கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2011.12

Page 1
50வது ஆண்டை நோக்கி.
பல்துறை பலரையும் தெரிந்:
டிசம்பர் 2011
 

Š6წ)ბy 4
ரியர்: டொமினிக் ஜீவா
பிற்பன்னர் - து வைத்திருப்பவர்
விலை 40/-

Page 2
ருமண சேவை:
e
N
தங்கள் தேடல் உள்நாட்டிாை, வெளிநாட்டிாை? கணக்கியலாளரா, பொறியலாளரா, வைத்தியரா, வேறு தொழியியலாளரா?
எந்நாடாக இருந்தாலும்,
எத்தொழியியலாளராக
*47*Akుళ "4%AA; இருந்தாலும் சுலபமானச்
隐
i
தெரிவு முறையில் தெரிவு செய்திட.
விவரங்களுக்குதிங்கள், புதன், வெள்ளி மாலை 4.30-7.30 * மணிக்கு உள்ளேயோ, சனி, ஞாயிறு நண்பகல் 11.00 -
2.00 மணிக்கு உள்ளேயோ சர்வதேச - சகலருக்குமான, ,முத்த - புகழ் பூத்த, தனிநபர் நிறுவனம் مح۔
திருமண ஆற்றுப்படுத்துநர்
சந்திப்பு முன்னேற்பாட்டு ஒழுங்குமுறை
முகவரி
8.8.3 மெற்றோ மாடிமனை, (வெள்ளவத்தை காவல்
நிலையத்திற்கு எதிராக, நிலப்பக்கம்,
33ஆம் ஒழுங்கை வழி) தொலைபேசி 55ஆம் ஒழுங்கை,வெள்ளவத்தை, 1873929 கொழும்பு 05. 2360488
வாடிக்கையாளர் புதிய வரவுகளின் முக்கிய விவரங்களை வேல் அமுதனின் அலுவலகநேரம் தொலைபேசி ஊடாக அறிந்து கொள்ளலாம். நேரம் தொலைபேசி இளடாக அறிந்து கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி sigskissosorus assoscassisi e sista FG :G-sögyi} Si-tR}Hr Mír
ಇಇ: நிலை ssä8 söiristösi”
ஐ.லகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திர தான் ஒர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பார ட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இ. பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ் சிகை மல்லிகை. இதனை நாடாளுமன்ற LigKZs H_IfSGT 6YsšisYorfft (04. 7, 200} gles செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்கா ஆவணப்படுத்தியுமுள்ளது. அத்துடன் உலக வரலாற்றில் முதன் முதலில் சலு னுக்குள் இருந்து வெளிவந்த இலக்கிய சஞ்சிகையும் மல்லிகையே தான்!
50 - ஆவது ஆண்டை நோக்கி.
டிசம்பர் - 391 ീഡൂ الم%لملاحه
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Te: 2320721
mallikaiJeeva@yahoo.com
புதியதொரு வரலாற்றை உருவாக்குவோம்!
அடுத்த மாத ஜனவரி இதழ், 47-வது ஆண்டு மலர். வழக்கம் போலவே, இந்த ஆண்டு மலரையும், வெகு சிறப்பாகவும் கவன ஈர்ப்புப் பெறத்தக்கதுமான ஆண்டு மல ராக வெளியிட்டு வைப்பதே எமது திட்ட மாகும்.
எனவே, நாட்களைக் கடத்தி, கடைசிக் கட்டத்தில் ஆக்கங்களை அனுப்பி, எம்மைச் சிரமப்படுத்தாமல், கூடிய சீக்கிரம் உங்களது படைப்புக்களை ஆண்டு மலருக்கு அனுப்பி வைக்கும் வண்ணம் எழுத்தாளர்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
சுவைஞர்கள் முக்கியமாகத் தொடர் சந்தாதாரர்கள் கவனிக்கத்தக்க ஒன்று.
2012ற்கான சந்தாக்களைப் புத்தாண்டுத் தொடக்கத்திலேயே புதுப்பித்துக் கொள்வது எமது சிரமங்களைக் குறைப்பதற்கு பேருதவி புரிந்ததாக அமையும்.
மல்லிகை சகல வசதிகளையும் தன்ன கத்தே கொண்ட இலக்கிய வெளியீட்டு நிறுவனமல்ல. தனிமனித ஆர்வத்தையும், அர்ப்பணிப்பு உழைப்பையும் அடி உரமாகக் கொண்டு, கடந்த அரைநூற்றாண்டுக் கால மாக இயங்கி வரும் தனிமனித இலக்கிய இயக்கமிது. நல்லெண்ணத்தையும், தார்மீக ஆதரவையும் அடி ஆதாரமாகக் கொண்ட, நல்லெண்ணம் படைத்த புத்திஜீவிகளின் அன்பாதரவைப் போஷணையாகக் கொண்டு இயங்கிவரும் இலக்கிய சஞ்சிகைதான் மல்லிகை மாத இதழ்.
ஏனைய வியாபாரப் பத்திரிகைகளைப் போல, ஆள் வசதியோ, பொருளாதாரப் பின் னணியோ, நிர்வாகக் கட்டமைப்போ ஒன்று

Page 3
மேயில்லாமல் இலக்கிய ஆர்வத்தையும், தேசிய இலக்கிய வளர்ச்சியையுமே மூலதார மாகக் கொண்டு, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் மாதா மாதம் இலக்கிய இதழை வெளியிட்டு வரும் சிறிய இலக்கிய நிறுவனம் தான் மல்லிகைப் பிரசுராலயம்.
இதில் பெருமை என்னவென்றால், இலக்கிய சிற்றிதழ்தான் மல்லிகை. அதே சமயம் சர்வதேசமெங்கும் இன்று அதனது காத்திரமான உள்ளடக்கம் காரணமாகப் பேசப்பட்டுவரும் மாசிகையாகிவிட்டது. இன்று இன்ரல் நெட்டில் சர்வதேசமெங்கும் வலம் வருகின்றது.
இதை மல்லிகைச் சுவைஞர்கள் முற்று முழுதாகப் புரிந்துகொள்ள வேண்டும். பயன் படுத்த வேண்டும்.
சந்தாதாரர்களுக்கு அவர்களது சந்தாக் காலகட்டம் முடிவுற்றதைக் கூட, அறிவிக்க முடியாத சூழ்நிலையில்தான் நாம் இன்று இயங்கி வருகின்றோம். மல்லிகை இலக் கியச் சுவைஞர்கள் எம்முடன் ஒத்துழைக்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம்.
மல்லிகை ஆண்டு மலர் தேவையானோர்
காலங் கடத்தாமல், முன்னரே எம்முடன்
தொடர்பு கொள்வது, வரவேற்கத்தக்கது.
மல்லிகை இன்று இலக்கியச் சிற்றேடு தான். ஆனால், இன்னமும் கால் நூற் றாண்டுகளுக்குப் பின்னால், பல்கலைக்கழ கங்களில் பயிலும் மாணவர்களின் ஆய்வுக் குரிய இதழாக அது திகழும் என்பது சர்வ நிச்சயம்.
மல்லிகையை நெஞ்சார நேசிக்கும் இலக் கிய நெஞ்சங்கள் ஒன்று செய்யலாம். புதிய புதிய இலக்கிய நெஞ்சங்களைத் தேடிச் சென்று, மல்லிகையின் இலக்கியக் கன
தியை அவர்களுக்கு விளங்கப்படுத்துவது அத்தியாவசியமான இலக்கியத் தொண் L-IT(5b.
மற்றும் கனதியாக எழுதக் கூடிய, புத்தம் புதியச் சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய எழுத்தாளர்களை, படைப்பாளிகளை மல்லிகைக்கு எழுதும் வண்ணம் தூண்டி விடலாம். தேசம்பூராவும் பரந்துபட்டு இயங்கிவரும் இலக்கிய இளம் இதயங்களை இலக்கிய உலகிற்கு மல் லிகை மூலம் இனங்காட்டி ஊக்குவிக்கலாம்.
பொதுவாகவே நீண்ட நெடிய உள்நாட்டு இன யுத்த நெருக்கடிகளுக்குள் உட்பட்டு, தேங்கிப் போயிருக்கும் இளஞ்சந்ததிக்கு இலக்கியப் புத்துக்கம் தந்துதவலாம்.
எமது இளமைப் பருவ இலக்கிய ஆரம்ப காலங்களில் நம்மை தத்துவார்த்த ரீதியில் வழிநடத்த, அலோசனை சொல்ல, உற்சாகப் படுத்தி முன்செல்ல ஒர் இலக்கிய இயக்கம் இயங்கி வந்தது என்னமோ உண்மையாகும்.
ஆனால், இன்றைய இளந்தலைமுறை யினர் எழுதுகின்றனரே தவிர, இலக்கிய ரீதி யிலும், தத்துவார்த்தப் புலமையிலும் தம் மைத் தாமே செழுமைப்படுத்தி, முன்செல்லப் பின்னடைந்து போகின்றனரோ என ஐயப் படவும் வேண்டியிருக்கின்றது.
அரசியல்வாதிளை விட, இந்த நாட்டு எழுத்தாளர்களுக்கு, கலைஞர்களுக்குப் பாரிய பொறுப்புண்டு. புதியதொரு நவ இலங்கையை - புத்துாக்கம் மிக்க புதிய தொரு தேசத்தை - உருவாக்கித் தர நமது கலை இலக்கியப் பண்பாட்டுப் பெறுமதி மிக்க ஆக்கபூர்வமான உழைப்பின் மூலம் நாமொரு புதிய பூமியை உருவாக்கியே
தீருவோம். KOMMAS <

மலையகம் இன்று புதிய கோணத்தில் சிந்திக்கின்றது!
மலையகத்திலிருந்து வரும் இலக்கியச் செய்திகளைப் பத்திரிகைகளில் படிக்கப் படிக்க நெஞ்சுக்கு நிறைவைத் தருகின்றது.
வளர்ந்து வரும் இளந்தலைமுறை இலக்கியப் படைப்பாளிகள், தமது மண்ணைப் பற்றியும் மக்களைப் பற்றியும் புத்தம் புதுக் கோணத்தில் இலக்கியப் பார்வை முனைப்பட்டு, இயங்கி வருகின்றனர், என்ற தகவல் தமிழ் இலக்கிய உலகிற்கு புதிய இரத்தம் பாய்ச்சுமாற் போல, இருக்கின்றது.
அங்கொன்றும், இங்கொன்றுமாகப் பிரிந்து பிளவுபட்டுப் போயிருந்த மலையக இலக்கியவாதிகள், கட்டுக்கோப்புடனும் புதிய நம்பிக்கை கலந்த உற்சாகத்துடனும் இயங்கி வருவதை அவர்களது படைப்பு நூல்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.
வேறெந்தக் காலகட்டத்தையும் விட, மலையகத்தில் இன்று தமிழ் இலக்கியப் படைப்புக்கள் நூலுருவில் வெளிவந்து கொண்டிருப்பதைக் காணும்போது பெருமிதத்தால் இலக்கியவாதிகளின் நெஞ்சு தானாகவே நிமிருகின்றது.
மலையகத்தில் பரந்துபட்ட பிரதேசங்களில் இருந்தெல்லாம் இளந்தலைமுறையினர் இலக்கியத் துறைக்குள் குதிப்பது, எதிர்கால மலையக இலக்கிய வளர்ச்சிக்கு நம்பிக்கை ஊட்டுவதாகவே அமைந்துள்ளது, வரவேற்றகத்தக்க மாற்றமிது!
வட மாகாண இலக்கியப் பார்வை ஒருவகை. கிழக்கு மாகாண தமிழர் - முஸ்லிம்கள் சங்கமித்த இலக்கிய நோக்கு இன்னொரு வகை. ஆனால், மலையகப் பார்வையோ பிறிதோர் வகை. மூன்று வகைப்பட்ட பிரதேச எழுத்தாளர்களும் தமிழ் மொழியில் தான் தமது படைப்புக்களை வெளியிட்டு வருகின்றனர் என்ற போதிலும் கூட, இம்மூன்றுமே மூன்று வகைப்பட்ட இலக்கியப் படைப்புக்களாகும்.
இம்மூன்று வகைப்பட்ட பிரதேச இலக்கிய வெளியீடுகள் இன்று பரவலாக நாடு பூராவும் பரந்துபட்ட மட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதை இலக்கிய உலகம் நன்கறியும்.
இந்தக் கணிப்பீட்டின்படி இன்று மலையகத்தில் தோன்றி, வளர்ந்து வரும் இலக்கிய விழிப்புணர்ச்சியையும், ஆக்க இலக்கிய வெளியீடுகளையும் கவனத்தில் கொண்டு, மெய்யாகவே தேசிய இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் கொண்டுள்ள அனைவரினது சார்பாகவும் நிறைந்த நெஞ்சுடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

Page 4
GugŮUU வேண்டி) பேராலரைப் போதிடுப்பதேனே?
- LDIT.unguérias b
இனங்களுக்கிடையிலான உறவுப் பாலத்தை அமைக்கும் வினைப்பாடுகள், இலங்கையில் இன்று மும்முரமாகியுள்ளன. இதைத் தமக்கான ஒளிவட்டமாக்கிக் கொள்ளவும் சிலர் உற்சாகமாகின்றனர். ஆனால் இந்த இன ஒருத்துவ இயக்கத்திற்கு, ஏற்கனவே விசை கொடுத்த முன்னோடி ஒருவர், எவ்வித சலசலப்புமின்றிச் சிரித்த முகத்தோடும், பண்பான வார்த்தையோடும் பவனி வந்து கொண்டிருப்பதை இந்தச் சந்தர்ப்பவாதப் போகிகள் ஏனோ கண்டு கொள்ளாதிருக்கின்றனர்! அந்த பக்குவமான, இன ஒருத்துவத் தொண்டர்தான், எளிமையின் உறைவிடமான, அபிமானத்துக்குரிய தம்பிஐயா தேவதாஸ். ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர், நடிகர், ஒலிபரப்பாளர் ஆகிய தடங்களில் இவர் பதித்த முத்திரை என்றும் நின்று வாழும்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் சிங்கள மொழி, இலங்கை ஆட்சியாளரின் பிரத்தியேகக் கவனத்துக்குட்பட்டதை அகிலமறியும். அரச அரவணைப்பில் சிங்கள மொழி, தன் வயிற்றுப் பிள்ளையான சிங்கள இலக்கியத்தை வளர்த்தெடுத்துப் பண் படுத்தியது. சிங்கள இலக்கியமும், கலைகளும் சிலாகித்துப் பேசப்படத் தொடங்கின. பிரபல சிங்கள நாவலாசிரியரான மார்ட்டின் விக்ரமசிங்காவின் புனைவுகள் சிலிர்த்தன. இக்காலகட்டத்தில் வெளிவந்த அவரது கம்பெரலிய என்ற நாவல், சிங்கள நாவலிலக்கி யத்துக்கு ஒரு புதிய முகத்தைக் கொடுத்தது. இந்நாவலை மர்ஹம்ை அல்லாமா எம்.எம். உவைஸ் கிராமப்பிறள்வு என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் பேசும் வாசகரும் சிங்கள இலக்கியத்தை வாசிக்கும் ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். சிங்கள இலக்கியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் அலை, பேரலையாகப் பெருக் கெடுத்தது. இவ்வலையில் சிக்குண்டு, தம் பெயரைத் தமிழ் பேசும் வாசகர் நெஞ்சில் ஆழமாகப் பதித்தவர்களுள் தம்பிஐயா தேவதாஸ்ம்ே ஒருவராவர்.
அக்காலகட்டத்தில் சிங்கள நாவல் இலக்கியப் படைப்பில் கொடி கட்டிப் பறந்த நாவலாசிரியரான கருணா சேனஜயலத்தின் மூன்று நாவல்களைச் சரளமான பொது விருப்புத் தமிழ் நடையில் மொழி மாற்றம் செய்து அவைகளைத் தமிழ் வாசகருக்கும் படிக்கும் நல்லதோர் வாய்ப்பை ஏற்படுத்தினார். 'நெஞ்சில் ஓர் இரகசியம்', 'இறைவன்
மல்லிகை டிசம்பர் 2011 奉 4.

வகுத்த வழி', 'மூன்று பாத்திரங்கள்’ என் பனவே தம்பிஐயா தேவதாஸ் தமிழில் மொழிபெயர்த்த அம்மூன்று சிங்கள நாவலு மாகும். தனது கலைத்துவமான மொழி பெயர்ப்பின் மூலமாக, வாசகரை அந் நாவல்களுக்குள் கட்டிப்போட்டார் தம்பி ஐயா தேவதாஸ் எனத்தான் கூறவேண்டும். ஏனென்றால், வாசிப்பு இரசனையை உள் வாங்கிய ஈழத்துத் தமிழ் புனைவிலக்கிய நூல் வெளியீட்டில் சாதனை புரிந்த வீர கேசரி வெளியீட்டு நிறுவனம் முதலிரு நாவல்களையும் நூலாக வெளியிட்டது. மூன்றாவதைச் சென்னை என்.சி.பி.எச். நிறுவனமும் நூலாக வெளியிட்டுப் பரம்பல் செய்து, தம்பிஐயா தேவதாஸின் ஆற்றலை வெகுஜன மயப்படுத்தின.
இம்மூன்று நாவல்களின் மூலமாகச் சிங்கள மக்களின் வாழ்வையும், அதனோடு சார்ந்த பண்பாடுகளையும் தமிழ் வாச கருக்கு அறியத் தந்த தம்பிஐயா தேவதாஸ் இன்னொரு ஊடகம் மூலமாகவும் தமிழ் வாசகருக்கு அவைகளை ஊட்டி அறி தலைப் பெருக்கியிருக்கிறார்! மக்கள் குழு மத்தின் வாழ்வின் சுவடுகளை உள்வாங்கி வெளிப்படுபவை பழமொழிகள். இத்தகைய சிங்கள வாழ்வின் கோலத்தைக் காட்டும் 815 பழமொழிகளைத் தனது இடைவிடாத் தேடலால், பொறுக்கி எடுத்து, அவைக்கான பொருத்தமான தமிழ் விளக்கத்தோடு, ‘சிங் களப் பழமொழிகள்’ என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார். இத்தோடு நின்றுவிடாது, தமிழ்ச் சிங்கள உறவுக்கு உரிமை கொண் டாடும், இரு மொழிகளுக்கான பழமொழி களைக் கண்டெடுத்து அவைகளின் பொருத்தப்பாட்டுக்கமைய இணைப் பழ
மொழிகள்’ என்ற நூலுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இலக்கியத்தின் மூலமாகத் தம்பிஐயா தேவதாஸ் எழுப்பியிருக்கும் உறவுப் பாலம் இப்படியிருக்க, சிங்கள சினிமாவுக்கு அவர் தன் அர்ப்பணிப்பான ஊழியத்தாலும், ஆவணங்களாலும் வழங்கியுள்ள பணிகள் சிங்கள மக்களையும் வியப்படைய வைப் பவை "இலங்கைத் திரையுலக முன் னோடிகள்', 'பொன்விழாக் கண்ட சினிமா” போன்ற சிங்கள சினிமாவின் வரலாற்றைப் பேசும் நூல்களைப் பல ஆதாரங்களோடு படைத்துப் பாதுகாக்க வேண்டிய ஆவணங் களாகத் தமிழ் வாசகருக்குத் தந்துள்ளார்.
நடிகர் அலெக்சாண்டர் பெர்னாண்டோ (சரதியல்கே புத்தா) போன்ற சிங்களத் திரைப்படத்தில் நடித்த தமிழரைத் தமிழ் இரசிகர்களுக்குத் தெரியும். ஆனால் திரைக்கு பின்னாலிருந்து சிங்கள சினிமாவை வளர்த்தெடுத்த தமிழர்களான நாயகம், கே.குணரெத்தினம், ரொபின் தம்பு, 100 நாட்களுக்கு மேலாகத் திரையிடப்பட்ட தமயந்தி சிங்களத் திரைப்படத்தை நெறிப் படுத்திய வெங்கட் ஆகியோரை எத்தனைத் தமிழருக்குத் தெரியும்? தனது பத்திரிகை எழுத்துக்களாலும், நூல்களாலும் இவர் களை மட்டுமன்றித் சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களையும் தமிழ் வாசகரும் அறி யச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தவர் தான் பட்டதாரி ஆசிரியரான தம்பிஐயா தேவதாஸ்.
பேரினவாதம் உச்சக்கட்டத்தில் ஏறி நிற்கும் இக்காலத்தில் கூட, தம்பிஐயா தேவதாஸ் சிங்கள இலக்கியத்துக்கும், சிங்கள சினிமாவுக்கும் செய்திருக்கும் இவ்
மல்லிகை டிசம்பர் 2011 & 5

Page 5
வரிய பணிகளை ஒரு சிங்கள இனத்தவன் அறிவானாகில் நிச்சயமாக, சகலதையும் மறந்து அவரைக் கட்டி அனைத்து முத்த மிடுவான். அத்தகைய பாரிய பணியை இந்த வட இலங்கைத் தமிழன் செய்திருக் கிறான் இருந்தும் தேவதாஸின் இந்த இன இணைப்புப் பாலத்திற்கு எவரும் உரிய கணிப்பை கொடுக்கவில்லை!
சினிமாப் பட உற்பத்தித் துறை இன்று உலகில் விஸ்வரூபமெடுத்துள்ளது. பணத்தை அள்ளிக் கொடுக்கும் பாரிய வர்த் தக அலகு. ஆனால் இலங்கைத் தமிழ்ச் சினிமாவோ சாண் ஏற முழம் சறுக்கும் என்ற பட்டறிவால் படுத்து விட்டது. இது நாட்டிற்கும் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் பாரிய நட்டத்தைத் தந்து கொண்டிருக் கிறது. தென்னிந்திய சினிமாவே இப்பாத கத்தை எமக்குச் செய்து வருகின்றதென் றால் அது தேசிய நோக்கைக் கொண்ட பார்வையே இந்த உண்மையை எமது வழி காட்டிகள் உணராதிருப்பதால், உன்னத மான திறமை இருந்தும் எத்தனையோ இலங்கைத் தமிழ் நடிகர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்பவிய லாளர்கள் தமது சினிமாத் திரைப்படத் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பின்றிக் குடத்துள் விளக்காக இருக்கின்றனர். தென்னிந்திய சினிமா ஆதிக்கம் குறைந் தால் நிச்சயமாக இவர்களுக்கு விமோசனம் கனியும் தமிழ்ச் சினிமா உற்பத்தி மேலோங்கும். சினிமாக் கலைஞர்கள் வாழ்வும் சங்கடமின்றி நகரும். ஈழத்துத் தமிழ்ச் சினிமாவுக்கு இப்படியான துர்ப் பாக்கிய நிலை இருந்தும், சில பிரமுகர்கள் துணிந்து 'தோட்டக்காரி என்ற திரைப்படம் தொட்டு சில சினிமாத் திரைப்படங்களை
இலங்கையிலும் தயாரித்திருக்கின்றனர். நான் உங்கள் தோழன்', 'புதிய காற்று', 'வாடைக் காற்று ஆகிய ஈழத்துச் சினிமாப் படங்கள் மக்களால் பேசப்படத்தக்கவை யாக இருந்தன. மரைக்கார் ராமதாஸின் 'கோமாளிகள்’ என்ற நகைச்சுவைத் திரைப் படம் நூறு நாட்கள் திரையிடப்பட்டு ஈழத் தமிழராலும் சினிமாத் திரைப்படம் எடுக்க முடியுமென்பதை நிலைநாட்டியது.
இந்த விடயம் தம்பிஐயா தேவதாஸின் மனதிலும் பெருந் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்ச் சினிமா பற்றிய தகவல்க்ளைத் தேடிக் கண்டெடுத்து இலங்கைத் தமிழ்ச் சினிமா” என்ற நூலொன்றை மிகுந்த அக் கறையோடு வெளியிட்டுள்ளார். கட்டடக் கலைஞர் வி.எஸ்.துரைராசாசின் குத்து விளக்கு’ என்ற ஈழத்துத் தமிழ்த் திரைப் படத்தை விமர்சனக் கண்ணோட்டத்தோடு மறுவாசிப்புச் செய்து, குத்து விளக்கு’ என்ற தலைப்பில் நூலொன்றையும் வெளியிட்டுள் ளார். நிச்சயமாக இந்நூல்களில் காணப் படும் தகவல்கள், சிறந்த ஊக்கிகளாகச் செயற்பட்டு, எமது இளைய சந்ததியை, சினிமா உற்பத்தியில் ஈடுபடுத்தி, தென்னிந் திய சினிமா ஆதிக்கத்தைத் தணிக்க உதவுமென்பதில் சந்தேகத்துக்கு இட மில்லை. இதற்காக நாம் தம்பிஐயா தேவ
என்னதான்
தாஸ் ைக்கு 60 as LDTD
செய்தோம்!
தம்பிஐயா தேவதாஸின் ஈழத்தின் மற் றொரு சமூக அக்கறை சார்ந்த பரிமாணம் ஆக்கத் திறனாய்வு. இது குறித்து எமது தமிழாய்வுப் புலம் ஒரு சிறு தகவல் கூட இதுவரை வெளியிடாதது கவலையைத்
மல்லிகை டிசம்பர் 2011 率 6

தருகிறது. ஒருவர் ஏதாவதொரு கருத்தியல் முகாமில் இருந்தால்தான் அவருக்குக் கலை, இலக்கிய வரலாற்றில் ஆழமான பதிவுகள் கிடைக்கும். அல்லது அவருக்குக் குந்தியிருக்கத் திண்ைணையும் கிடை யாது! இது எமது தமிழ் கலை, இலக்கியப் பரப்பின் எழுத்தாச் சட்டமல்லவோ தம்பி ஐயா தேவதாஸ் எந்தவொரு முகாமுக்குள் ளும் ஒதுங்கியிருந்து தனது தேசிய ரீதி யான பணியைச் செய்யாது சுயாதீனமாகச் செய்து வருகிறார். ஆனபடியால், பீ.ஏ., ஊடகத்துறை டிப்ளோமா; மக்கள் ஊடகத் துறை - மக்கள் தொடர்பாடல் என்பவற்றில், முதுகலைமானி ஆகிய உரத்த கல்விசார் தகைமைகளைத் தன்னகத்தே கொண் டுள்ள தம்பிஐயா தேவதாஸ9க்கு இந் நிலை!
தமிழ் நாவலிலக்கியத்தில் வெகு வாகப் பேசப்படும் நாகம்மாள்' என்ற நாவலைத் திறனாய்வு செய்து ஆய்வுரை எழுதியுள்ளார். பல கல்விமான்களின் பாராட்டைப் பெற்ற இந்தத் திறனாய்வு எழுத்துரு, க.பொ.த. (உ.த) தமிழ்ப் பாட நூலில் சேர்த்து மாணவருக்குக் கற்பிக்கப் படுகின்றது. இது தம்பிஐயா தேவதாஸின் திறனாய்வாற்றலுக்குக் கிடைத்த நற் சான்றிதழாகும்.
வானொலி, தொலைக்காட்சி ஆகிய வெகுஜன ஊடகங்களிலும் தன்னாற்றல் களை வெளிப்படுத்தித் தமிழ் இரசிகர் களைப் பரவசப்படுத்தியிருக்கிறார். இலங்கை வானொலி ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் பகுதி நேர அறிவிப்பாளராகக் கடமை புரிகின்றார். இவரது கனதியும், கனி வானதுமான குரல் வளமும், ஆளமான சொல்லாட்சி வரமும் இவருக்கு உதவு கின்றன.
தொலைக்காட்சி நாடக நடிகர், தயாரிப் பாளர். நான் படித்த இங்கிலீஸ் என்ற - ஞானசேகரன் படைப்பில் ரவீந்திரன் நெறி யாள்கையில ஒளிபரப்பாகிய தொலைக் காட்சி நாடகத்தில், கட்டைக் காற்சட்டை அணிந்து, யாழ்ப்பாணத்துத் தமிழைப் பேசி இவர் நடித்த நடிப்பு இன்னும் தொலைக் காட்சி நாடக இரசிகர்களால் பேசப்படு கின்றது.
எவ்விதமான காழ்ப்புணர்ச்சியுமற்ற அபூர்வ எழுத்தாளர். தடம் பதித்த வானொலி முன்னோடிகள் பற்றி இன்ன மும் அச்சு ஊடகங்களில் எழுதுகிறார்.
ஆக, தம்பிஐயா தேவதாஸின் மானுட நேயப் பணிகள், தமிழுக்கு மட்டுமன்றி, சிங்கள இனத்துக்கும் செறிந்து, தமிழன் இன்னமும் சிங்கள இனத்துக்கும் நண்ப னாகவே இருக்கிறானென்பதை ஆற்றுப் படுத்துகின்றன. இதற்காக, எமது பெரும் பான்மை இனம் தம்பிஐயா தேவதாஸ0க்கு அப்படி என்னதான் கைமாறைச் செய்துள் ளது? அவர்கள் இந்த விடயத்தில் கரிசனை எடுத்து தம்பிஐயா தேவதாஸின் பணிகளை ஊக்குவிக்க வேண்டும். இந்த எண் ணத்தை அவர்களது மனதில் சிலிர்க்க வைக்க சிங்களத் திரைப்படம், பழமொழி கள் குறித்து அவர் எழுதி வெளியிட்ட தமிழ் நூல்கள் சிங்கள மொழியில் மாற்றம் செய் யப்பட்டு, சாதாரண சிங்கள வாசகனும் அவைகளைப் படித்து, இந்த சகோதர உறவுப் பாலத்தை தனது எழுத்துக்களால் கட்டி யெழுப்ப எத்தனிக்கும் தம்பிஐயா தேவதாஸை அறிந்து கொள்ள உதவ வேண்டும். இதுவொரு தேசிய ரீதியான வினைப் பாடென்பதை மறந்துவிடக்
கூடாது.
மல்லிகை டிசம்பர் 2011 & 7

Page 6
காலு குமாரி கொழும்பு நோக்கி கடகடத்து ஒடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் சனங்களை ஏற்றியேற்றி கொழும்பை நெருங்கும்போது மூச்சுவிட முடியாத முழுமாதக் கர்ப்பிணிப் பெண் போல் ஆகிவிடும். கோட்டையை அடைந்ததும் சிஸேரியன் ஒபரேசன் செய்ததுபோல் புகைவண்டி வெறுமையாகக் காட்சியளிக்கும்.
இடைக்கிடை தோன்றி மறையும் கடற்காட்சியும், தென்னந் தோப்புகளுக் கூடாகப் பாய்ந்துவரும் குளிர்க்காற்றும் புலன்களுக்கு நல்ல விருந்துதான்.
புகையிரதம் வெளிக்கிட்டு நான்காவது நிலையத்தை நெருங்கும்போது எல்லா ஆசனங்களும் நிரம்பிவிட்டன. இரண்டொருவர் ஆங்காங்கே நின்ற படி பயணித்
தனா.
புகைவண்டியின் வேகம் மெல்ல மெல்லக் குறைந்து ஊர்ந்து நின்றது. பிளட் போம் பக்கமாக மூலை இருக்கைகளில் அமர்ந்திருவர்கள் யன்னலுக்கூடாகத் தலையை நீட்டி எங்கேயென்று பார்த்தனர்.
ഗ്ഗീലീ 2த்த മഗക്രമിക്രമീ
- திக்குவல்லை கமால்
வெலிகமை.
தனியொரு ரயிலுக்குப் போதுமான சனம் அங்கிருந்து முண்டியடித்துக் கொண்டு ஏற எத்தனித்தது. எல்லாக் கண்களிலுமே ஆவல். பேராவல். சீட் கிடைக்குமாவென்றுதான். இன்னும் சில கண்களில் அனுதாப அலை எங்களை நோக்கி வீசாதா என்ற எதிர்பார்ப்பு. ஆங்காங்கே ஏறிநின்ற பெண்மணிகள் நாங்கள் பலவீனப் பிறவிகள். எங்களுக்குக் கைகொடுத்துதவுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பது போல் ஒவ்வொரு முகமாக மாறி மாறிப் பார்த்தனர்.
ரயில் பெட்டி சிறிய சிறிய அறைகள் போல் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன் றிலும் மும்மூன்று பேர் அமரத்தக்க நேரெதிர் ஆசனங்கள். புதுப் பயணிகளாக இரண்டு பெண்களும் ஏறினர். தாயும் மகளும்தான். தாயின் கையில் மகளின் பால்குடிக் குழந்தை. மகளின் கையில் குழந்தையின் தேவைகளை உள்ளடக்கிய பிளாஸ்திக் கூடை.
மல்லிகை டிசம்பர் 2011 & 8

