கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முருகேசு சபாரத்தினம் (நினைவு மலர்)

Page 1
அமரர்
d|Dd|58öăr d'III
அவர்களின் சிவபதட்
 
 

றத்தினம்
பேறு குறித்த

Page 2


Page 3


Page 4
懿
5:3.
繳 繳
 
 
 
 
 

முருகேசு சபாரத்தினம்
திதி நிர்
நிர்ணய வெண்பர்
Wಳ್ವ
േ

Page 5

(பஞ்சபுராணத் தொகுப்பு திருச்சிற்றம்பலம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
தேவாரம் துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் செஞ்சகம் நைந்து நினைமின் நாள் தொறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற்று அஞ்சவு தைத்தன அஞ்செழுத்துமே.
திருவாசகம் அத்தனே அண்டரண்டமாய் நின்ற ஆதியோ யாதுமீ றில்லாச் சித்தனே பக்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெருமானே பித்தனே யெல்லா வுயிருமாய்த் தழைத்து பிழைத்தவை யல்லையாய் நிற்கும் எத்தனே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெளுந் தருளுவ தினியே.

Page 6
assifi
நையாத மனத்தினை
நைவிப்பான் இத்தெருவே ஐயா! நீ உலாப்போந்த
அன்று முதல் இன்று வரை கையாரத் தொழுது அருவி
கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ? அருள் கோடைத்
திலை லோக்கிய சுந்தரனே.
திருப்பல்லாண்டு சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த தூய்மனத் தொண்ட ருள்ளிர் சில்லாண்டிற் சிதையுஞ் சிலதேவர்
சிறுநெறி சேராமே வில்லாண்ட கனகத் திரள்மேரு
விடங்கன் விடைப் பாகன் பல்லாண்டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க பூதபரம் பரைபொலிய புனிதவாய் மலர்ந்தழுத சிதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவோம்.
 

திருப்புகழ்
பக்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணநேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திநிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே.
வாழதத
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ்சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை அறங்களேங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்

Page 7
F 8HUJdi dlou66
உயிர் உடலோடு கூடிவாழும் நிலையில் அதன் நன்மை கருதிச் செய்யப்படும் கிரியைகள் பூர்வக் கிரியைகள். எடுத்த உடலை விட்டு விலகியபின் அதன் நன்மை குறித்துச் செய்யப்படும் கிரியைகள் அபரக்கிரியைகள் எனப் பெயர் பெறும்.
உயிர் என்றைக்கும் வாழும் ஒரு வஸ்து. அதன் வாழ்க்கை மூன்று நிலைகளில் வைத்து அவதானிக்கப்படுகின்றது. அது இவ்வுலகில் உடம்பு எடுத்து வாழும் வாழ்க்கை நிலை இம்மை, இவ்வுடல் வீழ்ந்த பின் திரும்பவும் இதுபோல் உடலில் கூடிவாழும் வாழ்க்கை மறுமை, உடல் வாழ்க்கைக்கான வினைத்தொடர்பு முற்றாக நீங்கி இறைவனடி சேர்ந்து விடுதல் அம்மை எனப்படும்.
மூன்று நிலையிலும் உயிர்க்கு வாழ்வுண்டு. இவற்றில் இம்மை வாழ்க்கைக்கும், மறுமை வாழ்க்கைக்கும் இடையில் குறிக்கப்பட்ட அளவு ஒரு இடையிடுண்டு. அந்த இடைக்கால எல்லை குறித்த பட்சம் ஒரு வருடம் என்பார்கள்.
நம்மவர் யாரேனும் முன், பின் அறியாத ஒரு புதுத்தேசத்திற்குப் போக நேர்ந்து விட்டால் எமக்குப் பெரும் கவலை ஏற்படுகின்றது. அங்கு இடந்துறைகள் எப்படியோ? வாழ்க்கை வசதிகள் எப்படியோ? என்ற வகையில் அக்கவலைகள் தோன்றும் அதேபோலவே, நம்மோடு உடனாய் நம்மத்தியில் உடல் கொண்டு வாழ்ந்தவர் ஒருவர் உடலை விட்டுப் போய்விட்டார் என்ற போது, எங்கே போனார்? அவர் போன இடந்துறைகள் வசதிகள் எப்படியோ? அங்கு அவர் வாழ்க்கைக்கான ஏற்பாடுகள் எப்படியோ? என்ற கவலைகள் அன்பின் மிகுதியாய் எழுவது இயல்பு.
இங்கு வாழுங் காலம் முழுவதும் அவர் அறிவுணர்ச்சி உள்ளவராய் இருந்தார். தம் அறிவுணர்ச்சிக் கேற்றபடி உண்ணுதல்,
 

FFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFF பருகுதல் முதலிய பல்வேறு போகங்களை அனுபவிப்பவராயிருந்தார்.
தாகத்திற்கு என்ன வழி என்பது ஒரு வகைக் கவலை. அநாதையாக அந்தர வழியில் விடப்பட்டிருக்கும் அவருக்கு படைப்பு பேதங்களக
இருக்கும் பிறப்பு நல்ல பிறப்பாக வாய்க்குமோ என்றது ஒருவகைக் கவலை. இவ்விடைக்காலத்தில் உளதெனப்படும் நரகவாதனையில்
இங்கிருத்து இறந்து போன ஒருவரைப்பற்றி இங்குள்ளவற்கு எழவேண்டிய கவலைகள் இவைகளாகும்.
இக்கட்டத்தில் இவர் சம்பந்தமான சேமநலன்களைக் கவனித்தற் கென்று கடவுளற் படைக்கப் பெற்றுள்ள பிதிரர் என்ற ஒரு வகைத் தேவசாதியார் இருக்கின்றாக்கள். மரணத்துக்கு முந்திய நிலையில் நம் சேமநலன்களுக்கு சிறப்பாக உதவும் இந்திரன், வருணன் முதலிய தேவர்களைப் போல, மரணத்தின் பின் நமது சேமநலன்களுக்குச் சிறப்பாக உதவும் பொருட்டாக இருப்பவர்கள்
மாற் செய்யப்படும் நற் கிரி ilancio ganib gagagaugiga lahata
இறந்து விட்டவர் ஆரூபியாய் விட்பண். ல்ை iai அவரோடு தொடர்பு கொள்ளல் இயலாது. ஆகவே அதற்குரிய உத்தரவாதமுள்ளவர்களாகிய பிதிரர்களை வருந்தியழைத்து தம்முன் இருத்தி அவர்களை நமது பூஜை, தானம், தர்ப்பணம் என்பவற்றால் திருப்திப்படுத்தி, இறந்தோரின் சேமநலன் பொருட்டாக நாம்

