கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2007.12

Page 1
을 ύφουιτ
மார்கழி 2007
வெள்ளிவிழா
UIல் நிலை விழிப்புணர்வு, சமூக ரீதியான பால்நிலைச் சமத்துவம் என்பவற்றிற்காக இருபத்தைந்து ஆண்டு களின் சேவையை இவ்வருடம்பூர்த்திசெய்யும் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 1982ல் பெண்கள் கல்வி நிறுவனம் என்னும் பெயரோடு ஆரம்பிக்கப்பட்டது.
1991ல் இந்த அமைப்பு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டது. பெண்நிலை ஆய்வு என்பதைத் தனது முயற்சியின் ஒன்றாக உள்ளடக்கியதையிட்டு இப்பெயர் மாற்றம் உண்டானது.
பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாட்டின் பொருளாதார அரசியல், சமூக தளங்களில் அவர்கள் ஆக்க பூர்வமாக ஈடுபடுவதற்குரிய வாய்ப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கவும் இன்னல்களை அனுபவிக்கும் பெண்களின் நிலையை வெளிப்படுத்துவதற்காகவும் சில பெண் நிலைவாத ஆய்வாளர்களாலும் செயற் பாட்டாளர்களினாலும் இது தொடங்கப்பட்டது.
இக்குறிக்கோளை அடையும் பாதையில் பல போராட்டங்களையும் கஷ்டங்களையும் எதிர் நோக்கி வெற்றி கண்டோம். இதில் பல சமூக அமைப்புகள் உதவி, பக்க துணையாயிருந்தன.
ஆரம்பத்தில், அப்போதைய பெயரிற் கேற்றபடி, கல்வி யாவும் தகவல் பரிமாற்றத்தினாலும், சமூகத்தை மாற்ற முன் வந்த நாம்படிப்படியாக சமூக நிலையைப்பற்றிய ஆய்வுகள் மாற்றத்தை நிலையாகக் கொண்டு இயக்கப்பட்டு வரும் என வழி முறைகளைத் தேடி அவற்றை நடைமுறைப் படுத்தினோம். அதே வேளை மக்களிடம் சமாதானத்தின் முக்கியத்தைப்பற்றி உணர்த்தி, சமாதானம் நிலவும் இலங்கையை உருவாக்கும் முயற்சிக்கு உதவினோம்.
பிரவாகினி மார்கழி 2007 இதழ் 26
எங்கள் முய மொழிகளிலும் ஒரு வேண்டும் என்று அ ஆங்கிலத்தில் பிரசுரி கட்டுரைகளை தமிழி மொழி பெயர்த்து ( விழிப்புணர்வை ஏற்படு
ஓரங்கட்டப்பட்ட வேலைத்திட்டங்கள்,சுய பயிற்சிகள், சுனாமிய குழந்தைகளுக்கான க பல்வேறுபட்ட செயற் ஈடுபட்டுள்ளோம்.
ஆண்கள் மாத்தி கடினமான வேலைசெய்ய சைக்கிள்பழுதுபார்த்தல், போன்ற வேலைகை பயிற்றுவித்தோம். அ வேலைகளை தென் பகு பெண்கள் முன் வந்து கிழக்கிலிருக்கும்போரின பாதிக்கப்பட்ட பெண் சம்பிரதாயத்தின் நிமித் தையல் வேலைகள், சாட் போன்றவற்றைத்தான் வி ஊறிப்போன பழக்க வழ மிகவும் கடினமானது காட்டுகிறது.நவீனமயப்ப என்னும் தற்போதைய ம பெண்களை பழைய சப் விடுவிக்கமுடியவில்லை
தற்போது நாங்க பெண்களுக்காக பலாங் சக்தி என்னும் நிறுவ6 முச்சக்கர வண்டி ஒட் அளித்துவருகிறோம்.( வரவேற்பு விரைவில் மக் ஒட்டும் பெண்களைக் இருக்கும்.

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
செய்தி மடல்
இதழ் 26
கொண்டாடும் ஆய்வு நிறுவனம்
ற்சிகள் மூன்று பாலமாகத் திகழ தற்கு இணைவாக க்கப்படும் ஆய்வுக் லும் சிங்களத்திலும் பொது மக்களுக்கு த்தி வருகின்றோம்.
பெண்களுக்காக தொழில் புரிவதற்கான பால் பாதிக்கப்பட்ட ல்வி திட்டங்கள் எனப் ]பாடுகளிலும் நாம்
ரமல்ல பெண்களும் முடியும்என்பதற்கேற்ப மின்சாரபழுதுபார்த்தல் ள பெண்களுக்குப் பூனால் இத்தகைய குதியிலிருக்கும் தனிப் செய்த போதிலும், வட ால்கணவனை இழந்து கள் தங்கள் பழம் தம் முன் வரவில்லை. பாட்டுக்கடை நடத்தல் ரும்பினர்.சமுதாயத்தில் க்கங்களை மாற்றுவது என்று இது எடுத்துக் டுத்தல்உலகமயமாக்கல் ாற்றங்களால் கூட இப் பிரதாயங்களிலிருந்து
கள் ஓரங்கட்டப்பட்ட வ்கொடையில் 'காந்தா னத்துடன் இணைந்து ட்டுவதில் பயிற்சியை இதற்கு கிடைத்த நல்ல நகள் முச்சக்கர வண்டி காணக் கூடியதாக
கடந்த ஐந்து வருடங்களாக பெண்கள் கற்கை நெறி எனும் 4 மாதகாலக் கற்கை நெறியினை தமிழிலும் சிங்களத்திலும் நடத்தி வருகிறோம்.
ஆங்கிலத்தில் போதிய அறிவில்லாத வர்களால் பெண்கள் கற்கைநெறிச் சான்றிதழ் பெறுவது கைகூடாத ஒரு இலக்காகவே யிருந்தது. சான்றிதழ் வழங்கும் ஒரே ஸ்தாபனம் கொழும்பு பல்கலைக்கழகமாக இருந்தாலும் அவர்கள் பெண்கள் கற்கைநெறி மேற்படிப்புகளை ஆங்கிலத்தில் மாத்திரமே நடத்துகிறார்கள்.
எங்கள் நிறுவனத்தின் முன்னேற்றத் திற்கு பங்களித்தவராகிய திருமதி பேர்ணடீன் சில்வாவை எங்கள் 25ம் ஆண்டில் இழந்தோம். அவர் எங்கள் மத்தியில் இல்லாத குறையை நிவர்த்தி செய்ய முடியாது.
எங்கள் நிறுவனம் கால் நூற்றாண்டை தாண்டி விட்டது. அதற்கு காரணம் பெண் சமூக நலன்களில் மிகுந்த ஈடுபட்டுள்ளவராகவும் பெண்நிலை வாதத்தில் மிக ஈடுபாடு கொண்டவராகவும் இயக்குனராக இருந்து எங்கள் நோக்கங்களுக்காக அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் தற்போதைய நிலையை அடைந்துள்ளோம்.
ந்த இதழில் O OOOOOOO
HIV/AIDS
பால்நிலை எண்ணக்கருக்கள் - 1 எமது புதிய வெளியீடு
ஒசாமா தெற்காசிய தமிழ் மாநாடு
எமது நூலகம்
சமாதான கற்கை நெறி

Page 2
இலங்கையில் HIV/A
1987ஆம் ஆண்டே இலங்கையில் இந்நோய் பரவுதல் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரபூர்வமான அறிக்கைப் பிரகாரம் இலங்கையில் HIV/AIDS நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 862 ஆக இருப்பினும் உண்மையிலேயே இந்நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதை விட அதிகம். மேலும் பலர் தாம் இந்நோயினால் பாதிக்கப்பட்டடிருப்பதை உணராது உள்ளனர். UNAIDSஇன் மதீப்பிட்டின்படி இலங்கையில் கிட்டத்தட்ட 5000 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். UN AIDS/WHO வகைப்படுத்தலின்படி தெற்கு ஆசிய நாடுகளில் இலங்கையில் தான் இந்நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களுள் மேற்கு மாகாணத்தில் HIVயினால் பாதிக்கப்பட்டோர் 60% ஆகவும், மத்திய வடமத்திய மாகாணங்களில் ஒவ்வோன்றும் 8% ஆகவும், வடகிழக்கு மாகாணத்தில் 7% ஆகவும் உள்ளது என மதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வறிக்கையானது ஆராய்ச்சியினடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ளதென்பதையும், உத்தேச மதிப்பின் பிரகாரம் அல்ல என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்.
மேல் மாகாணத்தில் HIV பரிசோதனை அதிகளவில் செய்யப்படுவதனால் அங்கு அதிகமானோர் HIVயினால் பாதிக்கப்பட்டுள்ளமை அறியக் கூடியதாக இருக்கிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்பினை பெற்று சென்று வருகின்ற பணிப்பெண்கள் மற்றைய மாகாணங்களில் இருப்பினும், HIV பரீட்சைகள் பெரும் பாலும் மேல் மாகாணத்தில் தான் நடைபெறுவதன் முக்கிய காரணம், அங்கு பரிசோதனை செய்வதற்கு ஏற்ற வசதிகள் இருப்பதாகும். அடிப்படையில் மேற்கு மாகாணத்தில் இந்நோயினால் பாதிக்கப்பட்டோரின் விகிதம் அதிகமாகவுள்ளது. கிட்டத்தட்ட 90% ஆனோர் 15-49 வயதிற்கு இடைப்பட்டவராகத்தான் காணப்படுகின்றனர்.
HIV நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 96% ஆனோர் பாலியல் உறவின் மூலமும் (ஆண் பெண் உறவோ, ஒரினச் சேர்க்கை) ஏனையோர் பிறதொருவரிடமிருந்து குருதி பெற்றுக் கொண்டமையினாலோ அல்லது இந் நோய்க்கிருமியினால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்குப் பிறந்தமையினாலோ இந் நோயின் தாக்கத்திற்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
HIV/AIDS ஆல் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு போகின்றது. இதில் 50%ஆனோர் வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று திரும்பிய பெண்கள் ஆவர். நடைமுறையில் உள்ள கணக்கெடுப்பிலும் ஆய்வுகளிலும் பெண்களே ஆண்களைவிட அதிகமாக இந்நோயினால்
பாதிக்கப்பட்டுள்ளனர். 14- 1
இலங்கை தெற்காசியாவின் விகிதாசார அடிப்படையில் குறைந்தபட்ச நோயாளிகளைக் கொண்டிருப்பினும் பாலியல் உழைப்பாளிகளினாலும் வெளிநாட்டுப் பணிப்பெண்களாலும் இராணுவத்தினராலும், இடம் பெயர்ந்தவர்களாலும் போதிய பாதுகாப்பற்ற முறையில் பாலியல் உறவுகளில் ஈடுபடுபவர்களாலும் அகதிகளாலும், போதை வஸ்து பாவனை இந்நோயின் விகிதாசரம் பரப்பப்படுகின்றது.