சிறு அறைபோன்ற அந்தப் பிரி வில் அடங்கிய ஆறுபேரில் குறைந்தது ஒருவராவது எழுந்து இடமளிக்க வேண் டிய நிர்ப்பந்தம். அந்த மெல்லிய கறு வல் இளைஞன் சட்டென்று எழுந்து ஸிட்டைப் பிடித்தபடி நடுப்பக்கமாகி நின்றான். ஏனையவர்கள் அவனைவிட இரண்டொரு வயதாயினும் மூத்தவர்கள் தான்.
அந்த இடத்தில் மகள் அமர்ந்து கொண்டாள். தனக்கு இடம் கிடைத்து விட்டதென்பதனாலோ என்னவோ அவ ளது முகம் மலர்ந்து காணப்பட்டது. தனக்கு இடம் தந்த சகோதரனைப் பார்த்து நன்றிக் கடனாக ஒரு துளிப் புன்னகையாவது சிந்தாதவள், அடுத்த வர்களைப் பார்த்து என்னதான் பண்ணப் போகிறாள்?
அவள், கறுப்பில் மினுமினுப்பு கொண்ட கபாயா அணிந்திருந்தாள். முகம் மாத்திரம் வட்ட வடிவாகப் பளிச்
சென்று தெரிந்தது.
அவள் தன் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு, தன்பாட்டில் விளை ஏதேதோ எல்லாம் மழலை பேசினாள். இப்படி
யாடினாள். சிரித்தாள்.
யெல்லாம் அவளால் குதூகலிக்க முடிந் தது. அவ்வப்போது கழுத்தைத் திருப்பி தனது தாயைப் பார்த்துக்கொண்டாள். உள்ளங்கையில் சுருட்டி வைத்துக் கொண்டிருந்த கைக்குட்டையால் முகத்தை லேசாக ஒற்றிக்கொண்டாள். மெல்லிய ஒடிகுளோன் வாசம் எங்கும்
பரவியது. குழந்தையிடமிருந்தா? தாயிட மிருந்தா? தெரியவில்லை!
குழந்தையின் உம்மும்மா இன்னும் வயதால் அந்த எல்லையை அடைந்து விடவில்லை போல் தெரிந்தது. சாரி உடுத்தி, அதற்கு மேலால் அரை ஃபர்தா அணிந்திருந்தாள். அவளை அறியா மலேயே நெற்றியின் இறுக்கத்திற்கூடாக வெளித்தள்ளியிருந்த மயிர்க்கற்றை கறுப்பும் வெள்ளையுமாய்.
புகைவண்டி ஆடியாடி தாளம் வேறு போட்டு ஒடிக்கொண்டிருந்தது.
பொது வண்டிப் பயணங்களின் போது அடுத்தவர்களைக் கிண்டிக் கிளறி சமகால விடயங்கள் எதையாவது அலசிக்கொண்டிருப்பது சிலரது விருப் அமைதியாக ஒவ்வொன்றாகப் பார்த்து ரசித்து அனுபவித்துக் கொண்டு பயணிப்பது பலரது பழக்கம். கடலை, வடை, கச்சான் என்று வருவதையெல்
Lu ub.
லாம் வாங்கி வாங்கி நறுக்கிக்கொண்டி ருப்பது இன்னும் சிலருக்குப் பேரா னந்தம்.
எழுந்து ஸிட் கொடுத்த அந்த இளைஞன், மறுபக்கம் பார்த்து இரு பக்க ஆசனச் சட்டங்கள் இணையுமிடத் திற்கு முதுகைக் கொடுத்து நின்றான். அநேகமாக அவன் கொழும்புப் பக்கம் தான் போகிறானென்பதை மேலே வைத் துள்ள பெரிய தோற்பை தெரிவித்தது. உயர் கல்வி கற்கின்றதொரு மாணவனா கக்கூட இருக்கலாம். இன்று இறங்கும் வரையில் நின்றுகொண்டு பயணிப்பது அவனது தலைவிதிதான் போலும்.
மல்லிகை டிசம்பர் 2011 தீ 9

Page 7
புகைவண்டியின் ஆரவாரம் சற்றே குறைவதாகத் தெரிந்தது. இருபக்கமாக வும் வீடு வாசல்கள் வேகமாகப் பின் னோக்கி ஓடின. ஆமாம், காலி வந்து விட்டது. பத்துப் பேர் இறங்கினால் நூறு பேர் ஏறும் நிலைதான். நின்று கொண்டிருந்தவர் நப்பாசையோடு அங்குமிங்கும் பார்த்தனர்.
வண்டி நின்றது. மிகவும் ஆறுத லாக இரண்டொருவர் இறங்குவது போல் தெரிந்தது. ஏற அநேகர் காத் திருந்தனர். யாருக்கும் அவசரமிருக்க வில்லை. அதிக நேரம் தாமதிக்கும் ஸ்டேஷன் இதுவென்பது தென்பகுதிப் பயணிகளுக்கு நன்கு தெரிந்த விஷயம்.
அந்த இளம் பெண் தாயைப் பார்த் துச் சிரித்தாள். தாய் அவளைப் பார்த் துச் சிரித்தாள். மடியிலிருந்த பிள்ளை யைத் தூக்க முயன்றாள். உம்மாவுக்கு இடம்கொடுத்து அவள் எழும்பி நிற்கப் போவது போலிருந்தது. தொடர்ந்து பிளாஸ்திக் கூடையைத் தூக்கியபோது அப்படியில்லை என்று தெரிய வந்தது.
இருவரும் யாருடனோ கோபித்துக் கொண்டு போவது போல், ஒருமணி நேரப் பயண உறவுக்கு எந்த மரியா தையும் கொடுக்காமல் அங்கிருந்து நகர்ந்து, மெல்ல இறங்கிப் போய்விட் டார்கள்.
வெற்றிடமான இடத்தின் முன் னைய உரிமையாளன் மெல்ல நெருங்கு வதற்கிடையில், எதிர்பாராத ஆக்கிரமிப் பொன்று அங்கிருந்த அனைவரும் சாட்சியாக நடந்தேறி விட்டது. இடை
யில் ஏறிய விஷயம் தெரியாத அந்தப் பிரகிருதிக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு சக பயணிகளின் தலையில் விழுந்துவிட்டது.
'இது அவர் இருந்த இடம். கொழந்தப் புள்ளக்காரிக்கி எழும்பி இடம் கொடுத்தார்’ பக்கத்திலிருந்த சாரன்காரன், நாடி மயிரைப் பிடுங்கிய படி சொன்னான்; அந்த இளைஞனைக் காட்டி.
சுடுமூஞ்சிக்காரன். அவனை முறைத்துப் பார்த்தான். அவன் சொன்னதை ஆமோதிப்பது போல் சூழ நின்ற அடுத்தவர்களை, ஒரே சுற்றில் முறைத்தான்.
ஆசாமி
“அத நாங்க பார்த்துக் கொள்றம்.” இளைஞனை நோட்டமிட்டு விட்டு கீழே பார்த்துக் கொண்டான்.
கண்முன்னே நடந்துவிட்ட இந்த அநீதியை, ஆக்கிரமிப்பை சகித்துக் கொள்ள அவர்களால் முடியவில்லை.
'ஐயா, உமக்கு இடம் தேவை யென்றா கேட்டு இருக்கலாந்தானே..? சண்டித்தனம் என்னத்துக்கு?’ ரீசேட் காரன் அதட்டலாகச் சொன்னான்.
அடக்கமான இளைஞனுக்கும் மீசைக்குள்ளால் சற்றே கோபம் கொப் பளிப்பது போலிருந்தது.
“இது அரசாங்கச் சொத்து. இதில் யாரும் உரிம கொண்டாடேலாது.” சுடு மூஞ்சியும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.
மல்லிகை டிசம்பர் 2011 奉 10

“இங்க சொத்துப் பிரச்சின ஒன்னு மில்ல. சின்ன ஒழுங்குப் பிரச்சின. அவ் வளவுதான்” வெண்தாடியும் பங்கேற்று தன் அபிப்பிராயத்தை முன்வைத்தான்.
அந்தச் சிறு அலகுக்குள்ளிருந்த ஐவரதும் கருத்துக்கள் இளைஞனுக்கு சார்பாக அமைவது சுடுமூஞ்சிக்குப் பிடிக்கவில்லை.
&
* யாரு சொன்னாலும் நான் எழும்பப் போறதில்ல' - மீண்டும் தனது வல்லமையை நிலைநாட்டும் எத்தனிப்பு.
“என்னடா சொன்னே?’ என்றவாறு புலிபோல் பாய்ந்த இளைஞன், சுடு மூஞ்சியின் இருபக்க கொலரையும் பிடித்துயர்த்தி ஒரு குலுக்குக் குலுக் கினான்.
படுபாவி. வெலவெலத்துப் போய்விட்டான்.
எதிர்பார்க்கவில்லை.
கொம்பாட்மென்டே குழம்பி விட் டது. இருவரையும் பிடித்து விலக்கினர். சாதுவாக நின்ற வாலிபன் திமிறிக் கொண்டு பாய்ந்தான்.
சங்கதி விளங்கி விட்டது, எல்லோருக்கும்.
சுடுமூஞ்சியின் வீரம் காலடியில் சுருண்டு விழுந்து அடங்கிவிட்டது.
'தம்பி கோபப்படாதீங்க. நான் ஹிக்கடு வயில இறங்கிறன். இந்த ஸிட்ல இருங்கோ’ தனது இடத்தால் எழுந்தபடி நீட்டக்கை சேட்காரன் சொன்னான்.
இருங்க இருங்க. நான் பிறகு இருக்கிறன். ம். தவறு செய்திட்டு அத நியாயப்படுத்தப் பாக்கிறான். அது தான் எனக்கு கோபம் வந்தது.”
வெட்கத்தோடு போகப் பார்த்த சுடுமூஞ்சியை எல்லோரும் சேர்ந்து அமர வைத்தனர். குனிந்த தலையை அதன் பின்னர் தூக்கவேயில்லை.
புகைவண்டி தன்பாட்டில் கடகடத் துக் கொண்டிருந்தது.
புயலுக்குப் பின்னான அமைதி கொஞ்ச நேரம் அங்கே நிலவியது. அந்த அமைதிக்கூடாக புதியதொரு குரல் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. நீண்ட நேர அவதானிப்பின்
சாராம்சமாக.
“இந்த எல்லாப் பிரச்சினக்கும் காரணம், அந்தத் தாயும் மகளும்தான். இந்தத் தம்பி இடம் கொடுத்தது. நானும் பார்த்துக் கொண்டிருந்தன். ஒரு நன்றி. ஒரு சிரிப்பு. ஹ9ம். சரி எழும்பிப் போற நேரமாவது. தம்பி உங்க இடம், இருங்க இப்படி என்று சொல்லியிருந்தா. வீணா இவங்க சண்டை பிடிச்சிருக்க மாட்டாங்க. ம். ரெண்டு வார்த்த சொன்னா, என்ன ஆகப் போகுது? ம். எல்லாரும் மனிசங்க தானே?"
அவரது நியாயமான பேச்சு எல்லோரது உள்ளத்தையும் ஊடுருவிச் சென்றது.
புகைவண்டி தலைதெறிக்க ஒடிக் கொண்டிருந்தது.
மல்லிகை டிசம்பர் 2011 & 11

Page 8
இலங்கை இலக்கியப் பேரவையின் 2010ஆம் ஆண்டிற்கான விருது பெறும்
談
努 終 #ళ్కీప్లోళ్ల
நூல்களும், சான்றிதழ் பெறும் நூல்களும். காவியம் : "நீலாவாணன் காவியங்கள்’ - ஜின்னாவிற்ஷரிபுத்தீன் சான்றிதழ் - "தீரன் திப்பு சுல்தான் காவியம்” - ஜின்னாவுற்ஷரிபுத்தீன்
கவிதை :- "சுவட்டெச்சம்” - கவிஞர் சோ.பத்மநாதன் சான்றிதழ் - "கடந்து போகுதல்’ – நீ.பி.அருளானந்தம் "சிறகு முளைத்த தீவாக” - மட்டுவில் ஞானக்குமரன்
நாவல் - "குடை நிழல்' - தெளிவத்தை ஜோசப் சான்றிதழ் - "சாம்பல் பறவைகள்” - எஸ்.அரசரெத்தினம்
சிறுகதை :- "முட்டைக் கோப்பி' - திக்குவல்லை கமால் சான்றிதழ் - “தாயின்மடி தேடி' - கார்த்திகாயினி சுரேஷ்
சிறுவர் இலக்கியம் :- "இனிக்கும் பாடல்கள் படைத்த இருபது கவிஞர்கள்' - த.துரைசிங்கம். சான்றிதழ் - “மழலைப் பாக்கள்” - சிதம்பர பத்தினி
ஆய்வு :- "நெடுந்தீவு சிதையும் சின்னங்கள்” - நெடுந்தீவு லக்ஸ்மன் (வரலாறும் வளங்களும்) சான்றிதழ் - "சூழ ஒடும் நதி' - (ஜெயகாந்தன் படைப்புகள் பற்றிய ஆய்வு நூல்) கெகிறாவ
ஸ்ஹானா
அறிவியல் - “வாதரோகம்” - வைத்திய கலாநிதி செல்லத்துரை.பரமசிவம்பிள்ளை
சமயம் :- "திருவருட்பயன்கதைகள்' - தமிழறிஞர் கே.வி.குணசேகரம் (குறள், உரை, விளக்கம், கதைகள்)
பல்துறை :- "இலங்கையில் தொலைக்காட்சி” - எம்.பகீரதி சான்றிதழ் - “தொடர்பாடல் ஊடகக்கல்வி' - பரராஜசிங்கம்.இராஜேஸ்வரன்
மொழிபெயர்ப்பு : “கசந்தகோப்பி' - இரா.சடகோபன் சான்றிதழ் - “அந்தப் புதுச் சந்திரிகையின் இரவு' - கெகிறாவ சுலைகா
நாடகம் :- “மனித தர்மம்' - கலைஞர் கலைச்செல்வன் சான்றிதழ் - “மாவீரன் சங்கிலியன்’
(நாட்டுக் கூத்து) அண்ணாவியார் மு.அருட்பிரகாசம் (விருது, சான்றிதழ் வழங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.) மல்லிகை டிசம்பர் 2011 & 12
 
 
 
 

gGraటిr &uడుల
தண்ணி மீது காட்டுகிறாய்
என் மீதுள்ள வெறுப்புணர்வை.
தண்ணி நிர்மலமானது அதை மலங்கழுவி
அழுக்காக்கியவன் நீதான்.
தண்ணில் இருந்துதான்
நீயும் தோன்றினாய்
நானும் தோன்றினேன்.
இங்கு எல்லாமே தண்ணில் இருந்துதான் தோன்றுகின்றன. தயைகூர்ந்து இனியும் அதை அழுக்காக்காதே!
அழுக்கான தண்ணி என்றாலும் அழுக்கைப் போக்கும்
அதுதான் அதன் இயல்பு. அதற்கு இன்னொரு இயல்பும் உண்டு ஒருவர் மீதுள்ள வெறுப்புணர்வை
அது இன்னொருவர் மிது காட்டுவதில்லை.
மல்லிகை டிசம்பர் 2011 & 13
- பெரிய ஐங்கரன்

Page 9
கஹிைஸ்ஞ்
என்னைத் திறக்கிறேன் உன்னைத் தெரியவில்லை பகல் என்று கதைக்கிறார்கள் இரவு ஒன்று கவிந்திருக்கிறது.
காகம் எச்சம் இட்டுப்போன காகிதத்தைக் கசக்கி எறிகிறேன் கடலுக்குள் இலங்கை மூழ்கியதைப் போல காணாமல் போனது அக்காகிதம் எல்லாம் இழந்த நிலையில் எதனை எழுதச் சொல்கிறாய் மாலைச் செய்தியும் வருகிறது அம்மாவின் மரணம் பற்றி
என்னை மூழக்கொள்கிறேன்
எதனையும் எழுதிக்கொள்ளாமலேயே
soul-GOG)Gos
மீனின் தலையொன்று அலையோடு அள்ளுண்டு வந்து இக்கரையில் விழுந்தது.
அதைத்தின்று முழத்த பூனையொன்று முடிவெடுத்தது
மீனின் மீதிப் பகுதி அக்கரையில் இருக்குமென்று.
அடுத்தநாள் காலையில் இக்கரையிலேயே மிதந்தன நீந்திக் கரை கடக்க முனைந்த அந்தப் பூனையின் ஊதிப் பெருத்த உடலும் மீனின் மீதிப் பகுதியும்.
அந்த அந்தீ
இதே எச்சிலை
இதே அஸ்தமனத்தை இனி என்னால் காணமுடியாது என்பதை நான் நன்கு அறிவேன்.
இதே அந்தியை
இதே எச்சிலை இனிக் காணமுடியாது என்பதை இந்த மறையும் கரியனும் அறியுமோ?
மீண்டும் துப்பினேன் - எச்சில் சமுத்திரமானது சமுத்திரம் எச்சிலானது.
நீரைக் கிழித்து வழியமைத்துக் கொண்டு தன்பாட்டிற்குப் போய்க்கொண்டிருந்தது என்பாட்டை அறியாத கப்பல்.
மல்லிகை டிசம்பர் 2011 & 14

சில கால இடைவெளிக்குப் பின்னர் ஒரு மாற்றுத் தமிழ்த் திரைபடமான ‘எங்கேயும் எப்போதும் சினிமாவைப் பார்க்கக் கிடைத்தது. தமிழ்த் திரையுலகம் அண்மைக்காலமாக அவ்வப்போதாயினும் சில நல்ல, வித்தியாசமான ரசனைக்குரிய திரைப்படங்களை வெளி யிட்டு வருவது ஆரோக்கியமான நகர்வாகும். தொடர்ந்தும் பல மசாலாப் படங்கள் வெளி வந்து, அவற்றில் பல தோல்வியையும், சில வெற்றியையும் பெற்றுக் கொள்கின்றன. இவற்றிற்கிடையே ஆழமான ரசிகனுக்கு தீனி போடுவதாகச் சில படங்கள் வெளிவந்து, அவற்றிலும் பல தோல்வியையும், ஒருசில பிரமாண்டமான வெற்றியையும் பெறுவதை அவதானிக்க முடிகிறது. முற்று முழுதான கலைப் படைப்பு என்றில்லாமல், சினிமா என்பது ஒரு தொழில் என்ற வகையில் லாபமீட்ட வேண்டியது அவசியம் என்ற கருத்தை யும், பொழுதுபோக்கு சாதனமாக இருப்பதனால், பல மட்ட ரசிகர்களையும் ஈர்க்க வேண்டும் என்ற நோக்குடனும் கவனமாக சில திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.
சினிமா விமர்சனம்
எங்தேயும் எப்போதும்
- பிரகலாத ஆனந்த்
இந்த வகையில் முருகதாஸின் நிறுவனத்தினால் புதியவரான சரவணனின் இயக்கத் தில் வெளியான ‘எங்கேயும் எப்போதும் திரைப்படம் சற்று வித்தியாசமான திரைப்படமாக வெளிவந்துள்ளதுடன், வெற்றிகரமாக ஓடிக்கொண்டும் இருக்கின்றது. இவ்வருடத்தில் ஏற்கெனவே ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை, வானம், அவன் இவன், தெய்வத் திருமகள், முரண், மங்காத்தா போன்ற சில குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் வெளிவந்த போதிலும், அவற்றை உடனுக்குடன் பார்த்து எனது ரசனையைப் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டாத போதிலும், இப்போது சற்றுத் தாமதமாக எனினும் ‘எங்கேயும் எப்போதும் திரைப்படம் பற்றிய எனது கண்ணோட்டத்தை முன்வைக்கிறேன்.
அண்மைக் காலமாக தமிழ்த் திரைப்படங்கள் காட்சிப்படுத்தலிலும், தொழிநுட்ப ரீதி யிலும் சிறப்பாக வெளிவருகின்றன. பிறமொழிப் படங்களின் பரிச்சயம் மூலமும், சினிமா கல்லூரிகளின் பயிற்சி மூலமாகவும் புதிய வகைப் படைப்புகள் தரிசனமாகக் கிடைக் கிறது.
எங்கேயும் எப்போதும் திரைப்படம் யதார்த்தமற்ற காட்சிகள் அற்றதாகவும், தனி மனித அகாய சூரத்தனங்கள், மிகையான கனவுக் காதல் காட்சிகள் அற்றதாகவும் வார்க் கப்பட்டுள்ளது. இது ஒரு சமூக நோக்குக் கொண்ட திரைப்படமாக இல்லாவிட்டாலும்,
மல்லிகை டிசம்பர் 2011 & 15

Page 10
எல்லாத் திரைப்படங்களும் அவ்வாறுதான் இருக்க வேண்டும் என்ற நியாயமில்லை. ஆனால், சமூகச் சீரழிவுக்கு இட்டுச் செல் லாத அளவில் இருப்பதுவே போதும், மேலோட்டமாக இது சில காதல் கதை களின் தொகுப்புப் போல் பட்டாலும், அதற் கும் மேலாக மரணம் என்பது எதிர்பாராமல், இளம் வயதில் ஏற்படும் போது, அது ஏற் படுத்தும் அதிர்வுகளையும் எடுத்துக் கூறு கிறது. முக்கியமான மூன்று காதல் கதை களின் பின்னால் அந்தத் தந்தை மகள் பாசக் கதை சற்று பின்தள்ளப்பட்டு விட்டா லும் அதுவே மிகவும் உருக்கமாக உள்ளது. முகம் தெரியாத அந்தக் குழந்தை மனதை ஈர்க்கிறது.
சென்னையிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து சென்னைக்கும் பெருஞ் சாலையில் வரும் அதிவேக பேருந்துகள் இரண்டு எதிரெதிரே மோதிக்கொள்கிற பெரும் விபத்தில் பல உயிரிழப்புகள், பலர் காயம்பட்டு அங்கவீனமாதல் என்பன ஏற்படுகின்றன. பஸ் விபத்து நடப்பதற்கு நான்கு மணித்தியாலத்திற்கு முன்பதாக ஆரம்பிக்கும் அந்த பஸ் பயணமும், பயணி களும், பயணத்தின் போதான நிகழ்வுகளு மாக கதாபாத்திரங்கள் அறிமுகமா கின்றன. பின்னர் அதில் பயணித்த ஒரு சிலரின் முன்கதைகள் சொல்லப்படுகின் றன. இறுதியில் யாருக்கு என்ன நடந்ததோ என்ற தவிப்பை பார்வையாளரிடம் ஏற் படுத்தி படத்தோடு முழுமையாக ஒன்ற வைத்த இயக்குநர், கதாசிரியர், படத் தொகுப்பாளர் பணியாற்றிய ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை மற்றும் அணியினரை եւյլն எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டத் தகும்.
விபத்து நடந்தவுடன் சிதைவடைந்த பேருந்துகளும், அவற்றில் சிக்கியுள்ளவர் களும், மீட்புப் பணிகளும் வெகு யதார்த்த மாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதலில் பாத்திரங்களின் அறிமுகத்தின் போது பார்வையாளருக்குச் சற்று தடுமாற்றம், பாத் திரங்களை அடையாளம் காண்பதில் குழப் பம் இருப்பினும், அது நீடிக்கவில்லை. தனி யொரு நாயகன் நாயகியென்றில்லாமல் இருப்பதும் இதற்கான காரணம் எனலாம். புதிய அல்லது குறுகிய காலத்துள் அறிமுக மான நடிகர்கள் எனினும் மனதோடு ஒன்றி விடுகிறார்கள். அங்காடித்தெரு புகழ் அஞ்சலியும், சுப்பிரமணியபுரம் புகழ் நாய கனும் மட்டுமன்றி, அனைத்துப் பாத்திரங் களுமே இயல்பாக நடித்துள்ளார்கள்.
வீட்டு உடைகளான சாரம், பனிய னோடு அறிமுகமாகும் ஒரு முக்கிய பாத் திரம் எதிர்வீட்டுப் பெண் அஞ்சலியை வெகு தொலைவிலிருந்து பார்ப்பதும், சமயங் களில் மாறி அவள் அம்மாவை தவறுத லாகப் பார்த்து அது மகள் என்று நினைப் பதும், அம்மா முறைப்பதும் ரசிக்கும்படியாக உள்ளது. அசாத்திய துணிச்சல்காரியாக நடிக்கும் அஞ்சலி அவனைப் பாடாய்ப் படுத்துவதும், அவன் அல்லாடுவதும் ரசனையான காட்சிகள். தன் காதலனிடம் சொல்லாமலே, தன் தகப்பனாரான பொலி சிடம் அவனை அனுப்புவதும், தன்னை ஆறு வருடமாகத் துரத்தும் மாமன் மக னிடம் அனுப்புவதும் என சுவையாக கதை நகர்கிறது. காதலிக்கும் முன்னதாகவே, காதலிப்பவனுக்கு எயிட்ஸ், பால்வினை நோய்கள் இருக்கிறதா? என்றும், எதிர்ப்புக் களைச் சமாளித்து கைப்பிடிப்பானா? என் றும் பரீட்சித்துப் பார்த்த பின்னரே காதலுக்
மல்லிகை டிசம்பர் 2011 & 16

குப் பச்சைக்கொடி காண்பிப்பதும், தனக்கு ஏற்றவாறு காதலனின் உடைகளை மாற்று வதும் என அஞ்சலி அசத்துகிறார்.
இன்னொரு காதல், சித்தார்த்துக்கும், திருச்சி அப்பிராணிப் பெண்ணுக்கும் ஏற்படு கிறது. இந்தக் காதலும் மிகவும் வித்தியாச மாகவும், சுவையாகவும் காட்சிப்படுத்தப் படுகிறது. திருச்சிப் பெண்ணொருத்தி சென்னைக்குப் புதியவள். ஒரு நேர்முகப் பரீட்சைக்காக சென்னை வரும்போது, அழைத்துச் செல்வதாக இருந்த அக்கா வின் வீட்டுக்காரருக்கு சுகயினம் ஏற்படு கிறது. வைத்தியசாலைக்கு அவரைக் கொண்டு செல்வதால், அவளால் வர முடி யாமல் போகிறது. திக்குத் தெரியாத சென் னையில் வந்து இறங்கிய அப்பெண், அக்காவின் ஆலோசனைப்படி ஒரு துணை யுடன் (முன்பின் தெரியாத இளைஞன்) வெகு அவதானமாக அக்கா சொன்னதுக்கு அச்சுப் பிசகாமல் செல்லும் போது ஏற்படும் அனுபவங்கள் சுவையானது. தனது அலு வலகத்திற்கு லீவு போட்டுவிட்டு முன்பின் தெரியாத அந்தப் பெண்ணுக்காகச் சிரமம் எடுத்துக் கொள்ளும் அவனுக்கு ஒரு நன்றி கூட கூறாமல் தொடர்ந்து அவனை உத விக்கு அழைப்பது மட்டுமன்றி, இறுதிவரை அவனை நம்பாமல் அவதானமாகச் செயற்படுகிறாள். மெல்ல மெல்ல அவனது நல்மனதை அறிந்து, ஒருநாளின் முடி விலேயே காதல் வயப்படுகிறாள். அதுகால வரை பேசிவந்த கலியாணங்களை எல் லாம் மறுத்து வந்த இளைஞனும், அந்தப் பெண் மீது காதல் கொள்கிறான். இருவரின் நடிப்பும் ஜொலிக்கிறது.
மூன்றாவது காதல் பஸ்ஸில் பயணிக் கும் பொறியியல் கல்லூரி மாணவனுக்கும்,
இன்னொரு கல்லூரி மாணவிக்குமிடையே அரும்புகிறது. மெல்ல மெல்ல நெருங்கி தொலைபேசியில் சொல்லப்படும் ஒரு நம் பரை எழுத அவனிடம் பேனா கேட்கும் அவள், பின்னர் கைபேசியில் யாருக்கோ தன் விபரம், கைபேசி இலக்கத்தைக் கூறு வது போல் அவளுக்குத் தெரிவிக்கும் அவன், அதே விதமாகப் பதிலளிக்கும் அவள் என பஸ் பயணத்தில் மொட்டாய் அரும்புகிறது, இந்தக் காதல். இருவரும் மனம் விட்டுப் பேசவே இல்லை.
மணமாகி ஒருசில மாதங்களில் தொழில் நிமித்தம் அபுதாபி செல்லும் கண வன், அவ்வேளை கருவுற்றிருந்த அவனது மனைவி இப்போது ஐந்து வயதுக் குழந்தை யுடன். அப்பாவைக் கண்ணில் காணாத குழந்தையும், குழந்தையைக் காணாத அப்பாவும் ஐந்துவருட இடைவெளிக்குப் பின்னர் மனைவி குழந்தையைச் சந்திப்ப தற்காக அபுதாபியிலிருந்து சென்னைக்கு வந்து, சென்னையிலிருந்து இதே பேருந் தில் பயணிக்கிறார். குழந்தை தொலைபேசி யில் கேட்கும் போதெல்லாம் "வருவேன் செல்லம்” என சமாளிக்கின்ற அப்பா, இம் முறை உண்மையில் வருகின்ற போதிலும் நம்ப மறுத்து தொலைபேசி மூலம் திரும்பத் திரும்பக் கேட்கிறது. தான் கொண்டு வரும் பொருட்களின் விபரம் கூறுவதுடன், தனது பக்கத்து ஆசனத்தில் மூலமும் தன்வரவு உண்மை என்பதை உறுதிப்படுத்துகிறார் அப்பா.
பயணிப்பவர்
இது தவிர, பேருந்தில் பயணிக்கும் ஒரு குழந்தையும் துரு துரு என்று பார்வை யாளரையும் கவர்ந்து விடுகிறது. இப்படி இன்னும் சில உதிரிப் பாத்திரங்கள்.
மல்லிகை டிசம்பர் 2011 & 17

Page 11
விபத்தில் யார் யாருக்கு என்ன ஆனாது என்பதுதான் உச்சக் கட்டம், என் றாலும் இயக்குநர் சரவணன் பார்வை யாளரை இவ்வளவு சோகத்துக்குள்ளாக்கி யிருக்க வேண்டாம். முதல் காதலில் அஞ் சலியின் காதலனான அந்தக் கிராமத்து இளைஞன் இறக்கிறான். இரண்டாவது காதலில் சித்தார்த்தின் காதலியான அந்த அப்பிராணிப் பெண் சாவின் பிடியில்.
கல்லூரி மாணவரில், காதலி மரணத்தைத்
தழுவுகிறாள். எல்லாவற்றிற்கும் மேலாக, முகம் தெரியா அந்தக் குழந்தையினதும், மனைவியினதும் அபுதாபிக் கணவன் உல கத்தை விட்டுப் பிரிந்து போகிறான். இறந்த அவனருகில் ஒலிக்கும் அலைபேசியில் குழந்தை, "அப்பா உண்மையாக வருகிறீங் கள்தானே?” எனக் கேட்கும் போது நாம் உறைந்து விடுகிறோம். படம் முடிந்து நீண்ட நேரத்தின் பின்னரும் மனதில் அது ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
மல்லிகை டிசம்பர் 2011 & 18
 