Page 8
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL எவற்றையெல்லாஞ் செய்ய விருமடடகிறோமோ அவற்றையெல்ாம் அவர்களைக் கொண்டே செய்வித்தல் தான் அபரக்கிரியைகளின் பெர்துப்பண்பாகும்.
பொதுவாக நம் வாழ்வில் நமக்கு நிகழும் சேமலாபப் பேறுகள் எல்லாவற்றிலும் தேவர், பிதிரர்களின் பங்கு முக்கியமானது. அவர்களின் திருப்தி எங்களின் சேமலாபப்பேறுகளை நன்கமையச் செய்யும். அவர்களின் வெறுப்பு அவைகளைக் குறைக்கவும் கெடுக்கவும் பார்க்கும். இவ்வுண்மை சமயநிலையில் ஒத்துக்கொள்ளப்பட்டள்ள ஒரு ஆஸ்திக உண்மையாகும். இருவர் சகாயமும் எப்போதும் வேண்டுவன எனினும், மரணத்தின் பின் பிதிரர் சகாயம் பிரத்தியேகமாக வேண்டப்படும் நிலையுண்டு. இதனால், இல்வாழ்வார்க்குத் தேவர் கடனும் பிதிர்க்கடனும் இன்றியமையாதனவாகின்றன.
அபரக்கிரியைகளின் பொது நிலைப் பண்புகளையும் அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் இதுவரை கவனித்தோம். இனி அவற்றை ஒழுங்குமுறைப்படி நோக்குவோம்.
சைவ அபரக்கிரியை இயல்
மேலைப் புண்ணிய பாவங்கட்கு பொருந்துமாறு இறைவனால் ஆன்மாக்கட்குப் பிறப்பு கொடுக்கப்படுகிறது. இப்பிறப்புக்களில் மானுடப் பிறப்பு சிறப்புடையது. இம்மானுடப் பிறப்பிலும் சைவ சமயத்தவராகப் பிறப்பது சிவபுண்ணிய சார்பாகும். சைவராகப் பிறவி எடுத்தமையால் சைவசமய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வேத சிவாகம நெறிப்படி வழிபட்டு சைவசித்தாந்த அத்துவித முத்தியாகிய பேரின்ப பெருவாழ்வு அடைய முற்படல் வேண்டும். இதுதான் மானுடப் பிறப்பின் முற்றாக முடிந்த முடிவாகும். எல்லாச் சமயங்கட்கும் அவற்றிற்கென தனித்தனியே பல சமயச்சடங்குகள் இருப்பதை நாம் அறிகின்றோம்.
சைவராகிய எமக்கு பிறப்பு முதல் இறப்பு வரையும் இறப்பின் பின்னரும் பல சமயச் சடங்குகள் நடைபெறுகின்றன. இவையாவும்
9-999999999C8A-8-8-8-8-8-8-8-8-Q

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLz சிவாகமங்களில் விதித்தபடி நடைபெறுகின்றன. அப்படியே நடைபெறவேண்டியது இன்றியமையாதது. சைவர் ஒருவரின் மரணத்தின் பின்னர் நடைபெறும் சடங்குகள் அபரக்கிரியை எனப்படும். (அபரம் - பிந்தியது) இக்கிரியைகள் இறந்தவரின் ஆன்மாவின் நன்மைக்காகச் செய்யப்படுகின்றன. ஆன்மா எப்பிறவி எடுத்திருப்பினும் பிதிரர்களின் கிரியைகளின் மூலமாக பயனை அந்த ஆன்மா பெறுகின்றது. பிதிரர்கள் பிரமனால் படைக்கப்பட்டவர்களாகும். இக்கிரியைகளைச் செய்பவர்கள் தனதானிய சம்பத்து, புத்திரலாபம் முதலிய ஜஸ்வர்யங்களை பெற்று வாழ்தலுமின்றி மறுமையில் நற்கதியையும் அடைவார்கள். அவர்களுக்கு தீவினையும், வறுமையும், இடரும் நீங்கும். செய்யாது விடின் எழு பிறப்பிற்கு பிதிர்தோஷம் ஏற்படும்.
அபரக்கிரி பில் சூர்ணேஸ்தவம் ம், அஸ்திசஞ் (காடாற்று), அந்தியேட்டி, பாஷாணபூசை (கல்லெடுப்பு), ருத்திரபலி (பிரபூத பலி), நவசிரார்த்தம், ஏகாத்திர விருத்தி சம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசியம், சோதகும்பசிரார்த்தம், சுவர்க்கமாதேயம், வைதரணிகேதானம், சயிணடிகரணம்(விட்டுக்கிளியை), சிரார்த்தம் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன.
இவற்றில் விஷேட அந்தியேட்டி, நிருவான அந்தியேட்டி ஆகியவை பிரதேத்திலேயே (கட்டையிலே) தகனத்திற்கு முன்னர் நடைபெறும். மச்ச மாமிச போசனமற்ற நாலாம் வருணத்தாருக்கும் பிரேதத்தில் சமய அந்தியேட்டி தகனத்திற்கு முன் செய்யப்படும்.
மேற்குறிப்பிட்ட கிரியைகளை கல்வியறிவு ஒழுக்கங்களிற் சிறந்த ஆசாரியாரை(குரு)க் கொண்டு செய்விக்க வேண்டும். இவற்றைச் செய்விப்பவர்களும்(கர்த்தா) கிரியைகளின் தத்துவங்களையும் அவற்றின் பலன்களையும் அறிந்து பக்தி சிரத்தையுடனும் அன்புடனும் அவற்றைச் செய்வதனால் நன்மை பயக்கும். இக்கிரியையில் பல தானங்கள் செய்யப்படுகின்றன. தானம் என்பது நற்பயன் குறித்துச்

Page 9
zLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL செய்யப்படுபவை. எனவே இத்தானங்களை சற்பாத்திரத்திற்குச் செய்தாற்றான், குறித்த பயனைப் பெறலாம்.
நாலாம் வருணத்தாராகிய எமக்கு சைவாகம விதிப்படியே சைவக்கிரியைகள் நடைபெற வேண்டியது. எமது அபரக்கிரியையில் சூர்னோத்சவம் தொடக்கம் பாஷாணபூசை வரையுள்ள கிரியைகளை சைவ ஆசாரியார்களும், சபிண்டீகரணம் சிரார்த்தம் முதலிய கிரியைகளை பிராமண ஆசாரியார்களும் செய்து வைக்கிறார்கள்.
இக்கிரியிைல் ஏற்படும் சந்தேகங்களை நூலறிவு அனுபவம் உள்ள ஆசாரியார் சிலரிடமே கேட்டு அறிய முடிகிறது. இக்கிரியைகள் பற்றிய நூல்களும் இன்று கிடைப்பது இல்லை. இக்கிரியைகளின் தத்துவங்களையும் விளக்கங்களையும் சாதாரண கல்வியறிவுடைய எவரும் வாசித்து விளங்கி பயனடைய முடியுமென்ற முறையில் இக்கட்டுரை அமையுமென நம்புகின்றோம்.
சமயதீட்சை பெற்ற நாலாம் வருணத்தாருக்கும் முப்பது நாள் ஆசௌசமுடையவர்களுக்கும் உரிய கிரியைகளையும் அதன் தத்துவங்களையும் விளக்கங்களையும் ஓரளவு இக்கட்டுரையில் விளக்கிக் காட்டப்பட்டுள்ளது. கிரியை செய்யும் முறைகள் அவற்றிற்குரிய மந்திரங்கள் ஆகியவை இக்கட்டுரையில் இடம்பெறவில்லை.
ஒருவர் நோய்வாய்ப்பட்டு அல்லது வயோதிபமடைந்து மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடையும் பொருட்டு கோடுபசு) தானம் செய்யப்பட வேண்டும். இதனை உத்கிராந்தி தானம் என்பர். இது உயிர் உடலை விட்டுப் பிரியும் போது செய்யும் கிரியையாகும். பின்னர் திருமுறைகள் ஒத வேண்டும். திருநீறு அணிவித்து புண்ணிய தீர்த்தம் அல்லது பால் பருக்கி வலது காதில் பஞ்சாட்சர மந்திரம் ஓத வேண்டும்.
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLz மரணித்தவரை குளிப்பாட்டி அலங்காரம் செய்து தர்ப்பைப்புல்
பரப்பி தெற்குப் பக்கம் தலை வைத்து கிடத்தல் வேண்டும்.
தலைப்பக்கம் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
மரணச்சடங்கு - ஆர்னோத்சவம் தந்தை தாயருக்கு மூத்த புதல்வனே கிரியை செய்ய வேண்டும். தந்தைக்கு சிரேஷ்ட புத்திரனும், தாயாருக்கு கனிஷ்ட புத்திரனும் கிரியை செய்யும் வழக்கமும் உண்டு. புத்திரர் இல்லாதவிடத்து கீழ்வருவோர் கிரியை செய்ய உரிமை உடையவர்.
1.புத்திரன் 2.மனைவி 3.மகள் 4.தமையன் 5.இளையசகோதரன் 6.சகோதரன்புதல்வன் 7.பிதா 8.தாய் 9.LDCBLD56 10.சகாதரி 11.சகோதரிபுதல்வன் 12.பிதாவழிச்சயிண்டன் 13.சமானோதகன் 14.தாய்வழிசபிண்டன்
15.தாயின்சமானோதகன் 16. சீடன் 17.குரு 18. மகள், கணவன் 19.தோழன் 20.அரசன் என்பவர்கள் இவர்களுள் புத்திரனே பிரதானமானவர். பிரதான கள்த்தா இல்லையாகில் அடுத்தவர் வரிசையாகப் பிரதானமானவர். சில நூல்களில் 32பேர்கள் கூறப்பட்டுள்ளது. புத்திரன் அல்லாத ஒருவர் கர்த்தாவாக கிரியை செய்வதாகில் அவர் தனது பெற்றோரில் ஒருவருக்காவது கிரியை செய்தவராக இருத்தல் வேண்டும்.
புத்திரர் இங்கில்லாத காரணத்தினால் மரணக்கிரியை வேறு ஆசெள வழியில் உள்ளவர் ஒருவர் செய்தால் புத்திரர் பின்னர் வருவராகில் எஞ்சிய கிரியைகளைப் புத்திரர் செய்யலாம். அதேபோல் புத்திரர் மரணக்கிரியைகளைச் செய்து மற்ற கிரியைகளுக்கு நிற்க முடியாது விட்டால் மற்றைய கிரியைகளை வேறொருவர் கர்த்தாவாக இருந்து செய்யலாம். ஆனால் இவரையும் ஆரம்பக்கிரியையிலே கர்த்தாவுடன் சேர்த்துக் கிரியைகள் செய்ய வேண்டும்.
அந்தியேட்டிக் கிரியை மாத்திரம் 21ம் நாளுக்கு மேல் 30நாட்களுக்குள்ளும் செய்யலாம். புத்திரர் வெளியூர் போக
99.9999-9999 G1 Dasa-R-R-A-R-R-R-R-

