கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விவேகானந்தன் 1971.07-09

Page 1
4. VIVEKAN AN DAN — JULY-AUG கொழும் பு வி வே கான ந்
 

Sr-SEPT, MBER - 1971 த ச பை வெளியீடு

Page 2
பொரு 6
நம் சபையின் மாடிக் கட்டடL
உதவி புரியுங்கள்.
நவராத்திரி வழிபாடு .
இந்துக்கள் சமயநெறியும் சுக!
கொள்கைகளும்
விவேகானந்த சபையின் 三塾芝『ー
அரங்கேற்றம்
திருக்கேதீச்சர ஆலயத் திருப்ப
வேண்டுகோள் கோளறு பதிகம்
சிறுவர் பகுதி
சபையின் நிகழ்ச்சிக் குறிப்புக்க
பிற நிகழ்ச்சிக் குறிப்புக்கள் - - - - இச்சபையிற் சேர்ந்த ஆயுட்கா .. - சாதார இச்சபைக்கு நன்கொடை வழங்
பூரீலழறீ ஆறுமுகநாவலர் நினை
நாவன்மைப் போட்டிகள்
அங்கத்துவ விண்ணப்பப் பட்டி
 
 

ம் உயர்ந்தோங்க இயன்ற
ாதாரக்
பிற் பரத நாட்டிய
னிச் சபையின்
ல உறுப்பினர் பட்டியல் . 5
1ண உறுப்பினர் பட்டியல்
கியோர் பட்டியல் .
Η δε கட்டுரை -- -- -

Page 3
சபை நமதே சபையின் உயர்வு நம் உயர்வு! என்ற எண்ணம் நம் மனதில் உதித்தால் இச்சபையின் கட்டட நிதிக்குப் பண உதவி செய்ய தாம் சற்றேனுந் தயங்க மாட்டோம். நாம் செய்துவரும் முக்கிய பணி இலங்கை யில் எந்த மூலே முடுக்கில் உள்ளவர்களும் அறிந்ததொன்று. ஏனெனில், தம் சபை நடாத்துஞ் சமயபாடப் பரீட்சை இலங்கை யில் எல்லாப் பாகங்களிலும் நடைபெறு கின்றதாதலின் என்க. இவ்வாறு சமய வளர்ச்சிக்குப் பல்லாற்ருனும் உழைத்து வரும் விவேகானந்த சபை வசதியான கட் டடம் இல்லாது செவ்வனே தொழிற்படு தல் இயலாததொன்று.
இந்நிவேயில் வரையாது வழங்குந் தமிழ்ப்பெருமக்களாகிய உங்கள் தயவை நம் பிக் கட்டட வேலையைத் தொடங்கியுள் ளோம். இக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா 11-9-1970 அன்று நிகழ்ந் ததை நீங்கள் அறிவீர்கள். இஃது இரண்டு அடுக்குக்களைக் கொண்ட மாடிக் கட்டட மாக அமையும். இதன் மேல் தட்டு ஏறத் தாழ ஆயிரம் பேரைக் கொள்ளக்கூடிய ஒரு மண்டபமாகும்; கீழ்த்தட்டுச் சபையின் அலுவலகங்களுக்குப் பயன்படும். இதனைக் கட்டி முடிப்பதற்கு ஏறக்குறைய இரண் டரை இலட்சம் ரூபா செலவாகும். இத் தொகையில் இப்பொழுது கைவசம் இருப் பது ரூபா 175, 000/- மேலுந் தேவை யாக இருக்கின்ற ரூபா 75,000/- இச்சபை யின் ஆக்கத்துக்காகப் பாடுபடும் அன்பர் களிடமிருந்து கிடைக்கும் என்ற திட நம் பிக்கை எமக்கு உண்டு.
நீர்க்குமிழி போன்றது இவ்வுலக வாழ்க் கை. இப்புவியிற் பெயரும் புகழும் ஈட்டிய
அரசர்கள் பலர். அவர்களின் வரலாற்றை இப்பொழுது நாம் அறிய விரும்பினுல் வரலாற்று நூல்களே நுணுகி ஆராய்தல் வேண்டும். ஆயின், பல்லவ அரசர்கள் இருந்
இயன்ற உத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lib
DLIlb
EI'LL ii p uiii ந்தோங்க வி புரியுங்கள்
தார்கள். அவர்களின் வரலாற்றை நாம் அவ்வாறு அறிய வேண்டிய தேவை இல்லை. அவர்கள் சமயத்தை வளர்த்தார்கள். வான ளாவுங் கோவில்கள் கட்டினர்கள். தம் புகழின் அழியாச் சின்னங்களாக அக்கோ வில்களை விட்டுச் சென்றர்கள். அவர்களின் வரலாற்றை அக்கோவில்கள் என்றென்றும் எடுத்துக்கூறிக் கொண்டே நிற்கும். அவர் களை நாம் மறக்க முடியுமா?
அவர்கள் தாம் அரசர்கள்; அவ்வாறு கோவில்கள் எழுப்ப நமக்கு வழி பாது? என்று கூறிவிட்டு வாளா இருந்தால் நாம் நம் கடமையிலே தவறியவர்களாவோம். 'விரலுக்குத் தக்கது வீக்கம்' என்று கூறு வதை நாம் கேட்டிருப்போம். அவர்கள் பல கோவில்கள் கட்டினூர்கள் என்ருல், நாம் விவேகானந்த சபையின் இந்த ஒரு கட்ட டத்தையாவது எழுப்புவதற்கு நம்மால் இய ன்ற உதவியைச் செய்யத் தயங்கல் ஆகாது. இச்சபையின் உறுப்பினராகச் சேர விரும்பு வோர் இந்த 'விவேகானந்தனின் இறு திப் பக்கமாக அமையும் விண்ணப்பப் பத் திரத்தை நிரப்பி, உரிய சந்தாப் பனத் துடன் பொதுச் செயலாளருக்கு அனுப்பல் வேண்டும். உறுப்பினர்க்கு 'விவேகானந் தன்' இலவசமாக அனுப்பப்படும்.
விவேகானந்தர் நாடு நாடாகச் சென்று நம் சமயத்தை வளர்த்தார். அன்ஞரின் பெயரால் நிலவும் தம் சபையின் இக்கட் டடத்தை அமைக்க உதவி செய்து, இச்சபை யின் மூலமாவது நம் ஆமயத்தை நாம் 6f6fffi LjGLifriðstæ !
இக்கட்டடத்துக்காகப் பணமோ, பொரு ளோ அனுப்ப விரும்புவோர் தயவு செய்து செயலாளருடன் இ தொடர்பு கொள்ளுங்கள்.

Page 4
ஒம்
நவராத்திரி
ജ്ഞ
இன்று விஞ்ஞானம் மிகவும் வளர்ச்சி யடைந்துவிட்டது. சந்திரனில் மனிதன் காலடி வைத்துவிட்டான். இனிமேலும் இந்தச் சந்திரனை நாம் நவகிரகத்தில் ஒரு கடவுளென்று வணங்குவதா என்ற கேள்வி எழுகின்ற காலம் இது. இத்தகைய இந்த
விஞ்ஞான யுகத்தில் "நவராத்திரி என்பது
சத்தியை வழிபடுங் காலம்; நாம் சத்தியின் அருளேப் பெறுதற்கு இக்காலத்தில் அவளை வணங்கல் வேண்டும்" என்று கூறினல் அதனை என்னி நகையாடுவோர் கூட்டந்தான் அதிக மாக இருக்கும். இவர்களைக் கண்டு நாம் வியப்படைதற்கு ஒன்றுமில்லை. அதுவுஞ் சற்று விஞ்ஞானமுங் கற்றுவிட்டால் அவர் கள் நிலை பற்றிக் கூறவும் வேண்டுமா? இத் தகைய இகலாட்டத்துக்குக் காரணம் அறி LLUITGEOLOGlazu !
இந்நிலையில், நாம் விஞ்ஞானத்திற் கூறப்படுஞ் சத்தியைப் பற்றிச் சற்றுச் சிந் தித்துப் பார்ப்போம். இப்புவிமீது உள்ள பொருள்கள் எல்லாம் அதன் ஈர்ப்புச் சத் தியாற் கவரப்படுகின்றன. இந்த ஈர்ப்புச் சத்தியை எந்த விஞ்ஞானியும் இல்லாமற் செய்தல் இயலாது. ஆயினும் இந்த ஈர்ப் புச்சத்தி புவிக்குமட்டும் உரியதொன்றன்று. சூரியன் புவியைக் கவர்ந்துகொண்டிருக் கின்றது. இதனுலேதான் புவியுங் கவர்ச்சிச் சத்தியைப் பெறுகின்றது. ஆயின் இந்தச்
சூரியன் தன் சத்தியை எங்கிருந்து பெறு
கின்றது என்று இவ்வாறு ஆராய்ந்து கொண்டு போஞல், இவை எல்லாவற் றுக்கும் ஒரு முடிவு காண இயலாதிருக்கும். நாம் இதுவரை பற்றுக்கோடாகக் கொண்ட விஞ்ஞானமும் நட்டாற்றிற் கைவிட்ட நண்பனைப் போல் நம்மைத் தவிக்க வைத்து விடும். இந்தச் சந்தர்ப்பத்திலேதான் இறை வனின் சத்தி நமக்குக் கைகொடுத்து உதவு கின்றது. அவனுடைய சத்தி, அஃதாவது ஆற்றல், நம்முடைய நுண்ணறிவுக்கு மட்டுமன்றிக் கூரிய விஞ்ஞான அறிவுக்கும் அப்பாற்பட்டது. விஞ்ஞான ஆராய்ச்சியின் எல்லைக்கு அப்பாலே தான் தத்துவ
 