ஜெயகாந்தன் பற்றிய விமரிசன நூல்
படைப்புலகில் சகலராலும் நன்கு அறியப்
பட்டவர்தான் ஸ்ஹானா - கெக்கிராவ ஸ்ஹானா.
இவர் நீண்ட நெடுங்காலமாகவே ஜெய காந்தனின் பரம ரசிகை. இலக்கிய விசிறி.
பல தடவைகள் சென்னை சென்ற சமயங் களில் எல்லாம் ஜெயகாந்தனது வீடு தேடிச் சென்று அவருடன் அளவளாவி மகிழ்ந்து குதூகலிப்பவர்.
ஒருதடவை நான் சென்னை சென்றிருந்த சமயம் நண்பர் ஜெயகாந்தனே இவரது இலக்கிய ஆக்கச் செயற்பாடுகள் பற்றி வியந்து பேசியுள்
ளார். பாராட்டியுள்ளார்.
இலங்கையில் சிங்களப் பெரும்பான்மை மக்களால் சூழப் பெறடற ஒரு பிரதேசத்தில் இருக்கும் ஒரு பெண், அதிலும் முஸ்லிம் பெண், இலக்கியத்துறையில் காலடி பதித்து நிமிர்ந்து நிலைத்து நிற்பது மிக மிகப் பெரிய சாதனைதான்! என நேர்ச் சம்பாஷணையில் இவரது இலக்கியச் செயற்பாடுகளைப் பல தடவைகள் நேரடியாக வியந்து பாராட்டி யுள்ளார், நண்பர் ஜெயகாந்தன்.
ஜெயகாந்தன் படைப்புகள் பற்றிய ஒர் ஆய்வு நூலை எழுதியுள்ளார், ஸ்ஹானா, அதன் பெயர் சூழ ஒடும் நதி என்பதாகும். (ஜெயகாந்தன் படைப்புகள் பற்றிய ஆய்வு நூல்) என்ற அடைப்புக் குறிக்குள் உபதலைப்பொன்றைச் சேர்த்து, அந்த நூலை வெளியிட்டுள்ளார், ஸ்ஹானா, 222 பக்கங்களை உள்ளடக்கிய பென்னாம் பெரிய ஆய்வு நூல் இது விலை 400/- ரூபா, இலக்கிய ஆர்வலர்கள் இவருடன் நேரடியாகவே தொடர்பு கொள்வது நல்லது. அவரின் முகவரி கெக்கிராவ ஸ்ஹானா. 32/21, செக்குப்பிட்டிய தெற்கு, கெக்கிராவ.
ஆர்வ மேலிட்டாலும் ஜெயகாந்தன் மீது கொண்ட அதீத இலக்கியப் பற்றுக் காரண மாகவும் சொந்தப் பணத்தை முதலீடு செய்து, தனக்கே தனக்கான சொந்தப் பதிப்பக வெளியீடாக இந்நூலை மிகத் துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் இவர் இந்தப் பாரிய விமரிசன நூலாக வெளியிட்டதற்காக இவரது இலக்கிய நெஞ்சத்தையும், துணிந்து தனி நபராக கருத்துச் சொல்லி, விளங்க வைப்பதையும் இலக்கிய உலகம் நிச்சயமாகப் பாராட்டியே ஆகவேண்டும். மல்லிகை நெஞ்ச நிறைவுடன் பாராட்டுகின்றது.
மல்லிகை டிசம்பர் 2011 & 19

Page 12
தனது கல்யாண வாழ்க்கை மீது சுபா கொண்டிருக்கிற அதீத நம்பிக்கையின் உச்சக்கட்ட விளைவாகவே அம்மாவுடன் கடைசியாக நேர்ந்த அந்தச் சாதகப் பரிமாற்றம். தன்னிச்சையாக அவள் எடுத்த இந்த முடிவு, அம்மாவுக்கு உடன் பாடற்ற ஒன்றாகவே மனதை அரித்தது. இது அவள் கொஞ்சமும் எதிர்பாராமல் நடந்தேறி விட்ட ஒரு நிகழ்ச்சி. சராசரி பெண்களைப் போலச் சுபா நல்ல நிலை மையில் இருந்திருந்தால், அவள் வாய்விட்டுக் கேட்காமலே அம்மா மனப்பூர்வ மாக, அதை முன்னின்று நடத்தியிருப்பாள். இப்பொழுதோ அவள் இருக்கின்ற நிலைமையில் உணர்ச்சி மனம், தெளிவான அறிவு நிலையின்றி, ஒரேயடியாகத் தடம்புரண்டு போனபின், வாழ வேண்டிய வயதில், பொங்கிச் சரியும் உணர்ச்சி களுக்கு வடிகால் ஏதுமின்றி, அவள் படும் பூரண அவஸ்தையின் சோகம் தீர்க்கின்ற ஒரு பரிகார நிகழ்வாகவே, அம்மா முன்னிலையில் அந்தச் சாதக அரங்கேற்றம் உணர்வுப்பூர்வமாக நடந்தேறியது.
சுயத்தோன்றுதலான அறிவுப் பிரக்ஞை மங்கிப்போன நிலையிலேயே, அம்மா அதைக் கைநீட்டி வாங்க நேர்ந்தது. இந்த உணர்வு நிலைக்கு அப்பாற்பட்டுச் சுபா எதிர்மறை நிழலாக நின்றுகொண்டிருந்தாள். களையிழந்த முகமும், வெறிச் சோடிச் சோகம் அப்பிய கண்களுமாய் அவளை நேர்கொண்டு பார்க்கவே மனம் கூசியது. முற்று முழுதாகச் சோகம் கனத்த இருண்ட யுகத்தின் ஒரு நித்திய சிறைக்கைதி போலாகி விட்ட அவளுக்கு இப்படியொரு விபரீத ஆசை வந்திருக் கக் கூடாதுதான். என்ன செய்வது? வாழ்கிற தகுதி இல்லாமற் போனாலும் தன்னிச்சையாக அவள் எடுத்திருக்கிற இந்த முடிவு அவளின் தார்மீக உரிமை.
அதற்கான பலன் பூஜ்யமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். மனம் அடி சறுக்கிய அந்த நிலையில், அவளை 途 மனப்பூர்வமாக ஏற்று மண க்க, 266/2
马 ற்று (Լpւգ ஒரு தியாக புருஷன் முன்வராமல் போனா லும், அவளின் ஆசைக்காகக் கொடுத் മ ഴ്ന്നി 酸 துப் பார்க்க வேண்டியதுதான். 2 /02
அனுவின் கல்யாணம் முடிந்து சிறிது காலமேயாகியிருந்தது. அணு சுபா കരമ0e Cவுக்கு நேரே மூத்தவள். சுபா இருக்கிற நிலையில், அவள் கல்யாணம் கூடக் 承 கேள்விக் குறிதான். சுபாவின் இருப்பை കരg &of அறிந்தால், அனுவின் கல்யாணம் கூடத் தடைப் படும் என்ற நிலைமைதான். 8
6T அனு செய்த புண்ணியம், தானாகவே وك ந்தி மல்லிகை டிசம்பர் 2011 & 20

அவள் போட்டோ பார்த்து, ஒரு நண்பி வழியாக விரும்பி வந்த சம்பந்தம். கனடா மாப்பிள்ளை. நிரந்தர பிரஜா உரிமை கிடைக்காததால் சிங்கப்பூரில் தான் அனுவின் கல்யாணம் அம்மா முன்னின்று நடத்திய ஒரு சத்திய வேள்வியாகவே நடந்தேறியது. அனு வோடு அம்மா மட்டுந்தான் தனியாகச் சிங்கப்பூர் போய் வந்திருந்தாள். அப்பா எதிலும் ஒட்டாத ஒருபுறம்போக்கு மனிதர். சிறு பிரச்சினைகளையும் பூதா கரமாக்கிச் சண்டை போடுவதொன் றையே குறியாகக் கொண்ட குணக் கோளாறான நடத்தைகளையே கொண் டிருப்பவர். அவரின் ஒட்டுமொத்த பாவங்களின் விழுக்காடு கண்ட ஈனப் பிறவியாகவே சுபாவின் நிலைமை.
அரச பணியிலிருந்து ஒய்வுபெற்ற பிறகு, பத்திரிகை வாசிப்பதிலேயே அவரின் பொழுது சுகமாகக் கழியும். வீட்டில் என்ன பிரளயம் நேர்ந்தாலும் அவர் கண்டுகொள்வதில்லை. அனு விற்கு நேரே தலைமகனாக ஒரு பையன். அவன் வெளிநாடு போய் அனுப்புகிற பணத்திலேதான், அவர் களின் குடும்பத் தேர் ஒடுகிறது. அனு வின் கல்யாணத்தை ஒப்பேற்ற முடிந் ததும் அவனால்தான். சாதகத்தோடு சுபா தனது போட்டோவையும் எடுத்து வந் திருந்தாள், புரோக்கரிடம் கொடுப்பதற் காக. போட்டோவிலே பார்த்து, அவளை யாரும் மனநோயாளியென்று சொல்ல மாட்டார்கள்.
குறை சொல்ல முடியாத அழகு
அவளுடையது. இருந்தாலும் தான் வடி வில்லையென்று, தாழ்வுணர்ச்சி கொண்
டதனால்தான், அவளுக்கு இந்தப் பாரிய மனமுறிவு. புத்தி நேர்வழியில் சிந்திக் கத் தெரிந்திருந்தால், இப்படியொரு சரிவு அவளுக்கு ஏன் வரப்போகிறது? நிமைமையை எடுத்துச் சொன்னால், அவளுக்குப் புரிந்துகொள்கிற மனநிலை யில்லை. அம்மா அவளைக் கழுவாய் சுமக்கிற மாதிரி, அவளைத் தோள்மீது வைத்துத் தாங்கத் தன் உணர்ச்சிகளைத் தியாகம் செய்து விட்டு, ஒரு யோக புருஷன் கிடைக்க வேண்டுமே. சமூ கத்தில் சல்லடை போட்டுத் தேடினா லும், அப்படியொருவன் கிடைப்பானா?
ge (D5
பெண்ணை மணமுடிக்க எந்த ஆண்
மனநலம் பாதிக்கப்பட்ட
மகனுக்குத் துணிச்சல் வரும்?
அம்மாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சுபாவின் ஆசையைத் தட்டிக் கழிப்பதற்காக அவள் கூறினாள்,
"சுபா! அனுவக்காவின் கல்யாணம் இப்பதானே முடிஞ்சிருக்கு. அதை நடத்தி வந்த களைப்பே இன்னும் போகேலை. கொஞ்சநாள் போகட்டுமே.
பிறகு பார்க்கலாம்.”
“என்னம்மா குழப்பிறியள். நான் இவ்வளவு நாளும் பொறுத்ததே போதும். அனுவக்காவின் கல்யாணம் முடியவேண்டுமென்றல்லோ காத்திருந் தனான். அவவுக்குச் சீதனமும் குறைவு. இனியென்ன சுணக்கம்? எனக்குப் பார்க்கவேண்டியதுதானே?”
மனம் குழம்பிப் போனாலும், புத்தி பூர்வமாகப் பேச சுபா நிறையக் கற்றுக் கொண்டிருந்தாள். உணர்ச்சி சிதறும்
மல்லிகை டிசம்பர் 2011 & 21

Page 13
போதுதான் பிரளயம் வெடிக்கும். அவளுக்கு முரண்பாடாத மறுமொழி சொல்லி, நிலைமையைச் சமாளிப்பது கஷ்டம். வேறு வழியில்லை. அவளின் சாதகத்தோடு, புரோக்கரின் கல்யாணச் சந்தைக்குப் புறப்பட வேண்டியதுதான். அம்மா துணிந்துவிட்டாள். அவள் சாதக மும் கையுமாகப் படியிறங்கும்போது, காலை மணி ஒன்பதிருக்கும். நல்ல வெய்யில் கொளுத்திக் கொண்டி ருந்தது. மனதிலும் ஒரே உஷ்ணம்.
அவள் படியிறங்கும் போது, பின் னாலிருந்து குரல் கேட்டது. சுபாவைக் காணவில்லை. திரும்பிப் பார்த்தால், அனு உணர்ச்சிப் பிழம்பாக நின்று கொண்டிருப்பது தெரிந்தது. விசா இன் னும் வராததால் அவள் கனடா போகச் சுணங்கிக் கொண்டிருந்தது. அந்த ஏக் கத்துடனேயே, இது ஒரு பொறிதட்டு கிற விடயமாய், மனதை எரித்தது. சுபா விடயமாக அம்மா எடுத்திருக்கிற முடிவு சரியில்லை என்று உறைத்தது. அவளின் குரல் உணர்ச்சிப்பூர்வமாக ஒலிக்கும் போது, அம்மா அதை மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
'அம்மா, இது விஷப்பரீட்சை யல்லே. அவள்தான் விபரம் அறியாமல் சொல்கிறாளென்றால், நீங்களுமா இதற் குத் துணைபோக வேணும்?”
"என்னை என்ன செய்யச் சொல் கிறாய்? சரிவராதென்று சொன்னால், சுபா நம்பவா போகிறாள்? நடப்பது அவள் ஆசைக்குக் கொடுத்துத்தான் பார்ப்போமே.”
நடக்கட்டும்.
"நான் மறுக்கேலை. நல்லாய்க் கொண்டு போய்க் கொடுங்கோ. ஆனால் ஒன்று சொல்லுறன். உண் மையை மூடி மறைச்சுத்தானே இதைச் செய்ய வேணும்.”
அம்மா யோசனையுடன் தலை ஆட்டினாள். பொதுவாகக் கல்யாண மென்றாலே, படுசிரமம். அதிலும் இப் படியொரு மகளுக்குக் கல்யாணம் பேசுவதென்றால், கத்தி மேல் நடக்கிற ஆபத்தான காரியமல்லவா!
வெள்ளவத்தைக்கு அவள் வரும் போது, கல்யாணச் சந்தை, களை கட்டி யிருந்தது. புரோக்கருக்கு முன்னால் கூட்டம் அலை மோதியது. அதன் நடுவே, தீக்குளிக்கின்ற மாதிரி அவள் நிலைமை. பைல் குவியல்களுடன் பெண் புரோக்கர், யாருடனோ கதைத் துக் கொண்டிருந்தாள். அவளுடன் நீண்டகாலப் பரிச்சயம், அம்மாவுக்கு. அனுவின் கல்யாண விடயமாக ஒரு அவளுடன் கொண்ட தொடர்பு நாட்கள். அவள் ஒரு முதிர்கன்னி. வேண்டாமென்றிருப்பதாகக் கேள்வி.
யுகம் போலாகிறது,
கல்யாணமே
அம்மாவைக் கண்டதும், அவள்
முகம் மலர்ந்து சிரித்தவாறே கேட்டாள்,
“ஆருக்கம்மா பார்க்க வந்திருக் கிறியள்?"
“என் இரண்டாவது மகளுக்கு.”
‘எப்படியான மாப்பிள்ளை
வேணும்?”
மல்லிகை டிசம்பர் 2011 毫 22

“வெளிநாடென்றாலும் பரவா யில்லை.”
"இந்தாருங்கோ போம். சாதகத்தை யும் இணைத்து, உங்கடை விருப்பத் தெரிவுகளை இதில் பதிவு செய்யுங்கோ. போட்டோவும் வேணும்.”
மனச்சாட்சியை மூடி வைத்து விட்டு, அம்மா அவள் கூறியவாறே, ஒவ்வொன்றையும் பதிவு செய்து, கை முகட்டிலிருந்து பல்லி சொன்னது. வேறு என்ன சொல் லப் போகிறது? இது நடக்காதென்று தானே சொல்லியிருக்கும். அம்மாவைக்
யளிக்கும் போது,
கவலை பிடித்துக் கொண்டது. இது நடக்க வேண்டுமே. யார் தலையில் மண் விழுத்த இந்த விபரீத நாடகம், பொய், பித்தலாட்டம், வெளிவேடம் இதிலே எடுபட்டு, ஒன்று வலையில் சிக்கினால், பிறகு என்ன செய்வது? உண்மையை மூடி மறைத்து, அதற்கு உடந்தை யானால், நானும் பழிகாரியாகி விடு வேனே? இந்தப் பாவத்தை எங்கே கொண்டு போய்த் தலைமுழுகுவது?
கண்முன்னாலேயே பெருக்கெடுத் தோடும் புண்ணியநதி போலச் சமூகத் தில் இருப்பு நிலை. அதிலொன்று போலாக முடியாமல், அவர்களின் கறை படிந்த இருண்ட யுகம். அதிலகப்பட்டுக் கழுவாய் சுமக்கிற துயரம் அம்மாவுக்கு மட்டும்தான். இனி என்ன நடக்கப் போகிறது? கல்யாணச் சந்தைக்குப் போய்வந்த கையோடு, அம்மாவுக்குக் குளிர்விட்டுப் போயிற்று. நாளடைவில் அதை அவள் மறந்தே போனாள். அந்தக் கல்யாண விடயமாகக் கதைப்
பதற்கு ஒருவர் வீடு தேடி வந்தபோது தான், அம்மாவின் நிலை ஆட்டம் கண்டது. பொருத்தம் பார்த்த குறிப் பையும் அவர் கையோடு எடுத்து வந்திருந்தார். சுபாவின் சாதகம் அவர் மகனின் சாதகத்தோடு நன்கு பொருந்தி வந்திருப்பதாகக் கூறினார்.
அவர் கேட்டுக் கொண்டதற் கிணங்க, அம்மா அசடு வழியச் சிரித் துக்கொண்டே, சீதன விபரத்தை விபர மாகக் கூறிய பின், பெண்ணை நேரில் பார்க்க விரும்புவதாக அவர் சொன்ன போது, அவளுக்குப் பாதி உயிர் போய் விட்டது. முழுக்க நனைந்த பின், முக் காடு எதற்கு என்ற நிலைமைதான். வேறு வழியில்லை. திரை விலக்கிச் சுபாவும் வந்து சேர்ந்துவிட்டாள். அவ ரின் கண்களுக்கு ஒன்றும் தட்டுப்பட வில்லை. இருள் அப்பிக் கிடக்கிற, அவ ளின் நிரந்தர சோகம், அவருக்கு வெளிச்சமாகமலே போனது. ஜெர்மனி யிலுள்ள அவர் பையனின் போட்டோ வைக் கூட எடுத்து வந்திருந்தார்.
நல்ல வேளை, சுபா அதனைக் காணவில்லை. மன்மதன் களை வடிய, அந்தப் பையன் வாட்டசாட்டமான அழ கோடு ஒளிர்ந்தான். அவனை அடையச் சுபா கொடுத்துவைத்திருக்க வேண்டுமே அவர்களைப் பற்றி விசாரிப்பதாக அவர் விபரம் அறிந்துகொண்டு போனவர் தான்.
அப்படி அவர் வந்துபோய், ஒரு யுகத்திற்கு மேலாகிறது. மீண்டும் திரும்பி வரவேயில்லை. என்ன நடந் திருக்கும்? யாரைக் கேட்டு அறிவது?
மல்லிகை டிசம்பர் 2011 & 23

Page 14
ஊரிலிருந்து ஒரு சமயம் உறவின லொருத்தி வந்திருந்தாள். நன்றாகச் சிரித்து, மழுப்பிக் கலகலவென்று பேசுகிற சுபாவம் அவளுக்கு. ஊர்ப் புதினம் எல்லாம் அத்துப்படி, அம்மா கேட்காமலே கதையைத் துவக்கினாள். அம்மா அதைக் கனவிலே கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் வாய்நிறையச் சிரிப்போடு கேட்டாள்.
உனக்கு ஒரு புதினம் சொல்லட்டே?”
G
дFлта9, 1
என்னவாக விருக்கும்? பெரும் பாலும் ஊர்ப்புதினங்களில் ஒன்றாகவே அது இருந்துவிட்டுப் போகட்டும். எனக் கொன்றுமில்லையென்பது போல அம்மாவின் நிலைமை. பெரிய சாபக் கேடு நேர்ந்திருக்கிறது. ஒன்றையும் காட்டிக்கொள்ளாத மாதிரி இருந்த போதுதான், அந்தப் பெண் எதிர்பாராத விதமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.
"சுபாவுக்கு நீ மாப்பிள்ளை பார்த்த
தாக ஊருக்குள் கதைக்கினம்.
உண்மையே?’ என்று அவள் கேட்ட போது, அம்மா மெளனமாக இருந்தாள். உண்மையைச் சொல்லத் தொடங்கி னால், அதன் வலியை, இவள் புரிந்து கொள்வாளா? எந்த மேலான உணர்வுப் போக்குமின்றி, பிறர் படும் துன்பங் களை எட்டி நின்று ரசித்து, மகிழ்ச்சி கொண்டாடி, வேடிக்கை பார்த்தே பழக் கப்பட்டவள். அவளை முன்னிறுத்தி, சுபா பக்கமுள்ள நியாயங்களை உணர் வுப்பூர்வமாக எடுத்துக் கூறினால், எந் தளவுக்கு அதை அவளால் புரிந்து
கொள்ள முடியும்? சுபா வழியாக அம்மா சுமக்கிற கழுவாயை அறிவுப் பிரக்ஞை கொண்டு, அவளால் புரிந்து கொள்ளத்தான் முடியுமா? நிலைமை இவ்வாறிருக்க ஒன்றையும் வெளிக் காட்டாத, பேச்சற்ற மெளனமே சிறந்த தென்று அம்மாவுக்குப் பட்டது.
அந்த மெளனத்தைக் கிழித்துக் கொண்டு, கனதியான ஒரு சத்தியப் பிரகடனம் போல், உச்சஸ்தாயியில் குரலை ஏற்றி, கண்களில் ஒளி மின்ன மீண்டும் அவள் பேசினாள்,
"சரசு! நீ சொல்லாவிட்டாலென்ன, எனக்கு விளங்குது. ஊரெல்லாம் உன்ரை மகளைப் பற்றிய கதைதான். சங்கானையிலிருந்து ஒருவர் வந்து உங் களைப் பற்றி விசாரித்தவர். சுபாவின் படத்தைக் காட்டிக் கேட்டவராம். சாந்தன் கடையிலை கதைச்சவை யென்று மருமகன் வந்து சொன்னவர். பிறகு என்ன நடந்திருக்குமென்று நான் சொல்லியே உனக்குத் தெரியவேணும்?”
அதைச் சொல்கிறபோது, உள்ளூர உணர்ச்சி வசப்பட்டு, அப்படி நேர்ந்த பிறரின் ஒரு வீழ்ச்சிக்காக மகிழ்ச்சி அவள் குதூகலிப்பது அவளது பேச்சின் ஆரவாரச் சப்தத்தி லிருந்தே வெளிப்படையாகத் தெரிந்த
கொண்டாடி,
போது, அம்மா வெகுவாக மனம்
நொந்து போனாள்.
சுபாவை மையமாக வைத்து, அவர் கள் வாழ்க்கையில் வீசிச் சுழன்றடிக்கிற சூறாவளியில் அகப்பட்டு, உருக் குலைந்து போன, ஜடம் மரத்த வெறும்
நடைப்பிணம் போல, அம்மாவின்
மல்லிகை டிசம்பர் 2011 奉 24

S&S is
}
ܐܠ
S s 雳漠
I
நிலைமை. வாழ்க்கையின் அதி பார தூரமான இந்தப் பாவச்சரிவின் கருந் தீட்டுப் படிந்த நிழல் கூறுகளின் சுவடு கூட எட்டாத வெகு தொலைவில், மலையுச்சியில் ஏறி நின்று எக்காள மிட்டுச் சிரித்து, நையாண்டி பண்ணு வது போல, ஊரில் நடந்த புதினத்தைச் சொல்லிவிட்டு ஒய்ந்த அவளின் குரல், விண்முட்டித் திரும்பத் திரும்ப எதி ரொலிப்பது போல, அம்மாவின் செவி களிலே நாராசமாய் வந்து விழுந்தது. அவளின் நிலையறியாமல், ஒரு பகிடிக் கதை போல அதைச் சொல்ல நேர்ந்ததற் காக, அந்தப் பெண் வெட்கம் கொண்டு மனம் வருந்த வேண்டியவள்; அம்மா வின் மனம் லேயே, மனம்விட்டுச் சிரித்துக் குளிர் காய நேர்ந்திருக்கிறதே. இந்தப் பாவ
நொந்த விழுக்காட்டி
மல்லிகை டிசம்ப
ಆಶಿಶ್ಟ್ ಅಕ್ಕ°
&&S & & ,གས་སེམས་སྒྲིགས༼༄
\N
S. X ଽ Š
& S
Š
༄
பிரகடனத்தின் உச்ச சலசலப்பை, கிர கித்து ஏற்றவாறே, அது ஜீரணமாக முடி யாமல் போன, வெறுமையோடு, அம்மா வெகுநேரமாய் நிலைகுத்தி அமர்ந்திருந் தாள். ஊரிலே என்ன நடந்திருக்கு மென்று, அவளால் ஊகிக்க முடிந்தது.
சுபா பற்றிய உண்மை யைச் சொல்ல நேர்ந்ததற்காக, அப்படிச் சொல்லிவிட்ட அவர்கள் மீது, கோபம் சாதித்துக் கறை பூச நினைப்பதே, பாவ மென்று பட்டது. அவர்கள்தான் என்ன செய்வார்கள்? உண்மை வழி அவ ர்களுக்கு. அந்த உண்மையின் சூட்டை வாங்கியவாறே கருகி அழிந்து போகத் தான், அம்மா உருக்கொண்டு நிற்கும் இருட்டு மயமான வாழ்க்கை யுகமும், அதன் சரிவுகளும்.
而2011奉25

Page 15
புதுமைப்பித்தனின் குெருவிளக்கு சிறுகதையும், மயில்சனின்
தெருவிளக்கு குறுந்திரைப்படமும்,
மனதாபிமான நேரெதிர் வெளிப்பாடுகள்
- சி.விமலன்
சில தினங்களுக்கு முன்னதாக திலகபாமா தொகுத்து காவ்யா வெளியீடாக வந்த புதுமைப்பித்தனில் பூமத்திய ரேகை நூலைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் தெரு விளக்கு - ஓர் உளவியல் பார்வை' எனும் கட்டுரை வெறும் மேலோட்டமான பார்வையாக இருந்தாலும், அது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த பொழுதுதான், மேமன்கவி அவர்கள் மயில்சன் இயக்கிய "தெருவிளக்கு குறுந்திரைப்படத்திற்கு சென்ற மாத மல்லிகையில் எழுதிய குறிப்பையும் வாசிக்க நேரிட்டது. இத்தெருவிளக்கு குறுந்திரைப்படத்தை முன்ன தாகவே பார்த்ததனால் அக்குறுந்திரைப்படைத்தையும், புதுமைப்பித்தன் எழுதிய "தெரு விளக்கு சிறுகதையையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்ற நினைப்பு வந்த போதிலும் சில காரணங்களால் அது கைகூடாமலேயே போய்விட்டிருந்தது. இப்பொழுது மேமன்கவி அவர்களின் கட்டுரை அதை எழுதுவதற்கான உத்வேகத்தை தந்துள்ள நிலையில் இச்சிறு குறிப்பை வரைகிறேன்.
தெருவிளக்கு குறுந்திரைப்படமானது தெருவிளக்கொன்று பழுதடைந்து காணப்படு கின்ற நிலையில் மனிதர்கள் பலரும் அதனை திருத்துவதற்கு எந்தவிதமான முயற்சிகளும் எடுக்காது, கண்ணிருந்தும் குருடர்களாய் மாறிப்போன நிலையில், பார்வையற்ற கடைக் காரர் ஒருவர் பார்வையுள்ள மனிதர்களுக்கு வெளிச்சம் காட்டுவதற்காக மின்சார சபை ஊழியருடன் தொடர்பு கொண்டு அதனை திருத்துவிப்பது மனிதாபிமானம் இன்னும் மரித்து விட வில்லை என்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது.
வழமையாக திரைப்படங்களாக இருந்தாலும் சரி, குறுந்திரைப்படங்களாக இருந்தாலும் சரி பார்வையற்றவர்கள் விடயத்தில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களாக அவர்களுக்கு உதவி செய்வதன் மூலமே பெரும்பாலும் அவை காட்சிப்படுத்துவதுண்டு. அத்தகைய நிலைக்கு விதிவிலக்காக பார்வையற்றவரே தான் இருட்டில் வாழ்ந்தாலும் மற்றவர்கள் இன்பத்தில் வாழ வேண்டும் என்பதற்காகவும், தன்னைப் போன்று மற்ற வர்களும் துயரப்படக்கூடாது என்ற நல் லெண்ணத்திலும் மனிதாபிமானம் தலை தூக்க அவர் செய்த காரியம் இக்குறுந் திரைப்படத்தைப் பார்ப்போரை ஒரு கணம் சிந்திக்கவே தூண்டும்.
மல்லிகை டிசம்பர் 2011 奉 26

குருடராய் நடித்து ஒரு பெண்ணின் அனுதாபத்தைப் பெற்று, அதன் ஊடாக அப் பெண்ணை அடைவதற்காக பார்வை அற்ற வர்களின் உணர்வுகளை மலினப்படுத்துவ தாய் எடுக்கப்பட்டு, அண்மையில் திரைக்கு வந்த நடிகர் பாக்கியராஜின் மகன் நடித்த 'கண்டேன்’ திரைப்படத்தை விட "தெரு விளக்கு குறுந்திரைப்படம் பார்வையாள னுக்கு மனிதநேயத்தை தொற்ற வைத்ததில் வெற்றி பெற்றிருக்கிறது என்று துணிந்து
&ngp6)ITLD,
அதேசமயம் 1934ஆம் ஆண்டு 'ஊழியன்’ இதழில் வெளிவந்த புதுமைப்பித் தன் எழுதிய "தெருவிளக்கு சிறுகதையா னது அநாதரவான நிலையில் காணப்படும் முதியவர் ஒருவருக்கு உற்றதுணையாக விளங்குகிறது தெருக்கோடியில் அமைந் துள்ள தெருவிளக்கு. தனது சுகதுக்கங் களை தினமும் அதனோடு பகிர்ந்து கொள் கிறார் அந்த முதியவர். இந்நிலையில் ஒரு நாள் முதியவர் பிச்சை எடுக்கச் சென்ற வேளையில் பழுதடைந்த நிலையில் காணப் பட்ட அந்தத் தெருவிளக்கை தெருவில் இருந்து அகற்றி விட்டார்கள். அந்த அதிர்ச்சி யிலேயே இந்த முதியவர் இறந்து விடுகிறார். மறுநாள் அவ்விடத்தில் மின்சார விளக்கு ஒன்று பொருத்தப்படுகின்றது. முன்னர் இருந்த அந்தத் தெருவிளக்கு குறித்தோ, அந்த முதியவர் குறித்தோ எந்தவித கவலை யும் கொள்ளாது, மக்கள் இயல்பாக இயங்கி கொண்டிருந்தனர் என்பது அச்சிறுகதையின் சாராம்சம்.
சமுதாயத்தில் காணப்படும் அவலங் களை படம் பிடித்து, அவற்றை சிறுகதைக ளாக்கி மனுக்குலத்தின் எழுச்சிக்காய் தனது எழுத்தை ஆயுமாகப் பயன்படுத்திய
வர் புதுமைப்பித்தன். அவரது படைப்புகளில் மனிதர்கள் மட்டுமல்ல, பல்வேறு சடப் பொருட்களின் மீதும் சமூக அவலங்களுக் கான சிந்தையை ஏற்றி அதனையும் ஒரு உயிர்ப்புள்ள பாத்திரமாக வார்த்து விடுவார். அதேநிலைதான் இத்தெருவிளக்கு சிறு கதையிலும் சித்திரிக்கப்பட்டுள்ளது.
"இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரியவையில்லை. எனவே தெருவிளக்கிற்கும் இப்பொழுது மூப்புப் பருவம்” என்றும், "தெருவிளக்கு, அவன் தோழன்தான். அதன் வெளிச்சம் அவனுக்கு எவ்வளவு மனநிம்மதியை அளித் தது” என்றும் புதுமைப்பித்தன் தனது சிறு கதையில் சித்திரித் திருப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
புதுமைப்பித்தனின் தெருவிளக்கு சிறு கதையில் தெருவிளக்கினை எடுத்துச் சென்ற பின்னர், ஒரிடத்தில் பற்றுக்கோலை யாரோ தட்டிப்பிடுங்கிக்கொண்ட குருடனின் நிலை என்று அதனை சித்திரிக்கும் பொழுது, என்னை அறியாமலேயே மயில் சனின் "தெருவிளக்கு குறுந்திரைப்படத்தில் வந்த பார்வையற்ற கடைக்காரரே நினை வுக்கு வந்தார்.
ஒட்டுமொத்தத்தில் புதுமைப்பித்தனின் தெருவிளக்கு சிறுகதையின் தாக்கம் மயில் சனைப் பாதித்துள்ளது என்று உறுதிப்படச் சொல்ல முடியாத நிலையில் தெருவிளக்கு குறித்த சிறுகதையையும் குறுந்திரைப்படத் தையும் ஒப்பியல் நோக்கில் பார்த்த பொழுது "தெருவிளக்கு குறுந்திரைப்படம் மனிதாபி மானத்தை வெளிப்படுத்த புதுமைப்பித்த னின் "தெருவிளக்கு சிறுகதையோ மனிதா பிமானத்தின் இருப்புக் குறித்து கேள்வி எழுப்புகின்றது எனலாம்.
மல்லிகை டிசம்பர் 2011 & 27

