கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2011.09-10.18

Page 1
ENDU (
சைவ பரிபாலன சபை வெளியீடு
ஆரம்பம் விரோதி டு ஆவணி மீ"26 ஆம் உ(889) ---
:123 . 1, 2 கர வருடம் புரட்டாதி, ஜப்
திருநெல்வேலி பழங்கி
வை. அநவரத6
ைெசவமும் தமிழும் வளர்த்த சான்றோர்கள் பலர் வாழ்ந்த 1 திருநெல்வேலி கிராமமாகும். பசுவதைக்கு அஞ்சிப் பரதேசம் பே ஞானப்பிரகாச சுவாமிகள், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை பழமைவாய்ந்த ஆலயங்கள் சிறந்து விளங்குவதும் சிவநெறிக் செல்வர்களும் கல்விமான்களும்; வணிகப் பெருமக்களும் கொடைவள் பேறுபெற்றதும் இந்தக் கிராமமாகும்.
கோவிலின் முகப்புத் தோற்றம்
 
 
 
 
 
 
 
 
 
 

Web Whinduorgan.com
e-mail editor Chindu organ.com
Ses - _ 1ílJě5 6ílooo பசித்திங்கள் 1ஆம் நாள் eBLIIT. 50.00
ணற்றழப் பிள்ளையார் விநாயகமூர்த்தி
|ண்ணிய பூமியாகத் திகழ்வது ானவர் என்று போற்றப்படும் ஆகியோரால் பெருமையுற்றதும்
செல்வர்களும் அறநெறிச் rளல்களும் நிறைந்து விளங்கும்
எழுந்தருளி பஞ்சமுக விநாயகர்

Page 2
இந்துசாதனம் 8. O9
இக்கிராமம் சங்கீதம், நாட்டியம், சிற்பம், ஒவியம் ஆகிய
நுண்கலைகளின் இருப்பிடமாகத் தொன்றுதொட்டு விளங்கு கிறது. செழுமையான மண்வளம் மிகுந்து காணப்படும் இக்கிராமத்தில் வாழை, மா, பலா முதலிய கனிதரும் மரங்களும் மற்றும் பூஞ்சோலைகளும், காய்கறித் தோட்டங்களும் நிறைந்து இயற்கை அன்னையை அழகுபடுத்துகின்றன. இங்கு வாழ்கின்ற மக்கள் சைவப் பண்பாட்டில் ஊறித் திளைத்தவர்கள். ஆசார சீலம்
நிரம்பப் பெற்றவர்கள். கல்வி அறிவால் சிறந்து விளங்குபவர்கள்.
இக்கிராமத்து மக்கள் வாழ்வின் உயிர் நாடியாக உள்ளுணர்வாக சமய நெறி விளங்கி வந்துள்ளது. அவர்களின் ஆன்மிக வாழ்வுக்கு மட்டுமன்றிப் பல்வேறு வகைப்பட்ட கலை வளர்ச்சிக்கும் ஆலயங்களே நிலைக்களனாக சிறந்து விளங்குகின்றன. அத்தகைய ஆலயங்களுள் திருநெல்வேலி பழங்கிணற்றடி பூரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் சிறப்புப்பெற்று விளங்குகின்றது. அருள்மிகு பூரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் விநாயகப் பெருமானை மூல மூர்த்தியாகக் கொண்டு கிழக்குப் பக்கம் நோக்கிய சந்நிதியுடன் சீர்பெற்று விளங்குகின்றது. சிறிய கோயிலாக இருந்த போதிலும் அங்கே எழுந்தருளியிருக்கும் பெருமான் மூர்த்திகரமாக விளங்குகிறார். பிரணவ சொரூபியான விநாயகப் பெருமானின் அருள் வடிவங்கள் நமது ஆலயங்களில் நின்ற கோலத்திலும் இருந்த கோலத்திலும் நடனத் திருக்கோலத் திலும் உள்ளன. இவ்வாலயத்தின் மூலஸ்தானத்திலே, ஏத்துவார் இடரைக் களையும் எம்பெருமான் இருந்த கோலத்திலே காட்சிதருகிறார். ஒற்றைக் கொம்பும், இருசெவிகளும், மூன்றுதிருக்
 

IO. 2OII கர புறபீடாதி, ஐப்பசி 01
கண்களும், நான்குதிருத்தோள்களும், ஐந்து திருக்கரங்களும், பருத்த உடம்பும் உடையவராக பூநீவீரகத்தி விநாயகன் என்னும் திருநாமம் தாங்கி தன்னை நாடிவரும் அடியார்களுக்கு அருள் பாலித்த வண்ணம் வீற்றிருக்கிறார். அவருடைய முகம் பிரணவத்தையும் மூன்று திருக்கண்கள் முச்சுடரையும் உணர்த்துகின்றன. அவருடைய துதிக்கை நாதவிந்து வடிவமாக அமைந்திருக்கிறது. அவரது திருமேனி ஞானமயமானது. திருப் பாதங்கள் ஞானசத்தியும் கிரியா சக்தியுமாகும். விநாயகப் பெருமான் தமது திருக்கரங்களில் பாசம், அங்குசம், மோதகம்,
கும்பம் என்பவற்றைத் தாங்கியுள்ளார்.
பொதுவாக ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கும் தன்மையைக் கூர்ந்து கவனிக்குமிடத்து ஒர் உண்மை புலப்படுகிறது. நமது உடம்பின் அமைப்பைப் போன்றே இருக்கிறது. மனிதன் ஒருவன் நீட்டி நிமிர்ந்துபடுத்திருக்கும் நிலையே ஆலய அமைப்பென்று ஆன்றோர் கூறுவர். இதனைத் திருமூலர் தமது திருமந்திரத்தில் பின்வரும் பாடலில் அழகாக எடுத்துக் காட்டுகிறார்.
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மனிவிளக்கே"
இவ்வாலயத்தின் அமைப்பை உற்று நோக்குமிடத்து அதில் பல உறுப்புக்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. மூலவிக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இடம் விமானம் என்றும், அதன் மேற்கூரை ஸ்தூபி என்றும் வழங்கப்படும். ஸ்தூபியின்கீழ்க் காணப்படும் கருவறையைக் கர்ப்பக்கிருகம் என்றும் கூறுவதுண்டு. இந்தக் கர்ப்பக் கிருகத்தை அடுத்து அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் மற்றும் வசந்த மண்டபம் யாவும் ஒருங்கே அமையப் பெற்று அழகுறக் காட்சி தருகின்றது. மணிக் கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் வைரவப் பெருமானுக்குத் தனியாக சிறு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பதி, பசு, பாசம் ஆகியவற்றை விளக்கும் கொடிமரம் மூஷிகம் பலிபீடம் என்பவை ஆகம முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன. வசந்தமண்டபம் புதுப்பிக்கப்பட்டு அழகிய சிற்பவேலைப் பாடுகளுடன் காட்சி அளிக்கிறது. யாகசாலை பாகசாலை வாகனசாலை களஞ்சிய அறை அமையப் பெற்று சிறந்து விளங்குகின்றது. தேவசபை தெற்கு நோக்கியபடி காட்சி தருகிறது.
உற்சவ மூர்த்திகளான வீரகத்திவிநாயகர், பஞ்சமுக விநாயகர் வலம்புரிவிநாயகர் ஆகிய எழுந்தருளி மூர்த்தங்கள் இந்தத் தேவசபையில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர். இந்த ஆலயம் உள்வீதி-வெளிவீதி என இரண்டு சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டது. வீதிகள் யாவும் தூய்மையாக விளங்குகின்றன. யாகசாலையின் வெளிப்புற சுவற்றில் வரையப்பட்டிருக்கும் நர்த்தனகணபதி ஒவியமும் மகா மண்டபத்தில் காட்சிதரும் விநாயகப்பெருமானின் ஓவியமும்
கண்களுக்குப் பெரும் விருந்தாகின்றன. ஆலயத்தின் ->

Page 3
இந்துசாதனம் 8. O9,
சுற்றாடல்கள் யாவும் தூய்மையாக விளங்குகின்றன. அமைதியும் ஆனந்தமும் தவழ்ந்து வந்து ஆலயத்திற்குச் செல்லும் அடியார்களுக்கு மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகின்றன.
ஆதியில் வேதாரணியத்தில் இருந்து வைத்திலிங்கம் கார்த்திகேசு என்னும் சைவப் பெரியாரே ஒரு சிறிய விநாயகர் விக்கிரகம் கொண்டு வந்து திருநெல்வேலி பழங்கிணற்றடிக்கு அருகாமையில் ஒரு கொட்டில் அமைத்து அங்கு பிரதிஷ்டை செய்து தினமும் ஏழு திரிவைத்துப் பூசை செய்து வந்தாரென்றும் பின்னர் 1890 ஆம் ஆண்டு தொடக்கம் அவரின் மகன் கா. நல்லதம்பி என்பவரால் பூசை செய்யப்பட்டு வந்தாகவும் அறியக்
கூடியதாக இருக்கிறது.
இவருடைய காலத்திலேயே தான் (1909ஆம் ஆண்டில்) ஒலைக் கொட்டில் எதிர்பாராத விதமாக தீப் பிடிக்கவே அடியார் ஒருவரது கனவிலே அக்கொட்டில் எரிவதைப் பிள்ளையார் தெரியப்படுத்தினாரென்றும் பொதுமக்களின் உதவியுடன் அந்த அன்பர் தீயை அணைத்தார் என்றும் கூறுவர். பின்னர் அந்தக் கொட்டில் திருத்தியமைக்கப்பட்டு ஒடு போடப்பட்டது. 1933ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் நவராத்திரி பூசை நாலாம் நாள் நல்ல தம்பி காலமானார். அதன் பின்னர் கார்த்திகேசு சின்னத்தம்பி பூசை செய்தார். பின்னர் சின்னத்தம்பி நோய்வாய்ப்பட அவரின் மைத்துனரான காசிப்பிள்ளை குமாரசுவாமி பூசை செய்துவந்தார். இவ்வாலயத்தின் ஆரம்பகால வரலாற்றை ஆராயும் போது, சைவ ஆசாரங்களை அனுஷ்டித்து வந்த பரம்பரையினரே நித்திய பூசைகளைப் பொறுப்பேற்றுச் சிறப்பாக நடத்தி வந்துள்ளனர் எனக்கருத இடமுண்டு. 1966ஆம் ஆண்டுவரை இந்த நிலை நீடித்து வந்துள்ளது.
வெவ்வினையை வேரறுக்கவல்ல விநாயகப் பெருமான் திருவருள் துணைபுரிய கனவில் கண்ட காட்சிப்பிரகாரம் இவ்வாலயத்துக்கென உற்சவ மூர்த்தி ஒன்று உருவாக்கப்பட்டு 1965ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் இக்கட்டுரையாளரினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி பெரிய நயினார் குடும்பத்தினர் பழமை வாய்ந்த மடாலயமாக இருந்து வந்த ஆயலத்தைப் புதுப்பித்து ஒரு சுபமுகூர்த்தத்தில் கும்பாபி ஷேகத்தை நடத்துவற்காக அயராது உழைத்துவந்தனர். இதன் பயனாக மூலவர் விக்கிரகம் ஒன்று புதிதாக வடிவமைக்கப்பட்டு வவுனியாவில் இருந்து நல்லதம்பியின் உதவியுடன் சின்னத்தம்பி நடராஜா என்பவரால் கொண்டுவரப்பட்டு 1966ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதியன்று சுபவேளையில் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் கும்பாபிஷேம் சிறப்பாக நடை பெற்றது. இதன்பின்னர் பூசைகள் யாவும் சிவபூரீவைரவநாதக் குருக்களிடமே கொடுக்கப்பட்டன. அவர் சிறிது காலம் பூசைகளுக்குப் பொறுப்பாகவிருந்தார். அவர் காலமாகிவிடவே அவரது மகன் சிவபூரீ ஜெகதீஸ்வரக்குருக்கள் பூசைகளைப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி வருகிறார்.

O. 20 - கர புறபீடாதி, ஐப்பசி 01
1981ஆம் ஆண்டிலும் அதனைத் தொடர்ந்து 1982-1983
ஆம் ஆண்டுகளிலும் மாசிமாதத்தில் அலங்கார உற்சவம் நடைபெற்று வந்தது. பின்னர் திருப்பணி வேலைகளுக்காக துந்துபி வருஷம் வைகாசி (06.06.1983) செவ்வாய்க்கிழமை பூர்வபக்க தசமித் திதியில் பாலஸ்தாபனம் நடைபெற்றது. அதனால் 1984ஆம் ஆண்டில் அலங்கார உற்சவம் நடைபெறவில்லை. 1985 ஆண்டில் கொடியேற்றத் துடன் ஆரம்பித்த மகோற்சவம் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று வருடங்கள் அலங்கார உற்சவமும் பின்னர் 1985ஆம் ஆண்டு கொடியேறி மகோற்சவமும் நடைபெறக் காலாயிருந்தவர் திரு. நாகரத்தினம் அவர்களே. மேலும் இதே ஆண்டில் பூதவாகனமும் கஜமுக வாகனமும் செய்வித்து கஜமுக சூர சங்கார விழாவையும் ஆரம்பித்து வைத்த
பெருமை இவரையே சாரும். இப்பெரியார் இக் கோயிலில்
சம்பளம் பெறாத ஒரு தொண்டராக நீண்டகாலம் பணிபுரிந்து வந்தமை குறிப்பிடத் தக்கது. இவரது அரும் பெரும் முயற்சி 1986 ஆம் ஆண்டில் வீரகத்தி விநாயகருக்கு ஒர் அழகிய சித்திரத்தேர் உருவாவதற்குப் பேருதவியாக இருந்தது.
திருநெல்வேலி ஆறுமுகம் சிற்பாலய நிர்வாக இயக்குனர் திரு. ஆ ஜீவரத்தினம் சிற்பாசாரியாரின் கைவண்ணத்தில் இச்சித்திரத் தேர் உருவானமை குறிப்பிடத்தக்கது. தேர் முட்டி அமைப்பதற்கு 1989ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி திரு. கா. சி. நடராசா அவர்களால் அத்திவாரம் போடப்பட்டு மிகவும் குறுகிய காலத்தில் இத்திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றன. திரு சிவலிங்கம் தனது காணியில் ஒரு பகுதியை தேர்முட்டி அமைப்பதற்கென குறைந்த விலையில் ஒதுக்கிக் கொடுத்தார். மேலும் இளைப்பாறிய ஒவசீயர் திரு. இ. குமாரசுவாமி அவர்கள் இக்கோயில் வளர்ச்சிக்கு ஆற்றிய சேவை மகத்தானது. அத்துடன் இச்சித்திரத்தேர் உருவாவதற்கு நீண்ட காலம் இவ்வாலயத்தில் ஒரு தொண்டராகப் பணிபுரிந்து வந்து அமரத்துவம் அடைந்த நாகரத்தினம் அவர்களது அரும் பெரும் முயற்சியே உறுதுணையாக இருந்ததை என்றும் நினைவு கூர வேண்டும். இன்னும் ஒரு முக்கிய விஷயத்தை இங்கு குறிப்பிட
->

Page 4
இந்துசாதனம் 8. O9
வேண்டும். இவ்வாலயத்தில் இளைஞர்கள் தாமாகவே முன் வந்து இறைபணியில் ஈடுபடுவதைத் தினமும் காணக்கூடியதாக இருக்கிறது. அவர்களது சேவையை மனமார வாழ்த்துகிறோம்.
நாட்டில் தற்போது நிலவும் கஷ்டமான சூழ்நிலையிலும் அன்பர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று இவ்வாலயத்தின் வடக்கு வீதியில் அன்னதான மண்டபம் ஒன்று மிகவும் குறுகிய காலத்தில் அமைக்கப்பெற்றுத் தைப்பூச நன்னாளில் திறந்து வைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க திருப்பணியாகும்.
1994ஆம் ஆண்டில் பூரீ வீரகத்திவிநாயகப்பெருமானுக்கு திருமஞ்சம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு 04.03.1994அன்று நண்பகல் 12 மணியளவில் வெள்ளோட்டம் விடப்பட்டது. திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பச் சக்கரவர்த்தி திரு. ஆ ஜீவரத்தினம் ஆச்சாரியார் அவர்களின் தலைமையின்கீழ் ஆறுமுக சிற்பாலயத்தினர் கலைவண்ணம் மிக்க இச்சித்திர மஞ்சத்தை அழகுற நிர்மாணித்
துள்ளனர்.
ழரீ வீரகத்தி விநாயகர் பெருமானது அடியார்களின் பேருதவிகளால் சித்திரவேலைப்பாடுகளுடன் கைலாசவாகனம் ஒன்றும் உருவாக்கப்பட்டு 04.03.1997 அன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. இவ்வாலயத்துக்கென சித்திரத்தேர், சப்பரம், மஞ்சம் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் நிர்மாணித்த ஆறுமுகம் சிற்பாலய அதிபர் திரு.ஜீவரத்தினம் அவர்களின் நெறிப்படுத்தலில் சிற்பாலயக் கலைஞர்களால் இந்தக் கைலாச வாகனமும்
உருவாக்கப்பட்டது.
மகோற்சவ காலத்தில் பழங்கிணற்றடி பூரீ வீரகத்தி விநாயகனைத் தரிசிக்க வரும் அடியார்களின் தாகத்தினைத் தீர்க்கும் பொருட்டு திருநெல்வேலி கலாமன்றத்தினர் ஆலயத்தின் தேரோடும் வீதியின் ஒரு புறத்தில் தண்ணிர்ப் பந்தல் அமைத்து குளிர்பான வகைகளை அடியார்களுக்கு அன்புடன் அளித்து அரும்பெரும் தொண்டாற்றி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. கலாமன்ற உறுப்பினர்கள் ஆற்றிவரும் இந்தப் பணி பாராட்டுக்குரியது.
கலாமன்றத்தினர் இன்னுமொரு அரும்பெரும் பணியில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. மகோற்சவ தினத்தையொட்டி மாணவர்களிடையே சைவசமய அறிவை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் ஆண்டுதோறும் சமய பாடப் பரீட்சை, கீழ்ப்பிரிவு, மத்தியபிரிவு, மேற்பிரிவு என மூன்று பிரிவுகளாக நடத்திப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெறுபவர்களுக்குப் பரிசில்கள் பூங்காவனத் திருவிழாவன்று வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
நித்திய பூசையும், நைமித்திக பூசையும் முறையாகவும் காலம் தவறாமலும் நடைபெற்று வருகின்ற ஆலயங்களில் இறைவனின் திருவருள் நிறைந்து விளங்கும். அதற்கு அமைய இக்கோயிலில் தற்போது காலை, உச்சிக்காலம், மாலை ஆகிய

