கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வங்கம் தந்த பாடம்

Page 1

தந்த பாடம்

Page 2

அர்ப்பணம்
தமிழ் தேசிய இனத்தின் நலனுக்காக மட்டுமல்லாது, பாட்டாளிகளின் விடிவுக்காகவும் போராடிச் சிறையில் வாடிய தோழர்களே!
போராட்டங்களில் இன்னுயிரை நீத்த தோழர்களே!
கொடுஞ்சிறையில் கொல்லப்பட்ட தோழர்களே!
உங்கள் தியாக வரலாறு எமக்கு உரமிட்டது உனது குரல் உலகத்தைத் தட்டியது உன்னை நேசித்த மக்களின் கண்ணிர் அருவி வங்கக்கடலில் சங்கமமாகிக் கொண்டிருக்கின்றது
சேற்றில் காலிவைத்த உன் பாட்டாளிகள் இன்று துப்பாக்கிகளை ஏந்துகிறார்கள். சோற்றுக்குள் கைவைக்க முடியாத அதிகார வர்க்கம் இன்று வல்லரசுகளை நாடி ஓடுகின்றது.
மக்களுக்கு தலைமை கொடுத்த தோழர்களே இப் படைப்பை உங்களுக்குக் காணிக்கை ஆக்குகின்றோம்.
பதிப்பாசிரியர்

Page 3
விளக்கவுரை
பங்களாதேசம் விடுதலைபெற்றதும் ஷேக் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் 1971இல் ஆட்சிக்கு வந்தது. ஆட்சியின் ஊழல் இமயத்தைத் தொட்டது. வறுமையில் வாடிய வங்காள மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம்(Red CrOSS) அனுப்பிய உணவுப்பண்டங்களை முஜிப்பின் உறவினர்களே விற்றுப்பணம் திரட்டினர்.1975 இல் அவாமிலீக் கலைக்கப்பட்டு பாக்சால் (BokSO) என்ற புதிய கட்சி முஜிப்ரகுமானினால் உருவாக்கப் பட்டது. இக்கட்டத்தில் இராணுவத்தில் இருந்து வெளியேறிய அபூதாகிரும், சியாவுடீனும் தனித்தனிப் பாதையில் சென்றனர். அபுதாகிர் தேசிய சோசலிசக் கட்சி (J.S.D.) யின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். இக் கட்சி மாக்சிசத்தை அடிப்படையாகக் கொண்ட விடுதலை வீரர்களது கட்சி. சியாவுடீன் ஆயுதப்போரா ட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிழக்கு வங்காளப் பாட்டாளி உளவர் கட்சியில் சேர்ந்து கொண்டார். இவர் தேடப்பட்டார் J.S.D. வளர்ச்சியடைய தொடங்கியது. முஜிப்பின் அரசின் ஊழல் குறைபாடுகளால் மக்கள் J.S.D.யை ஆதரித்தனர். பங்களாதேசம் சோசலிசப் பாதையை எடுக்கலாம் எனப்பயந்த பங்களாதேச முதலாளிவர்க்கம் ஜக்கிய அமெரிக்க C.I.A.யின் ஆதரவுடனே ஒரு சதியை நடத்தி முஜிப் அரசை வீழ்த்தி ஒரு பிரதி அரசை உருவாக்க 15 ஆவணி 1975 இல் முயன்றது. ஆனால் இந்தியா தனது மேலாதிக்கத்தை வைத்திருக்க மீண்டும் கார்த்திகை 3 இல் சதியை காலித் முஸ்ராப் பின் தலைமையில் நடாத்தியது. காலித் முஸ்ராப் அரசு பங்களாதேசை இந்தியாவுடன் இணைக்க இணங்கியது. இதற்கெதிராகப் போர்வீரர்கள் ந்ே திகதி அபுதாகிரின் தலைமையில் புரட்சியை வெற்றிகரமாக நடத்தினார்கள். ஆனால் அவர்கள் சியாவை நம்பி அவரிடம் அதிகாரத்தை வழங்கினார்கள். தமக்குள்ள ஆபத்தை உணர்ந்த பங்களாதேச முதலாளிவர்க்கம், ஜக்கிய அமெரிக்கா மற்றும் சகல மேலாதிக்க உதவியுடனும், சியாவின் உதவியுடனும் இப்புரட்சியை நசுக்கியது. அமெரிக்க C.I.A.யின் பாரிய தலையீட்டினால் அபுதாகிர் தூக்கிலிடப்பட்டார்.
- 2 -

அபுதாகிரின் நீதிமன்ற சொற்பொழிவு நாட்டிலிருந்து ரகசியமாகக் கடத்தப்பட்டு, இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. அதன் தமிழாக்கமே இது வாகும். மேஜர் ஜெனரல் சியாவுர் ரகுமான் அண்மையில் பங்களா தேசில் நடைபெற்ற சதிப்புரட்சியில் கொல்லப்பட்டார். இச் சதிப்புரட்சியில் சம்பந்தப்பட்டதாகக் கூறிப் பல விடுதலை வீரர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். 1971ல் பங்களாதேச ராணுவத்திலிருந்து போராடிய சகல விடுதலை வீரர்களும் இன்று அழிக்கப்பட்டு விட்டார்கள். இப்பொழுது பங்களாதேச ராணுவத்திலுள்ள தளபதிகள் விடுதலைப் போராட்டத்தின்போது பாக்கிஸ்தானில் சொகுசாக வாழ்க்கை நடாத்திப் பின்னர் 1973ல் நாடு திரும்பியவர்கன் இப்பொழுது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பங்களாதேசின் விடுதலைப் போராட்டத்தின்போது பாக்கிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்தவர்கள்.
இச்சம்பவங்களிலிருந்து நாம் பெரும் படிப்பினைகளைக் கற்றாகவேண்டும். பிரித்தானிய, அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் 19ம் நூற்றாண்டு முதல் இந்திய உபகண்டத்தில் வளரக்கூடிய புரட்சி கர சக்திகளை முளையுடன் அழிக்கின்றனர். பகத்சிங் முதல் அபு தாகிர் வரை எத்தனையோ விடுதலை வீரர்களை இந்த ஏகாதிபத்தி யங்களும் அதன் அடிவருடிகளும் தூக்கிலிட்டுள்ளனர். தேனை உறிஞ்சிச் சக்கை போன்ற நேரு, ராஜு வ், சியாவுல் கக், சியாவூர் ரகுமான் போன்றவர்களை இந்திய உபகண்டத்தை ஆளவும் தமது நலன்களைக் காக்கவும் விட்டுள்ளனர். எனினும் உபகண்டத்தில் ஏற்படப்போகும் சமூகப் புரட்சிகளை ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது. காஸ்மீர் முதல் தெய்வேந்திர முனை(டொன்றா) வரை ஆப்கானிஸ்தான் முதல் பங்களாதேசம் வரை கோடிக்கணக்கான பாட்டாளிகளும் உழவர்களும் எரிமலை போல் கிளர்ந்தெழுவர். இந்திய உபகண்டத்தில் தேசிய சுரண்டலும், பொருளாதாரச் சுரண்டலும், இராணுவ ஆக்கிரமிப்புக்களும் உடைத்தெறியப்படும். எங்கும் பாட்டாளிகள் பலம் பெறுவர்.
இலங்கை முன் எப்பொழுதுமில்லாத அளவில் நெருக்கடி களை இப்பொழுது சந்தித்து வருகிறது. இலங்கை 1948ல் விடு தலை என்ற பெயரில் பிரித்தானியர் கையிலிருந்து ஆட்சிமாற்றம்
- 3 -

Page 4
ஏற்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டங்களின் பிரதிபலிப்பே இலங்கைக்கும் விடுதலையைப் பெற்றுத்தந்தது எனலாம். இலங் கையில் பிரித்தானியர்களுக்கெதிராக பெருமளவில் போராட்டமேதும் நடந்ததாக இல்லாவிட்டாலும் எதிர்ப்பியக்கங்கள் பரவலாக நடைபெற்றதெனலாம். எனவே விடுதலையின் மதிப்பு என்ன வென்பதனை இலங்கை மக்கள் முற்றாக அறிந்திருக்கவில்லை. இதன்விளைவு முதலாழித்துவ வர்க்கத்திற்கும், குட்டியூர்சுவா தலைமைகளுக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. இம்முதலாளித் துவ, குட்டியூசுவா வர்க்கத்திற்கிடையில் அரசியல் உச்சப்பலனை அடைவதில் போட்டி முரண்பாடுகள் ஏற்பட்டன. இப் போட்டி முரண்பாடுகளே பேரினவாதத்திற்கு வழிவகுத்தது. பேரினவாதத்தின் வளர்ச்சி இனக்கலவரங்களுக்குத் தூபமிட்டது. இப் பேரினவாதங் களினாலும், இனக்கலவரங்களினாலும் தமிழ் பேசும் மக்கள் ஒட்டு மொத்தமாக அரசுயந்திரத்தின் நசுக்கலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். முதலாளித்துவ-பூர்சுவா ஆட்சிகழுக்கு எதிராக இயல்பாகவே இருக்கக்கூடிய பாட்டாளிகளின் எழுச்சிகளை திசைதிருப்பி நசுக்கு வதில் ஆட்சியாளர்கள் அக்கறை எடுத்துக்கொண்டனர். எனவேதான் பத்துலட்சம் பாட்டாளிகளின் குடியுரிமை, வாக்குரிமை களைப் பறித்து அதற்கு இனச்சாயம் பூசினர். பாட்டாளிகள் இன ரீதியில் பேரினவாதிகளால் பிரிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஆதிக்கவெறியாளர்களின் சுரண்டல் அங்கீகாரம் பெற்றது. தொழி லாளர்களைச் சுரண்டி நசுக்குவதற்குப் பேரினவாதக் கொள்கை பெரும் மூலதனமாக அமைந்தது.
எனவே மாக்ஸிசவாதிகளும், இடதுசாரிகளும் பேரினவாதத் தின் முன் அடிமையானார்கள். கோழைத்தனங்கொண்ட இடது சாரிகள் தமிழ்தேசிய இனத்தின் நலிவிலும் தொழிலாளவர்க்கத்தின் அழிவிலும் முடிசூடிக்கொண்டனர். இந் நடவடிக்கைகள் சட்ட பூர்வமாக மாக்சியவாதிகளின் முத்திரையை மேலும் கிழித்தது மல்லாமல் மாக்சியத்தையும் கொச்சைப்படுத்தியது. இடதுசாரிகள் குறைந்தபட்சம் இனவாதத்திற்கப்பால் தொழிலாளர்களின் ஒன்றியத் தையும், தேசிய ஒற்றுமையையும் காப்பாற்றுவார்கள் என எதிர்பார்த்த தமிழ்த் தேசிய இனம் ஏமாற்றமடைந்தது. இடதுசாரிகளே இனரீதியில் தொழிலாளர்களை நசுக்கினார்கள்.
- 4 -

எனவே கூட்டுமொத்தமான பேரினவாதத்திற்கு எதிராகத் தம்மைத் தற்காத்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டனர். தமிழ்த் தேசியஇனத்தின் தொடக்ககால ஆயுதப் போராட்டம் நிதானமானதாகவும், வளர்ச்சியை நோக்கியதாகவும் இருந்தது. எனவே உலகப் பார்வையில் கணிசமான ஆதரவை இப்போராட்டம் தேடிக்கொண்டது. இவ்வளர்ச்சி ஏகாதிபத்தியத்தின் கண்களை உறுத்தியது. ஏகாதிபத்தியங்கள் தமது அடிவருடி களைக் காப்பாற்ற ஆயுதங்களைக் குவித்தார்கள். சியோனிஸ்டுகளும் கூலிப்படைகளும் இலங்கையில் குவிக்கப்பட்டு தமிழ்த் தேசிய இனம் நசுக்கப்பட்டது. நசுக்கலின் மத்தியிலும் தமிழினத்தைக் காப்பாற்ற இளைஞர்கள் துணிகரமாகப் போராடிக்கொண்டிருந் தார்கள். உலகஆதரவைத் திரட்டுவதில் வெளிநாட்டுத் தமிழர்கள் முனைப்பாகச் செயல்பட்டனர். இருந்தும், உலகம் தனது கரங் களை இறுகக் கட்டிக்கொண்டது. பரிதாபத்திற்குரிய முதலைக் கண்ணிரை உலகம் வடிக்கத்தவறவில்லை. தமிழ்போராளிகளின் துணிவும். ஈகமும் தம்மினத்தை காப்பாற்றிக்கொள்ளும் சபதத்தை ஏற்கவைத்தது.
போராளிகளின் இத்துணிகர முடிவு அண்டை நாடான இந்தியாவைச் சிந்திக்கவைத்தது. ஆதரவுக்கரம் நீட்டியது. தென் கிழக்காசியாவில் மிகப்பலம் வாய்ந்த உளவு ஸ்தாபனமான ஆய்வுப் பகிர்வு பகுதி(RAW) போராளிகளின் இயக்கங்களை அவதானிக் கவும், கையாளவும் விடப்பட்டது. அதேவேளை இந்திய மானில ங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் மார்க்ஸிச புரட்சிவாதிகளை(நக்சல் பாரிகள் எனப்படும்) (CPIML) ஒடுக்குவதற்கென்றே உருவாக்கப் பட்ட காவல் துறையின் "S" பிரிவு தமிழ் விடுதலைப் போராளி களைக் கண்காணிப்பதற்காகவும், ஒடுக்குவதற்காகவும் பயன் படுத்தப்பட்டது. இக் "Q" பிரிவு (DGP) டிஜிபி மோகனதாஸின் நேரடிக் கண்காணிப்பில் (DIG) டிஜஜி இராஜசேகரநாயரின் பொறுப் பில் விடப்பட்டது. இவ்விருவரும் இந்திய நலன்களைவிட அமெ ரிக்க உளவு ஸ்தாபனமான சிஜஏ. யின் தேவைகளையே பூர்த்தி செய்வதில் கவனமெடுத்தனர். விடுதலை இயக்கங்களை அமெரிக் காவின் பக்கம் திருப்புவதிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை நசுக்குவதிலும் அக்கறைகாட்டினார்கள். இக் "S" பிரிவுக்கு உதவி
- 5 -

Page 5
யாக அண்மையில் டெல்லியில் அமெரிக்க உளவாளியெனக் கைது செய்யப்பட்ட ஆய்வுப் பகிர்வுப் பிரிவின்(RAW) தமிழ்நாட்டு மாநில பொறுப்பதிகாரியான உன்னிகிருஷ்ணன் (DIG) தனது முழு உதவியையும் வழங்கி வந்தார். இயக்கங்களுக்கிடையே ஆன கூட்டுகளை உருவாக்குவதிலும், உடைப்பதிலும் மிகத்திறமை யாகச் செயல்பட்டு வந்தார்.
அமெரிக்க அடிவருடிகளான மோகளதாஸ்(DGP) தமிழ் நாடு உன்னிகிருஷ்ணன்(DIG - RAW)சந்திரகாசன்(தமிழீழ அரசி யல்வாதி)ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கங்களை ஒன்றிணை ப்பதாக ஆர்வம் காட்டிக் கொண்டனர். இவ் ஆர்வத்தின் பயனாக இந்திய, அமெரிக்க நலன்களில் ஆர்வம் காட்டக்கூடிய அமைப்பு க்களை உள்ளடக்கிய ஈழ தேசிய விடுதலை முன்னனி(ENLF) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (EPRLF), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஈழ புரட்சிகர அமைப்பு (EROS), தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) ஆகியன அங்கம் வகித்தன. ஈழ தேசிய விடுதலை முன்னனி (ENLF) என்ற இவ்வமைப்பு ஆய்வுப் பகிர்வுப் பிரிவின் (RAW) செல்வாக்குப்பலம் வாய்ந்ததனால் தமிழீழ விடுதலைப் புலிகளிளால் தங்கள் தேவைகளைப் பெருமளவில் பூர்த்திசெய்ய முடியவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளைத்(LTTE)தவிர்ந்த Isle9 epsip 9istolniu36061Tuji (EPRLF, TELO, EROS)3i61ji பகிர்வுப் பிரிவு(RAW)தனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களில் ஈடுபடுத்தி வந்தது.
ஆயுதமோகங்கொண்ட ஈழதேசிய விடுதலை முன்னணி (ENLF)போராட்டத்தை திசை திருப்பி இனக்கலவரங்களை உரு வாக்கும் வேலைத்திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. தலைநகரிலுள்ள சிறுதொழிற்சாலைகள், பொதுமக்கள் போக்குவர த்து நிலையங்களில் குண்டுகளை வெடிக்கவைப்பதிலும், சிங்கள கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவிச் சிங்கள மக்களைக் கொன்று குவிப்பதிலும், தனியாரைக் கடத்தி பெரும் அரசியல் லாபம் தேடிக்கொள்வதையுமே இவர்கள் தங்களது வேலைத்திட்டமாக்கிக் கொண்டனர்.இவர்கள் தங்கள் தொடர்புகளையும் வர்க்கநிலைப்பாட் டையும் அம்பலப்படுத்தும் நடவடிக்கையாக முன்னாள் பாராளு
-6 -