ஆராய்ச்சி, அஃதாவது கடவுள் ஆராய்ச்சி தொடங்குகின்றது.
நவராத்திரிக் காலத்தில் நாம் வணங் குஞ் சத்திகள் மூன்று. அவை பெண்பா லாக உருவகஞ் செய்யப்பட்டுக் கலைமகள், திருமகள், மலைமகள் எனக் கூறப்படும்
உலகத்தை படைப்பவன் பிரமா அவ னுக்குரிய சத்தியே கலைமகள். பிறக்கும் நாளிலே தொடங்கி நாம் ஒரு சத்தியின் வழிப்பட்டுத் தான் உலகியல் வாழ்க்கையை அனுபவிக்கின்ருேம், ஆயின், அந்தச் சத்தி நம்முடன் அணுகிப் பழகுவதனுல் நாம் அதனைச் சத்தியின் உருவம் என உணர்வ தில்லை. அச்சத்திதான் நம்மை இந்த உலகில் ஈன்றெடுத்த தாய், முதலாவதாக நாம் உலகிற் காண்கின்ற கடவுளுங் குருவுந் தாயே. அதனுலன்ருே “அன்னையும் பிதா வும் முன்னறி தெய்வம்' எனக்கூறி, அதனி லும் அன்னையை முதற்கண் வைத்தனர் ஆன்ருேர். இவ்வாறு பிறந்த பிள்ளை முத லாவதாக அப்பா என்று அழைத்ததை நாம் எங்கும் கண்டிலோம். சும்மா அழுவது போலத் தொடங்கிப் பின்னர் அம்மா என்று சொல்லப் பழகிவிடுகின்றது அப் பச்சிளங் குழந்தை. இவ்வாறு கூறத் தொ டங்கிய 'அம்மா' என்ற சொல் நாம் வளர்ந்த பின்பு நம் நாவில் அதிகம் பயில் வதில்லை. ஆயின், அதனை நாம் முற்ருக மறப்பதுமில்லை. நமக்கு யாதாயினும் இடர் நேரும் பொழுது அன்றேல் உடலில் யாதா யினும் நோய் உண்டாகும் பொழுது 'அம் மா' என்கின்ருேம். நாம் இவ்வாறு நம்மை அறியாமலே அழைப்பது சத்தியின் ஆற்றலை நம் மனதுக்கு இடித்துரைப்பதற்கு இறை வன் செய்த ஒரு சூழ்ச்சிபோலும், இவ்வா ருகப் பிறந்த நாளிலிருந்து கலைமகள் தாயின் உருவில் இருந்து, தன் அருட் பார்வை யாலும் அன்புமொழிகளாலும் பிள்ளைக்கு அறிவூட்டத் தொடங்கிவிடுகின்ருள்.
2 -

Page 5
வேண்டுதல் வேண்டாமை இல்லாது, ஒடும் பொன்னும் ஒப்ப மதித்து வந்த பிள்ளை சற்று வளரச் செல்வம் என்ருெரு பொருள் இவ்வுலகில் உண்டு; அது இல்லாத விடத்து இன்பமாக வாழமுடியாது என் பதனைச் சிறிது சிறிதாக உணரத் தலைப் படுகின்றது. உயிரை ஒம்புதற்குத் தானுஞ் செல்வம் இன்றியமையாததாக இருக்கின் றது. இதஞலேதான் காத்தற் கடவுளின் சத்தியாகத் திருமகள் விளங்குகின்ருள். இந்நிலையிலே, நாம் கூறுகின்ற இரண்டா வது சத்தியாகிய இத்திருமகளின் செயல் தெரியவருகின்றது.
மேலே கூறிய இரண்டு சத்திகளினதும் அருள் நோக்கைப் பெற்று, உலகியல் இன் பங்களை நேரான வழியிலே துய்த்துத் தன் ளாடும் பருவத்தை அடையும் பொழுது * அன்னை பராசத்தியே அருள் புரிவாய்' என்று வேண்டுவது இயல்பு. இதன் கருத்து யாதெனின், உலக வாழ்க்கையை நீத்தற்கு உரிய காலம் வந்துவிட்டது; அப்பொழுது பராசத்தியின் அருள் இல்லாது, அச்சத் திக்கு உரியவஞன பரம்பொருளை அடைந்து வீடுபேற்று இன்பந் துய்த்தல் இயலாது என் பதாம். இதஞலேதான் முழுமுதற் கடவு ளாகிய அரனின் சத்தியாகப் பராசத்தி விளங்குகின்ருள்.
நாம் இப்பிறவி எடுத்ததன் பயன் இந்தச் சத்திகளே வழிபட்டு, வீடுபேற்றை அடைதலாம். ஒவ்வொரு நாளும் இச்சத் திகளை வழிபடவேண்டிய நாம், அது இய லாதபோது, ஆண்டிற் சில குறிப்பிட்ட நாட்களிலாவது வணங்க வேண்டுமென்பதற் காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை இந்த நவராத்திரி நாட்கள். நவ +ராத்திரி என்பது ஒன்பது இரவுகள் எனப் பொருள்படும்.
இந்த ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்களிலும் ஆதி பராசத்தி அன்னையை வணங்குகின்ருேம். இதன் நோக்கம் அழித் தற் கடவுளாகிய அரணின் சத்தியைக் கொண்டு நம் மனதிலுள்ள தீய சிந்தனை களை அழித்துத் தொலைத்தலாகும், மனத் தைக் குரங்குக்கு உதாரணமாகக் கூறுவார் கள். இதற்குக் காரணம், ஒன்றினை நிலைத்து நின்று ஆராயும் இயல்பு பொதுவாக மனத் துக்கில்லை. அவ்வாறு நிற்காத மனம் சும்மா இருக்கின்றதோ என்ருல் அதுவுமில்லை. கண்ணில் பட்ட எல்லாப் பொருள்களையும் பற்றி ஒவ்வொரு கணம் ஆராயும்; அவை நல்லவையோ, தீயவையோ என்று கூடச்
 

சிந்தித்துப் பார்ப்பதில்லை. அஃதாவது குரங்கு ஒரு மரத்திலிருந்து வேருெரு மரத் துக்கு எப்பொழுதும் தாவிக்கொண்டிருப் பது போல, நமது மனமும் ஒரு விடயத் தி லி ருந்து மறு விடயத்துக் குத் தா விக் கொண்டே இருக்கும். இத னற் பல தீய சிந்தனைகள், தீய ஆசைகள் எல்லாம் மனதில் எழும். இவற்றைச் சுட்டெரிப்பதற்கே பராசத்தியின் துணையை நாடுகின்ருேம். ஒரு பொருளைப் பற்றி ஊன்றிச் சிந்தித்துக்கொண்டு இருப்பவர்கள் அப்பொருளின் உண்மை இயல்புகளை எப் பொழுதாயினும் உணர்தல் ஒருதலை, அப் பொருள் விஞ்ஞானப் பொருளாயின் அவர் கள் விஞ்ஞான அறிவைப் பெறுவார்கள். இறைப் பொருளாயின் இறைவனின் உண் மைகளை அறிவார்கள். அது கைகூடTத வர்கள் குரங்குபோலப் பாய விட்டாது மன தைச் சும்மா இருக்கச் செய்யவாவது பழக்கல் வேண்டும். அவ்வாறு சும்மா இருக் கும் மனம் தூய்மையும் உடையதாயின் அங்கே இறையருள் பதியத் தொடங்கும். அஃது ஆற்ருதவர்களே மனம் போனவா றெல்லாம் அதனை அலைய விட்டுப் பின்னர் தீயவற்றை அழிக்கப் பராசத்தியின் உதவி யை நாட வேண்டிய நிலை உண்டாகின்றது.
உலகியற் செல்வமும் அதனுல் வரும் இன்பமும் அழியும் இயல்புடையன. அவை சிற்றின்பம் எனப்படும். அவற்றையும் திரு மகள் தருவாளென்ருலும் பராசத்தியி ஞலே தூய்மையாக்கப்பட்ட மனதிலே பதியச் செய்வது தெய்வ சப்பத்து எனப் படுகின்ற, திருவருட் பண்புகளே அறிகின்ற பேரின்பச் செல்வமாகும். எனவே, அடுத்து வருகின்ற மூன்று நாட்களிலும் இச்சத்தியை நாம் வழிபடுகின்ருேம்.
இந்நிலை வாய்க்கப்பெற்ற பின், கலை மகள் உண்மை ஞானத்தை விளங்கச்செய்து வீடு பேற்றுக்கு வழிவகுக் கி ன் ரு ள். இறுதி மூன்று நாட்களிலும் நாம் செய்யும் வணக்கம் இதுவேயாம்.
இவ்வாறு ஒன்பது நாட்கள் கழிந்த பின் பத்தாவது நாள் விசய தசமி எனப் படும். இஃது அறியழமை இருளே நீக்கி உண்மை ஞானம் வெற்றி பெற்ற நாளைக் குறிக்கின்றது. எனவே, இந்த நவராத்திரி நாட்களில் நாம் உரிய முறையிற் சத்தி வழிபாடு செய்து வீடுபேற்றைப் அடை Gangnirtinomri!
—seg, sêifulti

Page 6
இந்துக்கள் சமயநெறியும்.
- Աp. 9. Ածj
பண்டைக்கால இந்துக்கள் வகுத்த அன் முட வாழ்க்கை முறைகளிலே இக்காலத்த வரும் கண்டு பின்பற்றக்கூடிய சிறந்த சுகாதார முறைகள் பல உள்ளன என் பதை, நாம் நம் பழைய நூல்களிலிருந்து அறிதல் கூடும். இந்துக்களின் சமயமும் சுகாதாரமும் ஒன்ருேடொன்று இன்றுவரை இணைந்தேயிருக்கின்றன. இதனுல் சமய மெல்வளவு? சுகாதார முறைகள் எவ்வளவு? என்று பிரித்துக் காட்டுவது எளிதான தொன்றன்று கருவுயிர்த்த நான்முதல் உயிர் உடலைவிட்டு நீங்கும்வரை மனித வாழ்விலேற்படும் சுக துக்கங்களிலெல்லாம் சுகாதாரம் மிகவுங் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
காலையிலே துயிலுணர்ந்த நேரமுதலாகச் சதுனத்துக்குப் போகும் நேரமிருகவுள்ள பன்னிரண்டு மணிகளிலும் நாம் சுகத்துக் காகிய காரியங்களே எவ்வாறு இன்றுவரை செய்து வருகிருேமென்று ஒருசிறிது நேரம் கவனிப்போமானுல் பண்டைய இந்துக்களின் சுத்தமும், சுகாதார முறைகளினமைப்பும் எமக்கு விளங்காமற் போகா, மாணவதர்ம சாத்திரத்திலே மனு - என்பவர் "காலை யில் துயிலுணர்ந்து முதலாவதாக மலசல விமோசனம் செய்யவேண்டும். அதன்பின் முறையே பற்சுத்தி செய்தல், ஸ்நானஞ் செய்தல், அலங்காரம் பண்ணல், தெய்வ வழிபாடு செய்தல் ஆகிய காலேக்கடன்களைச் செய்யவேண்டும்' என்று விதித்துள்ளார். சூரியன் உதிப்பதற்கு ஐந்து நாளிகைக்கு முன் துயிலெழுந்து, தேவ தோத்திரம் செய்யவேண்டுமென்று ஆசாரக்கோவை சொல்கிறது. சாம்பர்மீதும் ஆப்பீமிதும், பூங் காவிலும், திருக்கோவில்களுக்கு அண்மையி லும், மனிதர் நடமாடுமிடத்திலும், புல் நிலத்திலும், கல்லின்மீதும் நீர்க்கரையிலும் மலசலவிமோசனம் பண்ணலாகாது என்று பழைய நம் நூல்கள் சொல்லிப்போந்தன. இவ்விடங்களை அசுத்தப்படுத்துவதனுலே மனிதருக்குத் துர்க்கந்தம், அருவருப்பு ஆதி யன விளைவதுமன்றி இவை காற்றிலும்,
 

