கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்காவனம் 2011.12

Page 1
கலை இலச்
est Queen
 
 

க்கிய சமூக சஞ்சிகை Foundation 666fuf(6

Page 2
With Best Compliments From:-
c. 蕴藉
GOAZAUL ab EYNXMAS” Κέ 8ν PaisTTItS LaTYKA Or'VL) Lto.
OKRESLEXO SOU AFRYKIEM O
ammonweaweespearsagy*****w
No. 5, Noei Mendis Mawatha, Modarawila industrial Estate, Panadura. Tel : (0382240040 / 5,03855998008, Fax: 038 2240046
S-Frai : bluxu tnet.lk Web : www.causewaypaints.com
Causeway Paints - %a rare/
With Best Compliments From:-
EVE STARTEXTOLESCENTRE WHOLESALE & RETAILTEXTILE DEALERS
No. 95, 2nd Cross Street, Colombo - 11, Sri Lanka. Tel:- 011 2441810, 2345280, 2441809 |Fax :- 94 - 1 - 2345184 / 2582453 E-mail:- shafeeka(asltnet.lk
With Best Compliments From:- J.P. Jayaram J.P
9 JANYANIRANMEBROMLEDERS "P"
DEALERS IN JUTE GUNNY BAGS, TEACHEST, TWINE & POLY THENE IMPORTERS OF ALL TYPE OF JUTE ITEMS, PAPER, INDIAN'S, CHINESE, JAPANE'S CELLOPHANE
Address : 118/7, S.R. Saravanamuthu Mw, (Wolfendhal Street), Colombo - 13, Sri Lanka.
: 011 2445615,2348430, 2345099,2345142 Fax 94 - 11 - 2330164 E-mail : Jayaramb(aslt.net.lk
 
 
 
 
 
 

Best Queen Foundation வெளியீடு
பூங்காவனம்
இதழ் 07 - 2011 டிசம்பர்
ISSN 2012 - 6700
ஆசிரியர் குழு
ரிம்ஸா முஹம்மத் எச்.எப். ரிஸ்னா டப்ளியு.எம். வஸிர்
ஆலோசகர்
திருமதி. ஐரீனா முஸ்தபா
Commercial Bank, Mount Lavinia Branch, Best Queen Foundation, A/C No - 893.001677.
எண் ற இலக் கத்திற்கு காசு, காசோலைகளை வைப் பிலிட்டு அவற்றின் பற்றுச் சீட்டுக்களையும்,
(M.F. Rimza - Dehiwala Post Office) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.
தனிப்பிரதி - 80/
தபால் மூலம் - 100/= வெளிநாடு - 2.5S
தொடர்புகளுக்கு
"Poongavanam"
21 E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.
Email:- bestcqueen 12G)yahoo.com
Website: w.bestoueen12.blogspot.com
Phone:- O094 (0) 77 5009 222 O094 (0)714403251
புதிய ஆக்கங்களும், இச்சஞ்சிகை பற்றிய
விமர்சனங்களும்
எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனத்துக்கு அனுப்புபவர்கள் நூலின் இரண்டு பிரதிகளை
அனுப்ப வேண்டும்.
- - - - - - - - - - - J60dLJ35(6H5(gö படைப்பாளிகளே பொறுப்பு. செவ்வைப்படுத்த ஆசிரியர் குழுவுக்கு

Page 3
பூங்காவன ஐg 02
இதழ் 7
விளுள் ஒருநிமிலدر
வல்ல இறைவனின் மேலான அருளாலும், நாம் வரமாக பெற்ற நம் வாசக உள்ளங்களின் அன்பினாலும் ஊக்குவிப்பாலும் பூங்காவனம் ஏழாவது இதழை வெளியிடுவதில் நாம் மிகவும் மகிழ்வுறுகிறோம்.
கல்வி கற்கும் உரிமை இன்று இருபாலாருக்குமானதாக இருக்கும் இந்த யுகத்தில், சிறுவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக பல விடயங்கள் அறியக் கிடைக்கின்றன.
பாடசாலை பிள்ளைகளை வீடுகளிலும், கடைகளிலும் வேலைக்கு விட்டுவிட்டு பெற்றவர்கள் படும்பாடு அன்றாடம் பார்த்தும் கேட்டும் அறிந்து வருகிறோம். இலங்கையின் அனைத்து பாகங்களைச் சேர்ந்த பல சிறுவர்கள் தலைநகரின் பெரும்பாலான தொழிற்சாலைகளிலோ அல்லது வீடுகளிலோ வேலைக்கு அமர்த்தப்பட்டிருப்பது ஜீரணிக்க முடியாத உண்மையாகும்.
வறுமை நிலை காரணமாக அதிகரித்திருக்கும் இந்த சீரழிவு தொடருமேயானால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். அதனால் காசுக்காக பிள்ளைகளை வேலைக்கு அமர்த்தியிருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறார்கள் இரவுநேரப் பணிகளிலும் மாடாக உழைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். சிறுமிகளோ வீட்டு எஜமானர்களின் வக்கிர எண்ணங்களுக்கு வடிகால் ஆகின்றனர். இவ்வாறான துரதிஷ்டங்கள் நிகழ்ந்து முடிந்த பின் கண்ணிர் வடித்து என்ன பயன்? கைது செய்து என்ன பயன்?
வெள்ளம் வந்த பின்பு அணை கட்டுதல் வடிகட்டிய முட்டாள் தனம், ஆகவே பாதுகாப்பற்ற நிலையில் தத்தமது பிள்ளைகளின் கல்வியையும், வாழ்க்கையையும் சீரழித்து விடாதிருக்க பெற்றார்கள், வளர்ந்தோர்கள் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.
ஏழைப் பிள்ளைகளின் கல்விக்காக தனவந்தர்கள் உதவ முன்வர வேண்டும். கல்வியுடன் இணைந்த சிறந்த வாழ்க்கை முறையை இந்த இளம் சமுதாயத்தினருக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவர்களது வாழ்வில் சந்தோஷம் மலர நாம் அனைவரும் உதவிட வேண்டும்!!!
ஆசிரியர் குழு
aে) இலக்கிய Joup, சஞ்சிகை
 
 
 
 

நேர்காணல்
திருமதி. ராணி சீதரன்
கவிதைகள்
பதுளை பாஹிரா கவிப்ரியன் என். சந்திரசேகரன் எச்.எப். வளமா எஸ். சாந்தி
கவிமலர்
ஆவழிகா வெலிப்பன்னை அத்தாஸ் புலோலியூர் வேல்நந்தன் மன்னார் அமுதன் ஷெல்லிதாசன்
சிறுகதைகள்
மருதூர் ஜமால்தீன் சூசை எட்வேட் மொஹமட் அஸாம் எஸ்.ஆர். பாலசந்திரன் இக்ராம் எம். தாஹா ஏ.சீ. ஐரீனா முஸ்தபா
கட்டுரைகள்
கவிஞர் ஏ. இக்பால் எம்.எஸ்.எம். சட்ரி
நூல் மதிப்புரை தம்பு சிவா ரிம்ஸா முஹம்மத்
வாசகர் கடிதம்
நூலகப்பூங்கா

Page 4
JĖTAEIGNiGolb
சந்திப்பு ; வெலிகம ரிம்ஸா முஹம்மத் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
"சொற்கள் வீச்சாக வந்து விழுந்து, உணர்வுகளைத்
தட்டிவிடும் வல்லமை பெறும்போது அந்தப்படைப்பு நெஞ்சில் நிலைத்து விடுகிறது”
உங்களது எழுத்துலக பிரவேசம் பற்றிக் கூறுங்கள்?
நான் 09 ஆம் வகுப்பில் படிக்கும் போது முதன் முதலில் வேதனை என்ற சிறுகதையை எழுதினேன். நிறைய கவிதைகள் எழுதுவதுடன் கவியரங்குகள், பேச்சுப் போட்டிகள், நாடகம், விவாதம் போன்றவற்றில் பங்குபற்றி இருக்கிறேன். இவற்றை விடவும் சிறுகதை, மர்ம நாவல், துப்பறியும் தொடர் என்பவற்றை விரும்பிப் படிப்பேன். இவற்றினால் எனது இலக்கியப் பிரவேசம் வித்திட்டதாக &nՈ3 (ԼՔlգավtք.
எழுத்துலக முன்னோடிகளாக நீங்கள் யாரைக் கொண்டுள்ளிர்கள்?
புதுமைப் பித்தனின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். ஜெயகாந்தன், மெளனி போன்றோரின் கதைகளையும் விரும்பிப் படிப்பேன்.
உங்களைக் கவர்ந்த படைப்பாளிகளின் தாக்கம் உங்களின் படைப்புக் களில் பிரதிபலிக்க வேண்டும் என நீங்கள் எதிர் பார்க்கிறீர்களா?
ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட எனக்கு பிடித்த எழுத்தாளர்களுடன் இன்னும் ஜானகிராமன், அம்பை, வாசந்தி, தாமரைச் செல்வி, நந்தி என்போரின் மொழிநடையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் நான் எனது பாணியில் எழுதவே விரும்புகின்றேன்.
љорао இலக்கி ՑՒ(1935 சஞ்சிகை
 
 
 
 
 

05
இதுவரை நீங்கள் வெளியிட்டுள்ள நூல்களை பட்டியல் படுத்திக் கூறுவீர்களா?
மாங்கல்யம் தந்து நீயே - 1வது சிறுகதைத் தொகுதி (1999) தேன் சிட்டு - சிறுவர் பாடல் (2000)
கன்னியாதானம் - 2வது சிறுகதைத் தொகுதி (2001)
நடுகல் - 3வது சிறுகதைத் தொகுதி (2002)
இலக்கியக் கட்டுரைகள் (2005)
நிலவும் சுடும் - 4வது சிறுகதைத் தொகுதி (2010)
இது தவிர பாடசாலை மாணவர்களை முன்னோக்கியதாக தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், வினாவிடை, செய்யுள் இலக்கியம் போன்ற தொகுதிகளையும் வெளியிட்டிருக்கிறேன்.
இத்தகைய புத்தகங்களை வெளியிட மிகவும் சிரமப்பட்டிருப்பீர்கள். அச்சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஆதரவாய் இருந்தவர்கள் பற்றி என்ன சொல்வீர்கள்?
எனது இலக்கிய முயற்சிகளில் எனக்கு உதவுவதிலும், ஊக்குவிப்பதிலும் முன் நிற்பவர் எனது கணவரே. எதிர்நோக்கும் சிரமங்களுக்கும் அவரே முகம் கொடுப்பார் என்று கூறலாம். அடுத்து இலக்கிய நண்பர்கள். அவர்களைத் தவிர எனது ஆக்கங்களை வாசித்து தட்டிக்கொடுக்கும் ஆசிரியர்கள் போன்றோரையும் குறிப்பிடலாம்.
ஆசிரிய பணிகளுக் கடையரிலி , குடும் பப் பொறுப் புக் களையும் வகத்துக் கொணி டு இலக்கியத்தில் ஈடுபடுவதை நீங்கள் என்றாவது சிரமமாக நினைத்திருக்கின்றீர்களா?
எனது பொறுப்புக்கள், கடமைகள் என்பவற்றோடு படைப்பு முயற்சிகளுக்கு நான் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கின்றேன். என்னை அழுத்தம் சுமைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழியாகவும் இலக்கியம் இருப்பதாக நான் உணர்ந்ததால் இந்த எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகின்றேன்.
உங்கள் மகளான கீர்த்தனி சீதரன், இலக்கியத் துறையில் ஆர்வம் காட்டி வருவது பற்றி யாது கூறுவீர்கள்?
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 5
06 ---
பூங்காவ
நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். இவர் பல்கலைக்கழக சஞ்சிகைகளில் எழுதி வருவதோடு ஞானம் சஞ்சிகையிலும், தினக்குரல் பத்திரிகையிலும் கவிதைகளை எழுதி வருகின்றார். அவரது படைப்புக்களை என்னுடன் பகிர்ந்து
சரிபார்த்துக்கொள்வார். தற்போது நிறைய கவிதைகளை எழுதியிருக்கும் அவர் கவிதை நூலொன்றை வெளியிடும் இக்க்ட்லர் எண்ணத்திலிருக்கிறார்.
சிறுகதைகளுக்கான கருப்பொருளை எவ்வாறு பெற்றுக் கொள்கின்றீர்கள்?
assofo go3-2. .. .
எனது சூழலில் நடக்கின்ற நிகழ்வுகளை வைத்து நான்
சிறுகதைகளை எழுதி வருகிறேன். எனது நண்பர்கள்,
உறவினர்கள், தெரிந்தவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட
அனுபவங்கள் மனதைப் பாதிக்கும் போதும் எனது
கதைகளுக்கான கருப்பொருள்களை பெற்றுக் கொள்கிறேன்.
உங்களுக்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்கள், பரிசுகள் பற்றி சொல்லுங்கள்?
* அகில இலங்கை உலக ஆசிரியர் தினப் போட்டியில் கவிதைக்கான
பரிசும், பாராட்டும்
* திருகோணமலை சாகித்திய விழா போட்டிகளில் சிறுகதை, கவிதை
என்பன முதலாமிடம் பெற்றமை
* தகவம் அமைப்பின் சிறுகதைத் தெரிவில் பாராட்டு
சிறுகதைகளின் இன்றைய போக்கு பற்றிய உங்கள் கருத்து யாது?
பலர் சிறுகதை உலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளனர். சிறந்த எழுத்து ஆளுமை, கருப்பொருள் தேர்வு, படைப்பு நுட்பம், வாசிப்பு பயிற்சி போன்றவற்றில் கவனம் தேவை. காலமாற்றத்தைக் கருத்திற்கொண்டு பல புதிய கருப்பொருள்களோடு படைப்புக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெளிவர வேண்டும்.
நாவல்கள் படைப்பதில் நீங்கள் ஆர்வம் காட்டி வருகின்றீர்களா?
நாவல்கள் இரண்டை நான் எழுதியிருக்கிறேன். இன்னும் வெளியிடவில்லை. சிறுகதையின் மூலம் ஏற்படுத்தும் தாக்கம் நாவலை விட அதிகமானது என்பதால் சிறுகதையிலேயே எனது கவனம் உள்ளது.
கலை இலக்கிய சமூக சஞ்சியை
 
 
 
 
 

07
ஒரு படைப்பாளியின் திறமை எவ்வாறு கணிப்பிடப்படுகின்றது என நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஒரு படைப்பு உயிர்த்துடிப்பு பெற வேண்டுமானால் படைப்பாளியின் எழுத்து வாசகனோடு பேச வேண்டும். அவனைத் தனித்துவப்படுத்துவதும், வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதும் எழுத்தை ஆளும் தன்மை என்றுதான் கூற வேண்டும். படைப்புக்களில் சொற்கள் வீச்சாக வந்து விழுந்து உணர்வுகளைத் தட்டிவிடும் வல்லமை பெறும்போது அந்தப் படைப்பு நெஞ்சில் நிலைத்துவிடுகிறது.
நீங்கள் பெண் எழுத்தாளர் என்ற வகையில் பெண்ணியம், பெண் மொழி பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
பெண்களின் பிரச்சனைகள், அழுத்தங்கள் பற்றி பெண் படைப்பாளிகளால் வெளியுலகுக்கு கொண்டு வரப்படுவதோடு இப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற தடுப்புச் சுவர்களுக்குள் நின்று சொல்வதை விடுத்து இயல்பு நிலையை யதார்த்தபூர்வமாக சித்தரிப்பது படைப்புக்களின் காத்திரத் தன்மையை பிரதிபலிப்பதாக அமையும்.
எழுத்துலகில் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?
மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய உள்ளன. அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாக எனது சிறுகதையொன்று இலக்கியத் திருட்டுக்கு உள்ளானதைக் குறிப்பிடலாம். பிறந்த மண் என்ற எனது சிறுகதை பொன் - பரன் என்பவரின் பெயரில் 2004 ஆம் ஆண்டு ஒரு பத்திரிகையில் வெளிவந்திருந்தது. எனது கணவர் அதை வாசித்துவிட்டு, 'இந்தக் கதையை வாசித்துப் பாரும். உமது கதை அல்லவா? என்றார்.
நான் அதை வாசித்துவிட்டு அதிர்ச்சியடைந்தேன். ஒரு சொல் கூட மாற்றம் இல்லாமல் அப்படியே பொன் - பரன் என்ற பெயரில் எழுதியிருந்தார். அதன் பின் குறிப்பிட்ட பத்திரிகையோடு தொடர்புகொண்டு கேட்ட பொழுது தவறு நடந்து விட்டது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினர்.
உங்களுக்குக் கிடைத் த எழுதி துலக நண்பர் களில் மனசைத் தொட்ட நண்பர்கள் பற்றி கூற முடியுமா?
ஆம். ரூபாராணி ஜோசப் அவர்கள் சிறந்த பல்வகை ஆளுமையுள்ள எழுத்தாளர். பல துறைகளிலும் கால் பதித்தவர். இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் உள்ளவர், மாணவர்களையும்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 6
இலக்கியத் துறையில் ஊக்குவித்தவர். அவர் எனது ஆக்கங்களை விரும்பிப் படித்துவிட்டு விமர்சிப்பார். அது மட்டுமல்ல. கண்டியில் நடைபெற்ற கலை விழாவிலே என்னையும் அழைத்து கெளரவித்தார்.
'இதெல்லாம் ஏன் செய்கிறீர்கள்? இது எனக்கு பொருத்தமற்றது” என நான் மறுத்தபொழுது,
"ராணி பேசாமல் இரும், உமது பணி தொடர வேண்டும். உம்மைப் பலரும் பாராட்ட வேண்டும். இது உமக்கல்ல. இது உமது எழுத்துக்குரிய கெளரவம்" என்று சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன். அவர் மறைந்தாலும் அவரது வார்த்தைகள் என் காதுகளில் இன்னும் ஒலிக்கின்றன.
இலக்கிய விருதுகள் பற்றிய உங்கள் கருத்தினை பூங்காவனம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
விருதுகள் பற்றி எனக்கு உடன்பாடான கருத்து இல்லை. இந்த இடத்தில் கவிஞர் வில்வரத்தினம் அவர்களை ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். "ராணி நான் ஒருபோதும் சாகித்திய விருதுகளுக்காய் எழுதுபவன் அல்ல. அதற்கு ஆசைப்படுபவனும் அல்ல. நீங்களும் வீணாக புத்தகங்களை அனுப்பி சிரமப்படாதீர்கள். எல்லாம் எப்போதோ முடிந்த காரியம்” என்று கூறுவார். அது உண்மை. அதற்காக விருது பெற்றவர்தான் சிறந்த எழுத்தாளர் என்பதில்லை. தெரிவு செய்யப்படாத எழுத்தாளர் தரமற்றவர் என்ற நிலையும் இல்லை.
எழுத்தாளர் - வாசகர் தொடர்பு ஒரு படைப் பை அல்லது படைப்பாளியை மெருகேற்றும். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
எழுத்தாளர் வாசகர்களின் திருப்தியை ஆர்வத்தை மையப்படுத்தி எழுத வேண்டும். புதிய சிந்தனைகளோடு புதிய உத்திகள் பயன்படுத்தி தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பது எழுத்தாளரின் திறமை. அதற்காக வாசகர்கள் விளங்காத முறையில் எழுதுவது வித்துவத்தனமாகாது. வாசகர்களின் விமர்சனங்கள்தான் படைப்பாளியை தூக்கி நிறுத்தவல்லன. அந்த வகையில் நிறைகளைவிட குறைகளையே நான் வரவேற்கிறேன். அதை ஏற்றுக் கொள்வதனால்தான் சில கதைகளில் வாசகர்களின் கருத்தினை அனுசரித்து மாற்றங்களையும் செய்திருக்கிறேன்.
இளம் படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
அவர்கள் படைப்புலகம் பற்றியும், அதன் தேவை பற்றியும் சரியானதும் உறுதியானதுமான விளக்கங்களோடு படைப்புலகில் பிரவேசிக்க வேண்டும் என்பதையே முதலாவதாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கூறிக் கொள்கிறேன்.
را «داران رو، / ، او، لا) و ( st" " , ", " ,
 
