கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2008.07-09

Page 1

65/76O7 காாைண்டிதம் 6მმrō6?//tbu/7 2424242
இ
கிய சமூக விஞ்
ஜூைை

Page 2
பாழ்பட்ட கிராமமொன்றில் மங்கலான ஒரு கண்கள் அரைத் தூக்கத்திலிருக்க முப்பது ஆண்டுகளையும் ஐந்து போர்களையும் நினைவு கூர்கிறேன் எனது சோளங்கதிரை எதிர்காலம் வைத்திருக்குமென உறுதிமெr ஏதோ ஒரு நெருப்பையும் எவரோ சில ே பாடகன் தாழ்வாகப் பாடுகின்றான். மாலைப் பொழுது வெறுமனே மற்றுமொரு பாடகன் தாழ்வாகப் பாடுகிறான்.
“ஏன் பாடுகிறாய்?’ என அவர்கள் அவனைக் கேட்டனர் “நான் பாடுவேன் என்பதால் பாடுகிறேன் அவன் பதிலுரைக்கிறான்
அவர்கள் அவனது நெஞ்சினுட் தேடினர், அவனது இதயத்தை மட்டுமே காண முடி அவர்கள் அவனது இதயத்துட் தேடினர், அங்கு மக்களை மட்டுமே காண முடிந்த அவர்கள் அவனது குரலுக்குட் தேடினர், அவனது துயரத்தை மட்டுமே காண முடி அவர்கள் அவனது துயரிற்குள் தேடினர், அவனது சிறையை மட்டுமே காண முடிந் அவர்கள் அவனது சிறைக்குட் தேடினர், தாங்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டி
 

மாலைப்பொழுது
ாழிகிறேன். >ந்நியரையும் பற்றிப்
மாலைப் பொழுதே
66
ஆனால் ந்தது ஆனால்
l ஆனால் ந்தது ஆனால்
ஆனால் ருப்பதை மட்டுமே காண முடிந்தது.
ஆங்கில வழியாகத் தழிழில் மணி -

Page 3
புதியஜனநாயகம் புதியவாழ்வு புதியபண்பாடு
கலை இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ் ஜூலை - செப்ரெம்பர் 2008
இதழ் இல. 71.
பிரதம ஆசிரியர்
க. தணிகாசலம் தொ.பே. 021-2223629
ஆசிரியர் குழு
இ. முருகையன் சி. சிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் கல்வயல் வே. குமாரசாமி சோ. தேவராஜா அழ, பகீரதன் ஜெ. சற்குருநாதன் மாவை வரோதயன்
கணினி அச்சு, பக்க வடிவமைப்பு
கு. மதுராளினி ஓவியங்கள்
எஸ். டி. சாமி, அமளி முகப்பு ஓவியம்: அப்டெல் தமாம் பின்அட்டை ஓவியம்: பலஸ்தீன் ஓவியம்
தொடர்பு : ஆசிரியர், ஆடியபாதம் வீதி,
கொக்குவில்.
021-2223629 L56.560 giggi): thayakam 10 yahoo.com 6,60600Tutb www.thajakam.com
அச்சுப்பதிப்பு: கெளரி அச்சகம் 011-2432477
விநியோகம்: இல.152-1/6, ஹல்ஸ்டோப் வீதி
கொழும்பு - 12 Tel 238.1603
வெளியீடு لکھتے தேசிய கலை இலக்கியப் பேரவை
SBN No. 978-955-8637-23-4
 
 
 
 
 

5@@g) அவர்கள் பார்வையில் - சு. சுகேசனன் மீள் வருவோம் - வெ. மகேந்திரன் எலிச் சுத்திகரிப்பு - ம.பா. மகாலிங்கசிவம் ஒளிந்து கொள் அல்லது எழுந்து நில் கிருஷ்ணா பயங்கரவாதிகளும் பதுங்குகுழிகளும் - தீபச்செல்வன் நான் நீ அவன் நிஜம் - நாச்சியாதீவு பர்வீன் மனிதத்தை விடுத்து - எளியோன் நிறங்களைக் காழ்பவன் - எல். வலிம் அக்ரம் ஏனிந்த வம்பு? - கலைச்செல்வி ஆய்ந்து சொல்வீர் - ஜி. இராஜகுலேந்திரா
சுகம் விசாரிப்போம் - இராகலை மோகன் கவலையின் முடிவிலி - தி காயத்திரி முரண்பாடு - இதயராசன்
്[[G
எப்போதோ நடந்த போர் பற்றி எங்கேயோ ஒரு உரையாடல் - பூஞரீ ஒரு ஒப்புதல் வாக்குமுலம் - செவ்வந்தி சோமு பொடி - சோ. ஆதர்சனன் தாய் - ச. முருகானந்தன் -
தொடர்நடைச்சித்திரம் வலிகாமம் மன்னின் மாந்தர்கள் குழந்தை குமாரசாமி - மாவை வரோதயன்
விந்தை மனிதர் குருநாதர் குஷ்வந்த் சிங் - புவனாசுவரன் அட்சய பாத்திரம் எங்கே? - ஆதவா. அ. சிந்தாமணி
சிங்கள மொழிபெயர்ப்புச் சிறுகதை ஆசிரியர் ஒருவரின் காதல் - தமிழில் சி. சிவசேகரம்
பின்வரலாற்றியல் தொடர்கதை ஆங்கிலேயனின் பரிசு 8.நாடு திரும்பற் படலம் - ஜெகதலப்பிரதாபன்
கட்டுரை ஏன் இந்தத் தமிழுணர்ச்சி - க. கைலாசபதி பாட்டும் பயனும் 1. பாட்டும் செய்யுளும் சி. சிவசேகரம்
விமர்சனம் இப்சனின் தலைமைக் கட்டடக்காரர - செ. சக்திதரன்

Page 4
புதிய
புதியஜனநாயகம்
ஜூலை - செப்ரெம்பர் 2008
கலை இலக்கிய ச
இரும்புத்திரையும்
மனிதர்கள் தம்மை விலங்கு நிலையில் இருந்து ஓரளவேனும் விடுவித்துக் கொண்ட பரிணாம வளர்ச்சியில் அவர்களது உடல் ரீதியான உழைப்பும், அதன் அனுபவத்தால் பெற்ற ஆரம்பக் கற்றற் செயற்பாடுகளுமே காரணமாக அமைந்தன எனலாம். இடறிவிழுதல் அறிவில் எழுதல்’ என்பது போல தமது அத்தியாவசியத் தேவைகளுக்கான இடையறாத முயற்சிகளால் பெற்ற புதியன புனையும் ஆற்றல்களே மனித நாகரீகத்தின் விடியலுக்கான திறவுகோல்களாக அமைந்தன.
மனித வரலாற்றில் உழைப்பும், சிந்தனையும் அதனால் உருவான படைப்பும், பயன்பாடும் அந்நியப்படாமல் ஒன்றிணைந்திருந்த காலமே மானுட மலர்ச்சியின் ஆரம்பகாலமாக அமைந்தது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால் ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்கு முறைகளும் நிறைந்த சமுதாயம் உருவாகிய போது உழைப்பும் சிந்தனையும் மட்டுமல்ல மனிதர்களுக்குரிய அனைத்துமே முரணுற்று அந்நியமாகும் நிலை உருவாகியது.
கல்வியை தமது அதிகாரத்தைக் காக்கும் கருவிகளில் ஒன்றாக ஆளும் வர்க்கம் அன்றே ஆக்கிக் கொண்டது. இன்றுவரை பல்வேறு படிநிலைகளிலும் ஒடுக்குதல்களுக்கு உட்படும் மக்களை அறியாமையில் மூழ்க வைத்து அடக்க முனையும் செயலுக்கு 'ஏகலைவனின் கட்டைவிரல்' இலக்கியச் சாட்சியாக உள்ளது.
இன்றும் மனிதத் தேவைகளை இலகுபடுத்தி நுகர்வுச் சந்தையை விரிவுபடுத்த விஞ்ஞானக் கல்வியை ஊக் குவித்து வரும் ஆளும் வர் க் கம், இத் தேவைகளுக்காக மனிதர்களிடையே ஏற்படும் போட்டிகள், பூசல்கள், இழுபறிகள், போரின் கொடுமைகள் என்பவற்றுக்கான காரணங்கள், தீர்வுகளைக் கண்டறிவதில் விஞ்ஞான வழிமுறைகளை ஊக்குவிக்க முனைவதில்லை. இவைகளுக்கான காரணங்களைக் கண்டறியும் சமூக விஞ்ஞான உலக நோக்கைத் தடை செய்வதிலும், திசைதிருப்புவதிலும் மிகவும் முனைப்பாக இருந்து வருகிறது. மனிதனைப் பற்றிய கற்றலை இன்றுவரை திட்டமிட்டு மிகுந்த முன்
C
 
 
 

வாழ்வு புதியபணி பாடு
இதழ் இல: 71
முகவிஞ்ஞான இதழ்
மாயத்திரையும்
எச்சரிக்கையுடன் மத வழிபாடுகளுக்குள்ளும், மதத் தத் துவங்களுக்குள்ளும் மட்டுமே புதைத் து வைப்பதற்கு ஆளும் வர்க்கம் உதவி வருகிறது.
ഉ സെഞ് 5 പേu மாற் றியமை கி கும் மனிதர்களால், தமது துயர் நிலைகளை மாற்றி உலகின் வளங்களைப் பாதுகாத்து போட்டியின்றி அவைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். போர், பிணி, பஞ்சம் இல்லாத உலகை மனிதர்களால் உருவாக்க முடியும்.
மனிதர்கள் தம்மைப் பற்றியும், தாம் வாழும் சமூகம் பற்றிய விஞ்ஞானபூர்வமான புரிதலை பெற்றிருக்க வேண்டிய அவசியம் இன்று பலராலும் உணரப்படுகிறது. எமது நாடு உட்பட உலகின் அனைத்து நாடுகளும் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள் மூலம் இதனை யாவருக்கும் உணர்த்தி நிற்கின்றன.
இத்தகைய சமூக, விஞ்ஞான கற்றல் அனுபவங்கள் மக்களுக்கு புதியன அல்ல. இன்றும் நேபாளத்தில் மன்னராட்சியை அகற்றுவதில் அதன் கற்றலும் நடைமுறையும் பயனளித்துள்ளன. சென்ற நூற்றாண்டில் சார் மன்னரை வீழ்த்தி ருஷ்யாவிலும், கொலனிய பிரபுத்துவ ஆட்சியை ஒழித்து சீனாவிலும் சாதாரண மக்களின் ஆட்சியை உருவாக்க இச் சமூக விஞ்ஞான அறிதலே வழிசமைத்தது. அவ்வரசுகளின் ஒழுங்கையும், கட்டுக்கோப்பான ஆட்சி முறையையும் 'இரும்புத் திரை', 'மூங்கில் திரை’ என ஏகாதிபத்திய சார்பு புத்திஜீவிகள் அன்று விமர்சித்தனர். அத்திரைகள் கூட வெளிப்படையாகவே யாவருக்கும் தெரிந்தன.
ஆனால், இன்று ஏகாதிபத்திய உலகமய பொருளாதார அமைப் பின் கீழ் - தகவல் தொழில் நுட்பத் திண் ஆதிக் க வலையால் பின்னப்பட்டுள்ள எளிதில் புலப்படாத மாயத் திரைக்குள் வெறும் நுகர்வு விலங்குகளாகவே மனிதர்கள் மாற்றப்படுகின்றனர்.
இம் மாயத்திரைக்குள் இருந்து மனிதத்தை மீட்பதற்கான கற்றலே இன்று மிக மிக அவசியமாகிறது.
- ஆசிரியர் குழு -
2ణN - ఇంతలv 2008

Page 5
உதவுங் உதைக்குங்
மிழ் ம க களுடைய விடுதலைப் போராட்டத்துக்கு மட்டுமன்றி அடிப்படையான உரிமைகட்கு ஆதரவாகவுங் கூடச் சர்வதேச சமூகமோ இந்தியாவோ இன்று குரல் கொடுக்கவில்லை. ஆக மிஞ்சி மனிதாபிமானமும் மனித உரிமை மீறல்களும் பற்றியே அவர்கள் எல்லாரும் பேசுகிறார்கள். தமிழ் தேசியவாதத் தலைவர்கள் மாறி மாறி யாரை நம்புமாறு மக்களிடம் பரிந்துரைத்துள்ளனர் என்று பட்டியலிட்டுப் பார்ப்போமா? பிரித்தானியாவும் இந்தியாவும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் என்ன செய்துள்ளன, தொடர்ந்தும் என்ன செய்து வருகின்றன எண் பன தமிழ் நாளேடுகள் சிலவற் றுக் கு விளங்காமலிருக்கலாம்; தமிழ்த் தலைமைகட்கு விளங்காமல் இருக்கலாம்; சராசரி அறிவும் நேர்மையும் உள்ள எவருக்கும் விளங்காமல் இருக்குமா? அதனாலோ எண் னவோ அவை பற்றி நமது ஊடகங்களில் அதிகம் பேசப்படுவதில்லை.
அந்நிய நாடுகளின் உதவியுடன் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கும் முயற்சிகள் முரண்பட்டு நிற்கும் தரப்பினருக்கே கேடாக அமையும் என்பதை நேர்மையான இடதுசாரிகள் இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை போராக உருவெடுக்கிறதற்கு வெகுகாலம் முன்பிருந்தே சொல்லி வந்துள்ளனர். தமிழ்த் துரோகிகள் என்று அவர்களை முத்திரை குத்தி ஒதுக்குவது நமது தலைவர் மாருக்கு எளிதாக இருந்தது. அதே தலைவர்கள், ஒருவர் பின் ஒருவராக, அவர்கள் வளர்த்தெடுத்த வாரிசுகளாலேயே ஒதுக்கப்பட்டனர். துரோகிகளுக்கு இயற்கையான சாவு வராது என்று சாபமிட்ட தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதையொட்டி எழுச்சி கண்ட போராளித் தமிழ்த் தேசியவாதம் பாராளுமன்ற அரசியல் வாதிகளை நிராகரித்ததே ஒழியப், பழைய தலைமையின் 'ஆண்ட பரம்பரையினர்’ உலக நோக்கிலிருந்து தன்னை முற்றாக விலக்கிக் கொள்ளவில்லை. தமிழ் மக்கள் ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்ற எண்ணம் இன்னமும் சரிவர மனதிற் பதியவில்லை.
பிரித்தானிய கடற்படை, விமானத் தளங்கள் அகற்றப்பட்ட போது முரண்பாடு இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலானது. தமிழ்த்
 

கரங்களும்
கால்களும்
தலைவர்கள் யார் தரப்பில் நின்றனர்? அந்நிய எண்ணெய்க் கம்பனிகள் தேசியமயமாக்கப்பட்ட போது முரண்பாடு அந்நியப் பெரு முதலாளிகட்கும் இலங்கை மக்களுக்கும் இடையிலானது. தமிழ்த் தலைவர்கள் யார் தரப்பில் நின்றார்கள், கியூபாவை அமெரிக்கா தொடர்ந்தும் மிரட்டி வந்திருக்கிறது? தமிழ்த் தலைவர்கள் இன்றுவரை யார் தரப்பில் நின்றார்கள்? வியற்நாமில் அமெரிக்கா தனது கோரமான ஆக்கிரமிப்புப் போரை நடத்தியது. தமிழ்த் தலைவர்கள் யார் தரப்பில் நின்றார்கள்? தங்களது மேட்டுக்குடி விசுவாசத்துக்கு இடையூறாக வடக்கில் கம்யூனிஸ்டுக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாகப் பல வேறு முனைகளிற் போராடி வந்தனர். எனவே கம்யூனிஸ் எதிர்ப்புப் பிரதேசிய, தேசிய எல்லைகளைத் தாண்டிச் சர்வதேசிய மட்டத்திலும் குருட்டுத்தனமான கம்யூனிஸ் எதிர்ப்பாகவும் வர்க்க அடிப்படையில் நட்புச் சக்தியாக நோக்கிய ஏகாதிபத்தியச் சார்பாகவும் அமைந்தது.
சீன - இந்திய எல்லைப் போர் ஒரு சீன ஆக்கிரமிப்புப் போர் என்று கண்டனக் குரல் எழுப்பத் தமிழ்த் தேசியவாதிகள் கூசவில்லை. இன்று உண்மைகள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. போருக்கான காரணமும் தூண்டுதலும் இந்திய ஆட்சியாளர்களே என்பதற்கான ஆதாரங்கள் இந்தியாவுக்குள்ளிருந்தே கசியத் தொடங்கிவிட்டன. "புரொண்ட்லைனில் இந்த ஆதாரங்களை ஏ.ஜே. துாரானி சில ஆண்டு காலமாகத் தொடர்ச்சியாக வழங்கி வருகிறார். ஆனாலுந், தமிழரைப் பொறுத்த வரை, சீனாவே ஆக்கிரமிப்பு நாடு. 1978ல், இலங்கையில் இந்தியா குறுக்கிடுமானால், சீனா என்ன செய்யும் என்ற தனது கேள்விக்குச் சீனா இலங்கையின் உள்விவகாரங்களிற் குறுக்கிடாது என்றும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை பிரிவினைக் கு இடமினி றிச் சுமுகமாகத் தீர்க்கப்படுவதே நல்லது என்றும் சீனத் தூதுவர் கூறியதாக, வழமையாகவே இடதுசாரி விரோத நோக்கில் எழுதி வந்தவரான ஏ.ஜே.வில்சன் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் நமக்குச் சீனா எதிரி என்று தான் அன்றுஞ் சொல்லப்பட்டது.
3D
eason - he wavy 2003

Page 6
இலங்கை அரசாங்கம் போர் தொடுப்பதற்கு நேரடியாகவே உதவிய நாடுகள் எவை என்று நாம் சொல்லித் தான் யாரும் அறிய வேண்டியதில்லை. இலங்கை அரசாங்கம் போரைத் தீவிரப்படுத்திய போது அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேலும் இலங்கை ஆட்சியாளர்கட்குச் சாதகமாக மட்டுமன்றிப் போரை ஆதரித்தும் ஊக்குவித்துஞ் செயற்பட்டன.
சீனாவோ ஈரானோ இலங்கை அரசின் போர் முனைப்பை ஊக்கிவித்துள்ளதாகவோ தேசிய இன ஒடுக்கலுக்கு ஆதரவாகப் பேசியுள்ளதாகவோ கூற முடியாது. சீனா வும் ஈரானும் இலங் கை அரசாங்கத்திற்குப் பொருளாதார உதவி வழங்கி வருவதையோ ஆயுதங்கள் விற்பதையோ தமிழ் விரோதச் செயல்களாகக் காட்டுகிறதற்குத் தமிழ்த் தேசியவாதிகளும் தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருங் கூசுவதில்லை. இலங்கையில் இந்திய, அமெரிக்கக் குறுக்கீடுகளின் பின்னணியைத் திரித்துச் சீனாவுக்குப் போட்டியாகவே இந்தியா இலங்கையில் தனது மேலாதிக்கத்தை வலுப்படுத்துகிறது என்று இவர்கள் திட்டமிட்ட முறையிற் பொய்ப் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
சீனாவையோ ஈரானையோ கியூபாவையோ நம்பித் தமிழ் மக்களோ வேறெவருமோ தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பது என்றுமே நமது வாதமல்ல. அயல் நாடுகளை நம்பி எந்த விடுதலைப் போராட்டத்தையும் முன்னெடுக்க இயலாது. ஆனால் நம்பக் கூடா தவர் களை நம்பி ஏமாறுவது பற்றி நாம் எச்சரிக்காமலிருக்க முடியாது. எனினும் இங்கே நடப்பது என்ன? சீனாவைச் சுட்டிக் காட்டிக் கொண்டே இலங்கைத் தமிழர்கட்கு எதிராக இந்தியாவில் மட்டுமன்றித் தமிழகத்திலும் செய்யப்பட்டு வருகிற துரோகங்கள் மூடிக்கட்டப்பட்டு வருகின்றன.
தமிழ் மக்களின் இயல்பான நட்புச் சக்திகள் யார்? 1980களில் விடுதலை இயக்கங்கள் பலவற்றுக்கு எந்தவித உள்நோக்கமுமின்றி ஆதரவு வழங்கிய பலஸ்தீன மக்களையும் விடுதலை அமைப்புக் களையும் நாம் மறந்து விட்டோமா? நமது தலைவர்கள் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் கண்டிக்கத் தயங்குவது ஏன்?
ஈராக்கிய மக்களோ ஆஃப்கானிய மக்களோ நமக்கு என்ன கேடு செய்துள்ளனர்? அவர்களை ஒழிக்கும் ஒரு போரை நடத்துகிற அமெரிக்கா தான் நம்மையும் ஒடுக்க உதவி செய்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பைப் பற்றி ஏன் நமது தமிழ் ஊடகங்கள் அடக் கி வாசிக் கின்றன? இன்று லத்தின் அமெரிக்காவில் ஒரு பெரும் எழுச்சி நடைபெறுகிறது.
(
 
 

/ دخاورلمامو Y
புதிய சந்தா விபரம்
இலங்கை ஒரு ஆண்டு - e5UT 300.00 இரண்டு ஆண்டு - ரூபா 500.00 மூன்று ஆண்டு - ரூபா 900.00 ஆயுள் சந்தா - e5UT 15000.00
85 60 LT ஒரு ஆண்டு - டொலர் 20.00 இரண்டு ஆண்டு - டொலர் 40.00 மூன்று ஆண்டு - டொலர் 60.00 ஆயுள் - GLT6 of 1000.00
பிரித்தானியா ஒரு ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 8.00 இரண்டு ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 15.00 மூன்று ஆண்டு - ஸ்ரேலிங்பவுண் 20.00 ஆயுள் சந்தா - ஸ்ரேலிங்பவுண் 350.00
ஐரோப்பிய நாடுகள்
ஒரு ஆண்டு - ஈரோ 10.00 இரண்டு ஆண்டு - REGJIT 20.00 மூன்று ஆண்டு - H68্যা 30.00 ஆயுள் சந்தா - H68্য[T 600.00
அவுஸ்திரேலியா ஒரு ஆண்டு - டொலர்2000 இரண்டு ஆண்டு - டொலர் 40.00 மூன்று ஆண்டு - டொலர் 60.00 M। சந்தா - டொலர் 1000.00
அது உலகின் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கானது. அதைப் பற்றி ஏன் நமக்குட் பேசப்படுவதில்லை? 1990ல் கம்யூனிஸம் வீழ்ந்ததென்ற போது கைகொட்டி ஆர்ப்பாட்டம் செய்தோர் ஏன் மோனிக்கின்றனர்?
இந்தியாவினுள் காஷ்மீரிலோ நாகா லாந்திலோ மணிப்பூரிலோ நடப்பன தேசிய இன விடுதலைப் போராட்டங்களிலில்லையா? நேபாளத்தில் அண்மையிற் கிட்டியது ஒரு விடுதலை இல்லையா? நாம் அவற்றை ஏன் மெச்சவில்லை? அமெரிக்கச் சூழ்ச்சியால் உருவான கொசோவோவை ஏன் கொண்டாடுகிறோம்?
உண்மையான விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்க மறுத்து நிற்கிற ஒரு சமூகம், பகைக்க வேண்டாதோர் மீது பகைமை காட்டுகிற ஒரு சமூகம், தனக்கு நீதி வேண்டிப் பிறர் குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்க என்ன உரிமையைக் கொண்டிருக்க இயலும்? நமது உலக நோக்கு சீரமைக்கப்பட (8660ÖT LITLIDIT ?
- ஆசிரியர் குழு
2 on - he vows 2003

Page 7
எப்Uேnதேடி நடர் எங்ஆேலோ
(அது ஒரு எதிர்பாராத சந்திப்புத் தான். என்றாலும் அவர்கள் இருவரும் அதற்கு ஆயத்தமாகவே இருந்தார்கள் என்பது போல அவர்களது உரையாடல் அமைந்திருந்தது. எங்கேயோ விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடங்குவது போலவே இருவரும் பேசிக் கொண்டார்கள்.)
க: ஒ, நீரா! எப்போதாவது உம்மைக் காணுவன்
எண்டுதான் நினைச்சிருந்தன். ச; நினைச்சதை விட முந்தியா, பிந்தியா?
ரண்டு விதமாயும் வைச்சுக் கொள்ளலாம். ச: வழக்கமான நழுவல் விளையாட்டைத்
தான் இன்னமும் விளையாடுகிறீர். க: நீர் அப்படி நினைச்சால் நான் என்ன
செய்யேலும்! ச. சண்டை துவங்க முதலிலை இருந்தே
உம்மட்டை ஒண்டு கேக்க வேணும் எண்டு நினைச்சிருந்தன். எண்டாலும் ஆறுதலாக் கேக்க வாய்ப்பில்லாமல் போயிட்டுது.
5:
 
 

ச. அந் நேரஞ் சண்டை நடந்திரா
விட்டால் ஒருவேளை கதைச்சிருப்பமோ?
சொல்லிறது கஷ்டம்.
ஏன்? என்ன கஷ்டம்?
நாங்கள் சந்திச்சுக் கதைச்சு இருந்தா ஒரு வேளை சண்டையே
வராமைப் போயிருக்கும். ச நாங்கள் கதைக்கக் கூடிய நிலையிலை இருந்திருந்தாச் சண்டையே வந்திராதே. 5: எண்டாலும் நாங்கள்
கதைக்கக் கிடைக்கேல்லை. ச கதைக்க
வேண்டியவையோடை கதைக்கேலாத மாதிரித் தானே நீர் எப்பவுஞ் சுழியோடிக் கொண்டிருந்தீர். க: ஏதோ என்னிலை தான் எல்லாப் பிழையும் எண்ட மாதிரி எல்லோ நீர் கதைக்கிறீர்! ச: எல்லாம் உம்மிலை எண்டு சொல்ல
மாட்டன். எண்டாலும் பெரும்பகுதி. க: உம்மிலை பிழையில்லையோ? க: நானும் உம்மட்டைச் சில அலுவல் கேக்க
வேணும் எண்டு தான் இருந்தனான். அதுக்கு
முதல் எல்லாம் வலும் வேகமா நடந்து முடிஞ்சு போச்சுது, நீர் உம்மடை திசை நான் என்னுடைய திசை எண்டு போயிட்டம். ச என்னிலை பிழையில்லையோ என்னவோ, அது வேறை கதை. ஆனாலும் நான் எப்பவும் நேர் நேராகக் கதைக்கிறனான். நான் பொய் சொல்லியிருக்கிறனா? வாயைத் திறந்து சொன்னாத்தான் பொய்யா? நீர் ஒண்டுங் கள்ளஞ் செய்யாத ஆளோ? நான் என்ன செய்யிறன், ஆருக்காகச்
செய்யிறன், ஏன் செய்யிறன், ஆரின்டை பக்கத்திலை நிக்கிறன் எண்டு எல்லாருக்குந் தெரியும். நீர். க: நான் பொது நன்மைக்காகத் தான் எதையுஞ் செய்வன். எனக்கு எந்தப் பக்கத்திலும் நிக்கத
| 2003: نوسمی طغازواکرa c (یہ - لم (aeے

Page 8
சிறுகதை
தேவையில்லை. நீரும் உம்முடைய மரு
மோனும்தான உங்களின்டை அவசரப்புத்தி யாலை என்னை மற்றப் பக்கத்துக்குப் போகப பண்ணிப் போட்டியள். போகப் பண்ணினது நாங்களோ? நீர் போற துக்குத் தருணம் பாத்துக் கொண்டிருந்தீரோ?
நீர் அப்பிடி நினைச்சால் நான் என்ன சொல்லேலும்! சரி. அந்தக் கதையல்ல நான் கதைக்க நினைச்சது. எங்கடை சண்டை நடந்து கன காலம். எத்தினை வருசம் எண்டே எனக்கு நினைப்பில்லை. க: ஒருத்தருக்கும் நினைப்பில்லை.
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி நாட் கணக்கும் வருசக் கணக்குஞ் சொல்லுகினம். ச நாட் கணக்கு மட்டுமோ? நடந்ததுகளைக்
கூட ஆளுக்கு ஒவ்வொரு விதமாய் எல்லோ சொல்லுகினம். க: அவையவை அவையவைக்கு வசதியான
விதமா விளங்கிக் கொண்டு அவையவைக்குப பிரயோசனப்படுகிற மாதிரி மற்றவைக்குக் கொஞ்சங்கொஞ்சம் மாத்தி மாத்திச் சொல்லுகினம். ச: எப்பிடி மாத்தினாலும் நான் சகுனி
கெட்டவன், என்னுடைய மருமேன் துரியோதனனும் அவன்ட தம்பிமாருங் கெட்டவையள். அந்தப் பாண்டவர் செய்த கள்ளத்தனங்களும் உம்மடை திருகு தாளங்களும் ஒரு நாளுஞ் சந்திக்கு வராது. வந்தாலும் அதெல்லாம் நல்ல நோக்கத்துக்கு எண்டு ஞாயப்படுத்திப் போடுவினம், உம்மைக கடவுளாகவும் ஆக்கிப் பத்தாததுக்கு நூறு பேரும் வைச்சுப் போட்டினை. பிறகு ஆரிட்டைப் போய் நாங்கள் ஞாயங் கேக்கேலும்? க: பிறகு நடந்ததிலை எதுக்கும் நான பொறுப்
பில்லையே! என்னை அவதாரமாக்கினதும் நான் சொல்லாத கதையை நான் சொன்ன தாக்கிப் பகவத்கீதை எண்டு பேர் வைச்சதும் நானில்லையே? ஒரு வேளை உம்மடை ஆக்கள் வெண்டிருந்தால், நீர் அவதார மாகியிருப்பீர். நீர் சொன்னது சொல்லாதது எல்லாமா ஒரு உலகநீதி மாதிரிச் சொல்லுப பட்டிருக்கும். என்னைக் கண்ணன், கிட்டினன், பரந்தாமன், நந்தகுமாரன் எண்டு எங்கெங் கையோ இருந்த எவரெவரையோ எல்லாம் நானெண்டு எடுத்து வைச்சுக் கதையெழுதின
 

மாதிரி, உம்மைப் பற்றியுங் கதைகதையா எழுதியிருப்பினம். உம்மைச் சிவனின்டை அவதாரம் எண்டோ மாலின்டை அவதார மெண்டோ பிரம்மாவின்ட அவதாரமென்டோ அல்லது மூண்டு பேரும் ஒண்டு சேர்ந்த அவதாரம் எண்டோ தன்னுஞ் சொல்லி இருப்பினை, அப்ப முறைப்படுறது நீரல்ல,
நானாயிருப்பன்! ச! நான் அறிய வேண்டியது அதல்ல. க: அப்ப எது?
ச; நீர் பலவிதமான களவு வேலையளுஞ்
செய்திருக்கிறீர், ஏனெண்டு தெரியவேணும். க: நீருந்தான் செய்தீர். பாண்டவருக்கு மாறாத்
துரியோதனனையும் தம்பிமாரையும் திருப்பினிர். ச: இங்கை பாரும், அவனுடைய பேர் சுயோதனன்.
எல்லாருமாத் திட்டம் போட்டு அவன்டை பேரையும் ஒரு கெட்டபேராக்கிப் (BLITL (of 6356ï! - க: நானென்ன செய்ய துரியோதனன் எண்டாத் தான் சனத்துக்கு விளங்கும். உமக்குங் கூட அந்தப் பேர் தான் கூட விளங்கும். நான் சொல்ல வந்தது என்னெண்டால் உம்மடை தூண்டுதல் இல்லாமல் உம்மடை மருமக்கள
பாண்டவரை அழிக்கிற அளவுக்குப் பல வேலையளிலையும் இறங்கி இராயினம். சூதாட்டத்திலையும் கள்ளப் பகடை உருட்டி அவை ஆண்ட நாட்டைப் பறிச்சீர். அதோடை விடாமை எல்லாப் பொருளையும் பறிச்சீர்.
ஆக்களையும் அடிமையாக்கினதோடை பெண்
சாதி திரவுபதயையும் எல்லோ பறிச்சீர். ச: நான் பறிச்சன் எண்டு என்ன துணிவிலை
சொல்லுறீர்? விடாமைத் தோத்துக் கொண்டு போகேக்கையே எங்கையோ பிழை எண்டு விளங்காத ஒருத்தன், நாடாளத் தக்கவன் எண்டு சொல்லுறீரா? நாட்டையும் வைச்சுச் சூதாடிறவனை நாடாளத்தான் விடேலுமா? நான் ஒரு கதைக்குச் சொன்னனெண்டாத், தம்பிமாரையும் வைச்சுச் சூதாடத் தருமனுக்கு என்ன வில்லண்டம்? சரி அவன்தான் மடையன
ஒரு வெறியிலை சூதாடுறான் எண்டாப் பின்னுக்குப் பின்னுக்கு அவனுக்காக ஞாயம் கதைச்சவை எல்லாம் ஏன் அவனை நிப்பாட் டேல்லை? ஒண்டு சொல்லிறன். தருமன் என்னுடைய வில்லங்கத்துக்குத் தம்பி மாரையும் பெண்சாதியையும் வைச்சுச் சூதாடேல்லை. அரச பதவி போன பிறகு,
| 2003 bنظواهرhe cه - لمونه لكه: 6D

Page 9
சிறுகதை
அதை மீட்டெடுக்க அவன் ஏலுமெண்டாத் தாயைக் கூட வைச்சுச் சூதாடியிருப்பான்! க: நீரென்ன சொன்னாலும் உம்மடை சூதாட் டத்தாலை தான் கடைசியிலை பெரிய சண்டை மூண்டது. ச நாட்டைத் தோத்த பிறகு அவை உரிமை கொண்டாட வந்ததாலை எல்லோ சண்டை வந்தது. அதோடை, ராசாவா இருந்திருக்க வேண்டிய ஆள் என்னுடைய மச்சான் திருத ராட்டிரன். ஆளுக்குக் கண் தெரியாது எண்டு சொல்லாமை ஏமாத்தி என்னுடைய ஒரே சோதரம் காந்தாரியைக் கட்டி வைச்சுப் போட்டு நாட்டை ஆளுகிற பொறுப்பைத் தம்பியாருக்குக் குடுத்தினம். அவனுடைய மனிசிக்கு வம்பிலை பிறந்த பிள்ளையளை ஆட்சியிலை இருத்தப் பாக்கிறது என்ன ஞாயம்? க: வம்பிலை பிறந்த கதை கதைக்கிறது
எண்டா உம்மடை மச்சானும் அவரின்டை தம்பி பாண்டுவும் விதுரனுங் கூட வம்பிலை தான் பிறந்தவை. ஆளுகிற உரிமை ஆருக்கும் இருந்திராது. பாண்டு தன்னுடைய பிள்ளையஸ் எண்டு ஒத்துக் கொண்ட பிறகு தருமன் எல்லாரிலையும் மூத்தவன் எண்ட தாலை அவனிட்டைத் தானே ஆளுகிற பொறுப்புப் போகேலும்! ச. அப்பிடிப் பாத்தா, கருணன் எல்லோ ஆண்டி ருக்க வேணும். அவன் என்னுடைய மருமேனு டைய கூட்டாளி எண்டதாலை அவன் ஆர் எண்ட உண்மையை அவனிட்டையிருந்தும் ஒளிச்சுப் போட்டீர். பிறகு அரிச்சுனனைத் தப்ப வைக்கச் சண்டை துவங்க முந்தி அவனிட்டைத் தாயை அனுப்பிக் கெஞ்சப் பண்ணினிர். க: அவன் ஆராயிருந்தாலும் பாண்டுராசனுக்கு அவனைத் தெரியாது. அதோடை ஆரெண்டு
தெரிஞ்சாக் குடும்ப மானம் மரியாதை எல்லாம் நாசமாப் போயிருக்கும். தெரிய வேண்டிய நேரம் தெரியட்டும் எண்டு விட்டிட்டன். ச: நான் என்னுடைய மருமேனுக்கு ஞாயமாய்ச்
சேர வேண்டிய ராச்சியத்தைச் சண்டை இல்லாமை அவனுக்குச் சேரப் பண்ணினன். நீர் செய்த வேலையள். க: எதைச் சொல்லிறீர்? ச. அவன் மடையன் துச்சாதனன் திரவுபதி
தமையனைக் கேவலப்படுத்தின பழைய கோவத
திலை அவளை மரியாதை கெடுக்க
s
 