சுகாதாரக் கொள்கைகளும்
தயாளன் -
நீரிலும் விஷக்கிருமிகளை நிரப்பி மனித சமுதாயத்துக்குத் தீராத வருத்தங்களையும், துன்பங்களையும் ஏற்படுத்தக்கூடும். இதனு லேயே நம் மூதாதையர் மேற்கண்ட இடங் களைச் சுத்தமாக வைத்திருக்கும்படி சொன் ஞர்கள். தலையையும் காதுகளேயும் மறைத் துக்கொண்டு மூக்குநுனியைப் பார்த்த படியே, நிமிர்ந்திருந்து மலசலவிமோசனம் செய்யவேண்டுமென்று கூறியுள்ளார்கள். இவ்வாறு செய்வதால், காற்றிற் கலந்துள்ள நுண் கிருமிகள் தலையிலமைந்த கண், காது, மூக்கு ஆகியவற்றின் வழியே உடலுட் புக மாட்டா துர்க்கந்தமும் மூக்கின் வழியாகச் சென்று உணர்விற் பதியாதொழிகின்றது.மல சலவிமோசனத்தின் பின்பே தந்தசுத்தி செய்யவேண்டுமென்பது ஆன்ருேர் வகுத்த முறையாகும். பற்பொடி, பல்மெழுகு, பற் குச்சி ஆதியன கொண்டு பற்களைப் பன் முறை துலக்கிச் சுத்தஞ்செய்ய வேண்டும். அப்படிச் செய்வதற்கு உப்பு, பாக்குக்கரி, மிளகு, வேற்கொம்பு, வால்மிளகு, ஆலம் விழுது என்பவையும் அரசு, சம்பகம், மல் லிகை, நாயுருவி, வேம்பு என்பவற்றின் கிளேகளும் உதவுமென்றும். கந்தானை, குன்றி மணி. தாளை, தென்னம்பாளை ஆதியன பற் களேக் கெடச்செய்யுமென்றும் ஆன்ருேர்கள் கூறுகின்ருர்கள்.
'வேலுக்குப் பல்இறுகும் வேம்புக்குப் பல்துலங்கும் பூலுக்குப் போகம் பொலியுங்காண் - நாலுக்குத் தண்டாமரையாளும் சார் வாளே நாயுருவி கண்டால் வசீகரமாம் காண்'
ஒருநாளில் ஒருவர் ஒரு முறையாவது தம் உடல், உடை ஆகியவற்றைக் கழுவிச் சுத்தஞ்செய்தல் வேண்டும். உணவு உண்ட உடனே ஸ்நானம் செய்தல் ஆகாது. குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்வதால் இரத் தம் சம்பந்தமான வியாதிகள் குறைகின் றன என்பதை நம் முன்னேர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். மேலும் கண்டம் வரை நீரினுற் குளிப்பதாற் சு வ ச ச ப்  ைப தொண்டை, வயிறு, குடர் ஆதியனவற்றில் ஏற்படுங் கொடிய நோய்கள் தீரலாமென்
سے 4

Page 7
ம் அவர்கள் தெரிந்திருந்தார்கள். அதி சூடான நீர் கண்களின் ஒளியை மங்க வக்குமென்பதும், வெந்நீரைக் குளிர் நீரிற் லப்பதன்றிக் குளிர்நீரை வெந்நீரிற் கலக் ਤੇ என்பதும் ஆன்ருேர் கூறி யவை. வாரமொருமுறை எண்ணெய் தேய்த்து நீரில் முழுகுவதால் இளைப்பு, சூடு, பெலவீனம் என்பவற்றை நாம் குறைப்பது
தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் நலன்களை ஒப்புக்கொள்கின்றனர். தாவர எண்ணை உட லிற் செறிந்திருக்கும்பொழுது, சூரியப் பிர காசத்தால் ஏ, டி ஆகிய இரண்டு உயிர்ச் சத் துக்கள் உண்டாகின்றன என்று கண்டுள் ளார்கள் உயிரியல் நிபுணர்கள்.
தோய்த்து உலர்ந்த வஸ்திரத்தையே ஸ்நானம் செய்தபின் அணிதல் வேண்டு மென்பது ஆன்ருேர் மரபாகும். பிறர் பயன் படுத்திய எப்பொருளையும் சுத்தம்செய்யாது ஏற்றுக்கொள்ளுதலும், உபயோகித்தலும் நம்மிடையே இல்லாத பழக்கமாகும். அவற்றை நாமுபயோகிப்பதால் பிறரு டைய நோய்கள் நம்மைப் பற்றல் கூடும் என்பதே அதன் அடிப்படைக் கருத்து,
ஸ்நானத்தின் பின் சந்தியாவந்தனமும், அதற்கு ஆரம்பமாகப் பிராணுயாமமும் செய்யத்தக்கன. பிராணுயாமத்தினுலே மூச்சு வாங்கும் அப்பியாசங்கள் முறையாக நிகழுகின்றன. நிலத்தில் வீழ்ந்து வணங்கு வதனுலும், அங்கப் பிரதட்சினம் (பிர தட்டை) செய்வதனுலும் தசைநார்களும், நரம்புகளும் உறுதியாகின்றன-அப்பியாசப் படுகின்றன. அதனுல் தேக சுகத்தோடு மஞே சுகமும் உண்டாகின்றது. சுகத்துக்குரிய அப் பியாசங்களை எவன் செய்துவருகிருனே அவனை நோய் நொடிகள் அணுகமாட்டா என்று நம் ஆன்ருேர்கள் போதித்துள்ளார்
●金鲈。
உலக வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவன் நல்ல உணவை நாளுக்கு இருதரம் உண் ணல் தகும். இதை மறந்து, கண்ட வேளை யிலெல்லாம் முறைதவறி உண் ண ல் கேடு விளைவிக்கும்.
- 5
 
 
 
 
 
 
 
 
 

* ஒருபோது யோகியே, ஒண்டொளிர்கை மாதே
இருபோது போகியே யென்க- திரிபோது ரோகியே நான்குபோ துண்பா னுடலைவிட்டுப் போகியே என்று புகல் ".
யோகி எனப்படுபவன் ஒருபோதும், போகி இருபோதும் உண்ண வேண்டுமாம். முப் போது உண்பவன் ரோகி என்றும், நாலு முறையுண்பவன் உடல் விட்டுப்போக எண் ணும் முழுமுட்டாள் என்றும் ஆன்ருேர் கள் கூறியுள்ளார்கள். இன்னும் உணவு உண்ணலிற் கையாளவேண்டிய முறைகளை - சமய, சுகாதார வழிகளை - நாவலர் பெரு மான் செய்த 'சைவ வினுவிடை'யிற் காணலாம். உண்ணும் போதெல்லாம் நீர் அருந்துதல் சமிபாட்டுக்கு இடையூருக இருக்கும்; ஆதலால் உண்ணும்போது அதிக மாக நீர் அருந்துதலை நாம் தவிர்த்தல் வேண்டும். உணவு உண்டபின் மூன்று நாளி கைக்குப் பின்னும், உண்ணுமுன் மூன்று நாளிகைக்கு முன்னும் நீரை உட்கொள்ள ଶ୍ରେଷ୍}|ffl|d.
மேலும், இரவு உணவின் பின் 100 யார் தூரம் நடப்பதும், பகலுணவின் பின் சற்று இளைப்பாறுதலும் பண்டைய இந்திய ரின் பழக்கங்களாகும், மாலைக்கால உலா மகிழ்வு தரும். ஆதலால் அது எவராலும் செய்யத்தக்கதொன்று உணவின் பின் வெற் றிலை உண்டல் ஒரு வழக்கமாக நம்மிடை யே நிலவுகின்றது. இவ்வாறு செய்வதால் வாய்நாற்றம், தொண்டைக் கரகரப்பு என்பவற்றை நீக்கிக் கொள்ளல் முடியும்.
இன்னும் பண்டைய இந்துக்களின் சுகாதார விதிகளாக மரண வேனேகளில் மக்கள் ஒழுகும்முறை, மயிர் களையுங்கால் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், உணவு உட்கொள்ளும்போது கைக்கொள்ள வேண்டிய ஒழுங்கு ஆகியனவும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ் வாரு க நம் மூ த ஈ  ைத ய ர் வையத்துள் வாழ்வாங்கு வாழ, வகுத்தும் தொகுத்தும் காட்டியுள்ள சமய சுகாதார நெறிகளை யெல்லாம் உணர்ந்து, இந்து மதத்திற்கும் சுகாதாரத்திற்குமுள்ள நெருங்கிய தொடர் பையறிந்து நல்வாழ்வு வர்ழ்ந்து இன்புற் றிருக்க முயலுவோமாக !
* உண்பது ஒருபொழுதுஒழிய முப்போதும் உண்ணுேம் உறங்குவது இராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம் பெருந்தாகம் எழுந்திடினும் பெயர்த்து நீர் அருந்தோம் மண்பரவு கிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம் வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம் நண்புபெற உண்டபின்பு குறுநடையும் கொள்வோம் நமஞர்க்கு இங்கு எது கவை நாமிருக்குமிடத்தே? "

Page 8
Hill, Yhl#IllHHH4, A.
\\\\\\ A.
Ν NNNNN N N
N
 
 
 
