசுகின்றது.
கடைசியாக வெளிவந்த ‘ஒரு காலம் இருந்தது' தொகுதியில் கூட, மனக் கவலையையும் ஆதங்கத்தையுமே பெரும் பாலான கவிதைகள் வெளிப்படுத்து கின்றன.
நான்கு கவிதைத் தொகுதிகளைத் தந்துள்ள மூதூர் முகைதீன், சிலகாலமாக 'ஒசை என்ற கவிதைச் சஞ்சிகையையும்
நடாத்தி வருகிறார். "படிமம், குறியீடு என்று விளங்காத கவிதை எழுதுவது புதுக் கவிதையின் பிறப்புக்கே பங்கம் விளை விப்பதாகும்' என்ற கருத்துடைய முகை தீன், அதனை அடியொற்றியே ஒசைக் கான கவிதைகளைத் தெரிவு செய்கிறார். இதுவரை பன்னிரண்டு இதழ்களுக்கு மேல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.
கணித ஆசிரியராக ஆரம்பித்த முகை தீன் படிப்படியாக முதலாம்தர அதிபராகப் பதவி உயர்வு பெற்று, பல்வேறு பாடசாலை களில் கடமையாற்றிய அநுபவப் பழமாக தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.
அரச ஊழியத்தில் ஒய்வு பெறுவது, இலக்கிய ஊழியத்துக்கு அதிக நேரத் தைப் பெற்றுத் தரும் என்ற வகையில் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
எழுபதுகளிலேயே தெளிவான கருத்தி யலை உள்வாங்கி அந்த வகையிலேயே தனது படைப்புக்களை உருவாக்கி, செயற் பட்டு வருபவர் முகைதீன். முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மல்லிகை முற்போக்கு எழுத்தாளர்கள் என்று தனது உறவை இன்றுவரை பேணி வருபவர்.
நாற்பதாண்டுகளுக்கு மேலான அவரது இலக்கியப் பணியை மதித்து, கிழக்கு LDITET 600 இவ்வாண்டுக்கான சாகித்திய விழாவின் போது, முதலமைச்சர் விருது வழங்கி கெளரவிக்கத் தெரிவு செய்துள்ளமை மிகப் பொருத்தமானதே.
SF6
அவர் பணி வாழ்கவென நாமும் வாழ்த்துவோம்.
மல்லிகை நவம்பர் 2011 & 5

Page 5
பெரிய பாறாங்கல்லின் மீது ஒன்பது அங்குல மலைக் கல்லை வைத்து அதன்மேல் அரிதட்டை வைத்து சுத்தியலால் ஓங்கி அடிக்கின்ற போது, சின்னத் துகள்களாக சிதறி உதிரும் - அவளது கனவுகளைப் போல.
ஆனால் இன்றைக்கு அது நடக்கவில்லை. கல் அசையவில்லை. பூமணியால் அது முடியவில்லை. சுத்தியல் பாறாங்கல்லோடு கதை பேசிவிட்டு கீழே விழு கின்றது. இயலாமையின் வெளிப்பாடு.
வேலை முடிய வேண்டுமே. இல்லாவிட்டால் கூலி கிடைக் காதே. மலையடிவாரத்தில் குந்தி இருந்து இந்த கொங்றிற் கல் உடைக்கும் வேலையும் இல்லையென்றால் தின்சரி கிடைக்கும் கஞ்சிக்கும் சோற்
CJ
- எம்.எஸ்.அமானுல்லா
றுக்கும் திண்டாட வேண்டும். ஆற்றாமையோடு திரும்பியும் சுத்தியலை ஒங்கி அடித்தபோது சுத்தியல் இலக்குத் தவறி பெருவிரலைப் பதம் பார்த்துவிட்டது.
இரத்தம் கசியத் தொடங்கிவிட்டது. சும்மாடு சுத்தும் சீலையில் ஒரு துண்டைக் கிழித்து காயத்திற்குக் கட்டுப் போட்டாள்.
ஆனாலும், இரத்தம் வழிந்துகொண்டே இருந்தது. பசி வேறு. இரண்டு நாட்களாக அன்னம் தண்ணி ஒன்றுமில்லை. நிறுவனங்கள் கொடுத்த புழுங்கல் அரிசியும் தீர்ந்துவிட்டது. அவர்களும் கொஞ்சக் காலமாக நிவாரணத்தை நிறுத்தி விட்டார்கள்.
காலையிலும் ஏதும் சாப்பிடாமல்தான் வேலைக்கு வந்தாள். குஞ்சுத்தம்பியும் இரவில் இருந்தே அரற்றிக்கொண்டுதான் இருக்கிறான்.
இண்டைக்கெண்டாலும் பிர அரிசி போட்டு கஞ்சி வை. நான் அடுத்த வளவுக்காரர்ட்ட தேங்காயொன்று கடன் வாங்கி வாறன்.
பத்து வயசுப் பொடியன் பசி தாங்குவானா? வீட்டில் அரிசி இல்லையென்றால் வேலியோரத்துப் பப்பாசியில் இளங்காயைக் குத்திக்கொண்டு வருவான். தோல் போக சீவி கொதி நீரில் அவித்து உப்பு மிளகாய் போட்டு தின்னத் தொடங்கிவிடுவான்.
அவளால் அதெல்லாம் முடியாது. ஏதாவது வித்தியாசமாகச் சாப்பிட்டால் நெஞ்சுக் கூட்டுக்குள் சளி கட்டிக் கொள்கிறது.
மல்லிகை நவம்பர் 2011 奉 6
 

இப்படித்தான் ஒருதடவை அல் லைக் குளத்தில் பொடியன்களோடுப் போய் ஒல்லிக்காயும், தாமரைப் பிஞ்சு மாகக் கொண்டு வந்தான். அவித்து இறக்கி இவளும் ஒருபிடி சாப்பிட் டாள். அன்று இரவு முழுக்க வயிற்றில் குமட்டல். இரவு இரவாக வாந்தி. கள்ளி முள்ளில் விழுந்த பழஞ் சேலையை உருவி எடுப்பது போல நெஞ்சில் வலி. காறித் துப்பி விட் டாள். அதன் பிறகு வித்தியாசமான உணவுகளைத் தூரமாக்கி எறிந்து விட்டாள்.
ஆனாலும் பசி அடங்க வேண் டுமே. சோளங் கொட்டையை உடைத் துப் பொடியாக்கிக் கஞ்சி காய்ச்சிக் குடிப்பாள். அமிர்தமாக இருக்கும். அதுவும் எத்தனை நாளைக்குப் போதும். இன்றைக்கு காலையிலும் சாப்பிடவில்லை. இரண்டு நாளாகி விட் டது. குடத்து நீரை வயிறு நிறையக் குடிப்பதோடு சரி.
இன்றைக்கு வெள்ளிக்கிழமை. கணக்குப் பார்த்து காசு தந்துவிடுவார் கள். அரிசி வாங்குவதுதான் முதல் வேலை. பச்சை மிளகாயும் போட்டு கொதிக்க கொதிக்க கஞ்சி காய்ச்சி, விலிம்பிக் காயை நாக்கில் தொட்டு வைத்துக்கொண்டு வயிறு முட்டக் குடிக்க வேண்டும்.
ஆனால் இன்றையப் பொழுது வரை குடல் தாங்குமா? குஞ்சுத் நினைத்த போதுதான் அவளுக்கு இன்னமும் கவலை ஏற் பட்டது.
தம்பியை
இன்னமும் தன்னைப் பெற்றவள் என்றுதான் நினைத்துக்கொண்டு இருக் கிறான். அம்மா என்று வாய்நிறையக் கூப்பிடுகிற போதும், தாய்மை உணர்வுக்கும் மேலாக தனக்கு குழந்தை இல்லையே என்ற வருத்தத்தையும் மறந்து போகிறாள்.
மலைக்குப் போய் வாறன் என்று போனவர்கள் கைக்குழந்தையை தன் னோடு கூட்டிச் செல்லவில்லை. 1993 பேரலையில் லோஞ்ச் புரண்டபோது இருவருமாக இறந்து போனார்கள். செய்திதான் கிடைத்தது. உடல் ஒன்றும் கிடைக்கவில்லை. அப்போது ஆறு மாதக் குழந்தை அவன்.
மலடியாக இருந்தவள் குஞ்சுத் தம்பியை மகனாக வரித்துக்கொண் டாள். அவனது மழலையும் வளர்ச்சியும் தனது வறுமையையே மறக்கச் செய்து விட்டது.
அவனுக்கு படிப்பு ஏறவில்லை. விளையாட்டுப் புத்தி. பிள்ளைகளோடு சேர்த்தி இல்லை. பேச்சு குறைவு. தானும் தன்னுடைய சோலியுமாக குஞ்சுத்தம்பி வளர்ந்தான். வாலிபனுக் குரிய மிடுக்குகள் ஏதுமின்றி நோஞ்சா னாகவே இருந்துவிட்டான். அதனா லென்ன இன்னமும் அவனை உச்சி முகர்ந்து உணவு ஊட்டி உள்ளம் குளிர்ந்துவிடுவாள்.
கல்குவாரிக்குப் பக்கத்திலேயே தண்ணீர்ப் பானை நிறைத்து வைக்கப் பட்டிருந்தது. திருப்பியும் தண்ணீரையே வார்த்துக் குடித்தாள்.
மல்லிகை நவம்பர் 2011 தீ 7

Page 6
‘என்ன புள்ள இண்டைக்கு கிழமைக் காசு தருவாங்களோ?”
"ஏன் அண்ணன் வழக்கமா வெள்ளிக்கிழமை கணக்குப் பார்த்து காசு தாறது வழக்கம்தானே?”
'இல்ல, நம்மட முதலாளிக்கு வயிற்றில ஏதோ கட்டி எண்டு ஒப்ப ரேசனுக்கு மலைக்குக் கொண்டு போன வங்களாம். அவர் வந்துதான் காசு தரணும்.”
"அது சுணங்காது. நேத்தைக்கு அவர்ட மகன் வந்து கணக்கெல்லாம் பார்த்துக்கொண்டு போனது. நீங்க அந்த நேரம் இங்க இல்ல. உங்கட மரு மகன் உடைச்ச கல்லுக் கணக்கெல் லாம் குடுத்துட்டார். நம்பிக்கையாகக் காசு கிடைக்கும். நான்
இண்டைக்கு
அந்தக் காசத்தான் நம்பியிருக்கிறன்.”
y
ஏன்?
“ரெண்டு நாளாச்சண்ணே வீட்ல அரிசி பொங்கி. பானையில அரிசியும் இல்லை. கையில் காசும் இல்ல. குஞ்சுத்தம்பியும் ரெண்டு வாட்டுரசுக்க கடிச்சிட்டு வேலைக்கு ஒடுறான்.”
"குஞ்சுத்தம்பி உன்னோடையே நிப் பானே. எங்க பொடியனைக் காண யில்லை.”
”அவன் இங்க வரல்ல. பக்கத்து மலையில யாரோ புதுசா குவாரி எடுத் திருக்கிறாங்கள். ஒன்பது இஞ்சில - அத்திவாரக் கல்தான் உடைக்கிறாங்கள். அங்கதான் அவனும் புதுசா வேலைக் குப் போறான்.”
ஒரு வாய்க்கு வெத்திலை இவர் கிட்ட கிடைச்சால், புளிச்ச வாய்க்கு நல்லா இருக்கும் எண்டு யோசித்தாள். கேட்க மனமில்லை. அதற்குள் தலை சுற்றத் தொடங்கிவிட்டது. உடைச்சு வைத்திருந்த கல் குவியல் மேலே சாய்ந்து விழுந்தாள். அதற்குள் அவர் ஓடிவந்து தாங்கிக் கொண்டார். தண் ணிர் தெளித்து மயக்கம் தெளிய வைத் தார். ஒரு மிடறு தண்ணிர் வயிற்றில் இறங்கியது. அடிவயிற்றில் தில்லம்பால் பட்டதுபோல எரிவு கண்டது. வயிற் றுக்குள் பல்லி ஊர்வது போல குடல் புரண்டு அரித்தது.
எத்தனை நாள்தான் சாப்பிடாமல் இருப்பது.
கிழமையில் ஒருநாள் கிடைக்கும் கூலியில் சாப்பாட்டுக்குத்தானே செல வழிக்கிறாள். வேலையாவது தினமும் கிடைக்கிறதா? தன்னோடு சேர்ந்து குஞ்சுத்தம்பியும் பட்டினி கிடக்கிறான். குஞ்சுத்தம்பி உழைக்கத் தொடங்கின பிறகாவது தன்னுடைய கஷ்டம் தீருமோ எனவும் அவள் மனம் யோசிக் கத் தொடங்கியது.
அவளால் நிமிர்ந்து இருக்கவும் முடியவில்லை.
GG e a ۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔
புள்ள என்ன சாப்பிட்டியா?
இவருக்கும் தன்னுடைய வறுமை புரிந்துதானே இருக்கும். அதைத்தான் கேட்கிறாரோ? சாப்பிடவில்லை என்று சொன்னால் மட்டும் இவரால் என்ன உதவி செய்துவிட முடியும்? அவரும்
மல்லிகை நவம்பர் 2011 奉 8

தன்னைப் போல தினமும் கைகளைக் கசக்கி சாப்பிடுபவர்தானே.
“என்னம்மா காலமே ஏதும் சாப்
பிட்டு வந்தினியா?”
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள்? தலையை மேலும் கீழு மாக ஆட்டி வைத்தாள். இல்லை என் பது போலவும், ஆம் என்பது போல வும் இருந்தது. ஆனால் அவரால் எதை யும் புரிந்துகொள்ள முடியவில்லை.
'நேரத்தோட வீட்ட போய்ச் சேரம்மா. கிழமைக் காசு வந்தால் நான் வாங்கிக்கொண்டு தாறன்.”
அவர் போய்விட்டார். அவளுக்கு உடல் முழுக்கச் சோர் வாக இருந்தது. அடித்துப் போட்டது போல உடல் முழுக்க வலியாக இருந் தது. எழுந்து நடந்து வீடு போய்ச் சேர் வதே அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.
இன்றைக்கு வேலைக்கு வராமல் விட்டிருக்கலாமோ? கிழமைக் காசை, அவர் சொன்னது போல குஞ்சுத் தம்பியை விட்டு வாங்கி இருக்க லாமோ? அவளுக்கு ஒன்றையும் நிதானிப்பதற்கு முடியவில்லை.
கண்களுக்குள் மின்வெட்டாம் பூச்சி பறக்கிறது.
குஞ்சுத்தம்பிக்கும் இண்டைக்கு கிழமைக் காசு கொடுத்தால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்? ஆனால் குடுப் பார்களா? எப்படிக் குடுப்பார்கள்? இரண்டு நாட்களாகத்தானே அவன் வேலைக்குப் போகிறான்?
இப்பொழுது ஒரு அகப்பைச் சோறு இருந்தால் எவ்வளவு ஆறுத லாக இருக்கும்? வாயில் எச்சில் ஊறு கிறது.
பச்சை அரிசிச் சோற்றின் மீது கத்தரிக்காய் பொரித்து வைத்து, பொன் னாங்கணிக் கீரைச்சுண்டலும், சுங்கான் மீன் பால்சொதியுமாகச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்.? அவளுக்கு கண் ணில் ஈரம் கசியத் தொடங்கியது.
அவர் இருக்கும்போது அப்படித் தான் அவர்கள் பகல் உணவு இருந்தது. அருவி வெட்டும், மீன் பிடியும், கரு வாடு போடுதலும், வயல் வேலை யென்றும், பசுமாடு என்றும் சந்தோச மாகத்தான் இருந்தார்கள்.
கண்களில் அருவியாக நீர் கொட் டியது. விசித்து விசித்து அழுதாள். காலையில் குரக்கன் ரொட்டியும், பழங் கறியும் வேணும், அவருக்கு புள்ள புள்ள என்று என்னோட எவ்வளவு இரக்கமாக இருந்தார். அவரே எனக்கு ஒரு புள்ள போல்தான். பசுமாடு வர வில்லை என்று தேடிக்கொண்டு செக்கல் நேரத்தில் வாய்க்கால் ஒரமாப் போனவர்தான். அதோட அவரும் இல்ல. என்ட வாழ்வும் இப்படிச் சீரழிந்து போயிற்று.
இனி குஞ்சுத்தம்பி ஆளாகி, உழைக்கத் தொடங்கி.
வெப்பத்தை வாரி இறைச்சுக் கொண்டு கச்சான் காற்று கோபமாக சுழன்றடிக்கிறது. வாயெல்லாம் காய்ந்து - கனம் புட்டி வெடிப்பது போல
மல்லிகை நவம்பர் 2011 & 9

Page 7
திட்டுத் திட்டாக அரித்து எரியத் தொடங்கியது.
நாக்கால் உதட்டைத் தடவி ஈரப் படுத்தப் பார்த்தாள். அவளால் முடிய வில்லை.
யாராவது கையைப் பிடித்துத் தூக்கி நிமிர்த்தி வரம்பில் இருப்பாட்டி னால் நன்றாக இருக்கும் என்று தோன்றிற்று.
கிழமைக் காசு வாங்கிக்கொண்டு வீடு போயச் சேருவோமா என்பதே அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.
பானைத் தண்ணீரும் எட்டாக் கணி போல தூரமாகி - விலகி இருந்தது. தவழ்ந்து தவழ்ந்து சென்று பானைத் தண்ணீரைச் சிரட்டையில் வார்த்துக் குடித்தாள். தண்ணீர் இறங்கியதும், தேனீர்க் கடை பொயிலருக்குள் கொதிப்பது போல வயிறு எரியத் தொடங்கியது.
ஒரு வாட்டு ரொட்டி, ஒரு பணிஸ், ஒரு அகப்பைச் சோறு, அவளுக்கு இப்போது கிடைத்தால் அதுவே சொர்க்கம் போல இருக்கும். ஆற்றாமையால் அழத்தொடங் கினாள்.
பரபரப்போடு ஆட்டோ ஒன்று வந்து நிற்கின்றது. கல்குவாரி ஆட்கள் மகிழ்ச்சியோடு இறங்குகிறார்கள்.
சுடச்சுட பார்சல் உணவொன்றை அவள் கைகளில் திணிக்கிறார்கள்.
“புள்ள பசியெண்டு காலயில அரற்றிக் கொண்டிருந்தாய். இப்பர்
பார், சர்க்கரைப் பொங்கல். சுடச்சுட இருக்குது. விரிச்சு சாப்பிடு புள்ள.”
“என்ன விசேசமாம் அண்ண?”
"முதலாளிக்கு ஆபரேசன் நடந்தது தானே. இப்ப நல்ல குணமாகி வீடு வந்துவிட்டார். அதுக்காக சந்தோசம் செய்றார். சர்க்கரைப் பொங்கல் மணக்க மணக்க முந்திரிப் பருப்பெல் லாம் போட்டு வந்திருக்கு. சாப்பிடு புள்ள. நான் போய் தண்ணி எடுத்திட்டு வாறன்.”
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எப்போது பார்சலைப் பிரிப்போம். எப் போது வாயில் அள்ளிப் போடுவம் என்றிருந்தது.
கண், தலையெல்லாம் இருட்டிக் கொண்டு, குடல் இரைப்பையை அரித்துக்கொண்டு இருக்குமாப் போல் உணர்ந்தாள்.
பர்சலைப் பிரித்து சுடச்சுட நாலு விரலால் பொங்கலை அள்ளி வாய்க் குள் வைத்தாள். அந்த நேரத்தில் குஞ்சுத்தம்பி கூவிக்கொண்டு வந்தான்.
"அம்மோவ்.”
அவளுக்கு மனசு தடுமாறத் தொடங்கியது. தனக்கு இருக்கின்ற அகோரப்பசிக்கு இந்தப் பொங்கல் எந்த மூலைக்குக் காணும்? முழுசாகச் சாப்பிட்டால்தான், வயிற்றில் புரளு கின்ற வலி குறைந்து, குடல் நிமிரும்.
அவசரம் அவசரமாகப் பார்சலை மூடி, பன்பைக்குள் திணித்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல நிமிர்ந் தாள்.
மல்லிகை நவம்பர் 2011 & 10

“என்னம்மா, பன்பைக்குள்..?” குஞ்சுத்தம்பி.
"அது ஒண்ணுமில்லடா, வெத்தில பாக்க மடிச்சு வெச்சனான்.”
குஞ்சுத்தம்பிக்கு மூச்சு வாங்கியது. Lu SFNGSuunt?
"அம்மோவ். கல்குவாரில யாரோ வந்து பொங்கல் குடுத்தாங்கம்மா. நீ ரெண்ட நாளா பட்டினியா இருக்கியே. அதுதான் கொண்டு வந்தனான். வாம்மா, ஆளுக்குப் பாதியாகச் சாப் பிடுவோம்.”
அவள் திடுக்கிட்டாள். அவளது மனச்சாட்சி குறுகுறுக்கத் தொடங் கியது. அவனின் பசி அறிந்தும், தனது பசியை மட்டுமே பெரிதுபடுத்திய தனது குறுகிய மனப்பான்மையை நினைத்து குமுறி குமுறி அழத்தொடங்
கினாள்.
"ஏனம்மா அழுகிறாய்?
முக்கிய குறிப்பு :
மல்லிகையின் 47-வது ஆண்டுமலர் தயாராகின்றது.
ஆண்டு மலருக்குக் கதை, கவிதை, கட்டுரை எழுத ஆர்வ முள்ள அத்தனை படைப்பாளிகளும் எழுத்தாளர்களும் இப்போதே தத்தமது படைப்புகள் ஊடாக எம்முடன் தொடர்பு கொள்வது பெரிதும் விரும்பத்தக்கதாகும்.
காலம் கடத்துவதைத் தவிர்த்து, இப்போதே மல்லிகையுடன் தொடர்பு கொள்ள முயற்சியுங்கள்.
மறுபடியும் கேவிக் கேவி அழு தாள். பன்பைக்குள் மறைத்திருந்த சர்க் கரைப் பொங்கல் பார்சலையும் குஞ்சுத் தம்பியின் கைகளில் திணித்து விட்டு,
"நீயே இரண்டையும் சாப்பிடடா ராசா” என்றாள்.
"அப்ப உனக்கு?”
“எனக்கு பசியில்லடா. எனக்கு
இனி பசிக்காதடா.”
குஞ்சுத்தம்பி இரண்டு பொங்கல் பார்சல்களையும் கைகளில் வைத்துக் கொண்டு இரண்டு நாட்களாகப் பட் டினியாக வாடிப்போயிருக்கும் தாயை ஆச்சரியத்தோடு பார்த்தான்.
குஞ்சுத்தம்பியின் பாச உணர்வுக்கு முன் தான் தாழ்ந்து போய்விட்டதாக தலைகுனிந்து நின்றாள். கண்ணிர் பெருகி கன்னங்களில் கோடு இழுத்து நின்றது.
ஆசிரியர்)
மல்லிகை நவம்பர் 2011 & 11

Page 8
அடரக்கு வெரி, சில்லென்று வீசும் காற்று, அங்குமிங்குமாய் அலையும் மனசு, ஆறுதல் சொல்லி தேறுதல் அடைய மறுக்கும் இதயம் இவற்றுக்கு நருவேயும் என்னை முட்டி மோதி வெட்டி வீழ்த்திடத் துடிக்கும் மனச்சஞ்சலங்கள். இவை அனைத்தும் இன்று நேற்றாய் மட்டுரு
என்னோரு பின்தொடர்கின்றஜணு அல்ல.
அக்கு ஒரு ஜீவனால்
என்னோடான 6]ঞাির্টকর্গে உஆடுகளின் வழியே
அரைமனதுடன் நிறுத்தி வைக்கப்பட்ட நார் முதலாய் தொடர்ந்து கொர்கின்றது என்னோடு. இனம் புரியாத சங்கடங்கள் தினம் தினமாய் நீர்கிறது. செவியினுள் புகுந்திட மறுக்கும் அவருக்கே உரித்தான கணிய பேச்சொலிகளுக்காக *வல் கிடக்கிறது நெஞ்சம். பிணங்கரை முட்டுகுே இந்த மார் கண்டதாய்
এ9গঠdলিগ வார்த்தைகளுக்கு மட்டுமே.
- வெற்றிவேல் அஷ்டித்தன்
or.neyGພສ நடைப்பிணங்கரையும் இந்த மார் குன்னில் அலையதிட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றது. அக்கு வகமைக்குர் புகுந்திட இல் ஆகியும் ஆயத்தம் கொர்கிறது. புயல்காற்று கிசினும்,
கடல் அலை ஆர்ப்பரித்து வரினும், என்னை அழிக்கும் 69&ისოდuყtà என்னை வாழவைக்குரு ஆற்றலும் வீரியம் மிக்க
ଔହାrfcff' வார்த்தைகளுக்கு மட்டுமே என்றும் உண்டு.
மல்லிகை நவம்பர் 2011 & 12

நூற்ற்குரீயம் ԱՊ505:յաsձԱյlմ
- ஆப்டீன்
பேராசிரியர் நந்தி வாழ்ந்த காலத்திலேயே அவர் மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய சேவையை ஆராய்ந்து ஒரு நூல் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் மூண்டிருந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ்ச் சங்கத்தில் ஒர் இலக்கியக் கூட்டம் முடிந்து திரும்பும் வேளையில், நந்தி அவர்களுடன் கொட்டாஞ்சேனை வரைக்கும் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் அரிய வாய்ப்புக்
கிடைத்தது. மனம் மகிழ்ந்தேன். என்னுடன் நாவல் நகர் நண்பர் கே.பொன்னுத்துரையும் இருந்தார். இச்சந்தரப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு "நாவல் நகரில் நந்தி சந்திப்புகள்” நூலாக்கம் பற்றிக் குறிப்பிட்டு அபிப்பிராயம் கேட்டேன்.
அவர் சற்று நேரம் மெளனித்து விட்டுச் “சரி உங்கள் விருப்பம். சந்திப்புகள் நல்ல தலைப்பு” என்று கூறினார்.
நாம் மிகுந்த ஆர்வத்தோடு அவர்களது வார்த்தைகளை உள்ளூர ஓர் அங்கீகார மாகவே ஏற்று, நூல் வெளியிடத் திட்டமிடத் தொடங்கினோம். காலம் மிக வேகமாகக் கடந்து கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் மருத்துவப் பேராசிரியரும், நாடு போற்றும் பேராற்றல் வாய்ந்த மூத்த இலக்கியப் படைப்பாளியுமான நந்தி காலமானார் என்று தினகரன் நாளிதழ் தன் முன்பக்கத்தில் சுமந்து வந்த சோகச் செய்தி, இலக்கிய நெஞ்சங்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.
அடிக்கடி வைத்திய பரிசோதனைகளுக்காகக் கொழும்பு வந்து யாழ் திரும்பிய போதெல்லாம் நாம் பேராசிரியரைச் சந்தித்து சுகம் விசாரித்து உரையாடத் தவறுவ தில்லை.
தனது உடல் நலத்தைப் பொருட்படுத்தாமல் ஓயாது இலக்கிய முயற்சிகளிலேயே
ஈடுபட்டுக்கொண்டிருந்தார், அவர்.
மல்லிகை நவம்பர் 2011 & 13

