கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாமோதரம்பிள்ளை துரைராஜா (நினைவு மலர்)

Page 1
அமரத்துவ தாமோதரம்பிள்ளை
எழுந்த இதயச் தாங்கிவரும்
2007,
 

ம் அடைந்த துரைராஜா அவர்கள் த்ததால் * குமுறல்களை
நினைவேடு
4

Page 2

31ம் நிறைவு நாள் நினைவேடு
S
7 ܐ
அமரர்
தாமோதரம்பிள்ளை துரைராஜா அவர்கள்

Page 3
اوهمدا 氨
#్యక్టీ * * Z శీ
a upířů u srub
இன்சொல் இனிதாய்ப் பேசி
தன் நலம் கருதாது வாழ்ந்த தூயவனே!
உயிர்தான் உடலை விட்டுப் பிரிந்தாலும் தங்கள் திருவுருவம் எமை
விட்டு மறையவில்லை ஏற்றமேது தாழ்வு மனப்பான்மை 6Jgs
அறியாத கள்ள மற்ற உள்ளமே
நூற்றாண்டு மறைந்தாலும்
மறைந்திடாது உம் நினைவுகள்
குடும்பத்தினர்.
ΟΣΟΚ
O2
 
 

அமரர் தாமோதரம்பிள்ளை துரைராஜா அவர்கள்
மண் தரையின் S விண் இறையின் கண்களுக்கு 2ܠܫ பந்தலுக்கு 1926-05-08 voy 2007-08-15
ク
திதி வெண்பா
சர்வசித்துவருட தமிழ்மாத ஆடிபதினைந்தில் திருதியை ஆடிப்பூரத்திருநாள் அன்று - கூண்டு வாழ்வுதனை விட்டுச்சிவ மோட்சமெனும் வீட்டினில் வாழ்வுகண்டார் தாமோதரம்பிள்ளை துரைராஜா ஆம்

Page 4

தோத்திரப்பாடல்கள்
விநாயகர் வணக்கம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
தேவாரம் மீளா அடிமை உமக்கே ஆளாய்
பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால் வாளாங் இருப்பீர் திருவா ரூரிர்
வாழ்ந்து போதிரே திருவாசகம் அன்றே எந்தன் ஆவியும் உடலும்
உடைமை எல்லாமும் குன்றே அணையாய் என்னை ஆட்கொண்ட
போதே கொண்டிலையோ இன்றோ ஈரிடையூறெனக் குண்டோ
எண் தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழை செய்யாய்
நானோ இதற்கு நாயகமே!
03

Page 5
திருவிசைப்பா நையாத மனத்தினை நைவிப்பாய் இத்தெருவே ஐயா நீ உலாப்போந்த அன்றுமுதல் இன்று வரை ஐயாரத் தொழுது அருவி கண்ணாரச் சொரிந்தலும் செய்யாயோ அருள் கோடைத் திரைலோக்கிய சுந்தரனே
திருப்பல்லாண்டு
ஆரார் வந்தார் அமரர் குழத்தில்
அணியுடைய ஆதிரைநாள் நாரா யணனொடு நான் முகன் அங்கியும்
இரவியும் இந்திரனும் தேநார் வீதியில் தேவர் குழங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
d () திருப்புகழ் இறவாமல் பிறவாமல் எனையாள் சற்குருவாகிப் பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசக் குமரேசா கறையானைக் குறையோனே கதிர்காமப் பெருமானே.
6) III.95g வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவறீதி விளங்குக உலகமெல்லாம்.
04

