கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துத் தமிழ் நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் பயில்நிலையும் பயன்பாடும்

Page 1
ஈழத்துத் தமிழ் நாட்டார் பண்ட
பயில்நிலையு
கலாநிதி கிருஷ்ணபி
 
 

p நாவல்களில் ாட்டுக் கூறுகள்
buu6öTurtGib

Page 2


Page 3

ஈழத்துத் தமிழ் நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள்
பயில்நிலையும் பயன்பாடும்
•
கலாநிதி கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்

Page 4

ஈழத்துத் தமிழ் நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் பயில்நிலையும் பயன்பாடும்
கலாநிதி கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் முதுநிலை விரிவுரையாளர் - தமிழ்த்துறை
யாழ்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
மலர் பதிப்பகம் 56/4 மணல்தறை ஒழுங்கை கந்தர்மடம், யாழ்ப்பாணம், இலங்கை,

Page 5
தலைப்பு
ஆசிரியர் முதற்பதிப்பு வெளியீடு
பதிப்புரிமை
அச்சாக்கம்
விலை
Title of the Book
Author
CopyRight Language
Edition
Size of the Book
Printing Point Paper Number of Pages Number of Copies Publisher
Printers
Price
ISBN
நூல் விபரம்
ஈழத்துத் தமிழ் நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் பயில்நிலையும் பயன்பாடும் கலாநிதி கிருஷ்ணபிள்ளை விசாகரூபன் ஏப்ரல் 2009
மலர்பதிப்பகம் 56/4 மணல்தறை ஒழுங்கை கந்தர்மடம் யாழ்ப்பாணம், இலங்கை விசாக. சண்முகன் மீரா ஃபைன் ஆர்ட்ஸ் சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா. இலங்கை ரூபா 1500
The Folk Cultural Elements in The Tamil Novels of Sri Lanka Method of Learning and Utilization
Dr. Krishnapillai Visakaruban Visaka. Shanmugan
Tamil
First Edition: April 2009 Demy 1 x 8
10 pt
Cream Wove
496
300
Malar Pathippakam 56/4, Manaltharai Lane Kandarmadam, Jaffna, Sri Lanka
Meera Fine Arts, Sivakasi. Tamilnadu, INDIA.
Sri Lankan Rs. 1500/-
978-955-5110-2-7

பேராசிரியர் கு. வெ.பாலசுப்பிரமணியன் முன்னை இலக்கியத்துறைத்தலைவர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
அணிந்துரை
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் முதுநிலை விரிவுரையாளராக இற்றை நாளிற் பணியாற்றிவரும் முனைவர் கிருஷ்ணபிள்ளை விசாகரூபன், தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் என் மேற்பார்வையில் 2000-2002 ஆம் ஆண்டுகட்கு இடைப்பட்ட ஈராண்டுகளில் “ஈழத்துத் தமிழ் நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள்: பயில் நிலையும் பயன்பாடும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர்ப் பட்டப் பேறெய்தினர். அவருடைய இந்த ஆய்வேடு இப்போது அச்சுருப் பெறுவது மகிழச்சி பயக்கிறது.
விசாகரூபனின் ஆய்வேடு 1. ஆய்வு முன்னுரை, 2. ஈழத்துத் தமிழ் நாவல்களும் நாட்டார் வழக்காற்றியலும், 3. நாவல்களும் நாட்டுப்புற நம்பிக்கைகளும், 4. நாவல்களும் சடங்கு நடைமுறைகளும், 5. நாவல்களும் நாட்டார் பண்பாட்டு வழக்காறுகளும், 6. நாவல்களும் பழமொழியும், 7. முடிவுரை என்ற ஏழு உட்பிரிவுகளைக்கொண்டது. இந்த ஆய்வேட்டின் பின்னிணைப்புக்களாக 1. வட்டார வழக்குச் சொற்களும் அவற்றுக்கான பொருள் விளக்கமும், 2. பழமொழிகளும் மரபுத் தொடர்களும், 3. நாட்டார் உவமைகள் என்ற மூன்று பகுதிகள் இடம் பெற்றுள்ளன.
பட்டப்பேற்றுக்குரிய விதிமுறைகளின் படிக்கட்டமைக்கப் பெற்ற ஆய்வேடு கல்வியுலகும், பிறவுலகும் பயன் கொள்ளும் வகையில் நூலாக்கம் பெறுங்கால் சில பகுதிகளை நீக்கியும் சில பகுதிகளைச் சேர்த்தும் உருவாக்கம் பெற்றுள்ளது.
முனைவர் விசாக ரூபன் ஈழத்துத் தமிழ் இலக்கியங்களில் தேர்ச்சியும் தெளிவும் பெற்றவர். குறிப்பாக ஈழத்துக் தமிழ் நாவல்கள் பலவற்றையும் படித்துணர்ந்து அவற்றைப் பலகோணங்களில் ஆய்வுக்கண் கொண்டு நோக்கிய பழக்கமுடையவர். இதற்கொப்பவே அவர் ஈழத்து நாட்டார் வழக்காற்றியலிலும் ஆழ்ந்த பயிற்சியும் புலமையும் பெற்றிருந்தமை கண்டே, அவரை

Page 6
6 x
இத்தலைப்பில் ஆய்வு செய்யவும் அப்பணிக்கு யான் நெறியாளராகப் பணியாற்றவும் இசைந்தேன்.
முனைவர் விசாக ரூபன் இவ்விரண்டாண்டுகள் தமிழகத்தில் தங்கி ஆய்வுப் பணி மேற்கொண்ட காலை அவருற்ற உளத்துயர்க்கும், பல்வேறு கவலைகட்கும் அவருடைய தமிழ்க்கல்வியே மாமருந்தாய் அமைந்து அவருக்கு ஆறுதல் நல்கிற்று. இருந்தமிழே உன்னால் இருந்தேன்’ என்றுமாறு அவர் இங்கு இருந்தார். அவர் நெஞ்சச்சுவர்களில் ஈழக்கடலலைகள் போல் எவ்வளவோ எண்ணங்கள் எழும்பியும் மோதியும் இடையறாப் பூசல் விளைத்தும் ‘என்று கொலோ என் தாயகம் காண்பதென ஆர்ப்பரித்தமை அவர் முகத்தே வெளிப்பட்டிருந்த நிலையறிவேன்,
முனைவர் விசாகரூபனின் இந்த நன்னூல் இருபெரும் பயன்களை அளிப்பது. அைெ ெ 1. ஈழத்துத்தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் வளமான நிலை. அவற்றுள்ளும் நாவல்கள் பலப்பல எழுதப்பெற்று ஈழத்தமிழ்ச் சமுதாய நிலையைப்படம் பிடிக்குமாறு படைக்கல் பெற்ற நேர்த்தி. 2. ஈழத்தமிழர்தம் தொன்மைக்காலந்தொட்டு அவர்களின் நாடி நரம்புகளில் உட்கிடந்து வாழ்க்கை நிகழ்ச்சியூடெல்லாம் வெளிப்படும் நாட்டார் வழக்காற்றியற் பண்புக் கூறுகள். அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளிலும், ஆட்ட பாட்டங்களிலும், விழாக்களிலும், இன்பதுன்பச் சடங்குகளிலும், பிற கலைக் கூறுகளின் புலப்பாட்டிலும், பேச்சு வழக்கிலும், சமய நம்பிக்கைகளிலும், மருத்துவ மரபுகளிலும், அழியாது துளிர்த்தும் தளிர்த்தும் கிளைபரப்பியும் அடுத்தடுத்த தலைமுறை தோறும் குருதிப்பண்பாய்த் தொடருமாறு அமைந்தும் வந்த ஈழத்தமிழர்தம் பண்புப் பேறுகள் பலவற்றையும் இந்த நூல், அந்நாட்டு நாவல்களில் வெளிப்படுமாற்றை விளங்க உரைக்கின்றது.
முனைவர் கிருஷ்ணபிள்ளை விசாகரூபனின் இந்நூல் ஒரு சிறந்த பண்பாட்டியல் ஆய்வு என யான் கருதுகின்றேன். இவருடைய இம்முயற்சிக்கு என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பன். கு.வெ. பாலசுப்பிரமணியன்

(X 7
முனைவர் ஆ. சண்முகம் பிள்ளை நாட்டுப்புறவியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் - 613010
வாழ்த்துரை
உலகமயமாதல் கொள்கையின் அடிப்படையில் பன்னாட்டு அரசுகளும் இயங்கி வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி, ஊடகங்களின் வளர்ச்சி, கணினிப்பயன்பாடு போன்ற அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உலகத் தொலைவுகளும் சுருங்கி வருகின்றன. உலக நாடுகள் பலவும் பல்வேறு பண்பாட்டுத் தளங்களைப் பெற்றுள்ளன. இத்தகைய பண்முகப் பண்பாட்டை அகற்றி ஒற்றைப் பண்பாட்டைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளில் வல்லரசுகள் கருத்தூன்றுகின்றன.
இதன் காரணமாகப் பல்வேறு மொழிகள் - பண்பாடு - நாகரிகத்தன்மைகளைக் கொண்ட இனக்குழுக்கள் பலவும் தங்களின் சொந்த அடையாளங்களை இழக்கும் நிலையிலுள்ளன. இச்சூழலில் ஒவ்வொரு இனத்தவரும் தங்களுடைய மரபுச் செவ்வகங்களைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு அத்தனிப்புகளை மேற்கொள்கின்றனர். அறிவுழைப்பில் ஒன்றிவரும் ஆய்வாளர்களும் அறிஞர்களும் தங்களின் படைப்புகளில் மரபுச் செய்திகளைப் பதிவு செய்கின்றனர்.
இவ்வகையில் ஈழத்து நாவலாசிரியர்களான டானியல், செ. கணேசலிங்கன், எஸ். பொன்னுத்துரை, செங்கை ஆழியான், பாலமனோகரன் முதலான படைப்பாளிகளும் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் பதிவுறும் வகையில் தங்கள் நாவல்களை ஆக்கம் செய்துள்ளனர். இந்நிலைகளைக் கருத்தில் கொண்டு ஈழத்துத் தமிழ் நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் பயில் நிலையும் பயன்பாடும் என்னும் பொருண்மையில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வாளர் கி. விசாகரூபன் அவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Page 7
8 X
ஈழத்துத் தமிழ் நாவல்களில் ஈழத் தமிழர்களின் வாழ்வியல் நடைமுறைகள் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கூறுகள் நாவல்கள் புனை திறனுக்கு எந்த அளவிற்குத் துணை நிற்கின்றன போன்ற சிக்கல் வினாக்களுக்கு விடை தேடும் வகையில் ஆய்வு அமைந்துள்ளது.
பன்னாட்டுப் புலப் பெயர்வுகளின் காரணமாகப் பன்னாட்டுப் பண்பாட்டுக் கலப்பில் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இச்சூழலில் ஈழத்தமிழர்களின் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்வதற்கு இவ் ஆய்வு பயனுடையதாக அமையும்.
முனைவர் கி. விசாகரூபன் அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர். கடந்த பல ஆண்டுகளாக அவரை நான் நன்கறிவேன். ஒழுங்குணர்வும் கடமையுணர்வும் மிக்க அவர் உழைப்பார்வமும் மிக்கவராவார். நாட்டார் வழக்காற்றியல்-ஒர் அறிமுகம், புலம்பெயர் கவிதை; உருவம் உள்ளடக்கம் உணர்த்தும் முறை, யாப்பிலக்கணமரபில் கலிப்பா, சங்க இலக்கியம் பதிவும் பார்வையும் போன்ற பல நூல்களைப் படைத்தளித்துள்ளார்.
நூலாசிரியர் தன் முனைவர் பட்ட ஆய்வேட்டை நூலாக்கம் செய்யும் பொருட்டு ஆய்வேட்டின் சில பதிகளை நீக்கியும் சில வற்றைப் புதிதாக இணைத்தும் இந்நூலை வெளியிடுகிறார்.
இந்நூல் ஈழத்துத் தமிழ் நாவல்களும் நாட்டார் வழக்காற்றியலும், நாவல்களும் நாட்டுப்புற நம்பிக்கைகளும், நாவல்களும் சடங்குமுறைகளும், நாவல்களும் நாட்டார் பண்பாட்டு வழக்காறுகளும் எனும் உள்ளடக்கப் பகுப்பில் ஆழமான கருத்துக்கள் பலவற்றின் கொள்ளிடமாகத் திகழ்கிறது. இது போன்று மேலும் பல நூல்களைப் படைத்தளிக்க வேண்டுமென நிறைந்த நெஞ்சோடு நூலாசிரியரை வாழ்த்தி மகிழ்கிறேன். தமிழுலகம் இந்நூலை ஏற்றுப் போற்றும் என அவதானிக்கிறேன்.
ஆ. சண்முகம் பிள்ளை

முன்னுரை
‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற புலமைத்துறை மீதான ஆய்வுச் சிரத்தை என்பது ஈழத்தைப் பொறுத்தவரை இன்னும் பெரிதும் விசாலிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஈழத்துக்குப் பல்வேறு தேவைகளுக்காக அவ்வப்போது வருகை தந்த மேனாட்டார் பலரும் தமிழர் தம் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றின் மீது தமது பார்வையைச் செலுத்தி உள்ளனர். அவை பல்வேறு கட்டுரைகளாகவும் நூல்களாகவும் வெளிவந்துள்ளன. மேனாட்டாரின் நடவடிக்கைகளால் கவரப்பட்ட சுதேசிகள் பலரும் பின்னாளில் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலே குறித்தவர்களின் எழுத்துக்கள் மற்றும் தொகுப்புக்களில் நாட்டார்வழக்காற்றியல் சார்ந்த முறையில் நுட்பங்களைப் பெரிதும் பார்க்கமுடியவில்லை என்றே சொல்ல வேண்டும்.
தமிழகத்தைப் போலவே ஈழத்திலும் 1960களுக்குச் சற்று முன்பின்னாக இத்துறை சார்ந்த முயற்சிகள் நிறுவன மயப்படுத்தப்பட்டதைப் பார்க்கமுடிகிறது இக்காலப்பகுதியில் நாட்டார் பண்பாடு தொடர்பான தொகுப்புக்கள் மற்றும் ஆய்வுகள் பலவும் அரச ஆதரவுபெற்ற கலைக்கழகங்கள், பாட சாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் முன்னெடுக்கப் பட்டன. இந்நிறுவன மயப்படுத்தப்பட்ட முயற்சிகளின் பலனாக வெளிவந்த ஆக்கங்களினூடே ஈழத்தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்கள் மீதான சிரத்தை என்று பல்வேறு நிலைகளிலும் வெளிப்பட்டு நின்றதனைப் பார்க்க முடிந்தது இக்காலகட்டத்தில் தான் இலங்கைப் பல்கலைக் கழகங்களின் தமிழ்த் துறைகளின் பாடத்திட்டங்களில் நாட்டார் வழக்காற்றியல் என்ற பாடமும் தணித்த ஒரு அலகாக இணைக்கப்பட்டது.
ஈழத்தை பொறுத்தவரை இன்று வரை எந்தவொரு பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் வழக்காற்றியலுக்கென்று தனித்த ஒரு துறை காணப்படாத நிலை இன்று வரை நீடித்தே வருகிறது. ஆயினும்

Page 8
10 «Х•
இப்புலமைத்துறை குறித்த காத்திரமான சிந்திப்புக்கள் மற்றும் எழுத்து நிலைப் பட்ட வெளியீடுகள் பலவும் அவ்வப் போது நிகழ்ந்தே வந்துள்ளன. பேராசியர்கள் க. கணபதிப்பிள்ளை, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ், இ.பால சுந்தரம், க. அருணாசலம், சி. மெளனகுரு, சி. சிவலிங்கராஜா, எம்.ஏ.நுஃமான் மற்றும் கலாநிதி செ. சுந்தரம்பிள்ளை முதலானோர்கள் இவ்விடத்தில் விதந்து குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களுடைய எழுத்துக்கள் பலவும் ஈழத்தமிழ் தம் சுதேசியப் பண்பாட்டைப் பல்வேறு நிலைகளிலும் ஆய்வுக்குட்படுத்துவனவாக அமைந்தன. குறிப்பாக பேராசிரியர் இ. பாலசுந்தரம் இப்புலமைத்துறையின் பல்வேறு கூறுகளின் மீதும் தனது புலமைச் சிரத்தையினைச் செலுத்தி இத்தடத்தில் தனக்கெனத் தனியான ஒரு இடத்தினை நிறுவிக்கொண்டார். இவ்வாறான ஒரு புலமைப் பாரம்பரியத் தொடர்ச்சியில், ஈழத் தமிழர்தம் பண்பாட்டு அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியில் உருவானதே இந்நூலாகும்.
இலக்கியம் சமூகவியல் பண்பாடு மற்றும் மானுடவியல் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கான பயனுள்ள தரவுகள் (Data) பலவற்றையும் ஒரு காலகட்டத்து ஈழத்துத் தமிழ் நாவல்கள் பலவும் எவ்வாறு தம்முள் கச்சிதமாகச் சிறைப்பிடித்துள்ளன என்பதனையும், இத்தரவுகள் பலவும் குறித்த நாவல்களின் கதையோட்டத்துக்குப் பங்கம் ஏற்படுத்தாத வகையில் அவற்றின் புனைதிறனுக்கு எவ்வாறு கை கொடுத்துள்ளன என்பதனையும் இந்நூல் பலவாறு வெளிப்படுத்தி நிற்கிறது.
தஞ்சைத் தமிழ்ப்பல்களைக் கழக இலக்கியத் துறையில் 2000-2002 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் முனைவர்ப்பட்டப்பேற்றுக்காக அளிக்கப்பட்ட ஆய்வேடே இங்கு நூலாக உருப் பெற்றுள்ளது. நூலாக்கும் பொழுது அதன் அழகியல் மற்றும் செறிவு கருதி ஆய்வேட்டின் சில பகுதிகளை நீக்கியும் சிலபகுதிகளைப் புதிதாகச் சேர்த்தும் உள்ளேன். இம்முயற்சியில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர். எஸ் சிவலிங்கராஜா அவர்கள் பெரிதும் உதவினார்கள். அத்துடன் ஆய்வேட்டின் தகுதியை அறிந்து புலமைத் திருட்டைத் தவிர்க்க வேண்டி அதனை உடனடியாக நூலுருவாக

* 11
வெளிக் கொணரவேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தவரும் இவரேயாவர். அவருக்கு என் நன்றி.
எனது ஆய்வேட்டை நூலுருவாக வெளிக்கொணரப் போகின்றேன் என்றவுடன் இன்முகம் காட்டி அதனை வரவேற்று அருமையானதொரு அணிந்துறையினை வழங்கிய எனது ஆய்வு நெறியாளர் அன்புக்கும் பெருமதிப்புக்குமுரிய தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறையின் முன்னாள் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நூலுக்கு வாழ்த்துரை வழங்கியதோடு இந்நூலுருவாக்கத்தின் பல்வேறு நிலைகளிலும் என் தோளோடு தோள் நின்று எந்தவிதமான பிரதியுபகாரமும் பாராது கடுமையாக உழைத்தவர் எனது பெருமதிப்புக்குரிய நண்பர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக நாட்டுப்புறவியல்துறைப் பேராசிரியர். முனைவர் ஆ. சண்முகம்பிள்ளை அவர்கள் இந்நூலின் அழகியலில் அவருக்கான இடம் கணிசமானது அவருக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
என்னை இப்புலமைத் துறையினுள் உள்ளீர்த்து கனடாவில் இருந்தபடியே என்னைப் பல வழிகளிலும் ஊக்கி நின்று ஆசிகளை வழங்கிவரும் எனது பெருமதிப்புக்குரிய ஆசான் பேராசிரியர் கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்களை நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.
இந்நூலைச் சிறந்த முறையில் வடிவமைத்துத் தந்த அன்னம் - அகரம் பதிப்பக முதல்வர் மதிப்புயர் மீரா. கதிர் அவர்களுக்கு என்
நன்றி.
7.8.2OO8 கலாநிதி கி. விசாகரூபன்

Page 9

கையுறை
என்னையும் என் உடன் பிறந்தார் எண்மரையும் கண்ணியமாக வளர்த்து ஆளாக்கும் பொருட்டுத்தம் இன்ப துன்பங்களையெல்லாம் மறந்து எமக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்து உழைப்பு செய்து வாழும் தெய்வங்கள் ஐயா! பொன்னையா கிருஷ்ணபிள்ளைக்கும் அம்மா! விசாலாட்சி கிருஷ்ணபிள்ளைக்கும் இந்நூல் நன்றிக் கையுறை. - கி.வி.

Page 10

உள்ளடக்கம்
ஈழத்துத் தமிழ் நாவல்களும் நாட்டார் வழக்காற்றியற் கூறுகளும்
நாவல்களும் நாட்டுப்புற நம்பிக்கைகளும்
நாவல்களும் சடங்கு நடைமுறைகளும்
நாவல்களும் நாட்டார் பண்பாட்டு வழக்காறுகளும்
நாவல்களும் பழமொழியும்
முடிவுரை
துணைநூற்பட்டியல்
பின்னிணைப்புக்கள்
17
83
2O6
283
392
434
450
478

Page 11

ஈழத்துத் தமிழ் நாவல்களும் நாட்டார்
வழக்காற்றியற் கூறுகளும்
'நாவல்’ என்பது ஐரோப்பியர் தொடர்பினால் தமிழுக்கு வந்து சேர்ந்த புதியதொரு இலக்கிய வடிவம். இவ்வடிவம் தமிழ் மொழியில் ஏற்படுத்திய தாக்க விளைவுகள் மிகக் கணிசமானவையாகும். தமிழகத்துத் தமிழ் நாவல் வரலாற்றைப் போலவே ஈழத்துத் தமிழ் நாவலும் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றினைக் கொண்டதாகும். தமிழில், நாவலுக்கும் நாட்டார் வழக்காற்றியலுக்கும் இடையேயான ஊடாட்டம் என்பது வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாகக் காணப்பட்ட ஒன்றல்ல. ‘நாவல் பொதுமக்களின் இலக்கிய வெளிப்பாட்டு வடிவமாக மாறத் தொடங்கிய பின்னர்தான் தனிமனிதனை, அவனுடைய சூழலுடன் பொருந்திப்பார்க்கும் பண்பு பெருவழக்காகியது. இந்நிலையானது பிரதேசப்பண்பு நாவல்களில் (வட்டார நாவல்கள்), வழக்காற்றியற் கூறுகளைப் பதிவு செய்து, ஆவணப்படுத்தக் கூடியதான ஒரு சூழலமைவினைத் தோற்றுவித்தது எனக் கூறலாம்.
ஈழத்துத் தமிழ் நாவல் வரலாறு பற்றிய நோக்கில் நாவல் என்பதன் வரலாறு, வளர்ச்சி, தேக்கம் என்பனவற்றைத் தனியே "ஈழம்’ என்ற நாட்டு எல்லைக்குள் நின்று ஆய்வு செய்யாமல், அவற்றைத் தமிழில் நாவலின் வரலாற்றோட்டத்தினுடைய பின்புலத்தில் வைத்து ஆய்வுசெய்ய வேண்டிய தேவை உள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றைத் தமிழ் நாட்டின் இலக்கிய வரலாறாகப் பார்க்கின்றதான ஒரு மரபு இத்தேவையை முன்னிறுத்தியுள்ளது. நாவல் தோன்றுவதற்கான வரலாற்று நிகழ்வுகள் இருநாடுகளுக்கும் ஒத்ததாகவே இருந்திருக்கின்றன. பொதுநிலையிற் பார்க்குமிடத்து, தமிழ்நாட்டின் நாவல் இலக்கியத்தின் ஏற்ற இறக்கங்களை ஒட்டியே

Page 12
18 X
ஈழத்துத் தமிழ் நாவலும் மாறுதல்களை எய்தியுள்ளதெனக் கூறலாம். அத்துடன் வரலாற்றின் நடுப்பகுதியிலிருந்தே ஈழத்துத் தமிழ் நாவல் குறித்த உணர்வுப்பூர்வமான கருத்து நிலைகள் உருவாகியமையும் இத்தேவையை மேலும் அவசியமாக்கியதாகக் கருதலாம்.
ஈழத்துத் தமிழ் நாவல்களும் நாட்டார் வழக்காற்றியலும் என்ற தலைப்பிலான இவ்வியலில் இரண்டு செய்திகள் குவிமையப்படுத்தி நோக்கப்படுகின்றன.
அவை வருமாறு
1. ஈழத்துத் தமிழ் நாவலின் வரலாறு, வளர்ச்சி குறித்த செய்திகள்
2. ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல்; நாட்டார் வழக்காற்றியலுக்கும் நாவலுக்கும் இடையேயுள்ள உறவு நிலைகள்.
தமிழில் நாவல் இலக்கியம்
தமிழின் இலக்கியமரபு மிக நீண்ட வரலாற்று அடித்தளம் கொண்டது. காலந்தோறும் ஏற்பட்ட வளர்ச்சிகளும் புதிய பரிணாமக் கூறுகளும் இந்த இலக்கிய மரபில் பல மாற்றங்களைத் தோற்றுவித்திருக்கின்றன. தமிழில் காலத்துக்குக் காலம்புதிய பல விடயங்கள் உள் வாங்கப்பட்டும், வழக்கொழிந்தன தவிர்க்கப்பட்டும் வந்துள்ளமையைக் காண முடிகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் நாவல் என்ற இலக்கிய வடிவம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளிலே காத்திரம் வாய்ந்த ஒரு இலக்கிய வடிவமாக உள்வாங்கப்பட்டது. வரலாற்று நோக்கில் அவதானிக்கும்போது ‘நாவல்’ என்பது தமிழுக்குப் புதிய ஒரு அனுபவமாகவே கருதப்படுகிறது. தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் வரை செய்யுள் இயற்றும் மரபே காணப்பட்டது. ஐரோப்பியத் தொடர்பு தமிழ் நாட்டுக்கு ஏற்பட்ட பின்னர் இம்மரபு, மாற்றம் பெறுவதாயிற்று.
கதை கூறும் மரபு தமிழில் ஆரம்பத்தில் இருந்தே காணப்படுகிறது. கதைப்பாடல்களிலும் இதனைக் காணமுடிகிறது.

* 19
இத்தன்மை உயர் இலக்கியங்களாகப் போற்றப்படும் காவியங்களிலும், எழுதாக் கிளவிகளாகப் போற்றப்பட்டு வந்த நாட்டார் இலக்கியமரபிலும் காணப்பட்டது எனினும், நாவலில் காணக் கூடிய சிறப்புப் பண்பு என்னவெனில் அது தொடர்நிலைக் செய்யுள் மரபைப் போலல்லாது உரைநடையில் எழுதப்பட வேண்டியதாக இருந்தமையாகும்.
நீண்ட கதை கூறும் மரபு மாற்றமுற்றுப் பின்னர் அது நாவல் இலக்கியமாகிறது. இந்த இலக்கிய வடிவம் தமிழில் நாவல் என அழைக்கப்படுவதற்கு முன்னர் ‘வசன காவியம்’ என அழைக்கப்பட்டு இருக்கின்றதென இது தொடர்பான ஆய்வாளர் கருதுவதுண்டு. ஆரம்பகால நாவலாசிரியர்கள் தமது படைப்பைக் காவியத்தின் சாயல் உடையதாகக் காட்டினர். தமிழில் எதுவும் புதிதெனக் கருதாத தமிழறிஞர், தமது வழமையான மரபுக்கேற்பக் காவியத்தின் வழி வருவது நாவல் எனக் கொண்டு அதற்கு ஒரு இலக்கியத் தொடர்ச்சியையும் GT6 விழைத்தனர். ‘பிரதாபமுதலியார் சரித்திரம் வசன காவியப் பண்புடையதென்பர். ஆரம்ப காலத்திலே சில புனை கதைகள் செய்யுள் வடிவிலேயே தோன்றியுள்ளன. தமிழ் நாட்டில் தோன்றிய நாவல்களிலொன்று செய்யுள் நடையிலே அமைந்திருந்ததாக ஆஷர் குறிப்பிடுவார். தமிழ் நாவலாசிரியர் சிலரைப் பற்றி ஆங்கிலத்தில் "The Novelin India’ எனும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரையில் மேற்கண்டவாறு கூறியுள்ளமை தெரியவருகிறது. ‘நாவல்’, ‘காவியம்’ இவை இரண்டுக்கும் இடையே ஒப்புமை தேடினாலும் இவையிரண்டையும் தனித்தனி வேறான இலக்கிய வடிவங்களாகவே கொள்ளுதல் வேண்டும்.
தமிழில் நாவல் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் இவ்விடத்திலே நாவல் இலக்கியம் தமிழில் தோன்றுவதற்கு முன்னர் காணப்பட்ட தமிழ் இலக்கியங்களினுடைய ஆக்கம், பொருண்மை, அவை பேணப்பட்ட விதம் ஆகியவை பற்றிக் குறிப்பிடுவது அவசியமானதாகும். குறிப்பாகத் தமிழ் மொழி மரபிலே நாவல் தோன்றுவதற்கான அகவயமான சூழல் ஏற்படுவதற்கு முன்பு நிலவிய பாடக் கையளிப்பு முறைமையை (Text Transmission) ஒப்பீட்டு நிலையில் நோக்கும் போது அக்கால நிலைமை வறட்சி பொருந்தியதாகவே காணப்பட்டிருந்தமை புலனாகின்றது.

Page 13
20 &
நவீன காலத்துக்கு முற்பட்ட கால இலக்கியப் பாடங்கள் (Text) மனனம் செய்வதற்கு இலகுவாக இறுக்கமான செய்யுட்களால் ஆக்கப்பட்டன. இவை மனனம் செய்யப்பட்டு மற்றவர்களுக்குச் செவிவழியாகவே பெரிதும் கையளிக்கப்பட்டன. கல்லில் செதுக்கியும், ஒலைகளில் எழுதியும் இவை பேணப்பட்டன. சைவ சமயத்துக்குரிய வேதங்களைச் சுருதி’ எனவும், ‘எழுதாமறை எனவும் பெயரிட்டு வழங்கும் மரபு இப்பாடக் கையளிப்பு முறைமைகளினால் ஏற்பட்டதெனலாம். பாடங்களைப் பிறருக்கு வழங்கும் ஒரு ஆரம்பகால முறையாகவே, ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் புராணபடனம், கதாகாலட்சேபம் முதலியன அமைந்தன.
பாரம்பரிய இலக்கியங்களை நோக்குகின்ற போது, அவை கற்பனைகளையும், அதீத ஆற்றல் பெற்ற தலைமக்களையும், மகோன்னதமான பொருட்களையும் பற்றியே பெரிதும் பேசின எனக் கூறலாம். சாதாரண வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட தலைமக்களுடைய சிறப்புக்களை மிக இலாவகமாக எடுத்தியம்பி நின்ற இந்த இலக்கியங்கள், அறநெறிகளைக் கருத்து வடிவில் காட்டக் கூடிய வகையினவாகக் காணப்பட்டன.
பாரம்பரிய மரபிலே காணக் கூடிய இன்னொரு அம்சம் என்னவெனில் ஒரு நூல் அதற்கு முன்பிருந்த இன்னொரு நூலில் காணப்படும் கருத்துக்களையும், சொல்லாட்சிகளையும், உவமை, உருவகங்களையும் கொண்டமையும் தன்மையாகும். கம்பனில் திருத்தக்க தேவரையோ அல்லது இளங்கோவில் வள்ளுவரையோ காணக்கூடிய தன்மை தமிழ்ப் பாரம்பரிய மரபுக்குரியது. இத்தன்மையானது இந்த இலக்கியங்களின் பாரம்பரிய மரபுப் பேணலுக்குட்பட்ட ஒரு அம்சத்தையே புலப்படுத்துவதாயுள்ளது.
மேலே குறிப்பிட்டவை போன்ற வகையிலமைந்த இலக்கிய மரபொன்று தமிழிலே பன்னெடுங்காலமாகப் பேணப்பட்டு வந்தது, இம்மரபிற் பின்னர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவாறானதொரு இலக்கிய வரலாற்று ஒட்டத்திலே ஐரோப்பியர் வருகையுடன் பாரியதொரு திருப்புமுனை ஏற்படுகின்றது. அது காலவரை பேணப்பட்டு வந்த மரபுகளின் ஒட்டம் ஐரோப்பியர் வருகையை அடுத்துத் தடம் மாறி ஓடவேண்டிய ஒரு இன்றியமையாத தேவை

8 21
ஏற்படுகின்றது. இலக்கிய உற்பத்தி, விநியோகம், வாசகர் வட்டம், கருப்பொருள் முதலான அனைத்து விடயங்களும் மாற்றமடையலாயின.
ஐரோப்பிய ஆட்சி தமிழ் இலக்கிய வரலாற்றிலே மாற்றங்களை ஏற்படுத்தியது என்னும்போது, அதற்கு முன்னரும் தமிழ் நாட்டின் வரலாற்றிலே அரசியல் மாற்றங்கள் ஏற்படவில்லையா என்னும் பிதானமான வினா எழுகிறது. அத்தகைய மாற்றங்கள் சமுதாய மாற்றத்தையும், அதனுடன் கூடவே இலக்கிய மரபுகளையும் மாற்றவில்லையா என்ற வினாவும் எழுகிறது. முந்தைய நூற்றாண்டுகளில் அரச வம்சங்கள் மாறும் போது இராசதானியிலும், அரசவையிலும், சிலபல மாற்றங்கள் நிகழுமாயினும் சாதாரண மக்கள் வாழ்க்கையில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்ததாக அறியப்படவில்லை. அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமுதாய நிலை மாறவில்லை என்றே தெரிகிறது. முக்கியமாக இம்மக்களுடைய பொருளாதார அமைப்பிலோ அல்லது வாழ்க்கை முறைமையிலோ எவ்வித மாற்றங்களும் உணரப்படவில்லை. ஆனால் இம்மாற்றம் தமிழ்நாட்டு வரலாற்றிலே ஐரோப்பியரின் தலையீட்டுடன் ஏற்படுகிறது எனலாம். தொழில்நுட்ப முன்னேற்றம், கல்வி விருத்தி, இவற்றினால் உண்டாகிய பொருளாதார மாற்றம் எனச் சமூகத்தின் அடிப்படை அம்சங்களிலே பல்வேறு மாறுபாடுகள், முன்னேற்றங்கள் என்பன ஏற்பட்டதன் காரணமாக ஒட்டுமொத்தமான ஒரு சமுதாய மாற்றம் ஏற்படலாயிற்று.
ஒவ்வொரு இலக்கிய வகையின் தோற்றத்துக்கும் சமுதாய வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பார் கா. சிவத்தம்பி. ஆரம்ப கால வீரயுகப் பாடல்கள், காவியங்கள், தல புராணங்கள் போன்றன தத்தம் கால சமுதாய அமைப்பினடியாகத் தோன்றியவையாகும். ஐரோப்பாவில் நிலவிய நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே புனைகதை என்ற இலக்கிய வடிவம் தோன்றியது." இவ்வாறான ஒரு மாற்றச் சூழலிலேதான் தமிழிலும் இந்த இலக்கிய வடிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதாவது தமிழ் நாட்டுச் சமூக அமைப்பு தனது பாரம்பரிய நெறிமுறைகளிலிருந்து விலகிச்செல்ல வேண்டிய ஒரு நிலைமாறு தன்மை’ ஐரோப்பியர் ஆட்சியில் ஏற்படுகிறது. ஆங்கில

Page 14
22 X
அரசு ஆட்சியைக் கைப்பற்றியதோடு மட்டும் நின்று விடாமல், அது தனது சாயலில் முழுச் சமுதாயத்தையுமே மாற்றி அமைக்கவும், உருவாக்கவும் முனைந்தது என்று கூறலாம்.
இத்தகைய ஆங்கில ஆட்சியின் தாக்கத்தினாலும் ஆங்கிலக் கல்வியின் செல்வாக்கினாலும் புதிய சிந்தனையும், புதுநிலையும் பெற்ற மக்கள் குழாமொன்று தோற்றம் பெற்றது. அரசியல் முதல் கல்விவரையும் சமயம் முதல் சமுதாய அமைப்பு வரையும் இந்தப் புதிய நிலையும், புதிய போக்கும் உணரப்படலாயிற்று. ஆங்கிலக் கல்வியின் பயனாக ஏற்பட்ட ஆங்கில இலக்கியப் பரிச்சயம் தமிழிலே நாவல் தோன்ற ஊற்று மையமாகியது. ஆங்கில நாவல்களைப் படித்து அந்த அனுபவங்களைப் பெற்றுக் கொண்ட சிலர், தமிழில் நாவல் என்ற இலக்கியப் பிரிவைத் தோற்றுவித்தனர். இவ்வாறு ஆங்கில இலக்கியங்களில் பெற்ற அனுபவங்களைத் தமிழிலே வெளிப்படுத்துவதற்கு அல்லது பகிர்ந்து கொள்வதற்கு ஏற்ற உகப்பான சூழலும் தமிழில் அப்போது உருவாகியிருந்தமையும் கருதத்தக்கதாகும்.
தமிழில் "நாவல்” தோன்றுவதற்கான முற்படு தேவைகளும், நிலைக்களன்களும்
நாவல்களைச் செய்யுளில் ஆக்க முடியாது என்பதுடன் அவற்றை எழுத்தாணி கொண்டு ஏட்டில் எழுதமுடியாதென்பதும் வெளிப்படையான கருத்து. எனவே நாவல் இலக்கியம் சரியான முறையிலே வளர்வதற்குச் சில முற்படு தேவைகள் இருந்தன. உரை நடை, நூல்களைப் பல்லாயிரக்கணக்கில் உற்பத்தி செய்யும் அச்சு இயந்திரவசதி, நாவல்களைப் படிப்பதன் மூலம் பயன் பெறத்தக்க கல்வி வசதி, வாசகர் சமூகம், வாசிப்பதற்குப் போதுமான ஒய்வு நேரம் முதலானவை காணப்படும் ஒரு சமூகச் சூழலிலேயே நாவல் சாத்தியமான ஒரு இலக்கிய வடிவமாகலாம். இவ்வாறு எதிர்பார்க்கப் படுகின்ற சாத்தியப்பாடுடைய சூழல் தமிழ் நாட்டு வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலே காணப்பட்டிருந்தது.
ஆங்கிலக் கல்வி வசதியால் ஆங்கில நாவல்களைப் படித்துணர வாய்ப்புக் கிடைத்த அதே வேளை, அவற்றைப்போல

(X 23
ஆக்கங்களைத் தமிழில் ஆக்குவதற்கு உகந்த உரைநடை விருத்தியும் அச்சு இயந்திர வருகையும், எழுது பொருட்களினதும் இன்னும் பல தொழில்நுட்பவிருத்தியுமென எல்லாம் ஒருசேர ஏற்பட்டன. இவை யாவும் எதிர்பாராத வகையிலே தமிழ்ச் சமூகத்திலே நிகழ்ந்த ‘வரலாற்று நிகழ்வுகள்’ என்பது உண்மை; எனினும், இதனால் தமிழ் இலக்கியச் செல்நெறியிலும் புதிய பரிமாணம் ஏற்பட்டமையும் குறிப்பிடத் தக்கதாகும். மேற்குறித்தது போன்ற இன்றியமையாச் சூழல் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படவேண்டிய தேவை என்னவாக இருந்தது என்பது பற்றிய தெளிவு இவ்விடத்தில் அவசியமாகிறது.
பதினைந்தாம் நூற்றாண்டுத் தொடக்கத்திலே மேலைத் தேயத்தவர் தமது ஆட்சியை இந்தியாவிலும், இலங்கையிலும் மிக உறுதியாக நிலவச் செய்யும் முயற்சியில் வெற்றி கண்டனர். மேலைநாட்டினர் தமது நாட்டு வாழ்வியல் முறைமைகளை விட்டுவிட்டுச் சுதேசிய மக்களோடு மக்களாக வாழ்ந்து தமது நடை, உடை, பாவனைகளை மாற்றி அவர்களிடையே கிறித்தவ மதத்தைப் பரப்ப முயன்றனர். தமிழை நன்கு கற்றுத் தேறிய இவர்கள், தமிழிலேயே மக்களுடன் உறவாடியதுடன், தமது சமய விவாகாரங்களைத் தமிழில் நன்கு விளங்கக் கூடிய வகையில் இலகுவான உரைநடையிலே மொழிமாற்றம் செய்தும், அச்சடித்தும் வழங்கினர். பாமரராகவும், ஏழைகளாகவும் இருந்த மக்களுக்கு விளங்கக் கூடிய எளிதான தமிழ்க் கையாளுகை இவ்வுரைநடையில் எளிதில் இடம் பெறலாயிற்று.
தமிழில் உரைநடை வடிமென்பது புதிதான ஒன்றல்ல. வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே இவ்வுரைநடை மரபு காணப்பட்டிருந்தது. சிலப்பதிகாரத்தில் உரைநடை உண்டு. இதனால் சிலப்பதிகாரத்துக்கு “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்னும் பெயரும் வழங்கிற்று. காலத்துக்குக் காலம் தமிழில் பல உரையாசிரியர்கள் தோன்றியிருக்கிறார்கள். இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், கல்லாடனார் போன்ற பல உரையாசிரியர்கள் தோன்றிச் செய்யுளிலமைந்த இலக்கியங்கள் பலவற்றுக்கும் உரையெழுதினர். இவ்வுரைகள் அந்தந்த நூல்களுக்கு உரையாகப் பயன்பட்டனவே தவிர, நவீன மரபு குறித்த நாவல் அக்கால மொழி வளத்தைக் காட்டின. பழங்கால மரபில் கூட இவ்வுரைநடை கதை கூறப் பயன்பட்டிருக்கவில்லை.

Page 15
24 令
சுருங்கச் சொல்லின் இலக்கியத்துக்கான உரை இருந்ததே தவிர, உரை நடை இலக்கியம் இருக்கவில்லை. நாவல் இலக்கிய வடிவம் தமிழிலே இணைந்த பின்னர் உரைநடை, மொழியின் வளத்திற்கு ஏற்பப் பல்வேறு உரைநடைப் பண்புகளையும் பெறத்தொடங்கியது.
ஐரோப்பியர் தொடக்கிவைத்த உரைநடை தமிழுக்குப் புதிதானது. அத்தகைய நடை முந்திய காலப் பிரிவுகளில் இருந்ததாகக் கொள்ள இடமில்லை. அவர்கள் தமது மத உண்மைகளையும், கொள்கைகளையும் பொது மக்களிடையே பரப்புதலை நோக்கமாகக் கொண்டனராதலின், பொதுமக்கள் யாவரும் படித்தறிய முடியாத உரையாசிரியர்களின் நடையைத் தாம் அறிந்திருந்தும் அதனைத் தமது சமயப் பிரசாரத்துக்காகக் கைக் கொள்ளாது விட்டனர்."
என வி. செல்வநாயகம் இது தொடர்பாகக் குறிப்பிடும் கருத்து இங்கு கருதற்பாலதாகும்.
சாதாரண மக்களோடு மக்களாகப் பழகி மக்களுக்காக ஆக்கப்பட்ட கிறிஸ்தவப் பாதிரிமார்களுடைய உரைநடையிலமைந்த மத அனுபவப் பகிர்வுக் குறிப்புக்களிலே பேச்சு வழக்குகள் இலகுவாக இடம் பெற்றன. பொதுமக்கள் பேசும் தமிழிலுள்ள சொற்களைக் கையாளும் உரைநடை சமுதாயத்தில் அதிகமாகக் காணப்படும் சராசரி வாழ்க்கை நடத்தும் மக்களிடையே அறிமுகமாகியமை தமிழில் நாவல் தோன்றுவதற்கு மிக உகந்த சூழலமைவாகியது. நவீன இலக்கியங்களினுடைய தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உரைநடை இன்றியமையாத வகையில் உதவிற்று. நவீனத்துவம் குறிக்கும் பண்புகளான வரலாற்று நோக்கு, ஆய்வறிவு, புதுமை, தனித்துவம், எளிமை, பொதுமக்கள் நலன் முதலியனவெல்லாம் உரைநடையின் மூலமாக இலகுவாகவும், விரைவாகவும், தெளிவாகவும் இலக்கியங்களால் உணர்த்தப் பெற்றன. எனவே உரைநடையும் இலக்கியத்தின் நவீனத்துவமும் உடன் பிறப்புக்கள் எனக் கூறுவது பொருத்தமானது."
தமிழில் அச்சு முறைமையும் கிறித்தவ மதப் பரம்பல் தொடர்பாகத்தான் ஏற்படுகிறது. பின்னர் 1835 ஆம் ஆண்டில்

※ 25
அனைவரும் அச்சினைப் பாவிக்கலாம் என்ற அச்சியந்திரப் பாவனைக்கான அனுமதியைத் தொடர்ந்து தமிழில் அது, பல்வேறு ஆக்கபூர்வமான தேவைகளுக்காகப் பயன்படலாயிற்று." இவ்வாறு அச்சினைக் கட்டற்ற வகையிலே பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து ‘உரைநடையே இலக்கியத்தின் முழுமையான வெளிப்பாட்டுச் சாதனமாயிற்று.
வாசகர்களுடைய பெருக்கத்துக்கு அடிப்படையாக அமைவது அச்சு முறைமையாகும். இதன் வெளியீட்டுத் தொகை, அதாவது தேவையான அளவு பிரதிகளை அச்சிட்டுப் பெறக்கூடிய தன்மை; ஒரு விடயத்தையே தேவையான அளவு அப்படியே பெற்றுக் கொள்ளக் கூடியதான ஒரேசீர்த் தன்மை, உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் தேவையான நூலைத் தேவைப்படி பெற்றுக் கொள்ளக் கூடிய பராதீனப் பாடுடைய தொலைத் தொடர்பு வசதி என்பன அதிகமாக வாசிப்புப் பழக்கமுடைய ஒரு தொகுதியினரை உருவாக்கும் வாய்ப்பை வழங்கியது.
வாசிப்பு என்பது தனிமனித நிலைப்பட்ட ஒரு முயற்சியாகும். வாசிப்பவர் எவரும் தாம் ஒரு தனியுலகமாக நின்று நூல்வழி வருகின்ற ஒரு உலகை நுகர்ந்து, அதனைத் தமது அகச் சூழலுடன் இணைத்து நோக்கிக் கொள்ளும் முயற்சிக்கு அது இடமளிப்பது. இந்தத் தனிமனிதவாசிப்பு நாவல் இலக்கிய வடிவத்துக்கு மிக உகப்பான, அதேவேளை அவசியமான ஒன்றாகும். இது அச்சு முறைமை அறிமுகமானதன் மூலமே சாத்தியமாகியது. ஏட்டிலோ, கல்வெட்டிலோ அன்றி வாய்மொழி மரபிலோ இது சாத்தியமற்றது. அச்சு முறைமையின் மூலம் மாத்திரமே வெளிவரத்தக்க இலக்கிய வடிவமான நாவலுக்கும், அச்சுமுறைமைக்குமான மிக இறுக்கமான இன்றியமையாத் தொடர்பாக இதனைக் கோடிட்டுக் காட்டலாம்.
நாவலொன்றை வாசிப்பவனுக்கும் வாசிப்புப் பொருளுக்குமிடையில் ஒருவகையான உறவை ஏற்படுத்தும் அற்புதமான வெளிப்பாட்டுச் சாதனமாகிய அச்சு, நாவலை எழுதிய ஆக்க இலக்கியக்கர்த்தாவுக்கும் அதனை நுகரும் வாசகனுக்கும் பாலமாக அமைந்த ஓர் அர்த்தம் உள்ள ஊடாட்டத்தை பிற வெளிப்பாட்டுச் சாதனங்களில் காண முடியாது.
தமிழிலே அச்சும், உரைநடையும் அறிமுகமாகிய பின்னர், அதன் இலக்கியப் போக்கும், செழுமையும் விரிவடைந்தன.

Page 16
26 ※
அப்போது தமிழில் உள்வாங்கப்பட்ட பல்வேறு புதிய விடயங்களுள் நாவல் முக்கியத்துவம் பெற்றது. தமிழில் நாவல் ஆழமாக வேரூன்றத் தொடங்கியதுடன் அது பல்வேறு மட்டத்து மக்களையும் பல்வேறு வழிகளிலும் சென்றடைந்து புதிய பல மாறுதல்களையும் சிந்தனைத் திறன்களையும் வளர்க்கும் ஆற்றல் மிக்க சாதனமாகப் பரிணமித்தது.
தமிழின் இலக்கிய வடிவங்களை நோக்குகின்றபோது, நாவலுக்கு முந்தைய இலக்கிய வடிவங்கள் அனைத்தையும்விட, நாவல் தான் சமூக வாழ்க்கையை ஆகக் கூடிய அளவில் சித்தரிக்கின்றது எனலாம். சமூகத்தின் மனசாட்சிச் சாதனம் எனக் கூறும் அளவுக்கு அது நவீன காலத்து வாழ்க்கை பற்றிய முக்கியமான சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திற்று. பிற்காலத்தில் நாவல்கள் சமூகச் சாசனங்களாயின. கற்றோர்க்கு மட்டும் அமைந்திருந்த செய்யுள் இலக்கிய முறைமை போய், உரைநடையில் புனைகதைகள் எழுதப்படத் தொடங்கியதும் இலக்கியத்தின் தன்மையே மாறிவிட்டது. நாவலினால், இலக்கியம் மக்களைச் சார்ந்தது ஆயிற்று; இலக்கியம் பெருந்தொகை வாசகர்களுக்கு உரியதாயிற்று, ஜனரஞ்சக மாயிற்று, இலக்கியம் போதனைக் கருவியாயிற்று. சுருங்கக் கூறின் தமிழின் மற்றெந்த இலக்கிய வடிவத்தையும் விடத் தமிழில் நாவலின் சமூகப் பொறுப்பு அதிகமாயிற்று.
தமிழில் நாவல் எனும் சொற் பயன்பாடும் நாவலின் பொதுவான பண்புகளும்
சொற்பயன்பாடு
நாவல் எனும் சொல் ஆங்கில மரபிலிருந்து வந்து தமிழிற் பயன்படும் ஒரு சொல்லாகும். ‘புனைகதை’ என்ற இலக்கிய வகை குறிக்கும் இரு பிரிவுகளுள் இதுவும் ஒன்று. சிறுகதை, நாவல் என்ற இரண்டையும் புனைகதை என்பது தன்னுள் உள்ளடக்கியுள்ளது. Nova என்ற ஐரோப்பிய மூலச் சொல்லடியிலிருந்து Novel’ என்ற சொல் ஆங்கிலமரபில் வழங்கப்பட்டது. ஐரோப்பிய ஆட்சியின் தாக்கத்தினாலும், ஆங்கிலக் கல்வியின் செல்வாக்கினாலும் Novel என்பது தமிழில் சுவறும்போது நாவல் என அப்படியே ஏற்றுக்

& 27
கொள்ளப்பட்டது. Novel' என்பது ஆங்கிலச் சொல். அதனை அவ்வாறே தமிழில் பயன்படுத்துகிறோம் என்ற மொழிநிலையுணர்வு மறக்கப்பட்ட நிலையில் ‘நாவல்’ எனத் தமிழில் அவ்வாறே வழங்கப்படுகிறது. இதற்கு, நாவலின் உருவும், பொருளும் தமிழில் இரண்டறக் கலந்துள்ளமைதான் காரணம் எனக் கொள்ளலாம்.
Novel’ என்ற சொல்லுக்குத் தமிழில் பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. ‘நவீனம்’, ‘புதிது’ எனவும் இதனைக் குறிப்பிடுவர். புது நிலையும் புது நோக்கும் பெற்ற மக்கட் பிரிவினரின் இலக்கியக் குரலாக அமைவதன் காரணமாக ‘புதுமை’ என்று குறிப்பிடும் மரபும் உண்டு. ஆரம்பகால நாவலாசிரியர்களிலொருவரான பண்டித நடேசசாஸ்திரி என்பவர் தீனதயாளு என்ற பெயரில் தாம் எழுதிய நாவலின் முன்னுரையில் நாவல் என்பதைப் புதுமை என்றே குறிப்பிட்டிருக்கிறார்.'
Novel எனும் சொல் இத்தாலிய மொழிச் சொல்லிலிருந்தே பிறந்தது . கி.பி. பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே இது ஆங்கில மொழியில் வழக்காட்சி பெற்றது. இச் சொல்லுக்கு கொலம்பியா என்ஸைக்ளோபீடியா (The Columbia Encyclopaedia) '2 60J/560) L– u9)Gö egy 60) LDis நெடியகதை’ என்று விளக்கம் தருகிறது. வெப்ஸ்டரின் 95u (upgaS) (Websters New 20th Century Dictionary) g)g606Të சற்று விளக்கி மனித உணர்ச்சிகள் எண்ணங்கள், அவர்தம் செயல்கள் ஆகியனவற்றை விளக்கிக் காட்டுகிற உரை நடையிலமைந்த நீண்டகதை’ என்று கூறுகிறது . நாவல் முதலில் இத்தாலி நாட்டில்தான் தோன்றியது. அப்போது அது பெரும்பாலும் காதல் நிகழ்ச்சிகளையே சித்தரிப்பதாய் இருந்தது. ஆகவே நாவல் எனும் சொல் ஆதியில் ROMANCE எனும் பொருளிலேயே வழங்கப்பட்டது.
என நாவல் என்ற சொற்பயன்பாடு தொடர்பான விளக்கத்தினை மா. இராமலிங்கம் குறிப்பிடுவார்.* அ. ச. ஞானசம்பந்தன் Novel என்பதற்குப் ‘புதினம்’ எனப் பொருள் கொள்வார். ஆரம்பகால நாவல்களைச்சரிதம்’ என்று குறிப்பிடும் மரபே காணப்பட்டுள்ளது.

Page 17
28 X
பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம், அஸன்பே சரித்திரம் என்றே ஆரம்பால நாவல்கள் பெயர் பெற்றன. “சரித்திரம்’ எனும் சொல் தமிழில், வரலாறு கூறும் தன்மையை எடுத்துக் காட்டுவதாகும்." தனிமனிதர் வரலாறு என்ற பொருளில் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். உ.வே.சாமிநாதையரின் சுயசரித்திரம் ‘என் சரித்திரம்’ எனப் பெயர் பெற்றது.
பொதுவாக நோக்குகின்றபோது நாவல் என்ற சொல்லானது இயல்பான உலக அனுபவங்களை ஒட்டிச் செல்லும் ஒரு வகையான இலக்கியத்தைச் சுட்டி நிற்கும் சொல்லென ஏற்றுக் கொள்வதிலே கருத்து வேறுபாடு காணப்படவில்லை. புதிது, புதினம், நவீனம் எனப் பல்வேறு பொருள் கொள்ளும் முறைமை காணப்பட்டாலும், நாவல் என்ற புதிய இலக்கிய வகையினுடைய குறிக்கோளை நினைவுபடுத்தும் சொல்லாகத் தமிழில் நாவல் என்பது பயன்படுகிறது. நாவல் என்ற சொல் அவ்வாறே பயில வேண்டும் என்பதில் பெரும்பான்மைக் கருத்து நிலவுகிறது.
நாவலின் பொதுவான பண்புகள்
தமிழ் இலக்கிய வகைகள் யாவற்றுள்ளும் மிக்க ஜனரஞ்சகமாக அமையும் இலக்கிய வடிவம் நாவலாகும். இதற்கென ஒரு பொதுவான அமைப்பு உண்டு, அதாவது நாவலென்பது ஒரு கதை அதற்குத் தலைமகன், தலைமகள் இருப்பர். இந்தத் தலைமகன், தலைமகளைச் சுற்றிச் சுழன்று கதையின் சம்பவங்களும், ஏனைய பாத்திரங்களும் வரும். நாவலுக்குக் கதைக் கரு இருக்கும். அதனைச் சார்ந்து கதை, தொடக்கம், உச்சம், முடிவு என்ற விதத்திலே நகர்த்திச் செல்லப்படும். இது நாவலின் ஒரு விரிந்த அமைப்பு அல்லது பண்பு எனக் கொள்ளப்படுகிறது.
நாவலினுடைய பொருளாகவும் உறுப்பாகவும் சாதாரணமான வாழ்க்கை, வழக்கமான நிகழ்ச்சிகள், பாத்திரங்களின் உரையாடல்கள் இன்னோரன்ன சில்லறையான விடயங்கள் ஆகியன கதைவடிவிலே இடம் பெறும். நாவலில் தெளிவான பாத்திரப்படைப்பு அவசியம். நாவலிலே உன்னதமான உதாரண புருஷர்கள் அல்லது தன்னிகரில்லாத் தலைவர்கள்

& 29
எதிர்பார்க்கப்படுவதில்லை. மனிதனை அவனது சிறுமைக் குணங்களுடன், அவனுடைய தவறுகளுடன், மனிதனை மனிதனாக அப்படியே காட்டும் பண்பே எதிர்பார்க்கப்படும்.
ஒரு சிறந்த நாவலாசிரியன் நாவலுக்குரிய சம்பவங்களை வாசகர் நம்பக் கூடிய தன்மைக்குள் அமைத்துக் கொள்வான். சுற்றுச் சார்பில் மனித வாழ்க்கை இயங்கும்போது நிகழக் கூடியவை நாவலாசிரியனால் சித்தரிக்கப்படல் வேண்டும். இயற்கையுடனும், சமுதாயத்துடனும் மனிதனுக்கு உள்ள உறவும், தொடர்பும் சித்திரிக்கப்படுவதுதான் நாவலூடாக எதிர்பார்க்கப்படும் பண்பு எனலாம்.
தனிமனிதனுடைய அனுபவமே நாவலின் அளவுகோல். ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர் வாழ்நாளில் வேறுவேறான அனுபவங்கள் ஏற்படும். இவ்வாறான பல்வேறுபட்ட அனுபவங்களை ஆதாரமாகக் கொண்டவையே நாவல் எனக் கொள்ளப்படக் கூடியவை. இதனால் அவரவர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பண்பினதாகவும் நாவல்கள் அமைந்துள்ளன. தனிமனிதனைத் தனிப்பட்ட எழுத்தாளனொருவன் வாழ்க்கை என்ற உரைகல்லில் உரைத்துக் காட்டுவதே நாவல் என்பர்."
நாவல்களைப் படிப்பவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தினராகவே காணப்படுகின்றனர். இவர்கள் கல்வியையே கருவியாகக் கொண்டு புத்தியைப் பயன்படுத்தி வாழ்பவர்கள். இவ்வுலக வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர்கள். வாழ்க்கையை வாழத் துடிப்பவர்கள். இத்தகைய சமூகத்தைச் சார்ந்து ஆக்கப்பட்ட நாவல் இலக்கியமும் பொதுவாக இப்பண்புகளையே உள்ளீர்த்ததாக ஆக்கப்பட்டது. எனவே நாவலில், ஆட்சி, உத்தியோகம், கொடுக்கல் வாங்கல், குடும்பச் சண்டைகள், சாதிவேற்றுமை முதலிய அத்தனை “சின்னஞ்சிறு விடயங்களும் கூடப் பேசப்படலாயிற்று. அதுகாலவரை இலக்கியங்கள் பேசிய இயற்கை, அதீத மேன்மைகள் யாவும் அற்றுப்போக உலகானுபவத்துடன் ஊடாட்டம் பெற்ற அனைத்துமே நாவல்களின் கதைப் பொருள்களாயின.
ஒரு பரவலான உணர்வைத் தோற்றுவிக்கும் அடிப்படைப் பண்பினைப் பெற்றுள்ள நாவலானது, குறுகிய எல்லைக்குள்

Page 18
30 X
இருக்கும் மனிதனது அன்றாட உணர்வு நிலையை விரிவுபடுத்திச் செயலாற்றவும் உதவுகின்ற தன்மை உடையது. அதாவது அனுபவத்திற்கு ஈடுசெய்யக் கூடியதாகவும் உள்ளது. வாசகர்களுக்குத் தமது இயல்பான வாழ்க்கை வழங்கும் அனுபவத்தை விடவும் விரிவானதொரு அனுபவத்தை நாவல்களால் வழங்க முடியும் கற்பனைக் கதைகளை அல்லது சம்பவங்களைத் தருவனவற்றை நல்ல நாவலின் பண்பெனக் கொள்ள முடியாது.
நாவல், கற்பனைக் கதை இரண்டும் அடிப்படையில் வேறுவேறானவை. நாவல் அவரவர் அறிந்த உலகத்தை விளக்குவதில் ஈடுபடுகிறது. இது நிகழத்தக்க
நிகழ்ச்சிகளையுடையது. கற்பனைக் கதை, அவ்வுலகத்தில் மறைந்திருக்கும் நாடக அம்சத்தினை வெளிக்கொணர்வது."
ஏற்கனவே குறித்தவாறு நிகழ்கின்ற நிகழ்ச்சிகளையும், தனிமனிதனையும் முக்கியப்படுத்திய தன்மையடிப்படையிலும், கோட்பாட்டு நிலையிலும் நாவலின் பண்புகள் நவீன இலக்கிய விமர்சகர்களால் எடுத்துக் காட்டப்படுகின்றன. இதுபற்றி, கா, சிவத்தம்பி என்பவர் பின்வருமாறு குறிப்பிடுவார்.
நாவலின் உலகப் பொதுவான தனித்துவப் பண்புகள்
(அ) அவ்விலக்கிய வடிவத்தின் அடிநாதமாகி அமையும் யதார்த்தமும் (ரியலிசம்)
(ஆ) அதன் தோற்றத்துக்கும் தொழிற்பாட்டுக்கும் முக்கியமாக அமையும் தனிமனிதத்துவமுமாகும்.'
Realism (ரியலிசம்) என்பதனை கா. சிவத்தம்பி யதார்த்தம்
8
என்றும் மா.இராமலிங்கம் இயல்பு நவிற்சி’ என்றும் குறிப்பிடுவர்.
மேலே காட்டிய பண்பினைப் பெற்ற நாவலை ஒரு கலைப்படைப்பாகப் பார்க்கின்ற போக்கே பெரும்பாலும் காணப்படுகிறது. இதற்கும் மேலதிகமாக நாவல் என்பது மேலும் சில பரிமாணங்களையும் உடையதாகும். மனிதனது வாழ்க்கையே நாவலின் பொருள் என்ற வகையில், நாவற் சித்திரிப்பை வெறும் சம்பவக் கோவைகளாக மாத்திரம் கொள்ளாமல் மனித மனவுலகத் தொழிற்பாட்டில் தாக்க விளைவை ஏற்படுத்தும் ஒரு சாதனமாகவும்

Х• 31
கொள்ளலாம். அத்துடன் மனிதனைச் சிந்திக்கத் தூண்டும் வலிமை பெற்ற சாதனம் என்ற வகையில் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய காரணியாகவும் கொள்ளலாம். புலமை நிலையில் சமூகவியலாளனுக்கு அல்லது ஒரு இலக்கியகாரனுக்கு நாவல் அடிப்படைத் தரவுகளை வழங்கக் கூடிய தளமாக அமையக் கூடியது. வரலாற்றாசிரியனுக்கு, ஒரு காலக்கட்ட வரலாற்றைப் பதிவு செய்துள்ள ஆவணமாகத் தொழிற்படக் கூடிய பண்பினையும் பெற்றுள்ளது. இவ்வகையான பல்வேறு நோக்கச் செயற்பாடுகளுக்கும் நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய தன்மையையும் நாவலில் காணக் கூடிய பொதுப்படையான பண்பாகக் கருதுவதற்கு
இடமுண்டு.
தமிழ் நாவல் வரலாறும், முதல் நாவலும்
தமிழில் நாவலின் வரலாறு மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற நாவலுடன் தொடங்குவதாகக் கொள்வதே மரபாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் அது காலவரை ஏற்படாத அனுபவம் பிரதாப முதலியார் சரித்திரத்துடன் ஏற்படுகிறது. பின்னர் பல்துறைப் பரிமாணம் பெற்றுத் தமிழில் அது ஒரு முக்கியமான இலக்கிய வடிவமாகிறது.
தமிழில் இந்த அனுபவம் ஏற்படுவதற்கு முன்பே ஐரோப்பிய மொழிகளிலே அது ஏற்பட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது. நாவல் முதலில் இத்தாலி நாட்டில்தான் தோன்றியது என்னும் கருத்துக் காணப்படுகிறது.* எனவே மேனாட்டு மொழிகளில் நாவலின் முகிழ்ப்பு அனுபவம் எவ்வாறு இருந்தது என்பதனை நோக்குவதனூடே தமிழில் அவ்வனுபவத்தை விளங்கிக் கொள்வது பொருத்தமானதாகும்.
நாவல் ஒரு உலகப் பொதுவான இலக்கிய வடிவம். இது பதினெட்டாம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் முதன்மையாவும், ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் சிறிது பின்னரும் தவிர்க்க முடியாத இலக்கிய வெளிப்பாடாகத் தோன்றியது." இவ்விலக்கியம் அதனது தனித்துவப் பண்புகளாக யதார்த்தப் பண்பினையும், தனிமனிதத்துவப் பண்பினையும் கொண்டிருந்தமை காரணமாக

Page 19
32 x
இலக்கிய உலகில் பெரிதும் பேணப்படலாயிற்று, நாவல் பற்றிய ஆய்வை மேற்கொண்டவர்கள், பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கில நாவல் உதயமாகியபோது அது சமகாலத்து மாந்தர் பற்றிய சித்திரிப்பைக் சரிவரச் செய்தது எனவும், ஆரம்பதிலேயே நாவல் வெற்றிபெற அதுவே காரணமாகியதெனவும் கருதுவர்."
இவ்வாறான ஒரு காத்திரம் வாய்ந்த இலக்கியமான நாவலின் முகிழ்ப்பு மேனாட்டு வரலாற்றின் நிலமானியச் சமூக அமைப்பு மாற்றம் காரணமாக ஏற்படுகிறது.*ஐரோப்பிய நிலப்பிரபுத்தவ மாற்றத்தினால் அங்கு ஏற்பட்ட புரட்சிகள் மற்றும் பல்வேறு மாறுதல்கள் என்பன புதிய இலக்கியத் தோற்றத்துக்கு வழிகோலின. மேனாட்டின் மத்தியதர வர்க்கத்தினுடைய எழுச்சியின் உடன் நிகழ்ச்சியாக நாவல் இலக்கியம் தோன்றிற்று.
இந்தியாவிலும் சமுதாய மாற்றம் ஏற்பட்ட காலச் சூழலிலேயே நாவல் இலக்கியம் தோற்றம் பெற்றிருக்கிறது. ஆங்கிலேயராட்சி இந்தியாவில் ஏற்பட்டபோது இச்சமுதாய மாற்றம் உணரப்பட்டது. ஆங்கிலேயருடைய மேனாட்டு நிலப்பிரபுத்துவமும், இந்திய நிலப்பிரபுத்துவமும் வேறு வேறானவை. எனினும் ஆங்கில ஆட்சியின் தாக்கங்களின் பின்னர் இந்தியச் சமுதாயத்திலே மாற்றங்கள் ஏற்பட்டன.
இந்திய நிலப்பிரபுத்துவத்தினுடைய இயங்கு தளமாக இங்கு நிலவிய சாதி அமைப்பினைக் குறிப்பிடவேண்டும். உயர்ந்தோர், உயர்ந்தோர் அல்லாதோர் என்ற சமூகப் பிரிப்பினடிப்படையிலேயே சமுதாயம் இயங்கிக் கொண்டிருந்தது. இங்கு உயர்ந்தோராகப் பிராமண சமூகத்தினர் இருந்தனர். இவர்கள் இச்சமுதாயத்தில் மேலாதிக்கமுடையோராகக் காணப்பட்டனர். இவர்களை ஒத்தவர்மீதே ஆங்கில ஆட்சியின் தாக்கங்கள் யாவும் விளைவை ஏற்படுத்தின. இத்தகைய ஒரு சூழ்நிலையிலே இந்தியாவினுடைய ஆரம்ப கால நாவல்கள் ஏறத்தாழ இந்தியச் சுதந்திரம் வரை இந்திய நிலவுடைமையாளர், பிராமண சமூகத்தவர் முதலானவர்களைச் சார்ந்து தோன்றியமையை அவதானிக்கலாம்.
தென்னிந்தியாவுக்கும், ஈழத்துக்கும் இடையே இடையறாத் தொடர்பு ஒன்று ஆரம்பத்திலிருந்தே காணப்பட்டுள்ளது.

(X 33
இத்தொடர்பு காரணமாகவும், இன்னும் பல காரணங்களினாலும் இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்துச் சமுதாய அமைப்பில் முக்கிய அம்சமாகச்சாதிப்பாகுபாட்டைச்சுட்ட முடிகிறது. எனினும் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினுடைய நிலப்பிரபுத்துவ அமைப்பு, பல தன்மைகளில் வேறுபட்டது. இதனால் அச்சமூகத்தினுடைய இலக்கியத்தளம் வேறுபாடாக இருக்க வேண்டிய அவசியம் பின்னாளில் ஏற்படுகிறது. இவை பற்றி ஈழத்துச் தமிழ் நாவல் பற்றிய பகுதியில் நோக்குவதே பொருத்தமாகும்.
தமிழின் முதல் நாவல்
உரைநடையையே தமது வெளிப்பாட்டு சாதனமாகக் கொண்டிருந்த நாவலானது, தமிழில் உள்வாங்கப்படும் போது ஆரம்பத்தில் செய்யுள் வடிவிலேயே தோன்றியது.* செய்யுள் வடிவில் தோன்றியதன் காரணமாக இதனை முதல் நாவலாகக் கொள்வதில் இடர்ப்பாடுகள் நிலவுகின்றன.
மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரமே தமிழின் முதலாவது நாவல் என்பது முடிந்த முடிபாக உள்ளது. பிரதாப முதலியார் சரித்திரத்துக்கு முன்னர் உரைநடை நவீனம் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை என மேற்படி நூலின் முகவுரையில் இந்நூலாசிரியரே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்நூல் ஆக்கப்படுவதற்கு ஒரு சகாப்தத்துக்கு முன்பு 1775 ஆம் ஆண்டிலே தமிழ் ஆசிரியர் ஒருவரால் ‘வசன சம்பிரதாயக் கதை’ என்றொரு கதை எழுதப்பட்டுக் கையெழுத்துப் பிரதியாக இருந்தமை பற்றியும், பின்பு அக்கையெழுத்துப் பிரதி 1895இல் அச்சில் வெளிவந்தமை பற்றியும் அறியக் கூடியதாயுள்ளது.* இந்நூலையும் தமிழின் முதலாவது நாவலாகக் கொள்ளாத நிலைப்பாடே காணப்படுகிறது. இதனை ஆரம்பகாலத்தில் தோன்றிய கற்பனைக் கதையெனவே கொள்ளும் மரபும் இன்றுவரை காணப்படுகிறது.
தமிழின் முதல் நாவல் என்ற வரலாற்று முக்கியத்துவம் பிரதாபமுதலியார் சரித்திரத்துக்கே வழங்கப்பட்டது. இந்நாவல் 1879இல் வெளிவந்தது என்பது வரலாற்று ஆய்வாளர் முடிவாயுள்ளது.*பிரதாப முதலியார் சரித்திரம்தான்தமிழின் முதல்

Page 20
34 x
நாவல் என்பது முடிந்த முடிபாகிவிட்ட போதிலும் இக்கருத்தினைப் பிற்காலத் திறனாய்வாளர்கள் அவ்வாறே ஏற்றுக் கொள்வதில் கருத்துமுரண்பாடுகளைக் கொண்டுள்ளனர். தமிழ் நாவலின் தந்தையென விதந்துரைக்கப்படுகின்ற வேதநாயகம்பிள்ளைக்கு நாவல் என்ற வடிவத்தினைக் கையாள வேண்டும் என்ற இலக்கு மட்டுமே இருந்ததெனக் கூறிவிட முடியாதுள்ளது.* இச்சரிதத்தின் கதைப்பின்னலைத் தமிழ் நாட்டில் நிலவி வருகின்ற மரபுவழிக் கதைகளின் நிகழ்ச்சி அமைப்பையும் செவிவழி வந்த நாடோடிக் கதைகளின் சாயல்களையும் புகுத்திச் சென்று அமைத்து உள்ள அதே வேளையில் தமிழிலே இருந்த நீதி நூல்கள், சமரசக் கருத்துக்களைக் கூறும் சமய சமரசக் கீர்த்தனைகள் ஆகியவற்றுக்கு உதாரணமாக அமையும் வகையினதாகவும் படைத்தல் வேண்டும் என்பதில் வேதநாயகம்பிள்ளைக்கு அதிக ஆர்வம் இருந்திருக்கின்றது. அத்துடன் இராசா, இராணிக் கதையைப் படிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ள வாசகரின் இரசனையைத் திருப்திப்படுத்துவதற்காக நவரசமும் பொருந்தும் வகையினதாக இதை அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளும் அவருக்கு இருந்தது. இக்கருத்துகள் வேதநாயகம்பிள்ளையின் கூற்றாக அவரால் எழுதப்பட்ட முன்னுரையிலே காணப்படும் தரவுகளாகும்.
வேதநாயகம்பிள்ளைதான் தமது பிரதாப முதலியார் சரித்திரத்தில் நாவல் என்ற மேனாட்டுச் சரக்கைத் தமிழருக்கு அறிமுகப்படுத்துகிறார் . அது உண்மையில் நமது நாட்டில் நிலவிவரும் மரியாதை இராமன் கதை தெனாலி இராமன் கதைகளை ஒரே கதையில் திரட்டி வைக்கப்பட்டதுதான்"
எனப் புதுமைப்பித்தன் குறிப்படுவதும் கருதத் தக்கது.
இதுபோன்ற தன்மைகள் காரணமாகப் பிரதாப முதலியார் சரித்திரத்திலே நாவல் என்ற இலக்கிய வடிவத்துக்கே உரிய படிமம் சரியாக விழவில்லை என்னும் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாவல் வேதநாயகம் பிள்ளையுடன்தான் தொடங்குகின்றது என்பதை ஆப்த வாக்கியமாகக் கொள்வதை நிறுத்திவிட்டு அதனுடன் அண்மித்த அடுத்தடுத்த நாவல்களுடன் ஒப்பிட்டு நோக்கி விமர்சிக்கப் பலரும் முன்வந்தனர்.

•x 35
வேதநாயகம்பிள்ளைக்குப் பின்னர் வந்தோரது நாவல்களிலேதான் தெளிந்த பாத்திரப்படைப்பும், கதையை நகர்த்தும் போக்கும் குறிப்பிட்டுப் பேசும் வகையில் அமைந்து காணப்படுகிறது. என்பார் க.கைலாசபதி.*கமலாம்பாள் சரித்திரம் 1896இல் ராஜம் ஐயரால் எழுதி வெளியிடப்பட்டது. இக்கதை மதுரை மாவட்டம் சிறு குளத்தில் வாழ்ந்த முத்துசாமி ஐயர், கமலாம்பாள் தம்பதிகளின் வாழ்வைச் சித்திரிப்பது. கமலாம்பாளின் தூய இல்லற வாழ்வும், அவளது வாழ்வில் ஏற்பட்ட ‘ஆபத்துக்கிடமான அபவாதமுமே இக்கதையின் கருவாகவுள்ளது.*
பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவந்த பின்னர் வெளி வந்ததாகக் கூறப்படும் பத்மாவதி சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம் முதலானவற்றின் கதைக்கருவானது நாவலாகப் பின்னப்பட்டவிதம் பெரும்பாலும் நாவல் எனும் இலக்கிய வடிவத்தின் கட்டமைப்புக்குள் வந்துவிடுகிறது. சம்பவங்களை விவரித்துக்காட்டும் போக்கு அவற்றை நல்ல நாவல்கள் என்ற வரையறைக்குள் கொண்டு வந்துள்ளன. மேலே சுட்டிய நாவல்களின் கதைப்பின்னல் நாவலுக்கே உரிய முறையில் அமைந்துள்ளன என கா. சிவத்தம்பி குறிப்பிடுவதும் இங்கு கருதத்தக்கதாகும்."
நாவல் விமர்சகர் க.நா. சுப்பிரமணியன் இதுபற்றிக் குறிப்பிடுகையில்;
கமலாம்பாள் சரித்திரத்திலே நாவல் உருவம் அற்புதமாகச் சமைந்துவிட்டது . இந்நாவல் இப்படியொரு லட்சிய நாவலாக அமைந்துவிட்டது தமிழர்களின் அதிஸ்டமாகும். தமிழில் நாவல் இலக்கியத்தின் இருநூறு வருஷத்திய வளத்துக்கு ராஜமையர் அஸ்திவாரம் போட்டுத் தந்துவிட்டார்."
எனக் கனதியான கருத்துகளை முன்வைத்துள்ளார். ஒரு கட்டுக்கோப்புக்குள் அடங்காத பிரதாப முதலியார் சரித்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாவல் என்ற இலக்கிய வடிவத்தின் திறனாய்வு அடிப்படையில் முதல் நாவலாகக் கொள்ளப்பட

Page 21
36 «Х•
வேண்டியது ராஜம்ஐயரின் கமலாம்பாள் சரித்திரமே என்பது இத்துறைசார் ஆய்வாளரின் முடிவாயுள்ள போதிலும், வரலாற்றின் முடிந்த முடிபாகத் தமிழின் முதல் நாவலாகப் பிரதாப முதலியார் சரித்திரமே எண்ணப்பட்டு வருகிறது.
இத்தகைய ஒரு பின்னணியிலே ஆரம்பகால நாவல்களான தீனதயாளு, ‘கோமளம் குமரியானது’, ‘திக்கற்ற இரு குழந்தைகள்’, ‘மாமி கொலுவிருக்கை’, ‘தலையணை மந்திரோபதேசம்’ முதலிய பல நாவல்களை எழுதிய பண்டித நடேசசாஸ்திரியின் கருத்தொன்றையும் இது தொடர்பாகக் குறிப்பிடுவது அவசியமாகும்.
பண்டித நடேச சாஸ்திரி, தமது ‘தீனதயாளு’ தான் தமிழின் முதல் நாவல் எனத் தமது கூற்றாகவே குறிப்பிட்டுள்ளார். 1900 ஆம் ஆண்டு இவர் ‘தீனதயாளு’வைத் தமது முதலாவது ஆக்கமாகப் படைத்தார். இந்நூலுக்கு நாவல்தான் எழுதியுள்ளேன் என்ற இலக்கிய உணர்வுடன் ஒருமுன்னுரையும் எழுதி, ஆங்கில மரபில் நாவல் என்ற இலக்கிய வகைக்குரிய இயல்புகளையும் குறிப்பிட்டிருந்ததுடன் மேற்கூறியது போலத் தமது நாவலே தமிழின் முதல் நாவலெனவும் குறிப்பிடலானார்."
பண்டித நடேச சாஸ்திரியின் மேற்குறித்த நாவலுக்கு முன்பு ஏற்கனவே ஆறு நாவல்கள் வெளிவந்த நிலையில் நடேச சாஸ்திரி இவ்வாறான கருத்தை முன்வைத்தது சர்ச்சைக்குரிய விடயமாகக் காணப்பட்டது. எனினும் குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய விடயம் ஒன்று உள்ளது. அதாவது, தீனதயாளுவுக்கு முன்னர் எழுந்த நூல்களின் முன்னுரையிலோ அன்றி வேறிடங்களிலோ அந்த நூலாசிரியர்கள் ‘நாவல்’ எனப் பெயர் குறித்து எழுதியதாகத் தெரியவில்லை. வேதநாயகம்பிள்ளை, முன்னுரையை ஆங்கிலத்திலேயே எழுதி உள்ளதுடன் தமிழில் எவ்விடத்திலேனும் 'நாவல்’ எனக் குறிப்பிடவில்லை. ராஜமையர் “பொய்க்கதை’ என்று கூறியுள்ளார். 1893இல் “பிரேமகலாவத்யம்' எனும் நாவலை எழுதிய குருசாமி சர்மாவும் ‘புதுமை’ என்றே குறிப்பிட்டுள்ளார். தீனதயாளு வெளிவந்த பத்து ஆண்டுகளின் பின்பு மூன்றாவது பதிப்பாக வெளியாகிய பத்மாவதி சரித்திரப் பதிப்பிலே அ.மாதவையா, நாவல் எனும் பதத்தைப் பிரயோகித்துள்ளார்.*

& 37
எனவே ஆரம்பகாலத் தமிழ் நாவல் ஆசிரியர்களும் ‘நாவல்’ என்ற பதத்தினைப் பிரயோகித்தமை காரணமாகவும், விளக்கம் தந்தமை காரணமாகவும், தமது படைப்பே தமிழில் முதல் நாவலெனப் பண்டித நடேச சாஸ்திரி தன்னளவில் கருதியிருக்கக்கூடும். இக்கருத்தைத் திறனாய்வாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் நாவல் வரலாற்றில் வேதநாயம்பிள்ளையோ, ராஜமையரோ அன்றி மாதவையாவோ பெற்ற வெற்றியை நடேச சாஸ்திரி பெறவில்லை என்பதே இது தொடர்பான பொதுவான கணிப்பீடாக உள்ளது. ஆயினும் நல்லதொரு சொந்தப் படைப்பாக எஸ்.எம்.நடேச சாஸ்திரிகளின் ‘தீனதயாளுவை’ க.கைலாசபதி குறிப்பிடுவார்.*
தமிழில் முதல் நாவல் எது என்னும் வாதப்பிரதிவாதமானது பல நோக்கில் உணரப்பட்ட விடயமாகியது. முதலில் எழுதப்பட்டதுதான் முதல் நாவலா?, நாவல் என்ற இலக்கண வரம்புக்குட்பட்டதுதான் முதல் நாவலா? அன்றேல் நாவல் என்று தமது படைப்பில் குறிப்பிட்டு எழுதியதால் பெறப்படும் முதன்மைதான் முதல் நாவலா? என்பன சுவாரசியமான வினாக்களாக உள்ள அதே வேளை சிந்தனைக்குரியனவாகவும் அமைந்தன.
பிரதாபமுதலியார் சரித்திரம்தான் தமிழின் முதல் நாவலென்ற முடிவைப் பெற்றுக் கொண்டதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகும். இவ்வாறான ஒரு சர்ச்சை ஈழத்து நாவல் வரலாற்றிலும் காணப்படுகிறது. அது தொடர்பான செய்திகள் ஈழத்துத் தமிழ் நாவல் பற்றிய பகுதியில் விளக்கப்படும்.
தமிழில் நாவலின் வளர்ச்சிப் போக்கு
தமிழின் முதல் நாவல் என்ற சர்ச்சை இலக்கிய வரலாற்றுப் பரப்பில் நடந்து கொண்டிருந்தபோதே பல்வேறு நாவல்கள் தோன்றிவிட்டமையை அறியமுடிகிறது. ஆரம்பகால நாவல்களைத் தொடர்ந்து 1930கள் வரையும் துப்பறியும் நாவல்களே தோன்றியதை நோக்க முடிகிறது. பண்டித நடேசசாஸ்திரி எழுதிய ‘திக்கற்ற இருகுழந்தை' எனும் நாவல் இவ்வாறு அமைந்த தன்மையுடையது. இந்நாவலுக்கு முன்னர் ‘தானவன்’ என்றொரு துப்பறியும்

Page 22
38 X
நாவலையும் இவர் எழுதினார். துப்பறியும் நாவல்கள், பெரும்பாலும் கதைத் தொடக்கத்தில் மர்மமாக இருக்கும் விடயத்தைத் துப்புத்துலக்கும் ஒருவர் மூலம் இறுதியில் தெளிவடைவதான அமைப்பைக் கொண்டிருந்தன. ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர்துரைசாமி ஐயங்கார், டி.எஸ்.டி.சாமி, ஜே.ஆர். ரங்கராஜ" போன்ற பலர் இத்துறை சார்ந்து கணிசமான நாவல்களை எழுதினர்.
நாவல் வரலாற்றில் ஏறத்தாழ முப்பது அல்லது நாற்பது வருட வரலாறு LDLD நாவல்களையே முனைப்பாகக் கொண்டமைந்தமைக்கான காரணமாக அது தோன்றிய இடத்துச் சமூகக் கட்டமைப்பு இருக்கவில்லை. இத்தகு நாவல்களை எழுதியோர் ஆங்கிலம், பிரெஞ்சு முதலான மொழிகளுக்குரிய நாவல்களின் கதைகளைத் தழுவியே எழுதினர். இந்நாவல்கள் தரும் திகில், மர்மம், துப்புத் துலக்கும் பாங்கு என்பவை அக்காலச் சமூகத்திலே நாவலின் சனரஞ்சகப்பாட்டுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கலாமெனவும் கருத இடமுண்டு. இவை வாசக சமூகம் ஒன்றை உருவாக்கின. எனினும் தகுந்த இலக்கிய மதிப்பீட்டுக்குப் பொருத்தமான நாவல்களே ஏறத்தாழ நாற்பது வருட வரலாற்றைத் தமது வரலாறாகக் கொண்டமையலாயின. ஆரோக்கியமான நாவலொன்றின் பண்புகள் இந்த நீண்ட வரலாற்றில் வளர்த்தெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
1930களின் பின்னர் இந்த வராற்றில் திருப்புமுனை ஏற்படுகிறது. இம்மாறுதல்கள் மேற்குலக இலக்கியப் போக்கின் மாறுதல்களாலும் அகவயமாக ஏற்பட்ட மாறுதல்களாலும் உண்டாகின எனலாம். காந்திஜியின் வருகை, அரசியல் விழிப்புணர்வு புதிதாக ஏற்பட்ட இயக்கங்கள், இலக்கியக் கொள்கைகள் என்பன இத்தகைய நிலைமாறு தன்மைக்குத் தளமாயின. மணிக்கொடி எழுத்தாளர்கள், இலக்கியவட்டம் போன்ற இலக்கிய இயக்கங்களின் முகிழ்ப்புக் காரணமாக இலக்கியச் செல்நெறியின் வீச்சும், வேகமும் பல்துறைப் பரிமாணம் உடையதாயிற்று. இப்பகுதியிலேதான் தமிழ் நாவல் படைப்பிலே தெளிவான சில போக்குகள் தென்பட்டன.
1940 ஆம் ஆண்டை ஒட்டிய நாட்களில் நடப்பியல் வாழ்வைப் பிரதிபலித்து இலக்கியத்தரம் நிறைந்த நாவல்கள் படைக்கபட்டன.

※,39
ஆர்ப்பரித்துக் கொண்டு செயல் புரிந்த மணிக்கொடி எழுத்தாளர்கள் இக்காலப்பகுதியில் பல நல்ல நாவல்களைப் படைத்தனர். இக்காலப் பகுதியில் நாவல்களைவிடச் சிறுகதைகளே பெரிதும் வளர்ந்ததாக கா.சிவத்தம்பி குறிப்பிடுவார். * பத்திரிகைத் தொடர் நாவல்கள் பலவும் ஆங்காங்கு எழுதப்பட்டன. கல்கி, எஸ்.வி.வி., பி.எம்.கண்ணன் போன்ற பலர் இவ்வாறு எழுதினர். க.நா.சுப்பிரமணியன் எழுதிய, ‘ஒருநாள்’, ‘பொய்த்தேவு”, ந. சிதம்பர சுப்பிரமணியம் எழுதிய ‘இதயநாதம்’ போன்ற பல நாவல்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன், அகிலன், மு.வரதராசன் முதலான எழுத்தாற்றல் படைத்த நாவலாசிரியர்களது படைப்புகளால் இக்காலப்பகுதியில் நாவல் வரலாறு உன்னதம் அடைந்தது எனலாம்.
1950களில் நாவலின் கதை போக்கில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. கல்கி படைத்த வரலாற்று நாவல்களான ‘பார்த்திபன் கனவு’, ‘பொன்னியின் செல்வன்’, முதலான நாவல்களைத் தொடர்ந்து இம்மாற்றம் உணரப்பட்டது. பிரதானமாகச் சுதந்திரத்தின் பின்பு புனைகதைத் துறையில் இன்னொரு பரிணாமம் தென்பட்டது. அரசியற் கட்சிப் பிரசாரத்துக்கென எழுத்துக்கள் பல தோன்றின. பொழுது போக்குக்கான பிரசுரங்களும் வெளிவரலாயின. வரலாற்றுத் தரவுகளைக் குறித்த சுவைமிக்க நாவல்கள் இக்காலப்பகுதிக்குரியனவாயின. சாண்டில்யன், சோமு, கோவி. மணிசேகரன், ஜெகசிற்பியன், அகிலன், நா.பார்த்தசாரதி, விக்கிரமன் போன்ற பலர் பண்டை இராச்சியங்கள், பழந்தமிழ் வரலாறுகள் முதலானவற்றைக் கருப் பொருளாக வைத்துக் கதையெழுதினர்.
நாட்டு விடுதலையைக் கருப்பொருளாகக் கொண்ட நாவல்கள் பலவும் 1950களின் பின்பு எழுந்தன. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எழுதிய ‘இருபது வருஷங்கள்’ (1965), வல்லிக்கண்ணன் எழுதிய ‘வீடும் வெளியும்’ (1966), ந.சிதம்பரசுப்பிரமணியனின், ‘மண்ணில் தெரியுதுவானம்’ (1969), நா. பார்த்தசாரதியின் 'ஆத்மாவின் ராகங்கள்’ (1969) முதலானவை பாரத விடுதலை தொடர்பான கதைகளாக அமைந்திருந்தன. இவற்றுள் விடுதலைக்கு முந்தைய நிலைப்பாடுகளையும், விடுதலைக்குப் பின்னரான சமுதாய நிலைப்பாடுகளையும் கருவாகக் கொண்டும் நாவல்கள்

Page 23
40 ※
படைக்கப்பட்டன. கிருத்திகா, ஜெகசிற்பியன், ராஜம்கிருஷ்ணன், ரா.சு.நல்லபெருமாள் முதலானோர் இவ்வாறு எழுதினர்.
இதே காலத்தில் பெண்களைச் சார்ந்த பிரச்சினைகளான கைம்பெண் வாழ்வு, பெண்ணடிமை, பெண் சுதந்திரம் முதலானவை பற்றி அவர்களது மன அவசங்களைக் கருவாகக் கொண்டும் பல்வேறு நாவல்கள் தோன்றின.
பெண்களுக்கான இலட்சிய உலகமொன்றை வ.ரா. படைத்தளித்தார் என்று குறிப்பிடுவார்." இவருடைய ‘கோதைத் தீவு’ (1945) நாவல் இவ்வாறு அமைந்த படைப்பு எனலாம். அகிலனும் இத்துறை சார்ந்து மிகுதியாக எழுதினார். இவருடைய ‘பாவை விளக்கு (1958), ‘சித்திரப்பாவை’ (1968) ‘எங்கே போகிறோம்’ (1973) முதலானவை குறிப்பிடத்தக்க நாவல்களாகும்.
மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பி.எம்.கண்ணன், லஷ்மி என்னும் புனை பெயர் கொண்ட திரிபுரசுந்தரி ஆகியோர் மிகுதியாக எழுதினர். இவ்வாறான எழுத்துக்களால் நாவல் வரலாறு இன்னொரு வீச்சினைப் பெற்றது. மு.வரதராசனாரும் சமூகத்துக்குப் பயன்படக்கூடிய கருப்பொருட்களைக் கொண்ட பல நாவல்களை எழுதினார். தமிழ் நாவல் வரலாற்றில் ஆழத் தடம் பதித்த தி.ஜானகிராமன் பல நாவல்களை எழுதினார். உயர்ந்த பண்புள்ளம் கொண்ட பெண்களையும், அசாதாரணச் சிந்தனைப் போக்குடைய விசித்திரமான பெண்களையும் நமது நாவல்களில் சித்திரித்துக் காட்டினார். மரப்பசு, மோகமுள், அம்மா வந்தாள், முதலான இவரது நாவல்கள் பலவும், தமிழ் நாவல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தவை எனலாம்.
இக்காலப்பகுதியில் குடும்ப உறவுகளினால் ஏற்படும் சமூகவிளைவுகள் சார்ந்து பல எழுத்துக்கள் வெளிவந்தன; புதுமைப்பித்தன் இதில் ‘மணிமகுடம்’ தரித்தவராகக்
காணப்பட்டார். சாதாரண நடைமுறைகளுக்கூடாகத் தனிமனிதனுடைய சித்திரிப்புக்கள் அமைந்த நாவல்களும் படைக்கப்பட்டன. இவ்வாறு படைக்கப்பட்டவற்றுள்
க.நா.சுப்பிரமணியத்தின், “பொய்த்தேவு” சி.என்.

8 41
அண்ணாத்துரையின், ரங்கோன் ராதா முதலானவை எடுத்துக் கூறப்படக் கூடியவை.
மனித சமூகத்தின் இன்னொரு படிமமான பாலியல் சார்ந்த விடயங்களைக் கருப்பொருளாகக் கொண்டும் நாவல்கள் எழுந்தன. இக்கால நாவல்களில் பலர் இதனை நாசூக்காகவும் குறியீடாகவும் வைத்து எழுதுகின்றார்கள. தி.ஜானகிராமன், மு.வரதராசன் ஆகியோர் படைப்புக்களில் இத்தன்மையை அடையாளம் காணலாம்.
இவ்வாறு நோக்குகின்ற போது கருப்பொருளிற் பல வகைகளையும், அவை நாவல்களாகப் பின்னப்படுகின்ற போக்கிலே பல அற்புதமான உத்திகளையும் கையாண்ட பல்வேறு நாவல்களைப் பலரும் எழுதியுள்ளமையைக் காணமுடிகின்றது. நாவல் வரலாற்றிலே இவ்வாறான ஒரு மகோன்னதப் போக்கு. சுதந்திரத்திற்குப் பின்னர் உணரத்தக்கதாக அமையலாயிற்று. ஒவ்வொரு சிருஷ்டி கர்த்தாவும் தத்தமக்கெனத் தனியானதொரு நடையைப் பின்பற்றினர். இத்தகைய தன்மைகள் காரணமாக நாவல் இலக்கிய வரலாற்றில் நடுப்பகுதியைத் தொடர்ந்து பின்னால் பற்பல வளர்ச்சி நிலைகள் அவதானிக்கப்படக் கூடிய அளவுக்கு அமையலாயின. தமிழிலிருந்து நாவல் வரலாறு பிரிக்கப்பட முடியாத அளவுக்கு ஒரு இறுக்கமான பிடிப்பு இன்றுவரை காணப்பட்டு வருகிறது எனலாம்.
ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் நாவலின் வரலாறு
தமிழ் மொழியின் வரலாற்றிலும், தமிழ் இலக்கியத்தின் வரலாற்றிலும் தமிழ்நாடும், ஈழமும் மிக நெடுங்காலமாக ஒரே கொள்கையுடன் ஒரே தடத்திலே இயங்கி வந்துள்ளன. ஆரம்பத்திலிருந்தே இரண்டு நாடுகளுக்கும் இடையே 'தாய் சேய்' உறவு போன்றதொரு இடையறாத் தொடர்பு காணப்பட்டு வந்துள்ளது. இத்தகைய ஒன்றுபட்ட போக்கிலே சுதந்திரத்துக்குப் பின்னர் மாற்றம் ஏற்பட்ட இவை இரண்டும் தனித்தனியே இயங்கவேண்டியதொரு அரசியற் பிரிப்பு ஏற்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையும், இந்தியாவும் தனித்தனிக் குடியரசுகளாயின. இந்நிலைமை காரணமாக அதுகாலவரை இருந்து வந்த ஒன்றாயோடிய தன்மை மாற்றம் பெறலாயிற்று.

Page 24
42 ※
ஈழம் எனும் பதம் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களைக் குறிக்கின்ற பதப்பிரயோகமாகும். அதாவது இலங்கை வாழ் தமிழ் மக்களுடைய பண்பாட்டுத் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாக இப்பதம் அமைந்துள்ளதுடன், இம்மக்களை அனைத்திந்திய வட்டத்துக்குள் பொதுமைப்படுத்தித் தமிழ் நாட்டு மக்களுடன் இணைத்துப் பார்க்க முடியாத இன்றியமையாமையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஈழத்துத் தமிழ் மக்களைச் சார்ந்து பல்வேறு இலக்கியங்கள் எழுந்துள்ளன. இவற்றையடிப்படையாகக் கொண்டு ஈழத்துக்கெனத் தனித்துவமான இலக்கிய வரலாற்றைப் பேணவேண்டும் என்ற கருத்து நிலைகள் முனைப்புப் பெற்றன. தமிழ் இலக்கியங்களைத் தமிழ் நாட்டு இலக்கியங்களாகப் பார்க்கின்ற மனோ நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ‘ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள்’ என வழங்கும் மரபும் வரலாற்றின் இடைப்பட்ட காலத்திலே ஏற்படலாயிற்று. ஈழத்துத் தமிழ் நாவல்களின் தனித்துவமான சில போக்குகள், பொதுவான தமிழ் நாவல் வரலாற்றுடன் அல்லாது அதனைத் தனியே பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈழத்துத் தமிழ்நாவல் வரலாற்றில் முதல்நாவல் பற்றியகருத்துகள்
தமிழ் நாடடின் நாவல் வரலாற்றைப் போலவே ஈழத்துத்தமிழ் நாவல் இலக்கியத்துக்கும் சுமார் ஒரு நூற்றாண்டுக் கால வரலாறு உண்டு. இவ்வரலாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தொடங்குகிறது. 1885 ஆம் ஆண்டு சித்திலெப்பை என்பவர் எழுதி வெளியிட்ட ‘அஸன்பேயினுடைய கதையை ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் முதல் நாவலாகக் கொள்ளும் மரபு காணப்படுகின்றது. ஈழத்தவரால் எழுதப்பட்ட இக்கதை சென்னையில் வெளியிடப்பட்டது. ‘மிஸர்' எனும் தேசத்தின் அரச குமாரனுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறும் இக்கதை, இஸ்லாமியப் பின்னணியைக் கொண்டது. மர்மச் சம்பவங்களும், வீரசாகசச் செயல்களும் இந்நூலில் மிகுதியாகக் காணப்படுகின்றன. கதை நிகழ்ச்சிகளுக்கான உண்மையான திகாதிகளும் இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளன. நாடகப் பாங்கான உரையாடலையும், காவிய மரபின் சாயலையும் இந்நூல் கொண்டமைந்துள்ளது.

& 43
1891 ஆம் ஆண்டில் 'ஊசோன் பாலந்தை கதை வெளிவந்தது. “ORSONANDVALENTINE' என்னும் போர்த்துக்கேய நெடுங்கதையை ஆதாரமாகக் கொண்டு கிறித்தவ மதப் பின்னணியிலே எஸ். இன்னாசித்தம்பி என்பவரால் இந்நூல் எழுதப்பட்டது. இக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளிலும், நிகழ்ச்சியோட்டத்திலும் தமிழ்ப் பண்பாடு செறிந்து காணப்படுகிறது. ‘தமிழ் நாவல்’ எனத் தோன்றும்படியான தன்மையும் இக்கதையில் உண்டு. இக்கதையை ஈழத்தின் முதல் நாவல் எனக் கொள்வாருமுளர்."
இவ்விரு நாவல்களுக்கும் முன்னதாக 1856 ஆம் ஆண்டில் “காவலப்பன் கதை’ எனும் நாவலை மூர் என்பவர் எழுதியுள்ளதாக மு.கணபதிப்பிள்ளை குறிப்பிடுவார்.*ஆரம்பகால நாவல்கள் தமிழ் மொழியிலே தோன்றியபோது செய்யுள் வடிவிலேயே தோன்றின எனவும், இலங்கையிலும் பொன்னம்பலப்பிள்ளை என்பவர் ‘சதாசிவலீலா சரித்திரம்’ எனும் கதையை அகவல் யாப்பு வடிவத்தில் எழுதினார் எனவும் கூறப்படுகிறது.*
1895 ஆம் ஆண்டில் திருகோணமலையைச் சேர்ந்த சரவணமுத்துப் பிள்ளை என்பவர் எழுதிய ‘மோகனாங்கி’ என்னும் நூல் வெளியிடப்பட்டது. இதனுடைய கதைக்கு தஞ்சை நாயக்கர் வரலாற்றில் இடம்பெறும் சிறு சம்பவத்தை வைத்து உருவாக்கப்பட்டதாகும். இந்நாவல் சரித்திரச் சம்பந்தமுடையதாக உள்ளது.
1905 ஆம் ஆண்டில் சி.வை. சின்னப்பிள்ளை என்பவர் எழுதிய ‘வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம்’ எனும் கதை வெளிவந்தது. இக்கதை ஈழத்தைக் களமாகக் கொண்டமைந்தமை கருதத்தக்கதாகும்.
மேலே சுட்டியவாறு ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றின் ஆரம்பத்திலே சில நாவல்கள் தோன்றின. இவற்றின் அடிப்படையில் அவற்றுள் காலத்தால் எது முந்தியது, எது பிந்தியது என நிர்ணயம் செய்து கொள்வதிலே கருத்து வேறுபாடுகள்

Page 25
44 «Х•
காணப்படுகின்றன. வரலாற்று நிலையில் “அஸன்பே சரித்திரமே ஈழத்து முதல் தமிழ் நாவலாகக் கொள்ளப்படினும், சிலர் இக்கருத்துப் பொருத்தமற்றது எனக் கருதுவர். இக்கதையினுடைய கருவும், கதையின் போக்கும் நூதன சாகசமானதாக அமைந்தமையால் இதனை நூதன சாகசக் கதையாகக் கொள்வதே பொருத்தமாயுள்ளதென்பர்." இக்கதை காவிய மரபிலிருந்து விடுபடமுடியாத ஒரு நிலைமாறுகாலப் படைப்பாக உள்ளதே தவிர, ஈழத்து நாவலெனக் கொள்ளும் வகையில் இதன் கதை நிகழ்களம் கூட அமையவில்லை என்று, விமர்சன நோக்கில் இதனை முதன் நாவலெனக் கொள்ளாத நிலைப்பாடே காணப்படுகிறது.
‘மோகனாங்கியை எடுத்துக்கொண்டால் அதனுடைய கதைக் கருவும், நிகழ்களமும் அயல் தேசத்துக் கதையின் இடையிலே பாதிக்குப் பாதி கவிதைகளே வருகின்றன. சரித்திரத் தொடர்பான கதையின் போக்கும் மோகனாங்கியை நாவலென்று கூறத்தக்க எண்ணப்பாங்கைத் தோற்றுவிக்க மறுக்கிறது. இதனைத் தமிழின் வரலாற்று நாவலிலக்கியத்துறையின் முன்னோடியாகக் கொள்வது பொருத்தம் என்பர்." இந்நூலில் நாவல் என்ற 'உருவ இலட்சியம்’ அமைந்து வரவில்லை என்பது பெரும்பான்மைக் கருத்தாக உள்ளது.
பொதுவாக ‘அஸன்பே சரித்திரம்’, ‘மோகனாங்கி’ ஆகிய இரண்டு கதைகளையும் ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றின் முதல் நாவல்களாகக் கொள்ளும் போது பின்வரும் விடயங்களையும் நின்று நிதானிக்க வேண்டியுள்ளது.
‘மோகனாங்கியை எழுதிய சரவணமுத்துப்பிள்ளை ஈழத்தில் பிறந்தவர் என்ற காரணத்தால் அவரை ஈழத்து நாவலாசிரியர் வரிசையில் சேர்த்து, அவரது நாவலுக்கு முதன்மையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர் வாழ்ந்தது, படித்தது, நாவல் எழுதியது எல்லாமே தமிழ் நாட்டின் தலை நகரமாகிய சென்னையிலேதான் என்பது கருதத்தக்கதாகும். இவரது நாவலிலும் தமிழ் நாட்டின் ஒரு காலகட்ட வரலாறு கூறப்படுகிறதே தவிர‘ஈழம்' எவ்வகையிலும் இடம் பெற்றதாகத் தெரியவில்லை.
"அஸன்பே சரித்திரத்தை எழுதிய சித்திலெப்பை மரக்காயரும் ஈழத்தினைக் களமாகக் கொண்டு எழுதவில்லை. எகிப்து,

4X
45
இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளைக் களமாகக் கொண்டே இந்நாவலின் கதை எழுதப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்குறித்த இரண்டு கதைகளையும் ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றின் முதல் நாவல்களாகக் கருதுவதை விடுத்து, சி.வை.சின்னப்பிள்ளையின் ‘வீரசிங்கன் கதையை முதல் நாவலாகக் கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. ஆயினும், இக்கதையிலும் கதை நிகழிடம் ‘ஈழம்' என்பதனைத் தவிர ஈழத்துச் சமூகக் களம் முக்கியத்துவம் பெறவில்லை என்றே கூறலாம்.
எனவே ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றின் ஆரம்பகால நாவல்களைப் பார்க்கின்றபோது இவற்றை எழுதிய ஆசிரியர்கள் பாரம்பரியமான தமிழ் இலக்கிய மரபினின்றும் மாறிப் புதியதொரு வடிவத்தைப் படைப்பதில் ஈடுபட்டமை தெரியவருகிறது. இப்படைப்புக்கள் வசனத்தில் அமைந்த நீண்ட கதைகளாக அமைந்தனவே தவிர, நாவலென்ற இலக்கிய வடிவத்தின் பண்புகளைப் பெருமளவில் பெற்றுக் கொள்ளவில்லை எனலாம். சமகால வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கருவாகக் கொள்ளாமல், இதிகாச அல்லது கற்பனைக் கதைகளையே இவை வசனத்தில் கூற முனைந்துள்ளன எனவும் கருதலாம். சி.வை. சின்னப்பிள்ளையின் கதையும், சமகாலப் பாத்திரங்களைக் கொண்டதுபோல அமைந்திருப்பினும் அதுவும் கற்பனையான ஒரு கதையாகவே உள்ளது. கற்பனைக் கதையில் அக்காலத்தின் தன்மைகள் சில இடம் பெற்றுள்ளன. இவ்வாறானவற்றை நாவல் எனக் கொள்வதனை விட ‘றொமான்ஸ் (Romance) எனக் குறிப்பதே பொருத்தமாகும் எனப் பிற்கால விமர்சகர் கருதுவர்.?
இவ்வகையிற் பார்க்கின்றபோது ஈழத்துத் தமிழ் மக்களுடைய சமுதாயப் பிரச்சினைகளைக் கதைப் பொருளாகக் கொண்டமைந்தது எனக் கொள்ளத் தக்கதாகத் திருமதி மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இருதயம்’ எனும் நாவலைக் குறிப்பிடலாம். இந்நூல் 1914 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நாவல் கணவனது கொடுமைக்கு உள்ளாகி இதயம் நொறுங்கிப்போன கண்மணி என்ற நடுத்தர வர்க்கக் குடும்பப் பெண்ணினுடைய அவல வாழ்க்கையைச் சித்திரிக்கின்றது. இந்நாவலின் ஆசிரியரை ஈழத்தின் முதலாவது பெண் நாவலாசிரியராக குறிப்பிடும் மரபும் உள்ளது.

Page 26
46 «Х•
யாழ்ப்பாணத்தில் நிலவிய அக்கால சமூகத்தினுடைய பல்வேறுபடி நிலைகளும் இந்நாவலிலே சித்திரிக்கப்பட்டுள்ளன.*
சிறப்பாக அக்காலச் சமூகத்துப் பெண்களின் வாழ்வியல் அம்சங்கள் இந்நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன எனலாம். வி. ரசிங்கன் கதையை விட, இந்நாவலில் பண்பு வளர்ச்சியுள்ள கதைமாந்தர் பாத்திரங்களாகப் படைக்கப் பட்டுள்ளமை
குறிக்கத்தக்க விடயமாகும். சி. வை. சின்னப்பிள்ளையும், மங்களநாயகம் தம்பையாவும் ஏறத்தாழச் சமகாலத்திலேயே நாவல்களைப் படைத்திருந்தாலும், மங்கள நாயகம்
தம்பையாவினுடைய ‘நொறுங்குண்ட இருதயம் யதார்த்தத்துடன் ஒட்டிச் செல்ல முற்படுவதனை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும். சமிகாலத்துச் சமுதாயப் பிரச்சினையைக் கதைப் பொருளாகத் தேர்வுசெய்து, நடப்பியற் பண்புகளுக்குப் பொருந்துமாறு கதையை நடத்திச் சென்று அதனை நிறைவு செய்துள்ளமை ஆரம்ப கால ஈழத்துத் தமிழ் நாவலாசிரியர்களுள்ளே மங்கள நாயகம் தம்பையாவுக்கு தனித்துவத்தையும் முதன்மையினையும் வழங்கியுள்ளது எனலாம்.
பொதுவாக நோக்குமிடத்து ஆரம்பகால ஈழத்து நாவலாசிரியர்கள் தம் கதைகளில் தனிமனித, சமூக வாழ்க்கையில் ஏற்பட்ட புதிய பரிமாணங்களை எழுத்தில் வடிக்கவில்லை எனக் கூற இடமுண்டு. இத்தன்மை காரணமாக இக்கதைகள் யதார்த்தத்தை இழந்த கற்பனைக் கதைகளாயின. தம் நாவல்களூடாக நல்லுபதேசம் செய்யும் பண்பினையும் இவர்கள் கொண்டு இருந்தனர். அத்துடன் அழகுணர்ச்சி, கற்பனாலங்காரம், வீரதீரப்பிரதாபம் என்பவற்றையும் தமது படைப்புகளில் தாராளமாகச் சேர்த்திருந்தனர். இவ்வாறான அம்சங்களையே சுற்றிச் சுழன்று நாவல் படைத்த பண்பு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை காணப்பட்டிருந்தது.
இவ்வாறான ஒரு பின்னணியில் நின்று கொண்டு காலவரன்முறைப்படி ஈழநாட்டவர் ஒருவரால் முதலில் எழுதப்பட்டது என்ற வகையிலே ‘அஸன்பே சரித்திரத்தை முதல் நாவலாகக் கொள்ளினும், அதனை மறுத்து, ஈழத்துக் களத்திலே தோன்றியது என்ற வகையிலே ‘வீரசங்கன் கதை’ முதல் நாவலாகக் கூறப்பட்டது. எனினும் பிற்கால விமர்சககர்கள் நாவல் என்ற

«Х• 47
கட்டமைப்புக்கள் வருவதனையே முதல் நாவலாகக் கொள்வது பொருத்தமுடையது என்று கருதுகின்ற வகையில் ‘நொறுங்குண்ட இருதயத்தையே முதல் நாவலாகக் கொள்வது பொருத்தம் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். எவ்வாறாயினும் ஈழத்து முதல் நாவல் என்றவுடன்‘அஸன்பே சரித்திரத்தையே உடனே குறிப்பிடும் மரபே இத்துறையில் பெரும்பான்மையாக நிலவுகிறது எனலாம்.
ஈழத்தில் தமிழ் நாவல்கள் தோன்றுவதற்கான சூழலும் ஈழத்தின் நாவல் வளர்ச்சியும்
புனைகதை வரலாற்றின் தோற்றத்தைப் பார்க்கின்றபோது எம்மொழியிலாயினும் சரி, எச்சமூக அமைப்பிலாயினும் சரி அடிப்படையில் ஒரு சமுதாய மாற்றம் ஏற்பட்டிருந்தமையை அவதானிக்க முடிகின்றது. இம்மாற்றத்துடன் உரைநடை விருத்தி, அச்சு முறைமை, தொழில்நுட்ப விருத்தி போன்ற அகவயப்பாடான தேவைகளும் ஒன்றுடனொன்று இணைந்த நிலை பற்றி இவ்வியலின் ஆரம்பத்தில் ஏலவே தெளிவுபடுத்தப்பட்டது. தமிழின் நாவல் வரலாற்றின் தொடக்கக் காலங்களில் ஏற்பட்ட மேற்குறித்த அனுபவங்களுடன் ஒத்த அனுபவங்களே ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றிலும் ஏற்பட்டிருந்தன.
ஆங்கில ஏதாதிபத்தியத்தின் கீழான மேனாட்டுப் பண்பாட்டுத் தாக்கம் இலங்கையிலும், இந்தியாவிலும் சமகாலத்தில் உணரப்பட்டது என்பது உண்மையெனினும், இரு நாடுகளிலும் வேறுவேறாயமைந்த நிலப் பிரபுத்துவச் சமுதாய அமைப்பின் தன்மை காரணமாக ஈழத்துத் தமிழ் நாவலின் போக்குச் சற்று வேறுபாடாக அமைந்தது.*இவ்விடத்திலே ஈழத்துத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படக்கூடிய யாழ்ப்பாண நிலவுடைமைச் சமூக அமைப்பைப் பற்றிக் குறிப்பிடுவது ஆய்வுக்குப் பொருத்தமாகும்.
ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்திலே குறிப்பாக யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பிலே இந்து சமயத்தினுடைய மேலாதிக்கத்தினையும், இறுக்கமான சாதியமைப்பினையும் காணலாம். இங்கு உயர்ந்தோர், உயர்ந்தோர்அல்லாதோர் என்ற சமூகநிலையிலான பாகுபாடு உண்டு. இப்பாகுபாட்டிலே தமிழகத்தைப் போல ‘பிராமணர்’ எனும் வகுப்பினர் முக்கியத்துவம் உடையோரல்லர். “வேளாளர்’ எனும்

Page 27
48 X
நிலவுடைமையாளரே அதிகார அடுக்கமைவில் முக்கியத்துவமானவர்கள். தமிழ்நாட்டுச் சமூக அமைப்புக்கும், யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்புக்குமுள்ள பிரதான வேறுபாடு இதுவெனச் சுட்டிக் காட்டலாம். விவசாயமே இவர்களது பிரதான தொழிலாகக் காணப்பட்டது. விவசாயிகளாகவும், வேளாளராகவும், இந்துவாகவுமிருந்த குறித்த இச்சமூகமே மேலாதிக்கமுடையதாயிருந்தது. ஒட்டு மொத்தமான சமூக இயக்கம் சாதியின் அடிப்படையிலேயே இயங்கியது. உண்மையில் இந்த வெள்ளாள மேலாண்மை என்பது யாழ்ப்பாணத்துப் பொருளாதார அமைப்பின் சமூக வெளிப்பாடே எனலாம். சீரான விவசாயத்தை மேற்கொள்ள முடியாத பெளதீக அமைப்பினைக் கொண்டதே இவர்களது விவசாயப் பொருளாதாரம். இவ்வாறு பலமற்ற பொருளாதார அமைப்பினைக் கொண்டிருந்த யாழ்ப்பாணச் சமூகத்தினைப் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரால் பூரணமாக மாற்றிவிட முடியவில்லை. இதற்குக் காரணம் அங்கு ஏற்பட்டுப் போயிருந்த சாதியமைப்பு முறைமை ஆகும். இவ்வாறான இறுக்கமான சாதியமைப்புப் பின்னணியிலே ஆரம்பித்தில் ஒல்லாந்தரால் மதமாற்றம் செய்யப்பட்ட உயர்ந்தோர் எனக் குறிப்பிடப்படும் வகுப்பினர் கிறித்தவர்களாக மாறியபோதிலும், சாதியமைப்பைக் கைவிடவில்லை. ஒல்லாந்தர் ஆட்சி மறைந்ததும் மீண்டும் அவர்கள் சைவர்கள் ஆயினர். கிறித்தவர்கள், மதமாற்ற முயற்சியால் சாதியமைப்பைச் சமுதாயத்தில் மாற்ற விழைந்தனர் எனினும் இறுதியில் அவர்களும் தத்தம் தேவாலயங்களில் அவரவர் சாதிக்கு ஏற்ப இடமளிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்தச் சமூக நிலைமைகளை ஈழத்தின் பிரபல நாவலாசிரியர் கே. டானியல் தமது 'கானல்’ நாவலில் மிகச் சிறப்பாகச் சித்திரித்துள்ளார்.
அந்நியர் ஆட்சி நிலைபேறடைந்த பின்னர்கூட ஈழத்தின் அடிப்படைப் பொருளாதார அமைப்பு மாறவில்லை. காரணம் இவ் ஆட்சியினால் ஆங்கிலக் கல்வி மூலம் கிடைத்த அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கூட நிலவுடமையாளருக்கே கிட்டியது. கல்வி வசதி உயர்ந்தோரல்லாதோருக்குக் கிடைக்கவில்லை.*
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரும் இந்நிலைமையே நிலவிற்று. ஈழத்தில் ஆரம்ப காலத்திலே தோன்றிய நாவல்கள்

8 49
மேற்குறித்த சமூக பொருளாதார நிலைமைகளைப் பிரதிபலிக்கும் பாங்கு உடையனவாகவே அமைந்தன. சித்திலெப்பையின் ‘அஸன்பே சரித்திரம்” இன்னாசித்தம்பியின் ஊசோன் பாலந்தை கதை’, த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய ‘மோகனாங்கி’, மங்களநாயகம் தம்பையா எழுதிய ‘நொறுங்குண்ட இருதயம், ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை எழுதிய ‘கோபால் நேசரத்தினம்’ முதலான ஈழத்தின் ஆரம்பகாலத் தமிழ் நாவல்கள், ஆங்கிலேயர் தமக்காக அமைத்துக் கொண்ட குடியேற்ற நாட்டு முறைமையிலான சமூக அமைப்புச் சார்ந்தனவாயிருந்தன.
ஏறத்தாழ 1915க்குப் பின்னரும் 1930க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய ஈழத்து நாவல்களில் பெரும்பாலானவை பழைய மரபு வழிப்பட்ட அறிவியலடிப்படையிலேயே பிரச்சினைகளை அணுகின. நாவலில் எதிர்பார்க்கப்படுகின்ற பிரதான பண்பாகிய யதார்த்தத்தை உடையனவாக அன்றி வெறும் கற்பனைக் கதைகளாகவே இவை அமைந்திருந்தன.*
மக்களிடையே விருத்தியடைந்த வாசிப்புப் பழக்கமும், தினசரிப் பத்திரிகையின் தோற்றமும் இத்தகைய நூல்கள் தோன்ற இன்னொரு காரணமாக அமைந்தது. 1931இல் தொடங்கப்பட்ட வீரகேசரிப் பத்திரிகை இவ்விடத்தில் விதந்து குறிப்பிடுதற்குரியதாகும். வீரகேசரிப் பத்திரிகையில் ஆசிரியராக இருந்த எச். நெல்லையா என்பவர் பல கதைகளை எழுதினார் ‘காதலின் வெற்றி அல்லது சந்திரவதனா’ (1934), இரத்னாவலி அல்லது காதலின் மாட்சி’ (1938), ‘காந்தமணி அல்லது தீண்டாமைக்குச் சாவுமனி (1938), ‘சோமாவதி அல்லது இலங்கை இந்திய நட்பு’ (1940), பிரதாபன் அல்லது மகாராஷ்டிரா நாட்டு மங்கை’ (1941), முதலான இவருடைய நாவல்கள் மர்மம், வீரசாகசம், கொள்ளை, கொலை, அறம் முதலானவை சார்ந்து எழுதப்பட்ட கதைப் போக்கினை உடையனவாகும்.
கே.வி.எஸ். வாஸும் எழுதிய ‘குந்தளப் பிரேமா’, ‘நந்தினி", *பத்மினி’, ‘தாரிணி’, ‘மலைக்கண்ணி, ‘உதயகன்னி’ போன்ற நாவல்களும், இராசம்மாள் எழுதிய சரஸ்வதி அல்லது காணாமல் போன பெண்மணி (1929) என்ற நாவலும், சிவராமலிங்கம் பிள்ளையின் ‘பூங்காவனம்’ (1930), பவள காந்தன் அல்லது கேசரி

Page 28
50 々
விஜயம்’ (1932), ஏ.சி.இராசையா எழுதிய ‘அருணோதயம் அல்லது சிம்மக் கொடி’ (1933) முதலான நாவல்களும் மேற்குறித்தவாறான கதைப் போக்குடைய நாவல்களேயாகும்.
ஈழத்தில் நவீன இலக்கிய வடிவங்களான நாவல், சிறுகதை, புதுக்கவிதை முதலானவற்றில் வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து ஏறத்தாழ நடுப்பகுதி வரை ஆங்கிலம் கற்றவர்களே பெரும்பாலும் ஈடுபட்டனர். அதே வேளை இவ்வகைப்பிரிவினர் உயர் சமூகத்தொடர்பு கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். அக்காலப்பகுதியில் ஆக்க இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டவர்களைப் பற்றி ஆராயும்போது இவ்வுண்மை தெரியவரும். பொதுவாக நோக்குகின்றபோது ஈழத்து நாவல் வரலாற்றில் 1940களுக்கு முன்னர் இம் முயற்சியில் ஈடுபாடு கொண்டோர் குறைவாகவே காணப்படுகின்றமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
ஈழத்து நாவல் வரலாற்றின் இத்தகைய போக்கில் 1950களின் பின்னர் மாற்றம் ஏற்படுகிறது. அடிமைச் சுபாவமுடைய உயர்ந்தோரல்லாத மக்களை அம் மனோநிலையிலிருந்து விடுபடச் செய்யக் கூடிய சூழ்நிலைகள் 1950களின் காலகட்டத்தின் பின்பு ஏற்படுகின்றன. அதுகாலவரை இருந்து வந்த ஈழத்து நாவல் வரலாற்றின் ஒட்டத்திலே புதிய போக்கு ஏற்படலாயிற்று. நாவல் என்ற இலக்கிய வடிவத்தினூடே எதிர்பார்க்கப்பட்ட யதார்த்தப் பண்புடைய காத்திரமான பல படைப்புக்களும் படைப்பாளர்களும் இக்காலப்பகுதியில் தோற்றுவிக்கப்படலாயினர். இவ்வாறான போக்குடைய நாவல்கள் இக்காலப்பகுதியிலே தோன்றுவதற்கான சூழல் என்னவாக இருந்திருக்கிறது என்பது பற்றி நோக்குவது இவ்விடத்தில் அவசியமாகிறது.
ஈழத்தில் இலக்கிய இயக்கங்களின் முகிழ்ப்பும், ஈழத்துத் தமிழ் நாவல்
வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்
ஈழத்தில் இலக்கிய இயக்கங்களின் முகிழ்ப்புடன் அதற்கு
முன்னர் அதிகமாகத் தோன்றிய நாவல்களுடைய பண்பில் பெரிதும்
மாற்றங்கள் ஏற்படலாயின. 1940களின் பின்னர் தமிழை மட்டும் கற்ற இலக்கிய உத்வேகம் கொண்டவர்களுடைய எழுத்துக்களை

& 51
மிகுதியாகக் காணலாம். இலக்கிய ஆர்வத்தினை வளர்க்கவும், கருத்துப் பரிவர்த்தனைக்குக் களம் அமைத்துக் கொடுக்கவும் எனப் பல்வேறு இலக்கிய இயக்கங்கள் உழைத்திருக்கின்றன. ஆரம்பத்திலே ‘ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம்’, கலாநிலையம்’ போன்ற இயக்கங்கள் தோன்றியிருப்பினும், 1942இல் மறுமலர்ச்சிச் சங்கமும், 1948களின் பின்னர் இன்னும் பல இயக்கங்களும் தோற்றம் பெற்றன. இவற்றின் விவரமும், தொழிற்பாடுகளும் வருமாறு அமைந்திருந்தன.
கொழும்புத் தமிழ்ச் சங்கம், அகில இலங்கை எழுத்தாளர் சங்கம், இலக்கிய அன்பர் வட்டம், இவற்றுடன் யாழ்ப்பாணத்தமிழ் எழுத்தாளர் சங்கம் எனத் தொடங்கப்பட்டப் பின்னர் ‘இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம்’ எனப் பெயர் கொண்ட இயக்கமும் குறிப்பிடத்தக்க இயக்கங்களாகும். இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இலக்கியத்துறையில் ஆக்கபூர்வமாகச் செயற்பட்டதுடன், தனது செயற்பாட்டின் ஒரு பகுதியாக ‘இலங்கை எழுத்தாளர் என்ற சஞ்சிகையையும் வெளியிட்டது.
*யாழ் இளம் எழுத்தாளர் சங்கம்’ எனும் இலக்கிய இயக்கம், இலக்கிய வளர்ச்சிக்காக மட்டுமன்றி, அக்கால இளஞ் சமூகத்தின் கல்வி விருத்திக்கும் பாடுபட்டது. இவ் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஒருபகுதியினர் பின்னர் ‘இலங்கை இளம் எழுத்தாளர் சங்கம்’ எனும் பெயர் தாங்கிய அமைப்பாகச் செயற்பட்டனர்.
‘இலக்கிய ரசிகர் சங்கம்’ என்னும் அமைப்பு, காலஞ் சென்ற எழுத்தாளர் நாவேந்தன் என்பவரால் தொடங்கப்பட்டது. இக்காலப் பகுதியிலே இலக்கிய இயக்கம் எனப் பெயர் சூட்டிச் செயற்படாவிட்டாலும், ‘குரும்பசிட்டி சன்மார்க்க சபையும்’ இலக்கியத் துறையில் ஈடுபட்ட உழைத்து வந்த சங்கமாகவே கருதப்படுமளவுக்குச் சிறப்பாகச் செயற்பட்டது எனக் கூறலாம்.
அரசியல் வேற்றுமைகளைக் கடந்து எழுத்தாளர் ஐக்கியத்தை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டக்களப்பு எழுத்தாளர் சங்கம் தோன்றியது. கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், சிதறிக் கிடந்த எழுத்தாளர்களை ஒன்று திரட்டும் அவாவுடன் கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கம்’ எனும் இலக்கிய இயக்கத்தை நிறுவியது.

Page 29
52 «Х•
மட்டக்களப்பு இளைஞர்களிடையே கலை, இலக்கிய ஆர்வத்தினை வளர்ப்பதற்காக மட்டக்களப்புத் தமிழ்க்கலாமன்றம்’ எனும் இலக்கிய இயக்கம் நிறுவப்பட்டது. இது பெரும்பாலும் கலை இலக்கியத்துறையில் முன்னின்று உழைத்தவர்களைக் கெளரவப்படுத்தியது.
இலக்கிய விருத்தியை நோக்கி அமைக்கப்பட்ட இன்னுமொரு இலக்கிய இயக்கம் ‘அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் முன்னேற்றச்சங்கம்’ என்பதாகும். இது நாடளாவிய நிலையில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதனை நோக்கமாகக் கொண்டிருந்ததுடன் பல இலக்கியக் கருத்தரங்குகளையும் நடத்தியது.
‘தமிழ் எழுத்தாளர் மன்றம்’ எனும் இலக்கிய இயக்கம் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கி வந்தது. இது புனைகதைத் துறை வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் பலவற்றையும் முன் எடுத்தது.
இவ்வாறாகத் தனித்தனி எழுத்தாளர்களது விருத்திக்கும், இலக்கியத்தினுடைய விருத்திக்கும் என 'ஈழம்’, ‘தமிழ்’ என்ற அடைகளைப் பெயர்களாகக் கொண்டு பல்வேறு இலக்கிய இயக்கங்களும் செயற்பட்டன. இவ்வாறு தோற்றம் பெற்ற இலக்கிய இயக்கங்களிலே 1942இல் ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சி’ எனும் இலக்கிய இயக்கமும், 1946 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1954களின் பின்னர் இலக்கியத் துறையில் காரிய வேகத்துடன் செயற்பட்ட ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்ற இலக்கிய இயக்கமும் தனியான கவனத்திற்கு உரியவையாகும். ஒட்டுமொத்தமான ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலும், குறிப்பாக நாவல், சிறுகதை போன்ற துறைகளிலும் பல புதிய பரிமாணங்களை இச்சங்கங்கள் ஏற்படுத்தின எனலாம். ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சியில் இவை வழங்கிய பங்கும் பணியும் பற்றி இங்கு சற்று விரிவுபடுத்தி நோக்குவது ஆய்வுக்குத் தெளிவை ஏற்படுத்தும்.
மறுமலர்ச்சி சங்கம்
இலக்கியத்துறையில் ஈடுபாடும், துடிப்பும், கொண்ட

«Х• 53
இளைஞர்கள் சிலரது ஆர்வத்தினாலே இச்சங்கம் முகிழ்த்தது. ‘ஈழகேசரி’ எனும் பெயரில் வெளியாகிக் கொண்டிருந்த பத்திரிகையின் இளைஞர் பகுதியில் சேர்ந்து எழுதிக்கொண்டிருந்த சிலர், 1942 அளவில் மறுமலர்ச்சிச் சங்கத்தை ஆரம்பித்தனர். ஈழத்தில் தோன்றிய முதலாவது இலக்கிய இயக்கமாக இது கருதப்படுகிறது.* இந்த இலக்கிய இயக்கம் சிறிது காலமே செயற்பட்டது. எனினும் இதன் செயற்பாடுகள் அதிகமானவை, வலுவானவை. மறுமலர்ச்சி’ என்னும் பெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட்டது. இச் சஞ்சிகையில் பலரும் எழுதினர். பலபுதிய எழுத்தாளர்கள் இதன் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமாயினர். ஈழத்தின் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க படைப்பாளிகளான, அ.செ. முருகானந்தன், அ.ந.கந்தசாமி, வரதர்’ என்ற சுருக்கப் பெயரில் எழுதிய தி.ச.வரதராசன், ‘சு.வே.’ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட சு.வேலுப்பிள்ளை, 'சொக்கன்’ என்று அழைக்கப்படும் க. சொக்கலிங்கம், சு.இராஜநாயகன் முதலானோர் இவ்வாறு அறிமுகமானோரில் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர்கள்.
மறுமலர்ச்சி சங்கம், புத்திலக்கிய எழுத்தாளர் பலருக்கு ஏற்ற களம் அமைத்துக் கொடுத்தது. நவீன இலக்கிய வகைகளாகக் குறிப்பிடப்படுகின்ற நாவல், சிறுகதை, புதுக்கவிதை போன்றவற்றின் சரியான இலக்கணங்கள் தமிழில் வரையறுக்கப்படாத ஒரு காலகட்டத்திலேயே ஆக்க இலக்கிய காரருக்கு இது களமமைத்துக் கொடுத்தது. இதன் காரணமாக நவீன இலக்கிய வடிவங்களுக்கான ஒரு ஜனரஞ்சகப்பாடு இவ்விலக்கிய இயக்கம் செயற்பட்ட காலத்திலே ஏற்பட்டது. இத்தன்மை காரணமாக நவீன இலக்கியங்கள் சமூகத்திலே பெரிதும் பரிச்சயப் படுவதற்கான ஏற்புடைச் சூழலும் அமைந்தது. அத்துடன் காத்திரம் வாய்ந்த முற்போக்குச் சிந்தையுள்ள ஆக்க இலக்கியப் படைப்பாளிகளை மேலும் வளர்த்து எடுப்பதற்கான சூழல் மறுமலர்ச்சிச் சங்கத்தினால் உருவாகியது.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
இலங்கையின் இடது சாரி இயக்கங்களுடன் ஒத்துழைத்த
கே.இராமனாதன், கே.கணேஷ் ஆகியோரால் இச்சங்கம் தோற்றம் பெற்றது. எழுத்தாளர் மத்தியில் கருத்துப் பரிவர்த்தனைகள்

Page 30
54 ※
நடைபெறுவதற்கு ஏற்றவகையினதாக இதன் செயற்பாடுகள் அமைந்தன. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற இடங்களில் இச்சங்கத்தின் கிளைகள் திறக்கப்பட்டு இவ் இலக்கிய இயக்கம் செயற்பட்டது. பல்வேறு வகையான அரசியற் கோட்பாடுகளை உடைய முற்போக்கு எண்ணம் கொண்ட பலர், தத்தம் அரசியற் கோட்பாடு மற்றும் கட்சி முதலானவற்றைத் தவிர்த்து நின்று இச்சங்கத்தில் செயற்பட்டமை கருதத் தக்கதாகும்.
முற்போக்கான சிந்தனையுள்ள எழுத்தாளர் அனைவரையும் ஒரே அணியிற் சேர்த்து, உயர்ந்த மனித வர்க்கத்துக்கான இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடனும், எழுத்தாளர்களது நலன்கள் மற்றும் உரிமைகளுக்காகவும் இவ்வியக்கம் பாடுபட்டுழைத்தது.
காத்திரம் வாய்ந்த இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினுடைய உடனடி இலட்சியமாக, நிரந்தர உலக சமாதானம், தேசிய விமோசனம், உண்மையான ஜனநாயகம், உயர்ந்த வாழ்க்கைத் தரம், சிறந்த கலாசாரம், நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றம் முதலானவை அமைந்திருந்தன. இவற்றுக்காக மக்கள் நடத்தும் போராட்டங்களைக் கருவூலமாகக் கொண்ட ‘மக்களுக்கான இலக்கியத்தைப் படைப்பதாக இச்சங்கத்தின் செயற்பாடுகள் இருந்தன.*இவ்வியக்கம் ‘புதுமை இலக்கியம்’ என்னும் விமர்சனச் சஞ்சிகையை மிகுந்த ஆர்வத்துடன் பிரசுரித்தது.
இத்தகைய ஒரு இலக்கிய இயக்கத்தின் எழுச்சி பலமுனைப்புக்களில் நவீன இலக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தியதுடன் நாவல் வரலாற்றிலும் புதிய பெருக்கத்தினையும் ஏற்படுத்தியது. இக்காலப்பகுதியில் மிக அதிகமானவர்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டார்கள். சிருஷ்டி இலக்கியக் கர்த்தாக்களான இவர்களது எழுத்துக்கள் புதுமை அல்லது நவீனத்துவம் சார்ந்தனவாக இருந்தன. இவ்வெழுத்துக்கள் ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே குறிப்பாக நாவல், சிறுகதை போன்றவற்றிலே பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தின.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்; தனது செயற்பாடுகளில் தீவிரமாக இறங்கி நின்றபோது அதன் முக்கிய இலக்கியக் கொள்கையாக, ஈழத்துத் தமிழ் இலக்கியம் ஈழத்து

8 55
மண்ணைப் பிரதிபலிக்க வேண்டும் என்பது காணப்பட்டது. இத்தன்மை காரணமாக ஈழத்தவரின் சமகாலப் பிரச்சினைகள் பலவும் நாவல்களில் இடம்பெறத் தொடங்கின. பேச்சு மொழி வழக்குகள் அந்தந்தப் படைப்புக்களிலே மிகச் சரளமாகக் கையாளப்பட்டன. இலக்கியப் பரப்பு விரிவும், நெகிழ்ச்சியுமடைந்தது. வருடத்தில் நூறு சிறுகதைகளும், ஐந்தாறு நாவல்களும் எழுதப்பட்ட காலம் மாறி வருடமொன்றுக்குப் பல நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், பற்பல நாவல்களும் வெளிவரத் தொடங்கின.*
இக்காலப்பகுதியில், இலக்கியம் படைத்தல் என்பது பொழுது போக்கு முயற்சியாக இருக்கவில்லை. மக்களின் வாழ்க்கையையும், அதனுடன் தொடர்பானவைகளையும், இலக்கியம் பிரதிபலிக்க வேண்டுமென்ற உணர்வுடன் எழுதப்பட்ட தன்மையையும் நோக்க முடிகிறது.
ஈழத்து இலக்கியத் துறையில் இன்று பிரதானமாகப் பேசப்படுகின்ற பலர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். இவர்களுள் இளங்கீரன்’ எனும் புனை பெயரில் எழுதிய ‘சுபைர்’ பிரதானமானவர். இவர் 1951 இலிருந்து நாவல்கள் எழுதத் தொடங்கினார். ஆரம்ப காலத்திலேயே ஈழத்துச் சூழ்நிலையில் நாவல்களை எழுத விழைந்ததன் காரணமாக ஈழத்துத் தமிழ் நாவல்களுக்குத் தனித்துவமான போக்கினை இவர் வழங்கினார். இவர், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சாதாரண ஏழை மக்களின் கீழ்நிலை வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தமது நாவல்களில் கூர்ந்து நோக்கினார். ‘ஒரே அணைப்பு’, ‘மீண்டும் வந்தாள்’, ‘பைத்தியக்காரி’, ‘பொற்கூண்டு’, ‘கலாராணி’, மரணக்குழி’, ‘காதலன்’, ‘அழகுரோஜா', 'வண்ணக்குமரி’, ‘காதல் உலகிலே’, ‘பட்டினித்தோட்டம்’, ‘நீதிபதி’, ‘எதிர்பாராத இரவு', *மனிதனைப்பார்’, ‘புயல் அடங்குமா’, ‘சொர்க்கம் எங்கே’, ‘தென்றலும் புயலும்’, ‘மனிதர்கள்’, ‘மண்ணில் விளைந்தவர்கள்’,
இங்கிருந்து எங்கே’ முதலான நாவல்களை இவர் எழுதினார்.
ஏறத்தாழப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் அதிகமான
எண்ணிக்கையில் நாவல்களை எழுதியதன் மூலம் ஈழத்து நாவல் வரலாற்றில் இளங்கீரன், தமக்கொரு சகாப்தத்தை ஏற்படுத்தினார்.

Page 31
56 x
இவருடைய நீதியே நீகேள்’, ‘இங்கிருந்து எங்கே ஆகிய நாவல்கள் இரண்டும் தலை சிறந்த பிறமொழி நாவல்களுடன் இணைத்து ஒப்பிடக் கூடியவை என ஈழத்து நாவல் வளர்ச்சி பற்றி ஆராய்ந்த சில்லையூர் செல்வராசன் குறிப்பிடுவார்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில், இளங்கீரனுடன் சமகாலத்திலும், அடுத்து வந்த காலங்களிலும் பலர் அக்கறையுடனும், ஈடுபாட்டுடனும் எழுதினார்கள். மனித வாழ்வின் அத்தனை விடயங்களையும் நாவலினூடாக இவர்கள் தொட்டுப் பேசினார்கள். இவ்விலக்கிய இயக்கத்தினுடைய இலக்கும், அந்த இலக்கை அடைவதற்கான செயற்பாடுகளும். இக்காலப் பகுதியில் தீவிரமடைந்தன. இதனால் நாவல் இலக்கியம் மட்டுமன்றி, ஈழத்தில் ஒரு ஒட்டு மொத்தமான இலக்கிய வளர்ச்சியையும், விமர்சனத் துறையின் வளர்ச்சியையும் இக்காலப் பகுதியில் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஈழத்தில்,தமிழ் மொழி இரண்டாம் தரத்துக்குட்படுத்தப்பட்ட போது தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புக்களைக் கருவாகக் கொண்டும் பலர் நாவல் எழுதினர். செ. கணேசலிங்கன் எழுதிய ‘நீண்டபயணம்’, ‘போர்க்கோலம்’, ‘செவ்வானம் முதலான நாவல்கள் மேற்குறித்தவாறு இன உணர்வைப் பிரதிபலித்தன.
க.தி.சம்பந்தனின் பாசம்', கனக.செந்திநாதனின் விதியின் கை’ முதலான நாவல்களையும், இவற்றைத் தொடர்ந்து அடுத்த பத்தாண்டுகளில் வெளிவந்த ‘தென்றலும் புயலும்’, ‘நீதியே நீகேள்’, சொர்க்கம் எங்கே’, ‘புயல் அடங்குமா’, ‘மனிதர்கள்’, ‘மண்ணில் விளைந்தவர்கள்’, ‘இங்கிருந்து எங்கே’, ‘காலம் மாறுகிறது’, அவளுக்கொரு வேலை வேண்டும்’, ‘அன்னை அழைத்தாள்’, ‘சடங்கு’, ‘தரையும் தாரகையும்’, ‘மண்ணும் மக்களும் முதலான நாவல்கள் சமூகப் பிரச்சினைகளைப் பொருள்முதல்வாத நோக்கிலே அணுகினவாகக் காணப்பட்டன.
பெனடிக்ற்பாலனின் சொந்தக்காரன்’, கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சை’, ‘நந்தி’ எனும் புனைபெயரில் எழுதிய செ.சிவஞான சுந்தரத்தின் ‘மலைக் கொழுந்து முதலான நாவல்கள், இந்தியாவிலிருந்து தொழிலின் நிமித்தம் இலங்கைக்குச்

«Х• 57
சென்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்டனவாக அமைந்தன.
கே. டானியல் எழுதிய ‘போராளிகள் காத்திருக்கின்றனர், ‘கோவிந்தன் அடிமைகள்’, ‘தண்ணீர், 'பஞ்சகோணங்கள்’, ‘கானல், பஞ்சமர்’, ‘பூமரங்கள்’, ‘முருங்கையிலைக் கஞ்சி’, ‘இருளின் கதிர்கள்’, ‘மையக்குறி’ முதலான நாவல்கள், அவை தோன்றிய சமுதாயத்தில் நிலவிய சாதிப் பாகுபாட்டின் அடிப்படைகள், இதன் கோரத்தனங்களை, அடக்கு முறைகளை அப்பட்டமாகச் சித்திரிப்பவையாகும். ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றுக்கு வளம் சேர்க்கத் தக்க உன்னத படைப்புக்களைத் தந்த கே. டானியல், அதற்கொரு அங்கீகாரத்தினைத் தமிழ் பேசும் உலகில் பெற்றுத் தந்தார் எனக் கூறலாம். ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றில் இவர் ஒரு மைல் கல் எனலாம்.
எஸ். பொன்னுத்துரை எழுதிய ‘தீ’, ‘சடங்கு முதலானவை ஈழத்து நாவல் வரலாற்றின் பிறிதொரு பரிமாணத்தைக் காட்டுவன. இவரது ‘தீ’ எனும் நாவல் பொருளிலும், வடிவத்திலும் ஈழத்தின் ஏனயை நாவல்களிலிருந்து சற்று வேறுபட்டது. இக்கதை ஆண்-பெண் உறவு தொடர்பான பாலியற் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டது. 'சடங்கு' எனும் நாவல், யாழ்ப்பாணச் சமூகத்தில் வாழ்ந்த கீழ்நிலைப்பட்ட, மத்தியதர மாந்தர்களுடைய மனவிகாரங்களை இயற்பண்புடன் எடுத்து இயம்புவதாக உள்ளது.
தெளிவத்தை ஜோசப், அ.பாலமனோகரன், கே.வி.எஸ்.வாஸ், அருள் சுப்பிரமணியம், நா. பாலேஸ்வரி, கனக. செந்திநாதன், சொக்கன், செங்கையாழியான் முதலான நாவலாசிரியர்கள், காதல், ஆண்-பெண் உறவு நிலைகள், அவற்றிலேற்படும் பிறழ்வுகள் முதலானவற்றைக் கருவாக வைத்துப் பல்வேறு நாவல்களைப் படைத்தனர்.
செங்கையாழியான் எனும் புனைபெயரில் எழுதிய க. குணராசா கணிசமான எண்ணிக்கையில் நாவல்களைப் படைத்தார். *நந்திக்கடல்”, “ஆச்சிபயணம் போகிறாள்’, ‘சித்திரா பெளர்ணமி’, ‘முற்றத்து ஒற்றைப்பனை’, ‘வாடைக்காற்று’, ‘பிரளயம், கிடுகுவேலி’, ‘கொத்தியின் காதல்‘, ‘இரவின் முடிவு’, ‘காட்டாறு,

Page 32
58 ※
‘அலைகடல்தான் ஒயாதோ’, ‘மரணங்கள் மலிந்த பூமி’ முதலான முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட நாவல்களை இவர் எழுதினார். இவருடைய படைப்புக்கள் ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சியில் பிறிதொரு பரிமாணத்தைக் காட்டுவனவாகும்.
ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றின் ஆரம்ப கால ஓட்டம் மெல்ல நகர்ந்து சென்றாலும், சுதந்திரத்துக்குப் பின்னர், இலக்கிய இயக்கங்களின் தோற்றத்துடனும், சமூக விழிப்புணர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்தும் அவ் ஓட்டத்தில் வீச்சான ஒரு போக்கை இனங்கான முடிகிறது. ஈழத்து யதார்த்தப் பண்பு நாவல்களின் தோற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் ஏதுவான களத்தினை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம்.
1950-1980க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய நாவல்களை, அவற்றின் கருவினை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, அவை சாதிப்பிரச்சினை, அரசியல், பொருளாதாரப் பிரச்சினை, மலையகத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினை, பாலியல் மற்றும் ஆண், பெண் உறவுநிலை, சீதனம் (வரதட்சனை), குடும்பச் சிக்கல்கள் என்ற அடிப்படையில் கணிசமான எண்ணிக்கையிலான நாவல்களும், நகைச்சுவை, மொழிபெயர்ப்பு, மர்மம் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள் குறைந்த அளவான எண்ணிக்கையிலும் எழுதப்பட்டன. மேற்படி நாவல்களில் ‘நாவல்’ என்ற இலக்கணத்துள் எதிர்பார்க்கப்பட்ட யதார்த்தம்’ என்ற உண்மைத் தன்மையைப் பெரிதும் காணமுடிகிறது.
இவ்வாறான ஒரு போக்கு ஈழத்தின் நாவல் வரலாற்றில் 1970கள் அல்லது 1980கள் வரை தொடர்ந்ததாகக் குறிப்பிடலாம். 1980களின் பின்னர் இவ்வகையான “போக்கு மாற்றமடைகிறது. இக்காலப்பகுதியில் போராட்டம், இனவிடுதலை, சுதந்திரம் முதலானவற்றைச் சார்ந்த கருப்பொருட்கள் ஈழத்துத் தமிழ் நாவல்களில் முனைப்புடன் பேசப்படலாயின.
இலங்கை அரசால், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரசபயங்கரவாதமும், அதற்கு எதிரான புரட்சிகளும் 1983க்குப்பின்

«Х• 59
உக்கிரமடைந்தன. இந்நிலையில் ஈழத்துத் தமிழ் நாவல்களும் இவற்றைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம் வந்து விடுகிறது எனலாம். இத்தன்மை காரணமாகத் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட இன்னல்கள், சிக்கல்கள், இடப்பெயர்வுகள் முதலான யதார்த்தங்களை இக்காலப்பகுதி நாவல்கள் சித்திரித்துக் காட்டின. இப்போக்கு விரிவடைந்து செல்வதாயிற்று. இன்று வரை இத்தன்மை நிலவுவதே ஈழத்து தமிழ் நாவல்களின் இன்றைய போக்காக உள்ளது எனலாம். சமுதாயத்தின் இதர சிக்கல்களைக் குறிப்பிட்டு எழுதும் போக்கும் இதனூடே உள்ளதெனினும் இனவுணர்வூடான அல்லது விடுதலையூடான பின்னணியில் வைத்துச் சமூகச் சிக்கல்களைக் காட்டும் பண்பே இத்தகு நாவல்களின் போக்காக உள்ளது.
இவ்வாறாக ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் தனித்துவமும், தனக்குள்ளே ஒருவிதமான ஒருமைப்பாடும் கொண்ட இலக்கிய வகையாக இன்றுவரை காணப்பட்டு வருகிறது.
ஈழமும் நாட்டார் வழக்காற்றியலும்
ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய சிந்தனைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் மேற்கிளம்புவதனை அவதானிக்க முடிகிறது. இந்திய நாட்டார் வழக்காற்றுக் காலகட்டத்தை மிஷனரிகளின் காலகட்டம், தேசியக் காலகட்டம், கல்விப்புலக் கால கட்டம் என மூன்று பகுதிகளாக ஜவகர்லால் ஹண்டு என்பவர் பிரிப்பார்." இவ்வகைப்பாடு ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காற்றியலுக்கும் பொருந்தி வரக்கூடிய ஒன்றாகவே உள்ளது.
ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் தொடர்பான முயற்சிகளைப் பின்வருமாறு இரண்டு வகையாகப் பிரித்து நோக்கலாம்.
(1) உணர்வுபூர்வமற்ற தனிநபர் நிலைப்பட்ட தொகுப்புக்கள், ஆய்வுகள்.
(2) உணர்வுபூர்வமான நிறுவன நிலைப்பட்ட தொகுப்புகள், ஆய்வுகள்.