‘இவன் மடையன் ஆட்சி பீடத்தின் திசைமாற்றுச் சிந்தனைகள் வியாபிக்கும் நிறுவனங்களின் மதிப்பீடுகள்.
"நாட்டின் விரோதி ஆட்சிக்குத் தாரைவார்க்கும் ஊடகங்கள் தரும் கணிப்பிடுகள்.
நரகத் தாதன் விஞ்ஞானம் மறக்கும் அஞ்ஞான ஆன்ம பீடங்களின் போதனைகள்.
‘அசாத்திய சமூகப் பிராணி தத்துவ மகுடம் தரித்த மாய விம்பம் காட்டும் தத்துவ பேராசான்களின் தர்க்கம்.
சமூக விரோதி காட்டாட்சியின் காவலர்கள் தரும் உளவறிக்கை.
66órgol b Leo இன்னும் பல உழைப்பவன் ஆட்சிக்கு நிர்மானம் தரும் கம்யூனிஸ்டுக்கு.
- க. ககேசனன் -
Sor - --Soevð 2008

Page 10
சிறுகதை
யோசிச்சான். அவளை மரியாதையீனப்படுத்த முன்னமே நினைச்சால் உம்மாலை நிப்பாட்டி இருக்கேலும், தெரிஞ்சுங் கடைசி நிமிசம் வரையும் நிண்டு ஏன் பிரச்சினையை முத்த விட்டீர்? சரி, அதை விடுவம். சூதாடித் தோத்த ஆட்சியைப் பிடிக்க அவைக்கு ஒரு உரிமையும் இல்லாத போதும் சமாதானம் பேசுகிற மாதிரி வந்து ரண்டு பக்கமும் கொதியைக் கிளப்பிப் பெரியோரு சண்டையை ஏன் மூட்டி விட்டீர்? சண்டை பிடிக்க மனமில் லாமல் அருச்சுனன் பின்வாங்க யோசிக் கேக்கை, நீர் என்ன செய்தீர்? யாரின்டை பக்கமும் சண்டை பிடியேன். அருச்சுனனுக்குத தேர் மட்டும் ஒட்டுவன் எண்டு சொல்லிப் போட்டு அருச்சுனனை விடாதை சண்டை பிடி எண்டு நீர் தானே தூண்டி விட்டீர்! சண்டைக்குள்ளை எத்தினை கள்ள வேலை செய்தீர். தருமனைக் கொண்டு பொய் சொல்லுவிச்சுத் துரோணரைச் சாக் கொண்டீர். ஒரு பெம்பிளையை அருச்சுனனுக்கு முன்னாலை தேரிலை இருத்தி வீட்டுமரைச் சாக்கொண்டீர்.
கடைசியா அருச்சுனனுக்குக கோவத்தைக் கிளப்ப வேணுமெண்டுதானே அவன் பெடியன் அவிமன்யு சாகிறதுக்கு இடம் விட்டீர்? தருமனை உயிரோடை பிடிக்கிற திட்டம் தெரிஞ்சும் நீர் ஏன் அப்பிடி நடக்கிற விதமா அருச்சுனனைத் துலைக்குப் போக விட்டீர்? இல்லாட்டி அந்தப் பச்சை மண் தேவையில் லாமச் செத்திருக்க மாட்டானெல்லோ! க: எது நடக்க வேணுமோ அது தான் நடந்துது.
எல்லாமே நல்லபடியாத்தான் நடந்துது.
பதினெட்டு நாள் சண்டை நடந்து பாண்டவர் தங்களுக்குச் சேர வேண்டியதை வெண்டு எடுத்தினம். ܝ சு: பாண்டவருக்குத் தான் சேர வேணும் எண்டு
எப்பிடிச் சொல்லேலும்? குந்தியின்ட மக்களுக்குச் சேர வேண்டியதெண்டாக் கருணனுக்குப் போயிருக்க வேணும்.
தருமனும் தாய் கேட்டிருந்தா விட்டுக் குடுத்திருப்பான். கருணன் எண்டமருமேனின்டை நல்ல கூட்டாளி. சேர்ந்து ஒத்துமையா ஆண்டிருப்பினம். சண்டையும்
வந்திராது, சனமும் அழிஞ்சிராது! க: நீர் உம்மடை மருமேனை ராசாவாக்கிப் பாக்கத் தெண்டிச்சீர், காரியங் கெட்டுப் போச்செண்டு ஏன் கொதிக்கிறீர்? உம்மடை மருமக்கள் பொறாமை பொச்சரிப்பு இல்லாமை

ஒழுங்கா இருந்திருந்தா எல்லாரும் ஒத்துமையா இருந்திருப்பினை தானே! ச; உமக்குக் கூட்டாளி அரிச்சுனன். அவன்ட பொறாமையாலை தானே கன காலமாக் கருணன் ஆரெண்டு தெரியாமை நீர் ஒளிச்சு வைச்சனிர் ஏகலைவனிலை பொறாமைப்பட்டுத்தானே துரோணரைக் கொண்டு அவன்டை கட்டை விரலைத் தெட்சினையாப் பறிப்பிச்சவன். உமக்கும், எல்லாரையுங் காட்டி, நீதி ஞாயத்தையுங் காட்டி, அவனிலை விசேச அக்கறை. க: அவன் சொல்லி ஒண்டும் நடக்கேல்லையே. ச: அவன்ட வாய் சொல்லேல்லை. அவன்ட
பார்வை என்ன சொன்னது? க: என்னவோ நான் எனக்கு தருமமெண்டு
நினைச்சதைச் செய்தன். நீர் உமக்குத் தருமமெண்டு நினைச்சதைச் செய்தீர். எல்லாருக்கும் அவரவர் கரும பயன். கதையை வளப்பானேன்! ச கரும பலன் எண்டு கழர ஏலாது கண்டீரோ! நான் எண்ட மருமேனுக்காக, ஏமாத்துப்பட்ட என்ட சோதரத்துக்காகச் செய்தன் எண்டு வையும். நீர் ஆருக்காகச் செய்தீர்? க: முந்தியே சொன்னன். எல்லாந் தருமத்துக்காக
எண்டு. ச; உந்தத் தருமக் கதை கதையாதையும்.
இந்தப் பதினெட்டு நாட் சண்டையிலை எத்தினை சனஞ் செத்துது. எத்தினை பொருட் சேதம். சொந்தக்காரரின்டை தகராறிலை ஊர் உலகத்திலை உள்ள எல்லாரும் வந்து ஏன் தேவையில்லாத அழிவு? க: நடக்க வேண்டியது எல்லாமே நல்லாகவே நடந்தது எண்டது தான் எண்ட கொள்கை. ச: இல்லை. நீர் நடத்த நினைச்சது எதையோ மூடி மறைக்கப் பார்க்கிறீர். இரும். மெய்யாக,
அருச்சுனனுக்காகச் செய்திரெண்டா, அவன்ட மகன் அவிமன்யுவை அநியாயமாகச
சாக விட்டிருக்க மாட்டீர். அதைவிடத் தேப்பனைக் கொண்ட கொதி அசுவத் தாமனுக்கு. பாண்டவரை வம்சமில்லாமைப் பூண்டோட அழிப்பான் எண்டு உமக்குத் தெரியும். பாண்டவரின்டை பிள்ளையளை எல்லாம் ஆள் விடாமை அவன் இரவோடை இரவா இல்லாமைச் செய்யேக்கை நீர் என்ன செய்தீர்? எல்லாமறிஞ்ச நீரெண்டு சொல்லிறவை ஏன் அதைக் கேக்கிறதில்லை. க: நடக்க வேண்டியது எல்லாமே. . ச எது நடக்க வேண்டியது? பாண்டவரின்டை
2 on - 1e-wovov 2003

Page 11
சிறுகதை ܓ
பிள்ளையஸ் எல்லாரும் அழிஞ்ச நேரம். இப்ப விளங்குது. நீர் ஒருத்தனை மட்டுந் தப்ப வைச்சீர். இல்லையோ? க: அவன் இன்னும் பிறவாத பிள்ளை, பரீட்சித்து. ச. அவனையும் அசுவத்தாமன் அழிக்கப் போறான் எண்டு தெரிஞ்சு தானே அந்தக் கருவையும் அசுவத்தாமன் அழிக்க முன்னம் காப்பாத்தினிர்! க: அவனும் போனாப் பாண்டவருக்குப் பரம்
பரையே இல்லாமைப் போயிருக்கும். குருகு லமும் சந்தனு ராசாவின்டை பரம்பரையும் இல்லாமலே போயிருக்கும். ச இல்லைக் காணும். நீர் காப்பாத்தினது
பாண்டவர் பரம்பரையை இல்லை. உம்மடை சகோதரியின்டை பேரனை. அவிமன்யு ஆர்? உம்மடை சகோதரியின்டை மோன். உம்மடை மருமேன். அவன் உம்மடை ரத்த உறவு. ஆனாலும் அவன் மிஞ்சி மற்றவை இறந் திருந்தா உம்மடை நோக்கம் எல்லாருக்கும் விளங்கியிருக்கும். ஆனாலும் அவன்டை பிள்ளையைத் தப்ப வைச்சு அவனை ராசா வாக்கினா ஆரும் ஐமிச்சப்படாயினம். நீர் பெரிய எம்டன் தான்! க: நீர் அப்பிடி நினைச்சால் நான் என்ன சொல்
லேலும்! - ச: இப்பிடிச் சொல்லிச் சொல்லியே ஒரு பெரிய அதருமத்தை, ஒரு வீண் சண்டையை நீர் நியாயப்படுத்திக் கொண்டு இரும். எத்தினை வீண் சா? எத்தினை வீண் அழிவு? இவ்வ ளவும் நடந்ததுக்கும் பிறகு தருமத்தைக் காப்பாத்தத்தான் இந்தச் சண்டை எண்டு உம்மாலை சொல்லேலுது, உம்மை நம்பிற ஆக்களாலை சொல்லேலுது. இந்தச் சண்டை உலகத்திலை தருமத்தைக் காப்பாத்தியிருந்தா ஏன் இன்னமும் உலக மெல்லாம் அப்பாவிச் சனம் அழியுது? நாங் கள் எங்கடை எங்கடை சுயநலங்களை எல்லாம் உலகத்தின்டை நன்மைக்கு எண்டு ஏமாத்திக் கொண்டு வந்திருக்கிறம். க: எல்லாம் நடக்க வேண்டிய மாதிரியே
நடக்குது. எல்லாம் நல்லபடியாகவே நடக்குது. ச: இப்ப இல்லை. இனித்தான் அப்பிடி
நடக்கப் போகுது எண்டு நினைக்கிறன்.
(இருவரும் தத்தம் திசைகளிலர் விலகிச் செல்கிறார்கள்)
 

/് தேசிய கலை இலக்கியப் N
(Suqa).-VIVfai தேசிய மாநாடு
தேசிய கலை இலக்கியப் பேரவையின் தேசிய மாநாடும் 35வது ஆண்டு விழாவும் எதிர்வரும் 2008ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் 23ம் , 24ம் (சனி, ஞாயிறு) திகதிகளில் கொழும்பில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவர் கவிஞர் திரு. இ. முருகையன் தலைமையில் நடைபெறும். பிரதேசப் பேரவைச் செயலாளர்களையும் உறுப் பரினர் களர் அ ைன வரையும் பேரவையுடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டுகின்றோம்.
பொதுச்செயலாளர்
தேசிய கலை இலக்கியப் பேரவை
இல. 59/3, வைத்தியா வீதி, தெகிவளை
தொ.பே - 5024358 レク ܓܠ

Page 12
சினம் கொண்டெழுந்த சிதையா உணர்வும் செங்கொடி ஏந்திய கரங்களின் வலிமையும் இன்னும் எங்களுக்குள்.
மீள வருவோம் தோழனே
கூடைத் தேசத்து கொள்ளி மலைகளெங்கும் உக்கி உரமாகி தேயிலைக்கு நிறமாகி தேசத்துச் சுமைதாங்கிகள் கணப்பில் உந்தி உந்தி உயிர் கொண்டெழுந்த உணர்வுகள் இன்னும் எங்களுக்குள்.
மீள வருவோம் தோழனே
மண் பறிக்கப்பட்ட போதும் மனைகள் எரிக்கப்பட்ட போதும் உழைப்புத் தின்று உயிர் குடித்து உறிஞ்சி உருக்குலைக்கப்பட்ட போதும் எழுந்து திரண்டு கனலான கோபம் இன்னும் எங்களுக்குள்.
மீள வருவோம் தோழனே
புத்தனின் போதனையால் புனிதமாக்கப்படும் புதைகுழி தேசத்தில் வக்கிரங்களின் வாசிப்புகளை வரலாறு எழுதிக்கொண்டிருக்கையில் வக்கரித்தெழுந்த வன்மம் இன்னும் எங்களுக்குள்.
மீள வருவோம் தோழனே
O
G
 

مجیے۔
ஆயுதங்கள் மொழி பேசி அராஜக அட்டூழியம் புரிந்து சதைப்பினன்டங்கள் மேலேறி சனநாயகம் பேசும் சதி கண்டு எழுதலுக்கான நம் எத்தனிப்புக்களின்
போது குண்டாந்தடியடியும் குள்ளநரித்தனமும் குத்திக் கிழித்த ரணங்கள் இன்னும் எங்களுக்குள்.
மீள வருவோம் தோழனே
மண் வாசம் தொலைந்து பினவாடை வீசும் எம் தேசத்தில் மனிதம் கொன்று பினமேட்டில் பிதற்றும் பித்தர்கள் பிடரி தெறித்தோட எழு எழு என எதிரொலித்த சேதி இன்னும் எங்களுக்குள்.
மீள வருவோம் தோழனே
வியர்வையின் விதைப்பில் கனன்னிரின் கனப்பில் குருதியின் வடுக்களில் குமுறிக் குமுறி எழுந்த எரிதனல் இன்னும் எங்களுக்குள் பத்திரமாய் கணபத்திரமாய் புடம் போட்டு புடம் போட்டு நரம்புகள் புடைக்க சுட்டெரிக்கும் சூரியத் தணல்களாய் விடியலுக்கான வேள்வித் தியோடு
மீள வருவோம் தோழனே
யானை புலி சிங்க வேடமிட்ட துவுடர்கள் தொடை நடுங்க உயர்ந்த எம் குரல்வளை நசித்து பயங்கரவாதியெனப் பறைசாற்றி கயவர் இட்ட விலங்கும் கடுஞ்சிறை வாசமும் கண்டு கலங்கிடோம், அஞ்சோம் தடைகள் பொடிபட புயல் எதிர்க்கும் புயம் கொண்டு
மீள வருவோம் தோழனே
= வெ. மகேந்திரன் -
ஒ
*ー*ッ*ッう 200&

Page 13
தொடர்நடைச்சித்திரம்
வலிகாமத்து ம Drissa
蚤
சென்ற இதழின் தொடர்ச்சி.
குழந்தை
அவருக்குச் gigt, 6f 6ÖILÖ 6T 600 LT 6ð எங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் கிடைக்கும். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் அனுமதி கேட்பார். 'எனக்கு இப்ப ரெண்டு மூண்டு நாளாய் நல்ல சுகம் இல்லை, வீடு வாசல், கோயிலடி, மடத்தடி ஒண்டும் கூட்டித் துடைக்க ஏலாமல் இருக்குது. உவை மூண் டு பேரை யும் ஒரு கி கால பள்ளிக் கூடத்தாலை வந்த பின்ன அங்கை அனுப்பி விடுவியளே!” அது எங்கள் காதிலும் விழும். பெரியப்பா கேட்டால் அம்மா மறுக்க மாட்டா. அதனால் நாங்கள் தயாராகி விடுவோம்.
- மாவை வரோதயன் -
அணி று பரிணி னேரம் எங் களா ல செய்யப்படும் ஆடு, மாட்டுக்கு இரைதேடும் வேலை பிறி போடப் படும் . ஆனாலும் பெரியப்பாவின் மடத்தில வேலை மும்முரமாக இருக்கும். கோயில் வீதி கூட்ட ஒராள், மடம் உட்புறம் கூட்ட ஒராள், அவரது அறை துப்பரவு பண்ண தொட்டாட்டு வேலைக்கு ஒராள் என்று பிரித்து விடுவார். தும்புத்தடி, விளக்குமாறு, ஒட்டறை தட்டும் ஒலைச் சிறகுத் தடி, மரத்தளவாடம் துடைக்க, தூசி தட்டத் துணி என்று அத்தனையும் வேறு வேறாக எங்கள் கைகளுக்குத் தரப்படும்.
"இஞ்சார் சும்மா கூட்டிப் பலன் இல்லை. காத்துப் போற பக்கமாய்க் கூட்டு, இந்தா இப்பிடி தூசிய தட்டி எழுப்பிக் கூட்ட வேணும், பங்க பாத்தியே! இதுதான் காத்துள்ள போது தூற்று எண் டு சொல் லுறது’ என்று செய் முறை விளக்கமும் தருவார். சாமான்களைப் பிரிப்பது,
 
 

துTசு தட்டுவது, மீள அடுக் குவது என்று
அத்தனையிலும் நுட்பம் இருக்கும்.
முற்றம் கூட்டுபவர் தேவையற்ற புற்கள்,
களைகளைப் பிடுங்கிக் கூட்ட வேண்டும்.
2003ڑوں طٹارو (ہنچnaہ ہے۔ لمasonیخ

Page 14
சிதாடர்நடைச்சித்திரம்
பிடுங் கிய புற் களை வேறாகக் குவித் து சருகுகளை வேறாகக் கூட்ட வேண்டும் . குப் பைகள் எல லாம் ஒரு இடத் தி ல சேர்க்கப்பட்டதும் அதற்கு எரியூட்டும் வேலையை அவர் செய்வார்.
வேலைகள் முடிந்ததும் " கைகால் முகம் கழுவிப் போட்டு மூண்டு பேரும் வாங்கோ!’ என்று அறிவிப்பார். அவரது அறைக்குள் கூப்பிட்டு கட்டிலில், கதிரையில் இருப்பாட்டுவார்.
அவர் தேநீர் குடிக்க பெரிய மாபிள் கோப்பை, தேநீர் ஆற்றும் எவர்சில்வர் கோப்பை, தண்ணீர் குடிக்கும் தகரக் கோப்பை மூன்றிலும் ஒவலரின் கரைத்து எமக்குப் பரிமாறுவார். குடித்து முடிய வாயில் மீசை வைத்தது போல் பால் கறை படர்ந்து கிடக்கும். அதைத் துடைத்து விட அந்த மாலை வேளையின் வேலைக் களைப்பு பறந்து போயிருக்கும்.
'இந்தா இந்தச் சாக்கில புடுங்கின புல்லப் போட்டுக் கொண்டு போங்கோ, இந்தா கத்தி. அந்த வேலி முட்கிழுவையில பாத்து குழை வெட்டிக் கொண்டு போ. இந்தாங்கோ படிக்கிறதுக்கு புத்தகம், எழுதுறதுக்கு கொப்பி' என்று ஏதாவது பரிசும் கையில் தந்து விடுவார். அவருக்கு சுகயினமான நாளில் இரவுச் சாப் பாடு பெற் றுக் கொள் வதற்காகவும் அம்மாவிடம் வருவார். மூன்று நாள் இரவுக்கு இடியப்பம் தேவை எனில் அதற்கு வேண்டிய அரிசிமாவை சுண்டுக் கணக்கில் அளந்து கடதாசிப் பையில் போட்டு, தேவையான தேங்காயையும் எடுத்து ஒரு துணிப் பையில் போட்டுக் கொண்டு வருவார். பொழுதுபட முதல் சொதி விடுவதற்கான போத்தலுடன் வருவார். வந்து இடியப்பத்தைக் கோப்பை ஒன்றில் வைத்து மற்றொரு கோப்பையால் மூடித் துணி ஒன்றினால்
(
 

வைத்துக் கட்டி எடுத்துப் போய்விடுவார்.
அவரது புத்தக அலுமாரியில் பெரிய பெரிய ஆங் கில நூால களர் மினுங் கிகி கொண்டிருக்கும். இரவு சாப்பிட்டு முடிய, கொஞ்ச நேரம் சாய்மனைக் கதிரையில் படுத்திருந்து ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வாசித்த பின்பு ஒரு ஓவல்ரின்னோ, மைலோவோ குடித்து விட்டு றேடியோவில் பாட்டுக் கச்சேரி கேட்டுவிட்டுத் தூங்கப் போவார்.
(இன்னும் வருவார்கள்)
அடுத்த இதழில்.
வலிகாமத்து மண்ணின் மாந்தர்கள்
தொடர்நடைச் சித்திரம் தலைவர் தவறாசா
நிறத்தில் அரைக் கை சேட், மேவி இழுத்த தலை, நாற்பத்தைந்து வயது கடந்தாலும் நரைக் காத கேசம் , சாதாரண உயரம் , திடகாத்திரமான தேகம், சேவ் எடுத்து மீசையை அரும்பு மீசையாக "கிளிப் செய்திருப்பார். சிகரட், சாராயம், கள்ளு வாசனையே அறியாதவர்.
அடுத்து வருகிறார்.
'தலைவர் தவராசா”
காத்திருங்கள்.
2ణN - 2-0తpov 200టి

Page 15
கவிதை
அவர்களின் வீட்டினுட் கூச்சலும் குழப்பமும் இரவுப் பொழுதில் அதிகமாய் இருந்தன! அயல்வீட்டாரின் துயிலையும் குழப்பின. அவர்களின் வீட்டினுள் எலி நுழைந்ததுதான் இத்தனைக்கும் ஒரே காரணம் ஆனது.
来 米
அவர்களின் வாழ்வை நிதமும் இயக்கிய வரவு செலவுக் கணக்குக் கொப்பியை அரித்த போதுதான் எலிவரவு அறிந்தனர் எலியின் இலக்கு பொருளாதார இலக்குதான் என்பது அப்பொழுது
உணர்ந்தனர். எனினும். எலி தன் உணவைத் தேடியே வந்தது என்பதை மட்டும் சற்றும் உணர்ந்திலர்.
米 米 米
பசியோ டலைந்த எலியோ அவர்களின் பிள்ளை காலைக் கடித்துப் பிய்த்தது. பெண்களும் சிறாருமே எலிகளின் இலக்கு என்றே உலகெலாம் பரப்புரை செய்தனர் எனினும். . . . எலிகளின் உணவினைக் கொடுக்க மறுத்தனர்.
enwe -71 : G
 

நீதிகரிப்பு/
- un.un, unasurcó uátas fantis -
எலியைக் கண்டு துரத்திய வேளையில் ஆட்டுக் கொட்டிலுள் அது புகுந்து ஒழித்தது. எலியைத் தேடிக் களைத்த கடுப்பில் ஆடுகள் அனைத்தையும் அடித்தே கொன்றனர். ஆட்டுக் கொட்டிலும் எரிக்கப்பட்டது எனினும். . . . எலிகளின் உணவையோ கொடுக்க மறுத்தனர்
米 米 来
கோழிக் கூட்டினுள் ஒருநாட் புகுந்ததால் கோழிகள் அனைத்தையும் கடத்தியே சென்று ஆங்கோர் தீவிற் பொந்திடை வைத்தனர் எனினும். எலிகளின் உணவைக் கொடுக்க மறுத்தனர்
米 米 米
ஆற்றாது அலைந்த அவர்கள் கூடி மந்திரா லோசனை நடத்தினர். தெளிந்தார். வீட்டை எரிப்போம்! வீட்டையே எரிப்போம்! வீட்டை எரித்தால் எலியும் எரியும். வீட்டை எரித்து மகிழ்ச்சியிற் குதித்தார். ‘எலியை அழித்தோம் புதுவீடு அமைப்போம்” சொல்லி முடித்து வாயை முடுமுன் காலடிக் கீழே "கீச் கீச’ சத்தம்.
& 0 20 ویں ضٹارو (کہ رac(ہنے لمaspضح

Page 16
சிறுகதை
61ணி என்ன, வயது 80. இனி என்ன எனக்குப் பல்லுக் கட்டுறது. பொம்பிளைப் பிள்ளை கலியாணம் கட்டேல்லை. பேரப் பிள்ளையஸ் காணுற வயசு . எனி னிலையும் பிழை . மனிசியிலையும் பிழை. நாங்கள் ரண்டு பேரும் கட்டியிருக் கப் படாது. நான் முப் பதிலை பிறந்தனான். 73ஆம் ஆண்டிலை 43 வயசு, அப்ப ரீச்சிங் வந்தது. நான் ரீச்சிங்கை இப்ப எடுத்தால் பேந்து பதினாறு பதினேழு வரியத்திலை எனக்கு 60 வர பென்சன் வந்திடும். பேந்து அந்தப் பென்சன் காசை வைச்சுக் கொண்டு என்னத்தைச் சீவிக்கிறதெண்டு லோச் செய்ய வெளிக்கிட்டன். 76ஆம் ஆண்டு என்ரை 46வயசிலை. கொழும்பிலை. மரி பண்ணினது 78ஆம் ஆண்டிலை.
76ஆம் ஆண் டு என் ரை அல் வாயப் மச்சாளுக்கு எனக்கு கலியாணம் பேசி ஆளனுப்பி விட் டன் என் னைப் படிப் பிக்க வேணும் பொம்பிளை வீட்டார் எண்ட ஒப்பந்தத்திலை. அவை தங்களிட்டைக் காசில்லை, என்னைப் படிப்பிக்க எண்டினம். அதாலை அவவை நான் கலியாணம் செய்யேல்லை. அதைப் பற்றி இப்ப கவலைப்படுறன்.
 

56ஆம் ஆண்டும் மாமிட்டை ஆளனுப்பி என் னை இந்தியாவிலை விட்டு படிப்பிக்க கேட்கேக்கை மாமி தன் ரை மற்ர மேளைப் படிப்பிடிக்க காணி ஈடு வைச்சுப் படிப்பிச்சதாலை தான் நான் கலியாணம் பேசின மச்சாளுக்கு கலியாணம் கட்டி வைக்க என்ரை ஒப்பந்தப்படி என்னைப் படிப்பிக்கக் காசில்லாமல் போச்சுது. மாமி காணியை ஈடு வைச்சுப் படிப்பிச்ச மற்ற மச்சாளும் தான் படிச்சு முடிச்சு தன்ரை படிப்புக் கடன் அடைச்சு பிறகு கலியாணம் கட்டுற பருவத்திலை இளசா இருந்த தன்ரை மற்றத் தங்கச்சிக்கு கலியாணம் கேட்டு வர வீட்டுக்கு வலிய வந்த வரனை விடப்படாது எண்டு தன்னைப் பற்றி யோசியாமல் அவாக்குச் சீதனம் உழைச்சுக் குடுத்து கட்டி வைச் சதாலை அவாவுக் கு கலியாணம் தப்பியிட்டுது.
என்ரை மச்சாளும் இப்பவும் கட்டேல்லை. 32ஆம் ஆண்டு பிறந்தவ. நான் 30. அவ தன்ரை தங்கச்சியோடை கொழும்பிலை தான் இப்ப இருக்கிறா. நான் அவை வீட்டை செத்தவீடு அந்திரட்டி வீட்டைத் தவிர கசுவலாய்ப் போய் வாறேல்லை. தவிர ஒரு நாள் அவ வீட்டை போனனான், 95ஆம் ஆண்டிலை. கடவுள் விட்ட பிழை. 95ஆம் ஆண்டிலை حيخ5 யாழ்ப்பாணத்திலையிருந்து இடம் பேர் ந் து நுணாவிலிலை நான் அகதியாய்
இருக்கிறதுக்கு அவை இருக்கிற வீடு தேடி அவவின்ரை தங்கச்சியின்ரை வீட்டுக்குப் போறன்.
நான் கட்ட விரும்பின மச்சாளின் ரை / தங்கச்சியார் கொழும்புக்குப் போயிட்டா.
eason - ہ(a2003 زوں ضرواہ نہ چ

Page 17
சிறுகதை
தங்கச்சியாரின் ரை ஹஸ் பண்ட் இருக்கிறார் வீட்டிலை. அவரிட்டை போய் இருக்க வீடிருக்கா என்றன். அவர் வீட்டிலை இப்ப இடமில்லை எண்டு சொல்ல என்ரை ஒன்றுவிட்ட தம்பியிடம் கேட்டுப் பார்ப்பமெண்டு சொல்லி அவையின்ரை வீட்டிலை இருந்து வெளிக்கிடுறன் உடனை.
அவர் அக்கா இருக்கிறா. இருங்கோ எண்டு சொல்லி உள்ளை போறார். கொஞ்ச நேரத்திலை என்ரை மச்சாள் வந்தா மாக்கரைச்ச கையோ டை தலை யெ லி லாம் நரைச் சுக் கிழவியாய்.
இருங் கோ. நீங்கள் கொஞ்சம் முந்தி வந்திருந்தால் வீட்டை உங்களுக்குத் தந்திருப்பன். இப்ப வேறை ஆரோ ரண்டு அகதிக் குடும்பங்கள் அங்கை இருக்குதுகள்’ எண்டு விட்டு எலும் பிச் சங் காயப் த் தண் ணி கரைச்சுக் கொண்டு வரப் போயிட்டா. இதுதான் நான் அவவோடை முதன்முதலாய் கதைச்ச கதை. கடைசியாயும் கதைச்ச கதை. 26 வயதிலை அவவை நான் மனசிலை கட்ட நினைச்சது. 66 வயதிலை தான் அவவோடை கதைச் சது. கொஞ்ச நேரத்திலை வந்து அவ தன்ரை ரண்டு கையாலையும் எலுமிச்சங்காய்த் தண்ணியைத் தர நான் எண் ரை ரண் டு கையாலையும் பக்குவமாய் வேண்டுறன். அவ தந்திட்டு எனக்குப் பக்கத்திலை நிக்கிறா.
- செவ்வந்தி =
என்னையும் அவவையும் தவிர வேறை ஒருத்தரும் இல்லை. ஆனால் என்னாலை ஒண்டும் அவவோடை வாய்திறந்து கதைக்க முடியேல்லை. (என்ரை மனசுக்கை நோ. தாங்க முடியாத நோ. அவவுக்கும் எப்படியோ). நான் விட்ட பிழை கலியாணம் கட்டிற நாளேலை நாங்கள் எங்கடை மாமி வீட்டுப் பக்கம் போய் வந்து கதைச்சுப் பேசிப் பழக்கமில்லை. அப்பிடிக் கதைச்சுப் பேசியிருந்தால் நான் அவவை விடாமல் கலியாணம் கட்டியிருப்பன். என்ன செய்யிறது எண்டு போட்டு சரியான கவலையோடை எனக்கு தொணி டைக் குளி  ைள இறங்க மறுதி த எலும்பிச்சங்காய்த் தண்ணியை மிண்டி மிண்டிக் குடிச்சபிறகு அவ என்னைக் கூட்டிக் கொண்டு ஒழுங்கையாலை வந்து ஒரு பனங் கூடலுக்கு உள்ளாலை இருபது நிமிச நடை தூரத்தை நான் இருக்க வீடு கேட்கப் போகவிருந்த எண்ரை ஒண்டுவிட்ட தம்பியின் ரை வீட்டை காட்டிப் போட்டுப் போயிட்டா.


