கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆறுமுகம் வேலுப்பிள்ளை நடராஜா (நினைவு மலர்)

Page 1
காரைநகர் 56TU அமரர் ஆ. வே.
நினைவு
O9.
 

LIGOTGGITG
LTE அவர்களின் வெளியீடு
2008

Page 2

சிவலிங்கம்
தொகுப்பும், ஆக்கமும் ச. ஆ. பாலேந்திரன்
காரைநகர் களபூமி பாலாவோடை அமரர் ஆ. வே. நடராஜா அவர்களின் நினைவு வெளியீடு
O912OO8

Page 3
நூல்
தொகுப்பும், ஆக்கமும் :
முதற் பதிப்பு
பக்கங்கள்
6Jİ600I ULIöI856T
அச்சுப் பதிப்பு
* சிவலிங்கம்
ச. ஆ. பாலேந்திரன்
: நவம்பர், 2008
: V + 114
யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிட்டட்,
48B, புளுமெண்டால் வீதி, கொழும்பு 13. தொலைபேசி: 2330195
அமரர். ஆ.வே. நடராஜா அவர்களின் நினைவாக பம்பலப்பிட்டி அரச தொடர்மாடி சனசமூக நிலைய மண்டபத்தில்
09.11.2008 அன்று
அருள்மொழியரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
அவர்களால் வெளியிடப்பட்டது.
அட்டைப்படம்
தஞ்சைப் பெருவுடையார் கோவில்
பிரகதீஸ்வரர் சிவலிங்க திருமேனி

காரைநகள்
UITGADH (86 IT GOD SOLDID 65T

Page 4

జ్ఞఒపిళ%ట**ఓపిక %ఒపిళ%ఒపిళ%ఒపిళ%ఓమ్నీళ%ఒ***ఒకటకట్ట
9)
13. 11. 1926 ఆత్ర 10. 10. 2008
ஆறுமுகம் வேலுப்பிள்ளை நடராஜா
55Q616ioIUIT
காரை நகர்க் களபூமி, நடராஜாப் (BLI60y 260Lu 6]LIdbLD560TITń – LIT60y 6fill(B) ஐப்பசிப் பூர்வபட்ச ஏகாதசி யன்று மெய்ப்பதம் நாடினாரே!
(kokokokokok *krokok്

Page 5

பதிப்புரை
உலகின் தொண்மையான சமயமான சைவ சமயம் சிவபெருமானைத் தலைவராகக் கொண்டது. இவர் உருவம், அருவம், உருவுருவம் ஆன்மாக்களோடு ஒன்றிய நிலை எனப் பரந்து தனித்து நின்று உலகினை இயக்கும் சர்வபூதராக விளங்குகின்றார். இவற்றுள் உருவம் என்பது ஜடாமகுடம், முக்கண், மான், மழு முதலியன தரித்து சர்வாலங்காரங்களுடன் எழுந்தருளியுள்ள நிலையாகும் . திருக் கோயில் களில் எழுந்தருளியுள்ள நடராசர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், உமாசகிதர் முதலான இவரது திருமேனிகள் இந்த “உருவ’ நிலையைக் குறிக்கின்றன. ‘அருவம்' என்பது சுத்தப் பிரணவமாகும். இவையெல்லாவற்றிற்கும் மூலமாகச் சிவபெருமான் இருக்கிறார்.
“அருவுருவம்’ என்பது சிவலிங்கத் திருமேனியாகும். திருமுகம், திருக்கரங்கள், திருவடிகள் போன்ற உறுப்புக்கள் இல்லாத காரணத்தால் இதனைத் உருவம் என்று சொல்ல முடியாது. எனவே உருவமாயும், அருவமாயும் விளங்குகின்ற காரணத்தால் சிவலிங்கம் அருவுருவத் திருமேனியாகும்.
இந்தக் குறியீட்டை அன்றிச் சிவபெருமான் அன்பர்களுக்கு அருள் பாலிக்க அந்த அந்த வேளைகளில் பல்வேறு திருவடிவங்களைக் கொள்கின்றார். ரிஷிகளும், தேவர்களும், அகத்தியரும் மணக்கோலம் காணவேண்டி நின்ற போது கல்யாண சுந்தரராகவும் , திருமால் , நந்தி முதலியோர்களுக்குச் சோமாஸ்கந்தராகவும், அருச்சுனனுக்கு வேடனாகவும், சுந்தரருக்கு அந்தணராகவும், சோமாசிமாற நாயனாருக்குப் பெரிய காளையாகவும் என இன்னும் கணக்கற்ற திரு உருவங்கள் கொண்டு காட்சியளித்துள்ளார். இவ்வாறு காட்சியளித்த அனைத்து திருவுருவங்களையும் எழுந்தருளி வைக்க முடியாது என்பதால் ஆன்றோர்கள் அவருடைய குறிப்பிடத்தக்க மூர்த்தங்களை 108 திருவடிவங்களாக வைத்து வழிபடச் செய்தனர்.
பின் வந்த சமயச் சான்றோர்கள் அதனையும் சுருக்கி 64 திருவடிவங்களை அமைத்து வழிபடச் செய்தனர். அதன் பின்னும் 64 திருவடிவங்களில் 25 மூர்த்தங்களைத் தேர்ந்தெடுத்து ‘மகேஸ்வர மூர்த்தங்கள்’, என்று வரையறுத்து சிறப்புடன் போற்றினர். பின்னாளில் இவ்வளவு திருமேனிகளையும் ஒவ்வொரு கோயிலிலும் வைக்க

Page 6
முடியாது என்பதால் இவற்றில் ஐந்து மூர்த்தங்களைத் தேர்ந்தெடுத்து எழுந்தருளச் செய்யவேண்டும் என்று வரையறை செய்தனர். அந்த மூர்த்தங்களாவன சோமாஸ்கந்தர், நடராஜர், சந்திரசேகரர், பிச்சாடனர், தட்சிணாமூர்த்தி என்பனவாகும். இவற்றுள் உலா மூர்த்தங்களாக சோமாஸ்கந்தர், நடராஜர், சந்திரசேகரர், பிச்சாடனர் ஆகியோர் உள்ளனர். தட்சிணாமூர்த்தியைக் கல்வடிவில் அமைத்து வழிபட்டனர்.
சிவபெருமானின் எத்தனை மூர்த்திகள் இருப்பினும் மூலவராகக் கருவறையில் இருந்து அருள்புரியும் மூர்த்தமாக உள்ளது சிவலிங்கத் திருமேனியே.
இத்திருமேனி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர். காலம் செல்லச் செல்ல இத்திருமேனியில் பல மாற்றங்களை முனிவர்கள், அருளாளர்கள், மன்னர்கள் ஏற்படுத்தினர். அவ்வாறு மாற்றம் பெற்ற சிவலிங்கத் திருமேனிகளைப் பற்றிய தொகுப்பே இந்த நூல்.
அவ்வாறு அமைக்கப்பட்ட திருமேனியைத் தெய்வங்களும் முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப பல தலங்களில் பிரதிட்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். அவற்றில் பிரம்மா, விஷ்ணு, சூரியன் போன்றோர் வழிபட்ட லிங்கங்கள் பற்றியும், அவை எழுந்தருளியிருக்கும் தலங்களைப் பற்றிய செய்திகளை மட்டும் இந்நூலில் வெளியிடுகின்றோம்.
இவ்வாறு எழுந்தருளி வைக்கப்பட்ட சிவலிங்கங்களில் அபூர்வமான கொண்ட சிவலிங்கங்கள் தென்னாட்டில் (தமிழ்நாடு) உள்ள சிவாலயங்களில் உள்ளன. அவற்றுள் சிலவற்றைப் பற்றியும் இங்கு விபரித்துள்ளோம்.
இந்நூல் காரைநகர் களபூமி பாலாவோடையைச் சேர்ந்த அமரர் ஆ.வே. நடராஜா அவர்களின் நினைவு மலராக அவரின் குடும்பத்தினரால் வெளியிடப்படுகிறது. அமரர் நடராஜா பாலாவோடையில் புகழ் பூத்த இராமுடையார் கத்தறை (சந்ததி)யைச் சேர்ந்தவர். தந்தை பெயர் வேலுப்பிள்ளை. தாய் பெயர் சின்னப்பிள்ளை. இவருடன் மூன்று சகோதரர்கள் பிறந்திருந்தனர். அவர்கள் திரு. சோமசுந்தரம், அமரர்களான ஆறுமுகம், மயில்வாகனம் என்போராகும்.

அமரர் நடராஜா களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையில் கல்வி கற்றவர். அதன்பின் பரந்தனில் சகோதரர் ஏ.வி. ஆறுமுகத்துடன் இணைந்து வியாபாரம் செய்து பொருள் ஈட்டி வாழ்ந்தார். இவர் 1958ம் ஆண்டில் அவ்வூரைச் சேர்ந்த செல்லம்மா என்பவரை மணந்தார். அதன் பயனாக மூன்று பிள்ளைச் செல்வங்களைப் பெற்றெடுத்தார். இவர்களில் மூத்தவர் வில்வராஜா. இவர் லண்டனில் தொழில் புரிகிறார். காரைநகரைச் சேர்ந்த சிவரூபி என்னும் மங்கை நல்லாளை மணந்து கஜானன், மயூரா என்னும் இரு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இரண்டாவது பிள்ளை பாலாம்பிகை. இவர் கணக்காளராகப் பணிபுரியும் நடராஜா கணநாதனை மணம்புரிந்து, அதன்பயனாக கஜரூபன், திவாகரன் என்ற இரு மழலைச் செல்வங்களை பெற்றெடுத்துள்ளார். இளையவர் நவரத்தினராஜா. இவர் லண்டனில் தொழில் புரிகிறார்.
அமரர் நடராஜா மிகுந்த சமயப்பற்றுடையவர். தங்கள் குடும்பத்தின் பராமரிப்பில் இருந்த வைரவர் கோயிலைக் கண்ணும் கருத்துமாகப் பேணி வந்தார். இக்கோயில் காரைநகர் களபூமியின் கிழக்கு கடற்கரையோரத்தில் 'செட்டிதனை’ என்ற குறிச்சியில் உள்ளது.
அமரர் நடராஜாவின் சமயப்பற்றினை மெச்சி இவரது குடும்பத்தினர் வைரவர் மூர்த்தியைத் தோற்றிய சிவபெருமானின் திருமேனியான சிவலிங்கத்தைப் பற்றி ஒரு நூலை அவர் நினைவாக வெளியிட எண்ணியது போற்றுதற்குரியது. இவர்களது இப்பணி சிவலிங்கங்கள் பற்றிய பல செய்திகளை சைவப் பெருமக்களுக்கு அறியத்தரும் பெரும் சிவத்திருப்பணியாகும்.
அமரர் நடராஜா எனக்கு தந்தை வழியில் மாமன் உறவினர் ஆகும். இவரது நினைவாக இந்நூலைத் தொகுத்து வெளியிடச் சந்தர்ப்பம் கிடைத்தமையை எனது பாக்கியமாகப் கருதுகிறேன்.
அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிப் பணிகின்றோம்.
இப்படிக்கு
ச.ஆ. பாலேந்திரன் 48, புதுச் செட்டித் தெரு கொழும்பு - 13.

Page 7
சிவலிங்கம்
உள்ளடக்கம்
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
சிவலிங்கத்தின் தோற்றமும் தொன்மையும்
சிவலிங்கங்கள்
திருமூலரின் சிவலிங்கங்கள்
முகலிங்கங்கள்
சிவலிங்கத்துள் சிவலிங்கங்கள்
தாராலிங்கங்கள்
விஷ்ணு வழங்கிய லிங்கங்கள்
தியானலிங்கம்
லிங்கோற்பவர்
தேவி லிங்கம்
திருவண்ணாமலை அஷட லிங்கங்கள்
ஜோதிர் லிங்கங்கள்
அமர்நாத் லிங்கம்
விபீஷண லிங்கம்
அபூர்வ லிங்கங்கள்
திருமாலீசர்
பிரம்ம புரீஸ்வரர்
ஆதித்தியேசுவரர்
லிங்காஷ்டகம்
பக்கம்
10
4
25
30
35
36
39
42
45
47
57
59
60
76
92
108
13

சிவலிங்கம் சிவலிங்கத்தின் தோற்றமும் தொன்மையும்
ஆதி மனிதன் முதலில் இயற்கையைத் வழிபட்டான். இயற்கையில் முதன்மையானது உலகிற்கு ஒளி வழங்கும் சூரியனே. சூரியனின் வெப்பம் மனிதனைச் சுட்டது. அதற்கு அஞ்சி அவன் சூரியனை வழிபடலானான். இயற்கை நெருப்பாகிய சூரியனுக்கு அஞ்சியவன் மற்றோர் நெருப்பையும் கண்டான். மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் எழும் நெருப்பும் மனிதனைச் சுட்டது. காட்டுத் தீ அச்சம் ஊட்டியது எனவே அக்கினி என்ற பெயரில் நெருப்பையும் வழிபடலானான். பின்னர் அந்த நெருப்பை தனது உணவுப் பக்குவத்திற்குப் பயன்படுத்தினான்.
சூரியன் இல்லாதபோது இருள் நீக்கி ஒளிபெற இந்த நெருப்பை பயன்படுத்தினான். இருளுக்கு ஒளி தரும் நெருப்பை அக்கினி என வழிபட்டான். இன்று எட்டுத் திக்கு பாலகர்களில் ஒருவனான அக்கினி தேவனை வழிபடுகிறான். பின்னாளில் அறிவு வளர்ச்சி பெருகிய போது தெய்வம் ஒன்று உள்ளதென்று உணருகின்றான். அதைப் பல வடிவங்களில் நோக்கினான். வேதம் நன்மைகளின் உருவமாக உள்ள ஒன்றையே பலவாகக் கூறுகின்றது. இதையே ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனக் கூறுகிறோம்.
தெய்வம் ஒன்றுதான் என்று நிலைத்த போது அந்த ஒன்றுக்கு உருவம் உண்டா? இல்லையா? என்ற வினா எழுந்தது. அது உருவமில்லை அருவம் தான் என்று விடை கூறப்பட்டது. அப்படியானால் அருவத்தை எவ்வாறு வழிபடுவது என்ற வினாவும் எழுந்தது. கண்ணில் தெரியும் உருவம் இருந்தால்தான் மனதில் பதிவு ஏற்படும். அப்பொழுது தான் வழிப்பாட்டில் மனம் ஒருமைப் படும். ஆகவே உருவம் அவசியம் என்று ஆனது. அந்த உருவம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பலவானது. அதனால் குழப்பம் விளைந்தது. இக் குழப்பத்தினால் தெளிவு பிறந்தது.
உருவம் இல்லாமல் அருவமும் இல்லாமல் உருவமும் அருவமும் கலந்ததோர் சின்னம் அறியப்பட்டது. அதுவே இலிங்கத்
சிவலிங்கம் 1.

Page 8
திருமேனி. இன்னது என்று சுட்டிக் கூற முடியாதவாறு உருவம், அருவம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து உள்ள மெய்க்கடவுளே பரமசிவம். உருவமாகவும் இல்லாமல் அருவமாகவும் இல்லாமல் உள்ள அருவுருவமே லிங்கம் என்னும் மெய்ப்பொருள். அங்கம் எதுவும் இல்லாத அரும் பொருள் ஆதலாலும், கண்ணுக்குப்
புலப்படும் உருவமாக இருப்பதாலும் லிங்கம் அருவுருவமாகும்.
இந்த சிவலிங்க வழிபாடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டது. மொகஞ்சதாரோ, ஹரப்பா, சீனா, சுமாத்ரா, ஜாவா முதலிய இடங்களில் சிவலிங்கங்கள் இருந்ததை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு உள்ளனர். பண்டைய லெமூரிய, அத்லாந்திக் ஆரிய நாகரீகங்களிலெல்லாம் லிங்க வழிபாடு பெரிதும் செய்யப்பட்டதாய் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பண்டைய லெமூரியத்தைச் சேர்ந்த பகுதியான ஆபிரிக்கக் கண்டத்திலும் சிவ வழிபாடே நடந்துள்ளது.
மனிதனின் பரிணாமம் ஆபிரிக்கக் கண்டம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள கென்யா என்ற நாட்டின் தலைநகரான நைரோபியில் சிவாலயமும், லிங்கமும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. வட ஆபிரிக்காவில் கொலரடோ ஆற்று முகத்துவாரத்தில் உள்ள பீடபூமியில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சிவாலயமும், லிங்கமும் உள்ளதாய் ஆராய்ச்சிக் குறிப்புகள் உண்டு. எனவே ஆராய்ச்சிகளின்படி இவ்வுலகத்தின் தொன்மையான வழிபாடு லிங்க வழிபாடு என்பதும் அந்த வழிபாடு எல்லாத் தேசங்களிலும் பேணப்பட்டுள்ளது என்பதும் தெரியவருகிறது.
“சிவன்’ என்ற சொல் ஒரு திராவிடச் சொல் எனக் கூறும் அறிஞர்கள் சிவப்பு நிறக் கடவுளையே இப்பதம் குறித்து நின்றது என்ற விளக்கத்தினைத் தந்துள்ளனர். அத்துடன் இச்சிவனே சிந்துவெளி நாகரீகத்திலிருந்து அகில இந்திய ரீதியில் செல்வாக்குள்ள கடவுளாக விளங்கினான் எனவும் எடுத்துக் காட்டியுள்ளனர். இச் சிவனின் குறியீடே லிங்க வடிவமாகும்.
இந்தியாவின் ஆதிகுடிகளான "ஒஸ்ரலோயிட்” இனமக்களின் வழிபாட்டில் யக்ஷ- நாக வழிபாடுகள் பிரதான இடத்தை வகித்தன. இவ் வழிபாட்டில் இயற்கைச் சக்திகளில் தெய்வங்கள் உறைகின்றன
2 சிவலிங்கம்

என்ற நம்பிக்கை காணப்பட்டது. இன்றைய இந்து சமயத்தின் அடி நாதமாக விளங்கும் உருவ வழிபாடு இவர்களுடையதே என எடுத்துக் காட்டும் அறிஞர்கள் (COOMARASWAMYAK.1971) லிங்க வழிபாடு கூட இவர்களதே எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். (MAJUMADER R.C. 1957-163).
சிந்துவெளி நாகரீகச் சமயம் பற்றிக் கூறும் போது அங்கு கிடைத்துள்ள முத்திரைகள் சிற்பங்கள் ஆகியன முக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன. இவை இங்கு சிவவழிபாடு காணப்பட்டதற்கான ஆதாரங்களாகும். இங்குள்ள முத்திரை ஒன்றில் யோக நிலையில் மூன்று முகங்களுடன் மகாயோகியாக இருக்கும் உருவம் உள்ளது. இவ்வுருவத்தின் தலைப்பகுதியில் இரு கொம்புகளும், இவற்றிற்கிடையில் பூங்கொத்தும் காணப்படுகின்றன எனக் கூறும் அறிஞர்கள் மகாயோகியாகிய சிவனேயே இது குறிக்கின்றது என்கின்றனர். இவ்விரு மருங்கிலும் உள்ள மிருகங்கள் பிற்காலத்தில் வளர்ச்சி பெற்ற சிவனின் பசுபதி மூர்த்தமாக இனங்காணப்பட்டுள்ளது. சிவனின் தலையிற் காணப்படும் இரு கொம்புகளும், பூங்கொத்தும் திரிசூலத்தினையே நினைவூட்டு கின்றன என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கைகள், கால்கள் ஒடிந்த நிலையில் ஒரு சிற்பம் பற்றி விளக்கமளித்த சேர் ஜோன் மார்ஷல் இது சிவனின் பிற்கால நடராஜ மூர்த்தத்தினை விளக்குகின்றது எனவும் ஊகித்துள்ளார். இதேபோல் லிங்க வழிபாடும் இங்கு சிறப்புடன் விளங்கியதை இங்கு கண்டெடுக்கப்பட்ட லிங்கங்கள் உறுதி செய்கின்றன. (ALL CHIN BANDALLCHIRF.R. 1982-214) 660036), 65535 6.5LITGB 6T6örugs) தொன்மையானது மட்டுமல்லாது உலக முழுவதும் பின்பற்றப்பட்ட வழிபாடு என்பதும் தெளிவாகின்றது.
லிங்கம் என்பதற்குக் குறி’ என்று பொருள். அது ஞானமயமான சிவனின் சின்னமே ஆகும். 'லிம்’ என்றால் தோன்றுமிடாகவும் 'கம்’ என்றால் தோன்றியவை மீண்டும் ஒடுங்குமிடம் எனவும் பொருள்படும்.
சிவலிங்கத்தில் பிரம்மா, விஷ்ணு சிவபாகங்கள் மூன்றும் அடங்கி உள்ளன. சிவலிங்கம் மூன்று கூறுகளை உடையது. அடிப்பாகம் நாற்கோணவடிவமாய் பூமிக்கு அதிபதியான சிருஷ்டிகர்த்தாவான பிரம்ம பாகத்தை உணர்த்துவதாகும்.
fauosólnánasuh 3.

Page 9
மத்திய பாகம் எட்டுப் பட்டங்கள் உடைய. அஷ்டகோண வடிவமாய் உள்ளது. வாமை, சேஷ்டை, ரெளத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, சர்வபூதசமனி என்னும் மகாவிஷ்ணுவின் எட்டு சக்திகளும் இதில் அடங்கியுள்ளன. இதனோடு பொருந்த இருக்கும் வடிவம் ஆவுடை.
இந்த ஆவுடையுடன் மனோன்மணியாகிய ஒன்பதாவது சக்தியும் சேர்ந்து மகா விஷ்ணுவின் நவசக்திகளாகி விடுகின்றன. அது நீருக்கு அதிபதியான காத்தல் எனப்படும் ஸ்திகள்த்தவான விஷ்ணு பாகத்தை உணர்த்துவதாகும்.
அரன் என்பதன் பெண்பாலே அரி என்பதாகும். அதனாலேயே 'அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயனார்க்கே’ என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திருமழிசையாழ்வார் தமது இயற்பாவிலே "மாதாய மாலவனை மாயவனை’ என்று அருளிச் செய்துள்ளார்.
அதனால்தான் நமது அப்பனாகிய சிவபெருமானது இடப்பாகம் நமது அம்மையாக விளங்கும் மகாவிஷ்ணுவின் பாகமாகவும், மாதொருபாகன், உமாமகேஸ்வரர், அர்த்தநாரி, சங்கரநாராயணர் என்ற ஆணும் பெண்ணும் சேர்ந்த அபூர்வ மூர்த்தங்களாகவும் அமைந்து திகழ்கின்றன
மேற்பாகம் நெருப்பிற்கு அதிபதியான அழித்தல் எனப்படும் த் ரெளபவம் , அருள் எனப்படும் அணுக் கிரகம் ஆகிய தொழில்களுக்கும் அதிபதியான சிவபாகம் ஆகும். இந்த மேற்பகுதி பாணம்' என்று வழங்கப்படும்.
பூமிக்கு அதிபதியான பிரம்மபாகம் பூமிக்குள் மறைந்து ஒடுங்கி நீருக்கு அதிபதியான விஷ்ணுவின் பாகத்தைத் தாங்கி நிற்கும். விஷ்ணு பாகம் அபிஷேக நீரைத் தாங்கி நிற்கும். நெருப்புக்கு அதிபதியான சிவபாகம் மேலோங்கி சோதி போன்று ஜொலித்துக் கொண்டிருக்கும். இம் மூன்றும் சேர்ந்து அருவமும் உருவமும் அற்ற ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் சோதி வடிவமே சிவலிங்கமாகும். இதுவே தேவர்கள் மூவரும் தோன்றும் சிவலிங்கம் எனப்படும்.
இந்தச் சிவலிங்கத்தை வழிபட்டால் பிரம்மாவை வழிபட்ட பலனையும், மகாவிஷ்ணுவின் பத்து திருஅவதாரங்களையும் வழிபட்ட
4. சிவலிங்கம்

பலனையும், சிவபெருமானினது இருபத்தைந்து மூர்த்தங்களையும் வழிபட்ட பலனையும் ஒருங்கே பெறலாம் என்பதை வேதாகமங்கள் வலியுறுத்துகின்றன.
புராண இதிகாசங்களும், அனுபூதிமான்களது அனுபவங்களும் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. அரசமரம் சுற்றிவரும் அன்பர்கள் சைவர்களாக இருந்தாலும் வைணவர்களாக இருந்தாலும் எல்லோரும் ஒன்று போல் சொல்லிவரும் மூலதோ ப்ரஹற்ம ரூபா, மத்தியதோ விஷ்ணு ரூபிணி, அக்ரஹ சிவரூபாய, விருஷ ராஜயதே நமஹ' என்ற மந்திரமும் சிவலிங்கத் தத்துவத்தின் உண்மையை நன்றாக வலியுறுத்துகின்றது. அல்லாமலும் உலகில் உள்ள எல்லாவகையான முட்டைகளும், ஜீவராசிகளின் தலைகளும், பிண்டங்களும், பூமியும், சந்திரனும், சூரியனும், நட்சத்திரங்களும், அண்டங்கள் யாவும், ஆகாயமும் சிவலிங்க வடிவின் மேற்பாகம் போல அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது."
மேலும் லிங்கம் எனப்படுவது அரூபமான இறைவனை உருவகப்படுத்திச் செய்யப்பட்ட வடிவம் என்றாலும், லிங்கத்திற்கும் முகங்கள் உண்டு என்றும், அந்த முகங்கள் தத்துவமயமானவை எனவும் ரிஷிகள் கூறுகின்றனர். சிவலிங்கம் ஐந்து முகங்களைக் கொண்டதாக உள்ளதை இதற்குச் சான்றாகக் கூறலாம். மேலும் தெய்வம், தேவர் முதல் தாவரம் வரையுள்ள ஜீவராசிகளின் நன்மைக்காகப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்கள் புரிந்து அறக்கருணையையும், மறக் கருணையையும் காட்டும் பரமேஸ்வரன்’ என்னும் ஆண் பாலாகக் காட்சி கொடுக்கின்றார். அதேபோன்று 'தாயுமானவர்’ என்னும் பெண் பாலாகவும், ‘அர்த்தநாரீஸ்வரர்' என்னும் இருபாலான அலியாகவும் விளங்குகின்றார். அதே போன்று பால் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட லிங்கம் எனும் பரம் பொருளாகவும் புலப்படுகின்றார்.
OJOJOJ
fenoblastih

Page 10
சிவலிங்கங்கள்
யாராலும் உருவாக்கப்படாமல் தானே வெளிப்படும் லிங்கங்களுக்கு சுயம்புலிங்கங்கள் அல்லது சிவலிங்கங்கள் என்று பெயர். எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு விளங்கியும், எல்லாமாக இருந்தும் எல்லாவற்றுடனும் உள்ள பரமசிவ மெய்ப் பொருளின் அருள்மேனியே சிவலிங்கம். எல்லாமாய் விளங்கும் பரமசிவத்தை ஒரு குறியின் இடமாக எழுந்தருளச்செய்து வணங்கும் பொருட்டே சிவலிங்கம் உருவானது.
பரசிவம் என்பது பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயமாகிய ஐம்பெரும் பூதங்களில் பரவி வியாபித்து உள்ளது. எல்லாமாய் செறிந்த சிவனை நாம் ஒரு குறியில் வைத்து வழிபடுதல் வேண்டும். அவ்வாறு வழிபடுவதற்கு திருவருள் துணை செய்தல் வேண்டும். இதைத் திருமூலர்,
குரைக்கின்ற வாரிக் குவலய நீரும் பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தியும் நினைக்கின்ற வாறறிவை நீண்டகன் றானை வரைத்து வலஞ்செய மாறறியேனே."
என்கிறார். ஒரு குறியில் வைத்து வழிபடுமாற்றலை நான் அறியேன் என்கிறார். இச் சிவலிங்கமானது ஐம்பூதங்களில் பரவி இருப்பதன் காரணமாக ஐம்பூதங்களுக்கும் ஐந்து தலங்களைக் காட்டி அங்கே எழுந்தருளியிக்கும் பெருமானை வழிபட முன்னோர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
அந்த ஐந்து தலங்களாவன காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் என்பனவாகும். இவை முறையே பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயத் தலங்களாகும்.
இவ்வாறு உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும் இறைவனாகிய சிவலிங்கத்தை நீர், மலர் கொண்டு போற்றித் தொழுது ஐம்புலன்களையும் வென்று வழிபட்டால் அவகதி நீங்கும். பரகதி உண்டாகும். துன்பங்கள் தீரும். சுயம்புலிங்கங்களுக்கு அகிரீத்மா (தோற்று விக்கப்படாதது) என்று பெயர்.
ിഖിribb

சுயம்பு லிங்கங்கள் உள்ள திருத்தலங்கள் எண்ணற்றவை. வடக்கே இமய மலையில் உள்ள ஜோதிர்லிங்கத் தலமான கேதாரம் முதல் தென்கோடி வரை நூற்றுக்கணக்கான சுயம்புலிங்கத் தலங்கள் உள்ளன.
வடக்கேயுள்ள அமரநாத் என்ற இயற்கையாக அமைந்த குகைக் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் பணியாலான சுயம்புலிங்கம் உருவாவதைக் காணலாம். இது கலியுகமான தற்காலத்திலும் கடவுள் வெளிப்படும் அற்புதத் திருத்தலமாகும். சென்னையை அடுத்துள்ள திருப்பாரூர் (திருப்பாச்சி) என்ற தலத்தில் மூங்கில் சுயம்பு லிங்கமாக உள்ளது. பாசு’ என்றால் மூங்கில், என்று பொருள். மூங்கில் சுயம்புலிங்க மூலவராக இருப்பதாலேயே இத்தலம் திருப்பாசூர் என்று பெயர் பெற்றது. இவ்வாறு கல்லால் மட்டுமன்று வேறு பொருட்களால் ஆன சுயம்பு லிங்கங்களும் பலப் பல உள்ளன.
யாவையுமாய் அல்லவையுமாம்
எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்து அவை அல்லையாய் நிற்கும் என்று கடவுளை மாணிக்க வாசகள் போற்றுகின்றார். நர்மதை நதியில் ஏராளமான லிங்கங்கள் உள்ளன. வடநாட்டுக் கோயில்கள் சிறியனவானாலும், பெரியனவானாலும், பழமையானதாக இருந்தாலும், புதிய கோயிலானாலும் சுயம் புலிங்கங்களே பிரதிட்டை செய்யப்படுகின்றன. ஆவுடையார் மட்டுமே வடிவமைக்கப்படுகின்றது.
இவ் வகையில் உருவான சிவலிங்கங்கள் முகமற்று உள்ளதாயினும் அதற்கு நான்கு வகையான முகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன (1) ஆட்யம் (2) அநாட்யம் (3) சுரேட்யம் (4) சர்வசம்
ஆட்யலிங்கம்:-
இறைவனை ஆயிரம் இதழ் தாமரை வடிவினன் என்று குறிப்பிடுவதே ஆட்யம். தாமரை மொட்டாக இருக்கும் பொழுது ஆட்யம் எனப்படுகிறது. ஆட்யம் என்பதற்கு ஆதியான லிங்கம் என்றும் பொருள் உண்டு. ஆட்யம் என்று கூறப்படும் லிங்கத்தில் ஆவுடைக்கு மேலிருக்கும் லிங்கபாகத்தில் மட்டும் ஆயிரம்
aanualrilash 7

Page 11
உருண்டை வடிவான லிங்கங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இந்த ஆயிரம் லிங்கங்கள் இறைவன் எண்ணிலடங்காத தன்மைகள் கொண்டவன் என்பதை உணர்த்தும்.
ஆட்யலிங்கத்தை சகஸ்ரலிங்கம் என்றும், முத்திலிங்கம் என்றும், மோட்சலிங்கம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆட்யலிங்கத்தைச் சகஸ்ரலிங்கம் ஆட்கொள்வதால் பிரம்மஹத்தி தோஷமும், கந்தர்வ, பிரம்ம, ராட்சத தோஷமும் நீங்கும்.
ஆட்யலிங்கத்தைப் போன்றே பலாக்கனியும் எண்ணிலடங்கா முகங்களைக் கொண்டுள்ளதால் பருத்த சிவபக்தர்கள் பலாக்கனியைச் சிவலிங்கமாக வழிபடுவர். கொட்டையூர் என்ற திருத்தலத்தில் இறைவன் பலாப்பழலிங்க வடிவமாக அருள்கிறார்.
அநாட்யலிங்கம்:-
முகமற்ற மொட்டையான லிங்க வடிவிற்கு அநாட்யம் என்று பெயர். அநாட்யம் என்பது அநாதி என்று பொருள்படும். எவராலும் உருவாக்கப்படாமல் தானே தோன்றிக் கொள்வது சுயம்பு என்றும், அநாட்யம் என்றும் அழைக்கப்படுகிறது. சுயம்புலிங்கங்கள் அநாதியானவையே. பாரத தேசத்தில் அனேக சுயம்பு ஸ்தலங்கள் உள்ளன. இறைவனின் திருமேனியில் அர்ச்சனைத் தளங்களாய்த் திகழும் வில் வத்தின் பழம் அநாட்யம் எனப்படுகிறது. வில்வவழிபாடு சுயம்புலிங்க வழிபாட்டிற்குச் சமமானது. பழுத்த சிவபக்தர்கள் வில்வ விருட்சத்தின் கீழ் ஒரு பஞ்சாட்சரம் உருச் செய்யும் போது இறை செயலால் தன்னுடைய கைகளில் விழும் வில்வக்கனியினை சிவஉருவாக எண்ணி வழிபடுவர்.
சுரேட்யலிங்கம்:-
சிவலிங்கத்தின் ஆவுடையின் மேற்பகுதியில் நூற்றி எட்டு செங்குத்து உருண்டை வடிவங்களைக் கொண்டது சுரேட்யம் எனப்படும். சந்திரனைத் தலையில் சூடிய இறைவன் அதனைச் சுற்றி இருக்கும் இருபத்தேழு நட்சத்திரங்களான தாராக் கூட்டத்தையும் ஏற்றுக் கொண்டார். ஒவ்வொரு நட்சத்திரங்களும் நான்கு பாதம் என்றபடி, இருபத்தேழு நட்சத்திங்களுக்கும் 108 பாதமாய் இறைவன் திகழ்கின்றான். சுரேட்ய லிங்கத்திற்குத் தாராலிங்கம் என்ற பெயரும் உண்டு. சுரேட்ய லிங்கத்தை வணங்க நட்சத்திர வயப்பட்ட கிரகதோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
8 சிவலிங்கம்

சிவனின் நேத்ரம் எனப்படும் ருத்ராட்சம் 108 முகங்களைக் கொண்டது. அதற்கும் சுரேட்யம் என்று பெயர்.
சர்வலிங்கம் = (சர்வசம்)
இதனைச் சர்வசம் என்றும் கூறுவர். இது ஒன்று முதல் ஐந்து முகங்களைக் கொண்டதாகும். முகலிங்கங்களை அமைக்கும் போது சிவலிங்கத்தின் பாணப்பகுதியில் முகத்தை மட்டுமே அமைக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனாலும் காலப் போக்கில் சிவனின் மார்பகம் வரையில் உருவம் செதுக்கும் நிலை தோன்றியது. தொடர்ந்து இரண்டு கரங்கள் வரையிலாக அமைக்கப்படலாயின. நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோயிலின் மூல லிங்கத்தில் சிவபெருமானின் திருஉருவம் மார்பு வரையில் இரண்டு திருக்கரங்களுடன் அமைந்திருப்பதைக் காணலாம்.
மேலும் சிவசாதாக்கிய நிலையில் சிவலிங்க வடிவின் நடுவில் பெருமான் நான்கு கரங்களில் மான், மழு, அபயவரத முத்திரைகள் தாங்கியவராய் விளங்கக் காணலாம். இதுவே வளர்ச்சியடைந்த திருவண்ணாமலையார் (லிங்கோற்ப) உருவமாயிற்று என்பர்.
நாட்டுப்புற அமைப்புக்களில் அமைந்த பல சிவலிங்கங்களின் நடுவில் முழு உருவில் சிவன் மட்டுமன்றி கணபதியையும் அம்பிகையையும் கூட அமைத்துள்ளனர். திருவானைக் கோயிலின் தெற்குப் பிறகாரத்தில் உள்ள 108 லிங்கங்களில் ஒரு லிங்கத்தில் விநாயகப் பெருமானும், ஒரு லிங்கத்தில் முருகப் பெருமானும் அமைந்திருப்பதைக் காணலாம்.
நாட்டுப்புறத் தெய்வங்களான பிடாரி, காளி ஆகிய தேவியர்களும் சிவ வழிபாடு செய்வதாகவும், சிவ நிலையில் ஒன்றியதாகவும் கூறப்படுகின்றது. இதனை காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் ஆலயத்தில் தனிச் சந்நிதியாக உள்ள சுந்தரி அம்மன், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் ஆலயத்தில் வடவாயிற் செல்வி ஆலயம், திருவக்கரை சந்திரமெளலீஸ்வரர் கோயில் வக்ரகாளியம்மன் ஆலயம் ஆகியவற்றில் காணலாம்.
இந்நிலை வளர்ந்து காலப்போக்கில் பிடாரியை சிவலிங்கத்தில் அமைக்கும் வழக்கம் வந்தது. ஆனால் இம்முறை அன்பர்களால்
Aenuoóriasuh 9

