கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இசைத்தேன்

Page 1


Page 2

இசைத்தேன்
கி. மு. நல்லதம்பிப் பாவலர்
பதிப்பு: கி. அ. சா. ஹைதர்அலி, கம்பளவெல, கம்பளை, பூரீ லங்கா.

Page 3
இசைத்தேன்
கி. மு. நல்லதம்பிப் பாவலர்
முதல் பதிப்பு: பாவலர் பதிப்பகம் சென்னை - 1 (1954) மீள் பிரசுரம்: கி. அ. சா. ஹைதர்அலி, கம்பளவெல, கம்பளை, பூனரீ லங்கா, (2OOO)

பதிப்புரை
நாவீறு பெற்ற நல்லிசைப் புலவர்களும், பாவீறு பெற்ற பைந்தமிழ்ப் பாவலரும் போற்றிக் காத்த தமிழ் அன்னைக்கு ஈழமணி நாட்டிலே, மலையகத்து மண்ணிலே இசைத்தேன் அமுதினை அள்ளி வழங்கிய பாவலரின் பங்களிப்பு குறிப்பாக 1950-களில் சிறப்பாக இருந்தது.
அவ்வப்போது ஊற்றாகக் கிளர்ந்த நினைவுகள் பாவலரின் பாடல்களாக மலர்ந்தன. ஆயினும் அவற்றை அவர்கள் போற்றிப் பாதுகாக்காத நிலையில் பல உதிர்ந்து அழிந்து போயின. எஞ்சியவற்றுள் சிலவே இசைத்தேன் நூலில் இடம்பெற்றவை. இவ்வாறு பதிக்கப் பெற்ற ‘இசைத்தேன்’ நூலும் அழிந்து விடாமல் தமிழுலகில் நிலைபெற வேண்டும் என்ற நினைவுடன் புதிய பிறப்பினைப் பெறுகின்றது.
அச்சிடுவிக்கும் கலையில் அபார திறமை வாய்க்கப்பெற்ற நண்பர்கள் அ. ஜ. முஹம்மது ஸ்னிர், மீ. லெ. முஹம்மது ரஸின் ஆகியோரின் ஆலோசனைகளுக்கும், அழகுற கணணிப் பதிவு செய்த ஹாபிஸ் இஸ்ஸதீன் அவர்களின் ஆக்கபூர்வமான உதவிகளுக்கும் நன்றிகள் என்றும் உரித்தாகுக.
கி. அ. சா. ஹைதர் அலி
ஜூலை 2000
கம்பளவெல, கம்பளை,

Page 4
நூன்முகம்
எல்லாப் புகழும் இறைவற்கே. இன்னருள் மன்பதை காக்க இளமை முதல் பாவியற்றும் ஆற்றலை உடையேன். கவிதா சன்னதம் நிகழும் போதெல்லாம் கவியாப்பதில் ஈடுபட்டி ருந்தேன். அக்காலச் சூழ்நிலைக்கேற்ப, ஆடுனரோடும், பாடுனரோடும் அரங்குகளில் காட்சியளித்ததுண்டு. இதன் காரணமாய் இசைக் கலை அறிஞரின் கூட்டமும், அவர்கடம் நாட்டமும் கிட்டின. எல்லோரும் என்னைப் 'பாவலர்” என்ற ழைப்பராயினர். வாலிப வயதில் வண்ணம் வண்ணமான பாடல்கள் பாடினேன். பலரின் மதிப்பும் பெற்றேன். ஆனால், அருமையும் பெருமையுமான பண்ணோடியைந்த பல பாடல் களைச் சேர்த்து வைத்தேனில்லை. இப்படியாகக் காலம் வேகமாய் ஒடி மறைந்தது. தன்னுணர்ச்சியின் வழி நடக்கும் பருவம் எய்தினேன். இது முதற்கொண்டு சில பாடல்களைச் சேகரிக்க முடிந்தது. எனினும் பல அழிந்தும் ஒழிந்தன. கைவசம் உள்ள கீதங்களைத் தமிழகம் காணவேண்டும் என்று கருதினேன். எண்ணம் உடலும் உயிரும் பெற்று விட்டது. "இசைத் தேன்’ என்னும் பெயர் பூண்டு, இசையரங்கிற்கு வருகின்றது நம் நூல்.
“நிறை நரம் பிற்றே பண்ணெனப் படுமே குறை நரம்பிற்றே திறமெனப்படுமே” என்பதற்கிணங்கப் பண்ணும், திறனும், ஆங்காங்குப் பாடல் களில் காணுவதை இசை வல்லார் எளிதின் அறிவர்.
இராகம் தாளம் பற்றிய குறிப்புக்கள் எம்மால் கொடுக்கப் பட்டிருந்தாலும் வேறு தகுதியான ரீதியிலும் இசையுலகம் பாடி இன்புற வேண்டும் என்ற கருத்தினாலேயே, பல பாடல் களுக்கு வண்ணங்கள் (மெட்டுகள்) கொடுக்கப்பட்டில. ஏழிசையின் இயல்புமறிந்தார்க்கு இஃது அமிர்தமாவது போல், ஏனையர்க்கும் ஆகவேண்டும் என்பதே என் இலட்சி

யம். இன்றைய உலகில் மலிந்துள்ள பல்வேறு வகைத்தான சங்கீதங்களின் இயல்புகளையும் இந்நூலிற் கண்டின்புறலாம்.
அணிந்துரை தந்துதவிய, கம்பளை ஸாகிராக் கல்லூரி ஆசிரியர் பூணூரீ க. அழகரத்தினம் புலவர் அவர்கட்கும், இந்நூல் நல்ல முறையில் வெளிவர பக்கமாய் இருந்த புலவர்மணி, ஆபிதீன் புலவர் அவர்கட்கும், அழகிய முறையில் அச்சிட்டுத் தந்த ராஜன் எலக்ட்ரிக் பிரஸ் அதிபர் அவர்கட்கும் என் நெஞ்சு கனிந்த நன்றி என்றும் உரித்து.
முத்தமிழ்கண் இசைத்தமிழ் ஒப்புயர் வற்றது. கல்லை உருக்க
வல்லது. எனவே, தமிழகம் இந்நூலை வரவேற்று ஆதரிக்கு மென்று கருதுகிறேன். வாழ்க இசைத் தமிழ்!
கம்பளை இங்ங்னம் 11-3-1954 பாவலர். கி.மு. நல்லதம்பி சாய்பு

Page 5
அணிந்துரை
பாவலரின் “இசைத் தேன்” என்னும் இந்நூலுக்கு அணிந்துரை செய்யும் பேறு பெற்றமைக்குப் பெரிதும் மகிழ்கின்றோம். பாமரரும் பண்டிதரும் பாடகரும் நற்பயன் பெற வேண்டும்; இசைப்பயிற்சி எங்கணும் ஒளிவிட வேண்டும் என்ற இலட்சியத் தையே உயிராகக் கொண்டு பாவலர், கீதங்களை யாத்துள்ளார் என்பதை எளிதில் உணர்தல்கூடும். சமயம், சமரசம், அரசியல், சமூகம், பொருளாதாரம் என்ற மிகப் பெரும் அம்சங்களை இலக்காக வைத்தே பாக்கள், ஆற்றொழுக்குப் போலத் தூய நடையில் சென்று கொண்டிருக்கின்றன.
கருவிலே திருவுடைய பாவலர் எக்கவிதையையும் வலிந்து, மாரடித்துப் பாடுவதில்லை. "தெய்வப் புலவனுக்கு நாவுணரும்” என்பார்களே அஃதே போல, உணர்ச்சி வேகத்தால் எழுந்த பாக்களே "இசைத் தேன்” என்று கூறுவதில் வழுக்களில்லை. பண்டை நாளில் வரகவிகள் தாம் தமிழ்த்தொண்டில் பெரிதும் ஈடுபட்டிருந்தார்கள். நம் ‘நல்லதம்பிப் பாவலரும்’ ‘தமிழ்’ என்றால் தன் வசம் இழந்து விடுவார். தமிழ் நலம் தெரிந்த பெருந் தகையாளர் என்றே இவரைக் கூறிவிடலாம்.
பாவலர் சாய்பு அவர்களின் விவேகமும், கண்ணியமான நடையும், கவியாக்குமியல்பும் சாலச் சிறந்தன.
இளமையிலிருந்தே சங்கீதத்தில் திளைத்ததன் பயனாகவே "இசைத் தேன்” காட்சியளிக்கின்றது. இந்நூலில் பல கீர்த்தனங் கள் அமைந்துள்ளன. புதுமையும் எளிமையுமான இனிய தமிழ்ச் சொற்களின் ஆற்றலையும் அழகையும் பாவலர் கீதத்திற் பரக்கக் dJ5s s600 s6Us sLO,
இத்தகைய சிறந்த நூல் பல பல்கிப் பரவவேண்டுமென்பதே எமது
வேணவா. சங்கீத ஞானமுள்ள யாரும் இந்நூலை இருகரமும் நீட்டி வருக என்று வரவேற்பரென்பது எம் கருத்து.
ஸாகிராக் கல்லூரி, ங்ங்னம்,
கம்பளை ஆசிரியர் dos. அழகரத்தினம் புலவர். 11-2-1954

கி.மு. நல்லதம்பிப் பாவலர்

Page 6

ଭist
27. 28.
பொருளடக்கம்
பொதுப் பகுதி
வணக்கம் நல் விருந்து தன்னைத் திருத்து பசிப்பினி திருநாள் வள்ளுவன் வாக்கு பாலர்களே! நாடு நலம்பெற ?
if 06Ö) f) உளத்திலே தெய்வஞானம் இசை இன்பம் இறை செயல் அன்பே நற்பண்பு போலிக் காதல் ஏய்க்குமுலகம் பகுத்தறிவு
D60T -9Lgsd5LO வாழ்க்கை இன்பம் அன்பும் அறிவும் சிந்தனை அஞ்சாதே எங்கே, எங்கே எங்கள் நாடு புரிந்துகொள்ள வேண்டும் சரிதானா? பெண்கள்
இஸ்லாமியப் பகுதி நபிகள் பிறப்பு நபி பிறந்தார்
பக்கம்
11
12
13
14
15
16
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
31

Page 7
29.
30. 31.
32.
33.
34. 35. 36. 37. 38. 39. 40.
41.
42. 43. 44. 45. 46. 47. 48.
49. 50. 51. 52. 53. 54. 55. 56. 57. 58. 59. 60.
நபி நற்போதனை நபி சொல் கலைக் கடல் நன்மதி
நல்லருள் ஜீவ தாஹா
வேதம் மலைக்காதே பின்பற்றுவோம் கவனம் செல்ல வழி புகழ்மாலை நாவுக்கினிமை இது நல்லதா இன்பம் சமூகச் சீர்திருத்தம் எது செய்வோம் FFLDT.gif நாயகம் சொல்வது சமரச ஞானம் ஜெகம்புகழ் ஜின்னா
செய்யுட் பகுதி கன்னித் தமிழ் கல்வி விழி ஒளிபோன்றது ஆசிரியர் இலக்கணம் மாணவர் இலக்கணம் சபை ஒழுக்கம் புத்தகப் படிப்பு தண்மதியம் உருவில் மனிதன் இடாம்பீக விருந்து பெற்றோரைப் பேண் பெரியோரைப் பேண் இல்வாழ்வு
32
34 35
37
38
39
40
42
43
44
46
47
48
49 50
52
53
54
55
56
58 59 60 61
62
63
65
67
68
69
71
72

6 l . 62. 63. 64. 65. 66. 67. 68. 69. 70. 71. 72.
73. 74. 75. 76. 77. 78. 79. 8O. 8.
82.
பிள்ளை வளர்ப்பு சாதிமத பேதம் மறப்பதும் மன்னிப்பதும் சகோதர ஒற்றுமை பொருளிட்டல் பரோபகாரம்
ஒழுக்கம்
திடநம்பிக்கை வெகுதூரம் போகவேண்டும் கூட்டுறவு மாண்பு மதுபானம் வளர்க விஞ்ஞானம் சிரித்த முகம் இப்படி இரு இன்பக் கனவு அன்புப் பரிசு நல்ல நாய் (க) நல்ல நாய் (உ) மாமா இருக்கிறார் அம்மா சொன்னாள்
திருப்தி
பிற்சேர்க்கை மரதன்
73
74
75
76
77
79
80
81
82
84
85
87
89
91
92
94
95
96
98
100
104
105

Page 8
தற்சிறப்புப் பாயிரம்
*இறைவன் பண்ணில் அமிழ்ந்தியிருப்பன்; கறவை பால்சுரந்தூட்டும் கன்றுக்கு; ஏருழும் பகடு இன்னிசை கேட்கும்; விடவராவாட் விரும்பும் கீதம், கொடும்பேய் இராகம் குழல்வழிக் கேங்கும்; சமூகம் ஆனந்த சாகரத் தாழ்ந்தும்; கல்லும் உருகும்; கயமை ஒழியும்; எதனால் என்னின் இசையால் என்க. இசைமயமான இந்நூற்றாண்டில் எவரும் பாடி இன்பம் கொள்ள லளிதஞ் செறிந்த சொற்பொருள் தன்னால் கீத மியம்பக் கிடைத்த ததனால் ஏத மகற்றும் இறைபணி வாமே.
-ஆக்கியோல்
அடிமறி மண்டிலவாசிரியப்பா,
* கடவுள் வணக்கமும் செயப்படுபொருளும் ஒருங்கே கூறப்பட்டன.

பொதுப் பகுதி

Page 9

வணக்கம்
எல்லா உலகும் புரந்திடும் ஏகனை வல்லவிறை என்றே வணங்கு.
(பல்லவி)
தேவா, தேவா, தேவா தினமுனைத் துதிசெய்தோம் வா, வா
(அனுபல்லவிகள்)
தவநிலை தாங்கும் தாரக மேதா
தரணியில் எவர்க்கும் சமரச வேதா நாமா, தூயா, யாருங் காணா நலக்கடலே வா, வா
அவரவர் அறிவினில் ஆகம நூலா அந்தரங்கமதை உணர்ந்தமெய் மேலா
அடியார் தமக்கே அருளும் லோலா அகில சிலாக்ய கலா ஜனன மரணபயம் ஒழித்திடும் தாதா மனமுறையிற் தினம் துதிப்போர்கட் கீதா
சேமா, காந்தா, கேட்போம், மீட்பாய் தீனதயா நிதியே பகலிர வென்பதன் இயற்கையை நிதானி பாடித் துதிக்குமன்பர் பலன்கண்ட ஞானி
பாரவர் யார்க்கும் தெய்வம் தான் நீ
பரமனெனுந் திருவே
இராகம் : விஜயனாகரி
தாளம் : ஆதி
(தேவா)
(தேவா)
(தேவா)
(தேவா)
(தேவா)

Page 10
நல்விருந்து
நல்விருந்து அன்பு நடுநிலைமை ஆன்றகுடி புல்லுவினையூக்கம் புணை.
(பல்லவி)
சிந்திப்போம் நாம் தோழரே! சிறந்து வாழச்
(அனுபல்லவி)
வந்தவர் மறைந்தார்; வலியவர் குறைந்தார், வழக்கம் இயற்கை நிலையைத் தெரிந்து
(சரணம்)
அன்பெனும் மருந்து
அதுபெரும் விருந்து அகிலமனைத்தின் அறிவின் நிலையைச்
வாழ்ந்தவர் எங்கே தாழ்ந்தவர் எங்கே தனியே யிருந்து விதியை, மதியைச்
நாயக வாக்கியம்
நம்பினால் பாக்கியம் நம்மிறையருளை நனிபெற வெண்ணிச்
இராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஏகம்
(சிந்திப்)
(சிந்திப்)
(சிந்திப்)
(சிந்திப்)
(சிந்திப்)

தன்னைத் திருத்து
தன்னைத் திருத்தித் தகவுடைய செய்தாரே பொன்னினும் மிக்கார் புவி.
(பல்லவி)
குறை பேசியே நீ உனை மோசம் செய்தால் உயர்வாகுமோ - அது - முறையோ (குறை)
(அனுபல்லவி)
அறியாமல் அவரவர் பெருங்குறையாலே ஆனந்தமாய் பிறரை இழித்தோதலாமோ?
மேதை மதித்திடு முறை இதுவாமோ?-மாந்தர்காள்! மானில வாழ்வு பொய்யாமோ? (குறை)
(சரணம்)
நயந்தே பலரை அன்பு மயத்தினால் வெல்வோம் நமக்கே உதவாக்கறைக் கொள்கையைத் தள்ளுவோம் நல்ல தமிழிசை நாட்டிலே சொல்லுவோம் நாதனாம் அறிவினை நாடியே செல்வோம் (குறை)
இராகம் : காபி
தாளம் : ஆதி

Page 11
பசிப்பிணி
பசிப்பிணியுற்றாரைப் பார்த்துணர்ந்தும் அன்பாய்ப் புசிப்பதற்கொன்றியார் புவி.
(பல்லவி)
உலகம் உலகம் உலகம்! ஓ! பல நாட் சில பேர் பசியால் - உடல் நலியா வாழ்வது எங்கே? (உலகம்)
(அனுபல்லவிகள்)
இங்குள்ள வேதம் இயம்பிடும் போதம்
இதற்கென்ன வழி சொல்லக் கண்டாய் இங்கும் எங்கும் இது பசிப்பிணி நோய்
இதைப் போய் எவர்காண வென்றார் நெஞ்சில் இரக்கமில்லா நிலை என்றார்
இந்தக்கொடுமையால் பலரை வாட்டியே
கொன்றார். வாழ்க்கையின் தலை விதி என்றார் (உலகம்)
பார்த்தறி வார்க்குப் பகல் போல் காணும் பாருக்குள்ளே இந்த உண்மை பகைமையும் கொடுமையும் பகுத்தறி வின்மையும்
பலனிலாத் துயர்தரும் அந்தோ! எந்தப் பாதகன் செய்வினை வந்தோ
நேர் கருணையின் வழிகெடுத் தந்தோ விந்தை வறியர் என்றார் மனம் நொந்தோ (உலகம்)

மனித ரெல்லோரும் ஒர்குல மென்னும்
மிக்க போதனை உண்டு இதை மறந்தோம் இரக்கமில்லாமல் இருதயம் தெரியா திருந்தோம் இரும்பாகிலும் கரையுமோ ஐயா!
இதமுணரா முதியோர் மதியால் சிறியோர் மனமும் கரையுமோ மெய்யா (2) 65lb)
இராகம் : தர்பார் கானடா
தாளம் : ஆதி
படம். பாய்ஜ" பெளறாவிலுள்ள “பக்வான்’ என்ற ஹிந்தி இசையிலும்
பாடலாம்.

