கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மட்டக்களப்பு சைவக் கோயில்கள் 2

Page 1


Page 2


Page 3

ທີ່ຄupub
மட்டக்களப் புச்
சைவக் கோவில்கள்-2
ஆக்கியோன் :
மகாவித்துவான், பண்டிதர் வி. இ.ே கந்தையா, பீ. ஓ. எல். (முன்னுள் சிவானந்த வித்தியாலய அதிபர்)
வெளியீடு :
“gữ t_6ũ)” 15, மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு 1991

Page 4
பதிப்புப் தரவுகள்
தலைப்பு மட்டக்களப்புச் சைவக் கோவில்கள் - 2.
፴) |(oዕ) ፴, : &#LDulutiD.
ஆசிரியர் மகாவித்துவான், பண்டிதர்
வி. சி. கந்தையா (B, O, L)
Coloւ հաTC) дълбо",
15 மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு.
அச்சுப் பதிவு புனித வளஞர் அச்சகம், மட்டக்களப்பு
| Ոս որ பவான், அமிர்தகழி, மட்டக்களப்பு,
IllIIIIIII திருமதி கங்கேஸ்வரி, கந்தையா,
15 மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு
in OOO,
| alih XIV - 50.
வெளியிட்டுத் தேதி 28-12-1991
ரூபா 50-00.
Bibliographical Data
Title : Mattakkalappu Saivakovilkal-2. Catogory : Religion. Author : Maha Vid., Pandit V. C. Kandiah (B.O.L.)
Publishers : “Kooda”,
15, Upstair Road, Batticaloa.
Printers : St. Joseph's Press, Batticaloa.
Art : Bawan, Amirthakali, Batticaloa.
Rights : Mrs. Kangeswary. Kandiah,
5, Upstair Road, Batticaloa.
Copies : 000.
Pages : XIV + 50.
Date of Publication: 28-12-199. Price : Rs 50-00.

சமர்ப்பணம்
மண்டூர், இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைத்
தலைமையாசிரியராகவிருந்த
அமரர் வ. பத்தக்குட்டி, உபாத்தியாயர்
அகர முதல எழுத்தெல்லாம் எனக்கூட்டி அறிவுவளம் மிகச்சேர்த்து சிகர நிகர் சிவசமயம் என்மனத்தே நிலைக்கவழி அமைவு செய்தான் பகரரிய பண்பாளன் என் ஆசான் பத்தக்குட்டி பொன்மலர்த்தாள் நிகர் எதற்கும் உளதாமோ தலைமேற்குடி நீள்மனத்தே நிறுத்துவேனே.
எனக்கு இளமையிலிருந்தே சிவசமய நெறியினே ஊட்டி
அந்நெறி நிலைக்கச்செய்த, அன்னுர்தம் பொன் வாடிகளில்
இந்நூற் சிறப்பினச் சிரம் தாழ்த்திச் சமர்ப்பிக்கின்றேன்.
- நூலாசிரியர்,

Page 5

மட்டக்களப்புச் சைவக் கோவில்கள் - 2
உள்ளுறை
1. அணிந்துரைகள் :-
1. பொன்னுரை.
பூரீமத். சுவாமி. ஜீவனனந்த மகராஜ் அவர்கள். .
i. சிறப்புரை
திரு. கே. கணபதிப்பிள்ளை B.A.; F.R.G. S.; Dip-Geo, (Lond)
11. அணிந்துாை
திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்கள்
iv. முகவுரை
திரு. இரா. நாகலிங்கம் (அன்புமண) அவர்கள் .
V. பதிப்புரை
திருமதி, கங்கேஸ்வரி கந்தையா அவர்கள்
2. நூன்முகம் - நூலாசிரியர்
3. முதலாவது இயல்:
அறிமுகம் - பொது.
4. இரண்டாவது இயல், பிள்ளையார் கோவில்கள் மூன்று.
(1) கோட்டைமுனை பூரீ வீரகத்திப்
பிள்ளையார் கோவில்
(2) வீரமுனைச் சிந்து யாத்திரைப் பிள்ளையார்
கோவில்.
(3) மண்டூர் - நாகஞ்சோலை மாணிக்கப் Lait &ntu intri G35 ft 6iai).
5. மூன்றவது இயல்: சிவன்கோவில் ஒன்று.
(1) செட்டிபாளையம் சோமநாத இலிங்கேஸ்வரர்
சோமகலா நாயகி கோவில்.
äb
vii
Xi
O
l
23
37
43
47

Page 6
6. நான்காவது இயல்: முருகன் கோவில் ஆறு.
(l)
(2)
(3)
(4)
(5)
(6)
ஈழத்து - திருச்செந்தூர் முருகன் ஆலயம்.
திருப்பெருந்துறை - முத்துக்குமார
வேலாயுத சுவாமி கோவில்.
குருக்கள் மடம் பூரீ செல்லக்கதிர்காமம்
ஆலயம். காரைதீவு மாவடிக் கந்தசாமி கோவில். ஆரையம்பதி கந்தசாமி கோவில். கல்லடி வேலாயுத சுவாமி கோவில்
7. ஐந்தாவது இயல்: அம்மன் கோவில்கள் ஐந்து,
(l)
(2)
(3)
(4)
(5)
மண்டூர் - மண்டுக்கொட்டைமுனை
துறையடி மாரியம்மன் கோவில்
திருப்பழுகாமம் பூரீ திரெளபதியம்மன்
கோவில்,
துறைநீலாவணை கண்ணகை அம்மன்
கோவில்,
தம்பிலுவில் கண்ணகை அம்மன் கோவில்.
125
நாவலடி கடலாட்சி அம்மன் கோவில்.
8. ஆறவது இயல்: பொது
(l)
(2)
களுவாஞ்சிக்குடி மரீ மகா விஷ்ணு கோவில், .
37
களுவாஞ்சிக்குடி பூரீ வீரபத்திரன் கோவில்
9. நூலாசிரியர் வரலாறு,
53
67
73
79
83
9.
95
... I 0.
107
15
129
43

மட்டக்களப்பு ஜீ இராமகிருஷ்ண சங்கத்தின் பொறுப்பாளராகவுள்ள
பூனிமத் சுவாமி ஜீவனுனந்தாஜி
அவர்கள் அளித்த
பொன்னுரை
மட்டுநகர் இரண்டு பெருமைகளைக்கொண்டது. ஒன்று அதன் கலாசார பாரம்பரியம், மற்றது அங்கிங்கெனதபடி எங்கும் நிறைந் திருக்கும் ஆத்மீக அலை, மட்டக்களப்பின் சைவக் கோயில்கள் இவற்றுக்கு ஆதார சுருதியாக அமைந்துள்ளன என்ருல் அது மிகையாகாது.
இங்குள்ள கோயில்கள், தமிழகத்தில் உள்ள இராமேஸ் வரம், மதுரை, சிதம்பரம், தஞ்சைக் கோயில்கள் போல் வானளா விய பிரமாண்டமான அமைப்பில் இல்லை. ஆனல் "மூர்த்தி சிறி தானுலும் கீர்த்தி பெரிது’ என்ற மூதுரைக்கமைய சிறிய உருவ அமைப்பிலும் ஆழமான ஆத்மீக பலத்திலும் அமைந்தவை இக் கோயில்கள்.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம், கொக்கட்டிச் சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம், சித்தாண்டி முருகன் ஆல யம், பாண்டிருப்பு திரெளபதையம்மன் ஆலயம், மண்டூர் முருகன் ஆலயம் முதலிய நூற்றுக கணக்கான ஆலயங்கள் இங்குள்ள சைவப்பெருங்குடி மக்களின் உயிர் மூச்சாக, இதயத் துடிப்பாக
- I -

Page 7
அமைந்துள்ளன. இங்கு பரந்து வாழும் இந்துக்களின் பற்றுக் கோடாகப் பரம்பரை பரம்பரையாகப் பக்தி மார்க்கத்தில் மக்களை வழிநடத்திச் செல்லும் பார்த்தசாரதிகளாக இக்கோயில்கள் இங்கு செயற்படுகின்றன.
எத்தகைய துன்ப துயரங்கள் நேர்ந்தாலும் மக்கள் பக்தி யுடன் இறைவழியில் ஒழுக்கநெறியில் வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு இக்கோயில்கள் துணைசெய்கின்றன,
இக்கோயில்களின் வரலாறு, மகத்துவம், அற்புதங்கள் முத லிய இன்னுேரன்ன சிறப்புக்கள் மங்கி மறைந்துபோகாது, நமது எதிர்காலச் சந்ததிகளுக்கு நாம் அளிக்கும் முதுசமாக அமைவ தற்கு மகாவித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா (B.O.L.) அவர்கள் எழுதிய இந்நூல் பெரிதும் உதவும். அசக்தனுன நிலை யிலும் அவர் ஆற்றிவரும் இப்பெரும் சைவப்பணி தெய்வ சங்கல்பம் என்றே நாம் கொள்ளவேண்டும். இந்நூல் ஆசிரிய ராகிய மகா வித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா (B.O.L) அவர்கள் மதிப்பிற்குரிய எனது ஆசான். பல தமிழ் நூல்களையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிப் பெருமைவாய்ந்த பெரியார் . இந்நூலின் முதற் பாகம் * மட்டக்களப்புச் சைவக்கோவில்கள் (முதலாம் பாகம்) அதன் தொடராக அந்நூலின் இரண்டாம் பாகம் வெளிவர உள்ளது.
இந்நூலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மேலும் சில அருள்மிகு சேத்திரங்களின் வரலாற்றுக் குறிப்புகள் ஆராயப் படுகின்றன. இவை அனைத்தும் கிராமங்களிலும், குக்கிராமங்களி லும் உள்ளன. ஆனல் அவை அபூர்வமான வரலாற்றுப் பொக்கி ஷம் நிறைந்தவை.
இவ்வரலாற்றுக் குறிப்புக்களில் அக்காலத்து மக்களின் வாழ்க்கை முறைகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் முத லியன இழையோடியிருப்பதால், கோயில் வரலாற்றுடன் மக் களின் வரலாறு பற்றியும் நாம் பல விடயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. சுமார் ஒரு நூற்ருண்டு காலத்துக்குமுன் கிழக்கிலங்கை மக்களின் வாழ்க்கை எவ்வாறு ஆலயங்களுடன் இரண்டறக் கலந்திருந்தது என்பதையும், ஆலயங்களின் செல்வாக்கு எவ்வளவு தூரம் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தியது என்பதையும் அறியும்போது நமது மனம் மிகவும் நெகிழ்ச்சியடையவே செய்யும்.
பல கோயில் களின் பெயர்கள் கூட மக்களின் பற்றுக் கோடாக இருப்பதை நாம் காண்கிருேம். உதாரணமாக, மண்டுக் கொட்டைமுனை துறையடி மாரியம்மன் கோயில், செட்டிபாளையம் சோமநாத இலிங்கேஸ்வரர் சோமகலாநாயகி கோயில், ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் கோயில், நாவலடி கடலாட்சியம்மன்
— іі —

கோயில் முதலிய பெயர்கள் இவ்வகையில் நம்மைப் பெரிதும் சிந்திக்க வைப்பனவாகும்.
கோயில்களின் வரலாற்றுப் பின்னணியுடன் திருவிழா, உற்சவங்கள் முதலிய ஏற்பாடுகள் பற்றியும், இவை ஊர்மக்க ளால் எவ்வாறு பரவலாக மேற்கொள்ளப்படுகின்றன என்ற அமைப்பு முறை பற்றியும், பாகைக்காரரின் சம்பிரதாயங்கள் பற்றி யும் பல பயனுள்ள குறிப்புக்கள் இக்கட்டுரைகளில் காணப்படு கின்றன. இவையாவும் ஆழ்ந்து சிந்தித்தற்குரிய முக்கியமான செய்திகளாகும்.
இக்கட்டுரைகளைப் படிக்கும்போது பல கோயில்களுக்குத் தல வரலாறு இல்லாதிருப்பதையும், பல கோயில்கள் பற்றி எவ்வித நூலும் எழுதப்படாமல் இருப்பது பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது. எதிர்காலச் சந்ததியினர் இக்குறையைப்போக்க முயற் சிகள் மேற்கொள்ளவேண்டும் என்பதையே இந்நூல் மறைமுக மாக நமக்குச் சொல்கிறது. வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத காரணத்தால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல செய்தி களை நமது மக்கள் பதிவு செய்துவைக்கத் தவறிய காரணத்தால், நாம் இன்று பல இழப்புகளுக்கு ஆளாகியுள்ளோம். பல நூற் முண்டுகளுக்கு முற்பட்ட நமது இலக்கியச் செல்வங்கள், கடல் கோள்களாலும், காலவெள்ளத்தாலும், பகைவர் செயலாலும் அழிந்தொழிந்தன. அது ஒரு வகையில் தடுக்க முடியாததாகவும். நமது சக்திக்கு அப்பாற்பட்டதாகவும் கொள்ளலாம்.
ஆணுல் அண்மைக்காலச் செய்திகளை, நமது பாரம்பரியச் சிறப்புகளை நாம் பாதுகாத்து வைக்கத்தவறினல், அது நமது எதிர் காலச் சந்ததியினருக்கு நாம் இழைக்கும் பெரும் அநீதியாகும். இந் தப் பின்னணியில் மகாவித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா வின் நூல்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. அவரது “மட்டக்களப்புத் தமிழகம்”, “கண்ணகி வழக்குரை”, “சைவக் கோயில்கள்’ (முதலாம் பாகம்), சைவக்கோயில்கள் (இரண்டாம் பாகம்) ஆகிய நூல்கள் முடிந்த அளவு வரலாற்றுச் செய்திகளைப் பதிந்து வைப்பதுடன் எதிர் கால த்தில் இன்னும் விரிவான ஆராய்ச்சிகளுக்கு அடித்தளம் ஆகவும் அமைகின்றன.
இச்சீரிய பணிக்கு இறைவனின் அணுக்கிரகமும் பூரண மாகக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
சுவாமி ஜீவனுனந்த, பூரீ இராமகிருஷ்ண குருகுலம், கல்லடி-உப்போடை, மட்டக்களப்பு, இலங்கை. 15-10-91.
- iii -

Page 8
மட்டக்களப்பு கல்லடி-உப்போடை சிவானந்த வித்தியாலயத்தின் முன்னுள் அதிபர் திரு. க. கணபதிப்பிள்ளை
B.A., F.R.G.S., Dip. Geog. (Lond.) அவர்கள் அளித்த
சிறப்புரை
பண்டிதர் மகாவித்துவான் வி. சீ. கந்தையா (பி.ஓ.எல்.) அவர்களின் மட்டக்களப்பிலுள்ள சைவ ஆலயங்கள் பற்றிய இக் கட்டுரைகளைப் படித்து நிறைவுற்றேன். அது ஒரு வரலாற்று நூல். வரலாறென்பது சாதாரணமாய் வரண்டு உலர்ந்து பசை யற்றுப்போன என்புக்கூட்டினைப் போன்றுள்ளதாகக் கருதப் பட்டு வருவதுண்டு. ஆனல் கோவில்களின் வரலாறுபற்றிய இக் கட்டுரைகள் சாதாரண சரித்திரக் கட்டுரைகள் போலில்லை. அவை உயிருள்ள, உணர்வுள்ள, வேகமுள்ள வியாசங்களாய் அமைந்துள்ளன.
பூமியின் ஒரு சிறு மூலை முடுக்காகிய புளியமிலபோன்ற இலங்கைத்தீவின் கிழக்குக் கரையில் மட்டக்களப்பு மாநிலம் உள்ளது. அம்மாநிலத்தில் ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளாக, வாழ்ந்துள்ளவரும், இக்காலத்திற்கூட வாழ்ந்துவருபவருமாகிய மக்களின் உள்ளக் குமுறல்கள், உளவேகங்கள், எண்ணங்கள்,
— iv —
 

எண்ண அடுக்குகள், நம்பிக்கைகள், விசுவாசங்கள், ஆகியவற்றினை இவ்வரிய வியாசங்கள் தம்பொருளடக்கமாகக் கொண்டுள்ளன. எனவே பொதுவாகப் பார்க்குமிடத்து மனித உளவித்தரிப்பு
9636.
மனித உள்ளமானது ஓர் உணர்வுப் பெட்டகம், ஒரு முழுமைப் பொருள் அது, நிறைவுப் பொருளும் அது. அது ஒய்வில்லா இயக்கம், இயங்கிக்கொண்டேயிருக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது. கூர்ப்பொழுங்கின் உச்சத்திலுள்ளது. தொடக்க மில்லாதது, முடிவில்லாதது. ஆழமுடையது, விசாலமானது. இயங்கிக்கொண்டேயிருப்பதால், அஃது முற்போக்குள்ளது, சிந் திக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளது. அளவில்லா ஆக்கத்தினைப் பெற்றுள்ளது. எனினும் முழுமையுற்றில்லாதது, அழிவில்லாதது, ஆகிக்கொண்டேயிருக்கும் திறத்தினைப் பெற்றுள்ளது.
இஃது மனித உளத் தத்துவத்தினை துஞ்சறக் கண்டறிந் துள்ள மேதாவிகளின் முடிபு. குறுகச்சொல்லுமிடத்து, அது ஒரே சீரான ஒழுங்கு, குறைவற்ற செல்வம். இத்தகைய சிறப் பியல்புகளையெல்லாம் நாம் எங்கும் காணலாம், எம் மனித கூட்டத்தாரிடத்திலும் காணலாம்.
மட்டக்களப்பு மாநிலத்தில் வதிந்துவரும் குடிகள் பெரும் பாலும் சைவநன்மக்கள். தெய்வத்தின் மாண்பினை இயற்கையின் இயக்கத்தில் கண்டுணர்ந்து கொண்டவர்கள். அன்னர் பண்டிதரு மல்லர், பட்டதாரிகளுமல்லர், அவர் இயற்கையின் இயக்கத்தில் நல்லுறவுகொண்டு, அதில் நீந்திக்கொண்டேயிருக்கும் இயல்பினை யுள்ளார். எனவே அன்னரின் வரலாருனது ஊக்கம் நிரம்பி யுள்ளது, ஒழுக்கமுடையது, வற்ருது ஒடிக்கொண்டேயிருக்கும் egy föGolgigpš6)őOTüGLITGörgy GiroTgl. It is a Process; not nesessarily a reality. கங்கையின் இடையரு நெகிழ்வுபோன்றுள்ளது.
*உழவர் ஒதைமதகோதையுடைநீரோதை தன்பதங்கொள் விழவரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி"
மக்களின் உள்ளம் காவேரி, காவேரியின் ஒழுக்கு மக்களின் மொத்தச் சூழ்நிலையின் இணக்கத்தினைப் பெற்றுள்ள உள ஒழுக்கு. இளங்கோவடிகள் கண்டுணர்ந்து கற்பித்த உளப்போக்கு இது.
நதிச்சேறல் உளச்சேறல். மனித உள இயைபுகளனைத்தினையும் நாம் அவர்தம் நம்பிக்கைகளிலும், எண்ணங்களிலும், உளவேகங் களிலும் கண்டுகொள்ள இயலும்,
அத்தகைய மாண்பினைப்பெற்றுள்ள இந்த ஆலயங்களின் சரித்திர நூலானது வெளுத்துப்போன என்புக்கூடுபோன்ற பசை யற்ற சரித்திர நூலாக அமைந்துவிடவில்லை. எனவே இஃது
سسسسسة W مسيحيم

Page 9
ஒர் மலட்டு வரலாழுகாது. அதில் உயிருண்டு, உணர்வுண்டு, ஆசையுண்டு, அபிலாசையுண்டு, உளவேகமுண்டு, ஆக்கமுண்டு, உளவீக்கமுண்டு, பூர்வக் குமுறலுண்டு.
இவ்வரிய வியாசங்கள் சைவரீதியின் மாண்பினையும், அதன் முகிழ்ப்பு, நிறைவு, முதிர்ச்சி, மலர்ச்சி ஆகியவற்றினையும், விளக் கிக் காட்டுகின்றன. இந்நீதி அகந்தையற்றது, சுயநலமில்லாதது, பிறர் நலம் கருதியே யாக்கப்பெற்றுள்ளதாகும். இப்பெருநலன் களை வெளியரும்பச் செய்யும் பெருநோக்குடன்தான் இவ்வியா சங்கள் யாக்கப்பெற்று, எண்ணங்கள் கோக்கப்பட்டனவென் பது எனது உள்ளக் கிடக்கை. இந்நூல் ஒர் உளக்காவியமாக அமைந்திருப்பதால், அதனைப் படிப்பவர்கள், மக்கட்சாகியத்தின் உளப்பாங்கினை அறிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றுள்ளவர் களாகக் கருதப்படுவர். இந்நூலில் பொதிந்துள்ள உட்கருத்துக் களை ஒரவாரச் சாய்வின்றி உய்த்துணர்ந்துகொள்வது இதைப் படிப்போரது நோக்கமாயிருத்தல் வேண்டும். இதைப் படித்து நிறைவுற்றேன். நீங்களும் படித்து நிறைவெய்துவீர்களாக. பண்டிதரவர்களின் நிறைவுள்ளம் இந்நூலில் இலைமறை கணி போலப் பரிணமித்திருப்பது நோக்குதற்பாலது.
அன்புள்ள,
க. கணபதிப்பிள்ளை.
52, நல்லையா வீதி, மட்டக்களப்பு, 30- 0- 1991.
- vi -

தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரான மதிப்புக்குரிய திருவாளர் எஸ். டி. சிவநாயகம்
அவர்கள் அளித்த
அணிந்து ரை
இருபதாம் நூற்ருண்டில், மட்டக்களப்பு மாநிலத்தில், இலக்கியத் துறையில், மலர்ச்சியும், மறுமலர்ச்சியும் ஏற்பட்ட காலகட்டங்கள் இரண்டு உண்டு.
இலக்கிய மலர்ச்சி ஏற்பட்ட முதலாவது காலகட்டத்துள் தோன்றியவர்கள் வித்துவான் பூபாலபிள்ளை, வித் துவான் சரவணமுத்தன், சுவாமி விபுலாநந்தர், பூஞரீ குமாரசாமி ஐயர், பண்டிதர் பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதர் சபாபதி, பண்டிதர் பூபாலபிள்ளை போன்ற வித்துவ சிரோமணிகளாவர். இந்தக் காலகட்டத்தை 1900 முதல் 1940ஆம் ஆண்டு வரையுள்ள நாற்பது ஆண்டுக்காலம் எனக் கொள்ளலாம்.
இதைத் தொடர்ந்து இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்ட இரண்டாவது காலகட்டம் 1940 முதல் 1960 வரையுள்ள இரு பது ஆண்டுக்காலம் எனக் கொள்ளலாம். இந்த மறுமலர்ச்சிக் காலத்தில்தான் ‘சுத்தானந்தர் கழகம்" என்ற பெயரில் மட்டக் களப்பில் ஒர் இலக்கிய அமைப்புத் தோன்றி இலக்கியத்துறை யில் பேச்சாளர்களையும், எழுத்தாளர்களையும் தோற்றுவித்தது. இலக்கியப் பணியாளர்களைச் சிறப்பித்தது. சாதாரண மக்களி டையே இலக்கிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த மறுமலர்ச்சிக் காலகட்டத்துள் பல இளைஞர்கள் தமிழ்மொழி, இசை, இலக்கியம், சமயம், ஒவியம், நாடகம், எழுத்து என்று பல்வேறு துறைகளில் புகுந்து பின்னர் நிறை வான பரிணமிப்பைப் பெற்ருர்கள்.
இந்த மறுமலர்ச்சிக் காலத்துள் தோன்றியவர்களுள் மகாவித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையாவும் ஒருவர். கல்வி யிலும், சமயத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் இவர் ஈடுபாடு கொண்டு பல பட்டங்களைப் பெற்றுத் துறைதோய்ந்த அறிஞர் களுள் ஒருவராகத் தம்மை ஆக்கிக்கொண்டார்.
திரு. கந்தையா அவர்கள் கல்விபயின்ற காலத்திலிருந்தே என் நண்பராகவும் விளங்கிய காரணத்தால் இவருடைய படிப்
- vii

Page 10
படியான வளர்ச்சியையும், இவர்பால் அமைந்த திறமைகளையும் நான் நிதர்சனம் அறியக்கூடிய வாய்ப்பைப் பெற்றவணுனேன்.
பண்டிதர் வி. சீ. கந்தையா என்று சகலராலும் அன் போடு அழைக்கப்பட்டுவரும் இவர் அன்பும் பண்பும், பழகுதற்கு இனிமையும் உடையவராவார். எழுத்தாற்றலைப்போலவே பேச் சாற்றலும் உடையவர் இவர். இவருடைய மனைவியார் பண் டிதை திருமதி. கங்கேஸ்வரி. கந்தையாவும், தமது கணவரைப் போலவே பேச்சாற்றல் உடையவராவார். சமயச் சொற்பொழிவு களில் மட்டக்களப்பில் அம்மையார் ஈடும் இணையும் அற்றவ ராக விளங்கினர்.
* மட்டக்களப்புத் தமிழகம்', 'கண்ணகி வழக்குரை' போன்ற பல நூல்களின் ஆசிரியரான பண்டிதர் கந்தையா ஏற் கனவே “மட்டக்களப்புச் சைவக்கோவில்கள்-1’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதியிருக்கிருர். இது பிரதேச அபிவிருத்தி அமைச் சின் இந்து சமயத் திணைக்கள வெளியீடாக வந்திருக்கிறது.
அதே தொடரில் இந்நூல் 'மட்டக்களப்புச் சைவக் கோவில்கள் - 2 என்ற பெயரில் இரண்டாவது பாகமாக வெளி வருகிறது. முதல் பாகத்தில் இடம்பெருது விடுபட்ட கோவில் களின் வரலாறுகள் இந்த நூலில் இடம்பெறுகின்றன.
மட்டக்களப்பில் உள்ள சைவக் கோவில்கள் பற்றி இரண்டு நூல்களை எழுதியதன் மூலம் பண்டிதர் கந்தையா ஒல்காப் பெரும் புகழை ஈட்டியவராகிருர்,
பண்டிதர்கள் தமிழ் எழுதப் புறப்பட்டால், படிப்பவர் கள் அகராதி புரட்டும் காலம் ஒன்று இருந்தது.
எடுத்துக்கொண்ட பொருளை எவ்வளவு தூரம் குழப்பி யடித்து, சாதாரண மக்களுக்குப் புலனுகாதவாறு சிக்கல்படுத்தி, முரடலும், நெருடலுமாக எழுதமுடியுமோ அப்படி எழுதினல் தான் தம்மைப் “படித்த பண்டிதர்” என்று படிப்போர் கருது வார்கள் - இப்படி எண்ணி ஒருகாலத்தில் தமிழ்ப் பண்டிதர்கள் தமிழில் வசனநடையைக் கையாண்டுவந்தார்கள்.
பத்திரிகைத் தமிழ் என்று ஒன்று உருவானதும் பண்டித நடை என்ற அந்தச் சித்திரவதை சொல்லாமல் கொள்ளாமல் பயணம் கட்டவேண்டியதாயிற்று.
ஒரு விஷயத்தைப் பொதுமக்களுக்குத் தெளிவாகவும், விளக்க மாகவும், புரியும்படியாகவும், தெரியும்படியாகவும் இலகு தமி ழில் எடுத்துக்கூறக் கூடியவர்கள் தான் உண்oமயில் படித்தவர் கள், நிறைமொழிப் பண்டிதர்கள் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
— — viii —

தமிழ் வசன நடையில் இப்படியான ஒரு நிலை மாற்றத் தைக் கொண்டு வந்துவிட்ட பண்டிதர்களிடையே முதல் ஸ்தா னத்தைப் பெற்றவராகிருர் மகாவித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள்.
அவர் எழுதுகின்ற தமிழ் நடை தெளிந்த ஆற்றேட்ட LDJI GÖT தமிழ் நடையாக மிளிர்கிறது. அதனல் அவர் எழுது கின்ற நூல்களை மக்கள் அலுப்புச் சலிப்பு இன்றி, ஆயாசம் இன்றிப் படித்து இன்பம் பெற முடிகிறது.
பண்டிதர் கந்தையா எழுதி வெளியிட்ட ‘மட்டக்களப்புத் தமிழகம்’, ‘கண்ணகி வழக்குரை' ஆகிய எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் எல்லாம் அவருடைய கைவந்த தமிழ் நடையின் இனிமையை அனுபவிக்கலாம்.
பண்டிதர் எழுதிய ஏனைய நூல்களோடு “மட்டக்களப்புச் சைவக் கோவில்கள்-2' என்ற இந்த நூலும் நெடிது காலம் நின்று நிலவக்கூடிய பெற்றி வாய்ந்தது என்று நான் துணிந்து கூறுவேன்.
எஸ். டி. சிவநாயகம்.
தொடர்மாடி வீடு, பம்பலப்பிட்டி,
கொழும்பு, 25ーI 0-9 I

Page 11
முன்னுரை
முத்தமிழ் வித்தகர் விபுலாநந்தரின் வாரிசுகளாக, அவர் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழ்ப்பணி புரிந்த சிலருள் மகா வித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா (B.O.L) பண்டிதை கங்கேஸ்வரி கந்தையா ஆகியோர் முன்னணி வகிக்கின்றனர்.
இந்த இலக்கியத் தம்பதிகள் தமது சமய, சமூக, இலக்கி யப் பணிகளினுலும் தமது ஆசிரியப்பணியினுலும் மட்டுநகர் மக் கள் மனதில் அழியா இடம்பெற்றவர்கள். திரு. கந்தையா அவர் கள் ஆசிரியராகவும் அதிபராகவும் பல மகா வித்தியாலயங்களில் பணிபுரிந்துள்ளார். திருமதி. கந்தையா அவர்கள் மட்டக்களப்பு ஆசிரியகலாசாலையின் தமிழ்த்துறைப் பேராசிரியையாகப் பல வரு டங்கள் பணிபுரிந்துள்ளார்.
இவர்களது சமய இலக்கியப்பணிகளுக்காக இருவருக்கும் பல பட்டங்களும் விருதுகளும் கிடைத்துள்ளன. இவர்கள் எழு திய நூல்களுக்கு சாகித்தியமண்டலப் பரிசுகளும் கிடைத்துள்ளன.
மகாவித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள் எழுதிய "மட்டக்களப்புத் தமிழகம்', 'கண்ணகி வழக்குரை' ஆகிய இரு நூல்களும் பல வருட ஆராய்ச்சியின் பயனுய் உரு வானவை. ஆராய்ச்சி அம்சத்தைப் பொறுத்தவரை சுவாமி விபுலாநந்தரின் "யாழ்நூலை' நிகர்த்தவை. இப்போதும் மட்டக் களப்பைப் பொறுத்தவரை இவையிரண்டும் முக்கியமான உசாத் துணை நூல்களாகப் பயன்படுகின்றன.
இருபது நூல்களுக்குமேல் வெளிவந்த பின்னர் தொடர்ந்து எழுதமுடியாது சுகவீனமுற்ற நிலையிலும் அவர் எழுதிய இரு நூல்கள் மட்டக்களப்பு சைவக்கோயில்கள் முதலாம் பாகம்", மட்டக்களப்பு சைவக்கோயில்கள்' இரண்டாம் பாகம். இவற் றுள் 'மட்டக்களப்பு சைவக்கோயில்கள் முதலாம் பாகம், ஏற் கனவே பிரதேச அபிவிருத்தி இந்துசமய கலாசார தமிழ் அலு வல்கள் அமைச்சினுல் 1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இரண்டாம் நூல் அதைத் தொடர்ந்து வெளிவர இருந்தபோதும் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் தாமதம் ஏற்பட்டு, இப் போது அவரது மனைவிமக்கள் மேற்கொண்ட முயற்சியினல் மட்டக்களப்பிலிருந்து வெளிவருகிறது. இந்நூல் வெளியீட்டு முயற்சியில் இணைந்துகொள்ளும் பேறு கிடைத்தமைக்கு இறை யருளைப் போற்றி, இப்பணியில் என்னேடு இணைந்துகொண்ட திரு. த. செல்வநாயகம் (முன்னுள் அதிபர்), செல்வி தங்கேஸ்வரி கதிராமன் (கலாசார உத்தியோகத் தர்) ஆகியோரின் பங்களிப்பை ஏற்றி சைவப் பெருமக்கள் முன் இந்நூலைச் சமர்ப்பிக்கிருேம்.
இரா. நாகலிங்கம்
'பார்வதியகம்", (அன்புமணி)
ஆரையம்பதி, காத்தான்குடி: I 5.10, 91. V
आ= X =

*நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு”
- திருவள்ளுவர் பிறந்த அன்றே இறப்பு உண்டு எனத் தெரிந்திருந்தும் பேதை மனம் வேதனை உறுகின்றது. 'கணவன் மனைவி இவர்
காணில் உயிர் உடம்பாம், கணவனிறந்தால் மனைவி கட்டைப் பிணம்” நடைப்பிணமாக வாழ்கின்ற எனக்கு உயிரளிக்க g2(D5 பணியை விட்டுச் சென்று ன் ளார் அமரரான எனது கணவர் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள். இவர் கடந்த 12-6-90ல் திடீரெனச் சிவபதமடைந்தமை யாவரும் அறிந்ததே.
இவர் எழுதிய 13ஆவது நூல் மட்டக்களப்புச் சைவக் கோவில்கள் 1ம் பாகம், பிரதேச அபிவிருத்தி தமிழ்மொழி அமுலாக்கல் இந்துசமய, இந்து கலாசார முன்னுள் கெளரவ அமைச்சர் செல்லையா இராசதுரை அவர்கள் அரசாங்க நிதி மூலம் வெளிவரச் செய்தது ஆகும். இவ்வமைச்சருடைய பாராட் டோடுகூடிய தூண்டுதலால், மட்டக்களப்பு மீதிச் சைவக் கோயில் களை 2ம் பாகமாக எழுத கோயில்களைப்பற்றிய வரலாறுகளைச் சேகரிக்கலானர் இந்நூலாசிரியர். 1ம் பாகம்போல் முப்பதிற்குக் குறையாத கோயில்களைப்பற்றியாவது எழுதவேண்டுமென ஆவ லோடும் தொழிற்பட்ட நூலாசிரியரை நோய்வந்தணுகிற்று. நோய் நீக்கத்துக்கு வைத்தியத்திற்கெனத் தமது மக்களின் அழைப்
- xi

Page 12
பிற்கிணங்கி அமெரிக்கா சென்ருர். அந்த இயலாத நிலையிலும் தாம் சேகரித்துள்ள கோவில் வரலாறுகள் நூலாக வெளிவர வேண்டுமென்று விரும் பினர் . சேகரித்தவற்றையெல்லாம் அமெரிக்கா போகும்போதும் தம்முடன் கொண்டுசென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து, மேலும் கோவிற் குறிப்புகள் தருவதாக வாக்களித்த மட்டக்களப்புப் பெரியார்களோடும் அவற்றைக் கேட்டுத் தொடர்பு கொண் டார். நாட்டுச் சூழ்நிலையாலும் காலத்தின் தடையாலும் அவை கிடைக்கப்பெறவில்லை.
ஆயினும் தாம் சேகரித்த வரலாறுகளை (கட்டுரையாக்கி யது) யும், மனமுவந்து தந்த நால்வர் பெருமக்களின் அணிந் துரைகளையும், தாம் எழுதிய நூன்முகம், பொது என்ற இரு கட்டுரைகளுடன் சேர்த்து, தட்டச்சு, கையெழுத்துப் பிரதி களாலமைந்த புத்தக உருவத்தில் கட்டி எடுத்தார். அதனைக் கொழும்பில் வசிக்கும் எமது மகன் முறையினரான திரு. குண ரத்தினம் - நாகராசா என்பவர் மூலம் கெளரவ அமைச்சரிடம் நேரில் கையளிப்பித்தார். அவருடைய காலத்தில் இது நிறை வேற இறைவன் திருவுளம் வேருக இருந்ததுபோலும்! பின்னர் அமைச்சரும், அமைச்சுக் காரியாலயமும் இடம்மாறிற்று. ஆன லும், “புதிய கெளரவ அமைச்சரிடம் தானே நேரில் சென்று இந்த நூல் வெளிவர உதவி கேட்பேன்’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருந்தார். ஆனல் பிரயாணம் பண்ணி மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு வரக்கூடிய உடற்சுகமில் லாத பெருங்குறையால் எதுவும் செய்ய இயலாமற் போயிற்று. இந்தப் புத்தகம் சிறிய அளவிலாவது வெளிவந்தால், இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பிலுள்ள மீதிக் கோயில்களைப்பற்றி எழுதி வெளியிட ஏனையோர்க்கு ஊக்கமுண்டாக்கியவனுவேன்" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருந்தார். மட்டக்களப்புச் சைவக் கோவில்கள் - 2ம் பாகம் வெளிவருவது தனக்குப் பெரு மைக்காகவல்ல, தொடர்ந்து நமது நாட்டுக் கோயில் வரலாறு கள் அனைத்தும் வெளிவர மட்டக்களப்பிலுள்ள ஏனையோருக்கு ஊக்கமுண்டாக வழிவகுக்கும் என்ற நாட்டுப்பற்றே காரண மாகக் கொண்டிருந்தார் என்பது நன்கு விளங்கிற்று. “பெற்ற தாயும் பிறந்த பொன்னடும் நற்றவவானிலும் நனி சிறந்தனவே', என்பது ஆன்ருேர் வாக்கு. இந்நிலையில் நூல்வெளிவரும் என்ற பெரு நம்பிக்கையுடன் அமரரான தந்தையின் அபிலாசையினைச் செயலுருவாக்கித் தம்கடன் தீர்க்க முன்வந்தவர்கள் அன்புச் செல்வங்களான சிவகுமாரன், இளங்கோவன், மணிவண்ணன், அருள் மொழி ஆகியோராவர். அவர்களின் உதவியுடன் வெளி வரும் இக்கட்டுரைகள், நூலுருப்பெற வழிகோ லியவர்கள் நூலா
— хіі —

சிரியரின் அன்பிற்குரிய மாணுக்கரான இளைப்பாறிய அதிபர் திரு. த. செல்வநாயகம், மட்டக்களப்பு கலாசாரப் பேரவை யைச் சேர்ந்த திரு. இரா. நாகலிங்கம் (அன்புமணி), செல்வி க. தங்கேஸ்வரி என்போர். இவர்களனைவருக்கும் எனது நன்றி.
இந்நூலுக்கு அட்டைப்படம் வரைந்துதவிய “ஓவியச் செல்வன்” K. S. பவான், அழகாக அச்சிட்டு உதவிய புனித வளனர் கத்தோலிக்க அச்சக முகாமையாளர், ஊழியர்களுக்கும் எனது நன்றி.
கங்கேஸ்வரி கந்தையா.
‘கூடல்”, 15, மேல்மாடித் தெரு,
மட்டக்களப்பு, 11-12-1991.
- xiii

Page 13

நூன்முகம்
மட்டக்களப்பு சைவக் கோவில்கள் 2.
மட்டக்களப்பு என்பது தெற்கு குமுக்கன் ஆறு தொடக் கம் வடக்கு வெருகல் ஆறு வரைக்கும் பரந்து நீண்டு கிடக்கும் பெரும் பகுதியைக் குறிப்பது. மட்டக்களப்புச் சைவக்கோவில் கள் பாகம் ஒன்று என்னும் நூலை யான் எழுதும்போது குறிப் பிட்டபடி இன்றைய அம்பாரை, மட்டக்களப்பு ஆகிய மாவட் டங்கள் இரண்டையும் குறிக்கும் பெரும் பகுதியே இது என்று குறிப்பிட்டுள்ளேன்.
இப்பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான கோயில்களில் சில வற்றைப் பற்றி முன்னர் எழுதியுள்ளேன். மிகுதியில் சிலவற்றைப் பற்றி இங்கு எழுதுகின்றேன். ஆயினும், இக்கோயில்களின் அமைப்பு நிருவாகம், ஒழுங்குமுறை முதலியன யாவும் ஒரே முறையாகவே இருப்பதை அறிகின்ருேம். இதில் முக்கியமாகக் குறிப்பிடக் கூடியது என்னவென்ருல், அன்பர்களது பக்தியை வளர்ப்பதே ஆலயங்களின் அடிப்படைக் கொள்கையாக இருந் திருக்கிறது. பக்தி என்பது சாதாரணமாக வணங்குவதால் உண் டாவதாக இருக்கலாம். ஆயின், அது வளர்வதற்கும், உள்ளத் தில் இடைவிடாது ஊன்றி நிற்பதற்கும் அடிப்படைக் காரணங் களாகச் சிலவுள்ளன. அவற்றை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று அறிஞர் வகைப்படுத்தி உள்ளனர். இவைகளை வளர்ப்பதற்காக ஆலயங்கள் ஊன்றுகோலாய் இருந்திருக்கின் றன. சரியையென்பது, சிறு பி ளையாய் இருக்கும்போதே ஒரு வரிடத்தே ஆரம்பிக்கலாம். அது பூப்பறித்தல், ஆலயங்களைக் கூட்டுதல், பெருக்குதல் முதலியனவாக அமையும். இப்போதைய சிரமதான முறையில் இந்தப்பணி பாடசாலைகள் மூலம் பிள்ளை களிடம் வளர்க்கப்படுவதைக் கண்டு மகிழ்கின்ருேம். கிரியை, யோகம், ஞானம் என்பவையும் இப்படியே தரத்திற்குத் தரம் செயல்கூடி வளர்ந்துசெல்லக் காண்கிருேம்.
அவ்வாறு வளர்ந்து சென்று அவை தனிமனிதன் ஒருவ னிடம், ஞான நிலையாக வரும்போது அவன் இவ்வுலக வாழ்வை மறந்து, செயல்படுகின்றன். அவனுடைய செயல் எதுவும் சாதா ரணமான மனிதனுக்கு விளங்குவதில்லை. இவ்வாறு ஞான நிலை யில் மனிதன் இயங்கும்போது அவனுடைய சொல் செயல் யாவும் இவ்வுலக வாழ்வைக் கடந்து தோன்றும்.
--1-

Page 14
அவ்வாறு கடந்து தோன்றுவதுதான் மணிகன் இன்றி யமையாது வேண்டுவதாகும். அவ்வேண்டுகலுக்கு இந்நூல் அமைப்பு முழுவதும் பயன்படும் என்று கருதுகின்றேன். மட்டக் களப்புச் சைவக் கோவில்களைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத் திலும் மற்றும், வெளியிடங்கள் பலவற்றிலுமுள்ள கோவில் களைப் பார்க்கிலும், நிறைய வித்தியாசம் காணப்படுகிறது. மற்றைய கோவில்கள் பலவற்றிலும் சைவ ஆகம ஒழுங்குப்படி பூசனைகள் நடைபெறும். கோவிலிற் குழுமும் பக்தர் கூட்டமும் அதற்கேற்ப நடக்கும். மட்டக்களப்புக் கோவில்கள் பலவற்றிலும் இதற்கு மாருக சைவ ஆகம ஒழுங்கு இல்லாமல் இடத்திற்கு இடம் வித்தியாசமான 'பத்ததி' எனப்படும் கோயில் பூசை ஒழுங்கு முறைப்படி பூசனைகள் நடைபெறும். இப்பூசனைக்காகச் சேரும் பக்தர் கூட்டமும், இதற்கேற்பவே வழிபாடு செய்யும். அவர்களிடத்தில் பெரும்பாலும், சிவாகம பக்திமுறையைக் காண் பதற்குப்பதிலாகக் கரைகடந்த பக்தி வெள்ளத்தை மாத்திரம் காணலாம். இதனுல் இந்த பூசனை முறைகளிலுள்ள வேறுபாடு, பக்தி வெள்ளத்தை பக்தர்களிடம் மாற்றி அமைக்க வழிசெய்வ தில்லை. எனவே, இந்தப் பூசனை முறைகளில் காணப்படும் 'பத் தாதி' முறைகளும் சிவாகம விதி முறைகளும் வேறுபாடாயி னும், அவற்றின் செயற்பாடு ஒன்ருகவே தோன்றுகின்றது.
'இந்தக் கோவில்பற்றிய வரலாற்று நூலில் மட்டக்களப் புப்பற்றிய விளக்கம் மிக உந்துதலாகக் காணப்படுகின்றது", என்று அன்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து அன்போடு குறிப்பிட்டிருக்கிருர். இக்குறிப்பு இவ்வரலாற்று நோக்கங்களுள் ஒன்ருயினும், பக்தியை வளர்ப்பது நூலின் முதல் நோக்கமாகும். அந்நோக்கம் நிறைவேறுமேல் இந்நூலால் பயன் செய்தவனு வேன் என்று நம்புகின்றேன். அதற்கேற்பவே நூன்முகவுரையில் சில கூற விழைகின்றேன்.
இதனை எழுதத் தொடங்கும்போது பகவான் பூரீ ராமக் கிருஷ்ணரைப் பற்றியும், அவரது பக்திமார்க்கத்தைப் பற்றியும் நினைவுகொண்டேன்.
"தாயே! நான் உன்னைச் சரணம் அடைகிறேன்! உடல் இன்பத்தை நான் விரும்பவில்லை! தாயே! நான் புகழை விரும்ப வில்லை. அணிமா முதலான எட்டுச் சித்திகளையும் விரும்பவில்லை. எனக்கு உன்னுடைய பாத கமலங்களில் தூய பக்தியை மட்டும் கொடு. பற்றற்றதும் தூயதும் எதையும் எதிர்பாராததுமான பக்தியைக்கொடு. அன்னையே! உலகை மயக்கும் உன்னுடைய மாயையில் நான் மூழ்காமல் இருக்கும்படி செய். உன்னுடைய உலக மாயையாகிய பெண், பொன் ஆசைகளில் ஒரு பொழுதும்
-2-

பற்றுக் கொள்ளாமல் நானிருக்கச் செய் தாயே! உன்னையன்றி வேறு துணை எனக்கு இல்லை. நான் உன்னுடைய புகழைப் பாடாதவன், சாதனை செய்யாதவன், ஞானமில்லாதவன், பக்தி புரியாதவன். கருணை செய். உன்னுடைய பாத கமலங்களில் எனக்குப் பக்தியைக் கொடு" என்று குரு தேவர் உலக அன்னை யும் பராசத்தியுமாகிய காளி அன்னையிடம் வேண்டுதல் செய் திருக்கிருர். இத்தகைய பக்திதான் மட்டக்களப்பெங்கும் பக்தர் களால் வேண்டப்பட்டதாகும்.
பக்தியோகம் என்பது இறைவனிடம் மனத்தை வைத்து அவனுடைய பெயரையும் புகழையும் பாடுவது. கலியுகத்துக்குப் பக்தியோகம் தான் சிறந்ததும் எளிய வழியுமாகும். பக்தி யோகமே இந்த யுகதர்மம். கர்மயோகம், ஞானயோகங்களினலும் இறைவனை அடையலாமாயினும் அவை யாவும் மிக்க கடின
66).
குருதேவர் கூற்றுப்படி இது நாரதீய பக்தி என்று சொல் லப்படுகின்றது. அதாவது பக்தி தவிர வேறு ஒன்றையும் வேண் டாத நன்மை. நாரதருடைய பக்திப் பாடல்களில் மகிழ்ந்த இராமர் அவர் முன் தோன்றி 'நீ என்ன விரும்புகிருயோ அவ் வரத்தைக் கேள; தருகிறேன்" என்ருர், அதற்கு நாரதர் "ராமா! உன்னுடைய திருபபாத கமலங்களில் எனக்குத் தூய பக்தி எனறும மாரு திருத்தல் வேண்டும். அந்த ஒன்றே எனக்குப் போதுமானதாகும்." என்று வேண்டிக்கொண்டாராம். திருத் தொண்டர் புராணம் எனப்படும் நமது பெரிய புராணத்திலும்,
*" கூடும் அன்பினிற் கும்பிடலே யன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினர்' என்று சிவனடி யார்களின் பெருமை பேசப்படுகின்றது. இவ்வாருண பக்தியை வளர்ப்பனவே மட்டக்களப்புச் சைவத் திருத்தலங்களும், சைவக் கோவில்களும் எனலாம்.
காளியைத் தமது தூய அன்னை என்று போற்றிவந்தவர் பகவான் பூரீ ராமக்கிருஷ்ணர். ஆனல் காளிகோவிலை நினைக்கும் போது நம்மவர்களுக்கு ஒருவித பயம் உள்ளத்தே தோன்று கின்றது. இதற்கு இரு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று உயிர்ப்பலி கொடுத்தல்; மற்றது காளிவழிபாடு இந்து சமயத் துக்குப் புறம்பானதோ என்ற ஐயம். உயிர்ப்பலியிடல் சட்டத் தினல் இன்று தவிர்க்கப்படடுவிட்டது. அடுத்ததாக மட்டக் களப்புக் காளி கோவில்களிலும் காளிதேவியின் காலடியில், சைவர் வணங்கும் தெய்வமான சிவன் வீழ்ந்து கிடந்து நசுக்கப் படும் தோற்றம் கொண்ட படம் காட்சியளிக்கின்றது.
-3-

Page 15
சாக்த மதம் வட இந்தியாவில் பரவியுள்ளது. அங்கெல் லாம் அன்னையை காளி, துர்க்கை என்ற பெயர்களில் வழிபடு தல் பெரும்பான்மை. அங்கே காளிக்கும் சிவனுக்கும் உண்டான காதற்போரிலே சிவன் தோல்வியடைந்ததைக் குறிப்பதுவேயன்றி சிவனைக் காலால் மிதிப்பது காளிதேவிக்குக் கருத்தாகாது என் பதைப் பக்தர்கள் விளங்கிக்கொள்ளல் வேண்டும். பூரீ ராமக் கிருஷ்ணரும் ஒப்ப இயைந்த இப்பாடல்கள் இதனுண்மையை விளக்குவனவாம்.
*தேவர்க்கெல்லாம் தேவனெனும் - மகா
தேவன் நெடுஞ்சாண் கிடையாக தேவி அவள் திருவடியின் கீழ் - தன்
தேகம் வீழ்ந்து கிடக்கின்றன்"
பொன்னடிகளப் பரமசிவன் மார்பின் மீது பொருத்தி மிக நேராக நின்று கொள்வாள்'
“என்ன இது தன் கணவன் மார்பின்மேலே
இருகாலும் ஊன்றியவா றிருக்கிருளே!
LL L S S SSS S SSSLS S SSSL SSLS S S S S L S S 0 S L LL 0 S L S 0 S S S S S S S S L L L LS SLS L L SL C 0 0 C C
“என்னுடைய தாயவளின் லீலை எல்லாம்
இருக்கின்ற விதிமுறைகள் அனைத்தும் மீறும்! திண்ணமுடன் தூய நறும் சிந்தை எய்தித்
தேவியவள் விளையாட்டை அறிவாய் நெஞ்சே."
இத்தகைய பக்தி உடையவனை ஞானியர் பின்வருமாறு வகைப் படுத்திக் காட்டுகின்றனர்.
*பிரவர்த்தகன், சாதகன், சித்தன், சித்தசித்தன் என்று நான்கு வகையினர் இருக்கின்றனர். இப்பொழுதுதான் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறவன் அவனே, பிரவர்த்தக வகுப் பைச் சேர்ந்தவன். அவன் நெற்றியில் சின்னம் அணிவான், கழுத்தில் மாலை அணிந்துகொள்வான்; வெளி ஆசாரங்களில் ஈடுபடுவான். சாதகன் என்பவன் இன்னும் சற்று முன்னேறிய வன். இவனிடம் வெளி ஆடம்பரம் குறைந்து விடும். இறைவனை அடைவதற்காக ஏங்கி நிற்பான். மனம் உருகி அவன் பெய ரைச் சொல்லிச் சொல்லி அழைப்பான்; சரளமான உள்ளம் கொண்டு வழிபடுவான். சித்தன் என்பவன் யார் தெரியுமா? இறைவன் இருக்கிருன். அவன்தான் அனைத்தையும் செய்கிருன் என்ற திடமான அறிவுகொண்டவணுகி இறைவனைத் தரிசித்து
-4-

மகிழ்கிறவனே சித்தன். சித்தசித்தன் என்பவன் இறைவனுடன் உரையாடி மகிழ்பவன். அவன் இறைக் காட்சி மட்டும் பெற்ற வனல்லன். இறைவனுடன் நெருங்கிய உறவுகொண்டவன். சிலர் தந்தை பாவத்திலும், சிலர் தாய் பாவத்திலும், சிலர் தோழமை பாவத்திலும், வேறு சிலர் தலைவன் - தலைவி பாவத்திலும் இறை வனுடன் உறவுகொண்டு உரையாடுகின்றனர். சிலர் ஆண்டான் அடிமை பாவத்திலும் இந்நிலை உறவுகொண்டுள்ளனர்.
விறகில் நெருப்பு இருப்பது உண்மை என்று நம்புவதும், விறகினின்று நெருப்பை வெளிப்படுத்தி, சோறு சமைத்துச் சாப் பிட்டு அமைதியும் நிறைவும் அடைவது என்பதும் ஆகிய இவ் விரண்டு நிலைகளும் வேறுபட்டவை அல்லவா!
இறைவனுடைய நிலைக்கு எல்லை என்பதில்லை. ஒருநிலை பெரியதென்ருல் மற்ற நிலைகள் அதைவிடப் பெரியதும், இன் னும் அதைவிடப் பெரியதுமாக உள்ளன.
மனம், வாக்கு, காயம் மூன்றலும் இறைவனைத் துதிப்பது தான் பக்தி. காயத்தால் அதாவது உடம்பால் பக்தி செய்தல் என்பது கைகளால் இறைவனைப் பூஜிப்பது; சேவை செய்வது; கால்களால் அவன் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் செல் வது; காதுகளால் அவனுடைய பெருமைகளைக் கேட்பது; கண் களால் அவன் எழுந்தருளியிருக்கும் திருமேனிகளைக் காண்பது என்பனவாகும். மனத்தால் பக்தி செய்தல் என்பது, எப்போதும் இறைவனைக் குறித்துச் சிந்தனை செய்வது, அவனது திருவிளை யாடல்களைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக்கொள்வது. வாக்கு மூலம் பக்தி செய்தல் என்பது, இறைவனைக் குறித்துப் பிரார்த் தனைகளைச் செய்வது, அவருடைய புகழைப் பாடுவது முதலி யன. கலியுகத்திற்கு நாரதீய பக்தி, அதாவது எப்பொழுதும் இறைவனுடைய பெயர் புகழ் பாடுவதே சிறந்ததாகும்.
இவைகளை அப்பர் சுவாமிகளுடைய திருஅங்கமாலையில் அழகுறக் காண்கின்ருேம்:-
தலையே நீ வணங்காய் தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேடுந் தலைவனை (தலையே) கண்காள் காண்மின்களோ கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை எண்டோள் வீசி நின்ருடும் பிரான்தன்னை (கண்காள்) செவிகாள் கேண்மின்களோ சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும் (செவிகாள்) மூக்கே நீ முரலாய் முதுகாடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணுளனை (மூக்கே)
-5-

Page 16
வாயே வாழ்த்து கண்டாய் மத யானை உரிபோர்த்து
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான்தன்னை (வாயே) நெஞ்சே நீ நினையாய் நிமிர்புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணுளனை (நெஞ்சே) கைகாள் கூப்பித்தொழிர் கடிமா மலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனை (கைகாள்) கால்களாற் பயனென் கறைக் கண்டனுறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழா (கால்களால்) ஆக்கையாற் பயனென் அரன்கோயில் வலம் வந்து
பூக் கையாலட்டிப் போற்றி என்னுத இவ் (ஆக்கையால்) உற்ருர் ஆருளரோ உயிர்கொண்டு போம்பொழுது
குற்ருலத்துறை கூத்தனல்லால் நமக்கு (உற்ருர்)
திருத்தலங்களுக்குச் சென்று பக்திக் கனிவினுல் வழி பாடாற்றுகின்ருேம. சிறிதும் தளர்ச்சி அடையாத பக்தி நம்மை ஆட்கொள்ளுமேயானல் அந்தப் பக்தியை ராகபக்தி என்பர் அநுபவசாலிகள். 'ராகபக்தி அதாவது, இறைவனிடம் ஆழ்ந்த அன்பு உண்டானல் இறைவனை அடையமுடியும். வைதிக பக்தி அதாவது, சாதாரண பக்தி ஒருவனிடம் தோன்றுவதற்கு எவ் வளவு நேரம் பிடிக்குமோ, அவ்வளவு நேரமே அது மறைவதற் கும் பிடிக்கும். எவ்வளவு விரைவாகத் தோன்றுகிறதோ அவ் வளவு விரைவாக மறைந்துவிடும். இந்தப் பக்தியை உடைய வர்கள், "இவ்வளவு ஜபம் செய்வேன், இவ்வளவு தியானம் செய் வேன், இவ்வளவு யாகம், யக்ஞம், ஹோமம் செய்வேன், இவ் வகை உபசாரங்களெல்லாம் செய்து பூஜை செய்வேன், பூல ஜ செய்யும்போது இந்த மந்திரங்களையெல்லாம் உச்சரிப்பேன்." என்று கணித்துக்கொண்டு செய்வார்கள். இதுதான் வைதிகபக்தி. “எவ்வளவு முறை ஒருநேர உணவு சாப்பிட்டிருக்கிறேன்? எத் தனைமுறை பூஜைகளி செய்திருக்கிறேன்? அப்படியிருந்தும் ஒரு பயனும் ஏற்படவில்லையே' என்று பலர் சொல்வதைக் கேட்ட
தில்லையா?*
*யாரிடம் ராகபக்தி ஏற்பட்டுள்ளதோ அவர்கள் ஒரு பொழுதும் ‘எவ்வளவு நாட்கள் ஒருநேர உணவைச் சாப்பிட் டிருக்கிருேம்? எந்தப் பயனும் ஏற்படவில்லையே” என்று கூற மாட்டார்கள். புதிதாகப் பயிர்த்தொழிலைச் செய்பவர்கள் பூமி யில் விளைச்சல் கிடைக்காவிட்டால் பயிர் செய்வதைவிட்டுவிடு வார்கள். ஆனல் பரம்பரை விவசாயி விளைச்சல் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பயிர்த்தொழிலைத் தொடர்ந்து செய்வான். அவனுடைய தந்தை, பாட்டனர் எல்லோரும் பரம்பரை பரம் பரையாகப் பயிர்த்தொழில் செய்துவந்தவர்கள். பயிர்த்தொழில்
- 6 -

செய்தே வாழவேண்டும் என்று உணர்ந்தவர்கள். யாரிடம் ராக பக்தி இருக்கிறதோ அவர்களிடம்தான் உண்மையான இறை பக்தி இருக்கமுடியும். இறைவன் இப்படிப்பட்ட பக்தர்களுடைய பொறுப்பைத்தானே முன்வந்து ஏற்றுக்கொள்கிருன். மருத்துவ மனையில் நாம் நம் பெயரைப் பதிவுசெய்துகொண்டால், நன்ற கக் குணமடைந்தாலொழிய மருத்துவர் நம் மை வீட்டுக்கு அனுப்பமாட்டார் அல்லவா!'
இத்தகைய பக்தி மார்க்கமே மட்டக்களப்புச் சைவத் திருத்தலங்கள் எல்லாவற்றிலும் பரந்து வழிவது. இந் நூல் எழுதும்போது யான் இன்னும் சில திருத்தலங்களைப்பற்றியும் எழுத நினைந்தேன். அவைகளுட் சில:- நிந்தவூருக்குப் பக்கத் தில் வயல் மத்தியிலுள்ள மடத்தடி மீனுட்சியம்மன், சம்மாந் துறை பத்திரகாளி அம்மன், கல்முனை அம்பலத் தடிப் பிள்ளை யார், பெரியகல்லாறு சித்திவிநாயகர், புளியந்தீவில் திமிலதீவு கிருஷ்ணர் முதலான கோவில்களுள்ள திருத்தலங்களாகும். யான் சுகவீன நிலையில் அமெரிக்கா வந்திருந்ததாலும், அக்கா லம் மட்டக்களப்புப் பகுதியிலேற்பட்ட குழப்ப நிலைகளாலும், என்னுடன் தொடர்புகொண்டவர்களிடமிருந்து மேற்படி கோவில் களைப்பற்றி அறிதல் இயலாதுபோயிற்று. இன்னும் நாகஞ்சோலைப் பிள்ளையார் கோவில், வீரமுனைப் பிள்ளையார் கோவில் என்பவற் றைப்பற்றி விரிவாக எழுத நினைத்தேன். அதுவும் மேற்குறிப் பிட்ட காரணங்களாற்போலும் என்னல் நினைத்தவாறு செய்ய முடியவில்லை.
மேலும், மட்டக்களப்பின் வட பகுதியிலுள்ள திருத்தலங் களைப்பற்றி இந்நூலில் சேர்க்கமுடியவில்லை. அவைகளையும், மற் றும் மேலே குறிப்பிட்ட விடுபட்ட தலங்களையும் பற்றி அடுத்து வரும் பாகங்களில் வெளியிடலாமென்று நினைக்கின்றேன். திரு வருள் துணை நிற்குமாக.
இந்நூலுக்கு வேண்டிய குறிப்புரைகளையும், கட்டுரைகளை யும் தந்துதவினுேர் பெயர்கள் மட்டக்களப்பு மக்களால் நன்றி உணர்ச்சியுடன் என்றும் மறவாத் தன்மையனவாகும். அவர்கள்:- மட்டக்களப்பு உயர்திரு. சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர் கள், திருவாளர்கள்: கோட்டமுனை ஏ. பாக்கியமூர்த்தி ஆசிரி யர், காலஞ்சென்ற மண்டூர் மு. அருணுசலம், செட்டிபாளையம் அ. அரசரத்தினம் ஆசிரியர், ஆரையம்பதி செல்வி. திருமலர் சிவசிதம்பரப்பிள்ளை ஆசிரியர், பழுகாமம் க. சீனித்தம்பி ஆசிரி யர், காரைதீவு வே. தம்பிராசா ஆசிரியர், ஆரப்பற்றை த. சந்திரசேகரம்பிள்ளை ஆசிரியர், கல்லடி சிவானந்த வித்தியாலய அதிபர் க. தியாகராசா, மண்டூர் மு. தம்பிராசா வண்ணக்கர்,
ー7ー