வாழ்க்கை வரலாறு
ாமோதரம்பிள்ளை நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனாக காரைநகர் களபூமியில் 1926ம் ஆண்டு மே மாதம் 8ம் திகதி பிறந்தார்.
இவர் பொன்னம்மா, சரஸ்வதி, காலஞ்சென்ற செல்லத்துரை, சிவப்பிரகாசம், அன்னபாக்கியம் ஆகிய உடன்பிறப்புக்களுடன் சகோதரத்துவத்தில் சிறந்து விளங்கினார்.
ஆரம்பக்கல்வியை சுந்தரமூர்த்தி வித்தியாலயத்திலும், பின்னர் இடைநிலைக்கல்வியை காரைநகர் இந்துக்கல்லூரியிலும் கற்றார். 1944ம் ஆண்டு ஜனவரி மாதம் கொழும்பு வந்த இவர் இலங்கை தொழில்நுட்பக்கல்லூரியில் கணக்காளர் பயிற்சி நெறியில் 1951ம் ஆண்டில் சித்தியடைந்து டிப்ளோமா பட்டம் பெற்றார்.
பின்னர் 1957ல் இருந்து 1961ம் ஆண்டு வரை சுகாதாரத் திணைக்களத்தில் கணக்காளராகப்பணிபுரிந்துகொண்டிருந்தார். பின்னர் 1962 பங்குனி மாதம் 31ம் திகதி பிரபல சட்டத்தரணி KK.சுப்ரமணியத்தின் முத்தமகளாகிய ராசமணி என்பவரைத் திருமணம் செய்தார்.
அமரர் தனது குடும்பத்தாரையும், மனைவியினது குடும்பத்தாரையும் சமமாக மதித்து இரு குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்தார்.
"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட்பேறு” என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க இல்லறத்தை நல்லறமாகப்பேணி இனிய மழலைச் செல்வங்களாக புஸ்பராஜா, சிவராஜா, ஸ்கந்தராஜா எனும் மூவரையும் இறைவனருளால் பெற்று சிறப்பாக வளர்த்து வந்தார்.

Page 6
அமரர் தனது தொழில்துறையிலும் படிப்படியாக பதவி உயர்வுபெற்று இலங்கை கைத்தொழில் திணைக்களத்திலும், இலங்கையின் வர்த்தக திணைக்களத்திலும், பின்னர் இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் பிரதம கணக்காளராகவும், ஆடைக்கைத்தொழில் திணைக்களகத்திலும் கணக்காளராகவும், பின்னர் இலங்கை றைசேரியின் பதில் பணிப்பாளராகவும் உயர்பதவி வகித்து வந்த இவர் 1991ல் இளைப்பாறினார்.
தனது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்டு மூத்தமகனாகிய புஷ்பராஜாவை வைத்திய நிபுணராகவும், இரண்டாவது மகன் சிவராஜாவை பொறியியலாளராகவும், இளைய மகன் ஸ்கந்தராஜாவை, வைத்திய நிபுணராகவும் உன்னத நிலைக்கு உயர்த்தி வைத்தார்.
தனது சிரேஷ்ட புதல்வன் புஸ்பராஜாவிற்கு பிரியதர்சினியையும், இரண்டாவது மகன் சிவராஜாவிற்கு சசிகலாவையும், இளையமகன் ஸ்கந்தராஜாவிற்கு பிரபாவையும் திருமணம் முடித்து வைத்து காயத்திரி, திவ்யா, அருண், கிருத்திகாயன் ஆகிய பாசமிகு பேரப்பிள்ளைகளையும் பெற்று மகிழ்வுற்றார்
தனது சுகவாழ்வில் மிகவும் கவனமுள்ள அமரர் அவர்கள் நீச்சல் பயிற்சி ,யோகாசனம், தியானம், நடைப்பயிற்சி என்பவற்றை இடையறாது செய்து வந்தார். ஆழமான இறைபக்கியுடன் மிக எளிமையான வாழ்வை வாழ்ந்ததுடன் பதற்றமடையாது கச்சிதமாகக் காரியமாற்றவும் வல்லவர்.
உற்றார், உறவினர், நண்பர்களுடன் அன்பாகவும் நகைச்சுவையாகவும் பழகி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர். இறுதியாக இறக்கும் தறுவாய் வரை கூட தனது வேலைகளைத் தானே செய்து வந்தார். மனைவியிடம் உணவு தரும்படி கேட்டு தனது கையாலேயே உண்டு, மகனும் அருகில் இருக்க அவரது இறுதிமூச்சு இறைவனுடன் இரண்டறக்கலந்தது.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
- இங்ங்னம்
மனைவி, மக்கள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்
06