Page 18
சிறுகதை
எனக் குக் கலரியான மி Gou como இடத் திலை முற் றாய விட்டுது. பேச்சு இருபதாயிரம் காசு. நான் லோப் படிச்சு முடியு மட்டும் மாதம் நானூறு ரூபா கொழும்புக்கு அனுப்ப வேணும். படிப்புத் தொடங்கி ரண்டு வரியமாய் தங்கச்சிட்டைத் தான் நான் காசு பதினையாயிரம் கடன்பட்டுப் படிச்சது. அவாக்கு நான் அந்தக் காசைத் திருப்பிக் குடுக்க வேணும். அவ மரி பண்ணின பிறகுதானே அவவிட்ட நான் கடன் பட்டுப் படிச்சது. என்ரை மச்சாளிட்டை என் னைக் கட்டுறதுக் குச் சீதனம் தரக் காசில்லாததாலை நான் தங்கச்சியிட் டைக் கடன்பட வேண்டிப் போச்சு. அந்தக் கடனடைக்க நான் என்ரை மனிசியிட்டைச் சீதனம் வாங்கி தங்கச்சின்ரை கடனடைச்சுக் கலியாணமும் கட்டி கொழும்பிலை படிச்சுக் கொண்டன்.
என்ரை பேரன் என்னைப் போல லோப் படிப்புப் படிச்சவர் தான். அவருக்குச் சரியான சொத்துப் பத்து. மாப்பாணர் குடும்பம். அவருக்கு என்ரை அப்பாதான் ஒரே பிள்ளை. என்ரை அப்பா வலு செல்லம். பெரிய படிச்சவற்றை பிள்ளை. மாப்பாணர் குடும்பத்துக்கு ஒரே ஒரு வாரிசு. செல்வச் சீர். செல்லம் கொட்ட ஆக்கள். ஆள் வலு குழப் படி, படிப் பி ைலயும் கவனம் செலுத் தேலை வேலையளும் பாக்கேலை. வேலையள் ஒண்டும் பழகவும் இல்லை. அஞ்சாம் வகுப்புத் தான் படிச்சவர். மைனர் வயது வர ஆக்கள் அவர் படிக்கேல்லை எண்டு பகிடி பண்ண, என்ரை பேரன் ரோசத்திலை தன்ரை பிள்ளையை மற்றவை படிக்கேல்லை எண்டு குறைவாய்ச் சொல்லவோ எண்டு சனங்களிலை கோவிச்சு 500 ஏக்கர் வயல் பரப்பு 130 பரப்பு காணி எல்லாத்தையும் தன்ரை பிள்ளையின்ரை பேரிலை உறுதி எழுதிக் காசாலை தூக்கி அப்பற்ரை கெளரவத்தை உசர வைச்சிட்டார். அப்பாக்கு தலைகால் புரியாத செல்லமும் செல்வமும், சும்மா இஷடம் போலை உலகத்தை அனுபவிச்சுக் கொண்டு சுத்தித் திரிஞ்சார்.
இதுக்குள் ளை ஒரு வறுமைப் பட்ட குடும்பத்துக்கை புன்னாலைக்கட்டுவனிலை ஒரு வடிவான சிவத்தப் பெட்டையை மூக்கும் முழியுமாய் வடிவான எண் ரை அம்மாவை கலியாணம் கட்டியிட்டார். ஒரு நாள் ராப்போலை தன்ரை சூட்கேசுக்கை உடுப்புகளையும் தன்ரை சாமானுகளையும் எடுத்து வைச்சுக் கொண்டு தகப்பனுக்குத் தெரியாமல் தகப்பன் நித்திரை ஆன பிறகு போனவர் தான் போய் பெட்டை
 

ബംസ്പേ இருந்திட்டார்.
அங்கை 3 மாத்துக்குப் பிறகு இருந்த இடத்திலை இருந்து கொண்டு மாப்பிளை சோறு தின் னுறார் எண் டு பொம் பிளை வீட்டார் புறுபுறுக்கத் தொடங்கின உடனை ரோசத்திலை தனி ரை சூட் கேசையும் துTக் கி கொண்டு விறுவிறெண்டு தன் ரை வீட்டை நடையைக் கட்டினார்.
வீட்டை திரும் பிப் போன எண் ரை அப்பாட்டை என்ரை பேரன் நைசாய் எல்லா உறுதியளையும் தன்ரை பேரிலை எழுதி வேறை எதுக்கோ கையெழுத்து வாங்கினது போல அவரிட்டைக் கையெழுத்தை வாங்கி சொத்தைத் தன் ரை பேருக்குத் திரும்ப மாத்தியிட்டார். அப்பாக்கு அதிலை எழுதினதுகளை வாசிச்சுக் கையெழுத்துப்போட படிப்பு இல்லைத் தானே.
பேந்தும் அப்பா சோக்குச் சுதி செய்து கொண்டு அம்மாவையும் அப்பப்பா வீட்டிலை கூப்பிட்டு இருத்தி வைச்சு வாழ்க்கை நடத்திக் கொண்டு வரேக்கை 3 பிள்ளையஸ் பிறந்த பிறகு வங்குறோத்தாகி என்ரை அஞ்சு வயசிலை வீடு வளவு நகை நட்டெல்லாம் வித்துக் குடிச்சு ஆள் தலைமறைவாகியிட்டார். பிறகு எங்கடை பேரன் தான் எங்களையெல்லாம் பார்த்தவர்.
என் ரை மகளுக்கு இப்ப 31 வயது. கொம்பியூட்டர் சயன்ஸ் பி.எஸ்.ஸி. கொழும்பு யூனிவே சிற்றி. அதுக் குத் தான் நாங்கள் கொழும்புக்கு வந்தனாங்கள். என்ரை மனிசி ஒரு ரீச் சர் . அவ முந் தி யாழ்ப் பாணத் திலை இருக்கேக்கை பெரிய பரிதாபம் பாருங்கோ. விடிய 4.00 மணிக்கு எழும்பி மத்தியானத்துக்கு ஆறு சுண்டு அரிசி சோறு அவிச்சு இரண்டு கறியும் வைச்சு கால மைக்கு அஞ்சு சுண்டு மா விலை புட்டும் அவிச்சு எங்கள் நாலு பேருக்கும் வேலைக்கு வாற ஆரும் கூலியள் இரண்டு பேருக்குமாய்ச் சேர்த்து ஏழு பேருக்குச் சமைச்சு பிள்ளை குழந்தையாயிருக்கேக்கை பிள்ளையின்ரை சாணைச்சீலையும் தோய்ச்சு ஒரு மைல் தூரம் நடந்துதான் தான் படிப்பிக்கிற பள்ளிக்கூடத்துக்குப் போகும். நான் பாலை ஹீற்றரிலை காச்சிப் போத்தில்லை விடுவன். இதுதான் நான் அப்ப செய்யிற ஒரு வேலை. அப்ப அவ பிள்ளையைப் பாக்க ஆளில்லாமல் போடிங்கிலையும் விட்டது. நான் சும்மா இருந்தது தான் எண் ரை மச் சான் மாரெல் லாம் ஒரு வேலையும் செய் யாமல் சும் மா இருக்க அவைக்கும் என்ரை மணிசி சமைச்சுப் போட
on - oba-Voo\2V5 2003

Page 19
சிறுகதை நா னெனி னணி டு அவா கி கு உதவி செய்யிறதெண்டு ஒரு உதவியும் செய்யாமல் நானும் சும்மா இருந்தன்.
ஆனால் நான் என்ரை தொழிலையும் லைற்றாய் ச் செய்து கொண்டு ரியூஷனும் குடுத் துக் கொண் டு அப் ப நல லா யப் இருந்திருக்கலாம். நானும் ஒரு போக்குத் தான். அப்ப எனக்கு 52 வயது. பெரிய லோயற்றை குடும்பத்திலை பிறந்தே என்ரை மனிசின்ரை ஊரிலை நாண் இருந்ததா லை என ரை தொழிலுக்கு அவவின் ரை ஊரிலை எனக்கு சரியான அடையாளம் இல் லாமல் எண் ரை லோயர் தொழிலால அஞ்சு சதமும் உழைக்க வழியில்லாமல் போச்சு. என்ரை கிறான்ட்பா ஏழு கிளாக்கர்மாரை வைச்சு தொழில் செய்தவர். பெரிய சந்திரகேசர முதலி மாப்பாண முதலி பரம்பரை நாங்கள். வசாவிளான் கந்தசாமி கோயில் கொடிக்கம்பத் திருவிழா தான் எங்கடை திருவிழா. இதுக்கை நாலு குடும்பங்கள். இந்த நாலு குடும்பத்துக்கையும் உள்ள பொம்பிளைப் பிள்ளையஸ் கலப்பில்லாமல் கலியாணம் செய்தும் கலியா னங்கள் செய்யாமலும் செத் துப் போச் சுதுகள் ஆம் பிளைப் பிள் ளையளிர் சகோதரியளைக் கட்டிக் குடுக்காமல் வீட்டிலை வைச்சிருந்து தாங்களும் கட்டாமல் பெரும்பாலும் சும்மா இருந்து கொண்டு சொத்தை அழிச்சழிச்சு குடிச் சு கூத தடிச் சும் கூத் தடியாமலும் ஒய்ஞ்சிருந்து அழிஞ்சு போச்சுதுகள். எல்லாம் எங்கடை சாதித் தடிப்புத் தான்.
எங்கடை குடும்பம் அடிமை குடிமையள் எல்லாம் வைச்சிருக்கிற ரொப் குடும்பம். எங்கடை அப்பப்பா உறுதி எழுதேக்கை சாட்சிக்காரர் கையெழுத்துப் போடேக் கை அவையின் ரை சாதியையும் போட்டு எழுதுறதை நான் எப்பவும் பார்த்திருக்கிறன்.
எ நi க ைL ஆக களர் தங் கடை ஆக் களுக் கையே சாதி சீதனம் எலி லாம் பாத் துத் தானி அந்தக் கால தி தி  ைல கலியாணங்கள் பேசிச் செய்யிறது. அதுக்கை எங்கடை மாப்பாணர் குடும்பங்கள் தங்கடை லெவலிலை ஒண்டும் குறைஞ்சு போகாமல் எந்த ஒண்டையும் எந்தச் சந்தர்ப்பத்திலையும் விட்டுக் குடுக் கா துகள் , எ ல் லாக் கலியாணமும் இப் பிடித் தானி நடக்கிறதும் நடக்காமல் விடுகிறதும்.
இப் ப என ரை பிள்  ைளக் கு ஒரு மாப்பிள்ளை வந்து பொருந்திச்சுது, 15 லட்சம்
 

நீத்தார் நினைவு
71 - ཡོད།༽
அஞ்சலி
ஒலிபரப்பாளர், கலைஞர், எழுத்தாளர்
G2n32 ခÁမှီဂဲ2Gဗီခ-2-2ဇံh
சிறுகதை எழுத்தாளர், ஒலிபரப்பாளர், நாடக ஆசிரியர் ஆகிய பல்துறை விற்பன்னரான ஜோர்ஜ் சந்திரசேகரன் தனது 67வது வயதில் கடந்த ஜூன் மாதம் 06ம் திகதி காலமானார். அவரது மறைவுக்குத் தாயகம் தனது அஞ்சலியைப் பகிர்ந்து கொள்கிறது.
1966ல் துப்பறியும் சிவம் என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளராகப் பணிபுரிந்தார். விமோசனம், நம்பிக்கை, சமூக விரோதிகள் ஆகிய மேடை நாடகங்களில் நடித்தார். நம்பிக்கை நாடகத்தில் டாக்டர் கோவூரின் வேஷமிட்டு நடித்துப் பெருமை பெற்றார். ஜோர்ஜ் சந்திரசேகரனின் சிறுகதைகள் (1995), சருகுக்குள்ளே கசியும் ஈரங்கள் (1997), வானொலியும் நானும் (1997) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலியில் செய்தி வாசித்தல், நேர்முக வர்ணனை, நிகழ்ச்சித் தொகுப்பு, நிகழ்ச்சித் தயாரிப்பு, நாடகத் தயாரிப்பு ஆகிய பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார்.
இலங்கை வானொலி இலங்கை மக்களின் | பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய முன்னோக்கிய அசைவில் உத்தியோக மனப்பாங்குக்கு அப்பாலான | ஜோர்ஜ் சந்திரசேகரனின் விளம்பரமற்ற அர்ப்பணிப்பு \சூாத்திரமானது ク
2003 ژوني طاروازه نه چه - لrosكي

Page 20
சிறுகதை காசு வீடுவளவு எண்டு. எங்களிட்டை இருக்கிறது 5 லட்சம் தான். மீதியை என்னெண்டு குடுக்கிறது. என்ரை பிள்ளைக்குக் குடுக்க 11 பரப்பு காணி வீடு வளவு இருக்குது. நாங்கள் காணியளை வித்து குடுக்கேலாது. எங்கடை வசாவிளான் கானிய  ைள ஆரிப் ப வேணி டினம் . குடியிருப்பில் லாத பிரதேசம். அரைச் சதம் விலையே போகாது. கலியாணச் செலவுக்குத் தான் இருக்கிற காசு காணும். பேசின மாப்பிளை கொழும்பிலை எங்கையோ 60 லட்சத்துக்கு வீடு வாங்கினவராம். அரைவாசி கடனாம். 15 லட்சம் சீதனம் கேட்கினம் , நாங்கள் கடன் பட்டு அவைக்குக் குடுத்தால் அதை என்னெண்டு நாங்கள் பேந்து அழிக்கிறது. நாங்கள் சாகப் போறம் மாப் பிளை யின் ரை கடனடைக்க மகளிட்டைச் சீதனம் கேட்கினம்.
எனக் கும் கலியாணம் பேசேக் கை அக்கான்ரை கடன் அடைக்க 15,000 ரூபாவும் லோ சோதினை பாஸ் பண்ணும் மட்டும் மாதம் 400 ரூபா கொழும்புக்கு அனுப்ப வேணும் மூண்டு வரியத்துக்கு எண் டது ஒப்பந்தம் என் ரை மனிசியவைக்கும் மாப்பிளை கிடைக்கேல்லை. எனக்கு பொம்பிளை இருந்துது, ஆனால் எனக்கு உழைப் பில் லை. ஆனால் நாண் இந்தக் காலகட்டத்திலை கட்டாயம் கலியாணம் கட்ட வேண்டியிருந்தது. எண் னெண் டால் அப்ப ரண்டாவது தங்கச்சிக்கு 32 வயது நடக்கேக்கை என்ரை ஒரு மாமி வந்து சொன்னா இனி நீ 565uUIT 600Tuò gL'LTLD65 6fL LT 55 E (36ITI GOL இருக்கப்படாது. எங்கையும் கட்டிப் போயிடு. நீ கட்டாமல் இருந்தியோ உண்ரை தங்கச்சியவை 35 வயசுக்கு மேலை உனக்கு மேலாலை கதைக்கத் தொடங்கிவிடுவினம். 40 வயது வந்துதோ நீ அவையோடை கதைக்கவே போகேலாது. 40 வந்தால் நாய்க்குணம், எண்டா. அதாலை தான் அப்ப நான் என்ரை மனிசியை கட்டினது.
மனி சினி ரை ஊரிலை உழைப் பு இல்லாமல் இருக்கேக் கை எண் ரை சொந்த ஊரிலை போயிருந்து தொழில் செய்திருந்து இருக்கலாம். அது முடிஞ்ச கதை. ஆனால் ஊர் பறிபோன பிறகு நான் என்ரை மனிசியிட்டை நெடுகலும் கேட்பன். 'வாவனப்பா போய்க் கொழும்பிலை இருந்து தொழில் பாப்பம். நீ உண்ரை ரீச்சிங்கையும் ரியூஷனையும் செய்ய நானும் எண் ரை லோத் தொழிலையும் ரியூஷனையும் செய்து கொண்டு நல் லாய்
(

உழைக்கலாம்” எண்டு. மனிசி மறுத்துப் போட்டுது. தனி ரை சகோத ரங் களை, கலி யாணம் கட்டாததுளை அங்கை நடுத்தெருவிலை விட்டிட்டு வரேல்லாதெண்டு. பேந்து அவான்ரை தம்பியார் முதலிலும் தமையன் பேந்தும் செத்த பிறகு தான் என்னோடை கொழும்புக்கு வந்தது. 70 வயசிலை வந்து என்னத்தைக் கொழும்பிலை உழைக்கிறது. சலரோகமும் துவங்கியிட்டுது. வீட்டா லை வெளிக்கிட்டால் றோட்டு மூலை முடக்குகளிலை போய் ஒண்டுக்கு நிக்க வேண்டிக் கிடக்கு. இதுக்குப் பிறகு என்னத்தைச் செய்யிறது. இப்ப வீட்டிலை நோயோடை முடங்கிக் கிடக்கிறன்.
எனக்கு பிள்ளை பெற விருப்பமில்லை. சும்மா கொம்பானியன் லைவ்க்குத்தான் நான் கட்டினது. இந்தப் பிள்ளை வராட்டி ஒரு கரைச்சலும் இல்லை. 48 வயசிலை எனக்கு பிள்ளை வரும் எண்டு நினைக்கேல்லை. ஆனால் வந்திட்டுது. என்ரை மகள் வலு கெட்டிக்காரி. கடைசி நேரம் தான் படிப்பள். சோதினைக்கு ஒரு 2 கிழமைக்கு முதலாய் புத்தகத்தை எடுத்துப் படிப் பள். நல்ல மாதிரி சோதினை பாஸ் பண்ணிப் போடுவள். என்ரை மனிசி என்னை விட வலு கெட்டிக்காரி தானே. இது அவளின்ரை மரபணுவின் ரை கெட்டித்தனந் தான். மகள் எந்தநேரமும் தாயோடை இருந்து ஒரே கதை. ஒரே அலட்டல், இரண்டு பேரும் சந்தோசமாய்க் கதைப்பினம். என்னும் என்ரை மகளுக்கு நாப்பது வயதாகேல்லைத்தானே.
இவ் வளவு கால மும் எண் ரை கெட்டித்தனத்தாலை வேலையில்லாமல் இருந்து வந்திட்டன். சிகரட், சுருட்டு எப்பவாவது குடிப்பன். கள்ளுக் கிள்ளுக் கிடையாது.
எனக்கு 37ஆம் ஆண்டு மலேரியாக் காய்ச்சல் வந்தது. அப்ப வரியம் வரியம் அந்தச் சனியன் பிடிச்ச கோதாரி வரும். ஒரே உடல் சோர்வு. அதாலை படிப்பிலை நாட்டமில்லை. அப்ப மருந்து தந்தால் வாயை இறுக்கிப் பிடிச்சுக் கொண் டு மருந் தைக் குடிக் கிறேல  ைல. பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காய்ப் போறேல்லை. அப்ப ஒரு கெட்ட பழக்கத்தை பழகினன். கடதாசிக் கூட்டம். றோட்டுக் கரையளிலை மரங்களுக குக் கீழை சில வீட்டுத திண்ணையளிலை இருந்து அது விளையாடுறது. அது தான் உந்தத் தோட்ட வேலையளுக்குப் போறவை தங்கடை வேலையளை முடிச்சுப் போட்டு கிடைக்கிற இடை நேரங்களிலை வரேக்கை அவையோடை சேர்ந்து நான் ஒரே
2003 زولې دهقانو(هنه -s(که – لمaspخه

Page 21
சிறுகதை காட்ஸ் அடிதான்.
அப்பர் 37ஆம் ஆண்டு ஊரைவிட்டு போன பிறகு வந்த மலேரியா பே நீ தும் இடையிடை வந்தாலும் 42 ஆம் ஆண் டு படிக்கேக்கை கடுமையாய் வந்துது, ஆறு மாதம் தொடர்ந்து பள்ளிக்கூடம் போகேல்லை. அப்ப நாங்கள் திருகோணமலையிலை இருந்தனாங்கள். ரணி டாம் உலக மகா யுத தத் தி ைல திருகோணமலையிலை யப்பான் குண்டு போட்ட நேரம் எல்லாரும் எங்கடை ஊருக்கு ஓடினம். இதுக்குப் பிறகு ஆறு மாதம் பள்ளிக்கூடம் இல்லை. அப்ப எங்கடை ஊருக்குப் போய் இருந்த காலத்திலை அப்பர் திரும்ப வந்து அங் கை உள்ள மிச்சம் மீதிச் சொத்துப் பத்துக்கள் எல்லாத்தையும் வித்து முடிஞ்சு தன்ரை 46 வயதிலை செத்துப் போனார். பேரனும் அடுத்த வரியம் தன் ரை 72வது வயதிலை தன் ரை மகனோடை போயிட்டார்.
பேரண் செதி த பிறகோ நாங்கள் நடுத்தெருவிலை. அந்தரிச்ச அந்த நிலையிலை என்னை திருகோணமலைக்கு என்ரை சித்தப்பா படிப்பிக்கவெண்டு கூட்டிக் கொண்டு போய் தனி னோ டை வைச் சுப் பளர் ளரி க கூட பற் அனுப்பினார். அப்பவும் எனக் குப் படிக்க விருப்பமில்லை. அப்ப எனக்குப் 12 வயது. 42ஆம் ஆண்டு வெள்ளைக்காரன் தன்ரை மிலிற்றிக்கு காம்ப் அடிக்க கூலி ஆக்களை எடுப்பான். அப்ப எனக்கும் கூலி வேலை நம்பர் கிடைச்சுது. ஊரிலை நான் கூலி வேலை செய்யேலாது. நாங்கள் நல்லாய் வாழ்ந்து மடிஞ்ச இடம். அங்கை கூலி வேலை செய்தால் எங்கடை குடும்ப கெளரவம் நிலை குலைஞ்சு போயிடும். ஆனா நாண் திருகோணமலையிலை கூலி வேலை செய்யிறது பெரிய பிரச்சினையா ஒருத்தருக்கும் தெரியாது. அதாலை துணிஞ்சு கூலித் தொழிலிலை இறங்கியிட்டன்.
ஒரு நாளைக்கு 60 சதம் கூலி. மாதச் சம்பளத்திலை அரைவாசி வீட்டுக்கு. மீதியிலை 2/3 என்ரை சாப்பாட்டுச் செலவு. மீதி என்ரை பிறைவேற் செலவுக்கு. காலத்தின் விதி இது. எத்தனையோ பேருக்கு வேலை குடுத்த நாங்கள் நாளுக்கு 60 சதக் கூலி வாங்கினது அப்ப மிகப் பெரிய விஷயம் தான்.
இப்பிடியே இருக்கேக்கை திருகோண மலையிலை அரிசிப் பஞ சம எனக் கு திருகோணமலையிலை கூப் பணி இல்லை. அதாலை தொடர்ந்து திருகோணமலையிலை
 

என்னாலை இருக்க முடியாமல் திரும்ப ஊருக்குப் போய் எனிப் படிச் சாத் தான் உயிரோடை யாழ்ப்பாணத்திலை வாழ முடியும் எண்டது தெரிஞ்சு படிக்க விரும் பித் தெண் டிச் சண்க மாப்பாணர் குடும்பத்தார் நாங்கள் ஊரிலை கூலி வேலை செய்தும் பிழைக்கேலாதே.
நான் வாழப் படிக்கக் காசுக்குச் சீதனம் வாங்கிக் கலியாணங் கட்டிப் பிள்ளையைப் பெத் துப் பிள்ளையைக் கட்டிக் குடுக் கக் காசில்லாமல் திரும்பத் திரும்ப வாழ வைக்கக் s it gിങ് ഓ it ID ബ് 6T Ibi 35 6ÖDL பரம ப ரைப் பெருமையோடை இருக்கிறன். இருக்கிறம்.
நான் செய்த பாவம், என்ரை மச்சாள் இன்னமும் கலியாணம் கட்டேல்லை. நான் என்ரை மனிசியைக் கட்டியிருக்கப்படாது. பிள்ளையைப் பெத்திருக்கப்படாது. என்ரை பிள்ளைக்கிப்ப 31 வயதாகுது. கையிலை காசில்லை. சீதனம் குடுக்க வழியில்லை. காலப் பிழை. எல்லாம் முடிஞ்சுது எல்லாம் முடிஞ்சுது.
எங் கடை மாப் பாணர் குடும் பங்கள் காசில் லாமல் பழம் பெருமையைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
ആ\n\ N
ஆக்கங்களை வரவேற்கிறது
தாயகம் சஞ்சிகைக்கான சிறுகதை, கவிதை, கட்டுரை, முன் அட்டை, பின் அட்டைகளுக்கான ஒவியங்கள் ஆகியவற்றைப் படைப்பாளர்களிடமிருந்து வரவேற்கிறோம். ஆசிரியர் குழுவினால் தகுதி கண்டு பிரசுரிக்கப்படும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Editor, &5. 5606°55|TöFootb Thayakam பிரதம ஆசிரியர் #59/3, ஆடியபாதம் வீதி, Waidya Road, கொக்குவில் Dehiwela தொ. பே. 021 2223629 TP 5024358
238 1603
ܢܓܠ
ഗ്ഗ
| 2003 ژولس رضا رواهان چاه - لمه oی

Page 22
விந்தை மனிதர்
(LD ந தி யெ ல லாம் ரா சி பல னி பாக கிறதெண் டாச் சில பேப் பர் களிலை மட்டுந்தான் பாக்க ஏலும். இப்ப என்னெண்டாக், காலைச் செய்தியைச் சொல்லாவிட்டாலும் ராசி பலன் சொல்லாமல் ஒரு றேடியோ, ரி.வி. கிடையாது. அதுவும் போதாமை எண்ணுக்கும் எல்லோ பலன் சொல்லத்-தொடங்கி விட்டாங்கள். நான் சோதிடத்தை நம்பாவிட்டாலும் சும்மா ஒரு பொழுது போக்குக்கு எண்டு தமிழ்ப் பேப்பரிலை இடையிடையே பாக்கத் துவங்கி அதுவே கொஞ்சம் கொஞ்சமாகச் சிலருக்குச் சிகரெட் சாராயம் பழகிற மாதிரி எனக்கும் பழகிப் போய்ச் சில நாளிலை உள்ள தமிழ்ப் பேப்பரெல்லாம் ராசி பலன் பாத்து முடிஞ்சு இங்கிலிஸ் பேப்பரிலையும் ஒண்டு ரண்டைத் தட்டிப் பாப்பன். இங்கிலிஸ் அப்ப அவ்வளவு ஓடாது எண்டாலும் ராசி பலன் பாக கிற அளவுக் கு ஒடும , சிங் களப் பேப்பர் களிலையும் பாத்திருப்பன், ஆனாச் சிங்களத்திலை பஸ் போற இடத்தை விட வேறை
குருநாதர் கு ஒண்டும் வாசிச்சு விளங்காது. அப்ப சிங்களம் படியாதை எண்டு சொன்ன தலைவர்மாரின்டை பிள்ளையஸ் யாரையேன் தெரிஞ்சிருந்தா அவையிட்டைக் கேட்டுக் கண்டு பிடிச்சிருக்கலாம். எனக்கு அப்பிடி ஒருத்தரையுந் தெரியாது.
விசயம் என்னெண்டா எல்லாத்திலையும் பாத்துப் பலனை அறியிறகில்லை. ஏனெண்டா ஒண்டுக்கொண்டு ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒண்டு பொருள் வரவு எண்டா மற்றது வீண் செலவு எண்டும், மற்றொண்டு சமபலன் எண்டும், இன்னொண்டு அலைச்சல் எண்டும், வேறொண்டு மன நிம்மதி எண்டும் முதல் முதலாப் பாக்கிறது நல்ல பலன் எண்டால் பிறகு ஒண்டையும் பாக்கிறதில்லை எண்டு தான் இருந்தனான். பிறகு இந்தச் சூதாடிறவை மாதிரி வேறெங்கேன் அதை விட நல்ல பலன் இருக்கும் எண்டு ஆசைப்பட்டுக்
(
 

கடைசியாக் காலவிரயம் எண்டு ஒண்டு சரியாப் பலன் சொல்லும். எனக்கு இவங்கள் எப்பிடி நாள் பலன் சொல்லிறாங்கள் எண்டு தெரியாது. கந்தோரிலை கூட வேலை செய்த ஒருத்தன், பேர் பீரிஸ், சிங்களவனில்லை, தமிழன், சிலாவப் பக்கம். தனக்குப் பேப்பருக்குப் பலன் எழுதுகிற ஒருதி தனை நல லாத் தெரியும் எண் டு சொன் னான அவனோ டை போய் கி கதைக் கே லுமோ?’ எண் டு கேட்டணி . ஏலுமெண்டான். ' எண்டாலும் ஒரு கொண்டிசன், அவனை பாறுக்குக் கூட்டிக் கொண்டு போக வேண்டியிருக்கும்’ எண்டான். இதுதான் அந்த நாளிலை 'சாராயத்தைக் குடுத்துப் பூராயத்தை வாங் கு’ எண் டிறவையோ தெரியேல் லை. சாராயச் சிலவுக்குப் பெறும் எண்டு ஒமெண்டன்.
ஒரு நாள் பாறிலை சந்திச் சம் , ஆளின் டை பேர் என்னவோ ஒரு மூர்த்தி, எழுதிறது வேறை பேரிலை. அது ஒரு தற்காப்பு நடவடிக்கை எண்டு நினைக்கிறன். கன விசயங்
துலாம்
20) * ー *シ"のーヘッう ZOOE

Page 23
விந்தை மனிதர்
கதைச் சம் எண் ன விஞ்ஞானத்தின் படி எழுதிறீங்கள்?’ எண்டு கேட்ட நேரம் ஆள் நல்ல லோட்’, ‘என்டை குருநாதர் ஆர் தெரியுமோ?” எண்டு கேட்டார். கேட்டுப் போட்டு நாங்கள் வாய் திறக்க முன்னம் 'இலஸ்ரேட்டட் வீக்லி ஆசிரியர் குஷ்வந்த் சிங்' எண்டார். எனக்கு அப்பிடி ஒரு பேப்பர் வாறதே தெரியாது. "இங்கை எடுக்கலாமோ?’ எண்டு கேட்டன். 'நிண்டு கனகாலம்’ எண்டார். ' அதில்லைத் தம்பி, குஷ்வந்த் சிங் என்ன செய்தார் தெரியுமோ?” எண்டு கேட்டார். 'இந்திரா காந்தியின் டை ஒப்பரேஷன் பளு ஸ்ற்றர் பற்றிப் புத்தகம் எழுதினவரோ?” எண்டு பீரிஸ் கேட்டான். 'ஓ! அவர் தான். ஆனாத், தெரியுமோ எண்டு நான் கேட்டது வேறை கதை. குறுக் கிடாதை. சொல்லுறன். கேள்!’ என்றார் மூர்த்தி. அவர் சொன்ன கதை என்னெண்டால்:-
குவர் வந்த் சிங் வீக்லியிலை உதவி ஆசிரியரா இருக்கேக்கை அதிலை வார பலன் வரும் . பல னி எழுதுகிறவர் தபா லி லை அனுப்பினது ஒரு முறை வரப் பிந்திட்டுது. வீக்லி பாக்கிறவை பலர் வார பலன் பாக்கிறவை. அதாலை குஷ்வந்த் சிங்கிட்டை ஆசிரியர் நீ தான் யாரையேன் பிடிச்சு எழுதுவிக்க வேணும் எண் டு போட்டார். குஷ் வந்த் சிங்குக் குச் சோதிடமும் தெரியாது, ஒரு சோதிடரையும் தெரியாது. கொஞ்சம் பழைய பேப்பர்களைப் பிரட்டிப் பாத்துக் கைக்கு வந்த மாதிரிப் பன்னிரண்டு பலனை எடுத்து ஒவ்வொண்டை ஒரு ராசிக்கு எண்டு தெரிஞ்சு எழுதிக் குடுத்துப் போட்டார். அந்தக் கிழமை வீக்லிக்கு நிறையக் கடிதங் கள் வந்து தாம் . இந்த மாதிரி அச் சொட் டாத் தங்களுக்கு யாரும் பலன் எணர் டு எ ல லாரும் பாராட்டியிருந்தினையாம். குஷ்வந்த் சிங்கிட்டை ஆசிரியர் யார் சோதிடர் எண்டு கேக்க அவர் நடந்ததைச் சொல்ல அதன் பிறகு வீக்லியிலை வார பலன் வெளியிடுறதை நிப் பாட் டிப் (3UT 1960Tib.
அப்ப மூர்த்தியும் குஷ வந்த் சிங் ஸ்ரையிலிலை தான் பலன் எழுதிறார் எண்டு விளங் கிச் சுது. வேறையுங் கொஞ சம ஐமிச்சமிருந்துது, கேட் டண் . " " இங்கிலிஸ் பேப்பரிலை ஆட்டின் ரை படம் போட்டு ஏரீஸ் மார்ச் 21 - ஏப்பிறல் 20 எண்டு போடுகினை. தமிழிலை மேட ராசி எண்டு அதே ஆட்டைக் காட்டி ஏப்பிறல் 14 துவங்கி மே 13 வரைக்கும் எண்டு சொல்லுகினை 'வானத்திலை திரியிற
(

ஆடு மாடுகள் வேறை வேறையோ?” எண்டு கேட்டன். 'தமிழ்ச் சனத்துக்கு எழுதிறத்திலை ஒரு வசதி இருக்குது கண்டியோ? ஒரு ராசியைச் சொன்னா ஒருத்தன் இங்கிலிஷ் கணக்குப் பாப்பான். பலன் பிடியாவிட்டாத் தமிழ்க் கணக்குப் பாப்பான். ரண்டுக்கும் ஒரே ராசி எண்டாச் சென்ம லக்கினம் எண் டு பாப் பாண். ஏதேனொண்டு பிடிச்சிருக்கும் தானே’. பார்க்காறன் எங்களைப் போகச் சொல்ல முதல் எப்பிடி மூர்த்தியாலை ஒரு பிரபலமான ராசி பலன்காரனா நிண்டு பிடிக்க முடிஞ்சுது எண்டு கேட்டன். அவர் சிரிச்சுக் கொண்டு 'உன்னட்டைச் சொன்னா என்டை பிழைப்பிலை மண் விழுந்திடும் எல்லோ’ எண்டு சொல் லிப் போட்டுப் ' பகிடிக் குத் தான் சொன்னன். நான் எழுதுகிற பலனைக் கவனமா வாசிச்சுப் பார் விளங்கும்’ எண்டார். சொல்லி முடிய பார்க்காறன் எங்களைக் கழுத்தைப் பிடிச்சு நெட்டித் தள்ளாத குறை.
- புவன ஈசுவரன் -
எனக்கு மூர்த்தி பலன் எழுதுகிற முறை அப்ப விளங் கேல் லை. ஏனெண் டா அவர் இங்கிலிசிலை எழுதிறவர். சொன்னானெல்லோ அப்ப எனக்கு அவ்வளவு இங்கிலிஸ் ஓடாதெண்டு. எண்டாலும் அதுக்குப் பிறகு நான் ராசி பலன் பாக்கிறதை நல்லாக் குறைச்சுக் கொண்டன். இப்ப காலமையிலை றேடியோ ' மேடம் - அதிட்டம், இடபம் - துரதிட்டம், மிதுனம் தைரியம் , கடகம் - பயம் .' எண் டு இழுத்திழுத்துச் சொல்லிறதைக் கேக்க எரிச்சல் எரிச்சலா வரும். என்ன செய்ய றேடியோ அடுத்த வீட்டிலை இருந்து என்டை பாத்றும் யன்னல் வழியா எல்லோ பலன் சொல்லுது தலைவிதி! கறுமம்!!
பீரிஸ் பிறகு இல லை வேறை வேலைக்குப் போட்டான். சில காலம் முந்தி ஒரு நாள் மூர்த்தி எழுதிற பலனை எடுத்துக் கவனமா வாசிச்சன். ஆள் கெட்டிக்காறன் தான். ஒவ்வொருத்தருக்கும் ஒண்டு ரண்டைக் கொஞ்சம் நல் லதாயும் ஒண்டு ரண் டைக் கொஞ்சம் பயப்படுகிற மாதிரியும் எண்டாலும் ஆகலும் வெருட்டாமை எழுதுவார். அதைவிட ஒரு ராசிக்கு நல்லாச் சொல்லிற விசயம், குடும்பத்தில் மகிழ்ச்சி எண்டு இருந்தா அடுத்த ராசியிலை மாறிக் குடும்பத்தில் சச்சரவு எண்டு வரும். சாவு, விபத்து, சுவீப்பில் பணம் கிடைக்கும் எண்டு ஒணி டும் இராது. இந்த நாளிலை
2003 مxضھا کہ a scy (کہ جب لorespoNکے

Page 24
விந்தை மனிதர்
எழுதுகிறதெண்டா விலைவாசி ஏற்றம், போக்குவ செலவு என்கிற மாதிரி ஏதாவது ஒண்டை எடுத்து ஆறுதல் சொல்லிற மாதிரியும் தொழிலில் முன்ன்ே சொல்லி விட்டாத் தொல்லையில்லை. எல்லாருக்கு கதை. பேப்பரை வாசிக்கிறவை ஆர் எண்டு அ ராசிபலனின்டை கெட்டித்தனம்.
ராசி பலனிலை ஒரு நன்மை என்னெண் ஒருத்தரும் அதை நம்பி ஒண்டிலையும் இறங்கா பிறகு ராசி பலன் எழுத யோசினை. இப்பவும் இலக்கியக்காறர் போட மாட்டினையாம்.
ஒலிந்து கொள் 2: எழுந்து நி3
தயவு செய்து ஒ_ன் ஒளிந்து கொள். நீ - 9 ամի) கடத்தப்படலாம் கைது செய்யப்படலாம் அறிக் இல்லையெனில் ܓܝ கொல்லப்படலாம். - நிழல்
e - திரை
&bs BITU356T &lւքՑ5 உன்னைக் கடித்துக் குதறக்கூடும் ଜୋରjରୀ தலையையும் உடலையும் அநீதி வெட்டி வேறாக்கி ܡ வேறு வேறு திசைகளில் - ஒடுக் வீசியெறியக்கூடும். 55600
இ_ன் தமிழ், முஸ்லிம், சிங்களம் Ց5ւմ: நீ யாராக இருந்தாலும் இதில் எதனடிப்படையிலும் தாற். எந்தச் சலுகையும் வழங்கப்படாது. புரிந்: வக்கிரங்களின் அரங்கேற்றங்களுக்கு புரிந்: வரைமுறைகள் ஏதுமில்லை.
55UI6). வங்குரோத்து அரசியலின் ஒளி வாழ்வை நீளமாக்க ஒப்ப கொன்றொழிக்கப்படுகிறது மனிதம். ஓங்க
உன், GTԱ56 இறந்த உடலத்தில் କ୍ଷୌରାଗ இறுதியாய் உயிர் நீத்த JULIU இதயத்துடிப்பு இப்ே
மனிதத்தின் மரணச் செய்தி வாசிக்கும்
brweb -7.
 