IDS இன் நிலைப்பாடு
வறுமையில் அவதியுறும் பெண்கள் விபசாரத்திற்குள் தள்ளப்படுகின்றனர். மேலும் பல ஏழைப் பெண்கள் வெளி நாட்டுப் பணிப்பெண்களாக அனுப்பப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் இவர்கள் HIV/AIDS இனால் பாதிக்கப்படுகின்றார்கள். ம்ேலும் சில இளம் பெண்கள் உழைப்பு வேண்டுமென்ற நோக்குடன் குடும்பங்களை விட்டு தனிமையில் வாழும் போதும் இத்தகைய விபச்சார ஊழலில் சிக்கிவிடுகின்றனர்.
பெண்களைத் தரக்குறைவாக பழிக்கும் சமுதாயத்தில் ஆண்களின் ஆதிக்கத்திற்கு உள்ளான பெண்கள் இவ்வாறான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.
பெண்களது பலவீனம், ஆண்வர்க்கத்தின் அடக்குமுறை யாவும் அவர்களைப் பாலியல் விவகாரங்களில் எந்தவித உரிமையும் அற்றவர்களாக்குகின்றது.
நோபல் பரிசு பெறும் மூதல் மூத்த எழுத்தாளர்
OIழுத்தாளர்கள், பெண்ணிய வாதி, சமூகப் போராளி என பல பரிமாணங்கள் கொண்டடோரிஸ் லெஸ்ஸிங்'தான் இந்த வருட இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
எழுத்தாளர் என்பதைவிட, போராளியாகவே அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தென் ஆபிரிக்க அரசு கடைப்பிடித்த இனவெறியை எதிர்த்துப் போராடியவர். கம்யூனிசம், சூஃபியிசம் உள்ளிட்ட பல்வேறு சித்தாந்தங்களின் தாக்கங்கள் கொண்டவிை டோரிஸின் படைப்புகள்.
தனது 31-வது வயதில் புற்கள் பாடுகின்றன (The grass is Singing) என்ற தன் முதல் நாவலை எழுதினார். இந்த நாவல், ஆப்பிரிக்காவில் கறுப்பர்கள் மீதான வெள்ளையர்களின் அடக்குமுறையை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது. டோரிஸின் இரண்டாவது நாவல், 'தி கோல்டன் நோட்புக், காதல், அரசியல் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அந்த நாவலில் சொல்லியிருந்தார் டோரிஸ்.
இந்த நாவலுக்குப் பிறகு பெண்ணுரிமைப் போராளியாகவும் அடையாளம் காணப்பட்டார் டோரிஸ்.
இவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் 11வது பெண் எழுத்தாளர். 88வது வயதில் இந்த விருதைப் பெற்றுள்ள டோரிஸ்தான், நோபல் பரிசு பெறும் முதல் மூத்த
எழுத்தாளரும் கூட
நன்றி ஆனந்தவிகடன்
பிரவாகினி மார்கழி 2007 இதழ் 28

Page 3
எடுத்தாளப்படக்
அண்மையில் ஒரு அரசசார்பற்ற நிறுவனக் கருத்த பரிமாறப்பட்டன. அந்நிகழ்ச்சியில் எடுத்தாளப்பட்ட சொ அபிவிருத்தித் திட்டத்தில் இம்மாதிரியான பொதுவான பெறுவதில்லை. அவை தற்கால நவீனத்துவ சூழலை மைய
பதங்களைத் தமிழில் எடுத்தாளும் போது பல மயக்கங்க
இரண்டாவதாக அவை அவற்றைப் பலரும் பலவிதமாக
உந்தப்பட்டு நான் சில சொற்தொடர்களுக்கு தமிழ்ப்பதங்க
உபயோகிக்கப்பட்ட சொற்தொடர்களையும், பொருத்தமான
தருகின்றேன். இவை முடிந்த முடிவுகளல்ல. இக்கட்டுை இவ்வழிமுறைகளைச் செம்மைப்படுத்தலாம்.
எடுத்தாளப்பட்ட சொற்கள்
Vision
Welfare
Capacity
Capacity building
Networking
Partner Organisation
Famework
Sustainable
Resource person
Feedback
Empower
Strategic
Agency
Social transformation
Decentralization
Reflection
பிரவாகினி மார்கழி 2007 இதழ் 28
தொலைநோக்கு நலன்புரி
கொள்ளளவு
கொள்ளளவைக்
கட்டியெழுப்புதல்
வலைப்பின்னல்
பங்காளி நிறுவனங்கள் வரைவுச் சட்டகம்
பேண்டக
வளவியலாளர்
பின்னூட்டல் வலுவூட்டல் சக்தி ஊட்டல்
வலி ஊட்டல்
யுக்தியான
முகவர் தன்மை
உருமாற்றம் பன்முகப்படுத்தல்
பிரதிபலிப்பு

கூடிய சொற்கள்
ரங்கில் பங்குபற்றியபொழுது பல விதமான கருத்துக்கள் ற்கள் சில எனக்கு ஒரு நெருடலைத் தோற்றுவித்தன. ா சொற்தொடர்கள் நம் பண்பாட்டிலிருந்து தோற்றம் மாகக் கொண்டு எழுந்தன். இந்நிலையில் அவ் ஆங்கிலப் 5ளும் பிழையான அர்த்தப்பாடுகளும் எழுவது இயல்பே. உபயோகிப்பதைக் காண முடிந்தது. இக்குறைபாட்டால் ளைத் தரலாம் என நினைக்கிறேன். இங்கு நான் அங்கு வை என நான் நினைக்கும் சொற்தொடர்களையும் கீழே
ரைகளை வாசிப்போர் தங்களது கருத்துக்களைக் கூறி
எடுத்தாளக்கூடிய சொற்கள்
ஆழ்நோக்கு வாழ்க்கை நலநிறைவு செயலாற்றல்
செயலாற்றலை ஊக்குவித்தல் நிறுவன இணைப்பு/ நிலையக்கோவை உண்டுபண்ணுதல் துணைநிறுவனங்கள் ஒழுங்கமைப்பு/ ஒழுங்குமுறை நீடித்து நிலைக்கக்கூடிய/ தொடர்ந்து நிலைக்கக்கூடிய திறன் உதவியாளர் மறுஉரை கூறல் செயலுரிமை பெறச்செய்தல் உரிமைகளை அளித்தல் ஆற்றல் பெறப்படுதல் திறமை மிகு திறமையுடன் கூடிய தன்னிலைச் செயற்பாடு/ செயலாளரின் செய்திறன் சமூகநிலை மாற்றம் ஆட்சியுரிமையைப் பகிர்தல்/ கிளையாட்சி
ஆழ்ந்து சிந்தித்தல் மீள்சிந்தனை
-செல்வி திருச்சந்திரன்