Page 9
தமிழுலகம் போற்றும் திருக்குறள் நூலைப் புதிய முறையில் ஆய்வதிலும், அவரது நண்பர்கள் இணைந்து வெளி யிடத் திட்டமிட்டிருக்கும் அவரது சிறு கதைத் தொகுப்பிலும், சமயங்கள் சம்பந்த மான ஓர் ஆய்விலும் தனது முழுக்கவனத் தையும் செலுத்திக் கொண்டிருந்தார். அவ ரது விருப்பப்படி சமய மேற்கோள் காட்டு வதற்காகப் புனித திருக்குர் ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றை கொட்டாஞ் சேனையில் நானும் நண்பர்கள், கே.பொன் னுத்துரையும், மேமன் கவியும், முரீதர்சிங் ஆகியோரும் நேரடியாகச் சந்தித்துக் கை யளித்தோம்.
எனது புகைப்படம் மல்லிகை அட்டையில் வெளியிடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அட்டைப்பட அறிமுகக் கட்டுரையை நந்தி அவர்கள்தான் எழுத வேண்டும் என்ற முடிவு செய்து, அவர்களுக்கும் அறி வித்திருந்தேன்.
ஒரு மாதத்திற்குப் பிறகு காலை 7.00 மணியளவில் தொலைபேசி அலறியது.
துரைவி பதிப்பகத்திற்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்த நான் ரிஸி வரை எடுத்தேன். மறுமுனையில் நந்தி பேசினார்.
". தம்பி உம்மைப் பற்றிய அறிமுகக் கட்டுரையை எழுதி விட்டேன். அதை எழுதுவதில் மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டொரு நாட்களில் உமக்குத் தபாலில் வந்து சேரும், கிடைத்தவுடன் தொடர்பு கொள்ளவும்.” அதைப் படித்ததும் புல்லரித்துப் போய்விட்டது. அதுதான் அவ
ரது வாழ்நாளில் எழுதிய இறுதி இலக்கியக் கட்டுரையாக இருக்குமோ என்று இப் பொழுது யோசித்துப் பார்க்கிறேன்.
மொழி எழுதுவது பேராசிரியர் நந்தியின் உயர் பண்பு. இந்த உயர் பண்பு இன்றைய இலக்கியவாதிகள் பலருக்கில்லை.
ஒரிரு மாதங்களில் மீண்டும் கொழும் புக்கு வருவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
இனி நந்தி அண்ணாவை எப்பொழுது சந்திக்கப் போகிறோம்?
அந்த அறிமுகக் கட்டுரையை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்கிறேன்.
'தம்பி ஆப்டீன், உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என்று அழுத்தமாக எழுதி அடியில் கோடிடப்பட்டிருந்த வரிகள் என் மனதை உலுக்கி விட்டது.
அவரது இறுதி யாத்திரைக்கு முன் எழுதப்பட்ட வரிகளா அவை
பேராசிரியர் நந்தி அண்ணாவை நான் முதன் முதலில் எப்பொழுது சந்தித்தேன் என்று சற்றுப் பின்னோக்கிச் சிந்தித்துப் பார்க்கிறேன்.
இலக்கிய ஆர்வம் மிகுந்த கால கட்டம் அது
கதைகள் எழுதி முடிந்ததும் இலக் கிய நண்பர்களுக்குப் படித்துக் காட்டி, அவர்களது கண்ணோட்டத்தில் கருத்துக் களைப் பெற வேண்டும் என்ற வகையில், நண்பர் இர.சந்திரகேசகர சர்மாவின் இல் லத்தில், "இலக்கியக் கனதி” மிக்க அந்தப்
மல்லிகை நவம்பர் 2011 & 14

புனிதமான மேன்மாடி அறைதான் இன் றும் என் ஞாபகத்தில் பசுமையாக இருக் நண்பர் இர.சந்திரசேகரன் அவர் கள் எனது ஆரம்ப காலச் சிறுகதைகளை ஆழ்ந்து படித்துவிட்டு, திருத்தங்கள் செய்து ஆலோசனைகள் வழங்கிப் பெரிதும் உற் சாகமூட்டியும், தனது கலைமகள் பதிப்ப கத்தில் என்னையும் ஓர் உறுப்பினராக்கி, நிறைய நூல்களை அவர் தந்து (மு.வ. தி.மு.க.நூல்கள்) படிக்கச் செய்தது அந்தப் பொற்காலத்தில்தான்.
தமிழ்நாட்டின் குமுதம் சஞ்சிகை யில் நந்தி அவர்களின் 'யானையின் காலடியில் சிறுகதை பிரசுரமாகிப் பரபரப் பாகப் பேசப்பட்டிருந்த கட்டத்தில், அந்தச் சிறுகதையை மிகவும் ரசித்துப் படித்ததன் தூண்டுதலால், “குமுதத்தில் கதை எழு திய ஆசிரியர் இங்கேதான், எம்.ஓ.எச். ஆக வந்திருக்கிறார்.” என்ற இனிமையான செய்தியைக் கேட்டதும், நானும் நண்பர் களும் நந்தி அவர்களைச் சந்திக்கச் சென்றோம்.
அதுவே எங்கள் முதல் சந்திப்பு.
சந்தித்த இடம் நாவலப்பிட்டி சென்றல் ஹோட்டல். காத்திரமான இலக்கியச் சந்திப்பு. அதற்குப் பின் வாரமொரு முறை என்றும், மாதமொரு முறை என்றும் கலந் துரையாடல்கள் தொடர்ந்தன.
அப்பொழுது எஸ்.எஸ்.சி. இறுதி யாண்டு மாணவர்களாய் இருந்தோம். நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் நெகிழ் கிறது.
சரியாக நாற்பத்தைந்து நீண்ட வருடங்களுக்கு முன் நாம் இலக்கிய
அண்ணா - தம்பி முறையில் அறிமுகமா யிருந்தோம்.
சொல்லப் போனால், நாவலப்பிட்டி ulsio 1958, 1959, 1960 aEmreso assat56ń6üo எழுத்தாளர் பேராசிரியர் நந்தி சந்திப்புகள் மிக முக்கியமான திருப்பங்கள். ஒரு புதிய உத்வேகத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ஒவ்வொரு சந்திப்பும் ஒவ்வொரு பயிற்சிப் ul-L-60).
"பதுளை, நாவலப்பிட்டி, ஹற்றன், கண்டி, மாத்தளை ஆகிய பகுதிகளில் இளம் எழுத்தாளர் சங்கங்கள் தோன்றி வருதல் மலையகத்தின் இலக்கிய விழிப் புணர்ச்சியைக் காட்டுகிறது.’ என்று மறைந்த கனக செந்திநாதன் தமது ஈழத்து இலக்கிய வளர்ச்சி' என்னும் நூலில் குறிப் பிட்டுள்ளார். மலையகத்தில் பேராசிரியர் நந்தி அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஊர் நாவலப்பிட்டியாகும். நாவலப்பிட்டிக் கும், சுற்று வட்டாரத்திற்கும் அவர் ஆற்றிய வைத்திய சேவையும், இலக்கிய சேவை யும் இன்றும் விதந்து பேசப்படுகிறது. இன் றும் நாவலப்பிட்டியில் நந்தி காலம் என இன்றைய இளைய சந்ததி வர்ணிக்கிறது.
1960இல் கவிஞர் பி.மகாலிங்கம் (மாலி) நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்கத்தை ‘தமிழகம் என்னும் தமது இல் லத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைத் தார். நண்பர்கள் கவிஞர் மாலி, இர.சந்திர சேகர சர்மா, ப. ஆப்டீன், எஸ்.சந்தனப் பிச்சை, நூர் முஹம்மது (கவிஞர் வழுத் தூர் ஒளியேந்தி), “செங்கதிர் ஆசிரியர் சு.பிரேமசம்பு, பெ.இராமானுஜம், மிகவும் பிந்தி வந்து எம்முடன் இணைந்த புதிய தலைமுறையினர் கே.வேலாயுதம்,
மல்லிகை நவம்பர் 2011 & 15

Page 10
கே.பொன்னுத்துரை போன்றவர்களின் இலக்கியச் சந்திப்புகளும் கருத்துப் பரி மாறல்களும் அடிக்கடி நிகழ்ந்தன. நெருக் கமான பழக்கமும் தேறியது. எந்நேரமும் இலக்கியத்தில் மூழ்கும் வாய்ப்பும் கனிந்தது.
நந்தி சந்திப்புகள் ஆக்கபூர்வமான இலக்கியப் படைப்புகள் தோன்றவும், என்னைப் பொறுத்தவரையில் அவரது ஊக்குவிப்பு ஏற்கனவே என்னுள் சுடர் விட்டுக் கொண்டிருந்த இலக்கிய முனைப் பிற்கு ஒரு புதிய திருப்பத்தையும், எனது சிந்தனையில் ஒரு புதிய திருப்பத்தையும், ஒரு புதிய சமூகப் பார்வையையும் தெளி வையும் மலரச் செய்தன.
பெரும்பாலும் தமிழ்நாட்டின் நூல் களிலும், சஞ்சிகைகளிலும் மூழ்கியிருந்த எங்களுக்கு, நம் நாட்டு எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார் நந்தி, ஆத்ம ஜோதி நிலையத்திலும், சென்றல் ஹோட்டலிலும் ஆக்க இலக்கியம் பற்றி முக்கியமாக கே.டானியல், டொமினிக் ஜீவா, அ.முத்து லிங்கம், காவலூர் ராஜதுரை, நீர்வை பொன்னையன் போன்றோரது படைப்புகள் பற்றிக் கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.
இப்படியாக எங்கள் முழுக் கவனத் தையும் இரசனையையும் ஈழத்து இலக்கி யத்தின்பால் திசை திருப்பிவிட்டவர், நந்தி அண்ணா அவர்களே! எனவேதான் அவ ரது இலக்கியச் செல்நெறியை ஆராதிக்க முனைந்தேன்.
நான் எழுதிய குடிசையில் ஒலித்த பாசக்குரல் சிறுகதையைப் பாராட்டினார்.
எழுதிய பின் ஒரு கதையைக் குறைந் தது ஒருமாத காலமாவது ஊறப்போபுடு, மீண்டும் வாசித்து மெருகேற்ற ವಿ. என்பது நந்தி அவர்கள் கற்றுக்கொடுத்த பாடங்களில் ஒன்று. அதை இன்றும் பின் பற்றுகிறேன்.
அடிக்கடி நிகழும் இலக்கியச் சந்திப் புக்களிலும் திறனாய்வுக் கருத்துப் பரி மாறல்களிலும் டொமினிக் ஜீவா அவர் களின் சிறுகதைத் தொகுப்புகள் இடம் பெறும். 'தண்ணிரும் கண்ணீரும், பாதுகை, போன்ற தொகுப்புகள் வெறு மனே படித்து அலுமாரிக்குள் அடக்கி விடா மல், பாடப் புத்தகங்கள் போல் அடிக்கடி எழுத்தெண்ணிப் படிக்கப்பட வேண்டி
6)6.
மலைக்கொழுந்து', நாவலின் கதா நாயகன் மூலம், இது என் கதை, இது என் னுடன் கூடி வாழும் வள்ளி, வீராயி, காத் தான், ரங்கசாமி மாமா, சிதம்பரம் கங் காணி, மீனாட்சிப் பாட்டி முதலிய பல தோட்டத் தொழிலாளர்களாகிய எங்களின்
8660) 5...
இது எனது இலங்கையின் மலை நாட்டுக் கதை. எனது மூதாதையரின் எலும்புரத்திலே வேர் விட்டுச் செழித்து வளர்ந்து, செல்வப் பசுங்கொழுந்துகளைத் தளிர்விடும் தேயிலைச் செடிகள் இதில் பேசுகின்றன.”
மலைக்கொழுந்து' என்னும் தனது முதல் நாவலின் உள்ளடக்கத்தைப் பற்றி அறிமுகப்படுத்தும் நந்தி அவர்கள், இந் நாவலைத் தத்ரூபமாகப் படைக்கும் நோக் கத்தோடு மலையகத்தின் மிக முக்கிய இடங்களுக்கெல்லாம் சுற்றுலாக்களை
மல்லிகை நவம்பர் 2011 & 16

மேற்கொண்டுள்ளார். நாவலப்பிட்டியி லிருந்து கண்டி, ஹற்றன், டிக்கோயா, மஸ்கெலியா போன்ற இடங்களுக்குச் சென்று தோட்டத் தொழிலாளர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடியுள்ளார். மலைக்கொழுந்து நாவலில் நடமாடும் கதாநாயகன் மலையப்பன், முத்துவீராயி, வள்ளி போன்றோர்களெல்லாம் வெறும் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார், நந்தி. இந்த இலக்கிய ஊட்டல்களால், நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர்களுக்கு டொமினிக் ஜீவாவைச் சந்திக்கும் ஆவல் பெருக் கெடுத்தது. இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தைச் சார்ந்த பல எழுத் தாளர்களின் தொடர்பும் கிடைத்தது.
1963ம் ஆண்டு இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நாவலப் பிட்டிக் கிளை அங்குரார்ப்பணம் செய்து
வைக்கப்பட்டது.
இ.மு.எ.ச.வின் தேசிய சபை உறுப் பினர்களான பேராசிரியர் நந்தி, திரு. ஈழத் துச் சோமு, திரு. டொமினிக் ஜீவா ஆகி யோரும், திருமதி. பத்மா சோமகாந்தன் அவர்களும் கலந்துகொண்டனர்.
“மக்கள் இலக்கியம் படைக்கும் மலையக எழுத்தாளர்கள் இ.மு.எ.ச.வில் சேர்வது இயல்பே. நாவலப்பிட்டியில் கிளை தோன்றும் இந்த நாள் நமது இலக் கிய வளர்ச்சியில் ஒரு மைல் கல்..” என்று நந்தி அன்று குறிப்பிட்டார்.
பேராசிரியர் நாவலப்பிட்டியில் சேவை யாற்றிய போதே, 1964ஆம் ஆண்டு சாஹறித்திய மண்டலப் பரிசு பெற்ற மலைக்கொழுந்து நாவல் உருவாகியது.
கவர்ச்சியான வசன நடை. பல அத்தியா யங்களை எனக்கும் நண்பர்களுக்கும் படித்துக் காட்டினார். இந்நாவலின் பிந்திய அத்தியாயங்களில் என்னையும் நண்பர் களையும் குட்டிப் பாத்திரங்களாக நடமாட விட்டிருக்கிறார், நந்தி. எனது தமிழ் வசன நடையைப் பாராட்டி ஊக்குவித்திருக் கிறார். நாம் அடைந்த மகிழ்ச்சிக்கும், இலக்கிய ஆர்வத்திற்கும் அளவே இருக்க வில்லை.
பல ஆண்டுகளுக்கு முன் நந்தியும் மலையகமும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி, நந்தி மணிவிழா மலருக்கு அனுப்பியிருந்தேன். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அந்தக் கட்டுரை அந்தத் தொகுப்பில் இடம்பெற வில்லை. நீண்ட இடைவெளிக்குப் பின் பிரேம்ஜி அவர்களின் வேண்டுகோளுக் இ.மு.எ.ச.வின் ‘புதுமை இலக்கியம்’ இதழுக்காகப் பேராசிரி யருடன் ஒரு நேர்காணலை ஒழுங்கு செய் திருந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் அந்தக் கட்டுரை பெரிதும் கைகொடுத்தது.
கிணங்க
‘நேர்காணல் கட்டுரை பேராசிரியர் நந்திக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
மேல்நாட்டு ஆக்க இலக்கியத்துடன் நம் நாட்டு நவீன இலக்கியத்தை ஒப்பிட்டு மனந்திறந்து தமது கருத்துக்களை வெளி யிட்டுள்ளார் நந்தி. அவரது கருத்துக்களில் ஆழ்ந்த அனுபவமும் தெளிவும் பளிச் சிட்டன. ஒருமுறை தமிழ்நாட்டிற்குச் சென்று திரும்பியதும், அவர் வெளியிட்ட கருத்துக்கள் இன்றும் என் மனதில் பசுமையாகவே இருக்கின்றன.
மல்லிகை நவம்பர் 2011 & 17

Page 11
”தமிழ்நாட்டில் தமிழ்மொழியை நூற் றுக்கு ஐம்பது வீதத்தினரே தெளிவாகப் பேசுகின்றனர். ஏனையோர் பேசும்போது வேற்றுமொழிகள் குறிப்பாக ஆங்கில மொழிச் சொற்களையேப் பிரயோகிக் கின்றனர்’ என்று குறிப்பிட்ட நந்தி அவர்கள்.
ஒரு இலக்கியக் கூட்டத்தில் நந்தி தமிழில் பேசியபோது ஒருவர், "சார் கன் னடம் எனக்கு விளங்காது. தமிழில் பேசுங்கள்.” என்று கூறினாராம்.
'தமிழகத்தில் தமிழ்மொழியின் நிலைமை இவ்வாறு இருக்கிறது. எமது மொழியை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழ்ச் சொற்களைப் பெருக்க வேண்டும். புதிய தமிழ்ச் சொற்கள் அகராதியில் இடம் பெற வேண்டும்.” என்பது பேராசிரியரின் கட்டித்த இலட்சியம்.
ஆங்கிலம் உலகளாவிய மொழியாக நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. எண்ணங் கள் வெளிப்படுத்துவதற்கு எவ்விதத் தடை யுமிராது. ஆனால், தமிழ்மொழியின் சொல் வளம் போதியளவு பெருகவில்லை என்பதும் நந்தியின் கருத்து.
பேராசிரியர் நந்தி இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ் கிளைத் தலைவராய் இருந்தும், அதன் முக்கிய பிரமுகர்களில் ஒருவராய் இருந் தும் வழிநடத்திச் சென்றுள்ளார். ஈழத்து இலக்கியத்தைச் செம்மைப்படுத்தினார். 'திட்டமிட்ட இலக்கிய முயற்சிகள் மூலம் சமுதாயத்தை ஒரளவேனும் மாற்ற முடியும். அதற்குச் சிந்தனையாளர்கள், அனுபவ சாலிகள், திறமையானவர்கள் எழுத்துத் துறையில் இறங்க வேண்டும்”
என்பது பேராசிரியரின் மணிக் கருத்து. இதனை ஒரு பேட்டியில் தெளிவுபடுத்தி யுள்ளார். இதன் மூலம் மானுடநேயம் மிக்க நந்தி அவர்களின் படைப்பிலக்கிய நோக்கம் நன்கு புலனாகின்றது.
அதேநேரத்தில் "இலக்கியப் படைப்பு களில் பச்சைப் பிரசாரம் வீசினால், அது இலக்கியமாகாது” என்னும் கருத்துடை யவர் நந்தி, பேராசிரியர் நந்தி தொழில் ரீதி யாக நாட்டின் பல பாகங்களிலும் சேவை யாற்றியுள்ளார். செல்லுமிடமெல்லாம் இலக்கியவாதிகளையும், இலக்கிய ஆர் வலர்களையும் இனங்கண்டு இலக்கியச் சந்திப்புக்களை நடத்தியுள்ளார். “கிராமந் தோறும் இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் இலக்கியக் கொள்கை கோட்பாடுகளைப் பரவச் செய்தல்” என் னும் கருத்தை நடைமுறைப்படுத்துவதில் திறம்படச் செயற்பட்டிருக்கிறார். தேவை யான இடங்களில் ஊக்குவித்து, உற்சாக மூட்டியுள்ளார். இதற்குச் சிறந்த உதாரண மாக, நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர்கள் நிறையப் படிக்க வேண்டும். தாம் படிக்கப் போகும் நவீன இலக்கிய நூல்களை தெரிவு செய்ய வேண்டும் என நெறிப்படுத்தி இருக்கிறார்.
நாவலப்பிட்டியில் நந்தி காலம்' என் பது மூன்று ஆண்டுகள். ஆனால், அதற் குப் பின் இறுதிவரைக்கும் நீடித்த கடிதத் தொடர்புகளும், இடைக்கிடை நிகழ்ந்த சந்திப்புக்களும்தான் 'நந்தி காலத்திற்கு வலுவூட்டியிருக்கின்றன.
கொழும்பிலிருந்து நானும் மேமன்கவி யும், மலையகத்திலிருந்து அந்தனி ஜீவாவின் தலைமையில் மலையகத்
மல்லிகை நவம்பர் 2011 & 18

நூதுக் குழுவினரும், யாழ் இலக்கிய வட் டப் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தோம். பரிசு பெறும் எங்களை வாழ்த்துவதற்காக நந்தி வந்திருந்தார்.
நண்பர் அந்தனி ஜீவா அவர்களின் ஏற்பாட்டில் மலையகத் தூதுக் குழுவினர் சார்பில் நந்தி அவர்களுக்குப் பொன் னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டது. பின்னர் நந்தி அவர்களுடன் இருந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டோம்.
'நந்தி அண்ணாவுடன் நிகழ்ந்த ஒவ் வொரு சந்திப்பும் ஒருவொரு திருப்பு முனை.
“சிறுகதையில் அதன் கரு முக்கிய மானது. மூலக்கருவுக்குப் பொருத்தமில் லாத சம்பவங்களைப் புகுத்தி வாசகருக்கு மயக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. கரு பளிங்கு போல் துலங்க வேண்டும்.
நல்ல சிறுகதைகளில் பொருத்தமில் லாத உத்தி முறைகளைக் கையாள்வ தாலும், அவற்றின் தனித்துவத்தையும், இயல்பையும் இழந்து விடுவதையும் பார்க்கிறோம்.” இந்தக் கருத்துக்களை அடிக்கடி வெளியிடுவார்.
நானும் நண்பர்களும் நந்தி அவர் களைச் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் ஒரு குறிப்புப் புத்தகத்தையும் எடுத்துச் செல்லத் தவறுவதில்லை. நாங்கள் 04.11.1993இல் கொழும்பு கொட்டாஞ் சேனையில் நந்தி அவர்களைச் சந்திக்கச் சென்ற போது, ஒரு நாவல் எழுதும்படி என்னைத் தூண்டினார்.
சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இந்தச் சந்திப்பில் "ஒரு நாவல் எழுதுவது
எப்படி?” என்னும் பொருள் பற்றித்தான் கருத்துக்கள் இடம்பெற்றன. நல்ல பல ஆலோசனைகள் வழங்கினார்.
திட்டமிட்ட நாவலை அத்தியாயங் களாகப் பிரிப்பது முதல் வேலை. பின் னால் அத்தியாயங்களின் பகுதிகளையோ, அத்தியாயங்களையோ மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்.
நாவலில் எத்தனை பாத்திரங்கள் நட மாடப் போகின்றன என்று தீர்மானித்து ஒவ் வொருவரைப் பற்றிய குறிப்புகளை எழுதிக் கொள்ள வேண்டும். குணாதியங்கள், நிறம், உயரம், மன இயல்புகள் முதலிய வற்றை எழுதி அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நுணுக்க மான அவதானப் பார்வை மிக முக்கியம்.
நல்ல தமிழ், புதுமையான தமிழ் மொழிப் வேண்டும். ஆசிரிய மொழிப் பிரயோகம் தூய்மையாக இருத்தல் அவசியம். பாத்தி ரங்கள் பேசும்போது மட்டும் ஒரளவு பிரதேச மொழி தேவை. இவ்வாறான ஒர் அடிப்படை அறிவுடன்தான் நாவல் எழுதத் தொடங்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக உள்
பிரயோகத்தைக் கையாள
வாங்கிக் கொண்டோம்.
தமிழ்நாட்டிலிருந்தும், இலங்கையி லிருந்தும் பல நாவல்களைத் தெரிவு செய்து அவற்றைக் கட்டாயம் தேடிப் படிக்க வேண்டும் என்றும் நந்தி அண்ணா ஆலோ சனைகள் வழங்கினார்.
‘இனி எமது இலக்கிய முயற்சி களுக்கு அவ்வப்போது ஆத்மசுத்தியுடன் ஆலோசனைகள் கூறி வழி நடத்துவதற்கு நந்தி அண்ணா எம்மோடு இல்லையே!” என்று நினைக்கும் போதுதான் எமது
மல்லிகை நவம்பர் 2011 & 19

Page 12
நெஞ்சங்கள் நெகிழ்கின்றன. நந்தி இலக் கிய உலகில் ஆழப் பதிந்து விட்ட பெயர். அவரது படைப்புகளில் முற்போக்குக் கருத் துக்களும், மனித நேயமும் முக்கியத்துவம் பெறும். எப்பொருளையும் எளிமையாக, ஒரு புதிய கோணத்திலிருந்து, புதிய தமிழில் படைத்தவர். எமது மண்ணை உணர்வு பூர்வமாகப் பிரதி பலிக்க வேண்டும் என்று சிந்தித்தவர்.
அவர் எழுதிய நூல்களைப் பற்றிய விபரங்கள் பல கட்டுரைகளில் இடம்பெற் றிருந்தாலும், இளைய தலைமுறையினர் படிக்க வேண்டும் என்ற நோக்கில் அவற்றை மீண்டும் இக்கட்டுரையிலும் வரிசைப்படுத்துகின்றோம்.
நாவல்கள்
1. மலைக்கொழுந்து 1964 2. தங்கச்சியம்மா 1977
3. நம்பிக்கைகள் 1988 சிறுகதைத் தொகுப்புகள்
1. D6Tr 5b quom ? 1966
2. கண்களுக்கு அப்பால் 1984 3. நந்தியின் கதைகள் 1994
4. தரிசனம் 2002
நாடகம்
1. குரங்குகள் 1975 சிறுவர் நூல்கள்
1. உங்களைப் பற்றி 1973 2. தம்பி தங்கைக்கு மருத்துவம்
1. அன்புள்ள தங்கைக்கு 1960 2. அன்புள்ள நந்தினி 1973
3. நந்தினி, உன் குழந்தை 1973 4. இதய நோய்களும் தடுப்பும்
இவை தவிர ஆத்மீகம் சார்ந்த நூல் as6061Tuub, "Learning Research' 6T66TD பெயரில் வைத்திய மாணவர்களுக்காக ஒரு நூலையும் எழுதியுள்ளார்.
சிறுகதை, நாவல் இலக்கியத் துறை யில் பேராசிரியர் நந்தி பதித்துள்ள சுவடுகள், சாதனைகள் பற்றி அவரது நாவல்களும், சிறுகதைத் தொகுப்புகளும் என்றென்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.
நந்தி மறைந்த பிறகு எமது நூல் வெளி யிடும் எண்ணம் புதிய உத்வேகத்தில் வலுவடைந்தது. மலையகத்தில் நந்தியுடன் மிக நெருக்கமாகப் பழகிய நண்பர்களுக் குக் கடிதம் எழுதினோம். நந்தியின் மிக நெருங்கிய நண்பர் சாரல்நாடன் பாராட்டுக் கடிதத்துடன் கட்டுரை அனுப்பி எம்மை உற்சாகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து கட்டுரைகள் அஞ்சலிலும், நேரடியாகவும் வந்துசேரத் தொடங்கின.
மலையகம் ஒரு பின்தங்கிய பிரதேசம், இது பல தசாப்தங்களாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு கருத்து. ஆனால், இதனை மிகத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால், மலையகம் காலம் காலமாக, பல்வேறு துறைகளின் ஊடாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்து வந்துள்ளதை மிகத் தெளிவாக அவதானிக்க முடியும்,
குறிப்பாகக் கல்வி, கலை, இலக்கிய, மருத்துவ மற்றும் பொதுத்துறைகளில் மலையகப் பிரதேசத்தில் தோன்றியவர் களால் ஏற்பட்ட மாற்றங்களுக்கு, வெளிப் பிரதேசங்களிலிருந்து மலையகத்தில் சேவையாற்ற வந்தவர்கள் ஆற்றிய பங்
மல்லிகை நவம்பர் 2011 奉 20