 

ரத்து நெரிசல், பணத் தட்டுப்பாடு, மிகுதியான ஒவ்வொருத்தருக்குஞ் சொல்லலாம். அதோடை ாற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி எண்டும் ஒண்டைச் தந் தேவை என்ன? பிராக்குக் காட்டிறதுக்கு ஒரு றிஞ்சு அதுக்குத் தக்கினபடி எழுதுகிறது தான்
டா எல்லாரும் அதைப் பாப்பினம். எண்டாலும் யினம். நானும் வேலையிலை இருந்து ஓய்ஞ்ச எழுதலாம். எண்டாலும் இந்தத் தேசிய கலை
கொலை ரின் மதிப்பிறக்கத்தை கை செய்யும்.
யுத்தம் மறைவுக் கொடுமை என ழகாய்ச் செய்திகள் சொன்னாலும் ரிவெளியாய் நிற்கும் திக்கெதிராய் குரலேதும் இல்லை
கப்பட்டோரின் அவலங்களுக்கு க்கில்லையாதலால்
தல் கைது கொலை வல்லுறவு ல் ஏதேனும் ஒன்றின்
பரியம்
தவரைத் தவிர து கொண்டவர் யாருமிலர்.
செய்து ந்து கொள் அல்லது ாரியை நிறுத்திவிட்டு காரமாய் எழுந்து நில்,
மையில் வந்த எமன் ாளை வானில் வரும் ப் புராணக் கதை
பாது, s கிருஷ்ணா 士
2ణN - ఇంతలv 2008

Page 25
சிறுகதை
சோமு
@ě58FITüò ć9 ÖLDATG)) UTGIT SUIT
சொந்தம்:
 
 

Ourg2 து எழுத்துப் பிறந்த காதை
- சோ, ஆதரசனன் -
எனக்கு அப்ப இரண்டு, இரண்டரை வயசிருக்கும் எண்டு நினைக்கிறன். ܡ அப்பு எண்டால் எனக்கு நல்ல விருப்பம். அவர் நல்ல வடிவு. நல்ல நிறம். மேவி இழுத்த நெளித் தலைமயிர் என்னை இடுப்பிலை இரண்டு கையாலையும் பிடிச்சு மேல உயரத்துக்கு துக் கித்துக் கி விளையாடுவார் . எண் ரை வயித்திலை தன்ரை வாயை வைச்சு 'புறும்’ எண்டு ஊதுவார். எனக்குக் கூச்சம் காட்டுவார். பிறகு என்ரை முகத்திலை நல்லாக் கொஞ்சு கொஞ்செண்டு கொஞ்சுவார்.
என்ரை அப்புவுக்கு மீசை இல்லை. ஒவ்வொரு நாளும் சேவ் எடுத்திருப்பார். அவற்றை முகம் நல்ல பச்சை நிறமாயிருக்கும். என் னைக் கொஞ்சேக்கை அவற்றை அரும்புத் தாடி என்ரை வயித்திலையும் முகத்திலையும் படும். அது எனக்கு வலு ஆசையாய் இருக்கும்.
நானும் அப்புவும் நல்ல முஸ்பாத்தியாய் இருப்பம்.
அப்பு படுத்தார் எண்டால் அவரை விடமாட்டன். அவரை ஏறி மிதிப் பண் அவரிலை ஏறி உறுளுவன். கட்டிக் கட்டிப் பிடிச்சுக் கொஞ்சுவன். நித்திரை கொள்ளுறதெண்டால் அப்புவின் ரை இடுப் புக்கு மேலை காலைப் போட்டுக் கொண்டுதான் படுப்பன்.
அப்பு காரைநகர் நேவியிலை ஸ்ரோர் கீப்பராய் வேலை செய்யிறார். அவர் வேலையாலை வந்ததும் தன்ரை மருமேஸ் குஞ்சு வீடு, சகோதரி அன்னம் வீடு, தமையன்மார் சுளுத்தார், நடலம் வீடு எண்டு வெளிக்கிடுவார். ஒரு நாளைக்கு ஒண்டு ரண்டு வீட்டுக்குத்தான் போக ஏலும்,
அப்பு அப்பிடிப் போகேக்கை தனியப் போகார். என்னையும் கூட்டிக் கொண்டு தான் போவார். என்னை விட்டிட்டுப் போக மாட்டார். தன்ரை தோளிலை என்னைத் தூக்கி இருத்துவார். நான் அவற்றை தலையை நல்லாய் கட்டிப் பிடிச்சபடி எல்லா இடத்தையும் பாத்துக் கொண்டு காவடி
3) éon - 13-V192v.ö. 2008

Page 26
சிறுகதை
புதினம்:
அலகு அசைவு:
விளையாட்டுப்
ஓட்டப் போட்டி:
சாப்பாடு:
enw82 7
 
 

போவன். அது எனக்கு வலு புளுகமாய் இருக்கும்.
அப்பு ஒழுங்கையாலை இப்பிடி உலாத்துக்குப் போறதெண்டால் எவ்வளவு நல்லம், ஒழுங்கேலை நிக்கிறவை, போறவை, வாறவை எல்லாரும் நிண்டு கதைப்பினை. ஏதோ கணக்கப் புதினங்கள் கதைப்பினை. எனக்கு அதெல்லாம் கேக்க நல்ல விருப்பம்.
அப்பு போற ஒழுங்கை வேலிப் படலையளிலை நிண்டு பொம்பிளை மனுசியள் புதினங்கள் கேப்பினை. அப்புவும் அதுகளுக்கு கதையள் சொல்லுவார். அந்த நேரங்களிலை சில பெரிய அக்காமார் வேலிப் பொட்டுக்காலை அப்புவைப் UT"|1560TLö.
அப்பு சில நேரங்களிலை அலகை ஆட்டிக் கொண்டிருப் பார் . அப்ப அவற்றை முகக் கன்னமெல்லாம் ஆடும். அதைப் பாக்க நல்ல வடிவாய் இருக்கும். அவர் ஆட்டுறது (3LT6) நானும் ஆட்டத் தெண்டிப்பன். ஆனால் அப்பிடிச் செயப்படாது. இப் பவும் அப் பிடிச் செய்து பாக்கிறனான். சரி வருகுதில்லை.
வாசிகசாலை விளையாட்டுப் போட்டி வரியம் வரியம் நடக்கும். விளையாட்டுப் போட்டி எண்டால் ஒட்டப் போட்டி, கயிறிழுவை, தயிர்முட்டி அடித்தல், வாயிலை கறண்டி வைச்சு அதிலை தேசிக்காய் வைச்சபடி விழுத்தாமல் ஒடுறது, தலையிலை செம்பு வைச்சபடி பிடிக்காமல் விழுத்தாமல் ஒடுறது, தடை ஓட்டம் எண்டு சாக்குக்கை காலுகளை விட்டுப் பாய்ஞ்சு பாய்ஞ்சு ஒடுறது, நூலிலை கட்டியிருக்கிற பாணைக் கையாலை எடுக்காமல் வாயாலை கவ் விக் கவ்விச் சாப்பிட்டு முடிக்கிறது, பலூனை ஊதி உடைக்கிறது, அம்மன் கோவில் வீதியாலை கோவிலைச் சுத்தி ஒடுறது எண்டு கன கன விளையாட்டுக்கள் நடக்கும்.
எண் ரை அப்பு ஒட்டப் போட்டியளிலை முதலாவதாய் வருவார். எல்லாரும் கைதட்டி, கைதட்டி ‘சோமு விடாதை, விடாதை’ எண்டு கத் திக் கத் தித் துளிர் ஞவினம் . நானும் அவையோடை சேந்து துள்ளுவன்.
அப்பு வேலையாலை வரேக்கை ஒவ்வொரு நாளும் றொட்டி, இறைச்சி, ஜாம், பட்டர் எண்டு சாப்பாடெல்லாம் கட்டிக் கொண்டு வருவார். எங்கடை வீட்டிலை மஞ்சள் ஈயக்கடதாசி ஒட்டின பச்சை, சிவப்புப் போத்திலுகள் இருக்கும். அதை
2) ఆలN - 8-0తovew 200టి

Page 27
சிறுகதை
brweb - 7
ஜாம்
 

அப்பு திறக்கேக்கை உஸ்’ எண்டபடி நுரை தள்ளும், பாக்க நல்ல ஆசையாய் இருக்கும். அப்பு அதைக் குடிப்பார். எனக்கும் தருவார். ஐயோ, அது நல்லாக் கைக்கும். அது பாக்கத் தான் வடிவு. குடிக்க எனக்குப் பிடிக்காது.
அப்பு கொண்டாற சாப்பாடுகளைச் சாப்பிடச் சொல்லித் தருவார். எனக்கு அதுகள் அவ்வளவு பிடிக்காது. எறிஞ்சு போடுவன். உடனை நாய் கெளவிக் கொண்டு போகும். அம்மா உடனை திட்டுவா. ஜாம் பாக்க அருவருப்பாய் இருக்கும். களி களியாய். அதைக் கண்டாலே எனக்கு ஒரு எரிச்சலாய் இருக்கும். துண்டறப் பிடியாது. சிந்திச் சிந்தித்தான் சாப்பிடுவன்.
அப்பு வேலைக்குப் போறதுக்கு ஒரு றலிச் சைக்கிள் வைச்சிருக்கிறார். வேட்டி சேட் தான். உடுக்கிறவர். விடியப்பறத்திலை சேவலுகள் கூவும்.
எங்கடை வளவு நல்ல பெரிய வளவு, வீடும் நல்ல பெரிசு பெரிய அறை, குசினி, தாவாரம், இரண்டு பக்கம் நீளமான திண்ணை, தலைவாசல், வெளிக் குந்து உள்ள பெரிய மணி வீடு. வளவுக் கை ஒரு இருபது, இருபத் தைஞ்சு தென்னை மரம் நிக்குது.
தென்னை மரத்திலை கறுப்புப் பெயின்ராலை பாம்பு மாதிரி அப்பு கிறிவிடுவார். ஏனெண்டால் அணிலுகள் மரத்திலை ஏறி இளனி குடிக்க அரிக்காது எண்டாக்கும் எண்டு நினைக்கிறன். வளவுக்கை பெரிய பிலா நிக்குது. நல்லாய் பிலாக்காய்கள் காய்ச்சுத் தள்ளும்.
பிலாப்பழத்துக்குக் குறையில்லை. வெள்ளைக் கொழும்பான் மாமரம் நிக்குது. அது காயிலை பிடுங்கிச் சாப்பிட நல்லாய் இருக்கும். பழத்துக்கு அவ்வளவு சரியில்லை.
கோழியள் நிறைய வளருது. தாவாரத்தோடை இருக்கிற சாக்குக்கை ஏறிப்படுத்துவிட்டு முட்டை போட்டதும் “கொக். கொக். கொக்” எண்டு கத்தினபடி பறக்கும். அம்மாஉடனை முட்டையைப் போய்ப் பொறுக்கி எடுப்பா.
ஆடுகளும் நிக்குது. ஆடு வரியம் வரியம் குட்டி போடும். அப்ப நல்ல ஆட்டுக்கடும்பு எங்களுக்குக் கிடைக்கும். அது நல்ல ருசி. மாடும் கண்டு போட்டபடி நிக்குது. மாட்டுக்கு பிலாவிலை இருந்து பழுத்து விழுகிற பிலா இலையளை
2ణN - ఇ-చితov 200లి

Page 28
சிறுகதை
கிணத்தடி:
罗 参 ޖީހްމަ سته ༽寻 και οι , ཅེ ޓޮއިތޫނަނަށަހ 丁 a. ဖါးရှူး) ( ピエ
H
enwe2 = 7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எடுத்துப் போட்டால் நல்லாச் சாப்பிடும். ஆச்சி வயலுக்கு ஒவ்வொரு நாளும் காலமையிலை போய் வருவா. ஆடு, மாட்டுக்கு நல்ல புல்லுக் கொண்டந்து போடுவா. அதுகள் நல்லாச் சப்பிச் சப்பிச் சாப்பிடுவினை. அவையின்ரை வாயைப் பாக்க நல்ல ஆசையாய் இருக்கும். இடைக்கிடை புண்ணாக்கு, பழஞ்சோறு எண்டு கரைச் சுக் கரைச்சு வைப்பினை. -
எங்கடை வீட்டுக் கிணத்துத் தண்ணி நல்ல தண் ணி. அதாலை ஊராக் கள் , அயலார் எல்லாரும் வந்து தண்ணி அள்ளிக் கொண்டு போவினை. எங்கடை வீட்டுக் கிணறு மற்றவை வீட்டுச் செடிக் கிணறுகள் மாதிரி அரை குறையாய் இல லை. நல லாய் அடித் தண்ணியளவுக் குச் சீமெந்து பூசியிருக்கும். பட்டைத் தண்ணியடியும் அடிக் கிணற்றிலையுந் தான் கல்லுகள் தெரியும். கிணத்தைச் சுத்தி உயரக் கிணத்துக் கட்டு கட்டியிருக்கு.
கிணத்தின் ரை இடப் பக்கம் நல்ல பூவரசங் கதியாலுகள் போட்ட ஆடுகால் இருக்குது. அதிலை தென் னையிலை செய்த துலா போட்டிருக்கு அடித்துலாவிலை நல்ல பலமான கல்லுகள் கட்டியிருக்குது. அதாலை வலு சுகமாய் எல்லாரும் தண்ணி அள்ளுவினை. கிணத்து முத்தம் பாசி படாமல் எப்பவும் கழுவினபடி இருக்கும். எங்கடை வீட்டுக் கிணத்துக்கு இரண்டு குண்டுகளும் தோய்க் கிற அடிக் கல்லும் இருக்குது. சின்னக் குண்டுக்கை தண்ணியை நிரப் பிப் போட்டுத் தோய்ப்பினை. பெரிய குண்டுக்கை நல்லாத் தண்ணி நிறைஞ்சால் அதுக் கை விழுந்து நீந்தலாம். அந்தளவு வசதியாய் இருக்கும்.
ஆனால் கிணத்தடித் தண்ணியிலை காலமேலை குளிக்கிறதுக்கு குளிராய் இருக்கும். அதாலை நான் குளிக்கப் பின்நிற்பன். என்னை அம்மா இழுத்துக் கொண்டு போய் வெறும் மேலிலை தண்ணியை படாரெண்டு ஊத்தி விடுவா. அழுது குளறுவன். அதுக்குப் பிறகு பெரிய குண்டுக்கை இறங்கிக் கூத்தடிப்பன். அம்மா சவுக்காரம் எடுத்து என்ரை உடம்பெல்லாம் இறுக்கித் தேய்ச்சுக் குளிப்பாட்டுவா. நான் அழுவன். எனக்கு அது பிடிக்காது. சவுக்காரம் கண்ணுக்கை போய் எரியும்.
-- 'சுகம். சுகம். வளர். வளர். எண்டு சொல்லி, மூண்டு தரம் தண்ணியை அம்மா வாளியால வாப்பா. அப்பதான் எனக்கு உயிர் வரும். அதோடை குளிப்புப் படலம் முடியும்.
ごo~ - *ッ"のらッう zooa

Page 29
சிறுகதை
இஞ் சாயப்":
வீட்டு முத்தம்:
* அம்மா’:
 
 

அப்பு அம்மாவை இஞ்சாய், இஞ்சாய் எண்டுதான் கூப்பிடுவா. நானும் அது போலை இஞ்சாய் எண்டு தான் அம்மாவைக் கூப்பிடுறனான். அப்பு இஞ்சாய்' எண்டு கூப்பிடுறது பற்றி அம்மாவுக்குக் கோவம் இல்லை. ஆனால் நான் அப்பிடித் தன்னைக் கூப்பிடுறது அவவுக்குப் பிடிக்கேல்லை. அது எனக்குத் தெரியாது.
ஒரு நாள் கால மையெண்டு நினைக்கிறன் . "இஞ்சாய்’ எண்டு எதுக்கோ கூப்பிட்டு விட்டன். அம்மா டபக் எண்டு என்ரை கையை எட்டிப் பிடிச்சா. வீட்டு முத்தத்துக்கு இழுத்துக் கொண்டு போனா. வீட்டு முத்தத்திலை நல்ல மண் நிறைய இருந்துது. என் னை வலுக் கட்டாயமாய் இருத்தினா.
என்ன சொன்னனி? இந்தா இரு. இதைச் சொல்லிச் சொல்லி எழுது எண் டு எண் ரை கையைப் பிடிச்சு விரலை மடக்கி பெருவிரலுக்கு அடுத்து இருக்கிற இரண்டாவது விரலை தன்ரை கையாலை பிடிச்சபடி மண்ணிலை தேய்ச்சு எழுதுகிறா. 'அ' எண்ட எழுத்தை அழுத்தி எழுதுகிறா. என்ரை விரல் மண்ணிலை தேய்ஞ்சு எழுதுகிது. சொல்லு எண்ணுறா. நானும் அழுது அழுது அம்மா சொல்லுறதை அவவின் ரை வாயைப் பாத்தபடி ' ஆனா’ எண்டு சொல்லுறன். பிறகு இரண்டாவதாய் 'ம்' எண்ட எழுத்தை எழுதுகிறா. அதே போல அழுது கொண்டு "ம்மன்னா’ எண்டு சொல்லுறன். பிறகு கடைசி எழுத்து 'மா' எண்டு எழுத அப்பிடியே 'மாவன்னா' எண்டு சொல்லுறன். பிறகு மூன்று எழுத்தையும் சேர்த்து 'அ.ம்.மா.’ எண்டு அழுது அழுது படிக்கிறன்.
இது தான் என்ரை எழுத்தின் ஆரம்பம். இதுதான் என்ரை படிப்பின் ஆரம்பம். இதுதான் என்ரை அம்மா பற்றிய படிமம். எண்ணில அம்மா ஏற்படுத்திய தாக்கம்.
இதாலைதானோ என்னவோ அப்புவை இன்னும் இன்னும் எனக்கு நல் லாயப் ப் பிடிச் சுதோ தெரியேல்லை.
இப்ப இப்ப நினைச்சாலும் அப்பு எண்டால் எனக்குச் சரியான ஆசை. எண்டாலும் அம்மாவை
நினைச்சாப் பாவமாய் கிடக்குது
(அடுத்து - இனிப்பு கசந்த போது மணர்ணில் புதையுணர்ட் காதை)
širon - ovov 2008

Page 30
கவிதை
பயங்கரவாதிக
O)
காலாவதியான ஒரு
கொக்காக்கோலாவை சுற்றி எறும்புகள் சூழ்ந்திருந்தன.
எனது வஸ்திரங்கள் கரைய அதிகாரத்தின் முன் நிருவானமாய் நின்றிருந்தேன். அது என்னை அடிமையாக்கி பயங்கரவாதி என அழைத்தது.
புரட்சி ஒன்றின் விளிம்பில் அடிமை பீடிக்கிறதை நான் உணர்ந்தேன். கூச்சலிட்டு சொல்லி உதறுகிறேன்.
சனங்கள் நிறைந்த எனது கிராமத்தின் மேலாக வேக விமானம் ஒன்றை உக்கிரேன் விமானி ஓட்டுகிறான்.
பயங்கரவாதிகளுக்குள் பதுங்குகுழிகள் பதுங்குகின்றன.
குழந்தைகள்
தாய்மார்கள் முதியவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என ஐ.நா. அறிவித்தது.
நான் பயங்கரவாதி என்பதை உரத்துச் சொல்கிறேன்.
என்னை அமெரிக்காவின் நேர்மை தேடிவருகிறது ஐ.நா. படைகளும் அமெரிக்காப் படைகளும் இந்தியப் படைகளும்
(

R
*。
蠢
இலங்கைப் படைகளைப்போல எனது தெருவுக்கு வர ஆசைப்படுகிறார்கள். நான் அப்பிள் பழங்களை புசிப்பதற்கு ஆசைப்பட்டிருக்கிறேன்.
கிரேப்ஸ் பழங்களை உற்பத்தி செய்யத் தொடங்கினேன்.
நான் ஒலிவம் இலைகளை மறந்திருந்தேன். பேரீச்சம் பழங்களை
| 2003 bالظواهرني چاوه - لمroكه

Page 31
கவிதை
உண்ணாதிருந்தேன். எனது பனம்பழங்களை இழக்க நேர்ந்தது.
ஒட்டகங்களின் முதுகில் குவிந்திருந்த பொதிகள் சிதைந்ததை நான் மறந்தேன். எனது மாட்டுவண்டிகள் உடைந்து போயின.
தலைவர்களின் இடைகளில் எண்ணெய்க் குடங்கள் நிரம்பியிருந்தன. அவர்களின் கூடைகளில் எனது பனம்பழங்கள் நிறைக்கப்பட்டிருந்தன.
கனியின் விதை கரைய என்மீது கம்பிகள் படர்ந்தன.
O2)
திருவையாற்றில் குருதி பெருக்கெடுத்து ஓடுகிறது பிணங்களை அள்ளிச் செல்கிறது வெங்காயக் குடில்கள் கருகிக்கிடந்தன. தோட்டம் சிதறடிக்கப்பட்ட செய்தியை அமெரிக்கா வாசிக்கிறது.
இரணைமடுவில் பறவைகளின் குளிர்ந்த சிறகுகள் உதிர்ந்தன. தும்பிகளும் நுளம்புகளும் எழும்ப அஞ்சின. இரணைமடுக் குளத்தில் குருதி நிரம்பிய பிணங்கள் சேர்ந்தன. நோர்வேயின் படகு மிதக்கிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஆயுதங்கள் பெருக எனது ஒளரின் நடுவில் போரிட்டுக் கொண்டிருக்கின்றன.
உலைப்பானைகளும் அடுப்புகளும் சிதைய எனது மனைவி நசிந்து கிடந்தாள்.

எனது வீதியை ஜப்பான் சுருட்டி எடுத்தது. அமெரிக்காவும் ஐ.நாவும் எனது குழந்தையைப் பள்ளியோடு கொன்று விட்டன. பிரித்தானியாவின் சிறையில் நானிருந்தேன்.
ஒரு மாம்பழத்தை தின்பதற்கு எல்லாரும் அடிபட்டு எனது காணியைச் சிதைத்தார்கள். கத்திகளை இன்னும் கூர்மையாக்கி வருகிறார்கள்.
இந்தியாவும் அமெரிக்காவும் எனது தலையில் காலூன்ற அடிபடுகின்றன. சீனாவும் ரசியாவும் எனதுTர் ஆலயத்தின் கூரைகளை பிரித்துப்போட்டன. நான் முதலில் அமெரிக்காவிற்கு பதில் சொல்ல வேண்டும்.
கோதுமையுடன் அமெரிக்காவின் கப்பல் திருமலைக்கு வருகிறது. அமெரிக்கா எனது படத்தை குறித்திருந்தது. ஐ.நா. எனது குழந்தையின் படத்தை குறித்திருந்தது.
எல்லாவற்றுக்காகவும் வலிந்து விழுங்கிய அதிகாரங்களால் நான் பயங்கரவாதி எனப்பட்டேன். ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் நான் தூக்கி எறியப்பட்டேன்.
நமது ஒலங்களிற்குள் பெருகும் குருதி ஆறுகளிற்குள் சந்தை பரவி நிகழ்ந்தது.
அமெரிக்கா இரணைமடுவுக்கு ஆசைப்படுகிறது.
- தீபச்செல்வன் -
9) كraه - لمونh2003 ژل. طارواکونه چ

Page 32


Page 33

*************ঃ
※移
<
ಜಜ್ಜ
প্ত

Page 34
25upissavib
G3FT 6ö GA6OT 6mö (Halvard Soliness) என்ற நடுத்தர வயதான கட்டிட நிபுணர்தான் தலைமைக் கட்டடக்காரர் (Bugmester Solness எனத் தான் நோர்விஜிய மொழியில் நாடகம் அழைக்கப்படுகிறது) நாடகத்தின் நாயகன் - தனது கடும் முயற்சியில் முன்னேறிய இவர் தனக்குக் கீழ் பணியாற்றும் LGBTT6îlaš (Knut Brovik) 6T6öīgo QGTLò ELL நிபுணர் தனக்குச் சவாலாக வளரக் கூடும் என்ற நினைப்பில் அவனை முன்னேற விடாது தடுக் கிறார். அதற்காக புரோ விக் கினி காதலியும் தனது அலுவலகத்திலேயே (36j60b6o urTÜü Lu6J(65LDIT6OT 351Tuu TT (Kaja Fesli) என்ற இளம் பெண்ணை வசப்படுத்தித், தனது கட்டுப்பாட்டிலேயே புரோவிக்கை வைத்திருக்க முயல்கிறான். இவ்வாறு தொடரும் நாடகம் ộmÚ6ð GBL (Hilde Wangel) 6T 6ối D E 6TTLĎ பெண் ணினி வருகையோடு திருப் பம் காண கிறது. ஹில டே, சொல னெஸின் முயற்சிகளில் பிரமிப்பு அடைந்தவளாகவே வருகிறாள். கட்டிடக் கோபுரத்தின் உச்சியில் அவன் முன்பு ஏறிய நினைவுகளோடு மீண்டும் அப் படி ஒரு முயறி சிக் கான தனது கோரிக்கையை முன் வைக்கிறாள். பலர் தடுத் தும் கேளாது ஹரி ல டேயைத் திருப்திப்படுத்த மீண்டும் தனக்காகக் கட்டிய வீட்டின் கோபுரத்தில் ஏறும் சோல்னெஸ் அதிலிருந்து விழுவதோடு அவனது வாழ்வும், கூடவே நாடகமும் துன்பியலாக முடிகிறது. கோபுரத்திலிருந்து சோல்னெஸ் விழுவதனை நேரடியாகக் காட்சிப்படுத்தாமல் ஏனைய பாத் திரங் களினி உணர் வு - நடிப் பு
G 7۔ طبخارجJما^a
 
 

வெளிப்பாட்டில் காட்சிப்படுத்தி அளிக்கையை இலகுபடுத் தியுள் ளார் நெறியாளர் . ஜெயகா நீ தனி , சுதர் சினி, கொலினி , பேர்மினஸ், மோகன்ராஜ், ஒலிவற் ஹரனி, லுமெண்டா என அனைவருமே தத்தமது பாத்திரங்களை உணர்ந்து நடித்திருந்தனர்.
திருமறைக் கலா மண் றம் தனது நிகழ்வுகளில் சில தனி முத்திரைகளைக் கொண்டிருப்பதனை அதன் நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் அவதானித்து இருப்பர். இந்த வகையில் குறித்த நேரத்தில் நிகழ்வுகளை ஆரம்பித்து நடத்தி முடிப்பதில் தயாரிப்பாளர் பேராசிரியர் நீ, மரியசேவியர் அடிகள் தமிழ் கலையுலகிற்கு ஒரு நல்ல முன்மாதிரி என்பதனை விதந்து கூறத்தான் வேண்டும். மே மாதம் 10ம் திகதி மருதானை டவர் மண்டபத்தில் சரியாக மாலை 6.30 மணிக்கு நாடகத்தை ஆரம்பித்தமையும் பரபரப்பான இன்றைய தலைநகர வாழ்வில் தமிழ் இரகசிகர்கள் அமைதியாக நாடகத்தை முழுவதுமாக இரசிக்க உதவியிருந்ததனை மறுப்பதற்கில்லை.
பரந் து விரி நீ துளி ள 90 — 6) 5E5 நாடக நிகழ்வுகளில் சிலவற் றையாவது எம்மவர்களுக்கும் அறிய வைக்கக் கூடிய முயற்சிகளில் உயர்கல்வி நிறுவனங்களும் துறை போனவர்களும் சோர்ந்து விட்ட இன்றைய நிலையில் திருமறைக் கலாமன்றம் 'தலைமைக் கட்டடக்காரரைத் தமிழ் நாடக இரகசிகர்களுக்குத் தந்துள்ளமை தமிழ் நாடக இரகசிகர்களுக்கு மகிழ்வூட்டக் கூடியது.
& 1200 نوسمہ ضروانہ رa c (کہ کے لحarsorضح

Page 35
దౌతపg
( - 77 ح ضارة الماصنع
 

* ー *シ"の2ッう 200&

Page 36
ólud/rLéóluujúUó ég &&g5
) ή
- எரிக் இளையப்பாராச்சி . சிங்கள வழியாக ஆங்கிலத்திற்கு ஏ.T.தர்மப்ரிய தமிழில் சி. சிவசேகரம்
அமரதாச தனது கண்ணாடியைக் கழற்றிக் கைகளிற் பற்றியவாறு இரண்டாந் தளத்தினி இடை வழியா லி நடக் கதி தொடங்கினார். தனது பாடம் இடைநிறுத்தப்பட்டது பற்றி அவருக்குத் திருப்தி இல்லை. பாடசாலை தொடங்கிப் பதினைந்து நிமிடங்களும் இராது. பிந்தி வந்த மாணவர்கள் படிக்கட்டு வழியே மேலே விரைந்து கொண்டிருந்தனர். அமரதாச படிக்கட்டின் இடை மேடையின் அருகே நின்று அப்புஹாமியை நோக்கினார்.
"அப்புஹாமி இந்த விருந்தாளி என்ன தரவழியான ஆள்? இளம் ஆளா?’ என்று வயது மூத்த ஒரு வேலையாளிடங் கேட்டுவிட்டுப் பதிலுக் குக் காத் திரா மல படியிறங் கத் தொடங்கினார்.
இப்போது அவரைப் பின் தொடர்ந்த அப்புஹாமி 'ஓம், இளம் ஆள் தான்’ என்று பதில் கூறினார்.
'பள்ளிக்குப் போகிற வயதா?’ அமரதாச தனது இரண்டாவது கேள்வியைத் தொடுத்தார்.
உங்களுடைய பழைய பள்ளிக் கூடத்திலிருந்து ஒருத்தர் போலத் தெரிகிறது’
"தனியாக வந்தாரா?”
'ஓம்’
6f 6'ş ulu Ló அறிகிற விதமான அக்கறையோடு தான் அமரதாச ஆசிரியர் அறைக்குப் போனார். இந்தப் பாடசாலையிற் சேர்ந்து மூன்று மாதந் தாண்டாத குறை. மணமாகாத அவர் பாடசாலைக்கு அண்மையில்
7 - ضده لعامعة
 
 
 
 

ஒரு அறையிற் குடியிருந்தார். பதினைந்து ஆண்டுகட்கும் மேலாகத் துTரப் பிரதேசப் பாடசாலைகளிற் கற்பித்த அவருக்குத் திருமண வயது தாண்டிவிட்டது. -
ஆசிரியர் அறைக்குள் நுழையும் போதே தனது விருந்தினருக்காகத் தேடினார். ஆனால் அறையில் யாருமே இருக்கவில்லை. வழமைக்கு மாறான ஒரு வடிவில் அமைந்த பயணப் பை ஒன்றும் மூன்று ஆங்கில நாவல்களும் ஓர் நாற்காலி மீது கிடந்தன. அவை தனது சக ஆசிரியர் எ வருடையனவுமல ல என று அமரதாசவுக்குத் தெரியும்.
ஆசிரியர் அறையின் பின் கதவால் உள் நுழைந்த அமரதாச முன் கதவால் வெளியேறி அதிபரினி அலுவலகத் திற் குப் போகும் இடைவழியாக நடந்தார். இடைவழியின் இரு புறச் சுவர் களிலும் அறிவித்தற் பலகைகளுடன் பாடசாலைப் படங்களுடனும் பொது அறிவிப்புப் பலகைகள் இருந்தன.
கட்டான உடலுடைய ஒரு இளைஞன் சுவரிற் கிடந்த ஒரு அறிக்கையை வாசித்துக்
anon - 1a 2003 زوں ضرو(ہرنہ

Page 37
மொழிபெயர்ப்பு சிறுகதை
கொண்டிருந் தான் , அமரதாசவின் காலடி ஒசையைக் கேட்டவுடன் அவன் திரும்பினான். விசாரிக்கிற தோரணையில் அவனை நோக்கி நடந்த அமரதாச ' என்னைப் பார்க்கவா வந்தீர்கள்? மிஸ்ற்றர்.?’ என்று அவனைக் கேட்டார். -
இளைஞனின் முகம் ஒளிர்ந்து முறுவலாக முகிழ்ந்தது. ‘சேர்’ என்று உரக்கக் கூவியபடி ஓடிச் சென்று அமரதாசவின் கைகளிரண்டையும் அன்புடன் பற்றிக் கொண்டான். அமரதாச அவனைக் குழப்பத்துடன் பார்த்தார்.
சேர் . நான் தானி குணபால! உங்களுக்கு நினைவில்லையா? ஹத் அமுன பாடசாலையில் படித்த குணபால!’ என்று
சொன் ன அவனுக் கு அமரதாச அவனை அடையாளங் காணத் தவறியது தெளிவாகவே அதிர்ச்சி தந்தது.
அமரதாசவின் கண் கள் வியப் பால் விரிந்தன. இப்போது தன்னால் அடையாளங்காண முடிந்த இளைஞனை உற்றுப் பார்த்த படியே வாயடைத்து நின்றார் . பின் பு அவரைக் கலக்கத்தில் ஆழ்த்திய ஏதோ காரணத்தால் ஒரு கணம் தனது தலையைத் தாழ்த்தினார் . எல்லாவற்றையும் விளங்கிக் கொண்ட அந்த இளைஞனி தனது பழைய ஆசிரியரை இரக்கத்துடனும் துயரத்துடனும் நோக்கினான்.
முடிவில், அமரதாச தனது தலையை உயர்த்தி ' குணபால, நீ மிகவும் மாறிவிட்டாய்” என்றார்.
'இருக்கும் சேர். ஆனால் நீங்கள் ஒரு சொட்டும் மாற வில  ைல. இனி னமும் எங்களுடைய அமரதாச சேர் தான்’.
'நாங்கள் மாறுவது கஷ்டம், குணபால” என று பதில் சொல லிய படி அமரதாச இளைஞனது கையைப் பற்றிக் கொண்டு ஆசிரியர் அறையை நோக்கி நடந்தார்.
இடைவழியிற் பாதித் தூரம் தாண்டிய போது 'நீ உன்னுடைய கிரீட வடிவிலான தலை அலங்காரத்துடன் இல்லாததால் தான் என்னால் உன்னை அடையாளங் காண முடியவில்லை’ என்று கொஞ்சம் வெட்கப்பட்ட மாதிரி அமரதாச சொன்னார்.
ஆசிரியர் அறையில் இருவரும் நாற்காலிகளில் அமர்ந்த பின்பு 'நீ நல்லாய் இருக்கிற மாதிரித் தெரிகிறது. ஹத் அமுன மாணிக்கக் கல் வியாபாரி மாதிரி’ என்று
 