O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
மூன்று நேரப் பூசைகளும் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற்று வருகின்றன. நாளாந்தம் இவ்வாறு பூசைகள் ஒழுங்காகவும், சிறப்பாகவும் நடைபெற்று வருவதால் ஆலயத்தில் ஒரு தெய்வீக ஒளி வீசுவதைக் காணலாம். இங்கு நடைபெறும் பூசை முறைகள் வழிபடுவோரைத் தெய்வ பக்தியில் ஈடுபடுத்தும்.
நமது ஆலயங்களில் திருவிழாக்கள் முறையாக நடைபெறுமிடத்து அவை சீரும் சிறப்பும் பெற்று விளங்குவதைக் காணலாம். இத்தகைய ஆலயங்களினால் அவை அமைந்துள்ள கிராமங்களும் சிறப்படைகின்றன. திருவிழாக்கள் தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் நன்மையளிப்பவை. அதனால் சமூகத்தினர் பலரும் நன்மைபெறுவதுடன் இறையுணர்வும் ஏற்படுகின்றது. இறைவனைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கவும் அவன் திருநாமங்களை வாயாரப் புகழ்ந்து பாடவும் அவனைப் போற்றித் துதிக்கவும் சந்தர்ப்பம் அளிக்கும் தினங்கள் இந்த திருவிழா நாட்களே.
பழங்கிணற்றடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்த மகோற்சவம் மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று பதினாறாம் விழாவான தீர்த்தோற்சவம் நடைபெறத்தக்கதாகக் கொடியேற்ற விழாவுடன் ஆரம்பித்துத் தொடர்ந்து 14 நாட்களுக்கு விழா விமரிசையாக நடைபெற்று 15ஆம் நாள் இரதோற்சவமும் அதனையடுத்து 16 ஆம் நாள் தீர்த்தோற்சவமும் நடைபெறும். இந்த விழாக்களுள் 10ஆம் நாள் மஞ்சமும் 12ஆம் நாள் கைலாசவாகனமும் 14ஆம் நாள்
சப்பறோற்சவமும் ஏனைய குறிப்பிடத்தக்க விழாக்களாகும்.
பஞ்ச கிருத்தியங்களுள் ஒன்றான படைப்புத் தொழிலைக் கொடியேற்றம் குறிக்கிறது. அதனைத் தொடர்ந்துவரும் விழாக்கள், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பவற்றைக் குறிக்கின்றன. தேர்த்திருவிழா சங்காரத்தை அதாவது அழித்தலையும் தீர்த்தத் திருவிழா அருளலையும் குறிப்பிடுகின்றன. இவ்வாறு ஆலயங்களில் நடைபெறும் மகோற்சவங்கள் இறைவனின் ஐந்தொழில்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த மகோற்சவ காலத்தில் வீரகத்தி விநாயகப்பெருமானது தரிசனம்பெறத் திருநெல்வேலியிலும் அயல் கிராமத்திலிருந்தும் அடியார்கள் ஆயிரக்கணக்கில் வந்தவண்ணம் இருப்பர். மேலும் வருடாந்த உற்சவங்கள் கால வரையறையோடும் பக்தி சிரத்தையோடும் நடைபெறுவதற்குப் பிரதம குருக்கள் முதற் கொண்டு அடியார்கள்வரை சகலரும் தங்கள் ஒத்துழைப்பை
வழங்கிவருவது பாராட்டுதற்குரியது.
இந்த ஆலயத்தில் நடைபெறும் நித்திய நைமித்திய உற்சவங்களை ஆகம விதிமுறைகள் சற்றும் பிசகாது நடத்திவருபவர் சிவபூரீவை. ஜெகதீஸ்வர சிவாச்சாரியார் அவர்கள். அவர் ஆற்றிவரும் சேவை போற்றுதற்குரியது. பெரும்பாலான பணிகளை அவரே பொறுப்பேற்று மிகவும் சிறப்பாக நடத்தி அடியார்களின் நன்மதிப்பிற்கு உரியவராகத் திகழ்கின்றார்.

Page 5
இந்துசாதனம் 8.09,
இவ்வாலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர் வேதாகம ஞான பாஸ்கரன் சிவழீ. தா. மகாதேவக் குருக்கள் அவர்கள் பங்குபற்றி கிரியைகள் ஆகம விதிப்படி நடத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவது பாராட்டுதற்குரியது.
இன்னும் ஒரு முக்கிய விஷயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன். தொன்மை வாய்ந்ததும் திருவருட் சிறப்பு மிக்கதுமான இவ்வாலயத்தின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாகவிருந்து அயராது உழைத்துவரும் திருநெல்வேலி பெரிய நயினார் குடும்பத்தினரின்தன்னலமற்ற சேவையைப் பாராட்டி வாழ்த்த வேண்டியது திருநெல்வேலிவாழ் சைவப்பெருமக்களது கடமையாகும். பழங்கிணற்றடி விநாயகப்பெருமான், தன்னை நம்பித் தஞ்சம்அடையவர்களுக்கு அபயம் அளிக்கும் தெய்வமாக விளங்குகிறார். தமது திருக்கடாட்சத்தைத் தங்குதடையின்றி எல்லோருக்கும் வாரி வழங்குகிறார். துன்பங்களையும் இடையூறுகளையும் அவர் எளிதில் நீக்கிவிடுவார் என்ற நம்பிக்கை மக்களிடையே வேரூன்றி இருக்கிறது.
எனவே அப்பெருமானாரையே திருநெல்வேலிவாழ் மக்கள் கண்கண்ட தெய்வமாக ஏற்று அல்லும் பகலும் அநவரதமும் போற்றித் துதித்துவருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
அடியார்கள் அவரது சந்நிதியில், காதலாகிக் கசிந்து கண்ணிர் உருகித் தங்கள் நெற்றியின் இருபுறமும் குட்டிக்கொண்டு
தோப்புக்கரணம் போட்டு வேண்டுதல் செய்வது, தேங்காயைச்
கிருதயுகம்
ஒவ்வொரு யுகத்திலும் உள்ள நிலையைப் மகாபாரதத்திற் சாந்தி பர்வத்திலும் இது கூ மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறார்கள். தர்மம் ஓங்கிய நின்றது மனிதன் சுமார் முப்பத்திரண்டு அடி உய போலவே உள்ளமும் மிக உயர்ந்ததாக விளங்கி
செயலிற் பண்பும் இருந்திருக்கின்றன. மனிதன் மிருகங்களையும் பறவைகளையும் கூட அவன் பு பேசியதாகச் சொல்லப்படுவதன் பொருள் இது தா வருணிக்கப்படுகிறது. இது சுமார் முப்பது இலட்சம்
 
 
 
 
 
 
 
 

O2O கர புரட்டாதி, ஐப்பசி 01
சிதறுகாயாக உடைத்து நன்றி செலுத்துவது. ஆலயத்தை வலம்வருவது என்பன தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து
வரும் வழக்கங்களாகும்.
வெள்ளிக்கிழமை, சதுர்த்தி, முதலிய விஷேட காலங்களில் விநாயகப்பெருமானுக்கு உகந்த நிவேதனப் பொருட்களாக சர்க்கரைப்பொங்கல், அப்பம், மாம்பழம், பலாப்பழம் மற்றும் கிழங்கு
பயறுவகைகளைப்படைத்து வழிபாடுசெய்வார்கள்.
பூரீ வீரகத்தி விநாயப் பெருமான் தம்மை உள்ளன்புடன் வழிபடும் அடியார்களுக்கு எளிதில் இன்னருள் புரியும் கருணைக் கடல். அவர்களது துன்பங்களை நீக்குவதில் வல்லவர். அத்துடன் கல்வி, செல்வம், ஞானம், சகல கலைகள் ஆகியவற்றையும் வாரி வழங்குவார்.
"நற்குஞ் சரக்கன்று நண்ணிற் கலை ஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்"
என்ற உமாபதி சிவாச்சாரியாரது அருள்வாக்கும் இங்கு கவனிக்கத்தக்கது.
சுருங்கக்கூறின், செந்தமிழும் சிவநெறியும் செழித்து வளரும் திருநெல்வேலியில் வாழ்கின்ற சைவப்பெருமக்களால் பெரிதும் விரும்பிப்போற்றப்படும் தெய்வமாக விளங்குபவர் பழங்கிணற்றடியூரீவீரகத்தி விநாயகப்பெருமானே. வினை தீர்க்கும் அந்தப் பெருமானின் திருநாமம் எந்த நேரமும் எமது நாவில் தவழ வேண்டும். எமது உள்ளமும் என்றும் அவரது சிந்தனையில் ஊறித் திளைக்க வேண்டும். அப்போது நாம் உலகில் எதற்கும் அஞ்சவேண்டியதில்லை. 人
料
燃
பற்றிச் சாத்திரங்களிற் சொல்லப்பட்டிருக்கிறது. றப்பட்டிருக்கிறது. கிருதயுகத்தில் எல்லோரும் பிருந்ததுதான் அதற்குக் காரணம் தர்மம் நாலுகாலில் ம் இருந்திருக்கிறான். அவனுடைய உடலைப் இருக்கிறது. அவனுடைய மனத்திற் கருணையும் இயற்கையுடன் ஒட்டி வாழ்ந்திருக்கிறான். அதனால், ந்து கொண்டிருக்கின்றான். அவை மனிதனுடன் ன். இவற்றால் கிருதயுகம் பொன்மயமானது
ஆண்டுகள் இருந்திருக்கிறது. ... சி.எம்.பத்மநாபாச்சாரியா �ܲܕ:8:" . . . . . . . •:::.
உடுப்பி'பரீ பரிமளமடம்,
என்று

Page 6
இந்துசாதனம் 8. O9.
யாழ். சைவபரிபாலன சபையினர் நடத்திய அகில இல
கல்லூரித் தமிழ்த்துறைத் துணைப் பேராசிரியர்நல்லுரர்
53 GÖTEBILI EflanILDITU...
2011 இந்துசாதனம் ஆவணி இதழ்-08ஆம் பக்கத் தொடர்ச்சி.
அன்பும் அருளும்
"அருள்" என்ற சொல்லைப் பிற்காலத்தில் பரம் பொருளின் தன்மையைச் சுட்டும் சொல்லாகவே பழக்கப்படுத்தி விட்டனர். அருள் என்பதை அன்பின் விரிவாகவே திருக்குறள் விளக்குகின்றது.
'அருள் என்னும் அன்பு ஈன் குழுவி பொருள் என்னும் செல்வச்செவிலியால் உண்டு"
-பொருள் செயல்வகை - 7
எனும் குறட்பா, அருளை அன்பின் செயல்பாடாக விளக்குகின்றது.
அகில இலங்கைச் சைவ மாநாடு - 2011 "சைவமும் பெண்மையும்" கருத்தரங்கில்
مجمع
ឆ្នាខំស្វេរ ម្ស ឆ្នា
* *
பேராசிரியர் கலைவாணி இராமநாத
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், விரிவுரையாளர் சுஜந்தினி ருநீ முரளிதரன்
அன்பானது பெற்றெடுத்த குழந்தைதான் அருள் என்பது. இந்த அருளை வளர்த்தெடுக்கும் செவிலித்தாய்தான் பொருள் என்று கூறப்படுகிறது. அருளைப் புரப்பது பொருள் என்னும் "செவிலி' எனப்படுகிறது. அச்செவிலியைச் "செல்வச் செவிலி' என்றும் குறிப்பிடுகின்றது.
உலகில் உள்ள பொருள்கள் மதிப்பு பெறுவது செல்வத் தன்மையினால் விளங்கச் செய்கின்றது. செல்வத் தன்மை என்பது அதன் இயங்கு மதிப்பாகும். இயங்கு மதிப்பெனும் தகுதி சமூக நன்மையில் நிலைப்படுவது. இவ்வகையின் செல்வத் தன்மை பொருளின் தகுதியாகவும் அருளை காட்டுவதாகவும் கூறப்படுகின் ՈՑjl
உயிரற்ற உலகப்பொருள்கள்மீது அன்பு செலுத்துவது என்பது "அருள்" தன்மையில் பொருள்களைப் பயன்படுத்துவது என்பதாகும். அருள் என்பது அந்தந்தப் பொருளின் சமூக நன்மையாக விளங்குவதாகும்.
தங்கத்தைப் பாதுகாக்கும் எண்ணமும் புளியைப் பாதுகாக்கும் எண்ணமும் ஒன்றல்ல. இதில் பொருளின் மதிப்பு பாதுகாப்பு எண்ணத்தை வேறுபடுத்துகின்றது. இதுவே பயன்படுத்துபவனைப் பொறுத்தும் வேறுபடும். திருநாவுக் கரசருக்கு உழவாரத் தொண்டில் கல்லும் மணியும் ஒன்றாகவே பட்டன. திருநாவுக்கரசரைப் பொறுத்தவரை அவை கோயிலைச் சுற்றிக் கிடக்கும் தடைகளே. இங்கே பொருளின் செல்வத்தன்மை
 

O. 2011 கர புறபீடாதி, ஐப்பசி 01
வ்கைச் சைவ மகாநாட்டில் சென்னை விவேகானந்தாக்
சா. சரவணன் ஆற்றிய தலைமையுரை.
சித்தாந்தச் செம்மணி, முனைவர் நல்லூர் சா. சரவணன்
என்பது உலக மதிப்பீடாக இல்லை. எண்ண மதிப்பீடாக விளங்குவது ஆகும். இப்படி உலக மதிப்பீடு என்பதாக இல்லாமல் நோக்கம் கருதிய செல்வமாக அல்லது இயங்கு தன்மையைப் பொருளில் காண்பது அருள் என்பது. இது தேவை நாடாத நட்பு போன்றது.
அன்பினால் விளையும் ஒரு நன்மையாக உலக மதிப்பீட்டிற்கு வேறாகப் பொருள்களில் காணப்படும் ஒன்றாக அருள் விளக்கப்படுகின்றது.
உலகப் பொருள்களை மதிப்பாக ஆக்கி அதன் கீழாகத்
தன்னை மதிப்பிட்டுக்கொள்ளும் முறையாக இல்லாமல், சமூக எண்ணத்தில் பொருளியக்கத்தை முறைப்படுத்துவதுதான் பொருளின் மீதான அன்பு அது அன்பு எனும் மூலத்தன்மையாக இல்லாமல் பொருளின் நன்மைச் செயற்பாடான "அருள்" என அக் குறட்பாவால் விளக்கப்பட்டது. நன்மையின் உடைமையாகக் கருதும் செயற்பாட்டில் அன்பானது "அருளாக" அனுபவப்படுகிறது என்பது குறிப்பாகும்.
அன்பு எனும் பொருண்மை
உயிர்ப் பொருள்கள் மீதும் உயிரில்லாத பொருள்கள் மீதும்
அகில இலங்கைச் சைவ மாநாடு - 2011 "சைவ நெறி காட்டும் வாழ்வியல்" கருத்தரங்கில்
- - முகுந்தன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், முனைவர். சா. சரவணன், விரிவுரையாளர் ச. லலீசன், ஆசிரியர் கு. பாலசண்முகம். காட்டப்படுகின்ற அன்பு வேறு வேறு பெயர்களால் குறிக்கப்பட்டது. அப்படிக் குறிக்கப்பட்ட பெயர்கள் அன்புக்கான மாற்றுச்சொற்க ளாக மட்டும் அமையவில்லை. அவை அன்பின் ஆற்றல் பெருமைகளை வேறு வேறு களங்களில் காட்டிக் கொண்டிருப்பவை ஆகும். இவ்வகையில் அன்பானது ஆற்றல் அருவப் பொருண்மையாக- மூலமான ஒன்றாக விளங்குகிறது என்பது உணரப்படுகின்றது.
அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும் இன்பமும் இன்பக் கல்வியுமாய் நிற்கும் முன்புறு காலமும் ஊரியுமாய் நிற்கும் அன்புற ஐந்தின் அமர்ந்து நின்றானே.
-திருமந்திரம், திதி -6 இது திருமூலர் பாடியது. ܓ

Page 7
இந்துசாதனம் 8,O9,
இறைவன் எல்லாப்பொருள்களிலும் புகுந்து நிற்பான். அவனே சில பொருள்களாக ஆகியும் நிற்பான். வியாபகமாய், வியாப்பியமாய் நிற்றல் போல பொருள்களாகவே மாறி நிற்கும் தன்மை கடவுளுக்கு உண்டு. இத்தன்மையில் "அன்பாகவும் கடவுள் நிற்கும் என்பதைக்கூறி அன்பின் அடிப்படையிலான ஒரு செயற்பாட்டையும் விளக்கி "அன்புற ஐந்தின் அமர்ந்து நின்றானே" என்று கூறுகின்றார்.
அன்பாக ஆகி நிற்கும் இறைவன் அமைப்பு ஒன்று. அன்பைப் பெறவைக்கும் இறைவன் அமைப்பு ஒன்று. அன்பைப் பெறவைக்க இறைவன் ஐந்தில் அமர்ந்து இருக்கிறான் என்பது கூறப்பட்டது.
ஐந்தாக கூறப்படுவன சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் எனும் ஐந்தாகும். இவை முறையே வாய், கண், மெய், செவி, மூக்கு எனும் புலங்களைச் சார்ந்த வகையில் அமைவன.
அன்பாக ஆகி நிற்கும் கடவுளே அன்பைப்பெறவைக்க ஐந்தாகவும் ஆகி இருக்கிறான் என்பது கூறப்பட்டது. அன்பாகத் தனிப் பொருண்மை போல ஆகி நிற்கும் கடவுள் தன்மையைத் தொடர்ந்து தனித்தும் நிலைநிறுத்துகிறார். அதன் வேறாக அதற்குரிய செயல் முறைகளையும் விளக்கப்படுத்துகின்றார். இவ்வகையில் கடவுளை "அன்புற ஐந்தின் அமர்ந்து நின்றான்" என்று வேறு அமைப்பிலும் சுட்டினார்.
ஆற்றல் பொருண்மையின் உண்மையானது அதனை உருவாக விளக்குவதில் அடங்கி இருக்கிறது. பொருளின் இயங்கு தளம் ஒன்றும் அதனின் வேறாக விளக்கப்படும்போது ஆற்றல் பொருண்மையானது மேலும் செயல்முறை உள்ள ஒன்றாக ஆகிறது. இதனால் அது பொருண்மை எனும் வரையறைக்குரிய சிறப்புத் தகுதியையும் பெற்று விடுகிறது.
அன்பும் பேரன்பும்
உயிர்களிடத்து ஆர்வமும் நட்புமாகவும், உயிரில்லாத பொருள்களிடத்து அருளாகவும் அன்பானது செயல்படுகிறது என்பதைத் திருக்குறளை மூலமாகக் கொண்டு அறிந்தோம். பொருள்களிடத்து அருளைக் காணுதலை பொருளின் இயங்கு தன்மைகள் வேறுபடுத்துகின்றன. ஆயினும் பொருள்களைச் சமூக நன்மையில் காணும்போது அருளாக அனுபவப்படுகிறது. அதுவே உயர்பொருள் எண்ணத்தில் காணப்படும்போது அப்பொருள் பற்றிய வேறுபட்ட மதிப்பீடும் மறைந்துவிடுகிறது.
உயிரல்லாத பொருளுக்கு அறிவு இல்லாத தன்மையினால் அறிவு வகையிலான செயல் மோதல்கள் இல்லை. அவற்றினின்று நீங்கிவிட்டால் அவற்றின் தாக்கம் இராது. ஆனால் உயிருள்ள பொருள்களின் தொடர்பில் செயல் மோதலும் உண்டு; பிரிப்புத் தாக்கமும் உண்டு. எனவே, இத்தொடர்பு சற்று விரிவானது. மேலும் இத்தொடர்புபல்வேறுபண்புகளுடன் பிணிப்புக் கொண்டது.
அவ்வகையில் உயிருள்ளவற்றுடன் தொடர்பு கொள்வ தாகிய நட்பு நேர் நிலையிலும் அதன் எதிர் நிலையிலும்கொள்ளும் முறைகளையும் பண்புக் கூறுகளையும் விரிவாக விவரிக்கிறது திருக்குறள். இப்படிப்பட்ட பல்வேறு பண்பு நிலைகள் உடனான அன்பை மறைமுகமாகவே கைக்கொள்கிறது இவ்வுலக வாழ்வு. இதில் அன்பை நிலைநிறுத்தும் கருவியே நட்பு இதன் பயிற்சியில் உலக வாழ்வைக் கடக்கும் தன்மையை உணர்ந்தவர்களே பேரன்பை அறிந்தவர்களாகிறார்கள்.
崇瀑
O