 

பள்ளிச்செல்லும் வெள்ளைப்புறாக்களிடம் வரம் கேட்டு நிற்கும் என்னாத்மா! என்னையறியாத என்னைப்பற்றி உங்களெழுதுகோல்கள் எழுதட்டும்
எதிர்காலத்தில்!
தலைப்பில்லாத தலைமுறைகளின் தலையெழுத்தும், தலைச்சுமையும் வழிமுறைகளின் சாபமா. பலிகளும் வடுக்களும் பாதையின் பக்கங்களை சிதைத்திடும் நாகமா?
அள்ளிவரும் காற்றின் காலடியில் உயிர் மூச்சுக்களின் (LTTF Essl B6i கையேந்தியபடி
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
ன்று நபகும்
அமாவாசை இருளுக்குள் சுவாசம் எழுதப்பட்டதாக நரகத்தின் மொழியிலே வாசிக்கப்படுகிறது நித்தமென் இருப்பு!
பந்தியில் சேர்க்காத கறிவேப்பிலைகளாக நிந்திக்கப்படுகிறோம் வரலாற்று ஏடுகளில்!
பல சமாதிகளின் சத்தங்கள் என் மனப்படுக்கையிலே GLD6ir 60) Du JT60s தினக்குறிப்புகள் அழுத்தமான ரணங்களின் வலியால்
துடித்தழும்!
ஏக்கங்கள், எதிர்பார்ப்புக்கள் எனக்குள்ளே சமாதியாகி தூக்கக் கனவுகள் கூட தாக்கத்தால் துக்கித்தழும்!
தெருவெங்கும் எங்கள் பட்டம் மட்டம் தட்டப்படுவதால் தெருப்புழுதியுடன் மிதிபட்டு மதிப்பற்றுப்போகும்!
உயிர்ப்புகளின் விலை அன்பைத்தேடி அகங்களைத் தட்டினால் சினங்கள் வெட்டும் வார்த்தைகள்!
அநாதையெம் அகவெளி மேடையிலே
துன்பராகத்தின் இசையே தொடராயொலிக்கிறது!!!
- பதுளை பாஹிரா

Page 7
R jä s 10 - - - - - -
கடவுளின் நிலம் நூல் வெளிfழல்
|தம்பு சிவா
நூல் கடவுளின் நிலம் ஆசிரியர் : இளைய அப்துல்லாஹற் வெளியீடு : விஸ்வசேது இலக்கியப் பாலம்
இலங்கையிலிருந்து வெளிவந்துகொண்டிருக்கின்ற முன்னணி தமிழ்ப் பத்திரிகைகளில் தொடர்ந்து கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதி எல்லோராலும் அறியப்பட்ட இளைய அப்துல்லாஹற். கடவுளின் நிலம் என்னும் பத்தி எழுத்துகளின் தொகுதியை முன்வைத்துள்ளார்.
எழுதத் துண்டியதோடு, தமது எழுத்துக்களை அதிகமாக விரும் பிய சுடர் ஒளி ஆசிரியர் பத்மசீலனுக்கும், எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவுக்கும் எனது இந்த நூலை மனதாரச் சமர்ப்பிக்கின்றேன் என்று கூறியிருப்பது அவரது நன்றி மறவாப் பண்பை எடுத்துக் காட்டுகின்றது.
ஒரு எழுத்தாளன் சமுதாயத்தைப் பார்க்கும் பார்வைக்கும், ஒரு சாதாரண மனிதனின் நோக்குக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கச் செய்யும். அந்த வகையில் இளைய அப்துல்லாஹற் அவர்களின் சமுதாய தரிசனங்கள் அவருக்கே உரித்தான தனித்துவம் வாய்ந்தவையாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
சொல்லவந்த பொருளை மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அதே வேளை அவர்களின் சிந்தனையைத் தூண்டுகின்ற வகையில், அவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் அமையும் போது அந்த எழுத்துக்கு ஒரு தகுதி இருக்கும். தரம், தகுதி என்ற சொற் பதங்களை நோக்கும்போது ஒரு எழுத்தாளன் எண்ணிப் படைப்பதோ அல்லது ஒரு விமர்சகன் அந்தப் படைப்பை நோக்கிச் செல்வதோ அல்ல. வாசகர்களே உண்மையான விமர்சகர்கள் என்பதைப் படைப்பாளிகள் கவனத்திற்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அந்தப் படைப்புக்கள் மக்கள் மயப்பட்டதாக இருக்கும்.
அநேகமான எழுத்தாளர்கள் பார்வையாளர்களாக மட்டுமே நின்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அந்த எழுத்துக்களில் உண்மைத் தன்மை அதாவது யதாரத்தப் போக்கைக் காண முடியாது. பங்காளிகளாக இருந்து கதை மாந்தர்களின் உண்மையான வாழ்க்கை முறையில் தரிசித்த தரிசனங்களைச் சொல்வதற்கும், வெளியில் நின்று கொண்டு சொல்வதற்கும், நிறைய வேறுபாடு இருப்பதை அவதானிக்கலாம். இந்த இடத்தில் ஒரு மார்க்ஸிய முற்போக்கு எழுத்தாளர் நாமக்கலைச் சேர்ந்த சின்னப்ப பாரதியைப்
| дворо இodig சமூக சஞ்சிகை WMWWWWM
 
 
 
 

பற்றி ஒரு முன்னோட்டம் தரலாம் என எண்ணுகிறேன். அவர் பல நாவல்களைட் படைத்திருந்த போதிலும் நான் படித்த நான்கு நாவல்களைப் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன். தாகம், சங்கம், சர்க்கரை, சுரங்கம் ஆகிய நாவல்களை எழுதுவதற்கு முன்பு களப்பணி அடுத்துத்தான் எழுத்துப்பணி, கொங்கு நாட்டு ஏழை விவசாய மக்களுடன் ஒன்றாக வாழ்ந்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்குபற்றி அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு தாமும் முகங்கொடுத்து, நிலச்சுவாந்தரின் சுரண்டலுக்கு உள்ளான ஏழை விவசாயத் தொழிலாளர்களை முன்னிறுத்தி தாகம் என்ற நாவலைப் படைத்தார். அதே போல மலைவாழ் மக்களுடன் வாழ்ந்து சங்கம் என்ற நாவலையும், கரும்புத் தோட்ட விவசாயிகளின், தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி சர்க்கரை என்னும் நாவலையும், மேற்கு வங்காளத்திற்குச் சென்று அங்குள்ள சுரங்கத் தொழிலாளர்களுடன் வாழ்ந்து உயிரைப் பணயம் வைத்து 1500 அடி ஆழத்தில் சென்று சுரங்கத் தொழிலாளர்களின் தொழில் கஷ்டங்களை அறிந்து சுரங்கம் என்ற நாவலையும் படைத்தார்.
இவரது நாவல்கள் ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகளாவிய ரீதியில் அவரைச் சிறந்த படைப்பாளியாக இனங்காட்டியிருக்கிறது. சிங்கள மொழியிலும் அவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்பொழுது இலங்கை மலையக மக்களின் வாழ்க்கைக் கோலங்களை வந்து வந்து தரிசித்துச் செல்கின்றார். அந்த மக்களைப் பற்றிய நாவலும் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
செம்மீன் நாவல் எழுதிய தகழி சிவசங்கரப்பிள்ளை கடல் வாழ் மக்களின் குடியிருப்பில் தங்கியிருந்து அம்மக்களின் பிரச்சளைகளை அறிந்து தமது படைப்பை முன்னிறுத்தினார். இன்றும் அவரது எழுத்துக்கள் பேசப்படுகின்றன.
இலங்கையைப் பொறுத்தளவில் கொழும்பில் இருப்பவர் யாழ்ப்பாணத்தைப் பற்றிய கதையையும், வவுனியாவில் இருப்பவர் மலைநாட்டைப் பற்றிய கதையையும், மட்டக்களப்பில் இருப்பவர் கொழும்பைப் பற்றிய கதையையும் எழுதிக் கொண்டு தாங்களும் எழுத்தாளர் என்று இனங் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கற்பனையின் உச்சத்தையும். சில எழுத்துக்கள் சொல்லி நிற்கின்றன. மண் வாசனையுடனான யதார்த்த படைப்புக்களே என்றும் நிலைத்து நிற்கும் என்பதை இவர்கள் உணராமல் இருப்பது ஆரோக்கியமான இலக்கிய பங்களிப்பு ஆகாது.
'நான் எனக்குத் தெரிந்ததை மட்டும்தான் எழுதுகின்றேன். எனக்குத் தெரியாதவற்றை ஒருபோதும் எழுதுவதில்லை. அதனால் எனக்கு எழுதுவதில் எந்தவித சிரமமும் இருப்பதில்லை’ என்று மார்க் ஸிம் கோர்க்கி சொல்லியிருப்பது இந்த இடத்தில் பொருத்தம் என எண்ணுகின்றேன்.
களப்பணியும், எழுத்துப்பணியும் கொண்ட ஒரு எழுத்தாளராக நண்பர் இளைய அப்துல்லாஹற் தம்மையும் இனங்காண வைத்துள்ளார். இந்தப் பின்னணியில் நண்பர் இளைய அப்துல்லாஹ் அவர்களின் கடவுளின் நிலம் பற்றி நோக்கலாம் என எண்ணுகின்றேன். புலம்பெயர்ந்து வாழுகின்ற எழுத்தாளர்கள் சுதந்திரமாக எழுதக்கூடியவர்களாக இருப்பதால் அவர்களது எழுத்துக்களில் உண்மையை உணர முடிகிறது.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 8
பூங்காவனம்
இந்நூலாசிரியர் பற்றி பதிப்பாளர் வி. ஜிவகுமாரன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 'மக்களுக்கு மிக அருகே நின்று அவர்களது வாழ்வின் ஏற்ற இறக்கங்களைப் பார்த்த அனுபவம் அவருக்கு இன்று மிகவும் கைகொடுத்திருப்பதை நன்கு கவனிக்கக் கூடியதாக இருந்தது. இவரது கட்டுரைகள் இன்றைய சகாப்தத்தின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலில் 42 தலைப்புக்களில் எழுத்தாளர் இளைய அப்துல்லாஹற். தனது மனப் பதிவுகளை முன்வைத்துள்ளார். மரணத்துக்கு அண்மித்து. 29 ஆகஸ்ட் 2005 இலங்கையின் ஊடகத்துறை சார்ந்தவர்களுக்கு உள்ள சவால்களையும், அவர்களின் ஆபத்தான நிலையையும் நேரில் கண்ட அனுபவத்தின் ஊடாக வெளிக்காட்டி இருக்கும் விதம் நெஞ்சை நெருடுவதுபோல் உள்ளது. ஒரு உண்மைச் சம்பவத்தை, ஒரு கதை சொல்லும் விதமாக சொல்லிய விதமும், எழுதியிருக்கும் எழுத்தும் வாசகரின் மனதில் பதியும் படியாக உள்ளது. ஆபத்திலிருந்து மீண்ட அந்த உணர்வு யதார்த்தமாக பிரதிபலிக்கின்றது.
மறதி எனும் சத்திராதி என்ற தலையங்கத்தில் நாம் பட்ட, படப்போகும் அவலங்களை பல வடிவங்களில் நாகுக்காகச் சொல்லியிருப்பது நெஞ்சை உறுத்துவதுடன், சிந்திக்கவும் வைத்துள்ளது. செலவு மிகுந்த மரணம் எனும் கட்டுரையில் லண்டன் வாழ்க்கையின் நிலவரங்களைச் சொல்லும்போது இடியப்பச் சிக்கலைவிட மேலான சிக்கல் லண்டனில் இருக்கிறது என்று கூறியுள்ளார். வசதியாக வாழ்ந்த பெண்கள் லண்டன் மாப்பிள்ளையை விரும்பித் திருமணம் செய்து ஆடம்பரமாக வாழ நினைப்பதும், அதனால் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகளுக்கு கட்டியவன் படும்பாடும் - இரண்டு குடும்பங்களை உதாரணத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.
இறந்தவர்களுடன் உரையாடல் ஒரு கட்டுக்கதை. இது ஒரு மூடக் கொள்கை. ஏமாந்தவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் என்ற இந்த விஞ்ஞான உலகத்திலும் பலரைக் காணும் போதும் வேதனை தருகிறது. கல்யாணம் என்னும் பெரும் செலவு என்ற கட்டுரையில் கல்யாணம் மற்றும் சடங்குகளுக்கு எம் மக்கள் ஆடம்பர செலவுகள் செய்வதையும், திருமணத்தின் அர்த்தம் புரியாமல் வாழ்க்கையைத் தொலைத்து நிற்பவர்களையும் எடுத்துக் காட்டி அவர்களுக்கான பரிகாரமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
லண்டனில் பொற்றோல் ஸ்டேஷன் அதை ஒட்டி நடைபெறும் திருகுதாளங்களையும், வேலைப் பளுவையும் தமது அனுபவத்தினூடாக வர்ணனையுடன் சுட்டிக் காட்டியுள்ளார். பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்ட அருமை ஜெயந்தி என்ற தலையங்கத்தில் லண்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒரு பெண்ணின் வரலாறு கூறப்பட்டுள்ளது. அதைப் பேட்டி என்று குறிப்பிட்டுள்ளார். அடியாத மாடு படியாது என்னும் தலைப்பில் இரண்டு விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. ஒன்று எமது பெற்றோர்கள், தாம் வாழ்ந்த சூழல் அல்லது விதம் பற்றிய அறிவு தொடர்பான எந்த வித
ஷமில்லாமல் இருக்கிறார்கள். அன்புடனான பரிவு எம்மிடையேயுள்ள அதிகமான பெற்றோரிடம் காணப்படுவதில்லை. இந்தப் பரிவை அல்லது
, , , , , , ,i, fii 131
 
 

