கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்லை நாவலன் கோவை

Page 1
ஆக்கியோன்
கந்த முருகேச
தென்புலோலி
உரையாசிரியர்கள். இலக்கிய கலாநிதி பண்டிதர் மு. கந்
பிள்ளைக்கவி வ.சிவராஜசிங்கம் B.
 


Page 2


Page 3

நல்லை நாவலன் கோவை
ஆக்கியோன் : கந்த முருகேசன் தென் புலோலி
உரையாசிரியர்கள் :
இலக்கிய கலாநிதி பண்டிதர். மு. கந்தையா. பிள்ளைக்கவி, வ. சிவராஜசிங்கம். BA(HONS)

Page 4
*
" NALLA NAVALAN KOVAI'
By : di Kantha Murugesan
'ൂ, (2) First Published dr. July - 1999
* ,
ബ {\" ܢܢܓܐ Printed By - Catholic Press, Jaffna.
Type - Setting - (S) Computer Unit,
Viyabari Moolai.
Cover Design ৩৮ Page Setters
Messenger Street, Colombo -12.
Published By ሰ -- Mr. S. Ehamparanathan,
Puloly South, Puloly.


Page 5

ஆக்கியோன் அறைவு.
நான் சிவமதத்தில் ஆர்வம் மீதூரப் பெற்று, அதன் பால் நின்று ஒழுகிய காலை அமிழ்து உறழ் தமிழில் அம்மத நூல்களை அவாவிக் கற்றேன். கற்றேற்கு நாவலரவர் கண் மீது நடந்தது நாட்டம்.
சிவமத (Մ91գ பொருள், ffuu தமிழுரு, ஒழுக்கமேயுயிர், துருவித் துருவித் தக்கது காணுந் தாவில்லறிவு, கண்டதைச் செயலிற் காட்டுங் கருவூலம், தகுமெனக் கொண்ட தங்கொள்கைக்காக உயிரையுமிழக்க உறுதி கொண் மேதை நாவலரவர்கள். இஞ்ஞான்றை ஒரு சில மேடைப்பேச்சு வீரர்கள் போன்று சொல்லுஞ் செயலும் வேறாபவரல்லர். தமிழகம் எங்கனுந் தமிழையுஞ் சைவத்தையும் பரப்பியவர் நாவலரவர்களே.
இந்தியாவில் நற்றமிழறிஞரென்றும் 6F6 மெய்யன்பரென்றும் இன்றிருப்போருட் பலர் நாவலரவர்களின் மாணாக்க வழிமுறையினரே. “இத்தகைய நாவலரியல்பை நானறிவேனோ என்றென்னாட்டங் கோட்ட முற்றது. பின், அவர்களியல்பறியாது தயங்கியமை புலப்படுத்த ஓர் நூல் அவர்கள் மீதாக்கப்புக்கது, புகீஇய நாட்டங் கோவையிற் சென்றது, கோவையாவது நானாவது, என்னறிவெங்கே, கோவையெங்கே ? "கவி (கோவை) பாடிச் சிரிப்பிப்பரே" என்பதற்கிலக்காகவா பாடுவது என மயக்கமுற்றது. உற்றும் நான் ஓர் கோவை அவர் மீதாக்கின் அவர்கள் பண்பின் அணுவளவேனும் அமைத்திடமாட்டேன், அதனால் அவர்க ளியல்பு என் போலிகளின் நாவிலடங்காதென்பது போதரும். அன்றியும் திருக்கோவையார் முதலியவற்றோடு என்னாலாக்கப்பட்ட கோவையை நோக்குவோர் நகைச்சுவை பெறுவர். நானும் ஓர் கோவை பாடுவேன். அதை நகைச்சுவை யுண்டாக்கும் என்பதை முன்னறிந்தே போலும் “கவி (கோவை) பாடிச் சிரிப்பிப்பரே" எனப் பன்மையிற் கூறிப் பழித்தனர் மேலோர்.
இக் கோவையிற் L6) பொருண்மொழிகள் முந்தையோர் தந்தனவே, அவை " முன்னோர் மொழி பொருளேயன்றியவர் மொழியும் பொன்னே போற் போற்றுவம்" என்பதனானும், பல அறிஞரின் சொற் பொருண யங்களை ஓரிடைக் காட்டும் நோக்கினானும் ஈண்டெடுத்தமைக் கப்பட்டன. குறை கூறாது பொறுக்க. இவை கிடக்க.

Page 6
ii
இன்று நான் எம்மதப்பற்றும் அற்றவனாயிருக்கிறேன். இதற்குரிய வேதுக்களை ஈண்டு விரித்தல் வேண்டா, மத நம்பிக்கையற்றவனாகிய நான் நாவலரவர்களைப் பாடலாமா? எனின், இக்கோவை பாட மத நம்பிக்கையுடையேனாயிருந்த காலத்திலேயே தொடங்கினேன். (பின் உடனலக்கமேதுவாகப் பன்னாளிடையீடுபட்டு) மத நம்பிக்கையற்ற பின்பும் நாவலர் அவர்களின் ஏனைய பண்புகள் என்னுளத்தை அவர்கள் பாலீர்த்தன. ஆகலின் பாடலாமென்றொழிக. சைவச் செய்திகடாம் பல செப்பினன், நாவலர் அவர்கள் நடைமுறை நாட்டிட, மற்றென்கோளல்ல.
முக்குணமும் மாறிமாறி வருதலின் யானறியா வகையாற் பிழை நுழைந்திருத்தலும் கூடுமிக்கோவையுள். - என்னை யுன்னாது நாவலரவர்கள் மீது செய்யப்பட்ட கோவ்ையிதாகலின் அவர்கள் பெருமையை எண்ணிப் பொறுத்தருளல் அறிஞர்தம் பேரருட்கேற்றதாகும்.
ஏனையவற்றையும் கூறிய கொண்டே தேறுக. ஒம்புக.
தமிழகம், கந்த முருகேசன்.
தென்புலோலி, 01.01.30.

ஈழத்துப் பெரியார் (தமிழ்த் தாத்தா) தென்புலோலியூர் கந்த முருகேசனார்

Page 7

iii
கந்தமுருகேசனாரின் கையெழுத்துப் பிரதியிலிருந்து.. .
5வேஆங்கிவத் * ? :ಞ . డిశారణ్ G rசி இவNறி :) 臀 ವಿž
' 'A് ഞു. (,
శాస్త్రీ డో"-_1 జ్ఞాల దx
, /6് $ ކ,نا تمA,ޓޯ% J11 f ' 'ഴേയ്ക്കൂ -േക്ക് തർജ് ജെ () ശര TATA ATTT AA AAAA Ahhh AhAhA ATM TAT YSA AMMMM TTe eeTTSMAeAe AA Thh 0
ਅਤਿ ਘ ങ്ങഴി اړونمالي مالوهابها"؟ كاملا .
రాళట dey ழிலழ் நிேலத் A ஐேே-டு: إن لهموم أيضاً οή στοά
لاهیم یا کانالها فهمیم گرفت؟ به شبا )ச்ே சேவலரவர்மீது பூே' ܗܧ భ? -9ιανήέλη (διάδων, ്ഡ 0്.oiിt \n' &&
அதிே7ெல அறிஞர்
0 பேரடுட فريقي prமே, * நி3 ':/് -ിധേയ്കും.
ή και η με ές ρ నీey ఓ ேேத 2%. ο βαι φέωκί), ്?

Page 8
iv
வெளியீட்டுரை
கோவை என்பது தமிழ் மொழியில் வழங்கி வரும் தொண்ணுற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று, அகப் பொருட் துறைகளைப் பொருள் தொடர்ந்து வருமாறு ஒழுங்கு பெற அமைத்து ஒரு நாடகக் காப்பியம் போல நானுாறு கட்டளைக் கலித்துறைகளில் பாடப்பட வேண்டுமென்பது இதன் இலக்கணம். இத்தகைய கோவை நூல்களுள் மிகப் பழைமை வாய்ந்தவை மணிவாசகப் பெருமான் இயற்றியருளிய திருச்சிற்றம்பலக் கோவையாரும். (திருக்கோவையார் ) இறையனார் அகப்பொரு ளுரையில் உரையாசிரியரால் மேற்கோளாக எடுத்துக் காட்டப் பெற்ற பாண்டிக் கோவையுமாம். பொய்யாமொழிப் புலவரால் *ąyööüULL தஞ்சைவாணன் கோவை திருச்சிற்றம்பலக் கோவையார்க்கு அடுத்த நிலையில் வைத்துப் பாராட்டப்படும் பெருமை உடையது. நம்பியின் அகப் பொருள் விளக்கத்துக்குச் சிறந்ததோர் இலக்கியமாக விளங்குவது. இதன் பின் வெவ்வேறு காலங்களில் கோவை நூல்கள் தோன்றியுள்ளன. கடவுளை அல்லது வள்ளலை அல்லது பிரபுவைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்படுவது இக்கோவைப் பிரபந்தம்.
தென்புலோலியைச் சேர்ந்த புலவர் திலகன் கந்தமுருகேசன் நல்லை நாவலன் கோவை என்னும் இப் பிரபந்தத்தை 492 கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் ஆக்கியுள்ளார். அவர் நல்லை ஆறுமுகநாவலர் மீது ஆழ்ந்த பற்றுடையவராய் இருந்ததனால் அவரையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கோவை பாடியுள்ளார். இவ்வாக்கம் 1.1.1930 இல் பூர்த்தியானதென்று இயம்புகிறது ஆக்கியோன் அறைவு, இந்நூல் கையெழுத்துப் பிரதியாகவே இன்று வரையும் அறுபத்தொன்பது ஆண்டுகளாக இருந்தது துர்ப்பாக்கியமே.
எமது ஊரைச் சேர்ந்த அமரர் வீர. கணபதிப்பிள்ளை கந்தமுருகேசன் மீது கொண்ட அபிமானம், பக்தி காரணமாகக் “கந்த முருகேசன் மன்று என நிறுவி அதன் செயலாளராகவும் திரு.சு.கதிர்காமத்தம்பி பொருளாளராகவும் இயங்கினர். கையெழுத்துப்பிரதியாக இருந்த இந்நூலை அச்சு வாகனமேற்ற ஊக்கத்துடன் பெரிதும் முயன்றனர், செய்யுள்களை அச்சிடுவதென ஒரு சாராரும் உரை எழுதி அச்சிடுவதென இன்னொரு சாராரும் செயற்குழுவில் இருந்தனரானதால் செயலிலிறங்க முடியவில்லை. மூலப்பிரதி கந்தமுருகேசனின் பிரியமான மாணவன் பண்டிதர் வீபரந்தாமனிடம் இருந்தது. அதை அப்போது வட்டாரக் கல்வி அதிகாரியாக இருந்த திரு.ப.சச்சிதானந்தனின் மூலம் மன்று பெற்று நிழற் பிரதி எடுத்து வைத்திருந்தது. இது கைகூடுவதற்கு மேலே கூறப்பட்டோர் உழைத்தமையால் அவர்கள் அனைவர்க்கும் எமது மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

V
கல்வி அதிகாரி அமரர் ஆவ:தங்கராசா மன்றின் செயலாளராகக் கடமையேற்ற பின்பு நூலை உரையுடன் வெளியிட வேண்டுமெனத் தீர்மானித்து அவர் நிழற்பிரதியை (செய்யுள்களுக்கு) உரை எழுதுவதற்காக ஏழாலையைச் சேர்ந்த பண்டிதர் மு.கந்தையாவிடம் கையளித்தார். உரை எழுதுவதில் பிள்ளைக்கவி வ.சிவராஜசிங்கமும் ஈடுபட்டிருந்ததால் கையெழுத்தில் எழுதப்பட்ட முதல் நூற்றைம்பத்தேழு செய்யுள்களின் உரைகளைத் தட்டச்சில் பொறிப்பதற்குப் பிள்ளைக் கவியின் உதவியைப் பெற்றார் செயலர். அப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது திரு.ஆ.வ. தங்கராசா திடீரெனக் காலமானார். சில மாதங்கள் நூலைப் பற்றிய சிந்தனையில்லாமலும் சீரற்ற கால நிலைமையாலும் கழிந்தன. இப் பணியில் உள்ளுணர்வுடன் உழைத்த அமரர் ஆ.வ. தங்கராசாவுக்கு நன்றி செலுத்தும் கடப்பாடுடையேன்.
இப்பனுவலுக்கு முற்றாக உரை எழுதுவித்து வெளிக் கொணர வேண்டுமென்னும் பேரவா என்னைப் பிடர் பிடித்து உந்திக் கொண்டேயிருந்தது. அதற்குரிய நிதி வளமின்றித் தத்தளித்தேன். அக் காலத்தில் கலங்கரை விளக்கமாக அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தார் திரு.பொ.இளங்கோ கந்த முருகேசனிடத்தில் அன்பும் குரு பக்தியும் மீதூரப் பெற்று
அவரிடத்தில் அளப்பரிய நாட்டங் கொண்டு 5D) புதல்வர்களுக்குக் குருவின் விருப்பப்படி அரசர்களினதும் புலவர்களினதும் நாமங்களைச் சூட்டியவரான அமரர்
.க.பொன்னையாவின் மூத்த புதல்வனே இளங்கோ ஆவர். எனது நோக்கத்தை அவருக்கு எடுத்துரைத்த பொழுது அகமுக
மலர்ச்சியுடன் நிதியைப்பற்றிக் მნQbჭ5 வேண்டாமெனவும் அவுஸ்திரேலியா கனடா, இங்கிலாந்து, ஆகிய நாடுகளிலுள்ள கந்தமுருகேசனின் மாணவர், அன்பர்கள், அபிமானிகள்
ஆகியோரிடம் நிதி சேகரித்து அனுப்புவதாகவும். வாக்களித்தார். அதற்கமைய அவுஸ்திரேலியாவிலிருந்து அவரும் கனடாவிலிருந்து திரு.மு.ழரீனிவாசனும் இங்கிலாந்திலிருந்து திரு.பொ. இளவழகனும் நிதி திரட்டி அனுப்பினர். அன்னாருக்கும் திரு.ச. கணபதிப்பிள்ளை, திரு.சி.கதிர்காமர், திரு.சி. கணநாதன், திரு.பொ. இளஞ்சேரன் ஏனைய மாணாக்கள், அன்பர்கள் ஆகியோருக்கும் உவந்தளித்த நிதிக்கு நான் மிகவும் கடப்பாடுடையேன்.
நிதி அனுப்பி எனக்கு உற்சாகமூட்டியதால் வெளியீட்டுக்குழு ஒன்றினை ஏற்படுத்தி இப்பணியில் நான் முழுமூச்சாக ஈடுபடும் பொழுது ஆலோசனைகள் வழங்கிய குழு உறுப்பினர்கள் திருவாளர்கள் வே.வீரபத்திரபிள்ளை, சி.நடராஜலிங்கம், வீ.க.சண்முகநாதன், ஆ.நா.சு.திருச்செல்வம், வி.நடராசா, என்.கே.எஸ். கிருஷ்ணபிள்ளை, ந.சிவலிங்கம், க.க.யோகேந்திரன் ஆகியோரையும் மறக்க (plgu JTg5d. அவர்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

Page 9
vi
"ஊக்கமது கைவிடேல்' என்ற ஒளவையாரின் ஆத்திசூடிப் பொன்மொழிக்கிணங்கப் பல அப்பியாசப் புத்தகங்களில் தாமே உரை எழுதித் தந்த இலக்கியக் கலாநிதி. பண்டிதர்.மு. கந்தையாவுக்கும் உரைகளைச் சொல்ல அவற்றை எழுதிய பண்டிதரின் உதவியாளர்க்கும் தமது வேலைப் பழுவினுள்ளும் மெய்வருத்தம் பாராது உரை எழுதிய பிள்ளைக் கவி வ. சிவராஜசிங்கத்துக்கும் செயற்கரிய செய்ததற்கு மனப்பூர்வமான நன்றி.
புற்றளைச் சனசமூக நிலையப் பொருளாளர் திரு.மு.கனகலிங்கம் (ஆசிரியர்) எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்து அச்சிடும் பணியை நிறைவேற்றுவதற்கு அளப்பரிய உதவிகளை ஆற்றினார். வியாபாரிமூலைக் கணணி அகத்துக்கும் உரையாசிரியர்கள் இல்லங்களுக்கும் யாழ்ப்பாணம் புனித வளன் கத்தோலிக்க அச்சகத்துக்கும் பன்முறை சென்று பணியை விரைவுபடுத்தியதை நான் மறக்க முடியாது. அவருக்கும் எனது மனங்கணித்த நன்றி.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி பேராசிரியர் அ.சண்முகதாஸ் இந்நூலின் செய்யுள்களையும் உரையையும் படித்துச் சிறந்த அணிந்துரை ஒன்று எழுதியுள்ளார். அவருக்கும் எனது அன்பு நிறைந்த நன்றி.
வியாபாரிமூலை (S) கணனி அக உரிமையாளர் திரு. ஆசு.சற்குணராசா இன்முகத்துடன் அச்சுப் பொறிக்கும் பொறுப்பை ஏற்று ஒப்புப் பார்த்துக் கொடுத்தவற்றை மீண்டும் கணனியில் பொறித்துத் தந்தார். அவருக்கும் அவரின் அகத்தில் இப்பணியில் ஈடுபட்டு உழைத்த அனைவருக்கும் எனது உள்ளார்ந்த நன்றி. இதைச் சிறந்த முறையில் குறிப்பிட்ட காலத்தில் அச்சுப் பொறித்துத் தந்த புனிதவளன் கத்தோலிக்க அச்சக முகாமையாளர், அவரின் ஊழியர்கள் ஆகிய அனைவரையும் பாராட்டி நன்றி இயம்புகின்றேன்.
நீர்வேலியைச் சேர்ந்த திரு.த.ந.பஞ்சாட்சரம் நூல் அச்சேற்றுவதற்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்கினார். திரு.நா.குகன் (குகன் புகைப்பட நிறுவனம்) கந்தமுருகேசனின் புகைப்படப் பிரதிகள் அளித்தார். நூலின் மேலட்டையையும் புகைப்படங்களையும் கொழும்பில் சிறப்புற வர்ணம் திட்டுவித்து அமைத்துத் தந்தார், கந்தமுருகேசனது மாணவனின் புத்திரனாகிய திரு.ஆறுமுகம் இரத்தினவேலோன். இவர்களையும் 6T6: உள்ளத்திலிருந்து அகற்ற முடியாது. அவர்களுக்கும் பாசம் நிறைந்த நன்றி.

vii
உரையாசிரியர்கள் தங்களால் இயன்ற வரை முயன்று பொருள் எழுதியுள்ளனர். நூலாசிரியரின் உள்ளக்கருத்து உரையில் அமைந்திருக்குமோ என்பது தெரியாது. அங்ங்ணம் முரணாக அமைந்திருப்பின் கற்றுத் தெளிந்த அறிஞர் குற்றம் காணாது ஆசிரியரின் இந்நூல் இலை மறை காயாக இன்னும் இருக்காது வெளி உலகமும் அறிய வேண்டுமென்று அச்சிட விரும்பிய சிறியோனின் முயற்சியைச் சிந்தித்துப் பொறுக்க, மறு பதிப்பில் அக்குறைகளை நிவிர்த்தி செய்யலாம்.
புலோலி தெற்கு, சே. ஏகாம்பரநாதன் (சமாதான நீதவான்) புலோலி, முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்,
வடமராட்சிக் கல்விக் கோட்டம்.

Page 10
viii
அணிந்தரை
பழந்தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் ஒருங்கு சேரக் கற்பித்துத் தனக்கென ஓர் உயர் மாணவர் குழாத்தினை உருவாக்கியவர், கந்தமுருகேசனார். அவர் இயற்றிய நல்லை நாவலன் கோவை என்னும் இந்நூலுக்கு இச்சிறிய அணிந்துரையை எழுதுவதில் மகிழ்ச்சியும் பெருமையுமடைகிறேன்.
பழந்தமிழ் இலக்கியங்களுக்கு அணி சேர்ப்பன
அகத்தினைப் பாடல்கள் . அகத்திணை மரபினை எம்முடைய ஆன்றோர் பிற்கால இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் போற்றி வந்தனர். அகத்திணை நிகழ்வுகள் gilas
இலக்கியங்களிலே உதிரிகளாக இடம் பெற்றன. பின்னர் ஐங்குறு நூறு, ஐந்திணை எழுபது போன்ற நூல்களில் அவற்றைச் சிறிய அளவிலே ஒழுங்குபடுத்திக் கூறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அகத்திணை நிகழ்வுகள் யாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கூறும் ஓர் இலக்கிய வடிவமாகக் 'கோவை தோன்றியது. பாண்டிக் கோவை முதலிலே இயற்றப்பட்டது. பின்னர் மாணிக்கவாசக சுவாமிகளால் திருக்கோவை பாடப்பட்டது. இலக்கிய உலகிலே புெருமதிப்புப் பெற்ற திருக்கோவை இலக்கியத்திலே கந்தமுருகேசனார் பெரிதும் ஈடுபட்டிருந்தார். கோவையிலும் நாவலர் பெருமானிலும் இருந்த ஈடுபாட்டின் விளைவே நல்லை நாவலன் கோவை என்னும் நூலாகும். இலங்கையிலே சின்னத்தம்பிப் புலவர் பாடிய
கரவைவேலன் கோவை முதலிலே எழுந்த கோவை இலக்கியமாகும்.
கோவைப் பாடல்கள் எல்லாமே 5L6061T6
கலித்துறையாலானவை. இப்பாவகையினையும் இலக்கிய நயம் விளங்கக் கையாளும் திறனுடையவராகப் புலவர் கந்தமுருகேசனார் திகழுவதை நூற்பாக்களைப் படிக்கும் பொழுது அறியக் கூடியதாகவுள்ளது. தமிழ்மொழியினுடைய செழுமையினையும் வளத்தினையும் நன்குணர்ந்தவராகச் செய்யுள்களை அமைத் துள்ளார். தமிழ் ஓர் ஒட்டு மொழி என்பதால், ஒரு தொடரைப் பிரிக்குமிடத்து ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் பயக்கக் கூடியதாகப் பிரிப்பதற்கு வாய்ப்புண்டு. பாதகமலம் என்னும் தொடர் பாத கமலம் என்றும் பாதக மலம் என்றும் பிரிக்கலாம். பின்வரும் பாடலிலே புலவர் இத்தொடரினை இரண்டு பொருளிலே கையாளுகின்றார்.
"பாத கமல முடிக்கணி யாக்கிய பண்பினர்தம் பாத கமல மறுத்தகு ணாவலன் பல்புகழ்போ னாத னுமதளு ரேகவந் தானெனு நற்சங்கம்ா நாத னுயாகர நற்சங்க நாடிட வாழியவே"
(செய்யுள் 311)

ix
நாவலரின் மேல் ஆசிரியர்க்கிருந்த ஈடுபாடு பாடலடிகளுடாகப் புலப்படுகின்றது. மேற்காட்டிய பாடலிலேயே நாவலர் பெருமானின் பாத கமலத்தினைத் தம்முடைய முடிக்கு அணியாக்கியோரின் பாதக மலம் அறுக்கும் பெருமான் எனக் கூறுவதைக் காணலாம்.
பல இலக்கிய அணிகளும் ஆசிரியரின் அறிவுத் திறனும் உடைய இக் கோவை நூலுக்கு ஏழாலைப் பண்டிதர் இலக்கிய கலாநிதி மு. கந்தையா அவர்களும், பிள்ளைக்கவி வ.சிவராஜசிங்கம் அவர்களும் உரை எழுதியுள்ளார்கள். இந்நூலை வெளியிடும் தமிழன்பர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்.
பேராசிரியர் : அ , சண்முகதாஸ் கலைப்பீடாதிபதி 14.05.1999 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

Page 11

க.கைக்கிளை
SeSeSMSSSLLTSSSLSLSLSSSMSSSLS LSLS S LSSL LS SSLSSSMSSSLS LSLS LSLS TSMSS
காட்சி என்பது தலைமகன் தலைமகளைப் பொழிலிடத்துக்காணக்
பொன்னேர் வடிவொன் றுலாவும் பவளம் பொலியுமுத்தம் தன்னேர் வயிரந் தருநீலங் கொண்டளி சார்குருக்க ளென்னேர் தரக்கா யமுந்தே வுறவே யியலும்நல்லைப் மன்னேர் பவரொழி நாவலன் போற்கா வளமிகவே.
பதவுரை:- கருணைத் திறத்தாலும் தேவகாயம் போன்று விபூதி தாரணத்தாலும் மின்பிரபை வீசும் திருமேனியுடைமையாலும் பிற ரெவரும் நிகரிலாது விளங்கும் நாவலராம் ஆசிரியமணி போல்வதாய்த் திகழுமி, வண்டு படியும் நிறமிக்க தேனானது தேவர் வதியும் ஆகாயத்திற் செறியும் நல்லைப் பதியிலுள்ள சோலையில் முத்து பவளம் வயிரம் நீலம் ஆகிய மணிகளைச் சுமந்துகொண்டு பொன்மயமாகிய வடிவொன்று (தன் பிரசன்னத்தால்) சோலை பொலிவு பெற உலாவுகின்றது என்றவாறு.
இச் செய்யுளின் பின்பகுதி நாவலருக்கும் பொழிலுக்கும் சிலேடை நாவலருக் காம்போது அளிசார் குருக்களென்னேர் தர - கருணைமிகு ஆசிரியராக விளங்குதலாலும், காயமுந்தேவுறவே - திருமேனியும் தெய்வத் திருமேனியாக விளங்குதலாலும், இயலும் நல்லை மன்னேர் பவரொழி நாவலன் போற் காவள மிகு - பொருந்தும் நல்லைப் பதியில் தனக்குச் சமானம் எவருமில்லாத தேவராய்த் திகழும் நாவலர் போன்று நன்கா பொலிவுறும் என்பது.
இப்பொருளில் அளி - கருணை, குருக்கள் - ஆசிரியர், காயமுந்தேவுற - உடலானது தெய்வத் தன்மையுடையதாக எனப் பொருள் கொள்க.
பொழிலுக்காம்போது:
அளிசார் குருக்கள் - வண்டுகள் நுகரும் நிறம் கிளரும் தேன்,தேகா ! முந்துறலால் - தேவர்கள் வாழும் ஆகாயத்தையும் முற்படுதலி: ' நல்லையில் பொழிலானது பொலிவுறும் வண்ணமாக
இப்பொருளில் அளி - வண்டு, குருக்கள் - நிறம் கிளரும் தேன், குரு நிறம், கள் - தேன், தே - தேவர், காயம் - ஆகாயம், முதற்குறை முந்துறலால் - முற்படலால்,

Page 12
2)
2
பொன்னேர் வடிவொன்றுலாவும் - பொன்மயமான எழில் வடிவொன்று உலவுகின்றது. இது உருவகம். இதனால் பவளம் போலும் வாயும் முத்துப்ப்ோன்ற பல்வரிசையும் கூர்ந்த வைரம் போன்ற நாசியும் நீலக் கருவிழியும் கொண்டு ஒரு பொன்மயமான அழகு (பெண்) வடிவம் எதிர்ப்பட்டது என காட்சி உரைத்தவாறு,
ஐயம்
(ஐயம் என்பது கொடிபோன்றுலவிய தோற்றத்தைக் கண்ணுற்ற தலைமகன் அத்தோற்றம் பெண்ணென்று தெரிந்து காட்சியில் சிறந்து தோன்றிய இவள் தெய்வப்பெண்களில் எத்தெய்வப் பெண்ணோ என ஐயமுறல்)
கற்றவர் மெச்சு மறுமுக நாவலன் காவகத்தி லுற்றவர் தம்மனை பூவோ தடமுறை பூவதுவோ பற்றல ரூர்தீ பரனது சில்லோ பனிக்கடலோ வற்றமி லாச்சே ருடலோ வறிகில னேதெனவே.
பதவுரை:- கற்றவர் மெச்சும் அறுமுக நாவலன்காவகத்தில் - படித்தவர்கள் போற்றும் ஆறுமுகநாவலர் பிரானை நிகர்க்குஞ் சோலையிலே, உற்றவர் தம்மனை பூவோ - உலாவுபவருடைய வாழ்விடம் இவ்வுலகமோ, தடமுறை பூவதுவோ - தடா கத்திலுள்ள செந்தாமரையோ, பற்றலர் ஊர் திபரனதுசில்லோ - பகைவர்களாகிய மூவசுரர்களதுடரங்களை எரித்த சிவபிரான் ஊர்ந்து சென்ற" தேரின் சக்கரங்களில் ஒன்றான சந்திரமண்டலமோ, பனிக்கடலோ - குளிர்ச்சி பொருந்திய சமுத்திரமோ, அற்றமில் ஆச்சேருடலோ - குற்றமில்லாத விண்ணுலகோ, (ஆ + உடல் = ஆ+ காயம் எனக்காண்க) ஏது என அறிகிலன் - ஏதென அறிகிலேன். காவகம் - சோலையிடம், மனை - வாழ்விடம், - 66)85lb. இலக்குமியாதற்கேற்ப ജൂഖണിങ് உறைவிடமாகிய செந்தாமரை குறிக்கப்பட்டது. இன்னும் பூவெனப்படுவது பொறிவாழ்பூவே என்பதும் நோக்கற்பாற்று, பொறி - இலக்குமி பற்றலர் - தாரரக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி என்ற அசுரர்கள், இவர்களை அழித்ததற்கு சிவபிரான் சூரிய சந்திரர்கள் சில்லாக அமையப் பெற்ற உலகமாகிய தேரில் ஊாந்து சென்றனர். என்பது புராணச் செய்தி, விரிவினைக் கந்தபுராணம் முதலிய நூல்களிற் காண்க.

3
ஆச்சேருடல் - ஆகாயம், ஆ- பசு, உயிர், உயிர்கள் வினைக்கேற்ப உடல் எடுக்கும்முன் தங்கியிருக்கும் இடமாதலின் ஆகாயத்தை ஆச்சேருடல் என்றார் ன்ன்றுமாம், ஒகாரம் ஐயப்பொருளில் வந்தது.
இனி அற்றம் இல் ஆ- பாவக்குற்றமில்லாத புண்ணியாத்மாக்கள் எனக்கொண்டு சேருடல் - அவர் தம் புண்ணியப்பலன் நுகர்தற்குச் சென்று சேரும் சுவர்க்கமோ என்றுமாம்.
துணிவு
(துணிவு என்பது மாலைவாடுதல், கண்ணிமைத்தல் போன்ற குறிகளால் முன்னைய ஐயம் நீங்கி இவள் மானிடமாதே எனத் தலைமகன் துணிந்து கூறுதல்)
சைவப் பயிர்வளர் ஆறுமுகனார் தடம் பொழில்வாய்க் கைவலன் சித்திரப் பாவை யனையவர் கட்கதவு மெய்வகை மூடுநற் கோதையும் வண்டுண மேவிடலால் மைவளர் கடந்த விடம்பா ரெனப்பயன் மன்னுவனே.
பதவுரை: சைவப் பயிர்வளர் ஆறுமுகனார் தடம்பொழில்வாய் - சைவமாகிய நற்பயிரை வளர்ந்தோங்கச் செய்த பெருமை வாய்ந்த நாவலரின் நல்லைப்பதியில் பொய்கை பொருந்திய சோலையின் கண்ணே, கைவலன் சித்திரப் பாவை யனையவர் - கைவல்ல சித்திர வினைஞன் கைவண்ணத் தியன்ற ஓவியப்பாவை போலும் இப்பெண்ணினது, கட்கத: - திறந்து மூடும் கண் இமையாகிய கதவுகள் இருத்தலாலும், கோதையும் வண்டு உண மேவிடலால் - இவள் அணிந்திருக்கும் தேன் உண்ணும் வண்டுகள் படியும் மாலை இருத்தலாலும், மைவளர் கூந்தல் இடம் பார் என மன்னுவ - மை படர்ந்த கரிய கூந்தலுடைய இப்பெண்ணின் வதிவிடம் இப்பூவுலகம் எனத் துணிதலாகிய பயன் பொருந்துவனவாம்.
கட்கதவும் கோதையும் பயன் மன்னுவளனக் கூட்டுக. மூடுநல் என்பது இனம்பற்றித் திறத்தலையும் குறிக்கும்.

Page 13
4.
குறிப்பறிவு
(குறிப்பறிவு என்பது தலைவி பார்வையால் அவட்குத் தன்னிடத்து வேட்கை உண்டென்று தலைவன் குறிப்பால் அறிந்து கொள்வது.)
4. துறவோ ரெவருந் துதித்திடு நாவலன் றுநலையி லறவோ ரருளென லாகு மரிவை யரிவிழிக டுறவே துணியா தெனைத்தகுத் தேதுய ரோடுகளிப் புறவே யருளும் பிறவுறுப் பென்னினிப் பேசுதற்கே.
பதவுரை:-
துறவோர் எவரும் துதித்திடு நாவலன் தூநலையில் - துறவிகளாயுள்ளோர் 'அனைவரும் போற்றும் தகுதி வாய்ந்த நாவலரின் பிறப்பிடமாம் புனிதமான நல்லைப்பதியில, அறவோர் அருள் என ஆகும் அரிவை அரிவிழிகள் - அத்தன்மையால் மேம்பட்ட அறவோரின் கருணைத் திறம் போன்று அருளைச் செய்யும் இப்பெண்ணின் செவ்வரி படர்ந்த
விழிகள், துறவே துணியாது - பார்த்தலாகிய தொழிலைத் துறக்கத் துணியாதபடி, என்னைத் தகுத்தே - என்னைத் தகை செய்து, துயரோடு களிப்பு உறவே அருளும் - (தன் பார்வையினை என்மீது
செலுத்துதலினால்) துன்பத்தையும் இன்பத்தையும், மாறி மாறி வழங்கும், பிறஉறுப்பு இனி என் பேசுதற்கு - பிற உறுப்புக்களின் செயற்பாடு பற்றி இனி யாது பேசுவது?
தூநலை - தூய்மையுடைய நல்லை, நலை - இடைக்குறை எனத்தடுத்து - என்னைத் தனது பார்வை வளாகத்துக் குள்ளடக்கித் தகுத்தல் - தகைதல் - தடுத்தல் என நினைவை ஸ்தம்பிக்கச் செய்தல். "துயரோடு களிப்பும் உறவே யருளும்” என்பதனை
"இருநோக் கிவளுண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து'என்னும் குறளோடு ஒப்பிட்டோர்க,
2. இயற்கைப் புணர்ச்சி
இரந்து பின்னிற்றற்கெண்ணல்
, இரந்து பின்னிற்றற் கெண்ணல் என்பது தலைவன் தலைவியை இதஞ் சொல்லி இணங்க வைத்தற்கு எண்ணுதல். (பின்னிற்றல் - இதஞ்சொல்லித் தாழ்தல்)

5
5
இலைகா யுறச்சோ றுறமலர்க் கண்ணிர் தளிரெரியு மலைசா மரைவளர் பூகமுற்வரற் கர்ச்சனை செய் தலையே யறுமுகன் போற்கா விரப்புமொ ரேருடைந்து மலையேய் தனத்தர் கரப்பி னவர்பழி மன்னுவரே.
இச்செய்யுள் முற்பகுதி பொழிலிற்கும் நாவலருக்கும் சிலேடை. இலைகாய் உற - இலையும் காயும் தன்னிற் பொருந்த, சோறு உற -
சோற்றையொக்கும் மகரந்தமும் உளதாக மலர்கள்நீர் - மலரும் தேனும், தளிர் எரியும். (எரிதளிரும்) அக்கினிச் சுவாலை போன்ற இளந்தளிரும் அலை சாமரை வண்பூகமுற - அலைகின்ற வெண் சாமரை போலும்
பாளைகளும் பொருந்த அமைந்து விளங்கும் சோலை.
பதவுரை: நாவலர் இலை, காய் - வெற்றிலை, பாக்கு, சோறு - நைவேத்தியம், கண்ணீர் - அன்புக்கண்ணிர், தளிர் - அர்ச்சனைப் பத்திரம், எரி - தீபம், அலைசாமரை - மங்காத நிலத்தாமரை எனப்படும் றோசாப்பூவும், பூகமுற - கமுகாற் செய்த ஒப்பனையும் பொருந்த அமைத்துக் கொண்டு. ஆரற்கு அர்ச்சனை செய்தலை ஏய் ஆறுமுகன் போல்கா - சிவனுக்கு நிகழும் அர்ச்சனை செய்யும் நாவலரை ஒக்கும். சோலையின் கண், இரப்பும் ஓர் ஏர் உடைத்து - இவரை இரப்பதிலும் ஓர் சிறப்புளதாம். மலைஏய் தனத்தர் கரப்பின் - மலையை யொக்குந்
தன்மைகளை உடையராய் இவர் தம் இசைவை எனக்கு மறைப்பாராயின், அவர் பழி மன்னுவர் - அவரே பழியைப் பொருந்துவர்.
(கு.உ) - அலைசாமரை - மலங்காத தாமரை, தாமரை இங்கு நிலத்தாமரை (தலபத்மம்) எனப்படும் றோசா' வின் மேல் நின்றது. நாவலர் புஷ்ப விதிக்கு மாறாகவும் சிவ பூசையில் றோசா மலரைச் சோத்துக் கொள்வர் என்பதோர் செய்தியுண்டு. இனி அலைசாமரை - நீரிற் கிடந்த வசப்படாத தாமரை என றோசாவுக்கான தெனலுமாம். இரப்புமோ ரேருடைத்து ' என்பதைக் கரவாது வந்தியுங் கண்ணன்னார் கண்ணு மிரவாமை கோடியுறும் என்னும் திருக்குறளோடு ஒட்டி உணர்க.
6. மஞ்சேறு சூழ்பொழில் நல்லை யிலாறு முகன்வரையி
லஞ்சேறு சந்தன மாரம் புதைதன மாய்குவமாற் பஞ்சேறு மெல்லடி யாரை யிரந்து பதமறிவ நெஞ்சேறு மீன்கொடி தாழ்க்கு நிரைவளையாரையின்றே.

Page 14
6
பதவுரை: நெஞ்சு - நெஞ்சமே, மஞ்சு ஏறு பொழில் சூழ் நல்லையில் - முகில்கள் படிகின்ற சோலைகள் சூழ்ந்துள்ள நல்லைப் பதியில்,ஆறுமுகன் வரையில் - ஆறுமுகநாவலரது மலையில் மீன் ஏறு கொடி தாழ்க்கும் . நிரைவளையாரை இன்றே - சுறா மீன் அமைந்த கொடியையுடைய மன்மதனையும் வணங்கச் செய்ய வல்ல அழகு பொருந்திய நிரையான வளையல்கள் அணிந்த இம்மாதினை (இரந்து) இன்று (u JITib) அஞ்சேறுசந்தனம் ஆரம் புதைதனம் ஆய்குவம் - அழகிய சந்தனக் கலவை திமிர்ந்து முத்துமாலை புனைந்த அவள் நகில்களைச் சேருவோம், அதன் பொருட்டாக, பஞ்சு ஏறு மெல் அடியாரை இரந்து பதமறிவம் - செம்பஞ்சுக் குழம்பு தீட்டிய மென்மையான பாதங்களையுடைய பெண்ணை இதம்பேசி உள்ளப் பாங்கை அறிவோம். .
(கு.உ) :- ஆரம்புதைதனம் - ஆய்குவமால் என்ற தொடர் முத்துமாலை அணிந்த நகில்களை ஆராய்ந்து சுவைப்போம் எனவும் முத்துக்கள் பொதிந்த திரவியத்தைத் தேடிப்பார்ப்போம் எனவும் இரு பொருள் கொள நின்றது. ஆரம்புதைதனம் - ஆர் அம்பு தை தனம் - LD6)fgs6 TTU மன்மத அம்பு இலக்கு வைத்தற்கு இடமான தனம் என்றுமாம்.
புதைதனம் - வினைத்தொகை சூழ் பொழில் நல்லை - பொழில் சூழ் நல்லை என மாற்றிப் பொருள் கொள்ள நின்றது. ஏறு மீன் கொடி என்பதும் மீன் ஏறு கொடி என மாற்றிப் பொருள் கொள்ளற்பாலது. புதை - சேறிந்த, பதம் - சொல், இங்கு தலைவியின் இசைவு மொழி செவ்வி என்னுமாம்.
இரந்து பின்னிற்றல் தலைவன் தலைவியை இரந்து தாழ்தல்
7. பாரத் தனத்தர்ப் படுமா லகற்றிப் பரமனடி
யாரத் தினம்பணி யாறு முகனல்லை யாம்ெழிலீர் கோரக் கதிர்வடி வாளம்பு வேணிக ராம்விழியெ
னிரத் துரிறப்பாக்கி யிருந்த லியலுவதே.
பதவுரை:
பாரதனத்தர் படும் மால் அகற்றி - கனத்த பயோதரங்களையுடைய
பெண்கள் பால் உள்ள மயக்கத்தை அகற்றியவரும், பரமன்அடி ஆர் தினம் பணி ஆறுமுகன் நல்லையாம் எழிலீர் இறைவனது திருவடிகளை நிறைந்த

அன்போடு நிதமும் வணங்குபவருமாகிய நாவலர் பெருமானை நிகர்த்த நல்லைப் பதி போன்ற அழகு உடையவரே, கோர கதிர் வடிவாள் அம்பு வேல் நிகராம் விழி- கொடுமை மிக்க ஒளி காலுகின்ற கூரார்ந்த வாளையும் அம்பினையும் வேலையும் நிகர்த்த கண்களை ஏவி, ஈரத்து உயர் இறப்பு ஆக்கி இருத்தல் என் இயலுவதே - எனது உள்ளத்தில் இயல்பாக இருந்த குளிர்ச்சியை நினது பார்வை வெப்பத்தால் அதிகம் வரட்சி செய்திருப்பது நுமக்குப் பொருந்துவதாமோ?
(கு.உ): மாலகற்றி - மயக்கத்தை அகற்றியவர் என்ற பொருளில் வந்த வினைப் பெயர்த்த கருத்தாப் பொருள் - விகுதி இவ்வாறு கொண்டு அகற்றியவரும் வணங்குபவரும் என உம்மை வருவித்து உரைக்கப்ப்ட்டது. இப்பொருள் கொள்நோக்கில் பகரவொற்று மிக்கது. வேண்டாவழி விகாரமாயமையும். அன்றி பெண்கள் பாலுறும் மாலகற்றிச் சிவனை வணங்குபவர் எனப்பொருள் கொள்ளிற் பகரமிகுதி வேண்டுவழி விகாரமாம். ஈரத்துயரிறப்பாக்கி - ஈரத்து + உயர் + இறப்பாக்கி ஈரத்தை அதிகம் வாட்டி, வாட்டத்தை மிகுதியாக்கி எனப் பொருள்கொள்க. மாலகற்றியின் (நாவலரின்) நல்லை யொப்பீர் என்று என்பால் மயலகற்றா திருப்பதென்னை என்ற குறிப்புத் தோன்ற நிற்றல் காண்க.
8. சிவனார் மதம்புரப் போரைப் பெறாது தினநடுங்கத்
தவலா வளிகொடு தாங்கிய நாவலன் றண்சிலம்பிற் கவலா வரற்ற வவாவா மரக்கர் கடிதலொழி சுவலார் திரிசடை யாம்பே ரதுவுனைத் துன்னியதே.
- %
பதவுரை:- சிவனார் மதம் புரப்போரை பெறாது தினம் நடுங்க - சிவபிரானது சமயத்தைப் பேணி வளர்க்கத் தக்கோரிலையே எனச் சான்றோர் நிதமும் வருந்துதல் கண்டு, தவலாஅளி கொடு தாங்கியகுறைவில்லாத கருணையொடு புரந்த, நாவலன் தண்சிலம்பில் - நாவலரது குளிர்ச்சி பொருந்திய மலையிடத்தில், கவலா அரற்ற அவாவாம் அரக்கர் கடிதல் ஒழி கவலை கொண்டு துன்பப்படும்படியாக (என்னை வருத்துகின்ற) ஆசையென்னும் அரக்கர் என்னைக் கடிவதை நீக்குவ்ாய், சுவல் ஆர் திரிசடையாம் பேர் அது உனைத் துன்னியது - தோளில் புரளுமாறு முப்புரியாக முறுக்கிவிடப்பட்ட கூந்தலை உடையாய், ஆதலால் திரிசடை என்னும் பெய்ர் உன்னைப் பொருந்தியது.
(கு.உ)- மேல் அவள் பால் எழும் அவரிவை அரக்கர் என்பமைக்கேற்ப அவளைத் திரிசடை என் உருவகித்தார். இனிச் சுவலார் திரிசடை என்றதனால் அவளுக்கு அப்பெயர் இயல்புவகையானும், பொருத்தமாறு அறியப்படும்.

Page 15
s زار
எங்ஙனம்? சுவல் தோள், திரிசடை - முப்புரியாக முறுக்கிவிடப்பட்ட கூந்தல் - தோளில் புரளுமாறு முப்புரியாக முறுக்கிப் பின்னிய கூந்தல் எனப் பொருள் தோற்றுதலினால் என்க.
திரிசடை - விபீஷணன் மகள், இராவணனால் சிறைவைக்கப்பட்ட சீதைக்கு அரக்கரால் நேரும் கொடுமைக்கு எதிர் இதம் அளிப்பவளாய் இருந்தாள் என்பது வரலாறு.
இவ்வரலாற்று உண்மை கவிகோளுக்கு ஊட்டமளித்து நிற்கும் நயம் காண்க. எங்ங்ணம்? என்னை வாட்டுபவர் அரக்கர், நீ திரிசடை, ஆம் வகையில் அவ்வரக்கர் கொடுமையிலிருந்து சீதைக்கு ஆறுதல் அளித்த அத்திரிசடை போல, காம வேட்கையாகிய இவ்வரக்கன் கொடுமைக்கெதிர் எனக்கு ஆறதலளிப்பது உனக்குப் பொருந்தும் எனக் குறிப்பாற் கொள்ள வைத்துள்ளமையின் என்க.
p
முன்னிலையாக்கல்
(முன்னிலையாக்கல் என்பது தலைவன், தலைமகளைத் தனது கருமத்துக்கு முதனிலையாக்கிக் கூறுதல் தனது விருப்ப ஈடேற்றமாகிய காரியத்துக்குத் தலைவியைக் காரணமாக்கிக் கூறுதல் முன்னிலை யெனினும் முதனிலையென்னும் காரணமெனினும் ஒக்கும்.)
9. முத்தலை வேலன் மகனார் பதம்பணி நாவலனா
ரித்தலை நல்லை யுனது குழற்பகை யென்முகில்வின்ை டத்தளித் தேநீர் சிதறி யலறத் தளைப்புகுத்த வித்தகப் பாவாய் விய்ன்றகு காவிகின் மேவலெனே.
பதவுரை: முத்தலை வேலன் மகனார் பதம்பணி - மூன்று தலை பொருந்திய சூலப்படையைத் தாங்கிய சிவபிரானது மகனாம் ஆறுமுகப் பெருமானைப் பணிபு:மியல்புடைய, நாவலனார் இத்தலை நல்லை - நாவலர் பிரானுக்குரிய இவ்விடமாகிய நல்லைப் பதியில், உனது குழல்பகைஎன் - உனது கூந்தலின் கையென்று சொல்லத் தகுந்த, முகில் விண் தத்தளித்து - மேகம் ஆகாயத்தில் தத்தளித்து, நீ சிதறிஅலற தளை புகுத்த - (க3) ீர் சிதறி இரங்கும் படியாகச் சிறையிலிட்டு வைத்த, வித்தக பாiைt 8:துரியமுடைய பாவை போன்ற அழகிய பெண்ணே, வியன்தகு கா இதில் வேல் என் - வியப்பும் தகுதிப்பாடுமுடைய இந்தச் சோலையில் நிற்பதன் காரணம் என்னவோ? - ' ' தலை - இடம், இத்தலை - இவ்விடம், என் - என்னும் என்பதன் கடைக்குறை, தளை - சிறை, ஆகாயம் அளாவிய சோலையில் வந்து

9
படிந்திருக்கும் முகில்களைக் கூந்தலுக்குப் பகையாந் தன்மையால் தலைவி அவற்றைச் சோலையிற் சிறையிட்டு வைத்ததாகக் கூறியதும் தற்குறிப்பேற்றம்.
வண்டோச்சி மருங்கனைதல்
(வன்ைடோச்சி மருங்கணைதல் என்பது, தலைமகன் தலைமகளின் கூந்தலில் வண்டு இருப்பதைக் கண்டு அதை ஒட்டுவான் போலப் பாசாங்கு பண்ணி அருகணைதல், அவள் மெய் தொட்டுப் பழகுதல் இதன் குறிப்பாம்.சில கோவைகளில் இத்துறை மெய்தொட்டுப் பழகுதல் என்றே வழங்கும்)
10. பிறப்பறு மெய்ந்நெறி கண்டா னறுமுகன் பேணகுலச்
சிறப்புறு மோங்க லளிகாள் னடுவறச் சேர்ந்திரிவள் கறுத்தொளி கூருமற் றாரணி யாள்செயல் கண்ணிலிரோ வெறுத்துந லார்பழி மேவுகள் ஞடைமர் வீரறிவே
பதவுரை: பிறப்பது மெய்ந்நெறி கண்டான் - பிறப்பினை நீக்குவதற்கு ஏதுவாகிய மெய்யான மார்க்கத்தைக் கண்டவராகிய, அறுமுகன் பேண்நகுல சிறப்புறும் ஓங்கல் அளிகாள் - ஆறுமுகநாவலர்பிரான் போற்றுகின்ற பெருமை மிக்க கீரிமலையென்னும் சிறப்பு வாய்ந்த மலையில் விளங்கும் வண்டுகளே, நடுஅற சேர்ந்தீர் - இவள் இடைமுரியும் படியாக (கூந்தலில்) பொருந்தியிருக்கின்றீர், இவள் கறுத்து ஒளி கூரும் அல் தார் அணியாள் - இவள் கரிய பிரகாசம் பொருந்திய இருளை யொத்த கூந்தலில் மாலை கூட அணியாதிருக்கிறாள். செயல் கண் இலிரோ - அத்தன்மையைப் பார்க்கத் தானும் உமக்குக் கண்ணில்லையோ? ந(ல்) லார் வெறுத்து பழி மேவு கள் உண்டு அமர்வீர் அறிவு ஏ - சான்றோர்கள் வெறுத்து ஒதுக்குகின்ற பழிபொருந்திய கள்ளை உவந்து உண்டு இருக்கின்றீர்களாகிய உங்கள் அறிவு இருந்தவாறு ஏன்?
(கு.உ) நகுலச் சிறப்புறு மோங்கல் - கீரிமலை (ஓங்கல் - மலை) - நடுவற - செம்மொழிச் சிலேடை- நடு - இடை, நீதிஅற - முறிய, திறம்ப, நீவிர் இருப்பதனால் ஏற்படும் பாரத்தினால், இடை முறியும் என்ற பரிவு நியாயத்தை நோக்காமல் கூந்தலைச் சேர்ந்தீர் என்பதும் சிலேடை வகையால் தோன்றக் கூறினான். இடை பாரம் பொறாது என்பது கருதியே இவர் மாலையணியா தொழிந்தாள் என்பதையும் நீவிர் சிந்தித்தீரல்லீர் என இப்படியெல்லாம் வண்டினிடம் கூறியவாறே அதனை விரட்டுவான் போன்று தலைமகன் தலை மகளின் கூந்தலைத் தீண்டுவதில் மகிழ்ச்சி கண்டான் 6Í6ûዘö£.
அல் - கூந்தல் - உவமையாகுபெயர்,

Page 16
10
இதுவுமது
11. ஓதி யிருப்பவர் நூலை யழியா ருயருமைம்பாற்
றிதி யலாவகத் தேபடிந் தார்நடுப் பாலறிவார் நீதி நிலைநா வலுனு ரளிகூழை நீர்நசைஇப் பீதி யுறுகுழை கொம்பொடிப் பீர்மதுப் பெய்மயக்கே.
பதவுரை: ஓதி இருப்பவர் நூலை அழியார் - கூந்தலில் மேவியிருக்க வேண்டுவோர் நூல் போன்ற இடையினை அழித்தல் செய்யார் (சான்றோராயின் அழித்தலைச் செய்யார் என்றபடி) ஐம்பால் தீது இயலா அகத்தே படிந்தார் நடுபால் அறிவார் - ஐந்து வகையாக முடிக்கப்படும் கூந்தலினையுடைய மகளிரது இன்ப ஒழுக்கத்தில் படிந்தவர் நடுவில் உளதாகிய இடையின் இயல்பை உணர்வர், நீதிநிலை நாவலன் ஊர் அளி - (அங்ங்னமாகவும்) சைவ நீதிபேணும் நிலையினராகிய நாவலர்தம் ஊரில் வாழும் வண்டுகளே, நீர் கூழை நசைஇ - நீங்கள் கூந்தலை விரும்பி அமர்ந்து, பீதி உறு குழைகொம்பு
ஒடிப்பீர் - தன்னைத் தரிப்பதனால் இடை முரிந்து விடுமோ என்று அஞ்சிய வண்ணம் இருக்கின்ற குழையென்னும் காதணியை அணிந்த பூங்கொம்பர் போலும் தலைவியினுடைய இடையை ஒடிப்பது போல வருந்து கின்றீர் , மது பெய் மயக்கே - இவ்வாறு நீர் செய்வது தேனாகிய மதுவையுண்ட மயக்த்தினாற் போலும் இனிப் பிறிதொருபொருள் ஒதிஇருப்பவர் நூலை - அழியார் - படிக்கின்ற நியமம் உடையவர்கள் தமது அறிவுக்கேதுவாக உள்ள புத்தகங்களை அழிக்கமாட்டார். ஐம்பால் - அறிவார் ஐந்து வகையான திணையியல்பு கூறும் அகப்பொருள், நூற்பயிற்சியுடையவர்கள் நடுவனுளதாகிய பாலைத்திணையின் இயல்பை அறிவார்கள். கூழைநீர் நசைஇ - கூழாகிய உணவை விரும்பி, பீதியுறு குழைக் கொம் பொடிப்பர் - கூழில் இடுவதற்குரிய பிரியகரமான இலைக் கறியைப் பெறுதற் பொருட்டுக் கொம்பினை முறிப்பர். இப் பொருளில் பீதி பிரீதியின் மரூஉ, இவ்விருபொருள் நிலைக்கும் ஒப்பச் சொற்களின் சிலேடைஅமைதி.
(கு.உ);~ ஒதி - கூந்தல், படித்து, நூலை - நூல் போன்ற இடையினை, புத்தகத்தை, ஐம்பால் - கூந்தல், ஐந்திணை, அகம் , இன்பவொழுக்கம், அகப்பொருள் நூல், கூழை - கூந்தல், கூழ் என்னும் உணவை, பீதி - அச்சம், பிரியம் (பிரீதி) நசைஇ - விரும்பி, குழை - காதணி, இலை, கொம்பு - பூங்கொம்பு போன்ற பெண் (உவமையாகு பெயர்)கிளை, ஐம்பால் - கூந்தலையுடைய பெண் என்ற பொருளில் அன்மொழித்தொகை பீதியுற்றுக் குறைகின்ற கொம்பு எனலுமாம். இப் பொருளில் உறு இடைக்குறையாகக் கொள்ளப்படும்.

மெய் தொட்டுப் பயிறல்
(மெய் தொட்டுப் பயிறல் என்பது வண்டை ஒட்டுவது போல நெருங்கிய தலைமகன், வண்டு விரட்டுகையில் கைபட்டதுபோலாம் பரிசில் தலைவியின் மெய்யைத் தீண்டுதல். மெய் என்று பொதுப்படக் கூறப்பட்ட தேனும், தலைவன் தலைவியின் தோளையே தீண்டினான் என்க.) அது அங்ங்னமாதல்.
உறுதோ றுயிர்தளிர்ப்பத் திண்டலாற் பேதைக் கமிழ்தி னியன்றன தோள்” என்னும் குறளினால் உணரப்படும்.
12. நற்றமி ழுந்தமிழ் நாடதும் புத்துயிர் நண்ணியெழ வற்றமி லாதுழை யாறு முகனல்லை யன்னவிவர் பொற்றளிர்க் கையுந் திருவடி யுந்தொடு பொங்குமகிழ் வற்றிட முற்றவம் பற்பல செய்தன னோவுழந்தே.
பதவுரை:- நற்றமிழும் தமிழ் நாடதும் புத்துயிர் நண்ணியெழ- சிறப்புடைய தமிழும் தமிழ் பயிலும் நாடும் புத்துயிர் பெற்று உயர்ந்தோங்கும் வண்ணம், அற்றம் இல" உழை ஆறுமுகன் நல்லை அன்ன இவர் - சோர்விலாது சேன்வ புரிந்த ஆறுமுகநாவலரின் நல்லூரை ஒத்த பெருமை வாய்ந்த இம்மாதரசியின், பொன்தளிர் கையும் திருவடியும் தொடு பொங்கு மகிழ்வு உற்றிட - பொன்னிறமும் அழகிய தளிர் போலும் தன்மையுள்ள கையினையும் பாதங்களையும் தொட்டுப் பழகுவதனால் பிரவாகிக்கும் மகிழ்ச்சியை யானடைவதற்கு ஏதுவாக, முன் தவம் பற்பல உழந்து செய்தனனோ முன்னைய பல பிறவிகளில் அரிய தவத்தினை வருந்திச் செய்துள்ளேன் போலும். அற்றம் - சோர்வு.
பொய் பாராட்டல்
(பொய் பாராட்டல் என்பது தலைமகன் தலைமகளிடத்து உள்ளதும் இல்லதுமாகிய பண்புகள்ைச் சொல்லிப் பாராட்டல்)
13. ஏழைக் கனைதா னெனப்புக லாறு முகனலைவா யாழைக் கடல்விழி மாதே உனதிடை யென்றுகரி கோழைத் தனத்தா லரிவா யகப்படுங் கோடுசங்கு மாழைக் கழுத்தாற் கடல்வீழ்ந் துயிர்விட வாய்விடுமே.

Page 17
12
பதவுரை; ஏழைக்கு அனைதான் என புகல் ஆறுமுகன் நலைவாய் - ஏழைகளுக்கு அன்னையைப் போன்று கருணை செய்கின்ற ஆறுமுக நாவலரது இடமாகிய நல்லைப் பதியில் விளங்கும், ஆழைக்கடல் விழிமாதே - ஆழாகிய கடல் போன்ற அழகிய கண்ணையுடைய பெண்ணே, உனது இடை என்று கரிகோழை தனத்தால் அரிவாய் அகப்படும் - உனது இடையைச் சிங்கமென்று கருதி அச்சமுற்று விலகிய யானை சிங்கத்தை மேல் உனது இடைப்ெபன்னும் ழயக்கத்தால் அணுகி அண்டி அதனிடத்து அகப்பட்டுக்கொள்ளும், கோடு சங்கு மாழை கழுத்தால் கடல் வீழ்ந்து உயிர்விட வாய்விடும் - வளைவுடைய சங்கானது, பொன்மயமாகிய உனது கழுத்தின் வனப்புக்கு ஆற்றாது கடலில் வீழ்ந்து உயிர் விடக் கருதி வாய்விட்டலறும்.
(கு.உ): 1ம் அடி - நலை - நல்லை என்பதன் இடைக்குறை 2ம் அடி - ஆழ் ஐ கடல் - ஆழமாகிய சிறந்த கடல். ஐசாரியை எனலுமாம். கோழைத்தனம் என்றதில் கோழைமை அறிவின் மேற்று. சிங்கத்தை இடையென அணுகிற்றென்பது மயக்கவணி.
இடம்பெற்றுத்தழாஅல்
(இடம் பெற்றுத் தழாஅல் (தழுவல்) என்பது தலைவியைத் தழுவுவதற்கு உகந்த இடத்தைக் குறித்துத் தலைவன் தன் விருப்பத்தைக் கூறுதல். தலைவன் தன் விருப்பத்தைத் தலைவியிடம் கூறினான் என்று கொள்ளாது தன் நெஞ்சினுட் கூறினான் என்று கொள்வதே பொருத்தமாம்)
14. கோடால் விளக்குங் கொடித் தோரணமுங் குவிமணப்பூ வேடார் நிழற்பள்ளி யுண்டா லிதுவிட மேவினவர் கோடா மணமது கொண்டிட நாவலன் கோதினல்லை வாடா மலர்முக மாதவி நீமிகு வாட்டகற்றே.
பதவுரை:- கோடால் விளக்கும் கொடி தோரணமும் - வெண் காந்தள் மலர் விளக்கும் கொடிகளால் இயன்ற தோரணமும், குவி மணப்பூ - கொத்தாக அமைந்தபூ ஏடார் நிழற் பள்ளி உண்டு - இதழ்களாலான படுக்கையும் இங்கு உண்டு ஆதலினால், அவர் மேவின் - தலைவி இங்கு வருவாரெனில், கோடா மணமது கொண்டிட இது இடம் - குற்றமற்ற மனம் புணர்தற்கு இதுவே உகங்க இடமாகும்,

13
நாவலன் கோதில் நல்லை வாடாமலர் முகமாதவி - நாவலர் பெருமானின் நல்லையிலுள்ள பொழில் வாய் விளங்கும் குருக்கத்திக் கொடியே , நீ மிகு வாட்டு அகற்று - தலைவி என்னோடு இணைதற்கு வழி வகுத்து எனது அதிகரித்த வாட்டத்தை நீக்குவாயாக.
(கு.உ)- கோடால் - கோடல் (விகாரம்) - காந்தள்மலர் மேவினவர் என்பதனை அவர் மேவின் என மாற்றுக
வழிபாடு மறுத்தல்
(வழிபாடு மறுத்தல் என்பது இரந்து பின்னிற்றல் முதல் பொய் பாராட்டல் வரை தலைவன் செய்த வழிபாட்டினைத் தலைவி ஏற்க மறுத்தல்)
15. முல்லைக் கொடியளி நாணுறு கின்றனை பொய்குழலார்
முல்லைக் கணியார் முறைநா ணடைத்து முறைதிறம்பார் நல்லைக் கருணைக் கடனா வலன்வரை நண்ணுமெனை முல்லைக் கொடிநா னறாவகை காத்திட மூடுவையே.
பதவுரை:- முல்லைக்கொடி - முல்லைக் கொடியே, அளிநாண் உறுகின்றனை - எளிமையாக நாணுற்று ஒதுங்குகின்றனை, முல்லைக்கு அணியார் மெய்குழலார் முறை நாண் அடைத்து முறை திறம்பார் முல்லை மாலையணிந்த நெருங்கிய கூந்தலை D –60)L-J மகளிர் நான் உடையவராகித் தமது நிறையிலிருந்து வழுவமாட்டார், நல்லைக் கருணை கடல் நாவலன் வரை நண்ணும் எனை - நல்லையிலுள்ள கருணைக் கடலாகிய நாவலனது மலையின் கண் உள்ள என்னை, முல்லைக் கொடி - முல்லைக் கொடியே, நாண்அறாவகை காத்திட மூடுவை - அவரின் வலியுறுத்தலுக்கு ஆளாகி நான் எனது நாணத்தை இழக்காத வண்ணம் பாதுகாத்து உன்னிடம் மறைத்து வைப்பாய்.
விளக்கம்: 'முல்லைக்கொடி’ என இரு முறைவிளித்தது ஆதரம் தோன்றற் பொருட்டு, மருட்கை வயத்தால் எனினுமாம் அளி நாணுறுகின்றனை என்றது என் நாணங் காக்கும் தகுதியுளாய் என்ற குறிப்பெனல் சாலும், கொடி தன் இயல்பால் அசைந்தொதுங்குதல் நாணுற்று ஒதுங்குதலைச் சமர்த்தித்தமை தற்குறிப்பேற்றம், நாணுறுகின்றனை என்பதைப் படுத்தலோசையால் கூறி நாணுறுகின்றனை போதும் என்றான் எனலுமாம். ஒலிவேறுபடுத்தும் பொருள் வேறுபாடு காணும் நயம் இதுவாகும்.

Page 18
14
இடையூறு கிளத்தல்
(இடையூறு கிளத்தல் என்பது தலைவி நாணிக் கண் புதைத்தலால் எழுந்த துன்பத்தைச் சொல்லுதல்)
16. நாவல னாம்பே ரதுயோக ருடி நலமுடையான் பாவலர் மெச்சு மறுமுக னற்பதிப் பாலுறைவீர் தூவலர் காந்தள் குறிஞ்சி துறந்து துணுக்குறுத்து மேவலர் வென்ற கடலை யடைதலென் னேவியப்பே,
பதவுரை:- நாவலனாம் பேரது யோக ருடி நலமுடையான் - நாவலன் என்னும் பெயரைக் காரண இடுகுறியாகக் கொண்ட நல்லியல்புடையவரும், பாவலர் மெச்சும் அறுமுகன் நல்பதிபால் உறைவீர் - புலவர்கள் போற்றும் மேன்மையுடைய வருமாகிய ஆறுமுகநாவலரின் சிறப்புடைய ஊரில் வதிபவரே, தூ அலர் காந்தள் - தூய்மை வாய்ந்த காந்தள் மலர் போலும் கையானது, குறிஞ்சி துறந்து - குறிஞ்சி நிலத்துக்குரித்தாகிய மலையை நிகர்த்த மார்பினை ஒழித்து, துணுக்குறுத்தும் - அச்சத்தினை விளைவிக்கும், ஏஅலர் வென்ற கடலை அடைதல் - அம்பாகிய மலரை வென்ற கடல் போலும் கண்ணைப் பொருந்தியமை, என்னே வியப்பு - என்ன வியப்பாகும்.
காந்தள் மலர் தனக்குரியதாகிய குறிஞ்சி நிலத்தை விட்டு நீங்கி கடல் சார்ந்த நெய்தல் நிலத்தைச் சார்ந்தது வியப்பாகும் எனப் பிறிதொருதொனிப் பொருள் தோன்ற நின்றமையுங் காண்க. காந்தள் உவமை ஆகுபெயராய் கையை உணர்த்துகிறது. ஏ அலர் வென்ற கடல் என்பதற்கு அம்பாகிய மலரினை வென்றதும் கடல் போன்றதுமான கண் எனவும் அம்பையும் மலரையும் வென்றதும் கடல் போன்றதுமான கண் எனவும் பொருள் கொள்ளலாம். அம்பு எவ்வாறு அலராகும் எனின் மன்மதனின் பாணங்களுள் நீலோற்பலமும் ஒன்றாதலில் என்க.
இதுவுமது
7. ஆனை யிருக்க வரியு மிருக்க வடவிதிரி
வானை விடஞ்சே ரவ மறைந்தே யிருக்கமலை மானை யசத்தைப் புணர்தே மதநா வலனலையீர் மீனை யெடுத்தது சாறுவைத் தேயெனை மீட்கவன்றே.

15
பதவுரை:~ ஆனை இருக்க - மதயானை யொத்த மார்பகம் இருக்கவும், அரியும் இருக்க - சிங்கத்தின் உடல் போன்ற இடை வெளிப்பட்டிருக்கவும், அடவி திரி வால் நை விடம் சேர் அரவம் மறைந்தே இருக்க - காட்டில் சஞ்சரிக்கும் இயல்புடையதும் கரிய நஞ்சையுடையதுமான பாம்புப்படம் போன்ற அல்குல் மறைந்து இருப்பவும், மலைமானை அசத்தை புணர்தே மத நாவலன் நலையீர் - ഥങ്ങബ്ഥ6ബ്രഥ LDIT66 போலும் கண்ணுடையவளுமாகிய உமையம்மையையும் ஆட்டினையும் பொருந்தி யிருக்கப் பெற்றவருமாகிய இறைவனது சமயத்தினைப் பேணும் நாவலர் நல்லைப் பதியீர், மீனை எடுத்தது - மீன் போன்ற கண்ணை மேற் கொண்டிருப்பது, சாறு வைத்து எனை மீட்கவன்று - காம விழா நடத்தி எனது உயிர் பிரியா வண்ணம் என்னை மீட்டுக் கொள்வதற்குப் போலும்,
(கு.உ):- வால் நை விடம் - கரிய விடம், வால் -வெண்மை, நைந்தவிடம் என்கையில் நைதல் இன்மை மேற்றாய் வெண்மையில்லாதது கருமை என்று பொருள்தரும். சுமஸ்கிருதத்தில் அசிதம் (கருமை) என்பது போல, யானை, சிங்கம், பாம்பு ஆகியவை இருப்ப அவற்றைத் தவிர்த்து மீனை எடுத்தது எனப் பிறிதோர் தொனிப் பொருள் விளங்குதலும் காண்க. ஆனை, அரி, அரவம் என்பன முறையே தனம், இடை, அல்குல் என்பவற்றை உவமையால் உணர்த்தி நின்றன. அசத்தைப் புணர் தே என்பது ஆட்டைச் சேர்ந்த இறைவன் என்ற பொருள் பயந்து நின்றது. அசம் - ஆடு - இங்கே ஆட்டுக் கூத்து என்ற பொருளில் வழங்கப் பெற்றுள்ளது.
இதுவுமது
18. முன்னவர் பார்ப்ப ரவர்மணியத்த முழுதுறவும்
பின்னர் தனத்தர் வெளியே திரிவது பேருலக மன்ன வரோதய னாறு முகனார் மணிவரையி லென்ன புதுமை யியம்பு நலையனை யேந்திழையே.
பதவுரை:- முன்னவர் பார்ப்பவர் அவர் மணிஅத்தம் முழுதுஉறவும் - முன்னரே உள்ளனவாகிய கண்களை மணிக்கடக மணிந்த கைகள் முழுமையாகப் பொருந்தி மூடியிருக்கவும், பின்னர் தனத்தர் வெளியே திரிவது - பின்னெழுந்தனவாகிய நகில்கள் வெளிப்பாடாக விளங்குவது, பேருலகம் அன்ன வரோதயன் ஆறுமுகனார்

Page 19
16
மணிவரையில் - பெரிய உலகினரிடையே நிலை பெறும்படியான புகழ் படைத்த விரோதயனாகிய ஆறுமுகனாரது சிறப்புடைய மலையில், என்ன புதுமை - எத்தகையதோர் வியப்பாகும், நலை அனை ஏந்திழையே இயம்பு - நல்லை நகரை நிகர்த்த சிறப்பினையுடைய ஏந்திய ஆபரணமுடைய மாதே (அதனைச்) சொல்வாயாக,
(குரை): முன் தோன்றியனவாகிய கண்கள் கைகளால் மறைப்புண்டிருக்கப் பின் தோன்றியனவாகிய நகில்கள் வெளிப்பட்டிருக்கும் வியப்பு என்னே என்றவாறு. இனி முன்னிலையினராகிய பார்ப்பனர் மணி முதலாகிய பொருளைக் கொண்டிருக்க பின்னிலைப் Littlé y Téu வைசியர் பொருளின்றி வெளியே திரிவது பெருவியப்பே என்று பிறிதொரு பொருளையும் முதலீரடிகள் கொண்டு விளங்குதலைக் காணலாம். பார்ப்பார் - பார்க்கின்ற கண்கள், பார்ப்பனர், மணியத்தம் - மணிக கடக மணிந்த கை, தனத்தர் - நகில்கள், வைசியர் பொன்னும். அத்தம் - கை, பொன்.
நீடு நினைந்திரங்கல்
(நீடு நினைந்திரங்கல் என்பது,துன்பத்தை நெடிது நேரம் நினைந்து இரக்கம்
கொள்ளுதல்)
19. ஒன்றிரன் டல்லன வேவிடுத் தான வுயர்கரும்பன்
கன்றினன் மேல்விடு மாயி கைன்றிடுங் காணுயிரே பொன்றிகழ் மாதர் மூலைமலை யேறிப் பொருகடல்வா யென்றுகொ லாட லெழினலை நாவல னேர்ப்பொழிற்கே.
பதவுரை:- ஒன்றிரண்டு அல்லன ஏ - முல்லை, நீலம் அல்லனவாகிய அம்புகளை, அவ் உயர் கரும்பன் விடுத்தான் - அந்த உயர்ச்சி பொருந்திய கரும்பு வில்லையுடைய மன்மதன் ஏவினான். கன்றினன் மேல் விடும் ஆயின் - அவன் கோபமுடையவனாகி முல்லை, நிலங்களான அம்மலர்ப் பாணங்களை ஏவுவானாயின், உயிர் அகன்றிடும் காண் - எனது அரிய உயிர் நீங்கி விடும் காண்பாயாக. (அவ்வாறு உயிர் நீங்காதிருப்பதற்கு) எழில் நல்லை நாவலன் ஏர் பொழிற்கு - அழகு நலம் பொருந்திய நல்லை நகர் நாவலரின் சிறப்பு வாய்ந்த சோலையில், பொன்திகழ் மாதர் மூலை மலைஏறி -- சுணங் குழுத்த அழகிய முலைக் குவட்டின் மேல் ஏறி பொருகடல் வாய் ஆடல் என்று கொல் - அலை மோதுகின்ற காமக் (இன்பக்கலவி) கடலில் திளைக்கும் நாள் என்று வருமோ?

17
மன்மத பாணங்களில் முல்லையும் நீலமும் பிராணாபத்து விளைப்பன. இன்னும் அவன் அவற்றை ஏவிற்றிலன். அத்தனைக்கு ஆதிட்டமுடையயேன் என்பது குறிப்பு
ஏ - அம்பு, ஒன்று இரண்டல்லன என்பது மன்மதன் முல்லை முதலாய பாணங்களை மிகுதியாகச் சொரிகின்றான் என்றதுமாம். இனி வெளிப்பட்ட வெம்முலையும் (கரங்களால்) மறைவுற்ற கண்களும் ஏலவே வருத்தம் செய்துள்ளன. இவற்றோடு முல்லை.நீலம்ஆகிய கடும் பாணங்களும் ஏவப்படின் உயிர் தரிக்கு மாறில்லை என்றான் எனலுமாம்.
மறுத்தெதிர்க் கோடல்
(மறுத் தெதிர் கோடல் என்பது முன்வழிபாடு மறுத்தமைக்கு எதிர் தலைவன் கூறிய சொல்லை ஏற்றுக் கொள்ளல்.)
20) உற்றிடு மேழேழ் பிறப்புந் தொடரு முழுவலன்பர்
பற்றதை நாநெஞ்சு மேவெலெவ் வாறு பகைமதமா விற்று மடியச் சிவபத தாபன சைனடி குற்று மலர்பூ சனைபுரி நாவலன் குன்றினிலே
பதவுரை: - நெஞ்சம் - மனமே, பகை மதமா இற்று மடிய - பகைமை ப்ொருந்திய புற மதங்களாகிய யானைகள் வழுவற்று அழிந்து ஒழியுமாறு, சிவமத தாபனன் - சிவமதப்பொருளைத் தாபனம் செய்தவரும், ஈசன் அடி மலர்குற்று பூசனைபுரி ஈசன் திருவடிகளை மலர் கொய்து இட்டு வழிபடுகின்றவருமாகிய, நாவலர் குன்றினில் - நாவலர் பெருமானது மலையிடத்து, உற்றிடும் ஏழ் ஏழ் பிறப்புந் தொடரும் உழுவல் அன்பர் பற்றதை - ஏழேழ் பிறப்புக்களிலும் தொடர்ந்து பழைய அன்பினை உடையவரது உறவினை, நாம் ஏலல் எவ்வாறு - நாம் ஏலாமை எங்ங்ணம் சாத்தியமாகும்?
( கு.உ )- முதனிலைத் தொழிற் பெயராகிய (ஏல்) ஏற்றல் அல எனும் எதிர்மறை விகுதி புணர்ந்து ஏலாமை ஆயிற்று என்க. நெஞ்சம் - அண்மைவிளி, மலர் குற்றுப் பூசனை புரி என மாற்றிக் கூட்டுக. குறுதல் - கொய்தல், குற்றும் மலர் - கொய்யும் மலர் ஆய்மலர் என்றாற் போல.

Page 20
8
இதுவுமது
21 நாணிறை கொண்டிவர் காமக் கடலதை நாமடைத்தல்
சேணிறை திங்களைக் கையான் மறைப்பவர்
செய்கைரெ"க்கும் காணறை யைய ரெனும்பட்டம் வர்ணங் கருதியcதன் mேணற நாட்டிய நாவல வேந்த னெழினலைக்கே.
பதவுரை: அறை ஐயர் எனும் பட்டம் வர்ணம் கருதிய என்று ஏண் அற நாட்டிய - உலகம் அறைகின்ற ஐயர் என்னும் பட்டம் வருணம் பற்றி வந்ததென (எதிரிகளின்) இறுமாப்பு அற நிலைநிறுத்திய, நாவல ஏந்தல் எழில் நலைக்கே - நாவலராகிய சைவவேந்தரின் அழகு பொருந்திய நல்லையிடத்தே, நாண்நிறை கொண்டு இவர் காம கடலதை நாம் அடைத்தல் - நாணமாகிய நிறையினைக் கொண்டு மேலோங்கும் காமக் கடலாகிய வேட்கைப் பெருக்கை நாம் தடைசெய்ய முயலுதல், சேண்நிறை திங்களை கையால் மறைப்பவர் செய்கை யொக்கும் காண் - ஆகாயத்தில் நிறைந்து ஒளிரும் சந்திரனைக் கையினால் மறைக்க மு:பல்பவர் செயலை ஒக்கும் என்பதை (நெஞ்சமே) கண்டு கொள்வாய்.
(கு.உ) ஐயர் என்னும் பட்டம் வருணம் பற்றி வந்தது என எதிரிகளின் இறுமாப்பு அறநாட்டிய செய்தியினைக் குமாரநாயகன் அலங்காரம் பற்றி இலங்கை நேசன் தொகுதி இல. 5இல் வந்த கட்டுரையிற் காண்க.
வறிது நகை தோற்றல்
வறிது நகை தோற்றல் என்பது தலைவி முகத்தில் சிறுநகை புலப்படுதல். இது எவ்வாறு நிகழுமெனில் தலைவன் முன் நாணுடையளாயினும் உடன்பட்டு மகிழ்ச்சியால் முகமலர்ந்து அம்மலர்ச்சிக் குறிப்பினால் நகைபுலப்படுத்தியவாறு.
22. கலியிருள், பாவு பொழுது கனையிருள் காயுதய
மலிகதி ரோன்போல் வருநா வலவன் வரையணங்கு நலியுள முள்ளேன். துயரது நீங்க நகைநிலவார் கலியுதித் தொன்று கமல மொடுங்கவுங் காட்டியதே.

19
பதவுரை:- கலிஇருள் பாவுபொழுது - அறியாமை, வறுமை, அந்நியர் கொடுமை ஆகிய இருள் பரவுகின்ற காலத்தில், கனை இருள் காய் உதயம் மலிகதிரோன் போல் - செறிந்திருக்கும் இருள் கடிய உதயமாகும் ஒளிக்கதிர்கள் நிறையப் பொருந்திய சூரியனைப் போன்று, வரு நாவலவன் வரை அணங்கு - தோன்றிய நாவலரது மலையகத்து இம்மங்கை நல்லாள், நலிஉளம் உள்ளேன். துயரது நீங்க - வருந்துகின்ற நெஞ்சத்தை உடையேனது துயர் நீங்கும் வண்ணமாக, நகைநிலவு - நகையாகிய நிலவினை (வெளிப்படுத்தி), ஆர்கலிஉதித்து ஒன்று கமலம் ஒடுங்கவும் காட்டியது - கடவினிடத்துத் தோன்றி ஒப்பற்ற தாமரை ஒடுங்கியவாறு காட்டினாள். அதாவது தாமரை மலர் போன்ற வாயினைக் கோட்டி f56,orf என்னை வெதுப்பிய வாறிருந்த விரக்தியின் வெப்பகற்றுகின்றது.
முயங்குதலுறுத்தல்
தலைவி முயங்குதற்கு இசைவுற்று அருமையை வலியுறுத்திக் கூறுதல்.
24 தூய குமுதந் துவர்கோவை யன்ன சுகமருவு
காய மிதற்குக் கிடைத்தது வேவாய்க் கடிக்குடிநீர் பாய கலைநிலை கண்டறி நாவலன் பன்னலைமா லாய சுரமவிந் தாறின னன்ப ரகமெனவே.
பதவுரை:- தூய குமுதம் துவர் கோவை அன்ன தூய்மை வாய்ந்த (5(LP55 tDബങ്ങj வழங்கினால் கவர்ந்த பவளநிறம் பொருந்திய
கொவ்வைக்கனியை நிகர்த்த, வாய்கடி குடிநீர் பாய - வாயிலிருந்து ஊறும் அதரபானம் கிடைக்கப் பெற்றதால், கலை நிலை கண்டுஅறி நாவலன் பன்கலை - கலைகளின் ஆழ அகல நிலை கண்ட நாவலரது
விதந்து ஒதப் பெறும் நல்லைப் பதியின் கண் , மால் ஆய சுரம் அவிந்து - மயக்கம் தருவதாகிய விரக வெப்பம் தணியப் பெற்று, அன்பர் அகமென - அன்புடையாரது உள்ளம் குளிர்ச்சி பொருந்தியிருந்தவாறு, ஆறினன் -
தாப சாந்தியுற்றேன். இதற்கு காய மருவு சுகம் கிடைத்தது - இதனால் தலைவியின் உடலைத் தழுவும் சுகம் கிடைப்பதாயிற்று.
(கு.உ):- குடிநீர் கிடைத்ததனால், சுரநோய் தணிந்தது எனப் பிறிதொரு பொருளும் புலப்படல் காணலாம்.

Page 21
20
முறுவற் குறிப்புணர்தல்
24. பூமனு மாதும் பணிபணி நாவாள் புதுநகைதான்
வீமனு சோலைச் சுடுகாம வெந்தழல் வெப்பகற்று நாமனு நல்லமு தாகு மினியிலை நாமஞரே மாமனு வாளர் மனர்மதி யாறு முகனலைக்கே
பதவுரை:- பூமனு மாதும் பணி பணிநாவாள் புதுநகைதான்
வெண்தாமரைப் பூவில் மேவி வாழும் கலைமகளும் வணங்கும் இயல்புடைய சொற்கள் பொருந்திய நாவினளான தலைவியனது புதுமைவாய்ந்த சிரிப்பானது ' வீ மனு சோலை - மலர்கள் பொருந்திய சோலை தானும், சுடுகாம வெந்தழல் வெப்பகற்றும் - வெதுப்புகின்ற
கொடிய விரகமாகிய நெருப்பின் வெம்மையை நீக்கவல்ல : நாமனு நல்லமுதாகும் - நாம் உயிரோடு நிலைபெற்று வாழ்தற்கமைந்த நல்ல அமுதமாயிற்று, இனியிலை நாம் அஞரே . இனிமேல் நாம்
அஞ்சுதற்கேதுவாகிய துன்பமில்லை.
( கு.உ / து )- மாமனுவாளர் மனர் மதி ஆறுமுகன் நலைக்கே பெருமை மிக்க - மனுநெறியாளரும் மன்னரும் மதித்துப் போற்றுகின்ற ஆறுமுக நாவலரின் நல்லைப்பதியிலே.புதமைவாய்ந்த சிரிப்பு அமுதமாயிற்று என முடிக்க. அவ்வாறே நாவலரின் நல்லையின் இனித்துன்பமில்லையெனச் சேர்க்க.அடிதோறும் உள்ள முதற்சீரின் - மனு - மன்னு என்பதன் இடைக்குறை.
புணர்ச்சியின் மகிழ்தல்
புணர்ச்சியினில் மகிழ்தல் என்பது வெளிப்படை.
25 துன்பத் தரையும வையரை யுந்துன றோய்தலிலா
னின்பத் தரையும வையரை யுந்துன லேய்தலுளான் றன்பத் தியையெனக் கேயளி நாவலன் றண்சிலம்பி லென்பத் தனையு முருக்கிடு மேழை யிவளின்பமே.
பதவுரை:- துன்பத்தரையும் - துன்பம் விளைப்போரையும், அவ் ஐயர் - அத்தகைய சந்தேகம் கொள்ளும் இயல்பினரையும், துனல் தோய்தலிலான் - சேர்தலும் அவரொடு கலத்தலுமில்லாதவனும், இன்பத்தரையும் - (அதே வேளை) இதம் விளைப்போரையும், அவையரையும் - சபையில் உள்ள தகுதியுள்ள சான்றோரையும், துனல் ஏய்தலுளான் - சேர்ந்து கலந்து இருப்பவனுமாகிய எனக்கு, தன் பத்தியை எனக்கு அளி நாவலன் தண் சிலம்பில் - தன்மீது பத்தியை எனக்கு அளித்துள்ள நாவலர் பிரானது

21
குளிர்ச்சியான மலையில், ஏழை இவள் இன்பம் - நங்கையாகிய இவள் பால் பெற்ற புணர்ச்சி இன்பமானது, என்பு அத்தனையும் உருக்கிடும் எலும்புகள் அனைத்தையும் உருக்குவதாம்.
(கு.உ) துனல் - துன்னலின் இடைக்குறை - சேர்தல்.
L-59556)
(புகழ்தல் என்பது புணர்ச்சியால் மகிழ்ந்த தலைவன், தலைவியின் நலத்தைப் பாராட்டல்)
26. முத்துப் பதித்தன மீன்கள் விசும்பின் முழிசிநின்றே யெத்திக்கு நோக்கி யிரங்கினு மென்னுயி ரேயுமிவ டித்திக்கு நல்லமு தீபல் லதுபோற் சிறத்தலிலிர் முத்தர் தொழுநா வலன்பணி யாறு முகனலைக்கே
பதவுரை:- மீன்கள் - நட்சத்திரங்களே, முத்தர் தொழு நாவலன் பணி ஆறுமுகன் நலைக்கே - பிரபஞ்சத் தொடர்பு நீக்கிய சீவன் முத்தர்களாலும் தொழத் தகும் நால்லன் வணங்கும் அறுமுகனது நல்லைப் பதியின் கண்ணே, முத்து பதித்தன விசும்பில் முழிசி நின்று - முத்துக்களை விதானத்தில் பதித்தாற் போன்று ஆகாயத்தில் தமது விழிகளைப் பெரிதாக்கி, எத்திக்கு நோக்கி இரங்கினும் - எல்லாத்திசைகளிலும் பார்வையைச் செலுத்தியவாறு பரிவு தோற்றி நின்றீராயினும், என் உயிர் ஏயும் இவள் - எனது உயிர் போன்ற இத்தலைவியினது, நல் அமுது ஈ பல்லது போல் சிறத்தல் இலிர் தித்திப்பான அதர பானத்தைத் தருகின்ற பற்களைப் போன்று சிறப்பினைப் பொருந்தமாட்டிர்
(கு.உ): ിഖണ്ണിങ്കണി விட்டொளி வீசும் இயல்பில் முழிசிப் பார்ப்பதற்கான குறிப்பு ஏற்றப்பட்டது. விழியை அகல்விரித்து உறுத்திப் பார்த்தலை முழிசுதல் எனல் பேச்சு வழக்கு அது இங்கு இலக்கியத்துவம் பெற்றுள்ள விசேடம் காண்க.
இதுவுமது
27. நீர்நிலைத் தாமரை யிரொரு தாளுன்றி நின்றிடினு
மேர்நிலை மாதர் முகத்தை மலர்ந்திடு மெல்லையினும் பார் நிலை கண்ட வறுமுகன் றன்வரைப் பான்மதிகண் டீர் நிலை மாறி யொடுங்கிற் றணத்தையு மேய்குவிரே,

Page 22
22
பதவுரை:- பார் நிலை கண்ட அறுமுகன் தன்வரை - உலகியல் முழுவதனையும் உணர்ந்த மேலோனாகிய ஆறுமுக நாவலனது மலைப்பக்கத்தில், நீர் நிலைத்தாமரையீர் - நீரில் நிலையாக நிற்கின்ற
தாமரை மலர்களே, ஒரு தாள் ஊன்றி நின்றிடினும் - நீவிர் ஒரு தாளை ஊன்றி நின்று தவம் செய்திடினும், ஏர் நிலை மாதர் முகத்தை மலர்ந்திடும் எல்லையினும் - (நீவிர் மொட்டு விரிந்து மலர்கின்ற காலத்து ) அழகு நலம்வாய்ந்த மாதர் முகத்தை மலர்ந்திட * செய்யும் சமயத்திலும், மதி கண்டீர் நிலை மாறி ஒடுங்கில் தனது யும் - சந்திரனைக் கண்டீராய் முன்பு மலர்ந்து இருந்த நிலைமாறிக் குவிகின்ற நிலையில் அவர் நகில்களையும் ஏய்குவிரே - ஒத்திருக்க வல்லீர்களா, (அல்லவே).
(கு.உ);~ ஒரு தாளுன்றி நிற்றலாவது தாமரை ஒரே தண்டில் நிற்றல் - இதனைத் தலைவியின் முகத்தையும் நகிலையும் ஒத்திருக்கும் நிலை வேண்டி ஒரு தாளில் நின்று தவஞ்செய்வதாகக் கூறியது தற்குறிப்பேற்றம், ஏய்குவீரே என்பதில், ஏகாரம் எதிர்மறைப் பொருள் பயந்து நின்றது.
3. வன்புறை
அணிந்துழி நாணிய துணர்ந்து தெளிவித்தல்
இதன் பொருளாவது புணர்ச்சியிடத்துத் தலைவி அணிந்த முத்துமாலை முதலிய நகிலணி குழலணியாகியவை வேறுபட்டிருத்தலைத் தலைவன் தன் கையினால் வேறுபாடு தீரத் திருத்தியமைத்த காலை, , தலைவி யானவள் தோழியால் அணியப்பட்ட அணிகளாகிய இவைகளை யானணியும் போது வேறுபடுமென்றும் இவ் வேறுபாட்டினைத் தோழி அவதானிக்கின் ஐயம் தோன்றும் என்றும் கருதி நாணமுற்று முகம் வேறுபட்டாளாக, அதனைத் தலைவன் உணர்ந்து தலைவியைத் தெளிவித்தல்.
28 பணியணி வேணிப் பரமன் பதம்பணி நாவலனார்
திணிவரை மீதணி சேர வணிந்தனஞ் செல்லலொழி யணியனிை மேவ வடர்த்து மதர்த்தரி மேவுவிழிப் பிணிமுக நானுநற் சாய லுறுமென் பெடையனமே.
பதவுரை:- பணி அணி வேணி பரமன் பதம் பணி நாவலனார் - பாம்பை அணிந்த சடை முடியினை உடைய சிவபிரானின் பாதங்களை வணங்கும் நாவலர் பெருமானது, திணி வரைமீது - திண்ணிய மலையிடத்து, அணி அணி மேவ அடர்த்தும் - கவிப்பனவும் செறிப்பனவும் பூண்பனவுமாகிய

23
ஆபரணவகை அழகு பொருந்த நெருக்குற்றும், அரி மேவு மதர்த்து விழி - செவ்வரி படர்ந்த களிப்புற்ற கண்களும், பிணிமுகம் நானும் நற்சாயலும் - மயிலும் வெள்கும்படி இயலும் நல்ல சாயலுமுடைய, மென் பெடை அனமே - மிகுந்த மென்மைத் தன்மை வாய்ந்த பெண் அன்னம் போல்பவரே, அணிசேர அணிந்தனம் - (நின்பாங்கி அணிந்த) அணியை வேறுபாடின்றி அணிந்தோம், செல்லல் ஒழி - ஆதலால் அது பற்றிக் கவலை கொள்ளாது ஒழிக.
(கு.உ) :- திணிவரை மீது அணிசேர - மலையிலுள்ள நினது பாங்கி அணிந்த அணியை ஒப்ப எனப்பொருள் விரிக்க அணியணி மேவ அடர்த்து என்பதனை அடர்த்து மேவி எனமாற்றி அணிவகைகள் அடர்த்து விளங்கவும் என விரித்துப் பொருள் கொள்க.
செல்லல் - துன்பம், கவலை, செல்லல் ஒழி - அணி வேறுபட்டிருக்கும் என்னும் கவலையோடு செல்லவேண்டியதில்லை எனவும் பொருள்பட நின்றது. செல்லலொடு செல்லல் ஒழி என இரட்டுறு மொழிந்து கொள்க.
பெருநயப்புரைத்தல்
(பெரு நயப்புரைத்தல் என்பது, மீண்டும் இவர் வருவாரோ வரமாட்டாரோ என்று எண்ணித் தலைவி முகம் வேறுபட்டாளாக, அதனைத் தலைவன் குறிப்பால் உணர்ந்து தனது காதல் மிகுதியை உரைத்தல்)
29. விரியாத் தாமரை நாறிடுஞ் சைவலம் வேரிமணஞ்
சரியாத நீலோற் பலமிவை தாமுமுண் டேயளிகாள் எரியாத வன்னீர் வளிவெளி யாதிய வெண்ணுருவன் கரியாத வன் மகன் றாள்பணி யாறு முகனலைக்கே.
பதவுரை:- அளிகாள் - வண்டுகளே, எரி ஆதவன் நீர் வளி வெளி ஆதிய எண் உருவன் - நெருப்பு, சூரியன், நீர், காற்று, வான், மண், இயமானன், சந்திரன் ஆகிய எண்வகை உருவினனும், கரி - உலகியல் அனைத்துக்கும் சாட்சியாய் உள்ளவனும், ஆதவன் www. சிவ சூரியனாயுள்ளவனுமாகிய இறைவனின், மகன் தாள் பணி ஆறுமுகன் நலைக்கே - மகனாகிய முருகனின் பாதங்களைப் பணியும் ஆறுமுக நாவலரது நல்லைப்பதியில், விரியாத தாமரை - விரியாத தாமரையும்,
நாறிடும் சைவலம் - மணம் கமழும் பாசியும், வேரி மணம் சரியாத நீலோற்பலம் - தேன் மணமும் பொருந்தாத நீலோற்பலமும், இவை தாமும் உண்டே - ஆகிய இவற்றை நீர் பயின்ற தடாகங்களிலே கண்டது
உண்டோ,

Page 23
24
(கு.உ)- விரியாத தாமரை முதலாயின முறையே தலைவியின் நகில், கூந்தல், கண்கள் ஆகியவற்றைச் சுட்டி நின்றன. இவையெல்லாம் தான் வியந்து நயக்குந் தரத்தன என்று தலைவன் தன்னயப்புணர்த்தினன், தான் அவளை மேலும் நினைமாதிருத்தல் ஒல்லாதெனக் குறிக்கும் கருத்தினால் என்க. நாறிடும் சைவலம் நாறாத சைவலம் என்றிருப்பின் ஒக்கும் போலும்,
தெய்வத் திறம்பேசல்
(தெய்வத்திறம் பேசல் என்பது இவ்வாறு கூறியும் தலைவி தெளியா நிலை கண்டு விதியின் திறத்தை விதந்து பேசல்)
30. செவிச் செல்வ நாவலன் நல்லைச் சிலப்பதி காரமணி
புவிச் செல்வ மென்னுயிர் யானுட லாகப் புணரவுண வவிச் செல்வ வர்ணவர்க் கெட்டாத போக வமுதளித்த கவிச்செல்வர் போற்று விதிச்செல்வ மாற்றுவ தாருரையே
பதவுரை:- செவி செல்வ நாவலன் நல்லைச் சிலம்பு - செவிச் செல்வம் நிறைந்த நாவலர் பெருமானது நல்லை மலையின் கண், அதிக ஆரம் அணி புவிச்செல்வம் - மிகுதியான மாலைகள் அணிந்த இப்பூமியின் செல்வமாகிய இவள், என் உயிர் - எனது உயிராகவும், யான் உடலாகப் புணர- யான் உடலாகவும் பொருந்திச் சேர்ந்த இடத்து, அவிச் செல்வ உணவு வானவர்க்கு எட்டாத - அவிப்பாகமே உணவாகப் பொருந்திய தேவர்களுக்கும் எட்டாத, போக அமுது அளித்த - போக இன்பமாகிய அமுதம் வழங்கிய, கவிசெல்வர் போற்று விதி செல்வம் மாற்றுவது ஆர் - கவிஞர்கள் விதந்து ஒதும் பான்மையினதும் விதிவசத்தால் நமக்குக் கிடைத்ததுமான அரிய உறவுச் செல்வத்தை மாற்றவல்லவர் யார், உரை உரைப்பாயாக, (எவருமிலர், ஆதலால் நீ ஐயுறேல்).
(கு.உ)- கவிச்செல்வர் - புலமை முதிர்ந்தவர் செல்வம் என்ற ஒரு சொல்லின் பிரயோகத்திறன் இக்கவிதை இனிமைக்கு உயிராய் உறையும் நயம் உணரத்தகும்.
பிரியேனென்றல்
(பிரியேன் என்றல் என்பது சேர்க்கை இன்பத்தால் பொலிந்த அழகு தலைவர் பிரிந்து செல்வர் என்ற கவலையால் விளர்த்துத் தலைவி வாடிய நிலை கண்டு நின்னிற் பிரியேன் என்று தலைவன் வலியுறுத்திக் கூறல்)

25
31. மன்றிரண் டேத்து புலநா வலனகு லக்கிரியாய்
மின்றிரண் டன்ன விளமயி லேவா னுறுமென்மதி குன்றிரண் டேறா திசைமா றிடினுங் குலவுடல்போ வின்றிரண் டாவுயிர் கண்டனை கொன்னா னிகப்பதுண்டே.
பதவுரை:- மன் திரண்டு ஏத்து புல நாவலன் நகுல கிரி - மக்கள் ஒருங்கு சேர்ந்து போற்றுகின்ற அறிவுமிக்க நாவலர் பிரானது நகுலேஸ்வரத்தில், ஆய் மின் திரண்டு அன்ன இள மயிலே - நுணுகி மிளிரும் மின்னற் கொடிகள்ஒன்று சேர்ந்தாற்போன்று பிரகாசமிகும் இளமயில் போல்விாளே, வான் உறுமென்மதி - வானில் உள்ள ஒளி ப்ொருந்திய சந்திரன், குன்று இரண்டு ஏறா திசை மாறிடினும் - உதய அத்தமன கிரிகளில் படராது திசை மாறினாலும், நான் இகப்பது உண்டே - நான் உன்னைப்பிரிந்து செல்லலும் உளதாமோ, இன்று குலவு உடல் உயிர்போல் இரண்டா கண்டனை கொல் - இன்று நெருங்கிய உடல் எனவும் உயிர் எனவும் இரண்டினையும் பிறிது பறிதாகக் கண்டதுண்டோ.
(கு.உ):- வானுறுமென்மதி குன்றிரண்டு ஒரு திசை மாறிடினும் என்பது சிறப்புற்ற எனது புத்தியானது இரு நகில்களாகிய குன்றுகளில் ஏறாது புகழ் குன்றினாலும் எனப்பிறிதொரு பொருள் கொள்ள நிற்றலும் காண்க. ஏறாதிசை மாறிடினும் என்னும் தொடரை ஏறாது இசை மாறிடினும் எனப் பிரிக்க இசை - இச்சை (இடைக்குறை) இச்சை தீர்ந்தாலும் அதாவது முதுமையுற்றாலும் என்றபடி, குலவுடன்போல் இன்றிரண்டாவுயிர் கண்டனை கொல் என்பதனை "ஆவியை விட்டுடல் அறிவு கொண்டெழி இப்போவதுமுண்டு கொல்” (கந்தபுராண வள்ளி) என்பதனோடு ஒட்டி நோக்குக.
பிரிந்து வருகென்றல்
(பிரிந்த வருகென்றல் என்பது பிரிந்து போய்த் தாமதமின்றி வருகுவேன் என்று தலைவன் தலைவிக்குக்கூறல் வருகு - வருவேன்)
32. நூலாயு நுண்ணிடை நூலாயு நாவல னுண்ணமதி
யாலாயு நற்பொருள் போலே ய்றவர் நிறைமொழிபோ னாலாறு காற்பூ மதுவுனு மப்பொழி னன்ணியிரு காலாறு கில்லேன் வருவேன் கடிது கணங்குழையே.
பதவுரை:- ஆயும் நூல் நுண்இடை - ஆராய்ந்து, எடுத்து இழைத்த நூல் போன்ற நுட்பமான இடையினை உடையவளே, கனம் குழையே - பாரம் மிக்க காதணி அண்ந்த அழகியே, நாவலன் நுண்ணமதியால் ஆயும் நல்பொருள்போல (நூல்களை ஆராய்வதையே முயற்சியாகக் கொண்ட)

Page 24
26
நாவலர் பிரான் தமது நுட்பமான அறிவால் ஆராய்ந்து உணர்வதாயும் உணர்த்துவதாயும் விளங்கும் சுவை மிக்கபொருள் போலவும், அறவர் நிறைமொழிபோல் - முனிவர்களின் பொருள் நிறைந்த வார்த்தை போலவும், ஆறுகால் நால் பூமது உணும். அ பொழில் நண்ணி - வண்டுகள் நால்வகைப் பூக்களிலும் நாடி இனிமையும் பயனும், நிறைந்ததாகிய தேனைப்பருகி, உலாவும் அச் சோலையைச் சென்று பொருந்தி, இரு கால் ஆறுகில்லேன் - நடந்த இரு கால்கள் ஆறுதற்குத் தானும் ஓய்ந்திராது, கடிது வருவேன் -விரைவில் வருவேன். (ஆதலால் கவலை விடுக).
(கு.உ):- காலாறு கில்லேன் வருவேன் - போனதும் திரும்பி வருவேன். ஆறுகால் நாற்பூமது உண்ணும் என மாற்றிக் கூட்டுக. ஆறுகால் - அடையடுத்த ஆகுபெயராய் வண்டின் மேல் நின்றது. அப்பொழில் என்றது தனது ஊரை.
இடமளித் தென்றல்
(இடமளித்தென்றல் என்பது தனது ஊரும் தலைவியின் ஊரும் ஒன்றுக்கொன்று அருகில் உள்ளன எனத் தலைன் கூறுதல்.)
33. கந்த முருகேச னாடொறுங் கைதொழு கான்மலர
னந்த வுயர்வது பட்ட மடைந்திடு நாவலன்வெற் பிந்து முகத்தி யணிமுத்து மாலையெறி நிலவெ மிந்து மணிமண் டயம்புனல் கால வியற்றிடுமே.
பதவுரை :- கந்த முருகேசன் நாள் தொறும் கைதொழு - கந்த முருகேசன் என்னும் அடியவன் தினந்தோறும் பணிந்து ஏத்துகின்ற, கால் மலர்அனந்த உயர்வது பட்ட்ம் அடைந்திடு நாவலன் - பாத மலரானது
பல்வேறு விருதுகளைப் பொருந்த நின்ற பெருமை வாய்ந்த நாவலர் பிரானுடிைய, வெற்பு இந்து முகத்தி - மலையில் தோன்றும் சந்திரன் போலும் முகத்தை உடையவள், அணி முத்துமாலை எறி நிலவு - அணிந்துள்ள முத்துமாலையில் பிறக்கும் ஒளியானது, எம் இந்துமணி மண்டபம் புனல் கால இயற்றிடும் - எமது ஊரில் உள்ள சந்திரகாந்த மணிகள் பதித்த மண்டபம் நீர் காலச்செய்யும்.
(கு.உ):- நாவலர் ஊரில் உள்ள தலைவி அணிந்துள்ள முத்து மாலையில் பிறக்கும் ஒளி தனது ஊரில் உள்ள மண்டபத்தில் விளங்கும் சந்திரகாந்த மணியில் படுதலால் அதில் நீர் துளிர்க்கும் என்று கூறியதன் வாயிலாக இரு ஊர்களினதும் அண்மை புலப்படுத்தப்பட்டது. இந்து முகத்தி - மதிமுகமுடைய தலைவி, இந்துமணி - சந்திரகாந்தமணி.

27
நாவலர் பிரானைச் சேர்ந்த விருதுகள் அவர் திருவடி மலர்க்கு அர்ப்பணமாம் என்பார், கால் மலரனந்த பட்ட மடைந்திடு. நாவலன் என்றார். இதனாலே அவ்விருதுகள் அவர்க்குக் கெளரவமாகா என அவர் உயா மகிமை பெற வைத்தமை காண்க. இன்னும் இத்னால் அவை அவர் கால் மகிமைக்கே போதா என்பது ஒரு நயம் தோன்றுமாறும் அறிக. மேலும் அவை காலளவில் தங்குவன அன்றி கருத்தில் பெருமிதம் விளைப்பன ஆகா என்றதுமாம் என்க. இதனால் அவரது வெகுமதி விரும்பா மாண்பும் அதற்குக் காரணமான அவர் சன்மான வெகுமானத் தரம் கடந்த நிலையும் இவ்வாற்றால் புலப்பட வைத்த சீர்மை நயக்கப்படும்.
"மிகுமதி பிரபல்யராயினுமொருவர் செய் வெகுமதி விரும்பாய் நீ”
சன்மான வெகுமானத் தாமறியாய் தாலேலோ -
நாவலர் பிள்ளைத்தமிழ்
இதுவுமது
34. என்சாரற் காந்தள் விளக்கா வளியாழ் குயின்முழவா
நின்சார லன்னங் களிமண மெய்து நெடுமுகிலின் மின்சார மேனி மடவாய் குருகவி கூறுகவி தன்சார மெல்லா மறிவோ னறுமுகன் தண்ணலைக்கே,
பதவுரை :- நெடு முகிலின் மின்சார மேனி மடவாய் - கீண்டுசெல்லும் முகில்களிடையே தோன்றும் மின்னொளி ിബിന്ദ്രb மேனியுடைய தலைவியே, குருகவி கூறுகவி தன் சாரம் எல்லாம் - தமது ஆசான்மாராகிய கவிஞர் இயற்றுகின்ற பாடல்களின் சாராம்சத்தை எல்லாமி, அறிவோன் அறுமுகன் தண்நலைக்கு - அறிந்திருக்கும் பெருமையராகிய நாவலர் பிரானின் குளிர்ச்சியான நல்லையிலே, என் சாரல் காந்தள் விளக்கா - எனது ஊரில் மலரும் கார்த்திகைப்பூ விளக்கமாகவும், அழியாழ் - வண்டுகள் முரலொலி யாழிசையாகவும், குயில் முழவா - குயிலின் கூவல் தண்ணுமை வாத்தியமாகவும் அமைய, நின் சாரல் அன்னம் களிமணம் எய்தும் - உனது ஊர்ப்பக்கத்தில் உலவும் அன்னம் களிப்பொடு மணம் புணரும்.
இதுவுமது
35. கூற்று முனமுடி பாலனைக் கொள்கு குணமுடையா
னிற்று வடிவனை நாவல னிணகு லக்கிரியி லேற்று விளக்கும் தில்லுக் கிலங்கு மினைதலொழி கீற்று மதிபுரை வாணுதல் வாயெனுங் கிஞ்சுகமே.

Page 25
28
பதவுரை :- கீற்று மதி புரை வாள் நுதல் - பிறைச்சச்திரன் போலும் ஒளி காலுகின்ற நெற்றியினையும், வாய் என்னும் கிஞ்சுகமே - முருக்கம் பூப்போலும் சிவந்த வாயினை உடைய தலைவியே, கூற்று முனமுடி பாலனை கொள்கு குணம் உடையான் - இயமனை முன்னர் செகுத்தற்குக் காரணமாக இருந்த மார்க் கண்டேயர் போன்று பிரமசரியக் கொள்கை பூண்டவனும், நீற்று வடிவினன் - விபூதி பொலியும் திருமேனி உடையவனும், ஐ - (சைவமக்கள்) தலைவனும் ஆகிய, நாவலன் நீள் நகுலகிரியில நாவலன்பிரானது நெடிய நகுல மலையிடத்தே, ஏற்று விளக்கு - (எனது இல்லத்தில்) ஏற்றப்படும் விளக்கு, உமது இல்லுக்கு இலங்கும் - நுமது இல்லத்தில் ஒளி விளங்கி அதனை விளக்கமுறச் செய்யும், இணைதல் ஒழி - அதனால் பிரிவு நீடிக்குமோ என்று எண்ணிக் கொள்ளும் கவலையை ஒழி.
(கு.உ)- கிஞ்சுகம் புரைவாய் எனற்பாலது செய்யுள் அமைவு நோக்கி வாயெனுங் கிஞ்சுகம் என உருவகமாயிற்று கிஞ்சுகம் - முருக்கம் பூ, வாணுதலும் 6)T (yp6ODLuJMT86 TT 66 அடைஇடை புணர்ந்த உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை கொள்கு கொள்கை.
4.தெளிவு
(தெளிவு என்பது தலைவன் கூறிய சொல்லைத் தலைவி மெய்யெனத் தெளிந்திருப்பது)
36. சொல்லோங்கு காரை யணவிடு நல்லையிற் சோதியற
வெல்லோங்கு நாவலன் வெற்பி லெனக்கினி யாரொருகால் வில்லோங்கு மாற்றார் தமைமாற்ற வல்லமை மேவிடினு மல்லோங்கு தம்புய மாற்றல மென்றசொன் மாற்றலரே.
பதவுரை :- சொல் ஓங்கு காரை அணவிடு நல்லையில் - நெற்பயிர் வளர்ந்து உயர்ந்த மேகத்தை அளாவுகினற் நல்லைப் பதியில், சோதி அற எல் நாவலன் ஓங்கு வெற்பில் - ஒளி மிக்க அறஞாயிறாகிய நாவலர்
பிரகாசிக்கும் மலையின் கண், எனக்கு இனியார் - எனக்கு இன்பம் தரவல்ல காதலர், ஒரு கால் வில் ஓங்கு மாற்றார் தமைமாற்ற வல்லமை மேவிடினும் - ஒரு சமயம் வில்லைத் தாங்கிய ஆற்றல் மிக்க
பகைவர்களை வெல்லும் மேன்மை மேவப் பெற்றிருந்தாலும், மல் ஓங்கு தம் புயம் மாற்றலம் என்ற சொல் மாற்றலர் " வலிமை மிக்க தமது புயத்தினைப் பிற பெண்களோடு சேர அனுமதியோம் என்று முன்னே என்னிடத்திற் கூறிய உறுதி மொழியைத் தாம் மாற்று வாரல்லர்.

29
(கு.உ): சொல் - நெற்பயிர், எல் - சூரியன், அணவுதல் - பொருந்துதல், புயம் மாற்றலம் என்ற சொல் மாற்றலர் - தம்புயம் தழுவுதலில் எனக்குள்ள ஏகபோக உரிமையை மற்றொருவருக்கு மாற்றார் என்றவாறு.
5. பிரிவுபூழி மகிழ்ச்சி
செல்லுங் கிழத்தி செலவு கண்டுளத்தொடு சொல்லல் (செல்லுங் கிழத்தி -- சொல்லல் என்பது, செல்லுகின்ற தலைவியின் போக்கைப் பார்த்து தன் மனத்துக்குக் கூறுதல்)
37. சக்கர வாக மனமான் மருள மதியெனவா
விக்கு ளடக்கிக் கருவிளம் வாட விருகரம்வீ சிக்கர மாமுகி னாவலன் வெற்பி லெனதுயிர்யாக் கைக்கு ளடக்கிச் செலுமான் விழித்தது காணெஞ்சமே.
பதவுரை :- கர மா முகில் நாவலன் வெற்பில் - வரையாது வழங்கும் கரமாகிய மழை முகிலைத் தாங்கும் நாவலர் பிரானது மலையின் கண், சக்கரவாகம் அனம் மான் மருள - நகில் கண்டு சக்கரவாகப்பறவையும், நடைகண்டு அன்னமும், விழிகண்டு மானும் மயங்கும்படியாகவும், மதி என கருவிளம் வாவிக்குள் வாட அட - முகங்கண்டு சந்திரன் என்று எண்ணிக் கருங்குவளை வாடி அடங்கும்படியாகவும், இருகரம் வீசி எனது உயிர் யாக்கைக்குள் அடக்கிச் செல்லும் மான் - இரு கைகளையும் வீசி என் உயிரையும் தன் உடலுக்குள் அடக்கிச் செல்லும் மான் போல்பவளுமாகிய தலைவி விழித்தது - நீ மகிழுமாறு விழிக்கின்றது, நெஞ்சமே காண் - நெஞ்சமே அதோ பார்.
(கு.உ): மதி - என் - அவா - இக்கு உள் அடக்கி என் ஆசிரியர் குறிப்பிற் காணும் பொருள்கோள் சிந்திக்கத்தடும். செய்யுட் பொருளொருமை நோக்கில் கருவிளம் கருங்குவளையை குறித்தாக் கொள்ளுதல் அமைவுடைத்தாம் விழித்தது காண் என்றதனால் பெயர்ந்து செல்கையிலும் திரும்பி நோக்கியமை குறித்தான் என்க.
பாகனொடு சொல்லல்
(பாகனொடு சொல்லல் என்பது, தலைவன் தன்னைத் தேடி வந்த பாகனொடு தலைவி செல்லும் திறனைக் காட்டிக் கூறல்)

Page 26
30
38. சேடிய ரென்னும் பிணிமுக நோக்கிச் சிறக்கவுள
நீடிய வோதி யெனுங்கார் பரப்பி நிரைமினற்ப லாடிட வேகுமெ னாவித் தருவள ரம்பொழியன் பீடில் னாவல னல்லையிற் பாக விறைவளையே.
பதவுரை :- பாக - வலவ, என் ஆவி தரு வளர் - எனது உயிராகிய மரத்தை வளர்க்கும், அம்(பு) மொழி - நீரைப் பொழிகின்ற, அன்பு ஈடில நாவலன் நல்லையில் - அன்பில் ஒப்பில்லாத நாவலர் பிரானது நல்லைப் பதியில். இறைவளை - முன்கைவளையல் அணிந்த என் காதலி, சேடியர் என்னும் பிணிமுகம் நோக்கி - டாங்கியர் என்னும் மயிற் குழாத்தினை நோக்கி, உளம் சிறக்க - உள்ளம் மகிழ்வு பொருந்த, நீடிய ஓதி எனும் கார் பரப்பி - நெடிய கூந்தல் என்னும் காள மேகத்தினைப்பரப்பி, பலமினல் நிரை என - பல மின்னற் கீற்று நிரை தொக்கது என, ஆடிட ஏகும் - விளையாட்டு அயரச் செல்வாள்.
(கு.உ):- அம்பு நீர், அம் எனக் கடைக்குறையாயிற்று தலைவியின் இடை மின்னல் போன்று நுடங்குதலுடனாக, பல்வகை அணிகளில் பிறந்த ஒளிக்கற்றையினையும் சேர்த்து மின்னல் நிரை படர்ந்ததாக உருவகம் செய்யப்பட்டது. 'ஆவித் தருவளர் அம்மொழி அன்பீடில ஏற்றுக. (ஆஉ.கு)
9
என்பதனைத் தலைவி மீதும்
6. பிரிவுபூழிக் கலங்கல்
ஆய வெள்ளம்வழி படக் கண்டிது மாயமோ வென்றல் (ஆய வெள்ளம் - வென்றல் என்பது தோழியர் கூட்டம் வழிபடுவதைப் பார்த்து இதுமாயமோ எனக்கூறல்)
39. பரமத வாரண மோடத் துரந்து பரவுசைவத்
திரமத தாபன வாறு முகவரி திண்சிலம்பி லுரமத வானை தமையா னணைந்த தொரு வியப்பாற் சரமத நாட்ட முடையார் நடுவுறு தையலையே.
பதவுரை :- பரமத வாரணம் ஒட துரந்து - பர சமயங்களாகிய யானைகள் பின்னிட்டு ஓடும்படி விரட்டுதலைச் செய்து, பரவு சைவ திரமத தாபன ஆறுமுக அரி திண் சிலம்பில் - போற்றப் பெறும்
சைவசமயத்தினை உறுதியாக நிறுத்திய ஆறுமுக நாவலர் என்னும் சிங்கத்தின் உறைவிடமாகிய திண்ணிய மலையின் கண், சரமத நாட்டம் உடையார் நடுவுறு தையலை - அம்பு போலக் கூர்த்து மதத்து விளங்கும் கண்களை

31
உடைய சேடியர் நடுவில் விளங்கும் நங்கையினது, ஆனை மத உர தமை - யானையின் கொம்பு போன்ற மதர்த்த தனங்களை, யான் அணைந்தது ஒரு வியப்பு நான் - சென்று பொருந்தப் பெற்றமை பேரதிசயம்.
(கு.உ)- ஆனை - ஆகுபெயராய்க் கொம்பரைக் குறித்தது. ஆல் - அசை, உரம் - மார்பு - ஈண்டு தனங்கள் (இடவாகுபெயர்). தழுவல் விடயத்தில் சிறப்புறுவது தனமாதலின் தையலது தனம் எனக் கொள்க.
இதுவுமது
40. வெள்ளம் புயத்தி யுறைநா வலன்கா விரும்பழகார்
வள்ளக் கமல மலர்மே வரமகள் வந்தெனக்கு விள்ளற் கருமாய வெள்ள மகன்றிவ ண் மேவியது தள்ளற் கருமாய மென்றே யறிமகிழ்த் தாழ்மனமே,
பதவுரை:- தாழ் மனமே - பேதை நெஞ்சமே, வெள்ளை அம்புயத்தி உறை நாவலன் கா - வெண்தாமரை ஆசனியாகிய கலைமகள் உறையப்பெறும் நாவலர்பிரானது சோலையின்கண், விரும்பு அழகு ஆர் வள்ள கமல மலர்மேல். அரமகள் - விரும்பத்தகும் அழகு நிறைந்த வள்ளம் நிகர்த்த செந்தாமரை மலர் மேல் உறையும் தேவமகள் போன்ற இம் மங்கை, வந்து எனக்கு விள்ளற்கு அரும் ஆய வெள்ளம் அகன்று இவண்மேவியது - வந்து எனக்கு கூறுதற்கு அரிய பாங்கியர் கூட்டத்தினை விட்டு நீங்கி இவ்விடத்தில் பொருந்தி நின்றது, தள்ளற்கு அரு மாயம் என்றே அறி மகிழ் - நீக்கு தற்கரிய ஒரு மாயச் செய்கை என்றே அறிந்து மகிழ்வாயாக.
(கு.உ)- ஆய் வெள்ளம் - பாங்கியர் கூட்டம். மகிழ் தாழ் என்றலின் மகிழ்வினில் தாழும் (அமிழ்ந்தும்) மனமே எனல் சிறக்கும் மகிழ்த்தாழ் - ஏழாவதன் தொகை.
வாயில் பெற்றுய்தல்
(வாயில் பெற்றுய்தல் என்பது, ஆயக்கூட்டத்தைச் சேர ஏகும் தலைவி ஒருத்தி முகத்தை நோக்கியவாறு செல்லக்கண்டு, அவளே உயிர்ப் பாங்கி என அறிந்து அவ்வுயிர்ப் பாங்கியைத் தூதாகப் பெற்று இனி உய்வனெனத் தலைவன் கூறல்) வாயில் - மார்க்கம், தூது:

Page 27
32
41. வம்பா ரமுதக் குடஞ்சேர் பினற்கண் வரியளிக
ளம்பார் விழியார் வதனாம் புயத்தை யடைந்தகலா நம்பார் கலிவாட் டகற்றிய நாவல னல்லையினெஞ் சம்பார் விடக்கா மகற்று மருந்தெ னச்சார்ந்ததுவே.
பதவுரை :- நெஞ்சமே, நம் பார் கலி வாட்டு அகற்றிய நாவலன் நல்லையில் - நமது நாட்டில் நிலவிய இன்னல்களை நீக்கிய நாவலர் பெருமானது நல்லைப் பதியின் கண், வம்பு ஆர் அமுத குடம் சேர் பினல் - கச்சு அணிந்த அமுதம் பொதிந்த குடம் போலும் நகில்களையும் பின்னிய கூந்தலையும் உடைய தலைவியின், கண்வரி அளிகள் - கண்களாகிய வரி வண்டுகள், அம்பு ஆர் விழியார் வதன அம்புயத்தை அடைந்து அகலா - அம்பு போலும் கூர்த்த விழி உடைய (உயிர்ப்பாங்கியாகிய) , பெண்ணின் முகமாகிய தாமரையிற் சென்று பொருந்தி நீங்காது இருக்கின்றன. (ஆதலின்) காமவிடம் அகற்றும் மருந்து என சார்ந்தது - விரகமாகிய விடம் அகற்றவல்ல. மருந்து போல எனக்கு (வாயில்) வாய்ந்தது, பார் - இவ்வாய்ப்பை உணர்ந்து கொள்வாய்.
(கு.உ): கலி - இன்னல், அகஇன்னல், புற இன்னல் என இரண்டும், காமவிடம் என மாற்றுக, அமுதக்குடம் - உமையாகுபெயர், பினல் - பின்னல், அமுதக் குடம் போலும் தனங்களையும் பின்னலையு முடையாள் என விரித்து ஆகு பெயர்ப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை ஆமோ எனின் தொகை நிலைக் களத்துப் பிறப்பதே அன்மொழித்தொகை ஆதலானும் தொகைக்காஞ் செறிவு இதன் கண் இன்மையானும் ஆகாது 6,685.
இதுவுமது
42. கம்பேறி முத்தளி கான னறுங்கார்க் கவின்கிரிவீ
ழம்பேறி யாடு மவர்சுர ராநல்லை. நாவலனை நம்பேறி தென்றே யடைந்தவ ரின்மகிழ் நண்ணிவர்க ணம் பேறி நிற்குமம் மாதர் புருவ வருவிலிற்கே.
பதவுரை :- கம்பு ஏறி முத்து அளி கானல் நறும் கார் கவின் கிரி - சங்கினம் ஊாந்து முத்துக்களை ஈனுவதற்கு இடமாய் உள்ள கடற்கரைச் சோலை சார்ந்த உயர்ச்சி பொருந்திய அழகிய மலையில் இருந்து, வீழ் அம்பு ஏறி ஆடும் அவர் நல்லை - வீழும் அருவி நீரில் குளித்து விளையாடும் இயல்பினரான மக்கள் வாழும் நல்லையில் விளங்கும், சுரரா நாவல்னை -தேவரெனப் போற்றத்தரும் பெருமைவாய்ந்த நாவலர் பிரானை

33
நம்பேறு இது என்றே அடைந்தவரில் - தாம் பெறுதற்கரிய பேறு என்று கருதிச் சார்ந்தவர் போன்று, மகிழ் நண்இவர் - மகிழ்ச்சி பொருந்தி இருக்கின்ற இத்தலைவியின், கண் அம்பு - விழியாகிய பாணம், அமாதர் புருவ வரி விலிற்கு - அப் பெண்ணின் (உயிர்ப் பாங்கியின்) புருவமாகிய வரி வில்லின் மீது, ஏறிநிற்கும் -சென்று இயையும்.
(கு.உ);- கிரி மேல் அம்பேறி ஆடும். அவர் என்பதனைத் தலைவி மேல் ஏற்றினும் பொருந்தும். அவ்வாறு கொள்ளின் அருவி ஆடும் இயல்பினரும் நாவலரைச் சார்ந்தவர் போன்று மகிழ்வு பொருந்தி இருப்பவருமாகிய தலைவி என இயைக்க கம்பு - சங்கு, மகிழ் நண் இவர் - மகிழ் நண்ணும் இவர். புருவமாகிய வரிவில் - வரி வில்லில் வரி சாதியடை. சொற் கிடந்தவாறே கொண்டு அருவியாடுவோர் தேவராம் நல்லையென நல்லைச் சிறப்புரைத்ததாகக் கொள்ளுமாம்.
பண்பு பாராட்டல்
(பண்பு பாராட்டல் என்பது, தலைவியின் அழகைக் கொண்டாடுதல்.
பன்பு - அழகு)
43. நல்லூ ரெனும்பே ரமைவுடைத் தாக்கிய நாவலனா
ரெல்லூர் சிலம்பி லிவருறுப் பிற்சில கண்டழுங்கி வில்லூர் மணியர வால்வளை மீன்கள் வியன்யிலத்தி வல்லூர் கடல்விண் ணடைந்தன பண்பை யறைதலெனே.
பதவுரை :- நல்லூர் எனும் பேர் அமைவுடைத்து ஆக்கிய நாவலனார் எல் ஊர் சிலம்பில் - நல்லூர் என்னும் பெயரை அந்நகர்க்குப் பொருத்தமுடைய பெயராம் வண்ணம் தம் நற் செயல்களினால் ஆக்கிய நாவலர் பெருமானது ஒளி பொருந்திய மலையில் - இவர் உறுப்பில் சில கண்டு அழுங்கி - இத் தலைவியின் உறுப்புகள் சிலவற்றை நோக்கி அவற்றின் அழகுக்குத் தாம் ஆற்றாமை கண்டு விரக்தி உற்று, வில் ஊர் மணிஅரவு வால் வளை மீன்கள் - பிரகாசம் பொருந்திய இரத்தினத்தை உடைய பாம்பு, வெண்மையான சங்கு, நட்சத்திரங்கள் என்பன, வியன் பிலத்தில் அல் ஊர் கடல் விண் அடைந்தன - முறையே பெருமையுடைய பாதாளம். இருள் அடர்ந்த கடல், ஆகாயம் என்னும் இடங்களைச் சார்ந்து உற்றன எனின், பண்பு அறைதல் என்னே - தலைவியின் அழகைப் பாராட்டுவது எங்ங்ணம்.

Page 28
34
(கு.உ):- எல் - ஒளி, வில் - பிரகாசம், வால் - வெண்மை பாம்பு தலைவியின் நிதம்பத்துக்கும் சங்கு கழுத்திற்கும் நட்சத்திரங்கள் பல் வரிசைக்கும் ஆற்றாதனவாயின, பாம்பு முதலியன பிலம் ஆதிய இடங்களைச் சுயமாகக் கொண்டிருப்பவும், உறுப்புக்களுக்குத் தோற்று அவ்விடங்களைச் சார்ந்தன எனக்கற்பித்தது தற்குறிப்பேற்றம்.
பயந்தோர்ப் பழிச்சல்
(பயந்தோர்ப்பழிச்சல் என்பது தலைவியின் பெற்றோரைத் தலைவன்
வாழ்த்துதல். பழிச்சல் - போற்றல்)
44. பாற்கட லீனாப் பதுமந் தருவளை பாங்கனமய
வேற்கடல் வற்ற விடுவே லவன்பத மேலிடுநா வாற்கட லாறு முகனார் தமைப்பெறு நல்லையிலென் பாற்கட லின்பம் பயந்தாட் பயந்தார் பலவுறவே.
பதவுரை :- கடல் வற்ற வேல் விடு வேலவன் பதம் மேவிடும் சூரபன்மனுடைய சேனைக்கடல் வறந்து ஒழியும் படியாக வேற்படையை ஏவிய முருகப்பெருமானது பாதங்களை வணங்கும், நா ஆல் கடல் ஆறு
முகனார் தமைப்பெறும் நல்லையில் - பெருமை மிக்க சொல் ஓங்கிய ஆன்ற அறிவுக் கடலாகிய ஆறுமுகநாவலரைத் தோற்றுவித்த நல்லைப் பதியில, என் பாற் கடல் இன்பம் பயந்தாள் பயந்தார் - எனக்குப்
பாற்கடல் அமுதம் போலும் இன்பம் ஈந்த தலைவியைப் பெற்றவர்கள், பால் கடல் ஈனா பதுமம் தரு வளை பாங்கு அமைய பல உறவே - திருப்பாற் கடலில் பிறவாத பதுமநிதி சங்கநிதி என்பன முறையாக அமையும் வண்ணம் இவை உள்ளிட்ட செல்வங்கள் பொருத்தப் பெற்று நெடிது வாழ்வார்களாக,
(கு- ரை)- சூரன்சேனை மட்டற்ற பெருங்கடலென்பார். அக்கடல் எனப் பண்டறிசுட்டுவருவித்தார். அவ்வேல் கடல் வற்றவிடும் என நேரே கொண்டு அத்தகு வேலைக் கடல் வற்றவிடும் எனலுமாம். உற - அகரவீற்று வியங்கோள் - நான்மறையறங்களோங்க - என்றாற் போல.
கண்படைபெறாது கங்குனோதல்.
(கண்படைபெறாது கங்குல் நோதல் என்பது தலைவி தந்த வேட்கையால் தலைவன் துயில் பெறாது கங்குற் காலத்தில் வருந்திக் கூறுதல்.)

35
45. மானார் யானை பலப்பல வாகி மயங்கியின்று
வீரமே மேவி யுருத்து மெலிதுன் பிருளகற்ற வீரமே யாறு முகன்வரை யுச்சியி லேறியொற்றை யாரமே யாழி யலரி யலர்ந்திட லாவதென்றே
பதவுரை :- மாரனார் யானை பல பலவாகி மயங்கி - மன்மதனுடைய யானையாகத் திகழும் இரவானது பல்தொகுதியாகிக் கலந்து நின்று, இன்று வீரமே மேவி உருத்து - இற்றைப்போது பலம் பொருந்தியதாகிக் கோபமுற்று ,மெலி துன்பு இருள் அகற்ற - என்னை வருத்துகின்ற துன்பமாகிய அந்தகாரத்தினை (இருள்) நீக்க, ஒற்றை ஆரமே ஆழி அலரி - ஒற்றைச்சக்கரம் பொருந்திய தேரினை உடைய சூரியதேவன், ஈரம் ஏய் அறுமுகன் வரை உச்சியில் ஏறி - அன்பு நெஞ்சம் பொருந்திய ஆறுமுகநாவலரின் மலை உச்சியில் ஏறி, அலர்ந்திடலாவது என்று - உதயமாவது எப்போது.
(கு-உ):- மாரனார் யானை - இரவு. இருள்; ஈரம் - அன்பு , ஏய் - பொருந்திய ; ஆரம் - சக்கரம் : ஆழி - தேர் , அலரி - சூரியன்.
7. இடந்தலைப்பாடு
(இடந்தலைப்பாடு என்பது இயற்கைப் புணர்ச்சியிற் தலைவியைக் கூடிய தலைவன் மற்றைத் தினத்தில் முதல் நாட்கூடிய இடத்தே வந்து
தலைவியைக் கூடுதல்)
தந்ததெய்வந்தருமெனச்சேறல்
(தந்த தெய்வந் தருமெனச் சேறல் என்பது முன் இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைத் தந்த விதி இன்னும் அவ்விடத்திற் கூட்டித் தருமெனக் கருதித் தலைவன் செல்லல்)
46.
மன்னா தரமொழி நல்லையி னாவலன் மாநகரே யன்னா டவர்நுதல் வல்லி கலவி யமுதளித்த முன்னா ளுறுவிதி நல்கூ ரிரவலன் முன்னிதியோ லிந்நா டருநெஞ்ச மேகவ லாதெழு வென்னுடனே.
பதவுரை :- நெஞ்சமே - நெஞ்சமே, மன் ஆதரமொழி நாவலன் நல்லையில் மாந்கரே அன்னாள் - சிறப்புமிக்க அன்பு வார்த்தைகளைப் பேசுகின்ற இயல்பினரான நாவலர் பிரானின் நல்லைநகரே அனைய

Page 29
36
மேன்மை மிக்கவரும், தவர் நுதல் வல்லி - வில்லை நிகர்த்த நெற்றியை உடையவரும் வல்லி சாதகக்கொடி போன்றவருமாகிய தலைவியுடன், கலவி அமுது அளித்த முன்னாள் உறுவிதி - சேருவதாகிய புணர்ச்சி இன்பத்தை வழங்கும் வகையில் நேற்று உதவிய விதியானது, நல்கூர் இரவலன் முன் நிதிபோல் - வறுமை உற்று வருந்தும் இரப்போனுக்குப் பூர்வீக செல்வம் கிடைத்தாற்போல, இந்நாள் தரும் - இன்றும் யாம் சென்றால் கிடைக்க வைக்கும் கலவாது எ*னுடன் எழு - (ஆதலின்) கவலையுறாது (ஐயுறாது) இசைந்து எழுவாயாக,
(கு.உ) - முன்னாள் உறுவிதி - இன்பம் தருதற்கென ஏலவே சமைந்திருந்த விதி எனலுமாம். ‘என்னை முன் ஆள்ஊழ் எனத் திருக்கோவையாரில் வருதலுங் காண்க. முன்தனம் - பழந்தனம் (பழந்தன மிழந்தன படைத்தவரை ஒத்தாள் என்பதுங் காண்க.)
முந்துறக் காண்டல்
(முந்துறக் காண்டல் என்பது முன்பு போலத் தலைவியைத் தன்முன்னுறக் காணல்.)
47. அரியேறு மானை சுமந்த வெனதுயி ராங் கொடிதா
னரியேறு பூங்கா வகத்திற் பரமத வானையஞ்சு மரியேறு சைவசித் தாந்தத் துணிபுள வாறுமுக னரியேறு மீச னமர்நா வலனல்லை வாய்நின்றதே.
பதவுரை:- அரி ஏறும் ஆனை சுமந்த எனது உயிராம் கொடிதான் - சிங்கத்தின் அடிவயிற்றினை ஒத்த இடையானது யானையின் மத்தகத்தினை நிகர்த்த தனங்களைச் சுமந்து விளங்கும் எனது உயிராகிய கொடி போலும் தலைவியானவள், அரி ஏறும் ஈசன் அமர்- மயிலை வாகனமாக உடையகுமரப்பெருமான் வீற்றிருக்கப் பெற்றதும், பர மத ஆனை அஞ்சு - புற மதங்களாகிய யானைக் கூட்டங்கள் அஞ்சி அடங்குமாறு, சைவசித்தாந்த துணிபு உள அரி ஏறு- சைவசித்தாந்த நுண் பொருள் துணியினை விளக்கவல்ல ஆண்சிங்கமாகிய, நாவலன் நல்லை வாய் - நாவலர்பிரானது பதியுமாகிய நல்லை நகரின், அரி ஏறு பூங்கா அகத்தில் நின்றது - வண்டுகள் உலவும் மலர்ச் சோலையில் நின்றனள்.
(கு.உ);~ அரி - சிங்கம், வண்டு, மயில் ஆகிய பொருள்களைப் பயந்து நின்றது. அடிதோறும் ஒரே சீர் முதற், சீராக நிற்றலின் இச் செய்யுள் முதற் சீர் மடக்காம்.