Page 12
ஏற்கப்படவில்லை. எனினும் காஞ்சிபுரத்தில் பிடாரியைத் தன் பாணப் பகுதியில் கொண்ட சிவலிங்கம் ஒன்று உள்ளது. ஆதிபீட காமாட்சியம்மன் கோயில் என்றழைக்கப்படும் காளிகாம்பாள் கோயிலில் முன் மண்டபத்தில் ஒரு மேடைமீது அமைந்துள்ள இந்த லிங்கம் சக்தி லிங்கம் என்றழைக்கப்படுகிறது.
இதன் பாணப் பகுதியின் முகப்பில் பிடாரி அமைக்கப்பட்டுள்ளாள். அவள் நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள். மேலிருகரங்களில் பாசம் அங்குசம், கீழ்க்கரங்களில் கத்தி கபாலமும் ஏந்தி உள்ளார். இது போன்ற சக்திலிங்கத்தை இங்கு தவிர வேறு எங்கும் காண முடியவில்லை. இந்த வகையில் இது ஒர் அபூர்வமானலிங்கமேயாகும்.
திருமுலரின் சிவலிங்கங்கள்
வட நாட்டிலிருந்து வந்து தமிழ்த் தொண்டு புரிந்த ஆரியர்களில் ஒருவரான திருமூலர் என்ற முனிவர் திருமந்திரம் என்ற ஆகம நூலில் பலவகையான லிங்க அமைப்புகளை போற்றுகின்றார். அவை அண்ட லிங்கம், பிண்டலிங்கம், சதாசிவலிங்கம், ஆத்மலிங்கம், ஞானலிங்கம், சிவலிங்கம் எனப் பலவகைப்படுகின்றன. அவைபற்றிக் காணலாம்.
elasLeab:-
உலகம் உருண்டையாக இருப்பதால் அண்டம் எனப்பட்டது. பிரம்மதேவனும், விஷ்ணுவும் அடிமுடி காணமுடியாத வகையில் அனைத்து உலகங்களையும் கடந்து சென்று, அனைத்து உலகங்களிலும் ஒளிபரப்பிய ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெரும் சோதியே அண்டலிங்கமாகும். குறிப்பிட்ட ஒரு உருவம் இல்லாத பரமசிவனது அருவுருவ வடிவமான லிங்கப்பரம் பொருள் எட்டுத் திசைகளிலும் அறுபத்து நான்கு கலைகளாகவும், அனைத்துச் சக்திகளாகவும், அனைத்துக் குணங்களாகவும் உள்ளது. போகமும் முக்தியும், சித்தியும், புத்தியும் கொண்டு நிலம் முதல் நாதம் வரையிலான முப்பத்தாறு பொருட்களுக்கும் அப்பாற்பட்ட ஏகாந்த நிலையையும் வழங்குகின்றது.
லிங்கப் பரம் பொருளானது கிரியை வழிபாட்டிற்காகப் பல்வேறு பொருட்களால் உருவாக்கப்பட்டுப் பூசை செய்யப்படுகின்றது.
O afshuesSrilasLib

எண்ணற்ற தெய்வங்களாலும், தேவர்களாலும் சதா சர்வ காலமும் பூசை செய்யப்படுகின்றது. கல், மண், முத்து, மாணிக்கம், பவளம், திருநீறு, சாதம், தயிர், நெய், பால், மெழுகு, செம்பு, நெருப்பு, சாறு, நீர், செங்கல், வில்வம், பொன், சந்தனம், மஞ்சள் ஆகிய பொருட்களால் லிங்கம் அமைக்கப்படும். இவ்வாறு ஒருவரால் உருவாக்கப்படும் லிங்கங்கள் "கிரீத்திமா எனப்படும்.
அந்தணர்களுக்கு ஸ்படிகலிங்கமும், அரசர்களுக்கு தங்க லிங்கமும், வணிகர்களுக்கு கோமேதக லிங்கமும், பிற பிரிவினர்களுக்குப் பாணலிங்கமும் வழி பாட்டிற்கு மிகவும் சிறப்பானவையாகும். இராவணன் தான் செல்லும் இடம் எல்லாம் தங்கலிங்கத்தை வைத்துப் பூசை செய்வதை இராமாயணம் கூறுகிறது. இலங்கையை ஆண்டதனால் இலங்கை முழுவதும் லிங்கங்களை ஸ்தாபிக்க வேண்டி நேரிட்டது என்றும் அதனாலேயே இலங்கை சிவபூமி எனப்படுகிறது என்றும் கூறும் கருத்து உள்ளது.
பிண்டலிங்கம்:-
பிண்டம் என்றால் சதை, உடல் என்னும் பொருளாகும். அமர்ந்துள்ள மனித உடல் லிங்கவடிவில் உள்ளது. கண்களை மூடிப் பரமனை தியானம் செய்து யோகத்தில் அமர்ந்துள்ள மனித உடலில் உள்ள உள்ளத்தில் பரமேஸ்வரன் குடிகொள்ளும் போது அது லிங்கமாகின்றது. அப்போது பிண்டலிங்கம் எனப்படுகின்றது. செம்பொருளை நினைந்து தூய்மையாக வாழும் போது அண்டலிங்கத்தில் லிங்கோற்பவர் வெளிப்பட்டுக் காட்சி கொடுத்தது போன்று பிண்டலிங்கத்திலும் ஈசன் புகுந்து ஆத்மாவை ஆட் கொண்டு அருள் புரிகின்றார்.
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்’
என்று பிண்டலிங்கத்தைத் திருமூலர் தெரிவிக்கின்றார்.
சதாசிவலிங்கம்:-
நடராஜப் பெருமானது உடுக்கையிலிருந்து ஓங்கார ஒலி தோன்றுகின்றது. லிங்கப் பரம்பொருள் ஓங்கார வடிவமாகும். ‘அ’, ‘உ’, ‘ம்‘ என்ற ஓங்காரநாதத்தின் ஓங்கார ஒலியின் வடிவமே லிங்கப் பரம் பொருள். லிங்கத்தின் மேற்பகுதி அகரமாகும், ஆவுடையார் எனப்படும் நடுப்பகுதி உகரமாகும். பீடமாக உள்ள கீழ்ப் பகுதி மகரமாகும். ஓங்காரத்திற்கு
சிவலிங்கம் 11

Page 13
விந்துவும் நாதமுமாக லிங்கம் உள்ளது. ஓங்கார லிங்கமே சதாசிவலிங்கமாகும். .
இலிங்க நற்பிடம் இசையும் ஓங்காரமும்
என்பது திருமந்திரம். ஓங்காரேஸ்வரனுக்கு உரிய ஓங்கார ஒலியே எலி லாத் தெயப் வங்களுடைய பெயர் களுக்கு முனி பயன்படுத்தப்படுகிறது. ஓங்காரமான லிங்கத்தை வழிபடும் போது பரமசிவம் ஐந்து முகங்களும், பத்துக்கரங்களும் கொண்டு காட்சி தருகிறார். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்ற இந்த ஐந்து முகங்களும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு நடுவே உச்சி என்று அமைந்துள்ளன. இதுவே ஆகமங்களை அருளிச் செய்த வடிவமாகும்.
வேதங்கள் ஆறு அங்கம், சரியை முதலான நான்கு நெறிகள், சமயங்கள், இராசிகள், மண் முதலாக நாதம் வரை விரிவாகக் கூறப்படும் தொண்ணுாற்று ஆறு பொருட்கள், சந்திரமண்டலம், தாவரசங்கமங்கள், பராசக்தி முதலான எல்லா விதமான சக்திகள் ஆக அனைத்துமாக இருப்பது சதாசிவலிங்கம்.
ஆத்மலிங்கம்:-
உடலை இயங்கச் செய்வது உயிர். அந்த உயிருக்கும் உயிராக இருந்து இயங்கச் செய்வது ஆத்மலிங்கம். ஆத்மலிங்கம் அகரம் முதலாக எல்லா எழுத்தாகவும், எல்லாமாகவும் இருக்கின்றது. நிற்கின்ற, நகள்கின்ற உயிரினங்களுக்கு எல்லாம் ஆத்மாவாக உள்ளது.
'அகர முதலின் எழுத்தாகி நின்றாய்
என்று சுந்தரர் போற்றுகின்றார்.
பராசக்தி நாள் தோறும் பூசை செய்து வணங்குவது ஆத்மலிங்கத்தையே. இது நிலம் முதல் நாதம் வரையிலான முப்பத்தாறு தத்துவங்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றது.
பிரம்மனும், விஷ்ணுவும் எட்டுத் திசைகளிலும் தேடித் திரிந்தாலும் காண முடியாத சோதி வடிவமான லிங்கப் பரம்பொருள் பக்தியோடு வழிபடும் அன்பர்களின் உயிருக்கு உயிராக இருந்து இன்பம் பொழிகின்றது.
எல்லா உயிர்கட்கும் உயிரே" என்னும் திருவாசகம் ஆத்ம லிங்கத்தைப் போற்றுகின்றது. பிறப்பு இறப்பின் ஆதாரமும் இதுவே. எது ஒன்றுடன் ஆத்மலிங்கம்
12 floories

சேர்கின்றதோ அது ஜீவனாகின்றது. எது ஒன்றைவிட்டு ஆத்மலிங்கம் நீங்குகின்றதோ அது சவமாகின்றது. ஆத்மலிங்கத்தின் திருவருள் இருக்கும் போது இறந்தவர்களும் மீண்டும் உயிர் பெற்று வாழ்கின்றனர். தட்சன், மன்மதன், பூம்பாவை, மனுநீதிச் சோழன் மகன் மந்திரி, கன்று, சிறுத் தொண்டரின் மகன், சீராளன் அப்பூதியடிகளின் மகன், முதலை விழுங்கிய மகன், பாம்பு தீண்டி இறந்த வணிகன் மகன் போன்றோர்கள் இதற்கு உதாரணமாகும்.
ஞானலிங்கம்:-
தோற்றம், அவதாரம், பிறப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட சிவம் எல்லோருக்கும் குருவாக இருந்து ஞானம் அருளிச் செய்வது ஞானலிங்கமாகும். பரமனைக் குருவாகப் பெறும் வழிக்கு ஞானமார்க்கம் என்பது பெயராகும். சனகள், சனாதனர், சதாநந்தர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்கள் ஞானலிங்கத்தைப் பூசை செய்து வேதங்களின் மெய்ப்பொருளை உணர்த்துமாறு வேண்டினர்
பரமேஸ்வரன் ஆலமரநிழலில் ஆசானாக வெளிப்பட்டு தென்திசையில் அமர்ந்து நான்கு முனிவர்களுக்கும் வேதப் பொருளை மெளனத்தால், சின்முத்திரையால் உணர்த்தியருளினார். இதனால் பரமனுக்கு ஆலமர் செல்வன், பரமகுரு, தட்சணாமூர்த்தி, வேதநாயகன், வாலறிவன் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்தன.
சதாசர்வகாலமும் ஞானலிங்கத்தை ஞானேஸ்வரனை நினைத்து வாழ்பவர்களுக்குப் பரப்பிரம்மம் தட்சிணாமூர்த்தியாக வெளிப்பட்டு ஞானம் அருளிச் செய்கின்றது. சிவஞானம் பெற்றவர்கள் சிவத்துடன் கலந்து சிவமாகி முக்தி பெறுகின்றனர். மீண்டும் வந்து பிறக்காத பேரின்பப் பெருவாழ்வு பெறுகின்றனர்.
"மெய்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
என்று மாணிக் கவாசகப் பெருமான் ஞானலிங்கத்தை, ஞானேஸ்வரனைப் போற்றுகின்றார்.
"வாலறிவன் நற்றாள்' என்று திருவள்ளுவர் வாழ்த்துகின்றார்.
OJJJ
afesuesShnÄuasib 13

Page 14
முகலிங்கங்கள்
முகலிங்கங்கள் என்பன ஒன்று முதல் ஐந்து முகங்களைக் கொண்டதாக உள்ளன. இத்தகைய முகலிங்கங்கள் அபூர்வமாகவே வழிபடப்படுகின்றன. இவை,
ஒரு முகம் கொண்ட ஏகமுகலிங்கம் இரண்டு முகம் கொண்ட துவிமுகலிங்கம் மூன்று முகம் கொண்ட திரிமுகலிங்கம் நான்கு முகம் கொண்ட சதுர்முகலிங்கம் ஐந்து முகம் கொண்ட பஞ்சமுகலிங்கம்
என ஐந்து வகைப்படுகின்றன. ஆறாவது வகையான ஷண்முகலிங்கம் என்ற லிங்கமும் உண்டு. ஆனால் இதனை வழிபடுகிற வழக்கம் காணப்படவில்லை.
முகலிங்கங்களில் உள்ள முகங்கள் சிவபெருமானின் வடிவமான பஞ்சப் பிரம்மங்கள் எனப்படும். சத்யோ ஜாதர், அகோரர், தத்புருஷர், வாமதேவர், ஈசானர் என்ற ஐவரின் திருமுகங்கள் என்பர்.
ஏகமுக லிங்கம் :-
உலக உற்பத்திக் காகச் சிவபெருமான் கொள்ளும் பஞ்சாதாக்கிய நிலைகளில் மூன்றாம் நிலையில் ஒரு முகமுடைய வராக சிவபெருமான் லிங்கத்தின் வடிவில் தோன்றுகிறார். இந்நிலையே ஒரு முகலிங்கம் உருவாக்குவதற்குக் காரணம் என்பர். இம் முகம் கிழக்கு நோக்கிய தத்புருஷம் எனப்படும். இந்த இலிங்கத்தை ஏகமுகலிங்கம் என்றும், தத்புருஷலிங்கம் என்றும் அழைப்பர். இது வெண்மை நிறமும், எல்லையில்லாத சாந்த குணமும் கொண்டதாக அமைகிறது.
ராஜபதவியை விரும்புவர்களும், அவழ்ட ஐஸ்வரியங்களை விரும்புவர்களும் இந்த தத்புருஷலிங்கத்தை வழிபடுவர். இந்த லிங்கம் ஆலயத்தின் நிருதி மூலையில் அமைவதாகும். இதனால் இதனை நிருதி லிங்கம் என்றும் அழைப்பர். நிருதி மனிதனை வாகனமாகக் கொண்டவன். எனவே அவனால் தொழப்படும் இந்த லிங்கத்தை வணங்குபவர்கள் மனிதர்களுக்கு அரசனாகி அவர்களை அடக்கி ஆளலாம் என்று நம்புகின்றனர்.
14. சிவலிங்கம்

ஏகமுகலிங்கம் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவில்
afenjoyslijasih
15

Page 15
18
W
محبر
Չէ,
w
室
ミ
S
e
Y
l
獸
混變
S2 多 究
ليعة ジ 多 多 参 多 る。 Vays:away MINA KXXX&XXXX 3 《༡༡༡༡༡ཏཏ༡ཏ༡༡་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་༽། 42ZZ22222
Za.
**子・エ・ペ
சிவாகமம் கூறும் பஞ்சமுகலிங்கம்
சிவலிங்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சதுர்முகலிங்கம் சதுர்முகலிங்கம்
திருக்காளத்தி நேபாளம், பசுபதிநாதர் கோவில்
பஞ்சமுக லிங்கம் விரிஞ்சிபுரம் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்
17

Page 16
தென்னகத்தில் மூலவராக வைத்து வழிபடும் நிலையில் ஏகமுகலிங்கம் இல்லை. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் பெரிய நாயகள் சந்நிதிக்குத் தெற்கில் நிருதி மூலையில் ஒரு ஏகமுகலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தில்லைச் சிற்றம் பலத்தில் ரகசியத்திற்கு அருகில் ஒரு முகலிங்கம் அமைந்துள்ளது. இதில் பாணப் பகுதி பாணலிங்கமாகவும், முகம் தங்கத்தாலும் அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகம் , கேரள மாநிலங்களில் லிங் கத்திற்கு உருத்திரபாகத்தில் முகம் இல்லாவிட்டாலும் வெள்ளி, அல்லது பொன்னாலாகிய கண், மூக்கு, மீசை, வாய் இவற்றை வைத்து முகங்களை அமைக்கின்றனர். சில தலங்களில் முகம் போன்ற கவசங்களும் அமைக்கப்படுகின்றன.
சுசீந்தரம் தாணுமாலய சுவாமி ஆலயத்தில் கவசத்துடன் காட்சியளிப்பதைக் காணலாம்.
இந்த லிங்கங்களுக்கு ஏக முக உருத்திராக்கங்களில் 11, 121 ஆகிய எண்ணிக்கையில் கோர்க்கப்பட்ட உருத்திராக்க மாலையணிவித்து, வில்வதளங்களால் ஆராதித்தால் சிறந்த செல்வங்களையும் மன அமைதியையும் பெறலாம்.
பண்டைக் காலத்தில் முகலிங்கம் அமைத்து வழிபட்டதைப் பற்றிய நேரடியான குறிப்புகள் சமய நூல்களில் இல்லையென்றாலும், கண்ணப்ப நாயனாரின் கதையை நோக்கும் போது முகலிங்கங்கள் வழிபாட்டில் இருந்ததை உணரமுடிகிறது.
காளத்தி மலையில் எழுந்தருளியிருந்த குடுமித்தேவரின் லிங்கத்தின் கண்களில் இருந்து இரத்தம் வடிவதைக் கண்டு தன் கண்ணைப் பெயர்த்து அப்பியதும், அதன்னத் தொடர்ந்த வரலாறும் நோக்கத்தக்கதாகும். இதனால் காளத்தியில் இருந்த லிங்கம் முகலிங்கம் என்பது அறியப்படுகின்றது. இதையொத்துப் பல ஆலயங்களில் முகலிங்கங்கள் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலத்தில் திருவக்கரை சந்திரமெளலீஸ்வரர் ஆலயத்தைத் தவிர ஏனைய இடங்களில் முகலிங்கங்களைக் காணமுடியவில்லை. காளத்தியிலும் இப்போது ஒரு முகலிங்கமும் மூலஸ்தானத்தில் இல்லை."
18 fouoÚSlňIasih

சகல தத்துவத்தையும் தன்னுள் ஐக்கியப்படுத்தி பரமாத்மாவாகத் திகழ்வது ஏகமுகம் என்கிற இறை லிங்கமே. இறைவன் ஒருவனே என்றும், அவனே சகலமுமாய் விளங்குகின்றான் என்பதையும் குறிக்கும்."
துவிமுக லிங்கம் :-
சிவலிங்கத்தின் பாணப்பகுதியில் கிழக்கிலும் மேற்கிலும் இரண்டு முகங்கள் அமையப்பெற்றதே இரு முகலிங்கமாகும். இதிலுள்ள கிழக்கு முகம் தத் புருஷம் என்றும், மேற்குமுகம் சத்யோஜாதம் என்றும் அழைக்கப்படும்.
தியாகம் புரிய நினைப்பவர்களும், உலகிற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களும் இந்த லிங்கத்தை வழிபடுவர். குறிப்பாக வீர சைவர்களே சத்யோஜாத முகத்தை வழிபடுவார்கள். ஆதலின் இருமுகலிங்கம் அவர்களுக்கே உரியதாகும். இதனை மந்திரலிங்கம் எனவும் அழைப்பர். இதன் சந்நிதிக்கு கிழக்கிலும் மேற்கிலும் வாயில் அமைக்க வேண்டும் என்பது விதியாகும்.
இந்த லிங்கத்தை இரட்டை முக உருத்திராட்ச வடம் சூட்டி இருவாட்சி மலர்களால் அலங்கரித்து வழிபட்டால் தியாகம், தொண்டு செய்கிற மனமும், புகழும் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.
வழக்கத்தில் ஆலயங்களில் எங்கும் இத்தகைய இருமுக லிங்கம் இல்லை.
திரிமுக லிங்கம்:-
சிவலிங்கத்தின் பாணப்பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்டது மும்முக லிங்கம் எனப்படும்.
இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷம் என்றும், தெற்கிலுள்ளது அகோரம் என்றும், வடக்கில் இருப்பது வாமதேவம் என்றும் பெயர் பெறும். இந்த மூன்று முகங்களில் கிழக்கில் உள்ளது ஆண்மையுடன் புன்னகை புரிவதாகவும், வடக்கில் உள்ளது பெண் சாயலுடன் மந்தகாசம் கொண்டதாகவும், தெற்கிலுள்ளது கறுத்து விழித்த கோபவடிவம் கொண்டதாகவும் அமைக்கப்படும்.
afenjasinkiash 19

Page 17
இந்த லிங்கம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலைச் செய்யும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் ஆகியோரின் முகங்களைத் தன்னுள் கொண்டதென்பர். எனவே இது திரிமூர்த்திலிங்கம் என அழைக்கப்படுகின்றது.
எலிபெண்டா குகையில் மூன்று முகங்களைக்கொண்ட பெரிய வடிவம் உள்ளது. இதனை அங்கு சதாசிவர் எனக் குறித்துள்ளனர். மூன்று முகங்களை உடைய லிங்கம் தென்னார்க்காடு மாவட்டத்தில் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள திருவக்கரை என்னும் பாடல் பெற்ற திருத்தலத்தில் உள்ள சந்திர மெளலீஸ்வரர் ஆலயத்தின் கருவறையில் மூலமூர்த்தியாக அமைந்துள்ளது. இது போல மூலமூர்த்தியாக திரிமுகலிங்கம் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகிய திரியம்பகத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது மூன்று முகங்களைத் தங்கத்தால் கவசமாக அணிவித்துள்ளனர். ஈரோடு நகரில் அமைந்துள்ள மகிமாலீசுவரர் ஆலயத்தில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்க சந்நிதியில் அமைந்துள்ள திரியம்பகலிங்கமும் மூன்று முகங்கள் கொண்டதாக அமைக்கப் பட்டுள்ளதைக் காணலாம். இதனைத் தத்துவத் திரியம்பக லிங்கம் என்றும் கூறுவர்.
இத் திரிமுகலிங்கத்திற்கு மூன்று வேதங்களை ஓதி திரிமுக உருத்திராக்கத்தை அணிவித்து மூன்று தளவில்வங்களால் அருச்சனை புரிய எண்ணில்லாத செல்வங்களை அடையலாம் என்பர்.
சதுர்முக லிங்கம் :-
இந்த லிங்கத்தின் பாணப்பகுதியில் நான்கு திசைகள் நோக்கியவாறு நான்கு முகங்களை அமைப்பர். இதில் கிழக்கில் உள்ள முகம் சத்புருஷம். தெற்கில் உள்ளது அகோரம். மேற்கில் உள்ளது சத்யோஜாதம். வடக்கில் உள்ளது வாமதேவம் என்று அழைக்கப்படும்.
நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோயிலில் அமைந்திருப்பது இத்தகைய சதுர்முகலிங்கமேயாகும். இந்த லிங்கத்தின் முகங்கள்
2O fouoresh

மார்பு வரை இரண்டு கரங்களுடன் அமைந்துள்ளன. ஒரு கையில் ஜெபமாலையும், மற்றோர் கையில் அமுதகுடமும் உள்ளன. இந்த லிங்கத்தின் நான்கு முகங்களையும் நான்கு வேதத்தால் அர்ச்சித்துப் பூசை செய்கின்றனர். இந்த லிங்கம் அமைந்துள்ள ஆலயத்திற்கு நாற்புறமும் வாயில் அமைக்க வேண்டியது முறையாகும். நேபாளத்தில் நாற்புறமும் வாயிலைக் கொண்ட கோயிலே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அமையும் கோயில் நான்முகக் கோயில் என்று தமிழிலும் ‘சர்வதோ பத்ராலயம்' என வடமொழியிலும் அழைக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியின் ஒரு பகுதியாகிய திருவதிகையில் நான்முகக் கோயில் ஒன்று இருந்ததாக வீரட்டேசுவரர் கோயில் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. செங்கல்லால் ஆன அக்கோயில் சிதைந்து விடவே அக்கோயிலில் இருந்து நான்முகலிங்கம் பெயர்த்துக் கொண்டு வரப்பட்டு வீரட்டேசுவரர் கோயிலின் மாளிகைப்பத்தியில் தென் மேற்கு முனையில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இது கலையழகு நிரம்பியதாகும்.
மேலும் திருவண்ணாமலை, திருவானைக்காவல் முதலிய தலங்களில் சதுர்முகலிங்கம் அமைந்த சந்நிதிகள் உள்ளன. இச் சந்நிதிகளுக்கு நாற்புறமும் வாயில் அமைக்க முடியாத போது ஒரு புறம் வாயிலும் மற்றைய பகுதிகளில் ஜன்னல்களும் அமைத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசர் ஆலயத்தில் நடராசர் சந்நிதியையொட்டி ஒரு நான்முகலிங்கம் அமைந்த சந்நிதி உள்ளது. இந்த லிங்கத்தின் நான்கு முகங்களில் இருந்தும் நான்கு வேதங்களும் வெளிப்பட்டதால் இதனை வேதலிங்கம் என்றும் குறிப்பிடுகின்றனர். இதனைக் காஞ்சிப் புராணத்தால் அறியலாம்.
இந்த லிங்கத்தை நான்கு முக உருத்திராட்சத்தால் அலங்கரித்து நால் வகை வில் வங்களால் அர்ச்சிப்பவர் எட்டுத்திக்கிலும் புகழ் பரப்பும் பெரிய அறிஞனாக விளங்குவர் என்பது நம்பிக்கையாகும்.
afß6Qu6ÖhrÄIasub 2.

Page 18
ரீகாளத்தியில் கோயிலுக்கு அருகில் உள்ள குன்றின் சாரலில் மகேசுவரர் மூர்த்திகள் புடைப்புச் சிற்பமாக அமைந்த பாறை உள்ளது. அதன் மீது அமைந்த மண்டபத்தின் மேற்பகுதியில் நான்கு முகலிங்கம் அமைந்துள்ளது. இது மிகவும் கலையழகு நிரம்பியதாகும்.
இந்த லிங்கம் பிரம்மலிங்கம் எனவும் அழைக்கப்படும். இந்த லிங்கத்தை நான்கு முக ருத்திராட்சங்களால் அலங்களிப்பர்.
பஞ்சமுக லிங்கம் :-
நான்கு முகலிங்கங்களையே வழக்கத்தில் பஞ்சமுகலிங்கம் என அழைக்கின்றனர். உண்மையில் பஞ்சமுகலிங்கம் வேறானது. இது நான்கு திசைகளில் உள்ள நான்கு முகங்களுடன் கிழக்குத் திக்கில் உள்ள முகத்தின் மீது ஐந்தாவது முகத்தைக் கொண்டதாக விளங்குகின்றது. அபூர்வமாகவே இத்தகைய லிங்கங்கள் அமைக்கப்படுகின்றன.
வேலூர் அம்பேத்கர் மாவட்டத்தில் உள்ள விரிஞ்சிபுரம் மார்க்க சகாய ஈசுவரர் ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் அமைந்த ஒரு சந்நதியில் பஞ்சமுகலிங்கம் அமைந்துள்ளதைக் காணலாம்
பூரி கயிலாயத்தில் உள்ள மகா சிவாலயத்தில் பஞ்சமுகலிங்கம் ஒன்று இருப்பதாகவும், அதன் ஐந்து ஜடபாரங்களில் இருந்தும் ஐந்து கங்கைகள் பொங்கி வருகின்றன என்றும் சிவரகசியம் கூறும். அந்த ஐந்து கங்கைகளே பஞ்சகங்கை எனப்படும்.
வடநாட்டில் இந்நாளில் கட்டப்பட்ட பல ஆலயங்களில் பஞ்சமுகலிங்கம் அமைக்கப் பட்டுள்ளதைக் காண்கிறோம்.
இந்த லிங்கத்திற்கு ஜம்முக உத்திராட்சத்தால் விதானம், மாலை ஆகியவற்றை அமைத்து பஞ்சகவ்யத்தால் அபிஷேகித்து, பஞ்சவில்வத்தால் அர்ச்சித்து, பஞ்சவித உபசாரம் செய்து, பஞ்ச அன்னங்களை நிவேதித்து வழிபட உலகம் வசியமாவதுடன் எண்ணிய எல்லா நலமும் பெறலாம் என்பது நம்பிக்கையாகும். இந்த ஐந்து முகங்களில் இருந்து ஆகமங்கள் வெளிப்பட்டதால் இதனை சிவாகமலிங்கம் எனவும் அழைப்பர்.
22 சிவலிங்கம்

சிவாகமங்களில் பஞ்சமுகலிங்கத்தில் உள்ள முகங்கள் பரசிவத்திடமிருந்து முதலில் தோன்றிய ஐந்து சாதாக்கிய மூர்த்திகளின் முகங்கள் என்று கூறப்பட்டுள்ளது. அது பற்றி இனிப் பார்க்கலாம்.
பரசிவத்திடமிருந்து முதலில் தோன்றிய அதாசிருதர், அநாகதர், அநந்தர், வியோமரூபர், வியாபகர் என்னும் மூர்த்திகள் ஐவரும் அவரிடத்தில் தோன்றிய ஐந்து சக்திகளான பராசக்தி, ஆதிசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி, இச்சா சக்தி ஆகியோரைத் துணை கொண்டு ஐந்து சிவசாதாக்கியங்களைத் தோற்றுவித்து அவர்கள் மூலம் ஐந்தொழிலாகிய படைத்தல், காத்தல், அருளல், அழித்தல், மறைத்தல் எனும் ஐந்தொழில்களையும் இயற்றி வருகின்றனர். இவர்களுடைய திரு முகங்களே பஞ்சமுகலிங்கத்தில் அமைந்துள்ள திருமுகங்களாகும் என்பர்.
இவர்கள் ஐவரும் ஐந்தொழில் புரியும் காலத்தில் முறையே பிரம்மா, விஷ்ணு, உருத்திரர், மகேச்வரர், சதாசிவர் என்று பெயர் பெறுவர். இவர்களின் திருமுகங்கள் அமைந்ததே இந்த முகலிங்கம் என ஆகமங்கள் கூறுகின்றன.
இந்த ஐவரும் ஐந்தொழில் புரிவதோடு தனக்கெனத் திருவுருவம் தாங்கி அத் திருவுருவத்திற்கான தனிப் பெயர் பூண்டு தமக்குரிய இடத்தில் வீற்றிருப்பர்.
பிரம்மா எனும் அநாசிருதர் பராசக்தியுடன் சகல ஆன்மாக்களின் உள்ளத்திலும் நீங்காது வீற்றிருப்பார்.
அநாகதராகிய விஷ்ணு பெரிய ஆமை வடிவமாக ஆதாரசக்தி என்ற பெயர் பூண்டு சகல புவனங்களையும் சுமந்து நிற்பார்.
அநந்தர் எனும் உருத்திரன் காலாக்னி உருத்திரதேவர் என்ற பெயருடன் சராசரங்களிலுள்ள அனைத்துப் பொருள்களையும் இருப்பிடமாகக் கொண்டு அதனை நடாத்துவார்.
வியோமரூபர் ஆகிய மகேச்சுவரன் கூர்மாண்ட தேவ நாயனார் என்ற பெயருடன் இருபத்தெட்டு கோடி நரகங்களுக்கு அதிபதியாக இருந்து அதனை ஆளுவார்.
Aouebarkuasih 23

Page 19
ஐந்தாவதான வியாபகர் என்னும் சதாசிவன் ஆடகேசுவரர் என்ற பெயருடன் பாதாளத்திற்கு அதிபதியாகி அங்குள்ளோர் தொழ வீற்றிருப்பார்.
இவ்வாறு தனித் தனி மூர்த்திகளாயும், அதே சமயம் மூல சிவத்தை விட்டு நீங்காதவர்களாகவும் இருப்பதைக் குறிக்கும் வகையில் பஞ்சமுகலிங்கம் அமைகிறது என்று ஆன்றோர் கூறுவர்.
இக்கருத்து சிவபராக்கிரமம் எனும் நூலில் முகலிங்கங்கள் என்ற தலைப்பில் காணப்படுகிறது.
இதுவரை ஆகம நூல்களில் கூறப்பட்ட சர்வசமம் என்ற முகலிங்கங்கள் பற்றிய செய்திகளைக் கண்டோம். இனி பல்வேறு வகைகளில் அமைத்து வழிபடும் வேறு வகையான லிங்கங்கள் பற்றிய செய்திகளைக் காணலாம்.
ஆறுமுக லிங்கம் :- (சண்முக லிங்கம்)
சிவபெருமானுக்கு ஆறுமுகங்கள் உண்டு. இவற்றில் நான்கு முகங்கள், நான்கு திக்குகளை நோக்கியும், ஐந்தாவது முகம் உச்சியில் வானத்தை நோக்கியும், ஆறாவது முகம் எப்போதும் பாதாளத்தை நோக்கியவாறும் அமைந்து இருக்கும். மேல் நோக்கிய முகம் ஊர்த்துவ முகம் என்றும், கீழ் நோக்கிய முகம் அதோமுகம் என்றும் அழைக்கப்படும்.
இந்த அதோமுகம் எண்ணிலடங்கா ஆற்றல் உடையது. வடவைத் தீயைப் போன்றது. அதனால் பக்தர்களின் கண்ணுக்குப் புலனாகாமல் கீழ் நோக்கியே இருக்கின்றது.
முருகப்பெருமானின் திரு அவதாரத்தின் போது பெருமான் ஐந்து முகங்களுடன், ஆறாவதான இந்த முகத்தையும் சேர்த்து அவற்றின் நெற்றிக் கண்களில் விளைந்த நெருப்புப் பொறிகள் மூலம் அவனை உற்பவித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
இதனைக் குமரகுருபர சுவாமிகள்,
ஐந்துமுகம் தந்து அதோமுகம் ஆறாக என்று கந்தர் கலிவெண்பாவில் அருளிச் செய்துள்ளார்.
24 சிவலிங்கம்

பாற்கடல் கடைந்த காலத்தில் பெருகி வந்த ஆலகாலம் பொங்கி எழுந்த போது அதனை உண்டதும் இத் திருமுகமேயாகும். ஆகையால் நடைமுறையில் பூரீகண்டத்தையே ஆறாவது முகமாகப் பாவித்து அர்ச்சிக்கின்றனர்.
நடைமுறையில் ஆறுமுகலிங்கம் எங்கும் அமைக்கப்பட்ட தாகவோ, வழிபடப்பட்டதாகவோ தெரியவில்லை.
பெருமானின் ஆறுமுகங்களில் இருந்து உண்டான முருகனே ஆறுமுகச் சிவனாகக் காட்சியளிக்கின்றார்.
UUU
சிவலிங்கத்துக்குள் சிவலிங்கங்கள்
இவ்வாறு பலவகைப்பட்ட சிவலிங்க வடிவில் ஒரு பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி முனிவர்கள், அருளாளர்கள் ஆகியோர் சிவலிங்கத்துக்குள் சிவலிங்கங்களை அமைத்து வழிபட்டனர். இது பற்றி இனிக் காண்போம்.
சிவாகம லிங்கம்:
சிவபெருமான் தனது ஐந்து முகங்களின் மூலமாக 28 சிவாகமங்களை அருளிச் செய்தார். இச்சிவாகமங்கள் யாவும் சிவ வடிவேயாகும். எனவே 28 சிவலிங்கங்களை 28 சிவகாமங்களாகப் பாவித்து வணங்குகின்ற வழக்கம் சிலரால் மேற் கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது இத்தகைய சிவலிங்கங்கள் பரவலாகக் காணப்படவில்லை.
பாடல் பெற்ற திருத்தலமான திருநெல்வாயில் அரத்துறை என்கிற தலத்தில் உள்ள சிவாலயத்தின் மேற்குப் பிராகாரத்தில் அமைந்துள்ள ஒரு லிங் கம் சிவாகம லிங் கம் என்று அழைக்கப்படுகின்றது. இதன் பாணப்பகுதியில் 28 சிவலிங்கங்கள் அமைந்தள்ளன. இந்த லிங்கத்தை வணங்குவோர் சிவாகமத் தேர்ச்சி பெற்றுச் சிவசொரூபம் எய்தி கயிலையங்கிரியில் சிறப்புடன் வாழ்வர் என்று கூறப்படுகிறது.
சிவலிங்கம் 25

Page 20
சத லிங்கம் :- (சதருத்ர லிங்கம்)
தன்னுள் நூறு லிங்கங்களைக் கொண்ட லிங்கமே சதலிங்கம் எனப்படும். இது எட்டுத்திக்கிலும், விண்ணிலும், பாதாளத்திலும் சஞ்சரித்துக் கொண்டு உலகினைக் காத்து வரும் சத்ருத்திரர்களால் வணங்கப்பட்ட லிங்கமாகும். எனவே இதனைச் சதருத்ரலிங்கம் என அழைப்பர்.
இந்த லிங்கத்தை உருத்திர மந்திரத்தால் 100 முறை அபிஷேகித்து 100 உருத்திராக்கங்களால் அலங்கரித்து வழிபட்டால் எல்லையற்ற ஆற்றலும், வலிமையும் உண்டாகும். பகைவர்கள் நாசம் அடைவர் என்று நம்பப்படுகிறது.
108 லிங்கம் :- (சுரேட்டயம்)
(அகடோத்திர லிங்கம்)
சிவலிங்கத்தின் நான்கு வகைகளில் இரண்டாவதாகச்
சொல்லப்பட்ட சுரேட்டயம் என்பது இந்த அஷ்டோத்திரலிங்கமாகும்.
இந்த லிங்கத்தின் பாணப்பகுதியில் 108 சிறு லிங்கங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைவதற்குப் பலவகையான
காரணங்கள் கூறப்படுகின்றன.
நூறு (சத) உருத்திரர்களாலும், அவர்களின் தலைவர்களான அஷடருத்திரர்களாலும் பூசிக்கப்பட்டு ஒன்றாக்கப்பட்டது. இதனை 108 லிங்கம் என்று நூல்கள் சில கூறுகின்றன. காஞ்சிபுரம், சிதம்பரம், திருவொற்றியூர் முதலிய அநேக தலங்களில் 108 லிங்கம் அமைந்துள்ளதைக் காண்கிறோம்.
சென்னைக்கு வடக்கேயுள்ள பொன்னேரியை அடுத்துள்ள சின்னக்காவணம் எனும் ஊரில் நூற்றெட்டீஸ்வரர் என்னும் சிவாலயம் உள்ளது. ஆனால் அங்குள்ள மூலவரான சிவலிங்கம் சாதாரணமாகவே உள்ளது. இதனை அகத்தியர் அமைத்தார் என்பர். அவர் நாள் தோறும் ஒன்று வீதம் 108 நாட்கள் 108 லிங்கங்களைப் பூசித்து, இறுதியில் அவற்றை ஒன்றாக்கி நூற்றெட்டீசுவரர் என்ற பெயரில் நிறுவினார் என்று கூறுவர்.
சகஸ்ர லிங்கம் :- (1000 முகலிங்கம்)
இந்த லிங்கம் ஆயிரம் முகங்களைக் கொண்டதாகும். சிவபெருமான் ஆயிரம் கரங்களையும், ஆயிரம் திருவடிகளையும்
28 felellatsh