13
அன்பை ஒரு தெளிவை ஐரோப்பியரிடம் கண்டிருக்கிறேன் என்கிறார். மற்றது சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியது. இந்த இடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டேயாக வேண்டும். யாழ்ப்பாணப் பெற்றோர்களில் அநேகமானவர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் பெரும் அக்கறை காட்டி வந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. மற்றது சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு முக்கிய காரணங்களாக இருப்பவை வறுமை, வாழும் சூழல், போதைப் பொருள் பாவனை, பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமை என்பனவாகும். எமது பிள்ளைகள் மீதான கரிசனை எமக்கு வர வேண்டும் என்ற ஆசிரியரின் கூற்று வரவேற்கத்தக்கது.
புளியங்குளம் பற்றிய வாழ்க்கை அனுபவங்களை, அங்கு நடக்கும் நன்மை தீமைகளை, குளிர்த்தி போன்ற சடங்குகள் என்பவற்றை மிக அற்புதமாகப் பதியவைத்துள்ளார். ஆசிரியரின் பிறந்த மண் போலும், சனிட்டறி இந்தப் பெயருடன் தொடர்புபட்ட பூச்சி மருந்து, ஊசி போடுதல், அம்மைப்பால் குத்துதல், இளம் பிள்ளைவாத சொட்டு மருந்து போன்றவை பற்றியும் பாடசாலை மாணவர்கள் இவற்றை எதிர்கொள்ளும் சுவாரஷயமான விடயங்களையும் எடுத்துக் கூறியுள்ளார். செயற்கை விந்துகள் துள்ளும் உலகம் இந்தக் கட்டுரை செக்ஸ் சம்பந்தமான பல விடயங்களைக் கூறி நிற்கின்றது. வாழ்க்கையில் செக்ஸ் என்பது முக்கியமானது. அதைத் தத்தமது வசதிக்கேற்ப ஒவ்வொருவரும் அனுபவிக்கிறார்கள் போலும்.
பயணங்கள் அற்புதமானவை தான். ஆனால் அவற்றை எல்லோராலும் மேற்கொள்ள முடிகிறதா? பணம் படைத்தவர்கள் போல் ஏழைகளால் பயணங்களை மேற்கொள்ள முடிவதில்லை என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நோர்வே கடவுளின் நிலம் என்னும் கட்டுரையில் அந்த நாட்டின் இயற்கை அமைப்புக்கும், நாட்டின் சிறப்புக்கும் உள்ள பெருமை காரணமாக நூலாசிரியர் கடவுளின் நிலம் என்று வர்ணித்துள்ளார். இயற்கையின் கொடை என்று சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். அந்த நிலத்தில் தான் இன்று தொண்ணுற்றெட்டு உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. மிகப் பரிதாபம்.
வேலிகள் எப்பொழுதும் எம்மைப் பிரிக்கின்றனவா? கிராமத்து வேலிகளோடு சம்பந்தப்பட்ட உறவுகள் பற்றி கூற வந்த ஆசிரியர் அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் முன்வைத்துள்ளார். நகரங்களில் மதில்கள்தான் எல்லாவற்றையும் தீர்மாணிக்கின்றன என்கிறார். மாற்றங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்பது காலத்தின் தேவையாக இருக்கின்றது. கன்னிச்சவ்வும் செக்ஸ் சிகிச்சையும் எனும் தலைப்பில் ஒரு முக்கியமான விடயத்தை முன்வைத்துள்ளார். சாதி, சமயம், சாத்திரம், கன்னித்தன்மை என்று பார்க்கின்ற ஆண்கள் எல்லோருமே படு பிற்போக்குவாதிகள். மனிதம் என்னவென்று தெரியாத அறிவிலிகள், வாழுகின்ற சமுதாயம் அன்பு கொள்ளும் இரண்டு உள்ளங்களை வாழ விடுவதில்லை. இத்தகைய பிற்போக்கு சமுதாயத்திற்கு சாவுமனி அடிக்க இன்றைய இளைஞர்களும், கன்னியரும் முன்வர வேண்டும். இந்த இடத்தில் ஒன்றை கூறி வைக்க வேண்டும். ஆண்கள் எல்லோரும் கற்புடையவராக இருந்தால் பெண்கள் எல்லோருமே கற்புடையவர்களே. அலைந்துழலும் தமிழினம் என்னும் இப்பத்தியில் உள்நாட்டில் அலையும் அகதிகளைப்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 9
பற்றியும் வெளிநாடுகளுக்கு அகதிகளாக செல்லும் அவல நிலையைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
எங்கள் ஊரும் வீடும் எங்கே? வேண்டாத எண்ணங்களை விடுத்து கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம். நம்பிக்கையே வாழ்க்கையின் அர்த்தம் எனலாம். சச் கா சாம்னா உண்மையை உரித்தல் இதில் ஊடகங்கள் நடத்தும் அருவருப்பான விடயங்கள் சொல்லப்படுகின்றன. ஊடகங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று வாதாடுகின்றோம். அதே வேளை பெறப்பட்ட சுதந்திரத்தை சீரழிவான நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்துதல் நிறுத்தப்பட வேண்டும். என்ன விடயமானாலும் அது மக்களுக்கு நன்மை பயக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
கோபக்காரர்கள் சாதாரண மனிதன் பலவீனப்படும் போது கோபக்காரன் ஆகின்றான். நூலாசிரியர் தரிசித்தவர்களை இங்கே முன்னிறுத்தியுள்ளார். மனைவியின் மரணம் குடும்பத்தை நிர்வகிக்கின்ற, பெரும் பொறுப்பை ஏற்று நடத்துகின்ற மனைவியானவள் மிக முக்கியமானவளாக இருப்பதால் அவளின் இழப்பு ஈடுசெய்ய முடியாததுதான். அதேவேளை இளம் வயதிலேயே விதவையான எமது நாட்டுப் பெண்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பை எம்மவர்கள் உணர வேண்டும். ஆண் விபச்சாரர்கள் என்ற தலைப்பில் பல சம்பவங்களை சுட்டிக் காட்டியுள்ளார். இது புதியதொன்றல்ல, அன்று மற்றவர்களுக்குத் தெரியாமல் செக்ஸை ஆணும் பெண்ணும் அனுபவித்தார்கள். இப்போது பகிரங்கமாக அதை அரங்கேற்றுகின்றார்கள்.
ஐரோப்பாவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தமிழன் லண்டனிலும் அகதி, வவுனியாவிலும் அகதி. அகதி வாழ்க்கை பொருளாதார நெருக்கடியை எல்லோருக்கும் ஏற்படுத்திவிட்டது. தங்கத்தைவிட பெறுமதி பெயிண்ட்ஸ் என்ற தலைப்பில் லண்டனில் கார் ஓட்டுவது, லைசன் எடுப்பதன் கஷ்டங்களைக் கூறி உள்ளார். பேச்சு மனிசனுக்குத் துணை என்பது உளவியல் ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். அவை மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதோடு மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களாகவும் இருப்பது வரவேற்கக் கூடியதாகும். மேலும் செக்ஸ் தொடர்பான அறிவு, விபச்சாரம், காமம் போன்ற விடங்கள் சம்பந்தமானவையும் இந்த நூலில் உள்ளக்கப்பட்டுள்ளன.
எழுத்தாளர் இளைய அப்துல்லாஹ் அவர்கள் தமது அனுபவங்கள், கண்டவை. கேட்டவை, அறிந்தவை மற்றும் தமது உள்ளக் குழுறல்கள் ஊடாக பலதரப்பட்ட பதிவுகளை இந்நூலில் முன்வைத்துள்ளார். அவரது எழுத்துக்கள் யதார்த்தப் பண்புள்ளனவாக அமைந்திருக்கின்ற அதேவேளை சில விடயங்களை துணிவுடன் சொல்லியிருக்கிறார். இவை பத்தி எழுத்துக்கள் என்ற வரையறைக்குள் உட்படுத்தப்பட்ட போதிலும், சில கதை சொல்லும் பாணியிலும் சொல்ல வந்த விடயங்களுக்கு மேலதிகமான சொல்லாடல்களை சில இடங்களிலும் தந்துள்ளமையை அவதானிக்கவும் முடிகின்றது. அவரது எழுத்துநடை எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய நடையில் கையாளப் பட்டிருக்கின்றது. கடவுளின் நிலம் ஒரு தகவல் களஞ்சியமாகவும் முன்வைக்கப்பட்டுள்ளமை பலருக்கும் பயன் தரும் பதிவுகளாகும்!!!
ബ இலக்கிய ggupah, சஞ்சிகை
 
 

என் மொத்த உணர்வுகளின் ஒத்த உருவம். தவம் கிடந்து என்னைப் பெற்றவள். தவம் கிடந்தாலும் நம்மால் மீண்டும் பெற முடியாதவள்!
எதற்கும் ஈடு இணை அற்றவள். அவள்தான் என்னைப் பெற்றவள்!
எப்போதுமே - என் மொத்த உணர்வுகளில் சங்கமிப்பவள். ே எனக்கேதும் என்றால் உயிர் அலையாய் கொந்தளிப்பவள்!
கவிப்ரியன் -
வலேபொட,
எத்தனை தொலைவில் நானிருந்தாலும் - என் ജൂlതുlഖണഖ ♔ങ്ങ9 ഞഖu| அறிந்திருப்பவள்!
என்னைப்பெற தன் உயிரையே தாரைவார்க்க எத்தனித்தவள். எனக்கொன்றென்றால் எட்டி நிற்காதவள்!
என் தாயே.
உனை உவமிக்க
தரணியில் உவமை இல்லையம்மா. எதுகை மோனை வைத்தும் g) 6öı GLI(b60),Lp LIFTL. என்னால் முடியவில்லையம்மா!!!
பலாங்கொடை
மண்வெட்டி என்ன மன்னும் கூட
விரக்தியாய்
வெட்டிகளே. வெறும் வெட்டிகளே என்கிறது!
வெட்டிய மண்ணுக்கு ஒரு விதைப்பையும், விளையும் பொருளுக்கு
b6Ü6) 6ğa50)6\)60)u juq1b..
வியர்வையால் கொடுக்கும் விற்பன்னர்
கலை இலக்கிய
எம்மை மறந்து 6íJd596ujTuů வெட்டிகளே என விளிப்பது விழித்தெழச் செய்யவா?
மண்ணுக்கும்
மண்வெட்டிக்கும் இருக்கும் மனிதாபிமானம் கூட மன்னவர்க்கில்லையோ? இல்லை. நம்மவர்க்கில்லையோ??
- என். சந்திரசேகரன்
FDGB சஞ்சிகை

Page 10
கதிஜா உம்மா உறவினர் வாழ்க்கையில் பங்கம் விளைவிப்பதில் ஓர் அங்கமாக இருந்தாள். தானே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து வாழ வைப்பதாக மார்தட்டிக்கொண்டே தன்னால் வளர்க்கப்பட்ட மூன்று பெண் மருமக்களையும், இரு ஆண் மருமக்களையும் சுடு சொற்களால் சுட்டு வார்த்தை ஜாலத்தால் பிறரை நம்பவைத்து தனது அதிகாரத்தை நிறுத்தி வைத்திருப்பவள்.
அழகு வார்த்தைகளாலும் பெருமைக் கொடுப்பனவுகளாலும் அயலவர்களின் வாய்க்கு முத்திரையிட்டு தனது வரட்டுக் கொள்கைகளுக்கு நியாய முலாம் பூசி நிம்மதிப் பெருமூச்சு விடுபவள். கதீஜா உம்மாவுக்கு அவள் கணவன் மூலமாக இறைவன் ஒரு குழந்தையேனும் வழங்கவில்லை. ஆனாலும் தான் தத்தெடுத்து வளர்த்த மகனைப் படிக்க வைத்து பட்டதாரியாக்கி தனக்கேற்ற வாரிசு போலவே பகட்டான ஒரு பெண்ணையும் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தாள். தன்னால் வளர்க்கப்பட்டவர்கள், உறவினர்கள் தனக்குக் கட்டுப்பட்டு நடப்பதைப் போல தான் வளர்த்த மகனுக்கும், மருமகளுக்கும் கட்டுப்பட்டு எல்லோரும் மதித்து நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பாள்.
தனது அனைத்து நடவடிக்கைகளுக்கும் கணவனையும் உடந்தையாக்கி வைத்திருந்தாள். கணவன் சிலவேளை நியாயத்தை வழியுறுத்தினால் ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டிவிடுவதால் கணவனும் அவளது செய்கைகளைக் கண்டும் காணாதது போல் நடந்து கொள்வார்.
மனித வாழ்வில் அன்றாடம் நிகழம் சிலரின் சிறந்த சேவைகளில் சிலதை இந்த உறவினர்களுக்கு தான் செய்ததாக தனது கடந்த கால வாழ்வின் சாதனைகளாக ஒரு உரையாடலின் போது உறவினரிடத்தில் பெருமையாக ஒப்புவித்துக் காண்டிருந்தாள் கதீஜா உம்மா. குறிப்பிட்ட அந்த வேலைகளைச் செய்தது உண்மையில் வேறு நபராக இருந்தது.
"சுலைஹா நீ என்ன இப்படிக் கதைக்கிறாய்? நீ கண்டாப் போல. உனக்கு செஞ்ச உதவியெல்லாம் மறந்திட்டியா? என்று வாய்க்கு வந்தபடி பேசினாள்.
மேலுமொரு தடவை அடுத்த மருமகள் பாயிரா, கதீஜா உம்மாவின் கெட்ட குணமொன்றைச் சுட்டிக்காட்டிக் கதைத்தபோது 'இதென்னடி அநியாயம் நான் அப்பிடியான ஆளா? அல்லாஹற்வுக்கு பயந்து எவ்வளவு ஒழுக்கமா வாழுறன். இப்படியா நீ கதைக்கிறாய்? உனக்கு எவ்வளவு உதவியெல்லாம் செஞ்சிருக்கேனே. என்ட மனம் பத்துதே' என்று வசைபாடினாள்.
இன்னொரு தடவை இளைய மருமகள் மஸீதா கதீஜா உம்மாவின் தவறொன்றை உணர்த்த முயன்றபோது ‘எல்லோரும் என்னைத் தான் குத்தங் கதைக்கிற நன்றியில்லாதவளுகள்’ என்று ஆர்ப்பாட்டம் செய்தாள்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

17
கதீஜா உம்மாவின் தீய வார்த்தைகளால் விளையும் அநியாயங்களை எல்லாம் கண்டு அவளின் இளைய மருமகன் ஐ.ட்பர் மெளலவி பொறுமையுடன் சகித்துக்கொண்டிருந்தார். தனது கொள்கைகளுக்கு ஒத்துழைப்பார் என்ற எண்ணத்தில் அவரைத் தனது மருமகளுக்குத் திருமணம் முடித்துக் கொடுத்திருந்தாள். ஆனால் அவரோ அநியாயங்களைத் தவிர்த்து அல்லாஹற்வைப் பயந்து நடக்கும் இறையச்சம் மிகுந்தவர். இதனால் அவர் மீது அதிகம் கோபங்கொண்டிருந்தாலும் அதனை வெளிக் காட்டாது அவருடன் நல்ல பிள்ளை போல நடந்து கொள்வாள் கதீஜா உம்மா.
கதீஜா உம்மாவை எதிர்த்து நின்று எவரும் வெல்ல முடியாது எனத் தெரிந்துகொண்டு இஸ்லாத்தின் போதனைகள் மூலமாவது அவளுக்கு இறையச்சத்தை உண்டாக்கலாம் என்று எண்ணினார் ஜட்பர் மெளலவி. அதனால் பெண்களுக்கான பயான் (சொற்பொழிவு) நிகழ்ச்சியொன்றை தன் வீட்டில் ஏற்பாடு செய்து அயலவர்களை அழைப்பித்து சிறந்த ஆலிமா ஒருவர் மூலமாக அவர்களுக்கான பயான் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.
“சகோதரிகளே! நாம் அனைவரும் பெண்கள், இஸ்லாத்தின் கண்கள் எனப் போற்றப்பட வேண்டியவர்கள். பெண்களுக்கான இஸ்லாம் போதிக்கும் கடமை என்ன என்பதை இன்று அநேகர் உணர்வதாக இல்லை. இதனால் சமூகத்தில் அதிகமான உறவுகள் பாதிக்கப்படுகின்றன. பிறரைக் கோள்மூட்டுதல், புறம் கூறுதல், சண்டையிடுதல் போன்ற தீய நோய்கள் எம்மிடம் அதிகம் தொற்றியுள்ளது. அவற்றை நாம் அகற்றி வாழும்போதே அல்லாஹற்விடம் சிறந்த பெண்மணியாக மாறுவோம். அயலவர்களுடன் ஒற்றுமையாக வாழ முற்பட வேண்டும்'.
“சகோதரிகளே! தீய குணமுடைய அண்டை வீட்டாரின் நற்செயல்கள் அழிக்கப்பட்டுவிடும். அண்டை வீட்டாருக்கு நோவினையளிப்பவர்களின் நற்கருமங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால் நற்செயல்கள் அனைத்தும் ஈமான் (நம்பிக்கை) என்ற தூணின்மீதே நிர்மாணிக்கப்படுகின்றன. எனவே தீய செயல்களை வாழ்க்கையாக்கிக் கொண்ட ஆணோ, பெண்ணோ அத்தகையவர்களுக்கு ஈமான் இருக்க முடியாது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. ஈமான் அற்றவர்களின் எந்த நற்செயலையும் அல்லாஹற் அழித்துவிடுவான் என்பது மிகத்தெளிவான விஷயமாகும்’.
பயான் நிகழ்ச்சி முடிந்து எல்லோரும் வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.
கேட்டியா என்னமாத் தான் அந்தப் புள்ள பயான் பண்ணுது. இப்ப யாரு அதக் கேட்டு நடக்கிறாங்க? விடிஞ்சா ராப்படுமட்டுலயும் இந்தப் பொம்புளயல் கோளும், அவதூறும் தான் கதைக்காளுகள். நம்மளப் போல அமைதியா யாரிருக்கா? வரும் பெண்களில் தானே நல்லவளாய் இனங்காட்ட முயன்றாள் Fg52gfl 2 -líUDII.
சிறிது நேரத்தின் பின் “சுலைஹா கேட்டியா செய்திய?”
“என்ன மாமி?’ சுலைஹா வினவினாள்.
"அலிமாமாட மகள் ஹஸனாவுக்கு கலியாணமாம். அதுவும் பெரிய இடத்தில. அவங்க கெடந்த கெடக்கி. திங்கயும் சோறு இல்லாம. பாரு புள்ள.
எனக்கிட்டயும் எவ்வளவு சோத்த கறியத்தான் திண்டுட்டாக. இப்ப மொகத்தையே பாக்கிறல்ல. அவ்வளவு பெரும.”
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 11
‘மாமி! இப்ப தானே பயான் கேட்டீங்க? நமக்கெதுக்கு ஊரு பலாய்..? கொஞ்சமாவது அல்லாஹற்வப் பயந்து வாழுங்களன். நமக்கும் மெளத்து இருக்குதே, நாம அல்லாஹற் கிட்டப் போய் என்ன சொல்லப் போறம்?” மருமகள் சுலைஹா பொறுமையிழந்து சிறிது உரக்கப் பேசிவிட்டாள்.
"நான் அப்படி என்னத்தக் கதைச்சிட்டன் என்டு கிளம்புறாய்? ஊருல ஒலகத்தில இல்லாததையா சொன்னன்? ஆருதான் இஞ்ச சுத்தமா நடக்கா? நீயென்ன பெரிய ஆலிமா? எத்தன ஆலிமுகள நான் பார்த்திட்டன். பயான் பண்ணின ஆலிமுப் பொம்புளயும் ஆராரக் கழுவிக் குடிக்காவோ? இவளுகளெல்லாம் எனக்குப் புத்தி சொல்ல வந்திட்டாளுகள் பெரிய ஆக்களப் போல’.
“யா அல்லாஹற்! எனது குடும்பத்தையே என்னால திருத்த முடியல்ல என்று எனக்கு குற்றம் பிடித்து விடாதே. இந்தக் காலத்தில சமூகத்தில காணும் அநேக குற்றங்களைக் கையால தடுக்க முடியல்ல. நாவாலும் தடுக்க முடியல்ல. மனதால் மட்டுமே என்னால் வெறுக்க முடிகிறது. அதற்காக என்னைத் தண்டித்து விடாதே. இரு முகத்துடன் வாழும் இத்தகைய ஆண்களுக்கும், பெண்களுக்கும் நீதான் ஹிதாயத் செய்ய வேணும்” என்று பிரார்த்தித்தவாறு ஐ.ட்பர் மெளலவியின் மனமும் அழுதுகொண்டிருந்தது!!!
ஊர் உறங்கும் நேரத்தில் மரமாகும் வரம் கேட்கிறேன் உன்னோடு மட்டும் என் நிழலை உனக்குத்தர!
ன் U ILfb! பேசுகிறது என் இதய பூமியின் நிலை கண்டு மேகம் அழும் மழையைப்போல் மனவெளியில் முழுவதுமாய் உன்னைப் பற்றிய எண்ணங்கள்!
உனக்காக துடிக்கும் என் இதயத்தை நிறுத்தச் செய்வதற்காய் என் கண்ணிரை என்னிடம் தீ Lifty-sti (8-ys' fift
சகியே. வெறுப்பதற்கேனும் என்னைக் கொஞ்சம்
உனைத் தொட்டதால்
நினைத்துக்கொள்.
தங்கமாய் மாறிய சூரியன் கூட 梁 என்னை மட்டும் சுட்டெரித்து* சிரிக்கிறது கோரமாய்! ۔۔۔۔
ஏனெனில் காற்றாய் மாறி உன் மூச்சாக * நானிருக்கிறேன். ? பூமியாக நான் மாறி மனசில் உன்னைத் தாங்கியிருக்கிறேன்!!!
என் இருளகற்றும் ஒளிநிலவாய் நீயிருப்பதால்தான்
- தியத்தலாவ எச்.எப். வளிமா
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 
 
 
 
 