Page 17
மட்டக்களப்பு திருமதி. சுபாஷினி சக்கரவர்த்தி ஆசிரியர், மண்டூர் மகாவித்தியாலய அதிபர் க. தில்லைநாதன், தம்பிலு வில் (பழுகாமம்) வே. குமாரசாமி R. D. O , தம்பிலுவில் வன்னியசிங்கம் ஆசிரியர், களுவாஞ்சிக்குடி கோ. பாக்கியராசா, களுவாஞ்சிக்குடி திருமதி. மகேஸ்வரி தருமரத்தினம் என்போ
TIT nu IT .
செய்திகளைத் திருத்தம் செய்து கொடுத்து கட்டுரைகளைப் பிரதிசெய்து, தட்டச்சுக்குக் கொடுப்பதற்கு எனது பேத்தி செல்வி. கீதாஞ்சலி கனகநாயகம் மட்டக்களப்பில் இந்நூல் வேலைகள் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து உதவி செய்து தந்தார்கள். அவருக்கு மிகுதியும் நான் நன்றியுடையேன். அவ் வாறே அமெரிக்காவுக்கு வரப்பெற்ற மீதிக் கட்டுரைகளையெல் லாம் எனது மனைவியும் மக்களுமாகப் பிரதிசெய்து தத்தனர் என்பதும் குறிப்பிடவேண்டியதொன்ருகும். சுகநிலை பாதிக்கப் பெற்றதனல் வைத்திய நோக்கினேடு அமெரிக்க நாட்டுக்கு இந் நிலையில் வரலானேன். இந்த நூல்வேலை இடைநில்லாது வெளி வரவேண்டும் என்றும், எனது சுகத்துக்காக இறைவனை வேண்டி யும், மட்டக்களப்பிலுள்ள பல அன்பர்கள் கடிதங்கள் எழுத லாயினர். எனது இயலாமையினூடு நானடைந்த துன்பங்களோ மிகப் பலவாகும். அவைகளை ஒருவாறு நீக்கி இந்நூல் நிறை வினை இவ்வளவிலாவது தந்த இறைவனுக்கு எனது மனமார்ந்த பிரார்த்தனைகள்.
அமெரிக்காவிலிருந்த காலத்தில், தானும் சுகவீனமாக இருந்தும், பலவற்றை எனக்குத், தனது சுகநிலை கண்டு பிரதி செய்து கொடுத்த எனது மனைவி திருமதி. கங்கேஸ்வரி - கந்தையா அவர்கள் இவ்வாறு பிரதிசெய்து கொடுத்ததல்லாது இந்நூலுக் குப் பலவழிகளிலும் துணைநின்றுள்ளமையை மட்டக்களப்பு நாடு நன்கறியும். அவர்களுக்கு நாடு நன்றி சொல்லக் கடமைப்பட் டுள்ளது. யான் இங்கிருந்த காலத்து எனது சார்பில் மட்டக் களப்பிலிருந்து செயற்பட்டவர் எனது தங்கை திருமதி. பரமேஸ் வரி - சிதம்பரநாதன் அவர்கள். கொழும்பிலிருந்து செயற்பட்ட வர் எனது மகன் முறையினரான திருவாளர் குணரத்தினம் நாகராசா அவர்கள். இவ்விருவருக்கும் யான் எவ்வாறு கைமாற ளிப்பேன் என்று சொல்ல முடியாதிருக்கின்றேன்.
இந்நூற்படிகள் தயாரானதும் அவற்றைத் தட்டச்சிற் சேர்த்து அச்சிற்குக் கொடுக்கத்தக்க நிலையில் ஆயத்தம்செய்து தந்தவர் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த திருவாளர் கோ. பாக்கிய ராசா அவர்களேயாவர். இன்னர் அத்தோடு அவ்வூர் வீரபத் திரன் கோவில், பூரீ கிருஷ்ணன் கோவில் ஆகிய இரண்டுக்கும்
-8-

வேண்டிய குறிப்புகளைச் சேகரித்துத் தருதற்கும் தாமே முன் வந்து அவற்றையும் செய்து தந்தார். இவருடைய இந்த உதவி கட்கு யான் என்றும் நன்றிக்கடமை பூண்டுள்ளேன்.
இந்நூல் நிறைவுறல் கண்டு நூற்குச் சிறப்புரை தருதற்கு மனம் கோணுது முன்வந்த பெரியார்கள் உயர்திரு. சுவாமி. ஜீவனனந்தாஜி அவர்களும், சிவானந்த வித்தியாலயத்தில் மதிப் புக்குரிய ஒரு அதிபராயிருந்து இளைப்பாறியுள்ள திருவாளர் க. கணபதிப்பிள்ளை அவர்களும், தினபதி சிந்தாமணி இதழ்களின் பிரதம ஆசிரியரான திருவாளர் எஸ். டி. சிவநாயகம் அவர் களும் ஆவர். இவர்களுக்கு யான் பெரிதும் நன்றி பாராட்டு தற்குக் கடமைப்பட்டுள்ளேன்.
மட்டக்களப்பில் பக்தியை வளர்க்க எனவும், தேசத்தின் பண்டைய வழக்கங்கள் பேணப்படுதற்கெனவும் முக்கிய நோக்க மாகக்கொண்டு எழுதலானேன். இதில் பிழைகள் நேர்ந்திருந் தால், அன்பர்கள் அவற்றைப் பொறுக்க வேண்டுகின்றேன். எனது குறிக்கோள் நற்பயன் தருமேல் மக்களிடமிருந்து யானும் பரிசில் பெற்றவணுவேன்;
வணக்கம்.
வி. சீ. கந்தையா. ‘கூடல்',
5, மாடி வீதி, மட்டக்களப்பு.
-سس 9-------

Page 18

மட்டக்களப்புச் சைவக் கோவில்கள் - 2.
1ஆவது இயல்: அறிமுகம்
பொது
உலகில் வழங்கும் தொன்மையான சமயங்களுள் முதல் வரிசையில் வைத்து எண்ணத்தக்கது சைவம். சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் ஆதலின் சைவம் என்பது காரணப் பெயர். கி. மு. 5000 ஆண்டுகட்கு முன்னரே பாரத நாட்டில் சிவலிங்க வழிபாடு நிலைபெற்றிருந்ததென்பது சிந்து நதிக் கரையின் அகழ்வாராய்ச்சியால் நன்கு புலனுகின்றது. தொல் பழங்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு உலக முழுவதும் பரவி இருந்ததென்பதற்கு மேலைநாடுகளிலும் கீழைநாடுகளிலும் ஆங்காங்கே அருகிக் காணப்படுகின்ற சிவலிங்கத் திருவுருவங் களே சான்ருக உள்ளன.
சைவசமயம் அநாதியானதென்பதும், சர்வசங்கார காலத் தில் உலகம் மீண்டும் படைக்கப்படும் என்றும், ஆன்மாக்களது வினைகட்கேற்ப இறைவனருளால் இது தோற்றுவிக்கப்படும் என வும் அறிகிருேம். இதனல் அவர்கள் சிவபெருமானின் அருள்மூர்த் தங்கள் பலவற்றை வழிபட்டார்கள் என்பதும் தெளிவாம். இத்தகைய அருள் மூர்த்தங்கள் சிவலிங்கம், விநாயகர், முருகன், அம்மன் வடிவங்களென்று பக்தி செய்வோர் தன்மைக்கேற்பச் சொல்லப்படுகின்றன.
நான் முன்னர் நூன்முகத்தில் கூறியுள்ளதற்கமையவே மட்டக்களப்பில் ஆசாரத்தோடு கூடிய, கட்டுப்பாடற்றவகையில் தமது இட்ட தெய்வத்தைப் பூசித்துப் பக்தி வெள்ளம் கரை புரண்டோடும் வண்ணம் மக்கள் வேண்டுதல் செய்து ஆன்மீக நலன்களைப் பெறுகின்றனர். இவர்களனைவர்க்கும் சிவபெருமானது திருவருட் பொலிவே கிடைக்கின்றது.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்" "யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகஞர் தாம் வருவர்" என்பவற்றை உற்றுநோக்குக.
ஆகம விதிப்படி கட்டப்பெற்ற கோயில்களுடைய அமைப்பு முறை வேறு என்பது யாவரும் அறிந்ததே, அதில் ஒவ்வொரு
- li l

Page 19
அமைப்புக்கும் ஒவ்வொரு உண்மைப்பொருள் விளக்கம் உண்டு. அவற்றை நன்கு புரிந்துகொண்ட சிந்தனையோடே இக்கோயில் களிற் சென்று கும்பிடவேண்டிய அவசியத்தை மக்கள் தெரிதல் பெரும்பயன்தருவது என்ற காரணத்தால் சிவாகம விதிப்படி கட்டப்பெற்றுள்ள கோயில் அமைப்புக்களின் அர்த்தங்களையும் எழுதுவது என் கடமை என உணர்ந்து சில கூறலானேன். விரிவஞ்சிச் சுருக்கமாகச் சில கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்,
எல்லா நிலத்திற்கும் மேலாய் உயர்ந்து தோன்றும் மலை நிலத்தில் தோன்றிய சேயோன் வழிபாட்டின் வளர்ச்சியே சிவ வழிபாடென்பதும், முல்லைநிலத்திருமால் வழிபாட்டோடும் சிவ வழிபாட்டோடும் தொடர்புறும் நிலையில் அமைந்ததே கொற்றவை வழிபாடென்பதும் நானிலத்தில் உருப்பெற்று வளர்ந்த தெய்வ வழிபாடுகளின் திரட்சியாய் வளர்ந்து உருவாகிய சமய தத்தவமே சைவம் என்பதும், தமிழக வழிபாட்டு முறைகளையும் தமிழகத் தொன்நூல்களையும் இடைக்காலத்தில் தமிழகத்தில் தோன்றிய தெய்வப் பனுவல்களையும் ஒப்பிட்டு ஆராய்வார்க்கு இனிது விளங்கும்
"சிறப்பென்னும் செம்பொருள் காண்பதறிவு" என வரும் திருக்குறளிற் செம்பொருள் எனப்பெற்றது சிவபரம் பொருளே என்னும் உண்மையினை,
“செம்பொருட்டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே’
என வரும் திருவாசகத் தொடர் கொண்டும் உணர்ந்துகொள்ள லாம். தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோன், ஆலமர் செல்வன், முக்கட் செல்வன், காரியுண்டிக்கடவுள், மழுவாள் நெடியோன், நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன், காலக் கடவுள் முதலாகப் பல்வேறு சிறப்புப் பெயர்களாற் சங்கவிலக் கியம் சிவபெருமானைப் போற்றிப் பரவுகின்றது. பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்" என இளங்கோவடிகளும், 'நுதல் விழி நாட்டத்து இறையோன்" என மணிமேகலை ஆசிரியரும், சிவ பெருமான் வழிபாட்டினைத் தமிழகத் தெய்வவழிபாடுகள் எல்லா வற்றிலும் முதன்மையுடையதாகச் சிறந்து விளங்கியதென்று கூறியிருப்பது தமிழக வரலாறு, இலக்கிய வரலாறு, தமிழகக் கோயில் வரலாறு முதலியவற்றை ஆராய்வார்க்கு இனிது விளங்கும்.
நிலங்கடந்த வழிபாட்டளவில் பொதுமையமைப்பில் உரு வாகிய சிவ வழிபாடு, முப்பத்தாறு தத்துவங்களையும் இணைத்து நோக்கும் நிலையில் சைவ சித்தாந்த சமயமாக வளர்ந்து நிறைவு
س--12--

பெற்ற காலம் திருமூலர் காலம் எனக் கொள்ளலாம். பாரத நாட்டுச் சமயங்களுள் இருபத்தைந்து தத்துவப் பகுப்பு சாங்கிய தத்துவத்தில் அமைந்துள்ளமை பலரும் அறிந்த உண்மையாகும். இருபத்தைந்திலும் அடங்காது அவற்றின் மேலுள்ள தத்துவவுண் மைகள் சில,
*காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினை இயழதம்'
என வரும் தொல்காப்பிய நூற்பாவில் இடம்பெற்றிருத்தலைக் காணலாம். இவை எல்லாவற்றையும் உளங்கொண்டு வரை யறுக்கப்பெற்ற தமிழகத்துத் தத் துவக் கொள்கையே சைவ சித் தாந்தமாகும். தத்துவ இலக்கணமாகிய இக்கொள்கை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளிற் புலனுக வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர்கள் திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் நாயன்மார்கள் ஆவார்கள். அவர் களில் திருமூலரும். காரைக்கால் அம்மையாரும். தேவார ஆசிரி யர் மூவரும்,மாணிக்கவாசகரும், திருமுறையாசிரியர்களும் அருளிச் செய்ததோத்திரப்பனுவல்கள், சைவர்களால் வழிபடப்பெறும் சிவபரம் பொருளின் இயல்பினை விரித்துரைக்கும் திருவருளிலக் கியமாகத் திகழ்கின்றன. சைவ சமயச்சான்ருேர்களின் வரலாறும் சைவத் திருமுறைகளின் பொருள் நலனும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகளின் இயல்பும் சைவ சமய தத்துவவுண்மைகளும், விளக்கும் வரலாற்றுக் காப்பிய மாகச் சேக்கிழார் நாயனர் அருளியது திருத்தொண்டர் புராண
Drt g5th.
தமிழகச் சைவ சித்தாந்த நுட்பங்களை விளக்கும் நிலையில் வடமொழியில் இயற்றப்பெற்ற சிவாகமங்களும், உபநிடத நூல் களும் ஒருங்கே துணைபுரிதலும், எல்லாவற்றிற்கும் முதன்மையாக வேதத்தினை உடன்பட்டு வேதத் தொடர்கள் சிலவற்றுக்குச் சித்தாந்த நோக்கில் பொருள் விரித்துரைத்தலும், குமரி முதல் இமயம்வரை நின்று நிலவும் தத்துவக்கொள்கை சைவசித்தாந் தமே என்ற உண்மையை வற்புறுத்தல் காணலாம்.
ஞாயிறு, திங்கள், ஆன்மா, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பேருருவினனுகவும், உயிரும் உடம்பும் பொது உலகுயிர்களின் உள்ளும் புறம்பும் வியாபித்துள்ள அவற்றைப் பிணித்து நின்று உலகுயிர்களை இயக்கி நிற்பவனும், கலைகளே வடிவமாகத் திகழ்பவனும், தன்னையன்றித் தனக்குரிய சார்பாக (ஆதாரமாக)ப் பிறிதொன்றின்றி எல்லாப் பொருட்கும் தானே சார்பாக விளங்குபவனும் ஆகிய அவ்வியல்பினையுடையவனே சைவர்களாற் போற்றப்பெறும் ஈசனுகிய இறைவன் என்பது
-l3

Page 20
தான் பண்டையோரின் முடிபு. இதன்கண் சிவபெருமான் உல கமே உருவமாக அட்டமூர்த்தியாய் விளங்கும் பருமைநிலையும், உயிர்க்குயிராய்ப் பொருள் தோறும் இரண்டறக் கலந்து உலகுயிர் களைத் தொழிற்படுத்தும் நுண்மை நிலையும், உயிர்களின் பொருட்டு உலகு உடல் கருவி ஆகிய நுகர் பொருள்களைப் படைத்துக் காத்தலும், கறங்கோலைபோலப் பிறப்புக்களிற் பட்டுச் சுழன்று களைத்து உயிர்த் தொகுதிகளின் களைப்பு நீங்குதற்பொருட்டு அழித்தலும் ஆகிய தொழில்களைச் செய்து அவ்வுயிர்களின் துயரகற்றி இன்பம் நல்கும் அருட்செயலும், தனக்குச் சார் பொன்றில்லாத இறைவனே உலகுயிர்கட்குச் சார்பாதலும் ஆகிய உண்மைகள விளக்கப்பெற்றுள்ளமையும் பழந்தமிழ் இலக்கியங்களிற் காணலாம்.
சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத கடவுளை உருவநிலை யில் வைத்தன்றி அருவநிலையில் வழிபடுதல் என்பது எல்லா மக்களுக்கும் இயலாததாகும். பிறப்புக்களுடைய உயிர்த் தொகுதி யைப் போலனறி எல்லாப் பொருள்களோடும் கலந்து நின்று அவற்றுள் ஒன்றினுந் தோய்வின்றி அப்பாற்பட்டு விளங்கும் முழுமுதற் பொருளை உலகியற் பொருள்களுக்குரிய உருவம், அருவம், அருவுருவம் என்னும் முக்கூறுகளிலும் அடக்குதல் இயலாது. எனவே வழிபடுவோர் தமது பக்குவ நிலைக்கேற்ப இம்மூவகைத் திருவுருவங்களில் ஒன்றை வழிபடுந் திருமேனியா கக் கொள்ளுதல் இயல்பே. அண்டத்தின் அப்புறத்தும் உயிர் களின் அகத்தும் ஒளியுருவில் திகழும் இறைவனை உயிர்கள் தம் உள்ளத்து அகத்தும் புறத்தும் வைத்துப் பூசிக்கும் முறையில் அமைந்தது, உருவமும் அருவமுங் கலந்த சிவலிங்கத் திருமேனி யாகும். சிவலிங்கத்தின் பீடம் உயிர்களின் நெஞ்சத்தாமரை யாகிய உருவநிலையினையும், பீடத்தின்மேல் ஒளிப்பிழம்பாகச் சுடர் விட்டு விளங்கும்பாணம் அருவ நிலையையும் குறித்தலால், இதனை அருவுருவத் திருமேனி என வழங்குதல் மரபாகும்.
“ஒருவனே தேவன்' என்றவாறு ஒவ்வொன்றிலுந் தோய் வுற விளங்கும் தனிமுதற் பொருளாய்த் திகழும் இறைவனைச் சிவம் எனவும், அதனை விட்டு நீங்காத அருட்சுடராய் உலகுயிர் கள் தோறும் ஊடுருவிக் கலந்து நின்று அவற்றை வளர்த்துப் பக்குவப்படுத்தும் ஆற்றலைச் சத்தி எனவும் ஒருமையின் இருமை நிலையுணர்ந்து ‘நீலமேனி வாலிழை பாகத் தொருவன்’ ஆகப் போற்றிய தமிழ் முன்னேரது அருளணுபவம் உணர்ந்து பாராட் டத்தக்கது.
கடவுளுடைய அன்பும் இரக்கமும், அருளென்றும் சத்தி யென்றும் சொல்லப்படும்; ஆதலால், கடவுளை நமது பரமபிதா
--س-14 س----

என்றும், அவருடைய அருட்சக்தியைப் பரம மாதா என்றும் சொல்லுகிருேம். நாம் ஒருவரிடத்திலே எவ்வளவு பற்றேடிருந் தாலும் அவருக்கு ஒரு நன்மையைச் செய்யும் போதுதான் அந் தப்பற்று வெளியாகின்றது. அதுபோலக் கடவுள் உலகங்களைப் டைத்து ஆன்மாக்கள் வாழ்வதற்கு வேண்டிய சரீரம் முதலிய வற்றைக் கொடுத்தருளும்போதுதான் அவருடைய சக்தி வெளியா ன்ெறது. இப்படிச் சக்தி வெளியாதல் அவர் அருட்சக்தியோடு சேர்தலாகச் சொல்லப்படும். இது திருக்கலியாணம் என்றும் கூறப்படும்.
ஓங்காரத்துள்ளொளிக்குள்ளே முருகன் உருவங்காணப் படும். சிவபெருமானுக்குரிய சருவஞ்ஞதை, திருப்தி, அநாதி போதம், அலுப்தசக்தி, அநந்த சக்தி, சுவதந்திரத்துவம் என்னும் சுத்த அறுகுணங்களும் கந்தசுவாமியுடைய ஆறுமுகங்கள் என்பர்.
சருவஞ்ஞதை - முற்றறிவு.
திருப்தி - வரம்பிலின்பமுடைமை அநாதிபோதம் - இயல்பாகவே பாசங்களினிங்குதல், அலுப்த சக்தி - பேரருளுடைமை
அநந்த சக்தி - முடிவிலாற்றலுடைமை
சுவதந்திரத்துவம் - தன்வயமுடைமை
ஆன்மாக்களுக்கு முத்தியின்பங்கொடுக்கவிரும்பும் விருப்ப மாகிய இச்சாசத்தியும், அதற்கு வேண்டுமிவைகளை அறியும் அறிவு எனப்படும் ஞானசத்தியும், அறிந்தவைகளைச் செய்யும் செயலெனப் படும் கிரியா சத்தியுமாகிய மூன்று சத்திகளின் அடுக்கு வேலாயுத மாம் என்க.
இச்சா ஞானக் கிரியை யெனு மிவை மூன்றிலையாய்க் கிளைத் தெழுந்திட் டச்சாஞழியறச் சுவற்றும் அயில்வே லொருகை வலமமைத்து
(திருத்தக்க புராணம்)
தெய்வயானையம்மை, வள்ளியம்மை என்னும் இருவரும் முறையே சுப்பிரமணியசுவாமியினுடைய கிரியாசத்தியும் இச்சா சத்தியுமாவர்.
“நல்லகங் குடைந்த செவ்வேற் கந்தஞேர் தருவதாகி வல்லியர் கிரியை ஞான வல்லியின் கிளையாய்ச் சூழப் பல்லு யிர்க் கருளைப் பூத்துப் பல நெறிகாய்த் திட்டன்பர் எல்லவர் தமக்கு முத்தியிருங்கனி உதவு மென்றும்".
(கந்தபுராணம்)
مص۔۔۔ 15 ۔۔۔۔۔

Page 21
ஆன்மா சிவனுடைய பரமசிவ பூரணஞானப் பிரகாசத் தில் அழுந்துவது ஆவாகனம், அதில் நிலைபெறுதல் தாபனம். ஆன்ம அறிவு சிவ பூரணத்திலும், சிவ பூரணத்துவம் ஆன்ம அறிவிலும் ஒன்றை ஒன்று பிரியாதிருத்தல் சந்நிதானம். ஆன்ம அறிவு என்றும் ஒழிவின்றி சிவத்திலே சமைந்து போதல் சந்நிரோ தனம். ஆன்ம சுத்தியின் பொருட்டுக் கொடுக்கப்படுவது புஷ்பம், நிர்மலசுத்தியின் பொருட்டுச் செய்யப்படுவது மஹாபிஷேகம், அறியாமையை ஒழித்து அறிவைப் பெறும்பொருட்டுக் கொடுக் கப்படுவது தூப தீபம், சிவானுபூதியின் பொருட்டுக் கொடுக்கப் படுவது நைவேத்தியம், சிவவியாபகம் ஆன்மாவில் விளங்குதலின் பொருட்டுச் செய்யப்படுவது பிரதட்சிணம். ஆன்மா சிவத் தோடு அத்துவிதமாதல் நமஸ்காரம்.
மகோற்சவ நாள் பத்தினுள் முதல்நாள் விழா தூல நீக்குதற் பொருட்டும், இரண்டாம் நாள் விழா தூல சூக்கும நீக்குதற் பொருட்டும் மூன்ரும் நாள் விழா மூவினையும், முப்புத் தியும், முக்குணமும், மும்மணமும், முக்குற்றமும், முப்பிறப்பும், முப்பற்றும், நீக்குதற் பொருட்டும், நாலாம் நாள் விழா நாற் கரணமும், நால்வகைத் தோற்றமும் நீங்குதற் பொருட்டும், ஐந்தாம் நாள் விழா ஐம்பொறியும், ஐந்தவத்தையும் ஐந்து பல மும் நீக்குதற் பொருட்டும், ஆரும் நாள விழா காமாதியானும், கலையாதியானும், வினைக்குணமாறும், பதமுத்தியாறும், நீக்குதற் பொருட்டும், ஏழாம் நாள் விழா எழுவகைப் பிறப்பும் கலாதிகள் ஏழும் மாயாமலம் ஏழும் நீங்குதற் பொருட்டும், எட்டாம் நாள் விழா எண்குணம் விளங்குதற் பொருட்டும், ஒன்பதாம் நாள் விழா மூன்றுருவும், முத்தொழிலும் மூன்றிடத்துறைதலும் இலை யென்றற் பொருட்டும், பத்தாம் நாள் விழா பரமாநந்தமாக் கடலில் அழுந்துதற் பொருட்டும் செய்யப்படும்.
திருவிழாக்காலத்திலே கோயிலின் கொடிமரத்திலே சீலை சுற்றியிருப்பதைக் காணலாம். அச்சீலையிலே இடபமாகிய பசு எழுதப்பட்டிருக்கிறது. சீலையோடு தர்ப்பைக்கயிறும் சேர்க்கப் பட்டிருக்கின்றது. கொடிமரம் சிவம் என்றும், இடபம் எழுதப் பட்ட சீலை ஆன்மா என்றும், தர்ப்பைக் கயிறு பாசம் என்றும் சிவாகமம் கூறுகிறது. கடவுளிடத்தே ஆன்மா தங்கியிருப்பது போலக் கொடிமரத்திலே சீலை தங்கியிருக்கின்றது. கொடிமரமும் சீலையும் இரு வேறு பொருள்களாயினும் அவற்றைப் பார்ப்ப வர்கள் கொடிமரமாகிய ஒரே பொருளாக மதிக்கின்றனர். சிவமும் ஆன்மாவும் அத்துவித சம்பந்தமுடையவை என்பதை இது விளக்குகின்றது. கயிறு சீலையைக் கட்டியிருப்பதுபோலப் பாசம் ஆன்மாவைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. முப்பொருட் சம்பந்தங்களைக் கொடிமரம் நன்கு காட்டுகின்றது.
ー16ー

பெரும்பாலும் சிவா ல ய கர்ப்பக்கிருகங்களில் எளிய அமைப்பும் சொல்லொணுப் பரத்துவத்தையும் கொண்ட சிவலிங் கமே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். நடராஜப் பெருமான் உருவ அமைப்பில் கலைத்திறன் கொண்ட அழகி ன் சிகரமாயும், அருட்சோதியாயும், பிரபஞ்சத்துக்கும் எங்கள் வாழ்க்கைக்கும் உள்ளத்துக்குமே உயிர்ப்பூட்டும் தெய்வீக ஆடல் வல்லவராகவும் விளங்குகிருர், புராதனமான அருள் மிகுந்த பிரமாண்டமான நடராஜர் ஆலயம் சிதம்பரத்திலேயே இருக்கிறது. 1200 ஆண்டு கட்குமுன் திருவாசகம் பாடிப் புகழ்பெற்ற மாணிக்கவாசக சுவாமிகள் பல கால யோக சாதனத்தாலும், சிவபெருமான் மீது இனிய அருட்பாக்கள் பாடியமையாலும் சிதம்பர சிவாலய கர்ப் பக் கிருகத்துள்ளே அடியெடுத்து வைத்தார். மீளவரவேயில்லை. இரண்டறக் கலந்துவிட்டார்.
இப்பிரபஞ்ச மாயையினின்று மெய்ப்பொருளின் கண்ணும், அஞ்ஞான இருளிலிருந்து மெய்ஞான ஒளியின் கண்ணும், மரணத் னின்று முத்திக்கும் அழைத்துச் செல்வது ஆத்ம சாதனமே. எள்ளில் எண்ணெய்போல எங்கள் உள்ளே நிறைந்து நிற்கும் ஈசனைக் காணவேண்டும். வேறு தெய்வம் உண்டென உலகில் தேடாமல் பிறவிப் பிணியினின்று விடுதலை தந்து தனது திருவடி யில் சேர்க்கும் சிவபெருமானைத் தொழவேண்டும். அப்பர், சம்பந் தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், ஆகிய அறுபத்து மூன்று நாயன்மார்க்கும், பேணிக்கொள் பெரியோருக்கும் பேறருள் கொடுத்த முழுமுதற் கடவுளை நம்முள்ளே கண்டு அனுதினம் மறவாது முப்போதும் ஏத்தவேண்டும்,
இறைவழிபாட்டுடன் பக்திசாதனம் (ஆத்ம சாதனம்) செய் தல் வேண்டும். படிக்க நா, பணியச் சிரம், பிடிக்கக் கரம், நடக்கக் கால், நாடக்கண், பேணசற்குரு இருக்கும்போது அலையாமல் நமது நாதரை இறைஞ்சவேண்டும். இதனுல் இறையுணர்வு பெருகி ஆத்மீக விழிப்புணர்ச்சி உண்டாகும். சிவபக்தன், மறு பிறப்பும் அதனல் வரும் துன்பங்களில் அழுந்தவும் தேவைப் படாது, பிறவிப் பிணியினின்றும் விடுதலை பெறுவான்.
திருநெறி என்பது சிவநெறி, சைவநெறி எனப்பொருள் படும். 'திருவே என் செல்வமே' என்ற அப்பர் பெருமானது தேவாரத்தில் "திரு” எனும் சொல் சிவனைக் குறிக்கின்றது. “சென்றடையாத திருவுடையானை' என்ற சம்பந்தர் பெருமான் தேவாரக் கூற்றில் "திரு” எனும் சொல் அருளாகிய சிவசக்தியைக் குறிக்கின்றது. 'சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்' என்ற மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தில், “திரு” எனும் சொல் பேரின்பத்தைக் குறிக்கின்றது.
- 17

Page 22
அகங்காரம் போனலன்றிச் சிவன்பால் அன்பு உண்டா காது. அது போவதற்குச் சாதனங்களாவன: சரியை, கிரியை யோகம், ஞானம் என்னும் நான்குமாம். அவற்றுள் சரியையாவது சிவபெருமானது கோயில் தலத்தை அலகிடல், திருமெழுக்குச் சாத்தல், வழிபாட்டுக்காகப் பூக்கொய்தல், பூமாலை கட்டுதல், புகழ்ந்துபாடல், திருவிளக்கிடல், திருநந்தவனம் செய்தல் முத லிய தொழில்களை அன்போடு செய்தலாகும். கிரியையாவது: வாசனைத் திரவியம், தூபம், தீபம், தீர்த்தம், புஷ்பம், பஞ்சகவ்வி யம், பஞ்சாமிர்தம் ஆகிய பூஜைக்குரிய பொருள்களைக்கொண்டு பஞ்சசுத்தி செய்து உட்பூஜை, புறப்பூஜை, அக்கினி கார்யம் முதலியவற்றை விதிப்படி செய்தலாம். யோகமாவது, முக்குணங் களையும் ஐம்புலன்களையும் அடக்கி, மூலவாயுவை எழுப்புகின்ற இடைபிங்கலை என்னும் நாடிகளை அடைத்துச் சுழி முனை வழியைத் திறந்து, நடனச்சிலம்போசையுடன் சென்று, பஞ்சாட்சரம் ஏகாட் சரமாம் தன்மைகண்டு, அருளைத் தரும் புதுவெளியிலே புகுந்து அருந்தியிருத்தலேயாம். ஞானமாவது பல நூல்களையும் ஆராய்ந்து பதி பசு பாசம் என்னும் மூன்று தத் துவங்களின் இலக்கணங் களைத் தெளிந்து பண்டைவினையின் பயணுகவந்த சிற்றறிவு முற்றும் நீங்கி, பேரறிவாகிய சிவஞானம் விரிந்து தோன்றும் மனதைப் பெறுதலேயாம், சரியை முதலிய நான்கும் நான்கு படிகள்ாகும். அவை முறையே அரும்பு, மலர், காய் கனி, போலாகும் என் பர் தாயுமானவர். அன்போடு சரியை முதலியவற்றைச் செய்து வரும்போது சிவபெருமானுக்கும் நமக்கும் ஓர் உறவை ஏற்படுத் திக் கொள்ளுதல் அன்பைப் பெரிதும் வளர்க்கும்.
இந்நிலையில் உள்ள அடியார்களிடத்துத் தமக்கென ஒரு செயலும் நிகழாது, எல்லாம் சிவச்செயல்களேயாகும். அவர்கள் உடம்புடை யராயினும், அவ்வுடம்பால் அனுபவிக்கும் இன்பமும் பேரின்பமாகும். அவர் சென்ற நெறி எல்லாம் செந்நெறியாகும், அவர் செய்தன வெல்லாம் அவச்செயலாகாது தவச்செயலாகும். இச்சிவ ஞானிகளின் அன்பின் பெருமையை உலகத்தார் அறியு மாறு இறைவன் தனது அருட்செயல்களையெல்லாம் அவர்கள் வாயிலாகவே, அவர்கள் செய்தனவாகவே ஆக்கியருள் வான், அன்பே சிவமாகும், மெய் அன்பு மூலமாகத் தற்போதம் இவ் வாறு முற்றும் ஒழிந்து சிவபோதமே எப்பொழுதும் குடிகொண் டிருக்கப் பெறும் நிலையே முத்தி நிலையாகும்.
இனி, இராமகிருஷ்ணருடைய வாழ்வை ஒப்புநோக்கு வோம். பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தாரைப்போல் ஆரும் துறத்தல் அரிதரிது என்பர்; உண்மையே ஆயினும் அவர் மாதர்களது உடலைப் பழித்துரைத்தார். மனைவியைத் துறந்து சென்ருர். பூரீ ராமகிருஷ்ணரோஎனின் இல்லறத்தில் மனைவி
- 18

யோடிருந்தும், மனைவியுள்ளிட்ட மாதரனைவரையும் தேவியாகவே வழிபட்டார். “அறந்தான் இயற்றும் அவனிலும் கோடியதிகம் இல்லந் துறந்தான், அவனிற் சதகோடி உள்ளத்துறவுடை யோன்" என்ற இக்கூற்றிற்கு பூg இராமகிருஷ்ணர் இலக்கிய மாஞர். கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு தம்மிடம் இல்லையென்று தாழ்மையுடன் கூறினர் மாணிக்கவாசகர். கண்ணப்பற் கிருந்த அத்தகைய பிரேமை அன்பு ஆறு நாட்களில் தெய்வத்தினிடத்து உண்டானமையும் பூரீ இராமகிருஷ்ணரது வாழ்க்கையிற் காணப் படும். “மாது சொன்ன சூழால் இளமை துறக்கவல்லேனல்லன்' என்ற மொழிகளால் பட்டினத்தடிகள் குறிப்பிட்ட திருநீலகண் டக் குயவனரும், ஊடலால் ஏற்பட்ட சபதத்தால் இளமைக் குரிய இன்பத்தைத் துறந்து மனைவியுடன் வாழ்ந்தார். மனை வாழ்க்கையின் ஆரம்பமுதலே அத்தகைய காரணம் இல்லாத போதும் பெண்ணிச்சையை அறவே ஒழிததவர் பூரீ இராமகிருஷ் னர்.
மாணிக்கவாசகரைப்போல பூரீ இராமகிருஷ்ணர் இறை வனைக் காணுது ஆற்ருமையால் நீரைப் பிரிந்த மீனெனத் துடித்து அழுது அகங்குழைந்து அருளைப்பெற்றர். மாணிக்க மனையஞான வாசகங்களை உலகினர் உய்யுமாறு பொழிந்தார். நாவுக்கரசரைப் போலத் தாசமார்க்கத்தில் நிலைநின்ருர். சுந்தரரைப்போலத் தோழமை கொண்டு இறைவனிடம் அன்பும் தொண்டும் செய் தார். ஞானசம்பந்தரைப்போல இறைவனது சேயாகவே தம் மைப் பாவித்து ஒழுகிவந்தார். திருமூலரைப்போல உயர்ந்த யோகத்தில் ஊன்றியிருந்தார். நம்மாழ்வார் கண்ணபிரானது எளிமையை நினைத்ததும் சமாதியில் ஆழ்ந்ததுபோல பலமுறை பூரீ இராமகிருஷ்ணர் இறைவனைப்பற்றிய நினைவோ பேச்சோ வந்ததும் சமாதியில் மூழ்கினர். நம்மாழ்வாரைப்போல உறக் கம் இழந்தமையும், தெய்வ நன்னேய் பெற்றமையும் இறைவனது உணர்வோடு ஒன்றிய உணர்வுடைமையும் அவரது சரிதத்தில் காணப்படும். ஆண்டாளைப்போலக் கோபிகையாகப் பாவித்து. கண்ணனைப்பெற்ருர்.
அத்தகைய பக்தி வளர்வதற்குக் கால்கள்தாம் இவை யெனலாம். பக்தி வளர்வதற்குரிய அனுகூலங்களைச் சுருங்கச் சொல்வோம். (1) “ஒருமையுடன் நினது திருமலரடியை நினைக் கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும். ' அதாவது, சாது சங்கம் (நல்லோர் இணக்கம்) வேண்டும். நாரதரது பக்தி சூத்திரத்தி லும் "முக்கியமாக மகான்களது கிருபையாலும் பகவானது சொற்ப கிருபையாலும் பக்தி ஏற்படுகிறது' என்று கூறப்பட் டுள்ளது. (2) "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”. அதாவது தீயாரிணக்கத்தை அறவே
-س-19.س--

Page 23
விடல்வேண்டும். (பக்தி குத்திரம் - 43) (3) 'பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும்”. இறைவனது பொருள்சேர் புக ழைப் பேசியும் அதைக் கூறும் நூல்களைப் படித்தும் பொழுது போக்கல் வேண்டும். (4) 'பொய்ம்மை பேசாதிருக்கவேண் டும். " மெய்மையைப் பின்பற்றவேண்டும். சொல்லும், நினை வும், செயலும் ஒன்றுக்கொன்று பொருத்தம் உடையனவாதல் வேண்டும். (5) 'பெருநெறி பிடித்தொழுகவேண்டும்.” ஞான சாதனங்களையும் விடாது பழகிவரல் வேண்டும். (6) “மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும்.” ஆணவத்தை ஒழித்தல்வேண்டும். எல்லாம் அவனது செயல் என்றெண்ணித் தன் செயலறுதல் வேண்டும். (7) “மருவு பெண்ணுசையை மறக்கவேண்டுல்.” பிரம்மசரிய விரதத்தைக் கைப்பற்றி வழுவாது ஒழுகவேண்டும். இல்லறத்தாராயினும் துறவறத்தாராயினும் சரி, பிரம்மசரியத் தால் வரும் பெரும் சக்தி அனைவர்க்கும் வேண்டும். (8) *மனம் அமைதியிராதபோதும், துயரம் நேரும்போதும், தளர்ச்சியுரு து இறைவனை சதா நினைத்துக்கொண்டே இருத்தல்வேண்டும்.” (9) 'மதி வேண்டும். நின் கருணை நிதிவேண்டும். நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும்” - அழியும் பொருள் இது. அழி யாப் பொருள் இது என்ற வேறுபாட்டை எப்போதும் விசா ரித்தறியும் புத்தி வேண்டும். (10) 'நல்லாரிணக்கம் ஒன் ருெழிந்த மற்றையெல்லாம் அதனின்றே பெறலாம். ஆதலின் அதனினும் உற்றதுணை பக்தியைப்பெற நினைப்பார்க்கு வேறில்லை.”
இன்னும் சில சாதனங்களும் பக்தியை வளர்க்கும்.
(1) இந்திரியங்கள் அனைத்தையும் அடக்க முயலுதலும் சிறப்பாக நாக்கை அடக்குதலும் அவசியமாம். (2) எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன்னுடைய செயலே, எங்கணும் வியாபி நீ என்ற உண்மையை மனமார உணர்ந்து பழகவேண் டும். ஆணவத்தை ஒழித்து வாழ முயலவேண்டும். (3) ஆயினும் இறைவனது அருளின் துணையால் தான் எதையும் செய்ய இய லும் என்ற பெரு நம்பிக்கையுடையனப், எது வரினும் மனந் தளர இடங்கொடானப் எல்லாம் வல்ல அவன் இருக்க ஏன் கவலைப்படல்வேண்டும்? என்று சிந்தனையற்றிருத்தல் வேண்டும். வித்தும் இன்றியே விளைவு செய்குவான் அவன். சித்தம் சிவ மாக்கிச் செய்தனவே தவமாக்கும் இயல்புடையவன் அவன் என்று நம்புதல் வேண்டும். (4) வாழ்க்கையில் நேரும் சுகம், துக்கம், சாந்தம், மனச்சஞ்சலம் முதலிய யாவற்றையும் இறை வனது திருவடியில் சமர்ப்பித்தல் வேண்டும். பக்தியொன்றையே இறைவனிடம் மீண்டும் மீண்டும் பிரார்த்தித்தல் வேண்டும். (5) மேற்கு நோக்கிச் செல்ல, நாம் அதே அளவிற்குக் கிழக்கை விட்டு விலகுவோம்; அதுபோல, வேறு நினைவுகளை அடக்க
-20

முயலாமல் இறைவனிடம் மனதைச் செலுத்துதல் ஒன்றின லேயே தீமையனைத்தினின்றும் நீங்கலாம். நன்மையனைத்தையும் பெறலுமாகும்.
'உடலே "நான்’ என்ற உணர்வினல் தோன்றும் அகங் காரமே நரகம். நரகம் என்பது வேறு எதுவுமில்லை" என்று சங்கரர் கூறியிருக்கிருர். இப்படிப்பட்ட அகங்காரம் தெய்வீகத் துக்கு எதிரான நிலை. உலக மு 10வதிலும் நிறைந்துகிடக்கும் முட்களையும், கூழாங் கற்களையும் நீக்குவது என்பது ஆகக்கூடிய செயலா? அதனுல், அவைகளின் துன்பத்திலிருந்து தப்பிக்க வேண்டுமானல் காலணிகளை அணிந் ககொள்ளவேண்டும். அது போல வேதாந்த தத் துவங்களின் துணைகொண்டு சத்தியத்தின் மேல் பார்வையைப் பதியவைத்து, 'நானே பிரம்மம்” என்ற நம்பிக்கையுடன் இருப்பாயாளுல் உலகியல் துன்பங்களை எளிதில் கடந்துவிடலாம். அப்பொழுது சத்திய தர்மத்தைக் கைக்கொள் வதுகூடச் சிரமமான செயலாக இருக்காது.
இறைவனேடு ஒன்றிவிடுவதும், உண்மையான மீட்சியைத் தேடிக்கொள்ளுதலும் ஆக இவைகளைப் பெற முயற்சிப்பதுதான் மனிதன் மேற்கொள்ளவேண்டிய தலையாய அறம் ஆகும். இந் நிலையை அடைந்தவனை இருண்ட சிறைக்கூடத்தில் அடைத் தாலும் அவன் சுதந்திர மனிதனே. அதுவுமின்றி உடலைத்தான் சிறைப்படுத்த முடியுமே தவிர, ஆத்மாவைச் சிறைப்படுத்த யாரால் முடியும்? உடலுக்கு அடிமையானவனுக்கு ஒற்றை அருகம்புல்லும் கொலைக்கருவியே. அதைக் கொண்டுகூட அவன் உடலை மாய்த்துவிடலாம்.
அறமென்னும் ஆற்றுப்பெருக்கு ஒருநாளும் வற்றிப்போவ தில்லை. அந்தக் குளிர்ந்த நீர்ப்பெருக்கு வற்றுமானுல் பயங்கர மான விளைவுகளினல் மனிதகுலம் துன்புற நேரும். சரஸ்வதி நதி புறக்கரணங்களுக்குப் புலப்படாமல் பூமிக்கு அடியில் பெருக் கெடுத்து ஓடி, தாவர இனங்களின் வேர்களுக்கு உணவளித்து நீர்நிலைகளையும் நிரப்புவதுபோல, அறமென்னும் நீர்ப்பெருக்கும் புறக்கண்களுக்குப் புலப் படாமலே மனிதகுலத்தை ஊட்டி வளர்க்கிறது.
நெடுநாட்களுக்குக் கவனிக்கப்படாவிட்டால் அழகான வய லும், தோப்பும், முள்ளும், செடியும், புதரும் மண்டி உருமாறிப் போய்விடும். ஓங்கி வளர்ந்த மரங்களை வெட்டி வீழ்த்தி விட் டால் இயற்கையின் தோற்றமே மாற்றமடைந்து விடுகிறது. காலப்போக்கில் இந்த மாறிய நிலையையே பார்த்துப் பழகிவிட்ட மனிதன் அதனுடைய முந்தைய நிலையை, இப்போது நேர்ந் துள்ள அதன் வீழ்ச்சியைத் தெரிந்து கொள்ளுவதில்லை. இன்று தர்மத்துக்கும் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது,
--21 -

Page 24
"அஞ்ஞானத்தையும் அகங்காரத்தையும் ஞானத்தின் பலி பீடத்தில் பலி கொடுத்து அங்கே தர்மத்தை ஸ்தாபி' என்பதே வேதங்கள் போதிக்கும் உண்மை. சுயநலமற்ற ஒவ்வொரு சிறு செயலும் ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாவதற்கான வழி யைச் செப்பனிடுகிறது. அறத்தின் பாற்படும் ஒவ்வொரு செய லும், பார்வையை விரிவுபடுத்தி, இறைவன் எங்கும் நிறைந்த வர் என்ற உண்மையைத் தெளிவுபடுத்துகிறது. இப்படிப்பட்ட சிறு சிறு செயல்களாகிய சிற்முறுகள் தெய்வீகம் என்னும் புனித மான புண்ணிய நதியோடு கலந்து பாய்ந்து சென்று வழியில் வரும் தடைகளை எல்லாம் உடைத்துக்கொண்டு கடந்துசென்று பிரம்மம் என்னும் கடலோடு கலக்கின்றன.
இளைஞர்கள், முதியவர்கள் என்ற பாகுபாடின்றி, அனை வரும் இந்த உண்மைகளை அறிந்துகொள்ளவேண்டும். உதாரணத் துக்குச் சிவன் கோயிலை எடுத்துக்கொள்ளலாம். இலிங்கத்துக்கு நேர் எதிராக நந்தியின் சிலையைக் காணலாம். நந்தி பரமசிவ னின் வாகனம் என்றும், அதனுல்தான் அந்த சிலை சிவன் கோயி லின் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் நீங்கள் சொல்லுவீர்கள். காளை அல்லது பசு ஜீவாத்மாவை உருவகப்படுத்துகிறது. இலிங் கம் பரமாத்மா வை (உருவமற்ற பரம் பொருளை) உருவகப்படுத்து கிறது. சிவனுக்கும் நந்திக்குமிடையில் (ஜீவாத்மாவுக்கும், பர மாத்மாவுக்கும் இடையில்) யாரும் வரக்கூடாது என்றும் சிவனை நந்தியின் இரு கொம்பின் வழியாகத்தான் பார்க்கவேண்டும் என்றும் சிலர் சொல்லுவார்கள். வேறு வழியாகப் பார்த்தால் என்ன” என்று கேட்டால், 'அப்படிப் பார்ப்பதுதான் சிறப்பு' என்று பதில் வரும். உண்மை என்னவென்முல், ஜீவன் மூலமாகச் சிவ னைப் பார்க்கவேண்டும். ஜீவனும், சிவனும் ஒருவரே என்பது தான் அதன் கருத்து. நந்தியும் ஈஸ்வரனும் சேர்ந்து நந்தீஸ் வரர் ஆகிருர்கள. தளைகளில் சிக்கித் தவிக்கும்போது அவன் நந்தி, தளைகளிலிருந்து விடுபடும்போது அவனே ஈஸ்வரன். நந் தீஸ்வரன். பசு ஜீவன்) தன்னைப் பசுபதிக்கு அர்ப்பணிக்கும்போது அதனுடைய தனித்தன்மை களையப்படுகிறது. அதுதான் உண்மை யான யாகம். இந்த உண்மையை அனைவரும் மறந்துவிட்டார் கள். இவற்றை ஞாபகத்தில் வைத்து, சிவாகமமுறைப்படியான வழிபாட்டின் உண்மைகளை அறிந்து வழிபட்டுப் பயன்கொள்ளு தல் சைவமக்கள் கடனுகும். விரிக்கிற் பெருகும்.
வி. சீ. கந்தையா.
-22

qoys llog) sumuo 195ısı gạo úps @ : fùŋoolog,

Page 25

2ஆவது இயல் :
பிள்ளையார் கோவில்கள் மூன்று.
(1) கோட்டைமுனை
பூரீ வீரகத்திப் பிள்ளையார் கோவில்
மட்டக்களப்பு வாவி சங்கமமாகும் இடத்திலிருந்து தெற்கு நோக்கிப் புளியந்தீவு, காத்தான்குடி ஆரையம்பதி, கொத்தியா வலை, கொக்கட்டிச்சோலை, மண்முனை, தாழங்குடா, அம்பிளாந் துறை, களுதாவளை, பழுகாமம், பட்டிருப்பு, மண்டூர், குறுமன் வெளி, கல்லாறு, துறை நீலாவணை ஆகிய இடங்களெல்லாம் நீண்டு பரந்து சவளக்கடை கிட்டங்கித் துறை வரையும் விசா லித்திருக்கின்றது. இத்தூரம் இருபத்தைந்து மைல்களை உடை
LU gill •
இவ்வேரி புளியந்தீவிலிருந்து வடக்கு நோக்கி கன்னன்குடா, வலையிறவு, மாந்தீவு, சத்தருக்கொன்ருன், ஈச்சந்தீவு, தன்ன முனை, ஏருவூர், பன்குடா வெளி வரையும் நீண்டு பரந்திருக் கிறது. இத்தூரம், ஏறக்குறையப் பத்துமைல் நீளமுடையது. இந்த முப்பத்தைந்து மைல் நீளமான ஏரி சேறு நிறைந்ததாக வும், ஆழமற்றதாகவும் இருந்தபடியினலும் “மட்டக்களப்பு” என அழைக்கப்பட்டு வருகிறது. இதுபரக்கும் நாடெல்லாம் மட்டக்களப்புத்தான்.
இந்த மட்டக்களப்புப் பிரதேசம் முழுவதும் கண்டி மன் னர்களின் ஆட்சியின்கீழ் இருந்தது. 2ம் இராசசிங்க மன்னனின் காலத்திற் பாடப்பட்ட மாரியம்மன் காவியத்தின் ஈற்றிலுள்ள வாழிப்பாடலில்
*ஈசனுடன் நாலுமறை வேதநுதல் வாழி
இந்துமதி யொத்தழக ஈசுபரி வாழி வீசுபுகழுடைய ராசசிங்கனும் வாழி விளை செந்நெல் மழைபெய்து நீடுழி வாழி' என்று அம்மன்னனின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதும் எடுத் துக் காட்டாகும்.
1627ம் ஆண்டுக்கு முன் போர்த்துக்கீசர் தங்களுடைய ஆகிக்கத்தின் கீழிருந்த வேருவலை, அளுத்கமம், களுத்துறை, ஆகிய இடங்களிலிருந்த முஸ்லீம்களை நாடுகடத்தியபோது அவர் களில் நாலாயிரம்பேரை கண்டி மன்னனன *செனரதன்" மட்
سس-23--

Page 26
டக்களப்புப் பிரதேசத்தில் குடியமர்த்தினன். அப்படி வந்தவர் களில் "ஷா" என்னும் பெயருடைய ‘மூர்' வம்சத்தவனும் அவனுடைய இனத்தவர்களும் மட்டக்களப்பு வாவியினுள் உள்ள புளியத்தீவை நோக்கி நீண்டு நெருங்கியிருந்த புளியடிக்குடா முனையில் தங்கி வசித்தனர். இவர்கள் தங்கியிருந்த இடம் *மூர்ஷாப்பிட்டி" என அழைக்கப்பட்டது. அதைத் தற்போது “மோரிசாப்பிட்டி' என வழங்குவதை நாம் அறிவோம்.
மட்டக்களப்புப் பிரதேசத்தில் முஸ்லீம்கள் குடியேறுவதால் கண்டி நாட்டுக்குள் பிரவேசிக்கும் வழி தடைப்பட்டுவிடும் என அறிந்து போர்த்துக்கீசத் தேசாதிபதியாகிய 'கொனிஸ்ராண்டின் டீசா" மட்டக்களப்பை அரண்செய்ய நினைத்தான்.
அதற்காகவே போர்த்துக்கீசர் 1827ல் தாம் கட்டிய கோட்டைக்கு மட்டக்களப்புப் பிரதேசம் முழுவதற்கும் அமைந்த “மட்டக்களப்பு’’ என்னும் பெயரை எடுத்துச் சூட்டினர். இத ஞல் புளியந்தீவில் மட்டக்களப்புப் பட்டினம் அமைய ஏதுவா யிற்று. மட்டக்களப்புக் கோட்டையை நோக்கி நீண்டிருந்த புளியடிக்குடா முனைக்குக் “கோட்டைமுனை' என்னும் பெய ரும் ஏற்பட்டது. இக்கோட்டைமுனைப் பிரதேசத்துள குருகுல மக்கள் வசித்த புளியடிக்குடா சின்ன உப்போடைப் பகுதிகளும், விஸ்வப் பிரம்மகுல மக்களும் முஸ்லீம் மக்களும் வசித்த “மோரி சாப்பிட்டியும்' செங்குந்த குல மக்கள் வசித்த தாமரைக்கேணி யும், வெள்ளாளகுல மக்கள் வசித்த தாண்டவன்வெளியும் அடங்கியிருந்தன.
பூரீ வீரகத்திப்பிள்ளையார் கோவில் என்னும் இக்கோயி லைச் சூழவர 1627ம் ஆண்டுக்காலப் பகுதியில் செங்குந்த குல மக்களே வசித்தனர். பின் நெசவுத் தொழில் வீழ்ச்சியினுல் வறுமையடைந்து தங்கள் வீடுவாசல்களைப் பிறருக்கு விற்றுவட் டுத் தாமரைக்கேணியிலும் வேறு ஊர்களிலும் குடியேறிவிட்ட னர். ஆயினும் கோயில் நிருவாகம் செங்குந்தகுல மக்களாலேயே நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாலயத்திற்கு வடக்கில் “பழைய வாடி வீட்டுத் தெருவும், தெற்கில் பெளத்த ஆலய வளவும், கிழக்கில் வேறு குடியிருப்பாளரின் வளவுகளும், மேற்கில் பாஞ் சாலை வீதியும் எல்லைகளாகவுடையன. இக்கோயிலின் அமைப் புக்கள் யாவும் பூணு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை ஒத்தனவாக வுள்ளன. ஆனல் கொடிமரம் நட்டுத் திருவிழாச் செய்யும் ஒழுங்கு முறைகள் இல்லை. இவ்வாலயம் முதன்முதல் யாரால் எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது என்பது அறியப்படவில்லை. ஆயினும் 1627ல் மட்டக்களப்பில் கோட்டை கட்டவந்த போர்த் துக்கீசர் இக்கோயிலைப் பேய்வணக்கம் நடைபெறும் ஆலயமெனத் தம் சரித்திரக் குறிப்பில் கூறியுளளனர்.
------24-س-

இக்கோவிலுடன் மாரியம்மன் கோவிலும் இணைந்திருந்தது. அதில் தெய்வமாடிக் கட்டுச் சொல்லும் செயல் நடைபெற்ற காலத்திலேதான் போர்த்துக்கீசர் இங்கு வந்திருக்கலாமென ஊகிக்கப்படுகிறது. இந்த மாரியம்மன் கோவில் பிற்காலத்தில் 1882ம் ஆண்டு தாமரைக்கேணிக்கு வட பகுதியில் இடம்மாற்றி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1627ம் ஆண்டு காலப்பகுதியில் பூரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயம் பெரிய கட்டிடமாக இருக்கவில்லை. இவ்வளவில் நின்ற வில்வமரத்தடியில் ஓர் மேடையமைத்து அதை உள்ளடக்கிய ஒலைக்கொட்டிலில் கருங்கல்லினலான ஒரு சிறு பிள்ளையார் உரு வம் வைக்கப்பட்டதாயிருந்தது. இதையே யாவரும் பயபக்தி யுடன் வணங்கிவந்தனர். போர்த்துக்கீசர் கட்டிய மட்டக்களப் புக் கோட்டையை 1639ல் ஒல்லாந்தர் கைப்பற்றினர் பின் அதைப் பலங்கொண்டதாகப் புதிய முறையில் 1684ல் கட்டி முடித்தனர். அக்கோட்டையை நாம் இன்னும் காண்கின்ருேம். இக்காலப் பகுதியில்தான் புளியந்தீவில் ஏராளமாகச் சனங்கள் குடியேறத் தொடங்கினர்.
கோட்டைமுனையில் வசித்த செங்குந்தகுலத் தனவந்தர் களிற் சிலர் "மூர்ஷா"வின் இனத்தவர்களின் மரக்கலங்களிற் சென்று வியாபாரம் செய்துவந்தனர். இத்தனவந்தர்களில் ஒரு வரான "தாமோதரம்” என்பார் மரக்கலத்தில் புடவை, நூல், தேன், பசுநெய், முதலிய பொருட்களைக் கொண்டுசென்று வியா பாரஞ்செய்து அதிக பணத்தைச் சேர்த்தார். இவருக்கு மகப் பேறு இல்லாததால் தம்மிடமுள்ள பெருந்தொகைப் பணத் தைக்கொண்டு தாமரைக்கேணிப் பகுதியில் அதிகப்படியான பரப் புக்கொண்ட நிலத்தை வாங்கினர். ஏழைச் செங்குந்தகுல மக் களை அந்நிலத்தில் குடியமர்த்தி அவர்களுக்கு நெசவு செய் வதற்கு நூலும் மற்றும் உபகரணங்களுங்கொடுத்து ஊக்குவித் தார். அவர்களிடம் புடவைகளை வாங்கிப் பிற இடங்களுக்கு ஏற்றுமதிசெய்தார்.
தாமரைக்கேணியில் ஒரு சிறிய தாமரைக்குளம் இருந்தது. தாமோதரமென்பார் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இக்குளத் தில் வெண்டாமரை மலர்களை ஆய்ந்து கொண்டுபோய் பூரீ வீர கத்திப் பிள்ளையாருக்குச் சாத்தி வணங்கித் தனக்கோர் குழந் தையைத் தரவேண்டுமென்று பக்திபரசவத்துடன் வழிபட்டு வந் தார். தாமோதரம் தாமரைப் பூவுடன் வருவதைக் கண்ட சிறு பிள்ளைகள் இவரைத் ‘தாமரையார்' என அழைத்தனர். இவ ருடைய இயற்பெயர் அவர்களுக்குத் தெரியாது. அச்சிறு பிள்ளை கள் வளர்ந்து பெரியவர்களாக வந்தபின்பும் “தாமரையார்"
-25

Page 27
என்றே அழைத்து வந்தனர். அதனுல் தாமரையார் என்னும் பெயரே நிலைத்துவிட்டது. நாமும் இனிமேல் தாமரையார் என்றே அவரைக் குறிப்பிடுவோம்.
தாமரையார் தனக்குப் பிள்ளைவரம் வேண்டுமென வணங்கி வந்தநாளில் ஓர் நாள் பிள்ளையார் இவர் கனவில் தோன்றி 'நானே உனது பிள்ளை; என்னையே உனது பிள்ளைபோல் நேசி" எனத் திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். தாமரையார் விநாய கர் அருளை வியந்து மனமகிழ்ந்து வில்வ மரத்தடியில் இருந்த குடிசையைப் பெரியதாகப் பச்சைக் கல்லினுற் கட்டிக் கிடுகு வேய்ந்து அங்கிருந்த மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து வணங்கி ஞர். இக்கோவிலுக்குப் பூசகராக அவரின் இனத்தவரில் ஒருவ ரான சைவ ஒழுக்க சீலமும் இறை பக்தியுமுடைய வேலாயுதர் என்பவரை நியமித்தார்.
1685ல் தாமரையார் மரக்கலத்தின்மூலம் இந்தியா சென்று சிதம்பரத்தையடைந்தார். அங்கு நடராஜப் பெருமானை வணங்கி ஞர். அங்கிருந்து பிள்ளையார் விக்கிரகமொன்றை விலைக்கு வாங்கி வந்தார். இங்குள்ள செங்குந்தகுல மக்களை, ஒன்று கூட்டிக் கோயிலைத் தன் பணத்தைக்கொண்டு கட்டி வெள்ளாளகுல மக்கள், விஸ்வப் பிரம்மகுல மக்கள், குருகுலமக்கள், மற்றும் சைவ அன்பர் யாவரையும் சேர்த்து தான் கொண்டுவந்த மூர்த் தியை முறைப்படி பிரதிஷ்டை செய்து, மகா கும்பாபிஷேகத்தை யும் நடத்தினர். இக்கோயிலின் மூர்த்திக்குத் தன் பாட்டனரின் பெயரான 'வீரகத்தி' என்னும் பெயரைச் சேர்த்து "பூரீ வீர கத்திப்பிள்ளையார்” என நாமம் சூட்டினர். அதற்குமுன் இக் கோயிலின் மூர்த்திக்கு என்ன பெயர் இருந்தது என்பது தெரிய வில்லை. இக்கோயிலைப் பராமரிப்பதற்குத் தனது மனைவியின் வழி வந்த வைரவர்நாதர் என்பவரையும், ஓமநாதர் என்பவரையும் தனக்கு உதவிய வண்ணக்குமார்களாக வைத்துக்கொண்டார். அன்றியும் தனக்குச் சொந்தமான அசைவுள்ள அசைவற்ற ஆத னங்களையும் தனது சீவனுக்குப்பின் இக்கோயிலுக்குச் சேரவேண்டு மென்று தருமசாதன நன்கொடை பண்ணினர். அத்துடன் இக் கோவிலில் நித்திய, நைமித்திய பூசைகளில் ஏதும் தடை ஏற் படுங்காலத்தில் வெள்ளாள குல மக்களும், விஸ்வப்பிரம்ம குல மக்களும் உதவிகொடுத்து அவற்றைச் செவ்வனே நடைபெறச் செய்யவேண்டுமென்றும் குறிப்பிட்டார். முன்சொன்ன இருகுல மக்களும் இக்கோயிலிற் பூசைகளில் பங்குகொள்ளும் உரித்துடை யோர் எனவும் குறிப்பிட்டார். இது 1700ம் ஆண்டளவில் நடைபெற்றதெனக் கூறப்படுகின்றது. அன்றியும் கோட்டைமுனைப் பகுதியில் உள்ள ஒரே கோயிலும் இதுவேயாகும். இவ்வாண்டு முதல் 1875ம் ஆண்டு வரையிலும் பூரீ வீரகத்திப் பிள்ளையார்
-26

கோயிலுக்குப் பலர் வண்ணக்குமார்களாகவிருந்து காலத்திற்குக் காலம் பல கட்டிடங்களைக் கட்டினர். பரிவார மூர்த்திகளின் கோயில்கள், மடப்பள்ளி, மணித்தூண், மண்டபங்கள் முதலிய வற்றைக் கட்டிச் சிறப்புச் செய்தனர்.
1875ம் ஆண்டு காலப்பகுதியில் அமிர்தகழியில் பூரீ மாமாங் கேஸ்வரர் ஆலயமும் நல்ல முறையில் அமைக்கப்பட்டு நிருவகிக் கப்பட்டு வந்தது. 1878ம் ஆண்டு வீசிய புயலினல் கோவில் மிகவும் சேதமடைந்தபோது, அமிர்தகழி மக்களோடு சேர்ந்து, ஊறணி, கொத்துக்குளம் தாண்டவன்வெளி, தாமரைக்கேணி, செங்கலடி, ஆகிய இடங்களிலுள்ள சைவ மக்களும் உதவிசெய்து கோயிலைப் புதிய முறையில் திருத்தினர். கொடிமரம் நட்டுத் திருவிழாச் செய்யும் ஒழுங்கையும் ஏற்படுத்தினர். தாண்டவன் வெளி வெள்ளாள குல மக்களுக்கு பூரீ வீரகத்திப்பிள்ளையார் கோவிலில் பூசைத் தொடர்பும், செங்குந்த குல மக்களினதும், விஸ்வப் பிரம்மகுல மக்களினதும், நீங்கா நட்பும் இருந்தபடி யினல் 1880ம் ஆண்டு முதல் பூரீ மாமாங்கேஸ்வரர் கோயி லுக்கு கொடிச் சீலை, கொடிக் கயிறு (ஒவ்வொன்றும் தனித்தனி இருபது யார்) செங்குந்த குல மக்கள் கொடுக்கும் வழக்கமும், விஸ்வப் பிரம்மகுல மக்கள் கெர்டியெழுதும் வழக்கமும் ஏற் படுத்தப்பட்டது. அது இன்று வரையும் தவருது நடந்துவரு கின்றது.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசைக்குப் பன்னிரண்டு நாட்களுக்குமுன் (மாமாங்கக் கொடியேற்றத்திற்கு இரண்டு நாட் களுக்கு முன்) செங்குந்த குலமக்கள் கொடிக்கயிறு மற்றும் பூசைப் பொருட்கள் முதலியவற்றை பூரீ வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் ஆயத்தமாக வைத்திருப்பர். பூரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்குமார் தங்கள் கோயில் மேளவாத்தியத்துடன் பூணி வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு வந்து பூசையிற் பங்கு பற்றுவர். இங்குள்ள வண்ணக்குமார் அவர்களைச் சன்மானித்து மரியாதை வழங்குவர். அதன்பின் கொடிச்சீலை, கயிறு, கோயிற் பூசைப்பிரசாதம் என்பவற்றை ஒரு ஏடகத்தில் (சிறு தேரில்) வைத்து செங்குந்த குல மக்கள் சுமந்துகொண்டு மேள வாத்தி யும் முழங்க ஊர்வலமாகச் சென்று பூரீ மாமாங்கேஸ்வரர் கோயிலையடைவர். அங்கு கோயிற் குருக்களும், வண்ணக்குமார் களும் கொடிச்சீலை, கொடிக்கயிறு என்பவற்றை ஏற்றுக்கொண்டு கோயிலில் பூசை நிகழ்த்தி பூரீ வீரகத்திப் பிள்ளையார் கோயில் வண்ணக்குமார்களைச் சன்மானித்துப் பிரசாதமும் வழங்கி வழி யனுப்பி வைப்பர்.
ஒல்லாந்தர் 1694ல் புளியந்தீவில் கோட்டை அமைத்த பின் கோட்டைமுனையும், புளியந்தீவும் ஒரு ருேட்டினுல் இணைக்
- 27