அமரதாச குறிப்பிட்டார்.
'ஓம், ஓம் சேர். நீங்கள் சொன்னது சரி! நாங் களர் எ லி லாரும் நல லாக வந்துவிட்டோம் வகுப்பில் யாருமே பிழையாகப் போகவில்லை. ஹத் அமுன வாத்திமாரில நீங்கள் மட்டுந் தானி வெறுங் கையோடு போ னிங் களர் ' என று குண பால தனது ஆசிரியரிடஞ் சொன்னான்.
ஹத் அமுன மாணிக்கக் கற்களும் யானைகளும் செறிந்த பகுதி. யானைகள் குளிக்கும் மனோரம் மியமான இடமொன்று அமரதாசவின் நினைவுக்கு வந்தது. 'அப்ப. உன்னட்டையும் இப்ப யானைகள் இருக்கும்.” என்று அமரதாச சாடையாகக் குறிப்பிட்டார். குணபால பதில் சொல்லவில்லை.
அப் போது அறை யைக கூட்டிக் கொண்டிருந்த அப்புஹாமியிடம் பாடசாலைச் சிற்றுண்டிச் சாலையிலிருந்து இரண்டு கோப்பை தேனீர் கொண்டு வரும்படி ஆசிரியர் கேட்டார். தேநீரை அருந்தியபடியே அமரதாச தனது பழைய மாணவனிடம் பேசினார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் முன்னம் கேகாலை மாவட்டத் தி ல இருந் த ஹத அமு ன பாடசாலையை விட்டு அவர் வெளியேறி விட்டார். இருவரும் பழைய காலங்கள் பற்றி நீண்ட நேரமாக உரையாடினார் கள் . இளைஞன் அவரைத் தனது திருமணத்துக்கு அழைக்க வந்திருந்தான். அமரதாச அந்த அழைப்பைப் பெரு மகிழ்வுடன் ஏற்றார். வகுப்பு முடியும் நேரத்தை அறிவிக்கப் பாடசாலை மணி ஒலித்தது. தனது பழைய கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்க அமரதாச தனது இடது கையைச் சற்றுத் திருப்பினார். குணபால ஒரு காலம் கண்டு பழக்கப்பட்ட அந்த அபிநயத்தைப் பெரும் அக்கறையுடன் நோக்கினான்.
' சேர், இன்னமும் அதே வோச்சை உங்களுடைய மணிக்கட்டின் மறு பக்கமாகக் கட்டியிருக்கிறீர்கள். இல்லையா?’ என்று அன்புடன் கேட்டான் குணபால.
அமரதாச உரக்கச் சிரித்தார். 'ஓமப்பா, எங்கள் தரவழிகளுக்கு மாறுகிறது 356? LLD. இன்னமும் நான் தனிய இருக்கிற நேரம் 'பிய சமரவிலை இருந்து செய்யுள்களைப் பாடுவேன்’ என்றார் அமரதாச.
அதன் பின்பு நீண்ட மெளனம் நிலவியது. அவர்களைச் சூழ இருந்த அமைதியை விடக்
5) ఆరN - 8-0తov 200టి

Page 38
மொழிபெயர்ப்பு சிறுகதை
கனதியானது.
அவர்கள் மீண்டுங் கதைக்கத் தொடங்கக் கொஞ்ச நேரமெடுத்தது. இப்போது உரையாடல் கொஞ்சம் அந்தரங்கமானதாக ஆசிரியரது இதயத்தின் இருண்ட, உள் ளாழமான ஒரு பகுதியைத் தொடுகிற திசையில் நகர்ந்தது.
' ' (3 g j, கா நீ தி g5 6 UT 600TL5 முடிச்சிட்டாள்’ என்று நொருங்கிய குரலில் குணபால சொன்னான்.
ஆசிரியர் அதில் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. என்றாலும், ஒரு ஓவியத்தின் தெளிவுடன் அவரது நினைவினுட் பதிந்திருந்த காந்தியின் உருவம் மனதினுட் பாய்ந்தது. ஹத் அமு ன பாடசாலையில காந் தி அவரது மாணவியருள் ஒருத்தி. தனது இளநெஞ்சத்தை ஒரு காலத்திற் களவாடிய அச் சிறு பெண்ணின் உயிர்த் துடிப்பான நினைவுகள் இன்னமும் தனக் குளிர் தங் கி யிருப்பது அவருக கு வினோதமாயிருந்தது. அவரது உணர்வு பிரிவின் வேதனையோ அதையொத்த உணர்வு எதுவுமோ அல் ல, மாறாக இழந்த ஆசைகளாலும் நொருங்கிய எதிர்பார்ப்புக்களாலுமான தனித்து விடப்பட்டது போலான வெறுமை உணர்வு. காதலும் பிரிவும் ஒவ்வொரு இளங் காதலனும் உணருகிற ஒரே அனுபவத்தின் வெவ்வேறு முகங்கள்.
'காந்திக்கு உங்களில வலும் நல்ல விருப்பம். நீங்கள் ஏன் போய் அவளுடைய தகப்பனாரிட்டை அனுமதி கேக்க வேணும் எண்டு எனக்கு விளங்கேல்லை?” என்று ஆசிரியரிற் பிழை பிடிக்கும் தோரணையிற் கேட்டான். அமரதாச யனி ன லுTடாக விளையாட்டு மைதானத்தை நோக்கினார். அது வெறிச்சோடிக் கிடந்தது. மத்தியான வெய்யில் இரக்கமில்லாமல் உலர்ந்த புற்கள் மீது பாய்ந்தது. நீண்ட இடைவெளியின் பின்பு ஆசிரியர் பேசினார். ' குணபால. நான் ஓர் ஆசிரியன்’
இந் தச் சொற் களர் இளைஞனின் இதயத்தை ஊடுருவினாற் போலும். அவன் ஆசிரியரை மேலுங் கனிவுடன் நோக்கினான்.
குணபால அன்று திரும்பிச் சென்ற போது பாடசாலைப் பகலுணவு வேளை தாண்டிவிட்டது. பிரியாவிடை கூற முன்பு அவன் அவருக்குத் தான் கொண்டுவந்த மூன்று நாவல் களையும் பரிசளித் தானி , அவை சொமஸெற் மோம் எழுதியவை: சவரக் கத்தியின்
 
 

ஏனிந்த அபுே?
வீட்டருகே ஒரு வேம்பு; அதிலே அமர்ந்து கொண்டு ஆந்தைக்கு ஏனிந்த வம்பு? சும்மாவே நமக்கு நடுநிசியில் எத்தனை பீதிகள்; அவற்றை கூறவும் வேண்டுமா? நாளாந்த செய்திகளில், பார்ப்பது, கேட்பதெல்லாம் நடுச்சாமம் தானே நடுங்க வைக்கிறது. இவ்வாறான பீதி வேளையில் உறங்க மறுத்த இமைகள் சற்று உறங்குவதாய் சம்மதித்து இமைகள் ஒன்றை ஒன்று தழுவுகின்ற வேளையிலே ஆந்தைக்கு ஏனிந்த வம்பு வேம்புக்கும் உறக்கமில்லை போலும் இலைகளெல்லாம் சலசலத்து நம்மை மேலும் சலசலக்க வைக்கிறது. பரவாயில்லை, அதிகாலையும் ஆயிற்று இன்றைய உறக்கம் யாருக்குச்
சமர்ப்பணம் - வழமையாக குரைக்கும் நாய்களுக்கு. இன்று அவைகளோடு இணைந்து
அலறிய ஆந்தைக்கும் சமர்ப்பணம்!
- கலைச்செல்வி -

Page 39
மொழிபெயர்ப்பு சிறுகதை
விளிம்பு, வண்ணந் தீட்டிய முகத்திரை, நிலவும் ஆறு பெனிக் காசும்.
'இதையெல்லாம் வாசித்து விட்டாயா?” என்று பழக்க தோஷத்திற் போல அமரதாச கேட்டார்.
‘ எங்களால் வாசிக்க ஏலாது சேர். உங்களுடைய இங்லிஷ் வகுப்பு நின்றதோடு நாங்களும் இப்படிப் புத்தகங்களை வாசிக்கிறதை நிறுத்தி விட்டம்' என்று குணதாச பதில் சொன்னான்.
தனது மாணவனுக்கு ஆங்கில அறிவு குறைவாயிருநி த போதும் தனி னுடைய ரசனையை அவன் தனது உள்ளுணர்வால் விளங்கிக் கொண்டது பற்றி அமரதாசவுக்கு மன நிறைவாயிருந்தது. ஏற்கெனவே இந் நூல்கள் மூனி றையும் வாசித் திருந் தாலும் , எழுத்தாளருக்கும் தனது பழைய மாணவனுக்கும் தனது நன்றியுணர்வின் காரணமாக மறுநாளே அவற்றை மீண்டும் வாசித்தார்.
குணபாலவின் திருமணம் கொழும்பில் ஒரு ஹோட்டலில் நடக்கவிருந்தது. அங்கு போய்ச் சேர்வதற்கான வழியைப் பலரிடம் விசாரித்த போதும் அவர்களிடமிருந்து எதையும் அறிய இயலவில் லை. சிறப்பான எந்தப் பயணத்தையும் மேற்கொள்வதற்கு முற்கூட்டியே ஆயத் தப் படுத் துவது அவரது வழக்கம் . சலூனுக்குப் போய்த் தலைமயிரை வெட்டிக் கொண்டார். முகச் சவரமும் செய்த பிறகு தனது உடைகளைக் கவனமாக அடுக்கித் தனது கட்டிலுக்கு அருகாக வைத்தார். நீளக் கை வைத் த வெளி  ைள ஷேட் டு மி , ட் வீட் காற்சட்டையும் கோட்டும் ட்டையும் பொன் முலாம் பூசிய சட்டமிடப்பட்ட கண்ணாடியும் ஊற்றுப் பேனாவும் அவரது மரியாதையான நற்பண்புடைய ஆளுமையினின்றும் பிரிக்க இயலாத பகுதிகள். காலி முகத்திடலுக்கு ஒரு பஸ்ஸில் போய் அங்கிருந்து ஒரு ற்றாக்ஸி பிடித்து மிகுந்த சிரமத்துடன் ஹோட்டலைக் கண்டடைந்தார். அது வெள்ளவத்தை ராமகிருஷ்ண மண்டபத்தின் அருகான கொஞ்சம் பெரிய ஒரு கட்டிடம். அங்கே அன்றைய நிகழ்வுக்காகப் பெருந்திரளானோர் கூடியிருந்தனர். மண்டபத்தில் அமர விரும்பாத அமரதாச விறாந்தை மூலையோடு இருந்த ஒரு வட்ட மேசையையொட்டி ஒரு இருக்கையில் அமர்ந்தார்.
நீண்ட ஒடுங்கிய இடைவழி உட்பட
 

மணி டபம் நிரம் புமாறு எங் குங் கமழ் நீத மனோரம் மியமான நறுமணம் Ց| 6ւ Մ 5] உணர்வுகளைக் கிளரச் செய்யவில்லை. ஒரு கொஞ்ச நேரங் கழிய அவருக்கு ஒரு கிளாஸ் வைன் பரிமாறினர். அசுவாரசியமாக அவர் அதைப் பருகத் தொடங்கினார். மண்டபத்தினுள் நடக் கும் அனைத்  ைதயும் பழங் கால தி தோர  ைனயில விறாந் தை நெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த யன்னல் வரிசையூடு காண முடிந்தது. இடையிடையே தனது யன்னலுடு மணி டபத்தினுள் அவர் எட் டிப் பார்த்துக் கொண்டார்.
மண்டபம் அழகாகவும் விஸ்தாரமாகவும் அலங் கரிக் கப் பட்டிருந் தது. மண மேடை அமரதாசவின் பார் வைக் குத் தொலைவில் அ ைமந் திருந்தது. அறை யை நிரப் பி விறாந்தைக்குள் வழிந்த இசையைக் கேட்க விரும்பினார். ஆனாலும் தனது அலையும் சிந் தனை கட் குக் கடிவாளமிட அவரால இயலவில்லை. தனது ஆத்மா தீர்க்க இயலாத தனிமையிலும் வேதனையிலும் தவிப்பதாக அவர் உணர்ந்தார். ஹத் அமுன பாடசாலையில் அவரது பழைய மாணவர்கள் சிலர் அவரிடம் வந்து மரியாதை செலுத்திப் போனார்கள். ஏறத்தாழ ஒவ்வொருவருக்கும் திருமணமாகி விட்டது. அவர் கள போன கையோடு அமரதாசவின் இதயத்தில் ஒரு புதிய ஆவல் சுடர்விட்டது. காந்தியைக் காண வேண்டும் என்ற கட்டிலடங்காத ஆசையே அது. காந்தியின் நினைவு அவளைக் காண வேண்டும் என்ற ஆவலுடன் இணைந்து நுட்பமான ஒரு வேதனைத் துடிப்பை ஏற்படுத்தியது. போதையூட்டும் வைனும் அவரது இயதத்தை நெகிழ வைத்தது.
வெகு நேரஞ் செல் ல ஹோட் டல் வாசலில் ஒரு ற்றாக் ஸி வந்து நின்றது. வண்டியிலிருந்து காந்தி தனது கணவனுடன் இறங் குவதை அமரதாச எ வி விதமான சஞ் சலமுமினி றி அவதானித்தார். ' இந்த உன்னதமான வேளைக்காக அல்லவா ஹத் அமுணவிலிருந்து வெளியேறிய நாள் தொட்டு இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்தேன்’ என்று தனக்குட் சொல்லிக் கொண்டார். காந்தி சிவப்புச் சேலை அணிந்திருந்தாள். காலம் அவளுக்கு அபரிமிதமான கருணை காட்டியிருப்பதாகவும் அவள் மாறவேயில்லை என்றும் அவருக்குத் தோன்றியது.
| 2003 روی ضار که بa c(که حت لoته میخ

Page 40
மொழிபெயர்ப்பு சிறுகதை
கா நீ தி அவரை கி g5 T 600TTLD (36) விறாந் தையைக் கடந்து மணி டபத் தினுள் வேகமாக அடியெடுத்து நடந்தாள். அமரதாச தனது பானத்தைப் பருகத் தொடங்கினார். நிர்க்கதியான ஒரு உணர்வு அவரை ஆட் கொண்டது. விழாக்கால் இரவொன்றில் இருண்ட வான தி தில தனி ஒரு தாரகை போல ஏகாந்தமாகவும் தனித்து விடப்பட்டது போலவும் அவர் உணர்ந்தார்.
திடீரென எதிர்பாராத ஒன்று நடந்தது. அவரை விடாமல உற் றுப் பார் த துக் கொண்டிருந்த நடுத்தர வயது தாண்டிய ஒரு மனிதரின் உருவம் அவரது கண்ணிற் பட்டது. அமரதாசவுக்கு அது சங்கடமாயிருந்தது. தாங்க முடியாத வெட்க உணர்வால் தான் குறுகி ஒடுங் குவதைப் போல இருந்தது. அந்த மனிதரைப் புதினமாக நோக்கினார். தடித்த உடற்கட்டுடைய அவருடைய தோற்றம் ஒரு வணிகருடையது போலிருந்தது. வழக்கத்திற்கு LD Π (ΟΠ 601 தோற் றமுடைய கண் ணாடி அணிந்திருந்தார். அதனூடு விரிவாகித் தெரிந்த அவரது பெரிய கண்கள் ஒரு பிரம்மாண்டமான பல்லியினதைப் போலத் தெரிந்தன.
அதிக நேரஞ் செல்லு முன்னமே அந்தக் கண் கள் அமரதாசவை நெருங்கி வந்தன. அவற்றிற்குக் கீழாக அகலமாக ஒரு முறுவல் பரவியது. அமரதாச வேகமாக "நீங்கள் ஹத் அமுணவிலிருந்தா வருகிறீர்கள்?’ என்றார்.
அக் கண்கள் இரண்டும் மேலும் அகன்று கள்ளப் பார்வை பார்ப்பது போல விசித்திரமான வடிவம் எடுத்தன. அவர் மீண்டும் முறுவலித்தார். 'இல் லை இல் லை. நாண் கொழும் பு. கல்கிஸ்ஸைக்கு கிட்ட’.
நீங்கள் எ ன  ைன ப் பார் த துக் கொண்டிருந்த விதத்தில். நீங்கள் என்னுடன் பழகித் தெரிந்தவர் என்று நினைத்தேன்’ என்று மரியாதையுடன் அமரதாச பதில் கூறினார்.
இரு வரும் 西LD堡通 பா னங் களை ஒன்றாயிருந்து பருகினர். காந்தி தென்படுகிற சாடை உண்டா என்று அமரதாச விறாந்தை வழியாக நோக்கினார்.
'நான் உங்களுடைய கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்’ என்று அந்தத் தடித்த மனிதர் அமரதாசவின் கவனத்தைத் திடீரென வேறு திசையில் மாற்றினார்.
அமரதாசவுக்கு வியப் பாயிருந்தது.
 

நீத்தார் நினைவு
s
அஞ்சலி
uazi 2g5ő ခခံခ်ိဳဍ)/Aq႔အျñ இலங்கையின் மூத்த எழுத்தாளரும் | ஆசிரியரும் எழுபது வருடங்களாக இலக்கியப் பணி ஆற்றிய வருமான பணி டிதர் க. | சச்சிதானந்தன் அவர்களுக்குத் தாயகம் தனது
| அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது.
எழுத்தாளர் பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்கள் தனது 87வது வயதில் காலமானார். இவர் கணிதம், தமிழ், உளவியல் ஆகிய பாடங்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். ஆனந்தத்தேன் (கவிதை - 1955), யாழ்ப்பாணக் காவியம் (1998), தமிழர் யாழியல் ஆராய்ச்சி (1997), மஞ்சு காசினியம்: இயங்கு தமிழியல் (2001), இலங்கைக் காவியம்: பருவ பாலியர் படும்பாடு (2002), மஞ்சுமலர்க்கொத்து (2003), * அன்னபூரணி (நாவல் - 1942) ஆகிய
ஆக்கங்களைப் படைத்தவர். -
தண்ணீர்த் தாகம்’ (1939) என்ற சிறுகதையுட்பட 20 சிறுகதைகள் வரை எழுதி ஈழத்தழிழுக்கு வழங்கிய பன்முகத் தன்மை படைத்த படைப்பாளி பண்டிதர் க. சச்சிதானந்தன்
ஆவார். ク
فة 200 (قوس ظهوره اتجاه ح لهم وتملك

Page 41
மொழிபெயர்ப்பு சிறுகதை
அமரதாச உரக்கச் சிரித்தார். சிரிப்போடு சேர்ந்து அவரது புதினமறியும் ஆவலும் வளர்ந்தது. "அப்படியென்றால். அங்கே குந்திக் கொண்டு நீங்கள் என்னுடைய கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்?’ என்று தனது முறுவலை மறித்தபடி அமரதாச கேட்டார்.
அமரதாச தனது கண் ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டார். அதைக் காணவே அவருக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. அதற்கு ஒரு விசித்திரமான வியப் பூட்டும் வடிவம் இருக்கிறது போல உணர்ந்தார். 'இதில் என்ன விசேஷமாகக் கண்டீர்கள்?’ என்று கேட்டபடி அமரதாச அதை ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை பார்த்தார். 'இது விசேஷமான ஜேர்மன் "பிறேம். என்னிடமும் இப்படி ஒன்று கன காலத்திற்கு முந்தி இருந்தது. நான் எட்டு வயதிலேயே கண்ணாடி போடத் தொடங்கிவிட்டேன். எனக்குக் கண்ணாடிகளைப் பற்றிக் கொஞ்சந் தெரியும். உங்களுடையது வலும் விலைகூடின ஃபிறேம்’ என ற சொனி ன படியே அமரதாச வினி கைகளிலிருந்து கண்ணாடியைப் பறித்தெடுத்தார். " நான் கேகாலையில் ஹத் அமுன பாடசாலையில் படிப்பிக்கிற போது வாங்கியது. இப்போது ஏழு வருஷமாகி விட்டது' என்றார் அமரதாச. இப்போது அவர் கூட ஆறுதலாக
இருந்தார். --
'இது மிகவும் பெறுமதியுள்ளது’ ' எனக் கு இப் போது இதில் ஒரு பெறுமதியும் இல்லை’.
அமரதாசவுக்கு அதனுடைய பெறுமதி பற்றி ஐயமிருக்கக் கூடாது என்று வற்புறுத்துவது போல அந்தத் தடித்த மனிதர் 'இல்லை, இது மிகவும் பெறுமதியானது” என்று பதில் கூறினார். 'உங்களுக்கு இதில் ஒரு பெறுமதியும் இல்லை என்றால் என்னிடம் தாருங்கள். நீங்கள் கேட்கிற விலையைத் தருகிறேன்’ என்று இம்முறை அமரதாசவைக் கூரிய நோக்குடன் பார்த்தபடி அந்த மனிதர் சொன்னார்.
இப்போது இன்னொருவரது கையில் இருந்த தனது கணிணாடியைப் பார்த்த அமரதாசவுக்கு அவை என்றுமே தனக்குரியவை அலி ல எனி று தோனி றியது. இவ் வளவு கோமாளித்தனமான ஒரு கண்ணாடியைத் தனது கண்களின் மீதாகக் கடந்த எட்டு வருடங்களாக எப்படி அணிந் திருந் தோம் என்று அவர்
 

யோசித்தார்.
தடித்த பெரிய உருவமுள்ள அந்த மனிதர் தொடர்ந்தும் அக் கண்ணாடியின் மீது புகழை ச் சொரிந்து கொணி டிருந் தார் . அமரதாசவுக்கோ ஒரு வளைந்த கம்பியில் பொருத தப் பட் ட இரண் டு கணி னா டி வில்லைகளை விட அதில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
* கேகாலை வணிகசிங்ஹ கடையில். இரு நுாறு ரூபா வுக் கு வா நர் கினே ர்ை . வேண்டுமானால் அதே விலைக்கு நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று அக்கறையின்றி அமரதாச சொன்னார். -
தடித் த மனிதர் பேரா சையுடன் கண்ணாடியைப் பற்றிக் கொண்டு அமரதாசவின் கைகளில் நான்கு நூறு ரூபாத் தாள்களை வைத்தார். அமரதாச அவற்றில் இரண்டை அவரிடந் திருப்பிக் கொடுத்தார். அக்கணமே திடீரென ஏதோ 'டகாஸ்’ என்று சுடக்கிட்டது. தடித் த மனிதர் கெட் டித தனமாக "பிறேமிலிருந்து வில் லைகளைக் கழற்றி அமரதாசவின் கைகளில் வைத்தார். அமரதாச அவற்றைக் கவனமாகத் தனது புதிய வெள்ளைக் கைக் குட்டையிற் சுற்றித் தனது கோட்டுப் பொக்கற்றில் வைத்தார்.
| & 1200 واں ضرواہ نہ چnaہ ہے۔ لحم (arc کے

Page 42
கட்டுரை
ஏன் இ>9த்
இருபதாம் நூற்றாண்டில் தமிழர் தம் வாழ்வை நோக்குவோமாயின் தமிழ் மொழி பற்றியெழுந்த பல இயக்கங்களை நாம் காணலாம். தமிழிசை இயக்கம்', 'தமிழ் பாதுகாப்பு இயக்கம்', 'எல்லாந் தமிழ் இயக்கம்', 'தனித் தமிழ் இயக்கம் ஆகியனவெல்லாம் தமிழ் மொழியை, மொழிப் பற்றை அடிப்படையாகக் கொண்டன என்பது தெளிவு. சுருங்கக் கூறின் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து உதித்த மொழிப்பற்று இந்த நூற்றாண்டில் வலிமை பெற்றுத் தமிழர் தம் சமூக, அரசியல், பொருளாதார வாழ்வைக் கூடப் பாதித்தது என்று கொள்ளலாம். இத்தகைய அதீத மொழிப்பற்று ஏன் ஏற்பட்டது, எவ்வாறு வளர்ந்தது, அதன் உட்பொருள் என்ன ஆகியவற்றை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
மொழிப்பற்று அல்லது மொழிவெறி என்றால் என்ன? -
ஓர் உதாரணம்! நமது காலத்து மகாகவி பாரதியே தருகிறான்.
'தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார் க் கும் போது எனக் கு வருத்தமுண்டாகிறது.
'தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை.
'தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.
'தம்பி - நான் ஏது செய்வேனடா?” இன, மொழி, மத வரம்புகளைக் கடந்து உலகப் பொதுவான மனிதப் பிரச்சினைகளைப் பாடிய மகாகவி பாரதியே தமிழ்மொழிப் பற்றுக்கும், வெறிக்கும் ஆளாகினான் என்றால் மற்றவர்களைப் பற்றி நாம் பேசத் தேவையில்லை. எனினும் மகாகவி ஒருவனையே அழுத்தி அமுக்கிவிடும் மொழிப்பற்று மரபு பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டுமல்லவா? அதனைச் சற்று நுணுகி ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவரக்கூடும்.
தமிழர் தம் நீண்ட வரலாற்றைப் பின்நோக்கிப் பார்ப்போமாயின் சிற்சில காலப்பகுதிகளிலேயே இந்த மொழிப்பற்றும் மொழி வெறியும் தமிழ் மக்களை இயக்கியுள்ளது தெளிவாகும்.
முடியுடை மூவேந்தர் புகழொடு தமிழகத்தை ஆண்ட சங்க காலத்தில் இந்த மொழி வெறி இல்லை; பிறமொழி, மதம், பண்பாடு ஆகியவற்றுடன்
(

2OO6ෆ/\ඊශ්‍රි.
தமிழகத்தில் புகுந்த களப்பிரர், பல்லவர் ஆகிய அரச பரம்பரையினர் காலத்தில் மொழிவெறி இருந்தது;
சோழப் பெருமன்னர்கள் தமிழகத்தை மட்டுமன்றிக் கங்கையையும் கடாரத்தையும் கைக் கொண்ட பொற்காலத்தில் இந்த மொழி வெறி இருந்த இடமே தெரியவில்லை.
முதலில் முஸ்லிம்களும், பின்னர் தெலுங்கரும் தமிழகத்தில் ஆதிக்கஞ் செலுத்திய விசய நகர, நாயக்க மன்னர் காலத்தில் இந்தத் தமிழ் மொழிப் பற்று தீவிரமாக இருந்தது.
இந்தி, சிங்களம் ஆகிய பிற மொழிகளுடன் அரசியல் அதிக்கமும் ஏற்படும் இக் காலத்தில் மீண்டும் இதே வெறி காணப்படுகிறது!
வரலாறு காட் டும் இந் தக் கால அட்டவணையிலிருந்து அறிந்து கொள்வது என்ன? அரசியல், சமூக பொருளாதார, இன்னல்கள் தமிழகத்தில் அதிகரிக்கும் காலத்தில் தமிழ் மக்களிடையே தமிழ் வெறியும் பரவி விடுகிறது.
- க. கைலாசபதி=
பல லவர் காலம் , சமண, பெளத்த தத்துவங்களும், கோட்பாடுகளும் தமிழகத்தில் பரவியிருந்த காலம். பாளி, வடமொழி ஆகியனவே பல்லவ மன்னர்களது அரசகரும மொழிகளாக விளங்கின. வேற்றரசர்களான அவர்கள் தமிழகத்தின் பொருளாதார அமைப்பையே நிலை குலைத்தனர் என்பதற்கு வேள்விக்குடிச் சாசனங்கள் சான்று பகருகின்றன. சாதிப் பூசல்கள் மிகுந்தன. பல வகையாலும் தமிழர் சமுதாயம் பிளவுண்டு பின்னமுற்றது. அந்நிலையில் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டத் தமிழ்மொழி ஒன்றே பயன்பட்டது. தற்காலத்தில் 'எல்லாந் தமிழில் எனச் சிலர் கூறுவது போன்று அன்று சமய குரவர்கள் கூடத் தமிழ் மொழிப் பற்றைச் சமய பக்தியுடன் இணைத்து தமிழ் மக்களை ஒன்றுபடுத்த முற்பட்டனர். தேவாரங்கள் திவி வியப் பிரபந்தங்கள் ஆகியவற்றிலெல்லாம் தமிழ் வெறி சுழித்துச் செல்வதை நாம் காணலாம். சங்க காலத்தில் காணப்படாத இந்தப் புதிய பண்பு இலக்கியத்தில் புகுந்து கொள்கிறது.
'நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்” ( - சுந்தரர்). "பன்னிய நூற்றமிழ் மாலை பாடுவித்தென் சிந்தைமயக்கறுத்த திருவருளினை”
( - அப்பர்).
40) కోణN - 238pov 2006

Page 43
கட்டுரை
'திருநெறிய தமிழ்வல்லவர் தொல்வினை தீர்த்தலெளிதாமே" ( = சம்பந்தர்)
என்றெல்லாம் சிவநேயச் செல்வர்கள் தமிழுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துப் பாடி, மொழிப்பற்றை வளர்த்தார்கள். பல்லவர் கால இலக்கியங்களை நாம் படித்துப் பார்ப்போமானால் ‘தமிழ்’ ‘தமிழ் என்னும் ஆவேசக் குரலையே காதாரக் கேட்கலாம்.
'நெடுந்தமிழால் இம்மா நிலத்தோர்க்குரை சிறப்ப" 'மறைகளாய நான்குமென மலர்ந்த செஞ்சொற் றமிழ்ப்பதிகம்”. 'மிக்க சொற் றமிழினால் வேதமும் பாடினார்’. 'தமிழ்ச் சொல்லும் வட சொலுந் தானிழற் சேர்’ 'தமிழோடிசை பாட மறந்தறியேன்” "தாழ்ந்தெழுந்து தமிழ்வேதம் பாடினார் தாளம்
பெற்றார்”. 'தண்டமிழ்நூற் புலவாணர்க் கோரம்மானே’ ‘கூடலி னாய்ந்தவொண் டீந்தமிழ்”
என்றெல்லாம் பாடலுக்குப் பாடல் தமிழின் உயர்வை வலிமையை, பெருமையைப் பாடினர் சமய குரவர், ஏன்? தமிழ் யாவரையும் கட்டிப் பிணைத்தது; எதிர்ப்பாயுதமாகத் திகழ்ந்தது.
பல்லவர் காலத்தையடுத்துத் தமிழகத்தில் சோழப் பேரரசு எழுந்தது. தமிழர் தம் பொருளாதார வாழ்வு மேம்பட்டது; சமூக அமைப்பு நியதியின்படி இயங்கியது; தமிழ் வெறியும் அடங்கியது.
பல்லவர் காலத்தில் நடந்தது போல விசய நகர நாயக்க மன்னர் காலத்தில் நிகழ்ந்தது. சோழப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தெலுங்கர்களும், முஸ்லிம்களும் தமிழகத்தில் ஆட்சி செலுத்தலாயினர். ஏகாதிபத்தியப் போக்கில் கடல் கடந்த வணிகம், குடியேற்ற நாடுகள் ஆகியவற்றைப் பெற்று விளங்கிய சோழப் பேரரசின் சீர்குலைவு தமிழகப் பொருளாதார வாழ்விலும் பல தடுமாற்றங்களையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தியது. மதுரை, தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களாகப் பிரித்து நாயக்கர் தமிழகத்தை ஆண்டனர். தூர வடக்கே முகலாயப் பேரரசும், மத்திய இந்தியாவில் பாமனி ராச்சியங்களும் ஓங்கி வளர்ந்து கொண்டிருந்தன. நாயக்க மன்னராட்சியில் வரிகள் மிதமிஞ்சி விதிக்கப்பட்டன. தமிழகத்தின் பொருளாதார வாழ்க்கையின் நிலைகுலைவுடன், சமூக, சமய வாழ்வும் கட்டுக் கோப்பிழந்து தளரவாரம்பித்தன. மீண்டும் தமிழ் வெறி திடீரெனத் தலைதூக்கியது. பல்லவர் காலத்தில் சைவர்கள் சிவனைத் தமிழுடன் இணைத்துப் பாடினர். விசய நகர நாயக்கர் காலத்தில் வெற்றி வேலை ஏந்திய முருகனைத் தமிழ்க் கடவுளாகக் கொண்டு வீரவழிபாட்டு மரபைத் தொடங்கினர். சின்னாபின்னப்பட்டுக் கிடந்த தமிழ் மக்களுக்குத் தமிழ் உணர்ச்சி ஊட்டப்பட்டது. குமர குருபரர், அருணகிரிநாதர், பரஞ்சோதி முனிவர், கச்சியப்ப
- C

சுவாமிகள் முதலிய புலவர்களும், பிற கவிஞர்களும்
தமிழ்’ ‘தமிழ்’ என்று பாடிக் குவித்தனர். ‘செந்தமிழ் சொல்மாலைக்கார” 'அரியதமிழ் தானளித்த மயில் வீரா” ‘தெரிதமிழை உதவு சங்கப் புலவோனே' *செவிகுளிர இனியதமிழ் பகர்வோனே’ என்றெல்லாம் திருப்புகழ் கூறுகின்றது. தமிழைத் தவிர வேறெந்த மொழியும் சிறப்பாக இருக்க முடியாது என்னுங் கருத்துக் கூட ஆங்காங்கு தெரிகிறது.
“பண்ணுறத் தெரிந்தாய்ந்த
இப்பசுந்தமிழ் ஏனை மண்ணிடைச் சில இலக்கண
வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?” என்றும் 'அறைகடல் வரைப்பில் பாடையனைத்தும் வென்றாரியத்தோ டுறழ்தரு தமிழ்த் தெய்வத்தை உள்நினைந்தேத்தல் செய்வாம்” என்றும் தமிழ் மொழிச் சிறப்பினைப் புலவர்கள் பாடிப் புகழ்ந்தனர்.
குமரகுருபர சுவாமிகள் பாடல்களில் தமிழ் மொழிப் பற்றும் வெறியும் தனியழகுடன் செறிந்து ஒளி சிதறுகின்றன.
* பாதஞ் சிவக்கப் பசுந்தமிழ் வேண்டிப் பரவைதன் பாற்று தன்று சென்ற தென்னாரூர்த்தியாகர்’ * பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே’ என்று பாடி மகிழ்கிறார் அவர்
'ஆயுந் தொறுந்தொறு இன்பந் தருந்தமிழ்” 'தன்னே ரிலாத தமிழ்”
=RION - 413-V/1982 VÜð 2008