சூசை எட்வேட்
எழுத்தாளர் அருட்பிரகாசம் அமைதியாக இருந்து எழுதிக்கொண்டிருந்தார். இடைக்கிடை எழுதுவதும் எழுதுவதை விட்டுவிட்டு யோசிப்பதுமாக இருந்தார்.
இண்டைக்கு ‘மூட் அவ்வளவாக வருகுது இல்லையே. ஒரு பிளேன்ரி குடிச்சாதான் நல்லாயிருக்கும். இப்படி எண்ணிக்கொண்டவர்,
மலர், தேத்தண்ணி ஒண்டு தாருமன் கொஞ்சம் உடன கொண்டுவாரும், எழுதேலாமல் கிடக்கு மூளை களைச்சுப் போச்சு
தேயிலை இல்லையப்பா. நேற்று சந்தைக்குப் போனநான் மறந்துபோனன் வேண்ட இல்ல. நீங்க கடைக்குப் போய் வாங்கிக்கொண்டு வாங்களன். என்றவள் அடுக்களையில் நின்று புறுபுறுத்தாள். "இஞ்சை விறகும் எரியுதில்ல, அடுப்போட நான் படுகிறபாடும் இவருக்குத் தெரியுதில்ல. ஆத்தைபடுகிறபாடு இல்ல. இவர் என்னத்துக்கோ அழுகிறார்'
அருட் பிரகாசத்துக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது என்றாலும் அடக்கிக்கொண்டார். ‘இனிக் கழுவி துடைச்சு வெளிக்கிட்டு தேயிலை வாங்கிக்கொண்டுவந்து இவ தண்ணிய சுடவைச்சு தேத்தண்ணி தாறதுக்கு இடையில என்ர கற்பனை எல்லாம் கலைஞ்சு போயிரும். இனிப் பிடிக்கேலாது. இவள் எப்பவும் இப்படித்தான் பொறுத்த நேரத்தில காலவாரி விட்டுருவாள். கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் நடக்கிறாள். என்ர எழுத்த இலக்கியத்தப் படிச்ச எத்தனைபேர், என்னென்ன விதமா பாரட்டுறாங்கள். ஏன் காதல் கடிதம் கூட எழுதுறாங்கள் ‘உங்களோட வாழக்குடுத்து வைக்கவில்லைய்ே என்று'
'அவளுகள் எனக்கு மனைவியாக் கிடைச்சால் என்ர எழுத்துப் பணிக்கு எப்பிடி எல்லாம் உதவி ஒத்தாசையாயிருப்பாங்கள். நான் எழுதுறத ரசிச்சி கதைச் சாலே காணுமே சொர்க்கலோகம் தெரியுமே. என்ர கதைகள் ஆக்கங்கள் எத்தனை பத்திரிகைகளில புத்தகங்களில வரும். ஒன்றையாவது ஒழுங்காகப் படிச்சு ஒரு கதை சொல்லியிருப்பாளா? 'உங்கட பேரில கதையொண்டு வந்திருக்குப் போல’ என்பதோட சரி. போய் முகத்த ரீவிக்கு முன்னால வைச்சுக்கொண்டு பொழுதப் போக்குவாள். சமைக்கிறதும், தலைய வார்ரதும் பொட்டு வைக்கிறதும் ரீவி பார்க்கிறதும் தான் இவள்ற வாழ்க்கை. சரியான ஞான சூனியம். இவளோட சேர்ந்து என்ர வாழ்க்கையும் சனியன் பிடிச்சதாப் போச்சுது’ என்றெல்லாம் சிந்தித்தவர் அலுத்துக்கொண்டார்.
மலரும் எரியாத விறகை ஊதி ஊதி கண்ணெரிந்த ஆத்திரத்தில் கணவனை மனதுள் திட்டித் தீர்த்துக்கொண்டே இருந்தாள்.
s இலக்கிய gepas சஞ்சிகை

Page 12
இந்தாள் சரிப்பட்டு வராது. ஒண்டுக்கும் உதவாது. பிள்ளைகள் பள்ளியால வரப்போகுதுகள், கெதியாச் சமைக்க வேணும். இந்தாள் என்னடா எண்டால் அதக்கொண்டா, இதக்கொண்டா, அதைக் காண இல்ல இதைக் காண இல்ல எண்டு நெடுகக் கரைச்சல் குடுத்துக்கொண்டிருக்கும். எழுதுவார்; வாசிப்பார்; வானத்தப் பார்த்து யோசிச்சுக்கொண்டு இருப்பார் விசரன் மாதிரி இதால என்னத்தக் கண்டார்? வீண்பொழுது போக்கிறார்.
இஞ்சை நான் தனியக்கிடந்து மாரடிக்கிறன். குசினிக்க வந்து எப்பன் உதவி செய்தால் எவ்வளவு ஆறுதலாயிருக்கும்.நெடுக யோசிச்சுக்கொண்டு எழுதிக் கொண்டிருக்கத்தான் தெரியும். தான் பெரிய ஆள் எண்ட நினைப்பு எங்கள்ள கொஞ்சமும் அக்கறை இல்லை. அத இத ஆசைப்பட்டத வாங்கித்தாறாரா? வீட்டுக்கு நல்ல பொருள் பண்டங்கள கொண்டுவாறாரா? மூத்தவள் வளர்ந்து வாறாள். நகநட்டத் தேடுவம் என்ட எண்ணம் சிந்தனை இருக்கா? ஒண்டும் இல்ல. ஒண்டுக்கும் உதவாத ஆளா இருக்குது மனுசன்
இப்படியே ஒவ்வாமையில் ஒத்துழையாமையில் நாளும் பொழுதும் இவர்கள் வாழ்க்கை தட்டு முட்டுப்பட்டுக் கொண்டிருக்கையில் தான், ஒருநாள் அருட்பிரகாசம் அதிகாலையில் எழுந்து வழக்கம் போல் எழுதிக் கொண்டிருந்தார். நன்றாக விடிந்துவிட்டது. வெளிச்சம் பரவிக்கொண்டிருந்தது. எழுதிய வேகத்தில் நேரம் போனதும் தெரியவில்லை.
இப்போது தான் தேனீரின் ஞாபகம் வந்தது அவருக்கு. மனைவியையும் நினைக்கலானார். எனக்குப் பின்னால் எழும்பினாலும் பொழுது புலரும் முன்னமே எழும்பி அடுக்களையில் ஆரவாரம் பண்ணி தேனிகொண்டு வந்து தருவாளே. ஒரு சத்தத்தையும் காணவில்லையே. என்னவாகியிருக்கும் என்று சிந்தித்தார். தேனீர் தாகம் மனைவியை தேடியது. இப்போதுதான் முனகும் ஒலிகேட்டது. இது மலரின் அனுங்கும் குரல்தான். சற்று பதகளிப்போடு அவள் அறையை எட்டிப் பார்த்தார். மலர்தான் அனுங்கிக்கொண்டு பெரிதாக மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள். பார்க்க பரிதாபமாகவும் இருந்தது. பயமாகவும் இருந்தது.
'மலர் என்ன நடந்தது? என்ன செய்யுது? என்று கேட்டுக்கொண்டே அவளைத் தொட்டு எழுப்பினார். தேகம் அனலாகக் கொதித்தது. உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. குளிரால் அல்ல, பலவீனத்தால், அவளால் எழுந்திருக்க முடியாது என்று தெரிந்தது.
அருட்பிரகாசம் கொஞ்சம் ஆடித்தான் போனார். என்றாலும் நிதானமாகச் செயல்பட்டார். முச்சக்கரத்தை வரவழைத்து மனைவியை பிள்ளைகளோடு சேர்ந்து தூக்கிப் போட்டுக் கொண்டு பெரிய ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். அங்கே பரிசோதனைகள் ஆரம்பித்த பின்னர்தான் தெரிந்தது, வருத்தம் சாதாரணமானதல்ல, மூளைக்காச்சல் என்று. அருட்பிரகாசத்துக்கு தலை சுற்றியது. கொஞ்சநேரம் ஒன்றுமே தெரியவில்லை, மலரைத் தவிர! 'மனைவியை எப்படியும் காப்பாற்றியே தீரவேண்டும் என்ற நினைப்பைத் தவிர வேறு ஒன்றையுமே சிந்திக்க முடியாதவராகிவிட்டார்.
அவருக்குத் தெரியும் மூளைக் காய்ச்சலைப் பற்றி. அது தப்புவது கடினம். நாட்கள் நகர்ந்தனவே தவிர சுகம் வந்ததாகத் தெரியவில்லை. இலவச வைத்தியசாலையில் இடநெருக்கடி, ஏனோ தானோ என்ற
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 

21
மனப்பான்மை. தனியார் மருத்துவ மனையில் காசு போனாலும் பரவாயில்லை. நல்ல கவனிப்பு. கட்டாயம் சுகம் வரும் பலர் ஆலோசனை கூறினாள்கள், வைத்தியசாலை மாற்றப்பட்டது. இப்போதுதான் இறைவனின் ஞாபகம் கூடுதலாக வந்தது அவருக்கு. அடிக்கடி இறை நாமத்தைச் சொல்லிச் சொல்லியே பிரார்த்தித்து வந்தார். எப்படியோ மலருக்கு படிப்படியாக சுகம் வந்துகொண்டே இருந்தது. இவருக்கு மன ஆறுதல் ஏற்பட்டுக்கொண்டிருந்தது.
இந்த நாட்களில் எழுத்தாளரின் வீட்டு நிலைமை மிகவும் அலங்கோல8:யிற்று. முக்கியமாக சாப்பாட்டை சமாளிப்பது பெரும்பாடாகிவிட்டது. கடையிலேதான் எல்லாம் எடுத்துக்கொடுத்தாள். பிள்ளைகள் அவ்வளவாக சாப்பிடுகிறார்கள் இல்லை. நிலைமைக்குத் தக்கமாதிரி சமாளிக்கச் சொன்னால் கேட்கிறார்கள் இல்லை. ஏன் நாலு நாளைக்கு மேல் அவருக்கே வயிற்றைச் சமாளிக்க முடியவில்லை. முன்னர் என்றால் மலர் ஒவ்வொருவரின் விருப்பு வெறுப்பு அறிந்து இதம் பதமாக ஒவ்வொன்றையும் செய்து கொடுப்பாள்.
பிள்ளைகள் அழுக்கு உடுப்புகளோடு பள்ளிக்குச் சென்று வருகிறார்கள். இரண்டு நாள் கழுவிக் கொடுத்துப் பார்த்து அலுத்துவிட்டார். இதெல்லாம் செய்து முன்பின் அனுபவமில்லை அவருக்கு. "தேத்தண்ணிகூட வைக்கத் தெரியாத மனுசன்' என்று மனையாள் அடிக்கடி பரிகாசம் செய்வாள். தேனீரும் கடையிலே வாங்கியா கொடுக்க முடியும்? தேனிர் தயாரிப்பதற்கே மிகுந்த சிரமப்பட்டார். பிள்ளைகள் தாங்களே மேலும் சீனிபோட்டு கலக்கிக் குடிக்கிறார்கள. தானே போட்டுக் குடிப்பது இவருக்கும் இதப்படவில்லை. செலவுதான் சாப்பாட்டுக்கே இருமடங்காக உயர்ந்து கொண்டிருந்தது.
மனைவிக்கும் நல்ல சத்துள்ளவற்றை தயாரித்து போசிக்க முடியாமல் இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டார். மனைவிக்கு உதவி ஒத்தாசையாய் இருந்து இவைகளை எல்லாம் பழகாமல் விட்டேனே என்று வேதனைப்பட்டார்.
எப்படியோ மனைவி சுகமாகி வீடு வந்து சேர்ந்துவிட்டாள். இவருக்கு அப்பாடா என்று இருந்தது. என்றாலும் அவள் உடலில் பலவீனம் தெரிந்தது. இவர் கூடமாட ஒத்தாசையாக இருந்ததால் குடும்ப காரியங்கள் மலருக்கு நோகாமல் சீராக சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்தன. அவள் உடல் நலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார். அவள் உடல் நலம் நன்கு தேறிய பின்னும் இந்த அன்பும் ஆதரவும் தொடர்ந்தது. மலரை, மலராகவே பாவிக்கத் தொடங்கினார் சொல் முதலாய் அனைத்திலும்.
'பிள்ளைகள், சத்தம் போடாதேயுங்கோ, அப்பா எழுதுறார் எல்லே குழப்பாதீங்கோ. வெளியால போய் விளையாடுங்கோ, ரி.வியை நிப்பாட்டுங்கோ என்று சத்தம் போட்டவாறு மலர் தேனீ கோப்பையோடு அறைக்கு வந்தாள்,
இந்தாருங்கோ இதக் குடிச்சுப்போட்டு உற்சாகமாக இருந்து எழுதுங்கோ. இதில தேத்தண்ணியோட அன்லின் நெஸ் மோல்ட் குளுக்கோஸ் எல்லாம் போட்டிருக்கு. நீங்க நல்லா எழுதிப் புகழோட இருந்தால் தானே எங்களுக்கும் பெருமையாக இருக்கும்?
அருட்பிரகாசம் அக மகிழ்ந்தார். 'கணவன் மனைவியே ஆனாலும், அன்பை ஆதரவை கொடுத்தால் தான் திரும்பக் கிடைக்கும்’ என்ற உண்மை, ஊருக்கு உபதேசம் செய்யும் அவருக்கு இப்போதுதான் புரிந்தது!!!
REGIOON இலக்கிய agpa, சஞ்சிகை

Page 13
திருமணம் முள்ளும் மலரும் இணைந்திருப்பது
நிழல் பின் தொடரும் மர்ம மனிதன்
அன்பு ஆழம் அறியப்படாத சமுத்திரம்
இளமை தத்தளிக்கும் பருவம்
D6 புரட்டிப் பார்த்தும் விளங்காத புத்தகம்
குடும்பம் விடுவிக்க முடியாத விடுகதை
Luub அப்பாவிகளின் மூக்கணாங் கயிறு
காமம் மன்மதனின் அம்பு
வாசகர் கவனத்திற்கு
சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள். அது பூங்காவனம் சஞ்சிகை தொடர்ந்து வெளிவருவதையும், கிடைப்பதையும் உறுதி செய்யும். சந்தாதாரராக இணைந்து கொள்பவர்கள் ஆகக் குறைந்தது 500/- வை சந்தாவாக செலுத்தவும். பக்கச்சார்பற்ற முறையில் எழுதப்பட்ட, தெளிவான கையெழுத்தில் அமைந்த, இதுவரை பிரசுரமாகாத (சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள் A4 தாளில் 03 பக்கங்களுக்குள்) ஆக்கங்களையே பூங்காவனம் எதிர்பார்க்கிறது. பூங்காவனம் இதழில் விளம்பரங்களைப் பிரசுரிக்க மற்றும் கொடுப்பனவுகள், சந்தா, விற்பனை முகவர்களின் தொடர்புகள் ஆகியவற்றுக்கு 077 5009 222 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்!
- ஆசிரியர் குழு -
கலை இலக்கிய 8FCD&E சஞ்சிகை
 
 
 
 

[] ଔଞ = 0୭,
(கவிஞர். 6. இக்பால்)
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்து உயர் மதியுரைக் கழகத்தின் தமிழ் உப குழுவில் ஒருவனாக 1971 ஏப்ரல் 8ம் திகதியிலிருந்து நானும் நியமிக்கப்பட்டேன். தமிழ் ஆசிரியன் என்பதைவிட இலக்கிய உலகின் செயற்பாடே இதற்குக் காரணம் எனலாம். குறிப்பிட்ட தினத்தில் வெளியீட்டுத் திணைக்களம் சென்றேன். அங்கே பேராசிரியர் கா. சிவத்தம்பி, கலாநிதி
கல்வியதிகாரிகளான திருமதி. முஹிதீன், எம்.ஐ.எம். ஷரீப் இன்னும் பலர் வீற்றிருந்தனர்.
கல்வி வெளியீட்டுத் திணைக்கள நூலாக்க குழுவிலுள்ள இ. முருகையன். த. கனகரத்தினம், சு. வேலுப்பிள்ளை, எம்.சி. சலீம், க. கந்தசாமி, சடH ஜெயராசா, சண்முகம் சிவலங்கம் ஆகியோருடன் பாட விதான அபிவிருத்தி மத்திய நிலையத்திலிருந்து செ. வேலாயுதம்பிள்ளை, திருமதி. ந. சண்முகநாதன், எம்.எஸ். ஜமால், கா. ஜெயராசா இன்னும் சிலரும் வந்திருந்தனர்.
தமிழ் மலர்’ எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கும் பாடநூலை
வெளியிடுவதன் நோக்கமே அப்பொழுது நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்தது.
பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் தன்னுடைய கருத்தைக் கூறும்போது பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி டிப்ளோமா செய்த பின் கீழ் வகுப்பில் படிப்பிப்பதில்லை. மேலை நாட்டில் இவர்கள் தான் கீழ் வகுப்புக்களுக்கு படிப் பிப் பார்கள் . எனவே கரீழ் வகுப் புக் களுக்கு கற் பரித்த அனுபவமுடையோரைப் பற்றி வினவினார். நான் அந்த அனுபவமுடையவன் என்பதைத் தெரிவித்தேன். 'அப்படியானால் இந்த இடத்தில் இக்பாலின் கருத்துக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்’ என்றார்.
பாடநூல், பாடங்களின் அமைப்பு, மொழியியல் தொடர்ச்சி என்பன பற்றி விரிவாக ஆராய்ந்தனர். அதன்படி பாடநூலை ஆக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிட்டோம். அடுத்த சந்திப்பில் எழுதிவந்த பாடங்களின் தராதரம் பற்றி ஆராய்ந்தோம். பாடங்கள் முழு இலங்கை வாழ் மாணவர்களுக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கற்பித்தலில் வெற்றி காண முடியாது. இக்கருத்தில் பேராசிரியரும் நானும் ஒரே கோட்பாட்டில் இருந்தோம். சில பாடங்கள் சரிவராது என்ற நிலைக்கும் ஆளானோம். பாடங்களை அச்சிடுவதற்கு முதல் நானும் பேராசிரியரும் பல இடங்கள்
GODOA இலக்கிய σαρας சஞ்சிகை

Page 14
சென்று அப்பாடங்களை வகுப்பில் படிப்பித்துப் பார்த்தோம். அப்போது இடர்கள் புரியும். சரி செய்யவும் முடியும்.
இப்படி கலாசார சம்பந்தமான பாடம் இரண்டில் சந்தேகம் கொண்டு காரசாரமான விவாதம் நடந்தது. முடிவு ஏற்படாத நிலையில் அப்பாடங்களை குக்கிராமம் ஒன்றில் கற்பித்துப் பார்க்க வேண்டும் என்றனர். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அவரது வாகனத்தை எடுத்துக்கொண்டு என்னை வெலிப்பிட்டியை ஊடறுத்து சொரகொட என்ற குக்கிராமம் சென்று அங்குள்ள பாடசாலையில் நானொரு வகுப்பிலும், அவரொரு வகுப்பிலும் கற்பித்துப் பார்த்தோம். சில திருத்தங்களுடன் பாடங்கள் வெற்றியளித்தன. வெற்றிக்களிப்பில் திரும்பி வந்தோம். தற்காலம் தனது சொந்த செலவில் இவ்விதப் பணியை யாரும் செய்யமாட்டார்கள். அவ்விதம் செய்ய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் எந்நேரமும் தயாராக இருந்தார்கள். காரணம் இலக்கியக் கிடங்குள் நீச்சலடித்த பெரும் அனுபவம் தான் அது. நானும் அவரும் இவ்விடயங்களில் செலவைப்பற்றிச் சிந்திப்பதேயில்லை.
(இன்னும் வரும்)
உள்ளங்கையில் சல சல என்று ஒடும் உலக உருண்டை நதியில் பாசியில்லை. சுருண்டு நிற்கும். பள பள என்று மின்னும் நினைக்கும் நிமிடத்தில் பாத்திரத்தில் தூசியில்லை! நெஞ்சம் காற்றில்
சிறகு விரிக்கும்! கல கல என்று பேசும் மனதில் சோகமில்லை. எண்ணம் எனும் தட தட என்று துள்ளும் புதையலைத் தோண்டி வாழ்வில் தோல்வியில்லை! இலட்சிய விதையை
நாட்டு! இனிதாய் வாழும் வாழ்க்கை தேவை என்று யோசி. எதிர்கால விருட்சம் ஆதலால் உன்னை எட்டுத் திக்கும் நீயே நேசி! கிளை பரப்பி மலரும்
g ‘YT!1罪 - கவிமலர் சந்தோச மொட்டு!!!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 
 