Page 10
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
வேண்டுமென்பதற்காக இத்தினங்கட்கு முன்னதாக அந்தியேட்டி, சபிண்டீகரணம் முதலியவற்றைச் செய்ய முடியாது.
மரணக்கிரியை நடைபெறவுள்ள இடத்தில் மண்டபம் அமைத்து வெள்ளை கட்டி, மாவிலை, தோரணம், பூச்சரம் முதலியவற்றால் அலங்கரித்து அந்த இடத்தை கோமயத்தினால் மெழுக வேண்டும்.
மரணக்கிரியையின் போது (பக்திஸ்தோத்திரம்) திருமுறைகள் ஒதுதல் வேண்டும்.
மரணக்கிரியையில் சூர்னோத்ஸவம் செய்யப்படும். நடுவில் ருத்திர கும்பமும் அதனைச் சுற்றி அட்டத்திக்குப் பாலகர் கும்பமும், மேற்குப் பக்கத்தில் புண்ணியாகவாசன கும்பமும், கிழக்குப் பக்கத்தில் உரல், உலக்கை (பேரிக்குப் பதிலாக) மணி, மயானத்திற்குக் கொண்டு செல்லும் மண்குடக்கும்பம் ஆகியவை வைக்கப்படும். இக்கும்பத்தை மயானத்துக்கு கொண்டு செல்வது வழக்கமாகவுள்ளது. குரு உரிய கிரியைகள், பூசைகள் வழிபாடுகள் செய்வார்.
அபிஷேகம் முதலியன செய்யும் பொருட்டு பிரேதத்தை வீட்டின் தெற்குப் புறத்தில் வடக்கு நோக்கிக் (தெற்குப் பக்கம் சிரசாக) கிடத்த வேண்டும். பின்னர் கர்த்தா அரப்பு எண்ணெய் முதலியன சிரசில் வைப்பார். ஆசௌசகாரர்களும் அரப்பு எண்ணெய் முதலியன வைப்பார்கள். பின்னர் அரிசிமா, மஞ்சள்மா, அபிஷேகக்கூட்டு(ஆமலகம்) பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். கர்த்தா மேற்கு முகமாக நின்று சங்காரக் கிரமமாக அதாவது கீழிருந்து மேலாக கர்த்தாவின் புறங்கையினால் வேறொருவரின் உதவியுடன் இவ் அபிஷேகம் நடைபெறும். பின்னர் கும்ப அபிஷேகம் நடைபெறும் கும்ப அபிஷேகம் பன்னிர் போன்ற வாசனைப் பொருட்கள் சிரசிலே செய்ய வேண்டும். பின்னர் பிரேதத்தை அலங்கரித்து மண்டபத்திற்குக் கொண்டு வந்து
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL தெற்குப் பக்கமாக தலையை வைத்து திருநீறு சங்காரக் கிரமமாக சாத்த வேண்டும். பின்னர் சுண்ணம் இடிக்கப்படும்.
அறுகு, மஞ்சள் பொடி உரலில் இட்டு பேரிக்குப் பதிலாக மணியடித்து 81பத மந்திரம் சொல்லி எட்டுத்தரம் இடித்து பின்பு:திருப்பொற்சுண்ணப் பாட்டுப் பாடி சுண்ணம் இடிக்க வேண்டும். பின்னர் சுண்ணப் பொடியை கர்த்தா பிரேதத்தின் இருகண்களிலும் சாத்தி நீருடன் சேர்த்து பிரேதத்தின் முழு உடலிலும் தெளித்தல்(புரோட்சித்தல்) வேண்டும். இது தற்காலம் நடைபெறும் முறையாகும். (சுண்ணம் இடித்து சுண்ணப் பொடியும் சேர்த்து பிரேத அபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது சாஸ்த்திர விதியாகும்.)
பின்னர் பெண்கள் வாய்க்கரிசி இட்டு பிரேதத்தின் வாய், கை, கால், விரல்கள் ஆகியவற்றைக் கட்டி பூத உடலை வஸ்திரத்தால் மூடிக்கட்டி பாடையில் வைத்து கால் முன்பக்கமாக மயானத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். கர்த்தா நெருப்பு சட்டியுடன் பூத உடலுக்கு முன்பாகவும் ஆசெள உரிமையாளர்கள் பூத உடலுக்குப் பின்பாகவும் செல்ல வேண்டும். ஆசௌசமில்லாதவர்கள் பின் செல்லக் கூடாது. மயானத்தை அடைந்து தெற்கே சிரசாக முதலில் தலைப்பக்கமும் பின்னா கால்ப்பக்கமுமாக இறக்குக. மயானத்தில் வடக்குத் தெற்காக விறகுகளை அடுக்கி அதன் மேல் பூத உடலை வைத்து சுற்றத்தார் வாய்க்கரிசி போடுதல் வேண்டும். பின்னர் கர்த்தா மட்குடத்தை இடது தோளில் வைத்து சிதையை (அப்பிரதட்சணமாக) இடப்பக்கமாகச் சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து கும்பஜலம், அரிசி, சொர்ணம்(பவுண்), அல்லது காசுடன் வாய்க்கரிசியிட்டு பின்னர் குடத்தை முன்போல் இடத்தோளில் வைத்து கொள்ளியை கையில் கொண்டு சிதையை இடப்புறமாக மூன்று முறை சுற்றி வர வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் குடத்தில் கத்தி நுனியினால் துவாரமிட்டு குடநீர் ஒழுகும்படி செய்து மூன்றாவது சுற்று முடித்து தலைப்பக்கத்தில் தெற்கு முகமாக நின்று பின் புறமாக பிரணவம் சொல்லி கொள்ளியை பிரேதத்தின் சிரசில் வைத்து குடத்தை முன்புறமாக உடையும்படி போட்டுவிட்டு