Page 44
கட்டுரை
"புவனிக்கியம்பிய தண்டமிழ்” "தமிழொடு பிறந்து பழ மதுரையில் வளர்ந்த
கொடி’ “இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலு வேண்டேன்’
“முத்தமிழால் வைதாரையும் அங்கு
வாழவைப்போன்’ தெலுங்கு நாயக்கரும், பிறரும் விசய நகர நாயக்க மன்னர் காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த போது தமிழ் மொழிப் பற்றின் மூலம், சைவம், வருணாசிரமம் முதலியவற்றைத் தமிழர்கள் கட்டிக் காத்தனர். தெய்வத்துடனேயே தமிழை ஒன்றாக்கியதன் மூலம் தமிழுக்கு ஒரு நூதன சக்தியையும் வீறையும் அளித்தனர். ஒற்றுமைக் கொடியை உயர்த்தினர்.
இருபதாம் நூற்றாண்டிலே தமிழ்மொழி உணர்ச்சி மூண்டெழுவதற்குத் தூபமிட்டவர்களுள் *மனோன்மணியம்’ ஆசிரியர் சுந்தரம்பிள்ளையும் ஒருவராவார். 'பல்லுயிரும் பலவுலகும் எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வணக்கப்பாடலில்
‘ஆரியம்போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்து துமே”
என்று பேராரிசியர் சுந்தரம்பிள்ளை பாடிய பாடல் தமிழிலக்கியத்தில் பாயாத இடமில்லை; அவர் சொற்களினால் பாதிக்கப்படாத புலவரில்லை. அரசியல், பொருளாதாரக் காரணங்களினால் பல குறைபாடுகளை அனுபவிக்கும் தமிழ் பேசும் மக்கள் தற்காலத்திலும் மொழியின் பேரால் ஒற்றுமைப்பட முயல்வதை நாம் காண்கின்றோம். பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், சமூகச் சீர்திருத்தம் ஆகியவற்றை விட மொழி பற்றிய குரலும், இயக்கங்களுமே தமிழரிடையே தலைதூக்கி நிற்பதைக் காணலாம்.
‘தமிழுக்கும் அமுதென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று பாரதிதாசனும்,
'நினைத்திடும் மனத்தே நிற்பதும் தமிழே நீளுநம் மூச்சிலும் தமிழே முனைத்தபோர் முனையின் முன்னணி மறவர் முகத்தொளிர் வீரமும் தமிழே’ என்று "கலைவாண’னும்
* பாவிரியும் கவிவாணர் புகழ்ந்து பாடும் பசுந்தமிழ் நாடு ஈடில்லை எந்த நாடும்” என்று சது.சு. யோகியாரும்,
'சிந்தை மகிழும் செந்தமிழ் போல் எந்த மொழியில் இனிமை சொல்” என்று இசைக்கவிஞர் திருச்சி ஜி. தியாகராஜனும் பாடும் போது பல்லவர் காலமும், நாயக்க மன்னர் காலமும் நம் கண்முன் விரிகின்றன. இடுக்கணும், இன்னலும், அமுக்கமும், தமிழருக்கும், தமிழகத்திற்கும் ஏற்படும் போது தமிழ்மொழி மூலம் ஒற்றமை கோரப்படுகிறது என்பதும் நமக்கு புலனாகின்றது
 

இல்லையா? மொழிப் பற்றுக்கும் மொழி வெறிக்கும் அதிக வேறுபாடில்லை.
‘சாவில் தமிழ் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று ஈழத்து இளங்கவிஞர் ஒருவர் பாடுகையில் இந்த உண்மை தெளிவாகி விடுகிறது. இவற்றைத் தமிழர் மத்தியில் காணப்படும் தமிழபிமானம், தமிழுணர்ச்சி ஆகியவற்றை நோக்கும் போது வரலாற்றின் துணைகொண்டே பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் விருப்பு வெறுப்பு அற்ற வரலாற்றுண்மைகள் புலப்படும். நம்மை ஆட்டிப் படைக்கும் சென்ற காலத்தின் சக்திகளும், நிகழ்காலத்தின் நிகழ்ச்சிகளும் சங்கிலித் தொடர்புள்ளன என்பது தெரியவரும். எதிர்காலத்தை இதய வேட்கையுடன் நம்பிக்கையுடன் எதிர் நோக்க வழியும் பிறக்கும். தமிழுணர்ச்சியின் கதை தமிழக வரலாற்றின் வளர்ச்சிக் கதையாகும்.
நன்றி : தினகரன் தமிழ் விழா மலர் 1960 சித்திரை
2) مخra2003 ژونل طهاروازه نه چ۱ ه - لمون

Page 45
பின் வரலாந்நியல் தொடர்கதை
ஆங்கில்ே 8 நாடு இரு
தமிழர் உடல்நலச் சேவை போல உலக வரலாற்றில் ஒன்றுமே இதுவரை இருந்ததில்லை. நாடி பிடித்துப் பார்த்தே உடம் பில் இருக கக் கூடிய அதி தனை நோய்களையும் பட்டியலிடக் கூடிய தமிழ்ச் சித்த வைத் தியர் கள் இருந் தாலும் தமிழருக்கு அவர்களாற் பயன் இல்லை. ஏனெனில் தமிழர்கள் மிகவும் நல்ல உணவுப் பழக்க வழக்கங்களையும் உடற்பயிற்சியையும் கொண்டிருந்ததோடு மிகவும் நிதானமாகவே எல்லா விடயங்களையும் கையாளுகிற விதமாக இளமையிலிருந்தே மனப் பயிற்சி பெற்றிருந்தனர். எனவே தமிழர் மருத்துவத்தால் தமிழர் தவிர்ந்த முழு உலகமும் நண் மை அடைந்தது. சீனர் களிடையிலும் அவர் களது ஊசி குத் துகிற, மருந் துப் புகைப் பிடிக்கிற முறைகளை விடத் தமிழ் மருந்துகட்கு மரியாதை அதிகம். இது ஏன் நடந்தது என்று gf 6ÕI L i பாரம் பரிய மருத்துவர்களைக் கேட்டால் அவர்கள் தருகிற 6.65 556 வரலாற் று நுால களர் கூறுகிறவற்றிலிருந்து வேறுபடும். அதற்கான காரணங்களை ஆராய இப்போது நமக்கு நேரமில  ைல. ஏனெனிற கண் ண  ைன
go வரலாற்றுச் சுருக்கம்
இனி என்ன முன் வரலாற்றைச் சொல்லுவ தெரிந்த விடயம் கண்ணன் என்கிற ஆங்கில மாநிலத்தின் வன்னிப் பகுதியில் உள்ள எருதக் கட அங்கே ஆங்கிலத்தில் அக்கறையுள்ள பேராசிரியர் அவனைத் தனது ஆங்கில ஆராய்வுக்குப் பயன்ப காரணமாகக் கண்ணன் உடன்பட்டு மீண்டும் இ படிப்பைக் குழப்பிக் கொண்டு போவது பற்றி அவன் மன உறுதியுடன் இருக்கும்படி அவனுடைய வியற்ற வழங்கப்பட்ட பிரியாவிடையின் போத கண்ணனு ஒன்றில் அனுமதிக்கப்படுகிறான். கண்ணனுடைய புதிய திட்டங்கள் அதனால் மாறினவா என்றும் அ
 
 

Uandi LJáől ਹੈUਲੈ UUlað
மருத்துவமனையிற் கொண்டு போய்ச் சேர்த்த பரிணி பு என ன நடந்தது என று அறிய ஆவலாயிருப்பீர்கள்.
மருத்துவமனையில அவனைப் பரிசோதனை அறைக்குக் கொண்டு சென்று பாயில் அமர்த்தினர். அவனைப் பார்க்க வந்த மருத்துவர் அவனுடைய கண்களை நன்றாகத் திறக்கச் சொல்லி கண்களை உற்றுப் பார்த்தார். ஆழமாக மூச்செடுத்து மெல்ல வெளியே விடச் சொல்லி விட்டு அவனது நாடியைப் பிடித்துப் பார்த்தார். பிறகு அச்சொட்டாக அவனுக்குத் தலையில் அடிபட்ட இடத்தைத் தொட்டு அங்கு மேலாக அழுத்தியபடி அவனது முகத்தை நோக்கினார் . 'மகனே உமக்கு நல ல ஊழ்வினைப் பயன் இருந்திருக்க வேண்டும். அடிமட்டும் இரண்டு விரற் கடை அப்பாற் பட்டிருந்தால் உம்மைப் பார்க்க வேண்டியவர் ஒரு வைத்தியராக இருந்திருக்கமாட்டார்’ என்று சிரித்தபடியே சொன்னார். 'அம்மையே, மிக்க நன்றி. நான் ஒரு சில நாட்களில் என் தாய்நாடு திரும்ப வேண்டும். அதற்கு இடையூறு இராதே." என்று கண்ணன் இழுத்தான். 'உறுதியாக ஒரு இடையூறும் இராது. எனினும் இன்று இரவு இங்கு
து தமிழர் உலகை ஆளுவத எல்லாருக்கும் இப்போது இளைஞன் புலமைப் பரிசில் பெற்றுத் தமிழரின் ஈழ வப் பல்கலைக்கழகத்திற்குப் படிக்க அனுப்பப்பட்டான். பெருமுடிக்கோ அவனுடைய ஆங்கில அறிவை மெச்சி த்த முடிவு செய்கிறார். கண்ணனின் ஆங்கிலப் பற்றக்
கிலாந்துக்குத் திரும்பிப் போகப் போகிறான். தனத மனக் குழப்பத்துடனேயே இருந்த போதம், அவனை மிய நண்பன் ஒ சி மின் ஊக்குவிக்கிறான். கண்ணனுக்கு க்கு ဝှg, விபத்து நிகழ்ந்த அவன் மருத்தவமனை யணம் அதனால் தடைப்பட்டதா என்றும் அவனத றியத் தொடர்ந்த வாசியுங்கள்
25 N - 2-0తoew 200టి

Page 46
பிண் வரலாந்நியல் தொடர்கதை
தங்கி நாளைக் காலை உம் விடுதிக்குப் போகலாம்” என்று சொல்லியபடியே ஒரு சிறிய கல் உரலில் சில இலைகளையும் விதைகளையும் இட்டுச் சிறிய மர உலக்கையால் அவற்றைத் தட்டி நசுக்கி அவனுடைய தலையில் அடிபட்ட இடத்தில் மருத்துவர் கோதைநாச்சி அம்மையார் அப்பினார். வேப்பிலையின் மணம் கண்ணனின் நாசியை வருடியது. தன்னுடைய வேப்பம்பழ அனுபவம் நினைவுக்கு வர அவனுக்குச் சிரிப்பு வந்தது. கண் களை மூடியபடி உதட்டைக் கடித்துக் கொண் டானி , கோதை நாச்சி அம்மையார் போன பின்னர் அவரது முகம் முன்னர் எங்கோ கண்டது போலத் தோன்றியது. ஆனால் நினைவுக்கு வரவில்லை.
来三,米 米
அடுத் த நாண் கு நாட் களும் கணி ணனுடைய பொழுது uu 600
ஆயத்தங்களிலும் இங்கிலாந்துக்குப் போன பின்பு மேற் கொளர் ள வுள் ள பணிக கா ன சில தேடல்களிலுஞ் செலவாகியது.
கண் ணண் வன் னி மேற்கு விமான நிலையத்திற்குப் போவதற்கான மின்னூந்தில் ஏறுவதற்கு முன் அவனை வழியனுப்ப அவன் எதிர் பார்த்ததை விட அதிகமானவர்கள் வந்திருந்தார்கள். அவனுக்கு ஏற்பட்ட விபத்தின் பயனான இரக கங் காரணமோ அவனி
G
 

நடந்துகொண்ட பண்பான முறையால் வந்த மரியாதை காரணமோ என்று சொல்வது கடினம். ஒ சி மின் மட்டும் அவனுடன் விமானத்தளம் வரை துணைக்குப் போனான். வழமையாகத்
தமிழர்கள் யாரையும் வழியனுப்ப விமான
நிலையத்துக்குக் கூட்டங் agon. L'ILL DIT 35Üü (3 Tugs காலத்தை வீணாக்க மாட்டார்கள். ஏனெனிற் பயணிகட்கு வேண்டிய சகலவிதமான போக்குவரத்துத் தொடர்பாடல் வசதிகளும் விமான நிலையத்தில் இருப்பதால் அதற்கான தேவை இருப்பதில்லை. அதைவிடவும், தமிழர் பயனற்றவை பேசிக்
காலத்தை வீணாக்குவோரல்ல என்றும் நீங்கள் அறிவீர்கள். எனவே, கண்ணனுடைய
விபத்தைக் காரணங்காட்டி ஒ சி மின் தனது மதியுரையாளர் மூலம் சிறப்பு அனுமதி பெற்றே அவனுடன் போக முடிந்தது.
மினி னுTந்துப் பயணத் திண் போது கண்ணன் தான் எடுத்த முடிவு சரியானதா என்று கொஞ்சம் குழம்பத் தொடங்கினான். அப்போது, ஒ சி மின் 'கண்ணா, இம் மாதிரி விடயங்களில் முடிவுகள் மாற்றக் கூடியன அல்ல. எந்த முடிவும் உத்தரவாதங்களுடன் வருவதில்லை. நீ ஒரு சைவன். உனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தால் எல்லாவற்றையும் கடவுள் மீது போட்டுவிட்டுச் சும்மா இரு’ என்றான். "நீயும் ஒரு சைவனா?” என்று கண்ணன் ஒ சி மின்னைக் கேட்டான். ' கிழக்கில் இந்த மாதிரித் திட்டவட்டமான அடையாளங் களர் கிடையாது. எ லி லா நம்பிக் கைகளிலும் நல் லவற்றை எடுத்துக் கொள்ளுவோம். முன்பும் வியற்நாமில் நூற்றுக் கணக்கான மதப்பிரிவுகள் இருந்தன. இப்போது சைவமும் கலந்து இன்னும் பல பிரிவுகள் உள்ளன. கடவுளை மறுக்கிற சிந்தனையும் நீண்டகாலமாக இருந்து வருகிறது. மனிதர் யாரை வணங் கினா லெனி ன, முடிவில மனிதரை மனிதர்தான் காக்கவும் அழிக்கவும் முடியும்.' என்று ஒ சி மின் பேசி முடிப்பதற்குள் கண்ணனுக்கு இவன் ஒரு நாத்திகனோ என்று ஐயம் எழுந்தது.
'நீ கடவுளை நம்பவில்லையா?” என்று கேட்டான். ' கடவுள் பற்றி நான் அதிகம்
2003 ژبنۍ طارونه نه چ۱ ه - لمونraكي

Page 47
வீண் வரலாந்நியல் தொடர்கதை
யோசிப் பதில் லை. அப் படி இருந் தாலும் இல்லாவிட்டாலும் மனிதர் மனிதருக்கு நன்மை செய்ய வேண்டும். அதுதான் என்னுடைய நம்பிக்கை” என்று ஒ சி மின் பதில் சொன்னான். 'தமிழர் உங்கள் நாட்டில் சைவத்தைச் சரியாக விளக்கவில் லையா?’ என்ற கண் ணனின் கேள்விக்கு ஒ சி மின் ' எங்களுடைய மரபு வேறு. சைவத்தையும் வைத்திருக்கிறோம். புத்தரையும் கிறித்துவையுங் கூட மதிக்கிறோம். எங்கள் முன்னோரையும் வழிபடுகிறோம். ஒவ்வொன்றும் அவரவரது தெரிவு’ என்று அமைதியாகப் பதில் கூறினான்.
இப் படித்தான் இவர்கள் தமிழரைச் சமாளிக்கிறார்களோ என்று நினைத்த கண்ணன் அங்கே “பெரிய கோயில்கள் இல்லையா?” என்று கேட்டான். 'வியற்நாமிய விடுதலைக்காகப் போராடியவர்கட்கான நினைவுச் சின்னங்களை விட உயர்வாக எந்தக் கோயிலையும் நாங்கள் கொண்டாடுவதில்லை’ என்று அதே அமைதியுடன் ஒ சி மின் விடை கூறினான்.
கணி ண னுக் கு அது ஒரு புதிய ஞானோதயமாயிருந்தது. ஆங்கிலேயர்கள் ஏன் தமது தேசிய வீரர்களைக் கவுரவிக்கிறதை ஒரு பண்பாடாக்கி அதையும் சைவத்துடன் இணைத்து விடுதலைக்கான சைவம்' என்கிற ஒரு புதிய கோட்பாட்டை வளர்த்தெடுக்கக் கூடாது என்று அவனது சிந்தனை ஓடியது. நாடு திரும்பியதும் இதைத் தனது ஆ.வி.போ.சி. (அதென்ன என்று கேட்கிறீர்களானால், உங்களுக்கு இவ்வளவு மறதி கூடாது. ஆங்கில விடுதலைப் போராளிச் சிங்கங்கள் என்று முன்பு சொல்லியிருக்கிறேன்.) இளைஞர் அணியான ஆங்கிலக் குருளையர் அமைப்பிலுள்ள நண்பர்களுடன் அது பற்றிப் பேச வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்து கொண்டான். ' என்ன யோசனை? இன்னமும் தடுமாற்றமா?’ என்று ஒ சி மின் குறுக்கிடும் வரை கண்ணனின் மோனந் தொடர்ந்தது. 'ஒன்றுமில் லை. உங்கள் மரபைப் பற்றி யோசித்தேன். உங்களிடமிருந்து கற்க நிறைய இருக்கிறது' என்றான். ஒ சி மின் தனது வழமையான தன்னடக்கத்துடன் ' எல்லாரும் எல்லாரிடமிருந்துங் கற்க நிறைய உண்டு’ என்று சொன்னான். அதற்குள் மின்னுந்து விமான நிலையத்தை அடைந்து விட்டது.
கண்ணனுடைய கையிலிருந்த சிறிய பையைத் தவிர மற்ற அனைத்தும் விமானத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டடிருந்தன.
 

கடவுச் சீட்டு, விசா எண் றெல்லாம் இன்று
அவதிப்படுத்துகிற மாதிரித் தமிழராட்சியின் கீழ் எதுவுமே கிடையாது. மனிதரைத் துன்புறுத்தாமலே
கண்காணிக்கிறதில் அவர்கள் வல்லவர்கள் என்று
நீங்கள் அறிந்திருப் பீர்கள். கண் ணனின்
அடையாள வில்லையில் அவனைப் பற்றிய விவரங்கள் எல்லாமே பொறிக்கப்பட்டுள்ளன. அவனது பயண விவரங்களும் அதிலேயே பதியப்பட்டிருந்தன. விமானம் ஏறும் வழியிலுள்ள வளைவுக்குள்ளால் அவன் போகும் போதே அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டுவிடும். யாரும் யாரையும் தொட்டு அளைந்து கேள்வி கேட்டுச் சந்தேகப் பார்வை பார்த்து வெறுத்துப் போகச் செய்ய மாட்டார்கள். தமிழர் பண்பாட்டில் கண்ணனுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எனினும் அதன் பின்னாலுள்ள கண்காணிப்பு வலை அவனது மனதைச் சில்லென்று உறைய வைத்தது.
- ஜெகதலப்பிரதாபன் -
வளைவை அடைய முன்னர் ஒ சி மின்னிடம் இருவரும் போய் இளநீர் பருகுவோமா என்று கேட்டான். ஒ சி மின் கண்டகண்ட நேரமெல்லாம் இளநீர், சோற்றுக் கஞ்சி என்று பருகுகிற பழக் கமில லாதவனாயினும் கண்ணனுடனான இறுதி நிமிடங்கள் என்பதாற் கண்ணனுடன் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றான். இரு வரும் தங் களு கி கு விருப் பமான செவ்விளநீரைத் தெரிந்து வாங்கினர். ஒ சி மின் பனங் கொடுக்கப் போன போது காசாளர் கண்ணனைக் காட்டி ' இவர் தானே பயணி?’ எண் று கேட் டார் . கண் ணனி வியப் புடன் ஒமெண் றாணி அதைக் கண் டு பிடிக் கக காசாளருக்குக் கணணி தேவைப்படவில்லை. கண் ண னினி கையில் இருந்த பையே போதுமானதாயிருந்தது. 'இந்த இளநீருக்கு நீங்கள் பணந் தரத் தேவையில்லை. இது பயணிகட்கான சேவைகளுள் அடங்கும்” என்றார். ஒ சி மின் தனது இளநீரைக் காட்டினான். 'உங்களுக்குந் தான் இலவசம்’ என்று காசாளர் சொன்னார்.
இது தமிழரின் விருந்தோம்பலா வியாபார உத்தியா என்று கண்ணனால் முடிவு செய்ய இயலவில்லை. இருவரும் காசாளருக்கு நன்றி கூறிவிட்டு இருக்கைகளில் அமர்ந்து இளநீரைப் பருகினர் . பயணிக ட் கான அழைப் பு
* ー *ウ ZOOE

Page 48
பின்வரலாந்நியல் சிதாடர்கதை
ஒலிபரப்பப் பட்டது. இருவரும் இளநீரைப் பருகிவிட்டு வளைவை நோக்கி நடந்தனர். வளைவை நெருங்கியதும் கண்ணன் ஒ சி மின்னைக் கட்டித் தழுவினான். அவனது கண்கள் கலங்கின. ஒ சி மின்னின் முகத்தில் மெலிதான துயரங் கலந்த முறுவல் இழையோடியது.
米 来 米
இங்கிலாந்துக்கான நேரடி விமானச் சேவைகள் மிகவுங் குறைவு. உலகப் போரின் Lft 6i L T 61 பொருளாதார ச் சரிவா ல ஐரோப்பாவிற்குள்ளும் பயணங்கள் மிகவுங் குறைந்து விட்டன. எனவே வட குருதித்தானமே (குர் திஸ் தான்) ஐரோப் பாவுக் கான பயண மையமாக அமைந்தது. மு னி பு நான் கு நாடுகளிடையில் ஆங் கிலேயராலும் பிற ஐரோப்பியராலும் பிளவுபடுத்தப்பட்ட குருதியரை ஒன்றிணைத்து ஒரு நாடாக்கிய பெருமை தமிழர் பேரரசிற்குரியது. இதன் காரணமாகப் பாரசிகரும் (முன்பு ஈரானியர்) பவிலோனியரும் (முன்பு ஈராக்கியர்) துலுக்கரும் (முன்பு துருக்கியர்) சிரியரும் தமிழருடன் சில காலமாகக் க ச ப் பு ைடயோரா யிருந் தாலும் தமிழரது குறுக் கீட்டால் தமது நாடுகட்கு அமைதி மீண்டதை முன்னிட்டு நன்றியுடையோராயினர். தமிழர், குருதர் எனவும் அழைக்கப்படும் குருதியரை ஒன்றிணைத்த போதும் அவர்கள் நீண்ட காலமாக வெவ்வேறு மொழிகளதும் பண்பாடுகளதும் ஆதிக் கத்திற்கு உட்பட்டு இருந்ததனால் அவர் களிடையே ஒற்றுமை குறைவாகவே இருந்தது. இந்த முரண்பாடுகளின் காரணமாக அவர்கள் தமிழ்ப் பேரரசின் ஆளுனர் ஒருவர் தம்மை நெறிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகக் குருதிய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதையே தமிழரின் சேர்த்தாளும் தந்திரம் என்று வேறு சிலர் கூறுவர். அவர்கள் தமிழரை நேசிப்பவர்களல்ல என்றுஞ் சொல்லப்படுவதால் உலக வரலாற்று நூல்களில் இக் கருத்து வற்புறுத்தப்படுவதில்லை.
- 米 米 米
வட குருதித்தானத்தின் பிரதான நகரம் தமிழராற் கட்டப்பட்டது. மலை சார்ந்த அந் நகரைக் குறிஞ்சிப் பேரூர் என்று அந் நாட்டவர் அழைப்பர். கண்ணன் குருதித்தானத்தில் ஒரு முழுப் பகறி பொழுதையுங் கழிக் க வேணி டியிருந்தது. குருதியர் அழிந் து
(

போய் க் கொண்டிருந்த தமது மொழியை மரீட் டெடுத் ததற்கு உதவிய தமிழருக் கு நன்றியுடையோராயிருந்தாலும் காணாமற் போயிருந்த தமது மொழியை இன்னற்பட்டு மீட்டெடுத்ததன் காரணமாகத் தமது மொழி பற்றி இறுமாப்புடையோராயும் இருந்தனர். பொதுவாக அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரிந்தாலும் தமிழரல்லாதோரிடம் தமிழே தெரியாதது போல நடந்து கொள்வார்கள். யார் என்ன கேட்டாலும் " விளங்கவில்லை’ என்று குருதிய மொழியிற் பதிலுரைப்பார்கள். அவர்களது குருதிய மொழிப் பற்று அராபியர், பாரசிகர் விடயத்தில் மிகத் தீவிரமாகக் காட்டப்படும். துலுக்கர் விடயத்தில் அது ஒரு வெறியாகவே தெரியும். அராபியரிடமும் பாரசிகரிடமும் கொஞ்சம் முரண்டு பிடித்த பிறகு குருதியச் சொற்கள் கலந்த தமிழிற் பேசுவார்கள். துலுக்கரிடம் சராசரியான துலுக்கர் அறியாத தூய குருதிய மொழியில் உரையாடுவார்கள். இதனாற் துலுக்கருக்குத் தமிழர் மீது கொஞ்சம் மனக் கசப்பு இருந்தது. அதைவிடத் துருக்கி என்ற தமது நாட்டின் பேரைத் தமிழர் துலுக்கம் என்று மாற்றித் தம்மை இழிவு செய்துள்ளதாகவும் பலர் கருதுவர். இதனால், முக்கியமாக, வட குருதித்தானத்தில் துலுக்கரைக் காண்பது அரிது. வருகிறவர்கள் தமது துலுக்க அடையாளத்தை முடிநி த வரை மறைக் க முயனர் றாலும் துலுக்கருடன் ஒரு தலைமுறைக்கும் மேலாக வாழ்ந்த வட குருதிய மூத்தோரிடம் அது இயலாது போய்விடும்.
விமான நிலையத்தினின்று குறிஞ்சிப் பேரூருக்குட் போவதற்கு விமான நிலையத்தில் இருந்தே விசேட மின்னுந்து இருந்தது. விமானப் பயணிகள் போக வரவும் மடத்திற் தங்கவும் எல்லா விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. எனினும் வன்னியுடன் ஒப்பிட்டால் வசதிகள் மட்டுமட்டாகத் தான் இருந்தன. வரி விலக்குக் கடைகள் (டியூட்டி பிறீ என்றால் தான் சிலருக்கு விளங்கும்) என்று எதுவுமே கிடையாது. ஏனென் றால் அந் த விதமான விற்பனை ஊக்குவிப்பு வீண் விரயத்துக்கே வழி செய்யும் என்பதாற் பயணிகட்கு அத்தியா அவசியமான பொருட்களைத் தவிர எதையுமே விமான நிலையங்களில் விற்கிறதற்கான சலுகைகள் கிடையாது. தமிழரின் வரி விதிப்பு முறை நியாயமானதாகவே இருப் பதாலும் இறக்குமதிகட்கு மிகுதியாக வரி விதிப்பது உலக வணிக ஆணையத்தின் விதிகட்கு முரணானது
| 2003 روسی ضرواہ رہتا چlaہ ہے۔ لمopے

Page 49
பிண் வரலாந்நியல் சிதாடர்கதை
என்பதாலும் ஆடம்பரப் பொருட்களை விமான நிலையங்களில் வாங்குவது நின்று விட்டது. எனவே உங்களை நான் குறிஞ்சிப் பேரூர் விமான நிலையத்தைச் சுற்றிக் காண்பிக்காதது பற்றி நீங்கள் குறைப் பட மாட் டீர் கள் . கண்ணனுக்குக் குறிஞ்சிப் பேரூரிற் காண்பதற்கு விசேடமாக எதுவும் இருந்ததாகச் சொல்ல இயலாது - ஒரு இடத்தை விட.
குறிஞ்சிப் பேரூர் விடுதலைப் போராட்ட அருங் காட்சியகம் குருதியர் களது ஒரு நூற்றாண்டுக் கால விடுதலைப் போராட்ட வரலாற்றை விவரித்துக் காட்டுகிற ஒரு ஆவணக் காப்பகமாகவும் குருதியப் பண்பாட்டு மீட்சி பற்றி விளக்கும் பண்பாட்டு அரும் பொருள்களின் காட்சி மனையாகவும் இருந்தது. எலி லா ஆவணங்களுக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தது மட்டுமன்றிக் குருதிய மொழியும் தமிழ் எழுத்து முறையிலேயே எழுதப்பட்டிருந்தமை கண்ணனுக்கு வியப்பளித்தது. அந்த அளவில் ஆங்கிலேயரின் நிலை பிழையில்லை என்று நினைத்துக் கொண்டான். ஒ சி மின் வியற்நாமிய மொழியும் தமிழ் எழுதி துக் களிலேயே எழுதப்படுவது பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆங்கிலேயர்கள் இன்னமும் தங்களது எழுத்து முறையை விட்டுக் கொடுக்காதளவில் மற்ற எவரையும் விடத் தமிழருக்கு எதிராக் நிமிர்ந்து நிற்கும் தகுதி பெற்றவர்கள் என்ற நம்பிக்கை அவளது மனதிற்குத் தெம்பூட்டியது. ஆங்கில அறிவியல் பற்றி ஆராயும் போது இது போன்ற விடயங்களையும் தேடி ஆராய் நீது ஆங்கிலத்தின் மேன் மையை உலகறியச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவனையறியாமல் அவனுடைய உதடுகளில் தேசியக் கவி ஆங்கிலநாயகரின் ஆங்கில உணர்ச்சிப் பாடல் ஒன்று தவழ்ந்தது.
வாழிய ஆங்கிலம், வாழிய ஆங்கிலர் வாழிய ஆங்கில மணித்திருநாடு வாழ்க ஆங்கிலம் வாழ்க ஆங்கிலர்
வெந்தே சாகினும் நொந்நே வாடினும் என்றும் எங்கள் வாய்களில் எழும்ஒலி வாழ்க ஆங்கிலம் வாழ்க ஆங்கிலர் கணி ணனி கொஞ சம உரக கப் பாடியிருக்க வேண்டும். பக்கத்திலிருந்தவர்கள் அவன் பக்கமாகப் பார்த்துவிட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டார்கள். அதைக் கண்ட கண்ணனுக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது.

மனிதத்தை
விருத்து.
நிசப்தத்தின் விட்டில் பூச்சியின் ஒலியிலும் மின்மினிப் பூச்சியின் ஒளியிலும் தவளையின் கடூரத்திலும் ஓர் உலகம் இருப்பதாயும் அதில்
ஓர் உணர்வு இருப்பதாயும் நீங்கள் சொல்வதுண்டு.
குட்டியின்ற நாயிடம் தாய்மையை உணர்வீர்கள்
Ligi DT 6.0L is தெய்வம் என்பீர்கள்
எனினும், உங்கள் சகோதரிக்கு வல்லுறவு புரியப்பட்ட போது உங்களுடன் உயிர் வாழும் சிறுசுகள் வெடித்துச் சிதறிய போது
பசியால் நொந்து
மெலிந்து இறந்து போயினும்
சகோதரங்கள் துப்பாக்கி ரவைக்கு அடங்கி
பிரிந்து போயினும்
நீங்கள் மனிதர்களையோ மனிதத்தையோ, மனித உணர்வையோ விடுத்து
மிருக வதைக் கெதிராய் நிர்வாணமாய் வீதியில் நிற்பீர்கள்!
- எளிuேணன் -
as N - 12-vo.2V5 2003

Page 50
வீண் வரலாந்நியல் சிதாடர்கதை
அறைக் கதவோரமாகச் சீருடையில் நின்ற ფილ நடுத் தர வயதினர் கண் ணனைப் பார்த் து முறுவலித்தார். அதிலிருந்த கணிவைக் கண்ணன தவற விடவில்லை. கண்ணன் அறையை விட்டு வெளியேறும் போது அவர் கண்ணனைத் தோளிற தொட்டு 'ஆங்கில நாடு?’ என்று தமிழிற் கேட்டார் கண் ணன் ஒமெண் று தலையை ஆட் டினான் ' என்னுடைய அம்மா ஆங்கிலப் பெண்மணி என்றார், அந்த மனிதர். 'எனக்கு ஆங்கிலப நன்றாகப் பேசத் தெரியாது. ஆனாலும் விளங்கும் என்று தமிழிற் தொடர்ந்தார். அவரது கைத்தடியைக் கண்ட போது தான் அவர் உடல் ஊனமானவர் என்று விளங்கியது.
முன்னாளிற் குருதியத் தீவிரவாதியாக அறியப்பட்ட அவரது பேர் உசுமான். அவரை அவ
விரும் பரிய 35 T 6). Ld. ഖ ഞ] போராட் 1 அருங்காட்சியகத்தில் வழிகாட்டியாகப் பணியாற் அனுமதித்திருந்தனர். உசுமான் கண்ணனை:
தன்னுடன் அருங்காட்சியகத்தின் நூல் விற்பனை நிலையத்திற்கு அழைத் துச் சென்று ஒரு குறுந்தட்டைக் காட்டிார். 'குருதிய விடுதலையு உலக நாடுகளும் ' என்று உறையிற பொறிக்கப்பட்டிருந்தது. ' என்னுடைய தாயா தமிழில் எழுதியது” என்றார். கண்ணன் அை எடுத் துப் பார்த்து அதற்குரிய விலை யைக் காசாளரிடம் கொடுக்க முற்பட்ட போது உசுமான அவனை மறித்து 'இது உனக்கு என்னுடைய பரிச ஆங்கிலப் பற்றுள்ள ஆங்கிலேயன் ஒருவனை நா6 கண்டேன் என்று அறிந்தால் என் வயதான தாயா மிகவும் மகிழ்ச்சியடைவார்’ என்று உணர்ச் பொங்கக் கூறினார்.
குருதியத் தேசியப் போராளியாகி ஒரு காலம் வாழி நீ து குருதிய விடுத ை வரலாற்றுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டுள் ஒரு குருதிய நாட்டவருக்குத் தனது தாயில் நாட்டைப் பற்றியும் தாயின் மொழியைப் பற்றியு உள்ள பற்றைத் தனது ஆங்கில நண்பர்கள் பலர ஆங்கில உணர்வின் மையுடன் ஒப்பிடுகையி கண்ணனுக்கு வெட்கமாக இருந்தது.
கண்ணனுடன் கை குலுக்கி அவை வழியனுப்பும் போது அவனுடைய காதோடு காதா ' வெல் க ஆங்கிலம்’ என்று ஆங்கிலத்தி சொனி னார் . அது அவருக குத் தெரிந் ஆங்கிலத்தின் கணிசமான ஒரு பகுதியாக இருக் வேண்டும். கண்ணன் அவருக்கு ஆங்கிலத்தி நன்றி கூறி வாழ்த்திவிட்டு மின்னூந்தை நோக் நடந்தான்.
 