களிப்பு மகத்தானதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு அளப்பரிய பங்களிப்புச் செய்த வர்களில் பெரும்பாலானோர், கலை இலக் கியத்துறைகளில் மிகுந்த ஈடுபாடுடையவர் களாகக் கருதப்படுகின்றனர். அவ்வாறு அளப்பரிய பங்களிப்புச் செய்தவர்களில் பெரும்பாலானோர் கலை இலக்கியத்துறை களில் மிகுந்த ஈடுபாடுடையவர்களாக இருந் தமை மலையக மக்களுக்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக அமைந்ததை நாம் மிகத் தெளிவாக அவதானித்து வந்துள்ளோம்.
இதற்கு உதாரணமாக வெளிப் பிரதேசங்களைச் சார்ந்த ஆசிரியர்கள் பரிச் சயமான கலை இலக்கியவாதிகளாக இருந் தமையைக் குறிப்பிடலாம். இதற்கு அடுத்த படியான ஒரு எடுத்துக்காட்டாக வைத்தியத் துறையைச் சுட்டிக்காட்டலாம். இந்த மருத் துவத்துறையைச் சார்ந்தவர்களில் மறைந்த டாக்டர் நந்தி, டாக்டர் சதாசிவம், டாக்டர் ஞானசேகரன் போன்றோரைக் குறிப்பிட லாம். இந்த வரிசையில் முதன்மையாகக் குறிப்பிட வேண்டிய தகுதி டாக்டர் நந்தி அவர்களையே சாரும். டாக்டர் நந்தி மலை யகப் பிரதேசங்களில் கடமையாற்ற வந்த காலகட்டம் மிக முக்கியமானது.
1958க்கு முன்பும் நாவல் நகரில் நவீன இலக்கிய முயற்சிகள் நடைபெற்ற வண்ண மிருந்தன. ஆனால், அவை பெரும்பாலும் ஆழமான கருத்துக்களைத் தொனிக்கும் கட்டுரைகளாகவும், மரபுக் கவிதைகளா கவும்தான் வளர்ச்சி பெற்றிருந்தன என லாம். ஆன்மீகத் துறை சம்பந்தமான கட்டு ரைகளும் நாளிதழ்களில் பிரசுரமாகிக் கொண்டிருந்த காலகட்டம் அது
இத்தகைய ஒரு சூழ்நிலையில் நாவல் நகரில் முற்போக்குச் சிந்தனை சார்ந்த
ஆக்கவிலக்கியம் 1959ல் டாக்டர் நந்தியின் வருகைக்குப் பின்னரே வளர்ச்சியடையத் தொடங்கியது.
கிராமந் தோறும் மக்கள் இலக்கிய விழிப்புணர்ச்சியைத் தோற்றுவிக்க வேண்டு மென்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியக் கொள்கையை டாக்டர் நந்தி செவ்வனே நிறைவேற்றினார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம், டொமினிக் ஜீவா, திரு. திரு மதி. சோமகாந்தன், சொக்கன் முதலியோ ருடன் தொடர்பு கொண்டு நாவல் நகரில் இ. மு.எ.ச.வின் கிளையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இது நாவலப்பிட்டியின் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய திருப்பு முனையாகும்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் அக்கால கட்டத்தில்தான் மண்வாசனை, பிரதேச இலக்கியம் போன்ற சிந்தனை களைப் பரவலாக்க வேண்டிய ஒரு தேவை முகிழ்ந்திருந்தது. இந்தத் தேவையை மலையக மண்ணில் வேரூன்றச் செய்வ தற்கு ஒரு தனி மனிதனாக நின்று, ஒரு இயக்கத்தின் பண்புகளோடு நந்தி அவர்கள் செயற்பட்டார்.
இதன் காரணமாகத்தான் பேராசிரியர் நந்தியும் மலையகமும் என்று சிந்திக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியது. அவ் வாறு நாங்கள் சிந்தித்த போது, நந்தியின் பணியானது காலத்தால் சுருங்கினாலும் கூட, மேற்குறித்த சிந்தனையின் பின்னணி யில் நாவல் நகர் இலக்கிய வரலாற்றில் நந்திக் காலம் என்று ஒரு சிறிய காலப் பகுதி அடையாளமாகக் கருதப்படுகின்றது.
மல்லிகை நவம்பர் 2011 & 21

Page 13
எனவேதான், நந்தி அவர்கள் மலையகத் திற்கு ஆற்றிய அரும்பணியை ஆவண மாக்க வேண்டிய தேவை இருக்கின்றது. தானும் எழுதி மலையக இலக்கிய ஆர் வலர்களையும் எழுதத் தூண்டிய நந்திக் காலத்தை மலையகம் நன்கு அறியும்.
இலக்கியத்துறை, மருத்துவத்துறை என்று பிரிக்காமல், பல கோணங்களிலி ருந்து அவதானித்து, நந்தி மானுடத்தின் குரலைப் பதிவு செய்தவர். அதன் ஆத்ம துடிப்புக்களைப் பதிகை செய்தவர். அற்புத மான மனிதர் என்று பேராசிரியர் கா.சிவத் தம்பி, நந்தியின் ஆளுமைப் பண்புகளை அடையாளப்படுத்திக் காட்டியிருப்பதை நாம் ஒரு கணம் ஞாபகப்படுத்திப் பார்க் கிறோம்.
f. R. R. IR DR6CSS6CRS
89, Church Road, Mattakuliya, Colombo - 15. Tel: 0112527219
முற்றிலும் குளிரூபிடப் பெற்ற சலூன்
மலையகத்தில் நந்தி அவர்கள் ஆற் றிய சேவையை வெறுமனே தகவல் மட்டத் தில் அறிந்தவர்களிடமிருந்து மட்டுமன்றி, முதன்மையாக நந்தி அவர்களுடன் நெருங் கிப் பழகி, உறவாடிய மலையக அன்பர் களிடமிருந்தும் ஆக்கங்களைப் பெற்று, பேராசிரியர் நந்தியும் மலையகமும் என் னும் இத்தொகுப்பில் சேர்க்க வேண்டு மென்று முடிவெடுத்தோம். அறுபதுகளில் முகிழ்ந்த மலையக இலக்கிய மறுமலர்ச்சி இன்று தனித்துவம் பெற்றுத் திகழ்வதற்கு நந்தி அவர்களின் ஆரம்பகால ஊக்குவிப்பு கள் அடிப்படையாக இருந்தன என்பதில் ஐயமில்லை. இத்தொகுப்பில் அடங்கியுள்ள ஆக்கங்கள் நந்தி அவர்கள் ஒரு தனிமனித னாகவும், ஒரு இயக்கமாகவும் இயங்கிய பாங்கினைத் துல்லியமாகச் சித்திரித்துக் காட்டுகின்றன.
மல்லிகை நவம்பர் 2011 & 22
 

6lled gold
- அன்புடீன்
ஒரு கோப்பையளவுதான் இரசனை அதன் பின் மேலதிக இருப்பு பூ மலர்ந்து பின் உதிர்ந்து.
கண்காணா தேசம் போன அவர்கள் இன்பத்திலா? துன்பத்திலா? காற்றை கண்ணால் காணமுடியாதுதான் தழுவலையுமா உணர முடியாது? காணாததைக் கண்டு நிசம் கொள்வது வாழ்வின் நிதர்சனம்
இருவர் இணைப்பின் இலச்சினை அதற்குள் இருந்து வெளிப்படும் உயிரின் உருவம்
அணுக்களின் அபார வளர்ச்சி, மனிதன்!
சாபம் உண்டாகட்டும் நரகவாசிகள் மீது ரகசியப் பேச்சும்
பரகசியப் பேச்சும் அறிந்தோர் அமரத்துவம் அவனே. பூமி வசம் எல்லோருக்குமே
அதை வசப்படுத்தி வாழவே அழைப்பு போனவர்கள் வருவதில்லை வந்தவர்கள்தான் போவார்கள்,
மீண்டும் மீண்டும்.
மல்லிகை நவம்பர் 2011 & 23

Page 14
சந்தோஷமற்ற, துக்கம் நீண்டு கதைத்துக்கொண்டிருக்கின்ற, மந்தமான சோபையிழந்த ஒர் இளம் காலைப்பொழுதில் ரமாவை வார்த்தைகளால், வறுத் தெடுப்பதற்கென்றே திடுமென்ற நேர்ந்த மாமியின் வருகை, அவளை ஒரு மையப் புள்ளியில் கொண்டுபோய் நிறுத்திவிட்டிருந்தது. மாமி எப்போதும் வீடு தேடி வருவது உறவு கொண்டாடவல்ல. அன்பு அபிரிதமான இந்த உறவு நிலைக்கப் பால், ஆழ ஊடுருவும் அவள் பார்வை நிழல், வெறும் வரட்சிச் சங்கதிகளிலேயே பொறி தட்டி நிலைகொண்டிருப்பதாய் ரமா உணர்வதுண்டு. அது அவளின் இயல்பான சுபாவம். மூர்க்கமான கடும்போக்கு அவளுக்கு.
ரமாவுக்கு அப்போது வாழ்க்கையின் அடிநாதமே ஸ்தம்பித்து விட்டாற் போன்றதொரு வறண்ட நிலைமை. ஒட முடியாமல், நகர முடியாமல், நிகழ்ந்த தேக்கச் சுவடுகள் நடுவே, அவள் மிகவும் செல்லரித்துப் போயிருந்தாள். ஒட்டாத கணவனுடன், ஒன்றுகூடிக் குடும்பம் நடத்தியதன் விளைவாய், மனம் கனக்கின்ற சுமைகள் ஒன்று இரண்டல்ல, நான்கு குழந்தைகள். கடைசிக் குழந்தை கைக் குழந்தை. ஒரு கிழமையாய் வயிற்றோட்டமாகி, வாந்தி வேறு போகிறது. நாட்டு வைத்தியம் செய்தும் பலனில்லை. இனிப் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்ட போக வேண்டும். ஒற்றையாளாக எதைக் கவனிப்பது?
%eu-C19)^Gop (149-mcŵn
- ஆனந்தி
காலையிலிருந்து ஒர் அசைவற்ற நிலை. முன் வாசற்படியில் அமர்ந்து கொண்டு, குழந்தையை மடியில் போட்டபடி வானத்தையே வெறித்திருந்தாள். கை உதவிக்கு ஆள் இல்லாததால், முற்றம் கூட்ட ஆளின்றி, ஒரே குப்பைக் காடாக இருந்தது. நடுவே ஒர் அமங்கல ஜடமாக அவள். கழுத்தில் தாலி இழந்த வெறுமை கண்ணை எரித்தது. அதை இழந்தது அவள் குற்றமல்ல. ஒரு சில்லறைத் தேவைக்காகப் பாஸ்பரன் அதை அடகு வைத்து விட்டான்.
மல்லிகை நவம்பர் 2011 率 24

என்னவோ காரியம் பிடுங்க வென்று, மாமி அவள் வீடு தேடி ஒட்டமும் நடையுமாக வந்து சேர்ந்த அந்தக் கணப் பொழுதில், ரமா அதை வெறும் நிழல் சம்பவமாகவே எதிர் கொண்டாள். எனினும் மாமிக்கு உறைத்தது. என்னவொரு வீழ்ச்சிப் படலம், அவள் கண்முன்.
வீடு முற்றிலும் களையிழந்து நாறு கிறதே. களையென்றால், என்னமாதிரி யொரு அமானுஸ்ய களை. அது ரமா வின் மீதும் படிந்திருக்க வேண்டும். இல்லையே. மாறாக எல்லாம் சோபை வற்றிப் போன, வறண்ட காட்சிச் சுவடுகள்தான். இது யாரால் தோற்று விக்கப்பட்டது? எப்படி நேர்ந்தது? இந்த மகத்தான சரிவும், வீழ்ச்சிப் பின்னடைவுகளும் எதனால் நேர்ந்தன?
ஓ! - புரிகிறதே! எல்லாம் இவளு டைய வாழ்க்கை லட்சணம்தான். வந்த ஆவேசத்தில், மாமி உணர்ச்சி முட்டி ஆவேசம் கொண்டு பேசுகிற போது, வெகு தொலைவிலிருந்து அதைக் கேட் கிற பிரமை ரமாவுக்கு, கடும் குர லொடுத்து அவள் சொல்கிறாள்,
"ஏய் ராமா! நல்லாயிருக்கு நீ குடும் பம் நடத்துகிற லட்சணம். பவானியைப் பார். உன்னைவிட எத்தனை வயது சின்னவள். அவளைப் பார்த்து நீ பழக வேண்டாமோ. செய் காரியமாக அவள் வாழ்க்கையிலே எவ்வளவோ சாதிக் கிறாள். பிள்ளை வளர்ப்பைப் பற்றி நீ அவளிடம்தான் பாடம் படிக்க வேணும். நீ ஒன்றுக்குமே லாயக் கில்லை. மக்கு மக்கு.”
ஆவேசமாக மூச்சிரைக்கப் பேசி முடித்துவிட்டு, அவள் நிறுத்தியபோது மெளனம் கதைத்தது. பிரகடனப்படுத் தப்படாத, மறைபொருளாகத் தேங்கிக் கிடக்கும் தனது வாழ்க்கை பற்றிய உண்மை நிலையையே அறியாதவளாய் அவள் எழுந்தமானத்தில், தன்மீது அவ தூறு பேசி, எல்லாம் தெரிந்த கணக் கில், குரூர வார்த்தைகளால் தன்னைச் சந்திக்கு இழுத்துத் தண்டித்து விட்ட கொடுமையை எண்ணித் தனக்குள் ரத்தக் கண்ணிர் வடித்தவாறே ரமா நீண்ட நேரமாக எதுவும் பேசத் தோன் றாமல், மெளனத்தில் உறைந்து போயி ருந்தாள்.
பவானி அவளுக்குத் தூரத்து உறவு. பக்கத்து வீட்டிலே இருப்பதால், ரமாவை எடைபோட, அவள்தான் சரி யான ஆளென்பது மாமியின் கணிப்பு. பவானி பெரிய வாயாடி, ஊர்ப்புதினங் களைக் காவிக்கொண்டு திரிபவள். குறுக்கு வழியிலே, நெளிவு சுளிவுகளைக் கற்றவள். ரமா வைப் பொறுத்தவரை, சூதுவாதறியாத வெள்ளை மனம் அவளுக்கு. அப்பாவி யாக வீட்டிலேயே அடங்கிக் கிடப்
வாழ்க்கையின்
பவள். பவானியைப் போல், அவள் ஆகவேண்டுமென்றால், எப்படி முடியும்? குறைகள் நிரம்பிய வாழ்க்கை யில், பவானியைப் போலவோ, கொடி கட்டிப் பிரகாசிக்கும் ஏனைய பெண் களைப் போலவோ பிரகாசிக்க முடி யாமல், நான் ஒன்றை நிழலாகவே இருந்துவிட்டுப் போறன். இதனால், நானே தோற்றது போலாகி விடுமா? முதலில் என்ரை வாழ்க்கையின் கனம்,
மல்லிகை நவம்பர் 2011 奉 25

Page 15
அதனால் எனக்கு நேர்ந்த இழப்புகள், சூழ்நிலைக் கைதி போல என்னைத் தொடர்ந்து வருத்துகின்ற என்ரை உண்மை நிலை. இதிலே மறைந்து போன, என்னுடைய ஆத்மார்த்தமான தேடல்களுக்குமான தவிப்பு. இதை யெல்லாம் மறந்துவிட்டு, அறியாமல் போன மாபெரும் தவறின் நிமித்தம், மாமி கூறிவிட்ட குற்றச்சாட்டு, வீண் பழி எப்படி எடுபடும்? வாழ்நாள் முழு வதும் சுமக்கப் போகும், இந்தப் பொய் யின் கறையிலேயே, நான் எரிந்து கருகிச் சாம்பலாகி விடவும் கூடும். ஐயோ! இதை நான் எப்படிப் பொறுப் பேன்? எப்படி மன்னிப்பேன்?
அவள் கண்களிலிருந்து கண்ணிர் ஆறாகிப் பெருகி வழிந்தது. நீண்ட நேரமாக அவளுக்குப் பேச வர வில்லை. வெகுநேரம் கழிந்து, ஏதோ உத்தேசத்துடன் மனதைதத் திடப்படுத் திக் கொண்டு, சரளமாகக் குரலை உயர்த்தி, உணர்ச்சிவசப்பட்டு, அவள் கூறினாள்.
6
‘மாமி, இதைச் சொல்லுறே னென்று, நீங்கள் என்னைக் கோபிக்கக் கூடாது. எனக்கு அந்த உரிமை இருக்கு, நீங்க கேட்க வைத்து விட்டியள். உங் கடை அடுப்பிலே பூனை தூங்குறதுக் கும் இதுதான் காரணமென்று நான் நம்புறன். அதாவது ஒன்றுமே தெரியா மலிருப்பது.” தொடர்ந்து அவளே கேட்டாள்.
“என்ன மாமி! நான் சொன்னது சரிதானே?”
அதைக் கேட்டதும், மாமி வெகு வாக ஆடிப்போனாள். உண்மை நிலை யென்பது, பொதுவாக எல்லோருக்கும் ஒன்றுதான். எனினும் அவள் மனம் அதை ஒப்புக்கொள்ள மறுத்தது. அவள் ரமாவின் கேள்விக்கு விடை யாகத் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு இவ்வாறு கூறினாள்.
"நீ சொல்வதால், இரண்டு பேரும் ஒன்றாகிவிட முடியுமே? எனக்குச் சமைக்க, வீடு பார்க்க நல்லாய்த் தெரி யும். என்ரை வருத்தமிருக்கல்லே. அது தான் நீண்டகாலமாக நான் சமைக்கி றேலை. நீ அப்பிடியே? உனக்கு உண் மையிலேயே செய்காரியம் பத்தாது.”
"நீங்கள் திரும்பத் திரும்ப ஒன் றையே சொல்ல வாறியள். உங்கடை நிலைமை புரியுதல்லே. அதே நிலை மைதான் எனக்கும் இருக்கு. ஒரு சூழ் நிலைக் கைதி போல, என் நிலைமை யாகி விட்டிருக்கு. இதைச் சுற்றித் தான், நான் தடம்புரண்டு போறதும், எழும்புறதும் இருக்கு. இதை நீங்க புரிஞ்சுகொண்டால் போதும்.
"அப்ப இதுக்கெல்லாம் சூழ் நிலைக் குற்றம்தான் காரணமென்று சொல்லவாறியே?”
"நான் அப்படிச் சொல்ல வரேலை. உங்களுக்கென்று ஒரு நியாயமிருக்கு. அப்படித்தான் என்ரை பக்கமும். என்னை பல மும், பல யீனமும், தோல்வியும், வெற்றியும். இதுக்கு நான் பொறுப்பில்லை. என்னை வாழ்க்கை யனுபவங்கள்தான் காரணம். இதை
மல்லிகை நவம்பர் 2011 & 26

ங்கள் நம்பினாப் போதும். என்ரை
ந து
சத்தியம் ஜெயிச்ச மாதிரி இருக்கும்.”
“என்னவோ போ. நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன். எப் படி அழிஞ்சு போனால், எனக்கென்ன வந்தது? நான் போறன்.”
மேற்கொண்டு ரமாவால் பேச முடியவில்லை. மாமி பார்த்தது, கண் டது, கேட்டது, உணர்ந்தது எல்லாம் வாழ்வின் இருட்டிலே தோய்ந்த ஒரு பாதியை மட்டுந்தான். அதைப் பார்த் துக்கொண்டிருக்கும்வரை, அப்படித் தான் பேசுவாள்.
ஒளியில் தூங்கி வழியும் வாழ்வின் மறுபக்கத்தை, அவள் ஒருநாளும் கண்டுகொள்ளப் போவதில்லை. அப் படிக் காண நேர்ந்தால், அவள் இவ்வா றெல்லாம் பேசியிருக்க மாட்டாள். அறிவுப்பூர்வமாக, உண்மைகளை ஆழ மாக அறிந்து பார்க்காதவரை, குறைகள் மட்டுந்தான் கண்ணிலே படும். இப்படி அறிவுக் கண் இருண்டு போனதாலே தான், அவளுக்கு என்ரை குறைகள் மட்டும் பெரிசாய் கண்ணிலே உறுத் திற்று. காலம் முழுக்க, இந்தப் பொய் யான தகவலுக்காக, நான் ஏன் கழு வாய் சுமக்க வேண்டும்? இதை பெரிய மனசு பண்ணி நான் அடியோடு மறந்து காற்றில் கரைந்துபோன கதையாக, மாமியின் குரல் இப்ப எனக்கு என்று அவள் தனக்குள்ளேயே சமாதானம் செய்து
விட வேண்டியதுதான்.
கொண்டாள்.
২ LBLBLBLBLBLBLBLBLBLBLBLBLBLBLBLBLBLBLBL0LLBSBSBSBSBSB BSBS অৰ্চ
Excellent Photographers
Modern Computerized Photography
For Wedding Portraits &
Child Sittings
Photo Copies of Identity Cards (NIC), Passport & Driving Licences Within 15 Minutes
300, Modera Street, Colombo - 15. Te: 2526345
&১২&&
மல்லிகை நவம்பர் 2011 & 27

Page 16
r parti
his in in hard a magazine called. rite i that - - - as whis can his
貓。雛 8 tuxlirts camrinity with
※ kxai.
மல்லிகை நவம்பர் 2011 奉 28
 
 
 
 
 
 
 
 
 

பாராளுமன்றத்தில் படைப்பாளிகளைப் பற்றி.
அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர்
இலங்கையில் கடந்த காலத்தில் ஏற்பாட்ட கசப் பான அனுபவங்களுக்கு பின்னர், மூவ்வினங் களிடையே உருக்குலைலைந்து போன ஒருமைப் பாட்டையும், நல்லிணக்கத்தையும் மீண்டும் ஏற்படுத்த, கலை இலக்கிய படைப்பாளிகளால்தான் முடியும் என்பதை உணர்ந்து இந்த நாட்டின் மூவின படைப்பாளிகளும் பல்வேறு ஊடகங்களின் வழியாக வெளியிடும் தம் படைப்புகள் மூலம் முயன்று வருகிறார்கள். இச்செய்தியினை அரசியல் மட்டத்தில் எடுத்து சொல்லும் தேவை ஒன்று இருந்து வந்துள்ளது. அத்தகைய பணியினை இடைக்கிடையே செய்து வருபவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள். அந்த வரிசையில் கடந்து 09.09.2011 அன்று கூடிய இலங்கை பாராளுமன்ற அமர்வில், காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கலாசார அமைச்சராக பணியாற்றிய கெளரவ லக்ஷ்மன் ஜயகொடி அவர்களின் மறைவொட்டி நிறைவேற்றபட்ட அனுதாபத் தீர்மான உரைகளின் பொழுது, பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் ஆற்றிய தனது உரையில்:-
மறைந்த காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கலாசார அமைச்சராக இருந்த கெளரவ லக்ஷ்மன் ஜயகொடி அவர்கள் கொண்டிருந்த தேசிய ஒருமைபாட்டு உணர்வுடன் மூவினப் படைப்பாளிகளை ஊக்குவித்தவர் எனக் கூறி, அத்தகைய பணியினை தொடர்ந்து இந்நாட்டில் மூவின படைப்பாளிகளும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு, அப்பணிக்கான சமீப கால ஒர் உதாரணமாக இந்த நாட்டின் தமிழ்ச் சிறு சஞ்சிகைகளின் உழைப்பு மிக்க ஒர் ஆசிரியராகத் திகழும் திரு.டொமினிக் ஜீவா அவர்களின் முயற்சியினால் வெளிவரும் மல்லிகை சஞ்சிகையின் செப்டம்பர் மாத இதழில், தேசிய ஒருமைபாட்டை பற்றி பேசும் தென்னகம சிரிவர்த்தன எழுதிய “மித்துரோ” என்ற நாவலை காலஞ் சென்ற எம்.எச்.எம்.ஷம்ஸ் அவர்கள் தமிழில் "நண்பர்கள்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கும் நாவலை பற்றி மேமன்கவி எழுதிய "ஆத்ம சுத்தம் எதிர்கொள்ளும் நெருக்கடி' எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையை உதாரணமாகக் குறிப்பிட்டார். மேலும் அந்த உரையில் காலஞ்சென்ற எம்.எச். எம்.ஷம்ஸ் அவர்கள் பன்முக ஆற்றல் கொண்ட ஒரு படைப்பாளியாக திகழ்ந்தோடு,
மல்லிகை நவம்பர் 2011 & 29

Page 17
இத்தகைய மொழிபெயர்ப்பு பணியில் LIU6)16)TCB É60ôï L 35|T6ùLDITob FF(BLIL (B வந்தவர் என்பதையும் குறிப்பிட்டார்.
மேலும் அவரது அவ்வுரையில் இத் தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் மேலும் மேலும் தொடர வேண்டும். இத் தகைய படைப்புகளே பரஸ்பர நிலை யில் மூவினங்கள் தம் கலை கலா சாரங்கள் பற்றி அறிந்து கொள்வதற் bT60T | T60LDT5 960), Dub Bolę UTB இருக்கும் என்பதோடு, மூவினங்களி டையே ஒருமைபாட்டையும் நல்லிணக் கத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் பாராளுமன்றத்தில் நிகழ்த்தும் இத் தகைய உரைகள், மூவ்வினங்களி டையே உருகுலைந்து போன ஒருமைப் பாட்டையும், நல்லிணக்கத்தையும் மீண்டும் ஏற்படுத்த, கலை இலக்கிய
படைப்பாளிகளால்தான் முடியும் என்ற செய்தியினை அரசியல் மட்டத்தில், அழுத்தம் திருத்தமாகச் சொல்வதற்கும் ஆவணப்படுத்தபடுவதற்கும் (பாராளு மன்ற உத்தியோகபூர்வமான ஆவண
மான ஹன்சாட்டில் அவரது இவ்வுரை
பதிவு செய்யப்பட்டுள்ளது) உதவக் கூடி யவை என்பது மறுப்பதற்கில்லை. பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அளில்வர் அவர்கள் அடிப்படையில் ஒரு கலைஞராக இருப்பதன் காரணமாக அவர் ஒருவரால்தான் அத் தகைய பணி ஆற்ற முடியும்.
இப்பணிக்காக தேசிய ஒருமைபாடு, மற்றும் இனங்களிடையிலான நல்லிணக் கத்தை ஏற்படுத்தும் உணர்வுடன் செயற் படும் இந்த நாட்டின் சகல கலை இலக் கியப் படைப்பாளிகளின் சார்பாக,
பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அளில்வர் அவர்களைப் பாராட்டு வதோடு, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- மல்லிகை
மல்லிகை நவம்பர் 2011 & 30
 
 

இரசனைக் குறிப்பு:
திறனாய்வாளர் கே.எஸ்.சிவதமாரனின் திறனாய்வுத் தடம் காட்டும் நூல்
- LDT.ur6u)ärasb
ஈழத்துத் தமிழிலக்கியத்தில் திறனாய் வாளர் கே.எஸ்.சிவகுமாரனின் வகிபாகம் மிகவும் முக்கியமானதென்பதை, தமிழி லக்கிய நோக்கர்கள் நிராகரிக்க மாட்டார் கள். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அச்சு, இலத்திரனியல் ஊடகங்களிலும்,
இலக்கிய மேடைகளிலும் அவர் செய்துவரும் பங்களிப்பு கனகாத்திரமானதாகும். ஒரு தாயின் கரிசனத்தோடு, ஈழத்துத் தமிழிலக்கியத்தைச் செம்மைப்படுத்திச் சீராக்கி வருகிறார்.
அண்மைக்காலத் தகவல்களின்படி கே.எஸ்.சிவகுமாரன் இதுவரை 27 நூல்களை வெளியிட்டுள்ளார். இதில் ஒன்று மட்டும் சிறுகதைத் தொகுதியாகும். ஏனையவை விமர் சனம், திறனாய்வு சார்ந்தவை. ஆரம்பக்கால கட்டத்திலேயே இவரது திறனாய்வு, விமர் சனம் என்பவைகளைத் தொடர்ந்து படித்ததால், கே.எஸ்.சிவகுமாரன் எழுத்துகளில் அபி மானம் குவிந்தது. அந்த விருப்பில் அவர் நூல்களை ஊன்றிப் படித்ததில், அண்மையில் சென்னை மணிமேகலை பிரசுரமாக வெளிவந்திருக்கும், காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை' என்ற நூல் சற்று வித்தியாசமானதெனவே தெரிகின்றது. இதில் கே.எஸ்.சி.இன் 45 கட்டுரைகளோடு முகம்மது யாக்கூப் இன் தமிழாக்க எழுத்துரு ஒன்றையும் வாசிக்க முடிகின்றது.
1994இல் வெளிவந்த வவுனியா சாகித்திய விழா மலர், தினகரன் வார மஞ்சரி, வீரகேசரி வார வெளியீடு, தினகரன் தினசரி, வீரகேசரி தினசரி, வானொலி மஞ்சரி, மல்லிகை, ஈழமுரசு, தினக்குரல், நவமணி, ஈழநாடு, நங்கை, தமிழ் ஒலி போன்ற இதழ் களில் ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். சில கட்டுரைகள்
மல்லிகை நவம்பர் 2011 * 31