 
 
 
 
 
 
 


Page 9
விவேகானந்த சலி
உரித நீாட்டிய
கொழும்பு விவேகானந்த சபை யின் நடனமன்றத்தில், பிரதம குரு நடன ஞானவாணி திருமதி கமலா ஜோன் பிள்ளை அவர்களிடம் நடனம் பயின்ற செல்வி சியாமளா சந்திரசேகரம் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் விவேகானந்தசபை யின் சார்பில், நவரங்கஹலா மண்டபத்தில் 4-9-1971 அன்று சனிக்கிழமை மாலை 8.00 மணியளவில் ஆரம்பமாகியது. இதற் குப் பிரதம விருந்தினராக வைத்தியகலா நிதி த. குமாரசாமி அவர்களும் பாரியாரும் வருகை தந்திருந்தனர். இவ்வரங்கேற்றத் தைக் கண்டுகளிப்பதற்கு ஏறத்தாழ 800 பேரளவில் வந்திருந்தனர்.
இந்த அரங்கேற்றத்தில் முதலிலே குறிப் பிடவேண்டிய விடயம் ஒன்றுண்டு. ஒரு நிகழ்ச்சிக்குக் குறிப்பிட்ட நேரம் ஒன்ருக இருக்க, அந்நிகழ்ச்சி தொடங்கும் நேரம் வேருென்ருக இருத்தல் இக்காலத்தில் பொதுவழக்காகிவிட்டது. இந்த வழக்கத் துக்கு மாருகக் குறிப்பிட்ட நேரத்திற் சரியாக இந்த நிகழ்ச்சி தொடங்கியதற் காக இதனை முதலில் எடுத்துப் பாராட்ட வேண்டிய கடமை எமக்கு உண்டு. திரண் டிருந்த மக்களின் பொறுமையைச் சோதிக் காது சரிவாக பி.ப. 6 மணி 05நிமிடத்துக்கு முதல் திரை இழுக்கப்பட்டது. அப்பொழுது பிள்ளையார் வணக்கஞ் செய்து, நடராசர் விக்கிரகத்துக்குக் கர்ப்பூரங் கொளுத்திக் குரு வணக்கத்துடன் நடனம் ஆரம்பமா கியது,
நடனத்தில் முறையே அலாரிப்பு, ஜதி சுரம், சப்தம், வர்ணம், பதம், தில்லான, சிலோகம் ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற் றன. இவற்றைச் செல்வி சியாமளா மிகவும் திறமையாக ஆடிக்காட்டி அவையோரின் பாராட்டைப் பெற்ருர், இவற்றுள் வேலனை அழைத்து வாடி" என்ற வர்ணமும் ஆறு படைவீடு, என்ற பதமும் சிறப்பாகக் குறிப் பிட வேண்டியவை. பரதநாட்டிய நிகழ்ச்சி யில் இந்த வர்ணம் நடுநாயகமாகத் திகழ் வதோடு, மிகவும் விரிவானதுஞ் சிக்கலான
 

பையின் ஆதரவிற்
அரங்கேற்றம்
துமாக இருக்கின்றது. நடனத்திலும் அபி நயத்திலும் ஆடுபவர் தம் திறமை அனைத் தையுங் காட்ட வேண்டிய கட்டம் இது இதிலே தாளத்துக்கு ஆடலும் அபிநயமும் மாறிமாறி நிகழ்ந்து, இறுதியில் இராகம், பாவனை, தாளம் ஆகிய மூன்றும் முற்ருக ஒருங்கிணைகின்றன. இதில் ஆடுபவர் முரு கனத் தம் "தெய்விகக் காதலஞகக், கொண்டு, அவனை அழைத்து வரும்படி தோழியை இரப்பர். இந்த நடனத்தைச் செல்வி சியாமளா ஆடியபோது முருகன் கேரில் வந்துவிடுவான் போலத்தான் இருந் தது. அவ்வளவுக்குத் திறமையாக 22 நிமிட நேரத்துக்கு முறை தளம்பாது அவர் இதனை ஆடி முடித்துச் சபையோரின் பெரும் பா ராட்டைப் பெற்ருர் ஆறுபடைவீடு என்ற வர்ணத்தில் அபிநயத்துக்கு அதிகம் இட முண்டு. இதன் பொருள் முருகனையும் அவனுடைய ஆறு படை வீடுகளையும் அடிப் படையாகக் கொண்டது. ஆறு படை வீடு களின் வரலாற்றையும் இது கூறுகின்றது. இந்த நடனமும் மிகவும் திறமையாக 15 நிமிடநேரம் நிகழ்ந்தது.
இந்த அரங்கேற்றத்திற் பிரதம விருந் தினராகக் கலந்துகொண்ட வைத்திய கலா நிதி த. குமாரசாமி அவர்கள் சபையிற் பேசியதன் சுருக்கம் வருமாறு:
கலா ரசிகப் பெருமக்களே!
இந்த அரங்கேற்றத்தில் இதனைப்பற்றிச் சில வார்த்தைகள் பேசுமாறு விடுத்த அன்புக் கட்டளையை மறுக்கமுடியாது ஏற் றுக் கொள்ள வேண்டியவஞனேன். பின்பு என்ன பேசுவது, எவ்வாறு பேசுவது என்று திகைக்கலானேன். நீங்கள் இத்தகைய பல அரங்கேற்றங்களைப் பார்த்திருப்பீர்கள். பொதுவாக இத்தகைய அசந்தர்ப்பத்தில் பேசுபவர்கள் பரதநாட்டியத்தின் தோற்றம், வளர்ச்சி, சிறப்பு என்பவை பற்றிப் பேசிப் பேசி உங்களைச் சலிப்படையச் செய்திருப் பார்கள். நீங்களும் இதில் அக்கறை இன்றி வந்திருக்கமாட்டீர்கள். இதுபற்றி யாதா யினும் நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

Page 10
இந்த நிலையில் நான் ஒரு விடயத்தைக்
D விரும்புகின்றேன். 'நோயற்ற வாழ்
வே குறைவற்ற செல்வம்' என்று கூறப் படுவதுண்டு. நோய்வாய்ப் பட்டால் அது நாம பாக்கியம் இல்லாதவர்கள் என்பதைத் தான குறிக்கும். அதனிலும் மனநோய் என்ருல் மிகவுந் தீயது. சங்கீதங் கவலையை ஒழிப்பது நாட்டியக் கலையோவென்றல் நோயையே தீர்க்க வல்லது. உலகமே ஒரு நாடகமேடை என்றும், அதில் உள்ளவர்கள் அனைவருமே நடிகர்கள் என்றுங் கூறுவது வழக்கம். இதிற் கபட நாடகத்துக்கும் இடமுண்டு. ஆயினும் அது பெரும்பான் மையாக இல்லை. சகல சீவராசிகளுக்கும் அசைவு தெரியும். அந்த அசைவு தொட்ங் கிய காலத்திலேயே நாட்டியமுந் தொடங்கி விட்டது. இசை, உணர்ச்சி, தாளம் ஆகி யூனவெல்லாம் ஒருங்கிணைந்தது இக்கலை. இத ணேச் சிறப்பாகக் கற்று இன்று அரங்கேற்றம் நிகழ்ந்த செல்வி சியாமளா சந்திரசேகரத் இது மிகவும் பாராட்டுகின்றேன். தன் மான வியான சியாமளாவின் நடனத்தைப் பார்த்து உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவி யுங்கள் என்று குருவினுல் ஒழுங்கு செய் யப்பட்டது தான் இந்த அரங்கேற்றம். இது குருவுக்குத் தான் ஒரு சோதனையாக அமை கின்றது. மாணவி சிறந்த முறையில் ஆடச் செய்வது குருவின் பெரும் பொறுப்பு. மாணவியின் தரங் குன்றினுற் குருவின் புகழே குன்றும். குரு தம் மாணவியை நன்ருகப் பயிற்றியிருந்ததஞல், மாணவியும் குருவின் பெருமை குன்ருது பெருகும் ஒகையில் மிகவும் அழகாக ஆடினர். இதனைக் கண்டு களித்த நீங்களே இதற்கு நல்ல தீர்ப்பு அளிக்க வல்லவர்களாவீர்கள். இத்துறையிற் செல்வி சியாமளா மேலும் ஊக்கமும் ஆக்கமும் பெறத் தில்லை நடராசப் பெருமான் அருள் புரியவேண்டும்? என்று கூறி அவர் தம் பேச்சை முடித்தார்.
பின்னர் விவேகானந்த சபையின் உப தலைவர்களுள் ஒருவரான ஆ. செ. நடராசா அவர்கள் பின்வருமாறு பேசிஞர்கள்.
செல்வி சியாமளா சந்திரசேகரத்துக்கு நம் பள்ளியின் சார்பில் இச்சான்றிதழை வழங்குவதற்கு முன்பு நான் ஒரு சில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன். செல்வி சியாமளா பரதநாட்டியத்தில் மட்டுமன்றி வேறு பல துறைகளிலும் தனிப்பெருநிலை பெற்றுள்ளார். இவர் தம் தாய் தந்தை யருக்கு ஒரு தனிப் பிள்ளை. இவர் வாய்ப்
8 =ے
 
 