Page 28
கப்பட்டன. அந்த இடத்திலேதான் தற்போது பாலம் அமைந் திருக்கிறது. மட்டக்களப்புப் பகுதியில் ஒல்லாந்தருக்கு வியா பாரப் பொருட்களாக யானைத் தந்தம், தேன், மிளகு, மரம் என்பவையே கிடைத்தன. அதனுல் அவர்கள் காடுகளில் யானை களைப் பிடித் துப் பழக்கி மேல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தை மேற்கொண்டனர். அதனல் யானைகளைப் பிடித் துப் பழக்குவதில் கைதேர்ந்த அநேக சிங்கள மக்களைக் கொண்டு வந்து புளியந்தீவில் குடியமர்த்தினர். அச்சிங்களவர்கள் குடி யிருந்த இடம் புளியந்தீவில் ‘சிங்களவாடி' என இப்போதும் வழங்கப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
பொத்துவில், இறக்காமம், லகுகலை (லாக்சகல்) ஆகிய இடங்களிற் பிடிக்கப்படும் யானைகள் மட்டக்களப்புக் கோட் டைக்குக் கொண்டுவரப்பட்டு அதன் உயரம், வயது, இனம், விலை என்பன கணிக்கப்படும். ஒரு குறித்த தொகை யானைகள் சேரும் வரைக்கும், பிடிக்கப்பட்ட யானைகள் புளியந்தீவில் வைத்து பழக் கப்படும். சிங்களவர்கள் யானையைக் கட்டிவைத்துப் பழக்கிய இடம் 'ஆனைப்பந்தியடி’ என வழங்கப்பட்டது. இதுவே பிற் காலத்தில் ஆனைப்பந்தியென அழைக்கப்படுகிறது. இந்த ஆனைப் பந்தியடியில் மெதெடிஸ் த மிஷனரிமார் ஒரு பாடசாலையை அமைத்து அதற்கு “ஆலடிப்பாடசாலை' என நாமமிட்டதை யும் இந்த இடத்தில் நாம் எடுத்துக்காட்டுவது நன்று. யாழ்ப் பாணத்திலும் இதுபோலவே மாத்தறை, வன்னிமுதலிய இடங் களிற் பிடிக்கப்பட்ட யானைகள் கொண்டுவரப்பட்டு கப்பலில் ஏற்றும்வரைக்கும் கட்டி வைத்துப் பாதுகாக்கப்பட்ட இடம் “ஆனைப்பந்தியடி" எனத் தற்போதும் வழங்கப்பட்டு வருவது சரித்திர உண்மை.
ஆனைப்பந்தியடியில் ஒர் குருந்தமர நிழலில் (இதைச் சிலர் கோடை மரமெனவும் பிழையாகக் கூறுவர்.) அமைந்த மேடை யில் கருங்கல்லாலானதும் பிள்ளையார் வடிவில் அமைந்ததுமான ஒர் உருவத்தைவைத்து வணங்கிவந்தனர். அது யாரால் எப் போது வைக்கப்பட்டது என்பது அறியப்படவில்லை. ஏற்றுமதி, இறக்குமதிகளினலும் வியாபாரத் தொடர்புகளினலும் ஆட்சி அமைப்பு முறையினுலும் புளியந்தீவும் கோட்டைமுனையும் பட் டினமாக மிளிரத் தொடங்கின. பல வசதிகளும் அங்கு அமைந்த படியினல் வலையிறவு, பெரியதுறை, கொத்துக்குளம், தாண்டவன் வெளி, புளியடிக்குடா ஆகிய இடங்களிலிருந்து அநேகர் வந்து அப்பகுதியெங்கும் குடியேறினர்.
இங்கு வந்து குடியேறிய சைவமக்களான செட்டி வெள் ளாளரும், தனக்கார வெள்ளாளரும், குருகுல வெள்ளாளரும்
-28

ஒன்றுசேர்ந்து ஆனைப்பந்தியடியில் இருந்த கோயிலை ஆகம விதி களுக்கமையத் திருத்திக் கட்டி மகாகும்பாபிஷேகத்தையும் நடத்தி னர். கிறிஸ்தவ குருமாரின் மதப் பிரசாரத்திற்கு எதிராக சைவ மக்களின் ஆர்வமும், எழுச்சியும் வீறுகொண்டெழுந்தன. 1878ம் ஆண்டுப் புயலினல் அக்கோயில் கிலமடைந்த க. எனினும் பூசை கள் நடைபெற்றுவந்தன. 1890ம் ஆண்டளவில் புளியந் தீவில், சமாதான நீதவானுக விளங்கிய திரு. ச. முத்தையா என்னும் சைவப் பெரியாரும், வித் துவான் ச. பூபாலப்பிள்ளையவர்களும் கோட்டைமுனை, புளியந்தீவு வலையிறவு கொத்துக்குளம், பெரிய துறை ஆகிய இடங்களில் வசித்த சைவ அன்பர்களின் உதவி யுடன், மட்டக்களப்பில் சிறப்புடனும் அழகுடனும் திகழ்ந்து சைவத்தையும் பக்தியையும் பரப்பக்கூடியதாக ஆனப்பந்தி பூரீ சித்தி விக்கினேஸ்வரர் ஆலயத்தை வழிநடத்தினர்.
கொடிமரம் நட்டுத் திருவிழாச் செய்யும் ஒழுங்கும் இங்கு அதே ஆண்டிற் செய்யப்பட்டது. வித் துவான் பூபாலபிள்ளையால் இவ்வாலயத்திற்கு ஒரு பதிகமும் இயற்றப்பட்டது. திரு. கோபால ஐயர் என்பவர் குருக்களாக நியமிக்கப்பட்டார். இவ்வாண்டி லிருந்து இக்கோயிலுக்கும் கொடி ச்சீலை, கொடிக்கயிறு கொடுக்கும் வழக்கம் செங்குந்த குல மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. பூரீ மாமாங்கேஸ்வரர் கோயிலுக்குக் கொடிச்சீலை, கொடிக்கயிறு கொடுக்கும் முறையைப்போலவே ஆனைப்பந்திப்பிள்ளையார் கோவிலுக்கும் கொடுக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கம் இடைக் காலத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது. அதை மீண்டும் தொடங்கி நடத்தவேண்டுமெனச் செங்குந்தகுல மக்கள் விரும்புகின்றனர். இக்கோவிலில் இதேயாண்டிலிருந்தே கந்தப் புராணம் படிக்கப் பட்டு ஈற்றில் சூரசங்கார விழா நடத்தும் ஒழுங்கும் ஏற்படுத் தப்பட்டது. கந்தப்புராண வரலாற்றில் கூறப்பட்டிருப்பதுபோல் கந்தசுவாமியுடன் நின்று சூர சங்காரம் நிகழ்த்திய நவவிரபரம் பரையில் வந்த செங்குந்த குல மக்களே சேனைத்தலைவர் வேடம் பூண்டு சென்று விழா நடத்தும் உரித்துடையோராயிருந்து நிறை வேற்றி வந்தனர்.
ஐப்பசி மாதத்தில் வரும் பூர்வபக்கபிரதமையில் கந்த சட்டி விரதம் ஆரம்பமாகும். ஆரும் நாள் சூரசங்கார விழா. சூரசங்கார விழாவில் ஒன்பதுபேர் வீரவாகுதேவர் முதலான நவவிரருக்கும் ஒருவர் நாரதருக்கும் வேடமணிவர். விழாவில் பங்குபற்றும் இந்த பத் துப்பேரும் கந்தசஷ்டி விரதமனுட்டித்து ஆரும் நாள் சேனைத் தலைவர் வேடம்பூண்டு பூரீ வீரகத்தி விநாய கர் ஆலயத்தில் (பிற்காலத்தில் தாமரைக்கேணி மாரியம்மன் கோயிலில்) ஆயத்தமாகவிருப்பர். பூg ஆனைப்பந்தி ஆலய வண் ணக்குமாரில் ஒருவர் அல்லது அவருடைய பிரதிநிதி மேள
-س-29--

Page 29
வாத்தியத்துடன் வந்து இந்தப் பத்துப்பேரையும் பூரீ வீரகத்தி விநாயகர் ஆலய வண்ணக்குமாரையும் அல்லது அவர்களது பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று அங்கு பூசையில் பங்கு பற்றச் செய்து சன்மானிப்பர். பின் விழா தொடங்கும்போது சுவாமியினுடைய பக்கம் நின்று சூரசங்கார விழாவை நவவிரர் நடத்துவர். விழா முடிவில் பூரீ ஆனைப்பந்தி விநாயகர் ஆலயக் குருக்கள் பிரசாதம் வழங்கி வழியனுப்பிவைப்பர். இந்த ஆல யத்திற்குக் கொடிச்சீலை, கொடிக்கயிறு கொடுக்கும் வழக்கமும் சேனைத் தலைவர் வேடம் பூண்டு சூரசங்கார விழா நடத்தும் வழக்கமும் 1890ம் ஆண்டு முதல் தவருது நடைபெற்று வந் தது. இவ்வழக்கத்தைச் செங்குந்த குல மக்கள் 1974ம் ஆண்டி லிருந்து ஏதோ காரணத்தினல் நிறுத்திக்கொண்டனர். இவ்விரு வழக்கங்களும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் பண்டைக் காலம் தொடக்கம் இன்றும் செங்குந்தகுல மக்களால் நிகழ்த் தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
1878ல் அடித்த புயல் பூரீ வீரகத்திப் பிள்ளையார் கோயிலை யும் மிகவும் சேதப்படுத்தியது. அதை அக்காலத்து வண்ணக்கு மாராயிருந்த வண்ணக்குச் சின்னத்தம்பி முதலியாரும், (இவர் ஓமநாதர் நல்லதம்பியின் பெண் கொடுத்த மாமனர்) (திரு. சி. குமாரசாமி ஐயரின் பெண் கொடுத்த மாமனரான) வண்ணக்கு சின்னத்தம்பி முதலியாரும் திருத்தி அமைத்தனர். அன்றியும் தினப் பூசைகளும் விசேட பூசைகளும் சிறப்பாகச் செய்யப்பட்டு வந்தன.
பூரீ வீரகத்திப்பிள்ளையார் மேல் பக்தி விசுவாசங்கொண்ட வரும் திரு. கா. நெல்லிநாத வண்ணக்கரின் மனைவியுமான திரு மதி. நெ. சின்னத்தங்கம் பிள்ளையில்லாமலிருந்து இப்பிள்ளை யாரின் அருளால் ஓர் ஆண்மகவு கிடைக்கப்பெற்ருர், அதனல் மனமகிழ்ந்து இவ்வாலயத்திற்கு ஓர் பெரிய வெண்கலக் குத்து விளக்கை அன்பளிப்புச் செய்து மகிழ்ந்தார்.
ஆரையம்பதி பூணி திருநீலகண்ட விநாயகர்மேல் பற்றும் பத்தியும் கொண்ட நொத்தாரிஸ் திரு. வே. மூத்ததம்பி முதலி கோட்டைமுனையில் வசித்த தமது மருமகன் திரு. சி. கணபதிப் பிள்ளையவர்களுக்கு விதான வேலை கிடைக்கவேண்டுமென்றும், கிடைத்தால் பூரீ வீரகத்திப்பிள்ளையாருக்கு ஒரு மடமும் கின றும் கட்டித்தருவதாகவும் நேர்த்திவைத்தார். திரு. சி. கணபதிப் பிள்ளையவர்களுக்கு விதான வேலை கிடைத்தது. அதனல் மன மகிழ்ந்து 1900ம் ஆண்டில் பூரு வீரகத்தி விநாயகர் ஆலய வள வில் ஓர் மடமும் கிணறும் கட்டிக்கொடுத்தார். இக்கட்டிடம் பல வருடங்களாக 'சிவாநந்த' வாசிகசாலையாகவும் சைவ
-30

மாணவர்களின் ஞாயிறு பாடசாலையாகவும் திகழ்ந்தது. இதில் திரு. பொ. செல்வராசா, திரு. ஆ. விநாயகமூர்த்திச் சாமியார் ஆகியோர் சமய வகுப்புக்களை நடத்தினர். இதில் கல்வி பயின்ற வர்களில் திரு. வி. நாராயண தாஸ், திரு. வி. ஈஸ்வரதாஸ், திரு. க. கந்தையா, திரு. சி. விவேகானந்த முதலியார், திரு. க. நடராசா முதலியார், காலஞ்சென்ற திரு. வே. கந்தசாமி முதலி ஆகியோர் சைவசமயப் பணியில் மிக்க ஈடுபாடுடை யோராய்த் திகழ்வது குறிப்பிடத்தக்கது. அன்றியும் இவ்வாசிக சாலை அங்கத்தவர்கள் நாடகங்களையும் நடத்தியுள்ளனர். ஜயாதி" என்ற நாடகத்தில் சுப்பிறீந்தர் திரு. ஏரம்பமூர்த்தி, திரு. பொ. வி. கந்தையா நொத்தாரிஸ் ஆகியோர் திறம்பட நடித்தனர், என்று பலரும் கூறுவர். இக்கட்டிடம் தற்போது கோயிற் பூசகரின் வாசஸ்தானமாக உபயோகிக்கப்படுகிறது. திரு. கா. நெல்லிநாதர் அவர்கள் வண்ணக்கராயிருந்த காலத்தில் 1907ம் ஆண்டில் ஒரு பெரும் புயல் அடித்ததால் பூரீ வீரகத்திப் பிள்ளை யார் கோவில் மிகவும் கூடிய சேதமடைந்தது. அந்நிலையில் தொடர்ந்தும் பூசை செய்யமுடியாதபடியினல் சில வருடங்களின் பின் விக்கிரகங்களைக் கொண்டுவந்து தாமரைக்கேணியில் சைவ ஆசாரசீலரும், கல்விமானும், வைத்திய கலாநிதியும், சுவாமி விபுலாநந்தருக்கு சங்கத மொழிக்கல்வியைத் தொடங்கிவைத்த வருமான திரு. சி. குமாரசாமிஐயர் அவர்களது இல்லத்தில் அமைந்த சுவாமி அறையில் வாலஸ்தாபனம் பண்ணி பூசை புரியத் தொடங்கினர். இந்த ஐயர் அவர்களே பூசைகளையும் நிறைவேற்றிவந்தார். பூரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் புனருத் தாரண வேலைகளுக்காக விடப்பட்டது. சில வருடங்களின் பின் திரு. சி. குமாரசாமி ஐயர் அவர்களையே இவ்வாலய வண்ணக்க ராகவும் தெரிவு செய்தனர்.
1924ம் ஆண்டு திரு. சி. குமாரசாமி ஐயரவர்கள், செங் குந்தகுல பெரியார்களும் மற்றும் சைவ அன்பர்களும் கொடுத்த நன்கொடைகளையும் தன் கையிருப்புப் பணத்தையும் கொண்டு கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், தம்பமண்ட பம், மணிக்கோபுரம், பரிவார மூர்த்திகளின் கோயில்கள் ஆகிய வற்றைத் திருத்தியும் சிலவற்றைப் புதிதாகவும் அழகாகவும் சிறப்பாகவும் கட்டிமுடித்து 1928ம் ஆண்டு பிராமணக் குருக் கள்மாரைக் கொண்டு ஆகம விதிமுறைப்படி சம்புரோட்ஷண மகா கும்பாபிஷேகத்தையும் செய்துமுடித்தார். அன்று தொடக் கம் 1947ம் ஆண்டு வைகாசி மாதம் அவர் சிவபதம் அடையும் வரையும் நித்திய நைமித்திய கருமங்கள் ஒழுங்காகவும் சிறப் பாகவும் நடைபெற்றுவந்தன.
-31

Page 30
1947ம் ஆண்டுக்குப்பின் வண்ணக்குமுறை நிறுத்தப்பட்டு நிருவாகசபைமூலம் கோயிற் கருமங்கள் நடைமுறைப்படத் தொடங்கின. அதன்பின் திரு. டி. என். நல்லதம்பி ஆசிரியர், திரு. வெ. திருநாவுக்கரசு ஆசிரியர், திரு. சி. சிவசுப்பிரமணியம் ஆசிரியர், ஆகியோர் காலத்திற்குக் காலம் தலைவர்களாகவிருந்து கோயிலை நடத்தினர். 1964ம் ஆண்டில் திரு. க. வே. சிதம் பரப்பிள்ளை நொத்தாரிஸ் அவர்கள் தலைவராகவும், வித்துவான் திரு. ந. நாகலிங்கம் அவர்கள் காரியதரிசியாகவும் இருந்து பூரீ வீரகத்தி விநாயகர் ஆலய வளவின் எல்லைகளுக்கு மதில்கட்டி இரும்புக் கம்பியால் தலைவாசற் கதவும் அமைத்தனர். மதில் 1978ல் வீசிய குருவளியால் சேதமுற்றது.
1969ம் ஆண்டு முதல் திரு. பொ. வி. கந்தையா நொத் தாரிஸ் அவர்கள் தலைவராகவும், திரு. நா. பூரீபத்மநாதன் (நீர்ப்பாய்ச்சற் பகுதி அலுவலர்) அவர்கள் செயலாளராகவும் இருந்து ஆலய புனருத்தாரண வேலைகளுக்காக மூர்த்திகளை வாலஸ்தாபனஞ் செய்தனர். புனருத்தாரண வேலைகள் தொடங் கப்பட்டும் காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறவில்லை. அதனல் 21-11-76ல் நிருவாகம் புனரமைக்கப்பட்டு திரு. பொ. வி. கந்தையா நொத்தாரிஸ் அவர்கள் தலைவராகவும், திரு. செ. பூபாலரெத்தினம் ஆசிரியர் அவர்கள் செயலாளராகவுமிருந்து தூபி வேலை, பரிவாரக் கோவில்களின் திருத்தம் ஆகியவற்றைச் செய்தனர். 1978ல் வீசிய சூருவளியால் சில சேதங்கள் ஏற் பட்டன. 1980ல் மதில்கள், திருத்தப்பட்டதுடன் மகா மண்டப மும், சீமேந்து பிளேட் போட்டுக்கட்டப்பட்டது. 1982ல் நிருத்த மண்டபமும், திருத்தியமைக்கப்பட்டது. இத்துடன் பெரும்பகுதி வேலைகள் நடைபெற்றுவிட்டன.
இந்த நிலையில் மீதி வேலைகளை நிறைவேற்றிக் கும்பாபி ஷேகத்தை நடத்துவதற்குப் பொருட்களின் விலையேற்றமும், பணப் பற்ருக்குறைவும் நிருவாகத்தினரை மனந்தளரச் செய்தது. எனினும், திரு. பொ. வி. கந்தையா (பிரசித்த நொத்தாரிஸ்) தலைவராகவும், திரு. கு. சோதிராசா (அதிபர்) செயலாளராக வும், திரு. ந. நாகலிங்கம் (ஒய்வுபெற்ற அதிபர்) பொருளாள ராகவும், திரு. த. செல்வநாயகம் (ஓய்வுபெற்ற அதிபர்), திரு. ந. சுந்தரேசன் (கட்டிடக் கொந்தராத்துக்காரர்) ஆகியோர் உறுப்பினராகவும் கொண்டு இயங்கிய ஆலய பரிபாலன சபை யினர் பெருமுயற்சி செய்து கோயில் திருத்த வேலைகளைப் பூர ணப்படுத்தி சுக்கில ஞல ஆவணி மாதம் 22ம் திகதி (7-9-1989) வியாழக்கிழமை மஹா கும்பாபிஷேகம் செய்வித்து ஆனைமுகன் அருள் பெற்றனர்.
----س-32--س--

பிரதிஷ்டா குருவாக வியாகரண சிரோமணி சிவபூரி பூரண தியாகராஜ சிவாச்சாரியார் B. A. Hons. அவர்கள் தலைமை யில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகத்தின் பின்னர், சுக்கில இu) ஐப்பசி 6ம் திகதி (22-10-1989) ஞாயிற்றுக்கிழமை அஷ் டோத்திர சஹஸ்ர (1008) சங்காபிஷேகமும் நடைபெற்றது.
தற்பொழுது நித்திய பூசைகள் தவருது நடைபெறுகின் றன. நகரின் மத்தியில் பூரணப் பொலிவுடன் விளங்கி, எல்லா ஆன்மாக்களுக்கும் அருள்பாலித்தவண்ணம் பூரீ வீரகத்திப் பிள்ளை யார் கொலுவிருக்கிறர்.
இக்கோவிலில் ஆதிகாலந் தொடக்கம் சங்கமக் குருக்கள் மாரும் பிற்காலத்தில் சைவக் குருக்கள்மாரும் பூசை செய்தனர். 1928ம் ஆண்டிலிருந்து சிவபூரீ சுப்பிரமணியக் குருக்கள், சிவபூரீ சங்கரப்பிள்ளைக் குருக்கள், சிவபூரீ பஞ்சாட்சரக் குருக்கள் ஆகி யோரின் பரம்பரையில் வந்தவர்களே பூசை புரிந்தனர். 1917ம் ஆண்டுக்குப் பின்னர் பிராமணக் குருக்கள்மாரே தொடர்ந்து பூசை செய்துவருகின்றனர்.
இவ்வாலயத்தில் சித்திரை வருடப் பிறப்பு, சித்திரா பூரணைச் சித்திரகுப்த விரதம், கந்தசஷ்டி விரதம், திருக்கார்த் திகை, விநாயக சஷ்டி விரதம், திருவெம்பாவை, தைப்பொங்கல், தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்தரம் ஆகிய விசேட பூசைகள் நடைபெறும். திருவெம்பாவைத் தீர்த்தம் அமிர்தகழி பூரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தக்கேணியில் நடைபெறும். அன்று மதியம் அன்னதானமும் ஆராதனையும் நடைபெற்றபின் பின்னேரம் சுவாமி பூரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தை வந்தடை வர். இரவு திருப்பொன் னுாஞ்சல் நடைபெறும்.
இவ்வாலயத்தில் கந்தபுராணம், காசிகாண்டம், திருவாத வூரடிகள் புராணம், சித்திரகுப்தர் கதை என்பன படிக்கப்பட்டு வந்தன. தற்போது காசிகாண்டம் படிக்கும் வழக்கம் நிறுத்தப் பட்டுவிட்டது. இக்கோவிலைப்பற்றிய தல புராணங்கள் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. திரு. சி. குமாரசாமி ஐயர் அவர் களால் ஒரு பதிகம் பாடப்பட்டது. இன்னும் சதோதய முனி வர் அவர்களாலும் வீரகத்திப் பிள்ளையாருக்குப் பதிகம் பாடப் பட்டு இவையிரண்டும் அச்சிடப்பட்டுள்ளன. ஆரையம்பதியைச் சேர்ந்த திரு. சிவசோமசுந்தரம் டாக்டரும், திரு. நல். அளகேச முதலியார் அவர்களும், செல்வி திருமலர் சிவசிதம்பரப்பிள்ளை யவர்களும், பூறி வீரகத்தி விநாயகர்மேல் திருப்பதிகங்கள் பாடி யுள்ளனர். பின்னிரண்டும் இன்னும் அச்சிடப்படவில்லை. 1971ம் ஆண்டு இவ்விநாயகர்மீது யாழ்ப்பாணம் கரவையம்பதியைச்
س-33-س----

Page 31
சேர்ந்த சைவ ஆசாரசீலரும், செங்குந்தகுலச் செம்மலுமான டாக்டர் திரு. க. குழந்தைவேலு அவர்கள் “திருவூஞ்சல்" பாக்களைப் பாடியுள்ளார். அவ்வாண்டிலேயே அச்சிலும் அது இடப்பட்டிருப்பது போற்றற்குரிய விடயமாகும். இவ்வாலயத் தில் பரிவார மூர்த்திகளாக வைரவர், முருகன், நாகதம்பிரான், கோயில்கள் அமைந்துள்ளன.
கோட்டைமுனை பூரீ வீரகத்தி விநாயகர்
திருவூஞ்சற்பா.
வீசு புகழ் அரம்பையர்கள் நடனமாட மேதக்க கந்தருவர் கீதம்பாட பேசு முயர் பல்லியங்கள் கணங்கள் ஆர்ப்ப
பேரொளி செய் மருத்துவர்கள் சிவிறிவீச பூசுரரும் மாதவரும் வேதம் ஒதப்
பொங்கு தமிழ் வேதமதை நாமுமோத வீசு நெறி கோட்டைமுனை விளங்கும் கோயில்
வீரகத்தி விநாயக ரேயாடீரூஞ்சல்.
சைவப்புலவர் டாக்டர் திரு. க. குழந்தைவேலு.
மட்டக்களப்பு கோட்டைமுனை பூரீ வீரகத்தி விநாயகர் திருப்பதிகம்
அனைவீர கத்தியுனை யணைவார் தமக்குவினை
யணுகாதிருக்க வருள்வாய் அழியா நிதிக்குவைக ளளியாலளிக்குமவ
ரடியார் பணிக் குதவுவாய் கணையாழி சுற்று முகில் வணனர் நிதம்பரவு
கைலாய வெற்பிலுறையுங் கமலால யத்தர் தரு முதல்வா வுனைப்பரவு
கரணுர் தமக்கு னருள்தா மணிமாட கங்களிறை யணிகோ புரம்பரவு
மட்டுக்களப்பு வளரும் வண்ணக் கலிங்கமொடு மெண்ணற் கருங்கலைகள்
பண்ணற் பணிக்குள் நிறைவாய் துணையாயிருந்த ததிக சுகமே தரும்பெரிய
தும்பிச் சுருங்கை யழகா சுந்தர மதிக்குமர சந்தக் கவிக்குனருள்
தருவீர கத்தி சிவமே.
திரு. சிவ. சோமசுந்தரம் டாக்டர்.
-34

திருப்பதிகம்
ஆதிமுதலான பெருசோதியுரு வானவொளி
அண்டங்களோங்கி நிலவ ஆனைமுக மாகியுயர் ஞானதிருமேனி கொண்
டரு மறைகளேத்த வந்து ஒதியுணர் மாமுனிவர் மாலயன் தேவர்கள்
உவந்தினிதுமலர்கள் சிந்த ஓங்கார மெய்யுரு விளக்கியுயிர் யாவையும்
உய்க்குமிரு சத்தி முதல்வா பேதையணிடத்தில் வளர் தாகத் தினுலடரும்
பிழையெலாம் பொறுத்து நிதமுன் பெறலரும் பதமலர் பணிந்து யான் வாழ்ந்திடப்
பெருங்கருணை யிந்தருளுவாய் போதிமர நீழல்கீழ் அருமறைகள் வழங்கியுறை
புத்தர் பொற் கோவில் மருவும் புனிதமுயர் கோட்டைமுனை மத்தியிற் குடிகொண்ட
புகழ் வீரகத்தி பரமே
ஆரையூர் நல். அளகேசமுதலியார் ஜே பி
திருப்பதிகம்
கணிது ங்கு குதமுங் காய் மல்கு பாகலும்
கனத்த குலை வாழை கமுகும் கன்னலொடு செந்நெல் விளை கழனி சூழ் மட்டுநகர்
காட்சி பல கண்டு மகிழும் இனிமைசேர் கயமுகக் கடவுளே உன்னைநான்
ஏத்திப் பணிந்து நின்றேன் இன்னலொடு நோய் பிணிகளென்னை வந்தணுகாமல்
இன்பசுகம் நல்கியருள்வாய் தனியாக வருமாயன் மருகனே தற்பரா தறுகண்மை காட்டல் தகுமோ தந்தி முக நாதனே எந்தைசிவன் மைந்தனே
தயவோடு காருமையா பணி தூ வியலை நா பரவுசூழ் கோட்டைமுனைப்
பட்டினந் தன்னிலுறையும் பார்பதி மைந்தனே பார்புகழ் வேந்தனே
பதி வீரகத்தி பரனே.
செல்வி திருமலர். சிவசிதம்பரப்பிள்ளை ஆசிரியை
-35

Page 32
தாமரைக்கேணியிலுள்ள குடி யிருக்கும் வளவு களில் பெரும்பாலானவை வீரகத்திப்பிள்ளையார் கோயிலுக்குச் சொந்த மானவை. வீரகத்திப்பிள்ளையார் கோயில் சம்பந்தமாகத் தாம ரைக்கேணியில் ஏராளமான வளவுகளும், ஸ்ரேஷன் ருேட்டில் கடைக்கட்டிடங்களும் உள. இவையெல்லாம் தாமரையார் தர்ம சாதனமாக நன்கொடை பண்ணிய ஆதனங்களாகும். இதே போல் அரசடிச் சந்தியையடுத்து கடைக் கட்டிடங்கள், கராஜ், சோடா மில், அரிசி மில், தேனீர்க் கடைகள் முதலியன உண்டு என்றும் அறிகிருேம்.
- 36

2ஆவது இயல்:
பிள்ளையார் கோவில் மூன்று.
(2) வீரமுனைச் சிந்து யாத்திரைப்
பிள்ளையார் கோவில்
மட்டக்களப்பிலிருந்து தெற்கு நோக்கிப் பொத்துவில் வரைக்கும் செல்லும் நீண்ட வீதியொன்றுண்டு. அவ்வீதி இப் பொழுது இன்னும் தெற்கே நீண்டு உகந்தை வரையும் செல் கின்றது. இவ்வீதியில் மட்டுநகரிலிருந்து இருபத்தேழாவது மைல் தூரத்தில் உள்ள காரைதீவிலிருந்து மேற்கு நோக்கி ஒரு வீதி பிரிந்து அம்பாரை, கல்லோயாக்குளம் முதலிய இடங்களுக்குச் செல்கின்றது. இதில் இடையில் உள்ளது சம்மாந்துறை என் னும் ஊர். அதன் பக்கலில் வீரமுனை என்னும் கிராமம் இருக் கின்றது. இது மட்டக்களப்பிலிருந்து சுமார் தெற்கு நோக்கி முப்பது மைல் தூரத்தில் இருக்கின்றது எனலாம். வீரமுனை யைச் சுற்றி எங்கும் பரந்து செழித்த மருதநிலம் உண்டு. மட்டக்களப்பு மான்மியத்தின்படி வீரமுனை என்பது ஆதியிலே குடியேற்றம் பெற்ற ஊர். அதனைச் சூழ்ந்துள்ள வயல்கள் நெல் வளம் கொழிக்கும் பூமியாகும். ஆதியில் இங்குதான் மட்டக் களப்பு வாவியின் தென்கோடி முடிவுற்றது. சம்மாந்துறையும் வீரமுனையும் அடுத் தடுத்துள்ளமையால் வெளிநாடுகளிலிருந்து வரும் சிறிய கப்பல், வள்ளம், தோணி என்பன இவ்விடங்களில் தங்கும், அதனுல் நீர்மூலம் அவ்வாறு வரும் முஸ்லீம்கள் சிலர் சம்மாந்துறையிலும், தமிழர் வீரமுனையிலும் குடியேறியுள்ளனர் என்பது வரலாறு. பிற்காலத்தில் முஸ்லிம் மக்களின் பெருக்கம் சம்மாந்துறையில் அதிகமாயிற்று.
கடந்த சுமார் இருபத்தைந்து வருடகாலமாகத் தொடர்ந்து அப்பகுதிப் பாராளுமன்றப் பிரதிநிதியாயிருக்கும் ஜனுப் ஏ. எம். ஏ. மஜீத் என்பார் தமிழர் முஸ்லீம்கள் என்ற பேதம் காட்டாத பண்பாளர். அவர் மட்டக்களப்பு சிவாநந்த வித்தி யாலயத்தில் இளமை தொடக்கம் உயர்திரு. விபுலாநந்த அடிக ளாரிடம் மாணவனுகப் பயின்றவர். அதனற்போலும் சமரச மனப்பாங்கு இவருள்ளத்தில் வளர்ந்தது எனலாம். பின்னர் அதே கல்லூரியில் இவர் என்னுடனும் உடன் ஆசிரியராக இருந்து பணிபுரிந்தகாலை இந்நிலையினை நேரில் அநுபவித்துள் ளேன் என்பதை இங்கு குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
-37

Page 33
ஒருமுறை ஏற்பட்ட சிறிய கலவரத்தால் வீரமுனை தீயுண் டது. அதுபற்றி 'தீயுண்ட வீரமுனை" என்ற பாடல் நூலொன்றை ‘ராஜபாரதி' என்ற புனைபெயர் கொண்ட கவிஞரான ஆசிரியர் இராஜதுரை இயற்றியுள்ளார் என்பதைத் தமிழுலகம் நன்கறி யும். அதற்கு முதலோ அன்றிப் பின்னரோ ஒருபோதும் கலவரம் ஏற்படாது அமைதியைப் பேணி மக்கள் வாழ்ந்தனர் என்பது தெளிவு.
இந்த வீரமுனையிலுள்ள சிந்து யாத்திரைப் பிள்ளையார் கோவில் என்னும் பெயர், காலகதியில் மருவி சிந்தா யாத்தி ரைப் பிள்ளையார் கோவில் என்றும், சிந்தாத்திரைப் பிள்ளை யார் கோவில் என்றும் இப்போது அழைக்கப்படுகிறது. இக் கோவில் முறைப்படி அமைக்கப்பெற்று நித்திய பூசைகள் ஒழுங் காக நடைபெற்று வருகின்றன. இக்கோவில் வரலாற்றைப்பற்றி அங்குள்ள ஏடொன்றிலிருந்து படி எடுக்கப்பெற்ற பாடல் ஒன்று பின்வருமாறு:
திருவருள் கயிலைச் சிவனருள்புரிய மருவளரிலங்கை மன்னவனும் வால சிங்கனென்னும் சிறந்த பேருடையான் சித்து வித்தையிற் செகமெச்சிய தீரன் கலைஞானம் அறுபத்திநாலும் கற்றுத் தேறினேன் இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்னும் வேதம் நான்கும் விரும்பி யுணர்ந்தோன் கமண குளிகையின் காரசக்தியால் நாஞதேச வள விகற்பங்களை நன்ருய் அறிந்தோன் ஈழதேசமென்னும் O இலங்காபுரிக்கு இராசதானியெனக் கண்டிமாநகரைக் கனம்பெற வகுத்துச் செங்கோல் செலுத்தித் தேசத்தை யாள்கையில் மன்னனும் அப்போ மணம் செய்யக் கருதி துன்னு திரைகடல் துரிதமாகத் தாண்டி 15 மன்னு சோழன் மாதவப் புதல்வியை மணமாலை சூட்டி மகிழ்ந்திருக்கையில் இராசனும் தன்பவளுகிய இராணியாம் அம்மாளுடன் சனங்களைச் சேர்த்து சந்தோஷமாகத் தென்னிலங்காபுரி 20 சேர விரும்பி ஆரிய நாட்டு அந்தணர் தம்மில அச்சுதனை அங்காம் அவர் மனைவி செந்திரு மாது தேவியாருடன் திருவொற்றியூரின் சிவனடி மறவாச் சந்திர சேகர 25 சமயதீட்சிதர் தையலாள் பார்பதி
-38

கட்டுமாவடிக் கண்ணப்ப முதலி முத்து நாயக்கன் முதலியோருடன் குடிமங்களையும் கூட்டிச் சேர்த்து கப்பலோட்டக் கைதேர்ந்தவரில் சங்கரச் செட்டி சதாசிவச் செட்டி இவர்களையேற்றி இராசனும் ராணியுமேறி தென்னிலங்காபுரிதிசை நோக்கி வருகையில் திரிகோணமலை திரைகடல் நடுவில் கட்டிய தன்மையாய்க் கப்பலும் நின்றது நின்றிடுங் கப்பலைக் கண்டதும் அரசன் காரணமேதெனக் கண்டறிவோமென ஏவலாளர்களை இறக்கிப் பார்க்கையில் ஐந்து கரமும் ஆனைமுகமும் அங்குச பாசமும் தாங்கிய கையுடன் எங்கள் பிரான் எழுந்தருளி இருக்கிருர் என்னும் அவ்வுரைகேட்டு அரசனும் திகைத்து அந்தணர் தங்களே அன்புடன் பார்த்து ஐயனே நீங்கள் ஆழியிலிருக்கும் மெய்யனைக் கப்பலில் விரைவுடன் சேரென அவ்வார்த்தை கேட்ட அந்தணரானேர் கண்ணிர் சொரியக் கசிந்து மனதுடன் வெள்ளமதம் பொழி விநாயக பிரான உள்ளன்புடன் ஊக்கமாய் நின்று கணேசன வாவெனக் கைகூப்பித்தொழ அவ்வுருவாகும் ஐங்கரத்தண்ணல் திருவடி தன்னைச் சீக்கிரம் காட்ட கடலிலிருந்த கருணுகரனின் பாதாரவிந்தம் பற்றிச் சேர்ந்தனர் பற்றியபொழுது பாராளு மன்னன் சித்தம் மகிழ்ந்து திருவடி வணங்கி ஐந்து கரனே இச்சிந்து யாத்திரையில் உன் திருவடிகாண எத்தவம் புரிந்தோம் ஏத்தினுேம் என்று இறைஞ்சிப் பணிந்து கருணுகரனே இக்கப்பலானது கண்டிமாநகர்க் கரையை அடைந்தால் ஆலயம் அமைத்து அவ்விடத்திலிருத்தி பூசை செய்விப்பேனெனப் பூபதி போற்றிஞன் இவ்வாய் திறந்து இராசனுந் துதிக்க செவ்வாய் மடவாள் சிரசிற்கை கூப்பினள் கணேசனருளால் கப்பலும் ஓடி சம்மாந்துறையைச் சார்ந்திடும் நகரம்
س-39ـه
35
40
45
50
55
60
65

Page 34
வீரமுனை என விளம்பிய நதிக்கரை கப்பல் சேரக் கண்டு எல்லாரும் கப்பலை விட்டுக் கரையிலிறங்கி 7 J தச்சர் சித்தர் தட்டார் முதலிய குடிமக்களைக் கோவுமழைத்து ஐங்கரக் கடவுளுக்கு ஆலயமொன்று சீக்கிரம் அமையெனச் செலவு கொடுக்க அரசனுரைப்படி ஆலயம் அமைத்தார் 75 அந்தணராதியோர் அபிஷேகித்து விநாயகப் பெருமானை வீழ்ந்தடி பணிந்து கோமகனுரைப்படிக் கோயிலுள் வைத்தார் கண்டியரசன் கணேஸப் பெருமானை சிந்து யாத்திரையுள் திருவடி கண்டதால் 80 சிந்து யாத்திரைப் பிள்ளையார் என்னும் நாமத்துடன் நித்திய பூசை நியமமாகச் செய்து விநாயகராலயம் விளங்கிடும் பொருட்டு செந்நெல் விளையும் சிறந்த நிலங்களும் தேவாலயத்தின் திருப்பணிச் சாமான் 85. எல்லாவற்றையும் எழுத்தில் வரைந்து அந்தணர் தங்களை அரசனழைத்து பாசாங்குசக்கரன் பாதாரவிந்தம் பாற்கடல்மீது பற்றிச் சேர்ந்ததனல் சீர்பாதமெனச் சிறந்த பெயர் சூட்டி 9 O. அரசர்ச்கும் தேவர்க்கும் அரும் விருந்தான வெற்றிக் கொடியை விரும்பிக் கொடுத்து வணிகர் தம்மையும் வரும்படி செய்து இருசாதியாரும் இசைந்தெக்காலமும் ஆட்சிபுரியுமென்று ஆசீர்வதித்து 95 எழுத்தைப் பாரரசன் இவர்கட்கீந்து குடிசனங்களால் கோயில் சிறக்க சாதிக் காணிகள் சகலருக்குங் கொடுத்து செங்கோல் வேந்தனுந் தேவியுமாக கண்டி மாநகரைக் கனம்பெற அடைந்தார். 00
இப்பாடலின்படி இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கப்பல்
வரும்போது. திருக்ேஷ்ணமலைக்கண்மையில் கப்பல் தரித்து நின்ற தும், அந்த இடத்தில் ஆழ்கடலில் பிள்ளையார் விக்கிரகமொன்று கண்டு எடுக்கப்பட்டதென்றும், சிந்து (கடல்) யாத்திரையில் கண்டெடுத்த, இப்பிள்ளையாரை வீரமுனையில் இறக்கி, அங்கு கோவில் கட்டி வழிபாடாற்றினர் ன்ன்றும் தெரிகின்றது. கோவில் கட்டுவதற்கு நிலமும், கோவிற் தொண்டர்களுக்கான குடி
- 40

யிருப்பு நிலமும், கோவிலுக்குரிய விளைநிலமும் மானியமாக வழங்கப்பட்டதென்றும் இப்பாடலால் அறிகின்ருேம்.
உடன் சென்ற அந்தணர்கள் இப்பிள்ளையாருடைய பாதம் பற்றியதனுல் "சீர்பாதர்' எனப் பெருமைப்படுத்தப்பெற்ருர்கள் என்றவொரு குறிப்பும் காணப்படுகின்றது. மட்டக்களப்பில் சீர் பாதக்காரர் என்று ஒரு பகுதி மக்கள் வாழ்கிருர்கள். அவர் களுக்கும் இங்கு குறிப்பிடப்பெற்ற "சீர்பாதர்' என்னும் பெய ருக்கும் தொடர்பிருத்தல் கூடும். இதுபற்றிக் காலஞ்சென்ற திரு. அருள் செல்வநாயகம் அவர்கள் எழுதிய கட்டுரையினை இங்கு சேர்த்து நோக்குதல் அறிஞர் கடனுகுழ்.
இது தவிர இப்பிள்ளையார் கோயில் பற்றிய கல்வெட் டொன்றும் கிடைத்துளது. அது வருமாறு;-
*சகார்த்தம் கங்யன் (கி. பி. 1317) ஆண்டு சய வருஷம் தை மாதம் வடய (20)ம் தேதி வெள்ளிக்கிழமை கூடிய சுப யோக சுபதினத்தில் இலங்கை அதிபதி இராசேந்திரா சிம்மாச னத் தெழுந்தருளிய சமுகம் மதுரைப்பட்டணம் அருணுசலசெட்டிகந்தப்பச் செட்டி அவருடன் யக (1) செட்டிப் பிள்ளைமார்களும் குமா ரத்திக்குதவியாகச் சிந்து யாத்திரைப் பிள்ளையாரையும் கொண்டு இலங்கைத்தீவு மட்டுக்களப்பு வீரமுனையில் வந்திறங்கி பிள்ளையாரையும் அவ்விடம் வைத்துப்போட்டு செங்கடக நகரி பண்ணகசாலையில் வந்து குமாரத்தியையுங் கொண்டு சேர்த்து இராசாவிடத்தில்ப் போய் முகதெரிசனை பண்ணி முட்டுக்குத்தித் தெண்டம்பண்ண, இராசா திருமனதிரங்கி என்ன வேண்டுமென்று கேட்க மட்டுக்களப்பு வீரமுனையில் குடியிருக்கவும் வயிற்று வளர்ப்புக்குப் பூமி சம்பத்துக் கிடைக்கவேண்டுமென்றதற்கு, இறங்கின இடத்தில் குடியிருப்பும், பள்ளப்பத்து வெளியும், ஏத்தாலை வெளியும், முன்மாரிக்காடு நிலமும், குளம் கோபுரம் கட்டிக்கொடுக்கப்படும். பூமிக்கெல்லையாவது கிழக்குத் தகட்டு முரிவளவும் ஏருக்கு நாட் பார்த்த கல்லுகாமுச்சி- 3, வடக்கு வம்மியடிப்பிட்டி, தெற்கு ஏதுக்கல்லு காமுச்சி-2. இவ்வளவு நிலத்தையும் யஉ (12) செக்டிப்பின்வடிாற்களும், அவரவர் பிள்ளை பிள்ளை தலைமுறைகளுக்குழ் ஆண்டனுபவித்து வரவும், குமாரத்தி கொண்டுவந்த 3கேர்ல்டுத்தில் வத்தையூரும் அதற்குச் சொந்தக் குழ்ை, விவரிக்குழம், மட்டுக் களப்பு நாடு முழுதிலுமிருக்கும் பூெண் பிள்ளைகள்” சகலரும் வருஷ சம்பளம், அதைக் கே யிலுக் சிஆெடுகிழ் என்று நிச்சயித்துச் சிங்க முத்திரையும் i. திரீக்ைேகயும் கொடுத்தபடிக்குக் கொச்சி, கொல்லம் கோவ்ை ந4ச்4ந்தவிருந் தரசாளும் புவனசிங்க சுவாமி நமிசித்தே ஓடிசித்தீே4றிரிேத்து.'
--س-lشس

Page 35
இந்தக் கல்வெட்டுப் பகுதியில் இராசேந்திரச் சோழன் பெயர் குறிப்பிடப்படுகின்றது. அக்காலத்தில் இருந்த சோழ அரசன் பெயரை இலங்கையிலிருந்த அவருடைய சிற்றரசருக்கு கூறுவதுண்டு. அவ்வாறன ஒரு தமிழ்ச் சிற்றரசருக்குப் பெண் கொண்டுவந்த செய்தியைக் கூறுகிறது இக்கல்வெட்டு. அவ்வாறு கொணர்ந்த பன்னிரண்டு செட்டிப்பிள்ளைமார்களுக்கும், வழியில் திருகோணமலைக்கருகே கடலில் கிடைத்தவர் இந்தச் சிந்து யாத் திரைப் பிள்ளையார். அவருக்கு அரசன் வீரமுனையில் கோவில் கட்டிக்கொடுத்த வரலாறும், அதற்குக் கொடுத்த காணி பூமி முதலிய மானியங்களும் இக்கல்வெட்டில் தெரிகின்றன.
இக்கல்வெட்டையும், இப்பாடலையும் பிரதிசெய்து கொடுத் தவர் காலம்சென்ற திரு. மு. அருணுசலம் என்பவர். வீரமுனை யைச் சேர்ந்த இவர், மண்டூர்த் தபாற்கந்தோருக்குத் தபால் விநியோகிக்கும் உத்தியோகத்தராக மாற்றம் செய்யப்பெற்று வந்தபோது, ‘மண்டூர் முருகன் மலரடி சரணம்" என்று கூறி மனைவி மக்களோடு மண்டூரிலேயே குடியிருந்தவர். இவர் காலம் சென்றதால் இக்கோயில்பற்றிய ஆராய்ச்சி தடைப்படலாயிற்று எனலாம்.
கல்வெட்டிற் கூறப்பட்டுள்ள காணிகளனைத்தும் இக்கோவி
லுக்கு இப்போது கிடைப்பதாயிருந்தால் இதன் செல்வநிலை மிகுதியும் போற்றப்படலாகும்.
-42

2ஆவது இயல் :
பிள்ளையார் கோவில் மூன்று.
(3) மண்டூர் - நாகஞ்சோலை
மாணிக்கப்பிள்ளையார் கோவில்
இத்திருத்தலம் கி. பி. 12ஆம் நூற்றண்டில் எழுந்த பழமையானதாகும். 1107ஆம் ஆண்டு வரை மண்டூர்ப் பகுதியை அரசாண்ட தமிழ்ச் சிற்றரசன் மண்டுநாகன் என்பவன். அவனே மண்டூர் முருகையன் கோவிலையும், கோவிற்போரைதீவுச் சித்திர வேலாயுத சுவாமி கோவிலையும் புதுப்பித்து வளம் செய்தான் என்பதை அக்கோவில்கள் பற்றிய கட்டுரைகளில் அறிந்தோம்.
மண்டூர்க் கோட்டைமுனைத் துறையில் இவனது கோட்டை யொன்று இருந்தது என்பது ஐதீகம். இப்படிப் பழமையான கட்டிடங்கள் இருந்ததற்குச் சான்ருக மண்டூர்க் கோட்டை முனைத் திடரிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் பல இடி சுவர்களும் அத்திவாரங்களும் அவ்விடத்துக்காடுகளுக்கிடையே காணப்படுகின்றன. இத்துறையடியிலிருந்து சுமார் மூன்று மைல் தூரத்துக்கு மேற்கு நோக்கி ஒரு நேர் கோடு கிழித்தால், அக் கோட்டில் முறையே துறையடி மாரியம்மன் கோவிலும், மண் டூர் முருகையன் கோவிலும், சுமார் பத்து வருடங்களுக்கு முன் தோன்றிய ஒரு நாகதம்பிரான் கோவிலும் முடிவில் இந்த மாணிக்கப்பிள்ளையார் கோவிலும் இடம்பெறக் காணலாம்.
மண்டுநாகனுக்குப் பின்னர் மாகோன் என்பவன் (1215 - 1245) ஆட்சிக்கு வந்தான். இம்மன்னனுக்கும் கண்டி இராச்சி யத்துக்குமிடையே பலவிதத் தொடர்புகள் இருந்தன என்பதற் குச் சான்றுகள் உள. கண்டிக்குப் போகவும் வரவுமான ஒரு வழி, இம்மாணிக்கப்பிள்ளையார் இருக்கும் இடத்தருகே சென் றது. இதனல், முதலில் வழிப்போக்கர் ஒருவர் வழியருகே நின்ற ஒரு ஆலமரத்தின்கீழ் விநாயகப் பெருமான நினைந்து சிலை யொன்றினைவைத்து வழிபாடாற்றினர். அந்த ஆலமரத்தின் பின்னல் வழிக்குக் குறுக்காக அருவியொன்றும் ஒடிக்கொண் டிருந்தது. அந்த இடமும் விநாயகருக்குப் பொருத்தமாக அமைந்தது. எனவே அந்த வணக்கமும் வழிபாடும் நிலைபெற்று விட்டது எனலாம்.
س-43-س

Page 36
இந்த இடம் நாகமரங்கள் நிறைந்த ஒரு பெருஞ்சோலை யாகும். ஆனை அரவம் நாகஞ்சோலையில் பேர்பெற்ற ஒன்று. சுமார் ஐம்பது ஆண்டுகளின் முன்பு எல்லாம் இந்த ஒலி மண் டூரையே கலக்கி நிற்கும். இது நானும் நேரில் அறிந்த உண்மை. எனது தந்தையாரும் இன்னும் மூவரும் சேர்ந்து, (விநாசித் தம்பி, பூபாலபிள்ளை, முருகேசபிள்ளை, தம்பார் ஆகியோர்) அப்போதைய ஆங்கில அரசினரிடமிருந்து, ஆளுக்கு மூன்று ஏக் கர் காட்டு நிலத்தை இப்பிள்ளையாரடி முன்றிலில் வாங்கிக் காடு வெட்டித் திருத்தி வயலாக்கினர்கள். ஆனல் வேளாண்மை செய்து, வயல் எப்படி விளைந்தாலும் வீட்டுக்கு நெல்லே வந்து சேருவதில்லை. காரணம், வேளாண்மை வெட்டியபின் வைக்கும் சூட்டை ஆனைகள் இரவில் வந்து தின்று அழித்துவிடுவதாகும். அதனல், எல்லோரும் சேர்ந்தும், பின்னர் தனித்தனியாகவும் பொங்கலிட்டுப் பெரிய பூசைகள் செய்து “ஆனைக்கரைச்சல்” குறைய இப்பிள்ளையாரை வேண்டிச், சில ஆண்டுகளில் வெற்றி யும் பெறலாயினர். இக்காலங்களில் இந்தப் பொங்கல் பூசை களை மேற்கூறிய நால்வரில் ஒருவரான பூசாரி தம்பாரே செய்து வந்தார். இத்தம்பார் என்பவர் துறையடி மாரியம்மன் கோவி லுக்குரிய ஒரு பங்குப் பூசாரியாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்லாண்டு காலமாக மர நிழலில் வீற்றிருந்த பிள்ளை யாருக்கு திடீரென ஒருநாள் ஆலமரம் வீழ்ந்து வெறுமை செய் தது. பின்னர் சில காலத்தால் (நூறு வருடங்களின் முன்பு) பலர் சேர்ந்து நீளமான மண்டபமொன்றை கர்ப்பக்கிருகம் போன்ற அறை ஒன்றுடன் அமைத்தார்கள். அக்காலத்திலே சின்னுன்சாமி என்று யாவரும் அழைக்கும் சந்நியாசி ஒருவர் கோவிற் பூசைப் பணிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். பின்பு காலப்போக்கில் பொங்கலும் பூசனைகளும் வளரலாயின.
மண்டூர்த் தீர்த்தத்தன்று, மண்டூர் முருகன் கோயிலைத் தஞ்சமாகக்கொண்ட சாதுக்களும், சந்நியாசிகளும் இங்கு சென்று மிகப்பெரிய பொங்கல் செய்து பூசைகளாற்றுவது வழக்கம். இத் தகைய ஒரு விழாவில், சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன் 1934 ஆம் ஆண்டு பூரீ சரவணபவாச் சாமியார் தலைமையில் நடந்த பூசையில் யானும், என் உடன் மாணவர் சிலரும், சம் மாந்துறையைச் சேர்ந்த ஆசிரியராகிய காலஞ்சென்ற பரசுரா ம பிள்ளை என்பாரும் கலந்து பயன்கொண்டமை இந்த இடத்தில் நினைவுக்கு வருகின்றது. அப்போது பூரீ சரவணபவாச் சாமியிட்ட மிருந்து இக்கோயில்பற்றி வரலாற்றுத் தொடர்புள்ள சில குறிப்பு களை அறிய முடிந்தமை பெரும்பேறெனக் கருதுகின்றேன்.
பூரீ சரவணபவாச்சாமி எங்களைப்பார்த்து, சிறப்பாக என் னிடம் "உனது இனத்தவருக்கு மண்டூர் முருகையன் கோவிலில்
-44

வண்ணக்கர் என்ற வேலையைத் தந்தது யார்?' என்று கேட் டார். அதற்கு யான் தெரியாது சுவாமி” என்றேன். பின்னர் *கண்டனெடு சருகு பில்லி கட்டப்பத்தன்' என்ற ஒரு பாடலின் முதலைச் சொல்லி இதில் வருகிற அந்த அரசன் பெயரென்ன என்ருர், அதுவும் எனக்குத் தெரியாதாகையால் அவ்வாறே பதிலிறுத்தேன். “அவன் தான் மாகோன் என்னு மரசன்’ என் ரூர். "அவனே இப்பெருமானுக்கு ஒரு சிறு கோவிலையும் கட்டி ஞன். அந்தக் கோவில் இப்போது இல்லை" என்று கூறினர். அப்போது இந்தப் பாடல் எனக்குத் தெரியவில்லை. இப்பாடல்,
'கண்டனெடு, சருகுபில்லி, கட்டப்பத்தன்,
கருதரிய கவுத்தனும், அத்தியாயன்,
மண்டலத்தில் பொன்னச்சி, வயித்தி யென்று கோவசியர் மக்களிலே வருணமாக்கி
பண்டுமுறை தவருமல் எழுகுடியாய்ப்
பகுத்தீசர் பணிபுரியப் பரவணியாய்
அண்டர் தமைச் சாட்சிவைத்துத் தத்தம் செய்தான்
அணிதிகழும் மாகோனம் அரசன்தானே"
என இப்பொழுது அறிந்துகொண்டேன்.
கண்டன்குடி, சருவிலிகுடி, கட்டப்பத்தான்குடி அல்லது சங்கரப்பத்தான்குடி, கவுத்தன்குடி, அத்தியாகுடி, பொன்னுச்சி குடி, வச்சினுகுடி என்ற ஏழு குடிகளையும் எடுத்துக்காட்டுவது இப்பாடல். இக்குடிகளில் முதல் மூன்று குடிகளையும் திருக் கோவிலிலும், மற்றைய குடிகளை மண்டூர், பழுகாமம், களு வாஞ்சிக்குடி என்னுமிடங்களிலும் குடியேற்றினர் என்பதும், இவர்களிலிருந்தே திருக்கோவில், கொக்கட்டிச்சோலை, மண்டூர் முதலான இடங்களிலுள்ள கோவில்களுக்கு வண்ணக்குமார் தெரிவுசெய்யப்படுவர் என்பதும் மாகோன் செய்த அறுதி உரை யாகும்.
இது ஒரு பாலாக, மண்டூர்க் கோவிலிலிருந்து கப்புகஞர் ஒருவர், முன்னர்க் கதிர்காமத்திற்குப் பலாப்பழம் ஒன்றை நேர்த்திக்கடன் பண்ணிக் கொண்டுபோய் ஒரு மதிய பூசைக்குக் கொடுத்துவிட்டு மறுநாள் மதிய பூசைக்கு மண்டூருக்கு வந்தார் என்பது ஐதீகம். இவர் சென்ற வழி இம்மாணிக்கப் பிள்ளை யார் கோவிலடி வரைக்கும்தான் அறியமுடிந்தது. அவர் சென்று வந்த அச்சுருக்கமான வழியை மற்றையோரால் அறிய முடிய வில்லை. பிறகு அவ்வழியே சென்றுவந்த ஒரு சிலரை நாமறி வோம். மண்டூரிலிருந்து காலஞ்சென்றவர்களான ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும், பாலமுனைக் கோணமலை உபாத்தியாயர் அவர்களும் அவருட் குறிப்பிடத்தக்கோராவர். இவர்கள் கதிர்
- 45

Page 37
காமத்திலுள்ள மாணிக்கப்பிள்ளையாரை நினைந்து, மண்டூர் நாகஞ்சோலையிலுள்ள இப்பிள்ளையாரையும் மாணிக்கப்பிள்ளை யார் என்று சொல்லி வழிபாடாற்றிச் சென்றுள்ளார்கள் எனத் தெரிகிறது. இவைகளால் இத்தலத்தின் பழமையையும், இப் பிள்ளையாரின் பெயர்க் காரணத்தையும் ஒருவாறு ஊகிக்கமுடி கின்றது.
மண்டுநாகன் என்பவனுக்கும், மாகோன் என்பவனுக்கும் இடைப்பட்டு வேறு சிற்றரசர்கள் ஆண்ட காலம் சில கழிகின் றது. மண்டுநாகன் காலத்திலிருந்து, மரநிழலின்கீழ்வைத்து வழி படப்பெற்றுவந்த இப்பிள்ளையாருக்கு மாகோன் சிறு கோவில் ஒன்று அமைத்திருத்தல் கூடும். இவன், போரைதீவுச் சித்திர வேலாயுத சுவாமி கோவிலும், மண்டூர் முருகையன் கோவி லும் மண்டுநாகனுக்குப் பின்னர் வந்தவரால் இடித்து அழிக்கப் பட்டதால் அவற்றை மீண்டும் புதுப்பித்தான் என்று மட்டக் களப்பு மான்மியத்தால் அறிகின்ருேம். அப்படி அவற்றைக் கட் டும்போது இம்மாணிக்கப் பிள்ளையாருக்கும் கோவில் அமைத் தான் என்பதையே பூரீ சரவணபவா சாமியாரும் குறிப்பிட்டுள் ளார். இங்கு இவ்வாறன கட்டிடங்கள் இருந்தமை என்பதற்கு கோவிற் கிணறுகள் தோண்டும்போது வந்த பழைய கட்டிட அத்திவாரங்களும் சான்ருகின்றன.
இப்போது நடைமுறையில் தினப்பூசையும், வெள்ளிக் கிழமைகளிலும், மற்றும் விசேட நாட்களிலும் சிறப்புப்பூசைகளும் நடைபெறுகின்றன. அடியார்கள் ஆற்றும் பொங்கல் பூசைகளும் தினமும் பெருகிக்கொண்டேவருவது இம்மூர்த்தியின் மகிமை யைக் காட்டுகிறது. சேனநாயக்க சமுத்திரம் கட்டப்பட்ட பின் னர் நீர்ப்பாசன வசதி மிகுந்ததால் இப்பகுதிக் காடுகள் அழிக் கப்பட்டு, வயல் நிலங்களும், குடியேற்றத் திட்டங்களும் பெருகி யுள்ளன. இதனுல் இப்பகுதியிலுள்ள குடியேற்றத் திட்டங்களில் வாழ்வோர் இம்மாணிக்கப்பிள்ளையாரைத் தம் வாழ்வின் உயர்வு நலம் குறித்து வழிபாடாற்றுதலும் பெருகியுள்ளது.
இக்கோயிலுக்கு நாமறிந்த வரையில் மூன்று ஏக்கர் நெற் காணி சொந்தமாயுள்ளது. வழிபடுவோருள்ளிருந்து ஒரு குழு தெரிவு செய்யப்பட்டு நடைமுறை நிருவாகத்திலுள்ளது. ஆயி னும் இக்கோயில் முறையாக மண்டூர் மக்களால் பொறுப்பேற் கப்பட்டு நிருவாகம், ஆலயக் கட்டிட வேலைகள் என்பன நடத் தல் வேண்டும். அனைத்திற்கும் நாகஞ்சோலை மாணிக்கப்பிள்ளை யார் திருவருள் துணை நின்று வழிநடத்துமாக.
- 46

3ஆவது இயல்:
சிவன் கோவில் ஒன்று.
செட்டிபாளையம் சோமநாத இலிங்கேஸ்வரர்
சோமகலாநாயகி கோவில்
பDட்டக்களப்பிலிருந்து கல்முனைக்குச் செல்லும் பிரதான பாதையில் மட்டுநகரின் தெற்கே பன்னிரண்டு மைல் தொலை யில் அமைந்திருப்பது செட்டிபாளையம் என்னும் சீர்பெறுகிரா மம். செட்டிமார் பாளையமிட்டிருந்து தங்குமிடம் என்ற கருத் தில் இவ்வூரின் பெயர் அமைந்துள்ளது. வடக்கே குருக்கள் மடம் என்னும் கிராமத்தினையும் தெற்கே மாங்காடு என்னும் கிராமத் தினையும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கடலையும் மேற்கே மட்டக்களப்பு வாவியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது இக் கிராமம். நெய்தல் நிலமும், மருத நிலமும், தம்முள் மயங்கி நிற்கும் காட்சியை இக்கிராமத்தில் காணலாம்.
பொருட்செல்வமும் அருட்செல்வமும், கல்விச் செல்வமும் நிறைந்ததான, பண்பான, பழமையான ஒரு கிராமம் இது: கிழக்கிலங்கையில் வாழ்ந்த கணபதிப்பிள்ளைப் புலவர், சின்னவப் புலவர் ஆகியவர்கள் இக்கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கிராமத்தின் வடக்கு எல்லையில் சித்தி விநாயகர் ஆலயமும் தெற்கு எல்லையில் பூரீ முருகன் ஆலயமும் அமைந்துள்ளன. ஊரின் மத்தியில் வங்காளவிரிகுடாக் கடலை யும், மட்டக்களப்பு வாவியையும் இணைக்கும் வகையிலே நேரான தொரு பாதையுண்டு. இப்பாதை செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்துடன் தொடர்புடையதாகக் கர்ணபரம்பரைக் கதை கூறுவர். அம்மன் கோயிலின் அடிக்கல் நாட்டும் நேரத்தை அறிவிப்பதற்கு கடலிலே ஒரு வெடி கேட்குமெனவும் அப் பொழுது “கட்டாடியார்” எனப்படும் பூசகர் அடிக்கல் நாட்ட வேண்டுமெனவும் அம்மன் கட்டளையிட்டாராம் என்று ஒரு ஐதீ கம். இப்பாதையும் பிரதான பாதையும் சந்திக்கும் இடம் நாற் சந்தியாக அமைந்துள்ளது. இச்சந்தி செட்டிபாளையத்தின் கேந் திரஸ்தானமாகவும், மத்திய இடமாகவும் முக்கியம் பெற்று விளங்குகிறது. இப்பாதையின் மேற்குப்புற முடிவிடத்திலேயே செட்டிபாளையம் பூரீலழறி கண்ணகியம்மன் ஆலயம் அமைந்துள் ளது.
-47