O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
பேரன்பைத் தெரிந்துகொண்ட அறிவே நன்றி பற்றித் தெளிவாகத் தெரிந்துகொள்ளும். முயற்சி வகையில் அன்பானது நன்றியை நாடுவதே.
இடர்களையாரேனும் எமக்கு இரங்காரேனும் படரும் நெறி பணியாரேனும் - சுடர் உருவில் என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்கு அன்பறாது என்நெஞ்சு அவர்க்கு.
-காரைக்காலம்மையார், அற்புதத் திருவந்தாதி-2
என்ற பாடலில், இடைவிடாமல் அன்பைக் கைக்கொள்ளும் நிலையைப் பேசுகிறார் காரைக்காலம்மையார்.
எம்முடைய துன்பங்களை நீக்கவில்லை என்றாலும், எங்கள்மீது இரக்கப்படவில்லை என்றாலும், நாங்கள் செல்ல வேண்டிய வழியைக் காட்டாதவர் என்றாலும், சுடர் உருவமாக நடமாடும் எம் கடவுள் மீது என் அன்பு இடைவிடாமல் செயற்படும்! என் நெஞ்சமும் அவருக்கே உரியது என்று கூறுகிறார்.
காரைக்காலம்மையார் குறிப்பிடும் அந் நிலைமைகள் எல்லோருக்கும் உரியவைகளே. அவை ஏன் அப்படி வந்து அமைகின்றன என்பதும் அவற்றை அன்புடன் எப்படிச் சேர்த்துப் பார்ப்பது என்பதுதான் வினாக்கள். இதிலே ஒரு குறிப்பில் மட்டும் நாம் இப்போது தெளிவான நிலையைக் கடைப்பிடிக்கலாம். அதாவது அன்பு செய்யும் வாழ்நிலையில் இந்த இடர் முதலியன இருக்கின்றன என்ற உண்மையே ஆகும்.
மகிழ்தி மட நெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ் சேமம் சேர்ந்தாய் -இகழாதே யாரென்பே யேனும் அணிந்துழல் வார்க்கு ஆட்பட்ட பேரன்பே இன்னும் பெருக்கு.
-காரைக்காலம்மையார், அற்புதத் திருவந்தாதி-31 இப்பாடலில் காரைக்காலம்மையார் ‘பேரன்பைப் பெருக்கு என நெஞ்சுக்குக் கட்டளையிடுகிறார்.
மடமையில் இருக்கிற நெஞ்சமே நீ மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒர் ஆள்மானிடப்பிறப்பில் நீஇருக்கிறாய்! பெரிய நிதியும் பாதுகாப்புமான ஒன்றைப் பெற்றிருக்கிறாய்! அதை இகழாதே! என்று கூறி, எலும்பையும் அணிந்து ஆடும் இறைவனுக்கு ஆட்பட்ட ஒரு பேரன்பை நீ இன்னும் பெருகச் செய்வாயாக! என்று கூறுகின்றார்.
இடர்களில் இருக்கும் நிலையில் 'அன்பு உறவை உறுதியாகப் பெற்று முயற்சிக்கும் நிலை முதலாவது. இதற்குப்பின், நாம் பேரன்பால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்வோம். அந்த நிலையில் அப் பேரன்பானது பெருகுவதற்கு உழைக்கவேண்டும் என்பது.
அன்பு வேறு பேரன்பு வேறு என்னுமாறு மனிதப் பிறவியின் வாழ்வு அமைகிறது. அன்பை நிலைநிறுத்தும் முயற்சியான பிறவித் தன்மையில்தான் அவ்வேறுபாட்டு நிலை உணரப்படும். ஆனால், பிறப்பில் அன்பு விளங்கத் தொடங்கியபோது அன்பே தானே பெருகுவதாகிறது என்பது தெரியவரும்.இதனை உணர்த்தும் அப்பரடிகள் வாக்கு.
"என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே"
N
அலரும்.
激
;

Page 8
இந்துசாதனம் 8. O9,
சமயப் பண்பாட்டு நோக்கில்
_് ഉ_L
உபதேசம் என்பது சமய போதம், தீட்சை, புத்திபோதனை, அ சமயம் என்பது வாழ்வியல், வாழும் முறை என்ற வை ஞானகுரு - சமயாசாரியார் போன்றோர், அவற்றைத் பக்குவப்பட்டோர்களைத் தம் அருகிருத்தி அவர்களு விளக்கங்களே உபதேசங்களாகும். ஞானிகள் சிலர்,
அத்தகையவே. சமய வாழ்க்கைக்கு இன்றியமையாத வழங்கப்பெற்ற சூழ்நிலை முதலியவற்றையும் விளக்கு இந்துசாதனம் 2011 ஆடி, அவனி இதழ்களில் இட
ബ
பொதுவாக உபதேசம் என்பது ஞானாசிரியர் வாயிலாக பக்குவமுள்ள சீடர்கள் பெறுவதாகும். உபதேசங்கள் ஒருவர் இன்னொருவருக்கு வழங்குவதாக அன்றி தம் நெஞ்சத்தைத் தாமே விளித்துச் சொல்லும் அருளுரை, அறிவுரைப் போக்கிலும் அமையலாம் என்பதனை முன்னர் கண்டோம். காலத்துக்குக் காலம் படிப்படியாக உபதேசங்கள் ஆன்மீக தளத்தில் நின்றும் வளர்ந்தன. ஆன்மீக வளாகத்தில் தோன்றிய சமயாசாரியர்கள், சந்தானா சாரியர்கள், நாயன்மார், ஆழ்வார் முதலியோர் தம் நெஞ்சத்தை விளித்து நற்கருத்துக்களை உபதேசிக்கும் நல்லருளாளர்களாக விளங்கியமையைக் காணலாம். இவர்களது அறிவுரைகள் அருளுரைகளாக மலர்ந்து சமய நோக்கிலும், கலை நோக்கிலும், தத்துவத் துறையிலும், அறவியல் மற்றும் அறிவியல் நோக்கிலும் வளர்ச்சியடைந்தன.
கணபதியே குருவாக வந்து தமக்கு உபதேசித்த பெருமையை விநாயகர் அகவலில் ஒளவையார்
"குருவடிவாகிக் குவலயம் தன்னில் திருவடிவைத்து திறமிது பொருளென வாடாவகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடாயுதத்தால் கொடுவினை களைந்து உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்."
என்று பாடிச் செல்கின்றார்.
தமிழ்கூறும் நல்லுலகினில் ஒளவையாரைப்பற்றி அறியாத
வர்களே இல்லை. இவர் அருளிச் செய்த ஆத்திசூடி,
கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை, ஞானக்
குறள் ஆகியவை தமிழன்னைக்கு அரிய உபதேசப்
பொக்கிசங்களாக உள்ளன. பண்பாட்டியல் நோக்கில் ஒளவையார்
அருளிய இலக்கியக் கூற்றுக்கள் மனித வாழ்வினைப்
பக்குவப்படுத்துவனவாகவே உள்ளன.
"ஈதலறம் தீவினைவிட் டீட்டல் பொருள்நல்ல காத லிருவர் கருத்தொருமித்-தாதரவு பட்டதே இன்பம் பரணைநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு"
 

O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
e6T66IIIg, öfl.TLOGOOTTTÖFIT B.A. (Hons)
O jEFLO SK -
அருளுரை, அறவுரை முதலான கருத்துக்களை உடையது. கயில், சமயத் தத்துவங்களைச் சரியாக உணர்ந்துள்ள தம் வாழ்க்கையிலும் கைக்கொள்ள விரும்புகின்ற, க்குத் தக்க வழியைக் காட்டும் வகையில் அளிக்கும் தம் நெஞ்சுக்குத் தாமே சொல்லும் அறிவுரைகளும் சில உபதேச மொழிகளையும் அவற்றை வழங்கியோர், கின்றார். அளவெட்டி திரு. ரமணராசா. B.A.(Hons) டம்பெற்ற இந்தக் கட்டுரைத் தொடர் இந்த இதழில்
என்று அறவழி வாழ்ந்து அவ்வழியினின்று பொருள் தேடி, தாமும் அனுபவித்தும் பிறரும் அனுபவிக்கும்படி கொடுத்தும் அறவழியிலே இன்பத்தை அனுபவித்து வாழ்க எனவும், இறுதியில் இவ்வழியூடாக இறைவனை பற்றலாம் எனவும் மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டுகின்றார். மனிதனை நோக்கிய ஒளவையாரின் உபதேச வார்த்தைகளே இவரது செய்யுட்களில் உதிர்ந்து கிடக்கின்றன.
ஆன்மீக வளாகத்தில் நாயன்மார், ஆழ்வார் நின்ற நெறிகளும், கடைப்பிடித்த வாழ்வியல் முறைகளும், செய்த அரும்பெருஞ் சாதனைகளும், அற்புதங்களும் சமயப்பண்பாட்டு நோக்கில் நல்லுபதேசங்களாகவே காணப்படுகின்றன. சமண, பெளத்த மதங்களை எதிர்த்து, இந்து சமயத்தையும், பண்பாட்டம்சங்களையும் வளர்க்கும் நோக்குடன் மக்களைத் தம்பக்கம் ஈர்க்கும் முகமாகப் பல யுக்திகளை அவர்கள் கையாண்டனர். அச் சமய நெறிகள் துறவறத்தை வற்புறுத்திச் சென்றவேளை இறைவனை இல்லற நிலையில் காட்டி தாமும் இல்லற வாழ்வு வாழ்ந்து அவ்வற வாழ்வினூடாகவும் இறையின்பத்தை அடையமுடியும் என உபதேசம் செய்தனர். சான்றாக
"மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில்நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணின்நல் லஃதுறுங்கழுமல வளநகர்ப் பெண்ணின்நல் லாளொடும் பெருந்தகையிருந்ததே"
என்று கூறிச் செல்லும் பாங்கு குறிப்பிடத்தக்கது. ஒளவை யாரும் "இல்லறமல்லது நல்லறமன்று" என்று இல்லற வாழ்வின் சிறப்பினை உணர்த்துகின்றார். அத்துடன்
"பர்த்தாவுக் கேற்ற பதிவிரதையாமாகில் எத்தாலும் கூடி வாழலாம் - சற்றேனும் ஏறுமாறாகயிருப்பாளே யாமாகில் கூறாமல் சந்நியாசம் கொள்" எனவும் கூறி இருவரும் மனதினாலும் உடலினாலும் ஒன்றிணைந்து வாழ்தல் வேண்டுமெனவும், கணவனுக்
கேற்றாற்போல் மனைவி நடந்துகொள்ளுதல் வேண்டுமெனவும் -->

Page 9
இந்துசாதனம் 18. O9,
கூறிச்செல்கின்றார். இத்தகைய கருத்துக்கள் இல்லற நிலையில் இருப்பவர்களுக்கான ஒளவையாரின் உபதேசங்களே எனில்
மிகையில்லை.
அந்தணர்கள் வாழட்டும். அந்தணர்கள் வாழ்ந்தால் வானவர் களை வேள்விகளால் போற்றுவர். ஆதலினால் வானவர்கள் வாழ்வார். வேள்வி இயற்றுவதற்குத் தேவையான பால், நெய் என்பவற்றைத் தருகின்ற பசு இனம் வாழும். வேள்விகளினால் மகிழ்ந்து தேவர்கள் மழை பொழிவர். மழைவளத்தால் வரப்புயர்ந்து மன்னர் ஒங்கியுயர்வர். மன்னன் வாழும்போது நாட்டில் தீமை உண்டாகாதவாறு காப்பான். தீமைகளும் ஒழியும். அரசனும் குடிமக்களும் தீமையின்றி வாழும்போது ஈசனது நாமம் தழைக்கும். இறை நாம மகிமையால் உலக மக்கள் துயரம் நீங்கி உயர்வடைவர். என்றவாறு நல்லறிவுரைக் கருத்துக்களை சைவச் சூழலை நோக்கி, அச் சூழலில் வாழ்கின்ற மக்களை நோக்கி உபதேசித்தருளுகின் றார் சம்பந்தர்.
"வாழ்கஅந்தணர் வானவர் ஆணினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அரன்நாமமே சூழ்க வையகமுந்துயர் தீர்கவே"
என்றவாறாகப் பாடிச் செல்கின்றார்.
நாவுக்கரசரைச் சேக்கிழார் சைவச் சூழலுக்கு அறிமுகம் செய்யும்போது அவரைத் தொண்டுநெறி பேணிய தவமுனிவர் என்றே கணிப்புச் செய்கின்றார்.
"திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறிவாழ வருஞானத்தவமுனிவர் வாகீசர்"
என்பது சேக்கிழாரின் அறிமுக வாசகம். சைவக் காவலர் வரிசையில் சம்பந்தருக்கு அடுத்தபடியாகச் சிறப்புப்பெறுபவர் நாவுக்கரசர் ஆவார். இவர் சமணர்களாற் பல துன்பங்களைச் சந்தித்து அவற்றை வெற்றிகண்டு இந்துசமய உண்மைகளை வெளிப்படுத்தியவர். இவரது கருத்துக்கள் யாவும் அனுபவ அருளுரைகளாகவும், அறிவுரைகளுமாகவே தென்படுகின்றன. நற்கதி அடைவதற்குக் கோயில் வழிபாடு மிக இன்றியமையாதது. பக்திமார்க்கத்தின் இருப்பிடங்களாகத் திகழும் ஆலய வழிபாடு மனச் சாந்தியையும், உடல், உளத் தூய்மைகளையும் ஏற்படுத்துவன. ஆகையால் ஒவ்வொரு நெஞ்சங்களையும் நோக்கி ஆலய சேவைக்கு அழைப்பு விடுகின்றார்.
"நிலைபெறுமாறெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில்புக்கு
புலர்வதன்முன் அலகிட்டுமெழுக்குமிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்துபாடித்
தலையாரக்கும்பிட்டுக் கூத்துமாடி.."
என்றவகையில் அமைந்த திருத்தாண்டகப் பாடலில் கோயிலை நோக்கி சமூக மாந்தரை அழைப்பது, அங்கு தொண்டுகளும், வழிபாடும் நிகழ்த்தும் முறைமைகளை வரிசைக்கிரமமாக
எடுத்துரைப்பது என்பன சைவபக்தி இயக்கச் செயற்பாடுகளுக்கு
O

O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
அடிநாதங்களாய் அமைந்தன. இவை உணர்வோட்டங்களாக மட்டும் நின்றுவிடாமல் சமூக மாந்தருக்கு விடுக்கும் அனுபவ அருளுரைகளாகவும் புலப்படுகின்றன.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற சமத்துவ உண்மை திருமூலரது வாயிலிருந்து வந்ததோர் அறிவுரையாகும். நாவுக்கரசரும் அன்றைய காலச் சூழலில் நிலவிய குலப்பெருமை பேசும் முறைமைகளைக் கண்டிக்க முயல்வது அவரது பாடல்களில்
வெளிப்படையாகவே காணமுடிகின்றது.
"சாத்திரம் பலபேசும் சழுக்கர் காள்
கோத்திரமும் குலமும் கொண்டென்செய்வீர்." எனவும்
"...அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத்தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கன்பராகில்
அவர்கண்டீர்நாம் வணங்கும் கடவுளாரே" எனவும்
அமைந்த பாடல்கள் மூலம் கோத்திரம், குலம், சாத்திரம் என்பன இறையருளுக்குப் பயன்படாது என்பதனையும் அழுத்திப் பேசுகின்றார். இவையாவும் சமூகப் பார்வையை நோக்கிய
நாவுக்கரசரின் அறிவுரைகளே என எண்ணத்தோன்றுகின்றன.
சிவபெருமானின் திருவருள் நோக்கினைப் பெற்றவர்கள் சித்தர்களாவர். சித்தர் பரம்பரையொன்று தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிற் பலர் தமது ஞானநிலை அனுபவங்களைத் தமது செயல்களினாலும், போதனைகளாலும் வெளிப்படுத்தியுள்ளனர். சிலரது பாடல்கள் எளிமையானவையாக உள்ளன. ஈழத்து ஞானியாகிய செல்லப்பா சுவாமிகள் தாம்பெற்ற அனுபூதி ஞானத்தைச் சிறுசிறு வாக்கியங்களாகவே தம் சீடருக்கு உபதேசிப்பார். இச்சிறு உபதேச வார்த்தைகள் பக்குவ நிலையி லிருந்த சீடருக்கு ஒரு முழுநூல் போலவே விளக்கமளித்தன. "எல்லாம் செப்படி வித்தை", "அப்படியே உள்ளது", "முழுவதும் உண்மை", "யார் அறிவார்", "ஒருபொல்லாப்பும் இல்லை", "ஒருவருக்கும் தெரியாது", "எப்பவோ முடிந்த காரியம்" என்பவை செல்லப்பா சுவாமிகளிட மிருந்து உபதேச மகாவாக்கியங்களாக
வெளிவந்தன.
மகாஞானியாகிய செல்லப்பா சுவாமிகள் தமக்கு அருளிய உபதேசம் பற்றியும், தம் குருநாதரின் பெருமைகளையும் தமது நற்சிந்தனைப் பாடல்களிலே யோகர் சுவாமிகள் மிகத் தெளிவாகக்
கூறியுள்ளார்.
"ஒரு பொல்லாப்புமில்லை யென்பான் உண்மைமுழுதுமென்பான் ஒருவருக்கும் தெரியாதென்பான்-சின்னத்தங்கம் ஒவியம் போலிருந்தானடி அப்படியே உள்ளதென்பான் ஆரறிவாரென்று சொல்வான் செப்படி வித்தையென்பான் - சின்னத்தங்கம்
செல்லப்பனென்னுஞ் சீமான்"
என்றவாறாக நற்சிந்தனைப்பாடல்கள் அமைந்துள்ளன.