37
முயங்கல்
(பொருள் வெளிப்படை)
48. அன்ன நடைபயில் கற்பக வல்லி யமுதகுட
மன்னி முயங்கக் கிடைத்திடு காலை மறுவிலைந்து பன்னு பொறியும் புலனு முடலுயிர் பாய்கரண மென்ன வுமின்ப முறுமொருங் காறு முகனலைக்கே.
பதவுரை :- ஆறுமுகன் நல்லைக்கு - ஆறுமுக நாவலரது நல்லைப்பதியின் கண்ணே, அன்னநடை பயில் கற்பகவல்லி - அன்னம் போன்ற நடைபயிலும் தேவ தருவாகிய கற்பகத்தில் படரும் கொடி போல்வாளின், அமுதகுடம் மன்னி முயங்க கிடைத்திடுகாலை - அமுதம் பொதிந்த குடங்கள் போன்று விளங்கும் தனங்களைப் பொருந்திச் சேரும் இத்தருணத்தில், மறுவில் ஐந்து பன்னுபொறியும் - (இருவரது ம்) குற்றமில்லாத மெய் முதலாம் ஐம்பொறிகளும், புலனும் - ஸ்பரிசம் முதற் புலன்களும், உடல் உயிர் பாய் கரணம் என்பனவும் இன்பம் ஒருங்குறும் உடற் கண்ணான @一ujj血 Tub அந்தக்கரணங்களும் பின்னமில்லாதவாறு செறிந்து ஒன்றாயினாற் போல இன்பம் பொழியும்.
(கு.உ) : பொறி, புலன், கரணங்கள் ஒருங்கு என்ன இன்ப முறும் எனக் கூட்டுக. அவை சகலதும் ஒன்றாய்க் குழைந்து அனுபவிக்கும் இன்பம் என்பது கருத்து, பாய்தல் - செறிதல். அந்தக்கரணங்கள் உயிரின் அகவளாகத் தனவாதல் தோன்ற உயிர் பாய்கரணம் 3ன்றார்.
புகழ்தல்
(புகழ்தல் என்பது புணர்ச்சி இன்பம் பெற்ற தலைவன் தலைவியைப் புகழ்ந்து கூறல்)
49. மெய்யிலா முல்லை தனையஞ் சியவளை வீரையழு
நெய்கமழ் கூழைக் கலறு முகிலு நெடு விசும்பிற் பைவரு மல்கு னினைமின் பொருவப் பதைபதைக்குங் கைவரு சீல னறுமுக னல்லைக் கணங்குழையே.
பதவுரை : சீலம் கைவரு அறுமுகன் நல்லை கணங்குழையே - நல்லொழுக்கம் கைவரப் பெற்ற ஆறுமுக நாவலர் பெருமானின் நல்லைப்பதி வந்த் காதணி அணிந்த தலைவியே, மெய் இலா முல்லை தனை அஞ்சிய வளை வீரை அழும் - உமது முன்றானை இல்லாத

Page 30
38
தனங்களுக்கு ஈடாகாமையின் வெள்கிப் பின்னிட்ட சங்கானது கடலிடை ஒளித்துப் புலம்பும், நெய் கமழ் கூழைக்கு முகில் அலறும் - வாசனை பொருந்திய உனது கூந்தலுக்கு ஆற்றாது உடைந்து மேகம் வாய்விட்டு அலறும், பைவரும் அல்குல் நினை, மின் பொருவ நெடு விசும்பில் பதைபதைக்கும் . பாம்பின் படம் போலும் நினது நிதம்பத்தோடு இயைந்த இடையை நினையும் மின்னலானது அதனை ஒத்ததற்காக நெடிய ஆகாயத்தில் துடிதுடித்துக் கொண்டிருக்கும், (எனில் கினது பூரண செளந்தரியத்தை எவ்வாறு பாராட்டல் இயலும் என்பது குறிட பச்சம்)
(கு.உ) :- மெய் இலா முல்லை - 'ல்' இலா முல்லை - முலை, வளை - சங்கு, பணிலம். வெண்மையும் வடிவும் கருதி முலைக்கு உவமையாயிற்று, வீரை - கடல், கூழை - கூந்தல், அல்குல் ஆகு பெயராய் இடையை உணர்த்திற்று. அல்குல் நினைமின் எனப் பிரித்து இடையை நினையும் மின் என உரைக்க, கணங்குழை - அன்மொழித்தொகை,
ஆயத்துய்த்தல்
(ஆயத் துய்த்தல் என்பது தோழியர் குழாத்தொடு கூட்டி விடுதல்)
50. வள்ளலை நோக்கி முகமல ரேழையும் வண்டமிழ்தேர்
தெள்ளிய சீர்க்கவி நோக்கு மரசன் சினகரமு மெள்ளிடு நின்வர னோக்கிடு மாய வினைவகலக் கள்ளவிழ் கூந்த லசைநா வலனுர்க் கடிமனைக்கே.
பதவுரை :- கள் அவிழ் கூந்தல் - தேன் பிலிற்றும் மலர் பொருந்திய கூந்தலை உடைய தலைவியே, வள்ளலை நோக்கி முகமலர் ஏழையும் - கொடை யாளியின் கருணையைக் கண்டு மகிழ்கின்ற ஏழையின் ஆர்வ நிலையும், வண் தமிழ் தேர் தெள்ளிய சீர் கவி நோக்கும் அரசன் சினகரமும் - வளப்பம் பொருந்திய தமிழை ஆராய்ந்து தெளிவடைந்த சிறப்பினையுடைய சொற்கவிஞனது வரவினை எதிர்பார்க்கும் மன்னனது திருவோலக்க மவுன்டபத்தின் , ஆவல் நிலையும், எள்ளிடும் நின்வரல் நோக்கிடும் - தாழ்வுறும் படியாக விஞ்சிய ஆவலோடு நினது வரவை எதிர்பாாத்திருக்கு நின் ஆய நினைவு அகல - நுமது ஆயத்தார் துயர் நீங்கும்படிய88 :பலன் ஊர் கடி மனைக்கு அசை - நாவலர் பிரானது ஊரிடத்ததாகிய காவல் பொருந்திய மனைக்கு இயல்வாயாக.
(கு.உ) - தள்ளிய சீர் - - - சினகரமும் என்பது பண்டை நாள் அரச அரண்மனைகளில் தமிழ்ச்சுவை மீதிருந்த ஆர்வம் மனக்கண் முன் தோன்ற நின்றது. கடிமனை என்றான், வீடும் உன்னை விசாரிக்கும் என்றும் குறிப்புத்

39
தோன்ற, கடி - காவல்கட்டு , ஒதுங்கி அடி பெயர்க்கும் அவள் இயல்பு தோன்ற அசை என்றான். அதற்கு இயல் என்றே பொருள் உரைக்க.
8. பாங்கற் கூட்டம்
தலைவன் பாங்கனைச் சார்தல்
(பாங்கற் கூட்டமென்பது தன் இஷ்டமாகத் தலைவியைக் களவிற் கூடச் செவ்வி பெறாமையால் கவன்று தன்னலம் அழியும் நிலையில் தலைவன் தன் பாங்கன் (தோழன்) உதவியால் அது கைகூடு மாற்றில் முயல்தல் அதில் உள்ள 24அம்சங்களில் ஒன்று பாங்கனைச் சார்தல் என்பது)
51. கலைமரை மான்புன ராறு முகனார் கருமுகிறா
விலைகுளிர் முன்றி லெனதுயிர் காத்திடு மின்னமுத முலைவிலை நாக மணிமுடி போல்வா னுயரருளான் முலைமலை மாதர் தருகாம நோய்தணி முன்னுதுமே.
பதவுரை :- கலைமரை மான் புணர் ஆறுமுகனார் - வெண் தாமரை மலரில் வீற்றிருக்கும் மான்போலும் மருள் நோக்குடைய சரசுவதியைப் புணராது புணர்ந்த ஆறுமுக நாவலரது ஊரின் கன், கருமுகில் தா இலை
குளிர் முன்றில் - கரிய முகில் படிகின்ற இலைகள் பொதுளிய மரங்கள் அடர்ந்த குளிர்ச்சியான முன்றிலில், என் உயிர் காத்திடும் இன் அமுதம் - எனது உயிர் பிரியாது பேண வல்லதும் நோய்க்கு
மருந்தாவதுமான இனிய அமுதமும், உலைவு இலை நாகமுடி மணி போல்வான் - உலைவு அற்ற ஐந்தலை நாகத்தின் முடிமணியும் போன்ற
வனுமாகிய எனது உயிர்ப் பாங்கனது, உயர் அருளால் - மேலாகிய கருணையின் துணைகொண்டு, மலைமுலைமாதர் தரு காமநோய் தணி முன்னுதும் - மலை ஒத்த பாரிய பயோதரத்தினை (தனம்) உடைய
தலைவி அளித்த விரகதாபத்தைத் தணிக்க முயல்வோம்,
(கு.உ) - கலை மரை மான் - கலைகளுக்கிறைவியும் வெண்தாமரை மலரில் இருப்பவளும் மான்போலும் விழி படைத்தவளுமாகிய வாணி -மரை - தாமரையின் முதற்குறை, தனியா நோய் தணித்தற்கு நாகரத்தினத்தை நாடும் மரபு உண்டு. மணி மந்திர ஒளடதம் ஒழுங்கில் முதலாவது அதுவாம் ஆதலில் பாங்கனை அம்மணியாகக் குறித்தாா. மணிமுடி என்பதனை முடிமணி என மாற்றுக.

Page 31
40
பாங்கன் தலைவனை யுற்றது வினாதல்
(பாங்கன் - - - வினாதல் என்பது தலைவனது மெலிவு கண்டு அவனுக்கு நேர்ந்த துயர் பற்றிப் பாங்கன் வினாவுதல்)
52. உரைநடை தன்னி லுவமையி லாறு முகன்றனையேய்
தரைநடை கற்ற வுரவோ யுலகழி தான்வரினும் புரையறு முள்ளங் கலங்கா வுரனும் புகலுடலுங் கரையறு துன்புற் றலந்ததெ னல்லையிற் கட்டுரையே.
பதவுரை :- உரைநடை தன்னில் உவமையில் ஆறுமுகன் தனை ஏய்உரைநடை ஆக்கத்தில் ஒப்பற்ற சிறப்புற்று ஓங்கிய ஆறுமுக நாவலர் போன்று, தரை நடை கற்ற உரவோய் - உலகியல் நெறியில் ஒப்பற்ற பயிற்சி பெற்ற பெருமைக்குரிய தலைவ, உலகு அழிதான் வரினும் - உலக அழிவு ஏற்பட்டாலும், புரை அறும், உள்ளம் கலங்கா உரனும் புகலுடலும் - உமது மாசு அற்ற உள்ளமும் நெஞ்சு உரனும் உடல் வலுவும் (கலக்கமுறா), நல்லையில் கரை அறு துன்புற்று அலந்தது என் - (அத்தகும் நீர்) நல்லைப்பதியிலே எல்லையில்லாத துன்பம் எய்தி இரங்குதற்குக் காரணம் என்னையோ, கட்டுரை - உரைப்பீராக.
(கு.உ) :- அழி - அழிவு (கடைக்குறை). முதல் உள்ளம், இயைதலில் உளன் ஊக்க மிகுதி அல்லது நெஞ்சுரன் எனல் சாலும்,
தலைவன் உற்ற துரைத்தல்
தலைவன் உற்றதுரைத்தல் என்பது, தன்னிலை பற்றி வினாவிய பாங்கற்குத் தலைவன் தனக்கு நேர்ந்த வேறுபாட்டின் காரணத்தை உரைத்தல்.
53. மானா ரளக வனமடர் யானை வலியரியு
மானா விடல வாளே வடர்க்க வலைக்கழிந்து வானா ரிபம்டு வார்க்கணிப் பட்டதென் மன்னுகலை வானா ரி:ே* காமலி நாவலன் வண்கிரிக்கே.
பதவுரை - வான் ஆர் இளமர கா மலி நாவலன் வண்கிரிக்கு - ஆகாயத்தை ஆளாவி நிற்கும் இளமரங்களை உடைய சோலைகள் நிறைந்ததான நாவலரது வளப்பமுடைய மலையின் கண், மான் حسنا மான்விழியும், ஆர் அளகவனம் - பொலியுஞ் செறிவு உடைய கூந்தற்காடும், அடர் யானை - எதிர்த்துப் போர் புரியும் இயல்பினதாய

41
மதர்ப்பினை உடைய முலையாம் யானையும், வலி அரியும் - வலிய சிங்கமும், விட ஆனா அரவு - விடம் நீங்காது உறையும் ஒளி பொருந்திய நிதம்பமாகிய பாம்பும், வாள் ஏ அடர்க்க அலைக் கழிந்து - கண்ணாகிய கூர் அம்பும் ஒரு சேர நேர்ந்து நெருக்குதலால் துன்பம்-எய்தி, என் மன்னு கலை - யான் கற்றுத்தேறிய நிலைபேறுடைய அறிவு, வானார் இபம் படுவார்க்கு அணிப்பட்டது பெருமை மிக்க கொம்பனையார்க்கு எதிரணியாயிற்று.
(கு.உ) - விடம் ஆனா அரவு - விடம் நீங்கா அரவு.
இதுவுமது
54. கூழை வனஞ்சேர் பிடிக்கவ டேயர வாய்ப்பட்டதெ
னேழை மதிதா னிரங்கிநின் றேனெதி ரேற்றதெவ்வர் கோழை மதிபடைத் தோடி யொழிக்கக் குணப்படையாற் பீழை யுறவடர் நாவலன் கீரிப் பெருமலைக்கே.
பதவுரை :- குண படையால் பிழை உற அடர் நாவலன் கீரி பெருமலைக்கு - தனது உயர் பண்பு என்னும் படைக்கலத்தினால் uഞ5ഖf5ണ് துன்பமுறும்படி எதிர்த்துப் போர் புரியும் நாவலரது கீரிமலைப்பதியின் கண், அவள் வனம் கூழை சேர் பிடிக்கு - அவளது காடு எனத்தகு கூந்தலாகிய பிடியில், எதிர் ஏற்ற தெவ்வர் கோழை மதி படைத்து ஓடி ஒளிக்க - எதிர்த்து வந்த பகைவா கோழைத்தனத்தின் வாய்ப்பட்டு வலியற்று ஓடி மறையும் வண்ணமாக, தான் தே அரவு வாய்ப்பட்ட என் ஏழை மதி - தான் குறைப்பாம்பாகிய இராகுவினது வாய்ப்பட்ட சந்திரனாகி, இரங்கி நின்றேன் - கவலை உற்று நிற்கின்றேன்.
(கு.உ.) - தேயர - தேயரவு - குறைப்பாம்பு, இராகு. மதி - சந்திரன், அறிவு.
கற்றறி பாங்கன் கழறல்
(கற்றறி பாங்கன் கழறல் என்பது கலைகள் அனைத்தும் கற்றுத் தேறி
மதிவலி படைத்த பாங்கன், தலைவன் கலக்க நிலை கண்டு இடித்துரைத்தல்)

Page 32
42
55. கண்ணாடி யூது குழலுக் குடைந்தாய் ககனமுறு
பண்ணாடி யாழோர் மனமு மதித்திடு பாற்றிரைசேர் தண்ணுர டகநெகிழ் சந்தத் தமிழ்சேர் தனியறிவு மண்ணுர் டுனையனை யாரிலை நாவல மன்னகர்க்கே.
பதவுரை :- நாவல மன் நகர்க்கு நாவலர் பிரானது பெருமை உடைய நகரில், கள் நாடி ஊது குழலுக்கு உடைந்தாய் - வண்டுகள் மொய்த்து ஒலிக்கும் அவளது கூந்தலுக்கு அழிந்தாய், ககனம் உறு பண் நாடி யாழோர் மனமும் - ஆகாயத்தில் சஞ்சரிக்கும் யாழிசையாளர்களான கந்தருவர் மனத்தியல்பும், மதித்திடு பால் திரை சேர் தண் ஊடக நெகிழ் சந்தத் தமிழ் சேர் தனி அறிவும் - கடையப்பெற்ற பாற்கடலில் எழும் அமிர்த இனிமையினால் உள்ளுருக்கும் சந்தத்தமிழ் தெளிவிக்கும் ஒப்பற்ற அறிவும் என்பவற்றில், மண்ணுாடு உனை அணையார் இலை - உலகில் உனக்கு ஈடானவர் இல்லை.
(கு.உ) :- கண்ணாடி - கள் நாடி, வண்டு, குழல் - கூந்தல், வண்டு ஊதும் குழலுக்கு வலியழிந்தாய் என மற்றோர் தொனியும் நிகழ்தல் காண்க. மதித்தல் - கடைதல், தண் என்பது மை ஈறு கெட்ட பண்புப்பெயர். அது குணவாகு பெயராய் அமிர்தத்தின் மேல் நின்று பின் இருமடியாகு பெயராய் இனிமைமேல் நின்றது. யாழோர் - யாழிசையாளர் . கந்தருவர்.
கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்
(கிழவோன் கழற்றெதிர் மறுத்தல் என்பது பாங்கன் கூறிய வார்த்தையைத் தலைவன் மறுத்துரைத்தல்)
56. கண்டா னினதுரை காண்பே னவள்கடுக் கண்ணிணைவே னுண்டார் பொறாதுளை சிங்க மழிந்திடு நோன்கரியு மண்டா னிவன்றமிழ் மாமலை யென்றே மதித்தசிவ தொண்டா னவன்பிறர்த் தொண்டா னறுமுகன்
சோலையிலே.
பதவுரை :- இவன் தமிழ் மாமலை என்று மண் தான் மதித்த - இவன் தமிழறிவாண்மையில் பெருமையுடைய மலை போல்வான் என உலகம் மதிக்க உள்ளவனும், சிவதொண்டானவன் - சிவத்தொண்டே தானாய் விளங்கியவனும், பிறர் தொண்டான் - பிறர் தொண்டே தன்தொண்டாகக் கொண்டவனுமான, அறுமுகன் சோலையில் - ஆறுமுகனார் சோலையின் கண், கண்டால் நினது உரை காண்பேன் - அவளை நான் காண்பேனாயின்

43
நீ சொல்வதன் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வேன், அவள் கடுகண் இணைவேல் நுண்தார் பொறாது உளை அவள் நஞ்சு போன்ற கண்களாகிய இரட்டை வேல்களினது கூர்மையின் தாக்கத்தைப் பொறாதவனாகி வருந்துகிறாய், நோன்கரியும் சிங்கம் அழித்திடும் சிலபோது வலுமிக்க யானையும் சிங்கத்தை அழிப்பதுண்டு.
பாங்கன் கிழவோற் பழித்தல்
(பாங்கன் கிழவோற் பழித்தல் என்பது அவ்வாறு கூறிய தலைவனைப் பாங்கன் பழித்துக் கூறல்)
57. நாவலர் மெச்சிடு மாறு முகனார் நளியிருந்தண்
பூவலர் சோலைத் தமிழமு துண்ணல் பொருந்திலையல் லாவலர் மேவ வொருபேதை கொங்கை யமுதமுண்ணத் தூவலர் மார்ப வருந்தின் வனமெரி தூவிடுமே.
பதவுரை:- தூ அலர் மார்ப - தூய்மையான மலர்மாலை அணிந்த மார்பினை உடைய தலைவனே, நாவலர் மெச்சிடும் ஆறுமுகனார்
நாவன்மை மிக்க புலவர்கள் போற்றும் பெருமை வாய்ந்த ஆறுமுகக் கடவுளே போலும் நாவலர் பிரானது, நளி இரும் தண் பூ அலர் சோலை - தேன் பொருந்திய மிகுதியான குளிர்ச்சியை உடைய பூக்கள் மலரும் சோலையிடத்து, தமிழ் அமுது உண்ணல் பொருந்திலை - தமிழாகிய அமுதத்தினை நுகர வேண்டும் என்று கருதினாய் அல்லை, அல்லா அலர் மேவ - தகுதிப்பாடு அற்ற (பிறர் நூற்றும் படியான) பழிச்சொல் பொருந்தும் வகையில், ஒரு பேதை கொங்கை அமுதம் உண்ண - ஒரு பெண் பேதையின் நகில் இன்பம் நுகரக் கருதி, வருந்தின் - முயன்று வருத்த முற்றால், வனம் எரி தூவிடுமே - நீர் நெருப்பைப் பொழிதல் உண்டோ?
(கு.உ) :- அலர் - பூ இங்கு பூவால் இயன்ற மாலையை உணர்த்திற்று தமிழ் அமுது உண்ணலால் வருவது உள மகிழ்ச்சியும் குளிர்ச்சியுமாம். அதில் நீ செறிந்திருந்தால் தனபான சையோக விழைவின் பேறாய் உற்ற இவ் விரக வெம்மை ஏற்பட்டிருக்குமா என்ற குறிப்புத் தோன்ற வனம் எரி து விடுமே என்றான். வனம் - நீர்,

Page 33
44
கிழவோன் வேட்கை தாங்கற் கருமை சாற்றல்
(εβρβολιπού --------------- சாற்றல் என்பது, தலைவிபாற் கொண்ட வேட்கை தாங்க அரியது எனக்கூறல்)
58. தவித்த முயலது பார்த்தடிப் பார்போற் றகுமுனக்கே
புவித்த னருங்கலை செல்வ மனைத்தும் புதிய தமிழ் அவித்த பரமத மாள வளிநா வலனலையுற் பவித்த திருவுக் கழுங்கிடு வேனைப் பழிப்பதுவே.
பதவுரை :- புவி தன் அரும் கலை பூமியிடத்துப் பொருந்திய தனது அரிய கலைகளும், செல்வம் - பொருட் செல்வமும், புதிய தமிழ் - தாம் உருவாக்கிய நவீனமான தமிழும், அனைத்தம் ஆகிய எல்லாவற்றினையும், 'அவித்த பரமத மாள - கெடச்செய்த அந்தப் பொய்யாகிய பிற சமயங்கள் கெட்டு ஒழியும் படியாக, அளி நாவலன் கலை - தன்னை அர்ப்பணித்த நாவலர் பிரானது நல்லைப் பதியில், உற்பவித்த திருவுக்கு அழுங்கிடுவேனை தோற்றிய திருமகள் போலும் தலைவியின் அன்புக்கு ஏங்கித் துன்பப்படும் என்னை, பழிப்பது (ஏ) - குறை கூறுவது, தவித்த முயலது பார்த்து அடிப்பார் போல் " (இடம் விட்டு ஓடி உயிருக்கு அஞ்சி) அவதியுறும் முயலைத் துன்புறுத்துவார் போன்ற (செயல்), உனக்க்ே தகுவதாகும்.
(கு.உ)- கலையும் செல்வமும் புதிய தமிழ் அனைத்தும் என உம்மை விரித்துக் கூட்டுக - நாவலர் பிரான் வகுத்த உரைநடை தருங்காறும் செய்யுள் நடையே பெருவழக்குடையதாய் விளங்கியதாக, அதன்மேல் நாவலர் பெருமான் வகுத்த உரை நடையே செல்வாக்குப் பெற்றமையின் புதிய தமிழ் எனச் சுட்டப்பட்டது. தவித்த முயலது பார்த்தடிப்பார் இவ்வாசிரியரால் இலக்கிய அரங்கேறிய பேச்சுவழக்குத் தமிழ் , உனக்கே தகும் என்றது பிறர் இவ்வண்ணம் கூறார் என்றவாறு.
இதுவுமது
59. மைக்கோல வாள்விழி மாதர் பொருட்டு மயங்கிமதக்
கைக்கோல யானை யதுவுண் கனிபோற் கலங்குமெனை யிக்கோல மாத லுணர்ந்தும் பழித்த லியல்பலநிற் றக்கோல வாறு முகன்றெல் வென்வாழ் வரிதினியே.
பதவுரை :- மைகோல வாள் விழி மாதர் பொருட்டு மயங்கி - மை தீட்டிய அழகிய ஒளி பொருந்திய கண்ணினள்ாய தலைவியின் நிமித்தமாக மயக்கம் உற்று, மத கை கோல யானையது உண் கனிபோல் - மதம் பொருந்தியதும் துதிக்கையினை உடையதுமாகிய யானையால்

45
உண்ணப்பெறும் விளங்கனி பேர்ல, கலங்கும் எனை - (உள்ளிடற்றவனாய்) கலங்கி நிற்கும் ബങfഞങ്ങ്, இ கோலமாதல் உணர்ந்தும் (பரிதாபத்துக்கிடமாய் வாட்ட முற்று விளங்கும்) எனது இக் கோலத்தினைக் கண்டிருந்தும், பழித்தல் இயல்பு அல - இகழ்ந்து கூறுவது நினக்கு ஏற்புடையதாகாது, நீற்ற கோல ஆறுமுகன் - நீறு புனைந்த அழகிய தோற்றத்தினை உடைய நாவலர் பிரானது, தெவ் என வாழ் இனி அரிது - பகைவர்களைப் போன்று வாட்டமுற்று வாழ்வது இனிமேல் இயல்வது
960}.
பாங்கன் தன் மனத் தழுங்கல்
(பாங்கன் தன் மனத்தழுங்கல் என்பது, தலைவன் இவ்வாறு கூறக்கேட்ட பாங்கன் மனத்துள் அவன் பொருட்டு இரக்கம் எய்தல்)
60. மானொன்று கண்வே லதுகொண்டு குத்தி
மருங்குல்வெளிக் கானொன்று கூந்தல் வலையது வீசக்கட் டுண்டனனா னானின்று செய்வ தெவனுரை நெஞ்ச நமன்வரக்கண் டேனிங்கு வந்தனை யென்றவ னாறுமுகன் வரைக்கே.
பதவரை :- நெஞ்ச - நெஞ்சமே, நமன்வர கண்டு - யமதர்மராசன் தன்னை நோக்கி வருவதைப் பாாத்து, இங்கு வந்தனை ஏன் என்றவன் - (நீ) இவ்விடத்து வந்த காரணம் யாதென வினாவியனது, ஆறுமுகன் வரைக்கு -பெருமைமிக்க நாவலர் பிரான்து மலையினிடத்து, மான் ஒன்று கண் வேலது கொண்டு குத்தி - மான் ஒத்த மருட்சி உடைய கண்ணாகிய வேலினால் குத்தி, மருங்குல் வெளி - இடை என்னும் வெளிப்பிரதேசத்தை அடுத்த, கான் ஒன்று கூந்தல் வலையது வீச - செறிவுமிக்க கூந்தல் என்று சொல்லப்படும் வலை வீச, கட்டுண்டனன் - அதில் அகப் பட்டுக் கொண்டான், நான் இன்று செய்வது எவன் . யான் இப்போது செய்யத்தக்கது யாது, உரை - சொல்வாயாக.
(கு.உ):- மருங்குல்வெளி - இடை என்ற அவயவம் காணப்படாமையின் வெட்ட வெளியாகப் பேசப்பட்டது. நமன்வரக் - நாவலன்' என்றது "இறப்பதனுக்கென் கடவேன்'
என்ற மணிவாசகர் திருவுளத் திண்மை புலப்பட நின்று நாவலர் தம் அஞ்சா வீரம் தோற்றும் நயம் காண்க.

Page 34
61.
62.
46 பாங்கன் தலைவனோடழுங்கல்
(பாங்கன் தலைவனோ டழுங்கல் என்பது, பாங்கன் தலைவனோடு
வருந்திக் கூறல்) மூவேந் தருமற்று முச்சங் கமும்போய் முதியதமிழ் நாவேந் தழியா ததைநிலை செய்ந்நா வலன்வரைக் கொண் மூவேந் தியமான் பொருட்டா லுனதரு மொய்யறிவு நீவேந் தரியகன் றாயே லினிதே நினைகுதியே.
பதவுரை:- வேந்து அரி - அரசருள் சிங்க ஏறு போன்ற தலைவ, மூவேந்தரும் அற்று - சேரசோழ பாண்டியர்களால் வளர்க்கப்பட்ட நிலைநீங்கி, முச்சங்கமும் போய். முதல் இடை கடைச் சங்கங்களினால் போற்றி வளர்க்கப்பட்ட நிலையும் அகன்று, நா வேந்து முதிய தமிழ் - கற்றோர் நாவில் பேணப்பெற்று வந்த பழைமையான தமிழ் தன்னை, அழியா நிலை செய் நாவலன் - அழிந்து போகாது நிலை நிறுத்திய நாவலர் பிரானது, வரைக்கு - மலையிடத்து, கொண்மூ ஏந்திய 'மான் பொருட்டால் - முகில் போலும் கூந்தல் உடைய மானின் மருட்சியைக் கொண்ட நங்கை நிமித்தமாக, நீ உனது அரு மொய் அறிவு அகன்றாயேல் - நீ உனது அரிய வலிமையான அறிவாற்றலை இழந்தாய் என்றால், இனிதே நினைகுதி - (நிகழப்போகின்றவற்றை) நன்கு சிந்தித்துப் UTTTUTEs.
பாங்கன் எவ்விடத் தெவ்வியற்றென்றல்
(பாங்கன் . என்பது, தலைவனைப் பார்த்து நின்னாற் காணப்பட்ட நங்கை எவ்விடத்துள்ளாள், எவ்வியல்பினள் என்று வினவுதல்)
கிறித்த வரவது கொள்ளாமற் சைவக் கிளர்மதியை நிறுத்த வருளொளி நல்லையி னாவல னேரியவு ளெறித்த மதியை யரியரக் கொண்டு நிறையழித்த பொறித்த நுதலியல் மேவிட மேது புகலுகவே.
பதவுரை:- கிறித்தவர் அரவது கொள்ளாமல் - கிறித்துவ மதமான பாம்பு விழுங்கிவிடாமல், கிளர் சைவ மதியை - மேலோங்கும் இயல்பினதான சைவமாகிய சந்திரனை, நிறுத்த அருள் ஒளி நல்லையின் நாவலன் நேர் - நிலை நிறுத்துவதற்காக உழைத்த அருட் பிரபை மிக்க நல்லைப் பதியில் தோன்றிய நாவலர் பிரானை ஒத்த, இயவுள் எறித்த மதியை -

63.
47
தெய்வத்தன்மை வாய்ந்த அறிவாகிய சந்திரனை, அரி அர கொண்டு நிறை அழித்த - தகட்டு வடிவினதாகிய நிதம்பம் என்னும் பாம்பினைக் கொண்டு உனது மனவுறுதியை அழியச் செய்த, பொறித்த நுதல் - ஒளி பொருந்திய நெற்றியை உடையளாகிய அந்நங்கையின், இயல் மேவிடம் ஏது - தன்மை யாது, பயிலிடம் யாது, புகலுக - எனக்குச் சொல்வாயாக.
(கு.உ)- கிறித்து அரவு - கிறித்துவ மதமான பாம்பு, கிளர் சைவ மதியை நிறுத்த - உயரும் சைவ மேதையை ஆக்கிரமித்துக் கொள்ள விடாமல் நிலைநிறுத்திய என ஓர் பொருள் தொனிக்க நிற்றலும் காண்க. இயவுள் - தெய்வம், பொறி - ஒளி, நுதல் - நெற்றி, ஈண்டு நுதல் உடைய தலைவியை அன் மொழி வகையாற் சுட்டி நின்றது. அரி - தகடு, அரவு - அர எனக் குறைந்து நின்றது. நிறை - மனவுறுதி, ஆண்மைக் குணங்களாகிய நிறை, அறிவு, ஒர்ப்பு, கடைப்பிடி அனைத்தும் சீர் குலைந்தவாறு சுட்டப் பெற்றது. கிறித்தவ அரவு கொள்ளாமல் சைவமதியை நிறுத்த நாவலன் பதியில் அவனை ஒத்த விதி வருத்த உன் மதியை அல்குலாகிய அரவு கொள்ள நேர்ந்தது என்ன விபரீதம் என ஒரு சுவை தோன்ற நிற்றலின், முதலடி காட்டும் மறு பொருளைத் தொனிப் பொருளாகவே கொள்க.
தலைவன் இவ்விடத்திவ்வியற் றென்றல்
(தலைவன் இவ்விடத் திவ்வியற் றென்றல் என்பது, நான் பாத்த நங்கை இவ்விடத்தில் பயில்பவள், இன்ன தன்மையினள் என்று பாங்கனுக்குக்
கூறுதல்)
அம்பராத் திங்க ளசோகு பிறைவெளி யாமிளநீர் கம்புக ணல்குன் முகந்தா னுதலிடை கொங்கை கழுத் தம்பர வாரிரு ணுாற்றன கூந்த லவட்கென்றுளக் கம்பமி லாதவ னாவலன் றண்பொழில் காணிடமே.
பதவுரை :- அம்பர வார் இருள் நூற்று அன, கூந்தல் அவட்கு - ஆகாயத்தில் விளங்கும் இருண்ட முகிலை நூல் செய்தாற் போன்று விளங்கும் கூந்தலுடைய என் தலைவிக்கு, அம்பு, அரா, திங்கள், அசோகு, பிறை, வெளி, இளநீர், கம்பு ஆம் - அம்பு, பாம்பு, சந்திரன், அசோகந்தளிர்,பிறை, வெளி, இளநீர், சங்கு என்பன முறையே - கண் அல்குல் முகம் தாள் நுதல் இடை கொங்கை கழுத்து-கண், நிதம்பம், முகம், அடி, நெற்றி,இடை, நகில், கழுத்து ஆகிய உறுப்புக்களாகத் திகழ்வனவாம். (இதுவே அவள் இயல்) உள கம்பம் இலாதவன் நாவலன் - உளச்சலனம் சற்றும் இல்லாத (அறிவொளியாற் சூரியனைப்போலும்) நாவலர் பிரானது (பதியில் விளங்கும்) தண், பொழில் இடம் - குளிர்ச்சி பொருந்திய சோலையே அவள் பயில் இடமாகும், காண் - காண்பாயாக.

Page 35
65.
48
(கு.உ):- முதலீரடிகளும் அம்பு - கண், அரா - அல்குல் என்றாங்கு நிரல் நிறைப் பொருளில் அமைந்துள்ளன. அசோகு அசோகந்தளிர் மென்மையும் நிறமும் நோக்கிப் பாதத்திற்கு உவமையாயிற்று கம்பு - சங்கு
பாங்கன் இறைவனைத் தேற்றல்
செல்வத்துட் செல்வ முடையா னறுமுகன் சீர் நலையின் மல்குற்ற காமக் கடலத னிள்கரை மன்னிடநீ யல்வைத்த கூந்த லரும்புணை கண்டுனை யண்மளவு மெல்வைத்த நற்புக ழண்ண லிகந்திட லிப்பரிவே.
பதவுரை:- எல் வைத்த நற்புகழ் அண்ணல் - சோபை மிக்க சிறந்த கீர்த்தியை உடைய தலைவ, செல்வத்துள் செல்வம் உடையான் அறுமுகன் சீர் நலையில் - செல்வத்துட் சிறந்த செல்வமாகப் போற்றப்படும் கேள்விச் செல்வத்தை உடைய நாவலர் பிரானது சிறப்பார்ந்த நல்லைப்பதியில், மல்குற்ற காமக்கடல் அதன் நீள் கரை நீ
மன்னிட - (தலைவி பால்) பெருகிப் பரந்த ஆசைக்கடலின் நெடிய கரையை நீ பொருந்துவதற்கு, அல் வைத்த கூந்தல் அரும்புணை கண்டு உனை அண்மளவும் - அக்கடலைக் கடத்தற்கு ஆதாரமாக விளங்கும்
இருள் பொதிந்த கூந்தலை உடைய தலைவி என்று நீ கூறும் தெப்பத்தினைப் பார்த்து நான் மீண்டுவரும் வரையும், இ பரிவு இகந்திடல் - இவ்வருத்தத்தை தவிர்ந்திருப்பாயாக.
(கு.உ):- இகந்திடல் - தவிர்ந்திரும்பாயாக 'அல் ஈற்று வியங்கோள் மகனெனல் மக்கட்பதடியெனல்" என்பதில் இரண்டாவது 'எனல்" போல் (மக்கட் பதடி என்க) என்பது பொருள்.
பாங்கன் குறிவழிச்சேறல்
(பாங்கன் குறிவழிச் சேறல் என்பது தலைவன் கூறிய அடையாளத்தின் வழி தலைவி இயல், இடம் நாடிப் பாங்கன் செல்லல்)
கரிகண் டரியஞ்ச லுண்டேற் கடுக்கு முடுக்கையது சரிகண் டவனுரை செவ்விள நீராற் சரியுமிடை நரிகண் டவர்பரி யாக வடியவ னாவலவன் விரிகண் டலரி யலர்பொழின் மேவிடு மேயெளிதே.

49
பதவுரை :- நரி பரியாக கண்டவர் அடியவன் நாவலன் - நரிகளைக் குதிரைகளாக மாற்றி அருளிய சிவபெருமானது அடியவராகிய நாவலர்பிரானது, அலரி கண்டு விரி அலர் பொழில் (வாய்) - சூரியன் வரவு கண்டு விரிகின்ற மலர்கள் * பொருந்திய சோலையின் கண்ணே, உடுக்கையது சரி கண்ட கரி கண்டு அரி அஞ்சல் உண்டேல் - உடுக்கானது உவமைவகையால் சரியாக இருக்கும் தன்மையைப் பிரத்தியட்சமாகக் கண்டு அதற்கு - ஒவ்வாமையால் சிங்கம் பின்வாங்கும் நிலை உண்டெனில், கடுக்கும் - அதனை ஒத்திருப்பதும், செவ்விள நீரால் சரியும் - செவ்விளநீர் போலும் தன பாரத்தால் சாய்வதும், அவன் உரை - இத்தன்மைத்து என்று தலைவனாற் சொல்லப்பட்டதும் ஆகிய, இடை - இடையினை உடையாள், எளிது மேவிடுமே - இலகுவாக யான் காணத்தக்கதாய் நிற்பாளே.
(கு.உ):- கடுக்கும், சரியும், உரை என்ற எச்சங்களைக் கொண்டு கூட்டி உம்மை விரித்துப் பொருள் கொள்க. உரை கண்டவனுரை என விகாரமுற்றது கண்டவனது உரை என ஆறாம் வேற்றுமை ஏற்ற வினையாலணையும் பெயர் எனினுமாம்.
பாங்கன் இறைவியைக் காண்டல்
இறைவி - தலைவி
திங்கண் முகமே விழிகார் கதுப்புவிண் சீறிடைசில் வெங்கண் முலையிள நீரே நடையது வெள்ளையன்ன நங்கண் ணறுமுக நாவல னாரது நல்லையிலேபங்கண் பங்கண் மலைமகள் சேய்சொன்ன சேயிழைப் பாவையிதே.
பதவுரை:- நம் கண் அறுமுக நாவலனாரது நல்லையிலே - நமது கண் போன்ற ஆறுமுக நாவலர் பிரானது நல்லைப்பதியின் கண்ணே, (இவளின் உறுப்புகளை நோக்குமிடத்து) திங்கள் முகம் - சந்திரனே முகம், ஏ விழி - அம்பே கண், கார் கதுப்பு - முகிலே கூந்தல், விண் சீறிடை - விண்வெளியே சிற்றிடை, இளநீர் சில் வெம் கண் முலை - இளநீரே வட்டித்த விருப்பத்தை விளைக்கும் கண்ணுடைய நகில்கள், வெள்ளை அன்னம் நடையது - வெள்ளை அன்னமே நடை ஆதலின், பங்கு அண் மலைமகள் சேய் சொன்ன சேயிழை பாவை இது - சிவனது பாகத்தினை அணவி நிற்கும் பர்வத குமாரியாகிய உமையம்மையின் மகனாகிய முருகன் போன்ற தலைவன் கூறிய சிறந்த ஆபரணங்களை அணிந்த பெண்னே இங்கு காணப்படும் பாவையாவாள்.

Page 36
50
(கு.உ):- ஏ - அம்பு, கதுப்பு - கூந்தல், சில் - வட்டம், பங்கு அண்மலை மகள் -பாகத்து அண்மிய மலைமகள், வினைத்தொகை. சேய் - உவமையாகுபெயராய்த் தலைவனைக் குறித்தது.
பாங்கன் இகழ்ந்ததற் கிரங்கல்
(பாங்கன் இகழ்ந்தற் கிரங்கல் என்பது தலைவனை முன்னர்
பழித்ததையிட்டுப் பாங்கன் பச்சாத்தாபமடைதல்)
67. செல்லோங்கு சோலை யறுமுகன் றோன்றச் சிறந்த நல்லை
யல்லோங்கு கூழை வனத்தி லயில்விழி யாம்வலையான் மல்லோங்கு தோளைப் பிணிக்க மனமது மாழ்கலொழி சொல்லோங்கு வீர ருளரோ புவிதனிற் சொல்லிடவே
பதவுரை :- செல் ஓங்கு சோலை அறுமுகன் தோன்ற சிறந்த நல்லை - முகில்கள் படியும் வண்ணம் உயர்ந்து விளங்கும் சோலை பொலிவு உடைத்தாய் அறுமுகக் கடவுளை ஒத்த நாவலர் பிரான் தோன்றியதனால் சிறந்து விளங்கும் நல்லைப்பதியில், அல் ஓங்கு கூழை வனத்தில் - இருள் கவிந்திருக்கும் கூந்தலாகிய காட்டில், அயில் விழியாம் வலையால் மல்
ஓங்கு தோளை பிணிக்க - வேல் பேலும் கூரிய கண்களாகிய வலையினால் வலிமை மிக்க தோளை அகப்படுத்திய இடத்தும், மனமது மாழ்கல் ஒழி - உள்ளமானது அம் மயக்கில் மாழ்குவதினின்றும்
நீங்கியவராக, புவிதனில் சொல்லிட சொல் ஓங்கு வீரர் உளரோ - உலகில் சிறப்பாக எடுத்துப் பேசும் வகையில் புகழ் படைத்து உயர்ந்த வீரரும் உண்டோ.(இல்லை)
(கு. உ) :- ஒழி வீரர் என இயைக்க
பாங்கன் தலைவனை வியத்தல்
68. நல்லார் புகழ்ந்திடு மாறு முகனார் நலையணையா
ரல்லார் குழல்வன மாங்குன் றிரண்டட ரானை தப்பி நில்லா விடையரி தப்பியு நீள்கணை பாம்பு தப்பி மல்லார் புயன்மதி யெவ்வா றெனையுற வந்ததுவே
பதவுரை :-நல்லார் புகழ்ந்திடும் ஆறுமுகனார் நலையணையார் - சிறந்தோரால் விதந்து பேசப்படும் ஆறுமுக நாவலர் பிரானது நல்லைப்பதியை ஒத்த தலைவியினது, அல் ஆர் குழல் வனம் - இருள் பொதிந்த கூந்தலாகிய காட்டுக்கும், குன்று இரண்டு அடர் ஆனை தப்பி -

51
இரு மலைகள் போல் எழுந்து மோதுகின்ற கொங்கைகளாகிய ஆனைகளுக்கும் தப்பியும், நில்லா இடை அரி தப்பியும் - நிலையின்றித் தளருகின்ற இடையாகிய சிங்கத்துக்குத் தப்பியும், நீள் கணை (தப்பி) - நெடிய கண்களாகிய அம்புகளுக்குத் தப்பியும், பாம்பு தப்பி- நிதம்பமாகிய பாம்புக்குத் தப்பியும், மல் ஆர் புய மதி - வீரம் நிறைந்த தோள் வலியும் மதி வலியும் மிக்க தலைவன், எனை உற வந்தது எவ்வாறு- என்னைப் பொருந்தும்படியாக மீண்டு வந்தது எங்ங்னமோ.
(கு.உ) :- ஒப்பு - “மகரஞ் செறியும் மறிகடல் நீந்தி வட மலையின் சிகரங்கள் கடந்து வரியரி தாவும் : செறியிருள் கூர் தகரஞ் செறி வளம் தள்ளி யென்னாவி தனி வந்தவா பகருந் தகைமையதோ பெரியோர்தம் பரிசுகனே” - அம்பி கோவை.
பாங்கன தலைவியை வியத்தல்
69, கண்டரு காம விடமகல் வுண்டுமன் காரிகையார்
பண்டரு சொல்லாட் டுயர்நெறிப் பாவரும் பண்புடையான் மண்டரு நற்றவ மாநா வலவன் வரைமணங்கு தண்டரு மூவமு தூட்டிடு மூட்டிருந் தானெஞ்சமே.
பதவுரை - நெஞ்சமே - நெஞ்சமே, பண் தரு சொல்லாட்டு உயர் நெறி பாவரு பண்புடையான் - பண் அமைதியுள்ள உரையாடலிலும் உயர்ந்த நெறியுடைய பாவே தோன்றி வரும் பண்புடையனான தலைவன், காரிகையார் கண் தரு காமவிடம் அகல்வு உண்டு, - இப் பெண்ணரசியின் கண்ணால் விளையும் காமவிடம் அகலும் உபாயம் உண்டு, மன்ை தரு நற்றவ மா நாவலன் வரை அணங்கு - பூமி தந்ந நல்ல தவ உருவினனாம் சிறப்புக்குரிய நாவலர் பிரானது மலையிடத்தாளாகிய இவ் அணங்கு போல்வாள், ஊட்டு இருந்தால் - முன் நியதி இருக்குமானால், தண்ட அரு மூவமுது ஊட்டிடும் - குறைதல் இல்லாத மூன்று அமிர்தத்தினை ஊட்டி விடுவாள்.
(கு உ) - ஊட்டு - புசிப்பு - அனுபவம் நேர்தற்காய முன்னைய ஏற்பாடு, நியதி என்னலுமாம், தண்ட அரு - குறைதல் இல்லாத, தண்டல் - குறைதல், தண் தரு எனப் பிரித்து குளிர்ச்சி பொருந்திய எனக் கொள்ளலுமாம். மூவமுதாவன :- இதழமுது, (p60D6Du (pib), இன்பாநுபவஅமுது எனும் மூன்றுமாம்.

Page 37
52
பாங்கன் தலைவன் தனக்குத் தலைவி நிலை கூறல்
(பாங்கன் --- கூறல் என்பது தனியே உள்ள தலைவியைத் தாம் கண்டமை பற்றிப் பாங்கன் தலைவக்குக் கூறல்)
70. கணந்தாழ் முகில்படி காநலை நாவலன் காண்டகைய
குணந்தானனைய பொருப்ப வனமுங் குதூகலித்துப் புணர்ந்தாங் ககன்ற பொருகரி மீளப் புகுங்கொலென மணந்தாழ் பொழிற்பிடி போனின்ற துன்னுள மன்றிருவே.
பதவுரை முகில் கணம் தாழ் படி கா நலை நாவலன் - முகிற்கூட்டங்கள் தாழ்ந்து படிகின்ற சோலை பொருந்திய நல்லைப்பதி நாவலர்பிரானது காண் தகைய குணம் தான் அனைய பொருப்ப - கண்டு போற்றத்தகும் குண இயல்புடைய மலை கிழவோனே, வனமும் குதூகலித்து புணர்ந்தாங்கு அகன்ற பொரு கரி - காட்டின் கண்ணே பெருமகிழ்வுற்று அணைந்து சேர்ந்து அவ்விடத்தை விட்ட நீங்கிய போரிடுகின்ற களிறானது, மீளப் புகும் கொல் என - மீண்டும் வருமோ என எதிர்பார்த்து நின்ற, பிடிபோல் - துணையாகிய பெண் யானையைப் போல், மணம் தாழ் ப்ொழில் - வாசனை பொருந்திய சோலையின் கண்ணே, உன் உளம் மன்ரு தி நின்றது - உன் மனத்தில் நிலை பெற்ற இலக்குமி போலும் தலைவி நின்றனள்.
(கு.உ) : பொருகரி - போர் யானை, போர் யானை என்றது உத்தம லட்சன முடையது என்னும் அத்தனைக்காம்.
தலைவன் சேறல்
(தலைவன் சேறல் என்பது, தலைவி நின்ற இடத்துக்குத் தலைவன்
செல்லுதல்)
71. ஏவரு மெச்சிடு மாறு முகனா ரெழினலையிற் றாவரு காமக் கடலி லிருந்தே தழுவியெடுத் தாவரு கொங்கைக் குவடுவைத் தாற்றிட வாரணங்கு மேவரு பூங்கொம் பவையாய மாகவும் மேவிடுமே.
பதவுரை - ஏவரு மெச்சிடும் ஆறுமுகனார் - எவராலும் போற்றித் தொழப்படும் ஆறுமுகநாவலர் பிரானது, எழில் நலையில் - அழகு வாய்ந்த நல்லைப்பதியில், தாவ அரு காம, கடலில் இருந்து தழுவி எடுத்து - கடத்தற்கு அரிய ஆசைக்கடலினின்றும் என்னை அணைத்து எடுத்து,

53
ஆவரு குவடு வைத்து ஆற்றிட - நிறைந்து தனபாரம் என்னும் மலையில் ஏற்றி வைத்து (எனத) விரக வெப்பத்தினைத் தணித்தற்பொருட்டு உதவும், மேவரு பூங்கொம்பவை ஆயமாகவும் மேவிடும் விரும்பத்தரும் பூங்கொம்பர்களே தோழியர் என்று கருதும்படியாக உள்ள அவர்களையும் தன்பாற் கொண்டு, ஆரணங்கு மேவிடும் - அரிய அணங்கு போல்வாள் நின்றிடுவாள்.
(கு.உ);- தாவ அரும் தாவருமென விகாரமுற்றது. தாவுதல் - கடத்தல். ஆர்வரு - ஆவரு என விகாரமுற்றது. ஆர்வரல் - நிறைதல். கடலில் வீழ்ந்து தத்தளித்த உயிரைக் காப்பாற்றிக் கரை ஏற்றி ஓர் திடலில் வைத்து இளைப்பாற்றிய தன்மை போலக் காமக் கடலில் வீழ்ந்து உழன்ற தில்ைவனைத் தலைவி தூக்கி எடுத்து முலைக்குவட்டில் வைத்து இடர் தணிப்பள் என்க. பூங்கொம்பர் விரக நோய்க்குச் சைத்தியோப் சார சாதனமாம் இயையு பற்றிப் பூங்கொம்பர் ஆயமாய்ச் சூழ என்ற நயம் காண்க. சைத்தியம் - சீதளத்தன்மை, தண்மை, மேவரும் விரும்பத்தகும் மே. - விருப்பம்.
தலைவன் தலைவியைக் காண்டல்
72. என்னுயிர் காக்கு மமுதா ரெயிற்றவ ரேழுலகு
மன்னுயி ருய்ய வவதரி நல்லையின் மாக்குவளை துன்னிய தார னறுமுகன் சோலையிற் றோகைவிண்கார் மன்னிய கண்டு மகிழ்வது போல மருவுவரே.
பதவுரை :- ஏழ் உலகு மன்னுயிர் உய்ய நல்லையில் அவதரி - ஏழு உலகுகளின் கண்ணே நிலைபேறுடைய உயிர்கள் உய்திபெற்று ஈடேற நல்லைப் பதியிற் தோன்றியவரும், மாறவளை துன்னிய தாரன் அறுமுகன் சோலையில் - அழகு பொருந்திய குவளை மலரினாலான மாலை பூணும் வேளாளருமாகிய ஆறுமுகநாவலரது சோலையில், விண்கார் மன்னிய கண்டு மகிழ்வது தோகை போல - ஆகாயத்தில் மழை முகில் தோன்றக் கண்டு மகிழ்வதாகிய மயில்போல, (யான் கண்டு மகிழும் வண்ணம்) என் உயிர்காக்கும் அமுதா எயிற்றவர் மருவுவர் - எனது உயிர் நீங்காமற் காக்கும் அதரபானமாகிய அமுதம் பொருந்திய பற்களை உடைய தல்ைவி அணைந்து நிற்கின்றாள்.
(கு.உ):- குவளை - வேளாளரின் அடையாள மாலைக்குரிய பூ

Page 38
54
கலவியின் மகிழ்தல்
73. பாற்கட றன்னைக் கடைந்தே யமரர் பகுத்துணுநஞ்
சாற்படு மவ்வமு தெள்ளிடு நல்லமு தார்ந்தனமால் வேற்படு கண்ணிவள் வெம்முலை கொண்டுயர் வேலை
யல்குன் மாற்பட வேகடைந் தாறு முகநா வலன்பொழிற்கே.
பதவுரை :- (நெஞ்சமே), ஆறுமுகநாவலன் பொழிற்கு - நாவலர் பிரானது சோலை கண்ணே, பாற்கடல் தன்னை கடைந்தே அமரர் பகுத்துணும் - திருப்பாற் கடலைக் கடைந்து பெற்றுத் தேவர்களாற் பகிர்ந்து உண்ணப்பெற்ற அமுதம், நஞ்சாற்படு அவ்வமுது எள்ளிடும் நல் அமுது - நஞ்சினை அடுத்துவந்த குறைபாட்டினால் இகழப்படும் தரத்தது எனக் காட்டும் நல்ல அமுதினை, வேல் படு கண் இவள் வெம்முலை கொண்டு - வேல் போலும் கண்ணை உடைய இத்தலைவியினது விரும்பத்தகு தனமாகிய மலையினை மத்தாகக் கொண்டு, அல்குல் வேலை மால்பட கடைந்து - நிதம்பமாகிய பாற்கடலை ஆசை பெருகக் கடைந்து எடுத்து, ஆர்ந்தனம் - நுகர்ந்து இன்புற்றோம்.
(கு.உ):- வெம்முலை - விரும்பத்தகு மார்பகம், நல்லமுது - நஞ்சொடு வாரா அமுது, எள்ளிடும் - தரக்குறைவாக்கும்.
ஒப்பு: மெய்வாய் கண்மூக்குச் செவியெனும் நாமங்கள் மேவப் பெற்றஐவர்
யினும்நின் றருந்தின ரோடுவருந் தானவர்முன் உய்வான் மலைகொண் டொலிநீர்க் கடல் கடைந்தும்ப ரென்போல் மைவாரழக மடந்தை நின்போலு மருந்தினையே .
- அம்பிகாபதிக்கோவை.
புகழ்தல்
74. பெண்ணை யிவண்முக மேலு மதுநடுப் பெட்குமது
எண்ணை யிழுக்கு மியல்கீழிடமு மதுவுகண்டு விண்னை யளாவத் தலைவிரித் தந்தர மேவிடுமால் கண்ணை மனத்தைக் கவர்நா வலனார் கடனலைக்கே
பதவுரை - கண்னை மனத்தை கவர் நாவலனார் கடல் நலைக்கே - கண்ணையும் கருத்தையும் ஒருசேர ஈர்க்க வல்ல நாவலர் வதியும் வனப்பு வாய்ந்த கடலை மருவி விளங்கும் நல்லைப் பதியின் கண்ணே, பெண்ணை - பனைமரமானது, இவள் முகம் மேலும் மது - இத் தலைவியினது வாயின் கண்ணும் மது, நடு பெட்கும் மது - நடுவிலுள்ள நகில்களிலும்

55
மது, எண்ணை இழுக்கும் இயல் - சிந்தனையைக் கவரும் இயல்பினதாகிய, கீழிடமும் மது - கீழிடமாகிய நிதம்பத்திலும் மது, கண்டு - இருத்தலைக்கண்டு, விண்ணை அளாவ தலை விரித்து அந்தரம் மேவிடும் - விண் மண்டலத்தை அளாவும் படியான தனது தலையை விரித்து ஆகாயத்தைப் பொருந்தி நிற்கும்.
(கு.உ)- முதலீரடிகளிலும் 'உம்' பிரித்துக் கூட்டப்பட்டது மேல், நடு, கீழ் மூவிடத்தும் முறையே பெறற் பாலனவாகிய அதரபானம், நகிற்பானம், சுரதபானம் மூன்றும் தேனாக உருவகிக்கப்பட்டது. மேலிடத்து மட்டும் மதுவுள்ளதாகிய பனைமரம், தலைவிபால் மூவிடத்தும் மது இருப்பக் கண்டு பொறாமை உற்றுச் சகிக்கலாற்றாத தன்மையால் தலை விரி கோலத்தினராய் நின்று அந்தரமப் பட்டதெனக் கவி சாமர்த்தியம் தோன்றுதல் காண்க. முகம் இங்கு வாய்; இதழ்மேல் நின்றத. அந்தரம் மேவிடும் என்பது சிலேடை. அந்தரம் - ஆகாயம், அந்தரப்படும்.
தலைவன் பாங்கியொடு வருகெனப் பகர்தல்
(56006υ6)Ι6όι --------------------- பகர்தல் என்பது இனி நீ இவ்விடம் வரும்பொழுது உன் உயிாத் தோழியோடு வருக. என்று தலைவன் தலைவிக்குக் கூறல்)
75. என்மனக் கோயி லுறைதிரு வேயிங் கினிவருங்கா
ளின்மனக் கேபிரி வில்லா துறையு நினதுபடை தன்னக லாத வுயிர்ப்பாங்கி யோடிவண் டாவுதிநீ நன்மனச் சித்தரு நாடிடு நாவல னன்னகர்க்கே
பதவுரை:- என் மனக்கோயில் உறை திருவே - என் மனக் கோயிலில் வீற்றிருக்கம் இலக்குமி போன்ற தலைவியே, நல் மன சித்தரு(ம்) நாடிடு
நாவலன் நல் நகர்க்கு - சிறந்த உள்ளம் படைத்த பற்று அற்றவர்களாகிய சித்தர்களும் நாடி வருகின்ற நாவலர் பிரானது நன்மை பொருந்திய நகரில், இங்கே இனி வரும் கால் - இங்கே இனி
வருவதாயின், நின் மனக்கு பிரிவில்லாது உறையும் - நின் மனத்தை விட்டு ஒருபோதும் பிரியாது குடிகொண்டு வாழ்பவரும், நினது புடைதன் அகலாத உயிர் பாங்கியோடு இவண் நீ தாவுதி - உன் பக்கம் விட்டு அகலாது இருப்பவளுமாகிய உனது உயிர்ப் பாங்கியோடு வருவாயாக.
(கு.உ):-நின்மனக்கு - மனத்துக்கு என்பதன் அத்துச் சாரியை கெட்டு
நின்றது. நெஞ்சத்திலும், பயிலிடத்திலும் நீங்காது இருப்பவள் எனக் குறித்தமையின் உயிர்ப் பாங்கியின் அணுக்கப் பண்பு உணர்த்தியவாறு
சித்தரும் - உம்மை உயர்வு சிறப்பு.

Page 39
56
தலைவன் தலைவியைப் பாங்கிற் கூட்டல்
gങ്ങബഖങ് ------- கூட்டல் என்பது தலைவியை ஆயத்தோடு சேர்த்துவிடல்,
76. நிறைமதி கண்ட கடலது நீள்பக fைங்கியவ
ருறைபதி வந்த கிளையது கண்ட வுறவினருங் கறையறு நாவல னன்முகங் கண்டிடு கற்றவரு முறைமகிழ் வுற்றிடு நின்றாயஞ் சேர்ந்திடென்
னோருயிரே,
பதவுரை:- என் ஓர் உயிரே - எனது ஒப்பற்ற உயிர் போன்ற தலைவியே, நிறை மதி கண்ட கடலதும் - பூரண சந்திரன் உதயமாகி வருவதைக் காணும் கடலும், நீள் பகல் நீங்கி அவர் உறை பதி வந்த கிளையது கண்ட உறவினரும் - நெடுங் காலம் நீங்கி இருந்த உறவினர் இல்லத்துக்கு மீண்டு வருவது காணும் சுற்ற்த்தவரும், கறை அறு நாவலர் நன்முகம் கண்டிடு கற்றவரும் - மாசு அற்ற நாவலர் ” பிரானது நல்ல முகத்தைக் கண்ட புலமை மிக்கோரும் போல, உறை மகிழ்வுற்றிடு நின் ஆயம் சேர்ந்திடு - உனது வரவு கண்டு மகிழ்வுறும் நிலையினராய்ச் சோலையில் இருக்கும் நினது பாங்கியரோடு சென்று சேர்ந்து கொள்வாய்.
(கு.உ):- கடலதுவும் உறவினரும் கற்றவரும் என்பவற்றுடன் "போல" என ஒரு உவமைச் சொல் விரிக்க பாங்கி மதியுடன்பாடு - முன்னுறவுணர்தல் பாங்கியுடன்பாடு என்பது தலைவியின் வேறுபாட்டினைப் LuTsaé அவதானித்துத் தலைவனுக்குணம் தலைவிக்கும் உள்ள உறவை உளர்ந்து அதற்கு உடன்படுதல். முன்னுற வுணர்தல் என்பது - நாற்றம், தோற்றம், ஒழுக்கம், உணவு, செயல்மறைப்பு செலவு, பயில்வு என்னும் தன்மைகளால் தலைவியின் நிலையில் பாங்கி ஐயமுற்று ஆராய்தலும் ஐயம் தீர்தலும் - இவற்றின் விரிவை அகப்பொருள் விளக்கம் களவியலில்
BT6RS.

57
9. பாங்கி மதியுடன்பாடு முன்னுறவுணர்தல் தோற்றத்தானைய முற்றோர்தல்
(தோற்றத்தா- ஒர்தல் என்பது தலைவியின் தோற்றத்தில் ஐயம் வேறுபாடு கண்டு ஆராய்தல்)
77. ஊச லுகைத்து விளையாடி யோவுட லாவிபொருள்
காசி றமிழ்க்களி நாவலன் காண்டகு கார்ப்பொழில்வாய் நேச மிகுகுயி லாருட னாட னிகழ்த்தி வண்டல் பேசி லுடல்விளை யாடின தான்மயில் பேதுற்றதே.
பதவுரை :- மயில் - மயில் போலும் சாயலை உடைய நீ, பேசில் - ஆராய்ந்து கூறுங்கால், உடல் ஆசவி பொருள் - உடல் உயிர் பொருள் ஆகிய மூன்றையும், காசு இல் தமிழ்க்கு அளி/நாவலன் காண்தகு கார் பொழில்வாய் - குற்றம் அற்ற தமிழ் அன்னைக்கு அர்ப்பணம் செய்து நாவலர் பெருமான் சிறப்புப் போன்ற கரிய சோலையினிடத்தே, ஊசல் உகைத்து விளையாடியோ - ஊஞ்சல் ஆடி விளையாடியோ, நேச மிகு குயிலாருடன் ஆடல் நிகழ்த்தியோ - இசையின்பம் காரணமாக மிகுதியான அன்புக்குரிய குயில் கூவும் பொழுதெல்லாம் எதிர் கூவி விளையாடியோ, வண்டல் விளையாடினதால் - வண்டல் விளையாடினதாலோ, உடல் பேதுற்றது - உனது உடலம் மாறுபாஈடு அடைந்திருக்கின்றது.
(கு.உ):- நம்பி அகப்பொருட் சூத்திரத்தில் நாற்றமும் தோற்றமும் - எனக் குறிக்கப்பட்ட வரிசையில் அன்றி நாற்றத்தினால் ஆராய்தலைப் பின்னிட்டு, தோற்றத்தினால் ஆராய்தலை முன்னிட்டது என்னை எனின் நாற்றம் முதலியவற்றை ஒழுங்கு கூறக் கருதியமை அன்றியும் நாற்ற மறைப்பாளாய்த் தலைவி எதிர்சாற்றில் வந்தமை (சாற்றசைவுக்கு எதிர்ப்பக்கமாக) போலும் என்க. ஊசல் உகைத்து விளையாடியோ, என்பதற்கு ஏற்ப ஆடல் நிகழ்த்தியோ, வண்டல் விளையாடினதாலோ என ஒகாரம் விரிக்க. மயில் அண்மைவிளி. தோற்றத்தானைய முற்றோர்தல் - தலைவியின் நிலை கண்டு, பாங்கி ஐயம் தீர்க்குமுகமாகத் தலைவியை வினவி அறிவதும், தான் தன் நெஞ்சோடு பேசி ஆராய்வதும் என இருவகையிலும் அமையும். ஈண்டு தலைவியை வினாவியதாகக் கொண்டு உரைக்கப்பட்டது. நெஞ்சோடு உசாவியதாக உரைக்கின் மயில் போலும் இவ்ஸ் உடல் பேதுற்றது என இயையும்.

Page 40
79.
58
நாற்ற முதலியவற்றானைய முற்றோர்தல்
நாற்ற- முற்றோர்தல் என்பது நாற்றம் முதலியவற்றால் ஐயத்தினை முற்று ஆராய்தல்
78. வம்புறு வம்பு கமமு முடலும் வறிதுணவும்
வெம்புறு முள்ளத் தடைப்பு மொருவயின் மேவுதலு மம்புறு கண்ணம் புறுவது முண்டவ் வணங்கினுக்கென் அம்புறு சுப்பிர போதம் விடுநா வலன்வரைக்கே.
பதவுரை :- அம்பு உறு போதம் சுப்பிரம் விடு நாவலன் வரைக்கு - மேகத்துத் தோன்றும் மின்னல் ஒளி போன்று ஞானஒளி விடும் நாவலர்பிரானது மலையினிடத்து, வம்புறு வம்பு கமழும் உடலும் - புதமையான வாசனை 'வீசுகின்ற உடலும், வறிது உணவும் - உண்டியில் சுருக்கமும், வெம்புறும் உள்ளத்து அடைப்பும் - வெதும்புகின்ற உள்ளத்தே தோன்றுகின்ற எண்ணங்களை வெளியிடாது மறைத்து வைத்தலும், ஒருவயின் மேவுதலும் - எப்போதும் ஒதுங்கி ஓரிடத்தே இருத்தலும், அம்பு உறு கண் அம்பு உறுவதும் - அம்பு நிகர்த்த கண்ணில் நீர் துளிர்ப்பதும் (ஆகிய குறிப்புகள்) அணங்கினுக்கு உண்டு என் - அந்த அணங்கு போல்பவளுக்கு ஏற்பட்டது ஏன்.
(கு.உ):- வம்பு - புதியது, வாசனை, வயின் - பக்கம்; ஒரு வயின் மேவுதல் - பாங்கியரொடு சேராது ஒரு பக்கமாகத் தனித்து இருத்தல். அடைப்பு - வெளிப்படுத்தாது தடுத்து வைத்திருத்தல், அம்பு - பாணம், நீர் 4ம் அடியில் அம்பு - மேகம். மின்னல் ஒளி என்பது வருவித்து உரைக்கப்பட்டது. சுப்பிரம் - ஒளி; போதம் - ஞானம்; அணங்கு - தேவமகள்; அழகினால் வருத்தும் தெய்வம் என்பதும், பொருள். நாவலர் சுப்பிரபோதம் என்ற பெயரில் விளக்கியாபனம் ஒன்று வெளியிட்ட வரலாற்று உண்மையும் இங்குத் தொனிக்க நிற்றல் நயக்கத்தகும்.
பிறை தொழுகென்றல்
பிறை தொழுகென்றல் என்பது ஒழுக்கத்தை ஆராய்தற் பொருட்டு பிறை தொழுமாறு பாங்கி தலைவியை வேண்டல்.
இரவை யறுத்தலி னின்னுதல் கூந்தலை யேய்தலின வரவை யணிமுடி மேவலி னண்ணனிற் காதலினாற் சரவை விழிபிறை தாழத் தருவது தானலவோ கரவை யழித்திடு நாவல னிற்றொளி காணுறுமே.

59
பதவுரை - சர வை விழி - அம்பு போலும் கூரிய கண் படைத்த தலைவியே, இரவை அறுத்தலின் - இரவில் பொருந்தும் இருளை நீக்குதலினாலும், நின் கூந்தல் நுதலை ஏய்தலின் - உனது முகில் அனைய கூந்தல் நெற்றிக்கு ஒப்பாக விளங்குதலினாலும், ஐ அரவு அணி முடி மேவலின் - இறைவனது அழகிய பாம்பு விளங்கும் சடாமுடியின் கண்ணே பொருந்துதலாலும், கரவை அழித்திடு நாவலன் நீற்று ஒளி காணுறும் பிறை - வஞ்சக ஒழுக்கத்தை நீக்கிய நாவலர்பிரானது திருமேனியில் விளங்கும் திருநீற்றின் ஒளிபோல நிலவினை வீசித் திகழும் பிறையானது, நிற்கு அண்ணல் ஆதலினால் - உனக்குத் தெய்வம் ஆதலால், தாழ தருவது தான் அலவோ - (நின்து அன்பு கொண்டு) பணிந்து வழிபடுவது தக்கது அல்லவோ,
(கு.உ)- ஐ - இறைவன் - சிவன், அண்ணல் - அமலானவன்; தெய்வம் சர, சரம் - அம்பு, மகர மெய் கெட்டு நின்றது. வை - கூர்மை சரவை - வை சரம், சரவை விழி - அன்மொழித்தொகை. இனி அண்ணனிற் காதலினால் என்ற தொடரினை அண்ணன் நிற்கு எனப் பதச் சேதம் செய்து இலக்குமியே தலைவியாகத் தோன்றினாள் என்னும் நயம் பற்றி திருப்பாற் கடலில் திரு தோன்றுதற்கு முன் தோன்றியவன் சந்திரன் என்ற நோக்கில் எனக்கு அண்ணன் ஆதலினால், தொழத்தகும் எனப்பொருள் கொள்ளலும் இயையும்,
தலைவி மறுத்தல்
தலைவி மறுத்தல் என்பது தலைவி பிறை தொழ மறுத்தல்.
80. குருமனை யாட்டோய்ந் தனனிரு பானறு கோதையரி னுருவுள மாய்த்தன னானை முகவ னுறுசினத்தான் மருளுறு வான்பூ மலிநூல் ககோளமும் வண்கணித மருவுறு நாவல னல்லைமின் னேய மதியணங்கே.
பதவுரை - பூ மலி நூல் - உலகத்தின் கண் உள்ள சகல நூல் அறிவும், வண் கணித கோளமும் - வளவிய கணிதம் உள்ளிட்டவான இயல் அறிவும், மருவுறு நாவலன் - பொருந்தப் பெற்ற நாவலர் பிரானது, நல்லை மின் நேய அணங்கே - நல்லைப் பதியில் உற்ற மின்னல் போன்ற தேக காந்தியும் என்னிடத்து அன்பும் பொருந்திய தேவமகள் போன்ற எழில் படைத்த உயிர்ப் பாங்கியே, மதி - சந்திரனானவன், குருமனையாள் தோய்ந்தனன் - வியாழ பகவானுடைய பத்தினியாகிய தாரையோடு களவிற் சேர்ந்தவன், இருபான் அறுகோதையரின் உரு உளம் மாய்த்தவன்

Page 41
60
- தன் திச் செயலால் இருபத்தாறு மகளிரின் உருவினையும் உள்ளத்தினையும் அழித்தவன், ஆனைமுகன் உறு சினத்தன் - யானை முகத்தினை உடைய விநாயகரது கோபத்துக்கு ஆளானவன், மருள் உறுவான் - களங்கம் உடையவன் - (ஆதலின் தொழத் தக்கவன் அல்லன்)
(கு.உ):- குரு - வியாழன்; இருபானறு கோதையர் - பிரமனுடைய பெளத்திரிகள் (பேர்த்தி) இருபத்தெழுவராகிய அசுவினி முதலானோரைத் தந்தையாகிய தக்கன் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தானாக, சந்திரன்' ரோகிணியிடத்தே மோகம் உடையனாய் மற்றையோரைப் புறக்கணித்ததால் அம்மகளிர் துன்பம் உற்றனர். இதனை அறிந்த தக்கன், சந்திரனைக் கயரோகத்தால் வருந்தும்படி சபித்தான் அதனால் நாளுக்கு ஒரு கலையாகத் தேய்ந்து சிவபிரானிடம் முறையிட்டு, தேய்ந்த கலைகள் மீண்டும் வளர்ப் பெற்றரன் - விரிவைக் கந்தபுராணத்தில் காண்க. மருள் - கள்ங்கம் - தக்கன் சாபத்தால் வந்த வினை.
கயரோகி யென்றும் ஒருநாள் கண்கொண்டு பார்க்கவும் கடவதன் றெனவும் கடற்புவி யெடுத்திகழவிட்டபுலத்தொடு முடுமீன் கணத்தோடும் ஒருமநின்போல்வார்க்கு (குமரகுருபார் மீன்னாட்சி அம்மை)
நீராழி யுலகத்து நீளனுபவங் காணு நெறியிழைத் தோர் நிரலினில் நின் பெயரு நின்றிடும் நிலைமைநி யறிதியே
நிலவு நா டகப்புகழ் சால் தாராசா சங்கமித் தரணியுள தனையு நின்
தவற்றினை யெடுத்துரைக்குந் தாரையிட நீபுரிந் திடுகாம லீலையின்
தன்மைகாண் டொறு நின்னிடத் தூரார்க ளறியுடற் கூன்போ லுளக்கூனு முண்மைவிக சிதமிங் கிவற் கொரு கூறு மில்லையே ஒர்திநின் தாமசம
தொருபயனு முதவாது காண் ஆராலு முணர்வருமெ யாறுமுக ஐயனுட
னம்புலி யாடவாவே அழகுதமிழ் தழையவரு மாசானெ. மையனுட
னம்புலி யாடவாவே"
- நாவலர் பிள்ளைத்தமிழ்.

61
ஐயந் தீர்தல்
ஐயம் தீர்தல் என்பது, புணர்ச்சித் தொடர்பு உண்டென்று கருதிய பாங்கி தலைவியிடங் கொண்ட ஐயம் தீர்தல்.
81. நாற்ற முதலேழ் தபுவன கோட்டமி னற்றமிழ்வி
ணேற்றி நலைநகர் சாலன வைத்த வெழிலமரர்க் காற்ற விடமமு தாமென்ன நாவல னார்கிரித்தா நாற்றமு ணேய்ந்தகார்த் தேவின் முதுக்குறைந் தாளறியே.
பதவுரை:- நாற்ற முதல் ஏழ் த(ப்) புவன - நாற்றம் முதலாகிய ஏழு குறிப்புகளும் பிழைபாடு உணர்த்துவனவாயின, கோட்டம் இல் தமிழ் விண் ஏற்றி - குறைவுபடாத நல்ல தமிழை (தேவர் நுகரும்படியாக) விண்ணுலகில் ஏற்றி, நலைநகர் அன்ன சால்(பு) வைத்த - (அவ்விண்ணு லகினை) நல்லை நகர் போன்ற சிறப்பினை உடையதாம்படி வைத்த, எழில் அமரர்க்கு - அழகுடைய தேவர்களுக்கு, அமுதும் ஆற்ற விடம் என்ன (செய்த) நாவலனார் கிரி - (அவர்கள் விரும்பி நுகரும் அமுதமும் விடமென வெறுத்துத் தமிழை நுகர வைத்த திறத்தால்) தேவரது அமிர்தை நஞ்சாம் தன்மை செய்த நாவலர் பிரானது மலையிடத்தே, தூ நாற்றம் உண் ஏய்ந்த - தூய ஆவியைக் கொள்ளை கொள்ளும் இயல்பினதான; கார்த்தேவின் - வான் உறை தெய்வத்தால், (அதாவது களவுப் புணர்ச்சியால்) முது குறைந்தாள் அறி - சாமர்த்தியம் உடையள் ஆயினாள் என்பதை (நெஞ்சமே) நீ அறிந்து கொள்வாய்.
(கு.உ):- தபுவன - தப்புவன (தொகுத்தல்) கார்த்தே - வானுறை தெய்வம், பாலுறை தெய்வம் எனவும் படும். முதுக்குறைவு - பேரறிவு. "நாற்ற முதல் ஏழு - நாற்றமுந் தோற்றமும் நவிலொழுக்கமும் மாற்றமும் செய்கையும் மனமும் மற்றதும் வேற்றுமையாதலும்' எனக் கந்தபுராணம் வள்ளியம்மை திருமணப்படலம் குறிப்பவை, விணேற்றி - விண்ணுக்கு ஏற்றினவன். "இ" - கருத்தாப் பொருள் விகுதி, நாற்றம் - ஆவி, உயிா தூநாற்றம் - தூய உயிர்.

Page 42
62
சுனை வியந்துரைத்தல்
சுனை வியந்துரைத்தல் என்பது தலைவியினிடத்துக் கண்ட வேறுபாடுகளுக்குக் காரணம் யாதென்று வினாவிய பாங்கிக்கு, ஒரு சுனை யாடி வந்ததனால் ஏற்பட்டது என்று தலைவி கூற, அச்சுனை வியப்பை நானும் ஆடிக் காண்பேன். எனப்பாங்கி உரைத்தாள்.
82. புலவர் குழாக்களி றோட வடர்க்கும் புறவரியாம்
புலவ னறுமுகன் றன்வரைச் சாந்தம் புயறிருத்திப் புலவ வுவரி வளைமுத்த முல்லையும் பொற்புறநின் புலவ விழியயி லச்சுனை செய்த புதுமையெனே.
பதவுரை: புலவு அயில் விழி - ஊன் படிந்த வேல் போலும் கூர்மை படைத்த கண்ணை உடைய மாதே, புலவர் களிறு குழாம் ஒட - போலிப் புலவர்களாகிய யானைக் கூட்டம் சிதறி ஓடும்படியாக, அடர்க்கும் புற அரியாம் - எதிர்த்துப் போரிடும் வீரம் பொருந்திய சிங்கமாகிய, புலவன் அறுமுகன் தன் வரை - கவிஞனாம் அறுமுகக் கடவுளை ஒத்த நாவலர்பிரானது மலையிடத்து, சாந்தம் புயல் திருத்தி - சந்தனம் அணிவித்து, முகில் போன்ற கூந்தலைக் கோதி ஒப்பனை செய்து, புலி வவு உவரி - அறிவைக் கவர்கின்ற கடலில் உள்ள, வரி வளை முத்தமும் முல்லையும் பொற்புற - வரி பொருந்திய சங்கு ஈன்ற முத்துப் போன்ற வேர்வுப் பொடிப்பும், முல்லை மாலையும் பொலிந்து திகழ, அ சுனை செய்த புதுமை என்ன - அந்தத் தடாகம் உனக்குச் செய்தது புதமைக் கோலம் இது என்ன புதிரோ தான்.
(கு.உ)- புணர்ச்சியின் பின் தலைவி நிலை கண்டு தோழி ஐயுறல் ஆகாதென்பதற்காகத் தலைவன் தலைவிக்குச் சந்தனம் அணிவித்தும் ஒதியைக் கோதி எப் புனைந்தும் முல்லை மாலை சூட்டியும் விட்டான். கற்புடைமகளிர் முல்லை மாலை சூடுதல் இயல்பாதலால் முல்லைமாலை சூட்டி விடுத்தான். தலைவியும் தன் காதலன் சொல்லைக் கடவாளாதலின் மாலை சூடிய வண்ணமே வந்தனள், அது தோழி தன் ஐயம் தீர்க்கும் வாயிலாயிற்று.
புலவு - சாதியடை, புறம் - வீரம், நாவலர்பிரானது வரையிற் பிறந்த சந்தனம் எனக்கொள்க, புலம் - அறிவு வவு - வவ்வு இடைக்குறை வவ்வுதல் - கவர்தல் முத்தம் அனைய வேர்வுப் பொடிப்பு கண்டோர் புலங் கவரும் அழகாய்ப் பொலிந்தது என்க. திருத்திப் பொற்புறச் செய்த புதுமை எனக் கொண்டு கூட்டுக. புலவவு வரி - புலம் + வவ்வும் + உவரி, உவரிவளை - கடலிடத்தில் உள்ள சங்கு.

63
சுனைநயப்புரைத்தல்
சுனை நயப்புரைத்தல் என்பது பாங்கி தானும் அச்சுனையில் நீராட வேண்டுமென்ற ஆசையை உரைத்தல்.
83. கார்விழி சேப்ப நுதல்வேர் வதுவுறக் கட்குமுத
மேர்வறி தாகிவெள் ளல்லி யெனவா ரிணைமுலைக்க ணார்வுறு சாந்த முறமிக விம்ம வறுமுகனூர் நீர்நிலை யந்தா ரிடுமே லடியனு நீந்துவனே.
பதவுரை:- அறுமுகன் "ஊர் நீர்நிலை - ஆறுமுகநாவலர்பிரானது ஊரில் உள்ள சுனையானது, கார் விழி சேப்ப - எழில் மிக்க கண் சிவப்பு அடையவும், நுதல் வேர்வது உற - நெற்றியில் குறுவேர்வு பொடிப்பவும், கண் குமுதம் ஏர் வறிதாகி வெள் அல்லியென (வாக) - தேன் பொருந்திய குமுதமலர் போன்ற செவ்வாய் அழகு குன்றி வெள்ளாம் பல் போல் வெளுப்பவும், வார் இணை முலைக்கண் - கச்சு அணிந்த இரு தனங்களிடத்து, ஆர்வுறு சாந்தம் உற - ஆசையை ஊட்ட வல்ல சந்தனக் குழம்பு பொலிவுற்று விளங்கவும், மிக விம்ம - நகில்கள் மிகவும் பூரிப்பு அடையவும், அம் தார் இடுமேல் - அழகிய முல்லை மாலையினையும் சூட்டிவிடவல்லதாம் எனில், அடியேனும் நீந்துவன் - எளியேனும் அச் சுனையில் ஆட விரும்புவேன்.
மைவிழி சிவப்பவும் வாய்வெ ளுப்பவும் மெய்வியர் வடையவும் நகிலம் விம்மவும் கைவளை நெகிழவுங் காட்டுந் தண்சுனை எவ்விடை யிருந்துள தியம்பு வாயென்றாள்.
வள்ளியம்மை திருமணப்படலம்.
தகையணங்குறுத்தல்
தகையணங்குறுத்தல் என்பது தலைவியின் வேறுபாட்டினைக் கண்ட தோழி தான் உண்மை உணர்ந்தமை புலப்பட அவளைத் தெய்வப் பெண்ணாகப் பாவித்துக் கூறல். அதாவது உனது அம்சங்கள் சில தவிர, மற்றைத் தோற்றம் என் தலைவியை ஒக்குமென்று கூறல் - அணங்கு - தெய்வப் பெண். உறுத்தல் - பொருந்தச் சொல்லல்,

Page 43
64
84. வன்றாள் முலையணங் கேதாள் பணிந்தேன் மலிநகுலப்
பொன்றாழ் சுனைப்புகுந் தானந் தலைவி பொருவினல்லை மன்றாழ் குணமொழி நாவலன் றாள்பணி மாண்பெனவந் துன்றாள் பணிய வருள்புரிந் தேகுதி யுன்பதிக்கே
பதவுரை: வன் தாழ் முலை அணங்கே - சூதாடு கருவி போலும் நகில்களை உடைய தேவமாதே, தாள் பணிந்தேன் - உனது பாதங்களை வணங்கி, வேண்டுகின்றேன், நம் தலைவி மலி நகுல பொன் தாழ் சுனை புகுந்தாள் - எங்கள் தலைவி (செல்வம்) மிக்க கீரிமலையிடத்து அழகு வாய்ந்த தடாகத்தில் நீராடச் சென்றாள், மன் தாழ் குணமொழி நாவலன் தாள் பணி மாண்பு, என வந்து - சிவன் பாதமே என்றும் பணிதலைச் செய்யும் இயல்பினராய நாவலர் பிரானது பாதங்களை வணங்கி ஒருவர் மாட்சி உறுதல் போல (தலைவி) உன்னிடத்தில் வந்து, உன் தாள் பணிய அருள் புரிந்து உன் பதிக்கு ஏகுதி - உனது பாதங்களைப் பணியும்படியாக அருள் புரிந்து உமது பதிக்குச் செல்வாயாக.
(கு.உ):- வன்றாழ் முலை - வல் து ஆழ்; வன் (வல்) சூதாடு கருவி ஆழ் (முலை) ஆழ்தற்குக் காரணமான முலை - து-சாரியை ஆழ்தல் - கீழ்ப்படுதல். வல் - து - ஆழ் தொடுகருவி தம் வலிமை ஆழுதற்குக் காரணமான முலை. து - வலிமை,
நடுங்க நாட்டம்
நடுங்க நாட்டம் என்பது தலைவனுக்குத் துன்பம் நேர்ந்தது என்று கூற, அது கேட்ட தலைவி நடுங்குவது கண்டு உண்மை துணிய நாடிப் பாங்கி
கூறுவது. நாட்டம் - நாடுதல்,
85. புறமத வாரண மோடச் சுயமதம் போற்றுமரி
யறமத நாவல னார்வரை மேன்மத வாறொழுக நிறைமத வாரண நீள்கரங் கொண்டிட நீக்கினனா லறைமத மான்கமழ் கூழை யரனரு ளாண்டகையே.
பதவுரை - புறமத வாரணம் ஒட - புறச் சமயங்களாகிய யானைகள் தோற்று ஓடும் படியாகத் துரத்தி, சுய மதம் போற்றும் அரி - தன் சமயத்தைப் பேணி வளர்க்கும் சிங்கமாகிய, அற மத நாவலனார் வரை மேல் - அறவொழுக்கக் கொள்கையினராகிய நாவலர் பிரானது

65
மலையிடத்தே, அறை மான் மதம் கமழ் கூழை - மலைச் சார லிடத்துள்ள (மான்மதம்) கமழும் கேசத்தினை உடையவனும், அரன் அருள் ஆண்டகை சிவனால் அருளப் பெற்றவனுமாகிய
ஆண்தகைமைகளை உடையவன் ஒருவன், மத ஆறு ஒழுக நிறைமத வாரணம் - மதமான நதி ஒழுக்குப் பொருந்திய நிறைந்த மதத்தை உடைய யானை ஒன்று நீள், கரம் கொண்டிட - தன் துதிக்கை நீட்டிப்
பற்றிய போது, நீக்கினன் - அதன் வலுவால் அதன் பிடியில் இருந்து நீக்கிக் கொண்டான்.
(கு.உ)- மதமான் - மான்மதம் (கஸ்தூரி), மதவாரணம் என்புழி மதம் சாதியடை என வேண்டா மதங் கொளுமியல்பு மதத்துக்கு முன்னம் பிரசித்த மாகலின். நீள்கரங் கொண்டிட என்பதை இரட்டுற மொழிந்து கொண்டு நீள் கரங் கொண்டிட நீக்கினன் - கை நீட்டிப் பற்றிய யானை கைமேல் எடுத்துப் புலம்பிக் கொண்டு ஏகுமாறு விலக்கினான் எனலும் ஒன்று.
நடுங்கநாட்டம் இதுவுமது
86. என்ன புகல்வதொ ராண்டகை யேந்திரு கோட்டுவடு
மன்ன நிலைத்துமச் சீவக னென்ன மலிந்தனனா லன்ன நடைபயி லாயிழை யாயறு மாமுகவன் றுன்னு புரமூன் றெரித்தவ னல்லைத் துணிவுடனே.
பதவுரை:- அன்ன நடைபயில் ஆயிழையாய் - அன்னம் போல நடைபயிலுகின்ற நுண்ணிதின் இயற்றிய ஆபரணம் அணிந்த தலைவியே; என்ன புகல்வது - (நான் கண்ட அரியசெயலை ) எவ்வாறு சொல்வேன், ஓர் ஆண்டகை - ஆடுஉத்தகைமையில் மேம்பட்ட ஒப்பற்ற வலியுடைய ஒரு தலைமகன், ஏந்து இருகோட்டு வடுமன்ன நிலைத்தும் - உயர்ந்தோங்கிய யானையின் இரு தந்தங்கள் வடுவிளைக்கும் படியான நிலையேற்பட்ட போதும், அச்சிவகனென்ன , அக்காப்பியத் தலைவனான சீவகனைப் போல ; அறுமாமுகவன் துன்னு நல்லையில் - ஆறுமுகநாவலர் பிரானது நல்லைப்பதியில்; புரமூன்றெரித்தவன் துணிவுடனே மலிந்தனன். திரிபுரம் எரித்த சிவனாரைப் போன்று செருக்கோடு நின்றான் ( என்றவாறு, )
ஆல் - அசை

Page 44
66
10. குறையுறவுணர்தல்
பெட்ட வாயில் பெற் றிரவு வலியுறுத்தல் பெட்ட வாயில் - வலியுறுத்தல் என்பது முன்னர் பிரிவுபூழிக் கலங்கலின் போது தாம் உய்தற்குத் தூதாக உதவிய பாங்கியை மிக விரும்பி மீண்டும் அவள் துணையை இரந்து பெறத் தலைவன் எண்ணுதல். பெட்டல் - விரும்புதல் ;
வாயில் - தூது ; இரவு - இரத்தல்
87. காரே யெனக்கலை நல்குகை நாவலன் கார்புனத்தே
வாரே செறுமுலைப் பாங்கி யெனுந்திரு மாதையுற்றா னேரே பசும்பொனு கிட்டு மதனா னிகழு மின்ப மோரே மனமே யெழுந்தரு ணாமவணோடுதுமே.
பதவுரை :- காரே என கலை நல்கு கை நாவலன் கார் புனத்தே - முகில் மழையை வருவித்தாற் போலக் கல்விச் செல்வத்தை வரை வின்றியும் பிரதி நலம் கருதாமலும் வழங்கும் செயற்பாட்டினை உடைய நாவலர் பெருமானது செழிப்புடைய சோலையினிடத்தே, வாரே செறு முலை பாங்கி எனும் திருமாதை உற்றால் - கச்சு அணிந்த தனங்களை உடைய பாங்கி எனக் கூறப் படும் இலக்குமி தேவியாகிய மாதிடம் நாம் சென்று அணைவேம் எனில், நேரே பசும் பொனும் கிட்டும் - நேரடியாகவே (தடை இன்றி) பசிய பொன் (ஒத்த தலைவி) கிடைக்கப் பெறுவோம், அதனால் நிகழும் இன்பம் ஓர் - அவ்வாறு செய்வதனால், மனமே பெறத் தகும் இன்பத்தை உணர்ந்து கொள்வாய், எழுந்தருள் - கவலை விட்டு எழுவாயாக; நாம் அவன் ஏகுதும் - நாம் பாங்கி உள்ள இடத்திற்குச் செல்வோம்.
(கு.உ):- கார் - முகில் , செழிப்பு நல்குகை - தொழிற் பெயர் நல்கும் கை. நாவலன் எனப் பிரித்து வழங்கும் ஒழுக்கம் உடைய நாவலன் எனலுமாம். கை - ஒழுக்கம் ; பொன் - பொருள், தலைவி. பாங்கியைத் திருவாகக் குறிப்பிட்டமையின் அவளைச் சாரின் பொன் கிடைக்கும் எனவும் ஒரு தொனி தோன்றல் காண்க.

67
ஊர் வினாதல்
ஊர் வினாதல் என்பது பாங்கியைக் குறை யிரக்க எண்ணிய தலைவன் அவளது ஊர்ப் பெயர் வினாவுதல்
88. நெஞ்சிட மின்றி நெருங்கிய நும்முலை நீள்குவடேய்
மஞ்சிட வான்ற விருமலை மத்தியின் மன்னிநெரிந் தஞ்சிட வந்த வருந்துயர் நீங்க வறைந்திடுமின் பஞ்சிட வந்த பதத்திர் பதிநா வலன்வரைக்கே.
பதவுரை - பஞ்சு இட வந்த பததத்தீர் - செம் பஞ்சுக் குழம்பு திட்டுதற்கு இயன்ற பாதங்களை உடைய நங்கையே, நெஞ்சு இடம் இன்றி நெருங்கிய நீள் குவடு ஏய் நும் முலை - நெஞ்சப் பரப்பில் பிறிது; இடம் இல்லை என்று சொல்லத்தக்கதாக நெருங்கி உள்ளவும் உயர்ந்த சிகரத்தோடு பொருந்தியனவுமான உமது முலைகளாகிய, மஞ்சு இட ஆன்ற இருமலை மத்தியில் - முகில் படிதற்கு இடமாய் விசாலமுற்று விளங்கும் இரு மலைகளின் நடுவே, மன்னி நெரிந்து அஞ்சிட வந்த அரும் துயர் நீங்க - அகப்பட்டு இடர் அடைந்து அதனால் அச்சம் உற்று வந்த எனது நீங்குதற்கு அரிய துன்பம் அகலும் வண்ணமாக, நாவலன் வரைக்கு இநும்) பதி அறைந்திடுமின் - நாவலர் பிரானது மலையினிடத்து. நீவிர் வாழும் ஊர் யாது, சொல்வீர்.
(கு.உ) :- முலைகளாகிய மலை என இயைத்து "மஞ்சிட வான்ற இரு” இடைப் பிறவரலாய்க் கொள்க. மஞ்சு - முகில் ; குவடு - மலை ; ஏய் - பொருந்திய பஞ்சு. மகளிர் பாதத்தில் ஊட்டும் செம்பஞ்சுக் குளம்பு பருத்திப் பஞ்சு போலவும் மென்மை மிக்க எனினுமாம்.
வலைநடு வந்த இளங்கலை போலும் மணிவடந்தாழ் முலைநடு வென்னவிடமற வேவந்து முட்டுமிகு மலைநடு வந்துநடு வந்துநொந் தேனு ரையிர்நும் வனம் பதியா தலைநடு வந்தநஞ் சுண்டபிரான் வெங்கை யன்னவரே.
என்ற திருவெங்கைக் கோவைச் செய்யுள் ஒப்புநோக்கற் பாலது.

Page 45
68
பேர் வினாவல்
பாங்கியின் பெயரைத் தலைவன் வினாவுதல்
89. நும்வாழ் பதியுரை யிரெனி னேவரு நோக்குபவ
னம்வாழ் வனையவ னாவல நல்லையி னற்குரவர் தம்வாழ் வெணவமர் வான்வரைச் செந்தினை தண்புனங்கா கம்வாழ் குழலீர் பெயரதை யாயினுங் கட்டுரையே.
பதவுரை - நே வரு நோக்குபவன் - இதயம் நிறைந்த பார்வை உடையவரும், நம் வாழ்வு அனையவன் - நமது உயிர் போன்றவரும், நல்லையின் நற்குரவர் தம் வாழ்வென அமர்வான் - நல்லைப் பதியின் கண்ணே சமய குரவர்கள் போன்ற அருட்சிறப்பு உற வாழ்பவருமாகிய, நாவலன் வரை செந்தினை தண் புனம் கா - நாவலர் பிரானது மலையிடத்து செந்தினைப் பயிர் வளரும் குளிர்ச்சியான புனமாகிய சோலையிலே, கம் வாழ் குழலீர் - மேகம் குடியிருக்கும் கூந்தலை உடையீர், நும் வாழ் பதி உரையீர் எனில் - நுமது ஊரினைச் சொல்ல இயலாது எனில், (நும்) பெயரதையாயினும் கட்டுரை - நுமது பெயரையாயினும் கூறுவீர்
(கு.உ) - நே - நேயம், கருணை கம் - மேகம்; வாழ்வு - உயிர் என்ற பொருளிலும், வாழ்க்கை என்ற பொருளிலும் அமைந்து நின்றது. பெயரதை - அது பகுதிப் பொருள் விகுதி.
கெடுதி வினாதல்
கெடுதி வினாதல் என்பது அம்பேறுண்டு கெட்டு வந்த விலங்கு பற்றி வினாவுதல்,
90. செந்நீர் பகுவாய் வழியே யொழுகத் திறந்த புண்ணோ
டந்நீ ருறுமா லனைமாலு மஞ்சவொ ராண்கரிதான் தந்நீர் நுமதுகண் னோவெனு மென்கைச் சரம் பிளக்க விந்நீர் புனநா வலனடை யாரென வேவந்ததே.
பதவுரை - நுமது கண் தம் நீர் (மை) ஒ வெனும் என் கை சரம் பிளக்க - நுமது கண்களின் இயல்பினை உடையதோ என்னும் தகைத்தாய எனது கையில் இருந்து சென்ற அம்பு கிழித்ததனால், திறந்த புண்ணோடு - பிளவு பட்ட காயத்தோடு, செந்நீர் பகுவாய் வழியே ஒழுக - இரத்தமானது

69
அதன் திறந்த வாய் வழியாகச் சிந்த, அ நீர் உறுமால் அனை மாலும் அஞ்சி - அத்திருப்பாற் கடலில் உறைகின்ற திருமால் போன்ற கருமை படைத்த மேகமும் அஞ்சும் வண்ணமாக, ஓர் ஆண் கரி தான் - ஓர் ஆண் யானையானது, இ நீர் புனம் நாவலன் அடையார் என வந்தது - இந்த நீர் வளம் நிறைந்த புனத்திடையே நாவலர் பிரானது பகைவர்கள் போன்று புகலிடம் துேடி வந்தது உண்டோ,
(கு.உ) - ஆண்கரி அடையாரென வந்தது என வசன முடிபு செய்க.
ஒழிந்தது வினாதல்
ஒழிந்தது வினாதல் என்பது தலைவன் வினாவியதற்கு விடை கிட்டாமையின் நிர் பேசாது ஒழிந்தது ஏனோ எனப் பாங்கியை வினாவுதல்
91. கிறித்தவ ரோடு கலந்துண லாதிய கேடெனவே
குறித்தவ னாவல னல்லையொப் பீர்பல கூறினன்காட் டெறித்த நிலவென வான குழைகுழை யேயடைப்போ
தெறித்து விழுமுத் தெனவோ திறவீர் திருமரையே.
பதவுரை - கிறித்தவரொடு கலந்து உணல் ஆதிய கேடு எனவே குறித்த அ நாவலன் நல்லை ஒப்பீர் - கிறித்துவ மதத்தினரோடு சமபோசனம் செய்தல் முதலாம் கருமங்கள் தீமை பயக்கும் என்றும் கருத்து உடையவரான நாவலர் பிரானது நல்லைப் பதி போல்விர், பல கூறினன் காட்டு எறித்த நிலவு என ஆன (நான்) பல கூறினன் அவை காட்டில் எறித்த நிலவு ஆயின, குழை குழையே அடைப்போ - காது காதணியால் அடைக்கப்பட்டமையாலோ, தெறித்து விழும் முத்து எனவேர் - பேசினால் வாய் முத்தம் சிந்தி விடும் என்று கருதியோ, திரு மரை திறவிர் - அழகிய தாமரை மலர் போலும் வாயைத் திறவாது இருக்கின்றீர்.
(கு.உ) :- குழை - (1) காது (2) குண்டலம், பண்டைக் காலத்தில் மகளிர் காதில் தளிர், குழை அணியும் வழக்கு இருந்தது. பின்னர் அக் குழை என்ற சொல்லே காதணியைக் குறிக்கும் சொல் ஆயிற்று. திரு -
அழகு ; மரை - தாமரை (முதற்குறை) குழை குழையே யடைப்போ - நீவிர் குழை என அணியும் குழை காதை அடைத்தமையோ ?
மாசாலா மோமணி வாய்நோகு மோனும் மரமியலின் ஆசார மோவிர தத்தடை யோதிரை யாடைசுற்றுந்
தேசாதிபன் மெச்சு வேலன் கரவைச சிலம்பனையீர் பேசா திருக்கும் வகையென்ன வாறென்று பேசிடுமே.
கரவை வேலன் கோவை

Page 46
7η
பாங்கி, ur(8J இவர் மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல் பாங்கி . தேர்தல் என்பது இவ்வாறு ஊர் பெயர் முதலானவை வினவி நின்றவர் யர்ர். இவர் மனத்து எண்ணம் யாது எனப் பாங்கி தன் மனத்தில் ஆராய்தல்.
92. ஊரை வினவுவர் பின்னதை விட்டே யுருகியெம
பேரை வினவுவர் பேர்கரிவந்தது பேசியிணை. வாரை யறுமுலை நோக்குவர் நாவலன் வண்கிரியி லாரை யிவர்மன வென்ன மிதுவென் றறிகிலனே.
(இ.ஸ்) நாவலன் வண்கிரியில் - நாவலர் பிரானது வளவிய மலையிடத்து (வந்த இவர்), ஊரை வினவுவர். எமது ஊரை வினாவுவார், பின் அதை விட்டே உருகி எம்' பேரை வினவுவ்ர், - பின் அதை விட்டு உருகி எமது பேரைக் கேட்பார், பேர்கரி வந்தது பேசி இணைவாரை அறுமுலை நோக்குவர் - பெரிய யானை இவ்விடம் வந்ததோ என்று (கெடுதி) வினாவியவாறே அணைகின்றவர் கச்சினை அறுத்து வெளிப்படும் இயல்பினவாகிய நகிலை நோக்கி நிற்பர், இவர் ஆர் மன எண்ணம் இது என்று அறிகிலேன் - இவர் யார், இவர் மன எண்ணம் யாது என்று அறிகிலேன். எமது என்பது உருபு தொக்கு எம் என நின்றது ஆரை - ஆர் ; ஐ - சாரியை
எண்ணந் தெளிதல்
எண்ணந் தெளிதல் என்ப தலைவன் உள்ளக் கருத்தைப் பாங்கி உணர்ந்து கொள்ளல்.
93. சீர்கேட்டு விண்ணவ ரும்பணி நாவலன் சேர்நலையெ
மூர் கேட்டு நம்பெயர் கேட்டே யுறுகறை யுற்றவடிக் கார்கேட்டு வந்தது பொய்வார் வருத்துமிக் கன்னியிள நீர்கேட்டு வந்தவ ரேசுடு காம நெருப்பினுக்கே.
(இள்) சீர் கேட்டு விண்ணவரும் பணி - சைவத்துக்கும் தமிழுக்கும் ஆற்றிய பணியின் சிறப்பினைக் கேட்டு விண்ணுலகத்தவர்களாகிய தேவர்களும் போற்ற நின்ற நாவலன் சேர் நல்லை எம் ஊர் கேட்டு - நாவலர் பிரானின் உன்றவிடமாகிய நல்லைப் பதியில் நாம் வாழுகின்ற ஊரை (தலைவா) வினாவி; நம் பெயர் கேட்டு - நமது பெயரை வினாவி, உறு கறை உற்ற அடிகார் கேட்டு வந்தது பொய் - உரல் போன்ற ரீத்த்தினையுடைய கரிய முகிலை ஒத்த யானை வந்ததோ என்று (கெடுதி வினாவி வந்ததெல்லாம்) பொய்யாகும்; வார் வருத்தும் இக்கன்னி இளநீர்

7
65upp இறுக்குதலினால் கச்சுக்கு வருத்தத்தைச் செய்கின்ற இத்தலைவியினது தனமாகிய இளநீரை சுடுகாம நெருப்பினுக்கு கேட்டு வந்தவரே - வெதும்புகின்ற விரகமாகிய வெப்பம் தனிக்கும் பொருட்டுக் கேட்டு வந்தவர் என்பதே உண்மை எ - று.
கறை உரல் கார் - யானை - உவமை ஆகுபெயர் : இளநீர் என்பதும் உவமையாகுபெயர். நெருப்பை யவிக்க நீர் கேட்டு வந்தனர். என்பதிலுள்ள நயங்காண்க.
இருவரு முள் வழியவர் வரவுணர்தல் தலைவன் கையுறை ஏந்தி வருதல்
தலைவன் கையுறை ஏந்தி வருதல் என்பது தலைவியும் பாங்கியும் சேர்ந்திருப்பது கண்டு தலைவன் கையுறை ஏந்தி வருதல்
94. சேமத் தனமாக் கலையக மேபுதை செல்வனல்லூர்க் காமக் கருத்தொழி நாவல னேய்முகில் கால்புனத்தே தாமக் குழலியுந் தோழியுஞ் சாரென் றவம்பயன்போற் காமக் கனலவிப் பாஞ்சார்ந் தனரோர் கணத்தினிலே,
பதவுரை: கலையகமே சேமத்தனமா புதை செல்வன் - கலைஞானத்தைப் Lustgat TLIt மிக்க செல்வமாகத் 5LD5 நெஞ்சகத்திலே பேணி வைத்திருக்கும் தனவானும், காம கருத்து ஒழி நல்லூர் நாவலன் ஏய் - மகளிர் ஆசை சிறிதும் இல்லாதவருமாகிய நல்லூரில் (தோன்றிய) நாவலர் பிரானை ஒத்த முகில கால் புனத்தே - மேகம் மழை கான்றிடும் புனத்தின் கண்ணே, தாம குழலியும் தோழியும் சார் என் தவம் பயன்போல் மாலை அணிந்த கூந்தலை உடைய தலைவியும் பாங்கியும் பொருந்திய எனது தவமும் அதன் பயனும்போல, சார்ந்தனர் - ஒரு சேரப் பொருந்தி இருக்கின்றனர்.ஓர் கணத்தினில் காம கனல் அவிப்பாம் - அதனால் ஓர் இறைப் பொழுதில் எனது விரகாக்கினியைத் தணித்தல் சாலும்,
(கு.ரை): 7 தவம் பயன் - தவமும் பயனும் என உம்மை விரிக்க அத்துடன் தவமும் பயனும் போல் தோழியும் தாமக் குழலியும் என எதிர் நிரல் நிறையாகப் பொருள் கொள்க. கல்விச் செல்வமானது 'வெள்ளத்தாற் போகாது வெந்தணலால் வேகாது' என்ற பாடலின் வண்ணம் அழியாத செல்வம் ஆதலின் சேமக்கலை என்றார்

Page 47
72
தலைவன் அவ்வகை வினாதல்
தலைவன் அவ்வகை வினாதல் என்பது முன்னர் தொகுதி வினாவியது போல
மீண்டும் கலை வந்ததோ என்று வினாவுதல்.
95. தமிழுல கெங்கனுந் தன்புகழ் வித்திய நாவலனைத்
தமிழமு தென்ன வடையா தவர்துயர் சாரவென்வி லுமிழ்கணை தைப்ப வொருகலை வாய்விட் டுலம்பினநந்தா லமிழ்தனை யின்விழி நவ்வி களாமும் மயல்வந்ததே
பதவுரை:- தமிழ் உலகு எங்கனும் தன் புகழ் வித்திய நாவலனை - தமிழ் வழங்கும் நீள் உலகம் எவ்விடத்தும் தனது கீர்த்தியை விளைத்த நாவலர் பெருமானை, தமிழ் அமுது என்ன அடையாதவர் துயர் சாரதமிழ் அமிர்தம் என்று போற்றி அடைந்து உய்தி பெறாதவரது துயரத்தை நிகர்ப்ப, என் வில் உமிழ் கணை தைப்ப ஒரு கலை வாய்விட்டு உலம்பி நைந்து - எனது வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு தைத்த காரணத்தால் ஒரு மான் கலையானது வாய்விட்டு அழுது புலம்பி வருந்தி, ஆல் அமிழ்து அனை(ய) இன் விழி நவ்விகளாம் உம் அயல் வந்ததே - ஆலகால விடம் போன்று துன்பத்தை இழைத்தும் பின்னர் அமிர்தம் போன்று இன்பத்தைச் செய்தும் விளங்குதலால் ஆலமும் அமுதமும் அனைய இனிய விழி படைத்து மருட்சியினால் மான்போல விளங்கும் நுமது பக்கமாக வந்ததோ.
(குரை):- சார - நிகர்ப்ப என்னும் உவம உருபுப் பொருள் கொண்டு நின்றது. ஆலமIமிழ்து அனைய விழி - ஆலம் போலக் கரும்பாகமும் அமுதம் போல 'வெண் பாகமும் கொண்ட விழி எனினுமாம். 'ஆலமுண்டமுதம் பொழிதரு நெடுங்கண் அம்பிகை என வில்லி பாரதம்அம்பிகையின் விழி வனப்பைக் குறிப்பிடும் - இரு நோக்கு இவளுண்கண் உள்ளது. 'ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து (குறள்) நவ்வி - மான் இறுதி ஏகாரம் வினாப் பொருளில் நின்றது.

73
பாங்கி எதிர்மொழி கொடுத்தல்
பாங்கி எதிர்மொழி கொடுத்தல் என்பது தலைவன் வினாவியவற்றுக்குப் பாங்கி விடையளித்தல்.
96. கந்தவே னற்றவப் பேறு கலந்துறை நல்லைசெநீர்
சிந்திடு மானையுஞ் சேர்கணை மானையுந் தோகைமயி லுந்திடு வேளனை யீருயர் வானுற வோங்குபைந்தேன் சிந்திடு சோலை செறிபுனங் கண்டிலஞ் சேர்ந்திடவே
பதவுரை:- தோகைமயில் உந்திடு வேள் அனையிர் - கலாப மயிலைக் கடவிவரும் முருகவேள் போன்ற வடிவுடையவரே, கந்தவேள் நற்றவப் பேறு கலந்து உறை நல்லை - (அடியார்கள் செய்த நல்ல தவத்தின் விளைவாக) கந்தமுருகேசப் பெருமான் அன்பர்கள் உள்ளங்களில் உலவியவாறே எழுந்தருளியிருக்கும் நல்லைப் பதியில் , வானுற ஓங்கு பைந்தேன் சிந்திடும் - ஆகாயமுற உயர்ந்து வளர்ந்த மரக்கிளைகளில் உள்ள மலர்கள் தேன் பிலிற்றுகின்ற , சோலை செறிபுனம் - சோலை செறிந்த புனத்தின் கண்ணே , செந்நீர் சிந்திடும் ஆனையும் கணை சேர் மானையும் கண்டிலம் நீவிர் வினாவியவாறு இரத்தம் சிந்துகின்ற யானையினையும் நுமது அம்பு தைத்த கலைமானையும் நாம் கண்டிலேம் 6T 一匹列。
(கு.உ):- சேர்கணைமானை - கணை சேர்மானை என மாற்றுக.
பாங்கி இறைவனை நகுதல்
பாங்கி இறைவனை நகுதல் என்பது தலைவன் அப்பாற் சென்றானாக, பாங்கி தலைவின்ய நோக்கித் தலைவனைப் பரிகாச வார்த்தை பேசல்
97. வல்லவ னுக்குப்புல் லாயுத மாமெணல் வாய்மையதே
மல்லமர் தோளிவர் மானெய் தனமெனல் வாய்மையதே பல்லவ மாங்கணை கொள்ளக் கொடுமரம் பற்றினரே யல்லவர் கூழை யறுமுக னல்லை யழகிதுவே.
பதவுரை: அறுமுகன் நல்லை அல் அமர் கூழை - அறுமுக நாவலரது நல்லைப் பதியில் வரும் இருள் குடிகொண்ட கூந்தலை உடையாய், வல்லவனுக்கு புல் ஆயுதமாம் எனல் வாய்மையதே - வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழி உண்மையானதே, மல்

Page 48
74
அமர் தோள் இவர் மான் எய்தனம் எனல் வாய்மையதே - வலிமை பொருந்திய தோள் படைத்த இவர் மானை எய்ததாகக் கூறிய கூற்றும் உண்மையானதே, பல்லவமாம் கணை கொள்ள கொடுமரம் பற்றினரே - தளிராகிய அம்பினைச் செலுத்துதற்கு வில்லைக் கைக்கொண்டவராயிற்றே, இது அழகு - இவரது செயல் அழகே அழகு.
(கு.உ):- தலைவன் தலைவியிடம் கையுறை அளித்ததற்காக தளிர் கொடு நிற்றலையும் கையில் அம்பு இன்மையையும் பார்த்து, பாங்கி பல்லவமாங்கணை கொள்ளக் கொடுமரம் பற்றினர் என நகையாடிக் கூறினாள். பல்லவம் - தளிர் கொடுமரம் - வில்
98. நன்னூல் விருத்தி யுடையா ரிலையென னன்கறிந்து
மன்னு லுரையி லுரியியற் சொற்கொளு மாரறிவு மன்னா வலன்கிரி வண்பிடி மன்னர் மருத்துவரே பொன்னேர் தழையுடன் போந்தனர் மாண்புணைப்
போக்குதற்கே
பதவுரை:- நன்னூல் விருத்தி உடையார் இலை எனல் நன்கு அறிந்து - நன்னூல் என்னும் இலக்கண நூலின் விரிந்த பொருளைச் சிறப்புற உணர்ந்தவர் யாரும் இல்லை என்பதை நன்கு தெரிந்து, மன் நூல் உரையில் உரியியற் சொல் கொளும் ஆர் அறிவு மன் நாவலன் கிரி - நிலைபெற்ற அந் நூலினது முன்னர்க் காணப்பெற்ற உரையில் உரியியற் சொற்கள் விரிந்த பொருள் நுட்பங்கள் கொண்டு விளங்குவதை நுணுகி அறிந்து அவற்றைப் புலப்படுத்தும் தன்மையில் சிறந்த பாண்டித்தியம் பொருந்திய நாவலர் பிரானது மலையின் கண்ணே உள்ள, வண் பிடி
வளவிய பெண் யானை போன்ற தலைவியே, மன்னர் மருத்துவரே - நும் தலைவர் சிறந்த வைத்தியர் ஆதலாற் போலும், மாண் புணை
போக்குதற்கு - காதலினால் விளைந்த மிகுதியாகிய புண்ணைப் போக்குவதற்காக, பொன் நேர் தழையுடன் போந்தனர் - பொன் ஒத்த அழகிய தழையுடன் வந்தனர் ( ஆதலினால் மறுக்காது ஏற்றுக்
கொள்வாய் ).

75
பாங்கி மதியினவரவர்மனக் கருத்துணர்தல்
பாங்கி மதியினர் அவரவர் மனக்கருத்து உணர்தல் என்பது பாங்கி தனது மதிநுட்பத்தால் தலைவன் தலைவி இருவரது மனக்குறிப்பை உணர்ந்து கூறுதல்.
99. மான்கலை யெய்ய வருவோ னலனிவன் மங்கை தினை
தான்கிளி யோப்பு மவளு மவளிவர் தங்கணலர் வேன்மலி சிந்தைய னாவல னல்லையின் மேவினர்நெஞ் சான்மறை காத லெவரு மறியத் தகுவனவே.
பதவுரை:- இவன் மான் கலை எய்ய வருவோன் அலன் - இத் தலைவர் கலைமானை வேட்டை ஆடி வந்தவர் அல்லர், மங்கை தான் தினை கிளி ஒப்பும் அவளும் அலஸ் - தலைவியும் திணைப்புனத்தில் கிளி விரட்டும் செயற்பாட்டில் நின்றவள் அல்லள்; வேல் மலி சிந்தையன் நாவலன் நல்லையில் மேவினர் - முருகப் பிரானது ஞானவேல் நினைவு மிகுந்திருக்கும் உள்ளத்தினரான நாவலர் பெருமானது நகரில் வாழும் இவர்கள், நெஞ்ச்ால் மறை காதல் - தமது நெஞ்சத்தில் மறைத்து வைத்திருக்கின்ற காதல் உணர்வை, இவர்கள் தம் கண் அலர் எவரும் அறியத்தகுவன - இவர்களது கண் மலர்களானவை உலகத்தார் அறியும்படியாக வெளிப்படுத்துவன.
(கு.உ):- இவன் கலை நாடி வந்ததும், இவள் திணைப்புனம் காத்திருந்ததும் பொய் என்றவாறு கண்ணாகிய அலர். இனிப் பலர் அறிந்து கொள்ளற் கேதுவாய செய்தியைக் கண் வெளிப்படுத்தலாலும் அலர் எனப்பட்டது என்க. இப்பொருள் நோக்கில் இவர்தம் கண்ணலர், இவர் தங்கள் அலர் எவரும் அறியத்தருவன என அடையுமாறு "தங்கள் அலர்” என்பதை இரண்டாம் முறை மொழிந்து கொண்டு உரைக்க அலர் - இரகசிய காதல் உறவு பகிரங்கப் பேச்சுக்கு விடயமாதல்.

Page 49
76
1. பாங்கியிற் கூட்டம்
தலைவன் உட்கோள் சாற்றல்
தலைவன் உட்கோள் சாற்றல் என்பது, தலைவன் தன் உள்ளத்திற் கொண்ட காதலைப் பாங்கிக்குக் கூறல்
100. விண்ணேறு குன்றமந் தேனா ரருவி மிகுந்திழிசெய்த் தண்ணேறு சாலி வளர்க்கு மறுமுகன் சார்நலையும் கண்ணேறு மேவுற் றலந்த கலையெனைக் காத்திரெனின் மண்ணேறு சீர்த்தியு மன்னுதி ரேவல் வழிநிற்பனே.
பதவுரை:- விண் ஏறு குன்றம் மிகுந்து இழி அம் தேனார் அருவி - ஆகாயத்தை அளாவி விளங்கும் மலையில் இருந்து மிகுதியாக வீழும் அழகிய தேன் அருவியானது, செய் தண் ஏறு சாலி வளர்க்கும் அறுமுகன் சார் நல்லை - வயலில் உள்ள குளிர்ச்சி பொருந்திய நெற்பயிரை வளர்ந்து ஓங்கச் செய்கின்ற வளத்தினதாய் ஆறுமுகப் பிரானை ஒத்த நாவலரது நல்லைப் பதியில், உம் கண் ஏறும் ஏ உற்று அலந்த கலை எனைக் காத்திர் எனில் - நமது கண்போன்ற தீட்சண்ணியம் வாய்ந்த அம்பு தைத்த 8660)6OLDIT66s போன்று வருந்துகின்ற என்னைப் பாதுகாப்பீராயின், மண் ஏறு சீர்த்தியும் மன்னுதிர் - புவியின் கண்ணே மேன்மேல் மிகும் புகழை அடைவீர், ஏவல் வழி நிற்பன் - நானும் நுமது ஏவலின் வழிப் பணி புரிபவனாவேன்.
(கு.உ)-நம் கண்ணேறு மேவுற்று அலந்த கலை - உமது கண் வீச்சின் தாக்கம் உற்று வருந்திய ஆன்மாவான என்னை எனலுமாம்.
பாங்கி குலமுறை கிளத்தல்
பாங்கி குலமுறை கிளத்தல் என்பது தலைவன் மேற்படி கூறியதற்குப் பாங்கி குலமுறையால் இயையாது என மறுத்துக் கூறல்,
101. சிவமதப் பள்ளி யிலாத குறைதவிர் செல்வனிழி
பவவழி வாரா நலைநா வலன்வரைப் பைந்தினைகா வவகுல நாங்க ளொருகுடை நீயில் வவனிகலி தவவளி மேலை நினதென மேய்வது தானலவே.

7ך
பதவுரை:- சிவமத பள்ளி இலாத குறை தவிர் செல்வன் - தாமே பாடசாலைகள் நிறுவியதன் மூலம் சைவப் பாடசாலைகள் இல்லாத குறைபாட்டினை நீக்கிய செல்வனும், இழி பவ வழி வாரா நலை நாவலன் வரை - இழிவுடைய பாவ நெறியில் ஒருபோதும் செல்லாதவருமாகிய நாவலர் பிரானது மலையிடத்து, பைந்தினை கா அவ குலம் நாங்கள் - பசிய தினைப் புனத்தைக் காவல் செய்கின்ற புல்லிய குலத்தைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள், நீ கலி தவ இ அவனி ஒரு குடை அளி மேலை - நீவிரோ வறுமை சாராத வண்ணம் உலகினை ஒரு குடைக்கீழ் புரக்கின்ற மேற்குலத்தீர், நினது எ(ண்)ணம் ஏய்வது தானல - (ஆகவே) நுமது எண்ணம் பொருத்தம் உடையதாகாது.
(கு.உ)- 'நீ யொரு குடை இவ்வவனி கலிய தவ அணி மேலை என்பதனை முழுதுல கருள்புரி முதல்வ நீர் (கந்தபுராணம் - வள்ளியம்மை திருமணப் படலம்) என்பதனோடு ஒப்பிடுக. மேல் ஐ எனப் பிரித்து மேலோனாந் தலைவன் என உரைத்தலுமாம். எணம் - எண்ணம் (இடைக்குறை); தவ - குறைத்தல்; கலி - வறுமை
தலைவன் தலைவி தன்னை உயர்த்தல்
102. ஆடு நாகந்தோய் பினற்குழ னும்வரை மன்மின்வரை
யாடுனா கந்தா னுடையா ன்மகன்குக னவ்வரையே யாடுநா கந்தோ ளகலல்குல் வள்ளி யணைந்தனன்மா லாடுநா கம்புகழ் நாவல னல்லை யருமருந்தே.
(பதவுரை) :- மால் ஆடு நாகம் புகழ் நாவலன் நல்லை அருமருந்தே --பெருமை மிக்க சுவர்க்கலோகம் புகழும் கீர்த்தியை உடைய நாவலர் பிரானது மலையிடத்து வந்த அருமை வாய்ந்த தேவாமிர்தம் போன்ற பாங்கியே, ஆடு நாகம் தோய் பினற் குழல் - ஆடுகின்ற பாம்பின் வடிவு பொருந்திய பின்னிய கூந்தலை உடையவரும் நும் வரை மன் மின் - நுமது மலைப் பிரதேச அரசனது மகளுமாகிய மின்போன்ற தலைவி, (அதுவேயுமன்றி) வரையாள் துன் ஆகம் தானுடையான் மகன் குகன் - மலைமகள் ஒரு பாதியாய்ப் பொருந்தும் திருமேனி உடையவனாகிய சிவபிரானின் குமாரரான முருகன், வேயாடு தோள் நாகம் அகல் அல்குல் வள்ளி அணைந்தனன் - மூங்கில் நிகர்த்த தோளையும் பாம்பின் படத்தினை ஒத்த அகன்ற நிதம்பத்தினையுமுடைய வள்ளியை மணந்தனன்; ஆதலின் பாங்கியே நீ கூறும் குலமுறை நியாயம் பொருந்துவதாகாது இச் செய்யுள், நான்கடி முதற் சீரும் மடக்காய் வந்த uuLD5b.

Page 50
78
இதுவுமது
103. குறமா தவனொர் குறைமா தலள் பணிக் குன்றமுற்ற
வறமா தரன்மண்ந் தான்மலைத் தேனெனி லார்விடுவார் பிறவா தெனையருள் பெம்மா னறுமுகன் பேணல்லையீர் துறவார் புலாலுட் பொதிமுத்தை நீயிது
சொல்லலெனே
(பதவுரை):- பிறவாது எனை அருள் பெம்மான் அறுமுகன் பேண் நல்லையீர் - பிறவிக்கு ஏதுவாகிய தீவினையில் ஈடுபடாவண்ணம் எனக்கு அருளிய அறுமுகப் பெருமானது பெருமையை நாளும் சிந்தித்துப் போற்றும் நல்லைப் பதியில் உள்ளிர், அவள் குறமாது ஒரு குறைமாது அலள் - நம் தலைவி ஒரு குறவர் மாதே அன்றி வேறோர் குறையும் இல்லாத பெண்ணர்வள், பனி குன்றம் உற்ற அறமாது அரன் மணந்தான் - பனி போர்த்த இமயமலைச் செல்வியாகிய அறம் வளர்த்த நாயகியாம் உமாதேவியைச் சிவன் மணந்து கொண்டான், மலை தேன் எனில் யார்
விடுவார் - மன்லயிடத்துப் பிறக்கும் தேன் கிடைக்கப்பெறின் யார் தான் அதனைக் கை நழுவ விடுவார்கள்? (மேலும்) புலாலுள் பொதி முத்தை துறவார் - சிப்பிக்குள் அடங்கிய முத்து என்பதற்காக எவரும் அதை ஒதுக்கி விடமாட்டார், நீ இது சொல்லல் என - அவ்வாறாகவும் நீ இவ்வாறு சொல்வது என்ன?
பாங்கி அறியாள் போன்று வினாதல்
பாங்கி அறியாள் போன்று வினாதல் என்பது, தலைவன் தலைவியிடத்துக் காதல் கொண்டதை அறியாள் போன்று நீ யாரிடத்துக் காதல் கொண்டாய் என வினாவுதல்.
104 சங்கம் பொலியிறை யார்பல ரூசலுஞ் சார்ந்துபிர
சங்கம் பொலிமலர் குற்றிளஞ் சோலை தனிலுறைவார் சங்கம் பொலிமணி நீர்த்தட மேய் நல்லை சாரவைப்ர சங்கம் பொலிநா வலன்வரைக் கண்ணெறிந் தாரெவரே.
(பதவுரை) :- சங்கம் பொலி இறையார் பலர் - சங்கு வளையல்கள் அணிந்த முன்கையை உடைய மகளிர் பலர், ஊசலும் சார்ந்து - ஊஞ்சலும் ஆடி, பிரசங்கம் பொலி மலர் குற்று - தேன் நீராயப் பொழியும் பூக்கள் கொய்தும், இளம் சோலைதனில் உறைவார் - இளமரச்

79
சோலையில் பயில்வார்கள், சங்கம் பொலி மணி நீர் தடம் ஏய் நல்லை சார் - சங்குகள் திகழும் நீலமணி போல் நீர் படிந்த தடாகங்கள் பொருந்திய நல்லூர்ப் பதியில், அவைப்ர - சங்கம் பொலி நாவலன் வரை கண் எறிந்தார் எவர் - கற்றோர் சபையில் சொற்ப்ெருக்கு ஆற்றும் நாவலர் பிரானது மலையிடத்தே (அக்கன்னியர் பலருள்) கண்சாடை செய்து நம்மைக் கவர்ந்தவர் யாவர்.
(கு.உ): சங்கு - சங்கு வளையல்; பிரசம் - தேன்; கம் - நீர்; பிரசங்கம் - தேனாகிய நீர்; குற்று - கொய்து, இளஞ்சோலை - இளமரக்கா: வயல் சூழ்ந்த சோலை எனக் கொள்ளலுமாம்.
இறையோன் இறைவி தன்மையியம்பல்
இறையோன் . இயம்பல் என்பது தலைவன் பாங்கியை நோக்கித் தலைவியினது இயல்புகளைக் கூறுதல்.
105. பாறணி நன்மொழி பண்வாய் பவளம் பகிர்வடுக்க
னாறளி சூழ்குழன் மைம்முக மாமதி நாவலவர் பேறன வாறு முகனல்லை யேய்பவள் பேணுமுலை தோறமி யேனெஞ்ச மேயிடை தேரல்கு றேமொழியே.
(பதவுரை):- தே மொழியே - தேன் போலும் இனிமை வாய்ந்த மொழி உடைய பாங்கியே, நாவலவர் பேறு அன ஆறுமுகன் நல்லை ஏய்பவள் - பாவினும் உரையினும் வன்மை வாய்க்கப்பெற்ற நாவினரது பேறு எனத் திகழும் ஆறுமுகநாவலர் பிரானது நல்லைப் பதி போல்பவளாகிய எனது காதலியின் (இலக்கணம்), மொழி தணி நல்பால் - மொழி குளிர்ச்சியும் நன்மையும் இயன்ற (தாய்) பால் மாதுரியம் உடையது, பண் வாய் பவளம் - இசை பொலியும் வாய் பவள நிறமானது, கண் பகிர் வடு- கண்கள் பிளந்த மாம்பிஞ்சினை நிகர்ப்பன், ஆறு அளி சூழ் குழல் மை - வரிசையாக வண்டுகள் படியும் கூந்தல் மேகமாம், முகம் மா மதி - முகம் பூரண சந்திரன், பேணுமுலை தோல் - விரும்பத் தரும் நகில் யானை மத்தகம், தமியேன் நெஞ்சமே இடை - தனித்திருப்பவராகிய எனது நெஞ்சம் (தளரும் இயல்பால்) போல்வது இடை, அல்குல் தேர் - நிதம்பம் தேர்த் தட்டாகும்.
(கு.உ):- தனி - தண்ணிய - தொகுத்தல் விகாரம்; தோல் - யானை, ஈண்டு மத்தகம் ஆகுபெயர்.

Page 51
80
பாங்கி தலைவியருமை சாற்றல்
பாங்கி தலைவியருமை சாற்றல் என்பது பாங்கி தலைவி கிடைத்தற்கு அரியவள் எனத் தலைவனுக்குக் கூறல்.
106. ஆதீன நாரி யெனநீர் நினைய லரியவரை
யாதீன நங்கோ மகளையம் மாவுமொவ் வாடுறைசை யாதீன மெச்சி யளிநா வலப்பெய ராறுமுக னாதீன பந்தா மவனல்லை வாழ்தெய்வ மாவறியே.
(பதவுரை):- அரியவரை ஆதீன நம் கோமகளை - அருமைவாய்ந்த மலையினை உரிமையாகவுடைய நம் சிறப்புமிக்க தலைவியை, ஆ, தீன நாரியென நீர் நினையேல் - ஐயகோ வறுமை மிக்கவள் என்று நீர் நினைக்க வேண்டா, (அவளை) அ மாவும் ஒவ்வாள் - அத்தகு பெண்ணை அந்த இலக்குமியும் ஒப்பாக மாட்டாள்; துறைசை ஆதீனம் மெச்சி அளி நாவலப் பெயர் - திருவாவடுதுறை ஆதீனம் நாவன்மையைப் பாராட்டி 'நாவலன்' என வழங்கிய பெயருடைய, தீன பந்து நா ஆறுமுகன் - அலந்தோர்பால் பரிவுடைய நாப்படைத்த ஆறுமுகனாம்; அவன் நல்லைவாழ் தெய்வமா அறி - அப்பெருமானது நல்லைப்பதியில் வாழ்கின்ற அணங்கு (அவள்) என்பதை அறிந்து கொள்வாயாக.
இச் செய்யுளம் யமகம்
முதலடியில் ஆதீனம் - ஆதீனம் ஆ - பரிவுக்குறிப்பு: தினம் - வறுமை, சிறுமை; 2ஆம் அடி ஆதீனம் - உரிமை, சுவாதீனம், 3ஆம் அடி ஆதீனம் - திருவாவடுதுறை மடம்; 4ஆம் அடி ஆதீனம் - மூன்றாம் அடி இறுதிச் சீரோடு தொடர்புபட்டது. ஆறுமுகன் + நா + தீனபந்தாம்.
தலைவன் தலைவியின்றியமையாமையியம்பல்
gങ്ങബങ് - யியம்பல் என்பது, தலைவன் தலைவியின்றித் தான் உயிர் வாழ வியலாத் தன்மையைக் கூறுதல்.
107. காவுண்டு புள்ளுக்குக் காதலஞ் சேய்க்குக் கருதிடுதா யோவுண்டு சைவ யுயர்நெறி யோம்பிட நாவலவ னாவுண்டு காய நடுங்க விடுமத னாரிவிலி னேவுண்டு வந்த வெனக்கவ ளன்றி யெவருளரே.
(பதவுரை) :- புள்ளுக்கு கா உண்டு - வண்டுகளுக்கு உறைவிடமாகவும் சோலைகள் உண்டு, காதல் அம் சேய்க்கு கருதிடு தாய் உண்டு - அன்பு உணர்வைப் பெருக்கும் அழகிய குழந்தைக்கு

81
அதன் நலனையே எப்போதும் சிந்தித்து இருக்கும் தாயானவள் ஆதாரமாக
ருப்பாள், சைவ உயர் நெறி ஓம்பிட நாவலன் நா உண்டு - சைவத்தின்
மலான நெறியைப் பேணிப் பாதுகாத்தற்கும் வளரச் செய்வதற்கும் துணையாக நாவலர் பெருமானது நாவன்மை உள்ளது, காயம் நடுங்க விடு மதன் நாரி வில்லின் - எனது உடல் நடுங்கும் படியாக விடப்படும் மன்மதனாரது நார் கட்டிய வில்லில் நின்றும், ஏவுண்டு வந்த எனக்கு - ஏவப்பட்டு என்பால் வந்து தைத்த பாணத்தோடும் தமியனாக வந்த எனக்கு, அவள் அன்றி எவர் உளர் - அவள் இன்றி யார் தான் துணையாக உளர்? (எவருமில்லை)
(கு.உ):- சைவயுயர்நெறி யோம்பிட நாவலர் நாவுண்டு என்றது, சைவ மதத்தைப் பிறமதத்தினர் தூவித்த போது, அத்தூஷணைக்குக் கண்டனம் எழுதியும் அவர்களது அறியாமையால் சைவநெறி பற்றி எழுப்பிய ஆட்சேபங்களுக்குப் பேச்சு மூலமும் எழுத்து மூலமும் விளக்கம் அளித்துப் பரிகாரஞ் செய்தும் சைவத்தினைப் பேணிப் போற்றிய திறனைக் குறித்தது. நாவுண்டு என்பதால் அவரது பிரசங்கச் சேவை மட்டுமன்றி இனம் பற்றி எழுத்துப் பணியும் தழுவப்படுவதாம், நாரிவில் - நார் கட்டிய வில், நார் இகரச் சாரியை பெற்று நாரி என்றாயிற்று.
பாங்கி நின்குறைநீயே சென்று உரையென்றல்
(பாங்கி . உரையென்றல் என்பது பாங்கி தலைவனை நோக்கி, நின் கருமத்தை நீயே சென்று தலைவியிடம் கூறுக என்றல்)
108. சிவகாமி யம்மை செழுந்தவப் பேறு சிறக்கு நல்லை
நவகாமி யாமெ மலைக்கொடி மாட்டுன் மனவளுரை யவகாமி கவ்வழி போகா வறிவுடை யாண்டகைநீ தவகாமி யாகி மொழிக வெனக்கோர் தவறிலையே.
(பதவுரை):- சிவகாமியம்மை செழும் தவபேறு சிறக்கும் - சிவகாமியம்மையாரது செழுமை மிக்க தவப் பேறாகிய முருகப்பிரானது திருவருளாற் சிறப்புற்று ஓங்கும், நல்லை நவகாமியாம் - நல்லைப் பதியினைப் புதிது புதிதாக விரும்புகின்றவளாகிய, எம் மலைக்கொடி மாட்டு - எமது இமய மலை ஈன்ற குலக் கொடியாகிய தலைவியின் இடத்து, உன் மன அஞரை - நுமது மனத் துன்பத்தை, அவகா(ம)ம் மிகு அவ்வழி போகா - வீணாகும் விருப்பங்கள் மிகும் அந்நெறியிற் போகாது, ஆண்டகை நீ - ஆடுஉத் தகைமையில் மேம்பட்ட தலைவனாகிய நீவிர்,

Page 52
82
தவகாமியாகி மொழிக - மிகக் காமம் உடையவராகச் சென்று தலைவி
பால் எடுத்துக் கூறுக, எனக்கு ஓர் தவறு இலை - அதன் மூலம் நான் சொல்வதினால் நேரக் கூடும் குற்றம் எனக்கு இல்லை.
(கு.உ)- நான் சொல்லின் சிலகால் மனம் இரங்காள், அவ்வாறு இரங்காள் எனின் அஃது எனக்கு ஏதமாம். நீயே சென்று உரைப்பின் எனக்கு ஏதம் இல்லை என்றவாறு. அவ(ம்) கா(ம)ம் மிகு அவ்வழி - வீணாகும் விருப்பங்கள் மிகும் அவ்வழி. காம்மிகு என்பதில் மகரம் தொக்கது. தவ - மிக; காமி - காமமுள்ளவன், மிகு காம முள்ளவன் - காம மிகுதி உள்ளவன்.
பாங்கியைத் தலைவன் பழித்தல்
(பாங்கியின் கூற்று நன்றன்று என்று தலைவன் அவளைப் பழித்துக் கூறல்)
109. மாணிக்கன் போரான் வருந்திக் கடுவின் மலிவிழியாய்
நாணிக்கன் றம்புக் கரவரி கொள்பவ னார்மகன்பேர் பேணிக்கன் பற்றவர் போலப் பெரிதில காக்கிளிபோற் பாணிக்கன் மேமனத் தாய்நல்லைப் பாருரை யென்பிழையே.
(பதவுரை). கடுவின் மலி விழியாய் - நஞ்சுபோன்ற கண்ணினளே; மாண் இக்கன் போரால் வருந்தி - மாட்சிமை மிக்க கருப்புவில்லியாகிய மன்மதனுடைய போரினாலே வருத்தமுற்று அதன் விளைவாக; நாணிக்கு அரவு அம்புக்கு அரி கொள் பவனார் மகன் பேர் பேணிக்கு - நானுக்காகப் பாம்பையும் அம்புக்காக விஷ்ணுவையும் அமையக் கொண்ட பவன் எனும் நாமத்தினனாய சிவகுமாரனாகிய அறுமுகன் பேரைத் தன் பேராகப் பேணும் நாவலர் பிரான் மாட்டு; அன்பற்றவர்போல - அன்பற்றவராம் பகைவர் போலவும்; இலகாகிளி போல - இலவு காத்த கிளி போலவும்; நல்லை - இந்நல்லையில்; பாணிக்கல் மேம் மனத்தாய் - நீரிவிட்ட கல்லின் தன்மை பொருந்தும் உளத்தினாய்; என்பிழை உரைஎன்பிழையைச் சொல்லுதி.
(கு.உ): பவன் - சிவனுக்குரிய அஷ்டமந்திரங்களுள் ஒன்று பவாயநம. நாணிக்கு - எதுகை நோக்கிய திரிபு, பேணி - கருத்தாப் பொருள்தரும் "இ விகுதி பெற்ற பெயர். நீரில் இடுகல் உள்ளிரம் பற்றாதேனும் சற்றே பரிசக் குளிர்மை யாயினுங்காட்டும். என்னை அந்நியப்படுத்திப் பேசும் நீயும் உள்ளார்ந்த நேயமிலா தொழியினும் விடாதடுத்துத் தொடுத்து என்னோடு உரையாடிக் கொண்டிருக்குமளவுக்குச் சற்றேனும் இரக்கம் உடையை யாயிருக்கின்றனை என்பான் பாணிக்கல் ம்ேம்மனத்தாய் என்றான் என்க.