Page 38
மகா வித்தியாலயம் அமைந்துள்ள இச்சந்தியிலிருந்து கிழக்கே சுமார் 50 யார் தொலைவில் இச்சிவன் கோயில் அமைந் துள்ளது. கடற்கரை சார்ந்த இடமாகையினுல் வெண்ணிற மணல் கோயில் வீதியைப் புனிதமாகக் காட்டி நிற்கின்றது. கோயிலில் இருந்து சுமார் 4 மைல் தொலைவிலே கடல் கண் ணுக்குத் தெரிகின்றது. 4 ஏக்கர் நிலப்பரப்பு இக்கோயிலுக்குரி யது. கம்பிவேலியிடப்பட்டு இவ்விடம் பாதுகாக்கப்பட்டுள்ளது. கல்லாலான ஆலயம் இவ்விடத்தில் பொலிவுடன் காட்சி தரு கின்றது. மடாலய அமைப்பிலேயே ஆலயம் கட்டப்பட்டுள்ளது. மூலமூர்த்தியாகச் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த இலிங்கம் இந்தியாவில் இருந்து பூரீலழறி சோமேஸ்வரா னந்தகிரி சுவாமிகளால் தருவிக்கப்பட்டது. இது நுட்பமான வேலைப்பாடுகளும் பூரணமான உருவமும் உடையது. இரண் டாம் மண்டபத்திலே சோமகலாநாயகியின் திருவுருவமும் விநாய கர் திருவுருவமும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சண்டேஸ்வரர், நந்தி பலிபீடம் ஆகியனவும் அமையப்பெற்றுள்ள இவ்வாலயம் தெற்கு வாயிலாக அமைக்கப்பட்டுள்ளது. அம்பாளும் தெற்கு நோக்கிய பார்வையிலேயே வைக்கப்பட்டுள்ளார். வெளியே வைரவர் ஆலயமும் உண்டு. தீர்த்தக்கிணறு, மடைப்பள்ளி ஆகியனவும் அமையப்பெற்றுள்ளன. வீதியைச் சுற்றிப் பலவகைப்பட்ட பூ மரங்களும் நட்டுப் பராமரிக்கப்படுகின்றன. வில்வமரங்கள் அதிக மாகக் காணப்படுவது விசேடமாகக் குறிப்பிடப்படவேண்டிய தாகும். இக்கோயிலின் மேற்குப் புறமும், தெற்குப் புறமும் பாதைகள் எல்லைகளாகவுள்ளன. கிழக்கும், வடக்கும், மக் களுடைய குடியிருப்புகள் காணப்படுகின்றன. ஆலய வீதி எந்த நேரமும் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டு புனிதமான நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கிலங்கையிலே, கிராமப் பகுதிகளிடையே சமய அறிவு குறைவாகவும், விழிப்புணர்ச்சி குறைவாகவுமிருந்தகாலத்திலே இவற்றை ஊட்டிவளர்த்தவர்களுள் பூரீலபூரீ சோமேஸ்வரானந்த கிரி சுவாமிகளும் குறிப்பிடக்கூடியவர். இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம், அறபு, மலையாளம் போன்ற பல மொழிகளைப் பேசக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். சமய உண்மைகளை நன்முகக் கற்றறிந்தவர். மகாபாரதம், கம்பரா மாயணம், கந்தபுராணம், போன்றவற்றைப்பற்றியும், சமய தத்துவங்களைப்பற்றியும் பல இடங்களிலே பிரசங்கம் செய்தார். குருக்கள் மடத்திலே மகாவிஷ்ணு ஆலயத்தினை அமைத்தவரும் இவரே. இவரது முயற்சியினல் 1940ம் ஆண்டு தை மாதம் 11ந் திகதி செட்டிபாளையத்தில் ஆண்களுக்கென “திருவருள் வாலிபர் சங்கம்' அமைக்கப்பட்டது. 23-05-40ந் திகதி பெண்களுக்கென
- 48

*திருவருள் மாதர் சங்கம்’ ஒன்று அமைக்கப்பட்டது. வாலிபர் சங்கம் வெள்ளிக்கிழமைதோறும் ஆலயத்தில் கூடிக் கூட்டுப் பிரார்த்தனையும் கூட்டமும் நடத்திவருகின்றது.
மாதர் சங்கம் செவ்வாய்க்கிழமைகளில் இவ்வாறு நடாத்தி வருகின்றது. ஒலைக்கொட்டிலால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் சுவாமி தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சி இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. அண்மையில் இச் சங்கத்தின் 2040 கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. மேலே குறிப்பிட்ட இரு சங்கங்களும் அவை ஆரம்பிக்கப்பட்ட தினங் களில் தமது ஆண்டு விழாக்களை நடாத்திவருகின்றன. அன்றைய தினம் ஆண்டறிக்கையும், வரவு செலவுக் கணக்கறிக்கையும் வாசிக்கப்படுவதுடன் நடப்புவருட உத்தியோகஸ்தர் தெரிவும் இடம்பெறுகின்றன. இவ்விருசங்கங்களுமே இவ்வாலயத்தின் நிருவாகப் பொறுப்பினை ஏற்று நடாத்திவருகின்றன.
1940ம் ஆண்டு சுவாமி அவர்களால் இந்தியாவிலிருந்து அழகிய அருள் பொழியும் சிவலிங்கமொன்று தருவிக்கப்பட்டது அச்சிவலிங்கம் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் ஒலையினுல் அமைக்கப்பட்ட கோயிலில் வைத்துப் பூசிக்கப்பட்டு வந்தது. அவ்விலிங்கமே இன்றும் மூலமூர்த்தியாக எழுந்தருளி யுள்ளது. இவ்வாலயத்திற்குச் சொந்தமாக வருமானம் தரக்கூடிய எந்த வசதிகளும் இருக்கவில்லை. ஆலயத்தினைக் கற்கோயிலாக்க வேண்டுமென்ற ஆசை சுவாமிகளுக்கும் பக்தர்களுக்கும் இருந்தது. “சிறுதுளி பெருவெள்ளம்' என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டு செயற்பட்டனர். வாலிபர் சங்க உறுப்பினர்களிடம் LoTg5rrj535i சந்தாப்ப்ணம் ஒழுங்காக வசூலிக்கப்பட்டது. மாதர் சங்க உறுப்பினர்கள் தமது வீடுகளில் சமைக்கும்போது ஒவ் வொரு பிடியரிசி சேமித்து அவற்றைச் செவ்வாய்க்கிழமைகளில் ஆலயத்தில் ஒன்று சேர்த்து நியாய விலைக்கு விற்றுப் பணம் சேர்த்தனர். காணிக்கை மூலம் கிடைத்த பணம் முதலியனவும் ஒழுங்காகச் சேகரிக்கப்பட்டுச் சேமிக்கப்பட்டன.
“யாவர்க்குமாம் உண்ணும் போதொருகைப்பிடி' எனத் திருமூலர் கூறியதன்படி சுவாமிகளின் ஆலோசனைப்படி செய்து வரும் ஒரு கிராமம் செட்டிபாளையம் என்பதனைப் பெருமை யுடன் குறிப்பிடலாம். இவ்விருசங்கங்களின் அயரா முயற்சியின லும், கிராம மக்களின் பூரண ஒத்துழைப்பினலும், சுவாமிகளின் அருளாசியினலும், இறைவனின் திருவருட் கடாட்சத்தினுலும் 1981ம் ஆண்டு கற்கோயில் ஒன்று கட்டிமுடிக்கப்பட்டது. கோயி லின் கட்டிட வேலைகளில் அநேகமானவை சிரமதான அடிப்படை யிலேயே செய்து முடிக்கப்பட்டன.
سست 49 س

Page 39
இவ்வாலயத்திற்குக் கும்பாபிஷேகம் செய்யவும் ஆயிரம் திருநாமம் உடைய சிவனுக்கு ஓர் திருநாமம் சூட்டவும் ஆலோ சனை செய்தனர். இந்தியாவிலே கடலருகிலே பத்திரகிரியென்னும் இடத்திலே தெற்கு வாசல் கோயிலாகச் சிவன் கோயில் ஒன் றுண்டு. உதயகாலச் சூரிய கிரணங்கள் இச் சிவலிங்கத்திலே பட்டுப்பிரகாசமாக இருக்குமாம். அங்குள்ள சிவனுக்கு 'சோம நாதர்' என்று பெயர். இவ் ஆலயமும் கடலுக்கு அண்மை யில் தெற்கு வாயிலாக அமைந்திருப்பதினுல் இங்குள்ள சிவனுக் கும் “சோமநாதர்' என்ற நாமம் பொருத்தமானதென எண் னினர். அது மட்டுமன்றி இவ்வாலயம் அமைவதற்குத் தூண்டு கோலாக இருந்தவரும் இச் சிவலிங்கத்தைக் கொண்டு வந்த வருமான சுவாமிகளுடைய பெயரும் “சோமேஸ்வரானந்தகிரி' என்பதினுல் அவருடைய பெயரும் ஞாபகமாக அமையக்கூடிய வகையிலே இச்சிவனுக்கு ‘சோமநாதர்' என நாமகரணமிடப் பட்டது. அம்பிகைக்குச் சோமகலாநாயகி " எனப் பெயர் சூட்டப்பட்டது. மங்களகரமான துன்மதி வருடம் ஆனி மாதம் 4ந் திகதி வியாழக்கிழமை (18-6-1981) முற்பகல் 10-00 மணி 06 நிமிடம் தொடக்கம் 11 மணி 54 நிமிடம் வரையிருந்த மூலநட்சத்திர சித்தயோக சிம்மலக்கின புதலுரை கூடிய சுப முகூர்த்த வேளையில் களுதாவளைப் பிள்ளையார் ஆலய பூசகர் சிவபூரீ சு. சந்திரசேகரக்குருக்கள் அவர்களின் தலைமையில் பிரதிஷ்டா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இத்தருணத்தில் ஸ்தாபகரான சோமேஸ்வரானந்தகிரி இவ்வுலகில் இல்லாது சமாதியடைந்துவிட்டார்கள்.
அதன் பின்னர் எம்பெருமான் அருட்கடாட்சத்திலே இச் சிவனலயத்தைச் செட்டிபாளையம் சைவப் பெருமக்களின் அயராத உழைப்பினுலும் சுற்றியுள்ள கிராமத்து மக்களின் நிதியுதவியி ஞலும் கற்களால் மேலும் கட்டிப் புனருத்தாரண வேலைகள் செய்து சென்ற சில ஆண்டுகளுக்கு முன்னே பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. இதனைக் குறிக்கும் நோக்காகவும் எம்பெருமான் எழுந்தருளிய 44ம் ஆண்டு நிறைவு விழாவாகவும் 23-5-84ல் விசேட பூசை ஆராதனைகளும் கதாப் பிரசங்கங்களும் சைவ தத்துவச் சொற்பொழிவுகளும் நடை பெற்றன.
தற்போதைய நிலையில் சுவாமி வீதிவலம்வரும் திருவிழாக் கள் நடைபெறவில்லை. விசேட தினங்களில் விசேட பூசைகளும் தீர்த்தோற்சவங்களும் நடைபெறுகின்றன.
1. தை வருடப் பிறப்பு. 2. தைப்பூசம். 3. மாசிமகம்,
-50

மகா சிவராத்திரி. சித்திரைப் புதுவருடப் பிறப்பு. சித்திரா பெளர்ணமியில் சித்திரைக் கதை. ஆனி உத்தரம். ஆடி அமாவாசை,
நவராத்திரி. 10. கேதார கெளரி விரதம். 11. கார்த்திகை விளக்கீடு. 12. கார்த்திகை முப்பது. 13. சுவர்க்கவாயில் ஏகாதசி விரதம். 14. திருவெம்பாவை. 15. திருவாதிரை
என்பன முக்கியமாகக் கொண்டாடப்படுகிறன.
மகா சிவராத்திரி, நவராத்திரி, கேதாரகெளரிவிரத முடிவு, திருவாதிரை ஆகிய நாட்களில் தீர்த்தமாடுகின்றனர். திருவாதிரையையே திருவிழாவுக்குரிய நாளாகக் கொண்டு மகா தீர்த்தமாடுகின்றனர். வா கனங்கள் எதுவுமில்லையாயினும் பூந்தொட்டில் எனப்படும் சிறிய தேரில் சுவாமியின் ஆலயத்தின் அமைப்பை எழுந்தருளப்பண்ணிக் கடலிலே தீர்த்தமாடிவருகின் றனர். மிக விரைவில் வாகனங்கள் எழுந்தருளிகள் செய்தெடுத்து முறையான திருவிழாக்களை நடாத்தவும் நவக்கிரக ஆலயம் ஒன் றினை அமைத்துக் கொள்ளவும் நிருவாகம் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் நான்கு தீர்த்தங்கள் இடம்பெறு கின்றன. இவை கடலிலேயே நடைபெறுகின்றன. மகா சிவ ராத்திரி, நவராத்திரி, கேதாரகெளரி விரதம், திருவெம்பாவை முடிவு ஆகியனவே அவை.
இன்று இவ் ஆலயத்தில் காலை, உச்சி, மாலை வேளைகளில் தினமும் மூன்று காலப் பூசை நடைபெறுகின்றது. இப் பூசை கள் சாதி அடிப்படையிலேயோ குடும்ப அடிப்படையிலேயோ தெரு அடிப்படையிலேயோ அன்றி நடைபெறுகின்றன. வருடம் முழுவதற்கும் செட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பம் ஒவ்வொரு நாளையப் பூசைக்கும் பொறுப்பு ஏற்றுள் ளனர். பூசைக்கு வேண்டிய குறிப்பிட்ட சாமான்களை அவர்கள் கொடுக்க வேண்டும். அத்துடன் பூசகரின் ஒருநாள் சாப்பாட் டுக்குரிய அளவு அரிசி காய்கறி வகைகள் ஆகியனவும், சம்பளப் பணமாக ரூபா 15/-ம் கொடுக்கவேண்டும்.
இச்சிவன் கோயில் கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ளது. நிருவாகிகள் மிகவும் நம்பிக்கையுடனும் பொறுப்புணர்ச்சியுட
ཕག་ 51 མ་ཡང་མང་།

Page 40
னும் நடந்து வருவதினுல் ஆலயம் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்றது. பெருந்திரளான மக்கள் கூடித் திருவிழா முதலியன நடாத்துவதற்கு ஆலய வீதி போதுமானதாக இல்லை. எனினும் செட்டிபாளையம் கிராமத்தைப் பொறுத்த அளவில் சைவசமயப் பணி செய்யக்கூடிய ஒரு சிறந்த நிறுவனமாகச் சிவன்கோயில் அமைந்துள்ளதென்பது குறிப்பிடக்கூடியது. இக் கோயிலின் எல்லைகள் விஸ்தரிக்கப்படக்கூடிய நிலை கெதியில் ஏற்பட்டு, கோயில் நிலப்பரப்புக் கூடியதாக ஆகவேண்டும்.
-52


Page 41

4ஆவது இயல் :
முருகன் கோவில் ஆறு.
1. ஈழத்து - திருச்செந்தூர்
முருகன் ஆலயம், புது கல்லடி.
ஈழத்துக் கிழக்குக் கரையில் மீன்பாடும் தேளுடெனப் புகழப்படும் மட்டக்களப்பில், கல்லடியின் கடலோரத்தில் இவ் வாலயம் அமைந்துள்ளது. இக்கடற்கரையில் நின்றுகொண்டே காலைக் கதிரவன் செக்கச் செவேலென கடலில் உதயமாகும் காட்சியையும், மாலைக் கதிரவன் மறையும் காட்சியையும் கண்டு களிக்கலாம். மட்டக்களப்பு மாநகர் மக்கள் மாலைப் பொழுதை உல்லாசமாகக் கழிக்க இக்கடற்கரைக்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஒ என்று அகன்று விரிந்த நீளமான கடற்கரை சிறுவர்களும் பெரியோர்களும் ஓடி விளையாடக்கூடிய வெண் மணற் பரப்பு.
இக்கடலோரத்தில்தான் எத்தனையோ அரசாங்கத் திணைக் களங்களும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு வீடுகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன. இக்கடலோரத்தில் சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்கள் முன்பே சிதானந்த தபோவனம் என்ற பெய ரில் ஒர் ஆச்சிரமம் அமைத்திருந்தார். அங்கு அவர் அனேக மான தென்னைமரங்களையும் நாட்டியிருந்தார். இப்போது அத் தபோவனம் ஒர் தென்னந் தோட்டமாகவே காட்சியளிக்கிறது. இத்தென்னை மரங்கள் இக்கடற்கரைக்கு மேலும் ஒரு இயற்கை அழகையும் களிப்பையும் அளிப்பதாக இருக்கின்றன.
இந்தத் தென்னந்தோட்டத்தின் மத்தியில்தான் ஈழத்து திருச்செந்தூர் முருகனுக்கும் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் மட்டுமாநகரில், அது வும் கல்லடியின் கடலோரத்தில் அமைந்துள்ள சிதானந்த தபோ வனத்தின் மத்தியில் கட்டவேண்டி ஏற்பட்டதன் காரணத்தை ஓங்காரனந்த சுவாமிகளே கூறுகிருர்கள்.
1965ம் ஆண்டு பெப்ரவரி மாதம் மஹா சிவராத்திரி தினத்துக்கு முதல் இரவு எனது சிவானந்த ஆச்சிரமத்தில் படுத்
திருந்தேன். அன்றிரவு கனவில் தபோவனம் தோன்றியது. அப் போது தபோவனத்தில் ஒரே ஒரு பனைமரத்தைத் தவிர வேறு
سس 53-سس

Page 42
மரங்களே கிடையாது. அந்தப் பனைமர நிழலில் ஒரு காவி உடை தரித்த சுவாமிகள் உட்கார்ந்திருந்தார்கள். எனக்குத் துறவிகளென்ருலே ஒரு தனிப்பிரியம். அவரைக் கண்டதுமே அவசரம் அவசரமாக அவர் இருந்த இடத்துக்குச் சென்றேன். சுவாமிஜி எதற்காக இங்கு வந்தீர்கள்? எப்போது வந்தீர்கள்? எங்கிருந்து வந்தீர்கள்? இப்போது எங்கு போகிறீர்கள்? என் னுடைய உதவியும் எதற்காவது உங்கட்குத் தேவைப்படுகிறதா? என்றெல்லாம் பலகேள்விகளை அன்பாகக் கேட்டேன். மெளன மாக எனது கேள்விகளையெல்லாம் செவிமடுத்துக்கொண்டிருந்த சுவாமிகள் புன்முறுவல் பூத்தமுகத்துடன் தளதளத்த குரலில் இனிமையான தொனியில் விடை பகர்ந்தார்கள்.
'கடலை நோக்கித் தனது வலது கரத்தை நீட்டிய சுவாமி அதோ தெரிகிற திருச்செந்தூரில்தான் நான் இருக்கிறேன். இவ் வழியால் கதிர்காமம் போவது எனது வழக்கம். இப்போதும் கதிர்காமத்துக்குப் போகத்தான் வந்தேன். எக்காலமும் போன்று இன்றும் இந்தப் பனைமரத்தடியில் ஒய்வுபெற்றுக் கொண்டிருக், கிறேன். நீயாவது ஒரு சிறு கொட்டிலை இங்குக் கட்டிவிட்டால் இங்கும் சில நாட்கள் நான் தரித்துப்போக வசதியாயிருக்கும். முடிந்தால் அதைச் செய்துவிடு என்ருர்கள்.” அவ்வளவுதான் நான் கனவு நிலைமாறி நனவுநிலைக்கு வந்துவிட்டேன். ஆனலும், இந்நிகழ்ச்சிகளெல்லாம் எனக்கு நன்ரு க நினைவிலிருந்தன. படுக்கையிலிருந்தபடியே சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். எனது தந்தையாரும், இன்னும் பல பெரியார்களும் பலமுறை சொன்ன ஒரு விடயம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அதாவது "முரு கன்’ இரவு கதிர்காமம் போகிழுர். மயிலின் தோகைகள் இழு பட ஒளிமயமாகப் போவதை நாங்கள் பார்த்தோம் என்பதே அது.
ஆகவே, ஓர் உறுதியும் ஆனந்தமும் எனக்குத் தென்பட் டது. முருகன்தான் இன்று அடியேனுக்கும் காட்சியளித்துள் ளார். அதுமட்டுமல்ல; எனக்கு ஓர் பணியையும் செய்யும்படி கட்டளையிட்டிருக்கிருரே; இன்று சைவ சமயத்தவர்களுக்கெல் லாம் மிகவும் முக்கியமான மஹா சிவராத்திரி தினமுமல்லவா! முருகன் எனக்கிட்ட கட்டளையை இன்றே எப்படியும் நிறை வேற்றியாகவேண்டும். முருகன் அமர்ந்திருந்த அதே இடத்தில் ஒரு கோவில் கட்டிவிடத்தான் வேண்டும் என்ற உறுதியும் பூண்டு விட்டேன். ஆனலும், கோவில் கட்டுவது தனிப்பட எல்லாருக் கும் முடிந்த காரியமா? அதுவும் திடீர்க்கோயில் கட்டவேண்டுமே!
திருச்செந்தூர் தமிழகத்தின் தென் கிழக்குக் கோடியில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவில்
-س-54----

உள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று. மற் றப் படை வீடுகளில் குன்றிலும் மலையிலும் குடியிருக்கும் குமரன். இங்கே அலைவீசும் கடற்கரையில் அழகாகக் கோயில் கொண் டிருக்கிருன். காலையிளங் கதிரவன் நீலவானில் செக்கச் செவே லெனத் தோன்றும் காட்சி, முருகப் பெருமான் நீலமயிலில் அமர்ந்துவருவதைப் பக்தர்களுக்கு நினைவூட்டும். இத்தகைய ஒரு காட்சியைக் கண்டு பக்தி பரவசம ைந்த அருட்பிரகாசர் இராம லிங்க வள்ளலார்,
'சங்க மொலித்தது, தாழ்கடல் விம்மிற்று,
சண்முக நாதரே வாரும், உண்மை வினுேதரே வாரும்,
அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர், ஆறுமுகத்தோரே வாரும்,
மாநிலத்தோரே வாரும், என்று பாடிக் களிக்கிருர். திருச்செந்தூர் சென்று, கலியுகப் பெருமானாகவும் கண்கண்ட தெய்வமாகவும், விளங்கும் வள்ளி மணுளனைக் கண்ணுரத் தரிசித்து, ஆறுமுகனை பாமாலையால் பாடிப் புகழ்ந்த புலவர்கள் பலர். நக்கீரர் தமது திருமுருகாற் றுப்படையில் திருச்செந்தூரை இரண்டாவது படை வீடாகச் சிறப்பிக்கிருர், அருணகிரி நாதரின் 84 திருப்புகழ்ப் பாடல்கள் அழகான செம்பொன் மயில் மேலமர்ந்து அலைவாயுகந்த பெரு மானைப் போற்றுகின்றன. பிறவியிலேயே ஊமையாயிருந்த குமர குருபரர் செந்திலம்பதியை அடைந்து பேசுந்திறன் பெற்றுக் கதிர்வடிவேலனின் பேரில் ‘கந்தர் கலிவெண்பா' வாகக் கவி மழை பொழிந்தார். பகழிக்கூத்தர் திருச்செந்தூர்ப்பிள்ளைத் தமிழ் பாடிக் குறமகள் மணவாளன் அருளால் தமக்குற்ற தீராத வயிற்றுவலி நோய் நீங்கிக் குணமடைந்தார். எழுத்தறிவற்ற ஆலய மடப்பள்ளி ஊழியரான வென்றிமலை என்பவர் அடியார்க் கெளிய ஆறுமுகன் அருளால் திருச்செந்தூர் ஸ்தல புராணம் பாடியுள்ளார். பூரீ ஆதிசங்கரர் செந்தில் நகர் வந்து செந்தி லாண்டவனை வழிபட்டு ஷண்முகர்பேரில் ‘பூரீ சுப்பிரமணிய புஜங்கம்” என்ற வடமொழி நூலைப் பாடினர். புஜங்கம் என்ருல் தோளால் நகர்ந்து செல்லக்கூடிய பாம்பு என்று பொருள். இச் சொல் வடமொழியில் ஒருவித யாப்பைக் குறிக்கும் இத்தகைய புஜங்கக் கவிச் சொற்கள் பாம்பு வளைந்து செல்வதுபோல் சரள மான வார்த்தைகளால் அமைந்துள்ளபடியால் இப்பாமாலைக்குப் 'புஜங்கம்" என்ற பெயர் விளங்குவதும் பொருந்தும்.
பூரீ ஆதி சங்கர பகவத் பாதர் அவர்கள் ஒரு சமயம் சுற்றுப்பிரயாணம் செய்துவருங்காலத்து இவர்களுடைய கல்வி தவம், இவைகளின் சிறப்புக்களைக் கண்டு பொருமையுற்ற அபி
-55

Page 43
நய குப்தர் என்ற புலவர் பூரீ ஆதிசங்கராச்சாரியாரவர்கள் மீது மந்திர ஏவுதல் செய்ததின் விளைவாக ஆச்சாரிய சுவாமி யவர்கள் காச நோயால் பீடிக்கப்பட்டார்கள். இவ்வுபாதை யைப் பொறுக்கமுடியாது இவர் தவிக்கும் காலத்து ஓரிரவு சிவபெருமான் கனவில் தோன்றி பூணூரீ ஜெயந்திபுரம் என்ற தலத்தில் 'ஜயவின்பவடிவமாய் விளங்கும் செந்திற் குமரனைத் தரிசனம் செய்தால் இவ்வியாதி ‘அடியோடு நீங்கிவிடும்” என்று சொல்லி விபூதிப் பிரசாதத்தை ஆச்சாரியார்களுடைய கையில் கொடுத்து அருளினர். அதை வாங்கித் தம் மேனியில் பூசிக் கொண்டு விழித்தெழுந்தார் ஆச்சாரியார் .
உடனே காலையில் யோகமகிமையால் ஆகாய மார்க்கமா கத் திருச்செந்தூர் என வழங்கும் பூரீ ஜெயந்திபுரம் வந்தடைந் தார். அத்தலத்தில் எழுந்தருளியுள்ள பூரீ சுப்பிரமணிய சுவாமி யைத் தரிசிக்கச் சென்றகாலத்து அப்பெம்மானின் திருவடி களில் ஆதிசேடன் பூஜை செய்துவருவதைக் கண்ணுற்றர். உடனே, "பாம்பு’ என்ற பொருள் விளங்கும் வடமொழிச் சொல் லாகிய "புஜங்கம்’ (புஜம் + கம், தோளால் நகரக்கூடியது) அரவம் என்ற வார்த்தையையே தலைப்பாகக்கொண்ட திருச் செந்தூர் முருகப் பெருமானுடைய திருவடிகளிலே வடமொழி யில், முப்பத்திமூன்று கவிகளைக்கொண்ட பாமாலையொன்றை இயற்றிச் சூட்டினர். இதுதான் “திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கமாகும்.
செந்திலாதிபன் மகிமையைச் செவ்வனே விளக்குவதும் , பக்திச்சுவை மிகுந்ததுமான இப்புஜங்கத்தை அடியார்களும் தமிழில் படித்துப் பயனெய்துமாறு கோவை கவியரசு வித்து வான் கு. நடேசக்கவுண்டரவர்கள் தமிழில் தமிழ்ச்சுவை பக் திச் சுவை இவைகள் நனிசொட்டக் கருத்துப் பிசகாமல் கவி யாக மொழி பெயர்த்துத் தந்திருக்கிருர்கள். இக்கவிகளைத் தின சரி பாராயணம் செய்வோர்களிடம் நோய், நொடி, வலிப்பு, பூதபைசாசம் முதலியன அணுகா. தீராத நோயாளிகள், மந்திர பைசாச ஏவுதலால் வாட்டப்படுபவர்கள், இப்புஜங்கக் கவிகளைப் பக்தி ததும்பப் பாடி விபூதி தரிப்பார்களேயானல் சகலவித பீடைகளிலிருந்தும் விடுபட்டவர்களாவார்களென்பது பூரீ சங்கராச் சாரிய சுவாமிகளின் அருள்வாக்கு. பின்வரும் ஐந்து பாடல் களையும் புஜங்கத்தின் மொழிபெயர்ப்பில் இருந்து இங்கு பயன் படும் என்று தருகின்றேன்.
1. சொல்லேது பொருளேது கவியேது வசனந்
துகளேதும் இல்லாத தேதென்பதறியேன் எல்லேறு மறுமாமுகச் சோதி யிதயத்
திருந்தே நறுந்தே னெனும் பாடல் தருமே.

2. மயிலூர்தி சதுர்வேத மறைகின்ற பொருளோன்
மனந்தன் வசங்கொள் மகனுள்ள முறைவோன் பயிலும் மகாவாக் கிலக்கன் சிவன் சேய்
பனவர்க்கு மெய்த் தேவை நினைவின் கண்வைத்தேன்.
3. பெருவேலை யோரத்திலே பாவ நீக்கும்
பிரசித்தி சேர்சித்தர் வாழ்கந்த வெற்பில் ஒரு சோதி வடிவோடு குகை மேவு செந்தூர்
உயிருக்கொருயிர் செம்பொடி பற்றுவோமே.
4. பொற்கோயிற் பொன் மணிக் கட்டிலேறிப்
பொலிகின்ற ஒருகோடி ரவிமங்க வீசும் விற்கோல நற் செந்திலிற் கார்த்திகேயன்
விபுதேகனைச் சிந்தை விழைகின்ற தாலோ.
5. குறமாதி னிருதுங்க தனகுங்கு மந்தான்
கொடுசேந்ததோ அன்பர் குலமீது கொண்ட திறமான அனுராகம் வெளிநின்றிதோ நின்
திருமார்பில் ஒளி செந்திலாயஃது தொழுவேன்.
குறிஞ்சி நிலக் கடவுளான முருகனுக்கு உகந்த இடம் குன்றும் மலையுமே எனினும் செந்திலம் பதியில் மட்டும் அவன் கடற்கரையில் அமர்ந்திருப்பதற்குக் காரணம் உண்டு. தேவர் களைச் சிறைபிடித்துக் கொடுமைபுரிந்த சூரபத்மன் திருச்செந் தூர்க் கடலில் வீரமகேந்திரபுரி என்னும் கோட்டையில் வசித்து வந்தான். அவனை அழிப்பதற்காகவே அவதரித்த முருகன், படை யோடு இங்குவந்து தங்கி, சூரனேடு, போரிட்டு அவனை அழித் துத் தேவர்களைச் சிறை மீட்டபின் இங்கே கோயில் கொண் டருளினன்.
ஆறு நாட்கள் கடும்போர் நடந்தது. சூரனின் தம்பிமார் களும் மற்ற அசுரர்களும் போரில் மாண்டனர். கடைசியில் சூர பத்மனுக்கும் ஆறுமுகனுக்கும் கடுமையான யுத்தம் நடைபெற் றது. முருகனின் சுடர் வேல் சூரனின் உடலை இரு கூருக்கியது. சூரன் அழிந்தான். அவன் உடலின் இரு கூறுகளும் மயிலும் சேவலுமாக மாறின. அவற்றை முருகன் ஏற்று மயிலைத் தன்
வாகனமாகவும் சேவலைக் கொடியாகவும் அமைத்துக்கொண்டான்.
சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகப் பெருமான் தன் தந்தை யாகிய சிவபெருமானைப் பூசை செய்ய விரும்பினன். அதற்கா கத் தேவ தச்சன் மயன் இக்கோயிலை உருவாக்கினன். கோயி லின் கருவறையில் பாலசுப்பிரமணியன் சிவலிங்கத்துக்குப் பூசை செய்யும் கோலத்திலேயே இன்னும் காட்சியளிக்கிருன். வருடம்
57

Page 44
முழுவதும் நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் செந்திலம்பதியை அடைந்து வடிவேல் முருகனை வணங்க, வந்த வண்ணம் இருக்கின்றனர்.
ஈழத்து மக்களும் பெருந்தொகையானேர் அங்கு சென்று வழிபாடாற்றி வந்தனர். குறிப்பாக கந்தசஷ்டி விரத காலத் தில் பெருந்தொகையினர் ஈழத்தில் இருந்தும் சென்று, அங்கேயே தங்கியிருந்து விரதமனுஷ்டித்து, முருகனை வழிபட்டுவருவது வழக்கம். ஆனலும் இடைக்காலத்தில் ஏற்பட்ட போக்குவரத் துக் கட்டுப்பாடுகள் காரணமாக ஈழத்து மக்கள். செந்திலம் பதிக்குச் செல்வது மிகவும் குறைந்துவிட்டது. இந்நிலைக்கெல் லாம் கழுவாயாயிற்று சுவாமி ஓங்காரனந்த சரஸ்வதி அவர் கள் கண்ட மேற்படி கனவு, இம்முகமாகத்தான் சுவாமி அவர் கள் ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலயத்தை உருவாக்கி யிருக்கிருர்.
சுவாமிகளின் வாயிலிருந்து மிகுதியைக் கேட்போம். 'ஒரு வேல் செய்து அவ்விடத்தில் நிறுவுவதானலும் சில நாட்களா கும். என்னதான் செய்வதென்று ஒன்றுமே எனக்குத் தோன்ற வில்லை. ஆனலும் இறுதியில் ஒர் முடிவுக்கு வந்தேன். காலை யில் எழுந்து, கடன்களை முடித்துக்கொண்டு, ஆச்சிரமத்தை ஒருமுறை சுற்றிவந்தேன். அங்குகிடந்த கருங்கற்களில் ஒரு நல்ல கல்லைத் தேர்ந்தெடுத்தேன். (உளி, சுத்தியல் போன்ற ஆயுதங் களைக்கொண்டு கல்லைப் பலமுறை) புரட்டிப் புரட்டி ஒர் பிள்ளை யாருடைய வடிவத்துக்கு உடைத்தேன். வேலை முடிந்ததும், கடைக்குச் சென்று கற்பூரம் ஊதுபத்தி அபிஷேகச் சாமான்கள் ஆகியவைகளும் வெற்றிலை, பாக்கு, பழங்களும் வாங்கிக்கொண்டு வந்தேன். ஆச்சிரமத்தில் நின்ற பூமரங்களில் பூக்களும் பறித் தெடுத்தேன். ஆச்சிரமத்திலிருந்த சீமந்திலும் அரை பக்கட் அளவு எடுத்தேன். மேசன் கரண்டி, மட்டப்பலகை ஆகிய சாமான் களையும் எடுத்தேன்.
இவைகளையும் எனது உடைப்பாலெழுந்த பிள்ளையாரை யும் ஓர் பையில் போட்டு எனது துவிசக்கரவண்டியில் வைத்துக் கட்டினேன். சுமார் காலை ஒன்பது மணியளவில் தபோவனத் துக்குப் போய்விட்டேன். அது தபோவனத்தின் ஆரம்ப கால மாதலால் ஒரு துண்டுக் கல்லைக்கூட அங்கு காணமுடியாது. வெறும் மணலாலும், சீமந்தாலும் கோவில் கட்ட முடியுமா? சிறிது நேரம் நின்றுகொண்டே என்னசெய்வதென்று சிந்தித் தேன். ஓர் முடிவு தோன்றி சாமான்களைக் கொட்டிப் பத்திர மாக வைத்துவிட்டு அவைகொண்டுவந்த பையைத் தோளில் போட்டுக்கொண்டு கடற்கரையை நோக்கிச் சென்றேன்.
-58

அங்கு நெடுநேரம் அலைந்து திரிந்து சில சல்லிக் கற்களை பொறுக்கிப் பையில் போட்டுக்கொண்டு பனைமரத்தடிக்கு வந்து சேர்ந்தேன். இவற்றையெல்லாம் பயன்படுத்தி பனைமரத்தடியில் முருகன் அமர்ந்திருந்த இடத்தில் ஓர் மேடை அமைத்தேன். அதன் மத்தியில் நான் கொண்டுவந்த கல்லுப் பிள்ளையாரை யும் நிறுவிப் பார்த்தேன். பனைமரத்தடிப் பிள்ளையார் அழகாகவே இருந்தார். அபிஷேகம், பூசை, அர்ச்சனை, தீபாராதனை, மந்திர ஜெபம் எல்லாம் செய்து முருகனை நினைத்து வழிபட்டுவிட்டு மீண்டும் துவிச்சக்கரவண்டியை எடுத்துக்கொண்டு, எனது ஆச் சிரமத்துக்கு வந்துவிட்டேன். அன்று முதல் அப்பனைமரத்தடி ஒரு வழிபாட்டிடமாகவே இருந்து வந்தது.”
இது நடந்து சுமார் ஒருவருட காலமிருக்கலாம். கவி யோகி சுவாமி சுத்தானந்த பாரதியார் அவரது இலங்கை வருகை யின்போது, மட்டக்களப்புக்கும் வந்திருந்தார். இக்கோயில் இருக் கும் இடத்துக்கும் வருமாறு சில அன்பர்கள் சேர்ந்து அழைத் தோம். அவரும் ஏற்றுக்கொண்டார். அந்தக் கோவில் இருக் கும் இடத்தில் அவசரமாக ஓர் ஒலைக்கொட்டிலும் கட்டினுேம். ஒரு வேலும் செய்தெடுத்தோம். பாரதியாருடன் வேலையும் ஊர் வலமாக மேள வாத்தியத்துடனும் கூட்டுப் பிரார்த்தனையுடனும் கொண்டுவந்தோம். பாரதியார் யாக பூசைகளெல்லாம் செய்து, வேலையும் அந்த ஒலைக் கொட்டிலில் அமைந்திருந்த மேடையில் பிரதிஷ்டை செய்தார்கள். அன்றுமுதல் இக்கோவில் “ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம்” என்று அழைக்கப்பட்டது. இது நடந்தது 1966ம் ஆண்டு வைகாசி மாதம் என்று நம்பு கின்றேன்.
சில ஆண்டுகளின் பின்பு இந்தியாவிலிருந்து வந்திருந்த சிதம்பரப்பிள்ளை என்ற பெயரையுடைய சிற்பாசாரியைக்கொண்டு திருச்செந்தூர் முருகனுடைய வடிவில் ஒரு சிலையும் செய்து பிரதிஷ்டை செய்தோம். 1978ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற் பட்ட குரு வளியின்போது கோவில் எல்லாமே விழுந்து தரை மட்டமாகிவிட்டது. சில மாதங்கள் கழிந்ததும் மீண்டும் அதே இடத்தில் ஒலையால் கோவிலைக் கட்டிவிட்டோம். எக்காலமும் ஒலைக்கொட்டிலைக் கட்டுவது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. ஆகவே கல்லால் ஒரு சிறிய அறை கட்டி அதில் சுவாமியை வைத்து விடவேண்டும் என்ற எண்ணமே முற்பட்டுத் தோன்றியது. அதற்காகிய ஏற்பாடுகளும் செய்தோம். விளம் பரப் பத்திரம் அச்சிட்டு ஊர் மக்களையும் வரவழைத்து செய்தி கள் யாவும் விளக்கினேம். செயல் தொடர்ந்தது.
அதற்கமைய 1980ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி அடிக்கல் நாட்டு விழ மிகச் சிறப்பாக நடந்தேறியது. அப்
-س--59--

Page 45
போது அரசாங்கக் கட்டிடத் திணைக்களத்தில் பிரதம பொறி யியலாளராகக் கடமையாற்றிய திரு. எஸ். சுப்பிரமணியம் அவர்கள் இவ்விழா சிறப்புற நடைபெறுவதற்கு பெரிதும் உதவி ஞர்கள். கால ஓட்டத்திலே ஒரு அறை கட்டுவதென்ற திட்டம் மாறி, துவிதள விமானத்தைக்கொண்ட கர்ப்பக் கிரகமும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், தம்ப மண்டபம், முதலியவைகளையும்கொண்ட ஒரு பெரிய கோவி லாக எமது திட்டமே மாறிவிட்டது.
கோவிலுக்கு 5/2/84ல் மஹா கும்பாபிஷேகமும் மிக விமரி சையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 40 நாட்கள் மண்டலாபிஷேகமும், கடைசியில் சங்காபிஷேகமும் நடைபெற லாயின. சங்காபிஷேகம் முடிந்ததும் முருகன் அலங்காரத் தேரில் எழுந்தருளி இரு தினங்கள் மட்டக்களப்பு மாநகரில் சுற்றி எத் தனையோ ஆயிரம் மக்களுக்குத் தரிசனமளித்து மீண்டும் ஆலயத் துக்கு வந்து சேர்ந்தார். பொன்னூஞ்சல் நிகழ்ச்சியுடன் விழாக் கள் இனிது நிறைவேறின.
இதுவரை காலமும் இந்து ஆலயங்களில் நடைபெற்று வருவது போன்று, இவ்வாலய கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு பிராமணரோ, சிவாசாரியர்களோ அழைக்கப்பெறவில்லை. ஏனைய துறவிகளினதும் உதவியைக் கொண்டு சுவாமி ஓங்காரானந்த, சரஸ்வதி அவர்களே வாஸ்துசாந்தி, யாகபூஜை, கும்பபூசை. மூர்த்தி பிரதிஷ்டை, எண்ணெய்க்காப்பு சாத்துவித்தல், தூபி அபிஷேகம் முதலிய கிரியைகளை எல்லாம் செய்து முடித்து 5.2.84 பகல் 11.30 மணியளவில் மகா கும்பாபிஷேகத்தையும் மிகவும் சிறப்பாக நிறைவேற்றினர்கள். அதேவேளை சுவாமி பிரேமாத்மானந்தஜீ அவர்களும், சுவாமி ஜீவனனந்தஜி அவர் களும் இராமகிருஷ்ண சங்கச் சார்பில் கலந்து கொண்டு இவ் விழாவை சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் காவி உடைதரித்த துறவிகளே இங்கு பூசைக் காரியங்களெல்லாம் செய்து வருகின்றனர். தொழிலுக்காக கோவில்களில் பூசைக் காரியங்கள் செய்பவர்களைவிட இவர்கள் மிகவும் பயபக்தியுடன் மக்களுடைய தொண்டாகவும், பிரதி பலன் கருதாமலும் இக்காரியங்களைச் செய்து வருகிருர்கள்.இது எதிர்காலத்தில் இந்துமத வளர்ச்சிக்கு ஒர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
ஆலயத்தில் காலை 7.00 மணிக்கும் பகல் 12.00 மணிக்கும் இரவு 6.30 மணிக்கும் தினமும் மூன்று காலம் நித்திய பூசை கள் நடைபெற்றுவருகின்றன. தினமும் மூன்று வேளையும் பூசை
-س-60-س--

முடிந்தபின்பு பக்தர்கள் கர்ப்பக்கிருக வாசற்படிவரை சென்று முருகப்பெருமானை நேர்முகமாகத் தரிசனம் செய்ய அனுமதிக்கப் படுகிருர்கள். இவ்விடயத்தில் சாதிமத, இன, பால் வேறுபாடு களும் இல்லாமல் எல்லாருமே முருகப் பெருமானின் குழந்தை கள் என்ற ரீதியில் முருகனைத் தரிசித்து அருள்பெற்று வருகிருர் கள். இந்நிகழ்ச்சி பக்தர்களை மிகவும் கவர்வதாகவும் மகிழ் விப்பதாகவும் இருக்கின்றது. இதுவரை காலமும் ஆலயத்தின் உள்ளே காலடிகூட எடுத்துவைக்கத் தகுதியற்ற சாதியினர் என்று ஒதுக்கப்பட்டிருந்தவர்களுக்கும் இச்சம்பவம் ஓர் பெரிய வரப்பிரசாதமாகவே இருக்கின்றது.
பக்தர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் எவ்வித கட்டணமு மின்றி இலவசமாகவே உள்ளே சென்று நேர்முக தரிசனம்செய்ய அனுமதிக்கப்படுகிருர்கள். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல நூற்றுக்கணக்கான மக்கள் பலபாகங்களிலுமிருந்து செவ்வாய்க் கிழமைதோறும் ஆலயத்துக்கு வருகிறர்கள். கட்டணம் செலுத்தி நேர்முக தரிசனம் செய்ய இயலாதவர்களுக்கும் கூட இது ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது- நேர்முகதரிசனம் செய்யச் செல்வோருக்கு பத்து நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைக்கமைய அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகிறது.
நேர்முக தரிசனத்துக்குரிய விதிகள்:
1. பக்தர்கள் சாதி, மத, இன பால் வேறுபாடின்றி மூலஸ் தானம் வாசல்படிவரை சென்று முருகனை நேர்முக தரிசனம் செய்யலாம்.
2. நேர்முக தரிசனத்துக்கு வருபவர்கள் முடியுமானவரை உடல் உள்ளத் தூய்மையுடனும் ஆசாரத்துடனும் வரவேண்டும்.
3. நேர்முக தரிசனம் தினமும் மூன்று காலமும் பூசை முடிந்த
பின்பு நடைபெறும்.
4. நேர்முக தரிசனத்துக்குரிய அனுமதிப் பத்திரத்தை முன்பே காரியாலயத்தில் பெற்றுக்கொண்டு வடக்கு வாசல் கதவின் முன்பு வரிசையாக நிற்கவேண்டும்.
5. செவ்வாய்க்கிழமை தோறும் இலவச தரிசனம் நடைபெறும். கட்டணம் எதுவுமின்றி அனுமதிப்பத்திரம் இலவசமாக இதற்கு வழங்கப்படும்.
--61-سے

Page 46
6. அனுமதிப் பத்திரத்தை ஒவ்வொருவரும் தனித் தனியாகவே
தங்கள் பெயரில் பெற்றுக்கொள்ளவேண்டும்.
7. விரும்பியோருக்கு உள்ளேயும் அர்ச்சனை செய்து கொடுக்
கப்படும்.
8. நேர்முக தரிசனத்துக்கு உள்ளே செல்லும்போது விரும்பி யோர் தங்கள் அர்ச்சனைத் தட்டுக்களையும் கையில்கொண்டு போகலாம்.
வடக்கு வாசலால் உள்ளே சென்று நேர்முக தரிசனம் செய்துகொண்டு அதிக நேரம் உள்ளே தாமதியாமல் தெற்கு வாசலால் வெளியே வந்து விடல்வேண்டும்.
10. நோயாளரும், கைக் குழந்தைகளும் நேர்முக தரிசனத்துக்கு
அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஆலய முகப்பில் திருச்செந்தூர் முருகனின் திருஉருவமும், ஆலயத்தோற்றமும் வரையப்பட்டுள்ளது. ஒவியர் செல்வம் இவ் ஒவியத்தை வரைந்தார். 28.6.83ல் இவர் ஒவிய வேலைகளையெல் லாம் முடித்து, கண் திறப்பதை மட்டும் முடிக்காமல் பகல் உணவுக்காக வெளியில் சென்றிருந்தார். பின்பு அவர் திரும்பி வந்து பார்த்தபோது இரு கண்களும் தானுகவே திறபட்டிருப்ப தைக் கண்டார். இச்சம்பவம் 28, 6. 83 பகல் 12.00 மணிக்கும் 1.00 மணிக்கும் இடையில் நடந்தது. இவ்வற்புதத்தை நினைவு கூர்ந்து வருடந்தோறும் இத்தினத்தில் ஆலயத்தில் ‘கண் திறந்த விழா சிறப்பாக நடைபெறுகின்றது.
வெள்ளிக்கிழமைதோறும் விசேட பூசை, தமிழில் அர்ச் சனை, அருளுரைகள், கூட்டுப்பிரார்த்தனை ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஆலய ஸ்தாபகர் சுவாமி ஓங்காரானந்த சரஸ் வதி அவர்கள் ஆலயத்தில் பூசைகள் செய்தாலும் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மீக அறிவை ஊட்டுகின்ற வகையிலே பெரிதும் கவனம் செலுத்தி வருகின்றர். இதற்கான அருளுரை கள் சுவாமிகளால் தினமும் விசேடமாக சிறப்பு பூசனைகளின் பின்னர் வழங்கப்படுகின்றன.
வருடந்தோறும் கொடியேற்றத் திருவிழா நடைபெறுவ தற்காகிய ஒழுங்குகe) நடைபெறுகின்றன. ஆனலும் அதற்குரிய காலம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. கந்தர்ஷஷ்டி விரத காலங்களிலும் ஆலயத்தில் விசேட நிகழ்ச்சிகளெல்லாம் நடை பெறுகின்றன.
... 62

கோவில் கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது வேலைகளுக்காக அங்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த பதின் மூன்று பக்கட் சீமந்தை இரவில் யாரோ திருடிக்கொண்டுபோய் விட்டார்கள். முருகன் ஒர் இளைஞனுகச் சுவாமிகளுக்குத்தோன்றி திருடனையும், சீமந்தையும் காட்டிக்கொடுத்தார். பின்பு திருடிய வர்களே சீமந்தை வாங்கி வந்து அதே இடத்தில் அடுக்கிவைத்து முருகனையும் வழிபட்டுச் சென்றனர்.
ஆலய பிரதான வாயில் மேற்குத் திசையை நோக்கிக் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு கட்டியதற்குரிய காரணத்தை சுவாமிகளே கூறுகிருர்கள்.
முருகன் மக்கள் குடியிருக்கும் திசையை நோக்கியிருந்து மக்களுக்கு அருள் புரியவேண்டும். முருகனின் அருட் கண்பார்வை மக்கள் மீது செறியவேண்டும் என்பதே எனது நோக்கம். இதை ஏற்றுக்கொள்கின்ற வகையில்தான் கண்களும் தானகவே திறந் திருக்கின்றன என எண்ணுகிறேன். அதுமட்டுமன்றிக் கடவுள் இல்லாத திசையைக் கண்டுபிடிக்க முடியுமா?
இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ள குறைகளை நீக்கவேண்டு மானல், மக்களை அழிவுப் பாதையினின்றும் திருப்பவேண்டுமா ஞல் சமய தத்துவங்களை மக்களிடையே வளர்க்கவேண்டும். சம யங்களின் மத்திய நிலையங்களாகிய ஆலயங்களில் நடைபெறும் பிழைகளையெல்லாம் நீக்கவேண்டும். ஆலயங்கள் சமய அறிவை மக்களுக்கு ஊட்டக்கூடிய நிலையங்களாக மாற்றி அமைக்கவேண் டும். இவ்வாலயம் மக்களுக்கு ஒரு முன்மாதிரியாகவே விளங் கும். இதைப் பின்பற்றி ஏனைய ஆலயங்களையும் நடைமுறைப் படுத்திக்கொள்ளலாகும்.
“வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கரையுமே - செந்திநகர் சேவகா என்று திரு நீறணிவார்க்கு மேவவராதே வினை"
'ஈழத்துத் திருச்செந்தூர் முருகன்' ஆலயத்தில் குடமுழுக்கு நிகழ்ந்த ஞான்ஆறு பாடப்பட்ட தோத்திரப் பாடல்கள்:
(பாடல்கள்:- ந. அழகேசமுதலி அவர்கள்)
1. ஆதிதனி லருணகிரி யார்கண்ட குருவடிவில்
அக்கமணி காவி தாங்கி அயர்வு கொண்டிளைப்பாறு வான்போன்ற பாவனையில்
அதியோங்கு பனையருகில் நின்று
-س 63 م--

Page 47
ஒதியுணர் வானமுனி ஓங்கார சுவாமிக்கு
ஒளியிரவு கனவில் வந்து ஓம் சுவாமி, யாம் கதிரை செல்மார்க்க மாதலின்
ஒய்வு பெற விங்கு நின்றேன் காதலுட நானுறையும் திருச்செந்தூரதோ வென்னக்
கடல் நோக்கிக் கைகாட்டியென் கருத்தினை நிறைவேற்ற முடியுமானுல் சிறு
கட்டிட மியற்று மென்று சோதித்து நின்று நின் சாதனையை நாட்டியருள்
தூய பெறு சக்தி வடிவே துன்பமிடி வாழ்வகன் றின்பமொடு மிளிரீழச்
செந்தூர்ப் பதி முருகனே!
அளி மலர்ச் சோலைதனில் ரீங்காரம் செய்து மது
அருந்தி யொரு கூட்டி லிடல் போல் ஐயநின் பணிப்புரையில் பரவச மடைந்தவர்கள்
அயராது முயன்றெடுத்து எழிலோவியம் மருவு சிகரமணி மண்டபம்
எம்மவரை நோக்கு முகமாய் இன்று காணுத புது பொற்பொலி விலங்கிட
இயற்று பெருகோல விழாவில் குளிரருட் சக்திமிகு கும்பங்க ணிரைபெறக்
குரவர் மலர் மாரி பொழிய கூறு மறையோதிவரு யாகச் சிறப்பினில்
குடமுழுக் குவந்து மகிழும் தெளியுதிரை கடல்சூழ மட்டு நகர்க் கல்லடியில்
சிவநெறி யறம் வளர்க்கும் சிதானந்த தபோவன மருங்கிலே யுறையீழச்
செந்து ர்ப்பதி முருகனே!
தீய பெரு மவுணனைச் செங்கைவேற் படைகொண்டு
செருவினிற் சென்று தாக்கிச் சேவலும் மயிலுமாயிருகூறு செய்து மலர்ச்
சேவடிக் காளாக்கியுன் தூயதிரு கரியமால் முதலான தேவர்தம்
துன்பந் தீர்த்தாண்டருளிய சுத்த நிர்க்குணமான பர தெய்வமே யெனச்
சோரஞ் செயத் தூண்டிடும் மாயை யிருளூடுருவி நோக்கு புலனைந்திலும்
மயங்க நான் வீழ்ந்திடாமல்
- 64

ஞானமதி நல்கியென் வாழ்வினிது ஓங்கவுயர்
நற்பணிகள் தாங்க வைப்பாய்
பாயிருங் கடல் குழு மட்டுநகர்க் கல்லடியில் பாங் கொளிரும் கோவில் கொண்டு
பணிந்துருகு மடியார்க்குச் சுரந்து வரமருளிழச்
செந்தூர்ப் பதி முருகனே!
பூரீ திருநீலகண்ட வினயகர் ஆலய பரிபாலன சபையினர். செங்குந்தர் வீதி, ஆரையம்பதி, மட்டக்களப்பு, 5.2.84.
ஈழத்து திருச்செந்தூர் திருமுருகர் பதிகம் (அருட் கவிஞர் திமிலைக் கண்ணன்)
1. நடனமயிலேறி வரு உமைபாலகா ! இனிய நல்ல அருட் தெய்வமணியே! கடலோரங் கோயில் கொள் கந்தா கடம்பா
கருணை தரு சிவ சண்முகா! விட முண்ட கண்டனருள் செந்தீப் பிளம்பே
கந்தனே போற்றி போற்றி!
2. சுந்தையே கட்டியிருந் துண்ணு நிலைவரினு முனைக்
கருத்தில் மறவாமை வேண்டும்,
நிந்தை பகை மூன்று எதிர் வந்தாலு முன்னையே
நினைக்கின்ற நெஞ்சு வேண்டும்.
சிந்தையிற் குடிகொண்டு நடனமிடு கந்தாவுன்
தியானத்தில் நிலைக்க வேண்டும்
வந்துதிரை ஓசைதரு கல்லடியிலுறைகின்ற
வரதனே போற்றி போற்றி!
3. காண்கின்ற காட்சிகள் யாவினும் நின்னழகுக்
காட்சியே காணவேண்டும். மாண்பு செறி மங்கையர் குலத்திலே நின்றனது
மாதாவைக் காணவேண்டும் நான் கொடு அச்சமுறு பீதி அறியாமையென
நாடாது செய், துறவு பூண்டுவரு பழனி மலை ஆண்டியே திருச்செந்தூர்ப்
புலவனே போற்றி போற்றி! 4. ஓங்காரானந்தற்கு உண்மைநிலை உணர்த்தியிங்
குறைகின்ற ஒளித் தெய்வமே நீங்காதென் நெஞ்சத்தில் குடிகொண்டு குறைதீர்த்து
நீதியறம்பாட அருள் வாய்,
صس-65---

Page 48
பூங்காவை யுருவாக்கி அன்பு மலரது சாற்றும்
புண்ணியம் எனக் கருளுவாய்
நீங்காது பனையினிழல், அமர் செந்தில் வேலனே
நினது தாழ் போற்றி போற்றி!
5. ஆங்காரம் தீர்க்கவே அன்றயனைச் சிறையிட்ட
ஆண்டவா! போற்றி போற்றி!
ஓங்காரத் தத்துவம் ஒது சிவ குருநாத ஒளிவேலா போற்றி போற்றி!
நீங்காத நீங்கார சக்திக் கனலான
நிறைஞான குரு சண்முகா!
மாங்கனிக் காகமயி லேறியுல கைவலம் வரு பாலா போற்றி போற்றி!
6. ஏங்கியேங்கி யழுது இரு கண்ணினிர் சிந்தி
இறைவனே! உனப் போற்றினேன்,
நீங்காத கருணைமழை பொழி செந்தி நாதனே
நினதடி போற்றி போற்றி (ஒம்)
நசியென்று ஒதினேன் நிதம் நிதம்
உறுபகை யழித் தாளுவாய்!
நீங்கார ஒசைதரு தென்னை சூழ் கல்லடிச்
சிவகுரு போற்றி போற்றி!
பதிகத்தில் முதல் ஆறுபாடல்களுமே இவை. இன்னும் பல
தனிப்பாடல்களும் உள. அவையும் திரட்டிச் சேர்க்கப்பெறின் பக்தர்களுக்குப் பயனுTட்டுவனவாகும்.
- 66

4ஆவது இயல் :
முருகன் கோவில் ஆறு.
(2) திருப்பெருந்துறை - முத்துக்குமார வேலாயுத சுவாமி கோவில்,
மட்டுமாநகரைச் சூழ்ந்துள்ள வாவியின் மேற்குக் கரையில் வலையிறவுக்கும் வேப்படித்துறைக்கும் இடையே வாவியில் மலர்ந்த தாமரையென பொலிவுடன் காட்சிதரும் நிலப்பரப்பே பெருந் துறையாகும். திருவின் பொலிவால் விளங்கும் அது திருப்பெருந் துறையென இன்று அழைக்கப்படுவது.
பண்டைக்காலத்தில் இந்நிலப்பரப்பு வாவியால் சூழப்பட் டிருந்ததாகவும், கடல் வாணிபம் செய்வோர் மட்டுநகர் முகத்து வாரத்தின் வழியே தாம் கொண்டுவந்த பண்டங்களை பெரிய உருக்கள் மூலம் வாவியினுரடாகக் கொண்டுசென்று, பெருந் துறையில் இறக்கியமையாலும், பெரிய உருக்கள் அங்கே தரித்து நின்றமையாலும், இவ்விடம், பெருந்துறையெனப் பெயர் பெற்ற தாக வரலாறு கூறும்.
போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் புளியன்தீவு அன்ன ரால் கைப்பற்றப்பட அங்கு வாழ்ந்த சைவநன்மக்கள் தம் சமயத் தையும் பண்பாட்டையும் பேணிப்பாதுகாக்கும் பொருட்டு, பெருந்துறைக்குக் குடிபெயர்ந்தனர். அக்காலத்து வாழ்ந்தவரும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவரும் சைவமும் தமிழும் வளர்த்த வருமான மாப்பாணர் முத்துப்பிள்ளை என்பவரே பெருந்துறை யில் சிறியதொரு ஆலயத்தை உருவாக்கி அதில் வேலாயுதத்தை ஸ்தாபனம் செய்து வழிபாடாற்றி வரலாயினர். 1837ம் ஆண் டின் நிலவளவைப் படம் ரி. பி. 61533ம் இலக்கப்படி ஒரு ஏக் கரும் பத்தொன்பது பேச்சர்ஸ் விஸ்தீரணமும் கொண்ட காணி இவ்வாலயத்திற்கென அரசினரால் ஒதுக்கப்பட்டமை நோக்கற் பாலது. இதனுல் இவ்வாலயமானது மட்டக்களப்பு மாவட்டத்தி லுள்ள ஒரு பழமைவாய்ந்த முருகனலயம் என்று கூறுவது மிகை யாகாது. இந்த மாப்பாணர் முத்துப்பிள்ளை என்பவர் கொத் துக்குளத்தில் குடியாயிருந்திருக்கிருர். அவருடைய மனைவியின் பெயர் சுப்பிரமணியம் சின்னப்பினளை என்பது. இவரும் கொத் துக்குளத்தைச் சேர்ந்தவர். இவர்களது பிள்ளைகள் வினுசித்தம்பி, வேலுப்பிள்ளை, காளியாத்தா, சின்னத்தம்பி என்போராவார்.
-67

Page 49
இவர்களில் மூத்தவரான வினுசித்தம்பி என்பவர் திருமணம் செய்தது காசிநாதரின் மகள் சின்னம்மா என்பவரை ஆகும். இந்தக் காசிநாதர் பெரியதுறை முருகன் ஆலயத்திற்குச் சாட் டப்பட்ட 1871ம் ஆண்டு தை மாதம் 29ந் திகதி உறுதியில் கொத்துக்குளத்து, முத்துமாரியம்மன் ஆலயத்து மேற்பார்வை turretrid, afá (D6hirt. (One of the Trustees) 6T airpy displit IG கிறது. இவற்றைக்கொண்டு கொத்துக்குளத்து முத்துமரரியம்மன் கோயில், பெரியதுறை முருகன் கோயிலுக்கு முற்பட்டதாகலாம் என்று எண்ண இடமுண்டு.
இந்த மாப்பாணர் முத்துப்பிள்ளையும் இவரின் சகோதரர் மாப்பாணர் - வேலுப்பிள்ளை என்பவரும் யாழ்ப்பாணத்து நல் லூரைச் சேர்ந்தவர்கள். முதலில் இவர்கள் வந்து குடியேறிய இடம் கல்முனைக்கு கிட்டவுள்ள துரைவந்தெய்தியமேடு ஆகும். அங்கிருந்து தாங்கள் வணங்கிய முருகனேடு இவர்கள் பெரிய துறைக்கு வந்து மூத்தவரான வேலுப்பிள்ளை என்பவர் குடி யேறியிருக்கலாம் என எண்ண இடமுண்டாகிறது. அவரே பெரியதுறையில் முருகன் கோயில் உண்டாக்குவதற்கு தனது சகோதரணுகிய முத்துப்பிள்ளையுடன் ஆலோசனை செய்திருக்க லாம் என்று தெரிகிறது. இதனல் பெரியதுறை முருகன் கோயி லுக்கு மூலவர்கள் இவர்களே என்று தோன்றுகிறது.
மாப்பாணர் முத்துப்பிள்ளையின் மறைவின் பின்னர் அன் ஞரின் புத்திரர்களில் ஒருவராகிய வேலுப்பிள்ளையவர்கள், எம் பெருமானுக்கு கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நபனமண்டபம், வசந்தமண்டபம், ராஜகோபுரம், யாகசாலை என்பனவற்றேடுகூடிய ஆகமரீதியான ஒரு பெரியவாலயத்தை அமைத்து ஆறுகாலப் பூசையையும், திருவிழா தீர்த்தோற்சவம் என்பனவற்றையும் சிறப்பாக நடாத்திவரலாஞர்.
ஆலயத்தின் முன்னல் ஒரு சிவன் கோவிலும் அதற்குரிய தீர்த்தக்கேணியும் உண்டு, மேலும் தீர்த்தோற்சவத்திற்காக முருகனுக்கென ஒரு தாமரைத் தடாகமும் ஆலயத்துக்கு முன் புறமாக வாவியின் அருகே அமைக்கப்பட்டுள்ளது. வேலுப் பிள்ளையவர்கள் தன்னையும் தன் தந்தையாரையும் நினைவுகூரும் வகையில் ஆலயத்தின் பெயரை "முத்துக்குமார வேலாயுத சுவாமிகோயில்” எனத் திருநாமமிட்டுள்ளார்.
வேலுப்பிள்ளையவர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் பிரபல்ய மான சோதிட விற்பன்னரும் பொலீஸ் தலைமையும், வட்ட விதானையும், தோம்புதோரும், கோவில் மணியமுமாவார். இத ஞல் அன்ஞரது பெயரை சுருக்கமாக திரு. மு. வே. பொ. த.
-س-68-س-