படல்கும்புர - மொஹமட் அஸாம்
காலையில் சூரியன் வெளிச்சத்தை பிரகாசமாக பரப்பிக் கொண்டிருந்தது. வீட்டின் பக்கத்திலுள்ள மரங்களின் இலைகள் சலசல என அசையத்தொடங்கின. அது மிகவும் குளிர்ச்சியானதும், இதமானதுமான காற்றை வீசிக்கொண்டிருந்தது. பறவைகளின் கீச்கீச் என்ற ஒலி மிகவும் சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் தரத்தொடங்கின.
காலையில் தேவா அலுவலகத்துக்கு தயாராகிவிட்ட பின் சாப்பிடுவதற்காக அமர்ந்து கொண்டான், மனைவி சங்கீதாவும் அருகில் வந்தமர்ந்தாள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக இருந்தார்கள். சில கணங்களுக்குப் பிறகு சங்கீதா தன் பேச்சை ஆரம்பித்தாள்.
‘என்னங்க. நான் இரவு சொன்னது ஞாபகமிருக்குல்ல? இன்று வரும்போது ஒரு நல்ல இடமா பார்த்து எல்லாம் பேசிட்டு வாங்க. நாம குறை வைக்காமத்தானே பார்த்துக்கப் போறோம்?
"இங்க பாரு சங்கீதா. நீ வீணா பிரச்சின பண்ணாதே. உன்ன திருமணம் செய்யும்போதே நா சொன்னதற்கெல்லாம் ஒத்துக்கொண்டாய் தானே? இப்ப ஏன் மீண்டும் பிரச்சின பண்றாய்?
நானா பிரச்சினய உண்டு பண்றேன். இங்க பாருங்க. நான் முடிவெடுத்தா அதை மாத்த மாட்டன். எனக்கு சீக்கிரமா ஒரு முடிவு வேனும்
என்னடி உனக்கு பணத் திமிர் கூடிடுச்சா? உன் பணத்துக்கு நான் அடிமையில்லை. உன் பணத்தால எல்லாம் சாதிக்கலாம்னு நினைக்கிறியா? அது முடியாது. முதல்ல அடுத்தவங்க மனச நோகடிக்காம பாத்துக்க. புரியதா? என்றவாறு தேவா சாப்பாட்டு மேசையைவிட்டு விருட்டென எழுந்தான். அதே வேகத்துடன் அவன் அலுவலகம் நோக்கி புறப்பட்டான்.
அலுவலகத்தில் தேவாவால் எந்த வேலையையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை. தன் உள்ளக்குமுறல் அவனை வாட்டி வதைக்கத் தொடங்கியது. மேசையில் தலையை வைத்து கடந்த காலத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான்.
XXXXXXXXX
தேவா சிறுவயது முதலே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தான். அவன் படிப்பில் கெட்டிக்காரன் என்பதை அறிந்த தாய் மங்களம், அவனை நன்றாக படிக்க வைப்பதற்காக கஷ்டம் பாராது உழைத்து வந்தாள்.
தேவாவும் நன்றாக படித்து உயர்தரத்தில் நன்கு சித்தியடைந்தான். ஆனாலும் அவனது கல்விக்கேற்ற தொழில் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து போனான். காலப்போக்கில் பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து அந்த அலுவலகத்துக்கு நேர்முகப் பரீட்சைக்காக போனான். அவனது திறமையை
கலை இலக்கிய Feypa

Page 15
கண்ட நிர்வாகம் உடனே வேலையில் இணைத்துக்கொள்ளவே இனிமேல் தாயை வேலைக்கு அனுப்பக்கூடாது என்ற நோக்கத்துடன் கடவுளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.
அந்த அலுவலகத்தை அலுவலக உரிமையாளரின் மகளான சங்கீதாதான் நடாத்தி வந்தாள். காலம் கழிய தேவா மனேஜராக பதவி உயர்வு பெற்றான். அவனது நன்னடத்தையும், பொறுப்பும் சங்கீதாவுக்குள் காதலை ஏற்படுத்தின. அவள் தனது காதலை தேவாவுக்கு தெரிவித்தாள். தேவாவுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அவன் தடுமாறிப்போனான். மீண்டும் சங்கீதாவே பேசினாள்.
"தேவா. உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். இந்த காசு, சொத்து எதுவும் எனக்குத் தேவையில்லை. உங்கள் அன்பு இருந்தால் அதுவே போதும்' என்றாள்.
'எனக்கு என் அம்மா என்றால் உயிர். அவங்க படாதுபாடு பட்டு என்னை வளர்த்திருக்காங்க. அவங்களுக்கு நான் எந்தக்குறையும் வைக்கக்கூடாது மேடம்.
‘என்ன தேவா. முதலில் மேடம்னு சொல்றத நிறுத்துங்க. உங்க அம்மா எனக்கும் அம்மா மாதிரிதானே? அவங்களுக்கு நான் எந்தக் குறையும் வைக்கமாட்டேன். உங்கட கள்ளம் கபடம் இல்லாத மனசுல எனக்கொரு இடம் தாங்க தேவா’ என்றாள்.
இருவரினதும் மனசு ஒத்துப்போக பெற்றோர் சம்மதத்துடன் இனிதாக திருமணமும் நிறைவேறியது. ஆரம்பத்தில் நன்றாக இருந்த சங்கீதா கொஞ்ச நாள் செல்ல, தன் மாமியை வெறுக்கத் தொடங்கினாள். மாமியை வீட்டைவிட்டு அனுப்பிவிடும் அளவுக்கு அவளது மனம் மாறிப் போயிருந்தது. ஆனால் மங்களம் எதுவுமறியாத அப்பாவி, மருமகளைத் தன் சொந்த மகளாகவே நடாத்தி வந்தாள்.
XXXXXXXXX
காலையில் நடந்த சம்பாஷணையில் மூழ்கியிருந்த தேவா தொலைபேசி மணி அடிக்கவும் சுயநினைவுக்கு வந்தான். மறுமுனையில் சங்கீதா விசும்பும் ஒலி கேட்டது.
‘என்னங்க. அத்தை வீட்டை விட்டு போயிட்டாங்க. சீக்கிரம் வாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. சங்கீதா கூறியவை தேவாவின் இதயத்தில் இடியாய் இறங்க, உடனே அவன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான். சங்கீதா கையில் ஒரு கடிதத்துடன் நின்றிருந்தாள்.
அன்பு மகன் தேவாவுக்கு! நீங்கள் இருவரும் பேசியதை கேட்டபோது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உங்களிருவரையும் பிரிக்க நானொருபோதும் நினைத்ததில்லை. சங்கீதாவை என் சொந்த மகளாகத்தான் நான் பார்த்தேன். அவ மனசை நோகடிக்க விரும்பல. எப்போதும் நீங்களிருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என்னைத் தேட வேண்டாம் எனக்கு எங்கு தங்குமிடம் கிடைக்குமோ நான் அங்கு தங்குவேன் - இப்படிக்கு அன்பு அம்மா மங்களம்’
சங்கீதா தொடர்ந்தாள். நானொரு மகா பாவி. என் பணத்திமிரால அநியாயமா அத்தை மனசை துன்பப்படுத்திட்டேன். என்ன மன்னிப்பீங்களா? என கதறியழ இருவரும் தாயைத் தேடி புறப்பட்டார்கள்!!! (முற்றும்)
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

அடுக்கி கட்டிய அடுக்கு மாடி அழகாதான் இருக்குது. அடுக்கு மாடிய அண்ணாந்து பார்த்து கழுத்துதான் வலிச்சது!
கழுத்து வலிச்சது ஒரு காலம். இப்ப கால்களும் நோவுது எங்க மனசும்தான் வேகுது!
மேல் மாடி ஏறும்போது நெஞ்சடைக்குது. சாமான் வாங்க கடைக்கு நடந்து இடுப்பு கடுக்குது!
பொழப்பு ஒட்டின சில்லற யாவாரம்
எடம் மாறினதால் படுத்து கிடக்குது
பரம்பரையா வாழ்ந்த இடம் பறிபோற காலமிப்ப. பலபேரு கதறினாங்க வாழ்ந்த வீட்ட ஒடச்சப்ப
இன்னும் எத்தனபேர் அழுவாங்க? நெஞ்சடச்சி விழுவாங்க?
கூடு மாறி பறந்துபோக நாங்க ஒன்னும் காக்கை இல்ல. ஒன்னா இருந்து சமைதது வாழும அறிவுள்ள மனிதர் நாங்க!!!
ஆஷிகா - கொழும்பு 12
முஸ்லிம் ஆண் பெண் இரு பாலார்க்கும்
மாண்புமிகு கடமை கல்வி பெறல்
நபிகளார் பகர்ந்தது!
முறைகேடகற்றி வாழ்க்கை அமைந்திட முன்னிலை பெற்றிடக் கல்வியால் ஆகுமே!
கற்பவனாயிரு. கற்பிப்பவனாயிரு.
கற்றலுக்கு உதவுபவனாயிரு அற்றால் நான்காவது ஆளாய் ஆகிவிடாதே நபிவாக்கு
இத்தரை மீதில் நான்காவது ஆளாய்
முத்திரை பதித்திட நாம் வீணர்களால்லோம்!
பத்தரை மாற்றுத் தங்கமாய் மின்னிட
உத்தமராய் உயர்ந்திட உயர்வுகள் தேவை!
வெலிப்பண்ணை அத்தாளல்
சற்று நிதானமாய்ச் சிந்திப்பீர். கற்றவனும் கல்லாதவனும் சமமானவனா?
ஏற்றமாய் இறைவன் கேட்கிறான் அருள் மறையில். திக்கற்ற திசையறியா வாழ்வு நமக்கேது?
போக்கற்றுப் பதறி நிற்கும் எதிர்காலம் நமக்கு ஏன்? மக்கத்து நபிகளாரின் தலைமை நமக்கிருக்க பக்கத்தில் இறைமறையும் தக்கதனைப் பகர்ந்து நிற்க. வக்காலத்து வாங்கிடவும் தேவைதானா?
எக்காலமும் உயர்வு தரும் கல்வியை நாடுவோம் நாம்!!!
இலக்கிய GFD&E சஞ்சிகை

Page 16
កុំ
பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரி
புலம் பெயர்ந்து புகலிட நாடுகளில் வாழ்கின்ற தமிழர் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையிலேயே வாழ்கின்றார்கள். இனம், மதம், மொழி, பண்பாடு, நிறம், காலநிலை முதலாகப் பல்வேறு விதங்களிலும் மாறுபட்ட நிலை அவர்களுடையது. ஏனெனில் எல்லா விதங்களிலும் அந்நியமான நிலை ஏற்படுகின்றது. மேற்கூறிய எல்லா விதமான மாறுபாடுகளும், வேறுபாடுகளும் அவர்களுக்குப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன. ஒருபுறம் அவற்றிற்கு முகம் கொடுப்பவர்களாகவும், மறுபுறம் அவர்கள் தாயக நினைவுகளில் மூழ்குபவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்த வகையில் எம் நாட்டிலிருந்து அகதிகளாக வெளிநாட்டு மண்ணில் வாழ்கின்ற தமிழ் மக்களையே நாம் புகலிட நாடுகளில் வாழ்வோர் எனக் குறிப்பிடலாம்.
அறுபதுகளில் சென்றோரை விட எண்பதுகளில் சென்றோரின் வாழ்வு இன்னும் அகதி முகாம்களிலாகும். எடுத்துக்காட்டாக ஜேர்மனியக் கவனிப்பு சட்டத்துக்கு அமைய அங்கு வாழ்வோர் ஐந்து வீதமாகவும், தஞ்சம் கோரி அகதி முகாம்களில் வாழ்வோர் 95 வீதமாகவும் உள்ளனர். ஒவ்வொரு அகதி முகாமும் ஒவ்வொரு உலகமாகின்றது. வதிவோர் தொகை அதிகமாகவும், வசதிகள் குறைவாகவும் காணப்படுகின்றன. (உதாரணமாக 100 பேருக்கு ஒரு மலசலகூடம், ஒரு சமையலறை) வெவ்வேறு இனத்தவரோ, மதத்தவரோ ஒன்றாக வாழவேண்டிய நிர்ப்பந்தம் அங்கு ஏற்படுகின்றன. தனிமை வாழ்வை அவர்கள் எதிர்கொள்கின்றனர். இவர்களது ஓய்வு நேரம் தொலைக்காட்சி பார்ப்பதிலோ, வெறும் உறக்கத்திலோ கழிந்துவிடுகின்றது.
இன்று புகலிட மண்ணிலிருந்து வெளிவருகின்ற இலக்கிய சஞ்சிகைகளை எடுத்துக்கொண்டால் தூண்டில் (ஜேர்மனி), ஓசை (பிரான்ஸ்), மனிதம் (சுவிஸ்). சுவடுகள் (நோர்வே), அ.ஆ.இ (நெதர்லாந்து), பாலம் (கனடா), நான்காவது பரிமாணம் (கனடா), அக் கினிக் குஞ்சு (அவுஸ்திரேலியா), மரபு (அவுஸ்திரேலியா), அவுஸ்திரேலிய முரசு. போன்ற பல்வேறுபட்ட சஞ்சிகைகள் வெளிவருகின்றன. இந்த வகையில் புகலிடச் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் எனப் பல்வேறுபட்ட ஆக்கங்களைப் படைக்கும் எழுத்தாளர்களின் பட்டியலை எடுத்து நோக்குவோமாக இருந்தால் ராஜேஸ் வரி பாலசுப்பிரமணியம், அகஸ்தியர், மாத்தளை சோமு, லெ. முருகபூபதி முதலான மூத்த எழுத்தாளர்களையும், கலா மோகன், பார்த்தீபன், நிருபா, சுகன், கெளசல்யா சால்ஸ், தேவகி இராமநாதன், ந. சுசீந்திரன், பொ. கருணாகர மூர்த்தி, சேற்றுார் விக்கிரம், சரண்யா, சந்திரா தேவி முதலிய இளைய எழுத்தாளர்களையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
I agpo இலக்கிய ag Cupa, சஞ்சிகை 22
 
 
 

29
தமிழ் இளைஞர்கள் மத்தியிலான ஒழுக்கச் சீர்கேடுகளும் பல்கிப் பெருகுகின்றன. போதைப் பொருள் பாவனை, ஓயாத குடி, திருட்டு, விபச்சார விடுதிகளை நாடுதல் முதலான அருவருக்கத்தக்க, பண்பற்ற நடத்தைகள் தினமும் அவர்களில் ஒரு சிலரிடம் அதிகரிக்கின்றன. உடல், உளச் சோர்வும் தாயக நினைவுகளும் அவர்களை நிம்மதியாக இருக்கவிடாது ஆட்டிப் படைப்பதையும் அவதானிக்கலாம்.
புகலிடத் தமிழ்ப் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்களும், தனிமை, வறுமை, கடும் உழைப்பு, முரண்பட்ட பண்பாடு முதலியனவும். கணவனது அடாவடித்தனமான நடத்தைகளாலும், அடக்கு முறைகளாலும் அல்லல்படுதல் மற்றும் புகலிட நாட்டு அரசுகளின் கெடுபிடிகள் போன்றன நாளாந்தம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அகதிகளை வெளியேற்றுவது தொடர்பாக புதிய சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கொலைகளும், திடீர் விபத்துக்களும் பீதி உணர்வினை அகதிகள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றன. இத்தகைய பல பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் இவர்களுடைய புகலிட இலக்கிய ஆக்கங்கள் வெளிவருகின்றன.
தேர்தல் பிரசாரக் கவிதை ஒன்றின் பகுதி கீழே தரப்படுகின்றன.
"தள்ளாடிய படியே நான் வீடு வருகையில் யாரது வீட்டு வாசலில் நிற்பது - வீடு தேடும் கள்ள அகதித் தமிழன் ஒருவன்’
இப்படிப்பட்ட ஆழமான இன உணர்வுகளையும், அட்டகாசங்களையும் நமது நாட்டு போர்க்கால மேகங்களையும் இலகுவாகவும், எளிமையாகவும் இப் புகலிடக் கவிதைகள் சித்தரிக்கின்றன.
எண்பதுகளில் வெளியான சிறுகதைகளில் அதிகமானவை தாயக நினைவுகளையே சித்தரித்தன. அவை தாயக நினைவுகளையே மீட்டின. சிறுகதை ஒன்றின் தலைப்பு 'மண்ணைத் தேடும் மனங்கள்’. இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் பதின்மூன்றில், பத்துச் சிறுகதைகள் இலங்கையைப் பற்றியதாகவே இருந்தது என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும். இதை ஆழமாக நோக்கினால் இலங்கை பற்றிய அனுபவப் பதிவுகள் இருவகைப்படுவன. இலங்கையரசின் இன ஒடுக்கு முறைகளினால் ஏற்பட்ட அழிவுகள், பிரிவினைகள் என்பவற்றை வெளிக்கொணர்வது ஒன்று. இயக்கங்களின் உட்பூசல், பழிவாங்கல் நடவடிக்கைகள் என்பவற்றைச் சித்தரிப்பது மற்றொன்று.
மாத்தளை சோமு எழுதிய வெள்ளைக்காரர்கள் என்ற சிறுகதை புகலிட நாட்டில் வாழும் தமிழரது புதிய தலைமுறை தன் இன வரலாற்றை எவ்வளவு தூரம் மறந்துவிடுகின்றது என்பதை திறம்படச் சித்தரிக்கின்றது. அருண் விஜயராணி எழுதிய கன்னிகாதானங்கள், முருகபூபதி எழுதிய மொழி போன்ற சிறுகதைகளில் புகலிடத் தமிழ் குடும்பம் ஒன்றின் மாறுதலுக்கு வரும் தமிழ்ப் பண்பாடு சுட்டிக் காட்டப்படுகின்றது. மேலும் நிருபா எழுதிய
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 17
ஏக்கங்கள் என்ற சிறுகதை நோர்வே பாடசாலையில் கல்வி கற்கும் சிறுமி ஒருத்தியின் கவலைக்கிடமான அந்நிய நிலையினையும், புகலிட நாட்டு ஆசிரிய மாணவ உறவு நிலையையும் விளக்குகிறது எனலாம். புகலிடத் தமிழரது கலாசாரம் “மேலது கீழாய், கீழது மேலாய்” ம்ாறி வருவதைக் காட்டுகின்ற இன்னொரு சிறுகதை திரு. கலைச்செல்வன் எழுதிய கூடுகளும் குயில்களும் ஆகும். இவ்வாறு இன்றைய காலகட்டத்தில் புகலிட ஆக்க இலக்கியங்கள் அதிகளவில் சிறுகதைகளாகவே வெளிவருவதைக் காணலாம்.
கட்டுரை, நாடகங்களைப் பொறுத்தளவில் டாக்டர். இந்திரகுமார், பார்த்த சாரதி, ஈழத்துப் புராடனார், பாலா போன்றோரின் நாடகங்கள் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய அதே நேரம் இவர்களின் கட்டுரை, நேர்காணல்களில் தங்களது புகலிடத் தன்மையின் நிலையே முக்கியமான கூற்றாக இருப்பதுடன், இதனைப் பிரதிபலிக்கும் நாடகங்களையும் மேடையேற்றி மக்களை மகிழ்விக்கின்றனர். தமது ஆக்க இலக்கியப் பணிகளுக்கு புத்துயிர் அளித்துக் கொண்டிருப்பவர்களுள் இந்தப் புகலிடத் தமிழர்களும் அவர்களது இலக்கியப் படைப்புக்களுமே முக்கியமானவையாகும்.
சஞ்சிகைகளை நவீன மயப்படுத்தி கணினி எழுத்தமைப்புடன் இன்று அதிகம் வெளிவந்து கொண்டிருப்பது புகலிட இலக்கியங்களேயாகும். மேலும் அடிக்கடி இலங்கை, தமிழ்நாடு போன்ற நாடுகளில் இருந்து மூத்த தமிழ் அறிஞர்களை கனடா, சுவிஸ், அவுஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளுக்கு அழைத்து கருத்தரங்குகள் வைத்தும் இவர்கள் தமிழை வளர்த்து வருகின்றனர். 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் சிவத்தம்பி, கலாநிதி எம்.ஏ. நுஃமான், செ. யோகராசா போன்றோர் இலங்கையிலிருந்து இரண்டு வார விடுமுறையில் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் புகலிடக் கவிதைகளோ, புனைக்கதைகளோ எவையாயினும் அவை அந்தந்த நாட்டு மொழிகளில் அறிமுகப்படுத்தும் போதுதான் மிகுந்த பலனைத் தருவதாக அமையும். இவர்கள் புகலிட அகதிகளாக இருந்த போதும் கூட தாய் மொழியைப் போற்றிக் காக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் அவர்கள் நாள்தோறும் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும்!!!
பூங்காவனம் வாசகர்களுக்கு ஓர் இனிய சந்தர்ப்பம்
இளம் படைப்பாளிகளின் இலக்கிய முயற்சிக்கு வித்திட்டு அவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வர தன்னாலான சிகளை பூங்காவனம் இதழ் மேற்கொண்டு வருவது நீங்கள் "A tr " அந்த வகையில் இனிவரும் இதழில் பிரசுரமாகும் சிஞகதைகளில் சிறந்த சிறுகதை ஒன்று தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அதை எழுதி! க்கு பூங்காவனம் இதழ் இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!!!
ஆசிரியர் குழு
கலை இலக்கிய JCIDAE, சஞ்சிகை ی.
 