Page 12
திருநாள்
திருநாளும் ஒன்றுண்டு; செல்வம் திரண்ட பெருநாளும் அந்நாளே பேசு.
கேளுங்கோ - கேளுங்கோ - கேளுங்கோ
(பல்லவி)
நாமொரு நாளும் மறவாத திருநாளிங் கேது! பாரிலே கூறுவீர் ஞானவானே - ஒ! ஞானவானே உணர்ந்தால் வரும் உண்மைதானே (நா)
(அனுபல்லவி)
நிலையான தென்றெண்ணி நினையாது போனால் மலைபோல வந்தும்மை மாய்க்கும் நாளுண்டு பலமான கோட்டைக்குள் பலரோ டிருந்தும் நாம் இழிவான காயம் எங்கோ சென்று மாயும்
இதை எண்ணினால், இதை எண்ணினால் இலேசாகும் துன்பங்கள் இன்பம் கொண்டாட நாமுமே மாந்தரே உயிர்போகு முன்னாலே (நா)
இனமென்றே பலபேரும் எதைக்காணும் செய்வார் இனிமீள முடியாதென் றிறையோனை நாடி இறுமாந்த வாழ்க்கை அலங்கோல மாகி இதுதா னிந்த வாழ்க்கை இதை யெண்ணிப் பாரு
இனம் சொந்தமா? மனம் சொந்தமா? கனவானே நீர் கூறும் குணமான தெது பாரும் மாந்தரே உயிர்போகு முன்னாலே (நா)
"பாய்ஜ" பெளறா’ என்ற ஹிந்தி சினிமாப் படத்தின் ‘தூகங்காகே' என்ற இசையிலும் பாடலாம்.

வள்ளுவன் வாக்கு
தெள்ளுதமிழ் வள்ளுவனார் செப்பிய வான்பொருளை உள்ளுதோறுாறுமறிவூற்று.
(கண்ணிகள்)
வள்ளுவன் சொன்ன வகையெலாங் கண்டு வாழுவோம் இந்த நாட்டிலே தள்ளுவோம் குப்பை அறிவிலாக் கொள்கை தங்குமோ இன்பப் பாட்டிலே (வள்)
செல்வன் என்பதும் கள்வன் என்பதும் சேர்க்குஞ் சூழ்நிலை வாழ்விலே செல்வியாம் தமிழ் அன்னை ஒளவையின் செப்பருங் கலைக் காவிலே (வள்)
சித்த னென்பதும் முத்த னென்பதும் செய்கை கண்ட மெய்ச் சாட்சியே சுத்தமாய்க் கம்பன் சோடித்தான் தமிழ்த்
தெய்வ மென்றொரு காட்சியே (வள்
என்னதான் இல்லை ஏதுதான் இல்லை ஏற்குமே குறள் வேதமே அன்னை தந்தையர் பந்துவாம் மித்ரர் அனைவர்க்கும் அருள் கீதமே (வள்)
வாழ்க செந்தமிழ்! வாழ்க வள்ளுவன் வான்பொருள் துணை தாங்குமே வாழ்க வையகம்! வாழ்க வண்டுறை வாகை சூடுக வண்டமிழே (வள்)

Page 13
பாலர்களே !
பாலர்காள் நூங்கட்குப்பாட்டொன்று சொல்கிறேன் சீலமுடன் கேட்கச் செவி.
* சின்னச் சின்ன பாலர்களே! சிங்காரத் தோழர்களே! ஒன்றாகக் கூடிவிளையாடுவீரே - நீவிர்
நன்றாகக் கல்விநயம் தேடுவீரே - ஒ (சின்ன)
குணத்தாலே புவிமேன்மை கொண் டாடணும்-நல்ல
இனத்தாலே கவிபாடி விளையாடணும்
மனத்தாலே அன்னை தந்தை சொற் கேட்கணும்-அதை
நினைத்தாலே ஒழுக்கங்கள் மேலாகனும் அன்பு மேலோங்கணும். (சின்ன)
அழியாத கலைச் செல்வம் வளர்ந்தோங்கணும்-வித்தை
அறிவித்த குருமாரைத் துணை சேரனும்
செழிப்பாகத் தினம்பள்ளி விரைந்தேகனும் - கல்வி அளிப்பார்க்கு வெகுநன்றி செய்தாகணும் வாழ்வு முன்னேறனும் (சின்ன)
அறிவுக்கு உயிர்தந்த இறைவன் சதம்-உண்மை அன்பிற்கு அன்பான அறிவே சுகம்
அறியாமை தனைநீக்கும் அறமே சதம்-கூடி
அனைவோரும் நாட்டிற்குச் செய்வோம் நலம் அது தானே பலம்.
* “இசைமுரசு’ E. M. ஹனிபா HM.V. 95090 நெ இசைத்தட்டில் பாடி யுள்ள பாட்டு.

நாடு நலம் பெற. . .?
(பல்லவி)
நாடு நலம் பெற வேண்டும் - நம் நாடு நலம் பெற வேண்டும் வாழ்வு வளம் பெற வேண்டும் - மக்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் (நாடு)
(சரணானுபல்லவிகள்)
பாடு படுவதற்கும்
பாரின் பண்பு உயர்வதற்கும் கேடு தொலைவதற்கும்
அறிஞர் காட்டும் வழி நடப்போம் தேடும் உடல் உழைப்பும்
கலைகள் தீவிரமாய் ஓங்க வாடும் மனத்தினர்க்கும்
நல்ல வாழ்வை மலரச் செய்யும் (நாடு)
மெய்த் தொழிலாம் உழவு
வளர்ந்திட மேதினியே செழிக்கும் பொய்த்த விரோதங்களும்
ஒழிந்தால் மதப் போராட்டம் நின்றுவிடும் வைத்த வழக்கமெனும் பல
வகைப் பேதங்கள் தானொழிந்தால் கைத்தொழில் வர்த்தகங்கள்
வளம் பெறவே செழிக்கும் (நாடு)
மண்ணால் குதிரை செய்து
அதிலேறி மாநதிதான் கடக்க எண்ணினால் ஆகாது
இதன் பொருள் எல்லோருமே யறிவோம் கண்ணான இன்பத் தமிழ்
நமக்கு நல் ஆக்கம் தரும் புதுமை பண்ணாகவே சிறந்து
இந்தப் பாரெங்கும் வாழ்ந்திடவே (நாடு)
9

Page 14
DI 6ðDD
மடமை பலவெண்ணி வாழ்புவி மாந்தர் திடஞானம் கொள்ளல் சிறப்பு.
(பல்லவி)
பலரும் தெரிந்த இந்தப் பாருலகத்தின் தன்மை பார்த்துப் பார்த்துத் தேருவீர் -
பலன் கோருவீர் (பலரு)
(சரணானுபல்லவிகள்)
வலிமையும் எளிமையும் வாழ்வினில் எங்கே வழிதரும் அறநெறி வகுத்தவை எங்கே வாய் அன்பு பேசினால் வாய்க்குமோ பங்கே வகை யிதற்கு உண்மை அன்புதான் இங்கே (பலரு)
படித்தறிந்தோமென்று பறை போட்டுக் கொண்டோம் பாரில் நமக்கெதிர் யாரென்று நின்றோம் பட்டப் பகலில் கண்ட கனவை மெய்யென்று கண்டோம் பகலுமிரவும் ஒன்று தானென்று நின்றோம் (பலரு)
சேர்ந்து பிரியும் பஞ்சபூத மருந்து - அது
சேர்ந்து கலைவதற்குள் வேண்டும் விருந்து
சுகம் பெருக இதனைச் சிந்திப்போ மிருந்து
சூத்திரம் தவறினால் பறந்திடும் பருந்து (பலரு)
இராகம் : சிந்து பைரவி
தாளம் : ஆதி
10

உளத்திலே தெய்வ ஞானம்
உளத்திலே தெய்வஞானம்சேர் புலவன் வளத்திலேன் தாழ்வான் வழுத்து?
(பல்லவி)
உயிருள்ள போதுண்மைக் கவிஞரை மதித்தாரில்லை உலகில் ஒகோ இது பெருந் தீங்கென ஏனோ? இவரறியாமலே மதித்தாரில்லை. (உயி)
(பல்லவி எடுப்பு)
திட்டமிட்டுப் பலவித முட்டுக் கட்டைக ளிட்டுமே மதித்தாரில்லை (உயி)
(சரணம்)
உளத்திலே தெய்வத் தன்மையை ஊட்டும் கள்ளமில்லாமலே கவிநயம் காட்டும்
உண்மைக் கவிஞரை மதித்தாரில்லை. (உயி)
கம்பன் தானென்ன? காளிதாசன் என்ன? காளமேகம் இன்னும் பாரதி தானென்ன?
-மதித்தாரில்லை? (உயி)
இராகம் : பைரவி
தாளம் : ஆதி
11

Page 15
இசை இன்பம்
கன்னித் தமிழ்மொழியின் காணவின்பம் போலமறு வன்னமொழி தானுண்டோ? ஒய்.
(முதல் நிலை)
நல்ல நல்ல பண் அமைத்து நன்றாகவே சுவைத்து - நல்ல நட்பாகும் மான கானத்தாலே - நமது இன்பம் நன்றாகுமே தமிழினாலே (நல்ல)
(இடைநிலை)
நம் பாட்டில் இணக்கம் வேண்டும் நந் தமிழின் ஆர்வம் தூண்டும் அறிவாகும் சற்றே யோசித்தால் ஆகுமே நல் வாழ்வு கேட்டில்லையோ நீ கதை முன்னாலே கலைவளத்தைப் பாழாக்கலாகுமோ
மண்மேலே (நல்ல)
நன்று என்று நாம் நினைத்தால் இந்தஞான மன்றம் மன்றம் எங்குமே வளர்க்குந் தானம் நற்றமிழை நாம் விரும்பினாலே நமது இன்பம் நன்றாகுமே தமிழினாலே (நல்ல)
12

இறை செயல்
நன்றும் புரிவன்நாம் நாடாமல் வேறாய தொன்றும் தருவன் இறை.
(முதல் நிலை)
ஆடாது ஆடினும் பாடாது பாடினும்
வாடாத மலரேது?
ஆட்டம் எதுவும் ஆண்டவன் செய்கை
நாட்டம் நமக் கேது?
(இடைநிலை)
மெய்யே நிறைமயமாய்
நீராடும் தன்மையைப்போல் வையகமும் வானகமும்
வகுத்தபடியே நடக்கும்
நன்மை யென்றும் தீமை என்றும்
நல்லோர் தெளிந்த முறையே தன்னலம் கருதாத அன்பு
தருமம் தலைதாங்குமே
விதிக ளென்ன மதிக ளென்ன
பதியில் தோன்றும் காட்சிகள் இன்னமும் தெளிந்திட வேண்டும் இகபரம் இதமாகுமே
13
(sge4ʻL —fT)
(94L-IT)
(-94 IT)
(94 -T)

Page 16
அன்பே நற்பண்பு
பண்பிற் சிறந்ததே அன்பு படிமீது நண்பிற் சிறந்தது மில்.
(தொகையறா)
அன்பில் குறைந்தவர் என்றாரே
நேசம் மறந்தவர் அறிவீரே
அன்பினில் நன்மை காண்பீரே
அறிவுரை உமக்கிதுவே ஒ!
(முதல் நிலை)
கேள் அன்பினிலே உயர் பண்பினிலே மனத் தென்பில் கூடிடுவோம் இதேவழி அன்பினில் பாடிடுவோம். (G56it)
(இடை நிலை)
அன் பாவதும் அருளாவதும்
ஆடாத மனம் அதை மேவினால்
நரர் போதனை புரிவார் பாருலகினில்
நமதறிவே அன்பினால் ஆடுதையா (கேள்)
இன்ப மாவதும் துன்ப மாவதும்
இறையோனை அறியாமல் இயங்குமோ?
நரர் போதனை புரிவார் பாருலகினில்
நமதறிவே அன்பினால் ஆடுதையா (கேள்)
14

போலிக் காதல்
உடலின்பம் நாடி உணர்வுகொளும் காதல் விடல் நன்று; போலி வினை.
(கண்ணிகள்)
கவிஞர் பலரும் கலைஞர் சிலரும் காதற் கதைகளைக் கவினச் செய்வர் புவியில் மாந்தரை உயிருடன் கொல்லும் போதை காதலின் பாலது அன்று.
காத லென்னுமோர் காலச் சனியனைக் கட்டி யழுகின்ற காமுக மாந்தரே! காத லென்பது களங்க மற்றநற் தூய அன்பின் தொடரெனக் கொள்மின்.
கற்ற விற்பனர் மற்றவர் யாரும் காமுக ரென்னும் ரீதியில் நிற்பின் உற்ற பலனில் ஒழிந்த காதலே உயர்ந்த தோவெனில் உலைந்த தென்கவே.
அற்ப ஜீவனில் அழிந்தொழிந்தபின் அங்கு நிற்குமோ அன்பின் காதல்? நற்பயன் பெற நாம் நாடுவோ மென்னில் நாளும் போலிக் காதலை வெறுமின்,
கண்டு மருண்டு காசு பணத்தைக் கொண்டு தொடர்வது காமுகர்க் காதல் வண்டு மலரும் வான்குழல் மாதும் என்றுங் கணவனும் ஒப்புவ காதல்.
15
(கவி)
(கவி)
(கவி)
(கவி)
(கவி)

Page 17
ஏய்க்குமுலகம்
ஏய்க்கு முலகம் இதைநம்ப வேண்டாங்காண்; வாய்க்கமுத்தி நாடு வழி.
(பல்லவி)
மனமே புவன மாய்கையிலே மோகம் வையாதே மலைபோல் காட்டி ஏய்க்குமது
எல்லையில்லாதே (LDGOT)
(அனுபல்லவி)
கானலதை நீரென்று நீ கருதிக் கொள்ளாதே - தினம் கனகாம்பரம் வாய்க்குமென்று கனவு காணாதே
(LD6ð7)
(தொகையறா)
அற்பமாம் ஜீவனம் அதன்மேல் நிமித்தமாய் அடர்ந்தரசு செய்தா ரெங்கே? அவனிமேல் வெகு காலம் ஜீவிக்க எண்ணியே அருங்கற்ப முண்டார்களெங்கே? (மன)
(பல்லவி எடுப்பு)
பெண்டு பிள்ளை என்ற சந்தை வேடிக்கைக் கூத்து - அதைக் கண்டு கரையேற வழி தேடிக்கொள் பார்த்து
16

தொண்டு செய்தால் தேவனருள் வாய்க்குந் தப்பாது - குணம் கொண்டு நின்று பர்ர்ப்பவர்க்குக் கோவை பொய்க்காது (LD60T)
(சரணம்)
ஆதியந்த மற்ற உண்மை தேவ தயாளம் - நன்கு அறிந்து வாழ விரும்புவார்க்கு அஃது உபகாரம் அறிவுமன்பும் பெருகும் ஞானத்தமிழ் மொழியாரம்
-இசை
அணிந்து உயர்வு தாழ்வு நீங்கப்பாடும பாரம் (மன)
இராகம் : ஹிந்துஸ்தான் பியாக்
தாளம் : ஆதி
17

Page 18
பகுத்தறிவு
பகுத்தறிய மாட்டாத பாமரன் வாழ்வு நகுதற் பொருட்டென்னும் நாடு.
(பல்லவி)
நன்மையே நல்லதென்று அறியாத மாந்தரை நாமினி என்ன சொல்வோம் நயமுடன் பலன் தரும் ரகசியம் இது வெனும் (நன்)
(அனுபல்லவி)
அன்பிலே தெய்வம் அகத்திலிருப்பதை முன்பின்னாய்ப் பேசியே மோசங்கள் செய்வதால்
(நன்)
(gg g00TLb)
ஏனென்று கேட்கவும் ஆளில்லை யோவென்று ஏனையா அறிவிழந்தார்? நாதமும் கீதமும் நாட்டினி லுண்டு நல்லன மேற்கொண்டு நயமோங்கச் செய்தொண்டு
(நன்)
இராகம் : கரகரப்பிரியா
தாளம் : ஆதி
8

மன அடக்கம்
ஐந்து புலனு மடக்கித் தொழுவார்க்கு நொந்தழுத லுண்டோ நுவல்
(பல்லவம்)
கைமேல் பலன் பெறுவீர் மெய்யறிவினால் பயம் நீங்கும் பரா பரன் பதாம்புஜம் தொழுது
(கை)
(அனுபல்லவம்)
காண்பதெல்லாம் கனவு கானல்போ லாகுமே கயமையும் பகைமையும் நம்மைவிட்டு ஒடுமே
(6ᏡᏯᏏ)
(சரணம்)
இன ஜனங்கள் என்னுமிச் சந்தையில் மனமொடுங்காவிட்டால் மாய்க்குமே மந்தையில் ஆனதினால் பெரும் அன்பு கொண்டாரே அதையறிந்தே தூய தன்மைகொள்வாரே (கை)
இராகம் : ஷண்முகப்பிரியா,
தாளம் : ஆதி
19

Page 19
வாழ்க்கை இன்பம்
வாழ்விலே இன்பம் வருதற்கு நாமுழைத்தால் சூழ்வினையும் ஒடும் தொலை.
(பல்லவி)
ஆகுமோ இது ஞாயமோ? - சொல்வீர் ஆணவங் கொள்ளலாமோ? (马@
(அனுபல்லவி)
ஏகம் யாவரும் எங்குமே சமம் என்பதே திரு வாக்கியம். (ஆகு)
(சரணம்)
பகையுடன் அன்பு பரந்த உலகினில் பரவுதல் பலன் கூடுமோ? வகையறிந்துநல் வாழ்வைத் தேடினால் வாய்க்காமல் அது ஒடுமோ? வாழ்விலே நலம் நன்று காண்பதே வண்டமிழ்த் திரு வாக்கியமே. (ஆகு)
இராகம் : தேஷ்
தாளம் : ரூபகம்
e 92 g w துன்பம் நேர்கையில்” என்ற வண்ணம்
20