வ. வி. தோ, கோவில் மணியம் என அழைப்பர். 'கோவில் மணியம்” என்பது மட்டக்களப்பு பிரதேசத்தில் அன்னுருக்கு மட்டுமே இடப்பட்ட பெயராகும். இன்றும் இவ்வாலயத்தை ‘சாஸ்திரி வேலாயுதர் கோவில்” என அழைப்பது மரபு.
இந்தக் கோயிலுக்கு முன்புறமாகவுள்ள கேணியும், சிவன் கோயில் கட்டடங்கள் முதலியனவுமுள்ள பூமி ஆலயத்திற்குச் சொந்தமானதல்ல என்று சிலர் கூறுகிருர்கள். இன்னும் சிவன் கோயில் கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வருகின்றது.
இக்கோயில் அமைப்பு முருகன், வள்ளி, தெய்வானை, யாகசாலை, வசந்த மண்டபம் என்பன அடங்கியதாகும். கோயில் வீதியில் மடப்பள்ளி அமைந்துள்ளது. கோயில் முன்புறமாகத் தெரிகின்ற தெரு அக்காலத்தில் கோயிலின் பின்னலேயே சென் றது என்று கூறப்படுகிறது. இக்கோயில் நிர்வாகம் ஆண் அடி முதிசமாகவே உள்ளதாலும் கோயில் தலைவரை மட்டக்களப்பி லுள்ள மற்றைய எல்லாக் கோயிலையும்போல வண்ணக்கர் என்று சொல்லாமல் மணியம் என்று அழைப்பதாலும் இதன் மூலவருக் கும் யாழ்ப்பாணத்திற்கும் இருந்த தொடர்பு நன்கு விளங்கு கிறது.
இக்கோயில் உண்டான காலத்தில் ஆனைப்பந்தி, விண் ணுக்காடு, வேப்படித்துறை, பெரியதுறை, கொத்துக்குளம், பெரியஉப்போடை என்பன மாத்திரமே பிரபலமான பெரிய ஊர்களாக இருந்தன. இவ்வூர்களிலிருந்து புறப்பட்டவர்கள் செங்கலடி, பிள்ளையாரடி, கல்லடித்தெரு. வலையிறவு என்னும் க்னர்களில் சென்று குடியேறியிருக்கிருர்கள்.
கோயில் நன்கு அமைக்கப்பட்டபின் திருவிழா முறைப் படி நடைபெற்றது. இந்திய அமைப்பில்ேயே கோயில் உண் டாக்கப்பட்டிருந்தது. வாசலில் ஒரு மொட்டைக் கோபுரம் இருந்தது. சுவாமி வலம்வந்த வீதிகளில் அன்று முதல் இன்று வரை விடத்தல் புல் அன்றி வேறு மரம் செடி கொடிகள் எது வும் முளைக்கவில்லை. இது ஒரு சிறப்பம்சம் ஆகும். இன்றும் கோயில் வாசலில் ஒரு மஞ்சள் பூக்கொடி தானுகத்தோன்றி தானுக மறைந்துவிடுவதுண்டு, “சின்னமேளம் மட்டக்களப்புக்கு வந்தது, முதல் முதல் இந்தக் கோயிலுக்கேதான். அது வந்த தும் இந்தியாவில் இருந்து பெரிய உரு ஒன்றில் நேரே கொண்டு வந்து பெரிய துறையில் இறக்கப்பட்டது. திருவிழாக்கள் ஐந் தாக ஆதியில் நடந்தன. ஆவணி மாதத்துப் பூரணையில் தீர்த் தம் நடந்தது.
--69-س

Page 50
இந்தக் கோவில் தளர்ச்சியடைந்தது சுமார் 1891ம் ஆண் டுக்குப் பின்னரே. அதற்குச் சில ஆண்டு காலத்திற்குப் பின்னர் கோயிலில் வைத்து வழிபட்ட விக்கிரகத்தை முதலாளி வேலுப் பிள்ளை என்பவர் ஐயாத்துரை என்பவரின் அனுமதியோடு கொண்டுபோய் கல்லடி உப்போடை பிள்ளையார் கோவிலில் வைத்திருக்கிருர்கள். அதேபோல கொடித்தம்பத்து பிள்ளையார் விக்கிரகம் இப்போது மாமாங்கப் பிள்ளையார் கோவிலில் இடம் பெற்றுள்ளது. இங்கிருந்த குதிரை வாகனம் மாமாங்கக் கோயிலுக்குக் கொண்டுசென்று அங்குள்ள வண்ணக்குமார் விற்றதன்படி, கரையாக்கன்தீவுக் கோயிலில் உள்ளது எனத் தெரியவருகின்றது.
வேலுப்பிள்ளையவர்கள் வாழ்ந்த காலத்தில் கோவில் மணி யத்தை தலைமையாகக்கொண்டு துரைவந்தியமேடு, வலையிறவு, பெரியதுறை, வேப்படித்துறை, கொத்துக்குளம், செங்கலடி என்னும் ஆறு ஊர்களையும் சேர்ந்த ஆறு வண்ணக்கர்களை உள் ளடக்கிய தர்மகர்த்தா சபை ஆலயத்தைப் பரிபாலனம் செய்து வந்தது. மேலும் இவ்வாலயமானது மட்டக்களப்புப் பகுதியில் வாழும் சைவ மக்களினதும், தேசம் முழுவதும் வாழும் சைவ மக்களினதும் உடமையாகுமென மூலசாசனத்தில் மாப்பாணர் முத்துப்பிள்ளையால் எழுதி ஒப்படைக்கப்பட்டுள்ளமையால், அக் காலத்திலிருந்தே எவ்வித சாதிவேறுபாடும் கருதாமல், சமயம் என்ற பொது நோக்கோடு செயலாற்றியமை வியக்கற்பாலது.
1890ம் ஆண்டளவில் வேலுப்பிள்ளையவர்கள் காசியாத் திரை செல்ல உளங்கொண்டு, தமக்குப் புத்திரர் இல்லாமை யால், தமையனுர் குமாரராகிய விஞசித்தம்பி வாரித்தம்பியிடம் தாரைத் தத்துவம் எழுதி ஆலயத்தை ஒப்படைத்துச் சென்ற னர். சென்றவர் மீண்டிலர். 1907ம் ஆண்டில் வாரித்தம்பியும் காலமடையவே, அவர் கைம்பெண் தங்கநாயகத்தால் ஆலய பரிபாலனம் நடைபெற்றது. அவர்களது புதல்வர்களான ஐயாத் துரையும், பொன்னுத்துரையும் பராயமடையாத சிறுபராயத் தினராயிருந்தனர்.
1907ம் ஆண்டில் வீசிய சூருவளியாலும் 1913ம் ஆண் டில் ஏற்பட்ட வாந்திபேதி நோயாலும் பெருந்துறையில் வ்ாழ்ந்த மக்கள் குடிபெயர்ந்து நகரின் பல பாகங்களுக்கும் சென்று குடி யமர்ந்தனர். இதனல் ஊரே பாழ் விழுந்தது. ஆலயம் கவனிப் பாரற்றுச் சிதைவுற்று உருக்குலைந்தது. விக்கிரகங்களும் வாக னதிகளும் பிற ஆலயங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. ஆலய மும் அதைச் சூழ்ந்துள்ள பிரதேசமும் காடும் புதரும் வளர்ந்து விஷ ஜந்துக்களின் இருப்பிடமாகியது.
-70

வாகனம் சில விக்கிரகம் முதலியவை மேலே காட்டிய படி வேறு இடங்களுக்குச் சென்ற பின்னர் இக்கோயில் மரந் தடிகளையும் சலாகைகளையும் சின்னத்துரை - ஆம்ஸ்ரோங் என் பவர் பகிரங்க விற்பனையில் வாங்கிக்கொண்டுவந்து கோட்டை முனை அரசடிச் சந்தியிலுள்ள தனது வளவில் பெரியதொரு வீடு கட்டினர். அண்மையில் அது அழிக்கப்பட்டு வேறு கட்டிடம் அவ்விடத்தில் தோன்றியுள்ளது.
இந்தக் கோயில் பிரபலமாக இருந்ததற்கும், மக்கள் குடி யேற்றம் நிறைய இருந்தமைக்கும் சான்றுகள் நிறையக்காணப் படுகின்றன. அதில் சிறப்பாக ஒரு பழைய கிணற்றைக் குறிப் பிடலாம். நான்கு ஊர்களுக்கும் பொதுவான ஒரு வற்ருக் கிணறு, நல்ல குடிநீர் உள்ள கிணறு இருந்திருக்கிறது. அதற்கு 'பனைமரத்தடிக் கிணறு' என்று பெயர். இக்கிணறு மருங்கைக் கேணிச் சுடலைக்கு தென்கிழக்குமுகமாக இன்றும் தூர்ந்த நிலை யில் காணப்படுதல் கவனிக்கத்தக்கது.
1972ம் ஆண்டில் ஒரு நாள் மட்டுநகர் பொதுச் சந்தை யில் வியாபாரம் செய்பவரும், கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த வருமான ஞானச்செல்வம் மனேகரன் என்னும் இளைஞன், புகை யிரத நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வைரவன் கோயிலில் ஒரு முதியவரைக் கண்டான். அந்த முதியவர் பெருந்துறையி லுள்ள முருகன் கோயில்பற்றிய விபரத்தைக்கூறி அங்கே சென்று வழிபடுமாறு பணிக்கவே, மனவுறுதியுடனும் தளராமுயற்சியுட னும் அவ்வாலயத்தைக் கண்டுபிடித்து தனக்குத் தெரிந்தமாதிரி யாக வழிபட்டுவரலாஞன். தான் வழிபட்டுவந்ததோடல்லாமல் தனது நண்பர்கள், தனது அயலவர் உதவியுடன் இடிந்து தகர்ந்துகிடந்த ஆலயத்தைத் துப்பரவு செய்து காடுகளை வெட்டி வெளியாக்கித் திருப்பணியும் செய்வித்தான்.
இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே பரவ, சிலர் பலராகி, பலர் பெருங்கூட்டமாகவே மாறிவிட்டது. எனினும் இவ்வால யத்தின் சரியான உரிமையாளரைக் கண்டுபிடிப்பதில் பொது மக்கள் ஈடுபட்டதில் மாப்பாணர் முத்துப்பிள்ளையவர்களின் பரம் பரையில் ஐயாத்துரையின் மகன் சாரங்கபாணி அவர்களும், பொன்னுத்துரையின் மருமகன் வைத்தியகலாநிதி செ. பூபாலப் பிள்ளையுமே உரிமையாளர்களாகக் காணப்பட்டனர். இவர்கள் இருவருமாக சேர்ந்து ஒரு ஆலய பரிபாலன சபையை அமைத்து ஆலயத்தை புனரமைப்பதில் ஈடுபட்டுவருகின்றனர்.
இற்றைவரை பிரதான ஆலயத்தின் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்பனவும், வினயகர் ஆலயம்,
-7l

Page 51
பழனியாண்டவர் சன்னிதி என்பனவும் பொதுமக்களின் நன் கொடையாலும் இந்து கலாசார அமைச்சின் நன்கொடை யாலும் திருத்தப்பட்டுள்ளது. ஆலயத்திற்கென தனியான மின் னிணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆலய புனருத்தாரண வேலை கள் தொடர்ந்து நடைபெற்றவண்ணமிருக்கின்றன.
கதிர்காமத்தோடு கொடியேற்று வைபவம் ஆரம்பமாகி ஆடிமாத பூரணையில் தீர்த்தோற்சவம் நிகழ்வது ஒரு விசேட உற்சவமாகும். மேலும் மாதா மாதம் வரும் திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, திருவெம்பாவை என்பனவும் சிறப்பாக நடைபெறு கின்றன.
இவ்வாலயத்தின் சிறப்பையும், திருவருளையும் வியந்து மட்டுநகர் ச. வித்துவான் பூபாலப்பிள்ளையவர்கள் 1882ம் ஆண்டளவிற் பெருந்துறை முருகிர் பதிகம் என்னும் பதிகத் தைப் பாடியுள்ளார்.
இவ்வாலயத்திற்கு 30 ஏக்கர் காணி மட்டும் உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனல் படுவான்கரைப் பகுதியிலுள்ள காணி இன்னும் எவ்வளவோ இருக்கலாம். மேலும், துரைவந் தெய்திய மேட்டுப் பகுதியில் மூலவர்கள் இருந்த காரணத்தி னல் அப்பகுதிக் காணியிலும் சில ஏக்கர்கள் ஆலயத்திற்கு எழுதப்பட்டிருக்கலாம். இவைகளை ஆலய பரிபாலன சபையார் தேடிக் கண்டுபிடிப்பதும் எடுப்பதும் அவசியமாகும்.
-72

4ஆவது இயல்
முருகன் கோவில் ஆறு.
3. குருக்கள் மடம்
யூனி செல்லக்கதிர்காமம் ஆலயம்
மட்டக்களப்பு மாநகரிலிருந்து தென் திசையில் 11 மைல் தொலைவில் உள்ள அழகிய எழில் மிகுந்த கிராமம் குருக்கள் மடம், கிழக்கே வங்காள விரிகுடாக்கடல், மேற்கே நீர்வளம் மிகுந்த நன்செய்நிலம், வடக்கே வளமும், வளம்சார்ந்த இடமும் தன்னகத்துக்கொண்டுள்ளது. தெற்கே செட்டிபாளையம் எனும் ஊர் உளது. நெய்தல், மருதம், பாலை ஆகிய மூவகை நில அமைப் பும் மிகக்கொளிக்கிறது. கிராமத்தின் மேற்கே நன்னீர்ச் சுனைகள் தொடர்ச்சியாக உண்டு, 3, 4 அடி ஆழத்தில் இந்நீரைக் காண லாம். கடும் வரட்சியான காலமாயினும் இச்சுனைகள் நன்னீரைப் பொங்கிக்கொண்டே இருக்கும், இந்நன்னீரின் அளப்பரிய தேக்கத் தினலே வாழை, கமுகு, கரும்பு, தென்னை, கண்கொள்ளாக் காட்சியாக வளர்ந்து பொலிந்து காணப்படும் காட்சியை இன்றும் காணலாம்.
*கன்னல் வளமும் கமுகினத்தினேர் வளமும் செந்நெலொடு வாழை சொரிவளமும்-பன்னரிய காராளர் வாழும் கதிர்சேர் குருமடத்தில் சேர்வாளே செஞ்சொற் “திரு'
(புலவர்மணி ஏ. பெரியதம் பிப் பிள்ளை) என்ற இவ்வெண்பா அக்கிராமப்புவியியல் தன்மைகளையும் பயிர்வளத்தினையும் தெளிவு படுத்துகின்றது.
முக்கால் மைல் நீளமுள்ள ஏத்தாலைக்குளம் இக்கிராமத் தின் அளப்பரிய ஒரு கிராமக்குளம். எங்கும் காணமுடியாத செந்தாமரை மலர் இந்தக்குளம் நிறையக் காணலாம். காடும் காடுசார்ந்த இடங்களில் இன்று அழிந்து போனலும் மானினம் சுயேச்சையாக வாழ்ந்து வந்த பெருமை இக்கிராமத்துக்குரியது. வேளாள மரபினையுடைய உயர்குலமக்கள் இங்கு நிறைந்து வாழ் கின்றனர். ஒரு சிறு தொகையினரான ஏனைய வகுப்பினர் சொற்ப மாகக்காணலாம். இக்கிராம மக்கள் இந்து சமயத்தினர். சிறந்த தெய்வவழிபாட்டாளர். சமய நெறியில் தளர்வுரு பெருவாழ்வு
- 73 -

Page 52
படைத்தவர்கள். ஒரு சிறு தொகையினராக கத்தோலிக்க சமயத் தினைச் சார்ந்தோர் சமீபகாலமாக அச்சமயத்தை அனுட்டிக் கின்றனர். ஆனல் அவர்களும் வேளாள இனத்தவர்களே.
இந்த அழகிய கிராமத்தில் ஐயனர் ஆலயம், பூரீ செல்லக் கதிர்காம ஆலயம், கிருஷ்ணன் ஆலயம், முருகன் ஆலயம், ஆதியாம் தெய்வ வழிபாட்டுத்தலங்களும் உண்டு. இவைகளுக் கெல்லாம் தலைசிறந்ததும், தொன்மையுடையதும் செல்லக்கதிர் காமம் ஆலயமே.
இற்றைக்கு 400 வருடங்களுக்கு முன்பு **உலக குருநாதர்' என்னும் தபோதனர், யாழ்ப்பாணம் தொண்டமானறு கெருடா விலில் இருந்து பாதசாரியாக தென்கதிரை புறப்பட்டார். இவர் தனது யாத்திரையில் தரிசிக்கவேண்டிய இடங்களில் இக்கதிர் காமமும் ஒன்று. அவர் வரும்போது தனது பிச்சாபையில் சில விசேடம் பெற்ற விதைகளையும் கொண்டுவந்தார் தனது புனித யாத்திரையில் இக்கிராமத்தின் இயற்கை காட்சிகள் அவரை வசீகரித்தன. இயற்கை நன்னீர்ச்சுனைகள், அடர்ந்த காடுகள், ஆழ் கடலின் ஆரவாரம், இவைகள் ஒருங்கே வாய்க்கப்பட்ட இக் கிராமத்தைத் தனது தபோதன நிலைக்கு வசமாக்கிக்கொண்டார். தென்கதிரை யாத்திரை இவ்விடத்துடன் முடிகிறது. தனது மேலான பணியை ஆரம்பிக்கலானர். தற்காலம் செல்லக் கதிர் காமம் என்று அழைக்கப்படும் இடத்தில் ஒரு சிறு மண்கோயில் அமைக்கலானர். இப்பெரியாரின் ஆக்க வழிபாட்டுக்கு அக்கிராம மக்கள் பெரிதும் உதவிஞர்கள், தான் கொண்டுவந்த விசேட விதைகளில் ஒன்ருன “தத்தாக்கு" விதையைத் தனது ஆலய வாயிலில் நட்டார். இம்மரந்தான் இவ்விடத்தின் தலவிருட்சம், எங்கும் காணமுடியாத குளிர்தருவாக அது காட்சி அளித்ததை யாவரும் அறிவர். இன்று சூறாவளியினல் அழிந்துபோனலும் இதன் இனம் இன்றும் இங்கு காணலாம். இதைவிட குருக்கத்தி, கலிதும்பை என்பனபோன்ற செடிகளும் இங்குதான் காணலாம். இத்தவமுனிவரின் நன்கொடைகளின் பிரதிபலிப்பு இவைகள். தன்னுடைய தலமுறை அமைப்பில் இடம்பெற்ற தேவாலயத் திற்கு “செல்லக் கதிர்காமம்' என்று பெயரிட்டார். வேல் வேந்தன் பெருமை பகிர்ந்தளிக்கும் காலம் இதுவாகும். இந்த செல்லக்கதிர்காமம் ஆலயம் கிறித்துவ சகாப்த வருடம் 1607 மன்மத வருடம் ஐப்பசிமாதம் 15ந் திகதி வியாழக்கிழமை அசுபதி நட்சத்திரம் பொருந்திய சுபதினத்தன்று கும்பாபிஷேகம் செய் தார்கள். இக்கிராமப் பெரியோருடைய பெருமதிப்புடன் ஆலயத் துக்கு நன்கொடை சாதனம் ஒன்றும் எழுதப்பட்டு வழிபாடா யிற்று. இதன்பின்பு இம்மகானின் திருவருட் செயல்களை யாழ்ப் பாணம் கெருடாவில் வாசிகள் கேள்வியுற்று இக்கிராமம் வந்
- 74 -

தடைந்தனர். ஆதிக்குருமார் வருகையும் ஆரம்பமாயிற்று. இச் செயல்களால் இக்கிராமம் “குருநாதர் மடம்' என்று அழைக் கப்படலாயிற்று. தபோதனரால் ஆக்கப்பட்ட ஆலயம், பர்ண சாலையாக ஒளிவீசும் மடம் யாவும் ஒன்றுபட்டு பின்னிப்பிணைந்து நாதர்மடம் என்றும் அழைக்கப்படலாயிற்று. மக்கள் குறைவாகக் காணப்பட்டாராயினும் குருபயபக்தியில் மேம்பட்டு பெருவாழ்வு வாழ்ந்தனர். ஆலய உற்சவம், திருவிழா, தீர்த்தம் போன்ற பரமார்த்திகப் பெருவாழ்வுக்கு மகான் வழிவகுத்தார்.
வங்காள விரிகுடாக்கடல் அரை மைல் தொலைவில் இருப் பினும் அக்காலம் அடர்ந்த காடுகளும் கடந்து செல்லமுடியாத பெரும் தடையுமாக இருந்தது.இதனல் இவ்வாலயத்துக்கு வடக்கே பாலைவனப் பசுந்தரை (ஒயசிஸ்) போன்ற ஒரு பள்ள நன்னீர்த் தேக்கம் இன்றும் உண்டு. அதை மூன்று தொடர்ந்த பெரும் குளங்களாக வெட்டி தீர்த்தக்குளம்' எனப் பெயரிட்டு தீர்த்தோற் சவமும் நடாத்தப்பட்டது. இம்மூன்று குளங்களும் மூன்றுவகை யான சேற்றை இன்று தன்னகத்துக் கொண்டுள்ளன. சுத்தமான விபூதிபோன்றது ஒன்று; சந்தனம் போன்றது மற்றென்று. கரு நிறம் கொண்டது மற்றது. இவ்வாறன திருக்காட்சிகள் இத்தீர்த் தக்குளத்தில் உண்டு. இன்று இவைகள் நீர்த்தக்குளம் என்றே அழைக்கப்படுகின்றன. இந்தத் தீர்த்தக்குளத்துக்கும் ஆலயத்துக் கும் நடுவில் “வேத மேடு” என்ற உயர்ந்த ஒரு ஏக்கர் அளவின தான நிலப்பரப்பு உண்டு. இதில் கதிர்காமக் கந்தனின் சூரன் மலைபோன்று ஒரு ஆலயம் இருந்தது. திருவிழாக் காலங்களில் இறுதி நாளன்று இவ்வேத மேட்டுக்கு முருகன்சென்றுவருவதும் உண்டு. இம்மேடு இன்று அழிந்து சிதைந்து போனலும் இன்றும் 'வேதப்பிட்டி' என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. மிகப் புதையுண்ட பொக்கிஷங்கள் இவ்விடத்தில் அடங்கியுள்ளன. காலகாலத்தில் தொழிலுக்காக மண் தோண்டுவோர் பல அரிய பழமையான பொருட்களைக் கண்டெடுத்துள்ளனர்.
உலககுருநாதர் இக் கிராமத்தில் வாழ்ந்து தெய்வத் தொண்டை ஆற்றிய காலத்தில் மதுரையம்பதியில் உள்ள பல நாமங்களை இங்கும் குட்டி வைத்திருக்கிருர். அப்பெயர்கள் இன்று நாங்களும் காணக்கூடியதாக உள்ளன. தனது வேண்டுகோளின் படி செல்லக் கதிர்காமத்துக்கு இக்கிராமத் தனவந்தர் ஆனந்தப் போடி என்பவரால் செய்யப்பட்ட தர்மசாதனங்கள் இன்றும் உண்டு. அவரால் அன்று வழங்கப்பட்ட ஆதனங்கள் ஆலயத்தை அண்டிய தென்னந்தோட்டங்களே. அவைகளில் ஒன்று நந்தவனம் வளவு, 2. கூடல் வளவு, 3. கொங்கு மந்தாரை வளவு, 4. சம்பந் தர் வளவு, 5. காரியஸ்தர் வளவு, 6. பிராமணர் வளவு, 7. ஒது வார் வளவு, என்பன போன்ற அழகிய பெயர்களை இன்றும்
-- 75 -س

Page 53
வழங்குவதை நேரில் காணலாம். மேலே கூறிய தீர்த்தக் குளத்தி லிருந்து மாரிகாலங்களில் மிஞ்சிய நீர்வழிந்து அவ்வாலயத்தைச் சார்ந்து பெருக்கெடுத்து ஓடும் காட்சி மாணிக்ககங்கையை நிகர்த்து இருக்கும். ஆனல் ஒரு பருவத்தில் வரண்டு போவதால் புண்ணிய சேவைகளுக்கு வாய்க்கவில்லை.
வற்ற சொத்துக்களையும் பரிபாலித்து வந்தோர் கெருடாவில் இருந்து வந்த குருமாரும் கிராமப் பெருமக்களுமாவர். இக்குரு மாருக்குக் கோறளைப்பற்றில் உள்ள சிற்ருண்டி தேவாலயத்திலும் உரிமையும், கடமையும் உலக குருநாதர் வம்சத்தினருக்கு உண்டு. இன்றும் இவ்வுரிமைத் தொடர்பைக் காணமுடியும். இவ்வாறு நிர்வகிக்கப்பட்டுவந்த காலம் 19 வருடங்கள். உலககுருநாதர் என்ற தபோதனர் 1626ம் வருடம் ஆவணித் திங்கள் பாரமார்த் திகப் பெருவாழ்வைப் பெற்ருர். இவருடைய சமாதி இன்றும் சிதைந்த நிலையில் பகிரங்க வீதி அருகில் உண்டு. இவருடைய மறைவின்பின்பு மண்தேவாலயமே ஆலயமாக இருந்து வழிபாட் டுக்கு வழிகாட்டியது. இவ்வாலயம் இக்கிராமப் பெருமக்களுடன் கெருடாவில் குருமாரும் சேர்ந்து பரிபாலித்துவந்தனர். தெய்வத் தொண்டுகளும், உச்சநிலையில் வளர்ச்சிபெற்றன. “இளையசாமி என்ற குருப்பெரியார் ஆகம வழிபாடுகளை நெறிப்படுத்தி சாதி, சமய பேதமின்றி வளம்பெற வாழ்வு அளித்தார். ஆவணிப் பெளர்ணமி தீர்த்தோற்சவம், கார்த்திகைத் தீபம், கார்த்திகைக் காப்புக்கட்டு, கந்தசஷ்டி விரதம், மகாசிவராத்திரி, பங்குனி உத்தரம், புதுவருடப் பிறப்பு, வைகாசி விசாகம், சித்திரா பூரணை போன்ற பெருநாட்கள் முறையாகக் கொண்டாடப் பட்டுவந்தன. காலம்செல்ல இம்மண்கோயில் திருத்தப்படவேண் டிய காலம் அண்மியது. கி. பி. 1832ம் வருடம் குருநாதர்மடம் என்ற பெயர் குருக்கள்மடம் என மருவி வழங்கலாயிற்று. இக் காலத்தில் தனவந்தரான கைலாயச்செட்டியாரின் சிரேட்ட புத் திரர் செட்டிப்போடியார் மண்கோயிலை உடைத்து தற்போ துள்ள தேவாலயத்தை நிருமாணிக்க ஆரம்பித்தார். 1842ம் வருடம் ஆவணி மாதம் 18ம் திகதி வேலை ஆரம்பமாயிற்று. இத்தேவாலயம் அவரது பெருமுயற்சியாலும் கிராம மக்களின் சலியா உழைப்பினுலும் நிறைவு செய்யப்பட்டது.
1848ம் வருடம் ஆவணிமாதம் 25ந் திகதி எம்பெருமான் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக பிரதிட்டை செய்யப்பட்டார். கைலாயச்செட்டி செட்டிப்போடியார் இத் தினத்தில் ருேபேட் முண்டப்போடி பிரசித்த நொ., சி. அவர் களால் 2403 (1848 ஆவணி 25ந் திகதி)ஆம் இலக்க நன்கொடை சாதனம் ஒன்றும் எழுதி தேவாலய வளர்ச்சிக்குத் தான் இல்
- 76 -

லாக்காலத்துத் திறம்பட நடைபெற ஆக்கமளித்தார். இத்தர்ம நன்கொடையை மக்கள் வள்ளியம்மை, கண்ணம்மை, சிவகாமி ஆகியோரும் தங்கள் பங்குகளைத் தங்களது வம்சத்தினரின் ஆன்ம ஈடேற்றம் கருதி வழங்கியுள்ளனர். இத்தர்ம நன்கொடையில் பேர்போன கரவாகுப்பற்று, நடுபத்துவெளி, தேற்ருத்தீவு கோயில், பறையன் முன்மாரி போன்ற நெல்வயல்கள் முக்கிய மானவைகள் .
இவ்வாலயம், குருக்கள் மடம் கிராம வேளாள பெரும்குடி மக்களின் பொக்கிஷம், எவ்வித வேறுபாடுகளும் இன்றிப் பரிபால னம் நடைபெற்று வந்தது. இப்பரிபாலனத்தில் தர்மகர்த்தா சபையில் அத்தியாகுடி, செட்டிகுடி வண்ணக்கர்கள் மாறிமாறித் தலைவர்களாகக் கடமைபுரிந்து வந்தனர். இம்முறையில் கதிரேச பிள்ளை வன்னிமை மயில்வாகனம் அவர்கள் முக்கிய இடத்தை வகிக்கிருர். இவருடைய திருத்தொண்டுக்காலத்திலே இவ்வால யத்தை ஏனைய சைவ ஆலயங்கள் கவரக்கூடிய திருத்தொண் டொன்றை ஆக்கி வைத்தார். 27.10.1947ம் திகதி பூரீலரு செல்லக் கதிர்காமம் ஆலயத்தை பகிரங்க விளம்பரங்கள் மூலம் வெளியிட்டு "ஹரிசன ஆலயப் பிரவேசம்' செய்து வைத்தார். உலகம் போற்றும் உத்தமர் மகாத்மாகாந்தி அவர்களின் கொள் கையில் ஊறி அக்கொள்கையைக் கடைப்பிடித்து இவ்வரிய திண் டாமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், மயில்வாகனனர். இதை ஒட்டிய விளம்பரத்தில் உலக குருநாதசுவாமிகளும், ஆலயம் அமைக்கப்பட்ட வரலாறுகளும் பிரசுரிக்கப்பட்டிருப்பது போற்றக் கூடியதொன்று. இவ்வடிப்படையில் ஆலய பரிபாலனம் திறம்பட செயல்படுகின்றது. இக்கிராம மக்கள் சகலரும், வந்தேறிய மக் களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இப் புது உணர்வை அமைக்கவிரும்பிய கிராம மக்களால் விசேட தகுதி பெற்ற சைவப்பெரியார் பண்டிதர் வித்துவான் வி. சி. கந்தையா அவர்களை தலைவராகக் கொண்ட ஒரு விசாரணைச் சபை அரசாங்க அதிபரின் சிபார்சுடன் 1978ம் ஆண்டு வைகாசி மாதம் நியமனம் செய்யப்பட்டது. இச்சபையில் திரு. வே. நாகையா ஒய்வுபெற்ற அதிபர், திரு. என். கே. சர்மா மட்டக்களப்புக் கச்சேரி, ஆகி யோர் அங்கம் வகித்தனர். இப்புனிதச் செயலால் பின்வரும் முறையில் ஒரு பரிபாலனசபை அமைக்கப்பட்டது, ஆயுட்காலத் தலைவராக திருவாளர்,
1. க. சீனித்தம்பி ஜே.பி. அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். 2. ஆ. சோமசுந்தரம் உபதலைவர் 3, க. மயில்வாகனம் அதிபர், செயலாளர். 4. க. முத்துலிங்கம் அதிபர், பொருளாளர். 5. செ. சீனித்தம்பி டாக்டர்.
- 77 -

Page 54
6. த. வடிவேல். 7. பொ. கணபதிப்பிள்ளை அதிபர். 8. ம. விமலேஸ்வரன். 9. த. கிருஷ்ணபிள்ளை.
10. ஆ. மயில்வாகனம்.
11. க. மாமாங்கம் ஆகியோரை உள்ளடக்கியது இச்சபை, இன்று இச்சபை விசேடமான அபிவிருத்தி வேலைகளை நிறைவு செய்து வருகின்றது. கடந்த குருவளியினல் பாதிக்கப்பட்ட புனித தலத்தை கிராம மக்கள் ஒருங்கிணைந்து தத்தம் குடிவழி யில் ஒவ்வொரு பெரும்பணியை முடித்து இருக்கின்றனர். ஆயுட் காலத்தலைவர் திரு. க. சீனித்தம்பி ஆலய கர்ப்பக்கிருகம், திரு. த. வடிவேல் வண்ணக்கர் அர்த்தமண்டபம், திரு. செ. சீனித் தம்பி வண்ணக்கர் மகாமண்டபம், திரு. க. மயில்வாகனம் வண்ணக்கர் தம்பமண்டபம் போன்ற மிகப் பொறுப்புவாய்ந்த வேலைகளை நிறைவுசெய்திருக்கின்றனர். ஆலய மடப்பள்ளியறை திரு. க. சீனித்தம்பி வண்ணக்கரால் அமைக்கப்பட்டிருக்கின்றது.
பழைய மாரியம்மன் ஆலயம் சிதைவுற்ற நிலையை அகற்றி திரு. சா. கந்தப்பன் நொத்தாசியார் புதிய மாரியம்மன் தேவா லயம் ஒன்றை அழகாக அமைத்து உதவியுள்ளார். திரு. த. சாமித்தம்பி அவர்கள் விக்கின விநாயகன் ஆலயத்தை நவீன முறையில் அமைத்து உதவியுள்ளார். இச்செயல்களால் இவ் வாலயம் இன்று கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகின்றது. ஆலய வழிபாடுகளும், தீர்த்தம், திருவிழாக்களும் ஆவணிப் பூரணையில் வாக்கிய பஞ்சாங்க விளம்பரப்படி தடையின்றி நடைபெறுகின்றது. இன்றும், என்றும் இந்த மேம்பாடு நிலை பெற முருகன் அருள் பாலிப்பாராக. இவ்வாலயம் பகிரங்க வீதியின் அருகில் இருப்பதனுல் சகல பிரயாணிகளும் வாகனதி களும் செல்லும்போது இம்முருகனைத் தியானித்து வணக்கம் செலுத்திச் செல்லத் தவறுவதில்லை.
- 78 -

gogouseo gute-oogjo știris ugi – seg swsus

Page 55

4ஆவது இயல்
முருகன் கோவில் ஆறு.
4. காரைதீவு மாவடிக்
கந்தசுவாமி கோவில்
கிழக்கிலங்கையில் உள்ள பழமை, பண்பு, பெருமை என் பன வாய்ந்த செழுமையான ஊர்களுள் காரைதீவு முதலாவ தாகக் குறிப்பிடவேண்டியது. கற்ருேர், உத்தியோகம் பார்ப் போர் முதலானவருடைய வரிசையிலும் காரைதீவு, கல்லாறு, ஆரைப்பற்றை , மட்டக்களப்புப் பட்டினம், மண்டூர் என்று வகைப்படுத்திக்கொள்ளும்போது முதலில் வருவது காரைதீவே. விபுலாநந்த அடிகளாரைத் தோற்றுவித்த பெருமை காரை தீவுக்கேயுண்டு. தொடர்ந்து நடராஜானந்த அடிகளார் தோன் றினதும் இந்த ஊரிலேதான். தங்கராசா, தம்பிராசா, பொன் னையா, கந்தவனம், தம்பையாபிள்ளை முதலான காவிபோடாத சுவாமிகள் பலரின் வாழ்விடமும் காரைதீவேயாகும். ஆனைக் குட்டி சுவாமியார் வாழ்ந்து சமாதி எய்தியது காரைதீவிலே தான். இத்தகைய காரைதீவு சமயப் பற்றுதலுக்கும் பெயர் போனது.
இவ்வாறு காலங்கடந்த புகழினைக் கொண்டது மட்டக் களப்புக் காரைதீவு எனும் ஊர். இதனை ஆங்கில ஆட்சியினர் மூன்று நிருவாகப் பிரிவு (குறிச்சி)களாகப் பிரித்து ஆண்டனர். இதில் மூன்ரும் குறிச்சியானது கிராமத்தின் தென்பாகத்திலமைந் துள்ளது. இது பல வருடங்களுக்கு முன் தென்னந்தோட்டங் களும் மரக்கறித் தோட்டங்களும் நிறைந்ததாய்க் குறைவான குடியிருப்பாளர்களைக் கொண்டு விளங்கியது.
இப்பகுதியிலே நிந்தவூர்க் கிராமத்தின் எல்லைக்கு அண் மித்ததான பகுதி மாவடித் தோட்டமென அழைக்கப்பட்டு வந் தது. இன்னும் அது மாவடி என்றே கிராம மக்களால் அழைக் கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நெடுஞ்சாலைக்கு அண்மையா கச் சிறு பற்றைகளும் ஒரு புளியமரமும் உள்ள ஒரு தோட்ட வளவுண்டு.
கிட்டத்தட்ட ஆயிரத்துத் தொழாயிரத்து இருபத்தோ ராம் ஆண்டளவில் இங்குள்ள புளிய மரத்திலே ஒரு வேல்
۔۔۔۔ 79 ۔۔۔

Page 56
இருப்பதாகவும் ஒரு பக்தர் அதனை வழிபாடுசெய்து வருவதாக வும் அங்கு பல சித்துக்கள் நடைபெறுவதாகவும் கிராம மக்கள் கேள்வியுற்றனர்.
அவ்வேலினைப் பூசித்து வந்தவர் ஆறுமுகம் என்பவர். இவர் ஒரு நாடக ஆசிரியர், வஞ்சிக்கொடியெனும் பட்டப் பெய (ரு ையவர். இவ்வாறு பல தேவாலயங்கள் உண்டாக மூல கா கணமாக இருந்தவர், அவர்களை வரவேற்க இத்தல மகிமை யையும் பலர் தாம் நினைத்தவற்றை இறையருளாற் பெற்று வருவதனையும் அவர் கூறினர். இதனைச் செவிமடுத்த பெரியார் கள் பலர் ஒன்றுசேர்ந்து தற்காலிக ஆலயமமைத்து வழிபாடாற்றி வந்தனர். இதன் மகிமை பக்கத்துக் கிராமங்களுக்கும் பரவ லாயிற்று.
ஆயிரத்துத் தொழாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டள வில் முறண்டப்போடி தம்பையாபிள்ளை ஒவசியர் அவர்கள் அங்கு சென்று, அவ்விடம் தன்னுடைய முதுசொமெணலால் தான் தனது செலவில் ஓர் ஆலயம் அமைக்க விரும்புவதாகவும் கூறினர். அனைவரும் தமது சம்மதத்தினை அன்போடு அதற்குடன்பாடாகத் தெரிவித்தனர். அதன்படி கல்லாலயம் முதல்முதலாக அமைக் கப்பட்டது.
நித்திய பூசை விசேட பூசைகள் ஆகியவற்றைச் சைவ அந்தணர்களைக்கொண்டு நடாத்திவந்தனர். தமது முதுமையை முன்னிட்டு ஒவசியர் அதனைத் தொடர்ந்து நிருவகிக்கும் பொறுப் பினைத் தமது மக்களிடம் சிறிது காலம் ஒப்படைத்து மேற் பார்வை செய்து வந்தனர். தனது நண்பர்கள் பலருடன் கலந் துரையாடி ஆலோசனை கேட்டு இவ்வாலயத்தினைக் கிராமத்தின் பொதுச் சொத்தாக்கின் திறம்பட நடக்குமெனக் கருத்திற் கொண்டனர். இப்பெரியாருக்கு இவ்விடயத்திற் பக்கபலமாக நின்றுதவியவர் காரைதீவைச் சேர்ந்த அமரர் திரு. பெ. வ. வி. நல்லரெத்தினம் அவர்களாவர்.
ஆயிரத்துத் தொழாயிரத்து நாற்பத்தைந்தாமாண்டு மார் கழி மாதம் இருபத்து மூன்ருந்திகதி காரைதீவு மகாசன சபை யின் வருடாந்தப் பொதுக்கூட்டம் திரு. த. பொன்னையா அவர் கள் தலைமையில் கண்ணகி அம்மன் கோவில் வீதியில் ஆரம்ப மானது. இச்சபைக்குத் திரு. மு. தம்பையாபிள்ளையவர்கள் சென்று தனது பராமரிப்பிலுள்ள மாவடிக் கந்தசுவாமி கோயி லைக் காரைதீவுக் கிராமமே கையேற்று நடாத்தவேண்டுமென விண்ணப்பித்தனர்.
சபையோர் இதனை ஏற்று ஆறு பேர்கொண்ட குழுவினை நிறுவி திரு. தம்பையாபிள்ளையவர்களிடமிருந்து ஆலய பரிபால
- 80 -

னத்தைச் சட்டபூர்வமாகப் பொறுப்பேற்கப் பணித்தனர். அத் தோடு அறுபது பேர் கொண்ட நிருவாக உறுப்பினர்களையும் நியமித்தனர். ஆலயம் பொறுப்பேற்கப்பட்டதும் வழமைபோற் பூசைகள் நடைபெற்றன. வருடந்தோறும் பொதுக்கூட்டம் கூட் டப்பட்டு நிருவாக சபைத் தெரிவும் இன்றுவரை ஒழுங்காக நடைபெற்று வருகின்றது எனலாம்.
ஆயிரத்துத் தொழாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டள வில் முதலாவதாக சம்புரோட்சண கும்பாபிஷேகம் நடைபெற லாயிற்று. பின்னர் 1978ம் ஆண்டு வைகாசி மாதம் 26ந் நாள் (ஆணி மாதம் ஒன்பதாந் திகதி) புனராவர்த்தன மகா கும்பா பிஷேகம் ஒன்று மிகச் சிறப்புற நடைபெற்றது.
தினப்பூசைகள் கோயிற் பொறுப்பிலே நடாத்தப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் வரும் கார்த்திகை விரதத்தன்று விசேட அபிஷேகம், பூசை, சுவாமி வீதிவலம் வருதல் என்பன நடந்தேறி வருகின்றன. இப்பூசைகளை வெவ்வேறு உபயகாரர் கள் பொறுப்பேற்று நடாத்துகின்றனர்.
ஆடித்திருவிழா கதிர்காம உற்சவத்துடன் வளர்பிறைப் பிரதமையிலே கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். விசேட அபிஷேகம் நடைபெறுவதுடன் முருகப்பெருமானின் வீதி உலா வும் சிறப்புடன் நடைபெறும். தீர்த்தோற்சவத்துக்குமுன் இர வன்று பெருமானின் சப்பற ஊர்வலம் நிகழும். இதனை இந்து வாலிபர் சங்கம் பொறுப்பேற்று நடாத்துகிறது. 16ம் நாள் காலையில் முருகப்பெருமான் பக்தர்கள் புடைசூழ மயில் வாக னத்தின்மீதமர்ந்து தேரோடும் வீதிவழியாகச் சமுத்திரக் கரையை அடைந்ததும் தீர்த்தோற்சவம் நிகழும். ஆடித் திருவிழா உபயகாரர் விபரம் பின்வருமாறு:-
1. பாலையடி வால விக்கினேஸ்வரர் ஆலயச் சந்தானத்தார் கோயில் ஸ்தாபகர் மு. தம்பையாபிள்ளையவர்களுக்குக் கொடுக்கும் முதன்மைக்காக அன்னரின் சந்தானத்தாருக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இது கிராம வழக்கத்துக் குப் புறம்பானது, எனினும் மகா சபையால் ஏற்றுக்கொள் ளப்பட்டது. பூரீ கண்ணகை அம்மன் ஆலயச் சந்தானத்தார். பூரீ வீரபத்திர சுவாமி ஆலயச் சந்தானத்தார். திரு. ஞா. கணபதிப்பிள்ளை அவர்களின் சந்தானத்தார். பூரீ மகா விஷ்ணு கோயிற் சந்தானத்தார். திரு. க. கணபதிப்பிள்ளை அவர்களின் சந்தானத்தார். திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்களின் சந்தானத்தார். திரு. மு. கணபதிப்பிள்ளை அவர்களின் சந்தானத்தார். திரு. அ. சின்னத்தம்பி அவர்களின் சந்தானத்தார்.
-81 -

Page 57
10. திரு. க. மார்க்கண்டு அவர்களின் சந்தானத்தார். 11. திரு. இ. மார்க்கண்டு வைத்தியர் அவர்களின் சந்தானத்தார். 12. திரு. சீ. தங்கராசா அவர்களின் சந்தானத்தார். 13. திரு. க. இளையதம்பி அவர்களின் சந்தானத்தார். 14. திரு. சி. முருகேசு அவர்களின் சந்தானத்தார். 15. திரு. சி. இளையதம்பி அவர்களின் சந்தானத்தார். 16. பூரீ கந்தசுவாமிகோயில் பொறுப்பில் தீர்த்த உற்சவம்.
ஏனைய மாதாந்த விசேட பூசைகளின் உபயகாரர்கள் இடையிடையே மாற்றம் பெறுவதுண்டு. பூரீ மாவடிக் கந்த சுவாமி கோயிலின் ஆரம்பம் நிச்சயமாக 1921ம் ஆண்டு. ஆனல் 1821 என்பது பிழையாகும். நிரந்தரமான இரு பூசைகளின் உபயகாரர்கள் பின்வருமாறு:-
(1) சித்திராபூரணை திரு. த. கயிலாயபிள்ளை குடும்பத்தினர். (2) வருட சங்காபிஷேகம் - திரு. ஞா. கந்தையா குடும்பத் தினர். இவ்வுற்சவத்திற்கான உபயகாரர்கள் மாற்றப்பட LDfTTi - LifTf 7796 677 ...
கந்தஷஷ்டி விரதப் பூசைகளில் விரதகாரரினல் ஒரு பூசை யும், அன்னதானமும் பொறுப்பேற்று நடாத்தப்படும். ஏனைய பூசைகள் உரிய உபயகாரர்களினுல் நடாத்தப்படும். அபிஷேகம் சுவாமி உள்வீதி உலாவருதல் என்பன இதன் விசேட அம்சங்க ளாகும். ஆறு நாட்களும் கந்தபுராண படலமும் ஈற்றில் திருக் கலியாண நிகழ்ச்சிகளும் நடைபெறுவதுடன் சூரசம்மாரவிழா உரிய உபயகாரர்களினுற் திறம்பட நடாத்தப்பட்டும் வருகின் நிறது .
திருவெம்பாவை பத்து நாட்களும் விசேட அபிஷேக பூசை உரிய உபயகாரர்களினுல் நடாத்தப்படுகிறது. தைப்பொங்கல் நிருவாக சபையின் உபயமாகும். சித்திரா பூரணை அபிஷேக ஆராதனைகளுடன் உரிய உபயகாரர்களினுல் நடாத்தப்படுகிறது. தைப்பூசம், மாசிமகம் என்பவற்றில் விசேட அபிஷேக பூசை நடைபெற்று வருகிறது. தினமும் நவக்கிரக பூசையும், அர்ச் சனைகளும் நடைபெறுகின்றன. வருடாந்த சங்காபிஷேகம் உரிய உபயகாரரினல் விசேடமாக நடைபெற்று வருகிறது.
இன்று இக்கோயிலுக்கு நான்கு ஏக்கர் வயல் நிலமும், பூசகர் இருக்கும் வீடு வளவும், இதன் வடபுற வளவும், ஆலயம் அமைந்திருக்கும் வளவும் உட்பட ஐந்து ஏக்கர் நிலமுமுண்டு. அர்ச்சனை, ஊரவர்களின் நன்கொடை, வயற்குத்தகை இவற்றின் மூலம் வரும் வருமானத்தைக்கொண்டு கோயில் நன்கு பரா மரிக்கப்பட்டு வருகிறது.

qolo uosog) guru, soos go grigimotosfēr

Page 58

4ஆவது இயல் :
முருகன் கோவில் ஆறு.
5. ஆரையம்பதி கந்தசுவாமி
கோவில்
ஆரையம்பதி மட்டக்களப்புத் தொகுதியில் ஒரு பிரபல மான கிராமம். இத்தொகுதியிலுள்ள கிராமங்கள் பலவற்றுள் ளும் பெரியதும் சனநெருக்கம் கூடியதும் சைவப் பெருமக்கள் நிறைந்ததுமான ஒரு வளம் பொருந்திய கிராமம் இது. மட்டக் களப்பு நகரின் தெற்கே சுமார் நாலு மைல் தூரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஒரு கிராமம். கல்வியிற் பெரியது என்று பெயர் பெற்ற ஒருசில கிராமங்களுள் இதுவும் ஒன்று. இவ்வூரில் ஆரைப் பற்றைகள் அல்லது நீரோடைகள் வளைந்து வளைந்து சென்று வாவியுட் கலப்பதால் இவ்வூருக்கு ஆரைப்பற்றை என்று பெயர் உண்டாயிற்று. அன்றியும் அவ்வோடைகளிலே ஆரல்மீன்கள் நிறைய வாழ்ந்த காரணத்தால் இவ்வூருக்கு ஆரைப்பற்றை என்று பெயருண்டாயிற்று என்றும் ஒரு காரணம் சொல்வர். மேலும், ஆரல் எனப்படும் வல்லாரை ன்ன்கின்ற கீரைவகை நிறைய இந்நீரோடைகளின் ஓர்ங்களில் முளைத்திருந்த காரணத் தினுல் இவ்வூருக்கு ஆரைப்பற்றை என்று பெயர் க்ண்டாயிற்று என்றும் கூறுவர். இவ்வாரைப்பற்றை என்னும் விளழர்னஊர்ப் பெயர் திருந்தி ஆரையம்பதி என்று இக்காவத்தில் வ்ழங்கப்படு கின்றது. இவ்வாரையம்பதி என்னும், பெயர்ப் மிரிவு 1872ம் ஆண்டுதான் அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டது.s அதற்கு முன்பு காத்தான்குடி என்னும் பெயரே இப்பகுதிக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.
காத்தான் என்ற வேடர் தலைவன் ஒருவன் காத்தான் குடியிருப்பு என்னும் மத்திய பகுதியில் இருந்தான் என்று வர லாற்ருல் அறிகின்ருேம். அவன் தொழில் வேட்டை ஆடுதலும், மீன்பிடித்தலுமாகும். அவன் ஒருநாள் மீன்பிடிக்க வலை கொண்டு வந்தபோது மட்டக்களப்பு வாவிக்கருகில் இருந்த பற்றை ஒன்றி னுள் ஒரு கல் விக்கிரகத்தைக் கண்டான். அதைப் பயபக்தி யுடன் எடுத்துக்கொண்டு விக்கிரகம் கிடந்த இடத்திற்குப் பக் கத்திலிருந்த ஒரு பெரிய ஆலமரத்தின்கீழ் வைத்து, பூசித்து வந்தான். அதுவே காலகதியில் இக்கோயிலாற்று என்பர்.
-83

Page 59
அன்றியும் காத்தான் என்பவன் ஒரு பெரிய கோயிலைக் கட்டி அதனுள் தங்க வேலாயுதம் ஒன்றை வைத்து, பூசனை ஆற்றிவந்தான் என்றும் கூறுப. அக்கோயிலிருந்த இடம் “கோயில் குளம்” என்னும் பெயரால் ஆரைப்பற்றையின் தென் கோடி யில் அமைந்துள்ளது. அங்கே இடிபாடுகள் உடன் கூடிய பல கட்டிடங்கள் மாளிகைகள்போலவும் இருந்தன என்பதை 1940ம் ஆண்டில் நானும் கண்டேன். அந்தக் 'கோயில் குளம்' என் னும் ஊர்ப்பகுதி அக்காலத்தில் ஒரு பெரிய ஊராக இருந் திருக்கவேண்டும் என்றும், காத்தான் என்பவன் அவர்களின் தலை வஞய் அவர்களை ஆண்டுவந்த ஒரு குறுநிலமன்னன் என்றும் தீர்மானிக்கமுடிகிறது. இக்கோயிலையும் காத்தானையும் பற்றிய ஐதீகங்கள் பல இன்று கேட்கப்படுகின்றன. ஐதீகங்களான இவை பற்றி மேற்படி கோயில் வரவு செலவு அறிக்கையில் பின்வரு மாறும் கூறப்படுகிறது.
இக்கோயில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மிகப் பழமை வாய்ந்த ஆலயங்களுள் ஒன்ருகும். நாம் அறிந்த காலம் முதல் இதன் மூலஸ்தானத்தில் வேல் பிரதிட்டை செய்யப்பட் டுள்ளது. இவ்வாலயம் இருக்கும் இடத்தினை உள்ளடக்கிய பகுதி மண்முனைப்பற்று என வழங்கப்படுகிறது. இப்பகுதி மிகப் பழைய காலத்தில் காத்தான் என்ற தமிழர் தலைவன் ஒருவனின் அதி காரத்துக்குட்பட்டதாக இருந்ததென்றும் அவன் தனது வழி பாட்டுக்கெனத் தன் குலதெய்வமான குமரனுக்கு கோயில் அமைத்தான் என்றும் கூறப்படுகிறது. ஆலய வேலைகள் துரித மாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வேலைகளைப் பார்வையிட ஆலமர நிழலில் வந்தமர்ந்த அத்தலைவனது கண் களிலே அழகிய தங்கவேல் ஒன்று தென்பட்டது என்றும், ஆனந்த மேலீட்டில் அவ்வேலினைத் தமது இரு கரங்களாலும் ஏந்தியதும் அவ்வேல் கல்லாகச் சமைந்துவிட்டதென்றும், அதிசயமுற்ற அத் தமிழர் தலைவன் தான் அமைத்த ஆலயத்தில் அக்கல்வேலினை வைத்து வழிபட்டுவந்தான் என்றும் இப்பகுதியில் பல கர்ண பரம்பரைக் கதைகள் நிலவுகின்றன. “அவன் கோயில் அமைத்த தாகக் கூறப்படும் இடம் “கோயில் குளம்" என்று இப்பொழு தும் கூறப்படுகிறது. அங்கு காணப்படுகின்ற தடயங்களிலிருந்து அது குறுநிலத் தலைவன் ஒருவனின் வாசஸ்தலமாக இருந்திருக்க லாம் என ஊகிக்க" முடிகிறது.
பின்னர் உண்டான காலசசூழ்நிலை பலமாற்றங்களை உண் டாக்கின. பகைவரின் தாக்குதலால் ஏற்பட்ட தளர்ச்சியினல் காத்தான் பின்னடைய ஆலயமும் புறக்கணிக்கப்படுவதாயிற்று. இதனேடு மட்டக்களப்பு வாவியும் வேறு பெருக்கெடுத்து ஆல யத்தை நிலைகுலையச் செய்தது.
- 84 -

“முன்னவன் கோயிற் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்குள வாரிவளம் குன்றும் " - திருமூலர்.
இதற்கமைய ஊர் பஞ்சத்தால் வாடியது. ஆலயத்தைப் பூசனை யில்லாது போட்டனர். இவ் ஆலயத்தைப்பற்றி அதே வரவு செலவு அறிக்கையில் வேறு ஒரு உண்மை கூறப்பட்டுள்ளது. அது பழைய ஒரு ஏட்டிலிருந்து திரு. சி. ப. கண்ணப்பன் என் பவரால் 10-11-1887ல் பிரதிபண்ணப்பட்டுள்ளது. அப்பிரதி யைப் பார்த்து திரு. சி.குலசேகரம்பிள்ளை என்பவர் 14-10-1980ல் பிரதி எழுதி வரவு செலவு அறிக்கையில் சேர்த்துள்ளார். இதனை வாசகர்கள் படித்தறிதல் முக்கியமானதாகுமாதலில், கீழே அத னைத் தருகிறேன்.
“சில காலத்திற்குமுன் காத்தான் என்னும் பெயரையுடைய வோர் வேடன் இப்பகுதியில் இருந்தான். இவனுடைய தொழில் மீன்பிடித்தலும், மிருக வேட்டையாடுதலுமேயாம். அக்காலத்தி லிருந்த குடிசனங்களில் இவனே சற்று அதிகாரம் வாய்ந்தவன். இவன் வசித்திருந்த காலம் 1692ம் ஆண்டு. அதாவது கலியுகம் பிறந்து 4794ம் வருடத்தின் பின். இவனேர் வந்தேறு குடியைச் சேர்ந்தவன். இவனது பரம்பரையானேர் அக்காலத்தில் புத் தளப்பகுதியில் குடியேறியிருந்த தென் இந்தியராவர். இவன் வசித்திருந்த இடம் காத்தான்குடியென்னும் கிராமத்தின் மத்திய பகுதி. அங்கிருந்து இவன் வழக்கம்போல வலைகொண்டு தெற்கு நோக்கிவரும்போது, ஒருநாள் ஆற்றங்கரையோரமாக ஒரு பற் றைக்குள் கல்லினுற் செதுக்கப்பட்ட ஒரு விக்கிரகங் கிடக்கக் கண்டு, அதை எடுத்துக் கிட்டடியாக மணல் செறிந்த இடமா யுள்ள ஓர் பெரும் விருட்சத்தடியில் வைத்து அதை வணங்கிக் கொண்டு வந்தான். இவஞேர் பிரம்மச்சாரியாதலின், அன்று தொட்டு இவன் தனது சொந்த இருப்பிடத்திற்குப் போகாமல் விக்கிரகமிருந்த இடத்தையே தனது பதியாகக்கொண்டு சீவித்து வந்தான். மழைக்காலம் வந்ததும் அவ்விக்கிரகம் இருந்த இடத் தில் இலைகுழைகளினலும் புல்லினலும் வேயப்பட்ட ஒரு குடி சையை இயற்றி, அவ்விக்கிரகத்தையும் காப்பாற்றித் தனது தொழிலையும் வழமைபோற் செய்துகொண்டு வந்தான்'
காத்தான் விக்கிரகத்தை வைத்து வணங்கத் தொடங்கி இரண்டொரு வருட காலத்தின்பின் இவ்வூரில் பேதிநோய் தலை காட்டினமையின் அதிகமானேர் மாண்டனர். ஆயின், இக்காத் தானுக்கு ஒரு சிறு நோயுமே உண்டாகவில்லை. சனங்கள் இதைக் கண்டு அதிசயித்து, இந்தக் கோதாரி கெதியில் நீங்கிவிட்டால் காத்தானது கல்லு விக்கிரகத்திற்குப் பொங்கல், பூசை முதலி யன செய்து நிவேதிப்போமென்று நேர்த்திக்கடன்பண்ணி வைத்
-85

Page 60
கார்கள். அன்று தொடக்கம் கோதாரி நோய் படிப்படியாய்க் குறைந்து இரண்டு மூன்று தினங்களில் முற்ருய் இல்லாது போய் விட் து. கோதாரி நீங்கிய அடுத்த வெள்ளிக்கிழமை தொடக்க மாக சனங்கள் அவ்விடத்தில் பொங்கல், பூசை முதலியன தவ முது செய்துகொண்டு வந்தார்கள்.
சில வருடங்களின் பின்னர் காத்தான் இறந்துவிட்டான். பிறகு ஊரவர்கள் சேர்ந்து குடிசை இருந்த அவ்விடத்தை மூல ஸ்தானமாக வைத்து, கல்லினல் ஒரு சிறு கோயில் இயற்றி விக்கிரகத்தையும் வைத்து வணங்கிக்கொண்டு வந்தார்கள். அதுவே இப்போதுள்ள கந்தசுவாமி கோயிலின் மூலஸ்தான மாகும்.
இதிலிருந்து சில வருடங்களுக்குப் பின் அக்காலத்தில் ஆரைப்பற்றையைச் சேர்ந்த செங்குந்தர் பகுதியில் தனவான யிருந்த “நாகப்பர்" என்னுமொருவர் கொஞ்சப் பணம் செல வழித்து இக்கோயிலைப் பெருப்பித்துக் கட்டினர். இவரிறந்து போக, திருவிளங்கு குடியாரில் ஒருசிலர் சேர்ந்து இக்கோயிலின் வெளிமண்டபம், மதில் முதலியவற்றைத் தங்கள் பொருள் கொண்டும் பிறரிடம் அறவிட்டும் பெருப்பித்துக் கட்டினர்கள். இந்தக் குடியாருக்கு இது விடயத்தில் மன்றுளாடியார் குடியார், புலவனுர் குடியார், சம்மானேட்டி குடியாராதியோர் பொருளு தவியுஞ் செய்தனர். இது நடைபெற்றது 1850ம் ஆண்டில் இக் கோயிலின் வெளிமண்டபத்தில் 1864ம் ஆண்டு ஆனி மாதம் 1ந் திகதியன்று கொடித்தம்பம் நாட்டப்பெற்றதென்க.
கடைசியாய் இக்கோயில் உரர்ச் சனங்களின் அதிகாரத் திற்கு அடக்கமாய்வர தம்பலகாமமிருந்து வந்த ஒரு பூசகரை இக்கோயிலுக்குப் பூசகராக வைத்தனர். அக்காலத்தில் இக் கோயிற் பராமரிப்பாளராய் பூரீமான் நொத்தாரிஸ் காசிநாத ரென்பவர் வண்ணக்கராகவும் பூரீமான் கதிரவேற்பிள்ளை பெருக்கு தோர் கணக்கப்பிள்ளையாகவும் இருந்தனர். திருவிளங்கு குடி யாரும் மன்றுளாடியார் குடியாருமே இக்கோயிலைத் தக்க நிலை மைக்குக் கொண்டுவந்தது காரணமாக இந்த இரண்டு குடி யாருக்குமே இக்கோயிலின் பராமரிப்புத் தத்துவம் உரித்துடைய தாகும். (முறையே கணக்கப்பிள்ளை, வண்ணக்கு என்னும் உத்தி யோகங்கள்) இக்கோயில் உண்டுபட்ட காலம் தொடக்கம் இக் காலபரியந்தம் இம்முறையாகவே இக்கோயிலின் பராமரிப்புத் தத்துவம் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. இனிமேலும், தலைமுறை தலைமுறையாக இவ்விதமே நடைபெற்றுக்கொண்டு வர ஆதிமத்தியாந்தரகிதராகிய எம்பெருமான் கிருபை பாலிப் | J7 UIT 35.
-86