மன்ற உறுப்பினரும், ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கை கொண்ட வரும் தென்இலங்கை இடதுசாரிகளுடன் தொடர்புகளைப் பலப் படுத்தி வந்தவருமான தருமலிங்கத்தைக் கொலை செய்தனர். இக் கொலையைச் செய்த சிறீ சபாரத்தினம் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கத்தை(TELO) இராணுவரீதியில் பலப்படுத்தி, தமிழ் தேசிய இனப் பிரச்சனையை தமிழர்களுக்கும்-சிங்களவர்களு க்குமான முரண்பாடாக வளர்த்தெடுத்து, நிரந்தர தரகர்களாக இந்தியா தொடர்ந்தும் இருக்கும் சூழ்நிலையை உருவாக்குவதும், இயக்கங்களைப் பலவீனப்படுத்தி முற்றாக அழிப்பதுமே ஆய்வுப் பகிர்வுப் பிரிவின்(RAW)உள் நோக்கமாக இருந்தது.
தமிழீழ விடுதலை இயக்கத்தை(TELO) முன்தள்ளும் ஆய்வுப் பகிர்வுப் பிரிவின்(RAW) இந் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின்(LTTE) இராணுவ நடவடிக்கைகளை இரண் டாம்நிலைக்குத் தள்ளியது. எனவே ஆய்வுப் பகிர்வுப் பிரிவின் (RAW) இந்நடவடிக்கைகளினால் இராணுவரீதியில் வரக்கூடிய ஆபத்தைத் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும்(PLOT)அரசியல் அவதானிகளும், தமிழீழ விடுதலைப் புலிகளும் (LTTE) அவதானிக் கத் தவறவில்லை. எனவே ஆய்வுப் பகிர்வுப் பிரிவின்(RAW) ஓர் அங்கமான தமிழீழ விடுதலை இயக்கத்தை(TELO) முற்றாக அழிப்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு(LTTE) ஓர் தவிர்க்க முடியாத வரலாற்று அரசியல் தேவையாகியது. தமிழீழவிடுதலைப் புலி(LTTE)களின் இந் நடவடிக்கை ஆய்வுப் பகிர்வுப் பிரிவின் (RAW) அரசியல் தேவைகளைப் பலவீனப்படுத்தியது. விடுதலை இயக்கங்களை பலவீனப்படுத்தி போராட்டத்தை இனக்கலவரங்களாக உருவாக்கித் திசைதிருப்புவதையும், இலங்கை அரசையும் அரசியல் தலைவர்களையும் அடிபணியவைத்து தனது மேலாதிக்கத்தை கொண்டுவரும் இந்திய உளவு நிறுவனத்தின் நோக்கம் பின் தள்ளப்பட்டது.
இருப்பினும் இம்முட்டுக்கட்டை நீண்டகாலம் நீடிக்க வில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) தங்கள் பலவீனங்களை மறைக்க எடுத்த இராணுவ நடவடிக்கைகள் அவர்களைத் தொடர்ந்தும் அரசியல் அநாதைகளாக்கியது. அரசியல் வரட்டுத்த னம் கொண்ட தமிழீழ விடுதலைப் புலி(LTTE)களின் இராணுவ - 7 -

Page 6
நடவடிக்கைகள் இந்தியாவிற்கு சாதகமாகவே அமைந்துவிட்டது.
ஜே. ஆர் அரசின் சர்வாதிகாரப் போக்கும் தமிழீழ விடுத லைப் புலி(LTTE)களின் பாசிச நடவடிக்கைகளுக்கும் பின்னனியில் ஏகாதிபத்திய அமெரிக்க தொடர்பு இருப்பதாகக் கூறி இந்தியா தனது அரசியல், இராணுவத் தலையீட்டுக்கு வழிவகுத்தது. போ ராட்டங்களின் தவறான போக்குகளும் அன்னிய நாடுகளின் தலை யீடுகளும் ஓர் இடைக்காலச் சமாதானத்திற்கு மக்களைத் தூண்டி யது. எனவே இந்திய ராணுவத்தலையீடு விடுதலை இயக்கங்களுக் கப்பால் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவையும் சிங்களமக்களில் கணிசமான அளவு எதிர்ப்பற்ற தன்மையையும் உருவாக்கியது. இச்சூழ்நிலையை அரசியல்ரீதியில் அளவிடமுடியாத சில விடுதலை இயக்கங்களும் அரசியல் தலைவர்களும் தம்மால்தான் இத்தீர்வு வந்ததென மார்தட்டிக் கொண்டனர். எனவே இந்திய ராணுவத் தலையீட்டால் வரக்கூடிய ஆபத்தை மக்களுக்கு எடுத்துக்கூற இவர்களால் முடியவில்லை.
நீண்டகாலமாக இந்திய தலையீட்டை எதிர்த்துக்கொண் டிருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOT) போன்ற பிற அமைப்புகளுக்கு எதிர்த்துப் பிரசாரம் செய்ய இராணுவ பலமற்ற தன்மை, தமிழீழ விடுதலைப் புலி(LTTE)களின் ஏகபோக இராணுவ வல்லாண்மை ஆகியவை இதற்கு இடங்கொடுக்க வில்லை. எனவே இந்தியப்படைப் பெருக்கெடுப்புக்கு இலங்கையில் எவ்வித தடையும் இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலி(LTTE)களும் இந்திய இராணுவத்தின் பெருங் கூட்டங்களைக் கூட்டி இந்தியப் பிரதமர் ராஜு வ் காந்தியை தாங்கள் முற்றாக நம்புவதாகவும், தமிழர் களின் பாதுகாப்பை இந்தியாவிடம் தான்(வே. பிரபாகரன்) ஒப்ப டைப்பதாகவும். தமிழர்களைப் பாதுகாக்க தாங்கள் பெருமுயற்சி செய்து இறக்குமதி செய்த ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படை ப்பதாகக் கூறிக்கொண்டனர். அத்துடன் நின்றுவிடாது வரலாற் றுத் துரோகத்தனத்தின் முதல் நடவடிக்கையாக தமிழீழ விடுத லைப் புலிகளே(LTTE) பொதுமக்கள் முன்னிலையில் சிறிலங்கா முப்படைத்தளபதி சேப்பாலை ஆட்டிகலையிடம் ஆயுதத்தை ஒப்ப டைத்து தாங்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை மன்னிப்பதாக ஜே. ஆர். ஜயவர்த்தனே கொடுத்த மன்னிப்புக் கடிதத்தையும் - 8 -

பெருமையோடு பெற்றுக்கொண்டனர். உலக வரலாற்றிலேயே முதன் முதலில் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய இளைஞர் களுக்கு பாசிச அரசிடம் மன்னிப்புக்கேட்டு, அப்பாசிச அரசுத் தலைவர் ஜே.ஆர். இன் மன்னிப்புக் கடிதத்தை இந்திய இராணுவத் தளபதி மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முன்னிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) பெற்றுக் கொண்டு போராளிக ளுக்குத் துரோகம் இழைத்தனர்.
இந்திய ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்ததற்கு நன் றிக்கடனாக இலங்கைக்கான இந்திய குடியேற்ற அதிகாரி தீக்சித் தமிழீழ விடுதலைப் புலி(LTTE)களின் கையில் இடைக்கால நிரு வாகத்தை ஒப்படைப்பதாக அறிவித்தார். அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் எதிரிகளைத் தீர்த்துக் கட்டவும் மறைமுக உத்தரவுடனான ஆதரவை வழங்கினார்.
இயக்கங்களையும் அதன் முன்னணி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் அழிக்கும் நடவடிக்கைகளை மக்கள்முன் நியாயப்படுத்த தமிழீழ விடுதலைப் புலி(LTTE)களின் அரசியல் தலைமை இந்திய எதிர்ப்புக் கோசத்தை முன்வைக்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டது. அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலி(LTTE)களின் இடைக்கால நிருவாகத்தில் அங்கத்துவம் பெறாமல் புறக்கணிக்கப்பட்ட கிழக்குமாகாண மக்களும், பின்னடைந்த மாவட்டங்களான முல்லைத்தீவு, மன்னார் இளைஞர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தலையிடி கொடுக்கத் தொடங்கினர். மறுபுறத்தில் இடைக்கால நிருவாகத்திற் கான அதிகாரப்பங்கீட்டில் இந்தியாவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டது. எனவே தமிழீழ விடுதலைப் புலிகளின்(LTTE) ஒரு பகுதியினர் தன்னிச்சையாக இந்திய இராணுவத்தைத் தாக்க முற்பட்டனர். இத்தாக்குதலுக்கு எந்தவொரு அரசியல் காரணமும் முன்வைக்கப்படவில்லை. தமிழீழவிடுதலைப்புலி(LTTE)கள் - இந்தியப்படைகளுக்கான மோதல்கள் எந்தவெரு அரசியல் இலக்கையும் கொண்டதல்ல. ஆனால் வெளிப்பார்வைக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE) தொடர்ந்தும் தமிழீழத்திற்காக தியாகங்களைச் செய்வதுபோல் காட்சியளித்துக் கொண்டிருக்கவைத்தனர். இந்நிலை தொடர்ந்தும் - 9 -

Page 7
மக்களை விடுதலைபற்றிய மாயையில் மூழ்கவைத்து போராட் டத்தைத் திசைதிருப்பி மக்களைத் தங்கள் இரசிகர்களாகவும், பார்வையாளர்களாகவும் வைத்திருக்கச் செய்கின்ற நடவடிக்கை யாகும். இதன் மூலம் தலைமை தனது வர்க்க நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள விரும்புகின்றது.
இன்று நடந்துகொண்டிருக்கின்ற அதிகாரத்திற்கான போராட்டமோ, இந்தியத் தலையீடோ எமது மக்களுக்கும் தொழிலாளவர்க்கத்திற்கும் எவ்வித விடுதலையையோ, மாற்றத்தையோ எற்படுத்தித் தந்துவிடாது. இந்நடவடிக்கை எப்பொழுதும் சந்தர்ப்பவாத வலதுசாரிகளுக்கும், பேரினவாதி களுக்குமே சார்பாக அமையும். இதனை இன்றைய நிலையில் "வங்கந்தந்த பாடத்” துடன் ஒப்பிட்டுப் பார்த்து படிப்பினையாகப் பெற்றுக்கொள்வோம். எமது மக்கள் சக்தியில் நம்பிக்கைவைத்து தொடர்ந்தும் போராட்டத்தை முன் எடுப்போம்.
கமுகு வெளியீட்டாளர்
பதிப்பு:- பங்குனி 1988
வெளியீடு:- கமுகு
- 10 -

கேர்னல் அபுதாகிர் (Colonel Abu Tolher)
நீதிமன்றத் தலைவரே, ஏனைய உறுப்பினர்களே,
உங்கள் முன்னர் குற்றவாளியாக நிற்கும் மனிதன், எமது நாட்டுக்காக இரத்தமும் வியர்வையும் சிந்தியவன். இம் மனிதன் தனது உயிரையே இழக்கத் துணிந்தவன் எனச் சரித்திர ஏடுகள் கூறும். இவனது சாதனைகள் ஒருநாள் நியாயப்படுத்தப்படும். இந்த நாட்டுக்காக எனது தொழில், சிந்தனைகள், கனவுகள் பட்ட உண ர்வுகளை இப்பொழுது கூறவும் முடியாது. விளக்கவும் முடியாது.
என்ன விசித்திரம் !
எப்படி இரத்தத்தினால் என்னை இணைத்துக் கொண்ட இந்த நாடு என்னை நிராகரிக்கமுடியும்?
அதிகார பீடத்தில் நாள் இருத்திய அரசும், நாள் புதுவாழ்வு கொடுத்த மனிதனும் எனக்கு முன்னர் நீதிமன்ற வடிவில் இருக்கின்றது. அவர்கள் என்னை நாட்டுத் துரோகத்திற்கும் ஏனைய உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குமாக Grairaudar விசாரிக்கத் துணிகின்றனர். எனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகள் விஷமத்தனமானவை, ஆதாரமற்றவை, சூழ்ச்சியானவை, முழுப்பொய்கள்.
நாள் ஒரு பூரண நிரபராதி
இந் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டில் எனது தூண்டுதலினால் 1975ம் ஆண்டு கார்த்திகைமாதம் ம்ே, 7ம் திகதி டாக்கா(DOCCO) ராணுவத் தளத்திலிருந்த போர்வீரர்கள்
- 11 -

Page 8
புரட்சிசெய்ததாகவும் இதனால் ஒரு சதிகாரக்குழுவின் கபடமான நோக்கம் முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் சியாவூர் ரகுமான் (ZiCaur RChumCan) 6 GG56oo6a) செய்யப்பட்டு இந்நாட்டின் சுதந்திரம் காப்பாற்றப்பட்டது. இந்நடவடிக்கை தேசத்துரோகமாயின் நான் குற்றவாளி. நான் ஏதாவது குற்றம் இழைத்திருந்தால் அக்குற்றம் சட்டத்தையும் ஒழுங்கையும் மீண்டும் நிலைநாட்டியதாகும், நாட்டின் சுதந்திரத்தை நிலை நாட்டிய குற்றமாகும். ராணுவத் தளபதியைச் சிறைவாசத்திலிருந்து மீட்ட குற்றமாகும். பங்களாதேஷின் இறைமையில் மீண்டும் நம்பிக்கையை ஊட்டிய குற்றமாகும்.
இந்த உண்மையை நிலைநாட்டுவதற்கு நான் 1976ம் ஆண்டு ஆனி மாதம் 27ம் திகதி முதல் எனக்கு எதிராகப் பயன் படுத்தப்பட்ட பயமுறுத்தல்களையும் எனக்கு இழைக்கப்பட்ட சித் திரவதைகளையும் பற்றி மீண்டும் ஞாபகப்படுத்தத் தேவையில்லை. இந்த உண்மை 7ம் திகதி கார்த்திகை 1975ம் ஆண்டு எமது சொந்தமுயற்சியால் பதவியில் இருத்திய நீதிபதி சாயிம்(SOyem) இற்கும் அவரது அரசாங்கத்திற்கும் தெரியும். சகல அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும், அரசியல் நடவடிக்கைகள் நடைபெறவேண்டும் என்றும் எமக்கிடையே அங்கீகரிக்கப்பட்ட உடன்பாடு இருந்தது. இந்த உண்மை எனது நாட்டுமக்களுக்குத் தெரியும். அவர்கள் அதனை நன்றியுடன் நினைவில் வைத்துக் கொள்வார்கள்.
என்னை இந்தச் சிறையில் வைத்து ஒரு தரங்குறைந்த நீதிமன்றத்தால் விசாரிக்கமுற்படுவது இந்நாட்டுக்கே அவமான மாகும். உங்களுக்கு என்னை விசாரிக்க உரிமையில்லை.
எனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பொய்யான புனை யப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரிக்க முன்னர், நான் உங்களுக்கு எமது வீரதேசிய விடுதலை இயக்கத்தின் நாட்களை ஞாபகப்படுத் துகிறேன். இக்கட்டத்தில் இது மிகவும் முக்கியமாகும்.
நான் பாக்கிஸ்தான் ராணுவம் எமது மக்களுக்கு எதிராக மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்ட 1971 பங்குனி 25ம் திகதியை ஞாபகப்படுத்துகிறேன். எமக்கெதிராகத் திணிக்கப்பட்ட போரை வெல வதைத் தவிர வேறுவழியிருக்கவிலலை . நாம் - 12 -

தோற்கடிக்கப்பட்டிருந்தால் எம்மீது மிகமோசமான அடிமைவாழ்வு திணிக்கப்பட்டிருக்கும். பாக்கிஸ்தான் ராணுவஅரசு பத்திரிகைகள் மூலம் வங்காளிகள் உயர்கல்விக்குத் தகுதியற்றவர்கள் எனக் கூறியது. இதனை இரகசியமாக வைத்திருக்கவில்லை. வங்காளிகள் தேசப்பற்று அற்றவர்கள். அவர்களது கலாச்சாரம் தரம் குறைந்தது. அவர்கள் ஒரோயொரு மொழி உருது மொழியே கற்கவேண்டும் எனக்கூறியது.
எனது மக்களின் நிலைமையை உணரத்தொடங்கிய நாள் முதல் பாக்கிஸ்தானின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வங்காளிகள் போன்ற மக்களால் ஒரு சுதந்திர நாட்டை அமைத்து தமது தேசிய அபிலாசைகளைப் பூர்த்திசெய்ய முடியாது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. அந்தநேரம் முதல் நான் எப்பொழுதும் எமது மக்களின் விடுதலையைப்பற்றியும் அவர்களுக்கு ஒரு நாட்டை அமைப்பது பற்றியுமே சிந்தித்தேன். பாக்கிஸ்தான் ராணுவத்திலிருந்து எத்தனை வங்காளி அதிகாரிகள் (U) சுதந்திர பங்களாதேஷ் பற்றிச் சிந்தித்தார்களோ எனக்குத்தெரியாது. ஆனால் என்னைப்பற்றி நான் இவ்வளவு மட்டும் கூறமுடியும். சுதந்திரக்கனவு என்னை ஒரு நட்சத்திரம்போல் எப்பொழுதும் கவர்ந்து இழுத்தது.
பாக்கிஸ்தான் ராணுவத்தில, நாம் வங்காளிகள் தேசத்துரோ கிகளின் நாடு எனப்படிப்பிக்கப்பட்டோம்.
அவர்கள் சேவைசெய்யவே பிறந்தவர்கள். அவர்களை உண்மையான முஸ்லிம்களாகவும், தேசப்பற்றுள்ளவர்களாகவும் ஆக்குவது பாக்கிஸ்தானியரின் கடமையெனக் கற்பிக்கப்பட்டோம். அவர்கள் எங்களை எவ்வாறு நையாண்டி பண்ணினார்கள் என்பதையும் புறக்கணித்தார்கள் என்பதையும் என்னால் ஞாபகப் படுத்தமுடிகிறது.
அந்நாட்கள் மேற்கு பாக்கிஸ்தானிலிருந்த எமக்கு மிகவும் கோதனையான நாட்களாகும். நாட்டின் அழைப்பை ஏற்றுக்கொள்ள நான் தயங்கவில்லை. ராணுவ அரசின் மிக மோசமான நோக்கங்கள் எமக்குத்தெரியாமல் இருக்கவில்லை. எல்லாவற்றையும் எரியுங்கள் காண்பவர்களைக் கொல்லுங்கள் என்று ராணுவத் தலைமைப்பீடத் திலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
- 13 -