Page 11
zLLLLLLLLLLLLLLLLLLLLLLLLHHLHH பின்பு கால்மாட்டில் சென்று பவித்திரம் பூணுால் ஆகியவற்றை சிதையில் போட்டு(தனக்கு மூத்தவராகில்) விழுந்து நமஸ்கரித்து திரும்பிப் பாராமல்
செல்ல வேண்டும்.
மரணித்தவரும் கர்த்தாவும் மச்ச மாமிச போசனம்
இல்லாதவர்களாயின் இறந்தவருக்கு உடன் மயானத்திலே அந்தியேட்டி கிரியை செய்து தகனம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்திசஞ்சயனம் - காபாற்று - சாம்பல் அள்ளல்
தகனத்திற்கு அடுத்த நாள் மூன்றாம், ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் நாட்கள் ஒன்றில் அஸ்தி சஞ்சயனம் செய்க. தகனம் செய்யப்பட்ட இடத்தை கால் பக்கமாக இருந்து தலைப்பக்கமாக தண்ணிர் ஊற்றி அக்கினியை அணைக்கவும். தலைப்பக்கத்தில் விளக்கேற்றி கும்பம் வைத்து பூசை அபிஷேக திரவியங்களை வைக்கவும். மண்கலசத்தில் பால் ஊற்றி அதை தலைப் பக்கத்தில் ஒரு முக்காலியில் வைக்கவும், தகிக்கப்பட்ட உடல் எலும்பு மேனியில் முழு உருவமாக இருப்பதாக பாவனை செய்து கீழிருந்து மேலாக (சங்கார கிரமமாக) அபிஷேக திரவியங்களால் அபிஷேகம் செய்க. கர்த்தா மேற்கு நோக்கி நின்று புறங்கையால் இன்னொருவரின் உதவியுடன் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் முழங்கால்கள் (சத்தியோசாதம்), நாபி(வாமதேவம்), மார்பு(அகோரம்), நெற்றி (தற்புஷம்), தலை (ஈசானம்) ஆகிய ஐந்து இடங்களிலும் விபூதி, சந்தணம், புஷ்பம் வைத்து தூபதீபம் காட்டி பூசித்து மேற்குறிப்பிட்ட ஐந்து இடங்களிலும் உள்ள எலும்புகளில் ஒவ்வொன்று அக்கிரமப்படியே எடுத்து தலைமாட்டில் உள்ள பாலுள்ள கலசத்தில் வைத்து, அக்கலசத்தை வஸ்திரத்தால் மூடவும். பின்னர் மிகுதி எலும்புகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஒரு கடகத்தில் எடுத்து வைக்கவும். பின்னர் அவ்விடத்தைச் சுத்தம் செய்து பண்படுத்தி நவதானியம் விதைத்து நெற்பொரி, மாஅடை, தாம்பூலம், பழம் முதலியனவைகளைப் பூதப் பிரேத பைசாங்களின் பொருட்டு, பலியிட்டு, முன்னர் கலசத்தில்
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL எடுத்த அஸ்தியையும் கடகத்தில் எடுத்த மிகுதி அஸ்தி சாம்பலையும் புண்ணிய தீர்த்தம் சமுத்திரம் ஆகியவற்றில் கர்த்தா வடக்கு முகமாக நின்று தெற்குப் பக்கமாக போட்டுக் கரைத்து விடவும். பின்னர் கர்த்தா அந்த நீர்நிலையில் ஸ்நானம் செய்து அங்கு நக்கினப் பிரச்சாதனம் என்னும் நக்கினதானம் செய்ய வேண்டும். ஒரு குடத்தில் பச்சை அரிசியை நிரப்பி அக்குடத்தைச் சுற்றி வஸ்திரம் கட்டி வெங்கலப் பாத்திரத்தில் (விளக்கு) நெய்யூற்றி குடும்பஸ்தராக உள்ள சிவப்பிராமணருக்கு பரமசிவனைத் தியானித்துத் தானமாகக் கொடுக்கவும். இறந்தவரின் நிருவாணம், பசி, தாகம் இருள்களை நீக்கும் பொருட்டு இத்தானம் செய்யப்படுகின்றது.
அஸ்தியின் ஒரு பகுதியை அந்தியேட்டிக் கிரியைக்காகவோ அல்லது காசி, கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் கரைப்பதற்காகவோ எடுத்து வைப்பது நன்றாகும்.
எட்டுக்கிரியை
இக்கிரியை பற்றி பத்திகளிலோ ஆகமங்களிலோ எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் இது ஒரு நாட்டு வழக்கமாக வந்துள்ளது. தகனதினம் தொடக்கம் சபிண்டீகரணம் வரை இறந்தவரது படத்தை வீட்டில் ஒரு இடத்தில் வைத்து விளக்கேற்றி, தண்ணிர், இளநீர், வைத்து தாம் உண்ணும் உணவில் ஒரு சிறு பகுதியை அங்கு படைத்து தூபதிபம் காட்டி பூசித்து வரம் வழமை உண்டு. அஸ்தி சஞ்சயனத்தின் பின் எட்டாம் நாளுக்கு முன்னர் ஒரு தினத்தில் இறந்தவர் விரும்பிச் சாப்பிட்ட எல்லாப் பண்டங்களும்(உண்பன, பருகுவன) படைத்து தூபதீபம் காட்டி பூசித்து எட்டுக்கிரியையை முடிப்பார்கள். அன்று ஆசெளசகாரர்கள் அங்கு சாப்பிடுவார்கள். (இவை பிரபூதபலி என்ற கிரியைக்கு சமனாக நடைபெறுகின்றது)
அந்தியேட்டி - கல்வலடுப்பு அந்தியேட்டி சமய அந்தியேட்டி, விசேட அந்தியேட்டி, நிருவான அந்தியேட்டி என மூன்று வகைப்படும். இங்கு சமய