உங்களுடன் சேர்த்திடட்டும்
* திருமணச் சோலையிலே தாலி என்ற சரமெடுத்து பெருமணத் தன்மையிலே சூடினிர்கள் என்கழுத்தில் இல்லறம் அன்றிருந்து இன்பமாய் ஊற்றெடுக்க நல்லறம் வளர்த்து நல்ல செல்வங்கள் பெற்றெடுத்தோ
* கட்டில்லா உலகினிலே கட்டுண்டு ஒருவரானோம் மட்டில்லா இன்பத்திலே மகிழ்ந்திட்ட குடும்பமானோம் இல்லறமும் நம்மகிழ்வால் நல்லறமாய் ஆகியதால் மண்ணகமும் விண்ணகமும் நன்மதிப்புத் தந்திட்டது.
* கணவனாய் உங்களை நான் ஏற்றதால் பெருமை பெற்றேன். மனைவியாய் ஆகி உங்கள் மனையிலே அரசியானேன் பிள்ளையார் எனக்குத் தந்த பெருவரம் இதுவேயென்று கொள்ளையாய்க் கணிந்து நின்றேன் காண்பவர் வாழ்த்த நின்றேன்
ல் அன்று நான் வேரில்வளர் இளமரமாகி நின்றேன் இன்று நான் வேரனுந்து பட்ட மரம் போல் நிற்கின்றேன் இனி கொஞ்சம் கொஞ்சமாய் நான் முறிந்து வீழ் மரம் தான் கெட்ட விதி ஒரு விதிசெய்யட்டும் எந்தனைக் கொன்றிடட்டும்
ஃஎன்னுள்ளம் உங்களுக்குள்ளும் உங்கள் உள்ளம் என்னுள்ளும் விண்ணுள்ள கதிர்கள் போல் வாழ்வது தெரியும் தானே என்னுள்ளம் உங்களோடு சென்றதால்ச் சொல்லிவிடுங்கள் என்னுள்ளம் தெய்வமே நான் எவ்வாறு வாழ்ந்திடுவேனோ.
ஃஐயோநான் பாவியானேன் கணவனில்லாக் கோலமானேன் ஐயகோ நான் பொட்டு இழந்தேன் வாசமுற்ற பூவிழந்தேன் ஐயனேன் என்னை இலகு வாசனை தெய்வம் எனையெடுத்து உங்களுடன் சேர்த்திடட்டும்
- மனைவி
07