83
பாங்கி பேதைமையூட்டல்
பாங்கி பேதைமை யூட்டல் என்பது பாங்கி தலைவியின் மேல் அறியாமையை ஏற்றித் தலைவனுக்குச் சாற்றல்.
110. மான்பிற வெல்லாம் வதைப்பவர் வண்டளிர்ச் சந்தனமோ
டான்பிற தாரு வறுத்தெரி யூட்டு மவர்கண்மக ளென்பிற கூற லிறையுன் மனநோ யிறையறியாள் யான்மற வாதவ நாவல னல்லை யிதுவறியே.
(பதவுரை):- யான் மறவாதவன் - என்னால் என்றும் மறக்கப்படாத பெருமையினராகிய, நாவலன் pൺങ്ങബ நாவலர் பிரானது நல்லைப்பதியில், மான் பிற எல்லாம் வதைப்பவர் - மான் முதலாகச்
சொல்லப்படும் விலங்கினங்களைத் துன்புறுத்திக் கொல்பவரும், வண் தளிர் சந்தனமோடு ஆன் பிற தாரு வறுத்து எரி ஊட்டுமவர் - வளப்பம் பொருந்திய தளிரை உடைய சந்தனம் ஆதியாம் பயன் தரு மரங்களை எல்லாம், அக்கினி கொளுவி எரிப்பவர்களுமாகிய மறக் குலத்தவர்களின், கண்மகள் - கண்மணி போன்ற மகள் நமது தலைவி, பிற கூறல் என் - அவளின் பேதைமையை உணர்த்தற்கு மேலும் கூற வேண்டுவது என், இறை - தலைவ, உன் மனநோய் இறை அறியாள் - உனது உள்ளத் துயரைச் சிறிது அளவும் உணர்ந்து கொள்ளும் இயல்பு உடையவள் அல்லள், இது அறி - இதனை அறிந்து கொள்வாய்,
(கு.உ)- ஆன் - ஆன் என்பது எதுகை நோக்கி ஒற்றாகி நின்றது
இதுவுமது
111. பாவை யதரத்துப் பாக்கள வின்முலை பாங்குறவை
பாவை யெழுதிய பூசைகண் டாலும் பயந்தலறி நாவை வருத்துவ ணம்பிற் பதுங்குவ ணாவலன் வெற் பாவை யுனதுயிர் பன்னி லறிமோ பகருதியே.
(பதவுரை):- நாவலன் வெற்பர் - நாவலர் பிரானது மலையகத் தலைவனே, பாவை அதரத்து - பாகு அமைந்த இனிய இதழ்கள் பொருந்திய வாயினையும், பாக்கு அளவின் முலை - பாக்கு அளவினதாகிய சிறிய நகில்களையும் உடையவளாகிய நமது தலைவி, பாங்குற வை பாவை எழுதிய பூசை கண்டாலும் - பக்கத்தில் உள்ள சித்திரத்தில் எழுதப்பட்ட பூனையின் வடிவத்தைக் கண்டாலும், பயந்து அலறி - அஞ்சி நடுங்கிக் குளறி, நாவை வருத்துவள் - நாவைக் கடித்துக் கொள்வள், நம்மின் பதுங்குவள் -அச்சம் காரணமாக நமக்குப்

Page 53
84
பின் மறைந்து ஒதுங்குவள், ஐ உனது துயர் பன்னில் - வியக்கத்தகும்
உனது குறையைச் சொன்னால், அறிமோ பகருதி - அறிந்து கொள்வாள்ோ சொல்வாய்,
(கு.உ);~ பாக்களவின் முலை எனப் பூரணவளர்ச்சி காணாப் புணர் முலை குறித்ததனால் பிறர் மன இயல்புகள் உணரா இளமை சுட்டிய வாறாயிற்று. பாவை எழுதிய பூசை - சித்திரமாக வரைந்த பூனை பா.கு பா என
நின்றது. செய்யுள் இசைவு நோக்கி அதரத்து - அத்து வேண்டாவழி வந்த சாரியை அதுவும் செய்யுள் இசைவு நோக்கியது.
காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல்
(தலைவி முதிர்ந்த அறிவுடையளாதலைத் தலைவன் தோழிக்கு உணர்த்தல்)
112. நீர்மை யலவெனை யாட்கொ ணெறிசேர் நினையுரைக
ணிர்மை யுடையளைப் பாதிரி யென்றுரை நீர்பகரி னிர்மை யறுசிறைப் போக்குவ னென்ன நீலைஇமொங்கா னிர்மை புரிவனென் றானல்லைப் பேதையெ
னின்னுரையே.
(பதவுரை);~ எனை ஆட் கொள் நெறிசேர் நின் ஐ உரைகள் நீர்மையல - என்னை ஆட்கொள்ளும் நெறிக்குரியளான உனது வியப்புக்குரிய பேச்சுக்கள் தலைவி நிலைக்கும் பொருந்தும் p6irsoLDust6). TeBIT நல்லைப்பேதை - நல்லையிடத்துப் பெண்ணாம் இவள், நீர்மை உடையளை - தன்பால் அன்புடையாள் ஒருத்தியை; பாதிரி என்ற உரை நீ பகரின் - இழிதரமாக நீ பேசினால், நீர்மை உறு சிறைப் போக்குவன் என்ன நிலைஇ - (இதோபார்) உன்னை இருள் தன்மை பொருந்திய சிறைக்குள் செறிப்பேன்; எனும் ஆவேச நிலைஉற்று; மொங்கான் நீர்மை புரிவன் என்றால் - மொங்கான் மோதுந் தன்மையாக மோதுபவள் என்றால்; நின் உரை என் - நீ பேசுவது என்னாகும்.
(கு.உ):- என்ற + உரை என்றுரையெனத் தொகுதி, பாதிரி தாழ்வுத்தரங் குறித்தது. நிலை இ - நிலையென்னும் பெயர் வினையடியில்; தோன்றிய வினையெச்சம், JATLLb: 'உடையனே என்றிருக்குமேற் பொருள் சிறக்கும்அ.தெங்ங்ணம்! foLDuj60Luisir - காதலன், எந்தக் கோழையாயிருப்பினும் காதலன் என்றிருப்பவன் மேல் யாரும் இழிவு புகலக் கேட்பின் காதலியிடம் எதிர்பாரா அளவு வீராவேசம் நிகழ்வது இயல்பு ஆதலின்,

85
பாங்கி முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல்
(முன்பு கூடியவாறு பின்னுங் கூடுக எனத் தோழி தலைவனுக்குச் சாற்றல்.)
113. மறைமொழி யோவா வொழுக்கினன் மாதர் மயக்கமிகு
கறைமொழி தோளாச் செவிய னறுமுகன் காமுறுநன் னிறைமொழி மந்தாசொ லன்றோ நிகர்மலர் நல்லையிற்றே னுறைமொழி மாத ருனக்குவெற் பாவிங் குறுவதேனே.
(பதவுரை):- வெற்பா - மலை நிலத் தலைவனே; மறைமொழி ஒவா ஒழுக்கினன் - வேதவாக்கிற்குத் தக ஒழுகுதலின் தவறாத நெறியினரும்; மாதர் மயக்க மிகு கறை மொழி தோளாச்செவியினன் - பெண்கள்பால் மயக்கம் ஊட்டுகின்ற குற்றம் மலிந்த வார்த்தைகளால் துளைக்கப்படாத செவியினருமாகிய, அறுமுகன் காமுறு நல் நிறை மொழிமாந்தர் சொல் - நாவலர் பிரான் விரும்புகின்ற நல்ல நிறை மொழியாளராம் மேன்மக்களது சொல்லை; நல்லையில் தேன் உறை மொழி மாதர் நிகர் - நல்லையில் வாழும் தேன் பொதிந்த இனிய மொழி பேசும் பெண்கள் ஒப்பர் ஆதலால்; ಕಲೆ இங்கு உறுவதென் - உனக்கு இங்கு நேரவிருக்கும் அநர்த்தம் աT85it.
(கு.உ);~ நல்லையில் மாதர் மேன்மக்கள் சொல்லை ஒப்பர் ஆதலால் மேன்மக்கள் சொல் தவறாது பலிப்பது போல் தலைவியும் உனக்குத் தவறாதே பலன்படுவள்; அதிற் பிசகு நேராது என்றவாறு, நிறைமொழி - பயன்பாட்டிற் சோர்வு போகாத மொழி; அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயனைப் பயந்தே விடும் மொழி - பரிமேலழகர்.
தலைவன் தன்னிலை சாற்றல்
தலைவன் தன்னிலை சாற்றல் என்பது தலைவன் தான் வேட்கை நோயால் வருந்தும் நிலையைப் பாங்கிக்கு உரைத்தல்.
114. தென்றமிழ் சைவ மிருவிழி யாக்கொள் செழும்புலத்தா னொன்றிய சீருடை யாறு முகனை யுறாதவர்போற் கன்றிய காமனம் புற்றிழி ரத்தமென் கட்டழன்மாத் துன்றிய வல்குற் கடலமு தின்றித் தொலைவதுவே.

Page 54
86
(பதவுரை):- தென் தமிழ் சைவம் - சுவை மலிந்த தமிழ் மொழியையும் சைவ நெறியினையும், இரு விழியா கொள் - தமது இரு கண்களாகப் போற்றுகின்ற, செழும்புலத்தான் - செம்மையாகிய அறிவியல் நெறியினருமி, ஒன்றிய சீர் உடை - பொருந்திய சிறப்பு மிக்க வருமாகிய, அறுமுகனை உறாதவர் போல் - ஆறுமுகநாவலர் பிரானைச் சாராதவரைப் போல, காமன் அம்பு உற்றுமி - மன்மதனது வ்ைரித்த D6)f LT600TLDIT605 தைத்த இடத்து, ரத்தம் - (கிளர்ந்து எழும்) இரத்தமானது, என் கண் மா அழல் துன்றி - என்னில் பெரு நெருப்பாய்ப் பொருந்தி, அ அல்குல் கடல் அமுது இன்றி - அத்தன்மையதான அல்குற் கடலில் விளையும் கலவி இன்பமாகிய அமுதைப் பெறுதல் அன்றி, தொலைவதுவே - வீணாவதா?
பாங்கி உலகியல் உரைத்தல்
பாங்கி உலகியல் உரைத்தல் என்பது சான்றோரை முன்னிட்டு உலகியல் வழாது தலைவியை மணந்து கொள்வாயெனப் பாங்கி தலைவற்குச் சாற்றல்.
115. தாருங் கொடி மணமேவு மளிமலர் தாமணக்குந்
தேருந் தொறுமண மேவுஞ் சுவைதமிழ் நாவலனார் ரூருஞ் சிவமண மேவு முலகி லுயர்ந்தவர்க ளாரும் புகழ்மண மேவுவர் நீயறி யாதலவே.
(பதவுரை);~ கொடிமண மேவு தாரும் - கொடியானது பொருந்திப் படர்கின்ற மரமும், அளி மலர் தா மணக்கும் - (கொடியினது) வண்டுகள் மொய்க்கின்ற பூவினது வாசனையைப் பொருந்தும், தேரும் தோறும் - ஆராயும் தோறும், தமிழ் சுவை மண மேவும் - தமிழ் தன் சுவையாகிய மணத்தை மிகுதியாகப் பொருந்தும், நாவலனார் ஊரும் சிலமணம் மேவும் - நாவலர்பெருமான் வாழுகின்ற ஊரும் சிவமணம் கமழ்ந்த வண்ணம் இருக்கும், உலகில் உயர்ந்தவர்கள் ஆரும் புகழ் மணம் மேவுவர் - அவ்வாறே உலகியல் வழாத நெறி நிற்கும் உயர்ந்தோர் எவரும் புகழ் மணம் பொருந்தப் பெறுவர், நீ அறியாதல - இவ்வுண்மை நீ அறியாததன்று.
(கு.உ):- தரு - தாரு எனலாயது நீட்டல் விகாரம், அறியாதது அல - அறியாதல் என்பது தொகுத்தல் விகாரம்,

87
தலைவன் மறுத்தல்
116. தியுற்று வீடது வேவுதென் றாற்குச் சிறுகிணறு
நீயுற்றுக் கண்டவிப் பாயெனக் கூறிடு நீர்மையன்றோ வோயுற்றுக் காம முழந்திடு மென்றனை யோமவெரி காயுற்று மாலை புனையென னாவலன் காக்குயிலே.
(பதவுரை);~ நாவலன் கா குயிலே - நாவலர் பிரானது சோலையில் வாழும் குயில் போல்வாளே, ஒயுற்று காமம் உழந்திடும் என்தனை - என் வலி ஓயும்ளவும் விரகதாய்த்தால் வருந்தும் எனக்கு, ஒம எரி காயுற்று மாலை புனை எனல் - ஒமாக்கினி வளர்த்து மணமாலை சூடிக்கொள் என்று நீ வழிகாட்டுதல், தீ உற்று வீடது வேவுது என்றாற்கு - நெருப்புப் பற்றி வீடு எரிகின்றது என்று கூறித் துணை நாடி நிற்கும் ஒருவரிடம், சிறு கிணறு நீயுற்றுக் கண்டு - சிறு கிணறு ஒன்றினைத் தோண்டி நீர் கண்டு, அவிப்பாய் என - (அதில் உள்ள நீர் எடுத்து) அந் நெருப்பைத் தணிப்பாய் என்று, கூறிடும் நீர்மை அன்றோ - சொல்லும் தன்மையினது அல்லவோ,
(கு.உ);~ வீடது - அது பகுதிப்பொருள் விகுதி, வேவுது - வேகிறது என்பதன் சிதைவு நீர்மையன்றோ என்பதில் ஈற்று ஒகாரம் வியப்பு அவித்தல் - தணித்தல்; உற்றுக் கண்டு - தோண்டி நீர் கண்டு. கிணறு தோண்டினாரைக் கிணறு கண்டார் என்னும் வழக்கும் நோக்குக. உறுதல் தோண்டுதல் மேல் நின்றது.
ஒப்பு நோக்குக.
தாமக் குழலை வரைந்து கொண்டே வெங்கைத் தாணு வெற்பில் காமக் கன்லை தணிப்பாயென் றோதிய காரிகைநி
நாமக் கிணறகழ்ந் தந்நீர் கொடுநன் நகரிற்பற்றி வேமக் கனலை யவிப்பாயென் பார்களின் வேறல்லையே.
- திருவெங்கைக் கோவை
பாங்கி அஞ்சியச் சுறுத்தல்
தோழி தானும் பயந்து புனத்தை விட்டுப் போகுமாறு தலைவனைப் பயமுறுத்தல்,
117 ஆறு முகநா வலனார் தினம்பணிந் தாடுநல்லை
யாறு முகனா ரசுரருக் காமென வாகொடிய ரேறு கதலிப் பழமதி லூசி யெனுங்கணைமா லேறு மலைப்புயர் கானவர் கண்டிடி லேதுயிரே.

Page 55
88
(பதவுரை):- ஆறுமுக நாவலனார் தினம் பணிந்தாடும் - ஆறுமுக நாவலர் பிரான் நாள் தோறும் ஏத்தி வழிபட்டு மகிழும், நல்லை
ஆறுமுகனார் - நல்லைப்பதியில் கோயில் கொண்டு இருக்கும் அறுமுகக் கடவுள், அசுரருக்காம் என - அசுரரை மாய்ப்பதில் வன்கண்மை கொண்டிருந்தான் போன்று , (கானவர்) 'ஆ கொடியர் - (வேடராயினோர்) தம் குலத்துக்கு மாறாக் கேடு விளைப்பவரிடத்து ஆ! மிகக் கொடியர், கதலிப்பழமதில் ஊசி ஏறு எனும் - வாழைப் பழத்தில் ஊசி ஏறுதல் போல, கணை ஏறு மா மலை புயர் - (வெகு இலகுவாக) அம்புகள் உடலில் ஏறும் பெருமை மிக்க மலைபோல் திணிந்த தோள் உடையர், கண்டிடில் துயரே - (அத்தகையோர்) காண நேரின் நுமக்கும் எமக்கும் துயரம் உண்டு.
(கு.உ); அசுரர்க்கு முருகக் கடவுளாமென என்று கொண்டு கூட்டுக. கேடு
சூழ்ந்த அசுரரை அழித்தற்கு முருகக் கடவுள் கொண்டிருந்த தறுகண்மை போன்ற தறுகண்மையுடைய கொடியர் இக்கானவர் என்க. ஆ கொடியர்
என்பதில் 'ஆ' வியப்பு - மால் - பெருமை,
தலைவன் கையுறை புகழ்தல்
118. வளைமுகில் வேய்மலை மீன மதியர மாதமிழின்
கழையிவை யிட்ட திறைமுத் திவைகயற் கண்ணிசந்தத் தழையிது மேனி யிடத்தரு மாய்ந்தனன் றந்தனனொர் பிழையினி யாறு முகனல்லைப் பேணி யணிகுதிரே.
(பதவுரை). கயற் கண்ணி - கயல் போலும் கண்ணினாய், வளை முகில் வேய் மலை மீன மதி அர(வு) மா தமிழின் கழை இவை - சங்கு, முகில் மூங்கில், மலை, மீன், சந்திரன், பாம்பு, பெருமை பொருந்திய இனிமையான கரும்பு ஆதியன, திறை இட்ட முத்து இவை - திறையாக இட்ட முத்துக்கள் இவை, சந்தத் தழை இது மேனி இடத்தகும் - சந்தனத் தழையாகும் இது உனது மிருதுவான மேனிக்கு இடத்தக்கதாகும், அறுமுகன் நல்லை ஓர் பிழையிலி ஆய்ந்தனன் தந்தனன் - அறுமுகப் பிரானது நல்லைப்பதியில் இவற்றைத் தெரிதலில் அனுபவக் குறையற்ற
ஒருவன் தெரிந்து தந்துள்ளான், பேணி அணிகுதிர் - இவற்றைப் போற்றி அணிவீராக,
(கு.உ):- திறையிட்ட' என்றதனால் தலைவி, அரசி எனத் தோன்ற நிற்கும் நயம் காண்க. பிழை - அனுபவக் குறைவு; ஆய்ந்தனன் என்பது முற்றெச்சமி, வளைமுதல் கழை ஈறாகச் சொல்லப்பட்டவை, முத்துப் பிறக்கும் இடங்கள் என்பது ஐதிகம்.

89
இதுவுமது
119. சந்தனம் வாடை தகுநீர் மலர்க டனிப்பனிநீர்
நுந்தன மல்குன் முகமிவைக் காவன நுண்பொடியும் வந்தனங் கொண்டு மதிசவர்க் கார மரியவத்தர் தந்தனங் கொள்ளுதி ராறு முகனார் தகுநலைக்கே.
(பதவுரை):- ஆறுமுகனார் தகு நலைக்கு - ஆறுமுகநாவலர் பிரானது தகுதி வாய்ந்த நல்லைப் பதியில், வாடை தகு சந்தனம் - வாசனை பொருந்திய சந்தனம், நீர் மலர் - நீர் வாழ் பூக்கள், தனி பனி நீர் - தனிச் சிறப்பு வாய்ந்த குளிர்ச்சி பொருந்திய பன்னீர், நும் தனம் அல்குல் முகம் இவைக்கு ஆவன - நுதுெ தனம், நிதம்பம், முகம் ஆகிய உறுப்புக்களுக்கு ஏற்புடையன, நுண் பொடியும் - (அத்துடன்) மேனியில் பூசுதற்கான நுண்ணிய பொடியும், மதி சவர்க்காரம் அரிய அத்தர் கொண்டு வந்தனம் - மதிப்புடைய சவர்க்காரம் அரிய அத்தர் என்னும் வாசனைத் தைலம் என்பனவும் காணிக்கைப் பொருளாகக் கொண்டுவந்து, தந்தனம் கொள்ளுதிர் - தந்தோம், ஏற்றுக் கொள்வீர்.
(கு.உ):- வந்தனங் கொண்டு என்பதைக் கொண்டு வந்தனம் என மாற்றுக. கொண்டு வந்தனம் - முற்றெச்சம். கொண்டு வந்து தந்தனம் என முடிக்க. வாடை - மணம்; வாசனை என்ற சொல்லின் திரிபு ரூபம் வாடை என்பர். தீ மணம் குறித்தற்கு உரிய சொல்லாம் பாங்கின் வழக்கில் உள்ளது ஒன்று அது இங்கு நன்மணம் குறிக்க வந்தமை புறநடையால் தழுவப்படும்.
பாங்கி கையுறை மறுத்தல்
120. குறத்திய ராரக் கழுத்திய ரில்லைக் குழறுபல
வறத்திய லாத சமய மறுத்துயர் சைவநெறித் திறத்திய லேயுற வைந்நா வலனார் செழுங்கிரிவீழ் புறத்திய னிரனை மாலை புனைவது புத்தியன்றே.
(பதவுரை): அறத்து இயலாத குழறு பல சமயம் மறுத்து - தருமநெறி சாராதனவாய் வெற்றுரைப் பிரசார மாத்திரமான சமயங்களை மறுத்து,
உயர் சைவநெறி திறத்து இயல் உறவை நாவலனார் - மேம்பாடு பொருந்திய சைவநெறியே திறமை நிலை பொருந்தும் வண்ணம் வைத்த நாவலர் பிரானது, செழும் கிரி வீழ் - செழுமை வாய்ந்த
மலையிடத்ததான, புறத்தியல் நீர் மாலை - நமது ஊருக்கு அந்நியமான (பூக்களாலும் முத்துக்களாலும் இயன்ற) மாலைகளை,

Page 56
90
அ(ன்)னை புனைவது - தாய் போல்பவளாகிய என் தலைவி அணிவது, புத்தி அன்று - விவேகம் ஆகாது.
(கு.உ); நமது ஊருக்கு உரித்தில்லாத மாலைகளைத் தலைவி அணிய நேரின், இவை இவளுக்கு எவ்வாறு கிடைத்தன எனக் கண்டோர் ஐயுறுவர். ஆதலின் இவை வேண்டா எனத் தோழி ஏற்க மறுத்தாள் என அறிக. அன்னை - அனை என இடைக்குறை விகாரம் பெற்றது.
இதுவுமது
121. ஆரத் தழையிவ ணில்லது பன்னி ரரியவத்தர்
வாரப்படுமன நுண்பொடி யாதிய வாங்கிலெவன் காரப் படுகுழ லீரெனக் கானவர் கேட்பர்பிழை சேரப் பரவை செறிநா வலன்வரைத் திண்களிறே.
(பதவுரை):- பரவு ஐ செறி நாவலன்வரை - போற்றத் தகும் வியப்பு வாய்ந்த நாவலர் பிரானது மலையின் கண்உள்ள, திண் களிறே - வலிமை மிக்க ஆண் யானை போலும் பராக்கிரமம் மிக்கீர், ஆர தழை இவண் இல்லது - (நீர் கொணர்ந்த) சந்தனத் தழையானது இவ்விடத்தில் காணுதற்கு அரியது, பன்னீர் அரிய அத்தர் மனம் வாரப்படும் நுண் பொடி ஆதிய வாங்கில் -பன்னீர் அருமையான அத்தர் மனம் ஈடுபாடு கொள்ளற் கிடமாகிய வாசனை உடைய பொடி (பூசல் மா) முதலாயினவற்றை வாங்கில், அப்பு கார் அடு குழலீர் - நீர் பொருந்திய மேகம் போலும்
கூந்தலை உடையீர், எவன் இவை - எவ்வாறு கிடைத்தன என, பிழை சேர கானவர் கேட்பர் - எம்மில் பிழை காணும்படியாகக் கானவர் வினாவுவர்.
(கு.உ):- காரப்படு குழலீர் - அப்பு கார் அடு குழலீர் - நீர் உண்டு கறுத்த மேகத்தை வென்ற கூந்தல் உள்ளிர். எவன் என்பது ஏது இது உங்களுக்கு' என்பது பட நின்றது.

91
ஆற்றா நெஞ்சினோடவன் புலத்தல்
பாங்கி மறுத்து உரைத்ததைப் பொறாத நெஞ்சினனாய்த் தலைவன் வெறுத்து உரைத்தல்,
122. மாதரை யோதியு மாலை யுரைத்து மனமிரங்கா
மாதரை வேண்டி யென் மாதரைவேண்டா மதியனுயர் மாதரை மீயுறு நல்லையி னாவல மன்னணைவா மாதரை வேளம்பு தூவ வுயிர்போ மலந்தலந்தே.
(பதவுரை);- மாதரை ஒதியும் - தலைவியின் பால் எனக்கு உள்ள
காதலை உரைத்தும், மாலை உரைத்தும் - அக்காதல் நிமித்தமாக ஏற்பட்ட மயக்கத்தை எடுத்துச் சொல்லியும், மனம் இரங்கா மாதரை வேண்டி என் - சற்றேனும் உள்ளத்தில் பரிவு கொள்ளாத
பெண்களிடத்தில் இரந்து பயன் என்னை, ஆ தரை வேள் அம்பு தூது - ஐயகோ இப்பூமியின் கண்ணே மன்மதன் மலர்ப் பாணங்களைச் சொரிவதனால், அலந்து அலந்து உயிர் போம் - விரக தாபத்தால் வருந்தி வருந்தி (ஏற்படும் மிகுதியான துன்பத்தால்) உயிர் நீங்கி விடும் போலும் (ஆதலின்) மாதரை வேண்டா உயர் மதியன் - பெண்கள் உறவை நாடாத உயர்ந்த அறிவினை உடையவராகிய, மாதரை மீ உறு நல்லையில் நாவலன் மன் அணைவாம் - இடம் அகன்ற உலகில் சிறந்து விளங்கும் நல்லைப்பதி வாழ்நனுமான நாவலர் பெருமானைச் சென்று சார்ந்திருப்போம்.
பாங்கி ஆற்றுவித்தகற்றல்
(தலைவன் துன்பத்தைப் பாங்கி தணித்து அவனை ஏகச் செய்தல்)
123. மாலைந லூர்தியன் பாத மறவா மதியனுள
மாலை யொழித்தவ னாவல னல்லையின் வண்பவள
நீலை மணிபடி நீரினெ லெய்திடு நீடுறைவா காலை வருகுவை கண்ணனை யாள்கழுத் தாரமிதே.
(பதவுரை):- நீள் துறைவா - உயர்ச்சி பொருந்திய தலைவ, மால் ஐ நல் ஊர்தியன் - வியத்தகு , சிறந்த எருது வாகனத்தை யுடையவராகிய சிவபிரானது; பாதம் மறிவா மதியன் - பாதங்கள்ைத் துதிக்க மறவாத
நெஞ்சினனும், உள மாலை ஒழித்தவன் - தன்னைச் சார்வாரது மன மயக்கத்தினை ஒழித்தவருமாகிய, நாவலன் நல்லையில் - நாவலர்பிரானது நல்லைப்பதியில்; வண்பவளம் - வளவிய பவள மணியானது; நீல் ஐ
மணிபடி நீரின் - வியக்கத்தகும்

Page 57
92
நீலமணியின்மீது பொருந்தினாற் போன்று தோன்றும்; எல் எய்திடு காலை - சூரியன் உதிக்கின்ற (நாளைக்) காலைப் போதில்; வருகுவை - வருவாயாக, (நான் இன்றிரவு இயன்றவாறுரைத்து) கண்அணையாள் -
எனது கண்போன்ற தலைவியின்; கழுத்து ஆரம் இதே - கழுத்தில் இவ் ஆரமே (இலங்கச் செய்வேன்)
எய்திடுகாலை வண்பவளம் நீல் ஐ மணி படி நீரின் எல் எய்திடுகாலை ஒனப் பதச் சேதம் செய்து ஐ நீல் மணியில் பவளம் படி நீரின் எல் எய்திடுகாலை எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. நீல் - நீலம் - விகாரம், ஐ - வியப்பு, நீர் இன் நீர்மையில் - தன்மையில் அல்லது போல; எல் - சூரியன்; நீலமணி - கடலுக்கும், பவளம் சூரியனுக்கும் உவமை.
இரந்து குறை பெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல்
மறுநாள் காலையில் வந்த தலைவன், தோழியால் காரியம் இன்று எனக் கருதி இரந்து குறை பெறேம் எனக் கவன்று இனித் தலைவியைப் பெறுதற்கு மடல் ஏறுதலே தான் செய்யத் தகு கருமம் எனக் கூறல்,
124. உருக்கேறு முள்ள முடன்மகிழ் வாரு முறக்கிளைக்கின்
பெருக்கேறுஞ் செந்தமிழ் பூவை யுரைகாப் பெருகுநல்லை யுருக்கேறும் பெண்ணை யுளாநா வலன்கிரி யுள்ளினருங் கருக்கேறு முள்ளமுங் கொண்டிட னன்றிது கண்மணமே.
(பதவுரை):- உருக்கு ஏறு உள்ளமுடன் - பரிவு பொருந்திய சிந்தையராகி, ஆரும் மகிழ்வு உற - காண்போர் கேட்போர் அனைவரும் மகிழ்வு கொள்ளும் தன்மையாக, கிளைக்கு - கிளிப் பிள்ளைக்கு, இன் பெருக்கு ஏறும் செந்தமிழ் - இன்பம் பெருக்கு மேன்மேல் மிகும்
செந்தமிழை, உரை பூவை - உரைக்கின்ற நாகணவாய்ப் புள் (வாழுகின்ற) கா பெருகு நல்லை - சோலைகள் மிகுதியாகக் காணப்படும் நல்லைப் பதியில், உரு ஏறும் பெண்ணை - வனப்பு மிக்க பெண்
இனத்தை, உளா நாவலன் கிரி - கருதாத நாவலர் பிரானது மலையில், உள்ளின் - (பெண்ணை) கருத்தில் வைப்பாராயின், அரும் கருக்கு ஏறும் உள்ளமும் கொண்டிடல் நன்று - (அப் பெண்ணைப், பெற இயலாவிடத்து, அரிய பனை மடல் ஏறுதலாகிய கருமத்தையும் கருத்தில் கொள்ளல் நன்று, மனமே இது கண் - மனமே இதில் கண்ணோட்டம் (வைப்பாயாக).

93
கிள்ளை பாடிடப் பூவை கேட்டுக்கொண்டு இருத்தல்.
உள்ளம் ஆர்உரு காதலர் ஊர்விடை வள்ள லார்திரு வாரூர் மருங்கெலாம் தெள்ளும் ஒசைத் திருப்பதி கங்கள்பைங் கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.
- திருநகரச்சிறப்பு - திருத்தொண்டர் புராணம்,
இதுவுமது
125. கற்பா வியனடை நாவல னல்லையிற் காளகண்ட
னெற்பா மணியெருக் கேய்ந்திடு பூதி யெழுதுகொடி விற்பா வியலுமக் கோதையின் கோதை மிகவுமுள சொற்பா வியவமு தேய்பவட் டோயத் துணைநமக்கே.
(பதவுரை):- கற்பாவிய நடை - கல்விக்கேற்ற பரந்த ஒழுக்கம் உடைய, நாவலன் நல்லையில் - நாவலர் பிரானது நல்லைப்பதியில்; காளகண்டன் - நஞ்சார்ந்த கண்டத்தினையுடைய சிவபிரானது; எற்பாம் அணி - என்பினால் இயன்ற மாலை; எருக்கு - எருக்கமாலை; ஏய்ந்திடு பூதி - பொருந்திய சுடலைப் பொடி என்பனவும், எழுது கொடி விற்பா இயலும் - பரந்த எழுது கொடி வில்லாக அமையும்; அக்கோதையின் - அச் சேர மன்னனின், கோதை - பனைமாலை (அல்லது) மடலுமே; சொற் பாவிய அமுது ஏய்பவள் தோய - பரந்த சொல்லாற் புகழப்படும் அமுது போல்வாளான தலைவியைச் சேருதற்கு, நமக்கு மிகவும் உள துணையே - நமக்கு மிகுதியாக உள்ள துணையாகும்,
(கு.உ):- கற்பாவிய நடை என்பதற்கு கற்ற பாவிலுள்ள சிறந்த ஒழுக்கம் எனப் பொருள் கொள்ளினும் அமையும் காளம் - நஞ்சு, பூதி - பொடி: விபூதி எனினுமாம்; ஏய்ந்திடும் - பொருந்தும்; கோதை - 1, சேரன் 2 , பனை மாலை" - ஈண்டு மடல், பனை மடல் மாலை; ஏய்பவள் - போல்பவள்.அமுது போல்வாளைச் சேருதற்கு இனி எனக்குத் துணையாவன சிவபிரான் அணியும் எலும்பு மாலையும் எருக்கும் பொடியும் அத்துடன் பனை மடலுமே எனக் கூட்டுக.

Page 58
94
தலைவன் மடலேறுதலைப் பாங்கிக்கு உலகின்மேல் வைத்துரைத்தல்
126. நாணிக் களியான் றனைத்தெறு நாவல னல்லைநகர்
பேணிக் களியா ரெனவுமைப் போல்பவர்ப் பேணிமயல் பூணிக் களியா யணைதலில் காளையர் புந்தியது கோணிக் களியா ரெனவுறழ் வார்சிவன் கோலமதே.
(பதவுரை):- நாணிக்களியான் தனைச் தெறும் - (இக்கு அளி நாணான்) கரும்புவில்லுக்கு வண்டினை நாணாக உடைய மன்மதனைக் கோபிக்கும், நாவலன் நல்லை நகர் - நாவலர்பிரானது நல்லை நகரினை, பேணி களியார் என - போற்றி யடைந்து களிப்புறாதவர் போல மயல் பூணி - காதல் மயக்கம் பொருந்தி, உமை போல்பவர் பேணி - உன் போன்றாரையாசித்துத் துணையாகக் கொண்டு; அளியாய் அணைதலின் - எளியவர் போன்று தலைவியைச் சேருதலின்; காளையர் - (காதல் வயப்பட்ட) இளைஞர்கள், புந்தியது கோணி - மனமானது கோட்ட முற்று; களியாரென - பித்துப்பிடித்தவர் போல; சிவன் கோலமது - சிவபெருமானது, (என்புமாலை, எருக்கமலர், சுடலைப் பொடி தரித்த) கோலத்தினை, உறழ்வார் - தாங்குவார்கள்.
(கு.உ):- முதலாமடியிலுள்ள நாணிக்களியான் எனுந் தொடரை இங்கு அளிநாணான் என மாற்றுக. இக்கு - கரும்பு அளி - வண்டு; நாண் - விற்கயிறு ; பூணி - பூண்டு.
இதுவுமது
127. கூப்பிட்டுத் தின்றவன் பூவக நின்றவன் கோவறியான்
மாப்பிட்டுத் தின்றவன் றன்னடி கண்டிடுநாவலனார் வீப்பிட்டுத் தின்றளி பாடு நலைநகர் மெல்லியர்கட் காப்பிட்டு மாலையுற்றார் கோதை கோதை
யணைகுவரே.

95
(பதவுரை):- கூ பிட்டுத் தின்றவன் - பூமியைப் பிய்த்துத் தின்றவராகிய திருமாலும்; பூவக நின்றவன் - தாமரையில் வீற்றிருப்பவராகிய பிரமதேவரும் கோ - (ஆயிரங்) கண்களை உடைய இந்திரனும், அறியான் - இத்தன்மைய என்று உணர்ந்து கொள்ளாத பெருமையினரும்; மா பிட்டுத் தின்றவன் தன் - செம்மனச் செல்வி கொடுத்த பிட்டமுதை அருந்தியவுருமாகிய சிவபிரானின், அடி கண்டிடு நாவலனார் - பாதமலர்களைத் தமது உள்ளத்தால் உணர்ந்த நாவலனாரதாகி, வீ பிட்டுத் தின்று அளி பாடும் - மலர் முகையை நெகிழ்த்துத் தேனை உண்டு. வண்டுகள் ரீங்காரம் செய்யும்; நல்லை நகர் மெல்லியர் - நல்லை நகர்ப்பதியிலுள்ள (தலைவி, பாங்கி ஆகிய) மெல்லியலாரது; கட்காப்பிட்டு - கண் வலையிலகப்பட்டு மாலை உற்றார் - மயக்கமுற்றவர்கள்; கோதை கோதை அணைகுவர் - பனைமடலை மாலையாக அடைவர்.
(குரை): கூ - பூமி - பூமியைத் தின்றவன் திருமால் கோ - கண் - ஈண்டு கண்ணாயிரமுடைய இந்திரனை உணர்த்தி நின்றது. கோதை - மாலை, பனை, வீ - மலர், பிட்டு - நெகிழ்த்து. கட்காப்பிட்டு - கண் + கு + ஆப்பிட்டு எனப் பிரிக்க.
அதனைத் தன்மேல் வைத்துரைத்தல்
(மடலேற்றினைத் தலைவன் தன்மேல்வைத்துச் சாற்றுதல்)
128. பெண்ணை யிடங்கொண்ட பெம்மான் மகளல்லை நாவலனிம்
மண்ணை யிடங்கொண்ட சீர்த்தி யறுமுகன் மால்வரைநும் பெண்ணை யிடங்கொண்டு சேரப் பெறாவிடிற் பேணுகரும் பெண்ணை யிடங்கொண்டு வாரே னரனெனப் பேருலகே.
(பதவுரை):- பெண்ணை இடங் கொண்ட பெம்மான் - உமாதேவியாரை இடப்பாகத்திற் கொண்டுள்ள சிவ பெருமானது; மகன் - மகனாகிய முருகப் பெருமானை நேர்பவரும்; அறுமுகன் - ஆறுமுகன் எனும் பெயரைத் தாங்கியவருமாகிய, இம்மண்ணை இடம் கொண்ட சீர்த்தி - இந்த உலக முழுமையும் அளாவிய புகழ் படைத்த, நாவலன் - நாவலர் பிரானது , மால்வரை - பெருமை மிக்க மலையிடத்து; நும் பெண்ணை இடம்கொண்டு சேர பெறாவிடில் - நுமது தலைவியை (சோலை) இடத்தே கொண்டு பொருந்தப் பெறாது விட்டால்; கரும்பெண்ணை யிடங் கொண்டு - கரிய பனையை (மடலை) இடமாகக் கொண்டு, (கரிய பெண்ணை இடமாகக் கொண்டு) பேருலகு அரனென - பெருமை வாய்ந்த உலகு அரனென்று சொல்லும் படியாக, வாரேன் - வருவேன்.

Page 59
96
(கு.உ):- கரும்பெண்ணை - இடங்கொண்டு. வாரேன்' என்பது தலைவியைச் சேரவியலாவிடத்து பனை மடலைப் பொருந்துவேன் எனவும்; வேறு ஒரு கரியநிறம் படைத்த பெண்ணையேனும் சேர்வேன் எனவும் இருபொருள் பயந்து நிற்றல் காண்க.
பாங்கி தலைமகளவயவத் தருமை சாற்றல்
(மடல் ஊர்வேன் எனத் தலைவன் கூறக்கேட்ட பாங்கி, கிழி எழுதியன்றோ மடல் ஊர்வது, கிழி எழுதும் கால் தலைவியின் அவயவம் எழுதல் உனக்கு அருமையாம் எனக் கூறல்)
129, ஐவந்த வெண்ண ரரும்பிரண் டந்தர மார்ந்திடலி
னைவந்த வோர்கொடி யுண்டாக் கருதிடை நாடவினி மைவந்த பாட்டு மெழுதிய பின்பே வசனநடை கைவந்த வல்லாள னாவல னுார்ப் பெண்ணைக்கண்ணுறவே.
(பதவுரை): ஐ வந்த எண்ணர் - வியக்கத் தகுந்த தர்க்க சாஸ்திர வல்லவர், அரும்பு இரண்டு அந்தரம் ஆர்ந்திடலின் -அரும்பு நிகர்க்கும் இரு நகில்கள் அந்தரத்து அமைதல் சாலாதாகலின், நைவந்த ஓர் கொடி உண்டா கருது இடை - நலிவுடைய கொடி ஒன்று இருத்தல் வேண்டும் என அனுமானிக்கும் இடை, இனிமை வாய்ந்த பாட்டும் எழுதிய பின்பே - இனிமை பொருந்திய சொல்லை எழுதிய பின்னரே, வசனநடை கைவந்த வல்லாளன் நாவலன் ஊர் - வசன நடையைச் சிறப்பாகக் கையாண்ட வல்லாளனாகிய நாவலர் பிரானது ஊரில், பெண்ணைக் கண் உறல் - (நான்) பனை மடலிடத்தே பொருந்துவது. எழுதிய பின்னரே மடல் ஊரத் துணியலாம் எனப் பொருள் முடிக்க,
(கு.உ);~ பெண்ணைக் கண்ணுறல் என்னும் தொடர் பெண்ணைக் கண் + உறல் எனவும், பெண்ணைக்கு + அண்ணுறல் எனவும் பெண்ணைக் கண்ணுறல்’ எனவும் பதச் சேதம் பெற நின்றது.
தலைமகன் தன்னைத்தானே புகழ்தல்
130. முன்வினை பின்வினை யோட்டி யுணர்ச்சிமெய்ம் மேவியவ
னென்வினை போக்கி யெழினா வலன்பதி யேழையிவ டன்மொழி யிட்டிடை கோகிலம் பொய்யெனத் தான்வரைவன் மன்மன மாலெனை யம்மான் மகனென்க மைத்துணியே.
(பதவுரை):- முன்வினை பின் வினை ஒட்டி - பழவினையாகிய சஞ்சிதத்தையும் மேலேறும் வினையாகிய ஆகாமியத்தையும் நீக்கி, மெய் உணர்ச்சி, மேவியவன் - மெய்யுணர்வாகிய ஞானம் தலைப்பட்டுள்ளவனும்
என் வினை போக்கி - என் வினைத் தொடக்கைப் போக்கியவனுமான, எழில் நாவலன் பதி

97
ஏழை இவள் தன் - அழகு சிறந்த நாவலனார் பதியில் உள்ள இப் பெண்ணினது, மொழி கோகிலம் இட்டு இடை பொய் என தான் வரைவன் - மொழி குயிலாகவும் நுண்ணிய இடை பொய் எனவும் வரைவேன், கம் மை துனியே - தலைமேகம் ஒத்து விளங்கும் மாதே, மன் மன மால் என்னை - மிகுதியும் மன மயக்குற்றுள்ள என்னை, அ மால் மகன் என்க~ அத்தகைய திருமால் மகனாம் மன்மதன் என்க.
(கு.உ):- மை துன்னி - கருமை செறியப் பெற்றவன் மைத்துணி, கம் -தலை.
பாங்கி அருளியல் கிளத்தல்
( மடலின் பொருட்டுப் பனையை வெட்டுமிடத்து அதில் வாழும் அன்றில் துன்புறுமாதலின் அருளுடைய நினக்கு அச்செயல் தகாது எனத் தலைவற்குப் பாங்கி சாற்றல்.)
131 மருளுடை யாரைத் தெருட்டி மலவிருண் மாற்றியொளிர் தெருளுடை யாரா விருத்திடு நாவலன் சீர்நலையி லருளுடை யார்க்கு மடன்முடி யாகலை யாவழியு மிருளுடைப் பெண்ணையிற் பார்ப்பின மேய்ந்திடு
மெண்ணுதியே
(பதவுரை):- மருளுடையாரை தெருட்டி - அறிவு மயக்கம் உடையார்களது மயக்கத்தைப் போக்கித் தெளிவு ஊட்டி, மல இருள்
மாற்றி - அவருடத்து உள்ள அஞ்ஞான இருளை நீக்கி, ஒளிர் தெருள் உடையாரா இருத்திடு நாவலன் - பிரகாசிக்கின்ற அறிவுடையராகத் திகழச் செய்திடும் நாவலர் பிரானது, சீர் நலையில் - சிறப்புடைய நல்லைப் பதியில், அருளுடையார்க்கு மடல் முடியா - அருளுடைய நெஞ்சினர்க்கு மடல் புனைதல் சாலாது, இருள் உடைப் பெண்ணையில் - கருமை நிறம் பொருந்திய பனைமரத்தில், ஏய்ந்திடு பார்ப்பினம் - வாழ்கின்ற பறவைக் குஞ்சுகள் ( அன்றில் ஆதியாம் பறவையினம்), கலையா அழியும் -
இருத்தல் கலைந்து அழிந்து போகும், எண்ணுதி - இதனை எண்ணிப் ksfsfÜLJffu Jffè
(கு.உ):- ஆணவமலம் காரணமாகத் தோன்றும் அஞ்ஞானமாகிய இருள் பார்ப்பு - குஞ்சு, கலையா - கலைந்து என்னும் பொருட்டு.

Page 60
98
கொண்டு நிலை கூறல்
( தலைவன் உயிர் தாங்கி நிற்கும் நிலையாகிய மொழியைப் பாங்கி
கூறுதல்)
132. தமிழ்வடி வோவுயர் சைவ வடிவோ தனிமறையோ
வமிழ்தின் வடிவோ விவனெனு நாவல னாறுமுக னிமிழ்தெண் டிரைநல்லை யென்பெண்ணைக்
குன்குறை யான்சொலுவ னமிழ்தேய் செம்பெண்மறுத் தாற்கரும் பெண்ணை யணை
குதியே
பதவுரை:- இவன் - "இப் பெருமகனின் தோற்றம், தமிழ் வடிவோ - தமிழ் ஒரு வடிவு எடுத்தாற் போன்ற தோற்றமோ, உயர் சைவ வடிவோ - உயர்ச்சி மிக்க சைவத்தின் வடிவோ, தனிமறையோ - ஒப்பின்மையான வேதத்தின் சொரூபமோ, அமிழ்தின் வடிவோ - தேவாமிர்தத்தின் வடிவமோ, எனும் ஆறுமுகநாவலன் - என்று கூறத்தக்க ஆறுமுகநாவலரது, இமிழ் தெண் திரை நல்லை என் பெண் ஐக்கு - ஒலிக்கின்ற தெள்ளிய திரை போலும் புகழ் படைத்த நல்லை என்று சொல்லத்தகும் எனது தெய்வம் போல்பவராகிய தலைவிக்கு, யான் உன் குறை சொல்லுவன் - நான் உனது குறையை எடுத்துச் சொல்வேன், அமிழ் தேய் செம் பெண் மறுத்தால் - அமுதத்தை ஒக்கும் செவ்விய தலைவி உனது வேண்டுகோளுக்கு இசைய மறுத்தால், கரும் பெண்ணை அணைகுதி - கருமை நிறம் படைத்த பனைமரத்தை - மடலூர்தலைச் சாருவாய்.
(கு.உ):- நாவலர்பிரான் தமிழ், சைவம் ஆகிய இரண்டினையும் தமது கண்களாகப் போற்றி அவற்றுக்கே சேவை செய்து வாழ்ந்தாராதலின் தமிழின் வடிவமோ சைவத்தின் வடிவமோ எனவும் வேத ஒழுக்க இயலில் சிறிதளவும் பிறழாது வாழ்ந்தவர் ஆதலின் மறைவடிவோ எனவும் பேச்சும் எழுத்தும் இனிமை கனியக் கையாண்ட வல்லாளர் ஆதலின் அமிழ்தின் வடிவோ எனவும் சிறப்பித்தார்.
புகழின் தூய்மையும் செறிவுப் பரப்பும் நோக்கித் திரையினை உவமித்தார், ஏகாரம் - வியப்பு செம்பெண் மறுத்தால் கரும்பெண்ணை அணைகுதி எனப் பிறிதொரு பொருள் தோன்றும் நயமும் உணர்க.

99
தலைவி இளமைத்தன்மை பாங்கி இறைவற் குணர்தல்
(பருவமுறாதவளாய் இருக்கின்ற தலைவியின் இளமைத் தன்மை இவ்வாறு என உரைத்தல்)
133. இலையர முந்தெறு வேலிணை கள்ளம் தேய்திலழின்
முலையர சாட்சி அமுதுறு முத்த முறுவலென்னு
முலையர நாடுறு பூக முரணில முத்திதர விலையர னன்றி யெவருமெ னாவல னின்னலைக்கே.
பதவுரை: முத்தி தர - பேரின்ப வீட்டை வழங்குவதற்கு, அரன் அன்றி எவரும் இலை என் - சிவபெருமானே அன்றி வேறு எவரும் ஆற்றலுடையார் அல்லர் என்னும் கொள்கையினை உடைய, நாவலனின் நலைக்கு - நாவலர்பிரானது நல்லைப்பதியில், இலை அரமும் தெறு வேல் இணை - இலையையும் அரத்தினால் கூர்மை செய்யப்பட்ட வேலையும் வென்ற கண்கள் இரண்டும், கள்ளமது ஏய்ந்தில - ஆடவரை மயக்குவதாகிய பண்பினை இன்னும் பொருந்தவில்லை, மின் அமுது உறு முலை அரசாட்சி பூக முரண் இல - ஒளி பொருந்திய அமுதம் பொதிந்த நகிலாகிய அரசாட்சி பாக்கை மாறுபட்டில, நாடுறு முத்த முறுவல் என்னும் மு(ல்)லை அரம் முரண் இல - விரும்பப்படுகின்ற முத்தம் போல் ஒளி விடும் பற்கள் முல்லைத் தொகுதியோடு மாறுபட்டில.
(கு.உ);- பூகம் - கமுகு, ஈண்டு அதன் காயைக் குறித்தது, நகில்கள்
பாக்கை மாறுபட்டில என்பது, அவை பாக்களவு இல்லை :ன்றபடி, தோன்றியும் தோன்றாத நிலையை உரைத்தவாறு, பற்கள் முல்லையை முரணில என்பதற்கும் அவ்வாறே கொள்க. முல்லை ஆரம் - ஒல்லைக்
கூட்டம். ஆரம் அரமென விகாரமுற்றது. முறுவல் - நகை ஈண்டு (Pறுவல் தோன்றற்கிடமான பல்லை முறுவல் என்றது தானியாகு பெயர்.
தலைவன் தலைவி வருந்திய வண்ணமுரைத்தல்
(தலைவன், தலைவி தன்னை வருத்திய தன்மையைப் பாங்கிக்கு, உரைத்தல்)
134 அரியின் குருளை களிற்றினைப் பாய்தலு மாமிளன்
றெரியின் புனலிடை நீந்தலுந் தேற்றினர்த் தேறி:ையோ வரியின் கணியகம் யான்பட்ட துண்டே யறுமுகவன் புரியின் சரவண முத்த னிடம்பயின் றான்புரிக்கே.

Page 61
100
பதவுரை: பாங்கியே, அரியின் குருளை களிற்றினை பாய்தலுமாம் - சிங்கத்தின் குட்டி (வயதில் வெகு இளையதாயினும்) ஆண் யானையின் மீது பாய்ந்து தாக்குதல் உண்டே, தெரியின் - பார்க்குமிடத்து, இளமீன் புனலிடை நீந்தலும் - மீன் குஞ்சு தானாகவே நீரில் நீந்தலும் (இயல்புகளை) தேற்றினர் தேறிலையோ - தெளிந்த அறிவுடையார் பால் தெரிந்து கொண்டது இல்லையோ, அறுமுகவன் புரியில் - அறுமுகப் பெருமான் எழுந்தருளி உள்ள ஊரில், சரவணமுத்தனிடம் பயின்றான் புரிக்கு - சரவணமுத்துப் புலவரிடம் பாடங் கேட்டவராகிய நாவலர் பிரானது நல்லைப்பதியின் கண், அரியின் க(ண்)ணி அகம் யான் பட்டது உண்டே- செவ்வரி படர்ந்த இனிய கண்ணாகிய வலையிடத்து நான் அகப்பட்டதும் அவ்வாறேயாம்.
(கு. உ); அரி - செவ்வரி, கணி - கண்ணி - வலை. கணி - விகாரம், நுமது தலைவி தனது கண்ணாகிய வலையில் என்னை விழச் செய்த குணம், கற்றுக் கொடாமலே சிங்கக் குட்டிக்கு யானை மீது பாய்தலும் மீன் குஞ்சுக்கு நீந்தும் திறனுமாகிய பண்புகள் வாயத்தது போல இயல்பாய் அமைந்தது என்பது தலைவன் கருத்து.
அளைதா ழரவும் அரியும்வெந் தியும் அரசும் எங்கன் இளைதாயினும் கொல்லும் என்பது நிவந் திருவிசும்பின் கிளைதாழ் குழல் வஞ்சி கேட்டிலைபோ யிளங்கிள்ளை யின்சொல் முளைவாழ் நகைப் பெண் அரசல்லவோ இந்த மொய்குழலே
- அம்பிகாபதிக்கோவை
பாங்கி தலைவியின் செவ்வியருமை செப்பல்
(பாங்கி தலைவியைப் பார்த்தற்குரிய காலம் பெறுதற்கு அரிதெனத் தலைவற்குச் சாற்றல்)
135. ஆடா ளரசு கழலுடன் பாண்டி லரிய சிற்றி
னாடா ளருஞ்சுனை நாநலத் தாற்கலர் நன்றுறமீ வீடா ளருநா வலனல்லை யேயனை மெல்லியலா ணிடாள் வினையுடை யாயெங்ங் னாடி நிகழ்த்துவனே.
பதவுரை:- நீடு ஆள்வினை உடையாய் - நெடிய செயல்திறன் படைத்த தலைவனே; நா நலத்தால் - தமது நா வன்மையினால்; கலர் நன்றுஉற - தீயவழிப் படர்வோரையும் மேலோராகும் வண்ணம் மாற்றி; மீ வீடு ஆள அருள் - மேலான வீட்டினைப் பொருந்தி ஆளும்படி அருளவல்ல; நாவலன் நல்லை ஏ - நாவலர் பிரானது நல்லைப் பதியினை ஒத்த (சிறப்புடைய) அ(ன்)னை - தாய் போல்வாளும், மெல்லியலாள் - மென்மைத் தன்மை வாய்ந்தவளும் ஆகிய,

101
அரசு - (நமது) பெண்அரசு (தலைவி), கழலுடன் பாண்டில் ஆடாள் - கழங்கு, பாண்டில் ஆகிய விளையாட்டுக்களில் ஈடுபடாள், அரிய சிற்றில் அரும் சுனை நாடாள் - அருமையான சிறு வீடு அமைத்தல் அரிய சுனை படிதல் ஆகியவற்றினையும் கருதாள், எங்ங்ண் நாடி நிகழ்த்துவன் - நான் எவ்வாறு செவ்வி பெற்று உன் குறையை அவளுக்கு உணர்த்த வல்லேன். (வல்லேன் அல்லன்),
தலைவன் தலைவி செல்வி யெளிமை செப்பல்
(தலைவன் தலைவியைப் பார்த்தற்குரிய காலத்தின் எளிமையைப் பாங்கிக்குச் சாற்றுதல்)
136. குட்டிப் பிரமனை முற்சிறை கூட்டிய கோனடிநெஞ்
சட்டிப் பணிநா வலனல்லைச் சார்ந்தமை சாற்றினையேற் சட்டிப் பிறைநுதல் கண்பனி தூற்றத் துணை மருப்பெ னெட்டிப் பிடிப்ப வெனக்கிளர் வுற்றெழுந் தேர் கொளுமே,
(பதவுரை):- முன் பிரமனை குட்டி - முன்னொரு கால் பிரமதேவனைச் சிரசில் குட்டி, சிறை கூட்டிய - சிறையில் இட்ட, கோன் அடி - தலைவராகிய முருகப்பெருமானது திருவடிகளை, நெஞ்சு அட்டி பணி - நெஞ்சில் சேர்த்து வணங்கும், நாவலன் நல்லை சார்ந்தமை சாற்றினையேல் - நாவலர் பிரானது நல்லைப்பதியைச் சார்ந்தவன் என்ற செய்தியைக் கூறுவாயெனில், சுட்டி பிறை நுதல் - சுட்டி என்னும் ஆபரணம் பூண்ட பிறை போன்ற நெற்றியை உடைய தலைவி, கண்பனி தூற்ற - (மகிழ்ச்சியால்) கண்கள் நீர் துளிப்ப, துணை மருப்பு - (யானையின்) இரு மருப்புகள் போலும் நகில்களைக் கொண்டு , எட்டிப் பிடிப்ப என - (என்னை) தாவிப் பிடிப்பது போல, கிளர்வுற்று எழுந்து - ஆர்வம் மிக்கு எழுந்து, ஏர் கொளும் - எதிர் கொள்வான்.
(கு.உ):- பிரமனைக் குட்டிச் சிறையிட்டமை - பிரணவத்தின் பொருள் கூற அறியாது மயங்கி நின்ற பிரமனை முருகப்பெருமான் தலையிற் குட்டிச் சிறை இட்டான் என்பது புராணவரலாறு. இதன் விரிவைக் கந்த புராணத்தில் காண்க.

Page 62
02
பாங்கி என்னை மறைத்த பின் எளிதென நகுதல்
(தலைவன் இவ்வாறு கூறக்கேட்ட பாங்கி, நீவிர் இருவீரும் என்னை மறைத்த பின் இக் களவொழுக்கம் மிக எளிதாமென நகை செய்து தலைவனிடம் கூறுதல்)
137. பூவை யிடங்கொளுந் தாது மிருந்தும் பொறியளிக
ணாவை யிடங்கொளுங் கள்ளாற் புணர்ச்சி நடத்திலவேற் காவை யிடங்கொளுங் காய்களுண் டோநல்லை நாவலவன் பூவை யிடங்கொளும் பூவை எனைமறைத் தாலுறுமே.
(பதவுரை):- பூவை "இடம் கொளும் தாதும் இருந்தும் - பூவை இடமாகக் கொள்ளும் தாதும் இருப்பதாயினும், பொறி அளிகள் - புள்ளி உள்ள: வண்டுகள், நாவை இடம் கொளும் கள்ளால் புணர்ச்சி நடத்திலவேல் நாவிற்கு இதம் ஊட்டும் தேனோடு கலவி நடத்தாது ஒழியின், காவை இடம் கொளும் காய்கள் உண்டோ - சோல்ை இடமாகக் கொள்ளும் காய்கள் தோன்றுவதற்கு அடைவுண்டோ, நல்லை நாவலவன் பூவை இடம் கொளும் பூவை - நல்லையம்பதி நாவலனாரது நிலத்தை இடமாகக் கொண்டு விளங்கும் நாகணவாய் போலும் தலைவி, எனை மறைத்தால் உறும் - என்னைத் தவிர்த்து நீர் செய்யும் முயற்சியால் சேர்வதற்கு அடைவு உண்டாகுமோ, ஓ - எதிர்மறை,
அந்நகை பொறாதவன் புலம்பல்
(பாங்கி நகைத்து உரைத்த அதனைத் தலைவன் பொறாது கூறல்)
138. தேர்கரி யேவிற் கொலைபுரி சிங்கஞ் சிலைமதவே
ளார்துணை யாகவொர் பெண்மா னெனையட லாவறிந்து நீர்பரி காசம் புரித றிருவே நிலைத்தமிழோ தார்பரி நாவல னல்லூ ருனக்குத் தகுவதுவே.
பதவுரை:- திருவே - இலக்குமி போன்ற பாங்கியே, தேர் கரி வில் கொலை புரி சிங்கம் - தேர், யானை, வில், கொலைத் தொழில் புரிகின்ற சிங்கம் ஆகியவற்றையும், சிலை மத வேளார் துணையாக - கருப்பு வில்லை உடைய மன்மத வேளையும் துணையாகக் கொண்டு, ஓர் பெண்மான் எனை அடலா (வது) அறிந்தும் - ஒரு பெண்மான் என்னுடன்

103
போர் செய்ய முற்படுதலாகிய கருமத்தைத் தெரிந்திருந்தும், நீ பரிகாசம் புரிதல் - நீ (என்னை) ஏளனம் செய்தலாகிய செயல், உனக்கு - நீ சம்பந்தப் பட்ட மட்டில், நிலை தமிழ் ஒதார் - நிலைபேறுடையதாகிய தமிழை ஓதி உணராதவர்களை, நாவலன் நல்லூர் பரி(த்தல்) தகுவது - நாவலர் பெருமானது நல்லூர் தாங்கி இருக்கும் செயலுக்குத் தகுவதாகும்.
(கு.உ):- நாவலர் பிரானாகிய தெய்வீக அறிஞர் தோற்றுதற்கு இடமான நல்லூர்ப் பதியானது அவர் இருப்பவும் அவரைச் சார்ந்து தமிழை ஓதி உணராத மக்களைத் தன் அகத்தே கொண்டு விளங்குவது அதற்கு இழுக்காகும். அவ்வாறே தலைவியின் உயிர்த் தோழியாக இருந்தும் அவளைத் தம்மோடு கூட்டி வைக்க முனையாது நகையாடும் நின் செயல் தோழி மகிமைக்கு இழுக்காகும் என்றவாறு.
தேர், கரி, வில், சிங்கம் என்பன முறையே தலைவியின் நிதம்பம், நகில், புருவம், இடை' என்பனவற்றை உணர்த்தி நின்றனவாதலின் உவமையாகு பெயர்கள். வலிமிக்க தேர், யானை, சிங்கம் இவற்றைத் துணையாகக் கொண்டு (மென்மைத் தன்மை வாய்ந்த) ஒரு பெண் தன்னை அடர்க்க முனைந்தது என்ற தலைவன் கூற்றில் உள்ள முரண்பாட்டுச் சுவை நயம் கருதத்தகும்.
பாங்கி தலைவனைத் தேற்றல்
(இவ்வாறு கூறிய தலைவனுக்கு இரங்கிய பாங்கி இதஞ் சொல்லித் தலைவனைத் தேற்றல்)
139. வாசுகி யென்பா ளெனநீ மனது மகிழணைப்பன்
வீசுகி ராதர்தம் வேனெடுங் கண்ணியை மேவயன்கந் தேசுகி ரானழி தேவணடி பணி செம்மனத்தா னாசுகி மாதரை யுற்றா னுறான்லை யாண்டகையே.
பதவுரை: ஆண்தகையே - பெருமையிற் சிறந்த தலைவ, மேவு அயன் - பொருந்திய பிரமதேவரது, கம் தேசு உகிரால் அழி - சிரசினைத் தமது ஒளி பொருந்திய நகத்தால் கிள்ளி இல்லாது செய்த, தே வண் அடி பணி - சிவபெருமானின் வளவிய பாதங்களைப் பணிந்து வணங்குகின்ற, செம்மனத்தான் - செவ்விய உள்ளம் படைத்தவரும், சுகி மாதரை உற்றான் - பேரின்ப அனுபவத்துக்குரிய பெரிதாகிய மோட்ச நிலையினைப் பொருந்தும் நிலையினரும், மாதரை உறான் - பெண்கள் சுகத்தைச் சாராதவரும் ஆகிய நாவலர் பிரானது, நல்லை - நல்லைப் பதியிலே, வாசுகி என்பாள் என - வாசுகி என்னும் நங்கையைப் போல, வீசு

Page 63
104
கிராதர் தம் வேல் நெடுங் கண்ணியை - புகழ் வீசுகின்ற குறவர் மகளாகிய வேல் போலும் நீண்ட கண்களை உடைய தலைவியை, நீ மனது மகிழ - உனது உள்ளம் மகிழும் வண்ணம், அணைப்பன் -
நின்னுடன் சேர வைப்பேன்.
(கு.உ): வாசுகி - வள்ளுவரின் மனைவி; கற்பு நிலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகப் பேசப்படுபவள். (புகழ்) வீசு என ஒரு சொல் வருவித்து உரைக்க, புகழ் விசு என்பதனை வேல் நெடுங்கண்ணியுடன் இணைக்க. அயன் கந்தேசுகிரானழி என்பது அயன் கம் தேசு உகிரான் அழி எனப் பதஞ் சேதம் செய்தற்பாற்று. கம் - சிரசு; தேசு - ஒளி; உகிர் - நகம்; மாதரை என்பது பிரிமொழிச் சிலேடை வகையால் உற்றார், உறார் இரண்டோடும் இயைந்து பொருள் பட நின்றது. மா தரை - பெரிய இடம், பேரின்ப வீடு. மாதர் + ஐ - மகளிரை உற்றார் என இறந்த காலத்தில் கூறினாரேனும் உற நின்றவர் - பொருந்த உள்ளவர் எனக் கொள்க.
பாங்கி கையுறை ஏற்றல்
(தலைவன் கொணர்ந்த தழை முதலிய கையுறையினைப் பாங்கி ஏற்றல்)
140. மானின்ற மான்வயின் மான்வரல் கேணல்லை மானிடத்தார் கோனின்ற கோனெனக் கொள்ளளி நாவலன் குன்றிறைவா தேனின்ற சொல்லி சிறந்தணி சேர்ந்து திகழுவளேற் கானின்ற வாரங் குழைகள் கடிந்திடல் காண்தகுமே.
பதவுரை: மான் ஈன்ற மான் வயின் - மானின் வயிற்றில் உதித்த மான் போலும் மருண்ட பார்வையினை உடைய வள்ளிப் பிராட்டியின் பால், மான் வரல் கேள் - மான் வந்ததா என மான் கெடுதி வினாவிக் கொண்டு அணைந்தவனும், நல்லை மான் இடத்தார் - நல்லைப் பதியில் மான்மறியைத் திருக்கரத்தில் தாங்கிய, கோன் ஈன்ற கோன் எனக் கொள் - இறைவர் பெற்றருளிய மகனுமான முருகப்பிரான் எனக் கொள்ளத்தகும், அளி நாவலன் - கருணை மிக்க நாவலர் பிரானது, குன்று இறைவா - குன்றில் வாழும் தலைவனே, தேன் ஈன்ற சொல்லி - தேன் பெற்ற சொல்லினை உடையவளாகிய தலைவி, சிறந்த அணி சேர்ந்து திகழுவளேல் - சிறந்த ஆபரணத்தைக் கொண்டு விளங்குவாள் எனில், கான் ஈன்ற ஆரம் குழைகள் (அவள் தற்போது அணிந்து உள்ள) வாசம்
பொருந்திய சந்தனமும் பிறவுமாகிய தழைகளை, கடிந்திடல் காண்தகும் - தோற்றச் செய்தலைக் காணலாகும்.

105
(கு.உ): மானின்ற மான் - வள்ளிப் பிராட்டி, இரண்டாவது மான் உவமை ஆகுபெயர். கான் - வாசனை; ஆரம் - சந்தனம்; குழை - பிற தழைகள்; சந்தன முதலாந் தழைகள் தலைவியின்ால் அணியப் பெறுதற்காகத் தலைவனால் கொடுக்கப்படுவன.
நீரை யணியுந் திருச்சடை யார்வெங்கை நித்தர்வெற்பில் தாரை யணியு மதன்தேர்கண் டம்மை தழைத்தது காண் வாரை யணியு முகிழ்முலையா யணி வாய்த்தவல்குல் தேரை யணியுந் தகுதிய தாமிந்தச் செந்தழையே.
(திருவெங்கைக் கோவை)
கானின்ற குழையெனக் கொண்டு வாசனை பொருந்திய சந்தனம் முதலிய தழைகள் எனவும் ஆரம், முத்து எனவும் இரட்டுறமொழிக.
கிழவோனாற்றல்
(பாங்கியின் சொற் கேட்டுத் தலைவன் மனம் தேறி இருத்தல்)
141. குன்றாக் குடியி ரெனலோர்ந்து சீசாக்கள் கொண்டிவனா
நின்றாக் கடிந்திட நின்றன மென்றவ னல்லையிலே ஒன்றாக் கடிநுனை யைந்தலை வேளர வுற்றவிட மின்றாக் கிடக்குழை கொண்டசைத் தாரிவ ரென்றவமே,
பதவுரை:- சிசா கள் கொண்டு குன்றா குடியிர் எனல் ஒர்ந்து - போத்தல் கணக்கில் கள் வாங்கிக் குடிக்கும் குறைவற்ற குடிப்பழக்கம் உடையீர் நீர் என உசாவி அறிந்து, இவண் நாம் நின்றா கடிந்திட நின்றனம் - இவ்விடத்தில் நாமா நும் கடிதலுக்கு இடமாயினம், என்றவன் நல்லையிலே - என்று (தம்மை இகழ்ந்தாரைப் பரிகசித்து வசைக்கவி ஒலை போக்கிய) நாவலர் பிரானது நல்லையின் கண், வேள் - மன்மதன் என்னும், ஒன்றா கடி நுணை ஐந்தலை அரவு உற்ற விடம் - ஏக காலத்தில் தீண்டும் முனை உள்ள ஐந்தலை நாகத்தினால் உற்ற விடம், இன்றாக்கிட - இல்லாது ஒழியும்டி செய்ய, குழை கொண்டு அசைத்தார் இவர் - குழை அடித்துப் பார்வை பார்த்துள்ளனர் இந் நங்கையர், என்தவமே - என் தவப்பேறு இருந்தவாறு என்.
(கு.உ):- முதலீரடிப் பொருள் ஐயங்கி பொன்னன் குலமல்ல நாங்கள் என்பதற்கே என நாவலர் தருமப்பொருள் ஏற்று உண்டவராகத் தம்மை

Page 64
O6
இகழ்ந்தார் குலக் கேட்டை எனக் குறிப்பிட்டு எழுதியதாக உள்ள செய்தியை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகத் தோன்றுகிறது, இதன் யதார்த்தமும் சொற் பொருள் இயைபுப் பொருத்தமும் ஆய்ந்து உணரத்தகும். இவண் - இங்கு பேசுபவர் தம்மைச் சுட்டி இங்கு அல்லது இவ்விடம் எனக் குறிப்பிடுவது சான்றோர் வழக்கு, அவர் தம்மிலும் உயர்ந்தாரைக் குறிப்பிட அங்கு, அவ்விடம் என்று வழங்கலும் அறியத்தரும்.
மன்மதனை ஐந்தலைநாகம் என்பதும் அவன் தாக்கம் ஐந்து தலைகளாலும் ஒருங்கே தீண்டியதை ஒக்கும் என்பதும் அபூர்வ கற்பனையாம், தழையேற்ற விஷமாகக் குழை அடித்து விடம் அகற்றும் வழக்கை இலக்கிய மயப்படுத்தியதும் அன்னதே.
பாங்கி இறைவிக் கவன் குறையுணர்த்தல்
(பாங்கி தலைவிக்கு அவன் குறையை எடுத்துக் கூறுதல்)
142. வீப்பிசை வீப்பொலி காவுறை நல்லையன் மேவுதுயர்
காப்பிசை கல்வி சரவண முத்தன் கனிந்தளிக்க நீப்பிசை யாதுக னாவல னேர்ந்திடு (நீடுறைவர்)
நீள்கலைஞர் தாப்பிசை காட்டுவ ரில்லவர் போற்செல்வர் சார்வகமே.
பதவுரை: வீ இசை - வண்டின் இசையும், வீ பொலி - மலர்களும் பொலிந்து விளங்குகின்ற, கா. உறை - சோலையில் திகழும், நல்லையன் - நல்லையில் ஐயர், மேவு துயர் காப்பு இசை கல்வி - பொருந்துகின்ற துன்பத்திலிருந்து காத்தல் இசைந்த கல்வியினை, சரவணமுத்தன் கனிந்து அளிக்க - சரவணமுத்தன் மனக்களிப்புடன் அளிக்க, நீப்பு இசையாது கல் - தவறு (அல்லது இடையீடு) பொருந்துதலின்றிக் கற்ற, நாவலன் நேர்ந்திடு - நாவலர் பிரானைச் சார்ந்துறும், நீள் கலைஞர் - நீளும் கலைகளில் வல்ல தலைவர், தாப்பிசை இல்லவர் போல் செல்வர் - தாப்பிசைப் பொருளும் இல்லாதவர் போற் செல்வர், சார்வு அகம் காட்டுவர் - மனச்செலவும் காட்டுவர்.
(கு.உ):- சார்வகம் - சார்வு அகம்; தாப்பிசை - நடுவில் நிற்கும் சொல் முன்னாவது பின்னாவது சென்று இயைந்து பொருள் தரும் பொருள்கோளி, 'உண்ணாமையுள்ள துயிர்நிலை' என்னும் குறளில் நடுவில் வரும் "ஊன்’ என்ற சொல் ஊனுண்ணாமை என முன்னுறச் சென்று இயைந்தது போல.

Q7
இறைவி அறியாள் போன்று குறியாள் கூறல்
(பாங்கி இவ்வாறு கூறக் கேட்ட தலைவி ஒன்றும் அறியாதவள் போன்று மனத்திற் கருதாத வேறொன்றைக் கருதிக் கூறல்)
143 இறான்மிசை நால மதுவா ரிருந்துடுப் பீன்செங்காந்தள்
கறான்மிசை நஞ்சன் றிருவடி கண்ணிடு கற்றவரை வெறான்மிசை யார்பத மும்வெறு நாவலன்மே நலையி லறான் மிசை திங்களிற் பாய்செவ் வராவென லாமழகே.
பதவுரை: கறான் மிசை நஞ்சன் (நஞ்சு கறான் ஆய் மிசைந்தவன்) ஆல கால விடத்தினை வெறுப்புக் கொள்ளாது மிசைந்தவராகிய சிவபிரானது, திருவடி கண்ணிடு கற்றவரை - சீர்ப்பாதங்களைக் கண்ணில் ஒற்றி வணங்கும் கற்று அறிந்த கேண்மையோரை, வெறான் வெறாதவரும் (விரும்புகின்றவரும்) மிசையார் பதமும் வெறு - மேலுலகிலுள்ள இமையோர் பதவியை வெறுப்பவரும் ஆகிய, நாவலன் மே நலையில் - நாவலர்பிரான் மேவுகின்ற நல்லைப் பதியின் கண், இறால் மிசை நால - தேன் கூடு மேலே தொங்க, மது வார் இரும் துடுப்பு ஈன் செங்காந்தள் - தேன் மருவும் பெரிய முகையை ஈனுகின்ற செங்காந்தள், அல்தான் மிசை திங்களில் பாய் - இருளை விழுங்குகின்ற சந்திரனில் தாவும், செவ் அரா எனலாம் - செம்டாமபு எனத்தகும். அழகே -- அழகினதாம்.
(கு.உ): தேன் கூட்டின் கீழ் எழுந்துயர் காந்தள் முகை உவமேயம், திங்களிற் பாய் செம்பாம்பு உவமானம், மதி அதன் கூட்டுக்கும் செம்பாம்பு காந்தள் முகைக்கும் வடிவுவமை, அறான் - அல்தான் - அற்றான் என்பதன் விகாரம். அல் - இருள்.

Page 65
108
பாங்கி இறையோற் கண்டமை பகர்தல்
(தலைவி பொருட்டு வந்த தலைவனைத் தான்கண்டமை பற்றிப் பாங்கி தலைவிக்குக் கூறுதல்)
144. மானுங் களிறுமெய் தேனவை வந்தமை வாய்திறவீர்
தேனுங் கனிமொழி யிரெனச் செந்தமிழ்ப் பேழையரி தானும் வணங்கு மலரடி சார்நா வலனலையுன் மானுங் களிறு மிலக்கென வந்தவற் கண்டனனே.
(பதவுரை):- செந்தமிழ்ப் பேழை - செந்தமிழ்ப் பொக்கிஷமும்; அரிதானும் வணங்கு மலரடி சார் - திருமாலும் போற்றும் (சிவபிரானது) மலர்போலும் பூாதங்களைச் சாரும் தவத்தினருமாகிய, நாவலன் நல்லை - நாவலர் பிரானது நல்லைப் பதியின் கண்ணே, தேனுங் கனியு மொழியீர் - தேனும் இரங்கும் இனிமை வாய்ந்த சொற்களைப் பேசும் நங்கையரே; மானும் களிறும் எய்தேன் - மானும் யானையுமாகிய விலங்குகள் மீது கணை செலுத்தினேன் அவை வந்தமை வாய்திறவிர் - அவ் விலங்குகள் இப்பக்கமாக வந்ததுண்டோ, அதனை வாய் திறந்து சொல்லுங்கள்; என - என்று வினாவியவாறு; உன் மானுங் களிறும் இலக்கென - நுமது மான் போன்ற விழியினையும், யானையின் மத்தக மொத்த தனத்தின் சேர்க்கையினையும் குறிக்கோளாகக் கொண்டு; வந்தவன் கண்டனனே - முன்பு நாடி வந்தவரை இன்று கண்டேன்.
குறிப்புரை:- தேனுங் கனியுமொழி என்பதற்கு தேனையும் தொண்டைக் கனியையும் ஒத்த மொழியீர் எனக்கொள்ளலுமாம் அங்ங்ணங் கொள்ளுமிடத்து ஒத்த என ஒரு சொல் வருவித்துரைக்க.
பாங்கியைத் தலைவிமறைத்தல்
(தலைவி பாங்கிக்கு உண்மையைக் கூறாது தன் களவொழுக்கத்தை மறைத்தல்)
145. சொற்பனிக் காலங்கொடி தெனல் வேளையிற் சோர்விலனா
விற்பனிக் காலநன் றென்றா னெழினல்லை யிவ்வகைநீ மற்பனிக் காலமெவர்க்கு மருவிட வைப்பவற்கண் டற்பனிக் காலக் குழல்விழி யாய் சொலழகிதன்றே.

109
(பதவுரை):- அல்பனிக் காலக் குழல் வழியாய் (அல்பனிக்கும் குழலாய், ஆலம் பனிக்கும் விழியாய்) இருட் கூட்டமானது தோற்று இரங்கிப் பின்னிடும் கூந்தலையும், ஆலகாலம் இரங்கிப் பின்னிடும் கண்களையுமுடைய தலைவியே; சொற் பனிக் காலம் கொடிதென - சொல்லத்தகும் பனிக்காலம் மிகக் கொடியது எனக் (கவிஞர்) கூற; அவ்வேளையில் -, அந்நேரத்தில், சோர்விலனா(ய்) நாவிற் சோர்வில்லாதவராகி; இல் பனிக்காலம் நன்றென்றான் (பனிக்கு ஆலம் நன்றென்றான்) - பனியை நோக்க ஆலகால விடம் நன்று என்றவராகிய நாவலர் பிரானது, எழில் நல்லையில் - அழகு வாய்ந்த நல்லைப் பதியில்; மல் பனிக்காலம் எவர்க்கும் மருவிட வைப்பவன் கண்டு - எவர்க்கும் மற்போரில் நடுங்கும் காலத்தைப் பொருந்த வைப்பவனைக் கண்டும் காணாதே; இவ்வகை நீ சொல் அழகிதன்றே - இவ்வாறு நீ சொல்வது அழகிதன்று.
(கு.உ):- பனிக்காலங் கொடிதென்று கூறியவர் திருவாவடுதுறை ஆதீனத் தமிழ்ப்புலவர் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள், மற்பனிக் . வைப்பவன் - மல்லில் எவர்க்கும் நடுங்கும் காலம் பொருந்த வைப்பவன் என்பதினால் தலைவனின் ஆடுஉத்தகைமையும் போர்த்திறனும் சுட்டியவாறு; பனிக்கும் ஆலம் எனற்பாலது மகரம் கெட்டுப் பனிக்காலம் என்றாயிற்று. முதலிரடிப் பொருளைப் பின்வரும் அதனோடு ஒப்பிட்டு நோக்கல் தகும்.
சார்ந்த பனிக் காலங் கொடிதென் மகாகவிஞர்
கண்முன் விண்மின் விளாசுதல் போற் கவையார் சிலேடைச் சுவையாரக்
கடுகு மிந்தக் கொடுகு பனிக் காலம் நன்றென் றருள் வாயால்
அரசே முத்தந் தருகவே.
- நாவலர் பிள்ளைத்தமிழ்
பாங்கி என்னை மறைப்பதென்னெனத் தழாஅல்
(இவ்வாறு மறைத்துக்கூறிய தலைவியைப் பாங்கி நோக்கி உனக்கு நான் வேறாவேனே என்று மகிழ்வாய்த் தழுவிக்கொள்ளல், தழாஅல் - தழுவுதல்)
146. உள்ளி மறைக்கும் விரைகளுண் டோவுத்த மோத்தமனென்
றள்ளி மறைக்கரி யானிற் புகழ்நல்லை நாவலனை யெள்ளி மறைக்கு மெவருள ரோவெனை யென்னுயிரே தள்ளி மறைக்குந் தகையென்ன சாற்று தகுமுனக்கே.

Page 66
பதவுரை: உள்ளி மறைக்கும் விரைகள் உண்டோ - உள்ளி மணத்தை மறைக்கக் கூடும் வேறு மணங்கள் உளவாமோ, உத்தமோத்தமன் என்று
அள்ளி மறை கரியானில் புகழ் நல்லை நாவலனை - உத்தமோத்தமன் ଶର୍ଦg மிகுதியாக அரிய வேதம் உணர்ந்தோனும் புகழும் நாவலர் பிரானை, எள்ளி மறைக்கும் எவர் உளரோ அவமதித்து அவர்
மகிமையை மறைக்கும் ஈடுள்ளார் யாரெனினும் உ8:ரோ, என் உயிரே - என் உயிர் போலும் தலைவியே, எைை தள்ளி மறைக்கும் தகை என்ன - என்னை விலக்கி உன் உள்ளத்தை எனக்கு மறைக்கும் தன்மை என்ன, சாற்று - சொல்வாய், உனக்குத் தகு)ே - அது து. க்ைகுத் தகுவதாமா?
w .35 67.360601 ,66 -:{ س2هt: LL. ன்னுள் வாங்க இல்லகாகல் உள்ளியின்
g மகிமை 66i. திரும ខ្លាំថ្ងៃខែ பார்க்க,
பாங்கி கையுறை புகழ்தல்
(பாங்கி தலைவனது கையுறை ஏற்று அதனைப் புகழ்தல்)
147. ஆரந் திகழ்நுத னாவல னல்லூ ரமர்திருகம்
பாரந் தழையுறு மார நறிய வரியவத்தர் வாரந் தருமுக வாச மிவணில வந்தளித்தா ரீரங் கிரி!ன தீரங் கிரியுற வெண்ணினரே.
(பதவுரை). ஆரம் திகழ் நுதல் நாவலன் நல்லூர் அமர் திரு - திலகம் திகழும் நெற்றியை உடைய நாவலர் பிரானது நல்லூர்ப்பதியில் உறையும் இலக்குமி போல்வாளே, கம்பு ஆரம் - சங்கும் முத்தும், நறிய ஆரமுறு தழை - மணம் மிகுந்த சந்தனமாகும் தழை, அரிய அத்தர் கிடைத்தற்கு அரிய அத்தர், வாரம் தரு முகவாசம் - மலைச்சாரலில் பெற்ற தாம்பூல திரவியம் (ஆகிய), இவன் இல வந்து அளித்தார் - இவ்விடத்து இல்லாதனவற்றைக் கொண்டுவந்து அளித்துள்ளார், ஈர் அங்கு இரி உனது ஈர் அம் கிரி உற எண்ணினர் (செறிவால்) இரண்டாம் தன்மை நீங்கிய உமது குளிர்மையான அழகிய மலை போலும் இரு தனங்களிலும் அவை பொருந்த நினைந்தவராகின்றார்.
தோழி கிழவோன் றுயர்நிலை கிளத்தல்
(பாங்கி தலைவனது துயர் நிலையைத் தலைவிக்குக் கூறல்)
148. பாறு முகனு மறியா வடிதாழ் பரவுபுக
ழாறு முகநா வலனை யுறார்போ லணைத்துருகி யூறு முகச்சுகம் பேடை யுறவது கண்டுமின்னே நீறு முகமலை யாவெய் துயிர்ப்பரந் நீள்வெற்பரே.

பதவுரை:- மின்னே - மின்னல் நிகர்க்கும் இடை உடையாளே, பாறு முகனும் அறியா - கருட வாகனத்தை உடைய திருமாலும் தேடி அறிய முடியாத, அடி தாழ் - சிவபெருமானது பாதங்களை வணங்குபவரும், பரவு
புகழ் - பரம்பிய கீர்த்தியை உடையவருமான, ஆறுமுகநாவலனை உறார்போல் - ஆறுமுக நாவலரைச் சாராதவர்கள் போல (கவன்று) சுகம் பேடை அணைத்து உருகி - கிளி ஒன்று தன் பேடையை அணைத்து
உருகி, ஊறுமுகம் உறுவது கண்டு - பரிச இன்ப வசமாய் இருப்பது கண்டு நீள் வெற்பர் - நெடிது ஓங்கிய மலை கிழவோனாகிய தலைவர், நீறு முக மலையா வெய்துயிர்ப்பர் - நீறு பூத்த நெருப்பு மலை போல உட்கனன்று சூடு மூச்சு எறியா நிற்பர்.
(கு.உ);~ பாறு முகன் பருந்து தன் வரவுக்கு முகமாய் அமையக் கொண்டவன். அதாவது பருந்து முற்பட்டுத் தோன்ற வருபவன் என்றவாறு ஊறு - பரிசம்; ஊறு முகம் - பரிச இன்ப வசம் கிளி புலனாவதன் முன் அதன் பரிச இன்ப சுகமே முற்பட்டுத் தோன்றும் பாங்கு பற்றி ஊறு முகம் என்றது என்க.
தோழி தலைவனை மறுத்தற் கருமை மாட்டல்
(இவ்வாறு கூறிய சொற்களுக்கு விடையின்மையால் இனி அவர் வரின் என்னால் மறுத்தற்கரிதெனக் கூறாநிற்றல்)
149 முற்றுப் புளிமுதற் பல்குறி யீடு முகந்தளித்த
கற்றுப் புளிவே லவன்றாள் கருத்தமை நாவலனுா ருற்றுப் புளிவரு காவுயர் கையுறை யும்பல்வரி னெற்றுப் புளியுரை யெங்ங் னியம்ப விளம்பிடியே.
பதவுரை:- முற்று பு(ள்)ளி முதல் பல் குறியீடு முகந்து அளித்த முற்றுப் புள்ளி முதலாகச் சொல்லப்படும் பலவகைக் குறியீடுகளைத் தமிழ் வசன நடைக்குத் தெரிந்து வழங்கிய, கற்று புளி வேலவன் (கல் துப்பு உளி) - மலையின் உரத்தைப் பிளக்கும் உளியாகிய வேற் படையினைத் தாங்கிய முருகப் பிரானது, தாள் கருத்து அமை - பாதங்களை மனத்தில் இருத்தியுள்ள. நாவலன் ஊர் - நாவலர் பிரானது ஊரில், புள் உற்று இவரு(ம்) கா - பறவைகள் சேர்ந்து ஏறுகின்ற சோலையில், $2.uji கையுறை உம்பல் வரின் - உயர்வு பொருந்திய யானை போல்பவராகிய தலைவர் மீண்டும் வந்தால், எற்று புளி உரை - ஏமாற்றும் இயல்பினதாகிய புளிப்பான வார்த்தையை, எங்ங்ண் இயம்பல் - எவ்வாறு கூறுவேன், விளம்பு - சொல்வாய்.

Page 67
12
(கு.உ.): வசனநடை கைவந்த 6,606)T6Tiff 66 போற்றப்படும் நாவலர்பிரான் வாக்கியங்களை இலகுவாகப் பொருள் உணர்ந்து பிரித்துப் படிக்கும் வகையைத் தமது வசனநடையில் முன்பு இல்லாத குறியீட்டினை அறிமுகம் செய்தவர் என்னும் சிறப்பினை 'முற்றுப்-தளித்த” எனும் தொடரினால் விதந்து ஒதப்பட்டது. முதலாம் அடியில் புளி, புள்ளியின் விகாரம். கிரெஞ்சமலையின் உரத்தைப் பிளந்த உளியாகிய வேல் (துப்பு - வலிமை, உரம்) என வேலின் மராக்கிரமம் உணர்த்தப்படலாயிற்று.
பாங்கி தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல்
(பாங்கி தலைவனது குறிப்பு நோக்குங்கால், நம் பக்கல் இரப்பவன் போல் தோன்றவில்லை. வேறு நினைப்பினனாகத் தோன்றுகின்றது என்று ஒழுங்கு பெறக் கூறல்)
150. நனையேறு கூந்த லவர்மன நாட்டமு நாடரிதே பனையேறு பித்த குளரிள நீரைப் பருகவெனா வினையேறு சும்மைக் கெதிருரு மால்வரை யேந்தனனாம் பனையேறு பித்தற் பணிநா வலனுார்ப் பகர்ந்தனரே,
பதவுரை:- நனை ஏறு கூந்தல் - மலர் அரும்பு பொருந்திய கூந்தலை உடைய தலைவியே, அவர் மன நாட்டமும் நாடு அரிது - தலைவரது உள்ளக்கிடக்கை இது என ஆராய்ந்து அறிய இயலாது இருக்கின்றது, (ஏனெனில்) இனை ஏறு சும்மைக்கு - வருத்தும் இயல்பினதான இடியேற்றின் ஆரவாரத்துக்கு, எதிருரு மால் வரை - எதிரொலி எழுப்பும் பெரிய (இமய) மலையிடத்து, நல் நாம் பனை ஏறும் - நல்ல இடப வாகனத்தில் இவர்ந்தருளும், பித்தற் பணி - பித்தர் எனச் சுந்தரரால் அழைக்கப் பெற்ற சிவபெருமானைப் பணிந்து வணங்கும், நாவலர் ஊர் - நாவலர் பிரானது ஊரின் கண், இளநீர் பருக - இளநீர் குடிப்பதற்காக,
பனை ஏறு பித்தர் உளர் என - பனையில் ஏறுகின்ற பித்தர்களும் இருக்கின்றார்கள் என்று, ஏந்தல் பகர்ந்தனர் - புகழாளராகிய தலைவர் கூறினார்.
(கு.உ): மூன்றாம் அடியில் ஏறு - இடியேறு; சும்மை - ஒலி, ஆரவாரம், இளநீர் பருகப் பனை ஏறும் பித்தர் உளர் என்பது தலைவியின் கொங்கை இளநீரைப் பொருந்துவதற்காகப் பனை மடல் ஏற முனையும் காதற் பித்தர் உளர் என்ற பொருள் தோன்ற நின்று வினோதச் சுவை பயத்தல் காண்க.

113
பாங்கி தலைவியை முனிதல்
(இங்ங்ணம் கூறிய பாங்கியைத் தலைவி வெறுத்து உரையாடுதலும், பாங்கி தலைவியைக் கோபித்தலும்)
151. நானின்றா யத்த மிலையென் பதையுரை நாட்டுபொரு
டானென்றே கொண்டு விரிவுரை தந்த தகையனல்லை வேனின்ற கண்ணாய் வினையே னுரைக்கு வெகுளலுன்னார் தேனின்ற நட்பி னிருளையர்க் கேசொல்லு சீருறவே.
பதவுரை:- நான் இன்று ஆயத்தம் இல்லை என்பதை - நான் (இன்று பேசுதற்கு) ஆயத்தம் இல்லை என்று சொன்ன வார்த்தையினையே, உரை நாட்டு பொருள் தான் என்று விரிவுரை தந்த - (பிரசங்கத்தின் போது) உரை நிலை நாட்டுதற்குரிய தாற்பரிய பொருளாகக் கொண்டு சொற்பெருக்கு ஆற்றிய, தகையன் நல்லை - தகைமை உடையவராகிய நாவலர்பிரானது நல்லைப்பதியில் வந்த, வேல் நின்ற கண்ணாய் - வேல் வடிவமும் தன்மையும் வாய்ந்த கண் படைத்த தலைவியே, வினையேன் உரைக்கு வெகுளல். உன்னார் - தீவினையேனாகிய யான் கூறிய வார்த்தைப் பொருட்டு வேறெவரும் சினம் கொள்ள நினையார், (உயிர்த் தலைவியாகிய நீ சினம் உற்றது வியப்பு என்பது எச்சப்பொருள்) தேன் நின்ற நட்பின் இகுளையர்க்கு - தேன் பொதிந்த இனிய நட்பினை உடைய ஏனைய பாங்கியரிடத்தில், சீர் உற சொல்லு - (நீ கோபம் கொண்டதற்குரிய காரணத்தை) செப்பமாகச் சொல்வாய்.
(கு.உ):- தலைவி மேற் சார்த்திக் கூற இருந்ததைப் பிறர் மேற் சார்த்தி வெகுளலுள்ளார் என்றது அவள் பால் பாங்கி பேணும் மரியாதை நாங்கள் காட்டும் பொருட்டும் எனக்குச் சொல்லாதே எனச் சொல்ல இருந்ததை ஏனைப் பாங்கியர் இடத்தில் சொல் என்றது அது யாரும் ஏற்கத்தகும் பாங்கினது அன்று என மறைமுகமாகத் தெரிவிக்கும் அவள் சாதுரியம் தோற்றும் பொருட்டும் என்க.
தலைவி பாங்கியை முனிதல்
(முனிதல் - கோபித்தல்) பாங்கியை முனிந்து தலைவி தன்னுட் கூறல்.
152. முகமது கண்டவர் முன்னி வணங்கு முதல்வனன்க
முகமது வார்கா முதமயி றோகையை வீயறியா நகமது சேர்நல்லை நாவல னாட்டக நாடிலையா சுகமது வேயுரை சுந்தரி நீயிது சொல்லுவதே.

Page 68
14
பதவுரை:- முகம் அது கண்டவர் முன்னி வணங்கு முதல்வன் - முகத்தைக் கண்டவர்கள் கருதி வணங்கும் தன்மை உடைய முதல்வனும், நல் கமுக மது வார் கா - நல்ல கமுகின் பாளையில் இருந்து தேன் சொரிகின்ற சோலையினை உடையதும், முத மயில் தோகையை வீ அறியா நகமது சேர் - உவகை உடைய தோகை மயிலை நீங்குதலை அறியாததுமாகிய வானுலகம் எனத் தகும், நல்லை நாவலன் நாட்டகம் நாடிலை - நல்லைப் பதியின் நாவலர் பிரானது நாட்டின் இயல்பை நோக்கிப் பேசுகின்றாய் இல்லை, உரை ஆசுகம் அதுவே - (உன்) வார்த்தை அம்பு போல்வதே, சுந்தரி - அழகிய தோழியே, (அடி மூஞ்சூறே என்பதும் பொருள் ) , நீ இது சொல்வதுவே - நீ இப்படிப் பேசுவது என்ன வியப்பு.
(கு.உ):- முன்னி வணங்கும் முதல்வனும் நல்லை நகரை வாழ் பதியாயுடையவருமாகியி நாவலர் பிரான் எனக் கூட்டுக. வீ - நீங்குதல், -
நகம் - (நாகம் என்பதன் விகாரம்) - வானுலகம். ஆசுகம் - அம்பு, சுந்தரி- 1. அழகி. 2. மூஞ்சூறு.
தலைவி கையுறையேற்றல் (இது வெளிப்படை)
153. அத்து விதநிலை நின்னுட னானு மஃதறிநல் லத்து விதசிவ சித்தாந்த வாறுசெ லார்கலிசம் பத்து வீடா னறுமுக னல்லைப் பதிமலரே முத்த வரான் விழப் பத்திர மீந்தார் முயக்குறவே.
பதவுரை:- நின்னுடன் நானும் அத்துவித நிலை அஃது அறி - (பாங்கியே), நீவிரும் நானும் இணைந்து இருமையில் ஒருமை நிலையாயினம் என்பதை அறிவீர், நல் அத்துவித சிவ சித்தாந்த ஆறு செல் - நன்மையான சுத்தாத்துவித சைவ சித்தாந்த நெறியில் சென்று அடையும், ஆர் கலி சம்பத்தும் அ வீடான் - நிறைந்த எழுச்சி தருவதாகிய அவ்விடே சம்பத்தாக உடையவராகிய, அறுமுகன் நல்லை பதி - ஆறுமுக நாவலர்பிரானது நல்லைப்பதியின் கண், மலர் ஏ முத்தவரான் - மலர்ப் பானங்களையும் மூவகை வில்லையும் உடையவனாகிய மன்மதனின், விழப் பத்திரம் முயக்குற ஈந்தார் - விழாவிற்கான அறிவித்தல் தந்தவர் போல என்னைத் தழுவுவதற்கு வாயிலாகத் தழையைக் கொடுத்துள்ளார்.
(கு.உ):- பத்திரம் என்பதை இரட்டுற மொழிந்து கொண்டு ஒன்று விழாப் பத்திரம் மற்றது தழை (இலை குழை) எனக்கொண்டு தன் சார்பில் இனி நிகழ இருப்பது மன்மதவிழா தான் என்று எழும் தலைவியின் குதூகல மிகுதியைப் புலப்படுத்தியவாறு, தவர் - வில், முத்தவர் - மூன்று வில்,

115
கரும்பு வில் அன்றியும் மன்மதனுக்கு மற்றும் இரு வில் உண்மை பிரசித்தம், "சம்பத்தும் அ வீடான்' என்பதை அவ்வீடு சம்பத்துமாக உடையான் என மாற்றுக. ஏ - அம்பு, விழ - விழா விகாரமானது, பத்திரம் - அறிவித்தற் பத்திரம், தழை.
இறைவி கையுறையேற்றமை பாங்கி இறைவற் குணர்த்தல்
(இது வெளிப்படை)
154. பரச மயகோ ளரியென் றெவரும் பகரறிவ
னரச ரெனினு நடுநிலை மாறா னலையனையாள் சரச தழைதர வாட்டிக் கடலிலெட் சார்த்திநல் வாய்ப் பிரச வமுத மளித்து மலையிற் பிணைத்தனளே.
பதவுரை:- சரச - சல்லாபத்துக்குரியோனே, பர சமய கோளரி என்று எவரும் பகர் அறிவன் - பரசமய கோளரி என்று அனைவரும் புகழ்கின்ற பேரறிஞனும், அரசர் எனினும் நடுநிலை மாறான் - அரச ஆணை தான் நிர்ப்பந்தித்தாலும் நடு நிலைப் பண்பில் திரியாத இயல்பினருமாகிய நாவலர் பிரானது, நல்லை அனையாள் - நல்லைப் பதியையே ஒத்த தலைவியானவள், தழை தர - நினது தழையை நான் கொடுக்க அதனை ஏற்றுக் கொண்டு அதனை நீயாகவே கருதி, ஆட்டி கடலில் - கடல் போலும் கருமையும் விசாலமும் பொருந்திய கண்ணில் ஒற்றி, எள் சார்த்தி - எள் மலர் நிகர்க்கும் நாசியில் வைத்து முகர்ந்து, நல் வாய் பிரச அமுதம் அளித்து - அழகிய வாயின் தேன் போலும் இதழ் ஊறல் அளித்து, மலையில் பிணைத்தனள் - தனது மலைபோலும் நகில்களுடன் அனைத்துக் கொண்டாள்.
(கு.உ)- கடல் - கண், எள் - மூக்கு; இவை உவமையாகு பெயராயின, எள் - எட்பூ கண்ணில் ஒற்றியும் மூக்கில் வைத்தும் வாய் முத்தம் அளித்தும் நகிலில் அணைத்தும் மகிழ்ந்தாள் என்க. சரச என்பது சரச சல்லாபத்துக்குரியவனே என்று தலைவனை விளிக்கும் சொல்லாகவும் சரசத்துக்குரிய - ரசனைக்குரிய தழை எனத் தழையை விசேடிக்கும் அடையாகவும் கொள்ளற் பாலது. "பெயர்ந்தரைத்துப் பூசிற்றிலளன்றிச் செய்யாதன வில்லை பூந்தழையே" - திருக்கோவையார்.

Page 69
116
குறியிடங்கூறல்
பாங்கி தலைவற்குப் பகலிற் கூடும் இடத்து அடையாளம் கூறல்.
155. காவுறு முல்லை யசோகு கரும்பு சுரும்புணம்மா மாவுறு தாமரை நீல மருவ மதன்படைவீ டாவது காண்மென வேள்காள மார்க்கு மகன்புனநந் நாவது நீங்கா னொருதனி நாவல னற்கிரிக்கே.
பதவுரை:- கா உறு முல்லை அசோகு - சோலையில் உள்ள முல்லையும் அசோகும், சுரும்பு உண் அ மா - வண்டுகள் மொய்க்கின்ற அழகிய மாவும், மாஉறு தாமரை நீலம் - இலக்குமி வீற்றிருக்கின்ற தாமரையும் நீலோற்பலமும், கரும்பும் மருவ - கரும்பும் ஆகிய இவைகள் எல்லாம் பொருந்துதலால், மதன்படை வீடாவது காண்மென - மன்மதனுடைய படை இல்லம் என்று சொல்லும்படியாக விளங்கும் பொழிலிபம் காண்பாய் என, நல் நாவது நீங்கான் - சிறந்த நாவினை விட்டு நீங்காதவனாகிய, ஒரு தனி நாவலன் நற் கிரிக்கு - ஒப்பற்ற ஒருவனாம் நாவலர் பிரானது சிறந்த மலையிடத்தே, வேள் காளம் ஆர்க்கும் - குயிலானது எக்காள வாத்தியம் இயம்பும், அகல் புனம் - விசாலமாகிய சோலை.
குறியிடத்து இறைவியைக் கொண்டு சேறல்
156. நாடகங் காண்கம் வருகுவை நாவல னல்லையிலே
மாடகங் கொள்யாழ் சுரும்பெழ மாங்குயில் பாடிடப்பூ வேடகங் கண்ணிர் விடமரனார்தலை யேய் ந்தசைக்கப் பாடகச் சீறடி யாரா மயினடம் பாய்பொழிற்கே.
பதவுரை:- தலைவியே, நாவலன் நல்லையிலே - நாவலர் பிரானது நல்லைப் பதியின் கண்ணே, பாய் பொழிற்கு - பரந்த சோலையில், சுரும்பு மாடகம் கொள் யாழ் எழ - வண்டுகள் மாடக யாழ் இசை எழுப்ப, மாங்குயில் பாடிட- மாஞ்சோலையில் பயிலும் குயில்கள் பாடிட, பூ ஏடு அகம் கண்ணீர் விட - பூ இதழ்கள் இசையினால் (நெகிழ்வுற்று) கண்ணீர் சொரிய, மரனார் ஏய்ந்து தலை அசைக்க - மரக்கூட்டங்கள் பொருந்திய

117
தலை அசைக்க, சிறு அடி பாடக ஆரா - சிறிய பாதங்களில் உள்ள காலணி ஆர்த்தல் இல்லாத, மயில் நடம் - மயிலின் நடனமாகிய, நாடகம் காண்கம் - நாடகம் பார்க்கச் செல்வோம், வருகுவை - வருவாயாக.
(கு.உ):- சோலை நாடக அரங்காக அமைய உள்ள உறுப்புக்களின் அமைதி விசேஷம் இச் செய்யுளில் விசேடமாக நயக்கத்தகும். பூ ஏடகங் கண்ணிர் விடுவதும் மரனார் தலை அசைப்பதும் என இயற்கைக்கு உயிர் பனிக்கும் காட்சியே நாடகக் காட்சியாதல் ஒரு தலை, சீறடி பாடகம் ஆரா மயில் நடம் என்புழி மயிற் பாதத்துக்குச் சிலம்பு இல்லாக் குறையை எண்ணும் பரிவும் ஒருவகை இரசனையேயாம். முன் அறிவிக்கப்பட்ட மன்மத விழாவுக்கு நாடகச் சிறப்பும் கூட்டுகின்றது இச் செய்யுள்.
தலைவியைக் குறியிடத்துய்த்து நீங்கல்
157. ஞாலங் கிடைப் பினுமோவா வொழுக்கின னாவலன்வே ளாலம் புதையா னகன்கிரி நீயீண் டமர்குதிதண் ணால மரைமலர் காந்த ணறுமுல்லை யம்முகங்கை வால வெயிறுகண் டாலறல் காமறை மன்னுவவே.
பதவுரை:- நீ - தலைவியே, ஞாலம் கிடைப்பினும் ஒவா ஒழுக்கினன் - பூமியே பரிசாகக் கிடைப்பினும் சீலத்தினின்றும் வழுவாத ஒழுக்கம் உடையவரும், வேள் ஆல் அம்பு தையான் நாவலன் - மன்மதனது நஞ்சு , அனைய LDSOf பாணம் தைக்கப்பெறா நெஞ்சினருமாகிய நாவலர் பிரானின், அகன் கிரி ஈண்டு அமர்குதி - விசாலமாகிய மலையின் கண்ணே இவ்விடத்தில் இருப்பாய், தண் ஆலம் மரை மலர் காந்தள் நறுமுல்லை - குளிர்ச்சி பொருந்திய நீரில் வளரும் தாமரை மலர், கார்த்திகைப்பூ, வாசனை கமழும் முல்லை ஆகிய மலர்கள், அம் முகம் கை வால எயிறு கண்டாய் - முறையே நின் அழகிய முகம், கரம், வெண்மை மிக்க பற்கள் ஆகிய உறுப்புக்களைக் காண நேர்ந்தால், (அவற்றின் எழிலுக்கு ஆற்றாது அம் மலர்கள்) அறல் கா மறை மன்னுவ - நீரிலும் சோலையிலும் ஒளித்துக் கொள்ளலாம்,
(கு.உ):நீ என்னுடன் வந்தால் மலர்கள் நின் உறுப்புக்களைக் கண்டு வெட்கி மறைந்து விட, மலர் கொய்தல் இல்லாது போய்விடும். ஆதலின் இருப்பாய் என்று கூறித் தலைவியைத் தோழி குறியிடத்து உய்த்தனள். ஆல் - நஞ்சு, ஆலம் - நீர்; அறல் - நீர்.

Page 70
8
இதுவுமது
158. தம்பையாப் பிள்ளை புண்ர்ச்சி வழுவெனத் தானிறுவு
தம்பையாப் போடடு சிவம்புணர் நாவலற் சாரலரஞ் சும்பையாப் பேய்சூ ருறுகான் சுகமிரு தூயசந்தோ டம்பையாப் பேயர வேய்பினற் காமல ராய்குவனே.
பதவுரை:- தம்பையா பிள்ளை புணர்ச்சி வழு என - தம்பையா + பிள்ளை என்பது அல்வழிப் புணர்ச்சிக்கண் ஒற்று மிக்குத் தம்பையாப்பிள்ளை என வழங்குவது புணர்ச்சி வழுவாம் என்று, தான். நிறுவும் - தன் இலக்கணப் புலமையால் நிலைநாட்டி உள்ளோனும், தம்பை யாப்பு ஒட்டும் - தேகியாகிய தான் தன்னைத் தேகம் எனக் கொண்டு அபிமானித்து இருத்தலாகிய விபரீதத்தை விலக்கும் சாதனமாகிய, சிவம் புணர் நாவலன் சாரலர் - சிவமாம் தன்மையைப் பெற்று விளங்கிய நாவலரைச் சேராதவர்கள், அஞ்சும் - பயந்து வாழ்வதற்கு இடமாய், பை யாப்பு ஏய் சூர் உறு கான் - துன்பத்தோடு இயைந்திருக்கின்ற அச்சம் மிகுந்த க்ாட்டுச் சூழலில், இரு தூய சந்து சுகம் ஒடு - அகலமும் தூய்மையுமான சந்தனத் தழையோடு, அம்பை யாப்பு அரவு ஏய் பினற்கு - அழகிய படத்தினோடு கூடிய பாம்பின் வடிவினதாகிய உனது பின்னல் அலங்காரத்துக்கு, ஆம் மலர் ஆய்குவன - உகந்த மலர்களையும் ஆய்வேனாக.
இறையோன் குறியிடத் தெதிர்ப்படுதல்
(தலைவன் பகலில் கூடு) இடத்துத் தோன்றுதல்)
159, இருண்மின் முகம்வைத் திருந்தா யெனையிணை
யானையிலே யருண்மின் றரவுர் தரவோ வரைப்பணந் தந்திடவோ பொருண்மின் றரளப் பவளம் பொருந்து புனிதமுத மருண்மின் னெனத்தர வோநா வலன்பதி வாழ்திருவே.
பதவுரை” நாவலன் பதி வாழ் திருவே - நாவலனுடைய மகிமை விளங்கும் இப்பதியில் வாழும் இலக்குமி போல்பவளே, இருள் மின் முகம் வைத்து இருந்தாய் - இருளிடத்தே கிளர்ந்து எழும் மின்னற் பிரகாசம் போல முக விலாசம் தோற்றி இருக்கின்றாய், என்னை - இதன் குறிப்பு யாதாகுமோ, இணை யானையிலே அருள் மின்தர ஊர் தரவோ - மதத்து எழுந்த இரண்டு கொங்கைகளாகிய யானைகளில் ஊர வைக்கும் பரிவோ,

119
பண அரை தந்திடவோ - பாம்பின் படம் போலும் அல்குலில் படிதற்காம் செவ்வி அருளும் வியப்போ, மின் பொருள் தரள பவளம் பொருந்தும் - ஒளி மிக்கு விளங்கி மதிக்கப்படு பொருளாய் உள்ள முத்தே போலும் பல் வரிசை உள்ளடக்கிய பவளம் போன்ற வாய் இதழ்களில் ஊறும், புனித அமுதம் அருண்மின் என தரவோ - நுகர்தொறும் தூய்மை எனும் பிரேமை அளிக்கும் அதர பானத்தினை இன்னும் தருக எனக் கேட்டுப் பெறும் பாங்கான ஆராமை எழும் அளவுக்குத் தரும் கருணையோ,
புணர்ச்சியின் மகிழ்தல்
(இது வெளிப்படை)
160. கற்றா ரருநாக் கடைந்திடு சங்கக் கனித்தமிழ்ச்சா றுற்றே பருகிடு மின்ப முவட்ட முறுமிவளல் குற்றா ரிருகுன்று கொண்டே கடைந்து குலவுமின்பம் பெற்றே மகிழ்ந்தன மாறு முகனார் பெருநலைக்கே.
பதவுரை:- ஆறுமுகனார் பெரு நலிைக்கு - ஆறுமுக பிரானது பெருமை துலங்கும் நல்லையின்கண், உவட்டம் உறும் - இரு வட்ட அமைப்பினதான, இவள் அல்குல் தார் - இவள் அல்குலாகிய கடலை, இரு குன்று கொண்டே கடைந்து - தனங்களாகிய இரு குன்றுகளையும் பற்றி நின்று கடைதலினால், குலவும் இன்பம் - எழுகின்ற கலவி இன்பமானது, கற்றார் - கற்றவர்கள் எனக் கூறப் பொருந்தும் தரத்தினரான சங்கப் புலவோர், அரு நாக்கடைந்திடு - சொல் பொருள் சுவை அருமை அறிவனவாகிய தமது நாக்கினால் கடைந்திடுகின்ற, சங்க கனி தமிழ் சாறு
உற்றே பருகிடும் இன்பம் - முச் சங்கங்களின் கனிவு தரும் தமிழ்
இரசத்தை உற்றுப் பருகுதலாம் இன்பமாகும், பெற்றே மகிழ்ந்தனம் - அதனை அடைந்து மகிழ்ந்தோம்.
(கு.உ):- கற்றாரருநா . மின்பம் எனும் கூற்று, "உயர் மதிற் கூடலி னாய்ந்த வொண் தீந் தமிழின்துறை எனும் திருக்கோவைப் பொருளையே அது குறித்து நிற்றல் வெளிப்படையாதலின், கற்றார் - சங்கப் புலவோர் என உரைக்க - அரு நா என்புழி அருமை சொல்லருமை பொருளருமைகளின் மேற்று, உ - இரண்டு தருமாற்றால் உவட்டம் - இரு வட்டம் எனல் ஒக்கும். தார் என்பது கவி கொள்கின்ற குறிப்பு நோக்கில் கடல் எனும் பொருளில் நிற்பதாயிற்று. நாவலனது நல்லையிற் கிழவோனாதலின் இல்லது இனியது என நாட்டப்படும் கவியின்பமும் தமிழின்பமாகவே கொண்டு மகிழ்தல் வல்லனாயினான் 6T66.

Page 71
120
புகழ்தல்
(இது வெளிப்படை)
161. மரைமலர் பங்க மடைந்த கமுகந் தரமலையு
மரைமல ரின்பச் சுழிப்பை யனுங்கி யரவுமளைத் தரைமலர் புக்க திருவுஞ் சமமில டானிவட்காம் விரைமலர் தூயெ னுளம்பணி நாவல வேணலைக்கே.
பதவுரை:- என் உளம் விரை மலர் தூய் பணி நாவல வேள் நலைக்கு - எனது உள்ளமானது நறுமண மலர் தேடி ஆய்ந்து கொண்டு வந்து தூவி அனுதினமும் (LDIT60 spires) வழிபடுதற்காம் பெருந்தகைப் பிரானாகிய நாவலன் என்னும் மன்மதனின் புகழ் மலி நல்லையின்கண், மரை மலர் பங்கம் அடைந்த - (இவளின் முகச் செவ்விக்குத் தோற்ற அவமானத்தால்) தாமரை சேற்றில் சென்று புதைந்து கொண்டது, கமுகு அந்தரம் அலையும் - கமுகானது இவள் கழுத்து அழகுக்கு உவமையாக LDITILT60) DLLJITs) நிலைகொள்ளாது ஆகாயத்தில் அலைந்து கொண்டிருக்கும், அரை மலர் இன்ப சுழிப்பை அனுங்கி - இவளது அரையின் கண் மலர்ந்து இன்ப நிலைக்களனாக அமையும் யோனிச் சுழியோடு கூடிய அல்குலுக்கு ஒப்பா காமையின் வருந்தி, அரவும் தரை மலர் அளை புக்கது - பாம்பும் நிலத்தில் பொங்கி எழும் புற்றைத் தேடிச் சென்று ஒளிப்பதாயிற்று, திருவும் தான் இவட்கு சமமிலஸ் - இலக்குமி தானும் இவளுக்குச் சமமிலஸ்.
(கு.உ):- அந்தர மலையும் என்றது நிலையற்றுக் கலங்கும் என்னும் குறிப்பில் தரும், நாத்திகர் எனத் தாமே தம்மை விமர்சிக்கும் இவ் வர்சிரியர் விரை மலர் தூய் என் உளம் பணி என்றற்கு இயைபு என்னை எனின் 'பூத் தேர்ந்தா யென் கொண்டு நின் பொன்மை ஏத்தாதாரில்லை எண்ணுங்கால்' என்னும் விதப்பானே அதற்கியைவுண்டாதல் துணியப்படும்.
தலைமகன் தலைமகளை விடுத்தல்
(தலைமகன் தலைமகளைத் தோழியர் கூட்டத்திற் செல்ல விடுத்தல்)
162 அன்பு பலவுருக் கொண்டுனை யண்டிய தாமெனவொர்
துன்பு மிலாத குசரிகுழ லார்மகிழ் தோயச்செலென் னென்பு முருக்கு மமுதே யெழுதரு மென்னுயிரே நன்பு கரும்பொ னிகரி லறுமுக னல்லையிலே.

21
பதவுரை:- நன் புகரும் பொன் நிகரில் அறுமுகன் நல்லையில் - உயர் குருத்துவ நலமுளரான வெள்ளி பகவானும் வியாழ பகவானும் கூடத் தமது குருத்துவ மேன்மைக்கு இணையாதற்கரிய மகிமையுள்ள ஆறுமுக நாவலரது நல்லையின் கண், என் என்பும் உருக்கும் அமுதே - என் எலும்புத் துவாரங்களிலும் ஊடு புகுந்து உருக்கும் இன்ப அன்பு மயமாம் அமுது போல்வாளே, எழுதரும் என் உயிரே - எழுச்சி தரும் என் உயிர் போன்றவளே, அன்பு பல உரு கொண்டு உனை அண்டியதாமென - உன்னைச் சார்ந்த அன்பு என்ற ஏகப் பொருளே பல உருவங்கள் தாங்கி உன் சுற்றமும் சூழலுமாய்த் திகழ்தல் போல, ஓர் துன்பும் இலாத - இன்னல்களை உடனுக்குடன் நீக்கும் பரிவினராகியும், சுரி குழலார் மகிழ் தோய செல் - நெறிப்புண்ட கூந்தலை உடையராய்த் திகழும் உன் பாங்கியர் கூட்டத்தினர் மகிழச் சென்று அணைக.
(கு.உ):- துன்பமிலாத என்பதில் இலாத - இல்லையாகச் செய்யும், 'ம்லைவில்லார்’ என்பதிற் போல, புகரும் பொன்னும் கந்தபுராண வரலாற்றின் பிரகாரம் ஒரோவொருகால் மாயவாதமும் உலகாயதமும் போதித்துள்ளனர் ஆதலின் என்றும் சைவசித்தாந்த போதனா குருவாய் இருந்த நாவலர்க்கு ஒப்பாகாமை இயல்பேயாம்.
பாங்கி மெல்லியற் சார்ந்து கையுறை காட்டல்
குறியிடத்து நிறுத்திப் போயின பாங்கி தலைவன் போயினபின் தான் கையுறைக்குப் போன பாவனையாய்க் கையுறை கொண்டுவந்து காட்டல்,
163. காரது முப்பூ விளைந்ததென் னோவெனக் கண்டவர்சொ
னிரது வாக நினபன் முலைமுக நீளரிக்க னேரது வாமுல்லை கோங்கு கமல மிருங்குவளை பாரது செய்தவ நாவல னல்லையிற் பார்த்தணியே.
பதவுரை:- பாரது செய்தவ நாவலன் நல்லையில் - உயர்ந்தோர் ஆற்றிய அருந்தவப் பயன் ஓர் உருவாய் விளைந்தாற் போல உதித்த நாவலர் பிரானது நல்லையின் கண், கார் அது முப்பூ விளைந்தது என்னோர் என - வேற்றிடங்களில் மலர்தற் பாலனவாகிய மூவகைப் பூக்கள் மேகம் ( அனைய கூந்தல் )ஆகிய தானத்தில் மலர்ந்திருப்பது என்னே அதிசயம் என கண்டவர் சொல் நீர் அதுவாக - கண்டோர் தம்மில் சொல்லிக் கொளற் கேதுவாய் ஒரு தன்மை நிகழுமாறு, நின பல் முலை முகம் நீள் அரி கண் நேரதுவாம் - உனது பல், முலை, முகம், நெடிய செவ்வரி படர்ந்த கண் என்பவற்றுக்கு முறையே ஒப்பாதற் பாலனவாகிய, முல்லை கோங்கு கமலம் இரும் குவளை - முல்லையும் கோங்குஅரும்பும் தாமரையும் கருங்குவளையும் (ஆகிய மலர்கள் இதோ), பார்த்து அணி - (உன் விருப்பப் பிரகாரம்) தெரிந்து அணிக.

Page 72
122
(கு.உ):- பார் உயர்ந்தோர் மேற்று - உலகமென்பது உயர்ந்தோர் மேற்றே என்பவாகலின், மூவகைப்பூக்கள் கோட்டுப்பூ, கொடிப்பூ நீர்ப்பூ என்பன. கோட்டுப்பூ - கொம்பரில் பூக்கும் கோங்கு, கொடிப்பூ - முல்லை, நீர்ப்பூ - தாமரையும் கருங்குவளையும். கொம்பு, கொடி, நீர் ஆகிய வெவ்வேறிடங்களில் மலர்தற்பாலனவாகிய பூக்கள் அவற்றின் இடம் விட்டு மேகத்தில் மலர்ந்திருப்பது அதிசயம் என்க. நின - ஆறாம் வேற்றுமைப் பன்மை உருபு ஏற்றது.
தோழி மையுறு கண்ணியைப் பாங்கிற் கூட்டல்
(இது வெளிப்படை)
164. பறங்கி விலங்குரை யாது பழந்தமிழ்ச் சைவப்பைங்கூழ்
பிறங்கி யெழவ்ளர் காரரி நாவலன் பேணுவெற்பிற் குறங்கி லிணையிரு காலசை யாமற் குலக்கொடிநீ யிறங்கி யினையிரு காலசை யாம லியங்குதியே.
பதவுரை:- பறங்கி விலங்கு உரையாது - பறங்கியர் எனும் பெயரில் வந்து சேர்ந்த விலங்குகள் மேய்ந்து தேய்ந்து விடா வண்ணம், பழந் தமிழ் சைவ பைங்கூழ் - பழைமை மிக்க செந்தமிழும் சைவமுமாகிய பசும் பயிர்கள், பிறங்கி எழ வளர் - தழைத்து ஓங்குமாறு வளர்த்து எடுத்த, காரரி - காரணியாகிய, நாவலன் பேணு வெற்பில் - நாவலர்பிரான் விரும்பும் நல்லை மலையின்கண், மல் குலகொடி நீ - போர்க்குலமாகிய மறவர் குலத்துத் தோன்றிய பூங்கொடி போலும் நீ, குறங்கில் இணை இரு கால் அசையா - தொடையோடு சேர்ந்த இரு பாதங்களையும் அசைத்து, இறங்கி இனை - சற்றுக் கீழ் இறக்க முற்று வருத்தம் தரும், இரு கால் அசையாமல் - அரைப் பிரதேசம் அசையாவண்ணம், இயங்குதி - மெல்ல bLLJTurts.
(கு.உ):- காரரி - கார் அரி, அரி - சிங்கம், அதன் பரியாயமான ஆளி காருடன் இணைகையில் காராளி என்றாகிக் காராளன் (வேளாளன்) என்றாகும்.
பாங்கி தலைவற் கோம்படை சாற்றல்
பாங்கி தலைவியைத் தோழியர் கூட்டத்திற் சேர்த்து மீண்டு வந்து தலைவற்கு மறவாமை சாற்றல்.
165. ஈச னிடம்வைத் தனனரி மார்பி னினிதுவைத்தான்
ஆசக னாவினில் வைத்தன னான்முக னாரணங்கைப் பாச மிரிநா வலனல்லை வெற்ப பகர்கரும்ப னாசுகம் பிறுட லுட்டைய லிட்டனை யாற்றுதியே.

123
பதவுரை:- பாசம் இரி நாவலன் நல்லை வெற்ப - சிவப் பேற்றுக்குத் தகுதியான பாச நீக்கம் பெற்று விளங்கிய நாவலர் பிரானது நல்லையாகிய
மலையிடத்து உள்ள தலைவ, ஈசன் இடம் வைத்தனன் - சிவன் உமையை இடப்ப்ாகத்தோடு ஒட்ட வைத்துள்ளான், அரி மார்பின் இனிது வைத்தான் - விஷ்ணு இலக்குமியை மார்பின் கண் இனிதாக
வைத்துள்ளான், நான்முகன் ஆசு அகல் நாவினில் வைத்தனன் - பிரமதேவர் சரஸ்வதியைக் குற்றம் அற்ற நாவினில் வைத்துள்ளான், ஆர் அணங்கை - அருமை மிக்க அணங்குபோல் வாளாகிய நம் தலைவியை ஐய - தலைவனே, பகர் கரும்பன் ஆசுகம் பிறு உடலுள் - புகழ் பெற்ற மன்மதனது அம்புகளால் பிளந்த உடலுள் (உள்ளத்தில்) இட்டனை - இருத்தி, ஆற்றுதி - (அதன் மூலம் உள்ளத் துயரைத்) தனித்திடுவாயாக,
(கு.உ):- இரிதல் - நீங்குதல், இரி நாவலன் - இரியப்பெற்ற நாவலன் (வினைத்தொகை) வேதம் ஒதும் நாவாதல் பற்றி நான்முகன் நா ஆசகல் நாவாயிற்று. ஆசுகம் பீறுடல் என்றதனால் உள்ளமாயிற்று. கரும்பன் ஆசுகத்துக்குச் சிலேடை வகையால் பிறலுக்குத் தையலிட்டு எனவும் ஒரு பொருள் தோன்ற நின்றது.
விருந்து விலக்கல்
உற்றார் ஊரிலிருந்து வந்தால் அவர்க்கு ஊண் கொடுத்து உபசாரம் செய்தல் போல் த்லைமகனை எம்மூர்க்கு வந்து விருந்து உண்டு போமெனக்கூறிப் பகற் குறியை விலக்கல்
166. மானின்ற மானுக் கருள நினைந்தவம் மான்மருகன்
கானின்ற நங்குடிற் றங்கினன் காசி லரசவைக டானின்ற சொற்சே ரறுமுக னல்லையிற் சார்விருந்தாத் தேனின்ற சொற்பொருட் டாவிருந் தாலின்பஞ் சேருவதே.
பதவுரை:- தான் ஈன்ற சொல் - தன்னால் வெளியிடப்படும் உதாரத்துவமான கருத்துக்கள், காசு இல் அரசவைகள் சேர் அறுமுகன் நல்லையில் - குற்றமற்ற அரச சபைகளிலும் ஏற்கப்படுதற்காம் கண்ணியம் உடையோனாகிய நாவலர் பிரானது புகழ் பொருந்தும் நல்லையின் கண், தேன் ஈன்ற சொல் பொருட்டா - தேன் இனிமை பயக்கும் சொல்லினளாகிய எமது தலைவி பொருட்டாக, சார் விருந்தா இருந்தால் - பொருந்திய விருந்தாக இருப்பின், இன்பம் சேருவது - இன்பம் சேர்வதாம், (இதற்கு முன்னிடாம் பாங்கில்) மான் ஈன்ற மானுக்கு அருள நினைத்த அ மால் மருகன் - மான் வயிற்றில் கருவாய்ப் புகுந்து இருந்து அதனால் ஈனப்பட்ட மான் போல்வாளாகிய வள்ளிநாயகியைத் தன் காதலியாக அணைத்து அருளத் திருவுளங் கொண்ட திருமால் மருமகனாகிய முருகக்
கடவுள், கான் ஈன்ற நம் குடில் தங்கினன் - வனச் சூழலில் அமைந்த குடிலில் (விருந்தேற்க வந்து) தங்கியமையும் உண்டாம்,

Page 73
68.
24
(கு.உ)- தானின்ற சொல் அரசவை சேர் என்றது நாவலர்பிரான் வாக்குப் பிரபாவம் குறித்தவாறு, மானின்ற மான் என்பதில் பின் உள்ள மான் ஆகுபெயர், 'ஏ' மாற்றி உரைக்கப்பட்டது. கானின்ற என்பதற்கு வனச் சூழலில் அமைந்த என்று உரைத்தல் பொருந்துமாறு நோக்கி என்க.
இதுவுமது
167. நேர்கட் சிறுதடி நீரது பாய்ச்சிந னிடுறைவா
கார்பெயல் வேண்டா வுழவின் சிறுபதங் கானற்குடி லேர்தர மன்னி யிறவு முதலிய வீர்ம்புழுக்க லார்தரி னின்பரி யாறுமன் றேநா வலனலைக்கே.
பதவுரை:- நாவலன் நலைக்கு - நாவலர் பிரானது நல்லையின் கண் வந்த, நீள் துறைவா - நீண்ட துறை சார் தலைவனே, நேர் கண் சிறு தடி நீரது பாய்ச்சி - நேரான வரம்புகட் கிடையில் இடம் அகன்று காணும் சிறிய உப்புப் பாத்திகளில் கடல் நீரைப் பாய்ச்சி, கார் பெயல் வேண்டா உழவின் சிறு பதம் கானல் குடி - மேகம் பொழியும் மழையை வேண்டாத விளைவித்தற் தொழில் மூலம் உப்பு விளைவிக்கும் உப்பளக் குடியிருப்புக்கு, ஏர் 'தர மன்னி - மங்கலம் ஏற்படுமாறு இங்கு தங்கி இருந்து, இறவு முதலிய ஈர்ம் புழுக்கல் ஆர்தரின் - இறால் முதலாகிய இனிமையான சோறு ஆகியன நுகர்ந்திடின், நின் பரி ஆறும் - உமது பசி வருத்தம் ஆறுவதாகும்.
(கு.உ):- சிறுபதம் - மிகச் சிறிதாகவே கொள்ளப்படும் உணவு உப்பு சிறு பதங் கான் நற்குடி உமணர்குடி, பசியைப் பரி என்றது உபசாரம்.
விருந்திறை விரும்பல்
அவ்வூணைத் தலைவன் விரும்பிக் கூறல்.
பொன்போற் றினையரி யாறு முகன்வெற் புகுமரையா வின்பாற் சமைத்த தினிதேன் றிணைமா விளமரைமான் வன்பாற் பெறுதடி யேனன் மதுவிருந் தாமதவே ளென்பாற் செலாது நடவெனு நாவல னிர்ங்கிரிக்கே.
பதவுரை:- மதவேளே - மன்மதவேளே, என் பால் .செலாது நட எனும் நாவலன் ஈர்ம் கிரிக்கு - என் பக்கம் நாடாது விலகிச் செல் என அவளைக் கை உதிர்த்து விட்ட தூய பிரமசாரியாம் நாவலர் பிரானது குளிர்மையான மலையின் கண், ஆறுமுகன் வெற்பு உகு மரை ஆவின் பால் சமைத்து - ஆறுமுகன் மலையாகிய அவ்விடத்தில் உலாவும் பெண் மரைகள் தாமாக இரங்கிச் சொரியும் பசுவின் பாலில் சமைக்கப்

125
பெற்றதாகிய, பொன் போல் தினை அரி - பொன் நிறம் காட்டும் தினை அரிசிச் சோறு, இனி தேன் - இனிய தேன், திணைமா - தினை அரிசி மா, விளம் - விளாங்கனி, வன்பால் பெறும் மான் மரை தடி - வன் செயலால்
பெறப்படும் மான் மரை இறைச்சி, ஏல நல் மது விருந்தாம் - ஏற்புடைத்தாகிய நல்ல கள் ஆகியன இங்கு விருந்துப் பண்டங்களாம்.
இதுவுமது
169, இறவுப் பொரிய லெழில்வாளை நண்டி னினியகறி
சுறவு வறையுடன் கானற் சிறுகுடிற் சோறுமது நறவுத் துளிக்குத் தவளையண் ணாக்குஞ்செய்ந்
நல்லையிலே சுறவுக் குளைநா வலனருள் போற்சுவை தோய்ந்திடுமே.
பதவுரை:- நறவு துளிக்கு தவளை அண்ணாக்கும் செய் நல்லையில் - நீர்ப் பூக்களில் இருந்து சொட்டும் தேன் துளிக்குத் தவளைகள் வாய் திறந்து மேல் நோக்கி இருக்கும் வயல்களோடு கூடிய நல்லையின் கண், இறவு பொரியல் - இறால் மீன் பொரியல், எழில் வாளை நண்டின் இனிய கறி - சிறந்த வாளை மீன் கறி, நண்டினது இனிய கறி, சுறவு வறையுடன் - சுறா மீன் வறையோடு, கான்ல் சிறுகுடில் சோறு - கடற்கரைப் பாங்கில் உள்ள சிறு குடிலில் சமைத்த சோறு, மது - குடிவகை ஆகியன, ஏசுறவுக்கு உளை - தர்மப் பழிப்புக் கண்டு வருந்தும், நாவலன் அருள் போல் - நாவலர் பிரானது அருளின் சுவைபோல, சுவை தோய்ந்திடும் - சுவை மிக்கு இருக்கும்.
(கு.உ)- நறவுத் . அண்ணாக்கும் என்ற நயம் "கூணன் கருத்தேனுக் கண்ணாக்குங் காவிரி சூழ் நாடா' என்பதனோடு ஒட்டி உரைக்கத்தகும். ஏசுறுவு - பழிப்பு பொருந்து மாற்றால் தர்மப்பழிப்பின் மேல் நின்றது.
11. ஒருசார்பகற்குறி
கிழவோன் பிரியக் கிழத்தி மாலையம் பொழுது கண்டி ரங்கல்
(இது வெளிப்படை)
170. மாலை மிகுமணத் தாரு மதிமிகு மாலையுற
மாலை யொழிநல்லை நாவலற் சேரலர் மாலையென மாலை யுறியெனை நுங்கிய பற்பிறை மாலைதெரீஇ
மாலைக் கிருத்திமஞ் செக்கரென் வாய்விரி
மாலையென்னே.

