கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாகினி 2008.12

Page 1
* біразил
WERC
LOTïsol 2008
சட்டம், மரபு
இன்று70 வீதமான பெண்கள் தொழில் 9ŭulguLIT60T LOJI
புரிவோராக உள்ளனர். ஆனாலும் இவர்கள் தங்களது பாதுகாப்புக்கருதி தமக்கிருக்கின்ற உரிமைகள் பற்றியோ சட்ட நடைமுறைகள் பற்றியோ அதிகம் அக்கறையற்றவர்களாக இருக்கின்றனர். இதனால்தான் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்த பெண்கள் பிணங்களாக திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பல வருடங்கள் வேலைசெய்தும் சரியான ஊதியம் இன்றி இருக்கின்றனர்.
உள்ளூரில் வேலை செய்யும் பெண்களிலும் ஆசிரியத்தொழிலைத்தவிர ஏனைய தொழில்களில் உள்ள பெண்கள் மகப்பேற்று கால விடுமுறையைக் கூட மனித உரிமையாக அனுபவிக்க முடியாதவர்களாக உள்ளனர்.குறிப்பாக அரச அலுவலகர்கள் தவிர ஏனையோர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
“மகப்பேற்றுக்கு முன்னரும் பின்னரும் நியாயமான ஒரு காலப்பகுதியின் போது தாய்மாருக்கு விசேட பாதுகாப்பு அளிக்கப்படுதல் வேண்டும். அத்தகைய காலப்பகுதியின்போது வேலை புரியும் தாய்மாருக்கு சம்பளத்துடனான லிவு அல்லது போதிய சமூகப்பாதுகாப்பு நலன்களுடனான லீவு வழங்கப்படுதல் வேண்டும். என்கிறது. மனித உரிமை. இது சட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அபிவிருத்தி யடைந்த நாடுகளில் தந்தைக்கும் இந்த விடுமுறையை பகிர்ந்தளிக்கும் நடைமுறை இருக்கின்றபோது நமது நாட்டில் பெண்ணுக்கே இந்த உரிமை வழங்குவதில் பல நிறுவனங்கள் வேண்டா வெறுப்பாக நடந்த கொள்கின்றன. சமூக மறு உற்பத்திக்கான பங்காற்றலாக இதை நோக்காததே அதற்குக் காரணம்.
எனவே உரிமைகளிலும் சட்டங்கள் பற்றியும் பெண்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
குடும்ப சண்டையை தெருவுக்கு கொண்டுவந்தால் குடும்பம் பாழாகிவிடும். அடிக்கிற கைதான் அணைக்கும்.
பெரிய குற்றங்களை வழிகளாகிவிடுகின்ற அமைப்பில் சட்டங் கோலோச்சுகிறது.மரபுச் பட்டுள்ளாள். அதேே ஆண்களுக்கு அ6 காணப்படுகிறது. குடும் தலைவனாக கணிக் அவன் எது செய்தாலு தன்மையை பெண்களி சட்டரீதியாக கையா விடயங்களை சர்வசாத விட்டது. இதனால் வ குற்றங்களாலும் பெ பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் தம் வாழ்நிை சட்டத்தின் உதவியை அவர்களுக்குள்ள 2 பெண்கள் பிரச்சினைச வலியுறுத்திவருகின்றன
அனேகமாக பெண் துஷ்பிரயோகத்திற்கு குற்றங்களுக்கும் உட் நன்கு பழக்கமான களால்தான் என அறிச் தந்தையால் பாலியல் மகள்மார் பற்றிய பதிவாகியுள்ளன. இத சம்பவத்தை இங்கு குறி
பெண்கள் ஆ சட்டத்திற்குமுன் இத்தகைய சம்பவமொ கணவனுடன்தான் சே என்று கூறி வழக்கினை பெற்றுக்கொண்டார் மீண்டும் அந்த பெண் இளைத்த தந்தையுடன் தொடரப்போகிறது.
எமது மரபார்ந்த சி நாம் கொடுக்கும் பெண்களுக்கு விளை
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 28

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
செய்தி மடல்
இதழ் 28
, லிபண்கள்
ார்ந்த சிந்தனைகள் 'யும் மூடிமறைக்கும் |ன. தமிழ் சமூக களைவிட மரபே குள் பெண் அமிழ்த்தப் நரம் மரபுகளுக்குள் ாவற்ற அதிகாரம் பத்தைக்கட்டிக்காக்கும் கப்படும் கருத்தியல் ம் பொறுத்துப்போகும் டம்கோருகிறது. இது ளப்படவேண்டிய பல ாரணமான விடயமாக்கி ன்முறையாலும் பாரிய ண்கள் பெருமளவில் இந்த நிலையில்தான் லப்பிரச்சினைகளுக்கு நாடவேண்டும் என்றும் உரிமைகள் பற்றியும் ளை கையாள்பவர்கள் Ti.
னகுழந்தைகள் பாலியல் ம் பாலியல் வல்லுறவு படுவது அவர்களுக்கு அயலவர் உறவினர் கைகள் கூறுகின்றன. வல்லுறவிற்குட்பட்ட சம்பவங்கள் பல }ன்போது நடந்த ஒரு நிப்பிடவேண்டும்.
அமைப்பொன்றினால் கொண்டுவரப்பட்ட ன்றில் தான் மீண்டும் ஈர்ந்து வாழவேண்டும் இடைநடுவில் வாபஸ் பெண்ணின் தாயார். ண்பிள்ளையும் குற்றம் வாழும் அவலம்தான்
ந்தனைகளும் மரபிற்கு முக்கியத்துவமும் விக்கப்படும் குற்றங்
களை சர்வசாதாரண குடும்ப பிணக்காக இனம்காண வைக்கிறது. குடும்ப அலகில் உள்ள பிரச்சினைகள் சரியாக இனம் காணாமல் குடும்பம் சிதைந்து விடும் என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு வாழ்வது குற்றங்களை அதிகரிப்பதற்கும் சட்டத்தை இனம்காணாமல் இருப்பதற்கும் வழிவகுக்கும்.
இவ்வாறு தனது உரிமைகளை பெண்கள் உணர்ந்துகொண்டு அதுமீறப்படுகின்றபோது சட்டத்தின் உதவியை நாடுவதற்கு அவர்களை உற்சாகப்படுத்த சமூகம் முன்வரவேண்டும். அதேநேரம் சட்டத்துறைகளிலும் பெண்கள் நுழைந்து நீதியை நிலைநாட்ட ஆர்வம் காட்டலாம். இன்று இலங்கையில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக மூன்று பெண்கள் இருப்பதையும் இங்கு நினைவுபடுத்தலாம். கெளரவமான ஒரு வாழ்வுக்கு தேவையான அடிப்படை மனித உரிமைகளைப்பற்றியே தெரியாத பல பெண்கள் உள்ளனர். அந்தளவுக்கு பெண்களை மரபிற்கு கட்டுப்பட்டு தங்கிவாழும் சூழ்நிலை கொண் டோர்களாக இருப்பதற்கு சமூகம் வழி வகுத்திருக்கிறது. . இதை விடுத்து உரிமைகளையும் சட்டங்களையும் பெண்கள் பயன்படுத்துவதற்கு முன்வரவேண்டும். எல்லா நேரங்களிலும் மரபு இன்றைய வாழ்வுக்கு போதுமானதாகவோ ஆதாரமானதாகவோ இருக்காது.
இந்த இதழில்.
ம்ெ சார்க் 2008 பிரகடனத்தில்.
குடும்ப வன்முறை சட்டதீர்ப்பு
ம்ெ சட்டத்துக்கு முன்னால் குடும்பச்
சண்டை
ad
ம்ெ பால்நிலை எண்ணக் கருக்கள் உ பெண் விடுதலையும் ஆண்
விடுதலையும் ம்ெ தேவதைகளின் வாழ்வு ம்ெ எமது நூலகம்