Page 7
இதயத்தால் அழுகிறோம் நாம்
* முற்றத்தில் ஒடிநாம் மகிழ்வுற்று விளையாடுவோம் எட்டத்தில் நின்றெம்மை எட்டி எட்டி பார்த்துநீங்கள் எண்தவம் எனக்குத் தந்த என்னுயிர் சொத்துக்களே என்மனம் கொள்ளை கொண்ட என்னரும் செல்வங்களே
இரவுநேரம் இருள் நீங்கி ஒளிர்வது போல உங்களால் தான் நானும் இன்றைக்கு உயர்ந்துவிட்டேன் எந்தன் உயிர் இம்மண்ணில் நீங்களின்றி வழி எந்தனை உயர்வுக்கில்லை வாக்கிது உண்மையுண்மை என்றெல்லாம் வார்த்தைகள் பாசமாய்க் கொட்டியெங்கள் என்பெல்லாம் சிலிர்த்திட எம்மோடு கதைப்பீர்களே
* ஏனப்பா இன்றைக்கு எம்மைவிட்டு போனீர்கள் ஏனப்பா சொல்லுங்கள் எமக்கது புரியவில்லை யாருக்கு இதனை நாம் சொல்லுவம் ஆறிட பாருக்குள் எமக்காக இனியாரும் இல்லையப்பா உங்களின் உயிரினில் எம்முயிர் கலந்தது போல் உங்களின் கண்ணிலும் நாம் தானே தெரியாதப்பா உங்களைப் பிரிந்து நாம் எப்படி வாழ்ந்திருப்போம் எங்களைப் பிரிந்து நீங்கள் எப்படி சென்றிட்டீர்கள் அன்றைக்கு நடந்ததென்ன இடிவந்து தாக்கியா என்றைக்கும் இல்லாவாறு.
இன்றைக்கு நினைத்து எங்கள் இதயமே அழுகுதப்பா என்னுடைய செல்வங்களே என்னாசைத் தெய்வங்களே நல்வகைக் கல்விகற்று கற்றதில் நல்லஉச்சம் கண்டிட வேண்டும் பொதுச் சேவைகள் செய்யவேண்டும், தன்னலம் இன்றிச்செய்து இறையாசி பெற்றிடுங்கள் என்றெல்லாம் அறிவுரைகள் எமக்கிங்கு சொன்னீர்களே இன்றெல்லாம் அவற்றையெண்ணி இதயத்தால் அழுகிறோம்நாம் உங்கட்கு எங்களது கண்ணிரால்க் காணிக்கைகள் தந்திங்கு ஆறுகிறோம் ஏற்பீர்கள் தானேஅப்பா!
- பிள்ளைகள்
08

எப்போது பிறந்தமோ அப்போது இருந்து நாம் பயணத்தைத் தொடருகிறோம் - அது மரணத்தை நோக்கியதாம் இப்போது மிறக்கலாம் எப்போது மிறக்கலாம் ஈசனார் படைத்த வீதி - இறை
சட்டத்தில் உள்ளபடி
சிறப்பு வளர்வதும் பழிப்புத் தொடர்வதும் தானிந்த வாழ்க்கையெடா - இதில் ஏனென்ற கேள்வியில்லை
பிறப்பு வருவதும் இறப்பு தொடர்வதும்
ஆண்டவன் சித்தமடா எனவே
ஆறுதல் கண்டிடுவோம்

Page 8
விநாயகர் அகவல் சீதக் கபளச்செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாட பொன்அரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்ப பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விழங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிறு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரிய மெஞ்ஞான அற்புதம்நின்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் முகூழிக வாஹன இப்போழுது என்னை ஆட்கொள்ள வேண்டி தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்து திருந்திய முதல்ஐந் தெழுத்துத் தெளிவாய் பொருந்தவே எந்தன் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயத் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைத்தான் மகிழ்ந்தெனக் கருளி கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்ட உபதேசம் புகட்டிஎன் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
10

இன்புறு கருணையின் இனிதெனக் கருளி கருவிகள் ஒடுங்கும் கருத்தறி வித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத்து அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழிமுனை காபலமும் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்தி குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்து மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும் எண்முக மாக இனிதெனக் கருளி புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்தித் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை அறிவித்து எனக்கருள் செய்து
11

Page 9
முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கிய எந்தன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிட மென்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தினன் செவியின் எல்லை யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்து அருள்வழி காட்டி சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டி சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்தி கூடுமெய்த் தொண்டர் குழத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்து தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே.
(விநாயகர் அகவல் முற்றிற்று)
12

காரியசித்தி மாலை
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ சந்த மறைஆ கமலங்கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்று கூரத் தொழுகின்றோம்.
உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ் வுலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்? உலகம் புரியும் வினைப்பயனை ஊட்டுங் களைகண் எவன்அந்த உலகு முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவி ழும்பஞ் செனமாயும் தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும் கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும்அத் தடவு மருப்புக் கணபதிபொன் சரணம் சரணம் அடைகின்றோம்.
மூர்த்தி யாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான தீர்த்த மாகி அறிந்தறியாத் திறத்தி னானும் உயிர்ர்குநலம் ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப் பான்அவன்அப் போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
13