Page 4
பெண்ணின் நிர்வாணமும் எதிர்ப்பு
தெற்காசிய மதங்களில் நிர்வாணம் சில செய்திகளை வெளிப்படுத்துவதற்காக பிரயோகிக்கப்பட்டது. திகம்பார்’ நான்கு திக்குகளை உடையாகக் கொண்ட ஜைன மதத்தின் ஒரு பிரிவினர், நிர்வாணமாகவே திரிவர். அக்கா மகாதேவி, காரைக்கால் அம்மையார், காஷ்மீரைச் சேர்ந்த லலா என்னும் பெண் துறவி, ஆன்மீக மாயை உணர்ந்தவர்களாக முழு நிர்வாணமாகவே திரிந்ததால் இதுவும் கூட தன்னுடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு அவள் தேடிய ஒரு வழிமுறையே.
மாமியார், கணவன் போன்றோரின் கொடுமையிலிருந்து விலகி துறவறத்தை நாடிய இப்பெண்ணை அவருடைய மாமனார்(கணவனின் தகப்பன்) கோபப்பட்டு (அவளது நிர்வாணத்தை) கண்டித்த போது அவள் “இங்கு மானிடர் யாரும்” இல்லையே, செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும். . . மட்டுமே என்னைச் சுற்றி இருக்கின்றன. என்று கூறியதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது.
இவ்வரலாற்றுக் குறிப்புகளை நாம் குஜராத் மாநிலம் பூஜாவுடன் இணைக்கலாம். என்ன தான் பூஜா செய்தாள் கையில் பேஸ் பால் மட்டை கொஞ்சம் வளையல், வெறும் உள்ளாடையுடன் ஆக்ரோஷமாக சாலையில் நடந்து வந்த பூஜாவைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிஸியான சாலைகளில் நடந்து பொலிஸ் கமிஷனர் ஆபிசுக்கு வந்தார்.
அவரது இப்புரட்சிச் செயலுக்கு காரணம் என்ன? எமது சமூகத்தில் அன்றாடம் பெண்களுக்கு ஏற்படும் இழைக்கப்படும் கொடுமைகளே. பூஜா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பின் கணவன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். அவள் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். இந்நிலையில் கொடுமைகள் இன்னும் அதிகரித்தது. கொடுமைகளை தாங்க முடியாமல் புகுந்த வீட்டிலிருந்து வெளியேறி வந்த பூஜாவை பிறந்த வீட்டிலும் சேர்த்துக்கொள்ளவில்லை. அதனால் தனியாக வீடு எடுத்து குழந்தையோடு தங்கி வேலைக்குப் போய் வந்தாள். கொடுமை செய்த மாமனார் மாமியாரை கைது செய்யுங்கள் என்று பொலிசாரிடம் புகார் செய்தாள். அதனால் கணவர் வீட்டாரும் உறவினர்களும் வந்து அவளைத் தாக்க முயற்சித்தனர். பொலிசாரும் நடவடிக்கை எடுக்க தாமதித்தனர். அதனால் பொலிஸ் நிலையத்திலேயே தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாள். ஆனால் தடுக்கப்பட்டாள். கடைசியாக அரை நிர்வாணப் போராட்டம் நடத்தினாள். அவளது எதிர்ப்பை இன்னும் பலப்படுத்த ஒரு எச்சரிக்கையும் விட்டாள். இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தமுறை முழு நிர்வாணமாகவே வீதியில் நடந்து வருவேன் என்று சொன்ன பின்பே பொலிஸ், குற்றவாளிகளான மாமியார், மாமனார், கணவன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இச்செய்கையை எப்படி சமூகம் எதிர் கொள்கிறது? அவளுக்கு மனநிலை சரியில்லையா ன்ன்னும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. மாதிரிக்கு சில பெண் அமைப்புகளின் எதிர் வாதங்கள்

தெரிவிப்பதற்கு ஒரு சாதனமாகிறது
2 LOIT LIIr6oööInri, LijsgsfloosuITori, 6äFGör6oor:
“வரதட்சனையை ஒழிப்பதில் பொலிசார் எந்தளவு அலட்சியமாக இருக்கின்றார்கள் என்பதை காவல் நிலையங்களில் நடக்கிற பஞ்சாயத்தை வைத்தே தெரிஞ்சுக்கலாம். “உங்களுக்குள்ளே பேசிக்கோங்க”ன்னு தட்டிக் கழிக்கிறாங்க. இப்படிப்பட்டவங்களுக்கு புரிய வைக்க பெண், எல்லா அசிங்கத்துக்கும் ஆளாக வேண்டியிருக்கு.”
முந்லசுஷ்மி மோகன்ராவ், சமூக சேவகி, சென்னை:
“வரதட்சணைப் புகார்கள் நிறைய வருதுங்கிறது மறுக்க முடியாதது. நாகரிகம் வளர்ந்த அளவுக்கு, நம்ம மனசு வளரலையோனு தோணுது. எத்தனையோ வழிகள் இருக்கு. அதைச் செய்திருக்கலாம்.”
தமயந்தி, வழக்கறிஞர், சேலம்:
“அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் ஏதோ ஒரு வகையில் வெளிப்படும்போது சமூகம் இது போன்ற அதிர்ச்சிகளை சந்திக்கிறது. “தான் கேவலப்பட்டாலும் பரவாயில்லை. கொடுமை செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்” என்ற எண்ணமே இந்தப் போராட்டத்துக்குக் காரணம்.”
ஜோதிலட்சுமி, ஜனநாயக மாதர் சங்கம், சேலம்:
“இந்த விஷயத்த உணர்வு பூர்வமா அணுக தன்னைத் தானே இழிவு படுத்திக்க ஒரு பெண் துணிவது சாதாரண விஷயமில்ல. பிரச்சனையின் தீவிரத்தை இந்தப் போராட்டத்தின் மூலம் உணர்த்த முயற்சி செய்திருக்கிறார் பூஜா. அவர் இப்படிப் பொது இடத்தில் போராட்டம் நடத்தியிருப்பது உறுத்தல் தான்.”
ரஜணி, வழக்கறிஞர், மதுரை:
“அவர் கொடுத்த புகாரை போலிஸ் பதிவு செஞ்சிருந்தாங்கன்னா, அவங்க இந்த லெவலுக்கு போயிருக்க மாட்டாங்க. பொலிஸார் மெத்தனம் காட்டாமல் மனிதாபி மானத்துடன் புகார்கனை அணுகணும்.”
உமா மகேஸ்வரி, ஆசிரியை, மதுரை:
“எந்த அளவு கொடுமைப்படுத்தியிருந்தா, பூஜா இப்படி வரத் துணிஞ்சிருப்பாங்கன்னு நினைச்சுப் பாக்கணும். இருந்தாலும் வேறு ஏதாவது வழியில் தன்னோட கோரிக்கையை சொல்லியிருக்கலாம்.”
வழிலா, வழக்கறிஞர், திருச்சி:
“அரைகுறையா போய் தன்னைத்தானே கேவலப்படுத்தி யிருக்காங்க. இப்படி செஞ்சதால புகுந்த வீட்டுல அனுபவிச்ச கொடுமையெல்லாம் மறந்து, எல்லாரும் இவங்கள குறை சொல்வாங்க.”
முரீரங்கம்மா, கூலித்தொழிலாளி, மண்ணச்சநல்லூர்:
“ஒரு பெண் மானத்தைப் பற்றி கவலைப்படாம ரோட்டுல இப்படி நடந்து போச்சுன்னா அது புருஷன் வீட்டுல எம்புட்டு கஷ்டப்பட்டிருக்கும்? அத விட்டுப்புட்டு அந்தப்புள்ளையக் குறை சொல்லாதீங்க. அந்த பயல புடிச்சு உள்ள வைங்க.” (19-07-2007) குங்குமத்தில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது)
பிரவாகினி மார்கழி 2007 இதழ் 28

Page 5
சகமாணவிக்காக பேராடினார்கள் மாணவர்கள்
(DIணவர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தி ஒரு சிறுமியின் விவாகம் தடை செய்யப்பட்டது. ஏழையான,
பங்களாதேஷ் சட்கிரம் பெண்கள்
உயர்தரக் கல்லூரி மாணவி கபீபாவின் தகப்பன் அப்துல் கறீம் தனது 13 வயதுடைய மகளை 23 வயது வாலிபனுக்கு மணமுடித்துக் கொடுக்க ஒழுங்கு செய்திருந்தார்.தந்தையின் மீது கொண்ட பயத்தினால் கபீபாவால் எதுவும் எதிர்த்துக் கூற முடியவில்லை. உதவிக்கு சிநேகிதிகளை நாடினார். கபீபாவிடம் உன்னோடு நாங்கள் இருக்கின்றோம். தைரியமாயிரு. இதற்குச் சம்மதிக்க வேண்டாமெனக் கூறியதுடன் தங்கள் பெற்றோரிடம் முறையிட்டு அவர்கள் மூலம் கபீபாவின் தகப்பனை இத் திருமணத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
இவர்களது இம்முயற்சி பலனளிக்காததையடுத்து தொடர்ந்து இவர்கள் பொலிசாரிடம் முறையிட்டதுடன், 50திற்கு மேற்பட்ட மாணவர்கள் 13 வயதான கபீபா என்னும் சக மாணவியின் திருமணத்தை நிறுத்துமாறு வீதிகளில் இறங்கி
ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் சட்டவிரோதமான இத்திருமணத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டதோடு, “கபீபா சிறு பிள்ளையாக இருக்கும்வரை, மணம் முடித்துக் கொடுக்க மாட்டேன்” என்று வாக்குறுதி பத்திரத்தில் தகப்பனிடமிருந்து
கையொப்பமும் பெற்றுக்கொண்டனர்.
e0o sooooo so so Q0o Q0o s0o Q0o s0o so Q0o so so so so so Q LLeLyLyLB sLeLyLyLB sLeLLy yy BDLy yysyLy sLyLBLeLsLyLLLeL yLysLeLyLyLDL
எமது புதிய
தெற்காசியாவில் மிகப் பிரபலம ஜயவர்தனவின் அரிய சேவையை தலைப்பிலான நூலை கலாநிதி ெ
தொகுத்தளித்திருந்தனர்.
இந்நூலானது ஐப்பசி மாதம் 27ஆ திருச்சந்திரன் அவர்களது தலைமைய அழைப்புக்கிணங்கி அங்கு கூடியி பார்க்கையில் கலாநிதி குமாரி ஜெயவ கூடியதாக இருந்தது.
0ocoooooooooooooooooooooooooooooooooooooooooooo e LLy yLyyLyLy yOLyyLyLB BOyLLLB OLeLLOLLB yLyLOyLLLOyyLOLOLLyLyDOLLOLOLLL
பிரவாகினி மார்கழி 2007 இதழ் 26
 