Page 16
கடிதங்கள்
2011 நவம்பர் மாத மல்லிகை இதழினை வாசிக்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. வடமராட்சிப் பகுதியில் இலக்கிய சஞ்சிகைகள் விநியோகிக்கக் கூடிய புத்தகக் கடைகள் எதுவுமே இல்லாத காரணத்தால் மல்லிகையை கிடைக்கும் போது வாசிப்பேன்.
மேலும், ஆசிரியரின் செய்தியில் தங்களுடைய இலக்கிய வளர்ச்சியும், வெண்ணிற 260). அண்ணிந்து வந்தமைக்கான காரணங்களையும் துலக்கமாக எழுதியிருந்தீர்கள். 90களில் அல்வாய் முருகேசனாருடைய பவள விழாவினில் தாங்களும், மறைந்த கா.சிவத்தம்பி சேர் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியமை அவ்வேளையிலும் பேசிய பேச்சு துடிப்பின் சாரம் காரம் நிறைந்த சமூக அடிநிலை போக்கினை வெட்டி எறி கின்ற போக்குடைய கருத்தும் கார்த்திகை மாத மல்லிகையில் 12 வயதினில் தந்தை யாருடைய தொழில் நிறுவனத்தினை இன்றும் மறந்து விடாது எமது வரலாற்றினைத் தொட்டு தெளிவாக கூறுகின்ற தன்மையும், கூறிவருகின்ற நேர்மையும் இன்றும் அவ்வப் போதய சம்பவங்களினூடாக எம்மால் அனுபவிக்க முடிகின்றது.
தங்களுடைய பேனாவின் ஒவ்வொரு வரிகளிலும், பேச்சினில் செறிவான சமூகப் பார்வையும் இரு கண்களாகப் பார்க்க முடிகின்றது. 50வது ஆண்டினை நோக்கிய பாதையில் மல்லிகையின் பாதப் பதிவும் பாராட்டுக்குரியது. 47வது ஆண்டு மலரொன் றினை வெளியிட இருப்பதும் மகிழ்வு தரும் செய்தியாகும்.
K.R.óld B5316) TITU-Ir அல்லையூர்
நீங்கள் எனக்கு அனுப்பும் மல்லிகை கிடைக்கப் பெற்றேன். அதை 80களில் வாசித்திருப்பதாலும்,அவ்விதழ் குறித்து விவாதிப்பதென்பதைக் காட்டிலும்,அதன் சமூகப் பெறுமானம் குறித்துத் தொடர்ந்தும் வாசிப்பதில் மகிழ்வடைகிறேன்.
முநீரங்கன் விஜயரட்னம் 68frID60f
1972 முதல் 1976வரை நான் அனுராதபுரத்தில் இருந்தபோது அன்பு ஜவஹர்சா மூலம் மல்லிகை வாசிப்பில் இருந்தவன் என்ற முறையில் தற்போது மல்லிகையின் 47வது ஆண்டுமலர் வெளிவருவது அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சங்கம் வளர்த்த மாமதுரையில் நான் தற்போது தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மதுரைக் கிளையின் துணைத்தலைவராக இயங்கி வருகிறேன். மூத்த கலை இலக்கிய பெருமன்றத் தோழர்களிடையே இலங்கையில் முற்போக்கு
மல்லிகை டிசம்பர் 2011 奉 28

இலக்கியம் என்றாலே மல்லிகையைத் தான் சிலாகிக்கின்ற போக்கையே நான் காண்கிறேன். மூன்று தசாப்தங்களுக்கு முன் மல்லிகை வாசகன் என்ற முறை யில் நான் இப்போதும் பெருமிதம் கொள் கிறேன். 85வது அகவையை எட்டி இருக்கும் இலங்கையின் இலக்கியப் போராளிக்கு தாய்த்தமிழகத்தில் இருந்த படி தலை வணங்குகிறேன்.
தமிழ்நாடு
இலங்கையில் இலக்கிய உள்ளங் களை ஆட்கொள்ளும் 'மல்லிகை சஞ் சிகை மின்னஞ்சலில் வெளியிடப்படுவது மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருகிறது. மனப்பூர்வமான வாழ்த்துகளும், பாராட்டு களும். ஜீவா ஐயாவின் இலக்கிய சேவை நம் நாட்டுக்கு இன்னும் நீண்ட நாட்கள் கிடைக்க பிரார்த்திக்கின்றேன். மல்லிகையை இணையத்தில் இணைக் கும் மேமன்கவி என்றும் பாராட்டுக்
குரியவர்.
(BIIGOrIT IDC3GorrisjrGör
என்.நஜ்முல் ஹரிசைன் கொழும்பு
மின்னஞ்சல் மல்லிகை பிரமாதம்! பிரமாண்டம்!! பாராட்டுக்கள். மல்லிகை நொடிப் பொழுதில் விரும்பிப் படிக்கும்
வாசகர்கள் வசமாகிவிடும்.
உடுவை தில்லை நடராஜா விகாழும்பு
மல்லிகையை இத்தனை ஆண்டு களாக - சுமார் அரை நூற்றாண்டுக் காலங் களாக - தொடர்ந்து நடத்தி வருவதையிட்டு எனது மனமார்ந்த மகிழ்ச்சியைத் தெரி வித்துக் கொள்ளுகின்றேன்.
மல்லிகை மூலம் கடந்த காலங்களாக நீங்கள் பல்வேறு வகைப்பட்ட படைப்பாளி களையும், எழுத்தாளர்களையும் உரு வாக்கி, இலக்கிய உலகிற்கு தந்துதவிய தின் மூலம், ஒரு புதிய எழுத்தாளர் பரம் பரையையே இந்த நாட்டுக்கு நல்கி யுள்ளீர்கள்.
இத்தனை படைப்பாளிகளையும், எழுத்தாளர்களையும் உருவாக்கித் தந்துள் ளதையிட்டு, மெய்யாகவே எனது மன மார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
இத்தனை எழுத்தாளர்களை இந்த மண்ணுக்கு உருவாக்கித் தந்துள்ள போதிலும், அவர்களை ஒரனியில் திரட்ட ஆவண செய்யவில்லை என்றே நான் கருதுகின்றேன். எனவே, வருங்காலத் த  ைல முறையினருக்காக வாவது அத்தனைப் படைப்பாளிகயுைம் ஓரணியில் திரட்டத் தெண்டிக்கவும்.
க.தவமோகன்
'மல்லிகை'யை இணையத்தில் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. மிக நல்ல முயற்சி! தொடருங்கள்.
256tróOFIrisib
உங்களுடைய உன்னதமான உழைப்பிற்கும்,உயரிய சிந்தனை களுக்கும் கிடைத்த இன்னுமொரு வெற்றிதான் மல்லிகையின் இணைய இணைப்பு.
இந்த முயற்சி இன்னும் இன்னும் ஒளிர வாழ்த்துக்கள்.
ஈழக்கவி
மல்லிகை டிசம்பர் 2011 & 29

Page 17
ിഖLL ിഖണിuിബ)
அந்த ஒற்றை மரம் மட்டும் தன்னந்தனியே
மெதுவாய் தலையாட்டியபடி நின்றது! அதனைச் சுற்றி அதன் சகோதரத்துவங்களின்
விம்பங்கள்
விகார சிற்பங்களாய் கையிழந்து, ஒன்றிரண்டு காலிழந்து பலதும் தலையிழந்து அந்த ஒற்றை மரத்தைச் சுற்றி பார்வைதொடும் துரமெல்லம் முடங்கள7யப் அந்த ஒற்றைமரம் மட்டும் ஒரம7யப் நடந்ததிற்கு சாட்சி
நான என
நிசப்தமாய் வீசும் காற்றுக்கு கதை சொல்லியபடி தனியே.
ஒற்றை மரம்
- எஸ்.மதி
மல்லிகை டிசம்பர் 2011 தீ 30

பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின்
“மன் மறவா மனிதர்கள்" நுால் வெளியீட்டு விழா..!
ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி.ரி.இளங்
கோவனின் "மண் மறவா மனிதர்கள்” கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு
விழா மார்கழி மாதம் 11-ம் திகதி (11-12-2011) ஞாயிறு பிற்பகல் 3.00 மணியளவில்
UTiflamö LDITIBobjaö (50, Place de Torcy, 75018 Paris - Métro: Marx Dormoy)
நடைபெறவுள்ளது.
அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல், மருத்துவம் ஆகிய பல்வேறு துறை களில் ஒப்பரிய பணிகளைச் செய்தவர்களின் சிறப்பை "மண் மறவா மனிதர்கள்” நூல் அழகுற எடுத்தியம்புகின்றதெனவும், வருங் காலச் சந்ததியினர் நம்மவரின் பணி களை நன்கு அறிந்துகொள்ள இந் நுால் நல்லதோர் ஆவணமாக அமைந்துள்ளதெனவும் பேராசிரி யர்கள் பாராட்டியுள்ளனர்.
சர்வதேச ரீதியில் புகழ் பெற்ற மார்க்சிச தத்துவ ஆசான் நா.சண்முகதாசன், தலித் இலக்கியப் பிதாமகர் எனத் தமிழக விமர்சகர்களாலும் போற்றப்படும் கே. டானியல், பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், இலங்கையிலும் சீனாவிலும் தமிழ்ப் பணியாற்றிய “பாரதி நேசன்" வீ. சின்னத்தம்பி, அறிவுப் பசிக்கு உதவிய ஆர்.ஆர்.பூபாலசிங்கம், ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை சி.இராமலிங்கம், பல்லாண்டுகள் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய, எல்லோர்க்கும் இனிய மனிதன் ஆர்.சிவகுருநாதன், அச்சக வித்தகர் செம்மல் ஆ.சுப்பிரமணியம், மருத்துவக் கலையில் இலக்கியத் தமிழ் கண்ட வித்தகன் விஸ்வபாரதி, தொண்டுக்கு ஒரு
மல்லிகை டிசம்பர் 2011 & 31

Page 18
திரு எனப் போற்றப்பட்ட சர்வோதயம் க.திருநாவுக் கரசு, மக்கள் மனம் நிறைந்த உயர் நிர்வாகி சி.சடாட்சரசண் முகதாஸ், புங்குடுதீவு பெற்ற தமிழறிஞர்
களான வித்துவான் சி.ஆறுமுகம், வித்து வான் பொன். அ.கனகசபை, பண்டிதர் வீவ.நல்லதம்பி, கலாநிதி. க.சிவராம லிங்கம், மற்றும் பெண்கள் உரிமை களுக்காகப் பாடுபட்ட வேதவல்லி கந்தையா, கவிஞர் சு.வில்வரத்தினம் ஆகியோரின் ஒப்பரிய பணிகளை நூலா சிரியர் அனுபவ ரீதியாக அழகுறக் கூறி யுள்ளதை இந்நூலில் காணலாம்.
பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் ஆதரவில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவில் கலை இலக்கியப் படைப்பாளிகள், ஊடக வியலாளர்கள் பலர் உரை நிகழ்த்துவர்.
கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்பு, சிறுவர் இலக்கிய நூல்கள் எனப் பதி னாறு நூல்களை வி.ரி.இளங்கோவன் ஏற்கனவே வெளியிட்டுள்ளமை குறிப்
பிடத்தக்கது.
அனைவரையும் வாழ்த்துகின்றோம்.
இவ்வாண்டு சாஹித்திய ரத்னா விருது கிடைக்கப் பெற்ற பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்களை மல்லிகை வாழ்த்தி
மகிழ்கின்றது.
குறிப்பாக முீலங்கா சாஹித்திய மண்டலப் பரிசைப்
பெற்றுக் கொண்ட அனைவரையும் மல்லிகை மனநிறைவுடன் வாழ்த்தி, மகிழ்கின்றது.
- மல்லிகை
மல்லிகை டிசம்பர் 2011 & 32
 
 

சாஹித்திய மண்டலப் பரிசு பெறும்
தமிழ் - சிங்கள நூல்கள் மொழி மாற்றம் செய்யப்படுதல் அவசியம்
அரசிடமிருந்து ஊக்குவிப்பும்
தேவை அஸ்வர் எம்.பி. சபையில் கோரிக்கை.
சாகித்திய மண்டலப் பரிசு பெறும் சிங்கள நூல்கள் தமிழ் மொழியிலும், தமிழ் நூல்கள் சிங்கள மொழியிலும் மொழி பெயர்க்கப்படுதல் அவசியமாகும். அவ்வாறு மொழி பெயர்ப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் ஊக்குவிப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆளும் கட்சி
உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர் வெள்ளிக்கிழமை சபையில் கோரிக்கை யொன்றை முன் வைத்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தமிழ் மற்றும் சிங்கள இலக்கியங்கள் தொடர்பி லான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்து பேசுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அஸ்வர் எம்.பி.மேலும் கூறுகையில், சிங்கள இலக்கியங்கள் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்கள் சிங்கள மொழிக்குமான மொழிபெயர்ப்பு முயற்சிகள் சில தனியார் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சுமனசிறி கொடகே 'கொடகே சகோதரர்கள் என்ற தனது நிறுவனம் மூலம் இதுவரை சிங்களத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து சிங்களத்திற்குமாக சுமார் 40ற்கும் மேல் நூல்களை வெளி யிட்டுள்ளனர். அதேவேளை தனியாக தமிழ் நூல்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் ஆனமடுவில் இயங்கும் சிட்னி டயஸ் மார்ஸ் என்பவரின் ‘தோதென்பா என்ற அமைப்பாலும் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இவர்களும் சுமார் 30ற்கு மேல் சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.
மல்லிகை டிசம்பர் 2011 & 33

Page 19
ஆனாலும், ஒப்பீட்டு அளவில் சிங்களத் திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட் டுள்ள அளவுக்கு தமிழ் நூல்கள் சிங்களத் தில் வெளிவருவது குறைவாக இருக்கிறது. உயிருடன் இருந்த காலத்தில் கே.ஜி.அமர தாஸ, கலாநிதி எம்.எம்.உவைஸ், எம்.எச். எம்.ஷம்ஸ், ஜப்ருல்லாகான் போன்றவர்கள் சிங்கள - தமிழ் மொழிபெயர்ப்பு முயற்சி களுக்கு பாரிய பங்கினை ஆற்றிச் சென்றி ருக்கிறார்கள். இன்று தம்பிஐயா தேவதாஸ், சரோஜினி அருணாசலம், திக்குவல்லை சுந்தரம் சௌமியன், யாக்கூத், ராசூக் கராமத், நிலார்
கமால், இரா. சடகோபன்,
காசிம், ரஸ்மின் என பல தமிழ் பேசும் அன்பர்கள் சிங்கள இலக்கியங்களை தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை சிங் களத்திற்கும் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் சிங்கள அன்பர்களான உபாலி லீலா ரட்ன, மடுல்கிரிய விஜயரட்ன, விஜித பிரபா, சரத் ஆனந்த போன்றவர்கள் தமிழ் மொழி கற்று தமிழ் இலக்கியங்களைச் சிங்களத் தில் மொழி பெயர்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னுமொரு சாதனையையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமிழ்நாட்டு எழுத் தாளர் கு.சின்னப்பா பாரதி அவருடைய நாவல்களை சிங்களத்தில் மொழிபெயர்த்த தன் மூலம், சிங்கள நூல் ஒன்றுக்கு இந்திய வரலாற்றிலே முதல் முதலாக விரு தினை திரு. உபாலி லீலாரட்ன என்ற நமது இலங்கையர் பெற்றிருக்கிறார். இது வரலாற்றுப் பெருமை மிக்க சாதனை யாகும்.
இந்தியாவில் சாகித்திய மண்டலப் பரிசு பெறும் நூல்கள் இந்தியாவின் பிற மொழி
களில் மொழிபெயர்க்கப்படுகின்றன. அதே போல் இலங்கையிலும் சாகித்திய மண்டலப் பரிசு பெறும் சிங்கள, தமிழ் நூல்களும் பரஸ் பர மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண் டும். இத்தகைய முயற்சிகள் எல்லாம் தனி யார் மட்டத்திலே நடைபெறுகின்றன. இத்த கைய மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கு அரச மட்டத்திலே ஆதரவும் ஊக்குவிப்பும் வழங் கப்பட வேண்டும். இதற்கென ஒரு செயற் திட்டம் அரச மட்டத்திலே உருவாக்கப்படல் வேண்டும்.
மூவினங்களிடையிலான புரிந்துணர் வையும், நல்லிணக்கத்தையும் எடுத்துக் காட்டும் வகையிலான மொழிபெயர்ப்பு படைப்புகள் பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும். சிங்களப் பாடப் புத்தகங்களில் அத்தகைய தமிழ் படைப்புகள் சிங்களத் தில் மொழிபெயர்க்கப்பட்டும், தமிழ்ப் பாடப் புத்தகங்களில் அத்தகைய சிங்கள படைப்பு கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டும் இடம்
பெறச் செய்ய வேண்டும்.
இலங்கையில் தமிழில் பல கலை இலக்கிய சிறு சஞ்சிகைகள் நீண்ட கால மாக பெரும் போராட்டத்துடனேயே வெளி வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக கடந்த 1966களுக்கு மேலாக டொமினிக் ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு வெளி வரும் மல்லிகை மற்றும் டாக்டர் தி.ஞான சேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளி வரும் ஞானம், அந்தனி ஜீவாவை ஆசிரிய ராகக் கொண்டு வெளிவரும் கொழுந்து, பரணிதரனை ஆசிரியராகக் கொண்டு வெளி வரும் ஜீவநதி இப்படியாகப் பல சஞ்சிகை கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத் தகைய சிறு சஞ்சிகைகளுக்கு அரச மட்டத் திலான அனுசரணை வழங்கப்படல் வேண்
மல்லிகை டிசம்பர் 2011 & 34

Š
டும். அரச நிறுவனங்களின் விளம்பரங்
களை அச்சஞ்சிகைகளுக்கு வழங்குதல் அத்தகைய அனுசரணையில் ஒன்றாக g460). Duj6)Tib.
Happy Poto
Excellent
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்தல்
என்று வரும்பொழுது அவர்கள் வெளியிடும் நூல்களை அதிக அளவில் அரசு கொள்
வனவு செய்யலாம். ஆனால், இது பல மட்
டத்தில் நடைபெறுகிறது எனச் சிலர் சுட்டிக்
காட்டக் கூடும். ஆனால், அப்பணி சரியாக Photographers நடைபெறவில்லை என்றே சொல்ல வேண் es Gib. a stgségbe sorsrg eloldás | Modern Computerized எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு Photography செய்தல் என்ற திட்டத்தின் கீழ் கடந்த காலத்தில் ஒரு சிங்கள எழுத்தாளரிடம் 160 For பிரதிகளையும், தமிழ் எழுத்தாளர் ஒருவரிடம் Wedding Portraits 26 பிரதிகளையும் கொள்வனவு செய்து &
வந்தது. ஆனால், இம்முறை அத்தொகை யில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறி
Child Sittings
கிறோம். சிங்கள நூல்கள் 170 ஆகவும், தமிழ் நூல்கள் 15 ஆகவும் மாற்றப்பட் டுள்ளன.
Photo Copies of
அது தவிர நாடுகளுடனான கலாசார
பரிவர்த்தனை நிகழ்வுகளிலும், பயணக் குழு Identity Cards (NIC), விலும் தமிழ் எழுத்தாளர்களையும் இடம் Passport பெறச் செய்ய வேண்டும். அரச ஊடகங் களில் இரு மொழி படைப்பாளிகள் பங்கு Driving Licences
பெறும் வகையிலான நிகழ்ச்சிகள் தயாரிக்
Within 15 Minutes
கப்பட வேண்டும். கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் கலைச் சங்கத்தின் கீழ் சாகித்திய பரிசு தேர்வுக்கான இயங்கும் கலை குழு, இலக்கியக் குழு போன்ற குழுக்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித் துவப்படுத்தும் வகையில் எல்லாக் குழுக்
300, Modera Street, Colombo - 15. Te: 2526345
களிலும் உறுப்பினர்கள்ாகவும், நடுவர்களா கவும் குறிப்பாகப் படைப்பாளிகள் நியமிக்கப்
TsSb. UL. G86u6ooTO6 மல்லிகை டிசம்பர் 2011 & 35

Page 20
沃 \ატწ. Vy நவீன கலை இலக்கிய வடிவங்களில்
றுகதை GUI மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டு வந்த சிறு
கதை இலக்கியம் நூற்றாண்டு கடந்து
Vy Vy விட்ட நிலையில் அது பற்றி இன்று மீள்
быстѓä** பார்வையைச் செலுத்துதல் சாலப் பொருந்
தும். விரும்பிப் படிக்கப்பட்டு வந்த சிறுகதை
இலக்கியம் என்று நான் குறிப்பிட்டதிலேயே
Vy NgY ஒரு கேள்வி தொக்கி நிற்பதை அவதானித்
SJogoVØ திருப்பீர்கள். அப்படியாயின் சிறுகதைகள்
இப்போது விரும்பிப் படிக்கப்படுவ
தில்லையா? என்ற கேள்விதான் அது. நாம்
Vy Vy ஒவ்வொருவரும் இந்தக் கேள்வியை நம்
தேக்கம் மையே கேட்டுப் பார்த்து, அதற்கான விடை
யைத் தேடிப் பார்ப்போமானால் சிறிது
ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. குறிப்பாக
ச.முருகானந்தன் ஈழத்து நிலவரம் அவ்வளவு திருப்தியாக
இல்லை. இன்று சிறுகதைகளைப் படிப்ப
வர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது. முன்பு அதிகம் வாசித்த
பெண்கள் இன்று தொலைக்காட்சித் நெடுந் தொடர்களிடம் சரணாகதியாகி விட்டார்கள்.
இளைய தலைமுறையினரை கணணிகளும், அலைபேசிகளும் ஆக்கிரமித்து விட்டன.
இயந்திர மயப்பட்ட உலகில் யாருக்கும் ஒய்வு நேரம் என்பது குறுகிப் போய்விட்டது.
உலகமயமாதல் ஏற்படுத்தியுள்ள தேவைகளின் அதிகரிப்பு மனிதனை பணம் பணம்
என்று எந்நேரமும் அலைய வைத்துள்ளது. இதில் வாசிப்புக்கு நேரம் ஒதுக்குவதே அருகிப்
போய்விட்டது. தினசரிகளைக் கூட முழுமையாக வாசிக்காமல் நுனிப்புல் மேய்கின்ற நிலையையே தரிசிக்கிறோம்.
கவிதைக்கும் நாவலுக்கும் இளையதாகவே சிறுகதை இருப்பினும், தமிழில் அதை ஆரம்பித்து வைத்தவர் யார் என்ற சர்ச்சை இன்றும் தொடர்கிறது. வ.வே.சு.ஐயர், மாதவையர், சுப்பிரமணிய பாரதியார் முதலானோர் முன்னோடிகளாக ஏற்றுக்கொள்ளப் பட்ட போதிலும் ஐயரின் குளத்தங்கரை அரசமரமே முதற் சிறுகதையாக கொள்ளப்பட்டது.
ஆனால் நவீன கவிதையின் முன்னோடியான பாரதியாரே முதற் சிறுகதையை எழுதியதாக அண்மைக் காலமாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறே சிறு கதை இலக்கியம் மேற்கிலிருந்தே வந்தது என்பதை முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளாத நிலைப்பாடும் மேலோங்கி வருகிறது. மேற்குலகம் முக்கிய பங்கை ஆற்றியிருப்பினும் எமது இதிகாசங்கள், பண்டைய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என்பனவும்
மல்லிகை டிசம்பர் 2011 & 36

அவற்றில் கூறப்பட்ட உபகதைகளும் சிறு கதை என்ற வசன இலக்கியம் உருவா வதில் ஒரளவு பங்காற்றின என்று கருது வோரும் உளர்.
கதை சொல்லி தன் மனதிலுள்ள சில விடயங்களைக் கதையாக்கி குறுகிய நேரத்தில் வாசித்து முடிக்கும் படியானதாக எழுத்தில் தந்தான். ஆரம்பத்தில் அனுபவப் பகிர்வு என்பதைத் தவிர வேறு விடயங்கள் பற்றி சிந்திக்கப்படவில்லை. எனினும் இயல்பாகவே சில படைப்புகளில் சமூக நோக்கு வந்து வீழ்ந்தன. கட்டுறுக்கமாக சொற் சிக்கனத்துடன் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை அல்லது அதோடு சார்ந்த முன் பின் விடயங்களை சுவையுடன் ரசிக்கும்படி கூறப்படுவது சிறுகதை என்று கருதப் பட்டது. ஆரம்பத்தில் வடிவத்தின் அடிப் படையிலேயே சிறுகதைகளை நோக்கினர். எனினும் கிழக்கிந்திய மரபும், மேலை நவீனப் போக்கும் சிறுகதைகளின் திசை களையும், நோக்கையும் பன்முகப்படுத் தின. கால ஓட்டத்தில் சிறுகதைகளை சமூக அரசியல் விமர்சனமாக எழுதும் நிலை ஏற்பட்டது. மனித மன உணர்வு களுக்கும், அவை பற்றிய விமர்சனங்களுக் கும் கூட இடமளிக்கப்பட்டது. சில படைப் பாளிகள் கதை உத்தி முன்னிலைக் கூற் றின் முறையில் எழுதினர். இன்னும் சிலர் உட்பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத் தனர். எனினும் தமிழ் சிறுகதையை புதுமைப்பித்தன் நவீனப்படுத்தினார் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து வந்த எழுத் தாளர்கள் மொழியின் மூலம் வாழ்வின் புரிதலையும், தேடலையும் கதைகளாக்கி னார்கள். மெளனி போன்றோர் உள்மனச் சிக்கல்களைக் கதைகளாக்கினர்.
காலப்போக்கில் சமூகத்தையும், தனி மனிதர்களையும் அலைக்கழித்துக் கொண் டிருந்த அழுத்தங்கள், ஆதங்கங்கள், கனவு கள் என்பவற்றின் குரலாய் சிறுகதைகள் வெளியாகின. மனித மனத்தின் ஏக்கங் களுக்கு வடிகாலாய், உள்மனதின் ஆழங் களில் புதைந்திருந்த விடயங்கள் கதை களாகி, மெல்லதிர்வுகளை ஏற்படுத்தின. இதனால் எழுத்தாளர்களை வாசகர்கள் ரட்சகர்களாக நோக்கும் நிலை ஏற்பட்டது.
ஐம்பது வருடங்கள் அன்னநடை போட்டபடி முன்னோக்கி நகர்ந்த சிறுகதை, மார்க்சீய சிந்தனைகளின் பரம்பலுக்குப் பின்னர் புத்தெழுச்சி கண்டது. பெரியாரின் சிந்தனைகளும் தமிழ்ச் சிறுகதைகளின் போக்கில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற் படுத்தியதையும் மனம் கொள்ள வேண்டும். மார்க்சிய சிந்தனைகளின் சமூக அக்கறை யும், மானுட விடுதலைக்கான அம்சங் களும், ஒன்றிணைந்த மக்கள் போராட்ட மும் கதைகளின் கருத்தியல் நிலையை மாற்றி மனித மனங்களை சிந்திக்க வைத் தன. மக்களின் போராட்ட சிந்தனைகளுக் கும், விடுதலைப் பாதைக்குமான வழி வகைகளையும், எழுச்சியையும் சிறுகதை கள் ஏற்படுத்தின. இக்காலகட்டத்திலேயே விமர்சனங்களும், ஆய்வுகளும் செய்யப்
பட்டன. பல்கலைக்கழக மட்டத்தில் தமிழ்
போதனா மொழியானதுடன், நவீன தமிழ்ப்
படைப்புகள் பற்றிய ஆய்வு விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஏனோ தானோ என் றில்லாமல் படைப்பாளிகள் தமது படைப்பு கள் பற்றிய சிந்தனைத் தெளிவுடன் எழுத வும் ஆரம்பித்தனர். இதையடுத்து வந்த காலங்கள் தமிழ்ச் சிறுகதையின் பொற்
மல்லிகை டிசம்பர் 2011 & 37

Page 21
காலம் எனலாம். பண்டிதர்களிடம் சிக்கி யிருந்த எழுத்து முயற்சிகள் சாமானியர் களிடம் பரவலாகின. அதிகம் படிக்காதவர் களால் கூட அற்புதமான படைப்புக்களை சிருஷ்டிக்க முடிந்தது. கல்விக்கப்பால் பரந்துபட்ட தேடலும்,
urtlet so subás
வாசிப்பும் பெருகின.
மிகவும் ஏற்றம் பெற்று உச்சம் பெற்ற சிறுகதை இலக்கியம் நாட்டில் இடம்பெற்ற இன ஒடுக்குமுறை யுத்த காலத்தில் புதிய பரிமாணங்களை எட்டியது எனலாம். அனு பவ வெளிப்பாடாக வடிக்கப்பட்ட பல சிறு கதைகள் போரின் அவலங்களைக் கூறிய துடன், அதன் வேர் பற்றியும், தீர்வு பற்றியும் கூட அலசியது. எமது நாட்டின் யுத்தத்துடன் ஏற்பட்ட புலப்பெயர்வுடன் புதிய களங்கள் தமிழ்ச் சிறுகதைக்கு பரிச்சயமாகின. ஈழத் துப் படைப்புகள் பரம்பலானதுடன், தமிழ கத்திலும் ஈழத்து எழுத்துக்கள் அங்கீகாரம் பெற்றன.
அறுபதுகளில் ஏற்பட்ட எழுச்சியுடன் பிரதேச மண்வாசனை மற்றும் பேச்சு வழக்கு என்பன சிறுகதைகளில் செறிவாக இடம்பெற்றதுடன், மக்கள் இலக்கியமாக சிறுகதைகள் மாற்றம் கண்டன. பலதரப் பட்ட மக்களினதும் படைக்கப்பட்டும், பரந்து பட்ட மக்களினால் வாசிக்கப்பட்டும், மக் களின் பிரச்சினைகளை மையப்படுத்தியும் புதிய திசையில் பயணித்த இந்த நெடும் பயணம் பல்வேறு காரணங்களால் அண்மைக் காலமாக தேக்கமடைந்துள் ளதை அவதானிக்க முடிகிறது. அதே வேளை அண்மைக் காலமாக தரமான சிறுகதைகள், குறிப்பாக சிற்றேடுகளில் தரிசனமாவதையும் மறுப்பதற்கில்லை.
நூற்றாண்டின் பின்காலாண்டுகளில் பெண்ணியம், தலித்தியம் முதலானவை உரத்துப் பேசப்பட்டன. குறிப்பிடத்தக்க படைப்புகள் வெளியாகின. பெண் எழுத் தாளர்கள் பலரும் களமிறங்கினர். பின் நவீனத்துவக் கதைகள் சிலவும் படைக்கப் பட்டு புதிய பரிமாணங்களை எட்டின. பாலியல் அலசப்பட்டன. முடிச்சிடப்படாத நுனிகளாகத் தொங்கும் மையமின்மை யையும், பன்முகப் பார்வையும், மீள்வாசிப் பையும் கொண்டதாக பின்நவீனத்துவக் கதைகள் நவீனத்திலிருந்து மாறுபட்டன. இவ்வாறான கதைகள் பலவற்றில் சமூகப் பிரச்சினைகள் ஓங்கி ஒலித்தல் பின்தள்ளப் பட்டன. சூழலியம் பற்றிய அக்களை, கோள மயமாதலின் பின்னர் படைப்புகளில் இடம்பிடித்தன. விஞ்ஞான உயிரியல் வளர்ச்சிகளும் அவற்றின் பொறிகளும் கூட கதைகளில் இடம் பிடித்தன. முன்னைய படைப்பாக்கங்கள் கேள்வி குறியாக்கும் சிறுகதைகள் பின்னைய ஆண்டுகளில் வெளியாகின. இதற்குக் காரணமாக, எழுத் தாளன் தான் வாழும் காலத்தைப் பிரதி பலிக்கின்றமையைக் குறிப்பிடலாம். ஒவ் வொரு வகை சிறுகதைகளும் அந்தந்த காலகட்டங்களில் சிறப்புற்றிருந்தமை யினை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ
(փլգաո Ցl.
பழமையும் - நவீனத்துவமும், மார்க் சியமும் - பின்நவீனத்துவமும் ஒன்றன் மீது மற்றொன்று தாக்கம் விளைவிக்கும் சூழலில், மாற்றங்கள் - மாற்றுப் படைப்பு கள் என பலவும் அறுவடையாகின. சமூகப்
பொருளாதார அநீதிகளைக் களைந்தெறிய
மல்லிகை டிசம்பர் 2011 தீ 38