Page 2
U/1óðsö.ogv GIGð தாய்வழிச்
தாய்வழிச் சமூக அமைப்புக்கள் பெண் ஒடுக்குமுறை இல்லாத இலட்சிய சமூக அமைப்புக்களென முன்னர் கருதப்பட்டது. இக்கருத்தை இன்று பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதில்லை. தாய்வழிச்சமூகங்களாயிருந்தால் என்ன தந்தை வழிச்சமூகங்களாய் இருந்தால் என்ன ஆணாதிக்கம் எல்லாவகைச் சமூக அமைப்புக்களிலும் மேலோங்கி இருந்தது என்றே கொள்ளலாம். இருந்த போதும் தாய்வழிச் சமூகத்தின் சில அம்சங்கள் பெண்களின் உரிமையைப் பாதுகாப்பனவாய் இருந்தன என்று கூற முடியும். அவற்றுள் பிரதானமாக
1. திருமணத்தின் பின் மனைவி கணவன் வீட்டிற்குச் சென்று வாழாமல் தாய்வீட்டிலேயே தங்குதல். கணவன் மனைவியின் தாய் வீட்டில் குடிபுகல்.
2. சொத்துரிமை பெண் வழியில் அமைதல்
3. குடும்பத்தை நிருவகிக்கும் அதிகாரம் பெண்ணிடமும், பெண்ணின் தாய் தந்தையரிடமும் இருத்தலும், கணவன் பெண்வீட்டாரின் கட்டுப்பாட்டுக்குள் வருதலும் ஆகிய அம்சங்கள் பெண் உரிமையைப் பேண உதவின.
பக்தவத்சல பாரதி தமது “மானிடவியல் கோட்பாடுகள்” என்னும் தமிழ் நூலில் தாய்வழிச் சமூகங்களின் முதன்மைக்கூறுகள் எவையென எடுத்துக் கூறுகிறார். அதனை அடுத்து நோக்குவோம்.
ஒரு சமூகத்தின் அமைப்பு முறையை விளங்கிக் கொள்வதில் பின்வரும் நான்கு முதன்மைக் கூறுகள் உள்ளன.
(5ly6) (Decent) திருமணத்திற்குப் பின் தம்பதியர் வாழுமிடம் (Residence) GlyT55rf60L) (Inheritance) குடும்பத்தை நிருவகிக்கும் அதிகாரம் (Authority)
இந்நான்கு கூறுகளையும் முன்வைத்துத் தாய்வழிச் சமூகங்களின் அமைப்பியல்புகளைத் தாய்வழி(Matrilineal) தாயகம் (Matrilocal) GustoT 6) plai Gls frigrfso)LD (Matrilineal Inheritance)
LAASYLASALLAA iSAAL AA SSLLLAASALA SAALLL ASiAALLASASAALLASiLLASiAALAAA iSALLLSASi LAqASAS ALA SAALLLAAAASAALLLAAAASAAALLSAS SALAAASAA S AAALASSSqqq
--------------------------------
ஊடகத்துறை விருது
பத்திரிகையாளராக 1957 இல் லங் ரத்னகார. இவர் 1958 இல் முதல் பெண்க பெற்றார். நான்கு வருடங்கள் கழித்து சுத சஞ்சிகையான பூரீயில் ஆசிரியரானார். பே பதில் ஆசிரியராகவும் பதவிகளை வகுத்தவ இவருக்கு வாழ்நாள் முழுவதும் ஊடகத்துை இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் வருடாவரு
 

ாணக் கருக்கள் சமூகங்கள்
தாய்த்தலைமை (Matriarchy) என்னும் கருத்தமைவுகளாகப் பகுத்துக் கொள்ளலாம். (மே.கு.நூல்.பக் - 84)
ஒரு சமூகம் இம் முதன்மைக் கூறுகளில் எவற்றைக் கொண்டிருக்கிறது? எவற்றைக் கொண்டிருக்கவில்லை? எந்தெந்த வகையில் தந்தை வழிமுறையின் தாக்கமும் கலப்பும் உள்ளன என்பனவற்றை அறிந்துகொள்ள வேண்டும். இந்த நான்கு கூறுகளையும் ஒருங்கே பெற்ற சமூகங்களை தாய்வழிச் சமூக இயல்புகள் முதன்மை பெற்றிருக்கும் சமூகங்கள் எனலாம். இதுபற்றி பக்தவத்சல பாரதி கூறியிருப்பதை கீழே மேற்கோளாகத் தந்துள்ளோம்.
தாய் வழியில் குடியைப் பெற்றிருத்தல் திருமணத்திற்குப்பின் தாயகத்தில் தங்கும் முறை, பெண்கள் வழிச் சொத்துரிமை, குடும்ப நிருவாகமும் அதிகாரமும் மூத்த பெண் வழியில் அமைதல் ஆகிய 4 கூறுகளையும் ஒருங்கே பெற்ற சமூகம் முதல் வகை. பழைய நாயர் சமூகம், பழைய கோட்டைப் பிள்ளைமார், பழைய நாஞ்சில் நாட்டு வேளாளர் பழங்காலக் குருச்சியர் போன்றோர் இவ்வனைத்துக் கூறுகளையும் கொண்டிருந்தனர். இவர்களிடம் இப்போது வெகுவான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைய நிலையில் மேகலாவில் வாழும் காசி (Khasi) கேரோ (Garo) ஆகிய இரண்டு பழங்குடியினரும் இவ்வகைச் சமூக அமைப்பைக் கொண்டவர் ஆவர். (மே.கு.நூல் பக் - 85)
நாயர் கோட்டைப் பிள்ளைமார் நாஞ்சில் நாட்டு வேளாளர். குருச்சியர் ஆகிய சமூகங்களை பழைய என்ற அடைமொழியுடன் பக்தவத்சல பாரதி குறிப்பிடுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சமூக மாற்றங்களால் தாய்வழிச் சமூக அமைப்பின் இயல்புகள் அழிந்து வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
இலங்கையில் யாழ்ப்பாணத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர், மட்டக்களப்பு முஸ்லிம்கள், கண்டிச்சிங்களவர் ஆகிய சமூகக் குழுக்களிடம் தாய்வழிச் சமூகக் கூறுகள் இருந்து வந்துள்ளன.
"சண்'
LLLLLS SS STLS A TLSS SS SSALLLSS SS SSALLLS TLSS S AAAALLLSS SS STLSS S TLSS S S ASLSLLL SLLLS S ASASALLLS ASASALLLS AT LLLS A SAAALS ATALLSS S AA ATLLLLSS S SAeSAeS S SSLLS S SqLLS S S
--x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-------
சில் தினதரவுக்கு
வ்காதீபவில் உதவி ஆசிரியராக அடியெடுத்து வைத்தவர் சிரிய கள் பத்திரிகையான வனித்தா வித்தியில் ஆசிரியராக நியமனம் ந்திர பத்திரிகை குழுவின் குடும்ப பெண்களுக்கான முதலாவது லும் ரிவிரெச பத்திரிகையின் விவரணக்கட்டுரையாசிரியராகவும் i. ஆங்கில சிங்கள மொழிகளில் பல நூல்களையும் எழுதியுள்ளார். றைக்கு ஆற்றிய சேவைக்கான விருது 2008இல் கிடைத்துள்ளது. நடம் இவ்வகை விருதை வழங்கி வருகிறது.
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 28

Page 3
தலித் பெண்களின் த ஆரம்பமான மக்
ויי
"Partnership for our People எமது மக்களுக்கான பங்குடமை என்பதே நடந்து முடிந்த பதினைந் தாவது சார்க் (தெற்காசியப் பிராந்திய நாடுகளுக்கான கூட்டமைப்பு) மகாநாட்டின் பிரதான தொனிப்பொருளாக அமைந்திருந்தது. 2008 ஆகஸ்ட் 2ம் திகதி உத்தியோக பூர்வமாக மகாநாடு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கொழும்பில் சந்தித்து "பயங்கரவாதம் மீதான யுத்தம்” பற்றியும், அதனைப் பிராந்தியத்தில் கையாளும் முறைகள் பற்றியும் பல்வேறு மட்டங்களில் சந்தித்து உரையாடினர். மேலும் இம் மகாநாட்டின் இறுதி நாளான ஆகஸ்ட் 3ம் திகதி, "பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தம் தெற்காசியப் பிராந்தியத்தில் தொடரும்” என்ற பிரகடனத்துடன் மகாநாடு முடிவடைந்தது. ஆப்கானிஸ்தான் இந்த மகாநாட்டில் முதன்முறையாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதான சார்க் மகாநாட்டிற்கு முன்னோடியாக, இப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறுபட்ட குழுக்கள் கொழும்பிலும், கண்டியிலும் சந்தித்து, பல்வேறு விடயங்கள் குறித்து விலாவாரியாக ஆராய்ந்தனர். இவற்றுள் கடந்த ஜூலை மாதம் 18ம், 19ம், 20ம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற “மக்கள் சார்க் 2008”முக்கியமானது. தலித் பெண்களின் தப்பு வாத்திய முழக்கத்துடன் “மக்கள் சார்க் 2008” ஆரம்பமானது. தெற்காசியப் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த சுமார் 1,400 மக்கள் ஒரே கூரையின் கீழ் கூடினர்.
தொழிலாளர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள், மீனவர்கள், விவசாயிகள், சமாதானத்திற்காக உழைப்போர், சுகாதார ஊழியர்கள், மனித உரிமைக்காகப் போராடுவோர், சமூக சேவையாளர்கள் எனப் பல தரப்பைச் சேர்ந்த மக்களும் இதில் பங்குபற்றினர். உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மனித உரிமை மீறல் சம்பவங்கள், ஒரினச் சேர்க்கைக்குரியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேசியப் பாதுகாப்பு, அணுவாயுமற்ற தெற்காசியா, ஜனநாயகம் போன்ற விடயங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை, இரண்டாம் நாள் நிகழ்வின் போது பெண் பேச்சாளர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என விசனம் தெரிவித்த பிரபல பெண்ணிலைவாதியான கம்லா பசின், மேடையில் ஏறி உரையாற்ற ஆரம்பித்தார். பெண்களுக்கு உரிய இடமளிக்கப்படுவதில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், மகாத்மா காந்தி தனது பல்வேறு கடமைகளுக்கு மத்தியில் கொலரா நோயினால் பீடிக்கப்பட்ட தனது மனைவியான கஸ்தூரி பாயிற்கு அடிக்கடி உதவி செய்ய வேண்டியிருந்தது.
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 28
 