பாட்டு, வயலின் ஆகிய துறைகளிலும் ஆற்றலுடையவர். கொழும்பு விவேகானந்த சபையினரால் நடாத்தப்பட்டு வரும் சமய பாடப் பரீட்சைகளில் 1965 ஆம் ஆண்டு தொடக்கம் தவருது ஒவ்வோராண்டும் சிறப்புப் பரிசில்களைப் பெற்று வந்தார். 1970ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட பரீட் சையில் மேற்பிரிவில் முதலாம் பரிசாகத் தங்கப் பதக்கத்தையும் பெற்று, ஒரு பெருஞ் சாதனையை ஈட்டியுள்ளார். இவர் . S. C பரீட்சையிலும் இலங்கை முழுவதிலும் முதலிடம் பெற்றுள்ளார். இவருடைய ஆடற்றிறனையும் ஆசிரியையின் பயற்றற் றிறனையும் இதுவரை நேரமும் நீங்கள் கண்டு களித்தீர்கள் என்று கூறி, சபையின் சார்பில் செல்வி சியாமளாவுக்குச் சான்றி தழை வழங்கினர். பின்னர் சந்திரசேகரந் தம்பதிகளும் செல்வி சியாமளாவும் குருவுக்கு மலர்மாலை சூட்டி மரியாதை செலுத்தினர்
அதனை அடுத்து, விவேகானந்த சபைப் பொதுச்செயலாளர் திரு பொ. வன்னிய சிங்கம் அவர்கள் நன்றி கூறும்பொழுது, சிறப்பாகக் கூறியதாவது மூன்றெழுத்தின் மகிமையை, அஃதாவது சிவம், சத்தி என் பவற்றின் மகிமையை எல்லோரும் அறிவர். பரத என்பதும் மூன்றெழுத்தால் அமைந்தது இதிற் ப என்பது பாவனையையும் ர என்பது ராகத்தையும் த என்பது தாளத்தையுங் குறிக்கின்றன என்பது குருவின் கருத்து. இந்த மூன்றெழுத்தைச் சிறக்கச் செய்தது கமலா என்ற மூன்றெழுத்து.
பராக்கிரமம் என்பது எல்லாம் வல்லது எனப் பொருள்படும். எனவே, இந்தப் பராக்கிரம ரேடியோக் கம்பனியார் மே டைக்கு ஒளியையும் ஒலியையுஞ் சிறப்புற அமைத்ததில் வியப்பு ஒன்றுமில்லை என்று கூறித் தம் நன்றியுரையை முடித்தார்.
மங்கள வாழ்த்துடன் பி. ப. 8 மணி 45 நிமிடமளவில் அரங்கேற்றம் இனிது நிறைவேறியது.
பக்கவாத்தியங்கள்
நட்டுவாங்கமும் நடனப் \ நடன ஞானவாணி பாட்டமைப்பும் }: கமலா ஜோன்பிள்ளை 6չIII այլնլ. HIլ Թ திருமதி. அம்பிகா தாமோதரம்
சங்கீத பூசணம் எம். ஏ. குலசீலநாதன் மிருதங்கம் வித்துவான்திரு. ரி. இரத்தினம் பெலின் வித்துவான்திரு. ஜி. சண்முகானந்தன் புல்லாங்குழல் வித்துவான்திரு. ரி. பி. யேசுதாசன். கிளாரினற்று வித்துவான்திரு. ஈ. சுப்பையா.
سے {

Page 11
絮 இவீ *தொண்டர் நாள்தொறுந் துதிெ
திருக்கேதீச்சர் ஆலயத் வேண்(
E-2RECS233
அரசாங்கம் அங் தொண்டர்களே!
ஈழவள நாட்டிலே தேவாரப் புகழ் சரத்தைப் புனரமைப்புச் செய்யும் பணியில் தயங்கமாட்டார்கள். ஆயின், இதுவரை உதவ வசதி இல்லாது இருந்திருக்கலாம். திரு குள்ள பல்வேறு பணிகளுடன் சைவ மக்கை ளுடன் நேரே தொடர்புகொண்டோ உதவி மென்பதை நீங்கள் உணர்வீர்கள்.
எனவே, உங்களுடன் நேரிலே த்ெ உதவிகளையும் பொருளுதவிகளையும் உடலு, ‘பிரதேசக் குழுக்கள்' என்னும் பெயரில் இறைவன் அருளால் இத்திருப்பணிக்குப் ப யைச் செவ்வனே செய்து முடிப்பதற்கு மேலு நீங்கள் முழுமனதுடன் முன்வந்து உதவுவீ சரத்துச் சிவன் பெயரில் இரந்து கேட்கின்ே கள் மனம் ஒருப்படுமா?
சைவப் பெருமக்களே! சிந்தித்துப் பா களையும் நாம் பேணுவிட்டால் வேறு யார்தா சைவ வள்ளல்கள் இருந்தார்கள் வரையாது கள் எழுந்தன; கோபுரங்கள் வானளாவி உ இன்ருே நிலை மாறிவிட்டது. நம் ே இவற்றை அரசாங்கம் ஒம்பப் போகின்றதா போகின்றர்களா? வள்ளல்கள் மறைந்து வி இத்தகைய உயர்ந்த வள்ளல்கள் தோன்றிய தளர விடமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுட ஒருவர் இச்சபையின் சாதாரண அங்கத் ஆகும். இது தவிர நன்கொடை எவ்வளவு உதவி செய்வதுடன் நின்றுவிடாது, தம் உ வோர் ஆகிய எல்லோரிடமிருந்தும் நாம் ந வழி செய்யலாம். அத்துடன் கட்டளை உபய பொறுப்பேற்று நடாத்தி வருகின்றது. இை திருக்கேதீச்சர ஆலயச் சுவாமி, அம்பா கான அடிக்கல் நாட்டுவிழா விரோதிகிருது ஆ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கருங்கல்லா நிறைவேற்ற, சபை இதுவரை செய்து முடித் மேலும் மூன்று இலட்சம் ரூபாவிற்கு மேலான இயன்ற நன்கொடை வழங்கி, இப்பணிக்கு ஆ அன்பர்கள் தயவுசெய்து மேலே காணும் முகவர் ளுங்கள்.
சிறுதுளி பெரு வெள்ளம். இத்திருப்பண திருக்கேதீச்சரத்தான் அருளைப் பெறுவீர்கள
ҫ
 
 

s us
அருள்செய் கேதீச்சரமதுதானே"
திருப்பணிச் சபையின் கோள்
75, லோறன்ஸ் வீதி, கொழும்பு-4. கரித்த அறநிதி
பெற்ற கோவில்களுள் ஒன்ருன திருக்கேதீச்
ஈடுபட்டு உழைக்கச் சைவ மக்கள் எவருந் ாலமும் அவர்கள் அவ்வாறு பங்குபெற்று க்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை தனக் ா ஒவ்வொருவராகச் சந்தித்தோ, அவர் க களைப் பெறுதல் சற்றுச் சிரமமாக இருக்கு
ாடர்புகொண்டு, உங்களால் இயன்ற பண தவிகளையும் பெறுவதற்காக, இப்பொழுது
உபகுழுக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ணம் சேர்கின்றது. ஆயின், இத்திருப்பணி ம் பணந்தேவையாக இருக்கின்றது. ஆகவே, ர்கள் என்ற நம்பிக்கையுடன் திருக்கேதீச் ரும். இந்நிலையில் இல்லை என்று கூற உங்
ருங்கள்; நம் சமயத்தையும் நம் கோவில் ான் பேணப்போகின்ருர்கள்! முற்காலத்தில் அள்ளி மாரிபோல் வழங்கிஞர்கள்; கோவில் யர்ந்தன; சைவம் செழித்தோங்கியது.
காவில்கள் தேடுவாரற்றுக் கிடக்கின்றன ? அன்றேல் பிற மதத்தவர்கள் போற்றப் ட்டார்களென்று கூறி வாளா இருப்பதா? குலத்தின் வழிவந்த நீவிரும் எங்களைக் கை ன் கேட்கின்ருேம்.
தவராவதற்கு ஒர் ஆண்டுச் சந்தா ரூபா 12/- என்ருலும் வழங்கலாம். அன்பர்கள் தாம் ருர், உறவினர், தம்முடன் சுட்டிப் பழகு ன்கொடைகளையோ, உதவிகளையோ பெற ம் போன்ற பல பூசை வசதிகளையும் சபை பற்றிய விபரம் மறுபக்கத்தில் உள்ளது. 1ள் கோவில்களின் புனருத்தாரண வேலைக் ண்டு ஆவணித் திங்கள் 11ம் நரள் (27-8-71) ல் அமையும் இவ்வாலயத்தைச் செவ்வனே த புனருத்தாரண வேலைச் செலவுகளைவிட, பணம் தேவையாகும். எனவே, தங்களால் க்கமும், ஊக்கமும் கொடுத்துதவ முன்வரும் யிற் சபைச் செயலாளருடன் தொடர்பு கொள்
க்கு உங்களால் இயன்ற உதவியைச் செய்து "க!

Page 12
திருக்ே
ஆலயத் திருப்பணி நிதிக்கு உ
(l)
( 2)
(3)
நிரந்தரப் பொதுக்குழு உறுப் ஆயுள் (சபை) உறுப்புரிமை நிரந்தர வருடாந்தப் பூசைக்
(நட்சத்
(அ) நான்கு காலங்கள்
மூன்று காலங்கள் (இ) இரண்டு காலங்கள்
(ஈ) ஒரு காலம்
(4) மாதாந்த நட்சத்திர அர்ச்ச3
பொழிப்பு:- மார்பில் விளங்கவும், ஊமத்த மலர் மாலைை தேவியாரோடும் விடையூர்ந்து எழுந்தருளி ணத்தால் ஒன்பதாவது நாளாகிய ஆயிலியமும், கிய விசாகமும், பதினெட்டாம் நாளாகிய கேட் ஆகிய இவைகளோடு வைத்து எண்ணப்படு சுவாதி, பூராடம், மிகவும் அன்புடன் நல்லன; அவைகள் நல்ல
6.
திருஞானசம்பந்தமூர்த்
கோளறு திருசிற்ற என் பொடு கொம்ெ
இவைமார் எருதேறி ஏழை யு பொன பொ புனல்சூடி வந்து 6 உளமே புகு ஒன்பதொ டொன் பதினெட்டெ உடனுய நாள்கள் அன்பொடு அவை நல்ல நல் °母旦”夏° எலும்பும் பன்றிக் ே
புரட்டாதி எனப்படும்
این نیست.