Page 33
60 «Х•
உணர்வு பூர்வமற்ற தனிநபர் நிலைப்பட்ட தொகுப்புக்கள், ஆய்வுகள்
மேற்குறித்தவாறான தொகுப்பு மற்றும் ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டோர் தமது சொந்த விருப்பார்வத்தின் காரணமாகவோ அல்லது ஒய்வுநேர முயற்சியாகவோ நாட்டார் வழக்காற்றியல் பற்றிச்சிந்தித்தனர் எனலாம். இவர்கள் இத்தகு முயற்சிகளில் உணர்வு இன்றித் தொழிற் பட்டவர்களாகக் காணப்பட்டனர். இவ்வகையான தொகுப்பு மற்றும் ஆய்வு முயற்சிகளே ஈழத்தின் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய தொடக்கநிலை ஆய்வுகளாக இனங் காணப்பட்டன. ஏறத்தாழ 1960கள் வரை இவ்வறான முயற்சிகளே தொடர்ந்தன எனக் கூறலாம்.
ஈழத்துக்கு வருகை தந்த ஆங்கிலேய மிஷனரிமாரும், ஆங்கிலேய அரசுகளினால் நியமிக்கப்பட்ட துரைத்தன உத்தியோகத்தர்களும், இவ்விருவகைப்பட்ட பிரிவினர்களது முயற்சிகளினால் கவரப்பட்ட (ஈர்க்கப்பட்ட) சுதேசிகளும் இவ்வகையான தொகுப்பு மற்றும் ஆய்வு முயற்சிகளில் ஆர்வம் காட்டினர். இவர்களால் அவ்வப்போது எழுதிவைக்கப்பட்ட குறிப்புக்களே ஈழத்தமிழர் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய ஆய்வுகளின் மூலங்கள் எனக் கருதப்பட்டன. பீற்றர்பேர்சிவல்,
லாஸ்ரஸ், ஜென்சன், லெவிஸ், டபிள்யூ. எச்.கிளார்க், ஜோன் பென்றி, எச். ஹோஸ்கி, எச். நெவில், சைமன்காசிச் செட்டி, கனகசபைப்பிள்ளை, வ.குமாரசாமிப்பிள்ளை,
சுவாமிஞானப்பிரகாசர், மு.இராமலிங்கம், எம்.டி.இராகவன், குல. சபாநாதன் முதலியோர் இவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாவர்.
பிறநாட்டவரான மிஷனரிமாருக்கும், துரைத்தனத்தாருக்கும் கீழைத் தேசத்தவர்களது வாழ்வியல் நடைமுறைகளைத் தெரிந்து கொள்வதில் இருந்த சமய அல்லது நிர்வாகத் தேவைகளே இவர்களை இவ்வாறான முயற்சிகளில் இட்டுச் சென்றன எனக் கருதலாம். இவர்தம் ஆய்வுப் புலங்களில் பழமொழி, சாதியமைப்பு, நாட்டார் விளையாட்டு, சடங்கு, பாடல், உணவுப் பழக்கவழக்கங்கள் முதலானவை பிரதான இடம் பிடித்தன. தனிமனித நிலைப்பட்ட இவ்வாறான ஆய்வுகள் (One man Institution) பெரும்பாலும் விவரண நிலைப்பட்டனவாகவே காணப்பட்டன. ‘நாட்டார் வழக்காற்றியல்’ தொடர்பான

(X 61
முறையியலில் இவர்களுக்குப் பயிற்சிகள் இருந்ததாகச் சொல்ல முடியாது. தொகுத்தல், ஆவணப் படுத்துதல், விவரித்தல் என்பன இவர்களுடைய முயற்சிகளுக்கான அடிப்படைகளாகத் தொழிற்பட்டன.
உணர்வுபூர்வமான நிறுவன நிலைப்பட்ட தொகுப்புக்கள், ஆய்வுகள்
உணர்வுபூர்வமான தொகுப்பு மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளின் சாயல்கள் ஈழத்தைப் பொறுத்தவரை 1960களின் முன்பின்னாகவே முளை விடத் தொடங்குகின்றன. தமிழ்நாட்டிலும் இதே காலப்பகுதியில்தான் ‘நாட்டார் வழக்காற்றியல் கல்விப்புல எல்லைக்குள் வருவதை அவதானிக்க முடிகிறது.* இவ்வகையான தொகுப்பு மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள், நாட்டார் வழக்காற்றியல் பற்றிய முறையியல் நுட்பங்களை அறிந்தவர்களாகவும், கல்வி, உயர்கல்வி நிறுவனங்களுடன் தம்மை இணைத்துக் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர்.
க. கணபதிப்பிள்ளை, சு. வித்தியானந்தன், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, கா.இந்திரபாலா, அ.சண்முகதாஸ், இ.பாலசுந்தரம், சி. மெளனகுரு, க.அருணாசலம், எம்.ஏ.நுஃமான், செ.சுந்தரம்பிள்ளை முதலானோர் இவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாவர்.
க. கணபதிப்பிள்ளை இத்துறை குறித்த ஆய்வுகளை முறைப் படுத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டினார். க.கைலாசபதியின் முயற்சிகளினால் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகளில் ‘நாட்டார் வழக்காற்றியல்’ ஒருபாடமாக உள்வாங்கப்படுவதற்கான அவசியம் உணர்த்தப் பட்டுச் செயற்படுத்தப்பட்டது. இத்தன்மை காரணமாகக் காத்திரமான ஆய்வுகள் பலவும் நிறுவன நிலையில் மேற்கொள்ளப் படலாயின. பாட சாலைகள், பல்கலைக்கழகங்கள் வாயிலாக இம்முயற்சிகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.
1980ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடாத்திய இலங்கைத் தமிழர் நாட்டார் வழக்காற்றியல் கருத்தரங்கு

Page 34
62 X
இவ்விடத்தில் விதந்து குறிப்பிடத் தக்கதாகும். அ. சண்முகதாஸ் குறிப்பிடுவது போல. இக்கருத்தரங்கிலேதான் ஈழத்துத் தமிழர் நாட்டார் வழக்கியற் பரப்பினை ஓரளவு இனங்காணும் முயற்சியும், இத்துறையின் பல்வேறுபட்ட கூறுகளிலே சிறிதளவாவது ஆய்வு செய்கின்ற முயற்சிகளும் முனைப்புப் பெற்றன.*
1960களின் பின்பதான, ஈழத்தமிழர் நாட்டார் வழக்காற்றியல் தொடர்பான தொகுப்பு மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளை அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட புலங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குவது பொருத்தமானதாகும். அவை வருமாறு,
(அ) நாட்டுப்புறப் பாடல், இசை
(ஆ) நாட்டார் அரங்கு
(இ) நாட்டார் பண்பாடு
(ஈ) பழமொழி, விடுகதை
(உ) இடப்பெயர்.
நாட்டுப்புறப் பாடல், இசை
ஈழத்தமிழர் நாட்டார் வழக்காற்றியல் கூறுகளில் நாட்டுப்புறப் பாடலே இத்துறை குறித்த தொகுப்பாளர் மற்றும் ஆய்வாளர் பலரது புலமைச் சிரத்தைக்குரியதாக இருந்து வந்துள்ளது. நாட்டுப்புறப் பாடல் தொடர்பான தொகுப்பு மற்றும் ஆய்வு முயற்சிகள் ஏறத்தாழ 1950களின் முன்பின்னாக மேற்கொள்ளப்பட்டன. இவை தனிநபர், மற்றும் நிறுவன முயற்சிகளாக அமைந்து இருந்தன.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு மொழி, பண்பாடு, வரலாறு ஆகிய துறைகளில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. 1953 ஆம் ஆண்டு அரச உதவியுடன் இலங்கைக் கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இக்கழகம் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்து வெளியிடும் பணியை மேற்கொண்டது. சமகாலத்தில் பிரதேச நிலையிலான கலாமன்றங்கள் பலவும் நிறுவப்பட்ட மாவட்ட அளவில் நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிக்கும் முயற்சிகள் முனைப்பு அடையலாயின.

& 63
நாட்டுப்புறப் பாடல் தொடர்பாகப் பல்வேறு தொகுப்புக்களும், கட்டுரைகளும் இக்காலத்தில் வெளிவந்தன. பெரும்பாலும் கட்டுரைகளே மிகுதியாக வெளிவந்தன. இவை 'தினகரன்’, ‘ஈழகேசரி’, ‘ஈழநாடு’, ‘விரகேசரி’, ‘சுதந்திரன்’, ‘சிந்தாமணி’ முதலான பத்திரிகைகளிலும் இளம்பிறை, பூரீலங்கா, அஞ்சலி, பூம்பொழிதல், நுட்பம், கமத்தொழில் விளக்கம், ஆராய்ச்சி, வெற்றிமணி, கலைமகள் முதலான கலை, இலக்கியச் சஞ்சிகைகளிலும், உலகத் தமிழாராய்ச்சி மற்றும் மட்டக்களப்பு, வன்னி, யாழ்ப்பாணம் முதலான பிரதேச நிலையிலான தமிழாராய்ச்சி மாநாட்டு மலர்களிலும் வெளிவந்தன.
இவ்வாறான ஆராய்ச்சி மற்றும் தொகுப்பு முயற்சிகளில்
ஈடுபட்டவர்களுள் தி. சதாசிவஐயர், மு.இராமலிங்கம், குல.சபாநாதன், எவ். எக்ஸ்.சி.நடராசா, நவசோதி கணபதிப்பிள்ளை, மற்றாஸ்மெயில், த.சண்முகசுந்தரம்,
வீ.சி.கந்தையா, அருள். செல்வநாயகம், சி.வி.வேலுப் பிள்ளை, சாரல் நாடன், கோமஸ், மாத்தனை சோமு, எஸ்.முத்துமீரான், ஆ.மு.ஷரிப்புத்தீன் மற்றும் சு.வித்தியானந்தன், அ.சண்முகதாஸ். சு.சசீந்திரராஜா, இ.பாலசுந்தரம் முதலானோர் கருதத் தக்கவர்கள்.*
சு.வித்தியானந்தன் நாட்டுப்புறப் பாடல்களைப் பிரதேச வாரியாகத் தொகுத்துப் பதிப்பிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டினார். இரண்டு பாடல் தொகுப்புக்களையும், பல கட்டுரைகளையும் இவர் எழுதினார். *
இ.பாலசுந்தரம் என்பவரது முனைவர்பட்ட ஆய்வான மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள் ஆய்வும் மதிப்பீடும்’ என்ற முயற்சி ஈழத்து நாட்டுப்புறப் பாடல்கள் தொடர்பான ஆய்வில் குறிப்பிடத்தக்க பரிமாணத்தைக் காட்டுவதாக அமைந்தது. ம.இரகுநாதன் என்பவர் சிலம்பு கூறலைப் பதிப்பித்தார்.
க. கைலாசபதி, அ. சண்முகதாஸ், எம்.ஏ.நுஃமான், சு. சுசீந்திரராஜா போன்றோர் நாட்டுப்புறப் பாடல்களை மொழியியல், சமூகவியற் பின்னணியில் ஆராய்ந்து கட்டுரைகளை எழுதினர். 1976 ஆம் ஆண்டு இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் கல்விப் பொதுத் தராதரத் தமிழ் மொழிப்பாடத்

Page 35
64 必
திட்டத்துக்கு அமைவாக வெளியிடப்பட்ட ‘நாட்டார் பாடல்கள்’ என்ற தொகுப்பு இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒன்றாகும்.
வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் என்பவர், ‘இலங்கை நாட்டுப்பாடல்கள்’ (1957), ‘கிராமக் கவிக்குயில்களின் ஒப்பாரி' (1960), வடஇலங்கையர் போற்றும் நாட்டார் பாடல்கள், (1961), நாட்டார் பாடல்களில் பாண்டித்யம்’ (1971) முதான தொகுப்புக்களை வெளியிட்டார்.
செ.மற்றாஸ்மெயில் என்பவர்'வன்னிவளநாட்டார் பாடல்கள்’ (1980) என்ற தலைப்பில் ஈழத்தின் வன்னிப்பிரதேசப் பகுதிகளில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார்.
நாட்டார் இசை குறித்து எழுந்த காத்திரமான ஆய்வாக இ. பாலசுந்தரம் என்பவரின் ‘நாட்டார் இசை இயல்பும் பயன்பாடும்’ (1991) என்ற நூல் அமைந்தது. இசை குறித்துக் குறிப்பிட்டுச் சொல்லும் படியான வேறெந்த ஆய்வுகளும் இதுவரை வெளிவரவில்லை எனலாம்.
நாட்டார் அரங்கு
ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் பரப்பில் நாட்டுப்புறப் பாடலை அடுத்த புலமை நிலை முக்கியத்துவம் நாட்டார் அரங்கு பற்றியதாகவே காணப்படுகிறது. நாட்டார் அரங்கைப் பற்றிய ஆய்வு முயற்சிகள் இரண்டு நிலைகளில் நடைபெற்றன.
(அ) இலக்கிய நிலை நின்ற ஆய்வுகள்
(ஆ) அரங்க நிலை நின்ற ஆய்வுகள்
இலக்கிய நிலை நின்ற ஆய்வுகள்
ஈழத்தமிழர் நாட்டார் அரங்கைப்பற்றிய ஆரம்பநிலை ஆய்வுகள், விமர்சனங்கள் என்பன பெரும்பாலும் இலக்கிய
நிலைநின்ற ஆய்வுகளாகவே காணப்பட்டன. இவ்வகையான ஆய்வுகளில் பலரும் ஈடுபட்டனர். பெரும்பாலானோர் தத்தமது

«Х» 65
பிரதேசங்களில் ஆடப்பட்டு வந்த கூத்து மரபுகள் பற்றி அவ்வப்போது பத்திரிகைகளிலும் பருவ இதழ்களிலும், வானொலிக்கும் எழுதி வந்தனர்.
6) Il- இலங்கைக் கூத்து பற்றி, வ.குமாரசாமி, எம்.எஸ்.திருவிளங்கம், மு.இராமலிங்கம் முதலானோரும், மன்னர்ப் பிரதேசக் கூத்துக்கள் பற்றி பென்ஜமின் செல்வம், மக்ஸிமஸ்லம்பேட் முதலானோரும், வன்னிப் பிரதேசத்துக் கூத்து மரபுபற்றி முல்லை மணி சுப்பிரமணியம், மற்றாஸ் மெயின் போன்றோரும், மட்டக்களப்புக் கூத்துக்கள் பற்றி எவ்.எக்ஸ். சி.நடராசா, வீ.சி.கந்தையா முதலானோரும் மலையகத்துக் கூத்துப் பற்றி சி.வி.வேலுப்பிள்ளை, செ.சுந்தரம் பிள்ளை முதலானோரும் அவ்வப்போது எழுதிவந்தனர்.
கத்தோலிக்கக் கூத்துமரபு பற்றி சுவாமிஞானப்பிரகாசர், பாவிலுப்பிள்ளை அடிகளார், தியோகுப்பிள்ளை அடிகளார் முதலானோர் எழுதி வந்தனர். சு.வித்தியானந்தன், இ.பாலசுந்தரம் போன்றோர் அனைத்துப் பிரதேசத்துக் கூத்துமரபுகள் பற்றியும் எழுதி வநதனா.
கலையரசு சு. சொர்ணலிங்கத்தின் ‘ஈழத்தில் நாடகமும் நானும் என்ற நூலும், க.சொக்கலிங்கத்தின், ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி’ என்ற நூலும் இவ்வகை முயற்சிகளின் குறிப்பிடத்தக்க விளைவுகளாகும்.
அரங்க நிலை நின்ற ஆய்வுகள்
நாட்டார் அரங்கு குறித்து அரங்கியல் நிலை நின்று சிந்தித்தவர்களுள் சு.வித்தியானந்தன், கா.சிவத்தம்பி, சி. மெளனகுரு, இ.பாலசுந்தரம், செ.சுந்தரம்பிள்ளை முதலானோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
சு.வித்தியானந்தன், ஈழத்தமிழர் நாட்டார் அரங்கு குறித்த ஆய்வுகளின் முன்னோடியாக உள்ளார். சமகாலத்தில் சிங்கள மக்களுடைய நாட்டார் அரங்கு குறித்து ஆராய்ந்தவர்களான சரத்சந்திரா, தம்ஜாகொட முதலானோர்களது முயற்சிகளும்,

Page 36
66 必
க. கணபதிப்பிள்ளையினுடைய ஊக்கமும் இவரை இத்துறையில் ஈடுபடுத்தின. நாட்டார் அரங்கு குறித்துப் பல்வேறு கட்டுரைகளை எழுதியமை", கலைக்கழகத் தலைவராக இருந்து அண்ணாவிமார் மகாநாடுகளையும், கூத்துப் போட்டிகளையும் நடாத்தியமை, பல்கலைக்கழக மாணவரைக் கொண்டு தாமே கூத்துக்களைத் தயாரித்து மேடையேற்றியமை, கூத்து நூல்களைப் பதிப்பித்தமை முதலான செயற்பாடுகள் இங்கு விதந்து குறிப்பிடுதற்குரியனவாகும்.
1960களில், அரங்கநிலை நின்ற ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சி. மெளனகுரு என்பவர் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றதோடு நாட்டார் அரங்கு குறித்துக் கணிசமான கட்டுரைகளையும், சில நூல்களையும் எழுதி வெளியிட்டார்.” செ.சுந்தரம்பிள்ளை என்பவர், வடஇலங்கை நாட்டார் அரங்கு குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். அத்துடன் இத்துறை குறித்துப் பல கட்டுரைகளையும், 'ஈழத்து இசை நாடகவரலாறு’ (1990), வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும்’ (1996) முதலான சில நூல்களையும் எழுதினார். மேலே குறித்த ஆய்வுகள், ஈழத்தமிழர் நாட்டார் வழக்காற்று வடிவங்களை மீட்டுருவாக்கம் செய்ததோடு, இத்துறை குறித்த ஆய்வுகளைப் புதிய கோணத்தில் இட்டுச் செல்வனவாகவும் அமைந்தன.
சமகாலத்தில் சி. மெளனகுரு, தாசீசியஸ், குழந்தை ம.சண்முகலிங்கம் முதலானோர் ஈழத்தமிழர் பாரம்பரியக் கலை வடிவமான நாட்டார் கூத்தில் சில பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாகச் சமகாலத்தில் உக்கிரமடைந்திருந்த சமூகப் பிரச்சினைகளை நாட்டார் கூத்து வடிவங்களுக்குள் உட்படுத்தி ஆற்றுகை செய்து, வெற்றியும் கண்டனர். ‘சங்காரம்’, ‘ஏர்முனை வேலன்’, ‘கந்தன் கருணை’, களத்தில் காத்தான்’, ‘போடியார் மாப்பிள்ளை’, ‘கோபுரவாசல், ‘இராமாயணம் முதலானவை இம்முயற்சிகளின் வகைமாதிரியான எடுத்துக் காட்டுக்களாகும்.
இ.பாலசுந்தரம் என்பவர் நாட்டார் அரங்கு குறித்துக் கட்டுரைகள் எழுதியதுடன், காத்தவராயன் கூத்தின் பல்வேறு ஏட்டுப்பிரதிகளையும் ஆராய்ந்து காத்தவராயன் நாடகத்தினை

x 67
நூலாக வெளிக்கொணர்ந்தார். மேலும் ‘கோவலன்கூத்து’, ‘காத்தான் கூத்து’, ‘சத்தியவான் சாவித்திரி’ முதலான மரபுவழி நாடகங்களைப் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு தயாரித்து மேடையேற்றினார். கா.சிவத்தம்பி ‘மார்க்கண்டன் வாளபிமன்’ என்ற நாடகத்தினைப் பதிப்பித்ததோடு, நாட்டார் அரங்கு குறித்துப் பல்வேறு கட்டுரைகளையும் முன்னுரைகளையும் எழுதினார்.
நாட்டார் பண்பாடு
ஈழத்தமிழர் நாட்டார் பண்பாடு குறித்து மேலே சுட்டிய கூறுகளை விடுத்து முறையான முழுநிலையான தொகுப்புக்கள், ஆய்வுகள் எவையும் வெளிவரவில்லை என்றே கூறலாம். நாட்டார் பண்பாட்டின் சிற்சில கூறுகள் மீது பலரும் கட்டுரைகளை எழுதினர். இவை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்தன.* மேல்நாட்டவரும், சுதேசிகளும் இக்கட்டுரைகளை எழுதி வந்தனர். சாதிப்பிரிவுகள் சமுதாயப் பழக்கவழக்கங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் முதலானவை இக்கட்டுரைகளின் ஆய்வுப் பொருண்மைகளாக அமைந்தன.
நாட்டார் பண்பாட்டுக் கூறுகளைப் பெருமளவுக்குப் பதிவு செய்துள்ள தனி நூல்கள் என்ற வகையில் க.கணபதிப்பிள்ளையின் ‘ஈழத்து வாழ்வும் வளமும்’ (1942), ‘காதலியாற்றுப்படை' (1950) என்ற நூல்களும், எவ். எக்ஸ். சி. நடராசாவின் மட்டக்களப்பு மான்மியம்’ (1962), வீ.சி.கந்தையாவின் மட்டக்களப்புத் தமிழகம்’ (1964), ச.மனோன்மணி என்பவர் எழுதிய ‘சாதியும் துடக்கும்’ (1991), எஸ்.பொன்னுத்துரையின் ‘நனவிடைதோய்தல்’ (1992) முதலான நூல்களும், கே. டானியலின் நாவல்களும் சிறப்பான கவனத்திற்குரிய நூல்களாகும்.
பழமொழி, விடுதலை
நாட்டுப்புற வழக்கிலே, பெரும்பாலும் வழங்கிவரும் பழமொழிகள், விடுகதைகள் பற்றிய தொகுப்பு மற்றும் ஆய்வுகள் ஒப்பீட்டு நிலையில் குறைவாகவே உள்ளன. 1888 ஆம் ஆண்டு சத்தியநடேசன் என்பவர், 'பழமொழிகளினதும், தொடர்களினதும் கையேடு” என்ற நூலை வெளியிட்டார். 1894 ஆம் ஆண்டு ஜோன்

Page 37
68 哆
லாஸரஸ் என்பவர் தமிழ்ப்பழமொழி அகராதி ஒன்றை வெளியிட்டார்.* தொடர்ந்து 1897இல் சி.வை.தாமோதரம் பிள்ளையின் முன்னுரையுடன், செர்மன் ஜென்சன் என்பவர் தமிழ்ப்பழமொழி அகராதி ஒன்றினை வெளியிட்டார்.
தொகுப்பு முயற்சிகளைத் தொடர்ந்து பழமொழிகளை விளக்குவதும், ஆய்வு செய்வதுமான செயற்பாடுகள் ஆரம்பமாகின. மு.இராமலிங்கம், எவ்.எக்ஸ்.சி. நடராசா, என். செல்வராஜா, இ.பாலசுந்தரம், ஆ.சிவநேசச் செல்வன் முதலானோர் இவர்களிற் சிலராவர்." சச்சி மாஸ்டர், கோப்பாய் சிவம் போன்றோர் அண்மையில் பழமொழித் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளனர்."
மு.இராமலிங்கம் என்பவர் களவுக்காதலர் கையாண்ட விடுகதைகள்’ (1962), ‘பொது அறிவு விடுகதைகள்’ (1970) என்ற இரு தொகுப்புக்களை விடுகதைகள் தொடர்பாக வெளியிட்டுள்ளார்.
இடப்பெயராய்வு
விஞ்ஞான அடிப்படையில் இடப்பெயர்களை ஆராயும் முறை இன்று உலகளாவிய நிலையில் வளர்ச்சியடைந்து வருகிறது. ஈழத்தில் இத்துறை குறித்த முன்னோடிகளாக சைமன் காசிச்செட்டி, சுவாமிஞானப்பிரகாசர், எஸ்.டபிள்யூ. குமாரசுவாமி, எஸ்.சபாரத்ன முதலியார் ஆகியோர் உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளின் பின்னர் ஆங்கிலேய அரசு அதிகாரிகளும், நீதிபதிகளும், சுதேசிகளும் இதுபற்றிச் சிந்தித்தனர். ஆயினும் இம்முயற்சிகளில் ஊர்ப்பெயர்களைச் சேகரித்தல், அடையாளம் காணுதல், விளக்குதல், வெளியிடுதல் முதலான இடப்பெயராய்வின் நெறிமுறைகளைக் காண முடியவில்லை. அண்மையில் இ.பாலசுந்தரம் என்பவர் வடமராட்சி, தென்மராட்சி, காங்கேசன் கல்வி வட்டாரத்து இடப் பெயர்களை முறையாக ஆராய்ந்து வெளியிட்டார். இந்நூல்கள் இடப்பெயர் ஆய்வின் முறையியலை உள்வாங்கியனவாக அமைந்தன. கு. பகவதி என்பவர். தமிழக-இலங்கை ஊர்ப்பெயர்களை ஒப்பிட்டு ஆராய்ந்து உலகத் தமிழாராய்ச்சி மன்ற வெளியீடாக அதனை வெளிக்கொணர்ந்தார். இவையே ஈழத்துத் தமிழ் இடப் பெயராய்வு குறித்த முயற்சிகளாகும்.

ox
6
9
ஈழத்துத் தமிழ் நாவல்களும், நாட்டார் வழக்காற்றியலும்
ஈழத்துத் தமிழ் நாவல்களில் நாட்டார் வழக்காற்றியல் கூறுகளின் பயில்நிலை பற்றிய அவதானிப்பை ஈழத்துத் தமிழ் நாவல் வரலாற்றின் ஆரம்ப காலத்திலிருந்தே தொடர்ச்சியாகப் பெறமுடியாதுள்ளது. தமிழ் நாட்டின் நாவல் வரலாற்றிலும் இத்தகைய தன்மையே காணப்படுகிறது. தனிமனிதனை அவனுடைய சூழலுடன் பொருத்திப் பார்க்கின்ற போக்கும் நாவல் வரலாற்றில் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட ஒன்றல்ல. ஆரம்பகால நாவல்களைத் தற்கால நாவல்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது அவற்றின் நோக்கமும், போக்கும் வேறு வேறாகவே இருந்திருக்கின்றமை தெரியவரும். அவை பெரும்பாலும் கற்பனைக் கதைகளாக, மொழி பெயர்ப்புக் கதைகளாகத் துப் பறிதலுடன் தொடர்பானவையாக இருந்திருக்கின்றன.
இவ்வாறான தன்மை கொண்ட ஆரம்ப கால நாவல்களிலே மனித வாழ்வின் அடிப்படைகளை அலசிப் பார்க்கவோ, நாட்டார் மரபுகளுடன் அவற்றை இணைத்துக் கூறவோ வாய்ப்பு இருந்திருக்கச் சாத்தியமில்லை. நாவல் பொது மக்கள் இலக்கியமாக மாறத்தொடங்கிய பின்னர்தான், மக்களின் வாழ்வியல் ஒழுகலாறுகளூடே நாட்டார் மரபுகளையும் இணைத்துக் கூற முடிந்தது எனலாம். தனிமனிதனை அவனுடைய சூழலுடன் பொருத்தி நோக்கியதன் காரணமாக நாவல்களிலே அவ்வச் சூழலுடைய இயல்பான தன்மைகளையும், தனித்துவங்களையும் பதிவு செய்யமுடிந்தது.
பொதுவாக இத்தகைய தன்மை கொண்ட எவ்வகை இலக்கியங்களையும், ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பிலே ‘பிரதேச இலக்கியங்கள்’ என வழங்கும் மரபு உண்டு. இப்பிரதேச உணர்வு சார் இலக்கியங்களுக்கும், நாட்டார் வழக்காற்றியலுக்கும் நெருங்கிய ஒரு உறவு உண்டு. ‘பிரதேச உணர்வு சார் இலக்கியங்கள்’ என்ற பொதுமைக்குள் பிரதேச உணர்வுசார் நாவல்களும் அடக்கம் பெறுகின்றன. இப்பிரதேச உணர்வு சார் நாவல்களினுடைய பொதுவான சில விடயங்களை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானதாகும்.

Page 38
70 «Х•
ஈழத்துத் தமிழ்ப் பிரதேசப் பண்புசார் நாவல்கள்
பிரதேசப் பண்பு என்பது நிலவியலுடன் தொடர்புபட்டது. குறிப்பிட்ட பகுதிவாழ் மக்களை அவர்கள் வாழும் மண்ணைக் களமாகவும் அவர்களது வாழ்வியல் நடைமுறைகளைக் கருவாகவும் பின்னப்படும் நாவல்களைப் பிரதேசப் பண்பு நாவல்கள்’ எனலாம். இவ்வகையான நாவல்களிலே, சில பிரத்தியேகமான தன்மைகள், தனித்துவமான நடைமுறைகள், அவரவர்க்கென அமைந்துபோன சில நிர்ப்பந்தங்கள் முதலானவை செவ்வனே தெரியும். சமுதாய உண்மை நயம் நேர்க்காட்சியாக நாவலாசிரியரால் காணப்பட்டு, உள்ளவை உள்ளவாறே எழுதப்படும். நாவலின் களத்தையும், தனித் தன்மைகளையும் கண்டு உள்ளவாறே படம் பிடித்து விடுவதுடன் கதை நிகழும் மண்ணில் மணத்தையும், மக்கள் வடித்த சொல்லையும் குழைத்துத் தருவது இதன் புதிய போக்கு எனலாம்."
தமிழ்நாட்டிலே மேற்குறித்த தன்மையில் அமையும் நாவல்களை வட்டாரநாவல்கள் எனக் குறிப்பிடும் மரபுண்டு, இங்கு இப்போக்கைத் தோற்றுவித்த முன்னோடிகளாக கே.எஸ் வேங்கடரமணி, ஆர்.சண்முகசுந்தரம், சங்கரராம் முதலியோர் குறிப்பிடப்படுகின்றனர். வட்டார நாவல்களில் சிறந்தவையாக ஆர். சண்முகசுந்தரத்தின் *அறுவடை, ‘சட்டிசுட்டது, சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், ராஜம்கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்’, ஹெப்சிபா ஜேசுதாசின் ‘புத்தம் வீடு’, சுந்தரராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’, பூவை.எஸ்.ஆறுமுகத்தின் ‘தங்கச் சம்பா, நீலபத்மநாபனின் தலைமுறைகள், கி.ராஜநாராயணனின் ‘கரிசல் முதலானவை குறிப்பிடப்படுகின்றன. மனிதனது வாழ்வு அவன் வாழ்கின்ற மண்ணிலேயே வேர் கொண்டுள்ளதால் இது சார்ந்த நாவல்களை மண்வாசனை நாவல்களெனவும்
குறிப்பிடலாம்.
ஈழத்தின் ஆரம்பகாலத் தமிழ் நாவலாகிய ‘அஸன்பே சரித்திரத்திலே பிரதேசப் பண்பு காணப்படவில்லை. இது எகிப்து, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளைக் கதை நிகழ்களமாகக் கொண்டிருந்தது. ‘மோகனாங்கியும், தமிழ் நாட்டின் தஞ்சை நாயக்கர் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டமைந்ததாகும். மேற்படி நாவல்களிலே பிரதேசப் பண்புசார் நாவல்களின் பண்புகளை இனங் காணமுடியவில்லை.

eX 71
0.
அ. செ.முருகானந்தன், வ. அ.இராசரத்தினம், கனக.செந்திநாதன் ஆகியோரது படைப்புக்களில் பிரதேசப் பண்புசார் தன்மைகள் தென்படத் தொடங்கின.*1950களின் பின்னர் பிரதேசப் பண்புசார் நாவல்களைப் பலரும் ஆர்வத்துடன் எழுதினர். 1956களில் இம்மரபு மேலும் வேகம் பெற்றது."எழுத்தாளர் மத்தியில் கொள்கை ரீதியான விழிப்புணர்வு ஏற்படுவதற்கான சூழல் ஏற்பட்டது. இதன்படி ‘தேசியம்’ என்பது வலியுறுத்தப்பட்டது. சாதாரண மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளும், அன்றாட அனுபவங்களும் நாவல்களில் தயக்கமின்றி இடம்பெறுவது ஒரு பொதுப்பண்பாகியது. ஈழத்தின் மண்வாசனையைப் பிரதிபலித்த பிரதேசப்பண்பு மிக்க நாவல்கள் பலவும் தோன்றின. இவை நாட்டுப்புற மக்களின் வழக்காறுகளைக் கணிசமான அளவிற் பதிவு செய்தன.
இவ்வாறான பின்னணியில் பார்க்கும்போது ஈழத்துப் பிரதேசப் பண்புசார் நாவல்களிலும் இருவிதமான போக்குகள் தென்படுவதனை அவதானிக்க முடிகிறது.
(அ) சில நாவல்கள் கதை நிகழும் பிரதேசத்தைச் சார்ந்து. அவ்வப்பிரதேசங்களது பின்னணிகளைக் கையாண்டு கதையை நகர்த்திச் செல்லும் வர்ணனைகளுடே பிரதேசங்களைச் சித்திரித்தன. பிரதேசத்தைப் பற்றிய சித்திரிப்பு மட்டும் பிரதேச நாவலாகாது. பிரதேசம் சார் அடி நிலைகளையோ அல்லது அவ்வப்பிரதேசத்துக்கான வாழ்வியல் அடிப்படைகளையோ, அவற்றுடன் ஒட்டிய நாட்டார் வழக்காறுகளையோ அதிகம் காண முடியாத தன்மைகளே இந்நாவல்களில் உள்ளன.
ஆரம்பத்தில் பிரதேசப்பண்பு சார்ந்த நாவல்களை எழுதியவரான இளங்கீரன், தமது நாவல்களில் கதை நிகழ்களமாகக் கண்டி, யாழ்ப்பாணம் முதலான இடங்களைச் சித்திரித்துள்ள பாங்கினை இவ்வகைப் போக்கின் வகைமாதிரியான உதாரணமாகக் கொள்ளலாம்.
(ஆ) குறிப்பிட்டபிரதேசத்துக்கேயுரிய விடயங்களையும், அம்மக்கள் கூட்டத்தின் வாழ்க்கை இயங்கும் தளங்களையும்

Page 39
நாவலாசிரியர் தமது ஆழ்ந்தகன்ற நுண்ணிய நோக்கினால் தரிசித்து, அவற்றை மிகத் துல்லியமாகத் தமது நாவல்களிலே காட்டும் போக்கு இதன் இன்னொரு வகையாகும். இப்போக்குடைய நாவல்கள் அவ்வப்பிரதேசத்தின் பண்பாட்டு அம்சங்களை, சூழலைச் சிந்தாமற் சிதறாமல் அப்படியே எழுத்தில் வடிப்பனவாகும். இவ்வகைப் போக்குடைய நாவல்கள், அவை தோன்றிய காலக்கட்டத்தினுடைய மானிடவியல் மற்றும் பண்பாடு, கலாசாரப் பேணுகையின் ஆவணங்களாகக் கொள்ளப்படலாம், வாழ்வின் அடிநிலைகள் நன்கு அலசப்படுவதனால் இவற்றிலே நாட்டார் வழக்காறுகள் மிகுதியாகப் பயின்றுவரும்.
கே. டானியல், செ. கணேசலிங்கன், செங்கையாழியான், பெனடிக்ற்பாலன், எஸ்.பொன்னுத்துரை முதலானோருடைய படைப்புக்களை இப்போக்கின் வகை மாதிரிகளாகக் குறிப்பிடலாம்.
ஈழத்துப் பிரதேசப் பண்புசார் நாவல்களில் தென்படும் மேலே சுட்டிய இரு வகைப்போக்குகளில், முதலாவது போக்கு, பிரதேசப்பண்பு சார் நாவல்கள் படைக்கத் தொடங்கிய ஆரம்ப காலங்களிலும், இரண்டாவது போக்கு, மண்வாசனை, தேசிய இலக்கியம் ஆகிய கோட்பாடுகள் தீவிரமாக முன்வைக்கப்பட்ட காலத்திலும் காணப்பட்டன.
பிரதேசப்பண்பு நாவல்களில் நாட்டார் வாக்காற்றியல் கூறுகள்
பிரதேசப்பண்பு நாவல்களில் அவ்வப்பிரதேசங்களுக்கேயுரிய நாட்டார் வழக்காற்றியல் கூறுகள் பலவும் பயின்று வந்துள்ளமையினை அவதானிக்க முடிகிறது. வாய்மொழி வழக்காறுகள், நம்பிக்கைகள், சடங்குகள், நாட்டார் கலைகள், நாட்டுப்புற விளையாட்டுக்கள், மருத்துவ நடைமுறைகள், உணவுப்பழக்கவழக்க நடைமுறைகள், மக்கட்பெயர், இடப்பெயர், திட்டுக்கள், சாபங்கள் முதலானவற்றுடன் கிராமியப் பேச்சுவழக்கு நடைமுறைகள் முதலான இன்னோரன்ன வழக்காறுகளை இவ்வகை நாவல்களில் பரக்கக் காணலாம்.

く 73
நாவல் எழுதும் ஆசிரியர் நாட்டார் வழக்காற்றியற் கூறுகளைத் தமது நாவலில் ஆவணப்படுத்த வேண்டும் என்றோ அல்லது அவற்றை இலக்கியப் படைப்பில் அப்படியே இடம்பெறச் செய்யவேண்டும் என்ற நோக்கிலோ நாவலைப் படைப்பதில்லை. நாவல் படைப் போரது நோக்கும், போக்கும் வேறுவேறாகவே இருந்திருக்கிறது. ஆசிரியனொருவன், தனது நாவலின் கருவை, அதன் கட்டுக்கோப்புக்களுடனும், கலைச்சிறப்புடனும் கதையை நகர்த்திச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பான். இவ்வாறான கதை நகர்த்தும் முயற்சியிலே நாவலுக்கும், அதனைப் படைத்த ஆசிரியனுக்கும் நாட்டார் வழக்காற்றியல் கூறுகளும், மரபுகளும் இன்றியமையாத முறையிலே பயன்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அவை குறிப்பிட்ட நாவல்களை வளம்படுத்தியும் இருக்கின்றன என்று கூறலாம்.
நாகரிக வளர்ச்சி, தொழில்நுட்பம் முதலானவற்றினடியாக ஏற்படும் சமுதாய வளர்ச்சி காரணமாக மறைந்தும், மறந்தும் போகவேண்டிய நியதிக்குட்பட்ட நாட்டார் வழக்காற்றியல் கூறுகளை, இந்நாவல்கள் எழுத்திலே ஆவணப் படுத்தியுள்ளமையால் அவ்வக்காலத்தின் மரபுகள் என்றும் வாழும் மரபுகளாக ஆவணமாகின.
இவ்வாறான தன்மைகள் காரணமாகத்தான் நாவல் என்ற இலக்கிய வகையைத் தனியே கலை என்ற வரையறைக்குள் மட்டும் வைத்து நோக்காது, அதற்கும் மேலாக நாவலை வரலாற்று ஆவணமாகவும், பண்பாட்டுப் பெட்டகமாகவும், ஆய்வுப் பொருளாகவும் இன்னும் பலவாகவும் வைத்துப் பார்க்கும் தன்மை இன்றும் நிலவி வருகின்றது.
ஈழத்துப் பிரதேசப்பண்பு நாவல்களின் கதை விரிகளங்கள்
ஈழத்துப் பிரதேசம் பற்றிய வரையறை
‘ஈழத்துப் பிரதேசப் பண்பு நாவல்கள்’ என்று குறிப்பிடும்
பொழுது ஈழத்துப் பிரதேசங்களாக எவையெவை சுட்டப்படுகின்றன
என்பதை வரையறை செய்து கொள்வது அவசியமாகிறது. "ஈழம்' என்ற சொற்பதம் குறித்து நிற்கும் பொருள் பற்றி ஏலவே

Page 40
74 必
குறிப்பிடப்பட்டது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கான இடங்கள் ஈழத்துத் தமிழர்க்குரிய பாரம்பரியப் பிரதேசங்களாகக் கொள்ளப்படுகின்ற மரபு காணப்படுகிறது.
இலங்கையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளடங்கும், நயினாதீவு, புங்குடுதீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், புளியந்தீவு, எழுவைதீவு, அனலைதீவு, நெடுந்தீவு முதலான தீவுப் பகுதிகளையும், யாழ்ப்பாணம் எனும் நிர்வாக மாவட்டத்துள் அடங்கும் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என்னும் பிரதேசங்களையும் களமாகக் கொண்டு எழுகின்ற நாவல்களை யாழ்ப்பாணப் பிரதேசத்து நாவல்கள்’ என்று அழைக்கும் வழக்கம் உள்ளது.
இலங்கையில் தனித்தனி நிர்வாக மாவட்டங்களுள் குறிப்பிடப் படுவனவாகிய மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களை உள்ளடக்கிய பகுதியை 'வன்னிப்பிரதேசம்’ என வழங்குவர். அதிக அளவு அபிவிருத்தி பெற்றிராத வன்னிப்பிரதேசம் இயற்கையோடியைந்த வாழ்வை அடிப்படையாகக் கொண்டது. இயற்கைக்குக் கட்டுப்பட்டு வாழும் இப்பிரதேசத்து மக்களுடைய வாழ்வும், வாழ்வின் இதர அம்சங்களும் தனித்துவமானவை; நாட்டார் மரபுகளிலிருந்தும் விடுபடாத கிராமியச் சூழலாலமைந்தவை. இப்பகுதிகளைக் களமாகக் கொண்டும் கணிசமான எண்ணிக்கையில் நாவல்கள் எழுதப்பட்டன.
* கிழக்கிலங்கைப் பிரதேசம்’ என்பது திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய தனித்தனி நிர்வாக மாவட்டங்களுடன் அம்பாறை என்ற தனி நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியதாக உள்ளது. இப்பிரதேசங்களின், புவியியல் அமைப்பு, வாழ்க்கை நடைமுறைகள், தனித்துவமான பழக்க வழக்கங்கள் முதலானவை இப்பிரதேசப் பண்பு சார் நாவல்களிலே நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன.
ஒட்டு மொத்த நோக்கிலே இவை ஈழத்துத் தமிழ் நாவல்கள் என நோக்கப் பட்டாலும், அவ்வப் பிரதேசங்களது வேறுபாடுகளுக்கு ஏற்பத் தம்மிடையே தனித்துவமான சில அம்சங்களையும் கொண்டமைந்திருக்கின்றன எனக் கூறுவதே பொருத்தமானதாகும்.

«Х» 75
ஈழத்துப் பிரதேசப்பண்பு நாவல்களும் அவற்றின் களச்சித்திரிப்பும்
யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட வடக்குப் பிரதேசத்துப் பண்பாட்டுக் கூறுகளை, மங்கள நாயகம் தம்பையாவின் * நொறுங்குண்ட இருதயம்’ என்ற நாவலிலேயே இனங்காண முடிகிறது. இப்பிரதேசத்தின் கிராமங்களில் ஒன்றாகிய தெல்லிப்பழைக் கிராமம் இந்நாவலின் கதை விரிகளமாக அமைகிறது. கிராமிய மொழி வழக்குகள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றின் பயில் நிலையினை இந்நாவலில் இனங்கான முடிகிறது.
அ.செ. முருகானந்தன் ‘வண்டிச்சவாரி’ (1944), ‘புகையில் தெரிந்தமுகம்’ (1950), ‘யாத்திரை’ (1958) ஆகிய தமது நாவல்களில் தன் சொந்தக் கிராமமாகிய அளவெட்டியை, அக்கிராமத்தின் பண்பாட்டு வழக்காறுகளுடன் சித்திரித்துள்ளார்.
வ. அ.இராசரெத்தினம் ‘துறைக்காறன்’ (1950), * கொழுகொம்பு’ (1955) ஆகிய நாவல்களில் யாழ்ப்பாணத்துக் கிராமங்களைக் கற்பனைப் பெயர்களிலே சித்திரித்துக் காட்டினார், கனக.செந்திநாதனின் விதியின் கை’ (1950) சிறந்த சமூகப் பண்பாட்டு நாவலாக அமைந்தது.
ஏ.ரி.நித்தியகீர்த்தியின் 'மீட்டாத வீணை (1974) நாவலின் களம் யாழ்ப்பாணக் கிராமம் என்றாலும், இவரது சொந்தப் பிரதேசமாகிய வடமராட்சிப் பிரதேசத்தின் கிராமிய வழக்காறுகளையே அந்நாவல் சித்திரித்துள்ளது.
ஞானரதனின் “ஊமை உள்ளங்கள்’ (1976), தி. ஞானசேகரனின் ‘புதியசுவடுகள்’ (1977), அ.கைலாசநாதனின் ‘கடற்காற்று’ (1972), அப்பாச்சி மகாலிங்கத்தின் கமலினி’ (1977) ஆகிய நாவல்கள் முறையே அளவெட்டி, மல்லாகம், புன்னாலைக்கட்டுவன், மண்டைதீவு, நவாலி ஆகிய யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் நடைமுறை வாழ்வியலைச் சித்திரித்துள்ளன.
ஒருகாலகட்டத்து யாழ்ப்பாணச் சமூகத்தை அதன் பலத்தோடும், பலவீனத்தோடும் இலக்கியம் ஆக்கியவர் என்ற பெருமைக்குரியவராக கே. டானியல் கருதப்படுகின்றார். இவர்,

Page 41
76 «Х•
யாழ்ப்பாணச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை மிகக் கூர்மையாக அவதானித்து அவற்றைத் தமது நாவல்களிலே சிறைப்படுத்தியதன் மூலம் ஒரு சிறந்த பண்பாட்டு மானிடவியலாளராகவும் செயற்பட்டார் எனக் கூறலாம். ‘போராளிகள் காத்திருக்கின்றனர் (1975), ‘கோவிந்தன்’ (1982), ‘அடிமைகள்’ (1984), ‘பூமரங்கள்’ (1984), "தண்ணீர்’, (1987), “முருங்கையிலைக் கஞ்சி’ (1989) “மையக்குறி’ (1989), 'இருளின் கதிர்கள்’ (1989), பஞ்சகோணங்கள்’ (1993), 'கானல்’ (1993), பஞ்சமர்’ (1994), முதலான இவருடைய நாவல்களில் கரவெட்டி, நெல்லியடி, புத்தூர், மந்துவில், கட்டுவன், கலட்டி, குருநகர்ப் பிரதேசம், இணுவில், ஒட்டுமடம், யாழ்ப்பாண நகரம் முதலான பல்வேறு பிரதேசங்களினதும் வாழ்வியல் வழக்காறுகளை மிகத் துல்லியமாகச் சித்திரித்துள்ளார். டானியலின் நாவல்களிலே பயின்று வந்தள்ள நாட்டார் வழக்காற்றியற் கூறுகள் பற்றி ஆய்வேட்டின் பிற இயல்களில் விரிவாகக் காணலாம்.
செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம்’ (1965), சடங்கு (1966), ‘போர்க் கோலம்’ (1969) ஆகிய நாவல்கள் உரும்பிராய் உள்ளிட்ட யாழ்ப்பாணத்துக் கிராமங்களைக் களமாகக் கொண்டுள்ளன.
தெணியானின் ‘விடிவை நோக்கி’ (1973) என்ற நாவல் வடமராட்சிப் பிரதேசத்தைக் களமாகக் கொண்டமைகிறது. இதுபோலவே எஸ். பொன்னுத்துரையின்தீ’ (1961), சடங்கு’ (1971) ஆகிய நாவல்கள் யாழ்ப்பாணக் கிராமங்களைக் களமாகக் கொண்டமைந்துள்ளன.
செங்கையாழியானுடைய பல்வேறு நாவல்களிலும் பிரதேசப் பண்பாட்டுச் சித்திரிப்பு இடம் பெற்றுள்ளதனைப் பார்க்க முடியும். புவியியலில் இவருக்குள்ள நிபுணத்துவம் நாவல்களின் களங்களாக அமைகின்ற கிராமங்களின் சித்திரிப்பினூடே புலப்படுகிறது. வகை மாதிரியாக நோக்குமிடத்து, இவரது ‘வாடைக்காற்று' (1973) என்ற நாவல் யாழ்ப்பாணத்துத் தீவுகளில் ஒன்றான நெடுந்தீவுக் களத்தினைக் கொண்டமைகிறது. வாடைப் பருவத்திலே இடம் பெயர்ந்து மீன் பிடிக்கும் மீனவரிடையே நிகழும் தொழில் முறைகள், பூசல்கள், காதல் அனுபவங்கள், போராட்டங்கள் என்பனவற்றை இந்நாவல் சித்திரிக்கின்றது. அழிந்து போகின்ற யாழ்ப்பாணத்துக் கலை ஒன்றினைக் கட்டிக் காப்பதில் ஒரு

* 77
கிழவனுக்குள்ள மனவைராக்கிய உணர்வை முற்றத்து ஒற்றைப்பனை’ (1972) என்ற நாவலும், வண்ணார் பண்ணையில் வாழும் ஒரு ஏழைச் சுருட்டுத் தொழிலாளியின் துயரமிகு வாழ்வை
இரவின் முடிவு’ (1970) என்ற நாவலும் சித்திரித்து நிற்கின்றன.
ஈழத்து நாவலாசிரியர்களில் சிலர் தம் படைப்புக்களின் கதை நிகழிடமாக வன்னிப் பிரதேசத்தை எடுத்துக் கொண்டு அப்பிரதேசத்தின் வாழ்வியல் வழக்காறுகளை இயல்பாகச் சித்திரித்துள்ளனர்.
அ. பாலமனோகரனின் ‘நிலக்கிளி’ (1973) என்ற நாவல் இவ்வகையிலே முதன்மை இடத்தினைப் பெறுகிறது. மண்ணோடியைந்த இயல்பான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்நாவல், வன்னிப் பிரதேசத்தின் தண்ணீர் முறிப்புக் கிராம விவசாயிகளின் வாழ்வியல் நடைமுறைகளைச் சித்திரிக்கும் பாங்கில் அமைந்துள்ளது. காடுகளால் சூழப்பட்ட இக்கிராமத்தின் பிரதான உப தொழிலான காடுவெட்டுதல், வேட்டையாடுதல் பற்றிய விபரிப்புக்களுடன், இப்பிரதேசத்து மக்களின் சடங்குமுறைகள், உணவுப் பழக்கவழக்க நடைமுறைகள், மருத்துவம், நம்பிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டுக் கூறுகளையும் இந்நாவலில் இனங்காணமுடிகிறது. இந்நாவலாசிரியரின் பிறிதொரு படைப்பான *குமாரபுரம் (1975) என்ற நாவலிலும் இத்தன்மையைக் காணலாம்.
செங்கையாழியானின் காட்டாறு’ (1977) என்ற நாவல், கடலாஞ்சி எனும் கற்பனைக் கிராமத்தினைக் களமாகச் சித்திரித்தாலும், அதன் பகைப்புல விளக்கங்கள் வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பகுதியின் கிராமிய வாழ்வியல் ஒழுகலாறுகளைச் சுட்டி நிற்கிறது எனலாம்.
தாமரைச் செல்வி எழுதிய ‘சுமைகள்’ (1977) என்ற நாவல், வன்னிப் பிரதேசத்தின் பரந்தன்’ என்ற விவசாயக் கிராமத்தை அண்டிய குமாரபுரத்தின் பண்பாட்டு வழக்காறுகளைச் சித்திரிப்பதாகும்.
கிழக்கிலங்கைப் பிரதேசத்துப் பண்பாட்டு வழக்காறுகளைச் சித்திரிக்கும் நாவல்கள் என்ற வகையில், க. அருள்சுப்பிரமணியம் எழுதிய ‘அவர்களுக்கு வயது வந்துவிட்டது' (1973),

Page 42
78 X
‘நான்கெடமாட்டேன்’ (1976), ‘அக்கரைகள் பச்சையில்லை’ (1977) ஆகிய நாவல்கள் திருகோணமலைப் பிரதேசத்தின் வாழ்வியல் ஒழுகலாறுகளைச் சித்திரித்து எழுந்தனவாக உள்ளன.
வை. அஹ்மத்தின் ‘புதிய தலைமுறைகள்’ (1976) என்ற நாவல் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச் சேனைக் கிராமத்தைக் களமாகக் கொண்டதாகும். இந்நாவலில், இப்பிரதேசத்தின் பழக்கவழக்கங்கள், பகைப்புலத்தோடு ஒட்டிய வாழ்க்கை முறை ஆகியன சிறப்புற அமைந்துள்ளமை கருதத் தக்கதாகும்.
எஸ். பூரீ ஜோன்ராஜன் என்பவர் மட்டக்களப்பின் கன்னன் குடாப் பிரதேசத்தைக் களமாகக் கொண்டு ‘போடியார் மாப்பிள்ளை’ (1976) என்ற நாவலை எழுதினார்.
மேலே சுட்டியவாறு ஈழத்துத் தமிழ் நாவலாசிரியர் பலரும் தத்தம் படைப்புகளிலே நாட்டார் வழக்காற்றியல் கூறுகளை உள்வாங்கி எழுதியிருப்பினும், ஈழத்துத் தமிழர் நாட்டார் வழக்காற்றியல் கூறுகளை நுண்ணிதாக அவதானித்து, அவற்றைத் தமது படைப்புக்களிலே இயல்பாகச் சித்திரித்தவர்கள் என்ற வகையில் கே. டானியல், செ.கணேசலிங்கன், எஸ்.பொன்னுத்துரை, செங்கையாழியான், தெணியான், அ. பாலமனோகரன் ஆகியோர்
விதந்து குறிப்பிடுதற்குரியவர்களாவர்.
ஈழத்துத் தமிழ் நாவல்களும் நாட்டார் வழக்காற்றியலும் என்ற தலைப்பிலான இவ்வியலின் முதற் பகுதியில், ஈழத்துத் தமிழ் நாவலின் வரலாறு, வளர்ச்சி குறித்த செய்திகள் தமிழ்நாட்டின் தமிழ் நாவல் வரலாற்றுப் பின்னணியில் வைத்து விரிவாக அணுகப்பட்டுள்ளன. இவ் அணுகுமுறையினூடே தமிழ் நாட்டு நாவல் வரலாற்றிலிருந்து ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் தனித்துவம் பெற்ற சூழல்கள் பற்றித் தெளிவாக வெளிக் கொணரப்பட்டுள்ளன.
இரண்டாவது பகுதியில், ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் சிந்தனைகளின் தோற்றம், தொடர்ச்சி ஆகியன பற்றி விளக்கப்பட்டு, ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காற்றியலுக்கும் ஈழத்துத் தமிழ் நாவலுக்குமிடையேயான உறவுநிலைகள், அதற்கான தேவைகள் என்பன குறித்துத் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளன.

5.
10.
ll.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22,
23,
அடிக்குறிப்புகள்
கைலாசபதி, க., தமிழ் நாவல் இலக்கியம், ப. 102. மேலது. ப.12. சிவத்தம்பி, கா., நாவலும் வாழ்க்கையும், ப.31. சிவத்தம்பி, கா., “முன்னுரை', கணேசலிங்கன், செ, சடங்கு, L1. 5.
மேலது. ப.5. பரமசிவானந்தம், அ.மு., பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை வளர்ச்சி, பக்.38-39. செல்வநாயகம், வி., தமிழ் உரைநடை வரலாறு, ப. 78. பரமசிவானந்தம், அ.மு., மு.கு.நூ., ப.40. கைலாசபதி, க., நவீன தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகள், பக்.21-22. சிவத்தம்பி, கா., தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும், u.8l.
பண்டித நடேச சாஸ்திரி, “முன்னுரை”, தீனதயாளு. இராமலிங்கம், மா., இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், பக்.22-23.
ஞானசம்பந்தன், அ.ச., இலக்கியக்கலை, ப.334. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.410 கைலாசபதி, க., தமிழ் நாவல் இலக்கியம், ப.34. சுந்தரராஜன், பெ.கோ., சிவபாதசுந்தரம், சோ., “முன்னுரை’, தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும், ப.xxi. சிவத்தம்பி, கா., நாவலும் வாழ்க்கையும், ப.36. இராமலிங்கம், மா., மு.கு.நூ., ப.49.
மேலது. ப.23.
சிவத்தம்பி, கா., மு.கு.நூ., ப.36. கைலாசபதி, க., மு.கு.நூ. ப.32. சிவத்தம்பி, கா., “முன்னுரை', கணேசலிங்கன், செ, சடங்கு, Lu. 6.
சிவத்தம்பி, கா., நாவலும் வாழ்க்கையும், ப. 31,

Page 43
24.
25.
26.
27.
28.
29.
30.
. சுப்பிரமணியன், க.நா., முதல் ஐந்து தமிழ் நாவல்கள், பக்.42-43.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
சுந்தரராஜன், பெ. கோ., சிவபாதசுந்தரம், சோ., மு. கு.நூ., பக்.8-9.
மேலது. ப.6. மனோன்மணி, ச, “பெண்களும் தமிழ் நாவல்களும்’, சிந்தனை, தொகுதி 1, இதழ் 3, 4, ப.10. புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் கட்டுரைகள், ப.45. கைலாசபதி, க., மு.கு.நூ. ப.40. ராஜமய்யர், பி.ஆர்., கமலாம்பாள் சரித்திரம்.
சிவத்தம்பி, கா., நாவலும் வாழ்க்கையும், ப.75.
பண்டித நடேச சாஸ்திரி, “முன்னுரை’, மு.கு.நூ. சுந்தரராஜன், பெ. கோ., சிவபாசுந்தரம், சோ., மு. கு. நூ. , பக்.46-47.
கைலாசபதி, க., மு.கு.நூ. ப. 180. சிவத்தம்பி, கா., மு.கு.நூ. ப.75.
சுந்தரராஜன், பெ. கோ., சிவபாதசுந்தரம், சோ., மு.கு.நூ., Luji. 196-197. செல்வராசன், சில்லையூர், ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி, ப.13. மேலது., “முன்னுரை', ப.11. சிவத்தம்பி, கா., மு.கு.நூ., ப.31. க. கைலாசபதி இவ்வாறு கூறுவதாக 1974.5.26 திகதிய தினகரன் வாரமஞ்சரியில் எஸ்.எம்.கமாலுதீன் கூறுவார். சுப்பிரமணியன், நா. ஈழத்துத்தமிழ் நாவல் இலக்கியம், ப.12. மெளனகுரு, சி., சித்திரலேகா, மெள. நுஃமான், எம்.ஏ., இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், ப.38 சிவலிங்கராஜா, சி. (ப.ஆ.), “பதிப்புரை”, நொறுங்குண்ட இருதயம், ப.11
சிவத்தம்பி, கா., மு.கு.நூ., பக்.9-23. சிவத்தம்பி, கா., ஈழத்தில் தமிழ் இலக்கியம், ப.210. மெளனகுரு, சி, சித்திரலேகா, மெள., நுஃமான், எம்.ஏ., மு. கு. நூ., ப.43.

47.
48.
49.
50.
5l.
52.
53,
54.
8 81
செந்திநாதன், கனக, ஈழத்து இலக்கிய வளர்ச்சி, பக்.38-39. சிவத்தம்பி, கா., மு.கு.நூ., ப. 34. செந்திநாதன், கனக., மு.கு.நூ., ப.75. செல்வராசன், சில்லையூர், மு.கு.நூ., ப.44. Handoo, Jawaharlal, SOUTH INDIAN FOLKLORE: GROWTH AND DEVELOPMENT,pp.27-28. லூர்து, தே., “நாட்டார் வழக்காற்றுக் கோட்பாடுகளும், அணுகு முறைகளும்”, தமிழ் நாட்டார் வழக்காற்றியல், ப.2. சண்முகதாஸ், அ., “ஈழத்துத் தமிழ் நாட்டார் வழக்காற்றியல் பரப்பும் அதில் நுண்ணாய்வுக்குட்பட வேண்டிய கூறுகளும்”, தமிழ் நாட்டார் வழக்காற்றியல், பக்.218-219.
சதாசிவ ஐயர், தி. (1940) மட்டக்களப்பு வசந்தன்
கவித்திரட்டு. நடராசா, எவ்.எக்ஸ்.சி., (1960) எண்ணெய்ச் சிந்து.
(1962) ஈழத்துநாடோடிப்பாடல்கள் (1965) கண்ணகி வழக்குரை செல்லையா, மா.செ., (1962) கோவலனார் கதை செல்வராஜ் கோபால், க., (1970) கபோத காதை கந்தையா, வீ.சி., (1958) கண்ணகை அம்மன்
குளிர்த்திப் பாடல்கள். (1968) கண்ணகி வழக்குரை
மாறன் விதானை (1966) இரணிய சமீகார
அம்மானை. சண்முகசுந்தரம், த, (1984) நாட்டார் இலக்கியத்தில்
மழை இரங்கிப் பாடல்கள். (1988) தாய் தரும் தாலாட்டு. (1983) குருவிச்சி நாய்ச்சி சலிப்பு
வளர்ப்புத் தாய் புலம்பல். வேலுப்பிள்ளை, சி.வி., (1983) மலை நாட்டு மக்கள்
LI fL GR). புஸ்பராஜன், (1976) அம்பாப் பாடல்கள். முத்து மீரான் (1991) கிராமியக் கவி அமுதம்.

Page 44
55.
56.,
57.
58.
59.
60.
6丑。
62.
63.
64.
65.
கோமாஸ், ஏ.பி.வி. (1988) அங்கமெல்லாம் நிறைஞ்ச
மச்சான். வித்தியானந்தன், சு., மன்னார் நாட்டுப் பாடல்கள் (1964); மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் (1962) ஆகிய இருநூல்களைப் பதிப்பித்தார். நாடகம் நாட்டாரியற் சிந்னைகள் (1990) என்ற தலைப்பில் இக்கட்டுரைகள் தனி நூலாக வெளிவந்தது. பழையதும் புதியதும் (1992); சடங்கிலிருந்து நாடகம் வரை (1988); ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு (1993) முதலானவை இவற்றுட் சிலவாகும். ஆங்கிலக் கட்டுரைகள் வெளிவந்த இதழ்களில் சில வருமாறு: Ceylon Literary Register, Tamil Culture, Young Ceylon, Ceylon Antiquary and Literary Register, Social Compas, Hindu Dharmam, Orientalist, Anthropological Quarterly, The Ceylon Gazetteer, Taprobanian.glispi கட்டுரைகள் வெளிவந்த பத்திரிகைகள், இதழ்களில் சில வருமாறு: அனைத்துலக மற்றும் பிரதேச நிலையிலான தமிழாராய்ச்சி மகாநாட்டு மலர்கள், தினகரன், சிந்தாமணி, வீரகேசரி, பூணூலங்கா, நுட்பம், கலைவாணி, இந்துதர்மம், சரஸ்வதி. சிவனேசச்செல்வன், ஆ, “சிந்தனைத் திறனையும் பண்பாட்டுக் கூறுகளையும் தெரிவிக்கும் பழமொழிகளும், விடுகதைகளும்”, இலங்கைத் தமிழர் நாட்டார் வழக்காற்றியல், ப.348. பாலசுந்தரம், இ, “பழமொழி இலக்கியம்” - ஓர் அறிமுகம், இளந்தென்றல், பக்.55-60; சிவனேசச் செல்வன், ஆ. முற்குறித்த கட்டுரை, ப.348. செல்வராஜா, என். உருமாறும் பழமொழிகள்; சச்சிமாஸ்டர், இ., மக்கள் வாழ்வில் பழமொழிகள். வீராசாமி, தா.வே. தமிழ் நாவல் முன்னோட்டம், ப.25 இராமலிங்கம், மா., மு.கு.நூ., பக்.70-71. சுப்பிரமணியம், நா., மு.கு.நூ., ப.138. கைலாசபதி, க., மு.கு.நூ., ப.240.

நாவல்களும் நாட்டுப்புற நம்பிக்கைகளும்
நாட்டார் வழக்காற்றியல் கல்விப்புலத்தில் நம்பிக்கைகள்(belief) முக்கியத்துவம் பெற்றனவாகக் காணப்படுகின்றன. ‘நாட்டுப்புற நம்பிக்கை’ என்பது நாட்டுப்புறவியலின் அடிப்படைப் பொதுக்கூறு (Common Denominator) 676örp 35(15ğğılıb 99 633TGS). 69 (15 Feyp5ğ5, 6öt பண்பாட்டு வேர்களை இனங்கண்டு சுட்டத்தக்க வல்லமை அச்சமூகத்து மக்களால் புரக்கப்படும் நம்பிக்கைகளுக்குரிய தனித்துவமான அம்சமாகும். இவை தனிமனித நம்பிக்கை (Indiovidual Belief), felps publ 5 dig05 (Social Belief) 6T667 g) (D6 305u Tsidi காணப்படுகின்றன. இவ்வாறான நம்பிக்கைகள் தலைமுறை தடிைலமுறையாக மரபு வழியாகக் கையாளப்பட்டு வருவதனை நோக்க முடிகிறது. நம்பிக்கைகள் சமூகத்தின் இருத்தலுக்கும், இயங்கலுக்கும் அடிப்படைகளாக அமைந்துள்ளன.
நாவல்களும், நாட்டுப்புற நம்பிக்கைகளும் என்ற தலைப்பிலான இவ்வியலானது, ஆய்வின் வசதி கருதி இரண்டு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. ‘நம்பிக்கை’ என்ற சொல்லுக்குப் பல்வேறு அகராதிகளும், ஆராய்ச்சியாளர்களும் தருகின்ற விளக்கங்கள், நம்பிக்கையின் தோற்றம், தொடர்ச்சி, அதன் வகைப்பாடு முதலான விடயங்களை இயலின் முதற்பகுதி முறைப்படுத்துவதாக அமைகிறது. இரண்டாவது பகுதியில் ஈழத்துத் தமிழ் நாவல்களில் பயின்று வந்துள்ள நாட்டுப்புற நம்பிக்கைகளை இனங்கண்டு சுட்டுவதுடன், அவை மேலைத்தேயத்தார் மற்றும் பண்டைத் தமிழர்களிடையே பெற்றிருந்த முக்கியத்துவம், அவற்றுக்கான சமூகவியற் பின்னணி என்பன குறித்தும் நோக்கப்படுகின்றன.
நம்பிக்கை: சொற்பொருள் விளக்கம்
தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் ‘நம்பு’ என்ற சொல் ‘விருப்பம்’ என்ற பொருளில்

Page 45
84 ふ
எடுத்தாளப்பட்டுள்ளது. ஆயினும் சங்க இலக்கியத்தில் நம்பிக்கை என்ற சொல் நம்பிக்கையைச் சுட்டவே பயன்பட்டுள்ளமையினைக் காணலாம்.
சென்னைத் தமிழ்ப் பேரகராதி ‘நம்பிக்கை’ என்ற சொல்லுக்கு,
1. விசுவாசம் 3. நம்பியொப்புவிக்கப்பட்டது
2. ஆணை 4. உண்மை
என்ற நான்கு பொருள்களைத் தருகிறது. வாழ்வியற் களஞ்சியம் ‘நம்பிக்கை’ பற்றிக் குறிக்கையில்,
நம்பிக்கையானது மக்களுடைய உள் உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். இது ஒரு செயலின் காரணம் அல்லது சூழ்நிலைக்குரிய பின் விளைவுகளைக் கொண்டதாகவும். மரபுவழியாகச் சந்ததியின் சந்ததியினரால் கடைப்பிடிக்கும் ஒரு வழக்கமாகவும் உள்ளது.*
எனக் குறிப்பிடுகிறது.
மதுரைத் தமிழ்ப் பேரகராதி நம்பிக்கை என்பதற்கு, சத்தியம், நிசம், உறுதிப்பாடு எனப் பொருள் தருகிறது."
ஆங்கில மரபில் நம்பிக்கை என்ற சொல்லைக் குறிப்பதற்கு Belief எனும் சொல் பயன்பாட்டில் உள்ளது. பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்,
உண்மைக்கு ஈடாகத் தேவைப்படும் (Լp(Լք ஆய்வுணர்வுக்குரிய அறிவு இல்லாத நிலையில் ஆய்வுப் பொருளை நோக்கிய ஏற்பு அல்லது இசைவுக்கான மனப்பான்மையே நம்பிக்கை"
எனப் பொருள் தருகிறது.
அமெரிக்கக் கலைக் களஞ்சியம் நம்பிகை பற்றிக் குறிக்கையில்,
ஒரு பிரச்சினையின் மூலமாக நாம் தெரிந்து கொள்ளும் உண்மையை விரும்பி ஏற்றுக் கொள்ளுதலே பொதுவாக

8 85
நம்பிக்கை எனப்படும். ஆனால் நுட்பமாகவும், சமயரீதியாகவும் பார்க்கும்போது ஒரு தனிமனிதனது மனத் திண்மையையும் விருப்பத்தையும் பொறுத்தே இது அமையும்."
என்கிறது. மேலும், அறிவின் அடிப்படையிலோ அல்லது இரண்டின் அடிப்படையிலோ ஒரு கூற்று, ஒரு முறை, ஒரு மனிதன் போன்றவற்றின் மேல் கொள்ளும் கடப்பாட்டு நிலையே நம்பிக்கை என்றும் இது ஊகத்துக்கு மேற்பட்டது, அறிவுக்குக் கீழ்ப்பட்டது என்றும் குறிப்பிடுகிறது.
தனிமனித உணர்வினால் தோன்றிய நம்பிக்கைகள் காலப்போக்கில் கூட்டு வாழ்வினை மேற்கொண்ட மக்கள் குழுவால் ஏற்றுக்கொள்ளப் பெற்று மரபுவழி நம்பிக்கைகளாக நிலை கொள்ளத் தொடங்கின. நம்பிக்கைகளே வாழ்க்கையின் உயிர்நாடி என்பதனை பெரும்பான்மையான மக்கள் குழு உணர்ந்திருந்தது"
என்று சமூகவியல் கலைக்களஞ்சியம் நம்பிக்கைக்கு விளக்கம் தருகிறது.
மேலே குறிப்பிட்ட விளக்கங்களிலிருந்து நம்பிக்கை என்ற சொல் குறித்து நிற்கும் பொருண்மை பற்றிய நிலையில் அகராதிகள் பலவும் ஒரு மித்த கருத்தையே கொண்டிருப்பதனைக் காணமுடிகிறது.
அறிஞர் பார்வையில் “நம்பிக்கை”
நம்பிக்கை பற்றியும், அதன் ஊற்றுக்கள் பற்றியும் ஆய்வாளர்கள்
பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
தன்னுடைய சொந்தக் குணத்தை ஒரு சமூகம் மாற்றும்போது அல்லது இழக்கும்போது அவற்றுக்கு ஏற்ப முன்பே அமைந்திருந்த நடைமுறைகள் நம்பிக்கைகளாக எஞ்சுகின்றன."
என்பார் தமிழவன்.

Page 46
86 X
நாட்டார் நம்பிக்கைகள் எல்லோரிடமும் உள்ளன. அவை படிப்பதற்குச்சுவையானவை ஆய்வதற்குக் கடினமானவை நம்பிக்கையை நாம் கண்ணால் பார்க்க முடியாது"
என தே. லூர்துவும்,
இயற்கையின் புதிரான செயல்களை உணர இயலாத போதும் மனித வாழ்வில் நிகழும் ஊறுகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத நிலையிலும் மனித மனம் சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கின்றது. அவை நம்பிக்கைகளாக உருப்பெறுகின்றன’
எனக் க.காந்தியும் நம்பிக்கைக்கு விளக்கம் தருகின்றனர்.
வாழ்வில் தமக்கு ஏற்படும் பல்வேறு அனுபவங்களினால் இவற்றைக் செய்தல் தகும், இவற்றைச் செய்தல் தகாது என்று பல காலத்திற்கும் முன்னே பிரித்து வைத்த செய்திகள் எல்லாம் காலப்போக்கில் காரணம் அறியாமலே நம்பிக்கைகளாகவும், பழக்க வழக்கங்களாகவும் மாறுகின்றன என்பார் வி. சரசுவதி.*
அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களான நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு, அம்மக்கள் சமூகத்தால் பாதுகாக்கப் படுகின்றன’ எனச் சு.சக்திவேலும், நம்பிக்கை என்பது மக்களால் நம்பப்படும் அனைத்து எண்ணங்களும் கருத்துக்களும் ஆகும்* எனக் க.சாந்தியும் நம்பிக்கைக்கு விளக்கமளிப்பர்.
நம்பிக்கைகளின் தோற்றத்துக்கான அடிப்படைகள், அவற்றின் இயங்குதளம் ஆகியனவற்றை மேற்சுட்டிய விளக்கங்களில் இருந்து பெறமுடிகின்றது.
நம்பிக்கையின் தோற்றம்
மனிதன் எப்போது தோன்றினானோ அப்போதே நம்பிக்கையும் தோற்றம் கொண்டுவிட்டது எனக் கருதலாம். மனிதனின் தன்னல உணர்வும், சமுதாய உணர்வும் நம்பிக்கைகளை வளர்த்தெடுக்கும் காரணிகளாக உள்ளன. ‘நம்பிக்கை’ என்பது ஒன்றின் உண்மைத் தன்மையை ஏற்றுக்கொள்வதாகும்.

87
நம்பிக்கையின் அடிப்படை அகமனம் (Sub conscious) எனலாம். இதனால்தான் நம்பிக்கைகளைப் பொதுவாக ‘உள உருவாக்கம்’ (Mental creation) எனக் குறிப்பிடுவர். இவை ஒவ்வொருவரின் உளவியல் உணர்வுகளாலும் வாழ்ந்து வருகின்றன.
மனித மனத்தின் விழைவால் நம்பிக்கை தோன்றுகிறது. மனிதன் அச்சத்தின் காரணமாக இயற்கையின் தோற்றத்தினையும் செயற்பாடுகளையும் தனது வாழ்வியல் நடப்புக்களோடு இயைத்து நோக்கிய நிலையில் நம்பிக்கைகள் தோற்றம் கொண்டன. இவற்றுடன் நன்மை விளையவேண்டும் என்ற மனிதனின் விருப்பமும் இணைந்து கொண்டதால் நம்பிக்கையின் எல்லை விரிவடைந்தது."
ஆதிவாசி நிலையிலிருந்து மனிதன் நாகரிகம் அடைந்தாலும் ஆதிவாசி மனநிலை அவனை விட்டுப் போய்விடாது. பழங்கால மனிதன் தன்னைச் சுற்றி நடப்பனவற்றிற்கு விளக்கம் சொல்ல இயலாதிருந்தான். ஏன் மழை பொழிகிறது? ஏன் இடி இடிக்கிறது என்றெல்லாம் அவனுக்குச் சரியான காரணம் தெரியவில்லை. தன்னுடைய அறிவுக்கு எட்டிய காரணங்களை அவன் சொல்ல ஆரம்பித்தான். இந்த முடிவுகளைச் சமூகம் அங்கிகரித்தது.' காலப்போக்கில் இவை நம்பிக்கைகளாக நிலை பெற்றன.
இயற்கையோடு இயைந்த மனிதன் இயற்கையுையம் தன் உறவாகக் கொள்கிறான், உரிமையாகக் கொள்கிறான். காற்று, மழை, தீ, தண்ணி, மரம், செடி, விலங்கு முதலிய அனைத்தையும் உயிருள்ளவையாகக் கருதினான். அவற்றுக்கும் சினம், மகிழ்ச்சி, துன்பம் ஆகியன இருப்பதாக எண்ணினான். அவற்றுக்குத் தன்னால் ஊறு விளைந்தால் அவையும் ஊறு விளைவிக்கும் என்றும், அவற்றிற்குத் தன்னால் நிறைவு கிட்டினால் அவை தனக்கும் நன்மை தரும் என்றும் நம்பினான். அந்த நம்புதலின் முடிவாக அச்ச நம்பிக்கையும் மகிழ்வு நம்பிக்கையும் இயற்கை அற்றல்கள் மீது அவனுக்கு ஏற்பட்டன"
எனத் தாயம்மாள் அறவாணன் குறிப்பிடுவது நம்பிக்கைகளின் தோற்றத்துக்கான பின்னணிகளை எளிதாக விளக்கி நிற்கிறது.

Page 47
88 «Х•
மனிதனிடம் நம்பிக்கைகள் தோன்றுவதற்குப் பலவகையான காரணங்கள் உள்ளன எனக் குறிப்பிடும் தமிழவன், அவற்றுள் பிரதானமானவையாக மூவகைக் காரணங்களைக் குறிப்பிடுவார். செய்வினை எனப்படும் மந்திரம் (Magic), நாட்டுப்புற மருத்துவம் (Folk Medicine), விலக்குகள் (Taboos) என்பவையே அவையாகும்." இச் செய்வினை, மருத்துவம், விலக்கு ஆகியவற்றில் ஆதிக்கம் குறைந்தபோது அவை பற்றிய நம்பிக்கைகள் நாட்டுப்புற நம்பிக்கைகளாகின்றன என்பர்.
மேலே தரப்பட்ட கருத்தக்களை முறைப்படுத்திப் பார்க்கும்போது நம்பிக்கைகளின் தோற்றத்துக்கான காரணிகளாக, மனித மனத்தில் உருவாகும் அச்சம், மனிதனின் அவா அல்லது விருப்பம், மனிதனின் அறியாமை, மனிதன் எதையும் அறிவு கொண்டு ஆராயாமல் அப்படியே பின்பற்றும் போக்கு, மனிதனின் தன்னலப் பாதுகாப்புணர்வு முதலானவற்றைக் குறிப்பிட முடிகிறது.
நம்பிக்கையின் வகைப்பாடு
நம்பிக்கைகளை , அவற்றின் இயல்பு நோக்கிப் பலவாறாக வகைப்படுத்தும் பண்பு காணப்படுகின்றது. பொதுவாகக் காரணகா ரியத் தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளுடன் நிறுவ முடிந்தவற்றை நம்பிக்கை என்றும், அவ்வாறால்லாதவற்றை ‘மூடநம்பிக்கை' (Superstition) (Belief) என்றும் இருபாற்படுத்திப் பார்க்கும் தன்மை மேலோங்கி நிற்பதனைப் பார்க்க முடிகிறது. மூடநம்பிக்கை என்பதற்கு ஆங்கிலக் கலைக்களஞ்சியம், பகுத்தறிவற்ற நம்பிக்கை, அரை நம்பிக்கை என விளக்கம் தரும்.*
ஆலன் டண்டிஸ் (Alan Dundes) நம்பிக்கைகளைச் சகுன நம்பிக்கைகள், தந்திர நம்பிக்கைகள், சகுனப் பரிகார நம்பிக்கைகள் என்று மூவகையாகப் பாகுபாடு செய்வார். இம்மூவகைப் பகுப்புக்களுள்ளும் மனித வாழ்வில் கடைப்பிடிக்கப்படுகின்ற நம்பிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்கிப் பேசுவார்."
அலெக்சாண்டர் கிராப்பே (Alexander Krappe) நாட்டுப்புறவியலின் அறிவியல்’ (The Science of Folklore) என்ற தமது

& 89
நூலில், நம்பிக்கைகளை மதம், விலங்கு, பறவை, வானவியல், குழந்தை, மனித உடல் உறுப்பு, மாதங்கள், வாரங்கள், நாள்கள், இறப்பு, கனவு எனப் பலவகையாகப் பாகுபாடு செய்கிறார்.*
க. காந்தி, நம்பிக்கைகளை இருவகையாகப் பாகுபாடு செய்கிறார். காரண காரியத்தோடு நிறுவும் நம்பிக்கைகள், காரண காரியத்தோடு நிறுவப்படாத நம்பிக்கைகள் என்பவையே அப்பிரிவுகளாகும்.* காரண காரியத்தோடு நிறுவப்படாதவை மூடநம்பிக்கைகளாகக் கருதப்படும் நிலை தெளிவாகிறது.
எந்த ஒரு நம்பிக்கையினையும் எளிதில் மூடநம்பிக்கை எனத் தள்ளிவிட முடியாது. அறிவு வளர்ச்சியின் காரணமாக அன்றைய சமுதாயத்தின் பெரும்பாலான நம்பிக்கைகள் இன்று மூடநம்பிக்கைகளாகக் கருதப்படுகின்றன. அதேபோல் மூட நம்பிக்கையாகக் கருதப்பட்டவை இன்றைய அறிவியல் ஆய்வின் வாயிலாக நம்பிக்கைகளாக மாறியுள்ளன. நம்பிக்கைக்குக் காரணம் காணுதல் இலகுவன்று *எனக் க.கைலாசபதி குறிப்பிடுவது இங்கு கருதத் தக்கதாகும்.
வில்டுரான்ட், கிரேக்கச் சமூகத்தில் நிலவிய மூட நம்பிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். குறிப்பாக மாந்திரீகம், ஆவிகளின் செயற்பாடு, அவற்றினால் உண்டாகும் தீமைகள், நல்ல, தீய சகுனங்கள், அவற்றுக்கான பரிகாரங்கள் தொடர்பாகக் கிரேக்க மன்னர்கள் கொண்டிருந்தது நம்பிக்கைகள் அறிவியலின் எல்லையைச் சார்ந்திருந்தனவாகக் குறிப்பிடுவது நோக்கத் தக்கதாகும்.*
அறியாமையால் (மூடத்தனம்) எழும் நம்பிக்கைகளை மூடநம்பிக்கைகள் எனக் குறிப்பிடும் கலைக் களஞ்சியம், சிந்திக்க வேண்டிய முறையில் சிந்தித்துப் பார்க்காத போதே இவை தோற்றம் பெறுவதாகக் குறிப்பிடுகிறது.* மூடநம்பிக்கை என்பது மக்களின் அறிவு வளர்ச்சியை ஒட்டியே அமையும், அது மக்களின் அறியாமையின் அளவினை வெளிப்படுத்தும் எனலாம்.
உளவியலார், மூடநம்பிக்கை என்பது, மனிதனது மன நலத்திற்கும் சமுதாயத்தின் கட்டுக் கோப்புக்கும் இன்றியமையாத ஒன்றாகக் குறிப்பிடுவது இங்கு கருதத் தக்கதாகும்.'

Page 48
90 哆
சமூக நிகழ்வில் மூடநம்பிக்கை என்பது நிலையாக இருந்து வந்தள்ளது. பல நூற்றாண்டுகளைக் கடந்து பல நாடுகளைக் கடந்து இது தொடர்ந்து இருந்து வருவதாக மனித நாகரிகங்களை ஆராய்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்."
தென்னிந்திய மக்களிடையே குறிப்பாகத் தமிழ் மக்களிடையே பயில் நிலையில். உள்ள நாட்டுப்புற நம்பிக்கைகளைப் பொருள் அடிப்படையில் பலரும் பலவாறாக வகைப்படுத்தியுள்ளனர்.
தென்னிந்திய மக்களிடையே காணப்படும் நம்பிக்கைகளை ஜாவரே கெளடா (Javare Gowda), சமயம், புராணம், வீடு (பிறப்பு, இறப்பு, திருமணம், விருந்து), மருத்துவம், தொழில், இயற்கை, விலங்கு, மந்திரம், ஜோதிடம், கண்ணேறு எனப் பத்து வகையாகப் பாகுபடுத்துவார்.*
சு. சக்திவேல், நாட்டுப்புற நம்பிக்கைகளை, குழந்தை, பருவமடைதல், திருமணம், கர்ப்பிணிப் பெண், வேளாண்மை, மழை, விலங்கு, பறவை, விருந்தினர், எண், நட்சத்திரம், அங்கம், மச்சம், கிழமை, திசை, கோலம், விலக்கு, கடவுள், நோய், வீடு, உணவு, மரணம், பயணம், ஊழ்வினை, பிறவிக் கொள்கை, சோதிடம், கனவு, சகுனம், மந்திரம், இயற்கை உற்பாதச் சடங்கு, வழக்கங்கள், பல்பொருள் முதலான முப்பது தலைப்புக்களில் வகைப்படுத்தியுள்ளார்."
சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புற நம்பிக்கைகளை, உணவு, உடை, குழந்தை, திருமணம், குணங்கள், கனவு, வழிபாடு, பெண்கள், இறப்பு, நாள்" என வகைப்படுத்துவார். க.சாந்தி, மதம், மரம் செடிகொடி, விலங்கு, பறவை, குழந்தை, வான் பொருள், பொருள், மனித உடல், நாள், வாரம், காலம், கனவு, பல்வகை* எனவும் வகைப்படுத்துகிறார்.
முத்துசண்முகம், நம்பிக்கைகளை, வாழ்வியல் (The Life Cycle), குழந்தைகள் (Children), வீட்டு வாழ்க்கை (The Household), வழிபாடு (Worship) ஒய்வு முதலாகப் பத்து வகையாகப் பாகுபாடு செய்கிறார்.*
சா. வளவன், சமயம், விலங்கு, பறவை, குழந்தை, உடம்பு, நடத்தை, மரணம், கனவு, திசை, நாள், விண்ணுலகம்" என வகைப்பாடு செய்துள்ளார்.

8 91
தமிழ் மக்களிடையே பயின்று வரும் நம்பிக்கைகளைப் பொருள் அடிப்படையில் பலரும் வகைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறன வகைப்பாடுகளில் பாரிய வேறுபாடுகளைக் காணமுடியவில்லை. ஆய்வின் வசதி கருதி, நம்பிக்கையின் உட்கூறுகளை ஒருசாரார் சுருக்கமாகவும், மற்றொரு சாரார் விரிவாகவும் அமைத்துள்ளமையினை நோக்க முடிகிறது.
நம்பிக்கைகளின் வகைப்பாட்டினைப் பொறுத்தவரையில் நம்பிக்கை, மூடநம்பிக்கை என்றவாறாக வகைப்பாடு செய்வது பொருத்தமான ஒன்றாகத் தெரியவில்லை. ஒரு சமுதாயத்தின் நம்பிக்கை மற்றொரு சமுதாயத்தில் மூடநம்பிக்கையாகத் தென்படலாம்; அதேபோல ஒரு சமுதாயத்தின் மூடநம்பிக்கை மற்றொரு சமுதாயத்தில் நம்பிக்கையாகக் காட்சி தரலாம். எனவே நாட்டுப்புற நம்பிக்கைகளை அறிவியல் சார்ந்த நம்பிக்கைள் அறிவியல் சாராத நம்பிக்கைகள் என வகைப்படுத்துவதே பொருத்தமான அணுகுமுறையாகத் தெரிகின்றது.
நாவல்களில் நாட்டுப்புற நம்பிக்கைகள்
ஈழத்துத் தமிழ் நாவல்களில் குறிப்பாகப் பிரதேச நாவல்களில் (வட்டார வழக்கு நாவல்கள்) நாட்டுப்புற நம்பிக்கைகள் பலவும் கதை நகர்வுப் பின்னணியில் பயின்று வந்துள்ளமையினை நோக்கமுடிகிறது.
ஆய்வுக்குரிய நாவல்கள் பலவும் பல்வேறு பிரதேசங்களையும் தமது கதை விரிகளங்களாகக் கொண்டமைந்தள்ளன. நாவல்களின் கருப் பொருட்களை விரித்துக்கூற முற்பட்ட நாவலாசிரியர்கள், அவ்வப் பிரதேசங்களுக்கே சிறப்பாக உரிய நம்பிக்கைகளையும், பொதுவாக ஈழத்தமிழர்களிடையே பயில் நிலையில் உள்ள நம்பிக்கைகளையும் தத்தமது நாவல்களில் ஆவணப்படுத்திச் சென்றுள்ளமை கருதத் தக்கதாகும்.
நாவல்களின் வாயிலாகப் பல்வேறு நம்பிக்கைகளை
அறியமுடிகிறது. அவற்றைப் பின்வருமாறு முறைப்படுத்தி நோக்கலாம்.

Page 49
92 «Х•
1. பிறப்பு 12. நேர்ச்சை 2. Աւնւ! 13. சத்தியம்
3. திருமணம் 14. திட்டு, சாபம் 4. இறப்பு 15. பாவம், புண்ணியம், ஊழ், பழி 5. தீட்டு, துடக்கு 16. விதி 6. கண்ணேறு 17. அதிஷ்டம் 7. செய்வினை, சூனியம் வசியம் 18. சோதிடம்
8.கனவு 19. கிழமை 9. சகுனம் 20. மாதம்
IO. G. uuiu 21. எண்
II. 5–6)oft 22. வானியல்
பிறப்புத் தொடர்பான நம்பிக்கைகள்
மனிதனின் வாழ்க்கை வட்ட நடைமுறைகளில் பிறப்பு’ என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் காணப்படுகிறது. பிறப்புத் தொடர்பான பல்வேறு நம்பிக்கைகள்உலகின் பல்வேறு இனமக்களிடையேயும் வழக்கில் இருந்து வருகின்றன. பெண், கர்ப்பம் தரித்தவுடனேயே தொடங்கிவிடும் இந்நம்பிக்கைகள், அவள் குழந்தையை ஈன்றெடுத்த பின்பும் தொடர்கின்றன.
பிறப்புத் தொடர்பாக ஈழத்துத் தமிழர்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகளிற் சிலவற்றை நாவல்களிலே பார்க்க முடிகிறது.
குழந்தைப்பேறு என்பது, வாழ்க்கையில் கிடைக்கவேண்டிய பேறுகளில் பிரதானமான பேறாக அமைந்துள்ளது. மகப்பேறின்மைக்குப் பல்வேறு காரணங்களை இன்றைய விஞ்ஞான வளர்ச்சி சுட்டி நின்றாலும், நாட்டுப்புற நடைமுறைகளில் அவற்றுக்கும் மேலாகப் பல்வேறு காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன.
கிரகதோஷமும், பிள்ளைப்பேறும்
மகப்பேறின்மைக்கான காரணங்களில் கிரகதோஷம் தலையானதாகும். மரக்கொக்கு என்ற நாவலில் வரும் தலைமைப்

& 93
பாத்திரமான சிதம்பரப்பிள்ளை மணியகாரனுக்குப் புத்திரப் பாக்கியம் இன்மைக்கு கிரகதோஷமே காரணம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. வழிவழியே குவிந்துள்ள சொத்துச் சுகங்களை அனுபவிக்கப் பிள்ளை இல்லையே என்று ஏங்கிய மணியகாரன், சோதிடர்களை அணுக, அவர்கள் மனைவியானவளின் ஜாதகத்தை ஆராய்ந்து அவளுக்குத் தோஷம் இருக்கிறது எனக் கூறுவதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.*
மகப்பேறின்மைக்கு கிரக தோஷத்தைக் காரணமாக நம்பும் வழக்கம் ஈழத்தில் மட்டும் அல்லாது தமிழகத்திலும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழக வழக்காறுகள் பற்றி ஆராய்ந்த உருஷ்ய ஆராய்ச்சியாளர் விதாலி ஃபுர்னிக்கா, மகப்பேறின்மைக்கான காரணங்களில் ஒன்றாகக் கிரகதோஷத்தைக் குறிப்பிடுவதோடு, அதற்கு மேற்கொள்ளப்படும் பரிகார நடைமுறைகளையும் சுட்டுகின்றமை இவ்விடத்தில் கருதத் தக்கது.*
மனை அமைப்பும், பிள்ளை பேறும்
மனை அமைதல் என்பது சகலவிதமான நற்காரியங்களுக்கும் அடிப்படையானதாகக் கருதப்படுகிறது. மனை உதவுமாப்போல் மக்கள் உதவார் என்பது பரவலாக வழங்கப்படும் பழமொழி.
வீட்டின் அமைப்புக்கும், பிள்ளைப் பேறுக்கும் உள்ள தொடர்பு என்பது, ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தில் பிறப்புத் தொடர்பாக நிலவிவரும் நம்பிக்கைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதன் காரணமாக வீட்டில் வாழப்போகும் பெண்ணின் ஜாதக ஒலையைக் கருத்திற் கொண்டு மனைக்கு நிலம் எடுக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
கோவிந்தன் என்ற நாவலில், சண்முகம்பிள்ளையின் மனைவி சீதேவி அம்மாளின் பிள்ளைப் பேறின்மைக்குக் காரணம் அவர்களுடைய வீட்டின் அமைப்பே எனச் சுட்டப்படுகிறது. செவிட்டு ஐயரின் ஆலோசனைப்படி வீட்டின் சாமி அறையை மாறி அமைத்த சீதேவி அம்மாளுக்குப் புத்திரப் பாக்கியம் பற்றிய நம்பிக்கை வேர்விடத் தொடங்கிவிட்டதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது."

Page 50
94 ※
இத்தகைய நம்பிக்கைக்கான காரணம் ஒருவகையான உளவியல் தேற்றமே எனக் கருதலாம்.
நேர்ச்சையும், பிள்ளைப்பேறும்
பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் பல்வகையான நேர்த்திகள், விரதங்கள், தான தர்மங்கள் முதலானவற்றை மேற்கொள்வது என்பது பொதுவாகக் காணப்படும் நம்பிக்கையாகும்.
தண்ணிர் என்ற நாவலில், அன்னப்பிள்ளை நாச்சியார், பிள்ளைப்பேறு வேண்டிச் செய்த நேர்ச்சைகளை,
அன்னப்பிள்ளை நாச்சியாருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. அந்தப் பாக்கியத்தை அடைய அவள் செய்யாத முயற்சிகள் இல்லை. நேர்த்திகள், விரதங்கள், வல்லிபுர ஆழ்வாரையும் செல்வச் சந்நிதியானைம், நாகர் கோவிலானையும் வலம் வருதல்கள் ஆகிய தெய்வக் காரியங்களில் . அன்னதானம், வஸ்திரதானம், தர்ம காரியங்களில் ...*
எனக் கே. டானியல் தம் கூற்றாகச் சித்திரித்துள்ளமை இந்நம்பிக்கையின் பயில் நிலை முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. விரதங்கள், வலம் வருதல், உருளுதல் முதலான செயற்பாடுகளால் உடலியல் அளவில் ஏற்படும் மாற்றங்களினால் கொழுப்புக் கரைந்து, “கரு” உற்பத்தியாகும் என்பது மருத்துவ உலகிலும் ஏற்றுக்கொள்ளப்படும் தன்மை காணப்படுகிறது. இந்நம்பிக்கைக்கு இதுவும் ஒரு காரணமாகலாம்.
முழி விசேடமும், பிள்ளைப்பேறும்
பெண், கர்ப்பமாக இருக்கும்போது எவரிடத்து அதிகமாகக் கண் விழிக்கின்றாளோ அவர் சாயலிலேயே குழந்தை பிறக்கும் என்பது பிறப்புத் தொடர்பான நம்பிக்கையாகும்.
தண்ணீர் என்ற நாவலில், வீட்டு எசமானியாகிய அன்னப்பிள்ளை நாச்சியாருக்கும், அவர்களுக்குக் கார்ச் சாரதியாகப் பணிபுரிந்த நல்ல தம்பியனுக்கும் இடையில் ஏற்பட்ட தவறான

8 95
உறவால் பிறந்த குழந்தையானது நல்லதம்பியனைப் போலவே வாக்குக் கண்ணுடன் (மாறுகண்), அவனது சாயலில் பிறந்தது இதனை அவதானித்த மூத்ததம்பி நயினாருக்கு மனைவிமேல் சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது. மருத்துவிச்சியானவள் ‘முழிவியளப் பலனை எடுத்துக் கூறி அவரை நம்பச் செய்து விடுகிறாள்."
அடிமைகள் என்ற நாவலிலும் இதே நம்பிக்கையினை,
மரச் சேர்வைக்குச் சென்று, இவர்கள் வீடுகளிலே தொட்டாட்டு வேலைகள் செய்து செல்லப்பிள்ளைகளாக இருக்கும் சிலரைப்போல நயினாத்திகள் பெற்றெடுத்ததும் உண்டு. அவைகளெல்லாம் முழுவியளத்தின் மேல் தூக்கி வைத்துவிட்டவர்கள் பலரையும் அவள் அறிந்து வைத்திருந்தாள் ..."
எனக் கே. டானியல் மேற்படி நம்பிக்கையினைத் தமது நாவல்களில் சித்திரித்துள்ளார்.
தமிழக மக்களிடமும் இவ்வாறான நம்பிக்கை வழக்கில் உள்ளமை பற்றிப் பி. நாராயணன் குறிப்பிடுகிறார். கர்ப்பமான பெண்கள் ஆண் குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு இருந்தால் பிறப்பது ஆண் குழந்தையாக இருக்கும் என நம்பும் வழக்கம் தமிழக மக்களிடம் உள்ளமை இவ்விடத்தில் இணைத்து நோக்கப்படக் கூடிய ஒன்றாகும்."
இவ்வாறான நம்பிக்கையின் சாயல்கள் இன்றும் தொடர்வதனைப் பார்க்க முடிகிறது. படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடு இன்றிப் பலரும், கர்ப்பிணிப் பெண்கள் உறங்கும் படுக்கை அறைகளிலே அழகான குழந்தைகளின் படங்களை மாட்டி வைப்பது இந்நம்பிக்கையின் தாக்கத்தினாலேயே எனக் கூறலாம்.
கருவுறும் வேளையும், பிள்ளையின் நிறமும்
குழந்தையின் நிறத்துக்கும் கர்ப்பம் தரிக்கும் வேளைக்கும் தொடர்பு உண்டு என்பது நம்பிக்கையாக உள்ளது. பகலில் சனிக்கும் (உற்பத்தியாகும்) பிள்ளை வெள்ளைநிறமாகவும், இரவில் சனிக்கும் பிள்ளை கரியநிறமாகவும் பிறக்கும் என்பது ஒருவித நம்பிக்கையாக உள்ளது.

Page 51
96 必
சடங்கு என்ற நாவலில், தொழில் காரணமாகக் கொழும்பிலே வசிக்கும் செந்தில்நாதன் குறுகிய விடுப்பில் யாழ்ப்பாணம் வந்தபோது மனைவியைப் பகலில் உடல் உறவுக்கு அழைக்கிறார். பகல் வேளையைக் காரணம் காட்டி மனைவி மறுக்கவே நிறம் பற்றிய நம்பிக்கையை எடுத்துச் சொல்லி அவளை உறவுக்கு இணங்கவைக்கின்றார். தனது பிள்ளைகளில் மாலினி வடிவாகவம், வெள்ளையாகவும் இருப்பதற்குக் காரணம் அவள் பகலில் சனித்தமையே என அன்னலட்சுமி அபிப்பிராயம் கொள்கிறாள்.*
மேற்படி நம்பிக்கை இருட்டு, வெளிச்சம் என்ற அடிப்படையில் தோன்றிய ஒன்றாக உள்ளது.
வயிற்றுப் பருமனும், பிள்ளைப்பேறும்
கர்ப்பமுற்றுள்ள பெண்ணின் வயிற்றுப் பருமனைக் கணக்கிற் கொண்டு பிறக்கவுள்ள பிள்ளை ஆணா பெண்ணா என எதிர்வு கூறுவர். வயிற்றுப்பக்கம் வீங்கிப் பெருத்திருந்தால் பெண்பிள்ளை என நம்புவர்.
கானல் என்ற நாவலில், தங்கையிடம் போய் வந்த இளையவனிடம் அவளின் வயிற்றைப் பற்றி வினவும் அண்ணி, திரேசிக்கு வயிறு பெரிசாக்கிடக்கோ தம்பி? சிறிசாக்கிடக்கோ, பெரிசாக்கிடந்தா பெட்டை எண்டு சொல்லுறவை.* எனக் குறிப்பிடுகின்றாள். இந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களிடமும் வழக்கில் உள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.* பிறக்கும் குழந்தைகளின் பருமனைக் கொண்டு இந்நம்பிக்கை உருவாகியிருக்கலாம். எதிர்வு சரியாக அமையவே இந்நம்பிக்கையும் நிலை பெற்றிருத்தல் வேண்டும்.
*கனத்த’ நாட்களும், பிள்ளைப் பேறும்
கர்ப்பிணிப் பெண்கள் அமாவாசை, பெளர்ணமி, அட்டமி, நவமி முதலான கனத்த நாட்களிலே பிரசவிப்பர் என்பது நம்பிக்கையாக உள்ளது.
முருங்கையிலைக் கஞ்சி என்ற நாவலில், மகனின் வேலை விடயமாகக் கொழும்பு சென்ற ஆறுமுகத்தார், மனைவியின்

& 97
பெறுமாதத்தையும், அடுத்துவரும் கனத்த நாளையும் கருத்திற்கொண்டு உடனேயே, ஊர் திரும்பிவிடுகிறார்.* இவ்வாறு சித்திரிக்கக் காரணம் பிரசவம் பற்றிய மேற்படி நம்பிக்கையே எனலாம்.
சவரஞ் செய்தலும், பிள்ளைப் பேறும்
மனைவி கர்ப்பமாக இருந்தால், பிள்ளைப்பேறுவரை கணவன் சவரஞ் செய்யாமல் தாடி வளர்த்தல் என்பது நாட்டுப்புற மக்களிடையே இன்றுவரை காணப்படும் நம்பிக்கையாகும்.
கோவிந்தன் என்ற நாவலில் சண்முகப்பிள்ளை நயினாருக்கு வழக்கமாகச் சவரம் செய்யும் கணவதியின் சிலநாட்கள் தாமதித்து வந்தபோது தன்னுடைய மனைவி வாயிலும் வயித்திலும்’ என்றா இவ்வளவு நாளும் வரவில்லை? என சண்முகம்பிள்ளை நயினார் கேட்கிறார்."
மனைவி கருவுற்றிருக்கும்போது கணவன் தாடி வளர்க்கும் நம்பிக்கை, நடைமுறை தமிழக மக்களிடமும் வழக்கில் உள்ளமை கருதத் தக்கதாகும்.'மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, சவரம் செய்கையில் முகத்தில் வெட்டுக்காயம் வரின் குழந்தை பிறக்கும் போது இரத்தக்காயம் ஏற்படும் என்று தவறான நம்பிக்கையே இதற்குக் காரணம் எனலாம்.
பிள்ளையின் நட்சத்திரப் பலன்
குழந்தை பிறந்தவுடன் பிறந்த நேரம், நாள், ஆண்டு முதலானவற்றைக் கருத்திற்கொண்டு சோதிடர் மூலம் ஜாதகம்’ எழுதுவிக்கும் வழக்கமும், அந்த ஜாதகத்தின் பலனுக்கு ஏற்பக் உறுப்பினர்களுக்கு நன்மை, தீமை விளையும் என்ற நம்பிக்கையும் உலகின் பல்வேறு இனமக்களிடையேயும் வழக்கில் உள்ளன.
கிரேக்க, உரோமானிய இன மக்கள் நட்சத்திரங்களின் அமைப்பைக் கொண்டு எதிர்காலத்தைப் பற்றி அறிந்தார்கள் என்றும், அனைத்துக் குழந்தைகளுக்கும் அவை பிறந்த பின்பு ஜாதகங்கள் எழுதப்பட்டன என்றும் குறிப்பிடும் வில்டூரான்ட், பதினான்காம் லூயி பிறக்கும்போது அவரது தாயாரின் படக்கையறை அருகே ஒரு

Page 52
98 «Х•
சோதிடர் மறைத்து நிற்க வைக்கப்பட்டமை பற்றியும் குறிப்பிடுகிறார்.* இதிலிருந்து உலகளாவிய நிலையில் இந்நம்பிக்கைபெறும் முக்கியத்துவத்தினை உணர்ந்து கொள்ளலாம்.
பஞ்சமர் என்ற நாவலில், அடுக்கடுக்காகப் பல்வேறு துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும் ஆட்பட்ட வேலுப்பிள்ளைக் கமக்காரன், அதற்குக் காரணம் இலண்டனில் பிறந்த தமது பூட்டனின் பலனே என அமைதி கொள்கிறார். இதனை.
பூட்டன் பிறந்த நட்சத்திரப்பலன் சரியாய் இல்லைப் போல கிடக்கு .
ம் . என்ன செய்யிறது வேலுப்பிள்ளைக்கு இலண்டனில் பூட்டன் பிறந்த நட்சத்திரப்பலன் .
எல்லாம் பூட்டன் பிறந்த நட்சத்திரப்பலன்
ஏன் வெள்ளைக்காரச் சாத்திரி எழுதினதில என்ன பிழையிருக்கு? எங்களுக்கு நடக்கிறதைப் பார்த்தா அவன்ர குறிப்பு சரியாத்தானே கிடக்கு இஞ்சை பாருங்கோ .*
என்றவாறாகப் பல்வேறு இடங்களிலும் அழுத்திக் குறிப்பிடுகின்றார் கே. டானியல்.
போர்க்கோலம் என்ற நாவலில், தனது வயிற்றுப் பிள்ளை மூலம் தகப்பனுக்குக் கெட்டகாலம் ஒன்று மாறி ஒன்றாய் வரும் எனச் சோதிடர் மூலம் அறிந்த பார்வதி, அதனை இராசாத்தி என்பவளிடம் சொல்லிக் கவலை கொள்கிறாள்.*
ஜாதகம் எழுதுவது, பலன் பார்ப்பது ஆகியன தமிழக மக்களிடமும் வழக்கில் உள்ள நம்பிக்கைகளாகும். இது பற்றிச் * சோதிடம் பற்றிய நம்பிக்கை’ எனும் தலைப்பிலே விரிவாகக் காணலாம்.
பிள்ளைப் பொருத்தமும், விற்று வாங்குதலும்
பிறந்த குழந்தையின் ஜாதகமும், பெற்றோரின் ஜாதகமும் பொருந்தி வராவிடின் அக்குழந்தையை ஏதாவது ஒரு கோவிலில்

«Х» 99
விற்று மீளவும் வாங்கிக் கொள்வர். இவ்வாறு செய்வதன் மூலம் குறித்த குழந்தை புதியதொரு பிறப்பெடுப்பதாக நம்பப்படுகிறது.
காவோலை என்ற நாவலில், சுப்பிரமணியபிள்ளை தனது மகன் கனகவடிவேலைக் கோவிலிலே விற்று வாங்கியதன் மூலம் பெற்றுக் கொண்ட திருப்தி பற்றிச் செங்கையாழியான் சித்திரித்துள்ளார்."
குழந்தைகளைக் கோவிலில் விற்று வாங்குவதன் மூலம் புதிதாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்ட உணர்வும், கோவிலுக்குக் காணிக்கை செலுத்திய நிறைவும் பெற்றோர்க்குக் கிடைக்கிறது. இவை உளவியல் நிலையில் அவர்களைத் தேற்றுவிக்கின்றன எனக் கருதலாம்.
பூப்புத் தொடர்பான நம்பிக்கைகள்
வாழ்க்கைப் பருவமாற்றுச் சடங்குகளில் பெண்ணைப் பொறுத்தவரையில் ‘பூப்பு’ சிறப்பிடம் பெறுகிறதெனலாம். பிரிவுநிலை (Separation), மாற்றயிடையீட்டுநிலை (Transition), கூட்டுஇணைப்புநிலை (Incorporation) ஆகிய மூன்று நிலைகளிலும் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் வழக்கில் இருந்து வருகின்றன.
ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தில் பூப்புத் தொடர்பாகப் பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஆயினும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நாவல்களில் இது தொடர்பான நம்பிக்கைகள் அதிக அளவில் ஆவணப் படுத்தப்படாத நிலையே காணப்படுகிறது.
பூப்படைந்த பெண்ணின் பரிசுத்தம்
தண்ணிர் பெண், உடல், உளநிலைகளில் பரிசுத்தமானவளாக இருந்தால் பூப்புச்சடங்குக்குத் தயாரிக்கப்படும் விருந்துணவு மிகவும் வாசனையாக இருக்கும். இதனை,
பூப்படைந்த பெண், உடல், உறநிலைகளில் பரிசுத்தமானவளாக
இரந்தால் பூப்புச் சடங்குக்குத் தயாரிக்கப்படும் விருந்துணவு மிகவும் வாசனையாக இருக்கும். இதனை,
புழுங்கல் அரிசிச்சோறு வாசனையாக இருந்தது. கறிகளின் தாளிப்பு வாசனையும் சேர்ந்து கொண்டு புத்தியறிந்தவளின் பரிசுத்தத் தனத்தை வெளிப்படுத்திய ..."

Page 53
100 X
என ஆசிரியர் கூற்றாகவே கே. டானியல் குறிப்பிடுவது கருதத்தக்கதாகும். இந்நம்பிக்கைக்கான அடிப்படையினை ஊகித்துக் கொள்ள முடியவில்லை.
திருமணம் தொடர்பான நம்பிக்கைகள்
சடங்குகள் யாவிலும் மனித வாழ்வைப் பெரிதும் பாதிப்பது திருமணச் சடங்கே எனலாம். ஏனைய சடங்குகளைப் போலவே திருமணம் குறித்தும் பல்வேறு நம்பிக்கைகள் வழக்கிலிருந்து வருகின்றன.
ஜாதகப் பொருத்தம்
திருமணம் என்ற பந்தத்திலே இணை சேருகின்ற சோடியினரிடையே ஜாதகப் பொருத்தம்’ என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஒருவரை ஒருவர் விரும்பிச் செய்கின்ற காதல் திருமணத்தைத் தவிரப் பெரியவர்களால் நிச்சயிக்கப்படுகின்ற மண ஏற்பாட்டில் ஜாதகப் பொருத்தம்’ வலுவாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தில் இந்நம்பிக்கை ஆழமாக வேரூன்றியுள்ளது. இச்சமூகத்தில் திருமணத்தைப் பொறுத்தவரை முறையே ஜாதகம் மற்றும் குடும்பப் பொருத்தம் ஆகியன முதலில் முக்கியப் படுத்தப்படுகின்றன.
சடங்கு என்ற நாவலில், பொன்னம்பலத்தாரின் மகளான பத்மாவின் திருமணப் பேச்சில் ஜாதகப் பொருத்தமின்மை பெரிய பிரச்சினையை ஏற்படுத்துகிறது. அத்துடன் மணப்பெண்ணின் ஜாதகத்தைக் கணிப்பதில் நேர்ந்துள்ள தவறையும் இராசதுரையர் சுட்டிக் காட்டுகிறார்."
முருங்கையிலைக் கஞ்சி என்ற நாவலில், வள்ளிப்பிள்ளை தன் மகனான மூத்தவனை வீரசிங்கத்தாரின் மகளுக்கு மணம் முடித்துவைக்க வேண்டும் என வற்புறுத்தியபோது, அவளின் கணவனான ஆறுமுகத்தார் ஜாதகம் பொருந்தினால் மட்டுமே திருமணத்தை நிச்சயிக்கலாம் எனத் தடை போடுகிறார்.*

8- 101
செவ்வாய் தோஷம்
ஜாதக அமைப்பில் செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு அதற்கு இணையான தோஷமுள்ள ஒருவரையே இணைசேர்க்க வேண்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
செவ்வாய் தோஷம் என்பது இலக்கினம், ஏழு, எட்டாம் இடங்களில் செவ்வாய் இருப்பதாகிய தோஷம் என்பர்.*செவ்வாய்க் குற்றமுள்ள ஒருவருக்கு, குற்றம் இல்லாதவரைத் திருமணம் செய்துவைத்தால் உயிர் ஆபத்து, திருமணப் பிரிவு, குழந்தையின்மை ஆகியன ஏற்படுவது நிச்சயம் என நம்புகின்றனர்.
செவ்வாய்க் குற்றமுள்ளவருக்கு இணை தேடுவது மிகவும் சிரமமான காரியம். ஏதாவது ஒரு குறையுடனேயே இணை அமையும். இதனைத் தண்ணிர் என்ற நாவலிலே, அழகிலும், பொருளிலும், சாதி மரபிலும் மிகவும் உயர்ந்தவளான அன்னப்பிள்ளை நாச்சியார், இவற்றில் தாழ்ந்தவரான மூத்ததம்பி நயினாருக்கு மனைவியாக நேரிட்டதற்குக் காரணமாகச் செவ்வாய்க் குற்றத்தினை இந்நாவலாசிரியர் காட்டுகின்றார்.*
கிடுகுவேலி என்ற நாவலிலே, வயதும், இளமையும் உள்ள பவளம் என்பவளின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுள்ள ஒரே காரணத்தால் முப்பது வயதைக் தாண்டியும் அவளுக்குத் திருமணம் முடிக்க முடியாத நிலையில் உள்ளதனைச் செங்கையாழியான் சித்திரித்துள்ளார்."
திருமணத்துக்கான மாதம்
திருமணத்துக்கான மாதத்தைத் தேர்வு செய்வதிலும் சில நம்பிக்கைகள் காணப்படுகின்றன. இவ்வாறான நம்பிக்கை உலகப் பொதுவானதாகக் காணப்படுகிறது.
வைகாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் திருமணங்கள் வருத்தத்தில் முடியும் என மேலை நாட்டினர் நம்பிக்கை கொண்டிருந்தமை பற்றி வில்டூரான்ட் குறிப்பிடுவது கருதத் தக்கதாகும்."

Page 54
102 «Х•
பொதுவாக ஆடி மாதத்தை நல்ல காரியங்களுக்குரிய மாதமாகத் தேர்வு செய்யாத நிலை காணப்படுகிறது. ‘ஆடி கூடிவராது’ என்பது நம்பிக்கையாக உள்ளது. தமிழக மக்களும் நல்ல காரியங்களை ஆற்றுவதற்கு இந்த மாதத்தைத் தவிர்த்தே வருகின்றனர்.*ஆனியில் திருமணப் பேச்சை முடித்து, ஆவணியில் திருமணம் செய்வது பரவலாகக் காணப்படும் வழக்கமாக உள்ளது. இந்நடைமுறை பற்றி நிலக்கிளி என்ற நாவலில் செய்தி கிடைக்கிறது.*
திருமணத்துக்கு நாள் குறிக்கையில் மணமக்கள் பிறந்த மாதங்களைத் தவிர்ப்பது என்பது ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தினரிடையே கண்டிப்பாக நடைமுறைப் படுத்தப்படும் வழக்கமாக உள்ளது. பிறந்த மாதங்களில் திருமணம் செய்தால் மணவாழ்க்கை சிறக்காது என நம்புவதே இதன் அடிப்படையாகும்.
சடங்கு என்ற நாவலில் இராசதுரையர், தம் மகனுக்குத் தைமாதத்தின் திருணமத்தை வைக்கும்படி மணமகளின் தந்தையான கந்தையாவை வற்புறுத்த, அவரோ அம்மாதம் தமது மகளின் பிறந்தமாதம் எனக் கூறி அதனை நிராகரித்து விடுகிறார்."
திருமண நாள்
திருமணத்துக்கான கிழமையினைத் தேர்வு செய்வதிலும் சில நடைமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன.
திருமணத்துக்கான நாள்களில் ‘புதன் கிழமை சிறப்பானது என்று நம்பப்படுகிறது. சடங்கு என்ற நாவலில், தாலிக்குப் பொன்னுருக்குதல், திருமணத்துக்கு வேண்டிய பொருட்களை வாங்குதல், நாளுக்கு வேள்வு கொண்டு போதல் முதலான அனைத்துச் சடங்கு நடைமுறைகளுக்கும் புதன் கிழமையினையே திட்டமிட்டுத் தேர்வு செய்துள்ளமை பற்றி அறிய முடிகிறது." தண்ணீர் என்ற நாவலிலே கே. டானியலும் இந்நம்பிக்கைபற்றிக் குறிப்பிடுவார்." பொன்கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது ஆய்வுப் பிரதேசத்திலும் தமிழகத்திலும் பிரபலமான ஒரு பழமொழியாகும்.
திருமணத்துக்குப் பொருத்தமான விசேடமான நாள் அமையாவிடில், அவசரமான திருமணமெனில் அதனைப் பொது நாளொன்றில் நிறைவேற்றுவர்."

கோவிலில் தாலி கட்டுதல்
திருமணத்தை ஆண்டவன் முன்பாகக் கோவிலில் நிறைவேற்றுவதனைப் பலரும் விரும்புகின்றனர். இதன் மூலம் திருமணத்துக்குத் தெய்வக் கிருபை கிடைக்கும் என நம்புகின்றனர்." ஆயினும் அண்மைக் காலங்களில் இம்மரபு வேகமாக மாறிவருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மாற்றுச் சம்பந்தம்
மாற்றுக்கு மாற்றாக ஒரே குடும்பத்தில் மணமக்களை எடுத்துக் கொள்வது மாற்றுச் சம்பந்தம்’ என அழைக்கப்படுகிறது. இவ்வாறு ஒரே குடும்பத்தில் திருமண உறவை வைத்துக் கொண்டால் ஒரு குடும்பம் தாழும், மறுகுடும்பம் வாழும் என்ற நம்பிக்கை வலுவாக வேரூன்றி உள்ளது.
தங்கையோ, தமக்கையோ வாழாவெட்டியாக அல்லது கொடுமைக்கு உட்படுபவளாக உள்ளபோது, தம்பியோ, தமையனோ, தன்மனைவியை, அவள் நல்லவளோ, கெட்டவளோ அவளை வேண்டுமென்றே பழி வாங்குகின்றான். இதுவே இந்நம்பிக்கையின் அடிப்படையாகும். துன்பமான விடயங்கள் எதுவும் இரண்டு குடும்பங்களையும் தன்பத்தில் ஆழ்த்திவிடும் என்பதும் இந்நம்பிக்கையின் பிறிதொரு அடிப்படையாகலாம்.
செ.கணேசலிங்கன் சடங்கு என்ற நாவலில், இவ்வாறான உறவுச் சிக்கல் பற்றி மிகவும் துல்லியமாகச் சித்திரித்து உள்ளார். தன் தங்கை ஈஸ்வரியைப் பரமநாதன் மகிழ்ச்சியாக வைத்திருக்காததைக் கண்ட சிவஞானம், தனது மனைவியான பரமநாதனின் தமக்கை பத்மாவைக் கொடுமைப் படுத்தப் போவதாக நேரிடையாகவே எச்சரிக்கை செய்கிறான்."
இறப்புத் தொடர்பான நம்பிக்கைகள்
வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இறுதியாக அமைவது இறப்புச் சடங்காகும். 'இறப்பு’ என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இறப்பு ஏற்படும் விதம், அதன் தன்மைகள் பற்றிப் பல்வேறு விதமான நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

Page 55
104 «Х•
இறப்பும், சகுனமும்
இறப்புத் தொடர்பான நம்பிக்கைகளில் இறப்பு நிகழ்வதற்கான நிமித்தங்கள் குறித்த நம்பிக்கைகள் தனியிடம் பெறுகின்றன.
நினைத்தவுடன் தோன்றுதல்
ஒருவரைப் பிறர் நினைக்கும் போது, குறிப்பிட்டநபர் நினைத்தவர் முன்னே எதிர்பாராத விதத்தால் உடனே தோன்றின் அவருக்கு ஆயுள் கெட்டி என்பது நம்பிக்கையாக உள்ளது. தண்ணீர் எனும் நாவலில்,
இஞ்சைபார் இவளுக்குச் சாவில்லை, இப்பானெடி
பம்பிடிசிங்கி உன்ரைகதை கதைச்சனான். . . ."
என ஆறுமுகத்தார், பம்பிடிசங்கி பற்றிச் செல்லாச்சிக் குஞ்சியிடம் வினவவும், அவள் முன்னே தோன்றவும் நேரம் சரியாக அமைந்து விடுகிறது. இவ்வாறான நம்பிக்கை தமிழக மக்களிடமும் வழக்கில் உள்ளமை கருதத் தக்கதாகும்." தமிழகத்தில் இத்தகைய நிலையில் நேரில் தோன்றுபவர்க்கு ஆயுசுநூறு என வாழ்த்தும் மரபு காணப்படுகிறது.
அதிக விளைச்சல்
அதிகமான மழை, அதிகமான விளைச்சல் என்பன இறப்பைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. இதனைச் ‘சாவிளைச்சல்” என்று குறிப்பிடுவர்.
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து எனும் நாவலில், முத்தையா அம்மானுக்கும், தம்பிராசாவுக்குமிடையே நடைபெற்ற உரையாடலில் இந்நம்பிக்கை வெளிப்பட்டு நிற்கிறது.
இந்த மழை நல்லதுக்கில்லைப் போலத்தான் இருக்குது. இந்த முறை வெள்ளாண்மை சரிவரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. வழமையிலும் பார்க்க இம்முறை பயிர்கள் நல்லா இருந்தது. கதிர் நல்லாத் தள்ளி மதர்த்து இருந்தது. சாவிளைச்சல் மாதிரி. எல்லாரும் தலையில் கையவைக்க வேண்டியதுதான்."

இவ்வாறான நம்பிக்கை திமிழக மக்களிடமும் பயில் நிலையில் உள்ளமை பற்றிப் பலரும் எடுத்துக்காட்டியுள்ளமை கருதத் தக்கதாகும்."
கன்னிநாகு கனைத்தல், நாய்குரைத்தல், வம்புக்காய் வீழ்தல்
கன்னிநாகு கனைத்தல், நாய்குரைத்தல் இரண்டும் ஒன்றாக நடைபெற்றால் குறித்த வீட்டில் மரணம் நிகழும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
கானல் என்ற நாவலில், தம்பாப்பிள்ளையர், தன் மனைவியை அடித்து உதைக்கும் போது அவரின் வளர்ப்பு நாயும், கன்னி நாகுவும் ஒரே நேரத்தில் குரல்வைத்தன. இதனை வெள்ளைச்சியம்மாளின் உயிரைக் கொண்டு செல்ல இயமன் வந்துவிட்டுப் போன அடையாளமாகக் கே. டானியல் சித்திரித்துள்ளமை கருதத் தக்கதாகும்.
இஞ்சேரப்பா அறுவான் அந்த மனுசியை அடிச்சுக் கொண்டு போட்டான் போலைகிடக்கு புங்கைபாரப்பா, நாயும் குலைக்குது, கன்னிநாகும் கத்துது. இயமன் வந்திட்டுப் போறான் போலகிடக்கு ..."
பருவம் தப்பி மரங்களில் காய் உண்டானால் அதனை வம்புக்காய் என அழைப்பர். இவ்வாறு காய்ப்பதோ, இடையில் அது வீழ்வதோ இறப்பைக் கொண்டு வரும் என்பது நம்பிக்கையாகும். கழுகுகள் எனும் நாவலிலே, ஆறுமுகத்தாரின் மரணத்துடன் வம்புக்காய் வீழ்வதனைத் தொடர்புறுத்திச் சித்திரிக்கப்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது."
வளர்ப்புப் பிராணியாகிய நாய்க்கு எமன் வருவது பற்றித் தெரியும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடமும் உண்டு.?
சுமையுடன் இறத்தல்
கர்ப்பிணிப்பெண் வயிற்றுப் பிள்ளையுடன் இறக்க நேரிடின், அவளின் வயிற்றைக் கிழித்துப் பிள்ளையை எடுத்த பின்பே அடக்கம் செய்வர். அவ்வாறு செய்யாவிடின் பிள்ளையின் தந்தைக்கு ஆபத்து

Page 56
106 ※
நேரிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனை நாட்டுப்புற வழக்கில் சுமையிறக்கல் சடங்கு என வழங்குவர்.
தண்ணிர் என்ற நாவலில், வயிற்றுப் பிள்ளையுடன் இறந்து போன தெய்விக்குச்சுமையிறக்கற் சடங்கு செய்ய மூத்ததம்பிநயினார் காட்டும் அக்கறை இந்நம்பிக்கையினைப் புலப்படுத்தி நிற்கிறது.
சொடுகன்! உன்ரைமோள் சுமையோட போட்டாள். அங்கால அவளின்ர சுமையை இறக்க ஆளில்லாமல் அவள் அந்த ரிச்சுப் போவாள். அது அவளின் வயித்திலை இருக்கிற பிள்ளையின்ரை தேப்பனுக்குத்தான் கூடாது. அதுதான் நான் சொல்லுறன். சவக்கிடங்குக்கை வைச்சு சுமையை இறக்கிப்போடு ..."
என வரும் உரையாடற்பகுதி மேற்படி நம்பிக்கையினை வெளிப்படுத்துவதாக அமைகிறது. குழந்தை பெறமுடியாமல் கர்ப்பிணிப் பெண்கள் இறக்க நேரிடின் அவர்களின் வயிற்றைக் கிழித்துப் புதைக்கும் வழக்கம் செங்கை மாவட்டப் பகுதியில் வழக்கில் உள்ளமை பற்றி அ.இராசேந்திரன் குறிப்பிடுவதும் இங்கு கருதத் தக்கதாகும்."
இறப்பின் பின்பு தெய்வமாகுதல்
இறப்பவர்கள் இறப்பின் பின்னர் தெய்வமாகிவிடுவர் என நம்பப்படுகிறது. பஞ்சமர் என்ற நாவலில், காதலில் தோல்வி கண்டு இறந்து போனவர்கள் பற்றிப் பிறர் குறைவாகக் கதைத்தபோது
அவர்கள் செத்துத் தெய்வம் ஆகிவிட்டார்கள் அவர்களைப் பற்றிக் குறைவாகக் கதைக்க வேண்டாம்"
எனப் பொன்னி தடைபோடுகிறாள்.
கானல் என்ற நாவலில், தம்பாப்பிள்ளையின் மனைவி வெள்ளைச்சியம்மாள் குழந்தை பெற்றுக் கொண்டதில் உள்ள முறைகேடு பற்றி அவளின் இறப்புக்குப் பின்னர் விவாதம் செய்வதை
சும்மா நாக்கில் நரம்பில்லாமல் எங்களுக்கேன் வீண்கதையளை? அந்த மனிசியும் செத்தும் தெய்வமாய்ப் போச்சு?

8- 107
எனப் பலரும் தடுப்பதாக வரும் உரைப்பகுதியிலும், சடங்கு என்ற நாவலில்,
இப்ப அது பிணமில்லை, தெய்வமாக வைச்சுத்தான்
நாங்கள் எல்லா இறுதிச்சடங்குகளும் முறைப்படி செய்வம்
77
என வருகின்ற உரைப்பகுதியிலும் இந்நம்பிக்கைபற்றிக் குறிப்பிடப்படுகிறது.
இறப்பும், கிழமையும்
ஒருவர் இறக்கும் நாளைக் கருத்திற் கொண்டு நல்லது, கெட்டது பார்க்கும் நம்பிக்கை காணப்படுகிறது.
ஞாயிற்றுக் கிழமையில் ஒருவர் இறக்க நேரிடின் மிகவும் நன்று என்பது நம்பிக்கையாக உள்ளது கழுகுகள் என்ற நாவலில்,
எடியே இவன் முகத்தான் நல்லசா செத்திருக்கிறானடி!
இண்டைக்கு ஞாயிற்றுக்கிழமையெல்லே! ஞாயிறுசெத்து
திங்கள் எடுக்கிறது இன்னும் நல்லதெண்டு சொல்லுகினம்
78
என வரும் பகுதி ஞாயிற்றுக் கிழமையில் ஆறுமுகத்தார் இறந்ததன் விசேடம் பற்றி விளக்குவதாக அமைகிறது.
சனிக்கிழமையில் ஒருவர் இறப்பதை நல்ல விடயமாகக் கருதுவதில்லை. சனிப்பிணம் தனிப்பிணமாகப் போகாது என்று நம்புவதே இதற்குக் காரணமாகும்.
திருப்புப் பாடுதல்
நோய் கண்டவர் வதைபடாமல், அவருடைய உயிரை, ஆன்மாவை இறை கவனத்தில் செலுத்ததலே திருப்புப்பாடுதலாகும். உலகியல் துன்பத்தினின்று விடுபட்டு இறைவனை அணுகுவதற்குரிய வகையில் இறைப்பாடல்களை பாடுவர்.

Page 57
108 x
இதனால் ஏற்படும் கவனமாற்றமே திருப்பாகும். தேவார திரவாசகங்களைத் திருப்பாகப் பாடுவர். திருப்புப் பாடிக் கொண்டிருக்கையில் உறவு உரித்துக்காரர்கள், மூச்சுவிடக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவரின் வாயில் பாலை வார்ப்பர். அதற்கும் உயிர் பிரியவில்லை எனின் குறிப்பிட்டவரின் ஆவியானது, மண், பொன் ஆகியவற்றின்மீது ஆசை கொண்டுள்ளதாகக் கருதி அவற்றையும் உரைத்து வாயில் ஊற்றுவர்."
மூச்சுவிடக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பவரின் தொண்டை குழிக்குள் மண் துகள்கள் சென்றதும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்துவிடுவார். இது ஒரு வகையான கருணைக் கொலையாக உள்ளது எனலாம். இறக்கும் முன்பு ஒருவர் விரும்பும் பொருளைக் கொடுத்தால் உயிர் எளிதில் பிரியும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடமும் உள்ளமை கருதத் தக்கதாகும்."
இறப்புச் சடங்கு
இறப்புச் சடங்கில் குறைவைத்தால் இறந்தவரின் ஆன்மா
பேயாகி வீட்டைச் சுற்றித்திரியும் என்றும், உறவினர்க்குக் கேடு விளைவிக்கும் என்றும் நம்பப்படுகிறது.
சடங்கு என்ற நாவலில், இறப்புச் சடங்கைச் சுருக்கி விரைவில் உடலைத் தகனம் செய்ய வேண்டியபோது, அவ்வாறு செய்வதனால் உண்டாகும் விளைவு பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.* இந்நம்பிக்கை இன்றுவரை பயில்நிலையில் உள்ளமை கருதத் தக்கதாகும். தமிழக மக்களிடமும் இந்நம்பிக்கை வழக்கில் உள்ளது.*
ஆண்கள் உரலில் குந்துதல் (உட்காருதல்)
ஆண்கள் உரலில் குந்துதல் அபசகுனமாகக் கொள்ளபடுகிறது. சடங்கு என்ற நாவலில், மனைவி அன்னலட்சுமியுடன் பேசும்
ஆவலில் அருகில் இருந்த உரலில் உட்காரச் சென்ற கணவனை அவள் தடுத்துவிடுகிறாள்"
உரலில் கால் வைப்பது, வெறும் உரலை இடிப்பது முதலான செய்கைகள் மரணத்துடன் தொடர்புடைய சகுனங்கள் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடமும் வழக்கில் உள்ளது.*

இறந்தவரை உரலில் வைத்துக் குளிப்பாட்டுதல், இறப்புச் சடங்கில் சுண்ணம் இடித்தல் ஆகிய செயற்பாடுகள் ‘உரல் தொடர்பான இந்நம்பிக்கையினை ஏற்படுத்தி இருக்கலாம்.
தீட்டு, துடக்குத் தொடர்பான நம்பிக்கைகள்
பிறப்பு, பூப்பு, இறப்பு முதலான பல்வேறு நிகழ்வுகளின் போது தீட்டு,துடக்குக்காக்கும் பண்பு உலகின் பல்வேறு இன மக்களிடமும் காணப்படும் நம்பிக்கையாக உள்ளது. தீட்டுக் காலங்களில் தீட்டுடையோர் வீட்டுக்குள்ளேயும், வெளியேயும் பல்வேறு விதமான நிகழ்வுகளிலிருந்தும் விலக்கி (Taboo) வைக்கப்படுகிறார்கள்.
மேலைத்தேய மரபில் தீட்டும்,துடக்கும்
தீட்டுப்பற்றிய நம்பிக்கை என்பது மேலைத்தேயத்து மக்களிடையேயும் பரவலாகக் காணப்படுகிறது. சைபீரியா (Siberia) வைச் சேர்ந்த “கோலோஷ்’ (Kotosh) இனமக்களும், கோபக் (Kobak) நதிக்கரையில் வாழும் எஸ்கீமோக்களும் (Eskimos) பூப்பின் போது பெண்களைத் தனியான குடிசைகளில் விலக்கி வைக்கும் வழக்கத்தை உடையவர்களாகக் காணப்படுகின்றனர்.*
ஆப்பிரிக்கப் பழங்குடிகள், பூப்படைந்த பெண்ணைத் தீட்டுடையவளாகக் கருதித் தனியான குடிசைகளிலே விலக்கி வைத்துக் கொள்ளும் பண்புடையவர்கள் எனப் பிரேசர் குறிப்பிடுவது கருதத் தக்கதாகும்."
தமிழ் மரபில் தீட்டும், துடக்கும்
பிறப்பு, பூப்பு, இறப்பு முதலான பல்வேறு சந்தர்ப்பங்களில் துடக்குப் பேணும் மரபு இந்தியர்களுக்கும், சிறப்பாகத் தமிழர்களுக்கும் உரிய பொதுவான வழக்கமாகும்.
சங்க இலக்கியங்களிலே மகப்பெற்ற புனிற்றுமகளிர், நீராடுதல் மூலம் தங்களின் தீட்டினைப் போக்கிக் கொண்டமை பற்றிய செய்திகள் கிடைக்கின்றன." மகப்பெற்ற தாய், வாலாமை காரணமாகக் குறிப்பிட்ட கால எல்லைவரை தனித்துப் பிறரைத்

Page 58
110 «Х•
தீண்டாமலும் பிறர் உண்ணும் கலங்களைத் தீண்டாமலும் வாழ்ந்து வந்தமை பற்றி அறியலாம். சிலப்பதிகாரத்தின் அடைக்கலக் காதையிலும் வாலாமை என்ற சொல்லாட்சி பயின்றுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
வால் > வெண்மை-வாலுளைப் புரவி
தூய்மை தூய்மை செய்யப் பயன்படும் விலங்கின் உறுப்பு-வால்
வால் வாலாமை-துய்மையின்மை
குழந்தையைப் பெற்ற தாயும், வீடும், வீட்டுப் பொருட்களும் பதினைந்து நாட்கள் வரை தீட்டாகக் கருதப்படும் மரபு இன்றும் தொடர்கின்றது.*
புறநானூற்றுச் செய்யுள் ஒன்றில் முருகன் கோட்டத்திற்குக் கலந்தொடா மகளிர் புகாத நிலை பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. பூப்புக்காலத்தில் பெண்கள், தீண்டத்தகாதவர்கள் மட்டுமல்ல, நெருங்குதற்கும் ஆகார்; வீட்டுப் பாத்திரங்களைத் தொடக்கூடாது முதலான செய்திகளை இப்பாடல் விளக்கி நிற்கிறது.*
கி.பி. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்ததாக நம்பப்படும் பிளினி (கி.பி.23-79) என்பவர், மாதவிலக்குக் கொண்ட பெண் ஒருத்தி இனிய பழம் தரும் மரத்தின் அடியில் நின்றால் அம்மரத்தின் பழத்தினுடைய இனிப்பு கொடிய கசப்பாக மாறிவிடும், அவள் தானியத்தைத் தொட்டால், அது விதைப்பதற்கு உதவாது என்பன முதலான பல்வேறு நம்பிக்கை இந்தியர்களிடையே வழக்கில் இருந்தமை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்."
புனலாட்டும் மாற்றுடையும் தீட்டினை நீக்கியதற்குரிய அடையாளமாகச் சங்ககாலப்பகுதியில் கருதப்பட்டன.
பெண்களை, மகப்பேற்றுக் காலத்திலும், பூப்புக் காலத்திலும் ஊருக்கு வெளியேயுள்ள தனியான வீட்டில் இருத்தி வைக்கும் வழக்கம் தமிழகப் பழங்குடி மக்களிடமும் உள்ளமை பற்றிச் ச.அகத்தியலிங்கம் விரிவாகக் குறிப்பிடுவார்."

8- 111
நாவல்களில் தீட்டும், துடக்கும் மாதவிலக்குத் தீட்டு
வீட்டுக்கு விலக்கான பெண்களை வீட்டின் ஒரு மூலையில் உட்காரவைத்து, அவர்களைச் சுற்றிக் கரியினால் கோடு போட்டு அவர்தம் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்துவர். இவ்வாறான நம்பிக்கை பற்றிய செய்திகளைக் கிடுகுவேலி’, ‘சடங்கு முதலான நாவல்கள் விரிவாகச் சித்திரித்துள்ளன.*
தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பைப் பெறுவதும், வீட்டின் தூய்மை நிலையைப் பேணுவதுமே இந்நம்பிக்கையின் அடிப்படை எனலாம். வான் ஜெனப் என்பவர், இதனைப் பிரிவு நிலை (Separation) எனக் குறிப்பிடுவர்.* ஒரு இடத்திலிருந்து மற்றொரு குழுவிற்கோ, ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கோ, ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கோ, ஒரு உறவுமுறையிலிருந்து பிறிதொரு உறவுமுறைக்கோ ஒருவர் மாறுவதனை இது குறித்து நிற்கிறது.
மாதவிலக்குடைய பெண்கள் பொழுது படும் வேளையில் வெளியே செல்வதோ,* கிணற்றில் (நீர் நிலைகளில்) நீர் அள்ளுவதோ கூடாது" என்பது கடுமையாக நடைமுறைப் படுத்தப்படும் நம்பிக்கைகளாக உள்ளன.
மகப்பேற்றுத் தீட்டு
தீட்டுத் துடக்குரியோர் நாள் வேலையைத் தொடக்கி வைப்பதோ, கோவில்களுக்குச் செல்வதோ ஆகாது என்ற நம்பிக்கை உள்ளது." அடிமைகள் என்ற நாவலில், செல்லனுக்கு மகன் பிறந்ததனால் உண்டான துடக்குக் கழியும் வரை பொறுத்திருந்த மழுவராயர், முப்பத்தொன்றாம் நாள் கழிந்தபின்பே அவனைக் கொண்டு நாள் வேலையபினை ஆர்ம்பித்துவைக்கிறார்."தீட்டுடன் ஆரம்பித்து வைக்கும் காரியம் சிறக்காது என்ற நம்பிக்கையே இதற்கு அடிப்படையாகும்.
மரணத் தீட்டு
ஒருவருடைய மரணம், அவரது குடும்பத்தாரையும் நெருங்கிய உறவில் உள்ளவர்களையும் துடக்குக்குரியதாக்கிவிடும் என

Page 59
112 ふ
நம்பப்படுகிறது. பஞ்சமர் என்ற நாவலில், இந்நம்பிக்கை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.* குறிப்பிட்ட தீட்டுக்கழியும் வரை நல்ல காரியங்களில் பங்கெடுக்கவோ, கோவில்களுக்குப் போகவோ முடியாது. முறைப்படியான தீட்டு நீக்கத்தின் பின்னர் இவர்கள் வழமை நிலைக்குக் கொண்டு வரப்படுவார்கள்.
கண்ணேறு தொடர்பான நம்பிக்கைகள்
'கண்ணேறு பற்றிய நம்பிக்கை உலகின் பல்வேறு இனமக்களிடையேயும் மிகப்பரவலாக வழங்கி வரக்காணலாம். கண்ணேறு என்பது, ஒரு தனியன் தன்னிடம் உள்ள ஒருவகை ஆற்றலால் மற்றொரு தனியனை அல்லது அவனது பொருட்களைத் தன் விருப்பாகவோ, தன் விருப்பில்லாமலோ பார்ப்பதாலோ அல்லது புகழ்வதாலோ தீங்கை உருவாக்குதலாகும்."
கண்ணேறு: சொல்லும் பொருளும்
கண்ணால் விளையும் தீமையைத் தமிழில் கண்ணேறு என அழைப்பர். நாவால் ஊறுபடுதலை ‘நாவூறு’ என வழங்குவர். வடமொழியில் இதனை 'திருஷ்டிதோஷம்’ என வழங்கும் மரபு உள்ளது.
‘கண்ணுறு’ என்பதற்குக் கண்ணேறு’ எனப் பொருள் தருகிறது சென்னைத் தமிழ்ப் பேரகராதி."
சில கண்களுக்குத் தீமையை விளைவிக்கும் ஆற்றல் உண்டு என்பதே இந்நம்பிக்கையின் அடிப்படையாகும். தீமையை விளைவிக்கும் பார்வை பட்டாலே போதும். பார்க்கப்பட்ட பொருள் எதுவாயினும் அதாவது உயிருள்ள, உயிரற்ற பொருளாயினும் கேடுற்ற அழியும். உடல் வெளிப்பாடுகள் எல்லாவற்றையும்விடக், கண்ணிலிருந்து வெளிப்படுபவை ஆற்றல் மிகுந்தவை எனக் குறிப்பிடப்படுகிறது."
மேலைத்தேய மரபில் கண்ணேறு
கண்ணேறு பற்றிய நம்பிக்கை மேலை நாட்டினர் மத்தியில் மிக ஆழமாக வேரூன்றியுள்ளதனைப் பார்க்க முடிகிறது.

* 113
கண்ணேறு படாமல் காத்துக் கொள்வதற்காகக் கிரேக்கர்களிடையேயும் உரோமர்களிடையேயும் ‘நெமிசிஸ் (Nemesis) என்னும் தெய்வத்திற்குச் சிலைகள் வைத்தலும், வழிபாடுகள் நிகழ்த்தலும், வேண்டுதல் புரிதலும் நடைபெற்றமை குறித்து அறிய முடிகிறது.* உரோம நாட்டில் கண்ணேறு காரணமாகப் பயிர்களுக்கு ஏற்படும் கேட்டினைக் களைவதற்கு என்றே தனிச் சடங்குகள் இயற்றப்பட்டதாகப் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் குறிப்பிடகிறது.*
பாலிபிமஸ் (polyphemus) தன் உருவத்தைத் தண்ணீரில் பார்த்ததனால் தன் கண்ணேபட்டு வருந்தக் கூடும் என அஞ்சியதாகக் கிரேக்கக் கவிஞர் தியோக்ரிடஸ் (Theocrius) குறிப்பிடுவார்."
தீமை செயற்படும் தன்மைபற்றி மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அது என்னவெனில் தீமை தான் பார்க்கும் எந்தப் பொருளுக்கும் உடனடியாகத் தீமையை விளைவிக்கிறது என்பதேயாகும். இந்த நம்பிக்கை எல்லாக் காலங்களிலும், எல்லா நாடுகளிலும் நிலவி வந்ததாகும்
எனப் பேகன் (Bacon) குறிப்பிடுவது கருதத் தக்கதாகும்."
கண்ணேறு விளைவிக்கும் பேரழிவை, பேரச்சத்தைத் தரக்கூடியதாக இருந்திருக்கிறது என்று மொரோக்கோ (Morocco) மக்கள் நம்பினர்."
தங்கள் கைக்குழந்தைகள்நோய்வாய்ப்பட்ட தோற்றத்தோடு காணப்படுவதற்குக் காரணம் கண்ணேறே என எகிப்தியத் தாய்மார் பழித்துக் கூறியமை பற்றி அறிய முடிகிறது."
ஸ்லாவ் (Slav) என்பான், தன்கண் பிறரைத்துன்புறுத்தாதபடிதன் கண்ணைத்தானே குருடாக்கிக் கொண்டான் எனப் போலந்தின் கதை ஒன்றில் குறிப்பு வருகிறது.*உருஷ்ய உழவர், தம் மதகுரு கணணேறு விளைவிக்க வல்லவர் என நம்பினர் என நார்மன் என்பவர்
குறிப்பிடுவார்."
மேலே குறிப்பிட்டவற்றின் மூலம் கண்ணேறு பற்றிய நம்பிக்கை என்பது மேலைத் தேயத்தவரிடையே எவ்வளவு தூரம் செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பதனை அறியமுடிகிறது.

Page 60
114 *
தமிழ் மரபில் கண்ணேறு பற்றிய நம்பிக்கை
தமிழரிடையே கண்ணேறு தொடர்பான நம்பிக்கை மிக ஆழமாக வேரூன்றியுள்ளதனை நோக்க முடிகிறது.
பண்டைத் தமிழரிடையே கண்ணேறு தொடர்பாக வழக்கில் இருந்த பல்வேறு விதமான நம்பிக்கைகள் பற்றிச் சங்க இலக்கியங்களில் செய்திகள் கிடைக்கின்றன.
திருமுருகாற்றுப்படையிலே, குறமகள் கண்ணினால் ஏற்படம் ஊறுகளைத் தீர்ப்பதற்கு நெய்யுடன் வெண்சிறுகடுகையும் தூவியமை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. தீமை பயக்கும் கண்களுக்கு மாற்றாகக் கதவு நிலைகளில் நெய்யும் வெண்கடுகும் பூசும் வழக்கம் பற்றி நெடுநல்வாடை குறிப்பிடுகிறது."
அருட்கவி இராமலிங்க வள்ளலார், பண்ணேறு மொழியடியர் பரவிவாழ்த்தும் பாதமலர் அழகையிப் பாவி பார்க்கில் கண்ணேறு படுமென்றன்றோ ..."
எனக் குறிப்பிடுகின்றார். கண்ணேறு தொடர்பான பல்வேறு நம்பிக்கைகளும் இன்றும் தொடர்வதனைப் பார்க்க முடிகிறது.
கண்ணேற்றினால் அதிகம் பாதிப்படைபவர்களாகக் குழந்தைகளே காணப்படுகின்றனர். குழந்தைகளைப் பிறருடைய கண்ணேற்றிலிருந்து காப்பாற்றும் பொருட்டுக் கன்னத்திலும் நெற்றியிலும் பெரிதாகப் பொட்டுவைப்பர்.'
மணமக்கள் மீது கண்ணேறு படாமலிருக்க ‘நலுங்கு நிகழ்ச்சியைப் பயன்படுத்துவர். மணவீட்டுக்கு வந்தபின் கண்ணேறு படாமலிருக்கவும், கலைந்த ஒப்பனையைச் சரிபார்க்கவும் செய்யும் செயலை நலுங்கு என்றே குறிப்பிடுவர்.*
கண்ணேறு படாமலிருக்கும் பொருட்டு வீடுகளிலும், தோட்டங்களிலும், வியாபார நிலையங்களிலும் மனித உருவைப்போல ‘வெருளி கட்டிவிடும் நடைமுறைபற்றிக் கலைக்களஞ்சியம் விரிவாகக் குறிப்பிடும். இதனைப் ‘புல்லுரு
எனவும் அழைப்பர்."

& 115
இவ்வாறாகக் கண்ணேறு பற்றிய நம்பிக்கை இன்றும் பயில் நிலையில் உள்ளமை பற்றி அறிய முடிகிறது.
கண்ணேறு விளைவிப்போர்
மந்திரவாதிகள், சூனியக்காரர்கள், ஜாதகத்தில் தீய நட்சத்திரங்களின் ஆட்சி பெற்றோர், கொடி சுற்றிப் பிறக்கும் குழந்தைகள், பொறாமையுடையோர், இயல்பு கடந்த உடலமைப்புடையோர், நோய்காரணமாக உழல்வோர், தெய்வத்தன்மை உடையோர், மாதவிலக்குடைய பெண்கள் அகியோருடன் பாம்பு, பல்லி, நரி, மயில் முதலான உயிரினங்களுக்கும் கண்ணேறு விளைவிக்கும் ஆற்றல் உள்ளதாக நம்பப்படுகிறது.
தாம் விரும்பாமலேயே தமது கண்களுக்கு இத்தகைய தன்மையைப் பெற்றிருக்கும் இவர்கள், தமது கண்களின் தீமையினை அறிந்திருக்க மாட்டார்கள்.
ஆங்கிலக் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பன்ட்டுக்களும் (Bantus), ஸ்காட்லாந்தியரும் கண்ணேறு விளைவிக்கும் ஆற்றல்
15
பரம்பரை இயல்பாக வருகிறது என்று உறுதியாக நம்புகின்றனர்.
கண்ணேறு போக்கும் பொருட்கள்
மந்திரம், திருநீறு, மஞ்சள், குங்குமம், கோழி, எலுமிச்சை, உப்பு, சங்கு, தெருமண், மிளகாய் வற்றல், கற்பூரம், நீர், தானியம், விலங்கு உறுப்பு, நூல், நறும்புகை, குருதி, வாத்திய ஓசை, எருக்கு முதலானவற்றைக் கொண்டு கண்ணேற்றைப் போக்குவர்.
கண்ணேறு கழிக்கும் முறைகள்
கண்ணேறு கழிக்கும் முறைகளில் கண்ணேறுபடுவதைத் தடுத்தல் அல்லது பட்டதை நீக்குதல் என இருவகையான முறைகள் காணப்படுகின்றன. ஒன்று வருமுன் காத்தல்; மற்றொன்று வந்தபின் காத்தல் ஆகும்.
ஆராத்தி சுற்றியெடுத்தல், சாம்பிராணி புகையிடுதல், கற்பூர ஆராத்தி, கருப்புப்பொட்டு, கண்ணுக்குமை, சொடக்கு,

Page 61
116 «Х•
நகையணிவித்தல், மணிவகைகளை அணிவித்தல், கரடி, பன்றி முதலானவற்றின் மயிர், பல் முதலானவற்றை அணிவித்தல் ஆகிய செயல்கள் மூலம் கண்ணேற்றைக் கழித்துக் கொள்வர். கண்ணேறு கழிக்கும் நடைமுறைகளைப் பிரேசர் ‘தொத்துமந்திரம்’ என்ற வகைக்குள் அடக்கிப் பேசுவர்."
கண்ணேற்றினால் உண்டாகும் பாதிப்பு
கண்ணேற்றினால், உடல்நலக் குறைவு, மரணம் ஆகியன ஏற்படும் என்ற நம்பிக்கை ஆதிகால மக்களிடமும், இக்கால மக்களிடமும் நிலவி வருகிறது. அத்துடன் தலைவலி, விக்கல், கொட்டாவி, பசியின்மை ஆகியனவும் ஏற்படும்."
நாவல்களில் கண்னேறும், நாவூறும்
கண்ணேறு, நாவூறு தொடர்பாக ஈழத்துத் தமிழ் மக்களிடையே நிலவி வரும் பல்வேறு நம்பிக்கைகள் பற்றி நாவல்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
குமாரபுரம் என்ற நாவலில், தைப்பொங்கலை முன்னிட்டு, “வாயும், வயிறுமாக’ப் பிறந்த வீட்டுக்கு வந்த பவளத்தின் முகத்தில் ஏறியிருந்த செழுமையினையும்,உடலில் ஏற்பட்டிருந்த பூரிப்பையும் கண்ட சித்திரா தனது கண்ணே பட்டு விடும் போல இருந்தது எனக்
- 18
கருதுகிறாள்.
வளமான தனது வயற்காணியை அரசு, சுவீகரித்துக் கொண்டமைக்குக் காரணம், தினசகாயத்தின் கொடிய கண்களே எனச் சண்முகம் நம்புவதாகக் காட்டாறு என்ற நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளது.*
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து என்ற நாவலில், மது வெள்ளாமை நன்றாக விளைந்தும், அது மழையினால் அள்ளுண்டு போனமைக்குக் காரணம் ‘ஊராரின் கண்களே’ எனச் சிவக்கொழுந்து அபிப்பிராயப்படுகிறார்."
பஞ்சமர் என்ற நாவலில், நெடுங் காலமாகத் தன்னுடன் ஒத்துழைத்த குடை காற்றில் அலைக்கழிக்கப்பட்டுச் சிதைந்தமைக்குக் காரணம் அக்குடைமிது ஊராரின் பார்வை பட்டதே
எனச் சுப்பையா வாத்தியார் கருதுகிறார்."

போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில், போடியார் இளைப்புக் கண்டதற்கும், முற்றத்து ஒற்றைப்பனை என்ற நாவலில் மாரிமுத்தர் சயிக்கிளால் விழுந்தமைக்கும் ஊராரின் கண்களையே குற்றம் சாட்டுகின்றனர்."
தண்ணீர் என்ற நாவலில், பம்பிடிசங்கியின் கட்டுக் குலையாத உடல் வனப்பைப் பற்றிப் பேசிய ஆறுமுகத்தார் ‘நாவூறு படாமல் இருக்க வேண்டும்’ என வேண்டிக் கொள்கிறார்.*
முற்றத்து ஒற்றைப்பனை என்ற நாவலில் வரும் நீண்ட தலை முடியுடைய முத்தர் அம்மான், தனது முடி காட்டிய வரலாற்றை,
முந்தி எனக்கு இருந்த மயிரைப் பார்க்க வேணும். சும்மா, மயிலின்ர தோகைபோல இருக்கும். ஒரு சனிக்கிழமை எண்ணை தேய்த்து முழுகிப் போட்டுத் தலையைக் காய விரிச்சுப் போட்டு நிண்டன் கொச்சியாற்ரை பிராந்துக் கிழவ வந்து, ஆ . உதென்ன மயிரடா ... ஒரு பொம்பிளைக்கும் கூட இப்படி இராது என ஏங்கியதுதான். அன்றைக்குப் பட்ட கண் படிப்படியாகக் கொட்டுண்டு கொட்டப் பாக்களவிலை இருக்குது .*
எனக் குறிப்பிடுகிறார்.
இவ்வாறன நம்பிக்கையின் தாக்கத்தின் காரணமாக நீண்ட முடியினை உடையோர் பிறர் கண்படும்படி தமது கூந்தலை விரித்துப் போடுவதனைத் தவிர்க்கும் வழக்கத்தினைக் கொண்டுள்ளனர்.
ஒருவர் உணவு உண்பதனைப் பிறர் பார்த்தால் உண்பவருக்கு உணவு செரிக்காது என்ற நம்பிக்கை பற்றிச் சடங்கு என்ற நாவலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.*
போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில், எவ்வளவுதான் உணவு உட்கொண்டாலும், எலும்பும் தோலுமாகத் தனது மகனின் உடம்பு உள்ளமைக்குக் காரணம் ஊராரின் கண்களே எனச் சின்னப் பிள்ளை நம்புகிறாள், மகனுக்குக் கண்ணேறு கழிக்கவும் ஆவல் கொள்கிறாள்.*
இருளின் கதிர்கள் என்ற நாவிலே பொன்னம்மாவுக்குக் கண்பட்டு விட்டதெனக் கருதி, அவளை நிர்வாணமாக

Page 62
118 «Х•
நடுவீட்டுக்குள் நிற்கவைத்து, மூன்று செத்தல் மிளகாய் (வற்றல் மிளகாய்)களைப் பிடித்து, உள்ளங்காலிலிருந்து, உச்சிவரை தடவி எடுத்து அவளின் தலையை மூன்று தடவை அதனால் சுற்றி, துப்பிக்கழித்துப் பக்கத்து வட்டக்குளத்தில் வீசி எறிந்தமை பற்றி விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.'
கண்ணேறு தொடர்பான செய்திகள் அடிமைகள், பஞ்சமர், மீட்டாத வீணை முதலான பல்வேறு நாவல்களிலும் பலவாறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமையைப் பார்க்க முடிகிறது.*
கண்ணேறு கழித்தல்
கண்ணேறுபடாமலிருக்கும் பொருட்டுக் கழிப்புப் பொருட்களை நீர் நிலைகளில் எறிவதும், தெருவில் போட்டுத் தீயிடுவதும், வீட்டின் அடுப்பிலே போட்டுத் தீயிடுவதும் எனப் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
கண்ணேற்றிலிருந்து காவல் பெறும் நோக்கில் தாயத்து கட்டிக்கொள்ளும் வழக்கம் பற்றிப் போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில் செய்தி கிடைக்கிறது.*
மிளகாய் வற்றல் கொண்டு கழிப்புக் கழிக்கும் நடைமுறைபற்றி இருளின் கதிர்கள் என்ற நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.* தமிழர்களிடம் மட்டுமின்றி வடஇந்தியர்களிடமும் மிளகாய் சுற்றிப் போடும் வழக்கம் உள்ளமை பற்றி ஆராய்ச்சியாளர் எடுத்துக் காட்டியுள்ளனர்."
கண்ணேற்றினை மஞ்சள் தண்ணீர் காட்டிக் கழிக்கும் நடைமுறை பற்றி மையக்குறி என்ற நாவல் விவரிக்கிறது.*
நாவூறினை எச்சிலைத்தப்பிக் கழிக்கும் நடைமுறைபற்றி பஞ்சகோணங்கள் என்ற நாவலில் செய்தி கிடைக்கிறது.* இவ்வாறு துப்பிக் கழிப்பதன் மூலம் நாவூறல் இருந்து விடுதலை கிடைப்பதாக நம்புவர்.*இந்நம்பிக்கை காரணமாகவே கண்ணேறு கழிக்கும் பொருட்களில் ஒன்றாக ‘எச்சில்’ எனப்படும் உமிழ் நீரும் இடம் பெற்றுள்ளது எனக் கருதலாம்.

«Х• 119
கானல் என்ற நாவலில், நெட்டி முறித்துக் கண்ணேறு கழிக்கும் நடைமுறைப் பற்றி விவரிக்கப்படுகிறது. ‘திரே சியினுடைய நடையுடை பாவனைகளைப் பார்த்து ஆசை கொண்ட வயதான கிழவிகள் சிலர் அவளின் முகத்தைக் தடவி நெட்டி முறித்து நாவூறு கழித்துக் கொள்வதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.* தமிழக வழக்கிலும் இந்நடைமுறை உண்டு. இதனைச் சொடக்கு’ என இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
செய்வினை, சூனியம், வசியம் தொடர்பான நம்பிக்கைகள்
மந்திரம் என்பது ஒருமாயையை உருவாக்கி, அதனால் இயற்கையை நாம் கட்டுப்படுத்துவதாக எண்ணி அவ்வாறு கட்டுப்படுத்துவதன் மூலம் உண்மையாகவே இயற்கையைக் கட்டுப்படுத்துவதாக நம்புவதாகும் என்பார் கார்டன் சைல்டு.*இது, பாவனைச் செயல்களையும் (Mimeticats), கட்டளையிடுதலையும் அடிப்படையாகக் கொண்டதாகும்.
மேலைத் தேயமரபில் செய்வினை, சூனியம்
கீழைத்தேயத்தவர் போலவே மேலை நாட்டினரும் மதமாந்திரீக விடயங்களில் அதிக அக்கறை செலுத்தியிருந்தமை பற்றி அறிய முடிகிறது.
ஆஸ்திரேலியரிற் சிலர் மனித எலும்புகளாற் செய்யப்பட்ட அம்புகளைப் பகைவர்மேல் ஏவி நோயை உண்டாக்கும் வல்லமை பெற்றிருந்தனர் எனக் கூறப்படுகிறது. எல்லா நோய்களும் எலும்பு, மரத்துண்டு, கல் முதலானவற்றால் ஏற்படுவதாகவே அவர்களிற் பெரும்பாலானோர் நம்புகின்றனர்.
அமெரிக்க இந்தியர்களிற் சிலரும் ரோமானியர்களும் மெழுகினால் செய்த ஒரு மனிதனின் உருவத்தை அம் மனிதனுக்குக் கெடுதல் நேர்வதற்காக எரிக்கும் வழக்கம் உடையவர்களாகச் சுட்டப்படுகின்றனர்.
ஆஸ்திரேலியரிற் சிலர் தம்முடைய பெயர் எதிரிக்குத் தெரிந்தால் அதன் மூலம் கெடுதல் ஏற்படும் எனக்கருதி, குழந்தைப்

Page 63
120 «Х•
பருவத்தார்க்கு மட்டுமே பெயரிடும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர்.
ஆப்பிரிக்கக் கண்ட மலைகளிலும் காடுகளிலும் வசிக்கும் ஆதிமனிதர்கள், சூன்யம், மாந்திரீகம் முதலானவற்றில் மிகவும் சிறந்து விளங்கினர். மேற்கு ஆப்பிரிக்க நீக்ரோஇனத்தவர்தம்முடைய தலை முடியைப் பிறர் கையில் அகப்படாதபடி எரித்து விடும் வழக்கம் உடையவர். இவ்வழக்கம் கீழைத்தேயத்தவர்களிடத்திலும் காணப்படுகிறது.*
மனிதனின் உடலோடு உறவு கொண்டுள்ள பொருட்களைப் பிரித்தாலும் உடலுக்கும் அப்பொருட்களுக்குமுள்ள உறவைப் பிரிக்க முடியாது. பொருளுக்கு ஏதேனும் நடந்துவிட்டால், அது அப்பொருளின் சொந்தக்காரனையும் பாதிக்கும் என்ற அளவிற்கு மக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளனர். இதனால் முடி, நகம் இவற்றைப் பாதிப்படையச் செய்தால் அப்பாதிப்பு குறிப்பிட்ட நபருக்கும் சென்று சேரும் என மக்கள் நம்புகின்றனர் என மேற்படி நம்பிக்கையின் அடிப்படையினைப் பிரேசர் விளக்குவார்.*
ஐரோப்பாவில் வழங்கும் “நெருப்பு விழாக்கள்’ எல்லாம் சூனியக் காரரைத் தொலைப்பதற்கான விழாக்களே எனப் பிரேசர் குறிப்பிடுவது கருதத் தக்கதாகும். அத்துடன் எதிரியின் வீட்டில் தீ, உப்பு இவற்றைத் திருடிச் சென்று செய்வினை வைக்கும் வழக்கம் மேலை நாட்டினரிடையே வழக்கில் உள்ளமை பற்றியும் கிரேசர்
குறிப்பிடுகிறார்.*
கிசாசுகளை வைத்தச் சூனியம் நிகழ்த்திக் காரியங்கள் சாதிப்பதில் மேலைத் தேயத்தவர் கொண்டிருந்த நம்பிக்கை பற்றிக் குறிப்பிடும் வில் டுரான்ட், 1609இல் தென்கிழக்குப் பிரான்சில் எங்கு பார்த்தாலும் பில்லி, சூனியம் பற்றிய பேச்சே இருந்தது எனக் குறிப்பிடுவார். ஜெர்மனியில் கத்தோலிக்கரும், புரட்டஸ்டன்டுகளும், ஸ்பெயின் நாட்டினரும் சூனியக்காரர்களைப் பெரிதும் பயன்படுத்தினர் எனவும் குறிப்பிடுவார்."
மேலே சுட்டியவற்றின் மூலம் மேலைத்தேயத்தவரிடையே செய்வினை, சூனியம் பற்றிய நம்பிக்கை எந்தளவுக்குப் பயில்நிலையில் இருந்து வந்துள்ளது என்பதனை அறிய முடியும்.

இந்திய மரபில் செய்வினை, சூனியம்
இந்திய மரபில் அன்றாட வாழ்க்கை முறையில் செய்வினை, சூனியம் முதலான மாந்திரீக வழிகளைக் கையாள்வது என்பது பரவலாக உள்ள நடைமுறையாகும்.
வேதகாலத்தில் மாந்திரீகத்துக்கு மிகுந்த மதிப்பிருந்தது என்பர். மகாயான பெளத்த மதத்தினரும் இதனைக் கைக்கொண்டனர்.
பெளத்த நூலான ‘இலலித விஸ்தாரத்தில் சூனியம் வைத்தல் தொடர்பான குறிப்புகள் காணப்படுதல் பற்றிக் கு.வெ.பாலசுப்பிரமணியன் குறிப்பிடுவர்.*
தொல்காப்பியம் மந்திரம் பற்றிக் குறிப்பிடுகையில்,
நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறை மொழி தானே மந்திரம் என்ப*
எனக் குறிப்பிடுகிறது. இந்நூற்பாவுக்குப் ‘புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லும் சொற்றொடரெல்லாம் ‘மந்திரம் எனப்படும்’ எனப் பேராசிரியர் விளக்கவுரை தருகிறார்.*
பிள்ளைப்பேறு, திருமணம், இறந்தார்க்குச் செய்யப்படும் கருமம் முதலியவற்றில் மதத்துக்கும் மாந்திரீகத்துக்கும் நெருங்கிய தொடர்பினைக் காணமுடிகிறது. பொதுவாக ‘மாந்திரீகம்’ என்பது பேய் முதலான கெட்ட ஆவிகளுடன் தொடர்புடையதாகவே காணப்படும் எனக் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.*
மந்திரம் ஒதியும், மணமாரப் பிரார்த்தித்தும் கடவுளை வசப்படுத்தி, அதன் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவில் குறிப்பிட்ட நபருக்குக் கெடுதல் விளைவிக்கலாம் என்ற நம்பிக்கை இன்றும் தமிழக மக்களிடையே வழக்கில் உள்ளமை பற்றிச் சோமெல குறிப்பிடுவது கருதத்தக்கது.*
மந்திரத்தின் அமைப்பு
மந்திரம் என்பது விருப்பம், செயல், சொல் என்ற மூன்று
உட்கூறுகளை உடையதாக அமைந்து காணப்படும். விருப்பம் என்பது அடைய வேண்டிய பயனைக் கொண்டிருக்கும்.*

Page 64
122 «Х•
மந்திரத்தின் வகைப்பாடு
மானிடவியல் ஆராய்ச்சியாளரான பிரேசர், மந்திரத்தினைப் பின்வருமாறு வகைப்படுத்துவார்.
ஒத்துணர்வு மந்திரம்
(ஒத்துணர்வு விதி)
ஒத்தமந்திரம் தொத்த மந்திரம்
(ஒத்த விதி) (தொடர் விதி)
மந்திரங்கள் நிகழ்த்தப்படுவதற்கான நோக்கத்தை, அதன் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தூய மந்திரம் (White Magic), gu LDigglib (BlackMagic), pg5ugg LDigiTub (Production Magic), பாதுகாப்பு அழிப்பு மந்திரம் (Protective Destructive Magic) என்றும் பாகுபாடு செய்வர்."
நாவல்களில் செய்வினை, சூனியம், வசியம்
மருந்திடுதல், மருந்து வைத்தல், செய்வினை செய்தல், சூனியம் என்பன எல்லாம் தமக்கு வேண்டாதார்க்கு மருந்து வைத்துத் துன்பம் அனுபவிக்கச் செய்தல் அல்லது ஒருவரைத் தம் வசப்படுத்தச் செய்வதாகும். மந்திரத்தின் துணையுடன் தீய ஆவிகளைக் கொண்டு ஒருவருக்கு மரணத்தையும், நோயையும் உண்டாக்கலாம் என்பதே இந்நம்பிக்கையின் அடிப்படையாகும்.
செய்வினை, சூனியம்
ஈழத்தின் கிழக்குப் பிரதேசமான மட்டக்களப்புப் பிரதேசம் மதமாந்திரீகச் செயற்பாடுகளுக்கு நன்கு பிரசித்தமான ஒரு பகுதியாகும். இப்பிரதேசத்தைக் களமாகக் கொண்டமைந்த போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில் மதமாந்திரீகச் செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு செய்திகள் கிடைக்கின்றன.

(X 123
காராளியர் என்பவருக்குப் போடியார் சூனியம் வைத்தது பற்றிய உரையாடற்பகுதி வருமாறு;
பார்க்கிறேன் ஒருவகை என்று மீசையில் கைபோட்டுக் கறுவினார். அவர் அப்படிப் பகிரங்கமாகக் கறுவி ஒரு மாதத்தாதல் காராளி கையையும், காலையும் சுருட்டிக் கொண்டு படுக்கையில் விழுந்தார். அத்தோடு அவர் நடமாட்டம் சரி ... ஊரெல்லாம் போடியார் சூனியம் செய்து விட்டதாகப் பேசிக் கொண்டார்கள் .*
கழுகுகள் என்ற நாவலில் ஆறுமுகத்தாருக்கு ஏற்பட்ட நெடுநாள் ஆறாத புண், பிறர் வைத்த சூனியத்தால் உண்டானதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது.*
பூமரங்கள் என்ற நாவலில், ஏவற் பேயை ஏவி விட்டவன் மேலேயே அதனைத் திருப்பி ஏவிவிடக் கூடிய வல்லமை பொருந்திய சூனியக்காரன் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.*
மேலே கட்டியவைகளெல்லாம் சூனியம் மூலம் பிறரைத் துன்புறுத்த முடியும் என்ற மக்களின் நம்பிக்கையினை வெளிப்படுத்துவனவாகவே அமைந்துள்ளன எனக் கருதலாம்.
செய்வினை, சூனியம் வெட்டுதல் (விலக்குதல்)
செய்வினை, சூனியத்தால் பாதிப்புண்டோர் அவற்றிலிருந்து மீண்டு கொள்ளும் முகமாக மாந்திரீகனைக் கொண்டு சிலவகையான சடங்குகளைச் செய்விப்பதுண்டு. இவ்வாறு செய்வதன் மூலம் செய்வினைகளிலிருந்து விலக்குப் பெறலாம் என நம்பப்படுகிறது.
கழுகுகள் என்ற நாவலில், ஆறுமுகத்தாருக்கு வைக்கப்பட்ட சூனியத்தை வெட்டுவதற்காக மடைவைத்தல், நூல்கட்டுதல், பலியிடல், கழிப்புக் கழித்தல் முதலான செயற்பாடுகளை மாந்திரீகனைக் கொண்டு செய்வித்தமை பற்றிச் சித்திரிக்கப்பட்டுள்ளது.*
தீய சக்திகளின் தாக்கத்தினால் திடீரென உடல் மாறுதலுக்கு உட்பட்டவர்களுக்கு “ஏக்கப்பார்வை பார்த்த” எனும் நம்பிக்கை நடைமுறை இன்றும் வழக்கில் உள்ளது. தீய சக்திகளின்

Page 65
124 x
தாக்கத்திலிருந்து அவர்களை விடுவித்தற் பொருட்டு, வேப்பிலை கொண்டு குறிப்பிட்டவர்களின் உடல் முழுவதையும் தடவித் திருநீறு போடும் ஏக்கப்பார்வை பார்க்கும் நடைமுறைபற்றி 'இருளின் கதிர்கள்’, ‘முருங்கையிலைக் கஞ்சி ஆகிய நாவல்களில் செய்திகள் கிடைக்கின்றன.*
அடிமைகள் என்ற நாவலில் வருகின்ற கயித்தான் என்ற மந்திரவாதி செய்வினைகளை வெட்டுவதிலே வல்லவனாகக் காட்டப்படுகிறான். தனக்கு விருப்பமில்லாதோரைப் பெல்லி எனப்படும் ஏவற் பேயைவிட்டு உடனேயே அழித்துவிடும் ஆற்றல் அவனுக்கிருப்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.*
வசிபம் செய்தல் (மருந்து போடுதல்)
ஒரு பெண் குறிப்பிட்ட ஒருவனை மணம் முடிக்கச் சம்மதிக்காவிட்டால் அவளை வசீகரித்துத் திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை இதுவாகும். இதே வழிமுறையையே ஆணை வசீகரிக்கவும் மேற்கொள்வர்.
ஈழத்தமிழர் வசியம் செய்தலை மருந்து போடுதல்’ எனவும் அழைப்பர். திருமணம் செய்வதற்கும், திருமணத்தில் பிரிவினையை உண்டாக்குதற்கும் வசியம் செய்யும் வழக்கம் காணப்படுகிறது.
போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில், சின்னப்பிள்ளை என்பவள், தன்மகன் செல்லத்துரையனுக்கு அவனின் காதலி தேநீரில் மருந்து போட்டு, வசப்படுத்தி விட்டதாகச் சந்தேகப்படுகிறாள். செல்லத்துரையன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் ‘வசியம்’ பற்றிய அவளின் நம்பிக்கை அகலவே இல்லை.*
சடங்கு என்ற நாவலில், செல்லப்பாக்கியம் என்பவள் தன்மகன் நவரத்தினத்தை அவனின் மனைவி மருந்து போட்டே பிடித்ததாகக் கூறுகிறாள்.*
காவோலை என்ற நாவலில் சுருளி என்பவன், தான் காதலிக்கும் வசந்தா என்பவளைத் திருமணம் செய்வதில் முனைப்புக் காட்டியபோது, அவனது தாயானவள் மகனுக்கு அவள் மருந்த போட்டு விட்டதாக நம்புகிறாள்.*

8 125
மேலே காட்டியவாறு ‘வசியம்’ செய்து மணம் முடித்தல் பற்றிய நம்பிக்கை இன்றுவரை வழக்கிலிருக்கக் காணலாம். தமிழக மக்களிடமும் இவ்வாறான வழக்கம் உள்ளமை பற்றித் தே. ஞானசேகரன் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார்."
தமிழகப் பழங்குடிகளில் ஒன்றான இருளர் என்ற இனத்த வரிடையேயும் வசியம் செய்து மணம் முடிக்கும் வழக்கம் இருத்தல் பற்றிச் ச.அகத்தியலிங்கம் எடுத்துரைப்பர்.*
செய்வினை, சூனியம், வசியம் முதலானவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அவற்றின் மீது கொண்ட நம்பிக்கையின் அளவும் குறித்த நபரின் உளவியல் அமைப்புமே காரணம் எனக் கூறலாம்.
கனவு தொடர்பான நம்பிக்கைகள்
கனவு தொடர்பான நம்பிக்கையானது உலகின் பல்வேறு இனமக்களிடையேயும் மிக நெடுங்காலமாகவே வழக்கில் இருந்து வருகிறது. கனவுகள் உள நோயால் தோன்றுகின்றன என்பர்.* அடக்கப்பட்ட உணர்வுகள் அல்லது விருப்பங்கள் நேரடியாக வெளிப்படாமல் மறைமுக நிலையில் 95GTG. T.95 வெளிப்படுத்தப்படும் என்பது பிராய்டின் கருத்தாகும்."
மேலைத்தேய மரபில் கனவுபற்றிய நம்பிக்கை
கனவைப் பற்றிய கருத்துக்கள் பண்டைக் காலத்தில் பாபிலோனியா, எகிப்து, எஸ்கிமோ முதலான நாடுகளில் தோன்றி எபிரேயர், கிரேக்கர், ரோமானியர் வழியாக உலகத்துக்குப் பரவின."
பாபிலோனிய மக்கள் கனவுகள் கடவுளாலும், பேய்பிசாசுகளாலும் உண்டாக்கப்படுகின்றன என நம்பினர். எகிப்து நாட்டில் கனவுகளின் பலன்களை விவரிக்கத் தனிப்பட்ட புரோகிதர்கள் இருந்தார்கள் என அறிய முடிகிறது.
எஸ்கிமோ மக்களிடம் 'கனவு’ நம்பிக்கை வலுப்பெற்றிருந்து. லூசன் (Luzon) பகுதியில் வாழும் ‘தஜால்’ (Tazal) பிரிவினரிடம் தூங்குபவனை எழுப்பக் கூடாது என்ற விலக்கு (Taboo) கடுமையாகக்
கடைப்பிடிக்கப்பட்டது."

Page 66
126 «Х•
பண்டைய கிரேக்க நாட்டில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ ஆகியோர் கனவைப் பற்றிக் கருத்துக் கூறியுள்ளனர். “கனவுகள் மனிதனுடைய இச்சையைக் குறிக்கின்றன’ எனப் பிளேட்டோவும், “உடலைச் சார்ந்து எழுவனவே கனவுகள்’ என அரிஸ்டாட்டிலும் கருத்துரைப்பர்."
ஹோமர், “கடவுளின்தூதே கனவு’ என்பார். அரசன், தலைவன், இறைப்பணியாளர் (Priests) போன்றவர்களிடம் இறைவன் கனவின் வாயிலாகச் செய்திகளைச் சொல்லியமைக்குப் பழங்காலச் சுமேரிய மற்றும் எகிப்திய நாடுகளில் உள்ள ஞாபகச் சின்னங்களிலிருந்து (moniments) சான்றுகள் கிடைக்கின்றன.*
தமிழ் மரபில் கனவு தொடர்பான நம்பிக்கை
தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் கனவு பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.* சங்க இலக்கியங்களில், மானிடரே அன்றி அஃறிணைப் பொருள்களும் கனவு காணும் தன்மைபற்றி அறியலாம். “கனவில் தொட்டது கைபிழையாது’ எனப் பரிபாடல் குறிப்பிடுகிறது.*
*கனாநுால்’ பற்றிச் சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையிலே மேற்கோள் கிடைக்கிறது. சிலப்பதிகாரத்தின், அடைக்கலக்காதையில் கோவலன் மாடலனிடமும், வழக்குரை காதையிலே பாண்டியன் மனைவி தன் தோழியிடமும் தாம் கண்ட தீய கணவைப் பற்றிக் குறிப்பிடுவதாக இளங்கோ அடிகள் சித்திரித்துள்ளார். மணிமேகலை,
உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பலகாவதம் கடந்து சேண் சேறல் கனவிலும் காண்குவை
67
எனக் கனவு பற்றிக் குறிப்பிடுகிறது.
கம்பராமாயணத்திலே சீதையும், திரிசடையும் கண்ட கனவுகள் பற்றியும், அவற்றின் விளைவுகள் பற்றியும் கம்பர் விரிவாக விளக்கியுள்ளார்."
மேலே கட்டிய செய்திகளின் மூலம் கனவு பற்றிய நம்பிக்கையின் தொன்மையினையும், அவற்றின் பயில் நிலை முக்கியத்துவத்தினையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.

நாவல்களின் கனவு நல்ல கனாவும், தீய கனாவும்
கனவில் நன்மையான விடயங்களைக் கண்டால் தீமை நடக்கும் என்றும், தீமையான விடயங்களைக் கண்டால் நன்மை நடக்கும் என்றும் நம்புவர். இந்நம்பிக்கை இன்றுவரை மிகவும் வலிமையுடன் காணப்படுகிறது.
தண்ணிர் என்ற நாவலில், தன் காதலனான சின்னானை யாரோ வெட்டிச் சாய்த்துவிடுவதாகக் கனவு கண்ட சின்னி, மிகவும் கவலை கொள்கிறாள் அவளைத் தேற்ற முற்பட்ட தாயானவள் பின்வருமாறு குறிப்பிடுகிறாள்.
எடி விசரி பேசாமல் நித்திரையைக் கொள்ளடி. கூடாத கனாக் கண்டால் நல்லதுகள் நடக்குமெண்டு சொல்லறவையெடி நல்ல கனாக் கண்டாத்தான் கூடாதவை நடக்குமெண்ணிறவை. போன வரிசம் அத்துளு அம்மன் கோயில் பூவரசங்காட்டுக்கை கொம்மான்ரை சவம் தூங்கின அண்டுராத்திரி, கொம்மான் மேலெல்லாம் சந்தனமும் பூசிக்கொண்டு. அஞ்சாறு பூசனிக் காயையும் கமக்கட்டுக்கை வச்சுக் கொண்டு செடில் காவடியாய் வரக் கனாக் கண்டன். ராவு கனாக் காணிறன்; விடியக் கொம்மான் சாகிறான். இந்தக் கனாவிலை பிழை ஒண்டும் வராது நீ படுமோனை ..."
என வரும் உரைப் பகுதி கனவு தொடர்பான மேற்படி நம்பிக்கையினை மிகவும் ஆழமாக விளக்குகிறது. தீய கனவைக் கண்டவர்களை உளவியல் நிலையில் தேற்றும் வகையில் இவ்வாறான நம்பிக்கை தோன்றியிருக்கலாம்.
கனவில் மரணத்தைக் கண்டால் நன்மை விளையும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடமும் மிகப்பரவலாக உள்ளமை கருதத் தக்கதாகும்."
போராளிகள் காத்திருக்கிறார்கள் என்ற நாவலில், கன்னங்கள் வீங்கி மலைத்துப் போய் நின்ற சொர்ணத்தை நோக்கிய சிசிலியா, “கனவு’ ஏதாவது கண்ட, அதனால் பயப்படுகிறாயா?’ எனக் கேட்கிறாள்."

Page 67
128 «Х•
சமூக மதிப்புகளுக்கேற்பவே கனவுகள் பிறருக்குத் தெரியப்படுத்தப்படுகின்றன. கனவுகளில் நம்பிக்கையுடைய சமூகக் கட்டமைப்பில், தமக்கு ஆதரவாக இல்லாத கனவினைக் கண்டவர்கள் தம் நிலையினைப் பேணுதல் கருதித் தீய கனவினை வெளியில் சொல்லுதல் கிடையாது.
சகுனம் தொடர்பான நம்பிக்கைகள்
சகுனம் பார்க்கும் நம்பிக்கை உலகப் பொதுவான நம்பிக்கையாகும். சகுனம் என்பது நிகழவிருக்கும் நன்மை தீமைகளை முன் கூட்டியே உணர்த்துவதாகும். இது, நல்ல சகுனம், தீயசகுனம் என இருவகைப்படும். தமிழ் மரபில் இதனை, புள், நிமித்தம், விரிச்சி எனப் பலவாறு வழங்குவர். மனிதச் செயல்கள், பறவை, விலங்குகளின் அசைவுகள், இயற்கை நிகழ்வுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சகுனங்கள் பார்க்கப்படுகின்றன.
மனித மனம் ஆற்றப்புகும் செயல்களுக்கும் இயற்கையில் நிகழும் நிகழ்வுகளுக்கும் ஒருவிதத் தொடர்பு இருப்பதாக மனிதமனம் கற்பித்துக் கொண்ட நிலையில் சகுனக் கூறுகள் உருவாகத் தொடங்கின.* சகுனங்களைச் சிந்தனை நிலை, சொல் நிலை, செயல்நிலை என மூன்று நிலைகளில் காணலாம். சிந்தனை நிலையாவது, ஏதாவது ஒரு செயல் பற்றியோ, அல்லது பொருள் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கையில் வெளிப்படும் சகுனம் ஆகும். சொல் நிலையாவது, ஏதாவது ஒரு செயலைக் குறித்துப் பேசுகின்றபோது எதிர்பாராது ஏற்படும் சகுனங்கள் ஆகும். செயல் நிலையாவது, ஒரு செயலைத் தொடங்குவதற்காகப் புறப்படும் போது காணலாகும் சகுனங்கள் எனலாம்.
சகுனம், புள், நிமித்தம், விரிச்சி: சொல்லும் பொருளும்
‘சகுனம்' என்பதற்குச் சென்னைத் தமிழ்ப் பேரகராதி,
1. பறவை 2. பறவைகள் வலமிடமாதல் முதலிய நன்மை தீமைக்குறி 3. சகுனி
எனப் பொருள் தருகிறது.

«Х» 129
புள்’ என்பது பறவையின் நிமித்தத்தைக் குறிக்கிறது."
‘நிமித்தம்’ என்பது, காரணம், நிமித்தம், சகுனம், அடையாளம், பொருட்டு ஆகிய பொருண்மைகளைக் குறிக்கிறது." பின்னர் நிகழும் நன்மை தீமைகளை முன்னரே அறிவிக்கும் குறி ‘நிமித்தம் என்கிறது கலைக்களங்சியம்."
‘விரிச்சி’ என்பது வாய்ச்சொல்; இது ‘வாய்ப்புள்', என்றும் பெறும்,'
ஆங்கில மரபில் நிமித்தம் என்பதை “Omens’ என்ற சொல்லால் குறிப்பர். நல்ல அல்லது கெட்ட எதிர்கால நிலையைக் குறிக்கப் பழங்காலத்தாரால் பயன்பட்ட பெயரே ‘நிமித்தம்’ எனப் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் இது பற்றி விளக்குகிறது.*
மேலைத்தேய மரபில் சகுனம்
மேலைநாட்டினர் ‘சகுனங்கள் பார்த்துக் காரியம் ஆற்றுவதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தமை பற்றி அறியமுடிகிறது.
உலக நாகரிகங்கள் பற்றி ஆராய்ந்த வில்டுரான்ட், கிரேக்க இனமக்களிடையே சகுனம் பார்க்கும் வழக்கம் பெருவாரியாக இருந்தமை பற்றி விரிவாகக் குறிப்பிடுவார்."
பண்டைக்கால நாகரிகங்களின் வரலாறு பற்றி ஆராய்ந்தவர்கள், உரோமானிய நாகரித்தில் சகுனம் பெற்றிருந்த முதன்மையான இடத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர்.*
மேலை நாட்டவர், மின்னல், மேகத்தின் நகர்வு, பறவைகளின் சண்டை, சில புனித மிருகங்களின் பாதை போன்றவற்றைக் கொண்டு சகுனம் பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தமை பற்றி ஆங்கிலக் கலைக் களஞ்சியம் குறிப்பிடும்.* அத்துடன் நிமித்தக் குறிகள் பெரும்பாலும் வெளிப்படும் ஐந்து நிலைகள் பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகிறது.*
எகிப்தியர்கள் நல்லநாள் பார்த்துக் காரியம் ஆற்றுவதில் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தார்கள்.*

Page 68
130 «Х•
மேலே சுட்டிய தகவல்கள் மூலம், மேலை நாட்டினர் மத்தியில் சகுனம் பெற்றிருந்த முதன்மையினை அறிந்து கொள்ளலாம்.
தமிழக மரபில் சகுனம்
செயல்களைத் தொடங்கும் முன்பு ‘சகுனம் பார்க்கும் நம்பிக்கை வழக்கம் தமிழர்களிடம் தொன்று தொட்டே இருந்து வந்துள்ளது. ஆரம்ப காலத்தில் பறவைகளால் நிமித்தம் பார்க்கும் நடைமுறை இருந்தது. இதனால் ‘புள்’ என்பதற்கு நிமித்தம் என்றும் பெயர் வந்தது எனலாம். நிமித்தங்களை அறிந்து சொல்பவன் ‘நிமித்திகன்’ என்று அழைக்கப்பட்டான்.
சங்க இலக்கியங்கள் ‘சகுனம் பார்க்கும் நடைமுறைகள் பற்றிய விரிவான தகவல்களைத் தருகின்றன.
நீரையும், நெல்லையும் சொரிந்து விரிச்சி கேட்கும் வழக்கம் பற்றி,
நென்னீரெறிந்து விரிச்சி யோர்க்கும் செம்முது பெண்டின் சொல்லு நிரம்பா"
எனப் புறநானூற்றுப் பாடல் விளக்கி நிற்கிறது. மலைபடுகடாத்திலே புலவனைப் புரவலனிடம் ஆற்றுப்படுத்தும் பாணன், இதுவே பொருள் பெற நல்ல நிமித்தம் எனக் கூறுகிறான்.* குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு முதலான சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் சகுனம் பற்றிய செய்திகள் மிகுதியாகக் கிடைக்கின்றன.*சிலம்பில் தீநிமித்தங்களைப் பற்றிக் கூறுமிடம் சுவையானது. கோவலன் கொலைப்பட்டபின் ஆயர்பாடியில் நிகழும் தீநிமித்தங்களைப் பலவாக அடுக்கிக் கூறக் காணலாம்.
கம்பராமாயணத்திலே, சீதை திரிசடையிடம் தன் இடது கண்ணும், புருவமும் துடிப்பதைக் கூறி, நன்மை தீமைகளைக் கேட்பதோடு, இராவணன் தன்னை வஞ்சனையால் கவர்ந்த அன்று வலந்துடித்தது பற்றியும் குறிப்பிடுவதாகக் கம்பர் சித்திரித்துள்ளார்."
மேலே சுட்டிய செய்திகள் மூலம் தமிழ் மரபில் காலங்காலமாகச் சகுனங்கள் பார்க்கும் நம்பிக்கை வலுவாக

0X 131
நிலைபெற்று வந்துள்ளதனை உணரமுடியும். நாகரிகம் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில்கூடச் சகுனம் பார்க்கும் வழக்கம் தொடர்ந்து வருவதனைப் பார்க்க முடிகிறது. வடமொழி, தமிழ்மொழி ஆகிய இருமொழி இலக்கிய மரபில், மனித உணர்வைப் பறவை மற்றும் விலங்கு இனங்கள் வாயிலாக உணர்த்தியுள்ள போக்குப் பற்றி அறிஞர்கள் விரிவாக விளக்கியுள்ளமை கருதத் தக்கதாகும்.*
நாவல்களில் ‘சகுணம்’
மக்களின் வாழ்வியல் நடைமுறைகளில் மிகுந்த செல்வாக்குச் செலுத்தும் சகுனக்குறி நம்பிக்கை பற்றிப் பல்வேறு நாவல்களிலும் பலவாறான செய்திகள் கிடைக்கின்றன.
நல்ல சகுனம் ஆலயமணி ஒலித்தல்
காரியம் ஒன்றை நினைக்கையில், கோவில் மணி ஒலிதால் அதனை நல்ல சகுனமாகக் கொள்வர். தண்ணீர் என்ற நாவலில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பமான கிணற்று வேலைகள் மங்களகரமாகவே முடியும் எனப் பம்பிடிசிங்கி கூறவும் பக்கத்தே உள்ள ஆலயத்துமணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.*இதனைச் சூழ நின்றோர் நல்ல சகுனமாக எடுத்துக் கொண்டனர்.
நினைக்கும் போது தோன்றுதல்
எவரையாவது நினைக்கும்போது குறிப்பிட்ட நபர் உடனேயே பிரசன்னமானால் அவருக்கு ஆயுள் பலமானதாகும் என்று நம்புகின்றனர். காவோலை என்ற நாவலில் கனகர் கிட்டினனை நினைக்கையில் அவனே வந்து விடுகிறான்.
கனகர் சொல்லி வாய்மூடவில்லை. கிட்டினன் படலையைத் திறந்து கொண்டு வந்தான். உனக்கு நூறு
வயசடா. கிட்டினா . இப்பத்தான் உன்னை நினைச்சன்
90
என இந்நம்பிக்கை பற்றிச் செங்கையாழியான் விளக்குவார்.

Page 69
132 «Х•
ஒருவரைப்பற்றிப் பிறர் பேசும் போது பேசப்படுகின்ற நபரின் மூக்கு உளைவு எடுக்கும். அதன் மூலம் பிறர் தன்னைப் பற்றிப் பேசுகின்றனர் என நம்பும் வழக்கம் உள்ளது. இதனைப் பற்றி எஸ்.பொன்னுத்துரை, தீ என்ற நாவலில் குறிப்பிடுகிறார்."
தீய சகுனம் அதிக விளைச்சல்
அதிக விளைச்சல், அதிக மழை என்பன தீய சகுனங்களாகக் கொள்ளப்படுகின்றன.* இதுபற்றிய விரிவான விளக்கத்தினை இறப்புப் பற்றிய நம்பிக்கையிலே பார்க்கலாம்.
பின்னிருந்து அழைத்தல்
காலியம் ஆற்றப்புறப்பட்டுச் செல்கையில், பின்பக்கத்தே நின்று ‘எங்கே போகிறீர்கள்? எனக் கேட்டால் அக்காரியம் கைகூடாது என நம்பும் வழக்கம் காணப்படுகிறது. சடங்கு என்ற நாவலில், வேலை விடயமாக வெளியே புறப்படத் தயாரான செந்தில்நாதனை நோக்கி அவன் மனைவி,
“தூரத்துக்கே புறப்பட்டியள்’? எனக் கேட்கவும் அவளின் தாயானவள், நீயும் புள்ளை இத்தனை வருஷமாய் வாழ்ந்திட்டாய் . வெளிக்கிடுகிறவரைப் பார்த்து எங்கை எண்டே சேக்கிறது.*
எனச் சொல்வதனூடே இந்நம்பிக்கை பற்றி விளக்கப்படுகிறது.
எருது சோம்பியிருத்தல், கனைத்தல்
வீட்டில் வளர்க்கும் எருது சோம்பியிருத்தல், கனைத்தல் ஆகியனவற்றை அபசகுனமாகக் கருதுவர். பெரும்பாலும் மரணம் நிகழ்வதற்கான அறிகுறிகளாகவே இவை கருதப்படுகின்றன.
குமாரபுரம் என்ற நாவலில், தன்வீட்டு எருதுகள் சோம்பி நின்றதை அவதானித்த சித்திராவுக்கு, பின்னால் நிகழப் போகும் அபாயம் பற்றி ஒரளவு தெரிந்தே இருந்தது. சொற்ப வேளைக்குள் அவளின் கணவன் “குமாரு கொலையுண்ட செய்தியைக்
கேள்விப்படுகிறாள்."

(X 133
கானல் என்ற நாவலில், கன்னி நாகு கனைத்த சொற்ப வேளைக்குள்ளேயே வெள்ளைச்சி அம்மானின் உயிர் பிரிந்து விடுவதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. பூக்கண்டரின் மனைவி வாயிலாக இச்சகுனம் பற்றி விளக்கப்படுகிறது.*
பருவம் தப்பி மரம் காய்த்தல்
பருவம் தப்பி, மரங்கள் காய்த்தால் அது அபசகுனமாகும். கழுகுகள் என்ற நாவலில், ஆறுமுகத்தாரால் பராமரிக்கப்பட்ட மாங்கன்று பருவம் தப்பி ‘வம்புக்காய்’ காய்த்தது. அது அவரது முடிவுக்கே வழிகோலுவதாக அமைந்துவிட்டதாகத் தெணியான் சித்திரிப்பது வம்புக்காய் பற்றிய மக்களின் மனோநிலையின் வெளிப்பாடே எனலாம்.*
நாய்குரைத்தல்
காரணம் ஏதேனும் இன்றி நாய்குரைத்தால் அதனைதீய சகுனமாகக் கொள்வர். இவ்வாறு குரைத்தால், வீட்டில் உள்ளவர்களில் எவராவது மரணமடைவார்கள் என நம்பப்படுகிறது. இயமன் உயிரெடுக்க வருவது பற்றி நாய்களுக்குத் தெரியும் என்ற நம்பக்கை பற்றிக் கானல் என்ற நாவலில் குறிப்பிடப்படுகிறது."
நாய்க்கும் எமனுக்குமுள்ள தொடர்பு குறித்த நம்பிக்கை தமிழக மக்களிடமும் வழக்கில் உள்ளது.* தெலுங்கு மொழி பேசும் ஆந்திர மாநிலத்தில் உள்ள எருக்கலவாரு என அழைக்கப்படும் பழங்குடி மக்களிடையே, நாய் தலையை ஆட்டினால், காலால் மண்ணைப் புரட்டினால் தீமை நடக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதும் இவ்விடத்திலே கருதத் தக்கதாகும்.*
விளக்கு அணைதல்
நல்ல விடயங்களைப் பேசிக்கொண்டு இருக்கும்போது திடீரென விளக்கு அணைந்தால் அதனை அபசகுனமாகக் கொள்ளும் நம்பிக்கைபற்றிப் பஞ்சகோணங்கள் என்ற நாவலில் விளக்கப்பட்டுள்ளது."
நாளுக்குச் செய்ததை மீளவும் செய்தல்
தொழில் நடைமுறைகளிலும் சிலவகையான சகுன நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. பொதுவாக நாளுக்குச்

Page 70
134 x
செய்யப்படும் காரியங்களை மீளவும் செய்ய முற்பட்டால் அது தீமை பயக்கும் என்று நம்பப்படுகிறது. வாடைக்காற்று என்ற நாவலில், நாளுக்குப் போடப்பட்ட மீன்வாடியைப் பிடுங்கி வேறொரிடத்தில் அமைப்பதென்பதை அபசகுனமாகவே மரியதாஸ் கருதுகிறான்.*
கடலை குருவி வரைதல்
பறவைகள் சகுனம் உணர்த்துதல் பற்றிய நம்பிக்கை உலகளாவிய முக்கியத்துவம் கொண்டதாகும். அமெரிக்கக் கலைக்களஞ்சியம், பறவைகளின் அசைவுகள் சகுனம் உணர்த்தியமை பற்றிக் குறிப்பிடுகின்றது.*
சுடலைக்குருவி (கூகை) என்ற ஒருவகைக் குருவி (இது ‘சாக்குருவி” எனவும் அழைக்கப்படும்) வீட்டைச் சுற்றிக் கூவித் திரிந்தால் வீட்டில் மரணம், துன்பம் ஆகியன நிகழும் என்பது இன்று வரை காணப்படும் நம்பிக்கையாக உள்ளது.
பஞ்சகோணங்கள் என்ற நாவலில், அருணாசலத்தார்க்கும், அவரது நண்பர்களுக்கும் வரவுள்ள துன்பங்களுக்கான எச்சரிக்கையாகச் சாக்குருவிகள் வலமிடமாகப் பறந்தமை பற்றிச் சித்திரிக்கப்பட்டுள்ளது.*
அடிமைகள் என்ற நாவலில், செல்லப்பாக்கியக்குஞ்சி இறப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக அவளது வீட்டைச் சுடலைக் குருவி சுற்றிச் சுற்றிப் பறந்ததாகச் சொல்லப்படுகிறது.*
இவையெல்லாம் சுடலைக்குருவி தொடர்பாக மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கைகளை வெளிப்படுத்துவனவாயுள்ளன. ‘சாக்குருவி கத்தினால் இறப்பு வரும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடமும் வழக்கில் உள்ளமை பற்றி மேலைதேய ஆய்வாளரான விதாலி ஃபுர்னிக்கா குறிப்படுவதும் இங்கு கருதத் தக்கதாகும்.*
காகமும், சகுனமும்
தமிழரிடையே காகம் சகுனம் உணர்த்துதல் பற்றிய நம்பிக்கை தொன்றுதொட்டே நிலவி வந்தமை பற்றி அறியமுடிகிறது. * பிதிருகளுடன் தொடர்புடைய காக்கைகள் மனிதனுக்குப் பலவிதமான எச்சரிக்கைகளைச் செய்கின்றன’*என்பர்.

நிமித்தம் உணர்த்தும் பறவைகள் சிலவற்றிடம் புனிதத்தன்மை அடங்கியிருப்பதாகக் கருதும் எண்ணத்தின் அடிப்படையிலேயே 'காக்கை’ நிமித்தப் பறவையாகச் சுட்டப் பட்டிருப்பதாக ஜி.எல்.ஹார்ட் (G.L.Hart) என்பவர் குறிப்பிடுவார்."
விருந்து வருதலை உணர்த்துதல்
காகம் கரைந்தால் விருந்து வரும் என்ற நம்பிக்கை பழைமையான ஒன்றாகும். குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலான சங்க இலக்கியங்களிலே இது பற்றிய செய்திகள் நிறையக் கிடைக்கின்றன.* இது, விருந்து பற்றிய தமிழரின் மன விழைவையும், காக்கை மீதான பிடிப்பினையும் எடுத்துக் காட்டுவதாகச் சமூகவியலார் எடுத்துக் கூறுவர்.*
சடங்கு என்ற நாவலில், காகம் சுற்றிச் சுற்றிக் கரைந்ததைக் கருத்திற் கொண்டு, ‘பெரியதம்பி இன்று கட்டாயம் கொழும்பால் வருவான்’ எனத் தாயிடம் பத்மா தனது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறாள்."
மேலும் சடங்கு என்ற நாவலில், செந்தில்நாதன், தனது வரவுபற்றி எப்படி முன்கூட்டியே தெரியும் என மனைவியிடம் வினவிய போது,
உண்ணாணையப்பா, உங்கை காகங்கள் கரைஞ்சு திரிஞ்சுதுகள். நீங்கள் வருவியளோ எண்டு நினைச்சுக் கொண்டு பறந்து கத்திக் காட்டச் சொன்னன். அதுகளும் பறந்து காட்டீச்சுதுகள்."
என அன்னலட்சுமி விவரிப்பதில் காகம் விருந்துவரக் கரைதல் பற்றிய நம்பிக்கை புலப்படுத்தப்படுகிறது.
நிலக்கிளி என்ற நாவலில், தனது வீட்டுக்கு வருகை தந்த சுந்தரலிங்கத்தின் வரவைத் தான் முன்னரே காக்கைகள் மூலம் அறிந்துவிட்டதாகக் கதிராமன் குறிப்பிடுகிறான்.*
மரணம் உணர்த்துதல்
‘அண்டங்காகம்’ என்ற ஒரு வகைக் காகம் கரைந்தால் மரணம் நிகழும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. இவ்வகைக் காகங்களின்

Page 71
136 <》
தலையின் மேலே ஒருவகைக் கொண்டை காணப்படும். கழுகுகள் என்ற நாவலில், இதனை ஆறுமுகத்தாரின் மரணத்துடன் தெணியான்
罢 2巫3
தொடர்புபடுத்திச் சித்திரித்துள்ளார்.
பல்லியும் சகுனமும்
பல்லி சகுனம் உணர்த்துதல் தொடர்பான நம்பிக்கையும் பண்டு தொட்டே நிலவிவரும் ஒன்றாகும். பல்லிச் சகுனத்தை விளக்கும் நூல், “கெளளி சாஸ்திரம்’ எனப்படும். பல்லி சொற்பலன் பலவகைப்படும். பல்லி இருக்கும் திக்குகளை மாத்திரம் அனுசரித்தல், திக்குகளையும், கிழமைகளையும் அனுசரித்தல், திக்குகளையும், கிழமைகளையும் இருக்கும் இடத்தையும் அனுசரித்தல் எனும் இம்மூன்று வகைகளிலும் மூன்றாவதே மக்களிடம் மிகுதியாகப் பயில்நிலையில் உள்ளது எனலாம்.*
பல்லி ஒருவரின் உடலின்மேல் வீழ்வதைக் கொண்டு பலன்பார்க்கும் நடைமுறையும் வழக்கில் உண்டு.
பல்லி சொல்வதைச் சகுனமாகக் கொள்வதைப் பண்டைய இலக்கியங்கள் எடுத்துக் கூறுகின்றன. பாங்கர்ப் பக்கத்துப்பல்லி பட்டென, என்ற நற்றிணைப் பாடல் குறிப்பிடுகிறது.*
பல்லியும் பாங்கொத்திசைத்தன நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே ..."
எனக் கலித்தொகைப் பாடலடிகள் சகுனம் பற்றிக் குறிப்பிடுகின்றன. பல்லியின் ஒலி நன்நிமித்தமாக அமைவதனை “இனிய கூறும் பல்லி”**நல்லதைக் கூறும் பல்லி”**நிகழ்வதைக் கூறும்பல்லி”* “முதுவாய்ப் பல்லி”* “கணிவாய்ப்பல்லி”* எனச் சங்க இலக்கியங்கள் குறித்திருப்பது கொண்டு அறியலாம்.
மனிதனது இருப்பிடத்தை அண்டி வாழும் பல்லிகளின் ஒலிகள் அவனது நிலைமைகளை நிச்சயிக்க உதவியிருக்கலாம். பல்லி நிமித்தம் தென்னிந்தியாவுக்குச் சிறப்பான ஒன்று எனக் க. காந்தி குறிப்பிடுவார்.*
கிராம தேவதைகளுக்கு விழா எடுக்க நினைக்கும்போது தேவதை பல்லியின் வாயிலாக விழாத்தொடங்குவதற்கு அனுமதி

& 137
அளிப்பதாகத் தமிழக மக்கள் நம்புவது பற்றி இலட்சுமணன் செட்டியார் விளக்கியுள்ளார்.*
உச்சத்துப்பல்லி
பஞ்சமர் என்ற நாவலில், உச்சத்துப் பல்லியின் குரல் கேட்டு அச்சம் கொண்ட வேலுப்பிள்ளைக் கமக்காரனை, அவரது மனைவி, உச்சத்துப் பல்லி அச்சமில்லை எனத் தேற்றுவதான செய்தி கிடைக்கிறது.* உச்சத்தில் பல்லி சொல்வது தீய சகுனமாகவே நம்பப்படுகிறது. இதுபற்றிய செய்திகள் பல இடங்களிலும் பயின்றுள்ளன.
தெற்குப்பல்லி
தெற்குத் திக்கில் இருந்து பல்லி சொல்லுதல் என்பதையும் தீய சகுனமாகவே கொள்வர். இந்நம்பிக்கை பற்றிப் பஞ்சகோணங்கள் என்ற நாவலில், விவரிக்கப்பட்டுள்ளது.*
ஏதாவது ஒரு காரியம் ஆற்றப் புறப்பட்டுச் செல்கையில் திடீரெனப் பல்லி குரல் வைத்தால் அக்காரியம் நடவாது என நம்புவர். இதனை நச்சுப்பல்லி’ என அழைப்பர். கானல் என்ற நாவலில், வேலை விடயமாக வெளியே புறப்பட்டுப் போன தம்பனை, அவனது மனைவி பின்னாலிருந்து அழைத்தபோது நச்சுப் பல்லிபோல பின்னாலிருந்து இழுக்கிறாள்" என அவளைத் தம்பன் ஏசுவதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
முழிவிசேடம்
காரியம் ஆற்றப் புறப்படுகையில் எவரில் அல்லது எவற்றில் எதிர்ப்பட்டுச் சென்றார் என்பதனை வைத்துப் பலன் பார்க்கும் நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது. கிராமிய வழக்கில் இதனை ‘முழிவியளம்’ எனக் குறிப்பிடுவர். காலையில் யாரில் விழித்து எழுதுவது, காரியம் கை கூடாதுவிட்டால் யாரில் விழிக்க நேர்ந்தது என்ற நம்பிக்கை பற்றி நாவல்களிலே செய்திகள் கிடைக்கின்றன.
முற்றத்து ஒற்றைப் பனை என்ற நாவலில், முத்தர் அம்மான் தமது பிரயாணம் தடைப்பட்டுப் போனமைக்கு முழிவியளப் பிழையே

Page 72
138 X
காரணம் என நம்புகின்றார்.*
தண்ணிர் என்ற நாவலில், உடையாரின் கண்ணில் முழிவியளத்துக்கு நிற்கக் கூடாது எனக் கருதிய சொடுகள், ஒதுங்கி மறைந்து கொள்கிறான்.*
சடங்கு என்ற நாவலில், கொழும்பு நோக்கிப் பிரயாணப்படும் செந்தில்நாதனுக்கு அவனின் மனைவி முடுழிவியளமாக நின்று கொள்வதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.*
போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில், மனநலம் குன்றியவர்களில் விழித்துச் செல்வது மிகவும் ‘நல்லசகுனம்’ என்ற நம்பிக்கை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.* இதற்குக் காரணம் அவர்களின் வஞ்சகம் அற்ற தன்மையே எனக் கருதலாம்.
சகுனம் நம்பிக்கையின் பாற்பட்டனவாக உள்ளன. நிமித்தக் கூறுகளின் வியக்கத்தக்க பண்பியல்புகளும், தீமைகளிலிருந்து காப்பாற்றுதல், சில நிலைமைகளை நிச்சயித்துக்கொள்ள உதவுதல் என மனித வாழ்வியலில் அவை ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்களும் சகுனங்கள் நிலைபெற உதவுகின்றன எனக் கூறலாம்.
பேய் தொடர்பான நம்பிக்கைகள்
பேய் பற்றிய நம்பிக்கை என்பது உலகளாவிய தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது. படித்தவர், பாமரர் என்ற வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் இந்நம்பிக்கை உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இயற்கைச் சூழலில் வாழ்ந்த மனிதன், இறந்த உயிரினங்கள் மீண்டும் பிறக்கின்றன என நம்பினான். இறந்த உடலை விட்டுக் கண்ணுக்குப் புலப்படாத ஒன்று பிரிந்து செல்கிறது எனக் கருதி, அதற்கு ‘ஆவி’, ‘பேய்’ எனப் பெயரிட்டான். ஆவியுலகக் கோட்பாட்டின் அடிப்படையாக இதனைக் கருதலாம்.
பேய்: சொல்லும் பொருளும்
பேய் என்பதற்குச் சென்னைத் தமிழ்ப் பேரகராதி, பிசாசம், காட்டுத்தன்மை, தீமை, வெறி எனப் பல்வேறு பொருண்மைகளைத்

& 139
தருகிறது.*தமிழ் இலக்கியங்களில் ‘அச்சம்’ என்ற பொருண்மையில் இச்சொல் பயன்பட்டு உள்ளது.*
தீமை தரும் ஆற்றல்களை ஆங்கில மரபில் ‘கோஸ்ட் (Ghost), *கோஸ்ட்லி’ (Ghostly), 'ஸ்பிரிட்’ (Spirit), பெமிலியர் ஸ்பிரிட்’ (familiar spirit) 67Görgy egy60ypüui.*
மேலைத்தேய மரபில் பேய்
பேய் பற்றிய நம்பிக்கை என்பது மேலைநாட்டினரிடம் நெடுங்காலமாகவே வழக்கில் இருந்து வந்துள்ளது.
உலக நாகரிகங்களின் வரலாற்றை ஆராய்ந்த வில்டூரான்ட், பூதவழிபாடே முன்னோர் வழிபாடாக மாறியது என்பர். அத்துடன் கலிலியோ காலத்து அறிவியற் சூழலிலில், உலகம் முழுவதும் உள்ளேயும், வெளியேயும், நீரும், காற்றும், பிசாசுகளும், கண்ணுக்குத் தெரியாத கொடிய ஆவிகளும் இருப்பதாகவும், இவை ஒருமனிதனின் உள்ளே புகுந்தால் அம்மனிதன் அவ் ஆவியின் வசமாகி விடுவான் என்றும் நம்பியமை பற்றிக் குறிப்பிடுகிறார். பேயோட்டலில் நிலவிய நம்பிக்கை பற்றியும் விரிவாக 66) u fi u fi... *“
பூதம் என்பது அகால மரணம் அடைந்தவர்களது ஆவியே எனக் குறிப்பிடும் ஆங்கில அகராதி, அகால மரணமடைந்தவர்களது ஆவியை மக்கள் வழிபட்டு வந்தமை பற்றியும் குறிப்பிடுகிறது.*
கிரேக்கர்கள், அனைத்து நோய்களுக்கும் காரணம் கெட்ட ஆவிகளே என்று நம்பியதை மானிடவியலாளர் எடுத்துக் காட்டியுள்ளனர்.*
பில்லி சூனியம், மாந்திரீகம் போன்ற செயல்களுக்கும் ஆவிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இது எல்லாச் சமயங்களிலும் காணப்படுகிறது. இறப்புக்கு அச்சம் கொள்ளும் மனிதன், இறந்த பின் அவனுடைய ஆன்மா ஒரு திருப்தியான நிலையைத் தேடுகிறது. இவ்வான்மா, படிப்படியாகப் பேய்’ என்ற நிலையில் இருந்து மாறித் துர்தேவதையாகக் கருதப்படுகிறது. இந்தத்

Page 73
140 X
துர்தேவதையின் முடிவான வளர்ச்சியே கடவுள் என்ற நிலையாகிறது"
என அமெரிக்கக் கலைக் களஞ்சியம் குறிப்பிடுவது பேய் பற்றிய மேலைத் தேசத்தவர்களது எண்ணப் பாங்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது.
சமயத்தின் தொடக்கம் ஆவிகளின் பால் ஏற்பட்ட நம்பிக்கையிலிருந்து தோன்றியது என எட்வர்டு பர்னட்டைலர்
238
குறிப்பிடுவதும் இவ்விடத்தில் கருதத்தக்கதாகும்.
இந்தியமரபில் ‘பேய்"
இந்திய மரபில் பேய் பற்றிய நம்பிக்கைகள் மிகவும் வலுவான நிலையில் உள்ளதைக் காணமுடிகிறது. ஆவிகளின் நம்பிக்கை என்பது, சிந்து வெளிநாகரிகக் கூறுகளில் ஒன்றாக இருந்து வந்தள்ளமை பற்றிக் கு. வெ.பாலசுப்பிரமணியன் விரிவாகக் குறிப்பிடுவார்.*
அனைத்து வகையான சிரமங்களுக்கும், துன்பங்களுக்கும் கெட்ட ஆவிகளே காரணம் எனக் கருதும் இந்துக்கள், அவற்றை வழிபடுதலைப் பழக்கமாகக் கொண்டுள்ளமை பற்றி
*、240
அப்போதுபாய்ஸ் குறிப்பிடுவது கருதத் தக்கதாகும்
தமிழ்மரபில் ‘பேய்"
பண்டைத் தமிழர், கடவுள், தெய்வம், அணங்கு, சூர், பேய், பூதம் முதலானவற்றை இயற்கையின் கூறுகளுள் ஒன்று எனக் கருதினர். அவைகளுக்குரிய பண்புகளையும் கற்பித்தனர். தீமை தரும் ஆற்றல்களுள் பிறவகை ஆற்றல்களைவிடப் பேயைப் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் மிகுதியாகக் கிடைக்கின்றன.
ஆவியானது, பொருள்களில் வந்து உறைவதனால், தமக்கு நன்மை, தீமை ஆகியன ஏற்படுகின்றன எனப் பழந்தமிழர் எண்ணியமை பற்றி அகநானூறு, புறநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு முதலான இலக்கியங்களிலே சான்றுகள் கிடைக்கின்றன.* இவை அச்சத்தை விளைவித்தமையால் 'உருகெழுதெய்வம்’ என அழைக்கப்பட்டன.*

& 141
பரிபாடல் ‘பேஇ வணக்கம்’ என்று பண்டைய மக்களின் முருக
வணக்கத்தைக் குறிப்பிடுகிறது.*
‘தொடர்’, ‘எருக்கலவாரு முதலான பழங்குடி மக்களிடையே காணப்படும் ஆவி உலக நம்பிக்கை பற்றிச் சான்றோர் விரிவாக விளக்கியுள்ளனர். பேய், பிசாசு, மறுபிறப்பு முதலானவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள இம்மக்கள் இறந்தவர்களின் ஆவி சிலகாலம் பூமியில் சஞ்சாரம் செய்யும் என்பதிலும் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்.*
பேயின் உருவம்
காய்ந்த தலைமயிர், திறந்த வாய், பிறழ்ந்த பற்கள், சுழலும் விழிகள், பாம்பும் கூகையும் கூடிவாழும் பெரியகாது எனப்பேயின் உருவைத் திருமுருகாற்றுப்படை விவரிக்கிறது.* மேலும் பேயின் தலை தாழை மடல் போன்றது என அகநானூறும்.* யானையின் கால் நகம் போலப் பேயின்பற்கள் பெரியது எனப்பட்டினப்பாலையும்,* காது, நாக்குப் பற்றிச் சிறுபாணாற்றுப்படையும்* பேயின் உருவை விவரிக்கின்றன.
பேயின் இருப்பிடம்
பேய்கள், பிணம் கிடைக்கக் கூடிய இடங்களான போர்க்களம், முதுகாடு, சுடு நெறி, மன்றம் முதலான இடங்களில் வாழும் இயல்பின எனப் பண்டைத்தமிழர் நம்பினர்.* காரைக்கால் அம்மையார், பேயைக் கழுகுடன் இணைத்துப் பேசுவார். கழுதைப் புலிகளைப் பேயுடன் இணைத்துப் பார்க்கும் மரபு இருந்தமை பற்றித் தமிழவனும் குறிப்பிடுவார்.*
பேயின் செய்கைகள்
நள்ளிரவில் நடனமாடுதல், இரவில் கூட்டமாகத் திரிதல், அழுது புலம்புதல், இறந்தவரை உண்ணுதல், புண்பட்டவரை உண்ணுதல் முதலானவற்றைப் பேயின் செய்கைகளாகப் பண்டைத்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.*

Page 74
142 々
நாவல்களில் பேய்பற்றிய நம்பிக்கை
நாவல்களில் பேய் பற்றிய பல்வேறு நம்பிக்கைகள் பயின்று வந்துள்ளமையினைக் காணமுடிகின்றது.
பேயின் வகை
பேய்கள் பலவகைப்படும். அவை ஒவ்வொன்றினது செய்கைகளும் வித்தியாசமானவைகளாக அமைந்து காணப்படுகின்றன. இவைபற்றிய பல்வேறு செய்திகளையும் நாவல்களில் காண முடிகிறது.
சுள்ளன், காடன்,* ஊத்தைக்குடியன், பெல்லிப்பிசாசு, மோகினிப்பேய்,* சுடலைமாடன், எறிமாடன், ஏவல்பிசாசு" எனப் பல்வேறு வகையான பேய்களின் வகைகள் பற்றி நாவல்கள்
குறிப்பிடுகின்றன.
பெல்லிப்பேய் (பில்லிப்பசாசு) என்பது, மந்திரவாதிகளினால் பிறர்க்குத் துன்பம் விளைவிக்கும்படி ஏவப்படுகின்ற பேயாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
குமாரபுரம் என்ற நாவலில், ஆனையை அடக்கி வீரம் விளைவித்த அரியாத்தை, வீட்டுக்குள் சென்று படுத்தபின் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் பிறர் ஏவிய ‘பில்லிப் பேயே’ எனக் காட்டப்படுகிறது.*
பஞ்சகோணங்கள் என்ற நாவலில், இளையதம்பியர் ஏவிய அடியாட்கள் சுப்பையா வாத்தியாரை அடித்து வீழ்த்திய செயல், ஏவல் பேய்களின் செய்கையுடன் ஒப்பிட்டுப் பேசப்படுகிறது.* ஏவலை அப்படியே செய்யும் தன்மையே இதற்கான காரணம் எனலாம்.
அடிமைகள் என்ற நாவலில், பெல்லிப் பேயை ஏவி விடுவதில் வல்லவனான கயித்தானைப் பகைத்துக் கொள்வதைப் பலரும் தவிர்த்து விடுகின்றமை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.*
பெல்லிப் பிசாசு பற்றிய நம்பிக்கை இன்றுவரை மிகவும் வலுவுள்ள ஒன்றாகக் காணப்படுவது கருதத்தக்கதாகும். கெட்ட

※,143
ஆவிகளின் துணையுடன் இவ்விதமான ஏவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மக்கள் நம்புகின்றனர்.
பூமரங்கள் என்ற நாவலில், மோகினிப் பேயானது இளவயது ஆண்களையும், பெண்களையும் பிடிக்கும் என்ற செய்தி சொல்லப்படுகிறது*
இளவயது ஆண்கள் பெண்கள் முதலானோர் காதல் வயப்படும்போது, அவரவர் செய்கைகளில் மாற்றங்கள் தென்படுவதுண்டு. இதனைப் பேயின் தாக்கமாகப் பார்க்கும் மரபு இன்றுவரை காணப்படுகிறது. தமிழக மக்களிடமும் இதே வகையான நம்பிக்கை பயில் நிலையில் இருத்தல் பற்றி நா. வானமாமலை குறிப்பிடுவார்.*
பேயின் செய்கைகள் பழிவாங்குதல்
பேய் பழிவாங்கும் என்று நம்புகின்றனர். இயற்கை அல்லாத நிலையில் மரணம் அடைகின்றவர்களின் ஆவி பேயாக மாறித் தீமைகளை வளைவிக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடையே பரவலாக உள்ளது.*
பஞ்சமர் என்ற நாவலில், சிறாப்பரின் நடுவிலாள் இரத்தப் பெருக்குக் கண்டு இறந்து போனமைக்குக் காரணம், சிறாப்பரால் படுகொலை செய்யப்பட்ட சிறிசேனாவின் ஆவியே எனச் சித்திரிக்கப்பட்டுள்ளது.*
அடிமைகள் என்ற நாவலில், கைலாயரின் மறைவுக்குப் பின்னர் சரக்கனன் அட்டகாசம் அதிகரித்து, பஞ்சமர் துன்புறுத்தலுக்கு உள்ளான போது, சரக்கனின் உடலுக்குள் நின்று கைலாயர் பழி வாங்குவதாகவே அம்மக்கள் எண்ணிக் கொண்டனர்.*
அலைந்து திரிதல், அமுகுரல் வைத்தல்
மரக்கொக்கு என்ற நாவலில், ஆவிகள் அலைந்து திரிகின்றமை பற்றியும், அழுகுரல் வைப்பது பற்றியும் சித்திரிக்கப்பட்டுள்ளது. அகாலமரணம் அடைவோர்களது ஆவி பற்றிய மக்களின் நம்பிக்கையினை இது வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.*

Page 75
144 «Х•
அதிகமாக ஆசைப்படுதல்
பேயானது அதிகமாக ஆசைப்படும் என்பது நம்பிக்கையாகும். பஞ்சமர் என்ற நாவலில், பேய்கள் அளவுக்கதிகமாக ஆசைப்படுவது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.*
பேயின் நடமாட்டம்
பேய்கள் பெரும்பாலும் இரவு வேளைகளிலேயே நடமாடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்நம்பிக்கை பற்றிப் பல்வேறு நாவல்களிலும் செய்திகள் கிடைக்கின்றன. அடிமைகள் என்ற நாவலில், சின்ன நாச்சியாருக்குப் பிடித்த பேயானது, நயினார் இரவுப்பயணம் வந்த போது அவருடன் தொற்றிக்கொண்டு வந்ததாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது.*
தண்ணீர் என்ற நாவலில், வடமராட்சிப் பிரதேச மக்களுக்கு நன்கு பரிச்சயமான வல்லை முனி பற்றியும், அது நள்ளிரவில் செய்கின்ற சேட்டைகள் பற்றியும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.*
சுமையிறக்க உயிர் எடுத்தல்
பெண், வயிற்றுப் பிள்ளையுடன் இறந்து போனால், அவளுடைய ஆவியானது அப்பிள்ளைக்குத் தகப்பனானவரின் உயிரினைச் சுமையிறக்கும் பொருட்டு அழைத்துக்கொள்ளும் என நம்புவர். இதன் பொருட்டுச் சுமையிறக்கற் சடங்கை இறப்புச் சடங்கன்றே நடத்திவிடுவர். தண்ணீர் என்ற நாவலில், இவ்விடயம் பற்றி தெய்வியின் இறப்புச் சடங்கு குறித்த பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.*
வாய்பிதற்றச் செய்தல்
பேயால் பிடிக்கப்பட்டவர்கள் தம் நிலை மறந்து வாய்பிதற்றுவர். பஞ்சமர் என்ற நாவலில் தனது தந்தையின்
வாய்பிதற்றலைக் கண்ட முத்து, பயத்தால் நடுங்கித் தனது குலதெய்வத்தை வேண்டுகிறாள்.*
பேய் பிடித்தலிலிருந்து தற்காத்துக் கொள்ளல்
நடுநிசியில் பிரயாணம் செய்தல், கன்னிப் பெண்கள் நடுஇரவில்

* 145
கிணற்றில் நீர் அள்ளுதல் முதலான சந்தர்ப்பங்கள் பேயால் பிடிக்கப்படக் கூடியனவாகக் குறிப்படப்படுகின்றன.*
இரவுப் பிரயாணங்களின் போது கையில் ஒரு இரும்புத்துண்டை எடுத்துச் சென்றால் பேயால் எதுவுமே செய்துவிட முடியாது என்ற நம்பிக்கை இன்று வரை காணப்படுகிறது.
போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில், இரவில் கிணற்றடியில் குறித்துக் கொண்டிருந்த பரிமளம், திடீரென எழுந்த அரவத்தைக் கண்டு,
‘எண்டப்பேய் ஆரது பயத்தில் அவள் குரல் அனுங்கி அலறிற்று ஒருவாளி வார்த்து ஈரமாயிருந்த உடல் சில்லென்று ஓடி வியர்த்தது போலிருந்தது. வாளியை நெஞ்சோடு வைத்து. இறுகக் கட்டிக்கொண்டாள். கையில் இரும்பாலான பொருள் இரக்கிற வரையில் எந்தப் பேய் பிசாசும் முடுகிவராது என்ற நம்பிக்கை ..."
எனக் கூறுவது இந்நம்பிக்கையின் வெளிப்பாடே எனலாம். இவ்வகை நம்பிக்கை தமிழக மக்களிடமும் உள்ளமை பற்றி அ.இராசேந்திரன் குறிப்பிடுவார்."
பேயோட்டுதல்
பேயால் பிடிக்கப்பட்டவர்களிலிருந்து பேயை ஒட்டுவதான சடங்கு நடைமுறை குறித்து நாவல்களிலே பரவலாகச் செய்திகள் கிடைக்கின்றன. வெள்ளி, செவ்வாய் முதலான நாட்களில் மந்திரவாதியைக் கொண்டு பேயோட்டற் சடங்கை மேற்கொள்வர்.
அடிமைகள் என்ற நாவலில், சின்ன நயினாத்திக்குப் பிடித்த பேயை ஒட்டுவதற்கான கழிப்புச் சடங்குக்குரிய பொருட்களாக அரசி, வெள்ளைச் சேவல், தேங்காய், நெல்லுப்பொரி, ஆலம் சுள்ளி, பச்சைக் கற்பூரம், சாம்பிராணி, வெற்றிலை, வாழைப்பழம், நவதானியம், தேசிக்காய், வேப்பம்பத்தி, வாழைக்குட்டி, குங்கிலியம், ஒன்பது சிரட்டைகளில் தென்னங்கள்ளு முதலான பல்வேறு பொருட்களை மந்திரவாதியான கயித்தான் குறிப்பிடுகிறான்.?

Page 76
146 X
இருளின் கதிர்கள் என்ற நாவலில் படையற்பரப்பு, கோழிப்பலி, சுடலைக்கழிப்பு ஆகியன பற்றி விரிவாகக் குறிப்பிடப்படுகின்றன.* இவ்வாறான சடங்குகளின் இறுதி நிகழ்வாக நூல்கட்டுதல், யந்திரத்தகடு வழங்குதல் முதலானவை நடைபெறும்.*
பேய் பற்றிய நம்பிக்கைகளுக்கான அடிப்படைக் காரணம் அச்சமே எனலாம். இவ்வச்சம் காரணமாகப் பேய்பற்றிய நம்பிக்கைகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
கடவுள் தொடர்பான நம்பிக்கை
கடவுள் நம்பிக்கை என்பது மனித இன வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது. தன் அறிவுக்கும், ஆற்றலுக்கும் முறையே புலப்படாத, உட்படாத சக்திகள் மீது மனிதன் கொண்ட அச்சமே, அவனை இறை நம்பிக்கைக்கு இட்டுச் சென்றது எனலாம்.
உலகின் பல்வேறு இன மக்களிடையேயும் தம்மிலும் மேலான சக்தி ஒன்று உள்ளது என்ற நம்பிக்கை நிலவிவரக் காணலாம். அந்தச் சக்தி தொடர்பாகப் பல்வேறு நம்பிக்கைகள் வழக்கில் உள்ளன.
நாவல்களில் கடவுள் நம்பிக்கை கடவுளின் உறைவிடம்
மரங்களுக்கும் கடவுளர்களுக்குமுள்ள தொடர்பு பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இயற்கை கடந்த ஆற்றல்கள் மரங்களில் உறைவதாக நம்புகின்ற வழக்கம் உலகின் பல்வேறு இன மக்களிடையேயும் வழக்கில் உள்ளது. இதனைப் ‘புனிதப் போலி வழிபாடு’ (Fetishin) என அழைப்பர். மரத்தை வழிபடும் வழக்கம் சிந்துவெளிக்கால நாகரிகக் காலப்பகுதியிலேயே காணப்பட்டமை குறித்து ஆராய்ச்சியாளர் விளக்குவர்.*
கடவுள் உறையும் இடங்களாக மரங்களைக் கருதி வழிபட்ட நிலையைச்சங்க இலக்கியங்களிலே காணமுடிகிறது. பனை, கடம்பு, ஆலம் முதலான மரங்களிலே கடவுள் உறைகின்றமை பற்றிக் குறிப்பிடப் படுகின்றது.“கடவுள் மரத்த முள்மிடை குடம்பை” என அகநானூறு குறிப்பிடுகிறது."

வேப்பமரத்திலே கடவுள் உறைவார் என்பது நம்பிக்கையாக உள்ளது. போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில், வேப்பமரத்தில் உறையும் கடவுளுக்குரிய பூசை, புனஸ்காரங்களை முறைப்படி செய்யாததாலேயே அக்கடவுள் தன்னை வருத்துவதாகப் பரிமளம் எண்ணுகின்றாள்.* மதமாந்திரீக நிகழ்வுகளில் வேம்பம் பத்திகள் பயன்படுத்தும் நிலைபற்றியும் அறிய முடிகிறது.* கடவுளின் தன்மை கொண்ட வேப்பம் பத்தியினால் உடலைத்தடவுவதன் மூலம் நோய்கள் நீங்கும் என நம்புவர்.
வேப்ப மரத்தினைப் புனித மரமாகக் கருதி, அதன் கிளைகளை ஒடித்துக் காவல் செய்யும் மரபு தமிழக மக்களிடையே காணப்படுதல் பற்றி விதாலி ஃபுர்னிக்கா குறிப்பிடுவார்.* இம்மரத்தினை மாரியம்மன் வழிபாட்டுடன் தொடர்புபடுத்தும் மரபு பற்றிச் சுசீலா கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுவதும் இங்கு கருதத் தக்கதாகும்.*
அறுகம்புல்
அறுகம்புல்லில் விநாயகர் உறைவார் என நம்பும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. சடங்கு என்ற நாவலில், விடுமுறையில் ஊருக்கு வந்த செந்தில்நாதன், வீட்டின் கொல்லைப் புறங்களைத் துப்பரவு செய்தபோது, வாய்க்கால் ஒரத்திலே வளர்ந்திருந்த அறுகம்புல்லை மட்டும் தீண்டாமல் விட்டு விடுகிறார். அவசரத்துக்குப் பிள்ளையார் பிடிக்க உதவும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம்.*
கடவுளின் மேல் விசுவாசம்
பஞ்சமர் என்ற நாவலிலே எவருக்கு விசுவாசமாக இல்லாவிடினும் அவரவர் வணங்கும் குலதெய்வங்கள் மீது விசுவாசமாக இருக்கவேண்டும் என்ற நம்பிக்கை பற்றி ஐயாண்ணர் என்ற பாத்திரம் மூலம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.*
ஆபத்தும், குலதெய்வமும்
ஆபத்து வேளைகளில் அவரவர் குலதெய்வங்களை வேண்டினால் ஆபத்து உடனே விலகும் என்பது நம்பிக்கையாகும். நிலக்கிளி என்ற நாவலில், ஆபத்து வேளைகளிலே தன் அடியவரைக்

Page 77
148 «Х•
காப்பாற்றும் குருந்தூர் ஐயனின் பெருமைபற்றி உமாபதி, கோணாமலையர், பாலியர் முதலான பாத்திரங்கள் வாயிலாக எடுத்துக் கூறப்படுகிறது.*
பஞ்சமர் என்ற நாவலில், முத்து என்பவள், தனது குடும்பத்துக்கு ஆபத்து நேர்ந்தபோது துணைக்கு வராத துறைக்கரைப் பெரியதம்பிரானின் இருப்பையே சந்தேகிக்கின்றாள்.*
குறிசொல்லுதல்
இறைவன், வழிபடும் அடியார் மேலே வெளிப்பட்டுக் குறி சொல்லும் வழக்கம் மிகத் தொன்மையான ஒன்றாகும். சங்க இலக்கியங்கள் வெறியாட்டுடன்இதனை இணைத்துப் பேசுகின்றன. தெய்வம் ஏறி, ஆடும் மகளைச் சங்க இலக்கியங்கள் ‘சாலினி’, ‘தேவராட்டி’, ‘கணிக்காரிகை’ என்று குறிப்பிடுகின்றன.* ஈழத்து மரபிலே தெய்வம் ஏறி ஆடுவதனைக் கலையாடுதல், ‘உருவந்தாடுதல் முதலான சொற்றொடர்களால் அழைப்பர்.
போர்க்களம் என்ற நாவலில், தனது வயிற்றுப் பிள்ளையாலே கணவனுக்கு ஏற்படப் போகும் துன்பம் பற்றி, உருவந்து ஆடியவர் மூலம் அறிந்த இராசாத்தி மிகவும் கவலை கொள்வதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.*
புனிதப் பொருட்கள்
இறை வழிபாட்டோடு தொடர்புடைய புனிதப் பொருட்கள் நோய்களைக் குணப்படுத்தும் என்பது நம்பிக்கையாகும். அடிமைகள் என்ற நாவலில், கந்தனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கு உடனடி மருந்தாக அம்பாளின் அபிஷேக இளநீர் பருகக் கொடுக்கப்படுகிறது.*
குளிர்த்தி போடுதல்
ஊரில் கடுமையான வறட்சி, முதலியன ஏற்பட்டால் அதனைத் தெய்வக் குற்றமாகக் கருதி அம்மனுக்குக் குளிர்த்தி போடுவர். அவ்வாறு செய்வதன் மூலம் அம்பாளைக் குளிரச்செய்து அவளின் கருணையைப் பெற்றுக் கொள்ளலாம் என நம்புகின்றனர்.

நீண்ட பயணம் என்ற நாவலில், ஊரில் ஏற்பட்ட வறட்சி, நோய் ஆகியனவற்றுக்காகப் பால், இளநீர் ஆகியன கொண்டு அம்பாளுக்கு அபடேகம் செய்வித்தமை பற்றிச் குறிப்பிடப்படுகிறது.*இவ்வாறு குளிர்த்தி போடுகின்ற வழிபாட்டுச் சடங்கில் ஊரார் அனைவருமே பங்கெடுத்துக் கொள்வது வழமையானதாகும்.
நேர்ச்சை தொடர்பான நம்பிக்கைகள்
மக்கள் தமக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து விலக்குப் பெறும் வகையில் தெய்வங்களுக்கு நேர்ச்சை வைத்து, அதனை நிறைவேற்றிக் கொள்ளும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர். * நேர்ச்சை வைத்தால் தமது குறைகள், பிணிகள் நீங்கும் என்று நம்புகின்றனர்.
தெய்வத்துக்குப் பொருள்களை நேர்த்தலைக் கடம்பூணுதல், எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன.* இதிலிருந்த சங்ககாலம் தொட்டே நேர்ச்சையிடும் நம்பிக்கை வழக்கிலிருந்தமைபற்றி அறியமுடிகிறது.
நாவல்களில் நேர்ச்சை
நாவல்களிலே நேர்ச்சையின் பொருட்டு, பொங்கலிடுதல், சேவலை நேர்ந்து விடுதல், பிரதட்டை செய்தல், காவடியெடுத்தல்,
முடியிறக்குதல், அபிடேகம் செய்தல், பலியிடுதல் முதலானவை பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
மெழுகுவர்த்தி ஏற்றுதல்
கானல் என்ற நாவலில், தூக்குத் தண்டனை பெற்ற தனது தந்தையும், சகோதரர்களும் அதிலிருந்து மீண்டு வந்தால் மாதாவுக்கு ஆளுயர மெழுகுவர்த்தி ஏற்றுவதாகத் திரேசி வேண்டிக் கொள்கிறாள். வேண்டுதல் பலிக்கவே நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதில் அவள் மிகுந்த ஆர்வம் கொள்கிறாள்.*
பொங்கலிடுதல்
அடிமைகள் என்ற நாவலில், பன்றித்தலைச்சி அம்மனுக்கு, வேண்டுதலின் அடிப்படையில் பொங்கலிடும் வழக்கம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.*

Page 78
X
15O
வன்னிப் பெருநிலப்பரப்பிலே அமைந்துள்ள வற்றாப்பளை அம்மனுக்கு வைகாசி விசாகத்திலே பொங்கலிடும் வழக்கம் பற்றிக் குமாரபுரம் என்ற நாவலில் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.
காட்டாறு என்ற நாவலில், தனது வயலிலே அதிக விளைச்சலை வேண்டி நிற்கும் கணபதி, அவ்வாறு விளைந்தால் குளத்தடிப் பிள்ளையாருக்குப் பொங்கல் போடுவதாக நேர்ச்சையிடுகிறான்.*
போராளிகள் காத்திருக்கிறார்கள் என்ற நாவலில், புயலில் சிக்கிவிட்ட நாற்பத்தெட்டுச் சீவன்களைப் பத்திரமாகக் கரைசேர்த்த புனித அந்தோனியாருக்கு அவியல் போடப்படும் நிலைபற்றி விளக்கப்படுகிறது.*
காவடி எடுத்தல்
நேர்த்தியின் பொருட்டுக் காவடி எடுப்பது ஈழத்தில் பரவலாக மேற்கொள்ளப்படும் நம்பிக்கையாகும். பெரும்பாலும் முருக வழிபாட்டுடன் தொடர்புடையனவாகவே காவடிகள் எடுக்கப்படுகின்றன.
முருங்கையிலைக் கஞ்சி என்ற நாவலில், தனது மகனின் மனநோய்க்கு மருந்தாகச் சந்நிதிமுருகனுக்குக் காவடி எடுப்பது பற்றிக் குறிப்பிடும் ஆறுமுகத்தார், அதில் தனக்குள்ள நம்பிக்கையினையும் வெளியிடுகிறார்.*
பிரதட்டை
நேர்ச்சையின் பொருட்டுக் கோவிலின் உள். வெளிச் சுற்றுப் பிரகாரங்களில் பிரதட்டை (பிரதட்சினணம்) செய்வதுண்டு. அரையில் ஒரு சிறு துண்டை மட்டுமே கட்டிக் கொண்டு
296
இந்நேர்ச்சையினை நிறைவேற்றுவர்.
நாணயக் குற்றியைக்கட்டுதல்
நேர்ச்சையின் பொருட்டு நாணயக் குற்றியினை, வெள்ளை அல்லது மஞ்சள் துணியில் போட்டு இறுக முடிச்சிட்டு அதனைத் தமது கைகளிலோ அல்லது ஆலயத்திலுள்ள புனிதமரக் கிளைகளிலோ கட்டிவிடுவர். வேண்டுதல் நிறைவேறியதும் துணியை அவிழ்த்துவிடுவர்."

* 151
முடியிறக்குதல்
நேர்ச்சையின் பொருட்டு இறைசந்நிதிகளில் முடி இறக்கிக் கொள்ளும் நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது. பெரும்பாலும் குழந்தைகளின் முதல் முடியினை அவரவர் தத்தமது குலதெய்வங்களின் சந்நிதிகளில் இறக்கிவிடுவர். தலைக்குப்பதிலாக முடியைக் காணிக்கையாகக் கொடுக்கும் அடிப்படையில் இந்நம்பிக்கை தோற்றம் பெற்றிருக்கலாம்.*
குழந்தைப் பேற்றுக்கான நேர்ச்சை
குழந்தைவரம் வேண்டி நேர்ச்சையிடுதல் என்பது பெருவழக்கான ஒன்றாகும். தண்ணீர் என்ற நாவலில், அன்னப்பிள்ளை நாச்சியார் குழந்தை வரம் வேண்டிய வல்லிபுர ஆழ்வாரையும், செல்வச்சந்நிதி முருகனையும், நாகர் கோவிலானையும் வலம் வந்ததோடல்லாமல் அன்னதானம், வஸ்திரதானம், மற்றும் தர்மகாரியங்களிலும் ஈடுபட்டமை பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.*
நீண்டபயணம் என்ற நாவலில், முருகனை வேண்டி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தமை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.*
சேவலை நேர்ந்து விடுதல்
கோவில்களுக்குச் சேவல்களை நேர்ந்துவிடும் நம்பிக்கை இன்று வரை காணப்படுகிறது. இந்தச் சேவல்களைத் திருடர்கள் கூடத் தீண்டமாட்டார்கள். அவ்வாறு தீண்டின் அது தெய்வக் குற்றமாகிவிடும் என நம்புவர்.
நீண்ட பயணம் என்ற நாவலில், செல்லத்துரையன் தேர்தலிலே வெற்றி பெறவேண்டும் என்பதற்காக வள்ளி என்பவள் காட்டு வைரவருக்குச் சேவலை நேர்ந்து விடுகின்றமை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.*
போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில், கண்ணகையம்மனுக்கு நேர்ச்சை செய்யப்பட்டுள்ள சேவலின் இராஜகம்பீர நடைபற்றி விவரிக்கப்பட்டுள்ளது.*

Page 79
152 x
அபிடேகம் செய்தல்
நேர்ச்சைக்காக அவரவர் வசதிக்கேற்பப் பல்வேறு விதமான அபிடேகங்களை ஆலயங்களில் நிகழ்த்துவதுண்டு. இவ்வாறு செய்வதன் மூலம் தெய்வங்களைக் குளிர்மைப்படுத்தி வேண்டுதலை நிறைவேற்றலாம் என நம்புகின்றனர்.*
பலியிடுதல்
பலியிடுதல் பற்றிய நம்பிக்கை உலகின் பல்வேறு இன
மக்களிடையேயும் வழங்கிவரக் காணலாம். பல்வேறு
நோக்கங்களை முன்னிறுத்தித் தெய்வங்களுக்கும்,
தீய ஆவிகளுக்கும் நரபலி, விலங்குப்பலி, உயிரிபலி முதலானவற்றைப் பலியிட்டமை பற்றி அறியமுடிகிறது.
பலியின் வகை
பலியின் வகைப்பாட்டைக் கீழ்க்காணும் பட்டியல் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
பலியிடுதல்
உயிர்ப்பலி உயிரில்பலி
எலுமிச்சம்பழம்
பூசணி
தேங்காய்
நரபலி விலங்கு
பறவை
'உயிர்ப்பலி கொடுத்தல் அநாகரிகம் என்ற நிலையில் உயிரில் பலி வழக்கத்திற்கு வந்திருக்கலாம். எலுமிச்சம்பழம், தேங்காய் முதலியன மனித உறுப்புக்களின் குறியீடாக (Symbol) அமைகின்றன.

o
X 153
மனிதனது பாவங்களை விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மாற்றலாம் என்ற நம்பிக்கை நிலையில் மனிதனுக்குப் பதிலாக இவை பலிப் பொருட்களாகக் கொள்ளப்பட்டன. பிரேசர் என்பவர் இதனைப்பலியாடுமுறை, (Scapegoad) அல்லது ‘மாற்றியமைக்கும் (pGopo (Trasferring Method) 6TGOTaš (ggólůuři.“
மேலைத்தேய மரபில் “பலியிடல்” நம்பிக்கை
கீழைத் தேயத்தவர்கள் போலவே மேலை நாட்டினரும் தத்தமது தேவைகளை ஈட்டிக் கொள்வதற்காகப் பல்வேறு பலிகளையும் இறைவனுக்கும், புனித ஆவிகளுக்கும் கொடுத்து வந்தமை பற்றி அறியமுடிகிறது.
உலக நாகரிகங்கள் பற்றி ஆராய்ந்த வில்டுரான்ட், கிரேக்கர்களிடையே இறைவழிபாட்டில் காணப்பட்ட பல்வேறு வகையான பலியிடல் நடைமுறைகள் பற்றி விளக்குகிறார்.
கிரேக்க மரபில் வழிபாடு செய்பவர்கள் கோவிலின் முன்புறம் உள்ள பலிபீடத்தை அடைந்தவுடன் பலியினை வழங்கிவிட்டே இறைவனை வணங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். முக்கியமான சந்தர்ப்பங்களில் மனிதர்களைக் கூடக் காணிக்கையாகச் செலுத்தினர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவரை மனிதப்பலியிடல் தொடர்ந்தது.*
ஏதன்ஸ் நாட்டில் பஞ்ச காலங்களிலோ, வேறு குழப்பமான காலங்களிலோ நாட்டைத் தூய்மைப்படுத்துவதற்காகப் பலி கொடுத்தனர். சில சமயங்களில் பலி கொடுப்பது போல நடித்தனர். பிற்காலங்களில் தண்டனைக் கைதிகளைப் பலி கொடுத்தமை பற்றியும் அறியமுடிகிறது.*
நாகரிக வளர்ச்சியில் மிருகப்பலி என்பது ஒரு வளர்ச்சி நிலை எனக் கூறலாம். கிரீஸ் நாட்டில் எருது, ஆடு, பன்றி முதலானவற்றைப் பலிகொடுத்தனர். பிராணிகளைப் பலிகொடுக்கும் வழக்கம் கிரீஸ் நாடு முழுவதும் இருந்தாலும் கிறித்தவம் பரவ ஆரம்பித்ததும் சிறிதுசிறிதாக அது மறைந்துவிட்டது என்பர்.”
எகிப்து நாட்டில் நாளொன்றுக்கு மூன்று மனிதர்கள் பலியிடப்பட்டனர். பலிக்குரிய மனிதர்களைக் கன்றுக் குட்டிகளைச்

Page 80
154 «Х»
சோதிப்பது போல் பூசாரி சோதித்துத் தேர்வு செய்தான். இதனை அறிந்த அமாசிஸ்’ என்ற மன்னன், மனிதப் பலியை நிறுத்தி, அதற்குப் பதிலாகப் பார்லி அரிசி, வெண்ணெய் ஆகியவற்றால் உருவான மனித உருவத்தைப் பலியிட்டுக் கொள்ள அனுமதித்தான் எனப் பிரேசர் குறிப்பிடுவது கருதத் தக்கதாகும்.*
இந்திய மரபில் பலியிடல் நம்பிக்கை
இந்து மதத்தில் பலியிடல் நம்பிக்கை என்பது மிகவும் பிரதானமான ஒன்றாகத் தொடர்கின்றது. தெய்வங்களுக்காகவும், கெட்ட ஆவிகளுக்காகவும் பலி கொடுக்கும் வழக்கம் இன்றுவரை காணப்படுகிறது.
உருவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டுள்ள இந்துக்கள், எதிரிகள் மூலமாக வரும் தொந்தரவுகளைச் சமாளிக்கச் சிறு தெய்வங்களுக்கும், பூதங்களுக்கும் பல்வேறு வகையான பலிகளை வழங்கும் வழக்கத்தினை உடையவர்கள் என அப்பேதுபாய்ஸ் குறிப்பிடுவது கருதத் தக்கதாகும்.*
தமிழ் மரபில் பலியிடல் நம்பிக்கை
தமிழ் மக்களிடையே, பலியிடல் பற்றிய நம்பிக்கை என்பது சங்ககாலம் முதற் கொண்டே இருந்து வந்தமை பற்றி அறியமுடிகிறது.
வால் அரிசிப் பலி சிதறி"
மறிக்குரல் அறுத்துத் தினைப் பரப்பு இரீஇ'
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான்கோட்டுக் கடவுள் ஒங்கு வரைக்கு ஒக்கி*
நெய்த் தோர் தூஉய நிறைமகிழ் இடும்பலி*
久3珪
குருதிவேட்கை உருகெழு முரசம்
காவன் மன்னர் கடைமுகத்து உகுக்கும் போகு பலிவெண் சோறு"

«Х» 155
d
மடை அடும்பாலொடு கோட்டம் புகின்"
37
உயர்பலி பெறுஉம் உருகெழு தெய்வம்
என வரும் சங்கப்பாடல் அடிகள் உயிர்ப்பலி, குருதிபலி, சோற்றுப்பலி, பூப்பலி, தேன்பலி எனப் பல்வேறு விதமான பலியிடல் நடைமுறைகளை விளக்கி நிற்கின்றன.
பலியிடலின்போது மந்திர உச்சரிப்பு நிகழ்ந்ததனைப் பதிற்றுப்பத்தின் பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.*
அழலின் வழியே தெய்வங்களுக்கு ‘ஆகுதி வழங்கும் முறையின் செல்வாக்கினை, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து முதலான இலக்கியங்கள் இயம்பி நிற்கின்றன." நாவல்களில் பலியிடல் நம்பிக்கை
Olulii Lu 6
நேர்ச்சையின் பொருட்டு மிருகங்களையும், சேவல் முதலான
பறவைகளையும் பலியிடும் வழக்கம் இன்றுவரை ஈழத்துத் தமிழிடையே நிலவி வருகின்றது.
நீண்ட பயணம் என்ற நாவலில், வைரவர் கோவில் வேள்வியிலே நேர்ச்சையின் பொருட்டுக் கடாக்கள் வெட்டப்படுதல் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. வெட்டுண்ட கடாக்களின் தலைகள் இரத்த வெள்ளத்தினிடையே குவியலாகக் காணப்படுதல் பற்றிச் செ.கணேசலிங்கங்கன் விரிவாக விவரிக்கின்றார்.*
கோவில் திருவிழாக்களிலே பெரும்பாலும் வைரவர் கோவில் திருவிழாக்களிலே ஆட்டுக் கடாக்களைப் பலியிடும் நடைமுறைப்பற்றிக் கே. டானியல், கானல் என்ற நாவலில் குறிப்பிடுவார்.?
பூமரங்கள் என்ற நாவலில், கெட்ட ஆவியின் தாக்கத்திலிருந்து
விடுபடும் பொருட்டு, அதற்கு அடுத்தடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சேவல்களைப் பலியிட்டமை பற்றி விவரிக்கப்படுகிறது.*
சோற்றுப்பலி
போடியார்மாப்பிள்ளை என்ற நாவலில், தனது எண்ணப்படியே பரிமளத்தை மணந்துகொள்ள, கண்ணகை அம்மனின் அருளை

Page 81
156 X
வேண்டும் சிவலிங்கம், அதற்குப் பிரதியுபகாரமாகப் பொங்கற்பானையும் கோழிப்பலியும் தருவதாக நேர்ந்து கொள்கிறான்.*
காக்கையதுபலி
காக்கைகளுக்குப் பலியிடும் வழக்கம் மிகத் தொன்மையானது. சங்க இலக்கியங்களிலே, காக்கைக்கு இடும்பலி பற்றிய செய்திகள் நிறையக் கிடைக்கின்றன.
சடங்கு என்ற நாவலில், காக்கைகளுக்கு உணவு படைத்து, அவை உண்ட பின்பே மற்றவர்கள் உண்ண வேண்டும் என்ற நம்பிக்கை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.*
சத்தியம் செய்தல் தொடர்பான நம்பிக்கைகள்
ஒருவர் தனது உறுதியை நிலைநாட்ட, தலையிலடித்தும், கையிலடித்தும், சூட மேற்றியும், கடவுள் மீதும், தாயின் மீதும், விருப்புக்குரியோர் மீதும் அல்லது ஏதேனும் ஒரு பொருளைத் தரையிற் போட்டுத் தாண்டியும் சத்தியம் செய்துகொள்ளும் நம்பிக்கை வழக்கம் மிகப்பரவலாக உள்ளது.
தமிழ் மரபில் சத்தியம்
பண்டைத்தமிழரிடையே, தெய்வத்தைக் காட்டியோ, ஒருவரது மெய்யைத் தீண்டியோ, தீமீதோ, தெய்வத்தைச் சாட்சியாக வைத்துச் சூள் அல்லது வஞ்சினம் கூறும் வழக்கம் தொன்று தொட்டே இருந்து வந்துள்ளது. சங்க இலக்கியங்களிலே, சூள்' பற்றிய செய்திகள் விரவிக் கிடக்கின்றன.
Y SSSSS 0 SSS CS SS SS SS0 S0 S L SSSLL SSSLSS SLLLL S0S SS LSLS S SLLL SSS SL SLS S L0 S L S S கையால் தலைதொட்டேன் தண்பரங்குன்று”
கொடுஞ்சுழிப் புகா அர்த் தெய்வம் நோக்கி கடுஞ்சூள் தருகுவன் நினக்கே*
திருமணி விளக்கின் அலைவாய்ச் செருமிகு சேயொடு உற்ற சூளே”

தெறல் அருங்கடவுள் முன்னர்த் தேற்றி மெல் இறைமுன்கை பற்றிய சொல் இறந்து*
தெய்வத்தின் தேற்றா தெளிப்பேன் பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்"
என வரும் சங்கப் பாடலடிகள் சத்தியத்தின் தொன்மையினையும் அதன் தன்மைகளையும் விளக்கி நிற்கின்றன. தெய்வத்தை முன்னிட்டுச் சூளுரைப்பார், தம் சொற்படி நடக்காதுவிட்டால் சூளுரைத்தாரைத் தெய்வம் வருத்தும் என்று நம்பியதைச் சங்க இலக்கியங்களூடாக அறிய முடிகிறது.
நாவல்களில் சத்தியம்
ஈழத்துத் தமிழ் நாவல்கள் பலவற்றிலும் சத்தியம் செய்தல் தொடர்பான பல்வேறு நடைமுறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளமையினைப் பார்க்கமுடிகிறது. கிடைக்கின்ற தரவுகளின் அடிப்படையில் சத்தியம் செய்தல் தொடர்பான நடைமுறைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
(அ) கடவுள் மேல் சத்தியம் செய்தல்
(ஆ) தன்மேல் சத்தியம் செய்தல்
(இ) தலையிலடித்துச் சத்தியம் செய்தல்
(ஈ) கையிலடித்துச் சத்தியம் செய்தல்
(உ) தொழில் உபகரணத்தின்மேல் சத்தியம் செய்தல்
(ஊ) விருப்புக்குரியவர் மேல் சத்தியம் செய்தல்
(எ) துண்டைப் போட்டுச் சத்தியம் செய்தல்
கடவுள் மேல் சத்தியம் செய்தல்
நாவல்களிலே, கடவுளை முன்னிறுத்திச் சத்தியம் செய்யும் நம்பிக்கை பெருவழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.*

Page 82
158 «Х»
இந்நம்பிக்கையின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது எனலாம்.
சூடம் ஏற்றிக் கடவுளின் மீது சத்தியம் செய்தால் எவ்வித இடர்வரினும் கடைசிவரை அதனைக் காப்பதில் உறுதியாக இருப்பர். அடிமைகள் என்ற நாவலில் கே. டானியல், இந்நம்பிக்கையின் சமூக வலிமை பற்றி மிக ஆழமாகச் சித்திரித்துள்ளார்.
மஞவராயரின் மனைவிக்குப் பிரசவ வீட்டில் ஏற்பட்ட தெய்வக்குறைபாட்டு நோயின் காரணமாகப் பிள்ளைக்குப் பாலூட்ட முடியவில்லை. பரியாரியின் ஆணைப்படி ஆறுமாத காலத்துக்கு ஆண்வாடை பிடிக்காதவளின் பாலையே குழந்தைக்கு ஊட்டவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பல இடங்களிற் தேடியும் ஒரு இடமும் அகப்படாத நிலையில் தம்மிலும் சமூக நிலை அந்தஸ்தில் தாழ்ந்தவளான செல்லியைத் தவிர்க்க முடியாத நிலையில் பாலூட்ட ஏற்பாடு செய்கின்றனர். செல்லியின் விருப்பைக் கேட்காமலேயே, கணவனுடன் ஆறுமாத காலத்துக்கு உடலுறவு கொள்ளக் கூடாது எனச் சூடத்தின் மேல் சத்தியமும் வாங்கிவிடுகின்றனர். தனது கணவனுக்கு இவற்றைத் தெரிவிக்க முடியாத சூழலில், ஆறுமாத காலம் தான் செய்த சத்தியத்தைக் காப்பாற்றச் செல்லி படும் அவலம் மிகத் துல்லியமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆசையுடன் நெருங்கி வரும் கணவனை உதறித் தள்ளியபோது அவன் செல்லிமேல் சந்தேகம் கொள்கிறான். இறுதியில் தன் உயிரையே விடுகிறான். செய்த சத்தியத்தைக் காத்தற்பொருட்டுச் செல்லி தன்னுடன் தன் குடும்பத்தையே மாய்த்துக் கொள்கிறாள்."
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து என்ற நாவலில், வேட்டைக்குப் புறப்பட்ட மாணிக்கம் காட்டில் ஏற்பட்ட அடைமழை மற்றும் புயல் காரணமாக இறந்து விடுகிறான். பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மாணிக்கனின் உடலை அவனின் நண்பர்களான சிங்காரமும் விநாயகமும் சுமந்து வருகின்றனர். துரதிஷ்டவசமாக அவர்கள் மீதே கொலைப் பழி வந்து விடுகிறது. சூழ இருந்தவர்கள் அவர்களை நோக்கிக் கற்பூரத்தின் மீது சத்தியம் செய்து அவர்களின் உண்மைத் தன்மையை நிலைநாட்டச்

必 159
சொல்வதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இது கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்தலின் வலிமையினைக் காட்டுவதாக உள்ளது.*
தன்மேல் சத்தியம் செய்தல்
தன்னுடைய உறுதிப்பாட்டை நிலைநாட்டும் பொருட்டுத் தன்னையே பணயம் வைத்துச் சத்தியம் செய்தல் இதுவாகும்.*
தலையிலடித்துச் சத்தியம் செய்தல்
சத்தியம் செய்யும்போது தனது தலையைத் தொட்டோ அல்லது பிறருடைய தலையைத் தொட்டோ சத்தியம் செய்யும் நடைமுறை இதுவாகும்.* கையில் அடித்துச் சத்தியம் செய்தல்
சத்தியம் செய்யும்போது பிறருடைய உள்ளங்கையில், தனது கையை அடித்துச் கையோடு கைபிணைத்துச்சத்தியம் செய்யும் மரபும் நாவல்களில் காணப்படுகிறது.*
தொழில் உபகரணத்தின் மேல் சத்தியம்
தாம் மேற்கொண்டுள்ள தொழிலுடன் தொடர்புடைய உபகரணங்கள் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்தல் இதுவாகும். பஞ்சகோணங்கள் என்ற நாவலில், மார்க்கண்டன் தனது குற்றமற்ற நிலையை வெளிப்படுத்தத் தான் மரம் ஏறப் பயன்படுத்தும் தளநாரைக் கொண்டு சத்தியம் செய்கிறான்.* விருப்புக்குரியவர் மேல் சத்தியம் செய்தல்
சத்தியம் செய்யும்போது தாம் அதிகமாக நேசிக்கும் உறவுக்குரியோரை முன்னிறுத்திச் சத்தியம் செய்தல் இதுவாகும். அனேகமாகத் தாயின் மீது சத்தியம் செய்வதே பெருவழக்காக உள்ளது. சிறுபான்மையாகப் பிள்ளைகள், மனைவி மற்றும் உறவினர்கள் மீதும் சத்தியம் செய்வர். ‘சத்தியம்’ பொய்ப்பின் குறிப்பிட்ட உறவினர்க்குத் துன்பம் நேரும் என்பது நம்பிக்கை.*
துண்டைப் போட்டுச் சத்தியம் செய்தல்
சத்தியம் செய்பவர் தனது தோளில் உள்ள துண்டையோ, வேட்டியையோ போட்டு, அதனைத் தாண்டிச் சத்தியம் செய்தல்

Page 83
160 «Х•
இதுவாகும். சத்தியம் தவறின் துண்டுக்குரியவரின் உயிருக்கு ஆபத்து
நேரும் என்பது நம்பிக்கையாகும்.
கானல் என்ற நாவலில், தம்பன் தனது வேட்டியை
உருவிப்போட்டு அதனைத் தாண்டிச்செல்ல வேண்டுகின்றான்.*
இதே வழக்கம் தமிழகத்திலும் பயில் நிலையில் உள்ளமை பற்றி ஜி.வசந்தா என்பவர் குறிப்பிடுவது இங்கு கருதத் தக்கது.*
இவ்வாறு பல்வேறு வகையான சத்திய நடைமுறைகள் பற்றியும் நாவல்களில் செய்திகள் கிடைக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாகச் சத்தியத்தினை நம்பும் வழக்கம் இன்றுவரை நிலவி வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
திட்டு அல்லது சாபம் தொடர்பான நம்பிக்கை
நீதி நெறிகளுக்கு மாறாக ஒருவரால் துன்புறுத்தப்படும்போது பாதிக்கப்பட்டவர் மனம் நொந்து சொல்லும் வார்த்தைகளே சாபமிடுதல், சபித்தல், திட்டுதல் எனக் குறிப்பிடப்படுகிறது. இச்சாபம் துன்புறுத்தியவர்களைப் பாதிக்கும் என்பது பொதுவான நம்பிக்கையாக உள்ளது.
‘சாபம்’ என்ற சொல்லுக்கு, வில், சுடுசொல், ராசி, குட்டி என்ற பொருண்மைகள் சுட்டப்படுகின்றன.*
திருவள்ளுவர், சாபத்தினை நிறைமொழி’ எனக் குறிப்பிடுவர். நிறைமொழிக்குப் பரிமேலழகர், “அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தேவிடும் மொழி” எனக் குறிப்பிடுவார்.*
திட்டுவதற்கான காரணங்கள்
ஒருவர் ஆற்றும் செயல்களில் இடையூறு செய்தல், அவர் நினைத்தவாறு மற்றவர் நடவாமை, பொதுவிடங்களில் செய்யத் தகாதன செய்தல் முதலானவைகளே திட்டுதலுக்கான அடிப்படைக் காரணங்களாகும்.
திட்டுவதில் சில வகைகள்
குடும்பம், சமூகம், நாடு என அமைந்துள்ள மனித வாழ்வில், ஏற்படும் பல நிகழ்ச்சிகளுள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதும்

(X 161
தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. சாதாரண சொற்களால் திட்டுதல், கெட்டவார்த்தைகளால் திட்டுதல், அழிவு வார்த்தைகளால் திட்டுதல் எனப் பலவகைகள் திட்டுதலில் காணப்படுகின்றன. தமிழ் மரபில் இதனை ‘ வசை எனவும் வழங்குவர்.*
இலக்கியங்களில் சாபம் பற்றிய செய்திகள்
காவியங்களில் பதிவிரதைகள், தவவலிமையுடையோர், தெய்வசித்தி பெற்றோர், மந்திர சக்தி பெற்றோர் மற்றும் சாதாரண பெண்டிர் முதலானோர் சபித்த செய்திகள் பெருமளவில் காணக் கிடைக்கின்றன.
வறுமொழியாளனையும், வம்பப்பரத்தையையும் கவுந்தியடிகள், “முள்ளுடைக் காட்டில் முதுநரி ஆகுக' எனச் சபித்தார்.*
மணிமேகலையில், விருச்சிகன் என்னும் முனிவன் சாபத்தால்
காயசண்டிகையை யானைத்தீ, எனும் பசிப்பிணி வருத்திய செய்தி கூறப்பட்டுள்ளது.*
கம்பராமாயணம் பாலகாண்டத்தில் சாபம் பற்றி மிகுதியான செய்திகள் கிடைக்கின்றன. கெளசிகமுனிவன், தனது தவம் கலையக் காரணமாயிருந்த திரோத்தமையை நீபோய் மண்மகள் ஆதி’ எனச் சபிக்கின்றான். வசிட்டர், திரிசங்குவிடம் 'நீசனாகும்படி சபித்தார்.*
நாவல்களில் திட்டுதல் பற்றிய நம்பிக்கை கெட்ட வார்த்தைகளால் திட்டுதல்
சடங்கு என்ற நாவலில், தனது தாய், தன் தங்கையின் பக்கத்தில் நின்றுகொண்டு தனக்கு வரவேண்டிய சொத்துக்களைத் தடுப்பதாக எண்ணிய நவரத்தினம், அவளைக் கெட்டவார்த்தைகளால்,
கிழவிக்குக்கண் அவிஞ்சுபோகும் .
எனத் திட்டுகின்றான். பதிலுக்குக் கிழவி,

Page 84
162 x
பாழ்பட்டுப் போவான்
எனத் திட்டுகின்றாள்.*
தண்ணீர் என்ற நாவலில், தன்னிடம் பொய்யுரைத்த தன் மகனைச் சொடுகன் "அறுவான்’, எனத் திட்டுகிறான்."
நெருங்கிய உறவுக்குள் திட்டப்படும் இவ்வகையான சொற்கள் உள் மன வெறுப்பின்றி, சூழ்நிலை கருதி வெளிப்படுத்தப்படுவன. ஆகையால் இவ்வகைத் திட்டுக்களால் அதிகம் பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை எனலாம்.
மண்வாரித் திட்டுதல்
திட்டுதலில் மண்வாரித் திட்டுதல் என்பது பாரதூரமான ஒன்றாகும். திட்டுக்குரியவர் மண்ணோடு மண்ணாகப் போகவேண்டும் என்பதே இவ்வகைத் திட்டுக்களின் நோக்கமாகும்.
மீட்டாத வீணை என்ற நாவலில், பங்குக் கிணற்றுப் பிரச்சினை காரணமாக மீனாட்சியும் தேவியும் பிரச்சினைப்படுகின்றனர். ஒருகட்டத்தில் தேவிமீது மீனாட்சி,
குறுக்கால போக! நீங்கள் நாசமாகப் போக*
எனக் கூறி மண்ணைவாரித் திட்டுகிறாள். திட்டுதலின் வலிமையை உணர்த்த தேவி வாயடைத்துப் போய் நிற்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
போராளிகள் காத்திருக்கின்றனர் என்ற நாவலில், ஊமையாகிய தன்மகனைத் தாக்கி விட்டுச் செல்பவர்களை நோக்கி அவனின் தாயான மூதாட்டி,
முரல் பாய்வாங்களே திருக்கையடிப்பாங்களே திமிங்கிலம் திம்பாங்களே வாயில்லாத ஊமைக்கு அடிச்சுப் போட்டோ

& 163
போறியள்? முரல் பாய்வாங்களே திருக்கை அடிப்பாங்களே .*
என அவர்கள் போன திக்கை நோக்கி மண்வாரித் தூற்றுகிறாள்.
இந்நாவல் மீனவக் கிராமம் ஒன்றைக் களமாகக் கொண்டமைந்தது. எனவே அவர்கள் செய்யும் தொழிலில் உள்ள ஆபத்துக்களை வரவழைத்து மூதாட்டியானவள் திட்டுவது இங்கு கருதத் தக்கதாகும். முரல் மீன், திருக்கை மீன், திமிங்கிலம் ஆகியவற்றின் தாக்குதல்களினால் மீனவர்கள் இறப்பது வழமையானதாகும்.
பாவம், புண்ணியம், பழி தொடர்பான நம்பிக்கைகள்
மனிதர்களிடையே, அவர்கள் செய்கின்ற செயல்கள் நல்லனவானால் புண்ணியச் செயல்களாகவும், தீயனவானால் பாவச் செயல்களாகவும் அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பாவம் செய்யின் ஊழ் வந்து சேரும்.
சட்டத்துக்கு மாறனது குற்றம், சமூகத்துக்கு மாறானது பழி என்கிறது கலைக்களஞ்சியம்.* பழி என்பதற்குச் சென்னைத் தமிழ்ப் பேரகராதி,
1. நநிந்தை 5. பாவம்
2. அலர் 6. கலஞ்சாதிப்பு
3. குற்றம் 7. விரோதம்
4. குறை
ஆகிய பொருண்மைகளைக் குறிப்பிடுகிறது.*
தமிழ்மரபில் பாவம், புண்ணியம்
நன்மை விதைத்தவன் நல்லதை அறுவடை செய்கிறான்,
தீமையை விதைத்தவன் தீங்கினை அறுவடை செய்கிறான் என்பது கன்மக் கொள்கையாகும்.

Page 85
164 «Х•
பழைய உபநிடதங்களில் வினைப் பயன்களுக்கான மறுபிறவிக் கொள்கை என்பது புதுமையானதாகவும், சிலருக்கு மட்டும் தெரிந்த மறை பொருளாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.*
தொல்காப்பியம் “ஊழை, முறைமை என்ற பொருண்மையில் எடுத்தாள்கிறது’* சங்க இலக்கியங்கள் பலவும் ஊழ்வினையைப் ‘பால்’ என்றே குறிப்பிடகின்றன.* பிறந்தவர் இறந்து தமது வினைகளுக்கு ஏற்ப மீண்டும் பிறப்பர் எனச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. இம்மை மறுமை என்பது பழந்தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியிருந்தது என்பதனை முல்லைக்கலி மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாகக் கு. வெ.பாலசுப்பிரமணியன் குறிப்பிடுவது கருதத் தக்கதாகும்.*
இம்மை வினை மறுமைக்குக் காரணமாகும் என்ற நம்பிக்கை நிலவிய பழந்தமிழ்ச் சமூகத்தில், நல்வினை ஆற்றியோர் துறக்கம்செல்வர் என்ற கருத்தைப் புறநானூறு குறிப்பிடுகிறது.*
சங்ககால மக்கள் தாம் செய்த தீவினையைப் போக்கத்தக்கதான கழுவாய்களை மேற்கொண்டமையினை,
ஆண்முலை அறுத்த அறனிலோர்க்கும் மாண் இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் பார்ப்பார்த்தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கில கழுவாயும் உள.*
எனப் புறநானூற்றுப் பாடல் தெளிவுபடுத்துகிறது. பழந்தமிழ் அரசர்கள், தாம் பெற்ற செல்வத்தையும், சிறப்பையும் அறநெறிக்குட்பட்ட தகுதிகளாகக் காட்ட வேண்டிய பின்னணியிலேயே வினை, ஊழ் பற்றிய கருத்துக்களை இலக்கியங்களில் முதன்மைப்படுத்தினர் எனக் குறிப்பிடுவது கருதத்தக்க ஒன்றே எனலாம்.*
திருவள்ளுவர், ‘ஊழ்’ எனும் தலைப்பில் தனி அதிகாரமே செய்துள்ளார். 'ஊழ்’ என்பது “இருவினைப்பயன் செய்தவனையே சென்றடைதற்கு ஏதுவாகிய நியதி” என்பார் பரிமேலழகர். ஊழிற் பெருவலி இல்லை என்பது திருவள்ளுவர் கருத்து.

சிலப்பதிகாரத்தின் கதைத் திருப்பத்துக்குக் காரணமாக ஊழ்வினை அமைந்துள்ளது. மணிமேகலை, ஊழ்வினை காரணமாக ஏற்படும் பிறப்புக்களை,
அலகில் பல்லுயிர் அறுவகைத் தாகும் மக்களும், தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும், பேயும் என்றே°
என அறுவகைப்படுத்துகின்றது.
பழமொழிநானூறு, திரிகடுகம், நான்மணிக்கடிகை, நாலடியார், முதலான அறநூல்களிலும், பிற்காலச் சமய இலக்கியங்களிலும் ‘ஊழ்’, பற்றிய கருத்துக்களின் வளர்ச்சி நிலைகளைக் காண முடிகின்றது. நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் *கன்மக்கொள்கை’ பற்றிய நம்பிக்கை என்பது, வேதஞ்சாராத ஒரு நெறியின் நம்பிக்கையால் பிறந்தது என அறிஞர் கருதுவது ஏற்றுக்கொள்ளத் தக்கதே எனலாம்."
நாவல்களில் பாவம், புண்ணியம், ஊழ், பழி
நாவல்களில் பாவம், புண்ணியம், ஊழ், பழி முதலானவை பற்றிய செய்திகள் மிகவிரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமையினைக் காண முடிகிறது.
பாவம் கோவில் சொத்தைத் திருடுதல்
கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களைத் திருடுதல் பாவமான காரியம். இந்நம்பிக்கை பற்றிக் குமாரபுரம், காவோலை முதலான நாவல்களிலே விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
எங்கடை வன்னியா குடும்பம் காலங்காலமா கோயில் சொத்தை அனுபவித்த குடும்பம் அம்மா! எங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு மிஞ்சிறதை ஏழை எளியதுகளுக்குக் குடுத்துப் போடோணும். இல்லாட்டில் பழிச் சொத்தைத் திண்ட பாவம் தலைமுறை தலைமுறையாய் நிண்டு வருத்தும் .*

Page 86
166 «Х•
எனக் கூறுவதனூடே, வன்னியா குடும்பம் அடைந்த துன்பங்களுக்கெல்லாம் காரணம், இவர்கள் கோவில் சொத்தைத் அனுபவித்து வந்தமையே என்ற கருத்து குமாரபுரம் என்ற நாவலில், வலியுறுத்தப்படுகிறது. இதே கருத்தைக் காவோலை’ என்ற நாவலிலும் காணலாம்.*
மலட்டுச் சொத்தை எடுத்தல்
குழந்தையில்லாதவர்களின் சொத்தைத் தீண்டுதல் பெரும்பாவமாகக் கருதப்படுகிறது. தமது சொத்துக்களைப் பராமரிக்க வாரிசுகள் இல்லையே என்ற ஏக்கத்துடன் இறப்பவர் சொத்தைப் பிறர் தீண்டுவது பாவம் என்பதனைக் கழுகுகள் என்ற நாவலில் தெணியான் தெளிவாகக் குறிப்பிடுவார்.
ஆறுமுகத்தாரின் சொத்துக்கு உறவினர்கள் அடிப்படும் நிலையில், மலட்டுச் சொத்தெடுக்கிறது பெரிய பாவம் மலட்டுச் சொத்தெடுக்கிறவை ஆர் நல்லாயிருக்கினம்? அதுகள் விட்டிட்டுப்போகேக்கை ஆ. ஆ. எண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டு போறது. அந்தச் சொத்தெடுக்கிறவனுக்கு நிண்ட வெள்ளத்தையும் வந்த வெள்ளம் அள்ளிக்கொண்டு போனது போல உள்ளதையும் துடைச்சுக்கொண்டு போயிடும்*
எனக் குறிப்பிடப்படுகிறது. மலட்டுச் சொத்துப் பற்றிய மக்களின் மனோநிலையை இப்பகுதி வெளிப்படுத்துகிறது எனலாம்.
உயிரை அழித்தல்
வயிற்றில் உள்ள கருவைக் கலைத்தல் பாவமான ஒரு செயலாகக் கருதப்படுகிறது. இந்நம்பிக்கை பற்றி நீண்டபயணம் என்ற நாவலில் குறிப்பிடப்படுகிறது.*
பெண்களைக் கொடுமைப்படுத்துதல்
பெண்களைக் கொடுமைப்படுத்துவது பாவமான செயல் என
நம்பப்படுகிறது. இருளின் கதிர்கள் என்ற நாவலில், இந்நம்பிக்கை பற்றிச் சித்திரிக்கப்பட்டுள்ளது.*

«Х• 167
பழி சூழ்தல்
பழியானது காலங்காலமாக நின்று வருத்தும் என்பது நம்பிக்கையாக உள்ளது. குமாரபுரம் என்ற நாவலில், வன்னியர் குடும்பம் அடுக்கடுக்காக எதிர்கொண்ட துன்பங்களுக்கெல்லாம் காரணம், இவர்களின் முன்னோர்கள் செய்த பழிபாவங்களே என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது."
பஞ்சமர் என்ற நாவலில், வேலுப்பிள்ளைக் கமக்காரனின் வீட்டுக் காரியங்களனைத்தும் தோற்று வருகின்றமைக்கு, இவர்கள் சந்ததி சந்ததியாக ஊருக்குச் செய்துவந்த அநியாயங்களே காரணம் எனச் சின்னாச்சி குறிப்பிடுகிறாள்.*
சடங்கு என்ற நாவலில், தீராத நோயினால் அழுந்தும் சுப்பையா பிள்ளையின் அவல நிலைக்கு அவன்செய்த பழிச் செயல்களே காரணம் எனக் காட்டப்படுகிறது.
அவன் இஞ்சை இருக்கிறவங்கள் எல்லாரையும் அள்ளி
வறுகத்தானே சம்பாரிச்சவன் பழிசும்மாவிடுமே? கிடந்து
அழுந்துகிறான் .*
எனச் செந்தில் நாதன் குறிப்பிடுவதன் மூலம் முறையற்ற வழிகளில் வருவாய் ஈட்டுவது பழியான காரியம் என்ற கருத்துப் புலப்படுத்தப்படுகிறது.
பிறவி பற்றியது
இம்மையில் செய்யும் கன்மங்களுக்கு ஏற்பவே மறுபிறவி அமையும் என்பது நம்பிக்கையாக உள்ளது
மரக்கொக்கு என்ற நாவலில், சிலம்பனும் அவரைச் சார்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தமைக்கு, அவர்களின் முற்பிறப்புப் பாவங்களே காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது."
செவ்வானம் என்ற நாவலில், நாகரத்தினம் என்பவர் மாலினிக்குச் செய்யும் உதவிகளுக்குக் காரணம், அவள் முற்பிறப்பில் செய்த புண்ணியமே என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது."

Page 87
168 令
கமுவாய்க்கான வழிகள்
கன்மப் பலன்களிலிருந்து விடுபடும் வழிகள் பற்றி நாவல்களில் செய்திகள் கிடைக்கின்றன. மரக்கொக்கு என்ற நாவலில், தேவர்களைப் பிரீதி செய்தல், தானதருமங்களைச் செய்தல் முதலானவற்றின் மூலம் கழுவாயினை மேற்கொள்ளலாம் என்ற செய்தி கூறப்படுகிறது."
பாவம், புண்ணியம் பற்றிய நம்பிக்கை என்பது, மனிதனின் இன்றைய நிலை என்பது அவனின் முந்தைய செயலால் ஏற்பட்டது. வருங்காலத்தையும் அவன் தன் செயலால் நிர்ணயிக்கலாம் என்பதன் அடிப்படையிலேயே தோற்றம் பெற்றிருக்க வேண்டும் எனக் கருதலாம்.
தலையெழுத்து அல்லது விதி தொடர்பான நம்பிக்கைகள்
ஒருவர் பிறக்கும் போதே இறைவன் அவரது வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளைத் தலையில் எழுதி விடுவதாக நம்பும் வழக்கம் உலகப் பொதுவானதாகக் காணப்படுகிறது. மனித மண்டையோட்டில் குறுக்கும் நெடுக்குமாகக் காணப்படும் இணைப்புக் கோடுகளே இந்நம்பிக்கையின் அடிப்படை எனக் கருதலாம்.
விதி என்பதற்குச் சென்னைத் தமிழ்ப் பேரகராதி,
1. சட்டம் 9. ஊழ்
2. தீர்ப்பு 10. பிரமன்
3. ஆணை 11. காசிபன்
4. கட்டளை 12. திருமால்
5. கடமைநெறி 13. புண்ணியப் பயன்
6. ஒழுக்கமுறை 14. பாக்கியம்
7. அமைக்குமுறை 15. செல்வம்
8. நீதி 16. இயல்பு
முதலான பொருண்மைகளைக் குறிப்பிடுகிறது.*

8- 169
தொல்காப்பியர், திருவள்ளுவர் முதலானோர் விதியை ‘ஊழ் என்றே குறிப்பிடுகின்றனர்." பேராசிரியர், “விதி' என்பது
35
செய்யப்படும் வினையினது நியதி எனக் குறிப்பிடுவார்.
திருமண வாழ்க்கை
திருமண வாழ்க்கை அமைதல் என்பது அவரவர் விதிப்படியேதான் நடக்கும் என்பது மிகவும் அழுத்தம் பெற்ற நம்பிக்கையாகக் காணப்படுகிறது.
போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில், போடியாரின் மகளது திருமணப் பேச்சு முறிந்தமைக்கு விதியையே அவர் நொந்து கொள்கிறார். கறந்தபால் மடிபுக முடியாதது போல விதியை யாராலும் மாற்ற முடியாது என்று விதியின் வலிமையின் வலிமை பற்றிக் குறிப்பிடப்படுகிறது."
காவோலை என்ற நாவலிலே வரும் வசந்தியின் திருமண வாழ்வின் தோல்விக்குக் காரணம் அவளின் தலைவிதியே என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது."
போர்க்கோலம் என்ற நாவலில், அழகிலும், வயதிலும் சிறந்தவளான தங்கம், ஆறுமுகத்தாருக்கு வாழ்க்கைப் பட்டமைக்கான காரணம் அவளது தலைவிதியே எனக் காட்டப்படுகிறது.*
கழுகுகள் என்ற நாவலில், மகாலிங்கம் என்பவர் தனது மைத்துணியைத் திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக் கொள்ளாத ஆறுமுகத்தார், இறுதியில் ‘தாரமும் குருவும் அவரவர் தலைவிதிப்படி” எனக் கருதி அதனை ஏற்றுக் கொள்கிறார்."
பஞ்சமர் என்ற நாவலில், தனக்குப் பார்த்த வரனை மறுதலிக்கும் மாம்பழத்தியை, சின்னாச்சி என்பவள் ‘உனது தலையெழுத்து இதுதான் எனக்கூறி அவனை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்துகிறாள்."
மேலே குறிப்பிட்டவற்றிலிருந்து திருமண வாழ்க்கை என்பது அவரவர் விதிப்படியே அமையும் என்ற நம்பிக்கையின் தாக்கத்தினை உணரமுடியும்.

Page 88
170 «Х•
துன்பம்
வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் அனைத்துக்கும் விதிதான் காரணம் எனக் கருதுவர்.
நீண்ட பயணம் என்ற நாவலில், தனது கணவன் கட்டிய தாலிக்கொடி கிலிட்டு (பித்தளை) என்பதை அறிந்த அன்னம்மா, அதற்குக் காரணம் தனது தலைவிதியே என நொந்து கொள்கிறாள்.*
காட்டாறு என்ற நாவலில், செங்கமலம், தனது வாழாவெட்டி நிலைக்கும் குடும்பத்துக்குப் பாரமாக மூன்று பிள்ளைகளுடன் தாய் வீட்டுக்கே திரும்பி வந்தமைக்கும் காரணம் தனது தலைவிதியே அன்றி வேறில்லை எனச் சமாதானமடைகிறாள்.*
கானல் என்ற நாவலில், அல்லும் பகலும் ஊண் உறக்கமின்றி வேலுப்பிள்ளைக் கமக்காரனின் தோட்டத்தில் மாடாக உழைக்கும் நன்னியனை நோக்கி அவன் மனைவி, “இவ்வாறு கஷ்டப்பட உனது தலையில் எழுதிக் கிடக்கோ’ என வினவுகிறாள்.*
கோவிந்தன் என்ற நாவலில், ஒருவன் சாகவேண்டும் என்று விதி இருந்தால் அவன் செத்தே விடுவான் என்ற செய்தி சண்முகம்பிள்ளை வாயிலாகச் சொல்லப்படுகிறது.*
நீண்ட பயணம் என்ற நாவலில், கதிராசி, தன் மகனின் இறப்புக்குக் காரணம் விதியே எனக் கருதி, அவ்விதியை வரைந்த கடவுளையே திட்டுகிறாள்.*
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து என்ற நாவலில், கடன்பட்டு, பொருளை விற்று வயலில் போட்ட முதலையெல்லாம் வெள்ளம் கொண்டு போனதைப் பார்த்துத் திகைத்து நின்ற சிவக்கொழுந்தைப் பார்த்து,
நாம் நினைக்கிறபடி எதுதான் நடக்குது. ஏற்கனவே
நிர்ணயிக்கப்பட்ட மாதிரி எல்லாம் நடக்குது.
வாழ்க்கையே அப்படித்தான். நம்பிக்கையை இழக்காதை
386
என முத்தையர் தேற்றுகிறார்.

8- 171
பெருந்துயர் வரும்போது அதைத் தாங்கிக்கொண்டும், தன் தலையெழுத்தே அதற்குக் காரணம் என்று தன்னையே காரணமாக்கிக் கொண்டும் பொறுத்துக் கொள்ளும் பொறுமையின் அடியாகப் பிறந்ததே விதி பற்றிய நம்பிக்கை எனலாம்.
அதிஷ்டம் தொடர்பான நம்பிக்கைகள்
அதிஷ்டம், துரதிஷ்டம் தொடர்பான நம்பிக்கை பரவலாக வழக்கில் உள்ளது. அதிஷ்டத்துக்குள்ளாவோர், கொடுத்து வைத்தவர்கள் எனக் கருதப்படுகிறார்கள். இதன் பொருள் முற்பிறப்பில் நன்மையான காரியங்களைச் செய்தவர்கள் என்பதாகும்.
வாழ்க்கையில் ஒருவனுக்கு அதிஷ்டம் வருமானால், அது தானாகவே வந்து வாசலைத் தட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
நீண்ட பயணம் என்ற நாவலில், அன்னம்மாவுக்கு மாப்பிள்ளை வீடுதேடி வந்தது அவளது அதிஷ்டமே என்ற செய்தி தரகர்மூலம் வெளிப்படுத்தப்படுகிறது."
வாடைக்காற்று என்ற நாவலில், மரியதாஸின் வலைகளிலே குவியல் குவியல்களாக மீன்கள் அகப்பட்டமைக்குக் காரணம், அவனது கடுமையான உழைப்பு மாத்திரமன்று; அவனது அதிஷ்டமுமே எனப் பொன்னுக்கிழவர் குறிப்பிடுகிறார்.*
சோதிடம் தொடர்பான நம்பிக்கை
சோதிடம் தொடர்பான நம்பிக்கை உலகின் பல்வேறு இன மக்களிடையேயும் மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது. சோதிடம் என்பது, கிரகங்களின் நிலையையும், நட்சத்திரங்களின் நிலையையும் கொண்டு, மானிட, உலக விவகாரங்களைப் பற்றி முன் கூட்டியே அறியமுடியும் என்ற நம்பிக்கையின் அடியாகத் தோற்றம் பெற்றதாகும்.
மேலைத் தேய மரபில் சோதிடம்
ஐரோப்பிய வரலாற்றின் இடைக் காலத்தில் சோதிடம் பற்றிய நம்பிக்கை எல்லா இடங்களிலும் செழித்திருந்தமை பற்றி அறிய முடிகின்றது.*

Page 89
172 X
மேலைத் தேயத்தவர்கள், தலை அமைப்பு, கைரேகைக்கோடு மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பைக் கொண்டு எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தமை பற்றி உலக நாகரிகங்கள் பற்றி ஆராய்ந்த வில்டுரான்ட் விரிவாகக் குறிப்பிடுவார்.° கி.பி.1572 வரை மிகவும் புகழ்பெற்ற போல்கானாப் (Bolgna) பல்கலைக்கழகத்தில் சோதிடக்கலை பயிற்றுவிக்கப்பட்டமை பற்றியும் அறிய முடிகிறது.*
இந்தியமரபில் சோதிடம்
இந்தியமரபில் சோதிடம் பற்றிய நம்பிக்கை என்பது மிக நெடுங்கால வரலாற்றைக் கொண்டதாகக் காணப்படுகிறது.
சோதிடக்கலை பற்றிய அறிவை வேதகால ஆரியர்கள் கி.மு.2000 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தார்கள் எனக் கூறப்படுகிறது.*
தமிழ்மரபில் சோதிடம்
தமிழர்கள் சோதிடம் பற்றிய நம்பிக்கை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் பிறந்த நாளைச் சிறந்த நாளாகக் கருதும் போக்கும் நாள் நிமித்தம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதை நோக்க முடிகிறது.*
சங்கஇலக்கியங்களில், நல்ல நாளில் வினைகள் நிகழ்த்தப்பட்டமை குறித்து அறிய முடிகிறது.* நிலத்தில் விளைந்த பயனை அனுபவித்தற்கு நல்ல நாளினைப் பார்த்தது பற்றிப் புறநானூற்றுப்பாடல் சான்று தருகிறது.*
இலக்கியமரபில் சோதிடர், “கணி’ என்றும் ‘பெருங்கணி’ என்றும் குறிக்கப்பட்டனர். சங்ககாலத்தில் ஒருமனிதனின் இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் பற்றி அறிய ஜாதகம் பார்த்து வந்தமையை,
நின்று நிலைஇயர் நின்னாண் மீனில்லாது, படாஅச் செலீயர் நின் பகைவர் மீனே*
என்ற புறநானூற்றுப் பாடல்கள் காட்டிநிற்கின்றன.

8- 173
பரிபாடலில் பரணி, அவிட்டம் முதலிய நாள்கள் சில பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.* நல்ல கோள்களின் சேர்க்கையிலேயே நல்ல காரியங்கள் நிகழ்த்தப்படவேண்டும் எனப் பண்டைத்தமிழர் நம்பியமை பற்றிக் கலித்தொகை, அகநானூறு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, புறநானூறு முதலான இலக்கியங்களில் நிறையச் சான்றுகள் கிடைக்கின்றன.*
மேலே சுட்டியவற்றிலிருந்து சோதிடம் பற்றிய நம்பிக்கையின்பால் பண்டைத் தமிழர்கள் காட்டிய ஈடுபாட்டை விளங்கிக் கொள்ளமுடியும்.
நாவல்களில் சோதிட நம்பிக்கை
நாவல்களிலே, ஜாதகக் கணிப்பு, பலன் பார்த்தல், கைரேகை, காண்டம் வாசித்தல், நாள் பார்த்துக்காரியம் ஆற்றுதல், சோதிடரைக் கொண்டு கிணறு, முதலானவற்றுக்கு நிலம் எடுத்தல் முதலிய பல்வேறு நம்பிக்கைகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
ஜாதகம் எழுதுதல்
அடிமைகள் என்ற நாவலில், குழந்தை பிறந்தவுடன் சோதிடரைக் கொண்டு ஜாதகம் எழுதுவிக்கும் நம்பிக்கை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. பிள்ளையின் பலன் தந்தையின் நடவடிக்கைகளில் கணிசமான செல்வாக்கைச் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. சூரியருக்கு, அடுத்தடுத்து ஏற்பட்டு வந்த தோல்விகளுக்குக் காரணம் பிள்ளையின் ஜாதகப் பலனே எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.*
பலன் பார்த்தல்
ஒருவருக்கு நிகழவுள்ள நல்லது கெட்டதுகளை அறிந்து கொள்ளும் பொருட்டுச் சோதிடரைக் கொண்டு ஜாதக பலன் பார்ப்பர். இந்நம்பிக்கை பற்றிப் பஞ்சமர் என்ற நாவலில் விரிவாக விளக்கப்படுகிறது." இந்நாவல், சண்முகம் பிள்ளையின் திடீர் மறைவுக்குக் காரணம் அவரின் ஜாதகப்பலனில் சொல்லப்பட்ட கண்டமா அல்லது கடைசிப்பிள்ளையின் ஜாதகப்பலனா என்பதிற் சர்ச்சை ஏற்படுகின்றமை பற்றிக் குறிப்பிடுகிறது.

Page 90
174 x
கிரகநிலை சரியில்லாவிடில் துன்பம் வந்து சேரும் என்ற நம்பிக்கையினைப் பல்வேறு சம்பவச் சித்திரிப்புக்கள் மூலம் ‘கோவிந்தன்’, ‘நீண்ட பயணம்’, ‘பஞ்சகோணங்கள்’ முதலான நாவல்கள் விளக்கி நிற்கின்றன." இதனைக் காலப்பகை' என்றும் குறிப்பிடுவர். பஞ்சகோணங்கள் என்ற நாவலில், இளையதம்பியர், தனக்கு ஏற்பட்டுவரும் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் தனது காலப்பகையே என அமைதி கொள்கிறார். காலம் பகைத்து வரும்போது எதையுமே செய்ய முடியாது என்ற நம்பிக்கை பற்றி இவர் வாய்மூலமாகவே உணர்த்தப்படுகிறது.
கைரேகை
ஒருவரின் கையிலுள்ள இரேகைகளின் அமைப்பினைக் கொண்டு பலன்பார்க்கும் நம்பிக்கை வழக்கம் பற்றி இருளின் கதிர்கள் என்ற நாவலில் குறிப்பிடப்படுகிறது.*
காண்டம் வாசித்தல்
காண்டம் வாசிப்பதன் மூலம் எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளும் நம்பிக்கை தமிழகம் மற்றும் ஈழம் ஆகிய இடங்களில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒன்றாகக் காணப்படுகிறது.
தண்ணிர் என்ற நாவலில், விதானையார், நாகர்கோவில் சாத்திரியைக் கொண்டு காண்டம் வாசித்து, தனது நன்மை தீமைகளை முன்னறிந்து கொண்டமை பற்றி மூத்ததம்பிநயினாருக்கு விளக்கமாக எடுத்துக் கூறுகிறார்.*
வெற்றிலைச் சாத்திரம் அல்லது மைபோடுதல்
ஒருவருக்குத் துன்பம் நேரிடும் போது, அத்துன்பத்துக்கான காரணத்தைப் பிற வழிகளினால் அறிய முடியாத நிலையில் மை பார்த்தல் மூலம் அதனை அறிந்துகொள்ளும் நடைமுறை இன்றும் காணப்படுகிறது. இதனை “அஞ்சனம் பார்த்தல்’ எனவும் வழங்குவர்.
தண்ணிர் என்ற நாவலில், மூத்ததம்பி நயினாரின் உடலில் ஏற்பட்ட நலக்குறைவுக்கான காரணத்தை மை பார்த்தல் மூலம்

& 175
அறிந்து கொள்ளும் முயற்சி பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. கும்பத்தின் முன்னேயிருந்து, பச்சை வெற்றிலையில் மூன்றுதுளி மையினையிட்டு, அதனை இமைவெட்டாமல் பார்ப்பதனூடே நோயின் மூலத்தினைக் கண்டுபிடித்தல் பற்றி மிக விளக்கமாக இந்நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளமை கருதத்தக்கதாகும்.*
போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில், பாலிப்போடியார், தான் ஒரே ஒரு வாக்கினால் கிராமச் சங்கத் தேர்தலிலே தோற்றுப் போனமை குறித்து மிகவும் வருந்துகிறார். அந்த வோட்டுக்குரியவனை (Vote) மை போட்டுக் கண்டுபிடித்துப் பழிவாங்கப்போவதாகச் சூளுரை செய்கிறார்.*
சனிதோஷம்
ஜாதகத்தில் சனிதோஷம் இருப்பின் அது தீமை பயக்கும் என்பது நம்பிக்கையாகும்.*ஜாதகத்தில் சனியின் ஆட்சியினை, மங்குசனி, பொங்கு சனி, மரணச்சனி என வகைப்படுத்திப் பலன் பார்ப்பர். மங்குசனியில்துன்பம், அலைச்சல் முதலியன ஏற்படும் என நம்புவர்.
மையக்குறி என்ற நாவலில், சோமசுந்தரம், தனது தொழிலின் வீழ்ச்சிக்குக் காரணம் மங்குசனியே எனக் குறிப்பிடுகிறார்."
தண்ணிர் என்ற நாவலில், மூத்ததம்பி நயினாருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவுக்குக் காரணம், ஏழரைச் சனியின் கட்ைக்கூறே எனக் கூறப்படுகிறது. ஏழரைச்சனியின் கடைக்கூறு என்பது மிகவும் ஆபத்தான காலமாகக் கருதப்படுகிறது.
சனிதோஷம் பரிகாரம்
சனிதோஷம் நீங்கும் பொருட்டுச் சனீஸ்வரனுக்கு விரதம் இருந்து நேர்ச்சைகள் செய்வர். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சனீஸ்வரனுக்கு எள்ளெண்ணெய் எரித்து, காக்கைகளுக்கு உணவிடுவர். சடங்கு என்ற நாவலில், இந்நம்பிக்கை பற்றி மிக விரிவாக விளக்கம் தரப்படுகிறது.* ஈழத்தமிழர்களிற் பெரும்பாலானோர் இவ்விரதத்தை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Page 91
176 «Х»
தமிழக பழங்குடிகளான ‘எருக்கலவாரு இன மக்களிடையேயும் இவ்விரத நடைமுறை பயில் நிலையில் உள்ளமை பற்றிச் ச. அகத்தியலிங்கம் குறிப்பிடுவார்.*
செவ்வாய் தோஷம்
ஜாதக அமைப்பிலே செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் திருமணத்தைப் பொருத்துகின்றபோது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் நாவல்களில் செய்திகள் கிடைக்கின்றன. இது குறித்துத் திருமணம் தொடர்பான நம்பிக்கைகளிலே பார்க்கலாம்.
கிணற்றுக்கு நிலம் எடுத்தல்
கிணற்றுக்கு (கேணி) நிலத்தைத் தேர்வு செய்கின்ற போது, அதனைச் சோதிடர்களைக் கொண்டு தேர்வு செய்வது வழக்கமானதாகும். நன்னீர் நிலைகளைக் கண்டறியும் ஆற்றல் அவர்களுக்கிருப்பதாக நம்புவர். இந்நம்பிக்கை பற்றித் தண்ணீர் என்ற நாவலில் பொதுக் கிணற்றுக்கு நிலம் எடுப்பதான சம்பவச் சித்திரிப்பில் குறிப்பிடப்படுகிறது.*
வீட்டுக்கும் நிலம் எடுத்தல்
வீட்டுக்குரிய நிலம் மற்றும் வீட்டின் அமைப்பு ஆகியன்வற்றைத் தீர்மானிக்கும் போது, வீட்டுக்குரிய பெண்ணின் ஜாதகக் குறிப்பினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவர். இவ்வாறு செய்யாவிடில் வீட்டில் உள்ளோர்க்குத் துன்பங்கள் நேரிடும் என்று நம்புவர்."
நாள் பார்த்தல்
நல்லகாரியங்களை மேற்கொள்ளும் போது நல்லநாள், நேரம்
முதலானவற்றைக் கணித்துச் செயற்படுவர். இது குறித்த நம்பிக்கைகளை நாள் பற்றிய நம்பிக்கை என்ற பகுதியிற் காணலாம்.
விண்ணியல் நிகழ்வுகளே வாழ்வயல் நிகழ்ச்சிகளை நிச்சயிக்கின்றன என்ற எண்ணப்பாங்கின் அடிப்படையில் சோதிடம் குறித்த நம்பிக்கைகள் வளர்ச்சி பெற்றன எனக் கருதலாம்.

«Х» 177
தாள், கிழமை தொடர்பான நம்பிக்கைகள்
நாள் கிழமை தொடர்பான நம்பிக்கைகள் தமிழ் மக்களிடையே தொன்று தொட்டே நிலவிவரக் காணலாம். நல்லகாரியங்களுக்கும் செயல்களைத் தொடங்குதற்கும் நல்ல நாளைக் கணித்துச் செயற்படும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது.
தமிழ்மரபில் நாள்பற்றிய நம்பிக்கை
தமிழின் தொன்மையான இலக்கியங்கள் எனக் கருதப்படும் சங்க இலக்கியங்களில் ‘நாள் பற்றிய நம்பிக்கை குறித்துப் பல்வேறு தரவுகள் கிடைக்கின்றன.
நல்ல கோள்களின் நிலையிலேயே நற்காரியம் தொடங்க வேண்டும் என்று பண்டைத்தமிழர் கருதி வந்தமைப்பற்றிக் கலித்தொகை குறிப்புத் தருகிறது.*
பரிபாடல் பரணி, அவிட்டம், எரிகார்த்திகை, சடைதிருவாதிரை, வேழம் முதலான ‘நாள்கள்’ பற்றிக் குறிப்பிடுகிறது.*
திருமணத்திற்கு ஏற்ற நாளாக மதியத்தை உரோகிணி சேரும் நாளைத் தேர்ந்தமைபற்றி அகநானூறு,
கோள்கள் நீங்கிய கொடுவெண்திங்கள் கேடுஇல் விழுப்புகழ் நாள் தலைவந்தென*
எனக் குறிப்பிடுவதன் மூலம் அறியமுடிகிறது. இவ்விடத்தில் * கோள்’ என்பது தீய கோள்களைக் குறிப்பதாக அமைகிறது. இவ்வாறு தீமை பயவாத நாள், கோள்களைத் தேர்ந்தெடுப்பதன் காரணம் அவற்றால் உளவாகும் நன்மை கருதியே எனலாம்.
உவா நாளில் பரதவச் சமூகத்தினர் கடல் மேற்செல்லாது, ஊரின்கண் உண்டு மகிழ்ந்திருந்தமை பற்றி,
புன்தலை இரும் பரதவர் பைந்தழை மாமகளிரொடு பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது உவவுமடிந்து உண்டு ஆடியும்."