Page 9
நான் பாக்கிஸ்தானிலிருந்து தப்பியோடி விடுதலைப் போரா ட்டத்தில் சேரத் தயங்கவில்லை. இந்நீதிமன்றத்தின் தலைவருக்கு நான் பாக்கிஸ்தான் ராணுவத்தில் ஒரு சாதாரண போர்வீரன் அல்ல என்பது தெரியும். நான் முதன் முதலில் பலூச்சி ராணுவப்பிரிவில் சேர்ந்தேன். பின்பு பாக்கிஸ்தான் ராணுவத்திலுள்ள விசேஷ சேவை கள் குழுவில் சேர்ந்தேன். 6 வருடங்கள் நான் இந்த விசேஷ குழுவில் சேவையாற்றினேன். போர்வீரனாகவும், அதிகாரியாகவும் நான் எதிரிக்கெதிராக நேருக்குநேர் போராடத் தயங்கவில்லை. இந்திய-பாக்கிஸ்தான் போரில் நான் காஷ்மீர் முனையிலும் சியால் கோட் பகுதியிலும் போராடினேன். அப்போரில்பட்ட காயங்கள் எனக்கு இன்னும் உண்டு.
மரூன் பாராசுட் பரிசு வழங்கப்பட்ட முதலாவது வங்காளி அதிகாரி நானே. எனக்கு ஒரே நேர்கோட்டில் 135 பாராசுட் பாச்சல் கள் பாய்ந்த பெருமை உண்டு. என்னுடைய சேவைகளுக்காக நான் ஜக்கிய அமெரிக்காவிற்கு வெவ்வேறு வகுப்புகளுக்கு அனுப் பப்பட்டேன். கொலம்பஸ் ஜோர்ஜியாவில் ரேன்சர் பயிற்சி அதிகாரி களால் ரேன்சர் பரிசு வழங்கப்பட்டேன். வடகரோலினாவிலுள்ள விசேஷ அதிகாரிகள் பயிற்சிநிலையத்திலிருந்து விசேஷ பட்டதா ரியாக வெளியேறினேன். அக்காலம்மட்டும் ஒரு வங்காளி அதிகாரி யும் இப்படிப்பட்ட சேவைப்பரிசுகளைப் பெற்றிருக்கவில்லை என இக்கட்டத்தில் ஞாபகப்படுத்துகிறேன்.
ராணுவஅரசின் பாசிச காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நாட்களை ஞாபகப்படுத்துவோம். 1970 ம் ஆண்டு பெதுத்தேர்த லின்பொழுது நான் ஜக்கிய அமெரிக்காவில் ஒரு பயிற்சிக்குச் சென்றிருந்தேன். நான் மார்கழி மாதம் மேற்கு பாக்கிஸ்தான் திரும்பி வந்தபொழுது தேர்தல்கள் முற்றுப்பெற்றுவிட்டன. ஷேக் முஜிபுர் ரகுமானின் கட்சியான அவாமிலீக் பெரும்பாண்மை ஆதரவு பெற்றிருந்தது. நான் திரும்பிவந்தவுடன் பல தரப்பட்டவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறினேன். சிவிலியன் அரசு அதிகாரம் கையளிக்கப்படாது என நான் உணர்ந்தேன். ராணுவ அரசும் பூட்டோவும் (பாக்கிஸ்தான் அரசியலில் ஒரு சாபக்கேடு) ஒரு பொழுதும் அவாமிலீக்கிற்கு நியாயமான ரீதியாக அதிகாரம் வழங்கத் தயாராயில்லை. ஒரு வங்காளியும் அதிகாரத்திற்கு வரக்கூடாது என
- 14

அவர்கள் தீர்மானித்தார்கள். ஷேக் முஜிபுர் ரகுமானை அவர்கள் அங்கீகரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ தயாராயிருக்கவில்லை. என்னால் ஆபத்தான சமிக்ஞைகளை உணரக்கூடியதாக விருந்தது. எனவே மாசி மாதம் எனது மகைவியையும் குடும்பத் தையும் எனது சொந்த இடமான மயிமன் சிங்குக்கு அனுப்பினேன். குளிர்காலத்தில் குளிர் எம்முடன் இருந்தது.
வங்காளிகள் ஒரு நாடாக(பங்களாதேஷி) அமைவதைப் பாக்கிஸ்தானியர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என எனக்குத்தெரியும் அவர்கள் எதிர்ப்பார்கள் என எனக்குத் தெரியும். எமது மக்களை விடுதலையாக்கும் நாட்கள் அண்மித்துவிட்டதுபோல் நான் உணர்ந்தேன். எத்தனைபேர் இப்படி உணர்ந்தார்களோ எனக்குத் தெரியாது. நாட்கள் செல்லச் செல்ல நாம் விரைவான கருத்து மாற்றங்களுக்கு உள்ளாகி நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளுக்கு ஆயத்தப்படுத்தத் தொடங்கினோம்.
25ம் திகதி பங்குனி மாதம் நான் மேற்குப் பாக்கிஸ்தானில் உள்ள குயாட்டாவில் (Quefo) உள்ள ஒரு உயர் பல்நுட்பக் கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அந்த இரவு பூராவும் என்னால் அமைதியாக இருக்முடியவில்லை. நித்திரைகொள்ள முடியவில்லை. இரவு பூராவும் நான் குயாட்டாவில் உள்ள தனியான வீதிகளில் நடந்தேன். என்ன நடக்கிறது என நினைத்துப்பார்க்க முயற்சித் தேன். இப்பொழுதுகூட எமது மக்கள்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைத்துப்பார்க்க முடியவில்லை. இது வங்காள தேசத்தின் இருதயத்தில் இழைக்கப்பட்ட மிக மோசமான சித்திரவ தையாகும்.
26ம் திகதி பங்குனி மாதம் நாம், ஜெனரல் யகியாகான் வானொலியில் பேசுவதைக் கேட்டோம். அக்கட்டம் மிகவும் பயங் கரமான கட்டமாகும். ஒரு நாட்டின் பிறப்பு வேதனைகளை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. பாக்கிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான வெறுப்புணர்வுகளை நான் நேரடி யாகக் காட்டியதால் எனது மேலதிகாரிகளின் சந்தேகங்களுக்கு நான் உள்ளானேன். குயாட்டாவில் நடந்த பயிற்சி வகுப்பு நிற்பாட்டப் பட்டு நாம் எமது ராணுவப் பிரிவுகளுக்குச் செல்லு மாறு பணிக்கப்பட்டோம்.
- 15 -

Page 10
இக்கட்டத்தில் பல கீழ்மட்ட அதிகாரிகள் லெப்டினன்டு களும் உபலெப்டினன்டுகளும் என்னை அணுகி, எனது ஆலோச னையைக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு அவர்களது கடமை யைத் தெளிவாக்கி பாக்கிஸ்தான் ராணுவத்திலிருந்து விலகி தாய் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் சேரவேண்டுமெனக் கூறினேன். அக்கட்டத்தில் அவர்கள், குயாட்டாவில் உள்ள சில வங்காளி உயர் அதிகாரிகள், அவர்களுடன் பேசக்கூடப் பயப்படுவதாகக் கூறினார்கள். எனது கருத்துக்களை உணர்ந்த இந்த உயர் அதிகாரிகள் என்னுடன் பேசப் பயப்பட்டார்கள்.
இதே உயர் அதிகாரிகளே இன்று ராணுவத்தில் உயர்பதவி களில் உள்ளனர். என்னை இங்கு விசாரிக்க முயற்சிசெய்யும் குழு வும் இவர்களே. பங்குனி மாதம் 25ம் திகதிக்கு முன்னர் இவர்கள் ஷேக் முஜிபுருடன் தங்களுக்குள்ள தொடர்புகளை வெளிப்படை யாகப் பெருமையாகக் காட்டினார்கள். 25ம் திகதிக்குப் பின்னர் அவர்கள் அவரைத் தேசத்துரோகி எனக் கூறினார்கள்.
பின்னர் நான் ஆலோசனை கூறிய உப லெப்டினென்ட் நூரும், உப லெப்டினென்ட் இனாமும் வெற்றிகரமாகத் தப்பியோடி விடுதலைப்போராட்டத்தில் சேர்ந்ததாகக் கேள்விப்பட்டு மகிழ்ச்சிய டைந்தேன். குயாட்டாவில் சில நாட்களுக்குப் பின்னர் நான் கைது செய்யப்பட்டு அப்போதைய கிழக்குப் பாக்கிஸ்தானில் இழைக்கப் பட்ட அநீதிகளை ஆட்சேபித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டேன்.
ஆனால் என்னுடைய நண்பரும் காலாற்படை பாடசாலை யின் தளபதியுமான மேஜர் ஜெனரல் பி.எம். முஸ்தபாவின் தலையீ ட்டினால் எனக்கெதிரான குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன. நான் காரியர் ராணுவப் பிரிவிற்கு அனுப்பப்பட்டேன். இங்கு நான் சாதாரண படைப்பிரிவுக்குச் சேர்க்கப்பட்டேன். கிழக்குப் பாக்கிஸ் தானுக்கு எனது சொந்த மக்களைக் கொல்ல அனுப்பப்பட்ட எனது சொந்த ராணுவப் பிரிவுக்குச் சேர அனுமதிக்கப்படவில்லை. இந்த ராணுவப்பிரிவே ஷேக் முஜிபுர் ரகுமானைக் கைதுசெய்தது.
காரியரில் என்னுடன் காப்டன்கள் டெல் வரும், பட்லாரியும் தப்பி விடுதலைப் போராட்டத்தில் சேர இணங்கினார்கள். பாக்கிஸ் தான் ஆட்சியிலிருந்த காஷ்மீரிலிருந்து மீர்பூரிலிருந்த ஒரு வங்கா ளிப் பொறியியலாளருடன் நாம் தொடர்புகொண்ட பொழுது அவர் - 16

எமக்கு இடவசதி தந்து எல்லை மட்டும் வாகனமும் ஒழுங்கு செய்வதாகக் கூறினார். ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்டநேரம் நாம் மீர்பூரை அடைந்தபொழுது அப்பொறியியலாளர் வீட்டைப் பூட்டிவிட்டுத் தனது குடும்பத்துடன் சென்றிருப்பதைக்கண்டு மிகவும் ஆச்சரியமும் ஏமாற்றமும் அடைந்தோம். வங்காள மேல் வர்க்கத்தின் தேசபற்றற்ற தன்மையை இதுவே முதல்தடவை உணர்ந்தோம்.
நாம் அம்மத்தியானம் அவ்வீட்டு முற்றத்தில் தங்கியிருந் தோம். இரவு தொடங்கியதும் மலைகளில் ஏறத்தொடங்கினோம். எனது சகாக்களான காப்டன்கள் டெல் வரும், பட்லாரியும் கரடுமுர டான மலைகளுக்குப் பயிற்றப்படாதபடியால் சில மணித்தியாலங்க ளின்பின்னர் பயணத்தைத் தொடர மறுத்தனர். எனவே நாம் மீண் டும் காரியர் ராணுவப் பிரிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
அப்பொழுது மேற்கு பாக்கிஸ்தானில் ஏறக்குறைய 1000 வங்காளி அதிகாரிகள் இருந்தார்கள். நான் அவர்களில் பலரைச்சந் தித்து, தப்பி விடுதலைப்போராட்டத்தில் சேரும்படி தூண்டினேன். எனினும் வங்காளி மேல் வர்க்கத்தின் தேசபற்றானது, ராணுவ அறை யில் விவாதத்துக்கு மட்டுமே என்று பார்த்து மனம் வருந்தினேன். பின்னர் நான் அபோடாபாத்திலுள்ள பலூச்சி ராணுவமுகாமுக்கு அனுப்பப்பட்டபொழுது அங்குள்ள வங்காளி அதிகாரிகளை விடுதலைப் போராட்டத்தில் சேருமாறு கூறினேன்.
இக்கட்டத்தில் ராவல்பிண்டி பிரதான ராணுவ முகாமிலிரு ந்து மேஜர் சியாவுடின் என்னுடன் தப்பியோட இணங்கியது மிகவும் நன்மையாகவிருந்தது. என்னிடமிருந்த எல்லாப் பணத்தையும் கொண்டு எல்லைமட்டும் செல்ல ஒரு பாவிக்கப்பட்ட காரை வாங்கினேன். நானும் சியாவுடினும் பிண்டியிலிருந்து புறப்பட்டு வழியில் ஜேலத்திலிருந்து வந்த காப்டன் பட்வாரியையும் சேர்த்து க்கொண்டோம். பகல் நேரத்தைப் போக்கவேண்டியிருந்தமையால் நாம் சியால் கோட் ராணுவப் பிரிவிலிருந்த மேஜர் மன்சூரின் வீட்டுக்குச் சென்றிருந்தோம். மன்சூருக்கு எமது திட்டங்கள் தெரியவந்தாலும் அவர் அமைதியாகவிருந்தாரேயொழிய உற்சாகத் தைத் தரவில்லை. ஆனால் அவரது மனைவியின் முயற்சியால் அவர் எம்முடன் தப்பித்துக்கொள்ள இணங்கினார். இப்படியாக - 17 -

Page 11
மேஜர் மன்சூரும், அவர் குடும்பமும், அவரது சேவையாளும் எம் முடன் சேர்ந்துகொண்டனர். இரவானதும் நாம் எல்லைக்குச்சென் று காரைவிட்டுவிட்டு எல்லைகடந்து இந்தியாவை அடைந்தோம். நாம் விடுதலைப்போராட்டத்தில் எம்மை எல்லாவிதமான சுரண்டல்களிலிருந்தும், மேலாதிக்கத்திலிருந்தும் எம்மை விடுத லைப்படுத்தும் நம்பிக்கையுடன் சேர்ந்தோம். நீதியான சமுதாயத்தை உருவாக்க எண்ணியிருந்தோம். சுதந்திரப்போராட்டத்திற்குப் பின்னர் உண்மையாக என்ன நடந்தது? உண்மையாகப் பார்க்கும் பொழுது போரின் பெரும்பகுதி எமது நிலத்தில் நடைபெறவும் இல்லை. எமது சொந்தமக்களுக்கு மிகச்சொற்ப அளவு நன்மைகளையே தந்தது. ஆயுதமற்ற, அமைதி விரும்பும், பயப்படுத்தப்பட்ட பங்களாதேஷ் மக்கள் உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் எல்லையைக் கடந்தார்கள். பெரும்பாலாக இருந்த போர்வீரர்களும் இதனையே செய்தார்கள். முக்கியமான வெகுஜன இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் குறிப்பாக அவாமிலீக்கும் இக்காரணத்துக்கா கவே எல்லையைக் கடந்தனர். ஆனால் மக்களிடமிருந்து ஆதர வைப்பெற்றமையால் அவாமிலிக்குக்குக் கூடுதலான பொறுப்பிருந்தது.
ஆனால், அவர்கள் ஒருபொழுதும் ஆயுதமற்ற நாடு எதிர்நோக்கும் வருங்காலத் தைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அவர்கள் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு ஆயத்தப்படுத்தவில்லை. ஒரு நவீன ராணுவ த்திற்கெதிராக ஆயுதமற்ற மக்கள் போராடு வது முட்டாள்தனமாகும்.
ஆனால, இதுவே எமக்கு நடந்தது. இதற்காகவே நாம் பெரும் இழப்பைக் கொடுக்கவேண்டி இருந்தது. அவாமிலீக்கின் தலைமை உண்மையாகவே கோடிக்கணக்கான எமது மக்களின் வருங்காலத்தைப் பற்றிச் சிந்தித்திருந்தால், அவர்கள் கூடுதலாகத்
- 18 -

துணிவாக நடந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். ஆனால், அப்படி நடக்கவில்லை.
இக்கருத்தே எமது போர்வீரர்களுக்கும் பொருந் தும். அவர்கள் ஒருபொழுதும் ஒரு தேசிய விடுதலைப் போரை எதிர்பார்க்க வில்லை. இதன் விளைவு யாதெனில், உலகில் ஒரு நவீன ராணுவத்துக்கு எதிரான, தொடர்ச்சி யான, வித்தியாசமான போருக்கு ஒரு ஆயத்தமும் இருக் கவில்லை. இந்தியா மிக மகிழ்ச்சியுடன் எமது போர்வீர ர்களுக்கும், மக்களுக்கும், குழந்தைகளுக்கும் உணவும் இருப்பிடமும் வளங்கியது. ஏனெனில், உலக அரசியலி லும், சர்வதேச நாடுகளிலும் இந்தியாவின் செல்வாக்கும், நள்மதிப்பும் அதிகரித்திருக்கும். அத்துடள் உபகண்டத் தில் மேலாதிக்கம் எனும் அதன் கொள்கை பலப்பட்டிரு க்கும். பங்களாதேஷிள் நிலைமைகளினால் இந்தியாவே கூடுதலாகப் புவி-அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதி பாக, மூலப்பொருட்கள் தியாக கூடுதலாகப் பலனடைந் திருக்கும். இவ்வளவு மட்டுமே நாள் போரைப்பற்றிக் கூறமுடியும். எமது அதிகாரிகளும், பேர்வீரர்களும் கூடு தலாக இந்தியர்களிள் விருப்பங்களையும், போர்த்திட்டங் களையும் நடைமுறைப்படுத்தினர்கள். இதுவே இந்த இழிநிலைக்கு எம்மை ஆளாக்கியது.
நான் விடுதலைப் போராட்டத்தில் சேர்ந்தவுடன் எமது படைகளின் தளபதியாகிய கேள்னல் ஒஸ்மானி என்னைப் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று போராட்டத்தின் நடைமுறையிலுள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்து அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்வது என அறியுமாறு கூறினார். நான் விஜயம்செய்த முதலா வது பிரிவு மயிமன்சியர் டங்கயில் மாவட்டங்களை உள்ளடக்கிய 11வது பிரிவாகும். இப்போதைய உதவி ராணுவச் சட்ட அதிகாரியா கிய மேயர் ஜெனரல் சியா அப்பகுதியில் ஒரு ராணுவப் பிரிவை அமைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். இப்பிரிவு பிரிகேடியர் சிங்(Singh இந்திய ராணுவம்)கின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. - 19 -

Page 12
இப்படிப்பட்ட ஒரு முக்கியமான பகுதி ஒரு இந்திய அதி காரியின் பொறுப்பிற்குக் கொடுக்கப்பட்டது எனக்கு மிகவும் ஆச்ச ரியமாக இருந்தது. டாக்காவைத் தாக்குவதாயின் இப்பகுதி மிகவும் முக்கியமாகும். நான் வேறு பிரிவுகளுக்கும் சென்று விடுதலைப் போராளிகளுடன் கலந்து எனது கருத்துக்களையும், திட்டங்களை யும் கூறினேன். நாம் சில சிறு தாக்குதல்களை மேற்கொண்டோம். அப்பொழுது அரசியல் ராணுவத் தலைமைகளின் குறைபாடுகள் தெளிவாகத் தெரிந்தது. எமது தேசியப் போரானது ஏறக்குறையத் தோல்வியடையும் நிலையிலிருந்தது. நாம் ஒரு திறமான பயிற்சி பெற்ற, கூடுதலாகக் கல்விகற்ற எதிரிக்கெதிராகப் போராடிக்கொண் டிருந்தோம். அவர்கள் கடுமையான பயிற்சிபெற்றிருந்ததுடன், நவீன ஆயுதங்களும் கொண்டிருந்தனர். எமது பக்கத்தில் ஒன்றி ணைக்கப்பட்ட தலைமையை அமைக்கக்கூடிய நிலையான ராணு வத்தலைமையில்லை. எனவே எமது படைகள் தீர்மானமற்ற நிலையில், உற்சாகமற்ற நிலையில் இருந்தன. எமக்கு ஒரே ஒரு வழி கொரிலாப் போராட்ட முறையாகும். ஆனால் அப்பொழுது எமது தளபதிகள் வெளிநாட்டு மண்ணில் ஒரு முழுமையான ராணுவத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். எமது இளைஞர்கள் துணிவிலோ, தேசபற்றிலோ குறைவானவர்களாக இருக்கவில்லை. ஆனால் அவர்கள் சரியான முறையில் இயக்கப் படாமல் நாடுபூராவும் சிறுசிறு குழுக்களாகச் சிதறி, தேசப்பற்றினால் எப்படியோ உணர்ச்சியால் அலைப்புண்டு இயங்கினார்கள். அவர்கள் ஒருபொழுதும் பாக்கிஸ்தானின் ராணுவத் தாக்குதலை எதிர்பார்க்காதபடியால் பாக்கிஸ்தானின் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.
எமத போராட்ட நடைமுறைகளிலிருந்த குறைபாடுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டலாம்.
1வது நாம் போரை நடத்தினோம். மக்கள் போரை நடத்தினார்கள். ஆனால் ஒரு சரியான அரசியல் தலைமை இருக்கவில் லை. சரியான அரசியல் தலைமை இல்லாமல் கொரில்லா போராட்டம் வளர்ச்சியடையாது.
- 20

