கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கத்தமிழ் 2011.10

Page 1
謂
 


Page 2
Brandesan
isswalitkagfa
கொழும்புத் தமிழ்ச்சங்கம் திருவள்ளுவர் ஆண்டு : 2042 அக்டோபர் - 2011 'சங்கத்தமிழ்' இதழ் : 04
தலைவர்
திரு.மு.கதிர்காமநாதன்
பொதுச் செயலாளர்
திரு. ஆ. இரகுபதிபாலழுநீதரன்
நிதிச் செயலாளர் திரு. செ. திருச்செல்வன்
ஆசிரியர் திரு. க. இரகுபரன்
உதவி ஆசிரியர்கள்
திரு.மு. கதிர்காமநாதன் திரு. ப. க. மகாதேவா
திருமதி வசந்திதயாபரன்
கணனி வடிவமைப்பு
திருமதி. கு. சத்தியஜோதி
தொலைபேசி : 011 2363759 தொலைநகல் : 011 2361381
இணையத்தளம் WWW.Colombotamiisangam.Com
மின்னஞ்சல் tamilsangamcolombo Gyahoo.com
ISSN: 2O12949
படைப்பாளிகளிடமிருந்து 5JDITGO, ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆசிரியர்குழுவின் செம்மைப்பகுத்தலின் பின் 'சங்கத்தமிழ்'இல் அவை பிரசுரமாகும். படைப்புகள் குறித்த அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்துங்கள். அனுப்பவேண்டிய முகவரி:
ஆசிரியர் 'சங்கத்தமிழ்' கொழும்புத்தமிழ்ச்சங்கம், 7, 57வது ஒழுங்கை, கொழும்பு-06. இலங்கை.
ノ ܢܠ
அவை சங்கத்தினி கருத்துக்கள் அல்ல.
சங்கத்தமிழில் வெளிவரும் ஆக்கங்களின் கருத்துக்
(ஐப்பசி 2011)
 

2 afear . . .
* ஆசிரியர் பக்கம் 02 * திருச்சதிரின் மீட்டுருவாக்கமும்
பரதநடனத்தின் வளர்ச்சியும் 03
«Σ
பண் முறைமையிலிருந்து இராக முறைமைக்கான
வரலாற்றுப் படிநிலைகள் O6 * சம்பந்தரின்
திருக்கடைக்காப்புச் செய்யுள்கள் 13
மருதூர்க்கொத்தனின் சிறுகதைகள் -
ஒரு கண்ணோட்டம் 20 * நூல் அறிமுகம் 26 * சங்கப்பாடல்களை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் - சிக்கல்களும் அவதானிப்புக்கள் சிலவும் 30
Ο
0.
"மலர்மிசை ஏகினான்” 38
Ᏹ*
கற்பினுக்கு அரசு - சீதை தீக்குளிப்புக் குறித்த புதிய நோக்கு 42 உலக இலக்கியம் புறநானூறு 47
&
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகார நாயகி தெய்வமாகிறாள் 53
{
&
ஆழ்வார்கள், பாரதி நோக்கில் கண்ணன் 57 பத்திரிகை மூலவரும் சீர்திருத்தச் செம்மலுமான திரு.ஜி.சுப்பிரமணிய ஐயர் 66
* யாழ்ப்பாண மன்னர்கால
0.
0.
வரலாறுசார் படைப்புக்கள் 70
கள் அவ்வவற்றின் ஆசிரியர்களது கருத்துக்களாகும்;
O1)

Page 3
趣
ஆசிரியர் பக்கம்:
கொழும்புத் தமிழ்ச்சங்கம் தமி அறிவுப் பரம்பலுக்கு - தமிழியல் ஆ வேண்டும் என்பதே அதன் முதன் நகர்வாகவே 'சங்கத்தமிழ் வெளி கொழும்புத்தமிழ்ச் சங்கம் ஜனநாயக குறித்த ஒரு கோட்பாட்டுக்கு - சி அமையாது சமூக முன்னேற்றத் கோட்பாடுகளுக்கும் இடங்கொடுப்பத என்பது எமது அவா. அவ்வகையில் தத்தம் கோட்பாடுகளுக்கு அமைவா புலமைசார் விடயங்கள் வெளிவ வாசகர்களாகிய உங்களுக்கு வேறு யாகவும் உடன்பாடற்றவையாக உங்கள் அபிப்பிராயங்களை அடிப்படையிலான விவாதங்கள் அ என்பதால் மாறுபட்ட கருத்துக்க மதிப்பளிக்கும்.
அறிஞர்கள் தமிழியல் தொடர்பான வெளியிட்டு தமிழியல் விருத்திக்கு வ வேண்டுகிறோம்.
எமது சமூகத்தின் அறிவு வி அமைந்துள்ள சங்கத்தின் நூலகம் ே இனிமேல் வாரத்தின் ஏழுநாளும் செய்யப்பட்டுள்ளது. நூலகம் திற அதிகரிப்பதற்கும் ஆவன செய்ய முt சகல வகையாலும் நம் சமூகத் விருத்திக்குப் பணியாற்ற இயலுமான தரப்பாரது ஆதரவும் சங்கத்தின் பன
ஜப்பசி 2011

ழ் இலக்கியம், இலக்கணம் பற்றிய ய்வுக்கு அடிப்படைக் களமாக அமைய மை நோக்கம். அதற்கான ஒரு முன் யீடு அமைகின்றது. அடிப்படையில் 5ப் பண்புடைய ஒரு அமைப்பு. எனவே ந்தனை மரபுக்கு மாத்திரம் என்று தை நோக்காகக் கொண்ட சகல ாக சங்கத்தமிழ் அமைய வேண்டும் ) இந்த இதழில் பலதரப்பட்டவர்களும் க பல்வேறு விடயங்கள் பற்றி எழுதிய ருகின்றன. அவை ஒவ்வொன்றும் லுவேறு அளவில் உடன்பாடுள்ளவை வும் அமையலாம். அவை குறித்த
எழுதி அனுப்புங்கள். புலமை றிவை விரிவடையச்செய்ய வல்லன 5ளுக்கும் 'சங்கத்தமிழ்’ என்றும்
ா கட்டுரைகளை சங்கத்தமிழ் மூலமாக கை செய்ய வேண்டும் என விநயமாக
ருத்திக்கான பெருஞ் சாதனமாக மன்மேலும் விரிவுபெற்றுவருகின்றது. நூலகம் திறந்திருப்பதற்கு ஏற்பாடு ந்திருக்கும் நேர அளவை மேலும் u6(86).IITLD. தின் அறிவு விருத்திக்கு - தமிழியல் வகையிலெல்லாம் முயல்வோம். சகல ரிகளை மேலும் மேன்மைப்படுத்தும்.
சங்கத்தமிழ்

Page 4
திருச்
பரத
இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு சிறப்பார்ந்த பரிமாணம் புதைந்திருந்த கலைச் செல்வங்களை வெளிக்கொண்டு வந்தமையாகும். வாழையடி வாழையாக வளர்ந்து செவ்விய வடிவங்களை எய்திய நிலையில் வரலாற்றுக் காரணிகளால் நலிவுற்றிருந்த கலை வடிவங்களை மீட்டு ருவாக்கம் செய்யும் பண்பாட்டு நடவடிக்கைகள் விடுதலைப் போராட்ட காலத்தில் முன்னெடுக்கப் UL6DTullaOT.
அந்த வகையிலே மீட்டெடுக்கப்பட்ட தமிழகத்துச் செவ்வியல் ஆடலே "பரதநாட்டியம்", “தேவராட்டம்”, “சதிராட்டம்”, “சின்னமேளம்”, “கோயிலாட்டம்”, “செவ்வழிக் கூத்து", "திருச்சதிர்", “85L66ITTLLLb", “ðfle)]60TrLLLÓ", "&rLDIE1856ólá, கூத்து", "சொக்கர் கூத்து" என்ற பல்வேறு பெயர்களாற் கிராமங்களில் அழைக்கப்பட்டு வந்தது. தேவரடியார்கள் என்ற பெண்களே அந்த ஆடலைப் பாதுகாத்து வளர்த்து வந்தனர்.
இறைசார்ந்த ஆடலாகத் திருச்சதிர் வளர்க்கப்பட்டிருந்தமையால் வரன் முறையான கல்விக்குப் பின்னரே ஆடல் நிகழ்த் தப்படவேண்டிய வற்புறுத்தல் இடம்பெற்றிருந்தது. செவ்வியல் இசை, நாட்டார் இசை, தாளக் கட்டமைப்புக்கள், 'செட்டு என்று குறிப்பிடப்பட்ட ஆடல் அசைவுகள், முகக்குறிஎன்று சொல்லப்பட்ட பாவங்கள், “செதுக்கல்” என்று சொல்லப்பட்ட கை முத்திரைகள், கருவி இசை முதலியவற்றை மூத்த தேவரடியாரிடமிருந்து வரன்முறையாகக் கற்றுக் கொள்ளவேண்டியிருந்தது. இவ்வாறான கல்வித் தேட்டம் அவர்களது கலை ஆளுமைக்குப் பலம் சேர்த்தது.
செவ்வியல் ஆடலாகிய இன்றைய பரதம் சிதைவுறாது பாதுகாக்கப்பட்டுவந்தமைக்கு
(ஐப்பசி 2011)