Page 92
178 «Х•
எனப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. நாள் கோள்களின் நல்லியக்கத்தால் நன்மை விளைந்தமை பற்றி மதுரைக் காஞ்சி விவரிக்கிறது.* கலித்தொகைப் பாடல் ஒன்று
நாளும் கோள் மீன் தகைத்தலும் தகைமே"
எனக் குறிப்பிடுவதன் மூலம் பிரயாணம் செய்வதில் நாள் பார்க்கும் நம்பிக்கை இருந்தமை பற்றியும் அறிந்து கொள்ளமுடிகிறது.
திருஞானசம்பந்தரின் ‘வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் கோளறு திருப்பதிகம் நாள் தொடர்பான நம்பிக்கையினை மிகத் தெளிவாகக் காட்டி நிற்கிறது எனலாம்.
மேலே சுட்டியவற்றின் மூலம் நாள் பற்றிய நம்பிக்கை என்பது பழந்தமிழரிடையே எவ்வளவு தூரம் வலிமையுடன் இருந்துள்ளது என்பதனை அறிந்து கொள்ளமுடியும்.
நாவல்களில் நாள்பற்றிய நம்பிக்கை நாள் நடுகை
நாளுக்கு நாற்றை நடுகை செய்தலை நாள் நடுகை என்பர். கானல் என்ற நாவலில், தம்பாப்பிள்ளையரின் விளைநிலத்தில் சாத்திரி கணித்துச் சொன்ன நல்ல நாளிலே நன்னியன் முதல் நாற்றை நடுகின்றான். பூமியைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்ட நன்னியன் பக்தி சிரத்தையுடன் அதனை மேற்கொள்வதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.*
நாள் விதைப்பு
நாளுக்கு விதைப்பதனை ‘நாள் விதைப்பு’ என வழங்குவர். நிலக்கிளி என்ற நாவலில், கதிராமன் நல்லதொரு வித்து நாளின் விடிகாலைப் பொழுதில் கற்பூரம் ஏற்றி, ஐயனை வேண்டிக்கொண்டு நாள்விதைப்பை மேற்கொண்டமை பற்றிச் சித்திரிக்கப்படுகிறது.*
நாள்வேலை
நல்லநாளில் வேலையினைத் தொடங்குதலை நாள் வேலை எனக் குறிப்பிடுவர். அடிமைகள் என்ற நாவலிலே, செல்லன் நல்ல

8- 179
நாளின் விடியற் பொழுதிலே, மழுவராயரின் கல்லுப்பூமியில் கல்லுடைக்கும் வேலைக்கான முதற் கொந்தாலிக் கொத்தைப் போட்டு வேலையைத் தொடக்கி வைக்கிறான்."
முருங்கையிலைக் கஞ்சி என்ற நாவலில், தனது தோட்டத்தில் விளைந்த புகையிலையினைப் பாடம் போடுவதற்கு (உணர்த்துதல்) நல்ல நாளினையே ஆறுமுகத்தார் தேர்வு செய்கின்றமை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.*
நாள் இறைப்பு
விளைநிலத்தில் முதன் முதலாக நாளுக்கு நீரிறைப்பதனை நாள் இறைப்பு எனக் குறிப்பிடுவர். கானல் என்ற நாவலில், பூக்கண்டர், தனது தோட்டத்துக்கு நீர்பாய்ச்சுவதற்கு நல்ல நாளினைக் குறிப்பதற்கு ஆர்வம் கொள்கின்றமை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.*
நாள் நடுகை, நாள் இறைப்பு, நாள் வேலை முதலியன பற்றிய நம்பிக்கைகள் தமிழக மக்களிடமும் வழக்கில் உள்ளமை பற்றிக் குறிப்பிடும் கழனியூரன், தமிழக வழக்கில் நாள் நடுகையினைப் பெண் ஒருத்தியே முதலில் நடவேண்டும் என்ற நம்பிக்கை இருப்பது பற்றியும் குறிப்பிடுகிறார்.* வளமை பற்றிய நம்பிக்கையே இதன் அடிப்படை எனக் கருதலாம்.
அட்டமி நவமி
நல்ல காரியங்களை மேற்கொள்ளும் போது 'அட்டமி நவமி’ உள்ள நேரத்தில் அதனைச் செய்வதைத் தவிர்த்து விடுவர். கானல் நாவலில், இந்நம்பிக்கை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.*
கல்விச் செயற்பாடுகளில் நாள் பார்த்தல்
கல்வி தொடர்பான நடைமுறைகளில் நல்லநாள் பார்க்கும் வழக்கம், படித்தவர், பாமரர் என்ற வேறுபாடின்றி இன்றுவரை நிலவி வருகிறது. தைப்பூசம், விஜயதசமி ஆகிய நாட்களில் கல்வியை முறைப்படி தொடங்கினால் பலாபலன் மிக நன்றாக அமையும் என நம்புவர்.
முருங்கையிலைக் கஞ்சி என்ற நாவலில், ஆறுமுகத்தார், தன் மகனைத் தைப்பூசத் திருநாளில் இராமசாமி வாத்தியாரிடம்

Page 93
180 ぐ
சேர்த்துவிட்டதால் அடையும் மனத்திருப்தி பற்றிச் சித்திரிக்கப்படுகிறது.*
கோவிந்தன் என்ற நாவலில், அழகம்மா நாச்சியார் நல்லதொரு நாளில் கைவியளமாகப் புதுப்பள்ளிக் கூடத்துக்குப் போய் வந்தமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.*
கிழமை பற்றிய நம்பிக்கை
ஞாயிறு முதல் சனி ஈறாகக் காணப்படும், கிழமைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான குணாம்சங்கள் உண்டு என்பது பொதுவான நம்பிக்கையாக உள்ளது.
புதன்
திருமண நடைமுறைகளுக்கும் நல்ல காரியங்களைத் தொடங்குதற்கும் புதன்கிழமை ஏற்றதொரு நாளாகக் கருதப்படுகிறது.
தண்ணீர் என்ற நாவலில், சொடுகனின் மகள் தெய்வியைக் கறுத்தானுக்கு மணம் முடித்துவைக்க ஏற்ற நல்ல நாளாகப் புதன்கிழமையே குறிப்பிடப்படுகிறது.*
சடங்கு என்ற நாவலில், பொன்னம்பலத்தாரின் மகளுடைய பொன்னுருக்கை வியாழனைத் தவிர்த்துப் புதனிலேயே வைக்க வேண்டும் எனச் சுட்டப்படுகிறது.*
தண்ணிர் என்ற நாவலில், சொடுகனின் மகனாகிய சின்னானை வேலையில் சேர்க்கக் கூடிய நல்ல நாளாகப் புதன்கிழமையே குறிப்பிடப்படுகிறது.*
வியாழன்
நல்ல காரியங்களை வியாழக்கிழமைகளில் ஆற்றுதல் கூடாது என நம்புவர். வியாழனைக் கள்ள வியாழன்’ எனவும் அழைப்பர்.
சடங்கு என்ற நாவலில், வியாழன் நல்லகாரியத்துக்கு ஏற்ற நாள் அல்ல என்பதை;

நாளைக்கு தானே ஒரே நல்ல நாள். நாளையிண்டைக்கு வியாழன் பிறகு வெள்ளிக்கிழமை கலியாணம் .*
என்ற உரைப்பகுதி மூலம் விளக்கப்படுகிறது. பஞ்சமர் என்ற நாவலில், செல்லப்பனுக்கு வருடாந்தம் இனாமாகக் கொடுக்கப்படும் நெல்லைப் பெற்றுக் கொள்வதற்கு வியாழனைத் தவிர்த்து வருமாறு வேலுப்பிள்ளைக் கமக்காரன் செல்லப்பனை வேண்டுகிறார்.*
வெள்ளி
தமிழர்களிடையே வெள்ளிக்கிழமையைப் புனிதமான நாளாகக் கருதும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது.
வெள்ளியின் புனிதத்தன்மை கருதி, அந்நாளில் அசைவ உணவு, மதுவகைகள், இல்லற சுகம் முதலானவற்றைத் தவிர்த்து விடுவர்.* திருமணம் முதலிய நல்ல காரியங்களுக்கு வெள்ளிக் கிழமையினையும் தேர்வு செய்வர்.
வீட்டில் உள்ள பொருட்களை வெள்ளிக் கிழமைகளில் பிறர்க்குத் தானமாகவோ கடனாகவோ தரக் கூடாது என்பது வலுவான நம்பிக்கையாக உள்ளது. அவ்வாறு கொடுத்தால் செல்வம் நிலைக்காது எனக் கருதப்படுகிறது°இவ்வாறான நம்பிக்கை தமிழக மக்களிடமும் வழக்கில் உள்ளமை கருதத் தக்கதாகும்.*
மதமாந்திரீக வைத்திய நடைமுறைகளுக்கு ஏற்ற நாளாகப் பெரும்பாலும் வெள்ளிக்கிழமையே தேர்வு செய்யப்படுகிறது. குறிப்பாகக் கழிப்பு’, ‘பேய்க்கழிப்பு’ முதலான சடங்குகளை நிகழ்த்துவதற்கான நல்ல நாளாக வெள்ளிக் கிழமை அமைதல் பற்றி நாவல்களில் குறிப்புக்கள் கிடைக்கின்றன.*
மாதம் தொடர்பான நம்பிக்கைகள்
தை முதலாக வரும் பன்னிரண்டு மாதங்களிலே, சில மாதங்களுக்குச் சிறப்புச் செய்தும், சிலமாதங்களை நல்ல காரியங்களுக்குத் தவிர்த்து வருவதும் தமிழ் மக்களின் நெடுங்கால நம்பிக்கையாக உள்ளது.

Page 94
182 «Х•
தைமாதம்
மாதங்கள் பலவற்றுள்ளும் தைமாதத்துக்கெனத் தனியான சிறப்புக் கொடுப்பர். நல்லகாரியங்களைச் செய்தற்கும், தொடங்குதற்கும் ஏற்ற மாதமாகத் தையினைக் கருதுவர்.
நிலக்கிளி என்ற நாவலில், தண்ணி முறிப்புக் கிராமத்தின் கல்வி நிலையை மேம்படுத்த விழைந்த சுந்தரலிங்கம் பாடசாலை ஒன்றை நிறுவ முனைகிறார். அதனை முறைப்படி ஆரம்பித்து வைப்பதற்கு ஏற்ற மாதமாகத் தையினையே தேர்வு செய்கிறார்.*
சடங்கு என்ற நாவலிலே, இராசதுரையர், தையினைத்திருமணம் நிகழ்த்துவதற்குரிய சிறப்பான மாதமாகக் குறிப்பிட்டு, இம்மாதத்திலேயே தனது பிள்ளைகளின் திருமணத்தை நடாத்தவும் ஆவல் கொள்கிறார்.*
ஆனிமாதம்
ஆனி, கார்த்திகை முதலான மாதங்களும் திருமணம் நிகழ்த்துவதற்குரிய மாதங்களாகவே கருதப்படுகின்றன. குமாரபுரம் என்ற நாவலில், ஆனி மாதத்தில் திருமணப் பேச்சைத் தொடங்குதலும் அதனை நிறைவேற்றி வைப்பதும் நன்று என்ற நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.*
ஆடிமாதம்
மாதங்களிலே ஆடிமாதம் சிறப்புடைய ஒன்றாகக் கருதப்படுவதில்லை. நல்ல காரியங்களை இம்மாதத்தில் ஆற்றும் வழக்கம் இல்லை எனலாம்.
நிலக்கிளி என்ற நாவலில், மலையர், தனது மகனின் திருமணப் பேச்சை ஆனிமாதத்துக்குள் முடித்துவிட அவசரம் காட்டுகிறார். ஆடி பிறந்துவிட்டால் திருமணம் தடைப்பட்டு விடும் என்பது அவரது ஆழ்மன உணர்வாக வெளிப்படுகிறது.*ஆயினும் ஆடி மாதத்தில் பெரும்பாலான ஆலயங்களில் தெய்வங்களை வழிபாடு செய்து ஆராதிக்கும் விழாக்கள் நடைபெறுகின்றமை கருதத் தக்கதாகும். குறிப்பாக அம்பாளின் பூப்புச்சடங்கு’ எனப்படும்

& 183
'ஆடிப்பூரவிழா இம்மாதத்திலேயே நடைபெறுகிறது. இதன் காரணம் ஆடிபற்றி மக்கள் கொண்டிருக்கும் அச்சத்தினை உளவியல் நிலையில் போக்குவதாக இருக்கலாம்.
ஆடிமாதம் பற்றிய தமிழக மக்களின் நம்பிக்கைகளும் ஈழத்தமிழர் நம்பிக்கைகளும் ஒத்துப் போவனவாகவே உள்ளமை கருதத் தக்கதாகும்.*
புரட்டாதிமாதம்
புரட்டாதிமாதம் புனிதமான ஒருமாதமாகக் கருதப்படுகிறது. புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள்தோறும் சனீஸ்வர பகவானுக்கு விரதமிருந்து பிரீதி செய்வது வழக்கமாக உள்ளது.*
எண் தொடர்பான நம்பிக்கைகள்
மனிதன் தன் கருத்தினைப் பிறரிடம் உணர்த்த முற்பட்ட நிலையில் மொழி தோன்றியது. மொழியுணர்வு உருவாகத் தொடங்கிய காலத்திலேயே எண் பற்றிய உணர்வும் தோற்றம் பெற்றதெனலாம்.
எண் தொடர்பாக நிலவிவரும் நம்பிக்கை என்பது, உலகின் பல்வேறு இனமக்களிடையேயும் பரவலாக வழக்கில் இருந்து வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும். எண்களிற் சில நன்மை பயப்பனவாயும், சில தீமை பயப்பனவாயும் அமைவன என்ற நம்பிக்கை நெடுங் காலமாகவே வழக்கிலிருந்து வருகின்றது.
மேலைத்தேய மரபில் எண்
கிரேக்க, உரோமானிய மக்களிடையே எண் பற்றிய நம்பிக்கை நெடுங்காலமாகவே நிலவி வந்துள்ளமையினைக் காணலாம். ஒற்றை எண்கள் (Odd Numbers) நன்மை பயக்கும் என்றும், இரட்டை எண்கள்(EvenNumbers) தீமை பயக்கும் என்றும் கருதுவதான போக்கு இம்மக்களிடம் இருந்து வந்துள்ளது.*ஒற்றை எண்களின் வகுபடாத் தன்மை அதற்கு வலிமை சேர்ப்பதாக இம்மக்கள் கருதியிருக்கலாம்.
ஜப்பானியர், ஏழு என்ற எண்ணை நன்மை, தீமை பயக்கும் எண்ணாகக் கருதும் வழக்கமுடையவர்களாக உள்ளனர். ஆயினும்

Page 95
184 令
உலகின் பல்வேறு நாடுகளிலும் இவ்வெண்ணை நன்மை பயக்கும் எண்ணாக நம்பும் வழக்கமே காணப்படுகிறது எனலாம்.*
தமிழ் மரபில் எண் பற்றிய நம்பிக்கை
பண்டைத் தமிழர் எண்கள் தொடர்பாகக் கொண்டிருந்த நம்பிக்கை பற்றிச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
சங்க இலக்கியங்களில் ‘ஏழு என்ற எண் மிகுதியாகப் பயிற்சி பெற்றிருக்கக் காணலாம்.*இதற்குக் காரணம் இவ்வெண் நன்மை பயக்கும் எனக் கருதியமையே எனலாம்.
பல சந்தர்ப்பங்களில் தமிழர்கள் ஒற்றைப் படை எண்களைப் பயன் படுத்த விரும்பும் தன்மை பற்றி உருஷ்ய ஆராய்ச்சியாளர் விதாலி ஃபுர்னிக்கா விரிவாக விளக்கியுள்ளார். விற்பனை அங்காடிகளில் பொருள்களின் விலையை ஒற்றைப்படை எண்ணில் குறித்தல், தங்களுடைய தொலைபேசி எண்ணை ஒற்றைப்படை எண்ணாக அமைத்துக்கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சி, திருமண நாளில் அன்பளிப்புச் செய்யும் பணத்தொகையை ஒற்றைப்படையாகச் செய்யும் பண்பு முதலானவை பற்றி இவர் எடுத்துக்காட்டுவர்.*
நாவல்களில் எண் பற்றிய நம்பிக்கை
நாவல்களில் எண் தொடர்பாக நிலவிவரும் நம்பிக்கைகள் அதிகமாகப் பயின்று வரவில்லை. ஆயினும் எண் தொடர்பாக ஈழத்தமிழர்களிடையே நிலவிவரும் முக்கியமான நம்பிக்கை ஒன்று பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எண் அமைப்பும், காரியசித்தியும்
காரியம் ஒன்றை ஆற்றச் செல்கையில் மூன்று பேராகச் சென்றால் அக்காரியம் கைகூடிவராது என்பது நம்பிக்கையாகும். கலைக்களஞ்சியம் இதனை இந்துக்களின் நம்பிக்கையாகக் குறிப்பிடும்.*
காட்டாறு என்ற நாவலில், சந்தனம், சின்னத்துரை ஆகியோர், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் தங்களுக்குத் தேவையான விளை

8 185
நிலத்தைத் தேர்வு செய்வதில் மிகவும் ஆர்வமுடன் செயற்படுகின்றனர். அனுபவத்திலும், அறிவிலும் குறைவுள்ளவர்களாகையால், அவர்களால் பருவ நிலைக்கு நின்று பிடித்துப் பயிர் செய்வதற்குரிய நிலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்களின் சிக்கலைப் புரிந்து கொண்ட தாமரைக்கண்டுக்கிழவன், அவர்களுக்கு உதவி செய்ய முன்வருகிறான். சந்தனம், சின்னத்துரை, தாமரைக் கண்டுக்கிழவன் என மூவராக அலைந்து திரிந்தும் விளைநிலத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கணவதியின் மனைவி செல்லாச்சி என்பவள், “மூன்று பேராகச் சென்றால் ஒருகாரியமும் சரிப்பட்டு வராது’ எனக் கூறவே, கணவதியும் அவர்களுடன் இணைந்து கொள்கிறான். நான்கு பேராகச் சென்ற அவர்கள் மிகவும் பொருத்தமான ஒரு விளை நிலத்தை எளிதில் கண்டு பிடித்து விடுகின்றனர்.*
இப்பகுதியிலே செல்லாச்சி என்ற பாத்திரத்தின் மூலம் ‘எண்’ பற்றிய நம்பிக்கை வெளிப்படுத்தப்படுகின்றமை கருதத் தக்கதாகும். தமிழக மக்களிடமும் இவ்வாறான நம்பிக்கை வழக்கில் உள்ளமை பற்றிப் பி.நாராயணன் குறிப்பிடுவார்.*
நாட்டுப்புற தொடர்பான நம்பிக்கைகள்
நாட்டுப்புற மக்களிடையே வானியல் (Meteorology) குறித்துப் பல்வேறு நம்பிக்கைகள் வழக்கில் இருக்கக் காணலாம். அறிவியல் வாயிலாக அன்றித் தமது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டும் பல்வேறு நம்பிக்கைகளை இவர்கள் படைத்துள்ளனர் எனலாம்.
மழை
மழை என்பது மனித வாழ்வியலோடு மிகவும் பின்னிப் பிணைந்த ஒன்றாகும். மழை பொய்த்தால் மனித வாழ்வே பொய்த்துவிடும்.
விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள் நின்றுடற்றும் பசி* எனத் திருவள்ளுவர் மழையில் மகத்துவத்தை எடுத்துக்காட்டுவார். விண்மீன் கோள் நிலை கொண்டு, மழை நிலையையும், மன்னவன்

Page 96
186 ※
நிலையையும் ஆய்ந்துரைக்கும் கணிவர் சங்க காலத்தில் இருந்தமை பற்றிக் குறிப்பிடும் கு. வெ. பாலசுப்பிரமணியன், இது, தமிழரின் வானியற் கணிப்பறிவை மட்டுமல்லாது சமூகத்தின் ஆழமான நம்பிக்கையை அக்கணிப்புக் கலை பெற்றிருந்தமையையும் எடுத்துக்காட்டுவதாக மேலும் குறிப்பிடுகிறார்."
கொடும்பாவியும் மழையும்
மழைவேண்டிக் கொடும்பாவி எரிக்கும் நம்பிக்கை பற்றி, கே. டானியல் குறிப்பிடுகிறார். மக்கள் செய்த பாவச் செயல்களின் உருவமாகக்கொடும்பாவி செய்யப்படுகிறது. வைக்கோல், பழைய துணி முதலானவற்றைக் கொண்டு இதனைத் தயாரிப்பர். இளைஞர்களும், சிறுவர்களும் ஊர்ஊராக இதனை இழுத்துச் சென்று இறுதியில் சுடலையில் வைத்து அதற்குத் தீமூட்டுவர். இச்சடங்கின் போது, பறையடித்தலும், ஒப்பாரிவைத்தலும் இடம் பெறும்."
பாவம் செய்தால் மழை வராது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இக் கொடும்பாவி நடைமுறையைப் பார்க்க முடிகிறது. பாவத்தைத் தொலைத்தால் மழை வரும் என நம்புகின்றனர். தமிழக மக்களிடமும் இந்நம்பிக்கை வழக்கில் உள்ளமை கருதத் தக்கதாகும்.*
கனத்த நாட்களும், மழையும்
தண்ணிர் என்ற நாவலில், அட்டமி, நவமி, அமாவாசை, பெளர்ணமி முதலான கனத்த நாட்களில் மழைவரும் என்ற நம்பிக்கை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.* இந்நாட்களில் இயற்கையின் சமநிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மழையினை வருவிப்பதனால் இந்நம்பிக்கை தோற்றம் பெற்றிருக்கலாம்.
மங்கையர் கற்பும், மழையும்
மங்கையர் கற்பிழந்தால் மழை பொய்க்கும் என்ற நம்பிக்கை பற்றி நிலக்கிளி என்ற நாவலில் குறிப்பிடப்படுகிறது. தண்ணி முறிப்புக் கிராமத்திலே, மழை பொய்த்து, மரங்கள் வாடி, குளங்கள் நீரின்றிப் பாளம் பாளமாக வெடித்தமைக்குத் தான் கற்பிழந்தமையே

& 187
காரணம் எனப் பதஞ்சலி நினைக்கிறாள். “இனிமேல் மழையே பெய்யாது, மரங்கள் துளிர்க்காது, பாவத்தின் பாரத்தைச் சுமந்து நிற்கும் நானொருத்தி இந்த உலகில் இருக்குமட்டும் வரட்சி நீங்காது, கோடை முடியாது’ எனத் தனக்குத் தானே கூறிக் கண்ணீர் பெருக்குவது இந்நம்பிக்கையினை வெளிப்படுத்துவதாக உள்ளது.*
பெண்கள் கற்புள்ளவர்களாகக் கணவனுக்கு விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும் என்ற விருப்பின் அடிப்படையிலேயே இந்நம்பிக்கை தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.
பிற்பகல் பருவமழை
பிற்பகலில் ஆரம்பிக்கும் பருவமழை எளிதில் நின்றுவிடாது. தொடர்ந்து நின்று பெய்யும் என்ற நாவலிலே குறிப்பிடப்பட்டுள்ளது.*
புயல்
அமைதியாக உள்ள கடல் மணத்தாலோ, நுரைத்தாலோ, கறுத்தாலோ புயல் வரும் என்பது கடற்தொழில் புரியும் கடலோர மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
போராளிகள் காத்திருக்கின்றனர் என்ற நாவலில், கால அளவையோ, வானசாஸ்திரமோ எதுவுமே கற்றறிந்திராத சந்தியாக் கிழவன், கடலின் மணம், நுரை, நிறம் ஆகியனவற்றைக் கொண்டு, புயலின் வருகையினை முன் கூட்டியே அறிவித்து விடுகின்றமை பற்றிக் கூறப்பட்டுள்ளது.*
இவ்வியலில், நம்பிக்கைகளை அவற்றின் பொருளடிப்படையில் பாகுபாடு செய்து நோக்கப்பட்டுள்ளது. மனித மனத்தின் உள உருவாக்கங்களாக அமையும் நம்பிக்கைகள், பெரும்பாலும் அச்சத்தின் காரணமாகவே தோற்றம் பெற்றனவாக உள்ளமை கருதத் தக்கதாகும். மனிதனின் தன்னல உணர்வு, வாழ்வியல் தேவைகள், விருப்பார்வம் முதலானவை நம்பிக்கைகளை நிலைநிறுத்தி உள்ளன எனக் கூறலாம்.

Page 97
188
15.
I6.
17.
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
அடிக்குறிப்புகள்
தொல். சொல்., நூற்பா, 329,
நற்., 175; 7-8, 327; 1-3.
TAMILLEXICON, Vol. IV, p.2155. வாழ்வியற் களஞ்சியம், தொகுதி 11, ப.220. மதுரைத் தமிழ்ப் பேரகராதி, பாகம் 2, ப.10.
THENEWENCYCLOPAEDIABRITANICA (MICRO), Vol.I, p.946.
ENCYCLOPAEDIA OF AMERICANA, Vol.III, p.469.
ENCYCLOPAEDIA OF SOCIALSCIENCE, Vol.I, p.502. தமிழவன், நாட்டுப்புற நம்பிக்கைகள், ப.6.
. லூர்து, தே, நாட்டார் வழக்காற்றியல் கள ஆய்வு, ப.55, . காந்தி, க, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், ப. 103. . சரசுவதி, வி. நாட்டுப்புறப்பாடல்களில் சமூக ஒப்பாய்வு, ப.152.
சக்திவேல், சு, நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.188. . சாந்தி, க. (க.ஆ.), “மூடநம்பிக்கைகள் பற்றிய ஆய்வு
முறைகள்”, நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள், ப.408,
James BassettPatt, THE PSYCOLOGY OFRELIGIOUS BELIEF, p.32. காந்தி, க., மு.கு.நூ. பக்.103-104. தமிழவன், மு.கு.நூ. ப.5. தாயம்மாள் அறவாணன், திராவிட-ஆப்பிரிக்க ஒப்பீடு, ப.92. தமிழவன், மு.கு.நூ. ப.5.
ENCYLOPAEDIA BRITANICA, Vol.21.
வாழ்வியற்களஞ்சியம், தொகுதி 11, ப.221.
மேலது, ப.221.
க. காந்தி, மு.கு.நூ. ப. 107. கைலாசபதி, க, பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், ப.4.
Will Durant, THE LIFE OF GREECE, Vol II, pp.195-197.

26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36,
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
5I。
189
கலைக்களஞ்சியம், தொகுதி 8, பக்.466-467 காந்தி, க., மு.கு.நூ., ப.107.
Will Durant, THE LIFE OF GREECE, Vol II, pp.195-197.
Javane Gowda, D, FOLKBELIEFSINSOUTHERN INDIA, pp.382-383
சக்திவேல், சு., மு.கு.நூ. ப.19. சண்முகசுந்தரம், சு., நாட்டுப்புற இயல், பக்.155-157.
சாந்தி, க. (க.ஆ.), “மூடநம்பிக்கைகள் பற்றிய ஆய்வு முறைகள்”, நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள், ப.413.
Shanmugampillaiand Erica, A.E. Claus, FOLKBELIEFSOF THE TAMILS.
வளவன், சா., நாட்டுப்புறவியல் கட்டுரைகள், ப.129. தெணியான், மரக்கொக்கு, பக்.47-48. விதாலி ஃபுர்னிக்கா, பிறப்பு முதல் இறப்பு வரை, பக்.57-59. டானியல், கே., கோவிந்தன், ப. 69. டானியல், கே., தண்ணீர், ப.23.
மேலது. ப.212.
டானியல், கே., அடிமைகள், ப.234,
நாராயணன், பி., நாட்டுப்புற நம்பிக்கைகள், ப.87 பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, பக்.147-148
டானியல், கே., கானல், ப. 189.
இராசேந்திரன், அ., செங்கை மாவட்ட நாட்டுப்புறப் பழக்க வழக்கங்களும்-நம்பிக்கைகளும், ப.256. டானியல், கே., முருங்கையிலைக் கஞ்சி, ப.37. கோவிந்தன், பக்.160-161.
நாராயணன், பி. மு.கு.நூ., ப.123. டானியல், கே., பஞ்சமர், பக்.199, 252, 260, 271. கணேசலிங்கன், செ., போர்க்கோலம், ப.233.
செங்கையாழியான், காவோலை, பக்.73-74,
தண்ணீர், ப.41.

Page 98
190
52.
53.
54.
55.
56.
57.
58.,
59.
60.
6.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
74.
ΚΧ
கணேசலிங்கன், செ, சடங்கு, ப.41. முருங்கையிலைக் கஞ்சி, ப.50. சென்னைப் பல்கலைக்கழக அகராதி, தொகுதி 3, ப. 1614. தண்ணீர், ப.22. செங்கையாழியான், கிடுகுவேலி, ப.38. Will Durant, THE LIFE OF GREECE, Vol II, p.575. நாராயணன், பி. மு.கு.நூ., ப.51. பாலமனோகரன், அ., நிலக்கிளி, ப.77. கணேசலிங்கன், செ, சடங்கு, ப.50, மேலது., பக். 56, 57, 60.
தண்ணீர், ப.27
கோவிந்தன், ப.88.
முருங்கையிலைக் கஞ்சி, ப.59; நிலக்கிளி, பக்.56-57; பூரீஜோன்ராஜன், எஸ்.போடியார் மாப்பிள்ளை, பக்.138, 141.
கணேசலிங்கன், செ, சடங்கு, ப.90.
தண்ணீர், ப.177.
நாராயணன், பி., மு.கு.நூ., ப.88. செங்கையாழியான், மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, L 1.37.
கழனியூரன், நாட்டுப்புறத்து நம்பிக்கைகள், பக்.29-30; இராசேந்திரன், அ. மு.கு.நூ., ப.287 சுசிலா கோபாலகிருஷ்ணன் (க.ஆ), “தமிழர் பண்பாட்டில் மரஞ்செடி கொடி பற்றிய நம்பிக்கைகள்”, எண்பதில் தமிழ், Luji. 363-368.
கானல், ப.135.
தெணியான், கழுகுகள், ப. 160. நாராயணன், பி., மு.கு.நூ. ப.33.
தண்ணீர், ப.30.
இராசேந்திரன், அ. மு.கு.நூ. ப.287

75.
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
பஞ்சமர், பக்.209-210.
கானல், ப.154. கணேசலிங்கன், செ, சடங்கு, ப.249. கழுகுகள், ப.165. மேலது., பக். 160-161. நாராயணன், பி., மு.கு.நூ., ப.32. கணேசலிங்கன், அ. மு.கு.நூ., ப.249, இராசேந்திரன், அ. மு.கு.நூ., ப.287 பொன்னுத்துரை, எஸ். சடங்கு, 101. நாராயணன், பி., மு.கு.நூ., பக்.94, 102. Edward, S. Gifford, THE EVILEYE STUDIESIN FOLKLOREVISION,
p.5. Frazer, J.G., GOLDENSOUGH (ASTUDY OF MAGIC AND RELIGION) Vol.II, pp. 145-147.
சிலப்.அடைக்கலக்காதை, அடி.24. Thurston, E., CASTES AND TRIBES OF SOUTHERN INDIA, p.175. புறம், 299.
இராகவன், வி.எஸ்.வி., பிளினி, ப. 155. அகத்தியலிங்கம், ச. (பதி.ஆ.), தமிழகப் பழங்குடிகள், பக்.25, 26, 39. கிடுகுவேலி, ப.47; கணேசலிங்கன், செ, சடங்கு, ப.153. Van Gennap, LES RITES DE PASSAGE, p.104. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.169.
தண்ணீர், ப.97.
அடிமைகள், பக்.76-77; கானல், ப.20. அடிமைகள், பக்.76-77.
பஞ்சமர், ப.461. Alan Dundes, INTERPRETING FOLKLORE, p.93.
100. TAMILLEXICON, Vol.II, pp.496-497.

Page 99
192 «Х•
101. ENCYCLOPAEDIAOFRELIGIONANDETHICS, Vol. V, pp.608-609.
102. Frederick Thomas Elworthy, THE EVILEYE AND ACCOUNT OF THE
ANCIENT AND WIDESPREADSUPERSTITION, p. 14.
103.ENCYCLOPAEDIABRITANICA, Vol.8, p.916.
104. Edward S. Gifford, Op.cit., p. 12.
105. ENCYLOPAEDIA OFRELIGIONANDETHICS, Vol.V, p.608.
106. Ibid., p.609.
107.ENCYCLOPAEDIABRITANICA, Vol.8, p.916.
108. Ibid., p. 916.
109. ENCYCLOPAEDIAOFRELIGIONANDETHICS, Vol.V., p.611.
110. திருமுரு, 228; நெடு., 86.
111.இராமலிங்க வள்ளலார், திருவருட்பா, முதல் ஐந்து தொகுதிகள்,
பாடல் 103.
112. வசந்தா, ஜி., தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப்பாடல்கள் ஒரு
சமுதாய ஒப்பாய்வு, ப.171.
113. வளவன், சா., மு.கு.நூ., ப.129 114. கலைக்களஞ்சியம், தொகுதி 8, ப.466.
115. ENCYCLOPAEDIAOFRELIGIONANDETHICS, Vol.V,p. 16. 16.சிவசுப்பிரமணியன், ஆ, மந்திரமும் சடங்குகளும், ப.33. 117.பாலகிருஷ்ணன், மு., கண்ணேறு கழித்தல், ப.42. 118.பாலமனோகரன், அ., குமாரபுரம், L. 106. 119. செங்கையாழியான், காட்டாறு, ப.173. 120. மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, ப.65. 121. பஞ்சமர், ப.245.
122. போடியார் மாப்பிள்ளை, ப.24 செங்கையாழியான், முற்றத்து
ஒற்றைப் பனை, ப.19.
123.தண்ணீர், ப. 178.
124. முற்றத்து ஒற்றைப் பனை, ப.9. 125. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.102.

126. போடியார் மாப்பிள்ளை, ப.39. 127 டானியல், கே., இருளின் கதிர்கள், ப.229.
128. அடிமைகள், ப.252; பஞ்சமர், ப. 391; நித்தியகீர்த்தி, ஏ. ரி.,
மீட்டாத வீணை, ப.34
129. போடியார் மாப்பிள்ளை, ப.11. 130. இருளின் கதிர்கள், ப.229. 131. Enthoven, RE, THE FOLKLORE OF BOMBAY, p.228. 132. டானியல், கே., மையக்குறி, ப.111. 133. டானியல், கே., பஞ்சகோணங்கள், ப. 143. 134.தண்ணீர், ப.200
135. கானல், ப.124.
136. வானமாமலை, நா., பண்டைய வேத தத்துவங்களும்
வேதமறுப்புப் பெளத்தமும், ப.10.
137. கலைக்களஞ்சியம், தொகுதி 8, பக்.224, 225.
138. Frazer, J.G., THE GOLDEN BOUGH (THE MAGICART), Vol.I, Part I,
p.54.
139. Frazer, J.G., THE GOLDEN BOUGH (AFTERMATH), p. 177. 140. Will Durant, THE LIFE OF GREECE, Vol.II, p.575.
141. பாலசுப்பிரமணியன், கு. வெ. சங்க இலக்கியத்தில் கலையும்
கலைக் கோட்பாடும், ப.14.
142. தொல். பொருள், 480. 143. தொல். பொருள், 490, பேராசிரியர் உரை. 14. கலைக்களஞ்சியம், தொகுதி 8, பக்.224, 225. 145. சோமெல, தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும், ப.84 146. சிவசுப்பிரமணியன், ஆ. மு.கு.நூ. ப.29.
147. Frazer, J.G., THE GOLDEN BOUGH (A STUDY IN MAGIC AND
RELIGION), Vol.I, Part I, p.54.
148. போடியார் மாப்பிள்ளை, ப. 71.
149. கழுகுகள், ப.23.

Page 100
194 «Х•
150. டானியல், கே., பூமரங்கள், ப.11.
151. கழுகுகள், ப.23. 152. இருளின் கதிர்கள், ப.229; முருங்கையிலைக் கஞ்சி, ப. 72. 153 அடிமைகள், பக்.84, 112, 113.
154. போடியார் மாப்பிள்ளை, பக்.46, 50. 155. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.122.
156. காவோலை, ப.32.
157. ஞானசேகரன், தே., மக்கள் வாழ்வில் மந்திரச் சடங்குகள்,
பக்,88-106.
158.அகத்தியலிங்கம், ச. மு.கு.நூ., ப.89.
159. THENEWBOOKOF KNOWLEDGE, Vol.20, p.209.
160. THE WORLDBOOKENCYCLOPAEDIA, Vol. 5,347. 161. கலைக்களஞ்சியம், தொகுதி 3, பக்.400-406.
162. THENEWENCYCLOPAEDIA BRITANICA, Vol.27, p.306. 163. கலைக்களஞ்சியம், தொகுதி 3, பக்.400-406,
164. THENEWENCYCLOPAEDIA BRITANICA, Vol.27, p.305.
65. தொல், பொருள்., 113, 195, 256, 266.
166. பரி., 8:103.
167, மணிமேகலை, 16:102-103.
168. கம்பராமாயணம், 53, 39:2-3
169.தண்ணீர், ப. 79.
170. நாராயணன், பி., மு.கு.நூ., ப.63; இராசேந்திரன், அ. மு.கு.நூ.,
L 1.278.
171. டானியல், கே., போராளிகள் காத்திருக்கின்றனர், ப.92. 172. காந்தி, க, மு.கு.நூ. ப. 110.
173. TAMILLEXICON, Vol. III, p. 1220.
174. GlpGvg|., Vol.V, p.2795.
175. G3DGvg., Vol IV, p.2254.

8
0.
X- 195
176. கலைக்களஞ்சியம், தொகுதி 6, ப.444 177. மேலது., ப.444. 178. ENCYCLOPAEDIA BRITANICA (MICRO), Vol.7, p.531. 179. Will Durant, THE LIFE OF GREECE, Vol.II, p.192.
180. அனுமந்தன், கி.ரா., பண்டைக்கால நாகரிகங்களின் வரலாறு,
L 1.333.
181. ENCYCLOPAEDIA BRITANICA (MICRO), Vol.7, p.531. 182.ENCYCLOPAEDIABRITANICA, Vol.2, p.571. 183. கலைக்களஞ்சியம், தொகுதி 1, ப. 723. 184. புறம், 280; 6-7.
185. LD606)., 64-66
186. குறு., 218:3; கலித், 11:20-22; அகம், 9: 19-20; 151: 14-15; புறம்,
20: 18-19, 204: 10-11, 280: 6-7; ஐங், 218: 1-3.
187. கம்பராமாயணம், 5:3.33, 1-3; 5.3.35, 188. Sundaramoorthy, G., EARLY LITERARY THEORIES IN TAMIL, p.130. 189.தண்ணீர், ப.209,
190, காவோலை, ப.54. 191. பொன்னுத்துரை, எஸ், தீ, ப.57 192. மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, ப.37. 193. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.152. 194.குமாரபுரம், ப.57
195. கானல், ப.135.
196,கழுகுகள், பக்.13, 160.
197 கானல், ப.135. 198. நாராயணன், பி, மு.கு.நூ. ப.33. 199, அகத்தியலிங்கம், ச. மு.கு.நூ., பக்.10-11. 200. பஞ்சகோணங்கள், ப.25, 201. செங்கையாழியான், வாடைக்காற்று, ப.38. 202.ENCYCLOPAEDIABRITANICA (MICRO), Vol.7, p.531.

Page 101
196 «Х•
203. பஞ்சகோணங்கள், ப.22.
204 அடிமைகள், ப. 113. 205.விதாலி ஃபுர்னிக்கா, மு.கு.நூ., ப.90. 206.பாலசுப்பிரமணியம், இரா., எண்பதில் தமிழ், ப.231.
207. Hart, G.L., THE POEMS OF ANCIENT TAMIL, p.44.
208. குறு., 201; ஐங், 391.
209. கோமதி சங்கர், கே.எம்.கே., சமூகவியல் நோக்கில் நீதி
இலக்கியம், ப.47.
210.கணேசலிங்கன், செ, சடங்கு, ப.37. 211.பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.58, 212. நிலக்கிளி, ப. 113. 213. கழுகுகள், ப. 160. 214. கலைக்களஞ்சியம், தொகுதி 7, ப.18. 215. நற்., 98:5.
216. கலித்., 11: 21-22.
217. நற்., 246: 1-2.
218. மேலது., 333; 10-12.
219. அகம், 151: 13-15.
220. மேலது., 387; 14-16. 221. மேலது. 151: 14-15, 222. காந்தி, க, மு.கு.நூ. பக்.122-123.
223. Lakshmanan Chettiar, S.M.L FOLKLORE OFTAMIL NADU, p. 110. 224. பஞ்சமர், பக்.194, 69, 71. 225. பஞ்சகோணங்கள், ப.22
226. கானல், ப.204.
227. முற்றத்து ஒற்றைப்பனை, ப.46. 228.தண்ணீர், ப.53, 229.பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.169.

230. போடியார் மாப்பிள்ளை, பக்.13-14. 231. TAMILLEXICON, Vol.V, Part I, p.2893.
232. குறு., 87; 1-2. 233. ENGLISHTAMILDICTIONARY, pp435,979.
234. Will Durant, THEAGEOFREASONBEGINS, Vol.VII, p.575;Will Durant,
THE LIFEOFGREECE, Vol II, pp. 10-15.
235. STANDED DICTIONARY OF FOLKLORE MYTHOLOGY AND
LEGEND, pp. 139-140.
236. Will Durant, THE LIFE OF GREECE, Vol.II, pp. 10-15. 237. THE ENCYCLOPAEDIA AMERICANA, Vol.II, p.634. 238. Tylor, E.B., PRIMITIVECULTURE, p.1
239. பாலசுப்பிரமணியன், கு. வெ., சங்க இலக்கியத்தில் சமூக
அமைப்புகள், ப.171.
240. Abbe. J.A.Dubois, HINDUMANNERS, CUSTOMSANDCEREMONIES,
pp.644-645. 241. அகம், 309; புறம், 356, 370; ஐங், 171; நற்., 343; பதிற்., 35. 242.நற்., 398:1.
243.வானமாமலை, நா., “பரிபாடலில் முருக வணக்கம்”, ஆராய்ச்சி,
ւ 1.323.
244. அகத்தியலிங்கம், ச. மு.கு.நூ. பக், 10, 11, 59, 61.
245. திருமுரு, 47-51.
246. அகம்., 130: 4-5.
247. பட்டி., 236-237,
248. சிறுபாண்., 196-197.
249. புறம், 356, 370; பதிற்., 35.
250. தமிழவன், “பண்டைத்தமிழரின் பேய் பற்றிய கருத்து’,
ஆராய்ச்சி, பக்.441-445.
251, நற். 15, 171; புறம், 49, 238, 370; முத்தொள்ளாயிரம், 135; தொல், பொருள்., 77; மணிமேகலை, 6:142-143; கலிங்கத்துப்பரணி, 75, 137, 147, 148, 149, 150.

Page 102
198 X
252. தண்ணிர், ப. 180. 253. பூமரங்கள், பக்.11, 27, 28, 43, 48. 254. செங்கையாழியான், கொத்தியின் காதல், பக்.1, 4-5. 255. குமாரபுரம், 65.
256. பஞ்சகோணங்கள், ப.291.
257 அடிமைகள், ப.84.
258. பூமரங்கள், ப.27. 259. வானமாமலை, நா., தமிழர் பண்பாடும் தத்துவமும், ப.9. 260. கோமதி சங்கர், கே.எம்.கே., மு.கு.நூ., ப.51. 261. பஞ்சமர், ப.75.
262. அடிமைகள், ப.261. 263. மரக்கொக்கு, பக்., 168-169. 264, பஞ்சமர், ப.223.
265. அடிமைகள், ப.80.
266.தண்ணீர், ப. 180.
267. மேலது., பக்.15, 110.
268. பஞ்சமர், ப.35. 269.தண்ணிர், ப.180; வாடைக்காற்று, ப. 93. 270 போடியார் மாப்பிள்ளை, ப.75. 271, இராசேந்திரன், அ., மு.கு.நூ., ப.269. 272.அடிமைகள், ப.88. 273. இருளின் கதிர்கள், ப.230. 274. மரக்கொக்கு, ப.48,
275. பாலசுப்பிரமணியன், கு. வெ, சங்க இலக்கியத்தில் சமூக
அமைப்புக்கள், ப.171.
276.நற், 83, 216, 303; கலி., 101, 106.
277. அகம், 270:12,
278, போடியார் மாப்பிள்ளை, ப.75.

X- 199
279. அடிமைகள், ப.88.
280. விதாலி ஃபுர்னிக்கா, மு.கு.நூ., ப.62,
281. சுசீலா கோபாலகிருஷ்ணன், மு.கு.நூ., ப.367
282. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.98
283. பஞ்சமர், ப.219.
284. நிலக்கிளி, பக்.4, 9, 60.
285. பஞ்சமர், ப.51.
286. அண்ணாமலை, வே. சங்க இலக்கியத் தொன்மக் களஞ்சியம்,
தொகுதி 2, ப.121.
287 போர்க் கோலம், ப.233,
288. அடிமைகள், ப.51.
289. கணேசலிங்கன், செ, நீண்ட பயணம், ப. 14.
290. கலித், 46; 16-17; குறு., 218: 1-2.
291. கானல், ப.130.
292.அடிமைகள், ப. 182.
293. காட்டாறு, ப. 182.
294. டானியல், கே., போராளிகள் காத்திருக்கின்றனர், ப.38.
295. முருங்கையிலைக் கஞ்சி, ப. 71.
296. மேலது., ப. 71.
297.தீ, ப.89.
298. காட்டாறு, ப.64.
299.தண்ணீர், ப.23.
300. நீண்ட பயணம், ப.66.
301, மேலது. ப.152.
302, போடியார் மாப்பிள்ளை, ப. 72.
303. கணேசலிங்கன், செ., சடங்கு, பக்.18-21.
304. Frazer, J.G., GOLDEN BOUGH (AFTERMATH A SUPPLEMENT TO
GOLDENBOUGH), pp.433-439.

Page 103
200 X
305. Will Durant, Op. cit., pp. 192-195.
306. Ibid., pp. 192-202.
307. Ibid., pp. 192-202.
308. Frazer, J.G., Op.cit., pp.433-439.
309. Abbe, J.A., Dubois, Op.cit., pp.644-645. 310. பட்டி, 165.
311. குறு., 263:1.
312.அகம், 348; 7-8.
313. பதிற்., 30:37,
314. புறம், 50:5, 315. மேலது., 331: 11-12, 316. கலித், 109: 19-20.
317. அகம்., 166: 7,
318. பதிற்., 30. 319. அகம், 361; கலித், 119; பதிற்., 21. 320. நீண்ட பயணம், ப.177.
321. கானல், ப.84.
322. பூமரங்கள், ப.34. 323. போடியார் மாப்பிள்ளை, ப. 109. 324. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.58, 325. பரி., 6; 94-95.
326.அகம், 110; 4-5
327. மேலது., 266; 20-21. 328. மேலது., 396: 7-8. 329. கலித், 98; 32-33.
330. கானல், பக்.156, 77; பஞ்சமர், ப.343; குமாரபுரம், ப. 101; தண்ணீர், ப.88; காட்டாறு, ப.12; போடியார் மாப்பிள்ளை, ப.99; முற்றத்து ஒற்றைப் பனை, ப.39; முருங்கையிலைக் கஞ்சி, ப.55,

«Х• 201
331.அடிமைகள், பக்.72-78. 332. மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, ப.75. 333.தண்ணீர், ப.52.
334. கணேசலிங்கன், செ. சடங்கு, ப. 139; தண்ணிர், ப.52; பஞ்சமர்,
பக்,83, 90.
335. போடியார் மாப்பிள்ளை, பக்.70, 96.
336. பஞ்சகோணங்கள், பக்.286, 294.
337. கானல், ப.51; மரக்கொக்கு, ப.99; பஞ்சமர், பக்.238, 207, 95, கணேசலிங்கன், செ., சடங்கு, ப. 143; போராளிகள் காத்திருக்கின்றனர், ப. 102.
338. கானல், ப.122.
339. வசந்தா, ஜி., மு.கு.நூ., ப.166.
340. Visvanathapillai, V., ATAMIL ENGLISHDICTIONARY, p.327.
341. திருக்குறள், நீத்தார் பெருமை 8.
342. தசரதன், ஆர்., தமிழில் வசைப்பாடல்கள், ப.01.
343. சிலப்., நாடுகாண்காதை, அடி.227-232.
344 மணிமேகலை-பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை, 81-86.
345. கம்பராமாயணம்-பாலகாண்டம், 1.10.107; 1.10.118.
346. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.126.
347.தண்ணிர், ப.56.
348. மீட்டாத வீணை, ப.90.
349, போராளிகள் காத்திருக்கின்றனர், ப. 112
350 கலைக்களஞ்சியம், தொகுதி 7, ப.239.
351. TAMILLEXICON, Vol. IV, p.2547.
352.இராமநாதன், பி., சிந்து வெளித் தொல் தமிழர் நாகரிகம்,
பக்.56-57
353. தொல். பொருள்., 90, 258.
354.ஐங், 110, 229, 366; புறம், 75, 176, 236; குறு, 229, 366,
355 பாலசுப்பிரமணியன், கு. வெ., மு.கு.நூ., ப.203.

Page 104
2O2 x
356.புறம், 174.
357. மேலது., 34. 358.பாலசுப்பிரமணியன், கு. வெ., முகு.நூ., ப.21. 359. திருக்குறள், பரிமேலழகர் உரை, அதிகாரம், 38. 360. மணிமேகலை, 24: 116-118. 361. பாலசுப்பிரமணியன், கு. வெ., மு.கு.நூ., ப.211 362. குமாரபுரம், பக்.32, 102. 363. காவோலை, பக்.66, 67
364. கழுகுகள், ப.164.
365. நீண்ட பயணம், ப.34. 366. இருளின் கதிர்கள், ப.248. 367. குமாரபுரம், பக்.48, 49. 368. பஞ்சமர், பக்.140-141. 369. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப. 78. 370. மரக்கொக்கு, ப.130. 371. கணேசலிங்கன், செ, செவ்வானம், ப. 71. 372. மரக்கொக்கு, ப.48. 373. TAMILLEXICON, Vol VI, p.3672. 374. திருக்குறள், 380; தொல். பொருள், 90. 375. திருக்கோவையார், பேராசிரியருரை. 376. போடியார் மாப்பிள்ளை, பக்.56, 133. 377. காவோலை, ப.17.
378 போர்க்கோலம், ப.49,
379. கழுகுகள், ப.123.
380. பஞ்சமர், ப.153.
381. நீண்ட பயணம், ப.41.
382. காட்டாறு, ப.28.
383. கானல், ப.27,

384. கோவிந்தன், ப.164. 385. நீண்ட பயணம், ப.34. 386. மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, ப.95. 387. நீண்ட பயணம், ப.39. 388, வாடைக்காற்று, பக்.62-63. 389. கலைக்களஞ்சியம், தொகுதி 1, ப.260. 390. Will Durant, THE AGE OFREASON BEGINS, Vol.III, p.575.
391. Ibid., p.575. 392. கலைக்களஞ்சியம், தொகுதி 1, ப.260. 393. தொல். பொருள், 88.
394. அகம், 86, 141.
395. புறம்., 168.
396, மேலது., 24: 24-25.
397. Luff?., 11.
398. கலித், 5; பட், 90-92; நெடு, 161-163. 399, அடிமைகள், ப. 182.
400. பஞ்சமர், 21, 398.
2O3
401, கோவிந்தன், ப. 157; நீண்ட பயணம், ப. 78; பஞ்சகோணங்கள்,
ւ 1.314.
402. இருளின் கதிர்கள், ப.200. 403,தண்ணீர், ப.126. 404. மேலது., பக்.113-117. 405. போடியார் மாப்பிள்ளை, ப. 7. 406. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.96. 407, மையக்குறி, ப.170. 408. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.58, 409.அ. த்தியலிங்கம், ச. மு.கு.நூ., ப. 10. 410.த ரணிர், பக்.207-209,

Page 105
204 冷
41. கோவிந்தன், ப.69. 412. கலித், 5.
413. பரி, 11, 5:43,
414. அகம், 86; 4-5.
415. பட்டி, 90-94
416. மதுரை., 1-12.
417. கலித், 5:9.
418. கானல், பக்.40-41.
419. நிலக்கிளி, ப.35.
420 அடிமைகள், ப. 76. 421. முருங்கையிலைக் கஞ்சி, ப.26. 422. கானல், ப. 114.
423. கழனியூரன், மு.கு.நூ., ப.26. 424. கானல், ப.200
425. முருங்கையிலைக் கஞ்சி, ப.6. 426. கோவிந்தன், ப.25, 427.தண்ணிர், ப.193. 428.கணேசலிங்கன், செ, சடங்கு, பக்.56-57 429.தண்ணீர், ப. 70. 430.கணேசலிங்கன், செ, சடங்கு, ப.58. 431. பஞ்சமர், ப.22.
432. முருங்கையிலைக் கஞ்சி, ப. 48; பஞ்சகோணங்கள், ப.28;
காட்டாறு, ப.94.
433. பஞ்சமர், ப.22. 434.இராசேந்திரன், அ. மு.கு.நூ., ப.279. 435.தண்ணீர், ப.117; அடிமைகள், ப.89. 436.நிலக்கிளி, ப.94.
437. கணேசலிங்கன், செ, சடங்கு, ப.50.

令 205
438. குமாரபுரம், ப. 103. 439. நிலக்கிளி, ப.77. 40. நாராயணன், பி., மு.கு.நூ., ப.51. 41. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.58,
442. THENEWBOOKOFKNOWLEDGE, Vol.13, p.378. 43. காந்தி, க., மு.கு.நூ., ப.188. 44. புறம், 40; குறு. 24, 172, 210; ஐங், 32; பரி, 3. 45. விதாலி ஃபுர்னிக்கா, மு.கு.நூ., ப.99. 446. கலைக்களஞ்சியம், தொகுதி 8, பக்.466-467 447. காட்டாறு, ப. 144 448. நாராயணன், பி., மு.கு.நூ., ப. 113. 449. திருக்குறள், 13. 450. பாலசுப்பிரமணியன், கு. வெ., மு.கு.நூ., ப.206. 451.தண்ணிர், ப. 151. 452. ஞானசேகரன், தே., மு.கு.நூ., ப. 17, இராசேந்திரன், அ.,
மு.கு.நூ., ப.258. 453.தண்ணீர், ப.2. 454.நிலக்கிளி, ப. 137. 455. செங்கையாழியான், மரணங்கள் மலிந்தபூமி, ப.10. 456. போராளிகள் காத்திருக்கின்றனர், பக்.1-17

Page 106
நாவல்களும் சடங்கு நடைமுறைகளும்
உலகின் பல்வேறு இன மக்களிடையேயும் பல்வேறுவிதமான சடங்குகள் வழக்கில் இருந்து வருகின்றன. சமுதாய வாழ்வில் சடங்குகளின் பங்கு கணிசமான ஒன்றாகும். ஒவ்வொரு சடங்கிற்குப் பின்னும் உலக வாழ்வியல் பற்றிய மக்களின் பார்வையும் (World View), அது பற்றிய அவர்களின் கருத்தாக்கமும் அடங்கியுள்ளன. சடங்குகள் மேலாதிக்கம் செலுத்தாத சமூகப் பிரிவுகளே இல்லை எனக் கருதும் அளவுக்கு இவை உலகளாவிய பொதுத்தன்மை பெற்றுக் காணப்படுகின்றன எனலாம்.
வழிவழியாக வரும் பழமரபுகளைக் காத்தல் என்பது மனித மனத்தின் ஆழத்தில் வேரூன்றிய செயலாகும். சடங்குகள் இப்பணிக்குப் பெரிதும் உதவுகின்றன. முன்னோர் செய்த செயல்களைக் காரண, காரிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல் தாம் கண்டவாறே பின்பற்றுவதும், நிகழ்த்துவதும் சடங்கின் முறையாகும். உலகின் எல்லாப் பகுதிகளிலும் நாகரிகத்தின் உச்சியில் வாழ்பவர்களிடையிலும், நாகரிகத்தின் கீழ்ப்படியில் உள்ளவர்களிடையிலும் எல்லாக் காலங்களிலும் சடங்குகள் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன.
பாமர மக்களுடைய ஒவ்வொரு நாள் வாழ்வும் சமயத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது எனலாம். பிறந்த வினாடி முதல் இறக்கும் வினாடி வரை அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒரு சடங்கைச் செய்து திருப்தி அடைகிறார்கள். ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கையின் L16) நிலைகளுக்கேற்பச் சடங்குகள் உண்டாகியிருப்பது போலவே, ஒரு சமூகத்தின் வாழ்க்கையின் பல நிலைகளுக்கு ஏற்பவும் சடங்குகள் உள்ளன.
ஒரு சமுதாயத்தின் பண்பாட்டு வரலாற்றை, அதன்வேர்களை னங்கண்டு கொள்ளச் சடங்குகள் பெரிதும் துணை புரிய
gli D gol ژق)

«Х• 207
வல்லனவாகும். சடங்குகள் சமூக உறவுகளை வெளிப்படுத்தும் குறியீடுகளாக அமைந்து காணப்படுகின்றன.”
நாவல்களும் சடங்கு நடைமுறைகளும் எனும் தலைப்பிலான இவ்வியலிலே சடங்கு நடைமுறைகள் பற்றி ஈழத்து தமிழ் நாவல்களிலே கிடைக்கின்ற செய்திகளைத் தொகுத்து வகைப்படுத்தி விளக்குவதுடன், சமூக நடைமுறையில் இச்சடங்குகள் பெறும் முக்கியத்துவம், அவற்றின் நிலைபேறு, நெகிழ்ச்சித்தன்மை ஆகியன குறித்தும் நோக்கப் பெறுகின்றன.
சொல்லும் பொருளும்
சங்க இலக்கியங்களில் 'சடங்கு’ என்ற சொல்லாட்சி பயின்று வரவில்லை; பண்டைத் தமிழர், சடங்கினை விழா’, ‘நோன்பு’ முதலான சொற்களால் குறித்தமையைப் பின்வரும் சங்கச் செய்யுட்களால் அறிய முடிகிறது.
மூவிரு கயந்தலைமுந் நான்கு முழவுத் தோள் ஞாயிற்றோர் நிறத்தகை நளினத்துப் பிறவியை காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் சால்வ தலைவவெனப் பேஎ விழவினுள் வேலனேத்தும் வெறியுமுளவே."
திரை அணற்கொடுங் கவுள் நிறையமுக்கி வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர் கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்."
தொல்காப்பியத்திலே ‘கரணம்’ என்ற சொல், சடங்கைக் குறிக்கப் பல இடங்கிலும் பயின்று வந்துள்ளது."
‘சடங்கு’ என்பதற்குச் சென்னைத் தமிழ்ப் பேரகராதி, பின்வரும் பொருண்மைகளைத் தருகின்றது.
1. சாஸ்திர விதி பற்றியும் வழக்கம் பற்றியும் அனுஷ்டிக்கும்
கிரியை
2. முதற் பூப்புச் சடங்கு
3. சாந்திக் கல்யாணம்."

Page 107
208 «Х•
‘சடங்கு’ என்பது ஒரு வரன்முறை உடையதாகும். சமூகத்தினர் வாழ்க்கையை நெறிப்படுத்தி நடத்திச் செல்ல அமைத்துக் கொண்ட சம்பிரதாயங்கள் அல்லது கட்டுப்பாடுகள்தாம் சடங்காகும் எனக் கலைக் களஞ்சியம் சடங்கிற்கு விளக்கம் தருகிறது."
ஆங்கில அகராதி, சடங்கு’ என்பது வாழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது எனவும், இது செயல்முறையினை அடிப்படையாகக் கொண்ட இறுக்கமான விதிகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது எனவும் குறிப்பிடுகின்றது."
சடங்கு என்ற சொல்லிற்கு, இயல்பூக்கத்தால் எழாததும், முன் கூட்டி உரைக்கத்தக்கதும், அறிவார்ந்த தொடர்பற்றதுமான ஒரு செயல் அல்லது செயலின் வரிசை என அகில உலகச் சமூக விஞ்ஞானக் கலைக்களஞ்சியம் பொருள் தருகிறது.*
பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம், சடங்கு என்பது எல்லாச் சமுதாயங்களிலும் காணப்படுவது என்றும், அது வழிவழியாகவோ, நிர்ணயிக்கப்பட்ட நிலையிலோ காணப்படும் ஒருவகை நடத்தை என்கிறது.*
மானிடவியல் கலைக்களஞ்சியம், முறைப்படுத்தப்பட்ட, தொடரான, ஒரே வார்ப்பான (Styereotyped) எப்போதும் நிகழ்த்தப்படும் சமயச் செயற்பாடுகளும், நடத்தைகளும் சடங்குகள் என வழங்கப்படும் எனக் குறிக்கின்றது.'
வி. டர்னர் என்பவர், அறிவியல் நுணுக்கமாக ஏற்க முடியாத, புரிபடாத, மாயத்தன்மை கொண்ட சக்திகள் மற்றும் உயிர்கள் மீதான நம்பிக்கைகள் தொடர்பான நிகழ்வுகளில் காணப்படுகின்ற மரபான நடவடிக்கைகளே சடங்குகள்’ என்பார்."
ஆர்னால்டு வான் கென்னப் என்பவர், சடங்குகள் அனைத்தும் தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள்’ (Rites of passage) என்றும், இவை மக்களை ஒரு நிலையிலிருந்து பிறிதொரு நிலைக்குக் கொண்டு செல்கின்றன எனவும் குறிப்பிடுவார்."
பரம்பரை வழக்கமாகச் செய்துவரும் செயல்களே சடங்குகளாகும். இவை நூல் முறையாலும், சான்றோர் நெறியாலும்

209
வழிவழி வருவன, இவற்றை அறிந்த முதியோர் ஏனையோர்க்கு வழிகாட்ட இவை பின்பற்றப்படுபவை என மு.சண்முகம்பிள்ளை சடங்கிற்கு விளக்கம் தருகிறார்."
அகராதிகளும், ஆய்வாளர்களும் தருகின்ற விளக்கங்களிலிருந்து, சடங்கு’ என்பது, நிர்ணயிக்கப்பட்ட விரிவான நடத்தை அல்லது நடவடிக்கைகளின் வடிவம்’ என்ற கருத்துப் பெறப்படுகிறது.
சடங்கின் தோற்றமும் அதன் நிலைபேறும்
சடங்கின் தோற்றம் என்பது, மனித இனத்தின் தோற்றத்துடனேயே ஆரம்பித்துவிட்டது எனக் கருதலாம். சடங்கினது தோற்றத்துக்கும் இறை வழிபாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆதிமனிதன், இயற்கைச் சக்திகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அவற்றை வழிபட்டான். மனித மனத்தில் தோன்றிய அச்சம், குற்ற உணர்வு போன்ற மனவியற் பண்புகளின் வளர்ச்சி வழிபாட்டுக்கு வித்திட்டது." இவ்வழிபாடு, சமயச் சடங்கு, வாழ்க்கை முறைச் சடங்கு முதலான சடங்கு நடைமுறைகளை உண்டாக்கிற்று எனலாம்.
சடங்குகளின் இருத்தலுக்கும், இவற்றின் நிலைபேற்றுக்கும் பல்வேறுவிதமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. கடவுளிடம் கொண்ட அச்சமும், முன்னோர் வழக்கத்தை மீறாமல் நடந்து கொண்டால்தான் வாழ்க்கை வசதியானதாகவும் கவலையில்லாததாகவும் அமையும் என்ற நம்பிக்கையும் சேர்ந்த நிலையில் சடங்குகள் நிலைபெற்றன என்பர்."
சடங்குகள் நிகழ்த்தாவிட்டால் எடுத்த காரியம் நிறைவேறாது என்றும், தீமைகள் நிகழுமென்றும் மக்கள் பொதுவாக நம்பிக்கை கொண்டுள்ளமையும் இவற்றின் நிலைபேற்றுக்கான ஒருவகைக் காரணமெனக் கருதலாம்.'
சமுதாய ஒருங்கிணைப்பின்பேரிலும், பழக்க வழக்கத்தின் பேரிலும், வழிவழியாக வந்த மரபைக் கடைப்பிடிக்கும் நிலையிலும், மற்ற இனத்தவர்போலத் தாமும் விழாக்கள் நடத்த வேண்டும் என்ற அடிப்படையிலும் சடங்குகளின் போக்கும் அமைந்துள்ளன.

Page 108
21.0 x
சடங்கின் வகைப்பாடு
மனித வாழ்வியலோடு ஒன்றிவிட்ட சடங்குகளை, அவற்றின் தன்மை, இயல்பு ஆகியவற்றின் அடிப்படையில் பலவாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
மேலைநாட்டு ஆய்வாளர், சடங்கு நிகழ்ச்சிகளைப் பொதுவாக, ஆண்டுப் பட்டியலில் அமைந்த சடங்கு நிகழ்ச்சிகள் (Calenderical Rituals), ஆண்டுப் பட்டியலில் அமையாச் சடங்கு நிகழ்ச்சிகள் (Non-Calenderical) என இரண்டு வகையாகப் பாகுபடுத்துவர்."
கலைக்களஞ்சியம், சடங்குகளை, பிரவேசச் சடங்குகள், வளமைச் சடங்குகள் என இரண்டு வகையாக வகைப்படுத்துகிறது. பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு முதலானவை பிரவேசச்சடங்குகள் அல்லது குடும்பச் சடங்குகள் என்ற வகைப்பாட்டினுள் அடங்குகின்றன. சமுதாய மக்களின் ஒட்டு மொத்தமான நன்மை கருதி மேற்கொள்ளப்படும் சடங்குகள் வளமைச் சடங்குகள் அல்லது பொதுச் சடங்குகள் என்ற பகுப்பிற்குள் அடங்குகின்றன."
சீபக்தவச்சலபாரதி என்பவர் சடங்குகளை, வாழ்வியல் சடங்கு, சமயச் சடங்கு, வளமைச் சடங்கு என மூவகையாகப் பாகுபாடு செய்வார்.49
சடங்கின் அடிப்படை நோக்கத்தைக் கொண்டு, அறிவிப்புச் சடங்குகள், சமயச்சடங்குகள் என இருவகைப்படுத்தப்படலாம். சில புதிய செய்திகளைப் பிறர்க்கு அறிவிக்கும் சடங்குகளான பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு போன்றவை அறிவிப்புச் சடங்குகள் எனப்படும். சமயத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் சடங்குகள் சமயச் சடங்குகள் எனப்படும்.
சடங்கில் தொடர்பு கொள்வோரை அடிப்படையாகக் கொண்டு, குடும்பச் சடங்கு, சமுதாயச் சடங்கு எனவும் வகைப்படுத்தலாம். இதில் குடும்பச் சடங்கைப் பருவச் சடங்கு, பிற சடங்கு என மேலும் பகுக்க முடியும். பின்வரும் அட்டவணை மூலம் இதனைத் தெளிவுபடுத்தலாம்.

8 211
தொடர்புகொள்வோர் அடிப்படையில் சடங்கின் பகுப்பு
குடும்பச்சடங்கு சமுதாயச் சடங்கு (திருமணம்) (கோவில் விழா)
பருவச் சடங்கு பிற சடங்கு
(புதுமனை புகுவிழா, தொழில்
தொடர்பானவை)
ஆண் பெண் பொது
—
குழந்தை பருவச் சடங்கு முதிர் பருவச் சடங்கு (முடி எடுத்தல் ...) (திருமணம், இறப்பு ...)
சடங்குகளை, மங்கலச் சடங்குகள், அமங்கலச் சடங்குகள் எனவும் பாகுபடுத்திப் பார்க்கும் மரபும் காணப்படுகின்றது.*
நாவல்களில் சடங்கு நடைமுறைகள்
நாவல்களிலே சடங்குகள் பற்றியும், அவற்றின் பல்வேறு நடைமுறைகள் பற்றியதுமான செய்திகள் ஆங்காங்கே உதிரிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சடங்குகள் எனும்போது பெரும்பாலும் வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகள் பற்றியே மிகுதியான செய்திகள் காணப்படுகின்றன. இவற்றுக்கடுத்த நிலையில் பேயோட்டும் சடங்கு பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
நாவல்களில் வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகள் (Life Cycle Rituals)
மனிதன் கருவுயிர்ப்பது முதல் இறப்பது வரை பல கட்டங்களைக் கடக்கிறான். ஒவ்வொரு கட்டத்தில் புகும்போதும்

Page 109
212 冷
அந்நிகழ்ச்சியைக் குறிப்பதாகவும் அதன் சிறப்பையும், பண்பையும், பலனையும் நினைவூட்டுவதற்காகவும் சில சிறப்புச் செயல்கள் செய்யுமாறு ஒவ்வோர் இனத்தாரும் விதிகள் உண்டாக்கியிருக்கிறார்கள். அச்சிறப்புச் செயல்கள் ‘பிரவேசச் சடங்குகள் அல்லது ‘வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகள்’ எனப்படும்.*
எந்தவொரு சமூகத்திலுள்ள தனிமனிதனின் வாழ்க்கையிலும், அவன் ஒரு வயதிலிருந்து, மற்றொரு வயதுக்குச் செல்லும்போதோ, ஒரு தொழில் முறையிலிருந்து, மற்றொரு தொழில் முறைக்குச் செல்லும்போதோ வரிசையாக நிலைமாற்றம் (passage) காணப்படுகிறது. தனிமனித நிலை மாற்றக் காரணங்களில் பிறப்பு, குழந்தைப் பருவம், சமூகவியல், பூப்பு, திருமணம், குழந்தைப்பேறு, தந்தைப்பருவம், தீட்சை மற்றும் சாவு அல்லது இறப்புப் போன்ற பல்வேறு சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகள் ஒரு குறிப்பிட்ட உரிமையைப் பாதுகாக்கும் நோக்கிலும், தூய்மையற்ற நிலையலிருந்து தூய்மைப்படுத்தவும், வளமைக்காகவும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும் ஆற்றப்படுகின்றன.
இச்சடங்குகள் பெரும்பாலும் ஏன் நடத்தப்பெறவேண்டும் என்று நடத்துவோர்க்குத் தெரியவில்லை.
1. LDDL)
2. நம்பிக்கை
3. நடத்தாவிடின் கேடுவரும் என்ற அச்சம்
4. மூத்தவர் வேண்டுகோள்
5. சமூக ஒத்திசைவு
என்ற ஐந்து காரணங்களில் ஒன்றைச் சடங்கு நிகழ்த்துதலுக்குக் காரணம் எனக் கருதலாம்.
சமூக உறவின் அமைப்பையும் அதில் நிகழ்ந்த பண்பாட்டு மாற்றங்களையும் இவ்வாழ்க்கை வட்டச் சடங்குகள் பிரதிபலிப்பதோடு, ஒரு தனியன் வாழ்வில் சில இன்றியமையாத

8 213
நிகழ்ச்சிகளைத் தனிச் சிறப்புக்குரியதாகும் நோக்கத்தினையும் கொண்டனவாகவும் இவை உள்ளமை கருதத்தக்கதாகும்.
வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகளைத் தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் எனக் குறிப்பிடும் சி.பக்தவச்சலபாரதி, இவை வாழ்வைப் பல தொடர் நிலைகளாகப் பிரித்து, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மக்களை அறிமுகப்படுத்தும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிடுவார்.*
மேலைத்தேய ஆராய்ச்சியாளரான ஆர்னால்டு வான்கென்னப் (Van Gennap Arnold) என்பவர் வாழ்க்கைப் பருவமாற்றுச் சடங்குகளுடன் தொடர்புடைய மூன்று படிநிலைகள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். அவை வருமாறு.
1. Sifa gala (Separation)
2. மாற்ற இடையீட்டு நிலை (Transition)
3. கூட்டிணைப்பு நிலை (Incorporation)
பிரிவு நிலை என்பது, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கோ, ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவிற்கோ, ஒரு
நிலையிலிருந்து வேறொரு நிலைக்கோ, ஒரு உறவு முறையிலிருந்து வேறொரு உறவு நிலைக்கோ ஒருவர் மாறுவதனைக் குறிக்கிறது.
மாற்ற இடையீட்டு நிலை என்பது மாறும் தகுதிகளைப் பெறுவதற்காகச் சடங்குகளுக்குரியவர் தனிமைப் படுத்தப்படுவார்.
கூட்டிணைப்பு நிலை என்பது புதிய இடம், குழுநிலை, உறவுமுறையில் முறைப்படி ஒருவரை அமர்த்துவதாகும்.
வாழ்க்கைச்சுழற்சிச்சடங்குகளில் காணப்படும் மேற்படி மூன்று படிநிலைகள் குறித்த செய்திகள் நாவல்களில் பரவலாகக் கிடைக்கின்றன. அவை பற்றி விரிவாக இவ்விடத்தில் நோக்குவது பொருத்தமானதாகும்.
பிறப்புச் சடங்கு நடைமுறைகள்
மனிதனின் வாழ்க்கை வட்டச் சடங்குகளின் தொடக்கமாக அமைவது பிறப்புச் சடங்காகும். பெண் கருவுறும் நிலையிலிருந்தே

Page 110
214 «Х•
பிறப்புச் சடங்கு நடைமுறைகள் ஆரம்பமாகி விடுகின்றன எனக் கூறலாம்.
பிறப்புச் சடங்குகள் குழந்தைப்பேற்றை எளிதாக்கவும், தாயையும் குழந்தையையும் சில சமயங்களில் குழந்தையின் தந்தை, நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பம் முழுவதையும் தீய விளைவுகளுக்கு எதிராகப் பாதுகாக்கவும் உதவுகின்றன என்ற நம்பிக்கையில் ஆற்றப்படுகின்றன.*
பிறப்பும் தீட்டும்
தீட்டு என்பது அசுத்தமான பகுதிகளிலிருந்து மனிதனைப் பாதுகாக்கிறது எனச் சமூகவியல் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.* மகப்பெற்ற தாயைத் தீட்டுடையவளாகக் கருதி, அவளைத் தனிமைப்படுத்தி, விலக்கி வைக்கும் வழக்கம் தொன்மையான ஒன்றாகும்.
மகப்பெற்ற மகளிரைத் தீண்டத் தகாதவராகக் கருதும் வழக்கம், நாகரிக முதிர்ச்சி பெற்ற மக்கள் முதற்கொண்டு பழங்குடி மக்கள் வரை காணப்படுகின்றது.*சங்க இலக்கியங்களில் மகப்பெற்ற தாய், *வாலாமை காரணமாகக் குறிப்பிட்ட கால எல்லை வரை தனித்துப் பிறரைத் தீண்டாமலும், பிறர் உண்ணும் கலங்களைத் தீண்டாமலும் வாழ்ந்தமை பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. “வாலாமை” என்ற சொல் நீளநினைதற்குரியது. வால் - வெண்மை, தூய்மை வாலுளைப் புரவி.*வாலாமை - தூய்மை அல்லாமை வாலாமை நீங்கிய நாள் , , .* விலங்கின் வால் தூய்மை செய்து கொள்ளப் பயன்படுவது பற்றியே இப்பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.
மகப்பெற்ற தாயையும், சேயையும் முப்பத்தொரு நாட்கள் வரை தீட்டுடையவர்களாகக் கருதித் துடக்கு நிலை (தீட்டு) பேணும் வழக்கம் ஈழத்துத் தமிழர்க்குரியதாகும். இரத்த உரித்துடையவர்களையும் இத்தீட்டுப் பாதிக்கும். மனைவியிடத்துள்ள தீட்டு நீங்கும் வரை அவளை அணுகாதிருத்தல் பற்றிப் பஞ்சமர் என்ற நாவலில் பின்வரும் உரையாடற்பகுதி விளக்கி நிற்கிறது.
எல்லாரும் வந்திட்டாங்க, முருகன் இண்டைக்கு பெண்டிலின்ரை துடக்குக் கழிவு; வரமாட்டன் எண்டு

«Х• 215
சொல்லிப் போட்டுப் போனவன் இண்டைக்கு அவன் வரான்! ..."ஒமோம் இண்டைக்குத் துடக்குக் கழிவெண்டால் அவன் பின்னை வருவானே? நாளைக்கும் அவன் வரான். நீ இருந்து பார். என்று இளையதம்பியர் வாயில் ஊறத் கூறினார்."
இக்காலப் பகுதியில் கோவில் நடைமுறைகள், மங்கலமான சடங்குகள் எவற்றிலும் இவர்கள் பங்கு பெற முடியாது.
உறவு நிலைகளில் ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்தவும், குழந்தை மீதான உரிமையை உறவினர்க்கு ஏற்படுத்தவும் இவ்வாறான விலக்குகள் (Taboos) உதவுகின்றன எனலாம். இதனைப் பிரிவுநிலை (Separation) என்ற நிலைக்குள் அடக்கிப் பார்க்கலாம்.
வெந்நீர் வார்வை
தாய், மற்றும் உறவினர்கள் நீராடித் தூய்மை பெறுவதன்மூலம் தீட்டிலிருந்து விலக்குப் பெறுவர். அடிமைகள் என்ற நாவலிலே தனது மனைவியின் துடக்குக் கழிவுச் சடங்கு நிறைவடைந்த மகிழ்ச்சியில் அவளை நெருங்கி வந்த செல்லன் அவள் அயர்ந்து தூங்குவதனைக் கண்ட அவளுக்காக இரங்கித் தனது ஆசையைத் தன்னுள்ளேயே அவித்துக் கொள்கிறான். இதனை, பாவம் அவள் பாவியும் துடக்குக் கழிய தோஞ்சகளை என்று செல்லன் அவளுக்காகப் பச்சாதாபப்பட்டான்' எனவரும் பகுதியின் மூலம் அறிய முடிகின்றது. தாய், சேய்க்குரிய வெந்நீர் வார்வை முறையே ஐந்து, பதினொன்று, முப்பத்தொன்று என்ற நாள் ஒழுங்கில் நடைபெறும். எனினும் முப்பத்தோராம் நாள், நீர் வார்வையின் பின்னரே தீட்டிலிருந்து முறைப்படியான விலக்குக் கிடைக்கும். இதனைக் குழைத்தண்ணி வார்வை’ எனவும் அழைப்பர். நொச்சி, பாவட்டை, வேம்பு, ஆமணக்கு முதலான மரங்களின் தழைகளை அவித்துப் பெறப்படும் நீரைக் கொண்ட தாயையும், சேயையும் புனிதப்படுத்துவர். முப்பதோராம் நாளில் வீட்டில் உள்ள கிணற்று நீரை முழுமையாக வெளியேற்றிச் சுத்தப்படுத்துவதுடன், வீட்டையும் கழுவிவிடுவர்; பின்னர் அந்தணரைக் கொண்டு துடக்கு நீக்கற் சடங்கினை மேற்கொள்வர். அந்தணர் தரும் புனித நீரை வீட்டின் உள்ளேயும், வெளியேயும் மாவிலை கொண்டு தெளிப்பர். தொடர்ந்து உறவினர்க்கான விருந்து நடைபெறும்,

Page 111
216 «Х•
நீராடித்தூய்மை பெறுகின்ற இச்சடங்கு நடைமுறையினை மாற்ற இடையீட்டு நிலைக்குள் அடக்கிப் பார்க்கலாம். தமிழக மக்களிடையே குழந்தை பிறந்த பதினோராம் நாளில் இவ்வாறான நீர் வார்வைச் சடங்கை மேற்கொள்ளும் வழக்கம் காணப்படுகிறது.* சிலவகைச் சமூகப் பிரிவு மக்களிடையே பதின்மூன்றாம் நாளிலும் நீர் வார்க்கும் வழக்கம் காணப்படுகிறது.*
குழந்தை பெற்ற தாய்க்கான உணவு நடைமுறைகள்
குழந்தைப் பேற்றின் முன்னரும் பின்னரும் தாய்க்கான உணவு நடைமுறைகளில் தனியான கவனம் செலுத்தப்படுகின்றது. பேறு காலத்தின் முன்னர் மிகவும் போசாக்கான உணவுகளை முறைப்படி வழங்குவர்.
குழந்தைப் பேற்றின் பின்னர் தாயின் உணவு நடைமுறைகளில் சிற்சில மாறுதல்கள் காணப்படுகின்றன. உணவில் உளுந்து, பனைஒடியல்மா, சிறிய மீன் வகைகள் முதலானவை அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. காரம் குறைந்து, மல்லி, சீரகம், பூண்டு என்பன சேர்த்து, 'பத்தியக்கறி’ என அழைக்கப்படும் ஒருவகைக் கறியினைத் தயாரித்து வழங்குவர்."
*காயம்’ என்று அழைக்கப்படும் ஒருவகை உணவு இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். இஞ்சி, பூண்டு, வேர்க்கொம்பு, மஞ்சள், சீரகம் முதலான சரக்குப் பொருட்களை அரைத்துக் காயம்’ தயாரிக்கப்படும். இக்காயத்தினைக் கோழி, மீன் முதலான மாமிசங்களுடன் கலந்து உண்ணக் கொடுப்பர். காயம் பிரட்டிய கறியைப் பலரும் விரும்பியுண்பர். இவ்வகைச் சரக்குப் பொருட்கள் தாயின் உடல் நலத்தைச் சீராக்க உதவுவதோடு, அதிக பால் வளத்தையும் கொடுப்பனவாகக் காணப்படுகின்றன.
கோவிலுக்குச் செல்லுதல்
முப்பத்தோராம் நாள் தீட்டுக்கழிவின் பின்னர் வருகின்ற ஒரு நல்ல நாளில் தாயையும், சேயையும் அவர்களது குலதெய்வக் கோவிலுக்கோ, அல்லது வேறு ஏதாவது ஒரு கோவிலுக்கோ அழைத்துச் செல்வர்.

«Х» 217
சடங்கு என்ற நாவலில் வரும் பரமநாதனின் தாயானவள் தனது மகன்வழிப் பெயரனை முதன்முதலாகத் தங்களுடைய குலதெய்வமான பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறாள். இதனை,
எங்கடை பிள்ளையார் கோவிலுக்குக் குழந்தையை முதன் முதலிலை கொண்டுபோகக் கொண்டு வரும்படி ஆச்சி சொன்னவாவாம். நீ ஏன் கொண்ட போகேல்லை"
என்று பரமநாதன், ஈஸ்வரியிடம் வினவுவதான உரையாடற் பகுதி மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
இருபத்தோராம் நாளில் அல்லது குறித்த ஒரு நல்ல நாளில் குழந்தையைக் குலதெய்வத்தின் அல்லது ஏதாவது ஒரு தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் தமிழக மக்களிடம் காணப்படுகின்றது.*
துடக்கு முடி எடுத்தல்
குழந்தை பிறந்த பின்பு முதன்முதலில் செய்யப்படும் ‘முடியிறக்கம்’ துடக்கு மயிர் எடுத்தல் எனப்படும். இதனை, மொட்டையடித்தல், முடியெடுத்தல், முடி களைதல், முடியிறக்கம் எனப் பலவாறாக அழைப்பர்.
முடியிறக்கத்துக்கான கால எல்லை என்பது குழந்தையின் வளர்ச்சி நிலையைப் பொறுத்ததாக அமையும். பொதுவாக ஓராண்டில் அல்லது மூன்றாவது ஆண்டுக்குள் இது நிகழ்த்தப்பெறும். இதனை அவரவர் தத்தமது குலதெய்வக் கோவில்களில் நிகழ்த்துவது வழக்கமாகும். முடி களையும் இச்சடங்கின் மூலம், குழந்தைக்கு ஏதேனும் குற்றம் இருப்பின் அது விலகி விடும் என்றும், குழந்தை நோய் நொடிகளின்றி ஆரோக்கியமாக வளரும் என்றும் நம்புவர். இச்சடங்கை இறைவனுக்கு அளிக்கப்படும் ஒருவகைக் காணிக்கையாகக் கருதும் பண்பும் உள்ளது."
பண்டைத் தமிழரிடையே முடிகளையும் வழக்கம் இருந்தமையை,

Page 112
218 «Х•
குடுமிகளைந்த நுதல் வேம்பி னொண்டளிர் நெடுங்காடி யுழிஞைப் பவரொடு மிலைந்து*
என்ற புறநானூற்றுப் பாடல் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
துடக்கு முடியினை நாவிதர்களே களைவர். முடி களைவதற்கு முன்பாகச் சிலவகைச் சடங்குகளை இவர்கள் மேற்கொள்வர். முடி களையும்போது குழந்தையைத் தாய் மாமன் தனது மடியிலே வைத்திருக்க வேண்டும் என்பது மரபாகும்.
அடிமைகள் என்ற நாவலில் வரும் உரையாடற் பகுதிகள் இந்நடைமுறை குறித்து விவரிப்பனவாக உள்ளன.
உதிலை முருகேசுக் கமக்காரற்றை பேத்தியின்ரை துடக்குக் கழிவெல்லே இண்டைக்கு. அதுக்குத்தான் துடக்குமயிர் எடுக்கப்போனான் .
அவ என்ரை நயினாத்தியெண்டாலும் சின்னப்பண்ணை கந்தன் கந்த தெண்டு என்னிலை உயிரை வச்சிருந்தவ. எத்தினை முறை ஆக்கள் வாற இடத்திலை கந்தண்ணை, கந்தண்ணை எண்டு கூப்பிட்டவ. என்ரை ஒரு சகோதரம் மாதிரி அண்ணை அவ. துடக்குக் கழியலண்டைக்கு வல்லி துடக்கு மயிர் எடுக்க வரேக்கை தாய் மாமன்ரைமடியிலை கிடத்தித்தான் துடக்கு மயிர் எடுக்க வேணும் எண்டிட்டினம். வருத்தமாகக் கிடந்து கொண்டு கந்தரை மடியிலை கிடத்தி எடுங்கோ எண்டவ.*
இதே வழக்கம் தமிழக மக்களிடமும் பயில் நிலையில் உள்ளமை
கருதத் தக்கதாகும்."
காது குத்துதல்
குழந்தை பிறந்து முப்பத்தோராம் நாளன்று தீட்டுக் கழித்த
பின்னர், குழந்தைக்கு அணிகலன் அணிவிப்பது வழக்கமாகும்.
ஆயினும், காது குத்துதலைத் தனியே சிறப்பாகச் செய்வர்."
அழகான குழந்தைகளைக் கண்ட எமன் ஆசை கொள்வான் 4சன்றும், குழந்தையின் உடலில் சிறுகாயம் ஏற்படுத்திவிட்டால் எமன்

0.
219
ஏமாந்து குழந்தைக்குத் தீங்கு செய்யமாட்டான் என்றும் நம்பப்படும் நம்பிக்கையே இச்சடங்கின் அடிப்படை எனலாம்.*
"தீமை தரும் ஆவிகள், தலை, வாய், கண், மூக்கு, காது ஆகிய உறுப்புக்கள் வழியாக எளிதில் புகுந்துவிடும் என்று நம்பியதால், காதில் துளையிட்டுத் தீய ஆவிகளை விரட்டும் சக்தியாக ஓர் உலோகத்தை அணிவித்தால் ஆவி நுழைவதைத் தடுக்கலாம் என்ற நம்பிக்கையிலும் இவ்வழக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுவர்.*
காது குத்த வேண்டிய குழந்தையை நீராட்டி, புத்தாடையுடுத்திப் பூரண கும்பத்தின்முன்னே இருத்தி விடுவர். பொற்கொல்லர், பூசாரி, வயதானவர்கள் இவர்களில் எவரையாவது கொண்டு காதைக் குத்திவிடுவர். இதனைப் போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில் பின்வரும் பகுதியின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
அவளது நாட்டியத்தை வேடிக்கை காட்டி, போடியாரின் குழந்தையின் அழுகையினை நிறுத்தப் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார் ஒருவர். சுமார் ஒருமணி நேரத்திற்கு முன்பாகக் குறிக்கப்பட்ட சுப வேளையில் கண்ணகியம்மன் கோவில் பூசாரியால் காதுகுத்தும் சடங்கு முடிந்திருந்தாலும் அதன் வேதனையால் உண்டான வீல்வீல் என்ற அலறலை இன்னும் நிறுத்தவில்லை குழந்தை .*
இதனை ஈழத்துக் கிழக்குப் பிரதேச மக்கள் ‘காதுகுத்துக் கல்யாணம்’ எனவும் அழைப்பர், காது குத்துச் சடங்கு பெரும்பாலும் அவரவர் குலதெய்வச் சந்நிதிகளிலேயே நடைபெறுதல் வழக்கம். சிறுபாண்மையாக வீடுகளிலும் இச்சடங்கை நிகழ்த்துவர்.
விற்று வாங்குதல்
விற்று வாங்குதற் சடங்கு கோவில்களில் மேற்கொள்ளப்படும், பெற்றாரின் ஜாதகமும், குழந்தையின் ஜாதகமும் ஒருவருக்கொருவர் பொருந்தி வராவிடின் விற்று வாங்குதற் சடங்கை மேற்கொள்வர். குழந்தை அடிக்கடி நோய்களினால் பாதிக்கப்படினும் இச்சடங்கை நிகழ்த்துவதனைப் பார்க்க முடிகிறது.

Page 113
220 x
காவோலை என்ற நாவலில் ‘நேர்ச்சையின்’ பொருட்டுக் குழந்தையை விற்றுவாங்கும் நடைமுறை பற்றி விரிவான செய்தி கிடைக்கிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கனகர் என்னதான் அலுவல் இருந்தாலும் ஐயனார் கோவில் பூசைக்கு வரத் தவறமாட்டார். அவரும் ஐயனார் பிள்ளைதான். அவரையும் அவர் ஆச்சியும் அப்புவும் ஐயனாருக்கு விற்றுத்தான் வாங்கியிருந்தனர். அவர் விற்கப்பட்ட கதை சுவையானது. அவர் பிறந்ததும் நாள்கோள் நிலைபார்த்துச் சாதகம் குறித்த சாத்திரியார் ஐயனாருக்கு விற்று வாங்கினால்தான் வம்சம் தழைக்கும் என்று கூறி வைத்தார். ஒருநாள் நினையாப் பிரகாரமாக ஐயனார் கோவிலிற்கு அவர் குடும்பம் வர நேர்ந்தது. அன்று கோயிலில் எவரும் இருக்கவில்லை. கேட்பதற்கு எவருமில்லை. குழந்தை நூறு ரூபாவிற்கு விலை போனது. சுப்பிரமணிய பிள்ளை தர்மகர்த்தாவிடம் பணத்தைப் பெருமையுடன் கொடுத்து விட்டுக் குழந்தையை வாங்கிக் கொண்டார். ஒரு கடமை முடிந்த திருப்தி அவருக்கு.*
விற்று வாங்குதல் என்பது ஒரு போன்மைச் சடங்காகக் (limitative Ritual) காணப்படுகிறது. குழந்தையை விற்பதுபோல் விற்று, வாங்குதலாகும். இதன்மூலம் குறிப்பிட்ட ஒரு தொகைப்பணம் கோவிலுக்குப் போய்ச் சேர்கின்றது. விற்று வாங்கப்படுகின்ற குழந்தை ‘புதிய குழந்தை’ என்று கருதப்படுவதால் உளவியல் நோக்கில் ஒருவிதமான ஆறுதலும் கிடைக்கின்றது எனலாம்.
பூப்புச் சடங்கு நடைமுறைகள்
மனித வாழ்வின் முக்கியத் திருப்பமாகப் (Turning Point) ‘பருவமடைதல்’ எனும் படிநிலை அமைகின்றது. பருவமடைதல் என்பது ஆண் பெண் என்ற இருபாலாரிடையேயும் உடல், உள நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பதாகும்.
பெண்களுக்கு மட்டும் உரியது பூப்புச் சடங்காகும். பெண்ணின் உடலில் ஏற்படுகின்ற புறத்தோற்ற வேறுபாடுகளுடன், பெண்ணின் கருப்பைச் சளிப்படலத்திலிருந்து சளியும், நீர்மங்களும் கொண்ட உறைய இயலாத குருதி வெளியேறுவதையே ‘பூப்பு’

8 8.
221
என்பர். ஈழத் தமிழர்கள் பூப்பை, பெரிசாகுதல்’ ‘பெரிய பிள்ளையாகுதல்’, ‘குமராதல்’, ‘கடுக்காணல்’, ‘குந்துதல்’, சாமத்தியப்படல், *கன்னியாதல்’ எனப் பல்வேறு சொல்லாட்சிகளால் குறிப்பர்."
பூப்பு’ என்பது ஆங்கில வழக்கில்"Puberty, Catemenia முதலான சொற்களால் குறிக்கப்படுகின்றன. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி Puberty 6 taip Gls ITGigydig, Maturing of the Sextual Functions' 6T60Ti பொருள் தருகிறது"
பூப்புச் சடங்கு என்பது குழந்தைப் பருவத்தில் இருந்து வயதுக்கு வந்த பருவத்தை அடைவதற்குக் கடந்து செல்லும் நிலையைக் குறிப்பதாகச் செய்யப்படுகிறது. குறிப்பாகச் சொல்வதனால், ஒரு தனிமனிதன் அல்லது குழுவினுடைய சமூக அடையாளத்தில் (Social Identity) குழந்தைப் பருவத்திலிருந்து பருவ வயதுக்குச் செல்லுதல் என்னும் வளர்ச்சியின் மூலமாக உண்டாகும் மாற்றத்தினை இச்சடங்கு குறித்து நிற்கிறது எனலாம்.
நாவல்களில் பூப்புச் சடங்கு நடைமுறைகள் பெண் பூப்படையும் பருவம்
பெண் பூப்படைகின்ற பருவம் என்பது வெவ்வேறு இன மக்களிடையேயும் வெவ்வேறு காலப் பகுதிகளில் நிகழ்கின்றது. பெண்கள் பூப்படைகின்ற பருவம் என்பது, அவர்களின் உடல் 6) μοιτήσεβή, உணவூட்டம், கால நிலை, மரபணு முதலான பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது. பெரும்பாலும் பதினான்கு வயதுக்கும் பதினைந்து வயதுக்குமிடையே இப்பருவமடைதல் என்பது நிகழ்ந்து விடுகின்றது.
பெண் பிள்ளைகளின் உடலில் ஏற்படுகின்ற திடீர் வளர்ச்சி, நடத்தைகளில் காணப்படும் மாற்றம் முதலானவற்றைக் கருத்திற்கொண்டு குறித்த பெண்ணைப் பூப்படைவதற்கு முன்பாகவே கண்காணிக்கத் தொடங்குவதுடன், அவளின் நடமாட்டத்திலும் புதிய பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பர்.
நிலக்களி என்ற நாவலில் வரும் பதஞ்சலியின் வயதுக்கு மீறிய வளர்ச்சியைக் கண்ணுற்ற பாலியார்,

Page 114
222 ベ
ஏதோ குருந்துரர் ஐயன்ரை துணையிலை இண்டைக்குத் தப்பீட்டியள் என்று மகிழ்ந்து கொண்ட பாலியார், மறுபடியும் பதஞ்சலியையும், வளர்ச்சி அடைந்திருந்த அவளுடைய உடலையும் கவனித்தாள். என்றுமே அவளுக்குப் பதஞ்சலியின்மேல் கொள்ளை ஆசை தனக்கொரு பெண் இல்லையே என்ற குறையைப் பதஞ்சலி தண்ணிமுறிப்புக்கு வந்தபின்தான் அவள் மறந்திருந்தாள்.
உமாபதி, இனிமேல் இவளைக் கண்டபடி காடு வழிய திரிய விடாதை, பக்குவப்படுகிற வயசிலை அங்கை இஞ்சையெண்டு போக விடாதை என்றாள் பாலியார் கூறியதைக் கேட்ட பதஞ்சலிக்கு முகம் ஒடிச் சிவந்துவிட்டது.*
என அறிவுறுத்துவதனூடே பதஞ்சலியின் சுயாதீனமான நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கிறாள் எனலாம்.
பூப்பை எதிர்கொள்ளும் வகையில் குறித்த பெண்ணை உடலியல் மற்றும் உளவியல் அடிப்படையில் தயார்படுத்துவதே இந்நடவடிக்கைகளின் நோக்கமெனலாம்.
பூப்படைதலைத் தெரிவித்தல்
பூப்படைந்த பெண், அதனை யாருக்குச் சொல்ல வேண்டும்; யாருக்குச் சொல்லக்கூடாது என்பதில் சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பூப்படைந்ததனைத் தாய்க்கு முதன்முதலில் சொல்லக்கூடாது, தாய், பூப்படைந்த பெண்ணை முதன்முதலில் பார்க்கக் கூடாது என்பது நம்பிக்கையாகும். மாமனின் மனைவி, ‘பேத்தி’ முதலான உறவுமுறைகளில் உள்ளோர் முதன்முதலில் கேட்பதோ, பார்ப்பதோ சிறப்பானதாகக் கருதப்படுகிறது.*
தாய், பூப்படைந்த பெண்ணை முதன்முதலில் பார்க்கக் கூடாது என்பதற்கான சமூக, உறவியற் காரணிகளை உய்த்துணர்ந்து கொள்ள முடிகின்றது.
பெண் பூப்படைதல் என்பது குடும்ப அமைப்பிலும் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அதுவரை அவளைப் பாதுகாத்து

«Х• 223
வரவேண்டும். இந்நிகழ்வுகளால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டும் என்பது முதலான மன அழுத்தங்கள் (Stress) உடனடியாகத் தாயைச் சென்றடைவதால் தாய் ஏங்கிவிடுவாள் எனக் கருதி, அவளுக்குக் கொடுக்கக் கூடிய குறுகிற கால அவகாசமாகவே இந்நடைமுறை ஏற்பட்டிருத்தல் வேண்டும். தாயின் கடமையுணர்வும், பொறுப்புணர்வும் மகளின் பூப்பினால் அதிகரிக்கின்றது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றே எனலாம்.
குப்பைத் தண்ணி வார்வை
பருமடைந்த பெண்ணை முதன்முதலில் நீராட்டும் நிகழ்வே குப்பைத் தண்ணி வார்ப்பு என்பதாகும். இதனைக் கண்டு தண்ணி வார்ப்பு’ எனவும், தண்ணீர் வார்ப்பு எனவும் அழைப்பர். பெரும்பாலும் பெண் பூப்படைந்த அன்றே இந்நீர்வார்ப்பு நடைபெறுகின்றது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அடுத்த நாளிலும் இதனை மேற்கொள்வர். குப்பைத் தண்ணிவார்வையானது பூப்புச் சடங்கின் மையமாக அமைந்துள்ளது எனலாம்."
குப்பைத் தண்ணிர் வார்ப்பதற்கு முன்னதாக நெருங்கிய உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பிரத்தியேகமான முறையில் சலவைத் தொழிலாளி குடும்பமும் அழைக்கப்படும். பூப்புக் காலத்தில் அழுக்குத் துணிகளைச் சுத்தம் செய்து கொடுத்தமையினால் சலவைத் தொழிலாளிக்கு இம்முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கலாம். தமிழக வழக்கிலும் பூப்புச் சடங்கில் சலவைத் தொழிலாளிக்கு முக்கியத்துவம் தரப்படுகின்றமை கருதத் தக்கதாகும்"
பூப்படைந்த பெண்ணின் தலையை வெள்ளைச் சேலை கொண்டு முக்காடிட்டு, கைகளிரண்டிலும் கூம்பு வடிவிலான இரண்டு வெற்றிலைச் சுருள்களைக் கொடுத்து அழைத்து வருவர். வெற்றிலைச் சுருளுக்குள் நாணயக்குற்றி, பாக்கு ஆகியன செருகப்பட்டிருக்கும். இவ்வாறு அழைத்து வந்த பெண்ணை, பெருக்கப்பட்ட குப்பைக் குவியலின் மேலே கிழக்கு நோக்கி இருத்தி நீர் வார்ப்பர். மாமன், மாமி என்ற உறவு முறை ஒழுங்கிலே இந்நீர் வார்ப்பு நடைபெறும், சில இடங்களில் பால், அறுகம்புல் முதலியனவற்றைத் தலையில் வைத்தும் நீராட்டுதல் செய்வர்.

Page 115
224 «Х•
“குப்பை என்பது இங்கே ஒரு குறியீடாக(Symbol) அமைகின்றது. பெண்ணின் தீட்டு அழுக்கு நிலையாகக் (Polution) கருதப்படுவதே இதற்குக் காரணமாகும். தீட்டினை நீக்கித்தூய்மையினை (Sacredness) ஏற்படுத்துகின்ற நிகழ்வாக இதனைக் கருதலாம்.
குப்பைத் தண்ணிர் வார்த்த பின்னர், பெண்ணை அழைத்து வரும்போது, அவளை, நிறைகுடம், குத்து விளக்கு முதலானவற்றில் விழிக்கச் செய்வர். பின்னர் விருந்து நிகழ்வு நடைபெறும்.
பூப்பும் உணவு நடைமுறைகளும்
பூப்படைந்த பெண்ணுக்கு வழங்கப்படும் உணவு நடைமுறைகளில் மிகுந்த கவனம் செலுத்தப்படும். இதற்குக் காரணம் பூப்பினால் உண்டாகிய உடற் சோர்வே எனலாம்.
பருவமடையும் வயதில் பெண்கள் உள்ள வீடுகளில், பூப்புக்கு முன்னரேயே பழைய நெல்லை வாங்கி வைத்து விடுவர். பூப்பு நிகழ்ந்தவுடன் இந்நெல்லைக் குற்றி அரிசியாக்கி வெண் பொங்கல் தயாரித்துக் கொடுப்பர். இப்பொங்கலில் தேங்காய்ப் பாலைச் சேர்ப்பது கிடையாது. இதுவே உடனடி உணவாகக் காணப்படும்.
சில நாட்களின் பின்னர் கத்திரிக்காய்ச் சாறு பிழிந்து முட்டை வெள்ளைக் கருவுடன் சேர்த்துக் கலந்தும், முட்டையும், நல்லெண்ணையும் கலந்தும் உண்ணக் கொடுப்பர். அரிசி, உளுந்து முதலானவற்றின் மாவினைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘களி’யும் இக்காலப்பகுதியில் வழங்கப்படும் உணவுகளில் பிரதானமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு உளுத்தங்களியினை வழங்கும் மரபு பண்டைத் தமிழரிடையே வழக்கில் இருந்தமை குறித்து அகநானூற்றின் பாடல்கள் சிலவற்றிலே குறிப்புக்கள் பயின்றுள்ளன.*
பூப்படைந்த பெண்ணின் வயிற்றுப் புண்ணைப் போக்கும்பொருட்டு, வேப்பிலைத்துளிர், மஞ்சள், சீரகம் ஆகியவற்றை அரைத்துச் சிறிய சிறிய உருண்டைகளாக்கிப் பனை வெல்லத்துடன் உண்ணக் கொடுப்பர். தொடர்ந்து வரும் நாட்களில் கார உணவுகளைத் தவிர்த்து, பத்தியமாகவே உணவு கொடுப்பர். பெரும்பாலும் “காயம் கலந்த கறிகளையே வழங்குவர்.

«Х• 225
பூப்புக்காலத்தில் குறிப்பிட்ட பெண்ணுக்கு வழங்கப்படும் நீரின் அளவு பெரிதும் கட்டுப்படுத்தப்படுகின்றது. எண்ணெய் உணவுகளை அதிகமாக உட்கொண்டு, அதிக நீரையும் உள்ளெடுத்தால் வயிற்றுப்போக்குக் கண்டுவிடும் எனக் கருதுகின்றமையே இதற்குக் காரணமாகும். மேலும் வயிற்றுப் பகுதி பெருத்துவிடும் என்ற நம்பிக்கையிலும் நீரின் அளவு மட்டுப்படுத்தப்படுகிறது.*
பப்பாளிப்பழம், அன்னாசிப்பழம், நிலக்கடலை முதலியன பூப்புக்குருதியை அதிகப்படுத்தும் எனக் கருதி அவற்றையும் இக்காலப் பகுதியில் தவிர்த்து விடுவர்.
சாமத்திய வீட்டுக்குள் ஒரு பெண்ணைப் பார்க்கின்ற பார்வைதான் (பராமரித்தல்) அவளை நீண்ட காலம் திடகாத்திரமான பெண்ணாக வைத்திருக்கும்*
என கே. டானியல் குறிப்பிடுவது, பூப்பு உணவு நடைமுறை குறித்த ஈழத் தமிழர்தம் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
மறுசாமத்தியம்
பூப்படைந்த பெண்ணுக்கு ஏற்படுகின்ற முதற் பூப்புச் சுழற்சியே மறு சாமத்தியம் என அழைக்கப்படுகிறது. இதனைச் சிறுபான்மையாகப் பரியாரம் எனவும் வழங்குவர். மறுசாமத்தியம் நிகழும் காலம், பூப்புக் காலத்தின்போது பின்பற்றப்பட்ட உணவு நடைமுறைகள், பெண்ணின் உடல், உள மாற்றங்கள், கால நிலை ஆகியனவற்றால் தீர்மானிக்கப்படுகிறது எனலாம். பொதுவாக இரண்டு மூன்று மாதங்களின் பின்னரேயே மறுசாமத்தியம் ஏற்படுகின்றது. மறுசாமத்தியக் காலப் பகுதியில் பூப்புக் காலத்தில் பேணப்பட்ட அதே உணவு நடைமுறைகளும், விலக்கு நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன.*
Անպiն, ֆւնiն
பூப்புக்குள்ளான பெண்ணைத் தீட்டுக்கு உரியவளாகக் கருதிப்
பிரிவு நிலையில் விலக்கி வைத்திருப்பர்." இது தொடர்பான விரிவான விளக்கங்களை மூன்றாவது இயலில் காணலாம்.

Page 116
226 X
ஆராத்துச் சடங்கு
ஆராத்துச் சடங்கு என்பது, நன்மையான சடங்குகளிலே இடம்பெறும் ஒரு இன்றியமையாத கூறு எனலாம். இதனை ‘ஏற்றியிறக்கற் சடங்கு’, ‘கடடிக் கழித்தற் சடங்கு' எனவும் குறிப்பர். பூப்புச் சடங்கிலே ஆராத்துச் சடங்கு பெறும் முக்கியத்துவம் கணிசமான ஒன்றாகும். இச்சடங்கு, பெண்ணின் தீட்டு நிலையை விலக்கி அவளைப் புனிதப்படுத்த உதவுவதோடு, பிறருடைய கண்ணேற்றிலிருந்தும் அவளைப் பாதுகாக்கிறது.
ஆராத்துக்குரிய தட்டுக்களை ஒற்றை எண்ணில் அமையத்தக்கவாறு பார்த்துக் கொள்வர். நிறைநாழி, தேங்காய், பிட்டு, களி, வெற்றிலை, பாக்கு, சோறு, கறி, பலகாரம், சந்தனம், குங்குமம், பூ, பால், ரொட்டி, வேப்பிலை முதலான பொருட்கள் ஆராத்துத் தட்டுக்களில் இடம்பெறுதல் மரபாகும்.
ஆராத்துகின்ற பொருட்கள் யாவும் மூன்று தடவைகள் ஆராத்தப்படுகின்றன. ஆராத்துக்குரிய தட்டுக்களை இருவர் இருவராக ஆராத்துவர். கீழிலிருந்து மேலாக உயர்த்தி, இடம்வலமாக அசைத்துப் பின் கீழிறக்குவர். இவ்வாறு மூன்று தடவைகள் செய்யப்பட்ட பின்னர், அப்பொருளினைக் குறித்த பெண்ணின் தலைக்குமேலாக உயர்த்திப் பின்புறமாகக் கொடுப்பர். ஆராத்துப் பொருட்களைச் சலவைத் தொழிலாளி மற்றும் நாவிதர் ஆகியோர் தமக்குள் பங்கிட்டுக் கொள்வர்.
சடங்கு என்ற நாவலில், இந்நடைமுறை குறித்துப் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.
தலையிலே துப்பட்டியுடனும், கையிலே நிறைகுடத்துடனும் மெதுவாக நடந்து வந்து பந்தலின் நடுவே கிழக்கே பார்த்தபடி பத்மா நின்றாள். இராசக்காவும், கோண்டாவிலில் இருந்து வந்த ஒரு பெண்ணும் ஆலாத்தி எடுத்தனர். அதைத் தொடர்ந்து தட்டங்களில் வைத்திருந்த பொருட்களையெல்லாம் ஆலாத்தி போல் எடுத்துப் பின்புறமாக நீட்டினர். வண்ணானும் அம்பட்டனும் வழமைப்படி தமக்குக்

«Х» 227
கிடைக்க வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டனர்."
தமிழக வழக்கிலும் இதே நடைமுறையே பின்பற்றப்படுகின்றது.
ஆராத்தும்பொழுது எவ்வெப் பொருட்களை எவ்வித ஒழுங்கில் ஆராத்துவது என்பதில் சில ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படுகின்றன. நிறைநாழி’ எனப்படும் பொருளே முதலில் ஆராத்தப்படுகின்றது. நெல் அளக்கும் கருவியாகிய மரத்தாலான கொத்தில் நெல்லை நிரப்பி அதற்குள் சத்தகம் என அழைக்கப்படும் ஒருவகைக் கத்தியினைச் செருகி விடுவர். இதுவே நிறைநாழி’ எனப்படும். நெல்லானது, இங்கே வளமைக்குரிய ஒரு சின்னமாக அமைந்துள்ளது. நெல்லைக் கொண்டு ஆராத்தும்பொழுது குறித்த பெண்ணும் வளமை அடைவாள் என நம்பப்படுகிறது.
நிறைநாழியைத் தொடர்ந்து, முறையே, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ, சந்தனம், குங்குமம், பிட்டு, களி, பலகாரம், சோறு, கறி, தேங்காய், வேப்பிலை என்பனவற்றால் ஆராத்துவர்.
ஆராத்து நடைமுறையின் பின்னர், பூப்படைந்த பெண்ணுக்கு உறவினர்கள் அன்பளிப்புக்களைத் தருவர்.* பூப்புச் சடங்கின் நிறைவாக இவ் ஆராத்து நடைமுறை காணப்படும்.
தமிழக மக்கள் ஆராத்துச் சடங்கைப் புட்டுச் சுற்றுதல் என வழங்குகின்றனர். இந்நிகழ்வில் ஈழத்தைப் போலப் பெண்களே முக்கியப் பங்கு வகிப்பர்."
பருமடைகின்ற பெண்ணுக்குப் பூப்புச் சடங்கு செய்திராவிடில் அச்சடங்கைத் திருமண நாளன்று நிகழ்த்தும் வழக்கம் ஈழத் தமிழர்களிடையே காணப்படுகிறது. இச்சடங்கினை நிகழ்த்திய பின்னரே திருமணச் சடங்கினை மேற்கொள்வர்." பூப்புச் சடங்கின்நோக்கம், திருமணத்துக்கு முன்பே குடும்பப் பொறுப்புக்களை இளம் தலைமுறையினர்க்குக் கற்பிக்க வேண்டும் என்பதாகும். அத்துடன் திருமணத்துக்குத் தயாரான பெண் ஒருத்தி குறித்த வீட்டில் இருப்பதையும் இச்சடங்கு அறிவிக்க உதவுகிறது
எனலாம்.

Page 117
228 &
திருமணச் சடங்கு நடைமுறைகள்
வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகளில் திருமணச் சடங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் காணப்படுகிறது. ஓர் ஆடவனும், பெண்ணும் இணைந்து வாழ்வதற்காகச் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வினை முறையே திருமணமாகும். திருமணத்தின் பின்னர்தான், மனிதன் வாழ்க்கையின் முக்கியப் படிநிலைகளைக் கடந்து செல்கின்றான். சடங்குகள் யாவற்றுள்ளும் மனித வாழ்வைப் பெரிதும் பாதிப்பது திருமணச் சடங்கே எனலாம். திருமணத்தின் மூலம் அமையும் ‘குடும்ப வாழ்க்கை’ என்பது எல்லாச் சமூகங்களிலும் அடிப்படை அமைப்பாக உள்ளது.
திருமணம்: சொல்லும், பொருளும்
தமிழ் மக்கள், திருமணத்தைக் 'கல்யாணம்’ என்றும் அழைப்பர். மண முறையினைப் பண்டைத் தமிழர் ‘வதுவை’, “மன்றல்’, ‘மணம் முதலான சொற்களால் எனக் குறித்துள்ளனர்."
திருமணம் என்பது மனிதனின் பாலியல் விருப்பங்களை நிறைவு செய்யும் பொருட்டு ஏற்படுத்திக் கொள்வதாகும் எனச் சமூகவியல் கலைக்களஞ்சியம் பொருள் தருகிறது.*
வாழ்வியற் களஞ்சியம், திருமணம் என்பது, ஒருவனைப் பண்பாட்டு உறுப்பினனாக ஏற்றுக் கொள்ள வகை செய்கிறது எனக் குறிப்பிடுகிறது.*திருமணத்தால் கட்டப்பட்ட மாந்தர் குழுவைக் குடும்பம் எனப் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.*
ஓராடவனும், ஒரு பெண்ணும் சமூக வசழக்கங்களுக்கும், சமய விதிகளுக்கும் உடன்பட்டு நிலையான வாழ்க்கையைத் தொடங்குவது மணமாகும் என்கிறது கலைக்களஞ்சியம்."
மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே சடங்கின்மூலம், ஆணும், பெண்ணும் புதிய குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள நிறுவப்பட்ட ஒரு வினையே மணம் எனத் தெளிவு பெறலாம்."

0.
X
2
2
9
திருமணத்தின் தோற்றம்
சமுதாய நடத்தையில் திருமணம் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சமூக நிறுவனமாகிய குடும்பத்துக்கு அடிப்படையிடுவது திருமணமே எனலாம்.
மனிதனது ஆளுகை சமுதாயத்தின் மீதும், சமுதாயத்தின் ஆளுகை தனிமனிதனின் மீதும் இறுகப்படிந்து ஒன்றையொன்று தொடர்ந்து வருகின்றன. மனிதனுடைய நாகரிக வரலாற்றில் ஆண், பெண் உறவானது பல கட்டங்களைக் கடந்து வந்துள்ளது. மனிதன் நாகரிகம் அடைந்த நிலையில்தான், ஆண்-பெண் இணைந்து வாழும் (g Gofu airs, 6in) 6 CD gituds (5G) blu (up 60 p (Monogrmous Family) தோன்றியது. ஆதி காலத்தில் இயற்கையாக வளர்ந்த பொதுச் சொத்தின் மீது தனியுடைமை வெற்றி பெற்றிருந்த நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த முதல் குடும்ப வடிவமாக இது அமைந்தது. சுருங்கக் கூறின் சொத்துரிமை கருதியே திருமணம் தோன்றியது எனலாம். தாய்வழிச் சமுதாயத்திலிருந்து தந்தை வழிச் சமுதாயம் தோன்றிய நிலையில் மணத் துணையை அமைத்துக் கொள்வதில் பல்வேறு முறைகள் காணப்பட்டன. “வந்து காணும் Sabida63TLb' (Common Marriage) “gsg535 Tair Sqbudasarib' (Probationary Marriage)'s gigsgigol D600TLb’ (Marriage of Capture) L1600 hostill D600TLb (Marriage by Service) 'Gsioli gold 600Tib’ (Marriage by Trial) முதலானனவாக அவை காணப்பட்டன.
உணர்வு உந்தும்வழிக் கூடிவாழ்தல் என்ற நிலைமாறி, உணர்வு ஓர் ஒழுக்கமாக, ஒழுகலாறாகத் திருமணம் என்ற அமைப்பின் மூலம் வந்தடைந்தது எனலாம்."
இந்திய வரலாற்றுப் பின்னணியில் வேதகாலப் பகுதியிலேயே திருமணம் என்பது நன்றாக நிர்வகிக்கப்பட்டது மட்டுமின்றி, அது சமூகக் கடமையாகவும், தேவையாகவும் கருதப்பட்டமை பற்றி அறிய முடிகின்றது.*
திருமணச் சடங்கு
திருமணச் சடங்கு என்பது விரிவான பல்வேறு நடைமுறைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழ்வின்

Page 118
தலையாய நிகழ்ச்சியாகவும் பிறவிதோறும் தொடர்ந்து வருவதாகப் போற்றப் பெற்ற தாம்பத்திய உறவுக்குத் தோற்றுவாயாகவும் விளங்கும் திருமணத்துக்குக் கரணம் அமைந்தது இயல்பே எனக் கூறலாம்."
சங்க இலக்கியங்களிலே திருமணம் பற்றிய செய்திகள் உதிரிகளாகப் பரவிக் கிடக்கின்றன." பண்டைத் தமிழரிடையே நிகழ்த்தப் பெற்ற திருமணங்களில் சடங்கு முறைகள் விரிவாகக் காணப்படவில்லை. தமிழ் வரலாற்றின் ஆரம்ப காலத்தில் சடங்குகள் இருப்பினும், திருமணம். தமிழ் வரலாற்றின் ஆரம்ப காலத்தில் சடங்குகள் இருப்பினும், திருமணம் என்பது எளிய நிகழ்ச்சியாகவே இருந்துள்ளது." மணமகனும், மணமகளும் எரியைச் சுற்றி வருவதுடன் மணவினை முற்றுப் பெற்றது. அக்கினியின் முன்னிலையில் மணவினை நடைபெற வேண்டும் என்பது ஆரியர் தொடர்பினால் ஏற்பட்ட வழக்கமாகும்.”
திருமண வாழ்வில் பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர், அவற்றைக் களைதற் பொருட்டுக் கரணங்கள் தோற்றம் பெற்றன. ஆரியத் தொடர்பின் காரணமாகப் பின்னாளில் தமிழர்களின் திருமணச் சடங்கு நடைமுறைகள் மேலும் விரிவடையலாயின.
நாவல்களில் திருமணச் சடங்கு நடைமுறைகள்
நாவல்களிலே திருமணச் சடங்கு நடைமுறைகள் குறித்த பல்வேறு செய்திகள் கிடைக்கின்றன. இச்சடங்கு நடைமுறைகளைப் பின்வரும் மூன்று நிலைகளில் பகுத்து நோக்கலாம்.
அ. திருமணத்துக்கு முன்பதான சடங்குகள்
ஆ. திருமணச் சடங்கு
இ) திருமணத்தின் பின்பதான சடங்குகள்
திருமணத்துக்கு முன்பதான சடங்குகள் சாணைக் கூறை போடுதல்
‘சாணைக் கூறைபோடுதல்’ என்பது திருமணத்தோடு தொடர்புடைய ஒரு சடங்காக உள்ளது. இதனைச்சாணை போடுதல்

8 231
என்றும் அழைப்பர், குறித்த ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறக்கும் நிலையில், அக்குழந்தையின் தாய்வழியில் அல்லது தந்தை வழியில் உள்ள மச்சான் (மைத்துனன்) முறையான ஆண் குழந்தைக்கு அக்குழந்தையை நிச்சயம் செய்து விடுவதே இந்நடைமுறை ஆகும். இச்சடங்கானது குழந்தை பிறந்து ஒருசில மாதங்களுக்குள்ளாகவே நடைபெறுவதுண்டு. மாமன் முறையானவர், மருமகளாக வரித்துக் கொண்ட பெண் குழந்தையைத் தனக்கு உரிமையான சேலையிலே வளர்த்துவடன் இச்சடங்கு நிறைவு பெறும்.
கானல் என்ற நாவலில் வரும் தம்பாப்பிள்ளையரின் முறை மருமகனின் விரும்பத் தகாத செய்கைகளைக் குறிப்பிட்டுக் குறை கூறும் நன்னியனை நோக்கி, தம்பாப்பிள்ளையர்,
டேய் நன்னியன் என்னடா நளக்கதை கதைக்கிறாய். அவன் வயது வந்த பெடியன்! என்ரை பெட்டைக்கு அவனைச் சாணைக் கூறை போட்டு வச்சிருக்கிறன் எண்டு தெரிஞ்சும் நீ கதைக்கிறாய் என்னடா..?
என நன்னியனை நோக்கி எச்சரிக்கை விடுக்கிறார்.
கோவிந்தன் என்ற நாவலில், தனது எசமான் ஆசைப்பட்ட பெண்ணையே அவருக்கு மணம் முடித்து வைக்க விழையும் நாகன், தனது விருப்பத்தைச் சின்னட்டியனிடம் வெளியிடுகிறான். “குறித்த பெண் வயதில் மிகவும் சிறியவள்’ என்று கூறிய சின்னட்டியை நோக்கி,
இப்பார் சொன்னது உடனை செய்வமெண்டு. பேச்சுக்காலீலை வைச்சுக் கொண்டு பின்னடிக்குப் பாப்பம்! ஏன் உங்கினைக்கை பெரிய வீடுவளிய சாணைக் கூறை போட்டு வைச்சிருக்கினம் அதைப்போலை! .
என நாகன் குறிப்பிடுகிறான்."
சாணைக் கூறை போடப்படுகின்ற குழந்தைகள், எதிர்காலத்தில் ஒருவரை ஒருவர் மணந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இம் மரபில் இல்லை. ஆயினும் சாணைக் கூறை போட்டவர்கள் மணந்து கொள்வதே பெரும்பாலான வழக்கமாக உள்ளது.*

Page 119
232 «Х•
உறவின் இறுக்கத்தைப் பேணுதல், சொத்தைப் பிறரிடம் செல்லவிடாமல் தடுத்தல் முதலான பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இச்சடங்கு நடைமுறை அமைந்துள்ளது. இந்திய மரபில் நிகழ்த்தப்படுகின்ற பாலிய மணமுறைமையுடன் இச்சடங்கை இணைத்து நோக்க முடிந்தாலும், இந்திய மரபில் பேணப்படுகின்ற இறுக்கம் ஈழத்து மரபில் பின்பற்றப்படுவதில்லை.
பேச்சுக்கால்
திருமணப் பேச்சை முதன்முதலாகத் தொடங்குதலைப் பேச்சுக்கால் எனக் குறிப்பிடுவர். ஜாதகப் பொருத்தம் தவிர்ந்த ஏனைய பொருத்தங்கள் உடன்பட்டுவரின் பேச்சுக்காலைத் தொடங்குவர். பேச்சுக்காலை நல்லதொரு மாதத்தின் நல்ல நாளில் வைத்துக் கொள்வர். பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களும், ஊரின் நன்மதிப்பைப் பெற்றவர்களும் இச்சடங்கு நடைமுறையில் பங்கெடுப்பது மரபாக உள்ளது. பெரும்பாலும் இவர்கள் மணமக்களின் உறவு முறையில் உள்ளவர்களாக இருப்பர். பேச்சுக்கால் வெற்றி பெறின் மணமக்களின் ஜாதகங்கள் முறையே பரிமாறிக் கொள்ளப்படும்."
பண்டைத் தமிழர் மரபிலும், மணம் பேசுதல் முதலான நடைமுறைகளில் வயதான முதியோர்கள் பங்கெடுத்தலே மரபாக இருந்ததுள்ளது. இதனை,
தண்டுடைக் கையர், வெண்டலைச் சீதவலர் நன்று நன்று என்னும் மாக்களோடு"
எனக் குறுந்தொகைப்பாடல் குறிப்பிடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஜாதகப் பொருத்தம்
திருமணத்தை நிச்சயம் செய்து கொள்வதில் மணமக்களின் ஜாதகங்களின் பொருத்தப்பாடு மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கு முதன்முதலாக ஜாதகத்தினை வீட்டுக்கு வெளியே எடுத்துச் செல்வதற்கு நல்ல நாளைக் குறிக்கும் மரபு உண்டு. நட்சத்திரப் பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரிதீர்க்கப்

8 233
பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசி அதிபதிப் பொருத்தம், வசியப் பொருத்தம், இரட்சுப் பொருத்தம், வேதைப் பொருத்தம் ஆகிய பத்து வகைப் பொருத்தங்களில் குறைந்தது ஏழு பொருத்தங்களாவது பொருந்தி வர வேண்டும். பொருத்தத்தை, உத்தமம், மத்திமம், அத்திமம் எனப் பொருத்திக் காணுவர்.
திருமணத்தில் ஜாதகங்களின் பொருத்தப்பாட்டின் முக்கியத்துவத்தினை “கிடுகுகுவேலி’, ‘சடங்கு ஆகிய நாவல்களில் பின்வரும் உரையாடற் பகுதிகள் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.
பவளத்திற்கு மாமா பலவிடங்களில் கலியாணம் பேசிப் பார்த்துவிட்டார். சீதனத்தோடு ஏழில் செவ்வாய் வேறு அவள் கல்யாணத்திற்குத் தடையாகியது.
உங்கடை பெண்பிள்ளையின்ரை சாதகமும் என்ரை பெடியன்ரையும் அவ்வளவு தோதாயில்லை. பொம்பளையின்ரைசாதகம் கணிச்சதும் சரியில்லை எண்டு எங்கடை சாத்திரி சொன்னான்."
ஜாதகத்தில் செவ்வாய்க் குற்றமுள்ள ஜாதகருக்கு, அவ்வகைக் குற்றமுற்ற ஜாதகரையே இணைத்து வைப்பர்.
பெண் பார்த்தல்
ஜாதகங்கள் பொருந்தி, குறித்த குடும்பமும் ஒத்துவரின், பெண் பார்க்கும் சடங்கு நடைமுறை மேற்கொள்ளப்படும். மணப்பெண் அறியாமல் அவளைப் பார்த்து நிச்சயிப்பதே பெரும்பான்மை மரபாகும். பெண் பார்க்கும் நிகழ்வு, பெரும்பாலும் கோவில், வேலை பார்க்கும் இடம் ஆகியனவற்றிலே நடைபெறுதல் வழக்கமாகும். சிறுபான்மையாக மணப்பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்றும் பெண் பார்ப்பர். மணமகன், பெற்றோர், உடன் பிறப்புக்கள் முதலானோர் பெண் பார்க்கும் நடைமுறையில் பங்கெடுப்பர். மணமகனுக்காகப் பெற்றோர்களே பெண் பார்த்தலும் உண்டு.
நீண்ட பயணம் என்ற நாவலில் வரும் அன்னம்மாவை, அவள் அறியாமலேயே பெண் பார்த்த சூழ்நிலை பற்றிக் பின்வரும் பகுதி விளக்கி நிற்கிறது.

Page 120
234 «Х•
பூவடிக் கிராமத்திலிலிருந்து கல்யாணத் தரகன் ஒருவன் திருமணம் ஒன்று பேசி வந்தான். கதிராசி வீட்டில் இல்லாத வேளையாக தரகன் மாப்பிள்ளையையும் கூட்டி வந்தான்.
ஆச்சி ஆடு ஒண்று விக்கிறதாகச் சொன்னா இவருக்கு ஒருக்காக் காட்டலாமாஸ் தரகன் அன்னம்மாவைக் கேட்டான்.
ஆச்சி தோட்டத்துக்குப் போட்டா! பரவாயில்லை இன்னொரு முறை பாப்பம்! மாப்பிள்ளைக்கு அன்னம்மாவை நன்கு பிடித்துக்
கொண்டது."
தமிழகத் திருமண நடைமுறையில் பெண் பார்க்கும் சடங்கு நடைமுறைக்குத் தரப்படுகின்ற முக்கியத்துவத்தினை ஈழத்தமிழர் திருமண நடைமுறையில் பார்க்க முடியாது.
முற்றாக்குதல்
மணமக்களின் ஜாதகங்கள் பொருந்தி, குடும்பத்தையும், பெண்ணையும் பிடித்து விட்டால் திருமணத்தினை முற்றாக்குவர். இதனை ‘நிச்சயம் செய்தல்’, ‘முற்றெடுத்தல்’ எனவும் வழங்குவர். இச்சடங்கு நடைமுறையிலேயே பெண்ணுக்கு வழங்கப்படும் சீதனங்கள் பற்றியும் பேசி முடிவெடுப்பர். முற்றாக்குதலின் பின்னர் சிறிய அளவில் விருந்து நடைபெறும். இவ்விருந்து திருமண ஒப்பந்தத்தை மேலும் உறுதி செய்வதாக அமையும். மட்டக்களப்புப் பிரதேசத்திலே திருமணத்தை முற்றாக்கியவுடன் பெண் வீட்டார் மணமகன் வீட்டாருக்குக் கொழுக்கட்டை’ எனும் இனிப்புப் பண்டத்தைத் தயாரித்து அனுப்புவது வழக்கமாக உள்ளது. போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில் இந்நடைமுறை குறித்த செய்திகள் விரிவாகப் பயின்றுள்ளன."
தமிழக மக்கள், முற்றாக்குதல் சடங்கினைப் ‘பரிசம் போடுதல்’ என வழங்குகின்றனர்.
நாள் வைத்தல்
திருமணத்துக்கான நாளை நிச்சயம் செய்வதனை ‘நாள் வைத்தல்’ எனக் குறிப்பிடுவர். மணவினையை நல்லதொரு நாளில்

«Х• 235
வைக்க வேண்டும் என்ற எண்ணப்பாங்கு, பண்டைத் தமிழரிடையே வழக்கில் இருந்தமை பற்றிச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. நாள் வைத்தலிலும் சில நடைமுறைகள் கருத்திற் கொள்ளப்படுகின்றன. மணமக்களின் ஜாதகத்தினைக் கருத்திற் கொண்டும், மணமகளின் மாதவிலக்கினைக் கருத்திற்கொண்டும் திருமண நாளைத் தேர்வு செய்வர். இச்செயற்பாட்டில் இருவீட்டாரும் இணைந்தே செயற்படுவர். பெரும்பாலும் சித்த அமிர்தயோகத்தில் பெண்ணின் நட்சத்திரத்திற்குப் பொருத்தமாகத் திருமணநாளைத் தேர்ந்தெடுப்பர். மணமக்கள் பிறந்த மாதங்களில் திருமணத்திற்கு நாள் வைப்பது கிடையாது.
இதனைச்சடங்கு என்ற நாவலிலே பின்வரும் உரையாடற் பகுதி வெளிப்படுத்தி நிற்கிறது.
அப்ப இரண்டு கலியாணத்தையுமே தையிலே நடத்துவம். இராசதுரை கந்தையாவின் நோட்டம் அறிந்து ஒரு போடு போட்டார். அதுவும் சரிவராது எங்க பொம்பிளைக்கு அது பிறந்த மாதம்."
தமிழக மக்கள் திருமணத்துக்கு நாள் குறித்தலை முகூர்த்த ஒலை எழுதல்’ என வழங்குகின்றனர்.
திருமணத்துக்குரிய பொருட்களை வாங்குதல்
திருமணச் சடங்கிற்குரிய பொருட்களில் தாலி, கூறை முதலானவை தவிர்ந்த ஏனைய உபபொருள்களைக் குறிப்பாக விருந்துக்குரிய பொருட்களை நல்லதொரு நாளில் வாங்குவதனை இச்சடங்கு நடைமுறை குறிக்கின்றது. நாளுக்குப் பொருட்களை வாங்கிய பின்னர் தொடர்ந்து அவ்வப்போது தேவைக்கு ஏற்றபடி ஏனைய பொருட்களை வாங்குவர்."
நாட்பலகாரம் சுடுதல்
திருமணத்துக்கு வேண்டிய சிற்றுண்டி (பலகாரம்) வகைகளைத் தயாரித்துக் கொள்வதனை ‘நாட்பலகாரம் சுடுதல்’ என அழைப்பர். பொன்னுருக்கலின் பின்னர் வருகின்ற நல்லதொரு நாளில், உறவினர்களும் அயலவர்களும் இணைந்து நாட்பலகார

Page 121
236 X
நடவடிக்கைகளைத் தொடங்குவர். முறுக்கு, வெள்ளுரொட்டி, பயற்றம் பணியாரம், சீனிப்பலகாரம் சீனியரியதரம், இலட்டு முதலானவை இவ்வகைப் பலகாரங்களில் சிலவாகும், அண்மைக் காலங்களில் திருமணத்துக்குரிய பலகார வகைகளை வீட்டுக்கு வெளியே கட்டளையின்பேரின் (order) பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளும் வழக்கமும் உள்ளது. எனினும், சம்பிரதாயப்படியாவது தேவையான பலகார வகைகளைச் சிறிய அளவிலேனும் மணமக்கள் வீடுகளில் தயாரிப்பதைக் கட்டாய வழக்கமாகக் கொண்டுள்ளமையும் கருதத்தக்கதாகும். “நாளுக்கு எண்ணெய்ச் சட்டி வைக்காவிடில் தரித்திரம் பிடிக்கும்’ என்ற நம்பிக்கையும் வழக்கில் உள்ளமை இங்கு கருதத் தக்கதாகும்.*
பந்தற்கால் நடுதல்
திருமணம் நிகழவுள்ள பந்தலை அமைப்பதில் சிலவகையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்நடைமுறைகள் பண்டைக்காலம் முதற்கொண்டே பின்பற்றப்பட்டு வருகின்றன. சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு, மணமக்கள் வீட்டில் பந்தல் அமைத்து, அதில் வெண்மணல் பரப்பி மணவினை மேற்கொண்டமை பற்றிக் குறிப்பிடுகிறது.*
பந்தற்கால் நடும் சடங்கை மணமகன், மணமகள் ஆகிய இருவரது வீடுகளிலும் மேற்கொள்வர். பந்தல் காலை ஊன்றுவதற்கு நல்ல நாளைக் கணித்துச் செயற்படுவர். இச்சடங்கு நடைமுறையின்போது சிறிய அளவில் இறைவழிபாட்டுச் சடங்குகள் மேற்கொள்ளப்படும். பின்னர் ஐந்து அல்லது ஏழு ஆகிய எண்களில் அமையக்கூடிய சுமங்கலிப் பெண்கள் ஒன்று சேர்ந்து பந்தற் காலை நாட்டுவர். பந்தல்கால் ஊன்றுதலைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும் வேலைகள் முனைப்புப்பெறும். பூர்த்தி செய்யப்பட்ட பந்தலின் மேற்பகுதிக்குச் சலவைத் தொழிலாளர் வெள்ளைச் சேலையினைக் கட்டுவர். பந்தலின் முகப்பில் கதலிவாழை (பூவன்) மரங்களைக் கட்டுவது வழக்கமாகக் காணப்படுகிறது.
நாளுக்கு பந்தற்கால் நாட்டி, பந்தலை எழுப்பி, அதனை அலங்கரித்தமை பற்றிச் சடங்கு என்ற நாவல் பின்வருமாறு விவரிக்கின்றது.

இரவு கோண்டாவில் வீட்டிலும் நாளுக்குப் பந்தல்கால்
நட்டனர் . இரவிரவாக வெளிச்சம் வைத்து வீடு முழுவதும் சோடனை வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
கிராமத்து வாழையின் மதமதப்பைக் காட்டுவதாக இருபெரிய கதலி வாழைகள் பழுத்த குலைகளுடன் கந்தையாவின் வண்டிலில் பொன்னம்பலத்தார் வீட்டில் வந்து இறங்கின. படலை வாயிலில் அவை கட்டப்பட்டன. படலையிலிருந்து பந்தல் வரை வர்ணக் கடதாசிச் சேலைகளும் மாவிலைத் தோரணமும் தொங்கின.*
ஈழத்தமிழர்கள், முள்முருக்கு, கல்யாண முருங்கை முதலானவற்றின் கிளைகளையே பந்தற்காலாகப் பயன்படுத்துவர். தேர்வு செய்யப்பட்ட மரத்துக்கு மாவிலைக்கட்டி, பட்டுச்சார்த்துவர். பந்தற்கால் நாட்டும் குழிக்குள் நவதானியங்களையும், பொன்னையும் தூவுவர். வளமை தொடர்பான நம்பிக்கையே இதன் அடிப்படை எனலாம். தமிழக மக்கள், பாக்கு, தேக்கு, மூங்கில் முதலான மரங்களைப் பந்தற்கால்களாகத் தேர்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.* குறிப்பிட்ட மரங்களின் உறுதித்தன்மையும், வளத்தன்மையும் இவ்வாறான தேர்வுகளுக்குக் &filjøIðILDITSGVITLD.
தாலி. கூறை வாங்குதல்
மணப்பெண்ணுக்குரிய முகூர்த்தப் பட்டுப்புடவை, தாலி முதலானவற்றை வாங்குதலைத் தலை கூறை வாங்குதல் என அழைப்பர். நல்லதொரு நாளில் மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் இணைந்து மணமகளுக்குரிய கூறை (முகூர்த்தப் பட்டுப்புடவை), இணைக்கூறை முதலானவற்றையும் ஏனைய சில மங்கலப் பொருட்களையும் வாங்குவர். இதே காலப் பகுதியில் தாலியைத் தாங்கி நிற்கும் கொடியையும் வாங்குவர். இச்செலவுகள் முழுவதும் மணமகன் வீட்டாரைச் சார்ந்ததாகும்."
அண்மைக் காலங்களில் மணமகளுக்குரிய பட்டுப்புடவைகளை வாங்கும் சடங்கு நடைமுறையில்

Page 122
238 «Х•
மணமகளையும் அழைத்துச் செல்லும் வழக்கமும் காணப்படுகின்றது.
மணமகனுக்குரிய பட்டுவேட்டி, சால்வை மற்றும் கணையாழி முதலானவற்றை மணமகளின் வீட்டார் வாங்குதல் மரபாகும்.
பொன்னுருக்குதல்
தாலிக்குரிய பொன்னை உருக்குகின்ற சடங்கு நடைமுறையினைப் பொன்னுருக்குதல் என வழங்குவர். திருமணம் நிகழ்வதற்குச் சொற்ப நாட்களுக்கு முன்பாகவே இச்சடங்கிற்கு நாள் குறிப்பர். இந்நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மணமக்களின் உறவினர்கள் கலந்து கொள்வர். இச்சடங்கை நிகழ்த்தும் பொற்கொல்லர் பூரண கும்பத்தின் முன்னேயிருந்து பொன்னை உருக்குவார். உருகிய தங்கத்தில் நிறைகுடத் தண்ணிரைத் தெளிப்பர். தொடர்ந்து உருகிய பொன்னை எடுத்து வெற்றிலையில் வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுத் தீபம் காட்டுவர். பின்னர் உடைத்த தேங்காய் மூடிக்குள் பொன்னையிட்டு நெருங்கிய உறவினர் கையில் கொடுப்பர். பதிலுக்குப் பொற்கொல்லருக்குத் தட்சணை வழங்கப்படும்.
பொன் உருகும் தன்மையினைக் கொண்டு, மணமக்களின் வாழ்க்கை வளங்களை அறிந்து கொள்ளும் நம்பிக்கையும் காணப்படுகின்றது. பொன்னுருக்குதலின் பின்னர், மணமக்கள் ஒருவரையொருவர் பார்ப்பது அல்லது அமங்கலமான நிகழ்வுகளில் பங்கெடுப்பது முதலான செயற்பாடுகள் தடை செய்யப்படுகின்றன.
சடங்கு என்ற நாவலில், வரும் ‘பொன்னுருக்கல் சடங்கு நடைமுறை பற்றி விவரிக்கும் பகுதியினை இவ்விடத்தில் தருவது பொருத்தமானதாகும்.
அடுத்தநாள் புதன் மாலையே ஆலையூரில் தாலிக்குப் பொன்னுருக்கினர். இச்சடங்குகளைத் தட்டான் பய பக்தியோடு செய்தான் உருகிய தங்கத்தில் நிறைகுடத் தண்ணிரைத் தெளித்தான்.இஸ்ஸ்’ என்ற ஒலி புகையுடன் எழுந்தது.

தட்டான் நாளுக்குப் பொன்னுருக்கினான். தாலிக்காக உருக்கப்பட்ட தங்கத்தை, தட்டான் வெற்றிலையில் வைத்து மஞ்சள் குங்குமம் பூசி தீபம் காட்டி உடைத்த முடித் தேங்காயுடன் இராசதுரை கையில் கொடுத்தான். அவர் மிகுந்த பயபக்தியோடு வாங்கிக்கொண்டு தட்சணை கொடுத்தார்."
பதிவுத் திருமணம்
திருமணத்தைச் சட்ட ரீதியாக உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் திருமணப் பதிவாளர் ஒருவர் முன்னிலையில் அதனைப் பதிவு செய்து கொள்வர். நல்லதொரு நாளில் நடைபெறும் இந்நிகழ்வில் உறவினர்களும் பங்கேற்பர். இந்நிகழ்வில் மணமக்களுக்கு வழங்கப்படவுள்ள சீர்கள் (சீதனம்) தொடர்பான அனைத்து ஆவணங்களும் பரிமாறிக் கொள்ளப்படும். இவ் ஆவணங்களைப் பலரும் அறியும் வண்ணம் பெரிதாகப் படிப்பர். மணமக்களுக்கு வேண்டப்பட்டவர்கள் சாட்சிகளாக ஒப்பமிடுவதுடன் இச்சடங்கு நடைமுறை நிறைவு பெறும்.*
திருமண அழைப்பு
திருமணச் சடங்கிற்கு உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்கும் நடைமுறை இதுவாகும். திருமண அழைப்பில் சில மரபுகள் பின்பற்றப்படுகின்றன. திருமணச் சடங்கிற்கு அழைப்பு விடுக்கச் செல்லும்போது, ஆணும், பெண்ணும் இணைந்து இருவராகச் செல்வர். இவ்வாறு சென்றாலே நடைபெறவுள்ள நிகழ்வில் அழைப்பு விடுக்கப்பட்டவர்களும் குடும்பமாகப் பங்கேற்றுச் சிறப்பிப்பர். அத்துடன் அழைப்பு விடுக்கச் செல்பவர்கள், நெருங்கிய உறவுகளிடத்து அவர்களால் அளிக்கப்படும் உபசரிப்புக்களைச் சிறிதளவாவது ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். இதனைச்சடங்கு என்ற நாவலின் பின்வரும் உரையாடற் பகுதிகள் கொண்டு அறியலாம்.
ஆண்களுக்கு மட்டும் சொல்ல வேண்டிய இடங்களுக்குக் கந்தசாமி சயிக்கிளிலே போய் சொல்லவிட்டு வந்தான். ஆண்களுக்கும், பெண்களுக்குமாகச் சொல்ல வேண்டிய வீடுகளுக்கு அவன் ஒரு பெண்ணையும் முறைக்கு

Page 123
240 «Х»
அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கு அடுத்த வீட்டு இராசக்காவின் எட்டு வயதான இளைய மகளை சயிக்கிளின் முன்புறத்தில் ஏற்றிக் கொண்டான்.
வீட்டுக்காரர் ஒருத்தரும் இல்லையோ?
ஏன் இருக்கிறம். என்ன விஷேடம்?
காலையில் பத்துமணிக்கு சாமத்தியச் சடங்கு இரவு பத்து
மணிக்குத் தாலிகட்டு. அப்ப வாறன்
தண்ணி குடிச்சிட்டுப் போவன் தம்பி எல்லா வீட்டிலையும் குடிச்சு வயிறு நிறைஞ்சு நிறைஞ்சு போச்சு இதென்ன கலியாண வீட்டுக்குச் சொல்லற முறையா?*
திருமணத்தன்று நடைபெறும் சடங்குகள் பூப்புச் சடங்கு
மணப்பெண் பூப்படைந்த காலத்தில் பூப்புச் சடங்கை முறைப்படி செய்திராவிடில் திருமண நாளன்று அச்சடங்கை நிகழ்த்துவர். இச்சடங்கை முதலில் நிகழ்த்திய பின்னரே திருமணச் சடங்கை மேற்கொள்வது மரபாகும். பூப்புச் சடங்கின்போது செய்யப்படுகின்ற அனைத்து நடைமுறைகளும் இச்சடங்கின்போதும் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து நடைமுறைகளும் இச் சடங்கின்போதும் மேற்கொள்ளப்படும். மணமகன் வீட்டாரும் இச்சடங்கில் பங்கெடுப்பர். புனித நீராடித் தூய்மை பெற்ற பின்னர் மணவினைச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெகறும்."
மாப்பிள்ளை அழைப்பு
திருமணச் சடங்கிற்கு மணமகனை முறைப்படி அழைத்து வருதலே மாப்பிள்ளை அழைப்பு என்பதாகும். மணப்பெண்ணின் ஆண் சகோதரர்களில் ஒருவர், ஆண் சகோதரர் இல்லாவிடில் ஒன்றுவிட்ட உறவுகளில் உள்ள சகோதரர்களில் ஒருவர், மாப்பிள்ளைத் தோழனாகச் சென்று மணமகனைச்சடங்கு மேடைக்கு அழைத்து வருவர். இச்சடங்கு நடைமுறையில் குறிப்பிட்ட அளவில் உறவினர்களும் பங்கெடுத்துக் கொள்வர்.

(X 241
மணமகனை அழைக்கச் செல்லும்போது, ஒற்றை எண்களில் அமையக் கூடிய வகையில் வேள்வுத் தட்டுக்களைச் சுமங்கலிப் பெண்கள் எடுத்துச் செல்வது மரபாகும். பாக்கு, வெற்றிலை, கற்கண்டு, பலகாரம், பழம், மஞ்சள், தேங்காய் முதலானவற்றை வேள்வுப் பொருட்களாக எடுத்துச் செல்வர். இவ்வாறு கொண்டு செல்லும் தட்டுக்களை வெள்ளைத் துணி கொண்டு மூடி எடுத்துச் செல்வர்.
மணமகன் வீட்டில், பால், அறுகு ஆகியன கொண்டு மணமகனை நீராட்டுதல், இறைவழிபாடு செய்தல், மணமகனுக்குத் தலைப்பாகை சூட்டுதல், உறவினர்க்கு விருந்தளித்தல் முதலான சடங்கு நடைமுறைகள் முறையே மேற்கொள்ளப்படும். தொடர்ந்து, மணமகனைத் திருமணச் சடங்கு நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் செல்வர். மண்டப முன்றிலில் வைத்து, மணமகனின் கால்களைத் தோழன் நீர் கொண்டு கழுவி விடுவார். அதற்குப் பரிசாக மணமகன் கணையாழியொன்றினை வழங்குவார். மணமகளின் தந்தை, மணமகனுக்கு மாலை சூட்டிய பின்னர், மணமேடைக்கு மணமகன் முறைப்படி அழைத்து வரப்படுவார்.
தோழன், மணமகனை அழைத்து வருதல், அவன் கால்களுக்கு ềỉ வார்த்தல், மணமகனிடமிருந்து கணையாழியினை அன்பளிப்பாகப் பெறுதல் என்பன குறித்துச் சடங்கு என்ற நாவல் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
மாப்பிள்ளைத் தோழனான கந்தசாமி செம்புத் தண்ணிரை மாப்பிள்ளையின் கால்களில் படாது காலடி அருகே ஊற்றினான். சிவங்ானம் தன் கையிலிருந்த ஒரு மோதிரத்தைக் கழற்றித் தோழனின் விரலில் போட்டு விட்டார். தோழன் விரலைப் பிடித்து அழைத்துச் சென்று மாப்பிள்ளையை மணவறையில் உட்காரச் செய்தான். முன்னே ஒம குண்டம் புகைத்துக் கொண்டிருந்தது."
தாலி கட்டுதல்
மணமகன், மணமகளின் கழுத்தில் திருமணச் சின்னமான தாலியை அணிவிப்பதே தாலி கட்டுதல் எனப்படுகிறது.

Page 124
242 ※
தாலியினைத் தங்கத்தால் செய்யப்பட்ட கொடியில் பொருத்தி அணிவிப்பதே தாலி கட்டுதல் எனப்படுகிறது. தாலியினைத் தங்கத்தால் செய்யப்பட்ட கொடியில் பொருத்தி அணிவிப்பதே ஈழத் தமிழர்களின் பெரும்பான்மை வழக்கமாகும். சிறுபான்மையாக மஞ்சள் நூலில் தாலியினைக் கோத்துக் கட்டுவர்.
திருமணத்தினை நிறைவேற்றி வைக்கும் புரோகிதர், ஓமம் வளர்த்து கும்ப பூஜையினை மேற்கொள்வார். கும்ப பூஜை முடிவடைந்ததும் கும்பத்திலிருந்த தாலியைத் தாம்பாளம் ஒன்றில் வைத்துப் பெரியோர்களின் ஆசீர்வாதத்துக்காகச் சபை நடுவே எடுத்துச் செல்வர். சபையினரின் ஆசீர்வாதத்தினைத் தொடர்ந்து, மணமகன், மணமகளின் கழுத்தில் தாலியினைக் கட்டுவான். தொடர்ந்து மணமகன், மணமகளுக்கும், அவள் அணிந்திருக்கும் தாலிக்கும் முறையே குங்குமத்தையிடுவான்.
தாலி கட்டும் சடங்கு நடைமுறை முடிவுற்றதும் அவையோர் மணமக்களை வாழ்த்துவர். மஞ்சள் கலந்த அரிசியினால் கீழிருந்து மேலாகத் தூவி வாழ்த்துவது மரபாகும்*
திருமணத்திலோ, வழிபாட்டிலோ நெல்லும் மலரும் தூவி வாழ்த்துகின்ற மரபு சங்ககாலப் பகுதியிலிருந்தே தொடர்கின்ற மரபாக உள்ளது.*உலக நாடுகள் பலவற்றிலும் திருமணத்தின்போது, பழங்களையோ, தானியங்களையோ மணமக்கள் மீது தூவி வாழ்த்தும் முறைமை என்பது நீணடகாலமாகவே வழக்கில் இருந்து வருகின்றது.* தீய சக்திகளிடம் இருந்து மணமக்களைக் காத்தற்பொருட்டும், வளமை (Fertility) வேண்டியும் இவ்வாறு வாழ்த்துவதாக நம்பப்படுகின்றது.
திருமணச் சடங்கின்போது அரிசி தூவி வாழ்த்துகின்ற வழக்கம் இந்தியப் பழங்குடிகளிடத்தும் காணப்படுதல் கருதத் தக்கதாகும்."
பூதாக்கலம்
திருமணச் சடங்கு நடைமுறைகள் நிறைவுற்றதும், மணமக்களிருவரும் முதன் முதலில் தமக்கிடையே உணவுகளைப் பரிமாறி விருந்துண்பர். இதனைப் ‘பூதாக்கலம்’ எனக் கூறுவர்.