ஆயிரம் முகங்களையும் உடையவர். இதனை,
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும் ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடையானும் ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடியானும் ஆயிரம் பேருகந் தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே எனும் அப்பரடிகளாரின் தேவாரப் பாடலால் அறியலாம்.
ஆயிரம் என்ற சொல் ஆயிரம் என்ற எண்ணைக் குறிப்பதுடன், அளவில்லாதது என்ற பொருளையும் கொண்டதாக உள்ளது. எண்ணிலா முகமும், பாதமும், கரங்களும் கொண்ட பெருமானை ஆயிரம் பெயர்களால் குறிக்கின்றோம். ஒரு லிங்கத்தில் ஆயிரம் முகங்களை அமைக்க வேண்டியதே முறையாகும். ஆனால் நடைமுறையில் முகங்களாக இல்லாமல் இதனைச் சிவலிங்கத்தின் பாணப்பகுதியில் சிறு சிவலிங்கங்களாகவே அமைக்கின்றனர்.
1001 லிங்கம்:- (ஏகாதிக சகஸ்ர லிங்கம்)
சிவாகமங்களில் சொல்லப்பட்ட நான்கு வகை லிங்கங்களுள் ஆட்யம் என்று சொல்லப்படும் லிங்கம் இதுவேயாகும். இந்த லிங்கத்தின் பாணப்பகுதியில் 1001 சிறு லிங்கங்கள் அமைந்துள்ளன. இது சிவபெருமான் எங்கும் பரந்திருக்கின்ற நிலையை உணர்த்துகின்றது.
1008 லிங்கம் :- (அவர்ட சகஸ்ர லிங்கம்)
சிவபெருமானின் எண்ணிலாது பரந்திருக்கின்ற ஆயிரம் முகங்களுடன் அளவிலா ஆற்றலும், வரம்பிலா சக்தியும் உடைய அஷ்டமூர்த்தியின் முகங்களையும் இணைத்து 1008 முகங்களைக் கொண்டதாக அமைந்ததே இந்த அஷட சகஸ்ரலிங்கமாகும்.
ஆயிரத்தெட்டு அண்டங்களில் உள்ள மகா லிங்கங்களை நினைவுபடுத்துவதாக ஆயிரத்தெட்டு லிங்கம் அமைவதால், இதற்கு அண்டலிங்கம் என்ற பெயரும் உண்டு.
நூற்றுக்கு மேற்பட்ட முகங்களை லிங்கத்தில் அமைப்பது நடைமுறையில் இயலாது என்பதாலும் அப்படியே நுணுக்கமாக
dRoueSiriasuh 27

Page 21
அமைத்தாலும் தினமும் அபிஷேகிக்கப்படும் லிங்கத்தில் அழுக்குப் படிந்து முகங்களை அறிய முடியாது போகும் என்பதாலும் முகங்களை அமைப்பதற்குப் பதில் அழகிய சிறுலிங்கங்களாகவே அமைக்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் நூற்றெட்டு லிங்கம், ஆயிரத்தெட்டு லிங்கங்கள் சிறப்புடன் உள்ளன. காளத்தி, திருவானைக்காவல் முதலிய தலங்களில் சகஸ்ர லிங்கங்கள் உள்ளன.
கோடி லிங்கம் :- (கோடிசுவரர்)
சிவபெருமான் அருளினால் தோன்றிய ஒரு கோடி உருத்திரர்கள் சிவபூசை செய்து பெருமானை வழிபட்டனர். அவர்கள் ஒவ்வொருவர் முன்னும் பெருமான் தனித் தனியே காட்சி கொடுத்தார். பின்னர் கோடிமுகங்களை உடைய சிவலிங்கமாகத் தோன்றினார். அந்த லிங்கமே கோடீஸ்வரலிங்கமாகும். இந்த லிங்கத்தின் பாணப்பகுதியில் (பலாக்காயின் மேற்பகுதியில் முட்கள் அமைந்திருப்பது போல) நெருக்கமாகச் சிறு முகங்கள் அமைந்துள்ளன.
இத்தகைய கோடிலிங்கம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவலஞ்சுழியை அடுத்துள்ள ஊரான கொட்டையூரில் உள்ள கோடீசுவரர் ஆலயத்தில் அமைந்துள்ளது.
பஞ்சலிங்கங்கள் :-
சிவபெருமான் ஐம்பூதங்களுக்கு நாயகன். எனவே அவனுக்குப் பூதநாயகன் என்பது பெயர். அவருக்கு ஐந்து முகங்கள். அந்த ஐந்து முகங்களில் இருந்தும் அவர் உலகினைப் படைத்து, காத்து, அருளி, மறைத்து, அழித்து ஐந்தொழில்களையும் நடத்துகின்றார். ஐம்பொறிகளான கண், காது, மூக்கு, வாய், மெய் என்கிற ஐந்தினாலும், நாம் இனிது வாழ அருள்பவரும் அவரே.
சிவபெருமானின் ஐந்து தொழில்களையும் நடத்தும் ஐந்து லிங்கங்களை வைத்து வழிபாடு செய்கின்றோம். இந்த ஐந்து லிங்கங்களும் பஞ்சபூதத் தலங்களில் உள்ள மண்லிங்கம், நீலிங்கம், காற்றுலிங்கம், நெருப்புலிங்கம், ஆகாசலிங்கம் என்பன நடைமுறையில் அத்தலங்களுக்குரிய மூர்த்தியின் பெயராலேயே இச் சிவலிங்கங்கள் அழைக்கப்படவேண்டுமென்பது மரபு. ஆனால் இவற்றை ஏகாம்பரேஸ்வரர், காளத்தியப்பர், அண்ணாமலையார்,
28 afloorish

சிதம் பரேசுவரர் , ஜம்புகேசுவரர் ஆகிய பெயர்களால் அழைக்கின்றோம்.
அனைத்துச் சிவாலயங்களிலும் இந்தப் பஞ்சலிங்கங்கள் இருக்க வேண்டும் என்பது பொதுவிதியாகும். திருவண்ணாமலை முதலிய பெரிய ஆலயங்களில் இச் சிவலிங்கங்களுக்குத் தனித்தனியே பெரிய சந்நிதிகள் அமைந்திருப்பதைக் காணலாம்.
இந்த ஐந்து லிங்கங்களையும் இப்போது ஒரே வகையான கல்லில் அமைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளோம். ஆனால் சிவ பூஜாவிதி நூல்களில் ஐந்து லிங்கங்களையும், ஐந்து வண்ணக் கற்களில் செய்து நிலைப்படுத்த வேண்டுமென்று கூறப்படுகிறது. உலோகத்தால் செய்யும் போது பொன், வெள்ளி, இரும்பு, செம்பு, ஈயம் ஆகிய வற்றில் கலப்பில்லாமல் செய்ய வேண்டும். பஞ்சரத்தினங்களாலும் சிவலிங்கம் செய்யப்பட்டு வணங்கப்பட்டு வரப்படுகிறது.
கொங்கு நாட்டுச் சிவாலயங்கள், முருகன் ஆலயங்கள் ஆகிய பெரும்பாலானவற்றில் பஞ்சலிங்கங்கள் தனித்தனிச் சந்நிதிகளில் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.
திரிமூர்த்திமலையில் உள்ள அருவியில் பெரிய பாறையின் அடியில் ஐந்து சுயம் புலிங்கங்கள் உள்ளன. இவை கோடைகாலங்களில் நீர் மிகக் குறைவாக இருக்கும் போது காணலாம் என்பர். எனினும் இந்தக் காட்டாற்றில் எப்போதும் நீர் இருப்பதால் இந்த லிங்கங்களைக் காண இயலாது என்பதால் அருகில் ஒரு மேடை அமைத்து அதன் மீது ஐந்துலிங்கங்களை அமைத்துள்ளனர்.
Ranuel Sir Afsh 29

Page 22
தாரா லிங்கங்கள்
முகலிங்கங்களைப் போலவே தனிச் சிறப்புவாய்ந்தவை "தாரா லிங்கங்கள் ஆகும். முகலிங்கத்தின் பாணப் பகுதியில் சிவபெருமானின் முகம் அமைந்திருப்பது போலவே தாராலிங்கங்களின் பாணப்பகுதியில் அழகிய பட்டைகள் அமைந்திருக்கின்றன. தாரா என்பதற்கு பட்டை' என்று பொருள் சொல்வர்.
இவ்வாறு பட்டைகளைத் தீட்டி தாராலிங்கங்களைச் செய்வது பல்லவ மன்னர்களால் மட்டுமே சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கின்றது என்பர்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், மதங்கீசர் கோயில், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தென்னார்க்காடு மாவட்டம் பனை மலைக் கோயில் ஆகியவற்றில நேர்த்தியான தாராலிங்கங்களைக் காண்கின்றோம்.
இவற்றைச் செய்வது கடினமாக இருந்ததாலும், இவற்றிலுள்ள பட்டைகள் காலப்போக்கில் மழுங்காமலிருக்க இவைகளைச் செய்ய உயர் வகைக் கருங்கற்கள் தேவைப்பட்டதாலும், பிற்காலத்தில் இந்த முறையில் லிங்கங்கள் அமைப்பது கைவிடப்பட்டது என்பர்.
சிவலிங்கங்களின் பாணப்பகுதியில் 4,8,16,32,64 ஆகிய எண்ணிக்கையில் ஐந்து வகையாகப் பட்டைகள் அமைந்துள்ளன. இப் பட்டைகளைத் தாரைகள் என்பர்.
நான்கு பட்டை லிங்கம்:-
பாணப்பகுதியில் நான்கு பட்ட்ைகள் கொண்ட சிவலிங்கம் வேதலிங்கம் எனப்படுகிறது. இந்த நான்கு பட்டைகளும் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. பாடல் பெற்ற தலமான சக்கரப்பள்ளி என்னும் ஊரில் மூலவர் சற்று சாய் சதுரமான நான்கு பட்டை லிங்கமாகக் காட்சியளிக்கின்றார்.
சிவபெருமான் மட்டுமன்றித் திருமாலும் கோவை மாவட்டம் காரமடை ரங்கநாதர் ஆலயத்தில் இத்தகைய நாற்பட்டை லிங்கமாகவே காட்சியளிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
30 சிவலிங்கம்

சகஸ்ரலிங்கம் (1001) எண்பட்ட லிங்கம்
திருவண்ணாமலை காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
அஷ்டோத்திரலிங்கம் 16 முக சோடசலிங்கம்
திருவண்ணாமலை தென்பொன்பரப்பி
சோடசலிங்கம் தென்பொன்பரப்பி
Renuexfilmälasub 31

Page 23
இது சர்வதோபத்திர தாரா லிங்கம் எனப்படும்.
அகடதாரா லிங்கம் :- (எண்பட்டை லிங்கம்)
எண் பட்டை லிங்கங்கள் பல்லவர்களின் ஆலயங்கள் அனைத்திலும் இடம் பெற்றுள்ளன. இதன் எட்டுப் பட்டைகளுள் முதல் வகையில் சிவப்ெருமானின் எட்டு இயற்கைத் தோற்றங்களான நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய எட்டையும் குறிக்கின்ற தென்றும்,
இரண்டாவதுவகையில் எட்டு பைரவசக்திகளைக் குறிக்கின்ற தென்றும்,
மூன்றாம் வகையில் இறைவன் எட்டு உருவில் நின்று நிகழ்த்திய அட்ட வீரட்டத்தை உணர்த்தும் எண் மூர்த் தங்களைக் குறிக்கின்றதென்றும் கூறுவர்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில், பனைமனைச் சுற்றாலயங்கள், சிதம்பரம் நவலிங்கம் சந்நிதியில் உள்ள எட்டுத் திசை லிங்கங்கள் ஆகியவற்றை எண்பட்டை லிங்கங்களாகக் காண்கிறோம்.
இத்தகைய லிங்கங்கள் அஷடதாரா லிங்கம் எனப்படும்.
கேரடச தாரா லிங்கம் :-
(10 பட்டைலிங்கம்)
பதினாறு பட்டைகளை உடைய லிங்கம் ஷோடச தாராலிங்கம்
எனப்படும். இது சந்திரனின் பதினாறு கலைகளையும் பதினாறு
பட்டைகளாகக் கொண்டது என்பர்.
இதனைச் சந்திர கலாலிங்கம் எனவும் கூறுவர். பல்லவர் காலத்தில் குளிர்ச்சி மிக்க கல்லைத் தேர்ந்தெடுத்து இவ்வகை லிங்கங்களை அமைத்தனர். பல தலங்களில் உள்ள இத்தகைய லிங்கங்களை உச்சி வேளைப் பொழுதில் தொட்டாலும் கூட சில்லென்று குளிர்ச்சியாய் இருப்பதை அனுபவபூர்வமாக உணரலாம்
66L T.
சிவலிங்கம்

சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் நவலிங்க சந்நிதியில் இவ்வகை லிங்கத்தைத் தரிசிக்கலாம். பழையாறை மேற்றளியில் உள்ள கோயிலில் பதினாறு பட்டைகள் கொண்ட லிங்கம் உள்ளது. மேலும் திருப்பட்டுர் பிரம்மபுரீஸ்வரர் திருக் கோயில் வளாகத்தில் உள்ள கைலாசநாதர் கற்றளிக் கோயிலில் பதினாறு பட்டைகள் கொண்ட ஷோடச தாராலிங்கம் உள்ளது. இது சுமார் இரண்டடி அகலமும் ஆறடி உயரமும் கொண்டது. இந்த லிங்கம் ஆவுடையார் மீது நில்லாமல் தனித்து தரைமட்டத்தில் காட்சி தருவது தனிச் சிறப்பு ஆகும். இந்த லிங்கத்தினை வழிபட்டால் பதினாறு பேறுகள் பெற்று வாழலாம் என்பர்.
சிதம்பரம் நவலிங்கம் சந்நிதியின் மையத்தில் அமைந்த லிங்கம், காஞ்சி கயிலாயநாதர் கோவில் சுற்றாலயத்தில் உள்ள லிங்கம், பழையாறை மேற்றளியில் உள்ள லிங்கம் ஆகியன இத்தகைய பதினாறு பட்டை லிங்கங்களாகும்.
தர்மதாரா லிங்கம்:-(32 பட்டை லிங்கம்)
32 பட்டைகளைக் கொண்ட லிங்கம் தருமத்தின் 32 வகைகளைக் குறிப்பிடும் லிங்கம் என்பர். இது தருமலிங்கம் எனவும் அழைக்கப்படும். காமாட்சி அம்பிகை 32 அறங்களை வளர்த்த காஞ்சிபுரத்தில் வயல்வெளியில் 32 பட்டைகளைக் கொண்ட கலையழகு மிக்க ஒரு சிவலிங்கம் அமைந்துள்ளதைக் காணலாம்.
சதுசுடி சகரடி தாராலிங்கம் :-
(64 பட்டை லிங்கம்)
64 பட்டை கொண்ட லிங்கம் என்பது சிவபெருமானின் 64
லீலா வினோதங்களை விளக்கும் வகையில் 64 பட்டைகளை
உடையதாகத் திகழ்கின்றது என்பர். எனவே இது சிவலிலாசமர்த்த
லிங்கம் என்றழைக்கப்படுகிறது.
மேலும் இந்த சிவலிங்கத்தில் அமைந்துள்ள 64 பட்டைகளும் 64 யோகினி சக்திகளைக் குறிக்கிறதென்றும் கூறுவர். எனவே இது யோகினி லிங்கம் என்றழைக்கப்படும். சைவசமயத்தினரில் ஒரு பிரிவினராகிய பைரவ மதத்தினரால் இச் சிவலிங்கம் கொண்டாடப்படுகிறது. இவர்கள் கருத்துப்படி இந்த 64
Hausdrklæstb 83

Page 24
பட்டைலிங்கம் பைரவரையும், அதன் 64 பட்டைகள் 64 யோகினிகளையும் குறிப்பதாகும்.
பொதுவாக தாராலிங்கங்கள் பைரவ சமயத்தோடு தொடர்புடைய தாகவே விளங்குகின்றன. அவர்கள் அஷட பைரவர் 64 யோகினியர் ஆகியோர்களோடு இந்த லிங்கத்தின் பட்டைகளைத் தொடர்பு படுத்துகின்றனர்.
பைரவ சமயத்தினர் அதிகமாக வாழ்ந்த காஞ்சிபுரத்தில் ஏராளமான தாராலிங்கங்கள் கிடைப்பதும் குறிப்பிடத்தக்க தாகும்.
சிறப்பு மிக்க தாராலிங்கங்கள்:
தாராலிங்கங்களில் அமையும் பட்டைகளும் கலைஞர்களால் சில சமயம் தனிக்கவனத்துடன் அமைக்கப்பட்டன. ஆரம்ப நாட்களில் சமதளமாக அமைக்கப்பட்ட இந்தப் பட்டைகள், காலப்போக்கில் குவிந்த குவிதளவளை பரப்புடையவையாகவும் 9 LL.Bb (55 g5 (CONCAVE SURFACE) (5.56TT 6,6061T பரப்புடையவையாகவும் அமைக்கப்படலாயின.
மேலும் சிலவகை சிவலிங்கங்களில் உச்சியை விடுத்து பாணப்பகுதியில் மட்டும் பட்டைகளை அமைத்துள்ளனர். இத்தகைய லிங்கங்களின் உச்சிப்பகுதி வழவழப்பாகவும் உச்சியில் சிறுவட்டமும் அமைகிறது.
சிலவகை லிங்கங்களில் உச்சிப் பகுதியில் வட்டமான பகுதி அல்லது ஒரு புள்ளியில் தொடங்கி பக்கங்களில் தொடர்ந்து அமையும் வகையில் பட்டைகளை அமைத்துள்ளனர்.
பல்லவர் காலத்தில் தொடங்கி அவர்களால் மட்டுமே செய்யப்பட்ட தனிச் சிறப்புக் கொண்டவை தாராலிங்கங்கள்.
இவற்றை வணங்குவதால் இறைவனோடு இரண்டறக் கலக்கும் தன்மையைப் பெறலாம் என்பர். எனவே இது சாயுச்சிய லிங்கம் என அழைக்கப்படுகின்றது.
தாராலிங்கங்களின் மேல் தாரா' என்னும் பாத்திரம் தொங்கவிடப்பட்டிருக்கும். இப்பாத்திரம் நிரந்தரமாகவே இருக்கும்.
34 சிவலிங்கம்

அப்பாத்திரத்தில் காசி தீர்த்தம் அல்லது புனித தீர்த்தம் இருக்கும். அது சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழும்படி செய்திருப்பார்கள்.
தாராலிங்கத்திற்கு பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம் செய்யப்படும். அப்போது பால், சந்தனம் ஆகியவை தாரைகளின் வழியே பிரிந்து செல்வதைத் தரிசிக்கும் போது நம் துன்பங்கள்
போகும். பேறுகள் கிட்டும்.
VIDJOJOJ
விஷ்ணு வழங்கிய லிங்கங்கள்
ஆதியில் விஷ்ணுவின் விண்ணப்பப்படி விச்வகர்மா ஒவ்வொருவருக்கும் சிவலிங்கம் செய்து கொடுத்தார்.
இந்திரனுக்கு குபேரன்
uuLD6ör
வருணன் பிரம்மா
6խTեւկ
நாகர்கள் லட்சுமி மகாவிஷ்ணு அக்கினி விசுவதேவர்கள் அசுவினி தேவர்கள் துவாதச ஆதித்தர்கள் நிருதி சாயாதேவி யட்சர்கள்
LDU6öT அசுரர்கள் ஆவிகள் பார்வதி யோகிகள் சரஸ்வதி
dalобinkath
- பத்மராகலிங்கம் - சொர்ணலிங்கம்
கோமேதகலிங்கம்
- நீல லிங்கம் - ஸ்வர்ணலிங்கம்
பித்தளை லிங்கம்
- பவளலிங்கம் - ஸ்படிக லிங்கம் - இந்திர நீல லிங்கம்
வஜ்ரலிங்கம்
- வெள்ளிலிங்கம் - பார்த்திபலிங்கம் (மண்) - தாமிரலிங்கம் - தாருலிங்கம்
மாவுலிங்கம்
- தயிர்லிங்கம் - சந்திரலிங்கம் - சாணலிங்கம் - இரும்பு லிங்கம்
நவநீதலிங்கம் பஸ்மலிங்கம் (விபூதி)
- நவரத்னலிங்கம்
35

Page 25
சிவபூசை செய்யாவிடில் புகழும் காரிய சித்தியும் நாளுக்குள் நாள் குறையும்.
சிவலிங்கங்களின் மாதாமாத வழிபாட்டு முறை
சித்திரை மாதம் - ஸ்படிக லிங்கம் வைகாசி மாதம் - வைர லிங்கம் ஆனி மாதம் - மரகத லிங்கம் ஆடி மாதம் - முத்துலிங்கம் ஆவணி மாதம் - நீலலிங்கம் புரட்டாதி மாதம் - மரகதலிங்கம் ஐப்பசி மாதம் - கோமேதகலிங்கம் கார்த்திகை மாதம் - பவளலிங்கம் மார்கழி மாதம் - வைடூர்ய லிங்கம் தை மாதம் - புஷபராக லிங்கம் uDTð uDTgblb - சூரிய காந்தலிங்கம் பங்குனி மாதம் - பளிங்கு லிங்கம்
ரத்தினங்களால் ஆன லிங்கங்களை வழிபட சக்தி இல்லாவிட்டால் பொன், வெள்ளி, செம்பினால் ஆகிய லிங்கங்களை வைத்துப் பூசிக்கலாம். இப்படிப் பன்னிரண்டு மாதங்கள் பூசை செய்து, அந்தணர்களுக்கு உணவு உபசாரங்கள் செய்யவேண்டும். பூசித்த லிங்கங்களை சிவாலயத்தில் வைக்க வேண்டும். ஸ்தோத்திரங்களால் துதிக்கவேண்டும்.
Oppp
தியானலிங்கம்
கோவை மாவட்டத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் தென் கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை உள்ளது.
இந்த வெள்ளியங்கிரி மலைச் சாரலில் ஆன்மிக விடுதலைக் கென்று சக்தி மிக்க தியானலிங்க சர்வ சமயக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு தீவிர பிராண பிரதிஷ்டையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள 13 அடி 9அங்குலம் உயரமுள்ள பாதரசலிங்கம் அமைந்துள்ளது.
இத் தியானலிங்கத்தின் சக்திமிக்க அதிர்வுகள் தியான அனுபவமில்லாதவர்களைக் கூட ஆழ்ந்த தியான நிலைக்கு எடுத்துச் செல்கின்றன.
33 சிவலிங்கம்

தியானலிங்கம் ஒரு மகத்தான அற்புதம். வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் முழுமையாக அறிந்து பேராசை, பயம், வெறுப்பு இவற்றில் இருந்து விடுபட்டு எப்படித் தேவையோ அப்படி நம் வாழ்க்கையை மாற்றியமைத்து வாழ்க்கையின் தழும்புகள் நம்மீது பதியாதவாறு, அன்பும் ஆனந்தமுமாய் வாழ முடிந்தால் அதுவே அற்புதம் . இதனை எளிய வகையில் தியானலிங்கம் சாத்தியமாக்குகிறது. தியானலிங்க சக்தி வளையத்திற்குள் நேரடியாகவோ விழிப்புணர்வின் மூலமாகவோ வரக் கூடிய ஒவ்வொரு வருக்குள்ளும் ஆன்ம விடுதலைக்கான விதை விதைக்கப்படுகிறது. இவையனைத்திற்கும் மேலாக ஒரு குருவோடு மிக நெருக்கமாக இருந்து ஆன்ம சாதனை செய்யக் கூடிய ஒரு சிலருக்கே கிடைக்கும் வாய்ப்பினை தியானலிங்கம் அனைவருக்கும் வழங்குகின்றது.
தியானலிங்கம் வளாகம் எல்லா நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். அன்பர்கள் அமைதியாய் அமர்ந்து அவரவர்கள் விரும்பும் வரை தியானம் செய்யலாம்.
பொருளாதார முன்னேற்றம், உடல்நலம், ஒவ்வாமைகளிலிருந்து விடுபடுதல் போன்ற வெவ்வேறு வாழ்வியல் தேவைகளுக்கும் தேடல்களுக்கும் துணை செய்யும் விதத்தில் தியானலிங் கத்திலிருந்து நாளுக்கு நாள் வித விதமான அதிர்வுகள் வெளிப்படுகின்றன.
திங்கட்கிழமை :- (பூமிதத்துவம்)
மலட்டுத்தன்மை நீங்கவும், குழந்தைப்பேறு கிட்டவும், உடலில்
உள்ள தோஷங்கள் நீங்கவும், மரணபயம் போன்றவற்றைப்
போக்கவும் இந்நாளில் தியானலிங்கம் உதவுகிறது.
செவ்வாய்க்கிழமை:- (நீர்த்தத்துவம்)
உருவாக்கம், உற்பத்தி, படைப்பாற்றல், உள்ளுணர்வு மற்றும் மனத்தூய்மை, மனஉறுதி, விரும்பும் விதத்தில் வாழ்க்கையை அமைத்தல், உறவுகளை வளர்த்தல் போன்றவற்றுக்கு இந்நாளில் தியானலிங்கம் உதவுகின்றது.
புதன்கிழமை:- (நெருப்புத்தத்துவம்)
பொருளாதார மேம்பாட்டுக்கும், உடல்நலம் சிறக்கவும், ஜீரணம்
தொடர்பான கோளாறுகளிலிருந்து விடுபடவும் இந்நாள் உகந்தது.
ിഖിbb 37

Page 26
குறிப்பாக நான்கு வயதுக்குட்பட்டகுழந்தைகளுக்கு மிகவும் சிறந்த நாள். தன்னம்பிக்கை வளரவும், உணர்வுகள் சமநிலை அடையவும், உடலுக்கும் மனதுக்கும் ஒத்திசைவு ஏற்படவும் இந்நாளில் தியானலிங்கம் வழிகாட்டுகின்றது.
வியாழக்கிழமை:- (காற்றுத் தத்துவம்)
இறையுணர்வின் தேடல் மிகுந்தவர்களுக்கு அன்புநிலை, பக்திநெறி போன்ற மேம்பட்ட வாழ்க்கை முறைகளுக்கும், கர்மவினைகளின் கட்டுக்களிலிருந்து விடுபடவும் இந்நாளில் தியானலிங்கம் உதவுகிறது.
வெள்ளிக்கிழமை:- (வான் தத்துவம்)
இயற்கையோடு இணைந்த வாழ்வு, அகத்தூய்மை போன்ற உயர் பலன்களோடு சாபங்கள் மற்றும் தீய சக்திகளிடமிருந்து விடுபடவும், நினைவாற்றல், தன்னம்பிக்கை, பொறுமை போன்ற நற்பண்புகள் மேம்படவும் இந்நாளில் தியானலிங்கம் உதவுகின்றது.
சனிக்கிழமை:- (மகாதத்துவம்)
ஐம் புலன்களைக் கடந்த ஞானம் பெறும் வேட்கை உள்ளவர்களுக்கும் உலகம் முழுவதையும் ஒன்றென உணரும் உள்ளம் கொண்டவர்களுக்கும் இந்நாளில் தியானலிங்கம் உதவுகிறது.
ஞாயிற்றுக்கிழமை:-
தான்' என்னும் மாயையினைக் கடப்பதற்கும் குருவின் அருளைப் பெறுவதற்கும் புலன்களுக்கும் அப்பாற்பட்ட பேரானந்தத்தை உணர்த்துவதற்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் தியானலிங்கம் நல்வழி காட்டுகிறது.
UUU
38 சிவலிங்கம்

லிங்கோற்பவர்
லிங்கம் என்பதற்கு உருவம் என்றும், உற்பவம் என்பதற்கு வெளிப்படுதல் என்றும் பொருள். லிங்கோற்பவம் என்ற சொல்லுக்கு உருவமற்ற இறைவன் திருவடிவம் கொள்ளுதல் என்பது பொருள். ஒருருவம் ஒரு நாமமில்லாத பெருமான் உருவம் தாங்கி அருளும் நிலையே லிங்கோற்பவம் எனப்படும். இப்படிச் சிவபெருமான் சூன் யத்திலிருந்து படிப்படியாக உருவம் கொள்ளும் நிலையே லிங்கோற்பவம் எனப்படும்.
சிவலிங்கமூர்த்தியின் மையத்தில் பெருமான் அழல்(நெருப்பு) போன்ற பிளவில் எழுந்தருளியிருக்க லிங்கத்தின் வலது புறத்தில் பிரமதேவனும், இடது புறம் திருமாலும் கை கூப்பி நிற்கின்ற நிலையே லிங்கோற்பவ மூர்த்திவடிவம். லிங்கத்தின் கீழ்பகுதியில் பன்றி வடிவில் திருமாலும், அன்னம் வடிவில் (அல்லது அன்னத்தின் மீது அமர்ந்தவாறு) பிரம்மதேவனும் பெருமானின் அடிமுடி தேடும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளனர். இந்த மூர்த்தியைப் புராணங்களும், கல்வெட்டுக்களும் லிங்கபுராண மூர்த்தி என்று குறிப்பிடுகின்றன. பொதுவாக சிவாலயங்களில் இவருக்கான இடம் கருவறையின் பின்புறம் அமையும் மாடம். ஆலயத்தின் பிற இடங்களில் இந்த மூர்த்தியை வைக்கும் வழக்கம் இல்லை.
லிங்கோற்பவரைக் கல் திருமேனியாக எழுந்தருள வைப்பதே வழக்கமாகும். என்றாலும் இதற்கு விதிவிலக்காக தஞ்சைப் பெரிய கோயிலில் ராஜ ராஜனின் மனைவியால் செய்து அளிக்கப்பட்ட உலோகத் திருமேனியைப் பற்றிக் கல் வெட்டுக் குறிப்பின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
திருவாதிரையில் நடராஜரையும், உமாமகேஸ்வர விரத காலத்தில் உமா மகேஸ்வரரையும் வழிபடுவது போன்று மகாசிவராத்திரியின் மூன்றாம் காலத்தில் இந்த மூர்த்தியை வழிபடவேண்டும். இதனால் சிவராத்திரியின் மூன்றாம் காலம் லிங்கோற்பவ காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வேளையில் பெருமான் நெருப்புத் தூண் மத்தியிலிருந்து மான், மழு, அபய, வரத முத்திரைகளுடன் உருவம் தாங்கி அருள் பாலிக்கிறார்.
சிவலிங்கம் 39

Page 27
இவ்வாறு பெருமான் உருவம் கொண்ட நிலையான லிங்கோற்பவ காலமானது தினமும் அதிகாலை 3.30 மணி முதல் 4.30 வரை உள்ள காலமாகும். இதற்கு நித்ய லிங்கோற்பவ காலம் என்று பெயர்.
திரயோதசியும், சதுர்த்தசியும் சந்திக்கின்ற வேளையானது பட்சலிங்கோற்பவ காலம் எனப்படுகின்றது. மாசி மாதத் தேய்பிறைச் சதுர்த்தசியின் மூன்றாம் காலம் வருஷ லிங்கோற்பவ காலம எனப்படுகின்றது. சிவராத்திரிக்கு முதல் மாலைக் காலத்தில் நடராஜமூர்த்தியையும், பிரதோஷ நாயகரையும் வழிபட்டு, இரவின் முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தென்முகக் கடவுளையும், மூன்றாம் காலத்தில் லிங்கோற்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூட மூர்த்தி (சந்திர சேகரர்) யையும் வழிபடவேண்டும் என்பது நியதி.
லிங்கோற்பவ காலம் என்று அழைக்கப்படும் இந்த மூன்றாவது காலத்தில், கருவறைக்குப் பின்னால் அமைந்த லிங்கோற்பவ மூர்த்திக்கு நெய்பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் ஆடைகளை அணிவித்து தாழம் பூக்களுடன், பிறமலர்களையும் கொண்டு அலங்கரித்து, எள்அன்னம் நிவேதிக்க வேண்டும். சிவந்த பழங்கள், நெற்பொரி, வெல்லம், கலந்த பொரி உருண்டை மற்றும் சுண்டல் முதலானவற்றையும் நிவேதனம் செய்து பதினொருமுறை நமஸ்கரிக்க வேண்டும். 'ஸ்படிகமயமாக விளங்கும் மகா லிங்கமூள்த்திக்கு அபிஷேகம் செய்கிறேன் என்று கூறும் பாடல்களைப் பாடிவிட்டு ருத்திர மந்திரம் கூறி அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் பூரீருத்திரத்தையும், சமகத்தையும் கூற வேண்டும்.
நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானைப் பிரம்மனும் திருமாலும் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்ததை நினைவு கூரும் வகையில், பெருமானை ருத்திர மந்திரம் ஓதி வழிபடும் வழக்கம் நிலவுகின்றது. மேலும் சிவ சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்து தேவாரத்தில் உள்ள "இரு நிலனாய் தீயாகி’ என்னும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந் தொகையையும் ஓத வேண்டும். அப்பரடிகளின் பதிகத்தை ஒதுவது சிறந்த பலன் தரும். இறைவனைப் பக்தி வலையால் பிடிக்கலாமே
40 சிவலிங்கம்

அல்லாமல் அகங்காரத்தால் அடைய முடியாது. அதற்காகப் பக்தர்கள் செய்ய வேண்டியதைப் பட்டியல் இடுகிறார் அப்பர் பெருமான். இதில் ஒவ்வொரு பாடலிலும் இருவர் இருவர் என்றே கூறி இறுதிப் பாடலில் 'அவ்விருவர் செங்கண்மாலும், பிரமனும் என்று காட்டுவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக லிங்கோற்ப மூர்த்தியில் உள்ள சிவபெருமானை நான்கு கரங்களுடன் தரிசிக்கலாம். அவரை மான்.மழு,அபய வரத முத்திரைகளைக் கொண்டவராக அமைப்பது வழக்கம். ஆனால் காஞ்சிபுரம் கயிலாயநாதர் கோயிலில் எட்டுக் கரங்களுடன் கூடிய லிங்கோற்பவரைக் காணலாம். பிள்ளையார் பட்டியில் உள்ள லிங்கோற்பவர் இரு கரங்களுடன் காட்சி அளிக்கின்றார்.
திருவண்ணாமலை ஆலயத்தில் இந்த மூர்த்தியைச் சற்றுக் கலை நயத்துடனும், காவிய நயத்துடனும் அமைத்துள்ளனர். அதாவது இந்தக் காட்சியின் பின்னணியில் அண்ணாமலையும், அதன் மீது தீபமும் காட்டப்பட்டுள்ளன. அதிலிருந்து வெளிப்பட்டு தேவியுடன் கூடியவாறு இடபம் பின் நிற்கப் பெருமான் காட்சி தருகிறார். இத்தகைய லிங்கோற்பவ மூர்த்தியை வேறெங்கும் காணமுடியாது."
UpUU
dfeinioôrksh 41

Page 28
தேவி லிங்கம்
சிவாலயங்களில் எழுந்தருளி உள்ள சிவலிங்கங்கள் பல வகைப்படுகின்றன. ஒருவருடைய முயற்சியின்றித் தானே அன்பர்களுக்குத் தோன்றி அருள் பாலிக்க, சிவபெருமான் வெளிப்பட்ட லிங்கங்கள் “சுயம்பு லிங்கங்கள்’ என்று அழைக்கப் படுகின்றன.
பார்வதி தேவி, தேவர்கள், ரிஷிகள், அரசர்கள், ராட்சதர்கள் முதலியோர் சிவபூசை செய்ய அமைத்த லிங்கங்கள் பிரதிஷ்டா லிங்கங்கள்’ எனப்படும். இவை அமைத்தவர்களின் பெயரையொட்டி முறையே தேவிலிங்கம், தைவிகலிங்கம், காணலிங்கம், ஆரியவடி லிங்கம், ராஜலிங்கம், ஆசுரலிங்கம் எனப் பலவாறு பெயர் பெறுகின்றன. இவையனைத்தும் பூமியில் கிடைக்கும் உயர்ந்த வகைக் கற்கள், மருந்துகள், மரம் முதலியவற்றால் செய்யப்பட்டனவாகும்.
இவை போன்று சித்தர்களால் அமைக்கப்பட்ட லிங்கங்கள் சித்திலிங்கங்கள் எனப்படும். சித்தர்கள் மூலிகைகள், ரசங்கள், பாஷாணங்கள் ஆகியவற்றைத் தங்கள் அரிய முயற்சியால் கண்டு பிடித்து, சித்த நெறி முறையால் ஒன்று கூட்டி அதனைச் சிவலிங்கங்களாக அமைத்துள்ளனர். இந்த லிங்கங்கள் மீது காற்றின் சேர்க்கை காரணமாகப் படியும் ஒருவகையான மருந்துப்படிவு நாம் இவற்றிற்குச் செய்யும் பால் அபிஷேகம், பஞ்சாமிர்தம், அபிசேக நீர் முதலியவற்றில் கலந்து விடும். அபிசேகம் செய்யப்பட்ட பொருட்களை உண்பதால் உடலிலுள்ள தீராத வியாதிகளும், மன உளைச்சல்களும் தீரும் என்பது கண்கூடான நம்பிக்கையாகும்.
சில தலங்களில் சித்தர்கள் இடிகற்களைப் பயன் படுத்திச் சிவலிங்கங்கள் அமைத்துள்ளனர். இடி கற்கள் என்பவை விண்ணில் சுற்றும் கற்கள். இவை இடியால் தாக்குண்டு பின் பூமியில் விழுவனவாகும். இவை அபூர்வ சக்திகளை உடையன என்று நம்புகின்றனர். சித்தர்கள் இக்கற்களைக் கண்டு பிடித்து அதில் சிவலிங்கம் செய்து அதற்குக் கோயில் அமைத்துள்ளனர். காஞ்சிபுரத்தில் இடிகல்லால் அமைந்த சிவலிங்கம் சித்தீசுவரர் என்ற பெயரில் அமைந்திருக்கக் காணலாம்.
42 floucកំuash