திரின் மீட்டுருவாக்கமும் நடனத்தின் வளர்ச்சியும்
Gшупа“rflui a-шп (olguyПа-п
தேவரடியாரிடத்துக் காணப்பட்ட அவ்வாறான வரன் முறையான ஆடற் கல்வியே அடித் தளமிட்டது.
சமூக முரண்பாடுகளை அடியொற்றி இருநிலையான வாழ்க்கைக் கோலங்களைத் தேவரடியார்கள் அனுபவித்து வந்தனர்.
(அ) இறைவனைத் துணையாகக் கொண்டி
ருந்தமையால் அவர்கள் எப்பொழுதும் நித்திய சுமங்கலிகளாகவே கருதப் பட்டு வந்தனர். அந்த நிலை அவர் களுக்குச் சமூகத்திலே ஒருவித வாழ் தகைமையைக் கொடுத்தது. (ஆ) அவர்களுக்குரிய சொத்துரிமை
அங்கீகரிப்புக்கு உட்பட்டிருந்தது. (இ) தேவரடியார் இறக்கும் பொழுது அந்த நிகழ்ச்சி மிகவும் உயர்ந்த மரியாதை LL60f 685T600TLITL LL60dLD&g5& சான்றுகள் உள்ளன. மேற்கூறியவை நேர்ப்பரிமாணங்கள் அதேவேளை உறுத்தும் எதிர்ப் பரிமாணங்கள் பல காணப்பட்டன. அவை வருமாறு:
(அ) சமூக நிலையிலே பலம் மிக்கவர் களால் அவர்கள் தீவிர பாலியற் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டனர். (ஆ) வாழ்க்கை முழுவதும் பொருட்பலம்
உள்ளோரை நம்பி வாழும் அவல வாழ்க்கை நீடித்தது. வயது முதிர்ந்த காலத்தில் வாழ்க்கை அதிக துன்பம் நிறைந்ததாக இருந்தது. (இ) சமூகச் சீரழிவுகள் அனைத்துக்கும்
அப்பாவிகளான அவர்களே பொறுப் பாக்கப்பட்டனர். மழைபெய்யாமை, பயிரழிவு, வெப்பநோய்பரவல், அகால
C3)

Page 5
நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அவர் களே பொறுப்பாளிகளாக்கப்பட்டனர்.
அவர்கள் குரலெழுப்ப முடியாத நிலைக்கு உட்பட்டிருந்தனர். அவர்களுக்காக யாரும் குரலெழுப்ப முடியாத நிலையும் காணப்பட்டது.
அவற்றின் பின்புலத்தில் பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்துடன் அதிலே ஒரு தீவிர களப்பணியாளராகச் செயற்பட்ட மூவலூர் ஆ.இராமாமிர்தம் அவர்கள் தேவதாசி ஒழிப்புநடவடிக்கைகளைத்தீவிரமாகமுன்னெடுத்தர்
வறுமை காரணமாக மூவலூரின் தாயார் அவரை ஒரு தேவரடியாளுக்கு பத்து ரூபாவுக்கு விற்பனை செய்தார். அந்தத் தேவரடியாளின் பெயர் ஆச்சிக்கண்ணு. அவரின் அரவணைப்பிலே வாழ்ந்து வளர்ந்த ஆ.இராமாமிர்தம் தேவரடியாரின் துன்பமும் அவலமும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்து அழுவதோடு மட்டும் நின்றுவிடாது அவற்றை மாற்றியமைக்கும் ஒரு வினைப்பாட்டாளராக எழுச்சி கொண்டார்.
தேவரடியார் முறையை அடியோடு ஒழிப்பதற்கு அவர் மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்கு உயர் வகுப்பினரிடமிருந்து பல கோணங்களில் எதிர்ப்பு எழுந்தது. அவற்றைப் பொருட்படுத்தாது. அவர் "நாக பாசத்தார் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி தேவரடியார் முறையை ஒழிப்பதற்குரிய ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தினார்.
தேவரடியார் ஆலயங்களில் ஆடல் புரிவதை எதிர்த்துப் போராடியவர்களுள் கலாநிதி முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். தேவதாசிகள் ஆலயங்களில் நடனமாடுதல் சட்ட பூர்வமாக ஒழிக்கப்பட்ட நிலையில் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த செவ்வியல் ஆடலை பிறிதொரு வடிவிலே முன்னெடுக்க வேண்டிய தேவை தமிழகத்தில் எழுந்தது.
இராமாமிர்தத்தின் போராட்டம் எழுத்து வடிவிலும் மேலெழுந்தமை குறிப்பிடத்தக்கது.
(spüuf 2011}-
 

சங்கத்தமிழ்
அவர் எழுதிய கதைகளும் கட்டுரைகளும் சுயமரியாதை அரசியலை உட்கொண்டிருந்தன. 1929ஆம் ஆண்டின் அரச ஆணை வாயிலாக தேவதாசிகள் ஆலயங்களில் நடனமாடுதல் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முத்துலட்சுமி ரெட்டி அம்மையைச் சட்டசபையிலே குரலெழுப்பச் செய்வதற்குப் பின்விசையாக விளங்கியவர் மூவலூர் இராமாமிர்தம் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் பரதநாட்டியத்தின் வரலாற்றை எழுதுவோர் இராமாமிர்தம் eesoluğ a56T உருவாக்கிய முன்வினைப்பாடுகளைக் குறிப்பிடத் தவறியுள்ளனர்.
தேவதாசி முறை ஒழிப்பும் தமிழரின் செவ்வியல் நடனத்தின் புத்துருவாக்கமும் ஒன்றையொன்று தழுவிய நிகழ்ச்சிகளாகும்.
வழுவுர் இராமையாப்பிள்ளை, மற்றும் கிருஷ்ண அய்யர் ஆகியோர் தமிழர் செவ்வியல் ஆடலின் புத்துருவாக்கத்திலே பெரும் பங்கு கொண்டு உழைத்தனர். ஆயினும் இருவரது பின்புலங்களும் வேறுபட்டிருந்தன.
வழுவுர் இராமையாபிள்ளை அவர்கள் மரபுவழியான ஆடல்வழி எழுந்த எழு குழாத்தினர். சமூக மாற்றத்தினூடே செவ்வியல் ஆடல் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற உந்தலைக் கொண்டவர்.
ஆனால் கிருஷ்ண அய்யர் ஆங்கிலக் கல்வியினூடாக ஊட்டம் பெற்றவர். செவ்வியல் ஆடலை மீட்டுருவாக்கம் செய்தலின் முக்கியத்துவத்தை ஆங்கில மொழி வாயிலான மறுமலர்ச்சிச் சிந்தனைகளின் ஊட்டத்தினூடாகப் பெற்றுக் கொண்டவர்.
இருவரது முயற்சிகளும் தமிழரது செவ்வியல் ஆடலின் மீட்டுருவாக்கத்திலே வேறுவேறு விதமான செல்வாக்குகளை ஏற்படுத்தின.
கிருஷ்ண ஐயர் "பரதநாட்டியம்” என்ற மகுடத்திற் பரந்த இந்தியத் தளத்துக்கு அதனை இட்டுச் செல்ல முயன்றார். அதற்குரிய ஏற்புடைமையாகத் தமிழரின் செவ்வியல்
(4)

Page 6
” සුස්
ஆடலைச் சமஸ்கிருத அறிகை முறைமைக்குள் கொண்டு சென்றார். நாட்டிய சாஸ்திரம், அபிநயதர்ப்பனம் முதலாம் நூல்களுடன் பரதநாட்டியத்தை ஆழ்ந்து தொடர்புபடுத்தினார்.
"இந்தியத் தளத்துக்குப் பரத நாட்டியத்தை எடுத்துச் செல்லும் பிறிதொரு முயற்சியாக 1934ஆம் ஆண்டிலே காசியில் நிகழ்ந்த அனைத்து இந்திய மாநாட்டில் பரதநாட்டிய நிகழ்ச்சியை அவர் ஒழுங்கு செய்தமை குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்ச்சியிலே மரபு வழியாகச் செவ்விய ஆடலைப் பயின்று வந்த பாலசரஸ்வதி, வரலட்சுமி, பானுமதி முதலியோரின் ஆற்றுகைகள் இடம் பெற்றமை பிறிதொருவகையிலே முக்கியத்துவம் பெறுகின்றது.
1935 ஆம் ஆண்டிலே நிகழ்ந்த சங்கீத வித்வ சபை மாநாட்டிலே பந்தனை நல்லூர் சகோதரிகளின் ஆடற்கச்சேரி இடம்பெற்றமை முக்கியமாகக் குறிப்பிடப்படல் வேண்டும். கர்நாடக சங்கீத ஆற்றுகையைப் புனிதமாகக் கொண்டோர் மத்தியில் பரதநாட்டிய ஆற்றுகைநிகழ்த்தப்பட்டமை அதன் மீட்டுருவாக்கத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாயிற்று. அதன் பின்னணியிலேதான் ருக்மணிதேவி அம்மையாரின் பரதநாட்டியச்
செயற்பாடுகள் மேலெழுந்தன.
2O1OеЪшb će; சாகித்ய மண்டல ஆட்சிக்குழு உறு தீரன் திப்பு சுல் கொண்டார்.
(ஐப்பசி 2011)
 