Page 12
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLz அந்தியேட்டி பற்றிய விபரங்களே தரப்படுகின்றன. விஷேட அந்தியேட்டி, நிருவான அந்தியேட்டி பிரேதத்தில் (கட்டையில்) தகனத்திற்கு முன்னர் செய்யப்படும். மச்ச மாமிசம் புசியாதவர்கட்கும் சமய அந்தியேட்டி பிரதேசத்தில் செய்யப்படும். அந்தியேட்டி இறந்த 21ஆம் நாளின் மேல் 31ஆம் நாட்களுக்குள் செய்யலாம். புத்திரன் அல்லாத வேறு ஒருவர் கர்த்தாவாக இருப்பின் சுபநாள் பார்த்து அந்தியேட்டி செய்ய வேண்டும். நதிக்கரை, குளக்கரை, நந்தவனம், வீடு ஆகிய இடங்களில் அந்தியேட்டி செய்யலாம். அந்தியேட்டி என்பது இறுதியிற் செய்யும் யாகம் எனப் பொருள்படும். பிரேதசரீரத்திற்குப் பதிலாக தர்ப்பையினால் புத்தலிகா செய்யப்பட்டு அந்தியேட்டிக் கிரியை செய்யப்படும். சூர்ணோத்சவக் கிரியை எல்லாம் முடித்து புத்தலிகாவை தகனம் செய்வார்கள் இதைப் புணர்த்தகனம் எனக் குறிப்பிடுவர். பின்பு அங்கு பாசாணம்(கல்லு) ஸ்தாபித்து அதற்கு அபிஷேகம், பூசை முதலியன செய்து தர்ப்பணம், பிண்டம், ருத்ரபலி, பிரபூதபலி (முன்னர் எட்டுக்குச் செய்தது போன்று) செய்யப்படும். இங்கு 30பிண்டங்கள் இடப்படும். இப்பிண்டங்கள் பச்சை அரிசி சாதம், கறிவகைகள், பலகாரவகைகள், பழவகைகள், பட்சணங்கள் ஆகியவை சேர்த்துப் பிசைந்து உருட்டி இட வேண்டும். வாஸோதகம்(சீலையோடு சேர்த்து தர்ப்பணம்), திலோதகம்(எள்ளோடு சேர்த்துத் தர்ப்பணம்) செய்யப்படும். இங்கு 525 தர்ப்பணம் செய்யப்படும். இவை ஏகோத்திர விருத்தி என அழைக்கப்படும். ருத்திர பலி சிவப்பிரிதியின் பொருட்டு செய்யப்படுவது. பின்னர் பாஷாணத்துக்குத் தூபதிபம் காட்டி பூசை முடித்து, கும்பம், பாஷாணம், பிண்டம் ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து மங்கல வாத்தியத்துடன் எடுத்துச் சென்று நீர் நிலையடைந்து பிண்டத்தை ஒருவரும், அவர் பின் கும்பத்தை ஒருவரும், அவர் பின் பாஷாணத்தை ஒருவருமாக எடுத்துச் சென்று கர்த்தா இடுப்பளவு தண்ணிரில் வடக்கு முகமாக நின்று தலைக்கு மேலாக தெற்குப் பக்கமாக பிணடத்தை முன்னரும், பின்னர் கும்பத்தை வடக்குப் பக்கமாகவும், பின்னர் பாஷாணத்தையும் தலைக்கு மேலாக தெற்குப் பக்கமாக ஜலத்தில் விட்டு ஸ்தானம் செய்து, வீட்டு வாசலை அடைந்து வேப்பிலை தின்று அக்கினி, சாணம், மண், வெண்கடுகு ஆகியவற்றை
 

zLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL ஸ்பரிசித்து(தொட்டு) கல்லின் மேல் கால் வைத்து வீட்டிற்குள் செல்லவும். கர்த்தாவுக்கு ஆரத்தி எடுப்பதுவும் உண்டு. (உலக்கையைக் கடந்து செல்லும் வழக்கம் உண்டு. இவை வைதீகக் கிரியை முறையாகும்.)
தத்துவபூஜை
அந்தியேஷ்டி மண்டபத்தில் தென்கீழ்த் திசையில் சிதாவாஸ்துவுக்குப் பக்கத்தில் இருபத்தைந்து அறைகள் உண்டாக ஒரு ஸ்தண்டிலமிட்டு, அவற்றில் ஐந்து நிறப் பொடிகள் பரப்பப்படும். இந்நிறங்கள் ஐம்பூதங்களைக் குறிப்பனவாகும். ஒவ்வொர் பூதப்பகுதியிலும், அவ்வவ் பூதத்தைச் சார்ந்த கலைகளும் அவ்வவ்வற்றின் அதிதெய்வங்களும் பூசிக்கப்படும். தத்துவ விளக்க அட்டவணையில் இது பின்வருமாறு அமையும்.
பொடி Ա5ւb 5606) அதிதெய்வம் மஞ்சட்பொடி பிருதுவி(மணி) நிவிர்த்திகலை LîJLDT பச்சைப்பொடி அப்புடுநீர்) பிரதிஷ்டாகலை விஷ்ணு சிவப்புப்பொடி தேயு(அக்கினி) வித்தியாகலை ருத்திரன் கறுப்புப்பொடி வாயு சாந்திகலை மகேஸ்வரன் வெண்பொடி ஆகாயம் சாந்தியாதிதகலை சதாசிவன்
இத்தத்துவ பூஜையின் தாற்பரியமாவது சம்பந்தப்பட்ட உயிரின் தத்துவ விரிவு இயலுமளவு ஒடுப்பப்பட்டு விட்டது. இனி அது தன் தகுதிக்கேற்பச் சிவத்துவச் சார்பில் தனக்கேற்குமளவுக்கு உயர்கதி பெறலாமென்பதே.
இவ்விவ்வகையில் அந்தியேஷ்டிக் கிரியைகள் நடந்து இறுதிக்கட்டத்தில் புத்தலிகா தகனம் செய்யப்படும். இதுவே முன் ஓரிடத்தில் எங்களுக்கு இருதகனம் எனக்குறிப்பிடப்பட்டதாம்.
2-8-8-8-8-8-8-8-8-8 2ܠܰܬܠܰܬܠܰܬܛܰܬ݂ܛܰܬ݂ܠܳܬ݂ܛܽܢ