சிதம்பரத்தை அடுத்துள்ள திருக்கழிப்பாலையில் சித்த மருந்துகளால் செய்யப்பட்ட லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை அமைத்த பிறகு இதன் தலைப்பகுதி உடைந்து விட்டது. அதனால் அதன் உள்ளே இறுகாமல் இருந்த மருந்துப்பொருள் வழிந்து வெளியே வந்து விட்டது. பிறகு அந்த மருந்துக்கலவை படிப்படியாகக் குளிர்ந்து கெட்டியாக இருப்பதைக் காணலாம். இது கபிலர் என்ற சித்தரால் அமைக்கப்பெற்ற சிவலிங்கமாகும்.
பார்வதி தேவியரால் அமைத்து வழிபடப்பட்ட சிவலிங்கங்கள் பார்வதி லிங்கம் அல்லது தேவி லிங்கம் என்றழைக்கப் படுகின்றன. பார்வதி தேவியார் காஞ்சிபுரத்தில் மண்ணாலும், திருவானைக் காவில் தண்ணீராலும் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்துள்ளார். காஞ்சிபுரத்தில் தேவியால் அமைக்கப்பட்டு வழிபடப்பட்ட லிங்கமான ஏகாம்பரநாதர் மேனியில் அவள் தழுவிக் கொண்டதால் ஏற்பட்ட வளைத்தழும்பும், முலைத் தழும்பும் உள்ளதாகக் கூறுவார். இது தேவி லிங்கமாகும். இந்த லிங்கம் மண்ணால் செய்யப்பட்ட பிருதிவி லிங்கமாகும். இதனால் இதற்கு அபிஷேகம் கிடையாது. புனுகுச் சட்டம் மாத்திரம் சாத்தப்படும். அபிஷேகங்கள் யாவும் ஆவுடையாருக்கே நடைபெறுகின்றது. திங்கட்கிழமைதோறும் தலமகிமை தொடர்பான அம்மை தழுவும் கோலமுடைய கவசம் சாத்தப்படுகின்றது. இதனைச் சேக்கிழார் பெருமான்,
“செம்பொன் மலை வல்லி தழுவக் குழைந்த மேனிப் பெருவாழ்வு' என்று கூறுகிறார்.
திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் ஆலயத்தில் உச்சிக் காலத்தில் அம்பிகை இறைவனைப் பூசிப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே அங்குள்ள அம்பிகையின் கோயில் சிவாச்சாரியார் புடவை உடுத்தி அம்பிகையின் சார்பாக யானை ஆலவட்டம் முதலிய பரிவாரங்களுடன் சென்று உச்சிக்காலத்தில் ஜம்புகேசுவரப் பெருமானைப் பூசை செய்கின்றார்.
தென்னாற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து திருக்கோவிலுாருக்குச் செல்லும் வழியில் ரிஷிவந்தியம் என்னும் ஊர் உள்ளது. இவ்வூரின் நடுவில் அர்த்த நாரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு மூலத்தானத்தில் இருக்கும் லிங்கமானது அதிசயமானது. இது சாதாரண நிலையில் மற்ற லிங்கங்களைப்
afanI6sÓrÄIaBib 43

Page 29
போலவே வழவழப்பான தோற்றம் கொண்டுள்ளது. இந்த லிங்கத்திற்குத் தேன் அபிசேகம் செய்யும் பொழுது மட்டும், இதன் பாணப்பகுதியில் அம்பிகையின் நிழல் உருவம் தோன்றுகின்றது. தேன் முழுவதுமாக வழிந்து விட்டபிறகு இந்த நிழலுருவம் மறைந்து விடுகின்றது. ஒவ்வொரு நாளும் அர்த்த சாமப் பூஜையில் இங்கு தேன் அபிசேகம் செய்யப்படுகின்றது.
சிறந்த கலைச்செல்வங்களைக் கொண்ட இக்கோயிலின் லிங்கம் இந்திரனால் அமைத்து வழிபடப்பட்டதென்றும், சிவபெருமான் அவனுக்கு இச்சிவலிங்கத்தில் அர்த்த நாரீசுவரராகக் காட்சியளித்தார் என்றும் தலபுராணம் கூறுகின்றது. இக்கதையை விளக்கும் சுதைச்சிற்பம் இக்கோயிலின் அம்பிகைக்கு எதிரில் உள்ள நந்தி மண்டப விமானத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.
பார்வதி மயில் வடிவாக பூசித்த தலங்கள் இரண்டு உள்ளன. ஒன்று சென்னையில் உள்ள மயிலாப்பூர். மயில் வடிவில் தேவி இறைவனை இங்கு பூசை செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்வூர் கோயிலின் தலமரமான மகிழமரத் தடியில் அம்பிகை மயிலுருவாகச் சிவனைப் பூசிக்கும் ஐதீகச் சிற்பம் உள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள மயிலாடு துறையிலும் பூசை செய்துள்ளார். இதனால் இவ்வூருக்கு கெளரி மாயூரம் என்பது பெயராயிற்று.
திருச்சி மாவட்டத்தில் சத்தி முற்றம் என்ற ஊர் உள்ளது. இங்கு சக்தியான பார்வதி தேவி சிவலிங்கத்தைத் தழுவிக் கொண்டதுடன், அதற்கு முத்தமும் கொடுத்து மகிழ்ந்தார்களாம். இதனால் இவ்வூருக்குச் சத்தி முற்றம் என்பது பெயராயிற்று. இதனை விளக்கும் சிற்பம் ஒன்று இக்கோவிலில் உள்ளது.
கோமுத்தி எனப்படும் திருவாடுதுறையில் அம்பிகை பசு வடிவில் இருந்து பூசித்ததாக அவ்வூர்த்தலபுராணம் கூறுகின்றது.
கேதாரத்தில் பார்வதி தேவியார் கேதார நாதரைப் பூசித்து உலகினைப்படைக்கும் ஆற்றலைப்பெற்றாள். கேதாரத்தில் சிவனைப் பூசித்து தனது கரு நிறம் நீங்கிய பார்வதி தேவியார் பொன்னிறமாக ஒளி வீசியதால் அவருக்குக் கெளரி என்பது பெயராயிற்று. கேதாரத்தில் உள்ள அம்பிகை தனது கரத்தில் சிவலிங்கத்தை ஏந்தியிருப்பதாகக் கூறுகின்றனர்.
OU OU OU
44 சிவலிங்கம்

திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எட்டு சிவலிங்கங்கள் உள்ளன. இவற்றை வழிபட்டால் அளப்பரிய நன்மைகளைப் பெறமுடியும்.
இந்திர லிங்கம் -
கிரிவலப் பாதையில் கிழக்குத் திசையில் முதலில் தரிசனம் தருவது இந்திரலிங்கம். இதனை வழிபாடு செய்தால் செல்வம் கொழிக்கும், புகழ் ஓங்கும்.
அக்னி லிங்கம் -
தென்கிழக்குத் திசையில் வலது பக்கம் உள்ள இரண்டாவது லிங்கமே அக்னிலிங்கம். இந்த லிங்கத்தை வழிபாடு செய்தால் நோய், பயம் நீங்கும்.
எம லிங்கம் -
தெற்குத் திசையில் உள்ள மூன்றாவது லிங்கம் எமலிங்கம். இந்த லிங்கத்தை வழிபட்டால் அனைத்துத் துன்பங்களும் நீங்கும்.
நிருதி லிங்கம் -
தென்மேற்குத் திசையில் உள்ள நான்காவது லிங்கம் நிருதிலிங்கம். இங்கிருந்து மலையை நோக்கினால் சிவனும் உமையும் இணைந்த தோற்றம் போல ஒரு காட்சியைக் காணமுடியும். இந்தச் சிவலிங்கத்தை வழிபாடு செய்தால், புத்திர பாக்கியம் ஏற்படும். சுகமான வாழ்வு, புகழ் என்பன அமையும்.
வருண லிங்கம் -
மேற்குத் திசையில் அமைந்த ஐந்தாவது லிங்கம் வருணலிங்கம். இந்த லிங்கத்தை வணங்கினால் கொடிய நோய்கள் நீங்கும்.
வாயு லிங்கம் -
வடமேற்குத் திசையில் அமைந்த ஆறாவது லிங்கம் வாயு
லிங்கம். இந்த இடத்தை அடையும் போது சுகமான தென்றல்
வீசுவதை உணரமுடியும். எதிரிகள் கொடுக்கும் தொல்லைகளி
fejestrlesh As

Page 30
லிருந்து விடுபட இந்த லிங்கத்தை வழிபாடு செய்ய வேண்டும். மேலும் கண் திருஷ்டி நீங்கவும், பெண்கள் நல்வழி பெறவும் இந்த வழிபாடு உதவும்.
குபேர லிங்கம் -
வடதிசையில் உள்ள குபேர லிங்கத்தை வழிபாடு செய்தால் செல்வங்களைக் குறைவின்றி அடைய முடியும். இது ஏழாவது லிங்கம்.
ஈசான்ய லிங்கம் -
வடகிழக்குத் திசையில் உள்ள எட்டாவது லிங்கம் ஈசான்ய
லிங்கம். அனைத்து நிலைகளையும் கடந்து மனிதன் அமைதி
தேடும் இடம் என்றும் இதனைக் கூறலாம்.
இந்த அஷ்ட லிங்கங்களை வணங்குவதோடு அந்த லிங்கங்கள் அமைந்துள்ள ஆலயங்களின் அருகே உள்ள தீர்த்தத்தின் நீரை சிரசில் தெளித்துக் கொள்வது சிறப்பு.
OpО О
48 சிவலிங்கம்

ஜோதி(ர்)லிங்கங்கள்
இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் ஏற்பட்ட போட்டியினைக் கண்டு சிவபெருமான் அவர்களுக்கிடையே ஜோதிர்மயமான லிங்கமாகக் காட்சி அளித்தார். அதன் முடியோ அடியோ பிரமன், விஷ்ணு இருவரது கண்களுக்கும் புலப்படவில்லை. இதனால் அவர்களிடையே ஒரு முடிவு ஏற்பட்டது. இந்த ஜோதியின் அடியையோ, முடியையோ முதலில் காண்பவர்களே பெரியவன் என்று முடிவெடுத்தனர்.
பன்றி உருவம் எடுத்து விஷ்ணு அத்தெய்வச்சுடரின் அடியைக் கண்டறியப் பூமிக்குள் பாய்ந்து பாதாளத்தை நோக்கி விரைந்தார். பிரம்மன் அன்னப்பட்சி உருவம் தாங்கி, அந்த ஜோதிர்மய லிங்கத்தின் முடியைத் தேடி உயர நோக்கி ஆகாயத்தில் பறந்து சென்றார். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தன. மேலே பறந்து சென்ற பிரம்மன் வழியில் தாழம்பூ ஒன்று கீழிறங்கி வருவதைக் கண்டார். அத்தாழம்பூ நாற்பதாயிரம் ஆண்டுகளாகத் தான் இறங்கி வருவதாகவும், அந்த ஜோதி ரூபத்தின் முடியை எவரும் காணமுடியாது என்றும் கூறியது. பிரம்மன் அந்த ஜோதியின் முடியைத் தான் கண்டறிந்ததாகச் சொல்லப் போவதாகவும், அதற்கு தாழம்பூவை சாட்சி கூறும்படியும் வேண்டினார். தாழம்பூவும் இசைந்தது.
ஜோதியின் அந்தத்தை தேடி விஷ்ணு உடல் சோர்ந்து வந்து நின்றார். அச்சமயம் அண்டம் அதிரும்படியாக ஓங்கார நாதம் ஒலித்து அடங்கியது. தொடர்ந்து அந்த ஜோதிர் லிங்கத்தின் நடுவே ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களுடன், ஜடாமுடியிலிருந்து பிறைச் சந்திரன் ஒளி வீச, மானையும், மழுவையும் கையில் ஏந்தி பரமேசுவரன் இருவருக்கும் காட்சி தந்தருளினார்.
நாராயணனும், பிரம்மனும் அவரை வணங்கினர். மகாவிஷ்ணு தான் ஜோதியின் அடியைக் காண முடியாததைக் கூறித் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். ஜோதியின் முடியைத் தான் கண்டுவிட்டதாகக் பொய்கூறிய பிரம்மனுக்கு, பரமேஸ்வரன்
afRosoIoÓrÄuasb 47

Page 31
பூலோகத்தில் தனிக் கோயிலோ பிரத்தியேக பூஜையோ இல்லாமல் போக வேண்டும் என்று சாபமளித்தார். பிரம்மனுக்குச் சார்பாகப் பொய்ச் சாட்சி கூறிய தாழம்பூவுக்கு இனிமேல் ஈசனது பூசைக்கு உகந்ததாகச் சேர்த்துக் கொள்ளப்படமாட்டாது என்று சாபமிடப் பட்டது. உண்மையை ஒப்புக் கொண்ட மகாவிஷ்ணுவுக்கு ஊர் ஊராகக் கோயில் கட்டப்பெற்று பக்தர்கள் வழிபடும் பாக்கியம் இறைவனால் அளிக்கப்பட்டது.
பின்னர் ஜோதிர்லிங்கமாக நின்ற பரமேசுவரன் அவர்களிடம் தன் வலது புறத்திலிருந்து தோன்றியவர் மகாவிஷ்ணு என்றும், இடது புறத்திலிருந்து தோன்றியவர் பிரம்மன் என்றும், அவர்கள் இருவரும் தன்னுள் அடக்கம் என்றும் கூறி அவர்களது தர்க்கவாதத்தைத் தீர்த்து வைத்தார். மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் இடையே தோன்றிய ஜோதிர்லிங்கம் போன்று பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள் பாரதத்தில் பன்னிரண்டு தலங்களில் எழுந்தருளி அருளாட்சி புரிகின்றன. திருவண்ணாமலையில் இறைவன் ஜோதிர்லிங்கமாகத் தோன்றிய பின்பே இந்த ஜோதிர்லிங்கங்கள் தோன்றின என்று பண்டிதர்கள் கூறுகின்றார்கள். இறைவன் ஜோதி வடிவாகக் காட்சி தந்த தீபத் திருநாளில் அவனது பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களை தரிசிப்பது மகாபுண்ணியமாகும். அந்த ஜோதிர்லிங்கத் தலங்களை இனிக் காணலாம்.
ழிசைலம் -
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பூரீசைலம் உள்ளது. இங்கு ஓர் சிவாலயம் உள்ளது.
இறைவன் திருநாமம் - மல்லிகார்ஜூனர் இறைவி திருநாமம் - பிரமராம்பாள்
அர்ஜுனம் என்றால் மாயையை வென்றவன் என்று அர்த்தம். இத்தலத்தில் மாயையாகிய பந்தபாசத்தில் சிக்கி உழலும் உயிர்களின் மயக்கத்தினை தன் தரிசனத்தால் இறைவன் நீக்கி அருள்புரிகின்றார். பரிவாரத் தெய்வங்களுடன் உள்ள திருக்கோயில். இக்கோயில் மண்டபம் ஒன்றில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் இத்தலம் பற்றிப் பாடிய தேவாரப் பதிகங்கள் சலவைக் கற்களில் பொறிக் கப் பட்டு சுவரில் பதரிக் கப் பெற்றுள் ளன.
48 afaosQu6ÓhrÄIasíb

ஜோதிர்லிங்கத்தலமான இங்கு சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.
செளராஷ்டிரா -
குஜராத் மாநிலத்தின் செளராஷ்டிரா பிரதேசத்தில், துவாரகையிலிருந்து சுமார் இருபது கி.மீ தொலைவில் பேட் துவாரகைக்குப் போகும் வழியில் இந்த ஊர் உள்ளது. இங்கு ஓர் ஜோதிர்லிங்கத்தலம் உள்ளது.
இறைவன் திருநாமம் - நாகேஷ்வரர், நாகநாதர், நாகேசர்
மூலவரின் கருவறை பள்ளத்தில் உள்ளது. பெரும் படம் விரிக்கும் பஞ்சமுகநாகம் சிவலிங்கத்திற்குக் குடை பிடிக்கிறது. இது சுத்த வெள்ளியில் ஆனது. ஜோதிர்லிங்கத்தின் பின்புறமுள்ள சுவரில் அன்னை பார்வதியின் சிலை பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்னையின் உருவம் சரியாகத் தெரியவில்லை.
நாகேஸ்வரரைத் தரிசனம் செய்தால் நஞ்சாக மனதில் உள்ள தீய எண்ணங்கள் ஓடும்.
இத்தலத்தில் 85 அடி உயரமான ஜடாதரனின் சிலை உள்ளது. பிரமாண்டமான சிலை. கால்கள் சப்பணிக்க உட்கார்ந்துள்ளார். சதுர்புஜங்கள் உள்ளன. திரிசூலம், உடுக்கை, ஜெபமாலையுடனும், அபய முத்திரையுடனும் காட்சி தருகிறார். கண்டத்தில் கருநாகம் காட்சி தருகிறது.
திருக்கேதாரம் -
ஹரித்வாரிலிருந்து 250 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கேதாரம். ஆறுமாத காலம் கோயில் குளிர்காலத்தில் பணியால் மூடப்பட்டிருக்கும். இக்காலத்தில் தேவர்கள் பூசை செய்வதாக ஐதீகம் கூறப்படுகிறது. ஜோதிர்லிங்கத் தலம். வைகாசி மாதத்தில் திறக்கப்பட்டு பூச்ை நடைபெறுகிறது. இக்காலத்தை மனிதர்கள் பூஜை செய்யும் காலம் என்று கூறுகின்றார்கள்.
பிருங்கி முனிவரின் பொருட்டு உமையம்மை இறைவனை வழிபட்டு இடப்பாகம் பெற்ற தலம். இப்பகுதியில் இருந்த வயல் வெளியில் இருந்து தவஞ்செய்து பேறு பெற்றார். இந்நாட்களையே
Renuoóriasuh 49

Page 32
கேதாரகெளரி விரத நாட்கள் என்று மக்கள் இருபத்தொரு நாட்கள் விரதமனுட்டிக்கின்றனர். இங்கு எழுந்தருளியிருக்கும்,
இறைவன் திருநாமம் - கேதாரேஸ்வரர் இறைவி திருநாமம் - கேதாரகெளரி
என்பதாகும். காளையின் பிருஷ்டம் போல கேதாரலிங்கத்தின் வடிவம் அமைந்துள்ளது.
இத்தலம் சம்பந்தர், சுந்தரர் ஆகிய இருவரின் தேவாரப் பதிகம் பெற்றது. இருவரும் தென்கயிலாயமான திருக்காளத்தியிலிருந்தே இமயமலைச் சாரலில் உள்ள இத்தலத்தைப் பாடித் தொழுதுள்ளனர்.
கோயிலின் பின்புறம் வெள்ளிப் பனிமலையாகக் காணக்கிடக்கும் காட்சி அற்புதம். திருஞானசம்பந்தரின் பதிகங்கள் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. பஞ்சபாண்டவர்களால் இக்கோயில் கட்டப்பெற்றது என்பர். இராவணன் கைலாயமலையைத் தூக்க முயன்ற இடம் திருக்கேதாரம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
இராமேஸ்வரம் -
இந்தியாவின் கிழக்குக் கரையில் உள்ள தலம். சென்னை - மதுரை ஆகிய நகரங்களில் இருந்து பேருந்து சாலை உள்ளது. இராமேஸ்வரம் தீவாக உள்ளதால் பாலம் கட்டப்பட்டுள்ளது. இலங்கையில இராவணனைக் கொன்றதால் இராமருக்குப் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. போர் முடிந்து திரும்பும் வழியில் இங்கு இறங்கி சிவபூசை செய்ய இராமர் எண்ணினார். ஆஞ்சநேயரை கைலாயம் சென்று சிவலிங்கம் கொண்டு வா’ என்று அனுப்பினார்.
ஆஞ்சநேயர் வரத் தாமதமாகிய அவ்வேளையில் சீதாதேவியார் கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட இராமர் அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூசை செய்தார். அதிலிருந்து சிவன் பார்வதியுடன் தோன்றி இம்மூர்த்தம் ஜோதிர்லிங்கமாகும். இதனைத் தரிசிப்பவர்கள் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவர் என்று கூறி ஆசீர்வதித்தார்.
நாளடைவில் அப்பிருத்துவிலிங்கம் இறுகி அழகிய சிவலிங்கமாகியது. இங்கு எழுந்தருளியுள்ள,
50 சிவலிங்கம்

இறைவன் திருநாமங்கள் - இராமநாத சுவாமி
இராமலிங்க சுவாமி இறைவி திருநாமம் - பர்வதவர்த்தினி
என்பதாகும். இத்தலத்தின் கோயிலுக்குள்ளே இருபத்திரண்டு தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே இருபத்திரண்டு தீர்த்தங்களும் உள்ளன. கடற்பகுதி அக்னி தீர்த்தம் எனப்படுகிறது.
காலதாமதமாக ஆஞ்சநேயர் கொண்டு வந்த சிவலிங்கம் பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இச்சிவலிங்கத்தின் திருநாமம் ஹனுமந்தலிங்கம்.
சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலம். காசி யாத்திரை செய்வோர், அங்கிருந்து கங்கைநீரைக் கொண்டு வந்து இராமேஸ்வரம் இராமலிங்க சுவாமிக்கு அபிஷேகம் செய்தால் தான் காசியாத்திரை செய்த பலனை அனுபவிக்கலாம் என்று கூறப்படுகிறது.
2-gegufof -
மத்தியப் பிரதேசத்துக்குட்பட்ட மாளவா பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஆன்மீக நகரம் இந்தூர். இங்கிருந்து வடக்கே 56 கி.மீ தூரத்தில் உஜ்ஜயினி என்ற ஊர் உள்ளது. இங்கு ஓர் சிவாலயம் உள்ளது. இது ஜோதிர்லிங்கத்தலமாகும். துவாதச லிங்கங்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
இறைவன் திருநாமம் - மகா காலேஸ்வரர்
மகாபிரளய காலத்தில் உலகத்தின் உயிரினங்களின் கருவை இங்குள்ள மகாகாலேஸ்வரர் உருவில் வைத்துக் காப்பாற்றப்படுகிறது. பிரளயம் முடிந்தபின் அவ்வுயிரினங்கள் மீண்டும் தோன்றியதாக வரலாறு கூறப்படுகிறது. இதனால் இத்தலத்தின் தொன்மை புலப்படுகிறது. விண்ணிலே தாரகம், பாதாளத்தில் ஹாடகேச்வரம், மண்ணிலே மகாலிங்கம் என முச்சிறப்புக் கொண்ட சிவலிங்கம் மகா காலேஸ்வரர் ஆகும். இவரைத் தரிசனம் செய்தால் யம பயம் போகும்.
διαλισύrήμαδιb

Page 33
இந்த உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு விக்கிரமாதித்தன் ஆட்சி செய்துள்ளான். இவன் காலத்தில் இங்கு ஒன்பது மேதைகள் வாழ்ந்துள்ளனர். அவர்களில் காளிதாசர், வராஹமிஹிரர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். பழமையான சிவத்தலம்.
இந்தூர்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஊர் இந்துார். இங்கு நர்மதை நதிக்கரையில் ஓர் சிவாலயம் உள்ளது. இத்தலம் ஜோதிர்லிங்கத் தலமாகும். நர்மதை இத்தலத்தில் இரண்டாகப் பிரிந்து மீண்டும் கூடுகிறது. பூரீரங்கம் ரங்கநாதர் கோயில் போல் இத்தலம் அமைந்துள்ளது. மலைமேல் கோவில் உள்ளது. படகில் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
திருக்கோகர்ணத்தைத் தரிசித்து வந்த நாரதர் விந்தியமலை வழியாக வந்தார். விந்தியமலை அவரைக் கண்டு வணங்கி பெருத்த வரவேற்பு அளித்தது. அந்த வரவேற்பின் செயலில் தானே உயர்ந்த மலை’ என்ற இறுமாப்புக் காணப்பட்டது. அதை உணர்ந்த நாரதர் மட்டம் தட்ட நினைத்தார்.
'விந்தியமலையே உன்னைவிட மேருமலை தான் மிகவும் உயரமானது. புனிதமானது. தங்கமயமானது. சிவபெருமானின் அருளால் அதன் மகிமை வளர்ந்து வருகிறது. தேவர்கள் அதை வணங்கிப் போற்றுகிறார்கள் என்று நாரதர் கூறியதைக் கேட்டதும், விந்தியமலைக்குத் தாங்காத வருத்தம் உண்டாயிற்று.
ஓங்கார ரூபமாய் ஓர் இயந்திரத்தைத் தயாரித்துப் பஞ்சாட்சர உச்சாடனம் செய்து சிவபூஜை செய்யத் தொடங்கியது. மனம் மகிழ்ந்த சிவபெருமான் அம்மலை வேண்டியபடியே மேலும் உயர்ந்து வளர வரம் அளித்தார். ஆனால் உயர்வு காரணமாக மீண்டும் விந்தியமலை இறுமாப்புக் கொண்டால் சிவனடியார் ஒருவரால் அடக்கப்பட்டு விடும் என்று கூறினார். (விந்தியமலை அகத்தியரால் அடக்கப்பட்ட வரலாறு உள்ளது)
இந்த விந்தியமலை வணங்கிய யந்திரம் தாபிக்கப்பட்ட இடத்தில் ஓர் சிவாலயம் உள்ளது. அங்குள்ள,
52 சிவலிங்கம்

இறைவன் திருநாமம் - ஓங்காரேசுவரர்
என்பதாகும் யந்திரத்தில் சுயம்பு ஜோதிர்லிங்கமாக ஓங்காரேசுவரர் காட்சியளிக்கின்றார். விந்தியமலை பூசித்த பார்த்துவ லிங்கம் ஒன்றும் இத்தலத்தில் உள்ளது.
நர்மதை பிரிந்து கூடும் சங்கமத்தைக் காவேரி என்று அழைக்கின்றார்கள். நர்மதையின் பிரிவும், சேர்தலும் ஓங்கார வடிவமாக அமைந்துள்ளதே இந்தத் தலத்தின் சிறப்பு.
பிரணவப் பொருளாய் பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கும் பரமனின் பரவச தரிசனம் மத்திய பிரதேசத்தில் கிட்டுகிறது. ஓங்காரேசுவரரின் அருள் நீங்காத நிம்மதி தரும். பிறவிப் பிணி தீர்க்கும்.
பிரபாசப் பட்டினம் -
குஜராத் மாநிலத்தில் உள்ள ஊர். இவ்வூருக்கு சோம்பூர், ஹர்நகர், சோமநாதபுரம் என வேறு பல பெயர்கள் உள்ளன. பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் மிகப் பிரதானமாக விளங்கும் சிவாலயம் உள்ளது. இதன் விபரங்களை கூர்ம புராணம், கருட புராணம், பத்மபுராணம், விஷ்ணு புராணம் முதலிய புராணங்களிலும், தேவி பாகவதம், பூரீமத் பாகவதம், மகாபாரதம் முதலிய நூல்களில் இருந்தும் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
இத்தலம் வேத காலம், புராண காலம், இதிகாச காலம், சரித்திர காலம், தற்காலம் வரை தொன்று தொட்டு மாற்றார்களால் பல தடவை இடிக்கப்பட்டது. எனினும் இந்துக்களால் பலதடவை திரும்பத் திரும்ப எழுப்பப்பட்ட திருக்கோவிலாகும். இங்கு எழுந்தருளியிருக்கும்,
இறைவன் திருநாமம் - சோமநாதர்
என்பதாகும். திங்கள் ஆகிய சோமனை திருமுடியில் சூடியதால் சோமநாதர் எனப் பெயர் பெற்றார். பல தடவை இடிக்கப்பட்ட இத்திருக்கோயில் நிறைவாக சர்தார் வல்லபபாய் பட்டேல் முயற்சியினால் புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
folcsólriasuh

Page 34
இராமாயண காலத்தில் இராவணனால் தங்கத்தால் இவ்வாலயம் கட்டப்பெற்றது என்றும், துவாபரயுகத்தில் கிருஷ்ணனால் வெள்ளியினால் புதுப்பிக்கப்பட்டது என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்திரன், சூரியன், சந்திரன், பாண்டவர் ஆகியோர் இத்தலத்தை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
அனுதினமும் சரஸ்வதி சங்கமத்தில் நீராடி, சிவ ஆராதனை செய்து சோமநாதரை வழிபட்டால் அவர்களது எண்ணங்கள் நிறைவேறும், சோகங்கள் மாறும், பாவங்கள் ஒடும் என்று ஸ்கந்த புராணம் தெரிவிக்கின்றது.
பூனா -
மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனா என்ற நகரம் உள்ளது. இங்கு
போவாகிரி எனும் மலைப் பிராந்தியத்தில் கடல் மட்டத்திலிருந்து
3000 அடி உயரத்தில் காடுகளின் மையத்தில் ஓர் சிவாலயம் உள்ளது.
இதிகாசம் - புராணம் ஆகிய இவைகளில் பீமன் என்ற பெயர் கொண்ட இருவர் பிரபலமானவர்கள். மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவனாகப் பீமன் கூறப்படுகின்றான். சிவமகாபுராணத்தில் கூறப்படும் பீமன் ஓர் அரக்கன். இவன் பெயரால் மேற்கூறப்பட்ட சிவாலயம் பீமாசங்கரம் என்று அழைக்கப்படுகிறது.
இப்பீமன் அசுர குலத்தைச் சேர்ந்த இராவணனின் தம்பியான கும்பகர்ணனின் மகன் ஆவான். தன் குடும்பத்தில் பலரைக் கொன்ற இராமனைக் கொல்ல வேண்டும் என்று எண்ணி, அதற்குரிய பலத்தைப் பெற பிரம்மனை நோக்கி பல்லாண்டுகள் தவமிருந்தான். பிரம்மனிடம் வரம் பெற்றுப் பலசாலியானான். அது முதல் இவனது அட் டகாசத்தால் வானவர்கள் வலுவிழந்தனர். ՑF 55 6Ն) லோகங்களுக்கும் தானே அரசன் எனப் பிரகடனப்படுத்தினான். தேவர்கள் சிவனைப் பிரார்த்தித்தனர். சிவன் பீமனை அழிக்க தோன்றிய சிவலிங்க வடிவமே இச் சிவாலயத்தில் மூலவராக உள்ளது. அனல் பிழம்பாக அரன் வெளிப்பட்டதால் ஜோதிர் லிங்கமாகியது. இங்கு எழுந்தருளியுள்ள,
இறைவன் திருநாமம் - பீமாசங்கரர்
என்பதாகும். இந்த ஜோதிர்லிங்கத்தின் உயரம் சுமார் 40 செ.மீ ஆகும். பீமேஸ்வரலங்கம் என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது. ஆலயத்தினுள் இரு நந்திகள் உள்ளன.
54 #ff6)Ioôlmiaisth

தேவ்கர் -
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தேவ்கர் மாவட்டத்தின் தலைநகரம் தேவ்கர் என்பதாகும். சென்னை - டெல்லி மார்க்கமாக ரயில் பயணம் செய்து, ஜஸிடீஹற். என்ற நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆறு மைல் தூரம் சென்றால் தேவ்கர் நகரை அடையலாம். இங்கு ஓர் சிவாலயம் உள்ளது. இறைவன் திருநாமம் - வைத்யநாதர்
ஆவுடை தரைமட்டத்தில் தெரிய ஜோதிர்லிங்கம் காட்சியருளுகிறது. வைத்யநாதரின் உயரம் 11 அங்குலம் தான். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது. ராமேஸ்வரர் ராமலிங்க சுவாமி போல, தேவ்கர் வைத்யநாத லிங்கத்துக்குத் தினமும் சுத்த கங்கை நீரால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. கங்கை நதிக்கரையில் உள்ள சுல்தான் கன்னா என்னுமிடத்திலிருந்து கங்கைப் புனித நீரைக் காவடிக் குடங்களில் நிரப்பி வெறுங்காலுடன் காவடிகளைச் சுமந்து வந்து லிங்கத்துக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்கின்றனர்.
ஆதிசங்கரர், காஞ்சிப் பெரியவர் ஆகியோர் தரிசித்த தலம். ஜன்மப் பிணி தீர்த்து ஐகத்தினைக் காக்கிறார் வைத்யநாதர்.
asTaf -
உத்தரப் பிரதேசத்திலுள்ள ஜோதிர்லிங்கத் தல சேத்திரங்களுள் ராஜாவாக உள்ள தலம் காசி. இதற்கு அவிமுக்தம், ஆனந்தவனம், மஹாச்மசானம், வாரணாசி என்ற பெயர்கள் உண்டு. இன்னதென்று சொல்லமுடியாத ஒளி அங்கு வீசிக் கொண்டிருப்பதால் காசி என்று அழைக்கப்படுகிறது.
அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகா என்னும் ஏழு மோட்சபுரிகள் என்ற கணக்கில் நடுநாயகமாக விளங்குவது இந்தக் காசியாகும்.
சிவனுடைய கோரத் தாண்டவத்தால் அவர் சுமந்திருந்த சக்தியின் காதணி காசியில் திருமால் உருவாக்கிய தீர்த்தக் கிணற்றில் விழுந்து விடுகிறது. சிவனார் அந்தக் காதணியைப் பார்க்க கிணற்றை எட்டிப்பார்க்கும் போது, அவரது காதிலிருந்த குண்டலமும் அக்கிணற்றுக்குள் விழுந்து விடுகிறது. வருத்தமடைந்த சிவன் அங்கிருந்து மறையவும், கிணற்றிலிருந்து பிரகாசமான ஒளியுடன்
சிவலிங்கம்

Page 35
ஒரு சிவலிங்கம் தோன்றி மேலே வந்தது. கிணற்றில் விழுந்த அன்னையின் காதணியும், சிவனாரின் காதுக் குண்டலமும் இணைந்து வெளிப்பட்ட லிங்கத்தில் சிவனது சக்தியும், பார்வதியின் சக்தியும் ஒன்றாக ஐக்கியமாகி ஜோதிர்லிங்கமாக விளங்கியது. இங்கு எழுந்தருளியிருக்கும்,
இறைவன் திருநாமம் - விசுவநாதர் இறைவி திருநாமம் - விசாலாட்சி
என்பதாகும். சலவைக் கல்லால் இழைக்கப்பட்ட கருவறையிலிருந்து வடகிழக்கு மூலையில் சின்னதாக விசுவநாதர் லிங்க உருவில் காட்சி தருகிறார். யார் வேண்டுமானாலும் அவரைத் தொட்டு வழிபாடு செய்யலாம். ஜாதி, மத பேதம் கிடையாது. கங்கை நீரால் எல்லோராலும் அபிஷேகம் செய்யப்படுவதால் விசுவநாதர் அமைந்திருக்கும் பள்ளம் தண்ணிர் நிரம்பியே காணப்படுகிறது.
திரியம்பகேஸ்வரர் -
மத்திய பிரதேசத்தில் உள்ள ஜோதிர்லிங்கத் தலம். முக்காலம், மூவுலகம் உணர்ந்த கண்ணனாக எழுந்தருளி உள்ளார்.
இறைவன் திருநாமம் - திரியம்பகேஸ்வரர்
மூவடிவிலான இவரது தரிசனம் மூவினை அகற்றும்.
குஷ்மேசர் -
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் எல்லோரா குகையில் இருந்து 2 கி.மீ தொலைவில் இந்த ஜோதிர்லிங்கத் தலம் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும்,
இறைவன் திருநாமம் - குஷ்மேசர்
என்பதாகும். சிவலிங்கம் சிவப்பாக இருப்பதால் குஷ்மேசர் என்று அழைக்கப்படுகிறார். அம்பிகை குங்குமப் பூவால் அர்ச்சித்ததாக ஐதீகம் உள்ளது. இவருக்கு கிருஷ்ணேஸ்வரன் என்ற திருநாமமும் உள்ளது. கிருஷ்ணம் என்றால் கறுப்பு என்றொரு அர்த்தம். மனதில் இருக்கும் அஞ்ஞாத இருளினை ஒட்டுவதால் கிருஷ்னேஸ்வரன் எனப் பெயர் கொண்டுள்ளார்.
UUU
ിഖണlist

அமர்நாத் சிவலிங்கம்
உபநிஷத உபதேசங்களும், கீர்த்தி பெற்ற கீதை உரைகளும், தேவார திருவாசகங்களும், சிவாநந்தனுபவம் அடைந்த அருட் குரவர்களுடைய திருவாக்குகளும் சிவபெருமான் ஜோதிஸ்வரூபன் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன.
‘ஸ் மரணாத் அருணாசலம்’ என்று புராணம் புகழும் திருவண்ணாமலை ஷேத்திரத்தில் அந்த ஈசனை ஜோதியாகவே யோகிகள் காண்கின்றனர். திருவண்ணாமலைக்குப் பின்னரே நாடு முழுவதும் ஜோதிர்லிங்கங்கள் தோன்றின என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஜோதிர்லிங்கமாக அனற் பிழம்பாக, அழல் உருவமாக பல இடங்களில் சுடர்விடும் பிறைசூடிப் பெருமான் அபூர்வமாக, அதிசயமாக, அற்புதமாகப் பனிக்கட்டி உருவத்திலும் அருங்காட்சி அளிக்கின்றான். இந்தப் பணிக்கட்டி உருவம் இமயமலைச் சிகரத்திலே காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் என்று அழைக்கப்படும் தலத்தில் உள்ளது.
காவேரிக் கரையில் உள்ள திருவானைக்காவிலும், நர்மதைக் கரையிலுள்ள ஓம்காரேஷ்வர் எனும் தலத்திலும் ஈசன் நீர் உருவில் அருள்பாலிக்கின்றான். ஆனால் அவ்வாலயங்களின் கருவறைகளிலே காணப்படும் சிவலிங்கங்கள் கற்களால் வடிக்கப்பட்ட சிலைகள். இச்சிலைகளை ஒட்டி நீர் சுரப்பதால் அச்சிவலிங்கங்களை நீர் உருவினன் என்று ஆராதிக்கின்றனர். ஆனால் இறைவனை நீர் உருவிலேயே சிவலிங்க வடிவமாக தரிசனம் செய்ய அமர்நாத் தலத்துக்குச் செல்ல வேண்டும்.
இந்துக்களின் புனிதத் தலங்களின் சிகரமாக விளங்கும் தெய்வீக மணம் கமழும் அமர்நாத் குகை, காஷ்மீர் பள்ளத்தாக்கின் வடகிழக்கில் உள்ளது. காஷ்மீர் மாநிலத் தலைநகரான பூgநகரிலிருந்து 141 கி.மீ தூரத்தில் அமர்நாத் குகை அமைந்துள்ளது. இப்பிரயாணத்தின் போது பஹல்காம் என்ற ஊர் காஷ்மீரில் இருந்து 96 கி.மீ தூரத்தில் உள்ளது. இவ்வூர் வரையில் பேருந்தில் (பஸ்) பயணம் செய்யலாம். இங்கிருந்து அமர்நாத் 45 கி.மீ தூரத்தில் உள்ளது. நான்கு நாட்கள் நடைப்பயணம். நடக்க இயலாதவர்களுக்கு மட்ட குதிரைகள், பல்லாக்குகள் என்பன இங்கே
சிவலிங்கம் Eን?