ப்பு வாத்தியத்துடன் 56i snfiái 2008
பத்திரிகையாளர் மகாநாட்டின் மத்தியில் அடிக்கடி வீட்டிற்குள் சென்று திரும்பிய காந்தியை நோக்கிச் சினமுற்ற பத்திரிகையாளர் ஒருவர் “காந்தி பத்திரிகையாளர் மகாநாட்டை நிறைவு செய்து விட்டு, அதன் பின்னர் வீட்டுக்குள் செல்லலாம்” எனக் கூறினார். இதற்கு காந்தி அளித்த பதில் “எனது மனைவி கஸ்தூரி பாய் நோய்வாய்ப்பட்டுள்ளார். அடிக்கடி ஏற்படும் வயிற்றுப் போக்குக் காரணமாக, நான் மலசலம் கழிப்பதற்கான பாத்திரத்தை வைத்து அவளுக்கு உதவவேண்டும்” என்றார்.
மேற்கண்டவாறு கூறிய கம்லா பசினின் கண்களில் நீர் ததும்ப, எம்மவர்களில் எத்தனை கணவன்மார் காந்தியைப் போன்று தமது மனைவிக்குக் கடமை செய்ய முன்வருவர் என்ற கேள்வியைத் தொடுத்தவாறு மேடையை விட்டு இறங்கினார்.
- துகூழி
சார்க் 2008 பிரகடனத்தில்
O O O லிபண்கள் சிறுவர்
Uண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2008 ஜூலை 27ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை நடைபெற்ற 15ஆவது சார்க் உச்சி மாநாட்டில் 22 அம்சங்கள் உள்ளடக்கிய கொழும்பு பிரகடனம் வெளியிடப்பட்டது.
ஜனாதிபதியும் 15ஆவது சார்க் மாநாட்டின் தலைவருமான மஹிந்த ராஜபக்கூடி தலைமையில் ஆரம்பமான உச்சி மாநாட்டின் இறுதி நாளில் இந்த பிரகடனம் வெளியிடப்பட்டது.
பிராந்திய ஒத்துழைப்பு, தெற்காசிய மக்களுக்கிடையிலான வளர்ச்சி, இணைப்பு, எரிபொருள், சுற்றாடல், நீர்வளம், வறுமை ஒழிப்பு, சார்க் அபிவிருத்தி நிதியம், போக்குவரத்து, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அபிவிருத்தி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை, கலாசாரம், சப்டா மற்றும் வர்த்தக அனுசரணையாளர், வர்த்தக சேவை, சார்க் சமூக வரைபு, பெண்கள் மற்றும் சிறுவர்கள், பயங்கரவாத ஒழிப்பு, இணைந்த நிலை, பார்வையாளர்கள். 16ஆவது சார்க் மாநாடு ஆகிய அம்சங்களே கொழும்பு பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக கருத்தில் கொள்ளப்பட்டவை.
பொருளாதார ரீதியில் பெண்களின் திறன்களை அபிவிருத்தி செய்து சுகாதாரம் மற்றும் வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் அவர்களை ஆட்படுத்தல் மற்றும் சமூக செயற்திட்டங்களில் உள்ளீர்த்துக்கொள்ளல் என்பனவாகும். இதில் இங்கு நாம் மீண்டும் வலியுறுத்துவது என்னவெனில் பெண்களை சிறுவர்களுடன் இணைத்துப் பார்க்கும் தன்மை மாற வேண்டும்.

Page 4
சட்டத்துக்கு முன்னால் குடும்பச் சண்டை
இந்தியாவிலும் எம் நாட்டிலும் வீட்டில் நடைபெறும் வன்முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட வேண்டும் என்று தற்பொழுது சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பல தடைகளை மீறி இச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இச் சட்டத்திற்கெதிராக வைக்கப்பட்ட மாபெரும் குற்றச்சாட்டு, இதனால் குடும்பம் குலைந்து விடும். குடும்பம் என்ற தனிமனித புனித நிறுவனத்திற்குள் சட்டம் நுழைகிறது. இதனால் காலங்காலமாக போற்றப்பட்டு வந்த சமுதாய பண்பாட்டு விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. சமய குரவர்களும் பண்பாட்டுக் காவலர்களும் எழுப்பும் இந்தக் குரலில் எது தான் சமுதாய விழுமியம்? எது தான் வாழ்க்கைக்குகந்த பண்பாட்டுப் பண்புகள்? என்ற கேள்விகளுக்கு விடைகள் ஒழிந்து கொண்டிருக்கின்றன. ஒழிந்து விட்டன. கணவனால் உதைக்கப்பட்டு இம்சைப்படுத்தப்பட்டு உடலாலும், மனதாலும் கொடுமைப்படுத்தப்படும் ஒரு மனைவி பண்பாட்டுப் போர்வையில் மறைக்கப்பட வேண்டுமா? அவருக்கு விமோசனம் அவற்றிலிருந்து விடுதலை வேண்டினால் அது எப் பண்பாட்டிற்கு எதிரானது? கொடுமைகளும் இம்சைகளும் பண்பாடு, குடும்பப் புனிதம், குடும்பத்தின் நிரந்தரம், ஸ்திரம் என்ற நிறுவன ரீதியில் பேசப்படும் “பண்புகளுக்குள்’ அமுக்கப்படுகின்றன. தனிமனித உரிமை சுதந்திரம், விடுதலை அவற்றுக்கு இலக்காகின்றன. பெண்ணினால் - அதாவது மனைவியால் அடிக்கப்படும் கணவனுக்கு என்ன விமோசனம் என்று நகைச்சுவை பேசி இந்த கொடுமைகளின் தீவிரம் குறைக்கப்படுகின்றன.
அதற்கு விடையாக ஆம் அந்தப் பெண்ணும் மனைவியும் கூட தண்டிக்கப்பட வேண்டியவளே என்று சட்டம் கூறுகிறது. குடும்பச் சண்டை வீட்டு விவகாரம் நடுச் சந்திக்கும், கோட்டுக்கும் வந்து விட்டது என்று கவலைப்படுவோர் அவ் வன்முறை நடக்காமல் தடுப்பார்களா?
எம் நாட்டுச் சட்டம் மும்மொழிகளிலும் இப்பொழுது கிடைக்கிறது. அதைப் பெற விரும்புவோர் எம் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அதைப் பெற்றுக்கொள்ளலாம்.
O O O. O. குடும்ப வன்முறை சட்ட தீர்ப்பு
துத்துக்குடி குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி நீதிமன்றம் ஆகஸ்ட் 11, 2008இல் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் முத்தையா. இவரின் மனைவி அன்னலட்சுமி இவர்களது மகள்

கார்த்திகா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். மகள் கார்த்திகாவுடன் தனியே வசித்து வருகிறார் அன்னலட்சுமி.
குடும்பச் செலவுக்கு முத்தையா பணம் கொடுக்காமல் இருந்தார். இதனால் அன்னலட்சுமி கஷ்டப்பட்டு வந்தார். தூத்துக்குடி முதலாம் நடுவர் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2007ல் அன்னலட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஏமந்த்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி தனது உத்தரவில், பாதிக்கப்பட்ட அன்னலட்சுமிக்கு மாதந்தோறும் ரூ 3,500ஐ ஜிவனாம்சமாக அவரது கணவர் முத்தையா வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
குற்றவியல் நடைமுறை ஜிவனாம்சம் கேட்டு வழக்கு தொடரப்படுவதுதான் நடைமுறையில் உள்ளது. இதில் கால விரையமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் இழப்பீடும் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது.
குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முதலாக இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கும் விரைவில் முடிந்துள்ளது.
-0. eLSL S SSSSSS ATALLL S AAAALLLLL S S AALT ATAL SAAAA LSLS S S ATALLL S A AAALASS S AAALS AAALT AASALLLS S AAS L S AAALS AAALSAALLS 一※一令一一令一夺一夺一※一令一→一令一※一令一令一令一令一→→一令一&一令一→一
கணவன்டமிருந்து சீதனமாக 1 லட்சத்து 24 ஆயிரம் சிலுப்பு ரோஜாப்பூக்கள்
Fரானில் பெண் ஒருவர் தனது பத்து வருட திருமண வாழ்வில் கணவனின் கஞ்சத்தனத்தை பொறுக்க முடியாது வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கில் கணவன் 124,000 சிவப்பு ரோஜாக்களை தனக்கு சீதனமாக வாங்கித் தரவேண்டும் என்பதே கோரிக்கை.
தன்னுடன் உணவு விடுதிக்கு வந்தால் கூட தனது தேனீருக்கான பணத்தை கணவன் கொடுப்பதில்லை என்றும் இந்தப் பெண் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
கணவனோ ஒரு நாளில் 5 ரோஜாப்பூக்களைத்தான் தன்னால் வாங்கி கொடுக்க முடியும் என்றும், இவ்வாறான நிலைமைக்குத் தன் மனைவியின் பெரும்பணக்கார நண்பர்கள்தான் காரணம் என்றும் நீதிமன்றில் கூறியுள்ளார்.
ஆனால் நீதிபதி எல்லாப் பூக்களையும் வாங்கிக் கொடுக்கும் வரை அந்தக் கணவனிடம் இருந்து 64 ஆயிரம் டொலர்களை தண்டமாக செலுத்தக் கூறியுள்ளார். ஈரானில் ஒரு ரோஜாப்பூ 2 டொலர்.
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 28