அன்பும் அறிவும்
அன்பின் வடிவே அறிவின் பெருஞ்சுடரே இன்பின் முதலே இறை.
(பல்லவம்)
நீஞானி தேவா நிகழ் காலம் யாவும் நேரே நின்றே மெய் காக்கும் (நீ)
(அனுபல்லவங்கள்) நானே மேவினும் மேவாது போயினும் தானாக வந்தென்னைத் தாய்போல் கைதாங்கும் தானான தெய்வமென்றே காணும் உண்மை மேலான உன்றன் நாமம் சீரோங்கி வாழ்க,
தேவாதி தேவா (நீ) அறிவை நோக்கிநீ யாரென்று கேட்டால் அனைத்தும் வல்லோன் அவனேயென்றோதும் ஆனாலும் அன்பைக் காட்டும் தெய்வம் உன்போல் உண்டோ எங்கேனும் நன்றேரீ சொல்வாய்,
தேவாதி தேவா (நீ)
இராகம் : மோகனப்பிரியா. தாளம் : ஆதி
"பூமாலை’ என்ற இசையிலும் பாடலாம். (படம்: பராசக்தி)
21

Page 20
சிந்தனை
இனியன சிந்தித் தியற்றுவதால் இன்பக் கனிபெறலாம் என்று கழறு.
(பல்லவி)
சுகம் பெறும் வாழ்வினையே நினைவோம் மனமே (சுகம்)
(அனுபல்லவி)
இகத்தமர் என்பதும் இதுமனப் பாங்கே இவர்பிறர் என்றும் இது செய்யுந் தீங்கே (சுகம்)
(சரணம்)
தேக மென்னு உடல் யார் தந்ததோது தெய்வீகத் திரு வாக்கும் பொய்க்காது தேவன் அமைப்பினில் அசலென்பதியாது தேறித் தெளிந்தால் தித்திக்கும் என்றோது (சுகம்)
இராகம் : காபி
தாளம் : ஆதி
22

அஞ்சாதே
(பல்லவி)
உண்மையில் பொல்லாத பயமொரு பேய்!
உயிரைக் குடித்திடும் உதவாத நோய்! (உண்)
(அனுபல்லவி)
தின்மை விளைத்திடும் தீண்டாதே நெஞ்சே தீராத தொத்து நோயது நஞ்சே (g) 6T)
(சரணம்)
உள்ளத்தில் சற்றும் இடமேகொடாதே உதவுநல் தைரியம் நீகைவிடாதே எள்ளத்தனையும் அச்சப்படாதே என்றென்றும் நேர்மை நீமறவாதே (உண்)
இராகம் : அம்ஸாநந்தி.
தாளம் : ஆதி
23

Page 21
எங்கே, எங்கே?
அட்டைஸ் வரியம்எங்கேசெய் அரசெங்கே? மட்டற்ற போகமெங்கே மண்?
(முதல் நிலை)
மா மன்னர் வாழ்வும் எங்கே? மகிழ்வான போகம் எங்கே? மனமே! கூறு இங்கே (L DfT)
(இடைநிலை)
மதியாத மூடர் எங்கே ?
மத வெறியர் பேயர் எங்கே?
மன முரடர் கசடர் எங்கே?
மதியீனர் அசுரர் எங்கே?
மகா கொடியர் துச்சர் எங்கே?
மனமே! நீ சொல்லு இங்கே (LDIT)
வழமை புதுமை எங்கே?
இளமை முதுமை எங்கே? செழுமை பசுமை எங்கே?
சிறியர் பெரியார் எங்கே? சீச்சீ என்ன காணும் அங்கே
சிறிதுண்மை தான்நம் பங்கே (LDIT)
அல்லல் துன்பம் தாண்டும் உயர்
அன்பின் உண்மை வேண்டும் செல்வ மெல்லாம் வேண்டும் ஜெய சீலர் வாழ்வில் யாண்டும் நல்ல நேசம் சேர வேண்டும்
நலியாத இன்பம் தூண்டும் (L DfT)
“ஏ ஜிந்த கீகா மேலே’ என்ற ஹிந்தி மெட்டு.
24

எங்கள் நாடு
(முதல் நிலை)
* எங்கள் நாடும் எங்கள் நலமும் எந்நாளும் நிலை என்றே, சங்கே முழங்கு! எந்த இனமும் எங்கள் இனமாம் இதுவே அறிஞர்கள் காட்டும் நல்வழியாம் (எங்)
(இடைநிலைகள்)
துன்ப்மெனும் துயர்க்கடலில் துடிப்போரைக்-காத்து இன்ப நிலை அடையாதார் இருந்தென்ன-லாபம் அன்புடனே வாழ்ந்திடுதல் சரியென்று கூறும் நல்லோர்கள் சொல்வதை நீ முழங்கு சங்கே (எங்)
தன்மானம் தனைக்காக்கும் தனி உரிமை வாழ்க! தாயகத்தின் தனிப்பெருமைக் கலைவளங்கள் வாழ்க!! பண்ணோடு செந்தமிழும் பார்செழித்து வாழ்க!!! பாடுபட்டுப் பலன்காண முழங்கிடுவாய் சங்கே!
(எங்)
* “இசை முரசு’E.M. ஹனிபா HM.V. 95090 நெ இசைத்தட்டில் பாடியுள்ள பாட்டு,
25

Page 22
புரிந்து கொள்ள வேண்டும்
வேதம் புகன்ற புரியாதான் வாழ்க்கையோர் காதம் மணவாதெக் கால்.
(முதல் நிலை) சொன்னால் தெரிந்து கொள்ள வேணுமே-நற் சொல்லை மதிக்கவும் வேணுமே - நாம் இன்பம் பொழிந்திடவே (சொன்
(இடைநிலை)
சூரத் தனங்கள் கோரத் தனங்கள் கோழைத்தனத்தால் வந்த
கொடிய அகங்காரம்
குணத்தைக் கெடுக்கு மிந்தக்
கொள்கை தகாதே (சொன்)
வாழ்க்கையில் மின்னும் வழக்கங்கள் என்னும் வகைதெரியாமல் சொன்ன வார்த்தைகள் இன்றும் நம் போனாலும் போகு தென்னும்
தன்மை தகாதே (சொன்)
படம் : அவன்
w 91 இசை : “மின்னல்போல்” என்ற வண்ணம்
26

சரிதானா?
பல்லவி)
பாழும் உடம்பென்று பரிகசிக்காதே! பாலும் பழமும் உண்ணத் தவறிவிடாதே!
(அனுபல்லவி)
சூழும் உலகியல் சிந்தித்து முன்னோர் சொன்னவை யாவும் கவித்திறனே
(சரணங்கள்)
சாவது உண்மை என்பதிலே சந்தேகம் யாருக்கும் இல்லையப்பா! ஆவது அவன்செய லென்பதனால் ஆண்டவன் சிருஷ்டியை வீழ்த்துவதா?
இருக்கும் வரையிலும் மற்றவர்க்கு இன்னல் தராமல் நன்மைசெய்ய பெருக்கும் அறிவைப் பெறுவதற்கும் பேசும் உடல்வளம் தேவையன்றோ
சித்தர் முனிவர் ஞானிகளின் சிந்தனை சென்றது வேறுவழி உத்த உடலுக்கு மதிப்பில்லையேல் உயிருக்குப் போக்கிடம் ஏது சொல்வாய்
27
( Iff)
(UT)
({ ifT)
(זחL_j)
(LIT)

Page 23
பெண்கள்
கண்ணிகள்}
நல்ல குணமான பெண்கள் செல்வம் தரும் நாட்டின் கண்கள்
கல்வி நலம் வேண்டுவதும் நிஜமா, பொய்யா? நல்லொழுக்கம் நல்லடக்கம் நாடும் கலை வளங்கள்
நனி சிறக்க வேண்டும் இது நிஜமா, பொய்யா?
காதல் கனியாகும் பெண்கள் கண்ணியமாய் வாழ்வதற்குக்
கணவன் அன்பு வேண்டும் இது நிஜமா, பொய்யா? மேதினியிலே சிறந்த மேலான பெண்களினம்
வீரமுடன் வாழ்ந்த கதை நிஜமா, பொய்யா?
உத்தமப் பெண்கள் குலத்தால் உலகம் செழிக்குமென்ற
சித்திபாத்திமாவின் மொழி நிஜமா, பொய்யா? எத்தனை விதம் சொன்னாலும் ஏற்காத இந்த “லேட்டஸ்ட்
அம்மையார் செய் நாகரிகம் நிஜமா, பொய்யா?
பல்லைக்காட்டி மோசம் செய்ய எண்ணங் கொள்ளும் வாலிபரின்
கள்ளச் சிந்தைதஸ்ள வேண்டும் நிஜமா, பொய்யா? செல்லப் பிள்ளை போல் வளர்ந்த சீமான்கள் செல்வர் பலர்
சீரழிந்து போன கதை நிஜமா, பொய்யா?
28

9606VIIIÖuIÍ IIÖj;

Page 24

நபிகள் பிறப்பு
ஒன்றே இறையென்றுலகுக் கெடுத்துரைத்து நன்றே புரிந்தார் நபி.
(பல்லவி)
நபி பிறந்தனரே - நானிலத் தோரே ! நலன்களின் தந்தையானாரே, பவக்கடல் சூழ்ந்த பல கொலைத் துரோகங்கள் பாதகந்தனைத்தவிர்த் தனரே. (நபி)
(தொகையறாவும் பல்லவி எடுப்பும்)
சமத்துவக் கலைக்கடல் சரிநிகர் தியாகி
சன்மார்க்க நெறிகண்ட சாயுட்ச யோகி சகல லோகமத தாராள யூகி சல்லல்லாஹ் நபியெனும் விதேகி
சங்கை முழங்க மங்கள பாஸ்கர ஜெகத் குரு நபி பிறந்தனரே அங்கையெனுந் திருச் செங்கர மேந்தி ஆண்டவன் நபி பிறந்தனரே (நபி)
(தொகையறாவும் பல்லவி எடுப்பும்)
மானிலத்தில் மக்களினம் ஒன்றே என்றும் மதித்துத் தலைவணங்கத் தேவனொருவ னென்றும் மக்க மஹ்மூது நபி சொன்னார் அன்று மதிபெருகி மதித்ததனால் மகிழ்ந்தோம் இன்று
29

Page 25
அன்பு நிலைக்கவும் அறநெறி யோங்கவும் அஹ்மது நபி பிறந்தனரே அவனியில் மாந்தர்க்கு அருள் வழி காட்டிட அண்ணலாம் நபி பிறந்தனரே நாத வினோத குணாலய மாதவ நாமமே வாழிய சோபனமே நாமினித் தமிழில் நயந்துரை சாற்றுவோம் நாயகற்கேசுப சோபனமே (நபி)
இசைந்த வர்ண மெட்டில் பாடிக் கொள்க.

நபி பிறந்தார்
வையகம் உய்யவும் மானிடர் போற்றவும் துய்யநபி வந்தார் துதி.
(பல்லவி)
குரு நாயகமா நபி நாயகமே குலமே செழித் தோங்கிடு மாதவமே (குரு)
(அனுபல்லவிகள்)
அருளானந்தமாய் வந்த அண்ணல் ரசூல் அலைசூழ் கடல் யாதினுமே யவர்மேல் அகமே மகிழ்ந்தே ஸலவாத் துரையில் - தினம் அன்புடன் ஒதிடுவோம் அவர் பால் (குரு)
நிலைமையின் உண்மையைச் சொன்ன குரு கலை ஆய்வதன் தன்மையைச் சொன்ன குரு தலை தாய்மையின் தாரகமான குரு பிறந்தார் என்று மானிலம் போற்றும் பிரான் (குரு)
ஜீவ காருண்யமே உருவான நபி ஜெக மோங்கும் பிரபல்ய குணாள நபி பஜனாம்ருத கீதங்கள் போற்றும் நபி பிறந்தார் என்று மானிலம் போற்றும் பிரான் (குரு)
சர்வ நன்மைக்கும் சேகர மானபிரான் சுகவாழ்வு சிறக்கத் தொனிக்கும் பிரான் சதமான மனோநிலை சூட்டும் பிரான் பிறந்தார் என்று மானிலம் போற்றும் பிரான் (குரு)
31

Page 26
நபி நற் போதனை
வாழ்வாங்கு வாழ்ந்து மனிதர்க்குப் போதித்தார்
ஆழ்துயரம் நீங்க அறிவு.
(பல்லவி)
அல்லாஹ்வின் தூதரென்றால் யாரும்
அறிவார் உலகில் (அல்)
(அனுபல்லவி)
பொல்லாத புன்மைகள் நீக்கி நல்வாழ்வைப் புவிக் களித்த (அல்)
(மகுடம்)
உலகம் பல நிலை தடுமாறிக் கலகம் பல தினமும் விளைந்து கொலையும் பல களவும் நிமிர்ந்த நிலைகண் டிறையோன் நமக்களித்த (அல்)
(சரணங்கள்)
அரசனும் அடிமையும் அன்பாய் வாழ்ந்திட அவர் போதித்தார் மார்க்கம் - அதை அவனியில் இன்று நாம் அசட்டை செய்வது தானே பெரிய மூர்க்கம் (அல்)
அன்பின் துணையா லகில மனைத்தும் ஆளச் சொன்னது வேதம் - அது சரிதான் சரிதான் என்று ஏற்றபின் சருகி நடப்பதனிதம் (அல்)
32

ஆணும் பெண்ணும் சரிநிகர் உரிமை என்றிரஸஜூல் நபி சொன்னார் - அதை அவரவர் மனத்திலிருத்தித் திருத்தம் ஏனோ பண்ணார் இந்நாள் (அல்)
ஒற்றுமை என்பது இஸ்லாம் மதத்தின் இணையில்லாப் பெரும் சீலம் - இன்று எங்கு பார்த்தாலும் இறைவனை ஏய்க்க என்னையா பெருங் கோலம் (அல்)
33

Page 27
நபி சொல்
எல்லோரு மோர்குலமாய் இன்புற்று வாழவழி சொல்லலுற்றார் நாதன் துதி.
(பல்லவி)
எம்பிரான் நபிகளின் திரு வாக்கே ஞான மானமெலாம் காட்டும் வாக்கே நல் வாக்கே (6 TL b)
(அனுபல்லவி)
அம்புவி மாந்தர் துன்பங்கள் தீர்க்கும் அல்லாஹ்வின் தூதர் சொல் நயம் காக்கும் (எம்)
(சரணங்கள்)
சமரச வேதம் சாந்தமே போதம் சிாவசித்தாந்தம் சாயுட்ச காந்தம் (எம்)
நம்பினோர்க் கின்பம் நாளுமுண்டாக்கும் நற்றவப் பீடம் நாடினால் மீட்கும் (6 TL b)
இராகம் : காபி
தாளம் : ஆதி
34

கலைக் கடல்
கல்லாது கல்விக் கடலான உம்மிநபி
சொல்லாதனவுண்டோ சொல்.
(பல்லவி)
கலைக்கடல் போற்றும் காத்திமே தாஹா
நிலைத்திடம் காட்டும் நீதியின் தாஹா (கலை)
(பல்லவி எடுப்பு)
மகா மேதையான சாஸ்வத ஞானி சுகா சுகம் யாவும் தர்ம நிதானி (கலை)
(தொகையறா)
கருணையின் தந்தையாம் மேலோர் கல்விகற் காத கலைப் பெரிய நூலோர் அன்பிற்கு அன்பான சீலர் அற்புதர் யார்க்கும் தயாள கன நாதர்
(சரணம்)
குரு நபி பிறந்த திருநாளே இந்தக் குவலயம் யாவும் உயர் வாலே அருமை மிகு வள்ளல் மேலே அன்பாய் ஒதுவோம் சலவாத்து செயழுறைகளாலே
(பல்லவி எடுப்பு)
சகல கலாநிதி சமதர்ம ஜோதி சுகமெல்லாம் பெற வழி போதித்த நீதி (d566)6))
35

Page 28
(தொகையறா)
நானிலத் தேவர்க்கும் வழி காட்டி நல்ல பொன் மொழி அருங்கலை யாகவே பூட்டி நமக் கடங்காத பொய்ப் பேய்களை ஒட்டி நபி நாயகத்திரு மொழி காட்டுவதே பேட்டி
(பல்லவி எடுப்பு)
நாடென்றும் வாழக் கேடொன்றும் இல்லை நாமறிந்தால் நபி நாயகர் சொல்லை (கலை)
36

நன்மதி
மாந்தர் நலம்பெறவே மக்கள் புகழ்நபிகள் வேந்தர்மதி சொன்னார் விழைந்து.
(முதல் நிலை)
நம் புவி முழுதும் பிழைக்கும் வழி சொன்னாரே நபி சொன்னாரே - நபி - சொன்னாரே இனங்க ளெல்லாம் ஒருகுல மேயென்று சொன்னாரே - நபி - சொன்னாரே நபி (நம்)
(இடைநிலைகள்)
வீண்போ ராட்டங்கள் எங்கும் வேண்டாமென மக்கா மன்னர் நபி உண்மை சொன்னாரையா ஏனோ இதை நாம் உணர்ந்தோமில்லை உணர்ந்தோ மில்லை உணர்ந்தோ மில்லை (நம்)
ஆண்பெண் பாலரே அன்பு அல்லாஹ்வின் மேல் அந்த அண்ணல் நபி அருள்கண்டாரையா நல மோங் கிடவே நல்ல சீலர்களாய் நலம் பெறுவோம் நலம் பெறுவோம் (நம்)
"ஹம்துற்ஸே முஹப்பத்” என்ற ஹிந்தி மெட்டு
படம் : அவாரா
37