2வது
3வது
அவாமி லீக் எமது விடுதலைப் போராட்டத்திற்கான சரியான அரசியல் தலைமையைத் தரவில்லை.
ராணுவத்தலைமையானது கொரிலாப் போராட்டம் பற்றிச் சரியான கொள்கைகளைக் கொண்டிருக்கவில லை பழை மைவாத(COnventionel) அதிகாரிகளான கேர்னல ஒஸ்மானி, மேஜர் சியா, மேஜர் காலித், மேஜர் சவியுல்லா போன்றவர்கள் கொரில்லாப் போராட்டத்திற்குத் தேவையான அமைப்பு பற்றி விளக்கமற்றவர்கள். மேலும், இந்த பழை மைவாத அதிகாரிகள் தமது பழைமைவாதக் கருத்துக்க ளினால் கொரிலாப்போராட்டத்தின் சாதாரண வளர்ச்சிக்குத் தடையாக இருந்தார்கள்.
விடுதலைப் போராட்டத்தில் ராணுவத்தலை மைமட்டும் போதுமற்றது. சரியாகப் பயிற்சிபெற்ற போர்வீரர்களும், அதிகாரிகளும் ராணுவப் பிரிவுகளுக்குச் சேர்க்கப்பட்டார்கள் இதனால் தனிப்பட்ட சுயாதீன விடுதலைப் போர்வீரர் குழுக் களுக்குப் போதுமானளவு பயிற்சிகளும், தலைமைகளும் கிடைக்கவிலலை . மேலும் விடுதலைப் படைகளின் தளபதிகளுக்கு விடுதலைப் போராட்டம் குறித்து சரியான தெளிவான கருத்துக்கள் இருக்கவில்லை. இத்தளபதி களின் ஒரேயொரு நோக்கம் தமது அதிகாரத்தை நிலை நாட்டத் தேவையான ராணுவப் பிரிவுகளை உருவாக்கு வதேயாகும்.
அவர்கள் 20 ராணுவப் பிரிவுகளைக் கொண்ட ஒரு ராணு வம் விரைவில உருவாக்கப்படும் எனக் கூறினார்கள். அதே நேரத்தில் தேசிய மக்கள் போராட்டத்தின் சாதாரண வளர்ச்சி தடைப்பட்டது. விடுதலை வீரர்கள் நாட்டுக் குள்ளே வீரமிக்க செயலிகளைச் செய்தபொழுதும் அவர் களுக்கு உற்சாகம் கொடுக்க ஒருவருமில்லை. வெளித் தலையீடு (இந்தியா) இல்லாவிடின் சரியான தூரநோக்குக் கொண்ட தலைமை தொடர்ச்சியாக நாட்டுக்குள்ளே
- 21 -

Page 13
46hlgi
உருவாகியிருக்கும். அகர்தலாவில் (இந்தியா)மேஜர்காலித் முஸ் ரப்பின் தலைமையில் இருந்த ராணுவப்பிரிவும் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டிருந்தால் நாம் 7 அல்லது8 மாதத்திற்குள் விவசாய வீரர்களைக்கொண்ட 20 பிரிவுகளை உருவாக்கியிருக்கலாம். எனது கருத்துக்கள் கேள்னல் ஒஸ்மானிக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. அவருக்கு வாழ்க்கை இலகுவாயிருந்தது. அவருக்குப் படுத்துறங்கப் பாதுகாப்பான இடமும், பிரிவு களின் தலைமைப் பீடங்களைப் பார்வையிடப் போதுமான நேரமும் இருந்தது. இது விடுதலைப் போராட்டத்தில நேர் எதிர்த்தன்மையாகும். தலைமையானது முழுப்பைத்தி யக்காரத் தலைமையாகும். மக்கள் போராட்டத்திற்கும், சாதாரண போராட்டத்திற்கும் பெரும் வேறுபாடுஉண்டு. இது கேர்னல் ஒஸ்மானிக்கு விளங்கவில்லை. கொரிலாப் போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் ராணுவப்பிரிவுகளை உருவாக்குவது தவறாகும். சரியான நேரத்தில் கொரில்லா பிரிவுகள் ராணுவப் பிரிவுகளாக் கப்படும் . நான் 11ம் பிரிவின் முக்கியத்துவம் காரணமாக அங்கே நிற்கத் தீர்மானித்தேன். வெவ்வேறு பிரிவுகளுக்கு விஜயம்செய்து நேரத்தை வீணாக்குவது முட்டாள்தனமாகும். ஒஸ்மானி அரைகுறை மனத்துடன் என்னைப் பிரிவுத் தளபதியாக நியமித்தார்.
பிரபல விடுதலை வீரர்களான மேஜர் அப் சார், காலிலி , பட்டேம், மர்வாட் முதலியோரின் தலைமையில் தொடர்ச்சி யாக உருவானபடைகளே (பங்களாதேஷ் உள்ளே) எமது விடுதலைப்போராட்டத்திற் போராடிய சக்திகளே இயற்கை யான வளர்ச்சியாகும். ஆனால் கேர்னல ஒஸ்மானியின் தலைமையில் இருந்த ராணுவத் தலைமையும், இடைக் கால அரசும் இப்படிப்பட்ட படையின் வளர்ச்சியைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர். எனவே நாட்டுக்குள் வளர்ச்சியடைந்த விடுதலை வீரர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையில் சரியான தொடர்புகள் இருக்கவில்லை. - 22 -

5வது இந்திய ராணுவ வீரர்களின் கூடாத செல்வாக்கினால், சில விடுதலை வீரர்களுக்கிடையில் சரியான சித்தாந்த வளர்ச்சி யடையாதபடியால், சுயநலம் வளர்ந்தமையால் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் களவெடுப்பதிலும், வீடுடைப்பதிலும் ஈடுபட்டார்கள்.
இப்பிரச்சினைகளுக்கெல்லாம் சரியான தீர்வு யாதெனில், இடைக்கால அரசாங்கம் பங்களாதேசிற்குள் விடுதலை செய்யப் பட்ட பிரதேசத்திற்குள் தன்னை அமைத்திருக்கவேண்டும். பிரிவுத் தலைமைகளும், எல்லா அதிகாரிகளும் இந்தியாவைவிட்டு வெளி யேறிப் பங்களாதேசினுள் தனது நிலைகளை அமைத்திருக்க வேண்டும். நான் இக்கருத்தை வெளியிட்டவுடன் மேயர் சியா இதனை அங்கீகரித்தார். சகல தலைமைகளும் எல்லைக்குள் அமைக்கப்படவேண்டுமென நாம் தீர்மானித்தோம். ஒரு குறித்த நேரத்தில் எல்லாத் தலைமைகளும் பங்களாதேசிற்குள் செல்லவே ண்டுமெனத் தீர்மானித்தோம். எனவே சகல பிரிவுத் தளபதிகளின் கூட்டம் நடைபெற்றது. கேர்னல் ஒஸ்மானியும், மேயர்கள் காலித் முஸ்ராப்பம், சவியுல்லாவும் இதனை எதிர்த்தார்கள். எனவே தலை மைகள் இந்தியாவிலிருந்து பங்களாதேசுக்குள் செல்வது தடைப்ப ட்டது மட்டுமல்லாமல் மேஜர் சியாவின் படைப்பிரிவு எனது பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.
எனவே நான் ஒரு விமானப்படை அதிகாரி பிலைட் லெப்டினன்ட் காமித்துல்லாவுடனும், ஒரு காயமடைந்த அதிகாரி யின் உப லெப்டினன்ட் மன்னனுடன் விடப்பட்டேன். போக்குவரத் துக்கு ஒரேயொரு ஜுப்பே தரப்பட்டது. எம்மிடம் போதுமான உபகரணங்கள் இல்லாதபடியால் பிரிகேடியர்சிங்(இந்திய ராணுவம்) எம்மைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம் என நினை த்தார். எனவே எமது பிரிவின் தலைமை முகாமை அவரது தலைமை முகாமுடன் (இந்தியாவுக்குள், எல்லையிலிருந்து 40 மைல் தொலைவில்) தூராக்(Thurog) கில் அமைக்குமாறு கருத்துத் தெரிவித்தார். பெரும்பாலான இந்தியப்பிரிவுத் தளபதிகள் தமது கூடாரங்களின் நிலத்தை மறைக்க கார்பெட் (COrpet) விரித்திருந்தார்கள்.
- 23

Page 14
நான் பிரிகேடியர் சிங்கின் வேண்டுகோளை நிராகரித்து எனது பிரிவுத் தலைமை முகாமை கமால்பூர் துறைக்கு முன்பு பங்களாதேசுக்குள் 800 யார் தொலைவில் அமைத்தேன். எனக்கு இறுதி வெற்றியைத் தருவதற்குக் கமால்பூர், ஜமால்பூர், டாங்கில், டாக்கா முனையே முக்கியமாகும்.
இக்கட்டத்தில் நான், ஒரு விடுதலை வீரனான சுபேதார் அப்தாப்பை ஞாபகப்படுத்தவேண்டும். அவர் வியக்கத்தக்க துணிவு உடைய வீரர். அவர் எப்பொழுதும் பங்களாதேஷ மண்ணைவிட்டு வெளியேறவில்லை. சில இளைஞர்கள் அவர் பாக்கிஸ்தான் ராணுவத்துடன் தீரத்துடன் போராடச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுதெல்லாம் கடுமையாகப் போராடியதைக் கண்டார்கள். நான் 11ம் பிரிவை அடைந்ததும் சுபேதார் அப்தாப் ஒரு கலகக்காரன் எனக் கூறப்படுவதைக் கேட்டேன். அவர் ஒருவரது கட்டளை க்கும் கீழ்படிவதில்லை. அவர் குமிரிதானாவில் கோடால்கான்டியில் தங்கியிருந்தார். மேயர் சியாவும், பிரிகேடியர் சிங்கும் (இந்தியத் தளபதி) பலமுறை கட்டளையிட்டும் அவர் அவர்களைச் சந்திக்க வில்லை. இவரைப்பற்றி நான்கூட அறியவிரும்பியதால் அவரைப் போய்ச் சந்திக்க யோசித்தேன். நான் 18மைல்கள் நடந்து கோடல் கான்டியை அடைந்தேன். இது அவருக்கு ஆச்சரியமாயிருந்தது. அவர் ஒருபொழுதும் பங்களாதேசினுள் எந்தவொரு அதிகாரியையும் எதிர்பார்க்கவில்லை. நான் போர் நிலைமையைப்பற்றிக் கருத் துக்கள் பரிமாறியபொழுது போர்த்தந்திரத்தில் ஒரே கருத்துள்ளவர் கள் என அறிந்தோம். அதுமுதல் நாங்கள் தோழர்களாகப் போராடி னோம்.
சுபேதார் அவ்தாப் தன்னால்தான் ருமாரிதானாவின் பெரும் பகுதி விடுதலையாகவிருந்தது எனக் கூறினார். 16ம் திகதி மார்கழி மாதம்வரை அது அவ்வாறே இருந்தது. அவர் எப்பொழுதும் இந்தியாவுக்குச் சென்று தளம் அமைப்பதை நிராகரித்தார். நான் இரவுபூராவும் அவருடன் உரையாடினேன். நான் அவரை இயற்கை யான தலைவனாகவும் அவருக்கு முன்னர் நான் சிறுமனிதனாக இருப்பதையும் கண்டேன்.
அவர் தான் எதையும் செய்வதாகக் கூறியதும் நான் அவ ருடைய நிலைக்கு முன்னர் ஒரு தீவில் நிலைகொண்டுள்ள ஒரு
- 24

பாக்கிஸ்தான் ராணுவமுகாமைத் தாக்கக்கூறினேன். இரு நிலைகளு க்குமிடையே ஒரு ஆறு இருந்தது. பாக்கிஸ்தானியர் நிலைகொ ண்ட தீவு ஒரு சிறு கால்வாயினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டி ருந்தது. சுபேதார் அவ்தாபும் நானும் படகின்மூலம் ஆற்றைக் கடந்தபொழுது பாக்கிஸ்தானியர் கால்வாயின் அப்பால் உள்ள பகு தியில் இருப்பதை அவதானித்தோம். அண்மையான பகுதி உயர்ந்த புல்லினால் நிரப்பப்பட்டிருந்தது. நான் ஒரு விடுதலை வீரர் குழுவை இரவில் ஆற்றைக்கடந்து இப் புல்லினுள் மறைந்திருக் குமாறு கூறினேன். அதிகாலையில் வேறொரு குழு சென்று தம்மைப் பாக்கிஸ்தானியர் துரத்துமாறு தூண்டவேண்டுமென்று கூறினேன். நான்கு நாட்களின் பின்னர் அவ்தாப் தனது திட்டத் துடன் தயாராயிருந்தார்.
எதிர்பார்த்ததுபோல பாக்கிஸ்தானியர் அதிகாலை சென்ற குழுவைத் தாக்கினர். அவர்களது பிரிவுகள் விடுதலை வீரர்களின் பகுதிக்கு இழுக்கப்பட்டது. முதலாவது தாக்குதலில் பாக்கிஸ்தா னியருக்குப் பெருமளவு சேதம் ஏற்பட்டது. அவர்கள் இரண்டா வது மூன்றாவது தாக்குதல்களை மேற்கொண்டாலும் ஒவ்வொரு தாக்குதலும் முறியடிக்கப்பட்டது. அவர்கள் பயந்து தமது நிலை யைவிட்டு வெளியேறினர். யக்காதுயரப் வரை ருமாரிதானாவின் முழுப்பகுதியும் எமது கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
அடுத்ததாக எமது கவனத்தைச் சில்மாரிக்குத் திருப்பி னோம். இச்சண்டை பிரபல்யமானதும் எனது தலைமையில் நடைபெற்றதுமாகும். புரட்டாசி மாதம் நடுப்பகுதியில் ஒருநாள் இரவு 2000 விடுதலை வீரர்கள் பிரம்மபுத்திரா நதியைக் கடந்தனர். எமது இலக்கானது பெருந்தொகையான பாக்கிஸ்தானியருடன் கூலிப்படையான ரசாக்கர்களால் காவல் காக்கப்பட்டது. நாம் சிலிமா ரியை 24 மணித்தியாலம் எமது கட்டுப்பாட்டின்கீழ்வைத்திருந்து பெருந்தொகையான கைதிகள், ஆயுதங்களுடன் திரும்பி வந்தோம். இது போர்முனைகளின் சரித்திரத்தில் ஒரு விசேஷ சம்பவமாகும். புரட்டாசி தொடக்கம் விடுதலைப் போராட்டத்தைப்பற்றிய பெருமளவிலான செய்திகள் எமது பகுதியிலிருந்து வானொலி மூலமே ஒலிபரப்பப்பட்டது. அமெரிக்கச் செய்தி நிருபரான ஜாக் அன்டர்சன் கூட எமதுபகுதியில் செய்யப்பட்ட சாதனைகளைக்
- 25 -

Page 15
குறித்துக்கொண்டார். அவர் “கமால்பூரின் வீழ்ச்சியுடன் பாக்கிஸ்தா னியர் போரை இழந்துவிட்டனர்” எனக்கூறினார். கமால்பூர் தாக்கு தலைத் தலைமைதாங்கும் பொழுதே நான் எனது காலை இழந்தேன். எமதுபிரிவுகளே முதன்முதலில் தலைநகள் டாக்காவை அடைந்தன.
விடுதலைப் போரைப்பற்றிப் பேசும்பொழுது எமது விடு தலை வீரர்களின் தேசப்பற்று, தீரம், கீழ்ப்படியும் தன்மை பற்றிக் கூறவேண்டும். நாடு தனது சிறந்த மக்களை அவர்களிடமே கண்டது. இக்கட்டத்தில் நான் எமக்கு உணவு, இருப்பிடம், எதிரிபற்றிய தகவல் தந்து எம்மை உற்சாகப்படுத்திய வறிய கிராம மக்களைப்பற்றிக் கூறவேண்டும். என்னிடம் ஆயுதம் இருந்தது. அவர்களிடம் ஒன்றும் இருக்கவில்லை. எமக்கு உதவிசெய்தபடி யால் அவர்கள் பாக்கிஸ்தானியரின் குண்டுகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அவர்களது வீடுகள் எரிக்கப்பட்டன. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு எனது நன்றியைத்தானே எப்பொழுதும் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.
மார்கழி மாதம் 16ம் திகதி பங்களாதேஷ் இந்திய ராணுவத் தின் கைக்குச் சென்றது. இது ஆச்சரியப்படத்தக்கதல்ல. எமது அரசியல் ராணுவத் தலைமையின் கவலையினம். திறமையின்மை பால் இடைக்கால அரசாங்கம் ஒரு செயலற்ற சக்தியாக இருந்தது இது இந்தியரின் தலையீட்டுக்கு வழிவகுத்தது. எமது ராணுவப் படைகள் உளிதியாகப் பலவீனமாகவும் அடிமைமனப்பாண்மையுடைய தாகவும் இருந்ததற்குக் காரணம் அவர்கள் இந்தியாவிலிருந்த தளங்
கள் அடைந்தவுடன் வெற்றிகரமான ராணுவத்தைப்போன்று தமது கைகளில் அகப்படக்கூடிய எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டர்கள் O i ர்கள். அதிகாரத்தைத் தங்கள் பில் எடுத்துக் கொண்டர்
நீதிமன்றத் தலைவரே, ஏனைய உறுப்பினர்களே. இக் கட்டத் தில் நான் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை எதிர்த்த ஒரு அதி காரியைப்பற்றிக் கூறவேண்டும். இவர் 9வது பிரிவின் தலைவரான மேஜர் எம். ஏ. ஜலில் ஆகும். அவரும் இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட ஒருவராகும் ஜலில் தனது நடவடிக்கைக்காகப் பெரும் கஷ்டப் - 26 -