Page 18
வெளியாகிய ஆண்டு நூலில் பதிவாக வில்லை. அவையிருந்திருப்பின் கருத்துரு வாக்கத்துக்கு வசதியாக இருந்திருக்கும்.
ஈழத்துப் புதுக்கவிதை, விமர்சனம் (திறனாய்வு), வானொலி, சினிமா மற்றும் சில இலக்கிய ஆளுமைகள் பற்றி கே. எஸ்.சிவகுமாரனின் உற்றறிவுப் பார்வை யைக் கணிசமானளவில் இந்நூல் தரு கின்றது.
படிக்கப் படிக்கத் தெவிட்டாத உணர் வலைகளையும், எண்ணக் கோவைகளை யும் நல்லிலக்கியங்கள் தருபவை! (பக்146) என்ற கருத்தாளர் இந்நூலா சிரியர். இந்த இலக்கோடு அவர் எடு கோளுக்குள் தேடலை மேற்கொண்டிருப் பது வாசித்த போது தெரிய வந்தது.
“A SUBLIMANAL ASSAULT என்ற ஆங்கிலக் கவிதை மூலம், அமெரிக் காவில் கவிதைப் போட்டியொன்றில் பங்கு பற்றிப் பரிசைப் பெற்ற இலங்கையர் கே. எஸ்.சிவகுமாரன். 'ஆக்க இலக்கியத்தில் என்னைப் பரவசப்படுத்தும் வடிவம் கவிதை எனக் கவிதையைக் காதலிப் பவர். கவிதையின்பம் நுகர வேண்டு மாயின் கவிதைகளை நாம் லயத்துடன் வாய்விட்டுப் படிக்கவும், பாடவும் வேண்டு மன்றோ? கவிதை முதலிலே எமக்கு உவகையை, மகிழ்ச்சியைத் தரவேண்டும். அதன்பின் கவிதையைப் படித்து முடித் ததும் எம்மளவிலாகுதல் புத்தறிவு பெற்றி ருத்தல் வேண்டும்.’ (பக்145) என்ற நிலைப்பாட்டைக் கொண்டவர். இந்த இரசனை நெறிப்படுத்தலால் புதுக் கவிதையை மிகக் காட்டமாகச் சாடியுள் ளார். 'கவிதையைப் பொருளில் காட்டு
வேண்டுமேயல்லாது சொல்லடுக்கில் காட்டுவதில் பிரயோசனமில்லை' என்ற அமெரிக்கக் கவிஞர் வோல்ட் விட்மனின், கவிதை குறித்தான கருத்துரைப்பே மகா கவி சுப்பிரமணிய பாரதி போன்ற தமிழ் நாட்டுக் கவிஞர்களது வசன நடைக் கவிதை யாப்புக்கு அடிவேராக இருந்தது.
பாரதி வழியில் புதுக்கவிதைக்கு ஒரு பட்டாளமே குவிந்தது. ஆனால் காலகதி யில் எதிரலைகள் எழுந்தன. கவிஞர் அப்துல் ரகுமான் புதுக்கவிதை பற்றிக் கூறும்போது, கவிதை என்று அழைப்ப தற்கு எந்தவித அருகதையுமற்ற, துண்டு, துக்கடா வசனங்கள், கலை வடிவமற்ற வெறும் கருத்து நவிற்சிகள், வாக்கியங் களை ஒடித்து முறித்து அடுக்கிய கட்டுரை கள், வெற்றுக் கோஷங்கள், வார்த்தை வாந்திகள், கக்கூஸ் சுவரின் கிறுக்கல்கள், வாய் வெருவல்கள், வார்ப்படங்கள் இவை யெல்லாம் கூடப் புதுக்கவிதை என்ற பெயரில் வெட்கமில்லாமல் பவனி வரு கின்றன’ என எள்ளி நகையாடினார். இந் நூலாசிரியர் கே.எஸ்.சிவகுமாரன் ‘புது என்ற அடைமொழி, பொருளிலும், உரு விலும் வித்தியாசமான போக்குடைய கவிதைகளையும், கவிதை என்ற பெயரில் இடம்பெற்ற விடுகவிகளையும், சுலோகங் களையும் இனங் காட்டச் சில தசாப்தங் களுக்கு உதவிற்று எனத் தனது புதுக் கவிதை குறித்தான கணிப்பை 1981இல் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு புதுக் கவிதை என்ற பிரயோகம் இனி வேண் டாம் எனவும் கருத்துரைத்துள்ளார்.
அவர் இப்படிக் கூறி இன்று மூன்று தசாப்தங்களாகி விட்டன. ஆனால் புதுக் கவிதைகள் இன்றும் புழுத்துக் கொண்டு
மல்லிகை நவம்பர் 2011 率 32

தான் இருக்கின்றன. பத்திரிகைகள், சஞ்சி கைகள் பக்கங்களை நிரப்பிக் காலதாமத மின்றி வெளிவருவதற்கு இவை பெரிதும் கைகொடுக்கின்றன. கருத்துக்கள் ஆளுக் காள் வேறுபடலாம்! இன்றைய புதுக் கவிதைகளில் சிலவற்றை நோக்கும்போது அவைகளுக்குள் ஆழமான, வாழ்க்கை சார்ந்த நல்ல கருத்துகள் இருப்பதை நாக ரீகமான வாசகன் நிச்சயம் ஏற்றுக்கொள் வான். எனவே அவைகளை தீண்டாது விடுவது புத்திசாலித்தனமாகாது! கவி தைக்கு வடிவமொன்றுண்டு. தழை, சீர், அணி, சந்தம் இவை போன்ற அங்கங்கள் இருப்பதே கவிதை எனத் தமிழ்மொழி அறிஞர்கள் கூறுவர்.
இன்றைய புதுக் கவிதைகளில் பெரும்பாலானவை இவைகளில் எந்த வொரு அம்சமுமின்றி வெளிவருவதைக் காண முடிகின்றது. எனவே இவைகளைக் கவிதை என்பது பொருத்தமற்றதுதான்! ஆகவே 'புது உம் வேண்டாம். 'கவிதை' உம் வேண்டாம். அர்த்தமுள்ள இந்தச் சொல்லடுக்குகளுக்குப் புதியதோர் பெய ரைக் கண்டுபிடிப்பது தமிழ் மொழியிய லாளர்களின் தலையாய கடமையாகும். ஹைக்கூ’ போன்தொரு நாமத்தைச் சூட்டி இப்படைப்பாளிகளைத் தொடர்ந்தும் தமிழி லக்கியத்தில் இயங்க வைப்பது மக்களுக் குப் பயனளிக்கும்.
- எது எப்படி இருப்பினும் புதுக் கவிதை அதைப் பேச வைப்பதற்கான சாதனையைப் புரிந்துள்ளதை ஏற்கத்தான் வேண்டும். தமிழகத்தின் பிரபல இலக்கிய வாதி ந.பிச்சமூர்த்தி போன்ற கவிஞர்கள் புதுக்கவிதைப் படைப்பை ஊக்கப்படுத்தி இருக்கின்றனர். கவிதை இதழ்கள் கூட
வெளிவந்துள்ளன. புதுக்கவிதைக்கென்றே வானம்பாடி இதழ் வெளிவந்தது. ஈழத்தின் புதுக்கவிதைகளின் வீச்சை உள்வாங்கிய இவ்விதழ் ஈழத்துப் புதுக்கவிதைச் சிறப் பிதழையும் வெளியிட்டு ஈழத்துப் புதுக் கவிதையாளர்களைக் கெளரவித்தது.
கலாநிதி செ.யோகராசாவின் கருத் துப்படி ஈழத்தின் முதல் புதுக் கவிதையாக, 1943இல் 'ஈழகேசரியில் வெளிவந்த வரதர் எழுதிய ஓர் இரவிலே’ என்ற புதுக்கவிதை முக்கியத்துவம் பெறுகின்றது. வலம்புரி கவிஞர் வட்டம், (வகவம்) என்பது இலங் கையில் புதுக்கவிதைக் கவிஞர்களின் அமைப்பாக இயங்கியது. இதன் தலைவ ராக இருந்தவர்களுள் கவிஞர் அல் அஸ9 மத்தும் ஒருவராவர். ஈழத்தில் புதுக் கவி தைக்கெனக் காலாந்தரிகளும் வெளிவந்த தகவல்கள் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை' என்ற நூலில் பட்டியலிடப்பட்டுள்ளன. தேன் மொழி (வரதர்), கவிஞன்; பா (இ.இரத் தினம்), அக்னி (ஈழவாணன்) போன்ற ஏடுகள் வெளிவந்து புதுக்கவிதை எழுத்தை ஊக்குவித்துள்ளன.
எம்.ஏ.நுஃமானின் அழியா நிழல்கள், புதுக் கவிதைத் தொகுப்பு, ரஷ்மியின் புதுக் கவிதைத் தொகுப்பு என்பன பற்றி இந் நூலில் அறிய முடிகின்றது.
".கிழக்கிலங்கைக் கவிஞர்கள் எல் லோருமே அணிச் சிறப்பை உள்ளடக்கித் தான் கவிதை எழுதுகிறார்கள்’ (பக்:132) கவிதைப் போக்கை நூலாசிரியர் எடை போடுகிறார். அத்தோடு இப்பிரதேசத்தவரின் சிறு கதைப் படைப்பை மட்டக்களப்பு எழுத்
எனக் கிழக்கிலங்கைக்
மல்லிகை நவம்பர் 2011 & 33

Page 19
தாளர்கள் தமிழ்நாட்டு ஜனரஞ்சக எழுத் தாளர்களின் கற்பனைகளை ஆதர்சமாகக் கொண்டு எழுதுகின்றனர் (பக்.190) என 1981இல் மதிப்பிட்டுள்ளார். இதையொரு சர்ச்சைக்குரிய கருத்துரைப்பாகவே கருத வேண்டியுள்ளது. இதன் மூலம் வ.அ.இராச ரத்தினம், அ.ஸ்.அப்துஸ் ஸமது, பித்தன் போன்ற புகழ் பூத்த கிழக்கிலங்கைச் சிறு கதையாசிரியர்கள் படைத்தவை யாவும் கற்பனைச் சிறுகதைகளா? ரஷ்மி ஊடாக உளவியல் சமூக யதார்த்தம் என்ற கட்டு ரையில் நமது நாட்டு எழுத்தாளர்கள் சிறு கதைகளை எழுதுவதை விடக் கவிதை களை (புதுக்கவிதை என்ற பெயரில் புற்றி சல்கள் போன்று பிரசுரமாகும் சுலோகங் களையும் கூற்றுக்களையுமல்ல) எழுதி னால் பயனளிக்குமென நினைக்கிறேன் (பக்.143). இக்கட்டுரையைத் தினக்குரல் பிரசுரித்துள்ளது. நூலில் ஆண்டு குறிப் பிடப்படவில்லை. எனவே 1996ஆம் ஆண்டுக்குப் பின்னரே கே.எஸ்.சிவகு மாரன் இக்கருத்தை வைத்திருந்ததை ஊகிக்க முடிகின்றது. இதன் மூலம் ஈழத் துச் சிறுகதையை அவர் ஏற்கவில்லை யென்பது புரிகின்றது. ஆக்க இலக்கியத் துறையில் கலை, நுட்பம், அனுபவச் செறிவு, ஆழமான தத்துவம் போன்றவை குறைவாக. எனக் கூறித் தனது நிலைப் பாட்டைப் பலப்படுத்துகிறார். ஆனால் இலங்கையில் வெளிவந்த நல்ல சிறு கதைத் தொகுதிகளில் ஒன்று அயேசுராசா வின் சிறுகதைத் தொகுதி (பக்126) எனப் பொச்சடித்து, புகழ் பெற்ற ஈழத்துப் பிரமாக் களின் சிறுகதைகளைக் கேள்விக்குள் ளாக்கியிருக்கிறார். இதன் மூலம் அவை அ.யேசுராசாவின் சிறுகதைத் தொகுப்பை
ஏற்கவில்லையெனக் கருதக்கூடாது திற னாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனின் ஈழத் துச் சிறுகதைத் தொகுப்புகள் பற்றிய ஒட்டு மொத்தமான கருத்து அதுவாகில் எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ.), மு.தளைய சிங்கம், டொமினிக் ஜீவா, கே.டானியல், சாந்தன், க.சட்டநாதன் போன்றோரும் சிறு கதைத் தொகுப்புகளை வெளியிட்டனரே, அவைகளெல்லாம் வெறும் காகிதக் குப்பைகளா? இவ்விடத்தில்தான், கே. எஸ்.சிவகுமாரனின் இலக்கியம் குறித் தான கருத்தியலை ஒற்றி எடுக்க முடி கின்றது! அதை உரத்த திறனாய் வாளர்கள் செய்யட்டும்
‘தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் சிக்கலாக அமைந்தது விமர்சகர்கள் இல்லாமையாகும் (பக்:40) என்ற தக வலை இந்நூல் தருகின்றது. எமது பெரும் பாலான இலக்கியவாதிகள் தமது படைப்பு களுக்கு விமர்சனங்களையல்லாமல், விளம்பரங்களை எதிர்பார்ப்பது இக்கருத் துருவாக்கத்துக்கு இட்டுச் சென்றிருக் 856,ort b.
என்னிடமிருந்து ஆழமான திறனாய் வுகளை வாசகர்கள் எதிர்பார்ப்பது நியாய மில்லை' (பக்:83) எனக் கே.எஸ்.சிவ குமாரன் கூறியுள்ளார். அவரது தொடர் வாசகன் நிச்சயமாக இதை ஏற்கான். திருக்குறள் ஈரடிகளைத்தான் கொண்டுள் ளது. ஆனால் அதற்குள் எத்தனை ஆழ மான கருத்துக்கள்! கே.எஸ்.சி.இன் குறிப்புக்கள் சிறிதாக இருப்பினும், அவை கள் ஒரு படைப்பினதோ நூலினதோ உண்மை நிலையை வெளிப்படுத்துவதை உணர முடியும். தமிழகத்திலும், ஈழத்
மல்லிகை நவம்பர் 2011 & 34

திலும் இதுவரை மார்க்சிய, மரபார்ந்த, நற் போக்கு, ஆத்மார்த்தம் என்ற அடையாளங் களோடான விமர்சனங்கள் இருந்து வந் துள்ளன. இவைகளுள் கே.எஸ்.சிவகுமா ரனை எதற்குள் அடக்கலாம்? என்னிட மும் சார்பு நிலையுண்டு எனத்தான் அவர் இந்நூலிலும் கூறியுள்ளார். படைப்பொன் றைத் திறனாய்வு செய்யும்போது அதன் தொனிப் பொருள், படைப்புக் களத்தின் சூழல் இவைகளைக் கருத்தில் கொண்டு அவர் படைப்பின் நிலைப்பாட்டைத் தீர் மானிப்பதை அறிய முடிகின்றது. மரபுவாதி களை மட்டுமன்றி, மார்க்சியவாதிகளை யும் காட்டமாக விமர்சித்திருக்கிறார். அவரது திறனாய்வு (விமர்சனம்) எழுத்து களில் நீண்ட உசாத்துணை நூல் பட்டியல் கள், மேற்கோள்கள் இல்லாதிருப்பினும் அவைகள் நல்லதோர் திறனாய்வைத் தரு வதைக் காணமுடியும். பொது விருப்பு வாச கர்களை விமர்சன, திறனாய்வுத்துறை சார் எழுத்துகளுக்குள் இழுத்து வருவது அவரது எழுத்துகள் தான்! அதையே இந் நூலில் பதிவாகியுள்ள கட்டுரைகளும் வெளிப்படுத்துகின்றன.
டி.லேணர் என்ற வெளிநாட்டு விமர் சகரின் கருத்துப்படி இலக்கிய விமர் சனத்தை 5 கோணங்களில் நிலைப்படுத்தி மேற்கொள்ளலாம். சமூகப் பார்வை, செயல்முறைப் பார்வை, விளக்கப் பார்வை, தத்துவார்த்தப் பார்வை, வரலாற் றுப் பார்வை என்பவையே (பக்.162)
அவைகளாகும்.
இலக்கியக் கோட்பாடுகளும், இலக் கிய விமர்சன முறைகளும், இலக்கிய உருவ அமைப்பு முறைகளும், இலக்கிய
உள்ளடக்கப் பண்புகளும் காலத்துக்குக் காலம் மாறுவது போல் மனோதத்துவம் பற்றிய சித்தாந்தங்களும் மாறுபடுவன. இதனாலேயே மனோதத்துவதச் சித்தாத் தங்களைச் சார்ந்து எழுதப்படும் இலக்கிய விமர்சனங்களும் காலப்போக்கில் மதிப்பை இழக்கின்றன என நூலில் கருத்தொன் றுள்ளது. எனவே உளவியலை அடிப்படை யாகக் கொண்டு எழுதுவோர் ஓய்வுபெற வேண்டியதா? படைப்பை அரையும் குறை யுமாகப் புனைந்துவிட்டு, உளவியல் சார்ந்த தென வாதிடுவோருக்குக் கே.எஸ்.சி. சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்
6TTTir.
எவருக்குமே வாசிப்பு மிக மிக அவ சியம். வாசிக்காதவர்கள் இதழியலாளர் களாகவோ, திறனாய்வாளர்களாகவோ மிளிர முடியாதென்பதை நாம் அனைவரும் அறிவோம். இது அவரது அநுபவ வெளிப் பாடுதானென்பதை வாசகருக்குச் சொல்லித் தான் தெரியப்படுத்த வேண்டுமா? தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து இந்த அகவை 75 (பவள விழா) யிலும் வாசித்துக் கொண்டிருப்பவரல்லவா! இதற்கு இந்நூலிலேயே சான்றுகளுண்டு. செயற்பாட்டுவினையைத் தவிர்த்துச் செய் வினையில் எழுதுங்களென எழுத்தாளர் களை இலக்கண வழிப்படுத்துகிறார். நன்கு பழக்கப்பட்ட சொற்களைப் பயன்படுத்துங் கள் எனவும் வற்புறுத்தியுள்ளார். அப்படி யாகில் புதிய தமிழ் சொல்லாக்கம் எப்படிச் செழிப்படையும்? அடிமட்ட மக்கள் நாவில் நடமாடும் சினிமா” என்ற சொல்லைச் 'சினமா’ என உச்சரிக்கும்படி கோருபவர் இப்படிச் சொல்லலாமா?
மல்லிகை நவம்பர் 2011 & 35

Page 20
ஈழத்து இலக்கியத்தோடு தொடர்பு கொண்டிருந்த / இருக்கும் நாடறிந்த சில பிரமுகர்கள் பற்றிய காத்திரமான குறிப்பு களும் இந்நூலில் உண்டு. முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி அமரர் இளங் கீரன், புரவலர் ஹாசிம் உமர், எதிரி வீர சரத் சந்திர, பிரபல அரசியல் விமர்சகர் சிவா சுப்ர மணியம் ஆகியோரை இளைய சந்ததி யினரும் நன்கு அறியக் கூடியதான குறிப்பு கள் இந்நூலில் கிடைக்கின்றன.
அமெரிக்காவிலுள்ள கல்லூரியொன் றின் ஆங்கிலக் கவிதைப் போட்டியில் பரிசைப் பெற்ற யாழ்ப்பாணம் மானிப் பாயைச் சேர்ந்த கவிஞரும், ஒவியருமான ஜெகதீஸ்வரி நாகேந்திரன் குறித்து நமது வாசகர்கள் அறிந்திராதது துர்ப்பாக்கியமே என விசனித்து அவர் பற்றிய அறிமுகக் குறிப்புகளையும் இந்நூல் தருகிறது. தமிழ் வாசகர் பரப்புக்குள் கவிஞர் ஜெகதீஸ்வரி நாகேந்திரன் பிரவேசிக்க இது உதவக் கூடியதாகும். 1970களில் இலங்கையில் ஆங்கிலப் பத்திரிகை எழுத்துக்கு, பத் திரிகை ஆசிரியராக இருந்து புது மெருகை ஏற்படுத்தியவர் ஆர்.எல்.மைக்கேல். இவ ரது ‘இன்டிப்பென்டன்ட் என்ற ஆங்கில ஏட்டை வாசித்தவர்களுக்கு, இந்நூல் குறிப்புகள் ஜெ.நா.வை. நினைவுப்படுத்தும்,
ஒலிபரப்புத் துறையிலும் கே.எஸ்.சிவ குமாரன், ஆறு தசாப்தங்களுக்கு மேலான அநுபவமுடையவர். அறிவிப்பாளர், தமிழ்ச் செய்திப் பொறுப்பாளர், பேச்சுப் பிரதிப் பங்களிப்பாளர் இத்தகைய நிலைகளில் தமிழ் மட்டுமல்லாது ஆங்கில ஒலிபரப்புத் துறைக்கும் காத்திரமான பணிகளைச் செய்து அபிமானத்தைப் பெற்றவர். இன்றும் பொச்சடித்துப் பேசப்படும் புகழ் பூத்த
அறிவிப்பாளர் சிலரைப் பற்றி நூலில் எழுதி պ6f76mmir.
ஈழத்துத் தமிழ் ஒலிபரப்புத்துறை பற்றி எழுதும் பெரும்பாலோர் இன்னமும் அறிவிப் பாளர்களைப் பற்றி மட்டுமே சொல்லி வரு கின்றனர். ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகள் பற்றியோ, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பற்றியோ எதையும் சொல்வதில்லை. நேர் முக வர்ணனையாளர்கள் குறித்தும் ஒரு சொல்கூட எழுதமாட்டார்கள்! இதை ஒரவஞ் சகத்தனமென்றே அடையாளப்படுத்த வேண்டியுள்ளது தொழில்நுட்ப வசதிகள் மிகக் குறைவாக இருந்த அக்காலத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் மிகச் சிரமப் பட்டு நிகழ்ச்சிகளைத் தயாரித்து நேயர் களுக்கு ஒலிபரப்பினார்கள். அவையெல் லாம் இன்று காற்றோடு கலந்துவிட்டன. அமரர் சி.வி.இராசசுந்தரத்தின் இசை இடை யிட்ட சித்திரங்கள் இன்றும் பேசத்தக்கவை.
ஈழத்துத் தமிழிலக்கியம் மண் வாசனைக்கு அதிமுக்கியத்துவம் கொடுத் தது. இந்த இயக்கத்தில் இலங்கை வானொலியும் ஈடுபட்டிருந்ததை எந்தவொரு ஆய்வாளரும் கவனத்துக்கெடுப்பதில்லை. வானொலி நாடக மேதை, சானா எஸ்.சண் முகநாதன், பண்டிதமணி கணபதிப் பிள்ளையை அநுசரித்து மண்வாசனை கமழும் வானொலி நாடகங்களை ஒலிபரப் பினார். இலங்கையர்கோன், எஸ்.எஸ். கணேசபிள்ளை (வரணியுரான்), சி.சண் முகம் போன்றோர் இத்தகைய நாடகப் பிரதிகளை எழுதினர். அதேபோல் கிராம சஞ்சிகையில் விவியன் நமசிவாயம் தயாரிப் பில் ஒலிபரப்பாகிய சு.வே.இன் 'பொன் னொச்சிக்குளம் வானொலி நாடகமும் மண் வாசனையை அநுசரித்ததாகவிருந்தது.
மல்லிகை நவம்பர் 2011 * 36

வானொலித் துறையை இன்று தொலைக் காட்சி ஒளிபரப்புத்துறை விழுங்கிக் கொண் டிருக்கும் இக்காலகட்டத்தில், இன்றைய இளைய சந்ததி இவைகளை அறிந்தால், இந்த ஊட்டங்களைத் தொலைக்காட்சிக் கும் கொடுக்க முடியும். இராஜேஸ்வரி சண் முகம் தென்னிந்தியத் தமிழ்ப் பேச்சுவழக்கு, யாழ்ப்பாணத்துப் பேச்சுவழக்கு என்பவை களில் பேசி வானொலியில் நடித்தவர். அதேபோல் மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூ பவாதி நாதனும் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டிருந்தவர். வீ.ஏ.திருஞான சுந்தரம் ஏராளமான வானொலி நிகழ்ச்சிப் பிரதிகளை எழுதியவர். ‘மானா மக்கீன் வானொலி நாடகத் தயாரிப்பு, பிரதி எழுதல் என்பவைகளில் ஐம்பது, அறுபதுகளில் சாதனை படைத்தார். இந்நால்வரும் அன்றைய நிகழ்ச்சிகள் குறித்தும், தாம் பெற்ற அநுபவங்கள் குறித்தும் எழுதலா LD66)6. It
20-ஆம் நூற்றாண்டின் அடிச்சுவடுகள் - ஈழத்துத் தமிழ் இலக்கியம்' என்ற தலைப் பிலான நீண்ட கட்டுரை தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளி வந்த நற்பேறைப் பெற்றது. கே.எஸ்.சிவ குமாரன் ஆங்கிலத்தில் எழுத, அதிலிருந்த தகவல்களைத் திரட்டிப் பேராசிரியர் திஸ்ஸ காரியவாஸம் சிங்களத்தில் எழுதியதை முகம்மது யாக்கூப் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்நூலை ஆரம்பித்து வைக் கும் கட்டுரையும் இதுவேதான். நல்ல தகவல்கள் இதில் காணப்பட்டாலும், சில விடயங்கள் மனநெருடலை ஏற்படுத்து கின்றன.
ஈழத்துச் சிறுகதை இலக்கிய முன் னோடிகள் குறித்து அவர்கள் வாழ்க்கைக்
கும் இலக்கியத்துக்கும் இடையே தொடர்பு உண்டு என்பதை ஏற்கவில்லை' (பக்:8) எனச் சொல்லப்பட்டுள்ளது. இதை எப்படி ஏற்பது? இலங்கையர்கோனின் வெள்ளிப் பாதரசம் சிறுகதைத் தொகுப்பு முற்று முழு தான யாழ்ப்பாணத்து வாழ்வைச் சித்திரிக் கின்றது. அப்போ இத்தொகுதிக் கதைகள் இலக்கியமில்லையா?
'உண்மையிலேயே சமகாலச் சிங் களக் கவிதைகளுடன் நோக்கும்போது தமிழ்க் கவிதைகள் பின்தங்கிய நிலை யில்..' (பக்.13) இது தமிழ்க் கவிஞர்களைச் சீண்டி விடுவது கே.எஸ்.சிவகுமாரனின் ஆங்கிலக் கட்டுரையில் இப்படி உண்டா?
‘தமிழ்ப் பேசும் மக்களின் அவலங் களைப் பெரும்பாலான சிங்கள மக்கள் நேரடியாக அறியாமல் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், நாமே நமது வாழ்க்கை நிலையை, பெரும்பாலான மக்கள் பேசும் சிங்கள மொழியில் எடுத்துக் கூறத் தவறிய மையே என்ற வசனங்கள் நூலின் 2 ஆவது கட்டுரையான இன ஒற்றுமை - இலக்கிய வழி' என்பதில் காணப்படுகின்றது. இலங் கைத் தமிழினத்துக்கு 1994இல் வந்த செய்தியிது. இதன் தாற்பரியத்தை உணர வேண்டுமாகில், இலங்கை சமசமாசக் கட்சி இலங்கையின் அனைத்து இனத்தவர் களுக்கும் முன் வைத்த சம அந்தஸ்து கொள்கையை நோக்க வேண்டும். அவர் கள் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக் குத்தானே சொன்னார்கள் இன உறவுப் பாலம் உண்டானதா? அதுவே தமிழ் மக்களுக்கு பேரினவாதிகளால் கொடுக்கப் பட்ட அதி உன்னதமான சமிக்ஞை ஆகும். இதை இதுவரை இலங்கைத் தமிழர்கள் கண்டுகொள்ளாமல் விட்டது அரசியல்
மல்லிகை நவம்பர் 2011 & 37

Page 21
வரலாற்றுத் தவறாகும். இன்று தமிழிலக் கியம் சிங்களத்தில் சென்றால் சிங்கள
அதைத் தோசைக் கடை' என்ற முத்திரைதான் பேரினவாதிகளால் குத்தப்படும். இது நம்பிக்கையீனமல்ல கற்றறிந்த பட்டறிவு
மக்கள் தீண்டுவார்களா?
ஆக, காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை' என்ற திற
னாய்வு நூல் ஈழத்து இலக்கியத்தின் அடக் கத்தைச் சற்று வெளிப்படுத்துவதோடு, அந்நூலாசிரியர் கே.எஸ்.சிவகுமாரனின் திறனாய்வுத் தளத்தையும் வாசகனுக்கு அறியத் தரும் ஆவணமுமாகும். இந்நூலை ஈழத்து இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர் கள் படித்துப் பாதுகாப்பது நற்பணியாகும்.
மல்லிகை நவம்பர் 2011 奉 38
 

8 3. எஞ்சிய கவசம்
- சத்திய மலரவன்
என்னை அழைக்கும் பெருவெளி
நிழல் தாங்கு அடியொன்றில் வற்றிப் பெருகி
வழியும் என் விரல்குள்
உறைய வைக்கும் தன்சுவாரம்
ஏற்கனவே தகுந்து விட்டது தனிவரை
இனியேன் அழைத்தும் ஒலி
அவலம் தாக்கி என் சூடேவிழ்ந்து விடும்
மரநிழல் வெளியில்
என் உயிர் உதிர்ந்த சடலங்களுமே
தூக்கில் மாட்டி ஏன் சாவுக்குத்தீனி போடத் தேவை
எங்குேயென்றாலும் என் கூவடுகளில் துண்டுத்தால்
மனவழங்கும் இருக்குக் சூாண்கிறேன்
என்னை விடுவி
என்னை மீட்டெடுத்து
உன் உரமான இதானில் சாயவிடு
உனக்கான இவசம் நான்
மல்லிகை நவம்பர் 2011 & 39