Page 36
கிடைக்கும். இடைவழிகளில் சிற்றுண்டிச் சாலைகள், பொலிஸ் நிலையங்கள், தபால் தந்தி நிலையம், மருத்துவக்குழுக்கள் என்பன உள்ளன.
உடல் வலிவும், உள்ளத்தில் தெம்பும், கையில் நிறையப் பணமும், கருத்தில் பெரும் ஆர்வமும் உள்ளவர்களுக்கே அமர்நாத் தரிசனம் கிட்டும். ஆனால் இந்த ஈசனை என்றும் தரிசனம் செய்ய இயலாது. ஆவணி மாத பெளர்ணமி தினத்தன்றே கங்காதரனைக் கண்குளிரக் காணலாம்.
சுக்லபட்சத்திலிருந்து (பூர்வபட்சம்) பெருங்குகையின் கூரையிலிருந்து நீர்த்துளிகள் வெளிப்பட்டுச் சொட்டுச் சொட்டாக ஒரே இடத்தில் மெதுவாக விழுந்து கொண்டே இருப்பதால், படிப்படியாக தரையிலிருந்து லிங்கோற்பவர் வளர்ச்சியடைகிறார். சுக்லபட்சத்தில் கூரையிலிருந்து வெளிப்படும் நீர்த்துளி கிருஷ்ண பட்சத்தில் (அபரபட்சம்) நின்று விடும். வளர்பிறையில் வளர்ந்து வரும் அமரேசர் பெளர்ணமி அன்று பூரண பொலிவோடு நல்ல காத்திரமான லிங்க வடிவில் காட்சியளிக்கின்றார். தேய்பிறை தொடங்கியவுடன் லிங்கத்தின் உயரம் படிப்படியாகக் குறைந்து அமாவாசையன்று இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். சைவசித்தாந்தம் கூறும் உருவம், அருவுருவம், அருவம் என்னும் முன்னிலைகளைக் காட்டும் முக்கண்ணனை அமர்நாத் தவிர வேறு எங்கும் காணமுடியாது.
பனிலிங்கம் கொண்ட அமர்நாத் கருவறை ஒரு குகையே ஆகும். 45.72 மீட்டர் (150 அடி) உயரம் கொண்ட இக்குகையின் நீளமும் அகலமும் ஒரே அளவில் அமைந்துள்ளமை. அபூர்வமானது. கரடுமுரடான பாதையில் அடியடியாக வைத்து முன்னேறி உயர்ந்த மலைச் சரிவுகளை மிக்க சிரமத்துடன் கடந்து, 12729 அடி உயரத்தில் உள்ள மாபெரும் குகையில் நுழைந்து, அக்குகையின் இறுதியில் பணிலிங்கமாகப் பிரகாசிக்கும் பரமேஸ்வரனைக் கண்குளிரக் காணும் போது, ஏற்ற இன்னல்கள் எளிதில் மறைந்து விடுகின்றன. எல்லையற்ற இன்பம் எழும் இறைவன் திருவருள் இனிதே கிட்டும்.
QQ99QQDJ, Q.Q)
58 சிவலிங்கம்

ஜோதி () லிங்கங்கள்

Page 37

ܸ ܼ
W
வைத்யநாதர்

Page 38
இராமநாதலிங்கம்
 
 

விபீஷண லிங்கம்
இராவணன் தம்பியருள் இளையவன் மிகுந்த சிவபக்தி மிகுந்தவன். பீஷண’ என்றால் அழிவில்லாதது என்று பொருள். விபீஷண என்பதற்கு என்றும் அழிவில்லாதது என்பது பொருள். விபீஷணன் உலகில் என்றும் அழியாத நிலையில் உள்ள ஒரு சிரஞ்சீவிகளில் ஒருவராவார். இவர் அமைத்து வழிபட்ட லிங்கங்கள்
விபீஷண லிங்கம்' என்று அழைக்கப்படும்.
விபீஷணன் வீரசைவ பஞ்சாசாரியர்களில் ஒருவரான ஜகத்குரு ரேணுகாச்சாரியார் என்பவரிடம் தீட்சை பெற்று வீர சைவனானான் என்றும், அவனுடைய விருப்பப்படி ரேணுகாச்சாரியார் ஒரே இரவில் இலங்கையில் மூன்று கோடி லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார் என்றும் சித்தாந்த சிகாமணி’ என்ற வீரசைவ நூல் கூறுகின்றது. இராமர், சீதை, இலக்குவன் ஆகியோர் இராமேசுவரத்தில் சிவபூசை செய்யும் வகையில் அமைந்திருக்கும் ஓவியம் ஆகியவற்றில், விபீஷணனும் அவர்களுடன் இருந்து சிவபூசை செய்வதைக்
ET6006).TLD.
கேரள மாநிலத்திலுள்ள வைக்கம், எட்டுமானுர், கடித்திருத்தி என்ற மூன்று ஊர்களில் மூன்று சிவாலயங்கள் உள்ளன. இவற்றை விபீஷணன் நிறுவினான் என்பர். இதை இராவணன் செய்தான் என்று சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபீஷணனுக்கு ஒரு சமயம் மூன்று சிவலிங்கங்கள் கிடைத்தன. அவை மூன்றையும் ஒரே நேரத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்றும் அவன் அறிந்தான். அவற்றைப் பிறரிடம் கொடுத்துப் பிரதிஷ்டை செய்தால் நேரம் முன்பின்னாகிவிடும் என்பதால், வலது கையால் ஒரு லிங்கத்தையும், இடது கையால் எட்டி ஒரு லிங்கத்தையும், வாயால் கடித்து ஒரு லிங்கத்தையும் உரிய பீடத்தில் நிறுத்தினான்.
வலது கையால் வைக்கப்பட்ட இடம் வைக்கம் என்றும், எட்டி வைக்கப்பெற்ற ஊர் எட்டுமானுார் என்றும், பல்லால் கடித்திருத்திய ஊர் கடித்திருத்தி என்றும் இப்பொழுது அழைக்கப்படுகிறது. இதில் வைக்கம் கோயில் மிகச் சிறப்பு மிக்கதாகப் போற்றப்படுகின்றது.
QUOD QUOD QUOD

Page 39
அபூர்வமான சிவலிங்கங்கள்
வாளால் வெட்டப்பட்ட லிங்கம் -
இரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்த போது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட சிவலிங்கத்தை ரத்தினகிரி என்ற தலத்தில் காணலாம். இறைவன் திருநாமம் பூரீ இரத்தின கிரீஸ்வரர் என்பதாகும். இத்தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
நண்டு வளையுடன் சிவலிங்கங்கள் -
நீடூர் என்ற தலத்தில் நண்டு ஒன்று சிவபெருமானை
வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது.
இப்பெருமானின் திருநாமம் அருட்சோமநாதராகும்.
அனுமனின் வால் பட்ட சிவலிங்கம் -
1. ஆந்திர மாநிலம் ராமகிரி எனும் இடத்தில் உள்ள சிவன் கோவிலின் லிங்கத்தில் அனுமனின் வால்பட்ட தழும்பைக் காணலாம். இந்த லிங்கம் வடக்கே சாய்ந்த நிலையில் உள்ளது.
2. இராமேஸ்வரத்தில் ராமனால் தாபிக்கப்பட்ட சிவலிங்கத்தை அகற்றிவிட அனுமன் தன் வாலால் அதனைக் கட்டி இழுக்க முயன்றான். ஆனால் வால் அறுந்து விழுந்து விட்டான். அந்தச் சிவலிங்கத்தில் அனுமனின் வால் அடையாளம் உள்ளது.
ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்கள் -
ஒரே சிவலிங்கத்தில் 1008 லிங்கங்கள் இருப்பதைக் காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் திருக்கோயிலில் காணலாம். அங்கு தனிச்சந்நிதியாக இச் சிவலிங்கம் உள்ளது. வழுவூர் வீரட்டானத் தலத்திலும் ஒரு லிங்கத்தில் 1000 லிங்கங்கள் அமைக்கப்பெற்ற சகஸ்ரலிங்கம் உள்ளது. இத்தலம் மயிலாடுதுறை - திருவாரூர்ப் பேருந்து சாலையில் உள்ளது.
வடபுறம் சாய்ந்த லிங்கம் -
இத்தகைய சிவலிங்கத்தை கரூரில் உள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காணலாம். கரூர் - திருச்சி - ஈரோடு பாதையில்
8O சிவலிங்கம்

afß6hueoÓrÄuasıíb
8.

Page 40
உள்ள புகையிரத நிலையம். திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரின் அவதாரத் தலம்.
கோடரித் தழும்புடன் சிவலிங்கம் -
செங்கற்பட்டு மாவட்டம் பொன்னேரிக்கு அருகில் உள்ள
திருப்பாலைவனம் திருக்கோவிலில் உள்ள திருப்பாலீஸ்வரர் மீது
கோடரித் தழும்பைக் காணலாம்.
தாமரை மேல் சிவலிங்கம் -
செம்பொனார் கோவிலிலுள்ள சிவலிங்கம் முப்பத்திரண்டு
இதழ்களை உடைய தாமரை வடிவமுடைய ஆவுடையாரில் சுயம்பு
லிங்கமாக எழுந்தருளி உள்ளார்.
கருடன் கால்பட்ட லிங்கம் -
குடவாசலிலுள்ள பூரீ கோணேசுவரரைக் கருடன் வழிபட்டாராம்.
அவர் வழிபட்டபோது ஏற்பட்ட கருடனின் காற்சுவடுகளை
சிவலிங்கத்தின் மேல் இன்றும் காணலாம்.
பலாப்பழ லிங்கம் -
தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர்
திருமயானம். தற்போது திருமெய்ஞானம் என்று வழங்கப்படுகிறது.
இங்குள்ள லிங்கத்தின் மேற்பகுதி பலாப்பழம் போன்று உள்ளது.
பசுவின் கொம்பு குத்திய லிங்கம் -
திருக்கொண்டீச்சரம் பசுபதீஸ்வரர் ஒரு சுயம்புலிங்கம். இந்தச் சிறிய லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்படுத்தப்பட்ட பிளவு காணப்படுகிறது. திருக்கானப்பேர் என்ற தலத்தில் உள்ள சிவலிங்கத்திலும் பசுவின் கொம்பும், குளம்பும் குத்திய சுவடுகள் பதிந்துள்ளதைக் காணலாம்.
மீன் வழிபடும் லிங்கம் -
பாபநாசத்திற்கு அருகிலுள்ள திருச்சேலூர் எனும் ஊர்
தேவராயன் கோட்டை என்று வழங்கப்படுகிறது. இங்கு உள்ள
கோயிலில் மீன் ஒன்று சிவலிங்கத்தை வழிபடும் சிற்பம் உள்ளது.
அம்பாள் தழுவிய லிங்கம் -
தஞ்சைமாவட்டம் திருச்சத்தி முற்றம் கோயிலில் அம்பாள் சிவலிங்கத்தைத் தழுவியபடி இருக்கும் காட்சியைக் காணலாம்.
82 சிவலிங்கம்

இத்தலம் கும்பகோணத்திற்குப் பக்கத்தில் உள்ளது. இறைவன் சிவக்கொழுந்தீசர், இறைவி பெரியநாயகி.
நகக் கிறல் லிங்கம் -
கோயில் பாளையம் வியாக்கிரபுரீசுவரர் கோயில் லிங்கத்தினை
புலிகளின் கைகளைக் கொண்ட வியாக்கிரபாதர் ஆலிங்கனம்
செய்தபோது ஏற்பட்ட புலி நகக் கீறல்களை லிங்கத்தில் காணலாம்.
சகஸ்ரலிங்கம் -
கெழுவத்துார் எனும் தலத்தில் அழகிய சகஸ்ரலிங்கம் உள்ளது. இத்தலம் கோவிலூர் என்ற ஊருக்கு அருகில் உள்ளது.
பழமையான லிங்கம் -
இந்தியாவில் மிகப் பழமையான லிங்கங்களில் ஒன்று ஆந்திர மாநிலத்தில் குடிமங்கலம் என்ற கிராமத்தில் அமைந்த கோயிலில் உள்ளது. . இந்த லிங்கம் சுமார் கி.மு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
ஆமணக்கு லிங்கம் -
திருக் கொட் டையூர் எனும் தலத்தில் இறைவனின் லிங்கத்திருமேனியில் ஆமணக்குக் கொட்டைகள் ஒட்டியிருப்பது போல உள்ளது. இந்த லிங்கம் ஆமணக்கு மரத்தின் கீழ் தோன்றியது.
ரஜத லிங்கம் -
வெள்ளியால் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு ரஜத லிங்கம் என்று பெயர். காஞ்சிபுரம், மயிலாப்பூர் போன்ற தலங்களில் உள்ள சிவன் கோவில்களில் குறிப்பிட்ட சில வேளை தரிசனத்திற்காக மட்டும் வெள்ளிச் சிவலிங்கம் காட்சி தரும்.
பிருத்வி லிங்கங்கள் -
தொண்டைமண்டலப் பகுதியில் அம்பாள் மணல் லிங்கம் பிடித்து வழிபட்ட தலங்கள் நிறையவே உண்டு.
காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் திருமாற்பேறு மணிகண்டீசுவரர் தக்கோலம் ஜலநாதேசுவரர் எலுமியன் கோட்டுர் - அரம்பேசுவரர் கூவம் திரிபுராந்தகேசுவரர் திருப்பாச்சூர் வாகிசுவரர்
சிவலிங்கம் 33

Page 41
இத்திருத்தலங்களின் சிவலிங்கங்கள் பிருத்விலிங்கங்களாகும். அபிஷேகம் கிடையாது. தீண்டாத் திருமேனிகளாகும்.
வில்வ லிங்கங்கள் -
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பூரீ நித்யகல்யாணி கோவிலில்
உள்ள தலவிருட்சமான வில்வமரத்தின் கனிகள் சிவலிங்க வடிவில்
காய்ப்பது தனிப்பட்ட விசேட அம்சமாகும்.
பஞ்ச லிங்கங்கள் -
இலுப்பக்குடி பூரீ நீலகண்டேசுவரர் ஆலயத்தில் பஞ்ச பாண்டவர்கள் பூசித்த பஞ்ச லிங்கங்கள் உள்ளன. அதில் பீமன் வழிபட்ட மகதீஸ்வரர் சிவலிங்கத்தின் பாணத்தில் பதினாறு கோடுகள் உள்ளன. இதை ஷோடசலிங்க அம்சம் என்பர். பதினாறு செல்வங்களையும் தரும். பீமன் வழிபட்டதால் பிரமாண்டமாக உள்ளது.
ஐவகை லிங்கங்கள் -
தானே தோன்றியவை சுயம்பு லிங்கங்கள். பூதகணங்கள் வழிபட்டவை காணபதம், தேவர்கள் வழிபட்டவை திவ்யலிங்கம், ரிஷிகள் போற்றியவை ஆசிஷம், மானுடர் நிறுவியவை பவலிங்கம், கூடிணிகலிங்கம் எனப்படும்.
தற்காலிக பூசைக்காக நிறுவப்படுபவை கூடிணிகலிங்கங்கள் ஆகும். மணல், அரிசி, சாதம், பசுஞ்சாணம், ருத்திராட்சம், வில்வம், வெண்ணெய், வெல்லம், மாவு, தர்ப்பை என்பனவற்றால் அமைக்கப்படும் லிங்கங்கள் இவ்வகையைச் சார்ந்தவை.
மும்முக லிங்கம் -
திருவக்கரை எனும் இடத்தில் உள்ள சந்திரமெளலீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள மூலவர் மும்முகலிங்க வடிவானது. கிழக்கு நோக்கிய தத்புருஷம், வடக்கு நோக்கியது வாமதேவம், தெற்கு நோக்கியது அகோரம்.
இத்தலத்தில் ஒரே சிறிய சிவலிங்கம் ஒன்றில் 1008 லிங்கங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
மதுரை -
மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள ஒரு லிங்கத்தில், 1000 லிங்கங்கள் உள்ளன.
64 சிவலிங்கம்

பசுவின் குளம்பு (கால்) பட்ட லிங்கம் -
ஆந்திர மாநிலத்தில் நந்தியால் எனும் இடத்தில் உள்ள
மஹாநந்தீசுவரரின் மூலவ லிங்கத்தில் பசுவின் குளம்பு (கால்)
அடையாளம் இரண்டு குழிகளாக உள்ளன.
விரிஞ்சிபுரம் -
இங்குள்ள ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு சிவசருமன் என்ற சிறு பையன் அபிசேகம் செய்யத் தொடங்கிய போது லிங்கத்தின் முனை எட்டவில்லை. சிவனருளால் லிங்கம் வளைந்து சிவசருமனின் அபிசேகத்தை ஏற்றுக் கொண்டது. இன்னும் வளைந்த நிலையிலேயே சிவலிங்கம் உள்ளதைக் காணலாம். இறைவன் திருநாமம் - மார்க்கசகாயா.
வெள்ளிகரம் -
திருத்தணி சாலையில் உள்புறமாக உள்ள சிவாலயம். இங்குள்ள சிவலிங்கம் சந்திரனின் பதினாறு கலைகளையும் பட்டைகளாகக் கொண்ட ஜோடச தாரா லிங்கம் ஆகும். இது சந்திரகலா லிங்கம் என அழைக்கப்படுகிறது. சாயுஜ்ய லிங்கம் என்றும் கூறுவர். இந்த தாரா லிங்கத்தை பல்லவர்கள் குளிர்ச்சி மிக்க கல்லில் அமைத்துள்ளனர். உச்சி வேளையில் தொட்டாலும் குளிர்ச்சியாக இருக்கும். இறைவன் திருநாமம் பிருத்வீச்வரர்.
கடாத்தூர் -
உடுமலை - பழனி பாதையில் உள்ள தலம். இங்குள்ள சிவலிங்கம் சுயம்புலிங்கம். நிலமட்டத்தில் ஆவுடையாரின் சுற்றளவு 18 அடி, மேல் மட்டத்தில் 15 அடி, உயரம் 3 அடி, ஆவுடையாருக்கு மேல் பாணம் 3 அடி உயரமானது.
இராவுத்த நல்லூர் -
விழுப்புரம் மாவட்டம் தேவபாண்டலம் என்ற ஊருக்கு அருகில் இந்தத் தலம் உள்ளது. இங்கு முன்னாளில் ஓர் சித்தலிங்கம் இருந்தது. அதனைத் தொட்டு அபிசேகம் செய்பவர்கள் ஓரிரு நாட்களில் இறந்து விடுகின்றனர். முதலில் இது புரியாது மக்கள் தவித்தனர். சித்தர் ஒருவர் இந்த லிங்கத்தை ஆராய்ந்து இது விஷ லிங்கமாகிவிட்டதென்று கூறினார். நெடுநேரம் இதனைத் தொட்டுப் பூசிப்பவரின் உடலில் விஷம் பரவி மரணம் ஏற்படுவதை அறிந்தார். ஆனால் அபூர்வமான லிங்கம் என்று கூறி அதனை
Renuesóriassub 8s

Page 42
பூமிக்கடியில் புதைத்து அதன் மேல் புதிய லிங்கத்தை ஸ்தாபிக்கச் செய்தார்.
தாமல் -
சென்னை - பெங்களுர் நெடுஞ்சாலையில் உள்ளது. இங்குள்ள
சிவாலயத்தின் சிவலிங்கத்தின் பாணத்தில் சங்கு, சக்கரம்
பொறிக்கப்பட்டுள்ளது. திருமால் வழிபட்ட தலம்.
ஆத்தூர் -
காஞ்சிபுரம் - செங்கல்பட்டுச் சாலையில் உள்ளது. இங்குள்ள
சிவலிங்க பாணம் மூன்றடி உயரமானது. பாணமுகப்பில் புடைப்பான
சிறு கோடு உள்ளது. வித்தியாசமான அமைப்பு.
வேதசித்திச்சரம் -
காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரர் திருக்கோயிலுக்குள் உள்ள கோவில் இது. இக்கோவிலில் பெருமான் நான்குமுக லிங்கமாக எழுந்தருளி உள்ளார். இவர் தனக்கு நான்கு முகங்களாலும் வேதத்தை ஒதிக் கொண்டிருக்கிறார் என்று கூறுவர். இறைவன் திருநாமம் வேதசித்தீஸ்வரர்.
elbaiduajib -
சேலம் - சென்னை நெடுஞ்சாலையின் உட்புறம் உள்ள தலம். ஈசனின் பதினாறு முகங்கள் (பட்டைகள்) கொண்ட ஷோடச லிங்கத்தை ஹிரீ காகபுஜண்டர் இத்தலத்தில் நிறுவி உள்ளார். நவபாஷாணத்திற்கு இணையான சூரிய காந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட சிவலிங்கம், பாணம் சுமார் 5% உயரத்தினைக் கொண்டது. கைகளினால் தட்டிப்பார்த்தால் வெண்கலச் சத்தம் எழுவது இந்த லிங்கத்திருமேனியின் உயர்வுக்குச் சான்று.
6 F
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் நகரத்தில் உள்ளது. தலயாத்திரையாக வந்த அகத்தியர் இவ்வூர் மலையில் சிவபூசை செய்ய எண்ணினார். சிவலிங்கம் கிடைக்கவில்லை. நீர் நிறைந்து இருந்த கமண்டலத்தை சிவலிங்கமாக அமைத்து வழிபட்டு தியானஞ் செய்தார். தியானம் முடிந்து கமண்டலத்தை எடுக்க முடியவில்லை. அசரீரியாக “நாம் இந்த கமண்டல லிங்கத்திலேயே இருக்கின்றோம். நீ புதிய கமண்டலத்தைப் பெற்றுக் கொள்வாயாக’ எனக் கூறியது.
சிவலிங்கம்

இந்த லிங்கம் கலசலிங்கம் எனப் பெற்றது. ஊர் கலசா எனப் பெற்றது.
திருக்கடவூர் -
மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் உள்ளது. இங்கு எழுந்தருளிய இறைவன் மார்க்கண்டேயருக்காக யமனை உதைத்தார். மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க யமன் பாசக் கயிற்றை வீச மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்கின்றார். பாசக்கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்துப் பிணைக்கின்றது. அதனால் ஏற்பட்ட பாசக்கயிற்றின் தழும்பு சிவலிங்கத்தில் காணப்படுகிறது அற்புத அபூர்வ சிவலிங்கத் திருமேனி.
திருவான்மியூர் -
சென்னையில் உள்ள தலம். சிவலிங்கம் பால் போன்று வெண்மையாக உள்ளது. பசு பால் சொரிந்து வழிபட்டமை
தொடர்பாகச் சிவலிங்கத் திருமேனியின் சிரசிலும், மார்பிலும் பசுவின் குளம்பு வடு தெரிகிறது.
கைச்சினம் (கச்சினம்) -
திருவாரூர் - திருத்துறைப்பூண்டிப் பேருந்து மார்க்கத்தில் உள்ள தலம். இந்திரன் மணலால் இங்கு லிங்கம் அமைத்து வழிபட்டு அதை எடுத்து வைக்கும்போது அவன் கைபட்ட அடையாளம் லிங்கத் திருமேனியில் படிந்தது. எனவே கைச்சின்னம் என்று பெயர்பெற்று இன்று கச்சினம் என்றாயிற்று. சுவாமி மீது விரல் அடையாளம் உள்ளது.
கொண்டிச்சரம் -
தஞ்சை மாவட்டம் நன்னிலத்திற்கு அண்மையில் உள்ள தலம். காமதேனுவும் அவளின் மகள்களில் ஒருவரான கொண்டியும் பூசித்த தலம். உமையம்மை பசுவடிவில் பூசித்தமையால் பசுபதீஸ்வரர் என இறைவன் திருநாமம். பசுவாக இருந்த உமை இறைவனைக் காணும் அவசரத்தில் தான் பால் சொரிந்த புற்றினைத் தன் கொம்புகளால் குத்திக் கிளறினார். இதனால் கொம்பு சிவலிங்கத்தின் மீது பட்டு ஆழமான காயம் ஏற்பட்டு இரத்தம் சிந்தியது. உமை தன் பால் சொரிந்து காயத்தை ஆற்றியதாக வரலாறு. சிவலிங்கம் ஆழமான வடுபட்டு இரண்டாக பிளந்து இருப்பது போலக் காட்சியளிக்கின்றது.
சிவலிங்கம் 87

Page 43
திருநல்லூர் -
தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் வலங்கைமானிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் உள்ளது. மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர். சிவலிங்கத் திருமேனி ஒரு நாளில் ஆறு நாழிகைக்கு ஒருமுறை, ஒரு நாளில் ஐந்து முறை நிறம் மாறுகின்றது. பிருங்கி முனிவர் வண்டு வடிவாய் வழிபட்டதால் திருமேனி முழுவதும் வண்டுகள் துளைத்த அடையாளங்கள் உள்ளன. அத்துடன் சிவலிங்கத் திருமேனி பார்ப்பதற்கு ஓர் உலோகம் போல் காட்சியளிக்கின்றது. அபூர்வமான அற்புதமான திருமேனி.
திரு ஆமாத்தூர் -
விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் உள்ள சிவாலயம். காமதேனு வழிபட்ட தலம். மூலவரான சிவலிங்கத் திருமேனியில் பசுவின் குளம்பு பதிந்த வடுவும், பால் சொரிந்த அடையாளக் கோடும் உள்ள அபூர்வமான சிவலிங்கம்.
ஜமுத்தீஸ்வரர் கோவில் -
செங்கை மாவட்டத்தில் திருவள்ளூர் ஆரணி சாலையில் உள்ள பெரிய பாளையத்தின் பேருந்து நிலையத்திற்கருகில் ஐமுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள ஒரு சிவலிங்கத்தின் பாணப்பகுதியில் ஒரு வட்டமும் அதனுள் ஐந்து குரங்கு வடிவங்களும் அமைந்துள்ளன.
உத்தரகோசமங்கை -
இங்குள்ள சிவாலயத்தில் நடராச சந்நிதிக்குப் பக்கத்தில் தனியே சகஸ்ர லிங்க சந்நிதி ஒன்றுள்ளது. இதன் மூலத்திருமேனியில் நெடுக்கு கீற்றுகள் உள்ளன. சஹஸ்ர எண்ணிக்கையில் உட்புறத்தில் தலமரத்தின் வேருள்ளது.
காசி = காசி விசுவநாதர் கோயிலில் 511 சிவலிங்கங்கள் உள்ளன. இதில் சுயம்பு லிங்கங்கள் 11. தேவர்கள் உருவாக்கியவை 46. கிரகங்கள்
வணங்கியவை 7. முனிவர்கள் பிரதிஷ்டை செய்தவை 47. பக்தர்களால் உருவாக்கப்பட்டவை 295. பூதகணங்கள் வழிபட்டவை 40. பல்வேறு கோயில்களின் பிரதியாக உருவாக்கப்பட்டவை 65.
ஆவுடையார் கோவில் -
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவுடையார் கோவிலில் நந்தி கிடையாது, கொடிமரம் இல்லை,
88 சிவலிங்கம்

மூலவர் சந்நிதி வடக்கு நோக்கி உள்ளது, கருவறையில் லிங்கத்திற்குப் பதில் ஒரு குழி மட்டுமே உள்ளது, லிங்கம் என்று ஒரு செப்புக் குவளையைக் கவிழ்த்து வைத்துள்ளார், இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக இப்படி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுவார்கள்.
இத்தலம் மதுரை அரிமர்த்தன பாண்டியனிடம் மந்திரியாக இருந்த மாணிக்கவாசகரால் அமைக்கப்பெற்றது. வாதவூரர் என்ற பெயர் கொண்ட இவர் குதிரை வாங்கச் சென்ற போது குருந்த மரத்தின் கீழ் இருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு அவரை மாணிக்கவாசகராக்கிய பெருமை கொண்ட தலம்.
தேவிகாபுரம் -
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள தேவிகாபுரத்தில் மலைமீது அமர்ந்துள்ள கனககிரீஸ்வரர் ஆலயக் கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. அவற்றுக்கு கனககிரீஸ்வரர், காசி விசுவநாதர் என்ற திருநாமங்கள் வழங்கப்படுகின்றன.
திருவண்ணாமலை =
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் தெற்குக் கோபுரத்திற்கு எதிரே உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் சிவபெருமான் லிங்க வடிவில் காமாட்சி அம்மனுடன் ஒரே சந்நிதியில் அருள்பாலிப்பது அதிசயிக்கத்தக்கது.
தக்கோலம் -
அரக்கோணத்திலிருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில் உள்ள தக்கோலம் என்னும் திருவூறல் தேவாரத்தலத்தில் உள்ள சிவலிங்கம் தட்சிணாயத்தில் வெண்மையாகவும், உத்தராயணத்தில் சிவந்தும் இருப்பதாக கூறப்படுகிறது.
aыта? -
காசியில் சனிபகவான் தன்பெயரால் ஒரு லிங்கம் பிரதிட்டை செய்து சிவபூசை செய்தார். பூசைக்கு இரங்கிய சிவபெருமான் அவருக்குச் சனிமண்டலம், கிரக பதவி, அதிகாரங்களைக் கொடுத்தார். காசி விசுவநாதர் கோயிலுக்குத் தென் புறப்பகுதியில் சனிபகவான் நிறுவிய லிங்கம் இன்றளவும் உள்ளது என்பர்.
சிவலிங்கம் 89

Page 44
கங்கை கொண்ட சோழேச்சரம் -
திருச்சி மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் கங்கை கொண்ட சோழேச்சரம் என்ற திருக்கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிவலிங்கம் வடிவில் பேருருவமாக 13 அடி உயரத்தில் உள்ளார். ஆவுடையார் சுற்றளவு 60 அடி. ஒரே கல்லால் ஆனவை. இக்கோவிலின் கருவறை 160 அடி உயரமானது, 100
அடி சதுரமானது.
கழுகத்தார் -
மன்னார் குடியிலிருந்து பெருக வாழ்ந்தான் வழித்தடத்தில் 15கி.மீ தொலைவில் கழுகத்தூர் கிராமம் உள்ளது. இங்கு சடாயு பூசித்த சிவாலயம் உள்ளது. இச்சிவாலயத்தில் ஒரே சிவலிங்கபாணத்தில் ஆயிரத்தெட்டு சிறு லிங்கங்கள் பொறிக்கப்பட்ட சகஸ்ர லிங்கம் உள்ளது. இது கோவிலின் ஈசான்ய மூலையில் உள்ளது. இந்த சகஸ்ர லிங்கத்தைத் தூய மனதுடன் வழிபட்டால் இன்னல்கள் நீங்கி வாழ்வில் ஒளி பெறலாம் என்பது நம்பிக்கை.
அன்னூர் -
கோயம்புத்துர் நகரிலிருந்து சுமார் 30கி.மீ தொலைவில் உள்ளது அன்னுார்க் கிராமம். இங்கு ஓர் சிவாலயம் உள்ளது. இச்சிவாலயத்தில் உள்ள சிவலிங்கம் ஒரு வேடுவனால் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிவலிங்கத்தை எடுத்து கோவில் கட்டலாமென சேரமன்னன் ஒருவன் முயன்றான். யானையை விட்டு இழுத்துப் பார்த்தான். இயலாமையால் நிலத்துடன் உள்ள லிங்கத்தை வைத்தே கோவிலைக்கட்டி கும்பாபிசேகம் செய்ததாகத் தலவரலாறு கூறுகிறது.
திருத்தவத்துறை -
திருச்சியிலிருந்து 18கி.மீ தொலைவில் உள்ள லால்குடி எனும் ஊரிலிருந்து 2கி.மீ தொலைவில் திருத்தவத்துறைக் கிராமம் உள்ளது. இங்குள்ள சிவாலயத்தில் உள்ள சிவலிங்கத்தில் ஏழு பள்ளங்கள் உள்ளன. இத்தலத்தில் அத்ரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கெளதமர், ஆங்கிரசர், மாரிசீ ஆகிய சப்தரிஷிகள் தவமிருந்து சிவன் என்னும் ஜோதியில் கலந்துவிட்டதைக் காட்டும் பள்ளங்களே இவையென்று கூறப்படுகின்றன.
7O சிவலிங்கம்

சென்னை -
சென்னை வளசரவாக்கத்தின் மையப்பகுதியில் வேள்வீஸ்வரர் அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவன் கோவிலின் கருவறைக் கோட்டத்தின் மேற்குப்புறம் லிங்கோற்பவ ஸ்தானம். ஆனால் இக்கோவிலின் கருவறைக் கோட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக பாணபுரீஸ்வரன் என்ற திருநாமத்தோடு ஈசனே அங்கு லிங்கத் திருமேனியராக எழுந்தருளி இருப்பது அற்புதமாகவும், அபூர்வமாகவும் உள்ளது.
திருப்பனந்தாள் -
குங்குலியக்கலய நாயனார் தன் கழுத்தில் கயிறு கட்டி இழுக்க சிவலிங்கம் நேரான தலம் திருப்பனந்தாள். இத்தலம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது. இத்தலத்துப் பெருமானை ஒருத்தி புத்திரப்பேறு வேண்டி வழிபட்டு வந்தாள். ஒரு நாள் இறைவனுக்கு மாலை சாத்தும் போது ஆடை நெகிழ அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு மாலை சாத்தமுடியாமல் வருந்த, அவளுக்கு இரங்கி பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்று அருளினார். அன்று முதல் சாய்வாக இருந்த நிலையையே குங்கிலியக்கலய நாயனார் மாற்றினார்.
திருநள்ளாறு -
காரைக்காலில் உள்ள திருநள்ளாற்று தர்ப்பாரணயேஸ்வரன் திருக்கோவிலில் உள்ள மூல மூர்த்தி தர்ப்பை வனத்தில் சுயம்புவாக எழுந்தருளியதால், லிங்கத் திருமேனியில் தர்ப்பை பட்ட கோடுகள் தென்படுகின்றன.
திருப்புலிவனம் -
காஞ்சிபுரத்திற்குத் தெற்கே 22கி.மீ தொலைவில் உள்ளது திருப்புலிவனம் என்ற ஊர். இவ்வூரில் உள்ள சிவாலயத்து இறைவனைப் புலிவடிவில் ஒரு முனிவர் வழிபட்டு முத்தி பெற்றதாகத் தலவரலாறு கூறுகிறது. புலி இறைவனைப் பூசை செய்ததற்கான அடையாளமாக மூலத்தானத்தில் உள்ள லிங்கத் திருமேனியில் புலியின் நகக் குறிகளை இன்றும் காணலாம். மேலும் அருவுருவமான இறைவனின் லிங்கத் திருமேனியைப் புலி உருவில் உள்ள முனிவர் பூசிக்கும் காட்சி புடைப்புச் சிற்பமாக இங்குள்ள தூண் ஒன்றில் காணப்படுகிறது.
diflanioôlñasth 71

Page 45
AbbGaLu -
திண்டிவனம் - பாண்டிச்சேரி சாலையில் உட்புறமாகத் திரு இரும்பை மாகாளம் என்ற ஊரில் ஓர் சிவாலயம் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். இங்குள்ள மூலவராக உள்ள சிவலிங்கத்தின் மேற்புறம் மூன்று பிளவுகளாக வெடித்துள்ளது. இவற்றில் ஒரு பிளவு வெளியில் விழுந்து விட்டதால், அந்த இடம் வழித்தெடுத்தாற் போல் உள்ளது.
பாபநாசம் -
கும்பகோணத்திலிருந்து 15கி.மீ தொலைவில் தஞ்சாவூர் செல்லும் சாலையில் ராமலிங்க சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ராம லட்சுமணர்கள் இராவணனைக் கொன்ற தோஷம் நீங்க ராமேஸ்வரர் கடலில் நீராடிய பின் கிழக்குத் திசையில் வந்துகொண்டிருந்த போது கர தூஷணரைக் கொன்றதால் வந்த தோஷத்தை வழியில் இருந்த வில்வமரத்தடியில் தங்கி நீக்க எண்ணினர். அதற்கு லிங்கம் ஒன்றைக் கொண்டு வர அனுமனை காசிக்கு அனுப்பினார்.
காசிக்குச் சென்ற அனுமன் திரும்பி வர நேரஞ்செல்லவே சீதை அருகில் இருந்த குடமுருட்டி ஆற்றின் ஈரமணலை எடுத்து வரிசையாக சிவலிங்கங்களைச் செய்யலானாள். அதைக் கண்ட ராமர் பரவசமுற்று அனுமன் திரும்புமுன்னதாகவே சிவலிங்க பூசையைச் செய்யத் தொடங்கினார். காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டு வந்த அனுமன் ஏராளமான சிவலிங்கங்கள் உருவாகி அவற்றிற்குப் பூசைகள் நடப்பதைக் கண்டு தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். பின் அதை சீதை உருவாக்கிய சிவலிங்கங்களுக்குத் தென்திசையில் வைத்துவிட்டார். அதோடு சீதை செய்த சிவலிங்கங்களைப் பெயர்த்து வீச தன் வாலால் கட்டி இழுத்தார். முடிவில் வாலறுந்து வடதிசை நோக்கி விழுந்தார்.
பின் தவறுணர்ந்து ராமர் பாதம் பணிந்து மன்னிக்கவேண்டினார். ராமபிரானும் புன்முறுவலுடன் அருள்கூர்ந்தார். சீதை அமைத்த 107 சிவலிங்கங்களை வழிபட்டாலும் தென்திசையில் உள்ள 108வது சிவலிங்கமான ஹனுமந்த லிங்கத்தை வழிபட்டால்தான் ஏனைய 107 சிவலிங்கங்களை தரிசித்ததன் முழுப்பலனும் கிட்டும் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
72 சிவலிங்கம்