 

G3
னறி இழந்தளறிவு
பொறுமை, இனிமை (QLD6T60)LD LDL60)LD எத்தனை மை பூசினோம்? அழகு பார்த்தோம்?
அவள் உரிமையை மட்டும் வழங்காமல் அழகான அடிமையாக்கினோம்!
பூத்து அவள் மலர புதுப் பார்வை பார்த்தோம். காய்த்து அவள் குலுங்க களவெடுத்துச் சென்றோம்.
31.
புலோலியூர் வேல்நந்தன்
மறியாடுகளும் பெட்டை நாய்களும் குட்டிபோடத்தான் என்ற குறுகிப்போன உலகமதில் அவள் வெறும் உடலா? அழகிய தசையா?
இல்லை!
அவளொரு ஆத்மா. ஆயிரம் கனவுகள் கொண்ட அற்புத ஆத்மா. இதைப் புரிந்திடுவோம் இணைந்தே வாழ்ந்திடுவோம்!!!
- மன்னார் அமுதன் -
கஞ்சிக்கும் கூழுக்கும் நீதியொன்று - பணம் காய்த்த நல் மரத்திற்கு நீதிவேறு - என நெஞ்சினைக் கல்லாக்கி நீதி சொல்லும் - அந்த நீதிமான்களைக் காலம் வெல்லும்!
கிஞ்சித்தும் அஞ்சாமல் கொடுமை செய்யும் கீழான மனிதர்தம் பாதம் தொட்டு - நல்ல மேலான பதவிகள் கேட்டுநிற்கும் - இவர்கள் நிலையினைப் பார்த்தாலே உள்ளம் வெட்கும்!
பாருக்குள் எங்கோவோர் மூலையிலோ - பண்புகள் கொண்டவரைச் சாலையிலோ -
நல்ல
கண்டு
கதைக்கையில் ஒருதுளி நீர்திரளும் - அந்த நீரினில் ஒருபுறம் நீதி தவழும்!!!
கலை இலக்கிய
agpa சஞ்சிகை v.

Page 18
சிறுகதை - எஸ்.ஆர். பாலசந்திரன்
மதிய இடைவேளைக்காக அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. சாப்பாட்டு அறையில் மோகனும், லலிதாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். மோகனுக்கு உணவு இறங்கவில்லை. லலிதா தன்னை ஊடுறுவிப் பார்ப்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தது.
டெக்னிக்கல் துறையில் சிறந்த பயிற்சி பெற்று நிர்வாக அதிகாரியாக பணியாற்றுகிறான் மோகன். லலிதா உயர்தரம் படித்துவிட்டு தற்போது மோகனிடம் வேலை பழகும் உதவியாளராக பணிபுரிகின்றாள். அவளுடைய கனிவான பேச்சு, மரியாதையான தோற்றம், கண்ணியமான ஆடை என்பவற்றில் கவரப்பட்டு அவளைக் காதலிக்க ஆரம்பித்தான் மோகன்.
லலிதாவின் குடும்பம் நடுத்தர வாழ்க்கையைக் கொண்டது. தந்தையற்ற அந்த குடும்பத்தில் அவளுக்கு சீதனம் சேர்க்க யாருமில்லை. எனினும் மோகன் சீதனம் எதுவும் வேண்டாம் என்று சொன்னதில் லலிதாவின் தாய் மிகவும் மகிழ்ந்தாள். தனது இரண்டாவது மகளின் திருமணத்தை முடித்திட அவள் சேர்த்து வைத்திருந்த அந்தக் காசு அவளுக்கு போதும் என எண்ணியிருப்பாள் போலும். அடிக்கடி லலிதாவின் வீட்டுக்கு வந்துபோகும் மோகன் கட்டாயமாக தனது தாய் தந்தையருடன் வந்து பெண் கேட்பதாக வாக்களித்திருந்தான். இதற்குள் இடியாக வந்து விழுந்த அந்த செய்தியால் இப்போது மோகனின் மனது காயப்பட்டுப்போய் இருக்கிறது.
கொஞ்ச காலத்துக்கு முதல் மோகனுடன் லலிதா அவ்வளவாகப் பழகுவதில்லை. அவள் வீட்டுக்குப் போனாலும் முன்னர் இருந்த மரியாதை இல்லை. இதை உணர்ந்த மோகன் அது பற்றி லலிதாவிடம் வெளிப்படையாகவே கேட்டான்.
திடீரென கேட்டதில் அதிர்ச்சியடைந்த லலிதா தன்னை சுதாகரித்துக்கொண்டு கூறத் தொடங்கினாள்.
'மோகன்! குமரேசன் என்ற டாக்டரை உங்களுக்கத் தெரியும் தானே? அவர் என்னை கண்டுவிட்டு பெண் கேட்டிருக்கிறார். அதான்'
அதற்கு நீ என்ன சொன்னாய் லலிதா
'எனக்கும் அவரை திருமணம் செய்வதுதான் சரியாகப்படுகின்றது மோகன்.
கை நிறைய சம்பாதிக்கிறார் தங்கைக்கும் உத்தியோக மாப்பிள்ளை எடுக்கலாம். எனக்கும் இலங்கையில் வாழவே பிடிக்கவில்லை.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 

33
'விளையாடாத லலிதா. நா சீரியஸா பேசுறன்.
'உண்மைதான் மோகன். நாம எவ்வளவுதான் பழகினாலும் உடல் தொட்டுப் பழகவில்லை. ஆகவே நான் எனது வருங்கால கணவருக்கு துரோகம் செய்யவில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் திருமண நிச்சயம் நடக்கவிருக்கிறது. நீங்களும் நல்ல பெண்ணொருத்தியைப் பார்த்து கலியாணம் கட்டுங்கோ.
அதன் பின்பு அவனுடன் இணைந்து அவள் சாப்பிடவும் வருவதில்லை. வரவேண்டிய அவசியம் இல்லை அல்லவா? மோகனும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அலுவலகத்தால் அவன் நியமிக்கப்பட்டிருந்த மூன்று மாத வெளிநாட்டு வேலை சம்பந்தமான விடயங்களில் மும்முரமாகத் தொடங்கினான்.
மூன்று மாதங்கள் கழிய மோகனும் இலங்கைக்குத் திரும்பிவிட்டான். இப்போது அவன் காரியாலயத்தில் உயரதிகாரி. அவன் லலிதாவைப் பார்த்தான். மேலோட்டமாக அவதானித்ததில் அவளுடைய புன்னகை தொலைந்திருந்தது. விரலில் திருமணப் பதிவிற்கான மோதிரம் கூட இருக்கவில்லை. மத்தியானம் சாப்பிடும்போது முன்பு போலவே லலிதாவும் வந்து சேர்ந்தாள். மோகனுக்கு தயக்கமாக இருந்தது. அவன் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அவளாகவே தொடந்தாள்.
'மோகன். அந்த ராஸ்கலிடம் நான் ஏமாந்துவிட்டேன். அவன் டாக்டரே இல்லயாம். எங்கோ ஒரு டாக்டரிடம் கொஞ்சகாலம் பயிற்சி பெற்றவனாம். பெண்கள் விடயத்தில் படுமோசமான.வனா.ம் அவளே தொடர்ந்தாள்,
'அவசரத்துக்குன்னு பணம் கேட்கயும் தங்கச்சிட கல்யாணத்துக்கு வச்சிருந்த ஐம்பதாயிரம் ரூபா காசையும் அவனை நம்பி குடுத்திட்டு இப்ப ஏமாந்திட்டன். உடலளவில் நான் இன்னும் சுத்தமாகத்தான் இருக்கிறேன்.?
அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று மோகனுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனாலும் அவன் எதுவும் பேசவில்லை.
பிரச்சனை போலீஸ் வரைக்கும் போக, எங்க திருமணப் பதிவும் செல்லாக்காசு ஆயிடுச்சி. ஏன் மோகன் பேச மாட்டேங்குறீங்க. அவன்தான் என்னை ஏமாத்திட்டான்னு சொல்றேன்ல.
'அவன் மட்டும்தான் உன்னை ஏமாத்தினானா? நீ என்னை ஏமாத்தலயா லலிதா?
வெடுக்கென அவன் கேட்ட கேள்வியில் லலிதா உறைந்து போனாள். மோகன் கையைக் கழுவியவாறு தன் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்!!!
ப்ரியமான வாசகர்களே! உங்களால் இயன்ற அன்பளிப்புக்களை வழங்குவதன் மூலம் 'பூங்காவனம்' சஞ்சிகையின் தொடர் வளர்ச்சிக்கு உதவுங்கள்!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 19
கூனற் பிறை வளரும் - ஒரு குளிர் நிலவாய் அது நிமிரும் வானில் வலம் வந்து - இந்த வையத்து இருள் அகற்றும்!
ஈனப்பிறவியென - எம்மை ஏளனம் செய்பவரே ஊனை உருக்கிய - எம் உழைப்பினிலே வாழ்பவரே!
வேலை வரும்போது - அந்த விண்மதியாகவல்ல - புதுச் சூரியனாக எழுவோம் சுட்டெரிப்போம் கொடுமைகளை
காட்டில் மழை பெய்யும் காலம் உமக்காக ஏட்டில் நிரந்தரமாய் எழுதியா வைத்திருக்கு?
மாற்றம் அதுவொன்றே மாறாத விதிதானென்று ஏற்காது என்றென்னும் நீர் இருக்கவா எண்ணுகின்றீர்?
காலச் சுழற்சியிலே கைமாறும் இவ்வுலகம் - இந்த ஞாலத்திலே நம் எழுச்சி நன்றோங்கி வெற்றி பெறும்!
மாதர் தம் பெருமை
மனுக்குலத்தின் நற்சிறப்பு - அந்தப்
பூங்காவனத்தினிலே புதுக்கவிதை பாடி வரும்!!!
ஷெல்லிதாசன்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 

சாதிக் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். குடும்பச் சுமையை வாப்பாவால் சுமக்க முடியாததால், ஓ.எல் படித்து முடித்ததும் கொழும்பில் ஒரு ஹாஜியாரிடம் வேலைக்கு சேர்ந்து கொண்டான். இரவு - பகல், விடுமுறை - ஓய்வு என்று பாராது மாடாய் உழைத்தான். உம்மா, வாப்பா, தம்பி. தங்கைக்கு எந்தக் குறையும் வைக்காமல் அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டுவருவதற்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்தான். காலம் யாருக்காகவும் காத் திருக்கவில்லை. அதன் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. தங்கையும் கல்யாணம் முடித்துக் கணவருடன் டுபாய் போய்விட்டாள். சாதிக்கும் கல்யாணம் முடித்து இரண்டு குழந்தைகள். தம்பியும் படித்து நல்ல பெரிய கம்பனியில் இஞ்சினியராக வேலை. நல்ல சம்பளம். சந்தோசமாக சுழன்று கொண்டிருந்தது வாழ்க்கை.
திடீரென சாதிக் வேலை பார்த்த ஹாஜியார் நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்து விடவே, ஹாஜியாரின் பிள்ளைகளும் இவனை அங்கிருந்து போகச் சொல்லிவிட்டார்கள். வேலையில்லாமல் வீட்டிற்கு வந்தவனுக்கு மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்தது போன்று வரும் வழியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. குணமாகும் வரை தொழில் ஏதும் செய்ய முடியாது. மாதங்கள் கடந்து கொண்டிருந்தது. கையிலும் பணம் இல்லை. தம்பியின் வருமானத்திலே வாழ்ந்து கொண்டிருந்தான். வீடு தம்பிக்குத்தான் சொந்தம், தம்பியின் கல்யாணத்திற்கு முன்னர், தான் வேறு வீடு கட்டி ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றிருந்தான் சாதிக். அதற்குள் இந்த கஷ்டமான நிலை.
கையின் காயம் கொஞ்சம் குணமாகியதும் வேலை தேடத் துவங்கினான். சரியான தொழில் ஏதும் கைகூடவில்லை. கையில் பணமும் இல்லை. தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கிவிட்டான். அதுவும் தலைக்குமேல் வந்து விட்டால் அடைக்க முடியாது போகும் என்ற பயம் வேறு.
சில நாட்களுக்கு முன்னர், ‘என்னங்க. உங்க உம்மா, வாப்பா எங்கள வேற மாதிரி பாக்கிறாங்க 'வாப்பா! சாச்சா ஒரே எங்கள ஏசுறாரு
என்று மனைவி பிள்ளைகள் சொன்ன போதெல்லாம் 'அதெல்லாம் ஒன்னுமில்ல. பேசாம இருங்க” என்று அவர்களை சமாதானப்படுத்தி வைத்துக்கொண்டான் சாதிக்.
ஆனால் இப்போதெல்லாம் வீட்டில் தனக்கு காட்டும் வேறுபாடு சாதிக்கிற்கும் நன்றாக விளங்கியது. தங்கை டுபாயிலிருந்து பேசும் போது உம்மா, வாப்பா, தம்பி எல்லோரும் பலதும் பத்தும் பேசுவாங்க. சாதிக்கைக் கேட்கும் போது,
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 20
36
ஆ. சாதிக் நானாவா. இப்ப இருந்தான். எங்க சரி போயிருப்பான்’ என்று “போனை' வைப்பார்கள். சாதிக்கும் இதைக்கேட்டு மெளனமாய் இருப்பான். முன்னரெல்லாம் கொழும்பிலிருந்து சாதிக் வந்தால் வீட்டில் அவனுக்கு ராஜ மரியாதை. அதுவேனுமா இதுவேனுமா என்றெல்லாம் உம்மா ஆசையுடன் சமைத்துக்கொடுப்பா.
நாளெக்கு கிளாஸ் பீஸ் கட்டணும். ஸ்கூல் ட்ரிப் போகணும்' என்று தம்பி செலவுக்கு காசு கேட் பான். இவனும் கேட்பதை விட அதிகம் கொடுத்துவிடுவான்.
அழகிய சல்வாரை கொடுத்த போது ‘ஏன்ட தங்க நானா' என்று அவன் கன்னத்தை அன்பாய் கிள்ளிவிட்டு சிட்டாய் துள்ளியோடிய தங்கையைப் பார்த்து சாதிக் கொண்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
'அல்ஹம்துலில்லாஹற்ணு ஊட்டு செலவெல்லாம் நம்ம சாதிக் செய்யிறான். அவன் எந்த கொறயும் வெக்க மாட்டான். தம்பி இப்போ கொழும்பு கெம்பஸ்ல இஞ்சினியரிங் படிக்கிறான். மகளுக்கும் டுபாய்ல ஒருத்தர்தான் சரி வந்திருக்கு. சாதிக் தான் எல்லா செலவும் அன்று ஜப்பார் நானாவிடம் அப்படிச் சொன்ன வாப்பா, இன்று அதே வாயால் ஜமீல் மாமாவிடம்,
'சின்ன மகனுக்கு நல்ல எடம் வந்திருக்கு. படிப்புக்கு ஏத்த இடம். கொழும்புல ஊடு சொந்தமா வாகனம் எல்லாம் கொடுப்பாங்க போல. பாவம் சின்னவன் இல்லன்னா எங்க வாழ்க்க ஓடுமா. ஊட்டுக்கே பாரமா இரிக்கிற சாதிக்கோட குடும்பத்தயும் பார்க்கிறது அவன் தானே. என்று சொல்கிறார்.
தம்பி சாகிரின் வருமானத்தால் வீட்டில் எல்லோரும் மாறிவிட்டனர். சாதிக்கின் ஏழ்மையால் ஐந்து சதத்திற்குக் கூட அவனையும் அவன் மனைவி பிள்ளைகளையும் யாரும் கணக்கெடுக்கவில்லை.
தான் வாலிப பருவத்தில் தோழர்கள் எல்லோரும் தமக்கே உரிய பாணியில் வாழ்க்கை நடத்த, சாதிக்கோ குடும்பத்திற்காக வாழ்ந்தான். ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிக்கொடுத்தான். ஆனால் இன்றைக்கு தன் பிள்ளைக்கோ மனைவிக்கோ தான் ஆசைப்பட்டதையோ அவர்கள் ஆசைப்பட்டதையோ வாங்கிக்கொடுக்க முடியாமல் தவிக்கிறான். அவர்களும் சாதிக்கின் நிலை உணர்ந்து, கூண்டில் அடைத்த பிராணிகள் போல் கொடுப்பதை ஏற்று வாழ்ந்து கொண்டிருந்தனர்.
காலை 9 மணியளவில் குளத்தில் குளித்துவிட்டு வரும் போது வீட்டு முற்றத்தில் லாபிர் நானாவின் வேன் நின்றது. அதில் தம்பி சாகிர், உம்மா, வாப்பா, சுல்தான் ஹாஜியார், அவர் மனைவி. பஸிர் தொர, காமிலா டீச்சர் எல்லோரும் எங்கோ போக ஏறிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஏதும் புரியாதவனாய் சாதிக்,
'ஜ.ம்மா. எங்க போறிங்க?" என்று கேட்க,
'உனக்கெதுக்கு இந்தச் சோலி. நீ ஊட்ட பார்த்துக்கொண்டிரு’ என உம்மா கடுப்பாய் சொன்னார்.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 
 