Page 13
LLLHALLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL அந்தியேஷ்டிக் கிரியைகளில் சராசரி மனத்தை கவர்வது இப்புத்தலிகா தகனமாகும். அந்தியேட்டியைக் குறிப்பிடுகையில் தருப்பை சுடுதல் எனச் சுரக்கமாகக் சொல்லிக் கொள்ளல் பெரும்பான்மை.
இவையெல்லாம் முடிந்தபின்பே எமக்குப் பாஷாண ஸ்தாபனமும், இறுதிநாளாய் விட்டபடியால் கையோடே பாஷாண உத்தாபனமும் நடைபெறும்.
இதுவரை விபரிக்கப்பட்ட இவ்வளவும் அபரக்கிரியையில் பிரேத சரீரம் சம்பந்தப்பட்டவரையில் அதனை முன்னிலையாகக் கொண்டு நிகழ்ந்தனவாகும். இனி இவற்றின் தொடர்பாக நடைபெறுவன எல்லாம் நாம்முன் கவனித்தவாறு இறந்துபோன உயிரின் பிரேதத்தன்மை நீங்கி அது பிதிரர்களின் சகாயத்தால் தன் தேவைகள் நிரம்பப்பெற்று மேல கதியிற் செல்லுமாறு கருதிச் செய்யப்படுவனவாம்.
அக்கிரியைகள் தக்னதானம் முதல் சபிண்டீகரணம் இறுதியாகப் பலவாகும். சபிண்டீகரணமும் முடிந்த பின்பே அதற்கு மேல்கதிப் பேறென்பது ஆகமக் கொள்கை.
இப்பகுதிக்கிரியைகள் அனைத்தும் பொதுவில் சிரார்த்தம் எனப்படும். இறந்தவர் ஒருவரின் ஈடேற்றத்தை இங்கிருப்பவர்கள் பெரும் விஷயமாகக் கருதி இயன்றளவு கூடுதலான சிரத்தையுடன் இவற்றைச்செய்தல் வேண்டும் என்பது இப்பெயர்ப் பொருள் தரும் விளக்கமாகும். சிரார்த்தம் - சிரத்தையுடன் செய்யப்படுவது என்பர். முன் ஆரம்பத்தில் காட்டியவாறு பிதிரர்களே இச்சிரார்த்தக் கிரியைகளில் மிகுதியாக இடம்பெறுவர். தானங்களும் மிகுதியாக இடம்பெறும். இன்றைய நம் வழங்குமுறையில் இவையனைத்தும் வீட்டுக்கிரியைகள் என்ற பெயரில் அடங்கும்.
எங்கள் வீட்டுக்கிரியைகளில் புரோகிதர்கள் இடம்பெறுவார்கள். புரோகிதர்களாகிய ஐயர்மாரை அழைத்து அவர்கள் மூலமாகவே எல்லாக் கிரியைகளும் நடைபெறுதல் பிரசித்தம் . இவ்
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL எல்லாக் கிரியைகளும் நடைபெறுதல் பிரசித்தம். இவ் எல்லாக்கிரியைகளிலும் புலோகிதர்களிடத்தில் பிதிரர்கள் ஆவாஹனஞ் செய்யப்படுதல் ஒரு சிறப்பம்சமாயிருக்கும். அவர்கள் அப்போதைக்குத் தாம் பிதிரர்கள் என்ற பாவனையுடனிருந்து நாம் வழங்கும் தானங்களை ஏற்றுத் திருப்த்தியடைந்து, அவ்வகை யால் இறந்தோர்க்கு உதவ இருப்பவர்களாகிய மூலப் பிதிரர்கள் திருப்தியடையும் நிலையை உருவாக்குகிறர்கள். சிரார்த்தக் கிரியைகள் எல்லாவற்றிலும் அவற்றை நடத்துவிக்குங் கர்த்தா திருப்தியோ என வினாவுதலும் அவற்றை நடத்தும் புரோகிதர்கள் திருப்தி என்று சொல்லிக்கொள்தலும் நிகழ்தல் குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சிரார்த்த கிரியைகளில் ஏகோத்திஷடம் மட்டும் பிதிர் ஆவாகனத்திற்கு விலக்காகும். அக்கிரியையில் அமரும் புரோகிதரில் இறந்ததாகிய பிரேதத்துவ சம்பந்தமான உயிரே ஆவாகிக்கப்படுகிறது. அதன் பிரேதத்துவம் முற்றாக அகலுவதற்கு உபகாரமாக, ஏகோதிட்டத்தில் அமரும் புரோகிதருக்கு எல்லா வகையிலும் கூடுதலான தரமும் தொகையுமான பொருள்கள் பெருமளவில் தானஞ் செய்யப்படும். இந்த ஏகோதிஷ்டத்தை ஏற்பவர் இது காரணமாக ஒரு வருட கால ஆசௌசமுடையவராயிருப்பார் எனவும் அக்காலத்தில் அவர் சமயக் கிரியைகள் எதிலும் பங்கு பற்றுதற்கு அருகதை அற்றவராவார் எனவும், அந்த ஒரு வருட காலத்தில் அவர், புண்ணிய தீர்த்தயாத்திரை பண்ணுதல் மூலமாகவே அவருடைய ஆசௌசதோஷம் சரியாக நிவர்த்தியாகும் என்றும் கொள்ளப்படும். அங்ங்னமாதலால் இதை நடத்துவிக்கும் கருத்தா தமது சக்திக்கு இயலுமானளவு முயன்று அவருக்கு ஆகவேண்டிய சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியவராகின்றார். சிரார்த்தங்களுள் மகா சிரத்தையுடன் நடத்தவேண்டிய பெருஞ்சிரார்த்தம் இதுவாகின்றது.
நக்னதானம் இறந்தவருகுக்கு ஏற்படக்கூடிய ஆடையில்லாத குறையை நீக்குதல் பொருட்டுச் செய்யப்படுவது நக்னம் நிருவாண நிலை,

Page 14
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLz அதனுடன் அவருடைய பசிதாகத்துக்கும் இது சாந்தியளிப்பதாகக் கொள்ளப்படும். உயர் திட்சையாளருக்கு இது பிரேத தகனம் முடிந்த கையோடே செய்யப்படுவது.
நவசிராத்தம் நவம் - புதியது எனவே முதலில் செய்யும் சிராத்தம், நவசிரார்த்தத்தால் பிரேதத்தன்மை நீங்கும் சந்தணம், புஷ்பம், தூப தீபமின்றி பச்சையரிசி, காய்கறி வகைகள் தானம் செய்வது நவசிராத்தம்
(35D.
O O ஏகோத்தர விருத்தி இதை இங்கு இரணிய தானமாகச் செய்யவும் - விபரம் அந்தியேட்டிக்கிரியையில் சொல்லப்பட்டுள்ளது.
சம்கிதை - சங்கிதா சீராத்தம் இச்சிராத்தம் செய்வதால் திட்சை பெற்றுக்கொண்டபின் ஆசாரத்தில் வந்த குற்றம் நீங்கும்.
அபயதானம் - அபயோத்சர்சனம்
எருதுக்கு அலங்காரம் செய்து அதனைப் பூசித்து தானம் செய்தல், இறந்தவருடைய தான தரும பலன்களை தரும வடிவிலான இடபத்தின் மூலம் சிவபெருமானிடத்தில் சேர்ப்பித்தல், ஆன்மாவை இறைவனது திருவருள் வழியின் கண் நிற்குமாறு செய்தலாகும். இடபதானத்திற்கு எருது கொடுக்க வசதி இல்லாதவர்கள் ஒரு தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி அதிலே இடபத்தைக் கீறி அதன்மேல் தேங்காய் ஒன்றை வைத்து அதில் இடப தேவரை ஆவாஹனஞ் செய்து பூசித்து வழிபாடுசெய்தபின்னர் கர்த்தாவானவர் தமது இருகரங்களாலும் இடபதேவரைப் பற்றி ஒவ்வொரு திக்கிலும் கொண்டு சென்றதாக பாவித்து அதற்குரிய மந்திரங்களைக் கூறி வழிபாடு செய்து அதனைத் தட்சணை முதலியவற்றுடன் தானமாகக் கொடுக்கவும்.
 