முனைந்த மார்க்சியம் ஏன் பின்தள்ளப் பட்டது என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. முதலாளியத்தின் சதியில் சிக் குண்டு சீரழிந்து போன மார்க்சீயம், மறுபடி தழைத்து ஓங்கக் கூடாது என்பதில் பின் னைய முதலாளித்துவம் உசாராக இருக் கிறது. இதற்கான திசையில் இலக்கிய உருவாக்கங்களும் கூட திசை திருப்பப் பட்டுள்ளன. இதன் தாக்கம் புதிய மிலேனி யத்தின் சிறுகதைகளில் புலனாகிறது.
நம்பிக்கை வறட்சி சூழலில் நம்பிக் கையை வளர்க்கும் திசையில் அறுவடை யான எழுத்துக்கள் இன்று திசை மாறி தடம் புரண்டு திரிசங்கு சொர்க்கத்தில் உலா வருகின்றது. இதுவே இன்றைய சிறு கதையின் தேக்க நிலைக்கு முக்கியமான காரணமாகும்.
இதேவேளை, சிறுகதை இலக்கியம் தேய்வடையவில்லை என்று வாதிடு வோரும் உளர். சிறப்பானதும், உயர்வான தும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பது மான அம்சங்கள் பலவும் இன்றைய கதை களில் இருப்பதாக இவர்கள் வாதிடு கிறார்கள். எனினும் இன்னொரு சாரார் இன்றைய சிறுகதைகளில் ரசனை நுகர் வைத் தவிர வேறு எதுவுமில்லை என்றும் கூறுவர். கதைக் கரு, கதைகளின் வீச்சு, கதை மாந்தர், கதைக் களம், ஆழம், உயரிய நோக்கு என்பவற்றைக் கோட்டை விட்டு விட்டு ஏதேதோ இவர்கள் எழுது கிறார்கள் என இவர்களை விமர்சிப்போரும்
6irst missil.
இன்றைய உலகில் அறிவியல் உலகம். தகவல் தொழில்நுட்பம் உச்சங் களை எட்டியுள்ள காலமிது. எங்கும் எதிலும் விஞ்ஞானத்தின் கூறுகள் ஊடுருவி யுள்ளன. இன்றைய பொருளாதாரத்திலும் அறிவியல் ஆதிக்கம் செலுத்துகின்றது. இவ்வறிவியல் பொருளாதாரத்தின் தாக்கங் கள் பல்துறையிலும் இருப்பது போலவே இன்றைய சிறுகதைகளையும் பாதித் துள்ளன. இன்னொரு புறம் நேரமின்மை என்ற காரணத்தால் கதைகள் சிறுத்தும், அருகியும் வருகின்றன. இன்றைய தமிழக வணிக சஞ்சிகைகள் சிறுகதைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டோ அல்லது குறைத்துக் கொண்டோ உள்ளன. எழுத்தாளர்களை இரட்சகர் களாக கருதிய காலம் மலையேறி வருகிறது. எழுத்தாளன், வாசகன் உறவும், வாசகர்களின் கலந்துரையாடல் விமர்சனங் களும் கூட குறைவடைந்துள்ளன. எழுது பவர்களின் எண்ணிக்கை கூடினாலும், வாசகர்களின் எண்ணிக்கை குறை வடைந்து வருகிறது. எழுதுபவர்களே பெரும்பாலும் வாசகர்களாக இருக்கின்ற நிலையுள்ளது. நவீன தொழில்நுட்பம் புத்தக வெளியீட்டைத் துரிதப்படுத்தியும், இலகுபடுத்தியும் இருக்கின்ற போதிலும், புத்தகங்கள் தேடுவாரற்றுப் போகும் நிலை யுள்ளது. இதுவே இன்றைய சிறுகதையின் தேக்கத்திற்கு காரணமாகிறது.
எழுத்துக்களால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்ற கேள்வியும் உரத்து ஒலிக்கிறது. எதிர்வரும் காலங் களில் சிறுகதையின் நிலைமை ஆரோக் கியமாக இருக்கும் என்பதற்கு உத்தரவாத மில்லை.
மல்லிகை டிசம்பர் 2011 & 39

Page 22
திருகோனமுலை - 8á 96oš3)eevčú tuteyasrú9
- மேமன்கவி
திருகோணமலைக்கு முதற் தடவையாக போகும் சந்தர்ப்பம் அண்மையில் எனக்குக் கிட்டியது.
திருகோணமலைக்குப் போவது என தீர்மானித்த பொழுது அங்கு கடுமையாக பெய்து கொண்டிருந்த மழையால் அங்கு போவது சற்று தயக்கத்தை ஏற்படுத்திய பொழுதும், திருகோணமலைக்கு எந்த விதத்திலும் போவது என நானும் நண்பரும் தீர்மானித்துக் கொண்டோம்.
நண்பரும் ஈழத்தின் முக்கிய ஒரு படைப்பாளியுமான நந்தினி சேவியர் அவர்களின் நூல் வெளியீட்டு விழா எனக்கு, திருகோணமலைக்கு முதல் முதலாக போகும் அந்த சந்தர்ப்பத்தை வழங்கியது. நந்தினி சேவியர் அவர்கள் ஈழத்து சிறுகதை படைப்பாளிகளில் கவனத்திற்குரியவர். அலட்டல் இல்லாத எழுத்தும், அவருக்கான கருத்தியலில் அவர் கொண்டிருந்த தீவிரமும், படைப்புகளுக்கு அப்பால், கருத்துக்களை சொல்லுகின்ற காரமும் காத்திரமும் அவரை மற்ற படைப்பாளிகளிலிருந்து தனியாக தெரிய வைத்தது. 2011ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில், முதலமைச்சர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. நேசம் பாராட்டுவதில் ஆத்ம சுத்தமானவர். ஏற்கனவே தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியிடாக 1993 ஆம் ஆண்டு அவரது சிறுதைத் தொகுப்பான அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள நூல் வெளிவந்திருந்த நிலையில், மீதமாக இருந்த 8 சிறுகதைகளை ஒரு நூலாக வெளியிடுவது என்ற அவரது தீர்மானத்திற்கு ஏற்ப கொடகே நிறுவனத்தின் தமிழ் நூல்கள் வெளியிடும் திட்டத்தின் கீழ் வெளிவந்த அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான 'நெல்லிமரப் பள்ளிக்கூடம் நூலின் வெளியிட்டு விழா, 26.11.2011 அன்று நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
அந்த விழாவே முதல் முதலாக திருகோணமலைக்கு போகும் சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கியது. அதற்காக நந்தினி அவர்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டு இருக்கிறேன்.
25.11.2011 அன்று வெள்ளிக்கிழமை இரவு ரயிலில் நண்பர் வதிரி ரவீந்திரனுடன் திருகோணமலைக்குப் புறப்பட்டேன். இடைக்கிடை பெய்துகொண்டிருந்த மழை ரயிலை நனைத்துக் கொண்டிருந்தது. அதே ரயிலில் நண்பர் லெனின் மதிவானம் மற்றும்
மல்லிகை டிசம்பர் 2011 & 40

கலாநிதி ந.ரவீந்திரன் அவர்களும் அதே விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு எங்களுடன் பயணம் செய்தார்கள். சனிக் கிழமை அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலை போய் சேர்ந்தோம்.
மழை முழுமையாக நின்று போன திருகோணமலை எங்களை வரவேற்றது. திருகோணமலை ரயில் நிலையத்தின் அருகே அமைந்துள்ள நந்தினி சேவியர் அவர்களின் உறவினர் வீட்டில் நாங்கள் எல்லோரும் தங்குவதற்காக ஏற்பாடு செய் திருந்தார். அங்கு சென்றடைந்த பொழுது இரவே மன்னாரிலிருந்து வந்திருந்த, அண்மையில் சாகித்திய மண்டல பரிசு பெற்றுக்கொண்ட ‘வாசாப்பு நாவலாசிரியர் எஸ்.ஏஉதயனும், மற்றும் யாழ்ப்பாணத்தி லிருந்து வந்திருந்த நல்ல வாசகரும், விமர்சனத்துறை ஆர்வலருமான சின்ன ராசா விமலன் ஆகியோருடன் இணைந்து கொண்டோம். இவ்விருவரதும் வருகை யானது இலக்கியத்தின் மீதான அவர் களின் நேசிப்பும், நந்தினி அவர்கள் மீதான மதிப்பையும் எடுத்துக் காட்டியது.
அன்று காலை 10.00 மணியளவில் திருகோணமலை புனித பிரான்சிஸ் மகா வித்தியாலய மண்டபத்தில் திருகோண மலையிருந்து வெளிவரும் கவிதைக்கான சிறு சஞ்சிகையான நீங்களும் எழுதலாமீ வாசகர் வட்டத்தினால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நந்தினி சேவியர் அவர்களின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விழாவில் அன்றைய நாளின் முதற் பணியாக கலந்து கொண் டோம். நீங்களும் எழுதலாம் வாசகர் வட்ட உறுப்பினர் செல்வி நநவசஞ்சிதாவின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங் கியது. வரவேற்புரையை அதே வாசகர்
வட்ட உறுப்பினர் செல்வன் பெ.பத்மபிரசன் நிகழ்த்தினார். தலைமையுரை நிகழ்த்திய நீங்களும் எழுதலாம் ஆசிரியர் எஸ். ஆர்.தனபாலசிங்கம் அவர்கள் நந்தினி சேவியர் அவர்களின் படைப்பிலக்கிய பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்டு உரையாற் றியதோடு, நந்தினி அவர்களுடன் தனக் கான தொடர்பை மிகச் சுருக்கமாக எடுத் துரைத்து, அடக்கமான ஒரு தலைமை யுரையை நிகழ்த்தினார். அடுத்து நூல் அறிமுகவுரையை எஸ்.சத்யதேவன் என்ற இளம் படைப்பாளி நிகழ்த்தினார். நண்பர் சத்யதேவன் கொழும்பில் நடக்கும் பாடிப் பறை நிகழ்வுடன் தன்னை இணைத்து கொண்டவர். படைப்பாக்கப் பணியில் ஈடு பட்டு வருபவர். அவரது நூல் அறிமுக வுரை அடக்கமாகவும் ஆழமாகவும் அமைந்திருந்தது. அவ்வுரை நந்தினி அவர் களின் நூலை சிறப்பான முறையில் அறி முகப்படுத்தியதோடு, சத்யதேவன் அவர் களை நமக்கு சிறப்பான முறையில் அடை யாளப்படுத்தியது. அடுத்து நூல் வெளி யீட்டுரை பணி எனதாக இருந்தது. எனது அவ்வுரையில் நம் மத்தியில் நடைபெறும் விழாக்களில் சிலருக்கு கொடுக்கப்பட்ட பணிக்கு மாறாக பேச முனையும் பழக்கம் என்னை சற்றுத் தொற்றி கொண்டதன் காரணமாக, எனக்கு இதுவே திருகோண மலையில் முதல் மேடை என குறிப்பிட்ட தோடு, எனது உரையின் முதல் பகுதியில் முதல் முதலாக திருகோணமலைக்கு வந் ததை பற்றி சிறிது பிரஸ்தாபித்து, அம்மண் சார்ந்த பல முன்னோடி படைப்பாளிகளான தருரு சிவராமு. ஈழவாணன், சித்தி அமர சிங்கம் ஆகியோரை நினைவு கூர்ந்த தோடு, எனக்கு முன்னோடி படைப்பாளி களான ந.பாலேஸ்வரி இராஜதர்மராஜா, நல்லை அமிழ்தன், ஷெல்லிதாசன், அருள்
மல்லிகை டிசம்பர் 2011 奉 41

Page 23
சுப்பிரமணியம் ஆகிய படைப்பாளிகளின் படைப்புகளுடனான எனது பரிச்சயம் பற்றி யும் எடுத்து கூறினேன். எனது உரையின் அடுத்த பகுதியில் கொடகே நிறுவனத்தின் தமிழ் நூல் வெளியிட்டுப் பணியை பற்றி விரிவாக குறிப்பிட்டதுடன், அந்த வரிசை யிலே நந்தினி சேவியர் அவர்களின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' என்ற இந்த நூல் வெளிவந்துள்ளதாக குறிப்பிட்டேன். அத்தோடு, இன்றைய சூழலில் நம் நாட்டு மூவினங்களிடையே ஒருமைபாட்டையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகை யில் நடைபெற்று வரும் மொழிபெயர்ப்பு முயற்சிகளை பற்றிக் குறிப்பிட்டதோடு, மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கை களைப் பற்றியும் குறிப்பிட்டு, மூவீன மக்கள் மத்தியில், நல்லிணக்கத்தையும், ஒருமைபாட்டையும் ஏற்படுத்த கலை இலக் கியங்களாலும், கலை இலக்கியவாதி களாலும்தான் முடியும் என்பதை அழுத்தி குறிப்பிட்டதுடன் எனது உரையை முடித்து கொண்டேன். நான் அதிகமாக நந்தினி அவர்களின் படைப்புகளை பற்றி குறிப்பிட
பலர் அங்கு சமூகமளித்திருந்தமையால், அவர்களின் பணியில் நான் தலையிட் வில்லை. அடுத்து திருகோணமலையில் தொழில் புரியும் காத்தநகர் முகைதீன்சாலி அவர்கள் கவி வாழ்த்தினை நிகழ்த்தினார், காத்தநகர் முகைதீன்சாலி “வாழ்வியல் மீதான வன்முறைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பினை தந்திருப்பவர். கொடகே வெளியீடாக வந்துள்ள இத்தொகுப்பின் மூலம் கொடகே நிறுவனத்தினரால் வரு டாந்தம் நடத்தப்படும் கொடகே சாகித்திய விழாவில் புதிய படைப்பாளிக்கான விரு தினைப் பெற்று கொண்டவர். வளர்ந்து வரும் ஆக்க இலக்கியப் படைப்பாளி.
சந்தத்துடன் கூடிய கவிதையால் நந்தினி அவர்களுக்கான கவி வாழ்த்தினை நிகழ்த்தினார்.
க.யோகானந்தம் அவர்கள் முதலாவ தாகக் கருத்துரை வழங்கினார். 1987ஆம் ஆண்டு கால பேராதனை பல்கலைக்கழக பி.ஏ.பட்டதாரியான அவர், 2006ஆம் ஆண்டு அவரது "உண்மை என்றும் உயிர் பெறும்’ எனும் தனது கவிதைத் தொகுப் புக்கு 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான தேசிய சாகித் திய மண்டலப் பரிசை பெற்றுக் கொண்ட வர். 2007ஆம் ஆண்டு மழலைக்கோர் பாடல்’ எனும் சிறுவர் இலக்கிய நூல் ஒன்றிறை வெளியிட்டு இருப்பதுடன், 2009 ஆம் ஆண்டு 'என் மனவானில்' எனுமோர் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டு இருக்கும் அவர், தற்பொழுது அதிபராக கடமையாற்றி வருகிறார், அவர் தனது கருத்துரையில் ஆய்வுப் பார்வையுடன் நந்தினி அவர்களின் படைப்புகளைப் பற்றி கருத்துக்களை வெளியிட்டார். அடுத்து, கருத்துரை வழங்க வந்த ஷெல்லிதாசன் அவர்கள் நீண்ட காலமாக கலை இலக்கி யத் துறையில் ஈடுபட்டு வருபவர். 70களில் ஈழத்து புதுக்கவிதைத் துறையில் கணிச மான பங்கினை வழங்கி இருப்பவர். சிறந்த மெல்லிசைப் பாடல்களைத் தந்த வர். இடதுசாரி சிந்தனை மிக்கவர். இவரது “செம்மாதுளம்பூ கவிதைத் தொகுப்புக்கு 2010ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் சிறந்த கவிதை நூலுக்கான விருது வழங்கப்பட்டது. அவர் தனது கருத்துரையில் நந்தினி சேவியர் அவர்களுடனான அவருக்குள்ள தொடர் பினை எடுத்துரைத்தார். அவருக்கு அடுத் தாக உரையாற்ற வந்த லெனின் மதி வானம் இன்றைய சூழலில் மார்க்ஸிய
மல்லிகை டிசம்பர் 2011 & 42

பார்வையுடன் கூடிய விமர்சன ஆய்வு களை முன் வைத்து வருபவர். பேராசிரியர் க.கைலாசபதி அவர்களை விரிவான தளத் தில் இன்றைய தலைமுறைக்கு அறிமுகப் படுத்தி வருபவர். சமீபத்தில் "பேராசிரியர் க.கைலாசபதி - சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்' என்ற ஒர் அருமையான நூலினை தந்திருப்பவர். அன்று வெளி யிட்ட 'நெல்லிமரப் பள்ளிக்கூடம் சிறு கதைத் தொகுப்பில், நந்தினி அவர்களின் படைப்புகளை பற்றி ஆழமான ஒர் ஆய் வினை கொடுத்து இருப்பவர். அன்றைய அந்த நூலின் வெளியீட்டு விழாவிலும் அத்தகைய ஆழமான ஆய்வுப் பார்வை யுடன் கூடிய ஒர் உரையை முன்வைத் தார். அவருக்கு அடுத்து கருத்துரையை வழங்கிய கலாநிதி ந.ரவீந்திரன் அவர்கள் ஈழத்து தமிழ் கலை இலக்கியச் சிந்தனைச் சூழலில் தெளிந்த மார்க்ஸிய கருத்தியல் சிந்தனையுடன் ஆய்வுகளை யும், விமர்சனங்களையும் முன்வைத்து வருபவர்களில் முக்கியமானவர். அத்த கைய புலமையுடன் பல நூல்களை நமக்கு தந்திருப்பவர். அன்றைய விழாவில் நிகழ்த்திய கருத்துரையில், நந்தினி சேவியர் அவர்களின் படைப்புகளைப் பற்றிய கருத்துகளில் வெளிப்பட்ட தெட்ட தெளிவு பலரைக் கவர்ந்தது. இறுதியாக ஏற்புரை வழங்க வந்த நூலாசிரியர் நந்தினி சேவியர் அவர்கள் உணர்ச்சிபூர்வ மான ஒர் ஏற்புரையை வழங்கினார், கலை இலக்கியத்துறையில் பணி செய்யும் திரு கோணமலை பிரதேசத்தை சார்ந்த முக் கியமானவர்கள் பலர் அவ்விழாவுக்கு வருகை தந்திருந்தார்கள். குறிப்பாக திருகோணமலையின் சிரேஷ்ட ஊடகவி யலாளர் சி.குருநாதன், மூத்த எழுத்தாளர் களான திருமலை நவம், சிறுவர் இலக்கி
யத்துறையில் கணிசமான முறையில் பல நூல்களால் பங்களிப்புச் செய்துவரும் கேணிப்பித்தன் ச.அருளானந்தம், இளை ஞர் இலக்கியமாக கவிதைகளைப் புதிய பாதை’ என்ற நூலாகத் தந்திருக்கும் கவிஞர் செ.ஞானராசா, எழுத்தாளர்களான சூசை எட்வேட், மதன், இளம் கவிஞர் களான சி.பவித்திரன், விஸ்வமித்ரன், 'மழை என்ற கவிதைத் தொகுப்பை தந்த பெரிய ஐங்கரன், குறுந்திரைப்பட ஆர்வலர் களான ஆனந்த ரமணன், டீ.அனோஜன், நாடகத்துறைச் சார்ந்த கனக மகேந்திரா, ஊடகவியலாளர் அ.அச்சுதன் போன்ற முக்கியமானவர்கள் வருகை தந்திருந்தார் கள். அதன் மூலம் அவர்கள் எல்லோரை யும் காணக் கிடைத்ததோடு, அவ்விழாவும் சிறப்பு பெற்றது. அதன் காரணமாகத்தான் நந்தினி சேவியர் அவர்கள் தனது ஏற்புரை யில், அவ்விழாவில் வருகை தந்த அனை வருமே தனது இவ்விழாவின் சிறப்பு, விசேட, கெளரவ அதிதிகளாகத் தான் கருதியதாகக் குறிப்பிட்டார். நமது சூழ லில் நடைபெறும் நூல்களின் வெளியீட்டு விழாக்களில் பொன்னாடை, பூமாலை, முதல் பிரதி, கடைசிப் பிரதி என்ற மாதிரி யாக இடம்பெறும் எந்த விதமான சம்பிர தாய பூர்வமான நிகழ்வுகள் ஏதுமின்றி நடந்த விழா என்பதை நந்தினி அவர் களின் உரையும், அவ்விழாவும் எடுத்துக் காட்டியது. நீங்களும் எழுதலாம வாசகர் வட்ட உறுப்பினர் செல்வி ஞா.ஆன் கியூரி யின் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.
2
நந்தினி சேவியர் அவர்களின் நூல் வெளியீட்டு விழா நிறைவடைந்ததும் அங்கு வந்திருந்த இலக்கிய நண்பர்
மல்லிகை டிசம்பர் 2011 & 43

Page 24
களுடன் சிறிது நேரம் கலந்துரையாடிய பின் நண்பர் காத்தநகர் முகைதீன்சாலி யுடன் திருகோணமலை பஜாரை பார்க் கலாம் எனப் புறப்பட்டோம். எங்களுடன் வதிரி ரவீந்திரனும் இணைந்து கொண்டார். திருகோணமலைக்கு முதல் தடவையாகப் போவதற்கு முன்னால் அந்த நகரத்தை பற்றி மனதில் ஒரு படிமத்தை வளர்த்து வைத்திருத்தேன். அதன்படி அகண்ட பாதைகளுடன் கடலோரத்துடன் திரு கோணமலையின் பஜார் அமைந்திருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், திருகோணமலை பஜாரை பார்த்தபொழுது மிகவும் குறுகியப் பாதை களில் திருகோணமலை பஜார் அமைந் திருந்தமை எனக்கு ஏமாற்றத்தையே தந்தது. பஜார் பகுதியில் சற்று நேரம் உலாத்தி விட்டு பகல் உணவுக்காக நந்தினி எமக்காக ஏற்பாடு செய்திருந்த அவரது உறவினர் வீட்டுக்கு திருப்பி னோம். அன்று மாலையே நண்பர் ரவீந் திரன் மற்றும் லெலின் மதிவானம், கலாநிதி ந.ரவீந்திரன, எஸ்.ஏ.உதயன் ஆகியோர் அவர்களின் இருப்பிடம் திரும்ப வேண்டி இருந்தமையால் நந்தினி அவர் கள் வழி அனுப்ப சென்று விட, நானும் நண்பர் சின்னராசா விமலனும், தனபால சிங்கம் அவர்களும் சற்று இளைப்பாறி, அன்று நந்தனி அவர்களின் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த திருமதி. அஸ்ரபா நூர்டீன் அவர்களின் கணவரான அ.வா. மூஹற்சீன் அவர்கள் எழுதிய ஜனநாயகம் என்ற நூல் வெளியிட்டு விழாவுக்கு கட் டாயமாக வருமாறு அழைப்பு விடுத் திருந்தார், அஸ்ரபா நூர்டீன் அவர்களை ஏலவே, அவரது படைப்புகள் வழியாக அறிந்து வைத்திருத்தேன். நேரில் சந்தித் தது அதுதான் முதற் தடவையாக இருக்
கும் என நினைக்கிறேன். அதேவேளை அவரது கணவர் மூஹற்சீன் அவர்களைப் பற்றி சரியாக என்னால் அடையாளப்படுத் திக் கொள்ள முடியாதிருந்தது. அன்று மாலை திருகோணமலை ஸாகிராவில் நடக்க விருக்கும் அக்கூட்டத்திற்கு, நான் தனபாலசிங்கம் அவர்கள் மற்றும் சின்ன ராசா விமலன் ஆகியோர் புறப்படடோம்.
அந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு போன பின்தான் மூஹற்சீன் அவர்கள் யார் என்று தெரிய வந்தது. அவரது நூல் ஒன்றினை ஏற்கனவே வாசித்திருக்கின் றேன். மூதுரீல் வசிக்கும் சிறந்த சிறுகதை ஆசிரியரான எம்.எஸ். அமானுல்லா அவர் களின் உறவினர் சலீம் அவர்கள் கொழும்பில் பல நாட்களுக்கு முன் மூஹற்சீன் அவர்கள் எழுதிய "இலங்கை முஸ்லிம்களின் பூர்வகம்' என்ற நூலை தந்து இதை படியுங்கள். சற்று வித்தியாச மான ஒரு நூல் எனச் சொல்லி எனக்குத் தந்திருந்தார். அது வரலாற்று ஆய்வு நூல். சர்ச்சைக்குரிய பல தகவல்கள் கொண்ட நூலாக அது அமைந்திருந்தது. அன்று மூஹற்சீன் அவர்கள் வெளியிட்ட ஜன நாயகம் - வெள்ளை கிறிஸ்துவ சமூகங் களின் அரசியல் முறைமை' என்ற நூல் கூட, அதன் தலைப்பின் வழியாக சற்று வித்தியசமாகவே பட்டது. நான் அங்கு வந்திருப்பதைக் கண்டு, மூஹற்சீன் தம்பதி யினர் சிறப்பாக வரவேற்றார்கள். மூஹற்சீன் அவர்களின் அந்த நூலைப் பற்றிய பலரது கருத்துக்களை அங்கு கேட்கக் கூடியதாக இருந்தது. ஜனநாயகத்தைப் பற்றிய ஒரு மறு வாசிப் பாகவும் , அதனுTடாக அமெரிக்கா மற்றும் மேற்குலகத்தின் ஆதிக்கம் என்பன பற்றிய ஒரு அடை யாளப்படுத்தலை அந்த நூல் பேசுகிறது என்பதை அந்த உரைகளும், மூஹற்சீன்
மல்லிகை டிசம்பர் 2011 & 44

அவர்களின் ஏற்புரையும் எடுத்து சொல்லி யது. அந்த நூலைப் பற்றித் தனியாக பேச வேண்டும். திருகோணமலையிருந்து பணியற்றும் இளைய தலைமுறை படைப் பாளி யாந்தீரா அவர்களும் கருத்துரை வழங்க வந்திருந்தார். கூட்டத்தின் நிறைவுக்குப் பின் அவருடன் சிறிது உரை யாட முடிந்தது. கூட்டத்தின் நிறைவுக்கு பின் நண்பர் சின்னராசா விமலனுடன் தங்குமிடம் திருப்பினோம். ஏனைய நண்பர் களை வழியனுப்பி விட்டு நந்தினியும் அங்கு வந்து சேர்ந்தார். இரண்டு மூன்று இலக்கியவாதிகள் ஒரு சேர தங்கி இருந் தால் இலக்கிய உரையாடலுக்கு குறைவு இருக்காது. நண்பர் நந்தினி அவர்களுட னும் சின்னராசா விமலனுடனும் நீண்ட நேரம் ஒன்றாக இருந்த அச்சந்தர்ப்பதில் கணிசமான கலை இலக்கியம் சம்பந்த மான விடயங்களை உரையாட முடிந்தது.
3
ஞாயிறு முகைதீன்சாலி வந்து, திரு கோணமலைக்குப் பிரசித்தம் தரும் கன்னியா பகுதியில் அமைத்துள்ள சுடுநீர் கொண்ட ஏழு கிணறுகளைப் பார்க்க என்னை அழைத்து செல்வது என்றும், பிறகு மூதூர், கிண்ணியா ஆகிய ஊர் களுக்கு போவதும் என்பதுதான் திட்டம். அத்திட்டப் பிரகாரம் ஞாயிறு அதிகாலை யிலேயே முகைதீன்சாலி தனது மேட்டார் சைக்கிளுடன் வந்து விட்டார். அவருடன் கன்னியாவில் அமைந்துள்ள சுடுநீர் கொண்ட ஏழு கிணறுகளை பார்வையிடச் சென்றேன். இயற்கையாகவே அமைந் திருந்த ஏழு கிணறுகளிலும் ஏழு வகை யான டிகிரியுடன் சுடுநீர் சுரந்து கொண்டி ருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. திருகோணமலை மண்ணில் உல்லாசப்
பயணிகள் பார்க்கத் தவறாத இயற்கை வினோதம் மிக்க ஒரு பகுதியாக அது அமைந்திருந்தது. சாலி அவர்கள் அப் Liq(3u LDT 6ft 33 (Marble Beach) என அழைக்கப்படும் கடற்கரைக்கு கூட்டிச் சென்றார். மேற்படி இரண்டு இடங்களும் இராணுவனத்தினரால் நிர்வாகிக்கப்பட்டு வருவதை அவதானித்தேன். பொது மக் களின் பாதுகாப்பு கருதி அந்த நிர்வாகம் என்பது எனக்குப் புரிந்தாலும், அவ் விடங்களை ரசித்துப் பார்ப்பதில் ஏதோ ஒரு வகையான மனத் தடையை (inconvenience) ஏற்படுத்தவதாக இருந் தது. ஆனால் அந்த நிர்வாகத்திற்காக இராணுவத்தினர் செலுத்திக் கொண்டி ருந்த உழைப்பு அளப்பரியதாக எனக்கு தெரிந்தது. ஆனாலும் அத்தகைய சூழல் இல்லாமல் இருத்தால் நல்லது போலவும் எனக்குப் பட்டது. அடுத்து நண்பர் சாலி அவர்கள் முக்கிய ஒர் இடத்திற்கு அழைத்து செல்லுகிறேன் எனச் சொல்லி ஒர் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
கன்னியா எனுமிடத்தில் அமைந்துள்ள சுடுநீர் கொண்ட ஏழு கிணறுகள் அருகில்.
மல்லிகை டிசம்பர் 2011 & 45

Page 25
அதுதான் கிண்ணியாவையும், மூதூ ரையும், திருகோணமலையையும் இணைக் கும் பிரமாண்டமான பாலம் அமைந்திருந்த பாதை. சவூதி அரசின் அணுசரணையுடன் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட இப் பாலம், கிண்ணியா மூதூர் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். கடந்த காலங்களில் கிண் னியா மற்றும் மூதூர் மக்கள் திருகோண மலைக்கான போக்குவரத்திற்குப் பட்ட கஷடம் கொஞ்சமல்ல. வள்ளங்களிலும் படகுகளிலும் பயணிப்பதற்கான சிரமங் கள் சொல்லி மாளாது என்பதை நாம் அறிவோம். அத்தகைய சூழலில் அரசாங் கத்தின் அபிவிருத்தித் திட்டங்களில் இப் பணி மிக மெச்சத்தக்க ஒன்று என்றே சொல்ல வேண்டும். கிண்ணியாவையும் திருகோணமலையையும் இணைக்கும் இப் பிரமாண்டமான பாலத்தைத் தொடர்ந்து கிண்ணியாவையும் மூதூரையும் இணைக் கும் வகையில் பல வெளிநாடுகளின் அனு சரணையுடன் மேலும் மூன்று பாலங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சாலி என்னிடம் கூறினார்.
அப் பாலங்களை மூதுTருக்குப் போகும் பொழுது காணலாம் என்றார். அப் பாலங்கள் அமைக்கப்பட்டிருந்த பாதைகள் திருகோணமலையின் பஜார் பகுதியின் குறுகிய பாதைகள் போல் இல்லாது அப் பாலங்கள் அமைந்திருந்த பாதைகள் விசாலமானவையாக இருந்தன. சாலியுடன் அந்த உலாத்தலை முடித்துக் கொண்டு நந்தினி சேவியரும், சாலியும், நானுமாக 10.30 மணியளவில் மூதூர் போக பஸ் ஏறினோம், திரும்பும் வழியில் கிண்ணியா போகலாம் என்ற முடிவுடன். அப்பயணத் தின் வழியில்தான் கிண்ணியாவையும் மூதூரையும் இணைக்கும் மற்ற பாலங்
கிண்ணியாவையும்
திருகோணமலையையும் இணைக்கும் Lurtoos.gilso
களைக் கடக்க கூடியதாக இருந்தது. இவ்
விடத்தில் ஒன்று சொல்ல வேண்டும்.
இந்தப் பாலங்களைப் பற்றி இவ்வளவு தூரம் விதந்து கூறுவதற்கு காரணம் கிண்ணியா மூதூர் போன்ற ஊர்களுக்கு திருகோணமலையிலிருந்து செல்வதற்கு தரை மார்க்கமான பாதை மிகவும் கரடு முரடானதாகவும், நீண்ட நேரத்தை எடுத் துக்கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. மேற்குறித்த தூரத்தை மிக குறுகிய இடைவெளியில் கிண்ணியாவையும் திரு கோணமலையையும் இணைக்கும் கடலின் சிறு பகுதி இருந்தமையால் அந்த இடை யிலான இடைவெளிகளில் பாலங்கள் அமைக்கும் பணி சாத்தியமாக்கியது. அதன் மூலம் குறுகிய கால இடைவெளி களுக்குள் அவ்வூர்களைச் சென்றடையும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. அது கிண்ணியா மூதூர் மக்களின் அன்றாட வாழ்விற்கு மிக பயனுள்ளதாக அமைந் துள்ளது. அப்பாலங்களில் தெரிந்த ஜொலிப்பு கிண்ணியா மூதூர் மற்றும் அதன் சுற்று வட்டார மக்களின் ஜொலிப் பான முகங்களை காட்டியது.
மல்லிகை டிசம்பர் 2011 & 46
 