 

பால்நிலை எண்ணக்கருக்கள்-1 பால்நிலை ஒழுங்கமைப்பு (Gender Roles Frame work)
GolUIT ருளாதார அபிவிருத்தித் திட்டமிடுதலில் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய பால் நிலை எண்ணக்கருக்களில் பால்நிலை வகிபாகச் சட்டகம் (பா.வ.ச) முக்கியமானதொன்று. இதனை GRF என்ற சுருக்க எழுத்துக்களால் ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். வீடு என்ற அலகுக்குள் அமைந்துள்ள பால்நிலை 9| LIGOLum 60T (6)606). U(560ULLyth (gender division of labour) ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையிலான உறவு முறையின் பொருளாதார அம்சத்தையும் வெளிக்கொணர்வது பா. வ. ச. ஆய்வுமுறையின் நோக்கமாகும். ஆண், பெண் ஆகிய இருதரப்பினரும் தமது உற்பத்தி, மறு உற்பத்திச் செயல் முறைகளில் எதிர்நோக்கும் தடைகள் (Constraints) எவை? அவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதிகள் (incentives) அல்லது தூண்டுகைகள் எவை? என்ற கேள்விகளுடன் இந்த ஆய்வு தொடங்கும் வீட்டுக்கு கிடைக்கும் வருமானம், அதன் பெறுவழி (Access) ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வேறுபாட்டையும் இந்த ஆய்வு எடுத்துக் காட்டும், சொத்துக்கள் மீது உள்ள கட்டுப்பாடுகள் வேறுபடுவதையும் இது எடுத்துக் காட்டும். இவையாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் குறித்த கருத்திட்டம் (Project) பெண்ணின் வாழ்நிலையை எவ்வாறு பாதிக்கும்? அக்கருத்திட்டத்தின் விளைவுகள் எவை? என்ற கேள்விகளை எழுப்பும் சட்டகம் (Framework) என்ற சொல் பகுப்பாய்வு ஒன்றைச் செய்வதற்கான கருவியைக் குறிக்கும். பெண்களின் வேலைகளின் பெறுமதி, அவர்கள் எதிர்நோக்கும் தடைகள், சொத்துக்கள், வருமானம் என்பவற்றின் பெறுவழிகளில் பெண்ணிற்கும் ஆணிற்கும் இடையில் நிலவும் பேதம் ஆகிய விடயங்களை மறைக்கும் ஆணாதிக்கக் கருத்தியல் என்னும் திரையை விலக்கி உண்மையைக் கண்டு கொள்வதற்கு
இச்சட்டகம் ஒரு கருவியாகப் பயன்படுகிறது.
தொகுப்பு 'சண்'
)o es9o es0o eS0o es0o e09o es0o es9o e09o es9o es0o es9o en9o e«9o e09o Q9o Q9o en9o qLOLeLLyLyL LOLeLLyLyL sLLLDOLeL syBLOLLL LLeLB BLLeLsLy yLyLyLyLsLeLLyLyLyLLeLe
வெளியீடு
ான பெண்நிலை வாதியாகக் கருதப்படும் கலாநிதி குமாரி 6856Iryofindsgjih (pasiniras "At the Cutting Edge' or orp சல்வி திருச்சந்திரனும், கலாநிதி நிலுவர் டி மெல்லும்
நம் திகதியன்று பொரள்ள N.M. பெரேரா நிலையத்தில் செல்வி வில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அன்றைய தினம் எங்கள் Iருந்தவர்களையும் அவர்களின் எண்ணிக்கையையும் ார்தனவுக்கு சமூகத்தில் இருந்த முக்கியத்துவத்தை உணரக்
o Soo so so Soo so Sooooooooooooooooooooooooooooooo qLOLOLLLOLLLyyLyLOLyyLyLOLyLyLLLLLLLyLB sLyLyLLLyL yLGLeLLysLyL LL sLLLyqq

Page 6
பணமாத்தப்பரும் ஆப்கான் சியன்கள்
பெரும்பாலான ஆண்கள், பெண்கள் தமது உடைமைகள் என எண்ணுகிறார்கள் ஆனால் இது இஸ்லாமுக்கு முரணானது. பெண்களை விலைப்பொருளாகவே கருதுகிறார்கள். கடனுக்காக தங்கள் குடும்பத்து இளம் பெண்களை விற்பனை செய்யும் நிலை பழங்குடி இன மக்களின் மத்தியில் நீடித்து வருகிறது.
ஆப்கானில் கடனை அடைப்பதற்கும், தங்கள் சொந்தப் பகைமையைத் தீர்ப்பதற்கும், பெண்கள் பண்டமாக மாற்றப்படு கிறார்கள். பழங்குடியினர் பகுதியில் அகமத் என்பவர் ஆடு வளர்ப்பதற்கு ரூபாய் 7 ஆயிரம் கடன் வாங்கினார். கடனை அடைக்க முடியவில்லை ஆதலால் தனது 16 வயது மகளை கட்டாயப் படுத்தி விலை பேசி, ஒன்பது ஆடுகள் கொடுப்பதாக சம்மதித்த ஒருவருக்கு மணமுடித்து வைத்தார். பல்வேறு பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கு தங்கள் வீட்டு பெண் குழந்தைகளைத் தான் பயன்படுத்துகிறார்கள்.
ஒரு மனிதன் கொலை செய்யுமிடத்து, கொலை செய்யப் பட்ட குடும்பத்தினரிடம் தனது மகளையோ, சகோதரியையோ கையளித்து இரு குடும்பத்திற்கும் இடையிலுள்ள இரத்த பகைமையை, இரத்தச் சம்மந்தத்தினால் கொண்டுவரும் சமரச தீர்வாக இது கருதப்படுகிறது. இது நடவாவிட்டால் அடுத்தடுத்து கொலைகள் விழுவதும் உண்டு. பெரும்பாலான பெண்கள் குடும்ப வாழ்க்கை துன்புறுத்தலுக்கு ஆளாகின்றார்கள்.
12 வயது அழகான மகளை தகப்பன் சூதாட்டத்தில் தோல்வி யடைந்தமையால் 600 டொலர் செலுத்தமுடியாது வற்புறுத்தித் திருமணம் செய்து கொடுத்தான். சுதந்திரமாக சந்தோஷமாக வாழவேண்டும் என்று கனவு கண்ட இளம் மொட்டின் சந்தோஷம் கலைந்து போயிற்று. இப்படி 67 சதவீதமான பெண்கள் சட்டபூர்வமான திருமண வயதுக்கு முன்பாகவே சுயநலமான முறையில் திருமணத்துக்கு நிர்ப்பந்தப்பட்டு கட்டி வைக்கப்படுகிறார்கள். சிலர் குடும்பத்தைவிட்டு தப்பி ஒடிவிடுகிறார்கள், சிலர் தற்கொலையும் செய்கிறார்கள். தலிபான்களின் பிடியில் ஆப்கான் இருந்த போது பெண்களின் அடிமைத்தனம் அதிகமாகவிருந்தது.
தற்போது தலிபான்கள் பிடியிலிருந்து ஆப்கான் மீட்கப்பட்ட பிறகு பெண்களுக்கு பல வசதிகளை தீர்மானித்தார்கள். பெண்களுக்கு சரிசமமாக கல்வி அளிக்கப்படுகிறது ஆனாலும் பழங்குடி மனிதர்களின் நிலைமை இன்னும் சீரடையாமலே உள்ளது. பெண்களைப் பொருளாகக் கருதி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டு வருகிறது.
மாகாண கவுன்சில் உறுப்பினரான ஜள்ஷின்வாரி என்ற தொழிலதிபர் இத்திட்டத்தில் தீவிரம் காட்டி வருகிறார். ஆப்கான் பெண் எம். பி. மலாலாய் ஷின்வாரியும், இந்த பழக்கத்தை ஒழிப்பதிலும் பெண்ணுரிமையை நிலைநாட்டுவதிலும் ஆர்வம் காட்டுகிறார். இவர் 20 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண்களைப் பயன்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது. ஷின்வார் மக்கள் வசிக்கும் மாவட்டத்தில் 600 பேரிடம் இதுபற்றி உறுதி மொழி வாங்கப்பட்டது. இந்தப் பழக்கத்தை ஒழிப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும், தங்கள் இனமக்கள் மத்தியில் இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஆப்கானில் ஷவுஸ்சா என்ற கிராமத்தில் பயிர்ச் செய்கை வரட்சி காரணமாக வீழ்ச்சி அடைந்து சிறுவர்கள் பசியால் வாடினார்கள். 10 வயது சிறுமியின் தாய் மகளை 13 வயதுடைய சிறுவனுக்கு மணம் செய்யும் பொருட்டு