ஏகோதிடம்
இது இறந்தவரைக் குறித்துச் செய்யப்படும் தானமாகும். சற்பாத்திரான ஒரு குருவை மேற்கு முகமாக இருக்கச் செய்து, ஆசனம் கொடுத்து, சந்தணம், புஷ்பம், எள்ளு ஆகியவை கொடுத்து உபசாரங்கள் செய்து கர்த்தாவின் சக்திக்கு தக்கவாறு தானங்கள் கொடுக்கவேண்டும். ஏகோ திட்டத்திற்கு இருபத்துநான்கு தானங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன பவித்திரம், பூனூல், கமண்டலம், உருத்திராக்கம், பாதுகை (மிதியடி), தண்டம், கெளமீனம், விபூதிப்பை, யோகபட்டம், குடை, குல்லாய், மேல்வஸ்திரம்(சால்வை), வஸ்திரம், பொன், மோதிரம், ரத்தினம், நெய், வெண்ணெய், பசு, பூமி, போசனத்திற்கு வேண்டிய பொருட்கள், சர்வதானியங்கள், சர்வ அலங்காரப் பொருட்கள், தாசி தாசர்கள் என்பனவாகும். இவற்றில் சிலவற்றை இரணியதானம் (காசு) அகவும் கொடுக்கலாம். பின்னர் ஏகோதிட்டத்திற்கு ஒரு பிண்டமிட்டு அதற்கு சந்தண பத்திர புஷ்பம் சாத்தி தூபதீபம் காட்டி பூசிக்கவும். பின்னர் ஏகோதிட்ட குருவை வழியனுப்பி அந்த இடத்தை சுத்தி பண்ணி கர்ததா ஸ்நானம் செய்யவேண்டும். ஆசாரியார் மீண்டும் புண்ணியாகவாசனம் செய்து பஞ்சகெளவியத்தினாலே தன்னையும் கர்த்தாவையும் இடத்தையும் பொருட்களையும் சுத்தம்செய்துகொள்வார். ஏகோதிட்டம் ஏற்கும் குருவை இறந்வரை வரித்துச் செய்வதினால் அங்கு ஆசௌசம் ஏற்படுகின்றது. இதனாலேதான் மேற்கூறியவாறு சுத்திகள் செய்யப்படுகின்றது.
சயிண்டீகரணம் - வீட்டுக்கிரியை
வீடு கழுவிச் சுத்தம் செய்து புண்ணியாகவாசனம் செய்த பின்னர் வீட்டுக்கிரியைசெய்யவேண்டும். அந்தியேட்டிக்கிரியையை முப்பதாம் நாளும், வீட்டுக்கிரியையை முப்பத்தோராம் நாளும் நம்மவர்கள் செய்வது வழமையாகவுள்ளது. எமக்கு ஆசௌசம் முப்பது நாட்கள் அதாவது முப்பத்தோராம் நாள் காலையில்தான் ஆசௌசம் நீங்கும். அதன் பின்னர்தான் புண்ணியாகவாசனம் செய்யவேண்டும். முப்பதாம் நாள் அந்தியேட்டி செய்து அன்று புண்ணியாகவாசனம் செய்வது

Page 15
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLHHLLLLHHLHLHHLHHL சரியல்ல. அடுத்தநாள் காலை புண்ணியாகவாசனம் செய்து வீட்டுக்கிரியை சமையல் ஆயத்தங்கள் செய்யமுடியாது. எனவே முப்பத்தோராம் நாள் புண்ணியாகவாசனஞ் செய்து முப்பதிரெண்டாம் நாள் வீட்டுக்கிரியை செய்யலாம். (முப்பத்தியோராம் நாள் அந்தியேட்டி செய்து அன்று மாலை புண்ணியாகவாசனஞ் செய்வது நல்லது)
வீட்டுக்கிரியை பிராமண ஆசாரியரைக் கொண்டு செய்தல் வேண்டும். தானம் ஏற்கும் தகுதி பிராமணருக்குத்தான் உண்டு.முதலில் விக்கினேஸ்வரர் பூசை, புண்ணியாகவாசனம், பஞ்சகெளவிய பூசை முதலிய கிரியைகளைச் செய்து நவசிராதிதம், ஏகோத்திர விருத்தி, சம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசிகங்கள், சோதகும்ப சிராத்தம், சபிண்டீகரணம் ஆகிய கிரியைகள் நடைபெறும்.
சபிண்டீகரணம் செய்வதன்பொருள் ஆன்மாவின் பிரேதத்தன்மை நீங்கி பிதிர்த்துவ தன்மை உண்டாகும். அதன் மூலம் இறந்த உயிர் தன் பிரேதத்துவ தோஷம் முற்றாக நீங்கி பிதிர்த்துவத்தை அடையினும் அடையும். அல்லது தேவத்துவமடையினும் அடையும். தனக்குத் தகுதியுண்டேல் சிவத்துவத்தை அடையும். இக்கிரியையில் தேவர் பொருட்டு நந்தி மகாளர் என இருவரும் பிதிரர் பொருட்டு கந்தர், சண்டர், சணாதீசர் என மூவரும் அதிதி, அப்பியாகதர் இருவரும் நிமித்தர் ஒருவரும் (இறந்தவர் பொருட்டு நியமிக்கப்படுவர்) ஆகிய எண்மர் சபிண்டியில் அமர்த்தப்படுவர். தேவர் இருவரும் மேற்குப்பக்கத்தில் கிழக்கு முகமாகவும், பிதிரர் மூவரும் தெற்குப் பக்கத்தில் வடக்கு முகமாகவும், நிமித்தர் கிழக்குப் பக்கத்தில் மேற்கு முகமாகவும், அமர்த்தப்படுவர். இவர்களுக்கு ஆசனம் கொடுத்து உபசாரங்கள் செய்து பூசைகள் முடித்து தானங்கள் கொடுத்து பின்னர் சபிண்டீகரணம் நடைபெறும். குறிப்பிட்ட உபசாரங்கள், பூசைகள், தேவர்கள் பொருட்டு இருத்தப்பட்ட குருமாருக்குச் செய்யும்பொழுது கர்த்தா பூணுலை வலது பக்கமாக அணியவேண்டும். பிதிரர்களுக்கு பூசைசெய்யுமிடத்து இடதுபக்கமாக பூனூல் அணியவேண்டும். சபிண்டியில் பிண்டதானம் ஒருமுக்கிய அம்சமாகும். வாலையிலையை
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL தெற்கு நுனியாகப் போட்டு தெற்கு நுனியாக இருதர்ப்பைகள் வைத்து மேற்குப் பக்க தர்ப்பையில் இறந்தவர் தந்தையாகில் பிதா, பாட்டன், பூட்டன் ஆகியோருக்கும், கிழக்கு பக்கத்தர்ப்பையில் இறந்தவரக்காக (நிமித்தர்) பெரிய அளவு பிண்டம் இடவேண்டும். இறந்தவர் தாயாராகில் இதே போன்று தாய், பாட்டி, பூட்டி ஆகியோருக்குப் பிண்டம் இடவேண்டும். பிண்டம் வடக்கிலிருந்து தொடங்கிய வரிசையாக தெற்கு நோக்கி இடல்வேண்டும். தெற்கு நோக்கி இடல்வேண்டும். தெற்கு நோக்கி இருந்து இடது முழங்காலை ஊன்றி இருந்து பிண்டம் நோக்கி தர்ப்பணம் இடவேண்டும். பின்னர் பிண்டத்திற்கு மஞ்சள், சந்தணம், பத்திரபுஷ்பம் முதலியன காட்டி தூபம் காட்டி பூசிக்கவேண்டும். நைவேத்தியங்கள் வைத்து பூஜை வழிபாடு செய்து திருமறை ஓதி, சரமகவிபாடி, தர்ப்பணம் செய்து கர்த்தாவும் உறவினர்களும் வணங்கி முடிவில் நிமிர்த்த பிண்டத்தில் சாத்தப்பட்ட பத்திர சந்தணம், பத்திர புஷ்பம் முதலியன சாத்தி, தூப தீபம் காட்டி பூசிக்க வேண்டும். நைவேத்தியங்கள், வைத்து பூசை வழிபாடு செய்து திருமுறை ஓதி, சமர கவி பாடி, தர்ப்பணம் செய்து கர்த்தாவும், உறவினர்களும் வணங்கி முடிவில் நிமித்தபிண்டத்தில் சாத்தப்பட்ட பத்திர புஷ்பங்களை எடுத்து பிதிரர் பிண்டத்தோடு சேர்த்தல் மூலம் இறந்த நிமித்த பிண்டத்தை மூன்று பகுதியாகப் பாகம் செய்து பிதிரர் பிண்டங்களுடன் தனித்தனி சேர்க்கும் முறையும் உண்டு. சபிண்டியில் தகப்பன் அல்லது தாய் பிள்ளைகளுக்குச் செய்தலும், தமையன் தம்பிக்குச் செய்தலும் தாய்மாமன் மருமகளுக்குச் செய்தலுமாகிய மூத்தோர், இளையோருக்குப் பிண்டம் இடும்பொழுது நிமித்த பிண்டம் மாத்திரம் இட்டு கிரியைகளை முடிக்குக.
பச்சை அரிசி மா, உழுத்தம்மா, பால், தயிர், நெய், தேன், எள்ளு இவை பிண்டத்திற்கு சேர்க்கப்படும் பொருட்களாகும்.
இங்கு ஒரு விடயத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் பத்திரன், புத்திரி அல்லாத ஒருவர் கிரியை செய்தால் பிண்டம்