Page 29
நல்லருள்
நல்லருள் வேண்டின் நலம்பெறுக வையமென்று சொல்லுக, அன்பே தொடர்.
(பல்லவி)
தன்னலம் எல்லாம் தலை சாய்க்குமே தாஹா நபியருள் தான் வாய்க்குமே - பொல்லாத்
(தன்)
(அனுபல்லவி)
தன்னுயிர்போல் மன்னுயிர் யாவையும் எண்ணிடவே இந்நிலமே நன்மைபெற நாமறியோமே (தன்)
(சரணம்)
தேன் மனத்தால் அன்பு செய்ய வேண்டும் தீதென்றறிந்தால் விலகிக் கொள்ள வேண்டும் தேவ ரெல்லாம் தான்தேடி யுணர்ந்தால் தேறும் உள்ளமிங்குத் தேவை நன்கு கண்டு கொண்டு பூவில் (தன்)
இராகம் : சாருகேசி
தாளம் : ஆதி
படம் வேலைக்காரி
& o , 29 o w
இன்னமும்” என்ற வண்ணம்
38

ஜீவ தாஹா
(பல்லவி)
அன்புதானே, தன்மயமான தாரணி குருவான தாஹா தங்கும் காருண்யமே ஜீவ தாஹா (அன்)
(சரணானுபல்லவிகள்)
இன்பம் பெறுவார்க்கு அருள் மார்க்கங் காட்டும் துன்பம் துயராதி துயரெல்லாம் ஒட்டும்- என்றும் அழியாத பெருவாழ்வில் குருவாய் நிலைத் தோங்கும் தாஹா தவறெல்லாம் போக்குமெய்த் தாஹா (அன்)
காலம் கருதாமல் கன துன்பம் செய்தோம் கதி காணாமல் கருத்தை இழந்தோம். பாலம் கடத்தும் தயைக் கடல் காத்தம் ரசூல் நபி தாஹா என்னும் கண்ணொளியே ஞான தாஹா (அன்)
நாடும் நலமெல்லாம் செழித்தோங்க நாளும் நம்பி இசைபாடும் முறையீட்டைக் கேளும் வாடும் வறுமைப் பிணிகள் பொல்லா வதைகள் தொலைத்திடும் தாஹா வள்ளல் நெயினார் முஹம்மதே தாஹா (அன்)
இராகம் : ஹிந்துஸ்தான் செஞ்சுருட்டி
தாளம் : மிஸ்ரம்
"வன்னமானே’ என்ற மெட்டு

Page 30
வேதம்
இறையோனின் இஸ்லாம் எழில்பெருக, வேத முறைதந்தார் நாதர் முயன்று.
(பல்லவி)
அல்லாஹ் சொன்ன வேதமே அன்பின் மார்க்கம் ஆகுமே தொல்லை எல்லாம் தீர்க்குமே இல்லை யென்றால் பாருமே (அல்)
(தொகையறா)
பாசங் கொண்டு மயங்கியே காணாத ஆசை கொண்டு மோசம் ஆனபின்னால் - கன சோதனை அடைவதன் நியாயம் என்ன?
(பல்லவி எடுப்பு)
கோலை ஊன்றிக் கோட்டைபோல்
குறித்தாலும் ஆகுமோ?
குடிநீரு முண்டாகுமோ?
குடித்தாலன்றித் தீருமோ? (அல்)
(தொகையறா)
நபி நாதர் நாட்டில் உண்மை ஹபீபானோன் சொன்ன தன்மை "நபிளான நன்மை தானே புவியிலே பேசுவோமே
40

(பல்லவி எடுப்பு)
நல்ல சொல்லை நாடுவோம் நாவினிக்கப் பாடுவோம் நம்பிக்கை கொண்டோதுவோம் நன்மை யெல்லாம் சூடுவோம் (அல்)
இராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி
41

Page 31
மலைக்காதே
கண்டு மலைக்காதே காருண்ய ராம்நபிக்குத் தொண்டாற்று வேனென்று சொல்.
(பல்லவி)
மலைக்காதே நீ மனமே மக்கா நபிசொல் மறக்காதே ஒரு கணமே (LD)
(அனுபல்லவி)
மலைகள்பெரு விருட்சம் மனிதர் குல மனைத்தும் நிலைமங் களம்பெருக நினைத்தோனைத் தொழுதிட
(LD)
(சரணம்)
நித்தியா னந்த சுகமும் பேரின்ப வாழ்க்கையும் நிதமும் நமக்கு வேண்டும் என்றுதான்
சொன்னார்கள். நானிலத்துள்ளோரே நாம் உண்மை காண்போமே நல்லநீதி நெறியைத் தேனென்னு கொள்வோமே (LD)
இராகம் : சிந்து பைரவி
தாளம் : ஆதி
42

பின்பற்றுவோம்
அண்ணல் ரசூல்நபி அன்று புகன்றமொழி
கண்டுமுன் செல்வோம் களித்து.
(பல்லவி)
அண்ணல் ரசூல் நபி நேர்வழி கண்டே
அன்பீர் அடைவோம் - அருள்வழி (அண்)
(அனுபல்லவி)
கண்ணே மயங்கி நாம் பேரின்பம் காணாமல் காற்றில் போய்விடுமோ அதற்குமுன் (அண்)
(சரணம்)
மானிடனே நபி பேசினார் என்றால் மானில மதித்திடுமே - மறை எல்லாம் உணர்ந்திறை தன்னிடம் கொண்டுள்ள சன்மார்க்கம் இயம்பிடுமே இன்னமும் யோசிக்க இடமில்லை என்றால் தன்னம்பிக்கை தருமே திருமறை நெறியால் திசையெல்லாம் முழங்கத் தேவ ராஜ மதியாய் முழங்கிடும் (அண்)
படம் : ஹாரிதாஸ்
வண்ணம் : “மன்மத லீலையை”
இராகம் : சாருகேசி
தாளம் : ஆதி
ஆ 43

Page 32
சுவனம் செல்ல வழி
சுவனப் பதிசெல்லத் தூயவழி காட்டும் தவத்தார் நபியொருவர் தான்.
(பல்லவி)
அருமை முஹம்ம தென்போம் - நாம் அருமை முஹம்ம தென்போம் புகழ் ஏட்டின் புவன மெல்லாம் செழிக்கச் சுவனப் பதியில் சேர்க்கும் (அரு)
(அனுபல்லவி)
பெருமை யெல்லாம் தொலைத்துப் பூபதியைக் கண்டாய் - புவிமீது பேணி மனம் நிறைந்து பிழைத்துக் கொள்வாய் நன்றாய் (அரு)
(சரணங்கள்)
கற்பனை செய்வதென்றால் கருத்திற் கெட்டாதே கருணை நபி சொல்திரு வாக்கைத் தட்டாதே காரண மின்றி ஒன்றைக் கருத்தில் ஒட்டாதே காண்பதெல்லாமழியும் கதவில் முட்டாதே (அரு)
காத்திரமாய்ப் பாடு படுகின்றோம் நாமே கணத்தில் ஜடலம் விட்டு ஒடியே போமே காத்தமுல் அன்பியா சொல்நிச மாமே கருணைக் குணம் இருந்தால் கதிபெறலாமே (அரு)
44

நாட்டினில் பாட்டுக்கள் கேட்டிட வேண்டும் நல்ல பொருள் நயத்தை நாம் கொள்ளத் தூண்டும் நாட்டத்தில் சத்தியம் தன்னைத் தீண்டும் நயவஞ்சகத்தை நீக்கி நல்லறிவுற்றிட மீண்டும்
(அரு)
“பெருமை கொள்வோம் தமிழா” என்ற இசை
45

Page 33
புகழ் மாலை
புகழ்மாலை தூதர்க்குப் புனைந்தாலும், அஃதை இகழ்வாரலரோ இயம்பு?
(பல்லவி)
சங்கை வாய்ந்தவா குபேரா! சர்வரே! தயா மகா மனங் கனிந்தவா பரா! (சங்)
(சரணானுபல்லவிகள்)
தங்கு மங்க ளாங்க தாஹா தர்ம தாரணாங்க யோகா! திங்க ளார்ந்த திவ்ய தேகா! தேவா தேவா பாஸ்கரா - பரா! (சங்)
சர் ஜீவ சாந்த மேதா! சமத்வமே வேதாந்த போதா! சகல சாஸ்த்ர காந்த தாதா! தாஹா தத்வ சாகரா - பரா! (சங்)
இராகம் : சிந்துபைரவி
தாளம் : ஆதி
“சந்திர சேகரா ஈஸா’ என்ற வண்ணம்
46

நாவுக்கினிமை
நாவுக் கினிமை நலந்தரும் பண்ணிசை கோவுக் கினிமை குடி,
(கண்ணிகள்)
வேதம் முழங்குது அங்கே - விதியின் விளையாட்டு முழங்குது இங்கே - வினை விதி மயங்குவ தெங்கே - அருள் விளைத்தாடும் நபியவர் பங்கே,
தேனையும் பாலையும் போலே - புகழ் தெய்வத் தூதிரசூல் நபி மேலே ஒதும் சலவாத்துரை யாலே - அங்கே ஒன்றாய்த் தெரிவதைப் பாருங் கண்ணாலே.
ஏகன் தூதிறை வாக்கு - அதில் எதையும் பெரிதாக நோக்கு உண்மையின் தந்தையார் நாக்கு - இந்த உம்மி நபியின் செல்வாக்கு.
நானே பெரியவன் என்றால் - பலர் அதிற்றானே பெரியவன் என்றார் - சிலர் எல்லோரும் ஒன்றெனக் கண்டார் - குரு உம்மத் முஹம்மது என்றார்.
நாவுக் கினிப்பது பாட்டு - நபி நாயக வாக்குகள் கேட்டு நலமில்லாத வையற ஒட்டு -இனி நல் வழியைச் சுட்டிக் காட்டு.
47
(வேதம்)
(வேதம்)
(வேதம்)
(வேதம்)
(வேதம்)

Page 34
இது நல்லதா?
இந்த நிலைநன்றா? இஸ்லாத்தின் மேல்நிலைகள் நொந்திடுதல் நன்றா? நுவல்.
(பல்லவி)
இந்த நிலை நல்லதா? - ஐயா! இஸ்லாம் மதத்தின் புனிதத் தன்மை இதிலுள்ளதா? (இந்)
(சரணானுபல்லவிகள்)
எந்தை சகோதரம் என் றநற் பேச்சு ஏன் ஐயா! உமக்குள்ளே இல்லாமற் போச்சு பசுமுன் புலி பாய்வது போலு மாச்சு பல இனப் பிரிவினையோ நபி பேச்சு? (இந்)
சோனகர் தானகர் யாவரும் நாமே மாநகர் கோன்நபி உரை யிவை தாமோ? போனவர் மீள்வரோ யோசிப்போம் நாமே பொல்லாங்குடன் ஒற்றுமை ஒட்டாது போமே
(இந்)
ஞான கலாநிலை நாட்டிடு வோமே நமக்குள் இருக்கும் பகை ஒட்டிடுவோமே ஆணவ எண்ணம் அதிகத்தீது ஆமே அதையறிந்துளம் ஒன்றாய்க் கூடுவோம் நாமே
(இந்)
இராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ஆதி
48

இன்பம்
பல்வேறு இன்பங்கள் பாரிலுள ஆனாலும் நல்லின்பம் ஒன்றே நவில்.
(பல்லவி)
சுகமான இன்பம் தேடுவோம் சுகத்தை நாடுவோம் (சுக)
(அனுபல்லவி)
ஜெக ஜால மெல்லாம் ஆகுமோ? சிறிது நாம் யோசிப்போம் - மிக விரிவாய் - யோசிப்போம்
(சுக)
(சரணங்கள்) பேர் பெற்றால் அன்பு வாய்க்குமோ? சீர் பெற்றால் வாய்க்குமோ? ஊர் சொன்னால் அன்பு வாய்க்குமோ உயிர் என்றால் ஏய்க்குமோ? (சுக)
விஸ்வாசம் உண்மை அன்பென்னும் மேல் பண்பில் பாருங்கோ - அதை அன்பில் - சேருங்கோ இஸ்லாத்தின் ஐந்தும் ஆறென்னும்தரம் இதுதான் தேருங்கோ-இது சரிதான்-கூறுங்கோ
(சுக)
நபி விதியாய் ஒன்றைச் சொன்னார் என்றால் அஃது அன்பே தானுங்கோ, சந்தேகம் ஏனுங்கோ அவிவேகம் எல்லாம் போக்கு மென்றால் அஃது அன்பு தானுங்கோ - ஆழ்ந்து மெய்மை - காணுங்கோ
(சுக) இராகம் : சிந்து பைரவி தாளம் : ஆதி
49

Page 35
சமூகச் சீர்திருத்தம்
சமூகத் திடைநிற்கும் சாதிமத பேதம் எமைவிட் டோட இனி.
(பல்லவி)
சதா நினைந்தறிவோமோ -நாமே (சதா)
(அனுபல்லவி)
கீதமூலம் பாடிப் பாடிச் சாதி பேதம் நீங்க நாடி (சதா)
(தொகையறா)
சர்வமத தாராள சர்வஜன செளஜன்ய சன்மார்க்கமாகும் இஸ்லாம்
(அனுபல்லவி எடுப்பு)
சாசுவத முத்திக்கு வழிதந்த உத்தம சைதன்யமான இஸ்லாம் சாதுவாய் மாந்தர்க்குச் சமதர்மம் நாட்டும் சல்லல்லாஹ் நபி மறைவழி காட்டும் (சதா)
(தொகையறா)
சாதியில்லை இங்கோர் சனியனும் இல்லை ஒதினார் நபி பிரான் தனித்தொரு சொல்லை சந்தர்ப்பம் போல் எல்லாம் கொடுக்கிறார் தொல்லை சன்மார்க்க மென்று பலர் காட்டுகிறார் பல்லை
(சதா)
50

(தொகையறா)
உழக்குக் குள்ளே கிழக்கு மேற்கென்று சண்டை ஊக்கப்படுத்துவதால் உடையுமே மண்டை உத்தமமாம் ஒற்றுமை அதனைக்கைக் கொண்டே உயர் முறையாய்ந்துய்ய தவச்சொல் கண்டே (சதா)
51

Page 36
எது செய்வோம்
மாய வலையில் மதியற்றுச் சிக்கிநாம் மாய்வதா, வாழ்வதா மண்?
(பல்லவி)
நாயகம் சொல்போல் நடக்கணும் நயம் புரிந்து நலமாய் மனத்தில் உணர்த்தணும் தீனோர்களே
— 6TLb (நா)
(அனுபல்லவி)
தூயவனை நாம் தொழுது நிற்பதா? அல்லது மாய வலையில் மாய்ந்து வீழ்வதா? தீனோர்களே — 6 TLb (நா)
(சரணங்கள்)
சுகந்தரும் இறை சொல்லைக் கேட்பதா? அல்லது சுகத்தின்பால் நம் உயிரை மீட்பதா? பகைமைக் குணம் படை எடுப்பதா? அல்லது பஞ்சம் என்றே பதறிக் கொள்வதா? பகுத்தறிவோடு பார்த்தால் தெரியுமே தீனோர்களே
—- 6 TL b (நா)
அல்லா தரும் வேத மாச்சுதே - அல் புர்கான் எனும் கீத மாச்சுதே - அதை அன்பாய்க் கொண்டு வாழ்வோமே தீனோர்களே — 6TL b (நா) படம் : வாழப் பிறந்தவள் பாட்டு : “சந்திரனைப்போல்” என்ற வண்ணம்
52

“FFL DIT GõT”
நம்பிக்கை ‘ஈமான்’ நடுநிலைமை இன்பம்வீண் நம்பிக்கை கேடுகார் நா.
(கண்ணிகள்)
இஸ்லா மதிலே இன்பம் இறையோன் இயம்புகிறான் கேளிர் உண்மை விஸ்வாசமதே ‘ஈமான்’ பிசகாதவனே சீமான் என்று (இஸ்)
சுத்த மாவதிலே என்னவோ சுக மாகுமே புவிமேல் நேயா! இந்த மந்திரமே பாரும் மேலாம் வந்தனை யாகுமே சலாம் (இஸ்)
இந்தப் பூதலத்திலே பெறலாம் புகழாம் மனித வாழ்வே நாமே இந்த உண்மை ஞானம் அன்பதாகும் உணர்ந்தால் இன்பம் காணும் (இஸ்)
இங்குக் காணும் காட்சி யாவுமே உவமான மில்லான் செயலாமே மிக மங்கலான நோக்கம் தீர்ந்தால் பொங்கும் இன்பமே தானே (இஸ்)
படம் : திவானா.
இசை : “தஸ்வீரு”
53

Page 37
நாயகம் சொல்வது
பண்பாடமைந்திந்தப் பார்முழுதும் வாழமதி நண்பாலுரைத்தார் நபி.
(பல்லவி)
அறிவை வளர்த்திட வாரீர் அஃது ஆண்டவன் நபிமொழி பாரீர் )9ے[]n[(
(அனுபல்லவி)
ஆரமுதிதுவென்று கேளிர் - புகழ் ஆக்கும் மஹ்மூதர் போற்றினார் தேரீர் பண்பாய்ப் பண்பினிலே பாட்டிசைப் பீரே (அறி)
(சரணம்)
மக்கள் இனம் ஒரு கூட்டம் - அந்தோ ! மானிலந் தன்னிலேன் போராட்டம் தக்க இறைவன் மேல் நாட்டம் - உண்மை கொண்டவர்க் குண்டோவீண் திண்டாட்டம் பண்பாய்ப் பண்பினிலே, பாட்டிசைப் பீரே (அறி)
பகைமைகளை எல்லாம் ஒட்டும் - நல்ல தகைமையில் நமக்கு நேர் ஈட்டும் மகிமை எல்லாம் வந்து சூட்டும் - இந்த மாண்பினை மாந்தர்க்கு நம் நபி காட்டும் பண்பாய்ப் பண்பினிலே, பாட்டிசைப் பீரே (அறி)
இராகம் : தேஷ்முக் தாளம் : ஆதி
54