விற்றுவிட்டார். மணமகளின் விலை 2000,000 ஆப்கானிஸ். 39 வயதான விவசாயி தனது 8 வயதான மகளை முற்பணமாக 600 டொலரை வாங்கிக் கொண்டு தேவையான உணவு உடைகளையும் வாங்கி முடித்தார். மகளின் விலை 3000 டொலர். 22 வயதான கணவரை அடைந்த இந்த எட்டு வயது சிறுமி விவாகம் என்றால் என்னவென்று அறியாது விளையாட்டாக சம்பிரதாயங்களுக்கூடாக சென்றிருப்பாள். உணவுக்காகவும் உடைகளுக்காகவும் இத்திருமணங்கள் நடத்துவதுதான் ஏற்றுக் கொள்ள முடியாததாயிருக்கிறது.
வித்தியாசமான ஒரு கிராமத்து விதிமுறைகள்
சிவகங்கை சீமையில் மதகுப்பட்டிக்கும் கல்லலுவுக்கும் இடையே ஒரு சிறு கிராமம் ஆலவிளாம்பட்டி இக்கிராமத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டில் அவர்களது சில பழக்கவழக்கங்களை காணலாம்.
1282ல் பொன்னழகி செய்து கொண்ட உடன்படிக்கையின் படி “ஊருக்குள்ளே போதைவஸ்துப் பாவிக்கக் கூடாது. அவரவர் தத்தம் இனத்திரையே திருமணம் செய்ய வேண்டும். வரதட்சனை வாங்கக் கூடாது. இவற்றை மீறுபவர்கள் பஞ்சாயத்த்தில் நிறுத்தப்படுவர்.
பஞ்சாயத்து கூடும் இடத்தில் ஒரு வட்டம் போட்டு அதில் ஏழு கோடுகள் போடப்பட்டு அக்கோடுகளின் நடுவில் ஒரு சக்கரம் வரையப்பட்டிருக்கும். அதில் வேப்பிலை போட்டு தவறு செய்தவர்கள் நிறுத்தப்படுவர் அவர் தம் தவறை ஏற்றுக் கொள்வராயின் தலையில் பாதி மொட்டை அடிக்கப்படுவார். பொய் கூறி எவரும் தப்பிக்க முடியாது.
ராசு என்பவர் வெளியூரில் சாராயம் குடித்து விட்டு வந்து பொய் சத்தியம் செய்தார். ஆனால் ஒரு மாதத்திற்குள் தன்நிலை இழந்தவனாக விஷத்தைக் குடித்து மாண்டான். தமது குல தெய்வம் “பச்சநாச்சி” மிகவும் சக்தி வாய்ந்தவ. தவறை உணர்ந்து ஏற்றுக் கொண்டால் மன்னித்து விடும் மனதுக்காரி என்பது அவர்களது நம்பிக்கை.
சாதிக்குள்ளே திருமணம் செய்யும் முறையும் உண்டு அருகில் இருக்கும் 21 கிராமங்களில் திருமணம் செய்யலாம். இம் முறையினை மீறி வேறு சாதியினரை திருமணம் செய்பவர்களை தமது சாதியிலிருந்து விலக்கி ஊரை விட்டே அனுப்பிவிடுவர். ஒரே சாதியாக இருப்பின் வெற்றிலை மாற்றி திருமணம் செய்து வைப்பர்.
வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த இளைஞன் ஒருவன் குடித்ததனால் தந்தை பஞ்சாயத்தில் நிறுத்தி ஆறாயிரம் ரூபா அபராதம் செலுத்தும்படி செய்தார்.
காதலை மசிந்து உடனே கல்யாணம் செய்தல் வரதட்சணை இல்லை குடி போதை இல்லை
நற்பழக்கங்களை உடைய இச்சமூகத்தாருக்கு சாதித் தூய்மையைத் தாண்டமனமில்லை இதுவும் களையப்பட்டால் நல்லதொரு கிராமம்.
இத் தகவலுக்கு ஆதாரம் 19.01.07 குங்குமத்தில் வந்த ஒரு சிறுகட்டுரை “வரதட்சனை இல்லை. போதை இல்லை ஒரு வித்தியாரமான கிராமம்’
பிரவாகினி மார்கழி 2007 இதழ் 28

Page 7
உத்திர பிரதேசத்தின் முதல் அமைச்சர் மாயாவுதி
உத்திர பிரதேசத்தின் முதல் அமைச்சர் பதவியில் நான்காவது முறையாக அமர்ந்துள்ளார் மாயாவதி. தான் ஒரு தலித் மகள் என்பதை பெருமையாக முன்வைத்து “நான் பிறந்த சாதியை நான் நேசிக்கிறேன். பிறசாதியினரை மதிக்கிறேன்” என்று கூறுகிறார். இவரின் அணுகுமுறையும் அரவணைப்புமே இவரின் பெரிய வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள் இவரை கூர்ந்து கவனித்துவரும் அரசியல் விமர்சனர்கள்.
உ. பி. யின் மேற்கு பகுதியில் இருக்கும் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள பாதல்பூர் கிராமத்தில் பிறந்தவர் மாயாவதி. அரச ஊழியராக இருந்த பிரபுதயான்-ராம் ரத்தி தம்பதிகளுக்கு பிறந்த ஒன்பது பிள்ளைகளில் இவர் இரண்டாவது பிள்ளை. ஐ. ஏ. எஸ் அதிகாரி ஆகவேண்டுமென்பது அவர் இலட்சியம் ஆதலால் பள்ளிப் படிப்பிற்குப் பின் சட்டக் கல்வியில் தேர்ச்சி பெற்றார். ஐ. ஏ. எஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற எண்ணம் இன்னும் வலுப்பெற்றது. பல பாடசாலைகளில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது தான் அம்பேத்கர், மகாராஷ்டிர புகழ் பெற்ற சீர்திருத்தவாதி ஜோதிபால, தந்தை பெரியார் இவர்களின் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கன்ஷிராம், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின் அரச அலுவலர் கூட்டமைப்பு என்ற இயக்கத்தை நடத்திவந்தார். இந்த இயக்கத்தின் பொதுக் கூட்டத்தில் முதல் முறையாக மேடை ஏறிய இளம் பெண் மாயாவதி. இவரின் சாதி பாகுபாடு பற்றிய ஆவேசப் பேச்சு மக்களால் வரவேற்கப்பட்டு அன்றிலிருந்து இதன் உறுப்பினராக கட்சியை இவர் வளர்த்துவந்தார். இவர் அநேக தேர்தல்களில் நின்றும் தோல்வியையே கண்டார். அதே போல வாய்ப்புகளும் குவிந்தன. பயமின்றி நாடாளுமன்றத்தில் நுழைந்து மிகத்துணிச்சலுடன் குற்றவாளிகளுக்கு எதிராக குரல் எழுப்பினார். இத்துணிச்சலை அவதானித்த கட்சி இவரை பொதுச் செயலாளராக ஆக்கியது.
1995ம் ஆண்டு உ. பி. ல் ஏற்பட்ட கூட்டணி ஆட்சியில் பகுஜன் சமாஜ் கட்சியில் இவருக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது. இந்த பதவி நான்கு மாதங்கள் மட்டும் தான் நீடித்தது. மீண்டும் 1997ல் அதே பதவியேற்றர். இதுவும் ஆறு மாதங்கள் நீடித்தது. 2002ல் மூன்றாம் முறையாக இதே பதவியேற்று அரசியல் நெருக்கடி காரணமாக 18 மாதங்களில் பதவியை ராஜினமா செய்தார். இப்போது நான்காவது முறையாக உ. பி. ன் முதல் அமைச்சர் பதவியில் தனி நிலைப்
பெரும்பான்மையுடன் அமர்ந்துள்ளார் மாயாவதி.
விடாமுயற்சி என்றும் வெற்றியை கொடுக்கும் என்ற திடமனதைக் கொண்டு பல தோல்விகள், எதிர்ப்புக்களைத் தாண்டி, இன்று வெற்றிக் கிரீடத்துடன் அவரின் மக்களிடையே நிற்கிறார் மாயாவதி.
பிரவாகினி மார்கழி 2007 இதழ் 26