 
 
 
 
 
 

சங்கத்தமிழ்
பரதநாட்டியத்தின் மீட்டுருவாக்கத்தில் அம்மையாரின் பங்கு முக்கியமானதாகும். மொழிநிலையில் சம்ஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் ஆகியவற்றைப் பரதநாட்டியத்தில் முன்னுரிமைப் படுத்தியமை அதன் "இந்தியத்தளத்துக்கு" மேலும் வலுவுட்டியது. தமிழகத்துச் செவ்வியல் ஆடல் இந்தியப் பெருநிலை விரிவைப் பெற்றது.
நாட்டியத்தை நிறுவன மயப்படுத்தி அவர் உருவாக்கிய கலாஷேத்திரம் கல்வி நிறுவன ஆக்கத்தின் வழியான எழுச்சிக்கும் பரவலுக்கும் வழிவகுத்தது. அதன் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக எழுகுழாத்தினரிடத்து ஆவலும் அங்கீகாரமும் பெற்ற ஆடல் வடிவமாகப் பரதநாட்டியம் எழுச்சி கொண்டு வருகின்றது.
கிருஷ்ண அய்யர் மற்றும் ருக்மணி அம்மையார் ஆகியோர்பரதநாட்டியஅறிகைவிளக்கத்துக்குஆங்கில மொழியைப் பயன்படுத்தியமை பரதநாட்டியத்தின் உலகளாவிய விரிவுக்குக் கால்கோளயிற்று.
ஒரு புறம் உலகளாவிய விரிவு நடைபெற்றுவரும் வேளை மறுபுறம் அதன்தமிழ் வேர்களும் 69|60DLuum6ITIFil 565LĎ 6TՎք குழாத்தினரால் சிதைக்கப்பட்டு வருதலும் மறைக்கப்பட்டுவருதலும் ஆய்வு நிலைக் கவன ஈர்ப்பைப் பெற்று வருகின்றன. 米
ண்டின் இலங்கை அரசாங்கத்தின் ) ம் பரிசினை கொழும்புத் தமிழ்ச் சங்க ப்பினர் ஜின்னாஹ ஷரிபுத்தீன் தனது தோன்" காவியத்துக்காகப் பெற்றுக்

Page 7
பன்முறைமையிலிருந்
இந்திய இசையில் தற்காலத்தில் இராகங்கள் என்று அழைக்கப்படும். இனிய இசை பழந்தமிழ் மக்களால் பண்கள் என அழைக்கப்பட்டன. வரண்முறை செய்யப்பட்ட அல்லது பண் படுத்தப்பட்ட இசை "பணி" என்பதாயிற்று. பண்ணுதல் என்றால் இயற்றுதல் அல்லது செய்தல் என்று பொருள். பண் என்பதற்குப் பொருளாக பஞ்சமரபு என்ற இசை இலக்கண நூலில்
*LIGE தலி Imnirior - I Lertxi ன்ற நோவாப் பெருந்தான மெட்டாலும் - பாவா யெடுத்தல் முதலாவிரு நான்கும் பண்ணிற்படுத்தமையாற் பண்ணென்று பார்” (1655 DJL, észos pult, 626).6viLAT-5O) என்று தலை, மிடறு, நெஞ்சு, மூக்கு, இதழ், பல், நா, அண்ணம் முதலிய எட்டுத் தானங்களாலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பித்தல், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு முதலிய எட்டுக் கிரியைகளாலும் பிறப்பித்து ஓசைப்படுத்தலாற் "பண் என்று பெயர்க் காரணம் கூறப்பட்டுள்ளது. பண் என்பதற்கு அமைவு, இசைப்பாட்டு, ஊழியம், சீர், தகுதி, நிந்தை, நிறை நரம்புள்ள வீணை எனப் பல பொருள்கள் தமிழ் மொழி அகராதியில் தரப்பட்டுள்ளது. பண் என்பது பாடல்களில் அமைந்துள்ள இசையின் முறையாகும். ஒலி செம்மையான முறையில் ஒழுங்கான இசையமைப்புடன் பாடல்களில் ஒலி உருவமாக அமைவது பண்ணாகும்.
பண்படுத்தப்பட்ட இவ் இசையொலித் தொடர்கள், வடமொழியில் அமைந்த இராகம்’ என்ற சொல்லோடு ஒத்தமைகிறது. 'இராகம் என்ற சொல் மதங்கரின், பிருகத்தேசி (5ஆம் நூற்றாண்டு) என்ற வடமொழி நூலில் முதன்முதலில் காணப்படுகின்றது. இவர் இராகம் என்பதன் விளக்கமாக "அழகிய கமகங்களோடு
ஐப்பசி 2011

து இராக முறைமைக்கான வரலாற்றுப் படிநிலைகள்
முனைவர் மீரா வில்லவராயர்
கூடிய சுரக் கூட்டங்கள்” என்றும் "மக்கள் கேட்டு இன்புறும் தன்மையது” என்றும் கூறுகிறார். இராகம் என்ற சொல் ஒரு சில பண்களின் பெயர்களில் இணைப்பாகக் காண முடிகிறது. சான்றாக அராகம், தக்கராகம், பழந்தக் கராகம், நட்டராகம், மேகராகக் குறிஞ்சி போன்ற பண்களைக் குறிப்பிடலாம்.
தமிழிசை வரலாற்றை ஆராயும்போது 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் அருளப்பட்ட தேவாரங்களே முதன்முதலாக நமக்குக் கிடைத்த பணி, தாள அமைப்புடன் கூடிய இசை வடிவங்களாகும். தேவாரப் பாடல்களே பண்களில் அருளப்பட்ட முதன்மைப் பாடல்களாக நமக்கு கிடைத்துள்ளபோதிலும் சங்கப் பாடல்களும் பண்முறைக்கேற்ப பாடப்பட்டன என்பதை பல அகச்சான்றுகள் வாயிலாக அறியக்கூடியதாக உள்ளது.
சங்க இலக்கியத்தில் பணிகள்
சங்க காலத்தில் திணைகள் வகுக்கப் பெற்று அவற்றிற்குரிய முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ජිජ්ජluu6OT வரையறை செய்யப்பட்டிருந்தன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்குரிய 14 கருப்பொருள்களை உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவற்றில் ஒன்று 'பண்' ஆகும். சங்க இலக்கியம் இப்பண்ணை பாலை, யாழ் என்று குறிக்கின்றது. சங்க இலக்கியப் பண்ணைப் பற்றி உரையாசிரியர்கள் குறிப்பிடும் போது நாற்பெரும் பண்கள்’ எனக் குறிப்பிடுகின்றனர். அவை குறிஞ்சிப் பண், மருதப்பண், செவ்வழிப்பணி, பஞ்சுரப் பண் என்பனவாகும். இந்நான்கு பண்களும் முல்லை தவிர ஏனைய நிலங்களுக்கு உரியனவாகும்.
O6)