Page 74
126
பதவுரை:- மால் ஐ மிகு மனத்தாரும் - பெருந் தலைமை படைத்த உள்ளம் உடையோரும், மதிமிகு மாலை உற - அறிவின் கண் மிகுதியான மயக்கத்தைப் பொருந்த, மாலை ஒழி - அவர் மயக்கத்தை நீக்கும், (உபதேச ஆற்றல் உள்ள) நல்லை நாவலன் சேரலர் மாலை என - நல்லை ஊரானாம் நாவலர் பிரானைச் சேராதார் வரிசை போல, மாலை உறீ - மாலை நேரத்தில் வந்து சேர்ந்து, எனை நுங்கிய பற் பிறை மாலை தெரீஇ - என்னை விழுங்கியதும் தன் பல்லாகப் பிறைச் சந்திரனைக் கொண்டுள்ளதுமான மாலை வேளையைத் தெரிந்து கொண்டு, மாலை கிருத்திமம் செக்கர் என் - மாலைக் காலத்து வஞ்சனைத் தோற்றமான இந்தச் செக்கர் என்னே, வாய்விரி மாலை என் - வாயை அகலத் திறந்து கொண்டு விழுங்க வருவது போன்ற இந்த மாலைவேளை 66.
குறிப்புரை: இவை சகிக்கலாந் தரத்தன வன்று என்பது குறிப்பு ஐ - 5606)6OLD.
பாங்கி புலம்பல்
(இது வெளிப்படை)
171. நந்தி பதம்பணி நந்தி யனைநா வலனலைச்செவ்
வந்தி மலர வலரி யொடுங்கிய தத்தமம்பு சிந்தி யுகுகட் கருவிளஞ் செவ்வல்வி சேரமுக விந்தி துயர மெவன்றணிப் பேன்மயன் மாலையிலே.
பதவுரை:- நந்தி பதம் பணி நந்தி அனை நாவலன் நலை - நந்தி என்னும் சிவனது பாதங்களைப் பணியும் தலைமை பெற்றுள்ள திருநந்திதேவர் எனும் படியான நாவலர் பிரானது நல்லையின் கண், செவ்வந்தி மலரஅலரி அத்தம் ஒடுங்கியது - செவ்வந்திப் பூக்கள் விரியும் அவ்வேளை சூரியன் அத்தமனகிரியில் ஒடுங்கிற்று, அம்பு சிந்தி உகு கண் கருவிளம் - நீர்த்துளிகள் சிந்திச் சொரியுமாறு கலுழகின்ற கண்ணாகிய கருவிளமானது, செவ்வல்லி சேர் - செந்நிறமான இரேகைகள் பொருந்தும் படியாகத் தோன்றும், அமுத இந்தி துயரம் - பெருமை பொருந்திய சந்திரன் போலும் முகத்தினளான அத் தலைவியின் துன்பத்தை, மயல் மாலையில் - மயக்கம் தரும் வேளையாகிய இம் மாலைக்காலத்தில், எவன் தணிப்பேன் - எங்ங்னம் போக்குவேன்?

127
(கு.உ):- திருவருள் வீறு பெற்றிருந்தமை தோன்ற நந்தி அனை நாவலன் என்றார். அனைய கடை குறைந்து நின்றது. கருவிளஞ் செவ்வல்லி சேர்ந்தமை அமுது சிவந்தமை காட்டுவதாகும்.
தலைவனிடத் தலைவி வருந்தல்
தலைவன் வாராது நாழிகை நீட்டித்துழி தலைவி வருந்திக் கூறல்.
172. ஆய மெனுமலர்க் கொம்புகள் சேர்ந்திவ ணார்க்குமுனந்
தூய தமிழ்நா வலனல்லைக் காமலர் தோய்கனித்தேன் மேய தடஞ்செய் புகுந்திழி தன்மையின் மேவியல்கு லாய கடலிழிந் தேயிரு கொம்புகொண் டார்த்திலரே.
பதவுரை;~ ஆயம் எனும் மலர் கொம்புகள் சேர்ந்து இவண் ஆர்க்கும் முனம் - தோழியர் கூட்டம் எனும் மலர் நிறை கொம்புகளான ஆயத்தார் என்னைச் சார்ந்து ஆரவாரம் கொள்ளுதற்கு முன்னாக, தூய தமிழ் நாவலன் நல்லை - இலக்கணச் சுத்தமான தமிழ் அறியும் நாவலர் பிரானது நல்லையின் கண், கா மலர் தோய் கனி தேன் - சோலையிடத்து மலர்களும் இரசம் தோய்ந்த கனிகளும் சிந்தும் தேன், மேய செய் தடம் புகுந்து - பொருந்திய வயலிடத்துக் குளத்தில் புகுந்து, இழிதன்மையின் - இறங்கும் தன்மை போல, மேவி - அணைந்து, அல்குல் ஆய கடல் இழிந்தே - எனது அல்குற் பரப்பாகிய கடலில் இறங்கி, இரு கொம்பு கொண்டு ஆர்த்திலர் - இரு சங்குகளிலும் வாய் வைத்து முழக்கிற்றிலர்.
(கு.உ):- கொம்பு - சங்கு, அது உருவகமாய்த் தனங்களைச் சுட்டி நின்றது.
தலைவியைப் பாங்கிகழறல்
தலைவியை நோக்கி நீ வருந்துவது முறைமை அன்று எனப் பாங்கி கட்டுரைத்தல்,
173. புரிய னிடமக லாமலை மாதும் புரிந்திடுகாற்
பிரிய லடைந்தனள் பேச்செழுத் துச்செயல் பின்னமிலா ணரிய வனாவல னல்லை யனையாய் சகோரமதி தரிய வமுதைவிட் டுத்தரி யாது தளர்தலெனே.

Page 75
28
பதவுரை:- பேச்சு எழுத்து செயல் பின்னம் இல் 7 பேச்சு எழுத்து செயல் ஆகியவற்றில் ஒன்றற் கொன்று மாறுபட இயலுந் தன்மை இல்லாதவனும், ஆண் அரியவன் நாவலன் நல்லை அணையாய் - ஆண்மையில் அருமையானவனும் ஆகிய நாவலர் பிரானது நல்லையை ஒத்த தலைவியே, புரியன் இடம் அகலா மலைமாதும் புரிந்திடுகால் பிரியல் அடைந்தனள் - கூத்தாடி எனப் பெறும் சிவனது இடப் பாகம் விட்டுப் பிரியாத உமையும் சிவன் யோகம் புரியும் போது பிரிதலுற்றாள், சகோ ரம் மதி தரிய அமுதை விட்டு தரியாது தளர்தல் என் - சகோரப் பறவையானது தனது உயிர் ஆதாரம் எனும்படி சந்திரனிற் சுரக்கும் அமுதை இழந்து சகிக்க முடியாது தளர்வதும் உளது எனில் இது என்ன விபரீதமோ,
(கு.உ):- புரிந்திடுகால் என்புழி யோகம் அவாய் நிலையால் அந்நிலையையும் சகோரம் மதி தரிய அமுதை விட்டுத் தளர்தல் என்றதில் தலைவி தலைவனாற் பெறற்பாலதாகிய கலவி இன்பத்தை விட்டுத் தளர்தல் குறிப்பு உள்ளுறை வகையால் பெறப்படும்.
தலைவி முன்னிலைப்புறமொழி மொழிதல்
பாங்கி முன்னிலையாய் நிற்கத் தலைவி அவள் மேல் வெறுப்பால் அவளை ந்ோக்கிக் கூறாது புறமாய் மொழிதல்.
174 அடாரி லகப்பட்டுத் தப்பெலி யத்துன் பராச்செவிமாட்
டெடாவுரை செய்யு மியல்பதன் றோவெ னிடும்பைமனம் படாதவர் மாட்டுப் பகர்வது பாவுரை பாவுநன்னாக் கடாவிடை யாயுங் கலையுடை நாவலன்
கண்ணலைக்கே.
பதவுரை :- பா உரை பாவும் நல் நா - செய்யுளின் உரை வகையும்பா வகையும் பயிலப் பெற்ற நல்ல நாவினரும், கடா விடை ஆயும் கலை உடை நாவலன் - எதிர்த்தரப்பினர் எழுப்பும் வினாக்களுக்குச் சாதுரியமான விடை தேடும் கலை கைவந்தவருமான நாவலர் பிரானது, நலைக்கு - நல்லையின் கண் - மனம் படாதவர் மாட்டு ஏன் இடும்பை பகர்வது - என்னிடம் மனம் பொருந்தாதவராய் இருக்கும் எனது ஆயத்தாரிடம் எனது துயரங்களை எடுத்துச் சொல்வது, அடாரில் அகப்பட்டு தப்பு எலி - தன் பகைப் பிராணியிடத்தில் அகப்பட்டுத் தப்பிய் எலி ஒன்று, அ. துன்பு - தனக்கு நேர்ந்த அத்துன்பத்தை, அரா செவி மாட்டு எடா உரை செய்யும் இயல்பது அன்றோ - பாம்பின் செவியில் எடுத்து உரைக்கும் தன்மை அல்லவோ,

129
(கு.உ): அடார் - பகைவர் இங்கு பூனைமேற்று. அடார் - எலியை அகப்படுத்தற்கு இயன்ற பொறி எனினுமாம், என் இடும்பை என்றது மனம் படாதவர் என்பதனோடு இயையும், தாமதமாகவே முன் வந்து எனது துயர்க்கு அனுதாபம் தெரிவிக்காத ஆயத்தார் என்பான் என் இடும்பை மனம் படாதவர் என்றார். அவர்க்கு உரைத்தலின் விளைவு துன் அதிகரிப்பையே விளைக்கும் என்பது குறிப்பு.
தலைவி பாங்கியொடு பகர்தல்
வெறுப்பால் முன்னிலைப் புறமொழி கேட்ட பாங்கி தலைவியை உபசரித்ததால் அவ்வெறுப்பு நீங்கிப் பாங்கியோடு சொல்லல்,
175. மலைமக ஞற்றா விடத்து மலர்மகண் மார்பிலுற்றாள்
கலைமக ணாவிற் கலந்தாள் பிரிபவர்க் கண்டிலனா வலைபர வாதிக் களித்திடு நாவலன் மன்னலையா யிலைபுண ரெ.கற் பிரிந்துமிவ் வாக்கை யிருந்திடுமே.
பதவுரை :- பரவாதிக்கு நா அலை அளித்திடும் நாவலன் மன் - புறச் சமயிக்கும் அவன் நா வலுவிழந்து தோற்கும் நிலையைக் கொடுக்கும் நாவலர் பிரான் நிலைபெறும் நல்லைப்பதியிலுள்ள தலைவியே, மலை மகள் இடத்து உற்றாள் - உமாதேவி சிவனின் இடப்பாகம் பிரியாது உற்றாள், மலர்மகள் மார்பில் உற்றாள் - இலக்குமி விஷ்ணுவின் மார்பகம் பிரியாது இருக்கின்றாள், கலைமகள் நாவில் கலந்தாள் - சரஸ்வதி பிரமனின் நாவில் பிரியாது உள்ளாள், பிரிபவர் கண்டிலன் - இவ்வகையால் காதலுற்று ஒன்றினோர் எவரும் பிரிந்து இருக்கக்காணேன், இலை புனர் எ.கன்பிரிந்து இ ஆக்கை இருந்திடுமே - இலை வடிவம் கொண்ட வேல் தாங்கும் வீரனான என் தலைவனைப் பிரிந்த நிலையிலும் எனது உடல் நிலைத்து இருக்கின்றதே. இது என்ன புதுமை,
(கு.உ):- அலை - முதனிலைத் தொழிற்பெயர். நாவுக்கு அலைதலாவது தன் வாத உரன் இழந்து தளர்தல். எ.கன் என்றது பகை துரக்கும் சுடர் வேலனாய் இருந்தும் என் துயர் துரக்க வந்து உதவிற்றிலனே எனும் இரங்கற் குறிப்புரை நின்றது.
பாங்கியச்சுறுத்தல்
தலைவியைப் பாங்கி அச்சமுறுத்திக் கூறல்
176. எய்யாமை யாற்கடற் காம முழந்து னினியநலஞ்
செய்யாமை தேய்வு புனங்காவல் செய்யாய் தியங்கினையேல் வையாமை செய்தனை வார்புன நீக்கினை வைப்பள்சிறை செய்யாமை மீவளை கண்டுயி னாவலன் தண்ணலைக்கே.

Page 76
30
பதவுரை :- செய் ஆமை வளை மீ கண் துயில் நாவலன் தண் நலைக்கு - வயலிடத்து ஆமையானது சங்கின் மேல் ஏறிக் கிடந்து தங்கும் நீர்வளம் உள்ளதும் நாவலர் பிரான் பதியாய் உள்ளதுமான நல்லையில், எய்யாமையால் கடல் காமம் உழந்து - நீ பிரிவு ஆற்றாமையால் இங்ங்ணம் கடல் போலும் காமத்தில் அழுந்தி, (அது காரணத்தால்) இனிய நலம் செய்யாமை - (உனது) இனிதாகிய அழகுக் கோலம் சிதையாது இருக்க வைக்கும் சீர்ப்பாடுகளைச் செய்யாமையும், தேய்வு புனம் காவல் செய்யாய் - தேய்வு நிலையிலிருந்து தினைப்புனத்தைக் காவல் செய்யாது, தியங்கினையேல் - இத் துயரமே காரணமாக சஞ்சலம் அடைவாயேல், அனை வையாமை செய்து - அன்னையானவள் திட்டாது ஒழிவது பற்றிச் சிந்தித்து, வார் புனம் நீக்கினை - நீண்டு அமைந்த இத் திணைப்புனத்தினின்றும் அகற்றி, சிறை வைப்பாள் - வீட்டில் சிறை வைத்து விடுவாள்.
(கு.உ)- நீக்கினள் - முற்றெச்சம், அனை - தொகுத்தல். மீவளை - இலக்கணப் போலி, நலஞ் செய்யாமை - நலம் நினைத்தற்காம் சீர்ப்பாடுகள் செய்யாமை. அவை முகந் திருத்துதல், கூந்தல் திருத்துதல், ஆடை திருத்துதல் முதலியன. சிறைவைத்தல் - இற்செறிப்பு.
நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல்
தலைவனை விட்டு நீங்கற் கருமையைத் தலைவி நினைந்து தன்னுள் இரங்கிக் கூறல்,
177 ஆவியை நீங்கி யுடனிற்கு மோமீ னகன் புனல்விட் டேவியப் பெய்த வுறுமோ வெமக்குயி ரேய்தமிழை மேவிய பாரக மெங்கும் விளக்கிடு நாவலன்றெ வாவிவ ளென்ன வவர்ப்பிரிந் தாறலெ வாறணங்கே.
பதவுரை:- எமக்கு உயிர் ஏய் தமிழை - எங்களுக்கு உயிர் அனையதான தமிழை, மேவிய பாரகம் எங்கும் விளக்கிடும் நாவலன் - பரந்த உலகம் எங்கும் விளக்கமுறச் செய்த நாவலர் பிரானது, தெவ் இவள் ஆ என்ன - பகைவர் போலப் பொலிவு இழந்தவள் இவள் ஆ! எனக் கண்டோர் இரங்குமாறு அவர்ப் பிரிந்து, அணங்கு ஆறல் எவ்வாறு - பெண் தெய்வம் போன்ற இவள் ஆற்றி இருத்தல் எவ்வாறு கூடும், ஆவியை நீங்கி உடல் நிற்குமோ - உயிரைப் பிரிந்து உடல் தனித்து இருக்க வல்லதோ, அகல் புனல் விட்டே மீன் வியப்பு எய்த உறுமோ - அகன்ற நீர் நிலையைத் தவிர்த்து மீன் வியப்புக்கு இடமான வகையில் தனித்து இயல வல்லுமோ. இல்லை அன்றே.

131
(கு.உ):- அகன் புனல் - நீர் நிலை என்னும் பொருட்டு, ஆ எனவே பரிதாபம் என்னும் பொருட்டு. தமிழை விளக்கியது தமது பேச்சு ஆற்றல் எழுத்தாற்றல்கள் மூலம் அதன் மாண்பருமையை உலகம் அறிய வைத்தன்ம.
தலைவிக்கவன் வரல் பாங்கி சாற்றல்
(இது வெளிப்படை)
178. மீனை யவன்விற்க வேணு மலரை வியன்கரும்பை
தேனை யணைநா ணதிற்றார் சிறந்திடச் செய்துவெல்ல மானை மருட்டுக ணற்குத் தரமதன் வந்திடுவான் கோனை பரித்தேர் வரல்காண் கொடிநா வலனலைக்கே.
பதவுரை:- கொடி நாவலன் நலைக்கு - வெற்றிக் கொடி உடை யோனாகிய நாவலர் பிரானது நல்லையின் கண், கோன் ஐ பரிதேர் வரல் காண் - தலைவனது அழகிய குதிரை பூண்ட தேர் இதோ வருகிறது பார், மானை மருட்டும் கண் - மானையும் மிரட்டும் கண் உடைய அழகியான தலைவியே, மீனை அவன் விற்கவேணும் - இது வரை உன்னை வருத்த வரும் தன்மையில் மன்மதன் தன் கொடியாக உபயோகித்த மீனை இனி விற்றுவிட வேண்டியதாகும், தேனை அணை நாண் அதில் - தேனை நாடும் பாங்கினதான வண்டாகிய தனது நாணின் கண், மலரை தார் செய்தும் - தன் அம்பாகக் கொண்டிருந்த மலர்களை மாலையாய் அமைத்தும், கரும்பை சிறந்திட வெல்லம் செய்தும் - தன் வில்லாகக் கொண்டிருந்த கரும்பைச் சிறந்த வெல்லமாகும் படி திரித்தும், நிற்கு தர மதன் வந்திடுவான் - உனக்குத் தருதற்கு அம் மன்மதனே வந்து விடுவான்.
(கு.உ):- இனி ஆற்றி இருப்பாயாக என்பது எச்சம், காயாக இருந்த காலத்துப் புளிப்பாக இருந்தது எல்லாம் கனியாம் காலத்து இனிக்குமாறு போல கூட்டம் இல்லாக் காலத்து துன்ப சாதனமாய் இருந்தன எல்லாம் கூடும் காலத்து இன்ப சாதனமாய் விடும் என்னும் நயம் பற்றி இங்ங்ணம் தோழி உரைத்தாள் என்க. வேண்டும் என்பதின் திரிபு வேணும்.

Page 77
132
தோழி, தலைவற்குச் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல்
தலைவன் சிறைப்புறமாகக் குறியிடத்து வரத் தோழி தங்களுக்குரிய செறிப்பை அறிவுறுத்திக் கூறல். (செறிப்பு - வீட்டில் இருத்திக் காத்தல் - சிறைப்புறம் - வேலிப்புறம்)
179. அணியார் திருநீறுடன்கண் மணியனெங் கண்மணியன்
பணியார் புகனா வலனல்லைப் பாவையர் பாசிலைபூ நணியார் கொயலொழிந் தாரளி நீரளி நண்ணியிருங் கணியார் மொழியாற் கருந்தினை கொய்தனர் கானவரே.
பதவுரை:- அணி ஆர் திருநீறுடன் கண்மணியன் - அணியாம் தன்மை பொருந்திய நிறைந்த திருநீற்றுடன் உருத்திராக்கமணியும் அணிந்து கொள்பவனும், எம் கண்மணி - எமக்குக் கண்மணி போன்றவனும், அன்பு அணியார் புகழ் நாவலன் நல்லை - அன்பொழுக்கமே தமக்கு ஆபரணமாகப் பூண்டு ஒழுகும் சிட்டர்களால் விரும்பப்படுபவனும் ஆகிய நாவலர் பிரானது நல்லையின் கண், நணியார் பாவையர் - அடைந்துள்ள பெண்கள், பாசிலை பூ கொயல் ஒழிந்தார் - தம் தலைவியின் பொருட்டுத் தளிரும் பூவும் கொய்தலைக் கைவிட்டனர், அளி - வண்டுகளே, நீர் அளி நண்ணி இரும் - நீர் நிறையத் தேன் பெற்று மகிழ்ந்து இரும், (இந்நிலை வாய்ந்தது எங்ங்ணம் எனில்) கணியார் மொழியால் கானவர் கருந்தினை கொய்தனர் - வேங்கையின் அறிவித்தலால் குறவர் இங்கு இருந்த கருந் தினையைக் கொய்து கொண்டு சென்று விட்டனர்.
(கு.உ):- தலைவி இங்கு இருக்கமாட்டாள் என்பதைத் தலைவற்கு மறைமுகமாய் உணர்த்தியவாறு. பாவையர் பாசிலைப் பூ கொயலொழிந்தார் என்றதனால் வண்டுகளுக்கு இனித் தேன் வாய்ப்பு மிகுதியும் உண்டாதல் தெரிவிக்கப்பட்டது. கணி - வேங்கை. பூத்தல் தினை விளைந்து விட்டமையைத் தெரிவிக்கும் நிமித்தமாதல் கணியார் மொழியாற் கருந்தினை கொய்தனர் என்பதனால் பெறப்பட்டது. நனியார் தொகுத்தல் விகாரம். அளி - பின்னையது தேன்.
இதுவுமது
180. கோட்பலா வாழை விளைந்துகு தீமதுக் கொள்கடுவன்
றாட்படு பாறை விடாது தருவுற றானுமின்றிச் சேட்படர் கில்வா தடுக்கந் துயில் சிலம் பாதெரியிற் சேட்படு வேங்கை விரிந்த வரிந்தனர் செந்தினையே.

33
பதவுரை:- கோள் பலா வாழை விளைந்து உகும் தீம் மதுகொள் கடுவன் - குலையாய்ப் பழுத்துக் கனியும் பலாப் பழத்தினதும் வாழைப் பழத்தினதும் இனிய சாறாகும் தேனை உண்டு மயங்கும் கடுவன் ஆனது, தான் படு பாறை விடாது - அடியிடு பொருந்திய பாறையை விட்டு விலகாது, தரு உறல் தானும் இன்றி - மரத்தில் தாவும் முயற்சியும் இன்றி, சேண் படர்கில்லாது - தூரச் செல்லுதலும் இன்றி, அடுக்கம் துயில் சிலம்பா - மலைச் சாரலில் கிடந்தவாறே உறங்கி விடும் காட்சி உள்ள குறிஞ்சி நிலத் தலைவனே, தெரியின் - நேர்படக் கூறுங்கால், சேண் படு வேங்கை விரிந்த - உயர்ந்து ஓங்கிய வேங்கை மலர்ந்தது, செந்தினை அரிந்தனர் - (அது காரணமாக) கானவர் செந்தினையை அரிந்தெடுத்தார்.
(கு.உ):- கோள் - குலை, பலா வாழை ஆகுபெயர்கள் தேன் மாந்தி அதன் இன்பத்தில் மயங்கி மலைச் சாரலை விட்டுப் பிரியாதே கடுவன் துயிலும் சிலம்பா ஆதலின் தலைவியைக் கூடிப்பெறும் இன்பக் களியின் மயங்கி அவளைப் பிரிந்து இருக்கக் கடவை என்பது பெற வைத்தமை உள்ளுறையாம். முன் செய்யுளில் முன்னிலைப் புறமொழியால் தெரிவித்த தினை கொய்யப்பட்டு விட்டதான செய்தியை இங்கு நேர்மொழியால் சொல்கின்றார் ஆதலின் "தெரியின்' என விதந்தார்.
முன்னிலைப் புறமொழி மொழிந்தறிவுறுத்தல்
பாங்கி முன்னிலையாய் நிற்கத் தலைவி அவள் மேல் வெறுப்பால் அவளை நோக்கிக் கூறாது புறமாய் மொழிதல்.
181. பூந்தா தளிபிற பூப்புணர்த் தேவளர் பொங்கிடச்செய்
தீந்தே னுகுமலை நாடனெஞ் சிந்தனை சீக்கினுநம் வேந்தா ங்குறிஞ்சிக் கிழவனந் நாவலன் வெற்பருவி தாந்தா மெனநடஞ் செய்ம்மயில் காண்மற வாதிருமே.
பதவுரை:- நம் வேந்தாம் குறிஞ்சி கிழவன் நம் நாவலன் - நம் தலைவனும் குறிஞ்சி நிலத்துக்கு உரியோனாகிய முருகன் பெயராளியும் ஆகிய நமது நாவலர் பிரானது, (நல்லையாகிய) வெற்பின் அருவி தாம்தாம் என- மலையிலிருந்து வீழும் அருவியானது தாம் தாம் என்று தாளம் இட, நடம் செய் மயில்காள் - நடனம் ஆடும் மயில்களே, அளி - வண்டானது, பூந்தாது - ஒரு பூவில் இருந்து தான் பற்றிக் கொள்ளும் மகரந்தம், பிற பூ புணர்த்தே வளர் பொங்கிட செய் - பிறிது ஓர் பூவைச் சேர்ந்தே விதை தோன்றற்கு இடமானதாய், தீம் தேன் உகும் மலை நாடன் - இனிய தேன் சொரியும் வளத்தினதுமாய மலையிடத்தை நாடாகக் கொண்ட தலைவன், எம் சிந்தனை சீக்கினும் - எமது நினைவைத் துடைத்து விடினும், மறவாதிரும் - எம்மை மறவாது இருப்பீராக.

Page 78
134
(கு.உ);~ வளர் - விதை, பெயர் ஒப்புமையால் பாட்டுடைத் தலைவனைக் குறிஞ்சிக் கிழவன் என வேண்டினார். தாம் தாம் ' வெற்பு அருவி பாய்கையில் நிகழும் அநுகரண ஓசை,
பாங்கி, இறைவன் முன்னின்றிற் செறிப்புணர்த்தல்
பாங்கி தலைமகன் எதிர் நின்று தலைவி இல் வந்து இருத்தலைக் கூறல்,
182. புனமது விண்டு பதமது காணும் புகலுநடை
யணமது விண்டு தவிக்கு மறுமுக னார்புகழை மனமது கொண்டு தழை நல்லை மன்ன மகிழ்தளவு தினமது விண்டு தழுவிடு நம்மனைச் சேர்குதுமே.
பதவுரை :- அறுமுகனார் புகழை - ஆறுமுக நாவலரது புகழை, மனமது கொண்டு தழை நல்லை மன்ன - மனம் கொண்டு போற்றித் தழைக்கின்றோர் வாழும் நல்லையூர்த் தலைவனே, புனம் அது விண்டு பதமது காணும் - நாம் காத்த தினைப் புனம் அரி தாள் மயமாகவும், அனம் அது புகலு நடை விண்டு தவிக்கும் - அன்னப் பறவைகள் விரும்பத்தகும் தம் நடை அலங்காரம் இழந்து தவிக்கவுமி, மகிழ் தளவு தினமது விண்டு தழுவிடும் - மகிழவைக்கும் முல்லைக் கொடியானது தினம் தினம் மலர்ந்த கோலத்தில் தழுவிப் படர்ந்து இருக்கும், நம்மனை சேர்குதும் - நம் மனைக்குச் சென்று சேர்கின்றோம்.
(கு.உ):- அது இரண்டும் பகுதிப் பொருள் விகுதி, விண்டு பதம் அது காணும் - விண்டு - அரி; பதம் - தாள்; தலைவி நீங்குதலால் தான் பயில் நடைக்கு முன் மாதிரி இல்லாது ஒழிதலின் அன்னம் நடையழகு இழக்கும் என்க. நடை ' எனும் தொழிற்பெயர் அதன் பண்பின் மேல் நின்றது. உபசாரமி, மகிழ் தளவு - மகிழ்தற்கு ஏதுவான முல்லை.
முன்னின்றுணர்த்தியோம்படை சாற்றல்.
அவ்வாறு முன் நின்று உணர்த்திய பாங்கி எம்மை மறவாமை வேண்டுமென்று கூறுதல்.
183, தலையமை யானை தணவா தினமளி தண்சிலம்பா
வுலையமை மூக்கா" வுயிர்த்துக் கறுக்கு முருமுத்தியை நிலையமை நின்னுள நீயேன் மனத்தை நிறுத்தகல்வேங் கலையமை பூமான் புணர்நா வலன்புணங் கையிகந்தே,

135
பதவுரை:- அமை மூக்கு உலையா உயிர்த்து - தனக்கு அமைந்த மூக்கு நிலை குலைந்து கோபித்துப் பெருமூச்சு எறிந்து, உருமுத்தியை கறுக்கும் - இடியாகிய தீயையும் அணைத்துக் கறுக்க வைக்கும் தன்மையினதான, தலை அமை யானை - தலைமை அமைந்த யானையானது, தணவாது இனம் அளி தண் சிலம்பா - இடையீடின்றித் தொடர்ந்து தன் இனத்தைப் பாதுகாக்கும் சிறப்புள்ள குளிர்ந்த மலையிடத் தலைவனே, கலை அமை பூமான் புணர் நாவலன் புனம் கை இகந்து - கலைகள் அனைத்தும் தன்பால் அமையக் கொண்டோனும் தாமரையில் வீற்றிருக்கும் மான் போல்வாளுமாகிய சரஸ்வதி சேரப் பெற்றுள்ள நாவலர் பிரானது புனத்தைக் கைவிட்டுச் செல்கின்றோம் எனினும், மனத்தை நிறுத்து அகல்வேம் - மனத்தை இங்கே தான் நிறுத்திச் செல்கின்றோம், நிலை அமை நின் உளம் நீயேல் - இவ்விடத்து நிலை கொண்ட உன் உள்ளத்தையும் இங்கிருந்து நீக்கிவிடாதே.
(கு.உ):- தலையமை யானை தணவாது தன் இனத்தை அளித்தல் போல எமக்குத் தலைவன் என ஏற்பட்ட நீயும் எம் இனத்தை இடையீடின்றிப் பேணக் கடவை என்பது உள்ளுறை. நிலையமை நின்னுளம் நீயேல் என்பதும் அப்பொருட்டாம்.
தலைவன் தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல்
இவ்வாறு கூறக் கேட்ட தலைவன் வேறோர் பற்றுக்கொடு பெறாது நெஞ்சொடு கூறல்.
184. நாளு மமுத மளித்தெனம நல்குர வின்றிவைமுத் தாளு கலமொரு நான்குடை யாரை யகன்றவுடல் நீளு முருக னயில்வே றெனவே நிறுவியிருள் கிளு மறுமுக னல்லையின் வேள்கணை கீளுவதே.
பதவுரை:- முருகன் நீளும் அயில் வேறு எனவே நிறுவி - முருகப் பெருமானது நீண்ட வேலாயுதம் மற்றொன்று இது என்னும்படி நிலைத்திருந்து, இருள் கிளும் - உலகைச் சூழும் அஞ்ஞான இருளைக் கிழித்து விலக்கும், அறுமுகன் நல்லையில் - ஆறுமுக நாவலரினது நல்லூரின் கண், நாளும் அமுதம் அளித்து எமை நல்குரவு இன்றி வை - தினமும் அமுதம் அளித்து எமக்கு இன்பக் குறைவாகிய தரித்திரம் நேராமல் இருக்க வைக்கும், முத்து ஆளும் கலம் - (முத்துக் கலம் ஆளும்) முத்து ஆபரணத் தன்மையைக் கொள்ளும், ஒரு நான்கு உடையாரை - ஒப்பற்ற நாற்குணமாகிய ஆபரணங்களை உடைய தலைவியை, அகன்ற உடல் - பிரிந்திருக்கும், அதாவது சேர வாய்ப்பு இல்லாமல் இருக்கும்) என உடலை, வேள் கணை கீளுவதே - மன்மத பாணங்கள் கிழிப்பதா?

Page 79
136
12. பகற் குறியிடையீடு
இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல் (இது வெளிப்படை)
185. கணியார் கணியா ரெமதுயர் கானவர் காய்தினைகொய்
பணியார் பணியார் புனமது காக்கப் பசுங்குவளைக் கணியார் கணியார் பணிநா வலனார் களிநலைப்பூங் கணியார் கணியார் குறிவரல் காவல் கடிந்தனமே.
பதவுரை: கணியார் எம துயர் கணியார் - புனம் கொய்ய ஏவிவிட்டிருக்கும் வேங்கையார் எமது துயரத்தைக் கருத்திற் கொள்ளார், காய் தினை கொய் பணியார் கானவர் - காய்ந்த தினைக் கதிரைக்
கொய்யும் பணி மேற்கொண்டு நிற்கும் வேடர்கள், புனமது காக்கப் பணியார் - புனக்காவலுக்கு இனி எம்மை அனுமதிக்கார், பசும் குவளை கணியார் - பசுமையான குவளை மாலை அணிபவரும், கணியார் பணி நாவலனார் களி நலை - கருதி யாரும் பணிதற்குரிய நாவலர் பிரானது பதியான களிப்பு மிக்க நல்லையின் கண், பூங்கணியார் கணி - பூங்கண்ணளான எமது தலைவியைக் கருதி, ஆர் குறி வரல் காவல்
கடிந்தனம் - அமைந்த பகற் குறியிடத்து வராது காவலிட்டு விலக்கியுள்ளோம்.
(கு.உ): மடக்கணி நான்கடியும் முதலிருசீர் மடக்கு, கணி - வேங்கை, மதிப்புப் பொருளில் நிற்கவேண்டும். ஆர் - விகுதி சொல்லுவார் குறிப்பால் இழிதக வுணர்த்தும் பொருளில் நின்றது. யாரும் (பணி) என்பது உம்மை தொக்கு நின்றது.
பாங்கி இறைவியைக் குறிவரல் விலக்கல். (இது வெளிப்படை)
186. அப்பணி செஞ்சடை யானனை யாமவர்ச் சூழ்ந்துகனி
கைப்பணி வாப்பெறு மானையின் னாவலன் காவகத்தேர்க் கொப்பிணி பூங்குழை யாயனை கோங்கு குலவு கிளர்ப் பிப்பணி மென்மொழிக் கேதென் றயிர்ப்ப விரிககுறியே.
பதவுரை:- அப்பு அணி செஞ்சடையான் அன்னையாம் அவர் - கங்கை நீா அணிந்த சிவந்த சடையை உடையவனாகிய சிவனும் தாயாகிய உமாதேவியும் ஆகிய அவர்களைச், சூழ்ந்து பணிவா கனி கை பெறும் ஆனை பின் - சுற்றி வந்து பணிவாக மாதுளங்கனியைக் கையேற்றுக் கொண்ட ஆனைமுகத்தானுக்குத் தம்பியான ஆறுமுகனே இவன் என விளங்கிய, நாவலன் கோங்கு குலவு கிளர் காவகத்து - நாவலர் பிரானது

37
கோங்கு மரங்கள் விளங்கும் ஒளி பொருந்திய சோலையின் கண், ஏர் கொப்பு அணி பூங்குழையாய் - அழகிய காதணி அணிந்த தலைவியே, பணி இ மென் மொழிக்கு ஏது என்று அனிை அயிர்ப்பாள் - பணிந்த இந்த மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுக்கு வாய்ந்தது எங்ங்ணம் என அன்னை சந்தேகிப்பார், குறி இக - ஆதலால் குறியிடம் சேர்தலை நீங்கிக் கொள்.
இறைமகள் ஆடிடம் நோக்கியழிதல்
(இது வெளிப்படை) அழிதல் - இரங்குதல்
187. அக்கை யுடையா ரழலுறு தங்கைய ரம்மைத்துணி
மிக்க களத்தினர் ரம்மா முதலிய விண்மகளார் தக்க வணிகாப் பவராட்டைத் தான்விழை நாவலனார் மிக்க நல்லையிரு விப்புனங் கிள்ளையும் விண்டிடுமே
பதவுரை :- அக்கை உடையார் - எலும்பை மாலையாக உடையவரும், அழல் உறு தம் கையர் - நெருப்பு ஏந்திய கையை உடையவரும், அமை துனி மிக்க களத்தினர் - அத்தகைய கருமையான நஞ்சுத்துளி மிகுந்து ஒளிரும் கண்டத்தினரும், அ மா முதலிய விண்மகளார் தக்க அணி காப்பவர் - அத்தகைய இலக்குமி முதலாம் விண்மகளிரது தகுதியான அணிகலனான தாலியைக் காப்பவருமான சிவபரம் பொருளினது, ஆட்டை - நடனத்தை, தான் விழை நாவலனார் - தான் விரும்பும் இயல்பினரான நாவலர்பிரானது, மிக்க நல்லை இருவி புனம் - நிலைபேறுடைய நல்லையிலுள்ள தினைத் தாள்களோடு கூடிய புனத்தை, கிள்ளையும் விண்டிடும் - கிளி கூட விட்டு விலகி விடும்.
(கு.உ) முதலீரடி நாமாந்தரிதை, அக்கை, தங்கை, மைத்துணி, (சக்)களத்தி, அம்மா, மகள் என்ற முறைப்பெயர்கள் பிறிது பொருள்பட இயைந்து உள்ளமையின், தக்க அணி என்றதனால் தாலி கருதப்படும். அதைக் காத்தலாவது அவ்வம் மகளிரது கணவராம் திருமால் முதலானோர்க்குச் சீவ மோசம் நேராமற் காத்தலைக் குறிக்கும். கிள்ளையும் 'உம்' உயர்வு சிறப்பு.
பாங்கி ஆடிடம் விடுத்துக் கொண்ட கலல்
பாங்கி விளையாடுமிடம் விட்டு நீங்கி தலைவியைக் கொண்டு தம் ஊர்க்குப் போதல்
188 நல்லையி னாவலற் சாரா தவரென நைந்துருகி
யொல்லை யிவள்விழி நீர்நிறை யொண்டட மோங்குமலை கல்லையி லார்தினை வண்ட லருவிகாக் காவலிகந் தல்லையி லார்குழ லன்னைசொ லாலகன் றாளெனுமே

Page 80
138
பதவுரை:- நல்லையில் நாவலன் சாராதவர் என நைந்து உருகி -- நல்லையில் உள்ளோனாகிய நாவலர் பிரானது பகைவர் போல மனம் வருந்தி உருகி, இவள் விழி நீர் ஒல்லை நிறை ஒண் தடம் ஓங்கும் மலை - இவள் பெருக்கும் கண்ணிர் விரைவில் சேர்ந்து குளமாகி விட்ட சாரலோடு கூடிய உயர்ந்த மலையே , கல் அயில் ஆர் தினை - பாதத்தைத் துளைக்கின்ற கூர்மை வாய்ந்த தினைத்தாளே , வண்டல் - விளையாடு களமே , அருவி- அருவியே , கா - சோலையே , ( நம் தலைவர் இவ்விடம் வருங்கால் ) அல்லை இல் ஆர் குழல் அன்னை சொலால்-கருமை இழந்த கூந்தலை உடைய அன்னையின் சொல்லால் , காவல் இகந்து அகன்றாள் எனும் - தலைவி புனங்காவலின் நீங்கிச் சென்றுவிட்டாள் என்பீர்,
(கு.உ):- கல்லையில் அல்லையில் என்பவற்றில் 'ஐ' சாரியை.
பின்னாள், நெடுந்தகை குறிவயினிடு நின்றிரங்கல்,
தலைவன் குறியிடத்து வந்து நீட்டித்து நினைந்து இரங்கல்.
189. தேமொழி மாத ருடனே திளைத்திடு வேளையமு
தாமொழி வேளைநஞ் சாமிது வென்னை தரைமகள்சேய் தாமொழி தாமொழி நல்லை யிறைநா வலன்றெல்வென வேமொழி யாது மனவே தனைவினை யேனுறவே.
பதவுரை:- தேமொழி மாதருடனே திளைத்திடு வேளை அமுதாம்தேன்போலும் மொழிபேசும் தலைவியுடன் கலவி செய்கின்ற காலத்தில் அமுதாய் இனிக்கும் , ஒழி வேளை நஞ்சாம் - அது ஒழிந்த நேரம் நஞ்சாய்க் கசக்கும் , என்னை - இந்த உலகியல் என்ன , தரை மகள் சேய் - பூமாதேவியின் தவப்புதல்வனும் , தாமொழி தாம் ஒழி நல்லை இறை - பழிமொழிகளை நிராகரிக்கும் பண்பினனும் ஆன நல்லையின் தலைவனான, நாவலன் தெவ் என - நாவலர் பிரானது பகை போல , வினையேன் மனவேதனை உற - தீவினையேனாகிய நான் மன வேதனையைப் பொருந்த , யாது மொழி - என்ன காரணம் கூறுவாயாக.
(கு.உ):- இந்த உலகியல் தரைமகள் சேய் என்றது உலகு உய்யத் தோன்றியவள் எனும் நயம் பற்றி, தா-குற்றமும் பழியுமாம். பழிமொழி களாவன அவரால் அருமை செய்யப்படும் தமிழுக்கும் சைவத்துக்கும் அயலாரால் நேரும் அவதூறுகள் அவற்றை ஒழித்தல் , நல்லறிவுச்சுடர் கொளுத்தல் எதிர்க்கண்டனம் விடுத்தல் ஆகியவற்றால் என்க.

139
தலைவன் வறுங்களநாடி மறுகல்
தலைவி இல்லாத திணைப்புனத்தை நோக்கி வருந்துதல்
190, பிஞ்சு மதியணி பேணி மகனல்லை பேணியுறை
கஞ்ச னருஞ்சிறை காணவை யாறு முகன்வரைந லஞ்ச நடையிலை யாய்மயிற் சாய லிலையரிதாள் விஞ்சு பொருளிலை வேண்டுவை யென்னுங்கொன்
மென்மொழியே.
பதவுரை: பிஞ்சு மதி அணி பேணி மகன் - இளம் பிறைச் சந்திரனை அணிதலை விரும்பி மேற்கொள்பவனான சிவன் மகனும், நல்லை பேணி உறை - நல்லையை விரும்பி இருப்போனும் , கஞ்சன் அரும்கிறை காணவை - பிரமன் அறிய அரிய சிறைத் துன்பம் உணர வைத்தவனுமான, ஆறுமுகன் வரை - முருகப் பெருமானே போல்பவராகிய ஆறுமுகநாவலர் பிரானது மலையின்கண் , நல் அஞ்ச நடை இலை - அழகிய அன்ன நடை இல்லாது ஒழிந்தது, ஆய் மயில் சாயல் இலை - நுணுகும் அசைவழகு தரும் மயில் சாயலும் இல்லாது ஒழிந்தது, அரி தாள் விஞ்சு பொருள் இலை - தினைத்தாளுக்கு வேறாக எப்பொருளுமே இல்லை, மென்மொழி - மென்மையான மொழியை உடைய தலைவி , வேண்டுவை என்னும் கொல்-இந்த அருங் கலக் காட்சி உனக்கு வேண்டுமென்று இருப்பாரோ.
(கு.உ):- பேணி-பேணு + இ. இ விகுதி கருத்தாப் பொருளில் வந்தது. ஆதாரமாகிய தலைவி நீங்கினதுமே ஆதேயமாகிய அன்னநடை, மயிலின் சாயல் ஆதியனவும் அங்கிருந்து நீங்கினவாயின. வேண்டுவை என்னும் முன்னிலை வினை அவாய் நிலையாற் பெறும, .(நீ) யின் சேர்க்கையில் உனக்கு வேண்டும் என்றாம்.
தலைவன், தலைவி வாழுமூர் நோக்கி மயங்கல்
தலைவியின் ஊர் தேடிச் சேறுமெனில் அறிந்திலமென்று மதி மயங்கிக்
கூறல்
191. வான்மதி தன்னை விளையாட வாவென வாடியழு
மான்மதி யேய்மக வ்ாமென லாமனை யிற்செறித்த வூன்மதி நெஞ்சர் மகளை விரும்ப லுதபதிதா னேன்மதி நெஞ்ச மினைந்திடு வாய்நா வலன்வரைக்கே.

Page 81
140
பதவுரை:- நாவலன் வரைக்கு - நாவலர் பிரானது மலையின் கண், உது பதி தான் மனையில் செறித்த - உந்த ஊரில் உள்ள இல்லத்தில் பத்திரமாக வைக்கப்பட்ட , ஊன் மதி நெஞ்சர் மகளை விரும்பல் - மாமிசத்தையே எண்ணுகின்ற நினைவினரான குறவர் மகளை விரும்புதல்,
வான் மதி தன்னை விளையாட வா என - ஆகாயத்தில் உலவும் சந்திரனை விளையாட வருவாய் என, வாடி அழும் மால் மதி ஏய் மகவாம் 6T60TGOIT b - வருந்தி அழைத்து அழுகின்ற மயக்கப் புத்தி உள்ள
குழந்தையின் (செயல்) என்று கூறலாம், நெஞ்சம் - நெஞ்சமே , ஏன் இணைந்திடுவாய - ஏன் வருந்துகின்றாய்.
(கு.உ): செறித்த - செயப்பாட்டுப் பொருளில் நின்ற செய்வினை. ஊன் மதி நெஞ்சர் என்பது உணர்விலார் என்னும் குறிப்பில் நின்றது. மதி - ஆசை
13. இரவுக்குறி
(தலைவன் தலைவியை இரவுக்குறியிற் கூடுதல்)
இறையோன் இருட்குறி வேண்டல்
தலைவன் இருட்குறியை விரும்பிப் பாங்கியுடன் கூறல்
192. மல்லார் தொழில்வளத் தானல்லை நாவலன் மாட்டுலகி
வல்லார் வறுமை யழிதொழி லாளர்துன் பாற்றுகலை கல்லா தவரகங் காட்டன் முகமதி வாயமுத மல்லார் குழலெம் மகமாஞ் சகோரக் களித்திடுமே.
பதவுரை: மல் ஆர் தொழில் வளத்தால் - செழிப்பு மிக்க தொழில் வளம் பெருக்குதல் மூலம் , அல்லார் வறுமை - செல்வர் அல்லாதார் வறுமையினின்றும் , அழி தொழிலாளர் துன்பு - அழிக்கும் தொழில் பூண்டோரால் விளையும் துன்பத்தினின்றும், ஆற்று கலை - தணிக்கும் சாமர்த்தியத்தை, நல்லை நாவலன் மாட்டு - நல்லைப் பதியினராகிய நாவலர் பிரானிடம் இருந்து, கல்லாதவர் அகம் காட்டு அல் - கற்றுக் கொள்ளாதவரின் உள்ளத்தைப் போன்ற இருளில், அல் ஆர் குழல - இருள் நிறையும் கூந்தலினை உடைய தலைவி, முகமதி வாய் அமுதம்-தனது முகமாகிய சந்திரனில் ஒழுகும் அமுதத்தினை, எம் அகம் ஆம் சகோரக்கு அளித்திடுமே - எமது மனமாகிய சகோரப்பறவைக்கு அளித்திடுமா?

141
(கு.உ):- இரவுக்குறி வாய்ப்பு அறிய அவாவுகின்றான். ஆதலின் ‘ஏ’ வினாப் பொருளில் நின்றதாய் அமையும், சகோரக்கு - சாரியை தொக்கு நின்றது. நாவலர்பிரான் அல்லார் வறுமை யாற்றல் - நல்குரவு மலி சமூகநிலை குறி கொளற்கோர் முகம் எனவும் அழி தொழிலாளன் துன்பாற்றல் குத்திர உலோப வஞ்சக் கொள்கை மலி அரசாங்க நிர்வாக உத்தியோகத்தர் கொடுமை உட்கொண்டு கறுவிடவோர் முகம் என நாவலர் பிள்ளைத்தமிழ் கூறுமாற்றால் அறியப்படும்.
பாங்கி நெறியின தருமை கூறல்
( இது வெளிப்படை )
193. கரியரி தேர்ந்துழ லக்குழிக் கால்வழுக் கின்முதலை
மரியரி பற்கோத் திழுக்க விழுக்கும் வழிவரைக்க ணெரிசரி பாம்பளைப் போவது போல நெடுந்தகைநீ துரிவர லஞ்சுது நாவலற் சாரலர் துன்புறவே.
பதவுரை:- அரி கரி தேர்ந்து உழல் அ குழி கால் வழுக்கின் - சிங்கமானது யானையைத் தேடித் திரிதலால் கற்பாறை குவிந்துள்ள இடத்தில் கால் வழுக்கப்பெறின் , முதலை மரி அரி பல் கோத்து இழுக்க - முதலை அணுகி அரியும் தன்மை உள்ள தன் பல்லால் கொழுவி இழுக்க நேரும். இழுக்கும் வரை வழி கண் - இழுக்குடையதான மலை வழியின் கண், பாம்பு நெரி சரி அளை போவது போல - பாம்பானது நெரிந்து சரிந்து செல்லும் வழி ஊடாகத் தனது புற்றை அணுகச் செல்வது போல, நெடுந்தகை p5 --- பெருந்தகையாளனாகிய நீ, நாவலன் சாரலர் துன்புற - நாவலர் பிரானைச் சாராத பகைவர் படும் துன்பம் போல், துரி வரல் அஞ்சுதும - எம்மைத் தேடிவருதல் குறித்துப் பயப்படுவோம்.
(கு.உ):- மரீஇயும் துரி இயும் மருவி முறையே மரியும் துரியும் ஆயின. நீர் அசும்பு அறாத மலையிடம் ஆதலின் கால் வழுக்கல் இயல்பு எனக்கொள்க.
இறையோன், நெறியின தெளிமை கூறல்
( இது வெளிப்படை )
194. திருமா லுறுமன மஞ்சே னரவு சினவரியும்
பொருமா மதமா வதுவும் பொருதழி வேன்மினுண்டும் பெருமா லரைப்பாம் பிடையரி கொங்கைப் பெருங்கரிமான் மருமா னறுமுக னல்லை யுறாரென வஞ்சுவனே.

Page 82
142
பதவுரை:- திரு மால் உறு மனம் - தலைவியாகிய இலக்குமியின் கண் மயங்கும் மனத்தினனான நான், அரவு சின அரியும் பொருமா மதமா அதுவும் அஞ்சேன் - பாம்பையேனும் கோபம் மிகு சிங்கத்தையேனும் மோதிமுட்டும் மதத்தை உடைய யானையேனும் அஞ்சேன், பொருது அழி மின் வேல் உண்டு - அவற்றைத் தாக்கி வலி அழியச் செய்யும் ஒளி ஆர்ந்த வேல் என்னிடம் உண்டு, (எனினும் ) பெருமால் அரை பாம்பு
பேராசையை விளைவிக்கும் அல்குலாகிய பாம்புக்கும் , இடை அரிஇடையாகிய சிங்கத்துக்கும், கொங்கை பெரும் கரி- கொங்கையாகிய பருத்த யானைக்கும், மால் மருமான் அறுமுகன் - திருமாலின் மருகனாகிய
முருகனே போல்வானாகிய ஆறுமுகநாவலரின் , நல்லை உறார் என அஞ்சுவன் - நல்லையை அணுக அவர் பகைவர் பயப்படுவதுபோலப் பயப்படுவேன்.
பாங்கி அவனாட்டணியியல் வினாதல்
தோழி தலைவன் நாட்டுப் பெண்கள் அணியும் அணியையும் இயலையும் வினாவுதல்
195. ஒத்தக மேவெ னுயிர்க்குயி ராம னுவவுமதூர்
வித்தக மாதர்கள் சூடுவ பூசுவ மேனியணி நத்தக நற்கலம் யாவினை யாடு நறுநிழலென் சித்தக நாடு மறுமுகன் சீர்நலைச் செப்பியவே.
பதவுரை: ஒத்து (என்) அக மேவு என் உயிர்க்கு உயிராம் மனுவ - அபேதமாக என் உள்ளத்தோடு ஒன்றி இருக்கும் என் உயிர் அனைய தலைவிக்கு உயிராய்த் திகழும் தலைவ, உமது ஊர் வித்தக மாதர்கள் சூடுவ - உமது ஊரின் கண் உள்ள அறிஞராகிய பெண்கள் சூடுவனவும், பூசுவ- பூசிக் கொள்வனவும், மேனி அணி - உடம்புக்கு ஆபரணமாகக் கொள்வனவும், நத்து அக நற் கலம் - முவையிடத்து அணியும் நல்லாபரணமும் , விளையாடு நறு நிழல் என் - விளையாடும் வாசனை உடைய நிழல் இடமும், இன்ன என்பதை, சித்து அக நாடும் ஆறுமுகன் சீர் நலைச்செப்பிய - சித்துப்பொருளாகிய சிவத்தையே உள்ளத்தால் நாடும் ஆறுமுகநாவலர்பிரானது சிறப்பினை உடைய நல்லையில் செப்புக.

143
கிழவோன், அவனாட்டணியியல் வினாதல்
பாங்கி குறிப்பு அறிந்து அவள் நாட்டணி இயலைத் தலைவன் வினாவுதல்
196. முகின்மறை திங்கட் குறையெனு நன்னுதன் மொய்குழலே நகின்மறை சாந்த நணியினை நாவல னாட்டகத்தெங் குயின்மொழி யாரணி கூறிப் பயனென் குழன்மலர்பண் பயின்மர நீழ லணிசாந் துமர்க்கெவை பான்மொழியே.
பதவுரை:- நாவலன் நாட்டு அகத்து - நாவலர் பிரானது நாட்டின்கண், திங்கள் குறை முகில் மறை யெனும் நல் நுதல் மொய் குழலே - சந்திரனது துண்டமாகிய பிறையைக் கருமேகம் மறைத்து இருத்தல்போல நல்ல நெற்றியை மறைக்கும் மொய்த்த கூந்தலை உடையாய், எம் குயில்
மொழியார் - எம் நாட்டுக் குயில் போலும் இனிய மொழியை உடையராகிய மகளிர்களது , அணி நகில் மறை சாந்தம் நனி இனை கூறி பயன் என் - அணிகின்ற முலை மேல் சாந்தும் மற்றும்
அணிகளுமான அவற்றைக் கூறிப் பயன் என்ன, உமர்க்கு - உங்களுக்கு, குழல் மலர் - கூந்தலிற் சூடும் மலர், பண் பயில் மர நிழல் - பாடும் பண் விளையாட்டு அயரும் மர நிழல், அணி சாந்து - அணியும் சாந்து என்பன, எவை - எது எதுவோ, பான் மொழி - பான்மையின் மொழிவாயாக.
(கு.உ);~ எம் குயின் மொழியா ரணி கூறிப் பயனென் என்றது நுமர் அணியை நும்பாற் கேட்டலிற் பயனுண்டு என்பது படநின்றது. இணைய என்பது கடை குறைந்து இனை என்றாயிற்று.
பாங்கி அவற்குத் தன்னாட்டணியியல் கூறல்
( இது வெளிப்படை )
197 பிறைமுடி யான்விழி யாலழி வேட்பிழைப் பிப்பவர்போற்
பிறைமுடி சூடி நிழலார மாடிப் பெரியசந்தி னறையினி லாடி நறுஞ்சுனை யாடி நமர்குறிஞ்சி முறையினிற் பாடுவர் மூதுணர் நாவலன் முன்னுறவே.
பதவுரை:- மூதுணர் நாவலன் முன்னுற-முது உணர்வினராகிய நாவலர் பிரானும் கருதத்தக்கவாறு, பிறை முடியான் விழியால் அழி வேள் பிழைப்பிப்பவர் போல் - இளம் சந்திரன் விளங்கும் முடியினராகிய சிவபிரானது அக்கினிக் கண்ணால் வெந்து ஒழிந்துபோன மன்மதனை

Page 83
144
உயிர்ப்பிப்பவர் போல, பிறை முடி சூடி - சந்திரப்பிறை என்னும் ஆபரணத்தைத் தலையிற்சூடி , ஆர நிழல் ஆடி - சந்தன மர நிழலில் விளையாடி, பெரிய சந்தின் நறையினில் ஆடி - பெரிதாகிய
சந்தனமரத்தின் வாசனையில் தோய்ந்து, நறும் சுனை ஆடி - நறுமணம் உள்ள நீர் நிலைகளில் நீராடி, நமர் - நம்மவராகிய மகளிர், குறிஞ்சி முறையினில் பாடுவர் - குறிஞ்சிப் பண்ணை உரிய முறைப்படி பாடுவர்.
பாங்கி, இறைவிக்கிறையோன் குறிப்பறிவுறுத்தல்
பாங்கி தலைவனை ஓர் இடத்து நிறுவி, தலைவி பக்கற்சென்று தலைமகன் குறிப்பை அறிவித்தல்
198. போற்றிட மன்னவை யாற்றிட மன்னவை பூமலிநா வாற்றிட நாவல னார்பொழி லன்முலை யாடுகிரிப் பாற்றிட மேவியல் குற்கட லிற்படி பான்மையுரை சாற்றிட வந்தனர் தையால் புலம்பற்குச் சாற்றலென்னே.
பதவுரை:- மன் அவை போற்றிட - அரச சபையும் போற்றத் தக்கவாறு, பூ மன் மலி நவை ஆற்றிட - இப்பூமியின் கண் நிலைபெற்ற நிறைந்த சமூகக் குற்றங்கள் தீரச் செய்யும் நோக்கில், நா ஆற்றிட-நா வன்மையைக் காட்டுவதற்குரிய , அ நாவலன் ஆர் பொழில் - அத்தகையனான நாவலர் பிரானது நிறைவான சோலையிடத்தில், அல் - இரவில் , முலை கிரி பால் ஆடு - முலையாகிய மலையிடத்து மகிழ்ந்து ஆடி, அல்குல் கடலில் படி பான்மை உரை சாற்றிட - அல்குலாகிய கடலில் கலக்கும் உளப்பான்மையைத் தெரிவித்தற்கு, திடம் மேவி வந்தனர். - (காதலர்).திடங்கொண்டு வந்துள்ளார், தையால் - தலைவியே , புலம்பற்கு காற்றல் என்தனிமையாகத் துயருறும் நிலையினரான அவர்க்குச் சொல்வது 66:
(கு.உ);~ ஆடுஉ என்னும் செய்பூ வாய்பாட்டு வினையெச்சம் ஆடு எனத் திரிந்தது. அவர்க்கு அளிக்கும் பதில் சாதகமாய் இருத்தல் வேண்டும் என்பார் புலம்பன் என்றார். புலம்பு - தனிமை - பூமலி நவை - உலகின் கண் மலியும் குற்றங்கள் ஆதலின் சமூகக் குற்றங்கள் என்றாகும்.

145
நேரா திறைவி நெஞ்சொடு கிளத்தல்
இவ்வாறு கூறக்கேட்ட தலைவி இயையாது தன் நெஞ்சொடு கூறுதல்
199. மழைவளர் சாரல் வழிகயி றாமற் கரிகரியே
முழைவளர் சிங்க முழங்கு மிடங்கர்க் குழிகுழியே புழைவளர் நாக மணிவெயி லிற்றேர் முணவுணவே தழைவளர் தார்நா வலன்றெ வெனவவர் தாள்கல்வுமே
பதவுரை:- மழை வளர் சாரல் வழி கயிறாம் - முகில் படியும் மலைச்சாரலில் உள்ள வழியோ கயிறு அளவாம், கரி ஏய் அல் கரி - உண்மை யானையை ஒத்து இருக்கும் இருளாகிய யானையைக் குறித்து, முழை வளர் சிங்கம் முழங்கும் - குகையில் தங்கி இருக்கும் சிங்கம் முழங்கும் , இடங்கர் குழி குழி - முதலைகள் வாழும் நீர்க்குழி படுகுழியாகவே இருக்குமி, மணி வெயிலில் உணவு தேர் புழை வளர் நாகம் - தனது இரத்தின ஒளியில் உணவு தேடிக்கொண்டிருக்கும் புற்றில் வாழும் நாகம், தழை வளர் தார் நாவலன் தெவ் என - தளிர்த்தல் பொருந்திய மாலை அணியும் நாவலர் பிரானது பகைவர் போல் வந்து, அவர் தாள் உணவு கவ்வும் - காதலர் காலை உணவு எனக் கவ்வும்.
(கு.உ) :- கரி ஏய் அல் கரி எனக் கூட்டுக. குழி - குழியே என்றது. அக்குழி படுகுழி என்றபடி , உணவு எனும் பதம் உணவே எனத் திரிந்தது. தேர்ம் செய்யுமென் முற்றில் உயிர் ஏகிய நிலை.
நேரிழை, பாங்கியொடு நேர்ந்துரைத்தல்
நெஞ்சோடு கூறிய தலைவி பாங்கியோடு உடன்பட்டுக் கூறுதல்
200. பொன்மணத் தார்நெஞ் சகலா வறுமுகன்’ போற்றுநல்லை
வன்மதத் தானை மறத்து வரவடு மன்னர்நினை வுன்மனத் திற்குமு கந்தா லுயிரனை யுத்தமரை யென்மன மேவா விடுதலு மேய்ந்திடு மேயுரையே.
பதவுரை:- பொன் மனத்தார் நெஞ்சு அகலா அறுமுகன் போற்று நல்லை - பொன்போலும் நல்ல மனம் உள்ள மேலோர் நெஞ்சில் அகலாது இருக்கும் நாவலர் பிரான் போற்றுகின்ற நல்லையின் கண், வன் மத தானை ம்றுத்து வர அடு மன்னர் நினைவு - வலிய மதம் கொண்ட

Page 84
147
சேனை பகை மேற் கொண்டு வர எதிர்த்து மோதும் ஆண்மையினரான நம் மன்னனது கருத்து, உன் மனத்திற்கும் உகந்தால் - உன் உள்ளத்துக்கும் உகப்பாய் இருக்கு மேல், உயிர் அனை உத்தமரை - உயிர் போன்ற தலைவனை , என் மனம் மேவா விடுதலும் ஏய்ந்திடுமே - என் மனம் இசையாமல் இருத்தல் பொருந்துமோ , உரை - நீ சொல்வாயாக,
(கு.உ):- சிங்கம் நாகம் ஆய எத்துணைப் பகை இருப்பினும் அவற்றை எல்லாம் வென்று மீட்டார் அவர் என்றனது மனத்தெம்பைத் தெரிவிப்பாளாய் தானை மறத்து வர அடும் மன்னன் என்றார்.
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்குரைத்தல் ( இது வெளிப்படை )
201. நல்லார் புனைதமிழ் மாலை நறுங்குவ ளைத்திருத்தா
ரெல்லார் புயநா வலனல்லை யேழைநெஞ் சாஞ்சந்திரக் கல்லெ னதற்கெ லுரைமதி யாகக் கரைந்ததுகாண் சொல்லார் மதுரத் தமிழ்நற வுண்டிடு தூவளியே.
பதவுரை:- நல்லார் புனை தமிழ் மாலை - புலவர்கள் புனையும் தமிழ்
மாலையோடு, நறும் குவளை திரு தார் - நறுமணம் உடைய குவளையின் அழகிய மாலையும் (சூடும்), எல் ஆர் புய நாவலன் நல்லை ஏழை - ஒளி ஆர்ந்த தோள்களை உடைய நாவலர் பிரானது
நல்லையின்கண் வாழும் தலைவியினது, நெஞ்சாம் சந்திரகல் என் அதற்கு - நெஞ்சு' என்கிற சந்திர காந்தக் கல்லுக்கு, என் உரை மதி ஆக - உமது கருத்தைக் கொண்டு கூறிய எனது உரை சந்திரனாக வாய்ந்ததனால், சொல் ஆர் மதுர தமிழ் நறவு உண்டிடு தூ அளியே - புகழ் ஆர்ந்த இனிய தமிழ்த் தேனை நுகர்ந்திடும் தூய்மையான அளி அரசு போலும் தலைவனே, கரைந்தது - அவள் மனம் உருகியது, காண் - BT60iruTunes.
(கு.உ):- தலைவியினது நெஞ்சத் தகைமை மகிமை மேம்படுப்பார் கல்லுக்கு என்னாது கல் என் அதற்கு என்றார் அளி - வண்டு.

148
குறியிடை நிறீஇத் தாய் துயிலறிதல்
பாங்கி தலைவனைக் குறியிடத்து நிறுத்தித் தாயினது துயிலை அறிதல்.
202. நல்லை நகருறை நாவல னும்மைய நாட்டமுற
வல்லை நிகர்குழ லாயற் புதமொன் றறைகுவன்பூங் கொல்லை யுறுகுரங் கார்சினை கொண்டதொர்
கோதிறும்பி முல்லை மெயிலதி லாடிய வந்து முரலுவதே.
பதவுரை:- அல்லை நிகர் குழலாய் - இருளை ஒத்த கூந்தல் உள்ள தலைவியே, நல்லை நகர் உறை நாவலனும் ஐய நாட்டம் உற - நல்லை நகரில் வாழும் நாவலர் பிரானும் சந்தேக நோக்கு உறும்படியாக உள்ள, அற்புதம் ஒன்று அறைகுவன் - அதிசயம் ஒன்று சொல்வேன், (அது யாதெனில் ) பூ கொல்லை உறு குரங்கு ஆர் சினை கொண்டது ஓர் கோது இல் தும்பி - பூக்கள் நிறைந்த தோட்டத்தின் கண் உள்ள வளைவு கொண்ட கொம்பில் தங்கிய ஒரு குற்றமற்ற வண்டு, மெய் இல் முல்லை அதில் ஆடிய வந்து முரலுவது - மெய் இல்லாத முல்லை என்றற்குச் சமமாகிய முலையில் ஆடுதற்கு வந்து சப்திப்பதே (ஆகும்).
இறைவிக் கிறைவன் வரவறிவுறுத்தல்
(இது வெளிப்படை) வரவு - குறியிடத்து வரவு
203. நெறிவளர் பாம்புக் கிடியுங் கரிக்கு நெருப்பரியுங்
கறிவளர் சாரற் கடிமலை நாடர் கடியரிக்குக் குறிவளர் காவிற் சகோரமு மாமெனக் கூடினருன் நெறிவளர் காரண் மதிநீ ருணநா வலன் பொழிற்கே.
பதவுரை:- நெறிவளர் பாம்புக்கு இடியும் - நெறித்து நீளும் பாம்புக்கு இடியேறும், கரிக்கு நெருப்பு அரியும் கடி - யானைக்கு நெருப்பும் சிங்கமும் பகையாம், கறி வளர் சாரல் - மிளகுக் கொடி படரும் மலைச் சாரலில், அரிக்கு மலை நாடர் கடி - சிங்கத்துக்கு மலைவாழ்நர் பகையாம், (இத்தகையதோர் பகை மலிந்த சூழலில்) நாவலன் பொழிற்கு - நாவலர் பிரானது சோலையாகிய, குறிவளர் காவில் - இரவுக் குறியாய் அமையும் அவ்விடத்தில், உன் நெறி வளர் கார் அண் மதி நீர் உண - உனது நெறிப்பு மலியும் கூந்தலாகிய மேகத்தைச் சமீபித்து இருக்கும்

Page 85
149
முகச் சந்திரனது அமுதம் பருகுதற்கு, சகோரமுமாம் என கூடினர் - சகோரப் பட்சியும் உனது எனும்படி (காதலர்) வந்து சேர்ந்தனர்.
பாங்கி, இறைவியைக் குறியிடைக் கொண்டுசேரல் (இது வெளிப்படை )
204. கண்மறுத் தேயிதழ் தாமரை கூடுமிக் கங்குலளி
கண்மதுத் தாமுண முல்லைக் கடிமலர் கண்ணவிழ்தல் கண்மணத் திற்குங் களிவரக் கண்டிடக் கம்மனையை யெண்ணிட நீயென வாக்கி யியனா வலன்பொழிற்கே
பதவுரை:- கம் அணை நீ என எண்ணிட ஆக்கி - நீரா மகளிர் என்பது நீ என்றே எண்ணும்படி ஆக்குபவளே, தாமரை கண் மறுத்தே இதழ் கூடும் இக் கங்குல் - தாமரையானது தேன் கொடுக்க மறுத்து இதழ்களை மூடிக்கொள்ளும் இவ் விரவில் , அளிகள் தாம் மது உண - வண்டுகள் தேன் உண்ணுமாறு , முல்லை கடி மலர் கண் அவிழ்தல் - முல்லையின் மணம் மிக்க மலர் கொட்டு விரிதல் , கண் மனத்திற்கும் களி வர கண்டிட - கண்ணுக்கும் மனத்துக்கும் களிப்பு உண்டாகுமாறு காணும் பொருட்டு , நாவலன் பொழிற்கே இயல் - நாவலர் பிரானது சோலைக்கண் இயல்வாயாக. (நின்று உலாவுவாயாக ) கம் - நீர் ; அனை - அன்னை; கம்மனை - நீரரமகளிர்
பாங்கி இறைவியைக் குறியுய்த்து நீங்கல்
பாங்கி தலைமகளைக் குறியிடத்துச் செலுத்தித் தான் அகன்று போதல்,
205. பாண்டியர் தந்த தமிழமு துண்ணப் பரவைமனை
வேண்டின ர்க்காச்சந்து மேவினன் மேவு வியலறிவு தூண்டின னாவலன் காச்சந் தளிமுறி தூமலர்வெண் நாண்டினி கொங்கை யமரிவ ணான்கொய்து நல்குவனே.
பதவுரை:- பாண்டியர் தந்த தமிழ் அமுது உண்ண - பாண்டியரால் தரப் பெற்ற செந்தமிழ் அமுதை நுகரும் பொருட்டு, பரவை மனை வேண்டினர்க்கா சந்து மேவினன் - பரவை வீடு சென்று அடைய விரும்பிய சுந்தரர் பொருட்டுத் தூது செலற்கு அமைந்தவனாகிய சிவனை, மேவு இயல் அறிவு தூண்டினன் நாவலன் கா - அடைதற்கு உகந்த ஆகம அறிவைத் தூண்டிய நாவலர் பிரானது சோலையின் கண், அளி சந்து முறி தூ வெண் மலர் நான் கொய்து நல்குவன் -

150
குளிர்ச்சியான சந்தனத் தளிர் தூய்மையான வெண்மலர் (ஆகியன) கொய்து வந்து தருவேன். நாண் , திணி கொங்கை - மார்புக் கச்சைக்குள் செறிந்துள்ள கொங்கைகளை உடைய தலைவியே, இவண் அமர் - இவ்விடத்தில் இருந்து கொள்வாயாக,
வண்டுறை தாரோன் வந்தெதிர்ப்படுதல்.
வண்டுகள் மொய்க்கின்ற மாலையணிந்த தலைவன் வந்து எதிர்ப்படுதல்.
206. அகமினி தீந்தமிழ் கல்லா ரகம்போ லறவிருண்டு தகவறு மற்றவர் நெஞ்சுக ணஞ்சத் தடித்திடித்து நகமழை தூவிரு னாவலன் செய்திடு நல்லளிபோன் முகமதி யாரமு தன்னஞ் சகற்ற முடுகினையே.
பதவுரை:- அகம் இனி தீம் தமிழ் கல்லார் அகம் போல் அற இருண்டு - உள்ளத்துக்கு இனிமை தரும் இனிய தமிழைக் கற்காதவர் மனம் போல மிக இருண்டு, தகவு அறும் மற்றவர் கண் அஞ்ச தடித்து நெஞ்சு இடித்து - தகுதி அற்ற ஏனையோர் கண் அஞ்சும்படியாக மின்னியும் நெஞ்சு அதிரும்படி இடிஇடித்தும், நக மழை தூவு இருள் - மலையிடத்து மழை சொரிகின்ற இவ்விருள் வேளையில், நாவலன் செய்திடு நல் அளி போல் - (பாத்திரமாவார்க்கு) நாவலர் பிரான் செய்யும் தண்ணளி ஓர் உரு எடுத்து வந்தாற் போல, முகமதி ஆர் அமுது அல் நஞ்சு அகற்ற முடுகினை - முகமாகிய சந்திரனில் ததும்பும் அமுதானது இருளாகிய நஞ்சை விலக்க விரைவாக வந்துள்ளாய்.
(கு.உ):- தடித்தலும் இடித்தலும் கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
நிரனிறையாகக் கொள்க.
தலைவி ஆற்றின தருமை நினைந்திரங்கல்
தலைவி, தலைவன் வரும் வழியினது அருமையை நினைத்து இரங்கல்
207. மண்ணுண்ணி போற்றுமை மாதவன் சேய்நல்லை
மன்னுமகக் கண்ணுண்ணி நாவலற் சேரா ரெனவிரு கண்மறைய விண்ணண்ணி மேகம் பொழிபுன லாறு விளக்கொழியல் எண்ணண்ணி லாகாக் கிரியிடைத் தீநெறி யேகுவதே.

Page 86
151
பதவுரை:- நல்லை மன்னும் - நல்லையில் கோயில் கொண்டு இருக்கும், மண் உண்ணி போற்று உமை மாதவன் சேய் - ஒருகால் பூமியை விழுங்கிய திருமால் துதிக்கும் உமாதேவியைப் பிரியாத சிவன் மகனான முருகப் பெருமானை, அக கண் உண்ணி - அகக் கண்ணால் அனுபவிக்கும், நாவலர் சேரார்' என - நாவலர் பெருமானது பகைவர் புரியும் கொடுமை போல, இரு கண் மறைய மேகம் விண் நண்ணி புனல் பொழி ஆறு - இரு கண்களும் மறையுமாறு மேகம் ஆகாயத்தில் கூடிப் பொழியும் நீர் பாயும் வழியில், விளக்கு ஒழி அல் - ஒளியை ஒழிப்பதாகிய இருளில், எண் நண்ணில் ஆகா - மனம் செல்லுதல்
முடியாத, கிரியிடை தி நெறி ஏகுவதே - மலையிடத்து ஆபத்தான வழியில் என் பொருட்டு வருவதா?
(கு.உ):- உமை மாதவன் என்ற அனுக்கம் அவர்தம் பிரியாமை தோற்றும், உமையின் பெருந் தவத்தால் நாயகனாக அடையப் பெற்றவன்
என்ற வரலாற்று உணர்வுந் தோன்ற நின்ற நயம் காண்க. உண் + இ உண்ணி - "இ" கருத்தாப் பொருள் விகுதி. எண் என்புழி உயர்வு சிறப்பும்மை விரித்துக் கொள்ளப்படும். ஒழி அல் - வினைத் தொகை,
ஏகுவதே என்பது எம்மாட்டு வைத்த கருணை இருந்தவாறு எனும் தொனிபட நின்றது.
தலைவன் தேற்றல்
தலைவியைத் தலைவன் தேற்றுதல்
208. என்னொரு கைவே லுனவிரு கண்வே லிவையுமன்றி
மன்மத னாட்டுணை வந்தா னெனையச்ச மண்ணிடுமோ தன்னருஞ் சைவ மதருக்கு நாவலன் றண்ணுரையி லின்னறு நின்மொழி யுண்டே யிரங்க லெனதுயிரே
பதவுரை: என் ஒரு கைவேல் - எனது ஒரு கை வேலும், உன கண் இரு வேல் இவையும் அன்றி - உனது கண்களாகிய இரு வேல்களும் அல்லாமல், மன்மதன் ஆள் துணை வந்தான் - மன்மதனும் மனித
கவசழாக என்னை அணைந்து வந்தான், எனை அச்சம் மன்னிடுமோஇங்ங்னமாகையில் என்னைப் பயம் பொருந்துமோ, தன் அரும் சைவ
மதருக்கு நாவலன் தண் உரையில் - தன் அருமைக்குரிய சைவ சமயத்தாருக்கு நாவலர் பிரான் அருள் உரை போல, நின் இன் நறும் மொழி உண்டே - உனது .இனிய நன்மை அளிக்கும் மொழியும் தான் வேறு உண்டோ, எனது உயிரே - எனது உயிர் போன்றவளே, இரங்கல் - என் வரவுத் துன்பம் குறித்து இரங்கற்க,

152
(கு.உ)- ஆள் துணை - மனித கவசம். மன்மதனும் என உம்மை விரிக்க. இவ்வும்மை எச்சமோடு உயர்வுமாம், ஓ - எதிர்மறை. வழி எதிர் துன்பம் போக்க வேலும் ஆளும் துணையாதலுடன் பகைத் துன்பம் அல்லாத நடைச் சிரமத் துன்பம் போக்கும் சாதனம் நின்பால் உண்டு என்பான் மொழி உண்மையையும் இயைத்திட்டான் என்க.
புணர்தல்
(இது வெளிப்படை)
209. முலைமலை யேறிநன் முத்தா மருவி முழுகிவிசை
யலையலை யின்பச் சுழியுறு மல்குற் கடற் படிந்தெ னுலைதலை நீக்கி யொருபெரு வீட்டின்ப மெய்தினனெஞ் சலைதலை யில்லா னறுமுக நாவல னன்பெனவே.
பதவுரை:- முலைமலை ஏறி - முலையாகிய மலையில் ஏறி, நல் முத்தாம் அருவி மூழ்கி - நல்ல வாய் முத்தாகிய அருவியில் முழுகி, விசை அலை அலை இன்ப சுழி உறும் - வேகம் கொண்ட அலை மேல் அலையாய்ச் சுழிக்கும் இன்பச் சுழியோடு கூடிய, அல்குல் கடல் படிந்து - அல்குல் ஆகிய கடலின் கண் அமிழ்ந்தி, என் உலை தலை நீக்கிநெஞ்சு அலைதலை இல்லான் அறுமுக நாவலன் அன்பென - நெஞ்சம் இலட்சியத்தில் நின்று விலகுதலாகிய அலைதற் குணம் இல்லாத அறுமுக நாவலர் பிரானது அன்பினிமை என்னுமாறு, ஒரு பெரு வீட்டு இன்பம் எய்தினன் - ஒப்பற்ற பெரிய வீட்டின்பம் பெற்று உய்ந்தேன்.
(கு.உ):- தலைவி மாட்டுத் தான் பெற்ற இன்பம் நாவலர் அன்பு இன்பத்தின் வேறாகாது எனினும் நயப்பானே நாவலன் அன்பென வீட்டின்பம் எய்தினன் என்றான் என்க. ஒரு என்பது இனங் காணற்கரிய என்றுமாம். உலைதல் என்பது அதன் விளைவாம். துன்பத்தின் மேற்று.
புகழ்தல்
210. அந்தர நின்றே முகிலு மலறி யழுதழுது
சிந்தின நீரது வன்றே மழையெனச் செப்பிடுவர் நந்தன கொங்கை குழலது கண்டிடு நாணதனா னந்தனு மேதாழ் சிவமத நாவல னல்லையிலே.

Page 87
153
பதவுரை:- நந்தனுமே தாழ் சிவமத நாவலன் நல்லையில் - பாஞ்ச
சன்னியம் எனும் சங்கு ஏந்தியவனான விஷ்ணுவினாலும் தாழ்ந்து இறைஞ்சப்பெறும் சிவனது சமய வீரனாகிய நாவலர் பிரானது நல்லையின் கண், நம் தன கொங்கை குழலது கண்டிடு நாண் அதனால் - நமக்குப் பெருந்தனமாகிய கொங்கைகள் உள்ள தலைவியின் கூந்தலைக் கண்டதனாலான நாணத்தினால், முகிலும் அந்தரம் நின்றே அலறி - முகில் என்பதும் ஆகாயத்தில் நின்றவாறே வாய் விட்டுப் புலம்பி, அழுது அழுது சிந்தின நீரது அன்றே மழை என செப்பிடுவர் - இடைவிடாது அழுது கொண்டு சிந்தின கண்ணிரை அன்றோ உலகத்தவர் மழை என்று கூறுவர்.
(கு.உ) :- நந்தன கொங்கை - சங்கை ஒத்த கொங்கை உள்ளாள் எனலுமாம். எனினும் முன்னும் நந்து அதே பொருளில் வருதலின் நம்தன கொங்கை எனக் கொள்ளல் சாலும், கொங்கை - சினை ஆகுபெயர்.
இறைமகளிறைவனைக் குறிவரல் விலக்கல்
(இது வெளிப்படை)
211. என்னில நீரை யவாவி யிரவி லியலரிய
கன்னில விட்டரு மச்சச் சுவைதரு கங்குனெறி மன்னில தாகொடி தின்னாமை வேண்டி னிரவெழுக வென்னல சொல்லறி யாய்கொனந் நாவல னேரண்ணலே.
பதவுரை:- நம் நாவலன் நேர் அண்ணலே - நம் மதிப்புக்குரிய நாவலர்பிரானை ஒத்த அண்ணலே, என் இளம் நீரை அவாவி - எனது இளமை நலத்தை விரும்பி, இரவில் இயல் அரிய கல் நில - இரவில் இயங்குதற்கு அரிய மலை நிலத்து, இட்டரும் அச்ச சுவை தரும் நெறி - ஒடுக்கமானதும் அச்சச் சவை ஊட்டுவதுமான வழியில், கங்குல் மன்னில் அது ஆ கொடிது - இரவு வருவதென்றால் அது கொடிதே, இன்னாமை வேண்டின் இரவு எழுக என் நல சொல் அறியாய் கொல் - துன்பம் ಙ್ಗಕ್ಖೇಣಿ இரவில் புறப்படுக எனும் ஆன்றோர் வாக்கினை அறியீர்
LITLD.
(கு.உ):- நமக்கு இன்றியமையாதவர் நாவலர் எனும் அவர் மகிமை தோன்ற நம் நாவலர் என்றார். இட்டரும் இட்டிதாம் வகையில் அரிதாயுள்ள இட்டிது - ஒடுங்கியது. இன்னாமை - - - எழுக என்ற

154
மூதுரையில் இரவு என்ற சொல்லின் சிலேடை இயல்பைத் தான் வேண்டியது முடித்தற்குத் தலைவி ஆதாயப்படுத்திக் கொண்டதன் நயம் காண்க. நீர்மை - தன்மை நலம், இளநீர் என்பது உருவகமாய் முலையை உணர்த்தலுமாகு மாதலின் என் முலை நலத்தை விரும்பி 6T60tgjLDTib.
இறைவன், இறைவியையில்வயின் விடுத்தல்
தலைவன் தலைவியை மனையிற் செல் என விடுத்தல்.
212. தனத்தோ டடிகை முகங்க ணிதம்பந் தருசுழிகொண் டினத்தோ டெழாமு னெனதுயி ராமன்ன மின்மொழிமெய்ம் மனத்தோ டொருகறை யில்லவ னாவலன் வண்கிரிக்கண் இனத்தோ டினமுறல் போல வியலுதி யின்மரைக்கே.
பதவுரை:- எனது உயிராம் அன்னம் - எனது உயிர் அனையளாய் அன்னம் போல் இயலும் தலைவியே, தனத்தோடு அடி கை முகம் கண் நிதம்பம் தரு சுழி கொண்டு - பயோதரம், பாதம், கரம், வதனம், விழி, அல்குல், (இன்பம்) தரும் உந்திச் சுழி ஆகிய உறுப்புக்களைக் கொண்டு திகழும் (மங்கையர் உட்பட்ட) இனத்தோடு எழா முன்-உன் சுற்றத்தார் திரண்டு உன்னைத் தேடுதற்கு எழ முன்னாகவே, இன் மொழி மெய் மனத்தோடு - வாக்கு, காயம், மனம் என்ற மூன்றின் பாலும், ஒரு கறை இல்லவன் - சற்றும் குற்றம் இல்லாத (திரி கரண சுத்தியாளனான, நாவலன் வண் கிரிக் கண் - நாவலர் பிரானது வளம் மிக்க மலையிடத்தின் கண், இனத்தோடு இனம் உறல் போல - இனத்தோடு இனம் சேர்வது போல, நின் மனைக்கு இயலுதி - (நின் ஆயத்தோடு கூடி) நின் மனைக்குச் செல்வாயாக.
இறைவியை யெய்திப் பாங்கி கையுறை காட்டல
(இது வெளிப்படை)
213. நெய்யேந் தியகுழ னின்விழி யஞ்சிய நீள்குவளை
நையேந்திய மடுப் புக்குப் பயமுற நண்ணியதுன் கையேந்தி யேனும் பயமுற விக்குதி கார்க்கதிர்நெற் செய்யேந் தியநல்லை நாவலற் சேர்ந்தவர் சீருறவே.

Page 88
155
பதவுரை:- கார் கதிர் நெல் செய் ஏந்திய நல்லை - கரும் பச்சைநிறமான நெற்கதிர்களைத் தாங்கும் வயல்களை ஏந்திக் கொண்டிருக்கும் நல்லையின் கண் வந்தருளிய, நாவலன் சேர்ந்தவர் சீருற - நாவலர் பிரானைச் சேர்ந்தவர்கள் புகழ் பெறும்படியாக, நெய் ஏந்திய குழல் - எண்ணெய் நீங்காத கூந்தலினளாய தலைவியே, நின் விழி அஞ்சிய நீள்குவளை - உனது கண்ணுக்கு எதிர் நிற்க அஞ்சியதால் நீண்ட இக் குவளை மலரானது, நை ஏந்திய மடு புக்கு பயம் உற நண்ணியது - தளர்ந்து உயர்வான மடு நீரில் புகுந்து இது காறும் பயந்து கொண்டு இருப்பதாயிற்று, (அதற்கு இரங்கும் பாங்கில்) உன் கையேந்தியே நும் பயம் உறல் நீக்குதி - உன்கையில் ஏந்தி உமது பயம் அடையும் சார்பை (முற்ற) நீக்கி விடுவாயாக.
(g).D ) : நாவலற் சேர்ந்தவர் சீருற கையேந்தியேனும் பயமுறல் நீக்குதி' என்றதனால் நாவலற் சார்ந்தார் சற்றேனும் அச்சம் அற்று இருக்கும் வாய்ப்பினைப் பெறுவர் எனப் பாட்டுடைத் தலைவன் மேன்மை SoÜLL- வைத்தமை காண்க, சத்துவ நிதியே தவநிதியே சற்குனரக்ஷதயா நிதியே (நாபி.தமிழ் - தாலப்பருவம்) என்பதனோடு ஒட்டுக.
பாங்கி தலைமகளை யிற்கொண்டேகல்
பாங்கி தலைவியை மனையிடத்தில் கூட்டிப் போதல்
214. அரியயன் காணா வடிகண் டறுமுக னாறிருகா
னரிமக வேய்நல்லை நாம்போ குவமன்னை நாடினுந் மரிகரு நீலஞ் சிவந்தது காணினு மாஞ்செவ்வல்லி விரிதரு வெண்குமு தந்நிலை மேவலும் வேதனையே.
பதவுரை:- அரி அயன் காணா அடி கண்டு அறுமுகன் ஆறும் - விஷ்ணுவும் பிரமாவும் கண்டு அறிய இயலாதிருந்த திருவடியைத் தரிசித்து நாவலர் பிரான் ஆறி இருத்தற்கு இடமாவதும், இரு கால் நரி மகவு ஏய் நல்லை - இரு கால் நரியாகிய சம்புவின் (சிவன்) மகனாம் முருகன் வாசஸ்தலமாய் பொருந்தி உள்ளதுமாய நல்லையின் கண், நாம் போகுவம் - நாம் போய்ச் சேருவோம், அன்னை நாடினும் - அன்னை எம்மைத் தேடினும், அரி கருநீலம் சிவந்தது காணினும் - செவ்வரி பரந்த கரு நீலக்கண்கள் சிவந்து இருப்பதைக் காண நேர்ந்தாலும், செவ்வல்லி விரிதரு வெண் குமுதம் நிலை மேவலும் - செவ்வல்லி போன்ற நம் வாய் இதழ் அலர்ந்த வெள்ளாம்பல் போல் வெளிறி இருக்கப் பெறுதலும், வேதனையேயாம் - நமக்கு வேதனையே தருவனவாம்.

156
(கு.உ) :- மேவலும் எனல் பின்வருவன நாடினும் காணினும் என்பன நாடலும் காணலும் என நின்றனவாகக் கெள்ளக விழி சிவத்தல் வாய் இதழ் வெளுத்தல் ஆகியவை புணர்ச்சியால் நேரும் விகாரங்கள். இவ்விகாரங்கள் காணுறின் அன்னை விசாரியாது ஒழியாள். அது வேதனை தரும். எனவே இவை கண்ணில் படாமலும் இருந்ததற்காம் உபாயத்தால் சென்றடைவோமாக என்பது குறிப்பெச்சம், அரி கருநிலம் - அடையடுத்த ஆகுபெயர். நம்மெனத் தோழி தன்னையும் உளப்படுத்துரைத்தாள் தலைவியின் தொன்மை பேணும் தன் தகவு தோற்றற் பொருட்டாம்.
பாங்கி பின் சென்றிறைவனை வரவுவிலக்கல்
பாங்கி தலைமகளை மனையிற் சேர்த்திப் பின் தலைவன் பாற் சென்று இவ் இருளில் இனி வாரல் என்று வரவு விலக்கிக்கூறுதல்
215. இருட்குறிக் காமுடை மாலையும் பூண்டெஃக மேந்தினைநீ
யருட்குறிக் கோளுடை யாறு முகனல்லை யண்மினையேன் மருட்குறிக் கொள்ளுவர் மால்யானை யென்றுனை
வண்புனத்தே பொருட்குறிக் கொள்தினை யூர்கா வலதும் பொருந்தினதே.
பதவுரை:- நீ - (தலைவ) நீ, இருட்குறிக்கு ஆம் உடை மாலையும் பூண்டு - இருட்குறிக்குப் பொருந்தும் உடையும் மாலையும் அணிந்து கொண்டு, எஃகம் ஏந்தினை - வேலும் கையில் தாங்கியவனாய், அருள் குறிக்கோள் உடை ஆறுமுகன் நல்லை அண்மினையேல் - அருளே தன் சேவையின் குறிக்கோளாய்க் கொண்டுள்ள நாவலர் பிரானது நல்லையை அணுகினாயானால், மால் யானை என்று உனை மருள் குறி கொள்ளுவர் - மத யானை என்று உன்னை மயக்கக் காட்சியால் குறி வைப்பார்கள், வண் புனத்தே - வளந்தரும் தினைப் புனத்தில், தினை பொருள் குறிகொள் - தினையாகிய பொருட் காவலைக் குறிக்கொள்வாய், ஊர் காவல் அதும் பொருந்தினது - ஊர் காவற்படை எனும் அதுவும் அமைந்து இருக்கின்றது.
(கு.உ) :- ஒரு காரணமும் பற்றாது எழும் சீவ இரக்கமே நாவலர் பிரான் சேவையின் உள்ளிடென்பார். அருட்குறிக் கோலுடை நாவலன் என்பார், "கருணை மிகு - ம் - - தருமமு நிகழ்த்தி வெகுசன ருயிர் புரந்த வேள்" - நாவ. பி. த சப்பாணிப் பருவம் செய், 3. மருளால் உனைக் குறிக் கொள்வர் என்பது மருட்குறிக் கொள்வர் "என்றாயிற்று

Page 89
157
மருள் - மயக்கக் காட்சி. குறிக்கொள்ளல் - இலக்கு வைத்தல். இருளில் இனம் காண விடாது தடுக்கும் ஆடையும் மாலையும் தந்தம் போல் மின்னும் கைவேலும் மயக்கக் காட்சி ஏதுக்களாம். இச் செய்யுள் மயக்க அணி பட நின்றது. 'அது' என்னும் விதப்பு ஊர் காவல் மேல் உள்ள வெறுப்பு உணர நின்றது. முற்றுகரம் கெட்டுப் புணர்ந்தவாறம் அவ் வொற்றுப் புணர்வுக்கு மெருகூட்ட நிற்றல் நுண்ணுணர்வாற் காண்க.
தலைவன் மயங்கல்
பாங்கி இவ்வாறு இரவுக் குறி விலக்கிய சொற் கேட்டுத் தலைவன் மயங்கிக் கூறல்.
216. என்று மிருக்குமிவ் வின்ப மெனவிருந் தேனறத்தைக்
கொன்ற வகம்புக லில்லா வறுமுகக் கோனலைவாய் ஒன்று மிர்க்க மிலரிவ ரென்னி '. தொள்ளிய மண் டின்ற விரும்பென வாயின னேமனஞ் சீர்குலைந்தே
பதவுரை: அறத்தை கொன்ற அக்ம் புகல் இல்லா கோன் அறுமுகன் நலைவாய் - (நற் கடமையாகிய) தர்மத்தை அழித்த இடத்தில் புகுதல் இல்லாத தலைவனாம் நாவலர் பிரான் நல்லையின் கண், இவ் இன்பம் என்றும் இருக்கும் என இருந்தேன் - இந்த இன்பமானது என்றும் இடையீடின்றி இருக்கும் என நினைத்திருந்தேன், இவர் ஒன்றும் இரக்கம் இலர் - இப் பாங்கியும் தலைவியும் சிறிதும் இரக்கம் இல்லாதவர்களாய் உள்ளனர், இஃது என் - இது என்ன விபரீதமோ, மனம் சீர்குலைந்து - இன்பம் கருதி இருந்த மனம் இவ் விபரீதத்தினாலே நிலைகேட்டு, ஒள்ளிய மண் தின்ற இரும்பென ஆயினன் - தெளிந்த மண்ணால் அரிக்கப் பெற்ற இரும்பு எனுமாறு ஆயினேன்.
(கு.உ) :- இ.தென், ஆயினனே என்பன இரக்கப் பொருட்டு, அறக்கொன்றார் - அறத்தைத் தின்றார். கோயில் குருகுலம் ஆகிய அற நிலைகளில் கூடுறு சிவ சொத்தைத் தின்றவர் சிவதர்ம பாவகரென நிகழ் சிறுமை பொறுக்காமே - நாவ. பி.த - செங்கீரைப் பருவம்.

158
தோழி தலைமகள் துயர் கிளந்து விடுத்தல்
தோழி தலைமகனுக்குத் தலைமகள் துயரைக்கூறி, நி போய்ச் சேர்ந்த செய்தி யாம் அறியும்படி குறி செய்யென்று கூறி விடுத்தல்.
217. அச்சச் சுவைக்கோ ரிலக்கிய மாகு மருநெறிநீ
துச்ச மதாநினைந் தேவர றோகை துயர்வருத்தங் கச்ச மகன்றுயிர் காவலன் காவல நாவலனு ரச்ச மகல வடைந்தமை காட்டுதி யாண்டகையே.
பதவுரை:- காவல - தலைவ, அச்ச சுவைக்கு ஓர் இலக்கியமாகும் அரு நெறி - அச்சச் சுவை இலக்கணத்துக்கு ஒப்பற்ற இலக்கியமாக அமையும் கடத்தற்கு அரிய மலை வழித் துயரை, நீ துச்சம் அதாக நினைந்து வரல் - நீ அற்பமென நினைத்து வருதல், தோகை துயர் வருத்தம் கச்சம் அகன்று - மயில் போன்ற சாயலை உடைய தலைவி துன்பமாகிய வருத்தத்திலிருந்து நிச்சயமாக நீங்கி, உயிர் காவலன் - உயிர் காத்து இருக்க மாட்டாள், ஆண்தகையே - ஆண் தகைமை உள்ள பெருமையிற் சிறந்தோனே, அச்சம் அகல நாவலன் ஊர் அடைந்தமை காட்டுதி - பயம் நீங்க (நி) நாவலர் பிரானது ஊர் சென்று சேர்ந்ததை யாம் அறிய யாதாயினும் ஓர் அறிகுறியாகக் காட்டுவாயாக.
(கு.உ) :- வரல் இனம் பற்றிப் போதலையும் தழுவும். நீ நாவல னுாராய நினது ஊரை இடையூறு இன்றி அடைந்தமைக்கு ஏதேனும் ஓர் அறிகுறியாம் அறியச் செய்து வை என்பது தாற்பரியம். இங்கு அச்சம் ஆகுபெயராய் அது விளையும் காரணமான இடையூறு கருதிற்று. தலைவி தன் இயல்பால் துயர்தல் தவிர்க்க முடியாது. எனினும் அத்தகைய இடையூறுக்கு ஆளாகாது ஒழியும் ஆண்மை நினக்கு உரியதை யான் அறிவேன் என்பாள் ஆண்டகையே என்பாள்.
திருமகட்புணர்ந்தவன் சேறல்
(இது வெளிப்படை)
218. வேங்கை கரியர வுங்கரி யாகி விரைமழைநீர்
வேங்கை புனைமுலை காமவெந் தீயொளி மேவிடும் வேங்கை யுரியுடுப் போன்மகன் மேவிடு நாவலனை வேங்கை கொடுத்தளிப் பானலை மேவ லெளிதெமக்கே.

Page 90
1.59
பதவுரை:- கை கரி அரவும் வேம் - வழி எதிர் இடையூறாதற்பாலன ஆகிய யானையும் பாம்பும் வெந்து ஒழியுமாறும், கரியாகி விரை மழை நீர் வேம் - கரும் படலமாம் முகில், விரைந்து பொழியும் நீரும் உருளும்படியாகவும், கை புனைமுலை காமவெம் தீ ஒளி மேவிடும் - கை அலங்காரம் பெற்ற தனங்கள் உடைய தலைவி மேற் பொங்கும் வெவ்விதாகிய காமத்தியின் ஒளி பரக்குமி, அ வேங்கை உரி உடுப்போன் மகன் மேவிடும் நாவலன் - புலித்தோல் ஆடையன் ஆகிய சிவனுக்குத் திருமகனாம் முருகனைத் தியான முறையால் பொருந்தும் நாவலர்பிரான்,
நைவேம் கை கொடுத்து அளிப்பான் - வழி எதிர் இடையூற்றால் வருந்துவோராகிய எம்மைக் கை கொடுத்துக் காப்ப்ாற்றுவான், எமக்கு நலை மேவல் எளிது - அதனால் எமக்கு நல்லையைச் சென்று
அடைதல் இலகுவானதேயாகும்.
(கு.உ) :- 'அ' 'பண்டறி சுட்டு, மகன் மேவும் - 2ம் வேற்றுமைத் தொகை, நைவேம் அளிப்பன் என்பதும் அது.
14. இரவுக் குறியிடையீடு இறைவிக்கிகுளையிறைவரவுணர்த்தல்
தலைவிக்குத் தோழி தலைவன் வரவை அறிவுறுத்தல்
219. கால்பொர நீடிய கொம்ப ரசைந்திடு காரணமோ
மால்பொர நீடிய கூடலி னின்ப மணந்தனவோ சேல்பொர நீடிய கண்ணி யொலித்தன சேக்கையபுள் ளால்பொர நீடிய தேவனந் நாவல னார் பொழிற்கே.
பதவுரை:- சேல் பொர நீடிய கண்ணி - சேல் மீனை ஒத்த நீண்ட கண்களை உடைய தலைவியே, ஆல் பொர நீடிய தேவன் நம் நாவலனார் பொழிற்கு - ஆல் போல் தழைத்து நெடுங்காலம் நிலைபெறும் நமது நாவலர் பிரானது சோலையின் கண், நீடிய கொம்பர் கால் பொர அசைந்திடு காரணமோ - நீண்டு இருக்கும் கொம்பர்கள் காற்று மோதலால் அசைந்த காரணத்தினாலோ, மால் பொர நீடிய கூடலின் இன்பம் மணந்தனவோ - அப் பறவைகள் ஆசையால் மோதுண்டு தம்முள் புணர்ந்து கலவி இன்பம் அடைந்து கொண்ட க்ளிப்பினாலோ (அறியோம்) சேக்கைய புள் ஒலித்தன - கூடுகளில் பறவைகள் ஒலித்தன.

160
(கு.உ) :- இரண்டாம் அடியிற் பொர - மோத, ஏனையவற்றில் பொர - உவம உருபு மணத்தல் - கலத்தல். கூடற் புணர்ச்சி தலைவன் இரவுக்குறி வரவு குறிப்பான் அறிவிக்கின்றானாதலின் பறவைகளின் கூடல் இன்பமும் குறித்தாளாயிற்று.
தான் குறி மருண்டமை தலைவியவட்குரைத்தல்
தலைவி தான் அல்ல குறியிடத்து நின்று தலைவனைக் காணாமையால் மீண்டு விடியற்காலத்து வந்து பாங்கியுடன் கூறல்,
220. அப்பிய விவ்விருட் காதலர் செய்குறி யாமெனச்சென்
றிப்பியை வெள்ளி யெனவெடுத் தெய்த்தவரேயமின்னே திப்பிய நீரெனக் காணலைச் சென்றிள்ை நவ்வியென வெப்பிய சிந்தையென் மீண்டன னாவலன் சீர்நலைக்கே.
பதவுரை:- மின்னே - தோழியே, நாவலன் சீர் நலைக்கே - நாவலர்பிரானது பெருமை விளங்கும் நல்லையின் கண், அப்பிய இவ் இருள் - அப்பிவிட்டாற் போலச் செறிந்து இருக்கும் இத் திண்ணிய இருளில், காதலர் செய் குறியாம் என சென்று - (கேட்ட ஓசையை) நம் காதலர் தாம் வந்தமையை அறிவித்தற்கு இயற்றிய அறிகுறி ஓசை எனக் கருதிப் போய், இப்பியை வெள்ளி என எடுத்து எய்த்தவர் ஏய - நில வொளியில் விளங்கும் சிப்பியை வெள்ளி எனக் கருதி எடுத்து மனம் அலுத்தவர் போலவும், கானலை திப்பிய நீரென சென்று இளை நவ்வி என - கானல் நீரை இனிமையான உண்ணு நீர் எனக் கருதி ஓடிப் போய் அலுத்த பெண் மான் குட்டி போலவும், வெப்பிய சிந்தை என் மீண்டனன் - வெதும்பிய உள்ளத்தினளாய் மீண்டு இருக்கின்றேன்.
(கு.உ) :- வெம்பிய - வலித்தல் விகாரம். இப்பியை வெள்ளி என எடுத்து அலுத்தவர் திப்பிய நீரென காணலை சென்றிளை நவ்வி என்ற இரண்டும் உண்மை அல்லாததை (பொய்க் குறியை) உண்மை (மெய்க்குறி). எனச் சென்றேமாகத் தலைமகட்கு உவமையாயின.

Page 91
161
பாங்கி, தலைவன் றீங்கெடுத்தியம்பல்
தோழி தலைவன் பொல்லாங்கை எடுத்துக் கூறல்
221. ஒருகா லிருகா லொருமூன் றுலகு முழுதுபறந்
தொருநாற் றலைய னுடனைந் தலையர வாறுதுயி றருவா னறியருந் தாளேழ் பிறப்புமெண் ணாவலனார் திருவாழ் வனத்து நவக்குறி தந்தான் சிலம்பனென்னே.
பதவுரை:- இரு கால் ஒரு நால் தலையனுடன் - இரு கால்களும் ஒப்பற்ற நான்கு தலைகளும் உள்ள பிரமனோடு,ஐந்தலை அரவாறு துயில் தருவான் - ஐந்து தலையினதான அனந்தன் என்னும் பாம்பில் துயில் கொள்வானான விஷ்ணுவும், ஒரு கால் - ஒரு தடவை, ஒரு மூன்று உலகு உழுதும் பறந்து (தம்முள் சத்தமிட்டு) முறையே மூன்று உலகங்களிலும் துருவி மேல் பறந்தும் பாதாளத்தைத் தோண்டிக் கீழே சென்றும், அறி அரும் தாள் - அறிதற்கு அரிதாய் இருந்த சிவனது (முடியையும்) அடியையும், ஏழ் பிறப்பும் என் நாவலனார் - ஏழு பிறப்புக்களிலும் மறவாது ஏத்தும் நாவலர் பிரானது, திரு வாழ் வனத்து - கீர்த்திப் பிரபாவம் வாழ்கின்ற சோலையிடத்து, சிலம்பன் நவ குறி தந்தான் - மலையிடத்தனான நம் தலைவன் புதமையான ஒரு குறியை அறிவித்து இருந்தான், என்னே - நம் விதி இருந்தவாறு என்?
(கு.உ) :- இரு கால் ஒரு நால் தலையன் - கால் இரண்டே உளனாகவும் ஒப்பற்ற (பிரத்தியேகமான) ஒரு முறையில் தலை நான்குள்ளவன் என்றபடி, உழுது பறந்து என்புழி உம்மைகள் விரிக்கப்படும். தாள் இனம் பற்றி முடியையும் குறிக்கும். இரண்டும் திருவருளே ஆதலின் தாள் ஒன்றே இரண்டையும் குறித்தலும் அமையும். அடியெனு மதுவும் முடியெனு மதுவும் அறிந்திடில் சிற்குண நிறைவு எனல் காண்க. நவக்குறி - விநோதக் குறி எனலுமாம். என்னை என்பது இரங்கற் பொருட்டு.

162
புலந்தவன் போதல்
தலைவன தான் குறித்த குறியில் இருந்து, தலைவி அல்ல குறிப்பட்டு வாராமையாற் புலந்து (நெஞ்சொடு முனிந்து) தன் ஊர்க்குப் போதல்.
222. இருக்கை முடவ னியலிநற் றேன்கொள வெண்ணலெனத் தருக்கை யகன்றவர் சார்பறு த்துற்றிடு சார்பதுவா மிருக்கை யுரைத்திடு பூவை மலிகா வியனல்லைவான் றருக்கை யறுமுகன் சாரலா ராமனஞ் சார்துயரே.
பதவுரை:- முடவன் இருக்கை இயலி நல்தேன் கொள் எண்ணல் என - முடவன் ஒருவன் இருப்பிடத்திலிருந்து இரு கைகளாலும் இயன்று நல்ல கொம்புத்தேனைப் பெற எண்ணியதுபோல, தருக்கை அகன்றவர் - நான், எனது என்னும் செருக்கு ஒழிந்தவர்கள், “ சார்பு அறுத்து உற்றிடு சார்பதுவாம் - தேகாதி பந்தச்சார்பை நீக்கிப் பெறுவதாகிய மெய்யுணர்வு
சார்பான, இருக்கை உரைத்திடு பூவை மலி கா - வேதத்தைச் சொல்கின்ற நாகணவாய்ப் பறவைகள் மிகுந்து இருக்கும் சோலைகளை உடைய, வியன் நல்லை - பெருமைக்குரிய நல்லையின் கண், மனம்
சார் துயர் - என் மனத்தைச் சாந்த துன்பும், வான் தருகை அறுமுகன் சாரலராம் - சுவர்க்க லோகத்துக் கற்பக தருவை ஒத்த ஆறுமுக நாவலரது பகைவர் போன்றது.
(கு.உ) - நற்றேன் என்றதனால் கொம்பாந் தேனாதல் பெறப்படும். மனம் சார்துயர் என்பது அமன அபிலாசை மேற்று, காரணத்தைக் காரியமாக உபசரித்தவாறு, அபிலாசை மன்த்துயருக்குக் காரணமாதல் அறிக. கற்பகதரு கை - தருப்போலும் கையெனில் பயனுவமையாம், தருவாகிய கையெனில் உருவகமாம். கற்பக தருவே நாவலற்குக் கையாயிற்று என்றும் நயம் பயக்கவல்லது. இவ்விரண்டாவது விளக்கம் "வானு கடும் மாமதி - - - திருக்கோவையார் என்பதனோடு ஒட்டுக.

Page 92
163
புலர்ந்த பின் வறுங்களந் தலைவி கண்டிரங்கல்
இருள் புலர்ந்த பின் தலைவி வறுங்களங் கண்டு இரங்கிக் கூறல்.
223. குழைமுகங் கொண்டு கிளர்ந்து குலநறுங் கோப்பணிந்து
தழைமுகங் கொண்டு தளிநற வுண்டு தகுமலராம் விழைமுகங் கொண்டு மிசையுற நின்றனை மாதவிநீ மழைமுகங் கொண்டு மணம்புணர்ந் தாய்நா வலன்வரைக்கே.
பதவுரை: மாதவிநீ - மாதவி விருட்சமாகிய நீ, நாவலன் வரைக்கு - நாவலர் பிரானது மலையில், குழை முகம் கொண்டு - இலைத் தொகுதியாகிய குழைகளை மேற் பரப்பி, கிளர்ந்து - உயர்ந்து, குல நறும் கோப்பு அணிந்து - கவரும் கிளையுமாகிய நல்ல கோவையால் (கட்டுக்கோப்பு) அழகுற்று, தழை முகம் கொண்டு - மேலும் தழைத்தலில் உள்முகம் கொண்டு, தளி நறவு உண்டு தகு மலராம் விழை முகம் கொண்டு - இன்ப மதுவை உட்கொண்டு அலர்கின்ற மலராகிய விரும்பத்தகும் முகத் தோற்றம் காட்டி, மிசை உற நின்றனை - மேலோங்கி நிற்கின்றாய், மழை முகம் கொண்டு மணம் புணர்ந்தாய் - மழையினை எதிரேற்று மணம் புரிந்தாய்.
(கு.உ) :- மணம் புணர்ந்தாய் என்பதில் விவாகம் புரிந்து கொண்டாய் என்ற பொருளும் சிலேடை வகையால் அமைய வைத்தமையானே மணம் புணர்ந்து மகிழ்வுற்று இருக்கும் நங்கை ஒருத்தியின் விரும்பத்தகும் தோற்றத்தை இங்கு தலைவி மாதவி மேல் ஏற்றி உரைத்தாள் எனத்தகும். சந்தர்ப்பம் அவர் வறுங்களங் கண்டு இரங்கல் ஆதலினாலே அது சார்ந்த தனது வரட்சி நிலைக் கெதிர் மாதவியின் மலர்ச்சி நிலை கண்டு எழுந்த அசூசையால் 'ஓ நீ மட்டும் மணவணி பொலிந்தவளாய் இருக்கின்றாய்" எனத் தலைவி தன்னுட் கறுவிக் கொண்டவாறாயிற்று. மணம் - விவாகம், நாற்றம் எனச் சிலேடையாயினவாறு போல குழை - காதணி, இலை, கோப்பு - மாலை, கிளை (கொப்பு) மிசையுற - மேலாக, விண்ணுற, நறவு - கலவி இன்பம், தேன் எனச் சிலேடை விரித்து மணவணி பொலிந்த மகட்கும் ஏற்குமாறு பொருந்துமாற்றான் உரைத்துக்கொள்க.

164
தலைவி தன்றுணைக் குரைத்தல்
(இது வெளிப்படை)
224. இப்புத் தகம்விட் டகலு கின்றீர்க ளெனத்துறைசை மெய்ப்புத் தகவகச் சந்நிதா னம்பினார் மேவினவன் செப்புத் தனமா லறுநா வலன்காச் சிறக்குமல ரப்புத் துளைநெஞ்சி யாக்க வெனைமனர் வந்திலரே.
பதவுரை:- இ புத்தகம் விட்டு அகலுகின்றீர்கள் என - இதோ இந்தப் புத்தகத்தைத் தவறவிட்டுச் செல்கின்றீர்கள் எனச் சொல்லிக் கொண்டு, துறைசை மெய் புத்தக அக சந்நிதானம் பினர் மேவின் - திருவாவடுதுறை ஆதீனத்தின் சந்நிதானமாய் இருந்தவரும் மெய் விளக்கத் தகுதியாளருமான அத்தகைய சுப்பிரமணிய தேசிகர் இருக்கை விட்டு எழுந்து பின் வருவதற்காம் அளவு விசேட தகைமை பொருந்தியவருமான, செப்பு தன மால் அறும் நாவலன் - மகளிரின் செப்புக்கலசம் போன்ற முலைகள் மேற் செல்லும் ஆசை அற்றவருமான நாவலர்பிரானது. காசிறக்கும் மலர் அப்புத்துளை நெஞ்சில் எனை ஆக்க - சோலையின் கண் சிறந்து இருக்கும் மலர்களாகிய மன்மத அம்புகளால் துளைக்கப்படும் நெஞ்சினளாக என்னை ஆக்கும் நோக்கத்தாற் போலும், மனர் வந்திலர் - எம் தலைவர் நேற்று இரவுக் குறிக்கண் வந்திலர்.
(கு.உ) :- பினர், மனர் தொகுத்தல் விகாரம். செப்பு, அப்பு மெலித்தல் விகாரம். சந்நிதானம் ஆதீன முதல்வராகிய பரமாசாரிய சுவாமிகளுக்குரிய மரபுப் பெயர். சந்நிதானம் பின் மேவினவன் - சந்நிதானமே தன் பின் செல்லுதற்காம் மகிமை மேவினன் - சந்நிதானம் பின் சென்றமை விதந்து ஒதப்பட்டதன் கருத்து என்னை எனின் அது வருமாறு - தமது இருக்கையில் இருந்தவாறே எவரொருவரையும் வரவேற்பதும் விடை கொடுப்பதும்- அன்றி எழுந்து எதிர்சென்று வரவேற்றலும் பின்சென்று விடை கொடுத்தலும் ஆதீன சம்பிரதாயத்துக்கு விரோதமானவை. சந்நிதானங்களால் இது மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படுவது ஒன்றாகும். இருந்தும் இந்தச் சந்திதானம் மட்டும் விட்டுச் சென்ற புத்தகம் ஒன்றைக் கொடுக்கும் முறையாக எழுந்து பின் செல்வதன் மூலம் நாவலர்பால் தமக்கு இருந்த வெகு மதிப்பைப் புலப்பட வைத்தல் மூலம் அத்தகைய சந்நிதானங்களிலும் மிகுந்த மகிமையாளர் என நாவலர் பிரான் பெரு மகிமை பேணியவாகும். மெய்ப்பு - மெய் உணரும் இயல்பு. மெய்ஞ்ஞானம்; மகளிர் முலை மேல் ஆசை அற்றவர் என்றது அவரது பிரமசரியத் தூய்மை. குறிக்கப்படலாகும்.

Page 93
165
தலைமகளவலம் பாங்கி தணிவித்தல்.
தலைமகளது தன்பத்தைப் பாங்கி தணித்துக் கூறல்,
225. நாவல னார்க்கு மரிய புரியுநல் லூருறைவார்
காவல ராதலிற் காவல ரோகுறி காண்பிழைப்பு மாவல ரேய்முகிற் கூந்தன் மலர்க்காந் தளைநின்விர லாவல ராழி செறித்தா ரவல மறுகுதியே.
பதவுரை:- மா அலர் ஏய் முகிற் கூந்தல் - அழகிய மலர்கள் சூடிய முகில் போலும் கூந்தல் உடையாய், ஆர்க்கும் அரிய புரியு நாவலன் நல்லூர் உறைவார் காவலர் ஆதலில் - எவரெவர்க்கும் செயற்கரிய பரோபகார செயல்களையே செய்யும் பண்பினரான நாவலர் பிரானது பதியாகிய நல்லூரில் வாழ்பவர் நம் தலைவர் ஆதலினால், குறி காண் பிழைப்பு ஆவலரோ - நம் விடயத்தில் குறி , இழைத்தற்கு அவர் காரணமாதல் பொருந்துவதோ, இனி (அக் கவலையை விட்டு) மலர் காந்தளை நின் விரல் ஆவலர் ஆழி செறித்து - இம் மலர்க் காந்தளை உனது விரலில் காதலர் மோதிரமாக "இட்டு, ஆர் அவலம் அறுகுதி - நினக்கு ஏற்பட்ட நிறைந்த துன்பம் நீங்கப் பெறுவாயாக.
(கு.உ):- குறி காண் பிழைப்புக்கு ஆ(க)வலரோ என மாறிக் கூட்டுக. நல்லூர்ப் பிறந்தார் அல்லவை செய்யார் என்றபடி விரலாவலர் என்பதை விரல் ஆவலர் எனப் பதச் சேதஞ்செய்க. ஆழி - மோதிரம் - முகிற் கூந்தல் - உவமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
இறைவன் மேற்பாங்கி குறி பிழைப்பேற்றல்
இரவுக் குறிக்கு வந்த இறைவன் மேற் பாங்கி அல்ல குறிப்பிட்ட
குற்றமேற்றிக் கூறுதல்.
(அல்ல குறி - தலைவனால் நிகழ்த்தப்படுவன வாகிய புள்ளெழுப்பல் முதலியன பிறிதொன்றான் நிகழ்தல்)
226. அன்று கரும்புமக் காகாத வேம்பின் றவள்வருந்த
ஒன்று நயந்திலிர் நும்மூ ருறங்கினி ரோகொடிது நன்று பெறவளி நாவல னல்லூர் நறவு சிந்து துன்று பொழின்மலர் வார்குழல் வாட்டஞ் சொலிற்றுயரே.

166
பதவுரை:- அன்று (இவள்) உமக்கு கரும்பு - (தலைவரே), உமது களவு ஒழுக்கக் கால முற்பகுதியில் இவள் உமக்குக் கரும்பு, இன்று ஆகாத வேம்பு - இன்று அணுகுதற்கு ஆகாத வேம்பு, அவள் வருந்த - அவள் துன்புற, ஒன்று நயந்திலிர் - இரவுக் குறிக்குக் காத்து இருப்பாள் என ஒரு சிறிதும் பொருள் செய்யாது, நும் ஊர் உறங்கினிர் - உமது ஊரிலே தூங்கி விட்டீர், ஓ கொடிது - நும் மனப்பான்மை மிகவும் கொடியது, நன்று பெற அளி நாவலன் நல்லூர் - அனைவரும் நன்மையே பெற அருளும் நாவலர் பிரானது நல்லூரின் கண், துன்றும் நறவு சிந்து பொழில் மலர் வாழ் குழல் - நெருங்கி இருக்கும் தேன் சிந்துவனவாகிய சோலைகளின் நறு மலர்கள் வாழ்தற்கு இடமாகிய கூந்தலை உடையளான இவளது, வாட்டம் சொலில் துயரே - சோர்வு இருக்குமாற்றைக் கூறின் துயரே மிகுவதாகும்.
(கு.உ) :- இன்று ஆகாத வேம்பு என்றதனால் அன்று ஆகும் வேம்பு என விரித்துக் கொள்க. ஆதலும் ஆகாமையும் இனிப்பாதலும் கசப்பாதல் பற்றியன. ஒன்றும் - சிறிதும்; ஒ இரக்க மிகுதிப் பொருட்டு. மிகுவதாகும் என ஒரு சொல் சொல்லெச்சமாக மிகுந்தது.
இறைவி மேலிறைவன் குறி பிழைப்பேற்றல்
தலைவன் தலைவி மேல் அல்ல குறிப்பட்ட குற்ற மேற்றிக் கூறுதல்
227. கங்குற் பனியி னடுங்கி விறைத்திரு கண்மறைப்பு மங்குற் படிமின் விலக்க மலர்க்கா விலைப்புரைக ளெங்குந் தடவி யிதயமும் வாடி யெழில்கருகி நங்குல வாழ்வே யனைநா வலனுார் நடந்தனனே.
பதவுரை:- கங்குல் பனியில் நடுங்கி விறைத்து - இரவுக் காலப் பனியிலே நடுங்கி விறைத்து , இரு கண் மறைப்பு மங்குல் படி மின் இருகண் மறைப்பு விலக - மேகங்களில் படிந்து இடையிடையே பளிச்சிடும் மின்னல் கீற்றுக்கள் இருகண்களின் மறைப்பை ஒருகால் விலக்கிக் கொடுக்க, மலர் கா இலை புரைகள் எங்கும் தடவி - மலர் நிறையும் சோலையின் இலைத்தொகுதிகளின் இடைவெளிகள் எங்கும் தடவித் திரிந்து, இதயமும் வாடி எழில் கருகி - இதயமும் வாட்டமுற்று அழகும் அழிந்து, (ஏமாந்தவனாய்) நம் குல வாழ்வே அனை நாவலன் ஊர் நடந்தனன் - நம் குலத்தின் வாழ்வே போன்ற நாவலன் பிரானது ஊருக்கு மீண்டேன்.

Page 94
67
(கு.உ) :- தலைவி வாட்டம் சொலின் துயரே" என்ற கூற்றின் எதிர் தலைவன். தன் துயரும் அன்னதே என்பான் இங்ங்ணம் விரித்தான். எங்கும் தடவி என்பதில் உம்மை எஞ்சாமற் பொருட்டு குறியிடத்து மாத்திரமன்றி எனவும் கொள்ள நிற்றலில் எச்சவும்மையாம். நாவலர் பிரான் வாழ்ந்தது
ஒன்றே நம்குலம் வாழ்ந்தது என்பதற்கு அடையாளமாக நங்குல வாழ்வே யனை நாவலன் என்றான்.
தலைவி குறி மருண்டமைபாங்கி பகர்தல் தலைவி குறி மயங்கியது பாங்கி தலைவற்கு உரைத்தல்
228. நற்கயி றாத்திரி நாரை யலதொரு நாரையிலா
நெற்றது நீர்நிலை வீழப் பறவை நெடிதொலிப்ப மற்றது நின்குறி யாமென மாது மயங்கினளாற் சற்குரு நாத சுவாமியெ னாவலன் றண்பொழிற்கே.
பதவுரை:- சற்குரு நாத சுவாமி என் நாவலன் தண் பொழிற்கு - சற்குரு நாத சுவாமி எனப் போற்றப்படும் நாவலர் பிரானது குளிர்ந்த சோலையின் கண், நல் கயிறு ஆக) திரி நாரை அலது ஒரு நாரை இலா நெற்றது . நல்ல கயிறாகத் திரிக்க உதவும் சாதனமான தும்பு அல்லது வேறு பயன் படுதற்கு ஒன்றில்லாத தேங்காய் நெற்றானது, நீர்நிலை வீழ பறவை நெடிது ஒலிப்ப - நீர்நிலையில் விழுந்ததால் ஆன சத்தத்தினால் அதிர்ச்சி உற்றுப் பறவைகள் பேரொலி செய்ய, அது நிற் குறியாம் என மாது மயங்கினள் - அவ் ஒலி நீ விளைத்த குறியீட்டொலி எனத் தலைவி மயங்கி விட்டாள்.
(கு.உ) :- ஏ, மற்று, ஆல் என்பன அசைகள். நார் இரண்டில் முன்னது
தென்னந்தும்பும் பின்னது பலனுமாம். ஒரு நாரையிலா நெற்றது என ಖ್ವಗ್ರ: ஒல்லி எனல் பெறப்படும். நாவலர் பிரானைச் சற்குருநாத
சுவாமியாகப் பத்திமையாற் கண்டு அம்பலவாண நாவலர் சற்குருநாத
ே மாலை எனப் பிரபந்தம் இயற்றிப் போற்றிய செய்தி உணர
dapal.
அவன் மொழிக் கொடுமை அவளவட்கியம்பல்
தன்லைவன் சொல்லிய கொடுமையைத் தோழி தலைவிக்குச் சொல்லல்
229, மதிமாலை வீழக் கடற்கா வதுநண்ணி மாமறையோர்
துதிமாலை யோடு சுடருதி காலைத் துயர்க்கடலுள் விதிமாலை யென்ன விழுந்து சென்றேனென விண்டனரக் கதிமாலை பூணு மறுமுகற் சாரல ராமெனவே.

168
பதவுரை:- அக்கு அதிமாலை பூணும் அறுமுகன் சாரலராம் என - உருத்திராக்க வடத்தை உயர்தர மாலையாகப் போற்றி அணியும் நாவலர் பிரானது பகைவர்கள் போல, மாலை மதி வீழ - மாலை வேளை ஆரம்பத்திலேயே சந்திரன் மறைந்து விட, கடல் காவது நண்ணி - கடற்கரைச் சோலையை அடைந்து,(இரவு முழுவதும் உடன்று) மா மறையோர் துதி மாலையோடு சுடர் உதி காலை - மகத்துவம் மிக்க அந்தணர் துதி நிரையோடு சூரியன் தோன்றும் உதய வேளையில், துயர் கடலுள் விழுந்து சென்றேன் என - (என் விதியின் தன்மை இருந்தவாறு இது என) துன்பமாகிய பெருங் கடலுள் அழுந்திச் சென்றேன் என, விண்டனர் . - நம் தலைவர் தான் அனுபவித்ததை வெளியிட்டார்.
(கு.உ) :- மாலை நான்கும் முறையே காலம், நிரை, தன்மை, அணிகலன் என்னும் பொருளில் வந்தன. மதி மாலை என்றதனால் பூர்வ பக்க முதல் நாள் என்பது புலனாகும்.
என் பிழைப்பன்றென்றிறைவிநோதல்
குறி பிழைத்தது என் பிழை அன்று என்று இறைவி நொந்து கூறல்
230. நானிரா வூஞ்ச லெனவே நடலை நரலையுறத்
தானிரா வந்த தகைமை சொலத்துயில் சார்ந்தனளென் றேனிரா வல்ல குறிபிழைப் பேற்றின ரென்பிழைப்போ தேனிரா காமரம் பாடு மறுமுகன் றிணிபொழிற்கே.
பதவுரை:- தேன் இரா காமரம் பாடும் அறுமுகன் திண் பொழிற்கு - வண்டுகள் அமர்ந்து இருந்து காமரப் பண் பாடும் சிறப்பு உள்ள நாவலர் பிரானது செறிவான சோலையின் கண், நான் இரா ஊஞ்சல் எனவே நடலை நரலை உற - நான் இராவோர ஊஞ்சல் போல் அலையும் துன்பக் கடலுள் அழுந்தினேனாக இருக்கவும், தான் இரா வந்த தகைமை சொல - தலைவன் தான் அதே இராக்காலத்து வந்து போன தன்மையைச் சொல்ல, துயில் சார்ந்தனள் என்றேன் - நித்திரை செய்தனள் என்று சொன்னேன், இரா அல்ல குறி பிழைப்பு ஏற்றினர் - இரவு இடத்து இடம் பெற்ற அல்ல குறிப்படுதலாம் குற்றத்தை என் மேல் ஏற்றினர், என் பிழைப்போ - அது உண்மையில் என்னால் ஆன தவறாகுமோ.
(கு.உ) :- காமரம் - சி காமரம் எனும் பண். நடலை நரவை - துன்பக் கடல். என் பிழைப்போ - ஒகாரம் எதிர் மறைப் பொருளது.

Page 95
167
தாய் துஞ்சாமை
தாய் விழித்திருத்தல்
231 என்னை யுறாவளு ராற்றுயி லொல்லா வெனக்கிரங்கிச்
சொன்ன திலையா னுளம்புகுந் தன்பாற் றுயில்கிலனெ னன்னை யுயர்நட் புறுதுன் புளநட் படையுமதே யென்னைகைம் மாறவட் கொண்ணா வலனா
ரெழினலைக்கே.
பதவுரை: எண் நாவலனார் எழில் நலைக்கு - கருதத் தகும் மாண்பினரான நாவலர் பிரானது அழகிய நல்லூரின் கண், என் ஐ உறா அஞரால் துயில் ஒல்லா எனக்கு இரங்கி - எனது தலைவர் சேர்க்கையைப் ப்ொருந்தாமையாலான துயரினாலே கண் துயில் கொள்ளாத என் பொருட்டு இரங்கி, சொன்னது இலை யான்அத்தன்மையை யான் தனக்குச் சொல்லாது இருந்தும், உளம் புகுந்த அன்பால் என் அன்னை துயில்கிலள் - யான் தனது உளம் புகுந்து இருக்கும் அத்தன்மை சார்ந்த அன்பினால் என் அன்னையும் துயிலாது இருக்கின்றாள், உயர் நட்பு உறு துன்பு உள நட்பு அடையும் அதே - தாய் மகள் நட்புறவின் உயர்தன்மையாவது மகள் துன்பில் தாய் தானும் துன்புறுதலாகிய அத்தன்மையேயாம், அவட்கு என்னை கைமாறு - இந்த அன்னையின் நட்புக்கு ந்ான் செயத்தகும் பிரதியுபகாரம் யாதோ?
(கு.உ) - புகுந்த அன்பால் - புகுந்தன்பால் - பெயரெச்சத்து அகர வீறு தொகுத்தலாயிற்று. தலைவி தனக்கு அபகாரமேயாயிருக்கும் அன்னை துயிலாமையை உபசாரமாகக் கொண்டு உரைக்கும் தன்மைத்து ஆதலின் இச்செய்யுள் வஞ்சப் புகழ்ச்சி அணிக்கு உதாரணமாம்.
நாய் துஞ்சாமை
தாய் துஞ்சிய பின் ஊரில் இருக்கும் நாய் துஞ்சாமை
232. பாண்டிய னாகி. யரசுசெய் வான்மகன் பன்வடுகன்
வேண்டிய வூர்தி யெசமானன் றம்பி விறந்துகொலோ தூண்டிய சோதி நெடுவே னமர்வரத் துண்குரையாற் பாண்டிய ரூரை யழிக்கும் பதிநா வலன்பொழிற்கே.