ராமபிரான் தனது பாவங்கள் அகலக் காரணமாக இருந்த இத்திருத்தலம் பாபவிநாசம் என்று அழைக்கப்படட்டும் என்று அருளினார். அப்பெயரே இன்று மருவி பாபநாசம் என்று அழைக்கப்படுகிறது. 108 சிவலிங்கங்களை ஒரே கோயிலில் கொண்ட சிவத்தலம் இதுவாகும்.
திருக்கோகர்ணம் -
கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் உள்ள திருக்கோகர்ணம் தேவாரத் திருப்பதிகம் பெற்ற தலமாகும். இராவணன் கைலாயத்திலிருந்து சிவனிடம் பெற்ற சிவலிங்கம் இலங்கை செல்லாமல் தடுக்க விநாயகப் பெருமான் மூலம் தேவர்கள் முயற்சித்தனர். அதன்போது இவ்வூரில் சிவலிங்கத்தை வைத்துவிட்டு திரும்பவும். எடுக்க முயன்ற இராவணனால் சிவலிங்கமானது பசுவின் காது போலக் குழைந்துவிட்டது. இதனால் கோகர்ணம் என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. இறைவன் கோகர்ணநாதர் எனத் திருநாமம் கொண்டார். கோ என்றால் பசு, கர்ணம் என்றால் காது. பசுவின் காதைப் போன்று லிங்கம் குழைந்தமையால் இப்பெயர் பெற்றது. கொட்டைப்பாக்கு அளவில் ஆவுடையாரில் அடங்கி, சிவலிங்கத் திருமேனி உள்ளது.
உறையூர் -
திருச்சி உறையூரில் உள்ளது பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கின்றது என்று கூறப்படுகிறது. உதங்கமுனிவர் இந்த ஈஸ் வரனை வழிபட்டபோது இறைவன் காலையில் ரத்தினலிங்கமாகவும், உச்சிக்கால வழிபாட்டில் வைரலிங்கமாகவும், இரவு முதற்சாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்தசாம வழிபாட்டின் போது சித்திரலிங்கமாகவும் காட்சி தந்தார் என்று தல வரலாறு கூறுகிறது. இறைவன் திருநாமம் பஞ்சவர்ணேஸ்வரர்.
மருதம்பட்டினம் -
திருவாரூர் பெரிய திருக்கோவிலுக்குக் கிழக்கில் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள மருதம்பட்டினம் கிராமத்தில் ஓர் சிவாலயம் உள்ளது. இங்கு மூலவராக்ச் சிவலிங்கப் பெருமான் உள்ளார். மூலவரின் கர்ப்பக்கிரகத்தின் நான்கு மூலைகளையும் ஒட்டி வெளிப்பிரகாரத்தில் நான்கு சிவலிங்கங்கள் தனித்தனி சந்நிதிகளில்
af6I6ÓrÄua5íh 73

Page 46
உள்ளன. பிரகாரத்தின் தென்புறம் எதிர் எதிர் பார்த்தவாறு இரண்டு லிங்கங்கள், வடபுறம் இரண்டு சிவலிங்கங்களும் உள்ளன. மூலவரையும் சேர்த்தால் ஐந்து லிங்கங்கள் உள்ளன. மூலவரைச் சுற்றி நான்கு லிங்கங்கள் உள்ள இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர்.
குளித்தலை -
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள இரத்னகிரீசுவரர் ஆலயச் சிவலிங்கத் திருமேனிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது அது தயிராக மாறும் அதிசயத்தைக் 35|T600T6)|Tib.
கோலார் -
உலகின் மிகப்பெரிய 105 அடி உயர சிவலிங்கம், 35 அடி உயர நந்தி தேவர், லட்சக்கணக்கான சிவலிங்கங்கள் என்பன பெங்களுர் கோலாரில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ளன.
திருந்து தேவன் குடி -
கும்பகோணம் அருகே உள்ள திருத்துதேவன் குடியிலுள்ள ஆலயத்தில் ஒரே நிறப்பசுக்களின் பாலினால் மூல லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், 'பொன்னிற நண்டு லிங்கத்தின் மீதுள்ள துளையிலிருந்து வெளிவரும் என்பர்.
தென்னலக் குடி -
தஞ்சையிலுள்ள தென்னலக்குடி என்று வழங்கப்படும் திருநீலக்
குடித் தலத்திலுள்ள சிவலிங்கத்தின் மீது எவ்வளவு
நல்லெண்ணெய் ஊற்றினாலும் உள்ளே சென்றுவிடும்.
திருவிற்கோலம் -
சென்னை அருகே இருக்கும் திருவிற் கோலத்திலுள்ள லிங்கம் வெண்ணிறமாகத் தோன்றிடும் சமயத்தில் பெருமழை பெய்யும் என்றும், செந்நிறமாகக் காட்சியளித்தால் போர்வரும் என்றும் கூறுவர்.
74. afR6)I6ônÄIasLib

பூரிகாளஹஸ்தி -
இத் தலத்தில் அர்ச்சகள் கைப்படாத சிவலிங்கமாகத் தீண்டாத் திருமேனியாக அமைந்துள்ள மூலலிங்கத்தின் மீது சிலந்தி, பாம்பு, யானையின் உருவங்கள் உள்ளன. பூரீ-சிலந்தி, காளம்-பாம்பு, அஸ்தி-யானை.
கோயில் வெண்ணி -
கோயில் வெண்ணி என்று வழங்கப்படும் திருவெண்ணியிலுள்ள
மூலவரின் சிவபாகமானது (பாணம்) கரும்புக் கட்டுப் போல பட்டை
பட்டையாகக் காட்சியளிக்கிறது.
திருச்செங்கோடு -
கருவறையில் லிங்கவடிவின்றி அர்த்த நாரீஸ்வர உருவில் சிவன் காட்சியளிப்பது திருச்செங்கோட்டுமலை மீது ஆகும்.
ராமேஸ்வரம் -
ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி திருக்கோயில் சந்நிதியில் ஒரு புதுமையான லிங்கம் உள்ளது. அதன் திருநாமம் "லவணலிங்கம்' புதுமையான இந்த லிங்கத்தை ஆலயத்தினுள் அமைத்தவர் ழரீ பாஸ்கரராயர் என்பவராகும். மூலிகைகளினாலேயே ஆனது. ஒளி ஊடுருவுமி ஸ் படிகமான தோற்றம் . பனங்கற்கண்டுகளைப் பதித்தது போலச் சொர சொரப்பான நெருடலான உருவம் ஆகும். லவணம் என்றால் உப்பு என்பது பொருள். மூலிகை உப்புக்களால் ஆனதால் இது லவணலிங்கம் எனப்படுகிறது.
OU () y
öflensólnálæth 7s

Page 47
திருமாலீசர்
சிவனருளால் உலகினை வழிநடத்தத் தோற்றுவிக்கப்பட்ட ஆதிமூர்த்திகள், பிரம்மா, திருமால், உருத்திரர், மகேசர், சதாசிவர், என்னும் ஐவராவார். இவர்களில் உலகிலுள்ள உயிர்களைக் காக்கும் கடவுளாகத் திருமால் திகழ்கின்றார்.
உலகப்படைப்பின் தொடக்கத்தில் இவருக்கு ஆதிசிவனால்
காத்தல் தொழிலும், பஞ்சாயுதங்களும் பூதேவி, பூரிதேவி ஆகிய தேவியர்களும், பரமபதமும், திருபாற்கடலும் அளிக்கப்பட்டன.
இவர் உலகினைக்காக்கவும், தீயசக்திகளான அசுரர்களை அழிக்கவும், அன்பர்களுக்கு அருளவும் அனேக அவதாரங்கள் எடுத்தார். அந்தந்த அவதாரங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து ஆராதனை செய்து அருள் பெற்றார்.
ஆதி மும்மூர்த்திகளில் ஒருவரான திருமால் அதியுன்னத வீரமூர்த்தியாவார். உலகில் தீய சக்திகளான அசுரர்களை அழித்துத் தர்மத்தை நிலை நாட்டுகின்றார். அதே சமயம் சிவபெருமானை ஆராதனை செய்து மகா தபசியாகத் திகழ்கின்றார். திருமாலின் அவதாரமான கண்ணன் தனது சிவயோக பாவனையால் சிவபெருமானாகவே இருந்ததாக மகாபாரதம் கூறுகிறது.
சிவவழிபாட்டில் திருமாலையும் சேர்த்தே வழிபடுகின்றோம். திருமாலை உமாதேவியின் புருஷரூபமென்றே சைவர்கள் குறிக்கின்றார்கள். சைவர்கள் போற்றும் ஏழு குருமார்களில் ஒருவராகத் திருமால் திகழ்கின்றார்.
திருமால் தேவவடிவத்துடனும், அவதாரக் கோலங்களிலும் சிவவழிபாடு செய்ததை அனேக புராணங்களும் இதிகாசங்களும் சிறப்புடன் கூறுகின்றன.
திருமுறைகளில் திருமால் -
தமிழ் வேதமாகிய திருமுறைகளில் திருமால் தனிச்சிறப்புடன்
போற்றப்படுகின்றார். அவர் பார்வதி தேவியின் வடிவமாகச்
சிவபெருமானின் இடப்பாகத்தில் இருப்பது, ஒரு பாகத்தினைப்
78 சிவலிங்கம்

பெற்று அரியர்த்தராக இருப்பது, கரத்தில் அம்பாகத் திகழ்வது, இடப வாகனங்கொண்டு அவரைத்தாங்குவது முதலிய பல்வேறு நிலைகளில் போற்றப்படுகின்றார். இவை திருமுறைகளில் திரும்பத்திரும்பக் கூறப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இவற்றுள் சிலவற்றைத் திருமுறைத் தொடர்களால் அறிந்து மகிழலாம்.
சிவபெருமானின் அருட் சக்தியாக இருப்பவள் உமாதேவியாவாள். அவளே பவானியாகவும். விஷ்ணுவாகவும், காளியாகவும், துர்க்கையாகவும் விளங்குகிறாள் என்று புராணங்கள் குறிக்கின்றன. இதையொட்டித் திருமால் தேவியாக இருப்பதைத் தேவாரத்துள்,
'அரியலால் தேவியில்ல' (அரியான் திருமாலைத் தவிர தேவியில்லை)
என்றும், அந்தத் தேவியைத் தனது ஒருபாகத்தில் கொண்டு சிவபெருமான் அர்த்தநாரியாக விளங்குவதைக்,
“காவியங் கண்களாகி கடல் வண்ணன் ஆகிநின்ற தேவியைப் பாகம் வைத்தார்”
(காவியைப் போல் சிவந்த கண்களையும், கடல்போல் நீலநிறத்தையும் கொண்டு திருமாலாகி நின்ற தேவியைத் தனது பாகத்தில் கொண்டவர்.) என்றும், சிவபெருமான் திருமாலான மோகினியின் காதலனாக இருப்பதை,
"கடல் தனில் உறைவார் காதலன்” என்றும், திருமாலுக்குச் சிவன் குருவாய் விளங்குவதை,
‘மாலுக்கும் குருவாய் நின்றார்”
என்றும், திரிபுரமெரித்தபோது திருமால், சிவனின் கரத்தில் அம்பாகி நின்றதை
"ஈண்டு துயில் அமர் அம்பினனே? என்றும் பலவாறு குறிக்கப்பட்டுள்ளது.
மாணிக்கவாசகர், சிவபெருமான் திரிபுரமெரித்த வேளையில்
தேரின் அச்சு முறிய, திருமால் இடபவடிவம் கொண்டு தாங்கியதைத் திருவாசகத்தில்.
சிவலிங்கம் ገ?

Page 48
“இடபமதாய் தாங்கினான். திருமால்காண் சாழலோ’ என்று குறிக்கின்றார்.
திருமால் சிவபூசை செய்வதில் விருப்பமுடையவராக இருக்கின்றார். அவர் நீற்றினை நிறையப்பூசிப் பாசுபத விரதம் மேற்கொண்டு வேதங்களாலும் திவ்ய வார்த்தைகளாலும் சிவபெருமானை மலர்கொண்டு அர்ச்சிப்பதனை திருமுறை ஆசிரியர்கள்,
"மலர்கொண்டு வழிபடும் . கருமால். என்றும் அலர்கொண்டு அர்ச்சித்த மணிவண்ணன்” என்றும், அருமறைகளால் போற்றி வழிப்பட்டதை,
அருமறைாயல் நான்முகனும் மாலும் போற்றும் சீரான்' என்றும், துதிசெய்து வழிபடுவதை,
அரிபிரமர் துதி செய்ய நின்றளித்தார் போலும் என்றும், சுருதங்கள் பாடித் துதிப்பதை,
மாலயனும் கூடித் தங்கள் சுருதங்களால் துதித்து' என்றும் குறிக்கின்றனர்.
திருமால் வலிய சக்கராயுதத்தைப் பெற வேண்டியும், மைந்தர் களைப் பெறவேண்டியும் சிவனை ஆராதனை செய்தது புராணங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இதனை விளக்கும் வகையில் அனேக திருமுறை வாசகங்கள் உள்ளன. சக்கராயுதம் பெறவேண்டித் திருமால் பூசை செய்ததை,
வேண்டியிண்டு விருப்பமொடு மால்வழிபாடு செய்ய
என்றும், அப்படி வழிபாடு செய்யும் போது ஆயிரம் மலர்கள் கொண்டு வழிபட்டு வந்ததுடன் ஒரு நாள் ஒரு மலர் குறைய தன் கண்ணை இடந்து திருவடியில் இட்டு வழிபட்டதை,
“திருமகள்கோன் மாலாயிரம் கொண்டு மலர்கண் இட” என்றும் குறித்துள்ளதைக் காண்கிறோம்.
78 flooriilash

அவர் அவதாரம் செய்த காலங்களிலும், அனேக இடங்களில் சிவபூசை செய்துள்ளார். இராமனாக அவதாரம் செய்தபோது வழிபட்டதைத் திருவிராமேசுவரப் பதிகத்தாலும், பரசுராம அவதாரத்தில் வழிபட்டதைத் திருநின்றியூர் பதிகத்தாலும் அறிகின்றோம்.
சிவபெருமானே திருமாலாகி நின்று காத்தல் தொழிலை நடத்துகின்றார் என்று சில தேவாரப்பாடல்கள் கூறுகின்றன.
திருமாலின் பத்து அவதாரங்களும் சிவத்தலங்களும் -
ஆதியில் உலகைப்படைத்த சிவ பார்வதியார் தாம் படைத்த உலகையும் உயிர்களையும் காத்து அருள் புரிவதற்காக ஒரு தேவனைப் படைத்தனர். அவரே திருமால் எனப்பட்டார். அவர் மாயையின் வடிவாக விளங்கியமையால் “மாயவன்’ எனப்பட்டார்.
சிவபெருமான் அவருக்குச் சக்கராயுதத்தை அளித்தார். பார்வதி சங்கையும் தாமரையையும் அளித்தாள். அவருக்கென தனியே ஓர் உலகத்தைப் படைத்து அளித்தனர். அது “வைகுண்டம்” எனப்பட்டது. அதில் திருமால் பூரிதேவி, பூதேவி, நீளாதேவி என்ற மூன்று தேவியர்களுடன் வீற்றிருக்கின்றார்.
மேலும் பாற்கடலில் ஆதிசேடன் என்ற பாம்ப்ரசன் மீது யோகநித்திரை செய்பவராக உள்ளார். அவர் தனது சிந்தனையில் “அலைகடல் நடுவில் விளங்கும் சிவபிரானை ஓயாது சிந்தித்துத் தொழுதவாறே’ தமது காத்தல் தொழிலைச் செய்து கொண்டிருக் கின்றார். அவரைச் சுற்றி முனிவர்களும், கந்தர்வர்களும் உள்ளனர். கருடன் திருவடி வாரத்திலும், மார்க்கண்டேயர் திருமுடி வாரத்திலும் வீற்றிருக்கின்றனர். அவரது தொப்புள் கொடியிலிருந்து மலர்ந்த (உந்தி) தாமரையில் வீற்றிருந்து ஞானோபதேசம் பெறுபவனாகப் பிரம்மன் திகழ்கின்றான்.
அவருக்கு ஆதியில் அளிக்கப்பட்ட தேவி ‘ழரீ’ எனும் மகாலட்சுமியாகும். அவள் பல்வேறு அரசர்களுக்கும், பிருகு, மார்க்கண்டேயர் முதலிய ரிஷிகளுக்கும் மகளாகப்பிறந்து திருமாலை மணந்து கொண்டாள்.
அவள் சிவபெருமானுக்குரிய வில்வ மரத்தில் நீங்காது உறைகின்றாள். இதனால் அவரின் சகஸ்ரநாமா வளியில் “வில்வ நிலையாய நம” என்று துதிக்கப்படுகின்றாள்.
சிவலிங்கம் 79

Page 49
இவர் காக்கும் கடவுளராக இருப்பதால் மக்களையும் உயிர்களையும் காக்க அனேக அவதாரங்கள் எடுத்தார். அந்த அவதாரங்களில் அனேக அசுரர்களைக் கொன்று தருமத்தை நிலை நாட்டினர். ஒவ்வொரு அவதாரத்திலும் அசுரர்களைக் கொன்ற பாவம் நீங்கச் சிவபூசை செய்தார். அவர் பூசித்த சிவலிங்கங்கள் அவர் கொண்ட அவதாரச் சிறப்புப் பெயர்களால் மச்சேசர், கூர்மேசர், வராகேசர் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றனர்.
மச்சேசுவரர் -
ஒரு சமயம் கோமூகாசுரன் என்பவன் வேதங்களைத் திருடிக்கொண்டு கடலுக்கடியில் ஒளிந்துகொண்டான். வேதங்கள் இல்லாததால் பிரம்மாவினால் படைப்புத் தொழிலைச் செய்ய முடியவில்லை. அவன் திருமாலிடம் சென்று வேதங்களை மீட்டுத்தருமாறு வேண்டினான். திருமால் மிகப்பெரிய சுறாமீனாக உருவந்தாங்கிக் கடலுக்கு அடியில் சென்று அதைக் கலக்கினார். அதனால் கோபம் கொண்டு வெளிவந்த கோமூகாசுரனைக் கொன்று வேதங்களை மீண்டார். வேதங்களை குழந்தைகள் வடிவில் எடுத்து வந்து பிரம்மாவிடம் கொடுத்தார்.
பிறகு மின் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று தங்கினார். அவர் உள்ளத்தினுள் இச்செயலை என்னைத் தவிர வேறு யார் செய்வார்கள் என்ற கர்வம் உண்டாயிற்று. அதனால் உலகம் கலங்கும் படியாகக் கடலைக் கலக்கி விளையாடினார். இச் செயலால் உலகம் துன்பம் அடைந்தது. சிவபெருமான் கொக்குவடிவில் திருமாலாகிய மீனைத் தனது அலகால் பற்றி எடுத்தார். மீனாகிய திருமால் துள்ளித் துள்ளி விடுபட முனைந்தார். அவரது முயற்சி பலனளிக்கவில்லை.
அதன் பிறகே வந்திருப்பது சிவன் என உணர்ந்து மமதை நீங்கி அவரைத் தொழுதார். சிவபெருமான் அதன் பின் அவரை விட்டார். திருமால் தான் செய்த குற்றத்தை நீக்கும் பொருட்டு பல இடங்களில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். அத்தலங்களில் சிவபெருமான் மச்சேசர் என அழைக்கப்பட்டார்.
அவ்வாறு அழைக்கப்பட்ட ஆலயங்கள் காஞ்சிபுரம் மச்சேசர் ஆலயம், கும்பகோணத்தை அடுத்துள்ள தேவராயன் பேட்டை என்றழைக்கப்படும் சேலூரில் உள்ள ஆலயம் என்பனவாகும்.
80 afon J6óniilash

காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் ஆலயத்தின் முன்னுள்ள பதினாறு கால் மண்டபத் தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவரது அலகில் சிக்கிக்கொண்டு வழிபடும் திருமாலையும் காணலாம். இது வேறெங்கும் இல்லாத வடிவமாகும்.
கச்சபேசுவரர் -
திருமால் இரண்டாவது எடுத்த அவதாரம் 'ஆமை' அவதாரமாகும். தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி மந்திர LD600D6D60)ULU மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்த போது மந்திரமலையை தன் முதுகில் தாங்கி ஆமை வடிவம் கொண்டார். இந்த மந்திரமலையைத் தாங்கும் சக்தியைப் பெறத் திருக்கச் சூரில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானைப் பூசித்தார். அதற்கு அங்கு தீர்த்தம் ஒன்றையும் அமைத்தார். அது ஆமை மடு என்ற பெயரில் உள்ளது.
சக்தி கிடைத்தபின் திருமால் காஞ்சிபுரத்தில் முருக்கமரத்தின் கீழ் சோதி வடிவமாகத் தோன்றிய சிவலிங்கத்தை வழிபட்டார். அந்த லிங்கம் கச்சபேசுவரர் என்ற பெயரில் உள்ளது. கச்சபம் என்றால் ஆமை என்பது பொருள். இவ்வாலயம் காஞ்சிபுரத்தில் பெருங்கோயிலாக உள்ளது.
வராகேசுவரர் -
பன்றி சுகபோகத்திற்கும் அதியுன்னத வீரத்துக்கும் பெயர் போனது. அனேக தெய்வங்கள் பன்றி அவதாரம் எடுத்து அன்பர்களைக் காத்ததைப் புராணங்கள் கூறுகின்றன. திருவிளையாடற்புராணம் சிவபெருமான் பன்றி அவதாரம் எடுத்ததைக் கூறுகிறது.
திருமால் மூன்று தடவை பன்றி அவதாரம் எடுத்துள்ளார். ஊழி முடிந்து இந்த கல்பம் தொடங்கிய காலத்தில் பூமி தண்ணிரில் அமிழ்ந்து கிடந்தது. அதை மேலே கொண்டு வர திருமால் பன்றி அவதாரம் எடுத்தார். இதனை ஆதி வராகம் என்றழைப்பர்.
ஒரு சமயம் இரணியாட்சன் என்ற அசுரன் பூமியைப் பாய்போல் சுருட்டிக் கடலுக்கடியில் ஒளித்து வைத்தபோது, திருமால் வராக அவதாரம் எடுத்து அசுரனைக் கொன்று பூமியைக் காத்தார். இதனைப் பூவராகம் என்பர்.
சிவலிங்கம் 81

Page 50
ஒரு முறை சிவனின் அடிமுடிகாணும் நோக்கில் பன்றி உருவம் எடுத்து பூமியை அகழ்ந்து உள்ளே சென்று சிவனின் அடியைக் காண முடியாமல் சிவனைச் சரணடைந்தார்.
இந்த மூன்று வேளையிலும் வராக அவதாரத்துடன் சிவபெருமானைப் பூசித்தார். இதனால் சிவனுக்கு வராகேசுவரர் என்ற திருநாமம் உண்டாயிற்று.
இவ்வாறு திருமால் பூசித்த தலங்கள் சிவபுரம், காஞ்சிபுரத்தில் உள்ள தாமல், திருவிடந்தை, பன்றிக்கோடு, அரதைப் பெரும் பாழி என்பனவாகும்.
இவற்றில் சிவபுரம் சம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற திருமுறைத்தலமாகும். திருமால் பூசித்த தலங்களில் தலையானது.
தாமல் என்ற தலத்தில் திருமால் பூசித்த லிங்கத்துக்கு வராகேசுவரர் என்ற திருநாமம் உள்ளது. திருவிடந்தைக்கு அருகில் திருமால் பூசித்த லிங்கம் செங்கண் மாலீசுவரர் என்று அழைக்கப்படுகிறது. ஊர் செங்கண்மால் எனப்படுகிறது.
அரதைப் பெரும் பாழி திருஞானசம்பந்தர் பாடல் பெற்றதலம். இங்கு இறைவன் பாதாளவரதர் என அழைக்கப்படுகிறார்.
நரசிம்மேசுவரம் -
திருமால் இரணியனை அழிக்க கொண்ட நரசிம்ம அவதாரத்தின் அசுர சக்தியை அழிக்க, சிவபெருமான் சரபேசர் அவதாரம் எடுத்தார். சரபேசர் நரசிம்ம மூர்த்தியைப் பற்ற திருமாலின் அசுர சக்தி அடங்கியது. இதனால் திருமால் சிவபெருமானை போற்றினார். தனது தவத்திற்காகப் பல இடங்களுக்குச் சென்று சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். அவை அவரது பெயரால் நரசிம்மேசுவரர் என அழைக்கபடு கின்றன.
திருவதிகை, காஞ்சிபுரத்தில் உள்ள தாமல், பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள வில்லியனூர் ஆகியன திருமாலால் வணங்கப்பட்ட நரசிம்மேசுவரர் எனப் பெயர் கொண்ட லிங்கங்கள் அமைந்துள்ள தலங்களாகும்.
82 footfish

வாமனபுரீசுவரர் -
மாவலிச்சக்கரவர்த்தியிடம் திருமால் குறள் வடிவம் கொண்டு மூன்றடி நிலம் பெற்று, மாபலியைப் பாதாளத்திற்குள் தள்ளிவிட்டார். மாபலியை வஞ்சித்து பாதாளத்திற்குத் தள்ளிய பாவந்திர திருமால் வாமன வடிவத்துடன் சிவபூசை செய்த தலம் திருமாணிக்குழியாகும்.
இங்கு இறைவன் வாமனபுரீசுவரர் என்ற திருநாமம் கொண்டுள்ளார். அம்பிகை அம்புஜாட்சி எனத்திருநாமம் கொண்டுள்ளார். கடலூர் - பண்ருட்டி சாலையில் உள்ள தலம்.
மயிலாப்பூரில் உள்ள வெள்ளிச்சரர் என்ற திருக்கோயிலில் வியாழபகவானின் கண்ணைக்குத்திக் குருடாக்கிய பாவந்திர சிவலிங்கம் பிரதிட்டை செய்து திருமால் பூசித்துள்ளார்.
பரசுராமேசுவரர் -
திருமாலின் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரமாகும். ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாவுக்கும் மகனாகத்தோன்றியவர். தன் தந்தையைக் கொன்ற கார்த்தவீரியார்ச்சுனனைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டார். எனினும் கோபந் தாளாது எதிர்ப்பட்ட அரசர்களையும் கொன்றார்.
அவரை அடக்குவாரில்லாமல் பூவுலக அரசர்கள் காசிப முனிவரைச் சரணடைந்தனர். காசிபர் பரசுராமரிடம் சென்று நீ வென்ற இப்பூமியை எனக்குத் தானமாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பின் தனக்குத் தானமாக அளிக்கப்பட்ட பூமியில் இனி நீங்கள் இருக்க கூடாது என்று கூறி, உமது சினத்தைத் தவிர்க்க சிவபூசை செய்யும்படி கூறி அனுப்பினார்.
பரசுராமர் மேற்குக் கரையோரம் சென்று தனது மழுவை எறிந்து கடலை விலகும்படி கூறினார். கடல் பின்வாங்கியதனால் உண்டான நிலத்தினை ஏற்றார். இதுவே இன்றைய கேரளம் என்பர். இங்கு பல சிவாலயங்கள் அமைத்து வழிபட்டார். அவ்வாறு வழிபட நிறுவிய சிவலிங்கங்கள் பரசுராமேசுவரர் என்று அழைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் பழுவூர், வேகாமங்கலம், திரைலோக்கி, நின்றியூர் ஆகிய தலங்களில் பரசுராமர் நிறுவிப் பூசித்த சிவலிங்கங்கள் உள்ளன. இத்தலங்கள் பரசுராமேசுவரங்கள் என அழைக்கப் படுகின்றன.
சிவலிங்கம் 83

Page 51
இராமலிங்கேசுவரர் -
திருமாலின் ஏழாவது அவதாரம் இராமாவதாரமாகும். இந்த
அவதாரத்தில் வனவாசம் சென்ற இராமன் பல அரக்கர்களை
அழித்தான். இறுதியில் இராவணனை அழிக்கின்றான்.
இராவனேசுவரன் சிவபக்தன். அதனால் இராவனேசுவரனைக் கொன்ற இராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாயிற்று. அத்துன்பம் அவரை வருத்தியது. அது தீரும் பொருட்டு அவரும் அவர் மனைவி சீதையும், லட்சுமணனும், சுக்ரீவன் முதலான தோழர்களும் சிவலிங்கம் அமைத்துப் பூசிக்க விரும்பினர்.
ஆஞ்சனேயனை நர்மதை தீரத்துக்குச் சென்று பூசை செய்ய ஒரு லிங்கம் கொணி டுவர அனுப்பினர். அவர் வரக் காலதாமதமாகிவிட்டது. அப்போது சீதை கடற்கரையில் இருந்து வெண்மணலைக் கூட்டிச் சிவலிங்கம் அமைத்துக் கொண்டிருந்தார். அதற்கு மாலைகளும், மலர்களும் சூட்டி அலங்கரித்தாள். இராமர் இதைக்கண்டு மகிழ்ந்து அந்த லிங்கத்தையே பிரதிட்டை செய்து சிவ பூசை செய்தார். மற்றோரும் மனம் ஒன்றி சிவபூசையில் கலந்து கொண்டனர். இராமனைப்பற்றியிருந்த பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது.
தாமதமாக வந்த ஆஞ்சநேயன் சிவபூசை முடிந்ததைக் கண்டு மனம் வருந்தினார். ஆஞ்சநேயர் "ஐயனே வெகுதூரத்தில் இருந்து லிங்கங்களைக் கொண்டுவந்து விட்டேன். எனவே நீங்கள் அமைத்த லிங்கத்தை எடுத்துவிட்டு நான் கொண்டு வந்த சிவலிங்கத்தைப் பிரதிட்டை செய்யுங்கள்’ என்றார். இராமர் “அதை நீயே செய்” என்றார். ஆஞ்சநேயன் மணல் லிங்கம்தானே என்று அலட்சியமாக அதைப்பற்றினார். அவரால் ஒருமணல் துகள்களைக் கூட பெயர்க்க முடியவில்லை. பின் தனது வாலை அதில் கட்டிப் பலம் கொண்ட மட்டும் இழுத்தார். வால் அறுந்து சற்றுத் தூரம் போய் விழுந்தார். அவருக்கு அவமானம் உண்டாயிற்று.
இராமர் அவரை அழைத்து சிவபூசையின் பெருமைகளை உரைத்தார். பின்னர் ஆஞ்சனேயர் கொண்டுவந்த லிங்கத்தை தாம் நிறுவிய லிங்கத்தின் ஈசானத்தில் பிரதிஷ்டை செய்தார். அதற்கு காசி விசுவநாதர் என்று பெயரிட்டார். அதற்குத் தினமும் முதல் பூசை நடக்க வேண்டும் என்ற நியதியையும் ஏற்படுத்தினார்.
84 சிவலிங்கம்

பெயரில் உள்ளது. இது பன்னிரண்டு ஜோதிலிங்கங்களில் ஒன்றாகும். இராமேஸ்வரம் தென் இந்தியாவின் பிரதான தலமாக விளங்குகிறது.
இராமேஸ்வரத்தை விட திருவாமாத்துர், இராமநந்தீச்சரம் ஆகிய தலங்களில் இராமர் சிவவழிபாடு செய்துள்ளார். மன்னார்குடிக்கு அருகில் திருஇராமேசுவரம் என்ற ஊரில் இராமநாதசுவாமிக்கு பெரிய சிவாலயம் உள்ளது. இங்குள்ள மகாலட்சுமி சந்நிதியில் சீதை வழிபட்ட சீதேசுவரர் என்ற பெயரில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.
இராமேஸ்வரம் என்று அழைக்கின்றனர். திரு ஒற்றியூர், திருவாரூர், திருவான்மியூர் தலங்களில் ராமன் வணங்கிய சிவலிங்கங்கள் இராமநாதேசுவரர் என்ற திருநாமத்துடன் சிவலிங்கச்சந்நதிகளாக உள்ளன.
அகத்தியரின் அறிவுரைப்படி கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பாபநாசத்தில் ராமரும், சீதையும், இலக்குவனுடன் 108 லிங்கங்கள் அமைத்து வழிபட்டுள்ளனர். சிவவழிபாட்டால் அவர்களைப் பற்றிய பாவம் நாசமாகியது. அதனாலேயே இதற்கு பாபநாசம் எனப் பெயர் வழங்கப்பட்டது.
விசுவாமித்திரரின் யாகம் காத்தபோது தாடகையையும், அவளது சகோதரர்களையும் கொன்ற பாவந்திர குமரி மாவட்டத்தில் உள்ள தாடகை மலை அடிவாரத்தில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். அது அவர் பெயரால் இராகவேசுவரர் என்று அழைக்கப்படுகிறது. இதே போன்று நாகர் கோவிலிலிருந்து 18கி.மீ. தொலைவில் உள்ள தெரிசனம் தோப்பு என்ற இடத்திலும் இராகவேசுவரர் என்ற திருநாமம் கொண்ட சிவலிங்கத்தலம் உள்ளது.
பலபத்ர ராமேசுவரம் -
திருமாலின் எட்டாவது அவதாரமான பரசுராமரும் சிவலிங்கம்
வைத்து வழிபட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் இவர் பூசித்த பலபத்ர
ராமேசுவரர் என்ற திருநாமம் கொண்ட சிவலிங்கத்தலம் உள்ளது.
ரைவதகிரி -
திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கண்ணனும் சிவலிங்க வழிபாடு செய்துள்ளான், ரைவதகிரி எனுமிடத்தில் இவன் பூசித்த
சிவலிங்கம் 85

Page 52
சிவலிங்கத்தலம் உள்ளது. அப்பெருமானுக்கு வில்வேசுவரர் என்பது பெயராயிற்று.
பூபாரம் தீர்க்கக் கண்ணன் பல அசுரர்களைக் கொன்றதனால் அப்பாவந்திரக் காஞ்சிபுரத்தில் சிவலிங்கம் அமைத்துப் பூசித்தார். அச்சிவலிங்கம் கண்ணேசம் என்று அழைக்கப்படுகிறது.
திருமால் சிவலிங்கமானது -
குற்றாலத்திலிருந்து திருமால் வடிவை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்று அவ்வூர்த் தலபுராணம் கூறுகின்றது. திருமால் சிவமந்திரங்களைக் கேட்டு மனம் உருகித் தானே சிவலிங்க மாகியதைக் காஞ்சிபுரத்தில் காணலாம்.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்துக்கு மேற்கில் அமைந்திருப்பது திருமேற்றளிசுவரர் ஆலயம். சம்பந்தரின் பாடல் பெற்றதலம். இத்தலக் கோயிலின் உள்ளே இன்னொரு ஆலயம் உள்ளது. அதில் ஒதவுருகீசர் என்ற பெயரில் சிவலிங்கமாகச் சிவபெருமான் உள்ளார். அவருக்கு முன்பாக திருமாலின் திருவடிகள் உள்ளன. காஞ்சிபுராணப்படி இங்கு திருமால் வேதத்திலுள்ள உருத்திர மந்திரங்களை ஒதக் கேட்டு உருகித் தானே சிவலிங்கவடிவமாகி விட்டார் என்று கூறப்படுகிறது. திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்களைக் கேட்டும் திருமால் உருகியதாகவும் கூறப்படுகிறது.
சிவபெருமான் திருமாலானது -
காஞ்சிபுரத்தை அடுத்துள்ள திருப்பாற்கடலில் சிவலிங்கம் திருமாலாக உருவம் பெற்றதைக் காணலாம். சென்னை- பெங்களுர் சாலையில் காவேரிப்பாக்கத்திலிருந்து மூன்று கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. ஆவுடையார் மீது திருமால் உள்ளார்.
இந்த வரலாறு நன்மங்கல் ஏகாம்பரநாதர் ஆலயத்திலும், காஞ்சிபுரத்தில் இருக்கும் ஓரிரு கோயில்களில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. கோவையை அடுத்துள்ள காரமடையில் உள்ள திருமால் ஆலயத்தில் சிவலிங்கமே உள்ளது. இவர் ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
மோகினிசுவரர் -
திருமால் பல தடவை மோகினி அவதாரம் கொண்டுள்ளார். அவற்றில் இரண்டு நிகழ்ச்சிகளே அதிக வழக்கிலுள்ளது. பாற்கடலில்
88 fouoritish

கிடைத்த அமுதத்தை பங்கிடத் தேவரும், அசுரரும் போட்டியிட அவர்களிடையே மோகினியாகத் தோன்றி, அசுரரை வஞ்சித்து அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தார். இரண்டாவது தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கச் சிவபெருமான் பிச்சாடனர் உருவம் கொண்டு செல்ல, திருமால் மோகினி உருவம் கொண்டு சென்றார். இதனால் முனிவர்களின் தவம் அழிந்தது.
இவ்விரு செயல்களாலும் திருமாலைப் பாவம் சூழ்ந்தது. இப்பாவத்தைப் போக்க திருமால் சிவலிங்கம் அமைத்து பூசை செய்தார். அச்சிவலிங்கம் மோகினிசுவரர் என அழைக்கப்பட்டது. இச்சிவலிங்கம் கொண்ட சிவாலயங்கள் காசி நகரிலும், காஞ்சி புரத்தில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வடக்கிலுள்ள கண்ணேசம் தலத்திற்குப் பக்கத்திலும் உள்ளன.
சிவாலயங்களில் திருமால் -
சைவமும், வைணவமும் இந்நாளில் இரண்டு பெரிய பிரிவுகளானாலும், சைவர் திருமாலைச் சிவாலயத்துள் வைத்து வழிபடுகின்றனர். குறைந்த பட்சம் சிவாலயக் கருவறையின் மேற்குக் கோட்டத்திலாவது திருமாலை எழுந்தருள வைத்து வழிபடுகின்றனர்.
சில தலங்களில் கருவறை மேற்கு கோட்டத்தில் அண்ணாமலை யாரை (லிங்கோற்பவர்) அமைத்து அவருக்கு நேர் எதிரில் திருமாலை அமைத்துள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரது ஆலயத்தின் மேற்குப் பிராகாரத்தில் வேணுகோபாலர் ராதா ருக்குமணியோடு உள்ளார். இதே அமைப்பை கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திலும் காணலாம். இங்கு வெங்கடேசப் பெருமான் பூரீதேவி, பூதேவியுடன் மேற்கு பிராகாரத்தில் எழுந்தருளியுள்ளார்.
சில தலங்களில் சிவாலயத்திற்குள்ளேயே திருமாலின் ஆலயம் உள்ளதையும் காணலாம். திருவோத்தூர், கச்சிஏகம்பம், திருச்செங்கோடு, சிதம்பரம், சிக்கல், திருநெல்வேலி, இராமேசுவரம் போன்ற தலங்களில் இவற்றைக் காணலாம்.
திருமாலின் திருவுருவங்கள் மட்டுமன்றி அவரது பரிவாரங்களான கருடன், ஆஞ்சநேயன், சுக்ரீவன், முதலிய திருவுருவங்களும்
சிவலிங்கம் 87