படவேண்டியிருந்தது. தனது தேசப்பற்றான கடமைகளைச் செய் வதற்காக கைது செய்யப்பட்டு பலநாட்கள் சிறையிலிருந்தார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் இளம் புரட்சிவாதிகளின் பிரதிநிதியான ஏ.எஸ்.எம்." அப்துல் ராப் (இவ் வழக்கில் இன்னெரு குற்றச்சாட்டுக்குள்ளாக் கப்பட்டுள்ளவர்) உடன் சேர்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய் ந்த காரியமான பங்களாதேசின் முதலாவது எதிர்க்கட்சியான J.S.D. (தேசிய சோஷலிசக் கட்சி) யை உருவாக்கினார். அப்துல் ராப்பே சரித்திர முக்கியத்துவமான பங்குனி மாதம் 2ம் திகதி 1971ம் ஆண்டு நடைபெற்ற பொட்-டாலா கூட்டத்தில் முதன் முதலில் எமது தேசியக்கொடியை ஏற்றியவர். இக்கட்டத்தில் மேஜர் ஜலிலை விசா ரித்து விடுதலை செய்த நீதிமன்றத்தின் தலைவர் நானே என்று மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
இக்கட்டத்தில் நான் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட் ‘டிருக்கும் எனது சகோதரர்களைப்பற்றிக் கூறவேண்டும். எனது அண்ணன் அபு யூசுப்கான் விடுதலைப்போர் தொடங்கியபோது சவுதி அரேபிய விமானப்படையைச் சந்திக்க ஒரு குழுவில் சவுதி அரேபியா சென்றிருந்தார். அவர் தப்பி எமது பிரிவில் போரில் சேர்ந்தார். அப்பொழுது அக்குழுவில் பல வங்காளி அதிகாரிகள் இருந்தபொழுதும் ஒருவர்கூட இப்படிச்செய்யத் துணியவில்லை. அவர்கள் மேற்குப் பாக்கிஸ்தானுக்குத் திரும்பிச்சென்று 1973 இல் பின்பு பங்களாதேசுக்கு அனுப்பப்பட்டார்கள்.
ஜமால்பூரில் நடந்த சண்டையில் காட்டிய தீரத்திற்காக என் அண்ணனுக்கு "பீர் பிக்கிரம்” பதக்கம் வழங்கப்பட்டது. அவரே 16ம் திகதி மார்கழி மாதம் முதன் முதலில் பாக்கிஸ்தானின் தலைமைப் பீடத்தை அடைந்து ஜெனரல் நியாசியின் சரனைப் பெற்றவர். அவர் ஜெனரல் நியாசியின் வாகனப்பதக்கத்தை வைத்தி ருக்கிறார். உலகம் இவரைவிடத் திறமையான மனிதர்களைக் குறைவாகவே கொண்டுள்ளதாகக் கருதுகிறேன்.
எனது இன்னொரு சகோதரன் அன்வரும் இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அவர் டாக்கா பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர். விடுதலைப்போரில் 11ம் பிரிவின் தலைமைநிலைய த்தில் அவர் ஒரு அதிகாரி அவர் தனது இரண்டாவது போர்வையை - 27

Page 16
ஒரு விடுதலை வீரனுக்கோ அகதிக்கோ கொடுக்கக்கூடிய தன்மை யுடையவர். எனது சகோதரனான பாகார்(BohCr) பற்றி நான் கூற வேண்டும். இவரும் தீரம்மிக்க வேறு மூன்று இளைஞரும் இன்றைய அரசின் சதியால் கொல்லப்பட்டனர். அவர் 200 இளைஞ ர்களைத் தலைமைதாங்கி கர்த்திகை மாதம் அளவில் றெக்கோரானா பகுதியை விடுதலைப்போரில் விடுவித்தனர். அவரது தீரத்துக்காக இருமுறை பீர்-பரதிக் பதக்கம் வழங்கப்பட்டது. அவரும் ஒரு தேசிய வீரனாகும். எனது இன்னெரு சகோதரனான பீலால் (Belo) இன்னெரு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர். இருமுறை பீர்-பரதிக் பதக்கம் தீரத்திற்காகப் பெற்றவர். ஆறு சகோதரர்களும், இரு சகோதரிகளும் முழுமையாக யாவரும் விடுதலைப்போரிற் பங்குபற் றினோம். எனது பங்குக்காக நான் பீர்-உத்திரம் பதக்கம் வழங்கப் பெற்றேன். எங்களது பங்குகளுக்காக எங்களில் நால்வர் ராணுவப் பதக்கங்கள் வழங்கப்பெற்றோம். இவையெல்லாம் சரித்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஏடுகளாகும். விடுதலைப்போராட்டத்தில் பங்கு பற்றியதற்காக எமது கிராமம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டது. பாக்கிஸ்தான் ராணுவத்தினர் எனது தந்தையைக் கைதுசெய்து கொடுமைப் படுத்தினார்கள். எனினும் நான் பாக்கிஸ்தான் அதிகாரி யாகிய பிரிகேடியர் காடிர் தலையிட்டு எனது தந்தையை விடுவித் ததற்கு நன்றி செலுத்தவேண்டும்.
ஷேக் முஜிபுர் ரகுமான் திரும்பிவந்து இந்திய ராணுவம் வாபஸ் பெற்ற பின்னர் நாம் தேசிய புணரமைப்பு வேலைக்கு முத லிடம் கொடுக்கப்படுமெனவும் ஒரு நீதியான சமுதாயம் அமைக்கப் படுமெனவும் எதிர்பார்த்தோம். சுரண்டலும், ஊழலும் அற்ற வளர் ச்சியடைந்த சுயாதீனமான பங்களாதேஷ் உருவாகுமென எதிர்பார்த் தோம். எமது ராணுவம் கூலிப்படைபோல் அல்லாமல் மக்களை யும், நாட்டையும் காக்கும் படைபோல் இயங்குமென எதிர்பார்த் தோம். எமது ராணுவம் எமது உற்பத்தி அமைப்பின் ஒரு பகுதி யாக இருக்குமென எதிர்பார்த்தோம். இந்த நம்பிக்கைகளிலே எமது இலட்சியங்களும் வெளியாயின. ஆனால் இந்த நம்பிக்கைகள் ஒருபொழு தும் நிறைவேறவில்லை. ஒவ்வொருவரும் உணர்வதற்கு முன்பே அழிவு தொடங்கிவிட்டது.
சித்திரை 1972 எனது காலை வெட்டியபின்னர் மருத்துவத்தின்
- 28 -

பின் நாடு திரும்பினேன். நான் பங்களாதேஷ் ராணுவத்தில் ஒழுங்கு ப்பொறுப்பு ஜெனரலாக மீண்டும் சேர்ந்தேன். நான் ராணுவத்தில் மிகவும் சிரமப்பட்டு ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டி னேன். சில தவறான நடத்தைகளுக்காக நான் உயர் ராணுவ அதிகா ரிகளான பிரிகேடியர் மா. சவுகாத், மேஜர் ஜெனரல் சவியுல்லாவுற்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது இந்த நீதிம ன்றத்தின் தலைவருக்குத் தெரியும். அவர்களுக்கெதிராக தவறான முறையில் பணம், சொத்து, உடைமை பெற்றதாகக் குற்றம் சுமத் தப்பட்டது. எந்த அதிகாரியும் தவறான முறையில் பெற்றயாவும் திருப்பி ஒப்படைக்கப்பட்டு அவர்கள் விடுதலை வீரர்களுக்கு முன்னர், வீரமுள்ள நேர்மையுடையவர்களாகத் தோன்றவேண்டு மென்பதே எனது நோக்கமாகும். சூழ்நிலையானது மிகவும் சிக்க லாகவே இருந்தது.
நான் ஒருபொழுதும் இக்கொள்கைகளை விட்டுக்கொடுக்க வில்லை. சில மாதங்களுக்குள் நான் 44வது படைப்பிரிவின் தளபதி யாகக் கொமிலாவுக்கு அனுப்பப்பட்டேன். நான் அங்கு பொறுப்பெடு த்ததும் உடனடியாக எனது அதிகாரிகள் யாவரும் தவறானமுறை யில் பெற்றுக்கொண்ட யாவற்றையும் திருப்பி ஒப்படைக்க வேண் டுமெனக் கூறினேன். எனது அதிகாரிகள் எனது கட்டளைகளுக்குக் கீழ்படிந்தமையால் நான் நேர்மையான அதிகாரிகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது.
இதையே சரியான தலைமையென நான் கருதுகிறேன். நான் எப்பொழுதும் மனிதர்களிலுள்ள நல்ல குணங்களையே வேண்டுகிறேன். ஒரு மனிதனின் அல்லது நாட்டின் குறைபாடுக ளைப் பயன்படுத்துவதை வெறுக்கிறேன்.
விடுதலைப்போராட்டத்தின், டாக்கா, கொமில்லாப் படைப் பிரிவின் அனுபவங்களிலிருந்து நான் உற்பத்தி நோக்கமற்ற பிரயோ சனமற்ற ராணுவம் அற்றுப் புரட்சிகர மக்கள் ராணுவத்தை அமை க்கும் முயற்சியில் ஈடுபட்டேன். நிலையான ராணுவமானது வளர்ச் சியடையும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு ஒரு சுமையாகும். மேலும் சமுதாய முன்னேற்றத்திற்கும் ஒரு தடையாகும். இது தேசிய உற்பத்திக்கு ஒருபங்கும் அளிப்பதில்லை. விடுதலைப்போரா ட்டத்தின் பொழுது விடுதலை வீரர்கள் மத்தியில் நான் பார்த்த - 29

Page 17
உற்சாகம், தியாக மனப்பாண்மையிலிருந்து விடுதலையடைந்த பங்களாதேசில் உற்பத்தி நோக்கமுடைய புரட்சிகர மக்கள் ராணுவ த்தை அமைப்பது கடினமல்ல என நான் எண்ணினேன். இந்தக் கருத்து எனக்கு மிகவும் உற்சாகத்தைத் தந்தது.
கொமில்லாப் படைப்பிரிவில் மக்கள் ராணுவத்தின் அடிப்ப டையில் ராணுவத்தை உருவாக்க எடுத்த முயற்சிகள் ராணுவத்தின் ஏனைய பிரிவுகளுக்கும் தெரியும். நான் எப்பொழுதும் விடுதலைக் காகப் போராடியவர்களை மையமாகக் கொண்டு ஒரு பலம்வாய்ந்த ராணுவத்தை உருவாக்க முயற்சித்தேன். எமது அமைப்புக் கருத் தானது உற்பத்தி ராணுவம், இங்கு அதிகாரிகளும், போர்வீரர்களும், விவசாயிகளும், தொழிலாளர்கள் போல வேலைசெய்தார்கள். நாம் எமது நிலங்களை உழுது, எமது உணவை உற்பத்திசெய்து, கிராமங்களுக்குச் சென்று உற்பத்தியில் ஈடுபட்டோம். இது சுயாதீன நிலைக்கு வழியாகும். மிகவும் குறுகிய இப்பிரிவை உற்பத்தி சாத னமாக மாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.
ஆனால், விரைவில் வேறுபாடுகள் உருவாயின. ஒரு பக்க த்தில் முஜிப் அரசு மக்கள் ராணுவத்தின் வளர்ச்சியைப் புறக்கணித்து "ராக்கி பகினி'என்னும் கூலிப்படையை உருவாக்கியது. இப்படையை அமைப்பதில் இந்திய அதிகாரிகளும் ஆலோசகள்களும் ஈடுபட்டிருந்தனர். நான் எனது எதிர்ப்பைச் சம்பந்தப்பட்ட நபர்களுக்குக் காட்டினேன். அத்துடன் நான் போரின்போது இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ரகசிய ஒப்பந்தத்தையும் பற்றிப் பிரதமமந்திரியிடம் கண்டித்தேன். இந்திய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டிய தேவையை உணர்த்தினேன்.
ராணுவத் தலைமை முகாமில் எனது எதிர்ப்பைப்பற்றி ஆதாரங்கள் உள்ளது. இந்தியாவின் இவ் இரு கருத்துக்களிலும் காலனித்துவ முறையிலிருந்தது மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நான் வற்புறுத்தியிருந்தும் அரசுக்குள் வேறுபாடுகள் உருவாயின. அரசுக்கும் லெப்டினன்ட்கேர்னல் சியாவுதீனுக்குமிடை யிலும் வேறுபாடுகள் உருவாயின. இதனால் சியாவுடீனும் நானும் ராணுவத்திலிருந்து வெளியேறவேண்டியேற்பட்டது. இது கார்த்தி கை 1972ல் நடைபெற்றது. சியாவுடீனும் நானும் வெவ்வேறு கருத்துக் கொண்டிருந்தமையால் தனித்தனி வழியில் சென்றோம்.
- 30 -

எனினும் நாம் ஒருவரோடு ஒருவர் எப்போதும் தொடர்புகொண்டு நிலைமை குறித்துக் கருத்துப்பரிமாறினோம்.
1973 ம் ஆண்டு நான் வெள்ளப் பராமரிப்பு நீர்ப்பாசன அமைச்சில் அதிகாரியாகப் பதவியேற்றேன். நான் இப்பதவி எடுத்த பொழுதும் இப்பகுதியானது ஏற்கனவே ஊழலாலும் தவறான நடைமுறைகளாலும் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது. சொற்ப காலத்தில் இந்த அமைப்பை மீண்டும் புத்துணர்வு கொடுத்து 1972ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து மிகக்கூடிய வருமானம் பெறக் கூடியதாக இருந்தது. காவல்காரனிலிருந்து பொறியியலாளர் பொறு ப்பதிகாரிவரை நான் எவ்வாறு இவ்வமைப்பை நடத்தினேன் என நீங்கள் கேட்கலாம்.
15 ஆவணி 1975 வரை அவாமிலீக் அரசாங்கம் எவ்வாறு செயல்பட்டதென எல்லோருக்கும் தெரியும். எவ்வாறு ஜனநாயக அமைப்புக்கள் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்பட்டு மக்களின் ஜன நாயக உரிமைகள் நசுக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். சுருங்கக்கூறின் எமது இலட்சியங்களும் நோக்கங்களும் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்பட்டன. ஜனநாயகம் கேவலமாகப் புதைக்கப்பட்டது. மக்கள் மிதிக்கப்பட்டு பாசிச சர்வாதிகாரம் மக்கள்மேல் சுமத்தப்பட்டது. இந்தியாவின் தலையீடு பாசிசத்தை ஊக்குவித்தது.
இந்தப் பாசிச சர்வாதிகாரத்துக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு இயக்கம் உருவானது. இந்த நாட்டை உருவாக்கியவர்களில் ஒரு வரான ஷேக் முஜிப் ஒரு சர்வாதிகாரியாக மாறியது மிகவும் மன வருத்தமான விடயமாகும். முஜிப் தனது அரசியல் போராட்டத்தில் எப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்தார். அவரே ஜனநாயகத்தினதும் தேசிய விடுதலை இயக்கத்தினதும் சின்னமாக இருந்தர். எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் அவரே மக்களுடன் நேரடித்தெடர்பு கொண்டிருந்த ஒரேயொரு தலைவராவார். மக்களும் அவரைத் தலைவராக அங்கீகரித்தனர். மக்களே அவரைத் தீரனாகவும், வீரனா கவும் கருதினார்கள். மக்கள் தாங்கள் முஜிப் எப்படி இருக்கவேண் டுமென்று எதிர்பார்த்தார்களோ அதேபோல அவரைச் சந்தித்தார்கள். எமது விடுதலைப் போரில் முஜிப்பின் பெயரே போர்க் குரலாக இருந்தது. ஷேக் முஜிப் மக்களின் தலைவர். மக்களே அவரின் - 31

Page 18
நிலையைத் தீர்மானித்திருக்க வேண்டும். எனவே, தம்மை ஏமாற் றியதற்காக மக்களே சரியானவழியில் புரட்சிசெய்து முஜிப்பை விழுத்தியிருக்கவேண்டும். முஜிப்பை தமது தலைவராக்கிய மக்கள் சர்வாதிகாரி முஜிப்பை அறிந்திருப்பார்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன். மக்கள் எவருக்கும் சதிசெய்யவோ ஆட்சியைக் கவிழ் க்கவோ அதிகாரம் வழங்கவில்லை.
1976ம் ஆண்டு ஆவணி 15ம் திகதி ஷேக் முஜிப் ராணுவ த்தின் ஒரு பகுதியாலும் ஒரு அதிகாரிகள் குழுவாலும் கொல்லப் பட்டார். அன்று அதிகாலை இரண்டாவது பீரங்கிப் படையைச் சேர்ந்த ஒரு அதிகாரி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மேஜர் ரஷித் தந்ததாக ஒரு செய்தியைக் கூறினார். அத்துடன் அவர் ஷேக் முஜிப் கொலைசெய்யப்பட்டது பற்றியும் கூறினார். அவர் மறைந்த ஜனாதிபதியின் நெருங்கிய சகாவான கொண்டாக்கள் முஸ்டாக் அகமது (இவர் அவாமி லீக்கின் அங்கத்தவர்) அதிகாரி களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறிளார்.
நான் வானொலியைக் கேட்டபோதும் ஷேக் முஜிப் கொலை செய்யப்பட்டதாகவும் கொண்டாக்கர் முஸ்தாக்(KondKOOr Musfoque)அதிகாரத்தைக் கைப்பற்றியதாகவும் கேள்விப்பட்டேன். இது அரசியல் நிலையாமைக்கு வழிவகுக்குமென்றும், இதனால் எமது செல்வாக்கை இழக்கலாம் எனவும் யோசித்தேன். அதே நேரத்தில் பல தொலைபேசிச் செய்திகள் என்னை பங்களாதேஷ் வானொலி நிலையத்திற்குச் செல்லு மாறு கூறின. எனவே நான் அங்குசென்று நிலைமையை ஆராய யோசித்தேன்.
அதிகாலை 9மணிக்கு நான் வானொலி நிலையத்தை அடைந்தேன். அங்கு என்னை மேஜர் ரஷித் கொண்டாக்கள் முஸ்தாக், தகிருடீன் தாகூர், மேஜர் தலீம், மேஜர் ஜெனரல் காலிலூர் ரகுமான் முதலியோர் இருந்த அறைக்கு அழைத்துச்சென்றார். நான் சிலநேரம் கொண்டாக்கள் முஸ்தாக்குடன் பேசி நாட்டின் சுதந்திரத்தைக் காப் பாற்றவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன். என்னை மேஜர் ரஷித் வேறு அறைக்கு அழைத்துச் சென்று மந்திரிசபையில் சேருமாறு கூறினார். நான் அவரிடம் சகல ஆயுதப்படைத் தளபதி களையும் அழைத்துப் பிரச்சனைகளைப்பற்றி விவாதித்து ஒரு தீர்வைக்காணுமாறு கூறினேன். மேஜர் ரஷித், நானும், லெப்டினென்ட் - 32