 

மறு பேச்சின்றி வாயடைத்து நின்றான். மனைவியும் இரு பிள்ளைகளும் வீட்டின் ஒதுக்குப் புறமாய் நின்றுகொண்டிருந்தார்கள்.
மாலையில் வீடு திரும்பிய வீட்டார் டுபாயிலுள்ள தங்கைக்கு கோல் பண்ணி விபரம் சொல்லிவிட்டு முன் ஹோலிலிருந்து பெண் வீட்டாரைப்பற்றி புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.
அதே நேரம் அவ்விடம் வந்த சாதிக் இன்னைக்கு தம்பிக்கு பொண் பார்க்க போறன்னு ஒரு வார்த்த சொன்னீங்களா? ரோட்ல போற மனுசர் சொல்லி தெரிய வேண்டிய நிலை. என்கிட்ட காசு இல்ல தான் அதுக்காக. இப்படி ஒதுக்குறீங்களா. பணக்கார ஆக்கள மட்டும் கூட்டி போறிங்களே. நான் உங்க மகன் தானே. இவள் ஏன்ட பொண்டாட்டி தானே..? எங்கள கூட்டி போனா கொறஞ்சா போகும்? இவ்வளவு காலமும் மனசில் பூட்டி வைத்த ஆத்திரத்தை அவர்கள் முன்னால் போட்டுடைத்தான்.
"அது பெரிய எடம். நீ அங்க போக, ஒன்ட ஜொப் என்னணு கேக்க, நாங்க என்னத்த சொல்ல? தம்பிட மானம்தான் போகும். அதுதான் உன்னக் கூட்டிப் போக இல்ல உம்மா சாக்குபோக்கு சொல்லி சமாளிக்கத் துவங்கினாள்.
'அது சரி. நானும் அந்தக் காலத்தில இப்படி நெனச்சிருந்தா எங்கெயோ போயிருப்பன்." என்றான் சாதிக்.
டேய் சாதிக் சும்மா நாய் மாதிரி கத்தாம, போய் பொழைக்க வழியப்பாரு பக்கத்திலிருந்த வாப்பாவும் கத்தினார்.
நான் இந்த ஊட்டுக்கு எவ்வளவு செஞ்சேன். இப்போ உங்க கைல காசு வரப்போய் எல்லாரும் மாறிட்டீங்க. நன்றி கெட்ட தனம் சாதிக் ஆத்திரம் தாங்க முடியாமல் அழுகையுடன் சொன்னான்.
"பொத்துடா வாய. இருக்க ஊடில்ல. பிச்சக்கார ஊட்டுல கலியாணம் கட்டி மண்ணாப் போனாய். ஏன்ட ஊட்டில் நான் போடுற சாப்பாட்ட தின்டுகிட்டு பேச்சாடா பேசுற? நீ என்னதயடா எனக்கு செஞ்சு கிழிச்ச? அதவிட அப்பனா இப்போது உனக்கும் ஒன்ட பொண்டாட்டிக்கும் சனியனுகள் ரெண்டுக்கும் திங்க போட்டு. வாழ இடம் கொடுத்திருக்கேனே அது போதாதா. என்று கத்தியவாறு தம்பி சாகிர், சாதிக்கின் சேர்ட் கழுத்தைப் பிடித்து அதட்டினான்.
"ஐயோ சும்மா சண்டை பிடிக்காதீங்க. என மனைவி அப்பாவியாய் நிற்க, இரண்டு கால்களையும் பிள்ளைகள், பயத்துடன் பிடித்து நடுங்கியவாறு, வாப்பா என்று ஏக்கத்துடன் அழுதுகொண்டிருந்தார்கள்.
சாதிக் ஏதும் பேச முடியாமல் வாயடைத்துப் போனவனாய். தமக்கு என ஒதுக்கியிருக்கும் சிறிய அறையில் நுழைந்து கட்டிலில் புரண்டவனாய் அழுதான். இரவு சாப்பிடவும் இல்லை. மனைவியும் ஆறுதல் கூறி அழுதவளாய் பிள்ளைகள் இருவரையும் அரவணைத்தவாறு தூங்கிக்கொண்டிருந்தாள், மீண்டும் மீண்டும் பழையவை அவன் கண்முன்னே வந்து சென்று கொண்டிருந்தன. வீட்டார் சொன்ன வார்த்தைகளை அவனால் தாங்க
itAAii LALEStL S SSLASSAtr rgrrESAS

Page 21
முடியவில்லை. ‘இனி நான் எதுக்கு வாழனும்? இன்னொருத்தனுக்கு நான் பாரமா இருக்கத் தேவ இல்ல' என ஒரு முடிவெடுத்தவனாய், குளத்தை அண்டியுள்ள வயலை நோக்கி நடந்தான். சில நாட்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டு காசிமுடன் வயல்வெளியில் பேசிக்கொண்டிருந்த போது அவன் மீதமுள்ள கிருமிநாசினியை வீட்டில் வைத்தால் ஆபத்து இதை இங்கே ஒரு மூளையில் போட்டு வைப்போம் என்று சொன்னது ஞாபகத்தில் வரவே, டோச் லைட்டுடன் அவ்விடத்தை அடைந்தன்.
'அல்லாஹ" அக்பர்! அல்லாஹ" அக்பர்!’ பள்ளிவாசலில் சுபஹற் அதான் ஒலித்துக்கொண்டிருந்தது.
கிருமிநாசினியை கையில் எடுத்து மூடியைத் திறந்தான். அப்போது "ஐயோ என்ன காப்பதுங்க. யா அல்லாஹற் காப்பாத்துங்க. யாரோ விடாமல் கூக்குரலிட்டது கேட்டது. மீண்டும் மீண்டும் வந்த குரல் ஏதோ ராசிக் காக்காவின் குரல் மாதிரி கேட்கவே, சத்தம் வந்த திசையில் ஓடிப்போய் பார்த்தான். அவர் நீரில் அமிழ்ந்து கொண்டிருந்தார். உடனே பாய்ந்து அவரை கரை ஒதுக்கினான்.
நல்ல நேரம் நீங்க வந்தீங்க. இல்லன்னா நான் மெளத்து தான். அல்லாஹற் உங்கள அனுப்பினான் அல்ஹம்துலில்லாஹற். தம்பி என்ன கொஞ்சம் வீட்டுல விட்டுடுங்க ராசிக் காக்கா குளத்தில் தத்தளித்த வருத்தம் தாங்க முடியாமல், நன்றியுணர்வுடன் சாதிக்கைப் பார்த்துச் சொன்னார்.
அவருக்கு 7 பிள்ளைகள். மூன்று பிள்ளைகள் கலியாணம் முடித்தும் அதே குடிசையில் இவ்வளவு காலம் வாழ்கிறார்கள். 65 வயது. மீன் பிடித்தும், கூலி வேலை செய்தும் குடும்பத்தை நடத்துகிறார்.
இந்த வயசிலும் வாழ நினைக்கிறாரே இத்தன பிரச்சினைகளோட. சாதிக்கின் மனசு ஏதோ சொல்லியது. அவரைக் கூட்டிக்கொண்டு போகும் வழியில் கபீர் நானாவின் வீட்டு வானொலியில், காலை நற்சிந்தனை நிகழ்ச்சி ஒலித்துக் கொண்டிருந்தது. அது சாதிக்கின் காதில் விழத் தவறவில்லை.
உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவைத் தேடிக்கொள்ளதிர்கள்! - அல் குர்ஆன் (2:195)
உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதிர்கள் அல்லாஹற் உங்கள் மீது மிகக் கருணை உள்ளவனாக இருக்கிறான்! - அல் குர்ஆன் (4:29)
இறைத்துதர் ஸல்லல்லாஹ" அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவர் ஒரு கூராயுதத்தை அவர் தம் கையில்
கலை இலக்கிய gaps சஞ்சிகை
 
 
 

39
வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். - நூல் புஹாரி என் (5778)
"செத்துட்டோம்னா நிம்மதி’ என்று நினைத்து தற்கொலை செய்து கொள்பவர்கள் மேற்சொன்ன அல் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைப் படித்து தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக உண்மையான முஸ்லிம்கள் உலகில் ஏற்படும் சோதனைகளைக் கண்டு துவண்டுவிடக் கூடாது. ஏனெனில், அல்லாஹற் மு. மீன்களை சோதிப்பேன் என்று சொல்லிக் காட்டுகிறான். (அல் குர்ஆன் 2:155)
வானொலியில் ஒலித்த நற்சிந்தனை சாதிக்கின் உள்ளத்தைத் தொட்டது. 'யா அல்லாஹற் இன்னும் கொஞ்சத்துல நிம்மதி தேடி நஞ்ச குடிச்சி நரகம் போயிருப்பேனே? வாழ்க்கையில் ஆயிரம் சிக்கல் வரும். எதையும் நிதானமா தீர்க்கலாம் மனசு தெளிந்தவனாய் ராசிக் காக்காவை அவர் வீட்டில் விட்டு, தன் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினான்.
அதே நேரம் சாதிக் வீடோ மறுபுறம் புரண்டு கொண்டிருந்தது. இதற்குக் காரணம் சாதிக் வீட்டிலிருந்து வரும் போது, மேசை மீது எழுதி வைத்த காகிதம் தான். சாதிக் தற்கொலை செய்து கொள்வதாக எழுதிய காகிதம் கண்டதும் வீட்டார் கதறியழுதனர்.
"ஐயோ என்ட தங்கம் போயிட்டானே. தெரியாம செஞ்சிட்டம் ராஜா
நான் நல்ல நிலமைக்கு வர நீதான் என்ன கஷடப்பட்டு படிக்க வெச்சாப், ஒனக்கு ஏசிட்டேனே நானா.
"ஐயோ என்னய தனியா விட்டுட்டு போயிட்டீங்களே.
'உம்மா. வாப்பா எங்க..? வாப்பா!!
'ஏன்ட மகன். ஏன்டா இப்படி செஞ்சாய். நாங்க எல்லாரும் செஞ்சது தவறு தான். ஐயோ. காசு எங்க கண்ண மூடிட்டுதே.
வீட்டின் அல்லோலகல்லோலம் கேட்டு சுபஹற் தொழுதுவிட்டு அந்த வழியால் போய்க்கொண்டிருந்த ஹஸ்ரத்தும் அங்கே இருந்தார்,
'இப்போ அழுது என்ன பிரயோசனம்? ஒரு மனுசன் இருக்கிற போது தான் நாங்க விட்டுக்கொடுத்து நடக்கணும். அவன் மெளத்தாப்போன பிறகு அது சஞ்சிருக்கலாம் இது செஞ்சிருக்காலாம்னு பேசி ஒன்னும் நடக்காது. வாங்க இப்போ மையத்து எங்க இருக்குன்னு பார்ப்போம்' என்று ஹஸ்ரத் சொல்லவும், சாதிக் வீட்டை அடையவும் சரியாக இருந்தது.
வீட்டார் தம் குற்றத்தை உணர்ந்தவர்களாய் சந்தோசத்துடன் சாதிக்கை அணைத்துக்கொண்டனர்!!! u
(முற்றும்)
இலக்கிய Cupa சஞ்சிகை

Page 22
பூங்காவனம் 40
=விதநூல்றிெகுறி
|வெலிகம ரிம்ஸா முஹம்மத்
கல்வியமைச்சில் பிரதிக் கல்வி அமைச்சின் ஊடக செயலாலராகவும், அதிபராகவும் கடமை புரிந்துள்ள கவிஞர் நித்தியஜோதியின் மகுட வைரங்கள் என்ற கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. இணையத் தமிழ் இலக்கிய மன்றம் வெளியீடாக, 76 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 43 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. மலையக மக்களின் வாழ்கையைப் புடம் போட்டுக் காட்டும் ஓரிரு கவிதைகளையும், காதல் கவிதைகளையும், ஆன்மீகம் சார்ந்த சில கவிதைகளையும் இந்நூலில் தரிசிக்கலாம்.
இணைய தளத்தில் இலக்கியங்களைத் தேடி தகவல்களை சேகரித்த அனுபவம் கவிஞர் நித்தியஜோதி அவர்களுக்கு உண்டு. வாழ்க்கை என்னும் இணையப் பத்திரிகையை நெனசல நிலையம் ஊடாக வெளியிட்டு இலங்கை முழுவதும் இணைய வாசகர்களுக்கு இலக்கியம் வாசிக்கத் தந்தவர். . நவீன காலத்திற்கேட்ப தகவல் தொழில்நுட்பம், இணையம் என்பவற்றில் ஈடுபாடும், அவற்றின் பயன்பாடும் தமிழ் இலக்கியத் துறையில் பிரயோகிக்கப்பட வேண்டும் என்ற ஆவல் அவரிடம் அதிகமாகவே காணப்படுகிறது என்று தனது வெளியீட்டுரையில் கெளரிசங்கர் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பூனாகலை பெளர்ணமி கலை இலக்கிய வட்டத்தின் தலைவரான ஆறுமுகம் கலையரசு அவர்கள் இக் கவிதை நூலுக்கு அணிந்துரையை வழங்கியுள்ளார்.
அப்புத்தளை தமிழ் இலக்கிய ஆய்வு மன்றத்தின் செயலாளர் பெளஸர் நியாஸ் தனது பதிப்பாசிரியர் உரையில் "இந் நூலிலுள்ள கவிதைகள் தனித்துவம் வாய்ந்தவை. நவீனத்துவம் மிளிர்ந்து கவிதைகள் நடை போடுகின்றன. கவிதைகளின் உருவம், சொல்லாட்சி, உள்ளடக்கம் என்பன ஏனைய கவிஞர்களின் கவிதைகளில் இருந்து இக்கவிஞரை வேறுபடுத்திக் காட்டுகிறது என்கிறார்.
காதல் சொன்ன கண்ணாளன் என்ற கவிதையில் (பக்கம் 18) காதலி தனது உள்ளத்தை கூறியிருக்கிறார். மேலும் கண்களால் கேட்கும் கேள்விகளுக்கு செயலால் பதில் கூறும் தனித்திறமை தனது காதலுக்கு கிடைத்த முதல் மரியாதை என்கிறார் கவிதையின் நாயகியான அந்தப் பெண். மனதினால் தான் மனைவியாகிவிட்டதாக கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.
சிங்கார சிரிப்புகள் நாகரீக மூட்டத்தினுள்ளே முகம் கழுவும் நாளில் வெட்கத்திற்கு மட்டும் மரியாதை தந்தவனே, உந்தன் வேள்வியால் நானே மனைவியாகிறேன் மன
ஊஞ்சலில்.
காதலில் விழுந்தவர்கள் நேரெதிர் மாற்றங்களான விடயங்களை செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறோம். தாம் என்ன செய்கிறோம் என்று அவர்களுக்கே விளங்காத ஒரு அதிசய உலகத்தில் அவர்கள் இருப்பார்கள். அதே நிலை நீ . என்றும் நான். (பக்கம் 46) என்ற கவிதையிலும் இவ்வாறு உரைக்கப்பட்டிருக்கிறது.
புரிந்துகொண்டும் பதிலைத் தேடுகின்றாய். நானோ.வினாவைத் தேடுகின்றேன்.
கவிதையில் ஆர்வம் காட்டி வரும் கவிஞர் நித்தியஜோதி அவர்கள் இன்னும் காத்திரமான கவிதைகளைப் படைத்து இலக்கிய உலகில் நிலைத்து நிற்க வாழ்த்துகிறோம்!!!
நூலின் பெயர் - மகுட வைரங்கள் (கவிதைத் தொகுதி) நூலாசிரியர் - கவிஞர் நித்தியஜோதி விலை . 200/=
ബ இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 
 
 
 

வழமைபோன்று காலை வேளைகளில் ஈடுபட்டிருந்தாள் காயத்ரி. அப்போது யாரோ வீட்டைநோக்கி வருவதைக் கண்டதும் கூர்ந்து நோக்கினாள். நவநாகரிகமாக உடை தரித்த ஒரு நடுத்தர பெண்மணி தனது வயதுக்கு மீறிய மேக்கப்புடனும், இளம் யுவதிகள் அணிகின்ற ஆபரணங்களையும் அணிந்தபடி வருவது வேடிக்கையாக இருந்தது. அன்ன நடை பயில்வதற்கு சின்ன இடையின்றி இடை பெரிதாகி இருந்ததில் அவளது ஒய்யார நடை பொருத்தமற்றதாகத் தோன்றியது. எல்லாமாக கூட்டிக்கழித்துப் பார்த்தால் அவள் வெளிநாடு போய் வந்தவள் என்று யாரும் சொல்லத் தேவையில்லை.
யாராக இருக்கும்? எதற்காக இங்கு வருகிறாள்? என்று காயத்ரியின் உள்ளத்தில் எழுந்த வினாக்களுக்கு விடை காண்பதற்காக வாசலில் நின்றிருந்தாள். அருகில் வந்த அந்தப் பெண் "பேபிம்மா எப்படி இருக்கிங்க? என கேள்வியெழுப்பியதும் காயத்ரி அதிர்ந்து போனாள். யாரிவள்? எங்கேயும் கண்ட ஞாகம் கூட இல்லையே என்ற எண்ணங்கள் ஒட அந்தப் பெண்ணே மீண்டும் வினவினாள்.
"பேபிம்மா என்னைத் தெரியலையா. நான் தான்.
காயத்ரியை பேபிம்மா என்று அழைப்பது ஒரே ஒரு ஜீவன்தான். பல ஆண்டுகளுக்கு முன்னால் அவள் வீட்டில் பணிபுரிந்த வேலைக்காரி வேலம்மா மட்டும் தான். அவளது குழந்தையை பேபி என்றும் காயத்ரியை பேபிம்மா என்றும் அழைப்பாள். அது இந்த பெண்ணுக்கு எப்படி தெரிந்தது?
"பேபிம்மா நான் தான் வேலம்மா. அடையாளம் தெரியலயா?
இப்படி அந்தப் பெண் கூறியதும் காயத்ரிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவளால் நம்பவே முடியவில்லை. அத்தனை அடக்க ஒடுக்கமாக இருந்த வேலம்மாவா இப்படி அட்டகாசமாக..!
'வேலம்மா நீயா இது? என்ன வேஷம்? இவ்வளவு காலம் எங்கு போயிருந்தே?
குவைட்டில தான் இருந்தேன்’
'ஏன் சொல்லாமப் போன? உன்னை எங்கெல்லாம் தேடினோம் தெரியுமா?
"அதையெல்லாம் விடுங்க பேபிம்மா. என் மகள் ரோஜா எங்க?
முதல்ல வீட்டுக்குள்ள வா வேலம்மா, விபரமா பேசலாம்'
voor Kyiv , , ? , is hy :