Page 8
முல்லைப் பண் பற்றிய சான்றுகள் பரவலாகப் பயன்படுத்தப் பெறாத நிலையில் ஏனைய நான்கு பெரும் பணிகள் பற்றிய அகச்சான்றுகள் பரவலாகக் கிடைத்துள்ளன. இந்நான்கு பெரும் பண்களும் தற்காலத்தில் வழக்கிலிருக்கும் தாய் இராகம் (மேள இராகம்) போல செயற்பட்டிருக்க வேண்டும். சங்க இலக்கியத்தில் பண் பற்றிய செய்திகளில் பாலை, பண், யாழ் என்னும் பெயர்களோடு திறம் என்னும் சொல்லும் இடம்பெறுகிறது. திறம் என்பது ஏழு சுரங்களில் குறைந்த சுரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.
பகுக்கப்பட்ட பெரும் பண் பாலை எனப் பொருள்படும். நாற்பெரும் பண்களிலிருந்து ஏழ் பெரும் பாலைகள் பகுக்கப்பட்டுள்ளன. &160D6)Juurr6)J6OT 68FLDUT60D6D, UGBLD6006DU LIT6Op6o. செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம் பாலை, இப்பண்கள் தவிர எண்ணிக்கையில் குறைந்த சுரங்களையுடைய திறம் (ஒளடவம்), திறத்திறம் (ஸ்வராந்தரம்), பண்ணியற்றிறம் (ஷாடவம்) ஆகியனவும் தோன்றியுள்ளன.
சங்க காலத்திலே பண்கள் உரிய காலங்களுக்கேற்ப பாடப்பட்டன என்பதனை சான்றுகள் வாயிலாக அறியக் கூடியதாக உள்ளது.
எடுத்துக்காட்டு: மருதப்பண் மருதநிலத்தில் காலைப் பண்ணாகிய
இப்பண்பற்றி “சீரினிது கொண்டு நரம்பினிது இயக்கி யாழோர் மருதம் பண்ண புலர்ந்து விரி விடியலெய்த
முதுரை 657-658) என மதுரைக்காஞ்சி கூறுகின்றது.
செவ்வழிப்பண் மாலையில் பாட உகந்தது என்பதனை பல சங்கப் பாடல்கள் வாயிலாக அறிகின்றோம்.
ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
“அருளே யகலோ கொடிதே யிருள்வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின் a5T6ggốğ asT6UTLb LumTpGB6OT LDTEE"
(ppbilgilup/ 1441:3)
“பாலை யாழொடு செவ்வழிப்பண்கொள மாலை வானவர் வந்து வழிபடும்” என்னும் அப்பர் சுவாமிகளின் தேவாரத்தின் வாயிலாகவும் அறியலாம்.
சங்க காலத்தில் காலங்களுக்கேற்ப பண்கள் பாடப்பட்டன என்பதனையும் அப் பண்கள் பகல்பணிகள், இரவுப்பண்கள், பொதுப்பண்கள் என வகைப்படுத்தப்பட்டதாகவும் அறிகிறோம். பிற்காலத்தில் இராகங்களை கானகாலத்திற்கேற்ப வகைப்படுத்தும் முறைக்கு இது வழிகோலியது எனலாம்.
சங்க இலக்கியங்களில் 14 பணிகளின் பெயர்கள் இடம் பெறுகின்றன. அவை யாவன குறிஞ்சி, முல்லை, மருதம், செவ் வழி, பாலை, நைவளம், நோதிறம், பஞ்சுரம், ஆம்பல், காமரம், காஞ்சி, படுமலை, விளரி, காந்தாரம் என்பனவாகும்.
குறிப்பிட்ட பண்ணின் பெயர் இடம் பெறா மலும் பணி பொதுப் பெயராக சங்க இலக்கி யங்களில் பல இடங்களில் இடம் பெறுகின்றது.
எடுத்துக்காட்டு: 1. பண்ணினால் களிப்பிக்கும் பாணன்
காட்டு என்றானோ - கலி 7210 2. பண்கொளற்கு அருமை நோக்கி
LDLb 3O7:13 3. மண் அகம் முழவின் பண் அமை
éÓluITUp - GLJITb 1O7 பரிபாடலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இயற்புலவர். இசையமைத்தவரின் பெயர். பாடப்பட்ட பண்ணின் பெயர் என்பன தரப்பட்டுள்ளன.
C7)

Page 9
எடுத்துக்காட்டு:
பாடல் எண் - 4
பாடுபொருள் - செவ்வேள் ஆசிரியர் - கேசவனார் இசையமைத்தவர் - கேசவனார் Lഞ്ഞ് - நோதிறம்
பரிபாடலில் இன்று நமக்கு கிடைத்துள்ள 22 பாடல்களில் கடவுள் வாழ்த்துப் பாடல் மற்றும் 22&b பாடலைத் தவிர எஞ்சியுள்ள 20 பாடல்களில் வாழ்த்துப் பாடல்கள் பணி பாலையாழிலும் 5 பாடல்கள் பண் நோதிறத் திலும் மற்றும் 4 பாடல்கள் காந்தாரப் பண் னிலும் பாடப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
சிலப்பதிகார அரும்பதவுரையில் (12ஆம் நூ) ஆதியிசை 11, 991 எனக் குறிப்பிடப்படுகின்றது. ஆதியிசை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்ணமைதிகொண்டது என்ற கருத்து உள்ளது இவ் 11, 991 ஆதியிசைகளைத் தொழிற் படுத்திப்பாடுவது சாத்தியமில்லையாதலால் நாளடைவில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு பாடுவதற்குரிய பண்கள் 103 ஆகியது என்ற கருத்துண்டு. இவ்வாறு பண்கள் வரையறுக்கப் பட்ட காலம் ஜெயங்கொண்ட சோழன் காலம் எனக் கூறப்படுகின்றது. பணிகளாவன பாலையாழ் முதலிய நூற்றிமுன்று என்பார்திருக் குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர் (12ஆம் நூ). இந்த 103 பண்களின் பெயர்கள் சூடாமணி நிகண்டு, பிங்கல் நிகண்டு முதலான நிகண்டுகளில் காணப்படுவதால் 103 பண்கள் வரையறை செய்யப்பட்ட காலம் 10ஆம் 11ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
காரைக் காலம்மையார் கையானர்ட பணிகள்
சங்க இலக்கியங்களில் 14 பணிகளும் பிற்காலத்தில் எழுதப்பட்ட நிகண்டுகளில் 103 பண்களின் பெயர்களும் குறிப்பிட்டுள்ளன. ஆயினும் சைவநாயன்மார் அறுபத்து மூவருள்
ஜப்பசி 2011
 

சங்கத்தமிழ்
ஒருவராகப் போற்றப்படும் காரைக் காலம்மையார் (5ஆம் நூற்றாண்டு) அருளிய அற்புத திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு ஆகிய நான்கினுள் மூத்த திருப்பதிகங்கள் இரண்டும் முறையே நட்டபாடை பண்ணிலும் இந்தளப் பண்ணிலும் பாடப்பட்டன. 103 பண்கள் வழக்கத்தினுள்ள போதிலும் இவ்விரு பண்ணிலும் மாத்திரம் அம்மையார் பாடல் இயற்றியிருப்பது ஆய்விற்குரிய விடயமாகும். ஆயினும் அம்மையார் கையாண்ட நட்டபாடை பண்ணிலேயே திருஞானசம்பந்தர் முதன் முதலாக அருளிய "தோடுடைய செவியன்” எனத் தொடங்கும் பதிகம் அமைந்திருப்பதும் சுந்தரமூர்த்தி நாயனார் முதன்முதலாக அருளிய "பித்தா பிறைகடி பெருமானே” என்னும் தேவாரப் பதிகம் அம்மையார் பாடிய இந்தளப் பண்ணில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பணிகளின் பெயர்கள் இராகப் பெயர்களாக் கருநாடக இசையில் மாற்றி யமைக்கப்பட்டபோது நட்டபாடை பண்ணிற்குரிய இராகமான கம்பீர நாட்டை இசைக் கச்சேரிகள், நாட்டியக் கச்சேரிகள், கதா காலட்சேபம் முதலான நிகழ்ச்சிகளில் ஆரம்பித்தில் பாடுவதற்குப் பொருத்தமான இராகமாகக் கருதப்படுகின்றது. கோயில்களில் க்வாமி புறப்படும்போது வாசிக்கப்படும் "மல்லாரி" இசை கம்பீர நாட்டையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அம்மையார் கையாண்ட இந்தளப்பண் கருநாடக இசையில் மாயாமாளவகெளளை என அழைக் கப்படுகின்றது. இப்பணி அல்லது இராகம் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றது. மாணவர்கள் இசைபயிலத் தொடங்கும்போது ஆரம்ப இசைப் பயிற்சிகளை மாயாமாளவகெளளை இராகத்தில் பயில வேண்டுமென கர்நாடக சங்கீத பிதாமகராகிய புரந்தரதாஸர் இந்தளப் பண்ணிற்கு இணையான மாயாமாளவகெளளை இராகத்திலேயே ஆரம்ப
C8)