170
பதவுரை:- பதி நாவலன் பொழிற்கு - தலைவனாகிய நாவலர் பிரானது சோலையின் கண், பாண்டியனாகி அரசு செய்வான் மகன் பன்வடுகன் வேண்டிய ஊர்தி - ஒருகால் பாண்டிய மன்னனாய்த் தான் தோன்றி இருந்து அரசு செய்த சிவனது மகனாகப் பேசப்படும் வயிரவர் விரும்பிக் கொண்ட வாகனம் எனும் நிலை பெற்ற நாயானது, தூண்டிய சோதி நெடுவேல் நமர் வர - தூண்டப்பட்டு எரியும் சுடரொளி போலப் பேரொளி உள்ள நெடிய வேல் தாங்கி நமது தலைவர் வரக் காணுதலும், எசமானன் தம்பி விறந்து கொலோ - அவரைத் தனது எசமானுடைய தம்பியாகிய முருகனோடு ஒப்பக் கண்டதனாலோ, துண் குரையால் - நடுக்கமுறச் செய்யும் தனது குரைத்தலினால், பாண்டியர் ஊரை அழிக்கும் - அவர்க்கும் எனக்கும் இடையிலாகும் கூடலை இல்லாமல் செய்கிறது.
(கு.உ) :- வடுகன் - இளம் பிரமசாரி என்ற பொருளில் வயிரவர்க்குப் பெயராயிற்று. பாண்டியனாகிய அரசு செய்தமை மதுரையில் சிவுன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அறுபத்து நான்கில் ஒன்று. நமர் - நம்மவர். தன் எசமானனின் தம்பி என்று நாய் குரைத்தது என்றமையால் அது வரவேற்புப் பாணியில் குரைத்தது என்றதாம். பழகினாரை வரவேற்கும் பொருட்டும் நாய் குரைத்தல் வழக்காறு. நாயின் நோக்கில் தீங்கு இல்லையாயினும் அது நமது புணர்ச்சிக்கு இடையூறானமை விதி வசமே எனத் தலைவி தன்னைத் தானே தேற்றிக் கொண்டமை இதன் தாற்பரியமாம். குரை - முதனிலைத் தொழிற் பெயர். நாமாந்தரிதை எனும் அணி நயம்பட் கூடல் எனாது பாண்டியர் ஊர் என்றார்.
இதுவுமது
233. நட்புக்குக் காட்டுச் சமணருக் காயது நாடுமில்லத்
துட்புக்குக் கள்ள விடாதது ஆதிய மின்றிவைகா வற்புக்குத் தொன்மொழி தந்திழி வானது வள்ளென்குரை யிற்புக்குக் காத லவர்க்கடி யுந்நா வலனலைக்கே.
பதவுரை:- நாவலன் நலைக்கு - நாவலர் பிரானது நல்லையின் கண், நட்புக்கு காட்டு - உயர்ந்த நண்புக்கு எடுத்துக் காட்டாவதும், சமணருக்கு ஆயது திகம்பர சமணருக்கு ஒப்பானதும், நாடும் இல்லத்துள் புக்கு கள்ள விடாதது - தான் காக்கும் வீட்டில் எவரும் புகுந்து திருட ஒட்டாமல் தடுப்பதும்,(இத்தகைய உயர் பண்புகளோடு) ஊதியம் இன்றி வை காவல் புக்கு தொன் மொழி தந்து இழிவானது - தனக்கோர் ஊதியம் இல்லாமலே தன் எசமானது வைக்கோற் பட்டடைக் காவலும் மேற்கொண்டு பசித்து வரும் எசமானனின் மாடுகளும் அதிற் பற்றவிடாது விரட்டும் அர்த்தமற்ற செயலினால் தமிழ்ப் பழமொழி

Page 96
171
ஒன்றிலும் இடம் பெற்று இழிவுக்கும் ஆளாகியதுமான நாய், வள் என் குரையில் புக்கு காதலவர் கடியும் - வள் என்று ஒலிக்கும் குரைத்தலை மேறகொண்டு காதலரை விலக்கா நின்றது.
(கு.உ):- நாய் குரைத்தல் மூலம் தனது கூடல் இன்பத்தையே குலைத்தமை வைக்கோற்பட்டடையைக் காத்தல் போன்ற இழிதனத்தையே காட்டுவதாயிற்று. காட்டு - உதாரணம், ஆயது ஒத்தது எனும் பொருட்டு ஆமுதனிலையில் தோன்றும் சொற்கள் உவம உருபின் பொருள் பட வருதல் பெரும்பான்மை. அமை ஆகிய தடம் தோளாய் என அடுத்த செய்யுளிலும் அத்தன்மை காணப்படும். திகம்பரர் - திக்கே ஆடையாகக் கொள்பவர். நிர்வான கோலத்திலுள்ள சமணரில் ஒரு சிலரைக் குறிக்கும் பெயர்.
ஊர் துஞ்சாமை
நாய் துஞ்சினும் ஊரில் உள்ளார் துஞ்சாது இருத்தல்
234. அமையா கியதடந் தோளா யறுமுக னல்லையுற்றா
ரிமையா ரெனப்பிறப் பாரென் னியல்புல கிற்குரைக்கோ விமையா ரிருங்கடி யுந்துயில் போது மெதுவரினுஞ் சமையா பிமானந் தளர்தலினாவலன் சார்நலைக்கே.
பதவுரை:- எது வரினும் சமையாபிமானம் தளர்தலின் நாவலன் சார் நலைக்கு - எத்தகைய இழப்பு நேர வந்தாலும் சைவாபிமானப் பிடியைத் தளர விடாத இயல்பினரான நாவலர் பிரான் சார்ந்த நல்லையின் கண், அமை ஆகிய தடம் தோளாய் - மூங்கிலை ஒத்த பெருமை பொருந்திய தோள்களை உடைய தோழியே, அறுமுகன் நல்லை உற்றார்அறுமுகப்பிரானது பதியாகிய நல்லுரை அமைந்து இருப்போர், இமையார் என பிறப்பார் என் உலகின் இயல்பு உரைக்கோ - இமையார் எனப்படும் தேவர்ாகப் பிறப்பர் என்ற உலகோரின் வியப்புரைக்கு ஆகத் தானோ, இரும் கடியும் துயில் போதும் - கரிய பேயும் துயில் செய்யும் வேளையாகிய நடுநிசியிற்றானும், இமையார் - இவ்வூரார் இமை கொட்டாது (விழித்து) இருக்கின்றனர்.
(கு.உ) :- எது வரினும் என்றது உலகத்தார் உயிர் எனக் கருதும் பட்டம் பதவி முதலியவற்றின் இழப்பு வரினும் என்றபடி - நாவலர் மத்திய கல்லுரியில் தர்ம் வகித்த உயர் மதிப்புக்கு இடமான ஆசிரிய பதவியையும் மேல் வரும் என முன் மொழியப்பட்ட உயர்வுகளையும் தமது சைவாபிமான நோக்கில் பரித்தியாகம் செய்தமை கட்டும் இது, உரைக்கோ என்பதற்கு உரைக்குரிய ஆர்த்தத் தன்மை மிகுவித்தற்கோ

172
என விரித்து உரை செய்து கொள்க. ஊரவர் நடுயாமத்தும் கண் துயிலாது இருந்து தமது கூடலுக்கு இடையிடுதல் பற்றித் தலைவிக்கு அவர்பால் எழுந்த வெறுப்பு நிலைக்களனாக இச்சொல் நிற்கும் நயம் உணர்க. இரும் - கரிய, கடி - அச்சமே தரும் தன்னியல்பு பற்றிப் பேய்க்கு உற்ற பெயர்.
காவலர் கடுகுதல்
நகர் காப்போர் துடி அடித்துக் கொண்டு ஊர் சுற்றிக் கடுகி வருதல்
235. தண்டலை சூழ்ந்தொளிர் நல்லையி னாவலற் சாரலர்போற்
கண்டலை நீர்வர வாடிநங் காதலற் காணவிடாக் கண்டலை யிற்கடிப் போட்டிடு காவலர் கைத்துடிய னண்டலை யில்லார்க் கடிநெய்த லாம்பறை யன்னதுவே.
பதவுரை:-தண்டலை சூழ்ந்து ஒளிர் நல்லையின் நாவலன் சாரலர் போல் - சோலைகள் சூழ்ந்து விளங்குகின்ற நல்லுரில் வாழும் நாவலர் பிரானது பகைவர்கள் போல், கண் தலை நீர் வர வாடி - கண்ணில் இருந்து நீர் ஒழுக வாட்டமுற்று, நம் காதலன் காண விட - நம் காதலனை நாம் காணாது தடுக்கும் பாங்கில், கண் தலையில் கடிப்பு ஒட்டிடு காவலர் - அடித்தற் குறி இட்ட(கண்) குறுந்தடியால் செலுத்தப்படுகின்ற காவல் செய்பவர்களின், கைத்துடி - சிறுபறையானது, மன் அண்டலை இல்லார்க்கு - தலைவராகிய காதலர் அணுகி இருக்கப் பெறாதவர்க்கு, அடி நெய்தலாம் பறை அன்னது - அடிக்கப்படுகின்ற சாப்பறையை ஒத்ததாம்.
(கு.உ) :- சாரலர் - பகைவர். நாவலர் பிரானைப் பகைத்தவர்க்கு இயல்பு கண்ணிரும் கம்பலையுமாதல், தோன்ற நாவலற் சாரலர் போற் கண்டலை நீர் வர என்றார். கடிப்பு - பறை அடிக்கும் குறுந்தடி. கடிப்போட்டிடு துடி என்றதனால் துடி தடி கொண்டு அடிக்கப்பாலதாகிய சிறுபறை, ஆயிற்று. நெய்தல் - சாப்பறை,
நிலவு வெளிப்படுதல்
தலைவன் வருதற்கு இடையூறாய் நிலவு வெளிப்படுதல்
236. உடன்பிறந் தாளிற் சிதைப்பை களங்க முறுசிறியை
உடன்றாய் கலங்கிப் புடைத்தனன் கைகளி னோலமிட
அடர்ந்தாய் கரிமுகன் றம்பி யறுமுக னார்நலையி னடந்தாய் யொளியுறத் தீது மதியிது நன்றலவே.

Page 97
173
பதவுரை:-மதி - சந்திரனே, உடன் பிறந்தாள் இல் சிதைப்பை - உன்னுடன் பிறந்தவளாகிய இலக்குமிக்கு வீடாகிய தாமரையை (நீ உதிக்கையில்) சிதைத்து விடுவாய், களங்கம் உறு சிறியை - மறு உடையாய் ஆதலில் அற்பனானாய், உடன் தாய் கலங்கிக் கைகளில் புடைத்தனள் ஒலம் இட அடர்ந்தாய் - தோன்றிய உடனே உன் தாயாகிய கடல் அலைக்கரம் அடித்து அடித்து அபயக்குரல் எழுப்புமாறு வருத்தினாய், கரிமுகன் தம்பி அறுமுகனார் நலையில் ஒளி உற நடந்தாய் - ஆனைமுகக் கடவுளுக்கத் தம்பியான அறுமுகப் பெருமான் வீற்றிருக்கும் நல்லூரின் கண்ணும் உன் ஒளி மிக நடந்தாய், தீது இது நன்றல - உனது செயல் தீது எவ்வாற்றானும் நன்றலவாகும்.
(கு.உ) - பாற்கடல் கடைந்த நாள் அதிலிருந்து தோன்றிய இலக்குமியுடன் சந்திரன் தோன்றினன். என்பனவாகலின் கடல் சந்திரனுக்குத் தாயும் இலக்குமி உடன்பிறந்தாளுமாதல் கொள்ளப்படும். உடற் களங்கம் ஒருவரின் சிறுமைப் பண்பு ஏற்றற்கு ஏது வன்மையின் ஒழுக்கத் தவறாகிய உளக் களங்கமே இங்கே களங்கம் என்றதனால் கருதத்தகும். அது அவன் தன் குரு மனைவியாகிய தாரையைக் கூடிக் குருத் துரோகம் விளைவித்தமையால் ஆயது என்ப. அது "தாரா' சாசங்க முன் சரித்திரம் எடுத்து உரைக்கும் எனும் மாவைப் பிள்ளைத் தமிழாலும் அறியப்படும்.
கூகை குழறுதல்
கூகை குழறக் கேட்ட தலைவி அஞ்சிக் கூறுதல்
237. காகா வெனக்கூய்க் கொடிக்கன்ன நானிடல் கண்டுபகைக்
காகா வுணவிட லாமோ வெனக்கொள்ளு மப்பகைதிர் கூகா யறுமுகன் முன்பிற வாதியர் கூட்டமெனச் சாகா விடிற்கொடி முன்வலி நாளை யறிகுவனே
பதவுரை:-நான் காகா என கூய் கொடிக்கு அன்னம் இடல் கண்டு - நான் தினமும் காகா எனக் குரல் காட்டி அழைத்துக் காக்கைக்கு அன்னம் இடுதலைப் பார்த்திருந்து, ஆகா பகைக்கு உணவு இடலாமோ எனக் கொள்ளும் அ பகை தீர் கூகாய் - ஆகா! என் பகைக்கு இவள் அன்னமிட்டுப் பேணுவதா என்ற பாங்கில் என் மீது நீயாக மேற்கொண்ட அர்த்தமற்ற பகையால் வஞ்சினம் தீர்க்க நிற்கின்ற கூகையே, நாளை - நாளைக்கு, அறுமுகன் முன் பிறவாதியர் கூட்டம் என - நாவலர் பிரான் முன் எதிர்ந்த பரசமயவாதிகளின் தொகை பட்டுக் கெட்டு அழிவது போல, கொடி முன் வலி சாகாவிடில் அறிகுவன் - காக்கை எதிர் நீ உன் வலி சிதைந்து ஒழியாது இருப்பாயோ அறிவேன்.

174
(கு.உ) - பகை தீர்த்தல் - வஞ்சினம் தீர்த்தல். இங்கு அது தீர்த்தலாவது தலைவி காதலன் சார்பில் பெற இருந்த கூடலை நிகழாமற் செய்தமையாம். பகல் வெல்லும் கூகையைக் காக்கை என்பவாகலின் நாளை கொடி முன் உன் வலி சாகாவிடின் காண்குவன் என்றார்.
கோழி குரற் காட்டுதல்
இருவர்க்கும் இடையூறாய்க் கொழி குரல் காட்டுதல்.
238. என்படை மன்னர் வரநா வலன்பொழிற் கேர் நுதலாய்
வன்படைத் தாளார் முனமொரு மாதை வலிந்தமரர் மன்படைச் சேக்கையிற் சேரக் கொடுத்தவர் மற்றெனையு மின்படை யாவகை கூகூ வெனக் குரல் காட்டுவரே.
பதவுரை:-ஏர் நுதலாய் - அழகிய நெற்றியை உடைய தோழியே, நாவலன் பொழிற்கு - நாவலர் பிரானது சொலைக்கண், என் படை மன்னர் வர - வேற்படை தாங்கி எனது தலைவர் வர, முனம் ஒரு மாதை வலிந்து அமரர் மன்படை சேக்கையில் சேர கொடுத்தவர் - முன் ஒரு காலத்தில் ரிஷி பத்தினி ஒருத்தியைப் பலவந்தமாகத் தேவெந்திரன் மெத்தைப் படுக்கையில் சென்று சேரக் காரணமாய் இருந்து அவ் விருவரையுமே ஒருசேரக் கெடுத்து விட்டவராகிய, வன் படை தாளாா - வலிய ஆயதமாகிய கூர்முள் அமைந்த கால்களை உடைய சேவலார் என்னையும் இன்பு அடையா வகை - இங்கு என்னையும் கூடல் இன்பம் தடுக்க முகமாக, கூ, கூ என்று குரல் எழுப்புகின்றார்.
(e.d.):- ரிஷி பத்தினி - கெளதமர் மனைவியாகிய அகலிகை. கூடத் தகாதவரை வஞ்சனையாற் கூட வைத்து இருவரும் ரிஸி சாபத்துக்கு ஆளாகும்படி கொடுத்தது போல் இங்கு கூடத் தகுவோமாகிய என்னையும் என் காதலரையும் கூடாவகை கொடுத்தார் சேவலர் என்பார் என்னையும் என்றார். 'உம்' எச்சப்பொருளது, சேவலர் என ஆர் விகுதி இழிவுப் பொருளில் வந்தது. வன் படைத்தாளர் காலாயுதத்தார் என்ற பொருளில் சேவலுக் காயிற்று.

Page 98
175
15 வரைதல் வேட்கை
தலைவியைப் பாங்கி பருவரல் வினாதல் (இது வெளிப்படை) பருவரல் - துன்பம்
239. பாதிரி மார்க்கோர் சவுக்கியாழ்ப் பாணச் சமயநிலை யாதரிற் தேயுரை யாறு முகனல்லை யண்டிலர் பொ னிதரித் தாடலை பந்து நிகமலர் கொய்யலையாற் பேதலித் தாயகம் வந்ததென் றேவுரை பெண்ணணங்கே.
பதவுரை:- பெண் அணங்கே - பெண் இனத்தின் தெய்வம் போன்றேைள, பாதிரிழார்க்கும் ஓர் சவுக்கு - சுவ மத பொதனை செய்து வந்த பாதிரிமர்ருக்கு ஒப்பற்ற சவுக்குப் போல்பவரும், யாழ்ப்பாண சமய நிலை அதரித்தே உரை - யாழ்ப்பாணச் சமய நிலையை ஆராமையுடன் விளக்கிய வருமான, ஆறுமுகன் நல்லை அண்டிலர் போல் - ஆறுமுக நாவலர் பிரானது நல்லைய அணுக அஞ்சும் அவர் பகைவர் போல், நீ பந்து தரித்து ஆடலை - நீ பந்து தாங்கி ஆடாதவளாயும், நிகர் மலர் கொய்யலை - உனக்கு ஒத்த மலர்களைக் கொய்யாதவளாயும் இருக்கின்றாய், அகம் போதலித்தாய் - உள்ளம் வேறுபாடு அடைந்து உள்ளாய், வந்தது என் உரை - உனக்கு நேர்ந்தது யாது, கூறுவாயாக.
(கு.உ):- பாதிரியார் துடுக்கு அடக்கினவர் நாவலர் ஆதல் பற்றி அவரைச் சவுக்கு என்றார். ஆதரவு - விருப்பம். . அது இங்கு ஆராமை உணர நின்றது. நாவலரைப் பகைத்தார் மனம் போதலித்து செய் தொழில் ஓய்ந்து சாம்பி இருப்பார். என்பது பற்றித் தன் செயல் மறந்து இருக்கும் தலைவிக்கு அவர் உவமையாயினர். பொதலித்தல் துயரத்தாலாம் - மன நிலைத்தளர்ச்சி. ஆல் - அசை.
பாங்கிக் கிறைவி அருமறை செவிலியறிந்தமை செப்பல்.
தலைவி அரிய களவொழுக்கத்தைச் செவிலி அறிந்தமை பாங்கிக்குக் கூறல்,
240. சென்னை யியாழ்நகர் தன்னை யிகழ்வது சீத்தளிக்கம்
பன்னை யியாழ்நக ரிற்ச யந்நிலை பார்தவமே
யன்ன நலைநா வலன்காக் கனிதே ளை விருபா றன்னை யுணாயென் னெனவாய் சரபித்த சார்பென்றனே.

176
பதவுரை:- சென்னை யாழ்நகர் தன்னை இகழ்வது சித்து அளிக்க - சென்னை யாழ்நகரை இகழும் நிலையை நீக்கி இதற்கு உயர்வு அளிக்கும் முகமாக, யாழ் நகரில் சமய அந்நிலை பன் ஐ - யாழ்ப்பாணச் சமய அந்நிலையை எடுத்துச் சொல்லிய தலைவனாய், பார்தவமே அன்ன நலை நாவலன் கா கனி தேன் அளவிடு பால் தன்னை - பூமி செய்த தவமே ஒருரு கொண்டால் ஒத்த மகிமையினாய் விளங்கிய நாவலா பிரானது சொலையில் காணும் கனியும் தேனும் கலக்கப்பெற்ற பாலை, , உணாய் என் என ஆய் சரபித்த சார்பு என் - உண்ணாது இருப்பது என்ன காரணம் எனச் சொல்லி என்பால் ஐயற்று வினாவியதன் சார்பு யாதாகலாம்;
(கு.உ):- கனி தேன் யுனாய் என்றது தலைவி உணவு மறுத்தல் குறித்து வந்தது. யாழ் நகர் அங்குள்ளார் செய்தி குறித்து நின்றது. இகழ்ந்தமை என்றது யாழ்ப்பாணத்தைப் பற்றி தமிழகத்தார் கூறிய யாதாயினும் ஓர் இகழ்ச்சி குறித்து நின்றது. சீத்தல் - தடைத்துத் தளளல.
தலைமகள், தலைமகன் வருந்தொழிற்கருமை சாற்றல்
தலைவி தலைமகன் வருந்தொழிற்கு அருமையைப் பாங்கிக்குக் கூறுதல்.
241. ஒன்றான சொல்லன் கிளைபிற ரென்றிரண் டேகணியா
னொன்றான சைவ வொழுக்கந் தவறினர்க் கோரரியா நுன்றான நாவுடை யானா வலன்கா நமர்வருமா றொன்றாது மின்னே யனைமுத லேழு முறதடையே
பதவுரை:-ஒன்று ஆன சொல்லன் - சொன்னது சொன்னவாயேயாம் சொல் உறுதி உடையவனும், கிளை பிறர் என்று இரண்டே கணியான் - தமர் என்றும் பிறர் என்றும் இரண்டு படக் கணிக்கும் இயல்பு இல்லாதவனும், ஒன்று ஆன சைவ ஒழுக்கம் தவறினர்க்கு ஓர் அரியாய் - வாய்மை பொருந்திய சைவ ஒழுக்கத்தில் இருந்து தவறியவர்களுக்கு ஒப்பற்ற
சிங்கம் போன்றவனும், நுன்றான , நா உடையான் - நன்மையே ஆனவற்றைப் பேசும் நாவினனுமாகிய, நாவலன். கா நமர் வருமாறு ஒன்றாவது - நாவலர் பெருமானது சோலையின் கண் நம் காதலர்
வருகை பொருந்தா வண்ணம், மின்னே - பெண்ணே, அனை முதல் ஏழம் உறு தடையே - தாய் முதலாய (மேற்சொன்ன) ஏழம் உற்ற தடைகளாம்.

Page 99
177
(கு.உ):- ஒன்றான சொல்லன் - நினைவு செயல்களோடு ஒன்றுபட்ட சொல்லினன் எனலுமாம் ‘சித்தே வாசிக்ரியாயாம் ஜகமதயம் மஹத்மனாம் நினைவு பேச்சு செயல்களில் ஒரே தன்மை மஹான்க்ளது என்பர். ஆதலின் கிளை பிறர் இரண்டே கணியான் என்பது ‘நமரெனக் கால் கோடாது பிறர் எனக் குணங்கொல்லாது - புறம் 55 என்பதன் பொருள்பட நின்றது.
தலைமகள், தலைமகனுர்க்குச் செலவொருப்படுதல்
(இது வெளிப்படை)
242. நாஞ்சிவ நன்மதத் தாரெனக் கூறி நவைபுரிநஞ்
சாஞ்சில போலிக் குருமுத லோர்வெந் நிடவடரைஞ் சாற்சிவ நற்சமை யாசா னறுமுக னல்லைமன்பா னாஞ்செலி னண்ணுதும் பாலை யஞர்ப்பொறை நாதரினே
பதவுரை :- நல் சிவ மதத்தார் நாம் எனக் கூறி - நன்மையாகிய சைவ சமயத்தார் எனச் சொல்லிக் கொண்டு, நவைபுரி - சைவ மேன்மைக்கு ஒவ்வாத குற்றங்களைச் செய்யும், நஞ்சாம் சில போலி குரு முதலோர் வெந்நிட அடர் - நச்சுத் தன்மையினரான போலிக்குருமார் சிலர் முதுகிட்டு ஒடும்படி தாக்குகின்ற, ஐஞ்சாம் சிவ நற்சமை ஆசான் ஆறுமுகன் நல்லை மன் பால் நாம் செலின் - ஐந்தாது சமய குரவர் எனப் போற்றப்படும் நாவலர் பிரானே போன்ற நல்லூரிலுள்ள தலைவர் பால் நாம் செல்வதனால், நாதரின் பாலை அஞர் பொறை நண்ணுதும் - தலைவனின் பிரிந்து உறைதலாம் துயர் பொறுத்து இருக்கும் கஷ்டத்துக்கு ஒர் எல்லை கண்டவளாவேன்
(கு.உ)- நாதரின் - இன்னுருபு 5ம் வேற்றுமை நீக்கப்பொருளில் வந்தது. பாலை - பிரிவு, அஞர்ப்பொறை - துன்பம் பொறுத்தல், எல்லை என ஒரு சொல் சொல்லெச்சமாக வருவிக்கப்பட்டது. நாவலர் ஐந்தாம் குரவரெனும் வாய் வழக்கிற்கு நூற்பிரயோகம் தருதல் இச் செய்யுள் சிறப்பாகும். வெந்நிட என்றது குருமார் தம் போலி ஒழுக்கப்பிடியிலிருந்து பின்வாங்க 616.guigu Tub.

178
பாங்கி இறைவனைப் பழித்தல்
(இது வெளிப்படை)
243. வாணி யுறநா மறைநெறி போதலின் மன்கமலம்
பேணி யுறப்பா ரளித்துப் பிரமனைப் பேசுநல்லை மாணி யறுமுகன் றன்னருண் மானு மதிநுதலாய் காணி லுனையழ விட்டவர் போலிலைக் கைதவரே
பதவுரை :- நா வாணி உற மறை நெறியோதலின் - பிரமா தன் நாவில் சரஸ்வதி வீற்றிருக்க வேதங்களை முறைப்படி ஒதுதல் போல, நா வாணி உற மறை நெறி ஒதலின் நாவலர் நாவில் சரஸ்வதி பிரசன்னமாய் இருக்க வேதாகம நெறியைப் பிரசங்கத்தினாலும், மன் கமலம் பேணி உற பார் அளித்து - பிரமா தலைமை வாய்ந்த தாமரையில் வீற்றிருந்து பொருந்துமாறு உலகைத் தோற்றுதல் போல, மன் கமலம் பேணி யுற பார் அளித்து - நாவலர் தலைவனான சிவன் தனது உள்ளக் கமலத்தில் விரும்பி எழுந்தருளுமாறு இருத்திக் கொண்டு உலகினைப் பாது காத்தலினாலும், ( இவ்வொப்புமை பற்றி ) பிரமனைப் பேசு நல்லை மாணி - பிரமாவைத் தனக்கு இணையாகப் பேசநிற்கும் நல்லைப் பிரமச்சாரியான, அறுமுகன், தன் அருள் மானும் மதி நுதலாய் - நாவலர் பிரானது அருள்த்தன்மை போல விளங்கும் சந்திரனை ஒத்த நெற்றியை உடைய தலைவியே, காணில் உனை அழ விட்டவர் போல் உற்று உணரும் பொழுது கூடல் பெறாமல் வருந்தி அழும்படி உன்னைக் கைவிட்ட காதலர் போல், கைதவர் இலை - வஞ்சகர் யாரும் இல்லை.
(கு.உ)-இச்செய்யுளின் முதல் இரு தொடர்கள் பிரமாவுக்கும் நாவலருக்கும் சிலேடை, அதற்குத் தக ஒவ்வொன்றும் இரு வேறு விதமாகப் பிரித்துப் பொருள் உரைக்கப் பெற்றன. முதல் தொடரில் மறை நெறியோதலின் .. மறைநெறி ஒதலின் எனவும் மற்றையதில் மன்கமலம் பேணி உற பாரளித்து ".. மன்கமலம் பேணியுற பாரளித்து எனவும் அமைந்த கருத்து வேறுபாடுகள் கருதத்தகும். சிவனை உள்ளத்தில் இருத்திக் கொண்டு புரிந்த விசேடத்தால் நாவலர் கையிட்ட லோகோய காரணப் பணிகள் சித்திகர மாயின என இங்கு தோன்றும் பொருள் நயம் கவனிக்கத்தகும்.

Page 100
179
பூங்கொடி, இறைவனை நேர்ந்தியற்பட மொழிதல்
பாங்கி இறைவன் இயல் பழித்தது பொறாளாய்த் தலைவி இயற்பட மொழிதல்
244. அஞ்சக் கரமுற் றடிக்கட் கமல மமர்ந்திருத்திக்
கஞ்சத் திருவி லெனலா லரியைக் கடுக்கு நல்லை விஞ்சத் தவத்துதி நாவலன் மேவலர் மேவெமக்கு ளஞ்சக் கருமபுக சப்பது நம்வினை யாலணங்கே
பதவுரை :- அணங்கே - தெய்வம் அனைய என் தோழியே , அம் சக்கரம் உற்று அடி கண் கமலம் அமர்ந்து இருத்தி - (விஷ்ணு) அழகிய சக்கரப்படையை பெற உற்றுச் சிவனது திருவடியில் (தனது) கண்ணாகிய கமலத்தை விரும்பிச் சூட்டி கஞ்ச, திரு இல் எனலால் - தாமரை ஆகனியாகிய இலக்குமியின் வீடு 66 இருத்தலால், அஞ்சு அக்காரம்உற்று அடிகட் கமலம் அமர்ந்து இருத்தி - நாவலர் பஞ்சாக்கர செபத்தை மேற்கொண்டு பாதங்களைப் பத்மாசனமாக விரும்பி அமைத்து, கஞ்சத்திரு இல் எனலால் - இலட்சுமி கடாட்சம் இவருக்கு இல்லை என இருத்தலால் ( இத்தன்மை நோக்கில்) அரியைக் கடுக்கும் - விஷ்ணுவை ஒக்கும், விஞ்ச அ தவத்து உதி நல்லை நாவலன் - மிகுந்து நிற்கும் அத்தகைய தவத்தினனாகிய நல்லை நாவலரது, மேவலர் மேவு எமக்கு உள் அஞ்ச - பகைவரை ஒத்த எமக்கு உள்ளம் அஞ்சும் படியாக கரும்பு கசப்பது நம் வினையால் - இனிமை இயல்பின் நீங்காத கரும்பு எமக்குக் கசப்பது நம் பாவதோஷத்தினாலாம்.
(கு.உ):இச்செய்யுளின் முன் இரு தொடர்கள் விஷ்ணுவிற்கும் நாவலருக்கும் சிலேடை, அதற்குத் தக ஒவ்வொன்றும் இரு வேறு விதமாகப் பகுத்துப் பொருள் உரைக்கப்பட்டன. அம் சக்கரம் உற்று - அழகிய சக்கரம் பெறுதலை அவாவி அஞ்சு அக்கரம் உற்று - அஞ்சு அக்கர செபத்தை மேற்கொண்டு என சக்கரம் சக்கரப்பேற்றின் மேலும் அஞ்சக்கரம் அஞ்சக்கர செபத்தின் மேலும் நின்றன. விஷ்ணு ( சிவன் ) திருவடியில் தன் கண் தாமரையாகிய இருத்தியவாறு பங்கய மாயிரம் பூவினிலோர் --- எவரும் திருத்தெள்ளே திருவாசகப் பாடலாற் பெறப்படும், திருவில் என்பதன் இல் ஒரு கால் வீடு எனவும் ஒரு கால் இன்மை எனவும் பொருள்பட்டிருத்தல் காண்க. செய்யுள் இறுதி தொடர் ஒட்டணி, விளக்கம் வருமாறு :- கரும்பென்பது என்றும் மாறா இனிமைப் பொருள் அது ஒரு கால் யார்க்கேனும் கசக்குமாயின் காரணம் அவர் நாவிற் பித்து ஏறிய பாபதோஷமன்றிக் கரும்பின் தோஷமாதல் இல்லை. அங்ங்ணம் நம்

18O
காதலர் என்பவர் என்றும் மாறுபடா இனிமைப் பண்பினர், இன்று அவர் நமக்குக் கசக்கின்றார் எனில் காரணம் எமக்கு மனக்கிலேசம் ஊட்டும் எம் வினையே ( பாவம் ) அன்றி அவராதல் பொருந்தாது என்பது, வினை - தீவினை அது தன் காரியமாகிய பாவத்தை உணர்த்திற்று.
தலைமகள் கனவு நலிவுரைத்தல்
தலைவன் கனவிற் கூடினானாக, விழித்த பின்பு பொய்யாய்ப் போன துன்பத்தைப் பாங்கியுடன் கூறல்.
245. அக்கணி யான்முக் கணிய லமையா விடமரிவை
மிக்கணி நீற்றா னிமல னறுமுகன் வெற்பிலெமர் புக்கணி சேர்த்தி நறுநுத னிவிப் புனையறுவை யுட்களி யார்கலித் தோய்வர் விழித்திட வோடுவரே
பதவுரை :- அக்கு அணியான் - சிவன் எலும்பு மாலையை அணிபவன், மு கணி - மூன்று கண்கள் உள்ளவன் , அல் அமையா அரிவை இடம் - இருள் பொருந்தா ஒளி மயமாகிய சக்தியை இடப் பாகத்துக் கொண்டவன், மிக்கு அணி நீற்றான் - மிகுதியாக அணியப் பெற்ற திரு
நீற்றுக் கோலத்தினன், நிமலன் - மலச்சார்பு அற்றவன் , அக்கு அணியான் - (நாவலர்) உருத்திராக்க மாலையை அணியாகக் கொண்டவர், முக்கணி - ஞானக் கண்ணும் விழிக்கப் பெற்றமையால்
முக்கண்ணினன் , அரிவை ஆல் அமை ஆ (அவ்) விடம் - அவருக்குப் பெண் இருளாந் தன்மை வாய்ந்த அத்தகைய விஷமாம், மிக்கு அணி நீற்றான் - விருப்பம் மிக்குப் பக்தி பூர்வமாய் அணியும் திருநீற்றுக் கோலத்தினன் , நிமலன் - மனிதக் குற்றங்கள் இல்லாதவன், ஆறுமுகன் வெற்பில் எமர் - (இத்தன்மை நோக்கில் சிவனே எனத் தக்க ) நாவலர் பிரான் மலையிடத்தில் வாழும் நம்மவர், புக்கு அணி சேர்த்தி - என்னை அணுகி வந்து ஆபரணங்களால் அலங்கரித்து நறு நுதல் நீவி - எனது நல்ல நெற்றியைத் துடைத்து, அறுவை புனை உட்ட்களி ஆர் கலி தோய்வர் - எனக்குப் புத்தாடை உடுத்தி உள்ளுர விஞ்சும் களிப்பாகிய கடலில் அமிழ்வர் ( ஆனால்) விழித்திட ஒடுவர் - நான் கண் விழித்ததும் ஒடி ஒளிந்திடுவர்.

Page 101
181
(கு.உ):- கண் விழித்ததும் ஒடுவர் என்றதனால் நிகழ்ந்தது களவு என்பது பெற வைத்தார். நம்மவர் கூடி எனக்கு மணவணி புனையக் கனாக் கண்டேன் என்பது தாற்பரியம். இகர விகுதி செயப்படுபொருள் உணர்த்தும் இயல்பினதாதல் பற்றி முக்கணி - மூன்று கண்கள் உள்ளவன் என உரைக்கப்பட்டது. உயிரைப் பற்றும் காம குரோத மத, மாற்சாயம், தாபம், வாட்டம் விசித்திரம் என்ற் தீக் குணங்கள் மலகாரியங்களாதலின் அவை இங்கு ( நிமலன் என்பதில்) மலம் என்றே உபசரிக்கப்பட்டனவாதல் தகும். அது பற்றி நாவலர்க்காம் போது நிமலன் - மனிதக் குற்றங்கள் இல்லாதவன் என உரைக்கப்பட்டது. அவ்விடம் என்பது வகர ஈறுகெட்டு முதல் நீண்டு ஆவிடம் என ஆயிற்று என்க. நாவலர்க்கு அரிவை விடமாதல் வரும் செய்யுளாலும் அறியப்படும்.
கவினழிவுரைத்தல்
விரகத்தால் தலைவி தன் நலனழிந்ததனைப் பாங்கியொடு கூறல்.
246. மாயா வதமுதல் வன்மத வாரண மாய்க்குமரி
தோயா மனப்பர தெய்வ சுகநா வலன்றொண்டிற்கொன் றியார் தனமெனச் சந்தனக் குன்றி னெழிலழியப் பாயார் கொடிப்பீர் படருறச் செய்தனர் பாதகரே
பதவுரை :- மாயாவதம் முதல் வன்மத வாரண மாய்க்கும் அரிமாயாவாதம் முதலான பரசமயங்களாகிய வலிய யானைகளை அடர்த்து அழிக்கும் சிங்கம் போல்பவரும், பர தெய்வம் மனம் தோயாச் சுக நாவலன் - சிவனையன்றிப் பிற தெய்வங்கள் பால் மனம் தோயாத இயல்புடையவருமாகிய நாவலர் பிரானது, தொண்டுக்கு ஒன்று ஈயார் தனமென சைவ தமிழ்த் தொண்டுக்கு ஒரு சிறிதும் கொடாதவர்களுடைய செல்வம் போல, சந்தனக் குன்றின் எழில் அழிய - சந்தனமரங்கள் நிறைந்த மலையின் வனப்புக் கெடும்படி ( சந்தனம் திமிர்ந்த குன்றனைய பயோதரத்தின் வனங்பு நீங்க ) - பாயார் கொடுப்பிர் படருற - மேலேறிப் பீர்க்கொடி படருமாறு, ( சுணங்கு படருமாறு ) பாதகர் செய்தனர் - பாதகத் (தன்மை வாய்ந்த) தலைவரின் செயலமைவதாயிற்று.

182
தன்றுயர் தலைவற் குரைத்தல் வேண்டல்
தலைவி தன் துயரைத் தலைவற்கு அறிவிக்க வேண்டுமென்று பாங்கியொடு கூறல்.
247. ஈழச் சிவநெறித் தேர்வியாழ்ப் பாணச் சமையநிலை
யாழத் தெரிக்கு மறுமுக னல்லை யமர்புலம்பற் கேழை தனமு நுதலும் பசந்த வெனச்சொலியான் வாழத் துளிதலை மன்பீர் மலரது காட்டுதியே.
பதவுரை :- ஈழ சிவ நெறி தேர்வு - ஈழத்துச் சிவநெறித் தெளிவும், யாழ்ப்பாண சமைய நிலை ஆழத் தெரிக்கும் - யாழ்ப்பாணச் சமைய நிலையை எவரும் ஆழ்ந்து உணர்தற்கு ஏற்றவாறு தெரித்துக் கூறும், அறுமுகன் நல்லை அமர் புலம்பற்கு - நாவலர் பிரானது நல்லையின் கண் தங்கும் தலைவனுக்கு, எழை தனமும் நுதலும் பசந்த என சொலி - ஏழையாகிய எனது முலைகளும் நெற்றியும் பசப்புத் தாவி உள்ளமையைத் தெரிவித்து, யான்வாழ - நான் வாழச் செய்யும் உபகாரமாக, தலை துளி மன் பீர் அது காட்டுதி - தலையில் நீர்த்துளி பொருந்தும் பீர்க்க மலரைக் காட்டுவாயாக.
(கு.உ); பீர் - பீர்க்க மலர். நிறத்தால் ஒத்தலின் பீர் பசலைக்கும் பெயராயிற்று. அத்தொடர்பில் பசலை தாவியமை உணர்த்தும் அறிகுறியாவதாம். தலைவி அவள் கூடல் பெறாத வருந்துகிறாள். ஆதலின் தனது ஏழ்மை புலப்படத் தன்னை ஏழை என்றும் தான் வருந்துதல் பற்றிக் கவலைப்படாது கூட்டம் இன்றித் தனியிருத்தலைக் கடைப்பிடிக்கும் தலைவனது பொல்லாங்கு புலப்பட அவனைப் புலம்பன் என்றும் குறிப்பிட்டு உள்ள நலம் அறியத்தகும். புலம்பு - தனிமை புலம்பன் - தனிமை கடைப்பிடிப்பவன். துளி தலை மன் பீர் என்றதனால் மலர்ந்த உடனான புதுப் பூ என்றாளாம். அந்நிலையிலேயே பூவில் நீர்த்துளி காண்டல் சாத்தியம் ஆதலின் பசலை நிறத்தை உள்ளபடி காட்டுதலும் புதுப் பூவுக்கே பொருந்தும்.

Page 102
183
துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல்.
யான் துன்புறலைத் தலைவர்க்கு (பாங்கி) நீ சென்று சொல்லெனத் தலைவி கூறியதற்குத் தலைவியை நோக்கிப் பாங்கி சொல்லல்,
248. குயினிலை காநலை யிந்து சமயங் குவலயத்தே
வியனிலை யாகத் திருத்தி மளித்திடு வீரனெணு மயனிலை நீநா வலனேய் பவர்க்கு வகுத்துரைத்தென் றுயிதிலை யுற்றவர் போன்றார்க் கெடுப்பலென் றுமொழியே.
பதவுரை :- பல் (பால்) எனும் தூ மொழியே - பால் எனத்தகும் இனிமை வாய்ந்த தூய மொழியினளாம் தோழியே, குயின் நிலை கா நலை - மேகம் நிலைகொள்ளும் சோலைகளை உடைய நல்லையை இடமாகக் கொண்டு, இந்து சமயம் குவலயத்தே வியன் நிலையாக - சைவ சமயமானது உலகில் பெருமளவில் நிலையுறும் வண்ணம், திருத்தி அளித்திடும் - இடையில் புகுந்த ஒழுக்கத் தவறுகளைத் திருத்தி உதவிய, வீரன் எனும் நாவலன் ஏய்பவர்க்கு - வீரன் என்ற, நாவலர் பிரானை ஒத்த நம் காதலர்க்கு, நீ என் மயல் நிலை வகுத்து உரைத்து - நீ எனது மயக்க நிலையை விளக்கி உரைத்து, துயில் நிலை உற்றவர் போன்றோர் கெடு - உறங்கி இருக்கும் நிலையினர் போல் வந்து அவர் துயில் சோர்வைக் கெடுப்பாயாக.
(கு.உ): பால் பல் எனக் குறைந்து நின்றது. குயில் நிலை எனலுமாம். சமயத்தைத் திருத்தலாவது இடையிற் புகுந்த ஒழுக்கத்தவறுகளைத் திருத்துதலாம். வீரன் - புனருத்தாரண வீரன் என்க. துயில் நிலையுற்றவர் போன்றார் என்பது அது சார்ந்த மயக்கச் சோர்வுக்காயிற்று. அதுவே கெடுத்தற்குச் செயப்படுபொருளாம், துரமொழி - அன்மொழித் தொகை,
அலர் பார்த்துற்ற வச்சக்கிளவி
ஊராரும் சேரியாருஞ் சொல்லும் அலரைக் கருதி அதனால் உற்ற அச்சத்தால் தலைமகள் கூறும் சொல்.
249 அஞ்செழுத் தைத்தின நெஞ்சழுத் தாறு முகன்பொழின்மாம்
பிஞ்செழு கண்ணாய் குழைதலைக் கொண்டாய்
பிறர்தங்கள்வாய் அஞ்செழு கோவைக் கனியா யிருந்து மலர்கொளற்கோ வஞ்செழு காம னலர்கொளற் கோமெ யயருவனே.

184
பதவுரை :- அஞ்செழுத்தை தினம் நெஞ்சு அழுத்து ஆறுமுகன் பொழில் "வாய் - திருவைந் தெழுத்தைத் தினம் தினம் நெஞ்சு அழுத்தி உருகும் நிலையில் செபிக்கும் நாவலா பிரானது சோலையின்கண் உள்ள, மா பிஞ்சு எழு கண்ணாய் - மா வடுவின் தன்மை தோன்றும் கண்களை
உடைய தோழியே, குழை தலை கொண்டாய் - உள்ளம் குழையும் உருக்கம் மேற்கொண்டுள்ளாய், பிறர் தங்கள் வாய் - இங்குள்ள அயலார் வாய்கள், அம் செழு கோவை கனி ஆய் இருந்தும் - அழகிய
செழுமையான கொவ்வைக் கனிகளாய் இருந்தும், வஞ்சு எழு காமன் அலர் கொளற்கோ - வஞ்சனைத் திறத்தானாகிய மன்மதன் பூக்களாகிய அம்புகளுக்கு இலக்காதற்கோ, மெய் அயருவன் - என் உடல் அயர்ந்து போவது.
(கு.உ): வாய் நாகரிகமாய் இருந்தும் அதன் செயல் அநாகரிகமாதல் தோன்ற அஞ்செழு கோவைக் கனியாய் இருந்தும் அலர் கொளல் என்றார். வஞ்சு - வஞ்சம். அதற்கோ இதற்கோ என அயிர்த்தல் - இரண்டும் அயரச் செய்தலில் ஒரே தன்மையைக் கொண்டிருக்கும். எதற்கென்று தாக்குப் பிடிப்பது என்பது தாற்பரியம்.
ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி
வழியைப் பார்த்து அவ்வழி ஏதத்தால் தோன்றும் அச்சத்தால் தலைவி கூறும் சொல். பார்த்தல் - கருதல்,
250. தூசை யளித்தது போர்வை யளித்தது தொல்லையரற் காசை நடுங்க வமர்புரி சாரலன் றோவவன் பூண் மாசை தருபனங் காட்ட வருநெறி மன்னர்சிவ பூசை புரிவோர் திறம்ப றவிந்நா வலன்புவிக்கே.
பதவுரை :- சிவ பூசை புரிவோர் திறம்பல் தவிர் நாவலன் புவிக்கு - சிவ பூசை செய்வோர் அதன் பண்பில் தவறுதல் இல்லாத சிறப்பை உடைய நாவலர் பிரானது பூமியின் கண், அவன் பூண் மாசை தரு பணம் காட்ட மன்னர் வரு நெறி - சிவபிரானது ஆபரணமான நாகம் பொன் நிற அழகு தரும் தனது படம் விரித்து நிற்க அதற்கு அஞ்சி ஒதுக்கி நமது தலைவர் நம்மை நோக்கி வருகின்ற வழியானது, தொல்லை அரற்கு தூசை அளித்தது - பழமையான சிவனுக்கு ஆடை கொடுத்த புலியும் போர்வை அளித்தது - போர்வை அளித்த யானையும், ஆசை நடுங்க அமர் புரி சாரல் அன்றோ - திசை அடங்குமாறு தம்முள் மோதுகின்ற மலைச் சாரல் வழி அல்லவா.

Page 103
185
(கு.உ): தூசு - ஆடை, மாசை - (மாழை) பொன்; ஆசை - திசை, திக்கு, தலைவர் வரும் வழியை நினைக்க அச்சம் ஆகின்றது என்பது தாற்பரியம்."பார்த்தல் - இது இப்பொருளில் வருங்கால் இதனை
'நோக்கனோக்கம்' என்பர்; அதாவது ஒன்றினைக் கண்ணால் நோக்குதல் அன்றி மனத்தால் நோக்குதலாம்.
காம மிக்க கழிபடர் கிளவி
251. கிறித்தவ ராற்றி யொழுக்கம் பரவல் கிளந்தருஞ்சூள்
குறித்த வறுமுக னல்லைக் குரைகடற் கொண்கனற்றேர் மறித்துத் தருகிலை நின்பெடை யோடு மருவுகள்வ முறித்தல் பரதர் நின் கால்சரி தேர்ச்சரி மூடுவையே.
பதவுரை :- நின் பெடையோடு மருவு கள்வ - உனது பெடை நண்டோடு கூடி இருக்கும் ஆண் நண்டே, கிறித்தவரால் தீ ஒழுக்கம் பரவல் கிளந்து - கிறிஸ்தவர்களால் சமூகத்தில் தீயொழுக்கம் பரவுதலை ஆதார பூர்வாக விளக்கி, அரும் சூள் குறித்த அறுமுகன் - அரிய சபதம் இட்டுக் கொண்ட நாவலர் பிரானது, நல்லை குரை கடல் - நல்லை யோரத்து ஒலி செய்கின்ற கடற்கரை மணல் வீதியில், கொண்கன் நல் தேர் மறித்து தருகிலை - நம் தலைவரது நல்ல தேர் மீண்டும் வர வொட்டாது இருக்கின்றாய், அல் பரு அதர் - ஏலவே தெளிவற்றுக் கிடந்த பெரிய வழியின் இயல்பினை மாற்றி; நின் கால்சரி தேர்ச்சரி மூடுவையே - நினது கால்களின் பரவுகையால் தேரின் (சக்கரச்) சுவடு புலப்படாத வண்ணம் மூடுகின்றாயே, குறிப்பு; முறித்தல் பரதர் என்பதை அல் முறித்து பரு அதர் என மாற்றிப் பொருள் காண்க. அல் - மயக்கம், தெளிவின்மை, அதர் - வழி; சரி - சுவடு.
(கு.உ); நண்டே, பெடையும் நீயுமாய்க் கூடிக் குலாவிக் களிக்கும் நீ கூடல் பெறாமையால் வருந்தும் எனக்கு உபகாரத்துக்குப் பதில் அபகாரமே செய்கின்றாய். காதலர் என்பால் வரச் செய்யாமை மட்டிலன்றி அவர் வந்த தேர் சுவட்டைத்தானும் நான் பார்த்து ஆறதல் அடைய விடாமல் அவற்றை மூடி அழிக்கின்றாய். இது உனக்கு அறமன்று என்பது தாற்பரியம். இது காம மிகுதியால் வெளிப்படும் உள்ளக் குமுறலாதலின் விலக்காகா தென்க.
குறிப்பு:- 252ம் பாட்டு நீக்கப்பட்டுள்ளது.

186
நெறி விலக்குவித்தல்.
தலைவி தலைவன் வரும் வழியை விலக்கெனப் பாங்கியொடு கூறல்,
253. சைவக் குருக்க ளறியார் பலரச்சித் தாந்தநெறி
கைவைத் தறியார் கருவிக் கலையென் கழற்றுரையா னைவைத் தவிர்நா வலனன் னெறியுற நாடினவர் மைவைத் ததிநெறி மன்னுவ ரோசொல் வடிவிழியே.
பதவுரை :- வடிவிழியே - கூர்மை வாய்ந்த விழிகளை உடையாய், சைவக் குருக்கள் பலர் அ சித்தாந்த நெறி அறியார் - சைவக்குருக்கள் என்று இருப்பாரில் சிலர் அத்தகு மேன்மை வாய்ந்த சித்தாந்த நெறி பற்றி அறியார், கருவி கலை கைவைத்து அறியார் - அவ் அறிவுக்குச் சாதனமாம் கருவி நூல்களைத் திண்டியும் அறியார், என் கழற்று உரையால் நைவை தவிர் நாவலன் - என உணர வைக்கும் உரை நயத்தானே அவர்களிடை அவ்வறிவு நிலை நலிந்து போகும் இயல்பைத் தவிர்த்து விட்ட நாவலர் பிரானது, நல் நெறி உற நாடினவர் - நல்ல மேதை உணர்வைப் பொருந்த ஆராய்ந்து தெளிந்த நம் காதலர், மை வைத்த தி நெறி மன்னுவரோ - குற்றம் பொருந்திய தீய வழியில் பொருந்துவாரோ, சொல் - சொல்வாயாக.
(கு.உ)- கழற்றுரையாவது உற்றுணருமாறு தெருட்டி உரைத்தல். பொறி - அறிவு மேதை. நாடுதல் - ஆராய்தல், நாவலர் மேதையை ஆராய்ந்து உணர்ந்தவர் தீநெறிச் செல்லார் என்ற பொதுப் பொருளும் நெறி விலக்குவித்தல் என்ற கிளவி நிலைக்கு ஏற்றவாறு நாவலர் மேதை உணர்ந்தவரான நம் தலைவர் ஆபத்து நிறைந்த மலை வழியில் வருதல் தகாது என்றும் சிறப்புப் பொருளும் ஒருங்கே தோன்ற நின்றது. இது வேற்றுப்பொருள் வைப்பணி. தி நெறி - ஆபத்துக்களாகிய குற்றம் நன்றல்லாத வழி.
0. குறி விலக்குவித்தல். தலைவி தலைவன் வரும் இரவுக்குறியை விலக்கு எனப் பாங்கியொடு கூறல்.
254 அறியல ரேசு மதம்புகுந் தாங்குப் பதியியல்புக்
குறியிலைச் சைவங் குறிக்குமென் போதகர்ச் சீறுவரை நெறியி லிடித்துரை நாவல னிள்பொழிற் கண்டுயில்புட் குறியி லவர்வர வார்த்திடிற் கோது கொடுங்குழையே.

Page 104
87
பதவுரை :- கொடுங் குழையே - வளைந்த காதணி உடையாய் அறியலர் ஏசு மதம் புகுந்து, அறிவிலிகள் ஏசு மதத்திற் புகுந்து சைவம் குறிக்கும் பதி இயல்பு குறி ஆங்கு இலை என - சைவம் குறிப்பிட்டுக் கூறும் பதி இலக்கணத்தின் அடையாளம் தானும் அம் மதத்தில் இல்லை
என்கிறவரை, வரை நெறியில் இடித்து உரை - வரைவு பட்ட முறையினாலான உறுதிச் சொல்லால், போதகர் சீறும் - போதகர்களைக் கோபிக்கின்ற, நாவலர் நீள் பொழில் - நாவலர் பிரானது நீண்ட
சோலையின் கண், கண்துயில் புள் - கண் உறங்கும் பறவைகளானவை,
குறியில் அவர் வர ஆர்த்திடில் கோது - இரவுக் குறியில் காதலர் வரும் வேளை ஒலி கிளப்புமாயின் விளைவு தீங்காகும்.
(கு.உ)- புக என்னும் செயவெனெச்சம் செய்தென் எச்சமாகத் திரிந்து நின்றது. வரை நெறி - ஒருவர் மீறி உரைத்தற்கு இடம் கொள்ளாத அளவுக்கு வரைவுபட்ட நெறி - குறி - அடையாளம்,
வெறி விலக்குவித்தல்.
தலைவி தாய் வெறியாடுதல் கொண்டாளென்று தலைவற்குக் கூறி வரவு விலக்கெனப் பாங்கியோடு கூறல்,
255. சைவ மருந்தெனச் சான்றவர் சாற்று தனி நலையான்
மைவ ளருந்ந குலக்கிரி மையழித் தாற்பசலை நைவ ருகனி ருடன்பீர் படரா நடப்பனவோ தைவ மணங்கிய தென்றா னறியலன் றைவதமே.
பதவுரை :- சைவ மருந்தென சான்றவர் சாற்று - சைவ மருந்து என்று சான்றோர் புகழும், தனி நலையான் மை வளரும் நகுலக்கிரி - ஒப்பற்ற நல்லூரானது மேகங்கள் வளர்கின்ற சிறந்த குல மலையின்கண், மை அழித்தால் - (தெய்வப் பிரீதியாக) ஆடு பலியிட்டால், பசலை நை வரு கணிருடன் பீர் படரா நடப்பனவோ - மெய்யில் படரும் பசலையும் துயரக் கண்ணிரும் பீர்க்கு படர்தலும் இடம் பெறாது ஒதுங்கி விடுமோ, தைவம் அணங்கியது என்றான் அறியலன் தலைவியின் வேறுபாட்டுக்குக் காரணம் வரைத் தெய்வம் தீண்டியமை (அதற்குப் பிராயச்சித்தம் மறி அறுத்து வெறியாட்டயர்தல்) என்று கூறிய படிமத்தான் அறிவிலி, தைவதமே - என் துயர்க்குக் காரணம் என் தெய்வமாகிய க்ாதலரே.

188
(கு.உ):- காதலன் கூட்டம் பெறாமையால் தலைவி துயருற்று இருக்கையில் செவிலியோர் காரணம் அறியாது கட்டுச் சொல்வானைக் கேட்க, அவளை வரைத் தெய்வம் திண்டியதால் நேர்ந்த விளைவு அது என்றும் வரைத் தெய்வத்தை நேர்ந்து மறி அறுத்து வெறியாடுவதால் அது நீங்கும் என்றும் கூறக் கேட்டு அதற்குத் தயாராகும் வேளையில் தோழி கூற்றாக நிகழ்வது இதுவாகும். படிமத்தான் - தெய்வ வேடம் தாங்கி ஆவேசமுற்று நிற்றல் பற்றி படிமத்தான் எனப்படுவன். வேலன் எனப்படுவதும் உண்டு. ஆட்டை உணர்த்தும் மை எனும் சொல் மேகம் எனவும் பொருள் படு மாற்றால் மேகத்தை அழித்தால் பசலைக் கொடியும் பீர்க்கங்கொடியும் படர்ந்து செல்லுமோ என ஒரு தொனிப் பொருளும் இதிற் காண்க. கட்டு சொல்பவன் - குறி சொல்பவன்.
பிறர் விலக்குவித்தல்.
தலைவியை பிறர் வரைவைத் தலைவற்குக் கூறி வரவு விலக்கெனப் பாங்கியொடு கூறல்,
256. ஞானப் பிரகா சமுனி மரபி லினிதுதித்த
ஞானப் பிரகா சவிளக்கா நாவலன் வெற்பறா னானக் குழலாய் வரைவொரு வந்தா னமதுயிர்கொண் டினப் படவிருப் பேமோ வியம்ப லினியுளதே.
பதவுரை :- நான குழலாய் - மான்மதங் கமழும் கூந்தலினாய், ஞானப்பிரகாச முனி மரபில் இனிது உதித்த - ஞானப்பிகாச முனிவரின் மரபில் இனிதாக வந்து உதித்த, ஞானப்பிரகாச விளக்கா நாவலன் வெற்பு - ஞானப் பிரகாச தீபமாகிய நாவலர் பிரானது மலையின் கண், அயல்தான் வரைவொடு வந்தால் - அயலார் யாரும் தம் இட்டமாக மணம் பேசி வரும் நிலை நேருமாயின், ஈனப்பட நமது உயிர் கொண்டு இருப்போமோ - அதனால் நேரும் இழிவு நிலையில் நாம் உயிர் தங்கி இருக்கவும் கூடுமோ, இனி இயம்பல் உளது - இப்பொழுதே வரைவு எதிர் கொள்ளச் செய்ய வேண்டி உள்ளது.
(கு.உ);~ ஓ - எதிர்மறை - அயல் - ஆகபெயர், வரைவெதிர் கொள்ளல் அவாய் நிலையால் பெறப்படும்.

Page 105
189
குரவரை வரைவெதிர்கொள்ளுவித்தல். பெரியோர் வரைவு கூறிவர (அவரை) நமர் எதிர்கோடலைச் செய் என்று தலைவி பாங்கியொடு கூறல்,
257. இலக்கிய லக்கண தர்க்கசித் தாந்த மிருக்குமிடங்
கலக்கியெ வாதியர் தம்மைவெந் கண்டிடு நாவலன் போற் றுலக்கிய நம்குடித் தூய்மை யறாவகை சொல்லுதிகற் பிலக்கிய னேர வெமரை யவரை யெதிர்கொளவே.
பதவுரை :- இலக்கிய லக்கண தர்க்க சித்தாந்தம் இருக்கும் இடம் இலக்கியம், இலக்கணம், தர்க்கம், சைவ சித்தாந்தம் இருக்கும் நிலைக்களமாய் உள்ளவரும், எ வாதியர் தமை கலக்கி வெந் கண்டிடுடம் நாவலன் போல் - எத்தகு வலிமை பெற்ற வாதியரையும் கலக்கி முதுகிட்டு ஒடக் காணும் ஆற்றல் மிக்கவருமான நாவலன் (தூய்மை) போல, துலக்கிய நம் குடி தூய்மை அறாவகை - விளங்குகின்றதாகிய நமது குலத் தூய்மை கெடாது இருக்குமாறு, கற்பு இலக்கு இயல் நேர - என் (சம்பந்தமாக) கற்பாகிய இலட்சிய இயல்பு நேர்ப்படுதற் பொருட்டு, அவரை எதிர்கொள எமரை சொல்லுதி - தல்ைவரை வரைவு எதிர்கொள்ளுமாறு நம்மவரிடம் செல்வாயாக.
(கு.உ):- நாவலர் பிரானது சகல கலா சாகரமாகிய இயல்பும் திரிகரண சுத்தியும் புலப்பட மொழிந்தார். மனம் வேறுபடாது தம் உளம் புகுந்தாரையே மண்ந்து கற்பியல் காத்தல் குலத் தூய்மையாதலும் தோன்ற உரைத்தாள். அவரை எனச் செயப்படுபொருள் அவாய் நிலையான் வந்தது. நமரைச் சொல்லுதி உருபு மயக்கம். யாதானுருபிற் கூறிற்றாயினும் பொருள் சென் மருங்கின் வேற்றுமை சாரும் என்றதற் கேற்ப இரண்டாவது ஏழாவதன் பொருளில் நின்றமை காண்க.
10. வரைவு கடாதல்.
வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்.
258. சட்ட சபைக்குத் தமிழுடன் சைவந் தழைக்கவயற்
கட்ட மதக்களை பொன்ராம நாதனைக் கண்டிடவைத் திட்ட நலைநா வலன்கிரிப் பாலுண வேழையிவள் விட்ட தெனவேம் பெனவாய் சுரமா விளம்பினனே.

190
பதவுரை :- தமிழுடன் சைவம் தழைக்க - தமிழும் சைவமும் தழைத்து ஓங்க வைக்கவும், அயல் மத களை கட்ட - அயல் மதமாகிய களையைப் பிடுங்கித் தள்ளவும், (உபகாரமாதற் பொருட்டு) சட்டசபைக்கு பொன் ராமநாதனைக் கண்டிட வைத்திட்ட நலை நாவலன் கிரி - சட்ட நிரூபண சபைக்குத் தமிழர் பிரதிநிதியாகப் பொன் இராமநாதனையே தேர்ந்து எடுக்க வகை செய்திட்ட நல்லையின் நாவலர் பிரானது மலையின் கண், ஆய் ஏழை இவள் பால் உணவு வேம்பு என விட்டது என - செவிலியானவள் என் மகளாகிய இவள் நான் கொடுத்த பால் உணவை வேம்பெனக் கசந்து ஏற்காது விட்டது எதனால் என வினாவிய போது, சுரமா விளம்பினள் - உண்மையை மறைத்து மொழிந்தேன்.
(கு.உ)- கண்டிட வைத்தது - தேர்ந்து எடுக்கவைத்தமை. தேர்தற் பிரசார இறுதிக் கூட்டத்தில் நாவலர் பிரதி வேட்பாளரின் யோக்கியதை இன்மையை ஆதார பூர்வமாக நிரூபித்துக் காட்டிய வரலாற்று உண்மை குறித்தது இதுவாகும். ஏழை மகள் எனும் பொருளில் நின்றது. விட்டது என என்பதில் என் என ஒரு சொல் எஞ்சி நின்றதாகக் கொள்க.
அலரறிவுறுத்தல்.
ஊரில் தலைவியைத் தூற்றும் அலர் விரிந்தது என்று தலைவனுக்கு அறிவுறுத்தல்.
259. தேனைப் புணர்ந்தசொ லார்மயல் சைவஞ் சிறக்கவொழித்
தானை யறுமுக நாவல னைப்புகழ் கூறல்கலை மானைப் புணர்ந்தா னவனனை மன்னவ நீயுமெம்பெண் மானைப் புணாந்த தலராய் வடுவு மருவிடுமே.
பதவுரை :- கலை மானை புணர்ந்தான் அவன் அணை மன்னவ - சரஸ்வதியைப் புணர்ந்தவனாகிய பிரமாவை ஒத்த தலைவ, சைவம் சிறக்க - சைவத் தொண்டு சிறந்து ஓங்கும் வகையில் பணி ஆற்றும் பொருட்டு, தேனை புணர்ந்த சொலார் மயல் ஒழித்தானை - தேன் கலந்தாற் போன்ற இனிமை தரும் சொல்லினராய பெண்களை நோக்கி எழும் ஆசையை அறவே ஒழித்தவனாகிய, ஆறுமுக நாவலனை புகழ் கூறு அல் - ஆறுமுக நாவலனைப் புகழ்தற்கான நாளின் கூறாகிய இராப் பொழுதில், நீயும் எம் பெண் மானை புணர்ந்தது - நீயும் எம் பெண் மான் போன்ற தலைவியைப் புணர்ந்தமை, அலராய் வடுவு மருவிடும் - ஊரார் வாயில் எழும் அலர் மொழிக்கு இடமாய் நமது குலத்துக்கு ஒரு வடுவாயும் அமைந்து போயிற்று.

Page 106
191
(கு.உ):- பெண் மயலை ஒழித்தது என்பது இல்லற வாழ்வின்பத்தை பரித்தியாகஞ் செய்தமை குறிக்கும். தொண்டுக்கு தியாகத்தின் இன்றியமையாமை தோன்ற சைவஞ் சிறக்க என்றார். உம் - அசை,
தாயறிவுறுத்தல்.
இக்களவைத் தாய் அறிந்தாள் என்று தலைவற்குக் கூறுதல்.
260. அரவாய்க் கடிப்பகை யென்றே கரும்பை யருநறவு
விரமாத் தனையும் வெறுப்பளென் றென்றனை மெய்யுணரா விரவா மனத்த ரறியா வறுமுக னல்லைமனுங் கரவா மொழுக்க மதித்தறிந் தாளனை கண்ணுதியே.
பதவுரை :- மெய் உணரா இரவா மனத்தர் அறியா அறுமுகன் னல்லை - மெய்யுணாச்சி இன்மையால் இருண்ட உள்ளத்தினரால் அறியப்படாத நாவலர் பிரானது நல்லையின் கண், அனை - நமது தாய், கரும்பை - கரும்பையும், அரு நறவு விரமாதனை - தேனிற் குழைத்த திணைமாவையும், அரவாய் கடி பகை என்றே வெறுப்பள் என்று என்று - தம்மகள் இப்பொழுது வேப்பிலை என வெறுக்கின்றாள் என்று கண்டமையால், மனும் கரவாம் ஒழுக்கம் அனைமதித்து அறிந்தனள் - பொருந்திய களவொழுக்க உண்மையை அவள் ஊகித்து அறிந்து கொண்டாள், கண்ணுதி - இதனைக் கருத்திற் கொள்வாயாக.
(கு.உ):- அறியா அறுமுகன் - அறியப்படாத மகிமை உள்ள அறுமுகன். விரவு என்ற சொல் விர எனக் கடை குறைந்தது. அரவாய்க் கடிப்பகை - அரம் போன்ற ஓரங்கள் உள்ளதும் பேய் ஒட்டும் சாதனமாவதுமான வேப்பிலை. கடி - பேய், பேய் அதன் எதிர் நில்லாது ஓடுதல் பற்றி அது அதற்குப் பகையாம். என்றென்று என்ற அடுக்கு அன்னை பல தடவை அங்ங்ணம் பரீட்சித்துக் கண்டமை குறித்து நின்றது. மதித்து - ஊகித்து. மனும் இடைக்குறை. மன்உம் கரவாம் ஒழுக்கம் என வகுத்துத் தலைவ உமது களவொழுக்கத்தை எனக் கொள்ளுதலுமாம். வரைவின் அவசியத்தை அவன் உணர வைக்கும்படியாக உன் என அவன் மேல் சார்த்தி உரைத்தாள் எனும் நயமும் இதனால் பெறப்படும்.

192
வெறியச்சுறுத்தல்.
அன்னை வெறியாட்டளனை வினாதல் உட்கொண்டாளென்று தலைவனுக்கு அச்சமுறுத்திக் கூறல்.
261. வேங்கைமு னாட்டை யெடுத்தார் வியன்கரு ணைக்கடலென் நீங்கு மொழிநா வலன்கிரித் தெய்வமுற் றீண்டியதென் றோங்கிடு மாட்டைவிட் டாட்டை யழித்தே யுவகை செய வீங்கெம தன்னை யியைந்தா ளறிவை யெமதண்ணலே.
பதவுரை :- எமது அண்ணலே - எம் மகிமைக்குரிய தலைவ, வியன் கருணை கடல் - பெரும் கருணைத் தடங்கடலாகிய சிவபெருமான் வேங்கை முன் ஆட்டை எடுத்தார் (என்று) - வியாக்கிரத பாத முனிவர் காண வேண்டி நடனம் ஆடுதலை ஆரம்பித்தார் என்று, ஈங்கு மொழி நாவலன் கிரி - இவ்வுலகு உணர எடுத்து ஒதும் நாவலர் பிரான் மலையில், தெய்வம் உற்று ஈண்டியது என் - (தலைவியை) மலையில் இருக்கும் தெய்வம் பொருந்தித் தீண்டியுள்ளது என்கின்ற, ஓங்கிடும் மாட்டை விட்டு - உயர்ந்த ஒரு மாட்டுதலை (வேறொன்றில் இணைத்து) ஏற்படுத்தி விட்டு, ஈங்கு எமது அன்னை - இங்கே எமது தாயானவள், ஆட்டை அழித்தே உவகை செய இயைந்தாள் - மறி ஆட்டைப் பலி கொடுத்தும் பிரிதி செய்யத் துணிந்துள்ளாள்.
(கு.உ):- இனம் பற்றிப் பதஞ்கலி முனிவரையும் உடன் கொள்க. இவ்விருவர் வேண்டுதற்காகவே தில்லை மன்றில் நடன தரிசனம் ஆரம்பித்த தெனல் கோயிற் புராணச் செய்தி. தலைவன் காரணமாக தலைவி பால் விகாரம் நேர்ந்தமையை மற்றொன்றில் மாட்டி உள்ளமை பற்றி அன்னையின் செயலை மாட்டு என்றார். ஆட்டை அழித்து உவகை செயல் வெறியாடலைக் குறிக்கும்.
பிறர் வரைவுணர்தல்.
பிறர் வரைவு கூறி வந்ததனைத் தலைவற்கு அறிவித்தல். 262. அமல மனத்த னறுமுக னல்லை யனையகொடிக்
கமலந் தளவு மகிழ்கோங் கரும்பு கருவிருவேல்
அமுத முறுகனிக் கோவை யரசுட னாலணையத் துமயி ருறாதா ரரசுந மில்வருந் தோந்றவெணே.

Page 107
193
பதவுரை :- நம் இல் வரும் தோன்றல் - நமது இல்லத் தலைவனாய் வரற்குரிய பெருமையிற் சிறந்தோனே , அமல மனத்தன் அறுமுகன் நல்லை அனைய கொடி - மாசற்ற உள்ளத்தினரான நாவலர் பிரானது நல்லூரே போன்ற எமது தலைவி, கமலம் தளவு மகிழ கோங்கு அரும்பும் , கரு இரு வேல் - கரிய வேல்கள் இரண்டும், அமுதம் ஊறும் கனி கோவை - அமுதம் ஊட்டும் கனியாகிய கொவ்வையும் , அரசுடன் ஆல் - அரசும் ஆலும் ( ஆய இவற்றால் ) அணைய உறாதார் உயிர் தும் அரசு - தன்னைப் பொருந்த வந்து அணையாதவர்களின் உயிர் உன்னும் அரசு ஆவர், எண் - கருதுவாயாக.
(கு.உ)- கமலம் முதல் ஆல் இறுவாய ஒவ்வொன்றும் தலைவியின் உறுப்புக்களின் ஒவ்வொன்றுற்காம் . ஆல் - வயிறு: அரசு - நிதம்பம் என்க. துவ்வும் எனும் செயு மென் முற்று தும் எனக் குறைந்தது. அத்தகையதோர் அணங்காதலின் அவள் பிறர் வரைவுக்காளாம் நிலை நேருமுன் காரியத்தில் முந்திக் கொள் என்பாள் எண் என்றாள் என்க.
வரை வெதிர்வுணர்த்தல்
பாங்கி தலைவனை நோக்கி நீ வரைவு கூறி, எங்கள் நகர்க்கு வந்தாயாகில் எமர் எதிர் கொண்டு வருவர் எனக் கூறுதல்.
263. சகமா யிரத்தெழு நூற்றுநாற் பத்தைந்திற் சாருநல்லை
யகமா மகிழ வவதரி யாறு முகக்கதிரோன் றகமா மலையரி மன்றல் குறித்தனை சாரினமர் முகமா மரைமலர் வாரரி முன்மரை வாய்விடுமே.
பதவுரை:- சகம் ஆயிரத்து எழுநூற்று நாற்பந்தைந்தில் - சக வருடம் ஆயிரத்து எழுநூற்று நாற்பத்தைந்தில் ஐந்தின் கண், சாரும் நல்லை மா அகம் மகிழ அவதரி ஆறுமுக கதிரோன் தகு - பொருந்துகின்ற நல்லூராகும் இலக்குமியின் உள்ளம் மகிழுமாறு தோன்றி அருளிய நாவலர் பிரானாகிய சூரியனை ஒத்த, மா மலை அரி - பெருமை பொருந்திய மலையிலுள்ள சிங்கம் போன்ற தலைவன், மன்றல் குறித்தனை சாரின் - வரைவு முன்னிட்டு நீ வந்து அணைந்தால், நமர் முகமாம் மரை ம்லர்வார் - நம்மவர் தம் முகங்களாகிய தாமரைகள் அலரப் பெறுவர், அரிமுன் மரை மரை வாய்விடுமே - சிங்கத்தின் எதிரில் காட்டாடு குரல் எழுப்புமோ? இல்லை.

194
(கு.உ):- ஏகாரம் வினா. நமர் நின்னை எதிர்ப்பின்றியே வரவேற்பர் என்பதாம்.
நல்லையகமா மகிழ அவதரி-" ufsties
முன்னு மருளறிஞர்க்கு முதுபெருங் கவிஞாக்கு
முழுதுமறி மடாதிபர்க்கும் முந்தியமர் தரு வொளிர முழுதுணரு இம் மகவை
மைந்த தென வயிறு வாய்க்கும் இன்னதொரு பெருவிறலு முதுகொல் நமக்கென்ன
என்ற மெய்க் களிப்பிளிறு மாந் தியாழன்னை இணைவிழிகளிழுதுப்டுருள் முத்த மேய்க்கு மென் றின் கவிவலார் பன்னுமுயர் நல்லை வளர் பண்டிதசிகாமணி
பவளவாய் முத்த மருளே.
வரையுநாளுணர்த்தல்
மணம் செய்கின்ற நாளை அறிவித்தல்
264. சித்திர பானுவி லைந்து புதனவிட் டத்தினத்தி
லத்திர வேடனு வாட வவதரி நாவலன்வெற் பிற்குற மங்கைய ரம்புலி பேர்வா னிறையுதின மித்தரை வெம்புலி காட்டம் புலிக்கிலி யேய் தினமே.
பதவுரை :- சித்திர பானுவில் - சித்திரபானு வருடத்தில், தனு - மார்கழி மாதத்தில், ஐந்து புதன் அவிட்ட தினத்தில் - பஞ்சமித் திதியும் அவிட்ட நட்சத்திரமும் இயையும் புதன்கிழமையில், அத்திரவேள் வாட அவதரி நாவலன் வெற்பில் - மலர்ப் பானங்களை உடைய மன்மதன் வாட்டமுற உதித்து அருளிய நாவலர் பிரானது மலையின் கண், பேர் வான் அம்புலி நிறையு தினம் - பரந்த அகாயத்தில் சந்திரன் பூரண நிறைவுடன் ஒளிரும் தினம், குற மங்கையர் இ தரை வெம் புலி காட்டு அம்புலிக்கு கிலி ஏய் தினம் - குறவர் மாதர்கள் தரையில் உதிர்ந்து இருக்கும் வேங்கைப் பூத் தோற்றத்தினால் புலி புலி என்று காட்டிச் சந்திரனுக்குப் பயம் கொள்ளும் தினமாம்.
(கு.உ);- கரும் பாறை நிலத்தில் வேங்கைப் பூ உதிர்ந்து கிடக்கும் தோற்றத்தைப் புலி காட்டிக் கிலி கொள்ள வைக்கும் வினோதம் விளை தினமே வரைவு வினொதம் விளை தினமுமாம்.

Page 108
195
தலைமகளறிவு தலைமகற் கறிவுறுத்தல்.
பாங்கி தலைமகள் அறிவு தலைமகற்கு அறிவுறுத்தல்.
265. ஐம்பத்தே ழாண்டு நிரம்பிய பத்துட னாறுதின மிம்பர்க் குதவ விருத்த தமிழ்மத மேலுறக்கா நம்பற் றறுமுக னல்லை யனையா ணமக்கொழித்தா டன்பற் றியபழி யாமென நின்பழி தாரண்ணலே.
பதவுரை :- தார் அண்ணலே - மாலை விளங்கும் மார்பினை உடைய தலைவனே, ஐம்பத்தேழு ஆண்டு நிரம்பிய பத்துடன் ஆறு தினம் இம்பர்க்கு உதவ இருந்த - ஐம்பத்தேழு வருடம் பத்து மாதம் ஆறு நாள்களாக இவ் உலகத்தார்க்கு உதவும் வயிைல் வாழ்ந்திருந்து, தமிழ் மதம் மேலுற கா - செந்தமிழ் மொழியும் சைவ் சமயமும் மேன்மையுறக் காத்தருளியவரும், நம் பற்று அறுமுகன் - நமக்குப் பற்றாயுள்ள தலைவனுமாகிய நாவலர் பிரானது, நல்லை அனையாள் - நல்லூரை ஒத்த தலைவி, நின் பழி தன் பற்றிய பழியாம் என நமக்கு ஒழித்தாள் - நின் மேற் பழி கூறல் தன் பழியைத் தானே கூறுதலாய் விடும் என்ற கருத்தினால் நமக்கு அது தெரிய விடாமல் மறைத்து வாழ்கிறாள்.
(கு.உ):- ஐம்பத்தேழாண்டு நிரம்பிய . இருந்து அவன் குறித்த நாளில் நாவலர் பிரான் தேகவியோகம் எய்தினார் என்ற உண்மையைப் பிரிவுத் துயர் தன்னைக் காட்டாவண்ணம் அன்றே இம்பர்க்கு உதவ இருந்த என மறையக் கூறிய கவிசமத்காரம் காண்க. நம் பற்று அறுமுகன் - நாம் எனும் பற்றாய அகங்காரம் அறுதல் முகஞ் செய்யும் நிலை பெற்றவர் எனச் சிலேடையும் பயக்கும் பாங்கு உணர்க.
குறி பெயர்த்திடுதல்
பாங்கி இக் குறி இயல்பு அல்ல, வேறோர் குறியிடை வருக என்று கூறுதல்.
266. பிரமாதி கார்த்திகை வெள்ளியிற் பேரா சிரியர்புகழ்
திருமேவு காய நிறுவிய நாவலன் திண் சிலம்பா கரமேவு நின்காற் சுவடுகண் டார்நமர் கன்னிகும்ப மரமேவு நன்மிது னம்முறல் வேறொ ரரும்பொழிற்கே.

196
பதவுரை :- பிரமாதி கார்த்திகை வெள்ளியில் - பிரமாதி வருடத்துக் கார்த்திகை மாதத்து ஒரு வெள்ளிக் கிழமையில், பேராசிரியர் புகழ் திரு மேவு காயம் நிறுவிய நாவலன் திண் சிலம்பா - பேராசிரியர்களால் புகழப் பெறும் தகுதி பெற்ற தனது உடல் வாழ்வை நிறுத்தி விட்ட நாவலனது வலிய மலையில் உறையும் தலைவ, நமர் நின் கால் சுவடு கர மேவும் கண்டார் - நம்மவர் நீ வந்து சென்ற கால் அடையாளம் எங்கோ மணலில் மறைவாகி இருந்ததைக் கண்டு விட்டார்கள், (ஆதலால் இனி மேல்) கல் நிகும்ப மரம் மேவும் வேறு ஓர் அரும்பொழிற்கு நல் மிதுனம் உறல் - கல் வேம்பு மரத் தொடு கூடிய மற்றொரு அரிய சோலையிடமே நல்ல கூட்டம் நிகழிடம் ஆதல் அமையும்.
(கு.உ);- கல் நி கும்பம் - கல் வேம்பு, மிதுனம் - கூட்டம், புணர்ச்சி
பகல் வருவானை இரவு வருகென்றல்.
( இது வெளிப்படை)
267. சந்த வரைத்தமிழ் சைவந் தழைத்திடத் தான்மணம் விட்
டந்த வவாவறு மாறு முகன்வெற் பமரண்ணல்யூங் கொந்து செறிகுழ லாண்முகந் திங்க ளமுதமனத வந்து பெறுத லிரவி லலாதெவன் வாய்த்திடுமே.
பதவுரை - சந்த வரை தமிழ் சைவம் தழைத்திட - சந்தன மரங்களாற் சிறந்த பொதிகை மலைத் தமிழாகிய செந்தமிழும் சைவமும் விருத்தியுறச் செய்தல் பொருட்டு, தான் மணம் விட்டு அந்த அவா அறும் அறுமுகன் வெற்பு அமர் அண்ணல் - தான் திருமணம் செய்தலைக் கைவிட்டு அந்த நினைவே அற்று இருந்த நாவலர் பிரானது மலையின் கண் வாழும் பெருமையிற் சிறந்தோன், பூ.கொந்து செறி குழலாள் முக திங்கள் அமுதம் அதை - பூங்கொத்துக்கள் நெருங்கும் கூந்தலை உடையவளாகிய தலைவியின் முகச் சந்திரனில் பெறற்பாலதாகிய அமிர்தத்தை, வந்து பெறுதல் இரவில் அலாது வாய்த்திடும் எவன் - நீ வந்து புெறுதலாகிய அந் நிகழ்வு இரவுப்பொழுதில் அல்லது கைகூடுதல் 6560Tib'
(கு.உ);- தமிழ் சைவம் தழைத்திடத் தான் மணம் விட்டு என்பதை, தமிழ் சைவ விருத்தி பற்றிய தனது நேரகால நியமமற்ற பெருந்தொண்டு முயற்சிக்கு இடையூறு ஆகாதபடி என விரித்து உரைக்கப் பெற வேண்டும். அமுதம் திங்களிடத்து ஆதலால் அது பெறற் காங்கு திங்கள்

Page 109
197
தோன்றற்கு உரிய இராக்காலம் இன்றியமையாதல் என்பான் பெறுதல் இரவிலலா தெவன் என்றார். என்எனும் பொருளில் வரும் எவன் இங்கு எங்ங்ணம் எனும் பொருளில் நின்றதாகக் கொள்க.
இரவு வருவானைப் பகல் வருகென்றல்.
(இது வெளிப்படை)
268. பெருகு முதவி யுளவிந்த நானூல் பிறர்பதித்தா
ரருகு முனைநா ளதிற்பதி நாவல னன்னவரோ திருகு தலைமொழித் தேனூறு செந்தா மரைமலர்தல் முருகு கமழ்தா ரவசெவ் வலரி முளைத்தபின்பே
பதவுரை :- முருகு கமழ் தாரவ - தேன் கமழும் மாலை பூணும் தலைவ, பெருகும் உதவி உள இந்த நாள் பிறர் நூல் பதித்தார் - இடம் பொருள் ஏவல் சார்பான உதவிகள் பெருக்கமாக உள்ள இக் காலத்தில் பிறரும் நூல் அச்சிட்டார்கள், அருகும் முனை நாள் அதில் பதி நாவலன் அன்னவரோ - இவர்களும் குறித்த விதமான உதவிகள் குறைவாய் இருந்த இந்நாளில் நூற் பதிப்புப் பணி செய்த ஆறுமுகநாவலர்க்கு ஒப்பாவரோ, திரு குதலை மொழி தேன் ஊறு செந்தாமரை மலர்தல் - மேன்மையுள்ள இனிய மொழியாகிய தேன் ஊறுதற்குரிய தலைவி முகமாகிய செந்தாமரை மலர்தல், செவ் அலரி முளைத்த பின்பே - செந் நிறத்தை உடைய சூரியன் உதித்த பின்பு அல்லவா
(கு.உ)- உதவி - ஏடு தேடல் ஒப்பு நோக்கல், பெயர்த்து எழுதல், அச்சுச் செலவுக்கு உதவுதல் முதலான பல் திறந்து உதவிகள், அலரி பெயர் மாத்திரையாய்ச் சூரியனைக் குறிக்க, செம்மை இனம் சுட்டா அடையாய் புணர்ந்து நின்றது.
பகலினு மிரவினும் பயின்று வருகென்றல்
(இது வெளிப்படை) பயின்று - நெருங்கி
269. வண்ணை வயித்தீ சுரனா லயத்து மகிழ்ந்துனசவப்
பெண்ணை யணைத்துப் பிரசங்க மாம்பெரும் போகமளித்
துண்ணை வகற்றிய நாவல னல்லையி லுண்பர்மதுப் பெண்ணை யுடையவ ரற்பக வென்னுமிப் பேருலகே

198
பதவுரை :- வண்ணை வயித்தீசுரன் ஆலயத்து - வண்ணார் பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலின் கண், சைவ பெண்ணை மகிழ்ந்து அனைத்து பிரசங்கம்ாம் பெரும் போகம் அளித்து - சைவமாகிய பருவக் கன்னியை மகிழ்வுடன் அணைத்து அவளுக்குப் பிரசங்கமாகிய ஒப்பற்ற போகத்தை அளித்ததன் மூலம், உள் நை அகற்றிய நாவலன் நல்லையில் - அவளுக்கு இருந்த உள் நிறைந்த துன்பத்தைப் போக்கியருளிய நாவலர் பிரானது நல்லையின் கண், பெண்ணை உடையவர் ... 6069 உள்ளவர்கள் , அல் பகல் மது உண்பர் எனும் இ.பேருலகு - இரவு, பகல் எனும் இரு வேளைகளிலுமே மது உண்பர் எனும் பெருமை மிக்கது இவ் உலகம்.
(கு.உ):- இராப்பகல் மது உண்பர் என்ற விதப்பு பொருட்குறிப்பு உணர்த்துதல் மேற்றாம், சைவமகட்கு உள் நைவாவது அந் நாட்களில் தன் இலட்சணங்களை எடுத்து மொழிவார் எவரும் இல்லாது இருந்தமை பற்றிய மனக் குறைபாடாம். மக்கள் மனக்குறை உபசாரத்தால் சைவத்தின் மேல் நாவலர் பிரசங்கத்தின் மூலம் அக்குறை தீர்ந்தமை பிரசித்தமாதல் காண்க.
பகலினு மிரவினு மகளிவனென்றல்
270. வயித்தீ சுரன்முனர்ச் சார்ந்த பிரசங்க மாமருந்தான்
மயற்றி வருத்தந் தமிழக மெங்கு மகிழவழி நயத்தி விரதர நாவலன் வெற்பினன் னாரிபெற வயர்த்தீ யரிவையர் காவலெ லன்னகள் காவலரே
பதவுரை :- வயித்தீசுரன் முனர் சார்ந்த பிரசங்கமா மருந்தால் - வைத்தீஸ்வர ஸ்வாமி சந்நிதியில் வைத்து அளிக்கப்பெற்ற சைவப் பிரசங்கமாகிய நன் மருந்தினால், தமிழகம் எங்கும் மகிழ - தமிழகம் முழுவதும் மகிழுமாறு, மயல் தீர் வருத்தம் அழி - அதைப் பற்றி இருந்த மயக்கமாகிய தீய நோயை அழித்து அருளிய, நய தீவிர தர நாவலன் வெற்பினன் - நயனுடைமையும் தீவிரதர சுபாவமும் கொண்ட நாவலர்
பிரானது மலையின் கண், நல் நாரி பெற அயர்த்தி - நல்ல நம் தலைவியைக் கூடுதலை அயர்ந்து இருப்பாயாக, ( ஏனெனில் இந்நாளில்) நகள் காவலர் எல் அல் அரிவையர் காவலர் - எமது நகள் காவலர்கள்
பகல் இரவு என்று இல்லாது எந்நேரமும் பெண்காவலே பராக்காய் sp6iróTT6Orff.

Page 110
199
(கு.உ):- பராக்காயுள்ளனர் என்பது இசையெச்சத்தால் வருவித்துக் கொள்ளப்பட்டது. நாவலர் பிரானது பிரசங்க மருந்து தமிழக மயல் தீர்த்ததால் ஒருதலை என்றற்கு நிதர்சனங் காட்டுவாராய் வைத்தீஸ்வரன் முனர்ச் சார்ந்த எனவும் மாமருந்து எனவும் விதந்தமை காண்க.
உரவோன் நாடு மூரு முதலியன கூறல்
(இது வெளிப்படை)
271 வான்மதி யார்மறு வாமென வெற்ப மறுவுறுநற்
றேன்மதி நற்றமிழ் சேருன் பதியூர் செலுங்குடிமை யான்மதி பேர்குல மாண்மை யறிவு மறுமுகனை மேன்மதி யாரென நல்லை முணந்திலை மேவிடினே
பதவுரை:- வெற்ப - மலையிடத் தானான தலைவ, நல்லை. நல்லையின்கண், மணந்திலை - நீ இவளைத் திருமணத்திற் கொள்ளாது, அறுமுகனை மேல் மதியார் என - ஆறுமுக நாவலரது மேன்மையை மதிக்காதவர் போன்று, மேவிடின் - செல்வாயாயின், நல் தேன் மதி நல் தமிழ் சேர் உன் பதி ஊர் - நல்ல தேன் எனும் அறிவுள்ள நல்ல தமிழ் சேர்ந்த உன் வாழ்பதியாகிய ஊரும், செலும் குடிமையால் மதி பேர் - உனது சென்மதியாயுள்ள குடிமைச் சிறப்பால் மதிக்கப்படும் புகழும், குலம் ஆண்மை அறிவு - குலம் ஆளும் தன்மை அறிவும் ஆகிய எல்லாம், வான்மதி ஆர் மறுவாம் என மறுவுறும் - வானிற் பொலியும் ಜ್ಷಣೆ களங்கம் உற்று ஒளிர்தல் போல் , மறுவுற்று ஒளிர்வனவாய்
LO
(கு.உ):- குடிப்பிறந்தார் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து விளங்கும் என்பவாகலின் அதற்கொப்ப வான்மதியார் மறுவாமென மறுவுறும் என்றார். வான் மதி என்ற விதப்பு எல்லோரும் அறிதகும் பான்மைத்து எனக் குறிக்கும். புகழ் குடிமை நயத்தை இன்றியமையா நயம் தோன்ற குடின்மயான் மதி பேர் என்றார்

200
ஆறு பார்த்துற்ற வச்சங் கூறல்
வரும் வழியைக் கருதி அவ்வழியாற் றிரிதரும் விலங்காற் றோன்றும் அச்சங் கூறல்
272. புற்றளை(ப்) போமராப் போற்கயிற் றுப்புறம் போன்மலைநள்
ளுற்றளை மேல்வரு நாகமு நாக வுணவரிதே ரற்றளை யிற்புகு மார்சரி நாவலன் றன்னையண்டிக் கற்றளை யார்போல் வரணி கனியிள நீரினுக்கே
பதவுரை - புற்று அளை போம் அரா போல் - புற்றின் கண் அடியில் உள்ள பொந்தின் கண்ணே வளைந்து புகும் பாம்பு போலவும், கயிற்றுப புறம் போல் - கயிற்றினது முதுகு போலவும், மலை நள் உற்று அளைற மேல் வரும் நாகமும் - மலையின் நடுவிடத்தே அமைந்த அளையின் வரும் பாம்பும், நாக உணவு தேர் அரி - யானையாகிய தன் உணவைத் தேடும் சிங்கமும், ( உலாவுவதாய்)அற்று அளையில் புகும் ஆர் சரி -மேல் தொடராது ஒரு குகையில் சென்று புகும் அளவினதாகிய அரிய வழியில், நாவலர் தன்னை அண்டிக் கற்று அளையார் போல் - நாவலர் பிரானை அடுத்து இருந்து கற்று அளவளாவாதோர் போல, (இடருறும் நிலையில்) கனி இள நீரினுக்கு நீ வரல் - காதற் கனியாகிய தலைவியினது இள நலம் நுகர்தற்கு நீ வராது ஒழிக.
(கு.உ):- கன்னி என்பதன் தொகுத்தல் ரூபம் கனி ஆயிற்று எனலும் ஒக்கும். இளநீர் என்பது 660) ஆகுபெயராய் தனங்களை உணர்த்தியதாகவும் கொள்ளலாம். கவிதைப் பொருளை இடைவிடாது கொண்டு முடித்தற் பொருட்டு இடையில் சில பதங்கள் பெய்து உரைக்கப்படுவதாயின் கற்றளை என்புழி.
ஆற்றாத் தன்மை யாற்றக் கூறல்
தலைமகளது ஆற்றாத தன்மையை ஆற்றுதல் செய்யத் தலைவற்குக் கூறல்
273. வானம் புலிக்கு முலையம் புலிக்கும் வருந்திமதன் றேனம் புபட மெலிந்தே தெளிகுவ ளைக்கணிாவார் கானம் புலிகாண் பிணையென வாவி கலங்கிடுவாண் மானம் புகலிட நாவலன் வெற்ப வரைகுதியே

Page 111
2O1
பதவுரை :- மானம் புகலிட நாவலன் வெற்ப - மானம் என்ற பண்புக்குப் புகலிடமாய் அமைந்த நாவலர் பிரானது மலையிடத்தானாகிய தலைவ, வான் அம்புலிக்கும் முலை அம்புலிக்கும் வருந்தி - வானிடத்து எழும் சந்திரனுக்கும் முலையிடத்து அசையும் சலவைச் சாந்துக்கும் ஆற்றாது வருந்தி, மதன் தேன் அம்பு பட மெலிந்து - மன்மதனது தேன் பொருந்தும் மலர்களாய அம்புகள் தாக்குதலினால் மெலிவுற்று, தெளி குவளை கண்ணி வார் - தெளிந்த கண்களாகிய கருங்குவளையிடத்து நீர் துளிக்க இருக்கின்றவளாய், கான அம்புலி காண் பிணை என ஆவி கலங்கிடுவாள் - காட்டுப் புலியைக் காணும் பெண் மான் போல ( தலைவி) உயிர் கலங்கிடுவாள், வரைகுதி - அவளை விவாகத்திற் Gassrsit6. Tunes.
(கு.உ): மானம் புகலிட நாவலன் வெற்ப என்ற தொடர் இரட்டுற மொழிந்து கொண்டுரைக்கப்பட்டது. வருந்துதல் என்ற வினை ஒப்புமை நோக்கி முலைகளில் அப்பும் கலவைச் சாந்துக்கு ஆற்றாமையும் உடன் கொள்ளப்பட்டது. நீ வரைந்து கொள்வதால் மட்டும் அவள் மானம் தனக்குப் புகலிடம் பெறும் என்பதை மானம் புகலிட நாவலன் வெற்பு என்ற தன் கண் உடம்பொடு புணர்த்தலாற் கொள்க.
காவலன் மிகவுரைத்தல்
குறியிடத்து நீ வருவதற்கும் அவள் வருவதற்கும் இடையூறாகிய காவல் மிக்க என்று கூறுதல் மிகவுரைத்தல் - மிகவாய துரைத்தல்
274. வைப்பட் டடைகாத் திடுநாய் மருவனை மருவிழிக ளைப்பட் டுறங்கா ளவன்முதற் காவ லகன்றமரை யைப்பிட் டவள்வர லாமோந நாவலன் வெற்பிலிரு ளைப்பிட் டுறுசுவை யைந்தகன் றேமன்ன வண்மினுமே.
பதவுரை :- வைப்பட்டடை காத்திடு நாய் மருவு அனை - லைக்கோற் பட்டடை காக்கும் நாயை ஒத்த நமது அன்னை, மரு விழி களைபட்டு, உறங்காள் - பொருந்தும் விழிகள் மூடி உறங்காது விழித்தபடியே இருப்பாள், அவள் முதல் காவல் அகன்று - அவள் காவலாகிய முதற்
தடையை நீக்கி, அகன்ற மரையை பிட்டு அவள் வரலாமோ - தனது இல்லமாகிய தாமரையைப் பிளந்து கொண்டு அவள் வெளியேறி வரல் சாத்தியமோ, நம் நாவலன் வெற்பின் - நம் நாவலர் பிரானது
மலையிடத்தில், இருளை பிட்டு உறு சுவை ஐந்து அகன்றே - இருளைப் பிளந்து கொண்டு எழும் சுவையான மின்னலும்,நுணுகிப் பரந்து மன் அவன் மினும் -மிகுதியும் அங்கு மின்னும்

202
(கு.உ):- ஐ - துணுக்கம் - ஐந்து - வினையெச்சம், இருளின் மூழ்குவார்க்கு இரசனை ஊட்டுவதோர் நயம் பற்றி மின்னலைச் சுவை என்றார். விழிகளை என்பதில் ஐ சாரியை.
காம மிகவுரைத்தல்
தலைவி வேட்கை மிகவாயினது உரைத்தல்
275. தமிழக மெங்கணுஞ் சைவ மதப்பணி தாமமைத்த
வமிழ்தனை நாவல னல்லை யனையவ ளங்கரும்பன் கமிழல ரம்புக் கழிந்தலை காமக் கடல்விழுந்தாள் கமழக லத்தாய் நினபுய மேபுணை காணினியே
பதவுரை :- தமிழகம் எங்கணும் சைவ மத பணி தாம் அமைத்ததமிழகம் அடங்கலும் சைவ சமயப் பணி நிகழ அமைவு செய்த, அமிழ்து அனை நாவலன் நல்லை அனையவள் - அமிர்தம் போலும் நாவலர் பிரானது நல்லையை ஒத்த நம் தலைவி, அம் கரும்பன் கு அமிழ் அலர் அம்புக்கு அழிந்து அலை காம கடல் விழுந்தாள் - அழகிய கரும்பு வில்லோனாகிய மன்மதனது இலக்கில் வீழ்ந்து ஆழ்கின்ற மலராகிய அம்புக்கு ஆற்றாது தன் வசம் அழிந்து காமக் கடலில் தத்தளிப்பாளாயினள், கமழ் அகலத்தாய் - மாலை மணம் கமழும் மார்பினை உடைய தலைவ, நின் புயமே இனி புணை காண் - அவள் கரை ஏறுவதற்கு உமது தோள்களே இனித் தெப்பமாகும், கண்டு கொள்வாயாக.
(கு.உ):- கரும்பன் கமிழலர் - கரும்பன் கு அமிழ் அலர் என்க. கு - பூமி, இடம் இங்கு மன்மதன் இலக்கைக் குறிக்கும். கமழகலம் என்புழி மாலை பொருந்து மாற்றாற் கொணடு வருவிக்கப் பெறும்.
கனவு நலிவுரைத்தல்
தலைவிக்குக் கனவினால் வந்த துன்பத்தைப் பாங்கி தலைவற்கு உரைத்தல்
276. தனமே நெருடி யிதழைச் சுவைத்து தடவியல்குற்
கனமே கலையற வுள்ள முருகக் கலவிநயங் கனவே தரலி னுறக்கம் விடாள்கண மேவிழித்தான் மனவே தனைமிகு வாணா வலனலை மாதெரியே

Page 112
203
பதவுரை :- நாவலன் நலை மா - நாவலர் பிரானது நல்லையின் இலக்குமி போன்ற தலைவி, தனமே நெருடி - தனது முலைகளைத் தடவியும், இதழை சுவைத்து - வாய் இதழைச் சுவைத்தும், தடவி அங்கங்களைத் தடவியும், அல்குல் கன மேகலை அற, அல்குலிற் சூழ்ந்த கன மணியாலான மேகலை அறுமாறும் உள்ளம் உருக - மனம் கரையும் படியாக, கலவி நயம் - (நிகழும்) புணர்ச்சிச் சுவையானது கனவே தரலின், கனவில் மட்டுமே அனுபவிக்கக் கிடைத்தலினாலும், கணமே விழித்தால் மனவேதனை மிகுவாள் - சிறிது பொழுதேனும் கண் விழிப்பின் அனுபவம் ஆற்றொழிதலின் மனவேதனை கொள்வாள். உறக்கம் விடாள் - உறக்கத்திலேயே நீடித்து இருப்பாள், தெரிஇதனைக் குறித்துக் கொள்வாயாக.
(கு.உ): கனமேகலை என்புழி கனம் அங்கமாகிய மணி மேல் நின்றது இங்கு உறக்கம் பொய் உறக்கமாதல் கருதப்படும். அதன் கண் கனவும் கற்பனைக் கனவாதல் அமையும் இமைப்பின் கரப்பாக்கறிவல் எனும் திருக்குறட் பொருளுக்கு எதிர்நிலையாக விழிப்பிற் கரப்பாங்கறிவன் எனக் கருதலாவதோர் புதுநயம் இதன் பால் புலப்படல் காண்க.
கவினழிவுரைத்தல்
தலைவி அழகு அழிந்ததனைத் தலைவற்குக் கூறுதல்
277. திருவா வடுதுறைச் சுப்பிர மண்யநற் றேசிகருட்
கருகா வகைபொறை வேண்டப் பிசாசியார் காணெனவுட் டிருகா முடங்கல் விடுநா வலனலைத் தையலுடல் சருகா வுலர்ந்தனள் பான்மணி செம்மணித் தானிகரே
பதவுரை :- திருவாவடுதுறை நல் சுப்பிரமண்ய தேசிகர் திருவாவடுதுறை ஆதீனத் தலைவராய நல்ல சுப்பிரமணிய தேசிகள், உள் கருகா வகை பொறை வேண்ட - தன் மேல் மனம் சுளிக்கா வண்ணம் அவரிடம் பொறுமை வ்ேணடும் உபாயமாக, பிசாசு யார் காண் என உள் திருகா முடங்கல் விடும் நாவலன் நலை தையல் - பிசாசு யார்' எனும் தலைப்பிலான கட்டுரை ஒன்றில் சம்பந்தப்பட்ட மற்றொரு நாவலர் மனம் மாறுபடும்படி கடிதம் அனுப்பி வைத்த நாவலர் பிரானது நல்லையின் கண் வாழும் தலைவி, உடல் சருகா உலர்ந்தனள் - தன் உடல் சருகாமாறு

204
வற்றிக் காய்ந்து போயுள்ளாள், பால் மணி செம்மணி தான் நிகள் - அந்நிலையில் பாலில் பதித்த நீல மணி இயல்புள்ள அவள் கண்கள் செம்மணி போல் சிவப்பு ஏறின.
(கு.உ):- சம்பந்தப்பட்ட மறு நாவலர் சபாபதி நாவலர் "பிசாசு யார் என்ற கட்டுரை நாவலர் பிரபந்தத்திலும் காணத்தகும் குறித்த கட்டுரையில் பிறரைப் பிசாசு என்ற நீரே பிசாசு என அவரைத் தாக்கி வரையப்பட்டமை குறிபபார் உளந்திருகா என்றார்.
17.ஒரு வழித் தணத்தல்
அதாவது வரைவு கூறிய பாங்கியொடு வரைதற்கு உடன்பட்ட தலைவன் தன் ஊர்க்கு ஒரு வழிப் போய் வருகிறேன் என்று போதல்
தன் பதிக்ககற்சி தலைவன் சாற்றல்
(இது வெளிப்படை) அதற்கு - பிரிவு
278. பாதிரி பள்ளியலுவல் விட்டா னப்பரன் பணிக்கா
வீதிரி வண்டா வுழன்றவ னாவலன் மேநலையாய் நீதிரி யாது மளனமுரை நீணகு லக்கிரி போய் மீதிரி யாது வருவேன் விரைந்தென மெல்லியற்கே
பதவுரை :- பாதிரி பள்ளி அலுவல் விட்டான் - பாதிரிப் பள்ளிக் கூடத்திற் படிப்பிக்கும் உத்தியோகத்தையே துறந்தவனாய், அ பரன் பணிக்கா - அந்தச் சிவனது சமயப் பணிக்காக, வீ திரி வண்டாய்
உழன்றவன் - மலர் மாறி மலர் தாவும் வண்டு போல ஒய்வு ஒழிவின்றி விரைந்து உழைத்த, நாவலன் மே நலையாய் - நாவலர் பிரான் விரும்பும் நல்லையிலுள்ள தலைவ, மெல்லியற்கு - மென்மையான இயல்பினனாய தலைவியிடத்தில் நீள் நகுல கிரி போய் - நீண்ட நகுல மலைக்குப் போய, மீ திரியாது விரைந்து வருவேன் என - மேலும் திரிந்து விரைவில் திரும்புவேன் என்று மனம், திரியாது நீ உரை - தலைவி மனம் வேறுபடாது இருக்கும் வகை நீயே நேரிற் சொல்வாயாக.

Page 113
205
(கு.உ):- வீ - பூ வீ திரி வண்டாயுழன்றவன் என்றது ஓய்வொழிவின்றி உழைத்தவன் என்னும் பொருட்டு.
பெண் சொற் பாங்கி விலக்கல்
( இது வெளிப்படை)
279. அரவா மணியன் மதந்தமி ழாக்கம தாக்கிடுந
லுரமா மனத்தாக் குதவா துத்யோக மெனவிடுத்த வரமா தவனலை மன்மதன் மான்றேர் முரசுவிலே யிரவா னையித்தனை யிற்கு மிலக்கெம தின்னுயிரே
பதவுரை :- அரவாம் அணியன் மதம் தமிழ் ஆக்கம் அது ஆக்கிடுமபாம்பாகிய ஆபரணம் உடையானாம் சிவனது மதமான சைவத்தைத் தமிழர்க்குச் சிறந்த ஆக்கமாம் வகை பேணி வைக்கும், உரம் ஆம் மனத்தர்க்கு உத்யோகம் உதவாது என விடுத்த - உறுதியான சங்கற்பம் உள்ளார்க்கு உத்தியோகம் பொருந்தாது எனக் கைவிட்ட, வர மாதவன் நல்லை - மேலான மகா தவத்தினனாம் நாவலர் பிரானது நல்லையின் கண், மன்மதன் மான் தேள் முரசு வில் ஏ இரவு ஆனை இத்தனையிற்கு -மன்மதனது குதிரை, தேள், முரசு வில் ஆனையாகிய இரவு என்ற இத்தனைக்கும், எமது இன் உயிர் இலக்கம் - எனது உயிர் ஒன்றே இலக்காகின்றது.
(கு.உ): இத்தனையிற்கு என்புழி இல் வேண்டாவழிச் சாரியை இல் வழிச் சாரியை தழுவலும் கொள்க.
தலைவன் நீங்கல் வேண்டல்
தலைவன் பாங்கியை உடன்படுத்தி நீங்கற் பொருட்டு வேண்டிக் கூறல்
280, பொன்னுச்சா மித்தேவர் போல்பவர் தாமும் பொருந்துதுதி
பன்னச் சிவனடி யாரச்ச மில்லவள் பாரெனவிண் ணுன்னத் தகுநா வலனார் மலைப்போ யொருநொடியில் வன்னக் குவிமுலை யால்விடை நல்குவ ருகுவன்ே
பதவுரை :- பார் - பூவுலகில, பொன்னுச்சாமித் தேவர் போல்பவர்
தாழும் பொருந்து துதி பண்ண - பொன்னுச்சாமித்தேவர் போல்வாரும் பொருந்து மாற்றால் புகழ, சிவனடியார் அச்சம் இல்லவர், என -

2O6
சிவனடியார்கள் இடம் அளிக்காதவர்கள் என, விண் உன்னத்தகும் நாவலனார் மலை போய் - விண்ணுலகம் கருதத்தகும் நிலையை ஆக்கிய நாவலர் பிரானது மலைக்குப் போய், ஒரு நொடியில் வருகுவன் - வெகு விரைவில் மீள்வேன், வன்ன குவி முலையாய் விடை நல்கு - அழகிய குவிந்த தனங்களை உடையாய், எனக்கு விடை தருவாயாக
(கு.உ):- பொன்னுச்சாமி -- பாரென என்பது நாவலர் பொன்னுச்சாமித் தேவர் கையால் சன்மானம் பெற மறுத்தமை குறித்து நின்றது. நாவலர் வரலாறு காண்க. துதி பன்ன என்பது ஒரு சொல் நீர்மைத்தாய் புகழ் எனும் பொருளில் நின்றது அச்சம் யோக்கியாதா பாவம் - சாமானியர் சிவனடியாரைப் புகழ்தல் தரம் அறியார் செயல் எனப் புறக்கணிக்கப்படும் என்றவாறு அது பூவுலக மாண்பெனல்,
பாங்கி விடுத்தல்
பாங்கி தலைவனை ஊர்க்குப் போய் வருகென விடுத்தல்
281. இரா மநாதப் புரமானி துறை சையியற்றம் பிரான்
பராவு சிவமத வாதீன பத்தர் பலரிரக்க விராவு மறுபான வியனூல் வரைபதிப் பானகிரிப்பூ விராவு குழலிக் குரைப்பதன் முன்னிவண் மீளுதியே
பதவுரை :- இராமநாத புரமானி - இராமநாத புரத்தை ஆட்சி செய்து இருந்த சேதுபதி மன்னனது, சையியல் துறை தம்பிரான் - திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் சுவாமிகள், பராவு சிவமத ஆதீன பத்தர் பலர் இரக்க - துதிக்கத்தகும் சைவ ஆதீன பக்தர்கள் பலர் இரந்து வேண்டிக் கொள்ள விராவும் வியன் அறுபான் நூல் வரை - தன் கைக் கணைந்த பெருமைக்குரிய அறுபது தமிழ் நூல்கள் வரை, பதிப்பான் - பதிப்பித்த ஆசிரியனாம் நாவலர் பிரானது கிரி பூ விராவு குழலிக்கு - உரைப்பதன் முன், மலையிடத்துப் பூக்கள் அணிந்த கூந்தலை உடைய தலைவிக்கு (நீ நீங்கும் செய்தி ) சொல்லப்படுதற்கு முன் இவன் மீளுதி - இவ்விடம் திரும்பி விடுவாயாக.

Page 114
2O7
தோழி தலைவிக்கு அவன் செலவு உணர்த்தல்
(இது வெளிப்படை)
282. கருங்குழி யார்பா மருளெனக் காட்டிக் கடிந்துகரு
விருங்குழி நீத்தவ னாவல னல்லூ ரினிதடைந்து மருங்குளி யோடி வருவ னவண் முன்மருவுமுனி யிருங்களி யெய்திட வென்றார் பிரிவென வெண்ணன் மினே
பதவுரை :- கரும் குழியார் பா மருள் என காட்டி கடிந்து - கரும்குழி இராமலிங்க பிள்ளை என்பவர் இயற்றிய பாக்கள் அருட்யா அன்று எனக் காட்டி மறுத்து, கரு இரும்குழி நீத்தவன் நாவலன் - கருவாகிய பெருங் குழி வாய்பபட்டுப் பிறக்கும் பிறப்பை ஒழித்து உய்ந்த நாவலர் பிரானது, நல்லூர் இனிது அடைந்து - நல்லூர்க்கு நன்கனம் சென்று சேர்ந்து, அவன் மருவுமுன் - அங்கு சேர்ந்ததும் சேராததுமாகவே, நீ இரும் களி எய்திட - காதலியாகிய நீ பெரு மகிழ்ச்சி கொள்ளும்படி, மருங்கு உளி ஓடி வருவன் என்றார் -உனது இடையை நினைந்து ஓடி வருவேன் என்றார் (தலைவன்), மினே பிரிவு என எண்ணல் - மின்னல் போன்ற தலைவியே அவர் சென்றதைப் பிரிவு என்று எண்ணாது ஒழிவாயாக
(கு.உ): மருவுமுன் மீள்வன் என்றது போய் சோதற்கும் மீளத் திரும்புவதற்கும் இடையில் அதிகம் இருக்காது என்றபடி
தலைவி நெஞ்சொடு புலத்தல்
(இது வெளிப்படை) புலத்தல் - நொந்து கூறல்
283. தொண்டர் புராணச் சிறப்பெனச் சொல்லிடு சூசனமா
மண்ட ரமுத மளிநா வலனகு லக்கிரிமன் பண்ட முதமொழி கூறித் தெளித்தனர் பாவிமதன் விண்ட கருங்கணை யேவுமென் றெண்ணார் விலகினரே
பதவுரை :- தொண்டர் புராண சிறப்பென சொல்லிடும் - திருத்தொண்டர் புராணத்துச் சிறப்பு விளக்கம் என்று சொல்லப்படும், சூசனம் ஆம் அண்டர் அமுதம் அளி நாவலன் - சூசனம் என்னும் பேரிலான தேவாமிர்தத்தை லோகோபகாரமாகச் செய்து அளித்த நாவலர் பிரானது,

208
நகுல கிரி மன் - நகுல மலையிடத்தானாகிய நம் தலைவர் பண்டு, அமுத மொழி கூறி தெளிந்தனர் - பழைமையான அமுதம் போலும் இனிய மொழி கூறித தெளிவித்தவராய், பாவி மதன் - பாவியாகிய மன்மதன், விண்ட கரும் கணை ஏவும் என்று எண்ணார் - அலர்ந்த நீலோற் பலமாகிய தன் கணையைத் தருணம் பார்த்து என் மேல் எய்வான் என்று கருதாது, விலகினர் - விலகிப் போயினார்.
சென்றோ னிடலிற் காமமிக்க கழிபடர்கிளிவி
தலைவன் மாலைக்காலம் அளவும் வாராது நீட்டித்தலாற் காம மிகுந்தவதனால் மிகுந்த நினைவொடு கூடிய சொல்
284. பூத்தலை யுற்று மணமேவிப் பொன்னணிந் தேகளுண்டு
மாத்தலை வானுறு வல்லி மரம்புணர்ந் தச்செருக்கா னித்தலை யுற்றவர் நீனெறி வீழ்ந்து நிறுத்திலை நான் பார்த்தலை நாவல னல்லைப் பரிகசிப் பாய்தகுமே.
பதவுரை:- பூத்தலை உற்று - பூத்தலைப் பொருந்தி.மண மேவி - வாசனை கமழ்ந்து, பொன் அணிந்து - பொன் நிறம் உள்ள மகரந்தப்பொடி தாங்கி, கள் உண்டு - தேனை உட்கொண்டு, மாதலை வான் உறுவல்லி - சிறந்த தலை ஆகாயத்தில் பொருந்த நிற்கும் கொடியே, மரம் புணர்ந்த அ செருக்கால் - மரத்தைத் தழுவி நிற்கும் அந்தச் செருக்கினால் போலும், நீத்தலை உற்றவர் நீள் நெறி வீழ்ந்து நிறுத்திலை - என்னைப் பிரிந்த காதலர் சென்ற நெடு வழியில் குறுக்கே விழுந்து - அவர் செலவைத் தடுக்காது ஒழிந்தாய், நாவலன் நல்லை
நான் பரிகசிப்பு பார்த்தலை - நாவலர் பிரானது நல்லையில் நான் Ց|60|-Ավմb பரிகசிப்பினைப் பார்க்கவில்லை, ஆய்தகும் - ஆராயத்தகுவதாம்.
(கு.உ)- கொடியே நீ தடுத்து இருந்தால் அவர் பெருமையால் உறும் துயர் காரணமாக நான் பரிகசிக்கப்படும் நிலையிலதாம் என்பது குறிப்பு. இன்னும் மீளாமை பற்றிய துயர் உள்ளிட்டது நீனெறி ஆதல் காண்க. மூன்றாவது அடி ஈற்றசை காண் என்றிருக்கலாம் போலும்,
285ம் பாட்டு நீக்கப்பட்டுள்ளது.

Page 115
209
தலைவியைப் பாங்கி ஆற்றுவித்தல்
பாங்கி தலைவிக்குத் துயராற்றும்படி கூறல்.
286. காலையிற் பெய்த மழைநீர் கலந்து வரத்தலைவர்'
மாலையை விட்டனர் வந்தது மாலையு மாலையொழி
மாலையி லன்பர் வருமள வுன்றுயர் மாலையற மாலையெ டுத்தணி வாநா வலன்கிரி வண்புனற்கே.
பதவுரை :-காலையில் பெய்த மழை நீர் கலந்து வர - இன்று காலையில் பெய்த மழை நீர் பல பக்கங்களில் இருந்தும் ஓடிக் கலந்து வெள்ளமாய் வர,தன்லவர் மாலையை விட்டனர் - எமது தலைவர்
மாலையை வெள்ளத்தில் அள்ளுண்டு வர விட்டிருக்கின்றார், மாலையும் வந்தது - மாலையும் இதோ வந்து விட்டது, மாலை ஒழி மாலையில் அன்பர் வருமளவு - உன் மயக்கம் ஒழிய வைக்கும் மாலை வேளையில் காதலர் வந்து சேருமளவும், உன் துயர் மாலை அற - உனது துன்பமாகிய மயக்கம் திரும் பொருட்டாக, நாவலன் கிரி வண் புனற்கு - நாவலர் பிரானது மலையின் கண் பாயும் வளவிய வெள்ளத்தில், மாலை எடுத்து அணி வா - அம் மாலையை எடுத்து அணிந்து என்னுடன் வா,
(கு.உ):- காதலர் மாலையில் வந்து விடுவார். அதை அறிவிக்கும் தூதாக அவர் மாலை வெள்ளத்தில் மிதந்து வந்திருக்கின்றது. எனத் தோழி தலைவியை ஆற்றுவித்தவாறு. உன் துயர் மாலை அற என்பதில் 'ஐ' சாரியை. மால் - மயக்கம்.
தலைவன் வந்தமை பாங்கி உரைத்தல்
( இது வெளிப்படை )
287. பொன்னே தலைவர் புகுந்தனர் பொங்குன் பணம்பொருந்தி
நின்னோ டருஞ்சலா பத்துறை முத்தம் பெறநெடுந்தேர் முன்னே கொடிபார் பரிபார் பணில முழங்கிடல்பார் நன்னா வலனலை மாரனைப் பார்பின் நகைக்குதியே.

20
பதவுரை :-பொன்னே - இலக்குமி போல்வாளே, தலைவர் - உனது காதல,உன் பொங்கு பணம் பொருந்தி - உனது பூரிக்கும் அல்குலைப் பொருந்தி, நின்னோடு அரும் சலாப துறை முத்தம் பெற - உன்னோடு நிகழ உள்ள அருமையான சல்லாபத்திடையே உனது முத்தம் பெறும்பொருட்டாக, புகுந்தனர் - இதோ வந்து அணுகுகின்றார், நெடும் தேர் முன்னே கொடி பார் - அவரது நெடிய தேரின் முன்னே கொடி அசைகிறது இதோ பார், பரி பார் - குதிரைகளைப் பார், பணிலம் முழங்கிடல் பார் - தேரில் சங்கோசை எழுந்து முழங்குதலைப் பார், நல் நாவலன் நலை மாரனை பார் - நலம் மிக்க நாவலர் பிரானது நல்லையூர் வேளாகிய உன் காதலனைப் பார், பின் நகைக்குதி - பின்பு பார்த்ததும் மகிழ்ந்து சிரித்திடுவாய்.
(கு.உ): பாம்பின் படப் பெயராகிய பணம் உவமை ஆகுபெயராய் அல்குலுக்காயிற்று, சல்லாபம் சலாபமெனத் தொக்கது. சல்லாபம் - உரையாடல்.
பாங்கி வந்தோன்றன்னொடு நொந்து வினாதல்
( இது வெளிப்படை ) நொந்து வினாதல் - எவ் வண்ணம் ஆற்றியிருந்திர் என்று வினாவுதல்.
288, இன்று வருவே னுடலுயிர் விட்டங் கிருந்திடுமோ யென்று புகன்றா யகன்றா யிவளுயி ரெய்மதவே ளொன்று கணைவா யுறுத லுணர்ந்து முறாய்கடிது நன்று நுமது செயனா வலனலை நல்லவரே.
பதவுரை :-நாவலன் நலை நல்லவரே- நாவலர் பிரானது நல்லையின் கண் தோன்றிய நல்லவரே , இன்று வருவேன் - இன்று திரும்புவேன் , உடல் விட்டு உயிர் அங்கு இருந்திடுமோ என்று புகன்றாய். - உடலைவிட்டு உயிர் அங்கு இருப்பது எப்படி என்றெல்லாம் தெம்பு கூறிப் பிரிந்தீர் , எய் மதவேள் ஒன்று கணைவாய் உறுதல் உணர்ந்து கடிது உறாய்- உன் பிரிவால் தலைவியின் உயிர் மன்மதனது அழுந்தும் அம்பின் வாயப்பட்டு வருந்துதலை உணர்ந்து விரைவில் திரும்பிற்றிலீர், உமது செயல் நன்று. உமது செயல் நன்றாக இருக்கின்றது.
(கு.உ): இன்று வருவேன்- அகன்றாய் என்பது பிரியும் காலத்துத் தலைவியின் இசைவுபெறும் தந்திரமாகத் தலைவன் கூறியது. உடலுயிர்- திடுமோ என்பதனை ஆவியைவிட்டு உடலழிவுகொண்டெழிஇப் போவதும் உளது கொல்- கந்தபுராணம் என்பதனோடு ஒட்டுக. நன்று - இகழ்ச்சிக் குறிப்பினது.

Page 116
211
தலைவன் பாங்கியொடு நொந்துரைத்தல்
289. மின்னை வருந்த விடுதி யவனென விள்ளன்மத
னென்னை வருத்திய வாறறி யாய்நா வலன்பகைபோ லென்னை யவனெய் நுதிமழுங் கேவது வேவிடுவான் பின்னை யெனதுயிர் மெய்புதை யாதெனல் பேணினனே.
பதவுரை :-மின்னை வருந்த விடு தீயவன் என விள்ளல். மின்போல் வாளாகிய தலைவியை மன்மதன் அம்புக்கு இலக்காகி வருந்தவிட்ட தீயவன் என நீ பழி சூட்டுதல் பொருந்தாது, மதன் என்னை வருத்தியவாறு அறியாய்- மன்மதன் அங்கு என்னை வருத்திய கடுரத்தை இட்டு உனக்கு என்ன தெரியும், என்னை அவன் எய் நுதி மழுங்ஏ அதுவே வீடுவான். என்மீது அவன் நுதி மழுங்கிய அம்பையே தலைவி மேல் விடுவான், பின்னை எனது உயிர் மெய் புதையாது எனல் பேணினன். பின்பு அதனால் அவன் அம்பு என் உயிர் அனையாள் தலைவியின் உடலிற் புதையாது என எண்ணினேன்.
(கு.உ): தன் தவறு தவறன்று எனக்காட்டுதல் வேண்டி அவ்வாறு உரைத்தனன் என்க. தலைவிக்கு நேர்ந்த தாக்கத்தினும் தனக்கு நேர்ந்த தாக்கம் வலிதாயிற்று எனத் தெரிந்து தன் மேல் அவர்கள் பரிவு கூற வைக்கும் உபாயத்தினால் அவ்வாறு உரைத்தான் எனலுமாம்.
பாங்கி ஆற்றுவித்திருந்த அருமை கூறல்
( இது வெளிப்படை )
290. தார்கொண்ட தோண்மலை யாய்நா வலனார் தனிநலையு னுார்கொண்ட நீர்வரல் காட்டி யதில்வரு தாருனது தேர்கொண்ட பாதை யதுகாட்டிக் காட்டித் தென்கால்வரவு நீர்கொண்ட வாழி நிலைகாட்டி யாற்றின னிடுயரே
பதவுரை :-தார் கொண்ட தோள் மலையாய் - மாலை பூணும் மலைச் சிகரம் ஒத்த தோளை உடையவனே, நாவலனார் தனி நலை உன் ஊர் கொண்ட நீர் வரல் காட்டி - நாவலர்பிரானது ஒப்பற்ற நல்லைப் பதியில் உனது ஊரில் இருந்து மழை நீர் வெள்ளம் வருதல் காட்டியும், உதில் வரு தார் உனது - உவ் வெள்ளத்தில் அலைந்து வரும் மாலை உனது

22
மாலை எனத் தெரிவித்தும், தேர் கொண்ட பாதை அது காட்டி - உனது தேர் வரும் பாதை அதைக் காட்டியும், தென் கால் வரவு நீர் கொண்ட ஆழி நிலைகாட்டி - தென்றல்வரவினையும் நீள நிறைந்த கடலின் தன்மையையும் காட்டியும், நீள். துயர் ஆற்றினன் - தலைவி கொண்ட பெரும் துயரைத் தணிவித்து இருந்தேன்.
(கு.உ): ஆழி கடலுமாம் மோதிரமுமாம். பொருந்துமாற்றால் கொள்க. ஒரு காலைக் கொருகால் அதிகரிக்கும் இயல்பு பற்றி நீள் துயர் என்றார். அடுத்து வரும் காட்டி இரண்டினுள் ஒன்றை இரண்டாம் அடி இறுதியான உனது என்பதோடு இயைத்து இடையில் என ஒரு சொல்லெச்சமாகத் தந்து கூட்டி முடித்துக் கொள்க.
18. வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல்
என பொருட் பிரிவுரை யேந்திழைக் கென்றல் (இது வெளிப்படை)
291. அரைசினர் கைப்பன மார்க்கும் பொதுவா லனைமதர்க்கும்
புரைதவி ரக்கொடு மென்னா வலன்கிரிப் பொற்கொடியே தரையிடை மன்மூன் றிடைப்பணஞ் சாரின் முதற்பணமு மரையுறு நற்பண மும்வருஞ் செல்வ லவட்குரையே.
பதவுரை :-அரைசினர் கைபணம் ஆர்க்கும் - நாட்டுப் பொதுவால் அரசாங்கப் பணம் நாட்டு மக்கள் சகலர்க்கும், பொதுவால் அனை மதர்க்கும் புரை தவிர கொடும் என் நாவலன் - பொதுவாகச் சகல
மதத்தவர்க்கும் அப்பணம் உபயோகமாம் வகை பட்சபாதமின்றி வழங்கு வீராக என்று அன்றைய அரசுக்கு உரைத்த நாவலர் பிரானது, கிரி பொற் கொடியே - மலையிடத்தளாகிய பொற் கொடியே, தரை இடை மன் மூன்றிடை - உலகில் அமையும் அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள், இடை பணம் சாரின் - நடுவில் உளதாகிய பொருள் கை வந்தால், முதற் பணமும் - முதற் பொருளாகிய அறமும், அரை உறு
நற் பண்மும் வரும் - அல்குலிற் பொருந்தி அனுபவிக்கும் நன்மையதாகிய இன்பமும் கை கூடும், செல்லல் - அந்நோக்கில் நான் பொருள் மேற் செல்ல உள்ளேன், அவட்கு உரை - இதனைத்
தலைவிக்குத் தெவிப்பாயாக,

Page 117
213
(கு.உ):- அரசு - அரைசு, எதுகை நோக்கி விகாரம், அரைசினர்கொடும் என்பது அன்றைய அரசு கிறிஸ்தவ சார்பாய் இருந்ததை எடுத்துக் காட்டி நாவலர் செய்த இடித்துரை. இதன் கண் "புரை” என்பது குற்றம். மூன்றாவது அடிக்கண் வந்த பணம் இரண்டும் பொருள் குறித்த மூன்றில் முதலாவதாய் இருத்தல் அன்றியும் முதன்மை மிக்கதாதலும் பற்றி அறத்தை முதற்பணம் என்றார். அதில் வழி ஏனைய இரண்டும் பயன் படாவாதல் பற்றியுமாம். சிறப்புடை மரபிற் பொருளின்பமும் அறத்து வழிப்படுந் தோற்றம் போல் எனலும் காண்க. அரை ஆகுபெயர். அரையுறு நற்பணம் - இன்பம், இதிற் பணம் காரியம் என்னும் பொருட்டாய் அதன் விளைவாய இன்பத்துக்கு ஆகுபெயராயிற்று.
நின் பொருட் பிரிவுரை நீயவட் கென்றல்
(இது வெளிப்படை)
292. அண்டிடு காலை யகலத் திடைக்கால் சிறிதுறினு
மண்டுகட் டிவிழித் தேமன மாழ்கி வருந்துபொன்னை விண்டயற் பொன்னை நயப்பா யிதநல மீட்டகுமோ பண்டரு பாட்டிக் குரைத்து நடநா வலன் பதிக்கே.
பதவுரை :-நாவலன் பதிக்கு -நாவலர் பிரானது நல்லையின் கண், அண்டிடு காலை - நீ அவளைத் தழுவிப் புணரும் கால், அகலத்து இடை கால் சிறிது உறினும் - மார்பு அழுத்தத்தால் சிறிது தளர்ச்சி கண்டு மார்புகளின் ஊடாகச் சிறிது காற்றுப் புக நேர்ந்தாற் கூட, கண் தீ மண்டு விழித்து மனம் மாழ்கி வருந்து பொன்னை - கண் தீ மண்டி எழக் கனலுமாறு விழித்து மனம் அயரும் பொன் போல்வாளை, விண்டு அயற் பொன்னை நயப்பாய் - பிரிந்து ாேபய் அயலதாகிய பொன் தேட விரும்புவோய், இது அ நலம் மீள் தகுமோ - நீ தேட உள்ள இப்பொன் நின் பிரிவால் அவள் இழக்க உள்ள நலத்தை மீட்டு எடுக்க உதவுவதாகுமோ, பண் தரு மாட்டிக்கு உரைத்து நட - பண் கனியும் சொல்லினளாகிய அவளுக்கு நீயே நேரில் தெரிவித்துப் போவாயாக.
(கு.உ): அண்டிடு காலை - னும் என்பது தழுவலிறுக்கம் குறித்து நின்றது, 'வளியிடை போழா மயக்கு' எனலும் காண்க. 'கலவுக் கை நெகிழாமை எனலும் ஒன்று. அயற்பொன் பொருள். இத நலம் - (இது) அநலம் என்பது தொகுத்தல், பாட்டி - சொல். நீ பொருள் வயிற் பிரிதலைச் சொல்லு முன்னரே அவள் இளமை நலம் அழிந்து பாட்டிக் கோலமாய் விடுவாள் எனக் குறிப்பாற் தோன்றும் நயமுங் காண்க.