Page 5
G و
தேவதை க லீனாவின் ஆ
கால்களில் சலங்கை கட்டி வாத்தியக்காரர்களோடு இறப்பு வீடுகளுக்குச் சென்று ஒப்பாரி பாடும் லட்சுமியம்மாள். கேட்பாரற்றுக் கிடக்கும் பிணங்களை வண்டியில் ஏற்றித் தள்ளிக்கொண்டு சுடுகாட்டில் அடக்கஞ்செய்யும் கிருஷ்ணவேணி கடலில் மீன் பிடித்துக்கொண்டு கடல்மீதான மீனவர்களின் உரிமையை நிலைநாட்டிப் பேசும் சேதுராக்கு. இந்த மூவரும் தான் லீனா மணிமேகலையின் தேவதைகள்.
உயிரியல் ரீதியாக ஆண் பெண் வேறுபாடும் சமூக ரீதியாக ஆண்மை - பெண்மை கற்பிதமும் கொண்ட இச்சமூகத்தில் வீட்டிலும் வெளியிலும் பெண்ணுக்கான பணிகளும் ஆணுக்கான பணிகளும் முற்றிலும் வேறானவை. கண்ணுக்குப் புலப்படாத புனைவு சார்ந்த இந்தக் கற்பிதங்கள் பெண்ணின் இயங்குவெளியை ஆணிலும் சற்றுக் குறைவானதாகவே வரையறுத்திருக்கின்றன. இவ்வெளி பெண்சார்ந்திருக்கும் சமூகம், மரபு, நம்பிக்கைகள் இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது.
எழுதப்படாத இந்த விதிகளைத் தகர்த்து ஒரு பெண் தன் இயல்புபடி தன் வாழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை நிலைநிறுத்தி அவளுக்கான வெளியை விரிவுபடுத்தும்போது அவள் படித்தவளாயின் சாதனைப் பெண்ணாக அறியப்படுகின்றாள். கவனிக்கப்படுகின்றாள். இதே பெண் படிப்பினால் தன்னை வெளிப்படுத்தாது தன் சூழலில் தமக்கான மரபுகளைத் தாண்டி இயங்கினாலும் தனது வெளியை விசாலப்படுத்தினாலும் நூற்றில் ஒருத்தியாகவே வாழ்வின் போக்கில் தன் பயணத்தைத் தொடர்கிறாள். இப்படிக் கண்டுகொள்ளப்படாத பெண்களில் மூவரை லீனா அடையாளங்கண்டிருக்கிறார். வெவ்வேறு வாழிடங்களைக்கொண்ட அவர்களை அவர்களது பணிச் சூழலிலேயே காட்சிப்படுத்தியிருக்கிறார்.
0S S ASALLLS S ASASLLLLSSSS S AeLSSS SS SAALLLLLSS S SAqAqLS A AAALS AAALS S AS ASLLS A LLS AeAeS AAALS AAAASLLLLLS SSS qALALS AAALLL S AAALLL S AAALALeAMS S AAMS A AAAS S AA AAAA ---X-X----X-X-X-X-X------------X-------------
வெற்றிப்
Fla( நேரங்களில் சில முடிவுகளை எடுப்பதற்கு யோசிக்க که வெற்றிகளை ருசி பார்க்கவே முடியாமல் போய்விடும் என்கிற மிக எனக்கு கற்றுக் கொடுத்தது” என்கிறார் பிரியதர்ஷினி என்ற இ
ஆகக்குறைந்தது ஒரு மாதம் வரை நீங்கள் படுக்கையில் இ வைத்து நடந்தாலே உங்கள் காலை இழந்து விடுவீர்கள் என்று கடுங்குளிரில் ஐந்து நாள் தொடர்ந்து ஏறி சாதனை படைத்திருச்
இந்திய சீன எல்லையில் உள்ள மேனிபீஜிங் என்ற இடத் அடி) ஐந்து நாட்கள் ஏறி இறங்கும் போட்டி அது. அப்போதுதா? வைத்தியர்கள் இனி நடக்க கூடாது என்று சொல்லிவிட்டார்கள். இரண்டு நாட்கள்தானே என்று மனதில் தைரியத்தை வரவழைத்து வைராக்கியம் மலையேறவைத்தது. குறித்த நாளில் எல்லைக்கோ அவர் பெற்றுக்கொண்டார்.
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 28

ஆவணப்படம்
பக்கம் : லீனா மணிமேகலை, ஒளிப்பதிவு சன்னி ஜோசப், படத்தொகுப்பு : பி. தங்கராஜ், தயாரிப்பு : சி. ஜெரால்டு, நேரம் : 42 நிமிடங்கள், படம் : தேவதை
வயிற்றுப் பிழைப்புக்காக திருடுவதையும் உடம்பை விற்றுப் பிழைப்பதையும் தவிர வேறு எந்தத் தொழிலும் அவமானமானதல்ல என்று சொல்லும் லட்சுமியம்மாள்.
ஊரில் இருப்பவர்கள் எங்கள் வண்டி கடப்பதற்குள் மூக்கைப் பொத்திக்கொண்டு போவார்கள்; சிலர் திட்டிக்கொண்டே செல்வார்கள். எந்த நிலையில் பிணம் இருந்தாலும் நான் எடுத்து அடக்கம் செய்கிறேன் என்கிற கிருஷ்ணவேணி.
பெண்கள் கடலுக்குச் சென்றால் தீட்டு, சாமி குத்தம் என்கிறார்களே, புருஷன் ஒழுங்கில்லாவிட்டால் பெண்தானே குடும்பத்தைப் பார்க்க வேண்டும்? சாமி எங்களை ஒன்னும் செய்யலியே. எங்களுக்குக் கடல்தான் சாமி என்கிற சேதுராக்கு ஆகியோர் இந்தப்படத்தின் நாயகிகள்.
திருவண்ணாமலை, இராமேஸ்வரம், பாண்டிச்சேரி என்று வெவ்வேறு இடங்களில் வசிக்கும் இந்தப் பெண்களின் வாழ்வைப் பதிவுசெய்த விதம் அவர்களின் மீதான பரிதாபத்தைக் கோருவதாக இல்லை. மாறாக அவர்கள் கொண்ட வாழ்வின் நம்பிக்கையை, அவர்களை அறியாமல் அவர்கள் செய்துகொண்டிருக்கிற அரிய செயல்களைக் காட்டுவதாகவே இருக்கின்றது. இந்தப் பெண்கள் ஆண்களால் மட்டுமே முடியும் என்ற பொய்யை மறுதலித்திருக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு அவர்கள் மீது பரிவு ஏற்பட்டாலும் எஞ்சி நிற்பது அவர்கள் செய்துவரும் அற்புதங்களே!
பறை, மாத்தம்மா போன்று கவனிப்பிற்குரிய படங்களில் பெண்கள் மீதான அக்கறையை வெளிப்படுத்திய லீனாவிற்கு, அவரது ஆவணப்பட வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாக இப்படமும் அமைந்துள்ளது.
நன்றி காலச்சுவடு
AqSAqASAAAAAAAAqA S AqA AA AqAqSASA Aq AqAqS q AqAqS AqAqS AqAqAS AqAqA S AA AAAAAAAqAA S A AAAAAAAqAAS AAAAAAAAqASAqA SAAq AS AAAAAAAAqA A AAAAS AAAAS AASS SAAAA ASYAAYYLASYLLASYSAYSSASYLASLLAYLSiASSASSYSSSSSLASYSSSJSYLSSLSA SLSASAASASSLASSASeieS
படிகளில்
க் கூடாது. அப்படி யோசிச்சா சில கப்பெரிய பாடத்தை அந்த அனுபவம் ந்தியப் பெண்.
ருக்கவேண்டும். ஒரு அடி எடுத்து வைத்தியர்கள் சொல்ல, இமயத்தின் கிறார் பிரியதர்ஷினி,
தில் மலை ஏறும் போட்டியில் (6500 ன் பிரியதர்ஷினிக்கு கால் மூட்டு வீங்கி இரத்தம் வர ஆரம்பிக்க மூன்றாம் நாள்தான் இந்த நிகழ்வு நடந்தது. எனவே இன்னும் துக்கொண்டு பிரியதர்ஷினி ஏறத் தொடங்கிவிட்டார். அவரது மன ட்டை தொட்ட முதல் இந்திய பெண்மணி என்ற கெளரவத்தையும்
நன்றி அவள் விகடன்