Page 10
அப்பியாச வரிசைகளை இயற்றினார். சங்கீதமும் மூர்த்திகளுள் ஒருவராகிய முத்துஸ்வாமி தீட்சிதரும் முதன் முதலில் இயற்றிய “ழுநீநாதாதி குருகுஹ” என்னும் கிருதியும் தீட்சிதரின் சீடர்களாகிய தஞ்சை நால்வருள் ஒருவராகிய பொன்னையா முதன் முதலில் குரு காணிக்கையாகப் பாடிய “மாயாதீர்த்த ஸ்வரூபிணி" என்னும் கீர்த்தனையும் LD TUU fLDT6T6O 6 66T6OO6T இராகத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்து.
தேவாரங்களில் பணிகள்
நூற்றிமூன்று பண்களிலும் பாடப்பட்டதேவாரப் பாடல்கள் தற்போது நமக்குக் கிடைத்தில. தேவார முதலிகளாகிய திரு ஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார் (7ஆம், 8ஆம் நூற்றாண்டு), சுந்தரமூர்த்திநாயனார் (9ஆம் நூற்றாண்டு) ஆகியோரால் அருளப்பெற்ற தேவாரங்களுள் நமக்குக் கிடைத்திருப்பவை 23 பண்களில் அமைந்த தேவாரங்களே. இவ் 23 பண்களுள் சம்பந்தர் 22 பண்களிலும் அப்பர் 10 பணிகளிலும் சுந்தரர் 17 பண்களிலும் தேவாரங்களை அருளியுள்ளனர். 103 பண் களிலும் குறிப்பிடப்படாத யாழ்முரிப் பண்ணில் (அடானா) சம்பந்தர் பெருமான் “மாதர் மடப்பிடியும்" என்னும் தேவாரத்தை அருளியமை குறிப்பிடத்தக்கது. இவ் 23 பண்களும் அவற்றிற்கு இணையான இராகங்களும் வருமாறு:
Lഞ്ഞ് இராகம் 1.செவ்வழி யதுகுலகாம்போதி 2.தக்கராகம் காம்போதி 3.தக்கேசி காம்போதி 4.புறநீர்மை பூபாளம் 5. U655LDub ஆஹிரி 6.JBLLJIT60L BT.60L 7.அந்தாளிக்குறிஞ்சி EfTLDT 8.காந்தாரம் நவரோசு 9.பியந்தைக்காந்தாரம் நவரோசு 10.கொல்லி நவரோசு
(ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
1.கொல்லிக் கெளவாணம் நவரோசு
12.பழம்பஞ்சுரம் தீரசங்கராபரணம் 13.மேகராகக்குறிஞ்சி நீலாம்பரி 14.பழந்தக்கராகம் ஆரபி, சுத்தசாவேரி 15.குறிஞ்சி ஹரிகாம்போதி 16.நட்டராகம் பந்துவராளி 17.சாதாரி பந்துவராளி 18.வியாழக்குறிஞ்சி செளராட்டிரம் 19.செந்துருந்தி மத்தியமாவதி 20.இந்தளம் LDTULITTL DT6T66856TT60D6T 21.5 Tg55ITUU65&LDLb கேதாரகெளளை 22.கெளசிகம் 6oupJ6úl 23.சீகாமரம் நாதநாமக்கிரியை
பண் ஆராய்ச்சி மாநாடுகளிலேயே இந்த 23 பண்களையும் ஓதுவார்கள். மரபுவழிபாடிக்காட்டி அவை இக்காலத்தில் இராகங்களுக்கு இணையாகக் கொள்ளப்பட்டன.
பழந்தமிழ்ப் பண்களின் பெயர்கள் காலப்போக்கில் பெயர் மாற்றியழைக்கப் பெற்றன. இதனால் தேவாரப்பண்களை இராகப் பெயர்களைக் கொண்டு இனங்காண வேண்டிய நிலை ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியிருந்ததைத் திருவா வடுதுறை ஆதீன ஏட்டுப் பிரதி ஒன்று அறியத் தருகின்றது. இந்த ஏட்டுப் பிரதியில் பண்களுக்குரிய இராகப் பெயர்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
பகற்பண்கள்
u60dr இராகம் LD5j60LD முநீகண்டி காந்தாரம், பியந்தை இச்சிச்சி கெளசிகம் பயிரவி இந்தளம் திருக்குறுந் தபஞ்சமி தக்கேசி காம்போதி நட்டராகம், சாதாரி பந்துவராளி
BLUT60L நாட்டைக்குறிஞ்சி பழம்பஞ்சுரம் சங்கராபரனம்
C9)

Page 11
85Tib5Tyueb&LDLib கேதாரகெளளை U658LDLib ஆகிரி
இராப்பன்ைகள் Lങ്ങ് &gns b தக்கராகம் கன்டகாம்போதி பழந்தக்கராகம் சுத்தசாவேரி சீகாமரம் நாதநாமக்கிரியை கொல்லி, கொல்லிக்கெளவாணம், \ சிந்துகன்னடா
வியாழக்குறிஞ்சி ஸெளராட்டிரம் மேகராகக்குறிஞ்சி நீலாம்பரி குறிஞ்சி LD6D35f. அந்தாளிக்குறிஞ்சி ஸைலதேசாட்சி
பொதுப்பண்கள் U6Odr இராகம் செவ்வழி எதுகுலகாம்போதி செந்துருத்தி மத்தியமாவதி திருத்தாண்டகம் LiluunTEL
பணிகளுக்கு நேரான கருநாடக இசை இராகங்கள் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து இராகங்களைக் கொண்டு பதிகப்பண்களை இனங்கண்டு பாடும் முறை இவ்வேடு எழுதப்பெற்ற கி.பி.17ஆம் நூற்றாண்டில் வழக்கிலிருந்தமை தெரிகின்றது.
பணர்களினர் வகைப்பாடு
தமிழிசை இலக்கணத்தில் பண், திறம் என்ற இரு வகைப்பாடுகள் உள்ளன. பண் என்பது பொதுவாக எல்லா இராகங்களையும் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகும். ஆயினும் பண்களை வகைப்படுத்தும்போது பண் ஏழு நரம்புகளைக் கொண்டது என்றும் திறம் அதனிலும் குறைந்த நரம்புகளைக் கொண்டது என்றும் திவாகர நிகண்டிலிருந்து அறிய முடிகின்றது.
(ஐப்பசி 2011 )
 

சங்கத்தமிழ்
“நிறை நரம்பிற்கே பண் னெனலாகும்
குறை நரம்பிற்கே திற மெனப்படுமே”
தற்ப்ோது ஏழு நரம்புகள் (சுரங்கள்) உள்ள பண் சம்பூர்ண இராகமென்றும் அதினிலும் குறைந்த சுவரங்கள் கொண்ட திறம் ஜன்ய இராகமென்றும் அழைக்கப்படுகின்றன. திறம் அதன் நரம்புகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவையாவன:
திறப்பிரிவு இராகப்பிரிவு 1.பண்ணியற்றிறம் 8FTL6).JLD 2.திறம் ஒளடவம் 3.திறத்திறம் சதுர்த்தம்
(ஸ்வராந்தரம்)
103 பணிகளினர் வகைப்பாடு
பஞ்சமரபு உரையில் 103 பண்கள் மூன்று விதங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. (9606) pureleoT: (அ) பண், பண்ணியற்றிறம், திறம், திறத்
திறம் - இம்முறையை பின்வரும் பஞ்சமரபு வெண்பா விளக்குகின்றது.
பண்னேர்பதிே bபண்ணியல்பத்ே எண்ணுந்திறமிரண்டும்பத்தென்ப-நண்ணி நாலாந்திறத்திறமோர் நான்கு முளப்படப் பாலாய பண்ணுற்று மூன்று” ஏழு நரம்புகள் கொண்ட
பண்கள் - 17 ஆறு நரம்புகள் கொண்ட
U600raisef - 70 ஐந்து நரம்புகள் கொனன்ட
திறங்கள் - 12 நான்கு நரம்புகள் கொண்ட
திறத்திறங்கள் - O4 மொத்தம் 103 பண்கள்
இவ்வாறு 103 பண்களை வகைப்படுத்திக் கூறிய முதல் இசை இலக்கண நூல் பஞ்சமரபாகும்.
G10)

Page 12
(ஆ) "நாற்பெரும் பண்ணும் சாதிநான்கும் பாற்படுதிறனும் பண்ணெனப்படும்" என்னும் பஞ்சமரபு உரையும், சிலப்பதிகார உரைமேற்கோளும் பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், செவ்வழியாழ்என்றநாற்பெரும்பண்கள் அவற்றின் திறங்கள் - நால்வகைச் சாதியான அகநிலை, புறநிலை, அருகியல். பெருகியல், இவற்றின் வழியாகப் பிறக்கும் 103 பண்களை உணர்த்துகின்றன எனக் கருதலாம். பண்கள் ஒவ்வொன்றும் அகம், புறம், பெருகு ஆகியவற்றைச் சேர்க்க வரும் 16 பண்களோடு தாரப்பண் என்ற பண்ணும் சேர்ந்து 17 பண்களாகின்றன. இவை ஏழு சுவரங்களைக்கொண்ட பண்களாகும். நாற்பெரும் பண்களுக்கும் 21 திறங்கள் உள்ளன. அவை வருமாறு:
பாலை யாழ்த்திறன் ー5 குறிஞ்சி யாழ்த்திறன் - 8 மருத யாழ்த்திறன் - 4 செவ்வழி யாழ்த்திறன் - 4
21
இருபத்தொரு திறங்கள் ஒவ்வொன்றிலும் அகம், புறம், அருகு, பெருகு வகைக் கூறுகள் சேர்க்க மொத்தம் 84 பணிகளாகின்றன. இவற்றோடு முன்னர் கூறிய 17 பண்களும் பையுள் காஞ்சி, படுமலை என்ற இரண்டு பண்களையும் சேர்க்க 103 பண்களாகின்றன. (7+84--O2=1O3) (இ) செம்பாலை, படுமலைப் பாலை முதலிய ஏழு பாலைகளிலும் பிறக்கும் பண்கள் மொத்தம் 103 ஆகின்றன.
செம்பாலையுள் பிறக்கும்
U600rs6ir - O8
படுமலைப்பாலையுள் பிறக்கும்
U60dressir - 22
செவ்வழிப்பாலையுள் பிறக்கும்
U600,856ft - 12
(ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
அரும்பாலையுட் பிறக்கும்
LeOdressir - 26 கோடிப்பாலையுட் பிறக்கும்
Li6Odrasair - 12 விளரிப்பாலையிற் பிறக்கும்
u6Odrasoit - O5 மேற் செம்பாலையிற் பிறக்கும்
Lj6Odraisei - 18
103 பண்கள்
(ஈ) மேலும் பண்கள் கீழ்கண்டவாறும் வகைப்படுத்தப்பட்டுள்ளன:
வெளிப்படுவன, வெளிப்படாதன, ஒலிக்
குரியன, வன்மைக்குரியன. மென்மைக்குரியன. இவ்வகைப்பாடு தற்காலத்தில் வழங்கும் இராக வகைப்பாடுகளுடன் ஒத்த தன்மையுடை யவையாக விளங்குகின்றன.
()
(2)
(3)
(4)
வெளிப்படும் பண்கள் - எல்லோராலும் பாராட்டப் பெற்று வழக்கில இருக்கும் பண். இவை 19. இவை தற்காலத்து цflЈш6ӧ шцрп60т இராகங்களுக்கு ஒப்பானவை. வேங்கடமகியவர்கள் சதுர் தண்டிப்பிரகாசிகை (17ஆம் நூற்றாண்டு) என்னும் நூலில் பிரசித்தமான இராகங்கள் 19 (கல்பித மேளங்கள்) எனக்குறிப்பிட வழிகோலியது எனலாம். வெளிப்படா பண் - இசை வல்லுநரால் ஏதோ ஒருசமயம் மட்டும் பாடப்படும் பன்ை. இவை 17. இவை தற்காலத்து அபூர்வ இராகங்களுக்கு ஒப்பானவை. ஒலிக்குரியனவாய பண்கள் - கம்பீரமான பண்கள். இவை 6 பண்களாகும். இவைகன
வன்மைக்குரியனவாய பண்கள் - பெரிய இசைகளாக அமைந்த சிறப்பாக ஏழிசையும் கொண்ட பெரும் பாலைகளும் ஒரு சில ஆறிசைப் பண்களும் ஒரு சில
G11)