Page 10
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப் பொருள்யாவன் ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன்யாவன் உய்யும் வினையின் பயன்விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
வேதம் அளந்தும் அறிவரிய விரிர்தன் யாவன் விழுத்தகைய வேத முடிவில் நடம்நவிலும் விமலன் யாவன் விளங்குபர நாத முடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன்எண் குணன்னவன்அப் போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
மண்ணின் ஒர்ஜங் குணமாகி வதிவான் எவன்நீர் இடைநான்காய் நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன்வளியின் எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன்வான் இடைஒன்றாம் அண்ணல் எவன்அக் கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
பாச அறிவில் பசு அறிவில் பற்றற் கரிய பரன்யாவன் பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன் பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான தேசன் எவன்அக் கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.
14

afshurm600rib
திருச்சிற்றம்பலம்
தொல்லையிரும் பிறவிச் சூழுந் தளை நீக்கி அல்லலறுத் தானந்த மாக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன் திருவாசக மென்னுந் தேன்.
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவர் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஒங்குவிக்குஞ் சீரோன்கழல் வெல்க
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றி சிவனவன் என்சிந்தையுள் நின்ற வதனால் அவனருளாலே அவன்றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான்
15

Page 11
கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
வெய்யா தணியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தி னேரியாய் சேயாய் நனியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே.
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
16

பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த ன்பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தா னில்லாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா வமுதே அளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என்ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
17

Page 12
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் மையா அரனே ஓ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற்பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து
திருச்சிற்றம்பலம்
18

ராகுகால துர்க்கா அவழ்டகம்
வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீங்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே O1
உலகை யின்றவள் துர்க்கா உமையு மானவள்
உண்மை யானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை யானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே 02
செம்மையானவள் துர்க்கா செபமுமானவள்
அம்மையானவள் அன்புத் தந்தை யானவள் இம்மை யானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மை யானவள் என்றும் முழுமை துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே 03
உயிருமானவள் துர்க்கா உடலுமானவள்
உலக மானவள் எந்தன் உடமை யானவள் பயிறு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
04
19

Page 13
துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா! அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே 05
குருவுமானவள் துர்க்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே திருவுமானவள் துர்க்கா திருசூலி மாயவள்
திரு நீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையேராகு 06
தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே O7
கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீரத்தகனத் துர்க்கையே அன்பு துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்னை துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே. 08
(துர்க்கா அஷடகம் முற்றிற்று)
20

திருவிளக்கு அகவல்
திருவிளக்கு துதி திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக குலம் விளங்க எங்கள் வீட்டிற் கொழுவிருக்க வருக அலைமகளே வருக ஐஸ்வர்யந் தருக அலைமகளே வருக ஐஸ்வர்யந் தருக - திருவிளக்கை
வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லட்சுமிகரம் நெற்றியிலே திரிசூலம் நெஞ்சினிலே லட்சுமிகரம் அஷடமா சித்தியோடு லோகமெல்லாம் ஷேமமயம் அஷ்டமா சித்தியோடு லோகமெல்லாம் ஷேமமயம் அலைமகளே வருக ஐஸ்வர்யந் தருக அலைமகளே வருக ஐஸ்வர்யந் தருக - திருவிளக்கை மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம் மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம் ஊதுவர்த்தி ஏரிவதனால் உள்ளத்திலும் ஒருவாசம் அம்மா நீ அருள்புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம் அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலஷ்மி திருநாமம் அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலஷ்மி திருநாமம் சங்கு சக்ர தாரீ நமஸ்காரம் சகல வரம் தாரி நமஸ்காரம் பத்ம பூரீல தேவீ நமஸ்காரம்
பக்தர் தனைக் காப்பாய் நமஸ்காரம்.