Page 22
எனக்குச் சந்தோஷமாக இருந்தது. பெருமையாகவும் இருந்தது. மனநிறைவாகவும் இருந்தது. என் வாழ்வில் ஒரு நல்ல விடயத்தைச் செய்து முடித்து விட்டேன் என்ற திருப்தியும் இருந்தது.
ஒருதடவை மூச்சை முழுதாக உள்வாங்கி வெளிவிட்டேன். சுகமாக இருந்தது.
'ஸப்ரினா.
மனதுக்குள் அழுது, கொடுமைகளுக்காகக் குமைந்து, செய்வதறியாது திகைத்து. என்னிடம் மட்டும் உண்மையை உரைத்து ஆறுதல் தேடிய அந்தப் பாவப்பட்ட ஜென்மம்.
ஏழையாகப் பிறந்துவிட்டதாலேயே ஏமாற்றப்பட்ட பரிதாபம்.
உண்மையான உழைப்பு ஏற்றுக்கொள்ளப்படாது, யாருக்காகவோ தாரை வார்த்து விட்ட துயரம்.
அவளின் ஆற்றாமை என் மனதில் துல்லியமாக ஒலித்துக்கொண்டே இருந்தது.
தொண்டராசிரியராக ஐந்து வருடத்திற்கு மேற்பட பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைக் குழுவில் நானும் ஒருவனாக
பொய்த் தகவல்களை உண்மைத் தகவல்களாக மாற்றியமைக்கும் உன்னத கெட்டிக் காரத்தனத்தில் இருந்து உண்மையைப் பெயர்த்தெடுக்கும் பெருமுயற்சி.
ஆவணங்களை மிகச் சாதுரியமாகத் தயாரித்து, உறவினர்களுக்கு உதவும் உன்னத கடமையினூடாக உண்மையைத் தேடும் பரிதாபம். அந்த நிலையில்தான் ஸ்ப்ரினாவைக் கண்டேன்.
அந்தப் பாடசாலையின் அதிபரின் மகளும், இவளும் நேர்முகப் பரீட்சைக்குத் தேற்றினர். அதிபருடன் இருவரையும் விசாரித்தோம். மிகச் செம்மையாக அதிபரின் மகளின் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. ஸப்ரினாவின் ஆவணங்கள் திருப்தியாக
இருக்கவில்லை.
மல்லிகை நவம்பர் 2011 & 40
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காலையில் தொடங்கிய பணி மாலை யாகியும் முடியவில்லை. சுப்ஹானல் லாவுற். இறுதியாக.
“உங்களை ஒரு பிள்ளை சந்திக்க வாம் சேர்.’ பியோன் தயக்கத்துடன்
கூறினார்.
அணியிலிருந்த ஏனைய இருவரும் விரும்பவில்லை. இருவரின் முகத்தையும் பார்த்து புன்னகைத்தேன்.
"பார்ப்போமே.” என்றேன் நட்புடன். வரச் சொல்லும் தலைவர் இசைந்தார். கண் களில் சாரை சாரையாக நீர் வழிய அவள் வந்தாள்.
‘வல்லாஹறி. நான் பொய் சொன் னால் அல்லாஹறத்தாலா என்னைத் தண்டிப்பான் சேர். எனக்கு அநீதி நடந்து விட்டது, சேர். நான்தான் சேர் முழு நாளும் நின்று எனக்கு ஆவணங்களை அதிபர் தரவில்லை, சேர். மகள் நிரந்தர நியமனம் பெற வேண்டும் என்பதற்காக எல்லாம் காலை வாரி விட் டார் சேர், பிரின்சிபல். இது ஹறாம் சேர். ஹறாம்.” விக்கி விக்கி அழுதாள். எனக்கு நிலைமை நன்றாக விளங்கியது. ஏனைய
கஷ்டப்பட்டனான்.
இருவரும் அவளின் மனக்காயத்தைச் சுரண்ட விரும்பினர்.
“ஒகே நாங்கள் சரியாகத்தான் செய் வோம். கவலைப்படாதே’ என்று தேற்றி அனுப்பி விட்டேன். திருப்தியில்லாமல்தான் சென்றாள்.
அடுத்த வாரமே நியமனம் வழங்கப் பட்டது. இருவரையும் சிபார்சு செய்தேன். ஆனால், அதிபரின் மகளுக்கு மட்டுமே நிய மனம் கிடைத்தது. மறுநாளே ஸப்ரினா தொடர்பு கொண்டாள்.
“ஹலோ சேரா. என்பது மட்டுமே வார்த்தையாய் வெளிவந்தது. மீதியெல்லாம் அழுகைதான்.
என் உள்நெஞ்சு வலித்துக்கொண்டே யிருந்தது. என்ன பதில் சொல்வது?
"மகள், அல்லாட்ட துஆக் கேளுங்க” என்று மட்டும் என்னால் பதில் சொல்ல முடிந்தது.
பின், 'முடிந்தவரை முயற்சிக்கின் றேன்” என்று கூறிவிட்டேன்.
ஸப்ரினா என்ற பெயரைக் கேட்டாலே குற்ற உணர்ச்சியால் மனம் குறுகுறுத்தது. ஒவ்வொரு வாரமும் ஸப்ரினாவிடமிருந்து கோல் வரும்.
அதே பதில். எனது பிரார்த்தனையும், அவளது துஆவும் தொடர்ந்தது. மூன்றாவது மாதம் ஓர் அதிர்ச்சித் தகவல் என்னை மேலும் நிலைகுலைய வைத்தது. அதிபரின் மகளுக்கு போன மாதமே நிக்காவற் முடிந்த தாம். மாப்பிள்ளை எஞ்சினியராம். எஞ்சினி யரின் கெளரவத்துக்கு ஆசிரியை மணமக ளாகத் தேவைப்பட்டது. ஆனால் நிக்காவுற் முடிந்த மறுவாரமே டீச்சிங்கை ரிசைன் பண்ணச் சொல்லி விட்டாராம் மாப் பிள்ளை. என்சினியரின் மனைவி பாட சாலைக்குச் சென்று படிப்பிப்பதா?
விக்கித்துப் போனேன். அநியாயங்கள் யாவும் ஏழைகளுக்கா? என்னால் தாள முடியவில்லை. தாங்கவும் முடியவில்லை. அல்லாஹி அக்பர். அல்லாவற் போதுமான வன். என் மனதுள் குமைச்சலின் குறியீடு
சட்டென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒருமுறை ஸப்ரினாவின் வீட்டுக்குச் சென்று பார்த்தால் என்ன? மன திற்குள் முடிவெடுத்தேன். புறப்பட்டேன்.
மல்லிகை நவம்பர் 2011 & 41

Page 23
சனத்தொகை அதிகமாகவுள்ள ஆளையாள் கண்டுபிடிக்க முடியாத
நெருக்கமான வீடுகள்.
நண்பரொருவரை அழைத்துக் கொண்டு ஸ்ப்ரினாவின் வீட்டைத் தேடி னேன். அவர் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் என்றபடியால் நான் அந்நியமாகத் தெரிய வில்லைப் போலும், ஒரு சுற்றலில் கண்டு பிடித்து விட்டேன்.
ஒரு பழைய வீடு. பக்கத்தில் மதரஸா,
நிலம் பெயர்ந்த இடங்களில் எல்லாம் சாக்கைப் போட்டு மறைத்து, ஏழ்மையிலும் சீர்மையைப் பேணிய விதம் எனக்குப் பிடித்திருந்தது. இரண்டு கதிரைகளே இருந்தன. என்னைக் கண்டதும் அவள் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள்.
“வாங்க சேர். வாங்க. இருங்க இருங்க.” உம்மாவும் மகளும் திண்டாடத் தொடங்கினர்.
பத்து நிமிடத்தில் பக்கத்துக் கடையி லிருந்து தின்பண்டங்களும் சோடாவும் வந்தன.
"சாப்பிடுங்க சேர். சரியான சந்தோசம் சேர் நீங்க வந்தது” அவளின் கண்களில் பனித்த நீரை மெல்லப் புறங்கையால் துடைத்துக் கொண்டாள்.
G
சும்மா பார்க்க வந்தனான். மக பயப்படாதீங்க. அல்லாட காவலால உங் களுக்கு நல்லது நடக்கும்.
அரை மணித்தியாலம் சற்று ஆறுத லான வார்த்தைகளைக் கதைத்துவிட்டு எழும்பினோம்.
வாசலில் வந்து வழியனுப்பிய ஸப்ரினா "சேர், எங்கட துஆவும் உங்கட
பிரார்த்தனையும் பலிக்குமா சேர்?’ அவ
ளின் ஏக்கம் அந்த சொற்களில் துல்லிய
மாகத் தெரிந்தது.
'ஒமோம். இன்ஷா
அல்லாவற் நடக்கும்.”
ஒமோம்.
மறுநாளே செயலாளரிடம் சென்றேன். அவர் ஒரு தீவிர இறைபக்தர். எந்தக் கோயிலை, எங்க கண்டாலும் இறங்கி வழி படுவது அவரின் வழக்கம். உண்மையை அப்படியே ஒப்புவித்தேன். ஸப்ரினாவிற் காக நியாயம் கேட்டேன். எனது பிரார்த் தனையும், அவளது துஆவும் பலித்தது போலும், இளகினார். இரங்கினார். இறங்கி வந்தார்.
"கிருஷ்ணகுமார். தொண்டராசிரியர் பைலைக் கொண்டு வாரும்.’ இன்டர் கோமில் கட்டளை பறந்தது. பைல் கவன LDT85 otuuÜLILL-g5.
“எத்தனை பேர் பாக்கி உள்ளனர், அப்பொயின்மென்றுக்கு?”
“ஒன்றுதான் சேர்.”
'ஸப்ரினாவின் பைலை எடும். எடுக்கப்பட்டது.
எதுவுமே கேட்கவில்லை. எதையுமே பார்க்கவில்லை. அவரின் குறிப்பு எழுதப் பட்டு பன்னிரெண்டு குற்றுக்கள் குற்றப்பட் டன. அது அவரின் கையொப்பத்தின் ஒரு பகுதி. இரண்டு நாளில் எனக்குத் தகவல் வந்தது. ஸப்ரினாதான்.
‘சேர். சேர். எனக்குக் கிடைச் சிட்டுது, சேர்.” என் மனம் மகிழ்வாய்த் துள்ளியது. ஓர் ஏழையின் சிரிப்பின் பூரிப்பை மனதார உணர்ந்தேன்.
அல்லாவற் ஸ்ப்ரினாவின் நிக்காவற் வுக்கு கட்டாயம் நான் போக வேண்டும். அடி மனதில் தீர்மானித்துக் கொண்டேன்.
மல்லிகை நவம்பர் 2011 & 42

இரு குறுந்திரைப்படங்கள் The Technician -
காட்சிமயப்படுத்தப்படும் இன்றின் அபுத்தம்,
- 600.@
இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி ஊடாக கண்டுபிடிக்கப் பட்ட சில கண்டுபிடிப்பு கள், அவை கண்டுபிடிக் கப்பட்ட காலத்தில் அவை அறிவியல் தொழில் நுட்ப கண்டு பிடிப்புகளாக நோக்கப் பட்டன. காலப்போக்கில் அக கரு வரி க ளி ன தேவை அதிகரிக்கும் வகையில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் காரணமாக, அக்கருவிகள் எந்தப் பயன்பாட்டுக்காக கண்டு பிடிக்கபட்டதோ, அப்பயன்பாடுகளைக் கடந்து மேலதிகமான புதிய பயன்பாடு களுக்காக அவை பயன்படுத்தப்பட்ட பொழுது, வெறுமனே அறிவியல் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் என்ற நிலை கடந்து, அவை ஊடகங்களாக அடையாளப் படுத்தப்பட்ட பொழுது, அல்லது பயன்படுத்தப்பட்ட பொழுது அவை தம் தேவைகள் அதிகரிக்க அதிகரிக்க அவ்வூடகங்கள் மனிதர்களின் வாழ்வாதாரத்தின் தேவையாக மாறிவிட, அதன் ஆரம்ப காலகட்டத்தில் அவை தம்மின் பொருளியல் மதிப்பீட்டின் காரணமாக அவை உயர் வர்க்கத்தின் ஆடம்பரப் பொருட்கள் என்ற ரீதியிலே நோக்கப்பட்டன. காலபோக்கில் அவ்வூடகங்களின் பரவலின் காரணமாக அவை அத்தியாவசியமான பொருட்களாக மாறிவிட்டன. அத்தகைய ஊடகங்களில் மூன்றுதான் வானொலி தொலைபேசி தொலைக்காட்சி ஆகியவை ஆகும்.
இம்மூன்று ஊடகங்களும் அவை தாம் கொண்டிருக்கும் வீச்சுக்கு ஏற்ப
அவை தாங்கி வரும் உள்ளடக்கங்கள் தாக்கத்தையும் (Affect) விளைவுகளை
யும் (Effect) ஏற்படுத்துகின்றன. இதிலும் குறிப்பாக தொலைக்காட்சியினை எடுத் மல்லிகை நவம்பர் 2011 & 43

Page 24
துக் கொண்டால், அது அதிவீச்சினை கொண்டிருக்கும் ஓர் ஊடகமாக இருக் கிறது. இதற்குக் காரணம் அது தாங்கி வரும் உள்ளடக்கத்தை காட்சிமயப் படுத்தி (Visualize) தருகின்ற முறைமை ஆகும். (இவ்விடத்தில் இன்றைய கால கட்டத்தில் தொலைபேசியும் அது தாங்கி வரும் உள்ளடக்கத்தையும் காட்சி மயப் படுத்தி தருகின்ற முறைமைக்கு வந்து விட்டது என்ற செய்தியினையும் இங்கு நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.)
தொலைக்காட்சி கொண்டிருக்கும் இந்த வீச்சின் காரணமாக அது தாங்கி வரும் உள்ளடக்கங்கள் அதி வேகமாக சமூக, தனிமனித தாக்கத்தையும், அதற் கான விளைவுகளையும் ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.
தொலைக்காட்சி பற்றி உலக அள வில் சமூக ஊடக ஆய்வாளர்களால் பல்வேறு வகையான கருத்துகள் முன் வைக்கப்பட்டிருப்பினும், இத்தன்மை களைப் பற்றி விரிவாக இரு முக்கிய சமூக ஊடக அறிஞர்கள் முன் வைத் திருக்கும் கருத்துகள் முக்கியத்துவம் மிக்கவை. அவர்களில் ஒருவர் பிரான்ஸ் தேசத்தை சேர்ந்த பியர் பூர்தியு (Pierre Bourdieu-1930-2002). Q6 6(piu "தொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்" என்ற நூலில் தொலைக்காட்சி பற்றி மிக விரிவான கருத்துக்களை முன் வைத்துள்ளார். (இந்த நூல் பிரெஞ்சு மொழியிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழகத்தில் "க்ரியா’ பதிப்பகத்தால் வெளியிடப்பட் டுள்ளது. மேலும் அவரது கருத்துகளை
தமிழில் சிறிய அளவில் அறிமுகப் Lடுத்தும் ஒரு நூல் என்ற வகையில் கங்கு வெளியீடாக வந்துள்ள எஸ்.வி. இராஜதுரை அவர்களின் "பூர்தியுவும் மார்க்சியமும்” என்ற சிறு நூலும் குறிப் பிடத்தக்கது.
பூர்தியு தொலைக்காட்சி என்ற ஊடகம் உள்ளடக்கும் நிகழ்ச்சிக்கள் துரித சிந்தனையுடன் பாற்பட்டது என்றும், இது ஒரு வகையில் இன்றைய யுகத்தில் நடைமுறையில் இருக்கும் glflg5 D_600I6) (Fast Food) ab60TaffUgh துடன் ஒப்பிடத்தக்க ஒன்று என்பதாகக் கூறுகிறார்.
அடுத்து இன்னொரு முக்கிய ஊடக சமூக ஆய்வாளர்களில் ஒருவரான கனடாவைச் சேர்ந்த ஊடகத்துறை பேராசிரியர் மார்ஷல் மெக்லுகன் (Marshall McLuhan - 1911 - 80) 96 stab6f g560Tg5. Understanding the Media (UK: Routledge & Kegan Paul, 1984) 666 B BT656f 6fluJIT35 அச்சு ஊடகம் என்பது குளிர்ந்த (Cool) ஊடகம் என்றும், தொலைக்காட்சி என் பது வெப்பமான ஊடகம் (Hot) என் கிறார். இங்கு கையாளப்படும் இரு ஆங் கில பதங்களுக்கு இணையாக தமிழில் வெப்பமான, குளிர்ந்த என்ற சொல்லாக் கங்கள் பொருத்தமானவை அல்ல என எனக்குத் தோன்றுகிறது. தற்காலிமாக அவைக்கு இணையாக மிதமான, இத மான என்ற சொல்லாக்கங்களை பயன் படுத்தலாம் என தோன்றுகிறது. மேலும் இதனையிட்டு கலைச் சொல்லாக்க அறி ஞர்கள்தான் நமக்கு உதவ வேண்டும்.
மல்லிகை நவம்பர் 2011 & 44

தொலைக்காட்சி என்பது மீதமான ஊடகம் என குறிப்பிடுவதற்கு அவர் முன் வைக்கும் காரணம், அச்சு ஊடகம் மீது வாசகனின் கவனக் குவிப்பு உடனடியாக நிகழ்வதில்லை. அது சற்றுக் கால நீட்சியினைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் தொலைக்காட்சி
ஊடகத்தை பொறுத்தவரை அது
பார்வையாளனின் கவனக் குவிப்பை உடனடியாக வேண்டி நிற்பதே இதற்குக் காரணம் என்கிறார். இவ்விரு அறிஞர் களின் கருத்துகளின் ஊடாக தொலைக் காட்சி தாங்கி வரும் உள்ளடக்கங்கள் வெளிப்படும் விதம், அந்த உள்ளடக்கங் களின் ஆக்க முறைமை போன்றவை பற்றி ஆய்வு ரீதியாக நாம் அறிந்து கொள்வதோடு, அச்செயற்பாடுகளின் காரணமாக தொலைக்காட்சியானது சமூக, தனிமனித நடத்தையிலும் பெரும் மாற்றத்தையும் மிகுந்த செல்வாக்கையும் செலுத்தி வரும் ஒர் ஊடகமாக கட்ட மைக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. அத்தோடு இது சமூக உளவியலிலும், தனிமனித மனோ கட்டமைப்பிலும் மாற் றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக சமூக, தனிமனித நடத்தை யில் வெளிப்படும் ஒரு வகையான அபத் தம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி யினைப் பற்றிய விமர்சகர்களால் அது ஒரு நோய்க் கூறாக அடையாளப்படுத் தப்படுகிறது.
இந்த அபத்தம் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்ற கேள்வியினை சமீபத்தில் காணக் கிடைத்த The Technician என்ற கனடிய குறுந்திரைப் படம் எம்மில் எழுப்புகிறது. இப்படத்
gâ60D60T Simon Oliver Fecteau Qu Jišaś இருக்கிறார்.
நகரம் ஒன்றின் கேபல் டிவி வழங் குனர் அலுவத்திற்கு வரும் முறைப்பாடு காரணமாக அந்த அலுவகத்திலிருந்து டி.வி. இணைப்பு திருத்துனர் ஒருவர் முறைப்பாடு வந்த விலாசம் நோக்கி வருகிறார். அந்த விலாசத்திற்குரிய வீட் டின் கதவின் அழைப்பு மணியை அடிக் கிறார். இப்பொழுது முதியவர் ஒருவர் வருகிறார். வந்தவர் டிவி இணைப்பு திருத்துனர் என்பதை உடனடியாக ஊகித்து கொண்டு, வந்தவர் யார் என்று விசாரிக்காமலே கதவை திறக்காத நிலையில் "எனது டிவி பழுது அடைந்து விட்டது. முற்றும் முழுதுமாக பழுது அடைந்து விட்டது” என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதற்கு அந்த
Simon liver Fecteau (9 JLJTg55J5605 ஏற்று நடித்திருக்கிறார்) "பிரச்சினை யில்லை என்னை உள்ளே அனுமதி யுங்கள். நான் பார்க்கிறேன்” என்பார்.
அம்முதியவர் கதவை திறந்து அவரை உள்ளே அழைத்து, தனது டிவிக்கான ரிமோட் கன்டோரலை (Remote Control) 60)85us of 67 (6.5g) டிவியை இயக்குவார். அதில் தெரியும் சேனலில் போராளிகளுக்கும் அரசாங்க படையினருக்குமிடையில் கடும் போர் நடந்து கொண்டிருப்பதாகவும், அதில் நூற்றுக்கான பேர்கள் இறந்திருப்பதாகக் காட்டப்படுகிறது. இதனைப் பார்த்த அந்த ஊழியர் "உங்கள் டி.வி சற்று பழைய வகையைச் சார்ந்தது என்பதால் காட்சிகள் சற்று மங்கலாகத் தெரிகின்
மல்லிகை நவம்பர் 2011 & 45

Page 25
றன’ என்பார். அதற்கு அம்முதியவர் பதட்டத்துடன் “இல்லை இல்லை” என மறுதலித்து "இதைப் பார், இதைப் பார்” என இன்னொரு சேனலைக் காட்டுவார். அதில் புற்றுநோய் நாட்டில் கடுமையாகப் பரவி வருவதாகக் காட்டப்படுகிறது. "இதைப் பார்” என இன்னொரு சேன லுக்கு மாற்றுவார். அதில் உலக அள வில் பொருளாதார நெருக்கடி நிலவுவ தாக காட்டப்படுகிறது. அடுத்த சேன லுக்கு மாற்றுவார். அதில் எத்தியோப் பியாவில் கடும் பஞ்சம் நிலவுவதாகவும், நூற்றுக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருப்பதாகவும் காட்டப்படுகிறது. அடுத்து அவர் காட்டும் சேனலில் இம் முறை ஒலிம்பிக் போட்டியில் நம் நாட்டு வீரர்கள் பங்கு பெற முடியாத நிலை எனச் சொல்லப்படுகிறது. மேலும் பதட் டத்துடன் "இதை பார்” என அடுத்த சேனலை மாற்றுவார். அதில் அந்த நகரத்தின் பிரதான பூங்கா அருகில் இருந்த காட்டில் ஒரு சிறுவன் காணாமல் போய் விட்டதாக அறிவிக்கப்படுகிறது.
இதையெல்லாம் காட்டி "என் டி.வி. யைத் திருத்த முடியும் தானே?” என வினாவுகிறார், அதே பதட்டத்துடன். அந்த ஊழியருக்கு ஒரளவுக்கு விஷயம் விளங்கி விடுகிறது. இப்பொழுது அந்த ஊழியர் அந்த முதியவரை பார்த்துத் தயங்கி தயங்கிச் சொல்லுகிறார், "அது அவ்வளவு பிரச்சினையில்லை. ஆனால் இவ்வகையான குறைபாட்டைத் திருத்தப் பயிற்சி.” என்று சொல்லிக் கொண்டிருக் கும்போதே, முதியவர் மேலும் பதட்டம் அடைந்தவராக "அப்படியானால் எனது டி.வியை பழுது பார்க்க முடியாதா?” எனக் கேட்கிறார். இப்பொழுது அந்த
ஊழியரின் மனதில் அவர் மீது அனுதாப உணர்வு எழ, அவரை திருப்தி செய்யும் வகையில் சொல்லுவார், "இல்லை அப்படி ஒன்றுமில்லை. தொழில் நுட்பக் கோளாறின் காரணமாக இணைப்பில் ஏதாவது கோளாறு இருக்கிறதா என பார்க்கிறேன்” என்கிறார். அதற்காக டி.வி. பெட்டியின் பின்புறத்தில் அவரை திருப் திப்படுத்தும் வகையில் ஒர் ஆயுதத்தால் இரண்டு தட்டுக்கள் தட்டி, "இங்கு எந்த விதமான கோளாறும் இல்லை. வெளி இணைப்பில்தான் இனி பார்க்க வேண டும்” என்கிறார். முதியவரிடம் ஏமாற்றத் துடன் கூடிய அதே பதட்டம் தொடர் கிறது. இப்பொழுது ஊழியர் அவரை திருப்திப்படுத்தும் வகையில் தெருவில் இருக்கும் தூணில் ஏறிப் பார்க்கிறார். அங்கும் ஓர் பழுதும் இல்லை என்பது தெரிந்து இருப்பதால், அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையுடன் கீழே இறங்கி அக்கம் பக்கமாக பார்க்கிறார். இதனைக் கதவுக் கண்ணாடி வழியாக ஆர்வம் கலந்த நிலையில் பார்த்துக் கொண்டிருப்பார் முதியவர். வேறு வழி தெரியாமல் அந்த ஊழியர் அந்த முதிய வரிடம் சொல்லிக் கொள்ளாமலே அங் கிருந்து புறப்பட்டு விடுகிறார். இப் பொழுது ஏமாற்றம் அடைந்த நிலையில் டி.வி. சேனல்களை மாற்ற தொடங்கு கிறார் முதியவர். முதலில் வரும் சேனலில் போராளிகளுக்கும் அரசாங்க படைக்கும் நிகழ்ந்து கொண்டிருந்த போர் முடிவுக்கு வந்து விட்டது என காட்டப் படுகிறது. அவர் மாற்றும் அடுத்த சேன லில் புற்றுநோயை ஒழிப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து பயனளிக்க தொடங்கி விட்டதாக அறிவிக்கப்படு
மல்லிகை நவம்பர் 2011 & 46

கிறது. அடுத்த சேனலில் உலக பங்குச் சந்தை உயர்வடைந்து இருப்பதனால் உலக மட்டத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி இல்லாமல் போகப் போகிறது என அறிவிக்கப்படுகிறது. அடுத்த சேன லில் என்றும் இல்லாத அளவுக்கு எத்தி யோப்பியாவின் நாணய பெறுமதி அதி கரித்து இருப்பதாகவும்,உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக ஏத்தியோப்பியா மாறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இன்னொரு சேனலில் நம் நாடு ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறப் போவதாக அறி விக்கப்படுகிறது. கடைசியாக அம்முதிய வர் பார்க்கும் சேனலில் காட்டில் போன சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டு, அவனை நிருபர்கள் பேட்டி காண்பதாக காட்டப்படு கிறது. "யார் உன்னை காப்பாற்றியது?” எனக் கேட்கப்படும் கேள்விக்கு, அச்சிறு வன் முதியவர் வீட்டுக்கு டி.வி. திருத்த வந்த, வண்டியில் போய்க்கொண்டிருக் கும் அந்த ஊழியரைக் காட்டுவான்.
இவ்விடத்திலும் அந்த முதியவரின் முகபாவத்தில் எந்தவிதமான மாற்றமும் தெரியவில்லை.
இப்பொழுது அந்த முதியவரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்று விட்ட அந்த ஊழியர், சற்று முன் தொலைக் காட்சியில் காட்டப்பட்ட அந்த முதியவர் பார்த்த செய்திகளை அறிந்த நிலையில் (காட்டில் காணாமல் போன சிறுவனை தான் காப்பாற்றிய செய்தி உட்பட) ஏதோ உணர்வின் உந்தலில் அந்த முதி யவரைத் தேடி வருகிறார். அவர் அந்த வீட்டுக்குள் நுழைய முதியவர் ஷோபா வில் சாய்ந்திருந்தவாறே அந்தச் செய்தி களின் தொடர்ச்சியை பார்த்து கொண்டி
ருப்பதைக் காண்கிறார். ஒன்றுமே பேசாது முதியவரின் பக்கத்தில் அமர் கிறார். இப்பொழுது முதியவர் பார்த்து கொண்டிருக்கும் ஒரு சேனலில் இந்தோ னேஷியாவில் பூகம்பம் என்றும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவக்கப்படுகிறது. மறுகணம் அந்த முதியவர் அந்த ஊழியர் பக்கம் திரும்பி பார்க்காமலே ஒரு கேள்வியை அவரை நோக்கி கேட்கிறார். அதற்கு அந்த ஊழி யர் எந்தவிதமான பதிலும் சொல்லாது, மெளனமாக அந்த வீட்டை வெளியேறி தன் வண்டியில் போவதுடன் அக்குறுந் திரைப்படம் நிறைவு பெறுகிறது. அந்த கேள்வி மூலம் அந்த முதியவர் எத்த கைய அபத்தத்திற்கு ஆளாகி இருக் கிறது என்பது பார்வையாளருக்கும் புரிந்து விடுகிறது.
இக்குறுந்திரைப்படத்தை பற்றி இன் னொரு குறிப்பும் இவ்விடத்தில் சொல்ல வேண்டும், இக்குறுந்திரைப்படம் எனக்கு காணொளிகளுக்கான இணையத்தள மான Youtube இல்தான் முதன் முதலா கப் பார்க்கக் கிடைத்தது. இக்குறிப்புக் காக இத்திரைப்படத்தை பற்றி இணை யத்தளத்தில் மேலும் தேடிச் சென்ற பொழுது, குறுந்திரைப்படங்களுக்கான ஒர் இணையத்தளமான Shortsbay.com என்ற இணைத்தளத்திலும் இக்குறுந் திரைப்படம் இணைக்கப்பட்டிருந்தமை யைக் காண முடிந்தது. ஆனால் அவ் விணையத்தளத்தில் இக்குறுந்திரைப் படம் அங்கதம் (Comdey) என்ற வகை யில் (category) இணைக்கப்படிருந்தமை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அப்படம் இணைக்கப்
மல்லிகை நவம்பர் 2011 & 47