Page 6
லெபனானில் வாரம் ஒரு ட (மனித உரிமைக
லெபனானில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் வெளி வேண்டும். ஏனெனில் அதிகமான பணிப் பெண்கள் தற்கொலை, கொலைகள் நடைபெறுவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவி
மேலும் இது தொடர்பாக மனித உரிமைகள் அமைப்பு தெ நாடுகளில் இருந்து இரண்டு இலட்சம் பேர் லெபனானில் பணி ஆண்டு தொடக்கம் 2008 வரை 95 பணிப்பெண்கள் இறந்துள்ள அறிக்கையை நோக்குமிடத்து இந்த 95 பேரில் 41 பேர் தற்கொ இருந்து பாய முற்பட்ட பொழுது இறந்துள்ளதாக அறிக்கையிடட்
மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் மூத்த ஆய்வாலி பணிப் பெண்கள் இறக்கும் வீதம் வாரமொன்றிற்கு ஒன்றாக அ
一令一→→-→一一令一令一一※一一岭一一令一公一※一令一一令一→→一令一一令一→一令一一令一 சர்ச்சைக்குரி
கேள்வி 1 : இந்தியன் பீனல் கோட் செக்ஷன் 377 ஐ உடனே நீ அமர்த்தியா சென் அறிக்கை வெளியிட்டிருக்கிறாராமே. அது எ
அமர்த்தியா சென் மட்டுமல்ல, இன்னும் 150 பேர் அந்தக் கூட்ட இருந்த கேப்டன் லட்சுமி, இயக்குநர்கள் ஷியாம் பெனகல், கிரீஷ் கி சேத், அருந்ததி ராய், பத்திரிகையாளர்கள் குல்தீப் நய்யார், செய்தியாளர்கள் ராஜ்தீப் சர் தேசாய், பர்கா தத், நடிகை - இயச் 377 - செக்ஸ் சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவு.
ஓரினப் பாலுறவு எனப்படும் ஹோமோ செக்ஷ"வாலிட்டியை அதாவது, இரண்டு ஆண்கள் தங்களுக்குள் விருப்பப்பட்டு : வேண்டியவர்கள். சட்டப்பிரிவில் உள்ள வாசகங்களின் குழப்பத்த கீழ் தண்டிக்க முடியாது. 1861ல் மகாராணி விக்டோரியா காலத் சட்டம் எடுக்கப்பட்டு விட்டது. அதுமட்டுமல்ல, தன்னின விழைவுள் தன் கருத்தை மாற்றிக்கொண்டு பல வருடம் ஆகிவிட்டது.
ஆண்களோ, பெண்களோ, எப்படிப்பட்ட பாலுறவைத் தேர் தொடர்பான உரிமை என்பதை இன்று உலக அளவில் மனித உ இந்தப் பிரபலங்கள் இந்தியாவிலும் 377 ஐ நீக்கக் கோரியுள்ளனர்
இப்போதைக்கு இந்தப் பிரிவு போலீஸுக்கு வசூல் பிரிவு. பயன்படுத்தப்படுகிறது.
இன்று இந்தியாவில் மட்டும் மொத்தம் 5 கோடி ஆண் அத்தகையவர்களின் கூட்டமைப்பு கணக்கிட்டிருக்கிறது. இந்தித் குடும்பங்களில் ஆறு பேர், அரசியலில் உச்சமான பதவிகளில் இ முறையில் இருந்தாலும், பகிரங்கமாக அதைத் தெரிவிக்கத் தய இன்னொரு காரணம், நமது குடும்ப அமைப்பு முறை.
எப்ப பாரு ஒ திட்டிக்கறி சண்டை. *கம்ப்ளெயி
பேரையும் உ
 

னிப் பெண் இறக்கின்றாள் 7 குழு தெரிவிப்பு)
நாட்டு பணிப் பெண்களின் வேலை நடவடிக்கையை மேம்படுத்த ாடி வீடுகளில் இருந்து தப்ப முயலுதல் போன்ற செயல்கள் மூலம் க்கின்றது.
|விப்பதாவது, இலங்கை, பிலிப்பைன்ஸ், எதியோப்பியா போன்ற பெண்ணாக பணி புரிவதாக குறிப்பிட்டுள்ளது. ஜனவரி 2007ம் ாகவும் அறிக்கையிட்டுள்ளனர். அங்குள்ள தூதுவராலயங்களின் லை செய்தும், மீதமுள்ளவர்கள் உயரமான மாடித் தொடர்களில் பட்டுள்ளது.
ரான நாதீம்ஹரி குறிப்பிடுகையில் “லெபனானில் வேலை புரியும் நிகரித்துள்ளது” எனக் குறிப்பிடுகிறார்.
* Ο 0- 0. V. . . . LAM S SA A ALMS S AAAAAALAMS ALAMS S S A AAALA S S AAASAqLAMS S AA AAAqL S A AAALASSSAAAAASLLLS AAAqq 一一※一一公一→→令一一※一一※一→一※一一公一一※一一※一→一一※一→一→一→一→→一→一→一
ப உறவுகள்
க்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ன்ன செக்ஷன் 377.?
றிக்கையை வெளியிட்டார்கள். நேதாஜியின் ராணுவத் தளபதியாக ர்னாட், இந்துஸ்தானி பாடகி சுபாமுத்கல், எழுத்தாளர்கள் விக்ரம் பி.ஜி.வர்கீஸ், தெஹல்கா தருண் தேஜ்பால், வீர்சங்வி, டி.வி. குநர் அபர்ணா சென் என்று பலரும் எதிர்க்கும் இந்த செக்ஷன்
தண்டனைக்குரிய குற்றமாக இந்தியன் பீனல் கோட் சொல்கிறது. உறவு கொண்டாடினாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட ால், தன்னின உறவுகொள்ளும் லெஸ்பியன் பெண்களை இதன் தில் போடப்பட்ட சட்டம் இது. இப்போது பிரிட்டனிலேயே இந்தச் ன்பதை ஒரு நோயாக அறிவித்துவந்த உலக சுகாதார நிறுவனமும்
ந்தெடுத்துக்கொள்கிறார்கள் என்பது அவரவர் தனி வாழ்க்கை ரிமையாளர்கள் வற்புறுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் தான்
அரவாணிகள், ஏழைத் தொழிலாளர்கள் பலரை மிரட்ட, இது
கள் தன்னினப் பாலுறவு வாழ்க்கை முறையில் இருப்பதாக, திரையுலகில் மூன்று டாப் இயக்குநர்கள், பெரும் தொழிலதிபர் ருக்கும் சிலர், விஞ்ஞானிகள் எனப் பலர் இத்தகைய வாழ்க்கை ங்குவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று செக்ஷன் 377
ருத்தரை ஒருத்தர் “இன்டீஸன்ட்"டா வ்க; வருஷத்துல 365 நாளும் இப்படியே போனா நானே பொலீஸ்ல ன்ட் குடுத்து உங்க ரெண்டு ள்ளே தள்ளிடுவேன், ஜாக்கிரதை.
நன்றி - தினமணி
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 28

Page 7
ஊடக வட்டாரத்தில்
இலங்கையில் மனித உரிமைக
ஆபிரிக்க பெண் ஒருவரின் பாடல் ஒன்றை பாடுவதனூடாக எனது கருத்து முன்னிலைப் படுத்தலை ஆரம்பிக்க விழைகின்றேன். அந்தப் பாடல் வருமாறு :
நான் ஒரே வேண்டுகோளையே முன்வைக்கின்றேன் எனக்கு அந்தத் தேவை இருந்த போதிலும். நான் பணம் தேவையென வேண்டவில்லை நான் இறைச்சி அவசியமென வேண்டவில்லை நான் வேண்டுவதெல்லாம் எனது வழியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைக் கற்களை நீக்க வேண்டும் என்ற ஒன்று மட்டுமே! - ஆச்சோலி கவிதை தொகுப்பின் லாவினோ பாடல் - மூ ஒகோட் பீபிட்டிக்
மேற்குறிப்பிட்ட பாடலைப் போன்றே மூன்றாம் மண்டல நாடுகளில் பெண்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். உலகில் அதிக சனத்தொகைப் பரம்பலைக் கொண்ட நாடுகளில் இலங்கை 53 ஆவது இடத்தை வகிக்கின்றது. மொத்த சனத்தொகையில் பெண்களாகிய நாம் 54 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் இலங்கையில் மொத்தமாக 20 மில்லியன் பெண்கள் காணப்படுகின்றனர்.
ஆசிரிய தொழில், வங்கித்துறைசார் தொழில் மற்றும் ஏனைய தொழில் துறைகளுடன் ஒப்பீடு செய்யுமிடத்து ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் சொற்பமான அளவாகக் காணப்படுகின்றது.
பால்நிலை சமத்துவம் தொடர்பான உலக வரிசைப் படுத்தலில் இலங்கை 88ஆவது இடத்தை வகிப்பதாக இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, ஊடக சேவையாளர் கூட்டமைப்பு இலங்கை முஸ்லிம் ஊடகப் பேரவை, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன கூட்டாக
வெளியிட்டுள்ள ை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்
பால் நிலை சமத்து பட்டியலில் மொத்த நாடுகள் அங்கம் வ சார்க் பிராந்திய நா இலங்கை பால்நிை அபிவிருத்தி குறிகா related Developmen களில் சாதகமான செய்துள்ளது.
ஏனைய அண்டை இந்தியா 128ம் நிை பாகிஸ்தான் 136ம் பங்களாதேஷ் 140ம் காணப்படுவதாக அ அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டு
உலக சனத்தொகை வீதமானோர் பெண் எனினும், 21 வீதமா பற்றிய செய்திகளே வெளியிடப்படுவதா கண்காணிப்பு திட்ட Monitoring Project 2005ம் ஆண்டு 6ெ ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு6
அரசியல் மற்றும் அ போன்ற கடினமான செய்திகளில் மிகக் (14%) பற்றிய செய் வெளியாகின்றன. ( துறையை பொறுத்த 20 வீதமான செய்தி பற்றிய செய்திகளா காணப்படுகின்றன.
அநேக சந்தர்ப்பங்க மென்மையான செ அதிகம் விபரிக்கப்ட கலைத்துறை அல்ல அதிதிகள் என்ற ரீ வீதமான செய்திகள் வெளியிடப்படுகின்
மரபுகளை மீறிச் சளி பெண்கள் பற்றிய ெ வெறும் 3 வீதமே
வெளியிடப்படுவதா
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 28