Page 53
அமைந்துள்ளதைக் காணலாம். கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வெளிப்பிராகாரத்தில் ஆஞ்சநேயர் சந்நிதியுள்ளது.
மகேஸ்வர முர்த்தங்களில் திருமால் -
ஓர் உருவமும் ஓர் நாமமும் இல்லாத சிவபெருமான் அன்பர்களுக்கு அருள் புரிய எழுந்து வந்த கோலங்கள் அனேகமாகும். இவற்றை மனதில் நிறுத்தி வழிபட ஏதுவாக ஞானிகள் உருவங்களை அமைத்துள்ளனர். இவை மகேசுவர மூர்த்தங்கள் எனப் போற்றப்படுகின்றன. இவை பலவற்றில் சிவபெருமானுடன் திருமாலும் சேர்ந்தே உள்ளார்.
சிவபெருமான் அடிமுடிதேடி அறியமுடியாத ஜோதியாக நின்றபோது, திருமால் பன்றி உருவத்துடனும், பிரம்மன் அன்ன உருவத்துடனும் முறையே அடியையும் முடியையும் தேடினர். இது குறித்து அமைக்கப்பட்ட லிங்கோத்பவரில் லிங்கத்தின் இரண்டு பக்கங்களிலும் கூப்பிய கரங்களுடன் திருமாலும், பிரம்மனும் அமைக்கப்பட்டனர்.
சிவபெருமான் மீனாட்சியைத் திருமணம் செய்து கொள்ளும் கல்யாணசுந்தரர் கோலத்தில் மீனாட்சியைத் தாரை வார்த்துத்தரும் அண்ணனாக திருமால் உள்ளார். இதையொட்டி அண்ணன் பெருமான் என்று அழைக்கப்படுகிறார்.
சிவபெருமானின் ‘சக்கரதானர்’ என்னும் கோலத்தில் திருமால் அவரிடமிருந்து சக்கரத்தைப் பெறும் கோலத்தில் உள்ளார். இவ்வுருவம் திருவீழிமிழலையில் உள்ளது.
பெருமானின் நடமாடும் நடராசர் கோலத்திற்கு திருமால் மத்தளம் வாசிப்பவராக உள்ளார். இதனைக் கீழ்வேளூர் நடராச சபையில் 35|T600T6)Tib.
சிவபெருமானின் திரிபுராந்தகர் கோலத்தில் அவர் தேர்த் தட்டை இடப வடிவம் கொண்ட திருமால் தாங்குகின்றார். இதனைத் திருவதிகை வீரட்டத்தில் காணலாம். சிவபெருமான் திரிபுராதிகள் மீது தொடுத்த அம்பில் திருமால் உள்ளார். இதனை அம்புப் பெருமாள் (சரநாராயணர்) என்பர். இந்த நிகழ்வு மதுரையில் தூண் சிற்பமாக உள்ளது.
88 சிவலிங்கம்

சிவபெருமான் உமாதேவியை ஒருபாகத்தில் கொண்டு அர்த்த நாரீசுவரராக விளங்குவதைப் போலவே திருமாலை ஒரு பாகமாகக் கொண்டு அரியர்த்தராக விளங்குகின்றார்.
சிவபெருமான் திரிபாதமூர்த்தியாகவும், ஏகபாததிரி மூர்த்தியாகவும் கோலம் கொள்ளும் போது திருமால் அவருடைய இடப்பக்கத்தில் இடுப்புக்கு மேலிருந்து வெளிப்படுபவராக உள்ளார்.
இடபாருடர் கருடாரூடர் -
சிவபெருமான் பல ஊர்திகளில் பவனி வந்தாலும் இடபமே
அவருக்குரியது. பக்தர்களுக்கு காட்சி தரும் போதெல்லாம்
உமையுடன் இடபத்திலேயே தோன்றி அருள் பாலிப்பார்.
திருமாலும் கருடவாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலிப்பார்.
பெரும்பாலும் திருமால் ஆலயத்திலும், சிவாலயத்திலும் ஒரு சேர விழாக்கள் நடைபெறுவதில்லை. அபூர்வமாகச் சிவ விஷ்ணு ஆலயங்களில் ஒரே நேரத்தில் விழாக்கள் நடைபெறுகின்றன. சென்னையை அடுத்துள்ள பொன்னேரிக்கு மேற்கிலுள்ள ஆயர் பாடியில் கரிகிருஷ்ணப் பெருமாள் என்ற திருமால் கோயில் உள்ளது. இதற்குக் கிழக்கில் கும்மங்கலம் எனுமிடத்தில் அகத்தீசுவரர் கோயில் உள்ளது.
சித்ரா பெளர்ணமியில் கரிக்கிருஷ்ணர் கருடவாகனத்திலும், அகத்தீசுவரர் இடப வாகனத்திலும் ஊர்வலம் வந்து ஊரின் மையத்தில் உள்ள கடைவீதியில் எதிரெதிரே நிற்க, தீபாராதனை நடைபெறுகிறது. இது சைவ வைணவ ஒற்றுமைக்குச் சிறந்த பாலமாக உள்ளது.
சுசீந்திரம் தானுமாலயம் கோவிலில் பிரதோஷதினத்தில் இடப வாகனத்தில் சிவனும், கருடவாகனத்தில் திருமாலும் எழுந்தருளி இணைந்து பிராகாரத்தில் வலம் வருகின்றனர். வேறெந்த கோயிலிலும் இவ்வாறு இணைந்து பவனி வருவதைக் காண (UDIQUIT35.
குமரி மாவட்டம் திருவிதாங்கோடு தலத்திலும், மார்கழியில் இரண்டு யானைகளில் ஒன்றாகப் பிராகாரத்தில் வலம் வருகின்றனர்.
afou65rilash 89

Page 54
ஒரே விமானத்தின் கீழ் சிவனும் திருமாலும் -
மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள சிறிய சிவாலயம் ஒன்றில் கருவறை இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கிலும் மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்கு நோக்கிய வாயில் அமைந்த பகுதியில் நடுவில் சிவலிங்கமும், பின்னணியில் சுவரில் சோமஸ்கந்தர் உள்ளார். கிழக்கு நோக்கிய வாயில் உள்ள பகுதியில் பாறையில் பள்ளி கொண்ட பெருமாள் வீற்றிருக்கிறார். இத்தகைய காட்சியை வேறு எங்கும் காண முடியாது.
அரங்கன் செய்யும் சிவபூசை -
திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாப சுவாமி கோயில் உள்ளது. கருவறையில் அனந்தன் மீது திருமால் சயனம் கொண்டுள்ளார். தலைமாட்டில் சிவலிங்கத்தை வைத்து வலது கரத்தால் பூசை செய்யும் காட்சியைக் காணலாம்.
சென்னை அடையாற்றில் உள்ள அனந்தபத்பநாப சுவாமி கோவிலிலும், திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்திலும் இத்தகைய திருக் கோலத்தைக் காணலாம்.
கோவை மாவட்டம் காரமடையில் அரங்கநாதர் ஆலயத்துள் அரங்கநாதர் சிவலிங்க வடிவிலேயே உள்ளார்.
சக்கரப்பேறு -
ஆதியில் சிவபெருமான் மும்மூர்த்திகளைப் படைத்த போது அவர்களுக்குரிய ஆயுதங்களையும் அளித்தார். இவ்வகையில் தன் உக்கிர சக்தியையும், அக்னியையும் இணைத்துச் சுதர்சனம் என்ற சக்கரத்தைத் திருமாலுக்கு அளித்தார்.
காத்தற் கடவுள் ஆனதால் தேவர்களையும், மக்களையும் காக்கச் சக்கரத்தை அடிக்கடி பிரயோகம் செய்ய வேண்டி இருந்தது. அதனால் சில சில வேளைகளில் உடைந்தும், கூர்மழுங்கியும், சக்தி குறைந்தும் போனதால் சிவனிடம் பெறவேண்டி இருந்தது. அதன் பொருட்டு சிவ பெருமானை நோக்கித் தவமிருந்து அவ்வவ்போது சக்கரங்களைப் பெற்றுவந்தார்
சக்கராயுதத்தைப் பெற திருமால்போற்றிய சகஸ்ரநாமம் சிவகாமபுராணத்தில் உள்ளது. மகாபுராணங்கள் திருமால்
90 சிவலிங்கம்

கயிலைமலைச் சாரலில் தவம் செய்தார் என்று கூறுகின்றன. ஆனால் தென்னிந்தியாவில் வழங்கும் தலபுராணங்கள் திருவீழிமிழலை, திருமாற்பேறு முதலிய தலங்களில் திருமால் சிவபூசை செய்து சக்கராயுதம் பெற்றார் என்று கூறுகின்றன.
இவற்றில் கும்பகோணம் பூந்தோட்டம் சாலையில் உள்ள திருவீழிமிழலை குறிப்பிடத்தக்கது. இங்கு திருமால் வழிபட்டதால் இவ்வூர் விஷ்ணுபுரம் என்றழைக்கப்படுகிறது. இத்தலத்தில் சக்கராயுதம் பெற்றதை திருஞானசம்பந்தர்
“தருப்பமிகு சலந்தரன்தன் உடல் தடித்த சக்கரத்தை வேண்டியிண்டு. விருப்பமொடுமால் வழிபாடு செய்ய இழிவிமானம் சேர்மிழலை”
என்று குறித்துள்ளார். இத்தலத்தில் உலாத்திருமேனிகளில் ஒருவராக “சக்ரதானர்” என்ற மூர்த்தி எழுந்தருளி உள்ளார். இதில் பெருமான் திருமாலுக்குச் சக்கரம் அளிக்கும் கோலத்தில் உள்ளார். இவரது திருவடியின் வலது பாகத்தில் திருமால் மேற்கரங்களில் சங்கும், கத்திரி முத்திரை தாங்கியும், முன்கரங்களை நீட்டிச் சக்கரத்தைப் பெற்றுக்கொள்ளும் கோலத்தில் உள்ளார்.
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ள திருமாற் பேறு என்ற தலத்திலும் திருமால் சக்கரம் வேண்டி சிவனைப் பூசித்ததாகக் கூறப்படுகிறது. கருவறையில் திருமால் பூசித்த ‘மால்வணங்கீசர்’ சுயம்பு வடிவில் உள்ளார். ஞானசம்பந்தரும் அப்பரும் இதனை தமது தேவாரப்பதிகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பைஞ்ஞீலி தலத்தில் உள்ள சோமஸ்கந்தர் “சக்கரத்தியாகர்” என்றழைக்கப்படுகின்றார். திருமாலுக்கு சக்கராயுதம் வழங்கியதால் இப்பெயர் பெற்றார் என்று கூறப்படுகிறது. மேலும் திருவதிகை என்ற தலத்து இறைவனும் திருமாலுக்குச் சக்கராயுதம் வழங்கியதாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
LOU (OU UKO
சிவலிங்கம் 91

Page 55
பிரம்மபுரீஸ்வரர்
ஆதி சிவன் உலகைப் படைக்கத் திருவுள்ளம் கொண்டபோது அவருடைய அருள்த்தன்மை பெண்ணுருக் கொண்டு அவரது இடப்பாகத்தில் பராசக்தியாக அமர்ந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து உலகத்தையும் அதில் உயிர்த் தொகுதிகளையும் உண்டாக்கினர். தொடர்ந்து உலகம் தொழிற்பட பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசன், சதாசிவன், என்ற ஐவரைப் படைத்து அவர்களுக்குப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் அளித்தனர்.
இதில் முதலாவது மூர்த்தியாகத் திகழும் பிரம்மதேவன் யாகங்களின் தலைவனாகவும், அறிவின் கடவுளாகவும், படைப்புக் கடவுளாகவும் தனிச் சிறப்புடன் போற்றப்படுகின்றான். இவன் தேவர்களுக்கு வழிகாட்டியாகவும், சிறந்த சிவ பக்தனாகவும் திகழ்கின்றான்.
பிரம்மா கள்வம் கொண்டபோது சிவபெருமான் அவனுடைய கள்வத்தை அடக்க அவனுடைய ஐந்தாவது தலையை பைரவர் மூலம் வெட்டினார். இதனால் அஞ்சி பிரம்மா அனேக இடங்களில் சிவபூசை செய்து சிவனருள் பெற்றான்.
ஒருமுறை திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக சிவபெருமான் விண்ணுக்கும், பாதாளத்துக்கும் இடையே அக்னித் தழலாய் நின்ற போது சிவபெருமானின் திருமுடியைக் காண முயன்று தோற்று, முடியைக் கண்டேன் என்று பொய் கூறினான். சிவபெருமான் கோபம் கொண்டு அவனுக்குப் பூவுலகில் கோயிலும், தனிப்பூசையும் இல்லாமல் போகட்டும் என்று சாபமளிக்கின்றார். அதனாலும் வருந்திச் சிவபெருமானை அவன் பல இடங்களிலும் லிங்கங்கள் நிறுவி பூசை செய்தான்.
இவ்வாறு பூசை செய்த தலங்களில் எழுந்தருளிய இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமம் வழங்கப்பட்டது. அத்தலங்கள் பிரம்மனின் பெயரால் பிரம்மபுரம், பிரம்மபுரி எனப் பெயர்கள் பெற்றன. இவ்வாறு சிவனைப் பூசித்து வந்தமையால் சிவபெருமானின்
92 சிவலிங்கம்

கருவறைக் கோட்டத்தின் வடக்கு கோட்டத்தில் பிரம்மனுக்கு இடம் அளிக்கப்பட்ட்து. நித்திய பூசை வழிபாட்டில் இப்பிரம்மனுக்குப் பூசையும் நடைபெறுகிறது.
பிரம்ம சிரகண்டிஸ்வரர் -
சிவபெருமான் செய்த அதி உன்னத வீரச் செயல்கள் எட்டில்
முதலாவதாகப் போற்றப்படுவது அவர் பிரம்மனின் ஐந்தாவது
தலையை அறுத்து அவனுடைய கர்வத்தை அழித்ததாகும்.
ஆதியில் சிவபெருமான் பிரம்மனைப் படைத்த போது பிரம்மன் எட்டுக் தோள்களும், ஐந்து முகங்களும் கொண்டவராக விளங்கினார். இதனால் தேவர்களும், முனிவர்களும் அவரைச் சிவபெருமானாகவே போற்றி வழிபட்டனர். இதனால் பிரம்மனுக்கு அளவு கடந்த கர்வம் உண்டாயிற்று. அதனை அறிந்த கொண்ட சிவபெருமான் பைரவனைப் படைத்து ஐந்தாவது தலையை வெட்டி எறியும்படி ஏவினார். பைரவனும் பிரமனின் ஐந்தாவது தலையை வெட்டி அதனைப் பிரம்ம கபாலம் என்ற பாணபாத்திரமாக ஆக்கிக் கொண்டான்.
சிவபெருமான் பிரமனது தலையை வெட்டிய நிகழ்ச்சிக்குத் தத்துவநோக்கில் பல விளக்கங்கள் கூறப்படுகின்றன. அதன்படி ஒவ்வொரு உயிருக்கும் படிப்பினாலும், அறிவினாலும் கர்வம் உண்டாகிறது. அந்த வித்யா கள்வத்தினால் ஆணவமும், செருக்கும் உண்டாகின்றன. அதன் மூலம் அவை பிற உயிர்களுக்குப் பல வகைகளில் தீமைகளையும், துன்பங்களையும் உண்டாக்குகின்றன. அந்தக் கர்வம் இருக்கும் வரையில் அந்த உயிர்தானும் ஈடேறுவதில்லை. அடுத்த உயிரையும் ஈடேற விடுவதில்லை. எனவே உயிர்களுக்கு ஆணவமும், இறுமாப்பும் ஏற்படுகின்றபோது இறைவன் பலவிதமான தடைகளை ஏற்படுத்தி அவற்றை அழிக்கின்றான். பிரம்மனின் சிரத்தை அறுத்தல் என்பது அவனால் படைக்கப்பட்டுள்ள உயிர்களின் அறியாமையையும், ஆணவத்தையும் அழித்தல் என்பதே என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இது பிரம்ம சிரச்சேதனம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் இறைவன் பிரம்மா கண்டீஸ்வரர் எனத் திருநாமம் பெறுகிறார்.
பிரம்மனின் தலையைத் துண்டித்த தலம் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான கண்டியூராகும். சிவபெருமான் இந்த இடத்தில்
ിഖിribb 93

Page 56
பிரம்மனின் சிரத்தைக் கண்டித்துத் துண்டித்த காரணத்தால் இது கண்டியூர் எனப்பட்டது.
தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் ஒன்பதாவது கி.மீ தொலைவில் உள்ளது இந்தக் கண்டியூர் தலம். இங்குள்ள இறைவன் பிரம்ம சிரகண்டீஸ்வரர். அம்பிகையின் பெயர் மங்கள நாயகி என்பதாகும். இக்கோயில் கருவறை மேற்கு நோக்கி உள்ளது. மாசி மாதம் 13, 14,15ம் நாட்களில் மாலையில் 5.30 மணிக்குச் சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படிகின்றன.
தனது ஐந்தாவது தலையை இழந்த பிரமன் இங்கு வழிபாடு செய்து, சிவனருள் பெற அமைத்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. மற்ற வீரட்டத் தலங்கள் ஏழிலும் இருப்பது போல வீரம் புரிந்த சிவபெருமானுக்கு திருவுருவமோ, தனிச் சபையோ இத்தலத்தில் இல்லை. பிரம்மனின் தலையைக் கிள்ளிய வடுக மூர்த்திக்கு மட்டும் சிறிய சிலை உள்ளது.
கல்வெட்டுக்களில் பெருமான் கண்டியூர் வீரட்டானத்து
கண்டீஸ்வரர் என அழைக்கப்படுகின்றார். இந்தத் தலம் ஒன்றில் மட்டும் வீரட்டாகாசம் புரியும் சிவமூர்த்தம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்ம தாண்டவம் -
சிவபெருமான் எப்போதும் தனித்து நின்று ஆனந்த நடனம் புரிகின்றார். பக்தர்கள் அரியதவங்களைச் செய்து அவருடைய ஆனந்தப் பேரின்ப வெள்ள நடனக் காட்சியைக் காணவிரும்பும் போது அவர்களுக்குச் சிறப்புடன் தனது நடனக் காட்சியைக் காட்டி அருள்பாலிக்கின்றார். அப்படிக் காட்சியளிக்கும் போதெல்லாம் பிரம்மன் பொற்தாளமிட, திருமால் மத்தளம் வாசிக்கின்றார். இந்திரன் புல்லாங்குழலை இசைக்க, லட்சுமி கரதாளமிட்டுக் கஞ்சிராவை இசைக்கிறாள். சரஸ்வதி வீணை மீட்ட பூதங்களும், பேய்களும் ஏழுகோடி இசைக் கருவிகளை இசைக்கின்றன.
இப்படிப்பட்ட இசைத் தொகுதியில் நின்று பிரம்மதேவன் அளவற்ற முறை இறைவனின் நடனக் காட்சியைக் கண்டுகளித்திருக்கின்றான். என்றாலும், தனக்காகத் தனியே
94. சிவலிங்கம்

சிவபெருமான் நடனக் காட்சியை அருளவேண்டும் என்று பலமுறை அரிய தவத்தினைச் செய்தான். சிவபெருமானும் அவனுடைய தவத்திற்கு மகிழ்ந்து தனது நடனக் காட்சியை அவனுக்குக் காட்டியருளினார். அவன் பெயரால் அந்தத் தாண்டவம் பிரம்மதாண்டவம் என்று அழைக்கப்படுகின்றது. இதனை அவர் பிரம்மனுக்காகப் பலதலங்களில் ஆடிக்காட்டியிருந்தாலும், அவற்றுள் திருப்பாண்டிக் கொடுமுடி, கூடலையாற்றுார், திருமுருகன்பூண்டி, திருக்களர் முதலிய தலங்கள் தனிச் சிறப்பிடத்தைப் பெறுகின்றன.
சிதம்பரத்திற்கு அருகில் உள்ள கூடலையாற்றுாரில் கோயில் கொண்டருளும் சிவபெருமான் பிரமனுக்குத் தாண்டவ தரிசனத்தை அருளியதால் நர்த்தன வல்லபேசுவரர் என்று அழைக்கப்படுகின்றார். இத்தலம் மணிமுத்தாறும், வெள்ளாறும் கூடுமிடத்தில் இருப்பதால் கூடலையாற்றுார் என்று அழைக்கப்படுகிறது. இங்குப் பிரம்மன் அமைத்த பிரம்ம தீர்த்தம் உள்ளது.
கொங்குநாட்டுத் தலமான திருப்பாண்டிக் கொடுமுடியில் பிரம்மனுக்குத் தாண்டவதரிசனம் அருளிய சிவபெருமான் சதுரதாண்டவ கோலத்தில் உள்ளார். ஆதியில் பிரம்மன் கண்ட, இந்தத் தாண்டவத்தைப் பின்னாளில் சிவபெருமான் பரத்துவாஜ முனிவருக்காக மீண்டும் ஆடிக் காட்டியருளினார் என்றும் கூறப்படுகின்றது. அதனால் தான் இவர் சதுர்முகத் தாண்டவர் என்று அழைக்கப்படுகின்றார். இந்த மூர்த்தம் மிகவும் அழகியதாகும். மேலும் இது சித்திரா பெளர்ணமியன்று பரத்வாஜ முனிவருக்காக ஆடப்பட்டதால் சித்திர நடனம் என்றும் அழைக்கப்படுகின்றது.
இதே மண்டலத்திலுள்ள திருமுருகன் பூண்டியிலும் பிரம்மனுக்காகச் சிவபெருமான் நடனம் காட்டினார் என்று அவ்வூர்த் தலபுராணம் கூறுகின்றது. இங்கே பிரம்மன் அமைத்த தீர்த்தம் பிரம்மதீர்த்தம் என்ற பெயரில் உள்ளது. பிரம்ம தேவனுக்காக ஆடியருளிய கோலத்தில் இங்கே எழுந்தருளியுள்ள சிவபெருமான் பிரம்ம தாண்டவமூர்த்தி என்று அழைக்கப்படுகின்றார். தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ள இப்பெருமானைச் சிறப்புடன் போற்றுகின்றனர்.
மேலும் சோழநாட்டுத் திருத்தலமான திருக்களர் எனும் தலத்தில பிரம்மன் வழிபட்டுச் சிவபெருமானின் தாண்டவதரிசனத்தைக் கண்டார்
சிவலிங்கம் 9s

Page 57
என்றும், பின்னாளில் துர்வாசர் அக்காட்சியைக் காணவேண்டி இங்கே தவம் செய்தார் என்றும் கூறுகின்றார். அவருக்காக மாசி மாதப்பெளர்ணமியில் இறைவன் தனது பிரம்மதாண்டவத்தை ஆடிக்காட்டி அருள்பாலித்தார் என்றும் கூறப்படுகிறது. இது ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மறுநாளான மாசி பெளர்ணமியில் பிரம்மதீர்த்தமான சிந்தாமணி தீர்த்தத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றது.
திருமுறைத் தலமான திருப்பனந்தாளிலும் பிரம்மதேவன் சிவபெருமானின் ஆனந்த திருத்தாண்டவத்தைக் கண்டு மகிழ்ந்ததாக அவ்வூர்த் தலபுராணம் கூறுகிறது. இங்கு அவனமைத்த ஆலயம் அயநீச்சுரம் என்றும் , தீர்த்தம் பிரம் மதீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றன.
புராணங்களில் சொல்லப்பட்டுள்ள இந்த பிரம்ம தாண்டவத்தைத் தவிர, தமிழ் இலக்கியங்களில் பிரம்மதேவன் காணும்படியாகச் சிவபெருமான் ஆடிய தாண்டவங்களும் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கது, திரிபுரங்களை எரித்தபின்னர் சிவபெருமான் தேவர்கள் அமைத்த தேரின் முன்னே நின்று தேர்ப்பாகனான பிரம்மன் காணும்படியாக ஆடிய பாண்டரங்கம் என்பதாகும். இதனை தேர்முன் நின்ற திசைமுகன் காண, பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கம்' என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.
மேலும் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பின் அதனைக் கபாலமாக ஏந்திக் கொண்டு பிரம்மன் அஞ்சுமாறு தாண்டவம் புரிந்தார். இது கபாலம்' என்ற கூத்தாகும். இதனைக் கலித்தொகை என்ற சங்க நூல் தலை அங்கைக் கொண்டு நீ கபாலம் ஆடுங்கால் என்று குறிக்கின்றது. தொடர்ந்து அந்த ஆட்டத்திற்கு ஏற்ப பார்வதி பாணி என்ற தாளத்தை தட்டினார் என்றும் கூறுகின்றது. காஞ்சீபுரத்திலுள்ள பிரம்மசிவகண்டீசுவரர் சிற்பம் இந்தக் கபால தாண்டவத்தை உணர்த்துவதாகவே உள்ளது.
இன்னும் பலதலங்களில் பிரம்மன் கண்டு மகிழவும், அஞ்சித் தொழவும் நடைபெற்ற பிரம்ம தாண்டவங்களையும் காண்கிறோம்.
பிரம்மதாண்டவம் என்பது பிரம்மனுக்காக ஆடிய தாண்டவம் என்ற பொருளைத் தருவதோடு பெரிய தாண்டவம் என்ற
98 சிவலிங்கம்

பொருளையும் தருகிறது. இதனைத் தமிழ் இலக்கியங்கள் ‘ள்ல்லையில் பெருங்கூத்து' என்று குறிக்கின்றன.
சில இடங்களில் பிரம் மர தாண்டவம் என்பது மருவி பிரம்மதாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது. பிரமரம் என்றால் வண்டு என்பது பொருள். பூவினில் தேனுண்ணவரும் வண்டு முதலில் அதைச் சுற்றிச் சுற்றியும், மேலும் கீழும், தாழ்ந்து உயர்ந்தும் பறந்தும் பிறகு ரீங்காரமிட்டுக் கொண்டே பூவினில் குடைந்து ஆடுவதுபோல ஆடுவதாகும். திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் ஆடும் நடனம் இத்தகைய வண்டு நடனமாகும். இது பிரம்மன்காண ஆடியதால் பிரம்ம தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்து இறைவன் பிரம்மபுரீசுவரர் என்றழைக்கப்படுகின்றார்.
பிரம்ம சாரத்தியம் -
உலகத்திலுள்ள தேர்களில் மிகப்பெரியது சிவபெருமானின் தேரேயாகும். இது ஆழித்தேர் எனப்படும். இதில் சிவபெருமான் பயணம் செய்யும்போது அதைப் பிரம்மன் ஒட்டுகின்றான். நான்கு வேதங்கள் குதிரைகளாகவும், சந்தஸ் (வேதங்களை ஓதவேண்டிய இசை) சாட்டையாகவும், சூரிய, சந்திரர்கள் சக்கரங்களாகவும் இருக்கின்றனர். மேலும் ஒரு முறை முப்புராதிகளை வெல்லச் சிவபெருமான் ஏறிச்செல்வதற்கான பெரிய தேரைத் தேவர்கள் அமைத்தனர். இதற்கும் பிரம்மனே தேரோட்டியாக விளங்கினான். இதையொட்டி சிவாலயங்களில் கொண்டாடப்படும் தேர்விழாவில் பிரம்மதேவனைத் தேரோட்டியாக அமைக்கின்றனர். இப்படி அமையும் பிரம்மனின் திருவருவம் மரத்தால் செய்து வண்ணம் தீட்டப்பட்டுப் பொலிவுடன் விளங்குகிறது. அவன் வலது கையில் சாட்டை ஏந்தி, இடது கரத்தால் குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்துள்ளான்.
பிரம்மன் வழிபடும் நான்முகலிங்கம் -
நான்கு முகம் கொண்டவனான பிரம்மதேவன் நான்கு முகம் கொண்ட லிங்கங்களை மிகவும் போற்றி வழிபடுகின்றான். திருவண்ணாமலையில் பிரம்ம தேவன் பிரம்மதீர்த்தத்தை அமைத்து, அதன் கரையில் நான்கு லிங்கத்தை அமைத்து வழிபாடு செய்துள்ளதைக் காண்கிறோம். திருப்புனவாயிலில் பிரம்மன் அமைத்த சதுர்முகலிங்கமும் பிரம்மதீர்த்தமும் உள்ளன. காளத்தி,
ിഖിbb 97

Page 58
திருவதிகை முதலிய அனேக தலங்களில் பிரம்மன் வழிபட்ட நான்கு முகலிங்கங்களைக் காண்கிறோம். நேபாளத்திலுள்ள பசுபதிநாதலிங்கம் பிரம்மனால் யுகப்பிரளய வெள்ளதிலிருந்து எடுத்து நிலைப்படுத்தப்பட்டதாகும். இங்குச் சிவபெருமான் அவனுக்கு நான்கு முகலிங்கமாகக் காட்சியளித்தாகக் கூறுகின்றனர்.
பிரம்ம தீர்த்தங்கள் -
சிவபூசை செய்யவும், நீராடித் தூய்மை பெறவும் பிரம்மதேவன் பல தலங்களில் தீர்த்தங்கள் அமைத்தான். அவை அவன் பெயரால் பிரம்ம தீர்த்தங்கள் என்று வழங்கப்படுகின்றன. சில சமயங்களில் அவன் தனது கமண்டலத்திலுள்ள நீரை வார்த்து தீர்த்தங்களை உருவாக்கினான். அவை கமண்டல தீர்த்தங்கள் என்று வழங்கப்படுகின்றன.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களான கிழ்வேளுர், திருக்கொள்ளம்பூதூர், சிவபுரம் முதலான அனேகதலங்களில் பிரம்ம தீர்த்தங்கள் அமைந்துள்ளதைக் காண்கிறோம்.
திருக்குருகாவூரில் ஆதிபிரம்ம தீர்த்தம் என்ற குளம் உள்ளது. இது ஆதிப்பிரம்மன் ஐந்து திருமுகங்களோடு இருந்தபோது அமைத்த தீர்த்தமாகும்.
திருமுருகன் பூண்டியில் பிரம்மன் அமைத்த தீர்த்தம் உள்ளது. இது உடற்பிணியையும், மனப்பிணியையும் நீக்கும் தன்மை கொண்டது. மனநிலை பாதிக்கப்பட்ட அன்பர்கள் இங்குத் தங்கித் தினமும் இதில் நீராடிப் பயன்பெறுகின்றனர்.
பிரம்மனைப்போலவே அவன் மனைவியான சரஸ்வதியும், அவனது வாகனமான அன்னமும் தீர்த்தங்கள் அமைத்துள்ளதைப் புராணங்கள் கூறுகின்றன. திருக்குருகாவூரில் ஆதிப்பிரம்மதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், (வடக்கன் குளம்) அம்ச தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
சில தலங்களில் கிணறுவடிவாகவும், சில இடங்களில் சுனைவடிவாகவும், சில இடங்களில் கடலாகவும் பிரம்ம தீர்த்தங்கள் உள்ளன. பெரிய திருகோயில்களில் பெரிய அளவில் பிரம்ம தீர்த்தங்களைக் காண்கிறோம். திருவண்ணாமலையில் பிரம்மன்
98 fouoritish

அமைத்து வழிபட்ட சதுர்முகலிங்கமும், பிரம்மதீர்த்தமும் கிளிக் கோபுர பிரகாரத்தில் உள்ளன.
சீர்காழியில் பிரம்மதேவன் அமைத்த பிரம்ம தீர்த்தம் உள்ளது. இதன் கரையில்தான் திருஞானசம்பந்தருக்குச் சிவபார்வதியர் தங்கக் கிண்ணத்தில் பால் அளித்துத் தமிழ்வேதம் பாடும் வரத்தை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரம்மனது வெட்டுண்ட தலை வீழ்ந்த இடங்களும் தீர்த்தக் குளங்களாக மாறியுள்ளன. இமயமலைச் சாரலில் உள்ள திருக்கேதாரம், பத்ரிநாத் முதலிய பல இடங்களிலும், காசியிலும், தென்னகத்தில் பல இடங்களிலும் இத்தகைய தீர்த்தங்கள் உள்ளன. இவை கபால தீர்த்தம், கபால மோட்ச தீர்த்தம் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன.
திருக்கண்டியூரில் கபால தீர்த்தம், குலதீர்த்தம் என்ற பெயரில் தீர்த்தக்குளங்கள் உள்ளன. மகாபாரதத்தில் பிரம்ம வேதி என்ற குளத்தில் மூழ்கிப் பாண்டவர்கள் தமது எதிரிகளைக் கொன்ற பாவத்தினை நீக்கிக் கொண்டனர் என்றும், இதில் மூழ்குவோர் தெய்வ ஒளியைப் பெறுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்னமாம் பொய்கை -
பிரம்ம தேவன் சிவபெருமானின் முடியைத் தேடி அன்னமாகப் பறந்து சென்று மீண்ட போது பொய் சொன்னதால், சிவபெருமான் அவனை அந்தப் அன்னப்பறவை வடிவிலே இருக்கும் படி சபித்துவிட்டார். அவன் தன்னுடைய பழையவடிவத்தை அடையவிரும்பி அம்பரிலும் திருப்பாச்சி ஆச்சிரமத்திலும் தீர்த்தங்கள் அமைத்து அதில் மூழ்கித் சிவவழிபாடு செய்தான். இதன் பயனால் அவனுடைய அன்ன வடிவம் நீங்கி மீண்டும் தேவ வடிவம் பெற்றான். அதையொட்டி இவை "அன்னமாம் பொய் கை" என்று அழைக்கப்படுகின்றன. இவ்விரு தலங்களிலும் உள்ள பொய்கைகள் தேவாரத்துள் இணைத்துப் பாடப்பட்டுள்ளன. இதனை,
அன்னமாம் பொய்கை சூழ்
அம்பாரனை ஆச்சிராம நகரும்’ என்று திருநாவுக்கரசர் திருநாகைத் தேவாரத்தில் குறித்துள்ளார். மேலும்,
சிவலிங்கம் 99

Page 59
அன்னமாம் பொய்கை சூழ்
பாச்சிலாச்சிரமத் துறை அடிகள் என்று சுந்தரரும் அருளியுள்ளதாக அறிகிறோம். இவற்றில் மூழ்கி வழிபடுவதால் நல்ல கல்வி அறிவும், பணிவும் உண்டாகும்.
பிரம்மன் பூசித்த சிவத்தலங்கள் -
அம்பர் -
தேவாரத் திருமுறைத்தலம். தேவாரத்தில் அம்பர் எனவும்
இந்நாளில் அம்பல் எனவும் வழங்கப்படுகின்றது. நாகை மாவட்டத்தில்
பூந்தோட்டம்- காரைக்கால் செல்லும் சாலையில் உள்ளது.
ஊரில் மையத்தில் கோவில் உள்ளது. கோச் செங்கட் சோழனின் கடைசித் திருப்பணிக் கோயிலாகும்.
இறைவன் திருநாமம் - பிரம்மபுரீசுவரர்
இறைவி திருநாமம் - பூங்குழல் அம்மை
இக் கோவிலில் உள்ள கட்டுமலை பிரம் மகிரி என அழைக்கப்படுகின்றது. பிரம்மனின் அன்ன உருவை நீக்கி பொன்னுடல் அளித்த “அன்னமாம் பொய்கை நாழிக் கிணறாக பிரகாரத்தில் தென்கிழக்கு முனையில் உள்ளது. இங்கு தீர்த்தமாடி சிவலிங்கம் தாபித்து பிரம்மன் சிவ பூசை செய்தான். இந்த வரலாறு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சோமாஸ்கந்தர் “கூடும் நாயகள்’ என்று குறிக்கப்படுகின்றார்.
காஞ்சிபுரம் - இங்கு பிரம்மன் அனேகலிங்கங்களை அமைத்து வழிபாடு செய்து பேறு பெற்றதால் காஞ்சிபுரத்திற்கு ‘பிரம்மபுரி என்ற பெயர் வழங்கப்படுகிறது.
பிரம்மன் தேவர்களுடன் கூடி வழிபட்ட தலம் ‘மகாலிங்கத் தானம்' என்று அழைக்கபடுகிறது. இதில் பெரிய லிங்கவடிவில் சிவபெருமான் இருக்கின்றார். இதனைப் பிரம்மலிங்கம் எனவும் அழைப்பர்.
பிரம்மன் தனது படைப்புத் தொழில்சிறக்க வேண்டி, காஞ்சியில் முருக்கமரத்தின் கீழ் சோதி வடிவாக எழுந்த சிவலிங்கத்தை
1OO சிவலிங்கம்

வழிபட் டான் . அதுவே இந் நாளில் கச் ச பேசுவரர் என்றழைக்கப்படுகிறது. மேலும் இங்கு அவன் வேதங்களை வேண்டிப் பூசித்த வேதசித்தீச்சரம் உள்ளது. இதனுள் நான்கு முகலிங்கம் அமைந்துள்ளது.
ஒரு முறை பிரம்மன் அளப்பரிய வரங்கள் வேண்டி பெரிய வேள்வி ஒன்றைச் செய்தான். அங்கு சிவபெருமான் ஒளிவடிவமாகத் தோன்றி அருள் பாலித்தான். அங்கு இந்த இடம் இந்நாளில் சிவாஸ்தானம் என்றழைக்கப்படுகிறது. ஏகாம்பரரை வணங்கி அவர் அருகில் வெள்ளைக் கம்பர் என்ற சிவலிங்கத்தை நிறுவி வழிபாடு செய்தான்.
யுக பிரளய காலத்தில் தாம் அழியாதிருக்க வரம் வேண்டித் தவம் புரிந்த இடம் காயா ரோகணம் ஆகும். இதன் பயனாக இறைவன் பிரமனைத் தமது வலது தோளில் தாங்கி அருள்புரிந்தான்.
பிரம்மன் தனது ஐந்தாவது தலையை பைரவன் வெட்டியதால் அஞ்சி வழிபட்டதலம் காஞ்சியாகும். 'கா' என்றால் பிரம்மன். அவன் அஞ்சி வழிபட்ட தலமாதலின் இது ‘காஞ்சி' எனப்பட்டது என்று காஞ்சிபுராணம் கூறுகிறது.
காஞ்சிபுரத்திலுள்ள அன்ேக ஆலயங்களின் தூண்களில் பிரம்மன் சிவபூசை செய்யும் காட்சி புடைப்புச் சிற்பமாக இடம் பெற்றுள்ளதைக் காண்கிறோம்.
பிரம்மன் வழிபட்ட பிரம்ம புரங்கள் -
பிரம்ம தேவன் சிவநிந்தனை செய்தது, அடிமுடி தேடியபோது பொய்கூறியது, சிவனைமதியாத தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டது முதலான அனேக பாவங்கள் தீரச் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்தான்.
அப்படிப் பிரம்மன் வழிபட்ட தலங்கள் பிரம்மபுரங்கள் என்றும், பிரம்மபுரீசுவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரங்கள் அனேகமுள்ளன. இவற்றின் பெயர்கள் காலப்போக்கில் மாறிவிட்டன. அவற்றில் சிலதலங்களை இங்கே காணலாம்.
பெருநகர் பிரம்மபுரீசுவரர் -
காஞ்சிபுரத்திற்குத் தெற்கில் அமைந்துள்ள தலம் பெருநகள் என்றழைக்கப்படும் பிரம்மநகராகும். காஞ்சிப் புராணத்தில்
fonorasb 1Ο1