Page 16
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL போடும் பொழுது இறந்தவருக்கு (பிதரருக்கு) மட்டும் பிண்டம்போடவேண்டும். இது ஏகோதிட்டவிதானம். பிதா, பாட்டன், பூட்டன் ஆகியோருக்கு பிண்டம் போடக்கூடாது. புத்திரன், புத்திரி பிண்டம்போடும்பொழுது பாட்டன், பாட்டி உயிரோடிருந்தால் அவர்களுக்கும் பிண்டம் போடக்கூடாது. ஆசாரியருக்கு பாட்டன் பாட்டி உயிருடழன் இருக்கும் விடயத்தை தெரிவிக்காவிட்டால் தவறுகள் ஏற்படும்.
கிரியைகள் முடித்தபின்னர் குருமாருக்கு தட்சணைகொடுத்து வணங்கி ஆசிரவாதம் பெற்று அவர்களை வலமாகப் பின்தொடர்ந்து சென்றுவழியனுப்புக. பிண்டத்தைப் பசுவுக்குக் கொடுக்கவும் அல்லது புண்ணிய தீர்த்தத்தில் போடவும்.
 

Alamoumb திருப்பொற்சுண்ணம் à முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சக்தியுஞ் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கெளரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன்ஐ யாறன்அம் மானைப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. O1
பூவியல் வார்சடை எம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்னகண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறம்நிலாமே
குனிமின் தொழுமின்னங் கோன்எங்கூத்தன் தேவியுந் தானும்வந் தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. O2
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன்அயன் தன்பொருமான்
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்கு
ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்துநாமே. 03
காசணி மின்கள் உலக்கையெல்லாம்
காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்துநின்று
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 04

Page 17

LLLLLLLLLLLLLLLLLAALLLLLLLALLLLLLLLLLLLLLL
வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கைநாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறையஅட்டி
மேதகு தென்னவன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்ாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 09
முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச் சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
செங்கயற் கண்பனி ஆடஆடப் பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருணையொ டாடஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 10
மாடு நகைவாள் நிலாவெறிப்ப
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெரு மானைத்தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 11
மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் தன்னை ஐயனை ஐயர்பிரானை நம்மை
அகப்படுத் தாட்கொண்டருமை-காட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோள் பையர வல்குல் மடந்தைநல்லிர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 12

Page 18
--------- மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியி ரென்னுடையாரமு தெங்களப்ப
னெம் பெருமானிமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்றகப்பன்
றமைய னெம்மையன் றாள்கள்பாடிப் பொன்னுடைப்பூண் முலைமங்கைநல்லிர்
பொற்றிருச்சுண் ணமிடித் துநாமே. 13
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்ப
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் செங்கனி வாய்இத ழுந்துடிப்பச்
சேயிழை யிர்சிவ லோகம்பாடிக் கங்கை இரைப்ப அராஇரைக்கும்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே. 14
ஞானக் கரும்பின் தெளிவைப்பாகை
நாடற் கரிய நலத்தைநந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானல் தடங்கண் மடந்தைநல்லிர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 15
ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோடு
ஆட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர்க னாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே 16
 

zLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளைபாடி
மால்விடை பாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் சூலம்பாடி
உம்பரும் இம்பரும் உய்யஅன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே. 17
அயன்தலை கொண்டுசென் டாடல்பாடி
அருக்கன் எயிறு பறித்தல்பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடி
காலனைக் காலால் உதைத்தல்பாடி இயைந்தன் முப்புரம் எய்தல்பாடி
ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடி யாடி
நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே. 18
6L LD6trasoa5.TGirGop LDT606)LITIg மத்தமும் பாடி மதியும்பாடி சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
சிற்றம்ப லத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் இட்டுநின் றாடும் அரவம்பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே. 19
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் சோதியு மாய்இரு ளாயினார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயினார்க்குப் பாதியு மாய்முற்றும் ஆயினாருக்குப்
பந்தமு மாய்விடும் ஆயினாருக்கு ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 20

Page 19
FFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFFF
வானத்தை எட்டும் வாழ்வு வேண்டி கள்ைவிழர்போல் காவியத்தை
வாழ்க்கை ஒரு சோகம் - சமாளிக்க வேண்டும் வாழ்க்கை ஒரு வெகுமதி - ஏற்றுக்கொள்ள வேண்டும் வாழ்க்கை ஒரு வேதனை - தாங்கிக் கொள்ள வேண்டும் வாழ்க்கை ஒரு போராட்டம் - வென்று காட்ட வேண்டும் வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் - நழுவவிடக்கூடாது வாழ்க்கை ஒரு புதிர் - விடுவிக்க வேண்டும் வாழ்க்கை ஒரு பயணம் - சென்றுமுடிக்க வேண்டும்
பொறுமையை விட சிறந்த தவமில்லை திருப்தியை விட உயர்ந்த இன்பமில்லை ஆசையை விட பெரிய தீமையில்லை கருணையை விட பெரிய அறம்மில்லை மன்னிப்பை விட ஆற்றல் மிக்க ஆயுதம் மில்லை
முடிந்த வழிகளில் எல்லாம் நன்மை செய் முடிந்த வகைகளில் எல்லாம் நன்மை செய் முடிந்த இடங்களில் எல்லாம் நன்மை செய் முடிந்த நேரங்களில் எல்லாம் நன்மை செய் முடிந்த மனிதருக்கு எல்லாம் நன்மை செய் வாய்ப்பு தானாக வருவதல்ல மனிதன் தானே உண்டு பண்ணிக்கொள்ள வேண்டும்.
 

ņońýswoul
ÚRSQoçgillI9 1će!!!?[80] pils@} †ņos@soolisi颂9望逼密ud色电 Isosapo + 1lplińsmo@Ų9 QK8@logsgjøreqiongoolimỹ tymise@ssøre �††^ sýresunQIIIŲmpulsųIŲolýrenusținIMIQinopuso Isusqısıí@ 十十十十十 qımıðȚısılmı9180pıpısılıgılıúĮugoIII subțw Ibuopųıņýnimow qwạpæın 之?之之之 – Ibuopųıņģnwiw + xog@fi]
ŪīÍSILņqIIe

Page 20
ன்
蟹 நன்றி
நவில்கிறோம் མ་
NA
இறையடியுற்றவே f
இறுதிப் ப கலந்து
எங்கள் குடு தலைவன்
ைெம நாடிவந்து துடித்தவர்கள், இழ்த்திரியைகளிலும்,
கொண்டவர்கள், ! பேசியில் துயர்
பகிர்ந்தவர்கள் spel
 


Page 21
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக் எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும், உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டுவந்தாய்? அதை நீ இழப்பதற்கு, எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு, எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது, எதைக் கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது, எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது, மற்றொரு நாள் مح۔ அது வேறொருவருடையதாகும்.
"இந்தமாற்றம் உலக நியதியு எனது படைப்பின் சாராம்சமாகு
பகவான் யூனி கிருஷ்ண