Page 23
பூங்காவனம்
'வீட்டுக்குள்ள வந்து விருந்து சாப்பிட நான் வரல்ல. என் மகள் ரோஜாவுக்கு என்ன நடந்தது?
அக்கம் பக்கத்துல உள்ளவங்க எல்லாம் வேடிக்க பார்க்குறாங்க. வீட்டுக்குள்ள வந்து பேசு.
பாக்கட்டும். நல்லா பாக்கட்டும். என்னால உள்ள வர முடியாது. நா உங்க வேலக்காரி வேலம்மா இல்ல. நீங்க கூப்பிட்டதும் வர்ரதுக்கு. சொல்லுங்க என் மகளுக்கு என்ன நடந்தது?
"அதை உன் மகன் சிவாவிடம் கேட்டிருக்கலாமே..?
கேட்டேனே. அவள மகாவெல போர்டிங்ல விட்டானாம். ஆனா அவ யார் கூடயோ ஒடிப்போயிட்டதா சொல்றாங்க. இதுக்கெல்லாம் காரணம் நீங்க தான் பேபிம்மா. உங்கள நம்பித்தானே உங்ககிட்ட அவள விட்டேன். நான் எத்தன வருஷம் மாடா இங்க உழச்சிருக்கேன். அதுக்கு நீங்க காட்டுற நன்றிக்கடன் இதுதானா?
நன்றிய பத்தி நீ பேசாத வேலம்மா. நன்றியப் பத்தி பேச ஒரு தகுதி வேணும். அந்த தகுதி உன்னிடம் இல்ல'
நா இத சும்மா விடப்போறதில்ல. என் மகளை மகாராணியாட்டம் வாழ வைக்கத்தான் நா வெளிநாட்டுக்க்ே போனன். ஆனா அவ வாழ்க்கை நாசமாயிடுச்சி. இதுக்குரிய பலனை நீங்க கூடிய சீக்கிரம் அனுபவிக்கத்தான் போறிங்க. தயாராக காத்திருங்க”
என எச்சரித்து விட்டு காயத்ரியின் பதிலைக்கூட கேட்காமல் அவளை அலட்சியப்படுத்திவிட்டு வெடுக்கென சென்றுவிட்டாள் வேலம்மா. அவளைப் பார்த்துக் கொண்டு சங்கடத்துடன் நின்றிருந்த காயத்ரியிடம் வந்தாள் பக்கத்து வீட்டு பாத்திமா,
‘பாத்திங்களா காயத்ரி பழசயெல்லாம் மறந்துவிட்டு பேசுறத. நலவுக்கு காலமில்ல என்று சொல்றது இதுக்குத்தான்’ என்றாள். சிறிது நேரம் உரையாடிவிட்டு பாத்திமா போன பிறகு முன் கதவை சாத்தியபடி உள்ளே வந்த காயத்ரிக்கு வேலைகள் எதுவும் ஒடவில்லை. அவளது உள்ளம் கடந்த காலத்தை எண்ணிப் பார்த்தது.
அப்போது காயத்ரி மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த நேரம் தினமும் வேலம்மாதான் வீட்டு வேலைகளைச் செய்வாள். அதனால் அவளது ஊதியத்துக்கும் மேலாக காயத்ரி பல உதவிகளைச் செய்வாள். ஒரு நாள் வேலம்மா,
"பேபிம்மா. என் மகள் ரோஜாவும் இங்கேயே இருக்கட்டுமே என்றாள்.
அதற்கு காயத்ரி "இதை பல தடவை நீ சொல்லிட்ட வேலம்மா. ரோஜா பெண் பிள்ளை என்பதால என் கணவருக்கு விருப்பம் இல்லாமலிருக்கு.
REGIOON இலக்கிய f(D&B சஞ்சிகை
 
 
 

43
உன் மகனையும் ஒழுங்காக படிக்க வைக்காம எங்கயோ வேலைக்கு விட்டுட்ட இப்போ மகளையுமா வைச்சி பராமரிக்க உன்னால முடியல?
பராமரிக்க முடியது. ஆனால் பாதுகாக்க முடியலியே பேபிம்மா. என் புருஷன் தினமும் ராத்திரியில மூக்கு முட்டக் குடிச்சிட்டு எப்படிப் பேசுறது? எப்படி நடந்துகிறது? என்று தெரியாமல் கண்டபடி இருப்பான். அவனிடமிருந்து ரோஜாவைப் பாதுகாக்க தினமும் நான் செத்து செத்து பொழக்கிறன் என்று கூறி அழுதுவிட்டாள் வேலம்மா.
காயத்ரிக்கு பிரச்சினை விளங்கிய அதே சமயம் இவ்வாறான தந்தையரும் உலகத்தில் இருக்கிறார்களே என்று அருவருப்பாக இருந்தது. தன் கணவனின் அனுமதியுடன் ரோஜாவையும் வீட்டில் தங்கவைத்தாள் காயத்ரி. அதுமாத்திரமன்றி ரோஜாவை பள்ளிக்கூடம் அனுப்பி, பகுதி நேர வகுப்புகளுக்கும் அனுப்பி நன்றாக கவனித்து வந்தாள். தன் மகள் சந்தோஷமாக வாழ்வதைக் கண்டு திருப்தியுற்றாள் வேலம்மா. சுகக் குறைவு என்ற காரணத்தைச் சொல்லி அடிக்கடி லீவு போட்டவள் அங்கு வருவதையும் அடியோடு நிறுத்திக்கொண்டாள். பின்பு ஒரு நாள் பாடசாலைவிட்டு வந்த ரோஜா காயத்ரியிடம்,
'காயத்ரி அக்கா அடுத்த வீட்டு ஆனந்தி எங்க மரத்துல மாங்கா பறிக்கிறா. உங்ககிட்ட கேட்டாவா? என்றாள்.
'இல்ல ரோஜா. பறிச்சிட்டு போவட்டும். பாவம் மசக்கைக்காரி' என பதிலளித்துவிட்டு தன் வேலைகளில் மூழ்கினாள் காயத்ரி. உடனே ஆனந்தியிடம் சென்ற ரோஜா,
'நீங்க யாருகிட்ட கேட்டு மாங்கா பறிக்கிறீங்கன்னு காயத்ரி அக்கா கேட்டுவரச் சொன்னா'
என்றதும், ஆனந்தியின் முகம் அவமானத்தால் சிவந்து போனது. அன்று முதல் ஆனந்தி காயத்ரியின் முகத்தைக் கூடப் பார்ப்பதில்லை. மற்றொரு நாள் பக்கத்து வீட்டு பாத்திமா வேலியோரமாக நின்றுகொண்டு "ஐஸ்’ கட்டி கேட்ட போது சமையலில் ஈடுபட்டிருந்த காயத்ரி, ரோஜாவை எடுத்துக் கொடுக்கும்படி ஏவினாள். 'ஐஸ் கட்டியை எடுத்துச் சென்ற ரோஜா.
"ஒரு பிரிஜ் வாங்கக் கூடவா வக்கில்லன்னு காயத்ரி அக்கா கேட்டா’ என்ற போது பாத்திமாவின் முகம் வாடிப் போனது. அன்று முதல் அவள் ஐஸ் கட்டி கேட்பதுமில்லை. காயத்ரியைப் பார்ப்பதுமில்லை.
ஒரு நாள் பின் வீட்டு ரீட்டா திருமண வீடொன்றுக்கு போவதற்காக காயத்ரியிடம் இரவல் நகைகளைப் பெற்றுச் சென்றாள். இதைக் கவனித்துக் கொண்டிருந்த ரோஜா, 'இதெல்லாம் தங்க நகைகளா? எப்படி இவ்வளவு நம்பிக்கையோட கொடுக்குறீங்க’ என்றாள்.
அதற்கு காயத்ரி 'என் தங்க நகை எல்லாம் ஈட்டுல இருக்கு ரோஜா. அதனால நானும் இதுகளத்தான் போடுவன். உண்மையைச் சொன்னா ரீட்டா
۱:۱۱i:: lt و ۱۱ مازند.

Page 24
ஏமாந்து போவா பாவம். நம்பிக்கையோடு வந்தவள திருப்பியனுப்ப மனசு வரல' என்றாள். அடுத்த நாள் நகைகளைத் திருப்பிக் கொடுப்பதற்காக ரீட்டா வந்திருந்த போது காயத்ரி குளித்துக்கொண்டிருந்தாள். உடனே ரோஜா,
‘என்ன ரீட்டாக்கா நல்லா ஏமாந்துeங்களா? இதெல்லாம் கவரிங் நகைங்க. உங்கள எப்படி நம்புறதுன்னு தான் இப்படி ஏமாத்திட்டா காயத்ரியக்கா
என்றதும் கோபத்தோடு போன ரீட்டா திரும்பி வரவேயில்லை. பக்கத்து வீட்டார்களை இப்படி பொய்யுரைத்து பகைத்து வைப்பதில் இன்பம் கண்டாள் ரோஜா. இவை எதையுமே அறியாத காயத்ரியோ ரோஜாவுடன் அன்பாகவே நடந்துகொண்டாள்.
ரோஜாவுக்கு பதினான்கு வயதாகியிருந்தது. அவள் பருவமடைந்து அழகாக இருந்தாள். அதனால் ரோஜாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஒரு நாள் இரவு அறையில் ரோஜா இல்லாததைக் கண்டு அதிர்ந்த காயத்ரியும், அவளது கணவனும் ரோஜாவை பல இடங்களிலும் தேடினார்கள். இறுதியில் திரும்பி வீட்டுக்கு வந்த போது, ரோஜா அவளது அறையிலிருந்தாள். காரணம் கேட்ட போது பாத்ரூமில் இருந்ததாக பொய் சொன்னாள். இப்படி அடிக்கடி நடந்தது. அத்தோடு வீட்டில் பணமும் பொருட்களும் காணாமல் போயின. பாடசாலைக்குப் போவதாக சொல்லிவிட்டுப் போகும் ரோஜா அங்கு செல்வதில்லை.
இப்போது ரோஜாவை வீட்டில் வைத்துக்கொள்வது காயத்ரிக்கு மிகவும் பயமாக இருந்தது. அவள் பல வாலிபர்களுடன் பழகுவதாக அக்கம் பக்கத்தவர்கள் வந்து சொன்னார்கள். இனிமேல் ஒரு நிமிடம் கூட ரோஜாவை வீட்டில் வைத்துக்கொள்ளக் கூடாது என தீர்மானித்தவளாக காயத்ரி வேலம்மாவைத் தேடினாள். வேலம்மா இருக்குமிடம் தெரியவில்லை. அவள் எங்கு சென்றாள் என யாருக்கும் தெரியவில்லை. ஆகவே வேலம்மாவின் மகன் சிவா வேலை செய்யும் இடத்தின் முகவரியை எப்படியோ கண்டு பிடித்து வலுக்கட்டாயமாக ரோஜாவை சிவாவுடன் அனுப்பி வைத்தாள். அதன் பிறகு தான் காயத்ரியால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.
இரக்கப்பட்டு உதவப்போய் இவ்வளவு பிரச்சனைகளில் சிக்கவேண்டி வருமென அவள் எதிர்பார்க்கவில்லை. ஒரு பிள்ளை நல்ல பிள்ளையாக வளர சூழல் பிரதான காரணமாய் அமைய வேண்டும். ரோஜாவின் நிலைமைக்கு அவள் வளர்ந்த சூழலும், அவளது பெற்றோருமே காரணம் என தோன்றியது காயத்ரிக்கு. பெற்றோரின் ஒழுங்கற்ற அநாகரீக செயற்பாடுகள் எந்தளவிற்கு பிள்ளைகளைப் பாதிக்கின்றன என்பதற்கு ரோஜாவின் வாழ்க்கை சிறந்த ஓர் உதாரணம்!!!
“பூங்காவனம்’ கிடைக்குமிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு - 06 பெஸ்ட் குயின் பவுண்டேஷன் - கல்கிசை
கலை இலக்கிய тара சஞ்சிகை
 
 

而ü D
பெண்களின் முயற்சியாக பூங்காவனம் இதழ் வெளிவருவதையிட்டு வாழ்த்துகிறேன். மேலும் இது இளையவர்களின் முயற்சிக்கு ஊன்றுகோலாக இருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆக்கங்கள் அனைத்தும் முத்துக்களாக இருக்கின்றன. நேர்காணல், விமர்சனம், நிகழ்வுப்பதிவு என்பன சிறப்பாக உள்ளன. தொடர்ந்தும் பூங்காவனம் பூத்துக்குலுங்க எனது பாராட்டுக்கள்.
வஸிலா ஜமால்தின்
汝决六火、六安安、
வாழ்வை இலக்கியமாய் வடித்துக் கவியாக்கி தாழ்வகற்றத் துடிக்கும் தரமான அகழ்வுகளைத்
தரங்கண்டு இனங்கண்டு களமீந்து செயலாற்றும் பூங்காவனத்தின் நோக்கத்தை வரவேற்கிறேன்!!!
- நீலா பாலன்
火火、火决火火始火
தூரத்திலே இருந்தேன் சுகமான நறுமணம பரப்பினாய். சட்டென எழுந்தேன் உன் வசந்தம் பட்டு!
பூக்களாம். பூந்துனராம் பூங்காவனமே உன்னில் கண்டேன். பார்க்க வந்தேன் பாரிலே போற்ற வந்தேன். பூக்களெலாம் தாதவிழ தாவி விளையாடல் கண்டேன்!
ஈதெனக்கு இனிதுவக்க ஆழமெலாம் பூக்க வேண்டும் வேறு யாதெனக்கு வேண்டுமினி?
கோடிகோடி முயற்சிகளின் கொற்றம் என நீயும் வையம் தனில் எங்கும் வளம்பெற வேண்டும்!
நூலாசிரியர் பல்லாண்டு உழைப்பிதனை இயம்பி விடல் எளிதன்று சின்னதொரு தலைப்பினிலே. அவர்தம் ஆயிரம் கலைகளிலே இது ஒரு துளிதான்!
பூங்காவனமே வாசம் பரப்ப வந்தாய். என் மனசை நிரப்ப வந்தாய். அக விழிகளெல்லாம் திறக்க வந்தாய் - நீ ஆயுள்வரை சிறக்க வந்தாய்!!!
- யாழ் ஜுமானா ஜுனைட்
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 25
Y
瓯
நூல் - கே.எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/
மதிப்பீடுகள் சில (ஆய்வு)
நூலாசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
தொலைபேசி - 011 2587617
வெளியீடு - மீரா பதிப்பகம்
விலை - 200 ரூபாய்
நூல் - நீலாவணன் காவியங்கள் (காவியம்) "... နိjး''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' நூலாசிரியர் - கவிஞர் நீலாவணன் தொலைபேசி - 0777 313720 வெளியீடு - நன்னூல் பதிப்பகம் விலை . 300 ரூபாய்
நூல் - சக்காராம் பைண்டர் (தழுவலாக்கம்) நூலாசிரியர் - கலைஞர் கலைச்செல்வன் தொலைபேசி - 0774 161616 வெளியீடு - இலக்கிய முற்றம் விலை - 250 ரூபாய்
நூல் - மனிததர்மம் (நாடகம்) நூலாசிரியர் - கலைஞர் கலைச்செல்வன் தொலைபேசி - 0774 161616 வெளியீடு - இலக்கிய முற்றம் விலை . 300 ரூபாய்
pavi.af i et filii.
 
 
 
 
 
 

நூல் - பொன்மொழிகளில் பெண்மணிகள் நூலாசிரியர் - எஸ். ராமன் தொலைபேசி - 011 2324712 வெளியீடு - கோல்டன் கபே விலை - குறிப்பிடப்படவில்லை
நூல் - சிதறிய முத்துக்கள் (பொன்மொழிகள்) நூலாசிரியர் - எஸ். ராமன் தொலைபேசி - 011 2324712 வெளியீடு - கோல்டன் கபே விலை - 100 ரூபாய்
giớiblijk, då டுெ நூல் முகை விடும் மொட்டுக்கள் (கவிதை)
நூலாசிரியர் - எம். ரஸ்லான் ராஸிக் தொலைபேசி - 077 8321116 வெளியீடு - இலங்கை தழிழோசை
இணைய வானொலி விலை - 130 ரூபாய்
நூலாசிரியர் - கோ. திரவியராசா தொலைபேசி - 026 3265126 விலை - 100 ரூபாய்
கலை இலக்கிய சமுக

Page 26
நூல் - ஆத்திச்சூடி அறுபது (சிறுகதைகள்) நூலாசிரியர் - பி.பி. அந்தோனிப்பிள்ளை வெளியீடு - லங்கா புத்தகசாலை விலை - குறிப்பிடப்படவில்லை
நூல் - கொன்றைவேந்தன் அறுபது (சிறுகதைகள்) நூலாசிரியர் - பி.பி. அந்தோனிப்பிள்ளை வெளியீடு - லங்கா புத்தகசாலை விலை - குறிப்பிடப்படவில்லை
అRRe
நூல் - அடையாளம் (கவிதைத் தொகுப்பு) தொகுப்பாசிரியர் - எம்.எஸ்.எம். அஸாறுதீன் தொலைபேசி - 067 2260286 வெளியீடு - தமிழ்ச்சங்கம் - இ.தெ.கி.ப விலை - 250 ரூபாய்
நூல் - புதிய இலைகளால் ஆதல் (கவிதை) நூலாசிரியர் - புஷ்பலதா லோகநாதன் (மலரா) தொலைபேசி - 067 2229668 விலை . 200 ரூபாய்
 
 
 
 
 
 

With Best Compliments From:-
Address : No. 16, Ediriveera Avenue, Dehiwala, Sri Lanka. Mobile : 0773235543
இதுவரை வெளிவந்துள்ள எமது பூங்காவணம் இதழ்கள்
{{xx్వధ

Page 27

o24.20740
I