Page 10
இந்துசாதனம் 8. OS
ஈழ நாட்டில் வாழ்ந்த சித்தர்களுள் சித்தானைக்குட்டிச் சுவாமிகளும் ஒருவர். இவர் தன்னைத் தரிசிக்க வருபவர்களுக்கு அருளுரைகளை வழங்கினார். இவரது அருளுரைகளே உபதேச வார்த்தைகளாக மலர்ந்து வெளிவந்தன. இவருடைய அருளுரை கள் மிகவும் எளிமையானவை. அத்துடன் எல்லோரது
வாழ்வியலிலும் திருப்பத்தை ஏற்படுத்தின.
"அதிகாலை நித்திரை விட்டெழு எழும்போதே ஆண்டவனை நினை காலை மாலை கடன்களைக் குறைவறச் செய் தேநீர் காப்பியைத் தரத் தள்ளு மரக்கறி உணவு மனதுக்கு மகிழ்ச்சி பசித்து வந்தோர் முகம் பார் உண்ணும்முன்பு:ஒருகணம் இறைவனை நினை கடமையில் தவறினால் கடவுளைக் காணமாட்டாய் நெற்றிக்கழுகு விபூதிபூசுதல் படுக்குமுன்பு இறைவனைப் பிரார்த்தி" என்பன சுவாமிகள் அருளிய சில உபதேசங்களாகும். பார்க்கும் போதே மிக எளிமையானவை என்பது புலப்படும். எனவே இத்தகைய எளிமைமிகு உபதேச வார்த்தைகள் மக்கள்
வாழ்வியலை மாற்றியமைத்தன என்பதில் ஐயமில்லை.
சைவ சித்தாந்த சாத்திர மரபிலும் குருசீட பரம்பரை ஒன்று நிலவி வந்துள்ளது எனலாம். குருசீட பரம்பரை முறையில் சைவ சித்தாந்த சாத்திர நூற்பயிற்சி வழங்கிய தத்துவஞானிகள் நால்வர். இவர்களைப் புறச்சந்தான ஆசிரியர்கள் என்றழைப்பர். மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் என்போர் புறச்சந்தானாசாரியர்கள் ஆவர். குரு - சீட உறவில் போதிக்கப்பட்ட அருளுரைகளே சித்தாந்த சாஸ்திரங் களாக வெளிவந்து சிந்தாந்த அடிப்படைப்பிரமாண நூல்களாகவும் சைவத்தின் சாஸ்திர நூல்களாகவும் தம்மை அடையாளப்படுத்தி நிற்கின்றன.
ஈழத்திலும் நாவலருக்கென்றே சீட பரம்பரை இருந்து வந்தள்ளமையும் ஈண்டு நினைவில் கொள்ளத்தக்கது. ஈழத்தில் சைவசித்தாந்தம் வேர்விட்டுப் பரம்பலடைவதற்கு இச்சீட பரம்பரையினரது பங்களிப்பு அளப்பரியதாகும்.
காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கு எழுந்திருங்கள், பகவானைத் தியானிப்பதற்கு நிற் வேண்டும் என்றோ கிடையாது. எந்த நிலையிலு தியானம் செய்யலாம். 'என் உள்ளத்தைக் காத்த எனது உள்ளதைச் சுத்தமாக வைத்துக் கொள்வே எழுந்திருங்கள்.
 
 
 
 
 
 
 

O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
எல்லாவற்றுக்கும் மேலாகச் சமயச் சூழலில் நின்று மேற்கொள்ளப்படுகின்ற பேச்சுக்கலை, சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கம், சமயப் பிரசார பிரசங்கங்கள் என்பனவும் உபதேச மொழிகளாகவே காண முடிகின்றன. இவ்வாறு நிகழ்த்தப்படுகின்ற உபதேசங்களான அருளுரை மற்றும் அறிவுரைக் கருத்துக்கள் மக்களை மாண்புமிக்கவர்களாக வாழச் செய்தன என்பதும் மறுக்க முடியாததே. சான்றாக கேட்போரைப் பிணிக்கும் வகையில் அமைந்த நாவலரின் பிரசங்க மழையினில் நனையாதவர் எவருமில்லை என்னும் வகையில் அங்காலச் சமூகச் சூழலில் அவரது அருளுரைகள் மற்றும் அறிவுரைகள் மக்கள் மனங்களில் செல்வாக்குப் பெற்று மாற்றங்களை ஏற்படுத்தின என்பதும்
மறைக்க முடியாததொன் றெனலாம்.
இறுதியாக - மக்களுக்காகத் தோன்றிய ஆன்மீகச் சாதனமே சமயம் என்பதாகும். இதனை உணர்ந்து குறிக்கோளில்லாத மக்களாகவோ அல்லது மக்களிலும் தாழ்ந்த விலங்குகளாகவோ வாழாமல் மக்களினத்தை மேம்படுத்தவல்ல நல்ல உயரிய உபதேச மொழிகளை வாழ்க்கையிற் கைக்கொள்ள வேண்டுமென்பது சமயக் கொள்கை ஆகும். இந்து சமயம் உயிரோட்டமுடைய சமயமாக மலர்ந்து வளர்ச்சியடைய ஆளுமைகளும் அறிவுரைகளும் உற்ற துணையாக விளங்கின. இந்துசமயத்தின் உயரிய கொள்கைகளைத் தியான வாழ்வும் தவயோக வாழ்வும் வாழ்ந்த ஞானியர்களின் உள்ளத்துணர்வுகளின் உந்துதல்களால் வெளிப்படுத்திய உபதேசங்களைக் கொண்டும் கண்டு தெளியலாம். மக்களை உயரிய வாழ்வின் இலட்சியங்களை நோக்கி வழிப்படுத்துகின்ற, ஆற்றுப்படுத்துவதற்கு வழங்கப்படுகின்ற நல்லறிவுரைகளே, அனுபவ அருளுரைகளே உபதேசங்கள் என்ற வகையில் சமய வாழ்வியலை உற்றுநோக்கி அவதானிக்கின்ற போது உபதேசம் என்பது இன்றியமையாத ஒன்றே என்பது புலனாகும். இந்துசமயப் பண்பாடு உயிரோட்டமுடையதாக, சமய நாட்டமுடையதாக விளங்க "உபதேசங்கள்" அறிவுரைகளாகவும், அருளுரைகளாகவும் அமைந்து விளங்கின எனக் கூறலாம். சுருங்கக்கூறின் உபதேசங்கள் யாவும் ஆப்த வாக்கிய பிரமாணங் களாக விளங்கி சமய உண்மைகளை வெளிப்படுத்துவனவாக
உள்ளன எனலாம். 人
த முன், பகவானைக் கொஞ்சம்தியானித்து விட்டு க வேண்டும் என்றோ, காலை மடித்து உட்கார ம் தியானிக்கலாம். படுத்த நிலையிலேயே ருள்வாய் நீ கோயில் கொள்ளத் தகுந்த இடமாக பனாக என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டே - ராஜாஜி
空S/eS/essこ少sごダー

Page 11
இந்துசாதனம் 8. O9
தலைக்குப் பாதுகாப்பாக இருக்கும் தலைமயிர், ை தெய்வச் சிலைகளின் அருட்டோற்றங்களின் அழகை, அை கோவிலுக்குச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்பை விளையக்கூடிய தீமைகளையும் விபரிக்கின்றார்.
శీజ్ల సాష్ట్రాక్గా
சமயம் ஒரு வ
கலாநிதி மனோன்ம
Tெண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானமென்பர். சிரம் என்ற வடசொல் தலை எனப்பொருள்படும். தலையிலுள்ள மயிர் தலையை மூடியிருப்பதால் முடி எனவும் வழங்கப்பட்டது. தலைமயிர் பற்றி வள்ளுவர் வருமாறு ஒரு குறளை அமைத்துள்ளார்.
"தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை" (குறள்:964)
நற்குடியிலே பிறந்தவர் தம் நிலையிலிருந்து தாழ்வுற்றால் தலையிலிருந்து உதிர்ந்து கீழே விழுந்த மயிரினைப் போல அவமதிக்கப்படுவர். தலைமயிர் தலைக்குப்பாதுகாப்பாக இருப்பது மட்டுமன்றி பண்பாட்டின் சின்னமாகவும் விளங்குகிறது. தமிழர் சமயவாழ்வில் தலைமயிர் பற்றிய செய்திகளை நோக்கும்போது சில பதிவுகளை மீள விளக்குவது பயன்தரும்.
தேவாரப் பாடல்களில்வரும் பதிவுகள் தெய்வங்களின் அருட்டோற்றத்திற்குத் தலைமுடி எத்துணை அழகூட்டியது என்பதை விளக்கிநிற்கின்றன. சிவனுடைய தலைமுடிசடையெனப் பட்டது. தாழ்ந்த சடையாகவும் செஞ்சடையாகவும் குறிப்பிடப்பட் டுள்ளது. நீரார் சடையெனவும் வர்ணிக்கப்பட்டுள்ளது. பொன் போன்ற மேனியையுடைய சிவனுடைய சடையைச் சுந்தரர் மின்னார் செஞ்சடையெனக் குறிப்பிட்டுள்ளார். நாவுக்கரசர் செஞ்சடைக் கற்றை எனப்பாடியுள்ளார். இதனால்சடையனார்’ என்ற சிறப்புப்
பெயரும் சிவனுக்கு வழங்கப்பட்டிருந்தது.
உமையினுடைய கூந்தல் பற்றிய பதிவுகளும் தேவாரத்தில் இடம்பெற்றுள்ளன. 'வண்டமரோதிமட்ந்தை எனச் சம்பந்தர் பாடியுள்ளார். இங்கு ஒதி என்பது பெண்களின் தலை மயிரைக் குறிக்கின்றது. உமையம்மையின் திருத்தோற்றம் பற்றி வேறொரு பாடலில் 'வண்டார்குழலரிவை என்ற குறிப்புக் காணப் படுகிறது. சுந்தரரும் வண்டார் குழலியுமைநங்கை எனப் பாடியுள்ளார். இதனால் குழல்' என்ற சொல்லும் பெண்களின் சுருண்ட தலைமுடியைக் குறித்ததை அறியமுடிகிறது.
இறைவனுடைய திருக்கோலத்தைப்பாடும் சம்பந்தர் குழல், சடை என்ற இருசொற்களையும் பயன்படுத்தியுள்ளார். "குழலார் சடையர் கொக்கினிறகர் கோலநிற மத்தம் தழலார் மேனித்தவளநீற்றர் சரிகோவணக்கீளர் எழிலார்நாகம் புலியினுடை மேலிசைத்து விடையேறிக் கழலார் சிலம்பு புலம்ப வருவார் சித்தீச்சரத்தாரே."
(திருநறையூர்ச்சித்தீச்சரப் பதிகம்:7)
SSNS
1
 

O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
சவத் தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாகவும் விளங்குகின்றது. பற்றின் தலைமுடி அதிகரிக்கச் செய்கின்றது. விரிசடையுடன் தைக் குறிப்பிடும் கட்டுரையாளர், அப்படிச் செல்வதனால்
ாழ்வியல் -33_(
னி சண்முகதாஸ்
இப்பாடலில் வந்துள்ள ‘குழலார்சடையர்' என்ற தொடர் சிறப்பாக ஒரு கருத்தைக் கூறி நிற்கிறது. சிவனுடைய சடையும் சுருண்டது என்பதை விளக்கிநிற்கிறது.
பிற்காலத்தில் தோன்றிய நிகண்டுகளில் தலைமுடியின் வகையை விளக்கும் வேறு சொற்களும் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை வகை மாதிரியாகக் காட்டலாம். அகராதி
நிகண்டில் சில சொற்களைக் கீழே காணலாம்.
அளகம் - பெண்மயிர் குஞ்சி - ஆண்மயிர், சிகை - ஆண்மயிர் கொண்டை - மயிர்முடி கொந்தளம் - மாதர் மயிர்க்கொத்து குழல்- மயிர்முடி, மயிர், ஆண்மயிர், பெண்மயிர் கோயிலுக்குச் செல்லும்போது தலையை விரித்துக் கொண்டு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்றுவரை உண்டு. ஆனால் யாரும் இக்கட்டுப்பாட்டைக் கைக்கொள்வதில்லை. கோயில் பலர் கூடும் ஒரு பொதுஇடம். அதற்கு மேலாக தீபங்கள் ஏற்றப்படும் இடம். நெருங்கி நின்று வழிபாடு செய்யும்போது மற்றவருடைய முகத்திலே தலைமயிர் படக்கூடும். எனவே பலருடைய நன்மை கருதிப் பெண்கள் கூந்தலை விரித்துக்
கொண்டுசெல்வது தடைசெய்யப்பட்டது.
இன்றைய இளந்தலைமுறையினர் கோயிலுக்குச் செல்லும்போது கூந்தலை விரித்துவிட்டுச் செல்கின்றனர். வீட்டிலிருந்து அவர்கள் அவ்வாறு செல்வதைப் பெற்றோரும் கவனத்திற் கொள்வதில்லை. அதனால் 'வெறியாடல் செய்யும் பெண்போலவே எல்லோரும் காட்சி தருகின்றனர். கோயில் நிர்வாகமும் இதனைக் கண்டும் காணாதவர் போலிருக்கின்றனர். அவர்கள் வருமானத்திலேயே குறியாக இருக்கின்றனர். இந்நிலை மாற்றப்படவேண்டும். குறிப்பாகப் பெண் தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் முடிந்த கூந்தல் அலங்காரத்துடன் காணப் படுகின்றன. ஆண்டாளின் கன்னக்கொண்டை பெண்களின் கூந்தல் அலங்காரத்தையே காட்டி நிற்கின்றது. திருக் கோயில்கள் பண்பாட்டுப் பயிற்சிக் களங்களாகவே முற்காலத்தில் விளங்கி யுள்ளன. அதனை நாம் பேணிக்காக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுள்ளோம் என்பதை நாம் மறந்து விடலாகாது. சமயம் ஒரு வாழ்வியலாகவே பண்டைக் காலந்தொட்டு இருந்து வந்துள்ளது. அதையே நாமும் அடியொற்றிச் செல்வதே சீர்மியமாகும்.
2A/SN22

Page 12
இந்துசாதனம் 809,
வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல்லாமரனாமமே ஆழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம் 65), JIT350r D Hindu Organ
e-mail: editorGhindu organ.com
கர Su) புரட்டாதி, ஐப்பசி மீ" 1ஆம் 2 (18.09-10.2011)
அன்புடன் அழைக்கின்றோம்
சைவத்தமிழ்ப் பண்பாட்டின் மீளெழுச்சிக்காக முதன் முதலிற் குரல் கொடுத்து அந்த உயர் நோக்கத்தை விரைவில் அடைந்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் செயற்பட்ட ஆறுமுகநாவலர் அவர்களின் கொள்கைகளிலும் செயற்பாடு களிலும் மக்களை ஈடுபடச் செய்வதைத் தன் பிரதான
LIGoofluiresis 65TodorL -
திருவிதாங்கூர் நீதிபதி தா. செல்லப்பாபிள்ளை, அ. சபாபதி, ச. சிவகுருநாதர், ஏ. கனகரத்தினம், எம். எஸ். இளையதம்பி, மு. சபாரத்தினம், வி. நாகலிங்கம், ஏ.வி. குலசிங்கம், த. முத்துச்சாமிப்பிள்ளை, நம. சிவப்பிரகாசம் ஆகிய பெருமக்களை ஒருவர் பின் ஒருவராகத் தன் ஆங்கிலப் பதிப்புக்கு ஆசிரியர்களாகவும்
த. கைலாயபிள்ளை, பெ. கார்த்திகேயபிள்ளை ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை, நம. சிவப்பிரகாசம், மு. மயில்வாகனம், சுடர் மகேந்திரன், பேராசிரியர் குமாரவடிவேல் ஆகிய பெருமக்களை ஒருவர் பின் ஒருவராகத் தன் ஆசிரியர்களாகவும் கொண்ட
"சிறப்பான சைவக் கட்டுரைகளையும் வேறு பல விஷயங்களையுந் தாங்கி இறைவனருளால் எழுபத்தைந்து ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருப்பது சைவர்கள் யாவருக்கும் பெருமகிழ்ச்சியையும் பெருமையையும் தருவதாகும்" என அச்சுவேலி சிவழுநீ ச. குமாரசாமிக் குருக்கள் அவர்களாலும்
செந்தமிழில் ஆங்கிலத்தில் சிறந்த இந்து சாதனங்கள் தெய்வத்தன்மை
1.
 