Page 13
f
seg
ஐந்திசைப் பண்களுமாகும். இவை 2O. இவைதற்காலத்துநய இராகத்திற்கு ஒத்தன. (5) மென்மைக்குரியனவாய பண்கள் - சிறிய இசைகளாக அமைந்து வரும் பண்கள். இவை 6 பண்களாகும்.
இவற்றைவிட குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய பண்களைப் பாடினர் என்பதனை பண்டைக்கால இலக்கியக் குறிப்புகளிலிருந்து அறியலாம். பஞ்சமரபில் சிறுகாலை, காலை, நண்பகல், GöLIIIG, LDIT6O60, e60WuslD6ir us!LDLö, usiLDLb, வைகறை என்ற எட்டுக் காலங்களாகப் பிரிக்கப்பட்டு அவைகளுக்குரிய தெய்வம், அக்காலங்களில் பாடக்கூடிய பண்கள் என்பன விவரமாகக் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு காலத்திற்கேற்ப இராகங்களைப் பாடும் முறை பற்றி குறிப்பாக நாரதரின் சங்கீத மகரந்தத்திலும் (1ஆம் நூற்றண்டு) சோமநாதரின் இராக விபோ தத்தில் (17ஆம் நூற்றாண்டு இராகங்களுக்குரிய ஆதி தெய்வங்களும் நிறங்களும் கூறப்பட்டுள்ளமை பண்முறை வகுப்போடு ஒப்பிடக்கூடியது.
மேலும் தற்காலத்தில் ஜன்ய இராகத்தில் உட்பிரிவுகளாகிய வர்ஜ, வக்ர, உபாங்க, பாஷாங்க, நிஷாதாந்திய, பஞ்சமாந்திய இராக
qMeLqeLSLLM0SL0 T kiLqeeSLTL0S e TqeLeeMSL0L0 qLkiLiqeMSY MTMekS ST TkeqeeLSSL MTe0eSe
2O10ஆம் ஆண்டின் இலங்கை பரிசிலை கொழும்புத் தமிழ்ச் கலைச்செல்வன் அவர்கள் தனது திரு.இ.சடகோபன் அவர்களின் தன. பெற்றுக் கொண்டனர்.
LLk0LL LqLSL LMLML0S0LLMLL LAL LL k0LL k LLeLeeL S SLML0e0L0LqLqeMM AS S LMYLLeLL SS
ஐப்பசி 2011 )

சங்கத்தமிழ்
வகைகளும் பழைய பண்ணிசை வழிவந்த பண்களில் காணலாம். எடுத்துக்காட்டு:
இராக வகை U600T
பாஷாங்க இராகம் கெளசிகம், தக்கேசி வர்ஜ இராகம் புறநீர்மை, பழந்தக்க ராகம் வக்ர இராகம் மேகராகக்குறிஞ்சி நிஷாதாந்திய இராகம் சீகாமரம் பஞ்சமாந்திய கொல்லி
பண்டைக் காலத்தில் வழக்கிலிருந்த பண் என்ற சொல் பிற்காலத்தில் இராகம் என மருவி வந்ததாகவும் அக்கால வழக்கிலிருந்த பண்களின் வகைப்பாடு பிற்கால இராகப் பிரிவுகளுக்கும் வழிகோலியது எனக் கூறலாம்.
அடிக்குறிப்புகள்
1. இ.அங்கயற்கண்ணி தமிழக இசையும் ஆய்வும், ப-81
2. இரா.கலைவாணி, சு.தமிழ்வேலு,
சங்க இலக்கியத்தில் இசை, ப-113
3. து.ஆ.தனபாண்டியன், இசைத்தமிழ்
வரலாறு பகுதி-1, ப-204
4. மேலது ப-229
5. இ.அங்கயற்கண்ணி, பஞ்சமரபில்
இசைமரபு, ப-98
6. பொன் ஒதுவர்மூர்த்திகள்,தேவாரப் பண்கள் Annamalai
University Journal Volume 1. No.O2
ア தாண்டவராய முதலியார், சேந்தன்திவாகரம், ப-123
8. இ.அங்கயற்கண்ணி, பஞ்சமரபில்
இசைமரபு, பக். 90-93
MLeMMSLM0M MLMMMLM00C MLMMAMMMM MLLM SLSL MM Ee MLLLeS MMMS
9ரசாங்கத்தின் சாகித்ய மண்டலம் சங்க ஆயுள் உறுப்பினர்கள்
"மனித தர்மம்" நூலுக்காகவும், து "கசுந்த கோப்பி நூலுக்காகவும்

Page 14
சம்பந்தரின்திருக்
ம்ேபந்தர், பெரும்பாலும் தம் புதிகம் தோறும் இறுதியில் திருக்கடைக்காப்புப்பாடும் வழக்கத்தை உடையவர். சம்பந்தரின் தனிப்பட்ட ஆளுமைகளைக் கண்டு கொள்வதற்கு அவரது திருக்கடைக்காப்புச் செய்யுள்கள் உதவுவதுபோல் வேறெதுவும் உதவுவதில்லை எனலாம். அவரது ஆளுமைகளை மாத்திரமன்றி தமிழிலக்கிய உலகில் உணரப்படாத உண்மைகள் பலவற்றையும் துலக்கவல்லனவாக அவை புலப்படுகின்றன.
தமிழ் நாதன் (391)
BöpLÓlþ E5|T601&LbLög,6ör (99:10 திருமாமறை ஞானசம்பந்தன் (831) ஞானத்துயர்கின்றநலங்கொள்ஞானசம்பந்தன்(321) நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை
ஞானசம்பந்தன் (4:t) மறை சேர்வரும் கலைஞானசம்பந்தன் (791) இணையில் சம்பந்தன் (81:1) என்றெல்லாம் விருது மொழிகளையே சம்பந்தர் பேசுவதை அவரது திருக்கடைக் காப்புச் செய்யுள்தோறும் காண்கிறோம். "சம்பந்தன் தன்னைப்பாடினான்' என்று ઈીeu60f கூற்றாயமைந்த ஒரு மரபுத்தொடர் தோன்றக் கூடிய அளவுக்கு தன்னைப் புகழ்ந்திருக்கிறார் சம்பந்தர். அத்தகுதற்புகழ்ச்சியை நோக்கும்போது இலக்கண நூற் பரிச்சயமுடைய எவருக்கும் நன்னுற் பொதுப்பாயிரத்திற் காணப்படும் மேல் வரும் நூற்பா ஞாபகத்துக்கு வருவது தவிர்க்க இயலாதது.
"தோற்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான்தற் புகழ்தல் தகுதியன்றே"
ஐப்பசி 2011 }