Page 26
பட்டிருந்த பக்கத்தில் இப்படத்தை பற்றி Markus OskarSSon ({9}6)J([bLÍD (U) [13] Jb திரைப்பட இயக்குனர்) என்பவரால் ஒரு
கருத்துவுட்டல் (Commen) இடப்பட்டி ருந்தது. அக்கருத்துாவூட்டலில் "நல்ல கருவுடன் நகைச்சுவையாக இப்படம் அமைந்திருந்தது” என சொல்லப்பட்டு இருந்தது. ஆனால் இரண்டு நிமிட வித்தி யாசத்தில் அதே நபரால் இடப்பட்ட அதே கருத்துவுட்டலில் நகைச்சுவை யாக என்ற சொல்லாடல் நீக்கப்பட்டிருந் தமை காணக்கூடியதாக இருந்தது. இக் குறுந்திரைப்படத்தையிட்ட இந்த விடயம் கூட எனக்கு இப்படத்திற்கு வெளியி லான ஒர் அபத்தமாகவே பட்டது.
மேலும் இக்குறுந்திரைப்படத்தின் தலைப்பு என்பதும் பொருத்தமாக இல்லை என்றே சொல்லவேண்டும். அப் படத்தின் கரு டி.வி. திருத்துனர் ஒரு வரின் அனுபவம் என்பது உண்மையா னாலும் இக்குறுந்திரைப்புடத்தின் கரு வின் குவி மையப் பாத்திரமாக இருப் பது, அந்த முதியவரே தவிர, திருத்த வரும் ஊழியர் அல்ல. ஆகவே
tre e .
റ്റൂ.ബി
அத்தலைப்பு இக்குறுந்துரைப்படத்திற்கு பொருந்தவில்லை என்பதும் இத்திரைப் படத்தின் வெளியிலான இன்னொரு குறையாகத் தெரிந்தது.
இந்தக் குறைபாடுகளைக் கடந்து இக்குறுந்திரைப்படம் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் வழியாக, இன்றைய சமூக, தனிமனித நடத்தையில் வெளிப் படும் அபத்தத்தைக் கலைத்துவமாக சித்தரித்து இருக்கிறது என்ற வகையில் சிறப்பான ஒரு குறுந் திரைப்படம் 6T60,T6NDI TLD.
இறுதியாக, இந்தோனேஷியாவில் பூகம்பம் என்றும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாவும் அறிவிக்கப்படும் செய்தியைப் பார்த்த மறுகணம் முதிய வர் அந்த ஊழியரின் முகத்தைப் பார்க் காமலேயே அவரை நோக்கி கேட்டும் கேள்வி இதுதான்.
"நீ இன்னும் எண் டி.வி.யைத் திருத்தவில்லையா?”
தெரு விளக்கு - Street Light வெளிச்சமாகும் உச்சமான
மனிதநேயம் மனித நேய உணர்வு எழுவதென்
பது, அது எழுகின்ற பொழுது, எந்த விதமான முன் நிபந்தனையும்
கொண்டிருப்பதில்லை. சக மனிதனின்
மீதான நேசத்தை உணர்வதற்கு முன்னால், எந்தவிதமான பேதங்களை யும் பார்ப்பதில்லை. ஒரு மனிதனின்
மல்லிகை நவம்பர் 2011 & 48
 

இருப்பு என்பது ஒரு தனிமனிதனின் இருப்பில் உறுதி செய் யப்படுவதில்லை. மாறாக ஒரு மனிதனின் இருப்பு என்பது சக மனிதனின் இருப்பில் தான் நிச்சயிக்கப்படுகிறது. எனக்கு சமூ கம் வேண்டாம் என்ற யாரும் சொல்லி விட முடியாது. அப்படி சொல்லி வாழ்தல் என்பது வெறுமனே ஒரு ஜடத்தின் வாழ்
கின்ற மனிதன் ஒரு நடமாடும் ஒரு உயரியாக மட்டுமே வாழ்வான்.
ஆனால் மனிதன் என்பவன் சமூக மிருகம் என சொல்லப்பட்டாலும், ஆற றிவு இல்லாத மற்ற உயரிகள் கொண்டி ராத ஒரு தன்மையாக அவனில் எழும் மனிதநேயத்தைச் சொல்லாம். இந்த உணர்வு மழுங்கடிக்கப்படும் பொழுதும், மறந்து விடும் பொழுதுதான், மனித சமூ கங்களின் மத்தியில் போர்களும், கல வரங்களும், போராட்டங்களும், தனிமனித மட்டத்தில் சச்சரவுகளும், சண்டைகளும் தோன்றுகின்றன. இந்தப் போர்கள், கல வரங்கள், சர்ச்சைகளும், சண்டைகளும் யார் பக்க நியாயம்? என்ற கேள்வி மனித நேய உணர்வின் பொழுது கேட் கப்படுவதில்லை. இது மனிதநேய உணர்வின் பலம் என்றும் சொல்லப்படுவ துண்டு, பலஹினம் என்றும் சொல்லப்படு வதுமுண்டு.ஆனால் இதையெலாம் மீறி ஒட்டு மொத்த மனித சமூகத்தின் மீது கொள்ளும் நேயம் என்பது, நிச்சயமாக ஒரு தனிமனிதனில் துளிர்க்கும் மனித நேய உணர்வின் பாற்பட்டது. இந்த உணர்வை யாரும் தடுத்துவிட முடி யாது. அந்த தனிமனிதன் இருக்கின்ற எந்த நிலையும் தடுத்து விடமுடியாது.
இத்தகைய உணர்வுகளை எம்மில் தூண்டிவிடும் வகையில் அமைந்திருந் தது சமீபத்தில் பார்த்த தெரு விளக்கு (Street Light) 616öI[0 g)ff|bg) (J}|}}||5 திரைப்படம்.
இப்படத்தின் இயங்குனர் மயில்சன் என்ற இளைஞர். இவர் பிறப்பால் ஒரு தமிழர். மும்பையில் வாழுபவர். புகைப் பட, குறுந்திரைப்படம் மற்றும் விளம்பரத் துறையிலும் பணியாற்றி வருபவர். இத் தகவல்களை அவருடன் மின்னஞ்சலில் தொடர்புக் கொண்டு அறிந்துக் கொள்ள முடிந்தது.
இக்குறுந்திரைப்படத்தின் கதை இதுதான். இந்திய நகரம் ஒன்றின் தெரு வுக்கு பொறுப்பான மின்சார திணைக்கள அலுவலகத்திற்கு தினந்தோறும் ஒருவர் தொலைபேசி அழைப்பு எடுத்து, தான் இருக்கும் தெருவின் முனையில் தெரு விளக்கு பழுதடைந்து விட்டதாகவும், அதன் காரணமாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளா குவதாகவும், தயவுகூர்ந்து அதனைத் திருத்த வருமாறும் அழைப்பு விடுத்துக் கொண்டே இருப்பார். அந்த நபரின் தொல்லை தாங்காது ஒரு நாள் அந்த அலுவலகம் அந்த தெரு விளக்கை திருத்த ஒர் ஊழியரை அனுப்பி வைக் கிறது. அந்த ஊழியர் அத்தெருவுக்கு வந்து, பழுதடைந்த அவ்விளக்கை சீர் செய்து, அத்தகவலை தனது அலுவல கத்திற்கு தெரிவிக்க ஒரு தொலைபேசி இருக்கும் இடத்தைத் தேடுகிறார். அப் பொழுது அவரது கண்ணில் அந்த தெரு முனையில் அமைந்திருக்கும் ஒரு பெட்டிக்கடை தென்படுகிறது. அக்கடை யில் தொலைபேசி இருப்பதைக் கண்டு
மல்லிகை நவம்பர் 2011 & 49

Page 27
அக்கடைக்காரின் அனுமதியுடன் தனது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு, தான் அத்தெரு விளக்கை சரி செய்து விட்டதாக அறிவிக்கிறார். இதனைக் கேட்டு அக்கடைக்காரர் மகிழ்ச்சியான முகத்துடன் தெருவிளக்கை சீர் செய் தமைக்கு நன்றி சொல்லுகிறார். அதற்கு அந்த ஊழியர் எனக்கு நன்றி சொல்ல வேண்டாம். தினம் தினம் அந்த விளக்கை சரி செய்ய வருமாறு தொலை பேசியில் எங்களை நச்சரித்த அந்த நபருக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்கிறார். அப்பொழுது அக் கடைக்காரர் சொல்கிறார், அந்த நபர் நான்தான் ஸார் என்று. ஒருகணம் ஊழி யர் தடுமாறிப் போகிறார். பின் தான் எடுத்த தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்தை அக்கடைக்காரருக்கு கொடுக்க முயற்சிக்கிறார். அந்த கடைக் காரரோ "பணம் வேண்டாம் ஸார். நீங்கள் நல்லதொரு பணி செய்து இருக்கிறீர் கள்’ எனச் சொல்லி தொலைபேசிக் கட்டணத்தை வாங்க மறுக்கிறார். அப் பொழுது அந்த ஊழியர் "இது என்ன என் பணமா, அரசாங்கப் பணம்தானே. எடுத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறி வற்புறுத்தியவாறே அப்பணத்தை அக் கடையின் பட்டறையின் மீது வைக் கிறார்.
இக்காட்சிக்குப் பின் இக்குறுந் திரைப்படத்தில் வரும் காட்சி அந்த அரசாங்க ஊழியரை மட்டுல்ல அக்குறுந் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக் கும் பார்வையாளரையும் அதிர வைக் கிறது. அந்த ஊழியர் அக்கடையின் பட்டறையில் வைக்கும் பணத்தை அக் கடைக்காரர் தடவித் தடவி எடுக்க முயற்சிக்கிறார்.
அப்பொழுதுதான் பார்வையாளர் களுக்கும் அந்த ஊழியருக்கும் தெரிய வருகிறது, அக்கடைக்காரர் பார்வை யற்றவர் என்பது. அதனை உறுதிப் படுத்தும் வகையில் அக்கடைக்காரரிடம் ஊழியர், "நீங்கள் பார்வையற்றவரா?” என்று கேட்கிறார். அதற்கு அக்கடைக் காரர் "ஆம்" என்று சொல்லுகிறார். நாம் இக்குறிப்பின் முன் பகுதியில் சொன் னோமே மனிதநேய உணர்ச்சி என்பது மனிதனின் எந்தவொரு நிலையிலும் துளிர்விடும் என்பதை அக்காட்சி எடுத் துக் காட்டுகிறது.
அக்கடைக்காரர் பார்வையற்றவர் என்ற இந்த உண்மையை உறுதி செய்து கொண்ட அந்த ஊழியரது மன திலும், அக்குறுந்திரைப்படத்தை பார்த்து கொண்டிருக்கும் பார்வையாளர்களினது மனதிலும் எழும் ஒரு கேள்வியை அந்த ஊழியர் அக்கடைக்காரரிடம் கேட்கிறார். அதற்கு அக்கடைக்காரர் சொல்லும் பதி லாய் சொல்லும் வார்த்தைகள், தெரு விளக்கு பழுது அடைந்துவிட்டதனால் இருட்டாக இருந்த அத்தெருக்கு வெளிச் சத்தை கொண்டு வந்த அந்த ஊழியருக் கும் பார்வையாளருக்கும் மனித நேயத் தின் உச்சம் பிரகாசமான முறையில் வெளிச்சம் ஆகுகிறது.
"நீங்கள் பார்வையற்றவர். பின் ஏன் தெரு விளக்குக்காக தினம் தினம் தொலைபேசி எடுத்தீர்கள்?’ என அந்த ஊழியர் கேட்ட அந்தக் கேள்விக்கு அக்கடைக்காரர் சொல்லும் பின்வரும் பதிலுடன் அக்குறுந்திரைப்படம் முடி கிறது இக்குறிப்பை போல.
“அதற்குக் காரணம் இருட்டில் வாழுவதற்கான வலி எனக்கு தெரியும்.”
மல்லிகை நவம்பர் 2011 & 50

பிரபஞ்ச பெருவெளியில் நம் தேசம் சபித்த ஒர் பொழுதில் அமானுஷ இரவுகளில் நித்திரை நிராகரித்த
கனர்கள்
வழக்கமற்ற பகல் தாக்கத்தில் விசித்திர கனவெனக்கு வேற்றுக்கிரகத்திலிருந்து பல பறக்கும் தட்டுக்கள்
நம் தேசம் நோக்கி வந்தன
அதில்
முகமூடி சப்பாத்து
குருதி பருகும் ஒரு புது வகையான ஆயுதமென சில தட்டுக்கள் நிரப்பப்பட்டிருந்தது
கனவிலும் ஆச்சியமெனக்கு பல தட்டுக்களில்
முற்று முழுதாக கிறிஸ் கொண்டு நிரப்பியிருந்தது
இன்னும் சிலவற்றில் பாதி மனிதன் கலந்த புது சிருஷ்டிப்புக்கள் இருந்தன பெயர் சொல்ல தெரியவில்லை
எனக்கு
Ꮤ "كي
இன்னும் சில பறக்கும் தட்டுக்களில் சீருடைகளும் அடையாளம் கானாத வகையில் வெள்ளை நிறத்தில் சிலவும் இருந்தன அது வெள்ளை வான் ஆகத்தான் இருக்கனும் போல
கனவின்
கடைசிக் கட்டத்தில்
நான் கைது செய்யப்பட்டிருந்தேன் காரனமென அலறிய போது நாட்டில் மர்ம மனிதர்கள் என
வதந்தி பரப்பினோனாம்.
மல்லிகை நவம்பர் 2011 & 51

Page 28
655u Daojiaofeb சிங்கள நூலுக்கு விருது
- GLDLD6ofessf
இந்திய மண்ணில் சிங்கள மொழி நூல் ஒன்றுக்கு நான் அறிந்த மட்டில் முதன் முதலாக விருதும் பரிசும் வழங்கப் பட்டுள்ளது. இவ்விருதுக்கும் பரிசுக்கும் உரியவர் நம் நாட்டு சகோதர மொழிப் படைப்பாளியும், தமிழ் - சிங்கள மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருபவருமான திரு. உபாலி லீலாரட்ன அவர்கள்.
இவர் சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழகப் படைப்பாளி யான கு.சின்னப்ப பாரதியின் சுரங்கம்' நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூலுக்கு தமிழகத்தில் மொழிபெயர்ப்புத் துறையை ஊக்குவிக்கு முகமாக செயற்படும் நல்லி திசை எட்டும்' எனும் அமைப்பினால் அப்பரிசு வழங்கப்பட்டது. நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் அனுசரணையுடன் செயற்படும் அவ்வமைப்பின் 2011ஆம் ஆண்டுக்கான மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா கடந்த செப்டம்பர் 17ந் திகதி திருச்சியில் நடைபெற்ற வேளை உபாலி லீலாரட்ன சமூகமளிக்க முடியாது போனதால் ஒக்டோபர் 3ந் திகதி திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் வைத்து, நல்லி திசை எட்டும் விருது அந்த அமைப்பின் சார்பாக உபாலி அவர்களுக்கு, நம் நாட்டு புரவலர் ஹாசிம் உமர் அவர்களால் வழங்கப்பட்டது.
நல்லி திசை எட்டும் என்ற அமைப்பை பொறுத்தவரை மொழிபெயர்ப்பு படைப்புகள் அடங்கிய 'திசை எட்டும்' என்ற காலாண்டிதழ் ஒன்றினை வெளியிட்டு வருகிறது. அத்தோடு இவ்வருடம் Trans Fire என்ற பேரில் ஆங்கிலத்திலும் ஒரு காலாண்டிதழ் ஒன்றினை வெளியிடத் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நாமக்கல்லில் நடந்த 2011ம் ஆண்டுக்கான கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கிய விருது வழங்கும் விழாவில் ஈழத்துத் தமிழ் படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்ட பரிசளிப்பின் பொழுதும் உபாலி லீலாரட்ன சிங்கள மொழியில் மொழி பெயர்த்த கு.சின்னப்பபாரதியின் சுரங்கம்', தாகம் ஆகிய இரு நாவல்களின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் மொழிபெயர்ப்புக் கான விருதும் பரிசும் வழங்கப்பட்டது.
இவ்விரு நூல்களும் கொடகே நிறுவனத்தால் வெளியிடப்பட்டவை என்பது கொடகே நிறுவனத்திற்குப் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வாகும்.
அத்தோடு இந்திய மண்ணில் முதன் முதலாக ஒரு சிங்களமொழி நூல் ஒன்றுக்கு விருது பெற்றவர் என்ற சாதனைக்குரியவராக, மூவினங்களுக்கும் இடையே நல்லிணக் கத்தை உருவாக்கும் கருத்துடையவரான உபாலி திகழ்கிறார் என்பதில் அத்தகைய உணர்வு கொண்ட இலங்கையர்களான நமக்கும் பெருமை சேர்க்கும் ஒரு விடயம்
666D. மல்லிகை நவம்பர் 2011 率 52
 

იწu-(rNovწყ2
- வேல் அமுதன்
புது வாடிக்கையாளர் ஒருவர் எங்களது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்றார்.
"இதிலை என்ன கஷ்டம்? விளக்கமாகச் சொல்லுங்கோவன்” - நான் கேட்டேன். "சாதகக் குறிப்பைத் தரும்படி கேட்கிறியள். எமக்குச் சோதிடத்தில் நம்பிக்கை இல்லை.”
"சடங்கு, சம்பிரதாயம் எண்டு வரையிக்கைச் சாதகத்தைப் பாக்கத்தான் செய்வினம். மாப்பிள்ளைப் பகுதி பொருத்தம் பாக்க வேண்டுமென்றால், நாங்க என்ன செய்கிறது, சொல்லுங்கோ?”
"உங்கடை கஷ்டம் விளங்குது. நாங்க இதுபற்றி யோசித்துப் பாத்து, முடியுமெண்டால் திரும்ப வாறம்.”
ஒரு வாரம் கழித்து அந்த வாடிக்கையாளர் மீள வந்தார். “சாததக் குறிப்பைத் தாறம். ஆனால், ஒரு நிபந்தனை. நாங்க சாதகப் பொருத்தம் பாக்கப் போறதில்லை. மாப்பிள்ளைப் பகுதி வேண்டுமெண்டால், பாத்து முடிவைச் சொல்லட்டும்” என்றார்.
விட்டு விடுவேனா, நான்? "ஏன் உங்களுக்குச் சோதிடத்திலை நம்பிக்கை இல்லை?”நாசூக்காகக் கேட்டேன், நான்.
அவர் சொன்ன திடுக்கிடச் செய்த கதை இது. “எனது மனைவியும் நானும் ஒரே கல்லூரியிலை படித்தனாங்க. ரோகிணியும் திருவோணமும். பொருந்தாது எனத் தெரிய வந்தது. நாங்க இருவரும் ஒருவரை ஒருவர் மனதார விரும்புவதாகச் சொல்லி ஜெயித்திட்டம்.
இன்னொன்று. எங்கடை கலியான வீட்டண்டுத் துரதிர்ஷ்டவசமாக மனைவியின்ரை கூறையிலை குத்துவிளக்கு நெருப்புப் பிடித்துவிட்டது. சகுனப்பிழை என கிசுகிசுப்புப் பலமாகக் கிழம்பிச்சு; கெட்டித்தனமாக அடக்கிட்டம்.
சும்மா சொல்லப்படாது. நாங்க வலு சந்தோஷமாக வாழுறம். இருபத்து ஐந்து வருஷங்கள் வாழ்ந்திட்டம். எங்களுக்கு மூண்டு பிள்ளைகள். ஒரு குறையும் இல்லை. இன்னொன்டு. எமது மகளும் சாதகப் பொருத்தம் பாக்காமல் செய்யச் சம்மதம்.”
மல்லிகை நவம்பர் 2011 & 53

Page 29
GlLurrchítiu. Irr
சி.குமாரலிங்கம்
இந்தத் தென் அமெரிக்க நாட்டில்தான் சே குவாரோ கொல்லப்பட்டர். (9.10.1967) ஆனால் அவர் பிறந்தது இன்னொரு தென் அமெரிக்க நாடான அர்ஜென்ரினாவில்தான் (14.06.1928). 1545இல் இந்த நாட்டை ஸ்பானியர்கள் கண்டுபிடித்தார்கள். அப்பொழுது உலகத்திலேயே அதிகளவு வெள்ளி அங்கிருந்தது. அவர்கள் அந்த நாட்டு சுதேசி மக்களை அடிமையாக வைத்து அந்த வெள்ளிகளை அள்ளி தமது நாட்டுக்கு கொண்டு சென்றார்கள். அவர்கள் போனபின்பு அமெரிக்கர்கள் அங்கு வந்தார்கள். 1982இல் அங்கு ஜனநாயக முறையில் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. அந்த நாட்டில் இராணுவப் புரட்சி நடப்பது சர்வ சாதாரண விடயமாகும். EVOMORALES என்பவர் 2005இலிருந்து அந்த நாட்டை ஆட்சி செய்து வருகிறார். 1959ஆம் ஆண்டு இவர் ஒரு ஏழை இடையர் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஒரு மாக்சியவாதி ஆவார். இவர்தான் முதலாவது தேசிய இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி ஆவார். 2009 தேர்தலிலும் இவர் வெற்றி பெற்றார். இந்த நாட்டில் 55% சுதேசிகள், 15% ஐரோப்பியர்கள், 30% கலப்பு இனமக்கள் எல்லோரும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நாட்டில் கிராமிய சிறுதெய்வ வழிபாடு உள்ளது. தற்பொழுது அங்கு பெற்றோலியப் பொருட்கள் காணப்படுகிறது. USAID ஸ்தாபனத்தின் நடவடிக்கைகள் அதிகமாக காணப்படுகிறது. 2008இலிருந்து அந்த நாட்டு அரசு USAID அதிகாரிகளை வெளியேற்றி வருகிறது.
பல நூற்றாண்டுகளாக அந்த நாட்டு மக்கள் கொக்கோ இலைகளை சப்பி இன்பம் காண்பது வழக்கம். கொக்கோ மரம் அந்த நாட்டின் ஒரு முக்கிய பயிராகும். 13000 அமெரிக்கர்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கிறார்கள். 40000 அமெரிக்கர்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்து போகிறார்கள். 2007ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி அந்த நாட்டுக்கு விஜயம் செய்தார். அதே ஆண்டில் வெனிசுலா ஜனாதிபதி சாவோசும் விஜயம் செய்தார். இருவரும் தமது சொற்பொழிவுகளில் எதிர் எதிரான கருத்துக்களை முன்வைத்தார்கள். சீன அரசு பெற்றோலிய கனிவள விடயங்களில் முதலீடு செய்து வருகிறது. அந்த நாட்டில் பல சுய ஆட்சிப் பிரதேசங்கள் உள்ளன. வலதுசாரிகளும் பணக்காரர்களும் பிரிவினை வாதத்தை தூண்டி வருகிறார்கள். 2005லிருந்து ஜனநாயக ரீதியாக அரசியல் சீர்திருத் தங்கள் ஏற்படுத்தப்படுகிறது. எல்லாத் துறைகளிலும் அரசு ஏகபோகம் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கை மக்களால் முன்வைக்கப்படுகிறது.
19ம் நூற்றாண்டில் எமது நாடு ஐரோப்பியர்களுக்கு சொந்தம். 20ம் நூற்றாண்டில் அமெரிக்கர்களுக்குச் சொந்தம். இனிமேல் எமது நாடு எங்களுக்கே சொந்தம் என்று அந்த நாட்டு மக்கள் கூறுகின்றார்கள். 01.05.2005இலிருந்து பெற்றோலியத் துறை தேசிய மய
மல்லிகை நவம்பர் 2011 奉 54

மாக்கப்பட்டது. 2006ல் ஜனாதிபதி ஐ.நா. சபையில் பேசும் பொழுது கொக்கோ இலையைக் காட்டி இது எங்கள் நாட்டின் சொத்து. இதில் ஐ.நா. சபையும் அமெரிக் காவும் தலையிடக் கூடாது என்று பேசி னார். வறிய மக்களுக்காகப் பல சமூக நலத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வரு கிறது.
NAFTA என்பது அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் பொருளா தார கூட்டாகும். அதற்கு எதிராக PTA என்ற வர்த்தக பொருளாதார கூட்டு லத்தீன் அமெரிக்க நாடுகளால் ஏற்படுத்தப் ul. BOLIVARIAN ALTERNATIVE (பொலிவாரிய மாற்றுப் பாதை) என்ற கோசம் முன்வைக்கப்படுகின்றது. மாற்றம் கோரி அந்த நாட்டு மக்கள் பேரணி நடத்து வதில்லை. அவர்களுடைய வாழ்க்கை முறை மாற்றமே மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
1997ல் அந்த நாட்டில் தண்ணிர்
விநியோகம் தனியார் மயப்படுத்தப்பட்டது. புதிய கட்டண வீதங்கள் 35% அதிகரிக்கப் பட்டது. புதிய இணைப்புக் கட்டணம் 445 டொலராக இருந்தது. இது ஒரு தொழிலாளி யின் சம்பளத்தை விட 6 மடங்கு அதிக மாகும். மக்கள் போராட்டம் நடத்தினார் கள். அரசாங்கம் அந்தக் கொள்கையை கைவிட்டது. 31.10.1952இல் அந்த நாட்டில் இருந்த 163 சுரங்கங்கள் தேசிய மயமாக்கப்பட்டது. அமெரிக்க அரசாங்கம் 1989இல் இருந்து கொக்கோ பயிர் செழ் வதற்கு எதிராக பிரச்சாரம் செய்து வரு கிறது. 3 மாதத்துக்கு ஒருமுறை கொக்கோ இலைகள் அறுவடை செய்யப்படுகிறது. 1980இல் தான் தற்போதைய ஜனாதிபதி நகராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற் றார். அவர் அப்பொழுது நகரத்தில் ஒரு அறையில் வாடகைக்கு குடியிருந்தார்.
(இதில் கூறப்பட்டவை எல்லாம் ஓர் ஆங்கிலச் சஞ்சிகையிலிருந்து என்னால் தொகுக்கப்பட்டவை.)
கொழும்பு நாடகத்துறையிலும், இலங்கையில் திராவிட இயக்கச் செயற்பாடுகளை முன்னேடுத்து சென்றவருமான கம்பளைதாசன் அவர்கள் (சாகுல் ஹமீட்) சமீபத்தில் காலமானர். மருத்துவத்திற்காக தமிழகம் சென்ற வேளையில் அங்கு காலமான கம்பளைதாசன் அவர்கள் நீண்டகாலமாக கொழும்பு நாடகத் துறையிலும், திராவிட இயக்கச் செயற்பாடு களுடனும் தன்னை தீவிரமாக இணைத்துக் கொண்டு செயற்பட்டவர். அவரது மறைவையிட்டு மல்லிகை இலங்கைக் கலைஞர் களினது சார்பாகத் தனது அஞ்சலியை செலுத்துகிறது.
- ஆசிரியர்
மல்லிகை நவம்பர் 2011 & 55