இக்கோயில் கட்டப்பெற்றபின் முதன்முறை 1802ம் ஆண் டிலும் இரண்டாம் முறை 1864ம் ஆண்டிலும் கும்பாபிஷேகம் பண்ணப்பட்டது. இஃது ஆதியிற் பிள்ளையார் கோவிலாக இருந் தது. சிலகாலத்தின் பின்பே கந்தசுவாமி கோயிலென வழங்கப் பட்டு வருகின்றது. காத்தான் என்னும் வேடனுற் கண்டெடுக் கப்பட்ட கல்லு விக்கிரகம் ஒரு பிள்ளையார் சொரூபம். அதை இப்போதும் இக்கோயிலுட் காணமுடியும்.
அக்காலத்தில் இப்போதிருக்கும் ஆரைப்பற்றைக்கும் காத் தான்குடியிருப்பென்னும் ஒரே ஒரு நாமமே இருந்துவந்தது. கி. பி. 1872ம் ஆண்டு வரையிற்ருன் காத்தான்குடி, ஆரைப் பற்றையென அரசினரால் இரண்டாய் வகுக்கப்பட்டது. ஆரைப் பற்றையில் ஒவ்வோர் குடிமைகளையும் ஒவ்வோர் குடிமைகளின் இருப்பிடங்களையும், பூரீமான் கதிரவேற்பிள்ளை பெருக்குதோர் என்பவர் வேறு வேருக ஆங்காங்கு பிரித்துவைத்துள்ளார். இவ ரிறந்தது 1958ம் ஆண்டில்.
மேலே கூறப்பட்ட பிந்திய ஏட்டுக் குறிப்பின்படி, காத் தான் என்பவன் கண்டெடுத்தது பிள்ளையார் விக்கிரகமே என் பதும் அதனைக் கோயில் கட்டி வைத்து கந்தசுவாமியின் பெய ரைக் கூறி வணங்கினன் என்பதும்தான் உண்மையான வரலாறு ஆகும். அவன் தங்க வேலாயுதத்தைக் கண்டான் என்பதும் கோயில் குளத்தில் கந்தசுவாமி கோயில் கட்டினன் என்பதும் ஐதீகக் கதைகளே எனக் கொள்ளக்கிடக்கின்றது.
ஆரையம்பதியின் ஆதிக் குடிமக்களான முகத்துவாரத் தெருவார், நடுத்தெருவார், ஆரைப்பற்றைத் தெருவார், சம் மான்காரர் ஆகிய குருகுலத்தோரும், வேளாள தெருவார், பணிக்கர், செங்குந்தர், பொற்கொல்லர் என்போரும் இவ்வாலயத் தில் பாரம்பரிய உரிமையும் உரித்துமுடைய எட்டுப்பாகை மக்க ளாகும். இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி இவ்வாலய நித்திய நைமித்திக வழிபாடுகளை ஆதிகாலம் முதல் செய்துவந்துள்ளனர்.
இவ்வூர் ஆலயத்தின் வட எல்லையில் பரமநயினரும், தென் எல்லையில் ஆலடிவயிரவரும், கிழக்கு எல்லையில் காளிதேவியும், மேற்கு எல்லையில் காட்டுமாவடி வயிரவரும், ஏனைய திக்குகளில் கண்ணகியம்மன், கிருஷ்ணன், சமாதடிப் பிள்ளையார், மாரியம் மன், பேச்சியம்மன், திருநீலகண்டப் பிள்ளையார், சித்திவிநாய கர், ஆலடிப்பரமன், செல்வாநகர்சிவன் முதலிய தெய்வங்களும் எழுந்தருளி விளங்குகின்றனர். இத்தெய்வங்களை ஊரின் மத்தி யில் செங்கோல் கொண்டெழுந்தருளி உள்ள செவ்வேற் பெரு மானது அதிகாரத்தினை ஏற்றுச் செயற்படும் ஊரின் காவற் தெய்வங்கள் போலக் கருதமுடிகிறது.
---س-87---

Page 61
இக்கே! யிலுக்கும் கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ் வரர் கோயிலுக்கும் குளக்கோட்டு மன்னன் காலத்திற்கு முன் பிருந்தே நெருங்கிய வரலாற்றுத் தொடர்பு இருந்துவருகிறது. அத்தொடர்பினை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகள் இவ் விரு ஆலய மகோற்சவ காலங்களிலும் இன்னும் இடம்பெறுவதுண்டு. ஆரை யம்பதி கந்தசுவாமி கோயில் மகோற்சவ காலத்தின் மூன்ரும் நாள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து அவ்வாலய வண்ணக்குமார், குருக்கள், கோவிலார் முதலியோர் விருதுகளுடன் ஆரையம்பதி முருகனிடம் வருவதும், அவர்களை ஆரையம்பதி கந்தசுவாமி கோயில் நிருவாகிகளும் ஊர்மக்களும் மங்கல வாத்தியங்களுடன் எதிர்கொண்டு அழைத்துச்செல்வதும், அதுபோல் கொக்கட்டிச்சோலைத் தான்தோன்றீஸ்வரர் தேர்த் திருவிழாவன்று ஆரையம்பதி ஆலய நிருவாகிகள் ஊரவர்கள் முதலியோர் 'வேல்” கொண்டு பாதயாத்திரையாகத் தான்தோன்றி அப்பரிடஞ் செல்வதும், இவர்களைக் கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீஸ்வரர் கோயில் நிருவாகிகளும் ஊரவர்களும் மங்கல வாத்தியங்களுடன் எதிர்கொண்டு அழைத்துச்செல்வதும், ஆரை யம்பதி மக்கள் தேரின் வடத்தினைப் பூட்டி தேர் ஒட்டத்தினை ஆரம்பித்து வைப்பதும், பக்தி பரவசமூட்டும் அருள்மிகு கண் கொள்ளாக் காட்சிகளாகும். கொக்கட்டிச்சோலைத் தான்தோன் றிஸ்வரர் கோயிலுக்கும், ஆரையம்பதி கந்தசுவாமி கோயிலுக்கு முள்ள பழம்பெரும் தொடர்பின் ஞாபகச் சின்னமாக இன்னமும் விளங்குவது தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் நுழைவாயிலின் முன்புள்ள திருக்கலியாண மண்டபமாகும். அதனை ஆரையம்பதி மக்கள் அமைத்து வருடாவருடம் தேர்த் திருவிழாவுக்கு முன்பு புதிய ஒலைகளால் வேய்ந்து சிறப்புச் செய்யும் வழக்கம் இப்போ தும் உண்டு.
இக்கோயிலில் உற்சவம் புரட்டாதிப் பூரணையில் நடை பெறும் தீர்த்த உற்சவத்தோடு 10 நாள் திருவிழா கொண்டு நிறைவேறுகிறது. அவை முறையே :-
1ம் நாள் - கொடியேற்றம் ஊர்மக்கள். 2ம் நாள் - குருக்கள். 3ம் நாள் - பொன்தொழிலாளர் பாகை. 4ம் நாள் - பணிக்கர் பாகை. 5ம் நாள் - ஆரைப்பற்றைத் தெருப்பாகை. 6ம் நாள் - நடுத்தெருப் பாகை. 7ம் நாள் - வேட்டைத் திருவிழா - முகத்துவாரப் பாகை. 8ம் நாள் - சப்பரத் திருவிழா - சம்மானேட்டிப் பாகை, 9ம் நாள் - தேர்த் திருவிழா - வேளாளர் தெருப்பாகை, 10ம் நாள் - தீர்த்தம் - ஊர்மக்கள்.
- 88 -

இதற்குமேல், மாதந்தோறும் வருகின்ற கார்த்திகை நட் சத்திரத்தில் ஒவ்வொருவர் பூசை நிகழும். திருவெம்பாவைப் பூசை ஒழுங்காக நடந்து 10வது நாள் தீர்த்தமாடி முடிவுறும். மேலும் இவ்வாலயத்தில் தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத் தரம், சித்திராபூரணை, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகைத்தீபம், விநாயக சஷ்டி, திருவாதிரை முதலிய காலங்களில் அலங்கார உற்சவ விழாக்கள் நடைபெறு கின்றன. எம்பெருமானைத் தரிசிக்கக் கந்தசஷ்டியிலன்று கூடுகின்ற மக்கள் தொகை எண்ணில் அடங்கா. எம்பெருமான் பொற் கழலினையே தம் துணையெனப் போற்றிக் கடும் விரதமியற்றி நீண்டகாலம் புத்திரச் செல்வமில்லாமலிருந்த பலர் புத்திர பாக்கியம் பெற்றுச் சீரும் சிறப்புமாக வாழ்கின்ற பல கதை களை இங்குள்ள மக்களிடையே இன்றும் கேட்கலாம்.
இக்கோயிலில் வருடாந்த வரவு செலவு அறிக்கை மிக விபரமாகவும், ஒழுங்காகவும் நிறைவேற்றி வெளியிடப்படுகிறது என்பது குறித்து இக்கோயில் பரிபாலன சபையாருக்கு மிகுந்த நன்றியும் பாராட்டுக்களும் கூறுகின்றேன்.
இவ்வாலயத்தைப் பற்றிய வரலாறு 12 பாடலாக எழுந் துள்ளது. மாதிரிக்கு ஒரு பாடல் இங்கே தருகின்றேன்.
பதினெண் நூற்று ஐம்பதினில்
பரிவா யிலங்கு திருக்குடியார் பதிசேர் மன்று ளாடியுடன்
மறைசேர் புலவஞர் குடியும் கதிகூர் சம்மா ஞேட்டியரின்
கனநல் உதவிதனைப் பெற்று பதியாய் மகாமண்டபத்தினெடு
பழிப்பில் மாட மாக்கினரே.
இத்துடன் ஊஞ்சற் பாக்களும் ஆரையம்பதி கந்தசுவாமி கோயில்பேரில் பாடப்பெற்று அச்சாகியுள்ளன. அவற்றுள் ஒன்று:-
மட்டுமாநகரின் தெற்கே வகுத்த கல்ஈரிரண்டில்
வித்தைகள் பலவுமோங்கி விளங்கிடு திருவூராரை யம்பதி வாழும் கந்த அருள் மிகு சுவாமிமீது
மன்குலம் சிறக்க வென்று வாழ்த்தியே ஊஞ்சல்பாட தம்பியின் ஒலம்கேட்டு தண்புனம் கடிது சென்று
வெம்பியே வாடிநின்ற வேலண்ை இரங்கிநோக்கி நம்பியின் தங்கை வள்ளி நாயகி தனையணைத்த
தந்தியின் உபயபாதம் தலைமிசை சூடுவோமே.
இவைபோன்று இவ்வாலயம் பற்றிய தனிப் பாடல்களும் பல உள. அவற்றை எல்லாம் திரட்டி வெளியீடு செய்வதும் ஆலய பரிபாலன சபையாரின் கடனுகும்.
- 89 -

Page 62

golo, uog, gunese osnussreg, biasąove Hıņussegg-i-non

Page 63

4ஆவது இயல்:
முருகன் கோவில் ஆறு.
(6) கல்லடி வேலாயுத சுவாமி
கோவில்.
மட்டக்களப்பின் முகப்புப்போல் பிரயாணம் செய்வோர் கண்ணுக்கு முதலாவதாகத் தோன்றுவது, கல்லடி வேலாயுத சுவாமி கோயில், மட்டுநகரிலிருந்து தெற்கு நோக்கி கல்முனைக் குச் செல்லும் நீண்ட பாதையில், நீண்டு கிடக்கும் கல்லடிப் பாலத்தைத் தாண்டிய பின்னர் முதலாவதாகச் சற்றுத் தூரத் திற்கு அப்பால் கண்ணுக்குத் தெரிவது இக்கோயிலாகும். ஊர் ருேட்டும், “காட்டு ருேட்டும்' பிரியும் சந்திக்கு அப்பால் இரண்டு ருேட்டுகளுக்கும் நடுவில் அமைந்திருப்பது இக்கோயில். முன் ல்ை இக்காலத்தில் கட்டப்பட்ட ஒரு “சினிமாத் தியேட்டர்", கோயிலுக்குப் பின்னல் ஓர் அரசாங்கப் பாடசாலைக் கட்டிடம். இவற்றைக் கடந்து செல்லுமிடத்து, மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் குருகுலம், சிவானந்த வித்தியாலயம், சுவாமி விபுலானந்தர் மணிமண்டபம், சாரதா மகளிர் இல்லம் என்ப வற்றுடன் விபுலானந்தர் இசை, நடனக் கல்லூரியையும் காண லாம்.
கிழக்கிலங்கையிலுள்ள ஒரு சில பழமைமிகு ஆலயங்களு டன் ஒப்பிடும்போது இவ்வாலயம் காலத்தால் பிந்தியது எனி னும் அருட் சிறப்பிலும் தலமகிமையிலும் பெரிதும் சிறந்து விளங்கும் ஆலயமாகத் திகழுகின்றது. இவ்வாலயம் மட்டக் களப்பு மாநகரசபை எல்லையினுள் அமைந்த கல்லடியில் புதிய கல்முனைப் பேர் பாதைக்கும் பழைய கல்முனைப் பேர்பாதைக்கு மிடையில் அழகுற அமைந்து நிற்கின்றது.
ஆயினும் இதுதோன்றிய காலத்தில் இத்தலம் காடடர்ந்த பகுதியாக கல்முனைக்குச் செல்லும் பழைய வீதியை மாத்திரம் கொண்டதாகவிருந்தது. மக்கள் நடமாட்டம் குறைந்து காணப் பட்ட இவ்விடத்தில் இந்நூற்ருண்டின் ஆரம்பமாகிய 1901ம் ஆண்டில் இவ்வாலயம் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தினை அணித்து, இன்னும் காட்சிதரும் தேத்தாமரம் இவ்வாலய வரலாற்றுடன் நெருங்கிய
سس- 91 سس

Page 64
முக்கியத்துவம் உடையதாக விளங்குகின்றது, நெடுநாள் நோயி ஞல் வருந்தி, கந்தசஷ்டி விரதம் நோற்று அவ்வழியால் மனம் நொந்த நிலையில் வந்துகொண்டிருந்த கந்தவேற்பிள்ளை என் பவருக்கு தேத்தா மரநிழலிருந்து வெளிப்பட்ட பண்டாரவடிவி லிருந்த ஒருவர் பச்சிலைகளைக் கைகளில் கட்டி மறைந்தார்.
1901ல் நடைபெற்ற இவ்வற்புத நிகழ்ச்சியே இவ்வால யத்தின் ஆரம்பக்கால்கோளாக அமைவுற்றது. அன்று அருகி லமைந்த பூரீ சித்திவிநாயகராலய அர்ச்சகரது கனவில் முருகப் பெருமான் தேத்தாமரத்தடியில் தனக்கொரு பீடமமைத்துத் தரும்படி தெரிவித்தார். அர்ச்சகர் கனவும் கந்தவேற்பிள்ளைக்கு நடந்த அற்புதமும் ஊர் மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு தேத்தாமர நிழலில் முருகப்பெருமானுக்கு ஒரு பீடம் அமைக்கப்பட்டது.
பொங்கலும் பூசைகளும் நடைபெறலாயின. கல்லடியைச் சேர்ந்த தோ. கு. சின்னத்தம்பியென்பவர் பெரிதாகக் கோயில் அமைக்கும் பணியினை ஆரம்பித்து வேலை நடைபெற்றுக்கொண் டிருந்தபோது தேத்தாமரத்தடிப்பீடத்தை மாற்ருதீர் என அர்ச் சகர் கனவில் உரைக்கப்பட்டது. இது விடயமாக பூரீ விநாயக ராலயத்தில் பூவும் போட்டுப்பார்க்கப்பட்டது. இடத்தினை மாற் றக் கூடாதெனப் பூப்பரீட்சையும் காட்டியது. எனவே, பழைய பீடத்துடன் சேர்ந்ததாகவே சிறிய ஆலயமாக அமைக்கப்பட்டு பூசைகள் நடைபெற்றன. இன்றும் கல்லடி வாழ் மூதாட்டிகள் எம்பெருமானை “தேத்தாக் கிழவன்' என்று பக்திரசம் சொட்ட அழைப்பர்.
1927ம் ஆண்டு முதல் வருடாந்தத் திருவிழாக்களும்
சமுத்திர தீர்த்தோற்சவமும் ஆரம்பிக்கப்பட்டன. வைகாசிப்
பெளர்ணமிக்குமுன் அமைந்த 6 நாட் திருவிழாக்களும், சுவாமி வீதிவலம் வருதலும், பெளர்ணமி தின அருணுேதய வேளையில்
தீமிதிப்பு வைபவமும், சமுத்திர தீர்த்தமும் நடைபெறுவது ஒழுங்காயிற்று. வருடத்திற்கு வருடம் இவ்வருடாந்த திரு
விழாக்களின் சிறப்பும் தரமும் பெருகிக்கொண்டே செல்கின் றது. மிகக்குறுகிய காலத்துள்ளாக எம்பெருமானது கீர்த்தி
பெரிதாகப் பலவிடங்கட்கும் பரவியுள்ளது. நேர்த்திக் கடன் களுடன் இத்திருத்தலம் நாடிவந்து தம்துயர் தீர்த்துக்கொண்ட, அன்பர்கள் ஏராளமாயினர். அண்மையில் 1978ல் இடம்பெற்ற
சூருவளியினல் இவ்வாலயத்தின் முன்புறம் சேதமுற்றபோதிலும் மூலஸ்தானம் பழுதடையவில்லை. விரிவான முறையில் புனருத்
தாரண வேலைகள் மேற்கொள்ளப்பட்டு 1982ம் ஆண்டு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
---92س--

தினப்பூசைகள் நடைபெறுவதுடன் வெள்ளிக்கிழமைகள் தோறும் விசேட பொங்கல் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. வருடாந்த திருவிழாக்களைத் தவிர, கந்தசஷ்டி விரத காலத்தில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு காப்புக்கட்டி விரதம் அனுஷ்டிப்பர். குமாராலயதீபம், கந்தஷஷ்டி திருவிழா, மண வாளக்கோலத் திருவிழா ஆகியவை விசேட ஆராதனைகளாக அமைந்துள்ளன.
முன்பு இவ்வாலய நிருவாகம் ஊர் மக்களிலிருந்து தெரி வாகும் தலைவர், வண்ணக்கர் ஆகியோரது பராமரிப்பிலிருந்து வந்தது. 1960ம் ஆண்டின்பின்னர் ஆண்டுதோறும் நடைபெறும் ஊர்ப்பொது மகாசபையிலிருந்து தெரிவாகும் ஆலய பரிபாலன சபையின் பொறுப்பில் இவ்வாலயம் நிர்வகிக்கப்படுகின்றது. கல்லடியில் அமைந்துள்ள பூரீ சித்தி விநாயகராலயம், பூறி விஷ்ணு ஆலயம், பூறி வேலாயுத சுவாமி ஆலயம் ஆகிய முத்திருவால யங்களின் நிருவாகமும் மேற்படி ஆலய பரிபாலன சபையின ராலேயே நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
س----93-س--

Page 65

bi műĺws sẽofiso fù-it, uosoɛɛg aeon --
石垣4%)
*---

Page 66

5ஆவது இயல்:
அம்மன் கோவில்கள் ஐந்து.
(1) மண்டூர் - மண்டுக்கொட்டிைமுனை துறையடி மாரியம்மன் கோவில்
மட்டக்களப்பில் மிகவும் பழமையும் பிரசித்தமும் உள் ளனவான திருப்படைக் கோயில்களுள் ஒன்ருன தில்லை மண்டூர் முருகன் கோயிலைக் கொண்டது மண்டூர் என்னும் திருப்பதி. முருகன் கோயில் மண்டூர்ப் பிரதேசத்தின் தெற்குக் கரையில் அமைந்துள்ளது. அதன் எதிர்ப்புறத்தே பரந்த மட்டக்களப்பு வாவி இருக்கிறது. இத்தகைய திருப்பதி விபுலாநந்த அடிக ளாரால் 'மண்டூர்” என்னும் புண்ணியப் பழம்பதி என்று பாராட்டப்படுவது.
இப்பதியின் கிழக்குக் கோடி நீண்டதும் வயல் சூழ்ந்ததும் ஆகும், அதன் எல்லையில் மட்டக்களப்பு வாவியின் ஒரு பகுதி கிழக்கெல்லையாக அமைந்துள்ளது. இவ்விடம் மண்டுக்கொட்டை முனை எனப்படுவது. மண்டூருக்கு நகர்ப்பக்கத்திலுள்ள கோட் டைமுனை போலிருப்பதால், மண்டூர்க் கோட்டைமுனை என்றும், மண்டு மரங்கள் நிறைந்த ஒரு திடர்ச்சோலை இருந்ததனுல் ‘மண்டுக்கொட்டைமுனை" என்றும் இப்பெயர் வழங்கலாயிற்று எனலாம். மண்டுக்கொட்டைகளை வெட்டிக் காயவைத்து, இடித்து மாவாக்கி எடுத்தால் அந்த மா பிட்டு, அவித்துத் தின்பதற்கு மிகச் சுவையான உணவாகும்.
1940ம் ஆண்டுக்கு முதல் தெற்கே கிட்டங்கித் துறையிலி ருந்து “ஸ்ரீம்போட்' (STEAM BOAT மூலம் காலையில் ஏழு மணிக்குப் புறப்பட்டு வருபவர்களுக்கும், மாலையில் இரண்டு மணிக்கு அதே ஸ்ரீம் போட்டில், மட்டக்களப்பிலிருந்து திரும்பி வரும்போது, பட்டிருப்புக்கு இந்தப் பக்கம் வந்ததும் நடுநாயக மாய்த் தெரிவதாக மண்டூர் - மண்டுக்கொட்டைமுனை துறையடி மாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது.
இவ்வாலயம் வாவியின் வலது கரையில் மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே சுமார் 20 மைல் தொலைவில் மண்டூரை யும், குறுமண்வெளியையும், மட்டக்களப்பு வாவியின் மூலமாக இணைக்குமிடத்தில் இருக்கின்றது. அக்காலத்தில் குறுமண்வெளித்
- 95 -

Page 67
துறையிலிருந்து தமது வயல்களுக்குச் செல்வதற்காக மண்டூர்ப் பக்கம் வருவோரும், ம்ண்டூரிலிருந்து துறையைக் கடந்து அப்பால் செல்வோரும் தமக்கு வாவியிற் செல்லும் போது எவ்வித இடை யூறும் நேராவண்ணம் இவ்வாலயத்து அம்மனைப் பிரார்த்தித்து வந்தனர். அதற்காகவே இவ்வம்பாள் ஆதியில் இவ்விடத்தில் வைக்கப்பட்டது என்றும் பொதுவாகக் கூறப்படுகின்றது. இவ் வாலயத்திற்குத் தலவிருட்சமாய் அரசமரமொன்று மிகப் பழமை வாய்ந்ததாக உள்ளது. இதன் வடக்குத் தெற்குப் பக்கங்களில் மட்டக்களப்பு வாவிக்கரையோரமாக வயல்வெளிகளும், மேற்குப் புறமாய் மண்டூர்க் கிராமமும் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னை, குறுமண்வெளியிலிருந்து வாவியி னுாடாக மண்டூருக்கு வரும் பிரயாணிகளை வரவேற்கும் மண்டூர் மாதாவாக அருள் சொரிந்து நிற்கின்ருள். இத்துறையடிக்கு வரும் எவரும் இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னையை வணங்கிவிட்டே செல்வது வழக்கம். மண்டூர்க் கந்தசுவாமி கோயிலுக்குக் காவடி எடுப்பவர்கள் விசேடமாக விழாக்காலங் களில் இவ்வாலயத்திலிருந்தே வாய்க்கு அலகு, முதுகுக்கு முள் என்பன பக்தியுடன் ஏற்றிச்செல்வது இன்றும் நடைபெறுகிறது.
கிழக்கு மாகாணம் மட்டக்களப்புப் பிரிவில் மண்டூர் - மண்டுக்கொட்டைமுனையைச் சேர்ந்த முருகனதிகாரியார் பொ.த. ஆறுமுகமும், இவரின் மனைவி கதிரவேலு அதிகாரியார் கந்தம்மை யும் 1903ம் ஆண்டுக்கு முதல் அவர்களது சொந்தச் செலவில் மண்டூர் - மண்டுக்கொட்டைமுனைத் துறையடியில், மாரியம்மன் கோயில் ஒன்று கட்டித் தனிப்பட நடத்திவந்தனர். இவர்களுக்குப் புத்திர சந்தானமில்லை. வயோதிபர்களானபடியால் கோயில் கருமங்கள் தங்களின் மரணத்தின் பின்னும் நடைபெறவேண்டு மென விரும்பியதால் மண்டுக்கொட்டைமுனை, மண்டூர் என்னும் இடங்களில் அப்போது குடிபதியாயிருந்த கப்புகமார், வேளா ளர், சீர்பாதக்காரர், கோயிலார் முதலிய சாதிக்காரர்களுக்கு அப்போதிருந்த செல்வாக்குள்ளவர்களின் பேரில் தரும நன் கொடையாக நொத்தாரிசு மூலம் கோயிலையும், அதற்குரிய ஆதனங்களையும் எழுதிவிட்டனர். அன்று தொடக்கம் நான்கு சாதியாரும், கோயிலையும் அதற்குரிய ஆதனங்களையும், பூசைச் சடங்குகளையும் ஒழுங்குற நடத்தி வந்தனர். நடத்தியும் வரு கின்றனர்.
1910ம் ஆண்டு கோயில் கட்டியவர்களில் கந் தம்மை இறந்துபோக, கோயிலுக்கு இன்னும் இரு சாதியாராகும் முற் குகர், வேடர் என்னும் வம்சத்தாரையும் சேர்த்து ஆறுசாதி யாரின் கையில் கோயில் நிருவாகம் மாற்றப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரையும் கோயில் கருமங்கள் இதன்கீழ் செவ்வனே நடந்து வருகின்றன.
- 96 -

1903ம் ஆண்டு கோவிலுக்கு வண்ணக்கராக வேளாள வம்சத்தில் சின்னவர் வீரக்குட்டி என்பவர் கடமை ஆற்றினர். இவருடன் மற்றும் மூன்று சாதியாரிலும் கப்புகமாருக்காக விஞசகர் கோவிந்தக்கப்புகன் அவர்களையும், சீர்பாதக்காரர் களுக்காக கணபதியார் வ. வி. மாணிக்கப்பிள்ளையையும், மண் டுக்கொட்டைமுனை மக்களுக்காக காத்தார் கணபதிப்பிள்ளை யையும், கோயிலார்களுக்காக சின்னத்தம்பி குழந்தையனையும் நியமித்து நிருவாகம் செவ்வனே நடைபெற்றது. 1910ம் ஆண்டு ஒரு மகாசபைக் கூட்டம் மண்டூர் கந்தசுவாமி கோயில் வீதியில் ஆறு வருணத்திலுள்ள மக்களும் கூடினர். முந்திய நிருவாகத் தர்கள் சிலர் இறந்து போனபடியாலும் இன்னும் இருசாதி யாராகும் முற்குகர், வேடர் என்னும் வருணத்தாரிலும் சேர்த்து பதினன்குபேர் நிருவாக சபையாராகவும் அதில் வேளாளரில் மண்டூர் 1ம் குறிச்சி ஆறுமுகம் பொ. த. கந்தப்பன் வண்ணக் கராகவும் (செட்டிகுடி) தெரிவுசெய்து ஆறு வருணத்தாரிலும், ஆறு பராமரிப்புக்காரர் அல்லது மனேச்சர்மார்களுமாக அறு வரைத் தெரிவுசெய்து, நொத்தாரிசு உறுதிமூலம் உறுதிசெய்து நடைமுறைப்பட்டு வந்தது. பொலிஸ் தலைமைக்காரராக இருந் தோர் தமது பெயருக்கு முன்னுல் பொ. த. என்பதையும் சேர்த்து எழுதுவது வழக்கம். இதுபோல் இன்று வட்ட விதானை மார் வ. வி. என்பதைச் சேர்த்து எழுதுவதையும் காணலாம். (அப்படியே இங்கு மு. பொ. த. தம்பிராசா என்பது முருகப் பன் பொலிஸ் தலைமை தம்பிராசா என்று முழுப்பெயருமாகும்.) அதன் பின்பு வண்ணக்கர் இறந்துபோக திருவாளர்கள் சோ. ஞானமுத்து, த. பொ. த. வினசித்தம்பி, க. சுப்பிரமணியம் என்பவர்கள் வண்ணக்கர்களாகக் கடமை பார்த்து வந்தனர். அதன் பின்பு 1958ம் ஆண்டு தொடக்கம் மு. பொ. த. தம்பி ராசா என்பவர் வண்ணக்கராகக் கடமை ஆற்றிவருகிறர்.
1957ம் ஆண்டு வந்த பெருவெள்ளத்தில் இந்த மாரியம்மன் ஆலயம் முன் முகப்பு சுற்றுமதில்கள் அழிந்துபோக, படிப்படி யாக ஆறுவருணத்தாரும் சேர்ந்து பணம்போட்டும் கோயில் ஆதனத்தின் வருமானங்களையும் கொண்டு அழிந்த கட்டிடங் களும், பழுதடைந்த கட்டிடங்களும் திருத்தப்பட்டன. இதன்பின் 1978ம் ஆண்டு வந்த குருவளியால் சில சேதங்கள் ஏற்பட்டு அதையும் திருத்தி 4-7-79ந் திகதி கோயில் கும்பாபிஷேகம் உயர்திரு. கு. பஞ்சாட்சரக் குருக்களால் நடைபெற்றது. இதற்கு மூலவிக்கிரகமொன்றைச் செய்து தாபிப்பதற்கு வித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள் வேண்டிய உதவியை வழங்கினர்கள். மற்றைய விஷயங்களுக்கு மண்டூரிலுள்ள ஆறு பகுதியாரும் பொருளுதவி செய்தார்கள்.
- 97 -

Page 68
மாரியென்னும் சொல் மழையைக் குறிக்கும். மாரி இல்லையேல் புல் பூண்டுகள் தொடக்கம் எவ்வித உயிரினங்களும் வாழா என வள்ளுவநாயனரே கூறியுள்ளார். அதேபோல் இறைவன் தன் திருவருளை உயிர்களின்மேல் வழங்காவிட்டால் உயிர்கள் ஈடேற்றம் காணு. வெம்மையான சிவன் தண்மையான சக்தியைத் தன் வாம பாகத்தில் வைத்திருப்பதனலன்ருே ஆன் ருேர், 'நீலமேனி வாலிழை பாகத்தன்” என்றனர். மாரி பொழிந்து உயிர்களின் உலக வாழ்வில் துன்பத்தை நீக்குவது போல், இறைவனின் திருவருட் சக்தியானது இறைவன் கொண் டுள்ள பெருங்கருணையால் அருள்மழை பொழிந்து 'தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தரும் சக்தியாகி'ன்ருள்.
இத்தகைய அன்னைக்கு அருள் வடிவம் எடுக்கும் பணியை நானே செய்யவேண்டும் என்பது நியதி! இந்த நியதியைப் பற் றிய வரலாற்றை நான் கூருமலே இருந்துவிட நினைத்ததுண்டு. ஆயினும் இப்போது ஏற்பட்ட சந்தர்ப்பத்தால் அதனைச் சற்றுக் கூற எண்ணுகிறேன். ‘நான் சிறுபிள்ளையாக இருந்த காலம் முதல் ஆண்டுக்கொருமுறை தவருது என் அன்னை முதலியோரு டன் கோயிலுக்குச் சென்று பொங்கல் படைத்து பூசனை ஆற்றி வருவதுண்டு. ஒருமுறை திருவாளர் வ. தங்கவடிவேல் ஐயர் என்பார் பூசகராக இருக்கையில் அங்கு மூலஸ்தானத்தில் வைக் கும் அம்மன் முகக்களையைப் பற்றி ஐயரிடம் கேட்டேன். அவர் பல மறுமொழிகளையும் சொல்லி எனக்கு விளக்கத்தோடு, இம் மூலஸ்தானத்தில் நிரந்தரமான அம்மன்சிலை ஒன்றை நீங்கள் செய்வித்துக்கொடுங்கள் என்ருர், மேலும் தொடர்ந்து, இக் கோயில் பற்றிய வரலாறு ஒன்றும் நீங்கள் நிரந்தரமானதாய் எழுதவேண்டும் என்றும் கேட்டார். இன்னும், இக்கோயில் அம்மன்மீது ஒரு பாடல்நூல் எழுதவும் வேண்டும் என்றும் என்னி டம் கேட்டுக்கொண்டார். இவை நடந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டன. நான் ஒன்றுமே செய் யாது இருந்தேன். இறுதியில் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் (ର ழ் இச் சூழ்நிலை ஏற்பட்டபோது ஏணுே தெரியாது, என்
SDL-L
மயனரான வண்ணக்கர் திரு. தம்பிராசா அவர்
இதுபற் ன்னைக் கேட்டார். நான் அப்படியே செய்து கொடுக்கிே மை ஏற்படலாயிற்று. அதன்பின் சில வருட்ஸ்ே கோயிலுக்கு வரலாறு எழுதும்
வரிவியும் அபோதிச் இடைக் னது. அம்மன்மீது பாடல் தெய்யும் ரேய்ப்பீன் இன்ன்மும் Aாத்திருக்கிறேன். அம்மன்மீது தீெங்கர்புபட்டி எரேது மூன்று னைவலைகளும் இவ்வாறுள்ளன.
க்கோயில் நிருவாகத்தர் தெரிவுசெய்தல், பகிரங்கமாக -ԶեU) 4:52 பொது சனங்கள் கூடியே நடைபெறும்.
- 98 --
 

ஒவ்வொரு சாதியாரிலும் இவ்விரண்டு பேரை நீதி, தயை, தயாளம், ஜீவகாருண்யம், பொறுமை முதலிய நற்குணமுள்ள வர்களாய்த் தெரிந்து அவர்களில் வேளாள வம்சத்தில் ஒருவரை வண்ணக்கராகவும், ஒவ்வொரு பகுதியாரிலும் ஒவ்வொருவரை மனேச்சராகவும் நியமனம் செய்து வண்ணக்கருடன் சேர்ந்து கடமை செய்யவுமாகத் தெரிவு நடைபெறும். இதில் கூடி யோரின் சம்மதப்படியே வண்ணக்கர் செயற்படுவார்.
மண்டூர்க் கந்தசுவாமி கோயில் கப்புகவம்சத்தில் ஒருவரும் ஐயர் வம்சத்தில் ஒருவரும் தகுதியான நற்குணம், ஒழுக்கம், பரிசுத்தம் முதலியன உடையவர்களாய் இருவர் நிருவாகத்தர் களால் தெரிவு செய்யப்படுவார்கள். இவர்களுக்குக் கோயில் வரு மானங்களில் மூன்றில் ஒருபங்கும் வருடா வருடம் செய்கை பண்ண ஒரு ஏக்கர் காணியும் கொடுக்கப்படும்.
கிராமக் குளப்பாய்ச்சலில் 20 ஏக்கர் வயல் நிலம் குறுமண் வெளியில் உள்ளது. மேலும் வட்டவளையில் 2 ஏக்கரும் வேதத்துச் சேனையில் 4 ஏக்கரும், முன்மாரிப் பூமியாக 1 ஏக்கரும் உள்ளன. இவற்றைவிட மேலும், மண்டூரில் மேட்டு நிலம் 1 ஏக்கரும் அம்மன் கோயிலுக்காக இருக்கின்றது.
இக் கோயிலில் வருடாந்த உற்சவம் ஆனி மாதம் பூரணை யின் முதல் 7 நாட்களும் பண்டுபோல் இன்றும் தவருது நடக் கிறது. இக் கோயிலில் தெய்வமாடுதலும் கட்டுச் சொல்லுதல் போன்றவை இருப்பினும், உயிர்ப்பலி கொடுத்தல் ஒருபோதும் இருந்ததில்லை. இறுதி நாள் சடங்கு பள்ளயம் எனப்படும். பள் ளயத்திற்கு முதல், அம்மனுகப் பிரதம பூசாரி கோலம் செய்து பந்தலின்கீழ் மண்டுக்கொட்டைமுனை, மண்டூர், பாலமுனை, தம்பலவத்தை ஆகிய ஊர்களுக்கு வலம் வருதலுண்டு. அப் போது சேகரிக்கும் அரிசி, நெல், பழவகைகள் என்பனவெல் லாம் பள்ளயத்திற்குப் பயன்படுத்தப்படும்.
மாதப் பூசைகள் :- மண்டூர்க் கந்தசுவாமி கோயில் கப்புக மார் தைப்பொங்கல் பூசைக்குரியோராவர். தைப்பூசம் கோயி லாரும், மாசிச் சிவராத்திரி வேளாளரும், சித்திரை வருடப் பிறப்பு - சீர்பாதக்காரரும், ஆனி மாதம் வருடாந்த விழா, மேலே குறிப்பிட்ட ஆறு வகுப்பினரும் 7 நாட்களுக்கும். பூசைக்குரி யோராவர். ஆடி அமாவாசை வேடரும், கார்த்திகைத் திருவிழா முற்குகரும், மார்கழித் திருவாதிரை கோயில் கட்டியவர்கள் வளர்த்த வயிற்றுப் பிள்ளைகள் பரம்பரையினரும் பூசைக்ளைச் செய்து வருவர்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். கும்பாபிஷேகத்திற்கு முதல் மூலஸ்தானத்தில் இருநத மூலவிக்கிரகம் இப்பொழுது ம மூல் ஸ்தானத்திலே வேருக இருக்கிறது. அது "தாம்பிரலோகத்தினுல் செய்யப்ப்ட் டது. கோயில் எழுந்த ஆரம்பகாலத்தில் இருந்து இது எழுந் தருளி விக்கிரகமாக பயன்பட்டிருக்கிறது. இவ்விக்கிரகம் ஒரு
- 99 -

Page 69
சிறு வாகனம் ஒன்றிலே வைக்கப்பட்டிருக்கிறது. இதைக் கொண் டிருக்கும் இந்தக் கோயில், தொடங்கிய காலத்திலிருந்து இங்கே திருவிழா செய்யும் முறையே இருந்திருக்கிறது என்பது தெரி கிறது. இக்கோயிலிலிருந்து சிங்க வாகனம் ஒன்று போரதீவிலுள்ள பத்திரகாளி கோயிலுக்கும், மயில்வாகனம் ஒன்று மண்டூர்க் கந்த சுவாமி கோவிலுக்கும் ஏதோ காரணத்தினுல் கொடுக்கப்பட்டிருக் கிறது என்பதும் பழைய குறிப்புக்களிலிருந்து தெளிவாகிறது.
மேலும் 1910ம் ஆண்டு ஆடி மாதம் 15ந் திகதி ஒரு பெரிய கூட்டம் கூடி திருவிழா ஒழுங்குகள் மீண்டும் தீர்மானிக் கப்பட்டிருக்கிறது. அதன்படி,
1ம் திருவிழா கொடியேற்றம் என்பன சுவாமி கணக்கில். 2ம் திருவிழா கம்புகமார். 3ம் திருவிழா வேளாளர் கவுத்தன் குடியார். 4ம் திருவிழா முற்குகர். 5ம் திருவிழா வேடர். 6ம் திருவிழா கோயிலார். 7ம் திருவிழா சீர்பாதக்காரர். 8ம் திருவிழா வ. வி. வதனக்குட்டி, பொ. த. கந்தவனம்
6T6 Inti. 9ம் திருவிழா பொ. த. தம்பிமுத்து சண்முகப்பிள்ளை. 10ம் திருவிழா வேளாளர் - செட்டி குடியார். 11ம் திருவிழா தீர்த்தம், கோயில் கட்டிய பொ. த. ஆறு முகம் என்பவரும், அவரது பின் உரித்தாளிகளும்.
இடைக்காலத்தில் இத்திருவிழா ஒழுங்கு நிறுத்தப்பட்டது ஏன் எனத் தெரியவில்லை. பொருள் வருவாய் குறைந்ததினுலும், கந்தசுவாமி கோயிலில் திருவிழா நடப்ப்தினுலும் என நினைக்க G) TLD .
தற்போதைய நிருவாகம் திருவிழா நடாத்த ஆலோசித் துக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்துக்குத் திருவிழா பொருத்த மாயிருக்கும் எனச் சிலர் நினைக்கின்ருர்கள்.
இக்கோயில்பற்றி நூல்கள் எதுவும் எழுந்ததாகத் தெரிய வில்லை. மண்டூர் - மண்டுக்கொட்டைமுனை 7 மாரியம்மன் கோயில் உள் வீதியில் பரிவார மூர்த்திகளுக்கு சிறு சிறு கோயில்கள் கட்ட நிருவாகம் தீர்மானித்து நாகதம்பிரான், வயிரவர் ஆலயங்கள் கட்டிமுடிக்கப்பட்டன. காரைதீவில் இருந்து ஒரு சாமிஅம்மா வள்ளியம்மையால் 1500 ரூபா நன்கொடையாகத் தரப்பட்ட நிதியினுல் இக்கோயிலின் வலதுபுறத்தில் உள்வீதியில் அமைக்கப் பட்ட ஒரு சிறு கோயிலில் அங்கிருந்த விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் விஷ்ணு ஆலயமும் நிறுவ வேண்டுமென ஆவல். மணிக்கே "புரமும் கட்டவேண்டுமென்றும் விரும்புகிருர்கள். எல்லாத் திருப்பணிகளும் நன்கு நிறைவேற அம்மன் திருவருளை வேண்டி அமைகின்றேன்.
----۔ 100 --سہ

5ஆவது இயல்:
அம்மன் கோவில்கள் ஐந்து.
(2) திருப்பழுகாமம்
பூணி திரெளபதியம்மன் கோவில்
பண்டைப் புகழ்மிக்க பழுகாமம் ஆதியில் கண்டியரசர் களின் கோடைக்கால வாசஸ்தலமாக இருந்தது. சிங்காரக் கண்டி, அமைச்சர்பிட்டி என்னும் சின்னங்கள் இன்றும் வழக்கில் உள்ளன. அரசப்பிரதானி ஒருவர் இங்கு இருந்தார். பல பண்டக சாலைகளும், அவற்றில் வேலை செய்யும், பண்டாரங்களும் பல ஏவலாளர்களும் பாதுகாவலர், படை வீரர்களும் இங்கு தங்கி இருந்தனர். இவர்கள் சம்புநாவற்பதிச் சித்திரவேலரையும், பூரீமாவேற்குடாவில் ஆலயங்கொண்டிருந்த மாவேற்குடையாரை யுமே வணங்கிவந்தனர்.
சில நூருண்டுகட்குமுன் இந்தியாவினின்றும் கதிர்காமம் வந்த வழியில் அடியார் ஒருவர் இக்கிராமத்தில் சில பகல் தங்கி யிருந்தார். இக்கிராமத்தில் வாழும் மக்கட்குக் கோயில் இல்லாத குறையைக் கண்ட அவர், தாம் கொண்டுவந்த பாண்டவர் சிலை களை முறைப்படி ஸ்தாபித்து ஆலயம் எடுத்து வணங்குமாறு மக்களை வேண்டித் தம் பிரயாணத்தைத் தொடர்ந்தார். அவர் சென்ற பின்னர் மக்கள் மண்ணுல் ஆலயம் அமைத்து அவர் அறிவுறுத்தியபடி பூசைகளையும் பயபக்தியோடு செய்துவந்தனர்.
இது இவ்வாறிருக்க, மாவேற்குடாவில் இருந்த மாவேற் குடையார் ஆலயத்தைச் சம்புநாவற்பதிச் சித்திரவேலாயுத சுவாமிக்குத் தொண்டு செய்துவந்த அத்தியாகுடி, வைத்தியனர் குடி வேளாளர், பூணிமா வேற் குடா க் கிராமத்தில் இருந்து கொண்டு, நிருவகித்துவந்தினர். அவர்களுடன் தான்தோன்றீஸ் பரர் ஆலயதேசவன்னிமை, மதுரை வடக்குவாயிற் பூபாலகோத் திரம் அவர்களும் வாழ்ந்து வந்தனர்.
ஒருமுறை கண்டி அரசர் தமது மனைவியார் சகிதம் பழ காமத்திலுள்ள சிங்காரக்கண்டியிற் சிலகாலந்தங்கி அரசியல்
விடயங்களைக் கவனிக்கவந்தார். வந்த சில நாட்களில் மனைவி யார் சுகவீனமுற அரச வைத்தியர், இயன்றளவு வைத்தியம்
- 101 -

Page 70
செய்தும் நோய் நீங்கவில்லை. இந்நிலையில் பழுகாமப் பிரதானி யின் வைத்தியர் முதலியோரும் வைத்தியஞ் செய்தனர். நோய் நீங்கவில்லை. அரசர் பெரிதும் மனம் நொந்திருக்கும்போது அர சரைக் காண பூரீமாவேற்குடாவில் வாழ்ந்த பூபாலகோத்திர வன்னிமை வந்தார். அவர் அரசரின் மனநோவுக்கான கார ணத்தையறிந்து, நீங்கள் விரும்பினல் என்பரிபாலனத்தின்கீழ் இருக்கும் வைத்தியணுரைக் கொண்டும் வைத்தியஞ் செய்யலாம் எனக் கூறியதோடு தரமான வைத்தியர் என்பதையும் வலி யுறுத்தினுள். அரசரும் தூதனை விடுத்து வைத்தியரையழைத்து வைத்தியஞ்செய்ய நோய் நீங்கிற்று. அது கண்டு ஆனந்தங் கொண்ட அரசர் அன்போடு வைத்தியரை அழைத்து அவரோடு அளவளாவி அவருக்கும் அவருடைய இனத்தவர்கட்கும் இருக் கும் கஷ்டங்களை அறிந்து பழுகாமத்தில் அவர்கள் வாழ வளவு களும், பழுகாமத்து வெளியில் வடபுறமாக ஆறு வயல்களும் விசேடமாக வைத்தியஞ் செய்த ஞாபகமாகப் ‘பரிகாரி வயல்’ என நாமமிட்டு ஒரு வயலும் கொடுத்தார்.
இன்னும் திரெளபதி அம்மன் ஆலயத்திலும் பாதியுரிமை வழங்கியதோடு வைத்தியரே 'நம்பி"யாகக் கோவிற் பூசைகளைச் செய்யும்படியும், திரெளபதி, தருமர், பாத்திரங்களிரண்டையும் நம்பியே வகிக்கவேண்டும் எனவும், அவரது சக குடியார்கள் அர்ச்சுனன் சகாதேவன், பாத்திரங்களாகச் சடங்குகளிற் கலந்து கொள்ளவேண்டும் எனவும், முன்னவர் முன்னிலையில் வைத்தி யருக்கு வரிசை ஈந்து தேசவன்னிமைக்குஞ் சிறப்புச் செய்து அனுப்பினர். ஏனைய வீமன், நகுலன், ஆகியோரின் இடத்தை பண்டாரப்பிள்ளைகளுக்கும் ஈந்தார். அன்று தொடக்கம் வேளா ளர் மெல்லமெல்ல பூரீமாவேற்குடாவை விட்டுப் பழுகாமத் திற் குடியேறினர். முன்மாரியில் அத்தியார் முன்மாரி வயல்களை யும், பின்மாரியில் (கோடைப்போகமாக) பழுகாமத்து வெளி யில் ஏழு வயல்களையும் செய்துவந்ததோடு கன்றுகாலிகளையும் பழுகாமத்துக்கே கொண்டுவந்து மேய்த்தனர். இதிலிருந்து மாவேற்குடாவில் உள்ள மாவேற்குடையார் ஆலயமும் நிலை குலையத் தொடங்கியதோடு அங்கு பிரதிட்டை செய்யப்பட்டிருந்த தங்கவேலும் களவு போயிற்று. ஆனல் திரெளபதி அம்மன் ஆலயம் வேளாளர் பொறுப்பேற்றபின் வளர்ச்சியடையத் தொடங்கியது. இருபோகமுஞ் செய்யத் தொடங்கிய வேளாளர் களும் முன்னிலும் சிறப்பாக வாழ்க்கை நடாத்திவந்தனர்.
மண்கோயிலாக இருந்த திரெளபதி அம்மன் ஆலயத்தைக் கற்களாற் கட்டியதோடு பின்வருமாறு பூசைமுறைகளையும் செய் யத் தொடங்கினர்.
- 102 -

1. மாதாந்தச் சடங்குகள். சித்திரை மாதப்பிறப்பன்று சித்திரைச் சடங்கும், வைகாசிப் பிறப்பில் வைகாசிச் சடங்கும், கார்த்திகைப் பிறப்பில் கார்த்திகைச் சடங்கும், மார்கழிப் பிறப் பில் மார்கழிச் சடங்கும், தைப்பிறப்பில் தைச் சடங்கும், விசேட பூசைகளாகச் செய்துவந்தனர். இச்சடங்குகளிற் பாண்டவர் கொலு சடங்கிற் கலந்து சிறப்பிப்பதோடு தெய்வமேறிய கட் டாடிமாரும் ஆடிச்சிறப்பிப்பர்.
2. விசேட பூசைகள் - சித்திராபெளர்ணமி, வைகாசிப் பெளர்ணமி, ஆனி உத்தரம், ஆடிப்பெளர்ணமி, ஆடிஅமா வாசை, ஆவணி ஒணம், நவராத்திரி, ஐப்பசி வெள்ளி, கந்த சஷ்டி, கார்த்திகைத் தீபம், விநாயக சஷ்டி, திருவெம்பாவை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்தரம் ஆகிய விசேட காலங் களிற் சிறப்பான பூசைகள் நடைபெற்றுவந்தன,
3. ஆண்டு விழா - ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கதிர்காமத் தீர்த்தத்தையடுத்துவரும் வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் சிறப்பாக நடைபெறும்.
தீமிதிப்புக்கு முந்திய வெள்ளிக்கிழமை கதவு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும். கதவு திறப்பதற்கு முந்திய வெள்ளிக் கிழமை பள்ளயக்கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் சாதி சமய வேறுபாடின்றிக் கிராம மக்கள் அனைவரும் கலந்துகொள் வர். பள்ளயக்கூட்டத்தை அடுத்துவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு வண்ணுர் சந்திக்குச்சந்தி நின்று எதிர்வரும் புதன்கிழமை வாழைக்காய் மடுவிற்போடப்படும், வெள்ளிக்கிழமை கதவு திறக் கப்படும், அதற்கிடையில் வீடுவேய்தல், வேலியடைத்தல், வளவு தெருத் துப்பரவுசெய்தல் ஆகியவற்றைச் செய்து முடிக்கவேண் டும் எனவும், வனவாசம் போகும்போது சமயக்குற்றமுள்ளோர் கிராமத்தைவிட்டு வெளியேறவேண்டும் எனவும் கூவுவர். புதன் கிழமை பிற்பகல் வண்ணக்குமாரும், பாண்டவர் கொலுவும், வாழைக்காய் மடுவிற்போடுவர். வாழைக்காய் மடுவிற்போட்ட தும், கிராம மக்கள் யாவரும் கோயில் வீதியைத் துப்பரவு செய்வதோடு தங்கள் வீடு, வேலி, வீதி ஆகியவற்றையும் சுத் தஞ் செய்வர். அடுத்துவரும் வெள்ளிக்கிழமை மாலை வண்ணக்கு மார் எண்மரும் நம்பியார் வீடு சென்று முறைப்படி அவரைக் கனம்பண்ணி ஆலயத்துக்கு அழைத்துவந்து உரிய கிரியைகளைச் செய்து திருக்கதவைத் திறப்பர், இவ்வைபவம் ‘கதவு திறத்தல்" எனப்படும். நம்பியாரோடு பாண்டவர் கொலுவும் தெய்வமேறி யாடும் கட்டாடிமாரும் ஆலயத்துக்கு வந்துவிடுவர். இவர்கள் யாவரும் ஒரு நாளுக்கு ஒரு முறையே, "நோர்ப்பு' எனப்படும் பள்ளயம் போடுவர். (உணவை உண்பர்) தலைநோர்ப்பு விசேட
- 103 -

Page 71
மானது. கிராம மக்களின் வீடு த்வருது மடல் வெட்டி கொண்டு செல்வர். அதில் நெல், காய்கறி, பால், தயிர், தேங்காய், வெற் றிலை, பாக்கு, பழம், சூடம் முதலியன இருக்கும். இந்நோர்ப்புச் சாதம் அவர்கள் நெற்குற்றிய அரிசியைக்கொண்டு காய்கறி புளி சேர்த்துப் புளிச்சோறுபோலச் சமைத்துப் பால் தயிர் சேர்த்து அதற்கென முன்பே கட்டிய பர்ணகசாலையில் (நோர்ப் புக் குடிசை) இருந்து உண்பர்.
கோயிலில் காலையிலும் மாலையிலும் சடங்கு நடைபெறும். புதன்கிழமை வனவாசப் பெருவிழா நிகழும். திரெளபதி, தரு மர் தவிர்ந்த பாண்டவர் கொலுவும், கட்டாடிமாரும் வன வாசம் போவர். தருமரிடம் வாளைப்பெற்ற வீமன் தலைமையில் வனவாசமும் கதலி வனமழித்தலும் நடைபெறும்.
அடுத்த நாள் வியாழக்கிழமை அர்ச்சுனன் தவநிலை நிகழ்ச்சி மாலைச் சடங்கின் பின் நடைபெறும். இந்நிகழ்ச்சி காணப் பல கிராம மக்களும் குழுமுவர். புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களிலும் பழுகாமத்தில் மக்கள் திரளாகக் கூடி வீடுகள் தோறும் நிரம்பி இருப்பர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை தீக்கட்டை எடுத்தல், யாகம் வளர்த்தல், தீமூட்டல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பின்னர் மதியத்தின்பின் கடற்குளித்தலும் தீமிதித்தலும் நடைபெறும். சனிக்கிழமை காலை தீக்குளிக்குப் பால் வார்த்தலும், இரவு காவற்காரர் பூசையும், (இடும்பன் வேள்வி) நடைபெறும். இவ் வேள்வி முடிவடைந்ததும் திருக்கதவடைப்பும், நம்பியாரை வீட் டில் கொண்டு விடுதலும் நடைபெதும். இத்துடன் தீப்பள்ளய நிகழ்ச்சிகள் நிறைவுபெறும்.
சில ஐதீகங்கள்:
1. இவ்வாலயத்தை மக்கள் பள்ளயக்கோயில் எனவே அழைப்பர். பள்ளயம் என்பது நோர்ப்பு என வழங் கும் உணவையே குறிக்கும்.
2. பூசகர் ஆதி தொடக்கம் நம்பி என அழைக்கப்பட்டு வருகிருர். இவரைக் கிராமத்து மக்கள் மிக்க மதிப் புடன் கெளரவமாக நடத்துவர்.
3. மார்கழி மாதம் முழுவதும், (தமிழ்க்கணக்கு) பாண்ட வர் தவத்துக்குப் போவதாகவும், அம்மாதத்தில் காவற்காரரே ஊரைப் பாதுகாப்பர் எனவும் மக்கள் நம்பி வாழ்கின்றனர். இதைத் தைச் சடங்கின்
- 104 -

போது “தவத்துக்குப் போனவர்கள் தவங் கலைந்து வாருங்கோ” எனக் கூவி அழைப்பதாலும் மக்கள் பரி பூரணமாக நம்புகின்றனர்.
4. பிள்ளைச் செல்வமில்லாதோர், இங்குவந்து முறைப்படி
அம்மையை வேண்டிப் பிள்ளைப்பாக்கியம் பெறுவர்.
5. இவ்வாலயத்துடன் கண்ணகியம்மன் ஆலயமும் அமைந் திருக்கிறது. ஆண்டுதோறும் வைகாசிப் பெளர்ணமி யில் கண்ணகியம்மன் திருக்குளிர்ச்சி விழா சாதிமத பேதமின்றிக் கிராம மக்கள் யாவராலும் சிறப்பாக நடைபெறும்.
திரெளபதை அம்மன் ஆலயத்தின் வட திசையில் கண்ணகி ஆலயம் அமைந்துள்ளது. கிராமத்தில் ஏதாவது கொள்ளைநோய், துன்பங்கள் வந்தால் மக்கள் ஒன்றுகூடிக் கண்ணகி அம்மனுக்கு விஷேட ஆராதனை கள் செய்து, தேங்காய் அடித்தல், கொம்பு முறித்தல் ஆகிய வைபவங்களைச் செய்வர். தினமும் வசந்தன் கூத்தும் நடைபெறும்.
இவ்விரு தெய்வங்களும் பழுகாமமக்களின் இருகண்போலப் போற்றப்படுவதோடு, அவர்களின் தயவால் நோய் நொடியின்றிச் சீர் சிறப்பாகவும் வாழ்கின்றனர்.
- 105 -

Page 72

soolog, issonaire gloss logos lorofollosgfűws sẽ

Page 73

5ஆவது இயல்:
அம்மன் கோவில்கள் ஐந்து.
(3) துறைநீலாவணை
கண்ணகி அம்மன் கோவில்
சோழநாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டிலே பாராளு மன்னனைத் தன் கணவனுக்காகப் பழிவாங்கிச் சேரநாட்டிலே செங்குட்டுவஞல் பத்தினி என்று விழா எடுக்கப்பெற்ற கண்ணகி, கடல் சூழ் இலங்கையில் நிலைபெற்று விட்டாளென்று கண்ணகி வரலாறுகளிலெல்லாம் முன்னர்க் கண்டோம். இன்றைக்கு ஆயி ரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்குமுன் அவ்விழா கயவாகு மன்ன ஞல் இங்கு கொண்டு வரப்பட்டு நிலைபெற்றுவிட்டது. இவ்வாறு ஈழநாட்டிலே வழிபடும் தெய்வமாகிவிட்ட கண்ணகி அம்மனுக்குத் திருவிழா வைகாசி மாதத்தில் கிழக்கிலங்கையில் விமரிசையாக நடைபெறுகின்றது. கிழக்கிலங்கை வாசிகள் பலர் பத்தினித் தெய்வத்தைத் தங்கள் குல தெய்வமாகவே வழிபடுகின்ற வழக்க மும் தொடர்ந்து நிலைப்படுவதாயிற்று.
மட்டக்களப்பில் இவ்வாறு வழிபடும் இடங்களுள் துறை நீலாவணைக் கிராமமும் ஒன்ருகும். இவ்வூர் மட்டக்களப்பு நகரி லிருந்து இருபத்தி நான்கு மைல் தொலைவினுக்கு அப்பால் தென் பகுதியிலுள்ளது. இக்கிராமம், மட்டக்களப்பு வாவியினலும், குளங்களினலும், வயல் நிலங்களினலும் சூழப்பெற்றிருக்கின்றது.
ஆனல் கண்ணகி அம்மன் கோயில் அமைந்துள்ள இடமோ கிழக்கும் தெற்கும் வயல் நிலங்களாலும், மேற்கும் வடக்கும் மட்டக்களப்பு வாவியினலும் சூழப்பெற்று கிராமத்தின் வட அந் தத்தில் சுமார் கால் மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது, கோயிலைச் சுற்றிச் சிறுசிறு குன்றுகளும் அதன்மேல் விருட்சங்களும் வளர்ந்து காணப்படுகின்றன. இக்கிராமத்தில் பாறைகள் காணக் கூடியதாக இருப்பது இவ்விடத்திலேதான். இதனல், இங்கு எழுந் தருளி இருக்கும் அம்மனுக்குக் கல்லடி அம்மன், கல்லடி நாச்சி என்று வேறு பெயர்கள் சூட்டியும் வழிபடுகின்றனர்.
இக்கோயில் அமைந்திருக்கும் இவ்விடம் சுமார் ஆயிரம் வருடங்களுக்குமுன் காடடர்ந்த பகுதியாக இருந்தது. சில முனி வர்கள் இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்து ஆச்சிரமம் அமைத்து
- 107 -

Page 74
உறைவிடமாக்கிக் கொண்டார்கள். இவர்கள் மந்திர, தந்திர, சித்து, வித்தைகளில் மேம்பட்டிருந்ததனல் மக்கள் இப்பகுதிக் குச் செல்லப்பயப்பட்டார்கள். இம்முனிவர்கள் சக்தி வழிபாட் டைக் கடைப்பிடித்திருந்தார்கள். சில காலத்தின்பின் இம்முனி வர்கள் ஏதோ காரணத்தையொட்டி வேறிடத்துக்குச் சென்றுவிட் டார்கள். இதன்பின்னர் மக்கள் இப்பகுதியினுள் சென்று ஊடாடித் திரிந்தார்கள்.
இவ்வாறு சனநடமாட்டம் ஒரளவு ஏற்பட்டுவருங்காலத் தில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு சென்றபோது ஒர் ஆச்சரியத்தைக் கண்டார். அங்கு மூன்று சிலைகளையும், முக்கோண வடிவமுடையதும், அதிக சித்திர வேலைப்பாடுடையதுமான இரு சோடி சிலம்புகளையும் தண்டைச் சிலம்பு இருசோடிகளையும் கண்ட அவர் பயத்தோடு கிராமத்துச் சனங்களுக்குத் தான் கண்டதை எடுத்துக்கூறினர். கிராமத்துச் சனங்களும் புதுமையினைக் காண விரைந்து வந்து சிலம்புகளையும் சிலைகளையும் கண்டார்கள். ஒரு புறம் பயமும், மறுபுறம் பக்தியும் கொண்டு பணிந்தார்கள். இச்சிலைகள் உருவ அமைப்பில் கண்ணகியின் அம்சங்களைக் கொண்டு இருந்தபடியாலும் 'கண்ணகி அம்மன்'' என்று நாமஞ் சூட்டி வழிபாடாற்றி வந்தார்கள். பின் இக்கிராம மக்கள் இக் குன்றையும் சிலைகளையும் நடுவணுகக்கொண்டு ஒரு கோயில் அமைத் தார்கள். இக்கோயில் வாவியை நோக்கி வடபக்க முகப்பாகக் கட்டப்பட்டது.
அக்காலத்தில் குறுமண்வெளி என்னும் இடத்திலும் பல முனிவர்கள் வசித்தார்கள். அவர்களில் ஒருவரான "கெங்காதசி ஐயர்' என்பவரை அழைத்துவந்து அந்த மூன்று சிலைகளையும் காண்பித்தார்கள். அவர் சிலை வடிவிலமைந்த கண்ணகி அம் மனுக்குப் பூசைசெய்யும் விதிகளைக்கொண்ட ‘பத்ததி ஒன்று வழங்கினர். ஆனல் இந்த பத்ததி முறைப்படி பூஜை செய்யுங் கால் வருடாவருடம் பூசை செய்யும் பூசகர் அப்பூசனைக்குப் பின்னர் இறந்துவிட நேரிட்டது. இதைக்கண்டு மக்கள் அச்சங் கொண்டார்கள், வருடாவருடம் வழிபாடு நடாத்துவதற்காக இருந்த பூசகராகிய 'தன்மர்" என்பவருக்கு அம்மனுடைய தரிசனமும் கட்டளையும் கிடைத்தன. “இந்த மூன்று சிலைகளில் மிக்க ஒளியுடையதும், அகோரம் பொருந்தியதுமான சிலையைக் கோயிலுக்கு எதிரே மட்டக்களப்பு வாவியில் நான்கு உப வாவி கள் ஒன்று சேரும் இடத்தில் அமிழ்த்திவிட வேண்டும்' என் பதுவே இக்கட்டளையாகும். அதன்படி கிராம மக்களுடன் சேர்ந்து பூசகர் செய்துமுடித்தார். இதன்பின்னர் பூசகர் வருடம் ஒரு முறை இறக்கும் வழக்கமும் நின்றுவிட்டது. அத்தோடு அம் மனல் ஆஞ்ஞாபிக்கப்பட்டபடி பூசைவேளையில் தீபம் வாவியை
- 108 -