«Х• 243
பெரும்பாலும் வீட்டில் உள்ள வழிபாட்டு அறையில் இவ்விருந்து நடைபெறும். ஒரே இலையில் மணமக்கள் விருந்துண்பர்.
நடுவீடு’ என அழைக்கப்படும் சாமி அறையில் பூதாக்கலம் நடைபெற்றமை பற்றி, அடிமைகள் என்ற நாவலின் பின்வரும் பகுதி விளக்கி நிற்கின்றது.
நடு வீட்டுக்குள் பூதாக்கலம் நடந்து கொண்டிருந்தது. அந்த வேளை உள்ளே சென்று மகனிடம் பேசுவது சரியானதாக அவருக்குப் படவில்லை.
பூதாக்கலத்தை அவசர அவசரமாக முடித்துக்கொண்டு வேலுப்பிள்ளையரும் சீதேவி அம்மாளும் பந்தலுக்குள் வந்து பாதிரியாரை வணங்கி அசீர்வாதம் பெற்றுக் கொண்டனர்.*
திருமண விருந்து
மணமக்களுக்கான பூதாக்கலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே திருமணச் சடங்கில் பங்கெடுத்தோர்க்கான விருந்திடல் வைபவமும் நடைபெறும். ஊரில், உறவில் உள்ள நிறைவாழ்வு வாழ்ந்த ஒருவரிடம் முதன்முதலில் செம்பு தண்ணியைக் கொடுத்து விருந்தைத் தொடக்கி வைப்பர். இவரே தலைச்சன் விருந்தாளி எனக் கருதப்படுவார். முதலில் ஆண்களுக்கும், பின்னர் பெண்களுக்கும் முறையே விருந்து
படைப்பர்."
திருமணத்தின் பின்பதான சடங்குகள்
திருமண நாளன்று நடைபெறும் சடங்குகளுக்கு மேலதிகமாகவும் பல்வேறு சடங்குகள் நடைபெறுகின்றன. மணமக்களோடு தொடர்புடைய இச்சடங்கு நடைமுறைகள் பலவகையினவாகும்.
மணமக்களைப் பார்க்க வருதல்
திருமணச் சடங்குகள் நிறைவுற்றதும், மணமகள், மணமகன் வீட்டில் தங்கி விடுவதே மரபாகும். இவ்வாறு தங்கிவிட்ட

Page 125
244 «Х•
மணமகளை அவளின் பெற்றோர், உறவினர் முதலானோர் மறுநாள் முறைப்படி வந்து பார்ப்பர். வரும்போது கொழுக்கட்டை என்றழைக்கப்படும் இனிப்புச்சுவை கொண்ட பலகாரத்தினை உடன் எடுத்து வருவர்.
சடங்கு என்ற நாவலில், மணமக்களான பரமநாதனையும், ஈஸ்வரியையும் புதுப்பெண் மாப்பிள்ளை பார்க்க வந்தமை பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலையில் கோண்டாவில் இருந்து இரண்டு காரில் பரமநாதனையும் ஈஸ்வரியையும் புதுப்பெண்மாப்பிள்ளை பார்க்க வந்திருந்தனர். பரமநாதனை நன்கு தெரிந்த சில இளைஞர்களும் வந்திருந்தனர்."
இச்சடங்கு நடைமுறை மணமகளைப் புதிய சூழலுக்கு இயைபாக்கம் செய்யும் வகையில் அமைந்துள்ளது எனலாம்.
கோவிலுக்குச் செல்லுதல்
திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் முதன்முதலில் கோவிலுக்குச் செல்வதனை இது குறித்து நிற்கின்றது. மணமக்கள் நிராடித் தூய்மை பெற்ற பின்னர், அவரவர் தத்தமது குல தெய்வங்களையோ இஷ்ட தெய்வங்களையோ வழிபாடாற்றுதல் மரபு. இதனைச் சடங்கு என்ற நாவலின் பின்வரும் பகுதி விளக்கி நிற்கிறது.
நாலாஞ் சடங்கு விருந்துகளுடன் நடைபெற்றது. மறுநாள் நல்லூர் கந்தசாமி கோவிலுக்கும், ஆலையூர் பிள்ளையார் கோவிலுக்கும் இரு சோடிகளும் சென்றனர்."
நாலாஞ் சடங்கு
திருமணம் நடைபெற்று முடிந்த நான்காவது நாளின் பின்னர் உறவினர்க்கும், நண்பர்களுனுக்கும் மாமிசத்துடன் கூடிய விருந்து படைப்பர். இதனை ‘நாலாஞ் சடங்கு' என்று அழைப்பர். திருமணச் சடங்கிற்காக வேலை செய்தவர்களைக் கெளரவிக்கும் வகையில் நடைபெறும் இச்சடங்கில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உறவினர்களும், நண்பர்களும் பங்கெடுப்பர்."

«Х• 245
உறவினர் விருந்து தருதல்
மணமக்களைக் கெளரவிக்கும் வகையில் உறவினர்கள் அவர்களை விருந்துக்கு அழைப்பது வழக்கமாகும். பொதுவாக நாலாஞ் சடங்கு நடந்து முடிந்து பின்னர் இவ்விருந்து வழங்கல் நடைமுறைகள் தொடங்கும். ஆடு, கோழி முதலானவற்றின் மாமிசத்தைக் கொண்டு விருந்து படைப்பர். விருந்து நிறைவுற்றதும் மணமக்களுக்கு அன்பளிப்புக்களையும் வழங்குவர். இவ் அன்பளிப்புப் பெரும்பாலும் பணமாகவே இருக்கும்."
இறப்புச் சடங்கு நடைமுறைகள்
வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகளின் இறுதி அத்தியாயமாக அமைவது இறப்புச் சடங்காகும். இறப்பு என்பது மனித வாழ்வின் இறுதித் கட்டமாகும். பொதுவாக, ஒரு விலங்கு அல்லது தாவரம் தொடர்ந்து அமைதிபெறும் வகையில் அதன் உடல் உறுப்புக்களின் வேலை நின்று விடுவதையே இறப்பு என்பர்.
வேறுபட்ட நாகரிகங்களில் இறப்புக்குப் பின் வாழ்வு பற்றி என்னென்ன கருத்துக்களிருந்தாலும், பொதுவாக இறப்பு என்பது ஒரு முடிந்த முடிபல்ல. அது ஒரு குறிப்பிட்ட உலகிலிருந்து அல்லது நிலையிலிருந்து வேறொன்றுக்குச் செல்லுதலாகும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. ‘பிரிநிலை’, ‘மாறுநிலை’, ‘இணைநிலை’ என்ற மூன்று நிலைகள் மரணத்தின் பின் இருப்பதாக நம்பப்படுகின்றது.*
ஆதிமனிதர்களிடையே முதன்முதலில் தோன்றிய சடங்குகள் ஈமச் சடங்குகளே என்பர்.* இச்சடங்குகள் இனத்துக்கு இனம், இடத்துக்கு இடம் மாறுபட்டுக் காணப்படுகின்றன. பிணத்தை அடக்கம் செய்வதில் பல்வேறு முறைகள் கையாளப்பட்டுள்ளன. பண்டை நாளில் திபெத், அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆதிக்குடிகள், பிணத்தை வெளியே இட்டு விடுவதனை அல்லது விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், உணவாக அளிப்பதனை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மத்தியதரைக் கடற் பகுதியில் வாழ்ந்த மக்கள் பிணங்களைப் புதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
பாலினேசிய பஞ்சாபிலிருந்து பாகர்பந்தி மக்களும், மேற்கு ஆப்பிரிக்க ஆதிக்குடிகளிற் சிலரும், பிணத்தைக் கடலிலோ அல்லது

Page 126
246 «Х•
ஆற்றிலோ விட்டுவிடுவர். அந்தமானியர், அஸ்ஸாம் நாகர்காசிகள் முதலானோர், மரத்தின்மேல் பரண் கட்டி, அதில் பிணத்தை இட்டனர். இவர்களிற் சிலர் பிணங்களை மண்ணில் புதைப்பதனையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இவை தவிர உலகில் பல பகுதி மக்களும் பிணத்தைச் சுடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்துக்களின் வழக்கமும் இதுவே எனலாம்.*
தமிழ் மரபில் இறப்புச் சடங்கு
பண்டைத் தமிழ் இறந்தோர் சடலங்களை ஒழித்தற்குப் பல்வேறு முறைகளை அறிந்திருந்தமை பற்றிச் சங்க இலக்கியங்கள் வாயிலாகவும், தொல்பொருட் சான்றுகள் வாயிலாகவும் அறிய முடிகின்றது.
பிணத்தை ஒழிக்கும் வகைகளாகச் சுட்டு எரித்தல், பானையில் அடக்குதல், கழுகுகளும், நரிகளும் தின்றுவிடும்படி எறிந்து விடுதல், சாதாரணமாகப் புதைத்தல் எனப் பலவழிகள் தெரிந்து கையாளப்பட்டன.*
சடலத்தை அதற்கென ஒதுக்கப்பட்ட புதைக்கும் அல்லது எரிக்கும் இடத்திற்கு உறவினர்கள் எடுத்துச் செல்வது பற்றியும், உடலை அழித்தற்கு முன்பும், பின்பும் அவர்கள் தங்கியிருந்த இடம் மன்றம் என அழைக்கப்பட்டது பற்றியும் பதிற்றுப்பத்திலே விரிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.*
இறந்தோர்க்காக, உப்பின்றி வேக வைத்த சோற்றுருண்டையைப் புலலின் மீது வைத்தமை பற்றியும், மரக்கட்டைகள் மீது பிணத்தை வைத்துத் தீயிட்டமை பற்றியும் புறநானூற்றிலே செய்திகள் கிடைக்கின்றன."
இறந்தோர்க்குச் செய்யும் சடங்குகளைச் சிலப்பதிகாரம், கடன்’ (கடமை) என்றும், உரை, ‘பலிகடன்’ என்றும் குறிப்பிடுகின்றன.
பிணங்களை, ஐவகை முறைகளால் அடக்கம் செய்யப்பட்ட நிலையினை மணிமேகலை குறிக்கின்றது. சுடுகாட்டுக் கோட்டமுரைத்த காதையில்,

8 247
சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர், தாழியிற் கிவழ்ப்போர் .108
என்றவாறு காணப்படுகின்றது.
இறப்பு, பண்டைச் சங்கச் சமுதாயத்தில் பல்வேறு சிந்தனை அலைகளை உருவாக்கியிருக்கிறது என்றும், ஐம்பத்தைந்து பாடல்களில், இம்மை, மறுமை, இறப்பு, ஈமச்சடங்குகள், கைம்மை, உடனுயிர் துறத்தல், ஊழ், உயர் நிலையுலகம், வானவுலகம், இந்திரன், உடனுயிர் துறத்தல், ஊழ், உயர் நிலையுலகம், வானவுலகம், இந்திரன், அமிழ்தம், கீழ்மேல் உலகங்கள், தென்புலம், வாள்போழ்ந்தடக்குதல், உலக நிலையாமை போன்ற பல்வேறு செய்திகள் சங்க இலக்கியங்களிலே காணப்படுதல் பற்றியும், கு.வெ.பாலசுப்பிரமணியன் குறிப்பிடுவது இவ்விடத்தில் கருதத் தக்கதாகும்."
பிணங்களைப் புதைத்தோர், அவற்றை நினைவு கூர்தற்பொருட்டு ஏற்படுத்திய ஈமச்சின்னங்களின் பலவகைகளையும் முறைகளையும் சங்க இலக்கியச்சான்றுகள் மூலமும், புதை பொருட் சான்றுகள் மூலமும் அறிய முடிகின்றது.
மேலே சுட்டிய சான்றுகளின் வழி இறப்புக்குப் பின்பதான வாழ்வு பற்றிய, தமிழரின் சிந்தனையோட்டங்களைக் கண்டுகொள்ள முடிகின்றது. பிணத்தை இடுதல், சுடுதல், புதைத்தல் முதலான நடைமுறைகளின்போது, பல்வேறு வகையான சடங்குகளை மேற்கொள்வதென்பது உலகின் பல்வேறு இன மக்களிடையேயும் தொன்றுதொட்டே இருந்து வருகின்ற ஒரு வழக்கமாகக் காணப்படுகின்றது.
இறப்புச் சடங்கின் நோக்கம்
இறப்புச் சடங்குகள் பல்வேறு காரணங்கள் பற்றி நிகழ்த்தப்படுகின்றன. இறந்தவரை முறைப்படி அடக்கம் செய்தால்,
இறந்து போனவரின் ஆத்மா எவ்விதச் சஞ்சலமும் இல்லாமல் சாந்திபெறும் என்பது இதன் தலையாய காரணமாகும்.
முறைப்படி அடக்கம் செய்யப்படாத பிணங்கள், புதைகுழியிலிருந்து வெளியேறி, வாழ்பவர்களைத் தாக்கி,

Page 127
248 ぐ
அவர்களை வருத்தும் என்ற நம்பிக்கை உலகின் பல்வேறு இன மக்களிடையேயும் காணப்படுவதும் இவ்விடத்தில் கருதத் தக்கதாகும்.
ஈமச்சடங்குகளின் பிரதான நோக்கம் இறந்தோரை, இருப்போரினின்றும் பிரித்து, முன்னால் இறந்து போன மூதாதையினருடன் சேர்ப்பதாகும் எனக் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகின்றது." அழுகிய பிணங்களோடு வாழ்வது சுகாதாரக் கேடானது; பிணங்களை அப்படியே விட்டுவிடுவதும், இடம் மாற்றுவதும் நடைமுறைக்கு ஒவ்வாதது. எனவே மனிதன் அவற்றை ஒழுங்குபடுத்த முனைந்தான் எனக் கருதலாம்.'
ஒருவரது மரணம் அவர் சார்ந்திருந்த குழுவைப் பாதிக்கிறது. அக்குழுவினர் அவர் பிரிவினால் தோன்றிய துக்கத்தை நீத்து, மீண்டும் பழைய நிலையை அடைய வேண்டியுள்ளது. குழுவை விட்டுப்பிரிந்த இறந்தவரும் ஆவியுலகில் நிலைபெற வேண்டியுள்ளது. இவ்விருவகைச் செயற்பாடுகளையும் நிறைவேற்றுவதே இறப்புச் சடங்கின் நோக்கம் எனப் பொதுவாகக் கூறலாம்.
இறப்புச் சடங்கின் வகைப்பாடு
இறப்புச் சடங்கினை அவற்றின் தன்மை கருதி, இறப்புக்கு முன்பதான சடங்குகள், இறப்புக்குப்பின்பதான சடங்குகள் என இருவகையாகப் பாகுபடுத்தலாம்.
மானிடவியலாளரான சீ. பக்தவச்சலபாரதி, இறப்புச் FL Lig53560 GMTÜ Luj-GODFë 9 —sig (Green Funeral), o Gaviipëg5 FL-liig5 (Dry
Funeral) என இருவகைப்படுத்துவார்."
பச்சை சடங்கு என்பது. இறந்தவுடன் செய்யப்படும் சடங்குகளைக் குறித்து நிற்கிறது. இது உடலிலிருந்து ஆவி பிரிந்து இறப்புக்குள்ளாகிய சதைப் பகுதிக்குச் செய்யப்படுவதாகும்.
உலர்ந்த சடங்கானது, ஒருவரது ஆவி இறந்த பின்னரும் சில காலம் வரை அவர்கள் பகுதிகளில் உலவும் என நம்பி, அவ்வாறு உறைந்தபின் ஆவிக்குச் செய்யும் சடங்குகளைக் குறித்து நிற்கின்றது. இறப்பின் பின்பதான சடங்குகள் இவ்வகையினுள் அடங்கும்.

«Х• 249
தமிழக பழங்குடி மக்களில் ஒருபிரிவினரான ‘தோடர் இன மக்கள், இறந்த அன்று செய்யப்படும் சடங்குகளைப் ‘பச்சைச் சாவு என்றும், அதற்கடுத்துச் செய்யும் சடங்குகளைப் பால் சாவு என அழைப்பதும் இவ்விடத்தில் கருதத் தக்கதாகும்."
நாவல்களில் இறப்புச் சடங்கு நடைமுறைகள்
இறப்புச் சடங்கு நடைமுறைகள் பற்றி பல்வேறு செய்திகள் நாவல்களில் கிடைக்கின்றன. கிடைக்கின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இறப்புச் சடங்கை,
1. இறப்புக்கு முன்பதான சடங்குகள்
2. இறந்தவுடன் மேற்கொள்ளப்படும் சடங்குகள்
3. எரியூட்டல் நடைபெறும் நாளன்றான சடங்குகள்
4. இறப்பின் பின்பதான சடங்குகள்
என நான்கு வகையாகப் பாகுபடுத்தி நோக்கலாம்.
இறப்புக்கு முன்பதான சடங்குகள் திருப்புப்பாடுதல்
இறப்புக்கு முன்பதான சடங்குகளில் திருப்புப்பாடி உயிரை அனுப்புதல் என்பது பிரதானமான ஒன்றாகும். இறக்கும் நிலையில் உள்ள ஒருவர் இறப்பதற்கு மிகவும் சிரமப்படுகையில், தேவார, திருவாசகங்களைத் திருப்பாகப் பாடிக் குறிப்பிட்டவரின் உயிரினை வதைபடாமல் அனுப்புவதே இச்சடங்காகும்.
திருப்புப்பாடும்போது, இறக்கும் நிலையில் உள்ளவரின் தலைப் பக்கத்தில் குத்துவிளக்கு ஒன்றை ஏற்றி வைத்த பின்பே அதனைப் பாடத் தொடங்குவர். இறக்கின்றவர், பிற நினைப்புக்களின்றி, இறை சிந்தையுடன் சலனமின்றி உயிர்விடத் ‘திருப்புப்பாடுதல் துணை புரிகின்றது." தமிழகத்தின் செங்கை மாவட்டப் பகுதிகளில் இந்நடைமுறை காணப்படுகின்றது." இப்பகுதி மக்கள், இறக்கும் நிலையில் உள்ள ஒருவரின் வாய்க்குள், பொன், மண், பால்

Page 128
250 X
முதலானவற்றை இழைத்துப் பருக்குவதோடு, தேவார, திருவாசகங்களையும் பாடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இறந்தவுடன் மேற்கொள்ளப்படும் சடங்குகள்
இறப்பு நிகழ்ந்தவுடன் சில வகையான சடங்கு நடைமுறைகள் உடனடியாக மேற்கொள்ளப்படுகின்றன. அவையாவன,
I.
2.
3.
7.
8.
இறந்தவரின் சடலத்தை மரக்கட்டிலில் வளர்த்துதல்
கண் மடல்களை இழுத்து மூடுதல்
வாயைக் கட்டுதல்
. கால்களின் பெருவிரல்களை வெள்ளைத்துண்டு கொண்டு
பிணைத்துக் கட்டுதல்
கைகளை மார்புக்கு மேலாகக் கோத்து விடுதல்
பிணத்துக்கு மேலே ‘எச்சந்தாங்கி’ என அழைக்கப்படும்
வெள்ளைத் துண்டு கட்டுதல்.
வெள்ளைச் சேலை கொண்டு உடலைப் போர்த்துவிடுதல்
தலை மாட்டில் விளக்கேற்றி வைத்தல்
முதலான செயற்பாடுகளை ஒருவர் இறந்த சிலமணித் துளிகளிலேயே மேற்கொள்வர்.
கழுகுகள் என்ற நாவல், இந்நடைமுறைகளில் சில குறித்துப் பின்வருமாறு ஆவணப்படுத்தி உள்ளது.
ஆறுமுகத்தாரின் சடலத்தைச் சுற்றி இருக்கும்
பெண்களை விலக்கிக் கொண்ட சடலத்துக்கருகே வருகின்றான். அவன். திறந்து கிடக்கும் சடலத்தின் கண் மடல்களை இழுத்து மூடுகின்றான். வெள்ளைச் சேலை ஒன்றை எடுத்து நீளமாகக் கிழித்து கைப்பெருவிரல்கள்

ぐ 251
இரண்டினையும் பிணைத்துக் கட்டுகிறான். அதேபோல்
கால்களையும் கட்டப் போனவன் . இன்னொரு வெள்ளைச் சேலையினால் உடலைப் போர்த்து மூடுகின்றான் ."
பிணத்தை மூடும் வெள்ளைத் துண்டினை முகத்தீட்டுச் சிலை என வழங்குவர்." பிணத்தின் மீது கோடித் துணி போர்த்தும் மரபு மிகத்தொன்மையானதாகும். சங்க இலக்கியங்களிலொன்றான புறநானூறு, வீரர்கள் இறந்தபோது, அவர்களின் உடலை, வெள்ளறுவை எனப்படும் தூய வெள்ளாடை கொண்டு போர்த்தியமை பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
.. என் சிறுவனைக் கால்கழி கட்டிலிற் கிடப்பித் தூவெள்ளறுவை போர்ப்பித்திலதே ...'
தமிழக வழக்கில் இந்நடைமுறை இன்றும் பேணப்பட்டு வருகின்றமை கருதத் தக்கதாகும்."
இழவு சொல்லுதல்
இழவு சொல்லுதல்’ என்பது, இறப்புப் பற்றிய செய்தியினை, உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் முதலானோர்க்கு முறைப்படி அறிவிக்கும் செயற்பாட்டைக் குறித்து நிற்கிறது. இதனைக் குரவை வைத்தல்’ எனவும் அழைப்பர்." இழவை, முறைப்படி சொல்லியனுப்பாவிடின், அது ஒரு குற்றமாகவே கருதப்படும் நிலைமை காணப்படுகிறது.
இறந்தவர் வேளாளர் சமூகப் பிரிவைச் சேர்ந்தவரானால், அவரின் இறப்புப் பற்றிய செய்தியினைக் கோவியர் என்ற சமூகப் பிரிவு மக்களே பிறர்க்கு அறிவிக்கும் கடமையைச் செய்வர். இறப்புச் சடங்கைத் தலைமை தாங்கி நடாத்தும் பொறுப்பும் இவர்களுக்குரியதாகும். ஆயினும், அண்மைக் காலங்களில் இறந்தவரின் நெருங்கிய உறவினர்களே இழவு சொல்லும் பணியினைச் செய்து வருகின்றமையைக் காணமுடிகிறது.
இந்நடைமுறை பற்றி ‘கோவிந்த’, 'பஞ்சமர்’ ஆகிய நாவல்களில் வரும் பின்வரும் பகுதிகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

Page 129
252 ふ
அந்த இழவு வீட்டுக்கு விடுபட்டுப்போன உரிமைக்காக கோவியக் கணபதியன், முதலித்தம்பிநயினார் வீட்டுச் சங்கடப் படலைக்குள் நின்று வேலுப்பிள்ளை மணியகாரனின் மரணச் செய்தியைக் குரவை வைத்துக் கூறிவிட்டுச் சென்றான் ... என்னதான் பகைமை இருந்தாலும் வீட்டு வாயலில் நின்று இழவு சொல்லிக் கோவியன் ‘குரவை’ வைத்து விட்டானானால் அந்த இழவு வீட்டுக்குப் போய்த்தான் ஆக வேண்டும் .
கிட்டிணன் அல்லது கிட்டடிணனையொத்த இன்னொருத்தன் தான் ஊருக்குள் இருக்கும் சிறாப்பரின் உறவினர்களுக்கெல்லாம் இழவு சொல்ல வேண்டும் .
இதுகாலவரை கோவியரைத் தவிர உறவினர்கள் யாரும் கட்டாடிக்கோ, பரியாரிக்கோ, சாம்பனுக்கோ பள்ளனுக்கோ, நளவனுக்கோ இழவு சொன்னதில்லை.*
தமிழகத்தின் தென்னார்க்காடு மாவட்டப் பகுதிவாழ் மக்களிடையே காணப்படும் இறப்புச் சடங்கு நடைமுறைகளில், இழவு சொல்லுதல்’ எனும் பணியினைப் பறையர் எனும் சமூகப் பிரிவு மக்கள் செய்து வருகின்றமையும் இவ்விடத்திற் கருதத் தக்கதாகும்.*
பந்தல் போடுதல்
இறப்புச் சடங்கை நிகழ்த்துவதற்கான பந்தல் அமைப்பதனை இது குறித்து நிற்கின்றது. மணவினைப் பந்தல் போலவே இறப்புச் சடங்கிற்கான பந்தல் அமைப்பதிலும் சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இறப்பு நிகழ்ந்தவுடனேயே பந்தல் போடும் வேலைகளை உறவினர்களும், அயலவர்களும் தொடங்கி விடுவர். பந்தலை அமைக்கும்போது, அதனைத் தட்டுப் பந்தலாக அமைத்தலே மரபாகும். பந்தலை வேய்வதற்குப் பச்சைத் தென்னோலையைப் பயன்படுத்துவர். பந்தலின் முகப்பில் ‘மொந்தன் வாழைகளைக் குலைகளுடன் (தார்) கட்டி விடுவதோடு மாவிலை, தோரணங்களையும் கட்டி விடுவர்.

* 253
தோரணம் மேல் நோக்கிய மூன்று மடிப்புக்களுடன் அமைக்கப்படும். மாவிலையைப் பிரத்தியேகமாக உட்பக்கமாக வளைத்துக் குத்துவர். மங்கல நிகழ்ச்சிகளின்போது கட்டப்படும் மாவிலை தோரணங்களுக்கும், இறப்புச் சடங்கின்போது கட்டப்படும் மாவிலை தோரணங்களுக்கும் இடையே அமைப்பு நிலையில் வித்தியாசங்கள் பேணப்படுகின்றன.
பந்தலின் மேற்புறத்தைச் சலவைத் தொழிலாளரைக் கொண்டு, வெள்ளைச் சேலைகளால் மறைத்துக் கட்டுவர். இதனை ‘வெள்ளை கட்டுதல்’ என வழங்குவர். சலவைத் தொழிலாளர்க்குரிய குடிமைப் பணிகளில் இதுவும் ஒன்றாகும்.
பந்தல் போடும் நடைமுறைகள் குறித்து, 'தண்ணீர்’, ‘கானல், ‘சடங்கு’, ‘கழுகுகள்’ ஆகிய நாவல்கள் முறையே பின்வருமாறு சித்திரித்துள்ளன.
இரண்டாவது மனைவியையும் இழந்து விட்ட ஏக்கத்தில் கறுத்தான் ஓரிடத்தில் குந்தியபடியே இருந்து விட்டான்.
நான்கு பனந்தடிகளை நட்டுவைத்து பச்சைத் தென்னை ஒலைகளைப்பரப்பி ஒரு தட்டுப்பந்தல் .
அப்புவுக்கு ஒரு செத்த வீடு. வெள்ளை கட்டப் போட்டு தாக்கும் அதுதான் நான் வந்தனான்.
முற்றத்துத் தட்டிப் பந்தலுக்கு சரவணமுத்து வெள்ளை கட்டினான். பந்தலைச்சுற்றி மாவிலை தோரணம் கட்டப்பட்டது. மேற்குப்புற வாசலில் இரண்டு மொந்தன் வாழைகள் கட்டப்பட்டன .
முற்றத்தில் பந்தல் ஒன்றைப் போடுவதற்காக மரந்தடிகளைத் தூக்கி வந்து, கிடங்குகள் தோண்டி கம்புகளை நாட்டி, குறுக்கே தடிகளை வைத்துக் கட்டுகிறார்கள் .*
பறைமேளம் அடித்தல்
இறப்பு நிகழ்ந்தவுடன் பறை முழக்கும் ஏற்பாடுகள் உடனேயே மேற்கொள்ளப்படும். 'பறையர்’ எனும் சமூகப் பிரிவு மக்கள்

Page 130
254 «Х•
இப்பணியை ஆற்றுவர். பறை முழக்கத்தினைக் கேட்ட மாத்திரத்திலேயே ஊரவர், இறப்புப் பற்றி விசாரித்து அறிந்து கொள்வர்.
முதிர்ந்தவர்கள் மேளத்தினை அடிக்க, சிறுவர்கள் ‘தம்பட்டை எனும் சிறிய மேளத்தைத் தாளத்துக்கேற்ப முழக்குவர். வெளியூரார் இறப்புச் சடங்கிற் கலந்து கொள்ள வரும்போது அதனைத் தமது முழக்கத்தின் மூலமே இவர்கள் உணர்த்தி விடுவது கருதத்தக்கதாகும். இதன்மூலம் இறப்புச் சடங்கில் பங்கெடுக்க வருவோர், இறப்புக்கு உள்ளானவரின் உறவுகளுடன் துயரைப் பகிர்ந்து கொள்ள இயைபாக்கப்படுவதுடன், குறிப்பிட்ட வீட்டினரும் அவர்களை எதிர்கொள்ளத் தயாராகின்றனர் எனலாம்.
இறப்புச் சடங்கிலே, பறை முழக்குதலின் முக்கியத்துவம் பற்றி, சடங்கு என்ற நாவலின் பின்வரும் பகுதி விளக்கி நிற்கிறது.
பறைமேளம் அடிக்காமல் செத்த வீடா? இணுவில், கோண்டாவில் பக்கத்துப் பறையரைக் கொண்டு மேளம் அடிப்பிக்கலாமே .
சிறிது நேரத்தில் பறையர் வந்து மேளம் கொட்டினர். ஆண்களும், பெண்களும் சிறுசிறு கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். பறைமேளம் ஆட்கள் வருகையை அறிவிக்க விட்டுவிட்டு ஒலித்தது .*
இறப்புச்சடங்கில் ‘சாப்பறை முழக்கும் மரபு பண்டைத் தமிழர்களிடமும் வழக்கில் இருந்தமை பற்றி அறிய முடிகின்றது. புறநானூற்றுப் பாடலொன்றில், ஒரில்லத்தில் மண முழவும், இன்னோரில்லத்தில் சாப்பறையும் முழங்குமாறு உலகைப் படைத்தவனைப் பண்பிலான் எனக் குறிப்பிடுவது கருதத் தக்கது.*
பாடை கட்டுதல்
இறந்தவரின் உடலை, இறுதிச்சடங்கு நடைபெறும் இடத்திற்கு எடுத்துச் செல்லப் பயன்படும் ஒருவகைக் கருவியே பாடை

255
என்பதாகும். அவரவர் வசதிக்கேற்பப் பாடையினை அழகாக அமைப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். உறவினர், பிணத்தை உடலிற் சுமந்து செல்வதற்கு வசதியாகப் பாடை அமைக்கப்படும். இது ‘பூப்பாடை’, ‘பாடைத்தட்டு’, ‘பாடைத் தடல்’, ‘தண்டிகை எனப் பலவகைப்படும்.
பாடையினைக் கமுகஞ்சலாகை கொண்டு கட்டுவதே வழக்கமாகும். பாடை கட்டுவதில் நிபுணத்துவம் கொண்டவர்கள் இப்பணியைச் செய்வர். சலவைத் தொழிலாளர், பாடைக்குச் சேலை சுற்றி உதவுவர். தென்னைப் பூவைப் பாடையின் மேற்புறத்தில் குத்துவதுடன் கடதாசிப் பூ என அழைக்கப்படும் ஒருவகைப் பூவினால் பாடையில் பிற பகுதிகளை அழகுப்படுத்துவர். அண்மைக் காலங்களில் பாடையினை அழகுபடுத்துவதற்கு வர்ணக் கடதாசிகளைப் பயன்படுத்தும் வழக்கமும் காணப்படுகின்றது.
பாடையின் உட்புறத்தே பச்சைத் தென்னோலையினால் பின்னப்பட்ட ‘பன்னாங்கிலே பிணத்தை வளர்த்திச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வர்.
பாடை கட்டும் மரபு பற்றி, ‘சடங்கு’, ‘தண்ணிர்’ ஆகிய நாவல்களில் வரும் குறிப்புக்கள் முறையே விளக்கி நிற்கின்றன. அவை வருமாறு,
வளவில் ஒருபுறத்தில் பாடை கட்டும் வேலை நடந்த கொண்டிருந்தது. கலாதியா பூப்பாடை கட்ட வேணும் கந்தையா அச்சுறுத்தினார் . நயினார் வீட்டின் கிணற்றடியில் தறிக்கப்பட்ட கமுகைப் பிளந்தும், கீலமாக்கியும் கட்டப்பட்ட பாடைத்தட்டு .
கமுகந்தடியால் ‘பாடைத்தட்டு’ ஒன்று கட்டப்பட்டது
夏26
பாடை கட்டி அதன்மேல் பிணத்தை வைத்துச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் மரபு சங்ககாலப் பகுதியிலேயே இருந்திருக்கின்றது. பாடையினைக் கால்வழி கட்டில்’ எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது. கள்ளிச் செடிகள் மண்டிய களரியாகிய சுடுகாட்டிலே, ‘வெள்ளில்’ ஆகிய பாடையை இறக்கி வைத்தமை பற்றிப் பிறிதொரு பாடல் குறிப்பிடுகின்றது.*

Page 131
256 x
எரியூட்டல் நடைபெறும் நாளன்றான சடங்குகள்
இறப்புக்குள்ளானவரின் உடலை எரியூட்டல் செய்யும் நாளன்று நடைபெறும் சடங்கு நடைமுறைகள் இவையாகும்.
தேவாரம் பாடுதல்
இறப்பு நடைபெற்றவுடனேயே இறந்தவரின் தலைமாட்டில் குத்துவிளக்கை ஏற்றி வைத்து, தேவார, திருவாசகங்களை ஒதுகின்ற மரபு இன்றுவரை காணப்படுகின்றது. இறப்புக்குள்ளானவரின் உறவினர்கள் மாறிமாறிப் பாடுவர். ‘சவக்கிருத்தியம்’ ஆரம்பிக்கும் வரையும் தேவாரம் பாடுதல் தொடரும். பின்பு சுண்ணம் இடிக்கும் போதும், பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் போதும் பாடுவர்.
பஞ்சமர் என்ற நாவலில், தேவாரம் பாடும் இச்சடங்கு நடைமுறை குறித்து விரிவான செய்தி கிடைக்கிறது. அச்செய்தி வருமாறு:
சண்முகம் முதலாளியாரின் கட்டையைச் சுற்றி நெய் விளக்குகள் எரிய, சாம்பிராணிப் புகை மூடம் மேலெழுந்து பரவப்பரவ, அங்கொரு கூட்டம் இங்கொரு கூட்டமாக சந்தனக் குச்சிகள் வாழைத்தண்டில் புதைத்து வைக்கப்பட்டு புகைந்து நூல்போல புகைத் தளிர்களை விடவிட, ஆள்மாறி ஆள்மாறி ஒதுவார்களின் தேவார திருவாசகக் குரல்கள் எழ, சாவீடெங்கும் அமைதியானதும் பக்தி சிரத்தையானதுமான சூழ்நிலை புதைந்து கிடந்தது
፲፭8
இறந்தவரின் ஆத்மா சாந்தி பெறக் கருதியும், இழப்பினால் அழுது அழுது இளைத்துப்போயுள்ள உறவினர்க்குச் சிறிது ஆறுதல் தரவும் தேவாரம் பாடுதல் உதவுகின்றது.
சவக்கிருத்தியம்
இறந்தவரின் உடலுக்கு மேற்கொள்ளப்படும் கிரியைகளைச் ‘சவக் கிருத்தியம்’ என அழைப்பர். இக்கிரியைகளைச்

8 257
செய்வதற்கென்றே தனியான புரோகிதர்கள் காணப்படுவர். இவர்களைச் 'சைவக்குருக்கள்’ என அழைப்பர்.
சிதைக்குத் தீ மூட்டுபவர்கள் நிராடி, பூனூல் தரித்து இச்சடங்கு நடைமுறைகளில் பிரதான பங்கை வகிப்பர். இறந்தவரின் உடலாகிய சவத்தைச் சிவமாக மாற்றி நடைபெறுகின்ற இச்சடங்கிலே, கும்பங்கள் பரப்பி, ஓமம் வளர்த்து, மந்தமிரங்களும் ஒதப்படும். கிருத்திய நிறைவில் சுண்ணமிடித்துத் தீபம் காட்டுதலுடன் இக்கிரியைகள் நிறைவு பெறும்.
'சவக்கிருத்தியம்’ பற்றியும், இறப்புச் சடங்கில் அதன் முக்கியத்துவம் பற்றியும் சடங்கு என்ற நாவல் பின்வருமாறு விவரிக்கின்றது.
பறை மேளம் நிறுத்தப்பட்டது.
கிருத்தியங்கள் துரிதமாக நடைபெற்றன.
குருக்கள் கும்பங்களைப் பரப்பினார். விறகுச் சுள்ளிகளைக் குவித்து நெய்யை ஊற்றி நெருப்பை மூட்டினார். மந்திரங்களை ஒதினார். பரமநாதனுக்குப் பூணுாலிட்டு விரலில் தர்ப்பை முடிந்து சடங்குகளை அவன் மூலம் செய்ய ஆரம்பித்தார்.
அய்யா கொஞ்சம் கெதிப்படுத்துங்கோ! நேற்று மத்தியானம் செத்த பிணம் .
கந்தையா அவசரப்படுத்தினார். அடிக்கடி அவர் நினைவூட்டு வதைக் குருக்கள் விரும்பவில்லை .
இப்ப அது பிணமில்லை. தெய்வமாக வைச்சுத்தான் நாங்கள் எல்லா இறுதிச் சடங்குகளும் முறைப்படி செய்வம். குறைகள் விட்டால் அதாலை உங்களுக்குத் தான் தீங்கு .*
குளிப்பாட்டுதல்
சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் முன்பு, பிணத்தை நீராட்டுதல் செய்வர். இதனைக் குளிப்பாட்டுதல்’ என வழங்குவர். ஆரம்பச் சவக்கிருத்தியம் முடிந்த பின்னர் இக்குளிப்பாட்டுதல் நடைபெறும். பிணத்தை இருத்திக் குளிப்பாட்டுவதற்கு வசதியாக, மூன்று

Page 132
258 «Х»
முருக்கங்கதியால்களை (குச்சி) நட்டு, அதன்மேல் கோடித் துணிகொண்டு நிழலமைப்பர். இதனைச் சலவைத் தொழிலாளரே மேற்கொள்வர். இந்நிழலின் கீழே, உரலின் மேல் பிணத்ன்த நிமிர்த்தி உட்கார வைத்து, உறவுமுறையினர் ஒருவர்பின் ஒருவராக வந்து, அரப்பு, எலுமிச்சம்பழம், எண்ணெய் முதலானவற்றால் உண்டான கலவையினை இறந்தவர் தலையில் வைப்பர்.
சிதைக்குத் தீ மூட்டுபவர் இறுதியாக அரப்பு எண்ணெய் வைப்பார். பின்பு கும்பத்து நீரைக் கொண்ட குளிப்பாட்டுதல் நடைபெறும். குளிப்பாட்டுதல் முடிந்த பின்னர், பிணத்துக்குப் புத்தாடையுடுத்தி மீண்டும் பந்தலுக்குள் கிரியைகளுக்காக எடுத்து வருவா.
சடங்கு என்ற நாவலின் பின்வரும் பகுதி இந்நடைமுறை குறித்து விளக்குவதாக உள்ளது.
ஆரம்ப கிருத்தியச் சடங்குகள் முடிந்தன. இனிக் குளிப்பாட்டலாம் குருக்கள் உத்தரவிட்டார்.
கோடிப் புறமாகச் சவத்தை எடுத்துச் சென்றனர். அங்கே மூன்று முருக்கங்கதியால் நட்டு, கோடித் துணியொன்றால் வெள்ளை கட்டியிருந்தான் பறையன். அதன் அருகே சவப்பெட்டியிருந்த கட்டிலை வைத்தனர். அரப்பு, வெட்டிய எலுமிச்சம்காய்கள் இருந்த தட்டத்தைச் சவத்தின் தலை மாட்டில் அம்பட்டன் வைத்திருந்தான். அரப்பெண்ணை வைக்க வந்தவர்கள் அதைத் தொட்டு தலைப்பக்கமாக வெளியே போட்டனர்.
குருக்கள் பரவிய கும்பங்களை எடுத்துவந்து பரமநாதன் கையில் கொடுக்க, அவன் தலைப்பக்கமாக ஊற்றினான். அத்தண்ணீரில் சிறிதளவைக் கையில் ஏந்தி சடலத்தின் மேல் கந்தையா தெளித்தார்.
இராசக்காவும் மற்றொரு பெண்ணுமாக மிகச் சிரமப்பட்டு, கூறைச் சேலையை உடுத்தியதுபோல உடலில் சுற்றி விட்டனர்.
மீண்டும் சவத்தை எடுத்து வந்து பந்தலின் கீழ் வைத்தனர். மீண்டும் குருக்கள் மந்திரங்கள் ஒதினார். *

8 259
சுண்ணமிடித்தல்
இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டிப் பந்தலுக்குள் எடுத்து வந்தவுடன் சுண்ணமிடித்தற் சடங்கு நடைபெறும். இச்சடங்கின்போது, மாணிக்கவாசக சுவாமிகளின் திருப்பொற் சுண்ணப் பாடல்களை ஒதுவார்கள் ஒத, ஒவ்வொரு பாடலின் முடிவிலும், உரலுக்குள் உலக்கைக் கொண்டு இடிக்கப்படும். உரலுக்குள், அறுகம் புல், மஞ்சள் முதலானவற்றை இட்டுத் துவைப்பது மரபாகும். உடழலுக்குத் தீ மூட்டுபவரே சுண்ணமிடித்தற் சடங்கினைச் செய்வார். இருவர் ஒரே நேரத்தில் தீ மூட்டும் நிலை காணப்படின் இருவராகச் சேர்ந்து சுண்ணமிடிப்பர். பாடல்கள் நிறைவு பெற்றதும், சுண்ணப்பொருளை இறந்தவரின் கண்களின் மேலே வைத்து அழுத்தி விடுவர். தொடர்ந்து இறந்தவர் உடலுக்குத் தீபம் காட்டி வணங்குவர்." நெய்ப்பந்தம் பிடித்தல்
சுண்ணமிடித்தற் சடங்கு நடைபெறும் போது, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் இறந்தவரின் உடலைச் சுற்றி நின்று நெய்ப்பந்தம் பிடிப்பர். பெயரன், பேத்தி முறையானவர்கள் இறக்கும்போது அவர்களின் பேரக் குழந்தைகள் நெய்ப் பந்தம் பிடிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. உடலை வளர்த்தியிருக்கும் கட்டிலைச் சுற்றி வாழை மடல்களின் மேலே சூடத்தினையும் ஏற்றி வைப்பர். நெய்ப்பந்தம் பிடித்தல் என்பது, உறவினர்க்குரிய கடமையாகக் கருதப்படுகின்றது.
சடங்கு என்ற நாவலில் வரும் பத்மாவின் இறுதிச் சடங்கில், அவளின் சகோதரர்களும் உறவினர்களும் நெய்ப்பந்தம் பிடித்தமை பற்றிய செய்தி பயின்றுள்ளது.
கந்தையா ஏற்பாடு செய்த இணுவில் பாட்டுக்காரர் திருப்பொற்சுண்ணம் பாட, பரமநாதன் சுண்ணம் இடித்தான் . தவமலர், ராணி மற்றும் உறவினர்கள் நெய்ப்பந்தம் பிடித்தனர் மீண்டும் பறை ஒலித்தது.*
தாலி கழற்றுதல்
இறப்புச் சடங்குகள் நிறைவுற்று, உடலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சல்லும் முன்னர் இறந்தவர் மனைவியின் தாலியினைக்

Page 133
260 «Х•
கழற்றி, அதனைக் கட்டியவருக்கே அணிவித்து விடுவர். இதனை மனைவி தனது கையினாலேயே செய்வாள். அத்துடன் முகூர்த்தப் பட்டுப்புடவையினையும் இறந்தவரின் மேல் போர்த்து விடுவர்.*
தமிழக வழக்கில் ‘தாலி வாங்குதல்’ எனக் குறிப்பிடப்படும் இச்சடங்கு, இறுதிக் கிரியைகள் நடைபெற்று முடிந்த சில நாட்களின் பின்னரே நடைபெறுவது இங்கு கருதத் தக்கதாகும்.*
வாய்க்கரிசி போடுதல்
இறந்தவரின் வாய்க்குள், வறுத்த அரசி, தேங்காய்ச் சில்லு (சொட்டு), நாணயக்குற்றி முதலானவற்றை இடுதலே வாய்க்கரிசி போடுதல்’ என்பதாகும். சவக்கிருத்தியங்கள் யாவும் முடிந்த பின்னர், பந்தலுக்குள் வைத்துப் பெண்கள் வாய்க்கரிசியினை முதலில் போடுவர். ஆண்கள் சுடுகாட்டில் வைத்தே வாய்க்கரிசியினை இடுவர். வாய்க்கரிசியிடுதலின் போது போடப்படுகின்ற பணம் கலவைத் தொழிலாளிக்குரியதாகும்.
‘வாய்க்கரிசி’ போடும் சடங்கு நடைமுறை பற்றி சடங்கு கழுகுகள் முதலான நாவல்களின் பின்வரும் பகுதிகள் விவரிப்பனவாக அமைந்துள்ளன.
வாய்க்கரிசி போடுற பெண்டுகள் வாங்கோ கந்தையா அறிவித்தல் கொடுத்தார். வந்த பெண்கள் கையில் சில்லறையைக் கொடுத்தார். சில்லறைப் பணத்தை அம்பட்டன் பிடித்த சால்வைக்குள் போட்டுவிட்டு வாய்க்கரிசியைப் பத்மாவின் வாயில் போட்டனர்.
சவப்பெட்டியை அடுக்கியிருந்த விறகின்மேல் வைத்தனர் ஆண்களையெல்லாம் வாய்க்கரிசி போட வரும்படி அழைத்து சில்லறை கொடுத்தார் கந்தையா, கடைசியாக வாய்க்கரிசி போடும்போது பரமநாதன் கதறி அழுதான்.
உறவுக்காரர்கள் சில்லறைகளையும், வறுத்த அரிசி தேங்காய்ச் சொட்டு என்பனவற்றையும் சேர்த்து சடலத்தின் மார்பிலே இட்டு வாய்க்கரிசி போடுகிறார்கள். சலவைத் தொழிலாளி சில்லறைகளைப் பொறுக்கி எடுக்கிறான்."

(X 261
வாய்க்கரிசியிடலை, இறை காணிக்கையாகக் கருதுகின்ற அதேவேளை, இச்செயற்பாட்டின் மூலம் இறந்தவரின் ஆசைகள் பூர்த்தி செய்யப்பட்டு, மீண்டும் அவர் இப்பூவுலகில் பிறப்பது தவிர்க்கப்படுகின்றது எனவும் நம்புகின்றனர்.*
மாரடித்தல்
இறந்தவரின் அருமை, பெருமைகளை அவரின் உறவுக்காரப் பெண்கள் ஒப்பாகச் சொல்லி, மார்பில் அடித்துப் பாடுதலே மாரடித்தல் என அழைக்கப்படுகின்றது. தமிழில் இதனை, ஒப்பாரி, பிலாக்கணம், பிணக்கபாணம், புலம்பல், இரங்கற்பா, கையறு நிலைப்பாட்டு, இழவுப்பாடல், சாவுப் பாட்டு, அழுகைப்பாட்டு எனப் பலவகையாக அழைப்பர்.
ஒருவர் இறந்தவுடனேயே மாரடித்துப் புலம்புதல் தொடங்கி விடும். இறுதிப் கிரியைகள் நிறைவுற்றுப் பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் முன்பாக உறவுக்காரப் பெண்கள் ஒன்றுகூடிப் பிணத்தை மூன்று முறை சுற்றி வந்து மாரடிப்பர். இதன் பின்னரே பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வர்.
‘மாரடித்துப் புலம்புதல்’ என்பது இறப்புச் சடங்கின் ஓரங்கமாகவே அமைந்து விட்டதனைச் சடங்கு என்ற நாவலின் பின்வரும் உரையாடல் பகுதி விளக்கி நிற்கிறது.
மாரடிச்சு ஒப்பாரி சொல்லுறவையெல்லாம் வாருங்கோ சவத்தைத் தூக்கப் போறம் .
கந்தையா அறிவித்தல் கொடுத்தார். பெட்டியைச் சுற்றி வந்து பெண்கள் மாரடித்தனர். சவப்பெட்டியைத் தூக்கியதும் ஒப்பாரி சொல்லினர்."
மார்பிலடித்துப் புலம்புகின்ற மரபு மிகவும் தொன்மையான ஒன்றாகும். சங்க இலக்கியங்களில், இறந்துபட்டோரின் உரிமை மகளிரும், பிற பெண்டிரும் தம்முடைய கைவளைகள் சிதறுமாறு தம் மார்பகங்களில் அறைந்து புலம்பிப் பூசலிட்ட செய்திகள் கிடைக்கின்றமை கருதத்தக்கதாகும். இளவெளிமான் என்னும் வள்ளல் மாய்ந்தபோது, அவன் மகளிர் மாரடித்துப் புலம்பியதைப் பின்வரும் புறநானூற்றுப் பாடலடிகள் காட்டுவனவாக உள்ளன.

Page 134
ஊழினு ருப்ப வெருக்கிய மகளிர் வாழைப் பூவின் வளைமுறி சிதற*
மாரடித்தல் மூலம் இறந்தவரின் உறவினர்கள் தம் மனக்குறையினைப் போக்கிக் கொள்கின்றனர்.*ஒப்பாரி பாடுவதன் மூலம் இறந்தவர்களின் ஆவிகள் சாந்தியடைவதாகவும், ஒப்பாரி பாடாவட்டால் ஆவிகள் துன்புறுவதாகவும் நாட்டப்புற மக்கள் நம்புகின்றனர். ஆவிகள் இவ்வுலகம் விட்டு மறுவுலகம் செல்ல, ஒப்பாரிப் பாடல்கள் இறக்கைகளாகப் பயன்படுகின்றன என்ற நம்பிக்கை உலகின் பல்வேறு இன மக்களிடையேயும் வழக்கில் உள்ளது.*
பிணத்தைக் காவுதல்
இறந்தவரின் பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதிலும் பல்வேறு சடங்கு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பிணத்தினை வீட்டிலிருந்து வெளியில் எடுத்துச் செல்லும்போது அதன் கால்பக்கமாகவே எடுத்துச் செல்ல வேண்டும் என்ற மரபு பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இதனைக் கால்மாட்டால் தூக்குதல்’ என அழைப்பர். பிணத்தைத் தூக்கிச் சென்று பாடையில் வைத்த பின்னர், பாடையினால் மூன்று முறை வீட்டின் கூரையினைத் தட்டிச் செல்வதே மரபாக உள்ளது.
பிணத்தைக் காவிச்செல்லும் நடைமுறை குறித்து 'சடங்கு’, “கழுகுகள்’, ‘குமாரபுரம்’ ஆகிய நாவல்களில் வருகின்ற பின்வரும் உரையாடற் பகுதிகள் முறையே விளக்கி நிற்கின்றன.
கந்தையா உட்பட நால்வர் சவப்பெட்டியைத் தூக்கினர்.
கால் மாட்டால் தூக்கிப் போக வேணும் கந்தையா சத்தமிட்டார் .
சவப்பெட்டியைத் தூக்கிச் சென்று பாடையில் வைத்தனர்
பிரேதம் தூக்கும் குடிமக்கள் பாடையைப் பந்தல் அருகே தூக்கி வந்து வைத்து அதனுள்ளே ஆறுமுகத்தாரின்

சடலத்தைக் கிடத்தி, பாடையைத் தோளின்மேல் சுமந்து மூன்று தடவைகள் சுற்றிவிட்டுப் புறப்படுகிறார்கள். ஒய்ந்திருந்த பெண்கள் எழுந்து நின்று சம்பிருதாய பூர்வமாக ஒலமிட்டுக் கதறுகிறார்கள்.
பாடையை உயர்த்தினார்கள். வேலியில் கதியால்களை வெட்டியிருந்த இடைவெளியினூடாகப் பாடையைக் கடத்தினார்கள். குமாருவின் இறுதியாத்திரை ஆரம்பமாகி விட்டது.*
பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது, வழமையாகப் பாவிக்கும் பாதையால் (Gate) கொண்டு செல்லாது, புதிதாக வேலியை வெட்டி அதனூடாக எடுத்துச் செல்வர். இதனை வழிவெட்டிப் போதல்’ என அழைப்பர். தினமும் பாவிக்கும் பாதையால் பிணத்தைக் கொண்டு சென்றால், மீண்டும் அப்படியொரு நிகழ்வு வந்துவிடுமோ என்று அஞ்சுவதே இதற்குக் காரணம் எனலாம். அண்மைக் காலங்களில் கற்சுவர் பாவனை மிகுதியாகிவிட்ட நிலையில் இச்சடங்கு நடைமுறைகளில் நெகிழ்ச்சிப் போக்குகள் காணப்படுகின்றன.*
சுமையிறக்கல் சடங்கு
வயிற்றுப்பிள்ளையுடன் பெண்கள் இறக்க நேரிடின் குறிப்பிட்ட பெண்ணின் வயிற்றைக் கிழித்துச் சுமையை வெளியேற்றிய பின்பே எரியூட்டுவர். இதனைச் ‘சுமையிறக்கல் சடங்கு’ என அழைப்பர். இச்சடங்கை நாவிதர்கள் சுடலையில் வைத்துச் செய்வது வழக்கமாகும்.
தண்ணிர் என்ற நாவலில் வரும் தெய்விவயிற்றுப்பிள்ளையுடன் இறந்து விடுகிறாள். இந்நிலையில் வயிற்றுப்பிள்ளையுடன் அவளை அடக்கம் செய்தால் பிள்ளையின் தந்தைக்கு ஆபத்து எனக் கூறும் மூத்தத்தம்பி நயினார், சொடுகன் என்பவனை நோக்கி.
சொடுகன் உன்ரை மோள் சுமையோட போட போட்டாள். அங்காலை அவளின்ரை சுமையை இறக்க ஆளில்லாமல் அந்தரிச்சுப் போவாள். அவள் அங்கை அந்திரிச்சா அது அவளின்ரை வயித்திலை இருக்கிற பிள்ளையின்ரை

Page 135
264 x
தேப்பனுக்குத்தான் கூடாது. அதுதான் நான் சொல்லுறன் சவக்கிடங்குக்கை வைச்சு அவளின்ரை சுமையை இறக்கிப் போடு மறந்திடாதை .*
எனக் கூறுவதானது ‘சுமையிறக்கல் சடங்கை நிறைவேற்றும்படி வற்புறுத்துவதாக அமைகின்றது. அண்மைக் காலங்களில் இச்சடங்கு நடைமுறை மிகவும் அருகி வருவதனைப் பார்க்க முடிகின்றது.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சுமை தாங்கிக்கல் அமைக்கும் நடைமுறையுடன் சுமையிறக்கல் சடங்கை இணைத்து நோக்க முடிகின்றது. கருவுற்ற பெண், பிள்ளைப் பேற்றுக்கு முன் இறந்து விட்டால் அவள் நினைவாகச் சுமைதாங்கிக் கல் அமைக்கப்படுகின்றது.* குறிப்பிட்ட பெண்ணின் வயிற்றுச் சுமையாகிய குழந்தையின் ஆவி, குறித்த கல்லில் தங்கும் என்பதே இதன் நம்பிக்கையாக உள்ளமை இங்கு கருதத் தக்கதாகும். இதன் தொடர்ச்சியே நிழற்குடை அமைக்கும் பழக்கம் எனக் கருதலாம்.*
நெஞ்சாங்கட்டை வைத்தல்
இறந்தவர் உடலை, எரியூட்டல் செய்தவற்கு முன்பாகச் சிதையை மூன்று முறை சுற்றி வந்த பின்னர், அதனைச் சிதையின்மேல் வைப்பர். பின்னர், இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் ஒன்று சேர்ந்து, 'நெஞ்சாங்கட்டை’ என அழைக்கப்படும் பெரியதொரு மரக்குற்றி ஒன்றினைப் பிணத்தின் நெஞ்சுப்பகுதியின் மேலே வைப்பர்.*இது நெஞ்சாங்கட்டை என அழைக்கப்படும். இதன் பின்னர் கொள்ளிக்குடம் சுற்றுதலும் கொள்ளி வைத்தலும் முறையே நடைபெறும்.
கொள்ளி வைத்தல்
இறப்புச் சடங்கில் ‘கொள்ளி வைத்தல்’ எனும் சடங்கு நடைமுறையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. பிணத்தை எரியூட்டல் செய்வதற்கு நெருப்பைப் பற்றவைக்கும் ஆரம்ப நிகழ்வே கொள்ளி வைத்தல் எனப்படுகிறது. கொள்ளிக்கு உரிய கட்டை, வீட்டில் செய்யப்படும் கிரியைகளின்போதே தயார் செய்யப்படும். தந்தை இறக்கின் மூத்த ஆண் பிள்ளையும், தாய் இறக்கின் இளைய ஆண் பிள்ளையும்

(X 265
கொள்ளி வைப்பது மரபாகும். ஆயினும் பிள்ளைகள் கொள்ளி வைக்க முடியாத நிலையில், நெருங்கிய உறவுக்காரர் (உருத்துக்காரர்) கொள்ளியினை வைப்பர். கொள்ளி வைப்பவர், முப்பத்தோராம் நாள் காரியம் உள்ளிட்ட அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றுதல் மரபாகும். கொள்ளி வைப்பதற்கு முன்பாக ஆண்கள் வாய்க்கரிசி போடுவர்.
கொள்ளி வைப்பவரின் தோளின்மேலே கொள்ளிக்குடத்தை வைத்து, கையில் கொள்ளிக் கட்டையினைக் கொடுப்பர். கொள்ளி வைப்பவர் பறை மேளம் முழங்க, கொள்ளிக் குடத்துடன் பிணத்தை மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு முறையும் தலைப்பக்கமாகச் சுற்றி வரும்போதும், குடத்தின் மீது நாவிதர் கத்திகொண்டு துளையிடுவார். மூன்றாவது முறை பிணத்தின் எதிர்புறமாகப் பார்த்துக் கொண்டே குடத்தைப் பின்புறமாகப் போடச் செய்து. கொள்ளிக் கட்டையினை வைக்கச் செய்வர். பின்பு கடமை செய்தவரின் பூனூலை அறுத்துக் கத்தியை அவர் கையில் கொடுத்தனுப்புவர்.
கொள்ளி வைத்தற் சடங்கு நடைமுறை பற்றியும், அதன் மரபு பற்றியும் சடங்கு’, ‘கானல்’, முதலான நாவல்களில் விரிவான செய்திகள் கிடைக்கின்றன. அவை வருமாறு.
கொள்ளிக்குடம் பரமநாதன் தோளில் வைக்கப்பட்டது. வலது கையில் கொள்ளிக் கட்டையை அம்பட்டன் பின்புறமாகப் பிடித்துக் கொள்ளும்படி கொடுத்தான். பறை மேளம் கொட்ட பரமநாதன் மூன்று தடவை பிணத்தைச் சுற்றி வந்தான். ஒவ்வொரு தடவையும் தலைப்பக்கமாக வரும்போது. கொள்ளிக் குடத்தில் கத்தியால் அம்பட்டன் ஒரு கொத்துப் போட்டான். மூன்றாவது தடவை பிணத்தின் எதிர்புறமாகப் பார்த்துக் கொண்டே குடத்தைப் பின்புறமாகப் போடச் செய்து கொள்ளிக்கட்டையைப் பின்புறமாக வைக்கச் செய்தான். தோளில் இருந்த பூணுரலை அறுத்து. கையில் கத்தியைக் கொடுத்து பிணப் பக்கம் பாராது அப்படியே போய்விடும்படி பணித்தான். பரமநாதன் அவன் சொல்லியபடி சுற்றிச் சென்று சுடலை மடத்துக்குள் கப்போடு சாய்ந்தபடி இருந்தான் .

Page 136
266 «Х•
கானல் என்ற நாவல், கொள்ளி வைத்தலில் பின்பற்றப்படம் மாற்று ஏற்பாடுகள் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
ஒருநாள் தந்தையார் ஏசியதிலிருந்து தம்பாப்பிள்ளையரும் எங்கோ போய் விட்டார். மரணச் செய்தியைக் காற்று வாக்கில் அறிந்த பத்து நாட்களுக்குப்பின்புதான் வருகிறார். தந்தையாருக்குக் கொள்ளிக் குடம் உடைத்தவன் யாரோ ஒரு உருத்துக்காரன். அந்த உரிமையோடு அவன் அந்தியேட்டிக் கிரிகையையும் கீரிமலையில் முடித்து விட்டான். மரபு அப்படி, கொள்ளி வைப்பவன் அந்தியேட்டிக்கும் உரித்தானவன் இதை மாற்றி நடத்த குருக்கள் மறுத்து விட்டார் .*
பெற்றோருக்குப்பிள்ளைகள் கொள்ளிக்கடன் செய்ய வேண்டும் என்பது இறுதிவரை அவர்கள் பெற்றோருடன் இருந்து அவர்களைக் காத்துக் கடமை செய்ய வேண்டும் என்பதன் பொருட்டே எனலாம். தம்மை வளர்த்து ஆளாக்கியவரின் தலையிலே நேருக்கு நேராக நின்று நெருப்பைக் கொட்டுவது என்பது சிரமமான காரியமாகும். இதனைக் கருத்திற்கொண்டே பின்புறமாக நின்று கொள்ளி வைக்கும் முறை பின்பற்றப்பட்டிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது.
கொள்ளி வைத்தலைத் தமிழக வழக்கில், நீர்க்கடன் என வழங்குவர். இறப்புச் சடங்குகளில் இணைந்து காணப்படும் இச்சடங்கு நடைமுறையினைப் பிரதான ஒன்றாகக் கருதும் வழக்கம் காணப்படுகிறது.*
இறப்பின் பின்பதான சடங்குகள் கஞ்சிமயங்குதல்
இறந்தவரின் உடலைத் தகனம் செய்த பின்னர் நடைபெறும் சடங்குகளில் ‘கஞ்சிமயங்குதல்’ என்பது முக்கியமான ஒன்றாகும். இதனை உரிமைக் கஞ்சி’ , ‘கஞ்சித்தண்ணி’ எனப் பலவாறாக அழைப்பர்.
இழவு நடைபெற்ற அன்றே அடுப்பை அணைத்து விடுவர். பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லும் வரை உறவினர்களே உணவை வழங்குவர். பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற

8 267
பின்னர், வீட்டினைக் கழுவிச் சுத்தம் செய்து, அடுப்பினைப் பற்ற வைத்து அரிசி, உப்பு, முருங்கையிலை, புளி முதலானவற்றைக் கொண்டு கஞ்சியைத் தயாரிப்பர். பெரும்பாலும் வீட்டு முற்றத்தில் வைத்தே இக்கஞ்சி தயாரிக்கப்படும். இரத்த உரித்துடையவர்கள் இக்கஞ்சியினைக் குடிப்பது வழக்கமாகும். பலா இலையினால்
49
தொன்னை செய்து கஞ்சியினைக் கோலிக் குடிப்பர்.
கஞ்சி மயங்குதலின் மூலம் இறப்பு நடைபெற்ற வீட்டின் செயற்பாடுகள் மீண்டும் உடனடியாக வழமைக்குக் கொண்டு வரப்படுகின்றன. அத்துடன் உறவுப் பாலத்தினைப் பலப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவும் இக்கஞ்சிமயங்கல் அமைந்துள்ளது எனலாம். உரிமைக் கஞ்சி குடிப்போர், முப்பத்தொன்றாம் நாள் கருமம் முடியும்வரை தீட்டுக் (துடக்கு) காக்க வேண்டும் என்பது கட்டாய நடைமுறையாகும். இதனால் உறவினர்களிற் பெரும்பாலானோர் குறித்த வீட்டிலேயே தங்கி விடுவதும் உண்டு. இதன்மூலம் இறப்புக்குள்ளானவரின் குடும்ப உறுப்பினர்களின் துன்பத்தின் செறிவும் குறைக்கப்படுகிறது.
கே. டானியல், கஞ்சிமயங்குதலைக் குறியீடாகக் கொண்டு “முருங்கையிலைக் கஞ்சி’ என்ற நாவலைப் படைத்துள்ளமை இங்கு கருதத் தக்க ஒன்றாகும்.
காடாற்றுதல்
பிணத்தினை எரியூட்டிய பின்னர் அதன் சாம்பல் மற்றும் எச்சங்களை அப்புறப்படுத்த மேற்கொள்ளப்படும் சடங்கே *காடாற்றுதல்’ என்பதாகும். இதனைக் காடுமாத்துதல்’ எனவும் அழைப்பர்.
காடாற்றுதல் சடங்கு, எரியூட்டல் நடைபெற்ற அன்றோ அல்லது அதற்கடுத்துவரும் நாட்களிலோ, நடைபெறுதல் வழக்கமாகும். எரியூட்டல் நடைபெற்ற அன்றே காடாற்றுதலை *உடன் காடாற்றுதல்’ என அழைப்பர், கொள்ளி வைத்தவர், நாவிதர், சலவைத் தொழிலாளி மற்றும் நெருங்கிய உறவினர்கள் இச்சடங்கில் முதன்மை பெறுவார்கள். சுடலையில் நடைபெறும் இச்சடங்கில், முதலில் எரியூட்டப்பட்டவரின் சாம்பல் மற்றும் என்பு எச்சங்கள் சேகரிக்கப்படும். பின்பு எண்ணெய் சேர்க்காது தயாரிக்கப்பட்ட ரொட்டி, பால், இளநீர், பூ முதலானவற்றை எரியூட்டிய

Page 137
268 必
இடத்தின்மீது படைத்து வழிபாடு செய்வர். தொடர்ந்து எரியூட்டப்பட்ட இடத்திற்கு நீர் தெளித்து, பால், இளநீர், பூ முதலியனவற்றைச் சொரிந்து, நவதானியங்களைத் தூவி விடுவர்.
நாவிதர், இறப்புக்குள்ளானவரின் எச்சங்களைப் பானையொன்றிலே சேகரித்து, இறப்பு நடைபெற்ற வீட்டின் கொல்லைப்புறத்திலே புதைத்து வைப்பார். முப்பத்தொன்றாம் நாள் சடங்கின்போது இவற்றைப் புனித நீர் நிலைகளிலே கரைத்து விடுவர். காடாற்றிவிட்டு வருபவர்கள் தமது கால்களைக் கழுவிய பின்னர், வீட்டு வாசலிலே போடப்பட்டுள்ள உலக்கையினைத் தாண்டுவர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு வேப்பிலைத் தளிர்களை உண்ணக் கொடுப்பர்.
காடாற்றும் சடங்கு நடைமுறை குறித்துக் 'கானல்’, 'பஞ்சமர், நீண்டபயணம்’ ஆகிய நாவல்களில் வரும் பின்வரும் உரையாடற் பகுதிகள் முறையே விளக்குவனவாக உள்ளன.
. பொழுதுபடுவதற்கிடையில் விதானையாரின் பிரேதம் தாவடி பெரும் சுடலைக்குப் போய் கொள்ளி வைக்கப்பட்டு இதுவரை சாம்பலாகி காடு மாத்தும் முடிந்திருக்கும் .
செல்லப்பன் கூட இன்று வழக்கத்துக்கு மாறாகத்தான் நடந்து கொண்டான். கமக்கார வீடுகளில் பெரிய இடங்களில் சாவீடு வந்து விட்டால் அவன் வீடு வந்து சேர இரவு ஒண்டுபாதி கூட ஆவதுண்டு. சுடலைக்குள் இருந்து அப்படியே கொள்ளி வைத்தவருடன் சாவீடுபோய், கஞ்சி தண்ணி என்பவற்றில் பங்கெடுத்து, உடன்காடுமாத்தென்றால் அதற்கும் நின்று.
வல்லியின் முக்கிய தொழில் வேலியடைப்பது. இது தவிர . சாவீடுவரின் பறைமேளம் அடிப்பதற்கும் அவனே
பொறுப்பு. அதைத் தொடர்ந்து சுடலையாற்றும்போது
சாம்பல்களை குழிவெட்டிப் புதைப்பது."
பால் தெளித்தல், நவதானியங்களைத் தூவுதல் முதலான செயற்பாடுகள் வளமையுடன் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. பாலைத் தெளிப்பதால், இறந்தவருக்கு, அவரை

(X 269
எரித்ததால் உண்டான வெம்மை தணிவதோடு, அவரது குடும்பத்தினரும் தழைத்து வாழ்வார்கள் என நம்பப்படுகிறது. தமிழக வழக்கில் இச்சடங்கினைப் ‘பால் தெளித்தல்’ எனவும் வழங்குவர். புதைத்தல் அல்லது எரியூட்டல் நடைபெற்ற மறுநாளே இச்சடங்கினை மேற்கொள்ளும் வழக்கம் தமிழக மக்களிடையே காணப்படுகிறது.
செய்வினை, சூனியம் செய்வோர், இறப்புக்குள்ளானவரின் ஈமச் சின்னங்களை எடுத்து, குறிப்பிட்ட நபரின் குடும்பத்திற்கோ அல்லது பிறருக்கோதுன்பம் விளைவிப்பதைத் தடுக்கும் நோக்கிலும் ‘உடன் காடாற்றுதல்’ நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது எனலாம்.
எட்டுச்செலவு
இறப்பு நடைபெற்ற எட்டாம் நாள் வீட்டிலே நிகழ்த்தப்படுகின்ற சடங்கை ‘எட்டுச் செலவு’ என அழைப்பர். சிலர் இச்சடங்கை, இறப்பு நடைபெற்று நான்காவது நாளிலும் செய்வதுண்டு.
மாலை நேரத்தில், இருள் கவியும் வேளையில் நடைபெறும் இச்சடங்கில், நாவிதர், சலவைத்தொழிலாளி, பறையர் சமூகத்தினர் ஆகியோர் பிரதானப் பங்கையாற்றுவர். இறந்தவரின் உருவத்தினை மாதிரியுருவாகச் செய்து. அதற்கு முன்பாகப் பல்வேறு வகையான உணவு வகைகளையும் படையல் செய்வர். இறந்தவருக்குப் பிடித்தமான உணவு வகைகள் அனைத்தும் இப்படையலில் இடம் பெற்றிருக்கும்.
படையல் பொருட்களில் ஒரு பகுதியினைப் பனையோலைப் பெட்டியொன்றில் இட்டு, முச்சந்திக்கு எடுத்துச் செல்வர். அங்கு வைத்துப் படையற் பொருட்களைப் படையல் செய்வதுடன், நீற்றுப்பூசணிக்காய் ஒன்றினையும் வெட்டுவர். குங்குமம் பூசப்பட்டபூசணிப் பாதியிலே நெய்ப்பந்தமொன்றை ஏற்றிவிட்டு, அருகில் வைக்கோலைப் போட்டு எரியூட்டுவர். பின்பு படையல் செய்தவர்கள் படையலக்கருகில் மூன்று முறை எச்சிலை உமிழ்ந்துவிட்டுத் திரும்பி விடுவர். சிலர், வீடு செல்வதற்காகப்

Page 138
270 X
பல்லியின் சொல்லைக் கேட்கக் காத்திருப்பர். பல்லியின் சொல்லை இறந்தவரின் ஒப்புதற் குரலாகக் கொள்வர்.
‘எட்டாம் நாள் செலவு செய்தல் குறித்துத் ‘தண்ணீர்’, ‘நீண்ட பயணம்’ ஆகிய நாவல்களில் குறிப்புக்கள் கிடைக்கின்றன. அவை" வருமாறு,
கறுத்தானெல்லை பிள்ளை துலாவால விழுந்து செத்துப் போட்டான். இண்டைக்குச் சிலவாரம் அவங்கள் எல்லாம் செத்த வீட்டை எல்லோ நிப்பாங்கள் ...!
வல்லியின் முக்கிய தொழில் வேலியடைப்பது. இதுதவிர கிராமத்தின் ஒரு பகுதி அவனுக்கு குடிமையாகவும் இருந்தது. குடிமையென்றால் அவ்வெல்லைக்குள் சாவீடுவரின் பறைமேளம் அடிப்பதற்கு அவனே பொறுப்பு. அதைத் தொடர்ந்து சுடலையாற்றும்போது சாம்பல்களை குழிவெட்டிப் புதைப்பது, இறந்த எட்டாம் நாள் சடங்கின் போது சில கடமைகள் ஆகியனவற்றுக்கு அவன் தவறாது சமூகந்தரவேண்டும்.
இவற்றிற்காக சுடலையில் படைக்கும் ரொட்டிகளும், வீட்டில் பேய்க்காகப் படைக்கும் சோறும், கள்ளுக்காக இரண்டு ரூபா பணமும் கிடைக்கும் ..."
எட்டுச் செலவு விருந்து, நாவிதர், பறையர், சலவைத்தொழிலாளர், உறவினர் என்ற ஒழுங்கில் நடைபெறுதலே மரபாகும். இவ்விருந்துணவை உட்கொள்பவர்கள் தீட்டுடையவர்களாகக் கருதப்படுவர்.
இறந்தவர் விரும்பி உண்ணும் உணவு வகைகளைப் படையல் செய்வதன் மூலம் அவரின் ஆசைகளைப் பூர்த்தி செய்யலாம் என நம்புவதே இச்சடங்கின் அடிப்படையாகும். தமிழக மக்கள் இச்சடங்கு நடைமுறையினை, எட்டுக் கும்பிடல், ‘எட்டாஞ் சடங்கு’, ‘எட்டுப்படையல் முதலான சொல்லாட்சிகளால்
குறிப்பிடுவர்.
இறப்பு நடைபெற்ற முப்பத்தொன்றாம் நாள் செய்யப்படும் சடங்கு இதுவாகும். இதனை ‘அந்தியேட்டி’, ‘துடக்குக் கழிவு

* 271
எனவும் வழங்குவர். இயற்கை மரணமடையாது அகால மரணம் அடைய நேரிடின் இச்சடங்கை ஆறுமாத காலத்தின் பின்பே மேற்கொள்வது வழக்கமாகும்.
இறப்பு நேர்ந்த குடும்பம் தீட்டுடையதாகக் கருதப்படுகிறது. மரணம் அடைந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் குறிப்பிட்ட காலம் வரை தீட்டு உண்டு. இத்தீட்டு நீராடுவதால் மட்டுமே போகக்கூடியதன்று. சடங்குகள் மூலமாகவே இதனைப் போக்க முடியும்.
வீட்டில் துடக்குக் கழிக்கும் முன்பாக, இறப்புக்குள்ளானவரின் சாம்பல், எலும்பு முதலான எச்சங்களை நீர்நிலைகளிலே கரைத்துச் சிலவகையான சடங்குகளை ஆற்றுவர். இச்சடங்கில், புரோகிதர், நாவிதர், கொள்ளிக் கடன் செய்தவர் ஆகியோர் பிரதான பங்கு வகிப்பர்.
கும்பங்கள் பரப்பி மேற்கொள்ளப்படும் இச்சடங்கில், இறந்தவரின் உடலை உருவகப்படுத்தி, அதைப் பாடையில் எடுத்துச் செல்லல், சுடலையில் எரித்தல், சாம்பல் எடுத்தல், சுட்ட இடத்தில் கலப்பை கட்டிஉழுதல், மறுத்தல், நவதானியம் விதைத்தல், சாம்பலை எடுத்துச் செல்லல், கங்கையில் கரைத்தல் முதலான அனைத்தச் செயற்பாடுகளும் போன்மைச் சடங்காக உருவகப்படுத்தப்படும். இச்சடங்குகள் யாவற்றையும் புரோகிதர்களே செய்து வைப்பர். இச்சடங்கு நடைபெற்ற மறுநாளில் வீட்டிலே துடக்குக் கழித்தற் சடங்கை மேற்கொள்வர்.
முருங்கையிலைக் கஞ்சி என்ற நாவலில், முப்பத்தொன்றாம் நாள் சடங்கு நடைமுறை பற்றி மிகவும் விரிவாக விவரணம் செய்யப்பட்டுள்ளமை கருதத் தக்கதாகும். அவ்விவரணம் வருமாறு;
இஞ்சாரப்பா வாற வெள்ளிக்கிழமை மருமோளின்ரை அந்திரட்டி செய்ய வேணும். மாதமும் சரியா ஆறாச்சு எல்லாத்தையும் வடிவாய் அடுக்குப் பண்ணுங்கோ .
அகாலமரணம் அடைபவர்களுக்கு ஆறு மாதத்தில்தான் அந்திரட்டி செய்வது வழக்கம் .

Page 139
இணுவில் கிருத்திய ஐயர் சாமிநாதர் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர நடுமுற்றத்தில் சாணிமெழுக்குச் செய்து சாணி உருண்டைபிடித்து அதில் அறுகம்புல்லுச் சொருகிப் பிள்ளையாராக்கி, வாழையிலை போட்டு புதிர் நெல்லப் பரவி கும்பம் வைத்ததில் இருந்து அந்தியேட்டிக் கிரியை தொடங்கிவிட்டது.
சுனித்திரா என்ற பெயரை உச்சரித்துக் கொண்டே ஐயர் தொடக்கி வைத்தார் . நாற்சதுரமாக்கி நான்கு மூலைகளிலும் பன்னிரண்டு நூல் சுற்றிய கும்பங்கள். நட்ட நடுவே ஒரு கும்பம். நாற்சதுரக் கும்பங்களை இணைத்து நூல் தொடர்பு. மூத்தவன் கைவிரலில் தருப்பை தோளில் பூனூல்! சூரிய நமஸ்காரத்துடன் கிரிகை தொடங்கிவிட்டது.
சுனித்திராவை உருவகப்படுத்திய தருப்பைக் கட்டு அதை எடுத்துச் செல்லும் பாடை, சுடலையில் எரித்தல், சாம்பல் எடுத்தல், சுட்ட இடத்தில் கலப்பை கட்டி உழுதல், மறுத்தல், நவதானியம் விதைத்தல், சாம்பலை எடுத்துச் செல்லல், கங்கையில் கரைத்தல், சுனித்திராவின் ஆத்மாவுக்கான சகல கிரிகைகளையும் முடித்துச் சாம்பன்லக் கங்கையில் கரைத்து விட்டு, தலை முழுகி மூத்தவன் தரையில் காலடி எடுத்து வைத்தபோது, கரையில் ஒருவன் கத்தியை வைத்துக்கொண்டு வழிமறித்தான்.
அவன் பரியாரி வல்லியன்! எங்கை போட்டுவாறாய்! இது வல்லியன் கேள்வி.
*எனது மனைவியான சுனித்திராவுக்கு காசி, கதிர்காமம் சென்று தானம் குடுத்திட்டு வாறன்’ இப்படி மூத்தவன் சொல்ல வேண்டும். ஐயர் அவனைக் கொண்டு இதைச் சொல்ல வைத்தார் . கையில் இருந்த கொடுவாக் கத்தியால் நிலத்தில் குறுக்காகக் கோடு இழுத்தான் வல்லியன். கடற்கரை மணலில் கோடு தெளிவாக இருந்தது.

ox. 273
அப்படியானால் எனக்கும் தானதருமம் செய்து போட்டுப் போ வல்லியன் நாக்குத் தெறிக்க இப்படிக் கேட்டான் . கட்டியிருந்த கோவணத்தை மட்டும் விட்டுவிட்டு உடுத்த வேட்டியை அப்படியே தானமாக வல்லியனுக்குக் கொடுக்கவும் தீத்தக்கரை அந்தியேட்டி நிறைவுக்கு வந்தது. . இனி வீட்டுக் கிருத்தியம்.*
மேல்வரும் பகுதி, முப்பத்தோராம் நாள் சடங்கு குறித்து முழுமையான ஒரு விளக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
தீட்டுக்கழிக்கும் நாளன்று, வீட்டைக் கழுவுவதுடன், கிணற்று நீரையும் இறைத்துச்சுத்தம் செய்வர். அந்தணரை வீட்டுக்கு அழைத்து, ‘புண்ணியானம் செய்விப்பர். அரிசி, காய்கறி, உடுபிடவை, குடை, செருப்பு, பாய், செம்பு முதலானவற்றைத் தானமாகக் கொடுத்து அவர்தரும் புனித நீரை மாவிலை கொண்டு வீடு. வளவு முதலான எல்லா இடங்களிலும் தெளித்துப் புனிதப்படுத்துவர். இத்தீட்டுக் கழிவுச் சடங்குகள் நிறைவு பெற்றதும், விருந்துக்கான உணவுகளைத் தயாரிக்கும் பணி ஆரம்பமாகும். இவ்விருந்தில் இறப்புச் சடங்கில் பங்கெடுத்தவர்களிற் பெரும்பாலானோர் பங்கெடுப்பர். இவ்வுணவை உண்பதால் எவ்விதமான தீட்டுக்களும் உண்டாவதில்லை என்பது கருதத் தக்கதாகும்.
ஆண்டுத்திவசம்
இறப்பு நடைபெற்று ஒரு வருட இடைவெளியின் பின்னர் நிகழ்த்தப் படுவதே ஆண்டுத்திவசம்’ ஆகும். இதனைச் ‘சிரார்த்தம் எனவும் அழைப்பர்.
முதலாவது ஆண்டுத்திவசம் பெரிய அளவிலே கொண்டாடப்படும். பிதிர்க்கடனாற்றும் புரோகிதர்பகளை அழைத்து அவர்களுக்குப் புத்தாடை, பாய், தலையணை, பசுமாடு, அரிசி, காய்கறிகள், தேங்காய், பழவகைகள் முதலானவற்றைத் தானமாக வழங்குவர். அந்தணர்க்குக் கொடுக்கும் தானம் இறந்தவரைச் சென்றுசேரும் என நம்புகின்றனர். தொடர்ந்து பல வருடங்களாக ஆண்டுத்திவசம் செய்வர். வசதியில்லாதவர்கள், இறந்தவர்களின் திதியில் ஆலயங்களுக்குச் சென்று மோட்ச அர்ச்சனை செய்வது வழக்கமாகும்.*

Page 140
274 X
இறந்தவர்களை நினைவு கூர்ந்து, படையலிட்டு வழிபாடாற்றும் மரபு சங்க காலம் முதற்கொண்டே இருந்து வந்தள்ளது.* இறந்த தன்கணவனுக்கு அவன் காதலி, பிண்டம் வைத்தமை பற்றி,
நோகோ யானே, தேய்கமாகாலை பிடிஅடி அன்ன சிறுவழி மெழுகித் தன் அமர் காதலி புல்மேல் வைத்த இன் சிறு பண்டம் யாங்கு உண்டனன்கொல் உலகு புகத் திறந்த வாயில் பலரொடு உண்டன் மரீஇயோனே .*
என்ற புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது.
பல்வேறு ஆதிக்குடிகளிடத்தும், முன்னோர் வழிபாடான இச் *சிரார்த்தச் சடங்கு நடைமுறை வழக்கில் உள்ளமை பற்றிக் கலைக்களஞ்சியம் குறிப்பிடுகின்றது" இறப்புக்கு முன்பிருந்த நிலையைவிட இறப்புக்குப் பின்பு தோன்றும் நிலை பற்றிய கவலைகளின் வெளிப்பாடே “சிரார்த்தம்’ எனக் கருதலாம்.
புதிர் வழிபாடு என்பது இந்துக்களின் வாழ்வில் பிரதானமானதாகும். ஆராய்ச்சியாளர் அப்பே துபாய்ஸ், இந்துக்கள், இறந்த முன்னோர்களுக்குப் படையலிட்டு அவர்களை வணங்கும் நடைமுறை பற்றி விரிவாக விளக்கியுள்ளார்."
நாவல்களும் நடங்கு நடைமுறைகளும் என்ற தலைப்பிலான இவ்வியலில் சடங்கு நடைமுறைகள் குறித்து, நாவல்களில் காணப்படும் பல்வேறு தரவுகளும் தொகுக்கப்பட்டு, அவற்றை வகைப்படுத்தி விளக்கியுரைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகளில் திருமணம், இறப்பு ஆகிய சடங்கு நடைமுறைகள் பற்றிய செய்திகள் நாவல்களில் மிகுதியாகப் பயின்றுள்ளமையைப் பார்க்க முடிகின்றது. சடங்கு நடைமுறைகளில் பலவும் இன்று வழக்கிறந்து வருகின்றன. ஏனைய சடங்கு நடைமுறைகளில், கால ஓட்டத்திற்கேற்ப நெகிழ்ச்சித்தன்மை காணப்படுகின்றமையும் இவ்விடத்திலே கருதத்தக்க ஒன்றாகும்.

10.
ll.
12.
13.
14.
lö.
I6.
17.
(X 275
அடிக்குறிப்புகள்
வாழ்வியற் களஞ்சியம், தொகுதி 8, ப.300, INTERNATIONAL ENCYCLOPAEDIA OF THE SOCIAL SCIENCE, Vol.13, p.525.
Lifl., ListL–6v, 5: 11-15.
நற்., பாடல், 22: 5-7.
தொல். பொருள்., நூற்பா, 140-144
TAMILLEXICON, Vol.III, p.1240. கலைக்களஞ்சியம், தொகுதி 4, ப.392.
THE RANDOMHOUSEDICTIONARY OF THE ENGLISH LANGUAGE, p.241. "A rite is an established, prescribed or customary from of religious or other solemn practice'.
INTERNATIONAL ENCYCLOPAEDIA OF THE SOCIAL SCIENCE, Vol. 13, pp.521-522. “These terms have been used interchangeably to denote any non istinctive predicatable action or series of actions that cannot be justified by a Traditional means to ends type of explanations.”
THENEWENCYLOPAEDIA BRITANICA, Vol.XV, p.863. “Exhibited by all known societies ritual is a specific observable kind of behaviour based upon established or Traditional rules.”
ENCYCLOPAEDIA OF ANTHROPOLOGY, Inc., 13.p.325. Turner Victer, PROCESS PERFORMANCE AND PILGRIMAGE, p. 112. பக்தவச்சலபாரதி, சீ, பண்பாட்டு மானிடவியல், பக்.542-543. சண்முகம்பிள்ளை, மு. சங்கத்தமிழர் வழிபாடும், சடங்குகளும்,
1.232
Kosambi, D.D., THE CULTURE AND CIVILIZATION OF ANCIENT INDIA, p.31; கலைக்களஞ்சியம், தொகுதி 6, ப.451.
சோமெல, தமிழ்நாட்டு மக்களின் மரபும் மரபும் பண்பாடும், L1.42.
வாழ்வியற் களஞ்சியம், தொகுதி 8, ப.300,

Page 141
276
I8.
19.
20.
21.
22.
23。
24.
25.
26.
27.
28.
29.
30,
31.
32.
33.
34.
35.
36,
37.
38.
39.
40.
41.
● oxo
Van Gennap, Arnold, LES RITES DE PASSAGE, p.104.
கலைக்களஞ்சியம், தொகுதி 8, ப.392.
பக்தவச்சலபாரதி, சீ., மு.கு.நூ. பக்.524-525.
வசந்தா, ஜி., தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் - ஒரு FCypgstru Allio), L. 187.
கலைக்களஞ்சியம், தொகுதி 4, ப.392.
பக்தவச்சலபாரதி, சீ, மு.கு.நூ. ப.525.
Van Gennap, Arnold, Op.cit, p. 104.
Ibid., p.41.
THE SOCIAL SCIENCEENCYCLOPAEDIA, p.341.
காந்தி. க., தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், ப.92.
பெரும். அடி.320.
சிலப்., அடைக், அடி:24.
டானியல், கே. பஞ்சமர், ப.312.
டானியல், கே., அடிமைகள், பக்.74-75.
இராமநாதன், ஆறு. நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், ப.194.
சாந்தி, ந. பார்க்கவகுலச் சடங்குகளும், நம்பிக்கைகளும், ப.36.
அடிமைகள், ப. 74.
கணேசலிங்கன், செ, சடங்கு, ப.189. வாழ்வியற்களஞ்சியம், தொகுதி 8, ப.300,
சாந்தி, ந. மு.கு.நூ. ப.42.
புறம், பாடல், 77; 2-3.
அடிமைகள், பக்.34, 200.
வாழ்வியற்களஞ்சியம், தொகுதி 8, ப.301.
ராஜன், ஜோன். பூனி.எஸ்., போடியார் மாப்பிள்ளை, ப. 117

42.
43.
44.
45.
46.
47.
48.
49.
51.
52.
53.
58.
59.,
60.
61.
& 277
வானமாமலை, நா. (பதி.ஆ.), தமிழர்நாட்டுப்பாடல்கள், ப.115.
William Crooke, RELIGION AND FOLKLORE OFNORTHERNINDIA, p.306.
போடியார் மாப்பிள்ளை, பக்.116-117 செங்கையாழியான், காவோலை, பக்.73-74,
தெணியான், மரக்கொக்கு, ப. 14; டானியல், கே., இருளின் கதிர்கள், ப.213; பஞ்சமர், ப.56.
Horriby, A.S., OXFORD ADVANCEDLEARNER'SDICTIONARY OF CURRENTENGLISH, p.645.
பாலமனோகரன், அ., நிலக்கிளி, ப.9.
மேலது. ப.13.
டானியல், கே. தண்ணிர், பக்.38-39; பொன்னுத்துரை, எஸ்., தீ, Lu. I49.
இராமநாதன், ஆறு. மு.கு.நூ., ப. 195; வேலுசாமி, ம., “வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகள்”, நாட்டுப்புறவியல், தொகுதி 3, 4, l. 2, Lu. 4.
அகம், பாடல், 86, 136.
டானியல், கே., முருங்கையிலைக் கஞ்சி, ப.25.
. இருளின் கதிர்கள், ப.213.
55.
56.,
57.
g56sTGOofii, Lu. 61. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, 153.
கணேசலிங்கன், செ, சடங்கு, பக்.59, 73,74, 75இருளின் கதிர்கள், பக்.212-215.
நிலக்கிளி, ப.17 இராமநாதன், ஆறு. மு.கு.நூ. ப.195. கணேசலிங்கன், செ, சடங்கு, பக்.59, 73-75.
ஐங், பாடல் 61: 4-5 அகம்., பாடல் 112; 11-16; புறம், பாடல் 341: 10-12.

Page 142
278
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
7.
72.
73.
74.
75,
76.
77.
78.
79.
80.
81.
82.
o
INTERNATIONALENCYCLOPAEDIA OFSOCIAL SCIENCE, Vol.X, p.2.
வாழ்வியற்களஞ்சியம், தொகுதி 1, ப.67.
THENEWENCYCLOPAEDIA BRITANICA, Vol.IV, p.673.
கலைக்களஞ்சியம், தொகுதி 8, ப. 64
பாஸ்கல் கிஸ்பெர்ட், எஸ்.ஜே., சமூகவியல் கோட்பாடுகள், L. 99.
அறவாணன், க.ப. தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புக்கள், ப. 109.
Nilakshi Sengupta, THE EVOLUTION OF HINDU MARRIAGE, p.6.
இராமகிருஷ்ணன், எஸ்., இந்தியப் பண்பாடும் தமிழரும், ப.287
அகம், பாடல் 136; 1-18.
சுப்பிரமணியன், ந., சங்ககால வாழ்வியல், சங்கத் தமிழரின் அரசுமுறையும், சமூக வாழ்வும், பக்.355-356.
வித்தியானந்தன், சு., தமிழர் சால்பு, ப.281.
டானியல், கே., கானல், ப.8; டானியல், கே., கோவிந்தன், ப.37
தகவல்: த.சுகந்தி, வயது 25, தெணியம்மை, வல்வெட்டித்துறை, இலங்கை.
கோவிந்தன், ப. 37; டானியல், கே. மையக்குறி, ப. 150; பாலமனோகரன், அ., குமாரபுரம், ப. 103.
குறு, பாடல் 146; 3-4.
செங்கையாழியான், கிடுகுவேலி, ப.38; கணேசலிங்கன், செ., சடங்கு, பக்.21, 40-41.
கணேசலிங்கன், செ, நீண்ட பயணம், பக்.37-38.
போடியார் மாப்பிள்ளை, ப. 35; கணேசலிங்கன், செ, சடங்கு, Լ1.39,
மேலது, பக்.49-51.
மேலது. ப. 60.
மேலது. ப.57

83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
99.
※ 279
அகம்., பாடல் 136; 1-18.
கணேசலிங்கன், செ., சடங்கு, பக்.60, 66, 68.
சாந்தி, ந. மு.கு.நூ., பக்.74-75.
கணேசலிங்கன், செ., சடங்கு, பக்.47, 60; முருங்கையிலைக் கஞ்சி, ப.54.
கணேசலிங்கன், செ, சடங்கு, பக்.56, 60.
மேலது., பக்.46, 48; அடிமைகள், பக்.9-10. கணேசலிங்கன், செ., சடங்கு, பக்.55, 58-59, 70-73.
மேலது., பக்.59, 69, 74. மேலது. பக்.79-80, 86; அடிமைகள், பக்.9, 40-41.
அடிமைகள், ப.13; நிலக்கிளி, பக்.56-57; கணேசலிங்கன், செ., சடங்கு, பக்.59, 69, 74.
அகம்., பாடல் 86; 13-17
Edwark Wester Marck, EARLY BELIEFS AND THEIR SOCIAL INFLUENCE, p. 135.
பிலோ இருதயநாத், மேற்கு மலைவாசிகள், ப.98.
அடிமைகள், பக்.12-13.
மேலது. பக்.11-14: கணேசலிங்கன், செ, சடங்கு, ப.84
மேலது., ப.88.
மேலது. ப.89.
100. மேலது., ப.63, 89,
101. மேலது., ப.89
102.ENCYCLOPAEDIABRITANICA, Vol.9, p.1012.
103. வாழ்வியற் களஞ்சியம், தொகுதி 8, ப.301.
104. கலைக்களஞ்சியம், தொகுதி 2, ப. 189.
105. சுப்பிரமணியன், ந. மு.கு.நூ, ப.383.

Page 143
280 x
106. பதிற்., பாடல் 44.
107. புறம், பாடல் 246, 360, 363.
108. மணிமேகலை, சுடுகாட்டுக் கோட்டுமுரைத்த காதை, ப.204.
109. பாலசுப்பிரமணியன், கு. வெ., சங்க இலக்கியத்தில் சமூக
அமைப்புகள், ப.204.
110. கலைக்களஞ்சியம், தொகுதி-2, ப. 189.
111. CHAMBERS ENCYCLOPAEDIA, Vol.IV,p.396.
112. பக்தவச்சலபாரதி, சீ., மு.கு.நூ., ப.496.
113.அகத்தியலிங்கம், ச. (பதி.ஆ.), தமிழகப் பழங்குடி மக்கள், ப. 69, 114. தெணியான், கழுகுகள், பக்.160-161.
115.இராசேந்திரன், ஆர்., செங்கை மாவட்ட நாட்டுப்புறப் பழக்க
வழக்கங்களும், நம்பிக்கைகளும், ப.225.
116. கழுகுகள், பக்.162-163; பஞ்சமர், ப.400; கணேசலிங்கன், செ.,
சடங்கு, ப.239.
117. பஞ்சமர், ப.417
118. புறம், பாடல் 286:3-5
119. வசந்தா, ஜி., மு.கு.நூ. ப.162.
120. கோவிந்தன், ப.47,
121. மேலது., ப.47; பஞ்சமர், பக்.26, 38, 77.
122.இராமநாதன், ஆறு. மு.கு.நூ., ப.203.
123.தண்ணீர், பக்.29, 213; கணேசலிங்கன், செ, சடங்கு, பக்.239, 245;
கழுகுகள், பக்.62, 169; கானல், பக்.81.
124.கணேசலிங்கன், செ, சடங்கு, பக்.243, 24
125. புறம், பாடல் 194
126.கணேசலிங்கன், செ., சடங்கு, ப. 244; தண்ணிர், ப.29, 214;
பஞ்சமர், பக்.399-400.
127. புறம், பாடல் 286, 360.

8 281
128. பஞ்சமர், பக்.413-414, 416. 129. கணேசலிங்கன், செ, சடங்கு, பக்.249-250.
130. மேலது., ப.250.
131. மேலது., ப.250.
132. மேலது. ப.251.
133. குமாரபுரம், ப.60.
134. சாந்தி, ந, மு.கு.நூ., ப.125. 135. கணேசலிங்கன், செ, சடங்கு, ப.253; கழுகுகள், ப.173. 136. சரோஜா, வே., மண்ணின் மணம், ப.43. 137. கணேசலிங்கன், செ., சடங்கு, ப.252.
138. புறம், பாடல் 237, 139. சரசுவதி, வி. நாட்டுப்புறப் பாடல்கள் சமூக ஒப்பாய்வு, ப.36.
140. ASTANDARDDICTIONARY OF FOLKLORE, p.514.
141. கணேசலிங்கன், செ., சடங்கு, ப.252; கழுகுகள், ப. 173;
குமாரபுரம், ப.61.
142. மேலது., ப. 61. 143.தண்ணீர், பக்.13, 30, 105, 107, 182; பஞ்சமர், ப.278. 14. சோமெல, மு.கு.நூ., ப. 115 145.விதாலிஃபுர்னிக்கா, பிறப்பு முதல் இறப்பு வரை, ப.120. 146. கணேசலிங்கன், செ., சடங்கு, ப.254
147. மேலது., ப.254; கானல், ப.98. 148. செல்லம், வே.தி., தமிழக வரலாறும் பண்பாடும், ப.129,
149.தண்ணீர், ப. 69; கோவிந்தன், ப.47; முருங்கையிலைக் கஞ்சி,
ப.84; கானல், ப.64.
150. மேலது. ப.61; பஞ்சமர், ப.40; நீண்ட பயணம், ப.47
151.தண்ணீர், ப.120; நீண்ட பயணம், பக்.47, 161.

Page 144
282 冷
152. முருங்கையிலைக் கஞ்சி, பக்.66-68.
153.தகவல்: செ.ரஜனி, வயது 25, கொக்குவில் கிழக்கு, கொக்குவில். பஞ்சமர், பக்.197-198; கோவிந்தன், ப. 50; பொற்சிறையில் வாடும் புனிதர்கள், பக்.39, 66.
154. புறம், பாடல் 360, 363. 155.மேலது., பாடல் 234. 156. கலைக்களஞ்சியம், தொகுதி 2, ப.190
157. Abbe, J.A., Dubois, HINDU MANNERS, CUSTOMS AND
CEREMONIES.p.560.

நாவல்களும் நாட்டார் பண்பாட்டு
வழக்காறுகளும்
நாட்டார் பண்பாட்டு வழக்காறுகள் என்பது பரந்துபட்ட பொருண்மையினைக் கொண்ட ஒர் ஆய்வுப் பரப்பாகும். மனிதனுடைய வளர்ச்சியை அகவளர்ச்சி, புறவளர்ச்சி என இரண்டு வகையாகப் பகுத்துக் காணலாம். அன்பு, அருள், வாய்மை, தூய்மை, ஒப்புரவு, கண்ணோட்டம், ஈகை, நாணம் முதலான பண்புகள் அனைத்தும் மனிதன் பிறரோடு கொள்ளும் உறவுக்கு அடிப்படைகளாகும். மனித இனம் முழுமைக்குமான மேற்குறித்த பண்புகள், தம்முடைய சிறு சமூக எல்லைக் கோட்டைத் தாண்டி, உலக உறவாக அகற்சி பெற்று வளர முனையும்போது, அவை மனித குலத்தின் சிறப்பினைக் காட்டுவனவாக அமைகின்றன. இத்தகைய மானுடப் பண்புகளின் வளர்நிலையை ‘அகவளர்ச்சி’ எனக் குறிப்பிடலாம்.
மனிதனுடைய அறிவும் அனுபவமும் மேலே குறித்த பண்புகளாக மட்டுமல்லாமல் பருப்பொருட்களாகவும் மேற்கிளம்புகின்றன. உணவு, உடை, உறையுள், சிற்பம், ஓவியம் முதலான பொருட்களின் வாயிலாகவும் மனிதனின் வளர்ச்சி நிலை வெளிப்படுகின்றது. இதனைப் புறவளர்ச்சி எனக் குறிப்பிடலாம்.
அகவளர்ச்சி, புறவளர்ச்சி ஆகிய வளர்ச்சிகளையும் ஒருங்கே கொண்டமைந்த சமுதாயமே முழுவளர்ச்சி பெற்ற சமுதாயமாகக் கருதப்படும். இவ்விரண்டு வளர்ச்சிகளில் பண்பாட்டை அகவளர்ச்சி என்றும் நாகரிகத்தைப் புறவளர்ச்சி என்றும் கருதலாம்.
நாட்டார் வழக்காற்றியலின் தொடக்ககால ஆய்வாளர்கள்
மொழிபுணர்ந்த நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், விடுகதைகள் முதலானவை பற்றியே ஆராய்ந்தனர். புழங்குபொருட்களால்

Page 145
284. X
அறியப்படும் பண்பாடுகள், நாட்டுப்புறச் சமுதாயப் பழக்க வழக்கங்கள் குறித்த ஆய்வுகள் பெரிதாக முனைப்பு அடையாத நிலையே தொடர்கின்றது.
பண்பாடு: சொல்லும் பொருளும்
மனித நடத்தைகளில் பெரும்பாலன மரபுவழி அமைந்த பண்பாட்டினால் அமைகின்றன. மிகச்சில உயிரியல் வழி அமைகின்றன. மனிதன் சமூகத்தின் உறுப்பினனாகத் தான் கற்றவைகளைத் தன் சந்ததியாருக்கும், தன் இனத்தவர்களுக்கும் கற்பிப்பதைப் பண்பாடு எனப் பொதுவாகக் குறிப்பிடலாம்.* பண்பாடு குறித்துப் பல்வேறு வகையான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை குறித்து இங்கு நோக்குதல் பொருத்தமானதாகும்.
பண்பெனப்படுவது பாடறிந்தொழுகுதல்’ என்ற கலித்தொகைப் பாடலடி, பண்பு’ என்ற சொல்லின் விளக்கமாக அமைந்துள்ளது.
பண்பாடென்பது அதன் விரிந்த இனக்குழுப் பொருளில், மனிதன், சமூகத்தின் உறுப்பினன் என்ற முறையில் பெறுகின்ற அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கங்கள், சட்டம், பழக்கவழக்கம், இன்ன பிற ஆற்றல்களை உள்ளடக்கிய சிக்கலானதொரு முழுமையாகும் என்பார் எட்வர்ட் டைலர்."
பண்பாடு இருவகை அடிப்படைப் பண்புக்கூறுகள் கொண்டு ஒழுங்கமைந்ததாகும். அவ்விருவகைப் பண்புக்கூறுகளாவன, கலை வேலைப்பாடு அமைந்தவையும் வழக்க முறைமைகளும் ஆகும். அவை மேலும் பல பிரிவுகளை உடையன எனச் சமூக அறிவியல் கலைக்களஞ்சியம் பண்பாட்டுக்குப் பொருள் தருகின்றது."
ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையே பண்பாடு எனக் குறிப்பிடும் உலகப் பல்கலைக்கழகக் கலைக்களஞ்சியம், அது மரபுகள், பழக்கங்கள், சமூக வழக்கங்கள், ஒழுக்கங்கள், சட்டங்கள், சமூக உறவுகள் இவை உள்ளிட்ட ஒரு குழுவினரால் பகிர்ந்து கொள்ளப்படும் ஆன்மீக அறிவார்ந்த கலைத்துறை, மனநிலைகளின் முழுமையாகும் எனக் குறிப்பிடுகின்றது ?

必,285
பண்பாடென்பது, ஒரு தலைமுறையினர் சென்ற தலைமுறையினரிடம் பெற்றுக்கொண்ட வாழ்க்கை முறை. இது தலைமுறைத் தலைமுறையாக அறிவு சார்ந்த நிலையில் கற்றுணர்ந்த நடத்தை முறைகளைக் குறித்து நிற்கின்றது" எனவும் விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.
நடைமுறையில் பண்பாடு என்னும் சொல் ஒரு சமூகத்தின் சிறந்த பக்குவநிலையையும், உயர்ந்த கலைச்சுவைகளையும், கலைகளை அறியும் செம்மையான நிலையையும் குறிப்பதுண்டு."ஒரு சாதியர் அல்லது இனத்தாரின் பண்பாட்டினை, இலக்கியத்தால் மட்டுமன்றி, அவர்களது நடை, உடை, மொழி, கலைகள், இலட்சியங்கள், சமயப்பொறை, அரசியல் கொள்கைகள், சமுதாயநிலைமை, பெண்களின் நிலைமை, அறிவியற் சிறப்பு, கல்வி நிலையங்கள் முதலானவற்றாலும் அறியலாம்."
பண்பு, பண்புடைமை, பண்படுத்துதல் முதலான சொற்களின் தொன்மையான பயில்நிலை குறித்து விரிவாக விளக்கியுரைக்கும் கு. வெ. பாலசுப்பிரமணியன், சமூகத்தின் வாழ்நெறியாக வெளிப்படுவதே பண்பாடு என்றும், ஒரு சமூகத்தின் மதிப்புக்களைப் பாதுகாத்து, வழிமுறையினரும் பேணத்தகும் அளவில் கற்பிப்பது அச்சமூகத்தின் பண்பாடே எனவும் குறிப்பிடுவது கருதத் தக்கதாகும்.'
மேற்சுட்டிய விளக்கங்களில் இருந்து பண்பாடு என்பது, பாரம்பரியத்தாலும், சமூகத்தாலும் உருவாக்கப்படும், அளந்தறிய முடியாத ஒர் உளப்பாங்கு எனக் கருதிக் கொள்ளலாம்.
பண்பாட்டின் வகைப்பாடு
பண்பாட்டினை, சடப்பொருள்களால் ஆனது, சடப்பொருள்கள் அல்லாதவற்றால் ஆனது என இருவகையாகப் பாகுபடுத்தும் கலைக் களஞ்சியம், வீடுகள், கருவிகள், ஆடைகள், அணிகள் போன்றவற்றைச் சடப்பொருள்களாகவும், மொழி, தொழில், மனப்போக்கு, கொள்கைகள், பாக்கங்கள், அறநெறி போன்றவற்றைச் சடப்பொருள் அல்லாதனவாகவும்
குறிப்பிடுகின்றது."

Page 146
286 X
சமூகவியல் கலைக்களஞ்சியம், பண்பாட்டினை, கலை வேலைப் பாடுகள், வழக்க முறைகள் என இருவேறாகப் பாகுபடுத்தி, அவை மேலும் பல உட்பிரிவுகளைக் கொண்டமையும் எனக் குறிப்பிடுகின்றது."
மானிடவியலாளர் பண்பாட்டினை, பொருள்சார் பண்பாடு (Material Culture), G I TG56TFTUT. L. 165TLTG) (Non Material Culture) என இருவகையாகப் பாகுபடுத்துவார்.' மேற்சுட்டிய அனைத்துவகையான பாகுபாடுகளையும் இப்பகுப்புக்குள் அடக்கிப் பார்க்க முடிகின்றது.
பொருள்சார் பண்பாடு
இயற்கை வளங்களைப் பண்பாட்டுப் படைப்புக்களாகவும், கலைப்படைப்புக்களாகவும் (Artifacts) மாற்றிக் கொள்வதைப் பொருள்சார் பண்பாடு எனலாம். மனிதனின் தேவைக்காக உற்பத்தி செய்து கொள்ளப்படும் பொருள்கள், பொருள் சார்பண்பாட்டில் அடங்குவதால் இவற்றைக் கலை வடிவங்கள் அல்லது பொருள் வடிவங்கள் (Artifacts) எனவும் குறிப்பிடலாம். இயந்திரங்கள், கருவிகள், மரச்சாமான்கள், வீட்டுப் பொருட்கள், உடைகள், அணிகலன்கள், கட்டடங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், சாலைகள், வேளாண் நிலையங்கள், எழுதுகோல், அழகுப் பொருட்கள், போர்க்கருவிகள் முதலான எண்ணற்ற பொருள்கள் பொருள்சார் பண்பாட்டைச் சேர்ந்தனவாகும்.
Gun (56iras A y Tú ugairuan (8 ( Non Material Culture)
பொருள் வடிவம் பெறாத அனைத்துக் கூறுகளும் பொருள் சாராப் பண்பாடாகும். இக் கூறுகள், மனத்தளவில் மட்டுமே உணரக் கூடியனவாகவும், புரிந்து கொள்ளக் கூடியனவாகவும் அமைத்து காணப்படும். இவற்றை மனவடிவங்கள் (Mentifacts) எனவும் வழங்குவர்.
கருத்துக்கள் (Ideas), பழக்கவழக்கங்கள், நெறிமுறைகள், அறிதிறன், அழகியல் சிந்தனைகள், கற்பனை, நடிப்பு, இலக்கியங்கள், பாடல்கள், இசை, நடனம், உணவு உண்ணும் முறை, தலைவாரும் முறை, வணக்கம் செலுத்தும் முறை, மந்திரங்கள்,

«Х» 287
வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் முதலான பொருள்வடிவம் பெறாத அனைத்துக் கூறுகளும் பொருள்சாராப் பண்பாட்டில் அடங்கும்.
நாவல்களும் நாட்டார் பண்பாட்டு வழக்காறுகளும் என்ற தலைப்பிலான இவ்வியலில், நாவல்களிலே கிடைக்கின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் விடயங்கள் குறித்து நோக்கப்பெறுகின்றன. அவை வருமாபறு:
1. நாட்டுப்புற மருத்துவம்.
2. நாட்டுப்புற விளையாட்டு.
3. காரணப் பெயரிடும் வழக்கம்.
4. நாட்டுப்புற உணவுப் பழக்கவழக்கம்.
5. நாட்டுப்புறக் கலை.
நாட்டுப்புற மருத்துவம்
அறிவியல் அடிப்படைகள் எதுவுமின்றிச் சில குறிப்பிட்ட சாதியினராலோ, மரபுவழி மருத்துவராலோ, பூசாரிகளாலோ, பொதுமக்களாலோ பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்படும் மருத்துவத்தைப் பொதுவாக நாட்டுப்புற மருத்துவம் எனக் குறிப்பிடுவர்.
ஒவ்வொரு மனித சமூகமும் தனக்கென்று ஒரு மருத்துவ முறையை உருவாக்கிக் கொள்ளும். இத்தகைய மருத்துவங்கள், அவர்களின் உடல் நலத்தை உயர்த்துவதற்காக, சமூக நிறுவனங்கள் மற்றும் அவர்களது பண்பாட்டு மரபுகளின் அடிப்படையில் எழுந்தவையாகும்.
விஞ்ஞான அல்லது மருத்துவக் கல்விச் சாலைகளில் கற்றறிந்த முறைமைகள் மூலம் அல்லாது, வழிவழி மரபான அல்லது அனுபவ அறிவு சார்ந்த முறைமைகளின் மூலம் நோய்க்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதனை நாட்டுப்புற மருத்துவம் எனப் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.*

Page 147
288 &
நாட்டுப்புற மருத்துவத்தினை ஆங்கில மரபில் Folkimedicine’ “Ethno Medicine”, “Popular Medicine” 6TGST LuGibGanup 6)uuisGiTITais குறிப்பர். தமிழில் இதனை நாட்டு வைத்தியம், கை வைத்தியம், மூலிகை வைத்தியம் பாட்டி வைத்தியம் முதலான பெயர்களால் குறிப்பிடுவர்.
நாட்டுப்புற மருத்துவத்தின் தோற்றம்
நாட்டுப்புற மருத்துவத்தின் வரலாறு, மருத்துவ உலகின் வரலாற்றுக்கு இணையானது." மக்கள் நாட்டுப் புறங்களிலும் மலைகளிலும் கூட்டமாக வாழ்ந்த நிலையில் தூய்மையில்லாத சுகாதாரமற்ற சூழலில் விலங்கோடு விலங்காக வாழ்ந்தனர். இக்காலத்தில் பரவிய நோய்கள் வேகமாகப் பரவியமைக்கு மருத்துவ அறிவின்மையும் ஒருகாரணம் எனலாம். மேலும், உடல்நிலை கெடுதல் என்பதனை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் உணர்ந்து கொண்டனர். அவ்வாறு உடல்நிலை சரியில்லாமைக்குத் தெய்வம், மற்றும் ஆவிகளின் சீற்றமே காரணம் என முழுமையாக நம்பிய நிலையில் நாட்டுப்புற மருத்துவமும் முளைகொள்ளத் தொடங்கியது எனக் கருதலாம்.
உலகநாடுகள் பலவற்றில் நாட்டுப்புற மருத்துவமே, நவீன மருத்துவத்திற்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. சீனா, அரேபியா, மலேயா, எகிப்து முதலான நாடுகளில் பரம்பரை பரம்பரையாக நடைமுறையில் இருந்து வந்த நாட்டுப்புற மருத்துவம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் இம்மருத்துவத்தின் நம்பகத்தன்மை பற்றித் திருப்தி கொண்டுள்ளனர்.
இந்திய மரபில் வேதகாலப் பகுதியிலேயே இவ்வாறான நாட்டுப்புற மருத்துவ முறைகள் வழக்கில் இருந்ததாகத் தெரிகின்றது."
தமிழின் தொன்மையான இலக்கியங்கள் மூலம் பண்டைத் தமிழரிடையே வழக்கிலிருந்து வந்த பாரம்பரிய மருத்துவ முறைகள் பற்றி அறிய முடிகிறது. பண்டைத்தமிழர், பசி, நீர்வேட்கை முதலானவற்றைக்கூட, நோய் எனக் கருதினர். பசிப்பிணியைப் போக்க முன்வந்த வள்ளல்கள் பசிப்பிணி மருத்துவர்கள்’ எனப் பாராட்டப்பட்டனர்.

8 289
உடல் முழுவதும் புண்பட்டுக் காணப்பட்ட மறவனுடைய உடல்,
மருத்துகொண் மரத்தின் வாள்வடுமயங்கி"
என மக்களால் மருந்துத் தேவையின் பொருட்டு வெட்டப்பட்ட மருந்து மரம் போலிருந்ததாகப் புறநானூற்றுப்பாடலடி குறிப்பிடுகின்றது.
நோயாளி வேட்டதைக் கொடாது, அவனுக்கு எது நன்மையானது என ஆராய்ந்து அளித்த மருத்துவமனை, ‘அறவோன்’ என நற்றிணைப் பாடல் சுட்டுகின்றது.*
வருந்திய செல்லல் தீர்த்த திறனறியொருவன் மருத்தறை கோடலின் கொடிதே'
எனவரும் கலித்தொகைப் பாடலடிகள், மருத்துவன், தனக்குத் தெரிந்த கலையை மறைத்தல் கொடிய பாவம் எனக் குறிப்பிடுகின்றமை கருதத் தக்கதாகும்.
தமிழரின் பாரம்பரிய மருத்துவக் கலை குறித்துத் திருவள்ளுவர் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
நோய்நாடி நோய்முதல் நாடி யதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்ற குறட்பா, மருத்துவத் துறையின் அடிப்படைச் செயல்பாடுகளை விரித்துரைத்து நிற்கிறது. சமணர், பெளத்தர் முதலானோர் மருத்துவக் கலையில் சிறந்து விளங்கினர். இம்மதங்கள் குறிப்பிடும் பல்வேறு வகையான அறங்களில் மருத்துவரும் ஒன்றாக உள்ளமை கருதத் தக்கதாகும். பதினென் கீழ்க்கணக்கு நூல்களில், ஏலாதி, சிறுபஞ்சமூலம், திரிகடுகம் முதலான நூல்கள் மருத்துவ மூலிகைகளால் பெயர் பெற்றவையாகும்.
பொதுவாக நாட்டுப்புற மருத்துவ இன, மத பேதமின்றி அனைத்துச் சமூகப்பிரிவு மக்களிடையேயும் ஆழமாக வேரூன்றியுள்ளன. இம்மருத்துவ நடைமுறைகள், நம்பிக்கைகள்,

Page 148
290 «Х»
சடங்குகள், மூலிகைகள் என்பனவற்றை அடிப்படைகளாகக் கொண்டு காணப்படுகின்றன. மருத்துவ நடைமுறைகளைப் பற்றிய செய்திகள், பாடல்கள், பழமொழிகள் முதலான வழக்காறுகளிலும் செறிந்து காணப்படுகின்றன.
நோய்க்கான காரணங்கள்
நாட்டுப்புற மக்கள், தமக்கும், தம்மைச் சார்ந்த விலங்குகள் உள்ளிட்ட பிராணிகளுக்கும் ஏற்படும் நோய்களுக்குப் பல்வேறு காரணங்களைக் கருதிக் கொள்கின்றனர். அவற்றில் பல நம்பிக்கைகளைச் சார்ந்தனவாகக் காணப்படுகின்றன.
தெய்வத்தின் சினம், தீய ஆவிகளின் செயல், மந்திரவாதிகளின் செயல், தீயபார்வைகள், முறையற்ற உணவு, சீதோஷ்ண நிலை, தீட்டுக்கள், இரத்தம் கெடுதல், நீர்த்தோய்வு, மிதமிஞ்சிய உடலுறவு, கண்ணேறு, கவனக்குறைவு, முற்பிறப்புப் பாவங்கள் முதலானவை நோய்க்கான காரணங்களாகக் கருதப்படுகின்றன.
நாட்டுப்புற மருத்துவத்தின் வகைப்பாடு
நாட்டுப்புற மக்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கத்தோடும் சமூக அமைப்போடும் பின்னிப் பிணைந்துள்ள நாட்டுப்புற மருத்துவ நடைமுறைகளைப் பலவாறாக வகைப்படுத்தி நோக்குவர்.
டான்யோடர் (Donyoder), நாட்டுப்புற மருத்துவத்தினை, Di55UFLDu LD(5i56b (Magico Religious Folk Medicine), 9)u560), Lo(5gigaulb (Natuiral Folk Medicine) 6T607 g)(56,1605 unt5 l பாகுபடுத்துவார்."
கி. கருணாகரன், இரா. பாக்கியலட்சுமி ஆகியோர் நாட்டுப்புற மருத்துவத்தினை, நாட்டுப்புற மந்திரத்தின் மூலம் நோய்களைத் தீர்ப்பதற்கான முறைகள், நாட்டுப்புற மருத்துவத்தின் மூலம் நோய்களைத் தீர்ப்பதற்கான முறைகள் எனவும்,*வ. ஜெயா என்பவர், மூலிகைமருத்துவம் மந்திரச்சடங்கு மருத்துவம் எனவும்,* சு.சண்முகசுந்தரம் என்பவர், இயற்கை மருத்துவம், மதமாந்திரீக மருத்துவம், நம்பிக்கை மருத்துவம், திட்டமிட்ட மருத்துவம், முரட்டு மருத்துவம் எனவும்" வகைப்பாடு செய்துள்ளனர்.

«Х• 291
மேற்படி வகைப்பாடுகள் யாவும் டான்யோடரின் வகைப்பாட்டினை ஒட்டியனவாகவே அமைந்துள்ளமை கருதத் தக்கதாகும். நாட்டுப்புற மருத்துவத்தைப் பொறுத்தவரை இவ்வகைப்பாடு பொருத்தமான அணுகுமுறையாகவே உள்ளதெனலாம்.
inisy sinu Ln(Osgah (Magico Religious Folk Medicine)
நோய்க்கான சிகிச்சையினை மதத்திலும், மந்திரத்திலும் நாடிநிற்பதனை மத, மாந்திரீக மருத்துவம் எனலாம். இயற்கையின் இயக்கவிதிகளைப் புரிந்து கொள்ளாத மனிதன், இயற்கையைக் கட்டுப்படுத்தவும் அதனிடமிருந்து சில பயன்களைப் பெற்றுக் கொள்ளவும் உருவாக்கிய ஒன்றே மந்திரமாகும். தொன்மைச் சமூகத்தில் ‘மந்திரம்’ என்பது பிரிக்க முடியாத ஒரு கூறாகவே இருந்து வந்துள்ளது.
தெய்வத்தின் சீற்றத்தால் துன்பங்கள் நேரிடும் என்ற நம்பிக்கை, உலகளாவிய வியாபகம் பெற்றுக் காணப்படுகின்றது. செய்யக் கூடாதவற்றைச் செய்தாலோ, தெய்வங்களுக்கு நிந்தனை செய்தாலோ துன்பம் வரும் என நம்பப்படுகிறது. அம்மைநோய், இருமல், வயிற்றமை, உடலுறுப்பு நோய்கள், நச்சுக்கடி முதலானவை தெய்வத்தின் சீற்றத்தால் ஏற்படும் என்றும், அவற்றினின்றும் விடுதலை கிடைத்தபோது சீற்றம் தணிந்து விட்டதென்றும் நாட்டுப்புற மக்கள் நம்புகின்றனர்.* அம்மை நோயும், அதற்கான கட்டுப்பாடான மருத்துவ ஒழுங்கு முறைகளும் கருதத் தக்கனவாகும்.
பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே, தெய்வக்குற்றத்தால் ஏற்படும் தீமைகள் பற்றியும், வெறியாடல் முதலான சடங்குகள் பற்றியும் பரவலாகச் செய்திகள் கிடைக்கின்றன. தெய்வம் மனித நிலைக்குக் கீழே இறங்கி வந்து, நோய்கள், துன்பங்கள், ஆகியவற்றுக்கான காரணங்களையும் பரிகாரங்களையும் பூசாரி மூலமோ அல்லது வழிபடுநர் மூலமோ தெரியப் படுத்தும் என்ற நம்பிக்கை தொன்றுதொட்டே இருந்து வருகிறது. தாயத்துக்

Page 149
292 X
கட்டுதல், நூல் கட்டுதல், மந்திரித்த பனையோலை கட்டுதல் முதலானவற்றின் மூலம் நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாமெனக் கருதுவர்.
பருக்கள், பாலுண்ணிகள், நச்சுக்கடி முதலான நோய்களுக்கு மந்திர அடிப்படையிலேயே நாட்டுப்புற மக்கள் தீர்வுகாண்கின்றனர். விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இற்றைக்காலத்திற்கூட, நச்சுக்கடிகளுக்கு மாந்திரீகனைக் கொண்டு பார்வை' பார்பித்து நஞ்சையிறக்கும் நிலைமை தொடர்கின்றது. தண்ணீரில் மந்திரித்தல்” என்பது இங்கு கருதத் தக்கதாகும். நாட்டுப்புற மக்கள், தமது உடல் உறுப்புக்கள் தோய்வாய்ப்பட்டால் அவ்வுடல் உறுப்புக்களை உலோகங்களாலும் மண்ண்ாலும் செய்வித்துக் கடவுளர்க்குக் காணிக்கை செலுத்துவதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒரு வகையான பாவனைச் சடங்காக இச்செய்கை அமைந்துள்ளது எனலாம்.
இருள் அல்லது பேய் அடித்தவர்களுக்கும் மந்திரித்துத் தாயத்துக் கட்டும் வழக்கம் மிகப்பழங்காலம் தொட்டே வழக்கிலிருந்து வருகிறது. நாட்டுப்புற மக்களிடையே அமாவாசை, பெளர்ணமி இரவுகளில் தீய ஆவிகளின் நடமாட்டம் உள்ளமை பற்றிய அச்சம் இன்றும் காணப்படுகின்றது. பேய்களை ஒட்டுவதற்கு, சாம, பேத, தான, தண்டம் என்ற ஒழுங்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பெண்கள் குழந்தைகள் முதலானோரிடத்தில் தீய ஆவிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மந்திரவாதிகள், தாம் செய்யும் மந்திரச் சடங்குகள் மூலம் ஒருவரைத் துன்பத்தில் ஆழ்த்தலாம் என்ற நம்பிக்கை வலுவான ஒன்றாக உள்ளது. பில்லி, சூனியம், வசியம், செய்வினை முதலான பெயர்களிலே இச்சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. தலைமுடி, நகம், இளவயதினரின் எலும்பு எச்சங்கள், எலுமிச்சம்பழம், செப்புத்தகடுகள் முதலானவை மந்திரித்துத் தீமை செய்வதற்குப் பயன்படுத்தப் படுகின்றன. செய்வினை மூலம் பாதிப்பு அடைந்தவர்கள், பிற மந்திரவாதிகளைக் கொண்டுகாவல் செய்தல்,
தடை வெட்டுதல் முதலான சடங்குகளைச் செய்விப்பர்.

& 293
கண்ணேற்றின் மூலம் உண்டாகும் பாதிப்புக்களைப் பார்வை பார்த்தல், சுற்றிப் போடுதல் முதலான சமயச் சடங்குகள் மூலம் போக்கும் நடவடிக்கை இங்கு கருதத்தக்கதாகும்.
மக்களிடையே அறிவியல் அடிப்படையிலான துணிவு, விளக்கம் என்பன இருந்தாலும் ஆவிகளைப் பற்றிய நம்பிக்கையினாலும் தெய்வ நம்பிக்கையினாலும் இவ்வாறான மதமாந்திரீக மருத்துவ நடைமுறைகள் இன்றும் செல்வாக்குடனிருப்பதை நோக்க முடிகிறது.
gu) Gina Ln(Osgalth (Natural Folk Medicine)
இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைகள், தாதுப்பொருட்கள் மருந்துகள் முதலானவற்றைக் கொண்டு மருத்துவம் பார்த்தலை ‘இயற்கை மருத்துவம்’ எனக் குறிப்பர். இம்மருத்துவ நடைமுறைகளில் மதம், மந்திரம் போன்றவற்றிற்கு முதன்மையிராது. இம்மருத்துவ முறையில் பத்தியம் காத்தல், மருந்துகளை முறையாக எடுத்தல் என்பன பிரதான விடயங்களாகும்.
இயற்கை மருத்துவ முறை மிகவும் தொன்மையான ஒன்றாகும். உட்கொள்ளும் மருந்து, வெளிப் பூச்சுமருந்து என இருவகையாகக் காணப்படும் இம் மருத்துவத்தை மனிதர்களுக்கு மட்டுமன்றி, விலங்குகளுக்கும் பயன்படுத்தி வருவதனைப் பார்க்க முடிகின்றது. பல்வேறு வகையான மூலிகைகள் இம்மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தவிர ஏனைய இயற்கைப் பொருட்களான கீரைகள், மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு, கற்பூரவல்லி, துளசி, கீழாநெல்லி, வேப்பிலை, வில்வ இலை, மரப்பட்டைகள், வேர்கள் ஆகியவற்றுடன் விலங்குகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்களும் இயற்கை மருத்துவ முறையில் முக்கியத்துவம் பெறுவனவாகும்.
மேலும் தமிழர் வாழ்க்கையொடு பிணைந்த மருத்துவச் செடிகொடிகள் முதலான பொருட்களும் மற்றும் விலங்கிடமிருந்து பெறும் பொருட்களும் இன்றும் உள்ளார்ந்த சிற்றுார்களில் அன்றாடம் மருந்துப் பொருட்களாகப் பயன்பட்டு வருகின்றன. சான்றாகச் சில மருத்துவப் பயன்தரும் பொருட்களை நிரலாகக் காணலாம்.

Page 150
294 <》
செடிகொடிகளிலிருந்து
இலை
. அம்மாம்பச்சரிசி
ஆடாதொடை ஆடுதீண்டாப்பாளை
ஆரை ஆவிரை
. ஓரிதழ்த் தாமரை
கரிசலாங் கண்ணி
. கறிவேப்பிலை
. குப்பைமேனி
10. குல்லை
11. சதை ஒட்டி
12. நொச்சி
13. பீச்சங்கு
14. பொன்னாங்காணி
15. மணித்தக்காளி
16. முசுமுசுக்கை 17. வேலிப்பருத்தி
விலங்குகளிடமிருந்து
1. ஆட்டுப்பால்
2. ஆவின் சாணம்
3. சிறுநீர்
4. குதிரைக் சாணம்
காய் கொடி
1. ஏலம் 1. சீந்தில்
2. கடுக்காய் 2. பிரண்டை
3. கண்டங்கத்திரி
4. நெருஞ்சில்
தண்டு பட்டை
1. வாழை 1. வேம்பு
விதை
1. சிறுபூளை 1. கொத்துமல்லி
2. தும்பை
3. ரோசா விழுது
1. ஆல்
வேர்
1. அதிமதுரம்
2. அமுக்கராக் கிழங்கு
3. திப்பிலி
4. நாயுருவி
7. பன்றிக் கொழுப்பு
8. புறாத்தசை
9. புநுகுப்பூனைக் கழிவு
10. யானைத் தந்தம்

令 295
5. கோழி எலும்பு 11. வெளவால் குருதி
6. சவ்வாதுப்பூனைக் கழிவு
நாவல்களில் நாட்டுப்புற மருத்துவம்
நாவல்களில் நாட்டுப்புற மருத்துவ வகைகளான மதமாந்திரீக மருத்துவம், இயற்கை மருத்துவம் ஆகியன குறித்து விரிவான செய்திகள் கிடைக்கின்றன. நாவல்களிலே இம்மருத்துவ முறையானது, தமிழ் வைத்தியம், கைவைத்தியம், ஆயுர்வேதம் முதலான பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளது.
மதமாந்திரீக மருத்துவம்
நாவல்களிலே மதமாந்தரீக முறையில் குணப்படுத்தும் நோய்களான பேய்பிடித்தல், செய்வினை, சூனியம், வசியம் மற்றும் கண்ணேறு ஆகியன பற்றியும், அவற்றின் பிணிப்பிலிருந்து நீங்குவதற்கான வழிமுறைகள் பற்றியும் மிகவும் விரிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
பேய்பிசாசுகளின் தாக்கம்
ஒருசில சூழ்நிலைகளில் இறந்தவர்கள் ஆவிகளாகவும், பேய்காளாகவும் உலவுவார்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இவ்வுலக ஆசைகளைப் பூர்த்தி செய்யாதவர்கள், அகாலமரணம் அடைபவர்கள் ஆகியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
மந்திரவாதிகளால் பிறர்மீது ஏவிவிடப்படும் பில்லிப்பேய்
ஏவலை முடிக்கும் தன்மை கொண்டதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
ஆவியின் பழிவாங்கும் இயல்பு குறித்த நம்பிக்கை பற்றிப் பஞ்சமர்
என்ற நாவலில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.
சிறாப்பரின் நடுவிலாள் இரத்தப் பெருக்குக் கண்டு இறந்துபோனாள், சிறாப்பருக்கு இது அடிமேல் அடியாகவே இருந்தது. செத்துப்போன சிறிசேனாவின் ஆவி பழிவாங்குவதாகத்தான் ஊர் பேசிக்கொண்டது. சட்டம் செய்ய முடியாததை ஆவி செய்து முடித்ததென்று பலரும் நம்பினர்."

Page 151
296 «Х•
மோகினிப்பேயானது இளவயது ஆண்களையும் கன்னி கழியாத பெண்களையும் பிடிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. பாமரங்கள் என்ற நாவலில் இவ்விடயம் பற்றிப் பின்வருமாறு சித்திரிக்கப்பட்டுள்ளது.
இப்பிடித்தான் என்ரை ஒன்று விட்ட அண்ணை ஒருத்தருக்கு மோகினிப் பேய் பிடிச்சு ஆட்டினது. அவரும் இப்படித்தான் நித்திரையில் ஒழும்பி நடந்தவர். ஒருநாள் நித்திரையில கிணத்துக் கட்டிலை கூட நடந்தவர். எப்பவும் இப்படித்தான் அவருக்கும் வேர்க்கும், நெஞ்சிடிக்கும்
27
பொதுவாக இரவு நேரங்களில் பேய் பிடித்துக் கொள்ளும் என்று நம்பப்படுகின்றது. அடிமைகள் என்ற நாவல் இதுபற்றிப் பின்வருமாறு விவரிக்கின்றது.
இராப்போலத்தான் அவளின் கணவன் கொழுந்தர் நயினார் பயணத்திலிருந்து வந்ததாகவும், அவர் வந்தகையோடேயே அவளுக்கு ஆட்டம் தொடங்கிவிட்டதாகவும் சொன்னாள். ஒமெடி புள்ளை! இருக்குமடி அவரோடை பேயைப் பிச்சையைத் தொத்திக் கொண்டு வந்து அது பச்சைப்புள்ளைக் காரியைப் புடிச்சுப் போட்டுது போலை கிடக்கு .*
பேயினால் பிடிக்கப்பட்டமைக்கான அறிகுறிகள்
பேயின் தாக்கத்தினால் ஒருவர் பிடிக்கப்பட்டு உள்ளார் என்பதனைச் சில வகையான செய்கைகளைக் கொண்டே இனங்கண்டு விடுவர். அடிக்கடி எச்சில் விழுங்குதல், கழுத்து நரம்புகள் புடைத்து ஒரு விதமாகத் துடித்தல், தனிமையிற் புலம்பல், தானேசிரித்தல், உணவு செல்லாமை, ஆழ்ந்த உறக்கம், உடுக்கைச்சத்தம், மந்திரவாதியின் தாலாட்டு முதலானவற்றுக்கு தலையசைத்தாடுதல், வியர்த்தல், நெஞ்சிடித்தல் முதலானவை பேயால் பிடிப்புண்டமைக்கான அறிகுறிகளாகும்.
பேயோட்டும் மந்திரவாதியின் தாலாட்டுக்குப் பேயினாற் பிடிக்கப்பட்டவர் இசைந்து ஆடுதல் பற்றிப் பூமரங்கள் என்ற நாவல் மிக விரிவாகச் சித்திரித்துள்ளது.

& 297
ஊத்தைக்குடி வயிரவா ஓடிவாடா
உன்ஆளைக் காணவே ஒடியாடா .
வயிரவா ஊத்தைக்குடியா வாடாவாடா . என்று திருநீற்றை அந்தமனிதன் மேல் அள்ளி வீசி உச்சாடனம் செய்தான் வேலன் உடுக்கின் கிண்கிணிநாதம் மேலெழுந்து கீழ்வந்து. கீழ்வந்து எச்சுக்கும் தக்குக்குமாக நாதச் சுவாலையைக் கக்கியது . சின்னப்பெண் தலையாடியது. மெதுமெதுவாக ஆடியதலை லயத்துக்கு ஆடியது. கூந்தல் இரண்டையும் பூமித்தாயின் நெஞ்சிலே ஊன்றிப் புதைய வைத்து உடம்பின் சுமையை ஊன்றிய கரங்களில் ஏற்றி மெல்லிடை துவளத் துவள அந்தச் சின்னப்பெண் ஆடத் தொடங்கி விட்டாள்.*
பேயோட்டற் சடங்கு
பேயினால் பிடிக்கப்பட்டவரிலிருந்து, குறித்த பேயை விரட்டும் பொருட்டுப் பேயோட்டற் சடங்கு மேற்கொள்ளப்படும். இது பகலிலும், இரவிலும் நடைபெறும். வெள்ளி, செவ்வாய் ஆகிய நாட்கள் பேயோட்டலுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.
பேயோட்டற் சடங்கின்போது, மந்திரவாதி, பூசைப் பொருட்களான கும்பங்கள், பலிப்பொருட்கள் முதலானவற்றைப் பரவி, தனது இஷ்டதெய்வத்தை வரவழைக்கும் பொருட்டுத் தாலாட்டுப்பாடி வாலாயம் செய்வான். பேயினால் பிடிக்கப்பட்டவர் மந்திரவாதியின் முன்னால் உட்கார வைக்கப்படுவார். வாலாயமான தெய்வத்தின் துணையுடன் குறித்த நபரில் உறைந்துள்ள படிமத்தானை வெளியேற்றும் சடங்கு நடைபெறும்." மந்திரவாதியின் தாலாட்டும் உடுக்கின் உள்ளத்தைக் கிளர்ச்சிகொள்ள வைக்கும் இசையும் சேர்ந்து பேய்பிடித்தவரைத் தன் நிலைமறந்து ஆடத்தூண்டும்.
பேயோட்டும் மந்திரவாதி, திருநீற்றைக் குறித்த நபரின் தலையிலே தூவி, சாம்பிராணிப் புகையினைச் சுவாசிக்கச் செய்து, வேப்பிலை கொண்டு உடல் முழுவதும் தடவல் செய்து பேயோட்டலை மேற்கொள்வார். இச்சடங்கின்போது பல்வேறு வகையான பலிப்பொருட்களைப் பேய்க்குக் காணிக்கையாக வழங்குவர். அடிமைகள் என்ற நாவல் இப்பலிப் பொருட்பட்டியலைப் பின்வருமாறு விவரிக்கின்றது.

Page 152
298 «Х•
கைவியளம் முடிந்தது. அடுத்த வெள்ளிக் கிழமை கழிப்புச் செய்ய வேணும்! என்று கயித்தான் சொல்லிவிட்டு, கழிப்புக்கு வேண்டிய பொருட்களைச் சொல்லத் தொடங்கினான் . மூன்று வெள்ளைச் சாவலில் இருந்து, அரிசி, தேங்காய், நெல்லுப் பொரி, ஆலம் சுள்ளி, பச்சைக் கற்பூரம், சாம்பிராணி, வெற்றிலை, வாழைப்பழம், நவதானியம், தேசிக்காய், வேப்பம்பத்தி, வாழைக்குட்டி . குங்கிலியம் என்று வளர்த்து வேறும் சில பொருட்கள் உள்ளடக்கி ஒன்பது சிரட்டை தென்னங்கள்ளு வரையில் வந்துமுடிந்தது .'
பலிப்பொருட்களுக்கு மசிந்து, குறித்த நபரிலிருந்து விடுபட மறுக்கும் பேயினைச் சாட்டை கொண்டு விரட்டும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். இந்நடவடிக்கை பற்றி அடிமைகள் என்ற நாவலில் பின்வருமாறு சித்திரிக்கப்பட்டுள்ளது.
எடி உதிரமாகாளி இந்தப்பூ மரத்தை விட்டுப்போறியா! கயித்தான் கேட்டான்
மாட்டேன்! போகமாட்டேன்! அவள் வாய் திறந்து பேசினாள். பக்கத்தேயிருந்த சாட்டையைக் கொண்டு தாறுமாறாக விளாசித்தள்ளினான் கயித்தான்.
பூமரத்தைவிட்டுப் போறியா?
மாட்டேன், போகமாட்டேன்!
சாட்டை அடி! ..."
சாட்டை அடியைத் தொடர்ந்து சூடு போடுதலும், தீக்கனல்களைப் பேய்பிடித்தவரின் கைகளில் அள்ளிக் கொடுப்பதும் நடைபெறும். நெருப்பைக் கண்டு பேயானது பயந்து ஓடிவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறானதுன்புறுத்தல்களுக்குப் பயந்து ஒட ஒத்துக் கொள்ளும் பேயினை இளநீர்ருக்குள் இறக்குவர். பேயின் தாக்கத்தினால் பிடிக்கப்பட்டுள்ளவரின் உச்சந்தலையிலுள்ள ஒன்பது தலைமுடிகளை வாரி எடுத்து, அதன் முடிப்பிலே ஆணியொன்றைக்கட்டி அதனை இளநீரிலே செருகி, அதன் வழியே பேயினை இறக்குவர். இவ்வாறு இறக்கப்பட்ட பேயினைச்

X 299
சுடலைவரை சுமந்த சென்று அங்குவைத்துக் கழிப்புச் சடங்கை நிறைவு செய்வர்.
சுடலை நோக்கிய பிரயாணத்தில் தடைகள் ஏதும் ஏற்படாதிருக்க வழிவழியே ஒன்றுக்கும் மேற்பட்ட சேவல்களையும், எலுமிச்சம் பழங்களையும் வெட்டிச் செல்வர். இதனைத் 'தடைவெட்டுதல்’ என அழைப்பர். தடைவெட்டும் சடங்கு நடைமுறை குறித்து ‘அடிமைகள்’ என்ற நாவல் பின்வருமாறு விவரிக்கின்றது.
பந்தத்தின் வெளிச்சத்தில் சுடலைப் பிரயாணம் தொடங்கிவிட்டது . ‘செல்லன்’ மற்ற கோழிச் சாவலையும் எடுத்துவை இடையில் தடை வெட்ட வேண்டிவரும் . ஐயோ காலைத்தூக்க முடியேல்லை! பொன்னன் வருத்தத்துடன் கத்தினான்.
செல்லன், தடைவெட்டவேணும் கோழியை எடு! மூன்றாவது வெள்ளைச் சாவலும் தடைவெட்டக்காக தன் உயிரைக் கொடுத்துவிட்டது!
இப்போ பொன்னன் எந்தவித சிரமமுமின்றி நடந்தான்.*
சுடலையில் உள்ள மரம் ஒன்றில் இளநீரில் செருகப்பட்டுள்ள ஆணியினை அறைந்து விடுவதுடன் பேயோட்டற் சடங்கு நிறைவு பெறும். இவ்வாறு செய்வதால் குறித்த மனிதரிடம் உறைந்துள்ள பேய், மரத்துக்குச் சென்றுவிடும் என நம்பப்படுகின்றது. இதனை ஒரு LDITpg5 G5d 5Liii.5ITsai (Rite of Transference) soliga IT b.
பேயோட்டற் சடங்கின் பல்வேறு நடைமுறைகளும் ஒருவகையான அதிர்ச்சி (shock) மருத்துவத்தினைக் குறித்த மனிதருக்கு வழங்குவனவாகவே உள்ளன. சாட்டை கொண்டு அடித்தல், தீயினால் சூடு போடுதல், தீக்கனல்களை அள்ளிக் கொடுத்தல் முதலான செயற்பாடுகள் மூலம் அதிர்ச்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறான அதிர்ச்சியின் மூலம் பேய்பற்றிய எண்ணங்களிலிருந்து குறித்த மனிதர் விடுபடுவார் என எண்ணுவது ஒருவகையில் சாத்தியமானதே எனக் கருதலாம். அத்துடன் தன்னைப் பிடித்திருந்த பேயினைக் குறித்த மந்திரவாதி வெளியேற்றிவிட்டார் என்ற உளவியல் நெறியிலான உளநிறைவும் இணைந்த நிலையில் இப்பேயோட்டற் சடங்கு முழுமையான வெற்றியைப் பெறுகின்றது எனக் கூறலாம்."

Page 153
300 *
மேலைநாடுகளிலே, பேயை விரட்டுவதற்காகப் பேய்பிடித்தவர்களைத் தீயிலிட்டுக் கொளுத்தும் வழக்கம் இருந்தமை குறித்துப் பிரேசர் குறிப்பிடுவது இங்கு கருதத்தக்கதாகும்.* பேய்களிடமிருந்து நிலையான பாதுகாப்புப்பெறும் பொருட்டு, நூல்கட்டுதல், யந்திரத்தகடு பெற்றுக் கொள்ளுதல் முதலான செயல்பாடுகளும் மேற்கொள்ளப் படுகின்றன."
செய்வினை, சூனியம், வசியம்
தீய மந்திரங்கள் மூலம் தமக்கு வேண்டாதாரைத் துன்புறுத்தவோ, இசைய வைக்கவோ முடியும் என்ற நம்பிக்கை உலகின் பல்வேறு இன மக்களிடையேயும் வழக்கில் உள்ளது. இதனைத் தொத்துமந்திரம்’ (Contagious Magic) என்ற பிரிவுக்குள் அடக்கிப் பார்க்கலாம்.' மருந்திடுதல், மருந்துவைத்தல், செய்வினை, சூனியம், வசியம் முதலான அனைத்தும் இவ்வகையினைச் சார்ந்தனவாகும்.
ஒருவருக்குச் செய்வினை வைக்கவேண்டும் என்றால், அவருடைய முடி, நகம், உடல் அழுக்குத் துணி (பெண்), பெயர், இராசி, இவற்றுள் ஒன்றைக் குறித்த மனிதருக்குத் தெரியாமல் கைப்பற்றி அதனைக் கொண்டு செய்வினை செய்விப்பர். செய்வினை வைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் உலகெங்கினும் ஒரே தன்மையுடையனவாகவே காணப்படுகின்றன.
செய்வினை, சூனியம், வசியம் என்பனவற்றால் பாதிப்படைந்தமைக்கான அறிகுறிகள்
செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களிடம் சிலவகையான குணங்குறிகள் காணப்படும். தீராத நோய், உடல் பாகங்களின் செயலிழப்பு, சொற்கேளாமை, தனது விருப்பப்படி நடத்தல் முதலானவை இவ் அறிகுறிகளிற் சிலவாகும்.
கழுகுகள் என்ற நாவலில் வரும் ஆறுமுகத்தாரின் ஆறாத புண்ணுக்குக் காரணம் சூனியம்தான் என்பதனை அவரும், அவரைச் சார்ந்தவர்களும் நம்புகின்றனர்.

※,301
புண் எப்படி உண்டானதோ அதேபோலத் தானாகவே ஆறிப்போய் விடுமென்றுதான் முதலில் அவர் நம்பினார். நாட்கள் பல சென்ற பிறகுதான் அவர் உள்ளத்தில் சந்தேகம் வளர ஆரம்பித்தது. அதன்பின்பு சில, கை மருந்துகளை இட்டுப்பார்த்தார். அந்த மருந்துகளாலும் சுகம் கிடைக்கவில்லை. அநுபவத்தர்களாக இருக்கும் அயலவர்கள் சிலர் அந்தப் புண்ணைப் பார்த்தார்கள். “இது நோயல்ல சூனியத்தால்தான் இந்த புண் வந்திருக்கிறது என்றார்கள் .” ஆறுமுகத்தார் மனத்திலிருந்த சந்தேகம் நம்பிக்கையாக மாறியது. அவர் மேற்கொண்ட பொறாமை காரணமாக மடக்கி, வீட்டோடு முடங்கிக் கிடக்கச் செய்யவேண்டுமென்று யாரோ சூனியம் செய்து வைத்திருக்கிறார்கள் .*
வூசியம் செய்து திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் சடங்கு என்ற நாவல் பின்வருமாறு சித்திரித்துள்ளது.
எனக்குத் தெரியுமே உப்பிடி நடக்குமெண்டு அந்த நெல்லியடியாள். அவள் தான் அந்த அரிசிப் பல்லுக்காரி மருந்து போட்டுத்தானே புருஷனைப் புடிச்சவள் ..."
செய்வினை, சூனியங்களினால் பாதிப்புண்டவர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள நோய்க்குக் காரணம் செய்வினைதானா என்பதனையும் அதனைச் செய்வித்தவர் பற்றியும் ‘மைபார்த்தல்’ மூலம் (அஞ்சனம் பார்த்தல்) அறிந்துகொள்வர். ‘மைபார்த்தல் நடைமுறை குறித்துத் ‘தண்ணீர் என்ற நாவல் பின்வருமாறு சித்திரிக்கின்றது.
.சாம்பிராணி வாசனை இதமாக இருந்தது, ஏறக்குறைய அரைமணி நேரமாயிற்று இன்னும் அஞ்சனத்தில் எதுவும் தெரியவில்லை. பரியாரியார், ஒருவடலிக்கரை தெரியுமாப்போலை கிடக்கு . கவனம் பெடியன் கொஞ்சவேளை பல்லைக்கடிச்சுக் கொண்டு கண்வெட்டாமல் பார் ."
செய்வினை பற்றி உறுதி செய்தவுடன் செய்வினை எடுத்தற் சடங்கினை மேற்கொள்வர்.