Page 30
பெண்ணியம் எதிர்பார்த்த இலக்கை அடைவதில் பின்னடைவு ஏற்படுவதற்கு நெஞ்சில் உரமற்ற பெண்களும் ஒரு காரணமாக இருக்கிறார்கள். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற நிலை இன்றும் தொடர்கதையாக இருக்கிறது. கணவனின் அட்டூழியங்களைத் தாங்க முடியாத பெண்கள் கூட, உறவை அறித்தெறிய முடியாமல் இதுவே விதி என்று எதையும் தாங்கும் இதயத்துடன் சோதனைகளையும் வேதனைகளையும் சகித்தபடி வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான அதி கொடுர வன்முறைகளை சகித்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும் குடும்ப அலகை உடைத்தெறியாமல் குட்டக் குட்ட குனிந்தபடி இருக்கும் பெண்களின் அவல நிலைக்கு முடிவே இல்லையா?
சாதாரண அடக்கியாளுதலுக்கு அடங்கிப் போதலில் இருந்து, அதி கொடுர
வன்முறைகளைத் தாங்கிக் கொண்டு குடும்பக் கெளரவம் என்ற போர்வைக்குள் முடங்கிப் போயிருக்கும் பெண்கள் ஏராளம், பெண்கள் சந்திக் கின்ற வன்முறைகளுக்கும், அவமானங்களுக்கும்
یہ � எல்லையே இல்லை. வீட்டுக் வீடு வாசற்படி நெத் efco என்பது போல எல்லா மட்டத்திலு உள்ள பெண்களும் ஆண்களின் நிராகரிப்புக்கும், வன்முறைக்கும்
உள்ளாகிறார்கள். படித்த உயர்பதவி வகிக்கின்ற 2 Lib பெண்கள் கூட இதற்கு வதிவிலக்கல்ல. இவ்வாறு பதிக்கப்படும் அனைத்துப் பெண்களாலும் வேண்டும் எதிர்க்குரல் எழுப்ப முடியாதவாறு சமூகப் பண்பாடு அழுத்தங்கள் தடை போடுகின்றன. பெண்களைத் தமது Ապ&Tuճl6մ
கட்டுப்பாட்டுக்குள்வைத்திருப்பது தமது பிறப்புரிமை என்ற எண்ணம் பாரம்பரியமாக தொடர்ந்து வருகின்றமையினால் பெண்கள் இதுவே நியதி என்று எண்ணுகிறார்கள். இந்த கட்டமைப்புள் வாழும் பெண்கள் இதை மீறிச் செயற்படத் தயங்குகிறார்கள்.
பிறப்பிலிருந்தே பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்ற போதிலும், அவர்கள் காதல், திருமண விடயங்களிலும், இல்வாழ்விலும் ஆணாதிக்கத்தின் தாக்கம் அதிகரிக்கின்றது. இன்றைய படித்த பெண்கள் தாம் விரும்பியவரை காதலித்து திருமணம் முடித்திடப் போராடி வெற்றி பெறுகிறார்கள். ஆனால் குடும்ப வாழ்வில் நுழைந்த பின்னர் பெண்களால் தமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் போராடி வென்றிட முடயாமல், அடங்கிப் போகும் நிலையையே பல குடும்பங்களில் காணமுடிகிறது.
மனைவி என்பவள் கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும் உழைக்கும் ஒரு சொத்துடமை அல்லது கொத்தடிமை போன்ற நிலையே இருக்கிறது. இதில் வேடிக்கை என்றவென்றால் இந்த நிலைக்கு பெண்களே வக்காலத்து வாங்கும்
நிலையுள்ளது.
மல்லிகை நவம்பர் 2011 தீ 56

அடிமை நிலையை உணர்ந்த பெண் கள் கூட, பொருளாதார தேவை கருதி யும், கணவனின் உதவி இல்லாமல் வாழ்க்கையை எப்படித் தொடர்வது என் கிற பயம் காரணமாகவும் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் இல்லற பந்தத்தைக் கொண்டு இழுக் கிறார்கள். படித்த, பதவி வகிக்கும் ஆற் றல் ஆளுமை உள்ள பெண்களிடமே இவ்வாறான பயம் இருக்கும் போது சாதாரண பெண்கள் எம்மாத்திரம்?
சில குடும்பங்களில் அதிக பிரச் சினைகள் வெடிக்காது விட்டாலும் கூட இன்றும் பல குடும்பங்களில் ஆணா திக்க கொடுமைகள் தொடர்கிறது. இக் கொடுமைகளை நிகழ்த்துவது கணவன் என்ற ஆண்மகன் மட்டுமல்ல. மாமியார், மைத்துணி என்ற பெண்கள் கூட ஆணா திக்கவாதிகளாகச் செயற்படுகிறார்கள். பரம்பரை பரம்பரையாகத் தொடர்கின்ற மூளைச் சலவையே இதற்குக் காரணம்.
பெண்கள், சமூகத்தின் தூற்றுதல் களுக்குப் பயந்து போயும், வாய்மூடி மெளனிகளாக அவமானங்களை உள்ள டக்கி சகிப்புடன் வாழுகின்ற அவல நிலையையும் காணமுடிகிறது. பாலியல் விவகாரங்களில் பெண்கள் தும்மி னாலும் குற்றம் என்று உரைக்கின்ற சமூ கம் ஆண்களுக்கு மட்டும் தாராளமான சுந்திரத்தை வழங்கியுள்ளது. உண்மை யிலேயே பெண்களைப் போன்ற கட்டுப் பாடு ஆண்களுக்கும் அவசியமாகும். அன்பான மனைவி அருகிருக்கும் போது அவளைத் துச்சமாக நினைத்து இன் னொரு பெண்ணுடன் உறவு வைக்கும் ஆண்கள் ஏராளம். இதற்குத் துணை
போகும் பெண்களும் கண்டிப்புக்குரிய வர்கள். கணவனின் இவ்வாறான நிரா கரிப்புத் தாக்கம் ஏற்படுத்தும் துயரம் எத்தனை கொடியது என்பதைப் பற்றி நெறி பிறளும் ஆண்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆம்பிளை என்றால் அப்படி இப்படித்தான் இருப்பான், பெண்தான் அவனைத் திருத்தி அன் போடு அரவணைக்க வேண்டும் என்று இந்தச் சமூகம் ஆண்களுக்குச் சார் பாகவே கருத்துரைக்கிறது. பெண்ணின் அவலம் பற்றிச் சிந்திக்க மறுக்கிறது. மனதிற்குள் எரிமலையைச் சுமந்தபடி தன்னையே ஆணுக்காக அர்ப்பணிக் கின்ற பெண்களை புரிந்துகொள்ளாமல், எதற்கெடுத்தாலும் அவளையே சாடு கின்ற ஆணாதிக்கத்தை எதிர்த்து எழு கின்ற பெண்களும் இருக்கத்தான் செய் கிறார்கள். ஆனால் இவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் வன்முறைத் தாக்கு தல்கள்தான். தன்மானம், ரோசம் என் கின்றவை பெண்ணுக்கு இருக்கவே கூடாதென ஏன் இச்சமூகம் நினைக் கிறது?
அரசியலமைப்பிலும், சட்டத்திலும் பெண்களின் உரிமைகளுக்குப் பாது காப்பு இருக்கின்ற போதிலும் அவை நடைமுறையில் முழுமையாக செயற் படுத்தப்படுவதில்லை. இன்னொரு புறம் பெண்கள் சட்டத்தை நாடவும், கணவன் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவும் தயங்குகிறார்கள். அதையும் மீறி செயற்படும் பெண்கள் மேலும் மேலும் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடு இச்சமூகத்தில்
மல்லிகை நவம்பர் 2011 & 57

Page 31
ஏற்படுதல் அவசியம். இதைப் பெண்கள் தான் போராடிப் பெறவேண்டும்.
பெண்களுக்கு நெஞ்சுரம் தேவை. ஆணைப் பகைத்துக் கொண்டு எப்படி வாழ் தல் என்ற பயத்தைப் போக்குவதுடன் சுய காலில் நின்று வாழும் நிலையை ஒவ் வொரு பெண்ணும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் வலுவில் ஆண்களை விட சற்றுக் குறைவானவள் என்கின்ற போதிலும் பெண்களின் மனவலிமை அளப் பரியது. தனக்கிருக்கும் இந்த வலிமையை ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து கொள்ள வேண்டும். குடும்பமானம், சுய பாதுகாப்பு என்ற மாயைகளில் சிக்குண்டு தமது ஆளு மையை அசிங்கப்படுத்திக் கொள்ளாமல், தாம் சுதந்திரமாக வாழத் தகுதியுடையவள்
என்பதை பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நெஞ்சுரம் என்பதை எதையும் தாங்குதல் என்று பொருளல்ல. எதையும் சாதிக்கின்ற நெஞ்சுரம் அவர்களுக்கு இருக் கிறது. பெண்ணின் வாழ்வு சமூகத்துடன் பின்னப்பட்டுள்ளது. சமூகத்தை நிராகரித்து, சமூகத்துடன் முரண்பட்டு பெண்கள் செயற்பட வேண்டும் என்று நான் கோரவில்லை. சமூக மாற்றம் ஒன்றிற்கான சரியான திசையில் பெண்கள் செயற்பட வேண்டும். எதிர்ப்பதுதான் பெண்ணியம் என்று தப்பெண்ணம் கொள்ள வேண்டாம். ஆனா திக்கத்தை மாற்றி ஆண் - பெண் சமத்து வம் காண்பதே பெண்ணிய இலக்கு. அந்த இலக்கை அடைவதற்காகப் போராடுவோம்.
ஆண் களை
செலுத்துகின்றது.
நவீன சிங்கள கலை இலக்கியத் துறையின் ஒரு முக்கிய ஒர் ஆளுமையாகத் திகழ்ந்த கே.ஜயதிலக அவர்கள் சமீபத்தில் காலமானார். மார்ட்டின் விக்கிரமசிங்க அவர்களுக்கு பிறகு யதார்த்தப் போக்குடன் சிங்கள இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றவர். இவர் பல்வேறான ஆக்க இலக்கியங்களை சிங்களக் கலை இலக்கியத்துறைக்கு வழங்கி சென்றுள்ளார்.
இவரது பல சிறுகதைகள் தமிழில் பலரால் மொழிபெயர்க்கப்பட் டுள்ளன. "சரீத துன” என்ற அவரது நாவல் “மூன்று பாத்திரங்கள்” என்ற தலைப்பில் தம்பிஐயா தேவதாஸின் மொழிபெயர்ப்பில் இந்தியாவில் NCBH வெளியீடாக வெளிவந்துள்ளது.
அன்னாரின் இழப்பு நவீன சிங்கள கலை இலக்கியத்துக்கு ஒரு பாரிய இழப்பாகும். அவரது மறைவுக்கு மல்லிகை தன் அஞ்சலியினை
மல்லிகை நவம்பர் 2011 率 58
 

கடிதங்கள்
அக்டோபர் மாதம் 2011 மல்லிகையின் ஆசிரியர் தலையங்கம் மிக யதார்த்த மானதும், எமது படைப்பாளிகள் மற்றும் இலக்கிய முயற்சியாளர்கள் தமது கருத்திற் கொள்ள வேண்டியவையுமாகும். யாழ்ப்பாணத்தில் மிக நீண்டகாலத்தின் முன்னர் இடம் பெற்ற சாகித்திய விழாவில் முற்போக்கு எழுத்தாளர்கள் கூழ்முட்டை அடித்த விடயத்தை நீங்கள் இதற்கு முன்னர் பத்துத் தடவைகளுக்கு மேல் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருந்த போதிலும், இந்த அநாகரிகமான செயல் இன்றும் உங்கள் மனச்சாட்சியை உறுத்திக் கொண்டேயிருக்கின்றது. இது மனிதத்தை, இலக்கியத்தை நேசிக்கும் ஓர் எழுத் தாளனிடம் இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள்தான்.
கருத்து முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. அம்முரண்பாடுகள் கருத்தின் வலிமை கொண்டே வெற்றி காணப்பட வேண்டியவை. முரண்பாடுகளே சமூகத்தின் வளர்ச்சிப் படிகள் என்பதை எம்மில் பலர் மறந்து விடுகின்றனர். அண்மையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வை இங்கு பதிவு செய்வது அவசியமாகின்றது.
மாலை நேரம், பால் நிலவு. எனது தேடி வந்த நண்பர்கள் இருவருடன் வீட்டு முற்றத் தில் உரையாடிக்கொண்டிருந்தேன். வீட்டின் கேற் திறந்தே கிடந்தது. யாழ்ப்பாணத்தின் மெத்தப் படித்த கல்விமான் ஒருவர் எங்களை அவதானித்தபடி வீட்டின் முன்னுள்ள வீதி யால் போகின்றார். அவருக்கும் என்னுடன் உரையாடிக்கும் கொண்டிருக்கும் நண்பர் ஒருவருக்கும் உறவில் விரிசல். கல்விமான் சென்று பத்து நிமிடங்களில் எனது வீட்டின் மீது கல்லெறி விழத் தொடங்கியது. குறித்த கல்விமானே தமது (இலக்கியப்) புதல்வர் களைத் தூண்டி இந்த இழிசெயலை மேற்கொண்டிருக்கிறார். அதுமட்டுமன்றி, நோயாளி யான எனது மனைவிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் வேறு விடுத்திருக்கின்றனர்.
நண்பர்கள் இருவரும் வெலவெலத்துப் போனார்கள். தமது ஹெல்மெற்றுகளை தலையில் அணிந்தபடியே, என்னுடன் உரையாட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளா னார்கள். நான் அவமானத்தால் உறைந்து போய்விட்டேன்.
இலக்கியக்காரர்களின் இந்தப் பேடித்தனமான நடவடிக்கைக்குக் காரணமோ மிக அற்பமானது. (இலக்கியப்) புதல்வரின் சிறுகதை பற்றி கலந்துரையாடலொன்றின் போது நான் கருத்துத் தெரிவித்தமையே கல்லெறிக்கான காரணம்
இத்தகையவர்களெல்லாம் இலக்கிய உலகின் சாபக்கேடுகளே. இவர்களின் கைகளில் அகப்பட்ட இலக்கியமும் எதிர்கால சமுதாயமும் குரங்கின் கைப்பட்ட பூமாலைதான்!
சி.வன்னியகுலம்
மல்லிகை நவம்பர் 2011 奉 59

Page 32
முeடை இறீமுற்Uேரிக்கு இடுக்கிய) இழுWஇல்
முட்டை எறிதான் முற்போக்கின் கால்கோள் இட்டமிலா எம்.ஏ.றகுமான் கூட்டில் இடரிட இரசிகமணி தொட்டதினை விட்டதினால் கட்டினார் வாங்கி சில்லையூர் சிதைத்து விட்டான். முட்டையெறிந்த பின்னே முடங்கியவர் ஒன்று இரண்டல்ல பிற்போக்குக் கூட்டம் எல்லாமே!
முட்டை யெறிந்ததுதான் முற்போக்கு இலக்கியத்தின் மைல்கல். அந்நேரம் அதை மிருதுவாய்ப் பாராட்டி நின்ற சடாமுடிகள் இன்று சந்தர்ப்பவாதம் பேசுவது சரியல்ல!
இலை மறை காயாக இலக்கியம் செய்தவர்களை இனம் கண்டு முன் அட்டையில் தேடிப்பிடித்து பிரசுரிக்கும் பணி மல்லிகைக்கு என்ற ஒரு தனிப் பாணி. இதை வரவேற்கின்றோம்.
எல்லாப் பிரதேசக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் இப்பதிவில் உள்வாங்கப் பட வேண்டும். அதை அப்பழுக்கற்ற முறையில் தனக்கே உரிய செல்நெறி பிரளாமல் செய்து வருகின்றீர்கள். நன்றி.
மேலும் மல்லிகையின் பின்புலத்தை நோக்குகையில் பல சிறப்பு மலர்களை
இன்றைய நாளில் முட்டை எறிவது தேவையல்ல. அன்று பண்டித வர்க்கம் பற்றுள்ள சாஹறித்திய மண்டலப் பிரதிநிதி எம்மைத் தள்ளிவிட்டு வெட்ட வெளிவந்த கூட்டத்திற்கே முட்டை எறி!
முழுதும் கலங்கி ஒட்டம் எடுத்ததுவே
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஆயுள்கால காரியஸ்தர் பிரேம்ஜி ஞானத்தில் பேட்டியிட்ட பேராசான் சிவத்தம்பி மயானத்தில் நிற்கும் மல்லிகை ஆசிரியர் சந்தர்ப்பவாதிகள் நாங்கள் முற்போக்கு இலக்கியத்தை வளர்த்தவர்கள் மைல்கல்லாய் முட்டை எறியை உவந்தவர்கள்
கவிஞர் ஏ.இக்பால்
வெளியிட்டு ஆவணப்படுத்தியுள்ளிர்கள். நீர்கொழும்பு சிறப்பு மலர், மாத்தளை சிறப்பு மலர், கிளிநொச்சி சிறப்பு மலர், திக்குவல்ல சிறப்பு மலர்கள் வெளிவந் துள்ளன. வரவேற்கின்றோம்.
ஏன்? மற்றப் பிரதேச சிறப்பு மலர்களை வெளியிட முன்வருவதற்கு மல்லிகை ஏன் தயங்குகின்றது. எதிர் காலத்தில் பல சிறப்பு மலர்களை வெளி
யிட முயற்சி செய்தால் என்ன?
உடப்பூர் வீரசொக்கன்
மல்லிகை நவம்பர் 2011 தீ 60

இந்தப் பல்லிக்கு நேரமே கிடையாது. சுவரிலே ஒட்டியபடி எந்த நேரமும் அலைந்து திரியும். விட்டில், சிறுபூச்சியென கவ்வி இரையாக்கும் நித்திரையினின்று ஏதோ, நினைந்து எழுகையில்
"இச். இச்.” என ஒலிக்கும்.
மனது தவிர்த்தாலும் சகுனத்தை யோசிக்கும் விசையினை அழுத்தி இருளினைப் பிளக்கையில் உச்சியில் பல்லி
ஊர்வது தெரியும்.
உச்சியில் பல்லி சொல்லல்
அச்சமில்லை என்று அம்மா கூறிய ஞாபகம். ஆனாலும், மேலும் மேலும்
மனதினிற் சங்கடங்கள்
ഗം്
- வே.ஐ.வரதராஜன்
பல்லியைச் சபித்தவாறு தொடர்ந்திடும் வேலைகள் வேலைகள் நடுவே விபரீதக் கற்பனைகள்.
மாலையில் பல்லி சொன்னால்
வேலையில்லை என்றும் அம்மா உரைத்ததுவும் நினைவினில் உறுத்தும்.
பல்லியின் எச்சம்
நோயினைத் தருமாம்.
பல்லியைப் பார்க்கையில்
கொலைவெறி தோன்றும். இந்தப் பல்லியினமே வெறுப்பானவை தாம். உடும்பினைக் கண்டால்
முதலையைப் பார்த்தால் மீண்டும் பல்லியின் ஞாபகம் துளிர்க்கும். பல்லிகளற்ற உலகில் வாழ்தல் நலமென
மனது நினைக்கும்.
மல்லிகை நவம்பர் 2011 தீ 61

Page 33
இவம் பருவம் வகுாட்டே 19Մ5նr silՅԱնքայճ ճ15:15մնr:IյU50ւ ՓԿ19մ) —
அதன் வரலாற்றுப் பின்புலமும்!
— Gula 6afiải šaun
நான் தொண்ணுாறுகளில் மாஸ்கோ போயிருந்தேன். அதன் பின்னர் இரண்டாயிர மாம் ஆண்டு பாரிஸ், லண்டன், பேர்லின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் மூன்று தலை நகர்களுக்கும் சென்றிருந்தேன்.
நான் போய் வந்த அத்தனை மேலைநாடுகளுமே குளிர்ப் பிரதேசங்கள்.
இந்த வெண்பனி கொட்டும் நாடுகளில் என்னைப் பலர் தெருவோரங்களில் நின்று உற்றுப் பார்த்து விட்டுத்தான் அகன்று சென்றனர். எனக்கது புது அநுபவம்
நான் கொழும்பிலிருந்து புறப்படும் போதே முன்னனுபவமுள்ள பல நண்பர்கள் என்னை எச்சரித்ததுமுண்டு.
'உம்மட தேசிய உடையெல்லாம் அங்கு செல்லுபடியாகாது. கோட் சூட் போட்டுக் கொண்டால்தான் அங்கு ஒரளவு சமாளிக்கலாம்!” என என்னைக் கொழும்பில் எச்சரித்த வர்களுமுண்டு.
நான் உடை விஷயத்தில் வெகு தெளிவாகவே இருந்தேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் எனது இயல்பான உருவத்தை உடை மாற்றியமைத்து விடக்கூடாது என்று மனதைத் திடம்பண்ணி வைத்துக் கொண்டேன்.
முடியுமானால் குளிர் அதிகமாக இருந்தால் ஒவர்கோட் போட்டுக் கொள்ளலாம் என மனதிற்குள் திட்டமிட்டிருந்தேன்.
மாஸ்கோவில் நானணியும் நஷனலுக்கு மேலாக வெள்ளை நிறக் கம்பளிச் சட்டை அணிந்து கொண்டுதான், வெளியே இயங்கி வந்தேன். கூட்டங்களில் கலந்து கொண்டேன்.
சில சமயங்களில் தேவை கருதி, பனி அதிகமாக இருந்தால், ஒவர்கோட் அணிந்து கொண்டதுமுண்டு. அதேசமயம் எனது ஆடை உருவத்தை மறைத்துக் கொள்ளாமலே பெரும்பாலும் நடமாடி வந்தேன்.
இந்த ஆடை விவகாரத்தால் எனக்கும் மகளைத் தந்த எனது தாய்மாமனுக்கும்கூட, எனது திருமண காலகட்டத்தில் வாக்குவாதம் கூட நடந்ததுண்டு.
மல்லிகை நவம்பர் 2011 தீ 62

'மாப்பிள்ளையும் பெறுமதியான பட்டு வேட்டி கட்டி, கன கனவென மாப் பிள்ளைக் கோலத்தில்தான் வந்து என் மகளினது கழுத்தில் தாலி கட்ட வேண்டும் எனத் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரேயே தனது ஒரே யொரு சகோதரியும், எனது தாயுமான சம்மந்தியிடம் வாக்குறுதி பெற்றுக் GastecoTLITs.
நான் முற்றாக இந்த மாப்பிள்ளைக் கோல, தற்காலிக உடைச் சோடிப்புக்களை யெல்லாம் நிராகரித்தேன்.
என்னைச் சமாதானப்படுத்த முயற் சித்த எனது தாயாரிடம் கண்டிப்பாக எனது நிரந்தர உடையைத் திருமணத்திற்காகத் தற்காலிகமாக விட்டுத் தரமுடியாது. இதற் குச் சம்மதிக்க முடியாதென்றால் மாமா, தனது மகளுக்கு அவருக்கு அடங்கிய ஒரு வரை மாப்பிள்ளையாக எடுக்கட்டும். எனக்கு அதிலேயும் மனக்குறை ஒன்றுமே யில்லை என சமரசம் பேச வந்தவர்களிடம் கண்டிப்பாகச் சொல்லியனுப்பினேன்.
எனது இந்தப் பிடிவாதத்தை எனது தாய்மாமனால் இலகுவாகச் சீரணிக்க இயலவில்லை.
மணப் பெண் - எனது மாமாவின் மகள் - எனது இந்தத் திடமான கோரிக்கையை முழுமனச் சம்மதத்துடன் ஆதரித்து, ஒத்துழைப்புத் தந்தார்.
எனது வெண்ணுடைப் பிடிவாதத் திற்கு அன்று கிடைத்த வெற்றி அது. இந்த எனது நீண்டகால ஒரே வெள்ளை உடைக் கலாசாரத்திற்கு நீண்ட கால வரலாறு ஒன்று உண்டு.
எனது இளம் வயதுப் பருவகாலம்.
எனக்கு அப்போது 14 வயதிருக்கலாம். யாழ்ப்பாணம் செம்மா தெருவில் - இப்போது அவ்வீதி கஸ்தூரியார் வீதி என அழைக்கப் படுகின்றது. அங்குதான் நான் முதன் முதலில் அப்பாவின் பரம்பரைக் கைத் தொழிலைக் கற்றுக்கொண்டேன்.
அந்த இளவயதுக் காலகட்டத்தில் நான் கடைப் படிக்கட்டில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்.
பிரேத ஊர்வலமொன்று அத்தெரு வழியே சென்றுகொண்டிருந்தது. பல பகுதி களிலுமிருந்து இந்து மதத்தைச் சேர்ந்த பிரேதங்கள் வில்லூன்றி மயானத்திற்கு அவ்வழியால் அடிக்கடி போவதுதான் வழக்கம்.
நான் வெளியே நின்று அவற்றை வேடிக்கை பார்ப்பதும் இயல்பான வழக்கங் களில் ஒன்றுதான்.
பிற்காலத்தில் பிரபலமாகிப் பாராளு மன்றத்தில் நியமனம் பெற்ற தோழர் எம்.சி.சுப்பிரமணியமும் ஊர்வலத்தின் முன்னே சென்றுகொண்டிருந்தார்.
ஆனால், இந்தப் பிரதே ஊர்வலத்தில் ஒரு பரபரப்பும், அவசர கதியும் தெரிந்தது. சவ வண்டிக்கு அருகாமையில் குழுக்கள் குழுக்களாகப் பலர் ஒன்றுதிரண்டு வந்து கொண்டிருந்தனர்.
பறை அடிப்பவர்களிடமும் ஒருவிதப் பரபரப்பும், பதட்ட நிலையும் நிலவியுள் ளதை மெல்லிசாக என்னால் உணர முடிந்தது. தெருவோரங்களில் பலர் கூடிக் கூடி நின்று கதைத்துக் கொண்டிருந்தனர்.
சவ ஊர்வலம் நமது தெருவின் முனையை விட்டு கண்ணுக்கு மறைந்து போய் சுமார் இரண்டுமணி நேரம் இருக்க
மல்லிகை நவம்பர் 2011 & 63

Page 34
லாம். வியாபார நிலையங்கள் பரபரப்புடன் கடைகளை இழுத்து இழுத்து மூடுகின் றனர். தெருவில் வாகன நெரிசல் அதிக மாகத் தென்பட்டது. சைக்கிளில் சவாரி செய்த சிலர், சுட்டுப் போட்டான்கள்! சுடலையிலை சுட்டுப் போட்டான்கள்!' என அலறித் துடித்தவண்ணம் கத்திச் சென் றனர். ஒரே பரபரப்பு.
என்ன நடந்ததென ஊகிக்கவே முடியவில்லை. சற்று நேரத்திற்குப் பின்னர் தெருவே போக்குவரத்து மந்தித்து, ஒரளவு சன நடமாட்டம் ஒய்ந்து போனது. மெல்ல மெல்லத் தகவல் கசியத் தொடங்கியது.
வில்லுன்றிச் சுடலையில் ஒடுக்கப் பட்ட மக்களினது பிரேதம் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட சுடலை மேட்டில்தான் தகனம் செய்யப்படுவது பொது வழக்கம்.
யாழ்ப்பாணம் பலாலி வீதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் கிழவி ஒருவர் இறந்து விட்டார்.
பலாலி றோட்டார் ஒருங்கிணைந்து திட்டமொன்றைத் தீட்டிச் செயற்பட்டனர். இந்தத் தடவை சுடலையிலும் தமது மானுட
எண்ணி, சகலரும் ஒருங்கிணைந்து, தங்களது திட்
உரிமையை நிலைநாட்ட
டத்தைக் கொட்டடி வில்லுன்றிச் சுடலை யில் நடைமுறைப்படுத்த முனைந்து செயற்
LJILL-60Tiff.
இந்த நிகழ்ச்சியை அந்தப் பகுதியில் வாழ்ந்த, படித்த ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதி யைச் சார்ந்த இளைஞர்களே தலைமை தாங்கி நடத்தத் தெண்டித்தனர்.
இந்தத் தகவல் எப்படியோ சுற்று வட் டத்திலுள்ள உயர்சாதி வெறியர்களுக்குக் கசிந்து விட்டது.
அடுத்த நாள் தினசரிப் பேப்பர்களில் தலைப்புச் செய்தியாக அந்தச் சாதி அகம் பாவ வெறியர்களின் மிலேச்சச் செயல் வெளிவந்தது. முதலி சின்னத்தம்பி சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.
என்னால் இந்தச் சாதியின் பெயரால் நடந்த நீசத்தனமான மயானக் கொலை
யைச் சீரணிக்கவே இயலவில்லை.
- அன்றைக்குத் தீர்மானித்ததுதான்
இந்த வெள்ளை உடை அணியும் மன
ஓர்மமும், வைராக்கியமும்!
சிங்கள சினிமாத்துறையில் ஆளுமை மிக்க நடிகராகத் திகழ்ந்த ஜோ அபேவிக்கிரம சமீபத் தில் காலமானார். நடிப்பால் சிங்கள சினிமாவை சர்வதேசப் பார்வைக்கு உட்படுத்தியவர்களில் இவரும் ஒருவர், இந்தியாவின் சர்தேசப் புகழ் பெற்ற இயக்குநர் சத்யஜித் ராய் அவர்கள் ஜோவின் சிறப்பான நடிப்பை கண்டு, ஜோ அபேவிக்கிரம என்ற இந்த கலைஞன் இலங்கை நாட்டின் பாதுகாக்கபட வேண்டிய கலைச்சொத்து என்று போற்றினார். ஜோ அபேவிக்கிரம என்ற அந்த மாபெரும் கலைஞனின் இழப்புக்கு மல்லிகை தன் அஞ்சலியைச் செலுத்துகிறது.
ஆற்றல் மிக்க தனது
மல்லிகை நவம்பர் 2011 奉 64
 