பால்நிலை சமத்துவம் ஸ் பற்றி செய்தி அறிக்கையிடல்
நயேட்டு
ாது.
பம் தொடர்பான
TB, 177 கிக்கின்றன. டுகளில்
uafTi Lly (Gender | Index - aly.g.) பெறுமதியை பதிவு
நாடுகளான லயிலும், நிலையிலும்,
நிலையிலும் அந்த
iளது.
5us) 52 களாகும். ன பெண்கள்
ஊடகங்களில்
5 g) -605 96TL85
h (Global Media - ஜி.எம்.எம்.பீ) வளியிட்டுள்ள
ர்ளது.
ரசாங்கம்
துறைசார் குறைந்தளவே திகள் பொருளாதாரத் நமட்டில்
களே பெண்கள்
35
iளில் பெண்கள் ய்திகளில் டுகின்றனர். ģ விசேட நியில் 23
T
60T.
பால்விடக்கூடிய சய்திகள்
கவும், 96
வீதமான செய்திகளில் பால்நிலை சமத்துவம் அல்லது முரண்பாடுகள் பற்றி வெளிக்கொணரப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
தமிழ் வார இதழ் ஒன்றில் பத்தி எழுத்தாளராக கடமையாற்றும் பெண் ஊடகவியலாளர் தொடர்பான சம்பவமொன்றை மேற்கோள் காட்டுவது சாலச் சிறந்ததென நான் கருதுகின்றேன்.
குறித்த பெண் ஊடகவியலாளர் அரசியல் நடப்பு விவகாரங்கள் பற்றிய கட்டுரைகளை பத்திரிகையில் வெளியிட்டு வருகின்றார். இந்தப் பெண் பத்தி எழுத்தாளரது ஆக்கங்கள் காத்திரமானவை என்பதனை ஏற்றுக்கொள்ள சக ஆண் ஊடகவியலாளர்கள் மறுதலித்துள்ளனர்.
இலங்கை அரசியல் நடப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆண் ஊடகவியலாளர்களுக்கு நிகராக செய்தி வெளியிடக்கூடிய வல்லமை குறித்த பெண் ஊடகவியலாளரிடம் காணப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பேச்சாளர்கள் மற்றும் நிபுணர்கள் பட்டியலில் ஆண்களே'அதிக ஆதிக்கம் செலுத்துவதாக 2005ம் ஆண்டில் உலக ஊடக கண்காணிப்புத் திட்டம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் (www.whomakesthenews.org) தெரிவிக்கப்பட்டுள்ளது.
86 வீதமான பேச்சாளர் பதவிகளை ஆண்கள் வகிக்கின்றனர் மேலும் சகல நிபுணத்துவ பணிகளிலும் 83 வீதமான ஆண்களே பதவி வகிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆண்களைவிட (8%) பெண்கள் இரட்டிப்பாக (19%) பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே பெண் ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் இலங்கை பெண்

Page 8
ஊடகவியலாளர் வலையமைப்பைச் சேர்ந்த நாம் ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பு தொடர்பாக முக்கியமான பங்களிப்பை நல்க வேண்டிய இன்றியமையா அவசியப்பாட்டை உணர்ந்தோம்
ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ஒரே மாதிரியாக பெண்கள் சித்தரிக்கப்படுவதனை வாசித்தாலோ, ஒளி, ஒலிபரப்புச் செய்தாலோ அதற்கு எதிராக சகல சந்தர்ப்பங்களிலும் அறிக்கைகளை வெளியிடுவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
ஊடகவியலாளர் ஒன்றியங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண் ஊடகவியலாளர்களாக காணப்பட வேண்டுமென இலங்கை பால் நிலை சமத்துவம் தொடர்பான ஊடக நிறுவனம் 2006ம் ஆண்டு வெளியிட்ட திட்ட வரைவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலைமை யதார்த்தத்திற்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது.
மிக மிக அரிதாகவே பெண் ஊடகப்பேச்சாளர்களை ஊடகங்களில் காணக்கூடிய நிலைமையை நாம் அவதானித்தோம். இதன் விளைவாக பெண் ஊடகப்
பேச்சாளர்களைக் செ
கையேட்டை வெளியி நாம் ஆரம்பித்துள்ளே
சொனாலி சமரசிங்க குறிப்பிடுவதற்கு நாள் விரும்புகின்றேன். eெ சமசிங்க “தி மோர்னி பத்திரிகையின் ஆசிரி நிலை சமத்துவம் என் பொருளில் 2008மே நடைபெற்ற செயலம ஊடகம் பால்நிலை ே அறியாது” என்ற தன கருத்துக்களை
முன்னிலைப்படுத்தியி
அதே நேரம் சிறுபான்மை விவகா தொடர்பான அவரது கரிசனைகளுக்காக வகையிலான மின் அ அவருக்கு அனுப்பி 6 சொனாலி லெட்சுமி என்ற பெயரும் சூட்ட மாற்றுக் கொள்கைக ஏற்றுக்கொள்ள முடிய காழ்ப்புணர்ச்சி இதன் தெளிவாக புலனாகிய தேசத்தில் சிங்களவர் ஏனைய சமூகங்கள் கொடுத்தால் அவர் மி துரோக முத்திரை கு இவ்வாறான ஒர் ஊட
→一一令一一令一一令一一疹一一邻一一竣一一哆一一浚一一汐一一令一哆一一领一一š一一岭一一令一一令一一š一一>一哆一领
叠 Ax பென் விருதலையும்
பெண் விடுதலை என்றவுடன் அதை ஆதரிப்பவர்களோ அதாவது பெண் விடுதலை என்பது பெண்களுக்கான விடுதலை விடுகிறார்கள். இது தவறான போக்காகும். விடுதலை என்பே விடுவிப்பதே இதன் நோக்கமாகும். அதே போல் ஆதிக்கம் என்பது சேர்த்து துன்பத்திற்கு ஆளாக்குகின்றது. மக்கள் தொகையில் ஒரு விட்டு சமூகத்தில் அவர்களது இருப்பின்மையால் அவதிப்படுப கையாள்வதில் களைவதில் தன்னோடு கை கோர்த்து வரவேண் அலைவது. மேலும் பெண்ணுக்கும் சேர்த்து தான் சமூக உழைப்பி பெண்ணிடம் சீதனம் வாங்கும் மணமகன் மட்டும் தானா ஆண்? தன் திருமண வாழ்வை தள்ளிப் போடுவதும் ஆண்தானே? பெண் பாதுகாவலனாக செல்ல வேண்டிய சுமையும் ஆணுக்குத்தானே?
எனவே தான் நாம் பெண் விடுதலை என்பது ஆண் பெண் இ மூலமாகவே சாத்தியப்படும் என்று கூறுகிறோம். ஆணிடமிரு இணைந்து அல்லது இணைத்துக் கொண்டு அல்லது ஒருவருக்கு 6 என்ற நிலையை அடைய வேண்டும். இத்தகைய கருத்துப் போ முன்னெடுக்க இயலாவிட்டாலும் நாம் அன்றாடம் சந்திக்கும் நண் நாம் அடிக்கடி கூடும் தேனீர் நிலையங்கள் நமது வீடுகளிலும் இத்

ாண்ட ஒர் கலாச்சாரத்திலேயே நாம் வாழ்ந்து
டும் பணியை கொண்டிருக்கின்றோம்.
TLD. எனக்கு நேர்ந்த ஒர் அனுபவத்தை
தொடர்பாக நான் இரண்டாவது உதாரணமாக
T முன்வைக்க விரும்புகின்றேன்.
ானாலி கருணா அம்மானிற்கு இராஜதந்திர
ங் லீடர்’ கடவுச் சீட்ட்ை அரசாங்கம்
யர். பால் வழங்கியமை தொடர்பாக சில
ாற தொனிப் கட்டுரைகளை நான்
மாதம் வெளியிட்டேன். அரசாங்க இணையத்
rவில் “நல்ல தளமொன்றில் என்னை மிகக்
வறுபாடுகளை கடுமையாக விமர்ச்சித்திருந்தனர்.
லப்பில் தமது பெண் என்ற ரீதியில் எனது
தொழில்சார் பயணம்
ருந்தார். இழிவுபடுத்தப்பட்டது.
இந்த விடயங்கள் பற்றி உங்களது
ரங்கள் சிந்தனைச் சிறகுகளை விரித்து
சிறகடிக்க அவகாசமளிக்கும்
மிக மோசமான வகையில் நான் எனது கருத்துப்
புஞ்சல்கள் பரிமாறலை இத்துடன்
வைக்கப்பட்டன. முடிவுறுத்திக் கொள்கின்றேன்.
சமரசிங்க -
ப்பட்டது. இலங்கையில் மனித உரிமைகள்
T தொடர்பான செய்தி அறிக்கையிடல்
பாத சிலரின் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற
செயலமர்வில் வாசிக்கப்பட்ட
மூலம O
து. இந்த கட்டுரையின் சில பகுதிகள்.
66
ஃகுல் துஷியந்தினி
து தேசத் கனகசபாபதிப்பிள்ளை
த்தப்படுகிறது.
上5
● 象 ● 0.
Ο Ο ● Φ ● ● ● ● * KO Φ ● * D-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-X-------------
ஆன் விருதலையும்
மறுப்பவர்களோ அடிப்படையாக ஒரு தவறினை செய்கிறார்கள். மட்டுமே ஆண்களுக்கான விடுதலை அன்று என முடிவு கட்டி தே அடிமைப்பட்டோரையும் அடிமைப் படுத்தியோரையும் சேர்த்து ஆதிக்கம் செய்வோரையும் ஆதிக்கத்துக்கு உட்படுத்துவோரையும் ந பகுதி பெண்களை புறக்கணித்து விட்டு அறியாமையில் ஆழ்த்தி வர் ஆண்களும்தானே? சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை ண்டிய பெண்ணை தனது அடிமையாக தான் சுமந்து கொண்டு வில் ஈடுபட வேண்டிய அவலத்தில் தான் ஆணின் நிலை உள்ளது. தன் சகோதரிகளுக்குக் கொடுக்க வேண்டிய சீதனத்திற்காக ணை பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியேற்றினால் அவளுக்கு
ருபாலாரின் ஒற்றுமையான உழைப்பின் மூலமாக போராட்டங்களின் ந்து விடுதலை கோருவது மட்டுமல்ல பெண்ணியம், ஆணோடு ஒருவர் இணைந்து நின்று எவ்வாறு வென்றெடுப்பது விடுதலையை ராட்டத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும். இதனை இயக்கமாக்கி பர்கள் நாம் பேருந்துக்காக காத்திருக்கும் பேருந்து நிலையங்கள் தகைய கருத்துப் பிரச்சாரங்களை ஆரம்பிக்க வேண்டும்.
நன்றி மங்கை
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 28