 
 
 
 
 
 
 
 

4
நான் திருகோணமலைக்குப் போகும் பயணத்தில்தான் போக விரும்பிய முக்கிய இரண்டு ஊர்கள், மூதூரும், கிண்ணியா வும் மற்றும், திருகோணமலையில் ஒரு நண்பரையும் பார்க்க எண்ணியிருந்தேன். அந்த நண்பர் டாக்டர் இராஜ தர்மராஜா அவர்கள். 70களின் ஆரம்பத்தில் ஈழ வாணன் அவர்களுடன் இணைந்து அக்னி இதழ் நடத்திய பொழுது, இராஜ தர்மராஜா அவர்கள் எனக்கு அறிமுக மானார். அக்னியில் கவிதைகளையும் விமர்சனங்களையும் எழுதி கொண்டிருந்த வர் என்னைப் பொறுத்தவரை அந்தக் காலத்தில் தமிழகத்திலிருத்து வெளிவந்த கசடதபற, நடை, தாமரை போன்ற சிறு சஞ்சிகைகளின் பையிண்டிங்களை எனக்கு தந்தவர். அவரால் நந்தினி அவர்களின்
வில்லை. அதனால், மூதூர் கிண்ணியா ஆகிய ஊர்களுக்கு போக முன்னதாக சிறிது நேர இடைவெளியில் அவரை அவ ரது கிளினிக்குக்குப் போய் அவரைச் சந்தித்தேன்.
என்னை பொறுத்த வரை இலங்கை யின் ஒவ்வொரு ஊரையும் அவ்வூர்களில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் படைப் பாளிகள் வழியாகதான் அறிந்து கொண் டேன். அந்த வகையில் மூதூர் என்றால் நான் ஆரம்ப நிலை வாசகனாக காலத் திலே அறிந்து வைத்திருந்த மறைந்த தோணி புகழ் வ.அ.இராசரத்தினம் அவர் களும், (பிற்காலத்தில் ஒரிரு சந்தர்ப்பங் களில் அவரை சந்தித்து உரையாடி இருக் கிறேன் என்பது எனக்குப் பெருமை) மூதூர் என்றால் மூதூர் முகைதீன் அவர் களும்தான் எனக்கு நினைவுக்கு வருவார்
கள். பிற்காலத்தில் அறிந்து கொண்ட அமானுல்லா, உபைத்துல்லா ஆகிய இரு சிறந்த சிறுகதையாளர்கள் மீதும் எனக்கு பெரும் அபிமானம். அவர்களையும் அதே போல் நேரில் சந்திருக்கா விடினும் தனது பாரிய உழைப்பில் கலை இலக்கிய பணி ஆற்றும் மூதூர் கலை மேகம் போன்றவர் களையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இவர்கள் எல்லோருடனும் நேர டியாக அவர்களின் ஊரில் சந்திக்க வேண் டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக எனக்குள் இருந்தது. மூதூர் படைப்பாளி களின் நினைவுகளுடன் நந்தினி அவர் களுடனும், நண்பர் முகைதீன்சாலியுடனும், ஆசிரியர் பதவியிலிருந்து ஒய்வுப் பெற்று மூதூரில் அமைந்துள்ள அரச சார்ப்பாற்ற நிறுவனம் ஒன்றை நிர்வாகித்து வரும் எம்.எஸ்.அமானுல்லா அவர்களின் அலு வலகம் சென்றடைந்தோம். ஏலவே எமது வருகை பற்றி நானும், நண்பர் நந்தினி அவர்களாலும் முகைதீன் அவர்களுக்கும், அமானுல்லா அவர்களுக்கும் அறிவிக்கப் பட்டு இருந்தமையால் எங்களுக்காக அவர் கள் இருவரும் நண்பர் ஏ.எஸ்.உபைத் துல்லா, மூதூர் கலைமேகம் ஆகியோர் எங்களுக்காக காத்துக் கொண்டிருந் தார்கள்.
இவ்விடத்தில் இந்த இலக்கிய நண்பர்களைப் பற்றிய சில குறிப்புகளை இங்கு சொல்ல வேண்டும்.
மூதூர் முகைதீன் அவர்களைப் பொறுத்தவரை வரை 70களின் ஆரம்ப கால தொடக்கம் எழுதிக்கொண்டிருப்பவர். திக்குவல்லை கமால், அன்புஜவஹர்ஷா போன்றவர்களுடன் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சி பெற்றவர், இன்று ஒய்வு பெற்ற ஆசிரியர். 70களில்
மல்லிகை டிசம்பர் 2011 率 47

Page 26
ஈழத்து புதுக்கவிதைத்துறையில் கணிச மான பங்களிப்பை வழங்கியிருப்பவர். மரபு கவிதையும் அவருக்குக் கைவரும். பல போட்டிகளில் பரிசில்களைப் பெற்று கொண்டவர். சமீபத்தில் நடந்தேறிய கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா வில் முதலமைச்சர் விருதினை பெற்று கொண்டவர். பல நூல்களின் ஆசிரியர். அவரது கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்பது பலருக்கும் தெரியாத சேதி. ‘ஓசை’ என்ற கவிதைக் கான சிறு சஞ்சிகையை தொடர்ந்து நடத்தி வருபவர். கலாபூஷணம் பட்டம் பெற்றவர். அவரில் எனக்கு மிகப் பிடித்த அம்சம் என்னவென்றால், எத்தனையோ கசப்பான அனுபவங்களைப் பெற்றுக் கொண்டாலும் மூவீன மக்களின் இடையில் ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தும் வகை யில் படைப்புகளை உறுதியான கருத்தி யலுடன் படைப்பாக்கத் துறையில் வழங்கி வருபவர். இறுதியாக வெளிவந்த ‘ஒரு காலம் இருந்தது' என்ற அவரது கவிதைத் தொகுதிக்கு முன்னுரை ஒன்றினை வழங்க கிடைத்தமை எனக்குப் பெருமை யாக இருந்தது.
அடுத்து எம்.எஸ்.அமானுல்லா அவர் களைப் பொறுத்தவரை மூதூர் மண்ணி லிருந்து தோன்றிய சிறந்த சிறுகதை படைப்பாளிகளில் ஒருவர். 2010ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதினை பெற்றுக் கொண்டதோடு, அதே ஆண்டு கலாபூஷணம் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டவர். “வரால் மீன்கள்’ என்ற தொகுப்பு அவரது முதலாவது நூலாகும். அத்தொகுப்பு 2007ஆம் ஆண் டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்புக் கான தேசிய சாகித்திய விருதினை பெற்றுக் கொண்டதோடு, அதே ஆண்டு
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா விருதினையும், யாழ் இலக்கியப் பேரவை யின் விருதினையும் அத்தொகுப்பு பெற்றுக் கொண்டது. இவரும் பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சி பெற்ற ஒய்வு பெற்ற ஆசிரியர்.
அடுத்து, ஏ.எஸ்.உபைத்துல்லா அவர் களும் மூதூர் மண்ணில் தோன்றிய இன் னொரு சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். "ஜலசமாதி’ என்ற சிறுகதைத் தொகுப்பினை தந்திருக்கிறார். இப்பொழுது அதிபராக பணியாற்றி வருகிறார். எம்.ஏ. பட்டதாரி. இக்கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிட்ட பாலங்கள் இல்லாத காலத்தில் மக்கள் பட்ட சிரமங்கள் பற்றியும், அத னால் ஏற்பட்ட உயிர் இழப்புகளைப் பற்றி யும் பல சிறுகதைகளைத் தந்தவர். அவ ரது தொகுப்பின் தலைப்பான 'ஜலசமாதி” எனும் சிறுகதை மூதூருக்கும், திருகோண மலைக்கும் இடையில் ஓடிய லோஞ்சு கடலில் மூழ்கி அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புச் சம்பவத்தை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துக் காட்டும் ஒரு படைப்பாகும்.
பெரியவர் மூதூர் கலைமேகம் அவர் களும் நீண்ட காலமாகச் சிறுகதை, கவிதை எனப் பரவலாக கலை இலக் கியத் துறையில் ஈடுபட்டு வருபவர்.
மூதூர் என்றதும் இன்னும் இரு பெரி யவர்கள் நினைவுக்கு வந்தார்கள். ஒருவர் அப்பிரதேசக் கல்வி வளர்ச்சிக்கு பெருதும் பாடுபட்ட மர்ஹஉம் எம்.எம்.கே.முகம்மது அவர்கள். அவரை நினைவுப்படுத்தும் வகையில் 2008ஆம் ஆண்டு இதயமலர் என்ற நினைவு மலரை எம்.எஸ்.அமா னுல்லா அவர்கள் தொகுத்து தந்திருக் கிறார். மற்றவர் மர்ஹஉம் மெளலவி எம். ஐ.எம்.மஷஹ?ர் அவர்கள். மூதூரின்
மல்லிகை டிசம்பர் 2011 & 48

ஆரம்பகாலப் படைப்பாளியான அவர் குறுங்கதைகளை எழுவதில் வல்லவர். 1973ஆம் ஆண்டு காலமானார். அவரது மறைவுக்கு பின் சிந்தனை வட்டத்தின் 192வது வெளியீடாக அவரது குறுங் கதைகள் அவரது புதல்வி திருமதி. சுஹாதா ஏ.கரீம் (இவரும் ஒரு கவிஞர்) தொகுத்து 'மர்ஹம் மஷ்ஹர் கதைகள்’ என்ற தலைப்பில் 2004ஆம் ஆண்டு ஒரு நூல் வெளிவந்துள்ளது.
மூதுTர் நண்பர்கள் இணைந்து அன்றைய தினம் அமனுல்லா அவர்களின் இல்லத்தில் இலக்கிய கலந்துரையாட லுடன் கூடிய பகல் உணவு விருந்தில் கலந்து கொண்டோம். நண்பர் மூதூர் முகைதீன் அவர்கள் வீட்டில் தேனீர் விருந்தில் கலந்து கொண்டோம். அடுத்து கிண்ணியா போக வேண்டும். மூதூர் நண்பர்களுடன் விடைபெற்று கிண்ணி யாவை நோக்கிப் புறப்பட்டோம்.
கிணிணியாவை பொறுத்தவரை கிண்ணியா என்றால் அந்தக் காலம் தொடக்கம் இன்று வரைக்கும் மறைந்த கவிஞர் அண்ணல் அவர்கள்தான் நினை வுக்கு வருவார். அவரது கவிதைகளை ரசித்து படித்து வந்தவன்.
கிண்ணியாவிருது சுதந்திரன் காலத்தி லிருந்து எழுதிவரும் ஒரு சிறந்த சிறு கதை படைப்பாளி கிண்ணியா எம்.ஐ. எம்.தாஹிர் அவர்கள். அவரது நூல் ஒன்று வெளிவராத சூழலில், புரவலர் புத்தகப் பூங்கா திட்டத்தின் கீழ் ‘பச்சை பாவாடை என்ற பேரில் 2009ஆம் ஆண்டு வெளி வந்தது. அவரையும் காணலாம் என்ற எண் னத்துடன் இருந்த பொழுதுதான், மூதூர் நண்பர்கள் அதிர்ச்சியான தகவல் ஒன் றைச் சொன்னார்கள். கிண்ணியா எம்.ஐ.
எம்.தாஹிர் அவர்கள் தனது 70வது வய தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் னால் காலமாகி விட்டார் என்று. இச்செய்தி எங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந் தது. இச்செய்தி இலக்கிய உலகுக்கு பரவலாக எட்டமல் போனது எப்படி? என்ற பாரிய கேள்வி என்னில் எழுந்தது.
கிண்ணியா எம்.ஐ.எம்.தாஹிர் அவர் களின் மறையொட்டிய சோகச் செய்தியை சுமந்தவர்களாக கிண்ணியாவை நோக்கி புறப்பட்டோம்.
கிண்ணியா என்றதும் இலக்கியத் துறைச் சார்ந்தவர்கள் என்ற வகையில் கிண்ணியா அமீர்அலி, கிண்ணியா ஏ.எம். எம்.அலி, பாயிஷா அலி போன்றவர்களு டன் நேரடியாகவும், எழுத்தின் மூலமா கவும் அறிந்து வைத்திருந்தேன். நண்பர் கிண்ணியா அமீர்அலி கொழும்பில் இருந் தமையால் அடிக்கடி சந்திக்க முடிந்தது. நல்ல சந்தக் கவிஞர். அவரது கவிதைத் தொகுப்பு ஒன்று விரைவில் வெளிவரப் போவதாக அறிந்தோம். அடுத்தவர், கிண் ணியா ஏ.எம்.எம்.அலி அவர்கள். நல்ல மரபுக் கவிஞர். சிறுகதைப் படைப்பாளி. 2005ஆம் ஆண்டு குடையும் அடைமழை யும் என்ற கவிதைத் தொகுதியினையும், 2011ஆம் ஆண்டு ஒரு தென்னைமரம என்ற சிறுகதைத் தொகுப்பையும் தந்த வர். பல பரிசில்களை தனது படைப்பு களுக்காக தேசிய, சர்வதேச மட்டத்தில் பெற்றவர். ஆகாயப் படையில் பணி புரிந்து, இன்று ஒய்வு பெற்று, இலக்கியப் பணியில் ஈடுபட்டு வருபவர். அவரையும் கொழும்பில் ஒரிரு தடவை சந்திருப்பினும் அவரது ஊரில் சென்றவேளை சந்தித்து வரவேண்டும் என்ற எண்ணத்துடன் சந் திக்க சென்றோம். அன்பாக வரவேற்றார்.
மல்லிகை டிசம்பர் 2011 & 49

Page 27
அவரிடமிருந்து விடை பெற்று, கிண்ணி யாவில் நான் சந்திக்க விரும்பிய முஸ்லிம் பெண் எழுத்தாளர் பாயிஷா அலி அவர் களின் வீட்டுக்கு சென்றோம். பாயிஷா அலி அவர்களைப் பொறுத்தவரை அவரை எழுத்து வழியாகவும், தொலைபேசி உரை யாடல் மூலமாகவும் மட்டுமே அறிந்து வைத்திருந்தேன்.
இன்று ஈழத்தில் முஸ்லிம் பெண் களின் மத்தியில் அனார், கெக்கிராவ சஹானா, கெக் கிராவ சுலைஹா, பெண்ணியா, 'பஹிமா ஜஹான் என்ற வரிசையில் கிண்ணியா பாயிஷா அலியும் கவனிக்கப்பட வேண்டியவர். கவிதைத் துறையுடன் சிறுவர் இலக்கியத் துறை யிலும் தனது பங்களிப்பினை நல்கி வரும் இவர், விமர்சனத்துறையில் கவனம் செலுத்தி வருவது மேலே சொன்ன ஈழத்து முஸ்லிம் பெண் படைப்பாளிகளி லிருந்து சற்று இவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.
பாயிஷா அலி அவர்கள் நாங்கள் இன்னும் சிறிது நேரம் தங்கி சொல்ல வேண்டும் என்ற விருப்பிய பொழுதும், அன்று இரவு கொழும்புக்கு திரும்ப வேண்டிய அவசியமும், அவசரமும் இருந் தமையால் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு திருகோணமலைக்கு திரும்பும் வழியில் கிண்ணியாவையும், திருகோண மலையையும் இணைக்கும் அந்த அழகிய பாலத்தை நடந்து கடந்தோம், நாங்கள் மூவரும். இவ்வளவு ஒட்டத்திலும் தனது உடல் நிலையை மீறி என்னோடு நந்தினி சேவியர் அவர்கள் என்னோடு அலைந்தார். அது எனக்கு கஷ்டமாக இருந்தது. அவர் வெறுமனே ஒரு படைப்பாளியாக மட்டு மல்லாமல், எல்லா வகை மக்களுடனும்
நெருங்கிப் பழகும் பண்பு கொண்டவர். இளைய படைப்பாளிகளை வளர்த்தெடுப் பதில் சலிக்காது இயங்குபவர். அடுத்து அன்றைய தினம் ஞாயிறு என்ற பொழு தும், தனது ஒய்வு நாள் முழுவதையும் எனக்காக என்னோடு கழித்த நண்பர் முகைதீன்சாலி அவர்களும் என்றென்றும் எனது நன்றிக்குரியவர்.
திருகோணமலைக்கான இப்பயண மானது இரண்டு முக்கிய விடயங்களை எனக்கு அடையாளப்படுத்தியது. ஒன்று, ஞாயிறு தினம் பல எழுத்தாளர்களை சந் தித்த பல சந்திப்புகளில் அவர் எங்களு டன் இருந்த பொழுதும், பெரும்பாலாக நாங்கள் உரையாடுவதை மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பாங்கு, எனக்கு எனது இளமைக் காலத்தில் மூத்த எழுத்தாளர்கள் சந்தித்து கொண்ட அமர்வு களில் நானும் மெளனமாக உட்கார்ந்து (இப்பொழுது எல்லாம் நான் அதிகமாக பேசுவதாக நண்பர்கள் சொல்கிறார்கள். அது வேறு விஷயம்) அவர்களின் உரையாடல்களை அவதானித்த அந்தச் சூழலை நினைவுப்படுத்தியது. அவ்வாறே அவர் அவதானித்துக் கொண்டிருந்த அந்த பாங்கு அவரது அடக்கத்தை எடுத்து காட்டியதோடு, எதிர்காலத்தில் அவர் பல விடயங்களை படித்து கொள்வார் என்ற நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.
அடுத்து ஒர் உச்சமான அனுபவம் என்றால் நந்தினி சேவியர் என்ற படைப் பாளியை, நண்பரை அண்மித்த நிலையில் பார்த்த அந்தச் சந்தர்ப்பத்தில், அவரது உறவினர்களும் அவரது குடும்பத்தினர் கள், மகள் குறிப்பாக துணைவியார் ஆகி யோர் நந்தினி சேவியர் என்ற படைப் பாளிக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பு,
மல்லிகை டிசம்பர் 2011 & 50

நந்தினி சேவியரின் சிறுகதைத் தொகுப்பான 'நெல்லிமரப் பள்ளிக்கூடம் நூல் வெளியீட்டு விழாவின் போது.
அவரைப் பராமரிக்ககின்ற முறைமை ஆகியவற்றைப் பார்க்கக் கிடைத்தமை என்பதோடு, அந்த ஒத்துழைப்பு, பராமரிப்பு என்பன புதழ் பெறாத இலக்கியச் சேவை களாக எனக்குப் பட்டன.
இத்தகைய நினைவுகளுடன் திரு கோணமலை என்ற உலக வல்லரசுகள், பிராந்திய வல்லரசுகள் எப்பொழுதுமே ஒரு கண் வைத்திருக்கும் திருகோணமலை ரயில் நிலையத்தில் நந்தினி அவர்கள் ஏற்றி விட்ட கொழும்பு போகும் ரயிலில் அமர்ந்திருந்த பொழுது “காலனிய காலத்து அடையாளங்கள் அந்தப் பிர தேசம் எதிர்கொண்ட போர் சூழல், அபிவிருத்தி என்பனவற்றின் காரணமாக மெல்லமாக மறைய இன்று பின்காலனிய
அடையாளங்களுடன் கூடிய ஒரு திரு கோணமலையைப் பார்த்துத் திரும்பி கொண்டிருக்கிறேன் என்பது தெரிந்தது. (கலாநிதி கனகசபாபதி அவர்கள் அண்மையில் காலனித்துவ திருகோண மலை என்ற நூல் ஒன்றினை வெளியிட் டுள்ளார். அதனைப் பார்க்க கிடைக்க வில்லை. ஆனால் நண்பர் மயூரன் தனது வலைப்பதிவில் எழுதிய அந்த நூலை பற்றிய குறிப்புகள் அந்த நூலை சிறிது அறிமுகப்படுத்தி இருக்கிறது.)
ரயில் புறப்படத் தொடங்கியது. நாங்கள் எல்லோரும் இங்கு வந்த பொழுது நின்று போய் இருந்த மழை இப்பொழுது பெய்யத் தொடங்கியது.
மல்லிகை டிசம்பர் 2011 & 51

Page 28
நெறி பிறழ்ந்து போகாத தனது கற்பு வாழ்க்கையின் புனிதமான ஒழுக்க விழுமியங்கள் குறித்து அகல்யா கொண்டிருக்கிற தீவிர ஈடுபாடு, வைராக்கியம் இவை யெல்லாவற்றையும் ஒரு நொடியில் துவம்சம் செய்துவிட்டுப் போகிற மாதிரி ஊரிலே சல சலப்பையும் ஏற்படுத்தி நடந்து முடிந்த மிகவும் துக்ககரமான அந்த விபரீத நிகழ்ச்சியினால் அவள் வெகுவாக மனமுடைந்து நிலைகுலைந்து போயிருந்தாள். கல்யாணமாகாமலே, செக்ஸ் உணர்ச்சியினால் உந்தப்பட்டு, அவள் நடத்தை பிசகி வரம்பு கடந்து ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டதாக ஊரிலே பரவிய கட்டுக் கதைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்த பாவத்தினால் அவள் எவர் முகத்திலும் விழிக்க விரும்பாமல், எந்நேரமும் ஒரு நித்திய சிறைக் கைதி போல, அந்த அறைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தாள்.
முதன் முதலாக அந்தச் செய்தியை ஒரு மறைபொருள் உண்மை போல் கேட்க நேர்ந்த பாவம் அப்பாவுக்கு மட்டும் தான். அவர் அப்போது கூப்பன் சாமான்கள் வாங்கு வதற்காகச் சங்கக் கடைக்குத் துரித நடையில் போய்க்கொண்டிருந்த போதுதான் அது நிகழ்ந்தது. இரண்டொருவர் அவரை வழிமறித்துப் பூடகமாய் கேட்பார்களாம்.
உங்கள் வீட்டில் ஏதும் விசேஷம் நடந்ததே? நடந்திருப்பதாக ஊரிலே கதைக்கினமே, உண்மையா?” என்று அவர்கள் கேட்கிற போது, அவருக்கு ஒரே குழப்ப மாக இருந்தது. அப்படி ஏதும் விசேஷம் நடந்திருந் தால் அவருக்குத் தெரியா மலா போகும். அதுவுமல் லாமல், அப்படி நடக்கக் கூடிய விசேஷம், அகல் யாவின் கல்யாணத்தைத் தவிர, வேறு எதுவுமில் லையே. அதற்கு இன் னும் காலமிருக்கிறது. இருபது வயது கூட நிரம் பாத சின்னப் பெண்தானே அவள். கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவள். அது மட்டு மல்ல, பிரத்தியோகமாக வீட்டிலேயே வைத்து ஒரு சங்கீத வகுப்பிலேயும் கலந்து கொள் கிறாள். அவளுக்குப் பாட்டென்றால் உயிர். நன்றாகச் சுருதி சுத்தமாகப் பாடவும் வரும். நல்ல இனிமையான குரல்வளம் கூட உண்டு. இதுவே அவளுடைய உலகம். அவளுக்குச் சங்கீதம் கற்றுக் கொடுப்பதற்காகச் சங்கரன் என்றொரு பாட்டு வாத்தியான் அளவெட்டியி லிருந்து சைக்கிளில் வந்து போகிறான். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுந்தான் அதற் கான வகுப்புக் களைகட்டி நடந்தேறும். சங்கரனுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை. தொழிலே கண்ணாக இருக்கிற, கர்மசிரத்தையான ஒரு உன்னத பாடற் கலைஞன் அவன். அவர்கள் கேள்விக்கு உடன்பாடில்லாத ஒரு தலையசைப்புடன்,
மல்லிகை டிசம்பர் 2011 & 52
 

அப்படி ஏதும் நடந்தால் எனக்குத் தெரி யாமலா போய்விடும் என்று சொல்லிவிட்டு வந்தவர்தான் அவர்,
அகல்யா அப்போது வாசலில் தனிமை யில் நின்றிருந்தாள். உள்ளே பேச்சுக் குரல் கேட்டது. அவளது ஒரே தங்கை வதனி மல்லாகத்தில் படித்துக் கொண்டிருப்பவள். அவளிடமும் இதே கேள்வி கேட்கப்பட்ட தாக, அவள் தாயிடம் சொல்லிக் கொண்டி ருந்தாள். அது என்னவென்று பிடிபட வில்லை. அவர்களுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அப்பொழுதுதான் அந்த அவர் களின் குழப்பதைத் தீர்ப்பது போல ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஏழாலை கிழக்கி லிருந்து ஆச்சி ஒட்டமும் நடையுமாக ஓர் அவசர செய்தி சொல்ல ஓடோடி வந்திருக் கிறாள். அவரது மனைவியின் அம்மா. அகல்யா அவளை ஆச்சி என்று கூப்பிடு கிறாள். பதட்டமாக வாசலைத் தாண்டி வந்தவள், “எங்கே அகல்யா?’ என்று கேட்டவாறு அவள் உள்ளே போகவும், அவளை நிழல் போல பின்தொடர்ந்தார், அப்பா.
"அகல்யாவுக்கு என்ன?”
“உங்களுக்கு விடயம் தெரியாதே?”
“என்னவென்று சொன்னால்தானே விளங்கும்.”
”சொல்ல நாக்கூசுது. ஊர் முழுக்க அவளைப் பற்றித்தான் ஒரே கதையாக இருக்கு.”
"என்ன கதைக்கினம்?”
"அகல்யாவுக்குப் பிள்ளை பிறந்திருக் கென்று, ஊர் முழுக்கக் கதை அடிபடுகுது.
எல்லாம் அந்தக் கண்டறியாத பாட்டு வாத்தியாரோடு பழகின தோஷம்தான். அவன்தான் இதுக்குப் பொறுப்பு என்று சொல்லினம். நான் அதுதான் அப்பவே படிச்சுப் படிச்சுச் சொன்னனான். இப்ப எதுக்கு இந்தப் பாட்டு வகுப்பெல்லாம் இவளுக்கு. அதுவும் குமர்ப்பிள்ளை. நான் அப்ப சொன்னதைக் கேட்டிருந்தால், இப்படியொரு பழி நேர்ந்திருக்குமோ?”
‘ஐயோ மாமி, நீங்களுமா இதை நம்புநியள்? ஊர் கதைக்கிற மாதிரி, அப்படி விபரீதமாய் இஞ்சை ஒன்றும் நடக்கேலை. நடத்தை பிசகிப் போகுமளவுக்கு அகல்யா அப்படியொன்றும் சலனபுத்தி கொண்டவ ளல்ல. சங்கரனோடு அவள் சாதாரண மாகத்தான் பழகினாள். அவர்களுக் கிடையே நிலவிய உறவு, தெய்வீகமானது. இதைக் கொச்சைப்படுத்திப் பேச, எங்களை யறியாமலேயே எங்கேயோ தவறு நடந் திருக்கு. எங்களுக்கு வேண்டாத எவரோ இப்படியொரு கட்டுக்கதையைப் பரப்பி விட்டிருப்பதாக நான் நம்புகிறன். அது யாராக இருக்குமென்று எனக்குத் தெரி யேலை” என்று அவர் உணர்ச்சிவசப்பட்டுத் தன்னை மறந்து பேசிக்கொண்டிருக்கும் போது, இடையில் குறுக்கிட்டு அகல்யா வின் அம்மா கூறினாள்,
“எல்லாம் சரசுவின் வேலையாகத் தான் இருக்கும்”
"ஓ! அவளா” என்றவர் மேற்கொண்டு பேச வராமல் யோசனையிலாழ்ந்தார். சரசுவைச் சிறுவயதிலிருந்தே அவருக்குத் தெரியும். அவர்களுக்குத் தூரத்து உறவும் கூட. அவள் ஒருமாதிரி. திரிபுபட்ட எண்ணச் சுழற்சியுடையவள். சலனப் புத்திக்காரி.
மல்லிகை டிசம்பர் 2011 & 53

Page 29
ஒன்றுவிட்ட சகோதரன் முறையான ஒரு வனை காதலித்து மணம் செய்துகொண்ட தறுதலைப் போக்கு அவளுடையது. பல தடவை அப்பா அதை விமர்சித்து, அவளின் தவறான போக்கைக் கண்டித்து அவளைச் சாடியுமிருக்கிறார். அதனாலே அவர்மீது, தீராத பகை அவளுக்கு. அவரோடு முகம் கொடுத்து பேசுவதுகூட இல்லை. பக்கத்து வாசலிலே அவளும் இருப்பதால், அவர்கள் வீட்டில் நடப்பதெல்லாம் அவளுக்குத் தெரியும்.
அகல்யாவுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கச் சங்கரன் அவர்கள் வீட்டிற்கு வந்து போவதைக் கண்கூடாகவே கண்டி ருக்கிறாள். அதையே மையமாக வைத்து, அப்பாவிகளான அவர்கள் இருவரையும் பொறியில் சிக்க வைத்து, என்னவொரு கொடூரக் கற்பனை அவளுக்கு.
ஜீரணித்துக் கொண்டு ஆச்சி போய் வெகுநேரமாகி விட்டி ருந்தது. அகல்யாவின் முகத்தில் விழிக் காமலே அவள் திரும்பிப் போனது, ஒரு
இதையெல்லாம்
கொடுர சித்திரவதையாய் அகல்யாவுக்கு உறைத்தது. அவள் முகத்தைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. சோகம் அப்பிய முகத்துடன் ஜடம் மரத்து, அவள் நீண்டநேரமாய் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். எவர் முகத்திலும் விழிக்காமலே, ஒரு பின்னடைவு நிலை அவளுக்கு.
நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது. இதில் நேர்ந்த அவமானச் சிலுவை அவளுக்கு மட்டுமல்ல. பாவம் சங்கரன். இந்தச் சிலுவையைச் சுமந்து எப்படியெல் லாம் மனம் வருந்துகிறானோ. இனி அவர்
களுக்கிடையே சங்கீத பாடமும் நடந்தாற் போலத்தான். அதுதான் சயஸ்வரம் தட்டிக் கிடக்கிறதே. இந்தத் தீராத பழியைப் போக்க என்ன வழி என்று பிடிபட மறுத்தது. தீக்குளிக்க நேர்ந்தாலும், போய்விடுமா இந்தக் களங்கம்?
நீண்ட நாட்களாக இதனால் வீடே சவக் களை தட்டிக் கிடந்தது. யாரோடும் சுமூகமான உறவு இல்லை. பேச்சற்ற மெளனத்தில், வீட்டில் இருள் கனத்துக் கிடந்தது. வெறும் பொய்யிலே புரையோடிப் போன அந்தகார இருள். இந்த இருளைக் கிழித்துக் கொண்டு, யதேச்சையாக ஒரு தினம் சங்கரனின் வரவு, திடீரென்று நிகழ்ந் தது. அப்பா அவனை முகம் கொடுத்து எதிர்கொள்ளத் திரானியற்றவராய், சாய் மனையில் வானத்தையே வெறித்துப் பார்த்தவாறு நிலைகுத்திப் படுத்திருந்தார். வதனிதான் அவன் அமர்வதற்குக் கதிரையை எடுத்துப் போட்டாள். அதுவும் வேண்டா வெறுப்பாகத்தான்.
கறையைத் துடைத்துக் கொண்டு, அல்லது புறந்தள்ளி மறந்து விட்டவனைப் போல, அவனது இந்த வருகை அகல்யா வையே பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கி யிருந்தது. இப்படியொரு விபரீத நிகழ்வு நேர்ந்த பின், அவன் முகத்தைக்கூட ஏறிட் டுப் பார்க்கிற துணிவு அவளுக்கு வர வில்லை. எனினும் இதில் அவன் களங்க மற்றவன் என்பதை அவள் முழு மனதோடு நம்பினாள். அப்படியிருந்தும் ஏன் இந்தப் பின்னடைவு? முறுகல் நிலை. அவன் என்ன நோக்கம் கருதி இங்கு வந்திருக் கிறான்?
மல்லிகை டிசம்பர் 2011 * 54

கனத்த மெளனத்தினிடையே, அவன் குரல் பிசிறில்லாமல் ஒலித்தது. அப்போது அவள் அதை எந்த ஈடுபாடுமின்றி, அசிரத் தையோடு கேட்டுக்கொண்டிருந்தாள். அவன் குரல் உடைந்துபோய், வேதனை யுடன் நலிவாக ஒலித்தது. யாரும் கேட்காத பாவனையில், சுவரைப் பார்த்துப் பேசுவது போல, குரல் கம்மிச் சொல்லிக் கொண்டி ருந்தான், அவன்.
"எங்களை அறியாமலே ஒரு தப்பு நடந்து போச்சு. இதுக்கு நானும் உடந்தை தான் என்று நினைக்கையில் பெரிய மன வருத்தமாக இருக்கு. நான் ஆண்பிள்ளை. எது நடந்தாலும் பிழைச்சுக் கொள்ளுவன். அகல்யா! நீங்கள் பெண்பிள்ளையாச்சே, இதனால் உங்கடை எதிர்காலமே கேள்விக்குறியாகியிருக்கே. இதுக்குப் பரிகாரமாய்.” என்று உணர்ச்சி முட்டி அவன் முடிக்கவில்லை. அகல்யா ஆவேச மாகக் குறிக்கிட்டுக் கேட்டாள்,
“உங்களாலை என்ன செய்துவிட (plgub?"
'ஏன் செய்ய முடியாது? நானே உங்களை மணமுடிப்பதன் மூலம், இப்படி ஏற்பட்ட கறை போய்விடுமல்லவா? அவன் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போதே, உணர்ச்சு தாங்காமல், அறையிலிருந்து ஆவேசமாக வெளிப்பட்ட அவள், அழுகை குமுறிய குரலில் அவனைப் பார்த்துக் குரலை உயர்த்திச் சொன்னாள்,
'வாயை மூடுங்கோ. நடந்ததை நிரூ பிக்க இது போதுமே. எங்களுக்குள் ஒன்று மில்லையென்பதே சாட்சியாக இருக்க வேணும். இதை மறந்திடுங்கோ. இதனால் எனக்குக் கல்யாணமாகா விட்டாலும் பரவா
47-லது குல்லிகை
ஆண்டு மூல
யில்லை. இப்ப இந்த நிலையிலை, எனக் கேற்பட்ட பழியை வெறும் வதந்தியென்று நம்புவதற்கு ஒருவன் வராமலா போவான்? அப்படி வரக்கூடிய ஒருவன் எனக்கு ஒரு நல்ல புருஷனாக இருப்பானென்று நான் நம்புறன். மனதால் கூட, நான் களங்கப்பட வில்லை. இப்படி இருக்கக்கூடிய எனது ஒழுக்கம் தவறாக நேர்மையை, சத்தியம் புறக்கணிக்கப்படாத உண்மைத் தன் மையை எவனொருவனால் புரிந்துகொள்ள முடிகிறதோ, அப்ப அவன் எனக்கு ஒரு நல்ல துணையாக இருப்பான். இது போதும் எனக்கு. அதுவரைக்கும் எத்தனை யுகம் சென்றாலும் நான் காத்துக்கொண்டிருக் கிறேனே!” என்றாள், அவள் குரலில் தொய் வில்லாமல்.
வாழ்க்கை பற்றி, அப்படி அடிசறுக்கி நிலையிலும் அவள் கொண்டிருக்கிற அதீத நம்பிக்கை அவனை உச்சி குளிர வைத் தது. அவன் விருப்பத்துக்கிணங்கி, அவளும் உடன்பட்டிருந்தால், அவர்கள் மீது பூசப்பட்ட கறையை இன்னும் வலு வுடையதாக்கி நிலைநிறுத்தியது போலவே யாகும். நல்லவேளை அவள் தன் கண் களைத் திறந்துவிட்டதாகவே அவன் முழு மனதோடு நம்பினான். அந்தத் திருப்தி யுடனேயே விடைபெற்றுக் கொண்டு, அங்கிருந்து வீடு போகக் கிளம்பினான், அவன்.