O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
முந்துசைவம் வளர்ப்பதற்கே
முழுப்பலத்தோடெழுந்தவைகள்
முதல்வித்திட்டோர்
சிந்தைதனைச் சிந்தித்துத் தெய்யாண்டொரு கோடி
தேவர் போற்ற
வந்த இருசாதனமும் வளர்ந்தினிது வாழ்க நனி
வாழ்க மாதோ
- எனப்பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களாலும்
நீறழித்துப்பேரழித்துச் சென்னியிலே நீர்தெளித்து மாறளித்துச் சைவநெறிமாய்க்க வந்த-ஆறழிப்போர் வேற்றுமதஇருளை வீட்டுமிந்து சாதனமே போற்றுதி நின் சேவைபுகழ்ந்து
என அல்வாயூர்க் கவிஞர் மு. செல்லையா அவர்க ளாலும் -
தன்பவளவிழாக்காலத்திற்பாராட்டப்பெற்ற
காஞ்சி காமகோடி பீடம், தருமபுர ஆதீனம், திருப்பனந் தாள் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம், மெய்கண்டார் ஆதீனம் - நல்லை ஞானசம்பந்தர் ஆதீனம்போன்ற சமயநிறுவனங்களினதும்
சைவத்தமிழ் கூறும் நல்லுலகெங்கும் வாழ்ந்த - வாழ்கின்ற சைவத் தமிழ்ப் பேரறிஞர்கள் - சாதனையாளர்கள் - சொற்பொழிவாளர்கள் - அபிமானிகள் போன்றவர் களினதும்- கணிப்புக்கும் மதிப்புக்கும் உள்ளாகி - யாழ்ப்பாணத் திலிருந்து வெளிவருகின்ற - சைவத் தமிழ் உலகின் மிகவும் மூத்த பத்திரிகை என்ற பெருமையையும் பெற்றுள்ள
இந்து சாதனம்
தன்னுடைய நூற்றிருபத்து மூன்றாவது அகவையிற் தடம்பதிக்கும் இவ்வேளையில் -
வேதநெறி தழைத்தோங்கி மிகு சைவத் துறை விளங்கவும்
அறநெறிக் கோட்பாடுகளையும் ஆன்மீக மேம் LIITooLuqh அடிப்படையாகக் கொண்ட அரசியல் - பொருளாதார - சமூக வாழ்வு பூத்துக் குலுங்கும் புனிதத் தலமாக இப்பூவுலகு புத்தாக்கம் பெறும் வகையிலும் -
அதன் உள்ளடக்கத்தை மேன்மேலும் ஆழமாகவும் அழகாகவும் இலகுவாகவும் இனிமையாகவும் ஆக்கு வதற்கும்
சைவத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரினதும் கரத்திற் திகழ்ந்து-கருத்திற்புகுந்து- வாழ்க்கையிற் கலந்து
அவர்களின் நண்பனாய் - தத்துவ ஞானியாய் - வழிகாட்டியாய் அதனை ஆக்குவதற்கும்
ஏற்ற ஆலோசனைகளையும் உதவிகளையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு எழுத்தாளர்களையும், அறிஞர்களையும் அபிமானிகளையும் அன்புடன் அழைக்கின் (3m)Inh.
ற 人
2

Page 13
இந்துசாதனம் 809,
பெய்யுரை
இந்துசாதனம் 2011 ஆவணி இதழ் 14ஆம் பக்கத் தொடர்
C
அருப்போடு மலர் பறித்து இட்டுஉண்ணா ஊரும்'அடவி, காடே
என்னும் ஐந்தாம் திருப்பாட்டுத் தொடரும்,
'உண்பதன்முன் மலர் பறித்திட்டு உண்ணாராகில்
என்னும் ஆறாம் திருப்பாட்டுத் தொடரும் இக்கருத்துக்களைத் தெரிவிக்கின்றன. அருப்பு என்ற சொல்லுக்கு, அன்பு, அரும்பு என்ற இரு பொருள்கள் உள்ளன. அரும்புகளையும் மலர்களையும் கொய்து சுவாமிக்குச் சார்த்தலாகும். என்று உரை காண்பது நயமாகத் தோற்றவில்லை.
பூக்கைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
என்ற இடத்தில் மலர்களே குறிக்கப்பட்டுள்ளன. இத்தொட ருக்கும் கோயிலில் தாமே பூ கைக்கொண்டு அரன் பொன்னடி
போற்ற வேண்டும் எனப் பிழையுரை செய்து தடுமாறக் கூடாது. தாமே எனச் சொல்வருவிக்கப் பனுவலில் இடமில்லை. அன்றியும் இப்பனுவலின் அடுத்த அடி, நாக்கைக் கொண்டு
அரன் நாமம் நவிற்றுதல் கோயிலில் மட்டும் செய்ய வேண்டியதா?’ என்றும் சிந்திக்க வேண்டும் நின்றாலும்
சைவ அன்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளில்
வேண்டும். காசி மடத்து முதல்வர் அங்கே ெ
என்பவற்றையும் தெளிவாக்குகின்றார். இந்து சாதன
தொடர் அடுத்த இதழில் நிறைவடையும்.
இருந்தாலும் , கிடந்தாலும், நடந்தாலும், மன்றாடும் மலர்ப்பாதம்
ஒரு போதும் மறவாத சிந்தையராய் அடியார்கள் விளங்க வேண்டும். இப்பனுவல் தொடர்கள் இல்லுறை தெய்வ வணக்கம்
பற்றியன. இதன் வளர்ச்சி நிலையே சிவதீட்சை பெற்றுச் செய்யும் ஆன்மார்த்த பூசையாகும்.
ஆன்மார்த்த பூசை மிக விசேடமானது. அதனைப்
பூசைப்பெட்டி வைத்துக் கொண்டு புரிவது என்பது கேலி
செய்வதாகும். அப்பாவத்தைத் திருநீறு அணிபவர்கள் செய்யலாகாது. ஆன்மார்த்தம், பரார்த்தம் என்பன வடமொழிச் சொற்கள். எனவே அவை வடமொழி ஆதிக்கத்தினின்றும் வந்தன என்றுவாதிட்டால் எத்தகைய இடர்வரும் என்று சிந்திக்க வேண்டும். சிவாயசசிவதராயசஎன்றுயசூர் வேதத்தில் வருகிறது.
அதர்வசிகையில்,
'சிவ ஏகோத்யேய: சிவம் கர:
சர்வம் அந்யத் பரித்யஜ்ய
என்றுள்ளது. இதன்பொருளை விளக்க,

O, 2O கர புறபீடாதி, ஐப்பசி 01
முநீலழுநீகாசிவாசி தி ஆடி
த்துக்குமாரசுவாமித்தம்பிரான் சுவாமிகள் f
ச்சி. &
அதருவம் இறுதி வேதம்;
அதருவ சிகைதான், அந்த அதருவமுடிவாய் ஒங்கும்;
அழிவு இலா இன்பம் சீவர்க்கு உதவிடும் சிவனே தேயன்
ஒதுக்குக பிறரை என்று, அது இதம் உற இயம்ப லாலே
ஏத்துவது எவனை வேதம்’
என்று சிவபரத்துவ நிச்சயம் வழங்கிய சிவத்திரு. ஆ. ஈசுவரமூர்த்திப் பிள்ளை செய்யுள் செய்தார். வேதத்தில் தமிழ்ச் சொல் இருக்காது. வேதத்தில் சிவநாமம் வந்தள்ளது. ஆன்மார்த்தம் பரார்த்தம் - வடசொற்கள்; இதனால் அப்பூசைகள் வடமொழியில் வடமொழியாதிக்கம் புகுத்தியவை என்றால் வேதத்தில் சிவ எனவருவதினால் சிவ என்பதும், சிவபெரு மானும் வடமொழியாதிக்கம் புகுத்திய கடவுள் எனக் கருதப்படும். எனவே சித்தாந்த வழிப்பட்ட ஆன்மார்த்த பூசையை தொன்று தொட்டு உள்ளது என அறிவதே தக்கதாகும்.
ஒரு தடவையாவது திருக்கோயிலுக்குச் செல்ல
lசய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை யாவை
எம் ஆவணி 2011 இதழில் ஆரம்பமான இக்கட்டுரைத்
அண்மையில் ஒரு சஞ்சிகையில் கீழ்வரும் தொடரைப்படிக்க நேர்ந்தது.
'திருக்கோயிலில் முப்போதும் திருமேனி தீண்டிப் பூசனைபுரிந்து காத்தளித்த ஆதி சைவர் சிவவேதியர், குருக்கள் எனப் பிறர்க்கும் பூசனைப் பேற்றை உணர்த்தி நெறிப்படுத்தி யருளியதிருத்தொண்டும் தெரியலாம். இப்பெருமக்களும் அரசு ஆட்சிகாலமாற்றத்தால் தமிழின் நீங்கி வடமொழியாதிக்கத்தின் கீழ்ப்பட்டதும் தற்போதுள்ள நிலை கண்டு தெளியலாம்.
திருக்கோயிலில் மக்களெல்லாம் நேரே சென்று பூசை செய்தார்கள் . அவர்கள் சிவ வேதியர்களாகிய குருக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். குருக்களை நெறிப்படுத்தினார்கள். குருக்களை அரசாங்கம் வற்புறுத்தி நீங்களே பூசை செய்யுங்கள்; சமஸ்கிருதத்தில் தான் பூசை செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டது. அதனால் தான் வடமொழியில் குருக்கள் பூசை செய்கின்றனர் என்பன இதன் கருத்துப் போலும் அப்படியானால்
இது திருகலாகிய சிந்தனையாகும்.

Page 14
இந்துசாதனம் 8O9
திருமூலர் மூவர் முதலிகட்கும் முற்பட்டவர். அவர் ஆகமச் சிறப்புக்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
'அஞ்சொடு இருபது மூன்று உளஆகமம்"
(திரு. ஆ.சி) என்றும்,
அரணாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி உரனாகி ஆகமம் ஒங்கிநின்றானே
(திரு. ஆசி 5)
என்றும்,
'தவம்மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற நவ ஆகமம் எங்கள் நந்திபிரானே'
(திரு. ஆ. சி.6) என்றும், ஆகமம்பற்றி வருவன காண்க. இந்த இடங் களுக்குத் தமிழில் ஆகமங்கள் இருந்தன; அவை தொலைந்து போயின என்ற பழைய துருப்பிடித்த ஆயுதத்தைத்தூக்கலாம். ஆனால்,
'அண்ணல் அருளால் அருளும் திவ்யாகமம்’
(திரு.ஆ.சி.4)
பெற்ற நல் ஆகமம் காரணம், காமிகம்
(திரு.ஆ.சி.7)
என வடமொழியின் உள்ள ஆகமங்களின் பெயர்களையே குறித்தருளிய திருமந்திரங்கள் உள்ளனவே - திரிக்கும் கயற்றில் கொஞ்சமேனும் திடமிருக்க வேண்டாமா?
மக்கள் பூசனையைத் திருக்கோயில்களிலேயே புரிந்தனர்
என்பதற்கு அரிவாட்டாயர், திருநீலகண்டர், முருகர், சேரமான்
திரேதாயுகம்
கிருதயுகத்துக்கு அடுத்தாக உள்ளது திரேதாயுக குறைந்திருக்கின்றன. பலமும் பராக்கிரமும் ஓங்கி இருந்தி உடல் வலிமையை உணர்த்தும் ரஜோ குணம் ே வளர்ந்திருக்கின்றான். தர்மம் இந்த யுகத்தில் மூன்று கால்: சுமார் பத்து இலட்சம் ஆண்டுகள் இருந்திருக்கிறது.
கனவுகள்
மனதுக்கு அமைதியையும் இன்பத்தையும் கொ கத்திரத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. கனவில் இப்படி பொருட்கள் பல இருக்கின்றன. ஆனால் மகேசுவரனான பண்பட்ட பக்குவப்பட்ட நிலையிலே தான் இதை ந கிலேசத்தைக் அளிக்கக் கூடியவை. அவை நம்முடைய பிரதிபலிக்கின்றன. கெட்டவனான இராவணனின் தீய என்பதைக் கனவின் மூலம் முன்னதாகவே சீதைக்கு, அவ
 
 
 
 
 
 
 
 
 

O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
பெருமாள் நாயனார் வரலாறுகளில் சான்று இருப்பதாக மாயவுரை
எழுதினால் அது மிகையே ஆகும். வழிபாட்டுக்குரிய திருத்
தொண்டர்களை மக்கள்’ என்பது குற்றமாகும்.
ஒரு கவிஞரின், ஒரு நூலில், எதிரெதிர்க் கொள்கைகள் வரவாய்ப் பே இல்லை. ஒரு கவிஞர் ஒன்றன் தொடர்பாக ஒரு கொள்கையை மட்டுமே பிரகடனப்படுத்துவார். தெய்வமாக் கவிஞர் சேக்கிழார் அருளுவன யாவையும் மரபு நிலை திரியாமாட்சிமை களுடன், உள்ளன, உள்ளவாறு, வரலாற்று ஆதாரங்களுடன்
அமைவன.
ஆகம விதிப்படியாக அமைந்த திருக்கோயில்களில், மூலத் தானத்திற்குச் சென்று அபிடேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யும் உரிமையும், மரபும், சிவவேதியர்க்கே உண்டு; எல்லாரும் கருவறைக்குச் செல்லுதல், பூசித்தல் விதிக்கப்படவில்லை. இதனைச் சேக்கிழார்,
"தெரிந்துணரின் முப்போதும் செல்காலம் நிகழ்காலம் வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பிய அர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன"
(பெரி.மு.பசெ2) என உத்தரவிட்டருளியுள்ளார்.
பெருமையால் பெருமானுக்கு நிகரான திருத்தொண்டர்கள் திருக்கோயில்களில் கருவறைக்குச் சென்று பூசித்திருந்தால் கொண்டாடப்படவேண்டியதேயாகும். ஆனால் அவர்கள் அப்படிச்
செய்ததாக வரலாற்றிலில்லையே! വ്രരൂർ. is
ம், இந்த யுகத்தில் மனிதனின் உயர் பண்புகள் சற்று ருக்கின்றன. கிருதயுகத்தில் இருந்த சத்வ குணம் போய், மம்பட்டிருக்கிறது. மனிதன் சுமார் 21 அடி உயரம் களில் நின்றதாகக் கூறப்படுகிறது. இது வெள்ளி யுகம். இது
சி. எம். பத்மநாபச்சாரியர் உடுப்பி - பூநீ பறிமளமடம்
டுக்கக் கூடியவை நல்ல கனவுகள் என்று பதஞ்சலி யோக நமக்கு ஒரு நல்ல உணர்வைக் கொடுக்கக்கூடிய ா கடவுளை உணர்த்தும் கனவே மிகச் சிறந்தது. மனம் ம்மால் அடைய முடியும், கெட்ட கனவுகள் மனத்துக்குக் மனத்திலுள்ள தீய ஆசைகளையும், பண்புகளையுமே ஆசைகள் அவனுடைய அழிவுக்கு வழி செய்கின்றன ளுக்குநல்லதையே விரும்பும் திரிசடைகூறுகின்றாள்.
-அம்பலவாண சுவாமிகள், -ஞானnசிரமம்

Page 15
இந்துசாதனம் 8,09
அன்னதானம் செய்தவனை யமலோகத்துக்கு அழை பூமியிலே அன்தைாம்ை செய்தவர்களை, யமதூதர்கள் த
துரிதுவர்கள் யமதர்மராஜனின் தண்டனைக்கு உள்ளாவார்கள்.
தானங்களில் உ
S2 ANNM 深 深
இந்தப் பூமியிலே வாழும் மனிதர்கள் தமது வாழ்நாளில் செய்யக்கூடிய தானங்கள் பல உண்டு. பசுவைத் தானமாகக் கொடுப்பது கோ தானம், உடுபுடைவைகளைத் தானமாகக் கொடுப்பது வஸ்திர தானம், உணவைக் கொடுப்பது அன்னதானம், தனது உழைப்பைக் கொடுப்பது சிரமதானம், நிலத்தைத் தானமாகக் கொடுப்பது பூ தானம், உயிர் காக்க இரத்தம் கொடுப்பது இரத்த தானம், தான் பெற்ற பெண்பிள்ளையை வளர்த்துத் தகுதியான மணமகனிடம் ஒப்படைப்பது கன்னிகா தானம் எனப் பல்வேறு தானங்கள்
உண்டு.
தானங்களில் அன்னதானமும் வஸ்திர தானமும், தண்ணிர் தானமும் மிகச் சிறந்தவை எனக் கூறப்படுகின்றன. அன்னதானம் ஒருவருடைய பசியைப் போக்கும், வஸ்திர தானம் ஒருவருடைய மானம் காக்கும், தண்ணிர் தானம் ஒருவருடைய தாகத்தைத் தீர்க்கும். ஆலயங்களில் விழாக் காலங்களில் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு அடியார்களின் தண்ணிர்த் தாகம் நீங்குவதற்கு வழிசெய்யப்படுகிறது. இதேபோல அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஆலயங்களிலே சிறப்பாக இடம்பெற்றுவருகிறது.
தானத்தைப் பெறுபவர் திருப்தி கொள்ளும் வரை வழங்கக்கூடிய தானமாக அன்னதானம் மட்டுமே காணப் படுகிறது. தானத்தைப் பெறுபவர்கள் எல்லோரும் தானத்தைக் கொடுப்பவரை வாயார வாழ்த்துவதில்லை. ஆனால் அன்ன தானம் ஒருவனுடைய பசிப்பிணியைப் போக்குவதால் அவனு டைய வாய் வாழ்த்தாவிட்டாலும் பசி அடங்கியதும் வயிறு வாழ்த்தும். ஒருவருக்குப் பணமாகக் கொடுப்பதைவிட உணவு அளிப்பது சிறந்தது. பணமாகக் கொடுத்தால் அதை அவன் வீண் செலவு செய்யவும் கூடும். உணவாகக் கொடுத்தால் அதைச் சாப்பிடத்தான் பயன்படுத்துவான். அதனால் அன்னதானம் தானங்களில் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.
மகாபாரதத்தில் குருவம்சத்தின் பிதா மகராகிய பீஷ்மாச்சாரியார் தருமனுக்குத் தருமோபதேசம் செய்கிறார்.
"அன்னஸ்யதானம் மதுராசவாணியமஸ்யதே
நிர்வசனா பவந்தி" அன்னதானம், இனிமையாகப் பேசுதல் ஆகிய

O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
த்துவரக்கூடாது என்று யமதர்மராஜன் சட்டமே போட்டுள்ளார். வறுதலாக யமலேரிகத்துக்கு அழைத்துச் சென்றால், அந்தத்
-யர்ந்தது.
-NYAP 一类 சிவத்தமிழ் வித்தகர் - சிவ. மகாலிங்கம்
AN
இரண்டில் எதைச் செய்தவராகிலும், அவர்கள் எத்தகைய பாவங் களைச் செய்திருந்தாலும் அவர்களை யமதூதுவர்கள் துன்பப் படுத்துவதில்லை என்பது இதன் பொருளாகும். அன்னதானம் செய்தவனை யமயோகத்திற்கு அழைத்து வரக்கூடாது என்று யமதர்மராஜன் சட்டமே போட்டுள்ளார். பூமியிலே அன்னதானம் செய்தவர்களை யமதூதர்கள் தவறுதலாக யமலோகத்திற்கு அழைத்து வந்தால் அந்தத் தூதுவர்கள் யமதர்மராஜனின் தண்டனைக்கு உள்ளாவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. பசியும் ஒரு வகைப்பிணி என்றே புறநானூறு கூறுகிறது.
"பசிப்பிணி போக்கும் மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ"
புலவர்களை ஆதரிக்கும் குறுநில மன்னன் ஒருவனின் இருப்பிடத்தை புலவர் ஒருவர் விசாரிக்கும் செய்தி மேற்கூறிய பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பசி ஏற்பட்டுவிட்டால் ஒருவரிடம் இருக்கின்ற சிறப்பம்சங்கள் அனைத்தும் பறந்து ஓடிவிடும். வியாபாரத்திலே முதலாளிக்கு நல்ல வருமானம் வந்தால் தான் தொழிலாளிகளுக்கும் உரிய காலத்தில் ஊதியம் சரியாக வழங்கப்படும். மனித உடம்பிலே முதலாளியாக இருப்பது வயிறு, மற்றைய உறுப்புக்கள் யாவும் தொழிலாளர்களாகவே உள்ளன. காலம் தவறாது வயிற்றுக்கு உணவு கிடைத்தால் தான் மற்றைய உறுப்புக்கள் அனைத்தும் சரியாக இயங்கும். பெருமை, குடும்பச் சிறப்பு, கல்வி, அழகு, உயர்வு, கொடை, தானம், தவம், தொழில் முயற்சி, மங்கையரிடம் ஆசை கொள்ளல் ஆகிய அனைத்தும் பசி வந்துவிட்டால் பறந்து ஓடிவிடும் என்பதைத் தமிழ் மூதாட்டி ஒளவையாரின் நல்வழிப்பாடல் பின்வருமாறு கூறுகிறது.
மானம் குலம் கல்வி, வண்மை அறிவுடைமை தானம், தவம், முயற்சி தாளாண்மை-தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம். ஒருவருடைய ஜாதகத்திலே செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் பேசுகின்றபொழுது பல தடைகள் ஏற்படும். பொருத்தமான செவ்வாய் தோசம் உள்ளவர்கள் கிடைக்கும் வரை திருமணம் தாமதமாகும். நாகதோஷம் இருந்தால் மக்கட்பேறு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இதேபோல அன்னதோஷம் இருந்தால் பொருளாதார வசதி நிறைய இருந்தாலும் உணவு
─>
15

Page 16
இந்துசாதனம் 8.09
எதையும் உண்ணமுடியாத நிலையில் உடலில் பல நோய்கள் குடிகொண்டு இருக்கும். அன்னதோஷம் நீங்குவதற்கு ஆலயங்களிலே அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதும், ஏழைகள், வயோதிபர்கள், அநாதைகள் ஆகியோரின் வயிற்றுப் பசியினைப் போக்க உதவுவதுமே வழியாகும் எனச் சைவசமயத்
திருநூல்கள் கூறுகின்றன.
நடமாடும் கோயிலாகத் திரிபவர்கள் சிவனடியார்கள்.
சிவனடியார்களுக்கு அன்னம் அளிப்பது சிவனுக்கு வழங்கும்
நைவேத்தியமாகவே அமையும்.
&仑s&
* எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல A2 A. R
எங்கும் இருக்கின்ற முழுமுதற் மனத்திலிருத்திஉலகம் சிறக்க அவன் ال606هـاه يق A.Y. ; அருளை வேண்டிச் செய்யப்படும்.
AY
Ké ※ தியான 濠 திரு. வி. க ※ Y
※ உலகெலாம் க 濠 உன்னருள் நே MANZ 深 ஞான நாயகா Sy2 深 ※ ஆணமையும ※ கேண்மையும் ※ 2n அடிமை ஒரு 濠 ※ குடிமை நீதிய s சோmlம் அணி ※ சாறும துணிய
c ※ கூறும் பிறவியி SAU4 编 深 அளவிலா உந் Sé ද්‍රි. களவியல் பேn 深 濠 உளவினைத் ( ※ வளமும் எங்கள்
R 深 Lobl>LD LInqMYA? ※ ங்கமிmக்கம் ※ எங்குமlருக்கும ※ அருட்பெருஞ் 濠 அருட்பெருஞ் ※ ခွါ தெருட்பெரு YAY ※ அருட்பெருஞ் YAY ※ தனிப் பெருங் ※
a.