Page 154
302 *
செய்வினை, சூனியம் எடுத்தல் (சிகிச்சை)
மந்திரவாதிகளைக் கொண்டு சிலவகையான சடங்குகளை மேற்கொள்வதன் மூலம் செய்வினை, சூனியத்திலிருந்து விலக்குப் பெறுவர். கழுகுகள் என்ற நாவலிலே, ஆறுமுகத்தாருக்குச் செய்வினை எடுத்தமை குறித்துப் பின்வருமாறு சித்திரிக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகத்தார் வீட்டில் என்றுமில்லாதவாறு உடுக்கை ஒலிக்க ஆரம்பித்தது. மாந்திரீகர்கள் ஒருவர்பின் ஒருவராக மூவர் வந்தார்கள். மடை வைத்தார்கள், நூல் கட்டினார்கள், பலி கொடுத்தார்கள், வீடு காவல் செய்தார்கள், கழிப்புச் செய்தார்கள் .*
செய்வினை எடுத்தற் சடங்கின் போது படையல் பரப்பிப் பல்வேறு விதமான பலிகள் கொடுக்கப்படும். செய்வினையை எடுத்தபின்னர் கழிப்புச் செய்வர். தொடர்ந்து வீட்டைக்காவல் செய்யும் சடங்குகளை மேற்கொள்வர். இதன் ஒரங்கமாக வீட்டைச் சுற்றி உள்ள வளவின் பல்வேறு மூலைகளிலும் மந்திரித்த சங்குகளைப் புதைத்துவிடுவர். நிறைவாக வினையால் பாதிக்கப்பட்டவருக்கு வேப்பிலை கொண்டு ‘ஏக்கப்பார்வை’ பார்த்தல்,
செய்வினை எடுத்தற் சடங்கின் போது படையல் பரப்பிப் பல்வேறு விதமான பலிகள் கொடுக்கப்படும். செய்வினையை எடுத்தபின்னர் கழிப்புச் செய்வர். தொடர்ந்து வீட்டைக்காவல் செய்யும் சடங்குகளை மேற்கொள்வர். இதன் ஒரங்கமாக வீட்டைச் சுற்றி உள்ள வளவின் பல்வேறு மூலைகளிலும் மந்திரித்த சங்குகளைப் புதைத்துவிடுவர். நிறைவாக வினையால் பாதிக்கப்பட்டவருக்கு வேப்பிலை கொண்டு ‘ஏக்கப்பார்வை' பார்த்தல், திருநீறு போடுதல், தாயத்து, நூல் என்பனவற்றைக் கட்டுதலுடன். இம்மடி மாந்திரீகச் சிகிச்சை நடைமுறைகள் முடிவுக்கு வரும்.
as Gior Gao (Evil eye)
கண்களால் பிறரைத் துன்புறுத்துவதனைக் கண்ணேறு’ எனக் குறிப்பிடுவர். பொறாமையே கண்ணேற்றுக்கான அடிப்படையாக

(X 303
உள்ளது. பொதுவாகக் குழந்தைகளே தீயபார்வைகளினால் அதிகம் பாதிப்படைபவர்களாக உள்ளனர். மனிதர்களை மட்டுமன்றி, மரம், செடி, கொடி, வயல், தோட்டம் மற்றும் புதிதாகக் கட்டப்படும் வீடுகள், கட்டடங்கள் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கண்ணேறு பாதிக்கும்.
கண்ணேறுபட்டமைக்கான அறிகுறிகள்
கண்ணேற்றினால் பல்வேறு திமைகள் உண்டாகும். உடல்நலக்குறைவு, தலைவலி, விக்கல், கொட்டாவி, பசியின்மை, பொருள் இழப்பு, சேதம் முதலானவை இவற்றுட் சிலவாகும்.
பஞ்சமர் என்ற நாவலிலே சுப்பையாவாத்தியாருடன் நீண்டகாலம் ஒத்துழைத்த குடை காற்றில் அகப்பட்டு முறிந்ததற்கும்.* போடியார் மாப்பிள்ளையிலே வரும் செல்லத்துரையின் உடல் நலக்குறைவுக்கும்,* காட்டாறு என்ற நாவலில் வரும் சண்முகத்தின் வளமான விளை நிலம் பறிபோனமைக்கும்,*முற்றத்து ஒற்றைப்பனையிலே வரும் முத்தர் அம்மான்சயிக்கிளால் விழுந்து முறிந்தமைக்கும்*முறையே ஊராரின் கண்ணையே குற்றஞ் சாட்டுவது குறிப்பிடத்தக்கதாகும்.
கண்ணேறு கழித்தல்
கண்ணேறு கழித்தல் நடைமுறை பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்படும். மந்திரம், மஞ்சள், குங்குமம், உப்பு, சங்கு, தெருமண், மிளகாய் வற்றல் முதலானவற்றைக் கொண்டு கண்ணேற்றைப் போக்குவர்.
பொதுவாக மிளகாய் வற்றல், உப்பு, தெருமண் (முச்சந்திமண்) முதலானவற்றை, உள்ளங்கையில் பிடித்து, கண்ணேற்றுக்குள்ளானவரின் உடலை உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் தடவி எடுத்து, கழிப்புப் பொருட்களின் மீது, பாதிப்படைந்தவரின் எச்சில் துளிகளையும் திரட்டி, அவற்றைத் தெருவிலே போட்டு எரியூட்டல் செய்வது பெரும்பான்மை வழக்கமாகும். சிலர் கழிப்புப் பொருட்களை நீர்நிலைகளில் வீசிவிடுவதுமுண்டு, எரியுண்ட மிளகாய்வற்றல் கரியின் மூலம் பொட்டிடும் வழக்கமும் காணப்படுகிறது.

Page 155
304 «Х•
இருளின் கதிர்கள் என்ற நாவலிலே வரும் பொன்னம்மாளுக்குத் திருஷ்டி பட்டதாகக் கருதி ஆராத்தி சுற்றியெடுத்தமை பற்றிப் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.
அவளுக்கு திருஷ்டிபட்டுவிட்டதாகக் கூறி, அவளை நிர்வாணமாக நடு வீட்டுக்குள் நிற்கவைத்து, மூன்று செத்தல் மிளகாய்களைப் பிடித்து, உள்ளங்காலிலிருந்து உச்சிவரை தடவி எடுத்து, அவளின் தலையை மூன்று தடவை அதனால் சுற்றி, துப்பிக்கழித்து பக்கத்து வட்டக் குளத்தில் மிளகாய்களைத் தானாகவே எடுத்துச் சென்று மிதக்க விட்டும் பார்த்தாள்."
கானல் என்ற நாவலிலே வரும் திரேசியின் வனப்பைக் கண்டு பிறர் கண்பட்டுவிடக் கூடாதே எனக் கவலை கொள்ளும் வயதான பெண்மணிகளிற் சிலர், நெட்டிமுறித்து (சொடக்கு) அவளுக்குத் திருஷ்டி போக்குகின்றனர்."
கழிப்புச் செய்வதன் மூலம் கழிப்புப் பொருட்களான தெருமண், மிளகாய்வற்றல், உப்பு முதலானவற்றின் மீது கண்ணேறு தொற்றிக் கொள்கின்றது. பின்னர் அவற்றைத் தீயிட்டோ, நீரிலிட்டோ அழிப்பதன் மூலம் அந்நோயும் அழிந்துபோகும் என்பதே இச்சிகிச்சை முறையின் அடிப்படையாகும். இதனைத் தொத்து மந்திரம்' என்ற வகைக்குள் அடக்கிப் பார்க்கலாம்.
நச்சுக்கடி மருத்துவம்
பாம்பு, பூச்சிகள் முதலிய நச்சுயிரி தீண்டின், சிகிச்சையினை மத மாந்திரீக மருத்துவ முறையிலேயே மேற்கொள்ளும் வழக்கம் காணப்படுகிறது. ‘நச்சுக்கடி மருத்துவத்துக்கென்றே சிலவித நடைமுறைகள் விசேடமாகப் பின்பற்றப்படுகின்றன.
நச்சுக்கடி மருத்துவரிடம் செல்கின்றவர்கள், தம்மையோ, பிறரையோ நச்சுயிரிதீண்டி விட்டதாக முதலில் கூறக் கூடாது. வந்திருப்பவர் நிலையையும் வந்த திசையையும் அனுமானித்து எவருக்கு, எந்தவகையான நச்சுயிரி தீண்டியுள்ளது! எப்படித் தீண்டியுள்ளது? என்பன பற்றி மருத்துவர் அறிந்து கொள்வார். தான் புறப்பட்டுச் செல்வது பயனுள்ளதாக அமையும் எனக் கருதின் மருந்துவகைகளுடன் புறப்பட்டுச் செல்வார்.

• 305
நிலக்கரி என்ற நாவலில், நச்சுக்கடி மருத்துவருக்கும், கதிராமனுக்குமிடையிலான உரையாடற் பகுதியில் இம்மருத்துவ நடைமுறைகள் பற்றிய விவரமான குறிப்புக்கள் கிடைக்கின்றன.
கையில் விளக்கை எடுத்து வந்து அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தார் வைத்தியர். விசக்கடி வைத்தியரிடம் முதலில் எதுவுமே கூறக் கூடாது என்ற வழக்கம் கதிராமனுக்கும் நன்கு தெரியும். எனவேதான் அவன் ஒன்றுமே பேசாமலிருந்தான் . “நாலு பல்லும் வாளமாய்ப்பட நாகம் தீண்டிப்போட்டுது! இனி நாமொன்றும் செய்வதற்கில்லை” என்று அமைதியாகச் சொன்னபோது கதிராமன் உள்ளம் குன்றிச் செயலிழந்து விட்டான் ...*
காயம்பட்ட இடத்தினையும், காயத்தின் தன்மையினையும் அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் செய்வர். நீறுபோடுதல், வேப்பிலை கொண்டு பார்வை பார்த்தல், பச்சிலை மருந்து கொண்டு பற்றிடல் முதலானவற்றின் மூலம் நஞ்சு இறக்கப்படும். நச்சுயிரி தீண்டியவருக்கான மருத்தவ நடைமுறைகள் முடியும் வரை விரதம் இருப்பது மருத்துவர்களின் வழக்கமாகும். விரதத்தை மருத்துவர் இடையில் முறித்துக் கொள்வாரானால் நச்சுயிரி தீண்டியவர் பிழைக்கமாட்டார் என்பது தெரிந்து விடும்.
தண்ணீர் என்ற நாவலில், பாம்பினால் கடியுண்ட சொடுகனுக்குப் பார்வை பார்த்த மருத்துவர், இடையிலே செல்லியிடம் இருந்து முட்டிக்குள் தண்ணிரை வாங்கிக் குடித்த போது, செல்லி அழுகுரலை வைப்பதான செய்தி மேற்படி நடைமுறையின் விளக்கமாக அமைந்துள்ளதெனலாம்.*
பாம்புக்கடிக்கான முதலுதவி
பாம்பினால் ஒருவர் கடியுண்டால், கடியுண்ட காயத்தின் மேலே
கட்டுப் போடுதல் உடனடிச் சிகிச்சையாகும். இதன் மூலம் நஞ்சு
உடலின் பிறபாகங்களுக்கும் செல்வது தவிர்க்கப்படுகின்றது.
பாம்புப்புற்று மண்ணை எடுத்து, கடியுண்டவரின் உச்சந்தலை,
கடிவாய், வாய் முதலானவற்றில் போடுவதன் மூலமும் நிவாரணம் பெறுவர். புற்றுமண், பாம்பின் நடவடிக்கைகளுக்கு இசைவான மண்

Page 156
306 X
என்பதால் அதற்கெனச் சிலவகை மருத்துவக் குணங்கள் உண்டென்பது நம்பிக்கையாக உள்ளது.*
இயற்கை மருத்துவம்
இயற்கை மருத்துவமுறையில் பல்வேறு மூலிகைகள், செடிகள், கொடிகள், காய்கள், கனிகள், பூக்கள், மரங்களின் பட்டைகள், வேர்கள், விதைகள், கிழங்குகள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள் முதலானவை பயன்படுத்தப்படுகின்றன. இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் நாட்டுப்புற மருத்துவ முறையானது இனத்துக்கு இனம், இடத்துக்கிடம் வேறுபட்டுக் காணப்படுகிறது.
இயற்கை மருத்தவத்தில் வழங்கப்படும் மருந்துகள், வெளிப்பூச்சு மருந்துகள், உட்கொள்ளும் மருந்துகள் என இருவகைப்படும். நாட்டுப்புற மருத்துவத்தில் நல்ல நாளில் மருத்துவத்தினைத் தொடங்குதல், மருத்துவ சிகிச்சைக்குப் பணம் பெற்றுக்கொள்ளாமை, பத்தியம் காத்தல் முதலான சில மரபுகள் பின்பற்றப்படுகின்றன.
அடிமைகள் என்ற நாவலில் வரும் மழுவராயர்தந்த பணத்தினை வாங்கமறுத்த வைத்தியர், அவரின் மகளுக்கான பத்திய நடைமுறைகளைப் பின்வருமாறு விளக்குகின்றார்.
இஞ்சை நில்லும் ஒரு அலுவல் . உம்மடை மகள் எழும்பி நடக்க ஐஞ்சாறு மாசம் செல்லும், எம்மடை மருமோனைக் கிட்டப்போக விட்டிரோ மோள்இல்லை எண்டு நினைச்சுக் கொள்ளும். இன்னுமொண்டு மோளன்ரை பாலைப் புள்ளைக்குக் குடுக்க விடப்பிடாது. ஆம்பிள்ளை வாடைபிடிக்காத ஒரு பால்காறியைப் பிடிச்சு பாலைக் குடுப்பியும் ."
இயற்கை மருத்துவத்தின் பொதுக் கூறுகள் பத்தியம் காத்தல்
பத்தியம் காத்தல் என்பது மிகவும் கடினமான ஒன்றே எனினும், அதுவே இம்மருத்துவமுறையின் தலையாய கூறாக உள்ளமை கருதத் தக்கதாகும், மருத்துவர் குறிப்பிடுகின்ற அறிவுரைகளை முறைப்படி

(X 307
கடைப்பிடித்துவரலே ‘பத்தியம்’ காத்தலாகும். உணவு உட்கொள்ளல், குளித்தல், தலைக்குளிப்பு, உடலுறவு உட்படப் பல்வேறு விடயங்களிலும் பத்தியம் காத்தல் பேணப்படும்.
தண்ணிர் என்ற நாவலிலே பத்தியநடை முறைகளைக் கடுமையாகப் பின்பற்றும்படி அறிவுறுத்தும் ‘கந்தன்’ என்ற வைத்தியர் பற்றிப் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.
எந்தப் பெரிய மனிதராக இருந்தாலும் கந்தன் ஒழுங்கு முறைப்படிதான் எல்லோரையும் கவனிப்பான். ஒரு நோயாளியைப் பார்த்துப் பேசி. மருந்து கொடுத்து, பத்தியவகைகளை அவர்களுக்குப் படித்துப்படித்துச் சொல்லி அனுப்ப ஒருமணிநேரத்துக்குமேல் ஆகிவிடும்.*
மருந்து உள்ளெடுக்கும் காலம்
மருந்து உள்ளெடுக்கும் காலத்தினை மண்டலம் என்ற அளவை கொண்டு தீர்மானிப்பர். ஒருமண்டலம் என்பது நாற்பது நாட்களைக் கொண்டதாகும். நோயின் தன்மைக்கேற்ப இரண்டு, மூன்று மண்டல காலத்திற்கு மருந்துகளையும், பத்திய நடைமுறைகளையும் தொடரவேண்டியிருக்கும். மருந்துகள் குழம்பாகவும், குளிகையாகவும் வழங்கப்படும்.
மரக்கொக்கு என்ற நாவலிலே வரும் மணியகாரனின் மனைவியின் கரத்தைத் தொட்டு நாடிபிடித்துப் பார்த்த வைத்தியர், அவள் குறிப்பிட்ட குணங்குறிகளைக் கேட்டு, உடற் சூடு தணிய வேண்டுமானால் நான்கு மண்டல காலத்துக்குக் குழம்பு உட்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்."
மருந்து உரைக்கப் பயன்படும் பொருட்கள்
மருந்தை உரைப்பதற்குக் (கரைப்பதற்கு) கருங்கல்லிலான உரல்களையும், தேங்காய்ச் சிரட்டைகளையும் (கொட்டாங்கச்சி) பயன்படுத்துவர். முழுத் தேங்காயின் பெரியகண்ணைத் திறந்து, அதிலுள்ள தேங்காயை அப்புறப் படுத்தித் தூய்மை செய்த பின்னர் அதனை மருந்துக் கொள்கலனாகப் பயன்படுத்துவர். மேற்படி

Page 157
308 8
பொருட்களின் பக்கவிளைவு அற்ற தன்மையே இவற்றின் பாவனைக்கான அடிப்படையாக உள்ளதெனலாம்.*
மருந்துக்கான ‘அனுமானம்’ (அனுபானம்)
இயற்கை மருத்துவத்தில், மருந்துகளை உள்ளெடுக்கும்போது, சில வகையான மருந்துப் பொருட்களுடன் கலந்து உள்ளெடுக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இவ்வாறு செய்தாலே குறித்த மருந்து பயன் கொடுக்கும் என நம்பப்படுகிறது. சிலவகைக் கசப்பு மருந்துகளை உள்ளெடுக்கவும் சிலவகை அனுமானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பனைவெல்லம் (பனங்கட்டி), தேன், முலைப்பால், வெற்றிலைச்சாறு, பனங்கள்ளு, தென்னங்கள்ளு முதலானவை இவற்றுட் சிலவாம். மருத்துவ உலகில் இவ்வகைப் பொருட்களை அனுமானம்’ என்ற சொல்லால் குறித்தல் மரபாக உள்ளது.
கானல் என்ற நாவலில் பின்வரும் உரையாடற் பகுதிகள் பனை வெல்லம், முலைப்பால், வெற்றிலைச்சாறு ஆகியன மருந்து அனுமானப் பொருட்களாகப் பயன்பாட்டில் உள்ளமை பற்றி விளக்குவனவாக உள்ளன.
நீ ஏன் சாகிறன் விழுகிறன் எண்டு கத்திறாய்? இந்தா இந்த மருந்து உருண்டையை பனங்கட்டியிலை போட்டு விழுங்கு எல்லாம் சரிவரும் .
. பரியாரி நாடிபிடித்துப் பார்த்தது, பின்செவ்வந்தியைக் காரில் பரியாரி வீட்டுக்குக் கொண்டு சென்றது, பரியாரி முலைப்பாலிலும், வெற்றிலைச் சாறிலும் உரைத்துக் கொடுக்கும்படி குளிகை கொடுத்தது.*
நோய்களும், அவற்றுக்கான இயற்கை மருத்துவ முறைகளும் மகளிர் மருத்துவம் மகப்பேறின்மை
மகப்பேறின்மை என்பது முக்கியமான ஒரு பிரச்சினையாகும். இயற்கை மருத்துவ முறையில் இதற்குப் பல்வேறு காரணங்கள்

(X 309
கூறப்படுகின்றன. உடற்சூடு, கருப்பைப் பலவீனம் முதலான பல்வேறு காரணங்களினால் மகப்பேறு தள்ளிப் போகும்.
மருந்து (உட்கொள்ளும் மருந்து)
‘ஏராக்கள்ளு’ என அழைக்கப்படும் ஒருவகைக் கள்ளினைச் சேர்வை செய்து, குடித்துவரக் கர்ப்பம் தரிக்கும். இக்கள்ளினைச் சேர்வை செய்தலில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். வம்புப்பாளை (புதியபாளை) வெளிவந்த பத்து நாட்களுக்குள் இக்கள்ளினைச் சேர்வை செய்தல் வேண்டும்.
ஏராக்கள்ளுச் சேர்வையாக்கும் முறைபற்றிக் கோவிந்தன் என்ற நாவலிலே பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.
கஸ்தூரி, கோராசனை, இராசாளி எச்சம் இப்படிப்பல சரக்குகள் சேர்த்துப் பொட்டளிகட்டி, புதுமுட்டியை வரகு வைக்கோலில் சுட்டெடுத்து முட்டியிலிட்டு, கன்னிப்பெண்பனை முதல் பாளையினைச் சேர்வையாக்கி, பொழுது அஸ்தமனத்திற்குப் பின் சேர்வைக்காரன் வாய்பேசாமல் ஏறிக்கட்டி, பொழுது உதயம் வரை பேசாவிரதம் அனுட்டித்து உதயத்துக்கு முன்னதாக இதை இறக்கி எடுத்து நோயாளியைக் குடிக்க வைத்துவிடவேண்டும் ..."
ஒவ்வொருநாளும் புத்தம் புதிய சரக்குப் பொட்டளியையும், புதுமுட்டியையும் பயன்படுத்தி வரவேண்டும். நோயாளியின் நிலைமைக் கேற்ப இரண்டு அல்லது மூன்று மண்டல காலத்துக்கு ஏராக்கள்ளினைக் குடித்து வரவேண்டும். தவிரப் பல்வேறு வகையான குழம்பு வகைகள், சூறண வகைகள், செந்தூர வகைகள், குடிநீர் வகைகள் முதலானவற்றையும் மகப்பேறின்மைக்கு மருந்தாகத் தயாரித்தளிப்பர்."
LJ (15 6JLO GOD LULIN GOD Ln
பெண், வயதுக்கு வந்தும் பருவமடையாமல் இருப்பது என்பது ஒருவகைக் குறைபாடாகும். இக்குறைபாட்டைப் போக்கிக் கொள்ளும் மருந்தாக, நாவல்களில் ஏராக்கள்ளுப் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.*

Page 158
310 X
மகப்பேறு
மகப்பேறு தொடர்பான மருத்துவ உதவிகளை மருத்துவிச்சி என அழைக்கப்படும் பெண் மருத்துவத்தாதிகளே மேற்கொள்வர். ஆயினும் மகப்பேற்றுக்கு முன்னதான மருத்துவக் கண்காணிப்புக்களைப் பாரம்பரிய ஆண் மருத்துவர்களே செய்வது வழக்கம்.
மகப்பேற்றுக்குத் தயாரான பெண்ணுக்கு வழங்கப்படும் முதல் மருந்தை ‘நிறை மாதப்பிள்ளைத்தாச்சி' யைக் கொண்டே வழங்குவர். இராச நோக்காடு’ என அழைக்கப்படும் மகப்பேற்று வலியை மேற்கிளப்பும் பொருட்டுப் பல்வேறு வகையான மருந்துகளை வழங்குவர்
அடிமைகள் என்ற நாவலில் வரும் இத்தினியின் எசமானிக்கு இராசநோக்காடு கிளம்ப மருந்து கொடுக்கும் வைத்தியர், அம்மருந்தைக் கொடுக்கப் பெறுமாதப் பிள்ளைத்தாச்சியைக் கொண்டு வரும்படி வேண்டுகின்றார்."
மகவு பெற்றதால் உண்டான உடல் வலியைப் போக்கும் பொருட்டு, வெந்நீர் வார்வை செய்வர். மகப்பெற்ற ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம், பதினொன்றாம் நாட்களில் முறையே இந் நீர்வார்வையினை மேற்கொள்வர். ஐந்தாவது நாளில், பருத்தி, ஆடாதோடை, நொச்சி முதலானவற்றை இட்டு அவித்த நீர்கொண்டும், ஏழாம், ஒன்பதாம் நாட்களில் இவற்றுடன் ஆமணக்கைச் சேர்த்தும் தலைக்குக் குளிக்க வார்ப்பர். பதினோராவது நாளில் வேப்பம் பட்டையினை அவித்தெடுத்த நீர்கொண்டு நீர் வார்ப்புச் செய்வர். இளஞ்சூட்டுடன் வார்க்கப்படும் இந் நீர்வார்வை உடல் வலிகளைக் கணிசமாகப் போக்கிவிடும்.
வெந்நீர் வார்க்கும் வழமை குறித்து 'அடிமைகள்’ என்ற நாவல் பின்வருமாறு விவரிக்கின்றது.
ஊர்வழமைப்படி ஐந்தாவது நாள் வென்னீர் வார்க்ப்பட வில்லை. ஏழாவது நாளுக்கான வேப்பம் பட்டைத் தண்ல் ரீருக்கான அடுக்குகளும் நடைபெறவில்லை .?

8 311
மகப்பேற்றினால் உண்டான உட்காயங்களைப் போக்கும் பொருட்டும், குழந்தை பெற்ற தாய்க்கான பால்வளத்தினை மிகுதிப்படுத்தும் பொருட்டும் ‘காயம்’ என அழைக்கப்படும் ஒருவகைப் பத்தியக் கறியினை உண்ணக் கொடுப்பர். உடம்பு முழுமையாக நலமெய்தும் வரை காயம் உண்பது தொடரும். இதனை ‘அடிமைகளில் வரும் பின்வரும் உரையாடற்பகுதி கொண்டு விளங்கிக் கொள்ளலாம்.
பேத்தி! எனக்கு இன்னும் தேகம் சரிவரேல்லை. அஞ்சுபத்து நாளைக்குப் பேந்தும் காயம் தின்ன வேணும் போலைகிடக்கு . பேத்திக் கிழவிக்கு நான்கைந்து நாட்களுக்கு செல்லிக்கு காயச்சரக்கு சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது . அவள் அடுக்குப் பெட்டியைத் திறந்து பார்த்துவிட்ட “இஞ்சியும் உள்ளிப்பூடும் துண்டா இல்லையடிபுள்ளை’ என்று குறைப்பட்டுக் கொண்டாள்."
*காயம் தயாரிக்கும் முறை பற்றிய விரிவான விளக்கத்தினை நான்காம் இயலில் காணலாம்.
வலிதொடர்பான நோய்கள்
உடலில் ஏற்படும் நோய்களில் வலிகளால் உண்டாகும் நோய்கள் கணிசமானவையாகும். தலைவலி, நெஞ்சுவலி, பல்வலி, நாரிவலி, முதுகுவலி, கழுத்துவலி என இவை பல்வேறு வகைப்படும். இவ்வகை நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை பற்றிய விவரங்களை நாவல்களில் பரவலாகக் காணலாம்.
தலைவலி
கடின உழைப்பு, மன உளைச்சல் முதலான பல்வேறு காரணங்களினால் தலைவலி உண்டாகின்றது. தலைவலி பல்வேறு வகைப்படும். சாதாரணத் தலைவலி, ஒற்றைத் தலைவலி, மண்டையிடி (கபால இடி) என்பன இவற்றுட் சிலவாகும்.
காட்டாறு என்ற நாவலிலே, தலையிடிக்கு மருந்தாக 'மல்லி’ பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.

Page 159
312 X
தலையிடி எண்டு சுடுநீர்வைச்சுக் குடிக்கிறதுக்கு ஒரு சொட்டு மல்லி கிடையாது. இவங்கள் பதுக்கி வைச்சிருக்கிறாங்கள் ."
நெஞ்சுவலி
இருதயக் கோளாறு, கடின உழைப்பு, அதிக பாரத்தினைச் சுமத்தல் முதலான பல்வேறு காரணங்களினால் நெஞ்சுவலி உண்டாகின்றது. பஞ்சமர்’ என்ற நாவலிலே நெஞ்சுவலிக்குச் சிறந்த மருந்தாகச் சாராயம் பூசிவிடுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் கிட்டிணன் உதென்ன செய்யும் நெஞ்சுக்குத்து! சாராயத்தைப் போட்டு உரஞ்சினால் அது நிண்டுபோம். சின்னாச்சி எப்பன் சாராயம் போட்டு உரஞ்சிவிடு.*
பல்வலி
வேப்பம் குச்சியினைக் கொண்டு தொடர்ந்து பல்துலக்கிவர,
பல்வலி இல்லாமற்போகும்.*
நாரிவலி
தண்ணீர் என்ற நாவல், நாரிப்பிடிப்புக்கு உகந்த மருந்தாக, கடல்மீன்களில் ஒருவகையான விலாங்குமீனைக் குறிப்பிடுகின்றது. இவ்வகை மீனைப் பிரட்டல் (கெட்டியான) கறியாகச் சமைத்து உண்டுவர நாரிப்பிடிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும்.*
உடல்வலி
உடல் முழுவதுமாக உணரப்படும் வலியினை உடல்வலி எனக் கருதலாம். 'சடங்கு’, முருங்கையிலைக் கஞ்சி, ‘நீண்டபயணம்’, ஆகிய நாவல்களில் இவ்வுடல் வலிக்குப் பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை வருமாறு,
(1) வெந்நீர் ஒத்தடம் - மிதமான சுடுநீரில் சுத்தமான துண்டொன்றினை அமிழ்த்தி எடுத்து அதன் மூலம் ஒத்தடம் கொடுத்தல்,
(2) முட்டை, சீனி, காப்பித்தூள், சாராயம் இவற்றை

« 313
ஒன்றாகக் கலந்து, பனை ஈர்க்குக் கொண்டு நன்றாகக் கலக்கி, சுடுநீரில் கலந்து குடித்தல்.
(3) வலி அதிகமுள்ள இடங்களில் சாராயத்தினைப் பூசி விடுதல்.
(4) நோவு எண்ணெய் பூசிவிடுதல்.
(5) நல்லெண்ணெய், மஞ்சள்மாவு ஆகியனவற்றைச்
சூடாக்கிப் பொட்டலமாகக் கட்டி நோவு உள்ள
இடங்களில் ஒத்தடம் கொடுத்தல்."
இருமல், சளி தொடர்பான நோய்கள் இருமல்
இருமல் இடைவிடாது தொடர்ச்சியாக இருக்குமாயின் ‘உண்ணாக்குப் பார்த்தல்' (உள்நாக்குப் பார்த்தல்) மூலம் அதற்கான சிகிச்சையினை மேற்கொள்வது பெரும்பான்மை வழக்கமாகும்.
பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற நாவலில் இவ்வுண்ணாக்குப் பார்த்தல் நடைமுறை பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜமுனா இருமலா .
ஓம் ஸேர்;
வைத்தியம் செய்யவில்லையா?
செய்விச்சனான் ஸேர்
என்ன வைத்தியம்?
உண்ணாக்குப் பாப்பிச்சனான்.
முருக்கமிலை. அல்லது முடிதும்பையைத் தலையில்
போட்டுக் கசக்கி. உச்சி மயிரைப்பிடிச்சு இழுக்கிறது"

Page 160
314 (X-
தடிமன்
தலைக்குக் குளித்துவிட்டுக் (தோய்தல்) கடற்கரைக் காற்றுப் படும்படியாக உலவினால் நெஞ்சுப்பகுதியிலே சளிக்கட்டி, உடனடியாகத் தடிமன் வரும்."
காய்ச்சல்
குடிநீர் தயாரித்துப் பருகுவதன் மூலம் காய்ச்சலிலிருந்து குணம் பெறுவர். மல்லி, தூதுவளை, சீரகம், மிளகு, இஞ்சி, வேப்பம் பட்டை முதலானவற்றை அவிப்பதன் மூலம் குடிநீர் தயாரிப்பர். காய்ச்சலின் தன்மைக்கு ஏற்பக் குடிநீரைத் தொடர்ந்து பருகுதல் வேண்டும்."
தீப்புண், உடன் இரத்தக்காயங்கள் தீப்புண்
தீப்புண்ணால் உண்டான காயங்களுக்குப் பச்சிலைகளின் சாறு உகந்த மருந்தாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இச்சாற்றைக் கோழியின் இறகு கொண்ட மிருதுவாகப் பூசிவிடல் வேண்டும். தீப்புண்ணால் உண்டான கொப்பளங்களை உடைத்துவிடக் கூடாது. அவை தாமாகவே தகர்ந்து விடும்படி பார்த்துக் கொள்ளல் வேண்டும். ‘தண்ணீர்’, ‘போராளிகள் காத்திருக்கின்றனர் ஆகிய நாவல்களிலே இம்மருத்துவ சிகிச்சை பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன."
உடன் இரத்தக் காயங்கள்
உடன் இரத்தக் காயங்களை விரைந்து குணப்படுத்தக் கூடிய பல்வேறு சிகிச்சை முறைகள் பற்றிய குறிப்புக்கள் நாவல்களிலே கிடைக்கின்றன. முடிதும்பை, நாவற்பட்டை, ஒட்டறை (புகைத்தூசிப்படிவு) ஆகியன இவற்றுட் குறிப்பிடத் தக்கனவாகும். நிலக்கிளியிலே, கரடியினால் தாக்குண்ட கதிராமனின் இரத்தக் காயத்துக்கு, பதஞ்சலி என்பவள் முடிதும்பைச் செடிகொண்டு பற்றுப் போடுகின்றாள்."
குமாரபுரம் என்ற நாவலில் வரும் குமாருவுக்கு ஏற்பட்ட
இரத்தக் காயத்திற்கு நாவற்பட்டைச் சாற்றினை வைத்துக் கட்டிய செய்தி கிடைக்கின்றது.?

8 315
பஞ்சமர் என்ற நாவலிலே, கிட்டிணன் என்பவனுக்கு ஏற்பட்ட உடனடி இரத்தக் காயத்துக்கு மருந்தாக ஒட்டறை எனப்படும் புகைத்தூசிப்படிவினை ஐயாண்ணர் பயன்படுத்துகின்றார்." ‘வெட்டொட்டி’ என்ற தாவரத்தின் காயமாற்றும் தன்மை குறித்து மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து என்ற நாவலில் செய்தி கிடைக்கின்றது."
பிறநோய்கள்
பிற நோய்கள் என்ற பகுதியிலே வலிப்பு, பித்தம், வாந்தி, வயிற்றுப்பொருமல், சர்க்கரைநோய், உடற்சூடு, பாலியல், உடல் இளைப்பு மற்றும் முடிவளர்ச்சி ஆகியன பற்றி நாவல்களிலே பயின்றுள்ள செய்திகள் குறித்து நோக்கப் பெறுகின்றன.
வலிப்பு நோய்
குளங்களிலே படர்ந்துள்ள தாமரைக் கொடிகளின் வேர்ப்பகுதிகளில் உள்ள சேற்றினைச் சேகரித்து, அதனை உடல்முழுவதும் பூசி, அக்கொடிகள் படர்ந்துள்ள குளத்தில் தொடர்ந்து நீராடிவர, வலிப்பு நோய் விடுபட்டுப் போகும்.
அடிமைகள் என்ற நாவலில் வரும் கந்தனுக்கு ஏற்பட்டுள்ள வலிப்பு நோயினைப் பரிசோதித்த வைத்தியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
அவன் நல்லாப் பயந்து போனான். அது நரம்பு வருத்தத்தைக் கொண்டு வந்திட்டுபுது. நாளைக்கு வேலுப்பிள்ளையரெட்டை எண்ணை கொஞ்சம் கொடுத்துவிடுகிறன். ஏழுநாட்களுக்கு ஒருக்கா உடம்பெல்லாம் பிரட்டி ஊறவிட்டு தாமரைக்குளத்தில் ஆறுமாதத்திற்குத் தோயவார்த்தால் அதுமாறிப்போகும்."
பித்தம்
பித்தம் பலவகைப்படும். தலையிலே பித்தம் உள்ளவர்கள்
கோப்பியினைப் பருகுதல் கூடாது என்ற மருத்துவக் குறிப்பைச் சடங்கு என்ற நாவல் சுட்டுகின்றது."

Page 161
J16 8
வாந்தி
வாந்தியினைக் கட்டுப்படுத்த வேர்க்கொம்பு (சுக்கு) மாவினைத்
தேயிலைச் சாயத்துடன் கலந்து இளஞ்சூட்டுடன் பருகலாம்.
பஞ்சமர் நாவலிலே, வரும் குமாரவேலனுக்கு ஏற்பட்ட உடல்
நலக்குறைவுக்குச் சின்னாச்சி மேற்கொண்ட மருத்துவ சிகிச்சை
குறித்துப் பின்வருமாறு விவரிக்கப்படுகிறது.
வாந்தி எடுத்த மயக்கத்திலே குமாரவேலன் அசந்து
போய்க்கிடந்தான் e. e. சின்னாச்சி அவனுக்கு இளஞ்சூட்டுடன் வேர்க்கொம்பு கலந்த தேநீர் தயாரித்துக் கொடுத்தாள்."
வயிற்றுப்பொருமல்
வயிற்றுப்பொருமல் செரிமானமின்மை முதலிய
நோய்களுக்குப் பூண்டு, மிளகு, சீரகம், மல்லி, பழப்புளி முதலானவற்றை அரைத்து அவித்துக் குடிப்பதன் மூலம் நிவாரணம் பெறலாம். மேலும் வேர்க்கொம்பு கலந்த தேநீரைப் பருகுவதன் மூலமும் நிவாரணம் பெறலாம்.
பஞ்சகோணங்கள் என்ற நாவலில், தனது தமையனின் உடல் நலக் குறைவைக் கண்ணுற்ற சீதை,
என்னண்ணை, வயித்துக்கை கியுத்துக்கை ஏதும் சுகயினம் சிகயினைமாயிருக்கே? உள்ளி, மிளகு, சீரகம் குத்தி எப்பன் ரசம் வைக்கட்டே அண்ணை"
எனக் கேட்கின்றாள்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயுள்ளவர்கள், தமது உணவுப் பழக்கவழக்கத்தில் சோறு (சாதம்), சீனி ஆகியனவற்றை அளவுடன் உள்ளெடுக்க வேண்டும்."
உடற்சூடு
உடற்சூட்டைத் தணிக்க, தலையில் நல்லெண்ணெயினை நன்றாகச் சுவறவைத்துப் பின்னர் அரப்பு, சீயாக்காய், வெந்தயம்,

* 317
பயறு ஆகியனவற்றை அரைத்துப் பூசிக் குளித்தால் உடற் சூடு தணியும்.?
பாலியல்
எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளித்த அன்று தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது என்ற செய்தி சடங்கு’ நாவலில் கிடைக்கின்றது. எண்ணெய்க் குளிப்பினால் உடம்பின் மூட்டுக்கள் இளகி இருக்கும் நிலையில், உடலுறவு வைத்துக் கொண்டால், சுவாதம், சன்னி முதலான நோய்கள் வந்து சேரும்."
உடல் இளைப்பு அசதி
உடல் இளைப்பைப் போக்குவதற்குப் பின்வரும் சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.
(1) உடன் பசும்பாலில் விளைவு கற்கண்டைப் போட்டுக் காய்ச்சிக் குடித்தல்
(2) செவ்விள நீரை வெறும் வயிற்றில் குடித்தல்
(3) முட்டையுடன் தோடம்பழச்சாற்றைக் (ஆரஞ்சு) கலந்து குடித்தல்.”
முடிவளர்ச்சி
முடி கொட்டுதல், முடி வளர்ச்சியின்மை, முடியின் நிறம்மாறுதல் ஆகியன பெண்களைப் பொறுத்தவரை முக்கியமான ஒரு பிரச்சினையாகும். இருளின் கதிர்கள் என்ற நாவலிலே ஆரோக்கியமான தலைமுடிக்கான விரிவான மருத்துவக் குறிப்புக்கள் கிடைக்கின்றன. அவை வருமாறு,
கறுத்தப்பூச்செடிச் சாறெடுத்துத்தப்பி முழுகிவந்தால் மயிர் கறுத்துவரும் .
அதிகாலையில் அறுகம்புல்லுத் துவைத்துத்தடவி முழுக்குப் போட்டுவந்தால் செம்பட்டை எடுபடும் .
இருட்டிவிட்டதன் பின் கடற்தண்ணீரில் முழுக்குப் போட்டு, தலையை உணர்த்தாமலே ஒருமண்டலம்

Page 162
318 «Х•
அதாவது நாற்பது நாட்கள் தொடர்ந்துவிட்டு வைத்தால் மயிர் விளைப்பேறிக்கறுத்து வரும் .
தாமரைத்தண்டின் அடிவோரை எடுத்து அதைப் பிடித்திருக்கும் சேற்றை எடுத்து தலையில் தப்பி முழுகினால் கட்டாயம் மயிர் கறுப்பாகும்.*
தண்ணிர் என்ற நாவலில், அடர்த்தியான தலைமுடிக்கு, தாராவின் முட்டையினைத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பது பற்றிய செய்தி கிடைக்கின்றது.*
நாட்டுப்புற விளையாட்டு
LD fT@g)I L — உயிர்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான வெளிப்பாட்டு நடத்தைகளுள் விளையாட்டும் ஒன்றாகும். கலை, மொழி, சமயம் ஆகியவற்றைப் போல விளையாட்டும் கலவையான ஒரு நிகழ்வாகும். விளையாட்டு என்பது ஒரு தன்னார்வச் செயற்பாடாகும். இஃது உடலுக்கும் உள்ளத்துக்கும் வலிமை சேர்க்க வல்லது. அயினும் பொழுது போக்குதல் என்ற செயற்பாடே விளையாட்டுக்கான அடிப்படை எனலாம். விளையாட்டுக்கள் நாட்டுக்கு நாடு, சமூகத்துச் சமூகம் வேறுபாடுடையனவாகப் பயின்று வருகின்றன. இவை நாட்டுப்புற மக்களின் நாகரிகத்தோடும், பண்பாட்டோடும் இணைந்துள்ளன.
விளையாட்டு: சொல்லும் பொருளும்
விளையாட்டு என்பதற்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தமிழ்ப்
பேரகராதி பின்வரும் ஐந்து பொருள்களைக் குறிப்பிடுகிறது. அவை,
1. பெர்ழுது போக்குக்குரிய மகிழ்ச்சிச் செயல்
2. சிரமமின்றி இலேசாகச் செய்யுந்தொழில்
3. வேடிக்கை
4. காமலீலை
5. கலைத் தொழில் எட்டனுள் பாடநினைத்த வண்ணத்தில்
சத்தத்தை விடுகை
என்பனவாகும்.*

8 319
மேலும் இது ஆட்டம் (Play), போட்டி விளையாட்டு (Game), வன்மை விளையாட்டு (Sports), இன்பப் பொழுதுபோக்கு(Recreation) ஆகியனவற்றையும் குறிக்கும் என மேற்படி அகராதி குறிப்பிடுகின்றது.
தனித்தனியே இயங்கும் பல உறுப்புக்களைப் பலவகையாக ஒன்று சேர்த்து, இயக்கி அவற்றினை அடக்கி, ஆடப்பழகுவதே விளையாட்டு எனக் குறிப்பிடும் கலைக்களஞ்சியம். விளையாட்டின் அடிப்படை இயல்பு, அதன்பயன், விளையாடுவதற்கான காரணம் என்பனவற்றுக்குப் பதிலிறுக்கும் வகையிலமைந்த விளையாட்டுக் கொள்கைகளாக, (Theories ofPlay) மிகை ஆற்றல் கொள்கை, ஆயத்தக் கொள்கை, பொழுது போக்குக் கொள்கை, புனராக்கக் கொள்கை, காலதற் கொள்கை, போட்டி மனப்பான்மை ஆகியனவற்றைக் குறிப்பிடுகின்றது.*
ஆங்கிலக் கலைக்களஞ்சியம், ஓய்வு வேளையில் மனமகிழ்ச்சிக்காகச் செய்யக் கூடிய எளிய அல்லது வேடிக்கையான செயல்களே விளையாட்டு என விளக்கம் தருகின்றது."
விளையாட்டாவது, விரும்பியாடும் ஆட்டு; விளை-விருப்பம், ஆட்டு-ஆட்டம் என விளையாட்டு என்ற சொல்லுக்கு ஞா.தேவநேயப்பாவாணர் விளக்கம் தருவார்.*
விளையாட்டு, வாழ்க்கைக்குப் பயிற்சி அளிக்கும் களங்களில் ஒன்று;* விளையாட்டு என்பது இன்பம் விளைவிக்கும் ஆட்டம்" நாட்டுப்புற மக்களின் வாழ்வியலைப் பற்றி ஆராய்வது" எனப் பல்வேறு 6)56 விளக்கங்களை அறிஞர்கள் முன்வைக்கின்றனர்.
மேலே குறிப்பிட்ட விளக்கங்களிலிருந்து, விளையாட்டு என்பது, மனமகிழ்ச்சியோடு தொடர்புடையதும், ஒருவரது ஆற்றலை வெளிக்கொணர வல்லதுமான ஒருவகை நடத்தை என விளங்கிக் கொள்ளலாம். பொழுது போக்குதல் என்ற நிலை இதன் பொதுவான கருத்தாக உள்ளது.
விளையாட்டின் தோற்றம்
சமூகத்திலுள்ள ஏனைய நிறுவனங்களைப் போல விளையாட்டும் வரையறுக்க முடியாத மூலத்திலிருந்து

Page 163
320 x•
தோன்றியதெனலாம். ஆதிமனிதன், வேட்டையாடித் திரிந்தகாலத்திலும், நிலையான வாழ்வு வாழத்தொடங்கிய காலத்திலும் பல்வேறு பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டான். மனிதன், தற்பாதுகாப்புக்காகத் தாண்டவும், நீத்தவும், ஓடவும், மரமேறவும் பழகினான். வேட்டை வினையில் அனுபவமுள்ளோர் பிறர்க்குப் பயிற்சிதர முன்வரலாயினர். அவை, குறிபார்த்து எறிதல், வீழ்த்துதல், ஆயுதங்களைக் கையாளுதல் முதலான பயிற்சிகளாக அமைந்தன. நாடோடி வாழ்வை விடுத்து, நிலைத்த வாழ்வு வாழத் தொடங்கிய நிலையில் அடிக்கடிப் போர்கள் மூண்டன. அதன் பயனாகப் போரின் செயற்பாடுகள் குறித்தும் பயிற்சிகள் தரப்பட்டன.
நாளடைவில் நாகரிக வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி ஆகியன காரணமாக, வேட்டையும், போரும் குறைவடையத் தொடங்க, பலர்காணத் தம் வீரத்தைப் புலப்படுத்தவும், மனமகிழ்ச்சிக்காகவும் விளையாட்டுக்களை விளையாட விளையாட்டுக்கள் தோன்றின.* மேலும் வீரத்தை வளர்க்க, பயத்தை விரட்ட, நம்பிக்கையை ஊட்ட, நண்பர்களைப் பெருக்க, பொழுதுபோக்கை வரவேற்க, முரண்பாட்டை உணர்த்த, வாழ்க்கையினையும், தொழிலினையும் எதிரொலிக்க, போலச் செய்ய எனப் பல்வேறு நிலைகளில் விளையாட்டுக்கள் வேர்கொண்டன.*
விளையாட்டு முதன் முதலில் சிறுவரிடையேதான் தோன்றியிருக்க வேண்டும் எனக் கருதும் தேவநேயப்பாவணர், ஓய்வுநேரத்தில் அல்லது வேலை செய்யாத பருவத்தில் சிறுவர் பெரியோரின் செயலை அல்லது இயற்கை நிகழ்ச்சியை நடித்து மகிழ்ந்த நிலையிலேயே விளையாட்டுக்கள் தோற்றம் பெற்றன என்பார்.*
விளையாட்டுக்களின் வகைப்பாடு
நாட்டுப்புற விளையாட்டுக்களை, அவற்றின் நிலைக்களன், காலம், நேரம், இடம், பங்குபற்றுவோரின் வயது பால், சமுதாயச் சூழல், தன்மை முதலான பல்வேறு பண்புகளை அடிப்படையாகக் கொண்டு பலவாறு வகைப்படுத்தலாம்.
விளையாட்டுக்களை, நிலைக்களன் அடிப்படையில், வீர விளையாட்டுக்கள், பொழுது போக்கு விளையாட்டுக்கள் எனவும்,

«Х• 321
கால அடிப்படையில் காற்றுக்கால விளையாட்டுக்கள், மழைக்கால விளையாட்டுக்கள், நிலாக்கால விளையாட்டுக்கள், விடுமுறைக்கால விளையாட்டுக்கள், எல்லாக் காலங்களிலும் விளையாடும் விளையாட்டுக்கள் எனவும், நேர அடிப்படையில், பகல்நேர விளையாட்டுக்கள், இரவுநேர விளையாட்டுக்கள் எனவும், இட அடிப்படையில் தெரு விளையாட்டு, வீட்டு விளையாட்டு, பொதுஇட விளையாட்டு எனவும், பங்குபற்றுவோர் அடிப்படையில், ஆண்கள் விளையாட்டு, பெண்கள் விளையாட்டு, சிறுவர் விளையாட்டு எனவும், பால் அடிப்படையில் ஆண்கள் விளையாட்டு, பெண்கள் விளையாட்டு எனவும், சமுதாயச் சூழல் அடிப்படையில் பொழுதுபோக்கு விளையாட்டு, அறுவடை விளையாட்டு, பண்டிகை விளையாட்டு எனவும், தன்மை அடிப்படையில் உடல் திறன் விளையாட்டு, அறிவுத்திறன் விளையாட்டு, வாய்ப்பு நிலை விளையாட்டு, மனமகிழ்ச்சி விளையாட்டு எனவும் வகைப்படுத்தி நோக்கலாம்.
விளையாட்டுக்களைப் பொதுவாக அகவிளையாட்டுக்கள் (Indoor Games), p 660 GMT uu T’(G) sägs Git (Outdoor Games) 6T 6MT இருவகையாகப் பகுத்து நோக்கும் பண்பும் காணப்படுகின்றது.*
கலைக்களஞ்சியம், விளையாட்டுக்களை, இயக்கவகை, பொறிவகை, அறிவுவகை ᎧᎻᎧᏈᎢ மூவகையாகப் பாகுபடுத்தியுள்ளது.*
அகவிளையாட்டுக்கள் பெரும்பாலும் வீட்டிலேயே விளையாடப் படுவனவாகும். பாண்டி, தாயம் முதலானவை இவற்றுட் சிலவாகும். காற்றாடி, கிளித்தட்டு, சிலம்பம் முதலான விளையாட்டுக்கள் பெரும்பாலும் வீட்டுக்கு வெளியிலேயே விளையாடப் படுதலின் இவை புற விளையாட்டுக்கள் என அழைக்கப்படுகின்றன.
வீர விளையாட்டுக்களில் உயிரைத்துச்சமென மதித்துப் பணயம் வைத்து விளையாடுவர். இவற்றின் வெற்றி தோல்வி என்பது வீரர்களைப் பாதிப்பதாக அமையும். சிலம்பம், விலங்குச் சண்டை முதலான விளையாட்டுக்கள் இவ்வகையைச் சார்ந்தனவாகும்.
காற்று வீசும் காலங்களை அறிந்து விதம்விதமான பட்டங்களை (காற்றாடி) ஏற்றுவர். விழாக் காலங்களில் சிலம்பம், உரிமரம் ஏறுதல்

Page 164
322 效
முதலான விளையாட்டுக்களை நிகழ்த்துவர். மழைக்காலத்தில் கப்பல் விளையாட்டு, வெள்ளமடித்தல் முதலானவையும், நிலாக் காலங்களில் பெண்கள் நிலாச்சோற்றை உண்டு கும்மியடித்தலும் கால அடிப்படையிலான விளையாட்டுக்களில் சிலவாகும்.
விளையாட்டுக்களில் சில ஆண்களுக்கு உரியனவாகவும், சில பெண்களுக்கு உரியனவாகவும், சில இருபாலார்க்கும் உரியனவாகவும் உள்ளன. இவ்வகையான பாகுபாட்டில் உடல்திறன் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் தொழிற்பாடு கணிசமானதாகக் காணப்படுகின்றது. ஓடுதல், குதித்தல், பாய்தல், தாவுதல் முதலானவற்றை நிகழ்த்தும் உடல்வாகு என்பது ஒப்பீட்டு நிலையில் பெரும்பாலும் ஆடவர்க்கே சாத்தியமானதாகக் காணப்படுகிறது.
பெண்கள் சிலவகையான விளையாட்டுக்களை விளையாட, சமூகத்தின் பண்பாடு அனுமதிப்பதில்லை. ஆண்களைப் போல வீட்டுக்கு வெளியே துர இடங்களுக்குச் சென்று விளையாடுவதற்கும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
விளையாட்டுக்கள் பொழுதுபோக்குக்காகப் பெரும்பாலும் ஆடப்பட்டாலும், மனமகிழ்ச்சிக்காக ஆடும் நிலையில் இவற்றால் அதிகமான நன்மை கிடைப்பதாகக் கருதலாம். நாட்டுப்புற விளையாட்டுக்கள், குறித்த மக்களின் பழக்க வழக்கங்கள், வரலாறு முதலானவற்றை வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.
உரையாடல் முறை, பழமொழி, விடுகதை ஆகிய முறைகளில் அமைந்த விளையாட்டுக்களினால் அறிவுத்திறன் மட்டுமன்றி, மொழி வளர்ச்சியும் ஏற்படுகிறது. இவ்வகை விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் தம் சொந்தத் திறன் (Physical Skill) அடிப்படையில் நேரடியாகச் செயற்படுவர்.
அறிவுத்திறன் விளையாட்டில், பங்குபற்றுவோரின் சொந்தத்திறன், குறிப்பாக அறிவுத்திறன் போட்டியின் விளைவுக்கு அடிப்படையாக இருக்கும். வாய்ப்புநிலை விளையாட்டில், போட்டி என்பது வாய்ப்பு நிலையின் அடிப்படையில் நடைபெறும்.
மனமகிழ்ச்சி விளையாட்டில், நடிப்பு, போலச்செய்தல், அல்லது பாசாங்குசெய்தல் முதலானவை அடங்கும். போட்டி இவ்வகை விளையாட்டுக்களில் இடம்பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

(x-
3
2
3
நாவல்களில் நாட்டுப்புற விளையாட்டுக்கள்
நாவல்களிலே, பல்வேறு வகையான நாட்டுப்புற விளையாட்டுக்கள் பற்றிய தரவுகள் கிடைக்கின்றன. அவற்றிலும் குறிப்பாக ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தினரிடையே இன்று வேகமாக அருகிவரும் நாட்டுப்புற விளையாட்டுக்களான போர்த்தேங்காய் அடித்தல், சாவலடி (கோழிச்சண்டை), பட்டம்விடுதல் (காற்றாடி), கம்படி (சிலம்பம்) முதலான சிலவகை விளையாட்டுக்கள் பற்றியும், அவற்றை நிகழ்த்தும் முறை பற்றியும் மிகவும் நுட்பமாகவும், விரிவாகவும் நாவல்களில் விவரிக்கப்பட்டுள்ளமை கருதத் தக்கதாகும். இவை தவிர வண்டிச்சவாரி,° கிட்டிப்புள்,* வாணவிளையாட்டு பந்து வீச்சு,°மாங்கொட்டையடி, "ஒளித்துப் பிடித்தல்,* சமைத்து விளையாடுதல்," கெந்தியடித்தல்" ஆகிய விளையாட்டுக்கள் பெயரளவில் மட்டும் ஆங்காங்கே பயின்று வந்துள்ளமையினைக் காணலாம்.
போர்த்தேங்காய் அடித்தல்
ஈழத்துத்தமிழ்ச் சமூகத்தினரிடையே வழங்கும் பருவகால நாட்டுப்புற விளையாட்டுக்களில் போர்த்தேங்காய் அடித்தலும் ஒன்றாகும். ஆடவர்க்குரிய வீர விளையாட்டாக இதனைக் கருதலாம். மகிலுட்டலுடன் தொடர்புடைய இவ்விளையாட்டில் போட்டி என்பது பிரதான இடம் பெறுகின்றது. இவ்விளையாட்டினைச் சித்திரைப்புத்தாண்டை அண்மித்து ஏற்பாடு செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.
விளையாட்டுக்கென நூற்றுக்கணக்கான தேங்காய்களைக் கொண்ட இரண்டு பிரிவுகள் ஏற்பாடு செய்யப்படும். இரண்டு பக்கத்திலும் குறிப்பிட்ட தொகையில் அடிகாரர்கள் மாறிமாறித் தேங்காய்களை அடிப்பார்கள். எவருடைய பக்கத்தில் தேங்காய்கள் முடிகின்றனவோ அந்தப் பக்கத்துக்குத் தோல்வியாகும்.
நடுவர்
ஊரில் உள்ள பெரியவர்கள், ஊராரின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் நடுவர்களாக இருந்து இவ்விளையாட்டை நெறிப்படுத்தித் தொடக்கி வைப்பார்கள்.

Page 165
324 必
விளையாட்டு நடைபெறும் இடம்
போர்த் தேங்காயடித்தல் நடைபெறும் இடம் ‘களரி’ என அழைக்கப்படும். குறிப்பிட்ட இடத்தை மண் இட்டு மேடாக்கிக் களரியினைத் தயார் செய்வர். களரியைச் சுற்றிக் கயிறுகட்டி, அதற்கப்பால் பார்வையாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.
போருக்குரிய தேங்காய்
போருக்குரிய தேங்காய்களை எல்லாத் தென்னை மரங்களிலும் பெற்றுக் கொள்ளமுடியாது. போர்த் தேங்காய்க்கு உரிய மரங்களிலேயே பெற்றுக் கொள்ளமுடியும். இவ்வகை மரங்கள் குறிப்பிட்ட சிலவகைப் பிரதேசங்களில் காணப்படுகின்றன. குறிப்பாகக் காலி, மீசாலை, சாவகச்சேரி முதலான இடங்களில் இவ்வகைத் தேங்காய்களைக் காணமுடியும். போட்டியில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று, தேங்காய்களைச் சேகரித்துவருவர். சேகரித்த தேங்காய்களை நிலத்தில் குழி தோண்டிப் புதைத்து, அவ்வப்போது அவற்றுக்கு நீர்வார்ப்பர். இவ்வாறு செய்வதன் மூலம் குறித்த தேங்காய்களின் வெளிப்புற ஓடுகள் வலிமை பெறுகின்றன. இந்நடவடிக்கை ஒருமாதகாலம் வரை தொடரும்.
போர்த் தேங்காய்களில் ‘விடுகாய்’, ‘அடிகாய்’ (கையான்) என இரண்டு வகைகள் உள்ளன. இவை கருப்பானவையாகவும், ஆழமான, நெருக்கமான கண்களை உடையனவாகவும் காணப்படும். இவற்றில் உருண்டைத் தன்மையுள்ளவற்றை விடுகாயாகவும் நீளமான அமைப்புடையனவற்றை அடிகாயாகவும் பயன்படுத்துவர். போட்டியில் பயன்படுத்தப்படும் தேங்காய்களின் முடிகள் (தும்பு, பொச்சு) நன்றாக அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமான விதியாகும். இதனை நடுவர்கள் பார்த்து உறுதிசெய்த பின்னரே போட்டி (பங்கம்) தொடங்கும்.
தேங்காய் அடிக்கும்முறை
போர்த்தேங்காய் அடித்தலில், குத்தியடித்தல்,
உருட்டியடித்தல், எறிந்தடித்தல் என மூன்றுவித முறைகள் காணப்படுகின்றன. விடுகாயும், அடிகாயும் (கையான்) ஒரே

& 325
வேளையில் உடைந்து போனால் அடிகாயை விட்டவரே பின்னர் தேங்காயை உருட்டி விடவேண்டும்.
குத்தியடித்தல் என்பது விடுகாயின் கண்பக்கமானது மேல் நோக்கியவாறு பார்த்திருக்க அடிகாயினால் விடுகாயினைக் குத்தியடித்தலாகும். இவ்வாறு குத்தியடிக்கும் போது அடிகாயின் கண்பக்கத்தினால் குத்தியடிக்க வேண்டும்.
உருட்டியடித்தல் என்பது விடுகாயை உருட்டி விடும்போது அடிகாயினால் அடித்தலாகும். விடுகாயினை எறியும்போது, அடிகாயினால் அடிப்பது எறிந்தடித்தலாகும். எறியும்போது தேங்காயைப் பக்கம் மாற்றாது கண்பக்கமாக எறிதல் வேண்டும்.
போர்த் தேங்காயினை அடிக்கும்போது, காயை அடிப்பவர், தனக்கு வாகான (வாய்ப்பான) எந்தப்பக்கத்திலும் நின்று கொள்ளலாம். ஆயினும் போட்டி ஆரம்பமானதும் குறித்த ஆள் தமது கால்களை அசைத்தல் கூடாது என்பது விதியாக உள்ளது. இவ்விளையாட்டில் பந்தயப்பணம் கட்டும் வழக்கமும் காணப்படுகிறது.
கே. டானியல் அடிமைகள் என்ற நாவலில் இவ்விளையாட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் விரிவாக விவரணம் செய்துள்ளார். இந்நாவலில் வரும் சூரியர், சந்திரர் என்ற இரண்டு பகுதியினர்க்கிடையிலான போர்த்தேங்காயடி பின்வருமாறு விவரிக்கப்படுகிறது.
. சரியாகப் பன்னிரண்டு மணிக்குப் பங்கம்’ தொடங்க வேண்டும். நடுப்பகல் வந்தது . பங்கம் பார்க்க வந்த ஜனங்கள் . கயிற்றுக்கப்பால் சுற்றி நின்றனர் மணியகாரன் பார்வையில் காய்கள் எண்ணப்பட்டன. சந்தேகமான காய்களைத் தூக்கி, கிலுக்கி சரிபார்த்து தனது நடுநிலைமை நிதானத்தை நிலை நிறுத்த முற்பட்டார் மணியகாரர்.
மணியகாரர்'பூ' வைத்துப் பார்த்ததில் கந்தனே முதலாவது அடிகாரன்.
கறுத்தான் முதலாவது காயை உருட்டினான். கந்தன் காயைச் சுற்றிவந்து வளம்பார்த்து முஷ்டியை உயரத் தூக்கி தனது காயினால் விட்டான் ஒருகுத்து.

Page 166
326 X
கறுத்தானின் முதலாவது காய் தூள்!
இரண்டாவது காய் . அதுவும் தூள்!
மூன்றாவது காய் .அதுவும் தூள்!
மொத்தத்தில் அத்தனையும் தூள் .
பதினோராவது காயில் கந்தனின் காயும் சேர்ந்து நொருங்கியது இப்போது அடிப்பது கறுத்தானின் முறை அவன் தன்னைத் தயாராக்கிக் கொண்டான் .
கந்தன் ஒருகாயை உருட்டிவிட்டான் கறுத்தான் மோதினான். இரண்டுமே நொருங்கிவிட்டது. மறுபடி கந்தன் முறை .
கந்தன் பங்கத்தை முடித்தான் .அவன்பக்கத்திற்கு எண்பத்தைந்து காய்கள் இருந்தன .
சூரியருக்குப் பெரும் வெற்றி .
கெளரவப் பிரச்சினையாகக் கருதப்படும் மேற்படி விளையாட்டில், அடிகாய் நொறுங்குவது என்பது மானப்பிரச்சினையாகவே கருதப்படும். இதனால் முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வெற்றியீட்டுவதிலும் சிலர் ஈடுபடுவதுண்டு.
விடுகாயின் நொறுங்கிய சிரட்டைத் (கொட்டாங்கச்சி) தூள்களைக் கொண்டு, அடிகாய் விட்டவரின் வீரம் புகழ்ந்துரைக்கப்படும்."
சாவலடி (கோழிச்சண்டை)
நாட்டுப்புற விளையாட்டுக்களில் சாவலடி மிகவும் சுவாரசியமான ஒன்றாகும். இதனைச் சேவற்சண்டை, சேவற்கட்டு, கோழிச்சண்டை, சாவல் விளையாட்டு முதலான பெயர்களாலும் அழைப்பர்.
கோழிச்சண்டை விளையாட்டின் தொன்மை
கோழிகளுக்கிடையே சண்டை மூட்டி, அவை கோபத்தோடு Gurti செய்தலைப் பார்த்துக்களிப்பது பழந்தமிழரின் பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது."

X 327
குறுந்தொகைப் பாடலொன்றில், காதலனைப் பிரிந்து வாழும் தலைவி, தன் காமநோயை நீக்குவாரில்லை என்பதனை விளக்க, கோழிப்போரை உவமையாக்கும் அளவில் இவ்விளையாட்டுச் சிறப்புப் பெற்று இருந்ததாகக் கருதலாம்."
கோழியின் வெற்றியைச் சிறப்பித்துப் பாடுதல், புறப்பொருள் துறைகளுள் சுவையுடைய ஒரு துறையாகக் கருதப்பட்டது. எழும்பிப்பாய்ந்தும், காலின் முள்ளையிட்டடித்தும், தாழ்ந்தும், பலமுறை சினந்தும், கொக்கரித்தும் கொடிய கோழி, தனக்கு எதிராக வந்த கோழியைப் புறங்கண்ட பிறகும் போருக்கு வருகின்றது எனப் புறப்பொருள் வெண்பாமாலை இதனைக் கோழிவென்றி’ எனக் குறிப்பிடுகின்றது."
பெருங்கதையிலே, பந்தயத்தின் பொருட்டுக் கோழிகளைச் சண்டைக்கு விடுவது மறப்போர்க்கோழி மரபிற்பொருத்தும் போராடவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.* சீவகசிந்தாமணியிலே கோழிச்சண்டைக்கு வெளிநாட்டிலிருந்து கோழிகளை வரவழைத்தமை பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.* இவ்வாறான செய்திகள் இவ்விளையாட்டின் தொன்மையினை உணர்த்தி நிற்பனவாக உள்ளன.
சண்டைக்கான சேவல்
‘சாவலடி விளையாட்டுக்கு ‘வெள்ளடியன்’ இனச்சேவல்களே உரியனவாகக் கொள்ளப்படுகின்றன. சாதாரணச் சேவல்களோடு ஒப்பிடுகையில் பல்வேறு விதமான சிறப்புத் தன்மைகளைக் கொண்டவையாக * வெள்ளடியன்’ இனச் சேவல்கள் காணப்படுகின்றமை கருதத் தக்கதாகும். இவ்வகைச் சேவல்களின் உயரம், பருமனற்ற தசைப்பிடிப்புத் தன்மை, நீண்ட கால்கள், கால்களிலுள்ள கூரான போர்முட்கள் ஆகியன சேவற் சண்டைக்குரிய சிறப்பு அம்சங்களாகக் கருதப்படுகின்றன.
பயிற்சியாளா
சேவலின் உரிமையாளர்கள் எல்லோருமே, சேவலினைச்
சண்டைக்கேற்பப் பயிற்றுவிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பதில்லை. பெரும்பாலும் இவ்வகைப் பயிற்சிக்கெனக்

Page 167
328 x
‘கோழியியல்’ தெரிந்த நிபுணர்களை விசேடப் பயிற்சியாளர்களாக நியமிப்பர். குறித்த சேவல்களைச் சண்டைக்கேற்றவாறு தீனிபோட்டு விழிப்புடன் வளர்ப்பதுடன், சண்டைப் பயிற்சியினையும் கொடுப்பது இவர்களின் கடமையாகும். இவர்களே போட்டி நடைபெறும் இடத்திற்குச் சேவல்களைக் கொண்டு சென்று சண்டையினையும் மூட்டிவிடுவர்.
சண்டைக்கான சேவலின் பராமரிப்பு முறைகள்
சண்டைக்கான சேவல்களைப் பராமரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவர். அடிமைகள் என்ற நாவலிலே, இப்பராமரிப்பு முறைகள் குறித்து மிகவும் "நுணுக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. விவரணம் வருமாறு.
. மூன்று நாட்களுக்கு ஒரு தடவை பரவைக்கடலில் அராவானை நீந்த வைத்து கால்களை எடக்கும் வரை முழுக்காட்டவேண்டும். உப்புத்தண்ணீரில் அதன் உடல் வலித்து இறுக்கமாக வேண்டும் .
அதிகாலையோடு அம்மியில் நெல்பரப்பி கொத்தித் தின்னவைக்க வேண்டும் அப்போதுதான் அதன் சொண்டுகள் இறுக்கமடைந்து, தடித்து உரமாகும்.
பத்து மணிக்குப் பிந்தாமல் குமரிக்கத்தாளைச் சாற்றில் குரக்கன் மாக்கழி கிண்டி ... அத்துடன் ஆண்பனைக் கள்ளில் காய்ச்சிய பனங்கட்டிப் பாணியும் குழைத்து உணவூட்ட வேண்டும். அப்போதுதான் அதன் குடலில் தண்ணீர்ப் பற்றுக் குறைந்து சுத்த இரத்தம் ஒடும்.
மத்தியானத்திற்குப் பின்பு சற்று வேளை அதை வளவுக்குள் தாராளமாக உலாவவிட்டு சற்றுத் துரத்திக் கலைத்து களைக்கவைக்க வேண்டும். அப்போதுதான் அதற்கு இளைப்புக் களைப்பு பழக்கப்பட்டதாகி விடும்.
எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு பெட்டைக் கோழி அதன் கண்ணில் படவோ, பெட்டைக் கோழியின் கேரல் அதன்

8 329
செவியில் விழவோ கூடாது. அப்போதுதான் அதன் ஆண்மை இறுகி வீரம் விளையும்.
மாலையானதும் இரண்டு சிறங்கை விளைவு சாராயமும், ஒரு சிறங்கை விளைவு கற்கண்டுப் பொடியும், சிறிதளவு சிறுகுறிஞ்சாச்சாறும் கலந்து பருக்கிக் குடிக்க வைக்கவேண்டும். அப்போதுதான் அதற்குச்சறளிப்பிடிப்பு நீங்கும்.
இரவில் அதை ஊஞ்சலில் உறங்கவைத்து இடைஇடையே இரண்டொருதடவை அந்த உஞ்சலை ஆட்டிவைக்கவேண்டும். அப்போதுதான் அதன் பாதமும் விரல்களும் இறுகி எதையும் அப்பிப்பிடிக்கும் வலிமை பெறும். இடையிடையே நான்கைந்து தடவை தவிடுகளையாத புழுங்கல் அரிசி முடபுடுக்காய்ப் பதத்தில் வேகவைத்த சோறு . ஏதாவது சிறிய இறைச்சித் துண்டுகள் அல்லது மாமிசச் சவ்வுகள் கொடுக்கவேண்டும்.
நான்கைந்து நாட்களுக்கொருதடவை அதன் பெருந்துடை இறகுகளைப் பிடித்து விட்டு மசாச் செய்து, அதன் தலையை இருகைகளாலும் அடக்கிப்பிடித்து இலுப்பெண்ணை தடவி கசக்கி அதன் தலையை வாய்க்குள் வைத்து உறிஞ்சி இழுத்து அதன் தொண்டைக்குள் இருக்கும் சறளியை இழுத்துவிடுதல் வேண்டும் ...'
குறித்த மேற்கோட்பகுதியிலே, சண்டைக்குரிய சேவலொன்றினைப் பராமரிப்பது தொடர்பான அனைத்து விடயங்களிலும் கே. டானியல் விசேடகவனம் செலுத்தியிருப்பது கருதத்தக்கதாகும்.
சண்டைக்குரிய களம்
சண்டைக்குரிய இடம் களரி என அழைக்கப்படும். இக்களரிக்குள் குறித்த இரு சேவல்களின் பராமரிப்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்கள் களரியைச் சுற்றிக் கட்டப் பட்டிருக்கும் கயிற்றுக்கு அப்பால் கற்றிவர நிறுத்தப்படுவார்கள்.

Page 168
330 X
நடுவர்
சேவற்சண்டை விளையாட்டுக்குரிய நடுவர்களாகக் குறித்த சண்டையில் பங்கேற்கும் இருதரப்பாரினதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான பெரியவர்கள் சிலர் பணியாற்றுவர்.
நிபந்தனைகள்
சேவல்கள் அடிப்பட்டக் கொண்டோ களைத்து நின்று கொண்டோ இருக்கையில் அச்சேவல்களைத் தொடுதல், அவற்றுக்கு நீர்தெளித்தல் முதலானவை தடை செய்யப்படுகின்றன. போட்டியில் பங்கெடுப்போரின் சம்மதத்தின் பேரில் நிபந்தனைகளை நடுவர்கள் தளர்த்துவர். சண்டை செய்கையில் இறுதியில் ஒரு சேவலால் முடியாது போனாலோ, குறித்த சேவல் களரியைவிட்டுக் கோழை கிளப்பிக்கொண்டு வெளியே பறந்து போனாலோ களத்தில் நிற்கும் இதர சேவலுக்கே வெற்றிவாய்ப்பு வழங்கப்படும். சேவல்களின் சண்டை பெரும்பாலும் ஒருவர் இடையிலே வந்து பிரித்துக் கொண்டு போகாவிட்டால் அவற்றில் ஒன்று இறக்கும் வரை தொடரும், தோல்வியுற்றவர் குறித்த சேவலைத் தமது வீட்டுக்கு மீளவும் கொண்டுபோக விரும்பாமையே இதன் அடிப்படையாக உள்ளது.
சண்டை செய்யும் முறை
மோதவுள்ள இரண்டு சேவல்களின் உரிமையாளர்கள், முதலில் அச்சேவல்களை ஒன்றுடன் ஒன்று மோதச் செய்வதும், பின்னர் அவற்றைத் தூரக் கொண்டு செல்வதுமாக இரண்டு சேவல்களுக்கும் கோபத்தை உண்டாக்குவர். இவ்வாறு பலதடவைகள் செய்த பின்னர், சேவல்களைக் களரிக்குள் இறக்கிவிடுவர். சண்டையிடும் சேவல்களின் போர்முட்களுடன் சிறியரகக் கத்திகளையும் சிலர் கட்டிவிடுவர்.
அடிமைகள் என்ற நாவலிலே, ‘அராவான்', 'கழுகன்’ ஆகிய இரண்டு சேவல்களுக்கிடையே நடைபெற்ற சண்டை பற்றிப் பின்வருமாறு சித்திரிக்கப்பட்டுள்ளது.
, , போர் தொடங்கிவிட்டது.

0x0
களரியைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான் சரக்கன். கிழக்கில் இருந்து மேற்கே அராவான் மேற்கில் இருந்து கிழக்கே கழுகன்.
இரண்டும் நட்டநடுவே சந்தித்துக் கொண்டன.
அந்த வேளை அராவானும், கழுகனும் ஒத்து மே விக்கொண்டன. ஆனாலும் அந்த ஒத்து மே வலின் பறப்போடு பறப்பாக அராவான் தனது வலக்கால் முள்ளினை கழுகனின் கன்னத்தில் பதித்துவிட்டது! கழுகனின் கன்னத்தில் இரத்தம் கொட்டியது.
திடீரெனக் கழுகன் பாய்ந்த பாச்சலுக்குதலையைத் தாழ்த்தி இலாவகமாகத் தப்பிக் கொண்டான் அராவான் .
வெறும் அடி ..!
பிரயோசனம் இல்லாத அடி!
திடீரெனக் களரியைச் சுற்றி ஆரவாரம் கேட்டது.
கழுகன் அரவானின் கண்களுக்குள் முள்ளைச் சொருகி இழுத்துவிட்டது .
முதல் அரைமணிநேரம் ஓங்கியிருந்த அராவானின் கை இப்போது தாழ்ந்து விட்டது.
அராவானின் ஒற்றைக் கண் பறிக்கப்பட்டுவிட்டது .
அராவான் சணவேகத்தில் பாய்ந்ததே ஒரு பாய்ச்சல்!
தோந்தடி அந்தரவிசுக்கு கழுகனின் தலையில் இலக்குத் தப்பாமல் விழுந்த அந்த விசுக்கு .
கழுகன் எழுந்தது! கழுகன் கோழைகிளப்பி ஓடியது. களரியைச் சுற்றியிருந்த சனக் கூட்டத்தில் அது சரண் அடைந்தது!
அரவான் வெற்றி வீரனாக களரியின் நடுவே தன்னந்தனியாக நின்றது .'
3.31

Page 169
332 X
பந்தயம் கட்டுதல்
சேவல்கள் சண்டையிடுகையில், பார்வையாளர்கள் இருகுழுக்களாகப் பிரிந்து, ஒவ்வொரு சேவலின் மீதும் பந்தயப்பணம் கட்டுவர். சண்டை நிறைவுற்றதும் தோற்றுப்போன சேவலின் உரிமையாளர் வெற்றி பெற்ற சேவலின் உரிமையாளரிடம் குறித்த பணத்தைக் கையளிப்பார்.'
சேவற்சண்டை விளையாட்டு, சேவலும் சேவலும் மோதிக் கொள்ளும் போட்டியே என்றாலும் உண்மையில் நடப்பது இரண்டும் மனிதர்களுக்கிடையே நடைபெறும் போட்டியே எனலாம். இச்சண்டை மனிதர்களுள் நடைபெறும் சண்டையின் பதிலி’ வடிவமாகும். எதிராளியின் சேவல், எதிராளியின் பதிலியே ஆகும். சேவல் சண்டையிடும்போது தானே சண்டையிடுவதாகச் சேவலின் சொந்தக்காரன் ஆர்ப்பரிப்பது, தனது சேவல் அடிப்பட்டால் தானே அடிப்பட்டதுபோல மனம் புண்படுவது முதலான செய்கைகள் உளச் செயல்களில் ஒன்றான ஒன்றுதல்’ (Identification) தன்மை கொண்டனவாகும்.தன் சேவலின் மீது அதன் சொந்தக்காரன் கொண்டிருக்கும் ஆழ்ந்த ஈடுபாடானது ‘தனிமோக ஒன்றுதல்’ (Narcissistic Identification) au 603560) Luj FITripëg5g5 Tg5 Lib. G3 SF6 u sjö சண்டையில் வெளிப்படும் சண்டை ‘தன்மோகச் சண்டை” (Natcissistic conflict) 6 TGötp sîrî606 uji SFITripëg5g5 Tg5b.
பட்டம் விடுதல் (காற்றாடி)
பருவகால விளையாட்டுக்களில் பட்டம் விடுதல் பிரதானமான ஒன்றாக உள்ளது. இவ்விளையாட்டைப் பட்டம் விடுதல், கொடியேற்றுதல், காற்றாடி விடுதல் எனப் பலவாறு வழங்குவர். பட்டம் விடுதல் பொதுவாக ஆண்களுக்குரிய விளையாட்டாகும்.
செங்கையாழியான், முற்றத்து ஒற்றைப்பனை என்ற நாவலைப் பட்டம் விடுதல் என்ற பாரம்பரியமான நாட்டுப்புற விளையாட்டைக் கருவாகக் கொண்டு படைத்துள்ளமை கருதத் தக்கதாகும். இந்நாவலிலே, பட்டம் தயாரித்தல், அதனைப் பறக்க விடுதல் முதலான பல்வேறு விடயங்கள் பற்றியும் அதன் ஆசிரியர் மிகவும் இயல்பாகச் சித்திரித்துள்ளார்.

(X 333
பட்டம் ஏற்றுவதற்கான காலம்
பட்டம் விடுதல்’ என்பது பருவகால விளையாட்டுக்களில் ஒன்றாகும். சோளகக் காற்றுப் பிறக்கும் காலப்பகுதியே பட்டம் விடுதலுக்கு ஏற்ற காலப்பகுதியாகும். இக்காலப் பகுதியில் வீசும் பலத்த காற்று, பட்டங்களை உயர எழுப்புதற்கு வசதியாக அமைந்து காணப்படும்.
பட்டங்களின் வகைகள்
பட்டங்கள், (காற்றாடி) எட்டு மூலைப்பட்டம், கொக்குப்பட்டம், பிராந்துப்பட்டம், சாதாரண கடதாசிப்பட்டம் எனப்பலவகைப்படும்.
முற்றத்து ஒற்றைப்பனை என்ற நாவலிலே வரும் மாரிமுத்து தனது மனைவியுடன் உரையாடுவதாக அமைந்த பகுதியில் பட்டங்களின் வகைகள் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
. கொடி ஏத்துறது ஒரு கலையடி, பொன்னு! இந்த மாரிமுத்தனை கொடி ஏத்துறதிலை வெல்ல ஒருவன் இல்லை. எட்டு மூலை, கொக்கு, பிராந்துக் கொடிகளை நூலிழை பிசகாமல்
கட்டி, வானத்திலை கம்பீரமாகப் பறக்கவிட வேறு ஆர் இரக்கினம்
3
பட்டம் தயாரிப்பில் பயன்படும் பொருட்கள்
மூங்கில் தடி, நூல், வண்ணக் கடதாசிகள், கம்பிகள், நார்க்கயிறுகள் முதலானவற்றைக் கொண்டு பட்டங்களைத் தயாரிப்பர். பட்டத்தின் உயரம் ஐந்து, ஆறு அடிகள் வரை நீளும், பட்டத்தின் தலைப்பகுதியில் “விண்’ என அழைக்கப்படும் ஒருவகைக் கருவியை இசை எழுப்புவதற்காகப் பொருத்திவிடுவர். விண்’ மூங்கில் தடியினாலும், நன்றாக வாரப்பட்ட பிரம்பு நாரினாலும் தயாரிக்கப்படும். இதன் வெளித்தோற்றம் பார்ப்பதற்கு ‘வில் போன்று காணப்படும். விண் எழுப்பும் ஒசை ஒரு சில கிலோ மீட்டர்கள் வரை கேட்கக் கூடியதாக இருக்கும்.
பட்டத்தின் அடிப்பகுதியில் “வால்’ என அழைக்கப்படும் கயிற்று மறுக்கினைப் பட்டத்தினைச் சமநிலைப்படுத்துவதற்காகக்

Page 170
334 X
கட்டிவிடுவர். பட்டம் பறக்கும் நிலையில் அதன் வாற்பகுதி கீழ்நோக்கித் தொங்கியபடி இருக்கும். வாலின்நிறை பட்டங்களின் பருமனுக்கேற்ப அமைந்து காணப்படும்.
நைலோன், கோர்லோன், பருத்தி முதலான நூல்களைக் கொண்டு பட்டங்களைப் பறக்க விடுவர். பட்டங்களைப் பறக்கவிடும்போது பயன்படுத்தப்படும் நூல் கைகளைச் சேதப்படுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டுச் சிறிய அளவிலான தடிகளில் நூலினைப் பிணைத்துக்கட்டி, அதன் மூலம் பட்டத்தினை விரும்பியபடி கையாளுவர்.
முற்றத்து ஒற்றைப்பனை என்ற நாவலில் வரும் முத்தரின் கைவண்ணத்தில் உருவான பட்டம் பற்றிய சித்திரிப்பு பின்வருமாறு காணப்படுகிறது.
. தலைவாசல் திண்ணையில் நான்கு அடிநீளத்திற்குக் குறையாத கொக்குக் காற்றாடி ஒன்று மினுமினுத்தபடி கிடந்தது. பக்கத்தில் பெரிய உருண்டை நூல்பந்து ஒன்று. நூல் பென்சில் தடிப்பிருக்கும். பெரிய கொக்கு ஒன்று இறகுகளை விரித்தபடி, சொண்டையும், கழுத்தையும் மேலே தூக்கியவாறு மல்லாந்து கிடப்பது போல இருந்தது. இறகுகளின் விரிப்பு, வாலிறகின் பரவல், கழுத்தின் வளைவு என்பன யாவும் அளவோடு, காற்றின் பரப்பில் மிதக்க வைக்கத் தக்கனவாக அமைந்திருந்தன. வெள்ளைவெளேர் என்ற நறம், கழுத்துச் சிற்றிறகுகள் கூட அற்புதமாக இருந்தன. சிறிய மணிக்கண்கள் வேறு .'
முத்தர் அம்மானின் அற்புதப் படைப்பைக் கண்ணுற்ற தம்பையா என்ற பாத்திரம், நாவலாசிரியர் எதற்காக இக்கலையைப்பற்றிப் பேச முனைந்தாரோ அதனையே வெளிப்படுத்துவதாகப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
ஒன்றுமில்லை அம்மான், தமிழன்ரை பல வகையான பழைய கலைகள் படிப்படியாக அழிந்து போவதை எண்ணினன். சத்தியமா அம்மான், உங்களுக்குப் பிறகு வண்ணார் பண்ணையில் கொடிகட்டி ஏத்த ஆர் இருக்கினம்? நுட்பமாகக் கட்டுவதற்கு ஆர் இருக்கினம்
15

(X 335
நெடியமரங்களில் நீண்டதடிகளைக் கொண்டு விட்டம்’ போட்டு அவ்விட்டத்திலேயே பிணைத்துவிடப்படும் பட்டங்கள், வாரக்கணக்கில் கீழே இறக்கப்படாமல் பறக்கவிடப் படுவதுண்டு, பட்டம் விடுவதற்கு ஏற்ற இடங்களாக, வயல்வெளிகள், கடற்கரை வெளிகள் முதலான இடங்களைத் தேர்ந்தெடுப்பர்.
கம்படி (சிலம்பம்)
'கம்படி ஆடவர்க்குரிய விளையாட்டாகும். இதனைச் *சிலம்பம்’, ‘சிலம்படி’ எனவும் வழங்குவர். கம்படியானது, பயிற்சி நிறைந்த ஒரு வீரம் மிகுந்த விளையாட்டாகக் காணப்படுகிறது. போட்டி அடிப்படையில் நடைபெறுகின்ற இவ்விளையாட்டு, ஒரு தற்காப்புக் கலையாகவும் அமைந்துள்ளது. இவ்விளையாட்டைப் பெரும்பாலும் கோவில் திருவிழாக்காலங்களிலும், பிற விழாக் காலங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சியாகவும் ஒழுங்கு செய்வர். எதிரியின் கம்பு, தம் உடல் மேல்படாமல் தடுத்தலும், தம்முடைய கம்பினால் எதிரியின் உடலைத் தொடுதலும் ஆகிய செயல்களைக் கொண்டு இவ்விளையாட்டின் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.
கம்படிக்குப் பயன்படுத்தப்படும் “தடி” (குச்சி)
கம்படிக்குரிய தடியாகப் பெரும்பாலும் துவரம் தடியையே பயன்படுத்துவர். நார்த்தன்மை கொண்ட இவ்வகைத்தடிகள், அடியின் போது நார்நாராக உரியுமே தவிர, விரைவில் உடைந்து போகாதெனலாம். வைரமான பிறவகைத்தடிகளை அடிக்குப் பயன்படுத்தும் போது, அவை உடைந்துபோக நேரிடும் வேளைகளில் அவற்றால் கைகளுக்கும் பாதிப்பு நேர்ந்து விடும். துவரந்தடியில் இவ்வகை ஆபத்துக்கள் எவையுமில்லை.
கம்பினது நீளம்
கம்படியில் இரண்டு 665 LTG கம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரியகம்பு ஒன்பது சாண்
அளவினதாகவும், சிறியகம்பு ஐந்து சாண் அளவினதாகவும் காணப்படும். சிலர், நெற்றியை எல்லையாக வைத்துக் கம்பினது அளவினைத் தீர்மானிப்பர். இவ்வாறு தீர்மானிக்கும்போது,

Page 171
336 X
விளையாடுபவர்கள் உயர வேறுபாடு உடையவர்களாகக் காணப்படின் அதனால் ஆபத்து நேரிடும் வாய்ப்புள்ளது.
வணக்கம்
கம்படி விளையாட்டைத் தொடங்குதற்கு முன்பாக முறையே தெய்வம், குரு, அவையோர் ஆகியோர்க்கு வணக்கம் செலுத்துவர். வணக்கத்தில், ஒருபக்க வணக்கம், இருபக்க வணக்கம் என இரண்டு வகைகள் உள்ளன. இவ்வணக்கமுறைமை என்பது அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாகவே உள்ளது.
கம்படியின் வகைகள்
கம்படி விளையாட்டில், கர்நாடகம், குறவஞ்சி, துளுக்காண்டம், மறுவன், சிறுத்தாக்கழி எனப் பல்வேறு வகைகள் காணப்படுகின்றன. ஈழத்துத் தமிழரிடையே, ‘சிறுத்தாக்கழி’ என அழைக்கப்படும் சிறுகம்பு விளையாட்டே பெருமளவில் பயில்நிலையில் உள்ளது.
விளையாடும் முறை
கம்பு வீசும்திறன், காலடி எடுத்துவைக்கும் முறை, வேகமாகச் செயற்படும் திறன் ஆகியவை இவ்விளையாட்டின் அடிப்படைகளாகும். விளையாடுபவரின் திறமைக்கேற்பப் புதிது புதிதான அடிகளை உள்வாங்கும் தன்மை இவ்விளையாட்டிற்குண்டு. சாதாரண அறிமுக நோக்கில், ஒருகைக்கு ஒன்பது என்ற கணக்கில் இரண்டு கைகளுக்கும் பதினெட்டு அடிகள் உள்ளன.
கீழே பிற அடி, மேலே பிற அடி, இடதுபக்கம் உள்ளடி, வலதுபக்கம் உள்ளடி, கண்ட உள்ளடி, கண்டபிற அடி, கீழடி பிறஅடி, உச்சியடி பிற அடி, குத்து அடி ஆகியன மேற்குறிப்பிட்ட ஒன்பது வகை அடிகளாகும்."
கோவிந்தன் என்ற நாவலிலே, சிலம்படி இரத்தினன் என்பவனுக்கும் சீனடி நயினாக்கண்டன் என்பவனுக்குமிடையில் நடைபெற்ற கம்படி விளையாட்டுப் பற்றிய சித்திரிப்பில், இவ்விளையாட்டின் பல்வேறு வகையான நுணுக்கமுறைமைகள் பற்றியும் கே. டானியல் விவரித்துள்ளார்.

. தொடங்கிவிட்டது
கம்பு விளையாட்டு
சிலம்படி இரதினனும், சீனடி நயினாக்கண்டனும்
மோதுகிறார்கள்.
அடிதூக்கி, அடிதூக்கி
அடி மாறி, அடி மாறி,
அடிமுன்வைத்து, அடிமுன்வைத்து வைத்த முறைப்படி
பின்வைத்து, பின்வைத்து
எம்பித்தள்ளி, எம்பித்துள்ளி
நுனித்தடிகளையும், அடித்தடிகளையும் முறையே
முட்டவைத்து, முட்டவைத்து
குருவணக்க வடிவங்காட்டி
நடுத்தடிகளைப் பிடித்துச் சுழற்றிப் பாய்ந்து
பாய்ந்து கிறுதாப்போட்டு
இப்போது ஆவேசமான போட்டி .
கண்கொள்ளாக் காட்சி அல்ல; கண் கூசும்
வீச்சு, மின்வெட்டுவேகம் ..."
வானவிளையாட்டு
வாணவிளையாட்டு ஆடவர்க்குரிய கால விளையாட்டுக்களில் ஒன்றாகும். இதனை, "ஆகாசவாணம்’ எனவும் அழைப்பர். வாணவிளையாட்டை எல்லோருமே நிகழ்த்திக் காட்டமுடியாது. வாணம் விடும் கலையில் கைதேர்ந்தவர்களே வாணவிளையாட்டுக் காட்டுவர். வானை நோக்கிப் பட்டாசுகளை உந்தித் தள்ளி வெடிக்க

Page 172
J38 X
வைப்பதே இவ்விளையாட்டாகும். பெரும்பாலும் கோவில் திருவிழாக்களின் போது, இரவு வேளைகளில் வாண வேடிக்கை கேளிக்கை நிகழ்ச்சியாக நிகழ்த்தப்படுதல் வழமையானதாகும்.
வெடிமருந்துகளின் அளவுக்கேற்ப, வாணம் விண்ணை நோக்கிப்பாயும். பாய்கின்றபோது, அலையலையாக அக்கினித்துகள்களைத் தூவிச் சென்று, இறுதியில் மண்ணை நோக்கி வீழ்வது பார்ப்பவர்களைப் பெரிதும் மகிழ்வடையச் செய்யும் காட்சியாகும்.
பஞ்சமர் என்ற நாவலிலே, மோட்டு ஆகாசவாணத்தினை ஆகாயத்தை நோக்கிச் செலுத்துவதற்கான ஆரம்ப நடைமுறைகளும் விண்ணில், அது மேற்கொள்ளும் சாகசங்களும் பின்வருமாறு சித்திரிக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்கு முன்பாக உள்ள பெரும் மருதமரக் கொப்புக்களில் ஏறி இறங்கி ஆனைக்கோட்டை ஐயன் தனது "மோட்டு’ ஆகாசக் குழல்களை விடுவதற்காக அச்சு நிலையங்களை ஆக்கியும், நீண்ட வால் தடிகளை உயர்த்தி உயர்த்தி அளவு பார்த்தும் பத்து இறாத்தல், எட்டு இறாத்தல், ஆறு இறாத்தல் என்று திரைப்படுத்தி இரும்பு வளையங்கள் கட்டப்பட்டிருந்த மோட்டு ஆகாசக் கொட்டுக்குள் திரிவாய்க்கு மருந்து வைக்கும் சகாக்களோடு ஆரவாரம் செய்கிறான்."
. இம்முறை ஐயனுக்குப் பூரண வெற்றிதான் வாணம் கிளம்பிய அமைதியான முறையே அதன் வெற்றியை அறிவித்துவிட்டது. மேலெழுந்த, எட்டு றாத்தல் ஆகாசம் கணவேளை பக்கவாட்டில் சரிந்தோடி, மறுபடி நிமிர்ந்து கண்களுக்கு எட்டியதுரம் பறந்தோடி, அலை அலையாக அக்கினித் துகள்களை கக்கிக்கக்கி, வித்து விளையாட்டு விளையாடி மறுபடியும் வான முகட்டில் சரிந்து வளைந்து வயல் பரப்புக்கு அப்பால் வெகுதூரம் வரை தென்புறக்கடல் சரிவை நோக்கி ஓடிச் சென்று மறைந்து போய்விட்டது. ..."
வாண விளையாட்டுக்களைப் பயிற்றுவித்தற்கென்று தனியான அண்ணாவிகள் (பயிற்சியாளர்) உள்ளனர்.

8 339
காரணப்பெயரிடும் வழக்கம்
ஒரு சமுதாயத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நாகரிகம், நம்பிக்கை, கடவுட்கொள்கை, சமயச்சிந்தனைகள், அரசியல், சமுதாயமாற்றங்கள் முதலான பல்வேறு விடயங்களையும் மக்கட்பெயர்’ மூலம் அறிந்து கொள்ளலாம். பெயர்களுடன் தொடர்புடைய வழக்காறுகளில் (Folklore related to Names) மக்கட் பெயர்கள், உறவுமுறைப் பெயர்கள், காரணப் பெயர்கள், இடப் பெயர்கள் ஆகியன உள்ளடங்குகின்றன. சமுதாயம் குறித்த ஆய்வில் காரணப்பெயர்களின் முக்கியத்துவம் கணிசமான ஒன்றாகும்.
ஆங்கில மரபில் காரணப் பெயர்களை, Nick Name’ என்ற சொற்றொடரால் அழைப்பர். இச்சொல்லுக்கு, நிந்தைப் பெயர், மாறு பெயர், விளையாட்டுப்பெயர், பரிகாசப் பெயர் முதலான பொருண்மைகள் சுட்டப் படுகின்றன.*
தமிழ் மரபில், காரணப்பெயர் வழங்கும் வழக்கம் என்பது பண்டைக்காலம் முதற்கொண்டே இருந்து வந்துள்ளது. அவரவர்க்குரிய சில விசேடதன்மைகள், உடல்தோற்றம் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர்கள் வழங்கப்பட்டமை குறித்து அறிய முடிகின்றது.
தொல்காப்பியர், பாலறி வந்த உயர்திணைப் பெயர்கள் பற்றிக் குறிப்பிடும் நூற்பா ஒன்றில், காரணப் பெயர்களாகக் கருதக் கூடிய பெயர்கள் சிலவற்றைக் குறிப்பிடுவர். நூற்பா வருமாறு
நிலப்பெயர், குடிப்பெயர், குழுவின் பெயரே வினைப்பெயருடைப் பெயர் பண்பு கொள் பெயரே
பல்லோர் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர் குறித்த சினைநிலைப் பெயரே பல்லோர் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கி னாடியற் பெயரே யின்றிவரென்னு மெண்ணியற் பெயரோ
டன்றியனைத்து மவற்றியல் பினவே.*

Page 173
340 必
மேற்படி நூற்பாவுக்கு உரைசெய்த சேனாவரையர், மேற்குறித்த பெயர்களெல்லாம் ஏதோ ஒரு ‘நிமித்தம்’பற்றியே அமைவன எனக் குறிப்பிடுவதும் இவ்விடத்திற் கருதத் தக்கதாகும்.*
உ.வே. சாமிநாதையர், பண்டைத் தமிழ்ப்புலவர் பெயர்களிற் சில, காரணப்பெயர்களாக அமையுமாற்றை எடுத்துக்காட்டியுள்ளார். விருந்துவரக் கரைந்த காக்கையைப் பாராட்டினமையால் 'காக்கை பாடினியார்’ என்றும், கழியில் உள்ள நெய்தல் மலருக்குக் கயத்தில் மூழ்கும் மகளிர் கண்களை உவமித்துக் கயத்தில் நிகழும் நிகழ்ச்சியைக் கூறுதலின் ‘கயமனார்’ என்றும் புலவர் பெயர் பெற்றதாகக் குறிப்பிடுவார். மேலும் குறுந்தொகைப் பாடலின் செய்யுள் பகுதிகளால் அமைந்த காரணப் பெயர்களாக ஓரேருழவர், கள்ளிலாத்திரையனார் முதலான பெயர்களையும் குறிப்பிடுவது கருதத் தக்கதாகும். சங்கப் புலவர்களில் சிறுபான்மையினர்தம் இயற்பெயர் தெரிந்தும், அவர் பெயரைச் செய்யுட்களில் அமைக்காமல், சிறப்புப் பெயரையே அமைத்தனர் என்பது இவரது கருத்தாக உள்ளது.*
காரணப் பெயர்கள் பற்றிக் குறிப்பிடும் உருஷ்ய ஆராய்ச்சியாளரான விதாலி ஃபுர்னிக்கா, மழை நீரும் பூமியும் ஒன்று சேர்வதைப் பாடிய புலவர் செம்புலப்பெயல் நீரார்’ எனவும், வெள்ளி வீதியிலே வாழ்ந்த புலவர் “வெள்ளி வீதியார்’ எனவும், இடைக்காட்டைச் சேர்ந்த புலவர் இடைக்காடர்’ எனவும் பெரியதலையினையுடைய புலவர் ‘பெருந்தலைச்சாத்தனார்’ எனவும் அழைக்கப்பட்டமை பற்றிக் குறிப்பிட்டு, இப்பெயர்களெல்லாம் சொந்தப் பெயர்கள்போல் வழங்கி வந்த காரணப் பெயர்களே எனக் கருத்துரைப்பார்.*
அ.துரையரங்கனார், சங்க இலக்கியங்களிலே, உருவகம், உவமை ஆகியன இயற்பெயர்களாக வருதல் பற்றியும் மனங்கவரும் சொற்றொடர்கள், மற்றும் குடி முதலானவை சிறப்புப் பெயர்களாகப் பயின்று வந்துள்ளமை பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ளமை இவ்விடத்திற் கருதத்தக்கதாகும்."
உயர் திணையில் இருபாலார்க்கும் வழங்கப்படும் பெயர்களை இயற்பெயர், காரணப் பெயர் என இருவாறாகப் பாகுபடுத்தலாம்.

0X 341
இயற்பெயர்கள், ஒரு மனிதனை மற்றொரு மனிதனிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவனவாகும். ஒருவனுக்குப் பெயர் சூட்டிய பின்னர்தான் அவன் குடும்பத்தில் ஒர் அங்கமாகவும் சமுதாயத்தில் ஒரு உறுப்பினனாகவும் கருதப் படுகின்றான்.
காரணப் பெயர்கள், மக்களின் தோற்றம், பண்பு, தொழில், செயல்கள், வாழ்விடம், வாழ்ந்த இடம், நம்பிக்கைகள் முதலான பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறுகின்றன. இப்பெயர்கள், ஒரே இயற்பெயருடைய இருவரை வேறுபடுத்தி உணர்ந்து கொள்வதற்காகவும், ஒருவரைக் கேலி செய்வதற்காகவும், ஒருவரைப்பற்றி மறைமுகமாகப் பேசுவதற்காகவும் பயன்படுகின்றன.* இப்பெயர்கள், மனிதனுடைய ஆளுமையினையும், அவனுடைய இயல்புகளையும் காட்டுவனவாக மட்டுமன்றிச் சமுதாயத்தின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், பண்பாடு முதலானவற்றையும் வெளிப்படுத்துவன வாகவும் அமைகின்றன.
நாவல்களில் காரணப் பெயர்கள்
நாவல்களிலே, பல்வேறு வகைப்பட்ட காரணப்பெயர்கள் பயின்று வந்துள்ளமையினைப் பார்க்க முடிகின்றது. நாட்டுப்புற மக்களின் புலமைத்திறனுக்கும் உவமை கூறும் ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டாக அமையும் இப்பெயர்களை, அவற்றின் தன்மை நோக்கி,
(அ) தோற்றம் குறித்த காரணப் பெயர்கள்
(ஆ) பண்பு குறித்த காரணப் பெயர்கள்
(இ) தொழில் குறித்த காரணப் பெயர்கள்
(ஈ) செயல் குறித்த காரணப் பெயர்கள்
(உ) ஊர் குறித்த காரணப் பெயர்கள்
(ஊ) சாதி குறித்த காரணப் பெயர்கள்
என வகைப்படுத்தி நோக்கலாம்.

Page 174
J42 8
தோற்றம் குறித்த காரணப் பெயர்கள்
தோற்றம் குறித்த காரணப் பெயர்களை, உடல் உறுப்புக்களுடன் Gigi TLil 60 Lu 607 (Body Parts, Physical Handicapped), 5pgg, Lair தொடர்பு உடையன, உருவத்துடன் தொடர்புடையன என மூன்று வகையாகப் பகுத்துப் பார்க்கலாம்.
உடல் உறுப்புக்கள் குறித்த காரணப் பெயர்கள்
உடல் உறுப்புக்கள் இயல்புக்கு மாறான தன்மையில் அமைந்திருந்தாலோ இல்லாமல் இருந்தாலோ அல்லது உறுப்புக்களின் எள்ளல் தன்மை கொண்ட தோற்றத்தினாலோ இவ்வகையான காரணப் பெயர்கள் தோன்றுகின்றன. இவ்வகைப் பெயர்கள், உறுப்புக்களின் பெயர்களோடு பால்விகுதி பெற்றோ அல்லது அதே வகையான தோற்றம் கொண்ட மிருகங்களோடும், பொருட்களோடும் தொடர்புபடுத்தியோ அமைகின்றன.'
கொத்தியின் காதல் என்ற நாவலில், வழக்கத்துக்கு மாறாக, நீண்ட பற்களின் அமைப்புக் கொண்டவரின் பற்களை எருமையின் பற்களின் அமைப்புடன் தொடர்புபடுத்தி அவர் ‘எருமைப்பல்லன்’ என்ற காரணப் பெயர்கொண்டு குறிப்பிடப்படுவதனைக் காணமுடிகிறது.*
பஞ்சமர்’, ‘கோவிந்தன்’ ஆகிய நாவல்களிலே வருகின்ற *செவிட்டு ஐயர்’, ‘சொத்திச்சட்டம்பி’, ‘செகிட்டுச் சாத்திரி’ முதலான காரணப் பெயர்கள், உடல் ஊனத்துடன் தொடர்புடையவர்களைக் கேலி செய்வனவாகப் பயின்று வந்துள்ளன.*
'அடிமைகள்', 'கானல்’ ஆகிய நாவல்களிலே வருகின்ற, ‘பறட்டைத்தலைப் பெரியதம்பி’, ‘பெருங்குடும்பி ஐயர் முதலான காரணப் பெயர்கள் தலைமுடியின் அமைப்புடன் தொடர்புடையனவாகப் பயின்று வந்துள்ளன.* எண்ணெய் தேய்த்து, முறைய்ாக வாரப்படாத தலைமுடியினையுடையவரை, நாட்டுப்புற வழக்கில் பறட்டைத்தலையன்’ எனக் குறிப்பிடுவது வழக்கமானதாகும். ‘பற்றைத் தலையன்’ என்பதன் திரிபாக இப்பெயர் அமைந்து இருக்கலாம்.

& 343
புரோகிதர்கள், தமது தலைமுடியினைக் கொண்டையாக முடித்துக் கொள்வது வழக்கம். வழமையான அளவிலும் பார்க்க கொண்டையின் அளவு பெரிதாக இருக்கும் காரணம் பற்றிப் ‘பெருங்குடும்பி ஐயர் என்ற காரணப் பெயர் வழங்கப்பட்டுள்ளது எனக் கருதலாம்.
தண்ணிர் என்ற நாவலில், உடம்பெல்லாம் பொருக்குகள் படிந்த வனாகச் சித்திரிக்கப்படுபவன், ‘சொடுகன்’ என்ற காரணப் பெயரினால் குறிப்பிடப்பட்டுள்ளான். சொடுகு' என்பது ‘பொடுகு என்பதன் திரிபாக இருக்கலாம்."
தண்ணிர் என்ற நாவலில் வரும் நல்லதம்பி என்ற பாத்திரத்தினைக் கேலி செய்யவும், அவர் அறியாமலே அவரைப்பற்றி மறைமுகமாக உரையாடுவதற்கும், 'தூங்கல் கண்ணர்’, ‘இறங்கல் கண்ணர்’, ‘ஒத்தைக்கண் நல்லதம்பி’ ஆகிய பெயர்கள் பயின்று வந்துள்ளன.* இப்பெயர்கள் மாறுகண் அமைப்பைக் கொண்டவரைக் குறிக்கப் பயின்றுவந்துள்ள ஒரே பொருள் குறித்த பல்வேறு காரணப் பெயர்களாக உள்ளன. இவற்றில் தூங்கல் கண்ணர், இறங்கல் கண்ணர் ஆகிய பெயர்கள், கீழ்நோக்கிய அமைப்பும் பார்வையும் கொண்ட கண்களையுடையவரைக் குறிப்பனவாக உள்ளன.
நிறம் குறித்த காரணப் பெயர்கள்
மீட்டாத வீணை என்ற நாவலில் வரும் இளங்கோ என்பவன், இயல்பான வெள்ளை நிறத்திலும் பார்க்க கூடுதலான வெள்ளை நிறமுடையவனாக இருக்கும் காரணம் பற்றி 'அவிச்சறால்’ என்ற காரணப் பெயரினால் சுட்டப் படுகின்றான். இப்பெயர் இயற்பெயர்களுடன் இணைந்தும், தனித்தும் வழங்கப்படுதல் மரபாக உள்ளது. பெரும்பாலும் இவ்வகைக் காரணப் பெயர் பெண்கள் தொடர்பாகவே வழங்கி வருகிறது எனலாம்.*
'அடிமைகள்’, ‘கானல்’, ‘பஞ்சகோணங்கள்’ ஆகிய நாவல்களிலே, கருமை நிறமுடையவர்களைக் குறிக்கப் பல்வேறு காரணப் பெயர்கள் பயின்றுள்ளன. கரடி ஆறுமுகன், கறுத்தான், நல்லெண்ணைக் கறுப்பி, கறுவல் கட்டையன், கறுவல் வைத்திலிங்கம் முதலானவை அவற்றுட் சிலவாகும்.*

Page 175
344 «Х•
கரடியின் நிறம் கருப்பு, இந்நிறத்தைக் கொண்டவரைக் குறிக்கக் கரடி ஆறுமுகன் என்ற காரணப்பெயர் பயன்பட்டுள்ளது.
பஞ்சகோணங்கள் என்ற நாவலிலே வரும் விசாலாட்சி அம்மாளின் நிறத்தினையும், அவளின் கணவனின் நிறத்தினையும் வள்ளி நகையாடுவதாக அமைந்தபகுதி வருமாறு;
விசாலாட்சி அம்மாள் கறுப்பி அல்ல. நல்லெண்ணைக் கறுப்பி என்று வேண்டுமானால் சொல்லலாம். இவரை அவளோடு ஒப்பிடும்போது, கழுவின் நெருப்புத்தனல் போல என்று கூறிவிடலாம் .*
மேற்படி நாவலிலே, குள்ளமான உருவத்தினையும், கருமையன நிறத்தினையும் உடையவன் 'கறுவல் கட்டையன்’ என்ற காரணப் பெயரினால் குறிக்கப்பட்டுள்ளான்.
உருவம் குறித்த காரணப் பெயர்கள்
உடலின் பகுதிகளாலன்றி மொத்த உருவத்தினையும் அடிப்படையாகக் கொண்டு, அவ்வுருவத்தோடு ஒப்புமையுடைய பொருட்களை ஒப்பிடுவதன் மூலம் தோற்றம் பெறும் காரணப் பெயர்கள் இவ்வகையைச் சார்ந்தனவாகும்.
* மீட்டாத வீணை’, ‘பங்சகோணங்கள்’, ‘முற்றத்து ஒற்றைப்பனை ஆகிய நாவல்களிலே வரும் பேத்தை வல்லி, பேத்தை வயித்தியன், குண்டான் கோபால் முதலான காரணப் பெயர்கள், தொந்தி பெருத்தவர்களைக் குறிக்கும் பெயர்களாகப் பயின்றுள்ளன.*
தவளை, மீன் ஆகிய இனங்களில் ‘பேத்தை’ என்றொரு வகையுண்டு. இவ்வகை உயிரினங்களின் வயிற்றுப் பகுதியானது எந்நேரமும் உப்பிப் பெருத்துக் காணப்படும். நாட்டுப்புற வழக்கில் பேத்தை மீன், பேத்தைத் தவளைகளை அறியாதார் இல்லை என்றே கூறலாம். அந்தளவுக்கு இவ்வகை உயிரினங்கள் நன்கு பரிச்சயமானவை. எனவே தொந்தி பெருத்தவர்களுக்கு உவமையாகப் பேத்தையினைக் குறிப்பிடுவது இயல்பானதே எனக் கருதலாம்.

8 345
முற்றத்து ஒற்றைப்பனை என்ற நாவலிலே பேத்தை வல்லி’ என்ற காரணப் பெயரில் பொருத்தப்பாடு பற்றி வருகின்ற விவரணம் வருமாறு;
பேத்தை வல்லி என்று வண்ணார் பண்ணையில் செல்லமாக அழைக்கப்படும் வல்லிபுரத்தைப் பற்றிச் சிறிது சொல்ல வேண்டும் . பனங்கள்ளையும் தென்னங்கள்ளையும் முட்டி முட்டியாகக் குடித்ததனால் வயிறு பொங்கல் பானைபோல முன்னால் தொங்கியது. வெண்மண்டை, கால்களும், கைகளும் மிக மெலிந்தவை, பெயரும் வலுபொருத்தம். .'
பஞ்சமர் என்ற நாவலிலே, ‘மாமூட்டையர்’ என்ற காரணப் பெயர், உருவம் பெருத்தவரைக் குறித்துப் பயின்றுள்ளது.* மாமூட்டையின் மருமனும், நிறையும் இவ்வகை ஒப்பிடலுக்கு அடிப்படைகளாக அமைந்துள்ளன எனலாம்.
இருளின் கதிர்கள் என்ற நாவலிலே, தசைப்பிடிப்பற்று, எலும்புகள் வெளித்தள்ளியுள்ளவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளவரைக் குறித்து, ‘எலும்பர்’ என்ற காரணப் பெயர் பயின்றுள்ளது.*
பஞ்சமர்’, ‘அடிமைகள்’, 'பஞ்சகோணங்கள்’ ஆகிய நாவல்களிலே, உருவில் சிறுத்தவர்களைக் (குள்ளமானவர்கள்) குறிக்கும் வகையில், கட்டை ஐயர், கட்டைச்சி, கட்டைப்புட்டு, காக்கொத்தர், பொடிலன் சுப்புறு முதலான காரணப் பெயர்கள் பயின்று வந்துள்ளன.* குள்ளமானவர் ஆணாயின், கட்டையர் அல்லது கட்டையன் எனவும், பெண்ணாயின் கட்டைச்சி எனவும் இப்பெயர் அமையும். ‘பொடி’ என்ற சொல் நாட்டுப்புற வழக்கில் சிறிய என்ற பொருண்மையில் பயின்று வருகின்றது. ‘பொடிலன்’ என்ற காரணப் பெயர் சிறியவன் என்ற பொருண்மையில் அமைந்துள்ளது.
‘கொத்து’ என்பது அரிசி, நெல்முதலான தானியங்களை அளக்கப் பயன்படும் ஒரு வகை அளவுக் கருவியாகும். இதனைப் படி எனவும் வழங்குவர். இதன் உயரம் அரை அடிக்கும் சற்றுக் குறைவானதாகும். அதிலும் காற்கொத்தின் உயரம் மிகவும் குறைவானது, இக்கருவியின் அமைப்புப் பற்றிப் பலரும்

Page 176
346 X
நன்கறிவார்கள். எனவே உயரத்தில் மிகவும் குறைந்தவரைக் குறிக்க பஞ்சமரிலே’, ‘காக்கொத்தர்’ என்ற காரணப் பெயர் பயின்றுள்ளது எனலாம்.
உருவத்தைக்கண்டு கேலி செய்தலும், எள்ளி நகையாடுதலும் சமூகத்தின் பெரும்பான்மை வழக்காக உள்ளது. நாவல்களிலே, இவ்வழக்கம் குறித்த சித்திரிப்பு மிக இயல்பாக அமைந்துள்ளது.
தோற்றம் குறித்த காரணப் பெயர்கள், நாட்டுப்புற மக்களின் கூர்மையான அறிவுத் திறத்தையும் ஒப்புமைப்படுத்தும் ஆற்றலையும் அவர்தம் நகைச் சுவையுணர்வையும் பிரதிபலிக்கின்றன எனக் கருதலாம்.
பண்புகுறித்த காரணப்பெயர்கள்
மக்களின் பல்வேறு விதமான பண்புகளைக் குறிக்கும்படியாக அமைந்த காரணப்பெயர்கள் அனைத்தும் இவ்வகைப்பாட்டினுள் அடங்கும்.
பஞ்சகோணங்கள் என்ற நாவலிலே, ஊரில் உள்ள புதினங்களையெல்லாம் தன்னுடைய நுனிநாக்கில் வைத்திருப்பவளான செல்லியினைப் பூதி என்பவள் ‘விடுப்புப் பிடுங்கி’ என்ற காரணப் பெயரால் குறிப்பிடுகின்றாள்.*செல்லியின் மேற்படி பண்பு குறித்துப்பூதி பின்வருமாறு குறிப்பிடுகின்றாள்.
அவள் எங்கடை பேத்தை வைத்தியண்ணையின்ரை செல்லிப் பொட்டை அவளுக்கு உள்ளதைச் சொல்லாட்டி வேறைமாதிரி எண்ணிப் போடுவாள். அவள் பொல்லாத விடுப்புப்பிடுங்கி! .
இவ்வகைப் பண்பு படைத்தவர்கள், எந்நேரமும் விடுப்புப் (புதினம்) பிடுங்குவதிலேயே குறியாக இருப்பர். சாதாரணமாக உரையாடினாலும் அவ்வுரையாடலினுரடே பல்வேறு விடுப்புக்களை இவர்கள் சேகரித்துக் கொள்வது வழக்கமாகும்.
முற்றத்து ஒற்றைப்பனை என்ற நாவலில், எந்நேரமும் பொருளற்றுப் பிதற்றித் திரியும் காசிநாதர் என்பவரைக் குறிக்க 'அலம்பல் காசி’ என்ற காரணப் பெயர் பயின்று வந்துள்ளது.* 'அலம்பல்” என்பதனைத் தமிழக நாட்டுப்புற வழக்கில் ‘சளப்பல் என்ற சொல்லாற் குறிப்பர்.

8 347
‘அடிமைகள்’, ‘போராளிகள் காத்திருக்கின்றனர்” ஆகிய நாவல்களிலே, உலக நடப்புக்களைப்பற்றியே விளக்கம் குறைந்தவர்களையும், பிறர் எள்ளும்படியான நடையுடை பாவனைகளைக் கொண்டவர்களையும் குறிக்கும் வகையில் ‘வெருளி’, ‘பேயன்’ ஆகிய காரணப் பெயர்கள் பயன்பட்டுள்ளன.*
அடிமைகள் என்ற நாவலிலே வருகின்ற வெருளிக்கந்தன்’ என்பவன், உலகம் பற்றிய அறிவு இல்லாதவனாகவும், எந்நேரமும் மூக்கில் சளியும், தலையில் எண்ணெய்யும் வழிந்தோடக் காட்சிதருபவனாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.
அவ்வெப்பண்புகள் சமூகத்தின் மதிப்புக்கும், கேலிக்கும், வெறுப்புக்கும் உள்ளானவைகளாக இருக்கின்றனவோ, அவற்றையெல்லாம் பண்பு குறித்த காரணப் பெயர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஒருவர், தம்மைச் சுயமதிப்பீடு செய்து, சமூகம் ஏற்றுக்கொள்ளும் வகையில் தம்மை மாற்றிக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கின்றதெனலாம்.
தொழில் குறித்த காரணப் பெயர்கள்
ஒருவர் ஆற்றுகின்ற தொழிலை அடிப்படையாகக் கொண்டு அமையும் காரணப் பெயர்கள் அனைத்தும் இவ்வகையினைச் சார்ந்தனவாகும். நாவல்களிலே, தொழில் குறித்த காரணப் பெயர்கள் குறித்தும், அவற்றின் பொருத்தப்பாடு குறித்ததுமான செய்திகள் மிக விரிவாகப் பயின்று வந்துள்ளன.
முருங்கையிலைக் கஞ்சி என்ற நாவலில் வருகின்ற 'அகிளான் ஆறுமுகம்’ என்னும் பெயர், தொழில் குறித்த காரணப் பெயராகப் பயின்று வந்துள்ளது. “அகிளான்’ என்பது வயற்காடுகளில் உள்ள பயிர்வகைகளை நாசம் செய்யும் ஒருவகைப் பிராணியாகும். பார்ப்பதற்கு எலியைப்போல இருக்கும் இப்பிராணி, நீண்ட வளைகளில் தங்கியிருக்கும். இவற்றைச் சுவடுபிடித்துத் தேடிக் கண்டு அழிப்பதில் வல்லவராகவும், தேர்ச்சி பெற்றவராகவும் சித்திரிக்கப்படும் ஆறுமுகம் என்பவர், “அகிளான் ஆறுமுகம்’ என்ற காரணப் பெயரினால் இந்நாவலில் குறிக்கப்பட்டுள்ளார்.
ஆறுமுகத்தாருக்கு இப்பட்டப் பெயர் வந்த வரலாறு பற்றி

Page 177
348 x
முருங்கையிலைக் கஞ்சி என்ற நாவலில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.
. இவருக்கு அகிளான் ஆறுமுகம் என்ற பட்டப்பெயர் வந்தது ஒரு பெரும் கதையல்ல. ஆனால் அந்தப்பட்டம் பெரிதாகி அவருடன் தொற்றிக் கொண்டு விட்டது. தோட்டத்தில் எங்கேயாவது ஒரிடத்தில் அகிளான் புற்றுவாயில் அரிமண்ணுடன் கிடந்துவிட்டால், ஒருகண்டிலும் நோப்படாமல், அந்தப்புற்றுப்போகும் வழிகளைக் கிளைகிளையாக வகிர்ந்து, விகர்ந்து, அகிளான் வெடிப்புற்றுக்கால் எங்கு சென்றாலும் அதைக் கொன்றுவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். இதுதான் ஆறுமுகத்தாருக்கு *அகிளான் ஆறுமுகம்’ என்று பெயர் வந்த சிறுகதையாகும்."
முற்றத்து ஒற்றைப்பனை என்ற நாவலிலே, பட்டங்களில் (காற்றாடி) ஒருவகையான கொக்குப் பட்டங்களை வடிவமைப்பதில் வல்லவரான மாரிமுத்தர் என்பவரைக் குறித்து, “கொக்கர் மாரிமுத்து’ என்ற காரணப் பெயர் பயின்று வந்துள்ளது. “கொக்கு என்பதுடன் ‘அர்’ என்ற மரியாதைப் பன்மை விகுதியும் சேர்ந்து “கொக்கர் மாரிமுத்தர்’ என ஆகியுள்ளது.
“கொக்கர்’ என்ற பட்டப்பெயர் உருவான சூழல் குறித்து, முற்றத்து ஒற்றைப்பனை என்ற நாவலின் ஆசிரியர் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
. மாரிமுத்தர் அம்மாளைத் தெரியாதவர்கள் வண்ணார் பண்ணையில் கிடையாது கொக்கர் மாரிமுத்து’ என்றால் வயதுபோன யாவருக்கும் அவர் யார் என்று தெரிந்து விடும். காற்றாடி கட்டி ஏற்றுவதில் மாரிமுத்தரை எவரும் மிஞ்சிவிடமுடியாது. சிறுவயதில் இருந்தே விதம் விதமான காற்றாடிகளைக் கட்டி, சோளகக் காற்றிலே பறக்க விட்டிருக்கிறார். எழுபது வயதாகியும் காற்றாடி விடுகிற அந்தப் பழக்கம், வெறி தீரவில்லை. கொக்குக் கொடி கட்டுவதில் மாரிமுத்தர் வெகுதிறமைசாலி. ஆளும் ஆறரை அடி உயரம். அதனால் “கொக்கர் என்ற பட்டமும் அவரது பெயரோடு ஒட்டிக் கொண்டது."

* 349
முருங்கையிலைக் கஞ்சி என்ற நாவலில், வாழை மரங்களை வளர்ப்பதில் நிபுணத்துவம் கொண்டவரைக் குறித்து நிற்கும் காரணப்பெயராக, வாழையன்’ என்ற பெயர் பயின்று வந்துள்ளது. இப்பட்டப் பெயர் வந்தவிதம் பற்றி இந்நாவலின் ஆசிரியர் கே. டானியல் பின்வருமாறு விளக்குவார்.
வாழை வளர்ப்பில் விண்ணனாகவும் வாழை வியாபாரத்தையே தனியச் செய்பவனாகவும் இருந்தபடியால் அவனுக்கு ‘வாழையன்’ என்ற பட்டப் பெயர் வந்திருக்க வேண்டும். .*
அடிமைகள் என்ற நாவலிலே வரும் சாவல் பண்டாரியன் என்ற பெயர், சண்டைக்குரிய சேவல்களைச் சண்டைக்கு ஏற்ற வகையில் தயார் செய்து வளர்ப்பதில் வல்லவன் என்ற அடிப்படையில் பயின்ற காரணப் பெயராக உள்ளது."
பஞ்சமர் என்ற நாவலிலே, இறந்தோர் உடல்களைச் சுடலைவரை சுமப்பதைக் குலத் தொழிலாகக் கொண்ட ‘கோவியர் என்ற சமூகப்பிரிவு மக்களைக் குறிக்கும் பெயராகச் ‘சவந்தூக்கியள்’ என்ற காரணப் பெயர் பயின்றுள்ளது.
பஞ்சமர் என்ற நாவலிலே வரும் கோர்வைதஸ்ளி, கரையார், நீர்க்காகங்கள், சாம்பான், பரியாரியார் முதலான காரணப் பெயர்கள் தொழிலை அடிப்படையாகக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. இப்பெயர்களின் பொருத்தப்பாடு குறித்து மேற்படி நாவலின் பின்வரும் உரையாடற் பகுதிகள் விளக்கி நிற்கின்றன. அவை 6) (5LDTg)I;
. முந்திச் சில இடங்களிலே கணவதியாற்ர ஆக்களை, கோர்வை தள்ளி எண்டு கூப்பிட்டு இருக்கினம். அதுவும் சிலவேளை கோர்வைப் புல்லுமாதிரி மயிரை வெட்டியதாலை பொருத்தமாயிருக்கும் .*
. இஞ்ச சந்தியாவர் இருக்கிறார். அவற்ர ஆக்களை பொதுவில கரையான் எண்டு சொல்லுகினம். அவை தண்ணிக்க இறங்கி தொழில் செய்யிறபடியா கரையார் எண்டு பேர் வைச்சிருப்பினம்தான். ஆனா அதைவிடவும் அவைக்கு வேற ஒருபேர் முந்தி இருந்திருக்கு. நீர்க்காகங்கள் எண்டு அவைக்கு ஒரு பட்டப் பேர் வைச்சு முந்தி கூப்பிட்டிருக்கினம் .*

Page 178
350
. இஞ்ச பாரும் சின்னாற்ர ஆக்களைக் கூப்பிடறதுக்கு ஒரு
காரணமாவது இருக்கு. அவை மேளத்தை சாம்பிச் சாம்பி
அடிக்கிறதாலை சாம்பான்ன எண்டு பேர்வைச்சிருப்பினம்.
கணபதியர் மயிர் வெட்டிற அம்பட்டஆள். நீர் வைத்தியம் பார்க்கிற படியா உம்மைப்பரியாரியார் எண்டு சொல்லுறம் .*
தண்ணீர் என்ற நாவலிலே வரும் ‘கரக்குட்டான்’ என்ற காரணப்பெயர், எந்நேரமும் குறிப்பிட்ட நபருடன் இணைந்து திரிவதனைத் தொழிலாகக் கொண்ட நபரைக் குறிக்கப் பயின்று வந்துள்ளது. ‘கரக்குட்டர்ன் என்பது பனை ஓலையினால் இழைக்கப்படும் ஒருவகைச் சிறிய பெட்டியாகும் (Bag). நாட்டுப்புற மக்கள் இவ்வகைப் பெட்டியினை எந்நேரமும் தம்முடன் வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இச்செயற்பாடே மேற்குறித்த காரணப் பெயருக்கான அடிப்படையாகும்.*
பஞ்சகோணங்கள் என்ற நாவலிலே, கள்குடிப்பதற்குப் பயன்படும் பிளா’ வினை வடிவமைப்பதில் வல்லவனாகிய கப்பன் என்பவன் ‘பிளாச்சுப்பன்' என்ற காரணப் பெயர்கொண்டு சுட்டப்பட்டுள்ளான்.*
அடிமைகள் என்ற நாவலில் வருகின்ற சிலம்படிரெத்தினம்’ என்ற காரணப்பெயரானது, சிலம்படியில் தேர்ச்சி பெற்றவரைக் குறித்து நிற்கும் பெயராக உள்ளது.*
தொழில் குறித்த காரணப்பெயர்கள், சமூகத்தில் பல்வேறுவிதமான காரணப் பெயர்கள் தோன்றுவதற்குக் களம் அமைத்துக் கொடுத்தன எனக் கருதலாம். தொழில் குறித்த காரணப் பெயர்கள் பின்னாளில் சாதிகளின் பெயர்களாக நிலைபெற்றன எனலாம்.
செயல் குறித்த காரணப் பெயர்கள்
ஒருவர் செய்யும் செயல்களை அடிப்படையாகக் கொண்டும் காரணப்பெயர்கள் அமைவதுண்டு. இச்செயல்கள், சமூகத்தின்

8 351
பார்வையில் கேலிக்குரியனவாகவோ, வினோதமானவையாகவோ, சிறந்தனவாகவோ இருக்கலாம்.
நாட்டுப்புற வழக்கில், ஒருவர் உண்ணும் உணவு வகைகளைக் கொண்டு அவரின் சமூக மதிப்பைப் பற்றிப் பேசுகின்ற வழக்கம் பரவலாகக் காணப்படுகின்றது.
கோவிந்தன் என்ற நாவலிலே, இறால் மீனில் மிகவும் மலிவான வகை மீன்களைத் தமது உணவாகக் கொள்ளும் கரையாரச் சமூகத்து மக்கள், ‘இறால் தின்னிக்கரையார்’ எனக் காரணப் பெயர் கொண்டு குறிக்கப் பட்டுள்ளனர்."
பஞ்சமர் என்ற நாவலிலே, கீவி” என்ற மிகவும் விலை குறைந்த மீனை உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ள விதானையார் கீளி’ தின்னிவிதானை’ எனக் குறிக்கப்பட்டுள்ளார்."
"பஞ்சகோணங்கள்’, ‘பஞ்சமர்’ ஆகிய நாவல்களிலே வரும், *வால் ஒடியல் தின்னி’, ‘வாலொடியல் வல்லிபுரம்’ ஆகிய காரணப்பெயர்கள், பனை ஒடியலில் மிகவும் விலை குறைந்த பகுதியான வால் ஒடியலினை உணவாகக் கொள்பவர்களைக் கேலி செய்யும் வகையில் அமைந்த காரணப் பெயர்களாகும்.*
கானல் என்ற நாவலிலே பனம்பழத்தின் சாற்றினை உணவாகக் கொள்ளும் பூக்கண்டரை, தம்பாப்பிள்ளை என்பவர், பினாட்டுத்தின்னிப் பூக்கண்டன் என்ற காரணப் பெயரினால் கேலி செய்கின்றார்.19
மாடு, நீர்க்காகம் அகியனவற்றை உணவாகக் கொள்வதை இழி செயலாகவும், தகுதிக் குறைவாகவும் பார்க்கும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக, கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் மாட்டிறைச்சியினை அதிகமாக உண்பதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்து மதத்தவர் மாட்டிறைச்சி உண்பதனைப் பாவமான செயலாகக் கருதுகின்றனர். 'கானல்’ என்ற நாவலிலே வரும் மாடுதின்னி வேதக்காரர்’, ‘காகம் தின்னிக் கரையார்’ முதலான பெயர்கள் குறித்த நபர்களின் உணவுப் பழக்க வழக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட காரணப் பெயர்களாக உள்ளன.?

Page 179
J.52 x
மையக்குறி என்ற நாவலிலே வரும் ‘அப்பச்சட்டியர்’ என்ற காரணப்பெயர், அப்பத்தில் அதீத விருப்புக் கொண்டவரையும்", கோவிந்தன் என்ற நாவலிலே வரும் ‘புக்கை தின்னிப் பிராமணி’ என்ற காரணப்பெயர் இறைவனுக்குப் படையலாகப் படைக்கப்படும் பொங்கலை உணவாகக் கொள்ளும் புரோகிதர்களையும்? முறையே குறித்துப் பயின்றுள்ள காரணப் பெயர்களாகும்.
பஞ்சமர் என்ற நாவலிலே வரும் ஐயாண்ணர் என்பவர் எவ்விதமான சாதி வேறுபாடுகளும் பாராட்டாத, முற்போக்குச் சிந்தனை கொண்டவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். கண்ணில் எதிர்ப்படும் வீடு, எவருடையதாக இருந்தாலும் எவ்விதத் தயக்கமுமின்றி அங்கேயே தங்கி, உணவு உண்ணும் ஐயாண்ணரின் செயற்பாட்டைக் கேலி செய்யும் காரணப் பெயர்களாக ‘கண்ட வீடு தூங்கி’, ‘கண்டவீடுதின்னி’, ‘வழிச்சி நக்கி’ முதலான பெயர்கள் பயின்று வந்துள்ளன."
பஞ்சமர் என்ற நாவலிலே வரும் சண்முகம் என்பவருக்குப் ‘பால்குடிச்சண்முகம்’ என்ற காரணப்பெயர் பயின்றுவந்துள்ள சூழல் குறித்து அந்நாவலின் ஆசிரியர் பின்வருமாறு விளக்குகிறார்.
சுமார் மூன்று வயது வரை சண்முகம்பிள்ளை பொன்னியைக் கலைத்துக் கலைத்துப் பால் குடித்தது ஐயாண்ணனுக்கு நல்ல நினைப்பு மூன்று வயதுவரை இப்படிப் பால் குடித்து வந்ததனால்தான் வேடிக்கையாக ‘பால்குடி’ என்ற பெயரும் இலேசாக சண்முகம் பிள்ளையுடன் ஒட்டிக் கொண்டது ."
பெற்றதாயிடம் பாலைக்குடிக்காமல், வழக்கத்துக்கு மாறாக வாடகைத் தாயிடம் பால்குடித்து வளர்ந்தமையும் மேற்படி பட்டப் பெயர் பயின்றுள்ளமைக்கான அடிப்படையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
கானல் என்ற நாவலிலே வரும் ‘கும்பிடுகள்ளர்’ என்ற காரணப்பெயர், பிறரைக் கும்பிடுதல் செய்தே காரியம் சாதிப்பவர்களைக் கேலி செய்வதாகப் பயின்றுள்ளது.
. அது எங்கடை முகத்துக்காகச் சொல்லறாங்கள் உவன்

* 353
மூப்பன். பகுதி கும்பிடுகள்ளர். கும்பிட்டுக் கும்பிட்டே நசுக்கி விட்டிட்டாங்கள் ..."
தண்ணீர் என்ற நாவலிலே வரும், ‘பூசல் புணத்தல்’ என்ற காரணப்பெயர், எந்நேரமும் தன்னைத் திருநீறு, சந்தனம், குங்குமம் முதலானவற்றால் அலங்கரித்துக் கொள்வதை இயல்பாகக் கொண்ட *கந்தன்’ என்பவனைக் குறித்துப் பயின்றுள்ளது.*
‘அடிமைகள்’, ‘முருங்கையிலைக்கஞ்சி’ ஆகிய நாவல்களிலே வரும், கொட்டப் பெட்டிச் சின்னையன், கொட்டப் பெட்டி ஆறுமுகம் முதலான காரணப் பெயர்கள், ‘கொட்டப் பெட்டி’ என அழைக்கப்படும் பனையோலைக் குருத்து இலையினால் இழைக்கப்படும் பெட்டியினை (பணப்பை) எந்நேரமும் தமது மடியில் கொண்டு திரிவதனைச் செயலாகக் கொண்டவர்களைக் குறிக்கப் பயின்றுள்ளன. "
செயல் குறித்த காரணப் பெயர்கள், சமுதாயத்தின் வெறுப்புக்கும், கேலிக்கும், பாராட்டுக்கும் உரிய செயல்களைப் பிறர்க்கு உணர்த்துவனவாக உள்ளன.
ஊர்குறித்த காரணப் பெயர்கள்
ஊரின் பெயரினைக் கொண்டு அமைகின்ற காரணப் பெயர்கள் இவ்வகைப்பாட்டினுள் அடங்கும். குறித்த சில ஊர்களின் சிறப்புக்களை, சிறப்பின்மைகளை உணர்த்துதற்கும் இவ்வகைப் பெயர்கள் பயன்படுகின்றன.
கானல் என்ற நாவலில் பயின்று வரும் கொட்டடிக் கறுத்தார், குளப்பிட்டிக்கணேசன், தட்டாதெரு பொன்னுச்சாமி, வண்ணார்பண்ணை நமசிவாயம் ஆகிய காரணப் பெயர்கள், முறையே கொட்டடி, குளப்பிட்டி, தட்டாதெரு, வண்ணார்பண்ணை முதலான ஊர்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளன."
அடிமைகள் என்ற நாவலில் வரும் நவாலி வீரசிங்கன், கொக்குவில் கொட்டப் பெட்டி ஆறுமுகத்தார், கடையடிகணேசன், பண்டாரக்குளத்தடி முத்தன் ஆகிய பெயர்களும் இடப் பெயர்களை

Page 180
354
முன்னொட்டாகக் கொண்டமைந்த காரணப் பெயர்களாகவே
பயின்று வந்துள்ளன."
சாதிகுறித்த காரணப் பெயர்கள்
ஒருவர் சார்ந்துள்ள சமூகப் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட காரணப் பெயர்கள் இவ்வகையைச் சார்ந்தனவாகும்.
கோவிந்தன் என்ற நாவலிலே பயின்று வரும் கொல்லச் செல்லத்துரை, அம்பட்டமுருகேசன், துரும்பமிக்கேல், வண்ணாரக்கந்தையா, கட்டாடிகந்தையா முதலான காரணப் பெயர்கள் முறையே கொல்லர், அம்பட்டர் (நாவிதர்), துரும்பர், வண்ணார், கட்டாடி முதலான சமூகப் பிரிவுகளை முன் அடைகளாகக் கொண்டனவாக அமைந்துள்ளன."
தொழில் மற்றும் செயல் குறித்த காரணப் பெயர்கள், சாதி குறித்த காரணப் பெயர்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கலாம். வட்டார வழக்கு நாவல்களிலே சாதிகுறித்த காரணப்பெயர்கள் பரவலாகப் பயின்றுள்ளமை கருதத் தக்கதாகும்.
நாட்டார் உணவுப் பழக்க வழக்கம்
நாட்டுப்புற மக்களால் மரபு வழியாகத் தொடர்ச்சியாக உண்ணப்பட்டு வரும் உணவுவகைகளை நாட்டார் உணவு எனப் பொதுவாகக் குறிப்பிடலாம். நாட்டார் உணவுமுறை, வட்டார வேறுபாடுகளைக் கொண்டதாகும். இவ்வுணவு முறை, வணிக முறை சார்ந்த, நிறுவன மயமாக்கப்பட்ட விடுதி உணவினின்றும் வேறுபட்டதாகும்.
பழக்க வழக்கம்: சொல்லும் பொருளும்
தமிழ் இலக்கியத்தில் பழக்கம்’ என்ற சொல், பழகுதல் அல்லது பயிற்சியாதல் என்ற பொருண்மையில் தொன்று தொட்டே பயின்று வந்துள்ளமையினைப் பின்வரும் செய்யுட் பகுதிகள் உணர்த்தி நிற்கின்றன.
.யாண்டுபல "கழிய
வழுவின்று பழகிய கிழமையராகினும்

8 355
72
முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை. கமழ்தேனளி வழக்க மெல்லாமும்"
சமூகச் செயல்களைக் குறிக்க, இச்சொல் பண்டைத்தமிழ் இலக்கியங்களில் பரவலாகப் பயின்று வந்துள்ளமையினை அறியமுடிகிறது.
சென்னைத் தமிழ்ப் பேரகராதி, பழக்கம் என்ற சொல்லுக்குப் பின்வரும் பொருண்மைகளைச் சுட்டுகின்றது. அவை வருமாறு,
1. பயிற்சி
2. வழக்கம்
3. அறிமுகம்
4. ஒழுக்கம்
5. சமர்த்து
6. அமைதிக்குணம்'
பழக்கம்’ என்பதற்கு நனவுடன் தொடங்கிய செயல்,
நாளடைவில் நனவின்றியே நிகழக் கூடியதாக ஆகிவிடும் செயல் எனக் கலைக்களஞ்சியம் விளக்கம் தருகிறது.*
பழக்கம்’ என்பதற்கு தனிமனிதனிடம் இயல்பாக வந்தேறிய நடத்தைக் கோலம், சமூகத்தை இயங்கச் செய்யும் சக்கரம், சமூகப் பாதுகாப்புச் செயலி, மனிதனின் இரண்டாம் இயல்பு என்றும்," திரும்பத் திரும்பச் செய்யப்படும் ஒரு கற்றல் நடத்தை முழுமையும் நிறைவும் பெறும்போது அந்நடத்தை பழக்கமாகிறது என்றும்." பல்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பழகிப் போன செயல், சமூக இசைவாணை பெற்று வழங்கிவருதலை வழக்கம் எனலாம். இது பழக்கத்தின் தொடர் நிலையாகும். சமூகம் சார்ந்து அமைகின்ற இவ்வழக்கங்கள், ஒரு குழுவினருடைய விருப்பங்கள், இலட்சியங்கள், வாழ்க்கைக் கண்ணோட்டங்கள் ஆகியனவற்றின் பிரதி பலிப்பாக அமைகின்றன." ஒரு குழுவினரால் பாரம்பரியமாகப்

Page 181
356 x
பின்பற்றப்பட்டு வரும் ஒட்டுமொத்த நடத்தை முறையே பழக்கவழக்கமாகும்.
பழக்கம்’ என்பது தனிமனிதனைச் சார்ந்தது என்றும் வழக்கம் என்பது சமூகத்தைச் சார்ந்தது என்றும் மேற்படி சொற்களுக்குச் சமூகவியலாளர் விளக்கம் தருவர்."
பழக்கம் என்ற சொல், பொருள் நிலையில் தனிமனிதனுடைய நடத்தைச் செயல் முறையினை உணர்த்துவதாக அமைய, வழக்கம் என்ற சொல் பழக்கத்தில் உள்ள செயல்கள், மனிதச் சமூகத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றுத் தலைமுறை இடையீடின்றி (Genaration cap) வழிவழியாகத் தொடர்ந்து பின்பற்றிவரும் நிலையினை வெளிப்படையாக உணர்த்துவதைக் குறித்து நிற்கிறது என்ற முடிவுக்கு வரலாம்.
பழக்கம், வழக்கம், மரபு முதலான சொற்கள், ஒன்றோடொன்று தொடர்புடையன. ஒன்றன் வளர்ச்சி நிலையே மற்றொன்றின் தொடர்ச்சியாக அமைகின்றது. இவை, சமூகத்தின் குறிக்கோள், தேவைகள், ஒழுகலாறுகள் முதலானவற்றை அடிப்படையாகக் கொண்ட தோற்றம் பெறுவனவாகவும், அவற்றைப் பிரதிபலிப்பனவாகவும் அமைகின்றன.
நாவல்களில் நாட்டார் உணவுப் பழக்க வழக்கம்
நாட்டார் உணவுப் பழக்க வழக்கம் குறித்த இப்பகுதியில், 1. நாட்டார் உணவு வகைகள் 2. நாட்டார் பாதுகாப்பு நடைமுறைகள் 3. சாதி, சமயம் சார்ந்த உணவுவிலக்குகள் (Taboos)
4. உணவுமுறை விதிகள்
ஆகியன குறித்து நோக்கப் பெறுகின்றன.
நாட்டார் உணவு வகைகள்
நாவல்களிலே பயின்றுள்ள நாட்டார் உணவுவகைகளை, சைவ உணவு வகைகள், அசைவ உணவு வகைகள், துவையல் வகைகள்,

«Х• 357
வற்றல் வகைகள், சிற்றுண்டி உணவு வகைகள், கிழங்கு உணவு வகைகள், திரவ உணவு வகைகள், மருத்துவ உணவு வகைகள் எனப் பலவாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
சைவ உணவு வகைகள் சோறு (சாதம்)
நாட்டுப்புற மக்களின் பிரதான உணவு சோறாகும். இம்மக்கள் குத்தரிசி, வரகரிசி, பச்சையரிசி, தினையரிசி முதலான அரிசிவகைகளால் சோறு சமைத்து உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்." சோற்றைத் தயாரிக்கும்போது அரிசியின் கஞ்சியினை வடித்தும், அவ்வாறு வடிக்காது உவியவிட்டும் தயாரிப்பர்."
கறி வகைகள்
நாட்டுப்புற வழக்கில், ‘கறி” (Dish) என்ற சொல், சைவ, அசைவவகையைச் சார்ந்த அனைத்துக் கறிகளையும் குறித்து நிற்கும் பொதுவான ஒரு சொல்லாகப் பயன்பாட்டில் உள்ளது. நாவல்களிலே, நாட்டுப்புற மக்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் இடம்பெறும் பல்வேறு வகையான கறிகள் பற்றிய செய்திகள் பயின்றுள்ளன. ஆயினும் பெரும்பாலான கறிகள் பெயரளவில் மட்டுமே பதிவாகியுள்ளன. ஆயினும் கத்தரிக்காய்க்கறி, ஒடியற்கூழ், இறால்குழம்பு, அமைக்கறி முதலான சிலவகைக்கறிகள் பற்றியும், அவற்றைத் தயாரிக்கும் முறைகள் பற்றியும் மிகவும் நுட்பமான விவரங்கள் நாவல்களிலே பதிவாகியுள்ளமை கருதத் தக்க விடயமாக உள்ளது.
நாட்டுப்புற மக்களின் உணவுப் பழக்க வழக்கத்தில் இடம் பெறும் மரக்கறி உணவு வகைகளில் கத்திரிக்காய்க் குழம்பு, பூசணிக்காய்க்கறி (பரங்கி)18, வெண்டிக்காய்க்குழம்பு.* முருங்கைக்காய்ப்பால்கறி,* முருங்கையிலை வறை. * பருப்புக்கறி," வெந்தயக்குழம்பு,* சாம்பார்° ஆகியன பற்றிய செய்திகள் நாவல்களிலே பயின்றுள்ளன.
‘சடங்கு’, ‘மரக்கொக்கு’ ஆகிய நாவல்களிலே இடம் பெறும் பின்வரும் உரையாடற் பகுதிகள் கத்தரிக்காய்க் கறியின் தயாரிப்பு நுட்பம் பற்றி விவரிப்பனவாக அமைந்துள்ளன.