"தீன்டாமை கொடுமைகளும்
தீ மூன்ட நாட்களும்” நூல் அறிமுக விழா
8.10.2011 சனிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க விநோதன் மண்டபத் தில் இலங்கையைச் சேர்ந்த தற்பொழுது பிரான்ஸில் வசிக்கும் தோழர் யோகரட்னம் அவர்களின் "தீண்டாமை கொடுமைகளும், தீ மூண்ட நாட்களும்” நூல் அறிமுக விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கலாநிதி ந.ரவீந் திரன் அவர்கள் தலைமை வகித்தார். வரவேற்புரையை மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் நிகழ்த்தி னார்.
இவ் விழாவில் பேராசிரியர் மா.கருணாநிதி அவர்களும், திருமதி. பத்மா சோமகாந்தன் அவர்களும், திரு.லெனின் மதிவானம் அவர்களும் கருத்துரைகள் வழங்கினார்கள். நன்றி யுரையை மேமன்கவி நிகழ்த்தினார்.
நூலின் சிறப்பு பிரதிகளை திருமதி. செல்வி திருச்சந்திரன் அவர் களும், பூபாலசிங்கம் பூரீதரசிங் அவர் களும் பெற்றுக் கொண்டார்கள்.
சமீபத்தில் வெளிவந்த இலங்கை யின் தீண்டாமை இயக்கம் சம்பந்த மாக வந்த நூல்களில் கவனத்திற் குரிய நூலாக இது அமைந்திருந்தமை யால் அன்றைய விழாவில் பல காத்திரமான கருத்துக்கள் முன்வைக் கப்பட்டன.
மல்லிகை நவம்பர் 2011 & 65

Page 35
நன்றி. வனக்கG!
- கே.எஸ்.சுதாகர்
மெல்பேர்னில் தமிழ்ப் பாடசாலைகள் களை கட்டத் தொடங்கின. இந்தத் தடவை பேச்சுப் போட்டிக்குரிய விடயதானத்தை மாணவர்களும் பெற்றோரும் தெரிவு செய்யலாம் என்று நிர்வாகத்தினர் சொல்லியிருந்தார்கள். இந்த மாற்றம் மோகனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒவ்வொரு தடவையும் பாரதியார், திருவள்ளுவர், நாவலர் என்று நிர்வாகம் எழுதிக் கொடுத்ததை, மாணவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எழுதி ஒப்புவிப்பார்கள். ஒவ்வொரு வருடமும் இரண்டாவது அல்லது மூன்றாவதாக வரும் மகனை இந்தத் தடவை முதல் ஸ்தானத்திற்கு உயர்த்தி விடலாம். புரட்சிகரமான வசனங்களாக எழுதி புழுதி கிழப்பி விட வேண்டும். எழுத்தும் இயக்கமும் மோகன். பேச்சு விமேஷ் என்றாள் மனைவி வேணி.
இன்ரநெற்றில் பத்துக் கட்டுரைகளை வாசித்து, பதினொன்றாவதை சிருஷ்டி செய்தான் மோகன். “பெண்ணியம், பன்னிரண்டு வயதுப் பிள்ளைக்கு ஏற்றது அல்ல!” என்று முடிந்த முடிவாகக் கூறிவிட்டாள் வேணி அதைப் பற்றியெல்லாம் மோகன் கவலைப்படவில்லை. பிள்ளையை முதலாவது இடத்திற்கு வரச் செய்வதே அவனது குறிக்கோள். எழுதிய பேச்சைத் திரும்ப வாசித்துப் பார்த்ததில் தனக்கும் விளங்கவில்லை என்றான் மோகன். "அப்படி என்றால் வெற்றி நிச்சயம்” என்றாள் வேணி.
மகன் விமேஷ் கஷ்டப்பட்டு நாள்தோறும் பாடமாக்கினான். நடுச்சாமத்தில் எழுப்பி, தட்டிக் கேட்ட போதெல்லாம் தொனி தவறாமல் சுருதி பிசகாமல் பேசினான், அவன். எத்தனையோ பிள்ளைகள் தமிழை ஆங்கிலத்தில் எழுதி வைத்து, 'எனக்கு தமில் நன்றாக வரும்; ஆனால் வராது’ என்று சொல்வது போல் அல்லாமல் தன் மகன் தமிழிலேயே பேசுவதையிட்டு பெருமிதம் கொண்டான் மோகன். தொடக்கமே கதிகலங்கிப் போக வேணும். பூமியிலே யாவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் ‘பொதுவான வணக்கம்.
மல்லிகை நவம்பர் 2011 & 66

போட்டி வந்தது. பெற்றோரைச் சுதந்திரமாக விட்டதால் பங்குபெறும் மாணவர் தொகை உயர்ந்திருந்தது. "நாரதர் கோபாலும் தனது மகனைக் கூட்டிக்கொண்டு வந்திருப்பதாகக் குண்டொன்றைப் போட்டாள் வேணி. கோபாலின் இரண்டு பிள்ளைகள் மோகனின் பிள்ளைகளுடன் பாட சாலையில் படிக்கின்றார்கள். போட்டி போடுகின்றார்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் மோகனுக்கும் கோபாலுக்குமிடையே ஒரு பிரச்சினை நடந்தது. நடந்து முடிந்த தரம் 12 பரீட்சையில் மோக னின் மகளுக்கு நல்ல புள்ளிகள் கிடைத்திருந்தன.
“என்ன உங்கடை பிள்ளைக்கு பெரிசா றிசல்ஸ் சரிவரவில்லைப் போல கிடக்கு” என்றான் மோகன்.
“உங்கடை பிள்ளை ஏழாம் வகுப் புப் படிக்கேக்கையே விடிய ஐஞ்சு மணிக்கு எழும்பி படிக்கத் தொடங்கி விட்டாள். ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு மூன்று இடங்களிலை ரியூசன். 12ஆம் வகுப்புப் படிக்கேக்கை கேட் கவே தேவையில்லை. ஒவ்வொரு பாடத்துக்கும் மூண்டு நாலு இடம் போயிருப்பாள். பிள்ளை நித்திரை கொண்டாளோ தெரியாது.” கோபத்தில் கத்தினான் கோபால்.
'ஏன் கோபப்படுகிறியள் கோபால்? பரீட்சை எண்டது இப்ப போட்டி. போட்டி இறுதியிலை ஆர்
வெற்றி பெறுகின்றார்கள் என்பதுதான் முக்கியம். எப்படிப் பரீட்சைக்குத் தயார் செய்தார்கள் என்பது முக்கிய மில்லை. எங்கடை பிள்ளைக்கு படிக் கிறதெண்டா "கிறேஷி. படிக்குதுகள்."
பணிவாகச் சொன்னான் மோகன்.
"அப்பிடியில்லை. உங்களிட்டைப்
பணமிருக்கு. ஆடுறியள்.”
"இல்லைக் கோபால். பரம்பரை
யிலும் தங்கியிருக்கு.” மனைவியும் படிக்கவில்லை என்பதைக்
கோபாலும்
குத்திக்காட்டினான், மோகன்.
சண்டை வலுத்தது. கொஞ்ச நாட் களாக இரண்டு குடும்பங்களிற்கிடை யேயும் தொடர்பில்லை. இப்போதுதான் பகைமை மறந்து பழகத் தொடங்கி யிருந்தார்கள்.
விமேஷ் பேசும் முறை வந்தது. அவனிற்கு வணக்கத்திற்குப் பிறகு எதுவுமே வர மறுத்தது. சபைக் கூச்சத் தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டான். பலமுறை முயற்சி செய்து பார்த்தான். ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. ருஷ்யப் புரட்சி. சீனப்புரட்சி. ஒன்றுமே செய்ய முடியாமல் திக்குமுக் காடினான். “ஞான்சி ராணி இல்லை யேல் மேடைத் திரைச் சீலைக்குள் ஒளிந்து நின்று அடியெடுத்துக் கொடுத் துப் பார்த்தான், மோகன். “ஞாபகம் இல்லையே! என்று விமேஷ் மனம் சொன்னது. அவன் எப்படித்தான் இந் தப் பேச்சை முடித்து வரப்போகின் றான் என வேணியும் மோகனும் பயந் தார்கள். புலம்பெயர்ந்த நாட்டில்
மல்லிகை நவம்பர் 2011 & 67

Page 36
பிள்ளைகள் எதை மறந்தாலும், நன்றி, வணக்கம் என்று சொல்வதை மறக்க மாட்டார்கள். அதை அவர்கள் சொல் லும் ஸ்ரைல் - “நன்றி, வணக்கம்.” அது அவனுக்கு இப்போது கை கொடுத்தது. சொல்லிவிட்டு ஓடிவந்து விட்டான், விமேஷ்.
தலையைக் குனிந்தபடி மோகனும் வேணியும் நின்றார்கள். எப்போது முடியும் என்று காத்திருந்தார்கள்.
கூட்டங்களுக்கு, விழாக்களுக்குப் போவதில் சில சங்கடங்கள் உண்டு. வேண்டுமென்றே “சிண்டு முடிவதற் கென சிலர் வருவார்கள். நாரதர் கோபால் கூட அப்படித்தான். நாரதர் வீட்டிற்கு இன்னமும் போகவில்லை என்று மோகனுக்கு நினைவுபடுத்தி னாள் வேணி.
நாரதர் கலகங்கள் நன்மையில்தான் முடியும். ஆனால் இந்த நாரதர் கிளப் பும் கலகங்கள் ஒருபோதும் நன்மையில் முடிவதில்லை. இன்றைய விமேஷின் பேச்சை நாரதர் நிச்சயமாக கூறு போட்டு விடுவார். நிகழ்ச்சி முடிந்து போகும்போது நாரதர் வாசலுக்கு சமீப மாக யாரையோ ‘கடிப்பதற்காக நின்றார்.
“மாணவர்களை சுயமாக எழுதி பேச வைக்க வேணும் எண்டு நீங்கள் நினைச்சியள்! இப்ப பார்த்தியளோ பெண்ணியம், பின் நவீனத்துவம் அது இதெண்டு பிள்ளை களுக்கு உதவாத தலைப்புகளிலெல்
பேரிடியை.
லாம் பேசுகின்றார்கள். மாணவர்கள்
எங்கே சுயமாக எழுதுகின்றார்கள். திரும்பவும் பெற்றார்தான் எழுதிக் குடுக்கிறார்கள்.” பாடசாலை அதிப ருடன் பேச்சுக் கொடுத்தான் கோபால். அதிபர் ஒன்றும் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டு நின்றார்.
“பிள்ளைகளை முன்னேற விடா மல் தடையாக இருப்பவர்கள் பெற் றோர்கள்தான்’ தானே முடிவையும் சொன்னான் கோபால்.
“கொஞ்சம் உதிலை நிண்டு கொள் ளும் வேணி. ரொயிலற் போட்டு வாறன்.” நேரத்தை தாமதித்தால் நாரத ரைத் தவிர்த்து விடலாம் என்பது மோகனின் எண்ணம்.
நேரத்தைக் கடத்தினாலும் நாரதர் அவ்விடத்தை விட்டு நகர்வதாக இல்லை. நாரதர் வெளியே விஷயத்தை முடித்துக்கொண்டு, அவராகவே இவர் களைத் தேடி உள்ளே வருகின்றார். இதழ் பிரித்து ஏதோ சொல்ல விழை கின்றார்.
அதற்கிடையில் வேணி தன் இரு கரங்களையும் கூப்பியவாறே “நன்றி. வணக்கம்.’’ என்று சொல்லிக் கொண்டு, கதவை வேகமாகத் திறந்து நழுவினாள்.
“எட எனக்கு இது தெரியாமல் போயிற்றே" என்றார் மோகன்.
“இந்த விசயத்தில் எனக்கு, எனது மகன் விமேஷ்தான் குரு” என்றாள் வேணி மகன் கிளப்பிய புழுதியில் குடும்பமே மறைந்து தப்பித்தார்கள்.
மல்லிகை நவம்பர் 2011 & 68

参 2°రశంసి
-டோமினிக் ஜீவா
& உங்களது சுய வரலாற்று நூலின் மூன்றாவது பகுதியை நாலுருவில் எழுதி வெளியிட்டால், σταύταπ7
தெஹிவளை. எஸ்.தேவராஜன் சி” சுய வரலாறு சொல்லும் இரண்டு பகுதிநூல்களை ஏற்கனவே நூலுருவில் எழுதி வெளியிட்டு வைத்துள்ளேன். அதில் முதலாவது பகுதியான எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரர் புத்தகம் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துவிட்டது. அந்நூல் சிங்களத்தில் வெளிவரவுள்ளது. எனது சுய வரலாற்றின் மூன்றாம் பகுதியைக் கட்டம் கட்டமாக எழுதிக்கொண்டிருக்கின்றேன். அநேகமாக இனிப்புத்தகமாக வரப்போகின்ற அந்த நூல்தான், எனது சுய வரலாற்றின் கடைசிக் கட்டமாக அமையலாம். கொஞ்சம் பொறுத்திருங்களேன்!
& அச்சு இயந்திரம் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
கேகாலை. எஸ்.தவந்தினி * 1536இல் ஐரோப்பாவில் முதன்முதலில் கண்டுபிழக்கப்பட்டது.
இ நீங்கள் ஏன் உங்களுக்கென்றொரு புனைபெயரைச் சூடிக்கொள்ளவில்லை? வல்வெடித்துறை. a.á56vajpgrea சி தொடர்ந்துநீண்டகாலமாக வெளிவந்துகொண்டிருக்கும் ஒரு மாசிகையாளன் பல கட்டங்களில், புனைபெயரில்
புகுந்து எழுத வேண்டிய தேவை ஏற்பட்டுவிடும். அந்த அந்த எழுத்துநடையை வைத்தே எழுத்தாளன் எழுதுவதைத்
தரமான வாசகன் இனங்கண்டுவிடக் கூடும்.
இ உண்மையை உண்மையின்படிவகால்லுங்கள். நீங்கள்யாரைஇதயபூர்வமாக நேசிக்கிறீர்கள்? சாவகச்சேரி எம்.ரதோத்தரன்
மல்லிகை நவம்பர் 2011 தீ 69

Page 37
சி எனது இளம் பராயத்தில் இந்தக் கேள்வியைக் கேtடால், பதில் சொல்லக் கொஞ்சம் தயங்கியிருப் பேன்! இன்று வெகு நிதானமாகச் சொல்லப்போனால், இந்த மண்ணில் மலர்ந்து, நிமிர்ந்து விழுந்து நிற்கும் சகல படைப்பாளிகளையும் நான் நெஞ்சார நிேக்கின்றேன்.
இ. இத்தனை ஆண்டுகளக இடைவிடாது ஓர் இலக்கியச் சஞ்சிகையைக் கொண்டு நடத்தி வருகின்றீர்களே, இதனால் ஏற்பரும் உடல் உழைப்பு ஒருபக்கம் இருக்கபரும் பொருளா தார ரீதியாக ஏற்பரும் சிரமங்களை எப்படிச் sionsfääsirgissir?
செல்வி குழுதினி
* இந்த வகையில் சிந்தித்து, இந்த மாதிரியான கேள்வியைக் கேட்டதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். மல்லிகைக்கென்றொரு ஆத்ம நெருக்கமுள்ள நண்பர் கள் சிலர் இருக்கின்றனர். பொருளாதார நெருக்கழக்கு உட்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம்மல்லிகையைப் பாது காத்து, நிலை நிறுத்தி வருபவர்கள், இவர்கள்தான். மல்லிகையின் நீண்டகாலநிலைப்புப்பற்றிநாலொன்றை எழுத உத்தேசித்துள்ளேன். அதில் இந்த மகத்தான மனிதர்களின் நாமங்கள் எல்லார் இவர்களின் பிற்
தெல்லிப்பளை,
சந்ததியினர் பார்த்து மகிழ என் கையால் எழுத்தில் வழுத்து வைப்பதுதான் எனது உத்தேசம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், தினக்குரல் புத்தக விமரிசனத்தில் அந்த அந்த மாத விமரிசனத் தைப் பழுத்துர் பார்க்கும் சில இலக்கிய விரும்பிகள், முன்னரெல்லாம் தவறாமல் மல்லிகை இதழ் எங்கள் கைகளுக்குக் கிடைத்து வந்தது. இன்று வருவ தில்லையே, ஏன்? எனக் கண்டனக் கழுதமெல்லாம்
வரைந்து தள்ளுவார்கள். சந்தார் பதிவுப் புத்தகத்தில்
பெயர்களைத் தடவிப் பார்த்தால், இரண்டு ஆண்டு
களுக்கு முன்னரேயே இவர்களினது சந்தாக் காலம்
முடிவடைந்திருக்கும்.
- எத்தனை எத்தனையோ பொருளாதாரப்
பிரச்சினைகளுக்கு மல்லிகை ஈடுகொடுத்துத்தான்
இத்தனை ஆண்டுக் காலமாக நிலைத்து நிற்கின்றது!
நீங்கள் நினைத்துப் பார்ப்பதுண்டா?
குருநாகல். எல்.வைரவநாதன்
சி மலையகத்தைச் சேர்ந்த தோழர் கே.கணேஷ் சிறிது காலம் யாழ்ப்பானவாசியாக இருந்தார். ராஜ கோபாலன் என்பவர் ஆசிரிய கலாசாலைப் புகுமுகர் பரிசை எழுதிவிட்டு ஓய்வாக இருந்தார். இவரை நான் பூபாலசிங்கம் புத்தகசாலையில் முன்னால் போடப்பட்டி ருந்த வாங்கில் இருந்து பேப்பfபடித்துக்கொண்டிருந்த சமயம்தான் முதன் முதலில் சந்தித்துக் கதைத்ததாக ஞாபகம். அவர்தான் நண்பர் எஸ்.பொன்றுத்துரையை எனக்கு முதலில் அறிமுகப்படுத்திய ஞாபகம். பின்னர் பானியல். அதன் பின்னர் ரகுநாதன். தோழர் கார்த்தி கேசனின் தோழமை உறவுதான் எங்களை இணைத்துப் பிணைத்து வைத்தது. அவரது இல்லம் யாழ். விமீ போரியாவிதியில்அமைந்திருந்தது. உரும்பிராய்தலவிர் சிங்கம் என்பவர் நட்பானார். தொடர்ந்து கணேச லிங்கன் உறவு கொண்டார். பிரேம்ஜி இந்தியாவில் இருந்து திரும்பியிருந்தார். எங்களது நட்பு வட்டம் விசாவித்தது. பின்னர் பல இலக்கிய நண்பர்கள் ஒன்று சேர்ந்தோம். இதற்கு அழுத்தளமாக அமைந்தது, அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் பிரபல இடதுசாரி அரசியல்வாதியான தோழர் ஜீவானந்தம் கள்ளத்
மல்லிகை நவம்பர் 2011 & 70

தோணியில் தப்பி வந்து, தோழர் கார்த்திகேசனது இல்லத்தில் தங்கியிருந்தார். இவரது வரவு எங்களுக் கெல்லாம் புதுதீவிதம்யை ஊட்டியது. யாழ்ப்பாண முற்ற வெளியில் பொதுக் கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இடதுசாரிச் சிந்தனை வயப்பட்டவர்கள் ஒன்றுகூடித் திரள ஜீவாவின் இந்த வரவு பாதை யமைத்துத் தந்தது. விரிவாக எழுதப்பட வேண்டிய ஆவணப்பதிவுமிக்க காலகட்டத் தகவல்கள் இவை.
- நீண்ட நெருங்காலத்திற்குப் பின்னர் பாலிய நண்பன்ராஜகோபாலனை கொட்டாஞ்சேனை இல்லத் தில் சந்தித்து நீண்டநேரம் சம்யாவழித்துக் கொண்டது, மனதிற்குப் பெரும் நிறைவைத் தருகின்றது.
& மல்லிகைக் காரியாலயத்திற்கு அடிக்கடி இலக்கிய நண்பர்கள் வந்து வபாகின்றனரா?
பதுளை. எம்.மானிக்கம்
சி நான் இயங்கிவரும்மல்லிகைக்காரியாலயம் செய
லாற்றி வருவதே, கொழும்பின் கேந்திரமான பகுதியில்
தான். வெளியூரில் இருந்து கொழும்பு வந்து செல்லும்
பல இலக்கியருண்யர்கள் அடிக்கடி வந்துபோகின்றனர்.
இவர்களில் பல புதுமுகங்களும் அடங்குவர்.
& சென்ற காலங்களில் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்காகத் தலையான பங்களிப்புச் செய்து மறைந்துவிட்ட பலரை இன்று நாம் வசதி கருதி மறந்துபோய் விட்டோமே? இது பற்றி.
க.வேலழகன்
சுன்னாகம்.
சி" இந்த வகையில் எனக்குக்கூட மனத்தவிப்பு இடை யிடையே ஏற்படுவதுண்டு. உள்நாட்டு யுத்தத்தைக்
காரணம் காட்டித்தப்பித்து வந்தோம். இனிமேலாவது அவர்களை நினைவுகூரப் பழகிக்கொள்வோம்.
இ மல்லிகையை யாழ்ப்பாணத்தில் ஆரம் பித்த அந்தக் காலத்தில் இத்தனை ஆண்டுக் காலம் தொடர்ந்து நடத்தி வருவேன் என்ற மனத்துணிச்சல் இருந்ததா, உங்களுக்கு?
சுண்டுக்குளி. எஸ்.தவசீலன்
F என்னைமுற்றுமுழுதாக அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும், நான் அசாதாரணமான துணிச்சல்காரன் என்று. திட்டமிட்டு இயங்கி வருபவன். எத்தனைதான் இடையூறுகள் வந்துள்ள போதும்கூட, எடுத்த காரி யத்தை செய்து முடிப்பதில் என்னை நானே முற்று முழு தாக ஒப்புக்கொடுத்து இயங்கிக் கொண்டிருப்பவன். யாழ்ப்பாணத்தை-நான்பிறந்த பூமியைவிட்டுப்பிரிந்த போதிலும்கூட, கொழும்பிலிருந்து பல ஆண்டுகளாக மல்லிகை இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருவ துடன், மல்லிகைப் பந்தல் பிரசுரங்களையும் இடை யறாது வெளியிட்டு வருபவன். எனக்கு இருக்கும் இட மல்ல பிரச்சினை. திட்டமிட்ட படி காரியமாற்ற வேண்டும்.
& சென்ற ஜனவரி மாத ஆரம்பத்தில் கொழும்பில்நீங்கள் உட்பட, முருகபூபதி ஞானம் ஞானசேகரன்,பூபாலசிங்கம்றிதரசிங்ஆகிளயார் முன் கையெருத்துக் கொழும்பில் மிகக் காத்திர மானதும் பெறுமதி வாய்ந்ததுமான ஒரு சர்வ தேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைப் பற்றி நீங்கள் உங்களது கருத்தைப் பதிப்பிக்க வில்லை என்ற மனக்குறை எனக்கு உண்டு.
மல்லிகை நவம்பர் 2011 தீ 71

Page 38
அந்த மாபெரும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் களினது ஒன்று கூடல் பற்றி உங்களது உண்மையான கருத்தநிலை என்ன?
வெள்ளவத்தை. எஸ்.சுந்தரேசன்
1. த த锣
8 தமிழில் இதுவரை நடைபெற்ற சகல எழுத்தாளர் களினது விழாக்கள் சகலதையும் விட, மிக மிகக் காத்திரமான, பெறுமதியான ஒன்றுகூடல் இது. இன் விழாவுக்கு முன்னின்று உழைத்தவர்களை விட, இம்மகா நாட்டைக் கொச்சைப்படுத்தி, சர்வதேசமெங்கும் அதனது பெருமையையும், சிறப்பையும் தமது எதிர்ப்பால் பிரபலமடைய வைத்தடிைக்காக திரு. எஸ்.பொன்றுத் துரை போன்றவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டவர்களாவோம். உன் நண்பனைப் பற்றிச் சொல்லு, உன்னை பற்றிச் சொல்லி விடுகின்றேன்! என்றொரு சொல்லடை உண்டு. இந்த மாபெரும் இலக்கிய விழாவைக் கொச்சைப்படுத்தி, பல திருகுதாளங்களைச் செய்து முழுத்தவர், திரு. எஸ்.பொ. இவ்விழாவின் சர்வ தேசச்சிறப்புக்கு இவர்களைப் போன்றோரினது சர்வதேச எதிர்ப்பே அடிப்படைக் காரணமாகும்.
S நம்மிடமிருந்து மறைந்துவிட்ட பல நமது எழுத்தாளர்களை அவர்களுடன் கூடிப் பழகி வந்த நம்மில் பலர் இன்று முற்று முழுதாக மறந்துபோய் விட்டனரே, இந்த மண்ணில் இன்று வரைக்கும் நின்று நிலைத்திருக்கும் மல்லிகையாவது அன்னாரது ஆாபகார்த்தக் கூட்டங்களை நினைவு கூரும் தினங்களாக நினைத்து நடத்தி வந்தால், என்ன?
ஆர்.திருயோகலிங்கம்
ຜົມແບໍ່ຍແມີ່ນ
* நல்லதொரு யோசனை. மறைந்து போன எழுத் தாளர்களினது நெருங்கிய இணசனச் சொந்தக்காரர் நிறையப் பேர் இருக்கின்றனர். இத்தகையவர்கள் ஆண்டுக்கு ஆண்டு அன்னாரது ஞாபகார்த்தக்கூட்டங் களை ஒழுங்கு செய்து நடத்தலாமே! அவர்கள் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியீட்டு விழாக்கூடச் செய்ய லாம். அப்பழமுன் கையெடுத்து செயற்பட விரும்புகின்ற
வர்களுக்கு நிச்சயமாக மல்லிகையும் தோள் கொருத்தே தீரும்!
சமீபத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் மல்லிகைப் பந்தல் புத்தக வெளியீடுகளின் முன் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, மதுசூதனன், மேமன்கவி ஆகியோர் காட்சி தருகின்றனர்.
201/4, முரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.
 

盗“ ヒ国 R E話 賽 ہے 李
塞器/%
நீங்கள் தரமான இலக்கியச் சுவைஞரா?
'மல்லிகைப் பந்தல் வெளியீடுகளைத் தொடர்ந்துபடியுங்கள்
கடந்த 46 ஆண்டுகிளுக்கு மேலாக நமது மண்ணைச் சார்ந்த படைப்பாளிகளின் பல்துறைப்பட்ட நூல்களை வெளியிட்டு வருகின்றது. மல்லிகைப் பந்தல் நிறுவனம்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை நீங்கள் வாங்கும் போது அதனது ஆதரவு மல்லிகை மாத இதழுக்கும் சுவறுகின்றது என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்
மல்லிகைப் பந்தல் gtങ്ങ8Uി: 232O721

Page 39
Malika
--9412 3
ev. Jwelers (Pvt) Ltd.131, Sea Street, Colombo 11, Sri Lanka. Tel
 

November - 2011
22 KT Goic Jewwellery
ബ
95001-5, Fax. +94 112327 101, E-mail info@devjewelersk