Page 30
50வது ஆண்டை நோக்கிய மல்லிகைப் பயணத்தில்.
ஒராண்டுச் சிறுகதை மதிப்பீடு 2010 டிசம்பர் - 2011 நவம்பர்
- 6TLD.6T b.LD6öT6modfr
ஐம்பதாவது ஆண்டை நோக்கி திடகாத்திரமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் மல்லிகை ஆண்டு தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அதன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. மாதாந்தம் இரண்டு மூன்று சிறுகதைகளை எப்படியும் அது சேர்த்துக் கொள்ளத் தவறுவதில்லை. இடைக்கிடையே மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், குறுங்கதை களும் இடம்பெறுவதுண்டு.
இவ்வருடம் மல்லிகை ஐம்பது சிறுகதைகளையும், ஐந்து மொழிபெயர்ப்புக் கதை களையும், பதின்மூன்று குறுங்கதைகளையும் தந்திருந்தது. அவற்றில் ஒன்பது சிறு கதைகள் யுத்தகால அனுபவங்களையும், நாற்பத்தொரு சிறுகதைகள் சமூகச் சிறுகதை களாகவும் காணப்படுகின்றன. இனி அவற்றின் தன்மைகளையும், அவை சொல்லும் சமூகச் செய்தி என்ன என்பதையும் நோக்கலாம். ஒரே ஒரு உருவகக் கதையும் இடம்
பெற்றிருந்தது.
2010 டிசம்பர் மாத மல்லிகை இதழில் மூன்று சிறுகதைகளும், ஒரு குறுங்கதையும்,
ஓர் உருவகக் கதையும் இடம்பெற்றிருந்தன.
6Safŵr 6vífð vw6ncordirgr? - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
யுத்த கால அவலங்கள் இன்னும் மக்கள் மனங்களில் மாறாத வடுக்களாக பதிவு பெற்றிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. செல்லடி பட்டு கண்ணடி பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் கதையை விளக்குகிறது.
Scărgt Vølvbø - ராணி சிரிதரன்
வயதுப் பெற்றோர்களைக் கண்போலக் காக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளை யினதும் கடமை என்பதைக் கதை உணர்த்தும் அதேவேளை, ஷெல் அடியில் கண் கெட்டுப் போனாலும், சூரிய நமஸ்காரம் செய்யத் துடிக்கும் விக்னேஸ்வரன் போன்றவர்கள் சமுதாயத்தில் லட்சியப் புருஷர்களாக வாழத் துடிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
மல்லிகை டிசம்பர் 2011 & 56

கற்பகத்தருக்கள் நான்கு
- க.பரணிதரன்
தனது பிள்ளையின் கல்வி முன்னேற் றத்துக்காக தன் குடும்பத்தை வாழ வைத் துக் கொண்டிருந்த கற்பகத் தருக்களாக விளங்கும் பனை மரங்களை விற்று லட்சி யத்தை நிறைவேற்றத் துடிக்கும் ஒரு தாயின் முயற்சியைத் சித்திரிக்கிறது கதை.
செங்கதிரோனின் நிறைகுடம் என்ற உருவகம்; அடிப்படை அமைதியாய் இருக்க உதிரிகள் தம்பட்டம் அடிப்பதை விளக்குகிறது.
அதேபோல வேல் அமுதனின் சிதைவு குறுங்கதை. சொந்தப் பெற்றோர் என்றாலும் பெண்ணின் விருப்பத்தைக் கேளாமல் திருமண ஏற்பாடுகளைச் செய் யக் கூடாது என்பதற்கு நல்லதொரு உதாரணமாகும்.
来 来 来
2011ம் ஆண்டுப் புதுவருடம் மல்லிகை அதன் இலட்சியப் பயணத் தின் 46வது மைல் கல்லில் கால் வைத்து ஆண்டு மலராக மலர்ந்தது. இவ்வாண்டு மலர் பதின்மூன்று சிறு கதைகளையும், ஒரு குறுங்கதை யையும் தாங்கி வந்தது.
wாரிடம்தான் சொல்லி அழ?
- யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
யுத்த காலச் சிறுகதையைச் சேர்ந்தது தான் இக்கதையும். நிகழ்ந்த சம்பவங்கள் மறக்கப்படுவதில்லை. ஆள் கடத்தலில் அள்ளிச் செல்லப்படும் அப்பாவிப் பொது
மக்கள் கொலை செய்யப்படுவது உறுதி என்பது அக்காலத்தில் நிலவிய பயங்கர மாகும். கார்த்திகாவின் மகனை விசாரித்து விட்டுக் கொண்டு வந்து விடுவோம் என்று கூறி அழைத்துச் சென்ற பயங்கரவாதிகள், இறுதிவரையில் கொண்டுவந்து விடாதது என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் தவிக்கும் நிலைக்கு கார்த்திகா வின் தாயின் உள்ளத்தை ஆட்கொண்டி ருந்தது.
விழுதுகளும் விழுமிலங்களும் - கே.ஆர்.டேவிட்
மனிதன் வாழும் காலத்தில் வளமான வாழ்வுக்கு வழி வகுக்காத பிள்ளைகள், அவன் மறைந்ததற்குப் பிறகு எத்தனை கோடி ரூபாய்கள் அள்ளி வீசி மரணச் செலவுகளைச் செய்த போதும், அவை தனது புகழுக்கு புகழ் சேர்க்குமே ஒழிய மறைந்தவருக்கு எந்தவித நன்மையையும் ஏற்படுத்தப் என்ற உண்மையை தனது வறுமைப்பட்டதாய்
போவதில்லை
அன்னம்மாவுக்கு வாழும் காலத்தில் உத வாத சிவநாதன், மரணச் செலவில் செய்த
புகழ் மாயையை மனதுக்குள் வரித்துக் கொண் டாலும், இறுதிக் காலத்தில் சாதாரண வருமானத்தைக் கொண்டு அன்னம்மாவை
செலவுகள் தனக்குப் என்ற
வாழ வைத்த காந்தராசன் போன்ற பரந்த மனச் செம்மல்களை இன்றைய சமூகத் தில் காண்பது அரிது என்பதை சித்திரித் துக் காட்டியுள்ளார் கதாசிரியர்.
@vgう துவக்கின் கதை
- சுதாராஜ்
துவக்கு உள்ள ஒரு குடும்பத்தில்
மல்லிகை டிசம்பர் 2011 & 57

Page 31
பிள்ளைகள் அதனை எந்த முறையில் அணுகுவார்கள், துவக்கினால் குறி வைக் கப்படும் மிருகங்களின் வயிற்றில் உள்ள குட்டிகளின் நிலையை எண்ணும் போதும், கண்களினால் காணும் போதும் ஏற்படும் மனவேதனை எப்படிப்பட்டது என்பதைத் துவக்கின் கதை சொல்லிப் போகிறது.
கதைvாகிறாள் என்நதிvோரக் காதலி
- ரஷியாவில் பயிலும் மருத்துவ பீட மாணவன் வி.தனேஷ்குமார்
எதிர்பாராத விதமாக காதலில் கட் டுண்ட ரவழிய பல்கலைக்கழக மாண வனுக்கு ஏற்பட்ட அனுபவம், மாறாத அன்பு கொண்ட ரஷ்யக் காதலி ஸ்வெத்தாவை மறக்க முடியாதபடி அவள் அவனது வாழ்க் கையுடன் இணைந்து கொண்டாள். அவளது கதைதான் நதியோரக் காதலி. அருமையான அனுபவக் கதையாகத் தந்திருந்தார் ஆசிரியர்.
அவள்நீரின்நிறம்
- க.சட்டநாதன்
கற்பதில் இடர்படும் இடங்களில் எல் லாம் சரஸ்வதியின் அருள் கிட்டினால் போல, தமிழ்ச் செல்வி ரகுவுக்கு உதவி வருகிறாள். அவள் இல்லாமல் படிப்பே வராது என்ற ரகுவின் உள்ளக் கருத்துக் களுக்கு உயிரூட்டுபவளாக இருந்த செல்வி, அவனை விட்டுப் பிரிந்த நாட்கள் வேதனையால் கழிந்தது. பின்னர் எதிர் பாராமல் சந்தித்தவள் இனி அவனுடைய முன்னேற்றத்திலும், படிப்பிலும் மாத்திர மல்ல வாழ்க்கைத் துணையாக நின்று ரகுவுக்குப் பக்கபலமாக இருக்கப் போவ
தாக கூறுவது அவனுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
காலம் தொலைத்த கனவு
- வசந்தி தயாபரன்
எத்தனை காலம்தான் வெளிநாடு களில் வசித்தாலும், சொந்த மண்ணை மறக்க முடிவதில்லை. பாடசாலைக் காலங் களில் ஒடியாடி விளையாடி மகிழ்ந்த பொழுதுகளை எவராலும் இலகுவில் மறந்துவிட முடிவதில்லை. ரூபி தாயகத் துக்கு வந்து, தான் வசித்திருந்த பழைய இடங்களையும், நண்பர்களையும் சந்திக்க ஆசை கொண்டு சென்ற போது சகலதும் இழக்கப்பட்ட ஒரு வித்தியாசமான புது இடங்களைத்தான் அவளால் காண முடி கிறது. அவளது பள்ளித் தோழர்களது முக வரிகள் கூடத் தெரியாதது அவளுக்குக் கவலையை வரவழைத்துள்ளது.
Vதில் ஒதானி
- திக்குவல்லை கமால்
பெண் பிள்ளையைப் பெற்று விட்டால் பெற்ற தாய்க்குத்தான் எவ்வளவு கவலை. அவளைக் கடைசி வரையில் கரை சேர்க் கும் முயற்சியில் ஒவ்வொரு தாயுள்ளமும் துடிப்பது தவிர்க்க முடியாதது. அதே வேளை, சுயநலமிகள் இருக்கும் வரையில் குடும்பம் என்றாலும் அளிக்கப்பட்ட வாக் குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை. நஸ்ரியாவின் கலியான விஷயமும் பல நொண்டிக் காரணங்களால் பின்தள்ளிப் போனபோது, சிறிதும் கவலைப்படாத நஸ் ரியா, கிளரிகல் உத்தியோகம் கிடைத் ததைப் பெரும் பேறாகக் கருதினாள். காரணம், உத்தியோகம் இருந்தால் மாப்
மல்லிகை டிசம்பர் 2011 辜 58

பிள்ளை தானாகக் கிடைத்து விடுவது இயல்பு. திருமணம் முடித்துக் கொடுப் பதற்கு பெண்களின் உத்தியோகமும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தான்.
6vvywrvatou gef agrVarévo
- கொற்றை பி.கிருஷ்ணானந்தன்
பிரதி அதிபரான நிர்மலா விதவை யான போதும், பழமை பேணும் சிலரால் கடைபிடிக்கப்படும் மூட நம்பிக்கைகளில் நம்பிக்கை வைக்காமல், பெண் விடுதலை அமைப்பு, மாதர் சங்கங்கள் என்பனவற்றில் பங்கு கொண்டு தனது பங்களிப்பைச் செய்து வந்தாலும், திருமண விழாக்களி லும், புது வீடு புகுவிழா வைபவங்களிலும் முறையான அழைப்புக் கிடைத்தாலே ஒழிய, வாழ்த்துக்களைத் தவிர்த்து வந் தாள். விதவைகளின் வாழ்த்துக்களை சமு தாயம் ஏற்கிறதோ இல்லையோ, முறை யான வைபவங்களில் கலந்துகொண்டு வாழ்த்தப் பின்னிற்பதில்லை என்ற கொள் கையுடையவள், தான் பேசி ஏற்பாடு செய்த தனது பெரியம்மாவின் மகளான தனது சகோதரி ரூபாவின் திருமணத்தில் பங்கு பற்றுமாறு தனது பெரியம்மாவினால் விடுக் கப்பட்ட முறையற்ற அழைப்பை ஏற்காது தனது பாடசாலையின் ஆசிரியராகக் கடமையாற்றும் நிமலாவின் புதுமனைப் புகுவிழாவுக்குச் செல்வதற்குத் தீர்மானித் ததுதான் அவளுக்குச் சரியாகப்பட்டது.
vனிமலரோ குளிர்நிலவோ
- சந்திரகாந்தா முருகானந்தன்
ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதல் செய்து இல்லறத்துக்குள் நுழையும்
இருவர் தமது தாம்பத்தியம் சீராக சிறப்பாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்ப துண்டு. எனினும் குடும்பம் என்றால் ஏற் படக்கூடிய சில்லறைப் பிரச்சினைகள் பெரிப்பிக்கப்பட்டு, பிரிந்து போவதுமுண்டு. அந்தக் கட்டத்துக்கு வந்ததன் பிறகுதான் இலக்கியனும், கவிதாவும் தமது தவறு களை உணர்ந்து மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ நினைக்கின்றனர். பிரிவு என்பது ஏற் படவில்லை. காதலும் காமமும் சேர்ந்தது தான் இல்லறத்தில் காணப்படும் இரண்டு முக்கிய அம்சங்கள். அது சீரானால் இல் லறம் சீராகி விடும். என்றாலும் காதலிக்கும் போது இருக்கும் உணர்வுகளும், ஆசை களும் திருமணம் முடிந்த பின்னால் இருப்ப தில்லை. குடும்பம் குட்டி என்று ஆனதன் பின்னால் சிந்தனைகளும், செயற்பாடு களும் வேறு விதமாகத்தான் அமைந்து விடும்.
9Y2Wg VøWităéaSNØ
- தெணியான்
அழகைக் கொடுக்கும் இறைவன் சில பெண்களுக்குப் பேசும் சக்தியைக் கொடுப்ப தில்லை. திருமணம் என்று வரும்போது தான் அவர்களது நிலைமை கவலைக்கிட மாகிறது. ஊமைக்கு ஊமையாக கலி யாணம் கட்டிக் கொண்டு குடும்பம் நடத்து பவர்களும் இருக்கிறார்கள். பெண் பேச, ஆண் ஊமை என்ற விதத்திலும், ஆண் பேச பெண் ஊமை என்ற முறையிலும் திரு மணம் முடித்து குடும்பம் நடத்துபவர்களும் இல்லாமல் இல்லை. ஊமையை ஒரு ஊனமாக நினைப்பவர்கள் வாழ்வளிப் பதற்கு எவரும் விரும்பாத நிலையில்தான் இன்றைய சமூகம் இருக்கிறது. எனினும்
Lipsb66los (gayLibur 2011 率 59

Page 32
தெய்வராசனின் தங்கை மாலதிக்கு சீதனமோ, எதுவுமோ இன்றி வெளிநாட்டில் தொழில் புரியும் மோகன் முன்வந்து வாழ் வளிப்பதற்கு, ஏற்ற துணையாக மாலதி யைத் தெரிந்தெடுப்பது உண்மையில் அழகு மயக்கத்தில் ஏற்பட்ட மயக்கமே என்பதை மூத்த எழுத்தாளர், படைப்பாளி தெணியான் அவர்கள் மிக மிக அழகாகத் தனது அழகு மயக்கம் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். என்றாலும் கதை யில் வரும் அண்ணன் தெய்வராசனுக்கு தனது உடன் பிறந்த தங்கையை நேரில் காணாதது, நோர்வேயில் என்ன நடக் கிறது, தங்கைக்கு என்ன நடக்கிறது என் பதை அறிய முடியாமல் சகோதரப் பாசம் ஏக்கம் கொள்ளச் செய்கிறது.
vாலனின் குட்டி வாத்திலார்
- நம்பி நழுவி
அம்பலத்தாரின் ஆடு களவுபோனதை ராட்டினம்தான் களவாடியிருப் பான் என்று பொலீஸில் முறைப்பாடு செய்து அநியாய மாக ஒரு நிரபராதியைத் தண்டிக்க எடுக்கும் முயற்சிகள் ராட்டினம் குற்றவாளி யல்ல என்ற பொலிஸ் தீர்ப்பின் மூலம் வெளியில் வருகிறான்.
திருNvம்
- மு.அநாதரட்சகன்
படித்துப் பட்டம் பெற்றும் இந்தக் காலம் அரச உத்தியோகமோ, படிப்புக் கேற்ற தனியார் துறை உத்தியோகங்களோ கிடைப்பது அரிது. ஏழ்மை, வேதனை, ஏமாற்றம், தனையோ பிரச்சினைகளுக்கு மத்தியில்
அலைக்கழிவு என எத்
சிவஞானத்தார் ஊட்டிய நம்பிக்கையில்
ஸ்டுடன் விசாவில் வெளிநாடு சென்று உத்தியோகம் பெறலாம் என்ற எண்ணத் தில் சென்றவனுக்கு சிவஞானம் காட்டிய அதைரியம் அவனது மனநிலையை மேலும் மோசமாக்கியது. திரும்பி நடந்த வனுக்கு தனது தகப்பனின் சைக்கிள் திருத்தும் இடம் வந்ததும் முடிவை மாற்றிக் கொண்டு, தந்தையின் தொழிலையே செய்வது என முடிவு செய்துகொண்டபோது பிரதியட்ச உலகின் யதார்த்தம் அவனுள் உறுதி பெற்று வேலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் மனது இலேசானது.
கற்V வியூகத்தின் கடைசிவதி
- ஆனந்தி
உடற் கோளாறுகள் காரணமாக காலம் தாழ்ந்த நிலையில் பிரசவம் நிகழ்வ துண்டு. எனினும் இதனை அறியாத கண வர்கள் தமது மனைவி பிள்ளை பெறத் தகுதியற்றவள் என்ற தவறான முடிவுக்கு வருவது தவறான கருத்தாகும். பெண் என் பவள் மனரீதியாக, உடல் ரீதியாக பாதிக் கப்படும் போது ஏற்படும் நிலைமைகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அவளை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வருவது அபாயகரமானது. சீதாவின் விவகாரத்தில் கணவன் ராகவன் எடுத்த முடிவு சீதாவின் மனதை வெகுவாகப் பாதித்திருந்தாலும், கணவன் தன்னோடு சேர்ந்து வாழ்வான் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. உற வினரும், ஊரவரும் ஆஸ்பத்திரிக்கு வந்து சீதாவையும், பிள்ளையையும் பார்த்துச் சென்ற போதும், கணவன் வருவார் என்ற நம்பிக்கையில் காத்துக் கிடக்கும் சீதாவின் முடிவு கற்பு வியூகத்தின் கடைசி வழியோ?
மல்லிகை டிசம்பர் 2011 奉 60

நன்றிமறவாமை
- வேல் அமுதன் (குறுங்கதை)
மாஸ்டர் சிவசம்பு பிரதி உபகாரம் எண்ணாமல் வசதி குறைந்த ஏ.எல். மாண வர்களுக்கு இலவச டியூசன் சொல்லிக் கொடுத்ததோடு தேவையான பண உதவி களையும் செய்தது, அவர் எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்பட்டு BypaSS Surgery செய்வதற்கு வார்ட்டில் அனுமதிக் கப்பட்டிருந்த போது, பணக் கஷ்டம் தனது உயிருக்கே ஆபத்து என்ற நிலையில், இவ ரின் நிலையைக் கேள்விப்பட்ட மாணவர் கள் தனது டியூசன் மாஸ்டரின் உயிரைக் காப்பதற்கு பணமும், இரத்தமும் வழங்கி யது தமது குருதட்சனையாக மாத்திர மல்லாமல், மனிதநேய நடவடிக்கையாக வும் நோக்க வல்லதொரு நன்மை செய்தால் என்றாவது ஒருநாள் அது தனக்கு நன்மை யாக வந்து சேரும் என்பதற்கு இந்தக் குறுங்கதை நல்லதொரு உதாரணமாகும்.
来 来 来
2011 பெப்ரவரி இதழில் மூன்று சிறுகதைகளும், ஒரு குறுங்கதையும் இடம்பெற்றிருந்தது.
என்னைப் போல் ஒருத்தி
- ச.முருகானந்தன்
வேண்டுமென்றே பெண்கள் தவறு செய்வதில்லை. ஆனால், ஆண்கள் செய் աւb மறைத்து தமது மரியாதையைக் காப் பாற்றிக் கொள்ளத் துடிக்கும் இக்காலத்தில் தன் உயிருக்கு உயிராய்க் காதலித்த
தவறுகளை வேண்டுமென்றே
ராசுவை நம்பி தன்னையிழக்கும் இலக்
கியா தன் கரம் பிடிக்க வரும் உத்தம புரு ஷனுக்கு தான் வாழ்க்கையில் களங்கப் பட்டவள் என்ற செய்தியை கடிதம் மூலம் அறிவித்து, தனது உத்தமத் தன்மையைக் காப்பாற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என எண்ணினாலும், ஊர் உலக நடப்புகளில் நன்கு பரிச்சயமுள்ள டாக்டர் மாப்பிள்ளை அவளிடம் இருந்து சீதனமோ, எதுவுமோ எதிர்பார்க்காமல் அவளைக் கட்டிக் கொள்ள முன் வருவ தானது அவரது பெருந்தன்மையைப் புலப் படுத்துகிறது மாத்திரமல்லாமல், இலக்கி யாவுக்கு நடந்த எதிர்பாராத இழப்பைப் பெரிதுபடுத்தாமல் அவளைத் தனது மனைவியாக்கிக் கொள்கிறார். ஆனால், இலக்கியாவோ அவர் தன்னைப் புறக் கணிப்பார் என்றுதான் எதிர்பார்த்தாள். என் றாலும் அவர் அப்படி செய்யாதது அவளுக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது. காரணம், டாக்டரின் அக்காவுக்கு ஏற்பட்ட அவலம் தன் மனைவிக்கும் ஏற்படக்கூடாது என்று எதிர்பார்த்துதான்.
\gsVeDvr
- கெகிறாவ சஹானா
பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது ஏற்படுகின்ற சம்பவங்களை ஒவ்வொரு வரும் அறிந்துதான் இருக்கிறார்கள். பெண் களுக்கு ஏற்படுகின்ற இக்கட்டான நிலை களைச் சொல்ல வேண்டியதில்லை. பெண் கள் பயத்தினால் எங்கே அவமானம் வந்து சேர்ந்து விடுமோ என்ற அச்சத்தி னால் சேஷ்டைகள் விடும் ஆண்களின் மீது எதிர் எடுக்கப் பின்னிற் கின்றனர். சட்டத்தில் பெண்களுக்கு இவ்
நடவடிக்கைகள்
வாறான விஷயங்களில் நடவடிக்கை
மல்லிகை டிசம்பர் 2011 奉 61

Page 33
எடுக்க சலுகைகள் வழங்கப்பட்டிருந் தாலும், விரும்பாத பெண்கள் சட்ட நடவடிக்கை எடுக்கத் துணியாதது, ஆண்களுக்குச் சாதகமாகி விடுகிறது.
வம்பை விலைக்கு வாங்க
குப்பை கொட்டும் விஷயத்தில் இப் பொழுது நாடு முழுவதிலும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. டெங்கு மற்றும் நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கு இந்த சுகாதாரம் பேணல் ஒரு முன்னடவடிக்கையாக இருப் பதனால், எல்லோரும் ஒத்துழைப்பு நல்கு வது அவரவர் கடமையாகும். விடுத்து, இதனையறியாமல் அடுத்தவருக்கு விரல் நீட்டுவது தம்மை நோக்கி மூன்று விரல்கள் நீட்டிக் கொண்டிருப்பதற்குக் காரணமா கின்றது.
uோலிகள்
- வேல் அமுதன் (குறுங்கதை)
சாதகப் பொருத்தம் பொருந்தினாலும், பொதுப் பொருத்தம் பொருந்தாத திரு மணம், திருமணத்தில் பிரிவுகளை ஏற் படுத்தி விடும். நவீன கால தொழில் நுட்பங் களைப் பயன்படுத்தி உருவத் தோற்றங் களில் மாற்றத்தினை ஏற்படுத்துவது மிக வும் எதிரான காரியம். அதனால்தான் நவீன செயற்கைத் தலைமுடியுடன் கூடிய அலங்காரப் புகைப்படமும், பளபளப்பான வழுக்கைத் தலைமுடியும் கொண்ட புகைப்படமும் ஒவியாவைப் பார்த்துச் சிரிக்கின்றன.
(தொடர்ச்சி ஆண்டு மலரில்)
இது ஒரு முக்கியமான தகவல்!
மல்லிகையில் எழுதும் எழுத்தாளர் களின் மீது தனி அபிமானம் எமக்குண்டு.
சொந்த, தனிநபர் உணர்வுகளையோ, கோப தாபங்களையோ மல்லிகையில்
பதிய வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு எப்போதுமேயுண்டு. ஆனால், நமது இலக்கிய நேர்மையைப் புரிந்து கொண்டிருந்தும், சிலர் மிக நுணுக்கமாகத் தமது சுய கோப தாபங்களை மல்லிகை எழுத்தில் பதிவு செய்து
விடுகின்றனர்.
இது எமது கவனத்திற்கு கொண்டுவரப் பட்டுள்ளது. இனிமேல் தமது கோப தாப உணர்வுகளை மல்லிகைப் பக்கங்களில் மறைமுகமாகப் பதிய வைக்க முனைந்து செயற்படும் இலக்கிய நண்பர்களை - அவர்கள் எத்தனைதான் மல்லிகைக்கு நெருங்கியவர்களாக இருந்தாலும், அவர்களை இனங்கண்டு,
அவர்களை தூர வைத்துவிடும். இது சர்வ நிச்சயம்.
- ஆசிரியர்
மல்லிகை டிசம்பர் 2011 & 62
 

ஒரு நாளில் ஓடி முடிந்த ஒரே நாளில்
- ஏ.எஸ்.எம்.நவாஸ்
இலங்கைத் தமிழ் சினிமா எழுந் திருக்க வாய்ப்பேயில்லை என்ற அப்பட்டமான உண்மையை தெளிவுபடுத்தியிருக்கிறது அண்மையில் இலங்கைத் திரைகளில் வெளியான ஒரே நாளில் திரைப்படம். இது இலங்கையின் இளம் கலைஞர்கள் பங்குகொண்டு இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட படமிது. 'மண் என்ற மலையகக் காற்றை உள் வாங்கிய படத்திற்குப் பின், நமது மண்ணில் வளர்ந்த சமீபத்திய படமான ஒரே நாளில் தலைநகரின் சினி சிட்டியில் ஒருநாள் ஒடியிருக்கிறது. அடுத்து கிங்ஸ்லியில் திரையிட்டு, மூன்று நாட்களுக்கு மேற்படாமல் ஒடியுள்ளது. சாவகச்சேரி பாலாவிலும் திரையிட்டு சில தினங்களே அங்கும் ஒடியுள்ள நிலையில் இனியும் நமது மண்ணில் தமிழ்ப் படம் தயாரிக்கும் தைரியம் எவருக்கும் வருமா? என்ற கேள்விக்குறியே முன்னிற்கின்றது.
இலங்கைத் திரைப்படங்களுக்கு தமிழகப் படங்கள்தான் முட்டுக்கட்டை என்ற அர்த்தம் புதுப்பிக்கப்படும் முன், இத்திரைப்படம் கூட, தமிழக சினிமாப் பாணியிலேயே எடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. படத்தின் தலைப்பைக் காட்டுவது முதல், இறுதிக் காட்சிகள் வரை தொழில்நுட்ப விடயத்தில் தொட்டுப் பார்த்திருக்கிறார்கள். தொடர்ந்து சில படங்களைத் தயாரித்து வெளியிடுவதற்கான ஆக்க முயற்சியாகக்கூட, அவர்கள் இவ்வாறான பாணியில் எடுத்திருக்கலாம். ஆனால், இலங்கையில் தயாரிக்கப்பட்ட படம் என்று சொல்வதற்கான சம்பவங்களோ, கலாசார பின்னணிகளோ இப்படத்தில் கிடை யாது. தமிழ்நாட்டில் சிறு பட்ஜட்டில் தயாரிக்கப்படும் புதுமுகங்கள் தோன்றும் படங்களுக்கு நிகராக ஒரே நாளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை இலங்கை ரசிகர்கள் நிரா கரிக்க என்ன காரணம்? என்றே புரியவில்லை. இலங்கையின் புகழ்பெற்ற கலைஞர்கள் ஒரு சிலரையாவது நடிப்பதில் இணைத்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் எம்.ஏ.கபூரைத் தவிர, ஏனையவர்கள் அனைவரும் புதியவர்களே! புகுத்தப்பட்ட காட்சிகளுக்காகவும் சிலர் நடித் திருக்கிறார்கள். பிரபல கலைஞர்கள் தோன்றியிருந்தாலும், ஒரே நாளில் எழுந்திருக்குமா என்பதும் சந்தேகமே
மல்லிகை டிசம்பர் 2011 & 63