சமரச ஞானம்
சமரசஞானம் தலைப்பட்டால் மாந்தர் தமராகி வாழ்வார் தளிர்த்து.
(பல்லவி)
ஞான முஹம்மதர்காண் - நபியெனும் ஞான முஹம்மதர்காண் நிலத்தில் நீசன் என்றே ஒரு சாதி இல்லை என்ற ஞான முஹம்மதர்காண் (ஞான)
(மகுடங்கள்)
ஞானப் பிரகாச ரெனுங் குரு மூலக் கருணாலயனின் திரு (ஞான)
கந்தம் தங்கும் பரிமள சந்தம் பொங்கும் பிரபல (ஞான)
சகித்த உளத்தில் திருத்தம் விளைத்த சுகித்த மனத்தின் குணத்தை அளந்த (ஞான)
(அனுபல்லவி)
மான மெல்லாம் தந்த மாந்தரின் ஜோதி மதித்து நடப்பதற்கு ஒதினார் நீதி (ஞான)
நாட்டிலே ஒன்று இரண்டல்ல நன்மை நபிபிரான் மனிதர்க்குப் போதித்த உண்மை (ஞான)
நாமெலாம் மனமொத்து நடப்பதே தன்மை நல்ல தமிழினிசை சொல்லுமே மேன்மை (ஞான)
இராகம் : சிந்து பைரவி
ாளம் : ஆதி தி ஆ 55

Page 38
ஜெகம் புகழ் ஜின்னா
கட்டறுத்து மட்டற்ற இன்பநலம் காட்டிய அட்டதிசைக் கண்ணல்ஜின் னா.
(தொகையறா)
பாருக்குள்ளே நல்ல நாடொன்றைச் செய்தனன் பலர் தர்ம சேஷம மோங்கப் பாக்கிஸ்தா னென்னுமோர் புதுப்பெயர் தந்தனன் பலர் துயரம் வறுமை நீங்க.
(பல்லவி)
ஜின்னா-ஜின்னா-ஜெகம்புகழ் மன்னா ஜீவியம் முழுவதும் கவி இக்பால் சொன்ன
(ஜின்னா)
(அனுபல்லவி)
தன்னலம் கருதாத் தாத வினோதா தனக்கென வாழாத் தகைமை சேர்மேதா
- (ஜின்னா)
(சரணம்)
பேரறிவாலுளத் தூய்மையைத் தூண்டிப் பேதையர் போதனை யாவையுந் தாண்டிப் பேருலகெங்கணும் மெய்ப் புகழ் வேண்டிப் பெருமித மார்பணி சிந்தையைத் தூண்டி
(ஜின்னா)
இராகம் ஹிந்துஸ்தான் தோடி தாளம் : ஆதி
56

G 方
W LI TG6) 6)
thi )
ன் நல்லத
திதாசனுட
ந்தர் பார
பாவே

Page 39

Gay Liu II (55

Page 40
கன்னித் தமிழ்
என்றும் அழகியாய் இன்பத்தின் ஊற்றமாய் நின்றதமிழ் வாழ்க நிதம்.
பாண்டியனால் வளர்ந்த கன்னிப்
பருவமுடை யாளை அன்று தூண்டியநல் அன்பால் வேண்டித்
தொண்டுபல செய்தார்; சங்கம் ஈண்டியபேர்க் கவிஞர் என்றால்
இவள்பெருமை சொல்லலாமோ தாண்டிபல் கடலை யெல்லாம்
தமிழ் மொழியே! என்றும் வாழ்க. (1)
அழகுடைய ராணி எங்கோ?
அனைத்துலகும் மெச்சு கின்ற வளமுடைய மொழி நீ எங்கோ?
வாளரசர்க் கொளிநீ எங்கோ? பழகுகிளி மொழியும் நானும்
பைந்தமிழை என்ன என்பேன்! உழவரிடை வளரும் கன்னி!
உனதுதிரு நாமம் வாழ்க! (2)
58

கல்வி, விழி ஒளி போன்றது
உலகுயிரைக் காண ஒளிவேண்டும்; கல்வி நிலவுலகில் வாழ நினை.
(அகவற்பா)
கண்தரும் ஒளியே கல்வி யென்க, விண்தரும் ஒளியே கதிரோன் மதியம்; கதிர்மதி யொளியில், கல்வி யொளியே முதிர்தரு பெருமை முற்றிலு முடைய பாஷைகள் பலவும் படித்ததால் கற்றோர் வேஷம் பூணலாம்; என்றால் வேடிக்கை வாழ்வழி வாழ வழிவகை கொண்டு சூழ்வார்த் தழிஇச் சுற்றம் கெழீஇ அறமும் பொருளும் நற்குடிப் பிறப்பும் பிறழா இன்பும், பின்னர் மோட்சமும் நல்க வல்லதாம் ஞானக் கல்வியே வல்ல கல்வி மண்ணிடை என்க விஞ்ஞானக்கலை மேல்நாட்டார்க்கும் அஞ்ஞானந்தனை அளித்துள ததனால் இறையிலை என்று ஏமாந்துளரால் மறைமுறை காக்கும் வளமுடைக் கல்வி எந்நாட் டவர்க்கும் இனிமை பயக்கும் பன்னாட் பழகுக பண்புள கல்வி ஆய்ந்து அறிந்து அதன் வழியில் ஈந்து அன்புடன் வாழ்க நன்றே.
59

Page 41
ஆசிரியர் இலக்கணம்
நன்று படித்துணர்ந்து நாட்டு நலம்புரிய நின்றான் குருவாம் நினை.
எல்லாக் கல்வியும் உளணிவ னென்று சொல்ல வல்லார், துதிப்பக் கற்று மாணவர் தமக்கு வாய்விட்டுரைத்து நாணம் காத்து நல்வழிச் செலுத்திப் பன்னாள் ஆய்ந்த பருப்பொருள் காட்டி இந்நாட் கல்வியோ டிருநிலையூட்டி அன்பும் பண்பும் ஆதரவும் யாவும் இன்பு மொழியும் இழுக்கில் ஒழுக்கம் தன்வயின் கொண்டு தன்னையும் காத்து மன்பதை மாட்டு வைத்த அன்பால் பழிப்பு இழிவு பகுத்தறிவானாய் விழிப்புடன் நேர்வழி காட்டும் வீரன் தாய்போற் சுரந்து தமர்போல் தாங்கி வேய்போல் அறிவில் மிகவும் வளர்ந்து தந்தையாய் இருப்பக் கல்வி, சிந்தையோ டீவான் சிறந்தவா சிரியனே.
60

மாணவர் இலக்கணம்
வருங்கால வையத்தை மாழாது காக்கும் பெருஞ்செயலான் மாணவனே பேசு.
(ஆசிரியப்பா)
மலர்ந்த முகமும், வாய்மை யுரைக்கும் பலர்புகழ் நிலையும், படிக்கும் ஆர்வமும், உடனலம் உளநலம் ஒருங்கே யமைந்து திடமுட னெழுஉம் சீரிய பண்பும் அடக்கம் ஒழுக்கம் அமைதி அன்பும் இடமறிந்துரைசொல் இயல்பும் முயற்சியும், ஆசான் தன்னை அஞ்சும் நெஞ்சும் கூசா தெழுந்து குறித்தவை வினவி ஐயந் தெளியும் அருங்குணப் பண்பும் தூய நடையும் சொற்போர் முழக்கும் ஆற்றலும் கடவுள் அன்பும் உடையவனாய் ஏற்ற பணியை இயற்றும் தகையனாய் வெள்ளென எழுந்து விரைந்து கடமை துள்ளிப் புரிந்து சுகநிலை காத்துப் படிக்கும் பொழுதிற் படித்துப் பின்னர் துடித்து ஒடிச் சோம்ப லகற்றி வீட்டின் நிலையை விரும்பி உதவிக் கூட்டுற வோடு கூவிப் படித்துத் தந்தை தாய்மைத் தற்பரன் தானென வந்தித்து வாழ்வோன் மாணாக் கன்னே.
61

Page 42
d60) ஒழுக்கம்
நல்லோர் பெரியோர்கள் நாடும் சபையிடத்தில் எல்லாம் ஒழுக்கம் இனிது.
(நேரிசையாசிரியப்பா)
வயதின் மூத்தோர், வாலிபர், கற்றோர் நியதி கூடி நிகழ்த்தும் மன்றம், அவையென, சபையென அழைக்கப் படுமால் , இவையிடம் சேர்ந்தார் என்று ஒழுக்கம் தவறாது நடத்தல் தானே பெருமை. இவருடன் அவரும், அவருடன் இவரும் குசுகுசு பேசுதல் கூடிச் சிரித்தல் அசுத்தம் செய்து அவமதிப் பதுவாம்; சொற்சோர் வின்றிச் சொல்ல முயல்க; விற்படை கொளினும் சொற்படை கொளற்க எனைத்தும் அமைதி இருங்குணப் பண்பு தனைத்தான் கொள்ளத் தாங்குக பொறுமை; சற்புத் திரனிவன் எனச்சபை மெச்ச நற்புத் திரனாய் நடத்தலே சாலும். கூடினார் மனது குளிரும் வணமும் ஊடினார் என்று உணர்ரா வனமும் சொல்லாற் செயலாற் காட்டாது ஒல்லும் வாயெலாம் உஞற்றுக நன்றே.
62

புத்தகப் படிப்பு
புத்தகந் தன்னைப் படித்துப் புலமடைந்தால் வித்தகர் தாமோ விளம்பு?
(விருத்தம்)
வேடிக்கைப் பேச்சுரைத்து வித்தாரம் பேசி
விதவிதமாம் நூற்கடலில் தோய்ந்தெழும்பலாலும் கோடிபணம் செலவிட்டேன், பல்கலைக் கழகம் குறித்தபடி வெற்றியது கூட்டவே வாழ்ந்தேன். நாடியினிக் கற்பதற்கு நான்காணேன் நூல்கள்
நவிலென்று நண்பரையே கேட்பார்கள் உண்டு பேடிகை வாள்போலாம் நூலறிவு வையப்
பெரும்படிப்பே மேலறிவு பேசமற் றுண்டோ? (1)
(வேறு)
பள்ளிதனிற் படித்ததையும் வாழ்வில் காணும்
பருத்தபொருள் தனையுமிகக் கூட்டி நன்று உள்ளத்தில் மிகப்பதித்து நுண்மைப் புலனால் உலகத்தி லுலவிடுவோன் விற்பன னாம் பள்ளத்தில் வருமழைபோல் இன்பம் வந்து பாயுமதி பேருண்டு; படிப்பு முண்டு; பிள்ளையுளம் புத்தகத்தால் மாறு மாமோ?
பேதலித்தார், ஏமாந்தார், பேசு வீரே. (2)
63

Page 43
மண்குதிரை தனைநம்பி ஆறு நீந்த
மாற்றம்சொல் வானும்நூல் அறிவு கொண்டு தண்கடலில் இறங்குவோனும் சமமே யாவன்;
தக்கவய துற்றபின் தானே வந்து திண்மைதரு மறிவுடனே நூலில் பெற்ற
திருந்தறிவும் கூடினாற் கேட்பா னேனோ வண்ணத்திலும்வண்ணமாகு மன்றோ
வாய்க்கதைபோல் புத்தகத்தின் படிப்பு மாமே (3)
64

தண் மதியம்
தண்மதியம் வையத்தின் தாயொக்கும்; வானிலவு வெண்கதிரோன் தாதை விளம்பு.
(விருத்தம்)
வீசும் நிலவே! முழுமதியே!
விடிந்தால் நீஎங் கேகுவையோ? ஆசு மதுரக் கவிஞர்களும்
அன்பாய் உன்னை நாடுவதேன்? பேசும் அன்பர் பரிதியிலும்
பெரிதோர் மகிமை உனக்கென்பார் தேசம் புகழும் உடையாய்நின்
சீர்த்தி விளம்பல் அரிதன்றோ! (1)
திசையில் புகழ்வோர் பேசுவதை
அறிந்தும் கதிரோன் உன்றனுடன் வசையாய்ப் பகைமை கொண்டதில்லை
வழங்கும் உண்மை இதுவன்றோ? நிசமாய் எங்கள் உலகோர்கள் நீடும் புகழை மோகித்தே வசமே இழப்பர் வாழ்க்கையிலே
அவர்க்கும் நீவிர் மேலன்றோ! (2)
65

Page 44
(வேறு)
கலைகலையாய் வளர்வாய், தேய்வாய்;
ககனத்தின் நிலவே இருளே! மலைமலையாய்ச் செல்வ போகம்
வைத்திருந்தாலு மென்ன? அலைவந்தே யழிய மற்றோர்
அலையுறுவ போல வாழ்வு நிலையற்ற உலக மென்று
நீபாடம் சொல் வழியே. (3)
66

உருவில் மனிதன்
ஆள்போலக் காட்சி அளிப்பர்; அவர்வாழ்வு பாழ்போன *கூபமிப் பார்.
(விருத்தம்)
மனிதர் கூட்டம் தனைக்கண்டேன்
மனிதன் தன்னைக் காண்கிலனே புனிதன் புனிதன் என்பதெல்லாம்
புவியோர் பேசும் பேச்சல்லால் மனிதன் புனித னாவதற்கு
மதங்கள் பேசி மதங்கொள்வார் இனியும் உண்மை உளதாமோ?
இரங்கா நெஞ்சார் இவர் விலங்கே, (1)
கனிந்தே உள்ளம் கனியாமல்
காலன் வருகை தனைமறந்தே தனியாய்க் கொண்ட தன்னலத்தால் தரங்கள் உயர்வு தாழ்வென்றே முனிவர் பலரைத் துணைகொண்டே முழுதுங் கருணை வசமிழந்தார் மனிதன் என்ற உருவல்லால்
மனிதர் ஆதல் வசமாமோ? (2)
*கிணறு
67

Page 45
இடாம்பீக விருந்து
இடாம்பீகமாக இடுவர் விருந்து படாடோபம் ஆற்றேம் படி,
(நேரிசை ஆசிரியப்பா)
கிடுகிடு சத்தம் கேட்குது காதில்; திடுமென ஏழை சிரித்தான் மகிழ்வால், ஏனோ என்னின், இன்றுநல் விருந்து நானோ முடவன் பசிப்பிணி யாளன் சென்றால் அங்குச் செல்வர் விருந்தில் நன்றாய் உண்பேன் நடக்கும் களையெனத் தண்டு ஊன்றித் தளர்ந்த நடையொடு அண்டினான் டாம்பீக விருந்தார் அரண்மனை, குடிப்பார் வெறிப்பார் கூச்சல் இடுவார் நடிப்பார் உண்பார் நல்விருந் தென்பார் இத்தனை கண்டு இருந்தான் முடவன். எத்தனை எத்தனை ஏந்தல் நேர்வார் போந்தார் உண்டார் புறத்தே நலிந்தார்க் கீந்தா ரில்லை இவன் துயர் பெரிது. இப்படி யான இடாம்பீக விருந்து தப்பிதம், தப்பிதம் தரித்திரர்க் கீதலே உச்சிதம் உச்சிதம் உலகமே! இனிமேல் பிச்சைக் காரனைப் பேணுதி இன்றேல் வாடி வதங்கி விடலால், நீடிய வாழ்வு நில்லா துனக்கே,
68

பெற்றோரைப் பேண்
பெற்றெடுத்தார் தம்மைத்தாம் பேணி நடவாதார் வெற்றுடல் பெற்றோர் விதி.
(எண்சீர்க் கழினெடிலடி ஆசிரிய விருத்தம்)
பூமிதனிற் பிறந்து விட்டோம் மனித ரென்று;
புலனைந்தும் கன்மேந்திரி யங்கள் பத்தும், ஆமிந்தச் சடலத்தை ஆட்டி வைக்கும்
அற்புதத்தை அறியாதார் தந்தை தாயைச் சாமியென்று கும்பிடவும் தலைமேற் பணிகள்
தாங்கிடவும் மாட்டார்கள், தனைய ரானால் நேமிவடி வாமுலகில் குரவோர் தம்மை
நிதம்பேணார் கொடுநரகிலுழலு வாரே. (1)
நோய் கண்ட போதெனது மகனே! மகளே !
நோற் றதவம் இதுவாமோ? கண்ணின் மணிகாள்! தாய் என்று தந்தை என்று உருவம் தாங்கிச்
சற்றேனும் இரங்காத பரனை எண்ணி வாய்விட்டு அழுதோமே? இந்நாளளவும்
வந்தநோய் தீராத மாற்றம் என்ன? சேயாக வந்தீரோ? செல்வங் காளென்
செய்வோமென்றேங்கிடுவார் தெய்வந் தாமே.
(2)
69

Page 46
உழைத்தாலும் உழைக்காது ஊக்க மின்றி
ஊரிடத்தே ஊதாரி போல்நின்றாலும் களைத்தமொழி கூறாமல் புத்தி சொல்லிக்
கண்ணிமைபோல் காப்பாற்று மிரண்டு தெய்வம் சளைக்காத பேரருளின் வடிவாந் தெய்வம்
தாய்தந்தை எனவோதும் தருமத் தெய்வம் முளைத்தபயிர் வாடாது காக்கும் தெய்வம்
முன்னறிந்த தெய்வமெனப் பேணு வோமே. (3)
70

பெரியோரைப் பேண்
பெரியோரைப் பேணப் பெரிதும் விரும்பின் எரிதழலும் சாந்தமுறு மென்.
(பதினான்கு சீர்க்கழினெடிலடி யாசிரிய விருத்தம்)
தன்னலத்தி லாசைமிக வையாத பேர்களும்
தண்ணருளை உடைய பேரும் தகைமைமிக வுடையநடை யாளர்களும் கலைநலம்
சான்றபெரியோர்களுமாய் எண்ணற்ற தவமாற்றி ஈன்றுவளர் தந்தைதாய்
இலக்கியம் எழுத்து தர்க்கம் இவையன்றி ஞானவுபதேசஞ்செய் வித்தகர்கள்
இராசப்ரபுக்கள் இன்னும் நண்ணுமடை யலர்துயரம் தீர்த்தபுகழாளர்சிர்
நவில்கவிஞனோடு கற்பு நங்கையவள் தன்னையும் மனமார நேசித்து
நாடோறும் பேண வேண்டும் மண்ணிலம் தன்னிலே உபசாரம் செய்யாத
மடையர்களை என்ன சொல்வோம் மன்னாதி மன்னர்க்கும் மன்னான தெய்வமே
மனதிலுறை மாணிக் கமே.
71