O. 20
கர புரட்டாதி, ஐப்பசி 01
"நடமாடும் கோயில் நம்பர்க்கொன்றீயில்
படமாடும் கோயில் பகவற்கது ஆமே"
என்றே தமிழ் மந்திரமாகிய திருமந்திரமும் கூறுகிறது. மண்ணில் பிறந்தவர்கள் பெறும் பயன் சிவனடியர்களுக்கு அமுது
கொடுப்பதும், அவர்களின் சிறப்பினைப் போற்றுவதும் என்று
பெரியபுராணமும் குறிப்பிடுகிறது.
"மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன்மதிசூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாய் பொலிவு கண்டார்தல்
உண்மையாமெனில் உலகர் முன்வருக என உரைப்பார்"
#☎းခ+
游
bfiledusouTub
ல்யாண சுந்தர முதலியார்
க்கும் ஒரு தனிப் பொருளே 1க்கி இன்னுமிங்குள்ளோம். நல்லருள் சுரந்து அறிவும் அன்பும் ஆற்றலும் பிறர்பால் கேடிலn எண்ணமும் டுவர்க் கொருவர் என்றிலா பின் கோன்முறை கொடுத்து பும் தேடுவதெரின்றே
ன் கொள்கை என்றின்றி தன் அருள் விளையாட்டின் ன்ற கருணையின் பெருக்கில் தேடி உயர்ந்திட வென்றே nவாழ்நாள் போக்கி
மகிழ்ந்திடத் தருவாய் எழிலுடை ஜோதி!
ஜோதி!அருட்சபை நடம் புரியும்
ஜோதி! நசீர்செரிலத்திகழ்வசித்தியே
ஜோதி
கருணை அருட்பெருஞ்ஜோதி
DA
崇紫
Y.
※
=
※
:
燃
*
e
r
سمے 棠崇Y
游
مر
sa 遂
5 Y }
崇

Page 17
இந்துசாதனம் 18. O9,
O () O கடவுள ஏன கலல வித்தியாயூஷணம் பிரம்மழுநீ ப. சிவானந்தசர்மா (கோப்பாய் சிவம்) NWA'
深
சினிமாக்களிலும் சீரியல்களிலும் வருகின்ற கடவுளர்கள் எவ்வளவு நல்லவர்கள்? ரத்தமும் சதையுமாக நமக்குமுன் தோன்றி நேரடியாக அருள் கொடுத்து உரையாடி. ஆஹா எவ்வளவு நன்றாக இருக்கிறது. நமது கடவுளர் மட்டும் ஏன் ஒவ்வொரு கோவிலிலும் கல்லாகத் தோன்றுகின்றனர். நமது வேண்டுதல் களுக்குச் செவிசாய்க்கிறார்களில்லையே? இவரைத்தான் கண்கெட்ட கடவுள் என்று சிலர் கோபத்தில் ஏசுகிறார்கள். அதுவும் சரிதான் போலும்.
புராணங்கள், இதிஹாசங்கள் பற்றித்தான் பலருக்குச் சந்தேகங்கள் தோன்றுவண்டு. ஆனால், வரலாறு பற்றிச் சந்தேகப்பட நியாயமில்லை. கல்லாயிருக்கும் நமது கடவுளர்கள் பல தலங்களில் நமது முன்னோர்களுடன்பேசியதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு. தவறு செய்ய முற்பட்ட வேற்று மதத்தவர்களுக்குப் பாடம் புகட்டியதற்கும், உண்மை அடியார் களுக்கு உரிய காலத்தில் உதவி புரிந்ததற்கும் சான்றாதாரங்கள் பல தல வரலாறுகளில் உள்ளன.
பிரச்சினை என்னவென்றால், நாம் சில உண்மைகளை உணர மறந்துவிடுகிறோம். ஏன், சிலவேளைகளில் உணர மறுத்துவிடுகிறோம். திரைப்படங்கள் போலவே நமக்கு முன் ஆண்டவன் தோன்ற வேண்டுமென்று ஆசைப்படுகிறோம்.
கல்லிலே கடவுளைக் கண்டு, கருணைக் கனிவில் மறந்து, கடவுளைக்கல்லாகவே ஆக்கும் கடைநி:
அதுவும்கடவுளே! என்று ஒருதரம் கூவியதும் அவர் கண் முன்னால் நிற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மறுதரப்பு நியாயங்களையும் எண்ணிப் பார்க்க வேண்டுமல்லவா?
இரண்டு குட்டிக் கதைகளை இங்கு பார்க்கலாம்.
கதை ஒன்று மஹாபாரதக் காட்சி. துகிலுரி படலம் . திரெளபதியின்துகிலைப் பல்லோர் முன்னிலையில் துச்சாதனன் உரிகின்றான். நல்லோர்கள் யாவரும் வல்லவர்களாக இல்லாமல் அல்லவர்களாக இருந்ததனால் வாளாவிருக்கி றார்கள். ஆண்டவனே துணையென்று நம்பி அவள் கண்ணனை அழைக் கின்றாள்.
ஆண்டவனை அழைக்கும் அதே நேரத்தில் அவள் தன்முயற்சியையும் விடவில்லை. தன் கைகளால் அந்த இழிசெயலைத் தடுக்க முடியும் என்ற சிறு நம்பிக்கையோடு அதுமனித இயல்பூக்கமும்கூட- தடுத்துக்கொண்டிருக்கிறாள். ஆண்டவனை அழைக்கும் அழைப்பும் நம்பிக்கையும் முழுமை பெறவில்லை. கண்ணனும் உதவிக்கு வரவில்லை.
ஒரு திருப்புமுனை வருகிறது. அவள் தன் முயற்சிகள்
வெற்றி பெறாதென உணர்கின்ற நிலையில் கரங்கள் சோர
ஆண்டவனையே முழுமையாக நம்பிப் பரிபூரண சரணாகதி
1.

O2O கர புரட்டாதி, ஐப்பசி 01
ானார்?
B.A (Hons)
NVA 深 深
நிலையில் "ஹரி ஹரி ஹரி" என்றாள். அப்போது அவளது துகில் வண்ணப் பொற் சேலைகளாய் வளரத் தொடங்குகின்றது. கண்ணனின் அருளால் திரெளபதியின் மானம் காக்கப்படுகிறது.
ஒரு பாவமும் அறியாத அப்பாவிப் பெண் திரெளபதி. நற்குண நற்செய்கைகள் நிறைந்தவள். கடவுள் மீது பற்றுடையவள். அப்படியிருந்தும், அவளுக்கும் சோதனைகள் காத்திருந்தன. இறைவனின் அருள் அவளுக்குக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்குக் காரணம் என்ன?
தன்மீதுள்ள நம்பிக்கையையும். கடந்து கடவுள் மீது பூரண நம்பிக்கை கொள்ளுகின்ற அந்த சரணாகதி நிலையில்தான் அருள் சுரக்கின்றது. நாம் அத்தகைய சரணாகதி நிலைக்குத் தயாராக இருக்கிறோமா? போகிற போக்கில் வாகனத்திலிருந்த படி சல்யூட் அடிப்பதுபோல ஒரு நவீனகால வணக்க முறையை ஆண்டவனுக்கு வழங்கிவிட்டு நமது வேலையே பிரதானம் என ஒடுகிறோம்.
சில நிமிட நேரங்களை ஆண்டவன் சந்தியில் செலவிட நம்மில் பலர் தயாராக இல்லை. ஆலயம் கட்ட அன்பளிப்பு வழங்கிவிட்டால்போதும் என நினைக்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். நமது ஏனைய செயற்பாடுகளை சிறிது ஒதுக்கி
கருத்தைச் செலுத்தி ஈடேற்றம்பெற்ற காலத்தை லைக்கு மனிதன் தாழ்ந்துவிட்டானா?
வைத்துவிட்டு அவன் முன்னிலையில் நம்மை மறந்து (முக்கியமாக செல்லிடத் தொலைபேசியைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும்) கொஞ்சநேரம் செலவிட முன்வர வேண்டும். நமது அந்தஸ்து முதலியவற்றை மறந்து கீழிறங்கி வந்து சரியைத் தொண்டுகள் புரிய முன் வரவேண்டும். அடுத்தது, முதலில் பார்த்த கதையின் பொருளை உணந்து ஆண்டவனை முழுமையாக நம்பி அவனிடம் சரணடையத் தயாராக இருக்க வேண்டும்.
இரண்டாவது கதையைப் பார்ப்போம். ஒருவன் ஆண்டவன் மீது பரம விசுவாசமாக இருந்தான். நற்தொண்டுகள் புரிந்து ஆண்டவனின் அன்புக்குப் பாத்திரமாயிருந்தான். அவனது நாளாந்த வேண்டுதல், ஆண்டவன் தன்னிடம் நேரடியாக வந்து விருந்துண்ண வேண்டும் என்பதாக இருந்தது. அவனைச் சோதித்துப் பார்க்க விரும்பினார் ஆண்டவன்.
அவனது கனவிலே தோன்றிய ஆண்டவன் மறுநாள் விருந்துண்ண வருவதாக வாக்களித்தார். மறுநாள் தடயுடலாக விருந்துக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆசாரம் , தூய்மை, சுவை, அக்கறை என எல்லாவிடயங்களிலும் கவனமடுத்துத்
தானே தன் கையால் சமையல் செய்த அறுசுவை ഞങ്ങ്

Page 18
இந்துசாதனம் 809,
உண்ண ஆண்டவன் வரும் நேரமாகிவிட்டதென ஆவலோடு காத்திருந்தான்.
நேரம் தான் நகர்கிறது. ஆண்டவன் வரவில்லை. அவர் பொய் சொல்லியிருப்பாரா? அல்லது எனது கனவுதான் பொய்யானதோ? அந்த நேரத்தில் வாசலில் ஒரு பிச்சைக்காரன் பலநாள் பட்டினியோடு பசி காதை அடைக்க உணவு கேட்டு வந்து நிற்கிறான். ஆண்டவனின் விருந்துபசாரத்திற்கு முன் இதென்னடா அபசகுனமாயிருக்கிறதே என வருந்திய இவன் அவனைக் கோபத்தோடு ஏசிக் கலைத்துவிடுகிறான்.
சோர்வோடு காத்திருக்கும் போது அடுக்களையின் பின்புற வாசலில் ஏதோ சத்தம். ஒடிப்போய்ப் பார்க்கிறான். ஒரு சொறிநாய் பசி வெறியோடு கதவைத் தள்ளித் திறந்தவாறு சாப்பாட்டில் வாய்வைக்கத் தயாராக நிற்கிறது. கையில் அகப்பட்டதைத் தூக்கி எறிந்து கலைத்து வாசலைத் தாழிட்டு விட்டு வந்து ஏமாற்றத்துடனும் சோர்வுடனும் இருக்கிறான். தன்னை மறந்து கண் அயர்ந்தவன் ஆண்டவணைக் கனவில் காண்கிறான். " ஏன் சுவாமி இன்னும் விருந்துண்ண வரவில்லை?" எனக் கேட்கிறான். "அப்பா நான் இரண்டு முறை உன்னை நாடி வந்தேன். நீயல்லவா என்னை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாய்" எனக் கூறிய ஆண்டவன் மறைந்து விடுகிறார்.
ஆண்டவன் நம்மைத் தேடி வரும் போது நாம் அவனை உணரத் தவறிவிடுகிறோம் என்பதற்கு இந்தக் கதை உதாரணமாகும். ஆண்டவன் புராணக் கதைகளிலும் திரைப் படங்களிலும் வருவதுபோல இடபாரூடராக உமையம்மையோடு காட்சி தருவார் என நாம் எதிர்பார்க்கக்கூடாது. எம்மைச் சூழ்ந்திருக்கும் பிரபஞ்சம் யாவும் இறைமயம் என உணர வேண்டும். ஒவ்வோர் உயிரிலும் இறைவனைக் காணும் பக்குவம் வரவேண்டும். ஏனைய செயல்கள் யாவும் வெளிவேஷங்களே. அயலவனை நேசிக்கத் தெரியாதவன் எப்படி ஆண்டவனை யாசிக்க முடியும்? உயிர்களை நேசிக்கத் தெரியாதவன் எப்படி உத்தமனைப்பூசிக்க முடியும்?
பரிபூரணமான நம்பிக்கையுடன் ஆண்டவனைச் சரணடை தல், அவனை அகிலமெங்கும் உணர்ந்து மனிதாபிமானம், ஜீவகாருண்யம் இவற்றோடு வாழ்தல் என்ற இவ்விரு விடயங் களைத் தவிர மூன்றாவதொரு முக்கிய விடயம் இருக்கிறது. ஆண்டவன் அருட்கதிர் தகுதியான இடங்களில் மட்டுமே பாயும்.
நல்ல ஒரு நல்லெண்ணெய் வியாபாரியைப் பாருங்கள். தனது தரமான நல்லெண்ணெயை நல்ல ஒரு பாத்திரத்தில் தரவே அவர் விரும்புவார். நாம் கொண்டு போகும் பாத்திரம் (போத்தல்) சுத்தமானதாக இல்லை என்றால் 'எனக்கு வியாபாரம் இல்லையென்றாலும் பரவாயில்லை, இந்தப் பாத்திரத்தில் தந்து எனது எண்ணெயின் நற்பெயரை நான் கெடுத்துக்கொள்ள மாட்டேன்" என்று கூறிவிடுவார்.
ஆசாரம்,ஒழுக்கம், தூய்மை, நற்குண நற்செயல்கள் என்பன இல்லாமல் ஐம்பது ரூபாய் காசிற்கு அர்ச்சனை செய்துவிட்டு ஆண்டவன் நமக்குமுன் தோன்றுவார் என எதிர்பார்க்கலாமா? இங்கு ஒழுக்கம், நற்குணம், நற்செயல் இவையெல்லாம் என்னவென யாவருக்கும் தெரியும். ஆனால் ஆசாரம் என்றால் என்ன என்பது இன்று பலருக்குத் தெரியாது.