Page 9
வெளிநாடுகளுக்கு வ
அனுப்புவதற்கான இலங்கை அரசு கடு
அரேபிய நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் பலவகைகளிலும் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று அமெரிக்காவிலிருந்து செயல்படும் மனித உரிமைக் கண்காணிப்புக் குழு ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அவர்களுக்கான உரிமைகளை மீட்டுத் தரத் தவறிவிட்டது என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அரேபிய நாடுகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று அது 131 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அரேபிய நாடுகளில் 6 லட்சத்து 60 ஆயிரம் இலங்கை பெண்கள் வீட்டு வேலைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு நடைமுறையில் உள்ள தொழிலாளர் உரிமை சட்டங்கள் வீட்டு வேலையில் உள்ள தொழிலாளர்களுக்கு செயல்படுத்தப்படுவதில்லை என்று நியூயார்க்கிலிருந்து வெளியிடப்படும் ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அங்கு வீட்டு வேலைக்குப் போகும் இலங்கைப் பெண்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஒய்வு, குறிப்பிட்ட வேலைநேரம், சுதந்திரமான செயல்பாடு ஆகியவை அற்ற சூழ்நிலையே உள்ளது என்று மனித உரிமை கண்காணிப்பின் பெண்கள் உரிமை ஆய்வாளர் ஜெனிபர் டர்னர் தெரிவித்துள்ளார்.
வேலைக்கு வருபவர்களின் பாஸ் போர்ட்டை முதலாளிகள் பிடுங்கி வைத்துக் கொண்டு அவர்களைத் தொடர்ந்து வேலை செய்ய பணிக்கின்றனர். ஒரு சிலர் அவர்களைத் தொடர்ந்து ஒருநாளில் 16 முதல் 21 மணிநேரம் வரை வேலை வாங்குகிறார்கள். சிலரோ பல மாதங்கள் வருடங்கள் வரை அவர்களது சம்பளத்தை பிடித்து வைத்துக் கொள்கின்றனர். அவர்களுக்கான சம்பளம் கொடுக்கப்பட்டாலும் ஒப்பந்தத்தில் பேசிய அளவை விட குறைவான சம்பளமே அவர்களுக்குத் தரப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வேலை செய்யும் இடத்தில் சிறை வைக்கப்படுதல், பட்டினிபோடுதல், உடல் மற்றும் வார்த்தை ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியவை அவர்கள் மீது பிரயோகிக்கப்படுகிறது என்று மனித உரிமை கண்காணிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பாலியல் பலாத்காரங்கள் மற்றும் வன்முறைகளுக்கு ஆட்படுத்தப்படும் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற பலாத்காரங்களில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கர்ப்பமடைந்துள்ளனர் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வேண்டிய சட்ட
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 28

பண்களை வேலைக்கு
சட்டதிட்டங்களை மையாக்க வேண்டும்
வழிமுறைகள் அவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. வீட்டு வேலை செய்பவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேற, அவர்கள் வேலை செய்யும் முதலாளியின் அனுமதி வாங்க வேண்டும் என்ற சவூதியின் சட்டமும் அவர்கள் துன்புறுத்தப்படுவதற்கு ஒரு காரணம் என்று மனித உரிமை கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
தங்கரசு ஜெயந்தி என்ற இளவயது இலங்கைப்பெண் அவருடைய எஜமானரால் பெரும் இடையூறுக்கு ஆளாகியுள்ளார். அவள் வேலை செய்த வீட்டில் இருந்தவர்கள் தினமும் அவளை அடித்துள்ளனர். இறுதியாக அவர்கள் பிடித்துத் தள்ளியதில் கீழே விழுந்த ஜெயந்திக்கு மணிக்கட்டு உடைந்துள்ளது. கடுமையான தாக்குதலுக்கு ஆளான அவரின் முகம் பெருமளவிற்கு வீங்கியுள்ளது. அவருடைய உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. அவருடைய காதில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரைக் கத்தியால் அவர்கள் வெட்டியுள்ளனர். தினந்தோறும் உதைத்து அவரைக் கட்டிப்போட்டு, அவருக்கு உணவு தர மறுத்துள்ளனர்.
பஹரைனில் வேலைக்கு சென்ற மற்றொருவருக்கு, தினமும் உணவு கொடுக்க மறுத்துள்ளனர். அவர்கள் வீட்டிலுள்ள பூனை சாப்பிட்டு மீதம் வைத்துவிட்டு போன உணவை சாப்பிட இவர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
பெரும்பாலும் படிக்காத, ஆனால் எண்ணெய் கிணற்றின் வளத்தில் பணக்காரர்களாக உள்ள அரேபிய நாட்டு பெண்கள் மற்றும் ஆண்கள் தான் இத்தகைய கொடுமைகளை நிகழ்த்துகின்றனர். 19 அரேபியர்களுக்கு 1 வேலைப்பெண் என்ற அளவில் அங்கு இலங்கையிலிருந்து வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் இலங்கையை வேலையாட்களின் நாடு’ என்றே அழைக்கின்றனர்.
இத்தகைய துன்புறுத்தல்களைத் தடுக்க வேலைக்கு ஆட்களை எடுக்கும் தரகர்கள் மற்றும் அமைப்புகளை இலங்கை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மனித உரிமைக் கண்காணிப்புக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு பெண்களை வேலைக்கு அனுப்புவதற்கான சட்டதிட்டங்களை இலங்கை அரசு கடுமையாக்க வேண்டும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பல லட்சக்கணக்கான அப்பாவிப் பெண்களைப் பலவிதமான கொடுமைகளிலிருந்து காப்பாற்ற உதவும்.
நன்றி - ஊடறு

Page 10
தமிழ் சிங்களபால்நிலை சமத்துவக் கற்கை நெறிகருத்தரங்கு
தி மிழிலும் சிங்களத்திலும் பல வருடங்களாக எமது நிறுவனம் பெண்கள் க ற்  ைக  ெநறி கருத்தரங்குகளை தொடர்ந்து நடாத்தி 酶 வருகிறது. இங்கு பால்நிலை குறித்து தலைமைத்துவமும் முகாமைத்துவமும் பெண்களும் சட்டமும், பெண்களும் வன்முறையும், பெண்களும் உழைப்பும் என பல விடயங்கள் கொண்ட பாட நெறிகள்
உள்ளடக்கிய வகுப்புகள் நடாத்தப்பட்டன. சிங்களத்தில் இருமுறை 3 நாட்களும் தமிழில் 3 நாட்களும் மேற் கூறிய விடயங்களில், தேர்ச்சி பெற்ற கல்வியாளர்களாலும் புலமை பெற்றவர்களாலும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. தமிழில் திருகோண மலையிலிருந்து 'பெண்கள் சிறுவர் பராமரிப்பு நிறுவன அங்கத்தவர்கள் இக்கருத்தரங்கில் பங்குபற்றினர். ஆண் பெண் இருபாலாரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். குடும்ப வன்முறைச் சட்டங்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய விடயங்கள் பற்றி அறியக்கூடியதாகவும், தலைமைத்துவ முகாமைத்துவம் பற்றி பூரணமாக அறிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது என்றும் பூரணமாக அறிந்து கொள்ள பயிற்சி இன்னமும் அவசியமென்றும் மேலும் போதை/ மதுசாரம் அதன் பாதிப்பு மற்றும் பால் நிலை சமத்துவ விடயங்களையும் அறிய முடிந்ததென இரு தரப்பினரும் கருத்தரங்குகள் பற்றிய மதிப்பீட்டில் குறிப்பிட்டிருந்தனர். 一令一令一令一令一※一令一※一令一※一※一※一令一公一令一令一令一令一令一令一令一
O O சமாதான கற்கை நெறிக் கருத்தரங்குகள்
சி மாதானம் ப ற் றி ய விழிப் புணர்  ைவ ஏ ற் ப டு த் து ம் நோக்கமாக நம் நிறுவனத்தில் 2006ம் ஆண் டி லி ரு ந் து * இக்கற்கை நெறி பின்வரும் சில அம்சங்களை
.வருகிறோம் قومیت உள்ளடக்குவதன் முக்கியத்துவத்தைத் தெரியப் படுத்துவதே எங்கள் நோக்கம்.
9 மதச்சார்பற்ற ஒரு அரசியலமைப்பு சமாதானத்திற்கு
இன்றியமையாதது.
10
 