来源 米 米
இலண்டனுக்கான புட்பக விமானம் எவ்விதமான தடங்கலுமின்றி வேளைக்கே புறப்பட்டது. இதில் ஒரு முக்கியமான விடயம் ஏதென்றால் லண்டனுக்கு வாரத்துக்கு இரண்டு விமானச் சேவைகளே உள்ளன. லண்டனில் இருந்த ஈத்துரோ விமான நிலையத்துக்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டுமானால் 'போருக்குப் பிந்திய இங்கிலாந்து' என்ற தலைப் பில் பேராசிரியர் உலகநாதன் பெருங்கதையாளருடன் இணைந்து யோவான் இக்கின் போத்தன் (ஜோண் ஹிகின்பொட்டம் 5 என்பது பழைய ஆங்கில வடிவம்) எழுதிய வரலாற்றுக் கையேட்டைப் பார்க்கவும். இலண்டன் ஏறத்தாழ வரலாறாகி விட்டது. அதைச் செங்கற்பாலை என்றே கண்ணனின் சமகாலத்தவர் குறிப்பிடுகின்றனர். எனவே அதன் துயர வரலாற்றை எழுதி உங்களை மனம் வருத்த நான் விரும்பவில்லை என்று விளங்கிக் கொள்வீர்கள்.
கண்ணன் சென்ற புட்பக விமானம் லண்டனின் கிழக்குப் பகுதியில் அமைந்த உவோத்தமிற்றோ (வோல் ற் ஹம் ஸ்ற் றோ என்பது வழக்கிழந்த வடிவம்) புட்பக விமானத் தளத்திற்குப் போய் க் கொண்டிருந்தது. இதென்ன திரும்பத் திரும்ப புட்பக விமானம் எண் று யோசிக் கிறீர்களா? நாங் களர் இராமாயணம் பற்றியோ இராவணன் பற்றியோ பேசிக் கொண்டிருக்கவில்லை. புட்பக விமானம் என்பது தமிழ் விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் உலகிற்கு வழங்கிய கொடை. வேறுபட்ட பருவ நிலைகட்கு ஏற்பத் தன் இயக்கத்தை மாற்றிச் சிக்கனமாக இயங்கக் கூடியது. எனினும் பாதுகாப்புப் பற்றிய சில விடயங்களில் போதாமைகள் உள்ளமையாற் தமிழர் நாட்டில் அதைப் பயன்படுத்துவதிற் கட்டுப்பாடுகள் உள்ளன. இது பிறருக்கு ஏற்படக் கூடிய உயிராபத்துப் பற்றித் தமிழரது அக்கறையீனம் என்று நீங்கள் நினைப்பது தவறு. தமிழர் விமானங்களின் குறை நிறைகள் பற்றிய முழு விளக கங்களுடனேயே உலகினி பல பாகங்களிலும் அவற்றை விற்கின்றனர். அவற்றைப் பயன்படுத்துகிற நிறுவனங்களும் ஏற் கும் நாடுகளும் விவரம் அறிந்தே அவற்றைப் பயன்படுத்துகின்றன. எனவே தமிழர் யாரையும் ஏய்ப்பதாகக் கூறுவது தவறு.
8) 2 on - he wavy 2003

Page 51
பிண் வரலாந்நியல் சிதாடர்கதை தமிழர் Ꭷ , 6ᏙᎩ 6ᏡᎠ 8Ꮟ ஆளு வ து பற் றரிப் பொறாமையுடையோர் மட்டுமே தமிழருக்கு மனித உயிர் பற்றிய அக் கறை இல்லை என்று குற்றஞ்சாட்டுவர்.
புட்பக விமானத்தின் பாதுகாப்புப் பற்றிய கவலைகட்கு நியாயம் இருந்தாலும் புள்ளி விவரங்களின் படி ஐரோப்பாவில் இதுவரை இயந்திரப் பழுதால் ஏற்பட்ட விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆண்டுக்குப் பத்துப் பேருக்கு மேல் இராது என்பதாலும் இறப்புக்கள் உடல் ஊனம் என்பனவற்றுக்கு உரிய நட்ட ஈடுகள் வழங்கத் தமிழர் உலகக் காப் புறுதி நிறுவனம் ஏறி பாடுகளை ச் செய்திருப்பதாலும் புட்பக விமானப் பயன்பாடு கூடிக் கொண்டே வந்துள்ளது.
கண் ணனும் பிற பயணிகளுமாக எல்லாமாகப் பதினைந்து பேர் ஏறியதும் புட்பக விமானம் மேலெழுந்து பறக்கலாயிற்று. கண்ணன் உசுமான் பெரியவர் கொடுத்த குறுந்தட்டைத் தனது இருக்கையின் முன்னாலிருந்த கையடக்கக் கணணியில் இட்டு வாசிக்கத் தொடங்கினான். குருதியர்கள் சில நூற்றாண்டுக் காலமாக இன அடையாளமே இல்லாமலாக்கப்பட்ட ஒரு இனம். தன்னை மீள அடையாளப் படுத்த அதற்கு இயலுமானால ஏணி அகிலமும் ஆண ட ஆங்கிலேயர் மீளவும் உலகாள இயலாது என்ற எண்ணம் திரும்பத் திரும்ப அவனது மனதிற் தோன்றியது. தொடர்ந்தும் உற்சாகத்துடன் சில பக்கங்களைத் திரும்பத் திரும்ப வாசித்தான்.
இது போன்ற ஒரு நூலைத் தனது வாழ்வில் இதற்கு முன்பு வாசித்ததில்லையே என்று இடையிடை மனம் வருந்தியது. அவனுடைய கவனம் நூலிலேயே குவிந்திருக்கையில் திடீரென ஏதோ அதிர்ந்தாற் போல இருந்தது. கண்ணன் திடுக்குற்றான்.
(கண்ணனை அதிர வைத்தது என்ன, புட்பக விமானதத?ல ஏதேன பழுது ஏற பட்டு விபததுககு ள எானதா, கணணனின பயணத தவிற்குத தடை ஏற்பட்டு அவன இங்கிலாந்திலன்றி வேறெங்கோ இறங்க நேர்ந்ததா எனர்களிற மாதிரிக் கேள்விகள் நிச்சயமாக உங்கள் மனதைக் குடையும். எனினும் அடுத்த படலத்தை வாசிப்பதை விட உங்கள் முன்னால் வேறு தெரிவு இல்லை.)
-

கனவுகளைக் கீறிக் கிழித்து தலையணையின் புள்ளிகளில் பிசைந்து உதிரத்திருக்கிறான்.
GunÚsör gTť sa 9 (56)Iún ujiju நினைவுகள் வந்து அவன் கன்னங்களை விறாண்டுகின்றன.
umTGOMJuquin நழுவித் தழுவ இயலாத கணங்களில் அவன் இருப்பில் வந்து
5gtotiti uyogasygi sunngonsorůn upou Gunný vůso இரத்தக் கறைகள்.
= எல். வஸிம் அக்ரம் =
/千 SanWƏVŽ)
வாசகர் வட்டங்கள்
தாயகம் வாசகர்களை ஒன்றிணைப் பதற் காகவும் ஆக் கபூர் வமான விமர்சனங்களை வெளிப் படுத் தி பரந்தளவில் தாயகம் சஞ்சிகையைப் பிரபல்யப்படுத்தவும் எழுத்தாளர்களையும் வாசகர் களையும் இலக் கரிய ஆர்வலர்களையும் அவர்கள் வாழும் பகுதியில் பத்துப் பேருக்கு உட்பட்டதாக வாசகர் வட்டங்களை அமைக்கும்படியும் © ഖ്വി, ഇിഞ L 3 u இனைப் பரினை ஏற்படுத்துவதற்கும் தாயகம் ஆசிரியர் குழுவுடன் தொடர்பு கொள்ளும் படி வேண்டுகின்றோம்.
ஆசிரியர் குழு .レク - ܓ
é os - one-woo 2v) 2 (0.03 |

Page 52
கட்டுரை
UvaTUeGö
1. பாடீரும்
明。 தசாப்தங்கள் முன்பு சினிமாப் Luffl 6OL i List L65 என்று சொன்னாற் பலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாடல்கள் என்பன கொஞ்சஞ் சிறப்பானவை என்கிற கருத்திலேயே அவ்வாறு சினிமாப் பாட்டுக்கள் மறுக்கப்பட்டன. அதே வேளை நாட்டார் பாடல்கள் பற்றிப் பேசப்பட்டு வந்தது. இன்று பாடல் என்ற சொல் பாடுவதற்குரிய அனைத்தையுமே குறிக்கப் பயன்படும். கூத்துப் பாட்டுக்களும் பாடல்கள் என்று அண்மைக் காலமாகவே கூறப்படுகின்றன. எ வி வாறாயினும் T L (3LT uTL (36) T பாடுவதற்குரியது.
LJ 66) op Ul இலக கசிய மரபுகளில செய்யுள்கட்கான யாப்பு விதிகளில் சந்தத்திற்கு ஒரு முக்கியமான இடம் இருந்தது. எதுகை மோனைகளின் ஓசை நயம் செய்யுளை அழகுபடுத்த உதவுவதுடன் நினைவில் இருத்தவும் உதவுவதாகும் . இவை யாவும் செய்யுள்களைப் பாடுவதற்கு ஏற்றனவாக் குகின்றன. தொடக்கக் காலத் தமிழ் ச் செய்யுள்கள் எளிமையான பேச்சின் சந்தத்தை உடையன. அவற்றைப் பாட இயலும். எனினுங் காலப் போக்கிற் பலவாறான சந்த ஒழுங்குகள் விருத்தி பெற்று வந்துள்ளன. இந்த விதமான விருத்தியை ஒட்டி, ஒரு செய்யுளில் பொருட் செறிவையும் சொல் அலங் காரத்தையும் கவித்துவம் தொடர்பான பிற பண்புகளையும் வலியுறுத்துகிற போக்கோ பாட எளிதாயும் கேட்க இனிதாயும் அமைவதையும் இசை சார்ந்த பிற பண்புகளையும் வலியுறுத்துகிற போக்கோ கூடுதலாக அமைந்திருக்கலாம்.
பின்னையவை தனி மனிதர்களோ ஒரு இசைக் குழுவினரோ பாடுவதற்கு ஏற்றனவாயும் வெவ்வேறு சூழ்நிலைகட்கேற்ப வெவ்வேறு வடிவங் கொண் டனவாயும் அமையலாம். இதனால் ஒரு தாலாட்டோ ஒப்பாரியோ ஊஞ்சற் பாட்டோ ஒரு கூத்துப் பாட்டாக அமைய இயலாது என்று தடை இல்லை. எனினும் பாடல்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிவோம்.

பலனும் செய்யுளும்
சில வகையான பாடல்கள் திரும்பத் திரும்பச் சமூகத்திற் குட் பாடப்படுபவை. அவற்றின் சொற்களும் மெட்டுக் களும் காலத்துடனும் இடத்துடனும் மாறி வந்தாலும் அவற்றுக்கென்று ஒரு தொடர்ச்சியான சமூக இருப்பு உண்டு. அன்றைய கூத்துப் பாட்டுக்கள் முதல் இன்றைய சினிமாப் பாட்டுக்கள் வரை கேட்பவர்களையே அதிகம் மையப்படுத்துகின்றன எனலாம். அவை எவரும், எல்லாரும் பாடுவதற்கானவை என்று சொல்ல இயலாது. எனினும் பலரும் கூத்துப் பாட்டையோ சினிமாப் பாட்டையோ முணு முணுக்கிறோம். ஒரு பரத நாட்டியப் பாடலை யாரும் முணுமுணுப்பதை விட ஒரு கச்சேரிப் பாடலை முணுமுணுப்பது அதிகம் எனலாம். இதற்கான காரணம் நாட்டியத்தின் போது நமது கவனம் பாட்டை விட ஆட்டத்தின் மீதே இருப்பது 55fᎢ60Ꭲ .
تقع =
பாட்டுக்களிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றின் வரிகள் கேட்க இனிமை, மனதிற் பதியக் கூடிய தன்மை என்பனவற்றைக் கவனத்திற் கொணர் டே அ ைமகன் றன. நிச்சயமாகத் தேவார திருவாசகங்களும் திவ்வியப் பிரபந்தங்களும் பாடுவதை மனதிற் கொண்டே ஆக்கப்பட்டவை. அதனால் அவற்றிற் கவித்துவம் இல்லை என்று கூற முடியாது. அவை கவித்துவத்தில் வேறுபடலாம். அவை வெறும் செவி நுகர்வு இன்பத்திற்காகப் புனையப்பட்டவை அல்ல. அவை ஏதோ செய்தியைக் கூறுவதையே நோக்கமாக உடையன. ஆயினும் அச் செய்தி பாடுவோரையும் கேட்போரையும் சென்றடையவும் மனதில் ஆழப் பதியவும் அவற்றின் இசைத் தன்மை உதவுகிறது. அவற்றைப் பாடுவதற்குரிய இடங்களும் அதே நோக்கங்களை ஒட்டித் தெரிவாகின்றன.
காலத் ததாற் பிற் பட்ட சநீதப் பாடல்களில், பாடலின் ஒசை மூலம் சில
ason - ಗಿಣ-opo೨೪/೨, 2008

Page 53
கட்டுரை
விதமான உணர்வுகளைப் புலப்படுத்தவோ கிளரச் செய்யவோ முடிகிறது. பலவேறு தாளக் கட்டுக்களில் வரும் கூத்துப் பாடல்களாயினும் திருப்புகழ் போன்ற சந்தச் சிறப்பு மிக்க பாடல்களாயினும் அவை இப் பண்பை முக்கியப் படுத்துவதில் வழமையான செய்யுள்களினின்று விலகி நிற்கின்றன.
இசைப் பாடல களாக அமைந்த சாகித்தியங்களில் பல்லவி, அனுபல்லவி, சரணங்கள் என்கிற அமைப்பு முறை பரவலாகக் காணப்படுகிறது. பிற இந்திய மரபுகளிலிருந்து வந்த பாடல் முறைகள் தமிழ்க் கூத்திலும் சினிமாவிலும் நடன இசையிலும் நிலையான இடம் பிடித துளிர் ளன. எவ வாறாயினும் இசை முக கலியமானதாகவும் மனதைக் கவர வேண்டியதாகவும் அமைய வேண்டிய இடங்களிற் பயன்படுகிற நடைமுறைகள் பொதுவாகக் கவிதைகளிற் காணப்படுவதில்லை. அதாவது, பாடுவதும் பாட்டு மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதும் முக்கியமானது என்று வருகிற போது பயன்படுகிற உத்திகள், ஒரு கவிதைக்குரிய கவித்துவமான பண்புகளைக் கொண்டிருக்கத் தேவையில்லை.
米 sk 米
தமிழிசையை விடத் தியாகராயரின் தெலுங் குச் சாகித் தி யங் கள் பரவலான வர வேறி பைப் பெறி றதறி குப் பல வேறு விளக்கங்கள் இருந்தாலும், ஒரு முக்கியமான விடயமேதெனில் தியாகராயரின் சாகித்தியங்கள் மொழி தெரியாதவரது வாயிற் கூட எளிதாக நுழைகின்றன. இதுவே அவரது பாடல்கள் அவரோடு ஒப்பிடத்தக்க அல்லது அவரை மிஞ்சிய | 6D 600 LID U 60) L. ULI அவரது கால த துச் சாகித்தியகாரர்களான முத்துச்சாமி தீட்சிதரதும் ஷயாமா சாஸ்திரியினதும் பாடல்களை விடப் Ll J 6ll 6Ꭰ [Ꭲ éᎦ அறியப் படக் கார ண மா யப் இருந்திருக்கலாம் என்பது எனது ஊகம்.
தமிழை விடத் தெலுங்கு கர்நாடக இசைக்கு ஏற்ற மொழி என்ற கருத்து ஏற்பட ஒரு காரணம் பல தமிழ்ச் சாகித்தியங்களில் மூச்சுத் திணறுகிற விதமாக வார்த்தைகள் அடைந்து காணப்படுவதாகவே தோன்றியது. பாட எளிய முறையில் எழுதியவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனினுஞ் செய்யுளுக்கும் பாட்டுக் கும் வேறுபாடு தெரியாதவர்கள் கணிசமாக இருந்துள்ளனர்.
பல நல்ல சாகித்தியங்கள் வெகுசில வரிகளையே கொண் டவை. அவற் றை
( ;[70– ظاهنمامو3 |

༄༽ வாசகர் கடிதம்
ஆசிரியர், 'தாயகம்
தங்களின் தாயகம் (ஏப்ரல்-ஜூன் 2008) இதழில் வெளியான, படைப்பிலக்கியமும் பல்கலைக்கழகங்களும் என்ற தலைப்பிலான சி.சிவசேகரத்தின் கட்டுரையில்,
' .' நிலவிலே பேசுவோம்’ என்ற என்.கே.ரகுநாதனின் கதையை வைத்துக் கைலாசபதி மீது எஸ்.பொன்னுத்துரை முதலாக யேசுராசா, மு.பொன்னம்பலம் போன்றோரும் தமிழகத்தில் வெங்கட் சாமிநாதன் என்கிற மாக்ஸியத் துவேஷி வரை அவதூறு கிளப்பிய மூன்று தசாப்தங்களில்.”
என்று வரும் வரிகளில், எனது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நிலவிலே பேசுவோம் சிறுகதையுடன் கலாநிதி க.கைலாசபதியைத் தொடர்புபடுத்தி, பேச்சிலோ, எழுத்திலோ எங்குமே நான் குறிப்பிட்டதில்லை.
எனது கடிதத்தைத் 'தாயகம் இதழில் வெளியிட்டு, என்மீது வீசப்பட்ட அவதூறைக் களையுமாறு கேட்டுக் கொள்கிறேன.
அ.யேசுராசா 10-06-2008
விருந்துகிறோம்
பேராசிரியர் சி. சிவசேகரத்திடம் தொடர்பு கொண்ட போது அவர் யேசுராசா கைலாசபதியைப் பற்றித் தன்னிடம் நேரிலேயே பல அவதுTறான கருத்துக் களைக் கூறியிருந்ததால் இத் தவறு நேர்ந்தது என்றும் இத் தவறுக்கு வருந்துவதாகவும் தெரிவித்துக் கொண்டார்.
- ஆசிரியர் குழு -
ار ܒܢܓ
assor ー *りーの ZOOーچے

Page 54
கட்டுரை
மனதிற்குள் வாசிக்க ஓரிரு நிமிடங்களே அதிகம். ஆலா பரணம் முதலாகப் பல விதமான அலங்காரங்களுடன் அதைப் பல நிமிடங்கட்குப் பாடலாம். ஒரு மணித்தியாலமோ அதினுங் கூடவோ வேண்டுமானாலும் பாடலாம். அதை இன்னுமொரு மணித்தியாலம் இருந்து கேட்கவும் ஒருவருக்கு ஆவலாய் இருக்கலாம். இங்கே ஆவலுடன் கேட்கத் தூண்டுவன சொற்களல்ல. கூறப்படுகிற கருத்தை விடப் பாடுகிற விதமே முதனி மையானது. இதனாற் சொற் களர் முக்கியமற்றவை என்றாகிவிடாது. ஒரு பாடலின் வரிகள் மன தி ல (b பாதிப் பை ஏற்படுத்துகின்றன. ஆயினும் அதுவே பாடலைக் கவர்ச்சியுடையதாக்குவதில்லை. இதை விளங்கிக் கொள் ள வேண் டுமானா ல gf 60f ld H. Li பாட்டுக்களின் பக்கம் திரும்பலாம்.
கவிதைகளை விட எளிதாகப் பாடல்கள் மக்களைச் சென்றடைகின்றன. ஏனென்றாற் பாடல்களைக் கேட்க முயற்சி தேவையில்லை. முதற் தடவை கேட்டவுடன் ஒரு பாட்டை மனதிற் பதியச் செய்வது அதன் சொற்கள் அல்ல. அதனாலே தான் அதன் முதல் வரிகள் திரும்பத் திரும்பப் பாடப்படுகின்றன. " சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே’ என்ற பாட்டை எத தனை பேருக் கு நினைவி ருக்கு மி ?, "செந்தமிழ்த் தேன்மொழியாள்’ என்ற பாட்டுப் பலருக்கு நினைவிருக்கும். முதலிற் குறிப்பிட்ட வரியுடன் தொடங்குகிற பாட்டின் பேராக ஏன் பின்னைய வரி நினைவில் உள்ளது? அந்த வரி பல லவி மாதிரித் திரும் பத் திரும் பப் பாடப்படுகிறது. ஆனாற் கருத்தாழம் உள்ளது முதற் பகுதி. அது ஒரு நாட்டார் பாடல், ஒரு ஒப் பாரி. அது ஒரு காதற் பாட்டிற்குள் புகுத்தப்பட்டுள்ளது.
சினிமாப் பாட்டிலும் கூத்துப் பாட்டிலும் கர்நாடக சாகித்தியங்களிலும் மனத்தில் அதிகம் பதிகிற வரிகளில் அதாவது திரும்பத் திரும்பப் பாடப்படுகிற வரிகளிலேயே பாட்டின் வெற்றி அதிகம் தங்கியுள்ளது. அது ஆழமான கருத்துள்ளதாக இருக்க வேண்டுமா என்று கேட்டால் அவசியமில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஐம்பது ஆண்டுகள் முன்பு மிகவும் பிரபலமான பாட்டு ஒன்று 'ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ டும்கானா’ என்ற நன்கறியப்பட்ட வரிகளைக் கொண் டது. இந்த மாதிரி உதாரணங் கட் குப் பஞ சம இல லை. அப்படியானால் ஒரு பாட்டின் வெற்றிக்குக் காரணம் எது? சினிமாப் பாட்டு என்றால் படத்தின் வெற்றி, படம் வந்த காட்சி, பாட்டுக்காக
.7 طیارۃ لما^e
 
 
 

வாயசைத்தவர் ஒரு பிரபல நடிகரா என்பன போன்ற விடயங்கள் முக்கியமாகின்றன. அடுத்தபடியாக மெட்டு, பாடியவர், பாடப்பட்ட விதம், பக்க வாத்தியங்கள் என்பனவற்றை மீறி ஒரு பாட்டு தனியே அதன் பாடல் வரிக்கட்டாக விரும்பப்படுவது அரிது.
பல பாட்டுக்கள் பிரபலமான பிறகு தான் அவற்றின் கருத்தாழமும் கவித்துவம் என்று எதுவும் இருந்தால் அவையும் கவனிப்பைப் பெறுகின்றன. இதனாலே தான் சினிமாப் பாட்டுக் கள் பல வற்றில பொருத்தமான வார் தி தைகள் கரி  ைடக கா விட் டா ல
ஜிஞ ஜினி னாக கிடி ஜிஞ ஜினி னாக கிடி ஜிஞ்ஜின்னாக் கிடி ஜிஞ்ஜின்னா’ என்றோ 'சிக்குமங்கு சிக்குமங்கு செல்லப்பாப்பா' என்றோ எழுதலாம். ஆனாலும் பாட்டு வெற்றி பெறுகிறது. வெற்றிக்கான காரணத்தை யாரும் பாட்டின் சொற்களிற் தேட இயலுமா?
கர்நாடக இசையில் கருத்தாழமுள்ள சாகித்தியங்கள் பல உள்ளன. கருத்தாழம் அற்றவையும் ஒப்பிடத்தக் களவில் உள்ளன. எனினும் பெருவாரியானவை தெலுங்கிலும் கணிசமானவை வடமொழியிலும் கன்னடத்திலும் உள்ளன. இன்றும் மொழி தெரியாமலே அவை விரும் பப்படுகின்றன. தமிழிசை இயக்கம் உருவாகும் வரை தமிழில் இருந்த மூத்த மூன்று சாகித்திய கர்த்தாக்கள் பற்றிக் கர்நாடக சங்கீத சபாக் காரர்கள் கேள்விப் பட்டும் இருக்க மாட் டார் கள். இன்றும் தமிழ் கர் நாடக சங்கீதத்திற்கு ஏற்ற மொழியல்ல என்ற எண்ணம் இருந்து வருகிறது. பாடுவதற்காகவே எழுதப்பட்ட சைவ, வைணவ பக்தி இயக்கப் பாடல்கள் தமிழிசை இயக்கம் எழுச்சி பெற்ற பின்பே கர்நாடக சங்கீத மேடைகளிற் பாடப்பட்டன. பாரதி பாடல கட் குச் சினிமா கொடுத் த முக்கியத்துவத்தைக் கர்நாடக சங்கீத மேடைகள் கொடுப் பதறி குச் சில தசாப் பதங் களர் எடுத்ததெனலாம். சினிமாத் துறையில் தி.மு.க. தலைவர்கள் தமக்கென்று ஒரு இடத்தைப் பிடித்ததனாலேயே பாரதிதாசன் கவிதைகள் சினிமாவிற் பாடப்பட்டன. -
கவித்துவம் ஒரு பாட்டின் வெற்றிக்கு முக்கியமானதென்றால் இனி றைக் கு நாம் வைரமுத்து, வாலி, கண்ணதாசன் என்கிற பேர்களின் இடத்தில் பாரதி, பாரதிதாசன் என்கிற பேர்களை மட்டுமன்றிச் சினிமாவுக்காக எழுதிய கா.மு. ஷெரிப், உடுமலை நாராயணகவி ஆகியோரின் பேர் களையும் உச்சரித்துக் கொண்டிருப்போம். சினிமாப் பாட்டு எழுதுவது
12003 نوسیہ ضروکہ macyہ سے لمasonضح

Page 55
கட்டுரை
ஒரு கலை. அதற்குக் கவித்துவத்தை விட முக் அவற்றைப் பற்றிப் பின்னர் கவனிப்போம்.
சமகால இசைத்துறையில் இவை அனைத் தமிழில் மெல்லிசை என்பது கூத்து மேடையில் சினிமாவிலேயே தங்கியுள்ள ஒரு விடயமாகவே தோல்விகளை நிர்ணயிக்கிற, படைப்பின் தரத் பாடல்களின் வெற்றி தோல்விகளையும் பாடகர்களது வெற்றி தோல்விகளையும் தீர்மானித்து வந்துள்ள
சினிமா தமிழகத்தின் சமூக-அரசியல்-பண்ட வேறு எங்கும் சினிமாவின் ஆதிக்கத்தைக் காணுவ இலக்கியம் பற்றிய மதிப்பீடுகளையும் ஊடுருவுகி அழகியல் தொடர்பான அளவுகோல்களையும் ப 3566ósi G3 LITLò.
உலகுக்கு உளவியலின் ஊற்றான சிக்மண்ட் பிரைட் அதிர்ந்த போனான் மகனும் மாதாவும் மருவுகொள்ளும் இடிபஸ் சிக்கல் மகளும் தந்தையும் மகிழ்ந்து கொள்ளும் இலெக்ட்ரா சிக்கல் ~ எல்லாம் எந்தன் ஒழுக்க விளக்கம்
புதிதாய் அவன் மூளையை கசக்கியத ~ கலக்கியது வியன்னாவில் நிகழ்ந்திருக்கும் ( விசித்திரக் கொடுரம் மகளைத் தந்தை மறியலில் வைத்த இரு பன்னிரு வருடம் உடலைப் பறித்த ~ * உலக ஒட்பம் தறித்து ~ உலகுக்கு ஈந்திருக்கிறான் மழலைகள் ஏழு
இந்தச் சிக்கல் என்ன என்று எழுந்துவிட்டான் புதைகுழிநின்று இந்த சிக்கல் வழக்காய் மன்றினைச் சேரும் மனநோய்தான் இவ்வகை மணநோய்க்கு மகத்தான காரணம் என மன்று சொல்லும்
மகளைப் புணரும் தந்தையின் மணநோய் நின்று கொள்ளும்

uक्ष வேறு ஆற்றல்கள் தேவைப்படுகின்றன.
தையும் விட முக்கியமான ஒரு விடயமும் உண்டு. மிருந்து சினிமா வழியாக வளர்ந்து இன்னமும் உள்ளது. எனவே திரைப்படங்களின் வெற்றி துடன் தொடர்பில்லாத பல வேறு விடயங்கள் தும் இசையமைப்பாளர்களதும் பாடலாசிரியர்களதும்
盲6T。
ாட்டுத் தளங்களிற் செலுத்துகிற ஆதிக்கம் போல து அரிது. எனவே தமிழ்ச் சினிமாவின் வக்கிரங்கள் ன்றன. சினிமாவாற் பதப்படுத்தப்பட்ட சிந்தனை, ாதிக்கிறது. இவை பற்றியும் இன்னொரு நேரங்
(இன்னும் வரும்)
= ஜி.இராஜகுலேந்திரா -
நோய்கள் தொடர நோயுறு ஏதும் தொடர தேய்ந்த போகும் மனிதப்பண்பு ஆய்ந்து சொல்வீர் அவன் போல் விலங்கு அழிந்து போக வழியொன்றெமக்கு,
(ஒஸ்ரியாவில் தந்தையொருவர் தனது பாதாள
அறையில் பல வருடங்களாக தலைமறைவாகத் தனது மகளை வைத்து 7 பிள்ளைகளைப் பெற்றமை குறித்து)
2003 زوښه خاواکه رنګه چ(که حب لمaoخ

Page 56
விந்தை மனிதர்
|ෙtඌණීto ඊශ්‍රේෂී
பஞ்ச பாண்டவர் காட்டுக்குள்ளை இருக்கிற காலத்திலை, அவைக்குத் தேவையான சாப் பாட்டுக் குதி தேடி அ ைலஞ சு கஸ்ற்றப்படாமைத் திரவுபதியிட்டை முனிவர் ஒருத்தர் ஒரு பானையைக் குடுத்தாராம். அதிலை எல்லாருக்கும் நாளுக்கு ஒரு வேளைக்குப் போதுமான அளவு சாப்பாடு கிடைக்குமாம். கழுவி வைச்சாப், பிறகு அடுத்த நாள் தான் சாப்பாடு. அதாலை அவ அடுப்பு மூட்டிச் சமைக்கிற அலுப்புமில்லாமை - அந்த நாளையிலை காஸ், மின்சாரம் ஒண்டும் இல்லை, எண் டாலும் பயங் கரமான றொக் கட் லோ ஞ சர் களர் இருந்து தெண் டு கணேசனி மாமா பகிடி பண் ணுவார் - வழக்கம் போலை நான் வேறெங்கையோ போகப் பாக்கிறன். திரவுபதி ஒரு நாள் எல்லாரும் திண்டு முடியப் பானையைக் கழுவி வைச்ச கையோடை, கிட்டினர் வந்து 'பசிக் குது ஏதேனி தருவியோ?’ எண் டு கேட்டாராம். தெரிஞ்சு கொண்டுதான் அந்தாள் இப்பிடி வம்பு பண்ணிறது.
சவையிலை சீலையை உரிய முதலே போய் மறியாமல் அரைவாசி உரியவிட்டுத்தானே உதவிக்குப் போனது. திரவுபதி 'எப்பன் முந்தி வந்தாயில்லை. இப்ப தான் எல்லாங் கழுவித் துடைச்சு வைச்சனான்’ எண்டாவாம். 'பொய் சொல்லாதை, கவனமாப் போய்ப் பார்’ எண்டு கிட்டினர் சொல்ல, அவ போய்ப் பானையைப் பாத்தா, அதுக்குள்ளை ஒரு பருக்கை சோறு
 
 

δσώ στατώΘεό2
59Č9 6r(röG38)?
ஒட்டிக் கிடந்துது’. ஆளுக்கு வலும் வெக்கமாப் போட்டுது. கிட்டினர் 'தா அதை’ எண்டு சொல்லி அவ மறிக்க முன்னமே எடுத்து வாயிலை போட்டாராம். நல்ல பசியாத் தான் இருக்க வேணும். பகிடி என்னெண்டா அவர் வாயிலை போட்டு விழுங்கின கையோடை உலகத்திலை எல்லாருக்கும் பசி ஆறிப் போச்சாம். இது சிவபெருமானின்டை முதுகிலை போட்ட கதை
மாதிரி. அடி போடுறதை விடச் சோறு போடுறது பறவாயில்லைத் தானே!
- ஆதவா அ. சிந்தாமணி -
இந்த முனிவரின்டை பானை மாதிரி புத்த சமயத்தாக்களுக்கு மணிமேகலைத் தெய்வம் வந்து மாதவியின்டை மேள் மணிமேகலையிட்டை அட்சய பாத்திரம் எண்டு ஒரு சட்டியைக் குடுத்து விட்டுப் போய், அவ இந்த என்.ஜி.ஒக்களை மாதிரி ஊரா வீட் டுச் சொதி தி லை அம் பிட்ட எல்லாருக்கும் சும்மா சும்மா சோறு போட்டுக் கொண்டு திரிஞ்சவ எண்டு சொல்லுகினம்.
அந்த மாதிரிச் சாமான்கள் வேறையும் இருந்தது எண்டு கேள்விப்பட்டன். காமதேனு எண்டு ஒரு மாடு பாலை விட வேறெல்லாந் தருமாம். அது மாதிரிக் கற்பக விருட்சம் எண்டு ஒரு மரம் காய் பழத்தை விட்டுப் பல மாதிரிச் சாமானுங் காய்ச்சுப் கொட்டுமாம். கொழும்பிலை இருந்து வந்த கணேசன் மாமாவின்டை சினேகிதர் ஒராளிட்டை ஏதோ கதையிலை பனைமரந்தான்
* ー *ツ"の2ッう 200&

Page 57
விந்தை மனிதர்
எங்கடை கற்பக விருட்சம் எண்டு அப்பு சொல்ல, அவர் போய் வளவுக்குள்ளை நிண்ட பனையை ஆவெண் டு அணி னா நீ து பாத் துக் கொண்டிருந்தார். ' என்ன அங்கிள் பாக்கிறியள்?” எண்டு கேட்டன். அவர் 'இந்த மரத்திலை என்னெல்லாங் கிடைக்கும்?’ எண்டு என்னைக் கேட்டார். 'இது ஆண் பனை, கள்ளு மட்டுந் தான் இறக்குவினம்’ எண்டன். ஆள் நம்பேல்லை. என்னை ஜமிச்சமாப் பாத்தார். ' வேணுமெண்டா ஏறிப் போய்ப் பாருங்கோ. அங்காலி மரத்திலை தான் காயிருக்குது எண்டன்’. அவர் அப்பு தனக்குப் புலுடா விட்டுப் போட்டார் எண்டு நினைச்சிருக்க வேணும். அந்தக் கதை அதோடை முடிஞ்சுது.
இப் ப உலகத் தி  ைல உணவுத் தட்டுப்பாடெண்டும் பல ஊர்களிலை குழப்பம் துவங்கிப் பொலிஸ், ஆமியைக் கூப்பிட்டவையாம் எண் டு பேப் பரிலை கிடந்துது. சாப்பிடப் போடுறதுக்காக இல்லை, சனத்துக்கு அடி போட்டுத் துரத்த இது எங்கை போய் முடியுமோ தெரியாது. அது தான் யோசிச்சன், திரவுபதை காட்டை விட்டுப் போகேக்கை, மணிமேகலை வானத்துக்குப் போகேக்கை தங்கட பானை சட்டியளைக் கொண்டோ போயிருப்பினை? எங்கேன் போட்டுவிட்டுத் தானே போயிருப்பினம். காமதேனு மாடு, கற் பக விருட் சம் எல்லாத்தையும் நாங்கள் தேடிக் கண்டு பிடிச்சாக் கொஞ சச் சனத் துக் கேனும் ஒரு நேர ச் சாப்பாட்டுக்குக் கூடும். இல்லையா?
பிரச்சினை என்னெண் டா அதுகளை எல்லாம் எப்பிடிக் கண்டு பிடிக்கிறது எண்டது தான்.
பிறகு யோசிச்சன். தற்செயலா நாங்கள் அதை இதைக் கண்டு பிடிச்சு உலகத்திலை உள்ள கஸ்ற்றப்படுகிற சனங்களுக்கெல்லாம் சாப்பிடக் குடுக்கத் துவங்கினா, அமெரிக்கக் காசிலையும் ஈயூக் காசிலையும் தொழில் நடத்துகிற எண்.ஜி.ஓமாரின் டை பாடு வலுங் கஸ்ற்றமாப் போயிரும். பிறகு அமெரிக்கன்காரன் ஈராக் கிலை அணுகுண்டு தேடுறதுக் காகச் சண்டைக் குப் போன மாதிரி இங்கினைக் குள்ளையும் அட்சய பாத்திரத்தைப் பறிச்சிட்டுப் போகச் சண்டை துவங்கினான் எண்டால், வருசக் கணக்காச் சண்டை பிடிச்சும் அழிக்கேலாத இந்த நாட்டை அவன் வந்து ரண்டு நாளிலை அழிச்சப் போடுவன் எண் டு அந்த யோசினையைக் கைவிட்டிட்டன். -
உங்களிலைலையும் யாரேனுக்கேன் அந்த மாதிரி யோசினை வந்தாக் கவனமா யோசிச்சுப் பாத்திட்டுச் செய்யுங்கோ.
 