Page 182
358 <》
... நேற்று வாங்கின கத்தரிப்பிஞ்சுகள் கொஞ்சம் கிடக்கெல்லே..? பெருஞ்சீரகத்தூள் போட்டு, நல்லெண்ணெயிலே வதக்கி எடுத்தால் சோக்கா இருக்கும்."
. கத்தரிக்காயை நெய்யில் வதக்கி எடுத்து தேங்காயைத் துருவிப் பிழிந்து சொட்டுப்பாலில் அந்த வதக்கலைப் போட்டு ஒரு குழம்பு வைத்தாள்."
பணம்பொருள் சார்ந்த உணவு வகைகள்
ஈழத்தமிழர் நாட்டுப்புற உணவு வகைகளில் பனம் பொருள் சார்ந்த உணவுவகைகளின் தாக்கம் மிகவும் கணிசமானதாகும். பனைமரங்கள் இல்லாத கிராமங்களே இல்லை என்று குறிப்பிடுமளவிற்குக் கிராமப்பகுதிகள் எங்கும் இம்மரங்கள் நிறைந்துள்ளன. நாட்டுப்புற மக்களுக்கு எளிதிற் கிடைக்கக் கூடியனவாகவும், பொருளாதார நிலையில் விலை குறைந்தனவாகவும், நிறைந்த சத்துள்ளனவாகவும் இவ்வகை உணவுப் பொருட்கள் அமைந்துள்ளன.
*சடங்கு’, ‘பஞ்சமர்’, ‘தண்ணீர்’, ‘பஞ்சகோணங்கள்’ ஆகிய நாவல்களிலே, பனம் பொருள் சார்ந்த உணவு வகைகள் பற்றிய குறிப்புக்கள் விரிவாகக் கிடைக்கின்றன. அவற்றுள் பனம்பழம், பனம்பழச் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் "பனாட்டு’,* பனங்கிழங்கு, அவித்தபனங்கிழங்கை வெயிலில் உலர்த்துவதன் மூலம் தயாரிக்கப்படும் புழுக்கொடியல்’,* ஒடியற்கூழ்", பனங்கட்டி* (பனைவெல்லம்) முதலானவை குறிப்பிடத் தக்கனவாக உள்ளன.
சடங்கு என்ற நாவலில், பரமநாதனுக்கும் தவமலருக்குமிடையிலான உரையாடற் பகுதியில் புழுக்கொடியல் மாவில் தயாரிக்கப்படும் உருண்டை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. உரையாடற்பகுதி வருமாறு,
. புழுக்கொடியல் மாவா? என்ன போட்டுப் பிசைஞ்சது? தேங்காய்ப்பூவும், பனங்கட்டியும். நல்லாயிருக்கு .* பஞ்சமர் என்ற நாவலிலே, ஒடியற்கூழ் தயாரிக்கும் நுணுக்க முறைகள் குறித்து, கதை விளக்கப் பின்புலத்தில் மிக விரிவாக

(X 359
விவரிக்கப்பட்டுள்ளமை கருதத் தக்கதாகும். ஒடியற்கூழுக்கு மாவு பிசைதல், கூழிற் சேர்க்கப்படும் பல்வகைக் கடல் உணவுப் பொருட்கள், சிறப்பாக அவற்றின் பாகங்கள், மரக்கறி வகைகள், கூழ்ப்பானைக்கு நெருப்பெரிக்கும் விதம், கூழைப்பரிமாறும் முறை, குடிக்கும்முறை உட்படக் கூழ்த் தயாரிப்பின் பல்வேறு அம்சங்களிலும் இந்நாவலின் ஆசிரியர் விசேடகவனம் செலுத்தியிருக்கிறார். ஐயாண்ணர், கிட்டுணு, செல்லப்பன், கணபதியர், மாணிக்கன் முதலான கதைமாந்தர்களுக்கிடையில் நடைபெறும் உரையாடற் பகுதிகள் மூலம் மேலே குறிப்பிட்ட விடயங்கள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன."
அசைவ உணவு வகைகள்
நாவல்களிலே, நாட்டுப்புற மக்களிடையே வழக்கத்திலுள்ள அசைவ உணவு வகைகளாகத் கோழி, பன்றி, மரநாவி, மான், மரை, மணிப்புறா, கூளக்கடா, நாரை, கொக்கு, நீர்க்காகம், மாடு முதலானவற்றின் மாமிசங்களும், பல்வகை மீன்கள், நண்டு, இறால், ஆமை, கருவாடு, முட்டை முதலானவையும் பதிவாகியுள்ளன.*
தவிர அசைவ உணவுவகையைச் சார்ந்த சில வகைத் துவையல்கள் குறித்த செய்திகளும் பயின்றுள்ளன. அவை குறித்த விவரத்தைத் ‘துவையல் வகைகள்’ என்ற தலைப்பின்கீழ்க் காணலாம்.
இறைச்சிக்காக மிருகங்களைக் கொல்லும்போது பலருக்கும் இது தொடர்பாக அழைப்பு விடுத்தல் குறித்து நாவல்களிலே செய்திகள் கிடைக்கின்றன. பலரும் பங்கு போட்டு வாங்கும் இறைச்சியினைப் ‘பங்கு இறைச்சி’ என அழைப்பர். பங்கு இறைச்சி ஒன்றில், இறைச்சியின் பல்வேறு பாகங்களும் குறிப்பாகச் சதைப்பகுதி, கொழுப்பு, ஈரல், எலும்பு முதலானவை உள்ளடங்கியிருத்தல் இதன் சிறப்பம்சமாகும்.*
சடங்கு என்ற நாவலிலே வரும் செந்தில்நாதன் என்பவர், தமது மாமியாரின் சமையல்திறன் குறித்துப் பின்வருமாறு விவரிக்கின்றார்.
. வெங்காயம் வதக்கி, இறால் போட்டு செல்லப்பாக்கிய ஆச்சி வைக்கிற வெந்தயக் குழம்பைத் தொட்டுக்

Page 183
360 «Х•
கொண்டே ஒருபானை சோறு சாப்பிடலாம். அதுவும் ஒரு கைராசிதான் . சும்மா இறால் மூஞ்சிகளைப் போட்டு, உள்ளி, மிளகு தட்டிச் சேர்த்து ஆச்சி ஆக்கிற சோதியின் ருசிகுறைவோ ..."
தண்ணீர் என்ற நாவலிலே, சமையலுக்குரிய ஆமையினைத் தேர்ந்தெடுத்தல் பற்றியும், அதனைப் பக்குவமாகப் பாகம் பண்ணும் முறை பற்றியும் கே. டானியல் மிகவிரிவாகக் குறிப்பிட்டுச் செல்கின்றார். விவரணம் வருமாறு,
. அருவி வெட்டுக்காலம் தொடங்க வயல்வெள்ளக் காடுகளில் நின்று தன் ஆரவாரமாகக் கண்டது கடியதுகளைத் தின்றுவிட்டு, வயற்காடுகளில் இடைக்கிடையேயுள்ள துரவுகளில் சென்றடைந்த, துரவுகளில் உள்ள மாங்கன், அயிரை, தவளை ஆகியவைகளைத் தின்று கொண்டிருக்கும் காலமாகையால் இந்தக் காலத்தில் பாலாமை என்றால் தளதளத்த நெய்ப்பிடிப்புள்ளதாகத்தானிருக்கும். அதிலும் நெஞ்சுப்புறம் ஓங்கி, நீண்டு, உயரமாக இருந்தால் அதன் கொழுப்புக்குச் சொல்ல வேண்டியதில்லை . செல்லிக்கு இந்தக் கொழுப்பின் சூத்திரம் தெரியும். அதனால் அவள், நெஞ்சுப்பக்கம் ஒடுங்கி, நீண்ட, உயர்ந்த ஆமைகளையே வாங்கிவந்தாள்.
பொது, பொதென்று கொதிக்கவைத்த அண்டாத் தண்ணிரில், உயிரான அந்த ஆமையைப் போட்டுக் கொதிப்பாட்டி எடுத்து விட்டால், பின்பு கத்தியின் உதவியின்றியே அதன் நெஞ்சுப்புறத்துப் பால் ஒட்டைக் கை விரல்களால் சுளை எடுப்பது போல எடுத்து அதற்குக் கீழ் உள்ள கொழுப்புப் படலைக் கரைத்துவிடாமல் பக்குவமாகக் கிளப்பி எடுத்துவிட்டுத்தான் அதன் இறைச்சிப் பகுதிக்குள் கையைவைத்து அதனை வெளியே கொண்டு வரமுடியும். இத்தனையும் செய்து விடுவது செல்லிக்குப் பெரிய வேலையல்ல. ஆனால் அதன்பின், கொழுப்பை வதங்க வைத்து, நிறையப் பொரிமாத்தூள் இட்டு, தேங்காய் முதற் பால் இட்டு, சற்றுக்கடுகடுத்த

«Х• 361
உப்புப் பதத்தில் தேசிக்காய்ப் புளியையும் விட்டெடுப்பதில் கண்ணாய் இருப்பதில்தான் கறியின்ருசி எல்லாம் தங்கி இருக்கிறது .*
போராளிகள் காத்திருக்கின்றனர் என்ற நாவலிலே, நன்றாகச் சினைப்பிடித்த பெட்டை நண்டுகளைக் கறிக்குகந்ததாக அதன் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.*
துவையல் வகைகள் (சாம்பல்)
நாவல்களிலே, சைவ, அசைவ வகைகளைச் சேர்ந்த பல்வேறு வகையான துவையல்கள் குறித்த செய்திகள் பயின்றுள்ளன. மிளகாய்த்துவையல்,* ஒடு சம்பல் (சட்னி),* புளிமாங்காய்ச் * தூதுவளைச் சம்பல்,* பிரண்டைச் சம்பல்,* மாசிக் கருவாட்டுச் சம்பல்,* இறால் கருவாட்டுச் சம்பல்° முதலானவை அவற்றுட் சிலவாகும்.
சம்பல்,
கானல் என்ற நாவலிலே வரும் செல்லி என்பவள் பிரண்டைச்சம்பல் அரைத்தமை குறித்துப் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.
. வெளியே போன செல்லி நன்றாகப் பொழுதுவிடிந்து வெய்யில் காணுவதற்கிடையில் வந்துவிட்டாள். அவள் கையில் பிரண்டைத்தண்டுகள் புத்தம்புதிய துளிர்களுடன் கிடந்தன. அவசர அவசரமாக அவள் தளிர்களை ஒடித்து, தளிர்த்தண்டுகளை மடக்கி முறித்து நான்கு வெங்காயப் பல்லுகளையும் உள்ளிப் பூடுகளையும், பத்துப் பச்சை மிளகாய்களையும் சேர்த்துக் கொண்டு அம்மிக் கல்லடிக்குப் போனாள்.
செல்லி பிரண்டைப் பச்சடி அரைக்கிறாள். அம்மியில் குளவி உருளும் ஓசை அவசர அவசரமாகக் கேட்டது .*
வற்றல் உணவு வகைகள்
நாவல்களில் வற்றல் உணவு வகைகளில் வேப்பம்பூவடகம்,'
மோர்மிளகாய், உப்புமிளகாய்* ஆகியன பற்றிய செய்திகள்

Page 184
362 X
கிடைக்கின்றன. நாட்டுப்புற வழக்கில், மோர்மிளகாய், உப்பு மிளகாய் என்பனவற்றின் பயன்பாடு அதிகமானதாகும்.
பிரளயம் என்ற நாவலிலே வரும் பொன்னு, தான் வடகம் போட என எண்ணியிருந்த வேப்பம் பூக்களைத் திடீரென வந்த மழை சிதைத்தமை குறித்துப் பின்வருமாறு விசனப்படுகின்றாள்.
. பாழாய்ப் போன மழை உள்ள பூவெல்லாத்தையும் கொட்டிப் போட்டுதே. என்று சாபம் வைத்தாள் பொன்னு. வடகம் போடவேண்டிய பூக்களையெல்லாம் மழை சிதைத்துவிட்டதே என்ற கவலை அவளுக்கு .*
சிற்றுண்டி வகைகள்
நாட்டுப்புற மக்களால் மிகவும் விரும்பி உண்ணப்படும் சிற்றுண்டி உணவு வகைகள் குறித்த செய்திகள் நாவல்களிலே பரவலாகப் பயின்றுள்ளன. பிட்டு.* இடியப்பம்,* தோசை,* குரக்கன் பிட்டு (கேழ்வரகு),* ஒடியற்பிட்டு,* மோதகம்*, வடை,* பயற்றம்பணியாரம்,* எள்ளுருண்டை* முதலானவை அவற்றுட் சிலவாகும்.
தண்ணீர் என்ற நாவலில் வரும் சொடுகள் என்பவன், குருக்கன் (கேழ்வரகு) மாவுடன் கறாநெய், அயிரைமீன், முசுட்டையிலை என்பன சேர்த்துக் குரக்கன் பிட்ட அவித்தமை குறித்து இந்நாவலின் ஆசிரியர் மிக இயல்பாகச் சித்திரித்துள்ளார்.*
குரக்கன் பிட்டைச் சுடச்சுட உண்ண வேண்டும். ஆறிய பிட்டு, விறைத்து உண்பதற்கு ஏற்றதல்லதாகி விடும். இதனைப் பஞ்சகோணங்கள் என்ற நாவலிலே வரும் பின்வரும் உரையாடற் பகுதியின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
. தம்பி பேந்து எந்நேரம் வாறியோ தெரியேல்லை எக்கணம் குரக்கன்புட்டு விறைச்சுப் போகப் போகுது, சுடச்சுட எப்பன் திண்டிட்டுப் போவன் .*
தண்ணீர் என்ற நாவலிலே வரும் சின்னிக் கிழவியின்
ஒடியற்பிட்டுப் பாகம் குறித்து இந்நாவலின் ஆசிரியர் பின்வருமாறு சித்திரிக்கின்றார்.

※ 363
. சற்று முன்புதான் அவனின் சகதர்மிணி சின்னிக் கிழவி கறிமுருங்கை இலையும் தேறைக்கருவாட்டுத் தூளும் போட்டு நீத்துப் பெட்டியில் அவித்தெடுத்த ஒடியல் பிட்டினைச் சுடச்சுட அவனுக்குப் கொடுத்திருந்தாள். ஒடியல்பிட்டு மணம் குணமாக இருந்ததனால் சற்று அதிகமாகவே சாப்பிட்டுவிட்டான் .*
கிழங்கு உணவு வகைகள்
*சடங்கு', 'கானல் முதலான நாவல்களில் மரவள்ளிக்கிழங்கு,* இராசவள்ளிக் கிழங்கு,* பனங் கிழங்கு, வற்றாளைக் கிழங்கு”* முதலான கிழங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு வகையான உணவுகள் பற்றிய குறிப்புக்கள் கிடைக்கின்றன.
திரவ உணவு வகைகள்
நாட்டுப்புற மக்களின் உணவுப் பழக்கவழக்க நடைமுறைகளில் பல்வேறு வகையான திரவ உணவு வகைகள் பாவனையில் உள்ளன. இவற்றுள் கணிசமான உணவுவகைகள் பற்றி நாவல்களில் செய்திகள் கிடைக்கின்றன. தேநீர்,* கோப்பி,* மல்லித்தண்ணி,* பழங்கஞ்சி,* மோர்,* சோற்றுக்கரையல்,* நுங்கு,*கருப்ப நீர்,* முதலானவை இவற்றுட் சிலவாகும்.
போடியார் மாப்பிள்ளை என்ற நாவலிலே வரும் சின்னப்பிள்ளை என்பவள், போடியாருக்குக் கலந்து கொடுத்த ‘மோர் குறித்து அதன் ஆசிரியர் பின்வருமாறு விவரிக்கின்றார்.
பச்சைமிளகாயும், வெங்காயமும் அரிந்து போட்ட கணக்காக உப்புங்கலந்து, பதமாகக் கரைக்கப்பட்டிருந்தது அந்த மோர். அதன் புளிப்புச்சுவை அந்த நேரத்துக்கு அந்த இடத்துக்குப் பொருத்தமாக இருந்தது .*
தண்ணீர் என்ற நாவலில் சொடுகன் தயாரித்ததினையரிசிக் கஞ்சி குறித்துப் பின்வருமாறு சித்திரிக்கப்பட்டுள்ளது.
சொடுகன், இரவு தண்ணீர் ஊற்றிவைத்திருந்த தினையரிசிச்
சோற்றைக் கரைத்து, வெங்காயமும் பச்சைமிளகாயும் நறுக்கிப் போட்டுக் கடைந்து மகன் சின்னானுக்கும்

Page 185
364 «Х•
செல்லிக்குமாக ஒவ்வொரு சிரட்டையைக் கொடுத்து விட்டுத் தானும் ஒரு சிரட்டையை எடுத்துக் கொண்டான்
24】
மருத்துவ உணவு வகைகள்
உடல் இளைப்பு, வயிற்றுப்பொருமல், உடல் வலி, செரிமானமின்மை முதலான உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்ட உணவுவகைகளை மருத்துவ உணவுகளாகக் கருதலாம். இவ்வகை உணவு வகைகளில் வேட்டைத் தண்ணீர்*, கரக்குக்கறி காயம்*, இரசம்,* முட்டைக்கோப்பி* முதலியன பற்றிய குறிப்புக்கள் நாவல்களில் காணக் கிடைக்கின்றன.
போராளிகள் காத்திருக்கின்றனர் என்ற நாவலிலே வரும் சந்தியாக்கிழவன் தயாரித்த வேட்டைத் தண்ணீர்குறித்து இந்நாவலின் ஆசிரியர் பின்வருமாறு விவரிக்கின்றார்.
எப்போதாவது இருந்து விட்டு ஒருநாள் *வேட்டைத்தண்ணீர்’ சாப்பிட வேண்டுமென்ற அவா சந்தியாக் கிழவனுக்கு வந்துவிடும். அப்போதெல்லாம் இப்படிச் சூழ்பிடித்து, கடற்கரையில் கெண்டைக்கால் நண்டுகளையும், கரையின் மணல்பரப்போடு தலையைச் செருகியபடி தூங்கிக்கிடக்கும் எறியால் மீனையும் மண்டாகொண்டு வேட்டையாடி வருவதில் கிழவனுக்கு ஒருவித ஆசை. அவைகளை வறோணிக்காவிடம் கொடுத்து, ‘வேட்டைத் தண்ணீர்’ என்ற ஒரு வகைச் சூப்பை ஆக்கிக் குடிப்பானானால் போன இளமையே வந்துவிட்டதான திருப்தி அவனுக்கு .*
அடிமைகள் என்ற நாவலிலே மகப் பெற்றவர்களும், உடல்நலம் குன்றியவர்களும் தயாரித்துண்ணும் ‘காயம்’ என அழைக்கப்படும் சரக்குத் தண்ணி பற்றி மிக விரிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதன் விளக்கத்தினை நான்காவது இயலிற் காணலாம்.
உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள்
உணவுவகைகளைக் குறிப்பிட்ட காலம் ᎧᏗ ᎶᏈᎠ Ꭰ கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் நடைமுறை இதுவாகும்.

8 365
அறிவியல் தொழில் நுட்பங்கள் அதிகம் சென்று சேராத நாட்டுப்புறங்களில், நவீன சாதனங்கள் மூலம் உணவுப் பொருட்களைப் பேணுதல் என்பது அசாத்தியமான விடயமாகும். நாட்டுப்புறமக்கள், மரபுசார்ந்த தொழில்நுட்பங்கள் மூலம் உப்பு, புளி, எண்ணெய், தண்ணிர் முதலான பொருட்களைக் கொண்டும் சூரியஒளி, நெருப்பு அகியனவற்றைப் பொருத்தமுறப் பயன்படுத்தியும் உணவுப் பொருட்களைப் பேணிவருகின்றனர்.
நாவல்களில் இவ்வகையான மரபுசார்ந்த தொழில் நுட்பங்கள் மூலம் பதப்படுத்தப்படுகின்ற சிலவகையான பொருட்கள் குறித்த செய்திகள் பயின்றுள்ளன. இறைச்சி வற்றல்,* கருவாடு,* பழஞ்சோறு (பழையது),* பனாட்டு,* புழுக்கொடியல்,* ஒடியல் * பழங்கறி,* முதலானவை அவற்றுட் சிலவாகும்.
கட்டாறு என்ற நாவலிலே, வேட்டையின் போது உபரியாகக் கிடைக்கின்ற இறைச்சியினைத் தீயிலிட்டு வாட்டுதல் செய்வதன் மூலம் அவற்றைக் குறிப்பிட்ட காலம் வரை கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் நடைமுறை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. விவரணம் வருமாறு.
.பன்றியின் உடலிலுள் இருந்த கொழுப்பு ஊற வாட்டப்படுகின்ற மயிர் எரியும் நாற்றம் குறைந்தது. தாமரைக் கண்டு பன்றியுடலை நெருப்புக்குப் பதமாகப் புரட்டிப் புரட்டி வாட்டினான்.
மான் மரையளைச் சுட்டால் அப்படியே உரிச்சுப்போட்டு வத்தலாக்கிறம் . பன்றி என்றால் மட்டும் ஏன் வாட்டிப் பின் உரித்து வதக்க வேண்டும்? என்று கேட்டான் கணபதி.
தாமரைக் கண்டுக்கிழவன் கணபதியை ஏளனமாகப் பார்த்தான். உண்மையாத் தெரியாமல்தான் கேக்கிறியோ?
சத்தியமாத்தான். ஏதோவிசம் ஊறாமல் இருக்க வாட்ட வேண்டும் என்பினம் .
தாமரைக் கண்டுக் கிழவன் பெரிதாகச் சிரித்தான்.
விசரா .. விசரா . அதுக்கில்லை;
பின்ன எதுக்கு . ?

Page 186
366 令
பன்றியில சரியான சிறுசிறு உண்ணிகள் இருக்கும். செத்தாலும் அவை தோலைவிட்டு நீங்கா கண்டியோ . ஒருக்காவாட்டினா எல்லாம் செத்திடும். மற்றது பன்றியில அதன்ர. தோல் அதுதான் வார். சரியான ருசி. நல்லா வாட்டாட்டில் வாருக்குள்ளை இருக்கிற அடிமயிர்க்கத்தை எரியாது. பன்றியில இருக்கிற கொழுப்பில இறைச்சி முழுதும் உருகினால் தனிமணம் . அதுக்குத்தான் . *
தண்ணிர் என்ற நாவலிலே மணிப்புறா முதலான பறவைகளின் இறைச்சியினை ஒருசில மணிநேரம் வரை கெடாமல் பாதுகாக்கும் நடைமுறை குறித்துப் பின்வருமாறு விவரிக்கப்படுகின்றது.
இடையிடையே கிடைக்கும் மணிப்புறாக்களை உடனுக்குடன் மற்றவர்களைக் கொண்டு வெளிச் செட்டைபடாமல் உரித்தெடுத்து, பக்குவமாக அதன் குடல் அகற்றி, பனங்குருத்துக் கோர்வையில் கோத்து விட்டானானால் வேட்டையால் வர எத்தனை மணி நேரமானாலும் அது அப்படியே விறைத்துப்போய் இருக்கும். இந்தக்கோர்வையைப் பக்குவமாக எடுத்துவரச்செய்து நயினாரிடம் ஒப்படைக்கும் வரை சூரனுக்கு மன அமைதி இருப்பதில்லை. .*
காவோலை’, ‘சடங்கு முதலான நாவல்களிலே, பனம்பழம், பனங்கிழங்கு ஆகியனவற்றை முறையே பனாட்டாகவும், ஒடியலாகவும், புழுக்கொடியலாகவும் மாற்றி நீண்டகாலம் வரை பேணும் நடைமுறைகள் குறித்த செய்திகள் பயின்றுள்ளன.
சாதி, சமயம் உணவு விலக்குகள்
நாட்டுப்புற மக்களில், தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானோர் மாடு, நீர்க்காகம், மரநாய், அணில் முதலானவற்றை உணவாகக் கொள்ளும் பண்புடையவர்களாக உள்ளனர். இப்பண்பு குறித்த செய்திகள் நாவல்களிலும் பயின்றுள்ளமை கருதத்தக்கதாகும்.
கானல் என்ற நாவலிலே, மாடு, நீர்க்காகம் மதலானவற்றை உணவாகக் கொள்ளும் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள், மாடு

«Х• 367
தின்னி வேதக்காரர்’ ‘காகம் தின்னிக் கரையார்’, ‘காகம் தின்னி’ முதலான சொற்றொடர்களால் பழித்துரைக்கப்படுகின்றனர்.* இவ்வாறு பழித்துரைப்பவர்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். இச்சமயத்தவர், மாட்டின் மாமிசத்தை உண்பதைப் பாவச் செயலாகக் கருதுகின்றனர். ‘ஆவுரித்துத்தின்றுழலும் புலையர் என்ற அப்பர் சுவாமிகளின் கூற்று இங்கு நினைவிற் கொள்ளத் தக்கதாகும்.
“முருங்கையிலைக்கங்சி’, ‘பஞ்சகோணங்கள்’, ‘சடங்கு” முதலான நாவல்களிலே, இந்த சமயத்தைச் சார்ந்தவர்கள், சடங்கு முதலான நாவல்களிலே, இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள், வெள்ளி, செவ்வாய் மற்றும் சமயம் தொடர்பான புனித நாட்களில் அசைவ உணவு வகைகளைத் தவிர்த்து வருதல் பற்றிய செய்திகள் பரவலாகப் பயின்றுள்ளன.*
உணவுமுறை விதிகள்
நாட்டுப்புறமக்கள், விருந்து முதலான வைபவங்களில் பிறர்க்கு உணவிடுவதில் சிலவகையான விதிமுறைகளை வகுத்துச் செயற்படுத்தி வருகின்றனர். ‘அடிமைகள்’, ‘சடங்கு முதலான நாவல்களிலே இவ்விதிமுறைகள் சிலபற்றிய குறிப்புக்கள் பயின்றுள்ளன.
திருமணம் முதலான விருந்து வைபவங்களில் வீட்டுத்தலைவன், பலவகைகளிலும் பொருத்தமான ஒரு 'தலைச்சன் விருந்தாளி'யைத் தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவரின் கையில் தண்ணீர்ச் செம்பைக் கொடுத்து அவரை முறையாக அழைத்தபின்னரே விருந்து வைபவத்தினைத் தொடங்க வேண்டும். இதனைச் செம்பு தண்ணி கொடுத்தல் எனவும் அழைப்பர்.
அடிமைகள் என்ற நாவலில் இடம் பெறும் பின்வரும் உரையாடற்பகுதி இந்நடைமுறை குறித்து விளக்குவதாக உள்ளது.
. உறவினர்க்கான சபை சந்திக்கான நேரம் வந்துவிட்டது . சம்பிரதாயப்படி வீட்டிற்குத் தலைவன், யாராவது ஒருவரிடம் செம்பு தண்ணீரைக் கொடுத்து சபை சந்தியை ஆரம்பித்து வைக்கவேண்டும். யாரைப் பெரிய மனிதராகக் கனம் பண்ணுவது .

Page 187
368 *
செல்லப்பிள்ளை, பாதிரியாரின் கையில் செம்பு தண்ணிரை வைத்துவிட்டார். பாதிரியாரைத் தலைச்சன் விருந்தாளி ஆக்கிவிட்டதில் பல்லக்கு முதலித்தம்பியருக்கு மனது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது .*
விருந்து விழாக்களில் முதலில் ஆண்களுக்கும் அதனைத் தொடர்ந்து பெண்களுக்கும் விருந்து படைப்பது வழக்கமான நடைமுறையாகும். இந்நடைமுறை குறித்துச் சடங்கு என்ற நாவல் பின்வருமாறு சித்திரித்துள்ளது.
... பந்தலுக்குள் BE2O) I I நடத்துவதற்கேற்ற ஒழுங்குகளை கந்தையா சுறுசுறுப்பாகச் செய்தார். இலை போட்டு, சோறுகறிபரப்பியதும் கந்தையாவும், பொன்னம்பலத்தாரும் தண்ணீர் நிறைந்த செம்புகளை எடுத்து சாப்பிட வேண்டியவர்களின் கையில் கொடுத்தனர்
. ஆண்கள் சபைமுடிய, பெண்களுக்குச் சபை நடத்தினர்
260
இறப்புச் சடங்கில், எரியூட்டல் நடைபெற்ற பின்னர் தயாரிக்கப்படுகின்ற கஞ்சியை இரத்த உரித்துடையவர்களே குடிப்பது வழக்கம். இதனை 'உரிமைக்கஞ்சி’ எனவும் அழைப்பர்." இவ்விதிமுறை குறித்துத் தண்ணீர்’, ‘கோவிந்தன்’, ‘கானல்’, “முருங்கையிலைக் கஞ்சி’ ஆகிய நாவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.*
பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற நாவலிலே ஆண்டுத் திவசம், கருமாதிச் சடங்கு முதலான நிகழ்வுகளிலே பிதிர்களுக்குப் படையல் செய்யப்படும் உணவு வகைகளைக் கடமை செய்தவர்களே உண்ணும் மரபு பற்றிய செய்தி பயின்றுள்ளது.*
நாட்டுப்புற வழக்கில், உணவுப் பொருட்களைக் கையாளுதல், கைம்மாறுதல், தானமாகக் கொடுத்தல் முதலான நடைமுறைகளிலும் சிலவகையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் உணவுப் பொருட்களைப் பிறருக்குக் கொடுப்பதை நாட்டுப்புற மக்கள் விரும்புவதில்லை, பஞ்சமர் என்ற நாவலிலே,

※ 369
வருடாந்தம் இனாமாகப் பெற்றுக் கொள்ளும் நெல்லினை வாங்க வந்த செல்லனை, வியாழன், வெள்ளியைத் தவிர்த்துச் சனிக்கிழமை வந்து பெற்றுக் கொள்ளும்படி வேலுப்பிள்ளையர் பணிப்பதனூடே இந்நடைமுறை குறித்துப் புலப்படுத்தப்பட்டுள்ளது.*
நாட்டுப்புறக் கலைகள்
மனித இனம் தோன்றி வளர்ந்த இடங்களில் எல்லாம் அவரவர்களின் இயல்புக்கும், வாழ்வியல் முறைமைகளுக்கும் ஏற்றவாறு, மக்கள் தம் உணர்வுகளை வாய்மொழி மூலமாகவோ, கைவினைகள் மூலமாகவோ வெளிப்படுத்தி வந்தனர். இவ்வாறானவற்றைப் பொதுவாக நாட்டுப்புறக் கலைகள் எனது வழங்குவர். மரபுவழியாக வழங்கப்பட்டு வரும் இக்கலைகளுக்குள் தனிமனித நிகழ்த்துதல்களும், கூட்டு நிகழ்த்துதல்களும் அடங்குகின்றன.
கலையுணர்வு என்பது இயல்பாகத் தோன்றுகின்ற உணர்வாகக் கருதப்படுகின்றது. மனித உணர்ச்சிகளின் வடிகால்களாக அமைந்த கலைகள், அழகியல் சார்ந்தனவாகக் காணப்பட்டன. தேங்கி, நிலைத்து நிற்காத இக்கலைகள் எந்தவிதமான இலக்கண வரையறைகளையும் தம்முள்ளே கொண்டவையல்ல; மகிழ்ச்சி ஒன்றே இக்கலைகளின் பிரதான இலக்கு எனக் கருதலாம்.
நாட்டுப்புறக் கலைகள் குறித்த இவ்வியல், நாட்டுப்புறக்கலைகளின் தோற்றம், இயக்கம், வகைப்பாடு ஆகியன பற்றி விளக்குவதுடன், நாவல்களினூடாக அறியப்படும் கலைகள் குறித்து விளக்குவதாகவும் அமைகிறது.
கலைகளின் தோற்றம்
மனித இனம் தோன்றிவிட்ட போதே கலைகளும் தோன்றிவிட்டன எனக் கூறலாம். கலைகளின் தோற்றத்துக்கும் மனித வாழ்க்கைக்குமிடையில் பிரிக்க முடியாத நெருக்கமான உறவு காணப்பட்டது. ஒன்றை ஒன்று சார்ந்த நிலையில் இவை நிலை பெற்றன எனக் கருதலாம். பொதுவாகக் கலைகளின் தோற்றத்துக்கு முருகியல் (Aesthetic) உணர்வே காரணம் எனலாம். இயற்கை மீது

Page 188
370 x
தொடக்ககால மனிதன் கொண்ட முருகியலே கலைத்தோற்றத்தின் ஊற்றாக அமைந்தது. அடுத்த நிலையில் ஒருவனது திறமையை வெளிப்படுத்தும் கருவியாகக் கலைகள் அமைந்தன.
உலகெங்கும் தொடக்ககாலக் கலையென்பது மனிதர்கள், தங்களால் புரிந்து கொள்ளப்பெறாத இயற்கைக் கூறுகள் பலவினின்றும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் செயல்களோடு தொடர்பு உடையனவாகவே இருந்திருக்கின்றன. பிரான்சு, லாசெக்ஸ் ஆகிய இடங்களில் பதினையாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததாக நம்பப்படும் குகைகளில் அக்கால ஓவியர்களால் தீட்டப்பட்டதான ஒவியங்களில் இயற்கைக்கும் கலைகளுக்குமுள்ள தொடர்பினைக் காணமுடிகிறது எனக் கு.வெ.பாலசுப்பிரமணியன் குறிப்பிடுவார்.*
வேட்டைச் சமூகத்தில், வேட்டைக்குப் புறப்பட்டும் முன்பு ஆதிமனிதன் ஆடிய வேட்டை நடனங்களை இக்கலைகளின் ஊற்றுக்களாக ஊகிக்க முடிகின்றது. விலங்குகளைக் குத்தி வீழ்த்தி, வேட்டையாடுவது போல நடனமாடிவிட்டு வேட்டைக்குச் சென்றால், நிறைய விலங்குகள் கிடைக்கும் என்று நம்பிய நிலையில் இவ்வாறான போலச் செய்தல் (Immitative) நடனங்கள் நிகழ்த்தப்பட்டன. வேட்டைநிலைக் சித்திரிப்புக்களை உள்ளடக்கிய குகை ஓவியங்களும் வரையப்பட்டன. இவ்வாறான ஒவியங்களின் சாயல்களை இன்றும் கிராமப்புறங்களில் காணமுடிகிறது.* நாகர், கோண்டு இன மக்களின் நடனம், காட்டிலுள்ள அபாயங்களைக் குறிக்கும் வண்ணம் அமைந்துள்ளமை கருதத்தக்கதாகும். பழங்குடிமக்களிடமுள்ள வீர நடனமும் இங்கு கருதத்தக்க ஒன்றாகும்*
கலைகள், மனிதச் சமூகத்தின் உழைப்புப் போக்கில் தோன்றின எனக் கோ. கேசவன் குறிப்பிடுவார்.* பிறிதொருபோக்காக் கெட்ட ஆவியினின்றும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுத் தெய்வங்களை வேண்டிய நிலையிலும், வழிபாட்டுச் சடங்கின் ஒருபகுதியாகவும் கலைகள் தோற்றம் பெற்றன எனக் கூறலாம். இந்த அடிப்படையானது, கலைகளை, சமூகச் சார்பாகவும், சமயச் சார்பாகவும் பிரித்துப் பார்க்கும் நடைமுறைக்கு ஆதாரமாக அமைந்தது.

(X 371.
தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் முதலான பண்டைத்தமிழ் இலக்கியங்களில் தமிழரிடையே வழக்கிலிருந்த புராதனகாலச் சமூகக் கலைகளைப் பற்றியும், அவற்றை ஆற்றுகை செய்த பல்வேறு வகையான கலைஞர்களைப் பற்றியும் பரவலாகச் செய்திகள் பயின்றுள்ளன. களவேள்வி, துணங்கை, குரவை, வெறியாட்டு, வாடாவள்ளி முதலானவை இவ்வகைக் கலைகளிற் சிலவாகும்.
நாட்டுப்புறக்கலைகளின் வளர்ச்சி நிலைகளை, தொன்மக்கலை (Primitive Art), bit 'Glilipdisg0at) (Folk Art), Galba)LDd 560)a(Classical Art) என மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுத்து நோக்கும் பண்பு காணப்படுகிறது.* இம்மூன்று வகையான பிரிவுகளின் தாக்கங்களைப் பரஸ்பரம் ஒவ்வொரு வகைக் கூறுகளிலும் இனங்கான முடியும்.
கலைகளின் இயக்கம்
எந்த ஒரு கலையும், அதன் அமைப்பு நிலையில் பின்வரும் இயக்கத்தினைக் கொண்டிருக்கும் எனலாம்.
56) G}
அமைப்பு இயக்கம்
பின்னணி குறிக்கோள் கருத்து வடிவம் பங்கேற்போர் செயல்மறை
தேவையானவை பணி
கருவிகள் ஆட்கள் மொழிசார் மொழிசாரா
மேலே குறிப்பிட்ட விடயங்கள், கலைகளுக்கேற்ப ஓரளவு மாற்றமடைந்தும், வேறுபட்டும் காணப்படும். பொம்மலாட்டம் முதலான சிலவகைக் கலைகளில் மொழியின் பயன்பாடு இல்லாமலிருக்கும். கரகாட்டம் போன்ற கலைகளில், இசையும், ஆடலும் இணைவுபெற்றிருக்கும். பொம்மலாட்டம், சிலம்பாட்டம்

Page 189
S72 X
முதலான கலைகளில் வெறும் செய்கைகள் மட்டுமே முதன்மை பெறும். சிலவகைக் கலைகளில், மொழி, இசை, செய்கை ஆகிய
மூன்றும் இணைவு பெற்றிருக்கும்.
நாட்டுப்புறக் கலைகளின் வகைப்பாடு
கலைகளை, பொதுவாகச் செவ்வியற்கலை, நாட்டுப்புறக்கலை என இரண்டு பெரும் பகுதிகளாகப் பகுத்து நோக்கும் பண்பு தமிழ்மரபில் நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது.
வேத்தியல், பொதுவியல் குறித்துச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. மேற்படி நூலுக்கு உரைகண்ட இடைக்கால உரையாசிரியர்கள், ‘வேத்தியல்’ என்பது, வேந்தனுடைய அவையில், வேந்தனுக்கும், அவனைச் சார்ந்த குழாத்துக்கும் நிகழ்த்தப்பெறும் கலை எனவும், பொதுவியல் என்பது, வேத்தியல் கலையை எளிமைப்படுத்தி, சாதாரண மக்களிடையே பரப்பிய கலை எனவும் பொருள்பட உரை கொள்வர்.”
வாழ்வியற் களஞ்சியம் கலைகளைச் சமூகச் சார்புக்கலைகள், சமயச்சார்புக் கலைகள் என இரண்டாக வகைப்படுத்தும்.* கலைக்களஞ்சியம், குடும்ப விழாக்கள், சமூக விழாக்கள், கோயில் விழாக்களில் ஆடும் நடனங்கள், தொழில் நடனங்கள், காடு மலைகளில் வசிக்கும் பழங்குடி இனத்தாரின் நடனங்கள்’ என நான்கு வகையாக வகைப்படுத்துகின்றது.
கி.கருணாகரன், இரா.பாக்கியலட்சுமி ஆகியோர் நாட்டுப்புறக் கலைகளை, வாய்மொழிக்கலைகள்(VerbelArts), வாய்மொழிசாராக் கலைகள் (Non Verbal Arts) என இரண்டு வகையாகவும்,* பானர்ஜி என்பார் சமூகச் சார்புகலைகள், சமயச் சார்புக்கலைகள், போர் இயல்புக்கலைகள்' என்ற மூன்று பிரிவுகளாகவும் வகைப்பாடு செய்கின்றனர்.
சு. சக்திவேல் நாட்டுப்புறக் கலைகளை, நிகழ்த்து கலைகள் (Performing Arts), sispggTé; 560) av56t (Non Performing Arts), GLITQ5L' கலைகள் (Material Arts) எனவும்,*ஆறு. இராமநாதன் என்பார் பொருட்கலைகள், நிகழ்த்து கலைகள்" எனவும் வகைப்பாடு செய்வர்.

(X 373
நாட்டுப்புறக் கலைகளை, உருவாக்குதல், பயன்படுத்துதல் அல்லது நிகழ்த்துதல் முதலான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மேலே சுட்டியவாறு பலரும் பல்வேறு வகைகளாக வகைப்பாடு செய்துள்ளமையை நோக்க முடிகின்றது. ஆயினும் நிகழ்த்துகலைக்கும், பொருட்கலைக்கும் இடையிலான வேறுபாட்டைக் கோடு கிழித்தது போலத் திட்டவட்டமாக வரையறுக்க முடியாது என்பது கருதத்தக்க விடயமாகும். நிகழ்த்து கலைகள் பலவற்றுக்கும் பொருட் கலைகளின் தேவை இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. ஒப்பனை, உடையலங்காரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் நிகழ்த்து கலைகள் பொருட்கலைகளைச் சார்ந்தே நிற்கவேண்டிய தேவை உள்ளதெனலாம். குதிரையாட்டத்தில் ‘குதிரை’ பெறும் முக்கியத்துவம் ஒன்றே இத்தொடர்பினை விளங்கிக் கொள்வதற்குப் போதுமான எடுத்துக்காட்டாகும்.
நாவல்களிலே பயின்றுள்ள நாட்டுப்புறக் கலைகளைக் கைவினைக் கலைகள், நிகழ்த்து கலைகள் என வகைப்படுத்தி நோக்கமுடிகிறது.
Dissourisang) (Material Arts)
கைவினைக்கலை அல்லது பொருட்கலை மரபில் பல்வேறு ஆற்றல்களைத் தமிழர்களிடையே காணமுடிகின்றது. கைவினைக் கலைகள் குறித்த உத்திகள் (Technics), தினுசுகள் (Desings) முதலானவை மக்களிடையே தலைமுறைத் தலைமுறையாக மரபுவழியாகக் கையளிக்கப்பட்டு வருவனவாக உள்ளன. மரபு சார்ந்த கைவினைப் பொருட்கள், வரலாறு சார்ந்தும், நிலவியல் சார்ந்தும் அமைவன.
கைவினைக் கலைகளில் மட்பாண்டக்கலை சிறப்பான ஓரிடத்தை வகிக்கிறது எனலாம். ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுடுமண்படிவங்கள், முதுமக்கட் தாழிகள் முதலானவை பண்டைத்தமிழரின் மட்பாண்டத் தொழில் தேர்ச்சிக்குச் சான்றுகளாக அமைபவையாகும். சங்க இலக்கியங்களில் மட்பாண்டங்களைச் செய்பவன் ‘கலஞ்செய்கோ எனக் குறிக்கப்பட்டுள்ளான்."

Page 190
374 x
மட்பாண்டங்கள் தவிர, காகிதப் பொம்மைகள், மரப்பொம்மைகள், பத்தமடைப்பாய்கள், பாய்பின்னுதல், பெட்டிகள், கடகங்கள் முடைதல், கதவு நிலைகள், சிற்பங்கள் முதலான மரவேலைப்பாடுகள், கண்ணாடியில் வரையப்படும் ஓவியங்கள், உலோகச் சிற்ப வேலைப்பாடுகள், கற்சிற்ப வேலைப்பாடுகள், சப்பரம், தேர், தெய்வத்தை அலங்கரிக்கும் கலை, நெசவுக்கலை, சாயமிடும்கலை, வேலிவகைகள் முதலான பல்வேறு கைவினைக் கலைகள் தமிழரிடையே வழக்கிலுள்ளன.
நாட்டுப்புறக் கலைகள், சமுதாய முக்கியத்துவம் வாய்ந்தனவாகவும், நாட்டுப்புற விழாக்கள், நம்பிக்கைகள் சடங்குகள் முதலானவற்றோடு நெருங்கிய பிணைப்புடையனவாகவும் காணப்படுகின்றன. இக்கலைகள், அவை உருவாக்கப்படும் நோக்கங்களுக்கேற்ப மக்களுக்கு நல்வழி காட்டவும், மகிழ்வூட்டவும், இன்னும் பிற வழிகளிலும் பயன்படுகின்றன எனக் கூறலாம்.
sos as GOG) (Performing Arts)
தமிழகத்தில், நிகழ்த்து கலை மரபில் பல்வேறு கலைகள் மிகுந்த செல்வாக்குடன் உள்ளன. தெருக்கூத்து, பாவைக் கூத்து, கணியான் கூத்து, கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் முதலானவை இவற்றுட் சிலவாகும்.
நிகழ்த்து கலைகளில் அர்த்தமும், கலைத்திறமும் வெளிப்படுவதோடு, வெறும் சொற்களுக்கு மட்டும் முதன்மை தராது, அவை எவ்வாறு மக்கள் முன் வழங்கப்படுகின்றன என்ற வினைத்திறத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது. இன்னிசை, வேகம், சந்தம், குரல், நாடகப் பண்பு, புலப்படுத்தும் வழிமுறைகள், நிகழ்த்தும் உத்திகள் முதலானவை நிகழ்த்துகலைகளை அறிய உதவுவனவாகும்.
நிகழ்த்தகலைகள், ஆடும் முறை, சாதி, நிகழ்த்துதலில் முதன்மை வசிக்கும் பொருட்கள், இசைக்கருவி, நிகழ்த்தப்படும் இடம் மற்றும் போடப்படும் வேடம் எனப் பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு பெயர் பெறுகின்றன.

8- 375
நாவல்களில் நாட்டுப்புறக் கலைகள்
நாவல்களிலே, கைவினைக்கலை, நிகழ்த்துகலை ஆகியனவற்றைப் பற்றிய செய்திகள் பயின்றுள்ளன. ஒப்பீட்டு நிலையில் கைவினைக் கலைகள் குறித்த செய்திகளே மிகுதியாகப் பயின்றுள்ளமையினைக் காணமுடிகின்றது.
கைவினைக் கலைகள் குறித்த செய்திகளை நோக்கும்போது, குறித்த பொருட்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், பொருட்களைத் தயாரிக்கும் முறை ஆகியன பற்றிய செய்திகள் விரிவான நிலையில் பயின்றுவராத நிலையே காணப்படுகிறது. பல்வேறு வகைப்பட்ட கைவினைக்கலைப் பொருட்கள் வெறுமனே பெயரளவில் மட்டுமே ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் Lg) go ஒலையினை மூலப்பொருளாகக் கொண்ட கைவினைப் பொருட்கள் கணிசமானவையாகும்.
நிகழ்த்து கலைகளில், ஈழத்தமிழரின் பாரம்பரியக் கலைவடிவமான நாட்டுக் கூத்தைப் பற்றிய செய்திகள் ஓரளவு பயின்றுள்ளன. நாட்டுக் கூத்தை அரங்கேற்றுவதில் பின்பற்றப்படும் பல்வேறு நடைமுறைகள் பற்றியும் நாவல்களில் விவரிக்கப்பட்டுள்ளமை கருதத் தக்கதாகும்.
நாவல்களில் கைவினைக் கலை
நாவல்களில் பயின்றுள்ள நாட்டார் கைவினைப் பொருட்களில் பெரும்பாலானவை 6) ஒலையினைப் பிரதான மூலப்பொருளாகக் கொண்டனவாக உள்ளன. கிராமப்புற மக்களிடையேயுள்ள புழங்கு பொருட்களிற் பெரும்பாலானவை பனை ஓலையினால் வடிவமைக்கப்பட்டவை என்பது கருதத்தக்கதாகும். பனை ஓலை, பனைமட்டை, பனை ஈர்க்கு, பனைநார், சாயமேற்றுதற்குப் பயன்படும் பல்வகை வேதிப்பொருட்கள் இவ்வகைப் பொருட்களுக்கான மூலப் பொருட்களாகக் காணப்படுகின்றன.
காவோலை', 'தண்ணீர்’, ‘சடங்கு', 'பஞ்சமர்’, ‘அடிமைகள்' முதலான நாவல்களிலே நாட்டுப்புற மக்களிடையே வழக்கிலுள்ள

Page 191
376 x
பல்வேறு வகையான புழங்கு பொருட்களைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. அவற்றுள் பனையோலைப் பெட்டிகள்,* பல்வகைக் கடகங்கள்,* பீலிப்பட்டை,* கைப்பட்டை (நீர் மொள்ளுதற்குப் பயன்படுபவை),* பனங்கட்டிக் குட்டான் (பனைவெல்லக் கொள்கலன்),* பறி*, பிளா”, தட்டுவம்*, பனைமட்டை வரியல் (வேலி),*கரப்பு" முதலானவை குறிப்பிடத் தக்கனவாக உள்ளன.
சடங்கு என்ற நாவலிலே வரும் செல்லாச்சி என்பவளின் கைவினைத் திறம் குறித்து அந்நாவலின் ஆசிரியர் பின்வருமாறு விவரிக்கின்றார்.
பின்னிக் குறையாக இருந்த ஒலைப்பெட்டியைத் தொடர்ந்து பின்னிக் கொண்டிருந்த செல்லாச்சி சொன்னாள் .
அவளின் விரல்கள் வார்ந்து, கிழித்த பனை ஒலைகளிடையே விளையாடிக்கொண்டிருந்தன .*
'காவோலை’ என்ற நாவல், குஞ்சியாச்சி என்பவளின் நார்க்கடகத்தின் நேர்த்தி குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
. குஞ்சியாச்சி இழைக்கின்ற நார்க்கடகங்களுக்கு அந்த ஊரில் மிகவும் தட்டுப்பாடு .
குருத்தோலைகளைச் சீராக வார்கின்ற திறனும், நீக்கலின்றி நார்களைப் பின்னுகின்ற சீரும் எல்லோருக்கும் இலகுவில் கைவந்த கலையல்ல . அத்தீவின் நார்க்கடகங்களுக்கு நல்ல பெயர். என்றால், அது குஞ்சியாச்சியின் நார்க்கடகத்தின் விளைவுதான் .*
போராளிகள் காத்திருக்கின்றனர் என்ற நாவலிலே, வலை பின்னுதல், அதனைப் பராமரித்தல், வலைகளின் வகைகள் ஆகியன குறித்த விரிவான செய்திகள் பயின்றுள்ளன. இந்நாவல் மீனவச் சமூகக் கிராமம் ஒன்றினைக் கதைவிரிகளமாகக் கொண்டுள்ளமையும் இங்கு கருதத்தக்க ஒன்றாகும். வலை பின்னுதற் கலையில் இச்சமூகப்பிரிவு மக்களே சிறப்புத் தேர்ச்சியுடையவர்களாகக் காணப்படுகின்றனர். இந்நாவலில் இடம் பெறும் பின்வரும்

& 377
உரையாடற் பகுதிகள் மேற்படி விடயங்களை விளக்குவனவாக அமைந்துள்ளன.
... புதிதாக அந்த வலைகளைத் தயாரிக்க அவன் பட்ட பாட்டுக்கள்!
கழிநூல்வாங்கி,
தன்கையாலேயே ராட்டினமிட்டு
முறுக்கி
மால்முடித்து
அப்புறம் .
அப்புறம் .
நீண்ட மூன்று மாத காலம் தன்னுடைய சொந்த உழைப்பை
விரையஞ் செய்து தேடிய பட்டிவலையை, அதன் எடுப்பான தோற்றத்தை அவன் நினைத்துப்பார்க்கிறான்.
பட்டி அடைப்பதற்கும், வேலிவலை பாய்வதற்கும் காட்டுக்கம்புகள் தேடி, அவைகளைக் கூரிட்டு, வலைக்குக் கண்டல் பட்டையிட்டு, அவித்துச் சாயமேற்றி நாள்பார்த்து நீர்பார்த்து, மீன்நிலை பார்த்து கடலில் இறக்கி
வலையில் செழும்பேறிவிட்டால் அதைப் பிடுங்கிவந்து, கண்டல்பட்டிைடச் சாயத்தில் ஊறவைத்து, அவித்து சாயமேற்றி பழுதுபார்த்து மறுபடியும் உலர விட்டுத்தான் புதிதாகப் பட்டி புதைக்கவேண்டும்.
பட்டிவலை, வேலிவலை, சிறகுவலை என்ற விதங்களிலான வலைக்கண்களைச் சீர்செய்ய ஒருநாள் கழிந்துவிட்டது .*
மேற்குறித்த கைவினைப் பொருள்கள், தொழிலாகவும், பரம்பரைத்தன்மை கொண்டனவாகவும் காணப்படுகின்றமை கருதத் தக்கதாகும்.

Page 192
378 X
நாவல்களில் நிகழ்த்துகலை
நாவல்களில் பயின்றுள்ள நிகழ்த்து கலைகளில், நாட்டுக்கூத்துப்பற்றிய செய்திகளே குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. ஈழத்தமிழர் நாட்டுப்புற நிகழ்த்து கலைகளில், நாட்டுக் கூத்து மிகுந்த செல்வாக்குடைய ஒன்றாக உள்ளமை கருதத்தக்கதாகும். யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, சிலாபம், முல்லைத்தீவு, திருகோணமலை என ஈழத்தின் பல்வேறு பிரதேசங்களிலும்இக் கூத்துக்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
கூத்தில், ஆடல், பாடல், உரையாடல் ஆகிய மூன்று அம்சங்களும் இடம் பெற்றிருக்கும். ஆயினும் பாட்டும், ஆட்டமுமே பிரதான விடயங்களாகக் காணப்படும். கதைத் தொடர்ச்சிக்கும், விளக்கத்திற்குமாக இடையிடையே உரையாடல் இடம்பெறும். பாத்திரங்களின் பண்புகளையும், கூத்தின் கதைப்போக்கினையும் விளக்கும் வகையில் ‘ஆட்டம்’ அமைந்திருக்கும்.
கானல் என்ற நாவலிலே, கதை விளக்கப் பின்னணியில் யாழ்ப்பாணத்துக் கூத்துமரபை இந்நாவலாசிரியர் மிகவும் நுணுக்கமாக ஆவணப்படுத்தியுள்ளார் எனக் கூறலாம். இந்நாவலில், ‘அண்ணாவி’ என அழைக்கப்படும் நெறியாளர் ஒருவரின் வழிநடத்துதலில் கூத்தைப் பழகுதல், கூத்துக்கான நடிகர்களை, அவர்களின் குரல்வளம், உடல்வனப்பு ஆகியனவற்றைக் கொண்டு தேர்வுசெய்தல், கூத்துக்கான எழுத்துருவினைத் தயார் செய்தல், ஒத்திகைபார்த்தல், ஒப்பனையிட்டு ஒத்திகை பார்த்தல், அரங்க அமைப்பு, ஒப்பனைப் பொருட்கள், பின்னணி இசை, பக்கவாத்தியங்கள், கூத்து வழிநடத்தற் பொறுப்பாளர், அரங்கு நிர்வாகம், திரையிடல் நுட்பங்கள், காட்சியமைப்பு, ஒளியமைப்பு முதலான பல்வேறு விடயங்களும் மிகவும் இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. வகைமாதிரிக்காகப் பின்வரும் உரையாடற் பகுதியினை இங்கு தருதல் பொருத்தமானதாகும்.
. ‘பொன்னூல் செபமாலை' என்ற அந்த நாடகம் இன்றுதான் முதல் முதலாக மேடை ஏறுகிறது.

X 379
நாவாந்துறைப் பேதுருப்பிள்ளை அண்ணாவிப் புலவரைத் தருவித்த ஓர் இடத்தில் நிலையாகப் பலநாள் இருந்து அவர் பாடல்களைப் பாட இருவர் இதை எழுதிமுடித்து நடிகர்களைத் தேடி எடுத்து முதலில் பாடல்களைப் பாடவைத்து பின்பு நடிக்கவைத்து, பின் மிருதங்கத்துடன் இணைந்து இசை சரிபார்த்து பதினைந்து தடவைகளுக்குமேல் ஒத்திகை வைத்து இறுதி ஒத்திகையை கூத்துச் செலவுக்கான பணக் கூத்தாக வைத்து கடலில் இறால் வலைகள் கொண்டு பொது இழுப்பு இழுத்து பலர் பலவிதமான சிரமங்கள் பட்டு இன்று இந்த நாட்டுக் கூத்து நாடகம் அரங்கேறுகிறது. சுமார் ஆறுமாதகால முயற்சி!
பட்டணத்து சோடினை ஆசான் பிலிப்புவின் சீர்வரிசை, உடைவரிசை, நாட்டுக் கூத்துமிருதங்க அடிகாரன் நாவாத்துறை அந்தோனிக் குட்டியின் மிருதங்க ஒழுங்கு, கிச்சின் லையிற் சக்கரவர்த்தி என்று பெயர் எடுத்த கனகுவின் லையிற் ஏற்பாடு இவைகள் எல்லாவற்றையும் ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வருவதென்றால் இலேசுப்பட்ட விஷயம் அல்ல .*
நாவல்களும், நாட்டார் பண்பாட்டு வழக்காறுகளும் என்ற தலைப்பிலான இவ்வியலிலே, நாட்டுப்புற மருத்துவம், நாட்டுப்புற விளையாட்டு, காரணப்பெயரிடும் வழக்கம், நாட்டார் உணவுப் பழக்க வழக்கம், நாட்டுப்புறக் கலை ஆகியன குறித்து விரிவாக விளக்கப் பெற்றுள்ளன.

Page 193
10.
II.
I2.
13.
14.
15.
16.
அடிக்குறிப்புகள்
சாந்தி, ந., பார்க்கவகுலச் சடங்குகளும், நம்பிக்கைகளும், uj.179, 180.
கலைக்களஞ்சியம், தொகுதி 8, பக்.116-117. கலித், பாடல் 133:8. Edward Taylor, THENEWCAXTONENCYCLOPAEDIA, Vol.VI, p. 1728. “Culture (or civilization) is that complex whole which includes knowledge
belief art, customs and other capabilities and habits acquired by Man and a Member of Society.”
ENCYCLOPAEDIA OF THE SOCIAL SCIENCE, Vol.III, p. 1954.“Culture is a well organised unity divided into two fundamental aspects - a body of artefacts and a system of customs - but also obviously into further subdivisions or units.”
WORLD UNIVERSITY ENCYCLOPAEDIA, Vol.V, p. 1405. “Culture (Kulcher) the way of Life of a Society. It is the totality of the spiritual intellectual, and artistic attitudes shared by a group, including its traditions, habits, Social Customs, Morals, Laws and Social relations.”
நாசிர் அலி, மி.அ.மு., நாட்டுப்புறப் பண்பாட்டில், ப.26. பக்தவச்சல பாரதி, சீ., பண்பாட்டு மானிடவியல், ப.157.
David Dressler with William, M.Willis, Jr., SOCIOLOGY - THE STUDY OF HUMAN INTERACTION, p.31. “Culture also means aspecial kind of refinement, involving lofly aesthetic interests and a sophisticated understanding of the arts and humanities.”
வையாபுரிப்பிள்ளை, எஸ்., தமிழர் பண்பாடு, ப.16. பாலசுப்பிரமணியன், கு. வெ. சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள், ப.4. கலைக்களஞ்சியம், தொகுதி 6, பக். 690-591. ENCYCLOPAEDIA OF THE SOCIAL SCIENCE, Vol.III, p. 1954. பக்தவச்சல பாரதி, சீ, மு.கு.நூ. ப.176. NEWENCYCLOPAEDIABRITANICA (Micro), Vol.VI, p.211.
Leach, Maria, STANDARDDICTIONARY OF FOLKLORE, p.699. “The History of Folk Medicine is the History of Medicine.”

17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31,
32.
33.
34.
35.
36,
37.
38.
39.
40.
41.
42.
※,381
சக்திவேல், சு., நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.264. புறம், பாடல் 180: 5.
நற்., பாடல் 136.
கலித், பாடல் 129; 23-24. Dun Yoder, “Folk Medicine”, FOLKLORE AND FOLKLIFE, p.197. கருணாகரன், கி., பாக்கியலட்சுமி, இரா., நாட்டுப்புறவியல் ஆய்வு நெறிமுறைகள், பக்.51-52,
ஜெயா, வ, “நாட்டுப்புற மூலிகை மருத்துவமும், மந்திரமும்”, தன்னன்னானே, இதழ், ப.27
சண்முகசுந்தரம், சு., “நாட்டுப்புற மருத்துவம்”, தன்னன்னானே, இதழ், ப.15. முத்தையா, இ. நாட்டுப்புற மருத்துவ மந்திரச்சடங்குகள், ப.15. டானியல், கே., பஞ்சமர், ப.76. டானியல், கே., பூமரங்கள், ப.27 டானியல், கே., அடிமைகள், ப.80.
பூமரங்கள், பக்.30-35.
மேலது., ப.33.
அடிமைகள், ப.88.
மேலது., ப. 106.
மேலது., ப. 109.
மேலது. ப. 110.
Frazer, G.J.S Golden Bough, Vol.I, p.806. தெணியான், கழுகுகள், ப.23. Frazer, G.J., Golden Bough Vol.I, Part I, p.54.
கழுகுகள், ப.23.
பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.122. டானியல், கே., தண்ணிர், பக்.66, 110-116.
கழுகுகள், ப.23.
பஞ்சமர், ப.245.

Page 194
382
43.
44.
45.
46.
47.
49.
50.
5I.
52.
55.
56.,
57.
59.,
60.
6丑。
62.
63.
64.
65.
66.
67.
Κ 0x
ஜோன்ராஜன், எஸ்.ழறி, போடியார் மாப்பிள்ளை, பக்.24, 39. செங்கையாழியான், காட்டாறு, ப. 173. செங்கையாழியான், முற்றத்து ஒற்றைப்பனை, பக்.9, 19. டானியல், கே., இருளின் கதிர்கள், ப.229. டானியல், கே., கானல், ப.124. பாலமனோகரன், அ., நிலக்கிளி, ப.28.
தண்ணீர், ப.69.
நிலக்கிளி, பக்.24, 26; தண்ணீர், ப.66. அடிமைகள், ப.66.
தண்ணீர், ப. 106.
தெணியான், மரக்கொக்கு, ப.47.
டானியல், கே., போராளிகள் காத்திருக்கின்றனர், ப.47; அடிமைகள், பக்.129-130.
கானல், பக்.99, 161. டானியல், கே, கோவிந்தன், பக்.113-114, 190. மேலது., ப.190; மரக்கொக்கு, ப.47.
கோவிந்தன், ப.115.
அடிமைகள், ப.59.
மேலது. ப. 67
மேலது. பக்.78-79.
காட்டாறு, ப.116.
பஞ்சமர், ப. 72.
நிலக்கிளி, ப.11.
தண்ணிர், ப.92. கணேசலிங்கன், செ, நீண்ட பயணம், ப.16; டானியல், கே., முருங்கையிலைக் கஞ்சி, பக்.18, 19, 40; பொன்னுத்துரை, எஸ்.
சடங்கு, ப.58; செங்கையாழியான், முற்றத்து ஒற்றைப்பனை, ப.18, செங்கையாழியான், காவோலை, ப.22.
தெணியான், பொற்சிறையில் வாடும் புனிதர்கள், ப.57

68.
69.
7O.
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
8.
82.
83.
... g6T66sfi, Lu.200.
85.
86.
87.
88.
89.
90.
(X 383
பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, பக்.106-107 நிலக்கிளி, ப.110; போராளிகள் காத்திருக்கின்றனர், ப.47. தண்ணிர், பக்.45-46; போராளிகள் காத்திருக்கின்றனர், ப. 73. நிலக்கிளி, ப.6.
பாலமனோகரன், அ., குமாரபுரம், ப.40.
பஞ்சமர், ப.100.
செங்கையாழினாய், மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, ւս.27.
அடிமைகள், ப.128. பொன்னுத்துரை, எஸ்., சடங்குகள், ப.115. பஞ்சமர், ப.87. டானியல், கே., பஞ்சகோணங்கள், பக்.153-154. மேலது. ப.129.
பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.96; முற்றத்து ஒற்றைப்பனை,
1. lO.
பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, பக்.99-100.
நித்தியகீர்த்தி, ஏ.ரி., மீட்டாத வீணை, ப.30, தண்ணிர், பக்.120, 124.
இருளின் கதிர்கள், பக்.197-198.
TAMILLEXICON, Vol.VI, Part I, p.3730. கலைக்களஞ்சியம், தொகுதி 9, பக்.423-424.
THE WORLDBOOKENCYCLOPAEDIA, p.506. “Play is recreation or what to do fun'
தேவநேயன், ஞா., தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், ப.5. பாலசுப்பிரமணியம், இரா., தமிழர் நாட்டு விளையாட்டுக்கள், U.448.
இராகவையங்கார், மு., “விலங்குப்போர் விளையாட்டு” ஆராய்ச்சித் தொகுதி, ப.297

Page 195
384 -
91. சக்திவேல், சு., மு.கு.நூ., ப.246. 92. பாலசுப்பிரமணியம், இரா. மு.கு.நூ., ப.27. 93. சிவகாமசுந்தரி, சு., சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம்,
பக், 6-7.
94. தேவநேயன், ஞா., மு.கு.நூ. ப.5. 95. பாலசுப்பிரமணியம், இரா, மு.கு.நூ. ப.4. 96. கலைக்களஞ்சியம், தொகுதி 9, ப.424. 97. கோவிந்தன், ப.84.
98. கானல், ப.195; மீட்டாத வீணை, ப.16. 99. கோவிந்தன், ப.96; பஞ்சமர், ப.318. 100. கானல், ப. 182; பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.57 101. மீட்டாத வீணை, ப.16. 102. மேலது. ப.16. 103. மேலது. ப.16.
104. அடிமைகள், பக்.168-178, 198. தகவல், செல்வி ரTதா கனகரட்ணம், வயது 25, பெண், மகாத்மா ஒழுங்கை, நெல்லியடி, கரவெட்டி, இலங்கை,
105. தொல். பொருள். நூற்பா 60. நச்சினார்க்கினயருரை. 106. குறு., பாடல் 305. 107. புறப்பொருள் வெண்பாமாலை, வென்றிப்படலம், 6. 108. பெருங்கதை, 3, 4 19-20.
109. சீவகசிந்தாமணி, 73.
110. அடிமைகள், பக்.180-181.
111, மேலது. பக்.190-196.
12. மேலது. ப.168. 113. முற்றத்து ஒற்றைப்பனை, ப.3.
114. மேலது. ப.23.
115. மேலது. ப.23.

«Х• 385
16.தகவல், செல்வி. ரஜினி செல்வரட்ணம், வயது 25, பெண், பிரம்படி ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, கொக்குவில், இலங்கை. 117. கோவிந்தன், பக்.94-96. 118. பஞ்சமர், ப.319. 119. மேலது., ப.325.
120.THE GREATLIFCODICTIONARY, ENGLISH-ENGLISH-TAMIL, p.65. 121. தொல். சொல். நூற்பா 165, சேனாவரையம். 122. மேலது. உரை, பக்.19-120.
123. சாமிநாதையர், உ.வே., முன்னுரை, குறுந்தொகைப் பதிப்பு,
uji.3-5.
124. விதாலி ஃபுர்னிக்கா, பிறப்பு முதல் இறப்பு வரை, பக்.18-19. 125.துரை அரங்கசாமி, அ.மொ., சங்ககாலச் சிறப்புப் பெயர்கள். 126.இராமநாதன், ஆறு, நாட்டுப்புற இயல் ஆய்வுகள், ப.280. 127. மேலது, ப.280. 128. செங்கையாழியான், கொத்தியின் காதல், ப. 7 129. கோவிந்தன், ப.50; பஞ்சமர், ப.169. 130.அடிமைகள், ப. 150; கானல், பக்.10, 29,
131.g56õTGOofii, Lu. 110.
132. மேலது., பக்.184, 210, 216.
133. மீட்டாத வீணை, ப.16.
134. அடிமைகள், பக்.150, 162; பஞ்சகோணங்கள், பக்.24, 29; கானல்,
1.97.
135. பஞ்சகோணங்கள், ப.29.
136. மீட்டாத வீணை, ப.16; பஞ்சகோணங்கள், பக்.35, 40; முற்றத்து
ஒற்றைப்பனை, ப.40.
137.முற்றத்து ஒற்றைப்பனை, ப.40.
138. பஞ்சமர், ப.153.
139. இருளின் கதிர்கள், ப.202.

Page 196
386 必
140.அடிமைகள், ப.32, பஞ்சகோணங்கள், பக்.29, 114; பஞ்சமர்,
Lid. 169, 351.
141. பஞ்சகோணங்கள், ப.115.
142. முற்றத்து ஒற்றைப்பனை, ப.13.
143.அடிமைகள், பக்.41-42; போராளிகள் காத்திருக்கின்றனர், ப.3.
14. முருங்கையிலைக் கஞ்சி, பக்.3-4.
145. முற்றத்து ஒற்றைப்பனை, பக்.4-5.
146 முருங்கையிலைக் கஞ்சி, ப.29.
147 அடிமைகள், பக்.179-180.
148. பஞ்சமர், ப.66.
149. மேலது. ப.352.
150. மேலது. ப.353.
151. மேலது. ப.352.
152. மேலது. ப.351.
153.தண்ணீர், ப.83.
154. பஞ்சகோணங்கள், ப.35.
155.அடிமைகள், ப.150.
156.கோவிந்தன், ப.176.
157. பஞ்சமர், ப.261.
158. பஞ்சகோணங்கள், ப.24; பஞ்சமர், ப.261.
159. கானல், ப.22.
160. மேலது., பக்.62, 79; பஞ்சமர், ப.353.
161. மையக்குறி, ப.159.
162. கோவிந்தன், ப.214.
163. பஞ்சமர், பக்.309, 360.
164, மேலது. ப.312.
165. கானல், ப.82.
166.தண்ணீர், பக்.113, 118.

※,387
167 அடிமைகள், ப. 68, முருங்கையிலைக் கஞ்சி, ப.17
168.5IT667a), u.97.
169.அடிமைகள், ப.150.
170. கோவிந்தன், பக்.126, 187, 211.
171. புறம், பாடல் 216:1-4. 172. தொல். பொருள். நூற்பா 37.
173. Lfl., 10: 118-119.
174. TAMILLEXICON, Vol.IV, Part IV, p.2254. 175. கலைக்களஞ்சியம், தொகுதி 7, பக்.29-30.
176.பாஸ்கல் கிஸ்பர்ட், சமூகவியல் அடிப்படைக் கோட்பாடுகள்,
Lu. 23l.
177. சந்தானம், என்., கல்வி உளவியல், ப.140. 178. காந்தி, க, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், ப. 14. 179. பாஸ்கல் கிஸ்பர்ட், மு.கு.நூ., ப.232.
180. கழுகுகள், ப.24; நிலக்கிளி, ப. 58; நீண்டபயணம், ப.28;
தெணியான், போர்க்கோலம், ப.165; மரக்கொக்கு, ப.39.
181.தண்ணீர், ப.88. 182. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப. 102; மரக்கொக்கு, ப. 71. 183. கானல், ப.25; மரக்கொக்கு, ப.39. 184. நீண்டபயணம், ப.83. 185. பஞ்சகோணங்கள், ப.230. 186. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.45, 187. நீண்டபயணம், ப.82; மரக்கொக்கு, ப. 71. 188. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, பக்.44-45, 189,பஞ்சகோணங்கள், ப.51. 190. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.102. 191. மரக்கொக்கு, ப. 71.
192.கணேசலிங்கன், செ, சடங்கு, ப.135.

Page 197
388 «Х»
193. மேலது. பக்.134-135.
194. பஞ்சமர், பக்.350-355; கணேசலிங்கன், செ., போர்க்கோலம்,
ப.108; பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.104.
195.தண்ணீர், ப.100. 196.கணேசலிங்கன், செ, சடங்கு, பக்.134-135. 197 பஞ்சமர், பக்.350-355.
198. பஞ்சகோணங்கள், பக்.62, 194; பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, பக்.44-45, 80, 102, 117, 142; கணேசலிங்கன், செ. சடங்கு, பக்.37, 180, 189; தண்ணீர், பக்.71, 74, 85, 95, 135, 137-138; போராளிகள் காத்திருக்கின்றனர், பக்.75, 77, 94; நீண்டபயணம், பக்.25, 107, 179; அடிமைகள், ப.98; கானல், ப. 140; பஞ்சமர், பக்.350-35.
199, பஞ்சகோணங்கள், ப.62. 200. பொன்னுத்துரை, எஸ். சடங்கு, பக்.44-45. 201.தண்ணீர், பக்.71-74, 202.போராளிகள் காத்திருக்கின்றனர், ப.77. 203. கணேசலிங்கன், செ, சடங்கு, ப.26. 204.தண்ணிர், ப.155.
205.நீண்டபயணம், ப.64. 206. கானல், ப. 72; பஞ்சகோணங்கள், ப.153. 207. பஞ்சகோணங்கள், ப.200; கானல், பக்.32-33. 208. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப. 14.
209. கானல், ப. 72.
210. மேலது. ப.32. 211. செங்கையாழியான், பிரளயம், ப.131. 212. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.64; நீண்டபயணம், ப.45. 213. பிரளயம், ப.131.
214 முற்றத்து ஒற்றைப்பனை, ப.14 215. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.77. 216.தண்ணிர், பக்.4, 11

8 389
217.தண்ணீர், பக்.62-64, பஞ்சகோணங்கள், ப.325; பொன்னுத்துரை,
எஸ்., சடங்கு, ப.104; முருங்கையிலைக் கஞ்சி, ப.77. 218.தண்ணீர், ப.2. 219. தெணியான், பொற்சிறையில் வாடும் புனிதர்கள், ப.3. 220. மேலது. ப.3. 221. கணேசலிங்கன், செ, சடங்கு, ப.125. 222.தண்ணீர், ப.40. 223. மேலது., பக்.62-64. 224. பஞ்சகோணங்கள், ப.325. 225.தண்ணீர், ப.2. 226.கணேசலிங்கன், செ, சடங்கு, பக்.182, 187; தண்ணிர், ப.71. 227.கணேசலிங்கன், செ, சடங்கு, ப.165.
228. கானல், ப.203. 229.தண்ணீர், ப.100. 230. போர்க்கோலம், ப.27; தண்ணீர், ப.100. 231. முருங்கையிலைக் கஞ்சி, ப.84. 232. குமாரபுரம், ப.11; தண்ணிர், ப.49. 233. பொற்சிறையில் வாடும் புனிதர்கள், ப.102. 234.தண்ணீர், ப.124; பஞ்சமர், ப.195. 235. போடியார் மாப்பிள்ளை, ப.24. 236. குமாரபுரம், ப.11. 237. பஞ்சமர், ப.54. 238. மீட்டாத வீணை, பக்.31-32. 239. பஞ்சகோணங்கள், ப.71. 240. போடியார் மாப்பிள்ளை, ப.24. 241.தண்ணீர், ப.49. 242. போராளிகள் காத்திருக்கின்றனர், பக்.110-111. 243. அடிமைகள், பக்.75, 79.

Page 198
390 «Х•
24. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப. 102. 245. மேலது., பக்.95, 155. 246. போராளிகள் காத்திருக்கின்றனர், பக்.110-111.
247. காட்டாறு, ப.20; அடிமைகள், ப.217.
248. கானல், ப. 72; தண்ணீர், ப.141. 249. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.144; குமாரபுரம், ப.11.
250. காவோலை, ப.16.
251. கணேசலிங்கன், செ, சடங்கு, பக்.134-135.
252. காவோலை, ப.16.
253. fỂGðITL LuLu GOOTLib, Lu. 187.
254. காட்டாறு, ப.20.
255.தண்ணீர், ப. 156.
256. கானல், பக்.62, 79.
257 பஞ்சகோணங்கள், ப.28; முருங்கையிலைக் கஞ்சி, ப. 48;
பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, பக்.55, 58,
258. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.58,
259.அடிமைகள், பக்.11, 14. 260. கணேசலிங்கன், செ, சடங்கு, ப.84
261.தண்ணீர், ப. 69; கோவிந்தன், ப. 47; கானல், ப. 64;
முருங்கையிலைக் கஞ்சி, பக்.84-86.
262. மேலது.
263. பொற்சிறையில் வாடும் புனிதர்கள், பக்.39, 68.
264. பஞ்சமர், ப.22.
265. பாலசுப்பிரமணியன், கு. வெ. சங்க இலக்கியத்தில் கலையும்
கலைக்கோட்பாடும், ப.15.
266. இராமநாதன், ஆறு. மு.கு.நூ., ப.14.
267. கேசவன், கோ., நாட்டுப்புறவியல் கட்டுரைகள், ப.9.
268. மேலது., ப.9.

269. சக்திவேல், க., மு.கு.நூ., ப. 167 270. சிலப்., அடியார்க்கு நல்லாருரை. 271. வாழ்வியற் களஞ்சியம், தொகுதி 11, ப.380. 272. கலைக்களஞ்சியம், தொகுதி 6, ப.382. 273.கருணாகரன், கி., பாக்கியலட்சுமி, இரா., மு.கு.நூ., ப.31. 274. மேற்கோள், சக்திவேல், சு., மு.கு.நூ., ப.169. 275. சக்திவேல், சு., மு.கு.நூ., பக்.170-171. 276.இராமநாதன், ஆறு. மு.கு.நூ. பக்.146. 277. புறம், பாடல் 228, 256. 278.கணேசலிங்கன், செ, சடங்கு, பக்.29-30. 279. காவோலை, ப.27; கானல், ப.39; பஞ்சமர், ப.228; தண்ணீர், ப.41. 280. அடிமைகள், ப.132.
281. மேலது., ப.132.
282.தண்ணீர், ப.52.
283. மேலது. ப.86.
284. LuGbFLDri, Ludi. 26-27.
285. மேலது., ப.228.
286. காவோலை, ப.43.
287.தண்ணீர், ப.86. 288.கணேசலிங்கன், செ, சடங்கு, பக்.29, 30. 289. காவோலை, ப.27. 290. போராளிகள் காத்திருக்கின்றனர், பக்.8, 94
291. கானல், பக்.143-152.

Page 199
நாவல்களும் பழமொழியும்
வாய்மொழி சார்ந்த நாட்டார் வழக்காற்று வடிவங்களில் பழமொழியும் ஒன்றாகும். வழக்குமொழியில் வாழ்வியலுக்குப் பொருத்தமாகத் தொன்று தொட்டே பொருளைச் சுருங்கிய சொற்களில் செவிக்கு இனிமையாகக் கூறி விளங்கவைக்கும் பெருவாக்குத் தொடர்களைப் பழமொழி எனலாம்.
ஐரோப்பியர், அப்பிரிக்கர், அமெரிக்கப் பழங்குடிகள், ஆசிய, ஒசியானிய மக்கள் முதலாக உலகின் பல்வேறு இனமக்களிடமும் பழமொழிகள் சிறப்பாகப் பயின்று வருகின்றன. பழமொழியின் மிகுபழந்தொகுப்பு ஒன்று விவிலிய நூலில் இடம் பெற்றுள்ளமை கருதத் தக்கதாகும்.'
தமிழில், பழமொழியை, மூதுரை, முதுமை, மொழிமை, முன்சொல், முதுசொல், பழஞ்சொல் என இலக்கிய வழக்கிலும், சொலவடை, ஒவகதை, சொலவந்தரம், ஒப்புத்தட்டம் என வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபட்ட வழக்கிலும் குறிப்பிடும் பண்பு காணப்படுகிறது.
பன்னாட்டுப் பழமொழிகள் அவ்வந்நாட்டுக்கே உரிய இலக்கியம், சமயம், மரபுகள் முதலான அனைத்து விடயங்களையும் உள்வாங்கியனவாக அமைந்து காணப்படுகின்றன.
நாவல்களும் பழமொழியும் என்ற தலைப்பிலான இவ்வியலில் பழமொழியின் வரையறை, அதன் இயல்பு, அமைப்பு, கருப்பொருள், வகைப்பாடு, பயன்பாடு ஆகியன பற்றி விளக்குவதுடன், நாவல்களில் பயின்றுள்ள பழமொழிகள், குறித்த நாவல்களின் புனைதிறனுக்கு எவ்வாறு பயன்பட்டுள்ளன என்பது குறித்தும் நோக்கப் பெறுகின்றன.

பழமொழி: வரையறை
தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம், நுட்பம், சுருக்கம், விளக்கம், எளிமை ஆகிய நான்கு இலக்கணங்களும் வாய்க்கப்பெற்று குறிப்பிட்ட பொருளை உணர்த்தவல்லது பழமொழி எனக் குறிப்பிடுகின்றது. அந்நூற்பா 6) ICD5 DfT)1,
நுண்மையும் சுருக்கமும் ஒளியடைமையும் எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வருஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப."
பழமொழி, மக்கள் எல்லோரும் அறிந்த பருப்பொருளை மட்டும் உரைக்காது, நுட்பமான பொருளையும் கூர்மையான முறையில் உணர்த்துதல் வேண்டும் என்பது தொல்காப்பியர் கருத்தாக உள்ளது. உரையாசிரியர்களும் இக்கருத்தையே வலியுறுத்தியுள்ளனர்.
வாழ்வை ஊன்றிக் கவனித்து உணர்ந்த உண்மைகளின் துணுக்குகளே பழமொழிகள் என ஆங்கில அகராதி பழ்மொழிக்கு வரையறை செய்கிறது."
பழமொழி என்ற சொல்லே பழமொழி என்பதன் மிகச்சிறந்த வரையறையாக அமைகிறது என்பார் ஜான்லாசரஸ்"
பழமொழி எனப்படுவது உலகுக்கு உணர்த்தும் உண்மையை ஒரு சிறிய வாக்கியத்தின் மூலம் சுருக்கிக் கூறுவதாகும். அந்தப் பழமொழி முழுமையாக இல்லாவிடினும் அதை விளக்கிக் கூறும்போது முழுக்கருத்தும் வெளிப்படக் கூடிய வாய்ப்புள்ளது என்பார்துர்க்கா பகவத்."
"பழமொழி’ என்பதற்கு எளிதில் கவனிக்கக் கூடிய, சேகரிக்கக் கூடிய தொன்மை வாய்ந்த கருத்து" என ரிச்சர்டு டார்சனும், பழைய மொழியே பழமொழி, பழமொழிகள் பழைமையும், எளிமையும், இனிமையும் நிறைந்தவை. பழமொழிகளைக் கொண்டு மக்களின் பண்பாட்டையும், நாகரிகத்தையும் அறியலாம் என கிருட்டினா சஞ்சீவியும் கருத்துக் கூறுவர்."

Page 200
394 &
பழமொழி என்ற சொல்லே மிகப்பழைமை வாய்ந்தவற்றை உணர்த்துவதாகும். Lu Gud Ugl அறிவையும் ஒருவரது நுண்ணுணர்வையும் அறியமுடியும் அறிவின் சுருக்கமே பழமொழி என்பார் சு.சக்திவேல்."
இவ்வாறு மேலே சுட்டிய வரையறைகளின் வழி, வாழ்வின் அனுபவப் பிழிவுகளான பழமொழிகளுக்கு, சுருக்கம், தெளிவு, பொருத்தம் முதலான பண்புகள் இன்றியமையாதன என்பதனை உணரலாம்.
பழமொழியின் இயல்புகள்
பழமொழியானது தன்னளவில் பல்வேறு இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு வாய்மொழி வழக்காற்று வடிவமாகும்.
ஆர்.சி. ட்ரென்ச் (R.C.Trench) என்பவர், பழமொழிகளுக்குப் பின்வரும் ஐந்து இயல்புகளை முதன்மைப்படுத்துகின்றார். அவை வருமாறு, பழமொழி ஒரே மூச்சில் சொல்லக் கூடியதாக இருக்கவேண்டும். சுருக்கம் அதன் மூலப்பண்பாகும்; சிறந்த பொருள் தருவதாகச் செறிவு இருத்தல் வேண்டும்; காரசாரமாகக் கூர்மையுடன் திகழவேண்டும்; எல்லாவற்றையும் விட, மக்களால் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, விரும்பப்பட்டு, அன்றாட வாழ்க்கையில் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுப் பயன்படுத்தப்படல் வேண்டும்."
மேலே குறிப்பிட்ட இயல்புகள் தொல்காப்பியர் குறிப்பிடும் பழமொழிக்கான வரையறைகளுடன் பெரிதும் ஒத்துப்போகின்றமை கருதத்தக்கதாகும்.
ஆர்.சி. ட்ரென்ச் குறிப்பிடும் இயல்புகளை ஏற்றுக்கொள்ளும் தே.லூர்து, மேலும் சில பண்புகளை அவற்றுடன் இணைக்க வேண்டும் என்கிறார். அவையாவன;
(1) கோட்பாட்டளவில் காண்கையில் ஒரு பழமொழியில் இரு சொற்கள் இருந்தே தீரும். ஒரு சொல்லில் பழமொழி அமையாது. ஆனால் ஒரு சொல்லைக் கொண்டமையும் வழக்காறுகள் உண்டு. எனினும் அவற்றைப் பழமொழி என்று கூறுவதில்லை.

& 395
(2) பழமொழிகள், வாய்மொழி இலக்கிய வழக்காறுகளில் நிலைத்த தொடர் அமைப்புடையனவாம்.
எதுகை, மோனை, முரண்தொடை போன்ற ஒலிநயங்களைப் பழமொழியிலும் காணலாம்.
(4) பழமொழிகள் பிறிதுமொழி அணிகளைப் போலக் கருதிய பொருளை மறைத்து, ஒன்று சொல்லி மற்றொன்றை விளக்குவனவாக அமையும்.
(5) பழமொழி, அது வழங்கும் இயற்கைச் சூழலைப் பொறுத்தே பழமொழியாகும்.
(6) பழமொழி உருவகமாகவும் அமையும்.
(7) பழமொழி உவமைப் பண்பு கொண்டது. ஆனால் உவமைகள் எல்லாம் பழமொழிகள் அல்ல.
(8) பழமொழி நேர்பொருள் உணர்த்தும்.
(9) பழமொழி தற்சார்பற்றது.
(10) வாழ்க்கை அனுபவத்திலிருந்து சிக்கலைத் தீர்க்க உதவுவது பழமொழி.
(11) சில பழமொழிகள் சில கதைகளைப் பிழிந்தெடுத்த சாறுபோல அமைகின்றன."
தே.லூர்து குறிப்பிடும் மேற்குறித்த இயல்புகளுடன் பின்வரும் பண்புகளையும் இணைத்துக் கொள்ளலாம். அவையாவன,
(12) மக்களின் வாழ்க்கை அனுபவக் கூறே பழமொழியில் உருப்பெறும்.
(13) பழமொழி தனக்குரிய கருத்துப் புலப்பாட்டை ஒரு கவிதைத் தன்மையோடு வெளிப்படுத்துவது.
(14) பழமொழி பண்பாட்டுப் பயிற்சி, மொழி ஆளுமை என்ற இரண்டின் சின்னமாகும்.

Page 201
396 «Х•
மேலே குறிப்பிட்ட இயல்புகளை உள்வாங்கியனவாகப் பழமொழிகளுக்குப் பதினாறு தனித்தன்மைகளைக் குறிப்பிடும் க. சாந்தி, அவை எல்லாப் பழமொழிகளுக்கும் பொருந்திவர வேண்டும் என்ற நியதி இல்லை எனக் குறிப்பிடுகிறார்."
பழமொழிகள் சங்கேதமொழி (Code Word) போன்றன. அவற்றின் மொழிநடை (Telegraphic pattera) தந்தி மொழிநடையைச் சார்ந்ததாகும். மிகப் பெரிய செய்தியை உள்வாங்கிய சிறிய வடிவமாகப் பழமொழி அமைந்துள்ளதெனலாம்.
பழமொழியின் அமைப்பு
பழமொழியின் அமைப்புப் பற்றிக் குறிப்பிடும் ஆலன் டண்டிஸ் (Aln Dundes) 676Ti55 %pu (Descriptive element) p 6itGIT upGldty) ஒன்றுக்குத் தலைப்பும் (Topic), முடிபுரையும் (Comment) முக்கியமான கூறுகள் என்பார்."
பழமொழிகள் எனப்படுபவை மிகக் குறைந்த சொற்கூறுகளைக் கொண்டமைந்தவை. ஒருவரி இரண்டு வரியிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கும் இச்சொற் கூறுகள் சேர்ந்து ஒருதனிவடிவமே கிடைக்கிறது. இதனைப் படைக்கின்ற மனித சமுதாயம் பழமொழிகளைக் குறைந்த, குறிப்பிட்ட வடிவத்திலேயே அமைகின்றது என்பார் லெவிஸ்ட்ராஸ்.*
உவமையாகவும் பழமொழி அமையலாம். அனால் எல்லா உவமைகளும் பழமொழிகள் அல்ல. போல, மாதிரி என்ற உவம உருபுகள் கொண்ட உவமைகள் பழமொழிகள் போல அமைவதுண்டு. உவம வாக்கியங்கள் மக்கள் வாக்கில் பன்முறை பயின்று வருவதால் இவற்றைப் பழமொழி என்கிறோம். ஒரு மொழிக்குரிய மக்கள் பழமொழிகளை மிகுதியாகப் படைக்காமல், உவமைத் தொடர்களாகவே தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் என்றால் அதனை அந்த மக்களின் தனிச்சிறப்பாகக் கருதிக் கொள்ளலாம்.
ஒருவாக்கியம் பழமொழியா இல்லையா என்பதனை, அது நாள் வழக்கில் மக்களால் பயன்படுத்தப்படும் இயற்கையான சூழலைக் கொண்டே வரையறுக்கமுடியும். சூழலினின்றும் நீக்கிப்பார்ப்பின் அது வெறும் வாக்கியமாகவே தோன்றும்.

※,397
ஆகுபெயரைக் குறிக்கும் இலக்கணிகள் தொன்முறையாக வருவன என்பர். இந்தத்தன்மை பழமொழிக்கும் உண்டு. ஆகுபெயர், அன்மொழித்தொகை, பழமொழி ஆகிய மூன்றும் தொடர்ந்த வழங்கற்பாடு பற்றி வருவன.
பழமொழியின் கருப்பொருள்
பழமொழிகள், சமூகத்தின் பல்வேறு நடைமுறைகளையும் கருப்பொருள்களாகக் கொண்டமைபவை. குறிப்பிட்ட விடயங்களைத்தான் பேசவேண்டும் என்ற எந்தவொரு வரையறைகளுக்குள்ளும் பழமொழிகள் கட்டுப்படுவதில்லை. நாட்டுப்புற மக்களின் ஆழ்ந்த அறிவைப் பிரதிபலிக்கும் இப்பழமொழிகள், அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் நிகழும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தமது கருப்பொருட்களாகக் கொண்டவையாக உள்ளன. பொதுநிலையில் பழமொழியின் கருப்பொருள்களை மக்கள் இனம் (Human beings), விலங்கினம், மரம், செடி கொடி இனம், பண்பாடு, பல்பொருள் என ஐந்துவகையாகப் பிரித்து, அவற்றின் உட்பிரிவுகளாக, இயற்கை, மனித உலகம், விலங்குகளும் பறவைகளும், மரம், செடி, கொடிகள், குடும்பம், சாதி, வேளாண்மை, கல்வி, பொருளாதாரம், தத்துவம், தெய்வம், மாதம், கிழமை, நம்பிக்கை, பழக்கவழக்கம், வானிலை, பல்பொருள் எனப் பலவற்றைக் குறிப்பிடுவர்."
பழமொழியின் வகைப்பாடு
இயல்புத் தன்மையாகவும், உவமைத் தன்மையாகவும், உருவகத் தன்மையாகவும் காணப்படும் பழமொழிகளை அவற்றின் அளவு, பொருள், அகரவரிசை, அமைப்பியல், பயன் முதலான பல்வேறு அடிப்படைகளைக் கொண்டு வகைப்பாடு செய்யலாம்.
சுமித் என்பவர் பழமொழிகளை, உவமைத்தன்மையன, கேலித் தன்மையன, சிலேடைத் தன்மையன, மரபுத் தொடர்கள், சொற்றொடர்கள், விடுகதைத் தன்மையன, ஒலி இயைபின் என ஏழு வகையாகவும், அப்ரஹாம் என்பவர் நேர் சமமதிப்பு, எதிர்மறை சமமதிப்பு, நேரடிக்காரண காரியத் தொடர்பு, எதிரிடைக் காரணகாரியத் தொடர்பு என நான்காகவும், பிரெளனே (B.Browne) என்பவர், இலக்கியப் பழமொழி (Literary), இலக்கியமில்லாப்

Page 202
398 &
பழமொழி (Non Literary) அல்லது மரபுப்பழமொழி என இரண்டாகவும் வகைப்பாடு செய்கின்றனர்."
தே.லூர்து, பழமொழிகளை, அமைப்பியல் நோக்கில் முரணற்ற Lugp G)LD Tus5756ïr (Non-oppositional Proverbs), (UpJg59/60) Lus பழமொழிகள் (Oppositional Proverbs), முரணுடைய முரணற்ற Jogja,6061Ti (6.5IIGirl Lupol DITL556ir (Proverbs with Non-oppositio0nal and oppositional Features) என மூன்றாக வகைப்பாடு செய்கின்றார்."
க. சாந்தி, பழமொழிகளை எழுத்துமுறை, பேச்சுமுறை என இரண்டு வகையாகப் பாகுபடுத்தி, பேச்சு முறைப் பழமொழியை உருவ அடிப்படையில் அமைந்தது, பொருள் அடிப்படையில் அமைந்தது என இரண்டு பிரிவாகவும்,' க. சக்திவேல், அளவு sgy glülu Go (Size Basis), Gu TC56ír egy glüL160) L.- (Subject Basis), அகரவரிசை அடிப்படை (Alphabetical Basis), அமைப்பியல் அடிப்படை (Structural Basis), பயன் அடிப்படை என ஐந்து வகையாகவும் வகைப்பாடு செய்துள்ளனர்."
பழமொழியின் பயன்பாடு
பழமொழிகள் உலகின் பல்வேறு சமூகத்தினரிடையேயும் வழக்கிலிருந்து வருகின்றன. நாகரிகத்தில் முன்னேறிய மக்களிடம் மட்டுமன்றி, பழங்குடிகள், இனக்குழுவினர் மத்தியிலும் பழமொழிகளின் பயன்பாடு மிக அதிகமாகக் காணப்படுகின்றது.
பழமொழிகளின் பயன்பாடு என்பது உலகளாவிய நிலையில் ஒரே தன்மையுடையதாகவே அமைந்துள்ளமை கருதத்தக்கதாகும். கண்டித்தல், ஒத்துக்கொள்ளுதல், வசை கூறுதல், முறையிடுதல், உண்மையுரைத்தல், கட்டளையிடுதல், மறுத்தல், உடன்படுதல், எச்சரித்தல், மேற்கோள் காட்டி வாதிடல் முதலான பல்வேறு நடை முறைகளில் பழமொழிகளை நாட்டுப்புற மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு பழமொழிக்கும் பின்புலமாக ஒரு நிகழ்வு உண்டு. அந்நிகழ்வே அப்பழமொழியின் தோற்றக் காரணியாகும். மனித அனுபவம், நாட்டுப்புறக் கதைகள், நாட்டுப்புற நம்பிக்கைகள், புகழ்பெற்ற சமயப்புராணங்கள், சமய சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், காப்பியங்கள் முதலானவை பழமொழிகளின் தோற்றக் காரணிகளில் குறிப்பிடத் தக்கனவாகும்.

8 399
நாவல்களில் பழமொழியின் பயன்பாடு
நாவல்களைச் சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள் எனப் பொதுவாக வகைப்படுத்துவர்.* சமூக நிறுவனங்களைப் பற்றியும், மனித மனப்பாங்கு, மனிதப்பழக்க வழக்கங்களின் மறைகள் முதலானவை பற்றிப் பேசுவது சமூகவியல் ஆகும். யதார்த்தம் எனப்படும் நடப்பியற்பண்பு கொண்ட வட்டார வழக்கு நாவல்களில் மேற்படி சமூகவியற் பண்புகள், நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை முறை, பேச்சுவழக்கு, பண்பு நலன்கள் முதலான அனைத்தும் அடங்குகின்றன. இவ்வகையில் நாட்டுப்புறங்களைப் பின்னணியாகக் கொண்டமைந்த ஈழத்துத்தமிழ் நாவல்கள் பலவற்றிலும் பழமொழியின் தாக்கம் என்பது இயல்பான ஒன்றாகவே அமைந்துள்ளதெனலாம்.
நாவல்களில் பழமொழிகள், பாத்திரம் தனக்குத் தானே பேசுவதாக அமையும் பொழுதும், பிறருடன் பேசும் பொழுதும் என இருவேறு நிலைகளில் இடம்பெறுகின்றமையைக் காணலாம். கரு, கதைப்பின்னல், பாத்திரப்படைப்பு முதலான பல்வேறு நிலைகளில் பழமொழிகளின் பயன்பாட்டை உணரலாம்.
பேச்சுமாந்தர்கள் உணர்ச்சி நிலையில் இருக்கும்போது பழமொழிகளை மிகுதியாகப் பயன்படுத்துவதனைக் காணமுடிகிறது. பாத்திரங்கள், தங்களுடைய உணர்ச்சியை நியாயப்படுத்திக் கொள்ளவும், கேட்பவருக்குத் தாம் கூறுவது சரியானது என்று வலியுறுத்துவதற்கும் பழமொழியைப் பயன்படுத்துகின்றனர்.
நாவலில், பழமொழிகள் இயல்பாக இடம்பெற்றுவிடுவன என்றாலும், ஏதேனுமொரு உள்நோக்கத்திற்காகவும் ஆசிரியரால் பழமொழிகள் பயன்படுத்தப்படுவதும் உண்டு.
நாவலில், கதை மாந்தர்களின் பண்புகளை விளக்கி உரைத்தற்கும், கருத்தை விளக்கியுரைத்தற்கும், கதைப் பின்னலுக்கும், அறக்கருத்தக்களை உரைத்தற்கும், உலகப்பொதுவான உண்மைகளை உரைத்தற்கும், கதைமாந்தர்களின் குறிப்பிடத்தக்க மனநிலைகளை நுட்பமாக வெளிப்படுத்துவதற்கும்

Page 203
{
&
4OO
எனப் பல்வேறு நிலைகளில் பழமொழிகள் பயன் பட்டுள்ளமையினைக் காண முடிகிறது.
கதைமாந்தர் பண்பு விளக்கத்தில் பழமொழிகள்
நாவலின் மகத்துவம் மனிதனைச் சிருஷ்டிக்கும் திறத்தைப் பொறுத்திருக்கிறது" என்ற கருத்து நாவலில் பாத்திரப்படைப்பின் முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டுகின்றது. பாத்திரத்தின் வாழிடம், செய்யும் தொழில், குணஇயல்புகள், வாழ்க்கை அனுபவம், பண்பு முரண்பாடுகள், மனநிலை மாற்றங்கள் முதலானவற்றைப் புலப்படுத்தும் வகையில் நாவல்களில் பழமொழிகள் பயின்றுள்ளதனைக் காண முடிகிறது.
பொய்மை
பஞ்சமர் என்ற நாவலில் வரும் விதானையார் என்பவரின் மனைவிக்கும், அவர்களின் வீட்டிலே வேலைக்காக அமர்த்தப்பட்டவனான மாயாண்டிக்கும் இடையில் தவறான உறவு ஏற்பட்டுவிடுகிறது. ஆயினும் வெளியிலே அவ்வாறான எந்தவொரு தவறுமே செய்யாதவள் போல விதானையாரின் மனைவி நடமாடுகிறாள். இம்முரண்பட்ட நடத்தையினைக் கேலி செய்யும் ஐயாண்ணர் என்ற பாத்திரம்,
ஒய்யாரக் கொண்டையிலே தாழம் பூவாம் அதன் உள்ளேயிருப்பது ஈரும் பேனாம்"
எனக் குறிப்பிடுவதனூடே நன்றாகச் சீவிச்சிங்காரித்து இருக்கும் கொண்டை வெளிப்பார்வைக்கு அழகானதுதான். ஆயினும் அதன் உள்ளே பிரித்துப் பார்த்தால்தான் ஈரும் பேனும் இருப்பது தெரியவரும் என்ற கருத்துப்பட, குறித்த பழமொழியினைக் கையாள்வதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. இக்கூற்றில் ஓர் உருவக அமைப்புப் பொருந்தியிருப்பதை அறியலாம்.
பஞ்சமர் என்ற நாவலில் வரும் சண்முகம்பிள்ளையின் மரணச்சடங்கில் தங்கள் குடிகளுக்குரிய கடமைகளை ஆற்றுவதற்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் மறுத்துவிடுகின்றனர். இந்தச் செய்தியை வெளியே சொன்னால் அது சண்முகம் பிள்ளையின் குடும்ப

«Х• 401
கெளரவத்துக்கு மரியாதைக்கேடு எனக் கருதும் வல்லிபுர வாத்தியார், விடயத்தை மழுப்பிச் சுற்றிவளைத்துச் சொல்ல, அருகிலிருப்பவர்,
முழுப்பூசணிக்காயைச் சோற்றில் புதைக்காதையுங்கோ'
என்ற பழமொழியைக் கூறிப் பொய் கூறாது, குடிமைகளுக்கும் சண்முகம்பிள்ளையின் குடும்பத்துக்கும் இடையிலான உறவு சரியில்லை என்ற உண்மையினைப் ‘பூசி மெழுகாமல் உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டுகின்றார்.
பஞ்சமர் என்ற நாவலில் வரும் குமாரவேலனின் பிறப்புத் தொடர்பான மர்மம் பற்றிக் குறிப்பிடும் சின்னப்பெட்டையின் செய்திகளில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் பெரிய கறுப்பி,
மொட்டைந் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக் கூடாது”
எனக் கூறி, வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த சின்னக்கமக்காரிச்சியின் வயிற்றில் வண்ணாரச் சமூகத்தைச் சேர்ந்த செல்லப்பனின் வாரிசு எப்படிப்பிறக்கும் என வினவுகிறாள். மொட்டந்தலையின் முடிகொண்டு முழங்காலுக்கு முடிச்சுப் போடமுடியாது. அதுபோலவே உண்மையை உள்ளபடி கூறும்படி வேண்டும் நோக்கில் இப்பழமொழி கையாளப்பட்டுள்ளது. இது சாதிச் சமூக அடிப்படையைத் தெளிவுறக் காட்டப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இப்பழமொழியை வேறு எவற்றுக்கும் பயன்படுத்த முடியும். இங்குச் சமூக அமைப்பைக் குறித்ததாக இப்பழமொழி அமைகின்றது.
பஞ்சமர் என்ற நாவலில், அரசியல்வாதிகளின் பேச்சுக்கும் நடைமுறையில் அவர்களின் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள பொய்மையினைப் பற்றிக் குறிப்பிடும் ஐயாண்ணர்,
பேச்சுக்குப் பல்லக்கு தம்பி கால்நடைதான்*

Page 204
402 «Х•
என்ற பழமொழியினைக் குறிப்பிடுவதன் மூலம் எல்லாமே வெறும் பேச்சுத்தான்; நடைமுறையில் ஒன்றுமே நடப்பதில்லை என்ற கருத்தை வெளியிடுகிறார்.
துணிவு
மரக்கொக்கு என்ற நாவலில் வரும் அன்னலட்சுமி, தனது கணவனால் விடுக்கப்பட்ட விவாகரத்து மிரட்டரை எதிர் கொண்டபோது,
வெள்ளம் தலைக்கு மேலே போனால் சாண்போனால் என்ன முழம் போனால் என்ன?
என்ற பழமொழியைக் குறிப்பிட்டுக் கணவனின் மிரட்டல்களுக்குப் பணிந்து போகத் தான் ஒன்றும் “கிள்ளுக்கீரை அல்ல எனக் கூறித் தனது துணிவினை வெளிப்படுத்துகிறாள்.
பஞ்சகோணங்கள் என்ற நாவலில், சமூக அதிகார அடுக்கமைவில் தன்னிலும் தாழ்த்தப்பட்டவறான செல்லியைத் திருமணம் செய்ய முன்வரும் சுப்பையா வாத்தியாலை நோக்கி,
நீந்திறதுக்கெண்டு வெளிக்கிட்டால் தண்ணிக்கை இறங்கத்தான் வேண்டும்"
என்ற பழமொழியை உதிர்க்கும் கிட்டிணன், சமூக ஒடுக்கு முறைகளை உடைத்தெறிய முன்வரும் சுப்பையாவாத்தியாரின் நெஞ்சத்தணிவினைப் பாராட்டுகின்றான்.
பஞ்சமர் என்ற நாவலில், வஞ்சகர்களின் சூழ்ச்சியினால் கொலை செய்யப்பட்ட இரத்தினத்தின் வீரச்சாவை எண்ணிப் பெரு மிதம் கொள்ளும் குமரேசன்,
ஆறிலும் சா நுறிலும்சா"
என்ற பழமொழியைக் கையாள்வதன் மூலம் ‘சாவு’ என்பது ஒருவருக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதை எண்ணிக் கலங்குவதிற் பயனில்லை என்ற தனது மனத் துணிவினை வெளிப்படுத்துகிறான்.

* 403
பஞ்சமர் என்ற நாவலில், சாதிவெறியர்களின் கொடுமைகளினாலே தளர்ந்துபோன மக்களைப் பார்த்து,
நிலவுக்கொளித்துப் பரதேசம் போகமுடியாது*
எனக் கூறும் ஐயாண்ணர் என்ற பாத்திரம், கொடுமைகளுக்கு எதிர்நின்று போராடி உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை மேற்படி பழமொழியின் மூலம் வெளிப்படுத்துவதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
தன்மானம்
பஞ்சகோணங்கள் என்ற நாவலிலே, தாழ்த்தப்பட்டவளான செல்லியைத் திருமணம் செய்து கொள்ள விரும்பும் சுப்பையா வாத்தியாரின் உண்மை நிலைபற்றி அறியாமல், அவளை *வைப்பாடிச்சியாக வைத்திருப்பதற்குத்தான் சுப்பையா வாத்தியார் விருப்புகின்றார் என ஊகித்த பூதி என்பவள்,
வெள்ளியிட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையில்லை"
என்ற பழமொழியின் மூலம், தாழ்த்தப்பட்டதனாலும், ஏழை என்பதனாலும் யாரும் யாரையும் அடிமையாக்கிக் கொள்ளமுடியாது என்றும் அவர்களுக்கென்று இலட்சியங்கள், அபிலாசைகள், சுயமரியாதை என்பன உண்டு என்றும் வெளிப்படுத்துகின்றாள்.
தண்ணீர் என்ற நாவலில், கணவனை இழந்தவளான பம்பிசிங்கி என்பவளின் இளமையை அனுபவிக்கத் தூதுவிடும் ஆறுமுகத்தாருக்கு,
மழைக்கால இருட்டெண்டாலும் மந்தி கொப்பிழக்கப்பாயாது"
எனப் பம்பிடி சிங்கி குறிப்பிடுவதன் மூலம் எந்தவொரு
சூழ்நிலையிலும் தான் நிதானத்தை இழப்பவளல்லள் எனத் தனது மான உணர்வினை வெளிப்படுத்துகின்றாள்.

Page 205
404 «Х•
பவிசு (வீண்பெருமை)
பஞ்சகோணங்கள் என்ற நாவலில், நயினார் பரம்பரையிலே வராத இளையதம்பியரின் அடாவடித்தனமான நடவடிக்கைகளைக் கண்ணுற்ற சுப்பையா வாத்தியார்,
நிறை குடம் தளம்பாது;
அற்பனுக்கு பவிசுவந்தால் அர்த்தராத்திரியிலும் குடைபிடிப்பான்”
ஆகிய பழமொழிகளைக் குறிப்பிடுவதன் மூலம், பணச் செருக்கினால் பிறரை மதிக்காமல் வீண் பெருமை கொண்டு திரியும் இளையதம்பியரின் பண்பினைச் சாடுகின்றார்.
மனமாற்றம்
கானல் என்ற நாவலில், தம்பாப்பிள்ளையரும் முருங்கையிலைக் கஞ்சி என்ற நாவலில், ஆறுமுகத்தாரின் மனைவி வள்ளிப்பிள்ளையும், பஞ்சமர் என்ற நாவலில், செல்லப்பனும் தமது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து பிறழ்ந்தபோது,
விழுந்தபாட்டுக்குக் குறிசுடக் கூடாது”
என்ற பழமொழி மூலம் பிறரால் கண்டிக்கப்படுகின்றனர். காளை மாடுகளுக்குக் குறிசுடுவது வழக்கமான நிகழ்வாகும். குறியைச் சுடுமுன்னர் அதற்கான இடத்தினை நிச்சயித்து அந்த இடத்தில் குறியைச் சுடுவதே வழக்கமாகும். அவ்வாறு சுடாமல் மாடு விழுந்தபாட்டுக்குக் குறி சுடுவதுமுண்டு. இவ்வாறான செய்கையினை அடிப்படையாகக் கொண்டமைந்ததே மேற்படி பழமொழியாகும். இப்பழமொழி மூலம் மேற்படி பாத்திரங்களின் உறுதியற்ற நிலைப்பாடு புலப்படுத்தப் பட்டுள்ளதெனலாம்.
வம்புபேசுதல்
பஞ்சமர் என்ற நாவலில் வரும் சின்னாச்சி என்பவள் ஊரில் உள்ள புதினங்களை (செய்திகள்) எல்லாம் தனது நுனிநாக்கில் வைத்துத் கொண்டிருப்பவளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். இத்தகைய பண்பு கொண்டவளை,

0.
X
4.
O
5
ஊசிக்குள்ளால புகுந்து உலக்கைக் குள்ளால வரக்கூடியவள்”
என்ற பழமொழியைச் சுட்டிக் குறிப்பிடுவதனூடே அவளுடைய வம்பு பேசும் சுபாவத்தினைக் கமலாம்பிகை அம்மாள் வெளிப்படுத்துகின்றாள்.
செயல்திறன்
சடங்கு என்ற நாவலில், தனது பிள்ளைகளான நவரத்தினத்துக்கும் அவனின் தங்கை அன்னலட்சுமிக்கு மிடையிலான காணிப்பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும்படி தனது மருமகனை வேண்டும் செல்லப்பாக்கிய ஆச்சி,
வாயிருந்தால் வங்காளம் வரை போகலாம்*
என்ற பழமொழியை உதிர்ப்பதனூடே தன்னால் அந்தக் காரியத்தினை உரிய முறையில் நிறைவேற்ற முடியும் என்பதனையும் மறைமுகமாக உணர்த்துகின்றாள்.
as Lng) & Golf
பஞ்சகோணங்கள் என்ற நாவலில் வரும் இளையதம்பியரின் காம இச்சைப் பண்பினைக் கேலி செய்யும் இராசரெத்தினம்,
காக்கைக்குக் கனவிலும் பீதின்னுற நினைப்பு"
என்ற பழமொழி மூலம், இளையதம்பியரின் எண்ணம், செயல் யாவும் உடற்சுகம் பற்றியே சுற்றிச் சுற்றி நிற்பதாகக் குறிப்பிடுகின்றார். மேலும் வயது வேறுபாடின்றிக் கண்டவர்களிடமெல்லாம் உறவு வைத்துக் கொள்ள விரும்பும் இளையதம்பியரின் மனோநிலையை,
அலைஞ்ச நாய் பீயில விழுகிற மாதிரி
என்ற பழமொழி மூலம் செல்லி என்பவள் சாடுகின்றாள். உணவு தொடர்பான எந்தவொரு இலக்குமில்லாத நாய், மலம் கிடைத்தாற்

Page 206
406 «Х•
ඵ්න. 4 - அதில் விழுவது போல இளையதம்பியரும் அகப்பட்டவர்களில் சுகம் காணும் பண்புடையவர் என்பதனை மேற்படி பழமொழி உணர்த்தி நிற்கின்றது. இப்பழமொழிகளின் வழியாக அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல் என்பது பழமொழிக்கில்லை என அறியலாம்.
அவசரபுத்தி
பஞ்சகோணங்கள் என்ற நாவலில் வரும் செல்லி என்பவள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலைத் தளங்களிலே நிகழ்த்தப்படுகின்ற பல்வேறு கொடுமைகளையும் தட்டிக்கேட்பதில் ஆர்வம் கொண்டவளாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். உயர் சாதி வேளாளரின் நிலபுலன்களில் குடியிருந்து கொண்டே அவர்களை எதிர்த்துப் போராடுவது சிரமம் என்றும் இதுவிடயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பூதி என்பவள்,
சுடுகுது மடியைப் பிடி"
என்ற பழமொழியைக் கூறி எந்தவொரு விடயத்தையும் எழுந்தமானத்தில் (நினைத்தவுடன்) செய்யக் கூடாதென்றும், எதனையும் நன்றாகச் சிந்தித்த பின்னரே செய்தல் வேண்டும் என்ற கருத்துப்படச் செல்லியின் அவசரபுத்திக் குணத்தைக் கடிகின்றாள்.
எள்ளல்
ஒருவரை ஒருவர் கேலி செய்து நகையாடும் காட்சிகளில் பழமொழி இடம்பெறும் இரு பொருளையும் மறை பொருளையும் தந்து சுவைபயப்பதுண்டு. பஞ்சகோணங்கள் என்ற நாவலில் வரும் செல்லி என்பவளின் பிறப்பில் மர்மம் காணப்படுகின்றது. செல்லி, ஒரு உயர்சாதி வேளாளனுக்குத்தப்பான வழியில் பிறந்த பெண் என்ற உண்மையினை அறிந்த இளையதம்பி, வேண்டுமென்றே செல்லியின் தந்தையைப்பற்றிப் பூதியிடம் கேட்கின்றார். பூதியிடம் விளக்கத்தில் திருப்தியுறாத அவர், செல்லியின் உருவச் சாயலைப்பார்த்து,
பாவற் கொட்டை போட்டால் கரைக் கொடியோ முளைக்கும்*

8 407
என்ற பழமொழியை எள்ளல் தொனியில் வெளியிடுகின்றார். செல்லியின் பிறப்புப் பற்றிய உண்மையினை யாரும் மறைக்க முடியாது எனக் கூறும் இளையதம்பியர், பாவற்கொட்டை போட்டால் பாவற் கொடிதான் முளைக்கும் என மேற்படி பழமொழி மூலம் உணர்த்துகின்றார். இது தமிழ் நாட்டில் விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா என வழங்குகின்றது.
GLUTGD5
பஞ்சகோணங்கள் என்ற நாவலில் வரும் இளையதம்பியர், தன்னை உருவாக்கி, வளர்த்துவிட்ட மருதப்பரை உதாசீனம் செய்து, மேலும் மேலும் பொருள் குவிப்பதிலேயே ஆர்வம் கொள்கின்றார். மருதப்பருக்கு இளையதம்பியரின் இவ்வாறான போக்குப் பிடிக்கவில்லை. இதனை,
சதை கண்ட இடத்தில் கடிக்கக் கூடாது"
என்ற பழமொழி மூலம் பொருள் குவிப்பதான நோக்கில் எவரையும் சட்டைசெய்யாத இளையதம்பியரின் பேராசைக் குணத்தைக் கடிகின்றார்.
தகுதிக்கு மீறிய ஆசை
வாடைக்காற்று என்ற நாவலில் வரும் விருத்தாசலம், தனது முறை மச்சாளான நாகம்மாமீது காதல் கொள்கிறான். விருத்தாசலத்தின் காதலை ஏற்றுக்கொள்ளாத நாகம்மா, பொருளாதார நிலையில் மிகவும் மேம்பட்டவனான மரியதாசின் மீது மையல் கொள்கிறாள். இறுதியில் அவனையே திருமணமும் செய்கின்றாள். நாகம்மா தனக்குக் கிடைக்காத ஏக்கம்பற்றிக் குறிப்பிடும் விருத்தாசலம்,
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படக் கூடாது"
என்ற பழமொழியைக் குறிப்பிட்டு நிரந்தரத்தொழிலும்,
தாய்தந்தையருமற்ற தன்னை நாகம்மா விரும்பாது நியாயமே எனக் கூறித் தன்னளவில் அமைதி காண்கிறான்.

Page 207
408 «Х•
சடங்கு என்ற நாவலிலே, இராசரெத்தினத்துடன் காதல்வயப்பட்டிருந்த காலத்தில் காதலுக்காக உயிரையும் தியாகம் செய்வதாகக் காதல் தத்துவங்கள் பேசிய பத்மா, விதிவசத்தால் வேறொருவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். எதிர்பாராத விதத்தில் இராசரெத்தினத்தைச் சந்தித்தபோது ‘காதல் என்பது வெறுங்கனவு’ என்ற பொருள்படக் கூறுகின்றாள். இதனைக் கேட்ட இராசரெத்தினம்,
எட்டாத பழம் புளிக்கும்"
என்ற பழமொழியைக் கூறி, அவளின் ஆசை நிறைவேறாத நிலையினையும், தகுதிக்கு மீறிய அவளின் ஆசையினையும் உணர்த்துகின்றார்.
தந்திரம்
பஞ்சகோணங்கள் என்ற நாவலில் வரும் கிராம அலுவலர், சந்தர்ப்பத்துக்கேற்பக் கொள்கைகளை மாற்றித் தனது பிழைப்பைக் கவனிப்பதிலேயே குறியாகச் செயற்படுகின்றார். இளையதம்பியரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கறுப்பையனின் மரணம் பற்றி, சுப்பையாவாத்தியார் குறித்த கிராம அலுவலரிடம் முறையிட விரும்புகின்றார். இதனைக் கேள்விப்பட்ட மருதப்பர்,
தயிரிருக்கச் சட்டியை நக்குகிற தந்திரமான பூனை?
என்ற பழமொழி மூலம் கிராம அலுவலர், மரணம் பற்றிய இரகசியத் தகவல்களை எதிராளியிடம் பரிமாறிக் குறிப்பிட்ட தொகைப்பணத்தை வார்கி விடுவார் என அவரின் தந்திர குணத்தை வெளிப்படுத்துகிறார்.
தண்ணிர் என்ற நாவலில் வரும் கார்ச் சாரதியான நல்லதம்பியன் தருணம் பார்த்துக் காரியம் ஆற்றுவதில் வல்லவனாகச் சித்திரிக்கப்பட்டுள்ளான், மூத்ததம்பி நயினாருடன் நல்லுறவை வைத்துக் கொண்டே அவரின் மனைவியிடமும் கள்ள உறவைத் தொடரும் அவனது தந்திரக் குணத்தை,
ஒடுமீன் ஓடி உறுமீன் வருமட்டும் வாடி நிற்குமாம் கொக்கு"

& 409
என்ற பழமொழி கொண்டு பம்பிடிசிங்கி என்பவள் வெளிப்படுத்துகிறாள்.
குற்றம் காணும் இயல்பு
கானல் என்ற நாவலில் வரும் ஐயாண்ணர் எந்த விடயமானாலும் அதன் சரிபிழைகளை நுணுக்கமாக ஆராயும் பண்புடையவராகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். அவருடைய இப்பண்பினை,
முட்டையில மயிர் பிடுங்குதல்" என்ற பழமொழி மூலம் இந்நாவலின் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இல்லாத ஒன்றைக் கூடத் தேடித் துருவும் பண்புடையவராக ஐயாண்ணர் என்ற பாத்திரத்தைக் குறித்த பழமொழியின் வாயிலாக
நாவலாசிரியர் சுட்டியுள்ளார்.
இயலாமை
பஞ்சமர் என்ற நாவலில், இலண்டனில் படித்துவிட்டு நாடுதிரும்பிய தமது மருமகனின் ஆதிக்கத்துக்குள் அடங்கிப் போன பெரியகமக்காரனும் சின்னக்கமக்காரிச்சியும்
பெட்டிப்பாம்புபோல" அடங்கிவிட்டதாகச் சின்னாச்சி என்பவள் குறிப்பிடுவதன் மூலம் அவர்களின் இயலாமைப் பண்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சடங்கு என்ற நாவலிலே காதலில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்ட பத்மா என்ற பாத்திரத்தை அந்நாவலின் ஆசிரியர்,
பல்லுப்பிடுங்கிய பாம்பு போல° எனக் குறிப்பிடுவதன் மூலம் காதலித்த குற்றத்துக்காக வேலைக்குப் போவதிலிருந்து, வெளியில் நடமாடுவதுவரை தடுக்கப்பட்ட பத்மாவின் இயலாமையினைக் குறித்த இப்பழமொழி மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பண்பு முரண்பாடு
பஞ்சமர் என்ற நாவலில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனான கற்கண்டன் என்பவன் வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த

Page 208
410 &
மாம்பழத்தி என்பவளைக் காதலிக்கின்றான். இக்காதலுக்கு உடந்தையாகச் செயற்பட்ட சின்னாச்சி என்பவள். மாம்பழத்தியின் தாயான கமலாம்பிகை அம்மாளுடன் சேரந்து கற்கண்டனின் கொலைக்கும் காரணமாக இருந்தாள் எனக் கருதும் பொன்னி,
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுதல்"
என்ற பழமொழி மூலம் சின்னாச்சியின் முரண்பட்ட சுட்டிக் காட்டுகிறாள்.
போர்க்கோலம் என்ற நாவலிலே, வெளியில் நல்லவன் போலவும், உள்ளே கள்ளமுடனும் பழகும் ஆனந்தனை,
பசுத்தோல் போர்த்திய புலி*
என்ற பழமொழி கொண்டு அன்னம் என்பவள் கேலிசெய்கின்றாள். பசுவுக்கும் புலிக்கும் உள்ள முரண்பட்ட பண்பினை எடுத்துக்காட்டி, அவனுடைய பண்பு முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.
பண்புப் பொருத்தம்
கானல் என்ற நாவலில் வரும் தம்பாப்பிள்ளையரினால் கொடுமைப் படுத்தப்பட்ட இளையவன், அவரிடமிருந்து விலகி முக்கந்தன் என்பவரிடம் வேலைசெய்து வருகின்றான். முக்கந்தன் தனது நண்பன் என்பதை அறிந்த தம்பாப்பிள்ளையர், நட்பின் செல்வாக்கைப் பாவித்து இளையவனின் வேலையினைப் பறித்துக் கொள்கின்றார். இவ்விடயம் பற்றியறிந்த பூக்கண்டர்.
பண்டியோடை சேர்ந்த பசுவும் பீதின்னும்"
என்ற பழமொழியைக் கூறுவதனூடே தம்பாப்பிள்ளையருடன் சேர்ந்த குணத்தினால் முக்கந்தனும் தனது இயல்பான குணத்தை
இழந்துவிட்டான் என்பதனை வெளிப்படுத்தி, இருவர்தம் பண்புப் பொருத்தப்பாட்டையும் உணர்த்துகின்றார்.

கருத்துவிளக்கத்தில் பழமொழிகள்
நாவலாசிரியர், தாம் உணர்த்த விழையும் கருத்தை வெளிப்படுத்த, அழுத்திக்கூறப் பழமொழியைப் பயன் படுத்தியுள்ளனர். கதை நிகழ்ச்சிக்கு ஏற்ப கருத்தை விளக்குவதோடு, நாவல் மூலம் ஆசிரியர் உணர்த்த விரும்பும் கருத்தையும் பழமொழிகள் புலப்படுத்தி நிற்கின்றன.
பஞ்சமர் என்ற நாவலில் வரும் சோமசுந்தரம் என்பவர் வீட்டில் வேலைக்கென அமர்த்தப்பட்ட சிறுமி, வீட்டு எஜமானியால் மிகவும் துன்புறுத்தப்படுகின்றாள். நெருப்புக் கொள்ளியாலும் உலோகக் கரண்டியினாலும் சூடு போட்டுக் கொடுமைப் படுத்தப்பட்டவள், நீதியைத் தேடிக் காவல்நிலையம் செல்கிறாள். அங்கே காவலர்கள் கேட்ட கேள்விகள் அவளை மேலும் கொடுமைப்படுத்துவனவாக இருந்தன. இதனை விளக்கவந்த ஆசிரியர்,
பனை யால விழுந்தவனை மாடேறி மிதிச்சதைப்போல°
என்ற பழமொழியினைக் கையாண்டு விளக்கிச் செல்கிறார். பனையிலிருந்து விழுவதே துன்பமான விடயம். அவ்வாறு விழுந்தவனை மாடேறிமிதிப்பது என்பது அதைவிடத் துன்பம். அத்தகையதொரு துன்பத்தையே இச்சிறுமி காவல் நிலையத்தில் எதிர்கொண்டதாக விவரிக்கப்பட்டுள்ளது.
மையக்குறி என்ற நாவலில் வரும் சோமசுந்தரம் என்பவருக்குக் காசிப்பிள்ளை முதலியாரின் மகளின் மேல் ஈடுபாடு ஏற்பட்டுவிடுகிறது. நல்ல பரம்பரையில் வந்தாலும், நித்தம் குடியிலும் கூத்திலும் பெரும்பகுதி நேரத்தைச் செலவிடும் சோமசுந்தரத்தார், தனக்குக் காசிப்பிள்ளை முதலியார் பெண் கொடுக்கமாட்டார் என்பது தெரியும். எனவே இது விடயத்தில் காசிப்பிள்ளையரைச் சம்மதிக்கவைக்கக் கூடிய பெரியவர்கள் சிலரைக் கொண்டு செய்விப்பதில் ஆர்வம் காட்டும் சோமசுந்தரம்,
சிறிய பாம்பெண்டாலும் பெரிய தடியாலதான் அடிக்கவேணும்"

Page 209
412 8
என்ற பழமொழி மூலம் தமது உள்ளக்கருத்தினைப் பண்டாரியனிடம் வெளியிடுகின்றார்.
சடங்கு என்ற நாவலில் வரும் செந்தில்நாதன் என்பவரின் கற்புப் பற்றிப் பேசவந்த ஆசிரியர் பாலுணர்ச்சியினால் உந்தப்பட்டு, விலைமகளிரிடம் சுகம் கண்டு, கூடவே விதவிதமான நோய்களுக்கு ஆட்பட்டுத் தாம் கண்ட சுகத்திற்கும் மேலாக மருத்துவர்களிடம் அலைந்து திரிந்து சீரழியும் ஆண்களின் பரிதாப நிலையை,
சுண்டங்காய் காற்பணம் சுமைகூலி முக்காற்பணம்"
என்ற பழமொழியைப் பொருத்தமுறக் கையாண்டு விளக்கியுள்ளார்.
போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில் வரும் சிவலிங்கம் என்பவன், திருட்டையே தொழிலாகக் கொண்டவன். இவன் வசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவளான பரிமளத்தைக் காதலிக்கின்றான். மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தந்தையை அவரின் மைத்துனன்,
மனங்கொண்டதுதான் மாளிகை’
என்ற பழமொழி மூலம் பெண் தனது மனத்தால் வரித்துக் கொண்டவனை மணம் புரிவதே வாழ்க்கை என்ற உண்மையினைக் கூறி, அவளின் தந்தையை இதுவிடயத்தில் இணங்க வைப்பதாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.
பஞ்சமர் என்ற நாவலில் வரும் ஐயாண்ணர் என்பவர் சாதியை அடிப்படையாகக் கொண்ட காரணப்பெயர்களுக்கான விளக்கத்தினைக் கணவதியன் என்பவரிடம் இதுபற்றி வினவுவது,
கொல்லன் தெருவில் ஊசிவிற்கப் போனது போல*
எனக் கணவதியன் குறிப்பிடவும், அதற்குப் பதில் கூறும் ஐயாண்ணர்,
ஆனையும் அறுகம்புல்லில் தடக்குப்படும்"
என்ற பழமொழியைக் குறிப்பிட்டுப் பேசுகின்றார். மேற்குறித்த பழமொழிகள் இருவரது நிலைப்பாடுகளையும் தெளிவு

& 413
படுத்துவனவாக அமைந்து விடுகின்றன. ஆனையும் அறுகம்புல்லில் தடக்குப்படும் என்ற பழமொழியின் மூலம் ஐயாண்ணரின் ஆழ்ந்த புலமை மேலும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறலாம்.
கானல் என்ற நாவலில் வரும் இளையவன்மிகுந்த உழைப்பாளி, இவன், தனது தமையனும், தந்தையும் சிறையிலிருந்து மீண்டு வரும் வரையில் திருமணம் செய்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றான். இளையவனுக்குத் திருமணம் செய்துவைக்க முனையும் தம்பன்,
பருவத்திலே பயிர் செய்ய வேண்டும்"
என்ற பழமொழியைக் கூறி அவனை வற்புறுத்துகின்றான். அவனோ தனது தமையனின் பிள்ளைகளைப் பராமரிப்பார்இல்லாத நிலையில் தன்னால் திருமணம் செய்ய முடியாது எனக்கூறித் தம்பனின் கோரிக்கையை நிராகரித்து விடுகின்றான். இந்நிலையில்,
மாடு சாகேக்க கன்றுக்குப் புல்லுப்பிடுங்கிப் போட்டுச் சாவதில்லை"
என்ற பழமொழியின் மூலம், அவனது தாய் இறந்தபோது எதனையும் தேடிவைத்து விட்டுப்போகவில்லை என்பதையும், அவனது தந்தை சிறையில் இருக்கும்போது அவர்கள் சீவியம் நடத்துவதையும் குறிப்பிட்டு, அவரவர் நியதிப்படிதான் நடக்கும் எதுவும் எம்கையில் இல்லை என்ற கருத்தை அழுத்திக் கூறுகின்றான் தம்பன்.
தண்ணீர் என்ற நாவலில் வரும் நல்லதம்பியனின் காருக்கான வாடகைப் பணத்தினைக் கொடுப்பத்தில் அன்னப்பிள்ளை நாச்சியார் தாமதம் செய்கிறாள். இதனைக் கண்ணுற்ற மூத்தம்பி நயினார்,
தாயும் பிள்ளையுமெண்டாலும் வாயும் வயிறும் வேறு?
என்ற பழமொழியினைக் கூறி, வாடகைப் பணத்தினை விரைந்து கொடுத்து அனுப்ப வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்துவதாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது.
பஞ்சகோணங்கள் என்ற நாவலில் வரும் செல்லி என்பவள், தன்னிலும் சமூக அந்தஸ்திலும், வயதிலும் மிகவும் கூடியவரான

Page 210
414 «Х•
சுப்பையா வாத்தியார்மேல் காதல்கொள்கிறாள். ஏற்கனவே இவ்வாறான ஒரு காதலில் அகப்பட்டுச் சமூகத்தின் கேலிக்கும் பழிப்புக்கும் உட்பட்டவளான பூதி என்பவள், செல்லியின் நோக்கத்தைப்புரிந்துகொண்டு,
பழமும் தின்று கொட்டையும் போட்டான்"
என்ற பழமொழியின் மூலம் தனது அனுபவமுதிர்ச்சியைக் காரணம் காட்டி, இது விடயத்தில் செல்லிக்குப் புத்தி சொல்லக் கூடிய தகுதி தனக்கே உண்டு என்பதனை வலியுறுத்துகிறாள். கூடவே அவள் கருத்தை மாற்றவும் முற்படுகிறாள்.
போர்க்கோலம் என்ற நாவலில், உயர்சாதி வேளாளரின் சாதிக் கொடுமைகள் பற்றி விரிவாக விளக்கிச் செல்லும் அதன் ஆசிரியர், உயர்சாதியினரின் பலாத்காரத்தினைத் தாழ்த்தப்பட்ட மக்களும் பலாத்காரத்தின் மூலமே சந்திக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்துவதற்கு,
முள்ளை முள்ளாலதான் எடுக்கவேணும்?
என்ற பழமொழியினைப் பயன்படுத்தியுள்ளார்.
போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில் வரும் பாலிப்போடியார் புதியதொரு வீடு கட்டுவதற்காகச் சிமெண்ட் பர்மிட்டுக்கு விண்ணப்பிக்கின்றார். பலமாதங்கள் காத்திருந்தும் கிடைத்ததென்னவோ சொற்ப அளவான சிமெண்ட்'தான், இதனை,
யானைப் பசிக்குச் சோளப்பொரி
என்ற பழமொழி மூலம் இந்நாவலின் ஆசிரியர் விளக்கிச்
செல்கின்றார்.
பஞ்சமர் என்ற நாவலில் வரும் சின்னாச்சி என்பவள், இளைஞர்களின் சொற்கேட்டு வெள்ளாள வீடுகளில் அடிமை குடிமை வேலை செய்வதை நிறுத்திவிடுகின்றாள். இதனால் மேற்படி வீடுகளிலிருந்து கிடைக்கும் அற்பசொற்பத் தின்பண்டங்களும் அவளுக்குக் கிடைக்காமற் போய்விடுகின்றன. சின்னாச்சி படும் சிரமங்களை,

令 415
உப்பு சமைந்தால் தெரியும் உப்பின் அருமை அப்பன் செத்தால் தெரியும் அப்பனின் அருமை"
என்ற பழமொழி மூலம் விளக்கும் ஆசிரியர் வெள்ளாள வீடுகளுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டதன் மூலம் சின்னாச்சி படும் இடர்ப்பாடுகளையும், அவளின் உறுதியான நிலைப்பாட்டையும் விளக்குகின்றார்.
கதைப்பின்னலில் பழமொழிகள்
கதை வளர்ச்சிக்குரிய காரணகாரியத் தொடர்போடு கூடிய நிகழ்ச்சிகளைக் “கதைப்பின்னல்’ என்ற தொடரால் குறிப்பர்.* கதைப்பின்னலில் பழமொழிகளின் பயன்பாடு குறிப்பிடத் தக்கதாகக் காணப்படுகிறது. பழமொழி ஒரு நிகழ்ச்சியில் இடம்பெறுதல், பின்னர் நிகழும் நிகழ்ச்சிக்குக் காரணமாக அமைதல், அல்லது தூண்டுகோலாக அமைதல் எனப்பல்வேறு நிலைகளில் இவற்றின் பயன்பாடு அமைந்துள்ளது.
கதை நிகழ்ச்சியை விளக்குதல்
கானல் என்ற நாவலில், தம்பாப்பிள்ளையருக்கும் அவரது மனைவி வெள்ளைச்சி அம்மாளுக்குமிடையில் குறிப்பிட்ட பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தம்பாப்பிள்ளையர் மனைவியை அடிக்கவும், அந்த அடியின் தாக்கத்தினால் அவள் இறந்து போய்விடுகிறாள். ஊரில் தன்னுடைய அடியினால்தான் மனைவி இறந்துபோனாள் என்ற உண்மை தெரியின் அது தனது சமூக அந்தஸ்துக்குக் கேடு எனக் கருதிய தம்பாப்பிள்ளையர், தனது மனைவி இருதயக் கோளாறினால்தான் இறந்து போனதாகப் பிறரை நம்பவைத்து, உடனடியாகவே இறுதிச் சடங்கிற்கும் ஏற்பாடு செய்து விடுகிறார். இறுதிச்சடங்கு நிகழ்வுகள் உச்சக்கட்டத்தை அடையும்போது யாரோ தெரிவித்த புகாரின் பேரில் காவல்துறையினரும், பிரேத பரிசோதனை செய்பவரும் திடீரென வந்து விடவே தம்பாப்பிள்ளையரின் அத்தனை முயற்சிகளும் வீணாகி விடுகின்றன. இந்நிகழ்ச்சியினை விளக்க வந்த ஆசிரியர்,
வெண்ணை திரளும் போது தாழி உடைந்தது போல"

Page 211
416 ※
என்ற பழமொழியைக் குறிப்பிட்டுக் காரியம் கை கூடும் நிலையில் அது பாழ்பட்டுப் போனமையினை மிகவும் இயல்பாக விளக்கிச் செல்கின்றார்.
பஞ்சமர்என்ற நாவலிலே, சிறாப்பரின் மகளின் இறுதிச்சடங்கில் தங்கள் குடிமைகளுக்கான கடமைகளைச் செய்யத் தாழ்த்தப்பட்ட மக்கள் மறுத்து விடுகின்றனர். இச்செயலானது சிறாப்பரின் கெளரவத்துக்கு ஒரு சவாலாகவே அமைந்து விடுகின்றது. தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவு மக்களின் அடுக்கடுக்கான இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்ளும் சிறாப்பரின் நிலையினை,
பனையால விழுந்தவனை மாடேறி மிதித்தது போல°
என்ற பழமொழி மூலம் இந்நாவல் ஆசிரியர் விளங்கவைக்கின்றார்.
உயிரை இழக்காலம், பணத்தை வாரிக்கொட்டலாம். ஆனால் குடும்ப கெளரவ மெல்லாம் சுமந்து நிற்கும் சம்பிரதாய முறைகள் இல்லையென்றால் அதைத் தாங்கிக் கொள்ளும் வல்லமை சிறாப்பருக்கு மட்டுமல்ல, அவரின் பரம்பரையில் வந்த சகலருக்குமே இருக்காது
என ஆசிரியர், சிறாப்பரின் நிலைகுறித்து தன் கூற்றாக விளக்கமளிப்பதற்கு இப்பழமொழி மிகப் பொருத்தமாகப் பயன்பட்டுள்ளதெனலாம்.
வாடைக்காற்று என்ற நாவலில் வரும் விருத்தாசலம், தனது முறை மச்சாளான நாகம்மா தனக்கேயுரியவள் என்ற நம்பிக்கையில் அதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருந்து விடுகிறான். அவனது அக்கறை இன்மையினையும், நாகம்மாவின் கள்ளக் காதலையும் விளக்க வந்த ஆசிரியர்,
செட்டை முளைத்தால் கிளிபொந்தில் இருக்காது பழம்பழுத்தால் வெளவால் விழாமல் இருக்காது"
ஆகிய பழமொழிகள் மூலம் விருத்தாசலத்தின் நம்பிக்கைக்கு நேர்மாறான நாகம்மாவின் நடத்தையினை விளக்குவதுடன்; கிணற்றுக் தண்ணீர் என நம்பியிருந்த நாகம்மா, இப்போது ஆற்றுத் தண்ணீராகப் பிறருக்கும் பயன்படுகிறாள் எனக் குறிப்பிடுகின்றார்.

& 417
நாகம்மாவின் காதல் தடம் மாறிச் செல்வதனை மேற்படி
பழமொழிகள் விளக்கி நிற்கின்றன.
பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற நாவலிலே வரும் கல்யாணி என்பவளுக்கும் அவளின் மைத்துணிக்குமிடையில் உறவு அவ்வளவு நன்றாக இல்லை. மைத்துணியின் குணநலன்களைப் பற்றி நன்றாக அறிந்தவளான கல்யாணி, அவளுடனான உறவை மிகக் கவனமாகவே பராமரித்து வருகின்றாள். இவ்வுறவை விளக்கவந்த நாவலாசிரியர்,
ஒடும் புளியம்பழமும் போல"
என்ற பழமொழியைக் குறிப்பிட்டு ஒட்டின் உள்ளே இருக்கும் புளியும், ஓடும் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது போலவே கல்யாணியும், அவளுடைய மைத்துணியும் உறவு வைத்துள்ளனர் எனப் புலப்படுத்துகின்றார்.
பின் நிகழ்வை முன்னுணர்த்துதல்
தண்ணிர் என்ற நாவலில் வரும் சின்னிக்கு, தாழ்த்தப்பட்ட மக்களாகிய தமது இனத்தவர் வேளாள சமூகத்து வீடுகளிலே அடிமை வேலை செய்வது பிடிக்கவில்லை. அடிமைத் தளையில் இருந்து விடுபடத் துடிக்கும் சின்னி, உடனடியாக அதற்கு எதிராகப் போராட வேண்டும் எனத் தனது தாயிடம் தன் கருத்தை முன்வைக்கிறாள். உயர்சாதி வேளாளருக்குச் சொந்தமான நிலபுலன்களில் இருந்து கொண்டே அவர்களுக்கு எதிராகப் போராட முனைந்தால் பல்வேறு இன்னல்கள் உடனடியாகவே வந்துநேரும் என்பதை உணர்த்திய
செல்லி,
சிறுபிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடுவந்து சேராது°
என்ற பழமொழி மூலம் பின்னர் நிகழப் போகும் இன்னல்களைக் குறிப்பாக உணர்த்துகிறாள். செல்லி கருதியது போலவே பின்னாளில் பல்வேறு விதமான கொடுமைகளுக்கு அவளும், அவளைச் சார்ந்தவர்களும் முகம்கொடுக்க வேண்டி வந்துவிடுகின்றது.
பஞ்சமர் என்ற நாவலில் வரும் சண்முகம்பிள்ளை என்பவர் மிகுந்த சாதிவெறி பிடித்தவராகச் சித்திரிக்கப்படுகின்றார். இவர்,

Page 212
418 X
ஊரில் உள்ள தமது சமூகப்பிரிவு மக்களுடன் இணைந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராகப் பல்வேறு கொடுமைகளை நிகழ்த்துகின்றார். சண்முகம்பிள்ளையரின் இவ்வாறான செய்கைகளுக்கெதிராகக் கிளம்பிய மக்களை அவர் பல்வேறு வழிகளிலும் துன்புறுத்துகின்றார். இறுதியில் சமூக ஒடுக்குமுறைக்கெதிரான போரில் எதிர் நிற்க முடியாமல் அவர் இறந்தும் போய்விடுகின்றார். சண்முகம்பிள்ளையருக்குப் பின்னாளில் ஏற்படப்போகும் இத்தோல்வியினை,
கெடுகுடி சொற்கேளாது ஆனை தன்கையாலேயே தனக்கு மண் அள்ளிப்போடும்"
ஆகிய பழமொழிகள் மூலம் நாவலின் முற்பகுதியிலேயே ஆசிரியர் உணர்த்தி விடுவது கருதத் தக்கதாகும்.
அறக்கருத்துக்களை உரைத்தலில் பழமொழிகள்
நீதி புகட்டுதற்கும், உலக இயல்பைச்சுட்டுதற்கும், பொதுவான உண்மைகளை உரைத்தற்கும் எனப் பல்வேறு நிலைகளில் பழமொழிகள் நாவல்களில் பயின்றுள்ளமையினைக் காண முடிகின்றது.
ஆங்கிலக்கல்வியின்தாக்கம், அதனால் விளைந்த சமூக மாற்றம், நாகரிக வளர்ச்சி என்பன தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரியமான பண்பாட்டு அறங்களை மாற்றிவிடக் கூடியதான சூழலமைவுகளை ஏற்படுத்தின. இந்நிலையானது நவீன இலக்கிய வடிவங்களிலொன்றான நாவல்களிலே, பழமொழி முதலான இலக்கிய வடிவங்கள் மூலம் அறமுரைத்தற்கும், உலகப்பொதுவான உண்மைகளை உணர்த்துதற்கும் வாய்ப்பான ஒரு நிலையைத் தோற்றுவித்தது எனக் கூறலாம்.
நாட்டுப்புற இலக்கிய வடிவங்களான பழமொழி, நாட்டார் கதை, முதலானவற்றைப் பயன்படுத்தி அறமுரைப்பதான முயற்சிகளைத் தமிழின் தொடக்கக் கால நாவல்களிலேயே இனங்காண முடிகின்றது. கதை கூறும் பண்புடன், நீதி புகட்டுதலையும் முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்த

令 419
இந்நாவல்களில் பழமொழிகள் அவற்றுக்குரிய சூழலில் மிகவும் இயல்பாகப் பயின்றுள்ளமையினைப் பார்க்க முடிகின்றது.
பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நாவலை எழுதிய வேதநாயகம்பிள்ளை மேற்படி நாவலின் உரையாடற் பகுதியிலும், கருத்து விளக்கப் பகுதியிலும் பல்வேறு கிளைக் கதைகளையும், பழமொழிகளையும் பயன்படுத்தியுள்ளமை இங்குக் கருதத்தக்கதாகும்." பிரதாப முதலியார் சரித்திரம்’ நிலமானிய சமூகத்தின் நீதிநெறிக் கருத்துக்களையே தொகுத்துத் தந்துள்ளதாகக் கருதுவாருமுளர்."
மேற்காட்டியவாறு, நாவலின் அமைப்புக்கும், பாத்திரப் படைப்புக்கும் மட்டுமல்லாது அறிவுறுத்தவும் நாவல்களில் பழமொழிகள் பயன்பட்டுள்ளமையினைக் காணமுடிகின்றது.
இறைவன்
கானல் என்ற நாவலில் வரும் இளையவனுக்குத் தம்பன் என்பவன் மணம் முடித்து வைக்க முயற்சிக்கின்றான். இளையவனோ, சிறையில் வாடும் தன் அண்ணனது மனைவி, பிள்ளைகளைக் காரணங் காட்டி, தான் திருமணம் செய்து கொண்டால், அண்ணனும் இல்லாத நிலையில் அவர்களுக்கு யார் ஆதரவு தருவார்கள் எனக் கேள்வி எழுப்புகின்றான். சமயவாதியான தம்பன்,
படைத்தவன் படி அளப்பான்”
என்ற பழமொழியின் மூலம் இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு நியதியின்படி இறைவனால் புரக்கப்படுவார்கள் என்ற உண்மையினைக் கூறி, இவை பற்றியெல்லாம் ஆழ்ந்து சிந்தித்தால் உலகம் இயங்காது என்ற கருத்தையும் முன்வைக்கின்றான்.
செய்ந்நன்றி மறவாமை
அடிமைகள் என்ற நாவலில் வரும் ‘ஆட்டிறைச்சிப்பரியாரி' என்ற மருத்துவர் மிகவும் கண்டிப்பான பேர்வழி. இவ்வாறான குணம் படைத்தவரிடம் சென்ற மழுவராயர், தன் மகளின் குறைபாட்டைப் போக்கியதற்குப் பிரதிபலனாகப் பெருந்தொகைப்

Page 213
420 (X-
பணத்தைக் கையளிக்க முற்படுகிறார். குறித்த பணத்தை வாங்கமறுத்த மருத்துவர், சமூக அந்தஸ்தில் உயர்ந்தவரான மழுவராயரைக் கண்டபடி ஏசிவிடுகிறார். மழுவராயர் மருத்துவரிடம் ஏச்சுக் கேட்பது இளையவனுக்குப் புதிராகப் படவே அவன் அதுபற்றி மழுவராயரிடம் நேரடியாகவே கேட்டு விடுகிறான். அதற்கு,
செய்நன்றி மறக்கக் கூடாது"
என்ற பழமொழியை முன்னிறுத்திய மழுவராயர், தனது மகளின் தீராத நோயைக் குணப்படுத்திய நன்றியை மறந்து, மருத்துவருடன் முரண்படுவது அறமல்ல என்ற கருத்தை முன்வைக்கின்றார்.
கானல் என்ற நாவலில் வரும் நன்னியன் என்பவன், தனது எஜமானாகிய தம்பாப்பிள்ளையருடன் தொடர்ந்து உறவைப் பராமரிக்க முடியாத அளவுக்கு முரண்படுகின்றான். ஆயினும் அவர் மூலம் தனக்குக் கிடைத்த நன்மைகளை எண்ணி, அவருடைய வயல் வேலைகள் அனைத்தும் நிறைவுற்ற பின்னரே அவரிடமிருந்து விலகிச் செல்ல எண்ணுகின்றான். அவ்வாறல்லாமல் உடனடியாகவே தம்பாப்பிள்ளையரின் வயற்காட்டு வேலைகளை உதறித் தள்ளச் சொல்லிய செல்லியை நோக்கி,
திண்டவிட்டுக்கு இரண்டகம் செய்யக் கூடாது"
என்ற பழமொழியைக் குறிப்பிட்டு இவ்வளவு நாளும் உணவு தந்து ஆதரித்தவருக்கு மாறாக நன்றிகெட்ட முறையில் நடக்கக் கூடாது என்ற தனது எண்ணத்தை வெளியிடுகின்றான்.
பஞ்சமர் என்ற நாவலில் வரும் கற்கண்டன் என்பவன் தாழ்த்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இவன் தனக்குக் 'கள் இறக்குவதற்கு மரங்களைத் தந்துதவியவரான வெள்ளாள சமூகத்தைச் சேர்ந்த கங்கரப்பிள்ளையர் என்பவரின் மகளின் மேல் காதல் கொள்கிறான். ‘கள்’ இறக்குவதனைச் சாட்டாக வைத்துக்கொண்டு மாம்பழத்திமேல் கண்வைப்பதனைச் சின்னாச்சி என்பவள் விரும்பவில்லை. கற்கண்டனை நேரிலே சந்திக்கும் சின்னாச்சி, தொழில் செய்வதற்கு வாய்ப்புத் தந்து வீட்டுக்கு, திண்ட

令 421
வீட்டுக்கு இரண்டகம் செய்வது போல’ நம்பிக்கைத் துரோகம் செய்ய வேண்டாம் என அவனை எச்சரிக்கின்றாள்.
பஞ்சகோணங்கள் என்ற நாவலில் வரும் இளையதம்பியர் என்பவர், நன்றிமறந்த ஒருவராகவே சித்திரிக்கப்பட்டுள்ளார். இளையதம்பியரின் ‘வைப்பாடிச்சி யான பூதியிடம் உரையாடும் சுப்பையா வாத்தியார், தனது நம்பகத்தன்மையை நிரூபிக்கத் தான் இளையதம்பியனைப்போல நன்றி மறந்தவன் அல்லன் என்பதனைக் குறிப்பிட்டு, அவன்,
திண்டசட்டிக்குள் மலங்கழிப்பவன்"
எனக் கூறி, இளையதம்பியர், தன்னை வளர்த்து ஆளாக்கிய மருதப்பரை உதறித்தள்ளிய செயலை இப்பழமொழியின் மூலம் உணர்த்துகின்றார்.
வினைப்பயன்
கழுகுகள் என்ற நாவலில் வரும் ஆறுமுகத்தார் என்பவர், தீராத நோய்க்கு ஆட்பட்டுப் படுத்தபடுக்கையாக மருத்துவமனையிலேயே தங்கி விடுகின்றார். ஒருவேளை உணவுக்குக்கூடப் பிறர் தயவை நாடவேண்டிய சூழ்நிலையில் ஆறுமுகத்தார், தனது தந்தையாரை நினைவிற் கொள்கின்றார். எல்லாம் இந்த வயிற்றுப்பாட்டுக்குத்தான். தீனை உதாசீனம் செய்யக் கூடாது. செய்யக் கூடாது. கொட்டக் கூடாது. அதுதான் தெய்வம் என்ற தந்தையரின் வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன. தந்தையின் சொற் கேளாமல் நடந்ததால்தான் தனக்கு இப்படியொரு நிலை வந்ததாகக் கருதும் ஆறுமுகத்தார்,
முற்பகல் செய்யின்பிற்பகல் விளையும்"
என்ற பழமொழியை நினைந்து தான் செய்தவற்றுக்கான அறுவடையே தனது தற்போதைய நிலை என்பதனை விளங்கிக் கொள்கின்றார்.
போர்க்கோலம் என்ற நாவலில் வரும் மாணிக்கனின் அவலச்
சாவுக்கு அவன் புரிந்த கொடுஞ் செயல்களே காரணம் எனக் குறிப்பிடும் தங்கம்மா,

Page 214
422 *
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்"
என்ற பழமொழியின் மூலம், ஒருவர்தாம் செய்யும் வினைகளுக்கான பயன்களிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்றும், தாமதமாகவேனும் அவரவர்க்கான பலாபலன்கள் கிடைத்தே தீரும் என்ற தனது கருத்தை முன்வைக்கின்றாள்.
நேர்மை
கானல் என்ற நாவலில் வரும் நன்னியன் என்பவனின் மகள் சின்னி, அவள் வேலைக்கென அமர்த்தப்பட்டுள்ள வீட்டின் எஜமானரால் பாலியற் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள். இதனை அறிந்த நன்னியன் தனது மகளை மீண்டும் தன்னிடமே அழைத்துக் கொள்கிறான். நன்றி’ என்ற ஒன்றுக்காகச் சிலநாள் இடைவெளியின் பின்னர் மீண்டும் அதே இடத்திலேயே மகளைக் கொண்டு போய்விடக் கருதிய நன்னியனை நோக்கி, அவனின் மனைவி செல்லி,
பஞ்சம் போனாலும் பஞ்சத்திலபட்ட வடுப்போகாது”
என்ற பழமொழியைக் கூறுவதன் மூலம் வாழ்க்கையில் வறுமை என்பது நிலையானதல்ல, வரும் போகும். ஆனால் பஞ்சகாலத்தில் நேர்மைக்கு மாறான செயல்கள் மற்றும் பழிப்புக்கிடமான செயல்களைச் செய்வதன் மூலம் கிடைக்கின்ற வடு’ என்பது ஒரு நாளும் ஒருவரை விட்டுப் போகாது எனக் குறிப்பிடுகின்றாள்.
ஒற்றுமை
பஞ்சகோணங்கள் என்ற நாவலில் வரும் சுப்பையா வாத்தியார் என்பவர் சமூக ஒடுக்குமுறைகளை எதிர்ப்பவராகச்
சித்திரிக்கப்பட்டுள்ளார். மண் விடுதலை எனக் கூறித்திரியும் இளைஞர்களுக்கும், சுப்பையா வாத்தியாருக்குமிடையே முரண்பாடு ஏற்படுகின்றது. சமூக விடுதலையைப் பெற்ற பின்னர், மண்விடுதலை பற்றிப் பேசவேண்டும் என்பது சுப்பையா வாத்தியாரின் நிலைப்பாடாக உள்ளது. அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாக நின்று முதலில் மண்ணை மீட்க வேண்டும் எனக்கருதும் இளையதம்பியருக்கு, சுப்பையா வாத்தியாரின்

«Х» 423
செயலானது சிங்களவருக்குச் சாதகமாக அமைவதாகவே தெரிகிறது. இதனை,
குளத்தைக் கலக்கிப் பிராந்துக்கு இரைகுடுக்கக் கூடாது?
என்ற பழமொழியூடாகத் தமது ஒற்றுமையின்மையைப் பயன்படுத்திப் பொது எதிரியாகிய‘சிங்களவன்’ பயன்பெறக்கூடாது என இளையதம்பியர் குறிப்பிடுவதானது, ஒற்றுமையாகச் செயற்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
அதிஷ்டம்
பஞ்சமர் என்ற நாவலில் வரும் மாம்பழத்திக்கு என்று நிச்சயிக்கப்பட்ட வரனை அவள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றாள். ‘காதல்’ விடயத்தால் ஏற்கனவே பெயர் கெட்டுப் போயுள்ள மாம்பழத்தியின் நிலையைச் சுட்டிக்காட்டிய சின்னாச்சி என்பவள்,
தலையா வாற சீதேவியைக் காலால தள்ளக் கூடாது"
என்ற பழமொழி மூலம், அதிஷ்டம் வீடுதேடிவரும் போது அதனைக் காலால் உதறித்தள்ளக் கூடாது என அறிவுறுத்துகின்றாள்.
உலகப்பொதுவான உண்மைகளை உணர்த்துதலில் பழமொழிகள் உலகத்துடன் ஒத்துப்போதல்
பஞ்சமர் என்ற நாவலில், சின்னப்பன் தலைமையிலான கூலித்தொழிலாளர்கள், சண்முகம்பிள்ளை, வேலுப்பிள்ளை முதலானோர்களின் சமூக ஒடுக்கு முறைகளுக்கெதிராகக் கிளர்ந்து, குறிப்பிட்ட சமூகத்தினரின் வயற்காடுகளில் வேலை செய்யவும் மறுத்து விடுகின்றனர். ஊரில் உள்ள குழப்பமான சூழ்நிலையின் விபரீதத்தை உணர்த்திய சண்முகம்பிள்ளையர்,
ஊருடன் பகைக்கின்
வேருடன் கெடும்?
என்ற பழமொழி மூலம் உலக நடப்புக்களோடு இயைபுபட்டு

Page 215
424 &
நடக்குமாறு, அவ்வாறு நடக்காது விட்டால் அது கேட்டிலேயே கொண்டுபோய் விடுமெனவும் அவர்களை எச்சரிக்கின்றார்.
கழுகுகள் என்ற நாவலில் வரும் ஆறுமுகத்தார் என்பவர், தமது உடல் தெம்பாக இருந்த காலத்தில் உறவினர்களையும், அயலவர்களையும் மதிக்காது ஆணவத்துடன் செயற்பட்டு வருகிறார். பின்னாளில் நோய்வாய்ப்பட்ட நிலையில், உறவுகளையும், அயலவர்களையும் நாடுகின்றார். ஆறுமுகத்தாரின் பண்பில்லாத இந்நடத்தையினைக் கண்டித்த தெய்வானை என்ற முதியவள்,
எறிஞ்சேப்பையும் சோறள்ளுமடி°
என்ற பழமொழி மூலம், உறவினர், மற்றும் அயலவர்களைப் பகைக்கக் கூடாது என்றும், தருணத்தில் அவர்களே கைகொடுப்பார்கள் என்ற உண்மையினை உணர்த்துகின்றாள். ‘வேண்டாம் என்று வீசி எறிந்த கரண்டிகூட, சமயத்தில் சோற்றை அள்ளுதற்குப் பயன்படும், என்ற பொருண்மையினை உடையதாக இப்பழமொழி அமைந்துள்ளது.
பூமரங்கள் என்ற நாவலில் வரும் கிராம அலுவலர், ஊரின் நடைமுறைகளுடன் ஒத்துப்போகாமல் தனக்கெனத் தனியானதொரு வழியில் நடக்க முனைகின்றார். அலுவலரின் இவ்வாறான போக்கினை அவதானித்த அவரது தாய்,
பாம்பு தின்னிற ஊருக்குப் போனா நடுமுறி நமக்கு"
என்ற பழமொழி மூலம் உலகத்து நடைமுறைகளுடன் இயைபுபட்டுச் செல்ல வேண்டியதன் அவசியத்தைத் தனது மகனான கிராம அலுவலர்க்கு உணர்த்துகின்றாள்.
தவறு செய்தல்
கோவிந்தன் என்ற நாவலில் வரும் செல்லத்துரையருக்கும், முருகேசருக்குமிடையே சுமூகமான நல்லுறவு கிடையாது. இருவரும் தற்செயலாகச் சந்திக்க வேண்டி வந்தபோது, ஒருவர்மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும், தனிப்பட்ட

«Х» 425
பண்புகளையும் குறிப்பிட்டு முரண்பாடு கொள்கின்றனர். நிலைமையைக் கவனித்த முத்தன் என்பவன்,
இலையும் பழுத்தலும் எங்கும் உள்ளதுதான்*
என்ற பழமொழியின் மூலம் மரமொன்றிலே பச்சை இலையும், பழுத்தல் இலையும் ஒருசேர இருப்பது போல, தவறு செய்தல் என்பது எல்லா வகையான மனிதர்களிடமும் இயல்பாக உள்ள ஒன்றுதான் என்பதனைச் சுட்டுகின்றான்.
மரக்கொக்கு என்ற நாவலில் இதே பொருண்மையினை உணர்த்துவதான சூழலில்
கள்ளுக் கொள்ளாத வயிறுமில்லை முள்ளுக் கொள்ளாத வேலியுமில்லை?
என்ற பழமொழி பயின்று வந்துள்ளது.
தன்னிலை இழத்தல்
பஞ்சமர் என்ற நாவலில் வரும் ஐயாண்ணர் என்பவர், கல்வி, கேள்விகளில் நிறைந்தவராகச் சித்திரிக்கப்படுகின்றார். இவ்வாறான பண்புடையவர், காரணப் பெயர் குறித்துத் தமக்கு ஏற்பட்ட ஐயத்தைத் தன்னிலும் பார்க்க அறிவில் குறைந்தவரான கணவதியன் என்பவரிடம் வினவுகின்றார். மற்றும் அறிந்த ஐயாண்ணர் தன்னிடம் விளக்கம் கேட்பதை ஆச்சரியத்துடன் விவரித்த கணவதியனுக்கு.
ஆனையும் அறுகம்புல்லில் தடக்குப்படும்"
என்ற பழமொழி மூலம், எவ்வளவுதான் அறிவில் சிறந்திருந்தாலும் தருணத்தில் எல்லோருக்குமே தடுமாற்றம் வரும் என்ற உண்மையைக் கூறி, எல்லாம் தெரிந்ததாக ஒருவரும் ஆணவம் கொள்ளக் கூடாது என்பதனை வலியுறுத்துகின்றார்.
நடந்தவற்றையே எண்ணி வருந்துதல்
பஞ்சமர் என்ற நாவலில் வரும் சுப்பையா வாத்தியார், தன்னுடன் நீண்டகாலம் ஒத்துழைத்த இலண்டன் ‘இராசா இராணி

Page 216
426 «Х»
மார்க் குடையை அலைக்கழிக்கும் காற்றில் அகப்படவிட்டுவிட்டு அதை எண்ணியே மிகவும் வருத்தப்படுகின்றார். முறிந்து போன குடையை எண்ணி வருந்துகின்ற சுப்பையாவாத்தியாரின் அர்த்தமற்ற கவலையைக் கண்ணுற்ற விதானையார்,
சந்திய பாலுக்கு அழுது பிரயோசனம் இல்லை"
என்ற பழமொழியின் மூலம் நடந்தவற்றையே எண்ணி வருந்துவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என உணர்த்துகிறார்.
போடியார் மாப்பிள்ளை என்ற நாவலில் வரும் பாலிப்போடியார் மிகவும் வசதியானவர். அவருடைய மகளான பரிமளம், வசதி மற்றும் சமூக அந்தஸ்தில் குறைந்தவனான சிவலிங்கத்தின் மேல் காதல் கொண்டு அவனையே திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக நிற்கிறாள். இவ்விடயம் குறித்து வருந்தும் பாலிப்போடியாரை,
கறந்தபால் மடிபுகுமா"
என்ற பழமொழியூடாகத் தேற்றுகின்ற கிராமசபைத் தலைவர், வருந்துவதில் பயனேதுமில்லை. மகளின் விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றார்.
கதைமாந்தர் மனநிலை விளக்கத்தில் பழமொழிகள்
நாவலாசிரியர்கள், பாத்திரங்களின் எண்ணவோட்டத்தினை, அல்லது மனநிலையைப் படிப்பவர் மனத்தில் பதியச் செய்ய வேண்டிப் பழமொழியைக் கருவியாகக் கையாண்டுள்ளனர். இப்பழமொழிகள், குறித்த சூழலில் இயங்கும் பாத்திரங்களின் மனநிலையை மிகவும் துல்லியமாக வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
அவமானம்
பஞ்சமர் என்ற நாவலில் வரும் உயர்சாதி வேளாளரான
கந்தப்பரைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவனான குட்டியன் என்பவன் கைநீட்டி அடித்து விடுகிறான். தாழ்ந்த சாதிக்காரனிடம்

«Х» 427
அடிவாங்கிய கந்தப்பருக்கு, இச்சம்பவம் மிகுந்த அவமானத்தையும், துன்பத்தையும் தந்துவிடுகிறது. தனது துன்பமான மனநிலையை,
முட்டையிட்ட கோழிக்குத்தான் தெரியும் பூத்தெரிச்சல்*
என்ற பழமொழியைப் பயன்படுத்துவதன் மூலம் கிராம அலுவலர்க்கு உணர்த்துகின்றார். முட்டையினை இடுதலில் படும் அவஸ்தையும் துன்பமும், அதனை இட்ட கோழிக்குத்தான் புரியும். அதுபோலவே, தனது துன்பமும், அவமானமும் தனக்குத்தான் புரியும் என்ற பொருள்படத் தன் மனக் கொதிப்பை
வெளியிடுகின்றார்.
பஞ்சமர் என்ற நாவலில் வரும் சிறாப்பருக்கு, அவரின் அடிமை குடிமைகளான தாழ்த்தப்பட்ட சமூகமக்கள் தமது கடமைகளைச் செய்ய மறுத்தது பெருத்த துன்பமாகவே அமைகிறது. இதனை,
பனையால விழுந்தவனை மாடேறி மிதித்தது போல”
என்ற பழமொழியின் மூலம் இந்நாவலின் ஆசிரியர் விளக்குகின்றார். பனையிலிருந்து விழுவதே துன்பமான ஒரு நிகழ்வு. அதனிலும் துன்பம், அவ்வாறு விழுந்து சலனமற்றுக் கிடப்பவன் மீது மாடேறி மிதிப்பது. சமூக ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் எதிர் நிற்க முடியாமல் தவிக்கின்ற சிறாப்பரின் நிலையும் இவ்வாறானதே என்பதை ஆசிரியர் இப்பழமொழியின் மூலம் புரியவைக்கின்றார்.
குழப்பம்
பஞ்சமர் என்ற நாவலில் வரும் கமலாம்பிகை அம்மாளுக்கும், சலவைத் தொழிளாளியான செல்லப்பனுக்கும் இடையிலான தவறான உறவின் காரணமாகக்குமாரவேலன் பிறக்கின்றான். இந்த உண்மையைப் பிறர் அறியாதபடி மூடிமறைத்து, குமாரவேலனை இடம் மாற்றுவதில் கமலாம்பிகை அம்மாளும், அவளின் குடும்ப உறுப்பினர்களும் வெற்றி கண்டுவிடுகின்றனர், ஆயினும் குமாரவேலனின் பிறப்புப் பற்றிய இரகசியம் வெளியே கசிந்தபோது கமலாம்பிகை அம்மாள் குழம்பியே போய்விட்டாள். இதனை,
மூழ்குறைப் பிடித்த சாரைப் பாம்பைப் போல”

Page 217
428 8
என்ற பழமொழி மூலம் நாவலாசிரியர் விளக்குகின்றார். சாரைப்பாம்பு எலி என்று நினைத்து மூஞ்சூறைப் பிடிக்கும். பிடித்தது மூஞ்சூறென்று தெரிந்ததன் பின்பு சாரைப்பாம்புக்கு ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும். காரணம் மூஞ்சூறை வெளியே விட்டால் அது சாரைப் பாம்பின் கண்ணைக் கடித்துப்பிடுங்கிப்போடும். மூஞ்சூறை விழுங்கினால் அதிலுள்ள நச்சுத்தன்மை சாரையைக் கொண்றுவிடும். இவ்வாறான ஒரு மனநிலையிலேயே கமலாம்பிகை அம்மாளும் மர்மத்தை வெளியில் சொன்னாலும் ஆபத்து, மூடிமறைத்தாலும் ஆபத்து என்பதனைக் குறித்த பழமொழியூடாக ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
குற்றவுணர்வு
கானல் என்ற நாவலில் வரும் சிமியோனும், அவன் மனைவியான திரேசியும் தேவநற்கருணை பெறுவதான சடங்கிற் பங்கெடுக்காமற் பின்நிற்கின்றனர். முதல் நாளோ அல்லது அதற்கு முன்போ உடலாலும், உள்ளத்தாலும் கெடாமல் இருப்பவர்கள்தான் மேற்படி நிகழ்வில் பங்கெடுக்கலாம் என்ற உண்மையினை உணர்ந்த சிமியோன் தயங்கியபடி நிற்கின்றான். இளமையின் உந்துதலினால் நாவலாசிரியர் குறிப்பிடுவது போல், அவர்கள், பாவம் ஒன்றோ பலவோ செய்திருக்க வேண்டும். திரேசியும் குற்றவுணர்வினால் மிகவும் வெட்கப்பட்டாள். எல்லோரும் அவளைப் பார்ப்பதாகவே அவளுக்குத் தோன்றியது. இதனை,
குற்றமுள்ள நெங்சு குறுகுறுத்தது*
என்ற பழமொழியின் மூலம் குறிப்பிடும் நாவலாசிரியர், குற்றம் புரிந்தவளான திரேசியின் மனவுணர்வை வெளிப்படுத்துகின்றார்.
நாவல்களில் பழமொழிகளின் பயில் நிலையினைப் பரவலாகக் காணமுடிகின்றது. கதைமாந்தர்களின் பண்புகளை விளக்கியுரைத்தல், கருத்தை விளக்கி உரைத்தல், கதைப்பின்னலுக்கு உதவுதல், அறக் கருத்துக்களை உரைத்தல், உலகப் பொதுவான உண்மைகளை உரைத்தல், கதைமாந்தர்களின் பல்வேறுபட்ட மனோநிலைகளை உணர்த்துதல் எனப் பல்வேறு நிலைகளில்

«Х• 429
பழமொழிகள் நாவல்களின் புனை திறனுக்குப் பயன்பட்டுள்ளன எனலாம்.
நாவல்களில் பழமொழிகளின் பயில் நிலையினைப் பரவலாகக் முடிகின்றது. கதைமாந்தர்களின் பண்புகளை விளக்கியுரைத்தல், கருத்தை விளக்கி உரைத்தல், கதைப் பின்னலுக்கு உதவுதல், அறக் கருத்துக்களை உரைத்தல், உலகப் பொதுவான உண்மைகளை உரைத்தல், கதைமாந்தர்களின் பல்வேறுபட்ட மனோநிலைகளை உணர்த்துதல் எனப் பல்வேறு நிலைகளில் பழமொழிகள் நாவல்களில் புனைதிறனுக்குப் பயன்பட்டுள்ளன எனலாம்.