214
நீடே னென்றவனிங்கல்.
நீடேலென்று அவனிங்கல் என்பது தலைவன் 'நீட்டித்து இராது விரைந்து வருவல்' என்று பாங்கியொடு கூறி நீங்குதல்.
293. நாதரை நம்வாத வுரர்சொல் கோலை நலந்தெரிநற்
போதரை நாவலர் புண்ணியர் போற்றிடு பூதரப்பூ மாதரை யுற்றவ ரிகை யிலரிகை மன்றலதே யேதரைப் போது மிரேனிருந் தாலெவ னின்னுயிரே.
பதவுரை :-நாதரை - தலைவரும், நம் வாதவூரர் சொல் கோவை நலம் தெரி நல் போதரை நாவலர் - நமது திருவாத ஷரடிகள் இயற்றிய திருக்கோவையாரின் நயம் உணர வல்ல கூர்த்த அறிவினரும் ஆய ஆறுமுக நாவலரை, புண்ணியர் போற்றிடு பூதரம் - புண்ணியராயுள்ளார். போற்றிடும் இம் மலையிடத்தில், பூமாதரை உற்றவர் - இலக்குமி அனைய இவள் தம் காதலியாகப் பெற்ற ஒருவர், ஈகையிலர் - பொன் இல்லாதவர் (ஆவதோ), ஈகை மன்றலது - நான் கருதும் பொன் தேடலும் இவளை மணத்தல் சார்பானதே, அரை போது இரே6 - இனி அரைக் கணமேனும் இருக்க இசையேன், இருந்தால் இன் உயிர் எவன் - இருப்பேனாகில் எனது இனிய உயிரை ஒத்த இவள் நிலை என்னவாகும்?
(கு.உ):- சைவம் தமிழுக்கு ஏகத் தலைவர் என்பார் அடைகொடாது நாதர் எனப்பட்டார் நாவலர். நமது சமயாசாரிய மூர்த்திகளில் ஒருவர் எனும் நயம் தோன்ற வாதவூரர்க்கு நம்' அடை புணர்க்கப்பட்டவாறு காண்க. ஈகை - பொன் கைவசமிலா வழி இந்த இலக்குமியைப் பெற்றும் பெறாதவனாவேன். என்பான். பூமாதவரை யுற்றவர் ஈகையிலர் என்றான். இலர் என்பதை எடுத்தல் ஒசையால் கூறி இது ஆவதோ என ஒரு சொல்லை அவாவி நிற்றல் அறிக. மன்றலது - மன்றல் நோக்கினது. ஏ - தேற்றம், போது - கணம், உயிர் - தலைவி. அது அவள் நிலைக் காயிற்று. விரைந்து பொன் தேடி மன்றல் புரியேனாயின் இவள் நிலை என்னாவது என்றதன் மூலம் பொருள் வயிற் பிரிவு முற்ற இவள் பொருட்டன்றிச் சற்றேனும் நம் பொருட்டன்று எனத் தெரிவித்துக் காட்டியவாறு.
தோழி ஒடரிக் கண்ணிக் கவன் செலவுணர்த்தல்
294, கொய்தினைத் தாளை யகலாச் சுகங்கொள் குளிர்சிலம்பர்
மைதிகழ் கண்ணி வருந்தி யிடையரி தாங்குதன மெய்திக ழப்பெற வேண்டி வியன்கரி தாங்குதனங் கைதிக ழப்பெறச் சென்றார் கனகங் கடிமகிழ்வே

Page 118
215
பதவுரை :-மை திகழ் கண்ணி - கருமை விளங்கும் கண்ணை உடைய தலைவியே, சுகம் கொய் தினை தானை அகலா குளிர் கொள் சிலம்பர் - கிளிகள் கொய்தல் பெறும் தினைத் தாளை விட்டு அகலாது விளங்கும் தண்ணிய மலையிடத்தராம் த்லைவர் , இடை அரிவருந்தி தாங்கு தனமெய் - இடையாகிய சிங்கம் மிகவும் வருந்திச் சுமக்கும் உனது முலை விலை கொடுக்கும் வழக்கம் , திகழ பெற வேண்டி -நிலைபெற வைக்கும் நோக்கில் , வியன் கரி தாங்கும், தனம் கை திகழ பெற வேண்டி கனகம் சென்றார். காடு தாண்டி அயலூர் சென்றார், கடி மகிழ்வே - ( அதன் பேறாக இனி நிகழ் இருப்பது ) கடி மகிழ்வே -விவாகக் களிப்பே.
(கு.உ)- கனகம் - கானகம் ( குறுக்கல் விகாரம் )
பூங்குழையிரங்கல்
பூங்குழை இரங்கல் என்பது தலைமகள் இரங்கல்.
295. புற்கொண்டு காப்ப தலாற்பசு வேங்கையிற் போதருமோ
வெற்கொண்டு காக்கக் கனக நடந்தா ரெடுக்க வினைக் கற்கொண்ட தோளரென் மார்பிற் கணகங் கனகமதே சிற்கொண்ட சீர்க்குண னாவலன் சீர்நலை யென்குறையே
பதவுரை - பசு புல் கொண்டு காப்பது அலால் வேங்கையில் போதருமோ - பசுவ்ை புல்லின் மூலம் காப்பதன்றிப் புலியின் மூலம் காக்கலாமோ, இணை கல் கொண்ட தோளர் - ஒன்றுக்கு ஒன்று ஒப்பான இரு குன்றுகள் போலும் தோள்களை உடைய தலைவர், என் கொண்டு காக்க கனகம் எடுக்க நடந்தார் - என்னை மணந்து காத்தற் பொருட்டுப் பொன் பெறப் பிரிந்து அகன்றார், என் மார்பில் கல் நகம் கனகமதே - என் மார்பில் குன்று போல் உயரும் தனங்கள் பொன்நிறப் பசலை பாய்ந்தனவாகின்றன, சீர் கொண்ட சிற்குணன் நாவலன் சீர் நல்லை - சிறப்பு மிக்க ஞான இயல்பு நிறைந்த நாவலர் பிரானது புகழ் உடைய நல்லையில், என்குறை - இது எனது அதிஷ்டக் குறைவே.
(கு.உ)- புற் கொண்டு ---- போதருமோ என்றதனால் என்னைக் காக்கில் பிரியாது இருந்து தழுவுதல் மூலம் காப்பது அன்றிப் பிரிந்து போய் பொன் கொணர்தல் மூலம் காத்தலாகுமோ என்றாளாம். இது வேற்றுப் பொருள் வைப்பு எனும் அலங்காரம். மூன்றாம் அடியில் வந்த கனகம் இரண்டில் முன்னது கல் + நகம் - குன்று; பின்னது பொன் அது

216
உருவுவமையாய் பசலையை உணர்த்தும், சிற்கொண்ட சீர்க்குணன் என்பதைச் சீர் கொண்ட சிற்குணன் என மாற்றிக் கூட்டுக.
பாங்கி கொடுஞ் சொற் சொல்லல்
இவ்வாறு நீ இரங்குவதென்னையென்று கழறிக் கூறல்,
296. அருணா சலக்கவி ராச னணியா வணிபுயனை மருணா மகல மலிநூ றருநா வலவயனை யருணா தவவென் றடையாரின் கோதா யலறுவதேன் பொருணா ணமக்குப் பொருணா ணமைக்கப் புகந்தனரே.
LJ856)|60)J :-அருணாசலக் கவிராசன் அணியா அணிபுனை - அருணாசலக் கவிராயரால் இயற்றப் பெற்ற கவிதைகளே அணியாகப்(ஆபரணம்) புனைந்த தோளை உடையவனும், நாம் மருள் அகல மலிநூல் தரு நாவலவ ஐயனை - நாம் கொண்ட அறியாமை நீங்க மிகுதியான நூல்களை ஆக்கித் தந்தவனுமாகிய நாவலனாகிய ஆசானை, நாதவ அருள் என்ற அடையாரின் - நாவிற் சிறந்தோனே அருள்க என்று சரண்அடையாதவர்களைப் போல, கோதாய் - பெண்ணே, அலறுவது ஏன் - (நீ) வருந்திப் புலம்புவது ஏன், நாண் பொருள் நமக்கு பொருள் நாண் அமைக்க புகுந்தனர் - நாணமே பொருளாக உள்ள நமக்குப் பொன்னால் தாலி அமைக்கவே போயுள்ளார்.
(கு.உ):- அருணாசலக் கவிராயர் - நாவலர் சரித்திரத்தைச் செய்யுளால் செய்த புலவர். சீகாழி ஊரினர். புயம் வீரம் குறித்தது. நாவலர் மகாவீரம் அவர் கவிதையால் அலங்கரிப்பட்டது என்க. புலவர் பாடும் புகழ் உடையோர் நாவலராதல் இதனால் பெறப்படும். நாதவ - நாவிற் சிறந்தவனே என்னும் பொருள் உரைக்குறிப்பிற் கண்டது. அடையார் - பகைவர்; வயம் - வீரம், ஈற்றில் உள்ள ஏகாரத்தைப் பிரித்து முன் கூட்டி அமைக்கவே புகுந்தனர் என இயைக்க,

Page 119
".1ے
தலைவிகொடுங் சொற் சொல்லல்
தலைவி, கழறிய அப்பாங்கியை மனத்தின் நொந்து கூறல்.
297 வரிச்சந்த நன்முலை யாய்வரு வார்வரு வார்மணக்க மரிச்சந்த வேவி லெயினர் சரிகட மன்னினரென் றரிச்சந்தி ரன்போ லரிநீ யறைத லதுவியப்போ வரிச்சந்தி ரன்மொழி நின்மொழி நாவல னார்தெவுக்கே.
பதவுரை :-வரி சந்த நல் முலையாம் - வரி ஒழுங்கு படச் சந்தனம் அணிந்த நல்ல கொங்கைகளை உடையாய், வில் சந்த ஏ எயினர் சரி கடம் மரி மன்னினர் - வில்லினிடத்துத் தொடுக்கப்பட்ட அம்புடையவரான வேடர் பொருந்தி உலாவுகின்ற காட்டுப் பிரதேசம் சென்றவர். மணக்க வருவார் வருவார் என்ற நின்மொழி - (நம்மை) மணக்கப் பொன்னொடு வருவார் வருவார் என்ற நினது வார்த்தை, நாவலனார் தெவுக்கே அரிச்சந்திரன் மொழி - நாவலர் பிரானது பகைவர்க்கே அரிச்சந்திரன் மொழியாவது, அரி நீ - கிளி போன்றவளே, நீ, அரிச்சந்திரன் போல் அறைதல் - அரிச்சந்திரன் போல் சொன்னதையே மாறாமல் சொல்வது. அது வியப்போ - அது அதிசயமோ.
(கு.உ):- தோழி இயல்பைப் புகழ்வது போல் பழிக்கும் நயம் இச் செய்யுளிற் காணத்தகும். வரிச்சந்த நன்முலை என்பதற்கு வரிந்து கட்டப்பட்ட அழகிய முலை எனல் சிறவாமை காண்க. சந்த - தொடுக்கப்பட்ட ஏ. அம்பு மரி - மரீஇ பொரந்தி; அரி. கிளி: நாவலானார் தெவுக்கே நின்மொழி அரிச்சந்திரன் மொழி என்றார். அவர் பகைவர்க்கு அன்றி எமக்கு அது நம்புதரமாகாதன்றோ.
வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல்
பாங்கி தலைவன் மீண்டு வருவரெனக் கூறல். வலித்தல் - கூறல்.
298. பெடைவெப் புறுதுயர் பேணிப் புறவு பிணைந்துசிறை யிடைவைத் தகற்றி யிருநிலை கண்டு மியங்குவரோ நடைகற் கனம்பி னடவிய னாவலன் நல்லையில்வேள் படைவெப் பகற்றவுன் பால்வரு வாரென் பதுதெரியே

218
பதவுரை :- புறவு - ஆண் புறவானது, பெடை வெப்புறு துயர் பேணி - (தாம் செல்லும் வழியில்) பெண் புறாவானது வேனில் வெப்பத்தால் துயருறுதலைப் பொருள் செய்து பிணைந்து சிறையிடை வைத்து அகற்றி இரு நிலை கண்டும் - அதனோடு ஒட்டி அணைந்து விரிந்த தன் சிறகுக்குள் அதனை அடங்கக் கொண்டு உபகரிக்கும் நிலையைக் கண்ணால் கண்ட பின்பும், இயங்குவரோ - திரும்பாது போயக் கொண்டிருப்பாரோ, வேள், படை வெப்பு அகற்ற - அக்காட்சியே வாயிலாக மன்மத பாணம் தன்னை வருத்துதலாம் வெப்பு நீக்குதற் பொருட்டு, நாவலன் நல்லையில் - நாவலர் பிரானது நல்லையில், அனம் நடை கற்க பின் நடவிய - அன்னத்தினது நடையைப் பயிலப் பின்னே நடக்கும் இயல்பு உடையாய், உன்பால் வருவார் என்பது தெரி - உன்னிடம் வருவார் என்பதைப் புரிந்து கொள்வாயாக.
(g5.2):- பெடை வெப்புறு a-a-aaaaaaaararaOMS கண்டும் என்பதனை 'இன்னிழலின்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே என்னும் பாலைக்கலிச் செய்யுளோடு ஒட்டி நயம் உணர்க. நடவிய - பிறவினை. 'அக்காட்டு அன்பு கொண்மடைப்பெடை யசைஇய வருத்தத்தை மென் சிறகராலாற்றும் புறவெனவு முரைத்தனரே'
11ம் செய்யுள் பாலைக் கவி - கலித்தொகை,
, பருவங்கண்டு பெருமகள் புலம்பல்
தலைவன் பிரியுங்கால் கார்க்கு முன்னே வருவே னென்று குறிப்பாற் கூறிப் போயினனால் அக்கார்ப் பருவங் கண்டு தலைவி புலம்பிக் கூறல்.
299. தோன்றி யெரிகரி வண்டா விருவிழி தூவுகனிர்
மான்ற லெனதுயிர் பற்ற மலரு மழைவில்வளைத் தூன்றி விடுமம்பு தைபூ வுதிர மெனத்தம்பல மூன்று முடலென் மதனே வெனநா வலனலைக்கே.
பதவுரை :- நாவலர் நல்லைக்கு - நாவலர் பெருமானது நல்லையின் கண், மழை வில் வளைத்து - மேகமானது தனது வானவில்லை வளைத்து, ஊன்றி விடும் அம்பு - அழுத்தி விடுகின்ற நீர்த்தாரையாகிய அம்புகள், என் உடல் மதன் ஏ ஊன்று என - எனது உடலில் மன்மத பாணங்கள் தைக்குமாறு போல, தை பூ உதிரம் என - தைத்தலினால் பூமிதேவியின் உடலில் பீறிட்டுத் துளிக்கும் இரத்தத் துளிகள் என்னும்

Page 120
219
படியாக, தம்பலம் - இந்திரகோபம், (விளங்க) தோன்றி எரி - காந்தள் மலராகிய தீயில், வண்டு கரியோ - (வீழும்) வண்டுகள் திரிமுனை கரியாகக் கொண்டு, மான்ற எனது உயிர் பற்ற - மயங்கும் எனது உயிரைப் பற்ற, இரு விழி தூவு கணிர் - இரு விழிகளிலும் இருந்து சொரியும் இடையறாக் கண்ணிராலும் வெப்பம் தணியாது, மலரும் - மிகுந்து எரியும்.
(கு.உ): மாரிகாலத்து நிலத்து ஊரும் தம்பலப் பூச்சி பற்றிய இச் செய்யுட் கற்பனை நயம் யாழ்க் கவிதாமேதையின் இயற்கை வர்ணனைக் கற்பனைகளுக்கு நிகரநிற்கும் இதன் தரமும் காணத்தகும். காந்தள் நிறப் பிரபையினுள் வண்டு காணப்படுதல் எரியும் விளக்கில் திரியும் கருமையும் உடன் தோன்ற நிற்கும் தன்மையாக உருவகிக்கப்பட்டுள்ள திறமும் "மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்து " திருத்தொண்டர் புராணம் - 473 என்னும் சேக்கிழார் கற்பனையை மருவ நிற்கும் நயம் அறியத்தரும்.
இருளை வம்பென்றல்.
அவ்வாறு புலம்பிய தலைவி தேறும் வண்ணம், பாங்கி 'இது காலத்தின் வந்த மேகமன்று, இடையே வம்பாகத் தோன்றியது' என்று கூறியது.
300. முலையானை யையரைப் பாம்பை யினமென முன்மலர்வ
மலையானை காந்தள் குழல்கா ரெனமயின் மன்னுநடம் கலையானை யோடக் கடிகலைக் கண்ணா வலனலையெம் நிலையானை சொன்ன பருவ மலவம்பு நீள்விழியே.
பதவுரை :- நீள் விழியெ - காதளவு நீண்ட கண்களை உடையவளே, முலை யானை இனம் என மலை யானை முன்மலர்வ - உனது முலையாகிய யானையைத் தமது இனம் எனக் கருதி மலையிடத்து யானைகள் முன் வந்து உலாவுகின்றன, ஐ அரை பாம்பை இனம் என காந்தள் முன் மலர்வ - உனது அழகிய நிதம்பமாகிய பாம்பைத் தனது இனம் எனக் கருதி காந்தள் எதிரே மலர்கின்றன, குழல் கார் என மயில் நடம் மன்னும் - உனது கூந்தலை மேகம் எனக் கருதி மயில் நடம் புரிகின்றது, கலை யானை ஒட கலை கண் நாவலன் நலை - கலை யானைகள் வெகுண்டு ஓடக் கடிந்து ஒதுக்கும் உண்மைக் கலைகளைக் கண்களாக உடைய நாவலர் பிரானது நல்லையின் கண், எம்

2\,
நிலையானை - எமக்கு நிலைப்பட்டுவிட்ட யானை போல்வானாம் தலைவர், சொன்ன பருவம் அல - குறித்துச் சொன்ன கார்ப்பருவம் அன்று, வம்பு - இது போலிப் பருவமாகும்.
(கு.உ): கார் வரும் போது தேர் வரும் என்று காதலர் கூறிப் பிரிவதாக அகத்திணை வழக்கு உண்டு. இப்போது கார் காலம் வந்து விட்டதாகக் கவலும் தலைவியைத் தேற்றும் தோழி இது உண்மைக் கார்ப்பருவம் அன்று. போலிக் கார்ப்பருவம் என `உணர்த்துதலைப் பொருளாகக் கொண்டது. இச்செய்யுள் வம்பு, பொய், போலி, அஃது அங்ங்னமாதல் யானை வெளிப்பட்டு உலாவுதல், காந்தள் மலர்தல், மயில் நடனமாடுதல் என்ற கார்ப் பருவம் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு வெவ்வேறு காரணங்கள் கற்பிக்கப்பட்டமையில் பெறப்படுவதாம். வம்பு காலமல்லாத காலத்திற் றோன்றும் பொருள்.
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவு
301. நல்லையி நாவலற் கண்ட சிவமத நாடலிலார்
ஒல்லையி கோட பெறுதுகள் கார்வேர் வுகுபுனலா முல்லையி தோகு ரெயிறியின் ரணபொன் முகந்தளித்த கொல்லையி லேயுறு கொன்றை யவர்நெஞ் சிடியெனவே
பதவுரை :-நல்லையின் நாவலற் கண்ட - நல்லூரானாகிய நாவலர் பிரானைக் கண்ட , சிவமதம் நாடலிலார் - சிவமதத்தை விரும்பாதவர் , இக - அவர் திருஷ்டிக்குட்படாது நீங்கும்படி , ஒல்லையில் ஒட - விரைவுடன் ஓட , பெறு துகள் கார் ஆ - கிளம்புகின்ற , பூதூளிப் படலம் மேகமாக , உகு வேர்வு புனல் ஆ- சொரிகின்ற வியர்வை மழையாக் , கொல்லையிலே உறு கொன்றை பொன் முகந்து அளித்த - கொல்லையில் நின்ற கொன்றை மலராகிய பொன்னை அள்ளி வீசின,
அவர் நெஞ்சு இடி என - தலைவர் நெஞ்சு இடி இடித்தாற் போலாக அவர் பொருள் வயிற் பிரிவாராயினர்.
(கு.உ):-புழுதிப் படலத்தை மேகம் எனவும் வியர்வைப் பொழிவை மழையெனவும் கொண்ட காட்சியால் கொன்றல்கள் மலர்களைச் சொரிய அக்காட்சி பொருள் நினைவைத் தோற்றி அவர் நெஞ்சை உறுத்தியதால் அவர் ப்ொருள் வயிற் பிரிவை மேற்கொள்வாராயினர் என்பது இதன் தாற்பரியம். அவர் பொருள் வயிற் பிரிவாராயினர் என்பது குறிப்பெச்சம், குரெயிறி - கூரெயிறி ( கூர்ந்த )

Page 121
221
இறைமகன் மறுத்தல்
தலைவி, பாங்கி கூறிய அதனை மறுத்துக் கூறல்.
302, நற்சற் குருமணி மாலை நலம்பல வாணனெனுஞ் சொற்சத் தறிநா வலனணி தூநா வலனலைவான் மிற்சத் துறுமிடி யுங்கீத மென்பை மிசைபிடிசோற் றிற்பொற் புறுபூ சினிக்காய் மறைப்பை யிதுவியப்பே.
பதவுரை :-நல் அம்பலவாணன் எனும் சொல் சத்து அறி நாவலன் அணி - நல்லோனாகிய அம்பலவாணர் என்னும் சொற்றிறன் அறிந்த புலவன் இயற்றிச் சூட்டிய, நல் சற் குருமணிமாலை தூ நாவலன் நல்லை - நல்ல சற்குருமணி மாலை என்னும் பிரபந்தம் பெற்ற தூயோனாம் நாவலர் பிரானது நல்ல்லயின் கண், வான் மின் சத்து உறும் இடியும் கீதம் என்பை - வானிடத்து எழும் மின் பொருந்திய சத்தம் மிகுந்த இடியையும் நல்லிசைக் கீதம் என்று கூறுவாம், மிசை பிடி சோற்றில் - உண்ணுதற்குரிய ஒரு பிடி சோற்றில் பொற்பு உறு பூசினிக்காய் மறைப்பை - பொலிவான ஒரு பூசினிக்காயை மறைக்க வல்வனும் ஆல்வாய், இது வியப்பு - (அத்தகைய நி) இது கூறுதல் பற்றி வியத்தற்கு என்ன உண்டு.
(கு.உ)-மாசு மறுவற்ற தூய நைஷ்டிக சிலர் என்பது தோன்ற நல் அம்பலவாணர் என்றார். தோழியின் சபலப்போக்கைக் கண்டிக்கும் தலைவியின் நளினச்சுவை இச்செய்யுட்கு உயிராகும்.
அவர் தூதாகிக் கார் வந்து அடைந்ததெனப் பாங்கி கூறல்.
தலைவி கார்காலம் வந்த தென்று கூறிய சொற் கேட்ட பாங்கி, தலைவன்
தான் வருகின்ற செய்தியை அறிவித்தற்கு விரும்ப இப்பொழுது கார் தூதுாய் வந்து அடைந்ததென்று கூறல்.
303. சனிநீரா டென்பதன் றக்குரை சீட்டுக் கவியிலுரை
முனிநீர னாறு முகன்முக நீறென . மின்முகில சனிவாய் திறந்தவ ரீண்டுறல் சாற்றிச் சரியுன்குழற் றனியே ரதுகொளக் காவலர் சந்தெனத் தான் வருமே.
பதவுரை :-சனி நீராடு என்பதன் தக்குரை சீட்டுக் கவியில் உரை - சனி நீராடு என்பதற்குத் தகுதியான விளக்கத்தைச் சீட்டுக் கவியில் உரைத்து அருளிய, முனி நீரன் ஆறுமுகன் முகநீறு என மின் முகில் - முனிவர்

222
இயல்பினரான ஆறுமுகநாவலர் பெருமானது திருமுகத்து விபூதி ஒளி போல மின்னும் முகிலானது, அசனி வாய் திறந்து - இடி இடித்து, சரி உன் குழல் தனி ஏர் அது கொள - சரிந்து அசையும் உனது கூந்தலின் ஒப்பற்ற கருமை அழகு இடம் பெற, அவர் ஈண்டு உறல் சாற்றி -- தலைவர் இங்கே வந்து இருத்தலைத் தெரிவித்து, காவலர் சந்து என தான் வரும் - தலைவர் தூது எனும்படியாக வந்துள்ளது.
(கு.உ)-வாய் திறந்து என்பது இடித்து எனப்பொருள், தக்கு உரை தக்குரை எனத் தொகுத்தலாயிற்று. புகு + உழி = புக்குழி, நகு + உழி = நக்குழி என்பது போல தகு + உரை - தக்குரையாயிற்று எனலுமாம்.
பிணை விழியாற்றல்
(இது வெளிப்படை)
304. மின்னுடை யாய்கரு மேனியை விண்கான் மிளிர்புனலை மன்னுடை யாய்வி லதுவுடை யாய்பெயர் மாலுடையாய் என்னுடை யாவி யுலகு புரப்பை யெனின்முகினி பொன்னுடைய யானைப் பொருவினை வாழ்நா
வலன்பொழிற்கே.
பதவுரை :-எழில் முகில் நீ - அழகிய முகிலாகிய நீ, மின் உடையாய் - மின்னலை நின்னிடம் கொண்டுள்ளாய், கரு மேனியை - கரிய நிறம்
உடையாய், விண் கால் மிளிர் புனலை மன் உடையாய் - வான் வெளியிற் சொரியும் நீர்க் கருவை மிகுதியும் கொண்டுள்ளாய், வில்லது உடையாய் - வில்லும் தாங்கி உள்ளாய், மால் பெயர் உடையாய் -
மால் என்னும் பெயருள்ளாய், என்னுடை ஆவி உலகு புரப்பை - எனது உயிரை மட்டு மன்றி உலகு முழுவதையுமே காப்பாய், நாவலன் பொழிற்கு - நாவலர்பிரானது இச. சோலையின் கண், பொன் உடையானை பொருவினை - பொன் பெற்று வருபவராகிய என் காதலனை ஒத்துள்ளாய், வாழ் - நீ வாழ்க.
(கு.உ):இச் செய்யுள் சிலேடை, பொன்னுடையான் - திருமால், தன் காதலன் பண்புகளை முகிலிற் கண்டு புகழ்கின்றாள் தலைவி. அத்தொடர் பின் காதலர்க்காம் போது மின் - ஒளி; நீர் - நீர்மை; பண்பு - நலம்; மால் - ஆசை என்பன சிலேடை வகையாக அமையும்.

Page 122
223
அவனவட் புலம்பல்
பொருள் ஈட்டச் சென்ற தலைவன் தன் கரும முற்றியபின் அவ்விடத்துத் தலைவியை நினைத்துப் புலம்பல்.
305. காந்த ளெரியுற வுட்கரி யாகிக் கரும்பனம்பு
போந்து பொடியாக் குவளைப் புனலுறப் பொன்றியழிந் தேந்து கரியினில் வேங்கை யடருற வென்மனவிற் போந்து பதுங்கு மொருபிணை நாவலன் பொற்கிரிக்கே.
பதவுரை :-நாவலன் பொற் கிரிக்கு - நாவலர் பிரானது அழகிய மலையிடத்தில், காந்தள் எரியுற - காந்தள் நெருப்பு ஒளியில் மலர, உள் கரியாகிய - உள்ளம் கரிந்து, கரும்பன் அம்பு போந்து பொடியா - மன்மதன் அம்புகள் போய்த் தாக்கி வருத்த, குவளை புனல் உற - (அத்துயரால்) குவளை போலும் கண்களில் நீர் ததும்ப, பொன்றி அழிந்து -தனது நலம் கெட்டு அழிந்து, ஏந்து கரியினில் வேங்கை அடருற - உயர்ந்த இள முலையாகிய யானையில் பொன்நிற பசலை நெருங்க, என் மன இல் ஒரு பிணை போந்து பதுங்கும் - எனது மனமாகிய வீட்டில் ஒரு பெண் மான் (தலைவி) புகுந்து பதுங்குகின்றது.
(கு.உ)-தன் பிரிவால் தலைவியுறும் துயர்நிலையும் தன் மனதில் அவள் நீங்காது இருக்கும் நிலையும் ஒருங்கு அகப்பட எழுந்த உருவகக் கற்பனையாயுள்ளது, இச் செய்யுள், வேங்கை பொன் பசலை அடரல் நெருக்கமாகப் பரத்தல், யானையை வேங்கை அடரக் கண்டு அஞ்சிய பெண்மான் ஒன்று தனக்கு ஒதுக்கிடம் தேடிப் பதுங்குகின்றதெனத் தொனிப் பொருள் விரவி இருத்தலும் காண்க. மிகத் தெளிவான உருவகச் செய்யுள்களில் ஒன்று இதுவாகும்.
தலைவன் பாகனொடு சொல்லல்
(இது வெளிப்படை)
306. காரம்பு தூவ விழியம்பு துவக் கழைவின்மலர்க்
காரம்பு தூவக் கணாடியிற் காந்தளங் கைகொடுத்தீர்
வாரம்பு தைதனம் வாடும் வலவா நளனெனமா வாரம்பு போலக் கொணாவலன் வாரர் மகிழ்வுறவே.

224
பதவுரை :-வலவா - தேர்ப்பாக, கார் அம்பு தூவ - மழை மேகம் நீர் தூவ, விழி அம்பு தூவ - கண்களும் நீர் சிந்த, கழை வில் கார் மலர் அம்பு தூவ - மன்மதனது மூங்கில் வில்லாகிய கமகமும் மலர்ப்பாணத்தாரை, சொரிய, கணாடியில் காந்தளம் கை கொடுத்து - கண்ணாடி போன்ற கன்னத்தில் காந்தள் மலர் போலும் தன் கையை ஊன்றி, வார் புதை ஈர் அம் தனம் - கச்சினுள் புதையுண்ணும் இரண்டு அழகிய தனங்களை உடைய தலைவி, வாடும் - (என் வரவு கருதி) வாட்டம் உற்று இருப்பாள், ஆதலின், நாவலன் வாரர் மகிழ்வு உற - நாவலன் பால் அன்புள்ளவர் மகிழுமாறு, நளனென - நளன் குதிரை செலுத்தும் முறை போல, மா அம்பு போல வார் கொள் - தேர்க்குதிரைகள் அம்பு போன்று விரைந்து செல்லத்தக்க பாங்கில் கடிவாளத்தைப் பிடிப்பாயாக.
(கு.உ)-ஈர் வாரம்புதை தனம் - அன் மொழித் தொகை வேகமாகக் குதிரை செலுத்துதலில் கீர்த்தி பெற்ற இதிகாச பாத்திரமாதல் பற்றி நளனென என்றார். வாரம் என்புழி அம் சாரியை எனலுமாம். வார் மூன்றனுள் முதலாவது கச்சு. இரண்டாவது கடிவாளம், மூன்றாவது அம்பு.
மேகந் தன்னொடு சொல்லல்
தலைவன் வருங்காலத்து மேகத்தை நோக்கிச் சொல்லல்.
307. காரானை வெப்பகல் பூகமக் காருக் களிமிகக்க
ணிரானை வோட்டி நிழன்றுவெண் சாமரை நீட்டுநல்லை. பூரானை யாறுமுகனை யுளினா ரெனவுவக்க வாரானை கூறி மகிழ்விப்பை வாழிய வண்முகிலே.
பதவுரை :- வண்முகிலே - வள்ளன்மையுள்ள முகிலே, காரால் நை வெப்பு அகல் பூகம் - மேகத்தினால் தன்னை வருத்திய வெப்பு அகலப் பெற்ற கமுகானது, அ காருக்கு அளி மிக -அம் முகிலிடத்து அன்பு மிக, கண்ணிரால் நை ஒட்டி - தன் கண்களில் இருந்து சொரியும் நீரால் துயர் நீக்கி, நிழன்று - நிழலிட்டு, வெண்சாமரை நீட்டும் - தன் பாளையாகிய வெண்சாமரை அசைத்து உபசரிக்கும், நல்லை ஊரானை ஆறுமுகனை உளினார் என - நல்லூரில் தோன்றிய ஆறுமுகனை நினைந்தார் போல, உவக்க - மகிழும் வண்ணம், வாரானை கூறி மகிழ்விப்பை - எனது வரவைக் கூறி மகிழ்விப்பாயாக, வாழிய - நீ வாழ்க.

Page 123
ن2Z
(கு.உ);~கமுகு முகிலுக்குக் கண்ணிரால் நைவோட்டுதலாவது தனக்கு முகில் செய்த நன்றியை நினைந்து கமுகு நன்றிக் கண்ணிர் விடக் கண்டு முகில் பெய்தலும் துன்பம் திரப் பெறுதலாம்.
கண் - கணு; நைவு - துன்பம்; வாரானை - வரவு; கூறி - முற்சென்று
கூறி.
இதுவுமது
308. நாருற லான்வா னடுவுற லான்மலை நந்துதலாற்
பேருற வானுல கெங்கணு நாவலற் பேண்முகில்கா ணிருற லான்விழி நீருற நின்றவர் நீடனப்பொன் வாருற வந்தனர் மன்னவ ரென்று வழங்குதிரே,
பதவுரை :-நார் உறலால் - நாவலர் பிரான் அன்புற்று இருக்க நீவிரும் நீா பெற்றிருத்தலாலும், வான் நடுவுறலால் - அவர் சிறந்த நடுவுநிலை பேணுபவராக நீவிரும் வான நடுவில் உறுதலாலும், மலை நந்துதலால் - அவர் மயக்கம் அறுத்தவராக, நீவிர் மலை மீது படிதலாலும், வான் உலகு எங்கணும் பேருற (லால்) - வானுலகு எங்கும் செல்லுதலால், சிறந்த உலகம் முழுவதும் புகழ் மிகுதலால், நாவலர் பேண் முகில்காள் - நாவலர் பிரானை அனுசரிக்கும் நிலை உளது என்று கருதப்படும் முகில்களே, நீர் உறலால் - நீவிர் ஆண்டும் செல்வீராதலின், விழி நீருற நின்றவர் - கண்ணிர் உகுமாறு துயர் நிலையில் இருக்கும் நம் காதலியினது, தன நீள் பொன் வாருற மன்னவர் வந்தனர் - முலையிடத்துப் பரந்த பசலையாகிய பொன் வடியுமாறு காதலர் திரும்பி வந்தார், என்று வழங்குதிர் - என்ற செய்தியை அங்கு சொல்வீர்.
(கு.உ)- முன் ஈரடியும் சிலேடை, நார் - அன்பு, நீர்; நடு - நடுநிலை, நடுவிடம்; மலை நந்துதல் - மலைவை அறுத்தல், மலை மீது படிதல் என முறையே நாவலர்க்கும் முகிலுக்கும் பொருந்தக் காண்க. நீள் தனப் பொன் என்பதை தனம் நீள் பொன் எனமாற்றுக, தனத்தின் கண் பரக்கும் பசலைப் பொன் என்பது பொருள். வாருற - வார்தல் உற, வார்தல் - வடிதல், காதலன் வரவால் முலைப்பசப்பு தீர்த்தல் பிரசித்தம் - உறலான் - உறுதல் வாயிலாக,

226
பாங்கி வலம்புரி கேட்டவன் வரவறிவுறுத்தல்
பாங்கி வலம்புரி ஓசையைக் கேட்டுத் தலைவன் வரவை அறிவுறுத்தல்.
309. வலம்புரி போற்கலை வள்ள லறுமுகன் வாழ்நலைக்கா
வலம்புரி மாலைய ருண்கண் வருமுத்த மாற்றினைய வலம்புரி பூணாம் பலளிபொன் னும்முல்லை வாய்முத்தமும் வலம்புரி சொல்வது கேள்திறை கொள்ள வருவரென்றே.
பதவுரை :-வலம்புரி போல் கலை வள்ளல் ஆறுமுகள் வாழ் நலை கா - அறிஞர் மத்தியில் வலம்புரிச் சங்கு என விளங்கும் கலை வள்ளலாகிய ஆறுமுகநாவலர் வாழ்கின்ற நல்லைப்பதியில், உள்ள சோலைக் கண்ணதாகிய, வலம்புரி மாலையர் - நந்தியாவர்த்த மலரால் தொடுத்த மாலை அணியும் நின் காதலர், புரி பூண் ஆம்ப வளி பொன்னும் - கிம்புரி என்னும் அணி பூணும் கொம்பினதாகிய ஆனை எனத் தகும். நின் முலையில் பரக்கும் பசலையும், முல்லை வாய் முத்தமும் - முல்லை அரும்பு போன்ற பற்கள் உள்ள உனது வாய் முத்தத்தையும், திறை கொள்ள வருவர் என்றே - ஒருங்கே கப்பம் பெற இதோ வருகின்றார் என்று, வலம்புரி சொல்வது கேள் - இங்கு கேட்கும் வலம்புரிச் சங்கு ஒலி சொல்வதைக் கேள், உன் கண் வரு முத்தம் - (கேட்டு) உனது மை உண்ட கண்களிடத்து உருண்டிருக்கும் கண்ணிா முத்துக்களையும், இனை அவலம் மாற்று - அவரையே நினைந்து பெறும் துன்பத்தையும் மாற்றுவீராக.
(கு.உ);-குலப்பிறப்பாலன்றியும் கலைவளத்தானும் சிறந்தவராதல் பற்றி எடுத்த வாக்கிலேயே அவரை வலம்புரி என்றார். ஆம்பல் - யானை, முல்லை - ஆகுபெயர், வலம்புரி - உயரினச் சங்கு, நந்தியாவர்த்தனம்.
தலைவி மகிழ்ச்சி
(இது வெளிப்படை)
310. கோட்ட நெறியர்க் கணங்கா மறுமுகன் கோதினல்லைக்
கேட்ட வளவிற் கயிறொடி போய கிளர்முகினிர்
காட்ட வரிய விழிநிலை மேய கணும்பசலை யோட்ட மெடுத்த துரவோன் வலம்புரி யூதுவதே.

Page 124
227
பதவுரை :-கோட்ட நெறியர்க்கு - நேர்மை அற்ற நெறியில் ஒழுகுவோர்க்கு, அணங்காம் அறுமுகன் கோதில் நல்லை - அணங்கு போன்ற ஆறுமுகநாவலரது நல்லைப்பதியில், உரவோன் வலம்புரி ஊதுவது - காதலரது வலம்புரி ஓசையைக் கேட்ட அளவில், கயில் தொடி போய - கேட்ட மாத்திரத்தே கழன்று விழும் நிலையில் இருந்த கை வளையல் இறுகிப்போயிற்று, கிளர் முகில் நீர் காட்ட அரிய கணும் விழி நிலை மேய -பொங்கிப் பொழியும் முகில் நீரும் காட்டற்கு அரிதான அளவு சொரியும் கண்களும் சுயமான விழி நிலை எய்தின, பசலை ஓட்டம் எடுத்த - பசலை ஒடி மறைந்தது.
(கு.உ):-சங்கொலிக் கேள்வி சர்வ விக்கினோப சாந் ஆயிற்றென்பது தாற்பரியம். கவலையால் உடல் சோர்வுறு நிலையில் தொடி கழலுதலும் மகிழ்வால் உடல் பூரிக்கும் நிலையில் அது இறுகுதலும் இயல்பாதலின் தொடி போய என்புதற்கு வளையல்கள் செறிவுற்றன, இறுகின என உரைக்க, பசலை ஒட்ட மெடுத்த என்பது களவாக வயல் மேய வந்த விலங்குக்ள் எசமானைக் கண்டு ஓட்டம் எடுத்தல் போன்ற காட்சி இனிமை பயக்கும் நயம் காண்க, கோட்ட நெறியர் நெறி கோடினோர் என விகுதி பிரித்துக் கூட்டப்படும். அணங்கு தாக்கி வருத்தும் தெய்வம் - நாவலர் நெறி கோடினோர்க்கு அணங்காவர். விதி யிகழ நாசார நோய் விலக்கு பேஷன வருக விரத்ய பிஷண வருக. நாவலர் பிள்ளைத் தமிழ் வாராளை 12. பார்க்க விரத்ய - நெறி கோடினோன். பீஷணன் - பயங்கரமானவன்.
இதுவுமது
311. பாத கமல முடிக்கணி யாக்கிய பண்பினர்தம்
பாத கமல மறுத்தகு ணாவலன் பல்புகழ்போ னாத னுமதளு ரேகவந் தானெனு நற்சங்கமா நாத னுயர்கர நற்சங்க நாடிட வாழியவே.
பதவுரை :-பாத கமலம் முடிக்க அணி ஆக்கிய பண்பினர் தம் - தமது பாதங்களாகிய தாமரை மலரைத் தங்கள் முடிக்கு அணியாகக் கொள்ளும் சிலர்களுடைய, பாதக மலம் அறுத்து அருள் நரவலன் - பாதகமாய் இருக்கும் தீய மலங்களை அறுத்து அவர்கள் ஆன்மீக மேல் நிலை அடைய அருளும் நாவலர் பிரானது, பல்புகழ் போல் நாதன் - பலவாகிய புகழ் எல்லாம் தானாய் உருத்தவரான நம் தலைவன், நுமது அஞர் ஏக வந்தான் எனும் - நுமது துயர் நீங்க வந்து கொண்டிருக்கின்றான் என அறிவிக்கும், நற் சங்கம் - நல்ல வலம்புரிச் சங்கானது, மாநாதன் உயர் கர நல் சங்கம் - இலக்குமி நாயகனாகிய விஷ்ணுவின் உயர்வாகிய திருக்கரத்தில் பொருந்தும் நல்ல வலம்புரிச் சங்கானது, நாடிட வாழிய - நாடப்படுமாறு வாழ்க.

228
(கு.உ):-பாத கமலம் - உருவகம், முன் 302ம் செய்யுளில் குறிப்பிட்டபடி நாவலர்பிரான் சற்குருநாதனே ஆதலின் அவர் பதம் தலைமேற் கொள்வார். மலநீக்கம் உறுதல் வாய்மைப்பாலதேயாம். வலம்புரியை வாழ்த்தியதன் மூலம் மகிழ்ச்சிப் பெருமிதம் புலப்படுத்தப்பட்டவாறு காண்க.
பாங்கி வந்தோன்றம்மை நினைந்தமை வினாதல்.
வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிந்தோன் பொருள் கொண்டு மீண்டு வந்துழிப் பாங்கி தலைவனை இந்நாளளவும் எங்களை நினைந்ததுண்டோ என்று வினாதல்
312. அன்னம் பயினலை யாறு முகனடை யாரெனநீ
சொன்னம் விரும்பியெஞ் சொன்னந் துறந்து துணைமுலையிற் கன்னந் தொழின்மற வர்வாழ் கடம்புகு காலெமதோ ரன்னம் புகுந்த துளதே யுனதுள மாமரைக்கே.
பதவுரை :-நீ சொன்னம் விரும்பி - (தலைவ), நீ பொன் தேட விரும்பி, துணை முலையில் சொன்னம் துறந்து - இரண்டு கொங்கைகளிலும் தேமல் உள்ள எமது பொன் அனைய தலைவியைத் துறந்து, அன்னம் பயில் நலை ஆறுமுகன் அடையார் என - அன்னங்கள் சஞ்சரிக்கும் வாவிகளை உடைய நல்லைப்பதியிற் தோன்றிய ஆறுமுகநாவலரது பகைவர் செல்வது போல, கன்னம் தொழில் மறவர் வாழ் கடம் புகு கால் - களவுத் தொழிலில் வல்ல மறவர்கள் வாழும் காட்டிற் புகுந்து இருந்தபோது, உனது உளமாம் மரைக்கு - உனது உள்ளமாகிய தாமரைக் கண், எமது ஓர் அன்னம் புகுந்து உளது - எமது ஒப்பற்ற அன்னம் போல்வாள் புகுந்திருக்க அவகாசம் இருந்தது உண்டோ,
(கு.உ):-இணை முலையிற் சொன்னம் - அது உடையாளைக் குறித்தது. அன்மொழித் தொகையாயிற்று, கன்னம் - களவு; மரை - முதற்குறை. அன்னம் புகுந்ததுண்டோ என்றது தலைவியையும் நினைந்த துண்டோ எனப் பரிகாசம் செய்தது.
நினைத்தமை செப்பல்
(இது வெளிப்படை)
313. அரவிந்தங் காட்டு பணைசெறி நல்லையி னாவலனை
யரவிந்தங் காட்டு சிரனை மறுவா வறுமுகனை
யரவிந்தங் காட்டு மிதய மமைப்பவ ராமெனநெஞ் சரவிந்த நீங்கா வனத்தை நினைப்பதெ னாயிழையே.

Page 125
229
பதவுரை :-ஆயிழையே - ஆய்ந்த ஆபரணங்களை உடைய தோழியே, அரவிந்தம் காட்டு பனை செறி நல்லையில் நாவலனை - தாமரைப் பூக்களைத் தோற்றும் வயல் நிலங்கள் செறிந்த நல்லூரின் நாவலர் பிரானும், அரவு இந்து அம் சிரனை மறவா அறுமுகனை - பாம்பும் சந்திரனும் கங்கை நீரும் தோற்றும் தலையினராய சிவனை மறவாத அறுமுகனை, அரவிந்தம் காட்டும் இதயம் அமைப்பவராம் என - தாமரை போன்ற இதயத்தில் அமைத்துத் தியானிப்பவர் போல், நெஞ்சு அரவிந்தம் நீங்கா அனத்தை நினைப்பது என் - நெஞ்சத்தாமரையை அகலாது உறையும் அன்னமாம் இவளை நினைக்க வேண்டுவது என்னோ?
தலைவன் ஆற்றுவித்திருந்த வருமை வினாவல்.
314 மின்னு மறலுற மாயு மிருங்குயின் மெய்ந்நடுங்க
மன்னு மணலைக் கயிறாத் திரிப்பவர் மானெனுயிர் தன்னை யெவாறு புரந்தனை சாரார் புரந்தனைத்தி தின்ன வளித்தவன் சேய்நா வலனார் செழுநலைக்கே.
பதவுரை :-தோழி, சாரார் புரம் தனை தி தின்ன அளித்தவன் சேய் - பகைவர் முப்புரங்களை தீ உண்ணச் செய்த சிவன் புதல்வனாகும், நாவலனார் செழும் நலைக்கு - நாவலர் பிரானது செழிப்பு உள்ள நல்லையின்கண், மின்னும் அறல் உற மாயும் இரும்குயின் மெய் நடுங்க - மின்னும் நீரும் பொருந்தும் கரிதாகிய பெரிய மழை மேகத்துக்கு உடல் நடுங்க, மன்னு மணலை கயிறா திரிப்பவர் மான - பொருந்தும் மணலைக் கயிறாகத் திரிப்பவர் போல், என் உயிர் தன்னை எவ்வாறு புரந்தனை - என் உயிர் போன்ற தலைவியை நீ எவ்வாறு தாங்கினாய்.
(கு.உ):நாவலர் பிரானைச் சிவகுமாரன் என்றார், திருஞானசம்பந்தர் போலப் பரமதம் நிராகரித்து சுவமதம் நிறுவும் பயன்நோக்கி. மா - கருமை, மாயும் - கரிதாகும். மேகம் நடுங்க என்பதில் 'கு'வ்வுருபு விரித்து மேகத்துக்கு (தலைவி) நடுக்கமுற்று இருப்பாள். அந்நிலையில் சாக்குப்போக்குச் சொல்லித் தலைவியை ஆற்றுவது மணலிற் கயிறு திரித்து எடுப்பது போல்வதோர் அசாத்தியமாகத் தோழிக்குத் தென்பட்டிருக்கும் என்பதை உட்கொண்டு தலைவன் வினாவிய பொருளாக அமைந்தது இச் செய்யுளி, மின்னொடு சேர்ந்த உம்மையை அறலுக்கும்
கூட்டுக, அறல் - நீர்,

230
தலைவி ஆற்றுவித்திருந்த வருமை கூறல்.
பாங்கி தலைவியை ஆற்றவித்திருந்த அருமையைத் தலைவற்குக் கூறல்.
315. வண்டார நீங்கப் பொரிய மதனெரி வாளிகளாற்
கண்டார வாவுறு கண்ணுடல் சேந்து கருகினளைத் தண்டார வாவுறு தோளாய் தணித்தனன் சாருகலைப் பண்டார மாநா வலனனை நின்வாய் பகர்ந்தினிதே.
பதவுரை :-தண் தார் அவாவுறு தோளாய் - குளிர்மையான மாலை ஆசை கொள்கின்ற தோளை உடைய தலைவனே, வண்டு நீங்க ஆரம் பொரிய - தங்கி இருந்த வண்டுகள் விலகுமாறு இவள் அணிந்திருந்த பூமாலை பொரியும் வண்ணம், மதன் வாளிகளால் எரி கண்டார் - மன்மதனது பாணங்களால் தாக்குண்டு எரிதலைக் கண்டார், அவாவுறு
கண் சேந்து உடல் கருகினளை - கண்டார் விரும்பும் கண் சிவந்து மேனி கருகும் நிலையினளாம் இவளை, சாரு கலை பண்டாரமாம் நாவலன் அனை - தேங்கிய கலைப் பொக்கிஷமாகும் நாவலர்
வாய்மையை ஒத்த, நின் வாய் பகர்ந்து இனிதே தணித்தனன் - உனது வாய்மையை எடுத்துக் கூறி இனிதாக ஆற்றுவித்தேன்.
(கு.உ): வாய்மை என்பது தலைவனின் சொற்தவறாமைக் காத்தோம்பும் சீலத்தை. வண்டார நீங்கப் பொரிய என்பதை வண்டு நீங்க ஆரம் பொரிய எனவும் கண்ணுடல் சேந்து கருகினளை எனவும் நிரனிறை ஒழுங்கில் பிரித்து இயைத்துக் கொள்க. ஆரம் - மாலை; சேந்து - சிவந்து, பண்டாரம் - பொக்கிஷம்; நாவலர் கலாபொக்கிஷமாதல் 'துங்கச் சமய விலக்கண இலக்கிய லெளகீக விஞ்ஞானத்துறை மலி சுய அறிவு
9
ஆற்றல் விவேகத் துடிப்பு மிடுக்கொளிர் . நாவலர் பிள்ளைத் தமிழ் - தாலப்பருவம் செய்.7 என்பதனாலு மறிக.
19. வரைவு மலிவு
காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக்
குரைத்தல். (இது வெளிப்படை)
316. பொம்மண வார்முலை யாய்கலை போய பொருவிலர்க
டம்மண லாறு முகநா வலனார் தகுமனதி லும்மண விம்மித மூராம் பலிற் கஞ்ச முய்த்தனரு ளம்மணங் காண வரைப்பணம் வேண்டிய வாண்டகையே.

Page 126
231
பதவுரை :-பொம் அணவு வார் முலையாய் - பொருமி நிமிர்கின்ற அரிய தனத்தை உடையாய், கலை போய பொருவிலர்கள் தம் அணல்
ஆறுமுகநாவலனார் தகும் - கலைத்துறையில் சென்ற ஒப்பற்ற அறிஞர்க்குத் தலைவராக விளங்கும் ஆறுமுகநாவலனாரை ஒக்கும், மனதிலும் மண விம்மிதம் - (நம் தலைவரது) மனத்தினிடத்தும்
மணப்பெருமிதம் தோன்றியுள்ளது, அரை பணம் வேண்டிய ஆண்டகை - பாம்பப் படம் போன்ற அல்குலை விரும்பும் ஆண்தகையினரான அவர், உளம் மணம் காண - (தம் முதற் காட்சியில்) உள்ளப் புணர்ச்சி தோன்ற (உடலுறு புணர்ச்சி கருதி) ஊர் ஆம்பலில் கஞ்சம் உய்த்தனர் - உலாவும் ஆம்பலாகிய யானையில் பொன் அனுப்பி உள்ளார்.
(கு.உ):-பொம் - பொம்முதல்; நிமிர் - மேனோக்கு; மனதிலும் - மனதினிடத்தும். வேந்து என்பதற்கு இணையான மன் என்பதும் வேந்து போல் சொல்லால் அறிணை ஆதல் பற்றி அதிலும் என்றார். எனினும் விளக்கத்திற்காக மன - மனதிலும் என விரித்து உரைத்துக் கொள்க. விம்மிதம் - பெருமிதம் - ஒகை - உவகைக் கிளர்ச்சி எனலுமாம். ஆம்பல் யானை - ஊர் என்ற அடை பிறிதின் இயல்பு நீக்கற்பொருட்டு. உளம் மணம் - உள்ளப்புணர்ச்சி - அரைப்பணம் - அல்குல்.
காதலி நற்றாயுள்ள மகிழ்ச்சியுள்ளல்
தலைவி தலைவன் வரவிடுத்த முலைவிலைப் பொருள்களைக் கண்டு நமக்கு மணக் காலம் என்று நற்றாய் மகிழு முள்ளத்து மகிழ்ச்சியை நினைத்தல் முலைவிலை - பரிசப்பொருள்.
317. சாலிய னாமெனச் சாலிய னார்வயற் சாலியல்கா
மாலிய னல்லையின் மாலிய நெஞ்சுறு நாவலன் பாலிய லன்பரென் பாலிய லன்புறு பாலினிதோர் காலிய லன்னையின் காலிய லோகை கணிப்பதுவே.
பதவுரை :-சாலி அணார் வயல் சால் இயல் கா மால் இயல் - நெற்பயிர் அண்ணாந்து ஓங்கும் வயலிடத்து அமைந்த நல்ல இயல்பினதான சோலைக்கண் முகில்கள் படிகின்ற, நல்லையில் - நல்லைப் பதியில், சாலியனாம் என - வசிட்ட முனிவன் என்னும்படி, மால் இய நெஞ்சுறு நாவலன் பால் - மயக்கம் அற்ற தன்மை நிலவும் நெஞ்சினன் ஆகிய நாவலர், பிரானிடத்து, இயல் அன்பர் - இயல்கின்ற - அன்பாளராம் தலைவர், என்பால் இயல் அன்புறுபால் - என்னிடத்து

232
நல்லியல்பான அன்பு கொண்டிருக்கும் தன்மையானது, இனிது - இனியது, ஓர் கால் இயல் - உணருமிடத்து, அன்னையின் ஒகை கால் இயல் களிப்பது - எனது அன்னையின் உவகைக் கிளர்ச்சி வாய்க்கால் எடுத்துப் பெருகுவதால் அளவிடக்கூடியது.
(கு.உ):-உளமயக்கம் தீர் நிலைக்கு உதாரணமாதல் பற்றி வசிட்டர் இங்கு தழுவப் பெற்றார். சாலி - அருந்ததி, அவள் நாயகனாதல் பற்றிச் சாலியன் என அவர் பெயராயிற்று. அணார் - அண்ணாந்து - சாலி இரண்டில் முன்னது அருந்ததி, பின்னது நெல். மால் இரண்டில் முன்னது மேகம், பின்னது மயக்கம். பால் இரண்டில் முன்னது பக்கம், பின்னது தன்மை, கால் இரண்டில் முன்னது போது பின்னது வாய்க்கால். ஒகை - உவகைக் கிளர்ச்சி. அவர்க்கு என்பால் உள்ள அன்பு பற்றி அறிகையில் அன்னை உவகை பெருகி வடிகாலெடுத்துப் பெருகும் என்கிறாள் தலைவி.
பாங்கிதமர் வரை வெதிர்ந்தமை தலைவிக் குணர்த்தல்.
பாங்கி தலைவன் தமர் மணம் கூறி வந்துழித் தலைவி தமர் மணம் எதிர்ந்தமை தலைவிக்குக் கூறல்.
318. ஆறு முகநா வலனது நல்லை யடைந்தவர்போ
லாறு முகந்தா மரைமுல்லை நீல மசோகமினவ யேறு கரும்பு மகிழ்தரப் பூங்கொம் பிணைந்திடமா வேறு மரசினை யாலத்தி கொள்கிளை யேற்றதுவே.
பதவுரை :-ஆறுமுகம் தாமரை முல்லை நீலம் அசோகம் இவை ஏறு கரும்பு - ஆற்றுமுகம், தாமரை, முல்லை, நீலம், அசோகம் என்பன பொருந்தப் பெற்ற கரும்பு போன்ற தலைவி, ஆறுமுகநாவலனது நல்லை அடைந்தவர் போல் மகிழ்தர - நாவலர் பிரானது நல்லூரை அடைந்தவர் போன்று உவகை அடைய, பூங்கொம்பு இணைந்திட மா ஏறு அரசினை - பூங்கொம்பு ஒத்த தலைவியை இணைத்துக் கொண்டு குதிரையில் பவனி வர இருக்கும் அரசாகிய தலைவனை, ஆலத்தி கொள் கிளை ஏற்றது - எடுக்கும் முயற்சியைப் பெரும் தோழியர் கூட்டம் மேற்கொண்டு L-L-35l.

Page 127
233
(கு.உ);~ஆறுமுகம் - ஆற்றுமுகம். அது இங்கு ஆற்றிடைக் குறையை உணர்த்தும். இது முதல் அசோகம் ஈறாக வந்த ஐந்தும் கரும்பென உருவகிக்கப்பட்ட தலைவியின் வெவ்வேறு உறுப்புக்களைக் குறிக்கும். அவற்றுள் ஆறுமுகம் - நிதம்பம்; தாமரை - முகம், முல்லை - பல், நீலம் - கண், அசோகம் - மேனி, மினுமினுப்பு , செய்யுட் பிற்பாதிப்பொருள் கரும்பு பூங்கொம்பு மா அரசு ஆல் அத்தி என்னும் நாமங்களில் மறைந்து நாமாந்தன்மை சுவை பட நிற்கும் நயம் காண்க. தலைவர் பொன் அனுப்பி விட்டார். இனி என்ன திருமணம் தானே என்ற துணிவில் தோழியர் ஆரத்தி ஆயத்தம் செய்யும் முயற்சியில் இறங்கி விட்டனர் என்பது தாற்பரியம். இனி என்ன காரியம் முடிந்துவிட்டது என்பது குறிப்பு, கொள்கிளை - பெருஞ்சுற்றம், மா - குதிரை பூங்கொம்பு இணைந்திட மாவேறரசு தம்பதிகள் குதிரையில் பவனி வருதல் மரபு.
அவள் உவகை ஆற்றாது உளத்தோடு கூறல்
தலைவி மகிழ்ச்சி அடங்காது நெஞ்சொடு கூறல்
319. நெஞ்சே மிகுமிலை வீடுவந் தார்நமர் நீடுபுகழ்
விஞ்சேர் கவிகை யவர்முன மேவிய வேள்கவிகை நஞ்சேய் சிலையே வெவன்செயு நாமின்ப நண்ணுவம்வான் மஞ்சே யெனப்பிர சங்க மழைநா வலனலைக்கே.
பதவுரை :-நெஞ்சே - மனமே, மிகும் இணைவு ஈடு வந்தார் நமர் - (நம் பால்) மிகும் துன்பத்துக்கு மாற்றிடாக வந்து விட்டார் நம் தலைவர், நீடு புகழ் விஞ்சு ஏர் கவி கையவர் முனம் - பெருகும் புகழ் மிகும் அழகிய கொற்றக் குடையாகக் கொண்ட அவர் முன், வேள் கவிகை - நம்மை இலக்கு எனக் கொண்டு வரும் மன்மதனது கவிந்த கையிடத்து உள்ள, நஞ்சு ஏய் சிலை ஏ எவன் செய்யும் - நச்சுத் தன்மை உள்ள வில்லில் இருந்து பாயும் அம்பு நம்மை என்ன செய்யும், வான் மஞ்சே என பிரசங்க மழை நாவலன் நலைக்கே - வானிற் சூழும் கரு மேகங்கள் போலப் பிரசங்க மழை பொழியும் நாவலர் பிரானது நல்லையின் கண், நாம் இன்பம் நண்ணுவம் - நாம் இன்பம் அடைவோம்.
(கு.உ)-இணைவீடு - இணைவு + ஈடு, இணைவு - துன்பம், ஈடு மாற்றீடு - எவன் செயும் என்றது அதற்கு இனி செயல் இல்லை என்றபடி இன்பம் நண்ணும் என்றது இனி இடையீடில்லா இன்பம் அடைவோம் என்றவாறு. மெவிய - நமை இலக்காகப் பொருந்திய.

234
தலைவனைப் பாங்கி வாழ்த்தல்
320. பாளை மணக்கும் விரிபூக நெற்றியிற் பாய்சினைமேய்
வாளை மணக்கு மதுநீ சிவமத மேமணக்கும் வேளை மணக்கு மறுமுக னல்லையல் வேள்குறமா னாளை மணக்கு மதுவென வாழ்மி னுடனண்ணலே.
பதவுரை :-அண்ணலே - பெருமை உடையவரே, விரி பாளை மணக்கும் பூக நெற்றியில் - விரிந்த பாளையின் மணம் பரவ நிற்கும் கமுகின் நெற்றியில், பாய் சினை மேய் வாளை மது மணக்கும் - பாய்ந்து ஏறுகின்ற சினை பொருந்திய வாளை மீனிடத்து (கமுகம் பாளையினது) தேன் படிந்து மணப்பதும், சிவ மதமே மணக்கும் - சிவநெறி பொருந்தி மணப்பதும், வேள் ஐ மணக்கும் - நிலமானது அழகு பொருந்தித் திகழ்வதுமாகிய, அறுமுகன் நல்லை - ஆறுமுக நாவலர் பிரானது நல்லைப்பதியில், நீ - நீவிர், அவ் வேள் குறமானாளை மணக்கும் அது என - அக் குமாரக் கடவுள் குறமான் ஆகிய பெண்ணை மணந்து மேவிய தன்மை போல், மின்னுடன் வாழ் - மின்னலை நிகர்த்த தலைவியுடன் வாழ்வீராக.
(கு.உ)-வாளையில் தேன் மணப்பதும், சிவமணம் மணக்கப் பெறுவதும் நிலமானது அழகு திகழப்பெறுவதுமாகிய நல்லை எனக் கூட்டுக. வேள் - மண் - நல்லைப்பதி; ஐ - அழகு.
தோழி, தலைவி மணப்பொருட்டா வணங்கைப் பராநிலை காட்டல்
தலைவி மணம் பொருட்டாகத் தெய்வத்துக்குச் சிறப்புச் செய்து வாழ்த்திக் கொண்டு நிற்கு நிலையைப் பாங்கி தலைவற்குக் காட்டல்.
21. புன்னையின் வீழ்பூந் துகண்மழை மின்னாப் பொலியுநல்லை
மன்னையி னாவல னைப்புகழ் வாரென மன்னவறீ தன்னைம ணக்கத் தகுபல செய்ம்மான் றருதுதிபார் முன்னைநம் பால்வரு மானை யணையு முருகுமுனே.

Page 128
235
பதவுரை :-புன்னையின் வீழ் பூந்துகள் - புன்னை மரத்திலிருந்து உதிரும் மகரந்தப்பொடி, மழை மின்னா பொலியும் நல்லை மன் - மேகத்திலிருந்து வீசும் மின்னலைப் போலப் பொலிவு தரும் நல்லை முதல்வனும், நை இல் நாவலனை புகழ்வார் என - வருந்துதல் இல்லாத வருமான நாவலரைப் புகழ்வார்போல, மன்னவ நீ தன்னை மணக்க - தலைவ, நீ தன்னை மணந்து கொள்ளல் குறித்து அணுக்கிரகம் வேண்டி, முன்னை நம்பால் வரும் மானை அணையும் முருகு முன் - அக்காலத்தில் நம்மிடை தோன்றி வளர்ந்த வள்ளியைத் திருமணத்தால் அணைந்து இருக்கும் முருகப்பிரான் முன்னிலையில், தகு பலி செய்மான் துதி தரு ப்ார் - தக்க பலி இட்டுத் தலைவி ஆற்றுகின்ற தொழுதலைப் LII.
(கு.உ)-நை - வருத்தம்; நையில் நாவலன் - வருந்தற்குக் காரணமான உலக் பந்தம் இல்லாதவன் என்றவாறு, பலி என்பது பூசைக்கு வேண்டும் நீர், பூ, பழம், பால் முதலிய அர்க்கியங்களைக் குறிக்கும் - தரு துதி என்பதை முன் பின்னாக மாற்றி தரு என்பதைத் தருதல் என்னும் முதனிலைத் தொழிற் பெயராகக் கொண்டு துதி தருதலைத் துதித்தலைப் பார் எனக் கொள்க. மான் ஈரிடத்தும் உவமை ஆகுபெயர், முன்னை நம்பால் வரும் என்றது மானிட உருவில் மானிடத்துப் பிறந்த மான் என்னும் நயம் பற்றி.
பராநிலை கண்ட தலைவன் மகிழ்தல்
322. ஆலவாய் மன்றல் பெறக்கனி யாலவா யார்விழிவேண்
மேலவாய்ப் போற்றி வியன்பலி யிட்டு மெலிந்துருகி வாலமேய் சீல மதிநா வலனனை மன்றவமென் பாலவாய் நின்மொழி தாழ்முன் னானான் பயின்றதுவே
பதவுரை :-ஆல் அவாய் ஆர் விழி கனி - நஞ்சின் தன்மையை அவாவி அமையும் கண்கள் உள்ள கன்னியாம் தலைவி , ஆய் மன்றல் ஆல - ஆய்ந்து செய்யும் திருமணம் நிறைவுற வேண்டி, வேள்; மேல் அவாய் போற்றி - முருகவேள் மீது அவாவித் துதித்து , வியன் பலி இட்டு மெலிந்து உருகி,சிறந்த பலி செலுத்தி உடல் மெலிந்து உள்ளம் உருகி தாழ் - தாழ்ந்து நிற்க, பால் அவாய் நின்மொழி - பாலின் இனிமையை அவாவி நிற்கும் சொல்லினளாய தலைவி , வாலம் ஏய் சில மதி நாவலன் நலை - தூய்ம்ை பொருந்திய சீலத்தாலும் மதியாலும் சிறந்த நாவலர் பிரானது நல்லூரின் கண், முன் அனாள் பயின்றது மன்தவம் என் - முற்பிறப்பில் அவள் செய்து கொண்ட பெருந்தவம் என்னே!

236
(கு.உ)-ஆல - ஆலம் ( கடைக்குறை) ; கனி - தொகுத்தல் (கன்னி ); வால் - தூய்மை . “அம்” விரிந்தது.
20. அறத்தொடு நிற்றல்
களவை முறையே வெளிப்படுத்தி நிற்றல் கையறு தோழி கண்ணிர் துடைத்தல்
ஆற்றிக் கையற்ற தோழி அருகிருந்து கண்ணிர் துடைத்தல் கையறல் - செயலறல்
323. வானிய னாந்திரு வன்னா வலனலை யன்னைவியப்
பூணிய வீரம் புயவரு கோரம் புயக்குவளை யாணிய முத்தை யளிப்பதென் வண்ட லலையழித்தோ பூணிய பூப்பறி காலந் தவறில பூவைசொலே
பதவுரை :-வாணி அனாம் திருவன் நாவலன் நலை அன்னை - நாமகள் தழுவும் திரு உடையவனான நாவலர் பிரானது நல்லைப் பதியில் விளங்கும் தாயே, வியப்பு பூணிய ஈர் அம்புயம் அருகு ஓர் அம்புய குவளை - வியக்கதக்க இரண்டு அழகிய புயங்களுக்கு அருகே இருக்கும் ஒரு தாமரைப் பூவில் (முகத்தில்) உள்ள குவளை (கண்) , ஆணிய முத்தை அளிப்பது சிறந்த முத்து (கண்ணிர்) அளிப்பது என்ன காரணம்? வண்டல் அலை அழித்தோ - தலைவி கட்டி விளையாடிய மணல் வீட்டைக் கடல் அலை அழிக்க விடாமல் காத்த வீரம் கருதியோ
பூணிய பூ பறி காலம் - அவள் அணிதற்குப் பூப் பறித்த காலத்து நேர்ந்த இடையூற்றிலிருந்து காத்த வீரம் கருதியோ ஆகலாம், பூவை
சொல் தவறில - இங்ங்ணம் தலைவி எனக்குக் கூறிய சொல் தவறில்லையாகும்.
(கு.உ)-வண்டல் அலை அழித்தோ , பூப்பறி காலம் என்னும்
தொடர்களுக்கு முறையே வீட்டை அலை அழியாது காத்த வீரம் எனவும் பூப்பறிக்கும் காலத்து நேர்ந்த இடையூற்றிலிருந்து காத்த வீரம் எனவும் வருவித்து உரைக்கப்பட்டவை இசை எச்சம். இனி "ஈர் அம்புயம் வியப்பூணிய வரு கோரம் புயக்கு எனக் கொண்டு கூட்டித் தாமரை அரும்புகள் போன்ற தனங்கள் இரண்டும் வியப்புணர்ச்சி தோன்ற மருவப் பெறுவனவும் ( பகைவ்ர்களினால் ) அஞ்சத் தகுவனவுமான புயங்களுக்கு எனப் பொருள் கூறலுமாம். புயக்கு - அத்துச் சாரியை கெட்டு நின்றது. சாரியை உள் வழிச் சாரியை கெடுதலும் ' என்ற தொல்காப்பிய விதியாற் கொள்ளப் பெறும். ஆணிய முத்தை அளிப்தென் ' என்பதற்கு வலம்புரியீன்ற ஆணிமுத்துப் போல்வாளாந் தலைவியை வெளியே செல்லவிடாது பேணிக் காப்பது என் கருதி எனப் பொருள் காணலும் ஏற்புடைத்து.

Page 129
237
கலுழதற் காரணங்கூறல்
(இது வெளிப்படை)
324. ஈரம் புயத்தும வாம்பலு மீரக் குறியிடுந
லாரம் புயத்த ரஞரொழி யென்னை யணைந்தவர்சான் றாரம் மவதே னலைநகர் நாவல னார்க்கு நவைக் காரம் விடுபுபு ன்பரி காரி கணுமலைக்கே.
பதவுரை :-ஈர் அம்புயத்தும் அவ் ஆம்பலும் ஈர குறியிடும் - இரண்டு தாமரைகளிலும் அந்த அழகிய ஆம்பலிலும் அன்புக் குறியிட்டுள்ள, நல் ஆரம் புயத்தர் - நல்ல மாலை சூடும் தோளினரும், அஞர் ஒழி என்னை
அணைந்தவர் - துயர் நீங்கும்படியாக என்னை அணைந்தவருமான என் தலைவர், சான்றார் - வியக்கத்தகும் சான்றோர் ஆவர்,தேன் அலை நகர் நாவலன் - வண்டினால் விரும்பப்படும் சிறப்பினை உடைய
சோலைகளுக்கு உரியவனான நாவலர் பிரான், ஆர்க்கு நவை புண் காரம் விடுபு நீ பரிகாரி - அவரவர் குற்றமாகிய புண்ணைக் காரம் விட்டு உடன் நீக்கும் பரிகாரியாவார், உம் மலை கண் - உமது மலையில் நிகழ்ந்து விட்டதன் சார்பிலும் இதைக் கருதுக.
(கு.உ)-ஈர் அம்புயம், முலை; ஆம்பல் - வாய்; ஈரம் - அன்பு, ஈரக்குறி அன்பாரத் தழுவுகையில் நேரும் அடையாளங்கள். அவை நகக்குறி, பற்குறி முதலாயின. ஒழி எனும் வினை முதனிலை ஒழிய எனவும் நீ, நீக்கும் எனவும் எச்சப் பொருள் படும். அம்ம - வியப்பு உணர்த்தும் இடைச்சொல் - இதைக் கேள் எனும் குறிப்பு உணர்த்திற்றுமாம். நாவலர் பிரான் சோலைகளுக்குரியவன் என்றது சோலைகள் அவர் பெயரால் வழங்கல் மூலம் அவரது அருமை பெருமைகள் புலப்பட நிற்றல் பற்றி ଶ6186.
தலைவன் தெய்வங் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை தலைவிகூறல்.
தலைவன் தெய்வங் காட்டிக் கரி என்று சூளுறவு சொல்ல மெய்யென்று தெளிந்ததனைப் பாங்கிக்குப் பொருந்தக் கூறல்.
325. மலைவிலர் யாது மலைவிலர் வீடு மலைவிலரு டலைவர் சங்கர ரென்றறி நாவலன் றண்டுறைவ ருலைகலை யென்றெனைத் தேற்றிய காலை யுணவிலவா யலைநிலை யார்குரு கார்கரி யாரோ வறிகிலேனே.

238
பதவுரை :- மலை விலர் - மலையை வில்லாகக் கொண்டவர், யாதும் அலைவிலர் - கொள்கையுறுதியில் சிறிதும் அலைதல் இல்லாதவர், அலைவு இல் வீடும் அருள் தலைவர் - அலைவற்ற வீட்டின்பமும் அருளுதலில் வல்லவர், சங்கரர் என்று அறி நாவலர் தண் துறைவா - சங்கரராகிய சிவபெருமான் என்ற அறியவல்ல நாவலர்பிரானது குளிர்ந்த துறையிடத்தவராம் தலைவர், உலை கலை என்று எனைத் தேற்றிய காலை - வருந்தாதீர் என்று என்னைத் தேற்றிய போது, உணவு இலவாய் அலை நிலை ஆர் குருகார் கரியாரோ அறிகிலேன் - உணவு அற்று அலையும் நிலையிலுள்ள பட்சிகளில் இதற்குச் சாட்சியாவார் எவரோ அறியேன்.
(கு.உ);-இவர் வலர் என்பன தொகுத்தல், சங்கரன் - இன்பம் அளிப்பவர். உலை கலை - உலைதற்குரியாயல்லை. உலை + அலை 'க்' எழுத்துப்பேறு. நீ வருந்த வேண்டியதில்லை. சிவன் உனக்கு என்னை மணத்தில் தருவார் எனத் தலைவர் குறிப்பிற் காட்டி தெளிவித்ததாகத் தலைவி கூறினாள் எனக் கொள்ளல் கிளவிப் பொருட்குப் பொருந்தும்.
இகந்தமையியம்பல்
தலைவி தலைவன் நீங்கினமை கூறல்,
326. தாரா தரசா தகஞாய மேவித் தளருமெனை
யாரா தரவா வணைந்தணங் கின்முன் றெளித்தவர்கண் பாரா தகலிற் பகரக் கரிகுரு காகுவதே காரா தரிக்கு மறுமுக னல்லையென் கைதவமே,
பதவுரை :-கார் ஆதரிக்கும் அறுமுகன் நல்லை - வள்ளன்மை நோக்கி மேகமும் விரும்பும் ஆறுமுகநாவலரது நல்லையின் கண், தாராதரம் சாதகம் ஞாயம் மேவி தளரும் எனை - மேகமும் சாதகப் பறவையும் என்னும் நியாயம் பற்றித் தளர்கின்ற என்னை, ஆர் ஆதரவாய் அணைந்து - நிறைந்த ஆதரவோடு அணைந்து, அணங்கின் முன் தெளித்தவர் - தெய்வம் காட்டி முன் தெளிந்த என் காதலர், கண் பாராது அகலில் - என்னைக் கண் பார்த்தற்கு ஒவ்வாத வகையில் பிரியின், பகரக் குருகு கரி ஆகுவதே - அதைச் சொல்லப் பறவை சாட்சியாம், என் கைதவமே na இந்நிலையில் இருப்பவும் நான் வருந்துவது என்ன வஞ்சனையினாலேயோ,

Page 130
239
(கு.உ):-தாராதரம் - தாரையை (நீர்) தரித்திருப்பது சாதகம் அதையே நம்பி எதிர்பார்த்து உயிர்வாழும் ஒரு பறவை. தலைவி தன் நிலை அப்பறவையின் நிலையாதலைத் தெரிவிக்குமுகமாக இந்நியாயத்தை இங்கு குறிப்பிட்டாள். ஞாயம் மேவித்தளரும் எனை என்றமை காண்க. குருகுமுண்டு தாம் மணந்த ஞான்றே எனும் சங்க நூல் மேற்கோள் இங்கு ஒப்ப நோக்கத்தகும்.
இரவினிட்டம்
இருளின் மிகுதியைப் பாங்கி தலைவிக்குக் கூறல்,
327. பூக்கட் குடிகட் குடிக்குழல் பூக்கட் குடியனய னாற்கட் குடியனறியா மணலக்கட் குடியனடி நாக்கட் டுதிநா வலன்றெம் மனமென நற்சக்கரப் பூக்கட் புறமலை யல்லென விவ்வற் பொலியுமெனே.
பதவுரை :-பூ கண் குடிகள் குடி குழல் - பூவின் கண் தேன் குடிக்கும் வண்டுகள் குடியிருப்பாகிய கூந்தலினாய், பூக்கண் குடியன் அயன் - செந்தாமரையில் குடியிருப்போனாகிய பிரமனும், ஆல்கண் குடியன் அறியா - ஆலிலையில் குடியிருப்பவனான திருமாலும் அறிதற்கு இயலாத, மலைகண் குடியன் அடி - திருக்கையிலைமலைக்கண் குடியிருப்பவனான சிவனது திருப்பாதங்களை, நா கண் துதி நாவலன் தெம் மனமென - நாவினால் துதிக்கும் நாவலர் பிரானது பகைவரது மனம்போல, பூகண் புற நல் சக்கரமலை அல் என - பூமி வளாகத்தின் புற எல்லையைச் சூழ்ந்திருக்கும் நல்ல சக்கரவாள மலைக்கு அப்பால் உள்ள இருள் மண்டலம் எனும்படி, இவ் அல் பொலியும் - இந்த இருள் மிகும்.என் - இது என்ன?
(கு.உ):பூக்கட் குடியன் என்பது முதலாக கட்குடியன் எனும் தொடர் மும்முறை வருதலால் அமையும் பொருந்தாப் பொருளும் உணர்வு சுவைநயம் பயத்தல் காண்க. பூமி எல்லையைச் சூழ்ந்திருக்கும் சக்கரவாள கிரிக்கு அப்பால் இருள் மண்டலம் சூழ்ந்திருக்கும் என்பது ஆகம காட்சி.

240
பாங்கி இயற்பழித்தல்
தலைமகன் இயலைப் பாங்கி பழித்துக் கூறல்
328. நல்லார் மொழிகல் லெழுத்தெனு நான்றுதி நாவலனை
யொல்லா ரெனநீ யுருகி மனமு முடைந்திளக வல்லார் முலைபொன் கருவிள முத்த மருவவறங் கல்லார் மனமெனக் கல்லா கியதெவர் காட்டவர்க்கே.
பதவுரை :-நல்லார் மொழி கல் எழுத்தெனும் - நல்லோர் கூற்று கல் மேல் எழுத்து என்றவரும், நான் துதி நாவலனை ஒல்லார் என - நான் துதிக்கும் நாவலர் பிரானைப் பொருந்தாதார் போல, நீ உருகி மனமும் உடைந்து இளக - நீ உருகி உள்ளம் உடைந்து இளகுமாறு, வல் ஆர் முலை பொன் கரு இளம் முத்தம் மருவ - சூதாடு கருவி போலும் முலையின் கண் பொன் நிறப் பசப்பும் கருவிள மலர் போன்ற கண்ணில் முத்து அனைய கண்ணிர்த் துளியும் பொருந்தவைக்கும் அளவுக்கு, அறம் கல்லார் மனமென - அறத்து இயல்பைக் கற்றறியாதார் மனம் போல, கல் ஆகியது - (அவர் மனம்) கல்லாகி விட்டது, அவர்க்கு காட்டு எவர் - அவர்க்கு உதாரணமாவார் யார்?
(கு.உ)-உருகுதற்கு மனம் போல உடைதற்கு உள்ளமும் வருவித்துக் கொள்க. வல் - சூதாடு கருவி.
தலைவி இயற்பட மொழிதல்
அங்ங்ணம் கூறக் கேட்ட தலைவி அச் சொற் பொறாளாய் இயல்பு பட மொழிதல்,
329. கருமா னிடமுறு செம்மான் புதல்வன் கடம்பனமர்
தருமான் றினந்துதி நாவலன் றண்டுறை வர்மனமான மருவா வமைகுவர் நீத்திலர் வன்கணர் மற்றவரென் னொருவா கொடுவுரை யோவிலர் சூளவ ரோவிலரே.

Page 131
24
பதவுரை :-கருமான் இடம் உறு செம்மான் புதல்வன் - நீலமேனி வால் இழையாகிய உமாதேவி இடது பக்கம் அமரப்பெற்ற சிவந்த மேனி எம்மானாஞ் சிவன் புதல்வனாகும், கடம்பன் அமர்தரும் ஆன் - கடம்ப மாலை அணிந்த முருகப்பெருமான் விரும்பி எழுந்தருளி இருக்கும் நல்லைத்திருத்தலத்தை, தினம் துதி நாவலன் தன் துறைவர் - நாள் தோறும் வணங்கும் நாவலர்பிரானது குளிர்ந்த துறையிடத்தராகிய காதலர்,
மனமான மருவான் அமைகுவர் - மனமென்ற இடத்தில் பெயுராது இருப்பர், நீத்திலர் - அவர் என்னைப் பிரிந்தவர் ஆகார், அவர் வன்கணர் என் ஆ கொடு உரை ஒருவு - அவர் கொடியவராயினார் என்ற
உரையை நீக்கிவிடு, ஒவிலர் - அவர் தவறார்; அவர் சூழ் ஒவிலர் - அவர் சபத உரை தவறார்.
(கு.உ):- ஒருவா கொடுவுரை என்பதில் 'ஆ' என்னும் இடைச்சொல் உள்ளத்தாபக் குறிப்பு உணர்த்தும்,
தெய்வம் பொறை கொளச் செல்குவமென்றல்
தெய்வத்தின் முன் பிரியேன் என்று ஆணை கூறிப் பிரிந்து போனாரால் அத் தெய்வம் கொடுந் தெய்வமாகலால் சீறாதபடி 'அவர் எங்கட்குக் குற்றம் செய்தாரல்லர், நீ பொறுத்துக்கொள்' என்று வேண்டிக் கோடற்கு இருவேமும் போதுவோமென்று தலைவி பாங்கிக்குக் கூறல்,
330. தன்சிற காற்றமிழ்ச் சேவல் பெடையைத் தணத்தறவிர்ந் தின்றுயில் கூரு மெழினலை நாவல னேயனையார் என்மன நீவில ரென்னு மணங்கிறை யும்மணங்கேல் நின்னடி போற்றின மென்று பலியது நேருவமே.
பதவுரை :-தமிழ் சேவல் தன் சிறகால் பெடையை தணத்து அற தவிர்ந்து - தமிழ்ப் பண்பினதாகிய சேவல் தன் சிறகு சம்பந்தப்பட்ட மட்டிலும் கூடத் தன் பேட்டைப் பிரிந்து இருக்க விடாமல், இன் துயில் கூரும் எழில் நலை நாவலனே அனையார் - (பெடையைப் போர்த்தவாறு) இனிய துயில் கொள்ளும் அழகிய நல்லையின் கண் வாழ் நாவலர் பிரானை ஒத்த தலைவர், என் மனம் நீவிலர் என்னும் - என் மனத்தில் சிறிதும் அகலாது உள்ளார் என்பர், அணங்கு - தெய்வமே, இறையும் அணங்கேல் - சிறிதும் வருந்தாதே, நின் அடி போற்றினம் என்று - உனது அடிகளை வணங்கினோம் என்று ஆணையிட்டு, பலி நேருவம் - பலி கொடுப்போம்.

242
(கு.உ); தணத்தல் - அகல்தல்; தமிழ்ச்சேவல் - தமிழ்ப் பண்பினதாகிய சேவல். தமிழ்ப் பண்பானது தம்பதிகளாயினோர் உறக்கத்திலும் பிரிந்திராமையே. தனித்தனி சயனம் கொள்ளாமை எனலுமாம். நீவு - நீத்தல்; அணங்கு - தெய்வம் (பெயர்); வருத்து (வினை).
இல்வயிற் செறித்தமையியம்பல்.
தலைவி, தன் மெய் வேறுபாட்டாலும் ஊரிலுள்ளார் அலர் தூற்றலாலும் நற்றாய் உள்ளத்தில் வெறுப்பாகி மனையிடத்தில் என்னைக் காவல் செய்தாளென்று பாங்கிக்குக் கூறல்.
331. மட்டலர் வார்குழ லாயலர் மட்டு மடுநிறைபூப்
பெட்டலர் நல்லையி னாவலற் பேணலர் பேணவய விட்டலர் கூற லெனதுயிர் மாலை யினைய கண்டாய் கட்டலர் கோதையெற் காவ லிருத்திக் கடிந்தனரே.
பதவுரை - மட்டு அலர் வார் குழலாய் - தேன் சுரக்கும் மலர் அணிந்த நீண்ட கூந்தலினாய், அலர் மட்டு நிறை மடு - பூக்கள் அலர்ந்து நிறைந்த குளங்களில், பூ பெட்ட பூ அலர் நல்லையில் - பிறரால் விரும்பப்படும். நல்லினத்துப் பூக்கள் அலர்கின்ற இடமாகிய
நல்லூரில், நாவலர் பேணலர் பேண - நாவலரை விரும்பாத அவர் எதிரிகள் போற்றும்படியாக, அயல் அலர் இட்டு கூறல் - அயலார் பழிமொழிகளைப் படைத்திட்டுக் கூறல், எனது உயிர் மாலை இணைய கண்டாய் - எனது உயிர் வருந்த வைத்தற் பொருட்டே என்பதை அறிவாயாக, கட்டு அலர் கோதை - மொட்டு அவிழ்ந்த மாலையினாய், என் காவல் இருத்தி கடிந்தனர் - (உண்மை அறியாது நம்மவர்)
என்னைச் சிறையில் இருத்தித் தண்டிக்கின்றனர்.
(கு.உ)ாக்ாவலில் இருத்திக் கடிதல் - இற்செறித்தல்; அலர் - பழிமொழி, பெட்டலர் நல்லை - பெட்ட - விரும்பப்படுவன + அலர் வினையாலணையும் பெயர். ஈற்றகரம் தொக்கது, பெள் - விரும்பு; கட்டு - மொட்டு நிலை.

Page 132
243
செவிலி, கனையிருளவன் வரக் கண்டமை கூறல்
செவிலி செறிந்த இருட் குறியிடத்துத் தலைவன் வரக் கண்டாளெனத் தலைவி பாங்கிக்குக் கூறுதல்.
332. வாதியர் வாய்மதங் காற்றிடு மேறு மலியுநல்லைச்
சூதிய லாரறி தூயவ னாவலன் றொல்கிரியாய் காதியல் வேலொடு காவலர் வந்தமை காவலர்க்கண் டாதியி னம்மா னனையு நம்மானென் றயிர்த்தனளே.
பதவுரை :-வாதியர் வாய் மதம் காற்று இடும் ஏறு - தர்க்கம் தொடுப்போரது வாய்க் கொழுப்பை வெளிப்படுத்த வைக்கும் இடி போல் வாரும், மலியு நல்லை சூது இயலார் அறி தூயவன் - செழிப்புள்ள நல்லூரில் சூது வாதிற் சேர்ந்து அறியாதவர் அறிந்து நயக்கும் தூயனுமாகிய நாவலர்பிரானது, தொல் கிரியாய் - பழைமை மிக்க மலையாய், காது இயல் வேலொடு காவலர் வந்தமை - கொல்லும் இயல்பினதான வேல் கைக்கொண்டு தலைவர் வந்தமையை, அலர் கா கண்டு - அலர்ந்த சோலைக் கண் (அன்னை) கண்டு, ஆதியில் அ மான் அணையும் நம் மானென்று அயிர்த்தனள் - ஆதி காலத்தில் அம் மான் மகளாகிய வள்ளியை அணைய வந்த நம் பெருமானாம் என்று சந்தேகித்தாள்.
(கு.உ);-காற்றிடும் - காலச் செய்யும் - கக்கச் செய்யும்,
செவிலி எறிவளை வேற்றுமைக் கேதுவினாதல்
செவிலி கைவளை வேறுமாட்டுக்குக் காரணம் தலைவியை வினாவுதல்.
333. பொய்கொலை யாதிய செய்திடு பூரியர் போக்கறுசெம் மெய்திகழ் நாவல னார்புனம் விட்டபின் மெய்குழையுற் றைதிகழ் கோலங் கடியுறு வார்போன் றதுவென்மின்னே கைதிகழ் கங்கணம் போய்கணிற் கங்கணங் காணுமென்னே.
பதவுரை :-மின்னே - பெண்ணே, பொய் கொலை ஆதிய செய்திடு பூரியர் போக்கு அறு - பொய், கொலை ஆகிய பாதகங்களைச் செய்யும் கீழோர் குற்றத்தை உணர்ந்து அவற்றைக் கைவிடச் செய்கின்ற, செம்மெய் திகழ் - அறத்தின் மெய்ம்மை சுயம்பிரகாசமாக விளங்கப்

244
பெறும், நாவலனார் புனம் விட்ட பின் - நாவலர்பிரானது திணைப்புனிக் காவல் விட்டு நீங்கிய பின், மெய் குழையுற்று - உடல் வாட்டமுற்று, ஐ திகழ் கோலம் - அழகு விளங்கும் நின் உருவமானது, கடி உறுவார் போன்றது என் - பேய் பிடித்தார் போலப் பொலிவு இழக்க வந்த காரணம் என்ன, கை திகழ் கங்கணம் போய் - கையில் விளங்கும் வளையல் சோர்ந்து போய், கணில் கங்கணம் காணும் - கண்ணில் நீர்த்துளித் தொகுதி தோன்றுகின்றது, என் - இது என்ன காரணம்?
(கு.உ):பூரியர் - கீழோர்; போக்கு - குற்றம்; போக்கறு - குற்றங்களை ஒழிக்கும். கடி - பேய்; கங்கணம் - (1)வளையல் (2) நீர்த்துளிக் கணம். கம் - நீர், கணிற் கங்கணம் காணும். கண்ணில் நீர்த்துளிக் கூட்டம் காணும். அத்தோற்றம் வளையலின் தோற்றமுமாம்.
வெறி விலக்கல்.
செவிலி வெறியாட்டாளனை அழைத்து மகட்கு நோய் உற்றவாறும், அது திருமாறும் சொல்ல வேண்டும் என்றும் கேட்புழி, தெய்வம் வந்து ஆடும் போது பாங்கி அத் தெய்வத்தை ஆட வேண்டாம் என்று விலக்குதல். வெறியாட்டாளன் ஆடு பலி கொடுத்தால் தீருமென்புழி அவ்வாட்டைக் கொல்லாமல் விலக்க லெனினும் அமையும்,
334. ஆனை யரிமா வழித்தாய் முருகே யவையலதெம்
மானை யழித்தே மறியை யழிக்க மதித்தலெனே வானை மழைபொழி னல்லையி னாவலன் மாற்றிடச்சொ லூனை விரும்பினை யுன்ன்றி வென்போ முயிர்மறியே.
பதவுரை :-முருகே -ஓ முருகனே, ஆனை அரி மா அழித்தாய் - (முன்னொரு காலத்தில்) ஆனை முகத் தாரகனையும் சிங்கமுகாசுரனையும் மா உருக்கொண்டு போர் செய்த சூரனையும் அழித்தாய், அவையலது எம்மானை அழித்து - அவைபோல் அல்லாத எமது மான் போலும் தலைவியை மனம் அழிவித்து, மறியை அழிக்க மதித்தல் எனே - பின் அதற்குப் பரிகாரமாம் என்று ஆட்டை அழித்துப் பலி ஏற்க நினைத்ததற்கு என்ன காரணம்? வானை மழை பொலி நல்லையில் நாவலன் - வானிலிருந்து சிறந்த மழை பொழியும் நல்லூர் நாயகன் ஆன நாவலர் பிரான், மாற்றிட சொல் ஊனை விரும்பினன் - நீக்கிவிடும்படி போதித்த ஊன் உணவை விரும்புகின்றாயோ, உன் அறிவு என் - உன் அறிவு இருந்தவாறு என், மறி உயிர் போம் - உனது அறிவற்ற செயலாண் ஆட்டின் உயிர் போகும்.

Page 133
245
(கு.உ):-மானை - LDIT6ir போல்வாளான தலைவியை, D606 அழித்தலாவது அவள் தானாத் தன்மை இழக்கச் செய்தல்.
வெறி விலக்கிய வழிச் செவிலி பாங்கியை வினாதல்.
(இது வெளிப்படை)
335. ஆட்டை யுகந்தம் பலத்துநின் றான்சே யறுமுகனுக்
காட்டை யறுக்கப் புகவெறி யாட்டை யறப்பழித்தாய் கோட்டை மதினலை நாவல னும்மதி கோதையிவள் பாட்டை யறிவை யெடுத்துரை நந்துயர்ப் பாட்டறவே.
பதவுரை :-ஆட்டை உகந்து அம்பலத்து நின்றான் சேய் அறுமுகனுக்கு - ஆட்டை (ஆடுதல்) விரும்பிப் பொன்னம்பலத்தில் நின்று ஒளிரும் சிவன் மகனாம் ஆறுமுகனுக்கு, ஆட்டை அறுக்க புக - எம் மகள் உற்ற துயர் நீக்கக் கருதி ஆட்டை அறுத்து வெறியாட்டயரத் தொடங்கிய பொழுது, வெறியாட்டை அற பழித்தாய் - அச் செயலை முற்றாகப் பழித்து விலக்கி விட்டாய், கோட்டை மதில் நலை நாவலனும் மதி கோதை இவள் பாட்டை அறிவை - கோட்டையைச் சூழும் மதில் உயர்ந்து தோன்றும் இராசதானியாகிய நல்லைத் தலைவனாம் நாவலனும் விரும்பும் பெண்ணாகிய இவளின் துயர்ப்பாட்டின் காரணத்தை நீ அறிவாய் போலும், நம் துயர்ப்பாட்டு அற - அவள் பற்றிய நம் கவலைப் புலம்பல் நீங்கும்படி, எடுத்து உரை - அதனை எடுத்துக் கூறுவாயாக,
(கு.உ):-பாடு - துன்பம், பட்டுழத்தல் தன்மையது. நம் பாட்டு - நமது துயரப் புலம்பல்.
தோழி புத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்
பூவைக் கொடுத்ததனாற் புணர்ந்த களவை வெளிப்படுத்திக் கூறல்.
336. கானலங் கைதை மடன்மதிக் காமுகக் கட்கமலம்
பாநல மோவல்கண் டேபானு பங்கய ஞாயமுற
மாநல நோக்கி யிவட்கொர் புமானம் மடலுதவிக் கானல ரம்பனை விட்டன னாவலன் கார்ப்பொழிற்கே,

246
பதவுரை :-நாவலன் கார் பொழிற்கு - நாவலர்பிரானது முகில் தவழும் சோலையின் கண், கானல் அம் கைதை மடல் மதிகா - கானலில் உள்ள அழகிய தாழை மடல் சந்திரன் ஒளி வீச்சினால், கண் முக கமலம் பாநலம் ஒவல் கண்டே - (இவள்) கண் முகமாகிய தாமரை தன் நலம் அழியக் கண்டு சகிக்காது, பானு பங்கய ஞாய முற - பானு பங்கய நியாயத்தின் படி, மா நலம் நோக்கி இவட்கு - மான் நோக்குப் போலும் நல்ல நோக்கினளாகிய இவளுக்கு, ஓர் புமான் அ மடல் உதவி - ஓர் இளைஞன் அத்தாழை மடலைப் பிடுங்கி அளித்து, கான்அலர் அம்பனை விட்டனன் - மணம் உள்ள மலரை அம்பாக உடைய மன்மதனை இவள் மேற்தொழிற் படவைத்தான்.
(கு.உ);-பானு பங்கய நியாயம் - சூரியனைக் கண்டு தாமரை மலர்தல் என்ற நியாயம். பானு - சூரியன்; பங்கயம் - தாமரை; தாழை மடல் சந்திரன் எதிர் கூம்பியது. இவள் முகத்தை அந்தப்புமான் மலர்வித்தான் என்பதே இங்கு பானுபங்கய நியாயப் பிரயோக பலனாம். இளைஞன் பானு, அம்பன் - அம்பேந்தியவன். அவனே இவள் பால் அம்பினை விட்டனன் என்றது இவட்குக் காதல் கிளர்ந்தது. அவன் காரணமாக என்றபடி கோவை மரபில் இது பூத்தரு புணர்ச்சி என வழங்கும்.
புனறரு புணர்ச்சியாலறத் தொடு நிற்றல். புனலாற் கூடும் புணர்ச்சியை வெளிப்படுத்திக் கூறல்.
337. செல்லூர் பொழில்சே ரறுமுக நாவலன் சேர்ந்துறையு
நல்லூ ரொருசுனை தன்னிட முற்றவை நாமுறவெல் தொல்லூர் பகையினிற் றுாண்டப் பகைமுடிக் கத்துனைகால் வில்லூர் புயர்குறங் கல்லூர் குழறொட மீண்டனனே.
பதவுரை :- ஆறுமுகநாவலன் சேர்ந்து உறையும் - ஆறுமுகநாவலர் பெருமான் தோன்றி வாழும், செல் ஊர் பொழில் சூழ் நல்லூர் - மேகம் பரவும் சோலை சூழ்ந்த நல்லூரில், ஒரு சுனை தன்னிடம் உற்றவை நாமுற - ஒரு சுனையின் கண் உள்ளனவான சங்கு தாமரை வரால் முதலியன இவள் உறுப்பு நலம் கண்டு அச்சம் அடைய, வெல் தொல் ஊர் பகையினில் தூண்ட - இவளை வெல்ல வேண்டி இருந்த பழைய பகைமையால் உந்தப்பட்டு, பகை முடிக்க துணை கால் -- சுனையானது இவளை அமிழ்த்துதன் மூலம் பகை முற்ற விரையும் தருணத்தில், வில் ஊர் புயர் குறங்கு அல் ஊர் குழல் தொட - ஒளி பரவும் புயமுள்ள இளைஞன் ஒருவன் தன் காலால் இவள் கூந்தலைப் பற்றி இழுக்க, மீண்டனள் - இவள் நீரில் அமுங்காது மிதந்து உயிர் தப்பினாள்.

Page 134
247
(கு.உ):-தொல்லூர் பகைமை - பழைமையான பகைமை. அஃதாவது சுனையின் கண் உள்ள தாமரை முதலியவற்றை இவள் முகம் முதலாயின தம் பிரபாவத்தினால் அவமதித்தலுக்குள்ளாக்கினமை பற்றி விளைந்த பகைமை பகை முடித்தல். இவளை உயிரோடு இல்லாமல் செய்து விடுதல். குறங்கு கால் என்னும் பொருளில் நின்றது. இவள் நீரில் அமிழ்தலைக் கண்டதும் அந்த இளைஞன் குதித்து இவள் கூந்தலைத் தன் காலால் துடக்கி இழுத்தமையால் இவள் மிதந்து உயிர் பிழைத்தாள் என்பதாம். இது கோவை வழக்கு மரபில் நீர் தரு புணர்ச்சி எனப்படும்.
களிறு தரு புணர்ச்சியாலறத் தொடு நிற்றல்.
களிறு தரும் புணர்ச்சியாற் களவை வெளிப்படுத்தல்
338. வாரேறு பூணரி மாயானை யோடொரு மாலியானை
போரேறு போதி லதுமா யரியெனப் போதொருவர் ஏரேறு சீவக னாயின ரன்னை யிவளுயிர் காத் தாரேறு வேல்விழி யானது தன்னுட் உணந்திலளே.
பதவுரை :-அன்னை - தாயே, வார் ஏறு பூண் அரிமா யானையோடு - கச்சு அணிந்ததும் ஆபரணம் அணியப் பெற்றதுமாய் சிங்கம் போன்ற இடையை மாய்த்து நிற்பதாகிய இவள் முலையாகிய யானையோடு, ஒரு மால் யானை போர் ஏறு போதில் - ஒரு மத யானை மோதும் தருணத்தில், அது மாய் அரி என ஒருவர் போது - அதனை மாய்க்கும் சிங்கம் போல்வான் ஓர் இளைஞன் அவ்விடம் வந்து, ஏர் ஏறு சீவகன் ஆயினள் - எழுச்சி கொண்டு யானை ஒன்றை மடக்கிய சீவகன் போலாயினன், இவள் உயிர் காத்தார் - தன் செயல் தீரத்தினால் அவரே அன்று இவள் உயிர் காத்தார், வேல் ஏறு விழியாள் - வேலின் தன்மை ஏறிய விழியினளாய இவள், அது தன்னுள் தணந்திலள் - அந்நிகழ்ச்சி தன் உள்ளத்திலிருந்து நீங்கப்பெறாதவளானாள்.
(கு.உ):- சீவகன் - சீவகசிந்தாமணி என்ற காப்பியத் தலைவன். அவன் மத யானை ஒன்றை மடக்கி அதனால் தாக்கப்பட இருந்த நங்கையைக் காப்பாற்றினான் என்ற சரித்திரக் குறிப்பு இங்கு ஞாபகப்படுத்தப்பட்டது. இச் செய்யுள் குறிப்பது கோவை மரபுப் பெயராகிய களிறு தரு புணர்ச்சி என்னும் பொருளையாகும்.

248
மின்னிடை வேற்றுமை கண்டு நற்றாய் வினாதல்.
தலைமகள் வேற்றுமை கண்டு நற்றாய் செவிலியை வினாவுதல்.
339. குளப்பிறை யாட்கு மலைப்பிறை யம்பிறை கூர்விழிய வளப்பிறை யேய்சடை யான்சே யனைநா வலனலைக்காக் களப்பிறை கோதை குழைமேனி வாய்வடுக் காணுவதென் உளப்பிறை துன்பு மிலாதக லக்கூ றுறவுமுனே.
பதவுரை :-பிறை ஏய் சடையான் சேய் - பிறை விளங்கும் சடையை உடையவனாகிய சிவன் மகனாம் முருகனை, அனை நாவலன் நலை கா - ஒத்த நாவலர் பிரானது நல்லையிடத்தில் உள்ள சோலையில், குளப் பிறையாட்சி - நெற்றிப் பிறை அணிந்த தமது மகளுக்கு, முலை பிறை - முலையின்கண் நகப்பிறையும், அம்பு இறை கூர் விழிய - நீர் இறைக்கும் கூர்மையான விழியும் - கள் அப்பு இறை கோதை - தேன் நீராய்ப் பெருகும் மாலையும், குழை மேனி - தளர்ச்சியான உடலும். வாய் வடு - இதழின் கண் பற் குறியும், காணுவது என் - காணப்படுவதன் காரணம் என்ன? உள் அப்பு துன்பும் இறை இலாது அகல - மனதைத் தாக்குகின்ற துன்பம் சிறிதும் இல்லாது நீங்க, முன் உறவு கூறு - முன் நிகழ்ந்த உறவின் இயல்பைக் கூறுவாயாக.
(கு.உ):-உள் அப்பு துன்பம் இறையும் இலாது அகல மன் உறவு கூறு - உள்ளத்தை நெருடும் துன்பம் சிறிதும் இல்லாது அகலும்படி இவள் சம்பந்தப்பட்ட முன் உறவு விபரத்தைக் கூறுக. குளம் - நெற்றி, குளப்பிறை - நெற்றிப்பிறை; அது பெண்களின் அணி வகைகளில் ஒன்று. கூறுறவு முனே என்பதை முன் உறவு கூறு என எடுத்து இயைக்க,
செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியாலுறத் தொடு நிற்றல்
முன்னிலைப் புறமொழியால் உணர்த்தாது முன்னிலை மொழியினாலே
களவை வெளிப்படுத்திக் கூறல்,
340. என்மதி கொண்ட தரைப்பட மோமுலை யீர்படமோ
சொன்மதி காண வெனவொரு தோன்ற நுணைக்குவளை யின்மதி காம மியன்மு னிவண்மணங் கொண்டொழிந்தா னன்மதி நாவல னல்லையி னாஞ்செய னாடுகவே.

Page 135
249
பதவுரை :-என் மதி கொண்டது அரை படமோ - என் உள்ளத்தை ஈர்த்தது உனது நிதம்பமான பாம்புப்படமோ, ஈர் முலை படமோ - இரண்டு முலைகளின் மீதிடும் துகிலோ, காண சொல் - நான் அறியச் சொல் என்று, ஒரு தோன்றல் - ஓர் இளைஞன், துணை குவளையின் மதி காமம் இயல் முன் - இணையாய் உள்ள குவளை மலர் போலும் கண்வழி விரும்பும் காமப் பார்வை நிகழா முன்னே, இவண் மனம் கொண்டு ஒழிந்தான் - இவ்விடத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டான, நல் மதி நாவலன் நல்லையில் - நல்லறிவு நிறைந்தவராகிய நாவலர் பிரானது நல்லையில், நாம் செயல் நாடுக - நாம் செயற்பாலதை &j Tujat,
(கு.உ):-முலை ஈர் படம் - ஈர் முலை படம் - இரண்டாகிய தனங்களின் மேல் அமையும் படம். படம் - சேலை.
நற்றாய் தமர்க்கறத்தொடு நிற்றல்.
(இத வெளிப்படை)
341. குச்சுறு காலி வளர்நலை நாவலர் கோன்கிரிந
மச்சுற வேய்விழி யாழின் முதுக்குறைந் தாணமர்காள் தச்சுறக் கோட கலத்துழு மின்பந் தரவளிமின் அச்சுனை வள்ளி யணைவே லவனெனு மாண்டகைக்கே.
பதவுரை :-நமர்காள் - நம்மவர்களே, குச்சு உறு சாலி வளர் நலை நாவலன் கோன் கிரி - கதிர்க் கொத்து ஈனும் நெல் வளர்தற்கிடமான நாவலர் தலைவனது மலைக் கண், நம் அச்சுற ஏய் விழி - நம் மகள் அஞ்சுவதற்குரிய விழி உடையார், யாழின் முது குறைந்தாள் - கந்தர்வ மண மூலம் தன் காரியம் தேறும் அறிவு மிகுந்து விட்டாள், அ சுனை வள்ளி அணை வேலவன் எனும் ஆண்டகைக்கு - அச் சுனையிடத்தில் வள்ளியைக் கந்தருவத்தால் அணைந்த வேலவனாம் முருகனை ஒத்த அந்த வீரனுக்கே, கோடு அகலத்து தச்சுற உழும் இன்பம் தர அளிமின் - முலையாகிய தந்தத்தினால் மார்பில் அழுந்தும் வண்ணம் உழும் வகையில் இன்பம் அடையத்தக்கதாக இவளை அவனுக்கு மணத்திற் கொடுப்பீர்களாக,
(கு.உ):முதுக்குறைவு - அறிவாண்மை. அதாவது தன் பாட்டிலே தன் காரியம் முடிக்கும் ஆற்றல், யாழ் - கந்தர்வ மணம் - காதல் மணம் - யாழோர் மணம் என்படுதலுண்டு.

250
21. உடன் போக்கு பாங்கி தலைவற் குடன்போக்குணர்த்தல்
காப்புக் கைம் மிகலால் உன் ஊர்க்கு உடன் கொண்டு போதியெனப் பாங்கி தலைவற்கு உரைத்தல்.
342. பிரிய லிவஞயிர் வாழாள் பெருந்தனம் பேணுவிலை
தெரியி லிவடனத் தானா னுறுபொற் சிலம்பதுவோ சரியி லுடனிவட் கொண்டு தணத்தி தருகமுகின் விரிபாளை வாளை வெடிதாவு நாவலன் மேகலைக்கே.
பதவுரை :-தகு கமுகின் விரி பாளை வாளை வெடி தாவு நாவலன் மே நலைக்கு - தகுதி வாய்ந்த கமுகினிடத்து விரிந்த பாளையின் கண் வாளை மீன் வேக ஒலியோடு பாய்கின்ற நாவலர் பெருமானது மேம்பாடு உடைய நல்லைப்பதியில், பிரியின் இவள் உயிர் வாழாள் - நீ பிரிந்து செல்வீராயின் இவள் உயிர் தரியாள், பெரும் தனம் பேணு விலை தெரியில் - முறைப்படி மணம் முடித்தற்கு முன் நியமமான முலை விலை பற்றி எடுத்துக் கொண்டால், இவள் தனத்தால் நானுறு பொற் சிலம்பு அதுவோ சரி இல் - இவள் தனத்துக்கு நாணி ஒதுங்குவதாகிய பொன் மலை கூடச் சரி அன்று, இவள் உடன் கொண்டு தணத்தி - ஆதலால் இவளை உடன் கொண்டு நீங்குவாயாக.
(கு.உ):வெடி - மின் முதலியன விசைத்துப் பாயும் போது எழும் ஒசையின் பெயர், பெருந்தனம் பேணுதலை கோவை மரபில் முலை விலை கூறல் எனப்படும்.
தலைமகள் மறுத்தல்.
(இது வெளிப்படை)
343. ஆரு மதிமுடித் தேநா வலன்கிரி யத்தையொரீஇக்
காரு முருப்பினை யஞ்சிப் பெயலொழி கானையிடை வாரு மறுமுலை யாற்றா திறுமிறு மாதரடி சாரு பரன்நெரிஞ் சிப்பழஞ் சாரிற் தருமுத்தமே.

Page 136
25
பதவுரை :-ஆர் உம் மதி முடி தே நாவலன் கிரி அத்தை ஒரீஇ - ஆத்தியும் மதியும் பொருந்திய முடியின்னாகிய சிவன் எனத் தகும் நாவலர் பிரானது மலையை ஒத்த தலைவியோடு நீங்கி, காரும் உருப்பினை அஞ்சி பெயல் ஒழி கானை இடை - மேகமும் வெப்பத்துக்குப் பயந்து நீர் பொழிய முன் வராத பாலை நிலத்தில் நடக்கும் பொழுது, வாரும் அறு மலை ஆற்றாது இறும் இறும் - கச்சையும் அறுமாறு விம்மும் முலைப் பாரம் தாங்காது இடை ஒடியும் ஒடியும், மாதர் அடி சாரும் பரல் நெருஞ்சிப்பழம் சாரில் - மென்மையான பாதங்களில் - பொருந்துகின்ற பரற் கற்களும் நெருஞ்சிப் பழமும் (முள்) உறுத்துதலின்ால், முத்தம் தரும் - கொப்புளம் கொள்ளும்.
(கு.உ)- உம்மை மதிக்கும் கூட்டித் தங்கும் என ஒரு சொல் வருவிக்க. தே நாவலன் - அடை அடுத்து வந்த பண்புத் தொகை, பரல், நெருஞ்சிப்பழம் உம்மைத்தொகை , பழம் நெருஞ்சியின் சார்பில் முள் முத்தம், கொப்புளம் குறித்த உருவகம். இறும் இறும் - துணிவுப் பொருளில் வந்தது.
அவளுடன் படுத்தல்
(இது வெளிப்படை)
344. தேனாட்டு பூங்கா நலைநா வலன்றா டினமறவாய்
பானாட்டு மென்மொழி யுன்னைப் பிரியிற் பரியுமுயிர் வானாட்டு மெற்கண் டலருதல் பங்கய வண்மையன்றோ மேனாட்டு வாரீச சந்திர ஞாயம் விளங்கிலையே.
பதவுரை :-தேன் நாட்டு பூங்கா நலை நாவலன் தாள் தினம் மறவாய் - தேன் நிலைபெறுகின்ற பூஞ்சோலைகள் பொலியும் நல்லூர் நாவலர் பிரானது திருவடிகளைத் தினமும் மறவாது பேணும் தலைவனே, பால் நாட்டும் மென்மொழி உன்னை பிரியில் உயிர் பரியும் - பாலின் இனிமை கொண்ட மென்மொழியையுடைய தலைவி உன்னைப் பிரியின் உயிர் நீங்கப் பெறுவாள், வான் நாட்டும் எல் கண்டு - (அன்றியும்) - வானில் நிலவும் சூரியனைக் கண்டு, அலருதல் பங்கய வண்மை அன்றோ - மலர்தல் தாமரை மலரின் பர்ை அல்லவா, மேல் நாட்டு வாரிச சந்திர ஞாயம் விளங்கிலை - மேலாகப் பேசப்படும் வாரிச சந்திர நியாயம் விளங்காது போலும்.

252
(கு.உ):நாட்டு என்ற சொல் நிலைத்தல், நிலவுதல், எடுத்துப் பேசப்படுதல் என்று மூவகைப் பொருளில் வந்துள்ளது. பரிதல் - அறுதல், அதாவது உடற்தொடர்பு அறுதல். வாரிச சந்திர நியாயம் என்பது சந்திரன் எதிர் தாமரை குவியும். சூரியன் முன் விரியும் என்னும் நியாயம். இங்கு அ.தாமாறு தலைவன் பிரியின் அவள் முகதர்சனம் நீங்க ஏனையர் முக தர்சனமே வாய்க்கும். ஏனைய முக தர்சனத்தில் சூரியன் முன் தாமரை போலத் தலைவி முகம் மலர்தற்கு இடமில்லை. அதற்கு எதிர் சந்திரன் முன் தாமரை போல அது கூம்புதற்கே இடம் உண்டு என்பதாம்.
அவன் போக்குடன்படுதல்
(இது வெளிப்படை)
345. காமவெந் தீயிற் கவினி வளர்ந்தலர் காணுகொடி
நாமவெந் தீயி னடலை யுறுமோ நறுந்தமிழ்க்கோர் ஏமவெம் வெற்பா யியனா வலனலை யேந்திழைய வோமவெந் தீநினைந் தாறினு மாறு முனதெண்ணமே.
பதவுரை :-காம வெம் தீயில் கவினி வளர்ந்து அலர் காணும் கொடி - காம வெப்பமாகிய அக்கினியின் ஊடே அழகுற்று விளங்கி வளர்ந்து பூக்கும் நிலையுற்ற கொடி, நாம வெம் தீயில் நடலை உறுமோ - பெயரளவுக்கு வெம்மையான பாலை வெப்பத்தில் வருந்துமோ, நறும் தமிழ்க்கு ஓர் ஏம வெம் வெற்பா இயல் நாவலன் நலை ஏந்திழை - நன்மை பொருந்திய செந்தமிழுக்கு ஒப்பற்ற பாதுகாப்பு அரணாகத் திகழும் நாவலர் பிரானது நல்லைக் கிழத்தியான ஆபரணம் அணிந்த தலைவி, உனது எண்ணமே - உனது எண்ணப்படியோ, அ ஒம வெம் தீ நினைந்து ஆறினும் ஆறும் - மணநிகழ்வின் போது வளர்க்கப்பட உள்ள அந்த ஒமத்தி வெம்மையை நினைந்து ஆறுதல் பெறுதலும் கூடும்.
(கு.உ)-உடன் கொண்டு செல்ல ஒருப்படுகின்றேன் என்பது குறிப்பெச்சம். கவின் - அழகு; கவினி - அழகுற்று விளங்கி; நாம வெந்தி என்றது காமவெம் தீயின் எதிர் பாலை நிலத்தி பெயராயமைக்க மாத்திரமே எனக் குறித்தவாறு. ஏந்திழை - அன்மொழித் தொகை, நறுந் தமிழ் செந்தமிழ் ஏம வெற்பு பாதுகாப்பு அரண். அ ஒம வெம் தீ என்பதில் சுட்டு அகரம் பின்பு எப்போதோ நடக்கவுள்ள எனும் பொருளில் நின்றது.

Page 137
253
பாங்கி தலைவிக்குடன் போக் குணர்த்தல்
தலைவிக்குத் தலைவன் உடன் போதலைப் பாங்கி உணர்த்தல்.
346. சோலை யவாவு கருமுகி றோய்நலை தோய்மயிலென் மாலை யவாவு மனத்தா மரைவாய் வளருமன்னம் பாலை யவாவு மதோசுரம் பற்றிடு பான்மையதோ வேலை யவாவு விழியிவை நாவலன் வெற்பாசொலே.
பதவுரை :-சோலை அவாவும் கரு முகில் தோய் நலை தோய் மயில் - சோலைகளை விரும்பிச் சேரும் கரிய முகில்கள் செறியும் நல்லூரில் வாழும் மயில் போன்றவளே, மாலை அவாவும் என மன தாமரையில் வளரும் அன்னம் - ஆசை மிகும் என் மனமாய தாமரையில் வளரும் அன்னமாகிய தலைவி, பாலை அவாவும் அதோ - பாலை நிலத்தை விரும்புமோ, சுரம் பற்றிடு பான்மையதோ - சுர வழியிற் செல்லும் தன்மையதாமோ, வேலை அவாவும் விழி - வேல் போலும் கண்களை உடையவளே, இவை நாவலன் வெற்பர் சொல்லே - இவை நாவலர் பிரானின் மலையினரான தலைவர் சொற்களாம்.
(கு.உ):-"சோலை ------ மயில்" - தலைவர் தோழியை விளித்த விளி. "வேலை அவாவும் விழி" தோழி தலைவியை விளித்த விளி.
தலைவி நாணழி பிரங்கல்
உடன் போகில் நாணழியுமே என்று அதற்குத் தலைவி இரங்கிக் கூறல்,
347. பொன்ராம நாதனை யாட்சி யவையிற் புகவிடினே
நன்றாகு மாக்க நமர்க்கென வேயவ ணண்ணிடச்செய் யென்றாதை நாவல னல்லையி லன்பின ரெண்டிசையும் தன்னாணை யாக்கின ரென்னாணைப் போக்க றகுந்தகுமே.
பதவுரை :-பொன்ராம நாதனை ஆட்சி அவையில் புக விடின் - சேர்பொன் இராமநாதனை ஆட்சி மன்றமான சட்ட நிரூபண சபைப் பிரதிநிதியாகச் செல்ல விட்டால் மட்டும், நமர்க்கு ஆக்கம் நன்றாகும் எனவே - நம்மவர்க்கு வாழ்வு நன்றாகும் எனச் சங்கற்பித்து, அவன் நண்ணிடச் செய் என்தாதை நாவலன் நல்லையில் அன்பினர் - அவர்,

254
ஆட்சி மன்றம் ஏறச் செய்து வைத்த என் தந்தை போன்ற நாவலர் பிரானது நல்லூரில் உள்ள என் அன்பாளராம் தலைவர், எண்திசையும் தன் ஆணை ஆக்கினார் - எட்டுத் திக்குகளிலும் தன் ஆணைக்கு அடங்க ஆக்கியவர், என் நாணை போக்கல் தகும் தகும் -எனது நாணை ஒழிக்கும் நிலை நேரின் அது வரவேற்கத்தக்கதாகும்.
கற்பு மேம்பாடு பாங்கி புகறல்
கற்பின் மேம்பாட்டைப் பாங்கி தலைவிக்குக் கூறாநிற்றல்,
348. வெற்பிற் சிறந்தந னாவலன் கீரி வியன்வரையிற்
கற்பிற் சிறந்த தலநா ணெனத்தலைக் கற்புறுவா ரற்பிற் சிறந்திடு பூங்கொடி யாரிலை யாதிமுல்லை யற்றுச் சிறந்திடு வோருறி னுய்யு மதையறியே.
பதவுரை :-வெற்பில் சிறந்த நல் நாவலன் கீரி வியன் வரையில் - குன்றுகளிற் சிறந்ததாய் உள்ள நல்லோனாம் நாவலர் பிரானது கீரிமலையின் கண், கற்பிற் சிறந்தது அல நாண் என தலை கற்புறுவார் - நாண் கற்பிற் சிறந்தது அல்ல எனும் கொள்கையால் தலைக்கற்பு பேணுவாராகிய, அற்பிற் சிறந்திடு பூங்கொடியார் உறின் - அன்பில் மேம்பட்ட பூங்கொடி போலும் பெண்கள் இருத்தலால் மட்டுமே. இலை ஆதி அற்று சிறந்திடும் முல்லை - இலை முதலிய கொடி உறுப்புகள் இல்லாது சிறப்புறுவதாகிய முல்லை என்னும் இருத்தல் ஒழுக்கம், உய்யும் அதை அறி -உலகில் உய்ந்திருப்பதாகும் அதை நீ அறிவாயாக;
(கு.உ):-"கற்பிற் சிறந்தது நானே” எனும் சங்க நூல் மேற்கோளை சமத்காரவகையால் தலை கிழாக்கிக் கூறும் விசேடம் உடையது இச்செய்யுள். ஐந்திணை இலக்கண வழக்கில் கற்பு முல்லை எனப்படும். அது இங்கு கொடியாகிய முல்லையினின்று வேறுபடுத்துணரப்படுமாறு இலையாதி அற்று சிறந்த முல்லை என விசேடித்து உரைக்கப்பட்டது. முல்லை கற்பு ஆவது தலைவன் விஷயார்த்தமாகப் பிரிந்து சென்றுழ தலைவி மனம் வேறுபடாது தன் நிறையைப் பேணி இருத்தல் ஆகும் அதனாலேயே புணர்தல் ஒழுக்கம் குறிஞ்சி என்றாற் போல் இருத்தல் ஒழுக்கம் முல்லை எனப்படலாயிற்று என்க.

Page 138
255
தலைவி ஒருப்பட்டெழுதல்
(இது வெளிப்படை)
349. இவ்வூர்க் கொடியா ரலர்வடுக் கொள்கவெம தனையுந்
தெவ்வூர் பவரெனத் திட்டுக வேதில ரேதுரைக்க பவ்வூ ரிருமூன் றுயிருறு பாவைய நாவலனுார் மவ்வூ ரனர் துணி பேநிற் கெனினான் மறுத்தலெனே
பதவுரை :-இ ஊர் கொடியார் அலர் வடு கொள்க - இவ்வூரில் பிறர் பதி தூற்றும் கொடியவர்கள் எம் மேல் பழிச்சொற் குற்றம் உண்டாக்கி உரைக்கட்டும், எமது "அனையும் தெவ் ஊர்பவர் என திட்டுக - எம் தாயும் பகைவர் எனத் திட்டட்டும், ஏதிலார் ஏது உரைக்க - அயலார் ஏதேதும் உரைக்கட்டும், பவ்வூர் இரு மூன்று உயிர் உறும் பாவை - மெய் உயிர் பெறும் வரியில் ஆறாவது எழுத்தாகிய பூ என்பதனோடு பாவை எனும் சொல் புணர்ந்ததான பூம்பாவையே, அ நாவலன் ஊர் மவ்வூரனர் துணிபே நிற்கெனின் -அந்த நாவலர் பிரான் ஊர் சார்ந்த மகரமெய்யோடு அனர் சேர்ந்தாம் பெயரான மன்னர் (தலைவர்) நிற்கு துணிபே எனில் - உனக்குத் துணிபாமாயின், நான் மறுத்தல் என் - நான் மறுப்பது ஏன்.
(கு.உ):கொடியார் - பெண்கள் எனலுமாம் - வடு - குற்ற்ம் தெவ் - பகை; தெவ்வூர்பவர் - பகைவர்; பவ்வூரிரு மூன்றுயிருறு பாவையர் மவ்வூரனர் என்ற இரண்டும் முறையே பூம்பாவையர் மன்னர் என்ற பெயர்களை மறைத்துக் கூறும். பண்பால் நாமாந்தரிதை என்னும் அணியாம். "அனர்துணிபே-லெனே" என்றது தலைவியும் தோழியும் இருவரின் ஒருவராம் நண்புறவு பற்றியது.
பாங்கி சுரத்தியல்பு உரைத்தல்
(இது வெளிப்படை)
350. கார்மழை யின்றிக் கதிர்வெயில் காயக் கரிகரியாய்ப் பார்வெடி பாங்கரிற் பாந்தளும் வெந்து பணமணிதுாய்
நீர்நசை யானுழை செந்நாயின் வாய்விழு நீரைநக்கு பேரழி கானமந் நாவலன் றெல்வுக் கிருப்பிடமே.

256
பதவுரை :-கார் மழை இன்றி - மேகம் மழை பொழிதல் இன்றி, கதிர் வெயில் காய கரி கரியாய் - சூரியன் கிரணங்கள் உக்கிரமாகக் காய்ந்து கொண்டு இருத்தலினால் யானையும் கரி என்னும் பெயர்க் காரணம் விளங்குதற்கு இடமாய், பார் வெடி பாங்கரில் பாந்தளும் வெந்து பண மணி தூய் - பாரிய நில வெடிப்புகள் ஏற்பட்டு அவற்றை இடங்கொள்ளும் சர்ப்பங்களும் வெந்து படங்களில் உள்ள இரத்தினங்கள் தூவப் பெற்று, நீர் நசையால் உழை செந்நாயின் வாய் விழும் நீரை நக்கும் - நீர் வேட்கையினால் அவதியுறும் மான் செந்நாயின் வாயில் வழியும் நீரை நக்கும் நிர்ப்பந்தத்துக்கு இடமாகும், பேர் அழி கானம் - முன்னே நிலையான குறிஞ்சி, முல்லை எனும் பெயர்களே அற்றுக் கட்டாந்தரையாய்க் கிடக்கும் கானம் ( நீ போக இருப்பது ) நாவலன் தெவ்வுக்கு இருப்பிடம் - அது நாவலர் பிரானது பகைவர்க்கு மட்டும் இருப்பிடமாம்.
(கு.உ)-மழை பொழிதல் மேல் நின்றது. கரி கரியாய் என்றது கரி என்றால் உஷ்ணம் ஏறிக் கரிவது என்ற தன் பெயர்க் காரணம் தோன்றும் இடமாய் என்றபடி - குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் சந்திக்கும் சில பகுதிகள் தம் நிலை அழிந்து வெறும் கட்டாந்தரையாதல்.
பாங்கி சுரத்தியல் புரைத்துழித் தலைவி சொல்லல்,
(இது வெளிப்படை)
351. தேனஞ் சுறவூ றியமல ரேவயற் சேருமல
ரானஞ் சுறக்கா யனைவா யழலிவை யத்தனைக்கும் நானஞ் சலிலை யருஞ்சுர மிவ்விலி னல்லதெவர் தானஞ் சலிசெ யறுமுக னல்லைமன் றான்துணையே.
பதவுரை :-தேன் நஞ்சுற ஊறிய மலர் - மன்மதன் என்மேற் சொரியும் தேனாக நஞ்சே நன்கு ஊறிய மலர்ப் பாணங்கள், அயல் சேரும் அலர் - அயலாரிடமிருந்து என்னைச் சேரும் பழிமொழிகள், ஆன அஞ்சுற காய் அனைவாய் அழல் - என்னுடனான ஐம்புலன்களையும் வாட்டும் அன்னை வாய்ப்பேச்சாம் அழல், இவை அத்தனைக்கும் நான் அஞ்சல் இல்லை - இவை யாவற்றுக்கும் நான் அஞசுதல் இல்லை, அரும் சுரம் இ இலின் நல்லது - நீ தீது எனக் கூறும் அரிய பாலை நிலம் இந்த மனையை விட நல்லது. எவர் தான் அஞ்சலி செய் - எவர் தானும் கும்பிட்டு ஏத்துகின்ற, அறுமுகன் நல்லை மன் தான் துண்ை - ஆறுமுகநாவலரது நல்லூரினராகிய என் தலைவர் மட்டுமே என் துணையாவார்.

Page 139
257
(கு.உ) :-தேனஞ்சுற-மலர் என்றது தேனின் இடத்தை நஞ்சு பற்றிக் கொண்ட என்றபடி, இனிமைக்குப் பதில் இன்னாமை செய்யும் மலர் என்பது தாற்பரியம். எவர் தான் என்புழி உம்மை விரித்துக் கொள்க. எவர் தானும் உம்மை எஞ்சாமைப் பொருளில் நின்றது.
பாங்கி கையடை கொடுத்தல்
பாங்கி தலைமகளைத் தலைமகற்குக் கையடை கொடுத்தல். கையடை - அடைக்கலம்.
352. கற்பவை கல்லொழுக் கார்நலை நாவலற் காண்பெரியோர் முற்படர் பேதை மொழியென வாயினு மொய்ம்மழைக்கார் பிற்படக் கொன்றை களங்கனி வென்றறல் பேண்விண்குழல் டிற்றனம் நீற்றுப்பை யேயினு நீயலை யெல்வளையே.
பதவுரை :-எல் வளையே - ஒளியுள்ள வளையல் அணிந்தவளே, கற்பவை கல் ஒழுக்கார் நலை நாவலன் காண் பெரியோர் - கற்பவை கற்றவற்றின் வழி நிற்கும் நல்லை நாவலர் பிரானைக் கண்ட பெரியோர், முற்படர் பேதை மொழி என வாயினும் - முன் செல்கின்ற அறிவிலி மொழி போல என் மொழி அமையினும் அமைக, மொய் மழை கார் பிற்பட - மொய்த்து இருளும் மழை மேகத்தைப் பிற்படச் செய்து, கொன்றை களம் கனி வென்று - கொன்றைப்பழம் களங்கனிகளின் நிறத்தையும் வென்று, அறல் பேண் குழல் - கருமணலின் பண்பைப் பேணும் உனது கூந்தலும், விண்டில் தனம் - மலை போலும் தனமும், நீற்றுப்பை ஏயினும் - முறையே வெண்ணிறு போலாகவும் பை போலாகவும், நீ அலை - (தலைவனை) நீ நீக்கி விடாதே.
(கு.உ) :-பெரியோர் முன் பேதை கூறும் மொழி அங்கீகரிக்கப்படும் தகைமை அற்றதாய் இருத்தல் போல என்மொழி இருப்பினும் என விரித்துக் கொள்க. மொழி - ஆசிமொழி என்க. குழல், தனம் என்ற இரண்டுக்கும் நீறு, பை என்னும் இரண்டையும் நிரனிறையாகக் கொள்க. நீ அலை - நீப்பாய் அல்லை.
353ம் செய்யுள் நீக்கப்பட்டுள்ளது.

25ồ
அவன் தலைவியைச்சுரத்துய்த்தல் தலைமகன் தலைமகளைச் சுரத்திற் செலுத்தல்
354. நின்னூர்க் கொடியா ரலர்வடுக் கொண்டனை நீள்சுரவெப்
பன்னோ பொறுத்த லமையா தலர்வடு வாங்கனிகொல் என்னா வளிமுரல் செய்யக் கொடியா ரினிதசையும் நன்னா வலனலைக் காவேய் நறுங்கா நடமயிலே.
பதவுரை :-அலர் வடு ஆம் கனி கொள் என்னா அளி முரல் செய்ய - பூவும் பிஞ்சும் காயும் கனியும் இதோ பெற்றுக் கொள் என்று கூறி வண்டுகள் ஒலித்தல் செய்ய, கொடியார் இனிது அசையும் - பூங்கொடி இனிதாக அசைகின்ற காட்சி உள்ள, நல் நாவலன் நலை கா ஏய் நறும் கா நட மயிலே - நல்லோனாகிய நாவலர் பிரானது நல்லைக் கண்ணதாகிய நறுமணம் வீசகின்ற சோலையில் நடனம் ஆடுகின்ற மயில் போல்வாளே, நின் ஊர் கொடியார் அலர் வடு கொண்டனை - நினது ஊர்ப் பெண்கள் (கொடி போல்வார்) கூறும் பழிச் சொல்லாகிய வசையை ஏற்றாய், நீள் சுர வெப்பு அன்னோ பொறுத்தல் அமையாது - நீண்ட பாலை நிலத்தினால் எதிர் கொள்ளப் போகின்ற வெப்பு ஐயொ! பொறுத்தற்கு இயலாது.
(கு.உ) :-முற்பாதியில் வெறுப்புப் பொருளில் வந்த அலர் வரு கொடியர் என்பன பிற்பாதியில் விருப்புப் பொருளில் அமைய வந்த நயம் இச் செய்யுளிற் காண்க. வடு - பிஞ்சு, ஆம் - ஆமம் என்பதன் இடைக்குறை - காய்.
அவன் பொழில் கண்டு வியத்தல் (இது வெளிப்படை)
355. பிறமதப் பாலை புகுந்துழல் வாரைப் பெரிதுமளி
யறமத நாவலன் போலுமிப் பாலை யளித்தளிர்க்கை யுறவசைத் தேநற சோறு கறிகா யுவகையுடன் பெறவளிப் பானிமிர் சோலையின் மாலை பெரிதழகே.
பதவுரை :-பிற மத பாலை புகுந்து உழல்வாரை பெரிதும் அளி - அந்நிய மதமாகிய பாலையில் புகுந்து அலைய இருப்பாரைத் தடுத்துப் பெரிதும் நன்மை செய்கின்ற, அற மத நாவலர் போலும் இ பாலை -

Page 140
259
அறத்தை உணர்த்தும் சைவ சமயத்தை நிலை நிறுத்தும் நாவலர் பிரான் போன்ற (இப்பாலையுள் நுழைவதற்கு) முன்பு உள்ள இடம், அளி தளிர் கையுற அசைத்து - தண்ணளிப் பாங்கான தளிர் எனும் கைகளைக் கொள்ள அசைத்து, நற சோறு கறி காய் உவகையுடன் பெற - நல்ல தேனும் சோறும் கறியும் காயும் மகிழ்ச்சியோடு பெறுமாறு, அளிப்பான் நிமிர் சோலையின் மாலை பெரிது அழகு - கொடுத்தற்கு நிமிர்ந்து நிற்கும் இச் சோலை வரிசை பெரிதும் அழகிதாம்.
(கு.உ) :-உழல்வார் - உழல இருப்பார் எனும் பொருளிலும் பாலை - பாலைக்கு முன் உள்ள இடப்பகுதி எனும் பொருளிலும் நின்றன. பிற மதப் பாலைக்குள் செல்லு முன்னே தடுத்து உபசரிக்கும் நாவலன் போல இச் சோலையும் பாலையுள் புகுமுன் இவர்களைத் தடுத்து உபசரிக்கிறது என்னும் அளவில் ஒப்புமை அமையும். அளி - தண்ணளி. நற - நறவு சோறு தாழைப் பூ மகரந்தம் போல்வன” கறி மிளகு,
தலைவன் தலைவிய சைவறிந்திருத்தல் (இது வெளிப்படை) அசைவு - வருத்தம்,
356. உள்ளினு முள்ளினி நாவல னுாரெனு மூருறுவங் கொள்ளினி பானம் வறண்டது கோல முகமதியந் தெள்ளொளி யென்முனர்த் தேம்பிய தாலடி சேர்ந்தகொப்புள் கொள்ளிய வெப்பமிந் நீழலிற் போக்குக கோதறவே.
பதவுரை :-இனி உள்ளினும் உள் நாவலனுார் எனும் ஊர் உறுவம் - இனி உள்ளுக்குள்ளாக (சற்றுத் தூரத்தில் உள்ள) நாவலனுார் எனும் ஊரில் புகுவோம், இனி பானம் கொள் - இப்போது சிறிது நீர் அருந்தும், கோலம் வறண்டது - மினுமினுப்பான உள்கோலம் காய்ந்து வரண்டது, முக மதியம் தெள் ஒளி என் முனர் தேம்பியது - முக சந்திரனது தெளிந்த ஒளி என் கண் எதிரே மங்கிற்று. அடி கொப்புள் சேர்ந்த - பாதங்களில் கொப்புளங்கள் தோன்றின, இந் நிழலில் கோது அற கொள்ளிய வெப்பம் போக்குக - இந்நிழலில் சற்று இருந்து துயரம் நீங்குமாறு கொள்ளி வெக்கை போன்ற வெப்பம் போகும்படி ஆறுக.
(கு.உ) :-கொள்ளிய - குறிப்பு வினைப் பெயரெச்சம்,

260
உவந்தலர் சூட்டியுண் மகிழ்ந்துரைத்தல்
தலைமகளை மகிழ்ந்து அவள் கூந்தற்குத் தன் கையால் அலரைச் சூட்டி, அதனால் பரவச மகிழ்ச்சி அடைந்து கூறுதல்.
357. பொய்யே யெனுமிடை பொற்பா ரிணைமுலை பூர்ணவிந்து
பெய்யே ரருவியர் முத்தமு முத்தமும் பேணியணி மொய்யே ரிளமலர் மாலையு நாவலன் மொய்யன்பெனக் கையே தவக்கை பிறர்கை தவக்கை கருதிடினே
பதவுரை :-பொய்யே எனும் இடை - இல்லை என்று சொல்லத்தக்க இடையும், பொற்பு ஆர் இணை முலை - அழகு நிறைந்த இரட்டைத் தனமும் உடையாய், பூர்ண இந்து - பூரண சந்திரன் போலும் முகத்தில், பெய் ஏர் அரு வியர் முத்தம் பேணி - சொரிகின்ற அழகியதும் அருமையானதுமான வியர்வைத்துளி முத்தினைக் கண்டு, முத்தமும் - (வாய்) முத்தமும் கொடுத்து, அணி மொய் ஏர் இள மலர் மாலையும் - அணிகின்ற வண்டுகள் மொய்க்கும் அழகிய புது மாலையும், நாவலன் மொய் அன்பு என (அளி) கை - நாவலர்பிரானது மிகுதியான அன்பு உபசாரம் போல உனக்கு அளித்த எனது கை, பிறர் கைதவம் கை கருதிடின் - பிறரது வஞ்சனையுள்ள கையைச் சிந்திப்பின், தவ கை - தவப் பயனுள்ள கையாம்.
(கு.உ) :- இணைமுலை என்பதை அடுத்து உடையாய் என்றும் வாய் முத்தமும் என்ற தன் பின் கொடுத்து என்றும் இரு சொற்கள் சொல்லெச்சங்களாக வரும், பிறர் - பிறரது என்றாம் கைதவம் - வஞ்சகம் அவக்கை எனப் பாடபேதம் இருப்பின் பொருள் சிறக்கும் - தலைவியின் வழிநடைத் துயர்க்குப் பரிகாரம் காண்பான் இங்ங்ணம் உபசரித்தான் என்க.
கண்டோரயிர்த்தல்
வடிவின் மேம்பாட்டாற் கண்டோர் ஐயமுற்றுக் கூறல்
358. மாலோ கரிய னிவன்செயன் மாமார் பகலுவளோ
சேலோ வெனுங்க ணிமையா விவட்கரன் சேயெனிற்கை வேலோ விருக்குங் குறமக னிலி வியனலைத்தென் னாலோ னெனுநா வலன்றெல் வுங்கடந் தாரிவரே

Page 141
261
பதவுரை :- ( யார் இவர் திருமால் தம்பதிகளோ எனில் ) மாலோ கரியன் இவன் செயன் - திருமால் கரு நிறத்தோன், இவன் செந்நிறத்தான், மா மார்பு அகலுவளோ - இவள் இலக்குமியாயின் மார்பு விட்டு அகன்று மருங்கில் வருவாளோ, இவட்கு சேலோ எனும் கண் இமையா - (அன்றியும்) இவளுக்குக் கயல் மீன் எனத்தகும் கண்கள் இமைக்கின்றன, அரன் சேய் எனில் - இவன் சிவன் புத்திரனாம் முருகன் எனில், கை வேல் இருக்கும் - கை வேல் இருக்கும், குறமகள் நீலி - குற மகளாகிய வள்ளி எனில் நீல நிறத்தி ஆவள், வியன் நலைத்தென் ஆலோன் எனும் - வியக்கத்தகும் நல்லூரின் கண் வந்த தட்சணாமூர்த்தி எனத்தக்க, இவர் நாவலன் தெவ்வும் கடந்தார் - இவர் நாவலர் பிரானது பகைவரையும் வெற்றி கண்டார்.
(கு.உ) :-செய்யன் - செயன் எனத் தொக்கது. தென் ஆலோன் - தென் திசாமுகமாகக் கல்லாலின் நீழலில் இருப்பவன். நாவலர் புகைவரே பாலை நிலம் சேரும் விதி உடையார் என்ற உண்மையில் வைத்து இவர் அத் தரத்தினரும் அல்லர் என்றார். ஓகாரங்கள் மூன்றும் ஐயப் பொருள் மேவின.
கண்டோர் காதலின் விலக்கல். கண்டோர் காதலினால் போக்கை விலக்கி எம் பாடியிற் தங்கிப் போம் என்று கூறுதல்,
359 என்மலை புக்கலை வீழ்ந்தா னிரவள் விருளதைய மன்னலை நாவல னுாரை மருவ வழிபறிசெய் கன்மலை வேடர் விடார்மெலிந் தாளிந்தக் காரிகையும வின்மலை தோளா யிரவெமிற் றங்கினை மேவுதியே.
பதவுரை :-எல் மலை புக்கு அலை வீழ்ந்தான் - சூரியன் அஸ்தமன கிரியை அடைந்து மேற்றிசைக் கடலில் குதித்து விட்டான், ஐய - ஐயனே, இரவு அள் இருளது - இரவும் செறிவுமிக்க இருளரினது, மன் நலை நாவலன் ஊரை மருவ - தலைவனான நல்லை நாவலர் பிரானது ஊரை இரவோடிரவாக அடைந்து விட (எண்ணுவையேல்), வழி பறி செய் கல் மலை வேடர் விடார் - வழியில் பொருள்களைக் கவர்கின்ற பெரும்பாறையின் மலை வேடர்கள் வழி போக ஒட்டாது துன்புறுத்துவர், இந்தக் காரிகையும் மெலிந்தாள் - இப் பெண் நல்லாளும் வழி

262
நடையால் நொந்து இளைத்துப் போயுள்ளாள், வில் மலை தோளாய் - ஒளி பொருந்திய மலை போன்ற தோளை உடையவரே, இரவு எயில் தங்கினை மேவுதி - இரவு இங்கு உள்ள கோட்டையில் தங்கிச் சேர்வாயாக.
(கு.உ) :-அலை - ஆகுபெயர். அள்ளிருள் - செறிந்த இருள்; காரிகை - பெண்ணின் நல்லாள்.
தன் பதியணிமை சாற்றல்
இவ்விடத்தில் நும்மூரில் வைகிப் போதல் பொருந்தாது, எம் பதிப் போதல் வேண்டும் என்று தலைவன் கூறியவழி, தலைவன் பதி அணித்து என்பதனைக் கண்டோர் கூறுதல்.
360. கூடார் புரமெரி கூட்டினர் சேய்நா வலனலையெ
மேடார் திருநடந் திப்பாலை யேகினப் பாலையுனிற் றோடார் மலர்த்தடஞ் சோலைசெய்த் தண்பனை சொல்லி
லொர்கூப் பீடார் நிலைநிலை யும்பதி நம்புதி யேகுதியே
பதவுரை:-ஏடார் திரு - தாமரை இதழ் மேல் உறையும் இலக்குமி அனையவளே, கூடார் புரம் எரி கூட்டினர் சேய் - பகைவர் புரங்களை எரியுண்ண வைத்த சிவபிரானது மகனாகிய, நாவலன் நலை நடந்து - நாவலர் பிரானது நல்லைக் கண் நடந்து, இ பாலைக்கு ஏகின் - இப் பாலையைக் கடந்தோமாகில், அ பாலை உனில் - அப்பால் எதிரும் நிலத்து நிலையைக் கருதின், தோடு ஆர் மலர் தடம் - இதழ்கள் நிறைந்த பூந்தடாகமும், சோலை - சோலையும், செய் தண் பனை - வயல்களோடு கூடிய மருத நிலமும், சொல்லில் - அதன் நலம் சொல்லுங்கால், ஓர் கூப்பீடு ஆர் நிலை நிலையும் பதி - ஒரே ஆரவார
நிலை நிலைக்கும் பதியாய் இருக்கும், நம்புதி ஏகுதி - நம்பிக்கையோடு நடப்பாயாக,
(கு.உ) :-நம்புதி என்றது விரைவில் அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையுடன் என்றபடி, கூப்பீடு - ஆரவாரம், அழைப்பு என்ற பொருளில் வரவேற்பு எனலுமாம்.