மீனாவின் சாதிகள் இல்லாத உலகம்
உலகத்தை எட்டிப் பார்க்கிற வயதிலேயே எழுத்தின் மூலம் மனிதம் பற்றிய தேடலைத் தொடங்கியவர் மீனா கந்தசாமி வயது 23, செயல்களில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி உடையவர்.
வசந்தா கந்தசாமி இவர் அம்மா கல்பனா சாவ்லா விருது பெற்ற பிரபல கணித மேதை. மீனாவுக்கு ஏகப்பட்ட கனவுகள் தானும் பிரபலமாக வரவேண்டும், ஆனால் எது செய்தாலும் அம்மாவின் விசிட்டிங் கார்டுதான் அதற்கு காரணமாக காட்டப்படும். இது மீனாவுக்கு பிடிக்கவில்லை. அம்மாவின் நிழலிருந்து வெளியே வரவேண்டும், ஏதாவது புதிதாக செய்யவேண்டும் என்று தீர்மானித்தாள். மீனாவுக்கு படிப்பில் ஆர்வமில்லாமல் போயிற்று. அதற்கும் இதுதான் காரணம் என்கிறார் மீனா. பாடசாலையில் பாடம் நடக்கும் போது மேசை அடியில் நாவலை மறைத்து வைத்து படிப்பார், வீட்டில் தலையணைக்கு அடியில் இலக்கிய புத்தகங்களை வைத்து விடிய விடிய படிப்பார், இப்படித்தான் இலக்கிய ரசனையை வளர்த்துக் கொண்டார்.
இவருடைய தோற்றத்தையும் முகத்தில் தோன்றும் அமைதியையும் வைத்து இவரின் எழுத்தை எடைபோட முடியாது. “சதி” என்ற உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றியும், அதின் அடிப்படையில் நடக்கும் அடக்கு முறைகளைப் பற்றியும் அவரின் எழுத்து அவரின் குமுறலை காட்டுகிறது. சாதி வேறுபாடுகளைக் காரணம் காட்டி நடக்கின்ற அநியாயங்கள் இவரை மிகவும் உறுத்தியது. இவைகளை சரிப்படுத்த இயலாதவளாய் வேதனைக்குள்ளான வெளிப்பாட்டை இவளின் எழுத்து வடிவமாக்கிற்று.
இவருடைய முதல் வெளியீடு டச் (Touch) கவிதைத் தொகுப்புக்கள். அதில் இடம் பெற்றமஸ்காரா' என்னும் கவிதை, மத்திய அரசு நடாத்திய தேசிய அளவிலான கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றது. இது நவீன உலக தேவதாசியைப் பற்றியது. இதுவே இவரின் முதற் கவிதை. இதை பாராட்டி முதன் முறையாக அணிந்துரை எழுதித் தந்திருக்கிறார் பிரபல கவிஞர் கமலா தாஸ், இவர் மொழி பெயர்ப்பாளாரும் ஆவார். ‘த தலித் (The Dalit) என்னும் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. மேலும் இவர் திருமாவளவனின் மேடைப் பேச்சுக்கள், காசி ஆனந்தனின் கவிதை, மற்றும் குட்டிக்கதைகள் பலவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தவர். அடுத்து காத்திருப்பது பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள். சாதிப் பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியவர்கள் பெண்கள்தான். இந்த பிரச்சினைகளுக்கு முதலில் பலியாகிறவர்களும், அதிகமாக பாதிக்கப்படுகிறவர்களும் அவர்கள் தான் என்று இவர் கூறுகிறார். சமுகவியலில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்து வருகிற மாணவி மீனா சாதிகள் இல்லாத உலகம் வேண்டும் என்று போராடுகிறார். இதுதான் அவர் எதிர்காலக்
கனவு.

Page 8
ஒசாமா
சிறுவயதில் எங்கள் தாய்மார் ஆண்குழந்தைக்குப் பெண்ணைப் போலவும் பெண்குழந்தைக்கு ஆணைப் போலவும் உடுத்தி அழகு பார்ப்பார்கள். இதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி. ஆனால் இங்கு ஆப்கானில் வறுமையினால் ஒரு தாய் தன் பெண் பிள்ளைக்கு ஆண் வேஷமிடும் திரைப்படத்தின் கதைதான் ஒசாமா ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிமான்களின் ஆட்சியில் பெண்கள் வேலைக்கு போகக்கூடாது. ஆண்துணையில்லாமல் வெளியில் வரக்கூடாது. களியாட்டங்கள் எதிலும் ஈடுபடக் கூடாது போன்ற பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர். அதன் படி நடந்துகொள்ளாதவர்களுக்குமரணதண்டனை விதிக்கப்பட்டது. இத்தனை கட்டுப்பாட்டுக்குமிடையே பாட்டி, அம்மா,12 வயதுடைய மகள் வருமானத்துக்கு என்ன செய்வார்கள்.இவளை பெண்ணாக படைக்காமலே இருந்திருக்கலாமே என்று அழுகிறாள் தாய், பாட்டி ஆறுதல் சொல்லி பெண்ணுக்கு முடியை ஒட்ட வெட்டி கணவனின் ஆடையும், குர்த்தாவும், தொப்பியும் போட்டு வேலைக்கு போக தயாராக்குகிறாள். அம்மா மகளோடு வேலை தேட கிளப்புகிறாள். போகும் வழியில் பெண்கள் தாலிமான்களினால்படும் தொல்லைகள் கண்டு ஒடி ஒழிகிறார்கள். புகைபோடும் ஒரு சிறுவன் அவளைப் பார்த்து நீ பெண்தானே என்கிறான். சமாளித்து சென்றுவிடுகிறாள். தனது கணவனின் நண்பனிடம் உண்மையைச் சொல்லி மகளை வேலைக்கு சேர்த்து விடுகிறாள். அடுத்த நாள் அவர் அவளிடம் “யாரோடும் பேசக் கூடாது, உன் குரல் காட்டிக் கொடுத்திடும்”என்று எச்சரிக்கிறார். அன்று மாலை வீடு செல்லும் போது ஒரு தாலிபான் பின் தொடர்ந்தான். மறுநாள் அவளை கடையிலிருந்து வலுக் கட்டாயமாய் கூட்டி சென்றுவிட்டான். அந்த ஊரிலிருக்கும் சிறுவர்கள் எல்லோரும் அழைத்துப் செல்லப்படுகிறார்கள். அந்த கூட்டத்தில் இவளை முன்னம் சந்தித்து மிரட்டின சிறுவனும் இருந்தான். போருக்கு பயிற்சி கொடுக்க இவர்களை பாழடைந்த கோட்டைக்குள் அழைத்துச் சென்றார்கள். அங்கு உள்ள சிறுவர்கள் இவளை பெண் என்று சந்தேகித்து துரத்துகிறார்கள். அப்போது இச்சிறுவன் இவளை காப்பாற்றுகிறான். இங்கே பல துன்பங்களுக்குள்ளாகிறாள். பெண் என்று அறிந்ததும் சிறையில் அடைக்கப்படுகிறாள். ஒரு 12 வயதுச் சிறுமியின் கனவுகள், ஆசைகள், இளமை எல்லாம் சிதைக்கப்பட்டு, பெற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு அவளுக்கு ஆயுட் தண்டனை தீர்ப்பு வழங்கப்படுகிறது. 70 வயது கிழவரின் வேண்டுதலின் பேரில் இவளை விடுவிக்கின்றனர். கிழவர் வீட்டுக்கு கூட்டிச் சென்ற அன்றிரவு அவளுக்கு முதலிரவும் முடிந்து விடுகிறது. அவளே அழுது தீர்க்கிறாள். அவரோ வெது வெதுப்பான நீரில் குளிக்கிறார். அவளுடைய சிறுவயது கனவுகள் எல்லாம் எங்கே?
பெண்களை எப்படி இந்த உலகம் நடத்துகிறது என்பதற்கு இது ஒர் உதாரணம் 'ஒசாமா' இவளைக் காப்பாற்றும் சிறுவனினதும் இவளின் கள்ளங் கபடற்ற உள்ளமும் இதில் நன்று பிரதிபலிக்கிறது. இவளின் பார்வையிலே தான் சோகங்களை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறாள்.