Page 14
6ifords(8as Sessionis(8as விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே ஜோதிமணி விளக்கே சீதேவி பொன்மணியே அந்தி விளக்கே அலங்கார நாயகியே காந்தி விளக்கே காமாட்சி தாயாரே பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரிபோட்டு குளம் போலே எண்ணை விட்டு கோலமுடன் ஏற்றிவைத்தேன் ஏற்றினேன் நெய் விளக்கு எங்கள் குடிவிளங்க மாங்கல்ய பிச்சையுடன் மடிப்பிச்சை தாருமம்மா சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா பெட்டி நிறையப் பூசணங்கள் தாருமம்மா புட்டி நிறையப் பாற்பசுவைத் தாருமம்மா புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா அல்லும் பகலுமென் அண்டையில் நில்லுமம்மா. அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா வந்தவினையகற்றி மகா பாக்கியம் தாருமம்மா தாயாரே உன்தன தாளடியிற் சரணடைந்தேன் மாதாவே உன்தன் மலரடியில் நான் பணிந்தேன்.
22

இதயச் செடியிலிருந்து எழும்.
எமது குடும்பத்தலைவர் அமரர் தாமோதரம்பிள்ளை துரைராஜா அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தி கேட்டு எம் துயரத்தில் பங்குகொண்ட உறவினர்கள், நண்பர்கள், ஆத்மசாந்தி பிரார்த்தனையில் கலந்துகொண்டோர் மற்றும் சகல வழிகளிலும் ஒத்தாசை புரிந்த அன்பு இதயங்களுக்கு.
"....... உய்வில்லைச் செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு” என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க நன்றிகள் சொல்ல வேண்டிய கடப்பாடு உடையோம்.
மற்றும்
வேறுபல வழிகளில் வெவ்வேறு உதவிகள்
தந்தோருக்கு . எமது இதயச் செடியில் பூத்த நன்றிப்பூக்களைத் தருகிறோம் ஏற்றிடுங்கள்
மீண்டும் எங்களது நன்றிகள் ஆயிரம் ஆயிரம்
- மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
23

Page 15
(வம்ச விருட்சம் )
- தாமோதரம்பிள்ளை K. K. சுப்பிரமணியம் - நாச்சிப்பிள்ளை சுந்தரம்மா
- துரைராஜா சுந்தரராஜா- Gustairé0TLDLDIT JIT&LD60s - - சரஸ்வதி சிவமணி - -செல்லத்துரை நவமணி - - சிவப்பிரகாசம் நடராஜா - L-அன்னபாக்கியம் தவமணி - ராசலட்சுமி -
புஸபராஜா சிவராஜா ஸ்கந்தராஜா
பிரியதர்சினி சகிலா பிரபா
காயத்திரி isilu IIT கிருத்திகாயன்
அருண
24


Page 16
எது நடந்ததோ, அது நன் எது நடக்கிறதோ, அது ந எது நடக்க இருக்கிறதோ, நன்றாகவே நடக்கும். உன்னுடையது எதை இழ நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தா எதை நீ படைத்திருந்தாய் எதை நீ எடுத்துக் கொண் அது இங்கிருந்தே எடுக்க எதைக் கொடுத்தாயோ, !
கொடுக்கப்பட்டது. | எது இன்று உன்னுடையே அது நாளை மற்றொருவ மற்றொரு நாள் அது வே "இதுவே உலக நிய មjb8
 
 
 

றாகவே நடந்தது. ன்றாகவே நடக்கிறது.
அதுவும்
ந்தாய்? எதற்காக
ய்? அதை நீ இழப்பதற்கு ? அது வீணாகுவதற்கு LIGuT.
ப்பட்டது.
அது இங்கேயே
தா,
ருடையதாகிறது. றொருவருடையதாகும். தியும் எனது படைப்பின் முமாகும்"
பகவான் ரீ கிருஸ்ணர்