கடைக்காப்புச் செய்யுள்கள்
க. இரகுபரன், சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,
சிறப்புப் பாயிரத்தை நூலாசிரியனே இயற்றுதல் ஏன் தகாது என்பதற்கு அளிக்கும் விளக்கமாக அமைவதே மேற்படி நூற்பா. இக் காரணத்தால் நூலினதும் நூலாசிரியரினதும் சிறப்பினைக் கூறுவதான சிறப்புப் பாயிரம், "தன் மகன், ஆசான், தகும் உரை காரர்” என்று நூலாசிரியர் அல்லாத பிறரொருவராலேயே பாடப்பெறுவதா யிற்று. பிற்காலத்தில் தற்சிறப்புப் பாயிரம்' என்று ஒன்று தோன்றியது. அது நூலாசிரியரினாலேயே செய்யப்படுவது. ஆனால் அத் தற்சிறப்புப் பாயிரத்தில் நூலாசிரியனதோ நூலினதோ சிறப்பு எதுவும் பேசப்படுவதில்லை. தெய்வ வணக்கமும் நூல்நுதலிய பொருளும் மாத்திரமே உரைக்கப்படும். யாப்பருங்கல உரையில், g56OOTFTaby,
“வணக்கம் அதிகாரம் என்றிரண்டும் சொல்லச்
சிறப்பென்னும் பாயிர மாம்”
"தெய்வ வணக்கமுஞ் செயப்படு பொருளும்
எய்த உரைப்பது தற்சிறப்பாகும்”? என்னும் இரண்டு நூற்பக்களைத் தற்சிறப்புப் பாயிர இலக்கணம் கூறுவனவாக எடுத்துக் காட்டுகிறார். தமிழ் இலக்கிய இலக்கண நூல்களை நோக்கும்போது நூலாசிரியர் எவரும் தம்மை வியந்து கூறியதைக் காண முடியவில்லை. மாறாக தம்மை மிகவும் தாழ்த்திக் கூறிய அவையடக்கங்களையே காணக்கூடியதாகவுள்ளது. இதனால் தமிழிலக்கிய இலக்கண ஆசிரியர்கள், நன்னூற் பொதுப்பாயிரம்,
"தோற்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான்தற் புகழ்தல் தகுதி அன்றே"
என்று கூறியமையைத் தடம் இயல்புக்குப் பொருந்தியதாகக் கண்டு ஏற்று நடந்தனர்
G13)

Page 15
எனலாம். ஆனால், நன்னூற் பொதுப் பாயிரம், மேற்படி நூற்பாவை எடுத்துக்கூறிய கையோடு, அதற்குப் புறநடையும் வகுத்துக் கூறியது. தற்புகழ்ச்சி தகுதியற்றதாயினும் இன்ன இன்ன இடத்தில் தற்புகழ்ச்சியும் புலவர்க்குத் தக்கதே என்பது அப்புறநடை.
"தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும் மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் தன்னை மறுதலை பழித்த காலையும் தன்னைப் புகழ்தலும் தகும் புலவர்கே.”*
இலக்கண, இலக்கிய நூல்களில் தற்புகழ்ச்சிக் கூற்றுக்கள் எவையும் காணப் பெறா நிலையில் இப் புறநடைவிதியின் தேவை என்ன என்ற வினா எழும்போதுதான், சம்பந்தரின் தற்புகழ்ச்சிக் கூற்றுக்கள் மலிந்த திருக்கடைக்காப்புப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாகிறோம்.
அதே நேரத்தில் பதிகந்தோறும் (பெரும்பாலான பதிகங்களில் 10ஆம் பாடல்) சமண பெளத்தர்களை மிகக் கடுமையாகப் பழித்துரைக்கக் காண்கின்றோம். தம்மை நற்றமிழும் நான்மறையும் நன்குணர்ந்தவர் என உரைக்கும் சம்பந்தர் சமண பெளத்தர்களை - குறிப்பாகச் சமணர்களை - அதற்கு மறுதலையாகப் பழித்துரைக்கிறார்.
"சங்கத பங்கமா பாகதத்தொடு இரைத்து
Ф—60одgѣдѣ SS SS LSL LL 0SL S S L L L L LSL L S LSL L ey85j” (3:39:4)
“ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா அங்கதர்” (3:39:4)
சம்பந்தர் தம் மேதமையை முன்னிலைப் படுத்தி தமது கொள்கைகளைப் பரப்ப முயல மறுபுறத்தில் சமணர்கள் சம்பந்தரோடு வாதிட்டு சைவத்தினதும் சம்பந்தரினதும் பல வீனங்களை
(gÜuf 2011}-
 

சங்கத்தமிழ்
எடுத்துக் காட்டி சமணத்தைப் (3600T முயன்றிருக்கிறார்கள். சமண பெளத்தர் வாது செய்யும் இயல்பினர் என்பதைச் சம்பந்தரே குறிப்பிடுகிறார்.
"தர்க்க சாத்திரத்தவர் இடுக்கண் வருமொழி
(1:62:1O) “வாது செய்யும் சமணர்” (17710)
வாதுகளின்போது சமணர், தம்பக்கத்துப் பெருமைகளைப் பகர்ந்திருப்பர், தற்புகழ்ச்சி செய்திருப்பர்.
"விருது பகரும் வெஞ்சொற் சமணர்" (1:68:10) என்கிறார் சம்பந்தர். அத்தகைய சமணருக்கு எதிராகச் சம்பந்தர், சைவத்தின் சிறப்புகளையும் சமணரின் பலவீனங்களையும் கூறுவதோடு அமையாது சைவத்தின் மீட்சிக்காக - எழுச்சிக்காக - நடைபெறும் போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் தம்முடைய ஆற்றலையும் எடுத்துக்கூற முற்பட்டிருக்கிறார். இரு பக்கத்தாரும் சளைக்காதுநின்றுவாது செய்திருக்கிறார்கள். சேக் கிழாரும் தம் பெரிய புராணத்தில் சம்பந்தரும் சமணரும் நேரடியாகவே பல வாதங்களில் ஈடுபட்டதை மிக விரிவாகவே கூறியிருக்கிறார். சம்பந்தர் பதிகங்களுள்ளும் அதற்கான அகச்சான்றுகள் பலவுள. எங்கெல்லாம் வாதம் நிகழுகிறதோ அங்கெல்லாம்,
"தன்னுடைய ஆற்றல் உணரார்” இருத்தலும் "மன்னிய அவையிடை வெல்லுறுத”னும் "தன்னை மறுதலை பழித்த"லும் இடம்பெறுதல் இயல்பே. அத்தகைய ஒரு கழலின் பிரதிபலிப்பே மேற்சுட்டிய பாயிரம் பற்றியதான நன்னூற் புறனடைச் சூத்திரம் என்று கொள்வது உண்மைக்கு மாறாகாது.
இவ்விடத்தில், சம்பந்தரோடு அவரது சமகாலத்தவரான திருநாவுக்கரசரை ஒப்பிட்டு நோக்குவோர் மனதில் ஒரு கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது. ஒரே கழலுக்குள் வாழ்ந்த
G14)

Page 16
“සාංඝ
இருவருள், சம்பந்தர் தம் பதிகம் தோறும் விருது மொழிகளை உடையனவான திருக்கடைக் காப்புகளைப் பாட, நாவுக்கரசர் ஏன் திருக்கடைக்காப்பையே பாடாது விட்டார் என்பதே அக்கேள்வி. சணர்முகதாஸின் விளக்கம் அக்கேள்விக்குத் தக்க பதிலாக அமையவல்லது.
66
அப்பருடைய அறிவிலோ அனுபவத்திலோ எவர்க்கும் ஐயம் ஏற்படும் சூழ்நிலையே இல்லை. காரைக்காலம்மையார் பதினொரு பாடல்கள் பாடினாலும் "பத்துப் பாடல்கள்” என்று குறிப்பிட்டுள்ளதையும் அவையே இறைவனைப் பாடுகின்றன என்பதனையும் நோக்கிய அப்பர் இறைவனைப் பற்றிப் பாடுவதே தன் கடன் என்று எண்ணி பத்துப் பாடல்களை மட்டுமே பாடியிருக்கலாம். சமண சமயத்திற் சேர்ந்த குற்றத்தினை எண்ணித் தன்னைத் தாழ்வாக நினைத்து இறைவனைப் பாடும் பாடல்களின் பயனைத் தான் கூறுவதற்கு அருகதையுடையவனோ என்று எண்ணி அவர் திருக்கடைக்காப்புப் பாடாமல் விட்டிருக்கலாம்"."
திருநாவுக்கரசர் வரலாறு கூறமுற்பட்ட சேக்கிழாரும் அவர் சம்பந்தர்போல் வாதங்கள் எதிலும் ஈடுபட்டதாகக் குறித்தாரில்லை. மாறாக, சமணர் தமக்குக் கொடுமை யிழைத்த வேளைகளிற்கூட மன வைராக்கியத்தோடு இறைவன் திருவருள் ஒன்றையே நம்பி அமைதி காத்தவராகவே நாவுக்கரசரைக் காட்டியிருக்கிறார் என்பதையும் மனங்கொள்ள வேண்டும். தற்கால ஆய்வாளர்கள் திருநாவுக்கரசரை சாத்வீகப் போராட்டத்தின் முன்னோடியாக இனங் காண்கிறார்கள் என்பதும் இங்கு மனங்கொள்ளத் தக்கதே.
இந்நிலையில் தேவார ஆசிரியர் மூவரில் மூன்றாமவரான சுந்தரரையும் நோக்குதல் பொருத்தமானதாகலாம். ஏனெனில் அவர் தேவார
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
ஆசிரியர்களுள்ஒருவராதலோடுதிருக்கடைக்காப்புப் பாடியவராயும் விளங்குகிறார். ஒப்பீட்டு நிலையில் சுந்தரரதுதிருக்கடைக்காப்புகளை நோக்கும்போது ஓர் உண்மை புலனாகின்றது. சுந்தரர் சம்பந்த ருடைய பதிக மரபைப் பின்பற்றி, பாடியவர் பெயர், ப்ாடுபொருள், பயன் என்பவற்றைக் குறிக்கும் அளவில் திருக்கடைக்காப்பைக் கையாண்டா ரேயன்றி தம்மைப் புகழ்ந்துரைக்கும் நோக்கம் எதுவும் அவரிடத்து இருக்கவில்லை என்பதே அவ்வுண்மையாகும். சான்றாக சுந்தரரது திருக்கடைக் காப்புப் பகுதிகள் சிலவற்றை நோக்குவோம்.
"அடிகேள் உமக்கு ஆட்செய்ய அஞ்சுதும் என்று
அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலக்ாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்த ஓர் ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒன்றும்
(7:2:1)
இக் கடைக்காப்பில் ஆரூரன் என்ற தம் பெயருக்கு முன்னே விருது மொழியாய் எந்த அடைமொழியையும் சுந்தரர் கையாண்டா ரில்லை. இப்பதிகத்துப் பாடல் பதினொன்றையும் தாம் அச்சத்தோடு மொழிந்ததாக அடக்கத்தோடு கூறுகிறார்.
விருத்தனாய வேதன் தன்னை விரிபொழில்
திருநாவலூரன் அருத்தியால் ஆரூரன் தொண்டன் அடியேன் கேட்பமாலை பத்து
(7:6:1O) இங்கே சுந்தரர் தம்மை தொண்டருக்கு அடியேன் என்று அடக்கத்தோடு குறிப்பிடுகிறார். ஆசை பற்றி அறையலுற்றதாக அவையடக்கம் பேசுகிறார். கீழ்வரும் உதாரணங்களும் இத்தகையனவேயாதல் காண்க.
-G15)