உலகம் எங்கும் வன்முறை நடந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். இன்று எத்தனை திருமணங்கள் பெண்ணின் சம்மதத்துடன் நடாத்தப்படுகிறது. இவ் ஆப்கானிஸ்தான் நாட்டுப்படமானது 2003இல் வெளியிடப்பட்டு கோல்டன் குளோப் விருதை வென்றது.
olubilt budu Tbillbft
ഖിട്ടീ
இப்போதெல்லாம் ஆண் கவிஞர்களுக்கு சமமாக பெண் கவிஞர்கள் தலைதூக்கியுள்ளார்கள். பாராட்டப்படவேண்டியது. எண்ணங்களை, உணர்வுகளை வெளிப்படுத்த முனைகின்ற எழுத்தாளர், சிறுகதை, கவிதை போன்ற கலைகளை கையாளுகிறார்கள் தமிழ் இலக்கியம் என்று வெளிவரும் போது பெரும்பாலும் ஆண்களாகவே காணக்கூடியதாயிருக்கிறது. ஆனால் இப்போது குரல் கொடுக்கவென பல புதிய பெண் எழுத்தாளர்கள் கட்டுப்பாடுகளைத் தகர்த்தி சமூகத்திற்கு குரல் கொடுக்க இலக்கியங்களை அமைத்து வருகிறார்கள்.
இந்த வரியில் பெண்களுக்குரிய நம்பிக்கை உணர்வுகள் கனவுகள் எதிர்ப்புகள் விடுதலைப் போராட்டம் என்பவற்றைத் தெளிவுபடுத்த 'என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை' என்னும் கவிதைத் தொகுதியை வெளிக்கொண்டுள்ளார் பெண்ணியா. 'பெண்ணியாவின் கவிதைகள்' பாராட்டுக் குரியதாக அமைந்துள்ளன. இவை பெண்கள் மீது கட்டப்பட்டுள்ள கலாச்சார ஒடுக்குமுறைக்கு குரல் கொடுப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
காதலின் பிரிவை உணர்வோடு விவரிக்கிறார் ‘உதிரும் இலைக் கனவு கவிதையில் :
என் ஆசைகளும் நினைவுகளும் வெடித்து கண்களிலிருந்து கண்ணிர் கோடுகள் துளியாய் வீழ்ந்தாலும் என் உணர்வுகளை நிறுத்த முடியவில்லை இப்போதும் நான் வாழ்கிறேன் மெளனம் நிறைந்தவளாய் இனிநான் பேசப் போவதில்லை உன் நினைவுகள் என்னைவிட்டு நீங்கும் வரை அன்று என் நினைவுகளும் என்னோடேயே இருக்குமா என்ன?.
நீண்டு கொண்டு போகும் இக்கவிதை வரிகளின் ஊடாக ஒரு பெண் தன் காதலின் பிரிவின் வலிகளை ஆழமாக வெளிப்படுத்துகிறாள். இப்படி பல கவிதைகளில் பெண் சார்ந்த குரலை உணரலாம்.
புதிதாக கலையுலகில் கால் எடுத்து வைத்திருக்கும் பெண்ணியா, இன்னும் பல கவிதைகளால் பெண்ணிய உணர்வுகளை அவர் மலரவைப்பார் என்று நம்புகிறோம். இன்னும் பல பெண்ணியாக்கள் மலரவேண்டும்.
பிரவாகினி மார்கழி 2007 இதழ் 26

Page 9
சொல்லாத சொல்
ஆசிரியர் : மாலன்
மாலன் எழுபதுகளின் முக்கியமான எழுத்தாளர். அரசியல், சமூகம், கலாசாரம், மொழி, சினிமா, விஞ்ஞானம் எனப் பல்வேறு துறைகள் சார்ந்த, மாலனின் அக்கறைமிக்க கட்டுரைகளின்
தொகுப்பு இது.
தமிழ்க்கொடி 2006
தொகுப்பு : சி. அண்ணாமலை
இத்தொகுப்பிலுள்ள I6) * கட்டுரைகள் தமிழுக்கும்
* களாயுள்ளன. தமிழ்நாடு மட்டு
தொகுப்பிற்கும் பெருமை
மல்லாமல் இலங்கை, அமெரிக்கா, Հ» : கனடா, பிரான்ஸ், ஸுவிஸ், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் ஆகிய இடங்களில் இருந்து 40 எழுத்தாளர்களின் பங்கேற்புகள் அரசியல் சமூகம் இலக்கியம் ஊடகம் என விரிந்து பரவலாக எழுதப்பட்டுள்ளன. காலம்
தாண்டியும் இத்தொகுப்பு நிலைத்து நிற்கும்.
நிவேதினி - இதழ் 11, 2007 (தமிழ்) ஆசிரியர் : செல்வி திருச்சந்திரன்
இம்முறை எமது பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகையானது, எமது நிறுவனத்தால் வவுனியாவிலும் மட்டக்களப்பிலும் நடாத்தப்பட்ட பெண்கள் கற்கை நெறிக்காக சமர்ப்பிக்கப்பட்ட சில ஆய்வுக் கட்டுரைகளையும், பெண்களும் கலை இலக்கியமும் சம்பந்தமான பல
கட்டுரைகளையும் தாங்கி வந்துள்ளது.
பிரவாகினி மார்கழி 2007 இதழ் 28
 
 
 
 
 
 
 

யாழ்ப்பாணச் சமூகம் ஆசிரியர் : பரம்சோதி தங்கேஸ்
யாழ்ப்பாணத்தில் சாதி, இனத்துவம், தனித்துவம் என்னும் மூன்று விடயங்களை ஆய்வுப் பொருளாக கொண்டுள்ளது. இந்நூலின் பொருளடக்கமானது யாழ்ப்பாணத்தில் சாதி மரபும் மாற்றமும், சாதியும் இனத்துவமும், அடையாளக் கட்டுமானங்கள் மற்றும் யாழ்ப்பாணச் சமூகத்தில் தனிப் பெண்கள் உருவாக்கம் போன்றவை.
இந்நூலில் இடம்பெறும் ஆய்வுக்கட்டுரைகள் ஒர் அர்ப்பணிப்புள்ள இளம் ஆய்வாளரால் மிக்க கவனத்துடனும் விமர்சன ரீதியான நுணுக்கமான பார்வையுடனும் வெளியிடப்படுகின்றது.
ஆழத்தை அறியும் பயணம் தொகுப்பு : பாவண்ணன்
“எனக்குப் பிடித்த சிறுகதைகள் எனக்களித்த வாசிப்பனுவத்தை” முன் வைத்திருப்பதாக கூறும் பாவண்ணன். வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவர் களையும் இணைத்து பல்வேறு கதைகளைப் பற்றி பேசுகிறார். பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட சிறப்பான பல கதைகளினூடே பாவண்ணன் நிகழ்த்தும் வாசிப்பு புதிய விசாரணை களைத் தூண்டும் வல்லமை படைத்தது.
நிவேதினி - இதழ் 13, 2007 (ஆங்கிலம்) ஆசிரியர் : செல்வி திருச்சந்திரன்
| இந்நூலில் இலக்கியம், சமயம், வன்முறை, உலக மயமாக்கல், குடும்பம்
| Nivedini
போன்ற விடயங்கள் சம்பந்தமான பல ஆங்கில கட்டுரைகள் உள்ளடக்கி யுள்ளது.
(இந்நூலினை பெற்றுக்கொள்ள விரும்புவோர் எமது நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளலாம்.)

Page 10
தெற்காசிய த
“தேசியம் மதம், அரசியல், வாழ்வியல் போன்றவற்றில் ஊடுருவி நிற்கும் ஆண் தலைமைத்துவத்தை எதிர் கொள்ளும் பெண்நிலைவாதம்” எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு தெற்காசிய ரீதியில் எமது நிறுவனத்தினால் கார்த்திகை மாதம் 30ம் திகதியும், மார்கழி 1ம் திகதியும் எமது நிறுவன கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. இம் மாநாட்டினை எமது நாட்டின் ஆய்வாளர்கள் ஐவரும், இந்தியாவின் பெண்நிலைவாத ஆய்வாளர் இருவரும் பெண் கவிஞர்கள் இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முதல் நாள் காலை அமர்வின் போது எமது நிறுவன இயக்குனர் செல்வி திருச்சந்திரன் அவர்களும், மாலை அமர்வினை பத்மா சோமகாந்தன் அவர்களும் தலைமை தாங்கி சிறப்பித்தனர்.
காலக்கணவு; தமிழில் ஒரு பெண்ணிய நாடகத்தின் ஆக்கம் என்ற தலைப்பையெண்ணி அரசு தனது கருத்துக்களை முன் வைத்தார். “சமூக மாற்றத்திற்கான ஒரு தமிழியல் பெண்ணியத்தின் நாடகம்; முழுக்க முழுக்க சர்ச்சை சார்ந்த நாடகம்” என்று அந்நாடகம் பற்றிக் கூறினார். அவரைத் தொடர்ந்து “தலித் பெண்நிலைப் பார்வையில் சாதிய ஆணாதிக்கம் மற்றும் அடையாள அரசியல்; இமயத்தின் 'செடல் நாவல் ஒரு விமர்சன வாசிப்பு” என்ற தலைப்பில் கலாநிதி ச. ஆனந்தி தனது கருத்தை முன் வைத்தார். மீட்டெடுப்பு அரசியல் மூலம் தலித் வன்முறைகள் மீட்டெடுத்தல் அமைப்பு ரீதியாகவே தமிழ்மக்கள் திணிக்கப்படும் போது இமயத்தின் 'செடல் மாறுபட்டுக் காட்டப்படுகின்றது. என்று தனது விமர்சனப் பார்வையை ஆனந்தி தெளிவாக்கினார். உணவு இடைவேளைக்குப் பின் திருமதி பத்மா சோமகாந்தன் தலைமையில் இரண்டாவது அமர்வு நடைபெற்றது.
போரையும் வன்முறையையும் பற்றி இலங்கையில் இலக்கியத்துக்கு ஊடான பெண்களின் எதிர்வினைகள் என்னும் பொருளில் பேராசிரியர் சித்ரா மெளனகுரு தனது கட்டுரையை முன் வைத்தார். தனது கருத்துக்களைத் தெளிவுபடுத்த அவர் பல பெண் கவிதைகளையும் சிறுகதைகளையும் மேற்கொள் காட்டினார். அவரைத் தொடர்ந்து முரண்படும் சமூகத்தில் தமிழ் எழுத்தின் இன்றைய பெண்நிலை வாதம் என்ற பொருளில் செல்வி திலகமாமா தனது கருத்தை முன் வைத்தார். சூடான கருத்துப் பரிமாறல்களுடன் முதல் நாள் அமர்வுகள் நிறைவடைந்தன.
இரண்டாம் நாள் காலை அமர்வு பேராசிரியர் சித்ரா மெளனகுருவும் மாலை அமர்வினை கலாநிதி ச. ஆனந்தியும் தலைமை தாங்கினர். அன்றைய கட்டுரைகள் பெண்நிலைவாதமும் சமூக சூழல் மாற்றங்களும்' என்னும் தொனிப் பொருளில் வாசிக்கப்பட்டன. பெண் - வெளிப்பாடு - இயக்கம்' என்ற நிலையில் திரு. தெ. மதுசூதனன் தனது கருத்துக்களை முன்வைத்தார். இவர் ஈழத்துப் பெண்ணிலைவாத இயக்கத்தின் வரலாற்று வளர்ச்சியை எடுத்துரைத்தார். அத்துடன் கத்தோலிக்க மத வருகை பெண் கல்வியின் வளர்ச்சியில் அது கொண்டிருந்த பங்கு பற்றியும் ஆராய முற்பட்டார்.
“எழுத்துக்களுக்கூடாக பெண்நிலைவாதத் தேசியவாதம் ஈழத்துப் பெண் போராளிகளின் அவதானிப்பு” என்னும் கட்டுரையை கலாநிதி செ. யோகராசா வாசித்தார். ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளை உதாரணத்திற்கு வைத்து தனது அவதானிப்புக்களைத் தெரிவித்தார்.
10