தீச்சர - - - தவக்கூடிய சில வழிவகைகள்
| «Եւn 5001100lf
gl :.8%T e luub
திரங்கள் திதிகளுக்கு)
100 11
纥象 75 l/-
廖影 501 |-
象荃劇
னக் கட்ட8ள
(ஒர் ஆண்டு) 羧酸 13
தி நாயனுர் அருளிய
羲
பதிகம் நம்பலம்
翡潭”、鼩D、
Gar தி மத்த மாலை ஆ
6. தந்த அதனுல் ருே டேழு - T - (OILO
அவைதாம்
நல்ல நல்ல
} ர்க்கு மிகவே. - காடும் ஆமை ஒடும் ஆகிய இவைகள் திரு பயும் கங்கையையும் முடியிற் சூடியும், உமா வந்து அடியேனது உள்ளத்திற் புகுந்த கார் பத்தாம் நாளாகிய மகமும், பதிஞரும் நாளா டையும், ஆரும் நாளாகிய திகுவாதிரையும், ம் பரணி, கார்த்திகை, பூரம், சித்திரை, இந்நாட்கள் அனைத்தும் அடியார்களுக்கு
னவே செய்யும். தி ទ្រឹក្សា). (5. 42,356 its).
O

Page 13
每 இவ
சிறுவர்
புத்தகத் துள்ளுறை மாதே பூவில் வித்தகப் பெண்பிள்ளை நங்காய் ே முத்தின் குடையுடை யாளே மூவு எத்தனையு முனைத்தொழு வோம் சிறுவர்களே
விவேகானந்தனின் இந்த இதழ் கின்றது. எனவே, இதனைக் கலைமகள் "தொட்டிலிற் பழக்கஞ் சுடுகாடு வதை நாம் கேட்டிருப்போம். நல்ல கத்தை என்ரு லென்ன நாம் சிறுவய நிலைத்திருக்கும் என்பதுதான் இதன் அறியாத சின்னஞ் சிறு வயதிலே ந கொண்டால் அவை இப்பிறப்பில் பயக்கும்.
நாம் சிறுவர்களாக இருக்கும்பெ அறிவது எவ்வாறு என்ற கேள்வி இப் தாய் தந்தையர் கூறும் அறிவுை பொறுத்தே நம் பழக்கங்கள் அமைகி கையில் ஆசிரியர் கற்பிப்பவற்றைக் ( சில பழக்கங்களை மேற்கொள்கின்ருேம் நண்பர்களின் செல்வா க்கையும் நாம் நிலைகள் எல்லாவற்றிலும் நல்ல பழக் வில்லை என்ருல் அது வருந்து தற்கு உ பரோ தாம் பொய் பேசிக்கொண்டு, லாதீர்கள் அது தீய பழக்கம்" என்று களின் மனதில் அழுந்திப் பதியாது. என்பதற்காக நாமும் அப்பழக்கத்தை
நாம் பகுத்தறிவு படைத்த மாந் நூல்கள் நம் பரம்பரைச் சொத்து யங்களை நம் வாழ்க்கையின் குறிக்கே இந்நிலையிற் காந்தி அண்ணல் கூறுவ6 வயதிற் பிதிர் பத்தி நாடகத்தையும் பொழுது அவை தம் மனதில் அழுந் இலட்சியமாகக்கொண்டு தாம் பெரு
- مسیحیت

– Due
Le a
மர்ந்துறை argi Ga வதப்பொரு ஞக்கிறைவி
லகுந் தொழுதேவி எண்ணெழுத் தெங்கட் கருள் வாய்.
நவராத்திரிக் காலத்தில் வெளிவரு வணக்கத்துடன் தொடங்குகின் ருேம் மட்டும்' என்று பெரியோர்கள் கூறு பழக்கத்தை என்ருலென்ன தீய பழக் திற் பழகிவிட்டால் அது இறுதிவரை
பொருள். எனவே, கள்ளங் கபடம் ல்ல நல்ல பழக்கங்களை நாம் பழகிக் மட்டுமன்றி மறுபிறப்புக்கும் நன்மை
ாழுது நல்லது எது, தீயது எது என்று பொழுது எழலாம் சிறு வயதில் நம் ரகளையுஞ் செய்யுஞ் செயல்களையும் ன்றன. அதன் பின்னர் பள்ளி வாழ்க் கேட்டுஞ் செய்பவற்றைப் பார்த்துஞ் 5. பாடசால்ைகளில் நமக்கு வாய்க்கும் ஓரளவுக்குப் பெறுகின்ருேம் இந்த கங்களேப் பழக நமக்கு வாய்ப்பு இருக்க ரியதொன்று. தந்தையாரோ, ஆசிரி 'பிள்ளைகளே ! நீங்கள் பொய் சொல் அறிவுரை கூறினுல் அது அப்பிள்ளை ஆயின், அவர்கள் செய்கின்ருர்களே ப் பழகல் அறிவுடைமை ஆகாது.
தர் திருக்குறள் போன்ற உயர்ந்த இவற்றைக் கற்று, உயர்ந்த இலட்சி ாளாகக் கடைப்பிடித்தல் வேண்டும். தச் சற்று நோக்குவோம் தாம் இள அரிச்சந்திரன் நாடகத்தையும் பார்த்த திப் பதிந்துவிட்டன என்றும் அவற்
b பயன் எய்தியதாகவும் அவர் கூறு
1

Page 14
கின்ருர், உண்மையின் உருவாக அ கொண்டு, உண்மை ஆராய்ச்சி செய லின் உயர்வை அரிச்சந்திர புராணத் வாழ்க்கை இலட்சியத்தை நாமும் பயன் அடையலாம் என்பதனைச் சிந்தி உண்மை பேசுதல் வாய்மை என பில் வருந் திருட்குறட் செய்யுள்கள் றை மனப்பாடஞ் செய்துகொள்ளுங்க
' வாய்மை எனப்படுவது யா
தீமை இலாத சொலல்? புறத்தூய்மை நீரால் அமை! வாய்மையாற் காணப்படும் எல்லா விளக்கும் விளக்கல் பெய்யா விளக்கே விளக்கு
நாம் கலைமகளை வணங்காது இருப்போமாயின், கலைமகன் தானு புரியத் தொடங்குவாள். எனவே, க உண்மை பேசுதலாகும்.
*霞_氙邑 愛
அ றி வி
காைsஇ
ஆசிரியரோ, மாணவரோ துக்களை அறிவுறுத்துந் தரமா நாடகங்கள் ஆகியன எழுதி
கான ந் தன் சஞ்சிகையில் இ

மைந்து உண்மையைக் கடவுளாகக் ப்த காந்தி மகான் உண்மை பேசுத திலிருந்து அறிந்தாரென்ருல், அவரின் குறிக்கோளாகக்கொண்டு எவ்வளவு த்துப் பாருங்கள். க் கூறப்படுதலுமுண்டு. இத்தொடர் மூன்று கீழே தரப்பட்டுள்ளன. இவற்
ஸ்
தெனின் யாதொன்றுந்
பும் அகத்தூய்மை
9.
பிச் சான்ருேக்குப்
உண்மையே என்றும் பேசிக்கொண்டு கவே வந்து நம் நாவிலிருந்து அருள் லேமகளை வணங்குஞ் சிறந்த முறை
Lயர்வை உய்க்கும்'
- ஆசிரியர் -
த் த ல்
, பிறரோ நம் சமயக் கருத்
ன கட்டுரைகள், சிறுகதைகள்,
அனுப்பினுல் அவை விவே
இடம்பெறும்,
-ஆசிரியர்.

Page 15
சபையின் நிகழ்ச்
தமிழ்த் திகதி ஆங்கிலத்திகதி நிக
a 30- 7 - 7 கந்தரர்
0 魔5–3、7】 அரவிந்த
ஆவணி
置9 4-9一7蚤 செல்வி இயாம
கேற்றம்.
26 11 1 7-9 سے பராதியா
புரட்டாதி
4 20-9-7I நவராத்திரி பூ
翼2 28-9-7 மகாநவமி - க
13 29-9-71 GEBEU
6 2- -7. கொழும்பு விே
யின் அகில இலக் பரீட்சை,
 
 

சிக் குறிப்புக்கள்
ਤੌਉਸੈ। குறிப்பு
G5(5g,60é பூசை, கூட்டு வழிபாடு
虞 இனம் வெள்ளவத்தை 3prir LD
கிருஷ்ண சபை மண்டபத் தில் பூரீ அரவிந்தர் குழாத் துடன் கூட்டாக நடை பெற்றது. பூசை வழிபாடு சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
ளாவின் அரங் 15வரங்கஹலாமண்டபத்தில் விவேகானந்த சபைச் சார் பில் நடந்தது. பிரதம விருத்தி னர் வைத்திய கலாநிதி த. குமாரசுவாமி
பூசை வழிபாடு சிறப்புச் சொற்பொழிவுகள் கவிய ரங்கு முதலியவற்றுடன் சிறப்பாக நடைபெற்றது.
பூசை கூட்டுப் பிரார்த் தனையுடன் pūutas நிகழும்.
வகானந்த சபை GÖDESğFF KADUL E TIL

Page 16
தமிழ்த் திகதி ஆங்கிலத்திகதி நிக
ஆவணி
20-8-71 செல்வச் சந்நிதி
27-8-71 திருக்கேதீச்சரம் கட்டட அடிக்க
20 5-9 - 7 செல்வச் சந்நிதி மாளய பட்ச ஆ புரட்டாதி
置9–9–7彦 மாளய பட்ச மு
-- 尘 20-9-71 நவராத்திரி விற் 2 28- 9- 71 சரஸ்வதி
3. 29-9-71
ஐப்பசி
夏&一互0–7及 தீபர்
20 - 10-7 கந்தர் சஷ்
8 25- 0-7 3 : s
பூரீல பூரீ ஆறு 576)j6ôT60)LDü (3 தலைப்
மேற் பிரிவு:
(1) நாவலர் நூல் நயம்
(i) நாவலர் தனக்காக வாழ்ந்திருந்தால்!
(i) நாவலர் எண்ணம்
கீழ்ப்பிரிவு:
(i) தமிழ் @ಆF657 5®
(1) நாவலர் செய்த
(i) நாவலர் பண்பு.
14 ملی۔
 
 

குறிப்புக்கள் -
ழ்ச்சி குறிப்பு
கொடியேற்றம்
பெருங்கோவிற் இது இனிது நிறைவேறியது ல் நாட்டுவிழா
. . . தீர்த்தம் 2.JLDL-JLD
plge
தத் தொடக்கம்
தி பூசை
தசமி
டி விரதம் தொடக்கம்
s 3 岁 (LPLg-Gly
முக நாவலர்
LITTL Lq.: 1971
புக்கள்
மத்திய பிரிவு:
(1) நாவலருக்கு விழா ஏன்?
(i) நாவலர்
gyfrif fi ? (i) நாவலர்
டயின் தந்தை
பெருமையை அறிந்தவர்
ஒர் அறவாழி
மாணவர் தொண்டுகள்
سے ـ