Page 218
450
10.
ll.
12.
13.
14.
15.
16.
I7.
18.
19.
2O.
0. 0.
அடிக்குறிப்புகள்
கலைக்களஞ்சியம், தொகுதி 10, ப.367 தொல். பொருள். செய்., நூற்பா 479 OXFORD ADVANCED LEARNERSDICTIONARY OF CURRENTENGLISH, p.684.
லூர்து, தே, நாட்டார் வழக்காறுகள், ப.3.
Durga Bhagwat, ANOUTLINE OF INDIANFOLKLORE, p46.“AProverb is pithy sentence which tells and unpalatable truth in a condensed way. The state of truth however is incomplete its exaggerated and expressed meta-phorically”
Richard, M. Dorson, FOLKLORE AND FOLKLIFE - AN INTRODUCTION, p.117. "Proverbs are one of the most easily observed and collected genes of traditional expression yet one of the least understood.”
கலைக்களஞ்சியம், தொகுதி 10, ப.366, சக்திவேல், சு., நாட்டுப்புற இயல் ஆய்வு, ப. 105. லூர்து, தே, மு.கு.நூ. பக்.5-6.
மேலது., பக்.6-7. சக்திவேல், சு. (பதி.ஆ.), நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம், Լյ.105.
லூர்து, தே, மு.கு.நூ. ப. 11.
கருணாகரன், கி., பாக்கியலெட்சுமி, இரா. , நாட்டுப்புறவியலாய்வு நெறிமுறைகள், ப. 119. சக்திவேல், சு., நாட்டுப்புற இயல் ஆய்வு, பக்.115-119. GëLD Gagis., L.J. 108.
லூர்து, தே, மு.கு.நூ., ப.12. சக்திவேல், சு. (பதி.ஆ.), மு.கு.நூ., ப. 109. சக்திவேல், சு., மு.கு.நூ. ப. 109. தண்டாயுதம், இரா., சமூக நாவல்கள், ப.25.
கைலாசபதி, க, தமிழ் நாவல் இலக்கியம், ப.117.

21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
34.
35,
36.
37.
38.
39.
40.
42.
43.
8 431
டானியல், கே., பஞ்சமர், ப.333. மேலது. ப.412.
மேலது., ப.209.
மேலது. ப. 356. தெணியான், மரக்கொக்கு, ப. 118. டானியல், கே., பஞ்சகோணங்கள், ப.349. பஞ்சமர், ப.167.
மேலது. ப. 318, பஞ்சகோணங்கள், ப. 173, டானியல், கே., தண்ணிர், ப.177. பஞ்ச கோணங்கள், ப.112.
டானியல், கே., கானல், ப.133; பஞ்சமர், ப.33; முருங்கையிலைக் கஞ்சி, ப.60.
பஞ்சமர், ப.22. பொன்னுத்துரை, எஸ்., சடங்கு, ப.119. பஞ்சகோணங்கள், ப.244.
GëLD Glogs., L1.116.
மேலது. ப.84.
மேலது. ப. 35.
மேலது. ப. 104. செங்கையாழியான், வாடைக்காற்று, ப. 127 கணேசலிங்கன், செ, சடங்கு, ப. 175, பஞ்சகோணங்கள், ப.132.
தண்ணிர், ப.195.
கானல், ப.222.
45.
46.
47.
பஞ்சமர், ப.428. கணேசலிங்கன், செ. மு.கு.நூ. ப.23.
பஞ்சமர், ப.208.

Page 219
4.32
48.
49.
50.
51.
52.
53.
55.
56.
57.
58.,
59.,
60.
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
69.
70.
71.
72.
73,
0x8
கணேசலிங்கன், செ, போர்க்கோலம், ப.191.
கானல், ப.206.
பஞ்சமர், ப.349, டானியல், கே., மையக்குறி, ப.150. பொன்னுத்துரை, எஸ். மு.கு.நூ., ப. 48. ஜோன்ராஜன், எஸ்.பூரீ, போடியார் மாப்பிள்ளை, ப.137. பஞ்சமர், ப. 352.
மேலது., ப.352.
35nTGOTGiv, Lu. 181.
GLDagsl., L. 181.
தண்ணீர், ப.193.
பஞ்சகோணங்கள், ப.204. போர்க்கோலம், ப.88,
போடியார் மாப்பிள்ளை, ப.7. பஞ்சமர், ப.232. Forster, E.M., ASPECTS OF THENOVEL, pp.93-94
கானல், ப. 160.
பஞ்சமர், ப.77.
வாடைக்காற்று, ப. 115, தெணியான், பொற்சிறையில் வாடும் புனிதர்கள், ப.21. தண்ணீர், ப.77.
பஞ்சமர், பக்.310, 330.
வேதநாயகம்பிள்ளை, மாயூரம் ச, பிரதாப முதலியார் சரித்திரம், Luji. 47, 64, 72, 73, 76, 84, 85, 101, 102, III1, 119, 125, 130, 139, 206, 277, 304.
கேசவன், கோ., இயக்கமும் இலக்கியப் போக்குகளும், ப.94.
35TGOTGiv, Lu, l8l.
டானியல், கே. அடிமைகள், ப.66.

74.
75.
76.
77.
78.
79.
80.
81.
82.
84.
85.
86.
87.
88.
89.
90.
9.
92.
93.
* 433
கானல், ப.34.
பஞ்சமர், ப.60. பஞ்சகோணங்கள், ப.100. தெணியான், கழுகுகள், பக்.11-12. போர்க்கோலம், ப.25.
கானல், ப.12. பஞ்சகோணங்கள், ப.260. பஞ்சமர், ப.153.
மேலது. ப.339.
கழுகுகள், ப.50. டானியல், கே, பூமரங்கள், ப. 14. டானியல், கே., கோவிந்தன், ப. 179. தெணியான், மரக்கொக்கு, ப.124. பஞ்சமர், ப.352.
மேலது. ப.245. போடியார் மாப்பிள்ளை, ப.133. பஞ்சமர், ப.408.
மேலது., ப.77.
மேலது. ப. 156.
கானல், ப.138.

Page 220
முடிவுரை
ஈழத்துத் தமிழ் நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள்: பயில் நிலையும் பயன்பாடும் என்ற இந்த ஆய்வின் வாயிலாக ஈழத்துத் தமிழ் நாவல்களில் பயின்றுள்ள நம்பிக்கைகள், சடங்கு நடைமுறைகள், நாட்டுப்புற மருத்துவம், நாட்டுப்புற விளையாட்டு, நாட்டார் உணவுப் பழக்கவழக்கம், காரணப் பெயரிடும் வழக்கம் முதலான நாட்டுப்புறப் பண்பாட்டுக் கூறுகள் பலவும் வெளிக் கொணரப்பட்டுள்ளன.
தமிழில் 'நாவல்’ என்ற இலக்கிய வடிவம் உள்வாங்கப்படுவதற்கு உகந்ததான சூழலமைவு பந்தொன்பதாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் காணப்பட்டது. உரைநடை வளர்ச்சி, அச்சியந்திர வருகை, தொழில் நுட்ப வளர்ச்சி, கல்வியறிவு, வாசிப்புப் பெருக்கம் முதலானவை தமிழில் நாவல் ஆழமாக வேரூன்றக் காரணமாக அமைந்தன.
நாவல் அதன் தலைமைப் பண்புகளாக யதார்த்தப் பண்பு, தனிமனிதப் பண்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மனித வாழ்வின் அனைத்துப் பொருண்மைகளையும் மிகச் சரியாகவும் எளிதாகவும் பிரதிபலிக்கக் கூடிய தன்மை நாவலுக்கேயுரிய சிறப்பான பண்பாகும்.
தமிழின் நாவல் வரலாறும், ஈழத்துத் தமிழ் நாவல் வரலாறும் தம்முள் வேறுபட்டவையாகும். 1940கள் வரை நாவல் எழுதும் ஆர்வம் ஈழத்தைப் பொறுத்தவரை குறைவாகவே காணப்பட்டிருக்கிறது. 1950களின் பின்னர் நாவல் மாத்திரமன்றி ஒட்டுமொத்தமான இலக்கிய வளர்ச்சியிலும் துரித முன்னேற்றம் காணப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதிகளில் ஈழத்தில் பல இலக்கிய இயக்கங்கள் தோன்றின. இவை நாவல் வளர்ச்சியில்

«Х• 435
காத்திரமான தாக்க விளைவுகளை ஏற்படுத்தின. தேசியம், யதார்த்தம், மண்வாசனை முதலான பண்புகளையுடைய நாவல்கள் எழுதப்படுவதற்கான சாத்தியப் பாடுகள் இவற்றால் ஏற்பட்டன. மறுமலர்ச்சிச் சங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியன இவ்விடத்திற் சுட்டிக் காட்டப்படத் தக்கன.
‘ஈழத்து இலக்கியம்’ பற்றிய உணர்வுபூர்வமான கருத்துநிலை (Ideology) ஈழத்திலே வேரூன்றி வளர்வதற்கு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முனைப்புடன் பாடுபட்டது. ஈழத்துப் படைப்பாளர்களால் இலக்கியத்திலே தேசியத்தன்மை வலியுறுத்தப்பட்டதன் விளைவாகப் பிரதேசப்பண்பு சார்ந்த நாவல்கள் பல தோன்றுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டன.
தமிழகத்திலே 'வட்டாரவழக்கு நாவல்கள்’ எனக் அழைக்கப்படும் நாவல்களை ஈழத்திலே ‘பிரதேசப்பண்பு நாவல்கள்’ என்று குறிப்பிடுவர். ஈழத்து நாவல் வரலாற்றில் இத்தகைய நாவல்கள் 1940களின் பின்னர் அதிகமாகப் படைக்கப்பட்டன. பிரதேசப்பண்பு சார்ந்த நாவல்களிற் சில அவ்வப்பிரதேசம் பற்றிய புவியியல் வர்ணனையுடைய நாவல்களாயும், சில நாவல்கள், குறித்த பிரதேசத்தைக் கதை இயங்குதளமாகக் கொண்டு அப்பிரதேசத்து மக்களுடைய வாழ்வியல் ஒழுகலாறுகளை ஆதியோடு அந்தமாகவும் நுணுக்கமாகவும் எழுத்தில் வடிப்பனவாகவும் அமைந்திருந்தன.
ஈழத்தில் பிரதேசப்பண்புசார் நாவல்களை எழுதியவர்களுள் இளங்கீரன், கே. டானியல், பெனடிக்ற்பாலன், செங்கையாழியான், செ. கணேசலிங்கன், எஸ்.பொன்னுத்துரை, அ. பாலமனோகரன், தெணியான், ஏ.ரி.நித்தியகீர்த்தி, எஸ்.பூரீ ஜோன்ராஜன் முதலானோர் குறிப்பிடத் தக்கவர்களாவர்.
ஈழத்துத் தமிழ்ப் பிரதேசப் பண்பு நாவல்களை யாழ்ப்பாணப் பிரதேசப் பண்பு நாவல், வன்னி பிரதேசப் பண்பு நாவல், கிழக்கிலங்கைப் பிரதேசப் பண்பு நாவல் என வகைப்படுத்தி நோக்கலாம். இவ்வகைப்பாட்டுக்குள் உள்ளடங்கும் நாவல்கள் அவ்வப் பிரதேசங்களுக்கேயுரிய வாழ்வியலைப் பிரதிபலிப்பனவாக அமைந்து காணப்படுகின்றன.

Page 221
436 x
ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தில் யாழ்ப்பாணத்துச் சமூகத்துக்கெனச் சில தனித்துவமான பண்புகள் உள்ளன. இச்சமூகத்தை, அதன்பலம், சிறப்புக்குரியவராகக் கே. டானியல் கருதப்படுகிறார்.
Folklore’ என்ற சொற்றொடரை 1846இல் வில்லியம் ஜான்தாமஸ் என்பவர் முதன்முறையாக உருவாக்கினார். இச்சொற்றொடரானது, நாட்டுப்புற மக்களின் மரபு வழிப்பட்ட கலைகள், நம்பிக்கைகள், வாய்மொழி இலக்கியங்கள், பழக்க வழக்கங்கள் முதலானவற்றை ஆராய்வதான புலமைத் துறையினைக் குறிக்கப் பயின்று வருகின்றது.
நாட்டார் வழக்காற்றியலைப் பொருட்கூறு நாட்டார் வழக்காற்றியல் (Material Folklore), பொருட்கூறல்லா நாட்டார் வழக்காற்றியல் (N0n-Material Folklore) எனப் பகுத்தராயலாம். நாட்டார் வழக்காறுகளை, அவை உருவாக்கப்படும் முறை (Composition), நிகழ்த்தப்பெறும் முறை, பரப்பப்படும் (Transmission) முறை ஆகியனவற்றைக் கருத்திற் கொண்டு வாய்மொழி சார்ந்தன, வாய்மொழி சாராதன என வகைப்படுத்தலாம்.
நாட்டுப்புறக் கலைகள், நம்பிக்கைகள் என்ற பகுப்பு, கலை, நம்பிக்கை, சடங்கு, தெய்வம், விளையாட்டு, மருத்துவம், பெயராய்வு, உணவுப் பழக்கவழக்கம் முதலானவற்றை உட்கொண்டதான பரந்த ஆய்வுப் பொருண்மையினைக் கொண்டதாகும்.
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் புழங்கு பொருட்பண்பாடு பற்றிய ஆய்வுகள் முனைப்படையவில்லை. நாட்டார் வழக்காற்றியலில் ஆய்வு மேற்கொள்வோர் பண்பாட்டு LртGof oilu ob (Cultural Anthoropology), arapé Gilu Job (Sociology), goерзGLрпрlufilu ob (Socio-Lingustics), g) Gvš5шић (Lirerature), கல்வெட்டு (Inscription) முதலான கல்விப்புலங்களில் ஆளுமை பெற்றிருப்பது சிறப்பானதாகும்.
ஈழத்துத் தமிழர் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுத்துறையிலே ஆங்கிலேயர் வருகையும், அவர்களது ஆட்சியும் கணிசமான தாக்க விளைவுகளை ஏற்படுத்தின. ஆங்கிலேய அரசின் பிரதிநிதிகளும், மிஷனரிமாரும், இவர்களின் முயற்சிகளால் கவரப்பட்ட

※,437
சுதேசிகளும் ஆரம்பகால நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் முனைப்புடன் செயற்பட்டனர்.
வழக்காற்றியல் குறித்து ஈழத்திலே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகளை, உணர்வுபூர்வமற்ற தனிநபர் நிலைப்பட்ட ஆய்வுகள், தொகுப்புக்கள் எனவும், நிறுவன நிலைப்பட்ட ஆய்வுகள், தொகுப்புகள் எனவும் இருவகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.
நம்பிக்கைகள், சமூகத்தின் இருத்தலுக்கும், இயங்கலுக்கும் அடிப்படைகளாக அமைகின்றன. மனிதனின் நலஉணர்வும், சமுதாய உணர்வும் நம்பிக்கைகளை வளர்த்து வருவனவாக உள்ளன.
நம்பிக்கைகளுக்கான அடிப்படை மனிதனுடைய அச்ச உணர்வும், அவனுடைய வாழ்க்கைத் தேவைகளுமேயெனலாம். இந்நிலையில் அவை அவனுடைய உள உருவாக்கங்களாக (Mental creations) வெளிப்படுகின்றன. நம்பிக்கைகளை அறிவியல் சார்ந்தன, அறிவியல் சாராதன என வகைப்படுத்துவது பொருத்தமான அணுகுமுறையாகும்.
ஆய்வுக்குரிய நாவல்களில் பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு, தீட்டு, கண்ணேறு, செய்வினை, கனவு, சகுனம், பேய், கடவுள், நேர்ச்சை, சத்தியம், திட்டு, பாவபுண்ணியம், அதிர்ஷ்டம், விதி, சோதிடம், கிழமை, மாதம், எண், வானியல் முதலான பல்வேறு நம்பிக்கைகள் விரிவான நிலையில் ஆவணப் படுத்தப்பட்டுள்ளன.
பெண் கர்ப்பமாக இருக்கும் போது எவர்முகத்தில் அதிகம் விழிக்கின்றாளோ அவரது சாயலைப்போலவே பிறக்கும் குழந்தையும் இருக்கும் என்ற நம்பிக்கையினைப் ‘பம்பிடிசிங்கி’ என்ற பாத்திரம் மூலம் தண்ணீர் என்ற நாவல் வெளிப்படுத்தியுள்ளது.
காவோலை என்ற நாவலில் பிறப்புத் தொடர்பான ஈழத்துத் தமிழ் மக்களின் பிரதான நம்பிக்கைகளிலொன்றான ‘விற்றுவாங்குதல் குறித்த செய்தி பயின்றுள்ளது.
செ. கணேசலிங்கனின் சடங்கு என்ற நாவலில், திருமணத்துக்கு நாள் குறித்தலில் மணமக்களின் பிறந்த மாதங்களைத் தவிர்ப்பது

Page 222
438 «Х•
முதல், இச்சடங்கில் பின்பற்றப்படும் பல்வேறு நம்பிக்கைகள் குறித்த செய்திகள் விரிவான நிலையில் பயின்றுள்ளன.
அதிக மழை, அதிக விளைச்சல் ஆகியன இறப்பைக் குறிக்கும் அறிகுறிகள் என்பதனைப் பல்வேறு நாவல்களிலும் பார்க்க
முடிகின்றது.
திருமுறைகளைத் திருப்பாகப் பாடுவதன் மூலம் இறக்கும் தறுவாயில் உள்ள உயிரை வதைபடாமல் இவ்வுலகிலிருந்து ‘திருப்பி’, மேலுலகம் அனுப்பலாம் என்ற நம்பிக்கையினைக் கழுகுகள் என்ற நாவல், ஆறுமுகத்தாரின் இறப்புடன் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளது.
கிடுகுவேலி, சடங்கு முதலான நாவல்களில் தீட்டின் காரணமாகப் பெண்களைத் தனிமைப்படுத்தி (Separation) விலக்கி வைக்கும் நம்பிக்கை குறித்த செய்திகள் பயின்றுள்ளன.
குமாரபுரம், பஞ்சமர், தண்ணிர், இருளின் கதிர்கள், போடியார் மாப்பிள்ளை முதலான நாவல்களில் கண்ணேற்றின் தாக்கம் பற்றியும், அதிலிருந்து விலக்குப்பெறும் வழிமுறைகள் பற்றியதுமான செய்திகள் கதை நகர்வுப் பின்னணியில் விரிவான நிலையில் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
‘போடியார் மாப்பிள்ளையிலே, காரளியரும், கழுகுகள் என்ற நாவலிலே ஆறுமுகத்தாரும் பிறர் வைத்த செய்வினை, சூனியத்தால் அல்லற்படுவதாகக் காட்டுவதன் மூலம் இது குறித்த நம்பிக்கை வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
கனவுகள், நனவிலி எண்ணங்களின் வெளிப்பாடுகள் (Visual Hallincination) என்ற எண்ணப்பாங்கினைத் தண்ணீர் என்ற நாவலில் சின்னி’ என்பவள் காணும் கனவின் மூலம் அந்நாவலின் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
சகுனம் பற்றிய நம்பிக்கைகள் நாவல்களில் மிக அதிகமாகப் பதிவு பெற்றுள்ளன. பல்லி, காக்கை முதலானவற்றின் சகுனங்கள் இவற்றுள் கருதத் தக்கன. மனிதனின் அச்ச உணர்வு சகுனங்களை உருவாக்குகின்றது. மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்,

«Х• 439
வாழ்வியலில் சில நடைமுறைகளை நிச்சயித்துக் கொள்ளவும் இவை உதவுவதனால் இச்சகுனங்கள் நிலை பெற்றுள்ளன என்பதனைக் குறித்த நாவல்களில் பயின்றுள்ள செய்திகளின் மூலம் உய்த்துணர முடிகின்றது.
இறைவழிபாட்டுடன் தொடர்புடைய புனிதப் பொருட்கள் நோய்களைக் குணப்படுத்த வல்லன என்ற நம்பிக்கையினை, அடிமைகள் என்ற நாவலில் கந்தனுக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் மூலம் அந்நாவலாசிரியர் புலப்படுத்தியுள்ளார்.
தெய்வங்களுக்கு நேர்ச்சை (offering) செய்வதால் துன்பங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை குறித்த செய்திகள் நாவல்களில் பரவலாகப் பயின்றுள்ளன.
விருப்புக்குரியவர்களின் மேல் சத்தியம் செய்யும் நம்பிக்கை வழக்கம் நாவல்களில் பெருவழக்காகப் பதிவு பெற்றுள்ளது. சத்தியம் செய்தல் குறித்து நாவல்களிலே பயின்றுள்ள செய்திகள், குறித்த நபரின் உறுதியை நிலைநாட்டச் சத்தியம் செய்தல் உதவுகின்றமையினை உணர்த்தி நிற்கின்றன.
திட்டுதல்’ குறித்து நாவல்களில் பயின்றுள்ள செய்திகள், அந்நம்பிக்கை குற்றம் செய்தவர் அவ்விடத்திலேயே தண்டனை பெறவேண்டும் என்ற எண்ணத்திலேயே பயின்று வருவதனை வெளிக்காட்டுவனவாக உள்ளன. போராளிகள் காத்திருக்கின்றனர் என்ற நாவலில் வரும் மூதாட்டியின் திட்டு’ இதற்கான வகைமாதிரியான எடுத்துக்காட்டாகும்.
மலட்டுச் சொத்து, கோவில் சொத்து முதலானவற்றை அபகரித்தால் பழிபாவம் சூழும் என்ற நம்பிக்கை பற்றிக் குமாரபுரம், கழுகுகள் ஆகிய நாவல்களில் விரிவான செய்திகள் பயின்றுள்ளன. குமாரபுரம் என்ற நாவலிலே வன்னியா குடும்பம் அனுபவிக்கும் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் பழியே’ எனக் காட்டப்பட்டுள்ளது.
தண்ணீர் என்ற நாவலில் வரும் அஞ்சனம் பார்க்கும்
(மைபார்த்தல்) நடைமுறை குறித்த விவரணம், சோதிடம் குறித்த நம்பிக்கையின் விரிவான வெளிப்பாடு எனக் கருதமுடிகிறது.

Page 223
440 «Х•
காட்டாறு என்ற நாவலிலே வரும் சந்தானத்துக்கான விளைநிலத்தைத் தேடும் சம்பவச் சித்திரிப்பினுடே அந்நாவலின் ஆசிரியர், காரியமாற்றச் செல்கையில் மூன்று பேராகச் சென்றால் அக்காரியம் சித்திக்காது என்ற எண் குறித்த நம்பிக்கையினை நுணுக்கமாக ஆவணப்படுத்தியுள்ளார்.
தீட்டு, கண்ணேறு, செய்வினை, கனவு, சகுனம், பேய், முன்னோர் வழிபாடு, பலியிடல், சோதிடம், எண், நாள் முதலான பல்வேறு நம்பிக்கைகள், தமிழ்ச் சமூகத்திடம் மட்டுமல்லாது மேலைத் தேயத்தாரிடையேயும் மிகுந்த செல்வாக்குடன் நிலைபெற்றிருக்கும் தன்மை குறித்து ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களிடையே பயில்நிலையில் உள்ள நம்பிக்கைகளில் பெரும்பாலானவை குறித்த செய்திகள் நாவல்களில் பயின்றுள்ளமை கருதத் தக்கதாகும்.
மதிப்புறுபொருள் மீது நடத்தப்படும் நிர்ணயிக்கப்பட்ட விரிவான நடத்தை அல்லது நடவடிக்கைகளின் வடிவத்தைச் *சடங்கு’ எனக் குறிப்பிடலாம்.
கடவுளிடம் கொண்ட அச்சம், நன்மை விளையவேண்டும் என்ற மனித விருப்பம், சமுதாய ஒருங்கிணைப்பு பழக்கவழக்கம் முதலானவை காரணமாகச் சடங்குகள் தோற்றம்பெற்றன.
சடங்கினை, அதன் இயல்பு நோக்கி வாழ்வியற் சடங்கு, சமயச் சடங்கு, வளமைச் சடங்கு என வகைப்படுத்தலாம்.
நாவல்களில் வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகளான பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு ஆகியன தொடர்பான பல்வேறு செய்திகள் ஆங்காங்கே உதிரிகளாகப் பயின்றுள்ளன. வாழ்க்கைச் சுழற்சிச் சடங்குகள் சமுதாயம் பற்றிய செய்திகளின் உரமிக்க பகுதிகளைத் தருவனவாக உள்ளன. சமுதாயமொன்றின் நெறிமுறைகளையும், மதிப்புகளையும் எளிதாக அறிவிக்கும் பண்பாட்டின் வார்ப்புக்களாக இவை அமைந்துள்ளன.
பிறப்புக்கு முன்பதான சடங்கு நடைமுறைகள் குறித்த செய்திகள் நாவல்களில் பயின்று வரவில்லை. இச்சடங்கு நடைமுறைகள் ஈழத்

«Х• 441
தமிழரிடையே மிக அரிதாகவே காணப்படுதல் இதற்குக் காரணமாகும்.
வாழ்க்கைச் சுழற்சிச் சடங்கு நடைமுறைகளில் தீட்டுநிலை என்பது முப்பத்தொரு நாட்கள் வரை பேணப்படுதல் குறித்து நாவல்களில் பரவலான செய்திகள் கிடைக்கின்றன.
பூப்புச் சடங்கு நடைமுறைகளில் ஒன்றான ‘குப்பைத் தண்ணீர் வார்வை’ குறித்து, தண்ணிர் என்ற நாவலில் குறிப்பிடப்படுகிறது. இதனை அழுக்கு நிலையினைப் (Pollution) போக்குகின்ற ஒரு குறியீட்டுச் (Symbol) சடங்காகக் கருதமுடிகிறது. பூப்புச்சடங்கு நடைமுறைகளில் நாவிதர், சலவைத்தொழிலாளி ஆகியோர் பெறுகின்ற முக்கியத்துவம், அதற்கான காரணம் ஆகியன குறித்த செய்திகள் கே. டானியலினுடைய நாவல்களில் விரிவாகப் பயின்றுள்ளமை கருதத் தக்கதாகும்.
ஈழத்தமிழர் திருமணச் சடங்கு நடைமுறையில் பல ஆண்டுகளுக்கு முன்னர்க் காணப்பட்ட ‘சாணைக் கூறை போடும் மரபு குறித்துக் கே. டானியல் தண்ணிர், கோவிந்தன் முதலான நாவல்களிலே ஒரு கருத்தியல் நோக்கில் ஆவணப்படுத்தியுள்ளார்.
செ. கணேசலிங்கனுடைய சடங்கு என்ற நாவல், ஈழத்தமிழர் திருமண நடைமுறை குறித்த செய்திகளை ஒரளவிற்கு வரன்முறைப் படுத்திப் பதிவு செய்துள்ளமை குறித்தற்குரியது.
இறப்புச் சடங்கு நடைமுறையில் இறுதிக் கிரியைகளில் குறைவைத்தால், இறப்புக்குள்ளானவரின் ஆவியானது குறித்த குடும்பத்தை வருத்தும் என்ற நம்பிக்கை பற்றியும், இறப்புச்சடங்கில் இக்கிரியைகளின் முக்கியத்துவம் பற்றியும் செ. கணேசலிங்கனின் சடங்கு என்ற நாவல் விரிவான நிலையில் ஆவணப்படுத்தியுள்ளது.
ஈழத்தமிழர் இறப்புச் சடங்கு நடைமுறையில் ‘தாலிகழற்றும் சடங்கு நடைமுறையினை இறப்புச் சடங்கு நடைபெறும் நாளன்றே மேற்கொள்வர். தமிழகப்பகுதி நடைமுறைக்கு மாறுபட்ட இச்செயற்பாட்டை குமாரபுரம் என்ற நாவல் பதிவு செய்துள்ளது.
தண்ணீர் என்ற நாவலில் பயின்றுள்ள சுமையிறக்கல்’ சடங்கு நடைமுறை இன்று வழக்கில் இல்லை எனக் கூறுமளவிற்கு

Page 224
442 X
அருகிவிட்டது. இச்சடங்கு நடைமுறைக்கும் தமிழக மக்களிடம் வழக்கில் உள்ள ‘சுமைதாங்கிக்கல்’ அமைக்கும் வழக்கத்துக்கு மிடையிலான தொடர்புகள் விரிவான ஆய்வுக்குரியன.
வாழ்க்கைச் சுழற்சிச் சடங்கின் பல்வேறு நடைமுறைகளிலும் தாழ்த்தப்பட்ட சமூகப்பிரிவு மக்களின் பங்களிப்புக் கணிசமான அளவில் காணப்படுகிறது. உயர்வர்க்கத்தினரின் சமூகப் பொருளாதார அம்சங்களைப் பேணுவதற்காகக் கீழ்வர்க்கம் சடங்குகளின் வாயிலாக அடக்கி ஒடுக்கப்பட்டதைக் கே. டானியல், செ. கணேசலிங்கன் முதலானோரின் நாவல்கள் மிக இயல்பாகவே சித்திரித்துள்ளமை கருதத் தக்கதாகும்.
நாவல்களில் திருமணம், இறப்பு ஆகிய சடங்கு நடைமுறைகள் பற்றிய செய்திகளே மிகவும் விரிவான நிலையில் பயின்றுள்ளன. இச்சடங்கு நடைமுறை குறித்த தரவுகள், ஒப்பீட்டு நிலையில் கே. டானியல், எஸ். பொன்னுத்துரை முதலானோரின் நாவல்களிலேயே மிகுதியாகப் பயின்றுள்ளன. செ. கணேசலிங்கனின் சடங்கு என்ற நாவல் இங்கு சிறப்பான கவனத்திற்குரியதாகும். எத்தனைதான் இடர்கள் வந்தபோதிலும் சடங்கு நடைமுறைகளை அவற்றுக்குரிய மரபுகள் பிறழாமல் பேணவேண்டும் என்ற ஈழத்துத் தமிழ் மக்களின் மனோநிலையின் வெளிப்பாடுகளாகச் சடங்கு’, ‘தண்ணீர், “முருங்கையிலைக் கஞ்சி’ முதலான நாவல்களைக் குறிப்பிடலாம்.
மனிதன் சமூகத்தின் உறுப்பினனாகத் தான் கற்றவைகளைத் தனது சந்ததியாருக்கும் தன் இனத்தார்க்கும் கற்பிப்பதைப்பண்பாடு எனலாம். இது சமூகத்தின் வாழ்நெறியாக வெளிப்படுவதாகும். இப்பண்பாட்டினைப் பொருள்சார்பண்பாடு (Material Culture), பொருள்சாராப்பண்பாடு (Non Material Culture) என இருவகையாகப் பிரித்து ஆய்வு செய்யலாம்.
நாட்டுப்புற மருத்துவம் என்பது, ஒரு சமூகப் பண்பாட்டுச் சுற்றுப்புறச் சூழலுக்குள், காலவெளிக்குள் மக்கள் குழுவின் வாழ்வியல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும். இம்மருத்துவ நடைமுறைகள் பலவும் அறிவியல் சார்ந்தனவாகவேயுள்ளன.

«Х• 443
நாட்டுப்புற மருத்துவத்தினை மந்திர சமய மருத்துவம், இயற்கை மருத்துவம் என இருவகையாகப் பிரித்துக் காணலாம். இயற்கை மருத்துவம், சமூகத்தின் புற எதார்த்தங்களான இயற்கை, சுற்றுச்சூழல், தட்ப வெப்பம், தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் பல்வகை மருந்துப் பொருட்கள் ஆகியனவற்றுடன், சமூக அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
நாவல்களில் நாட்டுப்புற மருத்துவம் பற்றிய பல்வேறு செய்திகள் பயின்றுள்ளன. கே. டானியல் தமது பல்வேறு நாவல்களில் பேயோட்டல் சடங்கு. செய்வினை, சூனியம், கண்ணேறு கழித்தல், நச்சுக்கடி மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த பல்வேறு செய்திகளை விரிவாக ஆவணப்படுத்தியுள்ளார்.
இருளின் கதிர்கள் என்ற நாவல், கழிப்புப் பொருட்கள்மீது கண்ணேற்றை மாற்றுவித்து, அவற்றை முற்றாக அழிப்பதன் மூலம் கண்ணேற்றினால் உண்டான நோயைப் போக்கலாம் என்ற மருத்துவ நடைமுறையினைப் பொன்னம்மாளுக்கான கண்ணேறுகழித்தல் சடங்கின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.
நச்சுக்கடி மருத்துவத்தில் நச்சுயிரியினால் கடியுண்டவர் அதுகுறித்து முதலில் எவ்விதத் தகவல்களையும் மருத்துவரிடம் தெரிவிக்கக் கூடாது என்ற மரபு குறித்து நிலக்கிளி என்ற நாவல் மிக இயல்பாகச் சித்திரித்துள்ளது.
இயற்கை மருத்துவத்தில் பின்பற்றப்படும் பல்வேறு பத்திய நடைமுறைகள் குறித்தும், மருந்து உள்ளெடுக்கும் பல்வேறு கால அளவைமுறைகள் குறித்தும் கே. டானியலின் நாவல்களில் பரவலாகக் குறிப்புக்கள் பயின்றுள்ளன.
மகப்பேறுவேண்டி ‘ஏராக்கள்’ளுச் சேர்வை செய்து பருகும்
முதலான நாவல்களில் விரிவான செய்திகள் பயின்றுள்ளன.
ஈழத்துத் தமிழரிடையே நாட்டுப்புற மருத்துவ நடைமுறைகளில் மந்திர, சமய மருத்துவத்தின் பயில்நிலை ஒப்பீட்டு

Page 225
444 «Х•
நிலையில் மிகவும் கணிசமான ஒன்றாகும். நாவல்களில் கிடைக்கின்ற செய்திகள் இவ்வுண்மையினைப் பிரதிபலிப்பனவாகக் காணப்படுகின்றமை குறிப்பிடுதற்குரிய ஒன்றாகும்.
விளையாட்டு என்பது மானிட உயிர்கள் எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு வெளிப்பாட்டு நடத்தையாகும். இது, குறித்த மக்களின் பழக்க வழக்கங்களையும் மனப்பிரதிபலிப்புக்களையும் வெளிக்காட்ட வல்லதாகும்.
நாட்டுப்புற விளையாட்டுக்களை அவற்றின் நிலைக்களன், காலம், நேரம், இடம், வயது, பால், சமுதாயச் சூழல் முதலான பல்வேறு பண்புகளை, அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தலாம்.
ஈழத்தமிழர்தம் நாட்டுப்புற விளையாட்டுக்கள் பலவற்றைத் தமது நாவல்களில் மிகத்துல்லியமாகச் சித்திரித்த வகையில் கே. டானியல், செங்கையாழியான் முதலானோர் இருவரும் சிறப்பிடம் பெறுகின்றனர். போர்த் தேங்காயடித்தல், சாவலடி (கோழிச்சண்டை), கம்படி (சிலம்பம்), காற்றாடி முதலான நாட்டுப்புற விளையாட்டுக்களை ஒரு கருத்தியல் நோக்கில் இந்நாவலாசிரியர்கள் ஆவணப்படுத்தியுள்ளமை தெளிவாகப் புலனாகின்றது. கருவுக்குப் பங்கமேற்படாத வகையில் குறித்த நாவல்களின் கதை நகர்வுப் பின்னணியில் இவ்விளையாட்டுக்கள் பற்றிய சம்பவச்சித்திரிப்புக்களை நேரில் பார்ப்பது போன்றதான ஒரு உணர்வுப் பின்னணியில் அமைந்துள்ளமை கருதத் தக்கதாகும்.
செங்கையாழியானின் முற்றத்து ஒற்றைப் பனை என்ற நாவல், பட்டம் விடுதல் (காற்றாடி) என்ற நாட்டுப்புற விளையாட்டைக் கருவாகக் கொண்டமைந்துள்ளது. இந்நாவலில் வரும் முத்தர் அம்மான் என்ற பாத்திரத்தின் வாயிலாகப் பட்டம் தயாரித்தல், ஏற்றுதல் தொடர்பான அனைத்து விடயங்களும் மிகவிரிவாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன.
பெயர்களுடன் தொடர்புடைய வழக்காறுகளில் காரணப்பெயரும் ஒன்றாகும். ஒரு சமுதாயத்தின் பண்பாடு, நாகரிகம் முதலான அனைத்து விடயங்களையும் இப்பெயர்கள் வாயிலாக

令 445
அறிந்துகொள்ளலாம். காரணப் பெயர் வழங்கும் வழக்கம் சங்ககாலம் முதற்கொண்டே இருந்து வருகின்றது.
நாவல்களில் பயின்றுள்ள காரணப் பெயர்களைத் தோற்றம், பண்பு, தொழில், செயல், சாதி முதலான அடிப்படையில் பாகுபாடு செய்யமுடிகிறது. எள்ளல் பொருளில் பயில்வனவாகக் காணப்படும் இப்பெயர்கள், நாட்டுப்புற மக்களின் புலமைத் திறனையும், உவமை கூறும் ஆற்றலையும், அவர்தம் நகைச்சுவையுணர்வையும் வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
அகிழான் ஆறுமுகம், வாழையன், கொக்கர் மாரிமுத்தர், இறங்கல் கண்ணர், பேத்தைவல்லி முதலான காரணப் பெயர்கள் இயற்பெயர்களுடன் ஒட்டியமைந்த சூழலமைவுகள் குறித்து நாவலாசிரியர்கள் தரும் விளக்கங்கள் குறித்த பெயர்களின் பயில்நிலை அடிப்படைகளைத் தெளிவுறுத்துவனவாக உள்ளன. முருங்கையிலைக் கஞ்சி, பஞ்சமர், தண்ணிர், முற்றத்து ஒற்றைப்பனை ஆகிய நாவல்கள் இவ்விடத்தில் சிறப்பான கவனத்திற்குரியன.
நாட்டுப்புற மக்களிடையே தோற்றம் மற்றும் செயல் குறித்த காரணப் பெயர்கள் பெருவழக்காகப் பயின்று வருகின்றன். இதனை ஆய்வுக்குரிய நாவல்களும் சித்திரித்துள்ளமை கருதத் தக்கதாகும்.
நாட்டுப்புற மக்களால் மரபுவழியாக உண்ணப்பட்டு வரும் உணவை நாட்டார் உணவு என அழைக்கலாம். உணவுப் பழக்கவழக்கங்களானவை, வாழ்வாதாரம் என்ற எல்லைக்கு அப்பாற் சென்று சமூக, பண்பாட்டுப் பொருண்மைகளையும், உளவியல் தன்மைகளையும், அதிகார அடுக்கமைவு, அதிகாரம் மற்றும் இன்னோரன்ன அம்சங்களையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன.
கே. டானியல், எஸ்.பொன்னுத்துரை முதலானோருடைய நாவல்களில் பல்வேறு வகையான நாட்டுப்புற உணவுவகைகள் பற்றியும், அவற்றைத் தயாரிக்கும் நடைமுறை பற்றியும் விரிவான குறிப்புக்கள் பயின்றுள்ளன. ஒடியற்கூழ், குரக்கன் (கேழ்வரகு) பிட்டு, காயம், ஆமைக்கறி, மீன்கறி மற்றும் பல்வேறு வகையான துவையல் வகைகள் இவற்றுள் குறிப்பிடத் தக்கனவாகும்.

Page 226
446 «Х•
தண்ணிர் என்ற நாவலில் வரும் ஆமைக்கறி தயாரிக்கும் விவரணமும், பஞ்சமர் என்ற நாவலில் வரும் ஒடியற் கூழ் தயாரிக்கும் விவரணமும் குறிப்பிடத்தக்க சித்திரிப்புக்களாக உள்ளன.
உப்பு, புளி, எண்ணெய், நீர் மற்றும் சூரிய வெளிச்சம் முதலானவற்றை நுட்பமாகப் பயன்படுத்துவதன் மூலம் உணவுப் பொருட்களைக் குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் பாதுகாக்கும் முறைமைகள் பற்றிய குறிப்புக்கள், காட்டாறு, தண்ணிர், பஞ்சமர், பஞ்சகோணங்கள், நிலக்கிளி முதலான நாவல்களில் பரவலாகப் பயின்றுள்ளன.
உணவு முறை விதிகளிலே விருந்து வைபவங்களில் தலைச்சன் விருந்தாளியைத் தேர்வு செய்யும் நடைமுறையின் முக்கியத்துவத்தினை அடிமைகள் என்ற நாவலில் வரும் கிறித்தவப் பாதிரியாரைத் தலைச்சன் விருந்தாளியாக்கிய சூழ்நிலையின் மூலம் கே. டானியல் மிக இயல்பாகச் சித்திரித்துள்ளார்.
நாட்டார் கலைகளும் கைவினைப் பொருட்களும் மக்கள் வாழ்வியலின் அனைத்து விடயங்களோடும்இணைந்துள்ளன. இவ் இருவகைப் பிரிவுகளுக்குமிடையிலான வேறுபாட்டைக் கோடுகிழிப்பது போலத் திட்டவட்டமாக வரையறுக்க முடியாத நிலையில், அவை ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன.
கே. டானியல், செங்கையாழியான் முதலானோரின் நாவல்களில் நாட்டார் கலைகள் பற்றிய பல்வேறு குறிப்புக்கள் பயின்றுள்ளன. நிலவியல் மற்றும் வரலாறு சார்ந்து அமைகின்ற கைவினைக்கலைகள் பலவும் பனைமரத்திலிருந்து பெறப்படுகின்ற மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டுள்ளமை பற்றியும் இவ்வகைக் கலைகளில் பெரும்பாலானவை குறித்த சில சமூகப்பிரிவு மக்களிடம் அடைக்கலம் பெற்றுள்ள நிலைமை பற்றியும் நாவல்கள் மிக இயல்பாகச் சித்திரித்துள்ளன.
கானல் என்ற நாவல் நாட்டார் கூத்துக்களை அரங்கேற்றுவதில் பின்பற்றப்படும் பல்வேறு நடைமுறைகள் பற்றி விரிவாக விவரணம் செய்துள்ளது. இது யாழ்ப்பாணத்துத் தமிழ் நாடக அரங்கு பற்றி ஆராய்ச்சி செய்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

(X 447
ஒரு குறிப்பிட்ட சூழலின்போது அச்சூழலுக்கேற்ற சார்புப் பொருளை உணர்த்துவதற்காகக் கையாளப்படுகின்ற பொதுப்படையான சுருக்க மொழிகளே பழமொழிகள் ஆகும். சுருக்கம், தெளிவு, செறிவு, பெருவழக்குப் பயன்பாடு முதலானவை பழமொழியின் அடிப்படை இயல்புகளாகும். பழமொழிகளை அவற்றின் அளவு, பொருள், அகரவரிசை, அமைப்பியல், பயன் முதலான பல்வேறு அடிப்படைகளைக் கொண்டு வகைப்படுத்தலாம்.
ஆய்வுக்குரிய நாவல்களில் முழுமையாகவும் பகுதியாகவும் பயின்றுள்ள பழமொழிகள், பாத்திரங்கள் தமக்குத்தாமே பேசுதல், பிறருடன் பேசுதல் என்ற இருநிலைகளில் பயின்று வந்துள்ளன.
நாவல்களில் பழமொழியின் பயன்பாட்டை, கதைமாந்தர் பண்பு விளக்கத்திற்கும், கதை பின்னலுக்கும், கருத்து விளக்கத்திற்க்கும், உலகப் பொதுவான உண்மைகளை உரைத்தற்கும், அறமுரைத்தற்கும், பாத்திரங்களின் மனநிலைகளை விளக்குதற்கும் எனப் பல்வேறு நிலைகளில் இனங்காண முடிகின்றது.
கே. டானியலினுடைய நாவல்களில் பழமொழிகளின் பயில்நிலை அதிகமாகக் காணப்படுவது கருதத்தக்கதாகும். பழமொழிகளை அவற்றுக்குகந்த சூழல்களில் கையாண்டுள்ள நாவலாசிரியர்கள்; கதையை, அதன் நிகழ்ச்சியை மட்டும் உணர்த்தப் பயன்படுத்தாது, தமது கருத்துக்களைப் புலப்படுத்துவதற்கும் அவற்றைக் கருவியாகக் கொண்டுள்ளமையினையும் காணமுடிகின்றது.
நாவல்களில் பயின்றுள்ள பழமொழிகள் கதைக் கருவை உண்டாக்கப் பயன்பட்டதைவிட மாறாகக் கதைக் கருவை விளக்கும் தன்மையிலேயே அதிகமாகப் பயன்பட்டுள்ளன.
நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகளின் பயில்நிலையைப் பொறுத்தவரை கே. டானியல், செ. கணேசலிங்கன், எஸ்.பொன்னுத்துரை, அ பாலமனோகரன், செங்கையாழியான் முதலானோரின் படைப்புக்கள் கணிசமான முக்கியத்துவம் பெறுவனவாக உள்ளன. இவர்தம் படைப்புக்களில்

Page 227
448 &
நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் பலவும் ஒரு கருத்தியல் நோக்கில் பயின்றுள்ளமையினைப் பல்வேறு நிலைகளிலும் உணரமுடிகின்றது. கே. டானியலின் நாவல்கள், செ.கணேசலிங்கனின்‘சடங்கு’, எஸ். பொன்னுத்துரையின்'சடங்கு, அ. பாலமனோகரனின் நிலக்கிளி, செங்கையாழியானின் முற்றத்து ஒற்றைப் பனை முதலான நாவல்கள் இங்கு விதந்து குறிப்பிடத்தக்க வகைமாதிரியான எடுத்துக் காட்டுக்களாகும்.
நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகளின் பயில் நிலை என்பது பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டதாகக் காணப்படுகிறது.
நாட்டுப்புறப் பண்பாட்டை, அதன்மரபைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்பது அவற்றுள் g5 6öp 6uyuLu Tulu 5 IT gaOSTLDIT5 அமைந்துள்ளதெனக் கருதலாம். ஆங்கிலக் கல்வியின் தாக்கம், அதனால் விளைந்த நாகரிகத்தாக்கம், சமூகமாற்றம் முதலானவற்றால் பாரம்பரியமான நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் பலவும் மறைந்தும், வழக்கிழந்தும் போவதான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அவற்றைப் பேணவேண்டும், GL 6ooft அடுத்துவரும் தலைமுறையினர்க்கும் கையளிக்க வேண்டும் என்ற எண்ணம் சமூகப் பொறுப்பு மிக்க படைப்பாளர்க்கு மேற்கிளம்புவது இயல்பானதே எனக் கூறலாம். எதார்த்தப் பண்புமிக்க பிரதேசப்பண்பு நாவல்கள் (வட்டார நாவல்கள்) இம்முயற்சிக்கு வாய்ப்பான பரந்துபட்ட களங்களாக அமைந்தன. இவை நாட்டார் பண்பாட்டுக் கூறுகளுக்கு இலக்கிய வாழ்வளித்து அவற்றை நிலைநிறுத்த முற்பட்டன.
ஈழத்து இலக்கியத் தடத்தில் மரபு, மண்வாசனை, தேசியம் முதலான பண்புகள் வலியுறுத்தப்பட்ட பின்னணியும், நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் அதிகம் பயின்றமைக்கான காரணங்களிலொன்றாகக் கருதலாம்.
நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகளின் பயில்நிலைக்குப் படைப்பாளர் சிலரது மார்க்சியச் சிந்தனைச்சார்பும் ஒரு காரணமாகும். நாட்டார் பண்பாட்டுக் கூறுகளின்
பயில்நிலையினை உழைக்கும் வர்க்கத்தினரை ஒன்று திரட்டிச் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்க முனையும் முயற்சியில் படைக்கப்பட்ட

«Х• 449
நாவல்களிலேயே அதிகமாகக் காணமுடிகிறது. கே. டானியலின் நாவல்களை இவ்விடத்தில் விதந்து குறிப்பிட்டுச் சொல்லலாம். சாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஒடுக்கப் படுகின்றவர்கள் சார்பில் தோன்றும் இவருடைய நாவல்களில் சமூகத்தின் சாதாரண அடித்தட்டு மக்களின் வாழ்வியல் கூறுகள் பலவும் விரிவான நிலையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளமை கருதத் தக்கதாகும்.
நாவல்கள் பயின்றுள்ள நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் குறித்த நாவல்களின் புனைதிறனுக்குச்சூழல் மற்றும் படைப்புநுட்பம் ஆகிய இருநிலைகளில் பயன்பட்டுள்ளமை குறித்து இந்த ஆய்வின் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. ‘பூமரங்கள்’, ‘முருங்கையிலைக் கஞ்சி’, ‘முற்றத்து ஒற்றைப்பனை, செ.கணேசலிங்கனின் ‘சடங்கு முதலான சில நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் அவற்றின் கருவுக்கும், தலைப்புக்கும் நேரடியாகப் பயன்பட்டுள்ளன எனக் கூறலாம். ஆயினும் இந்நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் நாவலின் கதைக் கருவை உண்டாக்கப் பயன்பட்டதை விட மாறாக அக்கருவை விளக்குவதான நிலையிலேயே பெரிதும் பயன்பட்டுள்ளதனைக் காணமுடிகிறது.
ஈழத்துத் தமிழ் நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகளின் பயில் நிலையும், பயன்பாடும் பற்றியதான இந்த ஆய்வின் மூலம் ஈழத்தமிழர் பண்பாட்டு மரபுகளை, அதன் வேர்களை இனங்கண்டு மீட்டுருவாக்கம் செய்வதற்கான வாய்ப்புநிலை ஏற்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இவ்வாறான முயற்சிகள் காலத்தின் கட்டாயமாகவும் அமைந்துள்ளன எனக் கூறலாம்.
ஈழத்துத் தமிழ் நாவல்களை நாட்டார் வழக்காற்றியல் நோக்கில் ஆராய்வதான முதன் முயற்சி இதுவேயாகும். வருங்காலத்தில் நாட்டார் வழக்காற்றியல் கூறுகளைத் தனித்தனியே நாவல்களில் பொருத்திப் பார்ப்பதான ஒரு பரந்துபட்ட ஆய்வுக்களத்தினை இந்த ஆய்வு தொடக்கி வைத்துள்ளது.

Page 228
துணைநூற்பட்டியல்
முதன்மை ஆய்வு மூலங்கள்
கணேசலிங்கன், செ.,
கணேசலிங்கன், செ.,
கணேசலிங்கன், செ.,
கணேசலிங்கன், செ.,
செங்கையாழியான்,
செங்கையாழியான்,
செங்கையாழியான்,
செங்கையாழியான்,
செங்கையாழியான்,
நீண்ட பயணம், பாரி நிலையம், சென்னை, 1965.
சடங்கு, பாரி நிலையம், சென்னை, 1994.
போர்க்கோலம், பாரி நிலையம், சென்னை, 1996.
செவ்வானம், பாரி நிலையம், சென்னை, 1997
வாடைக்காற்று, வீரகேசரி பிரசுரம், கொழும்பு, 1973.
கொத்தியின் காதல், மாணிக்கப் பிரசுரம், கொழும்பு, 1975.
காட்டாறு, வீரகேசரி பிரசுரம், கொழும்பு, 1977
யானை, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 1991.
செங்கையாழியான் நாவல்கள் (இந்தநாடு உருப்படாது, பிரளயம், முற்றத்து ஒற்றைப்பனை, கிடுகுவேலி, மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, ஒரு மைய வட்டங்கள்), கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 1992.

செங்கையாழியான்
செங்கையாழியான்
டானியல், கே.
டானியல், கே.
டானியல், கே.
டானியல், கே.
டானியல், கே.
டானியல், கே.
டானியல், கே.
டானியல், கே.
s
y
8 451
காவோலை, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 1994
மரணங்கள் மலிந்தபூமி, யாழ் இலக்கிய வட்டம், யாழ்ப்பாணம், 2000.
போராளிகள் காத்திருக்கின்றனர், வீரகேசரி பிரசுரம், கொழும்பு, 1975.
கோவிந்தன், கார்க்கி நூலகம், சென்னை, 1982.
அடிமைகள், தோழமைப் பதிப்பகம், குடந்தை, 1984.
பூமரங்கள், ரஜனி வெளியீடு, யாழ்ப்பாணம், 1984
தண்ணீர், வராவொல்லை வெளியீடு, தும்பளை, பருத்தித் துறை, 1987
கே. டானியலின் குறுநாவல்கள்
(முருங்கையிலைக் கஞ்சி, மையக்குறி, இருளின் கதிர்கள்), வராவொல்லை வெளியீடு,
தும்பளை, பருத்தித்துறை, 1989.
கானல், பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடு, கொழும்பு, 1993.
பஞ்சகோணங்கள், விடியல் பதிப்பகம், கோவை, 1993

Page 229
452 x
டானியல், கே,
தெணியான்,
தெணியான்,
தெணியான்,
தெணியான்,
நித்திய கீர்த்தி, ஏ.ரி.,
பாலமனோகரன், அ.,
பாலமனோகரன், அ.,
பொன்னுத்துரை, எஸ்.
பொன்னுத்துரை, எஸ்,
ஜோன்ராஜன், எஸ்.ழரீ,
பஞ்சமர், அலைகள் வெளியீட்டகம், கோடம்பாக்கம், சென்னை, 1994.
விடிவை நோக்கி, வீரகேசரி பிரசுரம், கொழும்பு, 1973,
கழுகுகள், நர்மதா வெளியீடு, யாழ்ப்பாணம், 1981.
பொற்சிறையில் வாடும் புனிதர்கள், முரசொலி வெளியீடு, யாழ்ப்பாணம், 1989,
மரக்கொக்கு, நான்காவது பரிமாணம், வல்வெட்டித் துறை, 1994.
மீட்டாத வீணை, கமலா வெளியீடு, பருத்தித்துறை, 1974
நிலக்கிளி, வீரகேசரி பிரசுரம், கொழும்பு, 1973,
குமாரபுரம், வீரகேசரி பிரசுரம், கொழும்பு, 1974
தீ, சரஸ்வதி காரியாலயம், ராயப்பேட்டை, சென்னை, 1961.
சடங்கு, ←9ዛዟö* வெளியீடு, கொழும்பு, 1971.
போடியார் மாப்பிள்ளை, வீரகேசரி பிரசுரம், கொழும்பு, 1976,

துணைமை ஆய்வு மூலங்கள் தமிழ் நூல்கள் 1. இலக்கிய நூல்கள்
அகநானூறு
ஐங்குறுநூறு
கம்பராமாயணம்
கலிங்கத்துப்பரணி
கலித்தொகை மூலமும், நச்சினார்க்கினியர் உரையும்
குறுந்தொகை
சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும்,
சீவகசிந்தாமணி
(நச்சினார்க்கினியர் உரை)
திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்,
8 453
கழக வெளியீடு, சென்னை, 1976.
சாமிநாதையர், உ.வே. (பதி.ஆ.), கபீர் அச்சகம், சென்னை, 1957
கம்பர், கம்பன் கழகம், சென்னை, I976.
பழனிவேல் பிள்ளை, பெ. (உரை.ஆ.) கழக வெளியீடு,
சென்னை, 1950.
அனந்தராமையர், இ.வை. (பதி.ஆ.), தமிழ் ப் பல் க  ைலக் கழகம் , தஞ்சாவூர், 1984.
சாமிநாதையர், உ.வே. (பதி.ஆ.), சென்னை, 1937
சாமிநாதையர், உ.வே. (பதி.ஆ.),
கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1968.
சாமிநாதையர், உ.வே. (பதி.ஆ.), பூரீதியாகராச விலாச வெளியீடு, சென்னை, 1969,
கழக வெளியீடு, சென்னை, 1956.

Page 230
454 &
திருக்கோவையார் - பேராசிரியர் உரை
திருவருட்பா - முதல் ஐந்து திருமுறைகள்
தொல்காப்பியம்சொல்லதிகாரம் சேனாவரையர் உரை.
தொல்காப்பியம்பொருளதிகாரம் இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்பொருளதிகாரம் நச்சினார்க்கினயருரை.
தொல்காப்பியம்பொருளதிகாரம் பேராசிரியருரை.
நற்றிணை
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்
பதிற்றுப்பத்து மூலமும் உரையும்
ஆறுமுக நாவலர் (பதி.ஆ.), வித்தியாதுபாலன யந்திரசாலை, சென்னைப்பட்டணம், 1922.
இராமலிங்க அடிகள், சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்,
FLD Jigr
தென்னார்க்காடு மாவட்டம், வடலூர், 1989.
பூவராகம்பிள்ளை (பதி.ஆ.),
கழக வெளியீடு, சென்னை, 1962.
கழக வெளியீடு, சென்னை, 1974.
கழக வெளியீடு, சென்னை, 1970.
கழக வெளியீடு, சென்னை, 1975.
பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (உரை.ஆ.), கழக வெளியீடு, சென்னை, 1956,
சாமிநாதையர், உ.வே. (பதி.ஆ.), தமிழ் ப் பல் க ைலக் கழகம் , தஞ்சாவூர், 1985.
துரைசாமிப்பிள்ளை,
(உரை.ஆ.), கழக சென்னை, 1968,
ஒளவை,
வெளியீடு,

பரிபாடல் மூலமும் உரையும்
புறப்பொருள் வெண்பாமாலை
பெருங்கதை
மணிமேகலை
முத்தொள்ளாயிரம்
2. உரைநடை நூல்கள்
அகத்தியலிங்கம், ச, (பதி.ஆ.)
அண்ணாமலை, வே.
அறவாணன், க.ப.,
அன்னகாமு, செ,
«Х» 455
சோமசுந்தரனார், பொ. வே. (உரை.ஆ.), கழக வெளியீடு,
சென்னை, 1969,
சாமிநாதையர், உ.வே. (பதி.ஆ.), கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1950.
சாமிநாதையர், உ.வே. (பதி.ஆ.), சென்னை, 1968.
சாமிநாதையர், உ.வே. (பதி.ஆ.), பூரீதியாகராச விலாச வெளியீடு,
சென்னை, 1965.
சேதுரகுநாதன், ந. (பதி.ஆ.), கழக வெளியீடு, சென்னை, 1975.
தமிழகப் பழங்குடி மக்கள், மொழியியல் துறை ஆராய்ச்சி மாணவர் வெளியீடு, சிவகாமி அச்சகம், அண்ணாமலைநகர், 1972.
சங்க இலக்கியத் தொன்மக் களஞ்சியம் தொகுதி-2, மெய்யப்பன் தமிழாய்வக வெளியீடு, சிதம்பரம், 2000.
தமிழர்மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புக்கள், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 1987
ஏட்டில் எழுதாக் கவிதைகள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1959.

Page 231
456 «Х•
அனுமந்தன், கி.ர.
ஆளவந்தார், ஆர்.
ஆளவந்தார், ஆர்,
இராகவன், வி. எஸ்.வி.
இராகவையங்கார், மு.
இராமகிருஷ்ணன், எஸ்.,
இராமநாதன், ஆறு.
இராமநாதன், ஆறு.
இராமநாதன், ஆறு, (பதி.ஆ.)
பண்டைக்கால நாகரிகங்களின் வரலாறு, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1985.
கல்வெட்டில் ஊர்ப்பெயர்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1983.
இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் (தொகுதி ஒன்று), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1984.
பிளினி, மணிவாசகர் நூலகம், சென்னை, 1977.
ஆராய்ச்சித் தொகுதி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1984
இந்தியப் பண்பாடும் தமிழரும், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1971.
தமிழில் புதிர்கள் - ஓர் ஆய்வு, சமுதாயச் சிற்பிகள் வெளியீட்டகம், மஞ்சக்கொல்லை, புவனகிரி, 1978,
நாட்டுப்புறப்பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1982.
நாட்டுப் nவியல் ஆய்வுமுறைகள், சமூகவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1991

இராமநாதன், ஆறு.,
இராமநாதன், பி.,
இராமலிங்கம், மா.,
எஸ்ஜியார்
கருணாகரன், கி., பாக்கியலட்சுமி, இரா.,
கழனியூரன்
காந்தி, கா.,
குணசேகரன், கே.ஏ.,
கேசவன், கோ.,
8 457
நாட்டுப்புற இயல் ஆய்வுகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1997.
சிந்து வெளித் தொல் தமிழர் நாகரிகம், கழக வெளியீடு, சென்னை, 1999,
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1985.
திருநெல்வேலிப் பகுதியில் சிறுதெய்வ வழிபாடு, திருமகள் நூலகம், தூத்துக்குடி, 1986.
நாட்டுப்புறவியலாய்வு நெறி முறைகள், இந்தியத் தமிழ் நாட்டுப் புறவியல் கழகம், அண்ணாமலை நகர், 1989,
நாட்டுப்புறத்து நம்பிக்கைகள், அன்னம் (பி.) லிட், சிவகங்கை,
1995.
தமிழர் பழக்கவழக்கங்களும்
நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1980,
நாட்டுப்புற நிகழ் கலைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை.
இயக்கமும் இலக்கியப் போக்குகளும், சென்னை புக் ஹவுஸ், சென்னை, 1982.

Page 232
458 x
கேசவன், கோ.,
கேசவன், கோ.,
கைலாசபதி, க.,
கைலாசபதி, க,
கைலாசபதி, க.,
கோமதி சங்கர், கே.எம்.கே.,
கோவைக்கிழார்
சக்திவேல், சு.
சக்திவேல், சு. (பதி.ஆ.)
சண்முகசுந்தரம், சு,
நாட்டுப்புறவியல் - ஒரு விளக்கம், புதுமைப்பதிப்பகம், திருச்சி, 1986.
நாட்டுப்புறவியல் கட்டுரைகள், புதுமைப்பதிப்பகம், திருச்சி, 1987
பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், பாரிநிலையம், சென்னை, 1966.
தமிழ்நாவல் இலக்கியம், பாரி நிலையம், சென்னை, 1968,
நவீன தமிழ் இலக்கியத்தின் அடிப்படைகள், மக்கள் வெளியீடு, சென்னை, 1980.
சமூகவியல் நோக்கில் நீதி இலக்கியம், சரயு பப்ளிகேஷன்ஸ், தென்காசி, 1989.
எங்கள் நாட்டுப்புறம், கோவை நிலையம், கோவை, 1951.
நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1995.
நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1996,
தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள்,
மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 1985.

சண்முகசுந்தரம், சு,
சண்முகலிங்கம், க. (பதி.ஆ.)
சத்தியமூர்த்தி, அ.ம.,
சந்தானம், என்.
சரசுவதி வேணுகோபால்,
சரோஜா, வே.,
சாந்தி, ந.,
சிவகாமசுந்தரி, சு,
சிவசுப்பிரமணியன், ஆ,
சிவத்தம்பி, கா.,
※ 459
நாட்டுப்புற இயல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1996,
தமிழ் நாட்டார் வழக்காற்றியல், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1993.
தமிழ் நாட்டுப்புறக் கதைகள் - ஓர் ஆய்வு, மகேந்திரன் பதிப்பகம், அம்மாச்சத்திரம், தஞ்சாவூர்-1997
கல்வி உளவியல், கார்த்திகேயன் அன் கம்பெனி, சென்னை, 1970.
நாட்டுப்புறப் பாடல்கள் - சமூக ஒப்பாய்வு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, 1982.
மண்ணின் மணம், வஞ்சிக்கோ பதிப்பகம், மதுரை, 1992.
பார்க்கவ குலச் சடங்குகளும் நம்பிக்கைகளும், குமரன் பதிப்பகம், வல்லம், தஞ்சை மாவட்டம், 1996,
சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, சென்னை, 1995.
மந்திரமும் சடங்குகளும், மக்கள் வெளியீடு, சென்னை, 1999.
நாவலும் வாழ்க்கையும், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1978,

Page 233
460 X
சிவத்தம்பி, கா. (பதி.ஆ.)
சிவத்தம்பி, கா.,
சிவத்தம்பி, கா.,
சிவலிங்கராஜா, சி. (பதி.ஆ.)
சுந்தரராஜன், பெ.கோ. (சிட்டி) சிவபாதசுந்தரம், சோ.,
சுப்பிரமணியம், க.நா.,
சுப்பிரமணியன், ச.வே.,
சுப்பிரமணியன், ச.வே. (பதி.ஆ.), விஜயலட்சுமி, ரா (பதி.ஆ.),
சுப்ரமணியன், ந.
இலங்கைத் தமிழர் நாட்டார் வழக்காற்றியல், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், 1980.
ஈழத்தில் தமிழ் இலக்கியம், பாவை பிரிண்டர்ஸ், சென்னை, 1987
தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி) லிட்., சென்னை, 1994.
நொறுங்குண்ட இருதயம், யாழ்ப்பாணக்கல்லூரி ஆய்வு நிறுவனம், யாழ்ப்பாணம், 1996.
தமிழ்நாவல் (நூறாண்டு) வரலாறும், வளர்ச்சியும்) கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை, 1977
முதல் ஐந்து தமிழ் நாவல்கள், அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், சென்னை, 1957.
தமிழில் விடுகதைகள், உலகத் தமிழாராயச்சி நிறுவனம், சென்னை, 1977
எண்பதில் தமிழ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1982.
சங்ககால வாழ்வியல் : சங்கத் தமிழரின் அரசுமுறையும் சமூக

சுப்பிரமணியம், நா.,
செந்திநாதன், கனக.,
செல்லம், வே.தி.,
செல்வநாயகம், வி.,
செல்வராசன், சில்லையூர்
சோமெல,
ஞானசம்பந்தன், அ.ச.,
ஞானசேகரன், தே,
ஞானசேகரன், தே.
(X 461
வாழ்வும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை, 1986.
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், யாழ்ப்பாணம், 1978.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி, அரசு வெளியீடு, கொழும்பு, 1964.
தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை,
1998.
தமிழ் உரைநடை வரலாறு, சாரதா விலாஸ் பிரஸ், கும்பகோணம், 1957.
ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி, அருள் நிலையம், சென்னை, 1967
தமிழ் நாட்டு மக்களின் மரபும் பண்பாடும், பாரி நிலையம், சென்னை, 1975.
இலக்கியக் கலை, கழக வெளியீடு,
சென்னை, 1999.
மக்கள் வாழ்வியல் மந்திரச் சடங்குகள், பாத்திபன் பதிப்பகம், மதுரை, 1987
நாட்டார் சமயம் : தோற்றமும் வளர்ச்சியும், கியூரி L16 ונth கேஷன்ஸ், மதுரை, 1992.

Page 234
4.62 x
தசரதன், ஆ ,
தண்டாயுதம், இரா.,
தமிழண்ணல்,
தமிழவன்,
தாயம்மாள் அறவாணன்,
துளசி இராமசாமி,
துரை அரங்கசாமி, மொ.அ.,
தேவநேயன், ஞா.,
நடராசன், தி. (பதி.ஆ.),
நடராசன், தி,
தமிழில் வசைப்பாடல்கள், (ஆண்டாள் கவிராயன் தனிப் பாடல்கள்), ஒலைச்சுவடிகள் பாது காப்பு மையம், சென்னை, 1996
சமூக நாவல்கள், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1988.
காதல் வாழ்வு, செல்வி பதிப்பகம், காரைக்குடி, 1960,
நாட்டுப்புற நம்பிக்கைகள், கன்னட சங்கம், கிருத்துக் கல்லூரி, பெங்களூர், 1976.
திராவிட-ஆப்பிரிக்க ஒப்பீடு, பாரி நிலையம், சென்னை, 1988
நெல்லை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1985.
சங்ககாலச் சிறப்புப் பெயர்கள் (இலக்கியச் சிறப்புப் பெயர்களும், குடிபற்றிய சிறப்புப் பெயர்களும்), பாரி நிலையம், சென்னை, 1980.
தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், கழக வெளியீடு, சென்னை, 1962.
வன்னியடி மறவன் கதை, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 1977
நாட்டுப்புறச் சிறுவர் பாடல்கள், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை, 1979.

நடேசசாஸ்திரி, பண்டித,
எஸ்.எம்.,
5u?6õTTii, LDT.,
நாச்சிமுத்து, கி.,
நாசிர் அலி, பி.அ.மு.,
நாராயணன், பி.,
பக்தவச்சலபாரதி, சீ,
பகவதி, கே.,
பகவதி, கு.,
பகவதி, கு., லாரன்ஸ்,
செ.ஜீன். (பதி.ஆ.),
பரமசிவானந்தம், அ.மு.
தீனதயாளு, சென்னை, 1946.
பேரும் பெருமையும், சோபிதம் பதிப்பகம், நாகர்கோயில், 1982.
தமிழ் இடப்பெயராய்வு, சோபிதம் பதிப்பகம், நாகர்கோவில், 1983.
நாட்டுப்புறப் பண்பாட்டியல், இக்ரஸ் பப்ளிகேஷன்ஸ், திருச்சி, 1987.
நாட்டுப்புற நம்பிக்கைகள், செல்வி பதிப்பகம், காரைக்குடி, 1986. பண்பாட்டு மானிடவியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1990,
தமிழக ஊர்ப்பெயர்கள், உலகத் தமிழ்க்கல்வி இயக்கம், சென்னை,
1986.
தமிழகம் இலங்கை ஊர்ப் பெயர்கள்-ஓர் ஒப்பாய்வு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1991.
தாய் நாட்டிலும் மேலை நாடுகளிலும் தமிழியல் ஆய்வு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2000.
வாய்மொழி இலக்கியம், தமிழ்க் கலைப்பதிப்பகம், சென்னை, 1964,

Page 235
464 X
பரமசிவானந்தம், அ.மு.,
பாலகிருட்டினன், மு.
பாலசுப்பிரமணியம், இரா.,
பாலசுப்பிரமணியன், இரா,
பாலசுப்பிரமணியன், கு. வெ.,
பாலசுப்பிரமணியன், கு.வெ.
பாலசுப்பிரமணியன், கு. வெ.,
பாலசுந்தரம், இ,
பாஸ்கல் கிஸ்பர்ட்,
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் உரைநடை வளர்ச்சி, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் லிமிடெட், சென்னை, 1966.
கண்ணேறு கழித்தல், பாலகி பதிப்பகம், நாகமலை, மதுரை, 1993.
தமிழர் நாட்டு விளையாட்டுக்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1980,
நாட்டுப்புற வாழ்வியல், சத்யா வெளியீடு, மதுரை, 1990.
சங்க இலக்கியத்தில் சமூக அமைப்புகள், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 1994.
சங்க இலக்கியத்தில் கலையும், கலைக்கோட்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1998.
ஆய்வியல் நெறிகள், உமா நூல் வெளியீட்டகம், தஞ்சாவூர், 2001.
ஈழத்து நாட்டார் பாடல்கள், (மட்டக்களப்பு மாவட்டம்) ஆய்வும் மதிப்பீடும், தமிழ்ப் பதிப்பகம், சென்னை, 1979.
சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள், ஜெ.நாராயணன்

பிலோ இருதயநாத்,
புதுமைப்பித்தன்,
பெருமாள், அ.நா.,
பெருமாள், அ.நா.,
மீனாட்சி சுந்தரம், தெ.பொ.,
முத்தையா, இ.
முத்தையா, இ,
மெளனகுரு, சி., சித்திரலேகா, மெள, நுஃமான், எம்.ஏ.,
ராஜமய்யர், பி.ஆர்.
& 465
(தமிழாக்கம்), தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1964,
மேற்கு மலைவாசிகள், மல்லிகைப் பதிப்பகம், சென்னை, 1970.
புதுமைப்பித்தன் கட்டுரைகள், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை,
1988.
தமிழில் கதைப்பாடல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1987
நாட்டுப்புறவியல் சிந்தனைகள், தேன்மழை வெளியீடு, சென்னை, 1987.
தமிழும் பிற பண்பாடும், நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 1980,
நாட்டுப்புற மருத்துவ மந்திரச் சடங்குகள், அன்னம் வெளியீடு, சிவகங்கை, 1986.
நாட்டுப்புறப் பண்பாட்டு மரபு மாற்றுமரபு, அரசு பதிப்பகம், மதுரை, 1998.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம், வாசகர் சங்க வெளியீடு, யாழ்ப்பாணம், 1979.
கமலாம்பாள் சரித்திரம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை, 1994

Page 236
466 必
லூர்து, தே.
லூர்து, தே.
லூர்து, தே.
வசந்தா, ஜி.
வளவன், சா.,
வானமாமலை, நா.,
வானமாமலை, நா.,
வானமாமலை, நா.,
நாட்டார் வழக்காற்றியல் - கள ஆய்வு, பரிவேள் பதிப்பகம், திருநெல்வேலி, 1986.
நாட்டார் வழக்காறுகள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 1988.
நாட்டார் வழக்காற்றியல்-சில அடிப்படைகள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1997
தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள்-ஒரு சமுதாய ஆய்வு, தென்றல் பதிப்பகம், தஞ்சாவூர், 2000.
நாட்டுப்புறவியல் கட்டுரைகள், மைதிலி பதிப்பகம், சென்னை,
1985.
தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள், எல்.சி.எச். பிரைவேட் லிட்., சென்னை, 1964.
பண்டைய வேதத் தத்துவங்களும், வேதமறுப்புப் பெளத்தமும், மக்கள் வெளியீடு, சென்னை, 1973,
தமிழர் பண்பாடும் தத்துவமும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை,
1973.

வானமாமலை, நா.,
வானமாமலை, நா. (பதி.ஆ.)
வித்தியானந்தன், சு.
விதாலி ஃபுர்னிக்கா,
வீராசாமி, தா.வே.,
வேதநாயகம் பிள்ளை, எஸ்.,
வையாபுரிப்பிள்ளை, எஸ்.,
ஜகந்நாதன், கி.வா. (பதி.ஆ.)
ஜகந்நாதன், கி.வா. (பதி.ஆ.)
ஸ்டீபன், ஞா. (தொ.ஆ.)
* 467
ஜவர் ராசாக்கள் கதை, மதுரைப் பல்கலைக்கழகம், மதுரை, 1974.
தமிழர் நாட்டுப்புறப்பாடல்கள், நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை, 1977.
தமிழர் சால்பு, பாரிபுத்தகப் பண்ணை, திருவல்லிக்கேணி, சென்னை, 1985.
பிறப்புமுதல் இறப்புவரை, நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை, 1986.
தமிழ்நாவல் முன்னோட்டம், மெர்க்குரி புத்தகக் கம்பெனி, கோயமுத்தூர், 1973.
பிரதாப முதலியார் சரித்திரம், சக்தி காரியாலயம், சென்னை, 1957.
தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1963.
மலையருவி, சரஸ்வதி மஹால் வெளியீடு, சென்னை, 1958.
நாடோடி இலக்கியம், கலைமகள் காரியாலயம், சென்னை, 1944,
பண்பாட்டு வேர்களைத் தேடி, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1999.

Page 237
468 «Х•
ஆய்வேடுகள் (அச்சிடப் பெறாதவை)
இராசேந்திரன், அ.,
சுகந்தி, த,
தமிழ்மணி, மா.,
நரேந்திரா, நா.,
ரகுபதி, சே,
செங்கை மாவட்ட நாட்டுப்புறப் பழக்க வழக்கங்களும்- நம்பிக்கை
களும், (செய்யூர் வட்டம்), முனைவர்ப்பட்ட ஆய்வேடு, நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், ஆகஸ்ட்-2000.
வடமராட்சியின் வாழ்வியற்
சடங்குகள் - ஓர் ஆய்வு, தமிழ்ச் சிறப்புக் கலைமாணி ஆய்வேடு, தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், 2000.
நாஞ்சில் நாடன் நாவல்களில் நாட்டுப்புறவியல் கூறுகள், எம். ஃபில். பட்ட ஆய்வேடு, தமிழியற்புலம், மதுரை காமராசர்
பல்கலைக்கழகம், மதுரை, 1999-2000,
பழமொழிகளும் நம்பிக்கைகளும் -
ஓர் ஆய்வுநோக்கு, தமிழ்ச்சிறப்புக் கலைமாணி ஆய்வேடு, தமிழ்த் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம், 2000.
கி.ராஜநாராயணன் நாவல்களில் நாட்டுப்புறவியல் கூறுகள், எம்.ஃபில், பட்ட ஆய்வேடு, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், Logi 60 U, 1999-2000.

必 469
ரஜனி, செ, நம்பிக்கைகளும் நடைமுறைகளும் - ஓர் ஆய்வுநோக்கு, தமிழ்ச் சிறப்புக் கலைமாணி ஆய்வேடு,
தமிழ்த்துறை, யாழ்ப்பாளப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், 2000.
கருத்தரங்க ஆய்வுக்கோவை, இதழ்கள்
ஆராய்ச்சி (காலாண்டிதழ்), பாளையங்கோட்டை, திருநெல்வேலி, 1973.
ஆராய்ச்சி (காலாண்டிதழ்), பாளையங்கோட்டை, திருநெல்வேலி, 1983.
இளந்தென்றல், கொழும்பு வளாகத் தமிழ்ச்சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு, 1976.
கருத்தரங்க ஆய்வுக்கோவை, தொகுதி:22, இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், புதுச்சேரி, 1991.
கலைக்கதிர், மலர் 3, இதழ் 12, கோவை, 1951.
சிந்தனை, தொகுதி 1, இதழ் 3 & 4, இலங்கைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1976.
தன்னனானே, நாட்டுப்புற மருத்துவம், காவ்யா, தன்னனானே பதிப்பகம், 1997
நாட்டுப்புறவியல், தொகுதி 1, 1 & 2, இந்தியத் தமிழ் நாட்டுப் புறவியல் கழகம், அண்ணாமலை நகர், 1983.
நாட்டுப்புறவியல், தொகுதி 3 & 4 & 1.2 இந்தியத் தமிழ் நாட்டுப் புறவியல் கழகம், அண்ணாமலைநகர், 1987-1988
அகராதி-கலைக்களஞ்சிபம்
க்ரியாவின் தற்காலத்தமிழ் அகராதி, தமிழ் - தமிழ் - ஆங்கிலம், CreA, Madras, 1992.

Page 238
470 «Х•
கலைக்களஞ்சியம், தொகுதி-1, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1954.
கலைக்களஞ்சியம், தொகுதி-2, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1954.
கலைக்களஞ்சியம், தொகுதி-3, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை,
1956.
கலைக்களஞ்சியம், தொகுதி-4, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1956.
கலைக்களஞ்சியம், தொகுதி-7, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1960.
கலைக்களஞ்சியம், தொகுதி-8, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை,
1961.
கலைக்களஞ்சியம், தொகுதி-9, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை,
1963.
கலைக்களஞ்சியம், தொகுதி-10, (இணைப்புத்தொகுதி), தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 1968.
தமிழ்ப் பேரகராதி(Tamil Lexicon) தொகுதி-2, சென்னைப்பல்கலைக் கழகம், சென்னை, 1982.
தமிழ்ப் பேரகராதி(Tamil Lexicon) தொகுதி-3, சென்னைப்பல்கலைக் கழகம், சென்னை, 1982.
தமிழ்ப் பேரகராதி(Tamil Lexicon) தொகுதி-4, சென்னைப்பல்கலைக் கழகம், சென்னை, 1982.
தமிழ்ப் பேரகராதி(Tamil Lexicon) தொகுதி-5, சென்னைப்பல்கலைக் கழகம், சென்னை, 1982.
தமிழ்ப் பேரகராதி(Tamil Lexicon) தொகுதி-6, சென்னைப்பல்கலைக் கழகம், சென்னை, 1982.
மதுரைத் தமிழ்ப் பேரகராதி, இ.மா.கோபாலகிருஷ்ணன் & கோ, மதுரை, 1937

«Х» 471
வாழ்வியற் களஞ்சியம், தொகுதி-6, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988.
வாழ்வியற் களஞ்சியம், தொகுதி-8, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1991.
வாழ்வியற் களஞ்சியம், தொகுதி-11, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1991.
gi. 86) is 65 it (English Books)
Abbe, J.A. Dubois Hindu Manners, Customs and Ceremonies, Oxford University Press, Delhi, 1981.
Arunachalam, M., Ballad Poetry, Gandhi Vidyalayam,
Thiruchitrambalam, 1976.
Bhagwat Durga, An outline of Indian Folklore, Popular
Prakashan, Bombay, 1958.
Bowra, C.M., Primitive Songs, Weldenfeld &
Nicolson, London, 1962.
Charless, E. Gover, The Folksong of Southern India, Gian
Publication, Delhi, 1981.
Don Yoder, Folklore and Folklife-An Introduction, The University of Chicago Press, U.S.A., 1972.
Dressler, David with Willis, Sociology; The Study of Human
William, M., Interaction, Alfred A.KnopF Inc., New
York, 1976.
Dundes Alan, Interpreting Folklore, Bloomington,
Indiana University Press, 1980.
Durkheim, Emile, The Elementary Forms of Religious Life,
The Free Press, New York, 1965.

Page 239
472 X
Edward, S. Gifford,
Edward Wesfer Mark,
Enthoven, RE.,
Forster, E.M.,
Frazer, J.G.,
Frazer, J.G.,
Frazer, J.G.,
Frederick Thomas Elworthy,
Hando, Jawaharlal,
Hart, G.L,
James Bissett Pratt,
The Evil Eye Studies in The Folklore Vision, The Macmillan Company, New York, 1958.
Early Beliefs and their Social Influence, Macmillan and Co., (Ltd), London, 1932. The Folklore of Bombay, The Clarendon Press, Oxford, 1924.
Aspects of the Novel, Middle Sex, Penguin Books Ltd., 1963.
The Golden Bough (The Magic Art), Vol.I., Macmillan & Co., London, 1955.
The Golden Bough (A study in Magic and Religion) PartI, Vol.I, The Macmillan Press Ltd., London, 1976.
The Golden Bough (After Math A Supplement to Golden Bough), Macmillan, London, 1976.
The Evil Eye and Account of the Ancient and widespread Superstition, London, 1995.
South Indian Folklore: Growth and Development, Academy of General Education, Manipal, 1985.
The Poems of Ancient Tamil, University of California Press, London, 1975.
The Psychology of Religious Belief, The Macmillan Company, London, 1908.

Javare Gowda, D.,
Kosambi, D.D.,
Lakshmanan Chettiar, S.M.L.,
Nilakshi Sengupta,
Richard, M. Dorson (ed.)
Sanker Sen Gupta,
Shanmugampillai and Erica, A.E.
Claus,
Sundaram, S.D.,
Sundaramoorthy, G.,
Thurston, E.,
Turner Victor,
«Х• 473
Indian and Japanese Folklore, Ramesh Mathur and Manabe Masahiro (eds.), KuFs Publication, Japan, 1984.
The Cultures and Civilization of Ancient India (Festivals in India) in Historical Culture, Vikas Publishing House Ltd., New Delhi, 1970.
Folklore of Tamil Nadu, National Book Trust, New Delhi, 1973.
The Evolution of Hindu Marriage, Bombay Popular Prakasam, Bombay, 1965.
Folklore and Folklife: An Introduction The University of Chicago Press, Chicago and London, 1972.
Folklore of Bengal-A Projected Study, Indian Publication, Culcutta, 1976.
Folk Beliefs of the Tamils, Muthu Pathippagam, Madurai, 1987.
“Folk Art from TamilNadu' Bulletin of the Institute of Traditional Cultures, University of Madras, Madras, 1975.
Early Literary Theories in Tamil, Sarvodaya Ilakkiya Pannai, Madurai, 1974.
Castes and Tribes of Southern India, Government Press, Madras, 1909.
Process, Performance and Pilgrimage, Concept Publishing Company, New Delhi, 1979.

Page 240
474 «Х•
Tylor, E.B.,
Van Gennep Arnold,
Will and Durant
Will and Durant,
William Crooke,
DSSERTATION
Vimalambikai, B.,
DCTIONARES
Primitive Culture, G.P. Putnam's Sons, New York, 1920.
The Rites of Passage, Routledge and Keganpall Limited, London, 1960.
The Story of Civilization Part II, The Life ofGreece, Simon and Schuster, Inc., New York, U.S., 1966.
The Story of Civilization Part VII, The Age of Reason Begins, Simon and Schuster Inc. New York, U.S., 1967.
Religion and Folklore of Northern India, Government Press, Allahabad, 1894.
Folklore of Tamils in Sri Lanka, A Bibliographical Guide to the Literature in English and Tamil, Bibliography submitted as part requirement for Intermediate Examination of the Sri Lanka Library Association, University of Sri Lanka, Vidyodaya Campus, Colombo, 1977.
A Tamil-English Dictionary, Visvanatha Pillai, V., The Madras School Book & Literature of Society, Madras, 1972.
English-Tamil Dictionary, University of Madras, 1981.
Oxford Advanced Learner's Dictionary (New Edition), Fifth Edition, Oxford
University Press, 1996.
Standard Dictionary of Folklore, Mythology and Legend (ed. Leach, Maria), Funk and Wagnalls Company, New York, 1949.

8 475
The Great Lifco Dictionary, English-English-Tamil, The Little Flower Co., Chennai, 2000.
The Random House Dictionary of the English Language, The Unabridged Edition, New York, 1967.
ENCYCLOPAEDAS
Chambers Encyclopaedia Vol.IV, International Learning Systems Corporation Ltd., London, 1973.
Coller's Encyclopaedia, Vol.23, Collier and Son Corporation, New York, 1955.
Collier's Encyclopaedia, Vol.7, Collier's Publishing Company, New York, 1960.
Encyclopaedia Britanica, Vol.2, (Ant-Balfe), Encyclopaedia Britanica Inc., William Benton Publisher, Chicago, USA, 1972.
Encyclopaedia Britanica, Vol.IV, Micropaedia, Encyclopaedia Britanica Inc., William Benton Publisher, Chicago, USA., 1973-1974.
Encyclopaedia Britanica, Vol.VI, Micropaedia, Encyclopaedia Britanica Inc., Helan Hemingway Benton Publisher, Chicago, USA., 1973-1974.
Encyclopaedia Britanica, Vol.VII, Micropaedia, Encyclopaedia Britanica Inc., Helan Hemingway Benton Publisher, Chicago, USA., 1973-1974.
Encyclopaedia Britanica, Vol.8, Micropaedia, Encyclopaedia Britanica Inc., Helan Hemingway Benton Publisher, Chicago, USA., 1973-1974.
Encyclopaedia Britanica, Vol.9, Micropaedia, Encyclopaedia Britanica Inc., Helan Hemingway Benton Publisher, Chicago, USA., 1973-1974.
Encyclopaedia Britanica, Vol.15, Micropaedia, Encyclopaedia Britanica Inc., Helan Hemingway Benton Publisher, Chicago, USA., 1973-1974.
Encyclopaedia Britanica, Vol.21, Micropaedia, Encyclopaedia Britanica Inc., University ofChicago, Chicago, USA., 1986.
Encyclopaedia of Anthropology, Inc. 13, Phillip Whitten Harper and Row Publisher, New York, 1976.

Page 241
476 x
Encyclopaedia of Americana, Vol.III, Americana Corporation, New York, USA, 1950.
Encyclopaedia of Religion and Ethics, Vol.V, Charles Scribner's Sons, New York, 1955.
Encyclopaeida of Religion and Ethics Vol.6, ToT. Clerk, Edinberough, 1960.
Encyclopaedia of the Social Science, Vol.5, The Macmillan Company, New York, 1937.
Encyclopaedia of the Social Science, Vol.III, The Macmillan Company, New York, 1954.
Encyclopaedia of World Arts, Vol. 5, Mcgraw Hill, New York, 1959.
Everyman's Encyclopaedia, Vol.5, J.M. Dent and Sons Ltd., London, 1967.
International Encyclopaedia of the Social Science, Vol.XIII, The Macmillan Company and the Free Press, New York, 1968.
International Encyclopaedia of Social Science, Vol.X, Macmillan Company, The Free Press, New York, 1972.
The Encyclopaedia America Vol.II, Americana Corporation, New York, 1968.
The New Book of Knowledge Vol.13 (N), Grolier Incorporated, New York, 1973.
The New Book of Knowledge Vol.20(W, X,Y,Z), Groler Incorporated, New York, 1973.
The New Caxton Encyclopaedia Vol.VI, The Caxton Publishing Company, London, 1972.
The New Encyclopaedia Britanica, Vol.I, Micropaedia, Encyclopaedia Britanica Inc., William Benton Publisher, Chicago, USA., 1973-1974.
The New Encyclopaedia Britanica, Vol. IV, Micropaedia, Encyclopaedia Britanica Inc., Helen Hemingway Benton Publisher, Chicago, USA., 19731974.

The New Encyclopaedia Britanica, Vol.9, Micropaedia, Encyclopaedia Britanica Inc., William Benton Publisher, Chicago, USA, 1973-1974.
The New Encyclopaedia Britanica, Vol.XV, Micropaedia, Encyclopaedia Britanica Inc., Helen Hemingway Benton Publisher, Chicago, USA., 19731974.
The New Encyclopaedia Britanica Vol.27, Macropaedia, Encyclopaedia Britanica Inc., University ofChicago, Chicago, USA., 1986.
The New World Encyclopaedia, Vol.6, The Caxton Publishing Company Limited, USA., 1974.
The Social Science Encyclopaedia, The Macmillan Company, London, 1970.
The World Book Encyclopaedia Vol.14, Field Enterprises Educational Corporation, Chicago, USA., 1960.
World University Encyclopaedia, Vol.5, Treasury of Knowledge Book Inc., New York, 1968.

Page 242
பின்னிணைப்புக்கள்
1. வட்டார வழக்குச் சொற்களும் அவற்றுக்கான பொருள் விளக்கமும்
அக்கப்பாடு அக்கை அச்சறுக்கை அசதி அசுகுசுப்பு
அசுகை அசுமாத்தம் அசைவு கட்டுதல் அட்டணக்கால் அட்டமருகில் அடிகொடி அடியழித்தல்
அடுகிடைபடுகிடை
அடுத்தல் அண்டலித்தல் அண்டுதல் அண்ணாவி அணியம் அப்பிராணி அமசடக்கம் அருக்காணியம் அருட்டிவிடுதல் அவக்கென
அளவை அணுக்கம் ஆட்சியெடுத்தல்
(அகரநிரலில்)
(பூம, 24) சண்டை
(பஞ்ச, 215) மூத்த சகோதரி
(தண். 35) காவல்
(தண். 143) களைப்பு
(கழுகு, 10) அறிகுறிகள்
(பஞ்ச, 69) இலேசாக அறிகுறி தென்படுதல்
(பூம,27) அறிகுறி
(பிரள, 115) ஒருவகைப் பரண்
(மு.க., 9) காலுக்குமேல் கால் போடுதல்
(பொ.சி.வா.பு.,29) அயலில்
(கோவி., 28) பரம்பரை
(பூம., 43) பெண்களால் நிறைவேற்றப்படும்
ஒருவகை நேர்ச்சை
(பஞ்.கோ., 131) முழுப்பொழுதையும் குறித்த ஒரு
இடத்தில் கழித்தல்
(போர்.கோ., 31) சேர்த்துக்கொள்ளுதல்
(மர.கொக், 90) சிரமத்தை சகித்துக்கொள்ளுதல்
(9|tg., 5) பிரச்சினையை ஏற்படுத்துதல்
(அடி. 138) கூத்துப் பழக்குபவர்
(போரா.காத், 16) தோணியின் முகப்புப் பக்கம்
(பஞ்ச, 247) அப்பாவி
(கோவி., 28) வெளிப்படையாகப் பேசாமை
(சட.எஸ்பொ.,29) பெருமையடித்தல்
(தண், 225) தூண்டிவிடுதல்
(கோவி., 83) துரிதமாக
(பஞ்ச,25) கள் அளத்தற் கருவி
(தண், 47) முனகுதல்
(அடி. 152) உரிமையெடுத்தல்

ஆடுகால் ஆத்துப்பறந்து
ஆமான ஆரதக்கறி ஆரதச்சாப்பாடு ஆனைப்பிரளி இக்கட்டு இட்டலிடஞ்சல் இத்தறிமட்டும் இயனக்கூடு
இரத்தம் துடித்தல் இருளிப்பெட்டை
இழவு சொல்லுதல்
இழுப்பு
இறைச்சிக்குடலை RFprit lig
உமல் உரிச்சுப்படைத்து உழத்தல் உளஞடல
ஊமைக்காயம்
ஊர்மேய்ச்சல்
எக்கணம் எக்குதல்
எடுக்குப்பிள்ளை எடுப்பு எடுபட்டவள் எப்பன் எல்லுப்போலை எழுப்பம்
X 479
(சட.எஸ்.பொ.,61) துலாவைத் தாங்கி நிற்கும் மரம்
(பஞ்ச,333) (கோவி., 66) (பொ.சி.வா.பு.,30) (தண், 39) (பஞ்ச, 59)
(அடி. 33) (தண், 40)
(தண், 13)
(கோவி, 77)
(பஞ்.கோ., 118) (போரா.காத், 115) (தண், 62) (கோவி., 21) (தண், 189) (தண், 21) (மு.க., 40)
(தண், 74)
(தண், 33) (மு.க., 18)
(கான, 126) (பூம, 40) (பூம. 24) (தண், 174) (பஞ்ச,94) (syllg., 145)
மிகத்துரிதமாக
முறையான
சைவக்கறி
சைவ உணவு
பெருங்கலகம் தீர்மானம் எடுக்கமுடியாத நிலை பல்வகைத்துன்பங்கள் இதுவரை கள்ளுச் சீவுகின்ற கத்திவைக்கும் கூடு
உணர்ச்சிவசப்படுதல் பக்குவப்படாத பெண், பூப்படையாத பெண் இறப்பை முறைப்படி அறிவித்தல் மரணத்தறுவாயில் வெளிவரும் மூச்சு இறைச்சிப் பங்கு, பங்கு இறைச்சி கடல் சலனமின்றியிருத்தல் ஒருவகைக் கைப்பை உருவத்தில் ஒத்திருத்தல் உடலால் அவஸ்தைப்படுதல் மறைபொருள் உட்காயம், வெளியில் தெரியாத காயம் பலபெண்களுடன் தொடர்பு வைத்திருத்தல்
இக்கணம் வயிற்றை உள்ளிழுத்துமூச்சுப் பிடித்தல்
கைக்குழந்தை
பெருமை
ஒழுக்கமற்றவள்
சிறிதளவு
சிறிதளவு
பெருமை காட்டுதல்

Page 243
480 x
ஏண்டாப்பு (போரா.காத், 73) நிதானமின்மை
ஏதனம் (கோவி.,35) பாத்திரம்
ஒக்கலிச்சு (தண். 70) ஒத்துப்போதல்
ஒப்பேத்துதல் (பஞ்ச,42) நிறைவேற்றுதல்
ஒம்பித்தல் (பஞ்ச,248) நிரூபித்தல்
ஓங்காளம் (பூம, 10) வாந்தி
ஒசுவனம் (கோவி, 177) 263) GðDAD
ஒரவஞ்சகம் (போர்.கோ.,56) வஞ்சகம்
கச்சான்காற்று (போரா.காத், 19) ஒருவகைப் பருவக்காற்று
1953-QyperT (பூம., 43) வதந்தி
கட்டாக்காலி (பஞ்.கோ., 45) கட்டுப்பாடற்ற
கட்டாடி (கோவி., 158) சலவைத் தொழிலாளி
கட்டியடித்தல் (போரா.காத், 88) ஏமாற்றுதல்
கட்டியவுத்தல் (கோவி, 37) முகாமை செய்தல்
கட்டுமட்டு (சட.செ.க.,156) சிக்கனமாக
கட்டையில் கட்டுதல் (பஞ்ச, 28) திருமணம் செய்து வைத்தல்
கடப்பு (நில, 88) கடந்து செல்லும் ஒருவகைப்
பாதை
கடுவன் (அடி., 29) பூனை, நாய் முதலானவற்றின்
ஆண்பாற்பெயர்
கடுக்கண்ட பருவம் (சட.எஸ்.பொ., 75) ஆண்களின் வாலிபப் பருவம்
கண்டாயக் கடவை (கோவி., 123) ஒருவகைச்சிறிய கடவைப்பாதை
கண்டாயம் (பஞ்ச.கோ., 72) சிறியபாதை கண்ணைப்போடுதல் (கோவி, 37) விருப்புக் கொள்ளுதல் கதவழிப்படுதல் (கோவி, 44) வாக்குவாதப்படுதல் கப்பாத்து (நீண், ப. 147) வெட்டிவிடுதல் கயக்கி (-y. LD., 6) கசக்கி கரக்குட்டான் (தண், 83) ஒருவகைக் கைப்பை கருகல்விடுதல் (கோவி., 164) மனதில் வஞ்சனைவைத்துப்
பேசுதல் கருவுறுத்தல் (நீண்.ப., 67) இல்லாமற் செய்துவிடுதல் கருவிப்பெட்டி (அடி. 34) நாவிதரின்கருவிகளை
உள்ளடக்கிய பெட்டி கரைசேர்த்தல் (சட.செ.க., 44) திருமணம் செய்துவைத்தல் கல்லுக்குத்துதல் (கிடு.வே., 41) குழப்பி விடுதல் கலட்டுப்பூமி (பஞ்ச.,42) வளமற்ற பூமி கழுத்தை முறித்தல் (கான, 14) விடாப்பிடியாக நிற்றல்

கள்ளத்தீன் கள்ளுப்பிளா
களரி
கறுவியம் கன்னை
காங்கை காதுகுத்துதல் காதோலை காந்துதல் காயம்
காவோலை கிறுங்குதல் கிறுதி குஞ்சுக்கடகம் குத்திமுறித்தல் குத்தியவன் குந்து குப்பைத்தண்ணி
குமரிப்பிள்ளை
குரவை வைத்தல் குலைப்பான் குறாவுதல் குறுக்குக்கட்டு கூக்காட்டுதல் கூப்பிடுதூரம் கூரான்
கூறைப்பாய்ச்சீலை கெடு
கெப்பர் கெலிச்சுப் போதல் கைத்தீன்
(தண், 13) (பேரா.காத், 87)
(அடி. 172)
(பஞ்.கோ., 102) (விடி.நோ.,33) (காட்., 163) (கோவி, 142) (பஞ்.கோ., 186) (கா.வோ, 13) (மு.க., 39) (பஞ்ச, 235) (தண், 82) (மீட்.வீ.,112) (தண், 41) (பஞ்ச,452) (தண், 5) (பஞ்ச, 48) (தண், 38)
(பஞ்ச, 271)
(கோவி., 47) (பஞ்ச, 86) (மர.கொக்., 66) (தண், 7) (தண், 143) (தண், 6) (பஞ், 263)
(போரா.காத், 5) (பஞ்.கோ., 30) (பஞ்ச.கோ., 60) (கோவி, 178) (மு.க., 36)
விருப்புக்குரிய உணவுப்பண்டம் கள்குடிக்கப் பயன்படும் கொள்கலன் சிலவகை விளையாட்டுக்கள் நிகழ்த்தப்படும் மேடை பகையை மனதில் வைத்திருத்தல்
(35(ԼՔ
வெப்பம்
ஏமாற்றுதல்
காதணி பற்களால் வழித்து உண்ணுதல் ஒருவகை மருத்துவ உணவு பழுத்துக்காய்ந்த பனைஒலை அடங்குதல்
தலைச்சுற்று
சிறியகடகம் பெருமுயற்சி எடுத்தல் ஆண்பிள்ளை
திண்ணை பூப்படைந்த பெண்ணுக்கு முதலில் வார்க்கும் நீர் திருமணமாகாமல் பெற்ற பிள்ளை
இழவு சொல்லுதல் நடுக்கத்துடன்கூடிய காய்ச்சல் குறுகுதல், சோர்ந்து போதல் மாராப்புக்கட்டு ஒலியெழுப்புதல் குறுகியதுரம் விவசாய வேலையில் பயன்படுத்தப்படும், கூரான ஒருவகைக் கருவி தோணிப்பாய்மரச்சீலை மிகுந்த ஆசை
பெருமை
பயந்துபோதல் திடகாத்திரமான உணவு

Page 244
482 «Х•
கைநீட்டுதல் கைமண்டையில்
பருகுதல்
கைவைத்தியம் கொட்டப்பெட்டி
கொட்டு
கொடி கொண்டல்
கொண்டாட்டம் கொப்பர் கொய்யோ
(பஞ்ச,405) (தண், 41)
(அடி. 34) (கழுகு.23) (மு.கு., 17)
(பஞ்ச, 59) (சட.செ.க., 20) (போரா.காத், 19) (பஞ்ச,217) (போரா.காத். 64) (போரா.கர்த், 93)
கொழுத்தாடு பிடித்தல் (மு.ஒ.ப., 21)
கொன்னை
கோசு கோத்தை கோப்பிசம்
கோர்க்காலி
கோள்குண்டணி சக்கப்பணிய
சங்கதி சங்கைக் குறைவு சண்டிக்கட்டு சணவேளை
sLoguib சருவுதல் சறளி சாடையாகி சாதிமான் சாலம் சாறுதல்
66ઈr
(pilg., 156) (கான, 17) (தண், 46) (தண், 94) (பஞ்ச, 201)
(பொ.சி.வா.பு.,15)
(போரா.காத், 4)
(கோவி.,34)
(சட.எஸ்.பொ.,126)
(கான,56) (கோவி., 16) (பஞ்ச,48) (கோவி, 166) (pilg., 180-181) (போரா.காத், 32) (அடி. 158) (போரா. காத், 93) (கான, 10)
(பூம,42)
அடித்தல் கைகளை வாயிற் குவித்துப் பிறர் ஊற்றும் நீரைப்பருகுதல்
நம்பிக்கைக்குரிய ஆள்
நாட்டுவைத்தியம்
மடியில் வைத்திருக்கும்
மரப்பொந்து
பட்டம், காற்றாடி, மரக்கொடி
ஒருவகைப் பருவக்காற்று
உறவு வைத்திருத்தல்
உனது தந்தை
அம்பலமாகுதல்
வலிந்து சண்டைபிடித்தல்
திக்குவாய்ப் பேச்சு
பருவம்
உனது தாய்
கூரைஅமைப்பு
உணவுப்பொருட்களைப்
பாதுகாத்து வைக்கும் ஒருவகைக்
கருவி
குற்றம் சுமத்துதல்
தரையில் கால் மடித்து
உட்காருதல்
செய்தி
மரியாதைக் குறைவு
சாரத்தை மடித்துக்கட்டுதல்
சொற்பவேளை
சந்தேகம்
சண்டைக்கிழுத்தல்
சளி
இலேசாகி
சாதியில் உயர்ந்தவர்
ஏமாற்று
விளைநிலத்தைக் கொத்திப்
பதப்படுத்துதல்
பதிலாள்

சினி (கோவி.,114) சிரட்டை (அடி. 88) சிலமன் (அடி. 151)
(மை.கு., 125) சிறங்கை (காட், 117) சிறைக்குட்டி (SGT., III) சுரக்குடுவை (அடி., 159) சுறுக்கா (சட.எஸ்.பொ., 97) சூரி (தண், 21) சூரிக்கத்தி (தண்., 30) சூழ் (போரா.காத், 110)
சூறணம் (இரு, 216) செத்தல் மிளகாய் (இரு, 229) செம்புதண்ணி எடுத்தல் (தண். 22) சேர்வையாக்குதல் (கோவி. 113) சொரியல் (சட.செ.க. 41) சோட்டைப்பண்டம் (தண். 97) சோளகம் (போரா.காத், 45) தங்குவேட்டை (காட்., 7)
தட்டி (பஞ்ச, 381)
தட்டுமுட்டுச்சாமான் (கோவி.,15) தட்டுவம் (தண், 7) தட்டேப்பை (தண், 43) தடிப்பு (தண், 11) தரவை (தண், 14) தலைக்கறுப்பு (அடி. 161) தலைச்சன் (கோவி., 49) தலையால் நடத்தல் (தண், 177) தவண்டையடித்தல் (கழுகு, 19) தவனம் (பஞ்ச, 59) தவா (பஞ்ச,292) தளைநார் (பஞ்ச,301)
தறை (பஞ்ச,396)
o
483
நாற்றம்
கொட்டாங்கச்சி
அறிகுறி
கழுவி
கையளவு
கொத்தடிமைப்பெண்
சுரக்காயிலான குடுவை
விரைவாக
விவேகமுள்ளவள்
பாளை சீவும் கத்தி
மீன்பிடித்தலிற் பயன்படும் ஒருவகைத் தீப்பந்தம்
ஒருவகை நாட்டுமருந்து
வற்றல்மிளகாய்
விருந்தை ஏற்றுக்கொள்ளுதல்
கள் இறக்கும் செயற்பாடு
உதிரி
சிற்றுண்டி
ஒருவகைப் பருவக்காற்று
காட்டில் சிறிதுகாலம்
தங்கியிருந்து வேட்டையாடுதல்
பனை, தென்னைமட்டையிலான
கதவு
பல்வகைப் பொருட்கள்
பனையோலைப்பெட்டி
தோசையைக் கிளப்பும் அகப்பை
பெருமை
வயல்வெளி
பிரசன்னம்
முதன்மையான
பெருமுயற்சி செய்தல்
ஆசைப்படுதல்
விடாய், ஆசை
பெரும் ஆசை
மரமேறப் பயன்படும்
பனைநாரினாலானகயிறு
நிலம்

Page 245
484 «Х•
தனகல் தனிப்பனையன் தனிமரத்தான் தாட்டன் தாயைத்தின்னி தாவாரம் திடுக்காட்டம் திருக்கல் திருவுளச்சீட்டு தீட்டுத்தடி துந்துமிமழை துப்பட்டி
துறை
(கோவி., 179) (கோவி., 209) (பஞ்.கோ., 71) (9yl 9..., 221) (தண்.,15) (தண், 45) (G5ITQS., 81) (தண், 38) (அடி., 10) (பஞ்ச.,57) (போரா.காத், 5) (சட.செ.க., 59) (பஞ்ச,299)
தூக்கியெறிந்து பேசுதல் (பஞ்ச, 72)
தெறிப்பு
(பஞ்ச,212)
தேப்பனைத்தின்னி (தண், 15)
தேன்வதை
(நில, 19)
தொட்டாட்டுவேலை (தண், 11)
தொடசல் தொடுப்பு தோஞ்சகளை
தோம்பு தோறை நசுக்கிடாமல் நடுவிலாள் நயினாத்தி நயினார் நாக்குவளைத்தல் நாச்சியார் நாண்டு கொண்டு
நிற்றல்
(தண், 8) (போரா.காத், 31) (9) Lg., 74)
(தண், 205) (Ա.ւD., 25) (பஞ்ச, 353) (கோவி, 17) (பூம, 14) (ԱւD., 14) (அடி., 259) (2 و..yL4طو) (நில, 41)
நாலாங்கால் பொடியன்(கோவி, 17)
நிலபாவாடை
நோஞ்சல்
(அடி, 10)
(தண்., 19)
வம்பு செய்தல் ஒருபனைக் கள்ளு ஒருமரக்கள்ளு உருவில் பெரியது தாயையிழந்தவர் குடிசையின்சரிவானகூரைப்பகுதி திடுக்கிடுதல் ஒற்றை மாட்டு வண்டி குலுக்கல் மூலம் தேர்வு செய்தல் கத்தியைத் தீட்டும் தடி தூறல்மழை போர்வை சலவைக் கல்லுள்ள இடம் மதிக்காது பேசுதல் ଗୋffig:ଗଞ தந்தையை இழந்தவர் தேன்கூட்டில் இருக்கும் தேன்
உள்ள பகுதி சிறுசிறு வேலைகள்
தகாத உறவு தொடர்பு தலைக்குக்குளித்ததனால்
உண்டானசோர்வு காணிஉரிமைப்பத்திரம் வேசிமகள், அறிவிற்பெரியது ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடுவிற் பிறந்த பெண் எசமானியம்மாள் முதலாளி, எசமான் பழித்துப் பேசுதல் 67 GFLDm Gorf? பிடிவாதமாக நிற்றல்
நான்காவது ஆண்பிள்ளை நிலத்தில்துணிவிரித்து
வரவேற்றல் பலமில்லாத

நோண்டுதல் பங்கம்
பச்சம்
பட்டை
GòDG) பண்டாரம் பண்டாரவெடி பணிய பதகளிப்பு பரவணி பரிசு கெடுத்தல் பரியாரி பளுவான காயம்
பறி
பறைதல் பன்னிப்பன்னி பனங்கட்டி பனைஏறி பாகம் பண்ணுதல்
பாறுதல் பிசகு பிடிபாடு பிரளி
பிலன் பிறக்கதை பிறகாலை பிறத்தி
ւյւգաn@T புத்தியறிதல்
புலுமாசு பூச்சிக்கடி பூசிப்புணத்தி பூம்பாளை பெண்டில்
(தண், 87) (அடி., 169) (தண், 52) (கான, 42)
(தண், 37) (தண்., 194) (கான, 56) (போரா.காத், 19) (பஞ்ச.கோ.,276) (கோவி.,33) (கான, 12) (தண். 91) (தண்., 167) (போரா.காத், 110)
(நில, 21) (போடி. மாப்.,101) (கான,99) (தண், 9) (தண், 71)
(Cup-9. L., 2) (கோவி.,30) (போரா. காத், 3) (தண், 56) (தண், 211) (பஞ்.கோ., 230) (கோவி, 37) (பொ.சி.வா.பு.4) (பஞ்ச, 17) (மு.க., 26) (கான,99) (கோவி., 43) (Ա.ւD., 16) (பஞ்.கோ., 91) (கோவி., 16)
々 485
மீனைத்துப்பரவு செய்தல்
முறை, போட்டி
பர்சம்
நீர்மொள்ளப் பயன்படும்
ஒருவகை ஒலைப்பெட்டி
கதவு
பூவேலை செய்பவர்
இலக்குத்தப்பியதுப்பாக்கிச்சூடு
கீழே
பதற்றப்படுதல்
LITLADIGðDJ
அவமானப்படுத்துதல்
நாவிதர், மருத்துவர்
ஆழமான காயம்
மீனைச் சேகரிக்கும் பனை ஒலையிலான பெட்டி
பேசுதல்
தயங்கித்தயங்கி
பனைவெல்லம்
மரமேறுபவன்
சமைப்பதற்கேற்ப உணவுப்
பொருட்களைத்தயார்செய்தல்
நிலைகுலைதல்
பிரச்சினை
பிடிபடும் மீன்கள்
கலகம்
பலம்
ஒட்டுறவில்லாத பேச்சு
பின்பு
உறவில்லாத
ஒரேபிடியாக
பூப்படைதல்
ஏமாற்று
பெண்ணாசை, நச்சுக்கடி
அலங்கரித்து
தென்னம்பாளை
மனைவி

Page 246
486 X
பெத்தாச்சி )وNL4.2 و(
பேந்து (பஞ்ச,216) பைம்பல் (தண், 37) பொச்சடித்தல் (கோவி., 112) பொச்சம் (சட.எஸ்.பொ.,33) பொசிப்பு (சட.எஸ்.பொ., 154)
பொட்டளி (ւյe5ժ., 65) பொட்டுக்கேடு (பஞ்ச,408) பொடிச்சி (பூம., 14) பொடிமீன் (சட.எஸ்.பொ., 98) பொடிவைத்துப் பேசுதல் (கோவி, 59) பொய்யுறக்கம் (கான, 14) போடுதடி (கோவி., 26)
மற்ற (pilg., 109) மாப்பிள்ளைச்சாப்பாடு (பூம.16)
upmab (ԱւD. 96)
முகடு (பஞ்ச. 382) முகம்முறித்தல் (சட.எஸ்.பொ., 46) முகரி (தண்., 139) முசுப்பாத்தி (சட.எஸ்.பொ., 29) முட்டி (பஞ்ச, 224) முட்டுக்கப்பு (கோவி.,46) முளாசுதல் (தண், 146) மூஞ்சி நீட்டுதல் (பூம., 28)
மூப்பு (தண், 35) மைம்மல் (பஞ்ச.42) மொக்கேனம் (சட.எஸ்.பொ., 71) மொட்டையாகக் கூறல் (போரா.காத், 64) மொடு (கான,101)
மோள் (கோவி, 44) மோனை (தண், 32)
வக்கு (கோவி.,152) வங்கு (போரா.காத், 19) வட்டில் (தண்., 127)
வடம் (தண், 161)
பேர்த்தி
பின்பு
மகிழ்ச்சி
உண்ணும்போது சப்தம் செய்தல்
ஆசை
அதிஷ்டம்
துணியால் கட்டப்பட்ட செய்தி
அவமானமான செய்திகள்
பெண்
சிறியeன்
உள்ளொன்று வைத்துப்பேசுதல்
சிறுதூக்கம்
முக்கியமற்ற
அடுத்த
திடகாத்திரமான உணவு
ஒலையினால் வேயப்பட்டபந்தல்
கூரைப்பகுதி
உறவைமுறித்தல்
முகப்புப்பக்கம்
பகிடி, மதுவெறி
மண்பானை
தாங்கி நிற்கும் மரத்தூண்
பிரகாசமாக எரிதல்
விருப்பமின்மையை
முகக்குறிப்பால் காட்டுதல்
தலைமை
சூரியன்மறையும்பொழுது
அவமானம்
விளக்கமாகக் கூறாமை
செழுமை
மகள்
மகனை விளிக்கும் ஒருவகைச்
சொல்
வசதி
தோணியின் உள்மரம்
உண்கலம்
கயிறு

வடலி வண்டில்தட்டி
வம்பிலைபிறந்தது வம்புப்பாளை வரிச்சுமட்டை வறுகி வாய்நனைத்தல் வாய்ப்பிறப்பு வாயுன்னுதல் வாரப்பாடு வாலாயம்
வாறானஅடி விசுக்கு விடுகாய்
விடுகை
விதானை விருத்தெரிஞ்சவன் வில்லங்கம் வீட்டுக்குத்தூரம் வெட்டை வெண்டயச்சங்கிலி வெள்ளப்பு
வெள்ளாவிவைத்தல் வெளிக்குப் போதல்
வெளித்துவிடுதல்
வைப்பு
(போரா.காத், 88) (பஞ்.கோ., 246) (மு.க., 8) (பூம. 45) (தண், 22) (பஞ்.கோ.,33) (போடி, மாப்.,27) (தண், 47) (பூம. 7) (மு.க.,15) (ԱւD., 33) (மை.கு., 164)
(கான, 26) (தண், 203) (தண், 58) (தண், 49) (போரா.காத், 53) (போடி, மாப், 29) (கான, 213) (தண், 25) (பஞ்ச.23) (தண், 10) (தண், 213) (தண், 163)
«Х» 487
பனையின் இளங்கன்று
மாட்டுவண்டிசென்று வரும்
பாதை
முறையில்லாமற் பிறத்தல்
பருவம்தப்பிவெளிவரும்பாளை
பனைமட்டை வரியல்
சுருட்டி
விருந்து கலத்தல்
வாக்குமூலம்
கூறமுற்படுதல்
ஈடுபாடு
இஷ்டமானது, கைவரக்கூடியது
ւյ6ծւDIT6ծr-9|ւգ
வீச்சு, துரிதமானவீச்சு
போர்த்தேங்காய் அடியில்
உருட்டிவிடப்படும் தேங்காய்
பொய்கூறுதல்
கிராம அலுவலர்
பருவமடைந்தவன்
பிரச்சினை
மாதவிலக்கு
வெளி
மாட்டின்கழுத்துச்சங்கிலி
வானவெளுப்பு
சலவைக்காக உடுப்பை அவித்தல்
காலைக்கடன் கழிக்கப்போதல்
உண்மை தெரியவரல்
வைப்பாட்டி

Page 247
488 X
2. பழமொழிகளும் மரபுத் தொடர்களும்
அடிக்கிற கைதான்அணைக்கும் அப்பமெண்டால் பிறகு புட்டுக்காட்டவேண்டுமோ அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் அலைஞ்சநாய் பீயில விழுகிறதுபோல அவிச்சமீனைப் பூனைபார்த்ததுபோல அற்பனுக்குப்பவிசுவந்தால் அர்த்தராத்திரியிலும்
குடைபிடிப்பான் ஆடி உழவு தேடி உழு
ஆத்திரத்துக்குச்சாத்திரமில்லை ஆயிரம் பொய் சொல்லியென்றாலும் கலியாணத்தைச்
செய்துவை
ஆற்றில் இறங்கினாசாண்போனாலென்னமுழம்
போனாலென்ன
ஆறிய கஞ்சியும் ஆறப்போடும் காதலும் சுவைகெடும் ஆறிலும் சாவு நூறிலும் சாவு ஆனைக்கொரு காலமெண்டால் பூனைக்கொரு
காலம் வரும்
ஆனைதன்தும்பிக்கையால் தன்தலையில்
மண் போடுவதுபோல ஆனையும் அறுகம்புல்லில் தடக்குப்படும் இலையும் பழுப்பும் எங்கும் உள்ளதுதான் இளங்கன்று பயமறியாது உப்புச்சமைந்தால் தெரியும் உப்பின் அருமை
அப்பன் செத்தால் தெரியும் அப்பனின் அருமை உள்ளதைச்சொன்னால் உடம்பு முழுக்க நோகுதாம் ஊசிக்குள்ள புகுந்து உலக்கைக்குள்ளால வருதல் ஊர்இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் ஊரா வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே ஊருடன் பகைக்கின்வேருடன் கெடும் ஊரைக் கலக்கிப்பிராந்துக்கு இரைகொடுக்கக்கூடாத எங்களது பல்லின் ஊத்தையைக் குத்தி மற்றவர்களுக்கு
மணக்கக் கொடுக்கக் கூடாது எட்டாம்பழம் புளிக்கும்
(பஞ்.கோ., 93) (கழுகு, 139) (போர்.கோ., 25) (பஞ்ச.கோ. 116) (தண், 173)
(பஞ்ச.கோ.,112) (நில, 85) (அடி, 59)
(சட.செ.க., 20)
(கான, 184)
(g., 77) (கான,186, பஞ்ச, 167)
(பூம. 39)
(கோவி., 16) (பஞ்ச,352) (கோவி, 179) (பஞ்ச,338)
(பஞ்ச, 232) (கோவி., 45) (பஞ்ச.22) (பஞ்.கோ., 209) (சட.எஸ்.பொ. 131) (பஞ்ச, 339) (பஞ்க.கோ.,260)
(பஞ்ச,338) (சட.கெ.க., 175)

எரிபுண்ணில் தேசிக்காய்ப்புளிபூசியதைப் போல எறிந்த அகப்பையும் சோறு அள்ளும் ஐந்து பெண்பெற்றால் அரசனும் ஆண்டியாவான் ஒண்டில் அறுகுது அல்லது கிழியுது
ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் அதன் உள்ளே
இருப்பது ஈரும் பேனாம் ஒடும் புளியம் பழமும்போல ஒடுமீன் ஒடி உறுமின்வருமட்டும் வாடியிருக்குமாம்
கொக்கு கட்டியிருக்கிற பூனையை அவிட்டுவிட்டுப் போட்டு
வாசுவாசு என்பானேன் கண்பார்க்கக் கை செய்யும் கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமோ கருவாடு கரைந்தால் ஆணத்துக்கைதான் கல்லைத்தின்று கட்டிலை முறிக்கும் பருவம் கலங்கினதண்ணியில மீன்பிடிக்கக்கூடாது கலியாணம் ஆயிரங்காலத்துப்பயிர் கள்ளுக்கொள்ளாத வயிறுமில்லை
முள்ளுக்கொள்ளாத வேலியுமில்லை கறந்த பால் மடிபுகுமா காக்கைக்குக் கனவிலும் பீதின்னுகிற நினைப்பு
காமத்துக்குக் கண்ணில்லை காலத்தை அறிஞ்சு கால் நீட்டப் பழக வேணும் காற்றிருக்கையில் தூற்றவேணும் குடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு
கொடுக்கும் குப்பையில்தான்குண்டுமணி கிடைக்கும் கும்பிடப்போனதெய்வம் குறுக்க வந்தமாதிரி குரைக்கிற நாய்கடிக்காது குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
கெடுகுடிசொற் கேளாது கொல்லன் தெருவில் ஊசி விற்கப் போனதுபோல சதை கண்ட இடத்தில் கடிக்கக்கூடாது சாடிக்கேற்ற மூடி சிந்திய பாலுக்குஅழுது பிரயோசனம் இல்லை
«Х• 489
(சட.எஸ்.பொ., 127) (கழுகு,50) (குமார., 7) (பஞ்கோ,83, பஞ்,161)
(தீ, 44, பஞ்ச, 333) (பொ.சி.வா.பு.,21)
(தண், 195)
(பஞ்.கோ.,114) (கான, 179) (மீட்.வீ.,89) (பஞ்ச, 335) (பூம, 6) (கான, 222) (சட.செ.க.,39)
(மர.கொக்.127) (போடி, மாப்.,133) (பஞ்.கோ.,244, அடி, 69, கோவி, 165) (போடிமாப்.,19798) (கோவி, 157) (பஞ்.கோ., 17)
(மு.க., 21) (பிரவு, 147) (பஞ்.கோ., 174) (போர்.கோ., 123) (சட.செ.க.25, கான, 138) (பஞ்ச,310) (பஞ், 352) (பஞ்.கோ., 104) (விடி.நோ.,41) (பஞ்ச, 245)

Page 248
490 &
சிறுபிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடுவந்து சேராது
(தண், 77)
சிறிய பாம்பென்றாலும் பெரியதடி கொண்டு அடிக்க வேணும் (மை.கு.,150)
சுடுகுது மடியைப்பிடி சுண்டங்காய் காற்பணம் சுமைகூலிமுக்காற்பணம் செட்டை முளைத்தால் கிளிபொந்தில் இருக்காது செய்ந்நன்றி மறக்கக்கூடாது சேறு கண்ட இடத்தில் உழக்கி தண்ணிகண்ட
இடத்தில் கழுவுதல் சோழியன்குடும்பிசும்மாஆடாது தந்திரமான பூனையெண்டால் தயிரிருக்கச்சட்டியை
நக்கும் தலையாரி வீட்டுக்கு ஒளித்த மாதிரி தலையால வாற சீதேவியைக் காலாலதள்ளக்கூடாது தலையில ஏறிச்செவியைக் கடிக்கக்கூடாது
தன்னிற் குறைந்ததுதாரம்
தனக்கெளிதுதாரம் தாயும் பிள்ளையுமெண்டாலும் வாயும் வயிறும் வேறு தாரமும் குருவும்தலை விதிப்படி திண்ட சட்டிக்குள்பேழக்கூடாது திண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது
(பஞ்.கோ., 84,258) (சட.எஸ்.பொ.,48) (வா.காற்., 115) (அடி. 66,268)
(பஞ்ச,404) (பஞ்ச,217)
(கான, 42) (பஞ்.கோ., 132) (பஞ்ச. 153) (கோவி, 127, பஞ். கோ., 105, 59) (மர.கொ., 30) (மர.கொ., 102) (தண். 193) (கழுகு, 123) (பஞ்.கோ.,100, 148) (பஞ்ச6, 187, கான, 34, பஞ்ச,347)
தொட்டிலையும் ஆட்டிப்பிள்ளையையும் கிள்ளிவிடுதல் (நீண்.பய.,25)
நத்தையின் வயித்தில முத்துப்பிறந்தது போல நிலவுக்கு ஒளித்துப் பரதேசம் போக ஏலாது நிறைகுடம்தளம்பாது நீந்தவென்றால் தண்ணீரில் இறங்கத்தான் வேணும் நெருப்பில்லாமல் புகையாது பங்குக்கிணறு பங்கத்தில் கொண்டு போய்விடும் பசுத்தோல் போர்த்த புலி பஞ்சம் போனாலும் பஞ்சத்தில பட்டவடுப்போகாது படைச்சவன்படி அளப்பான் பண்டியோட சேர்ந்த பசுவும் பீதின்னும் பத்தையில கிடப்பதை மெத்தையில் வைக்கக்கூடாது பருவத்தில் பயிர்செய்யவேண்டும் பல்லுப்பிடுங்கின பாம்பு போல பழமும்தின்று கொட்டையும் போட்டனான்
(பஞ்ச,55) (பஞ்.கோ., 173) (பஞ்.கோ.,112) (பஞ்ச.கோ., 349) (போர்.கோ.,25) (சட.எஸ்.போ.,118) (போர்.கோ., 191) (கான, 12) (கான, 181) (கான, 206) (கோவி., 199) (கான, 181) (சட.செ.க.,23) (பஞ்.கோ., 204)

பனையால விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல பாம்பு தின்னிற ஊருக்குப் போனால் நடுமுறிநமக்கு பாவற் கொட்டை போட்டாகரைக் கொடியோ
முளைக்கும் பிள்ளையையும் கிள்ளிவிட்டுத்தொட்டிலையும்
ஆட்டுதல் புண்ணுக்கு நோவோ, மருந்துக்கு நோவோ புதுக்காடு செய்ய வேணும் அல்லது புதையல்
எடுக்க வேணும் புதுமைக்கு வண்ணான்குறிகட்டி வெளுத்தது போல பெட்டிப்பாம்பு போல பெண்புத்தி பின்புத்தி
பெண் வளர்ச்சி பேய் வளர்ச்சி பெண் வளர்த்தி பீர்க்கு வளர்த்தி பேச்சுக்குப் பல்லக்கு தம்பிகால்நடைதான் மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம்போல மலிந்தால் சந்தைக்கு வரும்
மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப்
ւմnաո5]
மனங்கொண்டது மாளிகை மாடு சாகேக்க கன்றுக்குப் புல்லுப்பிடுங்கிப்
போட்டுச்சாவதில்லை
முட்டையிட்ட கோழிக்குத்தான் தெரியும் பூத்தெரிச்சல்
முட்டையில் மயிர்பிடுங்கக்கூடாது முடவன்கொம்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது முயற்சித்தால் முடியாததொன்றில்லை முழுப்பூசணிக்காயைச்சோற்றில் மறைத்தல்
முள்ளைமுள்ளால்தான் எடுக்க முடியும்
முற்பகல் செய்யின்பிற்பகல் விளையும்
மூஞ்சூறைப் பிடிச்சசாரைப்பாம்பைப் போல
மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்
போடக்கூடாது
யானைப்பசிக்குச்சோளப்பொரி
※,491
(பஞ்ச, 77, 349) (Ա.ւD., 14)
(பஞ்.கோ.,35)
(பஞ்ச, 208) (கழுகு, 55)
(நில, 87) (பஞ்.கோ., 112) (பஞ்ச,428) (கழுகு, 132, பொ.சி. 6նո.ւյ., 60) (மர.கொ., 59) (சட.எஸ்.பொ.,42) (பஞ்ச,356) (குமார., 100) (கோவி.,128)
(தண்., 177,
பஞ்.கோ., 98) (போடி-மாப்.,137)
(கான, 181) (பஞ்ச,408) (கான, 222) (வா.காற்., 127) (மர.கொ., 174) (பஞ்ச,412, பஞ்.
கோ., 48)
(போர்.கோ., 88) (கழுகு, 12) (பஞ்ச, 197)
(அடி, 240.
பஞ்ச, 209) (போடி, மாப், 7)

Page 249
492 X
வல்லவனுக்குப்புல்லும் ஆயுதம் வாயிருந்தால் வங்காளம் வரை போகலாம் விரலுக்குத் தக்க வீக்கம் விருதுக்கு வேட்டையாடப் போகக்கூடாது விழுந்தபாட்டுக்குக்குறிசுடக்கூடாது
வீட்டைக் கட்டிப்பார்கலியாணத்தை முடித்துப்பார் வெண்ணெய் திரளும் வேளையில் தாழி
உடைந்ததுபோல வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்ட பின்பு சாண்
போனாலென்ன வெள்ளியிட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையில்லை வேலிக்கு ஓணான்சாட்சி
வேசைக்கு மற்றபெண்களும் வேசையாகத் தெரியும்
(அடி., 244) (சட.எஸ்.பொ.,119) (பொ.சி.வா.பு.,30) (பஞ்.கோ.,142) (கான, 133,
பஞ்.கோ., 262) (பொ.சி.வா.பு.,104)
(கான, 160)
(மர.கொ., 118) (பஞ்.கோ., 318) (நீண்.,143,
போர்.கோ., 13) (பஞ்.கோ.,244)

3. நாட்டார் உவமைகள்
அடித்துப்போட்டசாரைபோல
அடிபட்ட நாய் போல
அணைந்த நெருப்பில் எண்ணைவார்ப்பது போல
அம்புபோல உதைத்து
அம்மன் சிலை போல
அரிசிக்குள்கல்லுப்போல அனலிலிட்ட புழுவாக அனலிடையிட்டமெழுகுபோல
இடிவிழுந்ததுபோல இலந்தைப்பழப்புழுப்போல
இனம்பிரிந்த மானைப்போல
எறும்பு போல
கஞ்சியுக்குள் கல்லுப் போல கஞ்சிக்குள் பயறுபோல
கடல் போல
கரை தெரியாத கடல் மாதிரி
கல்லில் பேண்டபூனைபோல கல்லுப்பிள்ளையார்போல
கல்லுப்போல கழுவினநெருப்புத்தணல்போல்
கள்ளப்பூனை போல
8 493
(பஞ்ச,40)
(வா.காற்., 71)
(நில, 60)
(போரா.காத், 28)
(போர்.கோ., 49)
(கழுகு, 35)
(விடி.நோ., 78)
(g., 89)
(பஞ்ச, 49)
(கான, 11,36,
மை.கு., 162)
(குமார., 109)
(சட.எஸ்.பொ., 149)
(தண், 212)
(பஞ்.கோ., 331)
(வா.காற்.,55)
(போடி, மாப்.3)
(சட்.எஸ்.பொ.,141)
(கான, 20)
(போடி, மாப்.,110)
(பஞ்.கோ., 29)
(போடி, மாப், 58, 98)

Page 250
494 x
கற்பூரம் குடிபோனது போல
காகம் மொய்த்தது போல
காட்டுப்புறாப் போல
காட்டுப்பூப் போல கவர்ச்சி
கிணற்றடித் தென்னைபோல
குட்டிபோட்டபூனைபோல
குடத்து விளக்குப் போல
கொதிக்கும் உலைபோல
கோயில் மாடு போல
சாடிக்கேற்ற மூடிபோல
சுடுமணலை மிதித்தது போல
சூறாவளியில் சிக்கிய சோலை போல
செத்தநாயில் உண்ணிகழருவதைப் போல
தயிரிருக்கச்சட்டியை நக்கினபூனைபோல
தாயின் குரல் கேட்ட கன்றுபோல
தாலிஅறுந்தவள் போல
திணியன் பத்தி நாம்பன் கொம்புக்கு மண்
எடுக்கிறது போல
தூறல் மழையில் கிளம்பும் புழுதிபோல
நகமும் சதையும் போல
நட்டகட்டைபோல
நட்டமரம் போல
நிண்டவெள்ளத்தை வந்த வெள்ளம்அள்ளிக்கொண்டு
போவது போல
நிலவுபோல
(கழுகு, 131)
(பஞ்ச,321)
(நில, 53)
(காட், 107, 167)
(போ.கோ., 74)
(தீ., 94)
(மு.கு.,46)
(கழுகு, 15)
(பஞ்ச.,102)
(விடி.நோ.,41)
(கழுகு, 109)
(நில, 61)
(குமார., 44)
(பஞ்.கோ., 132)
(நில, 54)
(பஞ்ச.325)
(பஞ்ச,290)
(g., 122)
(கோவி.,58,
கான, 100)
(மை.கு.,178)
(கோவி.137)
(கழுகு, 164)
(pể6ăT. Lu., 55)

நெஞ்சில் ஆணி அடித்தது போல நெய்யூற்றிய ஓமத்தீயாக
பசுப்போல
பட்டமரம் போல
பழஞ்சீலை கிழிவதுபோல பன்றி இரைச்சல் போல
பாம்பு போல
பாளை விரித்தது மாதிரி பிள்ளையார்சுழியிட்டது போல புற்றுக்குப்புறப்பட்டுத்திரும்பிய எலிபோல பூனைச் சீற்றம் போல பெருமழை பெய்து ஓய்ந்ததுபோல பெருமழையில் அகப்பட்ட செங்கீரைக்கன்றுபோல பேய் போல
பேயறைந்த பிணம் போல
பேயறைந்தவன்போல
மடைதிறந்த வெள்ளம் போல
மரக்கட்டைப் போல
மழை ஓய்ந்ததுபோல
மழைக்காளான் போல மழைமேகம் போல மான்குட்டிபோல
மின்னல் வந்ததுபோல
முகத்தில் அடித்தது போல
* 495
(பஞ்.கோ., 154)
(பொ.சி.வா.பு.,68)
(பொ.சி.வா.பு., 81)
(போரா.காத், 6)
(சட.எஸ்.பொ., 147)
(பஞ்ச,236)
(போடி, மாப்.,1)
(நீண்.ப.,128)
(பஞ்ச, 317)
(கான, 76)
(தண். 76)
(பஞ்ச,217)
(நில, 32)
(பஞ்ச,223)
(நீண், 41)
(பஞ்ச. 322,கழுகு,
157, வா.காற்., 105)
(வா.காற்., 42)
(கோவி., 28, 121)
(பஞ்.கோ.,273)
(நில, 31)
(நில, 16)
(நில, 12)
(பஞ்ச, 82)
(கோவி, 175)

Page 251
496 «Х•
வண்டிச்சில்லுக்குள் அகப்பட்ட ஊமல்
கொட்டை போல
வழுக்கல் மண்டைபோல
வாய்க்கால் கரைப் பயிர் போல
வாலறுந்த பல்லிபோல
விக்கிரகம் போல
விசர்நாய் போல
விரிச்சபுகையிலை போல வெட்டிவிட்ட கள்ளிச்செடி போல வேட்டைநாய் போல
வேள்வியில் தலைதுண்டிக்கப்பட்ட கோழிபோல
(பஞ்ச, 244)
(பஞ்ச, 251)
(போர்.கோ.,44)
(கழுகு, 97)
(கழுகு, 97)
(பொ.சி.வா.பு,70)
(சட.செ.க.,54)
(அடி., 166)
(பஞ்.கோ., 74)
(g., 60)


Page 252


Page 253

978-955-51110-2-7 ISBN مصير.
78 95551 1 1 027