Page 47
இல்வாழ்வு
இல்வாழ்வு நல்லதோர் இன்பவாழ் வாதற்கு நல்லாளே வேண்டுமிந்நாடு.
(விருத்தம்)
அன்புருக மனமுருக ஆசைமிக வேயுருக
ஆஸ்திமுழு வதும் பெருக இன்புருக நல்லறம் மிகப்பெருக இன்பான இல்லாளே வேண்டு மென்பர் என்புருக அமிர்தமொழி கூறியணைத் திடுகின்ற
இனியாளையற்ற வாழ்வு பொன்பெறுக இரும்பாலை நட்டபயிர் ஒக்குமே
இதிலென்ன பயன்களுண்டு. (1)
நண்புருக ஒருயிரு முடலிரண்டு மானதோர்
நம்பிக்கும் நங்கை தனக்கும் எண்பெருக யாருமில ரென்றுநாம் கூறலாம் ஏற்புடையோர் துறவி என்போர் பண்புருக இவர்தம்மை நாடியளி பெற்றுய்ந்து
பண்ணுதவப் பேறெப் துவார் பத்தியுடன் துதிக்கின்ற உத்தமபத் திணிவாழ்க்கை
பல்லூழி இன்பு தருமே. (2)
72

பிள்ளை வளர்ப்பு
காதலுரு வாம்மைந்தர் காசினியில் சீரெய்தப் போதமிக வீய்க புவி.
(நேரிசை வெண்பா)
மிகநொந்து பெற்றெடுத்த மேதகுமைந்தர்கள் இதுமிகச் சீர்த்தி அடைய-துகளற்ற கல்வி,ஒழுக்கம், கருத்தூக்கம், வாய்மையிவை நல்வழியி லீய நலம்.
ஐந்து வயதினிலே அன்புமிகக் காட்டியீ ரைந்து வயதிலே தண்டித்துப்-பிந்தியநாள் வாயாலே புத்தி வழுத்தி வளர்த்திடுக தாயார்போல் இன்பம் தரும்.
வாலிபந் தன்னிலே வாழ்க்கை புரியவழி கோலி யுதவல் குறிக்கோளாம்-சாலி வளர்ந்தீன்று நென்முற்றி வானாடு காக்கும் வளம்போலாம் மக்களின் வாழ்வு.
பாவமும் புண்ணியமும் பார்த்தறிந்து மேதினியில்
ஆவதி யற்ற அறிவுறுத்தி - நாவினிடை வாய்மை தவழ வருநாளுக்கேற்றமுறை யாய்வாழக் கற்பிக்க யாம்.
(1)
(2)
(3)
(4)
ஆண்மகனே போலவுன் அன்பான பெண்மகவைப்
பூண்மணியால் கற்பால் பொலிவித்து-நீணிலத்தில் அற்றோர்க் குதவி; அருள்காட்டி வாழுமினென்
றுற்றார் புகட்டலுறுதி.
73
(5)

Page 48
சாதி, மதபேதம்
மதபேதம் ஓதிமயக்குனரை நோக்கி அதமமீ தென்றே யறை.
(பதினான்குசீர் விருத்தம்)
எத்தனையோ யுகங்களாய், ஆண்டுகளாய்த் தோன்றியுள
இவ்வையம் உய்ந்து வாழ எத்தனையோ மதங்களும் சாதிகளும் அமைந்துளவே
ஈதெல்லாம் இயற்கை தாமா? அத்தனையாம் சமயங்கள், சாதிகள் அழிந்ததில்லை
அன்றுபோல் இன்றும் உள ஆனாலும் மதவெறியர் ஆங்காங்குத் தோன்றியே
ஆர்ப்பாட்டம் செய்து நிற்பார் இத்தனை இத்தனை என்றெண்ண வொண்ணாத
இசையுமிசை யற்றதுமாம் இயல்புள்ள சாதியார் நாம்பெரிது நாம்பெரிது
என்றென்றே மார டிப்பர் சித்தனுக்கு முத்திநெறி யில்லாத தன்மைபோல்
சிறியராம் துவேஷ தார்க்குச் சிறப்பில்லை; ஆன்றபல நிறைவில்லை; சீர்த்தியில்லை;
சீயென்று விட்டுத் தள்ளே,
74

மறப்பதும் மன்னிப்பதும்
மறப்பதும் மன்னிப்பதுமான நன்மை துறப்பதுள் நன்றென்று சொல்.
(ஆசிரியப்பா)
நன்றுநாம் செய்ய நலிவது செய்தான் என்றுநீ எண்ணி இன்னல் செயற்க, அறியா மையால் அனியா யம்ஏன்? குறித்தான் அவனென்று குணம்பா ராட்டுக இன்னா செய்தாற்கு இனியவே செய்க என்னா வள்ளுவர் இயம்பினர் அன்றோ செய்தவன் மகிழ்ந்த தீமையை மறந்தால் செய்தவம் ஈதில் சிறந்தது மின்றே ஆகாத சொல்லி அல்லல் விளைத்து நோகா மனம்நோக வைத்தாலும்நீ பேதமை எனநாடிப் பிழைபொறுத்தல் சாலும் ஆதரம் அன்பு அறமிதில் சேரும் தீதை மறப்பதும் நன்றே புரிவதும் கீதை மாந்தர்க்குக் கிளத்துமுப தேசம், மன்னிப் பதிற்சிறந்த மாதவம் மன்னுமிந்நிலத்தில் வழுத்துமா றிலதே.
75

Page 49
சகோதர ஒற்றுமை
உடன்பிறந்தார் ஒன்றி ஒருமித்து வாழ்தல்
கடனனை வோர்க்குமிது காண்.
(அகவல்)
ஒர்தேசம், ஒர்தாய், ஒர்வயிறு தோன்றி ஈரிரு வகையில் இணங்காது வாழும் புன்செயல் கண்டு பொறுப்பரோ பெரியார் நன்மை பொலிய நானிலம் மகிழ ஒற்றுமை, அன்பு, உணர்ச்சி, ஊக்கம் நற்புகழ் தாங்கி நடப்பது நன்று சாதி சமயம், வேத பேதம் நீதி யணிதி நினைந்து நினைந்து நல்லன கொள்க, தீயன விடுக எல்லாம் ஒர்குலம் என்றே கொள்க தெய்வம் ஒருவன் தேசம் பலவே உய்வம் என்னின் உள்ளன்பு கொண்டு சகோதர ஒற்றுமை சாந்தம் தயவு மிகமிக ஒங்க மேதினி வாழ்வோம் எல்லாரும் இன்புற நினைப்பம் உலகில் அல்லாமல் மற்றொன்றறியேன் பரமே என்ற பெரியோர் எண்ணம் பேணி நின்று நேர்வழி நீடு வாழ்வமே,
76

பொருளிட்டல்
பொருளாற் புகழுண்டு போனகமும் உண்டு அருளாற் கதியுண்டறி.
(விருத்தம்)
இன்புற்றுப் புகழ்தாங்கி இனிது வாழ
இவ்வுலகில் பொருள்மிகவும் வேண்டு மையா துன்புற்று நலிவார்க்கு உதவியாதுந்
துணைசெய்யா மனிதர்பல் லோர்களுண்டு என்புருகும் வண்ணமாம் ஏங்கி ஏங்கி
எத்தனைநாள் அழுதாலும் ஈய மாட்டார் என்செய்வோம்! ஆனாலும் இயன்ற வாறு
எங்குச்சென்றும்பொருளை ஈட்ட வேண்டும்
(1)
தனவானாய் வந்திடினோ தலைகள் சாய்ப்பார்; தமதுறவின் முறையாளர் தானே என்பார்) மனதாரத் தீயவனே ஆகி னாலும்
மகாபுண்ய வானென்று கூவி நிற்பார்) கனம்பெருகும்; இனம்வளரும்; கனத்த இன்பம்
கடகடென்று வந்தடையும்; கனலி என்றும் எனதாத்ம நண்பரிவரென்றும் சொல்வார்
இப்படியாம் பொருளிட்டல் நன்றே நன்றே. (2)
77

Page 50
கொலைகளவு வஞ்சகங்கள் குற்றம் என்னும்
கொடுஞ் செயல்கள் செய்யாது பொருளை ஈட்டி நிலையற்ற உலகினிலே சீர்த்தி நாட்டி
நின்றநிலை குன்றாமல் அறங்க ளாற்றி மலைவற்ற ஞானவழி கண்டு கொண்டு
மறுவுலக வாழ்வுக்கு வகைமை தேடி இலைமறைகாய் போல்நாம் வாழ வேண்டும்
இவ்வுலகம் தூற்றுவதில் பின்னில் லாதே (3)
78

பரோபகாரம்
பரோபகாரம்செய்வர் பண்பாடு டையர்; நரோபகாரம்செயவே நாம்.
நாமுதவி செய்ததற்கு இவனென் செய்தான்?
நல்லதிணிப் பார்ப்பமெனச் சொல்வா ருண்டு; யாமுதவி செய்ததோர் பலனுக் கன்று
நமதுகடன் ஈதென்றே கொள்வார் சான்றோர்; பாம்புக்குப் பால்வார்த்தோம் ஐயோ! என்று பச்சாத்தா பமிகநாம் கொள்ளல் ஏற்கா வீம்புக்குச் செய்நன்றி பரோபகார
வினையென்று துணிதலுமோர் மடமை யாமே. (1)
எச்சமய எச்சாதி யுள்ளான் வந்து
இரங்குகநீ என்றபோதிரங்க லேற்கும் துச்சனரும் நல்லோரும் தொல்லை கண்டு
துடிதுடித்தல் இவ்வுலக இயற்கை யன்றோ? முச்சகமும் ஆளவல வேந்தர் தாமும்
முறைதவறிச் செயுமுதவி வெறுப்பை நல்கும்; இச்சகத்தோர் கொண்டாடப் பிரதி பலனை
எதிர்பாரா உதவிதான் விழுமி தாமே. (2)
79

Page 51
ஒழுக்கம்
சீலமுள நன்னடையைச் செப்பும் ஒழுக்கமெனக் காலம் பலன்கண்ட கண்.
(கலிவெண்பா)
கல்வி பயில்வார்க்கும் காதல் மனையாட்கும் நல்ல தவத்தோர்க்கும் நாரியர்க்கும் - தொல்புவியில் சீலமுள நன்னடையும் செம்மைக் குணம்பலவும் சாலச் சிறப்பென்று சாற்றுவபோல் - ஞாலத்தில் வண்ணார்க்கும் நாவிதர்க்கும் வர்த்தகர்க்கும் மற்றுமுள சுண்ணாம்பு செய்கடைச் சாதிக்கும்- பண்ணிசைக்கும் பாணர்க்கும் கூத்துப் பழக்கும் குருக்களுக்கும் சாணார்க்கும் கொல்லர்க்கும் தச்சர்க்கும் - பேணுகின்ற * மன்னர்க்கும் ராணி மனையோர்க்கும் வேறுயாம் பன்னாத பேர்க்கு மொழுக்கம் பெரிதென்க தம்முயிர்போல் பேணித் தகைமையுடன் வாழ்வாரை அம்புவி மெச்சு மறி
* ஈற்றடிகள் நான்கும் இன்னிசை வெண்பாவாகி முடிவுற்றன.
80

திட நம்பிக்கை
திண்மையுடையாரே செல்வம் மிகப்பெற்று வண்மையாய் பல்லாண்டு வாழ்வர்.
(மருட்பா)
ஏதொன்றைச் செய்யநி எண்ணி முனைந்தாலும் தீதாகு மென்றுசிந்தியாதே - யாதொன்றும் வாரா , நலம் பெருகும் வாழ்வேம் வாராய் திருவே என்று வழுத்தே. (1)
சோர்ந்த வுளத்தோடு சோம்பிச் செயுங்கருமம் ஒர்ந்தால் துயரும் உடன்தருமே - சேர்ந்ததிட நம்பிக்கை யோடும் நாடினால், தம்பிக்கா வெற்றிதழிர்கா லும்மே. (2)
முன்னேற வேண்டில் முழுதும் திடநம்பிக்கை தன்னிலுளதென்று சாற்றுவரால் - எந்நேரம் எத்துயரம் வந்தாலும் எட்டுணையும் சித்தம் சலியா துழைக்க ஜெயமே. (3)
81

Page 52
வெகு துாரம் போக வேண்டும்
வெகுதூரம் சென்றார்க்கே வீட்டுநெறி வாய்க்கும் நகுதற்கோ கல்வி நவில்.
(எண்சீராசிரியம்)
கற்றாலும் வெகுதூரம் கற்க வேண்டும்
கானரிய மெய்ப்பொருளைக் காண வேண்டும் அற்றாலும் புன்தொழில்க ளாற்றி மானம்
அழித்திடா வண்ணந்தன் மானம் காத்து வெற்றிக்குக் காரியத்தில் வெகுதூ ரந்தான்
விடாதுஞற்றி ஆனந்த மெய்த வேண்டும் முற்றாத சிற்றறிவைக் கண்டே மாந்து
முழுதுணர்ந்தோம் என்றெண்ணி நைதல் நன்றோ
(1)
தன்னைத்தான் அறியவே பல்கால் வேண்டும்
தளராது ஞானவழி செல்ல வேண்டும் பொன்னைத்தான் பொருளைத்தான் தேட நேரின்
பொருகடலைத் தாண்டிநன் குழைக்க வேண்டும் என்னையீ தென்றிருந்தால் எதுவும் வாய்க்கா
எதற்கும்நீ வெகுதூரம் செல்ல வேண்டும் உன்னைநீயுணர்ந்தால்பின் உண்மை என்பாய்
ஒருநாளும் சமீபத்தில் எய்தார் பேறே.
(2)
82

தொழிலிலே ஆதாயம், தொடர்ந்து நட்டம்
சொல்லவொணாத் துன்பம்நீகாண்பாய்; ஆனால் இழிவுற்ற தென்றெண்ணி விட்டி டாதே இனியுமா மாதாயம் உண்டு என்று வழிகண்ட படிநடந்து தூரம் போனால்
வாய்ப்பான ஆகாயப் பாதை காண்பாய் விழிகொண்டு இப்படியே எல்லாம் செய்க
வீறெய்தி இன்பமுற்று வாழ்வாய் நன்றே
(3)
83

Page 53
கூட்டுறவு மாண்பு
கூட்டுறவு மாண்பு குணப்பண்பி லேயுண்டு நாட்டுறவு நல்லதென நாடு.
(அறுசீரடி ஆசிரியம்)
தனித்துநீவாழ நாடின்
தவம்புரி வோருக்கேற்கும்; இனிதென இந்த வாழ்வை
இயம்புநர் உண்டு ஞாலம் மனிதனாய் வாழ வேண்டின்
வாழ்வாங்கு வாழ வேண்டும் நினைத்ததை யாற்று தற்கு
நிதங்கூட்டுறவு வேண்டும். (1)
ஒன்றித்துச் சமர்த்துச் செய்ய
ஒருகோடி ரூபாய் வேண்டும் ஒன்றித்துக் கூடி நின்றால்
ஒருகோடி ஒடி நானும் கன்றியதா மனத்தி னோடு
கருமத்தை ஆற்றல் ஒண்ணா நன்றியுடன் வாழ்வதற்கு
நாம்கூடி வாழ வேண்டும். (2)
தொழில்பெருகும் அறிவு ஓங்கும்
சூழ்துன்ப இருள்களோடும் எழில்பெருகும் இன்ப மூறும் எதிராளி அஞ்சலாவன் கழிபொருளாம் என்றிகழ்ந்த
கதிபெற்றுப் பீடு நல்கும் வழியெங்கும் நல்ல ஆசி
வாய்க்குங்கூட்டுறவி னாலே (3)
84

மதுபானம்
மெய்மறந்த ஆனந்தம் வேண்டும் எனக்கருதிப் பொய்மதுவையுண்பார்புல் லர்.
(நேரிசை ஆசிரியப்பா)
கள்ளில் இன்பம், மாதர் அள்ளிவிடு பள்ளநீரோடை படித லின்பம். கற்றல் இன்பம், கண்ணோடு கண்கள் உற்றது பேசல் உயர்ந்த இன்பம்; ஆடல் இன்பம்; பாடல் இன்பம்; ஊடல் இன்பம், உளதென்பர்) என்தோழன் காணு மாறென்னைக் கருணையோ டழைத்தான் வேணுமென்றேயங்கு விரைந்தேன் ஒர்நாள் மேல்மாடி தன்னில் “விஸ்கிப்” புட்டியுடன் கால்மாடு தலைமாடு காணாது மஞ்சத்து என்வரவு நோக்கி இருந்தான்; நானும் உன்வரவு காணவே உற்றேன் என்றாலும், வருக! வருக! மனோகரமான அருமைச் சிநேக அருகில் வருக, பன்னாள் உம்மைப் பார்த்திலேன், இன்றோர் நன்னா ளாகும்; நட்பது வாழ்க! பிறந்துள தன்றிப் பேறுகள் காணோம் சிறந்த இன்பம் சிலதில் மதுபானம் ஒன்றான தாலே உவந்து உண்போம் என்றானை நோக்கி, என்னையா! வேண்டாம் செத்தாரும் மதுகொண்ட சிறியாரும் ஒன்றே; எத்தாலும் தீமையே இன்றிவே றில்லை.
85

Page 54
காமமும், பாவமும் கைதுரக்கினார்களும் நாமும் ஒன்றென நானிலம் உரைக்கும். மரணம் தருமதுக் கோப்பை தன்னைச் சரணம் அடைந்தோர் தாழ்வார் என்றேன்) நன்றென்று புத்தி நாடினான் என்றும் இன்புற் றிருந்திடற் பொருட்டே
86

வளர்க விஞ்ஞானம்
விஞ்ஞானம் என்றும் விருத்தி அடைந்திடுக; மெஞ்ஞானம் காட்டி மிளிர்ந்து.
(நேரிசை ஆசிரியப்பா)
இந்த இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானம் வந்து வளர்ந்த மாபெரும் ஆண்டு என்றேன், அப்போ தென்தம்பி கேட்டான் நன்றே யுரைத்தாய் அண்ணா! நவில்க வரைவிலக் கணமென்று மறித்துக் கேட்டான். உரைதடு மாறி உணர்ந்ததைப் பின்னும் சொன்னேன் கேட்பீர் “தோன்றிய பொருட்கள் மன்னிய இயற்கையின் மாற்றங்க ளென்க இதனைக் கொண்டு எண்ணிப் பரீட்சித்து விதவிதமான விளம்பரம் செய்து இயற்கை துணையால் எழுச்சி கொண்டு மயக்கம் தெளிதல்; வகுத்துக் காட்டல் விஞ்ஞானம்மே” மேதினி தன்னில் மூலப் பொருட்கள் தொண்ணுாற் றாறாம்; தூலப் பொருளில் தோன்றுவ தீதாம்; அணுவை அளித்தல் ஆண்பெண் அறிதல் அணுவைக் காணல் ஒளியலை பிரித்தல் என்பன மேல்நாட்டியங்கு ஞானம் தாவரம், மின்சாரம், தத்துவம், ரசாயனம் ஆவன எல்லாம் அதன்பாற் பட்ட
87