Page 142
263
தலைவன் றன் பதியடைந்தமை தலைவிக் குரைத்தல். தலைவன் தலைவிக்குத் தன் பதி அடைந்தமையை உணர்த்தல்.
361. சோலையும் வாவியுந் தோய்மீன் மிளிர்நல்லைத் தோன்றல் ഖണf சாலையும் பெட்கலைச் சாலையும் தேர்சார் மறுகுமிவை யோலையுஞ் சேலும் பொருமுகத் தாயெம தோங்குமிலி". தாலையம் வேளுக் கதுவா லணைகுதி யன்புறவே.
பதவுரை :-சோலையும் - மாஞ்சோலையும், மீன் தோய் வாவியும் - மீன்களால் அழகுறும் வாவியும், மிளிர் நல்லைத் தோன்றல் வளர் சாலையும் - விளக்கமுறும் நல்லூர்த் தோன்றலாய நாவலர் பிரான் ஒடியாடி வளர்ந்த விதியும், பெட் கலைச் சாலையும் - பெருமை மிகுந்த கல்விச் சாலையும், தேர் சார் மறுகும் இவை - தேர் ஓடும் வீதியுமாவன இவை. ஒலையும் சேலும் பொரு முகத்தாய் - காதோலையிற் (காது அணி) கண்ணாகிய கயல் மீன் சென்று மோதும் முகத்தை உடையவளே, எமது ஓங்கும் இல் இது - எமது உயர்ந்த மனை இதுவாகும், வேளுக்கு ஆலையம் அது - கந்தவேளுககு அமைந்த ஆலயம் அதுவாகும், அன்புற அணைகுதி - அன்போடு அணைவாயாக.
(கு.உ) :-வாவியில் மீன் மாறிமாறி நீரில் ஆழ்ந்து மிதக்கும் காட்சி தோன்ற தோய் மீன்' என்றார். ஒலை காதணி - காதோலை மரபுப் பெயர்.
22. கற்பொடு புணர்ந்த கவ்வை
தலைவி தலைவனது உடைமையாய்க் கற்பொடு கூடிய அதனை அயலார் விராய சேரியர் பலரும் அறிதல், கவ்வை - அலர், களவு வெளிப்பாடு.
செவிலி பாங்கியை வினாதல். (இது வெளிப்படை)
362. நீன்மணி முத்தம் பெறவாய் வெருவி நிலையினையொன்
பான்மணி சேரணி நூனா வலனலைப் பாங்கியர்பூ வான்மணி யுச்சி யுறத்தேம் புதலென வாடலென்ன கான்மணி யோசை யிலையெங்ங் னெம்பசுக் கன்றதுவே

264
பதவுரை :- ஒன்பான் மணி சேர் அணி நூல் நாவலன் நலை பாங்கியர் - ஒன்பது இரத்தினங்கள் என்னும் பொருள் உள்ள நவரத்தினம் என்பதை அடைமொழியாக உள்ள அழகிய மாலை ஒன்றின் ஆசிரியராகிய நாவலர் பெருமானது நல்லூரைச் சார்ந்த பாங்கியே, நீலமணி முத்தம் பெற வாய் வெருவி நிலையினை - நீலப் பூப் போலும் கண்களின் நீர்த்துளிகளாகிய முத்துமணிகளைப் பொழிய அழுகை மெய்ப்பாடு தோன்றும் வாயிதழ்களுடன் காணும் தன்மையள் ஆகின்றாய், வான் மணி உச்சி உற் பூ தேம்புதல் என்ன - சூரியன் ஆகாய உச்சிக்கு ஏற பூ வாட்டம் உறல் போல, வாடல் என்ன - நின் மலர் போலும் முகம் வாடுதல் என்னையோ, எம் பசுக்கன்றது - எம் பச்சிளம் கன்றை ஒத்த மகளினது, கால் மணி ஓசை இலை - காலில் அணியும் சிலம்பின் மணிப்பரல் கனைக்கும் ஓசையும் இங்கு இல்லையாகிறது, எங்ங்ன - இவை உளதாயவாறு எங்ங்ணம் ?
(கு.உ) :- ஒன்பான் மணிசேர் அணிநூல் - நவரத்தினமாலை அணி - மாலை' பாங்கியர் - விளி நூல் நாவலன் - நூலின் ஆசானான நாவலன். வான்மணி - சூரியன் வாய் வெருவல் - அழுகை மெய்ப்பாடு வாய்வழிப் புலனாம் அறிகுறி, பசுக்கன்று - பச்சிளங்கன்று வலித்த்ல் விகாரம் இளம் மகளைக் கன்று எனல் மரபு, கால் மணி ஓசை - இடத்து நிகழ் பொருள் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது.
பாங்கி செவிலிக்குரைத்தல்
(இது வெளிப்படை)
363. நெய்தலி னிருறப் பூங்குறிஞ் சிக்கெ நிகர்கன்றது
வெய்துயிர் தேமரு துற்றெ னுடன்பொழின் மேநலைபூக் கொய்தரு நாவலற் சேரின் பெனநற் குறிஞ்சியளி மொய்தரு பூவர சிற்பாலை பாயது முல்லையுற்றே
பதவுரை : பூங்குறிஞ்சிக்கு நிகள் கன்றது - குறிஞ்சி என்னும் ஒழுக்கமாகிய புணர்தலுக்கு ஒத்த நின் மகள், நெய்தலின் நீர் உற வெய்துயிர்த்து - கரு நெய்தல் போன்ற தன் கண்களில் நீர் ததும்ப வெப்ப மூச்சு எறிகின்றவளாய், என்னோடு மருது உற்று - என்னோடு பிணக்குற்று, கொய்தரும் பொழில் மேம் நலை நாவலர் சேர் இன்பம் என - கொய்வதற்குரிய பூக்கள் மலிந்து உள்ள சோலை பொருந்தும் நல்லூரில் உள்ள நாவலர் பிரானைச் சேர்ந்து பெறற்பாலதாம் இன்பம் எனத் தக்கதும், மொய் தரும் - மொய்ப்பு நிலையை விளைப்பதுமான,

Page 143
265
குறிஞ்சி அளி - புணர்ச்சி இன்பம் தனக்கு அளித்த, பூ அரசின் மன்னனின் பின், முல்லை உற்று - கற்பொழுக்கம் மேற்கொண்டு, பாலை ஆயது - உடன் போக்கு மேற்கொண்டாள் ஆயினாள்
(கு.உ) :- செம்மொழியாற் கூற வாய் கூசிக் குறிப்பு மொழியாற் செவிலிக்குப் பதில் உரைத்தாள் தோழி. குறிஞ்சி - புணர்ச்சி, நெய்தல்
கண், முல்லை - கற்பு, மருதம் - பிணக்கு , பாலை - உடன்போக்கு
பாலை பிரிவன்றோ எனின் உற்றாரைப் பிரிதலின் உடன் போக்கும் அதுவாம். மொய் - மொய்ப்பு அறிவு அழிந்து சோர்வதோர் உணர்வு நிலை புணர்ச்சி அதற்கு இடமாதல் ஸ்பஷடம். அகத்திணை உரிப்பொருள் ஐந்தும் அடுக்கிப் பிறிதுபட மொழிந்த அழகு இதற்கு உண்டு. இத்தன்மையில் குறிஞ்சியளி மொய் தரு பூவரசு முதன்மை பெறும்.
செவிலி இனையல் என்போர்க்கு எதிர் அழிந்து மொழிதல்
(இது வெளிப்படை) அழிந்து மொழிதல் - நொந்து கூறல்
364. மறவே தனையறு நாவல மாதவன் வாரரென
வறவே தனையறு கென்பீ ரறுத்த லமைவதுவோ வுறவே தனமுறு பாலை யளித்தளி பாலையுமைத் துறவே துனவொரு வேலைபின் பாலை துணிற்றெரிமே.
பதவுரை :- மற வேதனை அறும் நாவல மாதவன் வாரர் என - மறம்" என்னும் தீமையின் விளைவாம் வேதனை அறப் பெற்ற நாவலர் பிரானாகிய மாதவத்தோனது அன்பர் எனும்படி, வேதனை அற அறுக என்பீர் - நான் கொண்டுள்ள வேதனையை முற்றாக நீங்கி இரு என என்னைத் தெருட்டுகின்றீர்கள், அறுத்தல் அமைவதுவோ - அங்ங்ணம் நீங்கி இருத்தல் சாத்தியமாமோ, தனம் உறு பாலை உறவே அளித்து அளிபாலை - முலையில் உள்ள பாலை முற்றாக ஊட்டி நான் வளர்த்த செல்வி, உமை துறவே துன - பாங்கியராகிய உம்மைத் துறத்தல் பொருந்த, ஒரு வேல் ஐ பின் - ஒப்பற்ற வேல் தாங்கிய தலைவன் ஒருவன் பின்னால், பாலை துனில் தெரிம் - பாலை நிலம் சென்றிருந்தால் அதைத் தெளிய அறிமின்.

266
(கு.உ) : மறம் - அறத்தின் மறுதலையாவது அறும் நாவலன் - (அதனோடு) தொடர்பு அறும் நாவலன் அதன் வேதனைக்கு அருகள் அல்லாதவர் ன்னறவாறு வாரர் - அன்பர், அற இரண்டில் முன்னது எஞ்சாமை, என் வேதனை அறுதல் 960) Dust என்பதை
யதார்த்தப்படுத்துவாளாய் செவிலி உறவே தனமுறு பாலையளித்து அளி செல்வி ன்னறாள். என் வேதனை இரத்தத் தொடர்புடன் ஆனது. சும்மா ஆறுதற்காம் சாமானியமன்று என்றவாறு. தெரிம் - எச்ச வீற்றிற் கெடற்பாலதாகிய ஈற்று உயிர்மெய் முற்றினும் கெட்டவாறு.
செவிலி தன் அறிவின்மை தன்னை நொந்துரைத்தல்
தலைவி போதற்குத் தன் குறிப்பினால் அறிவித்த தன்மையை அறிந்திலேன் என்று தன் அறிவின்மைத் தன்மையை நொந்து கூறல்,
365. பாலைக் குடிக்கக மென்றனள் பாவைநற் பாலதென்றேன் வேலைப் புறத்திரா மேசுர மேக விருப்பமென்றாள் சேலைப் பழிவிழி நாவல னாட்டினர் மேவுசுரப் பாலைப் பெணென்ப ரெனையென் றனணெணம் பார்த்திலனே.
பதவுரை :- பாலை குடிக்க கம் என்றனள் - பாலைக் குடிக்க விரும்பம் என்றனள் மகள். நல் பால் அது என்றேன் - நல்ல பால் அது என்றேன் நான், வேல் புறத்து இராமேசுரம் ஏக விருப்பம் ன்னறார் கடற்கரையில் உள்ள இராமேசுரம் போக விருப்பம் என்றாள் மகள், சேலை பழிவிழி - சேல் மீனை வடிவால் அவமதிக்கும் விழி உள்ள மகளே, நாவலன் நாட்டினர் சுரம் மேவு பாலை பெண் என்பர் உனை என்றனன் - அப்படி நீ போனால் நாவலர் பிரானது நாட்டு மக்கள் மணல் வெளியாகிய பாலை நிலத்துக்குப் போய் இருக்கும் விபரம் அறியாத பெண் என உன்னைக் கூறுவர். என்றேன் நான், எண்ணம் பார்த்திலன் - இவ்வுரையாடலின் போது அவளது குறிப்பை அறிந்து கொள்ளும் விவேகம் அற்றவள் ஆய் விட்டேன் நான்.எண்ணம் பார்த்திலன் என்பதனால் மகள் வார்த்தைகள் உடன் போக்காகிய அவளது எண்ணம் பொதிந்தனவாய் இருந்தமையை அப்போது அறிந்திலன் என நொந்து உரைத்தார். செவிலி என்பது வெளிப்படை, அதற்கு இணங்க மகள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அப்பொருள் படவும் உள்ளவாறு காணல் தகும்.'பாலைக் குடிக்கு அகம்' - ஐ பால் குடிக்கு அகம் - தலைவன் சார்பான குடிக்கு நான் உள் ( அகம் - உள் ) அதாவது அவர் குடி உறுப்பினன் ஆயினோன் தான் என்பது. வேலைப் புறத்திரா மேசுரம் ஏக விருப்பம் - இனி இங்கு இராமே வேல் தாங்கிய தலைவன் பின் பாலை நிலம் செல்ல விருப்பம். மகள் ஒன்று கருதிச் சொல்ல நான்

Page 144
267
மற்றொன்றாக எடுத்துக் கொண்டேனே! என் மதி மோசம் இருந்தவாறு அதுவாயிற்று எனக் காட்டும் இவ் விளக்கம் கிளவிப் பொருளாகிய, 'அறிவின்மை தன்னை நொந்துரைத்தல்' என்பதற்கு முற்றிலும் ஒக்கும்; அதற்கு ஏற்ப செய்யுளின் தற்போதைய வடிவில் சில மாற்றங்கள் இருந்திருத்தல் இன்றியமையாதாகும். என்றனன் -என்றனன் பார்த்திலன் - பார்த்திலன் , எனை - உனை என்பன. மகளின் எண்ணம் அறிந்திலாமையின் கூறப்பட்டன என்ற செவிலி வாக்குகளிலும் முன்னது சிலேடை வகையானும் பின்னது இரட்டுற, மொழிதல் வகையானும் மகளின் உட்கோளுக்குப் பொருந்தக் காணும் வாய்ப்பு இருக்கும். நயமும் வேறு. அது வருமாறு முன்னது நற்பால் அது என்றேன் - நற்பால் - நல்லூழ், ஆகூழ் அதற்கு என்ன தலைவன் பின் செல்லக் கிடைத்தது நல்லூழ் தானே என்றவாறு, பின்னது வெளி. கம் -விருப்பம் அகம் - உள். சேலைப்பழிவிழி - விளி, எண்ணம் - உள்நோக்கு, பாலை - இளம் பெண் , சுரம் - மணல் பரந்த வெறும் வெளி. வேலைப் புறத்து என்று விசேடித்தது, பாலை செலினும் பாதுகாப்புக்கு அவரிடம் வேல் உண்டு எனக் குறித்ததாயிற்று. மகள் கூற்று இரண்டும் செவிலி கூற்று ஒன்றும் சிலேடை.
தெய்வம் வாழ்த்தல் (இது வெளிப்படை)
366. ஏடார் மலர்முக னேடார் மலர்க்கைய னாவலன்கஞ் சூடா ரடிமுரு கேசுடு பாலை துறந்தெமன்னம் பீடார் கிளையதண் பாலை யுறின்மயில் பேணுமயி லீடார் கடுத்தாட் படைக்கொடி யிட்டன னேத்துவனே
பதவுரை :- ஏடு ஆர் மலர் முகன் - இதழ் அமையும் மலர் போன்ற முக விலாசம் உள்ளவனும், ஏடு ஆர் மலர் கையன் - நூல் ஏடுகளைத் தாங்கும் மலர்ந்த கையினனும் ஆய, நாவலன் கம் சூடு ஆர் அடி முருகே - நாவலர் பெருமானுக்கு அவரது தலையின் கண் சூடும் சிறந்த அடியை உடைய முருகப் பிரானே, எம் அன்னம் சுடு பாலை துறந்து - எமது அன்னம் போல்வாளாகிய மகள் சுடுதல் வெம்மை கொண்ட பாலை நிலத்தில் இருந்து அகன்று, பீடு ஆர் கிளை அதன் பால் உறின் - பெருமைக்கு உரிய தன் சுற்றத்திடம் வந்து சேரப் பெற்றால், பேணும் மயில் அயில் - நீ விரும்பும் மயிலும் வேலும், ஏடு ஆர் கடு தாள் கொடி - சண்டையில் தனக்குத்தானே சமானமாகும். முள் உள்ள கால்களை உடைய நின்கொடியாகிய சேவலும், இட்டனன் ஏத்துவன் - நினக்குக் காணிக்கையாக வைத்துப் போற்றுவேன்.

268
(கு.உ) :-கம் - தலை, கம் சூடு ஆர் அடி முருகு - நாவலர் பிரான தலையிற் சூடுதல் சிறந்த அடிகளையுடைய முருகப் பெருமானே ஆனால் அது சம்பிரதாயப்படியான சடங்கு முறையில் நிகழ்ந்தது அல்ல என்பது தாற்பரியம். கடுத்தாட்படை கொடி. கடு - முள், சேவற் காலில் பின் உள்ள நகம். கடுவை உடைய தாள் அத்தகைய தாளை உடையதும் முருகப் பெருமானுக்குக் கொடியாய் அமைந்ததுமாகிய சேவல்.
செவிலி அறத்தொடு நிற்றல்
செவிலி நற்றாய்க்கு உடன்போக்கை வெளிப்படுத்திக் கூறல்
367. குளிறு திரைநல்லை நாவலற் கூடலர் கூடமகள்
களிறு மடித்து மடியாமற் காத்தார் கடிகடிந்தா ரொளிறு மயினம ரென்றேபொன் பித்தளை யுற்றுமணம் பிளிறு கரிகரி வெஞ்சுரங் காலையிற் போந்தனளே,
பதவுரை :- பொன் மகள் - பொன் அனையாள் ஆய என் மகள், களிறு மடித்து மடியாமல் காத்தார். - அன்று ஒரு நாள் தன்னை எதிர்ந்த யானையைக் கொன்று தான் இறவாது காப்பவராய், கடி கடிந்தார் - நேர்ந்த பிராண பயத்தை நீக்கி வைத்தவர், ஒளிறும் அயில் நமர் என்றே - விளங்கும் வேல் ஏந்திய தலைவர் ன்னற முறையில், மனம் பித்து அளை உற்று - தன் மனம் காதலுக்கு உறைவிடமாகப் பெற்று, ஒளிறு திரை நல்லை நாவலர் கூடலர் கூட - ஒலிக்கும் திரைகளோடு கூடிய நீர்வளம் உள்ள நல்லூர் வாணன் ஆகிய நாவலர் பிரானது பகைவர் செயல் தன்மை பொருந்த, பிளிறு கரி கரி வெம் சுரம் காளையின் போந்தனள் - பிளிற்றொலி செய்யும் யானையும் கரிந்து போக வைக்கும் வெப்பம் மிகுந்த பாலை நிலத்துக்கு இளமை நலம் மிக்க அத் தலைவன் பின் போயிருக்கிறாள்.
(கு.உ) :- ஒளிறும் - ஒலிக்கும். கூடலர் - பகைவர் கூடலர் கூட - பகைவர்களது செயல் தன்மை பொருந்த, கூட - பொருந்த கூடலர் அவர் செயல் மேல் நின்றது. நாவலர் பகைவர்க்குச் சுரமொன்று அல்லது புகலிடம் வேறில் என்பான் நாவலன் கூடலர் கூட என்றான். கடி - அச்சம், பிராணபயம், கடிந்தார் - நீக்கினார்.

Page 145
269
நற்றாய் பாங்கி தன்னொரு புலம்பல்
( இது வெளிப்படை )
368. முன்னே யிதைப்புறம் பின்னேய குழலி முறையிடினி தன்னே யவரையென் பொன்னே பெறுவ டவிருவளோ வன்னே யறுமுக நாவல னார்மதம் விட்டவர்போற் கொன்னே சுரம்விடுத் தின்னே யலறல் கொலுமெனையே
பதவுரை :- புறம் பின் ஏய் குழலி - முதுகுப் புறமாகப் பின் தாழ்ந்த கூந்தலை உடைய பாங்கியே, இதை முன்னே நீ மொழிந்திடின் - இது இவ்வாறாய் முடியக் காரணமாய் இருந்த சம்பவத்தை நீ ஏலவே சொல்லியிருப்பின், என் பொன் தன் நேயவரை பெறுகுவள் தவிருவளோ - எனது பொன் போல்வளாகிய என் மகள் தன் காதலரைப் பெற்றிருப்பாள் அன்றித் தவிர்ந்திருக்க மாட்டாள், அன்னை - தாயே, அறுமுக நாவலனார் மதம் விட்டவர் போல் - ஆறுமுக நாவலர் பிரானின் கொள்கையை ஏற்காது விட்டவர் போல, கொன்னே - அநாவசியமாக, சுரம் விடுத்து - அவள் பாலை நிலம் செல்லவிட்டு, இன்னே அலறல் எனைக் கொலும் - இப்பொழுது இருந்து புலம்பல் என்னைக் கொல்வதாய் இருக்கின்றது.
(கு.உ) :- இதை - மகள் காதலன் பின் போக வைத்த அவள் காதல் மிகுதியை மொழிந்திடின் பெறுகுவார் என்றது வெளிப்படுத்தி இருந்தால் சுமுகமான முறையில் விவாக நெறியில் அவள் அவனைக் கணவனாகப் பெற்றிருப்பாள். தவிருவளோ என்பதில் ‘ஓ’ எதிர்மறை. அன்னே - மகள் நினைவில் எழுந்த நற்றாயின் அவலக்குரல, கொன்னே - வீணே, அவசியமில்லா விதத்தில், புலம்பல் கொலும் - புலம்புதல் மரணவேதனையாம் என்றவாறு.
நற்றாய் பாங்கியர் தம்மொடு புலம்பல் (இது வெளிப்படை)
369. நீர்சோரக் கண்களி னிர்சோர நீர்சோர் நெடுமுகிலாங் கார்சோர நன்மழை கார்சோரு மாறில் கடத்துமினார் வார்சோர நன்முலை யூட்டி வளர்த்தவள் சோரவகத் தார்சோர வேபுற நாவல னல்லை யவள்செலுமே.

270
பதவுரை :-மினார் - பாங்கியர்களே, நீர் சோர் நெடு முகிலாம் கார் சோர - நீரை ஒழுக்குகின்ற நெடிய முகில் எனப்படும் காரானது தடித்துக் கீழ் இறங்க, கார் நன்மழை சோருமாறு இல் கடத்து - கார் காலத்துக்குரிய நல்ல மழை பொழியும் தன்மை இல்லாத பாலை நிலத்தினுக்கு, நாவலன் நல்லை அவள் - நாவலர் பிரானது நல்லூருக்கு உரியவளாய என் மகள், வார் சோர நன் முலை ஊட்டி வளர்த்தவள் - மார்புக் கச்சை விலக்கி முலை ஊட்டி வளர்த்த தாய், நீர் சோர் அ கண்களில் நீர் சோர சோர - கருணைக் கண்ணீர் மிகும் அத்தகைய தன் கண்களில் அவலக் கண்ணிர் பெருக்குமாறு சோர்வடைய, அகத்தார் சோர - குடும்பத்தில் உள்ளார் கவலை உற விட்டு, செலுமே - செல்கின்றனளே.
(கு.உ) :-மினார் - விளி. மின்னல் போல்வார் மினார். நல்லையவள் - நல்லையாள். வார் - பெண்களின் மார்புக் கச்சு. நீர் (முதல்) - கருணை நீர், நீர் (இரண்டாவது) அவலக் கண்ணிர். கருணைக் கண்ணிர் சோர்தலன்றி வேறொன்றும் அறியாத தன் கண்களில் அவலக் கண்ணிர் சோர என்றது தான் என்றும் அறியாக் கொடுமை இது என்றவாறாம். அவள் செலுமே - அவள் செல்வதற்கு இசைந்தாள் ஆயிற்றே என்றவாறுமாம். சோர என்ற சொல் பின்பின்னும் பயின்றமை சொற்பின்வரு நிலை அணியாம்.
நற்றாய் அயலவர் தம்மொடு புலம்பல் (இது வெளிப்படை)
370, இப்பாவி பெற்ற கொடியொளிர் தாமரை யேர்மலரத் தப்பாவி யோடு வளர்த்தா டளரத் தரைவனசத் தைப்பாவி வெய்யோ னுடனகன் றானலை நாவலன்றெல் வொப்பாவி தென்னயற் பெற்றவரே மன முற்றெரிமே.
பதவுரை :-அயல் பெற்றவரே - என் அயலாராகிய பெற்றோர்களே, இ பாவி பெற்ற கொடி - இப் பாவியாகிய நான் பெற்ற கொடி போல்வாளாம் மகள், தாமரை மலர் ஏர் அத்த பாவியோடு - செந்தாமரை மலரை ஒத்த கைகளை உடைய பாவியோடு, வளர்த்தாள் தளர - வளர்த்து எடுத்தவளாய செவிலி தளர்ச்சி அடைய, தனது வனசத்தை (தரை) பாவி - தனது நிலத் தாமரையான பாதங்களை நிலத்தில் பரப்பி, வெய்யோனுடன் - தன் பிரியத்துக்குரிய காதலனுடனே, நல்லை நாவலன் தெவ் ஒப்பா அகன்றாள் - நல்லூர் நாதனாகிய நாவலர் பிரானது பகைவர் போவது போலப் போயுள்ளாள், இது மனம் உற்று எரிம் - இது என் மனத்தில் பற்றி எரியும். (வேதனையாம்)

Page 146
27
(கு.உ) :-பெற்றவர் - பெற்றார். பெற்றாரே அறிவர் பிள்ளை அருமை என்னும் நயம் பற்றியதோர் விளி இதுவாம். கொடி, தரை, வசனம் உருவகங்கள், தரை வனசம் - நிலத்தாழரை; றோசா. இது இலக்கியத்தில் புதியன புகுதலாக ஏற்கப்படும். வனசத்தைப் பாவி - வனசத்தைப் பரப்பி. அத்தப் பாவியோடு வளர்த்தாள் தளர 4 செவிலி, தூக்கி வளர்த்தவள் 6i தளரத் தூக்கிய கைக்கும் உரித்தாக்கப்பட்டமை நயமாகும். வெம்மை - விருப்பம். ஆதலின் வெய்யோன் பிரியன் ஆகிய காதலனுக்கும் ஆயிற்று. எரிம் - ஈற்றுயிர் மெய் கெட்ட செய்யுமென் முற்று. இதுவும் சொற் பின் வருநிலை.
நற்றாய் தலைமகள் பயிலிடந் தம்மொடு புலம்பல்
நற்றாய் தலைவி பழகி விளையாடுமிடங்களோடு நொந்து கூறல்,
371. தேன்சோர் பொழிலே சுனையே யழகுறச் செய்தமைத்த வான்சோர் வரையே மணியூச லாடு மலர்க்கொடியே நான்சோர் வதுநேரக் கிடாக்கொடி யாளெவ ணண்ணினஞட் டான்சோர் விலான்புலம் வாட்டரி நாவலன் றண்வரைக்கே.
பதவுரை :-தேன் சோர் பொழிலே - தேன் பிலிற்றுகின்ற சோலையே, சுனையை - நீர்நிலையே, அழகுற செய்து அமைத்த வான் சோர் வரையே - அழகு படச் செய்து அமைத்தாற் போன்று ஆகாயத்தை அளாவி நிற்கும் மலையே, மணி ஊசல் ஆடு மலர் கொடியே - அழகாக ஏறியிருந்து ஊஞ்சல் ஆடத் தக்கதாகத் திரண்டு அமைந்த பூங்கொடியே, நான் சோர்வது நோக்கிடா கொடியாள் - நான் சோர்வு உறுவதைக் காணாத நிலையில் இருக்கும் கொடியாளாம் என் மகள், உள் தான் சோர்வு இலான் புலம் வாட்டு அரி நாவலன் தண் வரைக்கு - அகக் குற்றமாகிய "தான்” எனும் முனைப்புச் சோராமையில் தவறு இழைக்கும் அற்பர்கள் அறிவுத்திமிரைக் கெடுக்கும் பகைவனான நாவலர் பெருமானது குளிர்ச்சியான மலையிடத்து, எவன் நண்ணினள் - எங்கு போய்ச் சேர்ந்துள்ளாள்?
(கு.உ) :-சோலை, சுனை, வரை, மலர்க்கொடி என்பன தலைவியின் முன்னைய பயிலிடங்கள். மலர்க் கொடிகள் தம்மிடமாகப் பல்கிப் பெருகிப் பல கொடிகள் ஒன்றிணைந்து ஊஞ்சற் கயிறுகள் போல் திரண்டு மரக் கொம்பர்களில் சுற்றிக் கீழும் வளைந்து ஊஞ்சல்களாகக் காணும் காட்சி பெருங் காடுகளுக்கு உரியதாம். தாய் உற்ற துயரின் தாக்க மிகுதி தோன்ற நின்றது கொடியாள் எனும் பெயர். தான் சோர்விலான்

272
அகங்காரம் தணியாதவன் எனும் பொருளில் நின்றது. புலம் - அறிவு: அரி - பகைவன்; அகந்தை மிக்கு எழும் அறிவுக்குப் பகைவன் நாவலன் என அவர் பண்பு தோன்றப் புலம் வாட்டரி என்றார்.
நிமித்தம் போற்றல்
(நற்றாய்) சகுனப் புள்ளைத் துதித்தல்.
372. மன்கொடி மேழி யுடைநா வலனார் மனுநலைமை
யின்கொடி யேகொடி யேனளி கொம்பர சேய்ந்துவர வெண்கொடி யேன்கரை யாது கரையி லினியவனந் தின்கொடி யேயென மைத்தடி யோடுனைத் தீற்றுவனே.
பதவுரை :-மன் மேழி கொடி உடை நாவலனார் மனும் நலை - பெருமைக்குரிய கலப்பைக் கொடி தாங்கும் நாவலர்பிரான் வாழும் நல்லூரில்; மை இன் கொடியே - கரு நிறம் உள்ள இனிய காகமே, கொடியேன் அளி கொம்பு - கொடியவளான யான் பெற்ற பூங்கொம்பை ஒத்தவள், அரசு ஏய்ந்து வர என் கொடியேன் கரையாது -தலைவனோடு பொருந்தி மீண்டு வருமாறு கருதும் கொடியவளாகிய யான் புலம்பாது இருக்கும் வண்ணம், (நி) கரையில் - நீ ஒரு முறை கரைவாய் (கூப்பிடு) ஆயின், மை தடியோடு இனிய அனம் - ஆட்டிறைச்சியோடு கூடிய இனிய சோற்றை, கொடியே தின் என உனை தீற்றுவன் - காகமே உண்க என உனக்குத் திற்றுவேன்.
(கு.உ) :-மேழி - கலப்பை; மேழிக்கொடி நாவலர் பிரான் வேளாள குல திலகம் எனல் குறித்தது. பிரிந்து அகன்று தூரத்துள்ளார் திரும்பி வருதல் முன் அறிவிக்கும் நிமித்தமானபடி கரைதல் அதன் பண்பாதலின் இன் கொடி என்றார். கரையின் - நிமித்தம் தோன்றக் கரையின் என்றவாறு. மை - ஆட்டுக் கடா, தடி - இறைச்சி, தீற்றுவன் உண்பிப்பேன் என்பது ul fisips).
சுரந் தணிவித்தல். (நற்றாய்) சுரத்தின் வெம்மை குளிருமாறு கூறுதல்.
373 என்மக ளுற்றா விராமே சுரமவ ளெய்துவழி
யுன்மக வெப்ப மகன்று மழைபெய வோக்கியரு ளின்னக நாவல னல்லூர்ப் பணையாக் கெனவிரப்பேன் நின்மனை யீன்ற மகளே யதுவரி நின்கடனே.

Page 147
273
பதவுரை :- என் மகள் இராமே சுரம் உற்றாள் - எனது மகள் இங்கு இராமல் பாலை வனம் சென்றுள்ளாள், அவள் எய்தும் வழி - அவள் செல்லும் வழியெல்லாம், உன் மக வெப்பம் அகன்று - கருதத்தகும் பெரும் வெப்பம் நீங்கி, மழை பெய ஒக்கி - மழை பெய்யுமாறு ஊக்கி, இன் அருள் அக நாவலன் நல்லூர் பணை ஆக்கு என இரப்பேன் - இனிய அருள் உள்ளம் வாய்ந்த நாவலர் பிரானது நல்லூர் மருத நிலம் போல ஆக்குவாயாக என இரக்கின்றேன், அரி - சூரியனே, நின் மனை
ஈன்ற மகளே - உனது மனைவியாகிய தாமரை ஈன்ற மகளே தலைவியாவள், அது நின் கடனே - அதைப் பொழிவித்தல் நின் கடனேயாம்.
(கு.உ) :- அரி - விளி, மக - மகா, பணை - பண்ணை;
மருதநிலம், மனை - மனைவி,
தலைமகள் மென்மைத் தன்மைக்கிரங்கல்.
நற்றாய் தலைவியின் மெல்லிய இயல்பாகிய தன்மைக்கு இரங்கல்.
374 அனிச்சமு மன்ன மதின்று வியுமிதித் தஞ்சிமிகப்
பணிச்சலை மெல்லடி பாலைக் கதிர்காய் பரலின்வைத்தே யினிச்சதி யோடியல் கற்குங் கொலோவே லுடன் குறமின் கனிச்சுர மின்வை பிழைகடி நாவலன் காமயிலே.
பதவுரை :-வேலுடன் குறமின் - உற்சவ மூர்த்தியாகிய வேலுடன் குறமகளாகிய வள்ளியையும், சுரமின் - தேவமகளாகிய தெய்வ யானையையும், கணி - வேலின் சக்திகளாகக் கருதி, வை பிழை கடி நாவலன் கா மயில் - உற்சவத்தில் எழுந்தருள வைக்கும் தவற்றைக் கண்டித்து உரைத்த நாவலர் பிரானது சோலையில் உலாவும் மயிலான என் மகள், அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மிதித்து - அனிச்சம் பூவிலும் அன்னத்தின் இறகிலும் கால்பட நேர்ந்ததாலே, மிக அஞ்சி பனிச்சு அலை மெல் அடி - மிகப் பயந்து நடுங்கித் தளர்கின்ற அளவுக்கு மென்மையான தன் பாதங்கள், பாலை கதிர் காய் பரலின் மிதித்து - பாலை நிலத்துக்குரிய கிரணங்களால் வெதுப்பப் பெற்ற பரற்கற்களில் மிதித்தலால், (இனி) சதியொடு இயல் கற்கும் கொல் - தாளத்துக்கு ஒப்பச் சதி பட அடி பெயர்த்து வைத்தலாகிய நடனவியல் கற்பவள் ஆவாளோ?

274
(கு.உ) :- வேலுடன் - கடி நாவலன் என்கிற பகுதி நல்லூர்க் கந்தசாமி கோயில் உற்சவ நடைமுறையில் பயிலும் தவறான வழக்கம் ஒன்றையும் அது நாவலர் கண்டனத்துக் குள்ளானமையும் குறிக்கின்றது. கண்டன விபரம் நாவலர் பிரபந்தத்திரட்டிற் காண்க. 'தூவி - அன்னத்தின் உள் இறகு, பனிச்சு - பனித்து - நடுங்கி, 'த' வுக்குச் 'ச' போலியா யிற்று. சுரர் - தேவர்; வை - பிழை. கடி நாவலன் - வினைத் தொகை. மின், மயில் - உவமையாகு பெயர்கள்.
இளமைத் தன்மைக்குள மெலிந்திரங்கல்.
நற்றாய் தலைவியின் இளமைத் தன்மைக்கு மனம் மெலிந்து இரங்கிக் கூறல்,
375. வேங்கை மலரேய் துறுகலை வேங்கைப் பறழெனநெஞ்
சேங்கி யயர்ந்தெமை யோடித் தழுவு மிளையமுலை தாங்கி மடுத்திடு நாவல னல்லைத் தருபலகைக் கோங்கு கதிர்செறி பாலை நம்பாலை யுறுமஞரே.
பதவுரை :- வேங்கை மலர் ஏய் துறு கலை - வேங்கை மரத்தின் பூக்கள் பொருந்திய கருங்கல் துண்டத்தை, வேங்கை பறழ் என நெஞ்சு ஏங்கி அயர்ந்து - புலிக்குட்டி எனக் கருதி மனம் ஏங்கி மயக்கம் உற்று, ஒடி எமை தழுவும் இளைய முலை நம் ப்ாலை - ஓடோடி வந்து எம்மைத் தழுவும் இயல்பினளும் இளம் முலையினஞமான நம் மகள், நல்லை நாவலன் தரு பலகைக்கு ஓங்கு கதிர் செறி பாலை - நல்லூரின் கண் நாவலர் பிரான் கொடைத் தொழில் கருதிப் பல தடவைகள் நீட்டும் கை நீளங்களின் தொகைக்கு ஒப்பாக அளவிறந்த சூரியன் கதிர்கள் நீண்டு செறிந்து கொண்டிருக்கும் பாலை நிலத்தில், உறும் அஞர் தாங்கி மடுத்திடும் - மிகப்பெருந் துயரைத் தாங்கி அதில் அமிழ்ந்திடும் நிலையளானாள்.
(கு.உ) :- துறுகல் - செறிவான கல் துண்டம். வேங்கையின் மஞ்சள் நிற மலர்கள் கருங்கற் துண்டத்தில் வரிசைப்பட உதிர்ந்து கிடக்கும் தோற்றம் புலிக்குட்டியை நினைவுறுத்தும் என்றவாறு தருபலகை - அவர் மேற்கொள்ளும் கொடை வகை பலவாகலின் ஒரு கையைப் பல கைகளாம் என்க. அஞர் - துயரம் அவள் இளமை நிலைக்குப் பொருந்தாத் துயரம் ஆதல் இரங்கற் காரணம் ஆயிற்று. இளம் முலை - அன்மொழித் தொகை.

Page 148
275
அச்சத் தன்மைக்கு அச்சமுற்றிரங்கல்
நற்றாய் தலைவியது வெருவுந் தன்மையை நினைந்து தான் அச்சமுற்று இரங்குதல்
376. பூனை யுறுமுதல் கேட்டே யலறிப் புடைநடுங்கி
மானை யனைய ளரிமானைக் காணின் மதிமயங்கிக் கானை யனைபொழி னாவல னல்லையிற் கண்ணியபூ மானை முனஞ்சென் றுயிர்மெலி யுந்நம் மயிலதுவே.
பதவுரை :- பூனை உறுமுதல் கேட்டே அலறி புடை நடுங்கி மானை அனையள் மயிலத - பூனையின் உறுமல் கேட்டாலே அலறித் துடிதுடித்த வண்ணம் மான் விழிகள் போல் கண்கள் மருள வந்து அணையும் நம் மகளாகிய அவ்விளம் மயிலானது, அரி மானை காணின் - பாலை நிலத்துச் சிங்கத்தைக் காண நேர்ந்தால், கான் அணை பொழில் நாவலன் நல்லையில் - வாசனை செறியும் மலர்ச் சோலைகள் உள்ளதும் நாவலர்பிரான் பதியுமாகிய நல்லூர் இடத்தவனாய்க், கண்ணிய
பூமானை முனஞ் சென்று உயிர் மெலியும் - தான் கருதிச் சேர்ந்த காதலன் முன் போய் அணைந்து உயிர் மெலிந்து அவசம் உறுவாள்.
(கு.உ) :- மான் அதன் செயல் மேல் நின்றது. செயல் விழிகள் மருள வந்து ஒதுங்குதல், மயில் - உருவகம் கான் - வாசனை, கண்ணிய - கருதிய, காதலித்த கருதலின் திரிபே காதல் என்பர், பூமான் - காதலன், தலைவன், உயிர்மெலிதல் - அவசமுறல்
கண்டோரிரங்கல்
(இது வெளிப்படை) கண்டோர் - மாதராரென உணர்க
377. பாங்கி புலம்பிடக் கோடாய் பரியப் பசுங்கிளைநொந்
தேங்கி யனையனை யென்றே புலம்ப வியலறிஞர்த்
தாங்கி யறுமுக னல்லை யுறாரெனத் தானிடி கேட் டேங்கு மராவென வென்படு மென்படு மீன்றவளே.

276
பதவுரை :- பாங்கி புலம்பிட - தோழி புலம்ப , கோடாய் பரிவுற - செவிலித் தாய் வருத்தம் அடைய, பசும் கிளை நொந்து ஏங்கி அனை அனை என்றே புலம்ப - பசுமையான சுற்றம், வருந்தி மனம் ஏங்கி அன்னே அன்னே எனப் புலம்ப,வியல் அறிஞர் தாங்கி அறுமுகன் நல்லை உறார் என - விரிந்த அறிவாளர்களை ஆதரித்துத் தாங்குபவனும் ஆறுமுகன் எனும் நாமத்தினனுமான அப்பெருமானது நல்லூரை அணுகாதார் போல, இடி கேட்டு ஏங்கும் அரா என - இடி ஒலி கேட்டு ஏங்குகின்ற சர்ப்பம் போலவும், ஈன்றவள் என் படும் என் படும் - பெற்று எடுத்த தாய் என்னென்ன துயரம் எல்லாம் பட்டுத் தரிப்பாளோ ?
(கு.உ) :- கோடாய் - கொள் + தாய், ஏற்று வளர்த்தவள், செவிலி. பசுங்கிளை - பசுமை அன்பின் மேற்று, தாங்கி , 'இ கருத்தாப் பொருள் விகுதி , பிறை சூடி என்பதிற் போல. நல்லையை அணுகாதார். இன்புறற் கேது இலர் என்றவாறு, என் படும் என்படும் என்ற அடுக்கு தாங்கொணாத் துயர் மிகவும் அனுபவித்தல் குறித்தது.
செவிலி ஆற்றாத் தாயைத் தேற்றல்
செவிலி ஆற்றாத நற்றாயைத் தேறுமாறு கூறுதல்
378. மாலோ மிகக்குழை கொண்டழ லன்னை வடிதமிழ்நூற் பாலோ பருகு மறுமுக னல்லூர்ப் பசுங்கொடியை வேலோ டரசைக் குழையுற மீட்டிவண் மேவுவனம் மாலோ ரடியினும் வாயினுட் வைத்ததிம் மண்ணுலகே.
பதவுரை :- அன்னை மால் மிக குழை கொண்டு அழல் - அன்னையோ மயக்கம் மேலிடுமளவு வருந்தி அழாதொழிக, வடி தமிழ் நூல் பால் பருகும் அறுமுகன் நல்லூர் பசும் கொடியை - வடிக்கப்பட்ட செந்தமிழ் நூற் பயனாகிய பால் பருகுதலை விநோதமாக உடைய ஆறுமுகநாவலர் பிரானது நல்லூராளாம் பசிய கொடி போலும் நின் மகளை, வேல் அரசோடு உற மீட்டு குழை உற இவண் மேவுவன் - வேல் தாங்கும் தலைவனாகிய காதலனோடு கூடத் தேடி மீட்டுக் கொண்டு அன்பு பொருந்த இங்கு மீள்வேன், நம் மால் இ மண்ணுலகு ஓர் அடியினும் வாயினும் வைத்தது - நமது திருமால் ஒரு முறை இம் மண்ணுலகத்தைத் தன் ஓர் அடிக்குள்ளும் மற்றொரு முற்ை தன் வாயினுள்ளும் வைக்கப் பெற்றும் மீண்டும் மீண்டும் இங்கு உளதாயிருக்கின்றது என்பதை அறிந்து கொள்வாயாக.

Page 149
7ך2
(கு.உ):- அடியில் வைத்தது - ஓர் அடியால் அளந்தது. வாயில் வைத்தது - விழுங்கியது. அத்தகைமை உற்ற மண்ணுலகே நின் கண் காண நின் முன் உளதாம் வகை மீட்கப்பட்டதாக அயலில் உள்ள பாலை நிலம் உற்றோர் மீட்கப்படுதல் பற்றிக் கவலையுறற்கு இடமில்லை என்பது குறிப்பெச்சம், மால் - மயக்கம் ‘ஓ’ இரண்டும் அசைநிலை, குழை - குழைதல், சோர்தல் குழை (பின்னது) அன்பால் கணிதல், வைத்தது - செயப்படுபொருளைச் செய்தது போற் கிளக்கும் நயம்,
ஆற்றிடை முக்கோற் பகவரை வினாதல்
379. எண்மனத் தேழ்பிறப் பாறறுத் தைந்தொழி நாலுமுக்கோல்
நண்ணிரு கையொரு வற்பணி வீர்கா ணவசுவையுங் கண்ணிடு நாவல னல்லையொர் வஞ்சியிக் கானகத்தே யொண்ணிழல் வேலர சைப்பின்னி யாடி யுலவியதே.
பதவுரை :- எண் மனத்து - சிந்திக்கின்ற மனத்து எழுகின்ற , ஆறு ஏழ் பிறப்பு அறுத்து - காமம் முதலாய அறுவகைக் குற்றங் களையும் அவை பொருட்டாக அமையவல்ல எழுவகைப் பிறப்புத் தொடர்களை எல்லாம் செபம், தவம், தியானம் என்று இன்ன உயர் பண்புகளால் அறுத்து நீக்கி , ஐந்தொழில் - படைத்தல் முதலாய ஐந் தொழில்களை உடையவரும், நாலு முக்கோல் நண்ணிரு கை ஒருவன் பணிவீர்காள் - விளங்குகின்ற முத்தலை வேலினைத் தாங்கிய வலிமை மிக்க கையினை உடையவருமாகிய ஒப்பற்ற சிவபிரானைப் பணிகின்ற ( lyst LD6007 ) உத்தமர்களே , நவசுவையும் கண்ணிடு நாவலன் நல்லை - ஒன்பான் சுவைகளும் பொருந்தப் பேசவும் எழுதவும் வல்ல நாவலர் பிரானது நல்லைப் பதியிலே , ஓர் வஞ்சி - ஒப்பற்ற வஞ்சிக்கொடி (போன்ற இடையினளான ஒரு பெண் ) , இ கானகத்தே - இச் சோலையின் கண்ணே , ஒள் நிழல் வேல் அரசை பின்னி ஆடி உலாவியது - தம்மைச் சார்ந்தார்க்கு மேலான நிழலைத் தருகின்ற வேலும் அரசுமாகிய மரங்களிற் சுற்றி ( வேலைக் கரத்தில் தாங்கிய தலைவரை அணைந்து ) ஆடி உலவியது - மகிழ்வோடும் ஆடிய வண்ணம் விளங்குவதைக் கண்டிரோ.
(கு.உ):- வஞ்சி என்பது வஞ்சிக் கொடியினையும் உவமையாகு பெயரால் தலைவியையும் உணர்த்திற்று. அவ்வாறே வேல் என்ற தொடர் வேல் அரசு ஆக்கிய தருக்களையும் வேற்படையைத் தாங்கிய இளவரசு போல்வானாகிய தலைவனையும் உணர்த்தி நின்றது. கண்டிரோ என ஒரு சொல் கூட்டிப் பொருள் முடிக்க, நாலுதல் - தொங்குதல் இங்கு விளங்குதல் என்னும் பொருளது.

278
மிக்கோ ரேதுக் காட்டல்
செவிலி வினாயதற்கு மிக்கோர் ஈது உலக இயல்பு என்று காரணம் எடுத்துக் காட்டல்
380. காலுற வோங்கிடு நாவல னல்லூர்க் கணிபொழிற்பால்
வேலுறு மத்தியை மேவியும் வஞ்சி மிளிர்தலியல் மாலுறு மாறென் மலர்த்தே னதைவிட்டு மாவையுறும் பாலுறு தீந்தமி பூழின்பொருள் பார்த்திடிற் பண்பதுவே
பதவுரை :- நாவலன் நல்லூர் - நாவலர் பிரானது நல்லூரில், கால் உற ஓங்கிடும் கனி பொழில் பால் - பூவின் காம்பு கொண்டு எழுந்து உயரும் கனி உதவும் சோலையிடத்து, வேல் உறும் அத்தியை மேவி வஞ்சியும் வளர்தல் இயல் - வேர் கொண்ட அத்திமரத்தைப் பொருந்தி வஞ்சிக் கொடியும் வளர்தல் இயல்பே, மால் உறுமாறு என் - மயக்கம் உறுவதற்கு எது என்னோ, மலர் தேன் அதை விட்டுமா வையுறும் - மலரின் கண்ணதான தேன் மலரை விட்டுமா தங்கும், பால் உறு தீம் தமிழின் பொருள் பார்த்திடின் - பால் போலும் இனிய தமிழின் பொருட் கூறாய அகத்திணை இயல்பு எனப் பார்த்தால், இது பண்பே - இது பண்பேயாம்.
(கு.உ) :- வேருறு எதுகை நோக்கி வேலுறு ஆயது, அதை - மலரை.
வை - தங்கு. இது - பெண் ஒருத்தி தன் காதலனைச் சார்ந்திருத்தல் 'உம்' உம் "ஏ" யும் மாற்றிக் கூட்டப்பட்டன.
செவிலி எயிற்றியொடு புலம்பல்
செவிலி பாலை நிலத்துப் பெண்ணொடு புலம்பிக் கூறல்
381. பருகு சிவமத நூற்கட னாவலன் பாங்கணையார்
கருகு சுரத்தொர் பிடியிரு கொம்பு கலந்தோரரி யருகு நிழலி லசைந்தசைந் தானுற லானதுவோ பெருகு மலைப்புலிப் பற்றாலி பெய்யெயி னர்பிணையே

Page 150
279
பதவுரை :- பெருகு மலை புலி பல் தாலி பெம் எயினர் பிணையே - பரந்த மலைக் குகைக்கண் வாழும் புலியினது பல்லையே தாலியாகக் கோத்து அணியும் பாலை நிலப் பெண்ணே, சிவமது நூல் கடல் பருகும் நாவலன் பாங்கு அணையார் - சைவசமய நூற் கடலைப் பருகும் நாவலர் பிரான் பக்கம் அணைதற்கு அஞ்சும் அவ்ன் பகைவர், கருகும் சுரத்து - சென்று சேர்ந்து கருகுதற்கு இடமாய பாலை நிலத்தில் இரு கொம்பு ஓர் பிடி அரி கலந்து - இரு கொம்புகள் உள்ள ஒரு பெண் யானை சிங்கத்தோடு கூடி, அருகும் நிழலில் அசைந்து அசைந்து ஆறு உறல் ஆனதுவோ - அருகித் தோன்றும் நிழல் சார் பகுதிகளில் அசைந்து அசைந்து நடையிட்டுக் கொண்டு வழிச் சென்றமை கண்டாயா ?
(கு.உ) - எயினர் பிணை - எயிற்றி. பிணை - பிணாவின் திரிபு. கொம்பு , களிறு, அரி மூன்றும் உருவகங்கள். தனங்கள் அரும்பும் பருவத்தினள் ஆதலின் நீண்டு வளராக் கொம்புகள் உள்ள பிடி தலைவிக்கு உருவகமாயிற்று. இருகொம்பு - இரு தனங்கள்.
குரவொடு புலம்பல்
(இது வெளிப்படை) குரவு - குராமரம்
382. அம்மான் மருவா னடிதன் றலையிடை யாக்கிடுநம்
பெம்மா னறுமுக னல்லூர் மறுகப் பெரிதுகளித் தெம்மான் புணர்ந்தொரு காளையை யேக நகைத்துநின்றா யம்மான் றடாய்குர நின்பாவை யோடுறை வாயலர்ந்தே
பதவுரை :- குர - குராமரமே, அம் மால் மருவான் அடி தன் தலை இடை ஆக்கிடும் நம் பெம்மான் - பிரசித்தி பெற்ற திருமாலினால் அணுகுதற்கு அரியோனாகிய சிவனது திருவடிகளைத் தலைமேற்கொண்டு போற்றும் எம் தலைவனாம், அறுமுகன் நல்லூர் மறுக - ஆறுமுக நாவலர் பிரானது ஊராம் நல்லூர் கலக்கமுற விட்டு, எம் மான் ஒரு காளையை புணர்ந்து பெரிதும் களித்து ஏக - எமது மான் விழியினளாய மகள் காளைப் பருவத்தினை உடைய தலைவனைச் சேர்ந்து வாழும் பெரும் களிப்பினளாய்ச் செல்ல, அ மான் தடாய் நின்றாய் - அந்த மான் போலும் தலைவியைத் தடுக்காது சிரித்தபடியே நின்றாய், நின் பாவையொடு அலர்ந்தே உறைவாய் - பாவை போலும் நின் பூக்களோடு மலர்ந்தபடி இருப்பாயாக.

280
(கு.உ) :- குராமரம் பாலைக்கு உரியது. அதன் பூ பாவை வடிவினது ஆதல் பற்றிப் பாவை எனப்பருதல் மரபு. பாவை உள்ளவளாய் இருந்தும் என் பாவை விஷயத்தில் கவலை கொள்ளாது இருக்கின்றாய்.
சுவடு கண்டிரங்கல்
செவிலி நிலத்தின் மேல் கால் அழுந்திய குறியைக் கண்டு இரங்கிக் கூறல்
383. நாலடி கண்டனன் முன்னினி வள்ளுவர் நாட்டமுற்றேன் ஆலடி யாகம நால்வர்க் குரைவளை யாபதியின் நாலடி தோய்நா வலனலை யேழை நறுங்தொடைறோண் மேலடி வைப்பப் புகுங்கொல மூவர் வியனிலைக்கே
பதவுரை :- முன் நாலடி கண்டனன் - முதலில் அவர்கள் சென்ற பாதையில் நான்கு அடிச்சுவடுகள் கண்டேன், இனி வள்ளுவர் நாட்டம் உற்றேன் - இப்பொழுது வள்ளுவரின் திருக்குறள் அடி போல இரண்டு அடிகள் மட்டும் காண வல்லவள் ஆகின்றேன், வளை ஆல் அடி நால்வர்க்கு ஆகமம் உரை - வளைந்து நிழல் தரும் கல்லால விருட்சத்தின் அடியில் இருவழிகள் நால்வர்க்கு ஆகமப் பொருள் உரைத்தருளும், ஆ பதியின் நால் அடி தோய் நாவலன் நல்லை - ஆன்மாக்களுக்கு நாயகனாகிய சிவன் அருளிய நாற்பாதங்களில் தோய்ந்த நாவலர் பிரானது நல்லூரிடத்தாளான, நறும் தொடை ஏழை - நறிய மலர் மாலை அணிந்த என்மகள், அ மூவர் வியன் நிலைக்கு - அப்பாலை நிலத்தின் கண், அடி தோள் மேல் வைப்ப புகும் கொல் - காலைத் தோள் மேல் வைத்துச் சென்றிருப்பாளோ ?
(கு.உ) :- இச்செய்யுளில் நாமாந்தரிதை. என்ற அலங்கார அமைப்பு உண்டு பெயர்களை அடுக்கிக் கூறுகையில் வேறு பொருள் தோன்ற வைத்தல் நாமாந்தரிதை நாமத்துள் மறைக்கப்பட்ட பொருள் உள்ளது எனப்படும். நாலடி, வள்ளுவர் வளையாபதி என்பன அவ்வகையின. நாலடி - நாலடியார் வள்ளுவர் - அவர் நூலான திருக்குறள். வளையாபதி ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. நாலடி - நாற்பாதம் - சரியை, கிரியை,யோகம்,ஞானம் வள்ளுவர் கருத்தா ஆகுபெயராய்க் குறளுக்காம். நாலடியார்ப் பெயரில் அந்தரிதையானது காதலன் அடி இரண்டும் காதலி அடி இரண்டும் ஆன நான்கு, வள்ளுவரில் மறைத்து வைக்கப்பட்டது.

Page 151
281
ஈரடி, முதலில் நான்கு சுவடுகள் கண்ட செவிலி சற்றுத் தூரம் சென்று இரண்டு சுவடுகள் மட்டும் காண்கிறாள். அது பற்றி அவளுக்கு எழுந்த எண்ணம் மற்றைய இரு சுவடுகளுக்கான காதலியைத் தன் மேல் வைத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதாம், மிதித்தற்கு அரிய உஷ்ண நிலத்தில் தவித்துச் செல்லுதலை, காலைத் தோளில் வைத்துச் செல்லுதல் எனக் கூறும். வழக்குப் பற்றியது இது என்க.
கலந்துடன் வருவார்க் கண்டு வினாதல்
உடன் போக்குப் போய தலைவனும் தலைவியும் போல அன்பு கலந்து ஆற்றிடை வருவார் இருவரைக் கண்டு செவிலி கேட்டல்,
384. ஐவா யரவனம் மாவென நல்லையி லாறுமுகன்
நெய்வா ரலர்பெய் யிருகொடி நீடிய வேன்மலி செங் கைவே ளெனவுமைப் போற்கடம் புக்கனர் கண்டனிரோ கைவே லனுமொரு கண்வேலியுந் தம காலடைத்தே
பதவுரை :- ஐ வாய் அரவன் அ மா என - ஐந்து தலைகளை உடைய பாம்பைச் சயனமாகக் கொள்ளும் திருமாலினது அழகிய இலக்குமி எனவும், ஆறுமுகன் நல்லையில் - ஆறுமுகநாவலர் பிரான் பதியாகிய நல்லூரில் உள்ள, அலர் பெய் இரு கொடி - பூக்களால் ஆன மாலை அலங்காரம் உள்ள கொடி போல்வாராய சக்திகள் இருவரையும், நெய் வார் நீடிய வேல் மலி செங்கை வேள் என - நெய் ஒழுகும் நீண்ட வேலாயுதம் பொலியும் சிவந்த கை உடைய முருகன் எனவும் ( கணிக்கும்படியான), கை வேலனும் ஒரு வேல் கண்ணியும் - கையில் வேல் தாங்கியவனும் ஒப்பற்ற வேல் போலும் கண் உள்ளவளுமாக, உமை போல் தம் கால் அடைத்தே கடம் புக்கனர் - நீவிர் இருவரும் சென்றவாறு பாலை நிலம் புகுந்துள்ளனர், கண்டனிரோ - கண்டீர்களா ?
(கு.உ) :- மா - இலக்குமி இருகொடி - வள்ளி, தெய்வயானை அலர் சினையாகுபெயராய் மாலைக்காயிற்று நெய்வார் வேல் என்றது அதன் சர்தித்தன்மை குறித்து உமைப் போல் என்கின்றார் ஆதலின் இருவர் எனல் கூறாராயினார்.

282
அவர் புலம்பறேற்றல்
செவிலி இரங்கிப் புலம்புதலை எதிர் வந்தோர் தேற்றிக் கூறுதல்.
385. வான்காண் டினைகிளி யோப்பிய கன்னி வடிதமிழின் றேன்கா ணகப்பொரு டேற வருளுசெவ் வேளெனநற் கான்கா ணறுமுக நாவலன் காநலை கண்டுதுயர் தான்கா லுறுகுவ ரேன்காண் டுயரல் தகுவதுவே
பதவுரை :- வான் காண் தினை கிளி ஒப்பிய கன்னி - ஆகாயத்தை நோக்கி எழும் தினை மலிந்த புனத்தில் கிளி கடிந்து காத்த கன்னியாகிய வள்ளியும், வடி தமிழின் தேன் காண் அக பொருள் தேற அருளும் செவ்வேள் என - ஆராய்ந்து அமைக்கப் பெற்ற செந்தமிழின் தேன் ஒக்கும் இன் சுவைப் பகுதியாகிய அகப்பொருள் இலக்கணத்தின் பொருள் தெளிவுற உரைதந்தருளிய முருகனும் என ( ഉ_ങtണ് அவ்விருவரும்), துயர் கண்டு - தமது வழி நடை வருத்தம் உணர்ந்து, அறுமுக நாவலன் நலை - ஆறுமுக நாவலர்பிரான் பதியாகிய நல்லூரில் உள்ள, நல் கான் காண் கா கால் உறுகுவர் -நல்ல வனம் போல் அடர்ந்த சோலையினிடத்துத் தங்குவர், காணேன் - போய்க் காண்பாயாக, துயரல் தகுவதுவே - ( அது செய்யாது வீணே ) துயர் உறுதல் தக்கதோ?
(கு.உ) - வடி தமிழ் - குற்றங்குறை அகல வடித்துத் தெளி வாக்கப் பெற்ற தமிழ் , அதாவது ஆராய்ந்து செப்பஞ் செய்யப் பெற்ற தமிழ். 'காண் மூன்றில் முதலது நோக்கல், இரண்டாவதும் மூன்றாவதும் ஒக்கும். காலுறுதல் - தங்குதல். 'ஏன்காண் பின் முன்னாக மாறி நின்றது.
செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல்
செவிலி தன் புதல்வியைக் காணாது துன்பம் மிகுதல்
386. கற்றத னாலாம் பயனடை நாவலன் காய்ந்துரைவே
லுற்றத னாலெரி யுற்றிடு வாதிய ரொட்டவஞர் பெற்றவ ளென்னுயிர் வந்தது வோவெனிற் பேசுவதென் கற்றையங் கோதையைக் காணேன் பெருந்துயர் கைம்மிகுமே.

Page 152
283
பதவுரை :- கற்றதனால் ஆம் பயன் அடை நாவலன் - கற்றதனால் ஆம் பயனை அடைந்து உள்ள நாவலர் பிரானது, காய்ந்து உரை வேல் உற்றதனால் எரி உற்றிடும் வாதியர் ஒட்ட - கோபித்து உரைக்கும் சொல்லம்பு தாக்குதலால் மனம் எரிந்து சாம்பும் நிலையினரான வாதியர் போல, அஞர் பெற்றவள் - மகள் பிரிவால் மனம் பொசுங்கித் துயர் உறும் செவிலி, என் உயிர் வந்ததுவோ எனில் பேசுவது என் - என் உயிர் போல்வாள் மீண்டு விட்டாளோ என என்னை வினாவில் சொல்வது என்ன, கற்றை அம் கோதையை காணேன் துயர் கைம்மிகும் - கற்றையான கூந்தலை உடைய என் மகளை இன்னும் காணப் பெறாதேனாகிய எனது துயர் சசிக்கலாற்றா நிலையது ஆகின்றது.
(கு.உ) - கற்றதனாலாம் பயன் - வாலறிவன் நற்றாள் தொழல் காய்ந்துரை - சினந்து உரைக்கும் வெம் சொல் அதற்கு இரையாவார் வாதியர். அவர் கருத்துக்களுக்கு எதிர்வாதம் தொடுப்போர். பெற்றவள் - இரட்டுறமொழிதல்.
22 மீட்சி
தலைவி கேணகன்றமை செவிலி தாயக்குரைத்தல்
(இது வெளிப்படை)
387. பார்புகழ் நாவலற் கண்டே பதுங்கிடு பார்ப்பனர்செல்
கார்புக கில்லாக் கடமு மலைத்தட முங்குகையு மேர்புகு சோலை யிலைப்புரை யும்மரை யேடதுவு நார்புக நாடிச் சுவடது வேகண்ட னானனையே.
பதவுரை :- அனையே - தாயே, பார் புகழ் நாவலன் கண்டே பதுங்கிடும் பார்ப்பனர் செல் - உலகம் புகழும் நாவலர் பிரான் வரக் கண்ட போதே எதிர் செல அஞ்சி ஒதுங்கும் இயல்பு உள்ள பார்ப்பார்கள் ஒடி ஒளித்தற்கு உரிய, கார் புககில்லா கடமும் - மேகம் புகுதல் அறியாத பாலைவனமும், மலைதடமும் - மலைச்சாரல்களும், குகையும் - மலைக்குகைகளும், ஏர் புகும் சோலை இலை புரையும் - அழகு மிக்க சோலையின் இலை நெஞ்ககமான மறைவிடங்களும், மரை ஏடதுவும் - தாமரைக் காடுகளும், நார் புக நாடி சுவடு அதுவே நான் கண்டன் - அன்பாதரவாகச் சென்று சென்று தேடி அவர்கள் பாதச்சுவடுகளை நான் கண்டுள்ளேன்.

284
(கு.உ) :- கார் - மேகம், கடம் - பாலை , புரை - மறைவிடம்,
மரையேடு - தாமரை இதழ், கண்டன் - அன்விகுதி பெற்ற தன்மையொருமை வினைமுற்று.
தலைவன் தம்மூர் சார்ந்தமை சாற்றல்
தலைவன் மீட்சியில் தலைவியது ஊரைத் தாம் சார்ந்தமை தலைவிக்குச் சாற்றல்
388. கோயிற் குருமார் பிழைகடி நாவலக் கோளரிவெற்
பேயிற் றிதுதழ லேந்தினை காபுன மேயிதுபார் வாயிற் பவளமுத் தாக முதலின் மருவிடமீ தேயிற் புறக்குறி யீதே பதிபா ரினியனமே.
பதவுரை :- அன்னமே - அன்னம் போல்பவளே, கோயில் குருமார் பிழை கடி நாவல கோளரி வெற்பே இது - கோயிற் குருமார் செய்யும் தவறுகளைக் கடிந்து உரைக்கும் நாவலர் பிரானாகிய வலிமை உடைய சிங்கத்தின் மலையே இந்த மலை, தழல் ஏந்து தினை கா புனம் இது - கவண் தாங்கிச் செந்தினை காத்து நீ தங்கிய புனம் இதுவே காண்பாயாக, முதலின் பவளம் வாயில் முத்தாக மருவு இடம் இது- முதன் முதலாக உனது பவளம் போன்ற வாய் இதழ்களில் என் முத்தம் பொருந்தப் பெற்ற இடம் இதுவேயாகும். பதி இ புற குறி ஈதே பார் - உனது ஊரில் உனது வீட்டுச் சூழ்நிலை பகற்குறி இதுவாம், பார்த்துக் கொள்.
(கு.உ) - பவளம் முத்தாக - பவளத்தில் முத்தம் ஆக முத்து - முத்தம் , வாய் முத்தம்.
தலைவி முன் செல்குவார் தம்முடன் தான் வரல் பாங்கியர்க் குணர்த்தி விடுத்தல்
389. ஊஞ்சற் பொருளுள மாக்கவர் கள்வ னுடன்புகுந்து
நாஞ்சிற் படையுடை நாவல னுரிவ ணாந்திரும்பல்
வேஞ்சுரம் விட்டு மகிழவெ னாயம் விளம்புதிராற் பூஞ்சிலம் பார்சிலம் பாரடி முன்செலும் பூவையரே.

Page 153
285
பதவுரை :- முன்செலும் பூஞ் சிலம்பு சிலம்பு ஆர் அடி பூவையரே - முன் செல்கின்ற அழகிய சிலம்புகள் ஒலிக்கின்ற அழகிய பாதங்களை உடைய மகளிரே, உளம் ஊஞ்சல் பொருளாக கவர் கள்வன் உடன் புகுந்து - எனது உள்ளம் ஊஞ்சலில் இட்ட பொருள் போன்று அங்கும் இங்கும் அசைய என்னைக் கவர்ந்த கள்வனாகிய காதலனுடன் உடன் போக்கில் ஈடுபட்டு, வெம் சுரம் விட்டு - வெம்மை மிக்க பாலைநிலம் புகுந்து நீங்கி, நாஞ்சில் படை உடை நாவலன் ஊள் இவண் நாம் திரும்பல் - கலப்பைப் படைக்கு உரியவனான நாவலர் பிரானது ஊரான இவ்விடம் நாம் மீண்டு வந்திருக்கும் செய்தியை, என் ஆயம் மகிழ விளம்புதிர் - எனது தோழியர் மகிழுமாறு தெரிவியுங்கள்
(கு.உ) :- உளம் ஊசற் பொருளாக - நெஞ்சம் ஊசலாடும் படியாக, கவர் கள்வன் - கவர்ந்தான் ஆதலினால் கள்வன். நாம் திரும்பல் என்றார் தலைவனுடன் திரும்பியமை தோன்ற சிலம்பு இரண்டில் பின்னையது ஒலி. 'சங்கஞ் சிலம்ப - திருவெம்பாவை. "சீரார் திருவடித் திண் சிலம்பு சிலம்பொலிக்கே - திருவாசகம்.
முன் சென்றோர் பாங்கியர்க் குனர்த்தல்
(இது வெளிப்படை)
390. தாசிய ராட்டு முதலிய காட்டுத் தளிதவிரத் தேசிய லேய்பிர சந்திக மும்பிர சங்கசிங்க மாசிய லாநா வலனலை யேய்வாண் மணந்தசுர மாசென வாசிலன் பால்வரு மில்ல மலங்கரிமே.
பதவுரை :- தாசியர் ஆட்டு முதலிய காட்டும் தளி அது தவிர - நடன மகளிரின் ஆட்டம் முதலிய வெளி வீதி வேடிக்கை காட்டும் கோயில் அதை விட்டு ஒழிக்குமாறு, தேசு இயலும் பிரசம் திகழும் பிரசங்க சிங்கம் - அறிவு ஒளி வீசும் தேன் போல் இனிய பிரசங்கங்களை நிகழ்த்தும் சிங்கமாய், ஆசு இயலா நாவலன் நலை ஏய்வாள் - குற்றம் பொருந்தாத தூயவராம் நாவலர் பிரானது நல்லூரை ஒப்பாளாகிய தலைவி, சுரம் மாசு என் - தான் சென்ற பாலை நிலம் குற்றம் உடைத்தாதல் கண்டு, மணந்த ஆசிலன் பால் வரும் - தன்னை மணந்த தூயோனாம் காதலன் பாங்காக வருகின்றாள், இல்லம் அலங்கரிக்க - அதை முன்னிட்டு வீட்டை அலங்கரியுங்கள்.

286
(கு.உ) :- தாசியர் - வேசியர் எனலுமாம். முதலிய என்றதனால் வாண வேடிக்கையும் தழுவப்படும் தளி - கோயில் நல்லூர்க் கந்தசாமி கோயில், தளி அது தவிர என்றார். தேசு - அறிவொளி , பிரசம் - தேன், சிங்கம் என்றார் அத்தகு பிரசங்கம் கர்ச்சனை போலிருக்கும் நயம் பற்றி ஏய்வாள் - ஒப்பவள், மணந்த ஆசிலன் எனக் கூட்டுக. பால்வர - பக்கத்தில் வர.
பாங்கியர் கேட்டு நற்றாய்க் குரைத்தல்
(இது வெளிப்படை)
391. சரந்தீர்ந்த கண்ணா குதியனை துன்பொழி தையலரா
தரந்தீர்ந்து சென்றில ள்சார்ந்தன டான்வரல் சாற்றிவிட்டாள் சுரந்திாந்து மற்றெவரும் புகழ் துரயொளி நாவலனார் புரஞ் சேர்ந்து தன்கிளை வாயமு துண்டு பொலிவுறவே.
பதவுரை :- சரம் தீர்ந்த கண் நா குதி அனை துன்பு ஒழி தையலர் - நீர் இல்லாத பாலை நிலம் சேர்ந்தமையால் ஆன கண் எரிச்சல், நா வரட்சி, பாதவெப்பம் ஆகிய துன்பங்கள் நீங்கப் பெற்ற தலைவி, ஆதரம் தீர்ந்து சென்றிலள் - நம்மிடம் தனக்கு இயல்பாயுள்ள அன்பு நீங்கிச் சென்றவள் அல்லள், சுரம் தீர்ந்து மற்றெவரும் புகழும் து ஒளி நாவலனார் - பாவையை விட்டு அறிஞர் எவரும் புகழும் நிலை உள்ள தூய்மையான நாவலர் பிரானது , புரம் சேர்ந்து - ஊரை அடைந்து , தன் கிளை வாய் அமுது உண்டு பொலிவுற - தனது சுற்றத்தாரிடம் உணவு உண்டு பொலிவுறுமாறு, சார்ந்தனள் - மீண்டும் வந்து சேர்ந்திட்டாள், வரல் முன் அறிவித்தனள் - தன் வருகை பற்றி முன்னறிவித்தல் கொடுத்திருக்கிறாள்.
(கு.உ) - கண் நா குதி அனை துன்பு உரையில் விரிக்கப்பட்டது. ஆதரம் - அன்பு , சுரம் - பாலைநிலம் மற்றெவரும் என்றது அறிஞர் மேல் ஆயிற்று.

Page 154
287
நற்றாய் தலைமகனுளங்கொள வேலனை வினாதல்
(இது வெளிப்படை ) வேலன் - வெறியாட்டாளன்
392. முக்கால மும்முணர் வேலவ ரேநீர் மொழிந்திடுதிர்
மைக்கோல வாள்விழி மின்னை மணமலி வாவிசெறி செய்க்கோல நாவல னல்லை நமது திருமனைக்கோ வக்கோலக் கார்தம தாய்மனைக் கோமணந் தாடுவதே
பதவுரை :- முக்காலமும் உணர் வேலவரே நீர் மொழிந்திடுதிர் - முக் காலமும் அறிய வல்ல வேலனே நீள் சொல்வாயாக, மை கோல வாள் விழி மின்னை - கரு நிறம் உள்ள வாள் போன்ற கூரிய கண்களை உடைய மின்கொடி போலும் மகளை, மணந்து ஆடுவது - அவள் காதலன் வரைந்து கொள்வது, நாவலன் மணம் மலி வாவி செறி செய் கோல நல்லை - நாவலர் பிரானது பதியாய் பூ மணம் மிகுந்த வாவிகள் செறிந்திருக்கும் வயல் நிலக் காட்சி தரும் நல்லூரில் உள்ள, நமது திருமனைக்கோ - நமது அழகிய இல்லத்தின் கண்ணோ, அ கோல கார் தம அனை கோ - அந்த அழகிய மேகம் போலும் கொடைப் பண்பு உடைய தலைவரது தாய் மனையின் கண்ணோ
(கு.உ) :- வேலன் - வெறியாடிக் குறி சொல்லும் முருகன் ஆலயத்துப் பூசாரி. அக்கோலக்கார் - உருவகம் , தனது மகளை மனத்தில் ஏற்றுக் கொள்ளல் மூலம் தம் மீது கருணை பொழிதற்கு உரியான் என்ற குறிப்பில் தலைவனைக் கார் என்றாள். தம - தமது.
24. தன்மனை வரைதல்
உடன் போய் மீண்டு வந்த தலைவன் தலைவியைத் தன் ஊர்க்குக் கூட்டிப்போய்த் தன் மனையின் கண் வரைந்து கோடல்
நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல்
தலைவி நற்றாய் தன் மனையின் மணஞ் செய்யும் விருப்பினாற் செவிலியை வினாதல்.
393. சிலம்பு கழிஇயும் தில்லெம் மனையிற் றிருவமாக மலம்பு ரிமலர் மிகுநலை நாவலன் மானுமரி தலம்பு கழவென் பிடிமணஞ் சாரத் தருகிலென வலம்பு குமோடி யெனமன் னனைக்குரை மன்னுவமே.

288
பதவுரை :- உம் இல் சிலம்பு கழிஇ - உமது மனையில் சிலம்பு களைதல் என்ற சடங்கைச் செய்து விட்டு, திரு அமர் கமலம் புரி மலர் மிகும் - இலக்குமி வீற்றிருக்கும் தாமரையாகிய விருப்பத்துக்குரிய பூக்கள் மிகுந்த, நலை நாவலன் மானும் அரி - நல்லூர் வாசனாகிய நாவலர் பிரானை ஒத்த யானையாகிய தலைவன், தலம் புகழ - ஊர் எல்லாம் புகழுமாறு, எம் மனையில் - எமது இல்லத்தில், என் பிடி மணம் சார தருகில் - எனது பிடி போலும் மகளைத் திருமணம் செய்து ( இசைவு ) தரின் என் அவலம் ஒடி புகும் என - எனது துன்பம் ஓடிப் போம் என்று, மன் அனைக்கு உரை மன்னுவம் - தலைவனது தாய்க்குச் செய்தி அனுப்புவோமா ?
(கு.உ) :- சிலம்பு களைதல் மணவினைக்கு முன்னோடியான ஒரு நிகழ்ச்சி தலைவனை அரி என்றது உருவகம். தலைவியைப் பிடி என்றலின் அரி களிறு குறித்ததெனல் சாலும், தருகில் - தரின். உரை மன்னுவம் - செய்தி அறிவிப்போம்.
செவிலிக்கிகுளை வரைந்தமை செப்பல்
(இது வெளிப்படை)
394. பூங்கடி மேவு நலைநகள் நாவலற் போற்றினர்போற்
றாங்கடி மேவினர் சார்ந்து விருந்துணத் தம்மனையி னாங்கடி கொண்டவர் போலஞ ரெய்திட நம்பிணையை நாங்கடி வேல ரெனத்துாதர் கூறினர் நம்மனையே
பதவுரை :- நம் அனையே - எமது தாயே, பூங்கடி மேவும் நலை நகள் நாவலர் போற்றினர் போல் - பூவின் மணம் பரிமளிக்கும் நல்லை நகருக்கு உரியவராய நாவலர் பிரானைப் போற்றியவர் போல, விருந்து சார்ந்து உண - விருந்தினர் கூடி உண்ணும் படியாக, நாம் கடி கொண்டவர் போல் அஞர் எய்திட - அதே வேளை நாங்கள் பேய் பிடித்தார் போன்று துயரம் அடைய, நாம் கடி வேலர் - அச்சத்தை விலக்கும் வேல் தாங்கிய தலைவன், நம் பிணையை - நமது பெண் மான் அனைய தலைவியை, தம் மனையில் தாம் கடி மேவினர் - தமது மனையில் தாமாக வரைந்து கொண்டார். என தூதர் கூறினர் - என்று தூதர் சொன்னார்.

Page 155
289
(கு.உ) :- கடி எனும் உரிச்சொல் முறையே மணம், பேய், நீக்கு, விவாகம் என்ற பொருள்கள் மேல் நின்றது நாம்-அச்சம், விருந்து சார்ந்து உண்டு நாவலனைப் போற்றினர் போல் மகிழ்வுறும் அதே வேளை நாம் பேய் பிடி உண்டார் போல் துயருற வைத்துக் கடி மேவினர் எனப் பொருள் முடிவு செய்க.
வரைந்தமை செவிலி நற்றாய்க் குரைத்தல்
(இது வெளிப்படை)
395. தேனார் தமிழ்மறை தேறார் வெளியோ திடச்செய்ம்மட மானார் பிராமண ரைக்கடி நாவல மன்னலைமன் கானார் குழலைக் கடியயர்ந் தார்த மனையிலென்றார் மேனா ளவனனை காண விதுசெய் வியன்றவமே.
பதவுரை :- தேன் ஆர் தமிழ் மறை தேறார் - தேன் போலும் தமிழ் வேதத்தின் அருமை அறியாதாராய், வெளி ஓதிட செய் மட மானார் பிராமணரை கடி நாவல மன் - வெளியே நிற்பவரைக் கொண்டு
ஒதுவிக்கும் அறியாமை மிக்க பிராமணரைக் கடிந்து உரைக்கும் நாவலர் பிரானாம் தலைவனது, நலை மன் - நல்லூரிடத்தானாய தலைவன், கான் ஆர் குழலை தம் மனையில் கடி அமர்ந்தார் என்றார் - மணம் கமழுகின்ற கூந்தலை உடைய தலைவியைத் தமது இல்லத்தில் வரைந்து கொண்டார் எனச் சிலர் தெரிவித்துள்ளனர். அவன் அனை இது காண மேல் நாளில் செய் வியன் தவமே - அவனது தாய் இதனைக் காண முன்னாளிற் செய்த பெருந்தவம் இருந்தவாறு ( என்னே!)
(கு.உ) :- உனக்கு அது காண முன்தவப் பயன் இலதாயிற்று என்பது குறிப்பெச்சம். பூசையின் ஓர் அங்கமாகிய வேதம் ஒதுதலைத் தாமே செய்யும் பிராமணர், அருமை அறியாமையால் பூசையில் அதற்கு ஒத்த அங்கமாகிய தமிழ் வேதம் (திருமுறை) ஒதுதலை வெளியில் நிற்பாரைக் கொண்டு செய்வித்தல் தகுதி அற்ற செயல் என்பது நாவலர் குறிப்பு எனல் இதனால் விளங்கும்.

290
தலைவன் பாங்கிக்கு யான் வரைந்தமை நூமர்க்கு இயம்பு கென்றல்
(இது வெளிப்படை)
396, அரிசிவா வென்ற வழிச்செலப் பார்ப்பா னவனெனமுற்
பரிகசி நாவல னல்லு ரெமதிலும் பைங்கொடிக்கோ ரரிபுகு மாலை யளித்தேன்முன் மாலை யதுதரலாற் சுரிகுழன் மாதே யெமதியல் சொல்லுதி சோர்நுமர்க்கே
பதவுரை : அரிசி வா என்ற வழி செல பார்ப்பான் அவன் என - அரிசி வா என்று சொன்ன வழியில் செல்லும் பார்ப்பான் அவன் என்று, முன் பரிகசி நாவலன் நல்லூர் - அப்போது பார்ப்பாரைப் பரிகாசம் பண்ணிய நாவலர் பிரானது நல்லூரில் உள்ள , எமது இல் - எமது மனையின் கண், உம் பைங்கொடிக்கு அரி புகும் ஓர் மாலை - உமது பசிய கொடி போன்ற தலைவிக்கு வண்டு புகுந்து கிளறும் ஒப்பற்ற மாலை . ஒன்றை, அது மாலை (த்) தரலால் - அது முன்பே எனக்குக் காதல் மயக்கம் தந்ததனால் அளித்தேன் - சூட்டியிருக்கிறேன், சுரி குழல் மாதே - சுருண்ட கூந்தல் உள்ள பாங்கியே, சோர் நுமாக்கு எமது இயல் சொல்லுதி - அவள் பிரிவின்ால் சோர்வுறும் உங்களைச் சார்ந்தவர்க்கு இச் செய்தியைச் சொல்க.
(கு.உ) :- அரிசி வா என சொன்ன வழி செல பார்ப்பான் - இது நெறி தவறும் பிராமணரைக் கண்டிக்கும் சந்தர்ப்பம் ஒன்றில் நாவலர் வாயில் வந்த பரிகாசம் குறித்த சிலேடை மொழி இது. அரி + சிவா எனப் பிரிமொழிச் சிலேடையாக நின்று விஷ்ணுவே சிவனே என்ற பிரார்த்தனை வழியில் செல்லப் பார்ப்பான் என்றும் பொருள் தருதல் இதன் நயமாகும். அது முன் மாலைத் தரலால் நானும் மாலை அணிந்தேன் என்றது சிலேடை தழுவிய பரியாய அணியின் பாற்படும். தலைவியைக் கொடி என்றதனால் 'அது' என்றான்.

Page 156
29,
பாங்கி தான் முன்னே சாற்றிய துரைத்தல்
(இது வெளிப்படை)
397. எழுவாய் சுரமுன் பயனிலை யென்று னிலில் வரைந்தாய் வழுவாச் செயப்ப டுபொரு ளேயடை வானலையொர் வழுவா நெறிநா வலன் வரைக் கேட்டு வகுத்துரைத்தேன் வழுவார் சுரம் போய் மணவணி யோடிவண் மன்னுவதே.
பதவுரை :- முன் சுரம் எழுவாய் - முன்பு பாலை நிலம் போதலே துணிவு என எழுந்தவனாய நீ, பயன் இலை என்று உனி - அதில் பயன் இல்லை என்று கருதி, வழுவா சொல் படு பொருள் அடைவான் - ஐந்திணை ஒழுக்கத்தில் தவறாத கடி மணம் புணர்தல் என்ற பெயரில் செயப்படுதற்கு உரியதாகிய பேற்றை அடையும் பொருட்டு, இல் வரைந்தாய் - உனது தாய் மனையில் திருமணம் நிகழ்த்திக் கொண்டாய், தலைவனே, ஓர் வழுவா நெறி நாவலன் வரை கேட்ட - ஒப்பற்ற நன்னெறியால் உயர்ந்த நல்லை நாவலர் பெருமானுடைய மலையிடத்து அச் செய்தியை முன்னரே அறிந்து, வழுவார் சுரம் போய் - குற்றப்பாடுகள் பொருந்திய சுரநிலம் நாடிப் போய் , மண அணியோடு இவண் மன்னுவதே - திருமணம் செய்த அலங்காரத்தோடு இங்கு திரும்புவதனை, வகுத்து உரைத்தேன் - என் சுற்றத்தாராயினார்க்கு வகைபடத் தெரிவித்துள்ளேன்.
(கு.உ) - எழுவாய் பயனிலை செயப்படுபொருள் என்பன நாமாந் தரிதை என்னும் பிரகோரிகை நயம்பட நின்றன. இவண் மன்னுவது உரைத்தேன் என முடிக்க,

292
25. உடன் போக்கிடையீடு
நம் மனையில் வரைந்து கொள்ளாது தன் ஊரில் வரைந்தான் என்று தலைவி சுற்றத்தார் வெறுப்படைதலால், தலைவியை உடன் கொண்டு போம் போது, தலைவி சுற்றத்தார் இடையீடு பட்டு மீண்டு தலைவி வருதல்.
நீங்கும் கிழத்தி பாங்கியர் தமக்குத் தம் செலவுணர்த்தி விடுத்தல்
தன் ஊரை விட்டு நீங்கும் கிழத்தி எதிர் வருவோர் தம்மொடு தலைவனுடன் செல்லும் தன் செலவைப் பாங்கியர்க்கு உணர்த்தி விடுத்தல்.
398. வாட்டிடு மாயயல் வாயனல் பாலை மலியுமனல்
தோட்டுனை யாமர சின்னிழ லாறித் தொடர்ந்துபடர் வோட்டியங் கேபடர்ந் திட்டதென் றாயிக் குரைத்திடுவீர் ஒட்டிய வெங்கலி நல்லையி னாவல னொப்பவரே
பதவுரை :- அல் வாய் ஆய் வாட்டிடும் அனல் - இரவின் கண் தாயை வாட்டிடும் சோக நெருப்பை விளைத்த தலைவி, பாலை மலியும் அனல் - பாலை நிலத்து மிகுகின்ற வெப்பத்துயரை, தோள் துணையாம் அரசின் நிழல் ஆறி தொடர்ந்து - தனக்குத் தோள் துணையாக நிற்கும் காதலனின் நிழலில் ஒருவாறு ஆற்றிக் கொண்டு தொடர்ந்து, படர்வு ஒட்டி - துன்பத்தைத் துரந்து , அங்கே படர்ந்திட்டது என்று - அப்பாலை நிலத்திலேயே சென்று கொண்டிருக்கிறாள் என்று, வெம் கலி ஒட்டிய நல்லையின் நாவலன் ஒப்பவரே - கொடிதாகிய துன்பத்தைத் துரத்தி வெற்றி கண்ட நல்லையில் உள்ள நாவலர் பிரானை ஒத்த தபசியரே, ஆய்க்கு உரைத்திடுவீர் - தாயர்க்கு அறிவியுங்கள்
(கு.உ) :- அனல் விளையக் காரணமாய் இருந்தவளை அனல் என்றது காரணன் காரியமாய் வந்த உபசாரம் - அரசு உருவகம்,

Page 157
293
தலைமகள் தன் செலவின்றாட் குணர்த்தி விடுத்தல்
(இது வெளிப்படை)
399. நாவை விரும்பிய நாமக ணாவல னாந்தவத்தீர்
ஆவை விரும்பிய கன்றகல் போலு மனைக்குரைப்பீர் பாவை விரும்பிய கோவை மணித்தோள் பரவகத்தி டாவை முலைக்கொடி யேறிய தாரற மாமெனவே.
பதவுரை :- மணி தோள் பரவு அகத்திட்டு ஆவை - அழகிய தோள்களுக்கு இடையிலான மார்பில் தன்னை அகத்திடாக வைக்கும், விரும்பிய கோவை - தான் விரும்பிய தலைவனை , பாவை - பாவை போல்வாளாய, முலைக்கொடி ஏறியது - முலை உள்ள கொடி பற்றிக் கொண்டது, ஆர் அறமாம் எனவே - பொருந்தும் அறநெறியே என்று, நாமகள் நாவை விரும்பிய நாவலனாம் தவத்திர் - சரஸ்வதி தமது நாவை விரும்பி இடம் கொண்டிருக்கும் நாவலர் பிரான் எனத் தகும் தவசிகளே, விரும்பிய கன்று அகல் ஆவை போலும் அனைக்கு உரைப்பிர் - தன் பிரியத்துக்குரிய கன்று அகன்று விட அதனால் துயர் உறும் பசுவைப் போன்றிருக்கும் அன்னைக்குத் தெரிவியுங்கள்.
(கு.உ) :- அகத்திட்டு ஆ - அகத்திடு ஆகத்திரிபின்றி அகத்திடு என்றிருந்தாலும் செய்யுள் இலக்கணத்துக்கு இழுக்காகாது. அதுவே சிறந்த பாடமும் ஆம்,
ஈன்றாட் கந்தணர் மொழிதல்
400. தீந்தமி ழாரிய மாங்கிலஞ் சேரகத் திண்ணறிவா
னாந்தொழு நாவல னல்லையின் மாதவி நன்றுறநீ யின்றளி முல்லையொர் பூவர சிற்படர்ந் தேசுரத்தே நோன்றிடல் கண்டா முறையது வேயற நோக்குதியே
பதவுரை :- தீந்தமிழ் ஆரியம் ஆங்கிலம் சேர் அக திண் அறிவான் - இனிய தமிழும் ஆரியமும் ஆங்கிலமும் என்ற மும் மொழிகளிலும் திறமை சான்ற அறிவுரம் உள்ளவரும், நாம் தொழும் நாவலன் - நாம் விரும்பித் தொழும் தலைவருமாய நாவலர் பிரானது

294,
நல்லையின் மாதவி - நல்லூரிடத்தாளாகிய மகாதவச் செல்வியே, 呜 நன்று உற ஈன்று அளி முல்லை - நீ நன்மை அடையப் பெற்றுக் காத்த முல்லைக் கொடி போலும், மகள், பூ அரசில் படர்ந்தே - பூமிக்கு அரசன் போல்வானாம் ஆடவனைப் பற்றிய வண்ணம், சுரத்தே நோன்றிடல் கண்டாம் - பாலை நிலத்தில் தவம் இயற்றுதலைக் கண்டோம், முறை அதுவே - உலகியல் அதுவாகும், அறம் நோக்குதி - தர்மத்தை உணர்ந்து பார்.
(கு.உ) :- முல்லை, பூவரசு என்பன உருவகங்கள், நோன்றல் - தவம் இயற்றல். நில வெப்பத்தைத் தாங்கி நிற்கும் அளவுக்கு இது நோன்றலாயிற்று. முறை - உலகியல்,
தமர் பின் சேறலைத் தலைவி தலைவர்க் குரைத்தல்
401. ஏண்டகு நாவலற் சூழ்ந்த சுமார்த்த ரினமெனமுற்
காண்டவந் தீக்களி காளை முன்வந்து பெய்கார்முகில் றுாண்டகு தோட்சிலை வேன்மா வரசு தொகுமத்திகொண் டேண்டகு நஞ்சந்தன மெயின் சூழ்வரு மென்னரசே
பதவுரை:- என் அரசே - எனது தலைவரே, ஏண்தகு நாவலர் சூழ்ந்த சுமார்த்தர் இனம் என் - உயர்ச்சி பொருந்திய நாவலர் பிரானைப் பகைத்துச் சூழ்ந்த சுமார்த்தர் இனம் எனவும், முன் காண்டவம் தீக்கு அளி காளை முன் வந்து பெய் கார் முகில் - முன்னர் தீக்கடவுளுக்குக் காண்டவம் எனும் வனத்தை உணவாகக் கொடுத்த அருச்சுனனுக்கு முன்னால் மழையைப் பொழிந்த கரு மேகங்கள் போலவும், தூண் தகு
தோள் சிலை வேல் - தூணை ஒத்த தோளில் வில்லையும் வேற்படையையும் தாங்கிய வண்ணமாய், மா அரசு தொகும் அத்தி கொண்டு - குதிரை, தலைமைத் தன்மை வாய்ந்த யானை
என்பவற்றையும் உடனாகக் கொண்டு, ஏண் தகு நம் எயின் சந்தனம் சூழ்வரும் - வலிமை மிக்க நம் உறவினராகிய வேடுவர் நம்மைத் தேடித் தேரில் பின்னால் வருவர்.
(கு.உ):- ஏண் - உயர்ச்சி, வலிமை, சந்தனம் - தேர். இதனை மா அத்தி என்னும் பிற சேனைக் கூட்டங்களுடன் சேர்த்துப் பொருள் கோடலுமாம். எயின் - வேடுவர்.

Page 158
295
அவன் தலைவியை விடுத்தகறல்
402. புத்தக மும்மினி தேன்றமிழ்த் தாரணி பொற்புயன்சொல்
வித்தக நாவல னல்லையொப் பாய்நுமர் மேவினரேல் மைத்தடங் கண்ணி யவர்முன மன்னலன் மாற்றலரேற் றத்தையைக் கொண்டு செல் வத்தவ னானவர் தங்களுக்கே
பதவுரை:- மை தடம் கண்ணி - மை தீட்டிய விசாலித்த கண்ணையுடைய தலைவியே, புத்தகமும் இனி தேன் தமிழ் தார் அணி பொன் புயன் - நூல்கள் இனிமை பயக்கின்ற சுவைத்தேன் பிலிற்றுகின்ற தமிழ் மாலை அணிந்த அழகு பூத்த தோள்களை உடையவரும், சொல் வித்தக நாவலன் நல்லை ஒப்பாய் - சொல் சாதுரியம் உடையவருமாகிய நாவலர் பிரானின் நல்லைப் பதியை அணையாய் , நுமர் மேவினரேல் - நுமது உறவினர்கள் வருவார்களேயானால், அவர் முன மன்னலன் - அவர்கள் முன்னிலையில் நான் நிற்றல் ஒவ்வேன் ( ஏனெனில் ) மாற்றலரேல் - அவர்கள் பொறாமை உள்ளவர்களாகுமிடத்து அவர் தங்களுக்கு - அவர்களுக்கு, தத்தையை கொண்டு செல் அ தவன் நான் - கிளி போன்ற நின்னைக் கவர்ந்து செல்கின்ற ஒரு எத்தன் ஆவேன். ( பொறாமை காரணமாக நுமது நமர் என்னை ஒரு எய்ப்பனாகக் கருதலாமாதலின் அவர்கள் சமூகத்தில் வரேன். நீ அவர்களுடன் ஏகுவாய் என்றவாறு )
(கு.உ):- மாற்றலர் - பொறாமை உடையவர் தாம் கிளி போல் வளர்த்த பெண்ணைக் கவர எண்ணியவன் என்று கருதியதனால் பொறாமை உடையவராயினார் நமர்.
அ + தவன் - அந்த எய்ப்பன்
தமருடன் செல்பவள் அவன் புறம் நோக்கிக் கவன்றுரைத்தல்
தமருடன் செல்லப்பட்ட தலைவி அவன் புறங்காட்டிப் போதலை நோக்கிக் கவலைப் பட்டு உரைத்தல்
403. மாடேறி மைந்தன் மயிலேறி பேரனம் மானண்ணன்காத்
தோடேறி மைத்துனற் றும்பி சுரிகுழ லார்விழியேய் மேடேறி நாரை வளைமுத் தடைகா வியனலைமெய்ப் பீடேறி நாவலற் பேணன்ப ணங்கிளை பேணினனே.

296
பதவுரை:- சுரி குழலார் விழி ஏய் - சுருள் படைத்த கூந்தலை உடைய மகளிரது கண் போன்ற, மைத்து(ன)னல் தும்பி - கரிய நிறம் பொருந்திய வண்டு, தோடு ஏறி நண்(ணும்) - பூ இதழினை உழுது நண்ணுவதும், அ மால் நண் (ணும்) கா - அழகிய முகில்கள் பொருந்துவதுமாகிய நல்ல சோலையில், நாரை மேடு ஏறி வளை முத்து அடை கா - நாரையானது மேட்டு நிலத்தில் சங்கின் முத்தை அதன் முட்டை எனக் கருதி அடை காத்திருக்கும், வியன் நலை - மேம்பாடு பொருந்திய நல்லைப் பதி சார்ந்த, மாடு ஏறி மைந்தன் - இடப வாகனத்தை உடைய சிவபிரானின் குமாரனாகிய, மயில் ஏறி பேரன் ட் மயிலை ஊர்தியாக உடைய முருகனின் ஆறுமுகன் என்ற பெயரைத் தாங்கியவரும், மெய் பீடேறி - மெய்மையாகிய பெருமை பொருந்தியவருமாகிய, நாவலர் பேண் அன்பன் - நாவலர் பிரானைப் போற்றித் துதிக்கின்ற அன்பரான எனது தலைவர், நம் கிளை பேணினன் - நமது சுற்றத்தவரின் நற்பெயரைப் பாதுகாத்துக் கொண்டனர். ( நம்மை ஆயத்தாரோடு செல்ல விட்டதனால் )
(கு.உ):- முதலாம் அடியின் ஈற்றில் உள்ள (அம்மானண்ணன் கா) என்பதனை அம்மால் நண்(ணு) நன் கா என்று பதச் சேதஞ் செய்க. அம்மால் - அழகிய முகில், நண் என்ற வினையை "தோடேறி என்பதுடனும் ‘மால்' என்பதுடனும் ஒட்டிப் பொருள் கொண்டு முடிக்க இப்பாடல் உள்ளுறையுவமம்.
26. வரைவு
சென்றோன் மீண்டு வந்தந்தணரை முன்னிடல் சென்றவனாகிய தலைவன் மீண்டு வந்து அந்தண்ரை முன்னிட்டு மணச்சடங்கு இயற்றல்
404. சந்தன நீறு மலர்முகத் தாற்றரு மம்முறலால்
வந்தண வுற்றார் குளிரக் குழைதலை மன்னிடுகா நொந்தண வுங்கொடி யார்திருத் தித்தழு நோயினல்லூ ரந்தன னாவல னேரந் தணரா லவட்பெறுமே.
முதலீரடியும் சைவச் சான்றோர்க்கும் சோலைக்கும் சிலேடை
பதவுரை:- சான்றோர் காம் போது - சந்தணம் நீறு மலர் முகத்தால் தருமம் உறலால் - சந்தணமும் விபூதியும் பொலிந்து விளங்கும் முகத்தாலும் தரும சிந்தை திகழ்தலாலும். சோலைக்காம் போது : சந்தன மரமும் பூந்தாதும் மலர்களும் விளங்குதலால், அம் தரு

Page 159
297
உறலால் - நல்ல கற்பகதரு போன்ற மரங்கள் பொலிந்து விளங்குதலால், வந்து அணவுற்றார் குளிர குழைதலை மன்னிடு கா - விருந்தாக வந்து சேர்பவரிடம் உள்ளம் குளிர்தலைப் (சான்றோர் போன்று)
பொருந்தும் சோலையில், நொந்து அணவும் - என்னைக் காண வேண்டுமென்ற விருப்பால் வருந்தி நிற்பவளும், திருத்தி ஆரத்தழுவும் கொடி - நிறைவு பொருந்தத் தழுவுபவளும் ஆகிய பூங்கொடி
போல்வாளாகிய தலைவியை, நோயில் நல்லை - நோய் இன்றி இருக்கும் நல்லையில் உள்ள, அம் தண் நல் நாவலன் நேர் அந்தணரால் - அழகிய குளிர்ச்சி (யான வார்த்தைகள்) "பொருந்திய நல்ல நாவன்மை படைத்த நாவலர் பிரானை ஒத்த ( ஒழுக்க விழுப்பமுடைய) அழகிய தபோதனர்கள் முன்னாக, அவள் பெறும் - தலைவியை மணவினையாற் பெற்றுக் கொள்வேன்.
(கு.உ): இச் செய்யுளை முப்பொருட் சிலேடையாகக் கொள்ளலாம். நாவலன் கா, அந்தணர் என முப்பொருளையும் குறிப்பதாக அமையும். குழைதலை மன்னிடு - குழைதலுறுதலால், குழை மேலுறலால் எனக் கொள்க.
சான்றோரை முன்னிடல்
சென்றோன் மீண்டு வந்து சான்றோரை முன்னிட்டு மணச்சடங்கு இயற்றல்
405. மூலத்தா னத்துத் தமிழ்மறை நீக்கி முகடிகளாய்ச்
சாலத்தா னந்தமிழ் தாழ்த்திடு பார்ப்பனச் சண்டிகளைச் சாலப்ப வித்த சரவணன் மாணவன் சார்நலையோர் சீலத்த நல்லோரை நீக்கார் மணத்தனஞ் சேர்ந்திடுமே.
பதவுரை:- மூலத்தானத்து தமிழ் மறை நீக்கி - சைவக் கோயில்களில் இறைவன் எழுந்தருளியிருக்கும் மூலத்தானத்தில் பூசை நிகழும் காலத்து ஒதுதற்குரிய தமிழ் வேதமாகிய திருமுறைப் பாக்களை ஒதும் மரபினை ஒழித்து, முகடிகளாய் - மூதேவிகளாக, சாலத்தால் நம் தமிழ் தாழ்ந்திடு பார்ப்பன சண்டிகளை - தமது மாய மந்திர வலையினால் நமது தமிழ் மொழியைத் தாழ்வுறச் செய்த பார்ப்பனரை, சால பளித்த சரவணன் மாணவன் சார் நலை - மிகுதியாகக் கண்டனஞ் செய்த சரவணமுத்து உபாத்தியாயரின் மாணவராகிய நாவலர் பிரானின் நல்லையில், ஓர் சீலத்த நல்லோரை நீக்கார் மணத்தல் நம் சேர்ந்திடும் - ஆராய்ந்து கடைப்பிடிக்கப் பெறும் சீலமுடைய சான்றோரை முன்னிட்டு மணவினை நம்மைச் சேரப் பெற்றோம்.

298
(கு.உ):- மணத்தனம் சேரும் - மணம் பொருந்திய அன்னம் போன்றாள் சேரும் மணத்தல் நம்மைச் சேரும், மணத்திற் சோறு சேரும், எனக் கொள்ளலாம்.
அருங் கலந் தருதல்
406. பிறையு மரவும் பெருகுசிந் தாமணி குண்டலமு
மறையு மலைக்கு மலைக்கு மணியே கலைதரள மறையுஞ் சிலப்பதி கார வளையா பதியளித்தார் நிறையுந் தனநா வலனலைக் கொண்டனர் நேர்நமரே
பதவுரை:-பிறையும் அரவும் பெருகு சிந்தாமணி குண்டலமும் உச்சியில் அணியப்பெறும் பிறையும் பின்னலில் அணியும். நாகசடையும் ஒளி மிக்காகலும் சிந்தாமணியும், குண்டலமும், மறையும் அலைக்கு மலைக்கும் மணிமேகலையும் - அந்தரங்கமாகிய கடல் அனைய நிதம்ப மேல் அணியப் பெறும் மேகலாபரணமும், தரளம் அறையும் சிலம்பும் - முத்துப்பரல்கள் உட்கிடந்து சப்திக்கின்ற சிலம்பும், அதிகாரம் - மிகுதியான ஒளி விளக்கும் பதக்கமும், வளை - வளையலும், பதி அளித்தார் - தலைவர் வழங்கினார், நிறையும் தன நாவலன் நல்லையில் - நிறைந்த செல்வம் படைத்த நாவலர்பிரானது நல்லூரில், நமர் நேர்கொண்டனர் - சுற்றத்தவர் அவற்றை நேரிதாக ஏற்றுக் கொண்டனர்.
(கு.உ):- மறை - அந்தரங்கமானது; அலை - கடல் - நிதம்பம் - உவமை ஆகுபெயர். நிதம்பம் கடலாக உவமிக்கப்பட்டிருத்தலைப் பெரிய புராணத்து "பேர்பரவை பெண்மையினில் பெரும்பாவை விரும்பல் குல்' என்ற தடுத்தாட் கொண்ட புராணம் 148ம் செய்யுளிற் காண்க. மலைக்கு மணிமேகலை - அணியப்பெறும் மேகலை; மலைதல் - அணிதல்; அறையும் - ஒலிக்கும்; காரம் - பதக்கம்; வளை + ஆ + பதி - வளையல், ஆ - வியப்பிடைச் சொல்; பதி - தலைவன்.
வரைந்துழிக் கண்டோர் மகிழ்ந்துரைத்தல்
தலைவன் அந்தணரை முன்னிட்டுத் தலைவியை வரைந்து கொண்டுழிக் கண்டோர் மகிழ்ந்து கூறல்
407. எண்ணலை யுந்தமிழ்ச் சைவ உலகமு மேத்திடுஞ்சீர்
நண்ணிடு நாவலற் கண்டு நலிவகல் ஞாதிகள்போல் லண்ணலிம் மங்கை யகமுக மேவிய வம்மணங்காண் கண்ணெம வேகண் பிறகண்புண் கண்ணெனுங் காசினியே

Page 160
299
பதவுரை:- எண் நலையும் தமிழ் சைவ உலகமும் ஏத்திடும் - எண்ணத் தகுந்த சிறப்பு வாய்ந்த நல்லைப் பதியும் தமிழ்ச் சைவ உலகமும் மதித்துப் போற்றுகின்ற, சீர் நண்ணிடு நாவலர் கண்டு நலிவு அகல் ஞாதிகள் போல் - சிறப்புப் பொருந்திய நாவலர் பிரானைத் தரிசிப்பதனால் துன்பங்கள் நீங்கப் பெறும் தாயாதிகளைப் போல, அண்ணல் - தலைவனுடன் அக முகம் மேவிய இ மங்கை அம் மணம் காண் - அகத்தை எடுத்துக் காட்டும் இனிய மலர்ச்சி பொருந்திய முகத்தை உடைய இம் மாதரசியின் அழகு நலம் வாய்ந்த திருமணக் கோலத்தைக் காணும் வாய்ப்புப் பெற்ற, எம கண் கண் - எமது கண்களே உண்மையான கண்கள், பிற கண் புண்கண் காசினி எனுமபிற கன்களைப் புண் கண்களென்று உலகம் பழிக்கும்.
24.இல்வாழ்க்கை
தலைவனும் தலைவியும் இல்லின் கண் வாழும் வாழ்க்கையைக் கூறல்
தலைவன் தலைவி முன் பாங்கியைப் புகழ்தல்
(இது வெளிப்படை)
408. கல்ல வடமியாழ் செய்யளி சேர்குழற் காந்தையுடன் கல்ல லகுநுமர் க்ண்விடு தூம்பாக் கணிர்விடச்சென் றொல்லு துடிசங் கிடைமுலை வந்தவ ளோர்மணத்தார் புல்ல வறுமுக னல்லையிற் செய்தக்கை போற்றுவனே
பதவுரை:- அறுமுக நல்லையில் - ஆறுமுகநாவலர் பெருமானது நல்லைப் பதியில் , கல்லவடம் யாழ் செய் அளிசேர் குழல் காந்தையுடன் - கல்ல வடம் என்னும் மருதப் பறைக்கு இசைய யாழ் வாசித்தாற் போன்று ரீங்காரம் செய்யும் வண்டு படியும் கூந்தலை உடைய மங்கையுடன், கல்லலகு நுமர் கண் விடு தூம்பா கணி விட சென்று - கல்லலகு எனும் வாத்தியத்தினை இசைப்பதில் வல்ல நும் உறவினர் மதகுக் கண் வழியே நீர் வடிந்தாற் போன்று கண்ணிர் விடும்படியாகப்
போய், துடி சங்கு ஒல்லும் இடை முலை வந்தவள் - முறையே உடுக்கினையும் சங்கையும் ஒத்த இடையினையும் நகில்களையும் உன்டயவளாகிய தலைவி, ஓர் மண தார் புல்ல - ஒப்பற்ற மணம்
பொருந்திய மாலையினை அணிந்து கொள்ளுதற் கேதுவான கருமம் நிகழுமாறு செய்த, தக்கை போற்றுவன் - மண முரசினை வாழ்த்துவேன்.

3OO
தலைவனைப் பாங்கி வாழ்த்தல்
(இது வெளிப்படை)
409. அம்மா னுறுபாணி கம்மா னுறுபாணி யப்புமன்பு
தம்மா மனஞ்சேரப் பாணியா னாவலற் சார்வைதிருச் செம்மான் புணருமச் சக்கிரி போலத் தினமும் பள்ளி யும்மான் மருமங்க ணம்படைச் சிக்கா வுவந்திடும்
பதவுரை:- அம் மான் உறு பாணி - அழகிய மான் ஏந்திய கையை உடையவரும், கம் மானுறு பாணி - தலையிற் பெண்ணாகிய நீரை உடையவருமாகிய சிவனிடத்து, அப்பும் அன்பு தம் மா மனம் சேர் அ பாணியான் - அப்பினாற் போன்ற அன்புடைய தம் மனது வரத் தாமதியாமையுடைய, நாவலற் சார்வை - நாவலர் பிரானுக்கு ஒப்பாய், செம் திரு மான் புணரும் அ சக்கிரி போல - சிவந்த இலக்குமிதேவியைப் புணரும் அத் திருமால் போல, உம் மால் மருமம் - உமது மயக்கத்தையுடைய மார்பானது, கண் அம்பு அடைச்சிக்கா - கண்ணாகிய அம்பு உடையவளாகிய தலைவிக்கு, தினமும் பள்ளி - நாள் தோறும் படுக்கையாக, உவந்திடும் - மகிழ்வடைவாய்.
(கு.உ):- திருமால் செய்யாளைக் கூடி உவத்தல் போல நீயும் தலைவியைச் சேக்கையில் கூடி மகிழ்வடைவாய் என்க. கம்மானுறு பாணி என்பதற்கு சிறப்பு மிக்க கபாலம் ஏந்திய கை எனப் பொருள் கூறலும் ஒன்று. அங்ங்ணமாயின் மான் ஏந்திய கரத்தினையும் கபாலம் ஏந்திய கையினையும் கொண்ட சிவன் என முடிக்க. இப்பொருளில் “கம்” என்பது கபாலம் என்னும் பொருளது.
வரையுநாளளவும் வருந்தாதிருந்தமை தலைவியைப் பாங்கி வினாதல்
(இது வெளிப்படை)
ரமையா கியதோ ளணங்கய றுற்றவ ரன்னையர்வாய் வெமையா கியவடு வுஞ்சுமந் தேமனர் மேவலர்த்தா ரமையா வளவு மயரா திருந்ததெ வாறறையே
410. இமையா யிமைப்பிற் கரப்ப ரெனநா வலன்சீர்சே

Page 161
301
பதவுரை:- நாவலன் கிரி சேர் அமையாகிய தோள் அணங்கு - நாவலர் மலையினைச் சார்ந்த மூங்கிலை நிகர்க்கும் தோள்களை உடைய அழகிய தலைவியே, இமைப்பில் கரப்பர் என இமையாய் (நும் தலைவர்) காட்சியில் இருந்து மறைந்து விடுவார் என்னும் அச்சத்தினால் கண் இமையாது இருப்பாய், (அத்தகைய நீ ) அலர் தூற்று அயல் அன்னையர் வாய் - புறங்கூற்று இயம்புகின்ற அயலிடத்து மகளிர் வாயிடத்துத் தோன்றும் - வெமையாகிய வடுவும் சுமந்து, கொடுமையாகிய பழிச் சொற்களையும் தாங்கிக் கொண்டு, மனர் மேவு அலர் தார் அமையா அள்வும், தலைவர் சூட்டுவதற்கு உரிய மலர் மாலை வந்து பொருந்தாத காலம் வரையும், அயராது இருந்தது எவ்வாறு அறை - கலக்கமும்’ சோர்வும் இன்றி நீ எவ்வாறு பொறுத்திருந்தாய், அதைச் சொல்வாயாக.
(கு.உ):- வெமை - வெம்மை - பழிச்சொற்கொடுமை, மனர் - மன்னர்
gങ്ങബഖit.
பெரு மகளுரைக்கல்
தலைவி தான் வருந்தாதிருந்த காரணம் பாங்கிக்கு உரைத்தல்
411. முன்னாட் டழையும் பிறவு மளித்தே முயங்கியவர்
பொன்னாட் டருநிழல் வீழநா வலந்தேம் பொலிபுலவர் மன்னாட் டருநா வலன்கா மலர்பூ மலிகுழலா யன்னாட் டருகளி யுன்னிச் சுமந்தே னவைதெரியே
பதவுரை:- பொன் நாட்டு அரு நிழல் வீழ் நாவலந் தேம் பொலி புலவர், மன்(னு) - சுவர்க்கலோக நிழல் படிகின்ற நாவலந்தீவின் பொலிகின்ற கவிஞர்கள் வந்து செறிகின்ற, நாவலன் நாட்டு அரு மலர் கா பூ மலி குழலாய் - நாவலர் பிரானது நாட்டு அரிய மலர்ச் சோலையில் மலரும் பூக்களை அணிகின்ற கூந்தலை உடைய தோழியே, முன்னாள் தழையும் பிறவும் அளித்தே முயங்கியவர் - களவொழுக்கம் பயின்ற முன்னைய நாளிலே தழையும் ஏனைப் பொருள்களும் தந்து என்னைச் சேர்ந்தவர் ( ஆகிய தலைவர் ) அந் நாள் தரு களி உன்னிச் சுமந்தேன் - அந்நாளில் தந்த இன்பத்தை நினைந்து பிரிவாற்றாமையை ஆற்றி இருந்தேன். அவை தெரி - அச் செய்திகளைத் தெரிந்து கொள்வாய்.

302
தலைவனைப் பாங்கி வரையுநாளளவும் நிலைபெற வாற்றிய நிலைமை வினாதல்
(இது வெளிப்படை)
412. இந்நா விரிவளினை வெற்பிடை நீயா திணையுறுவீ
ரந்நாண் முதல்வரை யிந்நாள் வரைமன மாற்றினிர்வீ தன்னா வெனமுர் றாரவ தக்கவர் சார்நலையார் மன்னா வலன்றெவர் மானவெவ் வாறெங்கண் மாதவமே.
பதவுரை: வீ தன்னா என முரல் தாரவ - மலரிடத்து வண்டினம் தன்னா என இசைத்து முரலுகின்ற மலர் மாலை அணிந்த தலைவனே, இந்நாள் இவள் இணை வெற்பிடை நீ யாது இணை உறுவீர் - இற்றை நாளில் இத்தலைவியினது இணையாகப் பொருந்திய மலை அனைய மார்பகங்கள் இடையே நீங்காது இணைவுற்றிருப்பீர், தக்கவர் சார் நலையார் மண் நாவலன் தெவர் மான - தக்கோர் பயில்கின்ற நல்லைப் பதியில் விளங்கும் நாவலர் பெருமானது பகைவர்களைப் போல, அ நாள் முதல் வரை இ நாள் - களவொழுக்கத்தில் கூடிய அந் நாள் முதல் திருமணம் புரிவதற்கு இயன்ற இந்நாள் வரையும், எவ்வாறு மனம் ஆற்றினிர் - இவ்விடத்து எவ்வாறு மனம் ஆற்றி இருந்திர், எங்கள் மா தவமே - ( அங்ங்ணம் மனம் ஆற்றியிருந்தமை ) எங்கள் பெரிய தவப்பேறாகிய செயல் போலும்.
மணமனைச் சென்ற செவிலிக்கிகுளையிருவரன்பு முணர்த்தல்
கலியாண மனையில் வந்த செவிலிக்குத் தோழி இருவரது அன்பும் உணர்த்தல்
413. வெங்கட மும்பிரி மேவா வியன்புய மேலவனுங் சங்கடு மென்முலை தானு முடலுயிர் தாமறிகா
ரங்கடு நாவல னல்லை யணைந்தஞ ரற்றவர்போ னங்கட மாதவ மேயனை நாரியி னற்றவமே.
பதவுரை:- வெங்கடமும் பிரி மேவா வியன்புய மேலவனும்- வேங்கட மலையையும் பிரியாது பொருந்தியுள்ள விசாலமான தோளை உடைய தலைவனும், சங்கு அடு மென் முலை தானும் - சங்கு போலும்

Page 162
303
தனங்களை உடைய தலைவியும், உடல் உயிர் தாம் அறி - ஈருடலும் ஒருயிரும் போல விளங்குவதை அறிந்து கொள்வாய், (அவர்களின் அன்பு நிலையானது) அம் கார் கடு நாவலன் நல்லை அணைந்து அஞர் அற்றவர் போல் - அழகிய முகில் நிகர்த்த நாவலர் பெருமானது நல்லை நகரைச் சார்ந்து துன்பம் நீங்கியவர் போல, நங்கள் தம் மாதவமே அனை நாரியின் நல் தவமே - எங்களது பெருமையான தவமே வடிவாய் அமைந்த எமது அன்னை போல்வாளது நற்றவப் பேறேயாகும்.
(கு.உ):- உடலுயிராய நிலை நாரியின் நற்றவப் பேறேயாகுமென முடிக்க
வாழ்க்கை நன்றறைதல்
பாங்கி இல்வாழ்க்கை நன்றென்று செவிலிக்கு உரைத்தல்
414. தென்புல மாதிய வைம்புலம் போற்றிச் சிறந்தநல்லூர்
மன்புல மேறிய நாவல மாதவ னும்மகிழத் தன்புல மேவிடத் தான்றுழந் தட்டவை தாமருத்தி யன்புல வாதமர் வாளனை யாயிழை யாளறியே
பதவுரை: அனை - அன்னாய், தென்புலம் ஆதிய ஐம்புலம் போற்றி - தென்புலத்தார் முதலாய ஐவகையினரையும் பேணும் திறத்தால், சிறந்த நல்லூர் மன் புலம் ஏறிய - சிறந்து விளங்கும் நல்லூராகிய நிலைபேறுடைய ஊரிலே தோன்றியவராகிய, நாவல மாதவனும் மகிழ - நாவலர் பெருமானும் உவகை கொள்ளும்படியாக, தன் புலம் மேவிட - தனது (இன்ப) உணர்வு மேலோங்கும்படியாக, தான் துழந்து அட்டவை தாம் அருத்தி - தான் ஈடுபாடு கொண்டு துழாவிச் சமைத்த உணவினை ஊட்டி, ஆயிழையாள் அன்பு உலவாது அமர்வாள் அறி - ஆய்ந்து இழைத்த ஆபரணங்கள் அணிந்த தலைவியானவள் (மகிழ்வோடு) திகழ்கின்றாள் என்பதனை அறிந்து கொள்வீர்களாக.

304
மணமனைச் சென்ற செவிலி பொற்றொடி கற்பை நற்றாய்க் குரைத்தல்
(இது வெளிப்படை)
415. முற்படை மாத ரரியகற் பாம்பொன் முழுதுருக்கி
யிற்பிறப் போடே யிணைத்தயன் செம்மை யிகந்துளத்துத் தற்படை வாரைத் தகர்த்தெறி நாவல னல்லையுளார் பிற்படைத் தானெனப் பேசுவர் நீயீன் பிணையினையே
பதவுரை:- நீ ஈன் பிணையினை - நீவிர் பெற்றடுெத்த மான் பிணை போன்ற தலைவியை, முற் படை மாதர் கற்பாம் அரிய பொன் முழுது உருக்கி - தான் முன்பு படைத்த மாதரிடத்து விளங்கிய கற்பெனக் கூறப்படும் அரிதாகிய பண்பாகும் பொன்னை முழுமையாக உருக்கி எடுத்து, இற் பிறப்போடு இணைத்து - உயர்குடிப் பிறப்பு என்னும் பண்போடு ஒரு சேர இணைத்து, செம்மை இகந்து உளத்து தற்பு அடைவாரை - நேர்மை தவறி உள்ளத்தில் செருக்குப் பொருந்தி இருப்பவர்களை, தகர்த்து எறி நாவலன் - உடைத்து எறிகின்ற நாவலர் பெருமானது, நல்லை உளர் பின் படைத்தான் அயன் - நல்லைப் பதி வாழ் நங்கையரைப் பின்னாகக் கொண்டு படைத்தான் பிரமதேவன், என பேசுவார் - என்று (மக்கள்) பேசிக் கொள்வர்.
செவிலி மணவாழ்க்கைத் தன்மையுரைத்தல்.
416. அருந்துதி யாலகி லம்பணி நாவல னார்வரைய
மருந்துதி ருப்பெண் மலர்ந்து முகமக மன்விருந்தை யருந்துதி நன்றே யருந்துதி யென்றே யகமகிழ்வா ளருந்துதி யென்றே யறைகுவ ரன்னை யருந்துதியே.
பதவுரை:- அரும் துதியால் அகிலம் பணி நாவலனார் வரைய மருந்து திரு பெண் - அரிய போற்றுகையால் உலகம் வணங்குகின்ற நாவலர்பெருமானது மலையிடத்துள்ள தேவாமிர்தம் 96)6OT இலக்குமியை நிகர்த்த தலைவியானவள், முகம் அகம் மலர்ந்து - முகமும் உள்ளமும் மலர்ச்சி பெற்று, மன்விருந்தை - பொருந்துகின்ற விருந்தினரை, நன்று அருந்துதி அருந்துதி என்றே அக மகிழ்வாள் -

Page 163
305
நன்றாக அருந்துவீர் அருந்து வீர் \என்று உபசரித்து உள்ளத்தில் மகிழ்ச்சி கொள்வாள், அருந்துதி என்றே அன்னை அருந்துதி அறைகுவர் - இவள் அருந்ததி ஆவாள் என்று விருந்தினர் நம் மகளைப் போற்றிப் புகழ்வர்.
(கு.உ):- விருந்தோம்பலில் தலைவி அருந்ததியே அனையாள் என விருந்தினர் பாராட்டியதாகச் செவிலி தாய்க்கு உரைத்தனள் என்க.
அருந்துதி - அருந்ததி: இப் பிரயோகத்தினைத் திருக்கோவையார் 300ஆம் செய்யுளிற் காண்க.
26. பரத்தையிற் பிரிதல்
தலைவன் பரத்தை மேற் காதலாய்த் தலைவியைப் பிரிந்து பரத்தையர் சேரியிற் போதல்
காதலன் பிரிவுமிக் கண்டோர் புலவிக் கேது விதாமிவ் விறைவிக் கென்றல்
(புலவி - ஊடலின் முதிர்ச்சி)
417 மனையனை வாரளி நல்லரி கோழி மறுத்துக்குப்பை
தனையணை யூரனைத் தங்கண் வலையதிற் றாம்பிணித்தார் துணைவரு சண்ட மதனவே கத்துடன் தோய்குழுவோ நினைபுல விக்கே திதுநா வனலை யேய்பவட்கே
பதவுரை:- மனை அணைவார் அளி நல் அரி மறித்து - வீட்டிலுள்ளார் இடும் நல்ல அரிசியை வேண்டாது, கோழி குப்பைதனை அணை ஊரனை - கோழியானது குப்பையை விரும்பிப் போகும் ஊரவனான தலைவனை, துணை வரு சண்ட மதன வேகத்துடன் தோய் குழுவோர் - விரைவுபட்ட மூர்க்கமான காம வேட்கையுடன் ஆடவரைத் தழுவும் குழுவினரான பரத்தையர், நாவலன் நலை ஏய்பவட்கு - நாவலர் பிரானது நல்லூரில் உள்ள தலைவிக்கு, இனை புலவிக்கு ஏது இது - வருத்துஞ் சாதனமான ஊடல் நிகழ்தற்குக் காரணம் இதுவே.
தனித்துழியிறைவி துணித்தழுதிரங்கல்
துணித்தல் - துன்பமுறல்
418. அறத்திற் பொறுபொரு ளாறு முகனூ ரணுகவஞ்சு
மறத்திற் பிறர்கொள வாடி யழிந்திடு மக்களென விறத்த லவர்க்கா லிசையா மனதோ டிருக்கவையோ புறத்தி லவரொழுக் கீர மதனே பொருவதுவே.

306
பதவுரை: அறத்தில் பெறு பொருள் - தரும நெறியில் ஈட்டிய பொருளை, அறுமுகன் ஊர் அணுக அஞ்சும் மறத்தில் பிறர் கொள - ஆறுமுக நாவலர் பிரானது நல்லூரை அணுகுதற்கும் அஞ்சி ஒதுங்கும் பாவத் திறனால் பிறர் அபகரித்துக் கொள்ள, வாடி அழிந்திடு மக்கள் என - வாட்டமுற்று மனம் அழியும் மாந்தர் போல, அவர் கா இறத்தல் இசையா மனத்தோடு இருக்க - தலைவர் பிரிந்து போதலை உடன்பட்டுக் கொள்ளாத மனத்துயருடன் ஒருவாறு ஆற்றி இருக்க, ஐயோ அவர் ஒழுக்கு புறத்தில் ஈர் அ மதனே பொருவதுவே - அவரது காதல் ஒழுக்கத்தை இல்லுக்குப் புறமான பரத்தையிடம் இழுக்கும் அதே மன்மதனே என்னை மோதுவதா? இது என்ன அநியாயம் என்பது குறிப்பெச்சம்.
ஈங்கிது வென்னெனப் பாங்கி வினாதல்
பாங்கி தலைவியை நோக்கி நீ அழுது கொண்டிருத்தற்குக் காரணம் என்னென்று வினாதல்
419. எற்கண் டலருங் கமல மலவோ வெழிலழிந்தே
யற்கண் ணுறுகுழ லாயொளி தேம்பி யயருவதேன் கற்கண் டனவித ழுண்டவர் தண்ணக லாருறவும் புற்கண் டகரொழி நாவல னல்லையிற் பூங்கொடியே
பதவுரை:- புற் கண்டகள் ஒழி நாவலன் நல்லையில் பூங்கொடியே - சிறுமை கொண்ட வஞ்சகர் நீங்கப் பெற்ற நாவலர்பிரானது நல்லைப் பதியில் வாழும் பூங்கொடி போலும் தலைவியே, அல் கண்ணுறு குழலாய் - இருள் குடி கொண்டிருக்கும் கூந்தலை உடையவளே, கற்கண்டு அன இதழ் உண்டவர் - கற்கண்டு போன்று இனிக்கும் நினது அதர பானத்தை அருந்தியவரான நும் தலைவர், கண்அகலார் உறவும் - நினது கண்களை விட்டு நீங்காதவராயிருப்பவும், எழில் எல் கண்டு அலரும் கமலம் அலவோ - நினது வனப்பு சூரியனைக் கண்டு மலரும் தாமரை மலரினை நிகர்ப்பதல்லவோ, (அ-து) அழிந்து ஒளி தேம்பி அயருவது ஏன் - அவ்வழகு பொலிவு குன்றி ஒளி இழந்து போகும்படியாக நீவின் வருந்துவது எதற்காக ?

Page 164
307
இறைமகன் புறத்தொழுக் கிறைமகளுரைத்தல்
தலைவன் தன்னிடத்தொழுகு மொழுக்கம் இன்று பரத்தையரிடத் தொழுகுகின்றானென்று தலைவி பாங்கிக்குக் கூறல்
420. காரான் றெளிபுனல் விட்டே கலங்கல் களித்தருந்து மூரான் பரத்தைய ரூரா னுறங்குவ னோங்குநல்லை யூரா னறுமுக லூரை யுறாதவ ரொப்பவிழி நீரான் முலைகுழிப் பாட்டி வருந்துவ னேரிழையே.
பதவுரை:- நேரிழையே - நேரிய ஆபரணம் அணிந்த தோழியே, காரான் தெளி புனல் விட்டே கலங்கல் களித்து அருந்தும் ஊரான் - தெளிந்த நீர் இருப்பவும் அதனை நாடாது கலங்கல் நீரை விரும்பி உண்ணும் எருமைகள் பயிலும் மருத நிலத்து நமது தலைவர், பரத்தையர் ஊரான் உறங்குவன் - பரத்தையர் வாழ் சேரியே தனது ஊராகக் கொண்டு அங்கு உறக்கம் கொள்வர், ஓங்கு நல்லை ஊரான் அறுமுகன் ஊரை உறாதவர் ஒப்ப -உயர்ச்சி பொருந்திய நல்லையில் வாழ் அறுமுகப் பிரானைச் சென்று சாராதவர் போல விழி நீரால் முலை குழிப்பாட்டி வருந்துவன் - கண்ணிரால் தனங்களை நீராட்டி வருந்தி இருப்பது ஏன் ?
தலைவியைப் பாங்கி கழறல்
(இது வெளிப்படை) கழறல் - இடித்துக் கூறல்
421. ஆச்சிலை வெற்பிற்க ளாரளி பூமிசங் கார்களுனும்
பூச்சிலை வாகார் பொதுமா தரைமால் பொருந்தினரென் பேச்சிலை யாகுவை நாவல னல்லூர்ப் பெருகுதையல் காய்ச்சிலை வேன்மொழி கற்புறு வாரிடங் காணுவதே
பதவுரை:- ஆச்சிலை வெற்பில் கள் ஆர் அளி - கோகனகத்திற் தேன் உண்ணும் வண்டு, பூமி சங்கார் கள் உணும் - நிலத்தாமரையில் பொருந்தும் தேனையும் உண்ணும், பூ சிலை வா கார் - அழகியதும் கற் போல் திண்ணியதான தோள் உடைய தலைவர் பொது மாதரை மால் பொருந்தினர் என் பேச்சு இலை ஆகுவை - பொது மகளிடத்து ஆசை கொண்டனர் என்ற பேச்சை எடுக்காதவளாய் இருப்பாயாக, நாவலன் நல்லூர் பெருகு தையல் - நாவலர் பிரானது நல்லூரில் பெருமை உறும் தலைவியே, கா சிலை வேல் மொழி கற்புறுவாரிடம் காணுவதே -

308
வருத்தும் இயல்புள்ள வில்லில் இருந்து பாயும் அம்பு போன்ற வார்த்தை கற்புள்ளவரிடம் காணப்படுவதா? அது உனக்கு அழகில்லை என்பது குறிப்பெச்சம்.
(கு.உ)- ஆ - கோ; சிலை - கல், வெற்பு - நகம் - மலை இவ்வாற்றால் ஆச்சிலை வெற்பு - கோகனகம் - தாமரை, பூமி - நிலம்; சம் (ஜம்) - தோன்றுவது. நிலத்தாமரை. தலைவியிடம் கலவியின்பம்
துய்க்கும் தலைவன் பரத்தையிடத்தும் அது துய்த்தற்கு உரியன் என்பது உள்ளுறைப் பொருள்.
தலைவி செவ்வணியணிந்து சேடியை விடுதல்
தலைவி செம்பூச் சூட்டி செவ்வாடையுடுத்துச் செஞ்சாந்து பூசிச் சேடியை விடுத்தல்
422. பவ்வ நலைநா வலன்றமிழ்த் தெவ்வரைப் பார்த்ததெனச் செவ்வ லரியோ டொருமதி கார்க்கீழ்த் தெரிவதென மவ்வ லுறுகுழ லாள்குழை வாயொரு வண்கொடியைச் செவ்வரத் தந்தோய் செயலென விட்டனள் சேடியையே.
பதவுரை:- பவ்வ நலை நாவலன் தமிழ் தெவ்வரை பார்த்தது என - கடலால் சூழப்பட்ட நல்லூர்ப்பதியில் தோன்றிய நாவலர் பிரான் தமிழுக்குப் பகைஞராய் உள்ளாரைக் கோபத்தினால் முகம் சிவந்து பார்த்தது என்னும் படியாகவும், செவ் அலரியோடு ஒரு மதி கார் கீழ் தெரிவது என - சிவந்த அலரியோடு ஒப்பற்ற சந்திரன் முகிலின் கீழ் தெரியும் காட்சி என்னும் படியாகவும், மவ்வல் உறு குழலாள் - மல்லிகை சூடும் கூந்தலினாளான, சேடியை - தோழியை, ஒரு குழை வாய் வண் கொடியை செவ்வரத்தம் தோய் செயல் என விட்டனர் - குழைபொருந்திய வளவிய கொடி ஒன்றைச் செவ்வரத்தம் பூவால் அலங்கரிக்கும் செயல் போல அலங்கரித்து அனுப்பினர்.
அவ்வணியுழையர் கண்டிரங்கிக் கூறல்
அவ்வலங்காரத்தை அயல் மனையிலுள்ளார் கண்டு இரங்கிக் கூறல்
423. வேசைவா யான்வெலு மென்றே யுலகர் விளம்புவர்கா சாசையே கொண்டு வெறும்வா யசைப்பவ ராவிவடன் றேசையே செம்மை யதுசெய்தல் வாய்க்கவல் சேர்த்திடுமெ ணாசைவா யேய்புக ழாறு முகனலை யன்னவளே

Page 165
309
பதவுரை:- வேசை வாயால் வெலும் என்று உலகள் விளம்புவர் - வேசிப் பெண் வாயால் வெட்டுவாள் என்று உலகத்தோர் உரைப்பர், காசு ஆசை கொண்டு வெறும் வாய் அசைப்பவர் - காசு ஆசை கொண்டு வெறும் வாயை மெல்லும் இயல்பினர்க்கு, எண் ஆசை வாய் ஏய் புகழ் ஆறுமுகன் நல்லை அன்னவள் இவள் தன் - எட்டுத் திசைகளிலும் பொருந்திய புகழினை உடைய ஆறுமுகப் பிரானது நல்லைப்பதி போல்பவளாகிய இவளது. தேசையே செம்மையது செய்தல் - அழகு மேனியில் செவ்வணி புனைதல், வாய்க்கு அவல் சேர்த்திடும் - வாய்க்கு அவல் கொடுத்ததாக இருக்கும்.
(கு.உ):- வேசை வாயால் வெட்டுவாள், வெட்டுக்கடா கொம்பால் வெட்டும் என்பது பழமொழி.
பரத்தையர் கண்டு பழித்தல்
அச் சேரியிற் போய சேடியைப் பரத்தையர் கண்டு பழித்துக் கூறல்
424. செற்கறுத் தேயளி செய்கை நினைந்து செறிமலர்க
ணற்கறி சோறிலை காய்கனி யேந்திடு நாவலன்கா மற்செறி நல்லை யம்மா தவளின்கறுத் தக்கொடிப்பூ விற்சிவப் பேய விவண்முழு துஞ்சிவந் தாற்றிடுமே.
பதவுரை:- செல் கறுத்து அளி செய்கை நினைந்து - மேகமானது நீர்ச் செறிவினாற் கறுத்துத் தனக்கு மழை பொழிந்து உதவும் உபகாரச் செயலை நினைந்து அதற்குக் கைம்மாறாகும்படி, செறி மலர் கள் நல் கறி சோறு இலை காய் கனி ஏந்திடும் - செறிவான மலரும் தேனும் நல்ல மிளகும் சோறும் இலையும்' காயும் கனியும் என்ற நுகள் பொருள்களை அம் மேகத்தை நோக்கி ஏந்தியபடி இருக்கும், நாவலன் கா - நாவலர் பிரானது சோலைகள் உள்ள, மல் செறி நல்லை அ மாது அவளின் - வளப்பம் மிக்க நல்லூரிடத்தாளான அத்தலைவியாகிய பெண்ணின், கறுத்த கொடி பூவிற் சிவப்பேய் - கருமை மிக்க புருவக் கொடியிற் பூக்கும் பூவாகிய கண்ணின் சிவப்பை ஒத்தது, இவண் முழுதும் சிவந்து ஆற்றிடும் - இவ்விட முழுதும் சிவப்பு மயமாய் அமைந்தது.