Page 17
1-4-1971 தொடக்கம் கொழும்பு கொண்ட ஆயுட்கால,
ஆயுட்கால
உறுப்பினர் முழுப் பெயர்
முகவரி
சின்னத்தம்பி கந்தசாமி
கணக்குப் பரிசோதனை உள்நாட்டிறைவரித்தி? கொழும்பு-1.
விகவநாதர் கயிலாசபிள்ளை
த. பெ. இல.
கொழும்பு
இளையதம்பி சின்னத்துரை
நாகப்பர் தம்பிமுத்து
gil sa Uffgff
நாகமுத்து சிவகுரு
49, புதுச்செட்டித் கொழும்பு-1
51, புதுச்செட்டித்
கொழுபுபு
107, புதுச்செட்டித் கொழும்பு-1
ரமணியம் ĜLL FT JGG) iš 3Gko
சங்கரப்பிள்ளை அம்மையப்பர்
கந்தையா பரமநாதன்
சுப்பையா ஆச்சாரி
தியாகராசா
எஸ். திருஞானசுந்தரம்
90, விவேகானந்த கொழும்பு-1
ஆசிரியர், அராலி
வட்டுக்கோட்
த. பெ. இல.
கொழும்பு
102, புதுச்செட்டி கொழும்பு-1
182, ஸ்கின்னேர்
கொழும்பு
செளந்தரநாயகம்
263, செட்டியா
கொழும்பு-1
11 سے
 

விவேகானந்த சபையில் சேர்ந்து சாதாரண உறுப்பினர்
உறுப்பினர்
s அறிமுகஞ் செய்தவர் 3. ධ්‍රැ. ணக்களம், g5 rLOFH95 20-6-1971
19 | இவசுப்பிரமணியூம்
20-6-1971
தெரு, 6. ងប់ងាយ 30-7 罗。 (மு. ச. உறுப்பினர்) -7-1971
GLI. ன்னியூஇங்கப் டு , 30-7-1971
தெரு, வ, அப்பையா 30-7-1971 3. (மு. ச. உறுப்பினர்) -7-197.
- G - o@| ಬ್ಲೌರೌ ||30-7-197
(பரீட்சைச் செயலாளர்)
ତ, s, i; o೨ಅ. ರಾ?? 31-8-1971
@ 524, 莎TDT函 31-8-1971
-
தெரு, 号。 @.蠶)。 31-8-1971 ஸ் விதி
85. LIDTF. I 551 =ககு (நிலைய '...? ಙ್ಗಾ। 31-8-1971
o@: 9 ) 31-1-1971
5 -

Page 18
SFKg5 LET GOUE
ம. சிவானந்தம்
கணக்குப் பரிசே 5Titustally
கொழும்பு
பெருமாள் புண்ணியமூர்த்தி
கல்குடா வி வாழைச்சே
ஆறுமுகம் கந்தையா
அருணுசலம் சின்னேயாசிவம்
45卫, நீர்கொழும் வத்தளை
21, வான்றுாய6
கொழும்புநாகராசா தபாற் கந்தோர்
சச்சிதானந்தன்
கொழும்பு
சதாசிவம் பத்மநாதன் கணக்காய்வுத்
கொழும்பு
செல்லையா தில்லைநாதன் 36, கிறிஸ் ே நீர்கொழுப்
சேணுதிராசா சிவராசா * கார்த்திகேயன்
104, தவளசிங்கராம
கொழும்பு
சேணுதிராசா இரத்தினராசா
3660 T35BF60Ni I GA J95 UTGIFT
37, விவேகானந், கொழும்பு
வீரக்குட்டி நாகமணி
பெரிய கல்லா கல்லாறு, கி.
 

உறுப்பினர்
孺 இனக் 24-4一1971 7.
鷺 ..."??,124-4-1971
Н விதி, } 24-4—豫 و;
ನೌ: ) 24-4-197 ತಿನ್ತನ್ತಿ। 20-6-1971 3.
:d ...ಮ್ಮ್ | -7.
(30-7-1971
30-7-1971 5.
釁 黔 30-7-1971
0 1971-7-30 جومہم...........چیمہ
று 2, - சி. வேலாயுதம் 31-8-1971.
(சாதாரண உறுப்பினர்)

Page 19
கொழும்பு விவேகானந்த 6
நன்கொடை வழங்
வழங்கியவர் பெயர்
சீலழறி ஞானப்பிரகாச சுவாமிகள்
திரு. சு. சிவசுப்பிரமணியம்
(உபதலைவர்)
திரு. ஆர். எம். வள்ளியப்பன்
(சாதாரண அங்கத்தவர்)
திரு. க. இராமச்சந்திரன்
(கெளரவ அங்கத்தவர்)
திருமதி ப. தம்பியையா
திரு. நா. சிவகுரு
(சீவிய அங்கத்தவர்)
திரு. அ. கந்தையா
(சீவிய அங்கத்தவர்)
al
தெற்கு
= -17
 

பயின் புதிய கட்டட நிதிக்கு கியோர் பட்டியல்
G3, Tsaas 庞 리 முகவ திகதி
ாசந்நிதானம், 11-9-1970 1soo 1ண்டார் ஆதீனம், காஞ்சிபுரம், கோட்டடி வீதி, 13-9-1970 1000 காழும்பு-12, 1-6-1971 1000 12-6-1971 1000
2-7-1971. 10 6-8-1971. 1000 2-9-1971 1000 செட்டியார் வீதி, 20-9-1970 51. On காழும்பு, 11
திபுரம், தலங்கம, 3-4-1971 5000
மார் குறுரப் தமிழ்க் 7-6-1971 15 OO வன் பாடசாலை, டப்புசல்லாவ; துச் செட்டித் தெரு, 24-7-1971 100 00 காழும்பு-13.
க்கு வீடு', அராலி 20-8-9171 100 00
வட்டுக்கோட்டை,

Page 20
e 'சிவநேசர் பாதம் வ இவரேவல் செய்த
பூநீலநீ ஆறு நினைவுக் கட்டுரை - நாவ6
விரோதிகிருது ஆண்டு கார்த்திகைத் கிழமை நிகழ இருக்கும் பூரீலபூரீ ஆறுமுகநாவு போட்டிகள் வழமைபோல் இவ்வாண்டும் கெ இலங்கை அடிப்படையில் நடாத்தப்படும். பேர் வேண்டிய தகைமைகள், நிபந்தனைகள், மற் கண்டவாறு அமையும்:-
1. நாவலர் நினைவுக் கட்டுரைப் G
(அ) இக்கட்டுரைப் போட்டி மேற்பி
(ஆ) இப்போட்டியில் 8 ஆம் வகுப்பில் களிற் பயில்வோருமே கலந்து கெ
(இ) 8-12-71 இல் 15 வயதிற்கு மே 18 வயதிற்கு உட்பட்டோராகவு போட்டியில் கலந்துகொள்ளலாம்
(ஈ) 2-11-71 இல் நடைபெறும் அ.
யாவற்றிலுங் காலை 10-00-1 :
(உ) சபையாரினுல் வழங்கப்படும் தலைட்
எழுதப்படவேண்டும்.
(ஊ)நாவலர் வாழ்க்கைக் குறிப்புக்களிலி ஆக்கப்பணிகள், தமிழ் இனம், ெ பிறவும், அவரால் பெற்ற நன்ன கொள்கைகள் போன்றவற்றை தலைப்புக்கள் தெரிவுசெய்யப்படும்
(எ) கட்டுரையில் கவனிக்கப்படும் சிறப்பு
(i) தலைப்பிற்கு அமைந்த உண்ை விளங்க வைக்கும் ஆற்றல் (ii) கருத்துக்கள் (V) கருத்துக்கள் சொல், வசன, இலக்கணப் பிழை தல் - குறியீடுகள் (Vi) சொல்லா (ix)விளக்க ஆதார எடுத்துக்காட்( தொடர்பு கெடாமை.
(ஏ) பிரிவு (எ) இல் கூறிய அம்சங்கள் றிற்கும் 100 புள்ளிகள் வழங்கட்
(ஐ) இப்போட்டியில் முதல் மூன்றிடங்கி நடைபெறும் பூரீலபூரீ ஆறுமுகநா சில்கள் வழங்கப்படும்.
-- 1!
 

ணங்கிச் சிறக்க 1றிந்து' - சைவ சமயநெறி.
முகநாவலர் ண்மைப் போட்டிகள்: 1971
திங்கள் 22ஆம் நாள் (8-12-71) புதன் லர் குருபூசையை முன்னிட்டு, மேற்குறித்த ாழும்பு விவேகாநந்த சபையினரால் அகில ாட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர்க்கு றும் இவை தொடர்பான விவரங்கள் கீழ்க்
Լյուլգ.
ரிவு மாணவர்களுக்கு மாத்திரம் நடைபெறும்.
பயில்வோரும், அதற்கு மேற்பட்ட வகுப்புக்
ற்பட்டோராகவும், மேற்குறித்த இத்திகதியில் ம் உள்ள மாணவர்கள் மாத்திரம் இப்
j,
இ. சைவசமய பாடப் பரீட்சை நிலையங்கள் -00 வரை இப்போட்டி நடைபெறும்.
ப்புக்களுள் ஒன்றைத் தெரிவு செய்து, கட்டுரை
ருந்து, அவரோடு தொடர்புபட்டவை, அவரின் மொழி, சைவ சமயம், நாடு முதலானவையும், மைகள், நாவலரின் தனித்துவச் சிறப்புக் உள்ளடக்கிய விடயங்களிலிருந்தே கட்டுரைத்
அம்சங்கள்.
மக் கருத்துக்களின் ஆழம் (ii) சுருங்கக் கூறி கூறியது கூருமை (iy) புதுமையான புதிய ரின் ஒழுங்கமைவு முறை (Vi) எழுத் து pகளும், எழுத்துறுப்பும் (wi) பந்தி பிரித்தெழு ட்சித் திறனும், உரைநடை எழுதும் ஆற்றலும் டுக்களும், நயவுரைகளும் (x) தொடக்க முடிபுத்
செறிந்த நிறைவான கட்டுரை ஒவ்வொன் படும்.
களையும் பெறுவோர்க்கு, சபையில் இவ்வாண்டு வலர் குருபூசை நாளன்று, சபையினுல் பரி
8 -