Page 55
மூலப் பொருளை முற்றிலும் உணர்ந்தார் சாலக் குழம்பித் தற்பர னிலைஎனல் விஞ்ஞா னந்தரு விழுப்பயனா? இல்லை. அஞ்ஞானம் நீங்குக, அணுக்குண்டு, ஆவி மாய்தல் ஒழிக, மறுஜல வாயு ஒய்வு பெறுக, உணர்ச்சி வளர்க, உலகம் கலகம் ஒழிந்து நிலவிட விஞ்ஞா னம்நிலைத் திடவே.
88

சிரித்த முகம்
தண்டா மரைமலர்ந்த தாமென்ன நின்முகம் எண்டிசையும் காலு தொளி.
(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
என்ன அதிசயம்! என்ன அதிசயம்! எங்கள் முதலாளி எந்நேர முந்துக்க முகமாய் வாடி முணுமுணுத் திருப்பார் இந்தஒர் ஏழை எப்போ பார்ப்பினும் நாண்மலர் போல நல்லுரை பேசி எக்காலம் போல எதற்கும் சிரித்துப் பொலிந்த முகமும் பூரித் துடலும் பொருந்தி வாழ்கிறான்; புத்தியில் லாத மூடனோ? பித்தனோ? என்னென் பேன்யான்! என்றனன் “ஆண்டி' இலதென்றான்; தூண்டிக் காரணம் சொன்னான் காதெலாம் குளிர்ந்தது. “இல்லையே என்று இன்னலும் கொள்ளலான்” “இன்பமே என்று இன்பமும் கொள்ளான்” “துன்பமும் இன்பமும் தொல்புவி சமமென்று” “நிதானியான நிலையில் இருப்போன் அவனே ஆவன்' ஆசையுமில்லை; மோசம் செய்யான் முழுமதி போல முகப்பொலிவுடனே மூரல் தவழ வாழ்கின்றான் இவனே வாழப் பிறந்தான்; தனவான் எண்ணிச் சாவப் பிறந்தான். இதுவே உங்கள் எஜமான் முகமாம்
89

Page 56
இல்லா திருக்க ஏது வென்றிட்டான் ஆமாம்! சரிசரி, ஆண்டவன் செயலெனச் சமநிலை வாழும் தரித்திரன் பாக்கியன் என்றான் இருவரும் இதயம் பொருந்தி என்றும் இதுபோல் இருப்பது மேலெனச் சென்றார், புவியீர் தெரிமின் நிசமே.
90

இப்படி இரு
விலங்குகள் போல்பிறந்து வீழ்வதால் நன்மையில்லை கலங்கிய சேற்றுநீரில் காணுமே நல்லதோற்றம் துலங்கவே நஞ்சமூகம் தூஷணை யாதுமின்றி இலங்கவே கடமையாற்றி இனிதுநீவாழ்கவாழ்க!
(1)
பற்றலர் போல் நடித்துப் பாவமே கொய்யவேண்டா முற்றிலும் சுயநலத்தை மூட்டையாய்க் கட்டிப்போட்டு மற்றவர் தங்களுக்கும் மணியெனச் சேர்ந்துஉதவி கற்றவை பயன்மிகுக்கக் கருதியே வாழ்கவாழ்க!
(2)
வலைபடும் மீன்கள்போல வருந்தவோ நீதியில்லை அலையதன் வாய்த்துரும்பு அன்னவும் ஆவதுன்னால் நிலைபெறும் தன்மைசேர லட்சியம் நேஞ்சிலேற்றி உலைவிழுந் தங்கமன்ன உயர்ந்துநீவாழ்கவாழ்க!
(3) அந்தநாள் குப்பைகளம் அகத்தினுட் குவித்திடாமல் சிந்தனா சக்திச்செல்வம் சிதைந்திடா வாறுகாத்து உன் றனால் இந்தலோகம் அங்குலம் அளவிலேனும் முந்திமுன்னேறவேண்டும் மதித்திதை வாழ்கவாழ்க!
(4) குடத்தினில் இட்டதீபம் குறுகிய தன்மையைப் போல் அடத்தினால் நாட்கடத்தல் அறிவுடை செய்கையன்று சடத்துடன் வாழும்போதே சுமுகமாய் வாழ்வின் றுய தடத்தினைத் தேடிபற்றித்தகையுடன் வாழ்கவாழ்க!
91

Page 57
இன்பக் கனவு
காண்பதெல்லாம் இன்பக் கணவன்றி வேறில்லை பூண்பதெல்லாம் துன்பம் புவி.
(ஆசிரியப்பா)
நானறிந்த தோழர் நான்காண்ப தெல்லாம் ஏன்கேட்பான்! இன்பம் இன்றுமே இன்பென்பார் ஆமாம்! என்றுதலை ஆட்டுவேன்; அடுத்தாற்போல் சேமம் விசாரிப்பார்; செப்புவேன்; பின்னாகக் கேளப்பா என்மைந்தர் கெட்டொழிந்தார் பட்டினியால் மாளத்தான் போவாரோ? மாற்றில்லை ஒர்வேளை அன்னமெங் காவது அகப்படும் என்றுநல் இன்பமாய்ப் பேசியவர் இன்பத்தில் மூழ்குவார் கண்ட இன்பத்தைக் கண்டடைய முயன்று பண்டடைந்த துன்பமோ பாரப் பட்டதாம்; ஆனாலும் திடநெஞ்சு ஆகிப் பணிபுரிவார் போனாற் போகுதென்பர்; புத்திகெட்டா னிவனென்று உற்றார் உறவினர்கள் ஒதினார் ஊதாரி பெற்றநற் பேறெதுவும் பேருலகில்லையால், வாழ்வாங்கு வாழ வழிகண்டேன் என்றென்று தாழ்வாரே யன்றிநாம் சாற்றவேறில்லையால்; கொஞ்சநாட் செல்லக் குடிகளின் அன்பினால் விஞ்சுபுகழ் கொண்டான்; விறுவிறென்று செல்வம் உச்சநிலை யுற்றது; உற்றாரும் வந்தடைந்தார்; மெச்சிப் புகழ்வார்; வீரனி என்றுரைப்பார்;
92

முகமன் கூறுவதில் முகமலரான்; இன்பமே சகமெலாம் தோணுதென்று சாற்றுவான்; பாடுவான்; வாருங்கள்! முயலுங்கள்! வானாட்டார் போலின்பம் காருங்கள் நம்பிக்கை காட்டுங்கள், பேருழைப்பு என்பான் இவனொருவன் இன்பன் கனவிலே துன்பன் மிகக் கண்டு சோரா துழைத்ததனால் காதலி, கான்முளை, காசினி, ஒதிவாழ்த் தெடுப்ப உவந்துவாழ்ந்தனனே.
93

Page 58
அன்புப் பரிசு
நெஞ்சுடைந்த தோழற்கு நீவாழ்க என்றோதி அஞ்சலிசெய்தீந்தான் அடல்.
(நேரிசை வெண்பா)
(நண்பன் கூறுகிறான்)
பிறந்தநாள் தொட்டுப் பிரியாது வாழ்ந்து திறமிழந்த நண்பன் திருந்த - அறமுரைத்து வீரனே வாழ்க! விசனம் ஒழித்திடுக; சீரடைய நீழுயற்சி செய். (1) ஒன்றன்பின் ஒன்றாய் உமைச்சேர்ந்த தாழ்ச்சிகள் நன்றென்று எண்ணி நலம்புரிக - என்றென்றும் ஆண்மகற்கு நெஞ்சம் அஞ்சாமை வேண்டுமது பூணாகக் கொள்க புவி. (2) சிந்தித்துச் சோம்பிச் செயலற்று நிற்காதே; நிந்தித்தாலும்நீள் நிலமிசை - வந்தனையே ஆகு மெனக்கொள்க; அன்ப! இதன்வழியே ஏகுக தேங்கும்நல் இன்பு. (3)
(பதில் கூறுகிறான்)
தற்கொலை செய்துநான் சாவ நினைத்திருந்தேன். அற்புதம் பொற்பரி சாமன்ன - நற்றுணைவ! ஈந்தாய்; மகிழ்ந்தேன்; இனியுய்வ னென்றுரைத்து வீந்தநிலை நீத்தான் விரைந்து. (4) ஊக்கம் மிகக்காட்டி ஊரார் மதிக்கநல் ஆக்கம் பெருக அறமாற்றி - நீக்கமற மங்கை மனையுடனே வாழ்ந்தா னடல்என்ற தங்கப் பரிசளித்த தால். (5)
94

நல்ல நாய் (க)
எச்சலிட்டுக் காத்தான்பின் ஏழையாய் விட்டதினால் பிச்சை எடுத்துழன்றான் பெற்றதவம் - அற்றதனால் நானும் பிரிந்தேன்; நலிந்தேன் பலகாலம் தானும் கடந்ததே சாற்று. (1) குக்கல் பிடித்தென்னைக் கொன்றுவிட்ட தானாலும் நக்கல் தெரிந்திருந்த நாய்எனக்கு-மிக்கதுணை ஆருமிலை வீதி அலைந்தலைந்து சாகாமல் ஊருள்ளே போனேன் உவந்து. (2)
சின்னாட்கள் சென்றதுந் தேகம் குணமடைந்து அந்நாட்கள் போல அழகானேன்- பின்னாளில் செல்வன் மனைசேர்ந்து சீராக வாழ்ந்திருந்தேன் எல்லாம் விதியென்றியம்பு. (3)
அன்றென்னை ஆதரித்த ஐயா தடியுடனே நின்றார் மரநிழலில் நெஞ்சுமிகக் - கன்றியது ஒடோடிச் சென்றேன்; உவந்தேன்; அவரெனக்கு நாடோடி யானேனென்றார். (4) நல்லநாய் ஆவாய்நீ, நானுன்னைத் தள்ளிவிட்டேன். பொல்லாத காலம் பொருந்தியதால் - எல்லாரும் செல்வ நிலையில் சேர்ந்திருந்தார் அஃதொழியச் சொல்லாதே போனார் தொலை. (5)
பாலும் பழமும் பலவிதமாம் பட்சணமும் கோல விருந்துண்ட கூட்டத்தார் - ஏலவே தள்ளி மறந்திட்டார்; தாமுண்ட மிச்சிலை அள்ளியெறிந்தேனுனக்கே தான். (6) காலம் பல கடந்தும் கண்டவுடன் நன்றிசெய்தாய் மேலாம் மனிதர்க்கிம் மேற்குணமில்-ஞாலத்தில் ஏனோ அறியேன், இனிமாந்தர் நன்றியுடன் வானோ ரெனவாழ்க வையம்.
95

Page 59
நல்ல நாய் (உ)
நாய்நல்ல தானாலும் நல்லதில் நல்லதோர் நாய்நன்றியுள்ளதிந் நாய்.
(பஃறொடை வெண்பா)
முன்னொருநாட் கண்டேன் முறுமுறுத்துக்கொண்டேயஃ தென்னை விரட்டவும் சிந்தித்த - தந்நாளில் “காறிலே ஏறிக் கனத்தபவுசுடனே ஊறிய வீரிய ஊற்றினால் செல்வன்றன் காவலனாய் வாழ்ந்தது; கண்டார் பயங்கொள்வர் ஆனால், சிலகாலம் ஆனபின் புண்பட்டு ஏனென்று கேட்பார் இல்லாமல் தெருவீதி எல்லோரும் சிச்சீ என விரட்டச் சென்றதால் என்னின், இதனை யான் ஏறிட்டுப் பார்த்ததும் ஒர்ந்தேன் உறுமிய நாயென்று; முந்துநாட் கோப மடக்கினேன்; கூப்பிட்டேன்; ஒர்பிடி அன்னமிட்டேன். அன்றுதொட் டந்நாய் எனைப்பற்றி என்ன நினைந்ததோ?தேர்கிலேன்; ஆதரவு காட்டித்தன் வாலையும் ஆட்டி மகிழ்வெய்தும் ஊட்டி உதவலில் ஒய்ந்திலன் யானுமே நாற்றம் அகன்றது; நல்லநாய் ஆயிற்று. வேற்றார் தமைக்கண்டால் வீரியம் காட்டும் நல்லநாய் என்றேநான் நாய்க்குப் பெயரிட்டேன். ஒல்லும் வாயெல்லாம் உதவியே செய்தது. ஒர்நாள் அகங்குழைந்து, உன்னைநான் தீண்டக் கூர்எயிறு தீட்டினேன்; கொண்டானுக்காக
96

விடுத்தேன்; அவற்கு வெகுவாய் உழைத்தேன் அடுத்தது நோயும்; அடித்து விரட்டினான்; மீண்டும் உனதன்பால் மேதினி வாழ்கின்றேன் ஈண்டு குறைநீ பொறுஎன்று சொல்வபோல் கால்மோந்து நின்றது; கள்வனைக் கடித்தது; மேல்நிறை மாந்தன்ஏன் மேதினி நல்லநாய் போல்கின்றா ரில்லை; புலமுடையார் நாய்தன்னை மேல்வைத்த சாலும் விளம்பு.
97

Page 60
மாமா இருக்கிறார்
மாப்பிள்ளை மாடெனவா? மக்கள் பெறஉதவும் மாப்பிள்ளை யாஇந்த மன்.
(ஆறுசீரடி யாசிரியம்)
செல்வக்குடியில் செனித்து யர்ந்து
செல்வக் குமாரி தனைமணந்து அல்லல் என்ப தறியானாய்
அமைதி யோடு வாழ்பிரபு சொல்வார் என்னைச் சூழ்குறைகள்
தொல்லை யுலகி லேதுமில்லை; எல்லாம் பார்க்க மாமாவே
இருக்கார்; இன்பம் எனதன்றோ? (1)
வீட்டை விட்டு வெளியேறா
விரதம் பூண்டு இருப்பானேன்; நாட்டைக் கடந்தும் பொருளிட்டல் நமது கடமை யாகாவோ? கூட்டில் வாழக் குஞ்சியல்ல;
குழந்தை யுடையாய் என்றாலோ ஊட்டி வளர்க்க மாமாவே
உள்ளார் என்றே முடித்திடுவார். (2)
இப்படி யாகப் பல்லாண்டு
இவரைக் கடந்து சென்றிடவே
அப்போ திருந்த மாமாவும்
ஆவி விடுத்துப் போந்தனரால்;
98

இப்போதுதவி யாருமிலை;
ஏங்கித் தவித்தார் மருமகனார்.
அப்பா இருந்தால் இப்படியோ?
ஐயோ! என்றாள் கண்ணாட்டி (3)
வறுமை புகுந்து வருத்தியது;
வளங்கள் அற்றார் பரிதவித்தார்; சிறுமை கண்டு விழிப்படைந்து
தீர உணர்ச்சி பொங்கிடவே உறுமி யுலகிற் பிரவேசித்து
ஒயா துழைத்துப் பணந்தேடி நறும்பூங் குழலாள் மைந்தருடன்
நல்வாழ் வாற்றி நின்றனனே. (4)
பாரந் தெரியா திருந்தோர்கள்
படீரென் றுணர வழிசெய்யும் தாரம் தமரோ டியைபுடைய
தாக அமைந்த வாழ்க்கையது ஈரம் ஈகை இவைபொருந்தி
என்று முழைத்துக் கண்ணியமாய் வீர மகனாய் வாழ்வானேல்
விதியும் மதியும் துணையாமே. (5)
99

Page 61
அம்மா சொன்னாள்
அம்மா உரைத்தமொழி அத்தனையும் பொன்னாகும் சும்மா எனலாமோ சொல்.
(நேரிசை ஆசிரியப்பா)
'கண்மணியே! என்னுடைய காதல் மகனே! புண்ணுடைய நெஞ்சாற் புகலுமொழி நீகேள்; தந்தை இருந்தால் தாய்புத்தி கூறுவனோ? நுந்தை எடுத்தெடுத்து நுவல்வாரே உன்றனுக்கு உன்விதியும் தீது; உன்னை ஈன்றெடுத்த என்விதியும் தீது; என்னநாம் செய்வோம்? ஆனாலும் சாகுமுன் அன்போடு சிலசொல்ல வேனான் விரும்பி விளம்புதும் கேண்மின். பொன்மொழி என்று போற்றினால் மேன்மேல் நன்மை மிகப்பெற்று நானிலம் வாழுவை; உதறித் தள்ளினால் ஊதாரி யாகுவை; பதறுதே உனையெண்ணிப் பாவியா னேனே! கிட்டி வருவாய் கிண்கிணிக் கால்கண்டு தொட்டி லாட்டிமுன் தொட்டுப் பரிசித்து உச்சி மோந்தேன்; உவந்தேன்; அன்பினொடு நச்சி வளர்த்தேன்; நானும் பிரிகின்றேன். எல்லாம் நீபெற்ற இரும்பேறு என்பனோ! பொல்லாத என்றன் புன்மைதான் என்பனோ! ஐயோ மகனே! அன்னை மொழிதனை நையாண்டி பண்ணி நடக்க நினையாதே ஆறுதிலை என்மனம் அம்மா சொல்மொழி
100