தமிழ் மாநாடு
இரண்டாம் அமர்வு பேராசிரியர் ச. ஆனந்தி தலைமையில் நடைபெற்றது. ‘உலகமயமாக்கலும் பெண்களும்' என்ற தலைப்பில் திருமதி பவானி முகுந்தனும், தமிழ் மண்ணில் உடலரசியலின் மூன்றாம் பரிமாணம்' என்னும் பொருளில் குட்டி ரேவதியும், பெண்களும் அனர்த்த முகாமைத்துவமும்' என்ற கருத்துரையை சே. அனுஷியாவும் வழங்கினர்.
பவானி முகுந்தன் முக்கியமாக உலகமயமாக்குதல் பெண்களை எவ்வாறு பாதிக்கிறது என்றும் முக்கியமாக சுதந்திர வர்த்தக வலையத்தில் தொழில் புரியும் பெண்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதைப்பற்றி விளக்கினார். இவர் பல்வேறு அரசு சார்பற்ற நிறுவனங்கள் பெண்களை சமூகத்திலிருந்து பிரித்துப் பார்க்கின்றனர் என்றார். இதற்கு பல ஆய்வாளர்கள் மறுத்து விவாதித்தனர். குட்டி ரேவதி தமிழகத்தில் உள்ள பெண் கவிஞர்களில் ஒருவர். கவிதைகளில் எவ்வாறு பெண்களின் உடலைப் பற்றியும் உடல் அரசியலைப் பற்றியும் அவர் எடுத்துக் கூறியிருந்தார். காமம், விரக்தாபம் என்பனவற்றினால் ஏற்படும் கற்பழிப்புகளை உடற் பிரச்சனையாக ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்க முடியாது என்றும் கூறினார்.
அனுஷியா ஆரம்பத்தில் பல்வேறு இயற்கை அனர்த்தங்களையும் அவற்றின் வெவ்வேறு பரிமாணங் களையும் அது எவ்வாறு இயற்கை அழிவுகளை ஏற்படுத்தியது என்பதையும் எடுத்து கூறினார். பெண்கள் பல்வேறு வழிகளில் அனர்தங்களை எதிர்கொள்கிறார்கள், அதற்கான காரணங்களையும் உரைத்தார். சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகள் கருத்துப் பரிமாணத்திற்கு முன்வைக்கப்பட்டது. இக் கருத்தாடல்கள் பயனுள்ள கருத்தரங்காக அமைந்தமை சிறப்பம்சமாகும்.
பிரவாகினி மார்கழி 2007 இதழ் 28

Page 11
சமாதான கற்கை வநறிக் கருத்தரங்குகள்
நம் நிறுவனத்தினால் சமாதானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாக 2006ம் ஆண்டிலிருந்து இதை நடத்தி வருகிறோம். இன்னும் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடாத்துவதற்கான நிதியுதவியை கோடேட் என்னும் நிறுவனம் வழங்கியிருக்கிறது. மும்மொழிகளிலும் நடாத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.
சமஷ்டி முறை, பன்னிலைப்படுத்தல், மதச்சார்பற்ற என்னும் சொற் தொடர்களைப் பற்றி மக்களுடன் கலந்துரையாடி அவற்றின் முக்கியத்துவத்தையும் உண்மைகளையும் உணர்த்தி, சமாதானப் பேச்சு வார்த்தையில் இவற்றின் சில அம்சங்களை உள்ளடக்குவதன் முக்கியத்துவத்தைத் தெரியப் படுத்துவதே எங்கள் நோக்கம்.
இக்கற்கை நெறியில் பலரும் பல்வேறு மாவட்டங் களிலிருந்தும் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களுக்காக இக்கற்கை
நெறியினை நடாத்தி வருகிறோம்.
பிரவாகினி மார்கழி 2007 இதழ் 28
 

லிபண்கள் கற்கை வநறி சிங்களத்தில்
61மது நிறுவனமானது கடந்த 5 வருடங்களாக
பெண்கள் கற்கை நெறிகளை தமிழிலும் சிங்களத்திலும் நடாத்தி வருகிறது. இம்முறையும் சிங்களத்தில் இக் கற்க நெறி வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகிறது.
கற்கை நெறியானது ஒவ்வொரு துறைகளிலும் அனுபவமும் தேர்ச்சியும் பெற்ற விரிவுரையாளர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந் நெறியினை பல்வேறு பகுதிகளிலுமிருந்து ஆர்வமுள்ளவர்கள் பங்கு பற்றி வருகின்றனர்.
நவம்பர் 2007ல் ஆரம்பித்த இக்கற்கை நெறி பெப்ரவரி 2008ல் முடிவடையும்.
பங்குபற்றியோர் முழு நெறியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நீண்டதொரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.
11

Page 12
மொழி பெயர்ப்பு வசதிகளைக் கொண்ட பெண்கள் கல்வி ஆய்வுநிறுவன கேட்போர் கூடம்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினது கருத்தரங்கு மண்டபம் 50 சொகுசு இருக்கைகளைக் கொண்டது. மற்றும் சமகால மொழி பெயர்ப்புக் கருவிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உணவு, தேநீர் வசதி செய்து கொடுக்கப்படும். உங்கள் கூட்டம், கருத்தரங்கு, செயலமர்வு, படக் காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குத் தகுந்த வசதிகள் வழங்கப்படும்
WERC Auditorium Charges Hall Charges A/C Non AVC O Full Day (8 hours) 7,500/- 6,000/- O For Two Hours 3,000/- 2,500/- O Every Additional
One Hour 750/- 500/-
A.
* %
Facilities 盏驻
Television 400/- VCR 300/- Overhead Projector 300/- MultiMedia Projector 5000|- Mikes (each) 75/- Simultaneous Translation Unit 5000/- Head Phones (each) 300|-
Service charges 10% of the total amount O FOOd From Out Will not be Permitted
Maximum seating capacity 50
Ample Parking Space
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 58 தர்மராம வீதி, கொழும்பு 06 தொலைபேசி : 2595296, 2590985 தொலைநகல் : 2596313
தொகுப்பு : மகேஸ், தாரணி, செல்வி Σ
Women's Education er Research Centre
58, Dharmarama Road,
Colombo - 06,
Sri Lanka.
T. P. : 259.5296, 2590985 Fax : 25963 13
E-mail : womedre G sltnet.lk
12
 

பால்நிலை சமத்துவக் கருத்தரங்கு ༽
எமது நிறுவனத்தினால் பால் நிலைச் சமத்துவத்தைப் பேணும் நோக்கில் இக்கற்கை நெறியானது மும்மொழிகளிலும் நடாத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
பாடசாலை மாணவர்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோரிடையே நடாத்தப் படும். இக்கற்கை நெறியில் பங்குபற்ற விரும்புவோர் தங்களது நிறுவனத்தினூடாக எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு :
மாலதி பவானந்தன் - 2595296 الصر ܢܠ
r N சமாதானக் கற்கை நெறி
சமாதானத்திற்கான கற்கை நெறியானது வார இறுதி நாட்களில் மும்மொழிகளிலும் நடாத்தப்பட்டு வருகிறது. இலங்கையின் வரலாறும் சமூக இனத்துவ உறவுகளும், அதிகாரப் பிரிவும் சமஷ்டி முறையின் அவசியமும், அரசியல் முறைமையில் மதச்சார்பின்மையின் அத்தியாவசியம் போன்ற பல விடயங்கள் விரிவுரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்களாலும். புலமை பெற்றவர்களாலும் விரிவுரைகள் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரயாணச் செலவும் தங்குமிட வசதியும் வழங்கப்படும். இக்கற்கை நெறியினை தொடர விரும்புவோர் எமது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் லுவி ஹெட்டவல : 2595296 الم. - ܢܠ
i
TO :
பிரவாகினி மார்கழி 2007 இதழ் 28