Page 34
இத்திரைப்படத்தில் வாளோடும், கத்தி யோடும் துரத்தும் ஒரு கூட்டத்தைப் பார்க் கின்ற போது, அரிவாள் கதைகள் தமிழகத் திரைப்படங்களில் அடிக்கடிப் பார்த்த காட்சிகள்தானே என அலுப்புத் தட்டுகிறது. சில சில காட்சிகளில் எமது கலைஞர்கள் தமிழை மென்று விழுங்கியும் விடுவதை இத்திரைப்படத்தை ரசிக்கும்போது உணர முடிகின்றது. இது எமது படம் என உணர வைக்கத் தொடலங்க, வெல்லம்பிட்டிய போன்ற இடங்கள் சாட்சி கூறுகின்றன. கண்ணுக்கழகான காட்சிகள் இலங்கை நாட்டில் எவ்வளவோ இருக்க, இவர்களுக் குப் பாடலமைக்க கிடைத்த இடங்கள் வெற்றித் தரவில்லை. புடைவைக் கடை யில் பாடல் காட்சி தமிழகத்தின் அங்காடித் தெருவை அசை போடுகிறது. ரசிக்கத்தக்க வெளிப்புறக் காட்சிகள் என்று சொல்வதற்கு எதுவுமேயில்லை. இப்படத்தில் வரும் மாளிகை அழகாக உள்ளது. இப்படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.எம்.றஸிம் கதை, திரைக் கதை அமைத்துள்ளதோடு, வசன மும் எழுதி நடித்துமுள்ளார். எனினும் அவ ரது நடிப்புக்கு ஏற்றவகையில் அவரது குரல் ஒட்டவில்லை. இந்த விடயத்தில் இயக்கு நரே சறுக்கி விட்டார். ஆனால், அவரது நடிப்பு எவ்வித பின்பற்றல்களும் இன்றி இயல்பாக இருக்கின்றது.
அண்ணன், தம்பி பாசத்தை அடிப் படையாகக் கொண்டு ஒரே நாளில் தயாரிக் கப்பட்டுள்ளதும், தம்பியின் மனைவியின் இறப்புக்கு காரணமான ஒரு சம்பவத்தை வைத்து கதை நகர்த்தப்பட்டுள்ளதும் படத் தின் விறுவிறுப்புக்கு தடையின் அக்கதை படத்தைக் காப்பாற்றுவதுடன், குடிபோதை எவ்வளவு கொடியது என படத்தின் காட்சி
கள் தெளிவிட்டுக் கூறுகின்றன. பாடல் களின்றி தமிழ்ப்படங்கள் இல்லை என்ற சாபக்கேடுக்கு ஒரே நாளில் படமும் தவற முதன் முதலாய்..., ஒரு வார்த்தை பேசு. என முதல் வரிகள் மட்டுமே ஞாபகமாய்ப் பதிகிற அளவுக்கு, பாடல்களின் ஏனைய வரிகள் ஞாபகத்தில் இல்லை. இப்பாடல்களை நமது வானொலி
வில்லை.
ஊடகங்களே அதிகமாக ஏற்கவில்லை என்ற குறைபாடும் உள்ளது. இப்பாடல் களுக்கான தனியான இசைத்தட்டை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளாரா? என் பதும் தெரியவில்லை. தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் தமிழ்ப்படங்களிலேயே பல குறைகளும், நம்ப முடியாத காட்சிகளும் இருக்கின்றன. அந்த ரீதியில் ஒரே நாளில் படத்தை நெருங்கினால், தவறுகள் இருக் கவே செய்கின்றன. நமது கலைஞர்கள் எடுத்திருக்கின்ற முயற்சி என்பதால் இது சாதனை என்றே சொல்ல வேண்டும்.
எனக்கு ஞாபகம் இருக்கிறது. 1990 களுக்குப் பின் இலங்கையின் தமிழ்த் தயாரிப்பான ஷர்மிலாவின் இதய ராகம்’ கொழும்பு கெபிட்டல் படமாளிகையில் திரையிட்டு மூன்று வாரங்களே கண்டது. அதே நேரத்தில் எம்.ஜி.ஆரின் பழைய திரைப்படமான "ஒளிவிளக்கு கெயிட்டியில் திரையிட்ட போதும், 2 மாதங்கள் வெற்றிகர மாக ஓடியது. ஒரு ஞாயிறன்று ஒளிவிளக்கு பகல் காட்சி ஹவுஸ்புல் ஆனதும், ஏமாந்த ரசிகர்கள் கெபிட்டலை நோக்கிச் சென் றனர். அந்த ரசிகர்களால், ஷர்மிலாவின் இதய ராகம் ஏளனப்படுத்தப்பட்டது. ஏனென்றால் உள்ளூர் தயாரிப்பு ரசிகனாக நானும் அத்திரையரங்கில் இருந்து அப் படத்தை ரசிக்கச் சென்றபோதே இந்த
மல்லிகை டிசம்பர் 2011 தீ 64

அவலத்தைக் கண்டேன். இப்படத்தின் இறுதிக் காட்சிகள் (வழக்குக் காட்சி) யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென முடிகிறது. “கெளரவம் பட வழக்குக் காட்சிகளை ரசித்த இலங்கை ரசிகர்களுக்கு இக்காட்சி சுவை தரவில்லை போலும். படம் முடி வடைந்ததோடு, தரக்குறைவான வார்த்தை களும் அந்த ரசிகர்கள் ஊடாக வெளிப்
Lill-gs).
இவ்வாறே இலங்கையில் தயாரிக்கப் படும் படங்கள் திரையிடப்படும் போதெல் லாம் தமிழகத்து திரைப்படங்கள் அவற்றை மடிய வைத்தது. எம்.ஜி.ஆரின் பெரும் படங்களான 'ஆயிரத்தில் ஒருவன்', ‘நீரும் நெருப்பும்', 'அடிமைப் பெண் ஆகிய படங் களும்கூட, இலங்கைத் தயாரிப்புகளுக்கு அடியாக விளங்கின. இலங்கையில் தயாரிக்கப்பட்டு, முழுக்க முழுக்க நம் கலைஞர்களே தோன்றிய 'கோமாளிகள் படம் மாத்திரமே இதுவரை வெளிவந்த இலங்கைத் தமிழ்ப் படங்களில் அதிக நாட்கள் ஓடிய படமாகும். செல்லமஹாலில் 95 நாட்களும், யாழ் வின்ஸரில் 50 நாட் களும் ஒடிய படமாகும். மறைந்த சில்லை யூர் செல்வராஜன், கமலினி செல்வராசன், பீ.எச்.அப்துல்ஹமீத், எஸ்.செல்வசேகரன், எஸ்.ராமதாஸ், கே.ஏ.ஜவாஹர், கே.சந்திர கேசரன், ரீ.ராஜகோபால் என முக்கிய கலைஞர்கள் தோன்றிய படம் என்பதாலும், மேடை, வானொலி மூலம் புகழ் பெற்றவர் கள் என்பதாலும் இப்படம் பெரும் வெற் றியை ஈட்டியது, இலங்கைத் திரையுலகின்
வரலாறு.
மீண்டும் நம் மண்ணுக்கு ஒரே நாளில் படம் வருகிறது என்று சந்தோஷப்பட்ட அதேவேளை, அது திரையிடப்பட்ட காலத்
தில் தமிழகத்தின் இரு பிரபல நடிகர்களான விஜய்யும், சூர்யாவும் நடித்த வேலாயுதமும், ஏழாம் அறிவும் திரையிட ஏற்படுத்திக் கொண்ட வசதிகளால், ஒரே நாளில் படத் தின் ஒட்டமும் நின்றது. இதுவே இலங் கைப் படத் தயாரிப்பாளர்கள் இதுவரை கண்ட அநுபவங்களாகும். இலங்கை ரசிகர் கள் நமது படைப்பை புறக்கணிக்கின்ற விதமும் இவ்வாறே தொடர்கதையா கின்றது.
இனி ஒரு வேண்டுகோள்!
- நம்மவர்கள் ஏற்றுக்கொண்டு, ஆதரிக்கும் சினிமாப் தயாரிக்க முனைந்து செயற்படுங்கள்
படங்களைத்
மனமார்ந்த நன்றிகள்
கனடாவில் வசிக்கும் நமது சமூகச் சகோதரர்களில் இருவரான திரு. நல்லையா கண்ணன் (உரும்பராய்), திரு. எஸ்.பத்மநாதன் (உரும்பராய்) ஆகியோர் சமீபத்தில் கனடா சென்று வந்த இலக்கிய அபிமானி ‘மணி மஹால் கே.எஸ்.மணியம் அவர்களிடம் கணிசமான தொகையை மல்லிகைக்கு அன்பளிப்பாகக் கொடுத்து உதவியுள்ளனர். தூர தேசத்தில் இருந்த போதிலும் கூட, மல்லிகையை மனமார நேசிக்கும் இவ்விருவருக்கும் மல்லிகை தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.
- ஆசிரியர்
மல்லிகை டிசம்பர் 2011 & 65

Page 35
கள்ளப் பனிப் பொழுதில் அள்ளி உன் நினைவுகளை பொங்க விட்டேன் அரிசியென துள்ளும் மன அதிர்வில் கள்ளி உன் கனவுகளை புள்ளியிட்டு மனத்தடத்தில் வரைந்து வைத்தேன் கோலமென அள்ளி அணைத்ததுவும் கிள்ளத் துடித்ததுவும் சொல்லி உன்னை சூடேற்றி பண்ணி வைத்தேன், சேட்டை பல பள்ளிக் கனவதுவாய் கரைந்ததடி மனக்கோட்டை காலக் கருக்கிருட்டில் கொட்டிய கன மழையில் புழுதியெனக் கரைந்து சிதைந்தது எம் காதற் கரும்பாறை என் நினைவில் நீயிருந்தும் முகம் மறுக்கும் எதிர்காற்றில் கனவாய் கற்பனையாய் கரைந்தது நம் காதற் சிறுகுடிசை பயிர் வளர்த்த பாவிகள் நாம் கற்பனையில் பறிகொடுத்தோம் எம் காதற் சிறுபயிரை கனவிலே கருத்தரித்த கடுங்கோடைப் பயிரதனை குருதி வெளிச் சாக்காட்டில் கொன்று புதைத்தவர் யார்? கொள்ளிக்கும் வழியின்றிப்
آنقدریه a آCلا22 9లో రి?
- கு. சோமாஸ்காந்தமூர்த்தி
போன திசை நானறியேன் வழி தவறிப் போனாயோ? வாயடைத்து நின்றாயோ? பெருங்கடலின் அலை இழிப்பில் பெயரின்றித் தொலைந்தாயோ? முட்கம்பி வேலிக்குள் முகமிழந்து போனாயோ? தப்பி வந்து எனைத் தேடி தடுமாறி நின்றாயோ? எப்படி நான் எண்ணுவது ஏந்திழையே உன்பிரிவை? பதவிக்கும் பகட்டிற்கும் பச்சோந்தியாய் மாறி நீ பாழ்பட்டுப் போயிருந்தால் பாவி நான் என்ன செய்வேன்? வாழ்வின் வழித்தடத்தில் வந்தவொரு கோலமென எண்ணி நான் வாழ்ந்திருப்ன்ே எனக்கொரு வழிதேடி.
மல்லிகை டிசம்பர் 2011 தீ 66

sist9t
- வேல் அமுதன்
நீண்ட காலமாக வெளிமாவட்டத்தில் வேலை செய்து கொழும்புக்கு மாற்றலாகி வந்த எனது நண்பன் காந்தனைப் போன ஞாயிற்றுக்கிழமை போய்ச் சந்தித்தோம். எனது மனைவி யும் நானும் அவனின் பம்பலப்பிட்டி வீட்டிற்குப் போனபோது, அவன் சமைத்துக் கொண்டிருந் தான். எங்களைக் கண்டதும், ஓடோடி வந்து, “டேய் நான் நினைத்ததை விட வெள்ளென வந்திட்டியள். கொஞ்ச நேரம் என்ரை மனிவழியோடு கதைத்துக்கொண்டு இருங்கோ. நான் ஓட்டத்தில் வந்திர்ரன்” என்றான்.
ரீவியில் அசத்தப் போவது யார்? நிகழ்ச்சியை இரசித்துக்கொண்டிருந்த காந்தனின் மனைவி, எழுந்து வந்து, எங்களை வரவேற்று - எங்களுடன் உரையாடினாள்.
காந்தன் அவசர அவசரமாகக் குளித்து, உடை மாற்றி, இப்ப வாரன் எனச் சொல்லி விட்டு, மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தான். ரியூசன் கிளாஸ9க்குப் போயிருந்த தனது மகனைப் பக்குவமாக வீட்டிற்குக் கொண்டுவந்த கையோடு, சாப்பாட்டு மேசையைச் சரி செய்தான். காந்தனே எங்களுக்குப் பரிமாறினான். காந்தனின் சமையல் வலு ரொப். அவனது கெட்டித்தனம் என்ன என்றால், எங்களது ரசனை என்ன என அறிந்து, எங்களுக்குப் பிரியமான முறையில் சமையல் செய்தமையே மனம் குளிர மதிய போசனத்தைச் சுவைத்து மகிழ்ந்தோம்.
“சற்று நேரம் பம்பலப்பிட்டி கடற்கரைக்குப் போட்டு வருவம்” என நான் கேட்க, ”பெண்டுகள் இருந்து கதைக்கட்டும். நாங்க கொஞ்ச நேரம் வெளியிலை போட்டு வருவம்” எனச் சொல்லிய காந்தன் பிரியமாகக் கடற்கரைக்கு என்னுடன் வந்தான். என்னை அதுவரை குடைந்து கொண்டிருந்த கேள்வியை ஆருயிர் நண்பன் என்ற முறையில் கேட்டேன். “ஏண்டா நீ மடை வேலை செய்கிறாய்? மாடாய் உழைக்கிறாய்? மனிஷியப்பான் பொம்மை மாதிரி, குவழியாக - குசாலாக இருக்குது.”
“டேய் அது ஒரு ரகசியம்” “எனக்கும் உனக்கும் இடையிலை என்னடா அப்பிடி ரகசியம்? உள்ளத்தைச் சொல்லு?”
"ஒமடா, நான் உனக்கு இதுவரை மறைச்சது ஒண்டுமில்லைத்தான். சொல்றன். அதடா, எனக்கு ஒரு பலவீனம். இந்த நோய்க்கு நல்ல மருந்து தாஜாதான்.”
“எடேடே! எனக்கு ஒண்டுமே விளங்கவில்லை. விளக்கமாகச் சொல்லு”
"நான் ஒரு ஓவர் செக்ஸ் கேசடா, கடைசி ரண்டு நாளைக்கு ஒருதடவை எண்டாலும் எனக்கு செக்ஸ் வேணும். இல்லாட்டில், விசர் பிடிக்கும். என்ரை மனிசி அப்படியல்ல. ஒத்திசைவுக்கு தாஜா அவசியம்.”
நான் திகைத்துப் போனேன். அன்றுதான் ஒரு பேசாப்பொருளின் தாற்பரியம்
கெளிவானக.
引 மல்லிகை டிசம்பர் 2011 தீ 67

Page 36
தூண்டிலுக்கு வந்த ஒரு கடிதம்
மிகப் பெரிய ஆச்சரியம் மல்லிகை போன்ற சிற்றேடுகளுக்கு கொழும்பில் இயங்கி வரும் பெரும் வர்த்தக நிறுவனங்களான செட்டியார் தெரு DEVI JEWELLERS மற்றும் பிரதான வீதியில் அமைந்துள்ள RESHMA போன்ற நகைக்கடை விளம்பரமும் HAPPY DIGITAL CENTRE salsTLbug risslub S6öTsolub usu saurtury Spsu60TP களினது விளம்பரங்கள் மல்லிகையின் கடைசிப் பக்கத்தில் அடிக்கடி வெளிவந்துள்ள தைப் பார்த்து மெய்யாகவே நான் சந்தோஷமடைந்தேன். மன நிறைவடைந்தேன். இப்படியான பெரும் வர்த்தக நிறுவனங்கள் சிற்றிலக்கிய ஏடுகளுக்கு விளம்பரம் தந்து ஆதரிப்பதன் அடிப்படை நோக்கம்தான் என்ன?
- இப்படி ஓர் இலக்கியவாதி தூண்டில் கேள்வி-பதில் பகுதிக்கு கேள்வி எழுப்பி யிருந்தார்.
இந்த ஆக்கப்பூர்வமான அணுகுமுறை தமிழ்நாட்டில் பிரபல வர்த்தக நிறுவனங்கள் கையாளும் முறையைத்தான் இவர்களும் கைக்கொண்டு ஒழுகி வருகின்றனர்.
மெய்யாகவே சொல்லப் போனால், இந்த விளம்பர அணுகுமுறையால் மேற்படி வர்த்தக நிறுவனங்களுக்குப் பாரிய வருமானமேதும் கிடைத்துவிடப் போவதில்லை. இது எதார்த்த நிலை. ஆனால் இதன் மூலம் கிடைக்கும் விளம்பரம் தார்மீக ரீதியானது.
ஆனால், இவ்விளம்பர அணுகுமுறை பலராலும் கவனிக்கப்பட்டு, பாராட்டப்படு கின்றது. அடிப்படை லாபம் வேறு. இதயப்பூர்வமான நல்லெண்ணம் வேறு. இந்த நல்லியல்பு பணத்தால் வருவதல்ல. அடிப்படை அணுகுமுறையால் கண்டறியப்படுவது.
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்படி நிறுவனங்களின் பிற்சந்ததி யினர் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்களாக இலங்கையின் பல்வேறு பிரதேசங் களில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் போது, நூலகத்தை அணுகு வார்கள். அங்கே தமது மூதாதையர் மனமுவந்து நல்கிய விளம்பரங்களுடன் சிற்றிலக்கிய ஏடுகளின் கட்டுக்கள் தென்படும். எடுத்துப் புரட்டிப் பார்த்தால், அதில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தமது முன் பரம்பரையினரின் நிறுவன விளம்பரம் கடைசிப் பக்கத்தில் காட்சி தரலாம். அவர்கள் அதைப் பார்த்து பரவசமடைவர்.
தம்முடன் கல்வி பயிலும் சக மாணவ மாணவியருக்குக் இதைக் காட்டி காட்டியே பெருடைப்படலாம், பாருங்கள்!
பல பிரபல பத்திரிகைகளில் வரும் பென்னாம் பெரிய விளம்பரங்களின் ஆயுளே ஒரே ஒருநாள் மட்டுந்தான். ஆனால் மல்லிகையில் வரும் விளம்பரங்களே வரலாற்றுப் பதிவு
93(5D.
- ஆசிரியர் மல்லிகை டிசம்பர் 2011 & 68

ஆாண்டில்
- விடாமினிக் ஜீவா
& நீங்களொரு தொடர் வாசகனா?
கந்தரோடை. எஸ்.தவச்செல்வி
* எழுத்தாளன் ஒருவன் சமகாலச் சிந்தனைகளுடன் ஈடுகட்டி இயங்க
வேண்டும் என்றாலே அவன் தொடர் வாசகனாக இருந்தே ஆகவேண்டும்.
அதேபோல, ஒர் இலக்கியச் சஞ்சிகையாளன் சமகாலச் சிந்தனையாளர்களின்
கருத்துக்களையும் படித்தறிந்து, கவனத்தில் கொண்டேயாக வேண்டும்.
இது தவிர, எனது சிறுபராயம் தொட்டே நானொரு தொடர் வாசகனாக உருவாகி இருந்தேன். இன்று அந்தத் தொடர் வாசிப்புப் பழக்கம் எனக்குப் பெரிதும் உதவுகின்றது.
இ உங்களைப் போன்ற மூத்த எழுத்தாளர்கள் மனந்திறந்து, ஆத்ம சுத்தியுடன் எழுதும் மல்லிகைக் கருத்துக்களை, நான் கருத்தூன்றிப் படித்து வருவதில் மிக மிக விருப்பம் கொண்டவன்.
சமீப காலங்களாக மல்லிகை எழுத்துக்களில் முதிர்ச்சி தெரிகின்றது. இதிலிருந்து ஒன்று தெரிகின்றது. மல்லிகை மாத்திரமல்ல, மல்லிகைக்கு எழுத்தில் பங்களிப்பவர்கள் கூட தம்மைத் தாமே புதுப்பித்துக்கொண்டு வருகின்றனர். இதைப் பற்றி உங்களது கருத்து என்ன?
வட்டுக்கோட்டை. எஸ்.எம். திவ்விய நேசன்
* இதிலே நானேதும் சொல்லத் தயாராகவில்லை. நானோர் இலக்கியச் சமையல்காரன். உப்புப் புளி சுவை அறிந்து சாப்பிடுகின்றவர்கள் சொல்லும் சுவை அபிப்பிராயங்களைத்தான் நான் செவிமடுக்க முடியும். வாசகர்களின் மெய்யான இலக்கியத் திருப்திதான் எனது இலக்கிய வெற்றியாகும்.
மல்லிகை டிசம்பர் 2011 奉 69

Page 37
RS சிற்றிலக்கிய ஏடுகள் என்றுமே பண வருவாய் இல்லாதவை. அதனால் இடை நடுவிலே நின்றுபோய் விடுகின்றன. மல்லிகைக்கும் பண நெருக்கடி ஏற்பட்டி ருக்கலாம். அதற்கு மாற்று வழியாக எதனைக் கடைப்பிடிக்கின்றீர்கள்?
சுன்னாகம். என்.சபேசன்
° என்னையும் மல்லிகையின் இலக் கியப் பங்களிப்பையும் மனசாரப் புரிந்து கொண்டவர்கள் பலர், எனது நெஞ்சார்ந்த நண்பர்கள். நெருக்கடி கள் வந்துள்ள போது அவர்களின் முன்னால் தோன்றி, எனது கரத்தை நீட்டுவேன். இது ஒரு மெளனமான, பரஸ்பரம் புரிந்து வைத்துக் கொண் டுள்ள ஓர் ஒப்பந்தம். இதுவேதான் நான் பணப் பிரச்சினைகளைத் தீர்ப்
பதற்காகக் கையாளும் வழிமுறைகள்.
O O O
$ எனக்கு மல்லிகையின் பழைய பிரதி கள் தேவைப்படுகின்றன, ஒர் ஆய்வுக்கு. பழைய மல்லிகைப் பிரதிகளை எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்?
நீர்கொழும்பு. ச.மீனலோசனி
* மல்லிகைக் காரியாலயத்திற்கு நேரடியாக வந்து தேவையான இதழ் களைப் பெற்றுக் கொள்வதே வசதி யானது. அல்லது இன்ரல் நெற்றைப் பயன்படுத்துங்கள்.
இ மல்லிகையுடன் கடந்த பல ஆண்டு களாக இலக்கிய உறவு பூண்டவர்களில் பலர் இன்று வெளிநாடுகளில் வாழுகின் றனர். அப்படியாக வாழ்ந்து வருவோர் களில் இலக்கிய நெஞ்சம் கொண்ட வர்கள் மல்லிகையுன் தொடர்பு கொள்ளு கின்றனரா?
மன்னார். எஸ்.தர்மசீலன்
* அவர்கள் வாழ்வதோ வெளிநாடு களில், அவர்களுக்குப் புகுந்த நாடு களில் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள். இந்த எதார்த்த உண்மைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் அவர்களது இலக்கிய ஆர்வ முயற்சி களைக் கணக்கில் எடுக்க வேண்டும்,
சமீபத்தில் நமது பேராசிரியர் ஒருவர் பாரிஸில் நடந்த ஆய்வுக் கருத் தரங்கில் பங்கு பற்றச் சென்றிருந்தார். நான் அவரிடம் கை காவலாக ஒருசில மல்லிகைப் பந்தல் வெளியீடுகளைச் சேர்த்திருந்தேன். அவர் திரும்பி வந்த வுடன் அவர் சொன்ன வார்த்ததைகள், மடத்தனம்! நான் இன்னும் இன்னும் அதிகமாக எங்கட புத்தகங்களைக் கொண்டு போயிருக்கலாம் போலத் தோன்றுகின்றது. நான் கொண்டு சென்ற புத்தகங்களை நம்மவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றதைப் பார்க்க மெத்தச் சந்தேசமாக இருந்தது. இதுதான் உண்மை என்று கூறினார்.
மல்லிகை டிசம்பர் 2011 & 70

$ மல்லிகை போன்ற இலக்கிய இதழ் ஒன்றை நடத்த வேண்டும் என்ற எண்ணம் எப்போது உங்களுக்குத் தோன்றியது?
மருதானை. ராமதுரை
* சாஹித்திய மண்டலப் பரிசு பெற்ற காலத்தில் இருந்தே - அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்தே எனக்கு இந்த எண்ணம் தோன்றி விட்டது.
அதை நடைமுறைப்படுத்துவதில் இரண்டொரு ஆண்டுகள் கணக்கமாகி விட்டன. இருந்தும் அறுபதுகளின் பிற்பகுதியில் மல்லிகையை ஆரம் பித்து விட்டேன்.
O O O
இ எழுத்தாளனாக மலராவிட்டால்
நீங்கள் யாராக மலர்ந்திருப்பீர்கள்?
நீர்கொழும்பு. எம்.பி.எட்வின்
* எழுத்தாளனாக.
S சமீப காலமாக தமிழக சினிமா வட் டாரத்தில் ரஜினிகாந்த்' மறுபடியும் சினிமாத்துறைக்கு நடிக்க வருவரா? இல்லையா? என்றொரு விவாதம் நடை பெறுகின்றதே, இது பற்றி உங்களது மெய்யான கருத்து என்ன?
கிளிநொச்சி. ஆர்.நேசராஜன்
* பொதுவாகத் தமிழக அரசியலே சினிமாக்காரர்களின் ஆதிக்கத்தால்
தேங்கிப் போய்க் கிடக்கின்றது. இது உலகமே நன்கறியும்.
அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் நான் ஒரு ஹாலிவுட் படமொன்று பார்த்தேன். பிளட் அன்ட் ஸான்ட் என்பது அதன் பெயர். ஹரைன்பவர், ரீற்றா ஹேவர்ட் என்ற பிரபல ஆங் கில நடிகர், நடிகை நடித்த படம். ஸ்பெயினில் மாடு பிடிக்கும் பின் னணியைக் கொண்ட படமது.
புகழ் பெற்ற வீரன் ஹோதாவில் நின்கின்றான். மூர்க்கம் நிறைந்த மாடு, அவனைக் குத்திக் கிழித்துத் தூக்கி எறிகின்றது. உடனே அவனை பக்கத்து மருத்துவமனையில் சேர்ப்பிக் கின்றனர்.
அடுத்து, இளம் தலைமுறையைச் சேர்ந்த புதியதொரு வீரன் ஹோதா வில் குதித்து, அந்த மூர்க்கம் நிறைந்த மாட்டை அடக்கிப் பணிய வைக் கின்றான்.
முன்னைய வீரனின் நீண்ட நாளை யக் காதலி, புதிய வீரனுக்குக் காற்றில் முத்தத்தைப் பரிசாக வழங்குகின்றாள்.
புதிய வீரனுக்குக் கொடுக்கப்பட்ட பாராட்டுச் சத்தம் மரணப்படுக்கையில் இருந்த வீரன் செவிகளை மொய்க் கின்றது.
பழைய வீரன் மெல்ல மெல்ல வாழ்வை முடித்துக் கொள்கின்றான்.
பிறிதொரு சம்பவம், பாகவதர் சென்னை மவுண்ட் ரோட்டால் நடந்து
மல்லிகை டிசம்பர் 2011 奉 71

Page 38
வருகின்றார். எதிரே வந்த டாக்ஸியைக் கைகாட்டி நிறுத்தச் சொல்லுகின்றார். டாக்ஸிக்காரன் திரும்பி முகத்தைப் பார்த்துவிட்டு, வண்டியை நிறுத்தாமல் போய்விடுகின்றான்.
பிற்காலப் பாகவதருக்கு ஏற்பட்ட நேரடி அனுபவம்.
புகழின் உச்சியில் இறுமாந்து இருக் கும் ஒவ்வொரு பிரபல கலைஞனும் கற்றுத் தேற வேண்டிய அனுபவப்
பாடமிது. - கவனம்
O O. O.
R உங்களுடைய
புரிந்துகொள்ளும் அளவிற்கு, களைப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்
படைப்புகளைப்
2} - sS
கின்றதே, என்ன காரணம்?
கொழும்பு 6 ஆர்.தவநேசன்
* அப்படியா? இன்னும் இன்னும் கொஞ்சம் கிட்டே நெருங்கிவரப் வாருங்கள்.
O O. O.
S சமீபத்தில் ஒன்றை அவதானிக்கின் றேன். தமிழகத்துப் பிரபல பத்திரிகை களும், சில பிரமுகர்களும் ஈழத்துத் தமிழர் மீது திடீரென அபாரப் பரிவு காட்டு கின்றனரே, என்ன காரணம்?
தெஹிவளை. * ஒரு புடலங்காயுமில்லை. இன்று
எஸ்.தில்லைநாதன்
நம்மவன் 40 நாடுகளில் வாழுகின் றான். சர்வதேசச் சந்தைப்பட விரிவு தான், இதற்கு அடிப்படைக் காரணம்.
RS நீங்களும் இளம் எழுத்தாளராக இருந்து வளர்ந்து வந்தவர்தானே? உங் களது காலத்து எழுத்தாளர்களுக்கும், இன்று வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக் கும் உள்ள பிரதான குணாம்சம்தான்
என்ன?
கிளிநொச்சி எஸ்.கே.ராஜன்
° எங்களது காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பேனா பிடித்து எழுதிக்கொண்டு வந்தோம். எமது கல்வித்தரம் கூட அவ்வளவு உயர்தர மானதல்ல.
இன்று எழுதும் பல இளந்தலை முறையினரில் பலர் பட்டதாரிகள். நிறைய நிறையப் படிக்கிறார்கள். விவா திக்கின்றர். ஆனால் ஒன்று, தம்மைப் பற்றி மிகை படுத்திச் சிந்திக்கின்றனர். சிலர் இலக்
செய்
மெத்தச் சந்தோஷம்.
கிய நட்பைத் துஷ்பிரயோகம்
வதும் காணக் கூடியதாகவுள்ளது.
இவர்கள் கருத்தோட்டம் காரண மாக இணைந்து இயங்கலாம். செயற் படலாம். ஆனால், கோஷ்டி சேர்ந்து குழி பறிக்கக் கூடாது. தற்பொழுது இதன் தாக்கம் தெரியாது. காலப் போக்கில் தனிமைப்படுத்தி விடும். எனவே மிகக் கவனமாகவும், பொறுப் பாகவும் இலக்கிய உலகில் தத்தமது பெயரைப் பொறித்து வருவார்களே யானால், இவர்களில் சிலர் மிகச் சிறந்த படைப்பாளிகள் ஆகக்கூடும்.
201/4, முரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

雛
毅
盔
颈
을 P.
நீங்கள் தரமான இலக்கியச் சுவைஞரா?
'மல்லிகைப்பந்தல் வெளியீடுகளைத் தொடர்ந்துபடியுங்கள்
கடந்த கி ஆண்டுகிளுக்கு மேலாக நமது மண்ணைச் சார்ந்த படைப்பாளிகளின் பல்துறைப்படிட நூல்களை வெளியிட்டு வருகின்றது. மல்லிகைப்பந்தல் நிறுவனம்
மல்லிகைப்பந்தல் வெளியீடுகளை நீங்கள் வாங்கும் பொது அதனது ஆதரவு மல்லிகை மாத இதழுக்கும் சுவறுகின்றது என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்
மல்லிகைப் பந்தல் விதாலைபேசி: 232072

Page 39
副贰s引乱 BOIOmlh0:12, SisillaTisa,