மீறி நடவேன் மேதினி என்றுநீ பால்மனக்கும் வாய்விட்டுப் பாலன்போல் சொல்லடா ஆல்போல் தளிர்த்து அறுகுபோல் வேரூன்றி இன்புற்று வாழ்வாய் ஈதென் ஆசியே’ என்றாளை நோக்கி இயம்பினான் மைந்து. "தாயே! நின்மொழி தட்டிநான் நடவேன் சேயேன் தொழுதேன்; செப்புவ செப்புதி’ என்றானை நோக்கி எதிர்வைத்துக் கூறுவாள், “ஒன்றே தெய்வம், ஒருநாளும் மறவேல். பொய்யும் களவும் புன்மையென் றொழுகு செய்யும் பணிகள் திருத்திச் செய்தி, வஞ்சகம் கொலையை மறலியாய்க் கருது; தஞ்சம் புகுந்தார் தம்மைக் காத்திடு; பெரியார் சபையில் பிழைசெய்யாதே; உரிய முறையில் ஒதுவ ஒது; தன்மானம் காத்துச் சமூகம் மெச்ச நன்று புரிக; நாட்டை மறவேல்; ஆணவம் பேசி ஆர்ப்பரிக் காதே; நாணம் துறந்து நடக்க நினையேல்; தன்மனை யெனினும் தாய்போற் கருது; முன்பின் பார்த்து மொழிவன மொழிதி; சாந்தம், தயவு, தண்ணனி பூண்டு மாந்தர் விரும்ப வையகம் வாழ்க! பிறர்மனை கண்டு பேதலி யாதே; குறையும் நிறையும் கூறித் திரியேல்; கோபம் அடக்கு; குணம்பா ராட்டு; கூபம், கிணறு, குருமொழி, ஞானி காக்கக் கடவை; கருணை பூண்க; சாக்கா டுறினும் சகோதர பான்மை நீங்கா வகையில் நிற்பதும் கடனே, பூங்கொடி நல்லார் போகம் துய்த்தல்
101

Page 62
தானே யுலகெனச் சற்றும் கருதேல், தேனே மானே! செங்கரும் பேயென்று தானே யுரைத்தலோர் காலம் தனிலே வீனென் றுணர்வாய், வேதனை வரினும் காணென மெய்யே கழறுக, என்றும் கள்ளும், சூதும், கபடமும், வையம் எள்ளிநகைக்க இடம் வைக்கும்மே; எனவே இவைகளை எதிராய்க் கொள்க; மனநிலை தளர்ந்தால் வண்மை குன்றும்; திடசித்தம், ஊக்கம், தினமும் எய்தி அடலுறு வீரன் போல்புவில் வாழ்க, தீவழி யாலே செல்வம் கருதேல்; நாவழி வந்ததை நாளும் காக்க, பாவ புண்ணியம் பார்த்து நடத்தல் எவர்க்கும் நன்று; இதனையும் மறவேல்; உலகத் துள்ள உயிர்பொருள் எதினும் நிலவும் புகழ்சால் நின்னுயிர்க் காத்தி. என்றோ ஒர்நாள் இறுதிநாளாகும்; அன்றே நன்று ஆற்றினே னென்று நெஞ்சுகை வைத்து நிகழ்த்தவும் வேண்டும்; துஞ்சும் உடலம்; துஞ்சாது புகழே; கற்றது எண்ணிக் கண்ணெனக் கொண்டு உற்றபோ தெல்லாம் உலவுக என்றாள்’ சொன்னான்; ஆமெனச் சொன்னவை கேட்டுச் சின்னாள் தன்னில் சீவனை விட்டாள். புத்தியைக் கேட்ட புதல்வன் சொன்ன சத்தியம் தவறிச் சன்மார்க்கம் கெட்டுக் குடித்து வெறித்துக் கூட்டாளி கொண்டு தடிப்பயல் போலத் தான்வாழ்ந்தனனே. கைமுதலழித்தான், கயவர்கை விட்டார்; நைமுக மாகி நலிந்தான்; ஒர்தினம்
102

அன்னையை எண்ணிக் கண்ணிர் விட்டான், என்னையோ ஈன்றாய்? என்றாய்; உறுதி கொண்டான் தாயுரை கொள்ளுவ தென்று. விண்டான் பலதரம், விழைந்து நடந்தான்; புன்மை ஒழிந்தது; புதுவாழ் வரும்பி நன்மை மிளிர்ந்தது; நாடெலாம் புகழ்ந்தது. “தாயிற் சிறந்ததோர் கோயிலுமிலையென’ வாய்விட் டுறைத்து வந்தித்து வாழ்த்திப் புண்ணிய மான காரியம், மண்ணிற் புரிந்து வாழ்ந்தனன் பின்னே.
103

Page 63
திருப்தி
மருத்துவனால் நீங்காத மாகொடிய நோய்கள் திருப்தி எனுமருந்தால் தீரும்.
(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
நெஞ்சமே! கேள்நான் நிகழ்த்துவ னோர்கதை, வஞ்சகம் சூது மலிந்த வுலகிலே ஒயாது உழைத்து உடலம் களைத்துப் பேய்போல் அலைந்து பேதலிக் காதே எல்லாம் வேண்டும்; ஒன்றும் வேண்டா, எல்லாம் இன்பம்; எல்லாம் தீமை; தாழ்வும் வாழ்வும் தான்சமன் செய்யும்; ஏழ்மை இன்பும், இருந்தன வானின் இன்பமும் தோன்றி இல்லையே யாகும். மன்பதை யுலகில் மயங்கல் வீணே, காயமும் பொய்யே; கருத்தும் பொய்யே; நேயமும் பொய்யே; நினைவும் பொய்யே; பிறந்தோம்; வளர்ந்தோம்; பெண்டு பிள்ளை இறக்கும் வரையும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருமெனக் கொண்டு தேறியிருத்தல் திருந்தறி வாகும். “போதுமென்ற மனமே பொன்செய் மருந்து” ஏதுங் குறையுனக் கில்லை என்றே தீர்மா னித்துச் செய்வன செய்து பார்மிசை வாழ்க! பாக்கிய மிதுவே.
104

பிற்சேர்க்கை
இலங்கை மாதீன்ற சுதந்திர மரதன்
கடவுள், தியானம் (கொச்சகக் கலிப்பா)
கண்ணகி தன் கோட்டங் கண்டுங் கயவாகு புண்ணியவி லங்கை புரந்தாண்டிருந்ததற் பின், எண்ணுமோரை நூற்றின் இருபதி னா றொன்றாண்டு’ பெண்ணணங்கு லங்கைப் பெயர்ந்திருந்தாள் வேற்றிடமே. (1)
பெயர்ந்திருந்த மாது “பிரிட்டிஸார்” கைவிலங்கு அயர்ந்து தளைப்பிரிய அருந்தொண்டு பல்லாண்டு துயரங் களைந்து சுதந்திரத்தாய் வரவளித்த உயர்ந்த கடவுள் உன்றனுக்கே வணக்கமெலாம். (2)
இலங்கா வளம்
நீர் சூழ்ந்த லங்கா நிலத்தின் வளமறிந்து பேர்சூழ்ந்த பறங்கிப் பிரியா திருந்தனர்காண்! கார் சூழ்ந்து பெய்யுங் கணக்கால் பசும் பொருட்கள் சீர் சூழ்ந்து காணும் திருவாமி லங்காவே. (3)
மலையும் மலைமுகடும் மட்டடங்கா நீர் வீழ் வுங் கலையுங் கலைமகளும் கண்டதற்கு வொப்பாமே! விலை கொள், பொன் முதலாம் விறலாபரணமணிந்த தலைவி இலங்கைத் தனியரசு போலுண்டோ! (4)
1 கயவாகு - இலங்கைக்கு அரசன், இவன் சேரன் செங்குட்டுவனது கண்ணகிக் கோட்டத்தை தரிசனை செய்து வாழ்த்தெடுத்துச் சென்றான்.
2 ஐந்நூற்றின் இருபதி னா றொன்று :- 533 - ஆண்டு குறியீடு
3 பறங்கி - சீனக்கிழக்கான்; வெள்ளையனுமாம். இனிவரும் இடந்
தோறும் இந்தப் பொருளே கொள்க.
105

Page 64
தாயீன்ற பிரதமர்வெற்றி
பிறந்த தலைமையர்கட்குப் பெரிய விரா மன் போல சிறந்து வருஞ் சேனா நாயகர் நாயகராம், அறந்தரு மசோகன் அணையால் அருள்வளர மறந்தரு போர் செய்து மாதாயவடைந்தனர்காண். (5)
சுதந்திரத்தாய் வரவு
அன்னியவன் கையிருந்து அன்னை இலங்காவும் முன்னிருக்கும் மக்கள், முகமுந் தழைத் தோங்க தன்னரிய வெற்றித் தழைய சுதந்திரமாய் முன்னிவந் துற்றாள், முகமுந் தழைத்தனவே (6)
சுதந்திரத் திருநாள்
ஆங்கிலத் தோராண்டு ஆயிரந் தொள் ளாயிரமும் பாங்கரிய நாற்பான் பத்திலொன் றில்லாத தேங்கிய பிப்ருவரியாந் திருநாளு நான்கதிலே ஓங்கியசீர் லங்கா வுயர்ந்து நிமிர்ந்தனளே. (7)
மக்கட் புடைசூழ மன்னுங் கொழும்பு நகர் ஒக்கல் புடைசூழ உத்தமனார் சேனூ”வும் பக்கத் துணைபூண்ட பாங்கர்களைப் போலெழுந்து மிக்கப் புதுமை விளைத்தனர் விளைத்தனர்காண்! (8)
1 தலைமையர் :- இலட்சுமணன் முதலாயினார்
2 அசோகன் - புத்தபிரான்
3 இந்தக் கவிதை சுதந்திர ஞாபகத் திருநாளைக் குறிக்கும் 1949 - பிப்ருவரி
- 4ம் நாள் குறியீடு.
4 சேனூ - பிரதமர் சேனநாயக
106

நால்வகை மக்கள்
வங்கங் கடற் செலுத்தி வாழ்ந்த குலத்தமிழன் பங்கிற் குறையகன்ற பக்குவியர் முஸ்லிமும் கொங்கவிழு மாலை குலத்தார் பறங்கியர்கை சிங்களத் தன்னாடு சீரடைந்த சிங்களரும் (9)
ஒன்றித்த ஐக்கியம்
வாராத பன்னாட்டார் மன்னும் லங்காவில் பேராத எக்காலும் பெருக்கெடுக்கும் ஒற்றுமையால் ஆராதனைப்பலவும் ஐக்கியத்தின் வாழ்த் தேந்தி, நேராம் நெறியழகை நிகழ்த்தினர்காண் அந்நாளே. (10)
பற்கோவிலின்வணக்கம் பள்ளிவா யற் றொழுகை கற்கோபுரச் சுடரின் கணிஇ லென் மணியோதை அற்புதத் தனிச் சுடராய் ஆண்டெழுந்த புத்தபிரான் தற்காப்பும் வேண்டித் தழைந்த துகாண் அந்நாளே. (11)
சுதந்திரமரதன்
முன்னாள்? “கிரேக்க” மரதன் முனைந்ததினும் பின்னாள் “ஒலிம்பிக்” பிரியா மரதனினும் இன்னாளிலங்கா வீன்றெடுத்த தனிமரதன் என்னே! தனிசிறப்பை யீங்கெடுத்து வந்தனன் காண். (12)
நாடடைந்த சுதந்திரத்து ஞாபகத்தை நாட்டுதற்குப் பாடடைந்த மரதப் பந்தயத் திருநாளே பீடடைந்த லங்காப் பிரதமர் சொன் மாறாது நீடடைந்த மக்கள், நிறைந்தனர்காண் பங்கெடுத்து (13)
1 சோழசக்கிரவர்த்தியாகிய கரிகாற் பெருவளத்தான் கடலோடினா
னென்பது புராதீளம் 2 இக்கவிதை சரித்திர சம்பந்தமுடையது; ஆண்டுக் காண்க.
107

Page 65
நாற்றிசை மரதன்
பருத்தித் துறைமுதலாய்ப் பாங்கிருக்கும் நல்லவர்கள், கருத்தமைந்த மட்டக் களப்பும் பொன்டாராவும் விருத்தத் தலை போலும் விறல் சேர்ந்த கொழும்பு நகர் திருத்தகுசால் மரதப் பந்தயந் திளைத்தனவே. (14)
அஞ்சல் ஒட்டம்
வடக்கிருந்து தமிழன் வரவும் வளஞ்சிறந்து முடக்ககன்ற குணபால் முஸ்லிம் வரவோட்டம் திடமுற்ற உறுகுணையிற் சிங்களத் திருவரவும் குடக்கிற் பறங்கியர் குறித்தெல்லை வரவோட்டம் (15)
பிரதமராஞ் சேனாநாயகர்தன் பேர் குறித்துச் சரித்திரப் பிரக்யாதி சார்த்திய வோ லைச்சுருளை விரதந்தலைபூண்ட வெற்றிக் கோர் வாழ்த்தெனவே இரவுங் கைகொண்டு இனிதோடி வந்தனரால் (16)
ஒடும் மரதனுக்கு ஒரு கட்டம் அணுகாமல் பாடும் சங்கீதக் கச்சேரி பரிபாலம் வாடா திருந்துவர வாழ்த்தும் வழிநெடுகக் கூடுஞ் சனத்திரளின் குதூகலப் பரிபாலம். (17)
இரவில் வழிகாட்டும் இருவரிசை விளக்கினங்கள் கரவ விருளோட்டுங் கதிர்க் கிரணம் போலுமால் வரவு மரதன் வழிகாட்டும் காட்சிக்கு இரவுப் பகலாயிற் றென்பதுவே ஒப்பாமே. (18)
108

ஒலைச்சுருளை யுவதிகள் கையிதல்
ஒத்திருந்து மக்கள் உழைக்க வருமரதன் எத்திவரும் எல்லை யுவதிகளின் கை நோக்கி வித்தகரும் போற்ற விறல்காட்டி யீந்ததுதான் உத்தமனும் பத்மினியும் உறவுண்ட போலுமால் (19)
மக்களின் மகிழ்வு
மரதன் வருநோக்கம் மனதை மாற்றாமல், விரதம் பூண்ட விறல் சேர்ந்த மன்னரெல்லாம் வரதந் தருதெய்வம் வரக்கண்ட புதுமை போல் தரதம் மியத்திற் றணிமகிழ்வு கொண்டனரால். (20)
நாள்மொழி விளக்கம்
சாற்றரிய “டொரிங்டன்’ சதுக்கத்தில் யுவமாது வீற்றிருந்த பிரதமர்க்கு விரித்தோலை வாசித்தரால் தேற்று மொழி சிங்களத்தும் திருவாம் அறபதினும் போற்றுந்தமிழ் ஆங்கிலத்தும் பொரித்திருந்த வாசகமே. (21)
பிரதமர்க்கு விசுவாசம்
வாணாள் வரவழைத்த வாக்கணையும் பிரதமராம் சேனா நாயகர்க்குச் செய்தித்தாள்’ கூறுவதோ? மானாரும் விசுவாச வாக்குறுதி மற்று நலங் கோணா திருக்குமெனக் குறித்தோலை’க் கூறுவதே (22)
சுதந்திர ஞாபக ஸ்தூபி வெற்றி யடைந்த விறல் சேர்ந்த லங்கைக்குப் பற்றும் பெருமைவரப் பல்லுலக மும் வாழ்த்த வற்றாத கல்லெழுப்பி வைத்தார் சேனநாயகர் நற்றவ சுதந்திரத்து ஞாபகார்த்த தூபியெனவே (23) 1 செய்தித்தாள் - பத்திரிகைகள் 2 குறித் தோலை - மரதன் கொண்டுவந்த ஒலைச்சுருள்
109

Page 66
செய்திச் சுருளை ஸ்தூபியின் அஸ்திபாரத்தின் கீழ்ப் பதிப்பிக்கப்படுதல்
வள்ளல் சேனாநாயகர் வந்தவோ லைச் சுருளை எள்ளலில்லா ஸ்தூபி இருக்கும் இடத்தின்கீழ் ஒள்ளமைந்த பெட்டகத்து உள்ளிருத்தி யாவர்க்கும் உள்மகிழ வைத்தார் உறவுந் தழைத்தனவே. (24)
சமயப் பிரார்த்தனை
காலங்காட் டுங்கருவி காட்டு நாற் பதினைந்தில், ஆலயம ணிகளெல்லாம் அரு மோதை காட்டினவால் மூலப் பெருமைதரும் முன்னுரைத்த வணக்கமெல்லாம் கோலப் பிரார்த்தனையாய்க் கொண்டிருந்த தந் நேரம் (25)
என்னே! இலங்காவே! ஆள வரு முனது சின்ன புதல்வர்கட்குச் சீரளிப்பாய் என் றேத்தி முன்னேர் சுதந்திரத்துக் கீதம் முழக்கெடுக்க, என்னே! இதன் பெருமை யென்றுரைத்தார் எல்லோரும் (26)
புறவுவிடுதூது
திறனாரும் லங்கைத் திருவிளைந்த சுதந்திரத்துப் புறவுகாள்! என்னே! புதுமைசுப சோபனத்தைக் குறவர்கள் போற்ற கொண்டேகி வையகத்து உறவினைத் தாருமென விட்டார் உறவோடே (27)
அன்னியரின் ஆட்சிக் காலம் அறிவிக்கும் முன்னரிய நூற்று முப்பான் மூன்று கணக்காய் தன்னரிய லங்கைத் தனிமூலை நான்கதிலும் சொன்னரிய புறவினங்கள், சோபனங்கொண் டேகினவால் (28)
1 ஒள் - அழகு
2 நாற்பதினைந்து - 4 மணி 15 நிமிஷம்
3 நூற்றுமுப்பான் மூன்று - 133 புறாக்கள் - அன்னிய ஆட்சிக்
காலமென விளங்குகிறது.
110

இலங்கை மாதிடத்துப் புலவன் வேண்டல்
புறவு விடுதூது புறத்தால் புலவர்களுக்
குறவு மிகவுண்டும் உள்ளதவி லங்காவே!
இறவு பகலுனக்கு இன்பக் கவிபாடி உறவு தனைபூண்டேன் ஒற்றுமையைத் தாராயே. (29)
வாழ்த்துக் கூறல்
வாழ்க! சுதந்திர லங்கை வளர்தீவும் வாழ்க! பிரதமர் சேனா வள்ளலரும் வாழ்க! தனிப்பெருமை மக்களதி காரர்களும்
வாழ்க! சிங்களர்கள் கெளதமரின் வாழ்வாலே (30)
(இலங்கை மாதீன்ற சுதந்திர மரதன் சம்பூரணம்)
1 கெளதமர் - புத்தபிரான்
11

Page 67


Page 68


Page 69
PRNED EY HEO
 

OLOMEO PICTURE PALACE