கேர்னல் சியாவுடீனும் நிலைமையைக் காப்பாற்றமுடியுமென்றும் தனக்கு அரசியல்வாதிகளிலும், ராணுவத் தளபதிகளிலும் நம்பிக் கையில்லை என்றும் கூறினார். நான் அவரது வேண்டுகோளை நிராகரித்து பாக்சால்(முஜிப்பின் கட்சி) தலைவர்களைத் தவிர, தேசியப்பற்றுள்ள ஏனைய கட்சிகளை உள்ளடக்கிய அரசை அமை க்குமாறு கூறினேன்.
நான் பின்வரும் கருத்துக்களை அமுல்படுத்துமாறு கொண்டாக்கள் முஸ்தாக்கியிடம் கூறினேன்.
1) மோசடியும் ஊழலும்மிக்க அரசியலமைப்பு நீக்கப்படவேண்டும் 2) இராணுவச்சட்டம் நாடுபூராவும் அமுல்படுத்தப்பட வேண்டும். 3) சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும். 4) பாக்சால் தவிர ஏனைய கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி
ஜனநாயக தேசிய அரசு அமைக்கப்படவேண்டும். 5) உடனடியாக அரசியல் அமைப்புச்சபைக்கும் பாராளுமன்றத்
துக்கும் பொதுத்தேர்தல் நடாத்தப்படவேண்டும்.
கொண்டாக்கள் முஸ்தாக் எனது கருத்துக்களைக் கவன மாகக்கேட்டு உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறினார். கொண்டாக்கள் முஸ்தாக் பங்கா பவானில் பதவியேற்கும் வைபவத்தில் நான் கலந்துகொள்ள வேண்டுமென்று மேஜர் ரஷித் கேட்டுக் கொண்டார். 1130 மணிக்கு நான் வானொலி நிலையத்திலிருந்து மனக்குழப்பத்துடன் வெளியேறினேன். கொண்டாக்கள் முஸ்தாக் தனது சொல்லைக் காப்பாற்றமாட்டார் என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும், சதிகாரர்களுக்குப் பின்னால் வேறுயாரோ இயங்குவதுபோலவும் உணர்ந்தேன்.
இது எனக்கு மிகத்தெளிவாக வெகுவிரைவில் விளங்கியது. நாட்டுமக்களுக்கு நிகழ்த்திய உரையில் முஸ்தாக் எனது கருத்து க்களைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. நான் பங்கா பவானை மத்தி யானம் அடைந்தபோது பதவியேற்பு வைபவம் முற்றுப்பெற்றுவிட்டது. நான் பின்நேரம் கொலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைச் சந்தி த்தேன். அவர்களுக்கு மேஜர் ரஷித் தலைமைதாங்கினார். நான் மீண்டும் முஸ்தாக்குக்குக் கூறிய கருத்துக்களைக் கூறி உடனடி யாகச் சகல அரசியல் கைதிகளும் முதல் நடவடிக்கையாக விடு
- 33

Page 19
விக்கப்படவேண்டுமெனக் கூறினேன்.
எமது கலந்துரையாடலில் இறுதிப்பகுதியில் நான் ஜெனரல் சியாவை அழைத்தேன். அவர்கள்யாவரும் எனது கருத்துக்களை அங்கீகரித்து அதுவே இப்பொழுது சரியான வழியெனக் கூறினர். நான் அடுத்தநாள் மேஜர் ஜெனரல் சவியுல்லாவையும், மேஜர் ஜெனரல் எம். காலிலுர் ரகுமானையும் சந்தித்தபொழுது அவர்கள் நான் கூறியதை ஏற்றுக்கொண்டனர்.
இக்கட்டத்தில் 16ம் திகதி மேஜர் ரஷித்தும், மேஜர் பாரூக் (Farook)கும், நானும் அவர்களுக்கிடையே இருப்பதாகப் போர் வீரர்களுக்கிடையே கூறி, எனது பெயரைப் பயன்படுத்துவதாக அறிந்தேன். 17ம் திகதி முழு நாடகமும் ஜக்கிய அமெரிக்காவும், பாக்கிஸ்தானும் பின்னணியிலிருந்து நடத்துவதாக உணர்ந்தேன். மேலும் கொண்டாக்கள் முஸ்தாக் அவாமிலீக்கின் மேல்பகுதியுடன் முஜிப்பின் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளார் என அறிந்தேன். இந்தக் குழு முன்பே திட்டமிடப்பட்ட ஒரு பாதையில் இயங்கியது. 17ம் திகதி முதல் நான் பங்கா பவானுக்குச் செல்வதை நிறுத்தி இக்குழுவுடன் சகல தொடர்புகளையும் துண்டித்தேன்.
ஜெனரல் ஒஸ்மானி, முஸ்தாக்கின் ராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் என்னுடன் தொடர்புகொண்டர் அவர் என்னை பங்களாதேசின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச்சென்று பலதடவை லெப்டினன் கேர்னல் சியாவுடீனைப்பற்றி விசாரித்து அவரைச் சந்திக்கவேண்டுமெனக் கூறினார். நான் அதற்குமுதல் சியாவுடீனின் ஆயுளுக்கெதிராக விடுக்கப்பட்ட (Worrent) கட்டளையை அரசு வாபஸ்பெற்று அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் நிற்பாட்டப்பட வேண்டுமெனக் கூறினேன்.
புரட்டாதி மாதத்தின் இறுதியில் மேஜர் ரஷித் ஜனாதிபதி முஸ்தாக்கியிடமிருந்து நானும், சியாவுடீனும் அரசியல் கட்சியை அமைக்கவேண்டுமென்று இதற்கு சகல வசதிகளும் தாங்கள் செய் வதாகத் தகவல் கொண்டுவந்தார். நான் இதனை நிராகரித்து சகல அரசியல் கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வலியுறுத்தினேன். முஸ்தாக்குக்குச் சரியான அரசியல் தளம் இல்லை என்பது தெளிவாகியிருந்தது. ஒரு சிறு குழுவைத்தவிர அவருக்கு ராணுவத்திலும் வேறு ஆதரவு இல்லை. மக்கள்மத்தியிலும் வேறு - 34

ஆதரவு இல்லை.
இப்பொழுது முஸ்தாக்கியின் அரசைப் பார்ப்போம்.
இவ்வரசு முஜிப் அரசைவிடச் சிறந்தது அல்ல. நாட்டில் ஏற்பட்ட ஒரேஒரு மாற்றம் இந்திய-சோவியத் மேலாதிக்கத்திற்குப் பதிலாக அமெரிக்க மேலாதிக்கம் வந்ததேயாகும். நாட்டில் மற்றும் படி ஒருமாற்றமும் இல்லை. அரசின் அடக்குமுறை கூடியது. மக்களைக் கஸ்டப்படுத்துதல் தொடர்ந்தது. அரசியல் தொழிலாளர் களைக் கைதுசெய்வது சாதாரணமாகிவிட்டது. உண்மையில் நாடு சிவிலியன் சர்வாதிகாரத்திலிருந்து ராணுவ அரசுயந்திர சர்வாதி காரமாக மாறியது.
மக்கள் அமைதியற்றிருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையை அவர்கள் அங்கீகரிக்கத் தயாராக இல்லை. இந்திய-சோவியத் ஆதரவாளர்களும், மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத சமூகசக்திகழும் சூழ்நிலையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தப் பார்த்துக்கொ ண்டிருந்தன. முஸ்தாக் அரசின் தோல்விகளைப் பயன்படுத்தி எமது தேசிய நலனை அழிக்கச் சதிசெய்யப்பட்டது. பேராசைகொண்ட பிரிகேடியர் காலித் முஸ்ராப் சதிக்குத் தலைமைதாங்கி 1975 கார்த்திகை 3ல் எதிர்ப்புரட்சி சதிமூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
நான் அன்று சுகயினம் காரணமாக நாராயன் கன்சுலில் எனது வீட்டில் கட்டிலில் படுத்திருந்தேன். எனினும் அதிகாலை 4மணிக்கு எனக்குத் தொலைபேசியில் செய்தி கிடைத்தது. மேஜர் ஜெனரல் சியாவூர் ரகுமான் எனது உதவியைக்கேட்டு வேண்டினார். நாம் பேசிமுடிக்கு முன்னர் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அன்று பெருமளவு போர்வீரர்களும், இளம் அதிகாரிகளும் எனது வீட்டிற்கு வந்தார்கள். நான் எல்லோருடனும் பேசமுடியாமல் இரு ந்தமையால் எனது அறையினுள்ளிருந்து சிலருடன் பேசினேன். அவர்கள் காலித் முஸ்ராபாவின் சதி இந்தியர்களின் ஆதரவுடன் நடைபெற்றதென்றும், பாக்சால் (ஷேக் முஜிபின் கட்சி) சக்திகள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முயலுகின்றன என்றும் கூறினார்கள். “வங்காளி’ படைப்பிரிவுக்கும். ஏனைய படைப்பிரிவுகளுக்கும் இடையில் பதட்டநிலை அதிகரிப்பதாயும் எந்தநேரத்திலும் துப்பா க்கிப் பிரயோகம் ஏற்படலாம் எனவும் கூறினர்.
- 35 -

Page 20
நான் அவர்களை அமைதியாக இருந்து ஏனைய போர்வீரர் களுடன் தொடர்புகோண்டு, சூழ்நிலைபற்றிக் கருத்துப்பரிமாறும்படி கூறினேன். மேலும் எமது நாட்டின் சுதந்திரத்தை அழிக்க முயற்சிக்கும் எந்த சக்திக்கும் எதிராகவும், கவனமாகவும் இருக்கும்படி கூறினேன். ஒவ்வொரு போர்வீரனதும் கடமை நாட்டின் எல்லை களைக் காப்பதும், சுதந்திரத்தைக் காப்பதும் எனத் தெளிவாகக் கூறினேன். எமது சமுதாயம்போன்ற சமுதாயத்தின் அரசு அதிகாரத்தில் தலையிட ஆயுதப்படைகளுக்கு அவசியமில்லை, சதிகளுக்கும் எதிர்ச் சதிகளுக்கும் பின்னால் பேராசைகொண்ட அதிகாரிகளுக் கிடையில் போட்டியேயுண்டு. இந்த அதிகாரிகளுக்குத் தமது சுய நலன்களைத்தவிர வேறெந்த நோக்கமும் இல்லை. இதை அடை வதற்குச் சாதாரண போர்வீரர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படு த்துகிறார்கள். நாட்டை எப்படி நடத்துவதென மக்களே தீர்மானிக்க வேண்டும். போர்வீரர்களை தமது முகாம்களுக்குத் திரும்பிச் செல் லும்படியும் எக்காரணம் கொண்டும் ஒருவரையொருவர் தாக்க வேண்டாமென்றும் சரியான நேரத்தில் மக்களுடன் இணைந்து போராடவேண்டுமென்று கூறினேன். இதுவே அதிகாரவெறிகொண்ட ராணுவ அதிகாரிகளை முறியடிக்க ஒரோஒரு வழியாகும்.
கார்த்திகை 3ம் திகதிக்குப் பின்னர் எமது நாடு பட்ட கஸ்டங்கள் எல்லோருக்கும் தெரியும். காலித்தை இந்தியா ஆதரி க்கின்றதென எல்லோருக்கும் தெரியும் நாட்டின் சுதந்திரம் அந்தரத்தில் இருக்கும்பொழுது அட்மிரல் எம். எச். கானும், விமான மார்சல் எம். ஜி. தலாப்பும் காலித் முஸ்ராபாவின்மேல் மேஜர் ஜெனரல் பதக்கத்தைப் பொறித்தது கேவலமான விடயமாகும். இப்படிப்பட்ட சின்னப்புத்தியுடைய மனிதர்களைப் பார்த்து நான் விசனப்படுகிறேன். இந்தக் கோழைகள் தமது காலில் விழுந்து சுயமரியாதையைக் காப்பாற்றவேண்டியிருந்தது. சியாவுர் ரகுமான் எங்கே? அவர் காலித்தின் சிறையில் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தார். தலாப்பும், கானும் எங்கே? அவர்கள் தமது புதிய எஜமானனின் காலடிகளை நக்கிக்கொண்டிருந்தார்கள் இந்தநாடு ஆயுதப்படைகளில் இப்படிப் பட்ட கோழைகளை வைத்திருக்கத் தேவையில்லை.
கார்த்திகை 4ம் திகதி மாலை மேஜர் ஜெனரல் சியாவுர் ரகு மானிடமிருந்து ஒருசெய்தி அவருடைய உறவினர்கள் மூலம்
- 36

கிடைத்தது. அவர் போர்வீரர்களில் எனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தித் தன்னையும் நாட்டின் சுதந்திரத்தையும் காப்பாற்றுமாறு வேண்டினார். நான் அவரை அமைதியாகவும் துணிவுடனும் இருக்குமாறு கூறியனுப்பினேன். அதேநேரத்தில் போர்வீரர்களும் அதிகாரிகளும் சதிகார காலித் முஸ்ராப் குழுவினரை விழுத்த ஆயத்தங்கள் செய்யுமாறு என்னிடம் கூறினார்கள்.
எமக்கிடையே சரியான கலந்துரையாடல்களுக்குப்பின்னர் சில படிகளை மேற்கொள்ளத் திட்டங்கள் இடப்பட்டன. கார்த்திகை ம்ே திகதி நான் டாக்கா ராணுவமுகாமிலிருந்த சகல படைப்பிரிவு களின் பிரதிநிதிகளையும் ஆயத்தமாக இருக்கும்படியும் கட்டளை களை எதிர்பார்க்கும்படியும் கூறினேன். கர்த்திகை மாதம் 6ம் திகதி மாலை சகலரும் ஆயத்தமாக இருந்தார்கள். புரட்சியானது 7ம் திகதி அதிகாலை 1மணிக்கு நடாத்தப்படவேண்டியிருந்தது.
எமது தீர்மானங்கள்.
1) காலித் முஸ்ராப் குழுவைப் பதவியிலிருந்து நீக்குதல். 2) சியாவுர் ரகுமானை விடுதலை செய்தல். 3) புரட்சிகர ராணுவ சபையை நிறுவுதல். 4) சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தல். 5) பாக்சால் தவிர்ந்த ஜனநாயக தேசிய அரசை அமைத்தல். 6) சகல அரசியல் தொழிலாளர்களுக்கும் எதிராக இடப்பட்ட
வராண்ட் கட்டளைகளை வாபஸ்பெறுதல். 7) புரட்சிகரப் போர்வீரர்கள் இயக்கத்தின் 12 வேண்டுகோள்
களையும் அங்கீகரித்து அமுல்படுத்தல்.
எல்லாம் திட்டத்தின்படி நடைபெற்றது. வானொலி நிலையம் டி. வி. நிலையம், தபாற் கந்தோர், விமான நிலையம் ஏனைய முக்கிய பகுதிகள் உடனடியாகக் கைப்பற்றப்பட்டன. அதிகாலையில் சியா விடுவிக்கப்பட்டு இரண்டாவது பீரங்கிப்படைத் தலைமை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நான் எனது அண்ணன் விமான சார்ஜன்ட் அபூ யூசுப்கானுடன் அம்முகாமுக்கு அதிகாலை 3 மணிக்குச் சென்றேன். சுற்றிவரவும், போகும் வழியிலும் வாகனங்கள் நிறையப் போர்வீரர்கள் நின்றனர்.
- 37

Page 21
இரவு உடையுடன் சியா, பிரிகேடியர் டீப் சவுகாத்துடனும் வேறு
அதிகாரிகளுடனும், பேர்வீர்களுடனும் இருப்பதைக் கண்டேன். சியா என்னையும், எனது அண்ணனையும் ஆலிங்கனம் செய்து, கண்களில் கண்ணிருடன் தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றியைத் தெரிவித்தார். அவர் தனது உயிரே எனக்கும் தேசிய சோசலிஸ்ட் கட்சி (J.S.D)க்குமே சேர்ந்தது எனக் கூறினர். அப்பொழுது நாம் எதைக் கூறினாலும் செய்வதற்கு நண்றியுணர்வுடன் இருந்தார். நாம் எப்படியான பாதையைக் கடைப்பிடிக்க வேண்டுமென உரை யாடியபின்னர் பங்களாதேஷ் வானொலி நிலையத்துக்கு அதிகாலை 4 மணிக்குச் சென்றோம். நாம்போகும் வழியூராவும் உடனடியாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி உரையாடினோம்.
இதேநேரத்தில் வானொலியில் போர்வீர்களின் நடவடிக்கைகள் பற்றியும் சியா பிரதான ராணுவச்சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டது பற்றியும் கூறப்பட்டது. நாம் வானொலி நிலையத்திற்குச் செல்லும் பொழுது சியா தியாகிகள் மன்றத்தில் ஒருபெரும் மக்கள் கூட்டத்தில் பேச இணங்கினார். எனவே போர்வீரர்களைத் தியாகிகள் மன்றத்தில் கூடுமாறு அறிவித்தேன். இக்கூட்டத்தில் நானும் சியாவும் பேசுவதன் மூலம் அதிகாரிகளின் உதவியில்லாமல் புரட்சிப் போர்வீரர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்காதவாறு நாட்டின் சுதந்தி ரத்தைக் காப்பாற்றக்கூடியதாக இருந்திருக்கும்.
தியாகிகள்மன்றக் கூட்டத்தை 10 மணிக்கு நிர்ணயித்தேன். போர்வீரர்கள் மிகவும் சந்தோஷத்துடன் நகருக்குள் உலவிக்கொ ண்டிருந்தமையால் எல்லோரையும் ஒன்றுசேர்க்கச் சிலமணிநேர மாகுமென நான் கருதினேன். ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சி யுடன் புரட்சிப் போர்வீரர்களுடன் வீதிகளில் ஆடிப்பாடிச் சுலோகங் களை கூறிக்கொண்டிருந்தார்கள். எங்கும் பூக்கள் மயமாகவிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தமையால் தலைநகரம் மிகவும் சந்தோஷமாக இருந்தது.
830 மணியளவில் கொண்டாக்கள் முஸ்தாக் பங்களாதேஷ் வானொலி நிலையத்துள் பிரவேசித்து உரைநிகழ்த்த முயற்சிப்பதாக போர்வீரர்கள் கூறினர்கள். நான் வானொலி நிலையத்திற்குச் சென்றேன். நான் அரசியல் சதிகாலம் முடிந்துவிட்டதென்றும் வானொலி நிலையத்தைவிட்டு உடனடியாக வெளியேறவேண்டும் எனவும்
- 38 -