சுதந்திர இலங்கையே gigsLDIT....? சுதேசிய இனவாதிகள்.
மக்களை புதைக்க குழி தோண்டும் பாராளும் சதைப் (3Lu56រ៉ា
GSLDT.? -
குருத்துக்களை வேலைக்கமர்த்தும் குண்டர்கள் சுகமா..?
ULLDT55 வயிறு வளர்க்க வக்கில்லாது வால் பிடித்து வாழ்க்கை நடத்தும் பினங்கள் gigsLDIT....?
பனை மரங்கள் பெயர்ந்து பிணம் புதைக்கும் தமிழ் மண் சுகமா..?
பினங்களைப் பிரசவிக்கும் தமிழ்த்தாய் சுகமா..?
- இராகலை மோகன் -
| 2003 ژوبله طاووهان چ۱ ه - لمونraكي

Page 58
இராசேந்திரனின் மனம் ஒரு நிலையிலின்றித் தவித்துக் கொண்டிருந்தது. மனைவியின் நியாயமான கோரிக்கை ஒரு புறம். தாய்ப்பாசம் மறுபுறம் என இருதலைக் கொள்ளி எறும் பாய் தவித்துக் கொண்டிருக்கிறான். மனதின் அழுத்தம் நெஞ்சத்தை அமுக்கிக் கனன்றுகொண்டிருந்தது.
வீட்டில் கடந்த சில நாட்களாக முதியோர் இல்லம் என்ற சொல் உரையாடல்களில் இடம் பிடித்திருந்தது. எனினும் இராசேந்திரனின் காதில் இப்போது தான் எட்டியிருந்தது. கடந்த சில நாட்களாக அவன் மனைவி இராசாத்தியும், பெண் பிள்ள்ைகளான பாமா, சியாமாவும் தம்மிடையே கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். சின்ன மகன் பிரவிந்தனுக்கு மட்டும் இதில் உடன்பாடில்லை. தாயும், பிள்ளைகளும் சேர்ந்து செல்லம்மாக் கிழவியை முதியோர் இல்லத்திற்கு அனுப்புவது என்ற முடிவுக்கே வந்து விட்டார்கள். பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதே இப்போது அவர் களுடைய பிரச்சினையாக இருந்தது. செல்லம்மாவிடம் ஒரு மாதிரிச் சொல்லி விடலாம். எனினும் இராசேந்திரனிடம் எப்படி எடுத்துச் சொல்வது என்பது தான் பிரச்சினையாக இருந்தது. பெற்ற தாயை முதியோர் இல்லத்தில் விட அவன் இலேசில் சம்மதிக்க மாட்டான்.
G
 

இப்போதெல்லாம் அனேகமான குடும்பங்களில் பெண்கள் நினைப்பது தானே
நடக்கிறது! பெயருக்கு மட்டும் வீட்டுத் தலைவனைக் கேட்பார்கள். சம்மதமென்றால் பிரச்சினை தீரும். இல்லாவிட்டால் பெண்கள் தமது சாதுரியத்தாலோ,
கண்ணிராலோ சாதித்து விடுவார்கள். பாவம் கணவர்கள்; வெறும் தலையாட்டிப் பொம்மைகள் தான். இராசேந்திரனும் இதற்கு விதி விலக்கல்ல. ஆனாலும் இப்போதைய
பிரச்சினை அவனோடு தொடர்புடையது என்பதால், சமயம் பார்த்து பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டுமென கடந்த சில நாட்களாக அவள் காத்திருக்கிறாள். மாமிக் கிழவியிடம் சாடை LDIT60LuT35 GLD656) GLD6)6)
ஏற்கனவே சொல்லி விட்டாள். முதலில், ஹோமில் விடுவதாக தாயும், பிள்ளைகளும் கதைத்த போது கிழவிக்கு பெரிதாக ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நாள் பாமாவிடம், 'ஹோம் எண்டால் என்ன பிள்ளை' என நேராகவே கேட்டு விட்டாள்.
'ஹோம் எண்டால் வீடு அப்பம்மா” * அப்ப நீங்கள் கதைக்கிற ஹோம்? * அது அப்பம்மா, எல்டேர்ஸ் ஹோம் வயோதிபர் இல்லம் வயது போன ஆட்களை வைச்சுப் பராமரிக்கிற இடம். வெளிநாடுகளிலை கன காலமா இருக்கு. இப்ப தான் இங்கை பரவலாகி வருகுது.” கிழவிக்குச் சாடை மாடையாக இவர்களது நோக்கம் புரிந்தது. மனதிலை குழப்பம், காலம் காலமாக பிள்ளை, பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் இந்த வாழ்வுக்கு முடிவு வரப் போகிறதா? எவ்வளவு தான் பிரச்சனைப் பட்டாலும், மறுபடியும் ஒன்றாகிக் கூடி சமரசமாகி விடுவார்களே கிழவி நெடு மூச்செறிந்தாள்.
ஒரு நாள் மகன் இராசேந்திரன் அலுவலகம் சென்ற பின்னர் மருமகள் இராசாத்தி, மாமியாரிடம் வந்து பரிவோடு 'மாமி, இப்ப தலைச்சுற்று எப்படி இருக்கு? குறைஞ்சிட்டுதே?’ என்று கதையை ஆரம்பித்தாள். வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றவது போல மெதுவாக விடயத்திற்கு மருமகள் வந்த போது கிழவிக்கு முதலில் விளங்கவில்லை.
ఆరN - ఈ ఇ-0తovew Z00టి
,"eشMag
W 域 RNS AN
}

Page 59
சிறுகதை
‘மாமி. எனக்கு இந்த நாரிப்பிடிப்பு வந்த பிறகு முந்தின மாதிரி வேலைவெட்டி செய்ய முடியுறேல்லை. படியளிலை ஏறி இறங்கேலாமலும் இருக்கு. பாரமான வேலை ஒண்டும் செய்யக் கூடாது எண்டு பெரிய டொக்ரர் சொல்லிப் போட்டார். இவரும் முந் தின மாதிரியில் லை. எதுக்கெடுத்தாலும் சிடுசிடுத்தபடி.." -
கிழவி மருமகளை ஏக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். 'மாமி உங்களுக்குத் தெரியும் தானே? இது கொழும்பு வீடு. இடவசதி இல்லை. பிள்ளையஞம் படிக்கிற வயது மூத்தவள் டொக்ரருக்குப் படிக்க எடுபட்டிருக்கிறாள். கடுமையான படிப்பு. ஐஞ்சு வரிசம் படிக்க வேணும். சியாமாவும் ஏ.எல். எடுக்கிறாள். பிரவிந்தனும் ஓ.எல். எடுக்கப் போறான். படிக்கிறதுக்கு அமைதியான இடம் வேணும். அதுதான் உங்களை முதியோர் இல்லத்திலை சேர்க்க யோசிக்கிறம். 'ஒரு மாதிரிச் சொல்லி முடித்ததும் மாமியாரின் முகம் இருண்டு சுருங்குவதை இராசாத்தி அவதானித்தாள். அவளுக்கும் அந்தரமாக இருந்தது. மாமியாரை நினைக்கும் போது பாவமாக இருந்தது. மனதும் உறுத்தியது.
உண்மையிலேயே இராசாத்தி மாமியார் மீதும், மாமியார் இராசாத்தி மீதும் வலு பட்சமாகத் தானிருந்தார்கள். அந்த நாளில் எத்தனையோ முறை மருமகள்மார் இருக்க, இராசாத்தியையே மனம் விரும்பி தனது மருமகளாக ஏற்றுக் கொண்டவள். பணம் விரும்பி ஏற்றுக் கொண்டதாக உறவினர் கிண்டலடித்ததுமுண்டு. இப்போது இயந்திர மயப்பட்ட கொழும்பு வாழ்வில் எல்லாமே தலை கீழாகிப் போய்விட்டது. இந்தக் கொடிய யுத்தத்தினால் ஊரிலிருந்து இடம் பெயராமல் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிராது. கூட்டுக் குடும்ப வாழ்வின் இனிமை எல்லாம் கிராமங்களில் தானிருந்தது. பெரிய வீடு வளவு, காற்றோட்டமான முற்றம், கோடி, பின்வளவு என்று உலா வரலாம். சோலை மாதிரி மா, பலா, தென்னை, வாழை என இயற்கையிலேயே ஏ.சி. கிடைக்கும். எல்லாம் மாறிப் போய் விட்டது.
இராசாத்தியும் பாவம் தான். அவளினதும், இராசேந்திரனதும் கூடப் பிறந்தவர்கள் எல்லோரும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குப் போய் விட்டதால் இரண்டு பக்கத்து பெற்றோர்களை எல்லாம் பார்த்தெடுத்தது அவள்தான். அவளுடைய பெற்றோர் இருவரும், மாமனாரும் படுகிடையாய்க் கிடந்து போய்ச் சேர்ந்து விட்டனர். பராமரித்ததெல்லாம் இராசாத்தி தான். அப்போதெல்லாம் இராசாத்தி துடியாட்டமாக இருந்தாள். இப்போது அவளால் தன்னைக் கொண்டியக்குவதே முடியாமலிருக்கிறது. மேலும் இப்போது சில நாட்களாக மாமியின் கதை பேச்சும் நெருடலாக இருக்கும். எதை எங்கே எப்படிப் பேசுவது என்று தெரியாமல் வார்த்தைகளைக் கொட்டி மனதை உடைய வைத்து
bawea - 7
 

விடுவார். இராசாத்தி பொறுத்துக் கொண்டாலும் பிள்ளைகள் பொறுத்துக் கொள்ள மாட்டர்கள். இதனால் பாட்டிக்கும், பூட்டிகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்படும். பேரன் மட்டும் தான் அப்பம்மாவிடம் கொஞ்சம் ஒட்டாக இருக்கிறான்.
'அம்மா, நீங்கள் அப்பம்மாவை ஹோமிலை விட்டியளெண்டால், உங்கட பிற்காலத்திலை நான் உங்களை "ஹோமிலை தான் விடுவன்’ என்று மிரட்டுவான். எல்லோரும் அவனது கூற்றினைப் பகிடியாக எடுத்துச் சிரிப்பார்கள். எது எப்படியோ மாமியாரிடம் விடயத்தைப் போட்டுடைத்ததில் இராசாத்திக்கு நிம்மதி: எனினும் மாமியாரின் பரிதாபகரமான முகத்தைப் பார்க்க அவளுக்கு அந்தரமாக இருந்தது.
'மாமி. வயோதிபர் இல்லம் எண்டவுடனை அரசாங்க முதியோர் மடம் மாதிரி எண்டு யோசிச்சுப் போடாதையுங்கோ. இது மாதாமாதம் இருபதினாயிரம் கொடுத்துப் பராமரிக்கிற இடம். நல்ல வசதி. நிறையப் பேர் இருக்கினம் . எல் லாரும் டொக்ரர் இஞ்சினியர் மாரின்ர தாய் தேப் பன்மார் தான். உங்களுக்கும் பொழுது போகுதில்லை எண்டு அடிக்கடி சொல்லுவியள். அங்க கதைக்கப் பேச உங்கட வயதுக்காரர் இருக்கினம். ரீ.வி. டெக் எல்லாம் இருக்கு. படம் பார்க்கலாம். நாடகம் பார்க்கலாம். நேரத்துக்கு நேரம் சத்தான சாப்பாடு. ஒடியாடிக் கவனிக்கிறதுக்கும் நிறையப் பிள்ளையஸ் வேலை செய்யினம். அதோட அடிக்கடி டொக்ரர்மார் வந்து சோதிச்சு மருந்து தருவினம். நாங்களும் அடிக்கடி வந்து பாப்பம். பிரவிந்தன்ர ரியூட்டறிக்குப் பக்கத்திலை தான். அவனும் நெடுகிலும் வந்து பார்ப்பான். ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ LDIITLÓ”.
கிழவிக்குத் திருப்தி ஏற்படவில்லை. கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமலிருந்தாள். இராசாத்தி தான் தொடர்ந்தாள். 'என்ன மாமி, கனக்க யோசிக்கிறியள்? உங் களுக்கு விருப்பமிலி லை எண் டால் கட்டாயப்படுத்தேல்லை”.
நீண்ட நேர மெளனத்தின் பின்னர் கிழவி வாய் திறந்தாள். 'தம்பியோட கதைச்சனிங்களே? அவர் என்ன சொல்லுறார்? மகனுடைய மனநிலையைப் பற்றி அறிய கிழவி கேட்டதும் இராசாத்தி தடுமாறினாள். எனினும் தன்னைச் சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள்.
"அவரோட மட்டுமில்லை, வெளிநாட்டிலை இருக்கிற உங்கட பிள்ளையளோடையும் கலந்து பேசித் தான் முடிவெடுத்தது. எல்லோருமே "ஹோமிலை விட்டுப் பார்க்கட்டாம். அங்கேயும் உங்களை எடுக்கேலாதாம்.”. இராசாத்தியின் பதிலில் கிழவி ஒடுங்கிப் (3LTuj6'LT6i.
'உங்களுக்கு நான் பாரமாய் போயிட்டனோ பிள்ளை?’ என்று முணுமுணுத்தபடி படுத்துவிட்டாள்.
கிழவிக்குச் சொல்லியாகிவிட்டது. இனிக்
&200 روس طیارو(ہرنا چa(یہ ہے۔ لمasonضح

Page 60
சிறுகதை கணவனிடம் சொல்வது எப்படி? இராசேந்திரன் சீறித்தான் பாய்வான். எனினும் சொல்லித் தானாகவேண்டும். கிழவி முந்திவிட்டால் பிரச்சினை.
கணவன் வேலையால் வந்து சாப்பிட்டு படுக்கைக்கு வந்ததும் இராசாத்தி, காரியத்தில் இறங்கினாள். படுக்கை அறை தான் பொருத்தமான இடமெனினும் நாரிப்பிடிப்பிற்குப் பின் கேள்விக் குறியாகிவிட்டது.
ஒருவாறு மனதிலிருந்ததை இராசாத்தி போட்டுடைத்தாள். இராசேந்திரன் இவ்வாறான ஒரு நிலையை எதிர்பார்த்திருக்காததால் கலங்கிப் போனான். 'உனக்கென்ன விசரே? அவ என்னைப் பெத்து வளர்த்த அம்மாவடி' இராசேந்திரன் சீறி வெடித்ததும் இராசாத்தி ஒரு கணம் பயந்து போனாள்.
எனினும் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள். ‘மாமி உங்களை மட்டும் பெத்து வளர்க்கேல்லை. இன்னும் நாலு பேரைப் பெத்து வளர்த்து ஆளாக்கினவ. ஒருத்தருக்கும் அவவைப் பார்க்க மனமில்லை. குளிர் தாங்கமாட்டா எண்டும், அங்கே சிறை போல முடங்கிக் கிடக்க வேண்டுமெண்டும் சாட்டுச் சொல்லுகினம். உண்மை என்னெண்டா, அவைக்குப் பொறுப்பெடுத்துப் பார்க்க விருப்பமில்லை. சிவாசினியின்ரை புருஷனுக்கு அங்கே கூப்பிடத் துளியும் விருப்பமில்லை. சின்னவள் சிவாசினிக்கும் பொடியளுக்கும் கூட துளியும் விருப்பமில்லை. உங்கட அண்ணைக்கும், தம்பிக்கும் எப்படியோ மனிசிமார் கூப்பிட விடமாட்டினம். இதுதான் உண்மை நிலை. நீங்கள் மட்டுந்தான் வித்தியாசம்”.
“எனக்கு மற்றவையைப் பற்றிப் பிரச்சினை இல்லை. என்னைப் பொறுத்தவரையில் சாகிற வரைக்கும் அம்மாவை வைச்சுப் பார்க்கிறது என்னுடைய கடமை. கடமைக் கு மேலா ல அன்பு LJITELб இதையெல்லாம் நினைச்சுப் பார். மற்றப் பிள்ளையஸ் தங்கட பங்குக்கு காசு பணம் அனுப்புகினம்’ இராசேந்திரனும் விட்டுக் கொடுக்காமல் கூறினான். “அவ இருக்கிறதால துணை. ஒடி ஆடி உழைச்சவ”.
"இஞ்சாருங்கோ. காசு பணம் பெரிசில்லை. பெற்றவவை அவை ஒருத் தரும் வைச் சுப் பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரை மாமாவை வடிவாக வைச்சுப் பார்த்தனான். மாமியையும் வடிவாகப் பார்க்கிறன் . வருத்தம் வந்த போதெல்லாம் ஆஸ்பத்திரியிலை வைச்சு வடிவாப் பாத்தனான். இப்ப என்னாலை ஏலாமலிருக்கு. அதோட முக்கியமாப் பிள்ளையளின்ரை படிப்பு, எதிர்காலம் முக்கியம். அதுகளையும் மாமி அணைச்சுக் கொண்டு போறா இல்லை”. இராசாத்தி அடுக்கிக் கொண்டே போக, இராசேந்திரனுக்குக் கோபம் வந்தாலும் வாயடைத்துப் போனது. மனைவி சொல்வதில் சில அபத்தங்கள் இருந்தாலும், சில நியாயங்களும் இருப்பதை உணர்ந்தான். எனினும் மனைவியை அமைதிப்
 

கவலையின் முடிவிலி
காரணம் அறிந்திடாக் கவலையின் முடிவிலியில் நின்று
அடிக்கடி பயணிக்கிறேன்
இறக்கைகள் முளைக்கின்றன.
வானமும் விரிகிறது. நிஜ உலக வாழ்க்கைக்கு நிர்ப்பந்தத்தால் திரும்பும் போது சூனியமாய் எண் பயணம் பாரமாக எண் இதயம்.
மனிதம் மரித்து விட்ட இடத்தில் மனச்சாட்சியைத் தேடுகின்ற ஒரு குருட்டுக் கவிஞனின் கற்பனை போல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேடலில்.
- தி. காயத்திரி -
arson - 12003 ژبنۍ طارونه نه چ

Page 61
రౌతపొర్రో
படுத்துமாப் போல் தொடர்ந்தான்.
'இராசாத்தி நான் இருந்து கொண்டு அவவை முதியோர் இல்லத்தில விடுறது மதிப்பில்லை. நாலு பேர் நாலுவிதமாக நெளிப்பினம். அவ வீட்டோட இருந்தால் எங்களுக்கும் துணை தானே?”
'இல்லையப்பா. மற்றவை கதைக்கிறதைக் காதிலை எடுத்தால் ஒரு அலுவலும் நடக்காது. பெரிய பெரிய பதவியளிலை இருக்கிறவை எல்லாம் பெற்றோரை முதியோர் இல்லத்திலை விட்டிருக்கினம். நீங்கள் ஏன் யோசிக்கிறியள்?
“இராசு. அவ அந்த நாளையிலை எங்களை எவ்வளவு அன்பாக வளர்த்தவ. அப்பா விபத்திலை சிக்கி கால் முறிஞ்சு போய் வேலை வெட்டி செய்ய முடியாமல் போன பிறகு எவ்வளவு கஷ்ரப்பட்டு அப்பம், தோசை சுட்டு வித்து எங்களை வளர்த்தவ. எல்லாக் கஷ்டங்களையும் எங்களுக்காகத் தாங்கிக் கொண்டு ஓடாய் தேய்ஞ்சவ. என்ர உடம்பிலை இருக்கிற ஒவ்வொரு தசையும அவவால வளர்ந்தது தான். உன்ர அம்மா எண்டால் உப்பிடி யோசிப்பியே?
* இப்ப நான் இருக்கிற உடல் நிலையில் அவ உயிரோட இருந்திருந்தாலும் இதைத் தான் செய்திருப்பன். உங்களுக்கென்ன வேலை, உத்தியோகம் எண்டு முழுநாளும் வெளியிலை. நான் தானே இங்க மாயிறது. பொடியளாலையும் உதவி இல்லை. எல்லாப் பக்கத்தாலையும் நெருக்கடி எனக்குத் தான். ஏலுமெண்டால் எனக்கென்ன மாமியை வைச்சுப் பார்க்க விருப்பமில்லையே? நானும் வருத்தக்காரியாயிட்டன். என்ரை சுகயினம் பற்றி ஏதும் விசாரிக்கிறியளே?” இராசாத்தியின் ஒப்பாரி அவனது வாயை அடைத்தது. அவன் எதுவுமே பேசவில்லை. இராசாத்தி தான் தொடர்ந்தாள். -
“இப்பத்ததையிலை பிள்ளையஸ் வயது போன பெற்றோரை வயோதிபர் இல்லத்திலை தான் விடுகினம். அது தான் இரண்டு பக்கத்துக்கும் வசதி”, கணவனுக்கு ஆறுதல் சொல்வது போல் கூறிவிட்டு அவள் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினாள்.
அவள் போன பின்னர் இராசேந்திரன் பலமாக யோசித்தான். மனதில் நெருடல், தூக்கம் வரவில்லை. அம்மாவை நினைக்க நினைக்க அழுகை அழுகையாய் வந்தது. நெஞ்சம் பொருமி வெடித்து விடுமாப் போல் தவித்தான். அம்மா எங்களை வளர்க்க அயலட்டை வீடுகளில் குத்தி இடிச்சிருக்கிறா. புல்லுப் பிடுங்கப் போயிருக்கிறா. தோட்டங்களிலையும் மிளகாய்ப்பழம் பிடுங்கப் போயிருக்கிறா. வீட்டிலையும் ஒரு நிமிசம் சும்மா இருக்க மாட்டா. காலையிலை பலகார வியாபாரம் பிறகு வளவிலை விழுகிற தென்னை ஒலையளை எல்லாம் கிடுகாக்கி வித்துத் தான் எங்களுக்குப் புத்தகம் கொப்பி வாங்கித் தாறவ. சில நாட்களிலை எங்களுக்குச் சாப்பாடு தந்திட்டு, வெறும் பழந் தண்ணியைக் குடிச்சிட்டு
 

9 дефт и я (6.
உப்புநீரில் ஊறிப் பாசியாய் உருமாறிச் செழிப்பிழந்த உண்ணவரும் ஊர்வனமேற் புரண்டு புரண்டு அடையலாகிப் போனேன்.
பாதையோரத்தாற் பயணித்தேன் முச்சந்தி, நாற்சந்தி. அறுசந்தியில் வழிதவறி சாலை வளைவில் தனிமரத்தடியில் இளைப்பாறி நின்றேன் இரைதேடும் தேனிக்கூட்டத்தின் இரையாகிப் போனேன்.
அப்பனுக்கு முன் அப்பண் எடுத்த ஒலைச்சுவடி இன்னமும் எழுதப்படாமல் வெற்றோலையாய் வெளிவாசலில் காகச்செட்டையாய்த் தொங்குத, அப்பப்போ காகங்கள் கூடி ஒப்பாரிவைத்துப் போகின்றன - என் எழுத்துக்களும் அப்படியே!
கீரியும் பாம்பும் காதல் புரிவது கனவில் வந்த தொல்லை தருவதனால் இணையத்தளங்களில் வலைவீசியபடி - என் அலுவலக முன் வாசலில்
கரடியும் புறாவும்
காதற் சேட்டைகளில்,
கவசமாய்க் காத்த முட்டை ஒட்டினை உடைத்தெறிந்தபடி குஞ்சுகள்; தாயின் குருதியை உறிஞ்சும் கருக் குழந்தைகள்; வன்முறையால் மலரும் பூக்கள் முரண் நிலைகளில் முகிழ்த்தெழும் பிரபஞ்சச் சுழற்சி
- இதயராசன் -
2003 ژوبله طاوواهرني چه - لهraoكه

Page 62
சிறுகதை கூலி வேலைக்குப் போயிருக்கிறா. அம்மாவின் நினைவுகளின் ஊர்வலம் மனமேடையில் தரிசனமாகிறது. அவன் நெஞ்சில் நெடுமூச்சு வெடிக்கிறது. நெஞ்சில் ஓர் ஆலயமாக அன்னையை பிரதிஷ்டை செய்து வைத்திருக்கும் அவனுக்கு இப்படி ஒரு சோதனையா? அம்மா இருமுவது கேட்கிறது. இராசேந்திரனின் மனதில் நெருடல். 'அம்மா இதைத் தாங்குவாவோ? சிவகுமாரன் ரீச்சரின்ரை கதையிலை வாற மாதிரி வீட்டை விட்டு முதியோர் இல்லத்திற்கு அனுப்ப முன்னர் கண்ணை மூடியிடுவவோ? ம். அப்படி மூடினாலும் கூடப் பரவாயில்லை. வாழுற வயசுக்கு மேலாலை வாழ்ந்திட்டா. சந்தோசமாகப் பிள்ளையளோடை இருந்து செத்த மாதிரியும் இருக்கும். சீ. என்ன கீழ்த்தரமான நினைப்பு பெத்த அம்மா செத்துப் போனால் பரவாயில்லை எண்டு நினைக்கிறனே! சாமச் சேவல் கூவிய போதும் இராசேந்திரனுக்கு உறக்கம் வரவில்லை.
மறுநாள் இரவு இராசாத்தி "நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. உங்களுக்கும் லீவு. அன்பகம் முதியோர் இல்லத்திலை ஒழுங்கு செய்திருக்கிறன். மாமியைக் கூட்டிக் கொண்டு போய் விடுவம்”என்றாள். அவன் எதுவும் பேசவில்லை. பேச வார்த்தைகள் வரவில்லை. நெஞ்சம் உருகியது. கண்கள் உடைப்பெடுத்துவிடும் போலிருந்தது.
அவனது மனம் ஒருநிலையின்றி இன்று தவித்துக் கொண்டிருந்தமைக்கு இது தான் காரணம். இரவு நீண்டு கொண்டே போனது. தூக்கம் வராத இராத்திரிக்கு அம்மாவின் இருமல் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தது. அம்மா நீங்கள் தான் என்ரை தெய்வம். தலையணை நனைகிறது.
விடியும் போது தான் சற்றுக் கண் அயர்ந்திருக்க வேண்டும். இராசாத்தி தேனீருடன் எழுப்பிய போது, விடிந்து விட்டதா என்ற ஆச்சரியத்துடன் கண் விழித்தான் இராசேந்திரன்.
இப் போதெல லாம் குடும் பங்களில் பொம்பிளையஸ் நினைக்கிறபடி தானே நடக்குது? பெண்ணடிமைத்தனம் எண்டு சொல்லுறதெல்லாம் வெறும் மாயை தானோ? வேதனையின் மத்தியிலும் அவனுக் குச் சிரிப்பு வந்தது. மனைவியின் வேண்டுதலுக்குக் (ஆணைக்கு) கட்டுப்படுவதைத் தவிர அவனுக்கு வேறு வழியேதும் இருக்கவில்லை.
காலையில் எழுந்ததிலிருந்து அம்மாவைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டான். வழமை போல் போய்ச் சுகம் விசாரிக்கவில்லை. கிழவிக்கும் மகனில் சரியான காட்டம். எனினும் தனது கோபத்தை வெளிக் காட்ட முடியாத முதுமையினாலும், இயலாமையினாலும் மனதில் பொருமினாள்.
காலையில் திட்டமிட்டபடி எல்லாம் நடந்து கொண்டிருந்தது. கிழவியை வழியனுப்பும் கடைசிக் கட்டம் இராசாத்தியாலும் பிள்ளைகளாலும்
 

நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிழவி வாய் திறக்கவில்லை. கண்கள் மட்டும் பொல பொலவென நீரைச் சொரிந்து கொண்டிருக்கிறது. இராசேந்திரனுக்கு அழுகை வெடித்து விடும் போல் கண்கள் குளம் கட்டி நின்றன. அம்மாவுக்கு ஏதும் நடந்து விடுமோ என்ற பயமும் கூடவே எழுந்தது. இராசாத்திக்கும் கூட இப்படியொரு பயம் இருக்கத் தான் செய்தது. "கடவுளே! மாமிக்கு ஒண்டும் ஏறுமாறாய் நடக்கக் கூடாது' என்று மனதில் வேண்டிக் கொண்டாள்.
முச்சக்கர வண்டி வந்ததும், அம்மாவைக் கூட்டிச் சென்றதும், முதியோர் இல்லத்திற்கு கொண்டு போய் சேர்த்ததும் இராசேந்திரனுக்குக் கனவு போல் இருந்தது.
"ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ மாமி. அடிக்கடி நாங்கள் வந்து பார்ப்பம்.” என்று விடைபெறும் போது இராசாத்தி கூறிய வேளை அவளது கண்களும் கலங்குவதை இராசேந்திரன் அவதானித்தான். கடைசியாக அவன் தாயருகில் சென்று ‘போயிட்டு வாறன் அம்மா." என்று குரல் தழதழக்கக்கூறிய போது அவனையும் மீறிக் கண்கள் ஊற்றெடுத்தன. கிழவி வாயே திறக்காமல் கோபத்துடன் விறைப்பாக அமர்ந்திருந்தாள். அவளது பார்வை அவனைச் சுட்டெரிப்பது போல இருந்தது. 'அம்மாவை இனி நான் காணக் கிடைக்குமா?’ என அவனது மனம் ஒலமிட்டுக் கொண்டிருந்தது.
வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது 'இராசு இனி அம்மாவைக் காணக் கிடைக்குமோ தெரியேல்லை” என்றான் ஆதங்கத்துடன், இராசாத்தி அவனது கைகளைக் பற்றியபடி, "ஏன் அப்பிடி யோசிக்கிறியள்? வாற ஞாயிற்றுக்கிழமையும் வந்து பார்ப்பம். அவ நல்லாக இருப்பா.’ என்று ஆறுதல் கூறினாள்.
அதன் பின்னர் இராசேந்திரன் எதுவும் பேசவில்லை. நெஞ்சில் கனல் வீசி உடலெல்லாம் சுட்டெரிப்பதாக உணர்ந்தான். மனதின் அழுத்தத்தில் நெஞ்சு வலிக்கவே இராசேந்திரனின் உடலெல்லாம் வியர்த்துக் கொண்டு வந்தது. கடலின் அடியில் ஏற்படும் தாழமுக்கம் போல் நெஞ்சில் உணர்ந்தான். மூச்சு வெளியேற முடியாமல் அவன் திணறுவதைக் கண்ட இராசாத்தி, "என்ன செய்யுதப்பா?’ என்று பதறியபடி அவனது நெஞ்சைத் தடவினாள். உடனடியாக ஒட்டோவை வைத்தியசாலைக்குச் செல்லும்படி கூறினாள்.
* ஒண்டுக் கும் யோசியாதையுங் கோ. வேணுமெண்டால் மாமியை திரும்ப வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வருவம்” இராசாத்தி கெஞ்சியதைக் கேட்க இராசேந்திரனின் உயிர் அங்கிருக்கவில்லை.
2ణN - తa-లితoew 200టి

Page 63
6სრ6ს 67uს6სრoh
(செவ் வணக்கம்)
தோழரே, என்னவானாலும் நமது கனவு நனவாகும் நாளுக்கான காத் நாம் காத்திருந்த வளமான வாக்குறுதிகள் உலகெங்கும் நிறைவேறி வருகின்றன. முகில்களைக் கிழித்துச் சூரியன் வருவதற்க எல்லாவிடத்தும் பூமி தவத்தில் ஆழ்ந்துள்ள
பல காலமாகச் செயலற்று இருந்த நாம், 8 நம் மனங்களில் முலைகளில் இருந்த பல மறைந்திருந்த நம் மனவெறுப்பு உருவங் ெ ஒத்த மனமுடைய பித்தர்களால் நமது அை
அன்றைக்குத் தான் நாம் நம் கனவின் விை அதோ! மின்னல் பாயும் பொழுதிற்குள்
வயல்களிலே அடர்ந்த அறுவடை ஆயத்தமா நமது கூட்டு வாழ்வின் அறுவடைப் பாட்டை பணிதல் அறியாத காற்று எதிரொலிப்பது கே
தோழரே இன்று எல்லா நேரமும் உலகங் அதற்கான உறுதியான அடித்தளத்தைக் க பணியைத் தொடங்குவதை நமது இலக்கா தோழரே உமக்கு நான் அனுப்புவது என் செவ் வணக்கம்!
(1926ல் பிறந்த ஸ்"கன்த 1947ல் தனது இருபத்ே பிரசுரமாகியுள்ள அவரது கவிதைகள் அவரது வாழ் காலத்தில் அவர் இந்திய கம்யூனிஸ்ற் கட்சியில் தி

திருப்பு வீண் போகவில்லை.
TS
Glo
இப்போது கேள்விகளைத் தொடுக்கிறோம். காள்கிறது.
விகள் விரிகின்றன.
தகளை விதைத்தோம்,
ய் நிற்கிறது. ப் 5ட்கவில்லையா, தோழரே?
குலுங்கி நடுங்குகிறது. ட்டுதல் நமது பொறுப்பு. க்கியுள்ளோம்.
கன்த BTாச்சார்ய காளியினின்று ஆங்கிலத்தில் க்ஷிதிஸ் ரோய் ழில் சிவானந்தம்
தாராவது வயது நிறையு முன்பே இறந்து விட்டார். பின் இறுதி ஐந்து ஆண்டுகளில் எழுதப்பட்டவை. அக் விரமாக இயங்கி வந்தார்)

Page 64