நோக்கியும் காட்டப்படும் வழக்கம் இன்றும் இருந்துகொண்டு வருகின்றது. தெய்வங்களுக்கு ஆடும் சில பக்தர்கள் சிலவேளை வாவியில் அம்மன் அமிழ்த்தப்பட்ட இடத்தை நோக்கிக் குதித் துச் செல்வதும் உண்டு. மற்றைய சிலைகளில் ஒரு சிலை ஊர் வலத்தின்போது தேரில் வைத்துக்கொண்டு செல்லப்படுவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மற்றையது ஆலய கர்ப்பக் கிருகத் தில் வைத்து வழிபடப்படுகிறது.
இக்கண்ணகி ஆலயத்தை மையமாகக்கொண்டு சூழலில் வைரவன் கோயில், நாகதம்பிரான் கோயில், வதனமார் கோயில், இன்னும் பதினெரு தேவதைகளுக்குரிய மேடைகள் என்பன அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நாகதம்பிரான் ஆலயம் கட்டுவதற்குமுன் இக்கிரா மத்தில் தினமும் பாம்புக்கடி இருந்தது. பாம்பு வைத்தியர்களும் மூவருக்கு அதிகமாக இருந்தார்கள். ஆனல் இவ்வாலயம் அமைந் ததின் பின் எவ்வளவோ குறைந்து வருடத்திற்குச் சராசரி ஒரு வர் அல்லது இல்லை என்ற நியதியும் எற்பட்டதுதான் பெரிய ஆச்சரியமாகும்.
இக்கண்ணகி அம்மன் ஆலயத்தில் உயர்சாதிப் பல நாகங் கள் வாழ்கின்றன. கோயில் பூட்டப்பட்டிருக்கும் காலத்தில் இவைகளே கோயிலைப் பாதுகாக்கும் காவலர்களாக இருக்கின் றன. வழிபாடு செய்வோருக்கு ஒரு தீங்கும் செய்யாது, தீய எண்ணத்துடன் செல்பவர்களைக் கோபத்தைக் காட்டி விரட்டித் துன்புறுத்துமே தவிர ஒருவரையும் கடிப்பதேயில்லை. முன்னிருந்த ஒரு நாகம் வெள்ளிக்கிழமைகளில் மட்டக்களப்பு வாவியில் நீந்தி மண்டூர்க் கோயிலுக்குச் சென்றுவந்ததாகவும் இக்கிராம மக்கள் கூறுவர். சுமார் நானூறு வருடங்களுக்கு முன்பிருந்தே நடந்த தாக உள்ள இந்தக் கதைகளால் நாகங்களின் காவல் திறத்தைச் சிறிது நீங்களே சிந்தித்துப்பாருங்கள்.
முஸ்லீம் வியாபாரி ஒருவர் மட்டக்களப்பு வாவியில் மரக் கலத்தோடு சென்றர். பசி, தாகம் மேலிட்டதனுல் இக்கோயி லின் கரையையடைந்தார். அவர் இக்கோயிலை துறைகளில் வழிப்போக்கர்களுக்குக் கட்டப்பட்டுள்ள “அம்பலம்" என்னும் சத்திரமாகக் கருதினர். இவ்விடத்தில் மீன் முதலிய புலால் களைச் சமைத்துச் சாப்பிட்ட அவ்வியாபாரியை பாம்புகள் மரக் கலத்தில் ஏறவிடாது கிராமத்திற்குள் விரட்டித் துரத்தின. அவ்வியாபாரி ஊர் மக்களிடம் நடந்ததைக் கூற அவர்கள் கோயில் பூசகரிடம் சொல்லி அம்மனிடம் அவர்மூலம் முறை யிட்டுப் பணிந்து, வணங்குமாறு சொன்னர்கள். அப்படியே வியா
-س- 109 -س-

Page 75
பாரியும் பூசகரிடம் கூறித் தெரியாமல் தவறுசெய்த குற்றத்துக் காகப் பெரும் பொருளிவதாகவும் நேர்த்திபண்ணினன். இவ் வாறு நேர்த்திக்கடன் வைத்து வியாபாரியைப் பூசகர் கோயி லுக்கு அழைத்துவந்து பிரதட்சணம்செய்வித்துத் தோணியிலேற்றி அனுப்பினர். இதன்பின் விழாக்காலத்தில் அவ்வியாபாரி தங் கத்தாலாய பொருட்களைக் கோயிலுக்கு வழங்கி வழிபட்டான் 6T6šTLurř.
இதுமாத்திரமல்ல, இந்நாகங்களை மருந்து மந்திரத்துடன் ஏமாற்றிக் கள்வர்கள் கோயிலிலிருந்து வெண்கலப் பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்ல, மருந்து மந்திரத்திலிருந்து விடுபட்ட நாகங்கள் சுமார் மூன்றரை மைல் தூரமுள்ள ஒந்தாச்சிமடத் தில் அக்கள் வர்களை மறித்துவிரட்டிவிட்டுப் பொருட்களைக் காவல் புரிந்ததாகவும், இதன்பின் மூன்று தினங்களுக்குப் பிறகு பூசகர் கனவுகண்டு வண்ணக்கர் மற்றும் கோயில் நிருவாகிகள் முதலிய வர்களுடன் சென்று மீட்டுவந்ததாகவும் அறியக்கிடக்கின்றது. இந்த நிகழ்ச்சி இப்பகுதியில் எங்கும் பரவிவிட்டதொன்ருகும். இது யானும் நேரில் அறிந்த ஒன்று.
இவ்விழா ஒரு வருடத்திற்கு ஒருமுறை வைகாசி மாதத் தில் பூர்வபட்சத்தில் நடைபெறும். வண்ணக்கர், கோயில் நிரு வாகிகள், ஊர் மக்கள் எல்லோரும் ஒன்றுகூடி கோயில் விழா தொடங்கும் நாளையும் பூஜை முறைகளைப்பற்றியும் கலந்துரை யாடித் தீர்மானிப்பார்கள். பழங்காலந்தொட்டு செவ்வாய்க் கிழமை இரவு ஆரம்பமாகி அடுத்த திங்கட்கிழமை பின் இர வுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை இவ்விழா முடிவடையும்.
வெள்ளிக்கிழமை இரவு அம்மன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். இதனைப் “பல்லக்கு ஊர் சுற்று' என அழைப் பர். ஞாயிறு பிற்பகல் "கல்யாணக்கால் வெட்டு' நடைபெறும். இத்தினத்திலிருந்தேதான் கோயிலின் சிறப்பான பூசைகளும் காவடி முதலியவைகளும், பக்தர்கள் நெருக்கமும் அதிகமாகும். பூசகருக்கு அம்மன் கனவில் அறிவிக்கும் இடத்திலுள்ள “பூவரசங் கிளையினையே’’ காலாக வெட்டி எடுப்பர். பூசகர் உண்ணுவிர தம் இருந்தே இக்கல்யாணக்கால் வெட்டினை நடாத்துவர். இக் காலை பூசகர் வெட்டியதும் பூசகர் அறிவு மயங்கி விழுவார். அவ்வேளை பூசைவிதிமுறை தெரிந்த ஒருவரால், இவர் சுய நிலைக்கு மீட்கப்படுவார். வெட்டப்பட்ட கம்பு (கல்யாணக்கால்) பூசை விதிமுறைக்கமையக் கிரியைக்கு உட்படுத்தப்பட்டு பூசகரும், அவரது சகாக்களும், தோளில் தாங்கியவண்ணம் கோயிலுக்குக் கொண்டு செல்வர். இக்கல்யாணக்காலை அங்கு கொண்டு சென்ற தும் கல்யாண மண்டபத்தில் அது வைக்கப்பட்டு அன்றிரவு
- 1 0

கோவலர் கண்ணகி கல்யாண வைபவமும் பூசையும் கோயிலில் விசேடமாக நடைபெறும்.
கல்யாணக்கால் வெட்டச் செல்லும்போது உருவேற்றப் பட்ட சிலம்புப் பெட்டிகளுடன், அம்மன் பல்லக்கும் புடைசூழ மக்கர் பெருவெள்ளம் திரண்டு செல்லும். இன்றைய தினத்தில் இச்சிலம்புப் பெட்டியே முக்கிய இடத்தை வகிக்கும். உருவேற் றப்பட்ட சிலம்புப் பெட்டி, வெள்ளிக்கிழமை ஊர்வலத்தின் போது காப்புக்கட்டி ஒரு பொழுது உண்டு, அன்றைய தினத் தில் உபவாசம் கடைப்பிடிக்கும் பக்தரின் தலையிலேயே வைக்கப் படும். தலையில் வைக்கப்பட்டதுமுதல் இப்பக்தர் அடிக்கடி சுய நினைவு இழப்பார். பெட்டியிலுள்ள சிலம்பும் வெளிவர முய லும். இதற்காக இவைகளைக் கவனிப்பதற்குக் கோயில் பூசை விதிமுறை தெரிந்த குறைந்தது மூவராவது பெட்டியைப் பிடித்த படி செல்வர். இக்காட்சி காண்போர் உள்ளிங்களைக் கொள்ளை கொள்ளக்கூடியதாகவும், பக்திப் பரவசத்தை ஊட்டக்கூடியதாக வும் இருக்கும்.
திங்கட்கிழமை பகல் பூசையை "நெற்குத்துப் பூசை" என்றும் “வட்டுக்குற்றுப் பூசை' என்றும் அழைப்பர். இப் பூசை வேளையில் மலைக்குன்றிலே குளியாக்கப்பட்ட நெற்குற்றும் இடத்தில் பூசை நடைபெறும். பூசை முடிந்தபின்னர் பூசகர் உலக்கையில் மூன்று தரம் குற்றிய பின்னர் பிள்ளைப்பேறற்ற பெண்கள் இவரிடமிருந்து உலக்கையைப் பெற்று நெற்குற்றுவர். இதனை 'உலக்கை பறித்தல்" என அழைப்பர். இவ்வுலக்கை பறித்தல் பெரும் கண்கொள்ளாப் புதினமாகவே காட்சி தரும். இக்கிராமத்தில் மட்டுமன்றி வேறிடங்களிலிருந்தும் பிள்ளைப் பேறற்ற பெண்கள் இச்செயலால் அம்மனின் திருவருள் கைகூடப் பெற்று, மக்கட்பேறு பெற்று வாழுகின்றனர்.
இவ்வாறு குற்றப்பட்ட அரிசியே குளிர்த்திப் பொங்கலுக் காகக் கோயில் நிருவாகிகளால் உபயோகத்திற்கு எடுக்கப்படும். செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மன் குளிர்த்தியும், நாகங்களின் உணவாகிய "பாணக்கப் பூசையும்' நடைபெறும். சிறுவர்கள் வசந்தன் கூத்து ஆடிக் கோலாட்டம் அடிப்பார்கள். பல ஊர் களிலிருந்தும் பக்தர்கள் திரள் திரளாக வந்துசேர்வதால் இட நெருக்கடி ஏற்பட்டுவிடும். இடநெருக்கடி இல்லாத வயல்வெளி களில் ஒரே பொங்கல் பானையாகவே காணப்படும். பின் அதி காலை சுமார் ஐந்து மணியளவில் பூசகர் அம்மன் வேடம் தாங்கி ஊர் சுற்றுக்காகக் கொண்டுசெல்லப்படும் அம்மனைத் தாங்கிய படி முன் மண்டபத்துக்கு வர, அதற்கென உள்ளவர்கள் குளுர்த்தி ஏடு பாடுவார்கள். பூசகர் வசந்தன் ஆட்டுவிழாவில் கலந்து கொண்டபின்னரே சுயநிலைக்கு வருவார்.
- lll

Page 76
இந்த ஏழு நாட்களும் இக்கிராம மக்கள் மச்சம், மாமி சம் புசியாது புத்தாடை புனைந்து, வீதிகள் பெருக்கி குதூகலத் துடன் இருப்பார்கள். இக்கிராம மக்களுக்குப் பரிபூரண விழா இந்தக் கோயில் திருவிழா ஒன்றேதான். தைப்பொங்கல், சித்திரை வருடப் பிறப்பு, தீபாவளி முதலிய மங்கள நாட்களுக் குக்கூடப் புத்தாடை புனையாதவர்கள், இக்காலத்தில் புனைந்து கொள்வார்கள் என்ருல் இவ்விழாவின் மகிமைதான் எத்தகை lo,
இவ்வாலயத்தில் இந்த ஏழு தினங்களிலும் வழக்குரை படிப்பார்கள். இவ்வழக்குரை ஏட்டுப்பிரதியேயாகும். இவ்வேட் டுப் பிரதியைக் காலஞ்சென்ற சாஸ்திரி திரு. வீமாச்சியார் - ஆறுமுகம் தோம்புதோர் அவர்களால் எழுத்தாணிகொண்டு எழுதப்பட்டதாகும். இவர் அக்காலத்தில் கல்விமானுக விளங்கி யது மட்டுமன்றிச் சிறந்த தெய்வபக்திகொண்டவராகவும் விளங்கி னர். அவரால் வழக்குரை தவிர, பாரதம், நைடதம், கந்தப் புராணம், காசிகாண்டம், கஞ்சன் அம்மானை, வைகுண்ட அம் மானை, சித்திரபுத்திரனர் கதை, பிள்ளையார் கதை, தெய்வ வழிபாட்டுக்குரிய காவியங்கள், வைத்திய வாகடங்கள், சோதி டங்கள், முதலியனவும் ஏட்டுவடிவில் எழுதப்பட்டன. இன்னும் இவரின் சந்ததியினர் அவைகளைப் பக்குவமாகப் பாதுகாத்து வருகின்றனர். இவரால் எழுதப்பட்ட ஏடுகளே ஏனைய ஆலயங் களுக்கும் விசேட காலங்களில் படிப்பதற்காக அவரின் சந்ததி யினர் கொண்டுசெல்வதும், பூசைகள், திருவிழாக்கள் முடிவுற்ற தும் மீண்டும் அவர்கள் வீட்டுக்குக் கொண்டுவந்து, அதற்குரிய பெட்டகத்தில் பாதுகாப்பாக வைப்பதும் இன்றும் காணக்கூடிய தாக இருக்கின்றன. அத்துடன் கெங்காதசி ஐயரால் வழங்கப் பட்ட பத்ததியை மிகுதியும் பாதுகாத்து வருகின்றனர். இப் பத்ததியின் பிரகாரமே இவ்வாலயப் பூசை முறை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குற்று அற்றதும், தரிப் புக் குறியீடுகள் அற்றதுமான அந்த ஏட்டுப்படைப்புகளைப் படிப் பதில் இவர்கள் முதன்மைபெற்று விளங்குகிருர்கள்.
இவ்வாலயம் ஆதியில் சிந்தாத்திரங்குடியைச் சேர்ந்த ஒரு வரின் குடும்பத்தினருக்கு உரிமையாக இருந்தது. அதன்பின்னர் அவரது வயிற்றுவார் வழித்தோன்றல்களுக்கும் உரிமையாக இருந்தது. இக்காலத்தில் மூன்றுநாட் பூசையுடன் முடிவுற்று வந்தது. சிறிது காலத்தின்பின் அக்குடியிலுள்ளவாறு மூன்று வயிற்றுவாருக்கும் அதாவது 'ஆத்தகத்தற’, ‘வட்டூரிகத்தற', "பாலன் கத்தற என்ற மூன்றும் சேர்க்கப்பட்டன. இம்மூன்று வயிற்றுவாருக்கே முன்னீட்டு உரிமைகள் உண்டு என்பது குறிப் பிடத்தக்கது.
- 12

மைத்துனக் குடிகளான பாட்டுவாளிகுடி, முடவன்குடி, ஆகியோருக்கும் உரிமையாக்கப்பட்டு மூன்று குடியிலுள்ள வயிற்று வழிவந்த மரபினரே பூசையினை நடத்திவந்தனர். இக்காலத்தில் ஐந்துநாட் பூசையுடன் முடிவுற்றுவந்தது. காலங்கள் பல கடந்த பின் படையாண்டகுடி, காலதேவன்குடி, பொட்டப்பளச்சிகுடி, நரையாவிகுடி, வெள்ளாவிகுடி, செம்பகநாச்சிகுடி, பரதேசிகுடி, வெள்வேலன்குடி, வைதிஅடப்பன்குடி, ஊசாடிகுடி ஆகிய பத் துக்குடிகளையும் சேர்த்துப் பதின்மூன்று குடிகளும் சேர்ந்து உற் சவ காலங்களில் பூசையைப் பகிர்ந்துசெய்யத் தொடங்கினர். இதன் பின்னர் சிறிது காலத்தின்பின் ஏழுநாட் பூசையாக விரி வடையத் தொடங்கியது.
எனினும் வண்ணக்கர் பதவி சிந்தாத்திரன்குடியில் உரிமை வழிவந்த ஆத்தகத்தறையைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டுமென்றும், குளிர்த்திபாட வருடந்தோறும் சிந்தாத்திரன் குடியில் மூன்று கத்தறையினரில் வயிற்றுவழி மரபு ஒருவரும் மைத்துனக்குடிகளான பாட்டுவாளிகுடி, முடவன்குடி ஆகிய வற்றிலுள்ள உரிமை வழியினரில் ஒருவருமே சேர்ந்து பாட வேண்டுமெனவும் விதிக்கப்பட்டது. சிந்தாத்திரன்குடியுடன், முட வன்குடி சேர்ந்தும் அடுத்துவரும் சிந்தாத்திரன்குடியுடன் பாட்டு வாளிகுடி சேர்ந்தும் குளிர்த்திபாடும் முறை பண்டைய நாளி லிருந்து வழக்கமாகி வருகிறது. கடைசியாகிய குளிர்த்தி நாளில் விநாயகப்பானையிலுள்ள மூன்று பானைகளில் ஒன்று கோயில் பூசகருக்கும், இரண்டாவது பானை சிந்தாத்திரன்குடியில் வருடம் ஒரு முறையாக மூன்று வயிற்றுவாருக்கும், மூன்ருவது பானையை பதின்மூன்று குடியில் ஒவ்வொரு குடியினருக்கும் வருடம் ஒரு முறையாக கொடுக்கப்படும்.
தினந்தோறும் பூசைப் பொருட்கள் சோடிக்கப்பட்ட வண்டியின் மூலம், கிராமத்தின் ஆரம்பத்திலிருக்கும் தில்லையம் பலப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து, மேளவாத்திய இசையுடன் பகல் இரவு ஆகிய நேரங்களில், கிராமத்தின் பிரதான வீதியி னுாடாகக் கிராமத்தின் அந்தத்திலுள்ள அம்மன் ஆலயத்திற்கு வந்தடையும் மரபு, கிராமத்தில் பெரும் பக்தி பரவச நிலையை இவ்வேழு தினங்களிலும் ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும்.
பூசகர் இருவர் சிந்தாத்திரங்குடி, பாட்டுவாளிகுடி, முட வன்குடி ஆகிய மூன்று குடியிலுமே பூசகராகக் கடமை புரிவர். அத்துடன் இவ்விருவரில் ஒருவரேனும் வீமாச்சியார் ஆறு முகம் தோம்புதோர் அவர்களின் வழித்தோன்றலாக இருத்தல் வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளவாறு இன்னும் கடைப்பிடிக் கப்பட்டு வருகிறது.
سسسس-113 س--

Page 77
தற்போது கிராமத்திலுள்ள வட்டார ரீதியாகப் பணம் அறவிடப்பட்டுப் பொதுவிலேயே பூசை நடைபெறுகிறது. வண் ணக்கர் பதவி, குளிர்த்தி பாடல் ஆகிய முன்னீடுகளை எதிர்ப்பு ஏற்படாத காரணத்தினுல் சிந்தாத்திரன் குடியில் முக்கிய மூன்று வயிற்றுவார் அல்லாத ஏனைய வயிற்றுவாரைச் சேர்ந்தவர்களும் சிலவேளை பெறுகின்றனர்.
விழா முடிவுற்றதும் நடைபெறும் ஒழுங்குகளுக்கு வழக் கம்போல ‘கதவடைப்பு' என்று பெயர். இந்தக் கதவடைப் பின்போது மூலஸ்தானத்திலுள்ள அம்மன் சிலையினை எடுத்து, அதே அறையிலுள்ள மச்சுகளின்மேல் அதற்கெனவுள்ள ஒரு சிறிய துவாரம் வழியாகப் பூசகர் எடுத்துவைப்பார். மச்சு நிறைய நாகங்கள் படமெடுத்துக்கொண்டிருக்கும். இருந்தும், அவர் அச்சமின்றி, அம்மன் சிலையைக் கையால் வைத்துவிட்டு, வெளி யில் வந்து பூசை மந்திரங்களைச் சொல்லி முறைப்படி கத வடைப்பு விழாவினை நிறைவேற்றுவார்.
அதற்குப் பின்னர் ஒவ்வொரு வெள்ளியும் மத்தியானங் களில் கர்ப்பக்கிருக அறைக் கதவுக்கு முன்னல் படையல் படைத்து, பூசனைகள் ஆற்றப்படும். அதற்குக் கிராம மக்கள் நிறையப்பேர் கூடுவார்கள். இவ்வழக்கம் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பக்தர்கள் உள்ளத்தில் நிறைந்த பக்தியை யும் எழுச்சியையும் ஊட்டிவளர்த்துக்கொண்டிருக்கும் துறை நீலாவனைக் கண்ணகி அம்மன் கோயில் மட்டக்களப்பு வாவி யின் தென்கோடியில் ஒரு சிகரமாக இன்றும் விளங்குகின்றது.
-l 14

5ஆவது இயல்:
அம்மன் கோவில்கள் ஐந்து.
(4) தம்பிலுவில்
கண்ணகை அம்மன் கோவில்
ஆலும் வம்மியும் அடர்ந்து நிலம் பொழியும் வளம் நிறைந்த இரம்மியமான இடம். தென்புறம் பச்சைப் பசேல்எனப் பளிச்சிடும் நெல்வயல். மாரிகாலத்தில் இது, குளமாகவும் காட்சி யளிக்கும். கிழக்கே கடற்கரைவரையும் வடக்கே நீர்ப்புறமும் போக்குவரவும் நிறைந்திருக்கும், தனித்தமிழ் குடியிருப்புக்கள். மேற்கே சொற்ப தூரத்தில் அமைந்திருக்கும் மட்டக்களப்பு வாவியின் தென்னிறுதியுடன் கலக்கும் நீரோடை. இவ்வாழுன சூழலில் தென்வயல் ஒரத்தே வடக்கு நோக்கி அமைந்திருப் பதுதான் தம்பிலுவில் கண்ணகி கோவில். கண்ணகி அம்மன் கோவில் கொண்டிருப்பதன் காரணமாக மக்கள் அம்மன் கோவில் என்றே இதனை வழங்குகிறர்கள். இத்தகைய செழும்பதியினை நினைக்கும்போது இத்தலத்தின்மீது எனக்கு மாருத பெரும் பக்தியினை ஊட்டவும், காலத்திற்குக் காலம் வேண்டும் போது விழா நாட்களில் இங்கு யானும் எனது மனைவியும் பேச்சாள ராகச் செல்லவும் கருதிச் செய்த எனது நண்பரும், சிவானந்த வித்தியாலயத்து உடன் ஆசிரியருமாகவிருந்த இவ்வூர் திரு. தா. குகதாசன் அவர்களை நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
வடக்கு, கிழக்கு வாயில்கள் அமைந்த சுற்றுப்புறமதில் ஒன்று அமைந்திருக்கின்றது. கிழக்கு வாயில்தான் பிரதான வாயில். ஆனலும் வடக்கு வாயில் வழியாகவே அம்மன் பவனி போய் மீள்வதுண்டு. நாம் பிரதான வாயிலான கிழக்கு வாயில் வழியாக உட்புகுவோமானல் பிணிதீர்க்கும் தீர்த்தக் கிணற் றைச் சந்திப்போம். தீராத பிணியுடையவர்கள் இக்கிணற்றில் மூழ்கிச் சுகம் அடைந்துள்ளனர். மேலும், அக்காலத்தில் நெல் வயல்கள் பூச்சி புழுக்களால் பாதிக்கப்பட்டால் இக்கிணற்று நீரை மொண்டுசென்று தெளித்தால் வேளாண்மை பிணி நீங்கி முற்ருய் விளைவதுண்டு. அக்கிணற்றில் நம்மைச் சுத்திகரித்துப் போம் போது எதிரே காண்பது விநாயகர் ஆலயமாகும். இது சேகரம் கும்பம், கர்ப்பக்கிருகம், மண்டபம் என்பன உடையதாக இன்று காட்சியளிக்கின்றது. இவ் விநாயகர் ஆலயம் ஆரம்பம்
- l l 5

Page 78
முதல் பிள்ளையார் கோவில் என அழைக்கப்பட்டுவருகின்றது. அக்காலத்தில் மேடைமேல் அமர்ந்திருந்த சிலையையே வணங்கி வந்தார்கள். இதற்கு இப்பொழுது நித்திய பூசை நடைபெறு கிறது. விக்கினங்கள் தீர்க்கவும் விளைபொருட்கள் நற்பயனளிக் கவும் மக்கள் வைக்கும் நேர்த்திக்கடன் மூலமாக இப்பிள்ளையா ருக்கு வாரம் இருமுறையேனும் பொங்கல் நடைபெறுவதுண்டு. மக்களே பொங்கி அவர்களே பிரசாதம் படைத்து நைவேத்தி யம்செய்யப்பெற்ற ஒழுங்குகள் படிப்படியாக மாறி இன்றைய நிலைக்கு வந்துள்ளது. கோவிலும் புனருத்தாரணம் செய்யப் பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது. பூசையும் முறைப்படி கப்புகஞரால் நித்திய பூசையாக நடாத்தப்பட்டு வருகின்றது. மக்கள் தாங்கள் தொடங்கும் எந்த முயற்சியின் போதும் இக் கோவிலுக்கும் பொங்கலிட மறக்கமாட்டார்கள்.
பிள்ளையாரை வணங்கி வலம்வந்து உட்பிரகாரத்துள் நுழைந்தால் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், வெளிமண்டபம் கும்பங்களோடு காட்சி அளிக்கும், வடக்கு நோக்கி அமர்ந்தி ருக்கும் அம்மன் கோயிலைக் காணலாம். இதன் அமைப்பு முறையும் படிப்படியாக முன்னேறியதாகும். ஆதிகாலத்தில் ஒரு கொத்துப் பந்தலின் கீழ் அமைந்திருந்த கர்ப்பக்கிருகம் சிறு குடிசையாக மாறி நாளாவட்டத்தில் கற்கோயிலாகி நீண்ட காலம் வழிபடப்பெற்றுவந்தது. பின்பு அவ்வப்போது கடமை ஏற்ற வண்ணக்கர்மாரின் பெருமுயற்சியாலும் மக்களின் வரை யறையற்ற நன்கொடைகளாலும் காலத்துக்குக் காலம் புன ரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய உருவ அமைப்பைப் பெற்றுள் ளெது.
இதன் உட்பிரகாரத்திலேயே அண்மைக்காலத்தில் உரு வாக்கப்பட்ட நாகதம்பிரான் கோவில் அமைந்துள்ளது. அழகான கோபுரமும் உள்மேடையும் அதில் பிரதிஷ்டை பண்ணப்பட்டி ருக்கும் சிலைகளும் இத்தலத்திற்குப் பிரத்தியேக அழகைக் கொடுத் துக்கொண்டிருக்கின்றன. இக்கோவில் அக்கால வண்ணக்கர் திரு. க. வ. வி. கதிராமத்தம்பி அவர்களின் தூண்டுதலின்பேரில் பிரபல நிலச்சுவாந்தாரான தருமரெட்ணம் புவிராசசீர்த்தி அவர்களின் உபயமாக அவரது மனைவியாரால் உருவாக்கப்பட்டதாகும் என் பது குறிப்பிடத்தக்கது. இது கோயிலின் கிழக்குப்புறத்திலே அமைந்துள்ளது. மேற்குப் பிரகாரத்திலே புதிதாக அமைக்கப் பட்ட தீர்த்தக் கிணறு ஒன்றும் அமைந்துள்ளது.
வெளிப்பிரகாரத்தில் தொன்று தொட்டு ஒரு வைரவர் கோவில் அமைந்துள்ளது. அதில் வைரவர் தடிகள் சாத்தப் பட்டு முறையான பூசை நடைபெற்று வருகின்றது. அடுத்து
-1 16

வெளிப்பிரகாரத்தில் உள்மதிலையண்டி எட்டுத்திசையிலும் அட்ட பாலகர் பீடங்கள் அமைந்துள்ளன. பொங்கல் அல்லது சடங்கு காலமாகிய ஏழு நாட்களிலும் அவற்றிற்கு முறையான பூசைகள் நடைபெறும். அடுத்து நாம் காண்பது உயர்ந்த மணிக்கோபுர மாகும். இது பெயர்பெற்ற தலைமை ஆசிரியரும் இக்கோயிலின் ஒரு பிரதான பாகைக்காரருமான திரு. வன்னியசிங்கம் - சிவநிருப சிங்கம் (சிவகுரு) அவர்களின் ஞாபகார்த்தமாகக் கல்முனைவாழ் அவரது மனைவிமக்களாற் கட்டப்பட்டதாகும்.
இப்பிரகாரத்தில் ஆலும் வம்மியும், தென்னையும் கமுகும் நிறைந்து எப்போதும் குளிர்ச்சியே நிறைந்திருக்கும், மட்டக் களப்பு பொத்துவில் பிரதான பாதையில் 45ஆவது மைல் கல் லுக்கருகில் சந்தியொன்றுள்ளது. அங்கிருந்து பார்த்தோமானல் கோயிலின் பிரதான வாயிலும் மண்டபத்தின் முன்பகுதியும் விநாயகர் ஆலயமும் காட்சியளிக்கும். இதுவே இன்றையத் தோற்றமாகும். கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய கண்ணகி கோயில்களோடுதான் இதன் ஆரம்பமும் இருக்கவேண்டும் என எண்ண இடமுண்டு. ஊர் சுற்றுக் காவியத்தில்,
'அங்களுமக்கடவை காரேறு நகர் எருவில் களுவாஞ்சி
ஆன தம்பிலுவில் எழில் வீரமுனை தனிலும் மங்கைசேர் பட்டிமேடுயர் செட்டிபாளையம் வந்தாறு மூலைநகர் மற்றுமுளபதியும்" எனக் குறிக்கப்பட்டுள்ளதனுல் இது ஊர்ச்சிதமாகின்றது.
இங்கு கண்ணகிஅம்மன் வழிபாடு தொடங்கியதற்கு ஒரு நம்பகமான பழங்கதை கூறப்படுகின்றது. இவ்வூரில் ஆதிகுடி யார் எனக் கூறப்படும் வேடக்குடியார், கோரைக்களப்புக்குடி யார், குருக்கள் குடியார் எனப்படும் வம்சத்தினர்கள் வசித்து வந்தனர். அக்காலத்தில் இன்று அம்மன் கோயில் அமைந்துள்ள இடம் காடாக இருந்தபடியால் அங்கு வேட்டைக்குச் சென்ற வேடக்குடியார் ஒரு வெண்புரு வந்ததையும், அது சுற்று முற்றும் பார்வையிட்டு, ‘கண்ணகி’ என்று கூவிவிட்டுச் சற்று இருந்து திடீரென ஓரிடத்தில் சென்று மறைந்ததையும் கண்டு அவ்விடத் தில் கொத்துப்பந்தல் ஒன்று அமைத்து, ஏனையோரையும் சேர்த்து கண்ணகி அம்மன் என வழிபட்டனர். இவர்கள் கோவில் தொண்டு செய்தார்களே தவிர முறையான பூசை புனர்க்காரங் கள் செய்யமுடியாமல் திண்டாடினர். அவ்வேளையில் வந்திறங்கிய அன்னம்புருவர், ஈச்சவத்தையார் என்னும் இருவம்சத்தினரும் கோயில் நிருவாகத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இவர் கள் முறையே கட்டப்பத்தங்குடியார், சிங்களக் குடியார் என இன்று வழங்கப்படுகின்றனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து
- 117

Page 79
அயல் இடமான பட்டி மேட்டு அம்மன் கோவிலுக்குப் பூசை செய்யும் வம்சமான பட்டிமேட்டார் எனப்படும், “மழுவரசன் குடியாரை” அழைத்துவந்து பூசை செய்யும் உரிமையை வழங் கினர். இவர்களே இன்று கப்புகளுர் என்று அழைக்கப்படுகின் முர்கள்.
அன்னம்புருவர் எனப்படும் கட்டப்பத்தான்குடி வம்சத்தவரே இக்கோயிலின் வண்ணக்கர் பதவியை வகிப்பது நிரந்தரமாகும். இக்கோயில் வழக்கமாக வைகாசிப் பூரணையை அண்டிய ஏழு நாட்கள் திறந்து கோலாகலமாக நடைபெறும்.
*வைகாசித் திங்கள் வருவோ மென்று மாதுமையாளும்
வரம் கொடுத்தாளே”* என்பதற்கிணங்கி திங்கட்கிழமையிலேயே பொங்கலும் குளிர்த் தியும் நடைபெறும். எனவே, வைகாசிப் பெளர்ணமியை முன் னிட்ட ஏழு நாட்களை அண்டிய ஒரு செவ்வாய்க்கிழமை கதவு திறக்கப்பட்டுப் பூசைகள் ஆரம்பிக்கப்பெறும். தொடர்ந்து ஐந்து நாட்கள் பூசையும் திருவிழாவும் நடைபெறும். ஆரும் நாள் அம்மன் ஊர்வலம் செல்வார். ஏழாவதுநாள் பொங்கலும், குளிர்த்தியும் நடைபெற்று, திங்கள் இரவு கதவு அடைக்கப்படும்.
கோயில் திறந்த முதலாம் நாள் பூசை வண்ணக்கருடை யது. அது சிறப்புற நடந்தபின் இரண்டாம் நாள் மண்ணெடுத் தல் வைபவம் நடைபெறும். குறிக்கப்பட்ட காலத்தில் குறித்த இடத்திலிருந்து கொட்டு மேளத்துடன் மண் எடுத்துக்கொண்டு வரப்படும். இந்த மண்ணைக்கொண்டே மட்பாண்டத் தொழில் தெரிந்த சில பெண்களால் அம்மன் பொங்கலுக்குரிய பானைகள், குடுக்கைகள் (சிறிய பானைகள்) என்பன தயாரிக்கப்படும். அடுத்த விசேடம் கல்யாணக்கால் நாட்டுதலாகும். வழமையாகப் பாடப் படும் வழக்குரைக் காவியத்தில் நாகமணி மீகாமனுல் கொண்டு வரப்பட்டுச் சிலம்பியற்றிக் கண்ணகி கோவலன் திருமணம் நடை பெறுதலாகிய கல்யாணப் படிப்பு அன்று வருகின்றது. அன்றே, இங்கு உரிய முறையில் கல்யாணக்கால் நாட்டி அலங்கரிக்கப் படுகின்றது. அதன்பின்பு வழக்குரை மீதிப்பாடல்கள் தொடரும்.
ஆரும்நாள் ஊர்வலம் இக்கோயிலின் சிறப்பு அம்சமாகும். அன்று தம்பிலுவில் முழு ஊருமே திருவிழாக்கோலம் கொள்ளும். ஆருவது நாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை முன்னிரவில் நன் ருக அலங்கரிக்கப்பட்ட ஏடகத்தில் (தேரில்) கோயில் வடக்கு வாயிலாக அம்மன் ஊர்வலம் வெளிப்படும்போது அது ஒரு கண் கொள்ளாக் காட்சியாகும். மின்விளக்குகள் ஒளிபிரகாசிக்க, மேலா வாத்தியங்கள் பேரொலி செய்ய, நன்முக வேடமணிந்த வளர்த் தோர்களும் சிறுவர்களும் முன்னும் பின்னும் தத்தமக்குரிய
- 18

கிராமிய நடனங்கள் ஆடிவர, தம்பிலுவில் கண்ணகி அம்ம னுக்கே உரிய தனிக் காவியங்கள் இன்னிசை அளிக்க, வாணங் களும் வெடிகளும், விண்ணை அலங்கரிக்க, ‘அம்மம்மா! கூய்! கூய்!" என்ற இரைச்சல் பின்தொடர வடக்கு வாயில் மூலம் புறப்படும் அம்மன் தேரினைக் காண்பதற்குக் கண்கள் ஆயிரம் வேண்டும். ஒன்ரு இரண்டா; தெரு நிறையக் கணக்கில் அடங்காத பூரண கும்பங்கள் நிறைந்திருக்கும். எல்லாக் கும்பங்களிலும் ஊர்வலம் நின்று, கும்பம் சொரிந்து, தேங்காய் உடைத்து உரியவர்கட்கு விபூதி மஞ்சள் வழங்கி, ஊர்வலம் தொடர்ந்து நடைபெறும். அதே நேரத்தில் குறிக்கப்பட்ட பாதையின் பிரதான சந்திகளில் பெரும் பந்தல்கள் அமைத்துப் பாட்டு, கூத்து, கும்மி, கோலாட் டம், நடனம் என்பன ஆயத்தமாக இருக்கும். இவ்வாறன ஒவ் வொரு பந்தரிலும் நின்று செய்வன செய்து, ஆவன முடித்து அம்மன் தேர் விடியற்காலையில் அதே வடக்கு வாயில் வழியா கக் கோயிலை அடையும். அத்தோடு காலைப்பூசை முடித்து அடுத்தநாள் பொங்கலுக்கான ஆயத்தங்கள் நடைபெறும்.
ஏழாம் நாள் பொங்கலின்போது, காலையிலே பெண்கள் கூடிவிடுவார்கள். மடிப்பிச்சை நெல், மடை நெல் என்பனவற் றில் பொங்கலுக்குரிய நெல்லைக்குற்றி எடுப்பார்கள். அப்போ தெல்லாம் ‘சிலம்பு கூறல்” போன்ற இசைப்பாடல்கள் பாடப் படுவதனல் அவர்கள் எவ்விதகளைப்புமின்றி இதனைச் செய்து முடிப்பார்கள். மதிய பூசையின்பின் உடனே மக்கள் தங்கள் பானை பால் விறகு என்பவற்றேடு பொங்கலுக்கு ஆயத்தமாவார் கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பொங்கல் பானைகள் பொங் கிக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் கோயில் உட்பிரகாரத் தில் அம்மனுக்குரிய பிரத்தியேக பொங்கலும் நடைபெறும்g இவற்றிலிருந்தே மேற்கூறிய குடுக்கைகட்கும் பிரசாதம் நிரப்பப் படும். இரவு எட்டு மணியளவில் பானைகள் யாவும் முறையா கப் படைக்கப்பட்டு விநாயகர் பூசை, அட்டபாலகர் பூசை என் பனவற்ருேடு அம்மன் பூசையும் நடைபெறும். அதன்பின் குளிர்த்தி பாடி எல்லோருக்கும் தீர்த்தம் எறியப்படும். இதில் விரும்பி நனைவோரும் உண்டு. உடை நனைந்துவிட்டதே என்று கலங்குவதும் உண்டு.
அதை அடுத்து 'பணிமாறல்' என்ற பாரம்பரிய நடை முறை உண்டு. நேர்த்தி காரணமாகவும், வேண்டுதல் காரண மாகவும் கோயிலுக்குப் பல சேலைகள் வருவது வழக்கம். ஒவ் வொரு வருடமும் வரும் சேலைகளை ஒவ்வொன்முக அணிந்து கப்புகளுர் பின்தொடர வண்ணக்கர் மடையைச் சுற்றிவருவார். அப்பொழுது ஏகப்பட்ட கூட்டம் இருந்தாலும் அமைதி நிலவியே இருக்கும். அதனை அனைவரும் கண் இமைக்காது பார்த்துக்
سس۔ 19 tس

Page 80
கொண்டே இருப்பார்கள். இவ்வைபவம் முடிந்தவுடன் மற்றும் கடவுளர் பூசைகள் செய்து விபூதி மஞ்சள் பரிமாறியபின் 'வட்டா கூறுதல்’’ என்ற வைபவம் நடைபெறும்.
முதல் வட்டாவினை 'ஊர்' என்று வண்ணக்கர் கூறுவார். அவ்வட்டா ஆரம்ப குடிகளுக்கே சொந்தம் ஆகும். அதனை எவ ரும் கைநீட்டி வாங்கமாட்டார்கள். கண்ணகி கோயில் எங் கெங்கு அமைந்துள்ளதோ அவர்கட்கெல்லாம் அவ்வட்டா உரி மையாகும். ஊர் சுற்றுக்காவியமே இதனை வலியுறுத்துகின்றது. இரண்டாவது வட்டா கோவில் வண்ணக்கருக்குரியது. மூன்ரு வது வட்டா பழம்பெரும் கோவிலான திருக்கோவில் சிறி சித் திரவேலாயுதசுவாமி கோவில் வண்ணக்கருக்குரியது. அவர்கள் (வண்ணக்கர்) ஊரின் முதற்குடியான கண்டங்குடி வம்சத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் குடுக்கைகள் யாவும் உரிய உரிய பாகைக்காரருக்கும் தொண்டர்கட்கும் சேர்ப்பித்து எல்லோருக்கும் உபயம் கொடுத்த பின் அன்று கதவு அடைக்கப் பின்னிரவாகிவிடும்.
இக்கோயிலில் அதன்பின்னும் சில ருசிகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை முடிந்தவுடன் சகலரும் கோயில் கப்புக னரை மேளதாளத்துடன் அவரது வீட்டில் கொண்டுபோய் விடுவார்கள். பின் வண்ணக்கரைப் பாகைக்காரர் எல்லோரும் சேர்ந்து அதுபோல் அவர் வீட்டுக்குக் கொண்டு செல்வார்கள். அங்கு எல்லோரும் சிற்றுண்டிகள் அருந்திவிட்டுக் கணக்குவழக்குப் பார்ப்பார்கள். பின் நடைபெறும் மூன்ரும் சடங்கினேடு அம்மன் சடங்குவேலை பூர்த்தியாக்கப்படும்.
இந்த ஏழு நாட் பூசைகளையும் முற்கூறிய பராமரிப்புக் குடிகளாகிய இருவம்சத்தவரும் ஆதிகாலத்திலிருந்து நடத்திவந் தார்கள். பிற்காலத்தில் இது இன்னும் சில பாகைகள் சேர்த்து பதினெரு பாகையாக நடைபெறுகின்றது அந்த இரண்டு வம் சத்தவரோடு, கோரைக்களப்பார், வேடுவர், குருக்கள், விஸ்வ கோத்திரம், (பொற்கொல்லர்) முன்னங்கைச்சவடி (இவர்கள் அனைவரும் திருக்கோவில் சித்திர வேலாயுதர் சுவாமி கோவி லுடனும் தொடர்புடையவர்கள்) ஆகியோர் இணைந்து கோவிலை மிகவும் சிறப்பான முறையில் நடாத்தி வருகின்ருர்கள். மேற் கூறிய ஏழு நாட்களிலும் மக்கள் மிகுந்த பயபக்தியோடு நடந்து கொள்வார்கள். நாள் தோறும் கூட்டுப்பிரார்த்தனை, வழக்குரை காவியம் என்பன பாடப்பட்டு வருகின்றது இடைக்கிடை திரு விழா முடிந்தபின் சிறப்புற கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
-- 120 سے

இந்த நைமித்திக பூசையைத் தவிர, செவ்வாய், வெள்ளி நாட்களிலும், நவராத்திரி, தைப்பொங்கல் காலத்திலும் பூசை சிறப்புற நடைபெறுகின்றது. மேற்கூறிய பதினெரு பாகைக் குடிகள் தென்சேரி என வழங்கப்படுவர். இவ்வூரில் நிலைபெற்ற மீதிவம்சங்களான கண்டங்குடி, சருவிலிகுடி, வைத்தியனர் குடி, முற்குகர்குடி என்பன வடசேரி என வழங்கப்பட்டனர். இதன் காரணமாகவே இன்றைய சித்தி வினயகர் ஆலயம் அன்றிருந்தே வடசேரிக்கோவில் என வழங்கப்பட்டது. இதன் முக்கிய நோக் கம் பிரசித்தமான கொம்பு விளையாட்டாகும்.
மேற்கூறிய இருசேரியாரும் தற்காலிகமாகத் தங்களுக்குள் மாறுபட்டுக் கொம்பு விளையாட்டை நடத்துவர். கொம்பு நேர்ந்து. தேங்காய் உடைத்து, கொழுக்கொம்பு முரித்து ஆரம் பிக்கப்படும் விளையாட்டு, கொம்புத் தட்டு மூன்றும், கூடாரக் கொம்பு ஐந்தும், ஏடகக் கொம்பு ஏழும் சேர்ந்து பதினைந்து கொம்புகளுக்காகத் தேங்காய் முதலில் உடைக்கப்படும். ஏடகக் கொம்பு விளையாட்டின்போது இருசாராரும் போட்டிபோட்டு ஏடகம் உருவாக்குவர். இதனை உருவாக்கமுன் 'சீலை ஏறிதல்' என்ற வைபவத்தை இருசாராரும் சிறப்புறச் செய்வர். ஏடகக் கொம்பு முரிக்கும்போது இரு ஏடகங்களும் ஒருமித்து ஊர்வலம் வந்து கொம்புச் சந்தியில் நிற்கும். பின் கொம்பு முரித்து வென்ற ஏடகம் பலவிதமான சிறப்பு அம்சங்களோடு தனியே சென்றுவரும். இறுதியில் தண்ணிர் சொரிதலோடு இது முடி வடையும்.
இக்கொம்பு விளையாட்டு வைபவத்தில் இவ்வூர் மக்கள் சில சிறப்பான கொள்கைகளையுடையவர்களாவர். ஆரம்பத்தில் மழையின் தேவையை முன்னிட்டு இரு சாராரும் சேர்ந்து கொம்பு நேர்வார்கள். மழை பெய்து பயிர் விளைந்து ஊர் செல்வம் நிறைந்தவுடன் எல்லோரும் ஒன்று கூடுவார்கள். வண் ணக்கர்மார்களைத் தவிர இரண்டு கொம்புத் தலைவர்கள் தெரியப் படுவார்கள். அத்துடன் இருபக்கமும் இரண்டு விளையாட்டுக்குழு தெரியப்படும். மேலும் ஊர்ப்பிரமுகர்கள் சேர்ந்த ஒரு சமா தானச் சபையும் தெரியப்படும். பின் நாட்குறித்துக் குறிப்பிட்ட விடயங்கள் யாவும் நடைபெறும். ஆனல் ஏடகக் கொம்பு ஆரம்பமானவுடனே விளையாட்டு சூடுபிடிக்கத் தொடங்கும். இதனுல் பல அனர்த்தங்களும் நடைபெறுவதுண்டு. வென்ற ஏடகம் தனியே பவனிவரும்போது மறுசேரியார் வாசலில் கும் பம் வைக்கமாட்டார்கள். பதிலாக அதனுல் அவர்கள் வசை பாடத் தொடங்குவார்கள். இவ்வாறே மறுசேரியாரும் நடக்கும் பொழுது வீட்டில் கணவன் மனைவிக்கிடையிலும் சிக்கல்கள் உண்டாவதுண்டு. ஆனல் இவை அனைத்தும் நீர் சொரிதலோடு
- 121 -

Page 81
நின்றுவிடும். இந்த ருசிகரமான விளையாட்டு வேடிக்கைகள் சனப் பெருக்கத்தினுலோ என்னவோ தற்போது அருகிப்போய்விட்டது
எனலாம்.
இக்கோவில் செலவுகள் யாவும் மேற்கூறிய பாகைக்காரர் களே செலவழிக்கிருர்கள். எனவே வருமானமாய் வரும் உண் டியல், அடையாளம், தட்சணை நேர்த்திகள், மடைநெல், தெண் டல் நெல் என்பன கோயிலுக்கு வருமானம் எனக் கொள்ளப் படுகின்றது. மேலும் வயல் குத்தகை, தென்னைமர வருமானம் என்பனவும் சேர்க்கப்படுகின்றன. இவற்றில் சிறுபகுதி தொன் , டூழியர்கட்கு வேதனமாகப் போக, மீதி வருடாவருடம் புனருத் தாரணம் செய்வதற்கு உதவியாயிருக்கின்றது. மேலும் சிறப்புப்
பூசைகளும் தனிநபர்களே செய்து வருகின்றர்கள். எனவே
அதற்கெனவும் எதுவும் செலவிடப்படுவதில்லை. பரந்த வீதியும்
தென்னந்தோப்பும் காணி மூன்று ஏக்கரும் இக்கோவிலுக்குச் சொந்தமாக உள்ளன. அவ்வாறிருந்தும் வருடாவருடம் முன் னேறுவது பெருமைக்குரியது.
இவ்வாலயம் ஒரு பாடல் பெற்ற தலமாகும். ஊர் சுற் றுக் காவியம், ஊரெழுகாவியம் (எழுந்திருப்பு), பள்ளுப்பாடல். ஊஞ்சல்பாடல் என்பன அமைந்தாலும் சிறப்பாக இக்கோவி லுக்கு மாத்திரம் உரித்தான மழைக்காவியம்’ ஒன்று உண்டு. இக்காவியம் ஒரு அந்தணச் சிறுவனல் பாடப்பட்டது. இப் பாடல்கள் என்னல் அச்சில் பதிப்பிக்கப்பெற்றுள்ளன என்பதை யாவரும் அறிவர். NA”
இதன் பின்னணியாகக் கூறப்படுவது:
"ஊரக்கைவெளி? என்பது இவ்வூர் மக்களின் பூர்வீகச் சொத்து. அக்காலத்தில் இக்காணி சிறப்புற விளைந்தால்தான் வைகாசிப்பொங்கல், கொம்பு விளையாட்டு என்பன சிறப்புற நடைபெறும் மக்கள் வயல்களுக்கு ஏற்படும் எந்தவிதமான பிழைகட்கும் அம்மனே தஞ்சம் என வாழ்ந்தவர். மழையில்லாத போது அம்மனையே பிரதிஷ்டை பண்ணி வயலுக்குள் கொண்டு சென்று பிரசித்திபெற்ற பெரிய மருதமரத்தின்கீழ் வைத்துவிடு வார்கள். முன்னர் ஒருபோது மழையில்லாமல் வருந்திய மக்கள் அம்மனைப் பிரதிஷ்டை பண்ணிவிட்டார்கள். ஆணுல் உடனே வழமைபோல் மழை பெய்யவில்லை. அம்மனின் தேவைபோலும், ஒரு அந்தணச் சிறுவன் அம்பாளைத் தேடிச்சென்று தானகவே பாடிய பாடல்தான் இந்த மழைக்காவியம். பாடல் பிறந்ததும் 'சோவென' மழை பொழிந்தது. இப்போதும் மழை இல்லாத நேரங்களில் இக்காவியத்தை உருக்கமோடு பாடினல் கட்டாயம் மழை பெய்கிறது. ●
س-122 س--
 

' தண்ணிரில்லாமல் வயல் சாலிகள் இளங்கதிர்கள்
தலைசோர வயலிலுள்ள சனமது வருந்த கண்ணிரிஞல் மழையின்றியே
கண்கலக்கப்படும் கவலை அறியாயோ மண்ணிரினல் நுரைமிதக்க நதி ஒடியே
வரவெள்ள மொருமழை அருளவேண்டும் பெண்ணிர்மையான குண காரணச் செல்வியே
பேசுதம்பிலுவிலுறை பெண்ணரசிமாதே'
* எந்தவிதமான பிழைசெய்தாலுமே பொறுத்து
ஏழை அடியா ரெங்கட்கே மனமிரங்கி நொந்தகண்ணுலிப்போ ஆற்றிலொரு வெண்மை
நூதனமதாகவே நீயருள வேண்டும் கொந்தளகவிழிமடவார் கொண்டாடவா விதொறும்
நின்ருட மலரில் தந்தன தனவென்று வண்டினங்கள் பாடவரு ※W தம்பிலுவிலூரில் நனிதங்குழாதாவே, இவை அக்காவியப் பாடல்களிரண்டு.
இவ்வாருண் உருக்கமான பாடல்களேக்கேட்டு நூதன் மாகவே திடீரென்று மழை பெய்து ஆறு நிரம்பி வெள்ளம் வந்து வயல்கள் பூரண விளைச்சலைக் கொடுப்பதுண்டு.
மேலும் இக்கோயிலில் ஒரு அதிசயமான செயலும் நடை பெற்றதாகக் கூறுவர். வண்ணக்கர் திரு. க. கதிராமத்தம்பி கப்புகளுர் திரு. மா. சீனித்தம்பி ஆகியோர் அம்மனிடம் விடை பெற்று முன்னெருபோது ‘பச்சைப்பானை' (சுடாத) வைத்துப் பாற்பொங்கல் செய்து அபிஷேகம் ஆற்றினர். இதுபற்றிக் காலம் சென்ற திரு. பெ. கந்தையா என்பவரால் பாடப்பட்ட பாட லும் பிரபல்யமானதாகும்."
இவ்வாருன பிரசித்திபெற்ற தம்பிலுவில் கண்ணகை அம் மன் இன்றும் பல அற்புதங்கள் புரிந்து மக்களுக்கு உறுதுணை யாக விளங்குகின்ருர், 窓
' மாதுவளர் தம்பிலுவில் ஊர்வாழி வாழி
வளமைசெறி வணிகர்குல மாதுமையும் வாழி நீதிசெறிகண்டி மகாராசசிங்கன் வாழி
நீலமயில் ஏறுகதிர்வேல் முருகன் வாழி வேதமுடன் ஐந்தெழுத்தோ துவோர் வாழி வெண்ணிறு பூசுசிவசமயமும் வாழி பாதிமதிசூடும் அரன் பாதம் மறவாமல்
பாடினேர் வாழி கதிர்காமமும் வாழி.” கோயில் வண்ணக்கர், கப்புகஞர் உட்பட்ட ஒரு குழு வின் மேற்பார்வையின் கீழ் ஒழுங்காக நடைபெறும் இத்திருத் தலத்தின் சிறப்புகள் குன் ரூது வளர்ந்துவர வைகாசித் திங்கள் வருவோமென்று வரங்கொடுத்த மாதுமையாள் திருவருள் என்
றும் நிலைத்தோங்குமாக.

Page 82

5ஆவது இயல் :
அம்மன் கோவில்கள் ஐந்து.
(5) நாவலடி
பூனி கடலாட்சியம்ம ைஆலயம்.
உதய சூரியனின் பொற் கிரணங்கள் காலை வேளையில் தன்னுெளி பரப்பி வீசி, நாவலடிக் கடலாட்சி அம்மன் கோவி லைத் துலக்கும். இக்காலை வேளையில் எங்கும் ஒரே அமைதி. நாவலடியிலுள்ள கடலாட்சி அம்மன் கோவில் மணிஒலிச் சத்தம் மாத்திரம் அவ்வமைதியைக் கலைத்துக்கொண்டு ஒலிக்கும். நாவ லடி என்னும் கிராமத்தின் பால் நிலவொளிரும் பரந்த வெண் மணற் பரப்பில், பக்தகோடிகளை அட்டதிக்கிலுமிருந்து தனது அருட்கடாட்சத்தால் கவர்ந்திழுக்கும் அன்னை புரீ கடலாட்சி யம்மன் ஆலயம் புகழுடன் அமைந்திலங்குகிறது.
இவ்வாலயம் கி. பி. 1940ம் ஆண்டு நாவலடியைப் பிறப் பிடமாகக் கொண்ட திரு. குஞ்சித்தம்பி தம்பியப்பா என்பவ ரால் சாதாரண ஒலைக் கோயிலாகக் கட்டப்பட்டது. பின்னர் ஊரவர்களின் ஒத்துழைப்பும், இவ்வாலயத்திற்குக் கிடைத்த போது ஆலய முதல் வண்ணக்கராகத் திரு. தாமோதரம் - கனக சபை என்பவரும், கங்காணிமாராகத் திரு. செல்லப்பா செல்வ மும், திரு. அண்ணுமலை - கணபதிப்பிள்ளையும் நியமிக்கப்பட்டார் கள். பின் சிறிது காலத்தில் ஆலய தர்மகர்த்தாக்களின் அயரா உழைப்பினுலும், ஊர் மக்களின் ஒத்துழைப்பினலும் மூலஸ்தா னத்துடன் சேர்ந்த மூன்று மண்டபங்களுடன் செங்கற்களாலான கட்டிடமாகப் புதுப்பொலிவு பெற்றது. இவ்வாலயத்திற்கென எழுதப்பட்ட உறுதியில் திரு. குஞ்சித்தம்பி-தம்பியப்பாவின் வழி வழியாக வந்த வழித்தோன்றல்களுக்கும், நாவலடி ஊரவர்களுக் கும் ஆலயம் சொந்தமாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆலய உறுதியில் உரிமைபெற்ற வண்ணக்குமார் திரு. அண்ணு மலை கணபதிப்பிள்ளை - திரு. செல்லப்பா செல்வம் ஆவர். இவர் களில் அண்ணுமலை கணபதிப்பிள்ளையின் இறப்பின்பின் வண்ணக்க ராகத் திரு. கணபதி-செல்லப்பா அவர்களும், கங்காணிகளாக திரு. தம்பியப்பா சண்முகம், திரு. இளையதம்பி மாணிக்கம், திரு. கணபதிப்பிள்ளை வேல்முருகு, திரு. தம்பியப்பா மயில் வாகனம் என்பவர்களும் நீண்ட காலமாகப் பரிபாலித்து வந்தார்
----س-125 س

Page 83
கள். எனினும், இம்முறையில் மாற்றம் வேண்டும் என்று பல விரும்பினர்.
அதன்படி, 1976ம் ஆண்டு வண்ணக்குமுறை
பரிபாலன சபை ட்டபோது ତ୍ରି ன்றல்களுள் ஒருவரான தம்பியப்பா தம்பிப்பிள்ளை
திரு. கறுவல் தம்பி துரைச்சாமி தலைவராகவும், திரு. ளே நல்லலிங்கம் செயலாளராகவும், திரு. எச். 'ဇွို႔ႏွစ္ထိ ဂျို၊
இக்காலத்தினுள் 1978ம் ஆண்டு கார்த்திகை 23ல் கிழக்
கிலங்கையைக் கதிகலக்கிய பெரும்புயலும், கடற்பெருக்குமாகிய ற்கையின் சீற்றம் இவ்வாலயத்தின் மூலஸ்தானம் தவிர்ந்த п மண்டபங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியது. τ இறைவியின் இன்னருளாலும், ஊரவர்களின் மனமுவந்த 鰲 கொடையாலும், அரசாங்கத்தின் ஆலயப் புனருத்தாரண யொதுக்கீட்டினுலும், பரிபாலன சபையின் அயரா உழைப்பி b ஆலயம் முன்பிருந்ததைவிடப் பலத்துடனும், புதுப் |ம் அமைத்து முடிக்கப்பட்டது. இதனிடை
ருளாளர் மாற்றம் செய்யப்பட ங்கம் புதிய தலைவராகவும், திரு. புதிய பொருளாளராகவும் நியமன 1982ம் ஆண்டு ! து தலைவராகத் திரு. பொன் திரு. சாமிநாதன் சே
பூரணைக்கு ஏழு நாட்களு அன்று ஆலயத்திற்கு அண் சொரிதலுடன் முடிவு தனிப்பட்டவர்களாலும், நடாத்தப்படும். கடைசிநாள் இறைவியைக் குளிர்விக்கக் திப் பாடல் பாடுவார்கள் விநாயகப்பானை எடுத்தல் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளும் அன்றுண்டு. முடிவில் சர்க்கரைச் சாதம், தண்ணீர் ஊற்றப்பட்ட பள்ளேயம் பக்தர்களுக்கு விநியோ கிள் ਸuGib,
நா JGM-IT
- 26
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உற்சவ ஏழு நாட்களும் தெய்வம் உடலேறப்பெற்ற பக்தர்கள் உருவேறி ஆடுவார்கள். பல ஊர்களிலும் இருந்து நோய் நொடி களுடனும், மனச் சஞ்சலத்துடனும் வந்த பக்தர்களுக்கு மன நிறைவளிக்கும் அம்பாளின் அருள் வாக்குகள் தெய்வங்கள்மூலம்
கிடைக்கும். இதைவிடப் பூசாரியார் என்றழைக்கப்படும் திரு.
சீனித்தம்பி வேலுப்பிள்ளை என்பவர் அம்பாளிடம் கேட்டு, குறி சொல்வதை இவ்வாலயத்தில் வியப்புறக் காணலாம். தெய்வ மாடுவோர் சாட்டையடிகள் பெற்றும், நெற்றியில் வாளால் உதிரம் வழியும்படி கொத்தியும், முப்பது அடிக்கு மேற்பட்ட கம்பத்தில் ஏறிச் சூலத்தில் வயிற்றை வைத்து அந்தரத்தில் நின் றும் அற்புதஞ் செய்து காட்டுவார்கள். 'அரோகரா’ என்ற பக்தர் களின் குரலை எங்கும் கேட்கலாம். மந்திரம் கற்றவர்களின் கட்டுக்களும், வெட்டுக்களும் பக்தர்களைப் பிரமிப்படையச் செய் வதை இங்கு காணமுடியும்.
இவ்வாலயத்தின் ஆரம்பப் பூசகர் கோட்டைக்கல்லாற் றைச் சேர்ந்த திரு. சித்திரக்கட்டாடி என்பவராகும். அவரின் இறப்பின்பின் அன்னரின் முக்கிய சீடர்களில் ஒருவரான திரு. செல்லப்பா சோமசுந்தரம் என்பவர் நீண்ட காலமாகப் பிரதான பூசகராக இருந்து அம்பாளின் அனுக்கிரகத்துடனும் பல சீடர் களின் உதவியுடனும் மிகத் திறமையுடன் நடாத்திவருகிருர்,
இத்தகைய கடலாட்சி அம்மனுக்கு ஆதியில் ஒரு காணிக்கை உண்டியல் மாத்திரம் பிரதிநிதியாக இருந்தது. கடலுக்குத் தொழிலுக்குச் செல்வோர் யாவரும் தமக்கு எத்தகைய தீங்கும் நேராவண்ணம் கடல் அம்மனை வேண்டி இக்காணிக்கை உண்டி யலை வைத்து அதனுள் பணம் போட்டுவந்தார்கள் என்பது ஐதீகம். இதஞல் அந்த இடம் கடலாட்சி அம்மனுக்குரிய இட மாகப் பிரதிபலித்தது. பின்னர் காலஞ்செல்லக் கோயில் ஒன்று கட்டவேண்டி ஏற்பட்டது. கடலாட்சி அம்மஞல் கடற் தொழி லுக்குச் செல்வோருக்கு எவ்விதத் தீங்கும் வராமல் காப்பாற் றப்படுவதோடு அப்பகுதிக் கடலுட் செல்லும் கப்பல் முதலிய சாதனங்களும் எவ்வித இடையூறுமின்றி செல்கின்றன என்பது அறிந்தோர் கூற்று. 鬣 (MW、W、 W、
- தாயே! கடலாட்சி! உன் தாளினை போற்றி ma
Woussy.:wwaa

Page 84

6ஆவது இயல் : பொது.
(1) களுவாஞ்சிக்குடி
பூணீ மகாவிஷ்ணு கோவில்
கிழக்கிலங்கையில் மட்டக்களப்புக்குத் தெற்கே 16 மைல் தொலைவில் அமைந்துள்ள கிராமமே களுவாஞ்சிக்குடி. கிழக்கே கடல். மேற்கே மட்டக்களப்பு வாவி, வடக்கே களுதாவளை என்னும் கிராமம். தெற்கே பட்டிருப்பு ஈஸ்ட் சீற்றன் தென்னந் தோட்டம் என்பன இதன் எல்லைகளாகும். இதனிடையே பிர தான வீதியில் அமைந்துள்ளது பூரீ மகாவிஷ்ணு தேவஸ்தானம்.
இக்கோவில் இற்றைக்கு 200 வருடங்களுக்குமுன் ஆறுமுகக் குருக்கள் பெரியதம்பிக் குருக்கள் அவர்களால் ஆரம்பிக்கப்பட் டது. இவர் பெரிய கவுத்தன்குடியைச் சேர்ந்த வேளாளர். இவருக்குப்பின் இவரது மருகரான முருகக்குருக்கள் இதனை நிரு வகித்துவந்தார். இவரும் ஒரு விஷ்ணு பக்தர். இவருக்கு இந்தி யாவிலிருந்து வந்த ஒரு சன்னியாசியாரால் ஒரு விஷ்ணு சிலை கொடுக்கப்பட்டது. அதனை அவர் அக்கோயிலில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இந்த உருவச்சிலை இன்றும் இவ்வால யத்தில் காணக்கூடியதாக உள்ளது.
இவருக்கு மூப்பு எய்தும்காலை இவரது சகோதரியின் மக ஞன (வெள்ளையப்போடியாரின் மகன்) கார்த்திகேசு இராமநாத னிடமும், அவரது சகோதரிகள் ஐந்து பேரிடமும் கோயில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கண்ணனின் திருவடியடைந் தார். இவரும் இவரது சகோதரிகள் ஐந்துபேரும் சேர்ந்து முருகக் குருக்கள் கொடுத்த பணத்தினைக் கொண்டு சொறிக்கல்லினல் ஆலயம் அமைத்துக் கும்பாபிஷேகம் செய்து சுமார் 15 வருட காலம் கோயிலை நடாத்திக்கொண்டுவந்தார்கள். பின்னர் தமது மூத்த சகோதரியின் மகஞன கணபதி கந்தையாவிடம் ஒப்படைத் தார்கள். இதனை நடத்தத் தன்னல் முடியாது என்று கூறி கந்தையா மீண்டும் இராமநாதரிடம் ஒப்படைத்தார். ஏனைய சகோதரிகளுக்கு நிருவாகப் பொறுப்பினை ஏற்று நடாத்தக்கூடிய மக்கள் இல்லாத காரணத்தினல் தனது சகோதரியின் மகளான சேதுப்பிள்ளையை விவாகம் செய்த தம்பிமுத்து இராசையாக் கங்காணியாரிடம் பொறுப்பினை ஒப்படைத்து விஷ்ணு வின் பாதாரவிந்தம் சேர்ந்தார். இராமநாதர் இராசையாவிடம் பொறுப்பினை ஒப்படைக்கும் காலை தமது சகோதரியின் ஆண்
- 129