திட்டவட்டமாக முஸ்தாக்கிக்குக் கூறினேன். அவர் எனது கட்ட ளைக்குக் கீழப்படிந்தார். அதற்குப்பின்னர் கூட்டத்திற்குச் சியாவை அழைத்துவர நான் ராணுவமுகாமுக்குச் சென்றேன். அங்கு சூழ்நிலை சிறிது மாறியிருந்தது. சியா சவரம்செய்து புதிய அணியை அணிந்திருந்தார். அவர் தனது சிறைவாச அதிர்ச்சியிலிருந்து விடுபட்டிருந்தார். நான் அவருக்குத் தியாகிகள் மன்றத்திற்குப் போக நேரமாகிவிட்டதாகக் கூறியதும் அவர் மிகவும் பணிவாக மறுத்தார். தான் ஒரு போர்வீரனென்றும், தான் ஒரு அரசியல் கூட்டத்தில் பேசத் தேவையில்லை எனவும் கூறினார். அவர் என்னைச்சென்று பேசுமாறு கூறினார். நான் போர்வீரர்களைத் திரும்பி ராணுவமுகாமுக்குச் செல்லு மாறு கூறினேன்.
11 மணியளவில் நாம் தலைமை முகாமில் கூடி ஆலோசி த்தோம். கொள்கையளவில் ஒரு தற்காலிக அரசை அமைக்க இணங்கினோம். இக்கூட்டத்தில் சியா, நான், தவாப், எம்.எச். கான், காலிலூர் ரகுமான், ஒஸ்மானி, பிரதம காரியதரசி மகபாப் அலாம் சாசி முதலியோர் சமுகமளித்திருந்தோம். அரசாங்கத்தின் தொடர்ச்சி யைப்பற்றிச் சட்டரீதியான கேள்வி பிறந்தது. மற்றவர்கள் நீதிபதி சயாம் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கவேண்டுமெனக் கூறினர். (இவர் காலித் முஸ்ராப்பினால் நியமிக்கப்பட்டவர்) நான் இதற்கு இணங்கிய அதேநேரத்தில் சியா பிரதான ராணுவச்சட்ட அதிகாரியாக இருக்கவேண்டுமென திட்டவட்டமாகக் கூறினேன். தொடர்ந்து உரையாடும்போது சியா இப்பதவியை ஏற்கமறுத்தார். ஆனால் பின்னர் தவாப்பும், எம். எச். கானும் உதவி ராணுவச்சட்ட அதிகாரி களாக உடன் தானும் பதவியை ஏற்க இணங்கினார். இக்கூட்டத்தில் அவர்கள் ஏதாவது அமைச்சுகளுக்குப் பொறுப்பாயிருப்பது தீர்மா னிக்கப்படவில்லை. நீதிபதி சயாம் பிரதான ராணுவச்சட்ட அதிகாரி யாகவும், ஜனாதிபதியாகவும் ஏனைய மூன்று உதவி ராணுவச்சட்ட அதிகாரிகளும் சேர்ந்து ஒரு ஆலோசனைச்சபை அமைக்க இணங்கினார்கள். ஆனால் முக்கியமான தீர்மானம் அரசியல் கைதி கள் யாவரையும் விடுதலை செய்வதாகும்.
அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியபிறகு அரசியல் நடவடிக்கைகள் தொடர அனுமதிக்கப்படுமென்றும் முஸ்தாக் வாக்குறுதி கொடுத்ததற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் - 39 -

Page 22
பொதுத்தேர்தல் நடைபெறுமென்றும் தீர்மானிக்கப்பட்டது. சயாம் ஒரு தற்காலிக அரசையே நடத்துவார். நான் 7வது கார்த்திகைப் புரட்சியின் வேலைத்திட்டத்தை அங்கீகரிக்குமாறு கேட்டேன்.
நான் பிற்பகல் வானொலி நிலையத்திற்குச் சென்றேன். புரட்சியில் பங்குபற்றிய போர்வீரர்கள் தாங்கள் சியாவுக்குத் தமது 12 கோரிக்கைகளைக் கையளிக்கும்பொழுது நான் சமுகமாயிருக்க வேண்டுமென்று கேட்டார்கள். வானொலி நிலையத்திலிருந்து நான் சியாவூர் ரகுமானுக்குத் தொலைபேசிமூலம் அவர்களது வேண்டு கோளைத் தெரிவித்தேன். அப்பொழுது பேர்வீர்கள் பதட்டநிலையில் இருந்ததால் ஒருவரையும் வானொலி நிலையத்திற்குள் அனுமதிக்கத் தயாராயில்லை. மாலை 6.45மணிக்கு சியாவுடன் வந்த சாயிமையும் முஸ்தாக்கையும் போர்வீரர்கள் உள்ளே விடவில்லை. போர்வீரர்களின் பிரதிநிதிகள் 12 கோரிக்கைகளை சியாவுக்குக் கையளித்து அவரு டைய கையெப்பம் பெற்ற பின்னரே சாயிமும், முஸ்தாக்கும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
மேஜர் ஜெனரல் சியாவும் நானும் வானொலி நிலையத்தில் TV அறையில் தங்கியிருந்து கொண்டாக்கள் முஸ்தாக்கும், சாயிமும் நாட்டு மக்களுக்கு உரைநிகழ்த்துவதை அவதானித்தோம். சாயிம் தெளிவாக நாம் ஏற்ற கொள்கைகளைக் கூறினார். இக்கருத்துகளின் படி 8ம் திகதி கார்த்திகை மாதம் மேஜர் ஜலிலும், எ. எச். எம். அப்துல் ராப்பும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். 8ம் திகதி நான் ஜெனரல் சியாவுடன் தொலைபேசியில் பேசி எனது நன்றியைத் தெரிவித்து மடின், ஒகிதூர் முதலியோரும் அன்றே விடுதலை செய்யப்படவேண்டுமென வற்புறுத்தினேன்.
அன்று பிற்பகல் சியா என்னுடன் தொடர்புகொண்டு சில சம்பவங்களில் அதிகாரிகள் கொல்லப்படுவதாகக் கூறினார். நான் நிலைமையைக் கட்டுப்படுத்தச் சகல உதவியும் செய்வதாகக் கூறினேன். நான் உடனே ராணுவமுகாமுக்குச் செல்வதாகவும் ஏற்கனவே அதிகாரிகளைத் தாக்கவேண்டாமெனப் போர்வீரர்களுக்குக் கட்டளையிட்டிருப்பதாகவும் கூறினேன். 11ம் திகதி கார்த்திகை மட்டும் தொடர்ச்சியாக சியா என்னுடன் தொடர்புகொண்டிருந்தார். ஆனால் 12ம் திகதிக்குப் பின்னர் அவருடன் தொடர்புகளனைத்தும் துண்டிக்கப்பட்டன. நான் அவருடன் தொடர்புகொள்ள முயற்சித்த -40 -

போதெல்லாம் அவர் என்னைத் தவிர்த்துக்கொண்டார்.
கார்த்திகை மாதம் 23ம் திகதி எனது அண்ணன் அபு யூசிப்கானின் வீட்டை ஒரு பெரிய பொலிஸ் அணி சுற்றிவளைத்து அவரைப் பொலிஸ் தலைமைநிலையத்திற்கு அழைத்துச் சென்றது. நான் இதுபற்றிக் கேள்விப்பட்டதும் சியாவுடன் தொடர்புகொண்ட பொழுது அவர் இல்லை என்று கூறினார்கள். அவருக்குப் பதிலாக மேஜர் ஏர்சாட்(Ershold) என்னிடம் எனது அண்ணனைக் கைது செய்த சம்பவம் பொலிஸ் நடவடிக்கை என்றும் தமக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார். அதே நேரத்தில் மேஜர் ஜலில், அப்துல் ராப்பு ஏனைய தேசிய சோஸலிஸ்ட் கட்சி(J.S.D)த் தலைவர்கள் கைது செய்யப்பட்டது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இவ்விஷயம் தெரியவந்ததும் நாம் 7ம் திகதி பதவிக்குக் கொண்டு வந்தவர்கள் புதிய சதியில் ஈடுபட்டிருப்பதை உணர்ந்தேன்.
24ம் திகதி எனது வீட்டை ஒரு பெரிய பொலிஸ் அணி சுற்றிவளைத்தது. பொலிஸ் அதிகாரி, சியாவுடன் ஒரு உரையாட லுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். நான் ஏன் அதற்குப் பொலிஸ் பாதுகாப்புத் தேவையென ஆச்சரியத்துடன் வினவினேன். எனினும் அவர்கள் என்னை ஒரு ஜுப்பில் போட்டு நேரே இந்தச் சிறைக்கு அழைத்துவந்தார்கள். இவ்வாறே, நான் காப்பாற்றி அதிகாரபீடத்தில் இருத்திய துரோகிகள் என்னைச் சிறையிலிட்டார்கள்.
சியா என்னைமாத்திரம் காட்டிக்கொடுக்கவில்லை. புரட்சிகரப் போர்வீரர்களையும் காட்டிக்கொடுத்து 7ம் திகதி தான் கொடுத்த வாக்குறுதிகளைப் புறக்கணித்து முழுநாட்டையுமே காட்டிக்கொடு த்தார். நாம் முதுகில் குத்தப்பட்டோம். காலித் முஸ்ரப்புடன் ஒப்பிடும்பொழுது சியா ஒரே நாணயத்தின் மறுபக்கமாகும்.
எமது சரித்திரத்தில் இப்படிப்பட்ட காட்டிக்கொடுப்புக்கு ஒரேயொரு உதாரணம் உண்டு. மீர் ஜபாரின் காட்டிக்கொடுத்தலால் பங்களாதேஷ் மக்களும் துணைக்கண்டத்தின் ஏனைய மக்களும் 200 வருடங்கள் வெள்ளையருக்குக் கீழே அடிமைகளாக வாழவே ண்டியிருந்தது. ஆனால் இது 1757 அல்ல. இது 1976 எம்மிடை யேயுள்ள புரட்சிகரப் போர்வீரர்களும், மக்களும் சியாவூர் ரகுமான் போன்ற சதிகாரர்களை அழிப்பார்கள்.
மத்திய சிறையில் சிலநாட்களுக்குப் பின்னர் நான் ஹெலிகாப்டர்
- 41 -

Page 23
மூலம் ராஜ்சாகி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு நான் தனியாக விடப்பட்டேன். எனது குடும்பத்தினர் கூட இன்று மட்டும் என்னைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. நான் சிறை யிலிருந்தாலும் எனது நாட்டின் நாடியை உணரக்கூடியதாக இரு க்கிறது. இப்பொழுது இந்நாடு கடுமையான பிரச்சனையின் ஊடாகச் செல்கிறது. நாடு இரு பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றது.
முதலாவது: ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தொண்டர்கள்
பலர் இங்கிருந்து இந்தியாவிற்குச் சென்று எமது எல்லையனைத்தும் ஆயுதநடவடிக்கையில் ஈடுபடு கின்றனர்.
இரண்டாவது: இந்தியா பரக்கா அணையைப் பயன்படுத்தி கங்கை நதியின் நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
இந்த இரு நடவடிக்கைகளும் எமது நாட்டின் சுதந்திரத் திற்கும் பொருளாதாரத்திற்கும் எதிரான நடவடிக்கைகளாகும். என் னைச் சிறையில் தனியாகவைத்திருந்தும் கொடுமைப்படுத்தியும் நான் இந்த ஆபத்துக்களுக்கு எதிர்ப்பைக்காட்டத் தயங்கவில்லை.
1976ம் ஆண்டு வைகாசி மாதம் 10ம் திகதி நான் இந் நாட்டின் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை இப்பொழுது வாசிக்க விரும்புகிறேன்.
(அனுமதி மறுக்கப்படுகிறது) வாக்குவாதம் நடைபெறுகிறது.
நீதிபதிகளே ஜனாதிபதிக்கு நான் எழுதிய கடிதம் ஒரு மனிதன் தன்நாட்டை வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்ற விரும்பும் அவா ஆகும். நான் ஒரு சுதந்திர மனிதன். நான் எனது நடவடிக்கைகளாலே இச்சுதந்திரத்தைப் பெற்றேன். சிறையின் உயர்ந்த சுவர்களோ, தனிச்சிறைவாசமோ, கைவிலங்குகளோ அச் சுதந்திரத்தைப் பறிக்கமுடியாது.
2ம் திகதி வைகாசி மாதம் நான் ராஜ்சாகியிலிருந்து இந்த சிறைக்குக் கொண்டுவரப்பட்டேன். இங்கு தனிச்சிறைவாசத்தில் விடப்பட்டேன். முழுச்சிறையும் பூரண அமைதியால் சூழப்பட்டுள்ளது.
- 42 -

இங்கு நான் வந்ததும் ராணுவ நீதிமன்றத்தினால் சிறையினுள் விசாரிக்கப்படுவேன் என்றும் இதற்கென விஷேச சட்டம் பிறப்பிக் கப்பட்டுள்ளதென்றும் அறிந்தேன். ஆனி மாதம் 15ம் திகதி இந் நீதிமன்றத்தின் தலைவர் என்னைச் சிறையினுள்வைத்துச் சந்தித்தார். நான் இந்த நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்க மறுத்தேன். ஏனெனில் சிறைக்குள் ராணுவ நீதிமன்றமானது அரசு நீதியின் பெயரால் குற்றமிழைக்கப் பயன்படுத்தும் ஆயுதமாகும். 21ம் திகதி ஆனி மாதம் 4 வழக்கறிஞர்கள் எனது சிறைக்கு வந்து நீதி கடைப்பிடி க்கப்படுமென்றும் அரசு நீதிமன்றத்தில் தலையிடாதென்றும் வாக்கு றுதியளித்தனர். அதன் பின்னர் நான் இந்த நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்க இணங்கினேன்.
இக்கட்டத்தில் நான், இந்த நீதிமன்றத்தை உருவாக்கிய சட்டம் தவறானதென்று கூறுகிறேன். இச்சட்டம் 1976ம் ஆண்டு ஆனி மாதம் 15ம் திகதி பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்நீதிமன்றம் சட்டம் உருவாக்கப்படுவதற்கு முதலே உருவாக்கப்பட்டது. அவ்வாறு இல்லையெனின் எவ்வாறு இந்த நீதிமன்றத்தின் தலைவர் ஆனி மாதம் 15ம் திகதியே என்னைச் சிறையில் சந்திக்கமுடியும். மேலும் இச்சிறையுள் இப்படியொரு நீதிமன்றத்தை அமைக்கும் பணி ஆனி மாதம் 12ம் திகதியே ஆரம்பமாகிவிட்டது.
இப்பொழுது நான் இங்கே நிற்கிறேன். எனது வழக்கறிஞ ருடன் கலந்தாலோசிக்கக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனக்கெதிரான குற்றச்சாட்டுப் பத்திரத்தை, நான் பார்வையிடுவதற் குக்கூடச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. எனது குடும்பத்தினர் ஒருவர்கூட என்னைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இந்த வழக்கு நடத்தப்பட்ட மாதிரியைப்பற்றி மிகக்குறைவாகக் கூறுவதே நல்லது. முழு நடவடிக்கையும் பயத்துடனும், அவசரத்துடனும் செய்யப்பட்டதைப் பார்த்தால் எவரும் அதிர்ச்சியடைவார்கள்.
நான் வேறுசில சிவிலியன்களுடன் 1974ம் ஆண்டு ஆடி மாதம் முதல் சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசைக் கவிழ்க்கவும் ஆயுதப்படைகளுக்கிடையில் பிரிவினையையும், ஒழுங்கின்மையை யும் ஏற்படுத்தச் சதிசெய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். கார்த்திகை மாதம் 7ம் திகதி அரசைக் கவிழ்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். மேலும் எனக்கு தேசப்பற்று இல்லையென்றும்
- 43 -