O2O கர புரட்டாதி, ஐப்பசி 01
சர என்ற வினையடி நடத்தை எனப் பொருள்படும். அவ்வகையில் ஆசாரம் என்பதும் நன்னடத்தை ஆகிய ஒழுக்கத்தையே குறிக்கும். எனினும், ஆன்மீக நடைமுறையில் ஆசாரம் என்ற சொல் புற ஒழுக்கம் சார்ந்த சில நடைமுறைச் செயற்பாடுகளைச் சுட்டிநிற்கிறது.
ஆலய வழிபாடு என்றதும் முதலில் சொல்லப்படும் செயற்பாடு, நீராடித் தோய்த்துலர்ந்த ஆடை உடுத்தி' என ஆரம்பமாகிறது. துடக்கு, ஆசௌசம், தீண்டல் என்பவற்றையே சரியாகப் புரிந்துகொள்ளாத - அல்லது புரிந்துகொள்ள விரும்பாத இன்றைய நிலையில் மடி, ஆசாரம் இதற்கெதிர்ப்பொருளான விழுப்பு என்ற சொற்களை விளக்குதல் கடினமான ஒன்று.
உடல் அல்லது உடைகள் சார்ந்த புறவயமான தூய்மை நிலையையே ஆசாரம் அல்லது மடி என்பன குறிக்கின்றன. சிலர் ஈர உடையைத் தூய்மையானதாகக் கருதுகின்றனர். ஆனால் இது தவறானது. பிரேத காரியங்களுக்கு மட்டுமே ஈரவஸ்திரம் சொல்லப்பட்டுள்ளது. சிரார்த்தம் முதலிய பிதிர் காரியங்களுக்கும் தெய்வ காரியங்களுக்கும் தோய்த்துலர்ந்த மடிவஸ்திரமே உரியது. தோய்த்து உலர்ந்தபின் யாராவது அத்துணிகளில் தீண்டினாலோ வேறு தூய்மையில்லாத துணிகளுடன் தொடர்புபட்டாலோ அவ்வாடைகள் விழுப்பு என்ற பெயரில் தூய்மை அற்றனவாகக் கருதப்படும். அதனால் பிற இடைஞ்சல்கள் இல்லாமல் தோய்த்துலர்ந்து தனியாகப் பேணப்படும் ஆடைகளே வழிபாடுகளுக்குச் செல்லும்போது உரியன.
ஒருவர் குளித்து அத்தகைய மடி வஸ்திரங்களை அணிந்து நித்திய கர்மானுஷ்டானங்கள் செய்த நிலையில் பிறருடன் தொடர்புபடாமல் பிற ஆடைகளுடன்தொடர்பில்லாமல் (முட்டாமல்) இருக்கவேண்டும். இக்கட்டுப்பாடு விலகும்போது விழுப்பும் எனப்படுகின்றது. (அதாவது ஆசௌச நிலைக்குச் சமனானது) எச்சில் என்பது எந்த நிலையிலும் விலக்கப்படவேண்டியது. இன்று சுவாமிக்குச் சாத்தும் பூமாலைகளையே கூசாமல் பல்லினால் கடித்துத் துண்டாக்குவதில் பலர் ஈடுபடுவதைக் காணலாம். தண்ணிர் அருந்தும்போதும் உணவருந்தும்போதும் எச்சில் படாமல் செயற்படுதல் இன்று பலருக்குத் தெரியாது.
ஆசௌசமுடைய ஒருவரில் தீண்டுதல் (முட்டுதல்), அவர்களது இல்லத்திற்குள் செல்லுதல், அவர்களிடம் உணவோ நீரோ அருந்துதல் இவையெல்லாம் ஆசாரமற்ற செயற்பாடு களாகும். இவற்றை நன்கு சிந்தித்துப் பார்த்தால் இவை யாவுமே சுகாதாரப் பழக்கவழக்கங்கள் என்பதையும் தூய்மையைப் பேணும் நடைமுறைகள் என்பதையும் புரிந்துகொள்ளலாம். அறிவியல் - மனோதத்துவ - ரீதியில் பார்க்கும்போது ஆசாரமான பழக்கவழக்கங்கள் சில உயர்நிலை அதிர்வுகளை அல்லது தூண்டல்களை உள்ளத்தில் ஏற்படுத்தக்கூடியவை என்பதையும் எதிர்மறையாக அவை உதாசீனப்படுத்தப்படும்போது மந்தமான அதிர்வுகள் தூண்டப்படலாம் என்பதையும் உணர முடியும்.
எனவே, உடல்நிலைசார்ந்த புறவயத் தூய்மையும் உளம் சார்ந்த தியாக உணர்வும் சிரத்தையும் பற்றுறுதியும் நம்பிக்கையும் மனிதாபிமானம், ஜீவகாருண்ணியம் முதலிய பண்பு நலன்களும் நம்மிடத்தில் வளர்ந்தோங்கும்வரை கடவுள் கல்லாகவே இருப்பார். நாமும் பாலைக் குடம் குடமாக ஊற்றி அபிஷேகம் செய்து மோதகத்தை ஆயிரக் கணக்கில் அவித்துப் படைத்து வயிறார உண்டுகொண்டிருக்கலாம். خر
a2 烹

Page 19
8.09
இறைவன் ஈந்த இனிய கொடை எனச் சொல்லத் தக்க இரக்க சிந்தை, நல்லோர் நட்பு, நல்லொழுக்கம் முதலான பிறவிக் குணங்களுடன், தான் தெரிந்து கற்ற கல்வியையும் சிறப்பாய் வளர்த்த பேச்சாற்றலையும் இணைத்து, அறிவுப் பூங்காவில் வீசும் ஆன்மீகத் தென்றலாய் மிளிரும் சொற்பொழிவுகளாற் செஞ்சொற் செல்வராக மட்டுமல்லாமல் செம்பொற் செல்வராகவும் திகழ்ந்து, தான் பெற்றுக்கொண்ட பொன்னையும் பொருளையும் தான் கற்றுக்கொண்ட கல்விக்கிணங்க, தேவையும் தகுதியுமுள் ளோரைத் தேடிக்கண்டுபிடித்து, அவர்களுக்கு வழங்கி வாழ்வளிப்பதிற் திருப்தியும் மகிழ்ச்சியுமடையும் திரு. ஆறு. திருமுருகன் அவர்களின் பரந்துபட்ட கல்வி, கலாசார, மனித நேய, ஆன்மீகப் பணிகளை அங்கீகரித்துப் பாராட்டும்வகையில் அவருக்குக் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்குவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்வந்தமை வாழ்த்துக்கும் வரவேற்புக்கும் உரியதாய் மனமகிழ்ச்சியுைம் நிறைவையும் தருகின்றது.
கோப்பாய் - இணுவில் ஆசிரியத் தம்பதியான ஆறுமுகம் - சரஸ்வதி ஆகியோருக்கு மகனாக 1961 மே மாதம் 28ஆந் திகதி
கேட்டார்ப் பிணிக்குந்தகையவாய்க் கேளிரும் வேட்பெ நேயப் பணிகளில் எதிரொலிக்கச் செய்யும் பக்குவமும் அவர்கட்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் "கெளரவ கல இந்தக் கட்டுரை.
பிறந்து - ஆரம்பக் கல்வியைச் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பெற்றுப் பட்டப்படிப்பைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பட்டப்பின் படிப்பை மகரகம தேசிய கல்வி நிறுவகத்திலும் நிறைவுசெய்து, ஆரம்பத்திற் சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையிலும் பின்னர் கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலும் ஆசிரியராகவும், ஸ்கந்தாவிற் படிப்படியாக உயர்ந்து 2008ஆம் ஆண்டு தொடக்கம் அதிபராகவும் பணியாற்றி வருகின்றமை அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம் என்றால் வாய்ப்புக்களையும் வாய்மையையும் வாக்கின் வசீகரத்தையும் வகையாகப் பயன்படுத்தி, வளங்களைக் குவித்து அனாதைகள், அகதிகள், அங்கவீனர்கள், முதியோர், விதவைகள், நோயாளர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் தேவைகளை இனங்கண்டு அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வழிகாட்டி அவர்களை வாழ வைப்பது அவருடைய பொதுப்பணி வரலாற்றின் பெருக்கம் எனலாம்.
 

O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
திருமுருகன்
நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றுப் புகழையுடையதும் இப்போதைய அரசால் இசுறு பாடசாலையாகத் தரமுயர்த்தப்
பெற்றதுமான ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அதிபர் பதவிகோரும் முழுநேரப் பணிக்கும் தெல்லிப்பழை துர்க்கை அம்பாள் ஆலயத்தின் நிர்வாக சபைத் தலைமை என்ற ஒய்வுநேரப் பணிக்கும் அப்பால் அவருடைய கருத்தையும் கவனத்தையும் தம்மிடம் ஈர்ப்பதில் இணுவில் அறிவாலயம், சிவபூமி மனவிருத்திப் பாடசாலை, சிவபூமி முதியோர் இல்லம், அகில இலங்கை இந்துமாமன்றம், அகில இலங்கை கம்பன் கழகம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன ஆலோசனைச்சபை, தேசிய கல்வியியற் கல்லூரி ஆலோசனைச் சபை கருணைப்பாலம் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புக்களிடையே கடும்போட்டி நிலவுவதும், அதிர்ஷ்டவசமாக இந்தப் போட்டியில் எந்த ஒரு அமைப்பும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தோல்வியைத் தழுவுவதில்லை என்பதும் அவருடைய ஆற்றலுக்கும் ஆளுமைக்கும் மேன்மை சேர்க்கும் ஆரோக்கியமான தகவல்கள். இவற்றுக்கும் மேலாக விலை மதித்தற்கரிய சமய, இலக்கியச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல்வெளியீட்டு விழா
மாழியும் ஆற்றலும் அந்த ஆற்றலைப் பல்வேறு மனித வாய்க்கப்பெற்ற செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் ாநிதிப்" பட்டம் வழங்கியதைப் பாராட்டி வரவேற்கின்றது
உரைகள் போன்ற இலவச இணைப்புக்கள் எண்ணிலடங்
காதவை.
உள்நாட்டுப்போர் உக்கிரமடைந்த வேளையில் தென்மராட் சியை நோக்கிய இடப்பெயர்வின்போது ஸ்கந்தா சமூகத்தின் கட்டுக்கோப்புச் சிதைந்து சின்னாபின்னமாகாமல் அதைக் காப்பாற்றியதில் அவர் வகித்த பங்கு பெரிது. இடையிலே தரிப்பிடங்களையும் முடிவிலே தங்குமிடத்தையும் ஏற்பாடு செய்வதில், நெருக்கடி நிலையிலும் நேர்மையான செயற்பாடு களைத் தொடர்வதில் - தடைகள் பலவற்றைத் தாண்டி அதன் தனித்தன்மையைப் பேணுவதில் - அவர் தன்னை ஒறுத்துச் செயற்பட்டார்.
மீண்டும் பழைய இடத்தையே நிரந்தரமாக்கியபின், அதிபர்களின் அனுசரணையுடன் - குறிப்பாக அதிபர் திரு. க. சிவாஜி அவர்களின் உந்துதலாலும் உற்சாகத்தாலும், முன்னைப் பழம்பெருமையை நோக்கிய ஸ்கந்தாவின் பின்னைப் புதுப்
—>

Page 20
இந்துசாதனம் 8. O9
பயணத்தை எத்துணை இலட்சியப் பிடிப்புடனும் உறுதியான திட்டங்களுடனும் மேற்கொண்டு வருகின்றார் என்பதற்கு அவருடைய முயற்சியினால் பெருகிய ஸ்கந்தாவின் பெளதிக வளமும், ஆண்டுதோறும் அதிகரித்து வரும் ஸ்கந்தவரோ தயன்'களின் பல்கலைக்கழகப் பிரவேசமும், காலந் தப்பாது நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளின் தரமும் தொகையும் கல்லூரி வளாகத்திற் கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஸ்கந்தன் ஆலயத்தைப் போல் - கல்லூரித்தாபகர் கந்தையா, முகாமையாளர் வைத்திய கலாநிதி சுப்பிரமணியம் ஆகியோரின் அழகான சிலைகளைப்போல் - அசைக்கமுடியாத சான்றுகளாகத் திகழ்கின்றன.
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் அடியொற்றி அருள்மிகு தெல்லிப்பழை துர்க்கை அம்பாள் தேவஸ்தானத்தையும் அதனுடன் இணைந்த தர்மஸ்தாபனங் களையும் சீராக நிர்வகித்து வருவதும் ஈழத்துத் திருப்பதி என்று குறிப்பிடுமளவிற்கு அந்தத் தேவஸ்தானத்தின் அறப்பணிகளை அதிகரித்து வருவதும் தனி வரலாற்றுக்குரியவை.
திரைகடலோடியுந் திவியம் தேடு' என்ற ஒளவையின் கொன்றைவேந்தன் அடியை - திரை கடலோடியுந் திரவியந் தேடு - திக்கற்றோர் நலன் நாடு என நீட்டி, அந்த நீட்சிக்கு மாட்சி அளிக்கும் வகையில் அவர் செயற்படுகின்றார் எற்பதற்குச்
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணாமலை மட்டக்களப்பு யாத்திரையை மேற்கொள்ளும் அடியார் களுக்கு உதவும் வகையில் மட் தங்குமடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அடிக்கல் நாட்டுவற்கு முன்னர் இறை வணக்கஞ் செய்தலையும், அடிக்கல் நாட்டு விழாவில் திரு. அ. கோ
தொழிலதிபர்கள் P. தமிழ்ச்செல்வன் K சண்முகராசா முதலியோர் அமர்ந்
2
 

1,10, 2011 கர புறபீடாதி, ஐப்பசி 01
சாட்சியாயிருப்பவை காலத்துக்குக் காலம் அவர் மேற்கொண்ட இலண்டன், கனடா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா முதலிய நாடுகளில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளும் அவற்றினடியாக அவர் திரட்டிய நிதியின் மூலம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் தமிழ்கூறும் நல்லுலகில் அவர் உருவாக்கிய அறக் கட்டளைகள், கண் பார்வையற்ற சிறுவர்களுக்கான வாழ்வகம் (உடுவில்) நவீன கண் சத்திர சிகிச்சை நிலையம் (யாழ் - ஆஸ்பத்திரி), சிவயோகம் அன்னையர் குடியிருப்பு (கந்தரோடை) சிவபூமி மனவிருத்திப் பாடசாலை (கோண்டாவில்) சிவபூமி முதியோர் இல்லம் (சுழிபுரம்) போன்ற
மக்கள் நலன் காக்கும் மனிதநேய நிறுவனங்கள் பலவுமாகும்.
96) (560LLU சொல்லாற்றலுக்காகவும் செயற்றிறனுக் காகவும் இதுவரை இந்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள், பாராட்டுக்கள் எல்லாவற்றிற்கும் மேலாக யாழ் பல்கலைக்கழகம் அவருக்குக் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கியிருப்பது, யாழ்ப்பாணக் கல்விச் சமூகமே ஒன்று திரண்டு, தன் மண்ணிற் பிறந்த மனிதநேய மன்னனுக்கு மணிமுடி சூட்டிக் கெளரவத்தைப் போன்றிருக்கின்றது.
அவருடைய தூய தொண்டுகள் மேலும் சிறக்க இறைவனைப்பிரார்த்திப்போமாக. - சிற்பி
களுக்காக.
பு முதலிய இடங்களிலிருந்து கதிர்மகாமக் கந்தன் கோவிலுக்குப் பாத வந்தாறு மூலையில் உள்ள ருநீமஹா விஷ்ணு ஆலயத்துக்கு முன்பாகத் கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபைத் தலைவர் திரு. STS அருளானந்தன் தாசன் தலைமை உரை ஆற்றுவதையும் மேடையில் திரு. அருளானந்தன், திருப்பதையும் காணலாம்.
O

Page 21
இந்துசாதனம் 809
ஒருவர் மற்றவருக்கு நன்மை ஒன்றைச் செய்வதற்கு என்பதைப் பற்றிச் சிந்திக்கவே கூடாது. அதேவேளை, அந் சொற்களால் வெளியிடுவதுடன் மட்டும் அமையாமல், நன்மையைவிட அதிக நன்மையை முன்வைளுக்குச் செய்தல்
செய்யப்பெற்ற நன்
Nya NWA' } 深一
நிமக்கு உதவுகின்ற கட்டாயம் மற்றவர்களுக்கு இல்லை. இருந்தும் உதவி செய்து விட்டாரே என்பதை நாம் உணர்கின்றபோது தான், நமக்கு நன்றி சொல்லத் தோன்றுகின்றது. நமக்கு உதவிய அவரின் செயலினைப் பாராட்டி, நாமும் ஏதாவது திருப்பிச் செய்யவேண்டும் என்கின்ற எண்ணம் நமக்கு ஏற்படுகின்றது. இதுவே உணர்வுபூர்வமான நன்றியின் வெளிப்பாடாகும்.
உதவி செய்வதும், நன்றி சொல்லுவதும் ஒதுபோதும் உங்களுடைய கெளரவத்தினைத் தாழ்த்திவிடாது. மாறாக உங்களுடைய பெருந்தன்மையை வெளிப்படுத்தும். உங்களுக்கு யாராவது சகாயம் செய்து அன்பு காட்டினால், அவர்கள் செய்த அந்தக் காரியங்களுக்காக உங்களுடைய இதயத்தில் நன்றி யுணர்வு எதிரொலிக்க வேண்டும். ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், நன்றியுணர்வு அவனிடம் இல்லாமற் போகுமானால், அவன் மதிக்கத்தக்கவன் ஆகமாட்டான். நன்றியின் அவசியத்தைப் பற்றி நீங்கள் சிந்தித் தால், நன்றியுணர்வு தானாகவே உங்களிடம் தோன்றிவிடும். அதன்பின், எது எதற்கு நன்றி சொல்லவேண்டும் என்று நீங்கள்
வரிசைப்படுத்தினால், அதுவே ஒரு நீண்ட பட்டியலாக வளரும்.
உங்களுக்கு உரிமை இல்லாமற் கிடைக்கின்ற நன்மைகளையும், நீங்கள் அங்கீகரிக்க வேண்டும். முடியுமானால் வாய்ப்பு ஏற்படும்போது, பிரதி உபகாரமும் செய்ய வேண்டும். பணத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வெறும் வார்த்தை களால் நன்றி சொல்வது, உங்களுக்குப் பெரிதாக உதவியவர் களுக்கு எந்த விதத்திலும் பயன்படாது. சில வகையான அன்புக்குப் பிரதியுபகாரம் செய்வது சாத்தியமே இல்லை. உதாரணத்திற்கு, தாயாரின் அன்பைச் சொல்லலாம். உங்களுக்குச் செய்யப்படுகின்ற நன்மைகளைப் பாராட்டுகின்ற மனோபாவமாவது உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் காட்டுகின்ற நன்றி எப்படிப்பட்டது என்பது முக்கியமில்லை. அது உங்களுடைய இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம்.
"என்னைத்தடுத்து நிறுத்தியதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்லுகின்றேன்" இந்த வார்த்தையைச் சொன்னவன்
19 வயது இளைஞன். வேகமாகக் கார் ஒட்டியதற்காக மறுநாள்
2

, O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
முன், அப்படிச் செய்வதால் தனக்கு என்ன நன்மை கிடைக்கும்
த நன்மைக்கு உரித்தாவைர், தன்கடப்பாட்டை நன்றி என்ற தான் பெற்ற நன்மையை என்றும் மனத்திலித்தி, அந்த வேண்டும்.
ாறியைச் சிந்தித்து.
நயினை நா. யோகநாதன் B.A.
அவன் நீதிமன்றுக்குக் கொண்டுவரப்பட்டான். தன்னைக் கைதுசெய்த இரண்டு பொலிஸ்காரர்களுக்கும் அவன் நன்றி சொன்னான். அவர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி இருக்கா விட்டால், அவன் காரை வேகமாக ஒட்டிச் சென்றபோது டயர் வெடித்துக் கார் விபத்துக்குள்ளாகி இருக்கும். நல்ல வேளையாக அவன் தடுத்து நிறுத்தப்பட்ட பின், மெதுவாகச் சென்றபோது, டயர் வெடித்தது. இம்மாதிரிச் சம்பவங்கள்கூட நடந்திருக்கின்றன. சிந்திக்க வைத்திருக்கின்றன. இதன் மூலம் தடைகள்கூடச் சிலவேளைகளில் நன்மை பயப்பனவாயுள்ளன. அவை நன்றிக்குரியதாகவும் அமைந்துவிடுகின்றன என்பதைக் காண்கின்றோம்.
முதலில் கடவுளின் அன்பிற்கும், கருணைக்கும், நன்றி சொல்ல வேண்டும். கடவுளின் எல்லையுற்ற அருளுக்கு நன்றி சொல்லவேண்டும். நம்மை நேசிக்கின்ற இதயங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லுவோம். நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நட்பு முகங்களுக்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்லுவோம். கஷ்டங்களை அனுபவிப்பதற்கு நாம் பெற்றிருக்கும் பலத்திற்காக கடவுளுக்கு நன்றி சொல்லுவோம். நாம் அனுபவிக்கின்ற சந்தோஷங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி சொல்லுவோம். கடவுள் நமக்கு அளித்திருக்கும் நம்பிக்கைகளுக்காக நாம் அவருக்கு நன்றிசொல்லுவோம். கடவுளை நாம் நன்றியுணர்வுடன் நேசித்தால், கடவுளும் நம்ம்ை நேசிப்பார். நாம் மனநிறைவைப் பெறுவதற்கு இதைவிட வேறொன்றும் தேவையில்லை.
எமக்கு இவ்வுடம்பையும், கருவி கரணங்களையும், உலகத்தையும், நுகர்வுப் பொருட்களையும், தோற்றுவித்தவர் இறைவன். அத்தனையும் தந்த இறைவனுக்கு, நாம் நன்றிக் கடன் செலுத்த வேண்டியவர்கள். தினந்தோறும் நாம் மனத்தால் நினைந்து வாக்கினால் துதித்து, உடம்பினால் வணங்குவதற்குக் கடமைப்பட்டுள்ளோம். எந்தநாளும் அவருக்குச் செய்ய வேண்டிய நன்றிக் கடனும் அதுவேயாகும். "என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே" என அழகாகத் திருமந்திரம் கூறும். நாம் இறைவனை வணங்காமலும், வாழ்த்தாமலும், இருப்போமாயின் நன்றி மறந்த பாவத்திற் குள்ளாவோம். உயரிய மானிடப் பிறவியையும், பிறவிப் பயனை அனுபவிப்பதற்கான சகல வளங்களையும், நமக்குத் தந்த தலைவனை தினந்தோறும் ஒரு கணமேனும் சிந்திப்பதும், வந்திப்பதும், நமது கடன். "தலையே நீ வணங்காய்" என்பார்
Sa