Page 21
பரிசில் விவரம்:
1-ஆம் பரிசில் 30/- பெறுமதியான து 2-ஆம் 20/- 萝罗 -ேஆம் s lO- 92
2 நாவலர் நாவன்மைப் போட்டி,
(அ) இப்போட்டி மூன்று பிரிவுகளா
கொள்வோரது வயதுக் கட்டுப்ப கண்டவாறு அமையும்:-
கீழ்ப்பிரிவு: 8-12-71 இல்
மத்தியபிரிவு: 8-12-71 இல்
மேற்பிரிவு: 8-12-71 இல்
(ஆ) சபையாரினல் கடந்த ஆண்டுக கனவே ஒரு பிரிவில் முதற் பரிசி இம்முறையுங் கலந்து கொள்ள
(இ) போட்டியில் கலந்துகொள்பவர்க ஒன்றைத் தெரிவு செய்து, தத்த சொற்பொழிவாற்றக் கடவர்.
(ஈ) நாவன்மைப் போட்டிக்குரிய த
கTண்இ.
(உ) நாலன்மைப் போட்டியில் கவனிக்
(i) மாணவர் அரங்கில் நிற்கும் (i) தன்கருத்தில் GLG: Lib (y) உச்சரிப்புத் தெளிவு (vi) வி (wi) நியாய வாதத் திறமை (wi வுகள் தோன்றுந் நன்னயம்-தொ படாக் கருத்து (x) தொடக்க மு (ஊ) பிரிவு (உ) இல் கூறப்பட்ட குறி துள் சொற்பொழிவாற்றி முடிப்பு (எ) இப்போட்டியின் பூர்வாங்க தேர் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடா முதல் மூன்றிடங்களையும் பெறுே போட்டியில் கலந்து கொள்ள அ (ஏ) கொழும்பு விவேகாநந்தசபை மண் போட்டியில் கலந்து, ஒவ்வொரு வோர்க்குச் சபையாரினல் பரிசில்
-
பிரிவு 1-வது கீழ் 30மத்தி 50/- 75/-
[பரிசில்கள் யாவும் நூல்க
1 سسس
 

କଁ}&ଇଁ?.
க நடைபெறும். ஒவ்வொரு பிரிவிலுங் கலந்து டுஞ் சொற்பொழிவாற்றுந் ே
12 வயதுக்குட்பட்டோர்
5 நிமிடங்கள்.
12 வயதிற்குமேலும், 15
வயதிற்கு உட்பட்டோரும் 7 நிமிடங்கள்
15 வயதிற்கு மேலும், 18
வயதிற்கு உட்பட்டோரும் 19 நிமிடங்கள்
ரில் நடாத்தப்பட்ட அப்போட்டியில், ஏற் பெற்ற ஒருவர், திரும்பவும் அப்பிரிவில், அனுமதிக்கப்படமாட்டார்.
ள் சபையாரால் வழங்கப்படுத் தலைப்புக்களில் ம் பிரிவிற்குக் கொடுக்கப்பட்ட நேரம்வரை
லேப்புக்கள் விவரத்தை 14-ஆம் பக்கத்தில்
கப்படும் சிறப்பு அம்சங்கள் :
நிலை (i) தலைப்பிற்கு அமைந்த கருத்துக்கள் (ty) சொல்லாட்சித் திறன் ளங்கு உதாரணத்துடன் விழுமிவது கூறல் 1) கேட்போர்க்கு உவகையூட்டுஞ் சுவையுனர் னி-ஓசை (ix) உயர்ந்தோர் வழக்குடன் மாறு மடிபுத் தொடர்பு கெடாத் தொகுப்பு ப்ெபுக்கள் யாவும் நிரம்ப, குறித்த நேரத்
வர்க்கு 100 புள்ளிகள் வழங்கப்படும். பு, போதிய மாணவர்கள் விண்ணப்பிக்கும் த்தப்படும். இத்தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் வார், கொழும்பில் நடைபெறும் இறுதிப் னுமதிக்கப்படுவர். டபத்தில் 11-12-71இல் நடைபெறும் இறுதிப்
பிரிவிலும் முதல் மூன்றிடங்களையும் பெறு கள் வழங்கப்படும்.
விவரம்
2-வது 3 -வது 20/- IO30/- 20/- 50/- 3 O
ாாகவே வழங்கப்படும்.)

Page 22
குறிப்புக்கள்:
(i) நாவன்மைப் போட்டிக்குப் போ,
விண்ணப்பதாரிகள், பூர்வாங்க திற் அனுப்பப்படுவர்.
(ii) இப்போட்டிக்கென விண்ணப்பக்
( iii கொழும்பில் நடைபெறும் இறுதி
விரும்பிக் கேட்டால், பிரயாணச் வழங்கப்படும்.
(iv) பூர்வாங்கத் தேர்வு நடைபெற இ பெறும் நாளுக்கு ஒரு கிழமைக்கு
(v) போட்டியில் கலந்து கொள்வோ
சான்றிதழ்களை நடுவர்க்குக் காண் பிரிவின் வயதெல்லேக்குட்பட்டிரு Wi) தனிப்பட்ட விண்ணப்பதாரிகளின்
பாதுகாவலர்க்கூடாக அனுப்பப் (wi) ஒவ்வொரு போட்டிக்குந் தனித் (Vi) போட்டிகளின் நிலை பற்றிய நடுவ (ix) கட்டுரை-நாவன்மைப் போட்டி
விண்ணப்பதாரிகள் கீழ்க்காணும் மாதிரி வி
மேற்கூறிய முடிவு திகதிக்குள் எமக்குக் கில் வேண்டிய முகவரி:
கெளரவ பரீட்ை
(நாவலர் நினைவுப்டே
விவேகாந
34, 6:36
கொழும்
'அஞ்செழுத்தே ஆகமமும்
6.
பூனிலழறீ ஆறுமுக நாவலி
66ðiðIT GOOTIL
1. மாணவர் முழுப்பெயர். 2. பயிலும் வகுப்பு. . 3. பயிலும் பாடசாலை / மன்றப் பெய
பிறந்த திகதி.
urt LJET &n) ldTajl i Lib.................
மேற்கூறப்பட்ட விவரங்கள் யாவும்
 
 
 
 
 
 
 
 

கிய மாணவர் விண்ணப்பிக்காத மாவட்டத்து தேர்வு நடைபெறும் அண்டை மாவட்டத்
கட்டணமாக எதுவும் அறவிடப்படமாட்டாது.
த் தேர்வில், கலந்து கொள்ளும் மாணவர்கள் செலவுகள் அம்மாணவர்களுக்கு மாத்திரம்
இருக்கும் நாள்-நேரம் இடம் போட்டி நடை
முன்னதாகவே தெரிவிக்கப்படும். ர் பூர்வாங்கத் தேர்வன்று தத்தம் பிறப்புச் பித்து, தாம் போட்டியில் கலந்து கொள்ளும் த்தலை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
விண்ணப்பம் அவர்களின் பெற்றேர், அல்லது நடவேண்டும். தனி விண்ணப்பம் அனுப்பப்படல் வேண்டும். ர்களின் தீர்ப்பே சபையார் தீர்ப்பாகும். கள் விண்ணப்ப முடிவு திகதி 6-10-1971
ண்ணப்பத்தைப் பிரதி செய்து, பூரணப்படுத்தி டைக்கச் செய்யவும். விண்ணப்பம் அனுப்ப
ரச் செழிலாளர் ாட்டி விண்ணப்பம்) ந்த சபை நந்த மேடு,
- 13. அண்ணல் அருமறையும்'
ர்.போட்டி
D- 1971 : பிரிவு. e eg a 9 0
நம் முகவரியும்.
"விண்ணப்பமானவர்"கையொப்ப்ம்' Fரியானவை என உறுதிப்படுத்துகின்றேன்.
திபர்/தலைமை ஆசிரியர் கையொப்பம்:

Page 23
ஆபையின் ஸ்தாபன தினம் கடந்த பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழா ஏனை தது குறிப்பிடத்தக்கது. காரணம் சபை 69 தனது தலைமைப் பீடத்திலே தனக்கென : குறிப்பாகச் சொல்லுமிடத்து விழா வில் கெ
காணப்பட்டனர்.
இவ்விழாவுக்குச் சபைத் தலைவர் திரு. விழா பூசையுடனும் இராஜமாணிக்கம் குழு மாகியது.
கீழ்க்கண்டோர் முறையே திரு. எஸ் மணன், த, நீதிராஜா, மு. வையிரவப்பிள் இ. சி. சோதிநாதன், திருமதி ரா. ராஜேந்தி
இருந் இத்தினத்தில் தாளவாத்தியக் கச்.ே
ருநதன.
அறி வி
விவேகானந்த சபை அங்
ன ந் த ன் இலவசமாக அனு
கையைப் பெற விரும்புவோர்
அங்கத்தவர்களாகச் சேருங்கள்
 
 
 

13/7/71இல் சபை மண்டபத்தில் வெகு சிறப் 7ய விழாக்களிலும் பார்க்கச் சிறப்பாக அமைந் வது ஆண்டை அடைந்தது மட்டுமல்லாது ஒரு புதிய கட்டடத்தையும் பெறுதலாகும். பந்துகொண்டோர் அனைவரும் உற்சாகத்துடன்
கோ, ஆழ்வாப்பிள்ளை தலைமை தாங்கிஞர். வினரின் மங்கள வாத்தியத்துடன் ஆரம்ப
சோமசுந்தரம், வே. க. கந்தசாமி, கி. லக ளை, எஸ். ரி. சிவநாயகம், வ. நடராஜா, ரம் ஆகியோர் சிறப்புரை வழங்கிஞர்கள்
சரியும் இன்னிசை விருந்தும் இனிமையாக
--கலாசாரச் செயலாளர்
த் த ல்
கத்தவர்களுக்கு விவேகா
ப்பப்படும். எனவே, இச்சஞ்சி
தயவு செய்து இச்சபையின்
-ஆசிரியர்.

Page 24
ভুট)।
இச்சஞ்சிகை
Printed at The Kumaran pre.

Registered as a Newspaper at the G. P. О.
அரசாங்க தகுதிவாய்ந்த அதிகாரியினுல் அங்கீகரிக்கப்பட்டது.
프 "_
8 ܐ> * 書完目 。" | sq 2 ب < 로
;ہم تک مجمہ འི། །
こ 澤 |=d ` მს); @ ミー斐番 ཕྱི་ R O 葉 ー 。 ご
క్ష S