Page 60
குறிக்கப்பட்டுள்ள இருபத்தெட்டு ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். படைப்புத்தொழிலை நன்கு இயற்றும் வல்லமையைப் பெறப் பிரம்மன் பூசித்த தலங்களில் ஒன்று. இறைவன் திருநாமம் பிரம்மபுரீசுவரர் (பிரமீசர்) அம்பிகை பட்டுவதனாம்பிகை. தீர்த்தம் அன்னமாம் பொய்கை. பிரம் மனைத் தண்டித்த வைரவரும் இங்கே எழுந்தருளியுள்ளார். இங்குள்ள கல்வெட்டுக்கள் பெருமானைப் பிரமீச்ரமுடையார் என்று குறிக்கின்றன.
நீலக்குடி பிரம்மபுரீசுவரர் -
தேவாரப் பாடல் பெற்ற தலமான திருநீலக்குடி ஆடுதுறைக்கு
அருகிலுள்ள திருத்தலமாகும். பாற்கடலில் பிறந்த விஷத்தை
அருந்திய சிவபெருமான் இங்கே நீலகண்டராக வீற்றிருக்கின்றார்.
ஒரு முறை பிரம்மதேவன் தன்னுடைய தொடையிலிருந்து ஒரு பேரழகியைப் படைத்தார். அவளுடைய ஒப்பற்ற பேரழகு அவரை மயக்கியது. மோகத்தால் தன்னை மறந்து அவள் பின்னே ஓடினார். அதனால், அவருக்குப் பெரும்பழி உண்டாயிற்று. அப்பாவம் நீங்க அவர் நீலக்குடிக்கு வந்து தன்பெயரால் ஒரு லிங்கமும், தீர்த்தமும் அமைத்து வழிபாடு செய்து பழிநீங்கப் பெற்றார்.
அவர் வழிபட்டதால் இவ்வூருக்குப் பிரம்மபுரி என்பது பெயராயிற்று. சுவாமியும் பிரம்ம புரீசுவரர் என்றழைக்கப்படுகின்றார் அநூபமஸ்தினி, பக்தா பீஷ்டநாயகி என்ற இரண்டு அம்பிகை சந்நிதிகள் உள்ளன. பிரம்ம தீர்த்தம் வெளிப்பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது. இது திருவாவடுதுறை ஆதீனக் கோயிலாகும்.
சிர்காழி பிரம்மபுரம் -
உலகப் படைப் பின் தொடக்கத்தில் சிவபெருமான் மும்மூர்த்திகளைப் படைத்தார். பிறகு பிரம்மனை நோக்கிப்படைப்புத் தொழிலைச் செய்க’ என்றார். அவன் படைப்புத்தொழிலை இயற்றும் முன்னே, தோன்றியழிந்த பிரம்மர்கள் வழிபட்டுப் பேறு பெற்ற பிரம்மபுரியான சீர்காழியை அடைந்தான். சிவபெருமானைத் தியானித்துப் பஞ்சாட்சர உபதேசம் பெற்று, வேணுவனத்தில் சுயம்புவாய் முளைத்த லிங்கத்தைப் பூசைசெய்தான். அதிலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் அவனுக்கு நீண்ட ஆயுைைளயும், படைப்புத் தொழிலைத் திறத்துடன் ஆற்றும் வலிமையையும் வழங்கினார்.
O2 சிவலிங்கம்

பிரம்மன் மகிழ்ந்து அங்கே பெரிய ஆலயத்தை அமைத்தான். அவன் வழிபட்டதால் இறைவர் பிரம்மநாதர் என்றும், தலம் பிரம்மபுரம் என்றும், தீர்த்தம் பிரம் மதீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் ஞானசம்பந்தரால் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.
கோளிலியெம் பெருமான் -
தமது படைப்புத்தொழில் மேன்மை அடையவும் அதனால் வரும் குற்றங்கள் நீங்கவும் பிரம்மதேவன் வெண்மணல் கொண்டு சிவலிங்கம் அமைத்து வழிபட்ட இடம் 'திருக்கோளிலி’ ஆகும். பிரம்மன் தவம் செய்த இடமாதலின் இதனைப் 'பிரம்ம தபோவனம் என்று புராணம் கூறுகிறது. இங்கு உள்ள ஒரு சுவரில் பிரம்மன் வழிபடுவது புடைப்புச்சிற்பமாக அமைந்துள்ளது.
மழபாடி மாணிக்கம் -
பிரம்மன் தன்னுலகில் வைரத்தாலான சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்து வந்தான். ஒருநாள் புருஷாமிருகம் அதனை எடுத்துவந்து மழபாடியில் வைத்து, பூசை செய்யத் தொடங்கியது. அதையறிந்த பிரம்மன் பூமிக்கு வந்து அந்த லிங்கத்தைப் பெயர்த் தெடுக்க முடியவில்லை. அதனால் 'வைரத்தூண்’ என்று போற்றி வழிபாடு செய்து விட்டுத் தன்னுலகம் சேர்ந்தான்.
எல்லோரா கயிலாயநாதர் கோயிலில் உள்ள புடைப்புச் சிற்பம் இக்கதையை விளக்குவதாக உள்ளது. இதில் தூண்போன்று நெடியதான லிங்கத்தைப் பிரம்ம தேவன் தனது முன்னிருகைகளால் தழுவிக்கொண்டுள்ளான். முகத்தில் காட்டப்பட்டுள்ள இறுக்கமும், கால்களை அகட்டி வைத்துள்ள முறையும் அவன் சிரமப்பட்டு லிங்கத்தைப் பெயர்ப்பதைக் குறிக்கின்றன.
பிரம்மன் வழிபட்ட பிற தலங்கள் -
பிரம்மனுக்கு வேதங்களை ஒதுவதால் வேதி, வேதியன் என்றும், கஞ்சமாலராகிய தாமரையில் வீற்றிருப்பதால் கஞ்சன், கஞ்சமலரான் என்றும், ‘நளின” மலராகிய தாமரையில் வீற்றிருப்பதால் நளினாசனன் என்றும், பொன்போல் பிரகாசிப்பதால் பொன்னன் என்றும் சிறப்புப் பெயர்கள் அமைகின்றன. அத்தகைய சிறப்புப் பெயர்களுடன் அவன் சிவவழிபாடு செய்த தலங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.
afRouoSiriusuh 103

Page 61
வேதிகுடி பிரம்மபுரீசுவரம் -
பிரம்மன் வேதங்களை ஓதிக் கொண்டேயிருப்பதால் வேதி என்று அழைக்கப்படுகின்றான். அவன் பூசித்த, தலங்களில் ஒன்று வேதிகுடியாகும். தஞ்சாவூர் - திருவையாறு சாலையிலுள்ள கண்டியூரிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இத் தலம் உள்ளது. இறைவன் திருநாமம் வேதபுரீசுவரர், இறைவி திருநாமம் மங்கையர்க்கரசி. பிரம்மன் வில்வமரத்தடியில் ஆதியில் சிவலிங்கம் அமைத்துப் பூசித்ததால் வில்வம் தலமரமாயிற்று. பிரமன் நான்கு முகங்களாலும் ஒதும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்துக் கேட்டதனால் இங்குள்ள விநாயகர் வேத விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.
பின்னாளில் சோழமன்னர்கள் வேதம் ஒதும் பிராமணர்களுக்கு இவ்வூரைத் தானமாக அளித்து பரகேசரி சதுர்வேத மங்கலம் என்று பெயர் சூட்டியிருப்பது கல்வெட்டால் அறியப்படுகிறது.
கஞ்சனூர் -
கஞ்சம் என்றால் தாமரை. அதில் வீற்றிருப்பதால் பிரம்மனுக்குக் கஞ்சமலரோன், கஞ்சன் என்பன பெயர்களாயின. இப்பெயருடன் அவன் வழிபாடு செய்த சிவத்தலங்களில் ஒன்று கஞ்சனுர் ஆகும். இத்தலத்தில் பிரம்மன் பூசித்து, இமயமலையில் நடைபெற்ற சிவபெருமானின் திருமணக்கோலத்தைக் கண்டான் என்று கூறப்படுகிறது. இந்நாளில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்றும், அம்பிகை கற்பகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
வட கஞ்சனூர் -
சுந்தரர் தேவாரத்தில் வடகஞ்சனுTர் என்ற தலம்
குறிக்கப்பட்டுள்ளது. இதன் இருப்பிடம்தெரியவில்லை. சிலர் மேலே
குறிக்கப்பட்ட கஞ்சனுார் காவிரியின் வடக்கில் அமைந்துள்ளதால்
இதுவே வடகஞ்சனுTர் என அழைக்கப்படுகிறது என்று
குறித்துள்ளனர்.
நளினாசன ஈசுவரர் -
நளினம் என்றால் தாமரை. தாமரையில் வீற்றிருப்பதால் பிரம்மன்
நளினாசனன் என்று அழைக்கப்படுகின்றான். பூரீவாஞ்சியத்தில் பிரம்மன் வழிபட்டுப்பேறு பெற்றதால் சிவபெருமானுக்கு
O4 சிவலிங்கம்

நளினாசனேசுவரர் என்பதும் ஒரு பெயராயிற்று, தலபுராணத்தில் இப்பெயர் காணப்படுகிறது.
பொன்னூர் பிரம்மபுரீசுவரர் -
பொன் வண்ணத்துடன் இருப்பதால் பிரம்மன் பொன்னன் என்றழைக்கப்படுகின்றான். தமிழ்த்திருமறை அவனைப் பொன்னன் என்றே அழைக்கின்றது. வந்தவாசிக்கு அருகிலுள்ள பொன்னூர் பிரம்மன் வழிபட்ட தலங்களில் ஒன்றாகும். இது வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.
அயனிச்சுவரங்கள் -
பிரம்மனுக்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்று அயன் என்பதாகும். இப்பெயரால் அவன் அமைத்த ஆலயங்கள் அயனிச்சுவரம். அயவந்தீச்சுரம் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் 35|T600T6) Tib.
திருச்சாத்தமங்கை - அயவந்தீச்சுவரம் -
திருமருகலில் இருந்து - நாகூர் செல்லும் சாலையிலுள்ள சீயாத்தமங்கைப் பிரிவிலிருந்து வடக்கே ஒரு கி.மீ சென்றால் இக்கோயிலை அடையலாம்.
பூரீயாகிய மகாலட்சுமியாலும், மாசாத்தானாகிய பிரம்மனாலும், அவன் மனைவி நாவியலும் மங்கையான சரஸ்வதியாலும் வழிபடப்பட்டதால் இத்தலம் பூரீசாத்த மங்கை என்று பெயர் பெற்றது. அதுவே மருவி சீயாத்தமங்கை என்று வழங்குகிறது.
இங்குள்ள ஆலயம் அயனால் வந்திக்கப்பட்டதாதலின் அயவந்தி, அயவந்தீசுவரம் என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் இறைவன் திருநாமம் பிரம்மபுரீசுவரர் என்றும், அம்பிகை இருமலர்க் கண்ணி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
வழுஆர் அயனிச்சுரம் -
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையிலுள்ள புகழ்பெற்ற சக்தித்தலமான மேல் மருவத்துரிலிருந்து வந்தவாசி சாலையில் மருதநாடு என்ற ஊர் உள்ளது. இதன் வடக்கே 5.கி.மீ தொலைவில் அமைந்திருப்பது வழுவூர் ஆகும். இவ்வூர் ஆலயம் கல்வெட்டுக்களில்
சிவலிங்கம் 105

Page 62
'அயனிச்சரம்” என்று குறிக்கப்பட்டுள்ளது. ஒருசமயம் பிரம்மதேவன் சிவபெருமானை மட்டும் ஆராதனை செய்து விட்டு தனது படைப்புத் தொழிலை செயப் யத் தொடங் கனா னிர் . அப் போது படைக்கப்பட்டவைகள் யாவும் ஆண்களாகவே இருந்தன. அதனால் பிரம்மதேவன் திகைத்து யோகத்தில் ஆழ்ந்தான்.
சிவசக்தியை வணங்காததனாலேயே இப்படி நிகழ்ந்தது என்பதை உணர்ந்து இங்கு லிங்கத்துடன் அம்பிகையையும் சேர்த்து வழிபாடு செய்தான். அவனுக்குப் பார்வதிதேவியுடன் சிவபெருமான் காட்சியளித்தார். அம்பிகை அவனுக்கு அருள்புரிந்து அவனால் படைக்கப்படும் உயிர்களுக்கு ஆசையையும், இச்சையையும் கொடுத்தாள். இதனால் அவளுக்குக் 'காமரசவல்லி' என்பது பெயராயிற்று. அயனால் வந்திக்கப்பட்டதாதலின் கோயில் 'அயனிச்சரம்” எனப்பட்டது. இந்நாளில் இறைவன் பிரம்மதேவனின் படைப்பில் உண்டான வழுவை (வழு-குற்றம்) நீக்கியதால் இவ்வூர் வழுவூர் எனப்பட்டது. அண்மையில் திருப்பணி செய்யபட்டுப் புதிய பொலிவுடன் உள்ளது.
வைப்புத்தலமான அயனிச்சரம் -
தேவாரத்துள் அயனிச்சரம்' என்ற வைப்புத்தலத்தை அப்பரடிகள் குறித்துள்ளார். ஆராய்ச்சியாளர்கள் நெல்லைமாவட்டம் அம்பா சமுத்திரத்தை அடுத்துள் பிரமதேசத்தை அயனிச்சரம் என்று குறிக்கப்பட்டுள்ளதால் இதையே சில ஆராய்ச்சியாளர்கள் தேவார வைப்புத்தலமாகக் கூறுகின்றனர். மேலே குறித்த பிரம்ம தேசத்திலுள்ள இறைவர் கயிலாயநாதர். அம்பிகை பெரியநாயகி: தீர்த்தம் பிரம்ம தீர்த்தமாகும்.
திருப்பனந்தாள் அயனிச்சரம் -
பாடல்பெற்ற திருத்தலமான திருப்பனந்தாளில் அயனிச்சரம் என்ற தனி ஆலயம் உள்ளது. இவ்வூர்த் தல புராணத்தில் பிரம்ம தேவன் சோதிவடிவமாய் நின்ற சிவபெருமானின் முடியைக் கண்டேன் என்று பொய் சொன்ன பாவம் நீங்க இங்கு சிவலிங்கம் அமைத்து வழிபட்டான் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஊருடையப்பர் கோயில் சிறிய கட்டுமலை மீது அமைந்துள்ளது. இக்கோயிலின் விமானம் பெரிய கீர்த்தி (சிங்க) முகத்துடன் விளங்குகிறது. அம்பிகையின் திருநாமம் திரிபுர சுந்தரி என்பதாகும்.
108 &ffl6)JoôlmiasLib

இக்கோயிலிலுள்ள கல்வெட்டுக்கள் இதனை அயனிச்சரம் என்று குறிக்கின்றன. தேவார வைப்புத் தலமாகும். இங்கு பிரம்மன் அமைத்த தீர்த்தம் உள்ளது. இதில் மார்கழி , மாசி ஆகிய மாதங்களின் முப்பது நாளிலும் மூழ்குவோர் பிரம்மபதம் அடைவர் என்று நம்புகின்றார். இந்நாளில் இது பொய்கை என்று அழைக்கப்படுகிறது.
விரிஞ்சிபுரம் வழித்துணைநாதர் -
விரிஞ்ஞன் என்பது பிரம்மனுக்கு உரிய பெயர்களில் ஒன்றாகும். பிரம்மதேவன் மானுடனாகச் சிவவேதியர் குலத்தில் உதித்துச் சிவபூசை செய்த தலம். அவன் பெயரால் விரிஞ்சிபுரம் என்றழைக்கப் படுகின்றது.
வடாற்காடு மாவட்டம் வேலூருக்கு அருகில் அமைந்துள்ள தலம் விரிஞ்சி ஆகும். வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்று போற்றப்படும் சிறப்பினைப் பெற்ற தலம். இங்கு பிரம் மண் பூசித்த மார்க்கசகாயர் (வழித்துணைநாதர்) ஆலயம் அமைந்துள்ளது.
ஒரு சமயம் அழல்வடிவாய் நின்ற அண்ணாமலையாரின் அடியைக் காணத் திருமாலும், திருமுடியைக் காணப் பிரம்மனும் சென்றனர். திருமால் வருந்தி மீண்டும் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்மன் தோற்றான் என்றாலும், முடியைக் கண்டதாகப் பொய் சொல்லி அனைவரையும் நம்பவைத்தான். சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு திருமாலைத் தழுவி மகிழ்ந்தார். பிறகு பிரம்மனை நோக்கி, பொய் புகன்றதால் பூமிக்குச் சென்று பிறப்பாய் என்று சாபமிட்டார். பிரம்மன் சிவபெருமானைப் பலவாறு துதித்துத் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான்.
பிறகு பூவுலகில் கரபுரம் எனும் தலத்தில் சம்பு சர்மன்- நயன நந்தினி என்பவர்களுக்கு மகனாகத் தோன்றினான். அவன் பெயர் சிவசர்மன் என்பதாகும். அவனுக்கு ஐந்து வயது நிரம்பு முன்பே சம்புசர்மன் சிவகதி அடைந்துவிட்டார். அந்நிலையில் அவனுடைய கோயிற்காணிகளை அபகரிக்க உறவினர்கள் திட்டமிட்டனர்.
அதனால் வருந்திய நயனநந்தினி இறைவனிடம் முறையிட்டாள். சிவபெருமான் அவளுடைய கனவில் தோன்றி நாமே வந்து உன்மகனுக்கு உபநயனமும் தீட்சையும் செய்து வைப்போம்
சிவலிங்கம் 107

Page 63
வருந்தற்க என்றார். மறுநாள் வேதியர் வடிவம் தாங்கிச் சிவபெருமான் நயனநந்தினியின் வீட்டுக்கு எழுந்தருளினார். தாயாதிகளை அழைத்துத் தாம் அவர்களின் உறவினன் என்பதை நம்பவைத்தார். பிறகு, சிவசருமனுக்கு உபநயனமும், சிவதீட்சையும் செய்வித்து கோயிலுக்கு அழைத்து வந்தார். அங்கு அவனிடம் அபிஷேகக் குடத்தைக் கொடுத்து இறைவனை முழுக்காட்டுக’ என்றார். சிறுவனான சிவசர்மன் உயர்ந்து நிற்கும் லிங்கத்தைக் கண்டு மலைத்தான். பூர்வ நினைவுவர அண்ணலே அன்று உம்முடியை அறிந்திலேன். இன்றும் உம்முடியைத் தொட்டு அபிஷேகிக்க முடியாது நிற்கிறேன்' என்று கணிணிர் சிந்தினான். பரமகருணாநிதியாகிய சிவபெருமான் அதை உணர்ந்து, சிவலிங்கத்தைத் தலை சாயும்படிச் செய்தார். இன்றும் சிவலிங்கம் அக்கோலத்திலேயே உள்ளதைக் காண்கிறோம்.
சிவபெருமான் மகிழ்ந்தான் விரிவான பூசைகளைச் செய்தான். அதைக்கண்டு தாயாதிகள் அச்சமும் ஆச்சர்யமும் அடைந்தனர். நெடுநாட்கள் பூசித்த பின் பிரம்மன் தன்னுலகம் சேர்ந்தான்.
ஆதித்யேசுவரர்
சூரியனை சிவபெருமானின் வடிவமாகவே கூறுவது சைவநன்மரபாகும். சிவபெருமானின் எட்டு வடிவங்களில் ஒன்றாகச் சூரியன் விளங்குகின்றான். சைவர்கள் சூரிய வழிபாட்டைச் சிறப்புடன் போற்றுகின்றனர். சிவபூசையின் ஒரு அங்கமாகச் சூரிய வழிபாடு செய்யப்படுகிறது. சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அமைந்துள்ள அஷடபரிவாரங்களில் ஒருவனாகச் சூரியன் திகழ்கின்றான.
சூரியனுக்கு தனியே சந்நிதி அமைக்கப்படவேண்டுமென்று சிவாகமங்கள் வலியுறுத்துகின்றன. ஆலயத்தின் தென்கிழக்கு பகுதியில் மேற்கு நோக்கியவாறு சிவ சூரியன் எழுந்தருளுகின்றார். பாண்டிய சோழநாட்டுப் பெருங்கோயில்களில் சூரியனுடன் அவனுடைய மனைவியரான உஷா, பிரத்யுஷா ஆகிய இருதேவியரும் எழுந்தருளி உள்ளதைக்காணலாம்.
இவ்வாறு எழுந்தருளும் சூரியன் இரண்டு கரங்களைக் கொண்டு அவற்றில் தாமரை மலர்களை ஏந்தியவாறு காட்சியளிக்கின்றார்.
O8 சிவலிங்கம்

சில தலங்களில் சூரியனுக்கு நான்கு கரங்களும் அமைகின்றன. இத்தகைய திருவடிவங்களில் மேற்கரங்கள் இரண்டில் தாமரை மலர்களும் கீழ்க்கரங்களில் அபயவரத முத்திரைகளும் அமைகின்றன.
சிவாலயங்களில் கால சந்திப் பூசை சூரிய பூசையில் இருந்து தொடங்குவதே வழக்கமாகும்.
சூரியன் சிவாலயங்களில் தென்கிழக்கு பகுதியில் மட்டுமன்றி நவக்கிரக சந்நிதியிலும் எழுந்தருளி உள்ளார். தென்கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கி உள்ள சூரியன் நவக்கிரக சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு உள்ளார். சிவாகமப்படி செய்யும் பூசைகளில் சூரியனை மேற்கு நோக்கியிருப்பவராகவே கருதி பூசை செய்கின்றனர்.
சிவதீட்சை பெற்ற சிவபூஜா துரந்தாரர்கள் செய்யும் சிவபூஜையின் முதல் அங்கமாக சிவ சூரிய பூஜை நிகழ்கின்றது. இவர்கள் சூரியனைக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சிவ பெருமானாகவே கருதிப் பரிவாரங்களுடன் பூசிக்கின்றனர்.
சிவசூரிய லிங்கம் -
சிவபூஜா துரந்தரர்கள் கூறும் சிவசூரியன் போலவே ஆகமங்கள் காட்டும் சிவசூரியனைப் பற்றிக் காணலாம்.
இவர் நான்கு முகமும், எட்டுத் தோள்களும் உடையவராய் சிவந்த ஆடைகள் அணிந்து கமலாசனத்தில் வீற்றிருக்கின்றார் இவரைச் சுற்றி கிழக்கில் தத்புருஷர், வடக்கில் வாமதேவர், தெற்கில் அகோரர் மேற்கில் சத்யோஜாதர் ஆகிய மூர்த்திகள் அமர்ந்துள்ளனர். மேலும் இவருடைய முன்புறம் பாஸ்கரனும், வலப்புறம் பானுமூர்த்தியும், பின்புறம் ஆதித்தியனும், இடப்புறம் ரவியும் ஆகிய சூரியர்கள் வீற்றிருக்கின்றனர். இந்த சூரியர்கள் நால்வரும் நான்கு முகம், நான்கு கரங்கள் கொண்டவர்கள். இவர்களுடைய தேவியரான வித்தாரை, சுதாரை, போதினி, யாப்யாயினி ஆகியோரும் எழுந்தருளி உள்ளார்.
மேலும் தாமரை மலர் போன்று அமைந்துள்ள பிரபூதம் என்னும் சூரியனின் ஆசனத்தையும் அதனைத் தாங்கும் விமலன், சாரம்,
சிவலிங்கம் 109

Page 64
ஆராத்யம் பரமசுகம் எனும் நான்கு சிங்கங்களையும் இப்பீடத்தில் காணலாம்.
இந்தப் பீடத்தைச் சுற்றி
1. தீப்தை
(558,60)LD
ebagT விபூதி விமலை அமோகை நான்கு கரத்துடன் கூடிய வித்துயுதா பத்தரை ஆகிய அவஷ்டசக்திகளும், நான்கு முகமுடைய சர்வதோமுகி எனும் பீடசக்தியும் எழுந்தருளி இருக்கின்றனர்.
ஸ்படிகலிங்கம் -
சூரியனுக்கு உரிய கற்களில் தலை சிறந்தது ஸ்படிகமாகும்.
எனவே சிவசூர்யனாக விளங்கும் சிவபெருமானை ஸ்படிகக் கல்லில்
லிங்கமாகச் செய்து வழிபடுகின்றனர்.
ஸ்படிகலிங்கத்தை வழிபடுவதால் இம்மையில் ஞானமும், மறுமையில் மோட் சமும் கிடைக்கும் என்பர். எனவே ஞானாசார்யராக விளங்கும் துறவிகள் ஸ்படிகலிங்கத்தைப் பூசை செய்கின்றனர்.
ஸ்படிக லிங்கத்தை இல்லறத்தார் பூசிப்பதால் ஞானமும் பொருட் செல்வமும் உண்டாகுமென்பர். எனவே சிவதீட்சை பெற்ற பலர் ஸ்படிகலிங்க பூசை செய்கின்றனர். நெருஞ்சிப் பேட்டை, சிதம்பரம், காளஹஸ்தி முதலிய தலங்களில் ஸ்படிகலிங்கங்கள் நித்திய பூசையில் சிறப்புடன் வழிபடப்படுகின்றன.
சூர்ய மண்டலத்தில் சிவசக்தி வடிவமாகப் பெருமான் அர்த்த நாரீசுவரராக காட்சியளிக்கின்றார். இதனைக் குறிக்கும் வகையில் இயற்கையாகவே பல ஸ்படிக லிங்கங்களில் சிவப்பு அல்லது கருநீலநிறம் ஒரு பக்கத்தில் படர்ந்துள்ளதைக் காணலாம். இத்தகைய லிங்கங்கள் அர்த்த நாரீசுவரர் ஸ்படிகலிங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
11O சிவலிங்கம்

சூரியன் வழிபட்ட திருத்தலங்கள் -
சூரியன் சிவபெருமானை வழிபட்டுப் பேறுபெற்ற திருத்தலங்கள் அவன் பெயராலும், அவனுடைய பல்வகைப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையில் ஆதித்திய புரங்கள், பாஸ்கர புரிகள், பருதிபுரம், சூரிய ஷேத்திரம், ஞாயிறு, தலை ஞாயிறு என்று பல திருத்தலங்கள் உள்ளன.
இவற்றில் இரண்டு வகையுண்டு. முதல் வகையில் சூரியன் தேவ வடிவில் இருந்து ஆகமங்களில் கூறியபடி சிவலிங்கம் அமைத்து வழிபட்ட திருத்தலங்கள். இவை மங்கலக்குடி, பருதி நியமம், திருநாகேசுவரம் போன்றவை.
இரண்டாவது வகையில் அமைபவை ஆண்டின் சில நாட்களில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் கோபுர வாயில், பலிபீடம், கொடிமரம், ஆகியவற்றைத் தாண்டிச் சென்று மூலவராகிய லிங்கத்தை ஜோதிமயமாக்கும் திருத்தலங்கள் ஆகும்.
திருமால், பிரம்மன், சூரியன் ஆகியோரைத் தவிர அகத்தியர், வாலி, சுக்ரீவன், இராமர், சீதை, ஆஞ்சநேயன் போன்றோரும், இன்றும் வேறு பலரும் சிவலிங்கங்களைப் பிரதிட்டை செய்து சிவபூசை செய்துள்ளனர்.
ஒருமுறை கைலாசத்தில் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் நடைபெற இருந்த திருமணத்தினைக் காண தென் திசையில் உள்ளோர் வடதிசைக்குச் சென்றிருந்தனர். இதனால் தென் திசை உயர்ந்தும், வடதிசை தாழ்ந்தும் உலக சமநிலை மாறியது. இதனால் தேவர்கள், முனிவர்கள் இறைவனை இவ் விபத்தினுக்கு வழி செய்யும் படி கேட்டுக் கொண்டனர். இறைவன் திருமணம் காணவந்த அகத்தியரை நோக்கி, ‘நீங்கள் தனித்து தென்திசை சென்றால் உலகம் சமநிலை பட்டு விடும்’ என்று கூறினார். இறைவனின் வேண்டுகோளை மதித்து புறப்பட்டார். எனினும் சிறிது தயங்கி, “இறைவா நான் மட்டும் உங்கள் திருமணத்தைத் தரிசனம் செய்ய வேண்டாமா?” என்று கோரிக்கை விடுத்தார்.
ஈசன் “அகத்தியரே தென் திசையில் எங்கெல்லாம் நின்று திருமணத்தை தரிசிக்க வேண்டும் என்று நீ விரும்புகின்றாயோ
சிவலிங்கம் 111

Page 65
அத்தலங்களில் எமது திருமணக்கோலத்தைக் காட்டி அருளுவோம்’ என்று திருவாய் மலர்ந்தருளினார். அவ்வாறு திருமணக் காட்சியை அருளிய பெருங்கோயில் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் என்பதாகும். இதை விட இன்னும் 107 தலங்களில் சிவலிங்கம் தாபித்து இறைவனைப் பூசித்துள்ளார். அவற்றுள் சிலவற்றில் திருமணக் காட்சியையும் கண்டு மகிழ்ந்தார். இத்தலங்கள் அகத்தீசுவரங்கள் என்று இறைவன் திருநாமம் அகத்தீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறது.
இவ்வாறு அருளாளர்கள் தரிசித்த சிவத்தலங்கள் அவரவர் பெயர்களில் வழங்கப்படுகின்றன.
VJOJOJ
அடிக்குறிப்புகள்
(1) ஆராதனை சமய இதழ் ஜனவரி 2004
(2) ஈழத்து இந்து சமய வரலாறு
பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் - (பக் - 05)
(3) மே.கு.நூல் (பக் - 08)
(4) கடவுள் அருள் சமய இதழ் மார்ச் 2005
(5) ஞானபூமி யூன் (2006)
(6) சிவமஞ்சரி - பாகம் - 01
(7) ஆராதனை சமய இதழ் ஜனவரி (2004)
(8) சிவமஞ்சரி - பாகம் - 01 - Luis - 88
(9) மே.கு.நூல் (பக் - 96)
(10) சக்தி சமய இதழ் நவம்பர் (2006)
சிவமஞ்சரி - பாகம் - 01 - பக் - 88
12 சிவலிங்கம்

லிங்காகடேகம்
காமாட்சிநாதர்
அருளை யளித்திரு மாத்மகலிங்கம் பொருளையளித்திடும் பூரணலிங்கம் இருளை யகற்றிடும் ஈஸ்வரலிங்கம் மருளை யகற்றும் மகேஸ்வரலிங்கம்
உமையவள் போற்றிடும் உத்தமலிங்கம் இமையவர் போற்றிடும் ஈடில்லாலிங்கம் அமையெனக் காத்தெமை யாள் சிவலிங்கம் சமயத்திலுள்ள சதாசிவலிங்கம்
மகத்துவ மிக்கது மாசிவலிங்கம் அகத்தினி லுற்றிடும் ஆனந்தலிங்கம் ஜகத்தினை யீவது சாஸ்வத லிங்கம் சுகத்தினை யீவது சூட்சும லிங்கம்
நமனை யுதைத்திரு நாயக லிங்கம் öfLDuu LD066ğ5g5([56íT g5[Tuuab 65ÉI35Lib அமல மனத்தினில் மீதுள்ள லிங்கம் கமல சகஸ்திர மீதுள லிங்கம்
மகபதி மாலயன் போற்றிடும் லிங்கம் பகவதி பார்வதி பாலிக்கும் லிங்கம் இகமதிலே நிதி வாழ் சிவலிங்கம் சகலமும் ஈந்திடும் காரணலிங்கம்
சிவசிவ என்றிடச் சீர்தரு லிங்கம் அவயவ மொன்று மிலா சிவலிங்கம் தவமிகு மேலோர் தரித்திடும் லிங்கம் உவமையு மேலு மிலாபர லிங்கம்
ിഖബിthbb 113

Page 66
114
வானவர் வாழ்த்தும் மகாசிவலிங்கம் மோனமெய் ஞானியர் மோகன லிங்கம் தீனரைக் காத்திடும் சீர்மிகுலிங்கம் மானசம் ரட்சக மாகிய லிங்கம்
யந்திர மீதரு ளாயுள லிங்கம் மந்திர ரூப மகேஸ்வர லிங்கம் தந்திர சாத்திரம் சாற்றிடும் லிங்கம் வந்தனை செய்வோரை வாழவை லிங்கம்
பவ பய ஹர சிவ சாரூபலிங்கம் சிவாயநம நமசிவாய லிங்கம்.
O OU OU
சிவலிங்கம்

இifழ9ழித்யடு
$nfious@1ņ909Info@*鱷 UTIŲnnouns([]]ostog•Ģitoபரங்) Ųrtotų9ỗs) usốLUlqingq9oC)UO໙໑໙໑.ຫ |(109ĪĢĢI@139IIIIo,!1ဈ၆i@figဖစ္n ų/100ų9013)(ITIடிகியர்(fi)ığ99įrengoằnqęfisīsā,的或
•■nae[99@@ UseQ90901Ilmsẫugoję tę stās 圈•••••10909LRSIȚIẾlg)1990 #ąjoon 1909||9||5||||Íosle of, [109]ĝệnoņ990) | ql09riquả91ņ9IIIb)ug域90909LIUĻ090T| LUIqu091ņ91/ITU)IJsouff~15Ílistasıpışırlısıpự qofissãoqigonqu091ņ9 unte)qlofi) loĝ98 ||十||十 1990IIIorolęqī£IŲJŲ9ULIITIŴ listasıp yıl ||(Norto?) 19091||9||5||1091ņoss?ரயிாரழேumgặ09īję1,909||9||5||||Ģog) ||||||| 1ņ9ÍJosql.so * 10909 Istorņ@lg) |11909ų9ĻĻIĞrto?)(#nီဖ# Į09Ulf(sq990)|திடியா டிர்ேம9யா9ழி>k4ılınƯỜI) 109.199.gi 1ņ9ĝğ1091133@fi)十|恩戈n :ķ:kque fissãoĮRoashĮ09ĝi ||| ||| பகிர்டியரமாĮılmŲorgioĮmų9091,9190)நயதின்டிே ||| || ĮIIIn 109ft) u số
nsoorse, s Jinsen!!?QIme

Page 67
1990ourtosIJssfĪGI
1ņ9f@ỗo1ņ9109 IÃo || டிபேர்டி99Usòstols? 十十 Lã31] [1109Ģģ (105Í909051011109IITTIỄII/Istoņ9Ų9 || |
ரய்ர்ேடிம99 qisqïsolos 11@fios? qī£1ğıŲ9ĝųŲiiĝo + ự0901@goo? (I
U109ųımų91,919 + 1,9 solisão III09 gi + 1,90€, un@@
ự009Ư11,91||093)Ưi 十 q1109o III (909Ųnul 'Usgo (9
|
qofņ1909.IIIIIosẽ + IULIITIm@$±! ĢĢļfiàmŲo) + Į09U" (Nosso
IIUlqinoq990)LUIŲıs@@@
十十 uƐıú-ıgı “Uysoroqofi][Ìfā īņ9:19 || |
IisusupŲılınsıņots + ususupuşull@rtsg)
Ģitologo + liễu sẽsjonų9 ự09Ģoğulo + 1,909||9||5||910093)o யராகியேய் + முர்பேறுகி ự009]] [[$số + 1ņ9@115ī£1109@stoso
ųITUotų9013) sırı 十 q|(1@siguillog) TĘ9:19

முடிoயேடு + படிநிதிடிேயாகு
ரடிெஸ்டு Ųrtotų9.109@1(9hquŋoolrooyasınıĢflotų909 qī£IĘIQ9|JoUIIsã3II (I-15Íqıml??IIIIIŲolg + (3) 1999?!?!!1!0! qimų2090] [15]ņoហ្វgfiត19091||9||5|[]|$19ụITI ŲTU90ų9013) sıfıqıÍNosouus??)qimoriqu091ņ9IITTU)qabel11009@iĝo ||| 9ேறுப்திலIisusupușiņIẾrog)Usi史II9{aტடி9ரய99ழி 十十' +十 முதிர்டி|##111091.golfoIso supūliņIssıpg? I909||9||5|q|(1ĝojoImiqo091ņ9Ęq100Tlqim0009ņ9Ę |||| ||| 109091|forņĝo) 十 는「m적9 | புர்ேடி
ĮIIĢĢođqjąc gửiroņings sqọųogoļroko mð,311ú-1ợt qđơnko

Page 68
qıcı9riqi109.1991Irl(g) gặrtotų919 qięfisīsā (of,
qlRolf?I$?UIITILQQ9Ulf]|[ITIŴTU9(10130JA) +ņInų009ŪLIJUSIŲortolf?十{{sl|[[$€ரடிரிரி的地与949的 ŲTU90ų9013)(Ti1IUTUI 109109f@·|-· UlusqimŲ91,919| •| •||| || நித்ரிடியன்U109ųımų91,919LUlqi109.1991/ITU)ĻĢojo +L—I十 quaesits(susţgsåர9துg99டிருg19091||9||5||||Ģo?) || | Ģfiglio + qsofiMŰfā’ Lễıııııgsgặộliftooi o09Ųıqlılaşırı LễII(Iroqolys | qofi) logooIỄII/1-15Í19091||9||5|||Nortog)IIUlqißgắsso10909LTUIȚIỂU) 十十十十十 LUIqiolloÍJlu:uitstgote)Ilgiqu09.1993?qinoriųIIIII?)qlofi) loĝ99119091||9|9]] (losglo |||||| III ngắ09Țĵo q1009111009@iĝo UT09qImų91/9f09+qirtos@11@o || – qu09f0090909$ + IÊộfi)ęLĪsự1009||1(909TIq|Go
ņIIĢģđqjiq șÚŘro Ugoroooooos@ họgooņroko mð,3ms−1gi Isonk?


Page 69
PRINTEDBYUNEARTS (GVU)
 

TID, COLOMB0 M3, TEL: 233095