310
(கு.உ);-தலைவன் தங்களை அடைந்தமை பற்றித் தலைவி ஊடல் கொண்டு கண் சிவந்திருக்கும் நிலையைக் கூறிக் கேலி செய்து நகையாடும் பரத்தையர் கூற்று இது. செல் - மேகம் - கறி - மிளகு, சோறு - மகரந்தம் (விசேடமாகத் தாழைப் பூவின் மகரந்தம் மல் - மல்லல் - வளப்பம் )
பரத்தையருலகிய னோக்கி விடுதல்
பரத்தையர் தங்கள் சேரியில் தலைவன் இருத்தல் உலக முறைமைக்கு இயலாதென்று விடுத்தல்
425. வீட்டை யடைதல் பரத்தை யுறவெனல் வீணலக்கண்
பாட்டை யடையா தலறுமப் பாவியும் பன்னுமின்ப வீட்டை யடைய விழையில் லறமு மிகத்தழைக்க நாட்டை யடைநிலை நோக்குது நாவல னல்லையிலே
பதவுரை:- வீட்டை அடைதல் பரத்தை உற எனல் வீணல - மோட்ச வீட்டை அடைதல் பரம்பொருளைச் சார்வதற்கு என்று உரைப்பது வீண் வார்த்தை அன்று. மெய்யேயாம், கண் பாட்டை அடையாது அலறும் அ பாவியும் - கண்ணோட்டம் பெறாது புலம்புகின்ற அந்தப் பாவியும் கூட, பன்னும் இன்ப வீட்டை அடைய விழை - விதந்தோதப்படும் வீட்டின் பத்தைப் பொருந்த( ற்கு உறுதுணையாக) விரும்புவாய், இல்லறமும் மிக தழைக்க - மோட்ச நெறிக்கு இட்டுச் செல்வதாகிய இல்லற நெறியும் மிகத் தழைத்து ஓங்கும் வண்ணம், நாவலன் நல்லையில் - நாவலர்பிரானது நல்லைப்பதியின் கண், ஐ நாடு அடைநிலை நோக்குதும் -- நீவிர் வியக்கத்தக்க இற் பொருந்திய நிலையினை எதிர்பார்த்திருப்போம்.
(கு.உ):- பரத்தையர் உறவு தான் வீடடைதற்கு மார்க்கம் என்பது வீண் மொழியன்று, பரத்தையுறவு முடித்தவர் தன் வீட்டை அடைதல் நியதி எனவும் ஒரு பொருள் தோன்றச் சிலேடையாற் கூறினார். நாடு - இல், வீடு, இருப்பிடம்.

Page 166
31
தலைவன் வரவுகண்டு வந்து வாயில்கள் மொழிதல்
தலைவன் வருதலைக் கண்டு வந்து தாதிகள் பாங்கிக்கு மொழிதல்
426. மயலே யிலானெனச் சொல்லிடு நாவலன் மாக்கடலி
னயலே யயிருண்டு வந்துதன் பேடைக் களிகுருகி னியலேய் துறைவ னுலகிய னோக்கி யிவணடைந்தான் கயலேய் கணிபா லருளுடை யானெனல் காட்டினனே.
பதவுரை:- மயலே இலான் என சொல்லிடு நாவலன் மா கடலின் அயல் - மயக்கம் என்பதே இல்லாதவர் எனப் போற்றப்பெறும் நாவலர் பிரானின் பெருங் கடலின் மருங்கில், அயிர் உண்டு வந்து தன் பேடைக்கு அளி குருகின் இயல் ஏய் துறைவன் - நுண்ணுணவு அருந்தி வந்து தனது துணைக்கு நல்கும் நாரையின் இயல்புடைய தலைவன், உலகியல் நோக்கி இவண் அடைந்தான் - உலக ஆசாரத்தை எண்ணிப் பார்த்து இவ்விடம் வந்து சேர்ந்தான், கயல் ஏய் கணி பால் அருளுடையான் எனல் காட்டினன் - (அவ்வாற்றால்) கயல் போலும் கண்ணுடைய தலைவியின் இடத்து அன்புடையவன் என்பதனைப் புலப்படுத்தினான்.
கணி - கண்ணி
வரவுனர் பாங்கியரிவைக் குணர்த்தல்
(இது வெளிப்படை)
427. பன்னா வலர்பணி நாவல னல்லைப் பதியறிஞ
ரின்னா செய்தாரை யொறுத்த லினியசெய் தென்றறைவர் தென்னா வென்வண் டறைதார் மனரிவண் சேர்ந்தனர்தா வுன்னா தருள லுனக்கழ காமுல்லை யுத்தமியே
பதவுரை: முல்லை உத்தமியே - கற்பிற் சிறந்த உத்தமியான தலைவியே, பன் நாவலர் பணி நாவலன் நல்லை பதி அறிஞர் - பற்பல நாவன்மை படைத்த புலவர்கள் மதிக்கின்ற நாவலர் பெருமானின் நல்லைப் பதியிலுள்ள அறிஞர்கள், இன்னா செய்தாரை ஒறுத்தல் இனிய செய்தென்று அறைவர் - தனக்கு இன்னா செய்தாரை ஒறுப்பது அவர் தாமே காணுமாறு அவர்க்கு இனிய உவகை செய்தலாகுமென ஆன்றோர்

312
உரைப்பர், தென்னா என் வண்டு அறை தார் மனர் இவண் சேர்ந்தனர் - (ஆதலினால்) தென்னா என வண்டு பாடி மொய்க்கும் மாலை அணிந்த நின் மன்னராகிய தலைவர் இவ்விடம் வந்துள்ளார். தா உன்னாது - அவர் தம் குற்றத்தை மனத்திற் கொள்ளாது, அருளல் உனக்கு அழகாம் - அவர் பால் பரிவு காட்டுதல் உனக்கு அழகேயாம்.
முதிரா மென்முலை யெதிர் கொண்டு பணிதல்
தலைவி தலைவனை எதிர் கொண்டு பணிதல்
428. கன்றுன வாமடி நின்றுகு தீம்பாற் கயமுறமீ
னின்றுணு நாடதம் மாலாய நின்னை நிலவுநல்லை மன்றனை யுற்றார்க் கினிய னறுமுக வள்ளல்வெற்பிற் துன்றளி யோதிப் பொதுவியர் விட்டதென் றொல்தவமே
பதவுரை:- ஆ கன்று உன - பசுவானது அதன் கன்றை நினைத்த, மாத்திரத்தே, மடி நின்று உகு தீம் பால் - அதன் மடியிலே இருந்து சொரிகின்ற சுவை மிக்க பாலை, கயம் உறு மீன் நின்று உணு நாட - குளத்தில் உள்ள மீன் உண்ணும் இயல்புடைய நாட்டுத் தலைவரே, தம் மாலாய நின்னை - தம்மிடத்தே மயக்குற்று இருந்த நின்னை, நிலவு நல்லை மன் தனை உற்றார்க்கு -விளங்குகின்ற நல்லைப் பதியைச் சார்பவர்களுக்கு, இனிய ஆறுமுக வள்ளல் வெற்பில் - இனிமையைச் செய்கின்ற ஆறுமுகப் பெருமானது மலையிடத்தே உள்ள, அளி துன்று ஒதி பொதுவியர் - வண்டுகள் மொய்க்கும் கூந்தலினை உடைய பொதுமகளிர், விட்டது என் தொல் தவமே - மீண்டு வர விட்டது எனது பழைய தவத்தின் பயனே போலும்.
(கு.உ):- உன - உன்ன - நினைக்க - இடைகெட்டது மன் - மன்று - இடம் - கடைக்குறை.
புணர்ச்சியின் மகிழ்தல். 429. ஆரிய மும்மடி காணா வருந்தமி ழாயுமின்ப
வேரிய தாமிகு மெல்லிய லின்ப மிகுமமுதை
நாரிய மன்மதன் றாழ்குவ ளைத்தா ரறுமுகனல் லூரினர் சிற்றின்ப மென்ன லினச்சுட் டிலாவடையே.

Page 167
313
பதவுரை:- ஆரியமும் மடி காணா அரும் தமிழ் ஆயும் இன்ப மிகு வேரிய தாம் - பழமை வாய்ந்த ஆரிய மொழியினாலும் தோற்று வாயினைக் காண முடியாத பெருமை மிக்க தமிழினை ஆராய்வதால் வரும் இன்ப அனுபவத் தேன் (எனல்) ஆகும், மெல்லியல் இன்ப மிகு அமுதை - மென்மையான இயல்புடைய இப்பெண்ணிடத்துத் தோன்றும் அமுதமாகிய இன்பத்தை, நாரிய மன்மதன் தாழ் குவளை தார் அறுமுகன் நல்லூரினர் - அன்பு படைத்த மன்மதனால் வணங்கப்பெறும் குவளை மாலை அணிந்த ஆறுமுகநாவலர்பிரானது நல்லூரில் வாழ்பவர்கள், சிற்றின்பம் என்னல் ' இன சுட்டிலா அடையே சிற்றின்பம் எனக் கூறல் இனம் சுட்டாத அடைமொழியேயாகும்.
(கு.உ)- புராதனமாகிய ஆரியத்தினால் தொடக்கம் காணமுடியாத தமிழ் என்பதனால் அதன் அதி புராதன நிலை உணர்த்தப்பட்டது. மன்மதன் நாவலர்பிரானை வணங்கியமை அவரது நிறையின் திண்மையைத் தமது மலர்ப் பாணங்களால் பிளக்க இயலாமை கண்டு வெட்கி, அவா பால் பெருமதிப்புக் கொண்டதனால் என்க. நல்லூரில் வாழ்வார் வழக்கில் சிற்றின்பம் என்பது அதன் இனமாகிய பேரின்பத்தைத் தழுவுதலின்றி, மாதரின்பமாகிய இன்பத்தையே சுட்டுவதாய் நின்றது. இவ்வின்பப் பொருளின் மேலான வேறு இன்பப் பொருள் இல்லை என்றவாறு. இவ்வாறு கூறியதனால் பேரின்ப நிலைப் பேற்றை மறுத்தார் என்பதன்று. தலைவியால் தலைவன் எய்தும் இன்ப நுகர்ச்சியினை மேம்படுத்திக் கூறினார் என்பதே பொருளாம்.
காமக் கிழத்திநீத்தமை பொறாது நின்று கிழவோற் பழித்தல்
430. தன்சாரற் றாதுண்ணும் வண்டே யனையன் றகுநலையின்
மின்சாரற் றண்டலை காரெனக் கண்ணிர் விடுத்தலொப்ப வன்சாரங் கொண்ணா வலனனை யானவர் மாலகன்றே என்சார வேவருங் காலை யெடுப்ப னிவனலரே
பதவுரை: தன் சாரல் தாது உண்ணும் வண்டே அனையன் - தன் சூழலில் உள்ள மகரந்தத்தோடு கூடிய தேனை உண்டு களிக்கும் வண்டு போல்பவரும், வன் சாரம் கொள் நாவலன் அனையான் - ஆற்றலும் சிறப்பும் மிகுதியாகக் கொண்ட நாவலர் பிரானை அனையவருமாகிய தலைவர், மின் சாரல் தண்டலை கார் என கண்ணி விடுத்தல் ஒப்ப - (தண்டலை மின் சாரல் காரென கண்ணி விடுத்தல் ஒப்ப ) சோலையிற்

314
பொருந்திய மின்னலோடு கூடிய முகில் (மழை சொரிந்தாற்) போன்று கண் நீர் சொரிதல் ஒத்து யான் வருந்த, அவர் மால் அகன்று - அப் பரத்தை மங்கைமாரிடத்துப் பொருந்திய காம மயக்கம் நீங்கப் பெற்று, இவன் என் சாரலே வரும் காலை - தலைவர் என்னைச் சேர வரும் போது, அலர் எடுப்பன் - தலைவர் பற்றிய அலர் தூற்றலை மேற்கொள்வேன்.
(கு.உ): தன் உறவு நீத்துத் தலைவி பாற் சென்ற தலைவன் தன்னை நாடி மீண்டும் வருவான் என்ற கொள்கையுடையளாகிய காமக் கிழத்தி தலைவன் பிரிந்து சென்ற காலை இவ்வாறு கூறினள் என்க. காரெனக் கண்ணும் காரின் மழை ஒப்பக் கண் நீரும் என உருபு காட்டிப் பொருள் கொள்க. காரெனக் கண் நீர் விடுத்தல் உற்று யான் வருந்த என விரிக்க.
அவனொடும் பாங்கொடும் பரத்தையைப் பழித்தல்.
431. ஆலிரு பூமா னனைநா வலனலை யாயமதான்
மேலிரு நற்றனங் கீழாரை யாம்பண மேவினர்தம் பாலிரு நற்றனங் கொண்டு வறுமலர் பற்றிலரி போலிரு மாதர் கிளையை யனையனும்புல் வியப்பே.
பதவுரை:- ஆல் இரு பூமான் அனை நாவலன் ந(ல்)லை - ஆலிலையில் துயில் கொள்ளும் திருமால் அனைய நாவலர் பிரானது நல்லைப் பதியிலே, ஆயமதால் - தோழியரின் உதவியால், மேல் இரு நல் தனம் கீழ் அரையாம் பணம் மேவினர் தம் பால் - மேலே பொருந்திய நல்ல தனத்தினையும் கீழே அரையிடத்துள்ள பாம்புப் படம் போன்ற நிதம்பத்தினையும் விரும்பினோர் தமதிடத்து இரு நல் தனம் கொண்டு - பெருமை மிக்க மிகுதியான நற்பொருளைக் கவர்ந்து கொண்டு, வறு மலர் பற்றில் அரிபோல - தேன் அற்ற மலரில் பற்றில்லாத வண்டு போன்ற, மாதர் கிளையை அனையனும் புல் வியப்பு - பரத்தையின் கூட்டத்தினை அத்தகைய தலைவன் கூடுவது வியப்பாகும்.
(கு.உ பிரளய காலத்தில் திருமால் ஆல் இலையில் துயில் கொள்வார் என்பது புராணச் செய்தி பணம் - பாம்பின் படம்; அரி - வண்டு

Page 168
35
மனைவியைப் பழித்தல்
432. வளம்பட வாழ்வார் மனையக வாழ்வு மலியுவகை
யுளம்பட வுஞ்ச லெனவுலை நல்கூ ருவரெனத்த னுளம்பட மன்னக லம்பிற மாத ருழறரத்தான் குளம்படு கண்ணினள் வாழலென் நாவலன் குன்றினிலே
பதவுரை:- நாவலன் குன்றினிலே Nors நாவலர் பிரானது மலையிடத்தின்கண், 6)6TTLDL iL ഖpഖi് oro 66Tib பொருந்த வாழ்கின்றவர்கள், மனையக வாழ்வு மலி உவகை - தமது இல்லற வாழ்வில் நிலவிய மகிழ்ச்சி, உளம்பட - உட்குவிய ( அதாவது
சுருங்க), ஊஞ்சல் என உலை நல்கூருவர் என - ஊஞ்சல் உலைவது போல் மனத்தை உலைய வைக்கும் வறுமைக்கு ஆளாதல் போல, தன் உளம்படு அ மன் அகலம் - தன் உள்ளத்தைப் பிணித்திருந்த அந்தத் தலைவனது மார்பை, பிற மாதர் உழ - வேறு பெண்கள் தம் முலையால் உழ, தான் குளம் படு கண்ணினள் வாழல் என் - தலைவி குளம் போல் நீர் தேங்கு கண்ணினளாய் வாழ்தல் என்னோ ?
(கு.உ):- உளம்படல் - உட்குவிதல் - சுருங்குதல் - உலை நல் கூருவர் என்புழி உலை என்னும் வினைத்தொகை பின்வரும் மொழியின் முதல் நிலையாகிய நல்குரவு என்ற சொல்லோடு முடிந்ததாகக் கொள்க. அகலம் பிற மாதர் உழ - அகலமாகிய நெஞ்சை முலையாகிய கலப்பையால் உழ என விரித்து உரைக்க, உழ எனும் தொழிற் குறிப்பினால் வரும் உருவகம் இதுவாயிற்று, குளம் படு கண், குளத்தின் தன்மை அமையும் கண் என்க. என் - என்ன கேவலம் என்ற பொருளில் பழித்தற் குறிப்பிற்று.
பரத்தையர் காதற்பரத்தையைப் புகழ்தல்
(இது வெளிப்படை)
433. சண்பக வீயுறு வியென வீய்த் தகுமனையாள்
பண்பகர் வீயுறு வியென வேயுறு பாங்கமைநங்
கண்கவர் சாதியின் பண்பினி தேநா வலப்பட்டத்தா மண்புக ழெய்த வதுபுக ழெய்திடு வானலைக்கே

316
பதவுரை:- சண்பக வீயுறு வியென - வாடிய சண்பகப் பூவின் வாட்டம் போல, வீ அ தகும் மனையாள் - வாடுகின்ற அத் தகுதி வாய்ந்த
இல்லாள், பண் பகள் வீ உறும் வீ எனவே - பண் மிழற்றும் வண்டு பொருந்தி நீங்காது இருக்கப் பெறும் புது மலர் என்னும்படி, உறு பாங்கு அமை - உறுதற்காம் தன்மையை அமைக்கும், கண் கவர் சாதியின்
பண்பு இனிதே - கண் கவர்ச்சி தரும் உனது சாதிப் பண்பு இனியதே, நாவல பட்டத்தால் - நாவலர் என்னும் விருதினால், மண் புகழ் எய்த - உலகம் புகழ் அடைய, அது புகழ் எய்தும் - விருது புகழ் பெற்று மிளிரும் நிலையைத் தந்த, நாவலன் நலைக்கே - நாவலர் பிரானது நல்லையின் கண்
(கு.உ):- வி - வாடிய பூ வியென வி - வாட்டம் போன்ற, வாட்டமுறும், வாடிய பூவுமாம் - வாட்டமுமாம். இரண்டாம் அடியில் முன்னைய வீ - வண்டு; பின்னையது பூ தலைவனைத் தன் பால் திரும்ப விடாமல் தடுத்து வைத்திருக்கும் காதற்பரத்தையின் செயலை ஆட்சேபிக்கும் பரத்தையர் இல்லக் கிழத்திக்கு நன்மையே செய்வதாகப் புகழ்தல் வாயிலாகத் தம் உளக் கொதிப்பைக் கசிய விட்டவாறு. நம் சாதி என்புழி நம் நும் மேல் நின்றது. இகழ்ச்சிக் குறிப்பு இல்லக் கிழத்தி இப்போது வாடும் வாட்டமெல்லாம் தலைவன் மீண்டு சென்று சேர்கையில் அவன் பெறும் களிப்பை மிகுவித்தற் பொருட்டாகும். என்பது முதலீரடிப் பொருட் குறிப்பாயிற்று நாவலர் பட்டத்தால் மிளிரும் நல்லையின் கண்வாடிய இல்லாள் புதுமலர் என்னம் படியான தன்மையை அமைக்கும் உமது சாதிப் பண்பு இனியது எனக் கூட்டி முடிக்க. இது வஞ்சப் புகழ்ச்சி என்னும் அணியின் பாற்படும்.
பரத்தையர் தம்மை யிகழ்தல்
434. காமக் கிழத்தியர் காதற் பரத்தையர் திங்கட் செவ்வாய்த்
தேமப் புதன்மது வாரபொன் வெள்ளி தெளிமதியர் னாம மகச்சனி நாடார்க்கெ னாவல னல்லைவெற்ப னாம வலரி யகறா மரையோ லழுங்குவமே
பதவுரை:- இச் செய்யுள் வடமொழியிற் பிரகேளிகை எனப்படும் அணி வகையுள் அடங்கும் நாமாந்தரிதை ஆகும். கவி தான் கருதும் பொருளைச் சாமானிய பெயர்களில் உள்ளிட்டுக் []ഖg| நாமாந்தரிதையாம். இங்கு வார நாள் பெயராகிய திங்கள், செவ்வாய், புதன், பொன் (வியாழன்) வெள்ளி,சனி, அலரி (ஞாயிறு) ஏழும் பயின்று புணர்ச்சிச் சேர்க்கை இயல்பைத் தோற்றும் நிலை புலனாகிறது. திங்கள் புணரப்படுவாள் முகம், செவ்வாய் அவளது வாயிதழ், புதன் 'தேம் அப்பு தன் மது ஆர' என்ற தொடரிடைப்பட்டுப் புணர்ச்சியில் அதர பானம்

Page 169
317
நிகழ்வதைக் குறிக்கும். செயற்கு உபகாரமாகிறது. பொன் சுரோணிதம், வெள்ளி சுக்கிலம். சனி மகத்துச் சனி, சூரியன் மறையத் தாமரை குவிதல் குறிக்கும். இறுதி அடிப் பொருளுக்குதவும் நிலையில் ஞாயிறு (அலரி) என்ற நிலையில் அகன்ற தாமரை போல் அழுங்குவம். முகத்திலுள்ள வாயிதழில் இனிமை (தேம்) அப்பப்பட்டிருக்கும். தேனை (மது)ச் சுவைக்கச் கூரோணிதத்தில் சுக்கிலம் தெளிபடும் என்ற பொருள் நாமாந்தரிதைப் பொருளாம்.
(கு.உ)-மதியர் னாம மகச் சனி நாடார்க்கு எனற பகுதி தெளிவற்று இருப்பதால் அதற்குப் பதம் பிரித்துப் பொருள் முடிபு காணும் வாய்ப்பு அரிதாகின்றது.
பரத்தையர் கிழவோன்றன்னைப் பழித்தல்
435 வேசி துயில்குல மாதர்க் குறுமோ வியன்மதியோய் தேசி லறிவிற் பிறவிலொப் பாரறு சீர்நலையா னேசி யகல்கல வித்துறை காட்ட வியற்றிடுவார்ப் பூசி யதுவுனக் கேதகு மின்பமும் பொங்கிடுமே
பதவுரை:- வேசி துயில் குல மாதர்க்கு உறுமோ - வேசியின் வஞ்சனைத் துயில் குலப் பெண்களுக்கும் பொருந்துமோ, வியன் மதியோய் - பெருமை மிக்க நல்லை நாடனே, சீர் நலையான் ஏசி அகல் - சிறப்பு மிக்க நல்லை நகள் நாவலன் ஏசிக் கடிந்து ஒதுக்கிய, கலவி துறை காட்ட இயற்றிடுவார் பூசியது - மெய்யுறு புணர்ச்சியை விசேடித்துக் காட்டச் செயற்கை அலங்காரம் பண்ணும் மற்றும் பெண்களைக் காம மயக்கினால் நீயும் உன் கையால் பூசி மெழுகிட்ட (சோமர்) செயல், உனக்கே தகும் - உனக்கே பொருந்துவதாம், இன்பம் பொங்கிடும் - அதனால் உனக்குப் புணர்ச்சி இன்பமும் ஒரு படி அதிகரித்திருக்கும்.
(கு.உ):- அவருக்கு உன் கையாற் பூசி மெழுகிடுதல் ஆடவனுக்கழகோ என்பார் உனக்கே தகும் என நிந்தை “வாய்பாட்டால் கூறினார். அவ்விதம் இளிவந்தன செய்து பெறும் இன்பம் என்ன இன்பமோ அதிற் கெளரவ முண்டோ என்பார் இன்பமும் பொங்கிடுமோ என அவ் வாய்பாட்டாற் கூறினான் என்க. அகல் கலவித்துறை - அகற்றப்பட்ட கலவித்துறை இறந்த கால வினைத்தொகை. இயற்றிடுவார் - செயற்கை அலங்காரம் பண்ணுவார். ஆண்மைக் கழகற்ற முறையிற் பெண் வேண்டுவன செய்வாரைச் சோமர் எனல் வழக்காதல் அறிக.

318
பரத்தையர் தம்மைப் புகழ்தல்
436. அருண கிரியளித் தாணம் மரபி லரிவையன்றோ
மருள வருநெறி நீப்போர் பரத்தை மருவிடுவர் தெருளு பரத்தை யணைநா வலனலைச் சேர்பேரின்ப மருளு மெமையணை யாரெவ ராண்டகை யாயறையே
பதவுரை:- அருணகிரி அளித்தாள் - அருணகிரி ன்னற ஒரு பிரமுகரை ஆக்கியவள், நம் மரபில் அரிவை அன்றோ - நம் மரபினரான ஒரு பரத்தை அல்லவா, மருள வரும் நெறி நீப்போர் பரத்தை மருவிடுவர் - மயக்கம் கொண்டு வரும் பிறவி நெறியை நீக்குவோர் பரத்தை(யை) அணைவர், தெருளும் பரத்தை அணை - தெளிவு தரும் பரம் பொருளை அணைந்த, நாவலன் நலை சேர் பேரின்பம் அருளும் எமை - நாவலர் பிரானது நல்லைப் பதியைச் சேர்வதாற் பெறக் கூடிய இன்பம் போல்வதோர் இன்பத்தைக் கொடுக்க வல்லோமாகிய எம்மை, அணையா ஆண்டகை யார் எவர் - அணையாது விட்டவராய பெருமகன் யார், அறை - சொல்வாயாக.
(கு.உ):- அளித்தாள் - படைத்தாள் என்பது, அருணகிரி முருக பக்தனாய்ச் சிறந்து ஓங்குதற்கு முன்னோடியான விரக்தி நிலை அமையக் காரணமாய் இருந்தவள் என்னும் பொருண்மைத்து. இது காரணம் காரியத்தின் மேல் நின்ற உபசாரம். இரண்டாம் அடியில் பரத்தை ஐயிறு தொக்குச் செயற்படு பொருளில் நின்றது. ஐயிறு ப்ெறற பரம் ( பரம்பொருள்) எனற்கும் பொருந்த நிற்றலின் இதிற் சிலேடை நயம் உண்டு.
தலைவி வெள்ளணியணிந்து சேடியை விடுத்தல்
தலைவி வெள்ளாடை முதலிய அணிந்து சேடியை விடுத்தல்
437. நந்துார வாவி செறிநலை நாவல னற்கிரியிற்
சிந்துார வாணுத லாணெயி லாடிய சீரறிய விந்துார நன்முகச் சேடியைக் கற்புவெ ளேரறுவை சிந்துார நத்தளி முத்தணிந் தேவிடுஞ் சேரியிலே

Page 170
39
பதவுரை:- நத்து ஊர் அ வாவி செறி நலை - சங்குகள் ஊர்கின்ற அத்தகைய வாவிகள் செறிந்த நல்லையில் வாழ்ந்த, நாவலன் நல் கிரியில் - நாவலர் பிரானது நல்ல மலையிடத்தில், சிந்துார வாள் நுதலாள் - சிந்துாரப்பொட்டு விளங்கும் ஒளி மிக்க நெற்றியை உடைய தலைவி, நெயில் ஆடிய சீர் அறிய - எண்ணெய் முழுக்காடி விட்ட நிலைமை தெரிவாம்படி, இந்து ஊர் அ நன் முகச் சேடியை - சந்திரன் போன்ற அத்தகைய அழகிய முகம் உள்ள சேடியை, கற்பு வெளேர் அறுவை - கற்புக்கு அறிகுறியாம் வெண்மை பொருந்திய ஆடையும், சிந்து ஊர் அ நத்து அணி முத்து - கடலில் ஊரும் அத்தகைய சங்குகளினும் அழகிய முத்தின் ஆபரணங்களும் அணிவித்து, சேரியில் விடும் - பரத்தையர் சேரிக்கு அனுப்பியுள்ளாள்.
(கு.உ):- தலைவி தான் உற்ற பூப்புக் குற்றம் தவிர் எல்லை தீர்ந்து எண்ணெய் முழுக்காடி விட்டமையைப் பரத்தையர் சேரியில் உள்ள தலைவன் அறிந்து கொள்ளுமாறு தன் சேடியை வெள்ளணி அணிந்து சேரிக்கு அனுப்பி வைத்தல் என்னும் அகத்திணை ஒழுக்க விதி இதனாற் பெறப்படும்.
புள்ளணிமாலை நெடுவேலண்ணல் வாயில் வேண்டல்
438. புள்ளனி கொண்டறை வேலைநல் லூருறை
வேலையொப்பான் விள்ளணி கொள்ளுமிக் கோவை புனைநா வலன்வெற்பனம் வெள்ளணி கொண்டது கண்டேன் மகிழ்ந்தேன ளிபலமுதற் தெள்ளணி சொல்லா யகப்பொருள் யாப்புறச் சேர்க்குதியே
பதவுரை:- புள் அணி கொண்டு அறை வேலை - பறவைகள் நிரையாய் இருந்து ஒலிக்கும் சிறப்பு உள்ள கடற்கரை தழுவிய, நல்லூர் உறை வேலை ஒப்பான் - நல்லூரின் கண் எழுந்தருளும் வேலாயுதமுடைய முருகப் பெருமானை ஒத்தவரும், விள் அணி கொள்ளும் இ கோவை புனை நாவலன் - வெளிப்படக் கூறும் அணிகளைக் கொண்ட இக் கோவைப் பிரபந்தத்தை ஏற்று நமக்கு அருளுபவருமாய நாவலர் பிரானது, வெற்பு அனம் வெள் அணி கொண்டது கண்டேன் மகிழ்ந்தேன் - மலையிடத்தாளாய் அன்னம் போல்வாளாய உன் சேடி வெண்மையான அணி அணிந்து வந்த சுபதர்சனம் கண்டு மகிழ்ந்தேன், தெள் அணி சொல்லாய் - தெளிவு மிகும் பேச்சுடையவளே, அக பொருள் யாப்புற சேர்க்குதி - அகத்தினைச் சாரும் இன்பப் பொருள் ஒரு தலையாகத் தொடர்புறுமாறு என்னைச் சேர்த்துக் கொள்வாயாக.

320
(கு.உ):- கண்டேன் மகிழ்ந்தேன் என்பதனை விகுதி பிரித்துக் கூட்டுக. உடைமையாகிய வேல் உடையானாகிய முருகனுக்கு ஆதலால் ஆகுபெயர், உடைமை - ஆகுபெயர். யாப்பு - இயைபு, தொடர்பு.
தலைவி நெய்யாடிய திகுளை சாற்றல்
தலைவி புதல்வனைப் பயந்து நெய்யாடியதனைப் பாங்கி தலைவற்குச் சொல்லல்
439. பொய்யாடி நாவியி னெய்யாடி யாடியிற் போமவரைக் கையாடி காம சுகநாடி நிற்கவை கள்ளவளைச் செய்யாடி யிங்கே வருவோய் மகவளித் திட்டுநறு நெய்யாடி மாதரு நின்றா ளறுமுக னணலைக்கே
பதவுரை:-பொய் ஆடி - பொய்ப் பேச்சும் பொய் ஒழுக்கமும் கொண்டு, நாவியின் நெய் ஆடி - புனுகு நெய்யினைப் பூசி, ஆடியில் - எவ்வெவர்க்கும் அவ்வவர் தன்மையில் நிற்கும் கண்ணாடியைப் போன்று, (இவளும்) போமவரை - தம்மிடம் செல்பவர்களை அவரவர் விரும்பியவாறு இசைவு காட்டி, கையாடி - கைப்பொருளைக் கவர்ந்து, காம சுகம் நாடி நிற்க வை - காம இன்பம் நாடியவர்களாக நிற்க வைக்கும், கள்ள வளை செய்யாடி வஞ்சக இயல்பினளாகிய பரத்தையுடன் புணர்ச்சி (யாகிய செய்கை) யில் தோய்ந்து, இங்கு வருவோய் - இவ்விடம் நாடி வரும் தலைவ, அறுமுகன் நீள் நலைக்கு ஆறுமுகநாவலர் பிரானது நெடிய புகழ் பூத்த நல்லைப் பதியிலே, (உம்)
மாதர் - நுமது தலைவி, மகவு அளித்திட்டு - பிள்ளைப்பேறு எய்தி, நறு நெய் ஆடி நின்றாள் - வாசனை உடைய நெய் நீவிப் புனலாடி நிற்கின்றனள்.
தலைவன் றன் மனத்துவகை கூறல்
(இது வெளிப்படை)
440. மண்டகு சீர்த்தியன் றாமோ தரம்பிள்ளை தன்னைச்சைவங்
கண்டிட வைநா வலனலை யன்னவள் கைம்மகபா
லுண்டிடு கொங்கையும் வானெய் வழுவழுப் போங்குமெய்யுங் கண்டிட முந்து தவம்பல செய்தனன் காண்மனமே

Page 171
321
பதவுரை:- மண் தகு சீர்த்தியன் தாமோதரம்பிள்ளை தன்னை - உலகம் மெச்சத்தகு புகழுடையனான தாமோதரம்பிள்ளை அவர்களை, சைவம் கண்டிட வை. நாவலன் - சைவத்தின் பெருமையை உணர்த்தி அதனைத் தழுவச் செய்த நாவலர் பிரானின், ந(ல்)லை அன்னவள் - நல்லைப் பதியை நிகர்த்தவள், கை மக(வு) பால் உண்டிடு கொங்கையும் - கைக் குழந்தை பால் உண்ணப் பெறும் பயோதரமும், வால் நெய் வழுவழுப்பு ஓங்கு மெய்யும் - வெண்மையான நெய்ப் பூச்சின் வழுவழுப்புப் பூரித்த தேகமுமாய், (பொலியும் தோற்றத்தினை) கண்டிட முந்து பல தவம் செய்தனன் - நான் காண்பதற்கு முன்னைப் பிறவிகளில் பல தவங்கள் செய்திருக்க வேண்டும், மனமே காண் - மனமே கண்டு கொள்வாயாக,
தலைவிக்கவன் வரல் பாங்கி சாற்றல்
(இது வெளிப்படை)
441. நெய்த்த பசுநரம் போடிய மேனியு நேர்மகவு
துய்த்த விருபாற் குடமுந் துருவிச் சொரிபுயனிர் செய்த்தலை யோடரு நாவல னல்லைமன் சீர்மகவைக் கைத்துணை யேந்தியுன் காற்றுணை யேந்தக் கருதினரே
பதவுரை:- நெய்த்த பசு நரம்பு ஒடிய மேனியும் - நெய்த் தன்மை கொண்ட பசு நரம்பு பூத்த மேனியும், நேர் மகவு துய்த்த இரு குடமும் துருவி - பிறந்த குழந்தை பால் அருந்தும் இரு தனங்களையும் நோக்கி, சொரி புயல் நீர் செய்தலையோடு அரு நாவலன் நல்லை மன் - பொழிகின்ற மழை நீர் வயலிடத்துப் பாயும் அருமை வாய்ந்த நாவலர் பிரானது ந்லலைப் பதி சார் தலைவர், சீர் மகவை கைத் துணை ஏந்தி - சிறப்புப் பொருந்திய பிள்ளையைத் தனது கையிலே தாங்கி, உன் கால் துணை ஏந்த கருதினர் - உன் பாதங்களைச் சிரமேற் கொள்ள எண்ணியுள்ளார்.
தலைவியுணர்ந்து தலைவனொடு புலத்தல்
(இது வெளிப்படை)
442. சின்னிர் செறியழுக் காடையும் வாடையுந் திமுலைப்பா
லுன்னிர் முடையுமும் மெய்யறி னோங்கி யுயர்பொழிற்க
ளின்னி கயநிறை நாவல னல்லை யிளங்கொடியார் பன்னிர் களபப் பரிமள மாற்றுமெம் பால் வரலே

322
பதவுரை:- சின்னிர் செறி அழுக்கு ஆடையும் வாடையும் - குழவியின் சிறுநீர் துதைந்த அழுக்குச் சேலையும் துர்நாற்றமும், தீ முலை பால் உன் நீர் முடையும் - திவ்விய முலைப்பால் ஒழுக்கோடு அமைந்த ஊன நீர் நெடியும், உம் மெய் உறின் - நுமது உடம்பில் படுமானால், ஓங்கி உயர் பொழில் கண் இன் நீர் கயம் நிறை - வளர்ந்து ஓங்கி விளங்கும் சோலையிடத்து இனிய நீர் நிறையப் பெற்று, விளங்கும் தடாகங்கள் பொருந்திய, நாவலன் நல்லை. இளம் கொடியார் - நாவலர் பெருமானது நல்லைப்பதி சேர் இளங்கொடி போல்வார், நம் பால் வர - நம் பக்கமாக வர, பன்னிரொடு களப பரிமளம் ஆற்றும் - பன்னிரும் கலவைச் சாந்துமாகிய வாசனைப் பொருள் கொண்டு முன் குறித்த தலைவி பால் உள்ள நாற்றங்களை அகற்றும்,
பாணன் வாயில் பகர்தல்
443. கள்ளம் பயின்மனக் காரிகை யாரைக் கலந்தனனென்
றுள்ளம் வருந்த றிருவே யுயரவை யுற்றுநறுந் தெள்ளந் தமிழ்தெரி நாவல னல்லூர்ச் சிலம்பனன்பன் வெள்ளந் தெளிபுன லன்றி யுவரையு மேவிடுமே
பதவுரை: உயர் அவை உற்று - உயர்ந்தோர் சபையில் தோன்றி , நறும் தெள்ளம் தமிழ் தெரி நாவலன் - நறிய தெளிவுமிக்க தமிழ் மேன்மை தெரியப் பேசும் நாவலர் பிரானது, நல்லூர் சிலம்பன் அன்பன் - நல்லூர் மலையிடத்தானாகிய எனது அன்பன், கள்ளம் பயில் மன காரிகையாரைக் கலந்தனன் என்று - வஞ்சனையிற் பழகும் மனம் உள்ள பரத்தையரைப் புணர்ந்தான். என்று , திருவே - இலக்குமியாகிய தலைவியே, உள்ளம் வருந்தல் - உன் உள்ளம் வருந்தாது ஒழிவாயாக, வெள்ளம் தெளி புனலன்றி உவரையும் மேவிடுமே - வெள்ளம் பெருகும் கால் தெளிந்த நீரிற் கலத்தல் மாத்திரம் தான் அமையாது உவர் நீரிலும் கலப்பதாம்.
(கு.உ):- தலைவன் என்பான் பரத்தையைச் சார்வது ஒன்றும் புதிது அன்று இயல்புதானே என்பான் வெள்ளத்தின் மேல் வைத்துரைத்தான். இது வேற்றுப் பொருள் வைப்பணி, உயரவை திருவாவடுதுறை ஆதீனம் போல்வன. நாலாமடி "வெள்ளன் னம்புனன் மேவிடு மேநறும் பாறுறந்தே" எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Page 172
323
பாணன் வாயில் மறுத்தல்
444. கலையிடங் கொண்ட நலைநா வலனார் கடிந்துரைத்த புலையிடங் கொண்டவ பொய்த்தைேல காட்டுமப்
புன்மையலைத் தலையிடங் கொண்டிவண் வீணை யிசையாய் தடங்கடற்சார் அலையிடங் கொண்டெறி யிங்குன் வலைபலி யாதறியே
பதவுரை:- கலை இடம் கொண்ட - கலை ஞானத்தைத் தன்பாற் கொண்ட, நலை நாவலனார் - நல்லூரானாம் நாவலர் பெருமானால், கடிந்து உரைத்த புலை இடம் கொண்டவ - கடிந்து உரைக்கப்பட்ட புலைப்பண்பை உன்பாற் கொண்ட பாணனே, பொய் தலை காட்டும் அ புன்மை அலை தலையிடம் கொண்டு இவண் வீணை இசையாய் - பொய்த்தலை காட்டும் புன்மை அல்லாது முதன்மை இடம் பெற்றவன் போல் நின்று இங்கு வீணை வாசிக்காதே, இங்கு உன் வலை பலியாது - இங்கு என்னிடத்தில் உன் வலை வீச்சுப் பலிக்காது, தடம் கடல் சார் அலை இடம் கொண்டு எறி - விசாலமான கடலில் பொருந்திய அலையில் ( வேண்டுமாயின் ) உன் வலையைக் கொண்டு போய் 656. Itunes.
(கு.உ):- முன் புலை என்பதற்கேற்ப அத்தொழிற் சாதனமான வலை பின் வருவதாயிற்று. பாணனது தந்திரத்தை வலை என்றது உருவகம், பொய்த்தலை காட்டல் - சுவர் உடைத்துத் திருடுவார் ஆள் நடமாட்டம் அறிவதற்குச் சுவர்த் துவாரத்தின் ஊடாக உட்செலுத்தும் செயற்கைத் தலை.
வாயின் மறுக்கப்பட்ட பாணன் கூறல்
445. உரைநடை செய்யுணடை கீர்த்தனை நடை யுற்றவில்லந்
தரைநடை கற்க வியனா வலன்பொழிற் றண்டடத்தா மரையிடை யெம்பெரு மாட்டியச் சாக்கியன் மானலெனே வரையிடை வாழ்சிவ லிங்க மலேன்கண் மழைபெயவே

324
பதவுரை:- உரைநடை செய்யுள் நடை கீர்த்தனை நடை - உரை நடையும் செய்யுள் நடையும் கீர்த்தனை நடையும், உற்ற இல்ல நடை - பொருந்திய இல்லொழுக்க நடையாம், தரை கற்க இயல் நாவலன் - உலகம் கற்க வேண்டும் பணிகளில் இயன்ற நாவலர் பிரானது, பொழில்
தண் தட தாமரையிடை - சோலையின் கண் உள்ள குளிர்ச்சியான குளத்தில் அலர்ந்த தாமரையில் வீற்றிருக்கும், எம் பெருமாட்டிஇலக்குமி தேவியாகிய எம் பெருமாட்டி, சாக்கியன் மான - பண்டு
அறியப்பட்ட சாக்கிய நாயனாரை ஒப்ப, கன் மழை பெய்ய - என மேல் கல் மழை பொழிதற்கு, வரையிடை வாழ் சிவலிங்கம் அலேன் - நான் (அவள் கல் எறிக்கு இலக்காகிய) மலையிடத்துச் சிவலிங்க மல்ல, எனே - இது என்ன மாயமோ ?
(கு.உ):- நாவலர் இல்ல நடை தரை கற்க இயன்றமை அவள் மகளிர்க்குரிய கற்பு முதலியன பற்றி எழுதிய கட்டுரைகளாற் பெறப்படும். பிராட்டியே நீ சாக்கியன் மானக் கன் மழை பெய யான் சிவலிங்க மல்லவே என முடிக்க. எனே - என்னே.
விறலி வாயில் பகர்தல்
446. வண்டு பலசுரங் கண்டு பயின்றுபன் மாமலாக
ளண்டு வதுபுதுக் காரிய மோமுல்லை யார்திருவே கண்டு கணிகை விடுமே முலைக்கொடி கள்விடுமோ தொண்டு நமைக்கொளு நாவல கேசரி தொன்னலைக்கே
பதவுரை: முல்லை ஆர் திருவே - முல்லை அரும்புகள் போலும் பற்களை உடைய தலைவியே, நமை தொண்டு கொளும் நாவல கேசரி தொல் நலைக்கு - நம்மைத் தொண்டு கொண்டு அருளும் நாவலர் சிங்கமாய எம் பிரானது பழைமை மிக்க நல்லூரின் கண், வண்டு பல சுரம் கண்டு பயின்று - வண்டானது பல வேறு பண்களை அறிந்து பாடிக் கொண்டு, பல் மா மலர்கள் அண்டுவது புது காரியமோ - பல வேறு நல்ல பூக்களையும் அணுகுவது ஏதோ புதுச் செயலோ, கண்டு கணிகை விடுமோ - தலைவனைக் கண்டால் கணிகையர் அவனை ஏற்காது விடுவாரோ, முலை கொடிகள் விடுமோ - முலைகளைத் தாங்கும் பூங்கொடிகள் போல் அசையும் பிற மாதர்கள் அவனை அணுகாது விடுவார்களோ ?

Page 173
325
(கு.உ):- முல்லை என்னும் முதலின் பெயர் அதன் சினையாகிய அரும்புக்கு ஆகியது - முதலாகு பெயர். சுரம் - பண். கண்டு - இயல்பு அறிந்து - தலைவன் பிறமாதரைச் சேர்தலில் ஒரு புதுமையும் இல்லை, அது இயல்பு என்பான் வண்டின் மேல் வைத்து உரைத்தான்.
விறலி வாயின் மறுத்தல்
447. செந்தா மரைகரு முண்டகஞ் சேரு சிலம்பனடி
வந்தா தரிபாண் மகளே சுரம்பண் வடித்தனமுன் அந்தோ சுரம்பண் மறந்தன னாவல னாறுமுகன் செந்தே னொழுகு தமிழறி யாரிற் றியங்கினனே
பதவுரை: கரு முண்டகம் சேரும் செந்தாமரை சிலம்பன் அடி - கரிய முட்கள் பொருந்தும் செந்தாமரை மலரும் , மலையின் தலைவனது பாதங்களை, வந்து ஆதரி பாண்மகளே - வந்து போற்றிப் பிழைக்கும் விறலியே கேள், முன் சுரம் பண் வடித்தன அந்தோ சுரம் பண் மறந்தனன் - முன்னெல்லாம் நீ பண்ணிசைப் பாடல்களால் புலப்படுத்திய நல்லறிவுரைகளை இப்போது மறந்தொழிந்தவனாய், நாவலன் ஆறுமுகன் செந்தேன் ஒழுகு தமிழ் அறியாரில் தியங்கினன் -ஆறுமுகனாகிய நாவலர் பிரானது செவ்விய தேன் ஒழுக்காகிய தமிழ்ப் பயனை அறியாதார் போல் தியக்கமுற்றுள்ளான். ஆதலின் அவன் பொருட்டு நீ வாயில் வேண்டற்பாலை அல்லை என்பது குறிப்பெச்சம்,
(கு.உ):- இன்புறுத்துஞ் செந்தாமரையிற் துன்புறுத்தும் முள் இருந்தாற் போன்று இன்புறுத்தும் தன் தலையளிக்குள் என்னைத் துன்புறுத்தும் கொடுமையுமுள்ளவன் தலைவன் எனல் தோற்றலால் கரு முண்டகம் சேர் என்னும் அடை கருத்துடை அடையாயிற்று. இது கருத்துடையடை கொளி என்னும் அணியாகும்.
பாங்கி வாயில் வேண்டல்
448. அற்கொண்ட நெஞ்ச ரறியா வறவ னறுமுகனூ
ரிற் கொண்ட வேருடை யாய்மன ரின்முக மண்டிலமா மெற்கண்ட லாகுவை நின்முகத் தாமரை யீர்ங்கடல்வா யெற்கண்ட தாமரை வாய்விடு நல்லை யியல்புவிக்கே

326
பதவுரை: அல் கொண்ட நெஞ்சர் அறியா அறவன் ஆறுமுகன் ஊரில் கொண்ட ஏர் உடையாய் - அஞ்ஞான இருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களால் ( அறிவிலிகளால்) அறிய இயலாத அறவாணனாகிய ஆறுமுகநாவலர் தம் ஊரிற் குடி கொண்டு வாழும் அழகு நலம் பொருந்திய தலைவியே, ஈர்ங் கடல் வாய் எல் கண்ட தாமரை வாய்விடும் நல்லை இயல் புவிக்கு - பெரிய கடலில் தோன்றும் சூரியனைக் கண்டு தாமரை முகை அவிழும் இயல்புடைய நல்லைப் பதியினிடத்தே, ம(ன்)னரின் முக மண்டில மாம் எற் கண்டு - நம் தலைவரின் முக மண்டிலமாகிய சூரியனைக் கண்டு, நின் முக தாமரை அலர்குவை - நினது முகமாகிய தாமரை மலரப் பெறுவாய்.
(கு.உ):- அல் - இருள் - அறியாமையாகிய இருள்; மனர் - மன்னர் இடைக்குறை எல் - சூரியன், ஒளி.
பாங்கி வாயின் மறுத்தல்
449. வேளுரு மானை வெறிமலர்ச் சோற்றான் வெருண்டகலுந்
தாளுரு வான்மலி காநா வலனலைச் काrकी6ाी(8u தோளுரு நஞ்சேய் குதலை துறந்து துயிறுறதன் தோளுரு வார்தங் குதலைகண் டானிவண் டுன்னலெனே
பதவுரை:- வேள் உரு மான் - விரும்பத்தகும் வடிவினையுடைய மான் போலும் மங்கையர், வெறி மலர் சோற்றால் வெருண்டு அகலும் (கால்) - மணம் வெறிதாகிய மணமற்ற தாழையின் மலரோடியைந்த சோற்றியினைக் கண்டு ஏதோ விலங்கு என்று அஞ்சி அகலும் காலை, உரு தாள் மலி வான், கா - நடுக்கத்தால் சோர்ந்து விழும் மேகலைகள் மலிந்த பெருமையுடைய சோலை சூழ்ந்த, நாவலன் நலை சார் கிளியே - நாவலர் பிரானது நல்லூரைச் சார்ந்திருக்கும் கிளியே, தோள் உரு நம் சேய் குதலை துறந்து - நம் தோளில் இட்டு ஆட்டும் பருவத்தினதாய நம் குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்டு இன்புறதலைத் துறந்து, தன் தோள் துயிறுற உருவாள் தம் குதலை கண்டான் - கலவி மயக்கத்தினால் தன் தோளில் ( தலை வைத்து) துயிலும் அழகிய அப்பரத்தையரது குதலை கேட்டலில் இன்பம் காண்பவானாகின்றான் ( நம் தலைவன்), இவண் துன்னலன் - இவ்விடத்தில் இவன் நமக்குப் பகைவனேயாவான்.

Page 174
327
(கு.உ)- தோழிக் கைக்கிளிக்குச் சொல்லியது போன்று வாயில் வேண்டினார்க்கு உரைத்தல் வேள் - விருப்பம், உரு - வடிவம், சோறு - தாழை மடலில் உள்ள உள்ளிடு, சோற்றி, தாழையில் உள்ள சோற்றியினை விலங்கு என்று பயந்த மகளிர் வெருண்டு விரைந்து ஓடினாராக, அவர்களது மேகலைகள் கழன்று வீழ்வன, தாள் - மேகலையின் ஓர் உறுப்பு - அது மேகலையை உணர்த்திற்று. துன்னலன் என்றதனால் அவர் எம்மை இனி அணுகுந் தகுதியுள்ளானல்லன் என்றார். மூன்றாம் அடியில் வந்த தோளுரு எதுகை நோக்கி 'று 'ரு' ஆயிற்று உரு - அழகு, தன் தோள் துயிறுற என மாற்றிக் கூட்டுக தலைவியோடுள்ள நெருங்கிய தொடர்பினால் அவள் சேயை நஞ்சேய் எனலானாள் தோழி, 'ஏதோ விலங்கு என்று என்பனவற்றைச் சொல்லெச்சங்களாகக் கொள்க.
விருந்தொடு வந்துழிப் பொறுத்தது கண்டிறையோன் மகிழ்தல்
450. மருந்து சிவநெறி மாய்பிற மாயமதப் பிணிக்கென்
றிருந்து மொழிநா வலனுறை தெய்வத் திருநலைமான் முருந்து நகைமுகிழ் மேவிக் கறுப்பு விடுவிருந்தா மருந்து பலம்வர நற்றவம் மன்னுக நாடொறுமே
பதவுரை:- மாய் பிற மாய மத பிணிக்கு - அழிந்து ஒழியும் இயல்பினவான பொய்ம்மை மிக்க பிற மதமாகிய நோய்க்கு, சிவநெறி மருந்து என்று - சிவநெறியே சிறந்த மருந்தாகும் என்று, இருந்து மொழி நாவலன் உறை தெய்வ திரு நலை மான் - அங்கு திகழ்ந்த வண்ணம் கூறுகின்ற நாவலர் பிரானது வதிவிடமாகிய தெய்வத்தன்மை வாய்ந்த அழகிய நல்லை வாழ் நங்கையானவள், முருந்து நகை முகிழ் மேவி - மயிலின் இறகின் அடிக்குருத்துப் போன்ற ஒள்ளிய நகையைப் பொருந்தி, கறுப்பு விடு விருந்தாம் மருந்து பலம் வர - கோபத்தை விடுதற்கு ஏதுவாய அதிதியாகிய தேவாமிர்தம் வந்து சேருதற்கு, நாள்தொறும் நற்றவம் மன்னுக - நாள் தோறும் நல்ல தவம் அமைவதாக,
(கு.உ);- புலந்திருந்த தலைவி நகை பொருந்தவும் கோபத்தை விடவும் வகை செய்த விருந்தின் வருகை நாள் தோறும் அமைக எனக் கூறியவாற்றால் விருந்தினைப் பேணும் மேலான பண்பு புலப்படுத்தியவாறாயிற்று.

328
விருந்து கண்டொழித்தவுடல் வெளிப்படனோக்கிச் சீறேலென்றவள் சீறடி பணிதல்
451. பிழைபல செய்தவர் பின்னை யடிவிழிற் பேணுவராற்
குழைமுகம் வஞ்சி குணநா வலற்பணி கோதிலர்போற் றழைமுகச் சீறடி யென்முடித் தாங்கினன் சார்சிவப்பற் றிழைமுக வெற்பி னிடைத்துயி லேய விரங்குதியே
பதவுரை:- வஞ்சி - வல்லிக் கொடி போன்ற தலைவியே, பிழை பல செய்தவர் பின்னை அடி விழில் பேணுவர் - பல தவறுகளைப் புரிந்தவர்களும் புரியப்பட்டாரிடத்து வந்து அடி பணியிற் ( சான்றோர்கள்) அவ்வாறு பிழை செய்தாரை ஏன்று கொள்வர், குண நாவலற் பணி கோதிலர் போல் - குணக் குன்றாகிய நாவலர் பெருமானைப் போற்றிப் பணியும் சால்பினர் போன்று, (நின்) தழை முக சீறடி என் முடி தாங்கினன் - நினது தளிர் போலும் சிறிய பாதங்களை எனது சிரமேற் கொண்டேன், சார் சிவப்பற்று இழை முக வெற்பினிடைத் துயில் ஏய இரங்குதி - பொருந்திய செம்மை நீங்கும்படியாகச் சுணங்கு படர்ந்து வாடியிருக்கும் மலை நேர் தனங்களுக்கிடையில் சிறிது நேரம் துயில் கொள்ள அனுமதிப்பாய்.
இஃதெங்கையர் காணினன்றன் றென்றல் எங்கையராகிய பரத்தைமார் காணின் நீர் செய்த பணிவு குற்றமாய் முடியுமென்றல்
452. காலைக் கருமணி முத்தமுஞ் சூட்டல் கரும்பெனவே
மாலைக் கொளவலர் வேழ வயலவுன் மாலகற்ற மேலைப் பலர்பாற் பயின்றில னாவலன் மேநலையிற் பாலைப் பொழிநாவ ரெங்கையர் மெய்யாப் பரிகுவரே
பதவுரை:-கரும்பு எனவே மாலை கொள அலர் வேழ வயல - கண்டார் கரும்பு என மயங்கும் வண்ணம் அதன் பூப்போல் தானும் பூக்கும் நாணற் கரும்பூ சேர் வயல்கள் உள்ள நாட்டவனே, காலை கருமணி முத்தமும் சூட்டல் - உன் கருமணி போன்ற வாய் இதழால் என் காலில் முத்தமிடாதே, மேலை பலர் பால் பயின்றிலன் நாவலன் மே நலையில் - மேலைப் பலர் பாற் பயின்று அறியாத நாவலர் பிரான் விரும்பி மேவும்

Page 175
329
நல்லூரில் உள்ள, பாலை பொழி நாவர் எங்கையர் - பாலைப் போல் இனிய மொழி பகரும் நாவினரான எம் சகோதரிகள், மெய்யா பரிகுவர் - உண்மையில் உன் நிலைகண்டு இரங்குவர்.
(கு.உ):- வெறுப்புத் தோன்ற பரத்தையரை எங்கையர் என்றார். கரும்பென வேழம் அலர் வயல் என்றது இப்போதைய உன் செயல் மயக்குஞ் செயல் எனும் குறிப்பினதாம். வேழம் - நாணற் கரும்பு.
அங்கவர் யாரையுமறியே னென்றல்
453. அளவை வழாது தொழல்கண் ணகியை யெனாறுமுகன் உளநே மிகுநலை யுற்றவர் வேற்று ருறுதலிலை வளமா ரவன்கிரி வெற்பமர் வாவி வளருமன்னம் களரார் கலங்கற்சின் னிருறு மேயொன்று காணுயிரே
பதவுரை:- கண்ணகியை தொழல் அளவை வழாது என் ஆறுமுகன் - கண்ணகியைத் தெய்வமாக வணங்குதல் ஒவ்வாது எனக் கடிந்து உரைத்த நாவலர் பிரானது, உள நே மிகு நல்லை உற்றவர் - உள்ள நேயம் மிகுதற்கு இடமான நல்லூரை அடைந்தவர், வேற்றுார் உறுதல் இலை - வேறு ஊர் நாடிச் செல்லும் வழக்கம் இல்லை, வளம் ஆர் அவன் கிரி வெற்பு அமர் வாவி வளரும் அன்னம் - வளம் பொருந்திய அவரது மலையிடத்ததான தாமரை வாவியில் வளரும் அன்னப்பறவை, களர் ஆர் கலங்கல் சின்னிர் உறும் - உப்பங்கழியில் உள்ள கலங்கலான அற்ப நீரில் செல்லாதன்றோ, உயிரே ஒன்று காண் - உருவால் இருவேமாயினும் உயிரால் இருவரும் ஒருவேம் ஆதல் அறி.
(கு.உ):-நேம் - நேயம் ஒன்று போலிரண்டு வேற்றுப் பொருள் வைப்பணி கொண்ட செய்யுள் இதுவாம். வேறியாரையுமறியான் என்ற கிளவிப் பொருள் புலப்பட ஒன்று காணுயிரே என்றான்.
காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தல்
454 வீதியி லேவிளை யாடு மகனை விரைந்தணைக்கப் பூதியி லேவிளை யாடு புயனா வலன்வரைமா தோதியி லேவிளை யாடு மலரை யுவன்சிற்றன்னை நீதியி லேவிளை யாடென நாணு நிகழ்த்தவளே

330
பதவுரை:- புயத்திலே விளையாடும் பூதியன் நாவலன் வரை மாது - புயத்திலே திகழும் விபூதிப் பொலிவுடைய நாவலர் பிரானது மலையிடத்தாளாகிய காமக் கிழத்தி, வீதியிலே விளையாடு மகனை
விரைந்து அணைக்க - வீதியிலே விளையாடிக் கொண்டிருந்த நம் மகனை விரைந்து சென்று அணைத்துக் கொள்ள, (அம்) மாது ஒதியிலே விளையாடு மலர் ஐ - அந்த மாதின் கூந்தலிலே சொருகப்பட்டு
விளங்கும் மலரை உடையாய், (தலைவன் அவளைப் பார்த்து) உவன் சிற்றன்னை - உவனது சிறிய தாய் நீ, நீதியிலே விளையாடு என - அந்த உரிமைக் கேற்ப அவளுடன் விளையாடு என்று சொல்ல, நாணும் - அவள் நாணம் மீதுாரப் பெற்றாள், அவள் நிகழ்த்து - அவள் யார் கூறு.
(கு.உ):- முதல் மூன்றடிகளிலும் விளையாடல் விளங்கல் எனும் பொருளில் நின்றது. பூதியிலே விளையாடும் புயன் என்ற தொடரை விகுதி பிரித்து மாற்றிக் கூட்டி அந்நுவயஞ் செய்க.
தாமக் குழலியைப் பாங்கி தணிவித்தல்
455. இலவித ழாகல் கருவிள முப்பமைந் திட்டதுபோற்
புலவி யதுமிகல் போனிட் டிடுவது பொன்னுயிராக் குலவி யொளிர்நா வலனலை யன்னை குயின்மொழிகொள் கலவி யறன்மணர் கால்விழு தார்கை கருதுதியே
பதவுரை: கருவிளம் இலவிதழ் ஆகல் - கருவிளமலர் போலும் நின் கண்கள் செவ்விய இலவ இதழ் போலாக, புலவி உப்பு அமைந்திட்டது போலும் - ஊடல் உணவுக்கு உப்பு அமைந்தது போல காம இன்பத்துக்கு இதம் தருதற்காம் ஓரளவில் அமைய வேண்டியது, அது மிகல் போல் நீட்டிடுவது - அந்த உப்பு மிக விடல் போலும் அப்புலவி நீட்டித்தல், பொன் உயிரா குலவி ஒளிர் நாவலன் நல்லை அன்னை - பொன் உயிராய் விளங்கி ஒளிர்கின்ற நாவலர் பிரானது நல்லூரின் அன்னையே, குயில் மொழி - குயிலிசை போலும் மொழி பேசுபவளே, கல்வி உறல் கொள் - இனிக் கணவனோடு கூடுதலை மனங் கொள், மனர் கால் விழுது ஆர்கை கருதுதி - தலைவர் உன் காலில் விழுந்து மனம் பொருந்துதலை மதிப்பாயாக.
(கு.உ):- ஆர்கை - மனம் பொருந்துகை; இலவிதழாகல் என வேண்டியது கண்கள் இலவ விதழ் போற் சிவக்குமளவுக்கு ஊடலை நீட்டியாதே என்ற படி, கருவிளம் - உருவகம், குயின் மொழி - அன் மொழித் தொகை.

Page 176
33
தலைவியூடல் தணியாளாகத் தலைவனுடல்
456. முன்னாட் புனலிழி காலை யென்மாலை மதியமுத
மின்னாள் விடமெனக் காதல் விதியே வியன்றமிழர் மன்னா மறுமுக னல்லையின் வேங்கட மன்னியென்பி னன்னாள் வருமா னலதிது வஞ்சக வவ்வுழையே
பதவுரை:- முன்னாள் புனல் இழி காலை - முன்னை நாள்களில் நீரில் இறங்கி விளையாடிய காலத்து, மாலை மதி என் அமுதம் - மாலைப் போதில் தோன்றும் மதி போன்று என் அமுதாய் விளங்கியவள், இன்னாள் எனக்கு விடமாதல் விதியே - இற்றை நாளில் எனக்கு விடம் போன்று அமைந்தது எனது ஊழ்வினை போலும், வியன் தமிழர் மன் ஆம் அறுமுகன் நல்லையில் - பெருமிதம் மிகும் தமிழர்களின் இறைவனாகும். ஆறுமுக நாவலரது நல்லைப் பதியில், வேம் கடம் மன்னி - வேகின்ற சுரத்தில் பொருந்தி, என் பின் அந்நாள் வரும் மான் அல இது - என்னோடு உடன்போக்காக வந்த மான் அல்ல இது, அ உழை வஞ்சகம் - அந்த இடம் ஏமாற்றமானதே.
பாங்கி அன்பிலை கொடியை யென்றினர்த்தார் மார்பனையிகழ்தல்
பாங்கி தலைவனை யன்பிலாய், கொடியாயென இகழ்ந்து கூறல்
457, வேம்பு தரினும் வியனறை பாகு விரவிவெந்த
தீம்பா லுனக்குமுன் னாமவ ளின்றுநற் றேவரமு தாம்பா லறுமுகன் றிம்பா வனைய வமுதிடினும் வேம்பா நலைநக ருற்றாய் தகுமுன் வியனிலையே
பதவுரை:- நல்லை நகள் உற்றாய் - நல்லை நகரைச் சார்ந்த தலைவரே, முன்னாம் அவள் உனக்கு வேம்பு தரினும் - முன்னை நாளில் தலைவி நுமக்கு வேம்பினைத் தந்தாலும், (அது) வியன் நறை பாகு விரவி வெந்த தீம் பால் - வியப்பு மிகு வெல்லப்பாகு சேர்ந்த காய்ச்சிய திவ்விய பாலாக விளங்கிற்று, இன்று நல் தேவரமுதாம் பால் ஆற்முகன் தீம் பால் அனைய அமுது இடினும் - இன்று நல்ல

332
தேவர்களது அமுதமோ என்னும் தகைத்தான அறுமுகப் பெருமானது சுவை மிக்க கவிதை போன்று இனிமை பயக்கும் அமுதினை நுமக்குத் தந்தாலும், வேம்பாம் - அது வேம்பாகி விட்டது. நலை நகர் உற்றாய் - நல்லை நகரில் உள்ள தலைவனே, உன் வியன் நிலை தகும் - நுமது வியப்புமிக்க நிலை தகுமோ ?
ஆயிழை மைந்தனு மாற்றாமையும் வாயிலாக வரவெதிர் புணர்த்தல்.
தலைவன் பரத்தையர் சேரிக்குத் தேரின் மேலேறிப் போம் பொழுது தெரிந்தெடுத்த அணியை அணிந்த புதல்வன் குறுக்காக நிற்க, அப் புதல்வனைத் தழுவி எடுத்துக் கொண்டு தலைவன் ஆற்றாமையுடன் வந்துழி, தலைவியைப் புதல்வனும் தலைவன் ஆற்றாமையும் எதிர் உணர்த்தல்.
458. பரத்தை யுறவுறு வார்தமி வாயில் வருதல்செய்யார்
தரத்தி லுறுதமி ழம்மிமிழ் நாவலற் சார்மன்மதி வரத்தி லணையிய வாராழ் மிகப்பொன் வரைம்முருகைப் பரத்தை தமியுற வந்தனர் பார்த்திடு பார்ப்பதியே.
பதவுரை:- தரத்தில் உறு அம் தமிழ் இமிழ் நாவலன் சார் மன் - உயர்தரமான அழகிய தமிழை வெளிவிடும் நாவலர்பிரானைச் சாரும் தலைவர், பரத்தை உறவு உறுவார் வாயில் தமி வருதல் செய்யார் - பரத்தை உறவில் மிக்குள்ளாரெனில் தலைவர் உனது வாய்குதலுக்கு வந்திரார், மதி வரத்தில் அணையிய வாராழ் மிக பொன் வரைம் முருகு ஐ பரத்தை - மேலான சந்திரனை அளாவும் உயாந்த பொன் மலை போல் கச்சினுள் ஆழும் தனங்களை உடைய பரத்தை, தமி உற வந்தனர் - தனித்திருக்க விட்டு வந்துள்ளார், பார்ப்பதியே பார்த்திடு - பார்வதிதேவி போல்வாளே, அவரைக் கண்களால் பார்ப்பாயாக.
(கு.உ):- அணையிய - அளாவுதற்கு, மதி வரத்தில் - வர மதியில் என மாற்றி மேலான சந்திரனில் என உரைக்க. இது சித்திரக் கவி. இதன் விளக்கம் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

Page 177
333
வரவெதிர் கோடல்
வரவு எதிர் கொள்ளுதல்
459. காமுக மாக்க டமைக்கட் கணியிடுஉக் கண்ணிதியூ னேமுற வாங்கு மியல்பினர் பன்னக மேற்றுமண மாமுலைச் சின்ன மணந்திறை நாவல மன்னலையிற் காமுற வந்தனர் கண்டன மேத்துதுங் கார்க்குயிலே
பதவுரை: காமுக மாக்கள் தமை கட்கு அணியிடுஉ - காமுகர்களாகிய ஆடவர்களைக் கண்ணுக்கு அணிகலமாகக் கொண்டு, கண் நிதி ஊன் ஏம் 'உற வாங்கும் இயல்பினர் - அவ்ர்களின் கண், பொருள், உடற்சத்து ஆகிய அனைத்தையும் இன்பமுற வாங்கும் இயல்பினரான பரத்தையரின், பல் நகம் ஏற்று - பற்குறி, நகக்குறி எல்லாம் ஏற்றுக் கொண்டு, மண மா முலை சின்னம் மணந்து - வாசனைச் சாந்து அணிந்த அழகிய முலைத் தழும்பும் பெற்று, இறை நாவலன் மன் நலையில் - தலைவர் நாவலர் பிரான் தங்கும் நல்லூரில், காமுற வந்தனர் - எம்மால் விருப்பம் தோன்றலால் மீள வந்திருக்கிறார், கார் குயிலே - கரு நிறத்தையுடைய குயிலே - கண்டனம் ஏத்துதும் - கண்டு போற்றுவோம்.
(கு.உ):-இது தலைவி தன் வளர்ப்புப் பறவையாகிய குயிலை நோக்கிக் கூறியது. கண்டனம் - முற்றெச்சம்.
புணர்ச்சியின் மகிழ்தல்
460. காழில் கனிவிடுஉக் காஞ்சிரை யுண்போர் கடுப்பவமு
தூழில் விடுஉவிட முன்பவ ரேய வுலைந்தனமால் யாழி லுறுதீஞ் சுவைத்தமி ழாய்தொறு மேறின்பென வாழி யிவளிடை மன்னின னாவல மன்னலைக்கே
பதவுரை:-காழில் கனிவிடுஉ காஞ்சிரை உண்போர் கடுப்ப - மென்மையான பழம் இருப்பக் காஞ்சிரை விதையை உண்பவரைப் போலவும், அமுது ஊழில் விடுஉ விடம் உண்பவர் ஏய உலைந்தனம் - முறைமை உணராமையின் தேவாமிர்தத்தினை விட்டு நஞ்சினை

334
உண்பவரைப் போலவும் வருந்தினோம், நாவல மன் நலைக்கு - நாவலர் பிரானது நல்லைப் பதியிடத்தே, யாழில் உறு தீஞ்சுவை தமிழ் ஆய தொறும் ஏறு இன்பு என - யாழில் தோன்றும் திவ்விய சுவையை உடைய தமிழ் மொழியை ஆராயும் பொழுதெல்லாம் மேன் மேல் பெருகும் இன்ப ஊற்று என்னும்படியாகத் திகழும், இவள் இடை மன்னினன் - இவள் தம் இடையினைச் சார்ந்துற்றேன்.
மணந்தவள் போயபின் வந்த பாங்கியொடு இணங்கிய மைந்தனை இனிதிற் புகழ்தல்
461. வாழ்க்கை யினிமை, மகப்பெறு வார்க்கெனல் வாய்மைவழித்
தாழ்க்கை புரிந்தம் பரத்தை மலையுற றானகற்றி வாழ்க்கை நிலையின தென்னிளங் கன்றவ் வலிக்களிற்றைத் தாழ்க்கை யுறாதெவ ரும்பணி நாவலன் றண்ணலைக்கே
பதவுரை:-இளம் கன்று அ வலி களிற்றை - இளம் கன்று அல்லாத வலிய களிற்றுமுக விநாயகனை, தாழ்க்கை உறாது - தாமதம் பண்ணாது, எவரும் பணி நாவலன் தண் நலைக்கு - யாவரும் பணிகின்ற நாவலர் பிரானது குளிர்ச்சியையுடைய நல்லூரின் கண், மக(வு) பெறுவார்க்கு வாழ்க்கை இனிமை என் நல் வாய்மை வழி - குழந்தையைப் பெறுபவர்க்கு வாழ்க்கை இனிதாம் என்ற நல்ல உண்மையின் வழி, தாழ்க்கை புரிந்து - தாமதம் செய்து, அம் பரத்தை மலையுறல் தானகற்றி - அழகிய பரத்தையிடத்து மயங்குதலை நீக்கி, வாழ்க்கை நிலையினது என் - குடும்ப வாழ்க்கையில் நிலைத்தது என்னோ.
தலைவி தலைவனைப் புகழ்தல்
462. குளிருறு காலைக் குறுகினுந் தென்றல் குணமுடல
நளியுறு மென்பர் நலைநா வலன்வெற்பர் நாமனதி லளியற வுடி யிருப்பினும் வந்தே யளவிலின்பங் கொளிமகி ழேற்றிடு வித்தை யெவரிடங் கொண்டனரே

Page 178
335
பதவுரை:- தென்றல் குளிர் உறு காலை குறுகினும் உடல குணம் நளி உறும் என்பர் - தென்றற் காற்று குளிர் காலத்து அணித்தாய் வந்து வீசினாலும் உடலின் தன்மை குளிர்ச்சி அடையும் என்று சொல்வர், நாம் மனதில் அளி உற ஊடி இருப்பினும் - நாம் அந்தரங்க உள்ளத்திலே அன்பு பொருந்தி இருப்ப வெளிப் பார்வையில் ஊடல் கொண்டு பொய்க் கோபம் பொருந்தி இருப்பினும், நாவலன் நலை வெற்பர் வந்து, - நாவலராற் சிறப்புற்ற நல்லை மலைத் தலைவர் என்னைத் தேடி வந்து, அளவில் இன்பம் கொளி மகிழ் ஏற்றிடு வித்தை எவரிடம் கொண்டனர் - அளவில்லாத இன்பத்தினைத் தருவதாகிய இம் மகிழ் நிலையில் என்னை உயர்த்தி வைத்தற்கு இயன்ற வித்தையினை எங்கு கற்றனரோ.
(கு.உ):- வெற்பர் வந்து மகிழ்வேற்றிடும் வித்தை எவரிடம் கொண்டனர் எனக் கூட்டுக.
பாங்கி தலைவியைப் புகழ்தல்
463. கற்புக் குருவிய வேலனொந் நாவலன் கார்க்கிரிவாழ்
பொற்புக் குயர்பூங் கொடியளி பூத்திறை செய்பிழைமு னற்புக் கருதியுட் காயாம லேகனிந் தாசைமிக விற்புக் களித்தது கற்புக் கதுவே யெனல்வியப்பே
பதவுரை:- கற்புக்கு உருவிய வேலன் ஒந் நாவலன் - கிரவுஞ்சம் என்னும் மலையினை உருவிப் பிளந்த வேற்படையினனான முருகப் பெருமானை நிகர்க்கும் நாவலர் பிரானது, கார் கிரி வாழ் பொற்புக்கு உயர் பூங்கொடி - முகில்கள் படியும் மலைச் சாரலில் வாழ்கின்ற பொற்பினால் உயர்ந்த பூங்கொடி போன்ற நம் தலைவியானவள், அளி பூத்து - கருணையுடையவளாகி, இறை செய் பிழை - தலைவன் புரிந்த பிழையினை, முன் அற்பு கருதி உள் காயாமலே கனிந்து - முன்னைய அன்பினைக் கருத்திற் கொண்டு உள்ளத்தில் கோபம் கொள்ளாது கனிவுடையளாகி, ஆசை மிக இற் புக்கு அளித்தது - வேட்கை மிகும்படியாகத் தலைவரை இன்பம் கொள்ள வைத்தது, கற்புக்கு அது எனல் வியப்பு - கற்பினுக்கு அத்தன்மை உரியது என்பது அதிசயமோ.

336
29.ஒதற் பிரிவு
தலைவன் கல்வி காரணமாகப் பிரிதல்
தலைமகன் பாங்கிக் குணர்த்தல்
464. நாற்பொரு ணல்குங் கலையது வன்றி நடுங்களுர்க்கோர்
கோற்றுணை யாகுங் கலையறி வார்கள்கண் கோதில்கண்கள் வேற்றவள் கண்பு ணெனக்கரை வாரதை மேவுவனன் பாற்கலர் நல்லவ ராக்கிடு நாவலன் பாரெனவே
பதவுரை:- நாற்பொருள் நல்கும் கலையது அன்றி - அறம் முதலாகிய புருடார்த்தங்களைத் தரவல்ல கல்வி மட்டுமே அல்லாது, நடுங்கு அஞர்க்கு ஓர் கோல் துணையாகும் - நலிவு செய்கின்ற துன்பத்துக்கு ஆளானோர்க்குக் கேண்மையரான செங்கோல் மன்னர்க்குத் துணையாக விளங்குகின்ற, கலை அறிவார்கள் கண் கோது இல் கண்கள் - கலை ஞானங்களைக் கற்றறிந்தவர்களின் கண்களே குற்றம் இல்லாத கண்களாகும், வேற்றவர் கண் புண் எனக் கரைவார் - ஏனையோர் கண்கள் உண்மையில் புண்களே என்று கூறுவார்கள், அன்பால் கலர் நல்லவர் ஆக்கிடு நாவலன் பார் என - அன்பினாலே கிழோரையும் நல்லவராக்கிடும் நாவலர் பெருமானது ஊரைப் போல, அதை மேவுவன் - ರಾಹಕೀ। கண்கள் என்று கூறப்படும் நிலையினை யான் பொருந்து 616:01,
(கு.உ)-சான்றோர் வாழும் நில நலத்தால் கீழ்மையோரும் நல்லவராதல் போன்று கல்வி அறிவால் ஊனக்கண் புண் எனக் குறிக்கப்படும் நிலை மாறி ஞானக் கண் உடையவனாவேன் எனத் தலைவன் கூறினார் என்க. அஞர் - துன்பம், இங்கு துன்புடையாரைக் குறித்து நின்றது. யாதானும் துன்பத்தால் நலிவார்க்கு அரசன் ஆதாரமாக விளங்குதலின் அவனை அம் மக்களின் கேள் உறவினா, கலர் - கீழோர். இனி நாவலன் பாரெனவே என்பதற்கு நாவலர் தம் பார்வை போல எனக் கூறினும் பொருந்தும். இப் பொருளில் பார்வை என்பது கெடுதல் விகார முற்றுப் பார்" என நின்றது என்க.

Page 179
337
தோழி மறுத்தல்
465. கந்தனை யேய்குவை கஞ்செறி நாவல னல்லையிற்காக் கந்தனை மானுங் குழலைப் பிரிந்தனை கற்றலுறிற் கந்தனை யண்கடு வற்பாடி யென்புபெண் கண்டிடுசம் பந்தனை மானப் பயின்றனை வாமன பண்புறவே
பதவுரை:-ம(ன்)ன - தலைவ, கந்தனை ஏய்குவை நாவலன் நல்லையில் கம் செறி கா - முருகக் கடவுளைப் பொருந்தும்படியான ஆறுமுக நாவலர் பிரானது நல்லையிலுள்ள, கம் செறி கா சோலை கம் தனை மானும் குழலை பிரிந்தனை நீர் செறிந்த சோலையிற் படியும் மேகத்தை ஒத்த கூந்தலை உடைய தலைவியைப் பிரிந்து சென்று, கற்றலுறில் - நீ கல்வியை மேற் கொள்வதாயின், கம் தனை அண் கடுவற் பாடிகழுத்திற் பொருந்திய நஞ்சினராகிய சிவபிரானைப் பாடி, என்பு பெண் கண்டிடு சம்பந்தனை மான - எலும்பைப் பெண்ணாக உருப் பெறச் செய்த சம்பந்தப்பிள்ளையாரை ஒப்ப, பண்புற பயின்றனை வா - திறமை பொருந்தும்படியாகக் கலைகளைக் கற்று வருவாயாக.
தலைவனுடன் படுத்தல்
466. கற்றனைத் தூறு மறிவென நாவலன் கட்டுரைத்த
சொற்றனைத் தேறிய நாவலன் றொல்வரைத் தோகைமகிழ் வுற்றனை மானை யெனக்களித் தாயத னோடுறைய மற்றனை யரில் கலையிறை யாதலு மன்னுமெற்கே.
பதவுரை:- அறிவு கற்றனைத்து ஊறும் என - அறிவானது கற்ற அளவிற்றாக ஊறும் என, நாவலன் கட்டுரைத்த சொல்தனை தேறிய நாவலன் - செந்நாப் போதார் ஆகிய வள்ளுவர் உறுதியாகக் கூறிய சொற்களைத் தெளிவாக உணர்ந்து கொண்ட நாவலர் பெருமானது, தொல் வரை தோகை - பழைமை வாய்ந்த மலையிடத்து உதவும் மயில் போன்ற பாங்கியே, மகிழ்வுற்றனை மானை எனக்கு அளித்தாய் - ( தலைவி மீது வேட்கை மிக்கு உனது உதவியை நாடிய பொழுது) மகிழ்ச்சி கூர்ந்து மடமான் அனைய தலைவியை என்னுடன் சேர்த்து வைத்தாய், ( அவளுக்கு இறைவனாகும் பதத்தினை அளித்தாய் ) அதனோடு உறைய - அப் பெருமையோடு உறையும் படியாக, அணையாரில் கலை இறை ஆதலும் எற்கு மன்னும் - அவ் அறிவாளர்கள் போன்று கலைகளுக்குத் தலைவனாதலும் எனக்குப் பொருந்துவதே.

338
பாங்கி தலைவிக்குணர்த்தல்
467. கண்ணுடை யார்கற் றவரே கலார்கண் முகத்திரண்டு
புண்ணுடை யாரெனப் பேசு மொழியுட் பொருந்தினரிம் மண்ணிடை யார்கலை யாயநடந்தனர் மன்னவர விண்ணிடை யாருமொப் பில்கலை நாவலன் மேவிடவே.
பதவுரை: கற்றவரே கண் உடையார் - கற்றவரே கண் உடையவர்கள் ஆவார்கள், கலார் முகத்து இரண்டு புண் உடையார் என - கற்காதவர் முகத்தில. இரண்டு புண்களை உடையார்கள் என்பதாக, பேசும் மொழி உட் பொருந்தினர் - பேசப்படும் உண்மை மொழியை உள்ளத்தில் பதித்துக் கொண்டனராகி, மன்னவர் - தலைவரி, இ மண்ணிடை ஆர் கலை ஆய - இவ்வுலகில் நிறைந்து விளங்கும் பல்வகைக் கலைகளை ஆராய முற்பட்டு, அ விண்ணிடை யாரும் ஒப்பில் கலை நாவலன் மேவிட நடந்தனர் - விண்ணுலகில் வாழ் தேவர்களும் ஒப்பாகாத கலை விற்பன்னராகிய நாவலர் பெருமானைச் சார நினைந்து சென்றனர்.
தலைவி கார்ப்பருவங் கண்டு வருந்தல்
468. புன்கவி யோட விடித்துக் கவிமழை பொங்கிடவார்
தன்கவி காட்டப் புகுந்தநங் கார்நமைச் சாருமுன நன்கவி வாணர் கொளவளி நாவல னல்லையுவ ரின்கவி கார்சிலை கோலியம் பெய்யுமெவ னுய்வனே
பதவுரை: புன் கவி ஓட இடித்து - புல்லிய கவிஞர்கள் பின்வாங்கி ஓடும் வண்ணம் முழக்கம் செய்து, கவி மழை பொங்கிட - கவிதை என்னும் தாரை பெருகும்படி, தன் கவி காட்ட புகுந்த நம் கார் நமை சாருமுன்னம் - தமது கவிதைப் பண்புகளை புலப்படுத்தத் தோன்றிய நமது கருணை முகில் ஆகிய தலைவர் வந்து சேருதற்கு முன்னமே, நன் கவிவாணர் கொள அளி நாவலன் நல்லை - நல்ல கவிஞர்கள் உவகையோடு கொள்ளும்படி பரிசில் வழங்கும் நாவலர் பிரானது நல்லைப் பதியில்,ள உவரின் கவி கார் சிலை கோலி அம்பு எய்யும் - கடலில் மேகங்கள் கவிந்து நீரை மொண்டு வானவில்லைக் காட்டி மழையைப் பொழியும், எவன் உய்வன் - அங்ங்ணம் கார் காலம் தோன்றுமெனில் எவ்வாறு பிழைப்பேன் .

Page 180
339
(கு.உ): புன்கவி - போலிக் கவிஞர், இடித்து - வாத முழக்கம் செய்து; தன்கவி - தனது திறமை; கார் - கருணை முகில்; தலைவன், உவர் - கடல்; கவி - படிகின்ற; சிலை - வானவில்; அம்பு - நீர், மழை, சிலைகோலி அம்பு பெய்யும் என்பதில் சிலேடை நயம் நோக்கி இன்புறற்பாலது.
பாங்கி ஆற்றுவித்தல்
469. கடபட மென்றே கலைஞ ரரற்றக் கதிமுலையாய்
படபட வென்றே யிடித்துந நாவல பானுவெற்பம் விடவட வந்ததன் றென்போற் கலைக்கடன் மேய்ந்துகவி மடமட வென்றே பொழிமனர் வந்தா ரெனுமழையே
பதவுரை:- கட படம் என்றே கலைஞர் அரற்ற கதி முலையாய் - குடம் என்றும் மத்தகம்" என்றும் உவமானம் காண முயன்று அவை ஒவ்வாமையால் கவிஞர்கள் புலம்பத் திகழுகின்ற பாரித்த பயோதரங்களை உடைய தலைவியே, படபட என்றே இடித்து - படபட என்னும் ஒலியோடு முழங்கி, நம் நாவல பானு வெற்பு அம் விட அட வந்தது அன்று - நமது நாவலர் பெருமானாகிய சூரியனது மலையின் கண் நீரைப் பொழியவும் உன்னுடன் போர் செய்யவும் வந்தது அன்று, என்போல்என்னை (முகில்)ப் போல், கலை கடல் மேய்ந்து - யான் கடல் நீரைப் பருகுதல் போல கலையாகிய கடலைப் பருகி, மடமட என்றே கவி பொழி ம(ன்)னர் வந்தார் எனும் மழை - விரைவாகவே கவிமழை பொழிய வல்ல மன்னர் வந்தார் என்று கூறும் மழை. (அங்ங்ணம் கூறுவதற்கு வந்தது போலக் கார் வந்தது ).
30.காவற் பிரிவு
நாடு காத்தற்குப் பிரியும் பிரிவு
தலைவன் பாங்கிக்குணர்த்தல்
470. ஒருபகன் மன்னவன் காவான் மடியி னுலகழிவு
மருவுமென் சொல்லை மதித்தனர் சென்றனர் மன்றவிதோ வருகுவர் மன்னரென் மன்னர் வருவரென் மாறுரையேல் பொருவறு மென்னுயிர் காநா வலன்பொழிற் பூங்குயிலே

340
பதவுரை:- பொருவு அறும் என் உயிர் கா நாவலன் பொழில் பூங்குயிலே - சமானமில்லாத எனது உயிரைக் காக்கின்ற நாவலர் பெருமானது சோலையிடத்துள்ள பூங்குயில் போன்று இனிது வசனிக்கின்ற தோழியே, ஒரு பகல் மன்னவன் காவான் மடியில் - ஒரு பகற் போதாயினும் மன்னன் காவற்றொழிலைப் பேணாது ஒழியின், உலகு அழிவு மருவும் என் சொல்லை மன்ற மதித்தனர் - உலகத்துக்கு அழிவு வந்து சேரும் என்ற எனது சொல்லை பெரிதும் மதித்துச் சென்றனர், இதோ மன்னர் வருகுவர் என் - இதோ தலைவர் வருகிறார் என்று சொல், மாறு உரையேல் - இதற்கு மாறாக ஏதும் பேசி விடாதே, பொரு அறும் என் உயிர் கா - ( இதைக்கடைப்பிடித்தல் மூலம்) என் உயிர் அனைய தலைவி இறவாமற் காத்துக் கொள்.
பாங்கி தலைவிக்குணர்த்தல்
471 ஒருமாலு மின்னா வலனார் நகுல வுயர்சிலம்பர்
திருமாலு மாது மெனநீ தெரியெமைச் சேயிழையத் திருமாலு கந்த செயல்புரி வேனெனச் செப்பினர்யான் ஒருமாலு மில்லா துலகளிப் பான்செல லோர்ந்திலனே
பதவுரை:- ஒரு மாலும் இல் நாவலனார் நகுல உயர் சிலம்பள் திருமாலும் - எவ்வகை மயக்கமும் இல்லாத நாவலனார்து நகுலமலை வாழ்நராகிய உயர்ச்சி பொருந்திய சிலம்பர் திருமாலாகவும், நீ திருமாலு மாதும் என தெரி - நீ மகாலட்சுமியாகவும் எனத் தோன்ற நின்ற, ஐ - நம் தலைவர், சேயிழை - செவ்விய ஆபரணம் அணிந்த தலைவியே அ
திருமால் உகந்த செயல் புரிவேன் என செப்பினர் - அவ் விஷ்ணுமூர்த்திக்கு உவப்பான செய்கைகளைப் (அதாவது திருமாலுக்குரிய காப்புத் தொழிலை) புரிவேன் என்று கூறினார், ஒரு மாலும் இல்லாது உலகு அளிப்பான் செலல் ஒபர்ந்திலன் - எவ்வகை
ஆசையுமின்றி உலகினைப் பேணிப் பாதுகாக்க நம் தலைவர் துணிந்துள்ளமையைத் தெளிந்து கொண்டிலேன்.
தலைவி கூதிர்ப்பருவங் கண்டிரங்கல்
472. மானைப் பிரியா வரனுமிக் கூதிரின் மம்மர் கொண்டே யானை யுரிபோர்த் தனல்கர மேந்தி யனலினடங் கானிற் புரிந்திடு காலமந் நாவலன் கண்ணலைநம் வேனிற் கிழவன் பிரிந்திடு காலம் வெதுப்பிடுமே.

Page 181
341
பதவுரை: மானை பிரியா அரனும் - மான் அனைய கண்ணியாகிய உமாதேவியை விட்டு நீங்காத சிவபிரானும், இக் கூதிரின் மம்மர் கொண்டு - இக் கூதிர் காலத்துத் துன்ப நிலையைக் கண்டு, ஆனை உரி போர்த்து - ஆணையின் தோலை உரித்து அதனைத் தன் உடம்பில் போர்த்தும், அனல் கரம் ஏந்தி - அக்கினியைக் கையிலே தாங்கியும், அனற் கானில் நடம் புரிந்திடு காலம் - சுடுகாட்டில் நடனம் புரிந்தும் விளங்கும் காலம், நாவலன் நலை கண் - நாவலர் பிரானது நல்லைப் பதியில், வேனில் கிழவன் பிரிந்திடு காலம் வெதுப்பிடும் - வேனிற் கிழவோனாகிய மதனவேள் பிரிந்து செல்லும் காலமாகிய கூதிர்ப்பருவம் நம்மை வருத்துகின்றதே.
பாங்கி ஆற்றுவித்தல்
473. தூவலை மாமுகி றும மெனவிடச் சோருபெடை
சேவலை யாதரி செய்கை நலைநகள்ச் சிந்தை கொண்டு காவலை முற்றி வருவர்மண் காவலர் காரிகைப்பெண் காவலை யோவலர் பழிபூண் கிலாநா வலனன்பரே.
பதவுரை:- தூவலை மா முகில் தூமம் என விட - பெரிய முகில்கள் மழைத்தூற்றலை புகை போலச் செலுத்த, (அதனால்) சோரு பெடை சேவலை ஆதரி செய்கை நலை நகர் சிந்தை கொண்டு - வருந்துகின்ற பெண் பறவையை ஆண் பறவை அனைத்து ஆதரவு செய்கின்ற நிகழ்வு பொருந்திய நல்லை நகரின் பாதுகாபபினைக் கருத்திற் கொண்டு, நாவலன் அன்பர் - நாவலர் பெருமானிடத்து அன்பு பூண்டவராகிய நம் தலைவரி, காவலை முற்றி வருவர் - காவற் தொழிலை நிறை வேற்றி வந்து சேர்வர் காவலர் மண் காரிகை பெண் காவலை ஒவலர்- அரசரது பூமியாகிய அழகு மிக்க பெண்ணைக் காவல் செய்கின்ற பணியைத் துறக்கமாட்டாரி, பழி பூண்கிலர் - அவ்வாறு துறத்தலால் வரும் பழியைச் சுமக்கவும் மாட்டார்.

342
31. தூதிற் பிரிவு
இருவர் அரசர் தம்மில் பொரா நின்ற இடத்து அவரைச் சந்துசெய்வித்தற்குப் பிரியும் பிரிவு
தலைவன் பாங்கிக்குணர்த்தல்
474. இருபெரு வேந்தர் பொருவது நீக்க லிருநிலத்தி
லொருதனி மன்ன ருறுசெய லோடரி யொண்விழியாய் மருவரு தாளென் றலைக்கணி நாவல மன்னருள்போல் மருவுற வப்பிய சந்தெனச் சந்துற மன்னுவனே.
பதவுரை: ஓடு அரி ஒண் விழியாய் - செவ்வரி ஓடிய ஒளிமிக்க கண்ணை உடைய பாங்கியே, இரு நிலத்தில் இரு பெரு வேந்தர் பொருவது நீக்கல் ஒரு தனி மன்னர் உறு செயல் - பரந்த உலகினிடத்து இரு பெரு மன்னர்கள் பகை உற்றுப் போர் செய்ய முற்படுமிடத்து அதனை விலக்குதல் ஒப்பற்ற தனிச்சிறப்பு வாய்ந்த மன்னரின் கடப்பாடு ஆகும், என் தலைக்கு அணி மரு அரு தாள் நாவல மன் அருள் போல் - எனது தலைக்கு அணியப் பெறும் மருவுதற்கு அரிய தாள்களை உடைய நாவலர் பிரானின் அருள் போன்று, மரு உற அப்பிய சந்து என சந்து உற மன்னுவன் - மார்பினில் செறிய அப்பிய சந்தனம் போல நெகிழ்வுறா வண்ணம் அம் மன்னர்கள் இடையே சமாதானம் உறும்படியாகத் தூது செல்வேன்.
(கு.உ);~ சந்து - தூது, சமாதானம், மார்பில் பூசிய சந்தனம் மார்போடு செறிய நெருங்கியிருத்தல் போன்று பகைமை நீக்கிப் U6)85 மன்னர்களிடத்தே சமாதானம் நெருங்கி உறும்படியாகத் தூது செல்வேன் என்று பொருள் கொள்க.
பாங்கி தலைவிக் குணர்த்தல்
475. பொருகளி றோடிரு வேந்த ரழியப் பொருதலொழித்
திருகளி றோடிரு தோளிற் பொருதுன தின்பச்சுழி வருகளி மூழ்க வருவன் விரைந்தென வன்சமயம் பொருகளி றோட்டரி நாவல னல்லைமன் போயினரே

Page 182
343
பதவுரை:- பொரு களிறோடு இரு வேந்தர் அழிய பொருதல் ஒழித்து - போர் செய் இயல்பினவாணி யானைப் படையோடு ( பகைமுற்றிய) இரண்டு வேந்தர்கள் போரில் அழிந்து ஒழிந்து போகாவண்ணம் அவர்கள் புரியும் போரினை நிறுத்தி, இரு களிறோடு இரு தோளில் பொருது - நினது இரு யானைகள் போன்ற பயோதரங்களுடன் அவரது தோள்களோடு போர் புரிய, உனது இன்ப சுழி வரு களி மூழ்க - உனது இன்பச் சுழியில் தோன்றும் உவகையில் மூழ்கும் வண்ணம் விரைந்து வருவதாகச் சொல்லி, வன் சமயம் பொரு களிறு ஒட்டு அரி நாவலன் நல்லை மன் போயினர் - பகை மிக்க புறச் சமயங்களாகிய யானைகளை ஒட்டுகின்ற சிங்கமாகிய நாவலர் பிரானின் நல்லைப் பதி சாரத் தலைவர் சென்றனர்.
தலைவி முன்பணி கண்டிரங்கல்
476. தன்னால் வெதும்பி யிதழ்விடு தாமரைச் சார்புகைபோன்
மன்னா வளிசெறி முன்பனிக் கால மருவனன்றே யென்னா ருயிரை யளிக்க வருகில ரேறுமயின் மன்னா முயர்நா வலன்றெல் வெனவழ வன்கண்ணரே
பதவுரை:- தாமரை தன்னால் வெதும்பி இதழ் விடு சார் புகை போல் - தாமரையானது வெதுப்புற்று இதழ் விண்டு வாடுதற்குக் காரணமான புகை சார்ந்தாற் போல, மன்னா வளி செறி முன் பனிக்கு ஆலம் நன்று - உடலுக்கு ஒவ்வாத காற்றுச் செறிந்த முன்பனியிலும் கொடிய விடம் உகந்தது போலும் , ஏறு மயில் மன்னாம் உயர் நாவலன் தெவ் என அழ - மயில்வாகனராகிய முருகப் பிரானுக்கு நிகரான உயர்ந்த நாவலர் பிரானைப் பகைத்தவர் போன்று யான் அழுதபடி இருக்க, வன்கண்ணர் என் ஆருயிரை அளிக்க வருகிலர் - கருணை அற்றவராகிய தலைவர் என்னைப் பேண வந்தாரிலர்.
(கு.உ):- யான் அழுது இருக்க என்னைப் பேணுமாறு வந்திலர் , ஆதலின் அவர் வன்கண்ணர் எனக் கொள்ளினும் அமையும், வன்கண்மை - கொடுமை, வீரம் பெரிய வீரர் , என்னைப் பாதுகாக்க வந்திலர் என்ற இகழ்ச்சிப் பொருளும் அமைதல் காண்க.

344
பாங்கி ஆற்றுவித்தல்
477 ஆவிக டம்வினைத் தூசு கழுவிவண் ணாத்தியுற்றோன்.
மேவிய நாவல னல்லூரனையை வியனுடலந் தாவிய சட்டைப் பசலை கழுவித் தனதருட்டு சாவியப் பெய்த வளிக்க வருவர்வண் ணார்நமரே
பதவுரை: ஆவிகள் தம் வினை தூசு கழுவி வண் ஆத்தி உற்றோன் மேவிய - ஆன்மாக்களின் வினை என்னும் தூசிகளைக் களைந்து வளவிய ஆத்திமாலை அணிந்தவனாகிய இறைவன் மேவி வீற்றிருக்கும் , நாவலன் நல்லூர் அனையை - நாவலர் பெருமானது நல்லூர்ப் பதியை நிகர்த்த தலைவியே, உடலம் தாவிய வியன் பசலை சட்டை கழுவி - உன் உடலில் படர்ந்திருக்கும் பரந்த பசலையாகிய மேலீட்டைக் கழுவி, தனது அருள் தூசா - தனது அருளாகிய பொடியைத் (தூவி) , வியப்பு எய்த அளிக்க - நீ வியப்புறுமாறு தலையளி செய்ய, வண் நார் நமர் வருவர் - சிறந்த அன்பினை உடைய எம்மவர் (தலைவர்) வருவார்.
(கு.உ);- சட்டை வெளுக்க வண்ணார் வருவர் என்னும் தொனி நயமும் காண்க. சட்டை - மேலீடு
29.துணைவயிற் பிரிவு
நண்பாகிய வேந்தனுக்குப் பகை வேந்தரால் இடையூறு உற்ற வழி அவ்விடையூறு தீர்த்தற்குத் தலைமகன் துணையாகப் பிரிதல்
தலைவன் பாங்கிக்குணர்த்தல்
478. உடுக்கை யிழந்தவன் கையென நட்பற் குதவியஞர் தடுக்கை பொருளாத் தணந்தன ரென்று தவிதவமின் தொடுக்கை யுறயான் வருகுவன் றொல்வரைத் தோய்தமிழே மடுக்கை யுளசெவி நாவலன் வண்கிரி வண்பிடியே

Page 183
345
பதவுரை:- தொல் வரை தோய் தமிழே மடுக்கை உள செவி நாவலன் வண் கிரி வண் பிடியே - பழைமை வாய்ந்த பொதிய மலையிற் பொருந்த தமிழை மட்டுமே செவியில் ஏற்கும் இயல்பினரான நாவலர் பெருமானது வளவிய மலையைச் சார்ந்த கொடையிற் சிறந்த பாங்கியே, உடுக்கை இழந்தவன் கை என நட்பற்கு உதவி - சபை இடையே ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளி வரல் நீக்குவது போல நண்புடையார்க்கு உதவி புரிந்து, அஞர் தடுக்கை பொருளா - துன்பத்தைத் துடைப்பதையே நோக்கமாகக் கொண்டு, தணந்தனர் என்று தவி தவமின் - நீங்கிச் சென்றார் என்று துன்பம் உறுகின்ற தவத்தின் பேறாய் அமைந்த மின்னல் போலும் இடையினை உடைய தலைவியுடன் , தொடுக்கை உற யான் வருவேன் - இணைந்து கொள்ள நான் (போய்) வந்து விடுவேன்.
(கு.உ):-தவி - துன்புறு - வினைத்தொகை, தவமின் - ஒரு சொல் நீரது. தணத்தல் - பிரிதல் , தொடுக்கை - இணைவு
பாங்கி தலைவிக் குணர்த்தல்
479. நார்கொண்ட மன்னய ராவகை ஞாட்பி னலிவகற்றத்
தார்கொண்ட தோளர் தணந்தார் தரிக்கில ரைவருவார் ஏர்கொண்ட நீற்றான் மலரா னிலையா னிளகுகணிர் ஊர்கொண்ட வாற்றா னிகள்காவ நாவல னுாரகத்தே
பதவுரை:- ஏர் கொண்ட நீற்றால் - பெருமை கொண்ட நீற்றினாலும், மலரால் - பூவினாலுமி, இலையால் - பத்திரங்களினாலும் , நாவலன் நிகள் கா ஊரகத்து - நாவலர் பிரானை ஒக்கும் சோலை சூழ்ந்த நல்லூரின் கண் , நார் கொண்ட மன் அயராவகை - அன்புள்ள வேந்தன் தோற்காவண்ணம், ஞாட்பின் நலிவு அகற்ற - போரில் நேரும் வருத்தத்தை நீக்குதற் பொருட்டு, தார் கொண்ட தோளார் - மாலை அணியும் புயத்தினராய தலைவர் , தணந்தார் - பிரிந்து போனார் , தரிக்கிலர் ஐ வருவார் - சகிக்காது வெற்றி மாலையுடன் வருவார்.
(கு.உ)- நீற்றுக் கோலமும் பூவும் பத்திரங்களும் கொண்டிருத்தல் நாவலற்கும் காவுக்கும் பொது, Ա6վtb பத்திரமும் நாவலர் சிவபூசைக்குரியவை.

346
தலைவி பின்பணி கண்டிரங்கல்
480. அனலு மரும்பனி யாற்றா தஞள் பின் னமர்பனிநாட்
புனலு மிருகட் பொழிவு நெளிவும் புரள்படுப்புங் கனலும் புகையுங் கனலு முயிர்ப்புங் கலந்துமல ரனலம் பதுமவர்க் கிலவோ வறுமுக னார்நலைக்கே
பதவுரை:- அறுமுகனார் நலைக்கு - ஆறுமுகநாவலர் பிரானது நல்லையின் கண் , அரும்பனி ஆற்றாது அனலும் அஞர் பின் அமர் பணி நாள் - கடுங்குளிர் தாங்க இயலாது அனல் கூடத் துயருறுதற்கேற்ற பின்பணி நாளில் , மிகு புனல் கண் பொழிவும் - மிகுதியான நீரைப்
பெருக்கும் கண்களின் பொழிவும் , நெளிவும் புரள் படுப்பும் - நிலையாற்றாது உடல் நெளிதலும் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் நிலையும் , கனலும் புகையும் கனலும் உயிர்ப்பும் - நெருப்பும்
புகையுமாய்க் கனன்று கொண்டிருக்கும் துயர் மூச்சும் , கலந்து மலர் அனல் அம்பது அவர்க்கு இலையோ - பொருந்தி மலர்கின்ற அக்கினி அஸ்திரத்தின் தாக்கம் என் தலைவருக்கு இல்லையோ ?
(கு.உ):- இருந்தால் விரைந்து வந்திருப்பார் என்பது குறிப்பெச்சம் , படுக்கைப் புரள்வு - புரள் படுப்பானது முன்பின் மாறிய தொகை, அம்பு - அம்பின் தாக்கம்; அவள் - பாசறையில் இருக்கும் அவர்.
தோழி ஆற்றுவித்தல்
481. வேலேந்தி யத்தி யமரர சேங்கிட வேங்கையனார் ஆலேந்தி மாமருந் தேந்து கருவிளை யாருவஞ்சி மாலேந்தி தாள்பணி மானிந்த நாவல மன்னலையிற் கோலேந்தி நீவினர் நீவினர் வந்தனர் கொள்பனியே.
பதவுரை: கருவிளை ஆரும் வஞ்சி - கருவிள மலர்கள் அமையும் கொடி போன்ற தலைவியே, வேல் ஏந்தி நீவினர் - வேல் கையிற் தாங்கி எம்மைப் பிரிந்து போனவரும் , அத்தி அமர் அரசு ஏங்கிட அ வேங்கையனார் - யானை மேற்கொண்டு எதிருறும் பகையரசரை ஏங்க வைக்கும் வேங்கைப் புலியை ஒப்பாருமாகிய தலைவர் , ஆல் ஏந்தி மா

Page 184
347
மருந்து ஏந்து - நஞ்சுத் தன்மையைத் தாங்கிய பனிக்கு மருந்தாய்
அமைந்து, மால் ஏந்தி தாள் பணி மான் ஈந்த - திருமாலாகிய இடபத்தினால் தாங்கப்படும் சிவனது திருவடிகளைப் பணியும் மான் போல் வாளான சிவகாமி பெற்றருளிய, நாவலன் மன் நலையில் - நாவலர்
பிரானது நல்லூரில் , கோல் ஏந்தி கொள்பனி நீவினர் வந்தார் - ஈட்டி ஏந்திக் கொண்டு நீ கொண்ட நடுக்கம் நீக்கி வந்தார்.
(கு.உ):- நீவினர் - எச்சமுற்று. காலவழுவமைதி அ - பண்டறி சுட்டு ஏங்கிடு வேங்கை - ஏங்குதற்குக் காரணமான வேங்கை, ஆல் -ஆலம். நஞ்சு. இங்கு நஞ்சின் தன்மைக்காகிப் பொருளாகு பெயராயிற்று. மால் - விஷ்ணு, விஷ்ணுவாகிய இடபம் , ஏந்து - அமைந்து.
30.பொருள் வயிற் பிரிவு
தலைவன் பாங்கிக் குணர்த்தல்
482. மன்னா வுலகிடை மன்னிய மூன்றிடை மன்னிடுமேன் மன்னா தனவோ முதலீ றிடனின்றி வந்திரந்தார் மன்னா மகிழுற வீதனன் னுான்விதி மாசில்சின்னூல் மன்னா மருங்குற் குரைவகுப் பாய்நா வலன்வரைக்கே
பதவுரை:- மன்னா உலகிடை - நிலைபேறில்லாத உலகத்தில் , மன்னிய மூன்று இடை மன்னிடுமேல் - நிலைபேறுடையனவாகக் கூறப்படும் அறம் , பொருள் , இன்பம் என்னும் புருடார்த்தங்களுள்
நடுவண் இருப்பதாகிய பொருள் கிட்டுமேயானால், முதல் FF) மன்னாதனவோ - அம் மூவகைப் புருடார்த்தங்களுள் முதலிலும் ஈற்றிலும் உள்ள அறம் இன்பம் , என்பன பொருந்தாதனவே (பொருந்துவனவாம்) , இடன் இன்றி வந்திரந்தார் மன்னா மகிழுற - பொருள் வாய்ப்பு இன்மையால் வந்து யாசிக்கும் இரவலர்கள் மிகுதியாக மகிழ்வுறும் வண்ணம், ஈதல் நன்னூல் விதி - பொருள் வழங்குவது நல்ல தரும நூல் விதியாகும் , நாவல்ன் வரைக்கு - நாவலர் பிரானது மலையிடத்திலே, மாசில் சின்னூல் மன்னா மருங்குற்கு உரை வகுப்பாய் - குற்றம் இல்லாத மெல்லிய இழையும் ஒவ்வாத இடையை உடையவளுக்கு எடுத்துச் சொல்வாய்.

348
பாங்கி மறுத்தல்
483. இளமையும் யாக்கையு மென்று நிலைபே றியைவனவோ
வளமை மிகுதனம் வேண்டினை மற்றிவஸ் வண்டனலிட் டுளமலி காத லுமக்கது வேயெளி லோர்பெணிற வுளமது வுற்றனை நாவல னல்லையி லொல்லுவதே
பதவுரை:- இளமையும் யாக்கையும் என்றும் நிலைபேறு இயைவனவோ - இளமைப் பருவமும் உடல் நலமும் எக்காலமும் நிலைமாறாது இருப்பனவோ (இல்லை) , அங்ங்னமாகவும் வளமை மிகு தனம் வேண்டினை - வளப்பம் மிக்க பொருட் செல்வத்தைப் பெரிதாக விரும்பினாய் , இவள் வண் தனம் விட்டு - நின் தலைவியின் செழுமை மிக்க பயோதரங்களை மருவுதல் ஒழியுமாறு, உள மலி காதல் உமக்கு அதுவே எனில் - அச் செல்வப் பொருளே நுமது உளம் விரும்பும் காதற் பொருளாம் எனில, ஓர்பெண் இற உளமது உற்றனை - நின் தலைவியாகிய ஒப்பற்ற பெண் இறந்துபடும் தன்மையாக உளம் பொருந்தினாய் போலும் , நாவலன் நல்லையில் ஒல்லுவதே - இது நாவலர் பிரானது நல்லைப் பதியில் வாழ்வார்க்கு ஏற்புடைய செயல் ஆகாது.
தலைவன் பாங்கியை உடன்படுத்தல்
484. நிலையின்மை சொன்ன நிலையறிந் தேன்றே
னிகழ்மொழியாய் கலையுண்மை கண்ட நலைநகள் நாவலற் காட்டறிஞர் மலைவின்மை நீக்கி யறிபொருள் போற்பொருள் மன்னிடிலுள் ளுலைவின்மை யாமெனக் கூறுவர் நீமன மொப்புதியே
பதவுரை:- தேன் நிகழ் மொழியாய் - தேன் பயிலுகின்ற இனிய மொழி பேசுகின்ற பாங்கியே, நிலையின்மை சொன்னா நிலை அறிந்தேன் - நிலையாமை பற்றி நீ கூறிய வார்த்தையின் உண்மையை உணர்ந்து கொண்டேன் , கலை உண்மை கண்ட நலை நகர் நாவலற் காட்டு அறிஞர் மலைவின்மை நீக்கி அறி பொருள் போல் - கலை ஞானங்களின் உண்மை நிலையினை உணர்ந்த நாவலர் பெருமானால் விளக்கம் காட்டப் பெறும். அறிஞர்கள் ஐயந்திரிபு ஆகிய மயக்கங்கள் நீக்கி அறிந்து கொண்ட தெளிந்த அறிவே போன்று, பொருள் மன்னிடில் உள் உலை

Page 185
349
வின்மையாம் எனக் கூறுவர் - அற வழியில் சேர்க்கப்பெற்ற பொருள் பொருந்துவதனால் உள்ளத்தில் சஞ்சலம் இல்லை என்று ஆன்றோர் கூறுவர் , நீ மனம் ஒப்புதி - (ஆதலின்) எனது நோக்கம் நிறைவேற இசைவு அளிப்பாய்.
பாங்கி தலைவிக்குணர்த்தல்
485. இல்லவர் வாழ்க்கை யிர வினுஞ்சால விழிந்ததென நல்லவர் கூறுந லாறற நற்பொரு ணச்சிடுகோ வல்லவ னாளு முலகா முளிதரு வார்கடத்து வல்லவர் போயினர் நாவல னல்லையெம் மாதரசே
பதவுரை:- நாவலன் நல்லை எம் மாதரசே - நாவலர் பிரானது நல்லையிடத்தாளான எமது மாதரசியே, இல்லவர் வாழ்க்கை இரவினும் சால இழிந்தது என - பொருள் அற்றோர் வாழ்க்கை இரந்து வாழும் வாழ்வினும் மிக இழிந்ததாம் என்று, நல்லவர் கூறும் நல் அற ஆறு - நல்லோர் கூறும் நல்ல நீதி நெறியில் வரும், நற்பொருள் நச்சிடு கோ - நல்ல பொருள் ஈட்டத்தை விரும்பிய தலைவர் , அல்லவன் ஆளும் உலகாம் முளி தருவார் - வறுமையிருளினால் ஆளப்படும் உலகியலை வெறுத்து, வல்லவர் கடந்து போயினார் - வன்மை உடையராய்க் கடந்து சென்றுள்ளார்.
(கு.உ):- முளி தருவார் , வல்லவர் - முற்றெச்சங்கள்
தலைவி இளவேனில் கண்டு வருந்தல்
486, மதன்படைச் சாலை மருவிடு காவதின் மன்னியவன்
மதன்மிகு காள மெரிதோய்ந்த வாளெனு மாந்தளிரை யதனல காங்குற டிட்டெடுத் தார்த்தெ னரியுமுயிர் மதனர சாட்சி செலுமே யறுமுக மன்னலைக்கே
பதவுரை:- மதன் படை சாலை மருவிடு கா அதில் - அல்லி, மா, முல்லை, அசோகு, நீலோற்பலம் என்னும் மலர்களாகிய மன்மதனுடைய படைக்கலங்கள் விளங்கிடு சோலையில் , அவன் மதன் மிகு காளம்

350
மன்னி - அந்த மன்மதனுடைய வலிமைமிக்க எக்காள வாத்தியமாகத் திகழும் குயிலானது இருந்து கொண்டு, எரி தோய்ந்த வாள் எனும் மாந்தளிரை அக்கினியிற் தோய்ந்த மாந்தளிராகிய வாட்படையை, அதன் அலகாம் குறடு இட்டு எடுத்து ஆர்த்து - தனது அலகாகிய குறட்டினால் கவ்வி எடுத்து ஆர்ப்பளித்து, எனது உயிர் அரியும் - எனது உயிரை ஈர்க்கும் , அறுமுகன் நலைக்கு - அறுமுகப்பிரானது நல்லைப் பதியில் , மதன் அரசாட்சி செலும் - இவ் வண்ணமாக் மன்மதனுடைய ஆட்சி நடைபெறும்.
பாங்கி ஆற்றுவித்தல்
487. தென்ற லுலாவக் குயில்காள மூதச் சிறந்திடுகாத்
துன்று தளிர்மலர் தோன்ற மதனன் றுகடபுசீர் நின்ற நலவிள வேனில் வரத்து நிலவுமன்ப னின்று வருநா வலனலை யென்றிடு மின்பினியே
பதவுரை:- தென்றல் உலாவ குயில் காளம் ஊத - மந்தமாருதம் மெல்லிதாக வீச, குயில் எக்காள வாத்தியம் இசைக்க, சிறந்திடு கா துன்று தளிர் மலர் தோன்ற - சிறப்புப் பொருந்திய சோலையிடத்து நெருங்கமிக்கு தளிர்களும் மலர்களும் தோன்ற, மதனன் துகள் தபு சீர் நின்ற நல இளவேனில் வரத்து நிலவும் - மன்மதனுடைய குற்றம் நீங்கிய சிறப்புக் கெழுமிய நல்ல இள வேனிலின் வரவும் நிலவு எறிப்பும் , இன்று நாவலன் நலையில் வரும் என்றிடும் - இன்று நாவலர் பெருமானது நல்லைப் பதியில் நின்து அன்பர் வருவார் என்று சாற்றும் , இனி இன்பே - அவ்வாறு அவர் வருவார் எனில் இனிமேல் நுமக்கு இன்பப் பெருக்கேயாம்.
தலைவன் றலைவியுருவ வெளிப்பாடு கண்டு வருந்தல்
கல்வியிற் பிரிவு முதலாய ஐந்தினுள்ளும் தூது முதவியும் காரணமாகிய பிரிவின் கண் அவ்வினை ஓராண்டின் கண் முடியாது நீட்டித்துழித் தலைவன் தலைவி வெளிப்பாடு கண்டு வருந்தல்.
488. வில்லம்பு தூணி கரிபரி தேரரி மேவியடர்
சொல்லம்பு தூவிப் பிழைகடி நாவலன் றுநலைக்கா வில்லம்பு யத்துமின் றாழு மெழிலார் விரையணங்கு வில்லம்பு தூவ மதன்வரு மேயென விதியிதுவே

Page 186
351
பதவுரை:- சொல் அம்பு தூவி பிழை கடி நாவலன் தூ நலை காவில் - சொற்களாகிய அம்புகளை ஏவிச் சமூகத்தில் உள்ள தவறுகளைக் கண்டிக்கின்ற நாவலர் பெருமானது நல்லைப் பதியில் உள்ள பூஞ்சோலையில் , வில், அம்பு தூணி கரி பரி தேள் அரி மேவி அடர் - கட்புருவம் விழி, தோள் நகில் நிதம்பம் ,இடை எனப்படும் வில், அத்திரம், , புட்டில் யானை,குதிரை, தேர் , சிங்கம் ஆகியவை கொண்டு எதிர்க்கும் அம்புயத்து மின் தாழும் எழிலார் அணங்கு - தாமரை ஆசனியாகிய இலக்குமியையும் தாழ வைக்கும் அழகியான என் காதலி, வில் அம்பு தூவ - தன் புருவ வில் வளைத்துக் கண் அம்பு செலுத்த, மதன் விரை வரும் - அதன் இடமாகக் கொண்டு மன்மதன் விரைவாக வந்து விடுவான் , இதுவே என் விதி - இது என் விதியாகும்.
(கு.உ):- விரை - கடைக்குறை - வில்லம்பு தூவ என்பதை இரட்டுற மொழிந்து கொண்டு, மதன் விலலம்பு தூவ வருமே - தன் கரும்பாகிய வில்லை வளைத்து மலரம்பு தூவ மன்மதன் வந்து விடுவோனே என விரித்துரைத்தலுஞ் சிறக்கும்.
தலைவன் புறப்படுங்காற் பாகற்குக் கூறல்
489. தேமா வெளிவிடக் கோகிலங் கூவித் தெரிவையுயிர்
வேமா றதைக்காட் டிடுமுன் விடுமுயிர் மீட்டிடவுன் வாமா னெடுந்தேள் விரையூர்ந் திடுவையல் வான்மணிதேர் ஏமா றெனவிடு வான்கா லறநா வலன்கிரிக்கே
பதவுரை:- வான் கால் அற நாவலன் கிரிக்கு - மழை பொழிதற்குக் காரணமான அறநெறி நிற்கும் நாவலர் பிரானது மலைக்கண் , தேமா எரி விட - தேமா மரமானது தழல் போலும் பூக்களை ஈன, கோகிலம் கூவி - குயில் கூவி, தெரிவை உயிர் வேமாறு அதை காட்டிடு முன் - தலைவியின் உயிர் வேகுந் தன்மையை அச் சூழ்நிலை காட்டுதற்கு முன், விடும் உயிர் மீட்டிட - விடுபட்ட உயிரை மீட்கும் வண்ணம் , வாம் மா நின் நெடும் தேர் - தாவிப் பாயும் குதிரைகள் பூண்ட உனது நெடிய தேரை, விரை ஊர்ந்திடுவை - விரைந்து செலுத்துவாயாக, அ வான் மணி தேர் - அந்தச் சிறந்த மணி கட்டிய தேரை, ஏ மாறு என விடுக - அம்பு விசையிற் செலுத்துக.
(கு.உ):- வான் - மழை; விரை - ஈறு தொக்க வினையெச்சம்

352
ஊர் வந்துழித் தலைவன் பாகற்குக் கூறியது
490. சேன்முந்து கண்ணியென் னாவி திருகச் சிவக்குமுனங் கான்முந்து மாறு கடவுகென் றேறக் கருதலர்தாள் நான் முந்தி நான்முந்தி யென்றே பணிநல்லை நாவலனுார் தான்முந்தி வந்ததிழி யென் றனைவிம்மி தம்மிதுவே
பதவுரை:- சேல் முந்து கண்ணி - சேலினை வெல்லும் கண்ணினளாய தலைவி, என் ஆவி திருக சிவக்கு முனம் - என் உயிரைத் திருகிடுமாறு கோபிக்கும் முன் , கான் முந்துமாறு கடவுக என்று ஏற - காடு பிற்படும்படி முந்திப் போய்ச் சேருமாறு செலுத்துக என்று சொல்லி நான் ஏறினேனாக, கருதலர் நான் முந்தி நான் முந்தி ன்னறே பணி தாள் நாவலன் நல்லை ஊர் - பகைவர்களாயுள்ளோரும் நான் முந்தி நான் முந்தி எனப் போட்டியிட்டு வணங்கும் பாதங்களை உடைய நாவலர் பிரானது நல்லூரின் கண் , தான் முந்தி வந்தது தேர் முந்தி வந்து விட்டது, இழி என்றனை - இறங்குக என்றாய் இது விம்மிதம் - இது ஆச்சரியமாகும்.
பாங்கி தலைவன் வந்துழி மகிழ்ந்துரைத்தல்
491, சந்தன மேறி வளம்பல தந்தன தந்துபிடிச்
சந்தன மேவிடு மந்தன மேவினை சார்களபஞ் சந்தன மாழை தருகளி றேவிருந் தாதியரை வந்தனம் வந்தன முண்மெனு மின்னா வலன்வரைக்கே
பதவுரை:- சார் களபஞ் சந்து அன மாழை தரு களிறே - பொருந்திய களபச் சாந்தும் அத்தகைய சிறப்புள்ள பொன்னும் தரும் களிறாகிய தலைவனே, விருந்து ஆதியரை - விருந்தினர் முதலியோரை, வந்தனம் வந்தனம் உண்ம் எனும் இன் நாவலன் வரைக்கு - வணக்கம் வணக்கம் என வரவேற்று உண்ணுங்கள் என்று உவந்து ஊட்டும் இனிமையான நாவலர் பிரானது மலையின் கண் , சந்தனம் ஏறி - தேர் ஏறி, வளம் பல தந்தன தந்து - பல வளங்களையும் விளைப்பனவாய திரவியங்களையும் கொணர்ந்து, பிடி சந்தன மேவிடு அம் தன மேவினை - தனது பிடியாகிய தலைவியின் சந்தனக் குழம்பு பொருந்திய அழகிய தனங்களைப் பொருந்தினாய்.

Page 187
353
(கு.உ);~ ஸ்யந்தனம் - தேர். அது சந்தனமென மரீஇயிற்று. களபம் தடித்துறைந்த களபம் - முலை அணிகளில் ஒன்று. தலைவனைக் களிறென விதக்க வேண்டுவாள். தலைவியைப் பிடி என்றாள். நாவலர் பிரானது விருந்துாண்டற் பண்பு.
"வாடும் பசிக்கறு சுவையுணாத் தினம் வழங்கிடும் காமதேனு"
என்ற சிவசம்புப் புலவர் கூற்றினும் பயில்தல் காண்க.
தலைவியோடிருந்த தலைவன் கார்ப் பருவங் கண்டு சொல்லியது.
492, திருமா னயக்கு மொருமான் கடலுண்டு சீரிணைவெற்
பருகா படிந்தன னிகட லுண்டே யறுமுகவேள் திருநீ றெனமினிக் கீரிமலைக் குயின் சீகுறவுற் றிருணி கலைநா வலனென வாழிய ரீகுதியே.
பதவுரை:- திருமால் நயக்கும் ஒரு மான் கடல் உண்டு - திருமாலை ஒக்கும் ஒரு பெரிய கடலைக் குடித்து, சீர் இணை வெற்பு அருகா படிந்தனன் - சிறப்புப் பொருந்திய மலைச் சாரலில் படிந்தவனான நி, உண்டு கடல் ஈ - குடித்த கடல் நீரை ஈயும் கடப்பாடு உடையதாய் , அறுமுகவேள் திருநீறு என மின்னி - ஆறுமுகநாவலர் பிரான் பூசும் திருநீற்று ஒளி போல மின்னி, கீரிமலை குயின் சீர் உற உற்று - கீரிமலையில் மேகமாம் தன்மை உறப் பொருந்தி, இருள் நீ - அறியாமை இருளை நீக்குகின்ற, கலை நாவலன் என - சகல கலை வல்லாளனான நாவலர் பிரான் போல் , ஈகுதி - உன் நீர் வளத்தை மேன்மேல் ஈவாயாக, வாழிய - வாழ்க.
முற்றும்

354 தமிழ்த்தாத்தா கந்த முருகேசனார் பற்றி.
"கற்றோரைக் கறறோரே காமுறுவர்"
என்பதற்கிணங்க தமிழ்த்தாத்தா அறிஞர் கந்தமுருகேசனாபற்றியும் அவரது தமிழ்த்தொண்டு பற்றியும் தமிழறிஞர்கள் பலர், பாடல்கள் பாடியுள்ளனர்.உதாரணத்திற்கு சிலபாடல்கள் கீழே தரப்படுகின்றன.
கந்தமுரு கேசனார்க் கண்டே னொருதினம் யான் பைந்தமிழின் கல்விப் பரப்பனைத்தும் - இந்தவிதம் ஒருருவ மெய்தியதென் றுள்ளினே னன்றுதொட்டவ் வாருருவ முள்புகுந்த தால்
-பண்டிதமணி.சி.கணபதிப்பிள்ளை.
நீதிப் புலோலிக்கு நீண்டபுகழ் ஈட்டிவைத்த சோதி முருகேசர்க்கு தூயசின்னம் - வீதிப்பேர் மட்டுமே போதாது மாண்புடைய மண்டபமுங் கட்டுவீ ரீதே கடன்
-கவிஞர்.மு.செல்லையா
அகத்தியன் போல் அனுதினமும் திண்ணையமfந்திருந்தே சுகத்தினைப் பாராமற் சொற்பமும் ஓயாமற் பாடம் சொலிப் புகுத்திய கந்த முருகேசன் பொன்மொழி மாணவர்வாய் வகுத்துள வெண்மணல் மல்லிகைப் பந்தலு நாறிடுமே
-வித்துவான்.பண்டிதர்.க.கிருஸ்ணபிள்ளை
சேனாவரையன் றானிங்கு
மீண்டும் பிறந்தா னென்றிறும் பூ தானா தடைய வவன் வாய்ச்சொல்
அலசி யெடுத்திங் கறைவோனே! தேனார் கனிந்த சொல்லுடையாய்!
செம்மை மிளிருந் திருவுளத்தாய் கானார் கந்த முருகேச
கலைசால் கீர்த்திக் கவின்குருவே.
-பண்டிதர்.இ.முருகேசு
நாவலன் பேரில் நற்கோவை காட்டி நண்ணுபகழ் பாவலன் பண்பும் பயன்மிகு வாழ்வும் பெருகநண்ணார் மேவல னாகி மேன்மையும் உற்றவன் மேவு தமிழ் காவல னாகிய கந்த முருகேசக் கலைவள்ளலே.
-பண்டிதை.த.மாலோகமணி,கீழ்கரவை

Page 188
355
நல்லரிய சேவை செய்தீர் தமிழுக் காக
நாலுபத்து ஆண்டாகச் சோர்வு இன்றி சொல்லரிய காப்பியனார் உலகிற் கிந்த
சோர்விலா எழில்பேராம் இலக்கணத்தை நல்லரிய திருக்குறளை அகநா னுற்றை
நானிலத்தார் புகழுகின்ற சிலம்புதன்னை பல்லரிய கம்பரசம் பரணி தன்னை
பாவலனே படிப்பித்தாய் உலகம்போற்றும்.
தென்புலோலி.க.ஆழ்வாப்பிள்ளை
“முல்லைப் பந்தர் தனக்கருகே முதன்மை வாய்ந்த திண்ணையதில்
அல்லும் பகலும் மன்புடனே ய்கலா திருந்தே யெஞ்ஞான்றும் மல்கி நாடும் மாணவரின் மாசிலறிவாம் விடாய் தீர்த்தோன் செல்வன் கந்தமுருகேசன் சேவை யென்றும் மறவோமே".
பண்டிதன்.வித்துவான்.சி.சுப்பிரமணியன்
பாவல ருள்ளகக் கோவிலில் வைத்துப் பராவிடுசிர் நாவல ரின்றமிழ்க் கோவை யினிக்க நவின்றருளுங் காவய னல்லியற் கந்த முருகேசன் காசினிமேல் நாவல னார்புகழ் போலென்றும் வாழ்க நனிசிறந்தே
உடுப்பிட்டி - கா.நீலகண்டன்
உள்ளப் பொலிவோ டுவந்து கலையூட்டு மள்ளக் குறையா வருநிதியே - தெள்ளுதமிழ்க் கந்தமுரு கேசனெனுங் கண்மணிநேர் சற்குருவே சந்ததமுந் நின்றாள் சரண்.
பிள்ளைக்கவி.வ.சிவராசன்.
கற்றதுநான் சிலநாட்கள் கண்ட நலம் பெரிது
கந்தமுருகேச னெனும் கலைக் கடலைக்காணப் பெற்றதலாற் கரையிருந்த அடியேற்கு ஆழம்
புரியவில்லை புரிந்தவரும் இல்லையென்றால் உண்மை சுற்றுமிதிற் பொய்யில்லை, புலவரது ஆழம்
சுழியோடிக் காண்பதல்ல துறைபோகக் கற்று பெற்றியர்க்கும் அரியததைப் பேணவில்லை, இந்தப்
பேதையர்க்கும் வாழுலகு பெரியார் புகழ் வாழ்க.
திரு.மன்னவன் கந்தப்பு.
அறிவொளி வீச வகன்ற நிலத்துச் செறியும் பரிதி சிவக்க - செறிந்த புவியோர் மனமா சகல வகுத்தாய் கவியரங்கு நாவலன் மேல்.
திரு.க.பொன்னையா "இளங்கோ அகம்" புலோலி

356 பின்னிணைப்பு:-
சித்திரக்கவியின் விளக்கம்
458. பரத்தை யுறவுறு வார்தமி வாயில் வருதல் செய்யார்
தரத்தி லுறுதமி ழம்மிமிழ் நாவலற் வார்மன்மதி வரத்தி லனையிய வாராழ் மிகப்பொன் வரைம்முருகைப் பரத்தை தமியுற வந்தனர் பார்த்திடு பார்ப்பதியே
மேற்கூறப்பட்ட பாடல் சித்திரக்கவி வடிவத்தில் பின்வருமாறு அமையும்.
سی\
MQ Sỳ NI
S NN 德 Ve g 咏 つ。
S. பரத்தை piry rúiltillallelaplálaigiliul ir NA S 战

Page 189
357
சித்திரக்கவி (458)
ஆறாரைச் சக்கரம்.
இது ஆறு ஆர் உடையதாய், நடுவே 'மி' நின்று ஆர் ஒன்றுக்குப் பத்துப் பத்து எழுத்தாய், சூட்டின் மேல் இருபத்து நான்கு எழுத்து நின்று, இடக்குறுக்கு ஆரின் முனை தொடங்கி அதன் எதிர் ஆரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அடுத்த வலக் கீழாரின் முனை நின்று அதன் எதிர் ஆரின் முனையிறுதி சென்று இரண்டாம் அடி முற்றி, அடுத்த வலக்கிழாரின் முனை நின்று எதிர் மேலாரின் முனையிறுதி சென்று மூன்றாம் அடி முற்றி, அதற்கடுத்த வலக் கீழாரின் முனை நின்று வட்டை வழி வலஞ் சுற்றி நான்காம் அடி முடிந்து நிற்றல் காண்க.


Page 190


Page 191

ఇ65 இடையறாது முழங்கிய
ଶ୍ରେd&&ଭ୪:୪୩, இலக்கியங்கை 露 டையோராக்கினார். இவர் வலன் கோவை? என்னும் இயற்றியதுடன், பல கட்டுரை னங்களும் பத்திரிகைகளில்
மையைப் பெற்றவர். இவர்
b புகழுடம்பு எய்தினார்.