 
 

9 சமாதான முயற்சிகளில் பால்நிலை பிரதிநிதித்துவம்
பெறுபேறற்ற யுத்தமும் அதில் மனித இழப்புகளும்
9 அமைதியான இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி முறையின் மூலம்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு
0 இலங்கையின் இன உறவுகள் சமூக வரலாற்று சூழமைவு
இக்கற்கை நெறியில் பலரும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்களாலும், புலமை பெற்றவர்களாலும் நடாத்தப்பட்டு வருகின்றது.
இதையடுத்து ஒரு படமும் காட்டப்படுகிறது. அதன் பின் அதைப்பற்றிய விமர்சனம் மிகவும் ஆர்வத்தோடு நடைபெறும்.
ΚΣ ● KD 0. Kd Κ. O X6 令 0. x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
WERC 25 வருடங்களில்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் (WERC) ஆரம்பித்து 25 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இதையொட்டி நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு இம்மாதம் (டிசெம்பர்) நடைபெற்றது. ஆண்பெண் சமத்துவத்திற்காக இந்நிறுவனத்துடன் இணைந்து குரல் கொடுத்த, பணியாற்றிய ஆய்வுகளைச் செய்த பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிறுவனத்தின் பணிப்பாளர் செல்வி திருச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் WERC உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து விழாவை வலுவாக்கினர்.
ஆண் - பெண் சமத்துவத்தை சமூகத்தில் நிலைநிறுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களைக் கொண்டவர்களுடன் மட்டுமல்லாமல் அடிமட்ட மக்களுடனும் தொடர்பு கொண்டு பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளன. குழுவாக இணைந்து செயற்படும் இந்நிறுவன உத்தியோகத்தர்களின் கூட்டிணைவும் வேலைத்திறனும் இந்நிறுவனத்தின் பலம். மும்மொழிகளில் வேலைத் திட்டங்களை இந்நிறுவனம் முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் உரையாற்றுவதையும் கலந்து கொண்டோரில் சிலரையும் படங்களில் காணலாம்.
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 28

Page 11
தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள் ஆசிரியர் : வெ. முனிஷ்
இந்நூல் விரிவான தளத்தில் அமைந்திருக்கிறது. இலக்கணம், சங்க இலக்கியம்
விதத்தினை நூலாசிரியர் தேடுதல் நிகழ்த்தியிருக்கிறார். அரவாணிகளுக்கு என்று பண்பாடு, வரலாறு கிடையாது என்கின்ற கருத்தாக்கம் உள்ளது. இக்கருத்தாக்கத்தை மாற்றும் விதத்தில் “தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள்” என்பதை நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
ஒரு பெண்ணியப் பார்வையில் சாதியும் பால்நிலைப் பாகுபாடும் ஆசிரியர் : உமா சக்கரவர்த்தி
தமிழாக்கம் வ. கீதா
வரலாற்றுக் களம் காட்டிய
உண்மைகளுக்குச் சான்று பகரும் வண்ணமாக இதே காலகட்டத்தில் சாதி குறித்த ஆய்வுகளும், படைப்புகளும் வெளிவந்தன. பல்வேறு நோக்கு நிலைகளிலிருந்து எழுதப்பட்ட இந்நூல்கள் சாதி குறித்த 攤,°毒 விமர்சன அறிவாக
ாமும் சாதியும் வர்க்கமும், சாதிசார் வாழ்வியலும் ஆன்மீகமும் சந்திக்கும் புள்ளிகள், வரலாற்றுத் தருணங்கள், சமூகப் பின்னணிகள் ஆகியவற்றை துல்லியமாகவும் தெளிவுடனும் ஆராயும் நூல் gaffsoLILSlsöT“Gendering Caste: Through a Feminist Lens" இந்நூலை தமிழ் வாசகருக்கு அறிமுகப்படுத்தும் முகமாக அதனைத் தழுவியும் அதன் வாதங்களை விளக்கியும், சில இடங்களில் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தும் உதாரணங்களை வழங்கியும் எழுதப்பட்டுள்ளது.
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 28
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அக்கா ஆசிரியர் : நஞ்சுண்டன்
கன்னடத்தில் முக்கிய பெண் எழுத்தாளர்களும் இந்தத் தொகுப்பில் சேர்ந்திருக் கிறார்கள். இதிலுள்ள பத்து கதைகளின் மூலம் கட்ட மைக்கக் கூடியது சுயபச் சாதாபமற்ற “பெருமித” வாழ்க்கையை நம்பும், சுய அடையாளத்தை தேடும், இயலாமையிலும் உதட்டைக் கடித்து அழுகையை விழுங்கித்
தைரியமாக வாழ்க்கையை
எதிர்கொள்ளும் பெண்ணின் உலகமாக இருக்கிறது.
நான் கொலை செய்யும் பெண்கள் ஆசிரியர் : கனகலதா
இ ல ங்  ைக  ைய சேர்ந்தவர் சிங்கப்பூரைக் களமாக்கி, எழுதுகிறார். கனகலதா உறவுகள், பிரிவுகள், நட்பு, மதம், வன்முறை மரணம் என்பது வாழ்க்கையின் பல தளங்களில் புதைந்திருக்கும் கொடூர உண்மைகளை இவர் படைப்பில் வரும் நபர்கள் தரையில் கால் பதிக்க முடியாத ஒரு அறுபட்ட தன்மையுடன் நடமாடுகிறார்கள். இந்த இருண்மை உலகிலும் பெண் களிடையே நட்பு, நயத்துடன் கூடிய சில உரையாடல் எதிர்பாராத கணத்தில் வெளிப்படும் அன்பு என்று சில ஒளிக்கீற்றுகள் உள்ளன. அவை இருளிலிருந்து வெளியே வரும் பாதையைச் சுட்டிக்காட்டுகின்றது.
11

Page 12
மொழி பெயர்ப்பு வசதிகளைக் கொண்ட பெண்கள் கல்வி ஆய்வுநிறுவன கேட்போர் கூடம்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தினது கருத்தரங்கு மண்டபம் 50 சொகுசு இருக்கைகளைக் கொண்டது. மற்றும் சமகால மொழி பெயர்ப்புக் கருவிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. உணவு, தேநீர், வசதி செய்து கொடுக்கப்படும். உங்கள் கூட்டம், கருத்தரங்கு, செயலமர்வு, படக் காட்சி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்குத் தகுந்த வசதிகள் வழங்கப்படும்
WERC
Auditorium Charges Hall Charges A/C Non AVC O Full Day (8 hours) 7,500/- 6,000/- o For Two Hours 3,000/- 2,000/- o Every Additional
One Hour 750/- 500/-
Facilities ઉ#fff;
Television 400/- VCR 300/- Overhead Projector 300/- MultiMedia Projector 5000|- Mikes (each) 75|- Simultaneous Translation Unit 5000/- Head Phones (each) 300/-
Service charges 10% of the total amount O FOOd From Out Will not be Permitted
Maximum seating capacity 50
Ample Parking Space
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 58 தர்மராம வீதி, கொழும்பு 06 தொலைபேசி : 2595296, 2590985 தொலைநகல் 2596313
தொகுப்பு:எம். தேவகெளரி
Women's Education er Research Centre
58, Dharmarama Road,
Colombo - 06,
Sri Lanka. T. P. : : 259.5296, 2590985 Fax : 25963 13
E-mail womedre Gosltnet.lk
12

r பால்நிலை சமத்துவக் கருத்தரங்கு
எமது நிறுவனத்தினால் பால் நிலைச் சமத்துவத்தைப் பேணும் நோக்கில் இக்கற்கை நெறியானது மும்மொழிகளிலும் நடாத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றது.
பாடசாலை மாணவர்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோரிடையே நடாத்தப் படும் இக்கற்கை நெறியில் பங்குபற்ற விரும்புவோர் தங்களது நிறுவனத்தினூடாக எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு :
மாலதி பவானந்தன் - 2595296
الم.
சமாதானக் கற்கை நெறி
சமாதானத்திற்கான கற்கை நெறியானது வார இறுதிநாட்களில் மும்மொழிகளிலும் நடாத்தப்பட்டு வருகிறது. இலங்கையின் வரலாறும் சமூக இனத்துவ உறவுகளும், அதிகாரப் பிரிவும் சமஷ்டி முறையின் அவசியமும், அரசியல் முறைமையில் மதச்சார்பின்மையின் அத்தியாவசியம் போன்ற பல விடயங்கள் விரிவுரைகளில் உள்ளடக்கப் பட்டுள்ளன.
ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்ற கல்வியாளர்களாலும். புலழை பெற்றவர்களாலும் விரிவுரைகள் நடாத்தப்பீட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரயாணச் செலவும் தங்குமிட வசதியும் வழங்கப்படும். இக்கற்கை நெறியினை தொடர விரும்புவோர் எமது தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும் லுவி ஹெட்டவல : 2595296
J
N
f.ܝܬܐ
பிரவாகினி மார்கழி 2008 இதழ் 28