Page 85
மகனையும் வருங்காலத்தில் அணைத்துக் கோயிலை நடாத்தவேண்டு மென்று ஆணைபிறப்பித்திருந்தார். அத்தோடு “நீர், செகநாதக் குருக்களுக்கும், பெரியதம்பிக் குருக்களுக்கும் பேரனனபடியால் கோயிலை நடாத்த உனக்குத் தகுதியுண்டு" என்றும் ஆலோசனை வழங்கியிருந்தார்.
பொதுநலச் சேவைகளிலும் தேவாலயத் திருப்பணித் தொண்டுகளிலும் சிறந்து விளங்கியவராகிய தம்பிமுத்து இரா சையா (கங்காணியார்) 1924ம் ஆண்டு கோயில் பொறுப்பை ஏற்று நடாத்திக்கொண்டுவரும் நாளில், தனது மனைவியின் சகோ தரஞன திரு. க. சுப்பிரமணியத்தையும் சேர்த்துக் கம்சன் கதை போன்ற திருவிழாக்களையும் நடாத்திக்கொண்டு வந்தார். சுப்பிர மணியம் அவர்கள் 1940ம் ஆண்டு திடீரென அகால மரண மடைய நேரிட்டது. மனமுடைந்தவராகக் காணப்பட்ட கங்காணி யார் தனது மனைவியின் சகோதரியான கந்தவனம் சந்திரசோதி யின் கணவரும் தனது ஒன்றுவிட்ட சகோதரனுமான பொன்னம் பலம் கந்தசாமியையும் சேர்த்துக் கோயிலை நடாத்திக்கொண்டு வந்தார்.
1948ம் ஆண்டு கோயில் சுவர் வெடித்து மேற்கூரை வட புறத்தால் விழுந்தபடியால் அக்கோயிலைச் செப்பனிடவேண்டு மென்று நினைத்து வெள்ளையப்போடியாரின் சந் த தி யா  ைர அழைத்து (இராமநாதரின் சகோதரிகளின் ஐந்து பகுதியினரை யும்) ஒரு கூட்டம் கூட்டி புனருத்தாரணம் செய்வதெனத் தீர் மானித்தார். ஐந்து தாய் பிள்ளைகளிடமிருந்தும் ரூபா 500/- வீதம் நிதி சேகரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு கங்காணியார் 1000/- ரூபா போடுவது எனவும் ஏற்றுக்கொள் ளப்பட்டது. திருப்பணிவேலை தொடங்கி நடைபெற்றுக்கொண்டி ருந்த வேளை சந்ததியாரின் உதவி கிடைக்காது போகவே பொன் னம்பலம் கந்தசாமியும் சேர்ந்து தங்கள் இருவருக்கும் பங்காக இருந்த 9 ஏக்கர் காணியொன்றையும் விற்று, மூலஸ்தானத்தை யும் மகாமண்டபத்தையும் கட்டிமுடித்துக் கும்பாபிஷேகம்செய்து வைத்தனர். இத்திருப்பணி வேலைக்குப் பணம் வேண்டிய வேளை களில் ஊர் மக்களிடமும் ஏனைய பிற இடங்களில் உள்ள வள்ளல் களின் உதவியையும் பெற்ருர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் சந்தன மண்டபமும் தம்பமண்டபமும் கட்டப் படாமலிருந்தன. அத்தோடு வைரவர் கோயில், நவக்கிரக கோயில் என்பனவும் அமைக்கவேண்டிருந்தது. மீண்டும் இராசையாக் கங்காணியாரும் கந்தசாமியாரும் பொது மக்களிடம் சென்று பொருளுதவி பெற்றுத் தங்களுடைய உழைப்பினையும் கொண்டு மேற்படி மண்டபங்களையும் கோயில்களையும் கட்டிமுடித்தனர்.
-130

தவிர, கொடித்தம்ப மண்டபத்தை வெள்ளையப்போடி யாரின் பேத்தியாகிய குஞ்சித்தம்பி வள்ளியம்மையும் அவரது மகன் தருமரெத்தினமும் சேர்ந்து தங்களது சொந்தச் செலவில் கட்டிக் கொடுத்தனர்.
சுமார் 41 வருடகாலம் கோயில் திருப்பணிகளை மேற் கொண்டு பரிபாலனஞ்செய்துவந்த இராசையாக் கங்காணியார் தமது அந்தியகாலம் நெருங்குவதைக்கண்டு தாம் இராமநாதருக் குக் கொடுத்த வாக்குறுதியின்படி கோயில் பொறுப்பைத் திரு. இ கணபதிப்பிள்ளை , திரு. கு. தருமரத்தினம், திரு. க. பண்டரி நாதன் ஆகியோரிடம் ஒப்படைத்து வருங்காலத்தில் கோயிலைப் பரிபாலனஞ்செய்யும்போது விடுபட்டிருக்கும் இரு சந்ததியாரை யும் சேர்த்து பொ. கந்தசாமியின் ஆலோசனைப்படி நடாத்தும்படி கூறி விஷ்ணுவின் கழலடியினையடைந்தார்.
இராசையாக் கங்காணியாரின் மறைவுக்குப்பின் கோயில் பொறுப்பினைப் பொன்னம்பலம் கந்தசாமியின் ஆலோசனைப்படி நடாத்திக்கொண்டுவந்தனர். இக்காலத்தில் கோயிலைப் புதுப்பிக்க வேண்டிய நிலையொன்று ஏற்பட்டது. அதற்காக வள்ளிப்பிள்ளை யின் மகளான ஞானசெல்வத்தின் கணவரான மாணிக்கப்பிள்ளை யைப் பொருளாளராக நியமித்துத் திருப்பணி தொடங்கப்பட் டது. இதற்குத் தருமரத்தினம், கணபதிப்பிள்ளை. பண்டரிநாதன் ஆகியோரும் பொருளுதவியை நல்கி உலர்மக்களிடம் பொருளுத வியும் பெற்றுக் கட்டிமுடித்து 1972ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
இதன்பிறகு விடுபட்டிருந்த இரு சந்ததியாரையும் இணைத்து ஒரு பரிபாலனசபை ஏற்படுத்தப்பட்டது. இச்சபைக்குத் தலைவரா கப், பட்டதாரியான திரு. குஞ்சித்தம்பி தருமரத்தினம் எம். ஏ. அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். உபதலைவர்களாக திரு. இ. கணபதிப்பிள்ளை, திரு. க. பண்டரிநாதன், திரு. கு. சீனிவாச கம், திரு. சி. நாகப்பன், திரு. சு. பத்மநாதன், திரு. கா. நீதி நாதக்குருக்கள் ஆகியோரும், உறுப்பினர்களாகத் திரு. க. மாணிக் கப்பிள்ளை, திரு. சா. முருகேசு, திரு. செ. சிவசம்பு, திரு. ந. வசந்தராசபிள்ளை, திரு. க. அழகரத்தினம், திரு. மு. முத்துக் குமாரன், திரு. வ. பாலகிருஷ்ணமூர்த்தி, திரு. க. மாணிக்கம், திருமதி த. பரமேஸ்வரி, ஆகியோரும் செயலாளராகத் திரு. நே. சாமித்தம்பியும், பொருளாளராகத் திரு. இ. சுந்தரலிங்கமும் தெரிவுசெய்யப்பட்டனர்.
திரு. கு. தருமரத்தினம் அவர்கள் கோயில் தலைவராக நியமிக்கப்பட்டதும் கோயில் திருப்பணிக்கே தன்னை அர்ப்பணித்
- 31

Page 86
தார். திரைகடல் கடந்தும் திரவியம் தேடினர். தேடிய தேட்டத் தின் ஒருபகுதியைத் திருப்பணிக்கே செலவழித்தார். இவரது அயராத உழைப்பினைக்கொண்டு கோயிலின் ஐந்தாவது மண்ட பத்தைப் புதுப்பித்தார். வசந்தமண்டபத்தையும் வாகனசாலை, மடப்பள்ளி அறை (கபடா) ஆகியவற்றையும் கட்டிமுடித்தார். தொடர்ந்தது திருப்பணி. 'இராசகோபுரம்' கட்டியெழுப்பு வேன் என உறுதிபூண்டார். வேலை ஆரம்பிக்கப்பட்டுக் கோபுர மும் கெம்பீரமாக எழுந்துவரும் காலத்தில் கண்ணன் அவரைத் தன்னுடன் அழைத்துக்கொண்டார். இவரால் தொடரப்பட்ட சுற்றுவர மண்டபம் தற்போதும் வேலை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவரது காலத்தில் கோயிலுக்கான எழுந்தருளி விக்கிரகம் திருமதி. நல்லம்மா யோகலிங்கம் அவர்களால் கோயிலுக்கு வாங்கி உபகரிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்குப்பின் பரி பாலன சபைக்குத் திரு. இ. கணபதிப்பிள்ளை தலைவராக நியமிக் கப்பட்டு, கோயில் நிருவாகம் நடைபெற்றுக்கொண்டுவருகின்றது. சபையின் உறுப்பினர்களுள் ஒருவராக, மறைந்த தலைவரின் மகன் திரு. த. சுதர்சனம் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோயிலின் பூசகர் நியமனம் ஆறுமுகக்குருக்கள், பெரிய தம்பிக்குருக்கள் அதனைத் தொடர்ந்து முருகக் குருக்கள் ஆகியோர் நடாத்திக்கொண்டுவந்தனர். 1924ம் ஆண்டு சின்னையாக்குருக்கள் நிரந்தர பூசகராக நியமிக்கப்பட்டார். அவருக்குப்பின் திரு. க. கு. கணபதிப்பிள்ளைக்குருக்கள் பூசகராகக் கடமையாற்றினர். இவரது மறைவினை ஒட்டி சைவக் குடும்பமொன்றிலுள்ள மரகதம் பிள்ளையின் உரித்தாளரான திரு. கா. நீதிநாதக் குருக்கள் நிய மிக்கப்பட்டுப் பூசகராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிருர்,
கோயிலில் தினப்பூசை நடைபெற்றுவருகின்றது. வெள்ளிக் கிழமைகளில் இரவு வேளைகளில் பூசைக்கென நியமிக்கப்பட்ட உபயகாரர்களால் பூசைகள் நடாத்தப்பட்டுவருகின்றன.
தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, இராமநவமி, கிருஷ்ணஜயந்தி, திருக்கார்த்திகை, தீபாவளி, ஆகிய விசேட நாட்களில் உபயகாரர்களால் பூசையும் திருவிழாவும் நடாத்தப் பட்டுவருகின்றன. திருப்பாவைத் திருவிழா தொடர்ந்து 9 நாட் கள் நடைபெறும். பத்தாம்நாள் தீர்த்தோற்சவம் நடைபெறும். தவிர நவராத்திரித் திருவிழாவும் துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகளுக்குக் கும்பங்கள் வைத்து வெகு சிறப்பாக நடை பெற்றுக்கொண்டு வருகின்றது.
- 132

வருடாந்த உற்சவம் ஆவணி மாதம் வளர்பிறைக் காலத் தில் வருகின்ற அனுஷநட்சத்திரத்திற்கு முன் 9 நாட்கள் திரு விழா நடைபெற்று 10ம் நாள் தீர்த்தோற்சவத்துடன் முடிவடை யும். அதைத்தொடர்ந்து பூங்காவனம், திருக்கலியாண உற்சவம், வைரவர் பூசை என்பனவும் இவ்வருடாந்த உற்சவத்தில் இடம் பெறும் விசேட நிகழ்ச்சிகளாகும்.
உபயகாரர்கள் தங்கள் திருவிழாக்களைச் சிறப்பிக்கும் பொருட்டுக் கலை காலாட்சேப, உ.ந்நியாச, பஜனைகளை, ஒழுங்கு செய்து காலத்திற்குக் காலம் சமய உணர்ச்சியை ஊட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆலயபரிபாலன சபை, ழரீ மகாவிஷ்ணு தேவஸ்தானம்.
களுவாஞ்சிக்குடி மகாவிஷ்ணு கோவிலைப்பற்றி இங்கே சொல் லப் பெற்றன யாவும் இந்த ஆலய நிருவாகசபையார் கூற்ருகும். இந்தச் செய்திகள் பற்றி மேற்படியான நிலைக்கு யான் பலவந்தப் படுத்தப்பட்டுள்ளேன் என்பதை, எனக்கும். மேற்படி கோவிற் தலைவராக இருந்தபோது அண்மையிற் காலஞ்சென்ற திரு. தரும ரெத்தினம் அவர்களுக்கும் இடையிலே இருந்த உறவுத் தொடர்பு பற்றிச் சிறிது கூறவேண்டிய அவசியம் எனக்கு ஏற்படுகின்றது.
மண்டூரில் உள்ள இராமக்கிருஷ்ண சங்கப் பாடசாலையில் அக்காலை இருந்த ஜே. எஸ். சி. பரீட்சையிற் தேறிய பின்னர் எனது பதினன்காவது வயது முதல் களுவாஞ்சிகுடிக்கு வரலா னேன். அங்கு எனக்குக் குஞ்சாச்சி (குஞ்சு + ஆய் + சி (மரியாதை விகுதி] =சிறியதாய்) முறையினராக இருந்தவர் வள்ளிப்பிள்ளை என்பவர். அவருடைய கணவரும், காரைதீவு என்னும் ஊரை, ஆசிரியர் நிறைந்த வளமான கலைப்பிரதேசமாக்கியவரும், உயர் திரு. விபுலாநந்த அடிகளாரின் நல்லாசிரியராக இருந்தவரும் , பிற்காலத்தே அடிகளாரிடம் என்னை மாணவனுக்கி எனது வாழ் வினை வளம் செய்தவருமாகிய குஞ்சித்தம்பி உபாத்தியாயர் எனப் படும் எனது பெரியப்பாவும் எனக்கு உறைவிடமாயினர். அவர் களது மகளுக அப்போதிருந்த சிறு பிள்ளைதான், இவ்வாலயத்துப் பெருந் தலைவராக அண்மைக்காலம்வரை இருந்த பெரிய பேராளன கிய திரு. தருமரெத்தினம் அவர்களாவர். அவருடைய மூத்த சகோதரியார் திருமதி. ஆநந்தசோதி-சாமித்தம்பி. அவர்களோடு, இப்போதுள்ள இளைய சகோதரிகள் திருமதி. ஞானசெல்வம் - மாணிக்கபிள்ளை அவர்களும், திருமதி. அழகுமாணிக்கம் - முரு கேசு அவர்களும் ஆவர். இவர்களுள் இளைய சகோதரிகள் இரு வரும் பிறக்கும் காலத்திலெல்லாம் அவர்களுடனேயே நான் அங்கு இருந்துள்ளேன்.
-۔ 133 ہس۔

Page 87
அக்காலமெல்லாம் இந்த விஷ்ணு கோயிலுக்கு வள்ளிப் பிள்ளைக் குஞ் சா ச் சி யுடன் பல தடவைகள் சென்றுள்ளேன். கோவிற் தலைவராக அப்போது இருந்த இராசையாக் கங்காணி யாருடைய மகனும் தற்போது தலைமைப் பதவியேற்றுள்ளவரு மான திரு. இ. கணபதிப்பிள்ளை அவர்கள் களுவாஞ்சிக்குடியில் எனது கலாசாலை மாணவர். ஆதலால் அவருடன் கோயில் வளவு கட்டிடம் முதலியவற்றைப் பலமுறை பார்வையிட்டுள் ளேன். அப்போதிருந்து இன்றுவரை சுமார் ஐம்பது ஆண்டுகள் எனக்கு இந்தக் கோயிலுடன் நெருங்கிய தொடர்பிருந்தது என் பது பலரறியாத சேதி. அப்போதெல்லாம் வள்ளிக்குஞ்சாச்சிக் கும் இராசையாக் கங்காணியாருக்குமே கோவில் பற்றிப் பெரும் பாலான அக்கறை இருந்தது எனலாம். இதனுற் கவலைகொண்ட குஞ்சாச்சி அவர்கள் தன் மகனிடம் ஒருபோது ‘இந்தக் கோவிலை ஒருவரும் கவனியாது போனுலும் நீ மட்டுமாவது உனது கோவி லாக நினைத்து இதனைப் பாதுகாத்து வரவேண்டும்" என்று தனது கணவர் முன்னிலையிற் சொன்னதையும் நானறிவேன். அவரது கணவரான குஞ்சித்தம்பி உபாத்தியாயர் கிறிஸ்துவ மதத்தவராக இருந்து கொண்டே சமய சமரசம் வளர்த்த ஒரு பெரியார் என்பதை மட்டக்களப்புத் தமிழகம் நன்கு அறியும். அன்னர் அப்போது தமது மெளனத்தினுல் அதனை ஆமோதித் தார் எனலாம்.
பின்னர் முத்தகல் உடையாராகவிருந்த திரு. வண்டையா அவர்களுக்கு மகளான செல்வி. மகேஸ்வரிக்கு இரு பகுதியாரும் இசைந்து திரு. தருமரெத்தினம் அவர்களைத் திருமணப் பதிவு செய்துவிட்டு, அவர் லண்டனுக்கு M.A. படிக்கச்சென்று மீண்டதும் இல்லறத்தை மேற்கொண்டார். இதன்பின்னரே கோயிற் சபைத் தலைவராயினர் என்பது குறிப்பிடத்தக்சது. திரு. தருமரெத்தினம் தலைவராவதற்கு முன்னர்கூடத் தன் தாயுடன் சேர்ந்து சில கட்டிடங்களை அமைத்தமை மேலேயுள்ள ஆலய பரிபாலன சபை யார் கூற்றிலும் காணப்படுகின்றது. எனவே முன்னரும் பின் னரும் அவருள்ளம் அங்கேதான் பதிந்துகிடந்தது. 1972ம் ஆண்டு நடந்த குடமுழுக்கு விழாவின்போது களுவாஞ்சிக்குடியில் அமைந் துள்ள பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் நான் அதிபராகக் கடமை பார்க்கின்றேன். அந்நாளில் பாடசாலை முழுநேரமுமாக அவ்விழா வேலைகளில் ஈடுபட்டிருந்தது என்பதை நான் இங்கு குறிப்பிடுவதில் பெருமகிழ்ச்சியுறுகின்றேன்.
திரு. தருமரெத்தினம் தலையீடுகொண்டபின்னர் இவ்வால யத்தின் பேரும் புகழும் எல்லாம் அயலூர்களுக்கும், அயல் நாடு களுக்கும் நன்கு பரவின எனல்வேண்டும். அவர் தலைவராவதற்கு முன்பே திருவிழா நாட்களில் அங்கு வரும் வெளியூரவர் எல்
-- h34 سه

லோரும் திரு. தருமரெத்தினத்தின் கோவில் என்றே இதனைக் கருதும் அளவுக்கு அவரின் பிரபலம் அங்கு விளங்கலாயிற்று. ஐக்கிய நாடுகள் சபை நிதி ஆலோசகராக (Financial Advisor of the U N. O) பதவி உயர்ந்து மனைவி மக்களுடன் வெளிநாடு கள் பலவற்றுக்கு உழைக்கச்சென்றும் கோவிலை மறந்தாரில்லை.
உழைப்பில் பெரும் பகுதியைக் கோவிற் கட்டிடம் முத லிய பல வேலைகட்கும் செலவிட்டார். இதனுல் இக்கோவிலின் எதிர்காலம் இவர்களிடத்திலேயே தங்கப்போகின்றதோ என்றும் சிலர் நினைக்க இடம் அளித்தது. இவைகளால், எனது குறிப்பு கள் மட்டும் கொண்டு எழுதினுல் அது தகுதியாக இருக்குமோ என நானும் எண்ணியதுண்டு. திரு. தருமரெத்தினம் இருந்த போது அவரிடம் இவ்வாலய வரலாறுபற்றிய குறிப்புகள் தரு மாறு கேட்டேன். 'அவசரமாக இப்போது வெளிநாடு செல் கிறேன். பத்து நாட்களில் வந்துவிடுவேன். வந்ததும் நீங்கள் கேட்டபடி யாவும் எடுப்போம்” என்ருர். அதுதான் எங்கள் கடைசிச் சந்திப்பு. பத்து நாட்களில் அவர் லண்டன் மாநகரி லிருந்தே இறைவன் திருவடி அடைந்த சேதிதான் கிடைத்துப் பரதவிக்கலானேன். களுவாஞ்சிக்குடி மட்டுமன்றி மட்டக்களப்பு முழுவதுமே பரதவிக்கலாயிற்று.
சில நாட்களின் பின்னர் அவரது மனைவியாரான திருமதி மகேஸ்வரி - தருமரெத்தினம் அவர்கள் சில குறிப்புகள் எழுதிக் கண்ணிரோடும் என்னிடம் கையளித்தார்கள். ஆயினும் அதில் ஆலய வரலாறு முழுவதும் இல்லாத காரணத்தால் ஆலய பரி பாலன சபையாரிடமே இதனை எழுதித்தருமாறு கேட்டுப் பெற லானேன்.
முன்னர் களுவாஞ்சிக்குடி மகாவிஷ்ணு ஆலயம் கார்த்தி கேசு - இராமநாதரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் குடியிருந்த வளவுகூடப் பின்பு திரு. தருமரெத்தினத்தின் தாயாருக்கு வந்து, தற்போது ஞானசெல்வம்-மாணிக்கபிள்ளை அவர்கள் அதில் வீடு கட்டிக் குடியிருக்கிருர்கள். திரு. தருமரெத்தினத்தின் சகோதரி கள் மூவருக்கும் ஆண் மக்கள் இருக்கிருர்கள். வேளாளருட் பெரிய கவுத்தன்குடியாரே இக்கோவிற் தலைமைப் பதவி வகிப்ப தற்குத் தகுதி உடையவர் என்னும் நியதி மாரு திருக்கத்தக்க தாகச் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. திரு. தருமரெத்தினத்தின் மகன் திரு. சுதர்சன் அவர்களும் பரிபாலன சபையில் அங்கத்தவ ராகப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியதாகும். அவரும் எதிர்காலத் தில் கல்வி, தொழில்வளம், புகழ் என்பவற்றில் வளர்ந்து தமது தந்தையாரைப் ப்ோலாவர் என எதிர்பார்க்கின்ருேம்.
--سس۔135-س۔

Page 88

6ஆவது இயல் : பொது.
(2) களுவாஞ்சிக்குடி
ழரீ வீரபத்திரர் ஆலயம்
மட்டக்களப்புக்குத் தெற்கே 16 மைல் தொலைவில் களு வாஞ்சிக்குடி என்னும் கிராமம் அமைந்திருக்கின்றது. இக்கிராமம் பட்டிருப்புத் தொகுதியின் கேந்திர நிலையமாக சகல வசதிகளும் உள்ளதாக ஓரளவு மிளிர்கின்றது. கிராமத்தின் கிழக்கே வங் காள விரிகுடாக் கடலும், மேற்கே மட்டக்களப்பு வாவியும் வடக்கே களுதாவளையும், தெற்கே பட்டிருப்பு ஈஸ்ட்சீற்றன் தோட்டமும் இதன் எல்லைகளாகும்.
இங்கு வசிப்பவர்கள் அனைவரும் தமிழர்கள். பெரும்பாலா னேர் வேளாள மரபினர். பெரும்பான்மை மக்கள் சைவமதத் தினர். இதனுல் பூரீ வீரபத்திரர் ஆலயம் சிறப்புற்று விளங்கக் காரணமாயிற்று. இத்துடன் இங்கு இரு விக்கினேஸ்வரர் ஆல யம், விஷ்ணு ஆலயம், கண்ணகை அம்மன் ஆலயம், இரு நாக தம்பிரான் ஆலயம் என்பனவும் இடம்பெற்று, இறைவனின் திரு வருளால் கிராமத்தின் மேன்மையை மேலும் சிறப்படையச் செய்கின்றன.
களுவாஞ்சிக்குடி பூரு வீரபத்திர சுவாமி ஆலயம் எப்போது உருவானது என்று குறிப்பிடமுடியாத நிலையில் இருக்கின்றது. இக்கிராமம் எப்போ ஆரம்பிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே இவ் வாலயமும் இங்கு ஆரம்பிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றிருக் கலாமென நம்பப்படுகின்றது. இவ்வாலயத்தில் பூசகராக இருப் பவர்களை "கவுத்தன்' என்றும் அழைப்பர். கவுத்தன்குடி மர பில் வருபவர்களாதலால் இப்பெயர் வரலாயிற்று எனலாம். மட்டக்களப்புத் திருப்படை வரலாற்றில் உள்ள ஆறுகுடி வேளா ளர் மரபில் உள்ளவர்களே மேற்படி கவுத்தன்குடியினர் என்றும் கூறுவர்.
இவ்வாலயத்திற்குப் பெரிய கவுத்தணுக இருப்பவரைப் பெரிய கவுத்தன் என்றும், இவருக்கு உதவியாக இருப்பவரைச் சின்னக் கவுத்தன் என்றும் கூறிவந்துள்ளனர். இவ்வாறு இவ்வாலயத் தில் சேவையாற்றிய கவுத்தன்மாரின் எண்ணிக்கையைக்கொண்டு இற்றைக்கு முன்னுாறு வருடங்களுக்கு முன்பு இருந்தே பூரீ வீர பத்திர ஆலயம் களுவாஞ்சிக்குடியில் எழுந்தருளப்பெற்றிருக்கலா மெனக் கணக்கிடக்கூடியதாகவுள்ளது. இங்குள்ள சில வரலாற்றி
- 37

Page 89
லிருந்து வவுனியக்கவுத்தன், பட்டக்கவுத்தன், முதலாக வயிர முத்துக் கவுத்தன், கந்தசாமிக் கவுத்தன் ஈருக இருபதுக்கு மேற்பட்ட கவுத்தன்மார்கள் இவ்வாலயத்தில் பூசகராக இருந் துள்ளதற்கான வரலாறுகள் இருக்கின்றன.
கோங்குநாடு, அயோத்திநாடு, கோசலநாடு, கறுப்புநாடு, பருத்தித்துறை, திருக்கோணமலை, மண்முனை, நீலாவணை, எருவில், முதலிய நாடெல்லாம் அருள்பாலித்து, ஈற்றில் களுவாஞ்சிக்குடி யில் பூரீ வீரபத்திரப் பெருமான் கோவில் கொண்டுள்ளதாக வும் இதற்கெனப் பாடப்பட்ட அகவல் பாடல்களில் இருந்து அறியக்கூடியதாகவுள்ளன.
சுவாமி வழிபாட்டு அகவல்பாவில் “வவுனியர் வகுத்த குருவே' எனக் காணப்படுவதால் வவுனியர் என்பவர் இந்தியா வில் இருந்து மேற்படி இடமெல்லாம் அருள்பாலித்து, சுவாமி அடங்கிய பெட்டியையும் 'சவணிக்கை' என்ற ஒருவகை வாத்தி யத்தையும் கொண்டுவந்து கவுத்தன்குடியிலுள்ள இரு சகோதரர் களிடம் ஒப்படைத்து, வணங்கும் முறைகளுக்கான “பத்தாசி’ களையும் இவர்களிடம் கையளித்தனரென்றும், கிராமத்தில் நோய் நொடிகள் ஏற்பட்டால் அந்த வீடுகளுக்குச் சென்று இறைவனை முன்னிறுத்தி பூசை வைத்து (சடங்கு) வணங்கி, காலக்கிரமத் தில் இதற்கென ஆலயம் 'பத்தாசி" முறைக்கேற்ப சிங்காசனம் அடங்கிய மடாலயமாக அமைத்து, வருடாவருடம் வேள்விப் பூசைகள் நடாத்திவரப்பட்டதென்றும் சான்றுகள் உள்ளன.
மேலும் சுவாமியின் பேழை அடங்கிய பெட்டியொன்று ஏதோ ஒருவிதமாகத் தற்போது பூரீ வீரபத்திர சுவாமி கோவில் கொண்டிருக்கும் இடத்தை அண்மித்துக் கரைசேர்ந்ததென்றும் இரு சகோதரிகள் இதைக் கண்டெடுத்துத் திறந்துபார்த்தபோது சுய உணர்வில்லாத நிலையில் மயங்கிவிழுந்ததனுல் இவர்கள் தமையன்மார் இருவர் இக்காட்சியைக்கண்டு இறைவனை வணங்கி இவர்களைப் பெருமானின் திருவருளால் எழுப்பினர்களென்றும், அன்றிலிருந்தே இவ்வழிபாடு ஆரம்பிக்கப்பட்டதென்றும் ஒரு கர்ணபரம்பரைக் கதை கூறுகின்றது.
சுவாமிப்பெட்டியைக் கண்டெடுத்த நாள் முதல் இரு சகோதரர்களும் இதன் பூசகராகிக் கவுத்தனுக இருந்து பூசை ஒழுங்குகளைக் கவனித்துவந்தது மட்டுமின்றி, கிராமத்தில் ஏதும் நோய் நொடிகள் ஏற்பட்டால் சுவாமிப் பெட்டியைக்கொண்டு சென்று அங்கு சடங்கு செய்து வருத்தங்களைக் குணப்படுத்தியும் வந்ததாக வேறு கதைகளும் உள்ளன. பெரிய சிறிய கவுத்தன் குடி மரபில் உள்ள மக்கள் சிலர் தற்போதும் இம்முறையைக் கைக்கொண்டு வருவது கண்கூடு.
-138

அன்ருெருநாள் பெரிய பட்டக்கவுத்தனும், சிறிய பட்டக் கவுத்தனும் பூசை அதாவது, சடங்கு செய்துகொண்டிருக்கும் போது வழிப்போக்கராக வந்த பூபாலகோத்திரத்து வன்னி மைப் பெருந்தகையொருவர் இதை அலட்சியமாக மதித்து, பூசகர்களாக இருந்தவர்களை அவமதித்துப் பூசை மடைகளைக் காலினல் சிதற அடித்து, உதைத்துத் தள்ளிவிட்டு, ஏளனம் செய்து, பட்டிருப்பு - போரதீவு வழியால் பட்டிருப்பு - மட்டக் களப்பு வாவியைக் கடந்துபோகும்போது மயக்கமுற்று சுய அறி வில்லாமல் நிலத்தில் விழுந்தாரென்றும், இதை அறிந்த இவ ருடன் கூடச்சென்ற நபர் இவரைத் தட்டியெழுப்பப் பலமுறை முயற்சி செய்தும் முடியாமல் தத்தளித்து நின்ருராம். இந்நிலை யில் ஓர் உணர்வு இவருக்கு ஏற்பட்டு, பூசை மடைகளைக் காலி ஞல் சிதற உதைத்துத் தள்ளியதனுலும், பூசகர்களை அவமதித்து ஏளனமாகத் துன்புறுத்தியதாலும் இந்நிகழ்ச்சி ஏற்பட்டதோ என எண்ணி இவரை அந்த இடத்திலேயே படுக்கவிட்டுவிட்டு, சுவாமியின் பூசையை நடாத்திய பெரிய பட்டக்கவுத்தன் சின் னக் கவுத்தன் என்போரிடம் நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறி இதற்கு உதவி செய்யுமாறு அவர்களை வேண்டினராம். இவரின் பரிதாப நிலையை அறிந்து, இவரின் வேண்டுகோளுக்கிணங்கி அக்கரைமேட்டில் மயக்கமுற்ற நிலையில் விழுந்துகிடந்த வன்னி மைப் பெருந்தகையைத் திருவருளின் அணுக்கிரகத்தை வேண்டி பூரீ வீரபத்திரசுவாமியின் அருளால் எழுப்பிக் குணப்படுத்திய அற்புதம் எல்லோரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியதாம்.
இதற்குச் சன்மானமாக அந்த வன்னிமைப் பெருந்தகை பெரியபட்டன், சினனப்பட்டன் ஆகிய இருவருக்கும் சுவாமி யின் பெயரால் அக்கரைமேட்டுக் காணியையும், “நெருக்கத்து வெளி’ என்று சொல்லப்படும் நெற்காணியையும் சுவாமிக்குத் தொண்டு செய்பவர் என்றென்றும் செய்து, இதன் வருமானத் தால் சுவாமியின் பூசைகளைக் கவனிக்கவேண்டுமென்றும் சாத னம் எழுதிக் கட்டளையிட்டு அன்பளிப்புச் செய்தாரென்றும் கதைகள் உள்ளன. இதற்கிணங்கவே, காணிகள் செய்யப்பட்டு ஆலயப் பூசைகள் செய்யப்படும் வழக்கமும் இன்று இருந்து வரு கின்றது. ஆலயக் கவுத்தன்மார் யாரும் இறந்தால் அவர்கள் பரம்பரையிலே பெரிய கவுத்தன்குடி என்று கூறப்படும் சமூகத்தி லிருந்தே இதற்குப் பூசகர்கள் நியமிக்கப்பட்டுவரும் வழக்கமும் இருந்திருக்கின்றது.
பெண்கள் பூசைக்கான (வரி) காசுகளையும், ஆண்கள் நிரு வாகப் பொறுப்பையும் ஆடம்பரச் செலவுகளையும் செய்து வரும் வழக்கமுமுண்டு. வருடத்திற்கொருமுறை வரும் புரட்டாதி மாதத்தில் பூரணைத் தினத்திற்கு இரண்டொரு நாட்கள் முன்
---H39-س-

Page 90
கூட்டி இறுதி வேள்விப்பூசை (பலி) செய்யக்கூடியதாக ஒரு வாரத்திற்குமுன் கதவு திறக்கப்பட்டு இருநேரப் பூசை நாளாந் தம் செய்து இறுதியில் வேள்விப் பூசை நடைபெற்றுவந்த வழக் கம் இருக்கிறது.
இவ்வாலயத்தில் பூசை நடைபெறும் நேரத்தில் விசேட மாக சவணிக்கை, சேகண்டி சங்கு, தாளம் முழங்க, பூரீ வீரபத் திரர் அகவல் பாடல்கள் ஒலிக்க, பூசைகள் நடைபெறுதல் வழக் கம். இதனுல் பக்தி மேலீட்டினல் பூசையைப் பார்த்து நிற்பவர் சிலர் தெய்வம் ஆடிக் கட்டுச்சொல்லும் வைபவமும் இடம்பெறும். வருடத்திற்கு ஒருமுறை ஆலயம் திறக்கப்பட்டு, பூசை எண்ணிக் கைக்கு ஏற்றவாறு, ஐந்து அல்லது ஆறு நாட்கள் சிறப்பாகப் பூசைகள் நடைபெற்று இறுதியில் வேள்விப்பூசை, அதாவது, ஆடு, கோழி, பலி கொடுத்து முடிவடையும் வழக்கம் இருந்துள் ளது. தற்போது இது நிறுத்தப்பட்டு, திருவிழா முறை நடை பெறுகின்றது.
காலக்கிரமத்தில் 1970ம் ஆண்டு ஆலயம் புனருத்தார ணம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நிகழ்ந்தது. இதன்பின் ஆலய நடைமுறைகளில் பூசை ஒழுங்குகளில் மாற்றம் ஏற்பட்டு, திரு வுளச்சீட்டு மூலம் 'பலி (வேள்விப்) பூசை கொடுப்பதை எம் பெருமான் நிறுத்தியகளுல் கவுத் தன்மார் பூசை செய்யும் வழக் கம் நீக்கப்பட்டது. திரு. க. கணபதிப்பிள்ளைக் குருக்கள் இதன் ஆலயப்பூசகராக நியமிக்கப்பட்டு தினப்பூசை நடைபெற்று வரு வதுடன் வெள்ளிக்கிழமைகளிலும் விசேட புண்ணிய தினங்களி லும் வருடாந்த உற்சவ திருவிழாக் காலங்களிலும் சிறப்பாக இவ்வாலயத்தின் பூசைகள் நடைபெறுகின்றன.
புரட்டாதி மாதத்துப் பூரணையில் வருடாந்த உற்சவம் சமுத்திர தீர்த்தோற்சவத்துடன் முடிவடையக்கூடிய அளவில் அலங்காரத் திருவிழாக்கள் இடம்பெற்றுவருகின்றன.
அலவிப்போடி, சிதம்பரப்போடி என்று கூறப்படும், அலவி, சிதம்பரி, ஆகிய பெரிய கவுத்தன்குடிச் சமூகத்தினர், ஒரு தாய் பிள்ளைக்கு ஒரு தலைவர் என்ற முறையில் தெரிவு செய்யப்பட்டு ஒரு குழு அமைக்கப்பட்டு, “ஆலய பரிபாலன சபை" என்ற பெயருடன் ஆலய நிருவாகத்தைக் கவனித்து வருகின்றனர். தலைவர் பதவியை இரு பகுதியினரும் மாறி அவரவர் இறந்த பிற்பாடு வகித்துவரும் வழக்கமும் இருக்கின்றது.
தற்போதைய பூரீ வீரபத்திரர் ஆலய பரிபாலள சபை யினர் வருமாறு:-
1. திரு. பொ. இரத்தினசபாபதி, தலைவர்.
2. திரு. சா. நாகமணி, செயலாளர். 3. திரு. கோ. பாக்கியராசா, பொருளாளர்.
-140

திரு. சி. நாகப்பன், உப தலைவர். திரு. ஆ. இராசையா, நிருவாக உறுப்பினர்.
. சீ. இராசையா, y 9 திரு. கா. சிவகுணம், *警 திரு. க. கணபதிப்பிள்ளை, y . திருமதி கு. பாக்கியம், ss (தற்போது இவ்வுறுப்பினர்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்)
திரு
இத்துடன் 1980ம் ஆண்டிலிருந்து ஆலய அபிவிருத்தி கருதி களுவாஞ்சிக்குடி பூரீ வீரபத்திரர் ஆலய வாலிபர் முன் னேற்றச் சங்கம் என்ற ஒரு சங்கமும், ஸ்தாபிக்கப்பட்டு இவர் கள் ஒத்துழைப்புடனும் ஆலய பரிபாலனம் நடைபெறுகின்றது.
மேலும் நிருவாகத்தைப் பரவலாக்கும் முறையில் கிராமத் தினருக்கும், சில தனிப்பட்ட நபர்களுக்கும் விசேட பூசைகளும், வருடாந்த உற்சவத் திருவிழாக்களும் கொடுக்கப்பட்டு, இவர் கள் உதவியாலும் ஆலயம் சிறப்புற்று விளங்குகின்றது. தற்போதைய திருவிழா உபயகாரர்கள் பின்வருமாறு:- 1. பெரிய கவுத் தன்குடி மக்கள் ஆரம்பத் திருவிழாவையும், இறுதிநாள் தீர்த்தோற்சவத் திருவிழாவையும், தீர்த்த நாள் பூசையையும் செய்துவருகின்றனர். 2. திரு. சா. ஆறுமுகம் குடும்பத்தினர், குருக்கள் மடம். 3. திரு. மாணிக்கம் பரமானந்தராசா குடும்பத்தினர், களு
வாஞ்சிக்குடி. 4. களுவாஞ்சிக்குடி கிராமச் சார்பில் - களுவாஞ்சிக்குடி முகாமை
ஆலய பரிபாலன சபை 5. களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை வர்த்தக ஸ்தாபனம் - மேற் படி சந்தை வர்த்தக ஸ்தாபனத்தினர் முன்னின்று நடாத்தி வருகின்றனர். 8. திருவிழா இறுதிநாள். இரவு வயிரவர் வேள்விப் பூசையை மேற்படி சகல திருவிழா உபயகாரர்களும் ஒன்றுசேர்ந்து செய்கின்றனர்.
வேலைப்பழுவின் காரணமாக, திரு. க. கணபதிப்பிள்ளைக் குருக்கள் அவர்கள் தானுக விலகிக்கொண்டதால் அந்த இடத் திற்குத் தற்போது களுவாஞ்சிக்குடி பிரமயூரீ ஆ. சுப்பிரமணியக் குருக்களின் மகன் பிரமயூரீ ஜெகதீஸ்வரக் குருக்கள் அவர்கள் மேற்படி ஆலயப் பூசகராக இருந்து தொண்டாற்றிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
களுவாஞ்சிக்குடி பூரீ வீரபத்திர சுவாமி ஆலயம், இவ்வாறு சீரும் சிறப்புமாகச் சுடர்விட்டுப் பிரகாசிக்க எல்லாம்வல்ல எம் பெருமானின் பேரருள் கிடைப்பதாகுக.
- 141 -

Page 91

மகாவித்துவான், பண்டிதர்
வி. சீ. கந்தையா (B.O.L.)
வாழ்க்கைக் குறிப்பு
மட்டக்களப்புக்குத் தெற்கே வாவியின் மேற்குக் கரையில் மண்டூர் என்னும் பிரபலமிக்க முருகன்பதி அமைந்துள்ளது. இலக்கிய வித்தகர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, கவிஞர் மு. சோமசுந்தரம்பிள்ளை, இலக் கியச் செம்மல், சைவமாமணி, பண்டிதர் வி. விஸ்வலிங்கம் போன்ருேர் தோன்றிய இம்மண்ணில் மகாவித்துவான் வி. சி. கந்தையா அவர்கள் 29-07-1920ல் பிறந்தார். இவரது தந்தை யார் புலவர் வினசித்தம்பி என்பவர். தாயார் சின்னத்தை அம்மையார். இவர் தன் இளமைக் காலத்தில் திரு. வ. பத்தக் குட்டி உபாத்தியாயரிடமும், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை யிடமும், விபுலானந்தரின் குருவாகிய குஞ்சித்தம்பி உபாத்தி யாயர் அவர்களிடமும் கல்வி கற்ருர். பின்னர் விபுலானந்த அடிகளாரிடம் சங்க இலக்கியங்களையும், பழந்தமிழ் இலக்கணங் களையும் கற்ருர், பிற்காலத்தில் யாழ்ப்பாணத்து ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கப் பண்டிதர் பட்டமும் (1943), மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டமும் (1944), இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் வித்துவான் பட்டமும் (1952), அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தின் பி.ஓ.எல். (B.O.L.) பட்டமும் (1954) பெற்ருர்,
சுவாமி விபுலானந்தரால் ஆரம்பித்துவைக்கப்பட்டதும் கிழக்கின் 'சாந்தி நிகேதனம்" என்று கொள்ளத்தக்கதுமான சிவானந்த வித்தியாலயத்தில் 1940ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இக்காலத்தில் தேனீக்கள் மலரை மொய்ப்பதுபோல் தமிழ் கற்கும் மாணவர்கள் இவரை மொய்த் தனர். இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வரும் அழைப்புக் களையேற்றுப் பல மேடைகளிலும் தமிழ் இலக்கியச் சொற்பொழிவு களும் சமயச் சொற்பொழிவுகளும் ஆற்றினர். தமிழக ஏடுகளி
--سس۔ 143 س~~--

Page 92
லும் ஈழத்து ஏடுகளிலும் ஏராளமான இலக்கியக் கட்டுரைகளை யும் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதினர். 1946ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் திகதி செல்வி. கங்கேஸ்வரி நாக லிங்கம் அவர்களைத் தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார்.
1. கல்விப்பணி:-
ஆசிரியராகப் பணியாற்றிய இவர் சில வருடங்களின் பின் அதிபராகப் பதவியுயர்ச்சி பெற்று, களுதாவளை மகா வித்தியால யம், அக்கரைப்பற்று மகாவித்தியாலயம், பட்டிருப்பு மகா வித்தி யாலயம், சிவானந்த வித்தியாலயம் முதலிய கல்லூரிகளில் அதிப ராகப் பணிபுரிந்து இப்பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கும் தமிழ்மொழிச் சிறப்புக்கும் மாணவர் ஒழுக்க நெறிக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பணி புரிந்த வர். இவர் அதிபராகக் கடமையாற்றிய காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒரு குடும்பமாக இணைந்து தார்மீக நெறியின் அடிப்படையில் தமது கல்லூரியின் வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பைச் செய்தனர்.
2. தமிழ்ப்பணி:-
சுமார் இருபது நூல்கள் வரை வெளியிட்டுள்ள இவரது படைப்புக்களில் “மட்டக்களப்புத் தமிழகம்' என்னும் நூல் சிகரம்போன்றது. பலவருட ஆராய்ச்சியின் பின் எழுதப்பட் டுள்ள இந்நூல் சுமார் 500 பக்கங்களைக்கொண்டது. மட்டக் களப்பின் வரலாறு, தமிழறிஞர்கள், கிராமியச் செல்வங்கள், மருந்தும் மந்திரமும், கலைக்கோலங்கள் முதலிய பல்வேறு அம் சங்களை ஆராய்ந்து தெளிந்த கட்டுரைகளை இந்நூல் கொண் டுள்ளது. மட்டக்களப்பைப்பற்றிய உசாத்துணை நூலாகக் கொள்ளக்கூடிய இந்நூலிலிருந்தே இன்றும் பலர் மட்டக்களப் புப்பற்றிய தகவல்களைச் சரிபார்த்துக்கொள்கின்றனர். ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம் 1964இல் வெளியிட்ட இந்நூலுக்கு மட்டக்களப்புத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மிகப் பெரிய அளவிலான வெளியீட்டு விழா வொன்றினை மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடாத்தியது இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்புத் தமிழகத்தைப்போன்று மற்ருெரு மகத் தான நூல் ‘கண்ணகி வழக்குரை' என்பது. இந்நூலும் சுமார் 500 பக்கங்களைக்கொண்டது. பல ஏட்டுப் பிரதிகளை ஆராய்ந்து எழுதப்பட்ட இந்நூலைக் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கம் 1968இல் வெளியிட்டது. இவர் எழுதிய பிற நூல்கள் வருமாறு:-
- 144 -

ஆனைப்பந்தி விநாயகர் பதிகம், கட்டுரை இயல், கண் ணகி அம்மன் குளுத்திப் பாடல் முதலிய நான்கு நூல்கள். பாரதியின் பாஞ்சாலி சபதம், கம்பராமாயணம் மந்தரை சூழ்ச்சி, கையேயி குழ் வினைப்படல நூல்கள் - உரைவிளக்கம், ஆராய்ச் சிக் கட்டுரைகள், விபுலானந்த ஆராய்வு விளக்கம், மட்டக் களப்பு நாட்டுப் பாடல்கள், அலங்காரரூப நாடகம், இராம நாடகம், அருவுருத்திர நாடகம், தருமபுத்திர நாடகம், மட்டக் களப்பு சைவக் கோவில்கள்-1 , மண்டூர் முருகன்மீது கீர்த்தனைகள்.
3. சமயப் பணிகள்:-
மட்டக்களப்பின் கிழக்குப் பகுதியின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் இரு துறைகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று கிராமியக் கலையான கூத்து (நாட்டுக் கூத்து) இரண்டாவது கண்ணகி வழிபாடு. இந்த இரண்டு விடயங்களிலேயும் வித்து வான் கந்தையா அவர்கள் மிகவும் ஈடுபாடு கொண்டு ஊரூராகச் சென்று ஏடுகளையும், பிறசான்றுகளையும் ஆராய்ச்சி செய்துவந் தார். இந்தப் பயணங்களின்போது கண்ணகி விழா உற்சவங் களிலும், பிற சைவக் கோயில் விழாக்களிலும், சமயச் சொற் பொழிவுகளை நிகழ்த்தியதுடன் கோயில்களில் ஏடுபடிப்பது, புராணபடனம் செய்வது முதலியவற்றையும் மேற்கொண்டுவந் தார். இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி நிஷ்காமா நந்தா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘திருத்தொண்டர் கழகச் செயலாளராகப் பல்லாண்டு பணிபுரிந்தமையும் குறிப்பிடத் தக்கது. இவரது சைவப் பணிகளே மெச்சி "நாவலர்" என்றும் (காஞ்சிபுரம் தொண்டமண்டல ஆதீனம்), 'சிவம் பெருக்கும் சீலர்' என்றும் (யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம்) இவருக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர் இயற்றிய நூல்களுள் பெரும்பாலானவை சைவக் கோயில்கள்பற்றிய நூல்களாக இருப்பது கவனத்திற் கொள்ளத்தக்கது.
4. பிற இலக்கியப் பணிகள்:-
“கல்வி கரையில கற்பவர் நாள் சில” என்னும் உண்மை யைக் கருத்திற்கொண்டு இடைவிடாது கற்றுக்கொண்டிருந்த வர் இவர். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலும் தமிழைப் பொறுத்தவரை மாணவனுகவே அவர் இருந்தார். எந்நேரமும் எழுத்தும் படிப்புமாக இருக்கும் இவர், தாம் அறிந்தவற்றைப் பிறரும் அறியச்செய்யவேண்டுமென்பதற்காகப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினர். தனிநாயகம் அடிகளாரால் அறிமுகப் படுத்தப்பட்ட அகில உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இவருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. கோலாலம்பூரில் நடைபெற்ற முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் கட்டுரை வாசித்த இவர்,
- 145 -

Page 93
அதைத் தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டிலும் கட்டுரை வாசித்தார். பிரயாணத்தடங்கல் காரண மாகப் பிற நாடுகளில் கட்டுரை வாசிக்கமுடியவில்லை.
கொழும்பில் நடைபெற்ற அகில உலக இந்து சமய மாநாட்டிலும் கட்டுரை வாசித்தார். அன்றியும் இந்து சமய ஆலோசனைச் சபை உறுப்பினராகவும், இலங்கை கலைக் கழக உறுப்பினராகவும் அமர்ந்து பல வருடங்கள் இத்துறைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்தார். மேலும், கல்வித் திணைக் களத்தில் இயங்குகின்ற நூல் வெளியீட்டுத் திணைக்களத்தின் யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆலோசனைச் சபை உறுப்பினர்களுள் ஒருவராகவும் பணியாற்றினர். 1950ம் ஆண்டளவில் மட்டக் களப்பில் தமிழ் அறிஞர்களால் நிறுவப்பட்ட தமிழ்க் கலைமன்றம் என்னும் அமைப்பில் செயலாளராகப் பல வருடங்கள் சிறப்பான தமிழ்ப்பணி புரிந்ததையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
தமிழ்ப்புலமை:-
சிறந்த புலவராகவும் எழுத்தாளராகவும் மிளிரும் இவரு டைய தமிழ்நடை மகாகவி பாரதியின் ‘இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே’ என்ற சொற்ருெடர்களுக்கு இலக்கணமானது. இழும் எனும் ஒசை நயத்துடன், காவிரி நதி பாய்வதுபோல் கவிதைச் செழுமையுடன் இவரது உரைநடை அமைந்திருக்கும். கட்டுரை இயல் என்ற இவருடைய நூலில் அமைந்துள்ள கட்டுரைகள்
இதற்குச் சான்றுபகரும்.
இவரது கவிதைகளும் அவ்வாறே இனிய நடையில் அமைந் துள்ளன. மாதிரிக்குச் சில:
பூந்தாமரைப் பொலியும் பொற்கொடியே அன்னநடைத் துரண்டாமணி விளக்கே சொற்சுடரே-நீண்ட புகழ்த் தீந்தேன் பிலிற்று தமிழ்ச் செல்வக் களஞ்சியமே பூண்டேன் மலரடிப்பூண் போற்றி.
(இப்பாடல் மண்டூர் முருகன் கீர்த்தனை என்ற நூலில் கலைவாணி துதியாக வருகிறது)
கிள்ளை உரை செய் நீ கிளி மொழியாள் வள்ளி பங்கன் தெள்ளு தமிழ் முருகன் தேனர் கடம்பணியும் பிள்ளை கதிரை நகர் பேசும் அடியவர்க்கு உள்ளும் பகையுளதோ உறுதுயரம் உண்டாமோ
--- 146 سس--

அஞ்சுகமே செம்பவள அணிவாய் மணிக்கிள்ளாய் கெஞ்சுகின்றேன் உன்னைக் கிளர்வான் படர்ந்தேகி மஞ்சை வடிவேலான் மாணிக்கக் கங்கையிடைத் தங்கத் தமிழருக்குத் தடையுளவோ கண்டிடுக.
இப்பாடல்கள் “கிளியைத் தூது விடுத்தேன்” என்ற கீர்த் தனையில் இடம்பெறுகின்றன.
சுவாமி விபுலானந்தருடன் உள்ளத்தால் பிணைப்புண்ட இவர் அவர் மறைவின்போது இயற்றிய இரங்கற்பாக்கள் உள்ளத் தைத் தொடுவன:-
சரிகமவும் பதநீசவும் தனித்தனியே வடித்தெடுத்து புரிவுறநல் லிசையமுதாய்ப் புவிக்களித்தாய் புலவோர்கள் பரிவுற இங் கழுதரற்றிப் படுதுயரம் தனிலாழப் பிரிவுறவு செய்தனையே பெருமுனிவ வருவாயோ?
சத்தியமும் அன்பதுவும் சகத்திலுயிர்க் கிரங்குவதும் உத்தமமென் ருெரு நோக்கேயுனது மதமாய் இருந்தாய் நித்திரையாய் இன்றிருக்கும் நினைவெதுவோ நிருமலனே வித்தகனே விபுலாநந்த வீரமணி மீளாயோ!
தமிழறிஞர் சான்றுரைகள்:-
திருவண்ணுமலை ஆதீனத்து மகா சந்நிதானமாகிய குன்றக் குடி அடிகளார் மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூலுக்கெழு திய அணிந்துரை பின்வருமாறு கூறுகிறது:
"சிறந்த இந்நூலை எழுதிய நண்பர் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள் நமது பாராட்டுதலுக்குப் பெரிதும் உரிய வர். அவர் செந்தமிழ் அறிஞர், சிவநெறிச்செல்வர். அவருடைய வாழ்க்கைத் துணைவியாகிய திருவாட்டி கங்கேஸ்வரி அவர்கள் மனமாட்சிக்குரிய தமிழ் நல்லாள். சைவம் கமழும் செந்தமிழ்ப் பண்டிதை. இத்தகு மனையற வாழ்விலிருந்துதான் மட்டக்களப் புத் தமிழகம் மலர்தல் கூடும்."
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தை நிறுவி அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறுவதற்கு வழிகோலிய தனிநாயக அடிகள் தமது அணிந்துரையில் பின்வருமாறு கூறுகிருர்:
“இவ்வாருண நூல் முழுவதும் தெள்ளிய தமிழ் நடையில் இலக்கியச் சுவை நிரம்ப எழுதப்பட்டுள்ளது. இதனுசிரியரான
- 147 -

Page 94
பண்டிதர் கந்தையா அவர்கள் என் நண்பர். மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் நிறைந்தவர். ஆராய்ச்சியில் ஈடுபட்டு இன்புற்று வருகின்றவர். இவ்வெளியீட்டின் மூலம் தாம் பெற்ற இன்பத் தைத் தமிழுலகிற்கும் நல்கியதுபற்றி அ ன் ன ரை ப் பெரிதும் பாராட்டுகின்றேன்.”
மகாவித்துவான் கந்தையாவின் மற்ருெரு மகத்துவம்மிக்க நூலான கண்ணகி வழக்குரையில் பேராசிரியர் சு. வித்தியானந் தன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறர்:
“வித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள் மட்டக் களப்புக்குக் கிடைத்துள்ள அரும்பெருங் கலைச் செல்வம். அடக்க மான முறையிற் கலைத்தொண்டு செய்துவரும் இவரின் முயற்சி யாலே, நாம் இன்று மட்டக்களப்பின் வரலாற்றுப் பெருமையை யும், நாட்டுவளத்தினையும், கலைச் செல்வங்களையும், இலக்கியப் பரப்பினையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.”
அதே நூலில் இடம்பெறும் மதிப்புரையில் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிருர்:
"அடிகளாரின் அருள் பெற்ற மாணுக்கராகிய பண்டிதர் கந்தையா அவர்கள் சிலப்பதிகாரத்தின் வழக்குரையென்னும் வளர்தமிழ்ப்பனுவலை வழுஉக் களைந்து வனப்பூட்டி மக்களிலக்கிய மாக வாழும் வழிசெய்து ஈழ நன்னட்டிலும் தென் தமிழ்த் திரு நாட்டிலும் பிற நாடுகளிலும் தமிழின் பெயரால் வாழ்வார் தம் உள்ளத்துளெல்லாம் உளராயினர். குருவைப்போல் சீடன்'
இறுதி நாட்கள்:-
ஆசிரியப் பணியிலிருந்து இளைப்பாறியதும் மகாவித்துவான் கந்தையா அவர்கள் தனது வாழ்க் கைத் துணைவியாராகிய பண்டிகூது கங்கேஸ்வரியுடன் அமெரிக்கா சென்று அவரது புத்தி ரர்க கிய்^இவகுமாரன், மணிவண்ணன், அருள் மொழி குடும் பத்தி ன் சிலவருடங்களைக் கழித்தார். அதன்பின் இலங் 4දීර්‍ඝු, தம்பதிகள் தங்கள் மட்டக் களப்பு ఫ్లోక్ళీ மகின் இளங்கோவன் குடும்பத்தினருடன் f இகாண்டு நீண்பர்கள்ையும் உறவினர்களையும் சந்தித்து அளவளங்வுந்தனி
மகாவித்துவான் கந்தையா அவர்கள் கடந்த சில வருடங் களாக், சுகவீன்முற்று எழுதுமுடியாத நிலையிலிருந்தபோதும், னது துணைவியாரின் துணைகொணடு நண்பர்களுககான கடிதங் జేవి கூட்ட்ங்களுக்கான வாழ்த்துரைகளையும் அனுப்பில்ந்தார்
148 -س-

கடந்த 30.04.90இல் அரசாங்க அதிபரைத் தலைவராகக் கொண்டிருக்கும் மட்டக்களப்புக் கலாசாரப் பேரவை, அவருக்கு "மகாவித்துவான்’ என்ற பட்டத்தையும் அவரது துணைவியாருக்கு "இலக்கியமணி" என்ற பட்டத்தையும் வழங்கிக் கெளரவித்தது. இப்பட்டமளிப்பு விழாவில் உணர்ச்சிமயமாகிக் காட்சியளித்த வித்துவான் அவர்கள் மலர் மாலைகளின் மத்தியில் தமிழ் மலையா கக் காட்சியளித்தார்.
இந்தத் தமிழ்மலை மகாவித்துவான் பட்டம்பெற்றதோடு இவ்வுலகை நீத்து மேலுலகிலுள்ள தமிழறிஞர்களுடன் சேர வேண்டுமென்று இறைவன் சித்தம்போலும். ஈழத்திலுள்ள தமிழ் நெஞ்சங்கள் அனைத்தையும் தனது ஈடிணையற்ற தமிழ்ப் பணி யால் கவர்ந்த மகாவித்துவான் பண்டிதர் வி. சீ. கந்தையா அவர்கள், சுவாமி விபுலானந்தர் மறைவின்போது பாடிய இரங் கற் பாடல்கள் ஒவ்வொன்றும் நினைவுக்கு வருகின்றன. அவை ஒவ்வொன்றும் மகாவித்துவானுக்கும் பொருந்துமென்று உள்ளம் சொல்கிறது.
இராமகிருஷ்ண மிஷனுடன் நெருங்கிய தொடர்புகொண் டிருந்த மகாவித்துவான் கந்தையா அவர்கள் ஈழத்தில் இராம கிருஷ்ணமிஷன் நிறுவி தனக்கும் குருவாயமைந்து விண்ணகம் சென்ற விபுலானந்த அடிகளை நாடிச்சென்றுவிட்டார் போலும்!
இரா. நாகலிங்கம் (அன்புமணி) தலைமையக உதவி அரசாங்க அதிபர்.
கச்சேரி, மட்டக்களப்பு. 25-10-9,
۔ ۔ 49 1 ---۔

Page 95


Page 96
L LL SSSSSSSSSSSSSS SSgS SSS SSS SSS SSSLSL
இவ் வாசிரியர்
ཐ____ཟཟ_-__ཆཆཟནཚོ__g|
1. ஆனப்பந்தி விநாயகர் ப 2. கட்டுரை
3. கண்ணகி அம்மன் குளு
நூல்கள்.
4. பாரதியின் பாஞ்சாலி சபத
சிக் கட்டுரைகள்,
5. 35 upu TITLD fuu TLD மந்தரை படல நூல்கள், உரை விள
6. விபுலாநந்த ஆராய்வு வி
7. மட்டக்களப்புத் தமிழகம்
திய மண்டலப் பரிசு ெ
8. கண்ணகி வழக்குரை
(云LDTf 3000 L丁一ā手动 ஏட்டுப் பிரதிகளைப் பரிே 9. மட்டக்களப்பு நாட்டுப்
(இலங்கைக் கலைக் கழகத்தி பினராயிருந்தபோது யானந்தன் பெயரில்) இ 10. அலங்கார ரூப நாடகம் (மேற்படி கலாநிதி . 11. இராம நாடகம்/ .
(மட்/ பிரதேச 鑫@s
12 அநுவுருத்திர நாதேஸ்
(மேற்படி பிரதேச ୫ ଜିତି
སྡེ་
翠
13. மட்டக்களப்புச் சைவக் கே (பிரதேச அபிவிருத்தி, இ 14. மண்டூர் முருகன் மீது ே
ப்ான சுவாமி விபுலானந்த
15. இந் நூல்.
플
를
مقدونیہ،
*
・I眼mi瞳”に I間。 44JJ Hilig (IIWlllii iiHIIIILili II iiiJiiiiiii IJ சென், ஜோசப் கத்தோலிக்க
 
 

"川間"u間l'u間中間中*旧・川間中山川。 life
ரின் நூல்கள்
SSSSSS seasse
திகம்
த்திப்பாடல் முதலிய நான்கு
ம் - உரை, விளக்கம், ஆராய்ச்
சூழ்ச்சி, கைகேயி சூழ்வினப் ாக்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகள்,
5T3535D.
(1965ம் ஆண்டுக்கான சாகித் பற்றது.)
கொண்டது. 21 பல்வேறு சாதித்த பதிப்பு நூல்.)
ವೌ_ || - நின் தமிழ் நாடகக் குழு உறுப் ழத்திலுவர் கலாநிதி சு வித்தி 1ளியிடப்பட்ட து .يلا
’’ (උ. リ ー
를
§, ' ~ ந்ேதியானந்தன் - - 義... - ** TA) வெளியீடு)
,ே జీ, மூன்ற வெளியீடு) ாவில 17 , ந்து கவிரு அமைத்சி) த்தனிளுேம்