Page 22
இந்துசாதனம் 8. O9,
அப்பர்பெருமான். அவ்வாறு இறைவணக்கம் புரியாதவன், தன் கடமையை மட்டுமன்றி, நன்றியையும் மறந்த பாவத்திற்கும் பெரும் துன்பத்திற்கும் ஆளாவான். இறை வணக்கம் புரியாதவர்கள், எப்பாடுபடுவர் என்பதைப் பட்டினத்தார்
கூறும்போது,
"ஆற்றோடு தும்பையணிந்தாடும் அம்பலவாணர்தமைப் போற்றாதவர்க்கடையாள முண்டேயிந்தப் பூதலத்திற் சோற்றாவியற்று, சுகமற்று, சுற்றத் துணியுமற்றே யேற்றாலும் பிச்சை கிடையாமலே ஏங்குற்றிருப்பார்களே"
என்கின்றார்.
ஆதலால் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ நினைப்பவன், இறைவனை இயலுமானவரை வணங்கவேண்டும். "வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த" தலைவனல்லவா இறைவன் இறைவனுக்கு நன்றியறிதல் உடையவனாக வாழும் ஒருவனுக்கே, கண்கண்ட தெய்வங்களான தாய் தந்தையர்க்கு, அவர்கள் நம்பொருட்டுச் செய்த தியாகங்களை நினைத்துத் தன் கடமைகளைச் செய்யமுடியும். ஒவ்வொருவரும் தம் வாழ்நாள் முழுவதும் செய்நன்றியறிதல் என்ற விழுமியப் பண்பைப்பேணிக் கடைப்பிடித்து ஒழுகுதல் வேண்டும். இதிலிருந்து ஒருபோதும் பின்நின்றுவிடக்கூடாது.
நாம் பிறருக்கு உதவி செய்யும்போது கைமாறு கருதாமலும், அவற்றிற்கு ஈடாக எவ்வித பயனையும் எதிர்பாராமலும், செய்தலே உத்தமமாகும். "பயன் தூக்கார்செய்த உதவிநயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது" என்பார் வள்ளுவர். அன்பின் மிகுதியாலும், இரக்க மேலிட்டினாலும், செய்யப்படுகின்ற பணியே தொண்டு என்றும், சேவை என்றும் கூறப்படுகின்றது. பெயர், புகழ், விளம்பரம், வேறு நன்மைகள் கருதிச் செய்யப்படும் பணிகள் அறப்பணிகள் ஆகா. "என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்றார் அப்பர் பெருமான். "கடமையைச் செய் பயனை எதிர்பார்க்காதே" என்கிறது கீதை, "ஐயம் இட்டுண்" "ஈதல்
அறம்" என்பதெல்லாம் உணர்வுபூர்வமான தமிழ் வாசகங்களாகும்.
கொடுப்பதில் தான் மகிழ்ச்சி இருக்க வேண்டுமே யொழிய, பெறுவதில் அல்ல என்பது, எமது மரபுக்குரிய சிந்தனையாகும். பயன் கருதாமல் செய்யப்படுகின்ற பணி இறைபணியேயாகும். அது மக்கள் சேவையாகி நம்மை மகேசன் சேவைக்குரியவனாக்கி விடுகின்றது. நாம் மறக்கக் கூடியதும் உண்டு; மறக்கக்கூடாததும் உண்டு; ஒருவர் நமக்குச் செய்த நன்மை சிறிதோ, பெரிதோ, உயிருள்ளவரை அதனை மறத்தலாகாது. ஒருவர் நமக்குச் செய்த தீமையை உடனே மறந்துவிடுவதுதான் பெருங்குணம். அதனால் பெரும் நன்மையும் உண்டாகும். மகாபாரதத்தில் வருகின்ற கர்ணன் நன்றி மறவாமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளான். அவ்வாறே தருமர் தனக்கு இழைக்கப்பட்ட தீமைகளை உடனுக்குடன் மறந்து, தீமை செய்தவர்களையும் மன்னித்து, அவர்களுக்கு நன்மை செய்வதிலும் உதாரண புருஷராக விளங்கினார். துரியோதனன் முதலியோர் தமக்குச் செய்த தீமைகளை மறந்து, அவர்கள்

O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
வனத்தில் பகைவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டபோது, அவர்களை மீட்டு, உணவும், உடையும் கொடுத்து அரண்மனைக்கு அனுப்பி
வைத்தார் தருமர் என்பது வரலாறு.
கொடும் பாதகங்களைச் செய்தால்கூட, பிராயச்சித்தம் மூலம் அவற்றை நீக்கி பாவவிமோசனம் பெறுவதற்கு நூல்கள் வழிகூறுகின்றன. ஆனால் செய்நன்றி கொன்றவர்களுக்கு, கழுவாயே (பிராயச்சித்தம்) கிடையாது என அறநூல்கள் குறிப்பிட்டுள்ளன. அதனால் ஒருவர் செய்த உதவியை மறத்தல் அதாவது நன்றி மறத்தல் என்பது எத்துணை பாதகமானது என்பது புலனாகின்றது. நன்றி மறந்ததால் வரும் பெருங் கேட்டினை, சூரபத்மன் வரலாறு மூலமாகக் கந்தபுராணம் காட்டி
நிற்கின்றது.
எந்தையும் தாயும் எமக்காகச் செய்த நன்மைகளோ கணக்கற்றவை. அவர்களை ஒம்புதல் நன்றிக்கடன். பெற்றோர் செய்த தியாகங்களையும், நன்மைகளையும் மறந்தவர்கள், வாழ மறுப்பவர்களாகவும், வாழ்வைத் தொலைத்தவர்களாகவும், ஆகின்றனர். அவர்கள் வாழ்வில் உயர்வுமில்லை, உய்வுமில்லை. 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி
கொன்ற மகற்கு" என வள்ளுவம் அழகாகக் கூறும்.
நன்றி இல்லாமல் இருப்பது நாம் வாழ்கின்ற காலத்தில் ஒரு மனோ பாவம் ஆகிவிட்டது. சிறுவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் எல்லோரும் கிளர்ச்சி செய்வதற்கும், மற்றவர் களைக் குறைசொல்லுவதற்கும் கற்றுக் கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களுக்குச் செய்யப்படுகின்ற நன்மைகளுக்கு நன்றி சொல்லுகின்ற மனோபாவத்தைப் பெற்றிருக்கவில்லை. இது தூரதிஷ்டவசமானதொன்றாகும்.
மற்றவர்களின் துன்பங்களைப் பார்த்தும், பார்க்காதது போல் செல்வது இன்றைக்கு உள்ள மிகப்பெரிய சோகமாகும். வெறுப்பைவிட அலட்சியமே பெரிய அளவில் நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த அலட்சியம் மிக ஆபத்தானது. ஏனெனில், அலட்சியத்தில் இருந்துதான் வெறுப்பு தோன்றி வளர்கின்றது. ஒவ்வொருவருக்கும் தன்னுடைய சகோதரனைப் பாதுகாக்கின்ற கடமை இருக்கின்றது. இதனைச் செய்யாதபோது மனச்சாட்சி உறுத்துகின்றது. அதைத் திருப்தி செய்வதற்கு எத்தனையோ நியாயங்களைத் தேடவேண்டி இருக்கின்றது. எதிலும் தலையிட நான் விரும்பவில்லை எனச் சொல்லித் தப்பித் துக் கொள்வது இன்றைய சமுதாயத்தில் ஒரு வழக்கமாகி விட்டது. இவ்வாறானவர்களிடமிருந்து மனிதநேயம் விலகிச்
செல்வதை உணருகின்றோம்.
நம்மில் பலருக்கு மற்றவர்களைப் பற்றித் தெரியும். அடுத்தவரைப் பற்றித் தெரியும். நம்மைப் பற்றித் தெரிந்ததைவிட, அதிகமாகத் தெரியும். மற்றவர்களின் குறைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டுச் சொல்லுவோம். அவர்களைப் பற்றிய மோசமான அவதூறுகளைப் பட்டியல் போட்டுக் காட்டுவோம். முடிந்தால் நாமாகவும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுவோம். ஆனால்,
-->

Page 23
இந்துசாதனம் 8.09
நம்மிடம் உள்ள குறைகளைப் பற்றிய உணர்வே நமக்கு
இருப்பதில்லை. இந்நிலை மாறவேண்டும்.
பொதுஜன நன்மைக்காகச் செய்யப்படுகின்ற காரியங் களுக்கு எவரும் நன்றி சொல்லுவதில்லை, அதில் காணப் படுகின்ற குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதிலேயே அதீத அக்கறையுடன் இருக்கின்றோம். வேலை செய்வோரும், வேலை வாங்குவோரும், ஒருவருக்கொருவர் நன்றியுணர்வுடன் இருப்ப தில்லை. இரண்டு குழுக்கள் ஒன்றோடு ஒன்று ஒத்துழைக்க வேண்டிய நிலையிலும், ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லிக் கொள்வதில்லை. வேலை செய்வோரும் வேலை வாங்குவோரும் பரஸ்பரம் நன்றி இல்லாமல் நடந்து கொள்வதை ஒரு பழக்க மாக்கிக் கொண்டுள்ளார்கள். நியாயம் வழங்கப்படுகின்றபோது கூட நன்றி சொல்ல வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றுவ தில்லை. சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை. செய்த வேலையை அங்கீகரித்துப் பாராட்டுவதும் முக்கியமான அம்ச மாகும். அதேவேளை வேலை செய்வோரும் அர்ப்பணிப்புடனும், விசுவாசத்துடனும் வேலை செய்பவர்களாய் இருக்க வேண்டும். ஒரு நிறுவனம் வெற்றி பெறுவதற்கு, தொழிலாளர்களின் ஒத்துழைப்பு எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்து கொண்டால், நிர்வாகிகளுக்கு நன்றியுணர்வு தானாகவேவந்துவிடும்.
மனோதத்துவ நிபுணர்களும், டாக்டர்களும், தங்க ளுடைய நோயாளிகளுக்கு ஒர் ஆலோசனை சொல்லுகின்றார்கள். நோயாளிகள் தங்களுடைய நோய்களைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களாகிவிட்டனர். மற்றவர்களைப் பற்றி எண்ணு வதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. மாறாக தம்மைப் பராமரிப்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி சொல்லுகின்ற பழக்கத்தை இவர்கள் மேற்கொண்டால், நோய் குணமாவதை விரைவுபடுத்தும் என்று கருதுகின்றார்கள். இதன் மூலம் நோயாளிக்கு மனஅமைதி ஏற்படுவதுடன், தமது வாழ்க்கை பற்றிய கண்ணோட்டமும்மாறிவிடவாய்ப்புண்டு என்கின்றார்கள்.
விலைகொடுத்து வாங்க முடியாத பொருள்களில்தான், விலை மதிக்க முடியாத வாழ்க்கை அழகு இருக்கின்றது. நம்மைச் சுற்றிலும் நாம் இரசிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சூரிய உதயம், அஸ்தமனம், பசுமை படர்ந்த புல்வெளி, சிறகடித்துப் பறக்கும் பறவைக் கூட்டம், மலைகள், ஆறுகள், குளிர்நிலவு, கடற்கரைக் காட்சிகள் இவை எல்லாம்
SNS
armarnm
வாசக நேயர்களே!
தவிர்க்க முடியாத சில காரணங்களால், புற வெளியாகின்றது. அடுத்த இதழ் கார்த்திகை - ம
தைமாதத்திலிருந்து மாதமோர் இதழாக ஒழுங்கா

O. 20 கர புரட்டாதி, ஐப்பசி 01
நமக்காக இறைவனால் உருவாக்கப்பட்டு இயக்கப்படுவன. இவற்றை அனுபவித்துப் பூரிப்படைகின்றோம். நம் வாழ்வுக்கு ஆதாரமாகவும் அவை இருக்கின்றன. இதற்காக இறைவனுக்கு நாம் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டுமல்லவா?
நல்லபடி வாழ்ந்து முடிந்த முன்னோர்களதும், இப்போது வாழவழிகாட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லோரதும் உழைப்பின் மீது தான் எம்முடைய வாழ்க்கை கட்டப்பட்டிருக்கின்றது என்பதை மறந்துவிடக்கூடாது. அதனை ஒரு நாளைக்கு எத்தனையோ தடவை நாம் உணர்கின்றோம்; அனுபவிக்கின்றோம். அவர்களிடமிருந்து இப்பயனைப்பெற்றதற்கு பிரதிபலனாக நாம் எதனையும் வழங்கிவிடவில்லை. ஆனால், அவர்களுக்காக நன்றியுடையவர்களாகவாவது இருக்க
வேண்டுமல்லவா?
மற்றவர்களின் மகிழ்ச்சியால் உங்கள் இதயத்தை நிரப்பிக் கொள்ளும்போது, அது அன்பு நிறைந்த இதயமாகி விடுகின்றது. மற்றவர்களை மதிக்கின்றபோதுதான், அவர்களிடம் நம்மால் அன்பு காட்டமுடியும். அப்போதுதான் சகோதரத்துவம் தோன்றும்; மனித நேயம் வளரும். நீங்கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டுமென்றால், அடுத்தவர் களுக்கு உதவிசெய்யுங்கள். அடுத்தவருக்கு உதவிசெய்யமுடியா விட்டாலும் கூடப் பரவாயில்லை. ஆனால் யாரையும் புண்படுத்தி விடாதீர்க்ள். ஒவ்வொருவரும் கடவுளின் குழந்தைகள். கடவுளின் குழந்தைகட்கு தொண்டு செய்யும் பாக்கியம் இருந்தால், அவர்களுக்கு தொண்டு செய்வதன் மூலம், ஆண்டவனுக்கே நீங்கள் தொண்டு செய்தவர்களாகின்றீர்கள். அதன்மூலம் நீங்கள் பாக்கியம் பெற்றவராகின்றீர்கள். இந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்கு சந்தர்ப்பமளித்த அந்த உள்ளங்களுக்கு நன்றி சொல்லும் மனப்பக்குவம் உங்களுக்கு ஏற்படவேண்டும். அப்போது ஆண்டவனால் ஆசீர்வதிக்கப்பட்டவராகின்றீர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். உலகத்தைவிட மிகப்பெரியதாக மதிக்கப்படுவது, காலம் அறிந்து ஒருவர் செய்யும் உதவியேயாகும். "காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது" என்பது குறளமுதம். இவ்வாறான உதவிகளைப் பெற்ற பின்பும் நன்றியுணர்வற்றவர்களாய் வாழ்பவர்களுக்கு ஒருபோதும் உய்வில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும்
உணர்வோமாக, மற்றவர்களுக்கும் உணர்த்துவோமாக. 人
22/SN22
ட்டாதி, ஐப்பசி மாதங்களுக்குரியதாக இந்த இதழ் ார்கழி மாதங்களுக்குரியதாக வெளியாகும். 2012
க வெளிவரும்.
நிர்வாகி
இந்துசாதனம். Eਜ-----
3

Page 24
இந்துசாதனம் 18. O9,
Goddess Abhairami's Ble
Prof. A. Sanmugada.
Abhiramimeans 'She who is attractive every
moment of time'. This goddess is believed to be extremely powerful and fulfills the wishes of all her devotees. Abirami Bhattar sang 100 stanzas in praise of Abhirami. Each Stanza is a gem of poetry in itself. The language is lucid and rhythmic. The 69" Stanza lists things that Goddess Abhirami would bestow on Her devotees:
தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமிகடைக் கண்களே.
Sweet Scented flower haired Abhirami's,
Slanting sight of the beautiful eyes
Will bestow great wealth knowledge
Will give a mind that nevertires, and
Godly beauty
Will give all that is considered good,
Will give strength to Her devotees.
What is striking here is the priority of the boons listed. The first one is wealth. It makes us think that even the Divinity gives importance to wealth. Abhirami Bhattar seems to be a realistic devotee and poet. In this world, as we see, wealth plays the important role in all affairs. The great Tamil
Classical text Tirukkural (25:7) says.
அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு இவ்வுலக மில்லாகியாங்கு.
தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த இதழில் இடம் இதழில் இடம்பெறும்.
Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalf of
Printed at Harikanan Printers, No.424, K.K.S. Road, Jaffna. 18.09.10.2011 (1. 02.13202191

O. 2011 கர புறபீடாதி, ஐப்பசி 01
ssings on Her DeVotees , Ph.D. (Edinburgh)
As this World is not for those who are without
wealth, So,
That world is not for those who are without
God blessing.
Thiruvalluvar is extremely realistic. But Abhirami Bhattar, though realistic in mentioning the wealth first, has listed knowledge next. The wealth has to be handled intelligently. If it is handled well, it will give peace and plenty to this world. Knowledge
will handle the wealth properly.
Abhirami Bhattar Says that Goddess Abhirami's Slanting sight gives all such boons. When we go along the road we see many people and we just have a casual straight look at them. But we sometimes would like to have a special look at a person. At this moment we usually have a slanting look at him or her. Here Goddess Abhirami has a special look at her devotees. The Slant sight of her beautiful eyes bestow on Her devotees wealth, knowledge, untiring mind, Godly beauty, true
friends, all that are good and strength.
Unlike Abhirami Bhattar, the Vaishnavite Alwar Thirumankai Mannan lists Wealth as the
Second boon that Lord Vishnu Would bestOW on His devotees. His hymn begins as "goofig (5th Glais) in 5jSG)." For Thirumankai Alwar the clan relationship seems to be important and wealth
comes only at the second place.
பறாத "நாவர்ை சரிதமோதும் நற்றமிழ் மாலை" அடுத்த
-ஆசிரியர்
the Saiva Paripalana Sabai, No.450, K.K.S. Road, Jaffna & Day of Puraddathiththingal & lyppasiththingal). Phone: 021222 7678,