Page 24
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Indi வரே, அங்கத்தவர்களே
நான் குற்றச்சாட்டுகளின் பெறுமானத்தைப்பற்றிப் பேசத் தயாரில்லை. இவையாவும் பொய்யும், புனையப்பட்டவையுமாகும். எனவே இவற்றைப்பற்றிப்பேச நான் தயாரில்லை. அவாமி லீக் அரசு கவிழ்க்கப்படுவதற்கு முதல் நாட்டிலிருந்த நிலைமை அவ்வரசின் கீழ்க் கஸ்டப்பட்டவர்களுக்குத் தெரியும். பெரும் அடக்குமுறை, பொருளாதார ஒழுங்கீனம், சட்டத்தின் வீழ்ச்சி, ஜனநாயக உரிமை களின் மறுப்பு முதலியனவே நாட்டில் தினமும் நடைபெற்ற சம்ப வங்களாகும். இப்படிப்பட்ட பாதகமான அரசியல் சூழ்நிலையில் J.S.D.யும், ஏனைய வெகுஜன இயக்கங்களும், பாசிசஎதிர்ப்பு ஜனநாயக இயக்கத்தைக் கட்டிவளர்க்க முயன்றன. தேசபக்தர்களான வீரர்களும், இளவரசர்களும் இக்கட்டத்தில் எங்கே? எங்கே சியாவூர் ரகுமான்? எம். கே. கானும், எம். ஜி. தலாப்பும் எங்கே? அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? நான் சட்டரீதியாக ஸ்தாபிக்கப் பட்ட அரசைக்கவிழ்க்க முயற்சித்ததாகக் கூறப்பட்டுள்ளது. யார் முஜிப்பையும் குடும்பத்தையும் கொன்று அவரது அரசைக்கவிழ்த் தார்கள்? யார் முஜிப்பின் கொலையால் பதவிக்கு வந்தார்கள்? யார் முஜிப் வீழ்ச்சியடைந்த பிறகு ராணுவத் தளபதியானார்? குற்றஞ் சாட்டப்பட்ட நாங்களா இதனைச் சாதித்தோம்? அல்லது எங்கள் முன்னுக்கு இருந்து இன்று ஆட்சியிலிருப்பவர்களின் கட்டளை யைக் கடைப்பிடிக்கும் நீங்களா முஜிப்பின் மரணத்தால் பெரும் பலன் அடைந்தீர்கள்?
நான் ராணுவத்தில் குழப்பத்தையும் ஒழுங்கின்மையையும் ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளேன். ஆனால் ஆவணி 15ம் திகதியும், கர்த்திகை 3ம் திகதியும் ராணுவத்தில் என்ன நடந்தது? உயர் அதிகாரிகளுக்கு கட்டளைகளைக் கொடுத்த மேஜர்கள் யார்? கார்த்திகை 3ம் திகதி சதிக்குப் பிறகு யார் ராணுவத்தில் அதிகார ஒழுங்கைக் குலைத்தது? சியா தனது உயிரைக் காப்பாற்றுமாறு யாரிடம் வேண்டுகோள் விடுத்தார்? நிச்சயமாக எனது தலைமையி லேயே சியா புரட்சிமூலம் மீட்கப்பட்டார். எமது பிரதான நோக்கம்
- 44 -

எமது தேசிய சுதந்திரத்தைக் காப்பாற்றி வலுப்பெறச் செய்வதேயாகும். இதனைச் சாதிப்பதற்கு நாம் போர்வீரர்களை இயக்கி அரசியல் உணர்வுபெறச் செய்யவேண்டியிருந்தது. நான் இதனை வெற்றிகர மாகச் சாதித்து நாட்டையும், ஆயுதப்படைகளையும் பெரும் அழி விலிருந்து காப்பாற்றினேன் எனப் பெருமையுடன் கூறுகிறேன்.
நான் சட்டரீதியாக ஸ்தாபிக்கப்பட்ட அரசைக் கவிழ்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். இது ஒரு பெரும் உண்மை யார் கார்த்திகை 7ம் திகதிக்கு முன்னர் பதவிக்கு வந்தார்? யாரைக் காலித் முஸ்ராப் பிரதிநிதித்துவப்படுத்தினார்? யார் சியாவைக் கைது செய்தார்? யாருடைய வீழ்ச்சிக்காகப் பயந்துபோன மக்கள் மன்றாடி னார்கள்? எமது தேசிய சுதந்திரத்தைக் காப்பாற்றவும், நாட்டுக்குப் புதியபாதையைக் காட்டவும் நாம் மக்களுடனும் புரட்சிகரப் போர் வீரர்களுடனும் சேர்ந்து தேசத்துரோகி காலித் முஸ்ராப்பை வீழ்த்தி னோம். நான் தேசப்பற்று அற்றவனெனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். தனது ரத்தத்தை ஏன்-? தனது உடலின் ஒருபகுதியை நாட்டின் விடுதலைக்காகக் கொடுத்த ஒருவனிடமிருந்து நீங்கள் வேறு எதைக் கேட்கமுடியும்? எமது எல்லைகளைச் சுயமாக வைத்திரு க்க, நாட்டின் சுயமரியாதையைக் காப்பாற்ற, ஆயுதப்படைகளின் மரியாதையைக் காப்பாற்ற ஒரு அங்கவீனன் தனது உயிரைப் பணயம்வைத்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த புரட்சியை நடாத்தினான். இதைத் தவிர வேறு எந்தவழியில் என்னி டமிருந்து தேசப்பற்றை எதிர்பார்க்கமுடியும்?
இக் காரணங்களுக்காகவே நான் நீதிமன்றத்தை மேஜர் ஜெனரல் சியாவூர் ரகுமான், அட்மிரல் எம். எச். கான், தவாப் ஒஸ்மானி முதலியோரை அழைக்குமாறு கூறினேன். இவர்கள் யாவரும் இங்கு சமூகமளித்திருந்தால், இந்நீதிமன்றத்திற்கு அவர்களை அழைக்க அதிகாரம் இருந்திருந்தால் அவர்கள் இப்படிப்பட்ட பொய்களையும், போலிக் குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கத் துணி வற்றிருப்பார்கள். ஆனால் இந்நீதிமன்றம் தன் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது.
ஒரு சட்டம் நாட்டினதும், மக்களினதும் நன்மையை முன்னேற்றும் சட்டமாக அமையாவிடின், அது சரியான சட்டமாக இருக்கமுடியாது. 1976 ம் ஆண்டு ஆனி மாதம் 15ம் திகதி பிறப் - 45

Page 25
பிக்கப்பட்ட சட்டம் ஒரு மறுப்புச் சட்டமாகும். அச்சட்டம் அரசின் விருப்பங்களை நிறைவேற்றவே பிறப்பிக்கப்பட்டதாகும். இச்சட்டம் தவறானது. எனவே இந்நீதிமன்றத்திற்கு என்னை விசாரிக்க சட்ட ரீதியாகவோ, நியாயரீதியாகவோ அதிகாரம் இல்லை. இக்கட்டத்தில் நான் ஆனி 21ம் திகதி இவ்வழக்குத் தொடங்கியது தொடக்கம் நடைபெற்ற சம்பவங்களைப்பற்றிக் கூறவிரும்புகின்றேன். (அனுமதி மறுக்கப்படுகிறது)
இந்நீதிமன்றத்தின் நடவடிக்கையானது மனித சமுதாயம் தோன்றிய கால முதல் சாதித்த எல்லா நல்ல காரியங்களையும் அவமானப்படுத்துகிறது.
எனது வாக்குமூலத்தை முடிக்கமுதல் நான் ம்ே, 7ம் திகதி கார்த்திகை நடந்த சம்பவங்களைத் தெளிவாகக் கூறியுள்ளேன். நான் ஏன் சாயிம், சியா, எம். எச். கான், தவாப், ஒஸ்மானி முதலியோரை சாட்சிகளாக அழைத்தேன் என்பது நீதிமன்றத்திற்கு விளங்கும். அவர்கள் இங்குவந்து நான் இங்கு கூறியது ஏதும் தவறா எனக் கூறட்டும்.
நான் இங்கு என்னுடன் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ராணு வத்தினரைப்பற்றிச் சிலசொற்கள் கூறவேண்டும் எனக்கு அவர்களைப் பொறுத்தளவில் கடமையுண்டு. அவர்கள் ஏதாவது குற்றஞ்சாட்டப் பட்டிருந்தால் ராணுவச் சட்டப்படி விசாரிக்கப்பட்டிருக்கவேண்டும். நான் பங்களாதேஷ் ராணுவம் உருவான காலத்திலிருந்த உயர் அதிகாரிகளில் ஒருவன். இன்று ஆளும் ராணுவக்குழு தனது வஞ்சக நோக்கங்களை நிறைவேற்ற எமது ராணுவத்தின் முக்கிய பகுதியைத் தியாகம்செய்து ஆயுதப்படைகளைப் பலவீனப்படுத்தத் தயாராயிருப் பதைப்பார்க்க நான் மிகவும் மனவருத்தப்படுகிறேன். நான் இந்த இழைஞர்களைப் பற்றியும் அவர்களின் வீரத்தைப் பற்றியும் பெரு மைப்படவேண்டும்.
ஏழரைக்கோடி மக்களைக் கொண்ட இந்த நாடு ஒரு பொழுதும் அழியாது. பங்களாதேஷ் மக்கள் தீர்கள். கர்த்திகை 7ல் அவர்கள் படித்த படிப்பினைகள் அவர்களை வருங்கால நடவடிக் கைகளில் சரியான வழியில் நடாத்திச் செல்லும். அப்புரட்சி அவர் களுக்குப் பெருமளவு துணிவைக் கொடுத்துள்ளது. நான் செய்த எல்லாவற்றைப் பற்றியும் பெருமைப்படுகிறேன். நான் பயப்படவில்லை. -46 -

இறுதியாகத் -தலைவரே,
நான் எனது நாட்டையும் மக்களையும் நேசித்தேன் என்று மட்டும் கூறுவேன். நான் இந்த நாட்டின் ஆன்மாவின் ஒரு பகுதி.
ஒருவரும் எம்மைப் பிரிக்கமுடியாது!
வாழ்க்கையில் பயமற்ற மனதைத்தவிர வேறு சிறந்த சொத்து இல்லை. எனக்கு அது உண்டு.
நான் எனது நாட்டையும் அப்படிப்பட்ட மனதை அடை யுமாறு அழைக்கிறேன்.
புரட்சி ஓங்குக !
எமது நாடு வாழ்க !
அபுதாகிர் 1976ம் ஆண்டு ஆடி மாதம் 21ம் திகதி அதிகாலை 4மணிக்கு டாக்கா மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
அவர் தூக்கிலிடப்படுமுன் இறுதியாகக் கூறிய வசனங்கள்
*சென்று வருகிறேன், எனது நாட்டு மக்களே,
பங்களாதேஷ் வாழ்க, புரட்சி ஓங்குக!”
- 47 -

Page 26
அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய இறுதிக்கடிதத்தில், தன் குழந்தைகளுக்குக் கூறுகிறார்.
நீட்டு, ஜிசு, மீசு
எல்லோருடைய ஞாபகமும் எனது மனதில் வருகிறது.
நான் அவர்களுக்கு ஒரு சொத்தோ, பொருளோ விட்டுச் செல்லவில்லை. ஆனால் எமது நாடு முழுவதும் அவர்களுக்கு வருங்காலத்தில் உண்டு. நாம் அன்பும் ஆதரவுமற்ற, வெற்றுடம்புடன் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பார்த்துள்ளோம். அவர் களுக்கெல்லாம் இருப்பிடம் வழங்க விரும்பினோம்.
இந்த விடிவு வங்காளி மக்களுக்கு வெகு தொலைவா? இல்லை. அது தொலைவிலல்ல. சூரியன் உதயமாகப்போகிறது.
நான் எனது இரத்தத்தை எனது நாட்டுக்குக் கொடுத்தேன். இப்பொழுது எனது உயிரைக்கொடுக்கப் போகிறேன்.
இது எமது மக்களின் ஆன்மாவில் புத்துணர்வையும் புதிய சக்தியையும் கொடுக்கட்டும். இதைத்தவிர எனக்கு ஏது வேறு பெரியபரிசு என்னை ஒருவரும் கொல்லமுடியாது. நான் மக்கள் மத்தியில் வாழ்கிறேன் எனது நாடி அவர்களுடைய நாடியுடன் துடிக்கிறது.
என்னைக் கொல்லவேண்டுமாயின் எல்லா மக்களையும் கொல்லவேண்டும்.
எந்த சக்தியால் இதைச் சாதிக்கமுடியும்?
ஒன்றுமில்லை.
景景景
-48 -

"TIGERS' ACCUSE RAW AND CIA
From Mohon Ron - NEW DELHI
The Liberation Tigers of Tamil Eelam (LTTE) has charged India with splitting Sri Lanka's militant movement to intervene militarily for securing its diplomatic ends.
It has also alleged a nexus between some high officers of India's Research and Analysis Wing (RAW) and the American Central Intelligence Agency (CIA).
“lindio ond Eelom Tomil crisis” ou document of the political committee of the LTTE is primarily an appeal to the famil people. It makes startling disclosures about India's role in arming and training the Tamil groups and its objectives in Sri Lonko.
Am th Velofions Ore:
Indira Gandhi entrusted the task of imparting military training of India - based Tamil militant groups (after the unruly 1983 racial holocaust in the island) to the RAW.
Some of the RAW officers acted independent of the Indian Government and widened the gap between various militant groups and prevented the formation of a disciplined national liberation movement of the Tamils. The milifant groups were rendered totally dependent on India and reduced to a slave army of the Indian Government.
An inconsequential group of six exiles the Tamil Eelam Liberation Organisation(TELO) and kater the Eelam People's Revolutionery Liberation Front (EPRLF) and the Eelam Revolutionery Organisation of Students(EROS) were deliberafely built up through the training programme as a counterweight to the LTTE wich was the only disciplined group Octive in the tomil dreds in Sri LOnko.
- 49

Page 27
The LTTE was worried about the growing military strength of these misguided groups' and the possibility of being destroyed by them. Hence when approached by India, the LTTE agreed to the offer of "limited military training' (by RAW).
Unlike the other group, the LTTE got only limited help, but setup military camps on its own initiative (obviously on Indican soil) ond enhonced its militory strength. Without depending on India, the LTTE got substantial arms from its own sources, thus rising to become a formidable force to face the challenge of the RAW.
When the TELO lounched OtockS On its CCCire the LTTE retaliated and decimated the group. The RAW was disapointed about this and the conflict between the RAW and LTTE become Ocute.
The document says the RAW constituted an imporfant part of the Indian Government and reflected its foreign policy. If functioned directly under the Prime Minister and woS on effective Orm of the Indion Government."Therefore, we have to interpret the actions of the RAW as that of the Indian political leadership'.
it says some high RAW officials acted independently of the Indian Government and a few even played into the hCInd of the CIA.
Unnikrishnan, da RAW official now in prison and chorged with acting as an agent of the CIA was responsible for co-ordinating activities of various Tamil groups. But this official was passing on vital information to Sri Lanka (such as the type of training and arms given to various groups, their relrtive strength and their strategic plans). Based on this information, Sri Lanka planned its attacks against the LTTE.
- 50 -

The conclusions drawn by the LTTE are as significant das the revelations.
Though it wanted to strengthen its association with India and be its royalty India regarded the LTTE antinational Cand hold decided fO elimincke it.
India opposed even the minimum demands of the Tomils ond did not wont Sri LOnko's ethnic conflici fronsformed into a national liberation struggle and therefor promoted other militant groups against the LTTE.
After Sri Lanka clamped an economic blockad on the Tomil dreds ond stepped up militory operations, Indio dragged its feet on LTTE's request for arms and ammunition, saying it was being considered.
Unnikrishnoln informed Sri LOnko thout Obout the LTTE was facing an ammunition shortage and this helped Sri Lankan strategy for an onslaught on Jaffna. India supplied arms and ammunition to "misguided' groups which were idling in Tamil Nadu.
Meonwhile, Indio Olso threofened Sri LOnko it would supply modern weapons, including anti-aircraft guns, to the LTTE to defeat the Govenment forces. This persuaded president J.R. Jayawardene to enter the July 1987 agreement With Indio.
The accord did not meet Tamil aspirations but only advanced India's commercial political and other interests.
The document ends with a promise to the Tamil people that the LTTE will continue to fight for truth and justice in which no great power can ever conquer the people who ore honest, firm ond deeply committed to their couse.
The Indian Post - Bombay THE ISLAND 6 - 4 - 88
-51

Page 28
நமது எதிரிகள் யார்? நமது நண்பர்கள் யார்? புரட்சியில் இச் சிக்கல் முகாமை வாய்ந்ததொன்று. கடந்தகாலத் தமிழீழப் போராட்டம் எல்லாம் சாதித்தவை மிகக் குறைவாக இருப்பதன் அடிப்படைக் காரணம், அவை உண்மையான பகைவர்களைத் தாக்குவதற்குப் பதில் - உண்மையான பகைவர்களான அன்னிய மேலாதிக்கவாதிகளின் நலனுக்காக நண்பர்களைத் தாக்கியதும் ஒன்றாகும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வாக்கியத்துக்கு வரையறையின்றி உள்வாங்கப்பட்டமை யாகும். விடுதலை இயக்கம் என்பது பொதுமக்களின் வழிகாட்டி, அது பொதுமக்களைத் தவறான பாதையில் வழிநடத்தினால், விடுதலைப்போராட்டம் என்பது தோல்வியடையாமல் இருக்கமுடியாது. மக்களை நாம் தவறான பாதையில் இட்டுச்செல்லாமல், நமது விடுதலையின் நிச்சய வெற்றியை உத்தரவாதம் செய்யவேண்டும். நாம் உண்மையான விரோதிகளைக் கண்டறிந்து தாக்குவதற்கு உண்மையான நண்பர்களை ஒன்றுபடுத்துவதில் கவனம் செலுத்தவேண்டும்.
பாசிச அரசையும் அதன் நண்பர்களையும் வேரறுக்க இலங்கை மக்களின் பல்வேறு வர்க்கங்களின் பொருளாதார நிலையையும், மக்களின் மனோபாவங் களையும் ஆராய்வது அவசியம். வர்க்கப்புரட்சிக்கான ஒரு அடித்தளத்தை அமைக்காது பாசிசத்தைத் தூக்கி எறியமுயற்சிப்பது மேலாதிக்க வெறியர்களின் கையில் சிக்குண்டு நகங்குவதாகும்.
J.R. இன் அரசைத்தொடர்ந்து ஆட்சியில் வைத்திருக்க
இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.
J.N.DIXIT
- 52


Page 29
சுரு
兴兴 வங்கப் போராளி கேன
சுருக்கம்.
" வங்கப் போரில் இந்தி
兴兴 அமெரிக்க உளவு நி
景兴
விடுதலைபெற்ற வங்
பொருளாதார நலிவு.
இவை இலங்ை அமையட்டும். ஏற்கனவே தலையீடு 305 ஆய்
வைக்கப்பட்டுள்ளது. உள்ள படித்த பின்னும் விளக்கவுை
"சரியான பாதையை ம

னல் அபுதாரிேன் நீதிமன்றச்
யாவின் தலையீடு.
றுவனத்தின் ஊடுருவல்.
காளதேசத்தின் ர்ேகேடு.
கக்கு 905 LY's நடந்து முடிந்த இந்தியத் விற்காக விளக்கவுரையில டக்கத்தைப் படிக்க முதலும் ரயைப் படிக்கவும்.
க்களுக்குக் காட்டுங்கள்"