Page 17
출
". . . . . . . . . . . . . . . . . . . . . . பரமனையே பணியச் சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் சடையனவன் சிறுவன் பத்தன் ஆரூரன் பாடல் .......... " (7:7:1)
". . . . . . . . . . . . ஆரூர் அய்யனை ஊரன் அஞ்சிச் செஞ்சொலால் நயந்த பாடல் ................
(7:8:1O)
“ஆரூரன் அடியான் அடித்தொண்டன் ஆரூரன்
6affT6dreoT âebü UTL6ö ......................”(7:2:1O)
"படிசெய்நீர்மையிற்பக்தர்கள்பணிந்தேத்தினேன் பணியீர் அருள் வடிவிலான்திருநாலலுரன் வனப்பகையப்பன்
வன்தொண்டன் செடியனாகிலும் தீயனாகிலும் தம்மையேமனம்
சிந்திக்கும் அடியன் ஊரனை ஆள்வாரோ நமக்கு
அடிகளாகிய அடிகளே" (7:331O)
சுந்தரரின் தாழ்மையே துலங்க நிற்பன இப்பகுதிகள். பெரும்பாலும் இதுவே சுந்தரரது திருக்கடைக் காப்புகளின் பொது இயல்பாய்த் துலங்குகிறது. சுந்தரரது காலம் அப்பர், சம்பந்தர் காலத்திற்கு ஏறக்குறைய குறைந் தது ஒரு நூற்றாண்டேனும் பிற்பட்டதாகக் கொள் ளப்படுகின்றது. அது தமிழகம் அவைதீக மதத்தினருக்கெதிராக சம்பந்தர் முதலானோர் நடாத்திய போராட்டத்தின் முதிர் விளைவை அநுபவித்த காலம். வைதீகம் செழிப்புற்றிருந்த அக்காலத்தில் வாழ்ந்த சுந்தரருக்கு அவைதீகருக்கு எதிராகப் போராட்டம் நடத்தவோ வாதிடவோ வாதுகளின் போதும் வேறு தேவை கருதியும் விருதுபகரவோ வேண்டி இருந்திராது. அப்படியான சந்தர்ப்பம் எதுவும் சுந்தரர் வாழ்வில் ஏற்பட்டதாகச் சேக்கிழாரும் காட்டினாரில்லை. மாறாக தம்பிரான் தோழராக உரிமை பாராட்டிய போதும் தம்பிரான் அடியார் முன்னிலையில் அடியார்க்கடியராகத் தம்மைத் தாழ்த்தியேநடந்து
(ஐப்பசி 2011 )
 

சங்கத்தமிழ்
கொண்டார். இதுவே சேக்கிழார் காட்டும் சுந்தரரது குணசித்திரம். அக்குண சித்திரத்துக்கு அமையவே அவரது திருக்கடைக்காப்புகளும் திகழ்கின்றன.
இவற்றால் சுந்தரருக்குத் தம்மைப் பற்றிய விருதுமொழி பகர வேண்டிய காலச் சூழ்நிலை இல்லை என்பதும் நாவுக்கரசர் விருதுமொழி பகரத்தக்க ஆளுமையுடையவராய் இல்லை என்பதும் சம்பந்தரே இரண்டும் ஒருசேர அமையப் பெற்று விளங்கினார் என்பதும் நாம் கொள்ளத்தக்க முடிவுகளாகின்றன. வேறு வகையிற் கூறுவதாயின் சம்பந்தர் பதிகத்துத் திருக்கடைக்காப்புகளிற் காணப்படும் தற்புகழ்ச்சிக் கூறுகள் அவரது காலச் சூழலதும் தனிப்பட்ட ஆளுமையதும் எதிர் விளைவுகள் எனலாம்.
சம்பந்தர் காலச் சூழ்நிலையை ஒத்த கழலில் வாழ்ந்தவர்களும் ஏறக்குறைய சம்பந்தரை ஒத்த &6560) D உடையவர்களும் blDg அணர்மைக்காலத்தவர்களுமான இருவரை இங்கு நோக்குவதன் மூலம் இவ்வுண்மையை மேலும் தெளிய விளங்கலாம். அவ்விருவருள் முன்னவர் ஆறுமுகநாவலர்; அடுத்தவர் மகாகவி பாரதியார்.
தமிழ்நாட்டில் பல்லவர் ஆட்சியின் ஆரம்ப காலத்தை ஒத்த சூழ்நிலையே 19ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் நிலவியது. அங்கே அவைதீக மதங்களான சமண பெளத்தம் இருந்த இடத்தில் கிறிஸ்தவத்தின் பிரிவுகளான புட்டஸ்தாந்த, கத்தோலிக்க மதங்கள். அவற்றால் தமிழரது பாரம்பரிய கலாசார மான சைவத்துக்கும் தமிழுக்கும் ஆபத்துத் தோன்றியது. அந்த நிலையில் நாவலர் எழுத்துவன்மை, பேச்சுவண்மை, ஆழ்ந்தகன்ற அறிவு, துணிவு என்பவற்றின் துணை கொண்டு போராடினார். அவரது போராட்டம் கிறிஸ்தவத்திற்கு எதிரானதாக மாத்திரம் அமையவில்லை. சைவத்தினதும், தமிழினதும் அன்றைய இழிநிலையை உணராமல் வாழ்ந்து
G16)

Page 18
கொண்டிருந்த பரம்பரைச் சைவர்களுக்கு - ஒழுக்கவீனர்கள், அநீதியாளர்களுக்கு எதிராகவும் அமைந்தது. ஆராய்ச்சி முரண்பாடுகளுக்கு எதிராகவும் தலைமை தாங்கிப் போராடினார் நாவலர். அப்போராட்டச் சூழ்நிலையில் எழுந்த கண்டன இலக்கியங்கள் ଗରUଓ5 பிரசித்தமானவை. அக்கணர்டனங்களுள் தம்மையும் தLDது கட்சியாரையும் நிலைநிறுத்துவதும் எதிர்க் கட்சியாரை ஏளனம் செய்வதுமான போக்குகள் églasLib காணப்படுகின்றன. அவை சம்பந்தர் பதிகத்துக் காணப்படும் சமண பெளத்த கண்டனங்களையும் சம்பந்தரின் தற்புகழ்ச்சிக் கூறுகளையும் விளங்கிக் கொள்ள, தக்க மேற்கோளாய் அமையவல்லன. நாவலருடைய கண்டனங்கள் வசன ரூபமானவை என்பதே வேறுபாடு. செய்யுள் வடிவில் அமைந்ததும் உண்டு. சுருக்கம் கருதி செய்யுளை நோக்குவோம்.
இது 'சனிநீராடு' என்ற முதுமொழியை பிழையான முறையில் வியாக்கியானஞ் செய்து அதுவே சரியானதென்று வாதிட்டவர்களுக்கு எதிராக - கிறிஸ்தவரால் நடாத்தப்படுவதான - உதயதாரகை பத்திரிகைக்கு எழுதிய சீட்டுக் கவி.
"மக்கர்குருதத்தத்நிடதத்தர்பிற மன்னர் தொழ வளமிகுதொன் மதுரை நீங்கி மத்தகய மொத்ததிறல் பெற்றிடு புவிச்சக்ர வர்த்திசிங் காரியன் முதல் மன்னரர சாளுமிட மென்னவள ரியாழ்பான மருவு நல்லா புரியினன் மயில்வா கனச்சுப்ரமணிய சுவாமியின்றிரு மலரடி துதிக்கு மடிமை திக்கனைத் தும்புகழு முத்தம மிகுந்திடுஞ் செந்தமிழ்க் கலை ஞாபகன் சீர்மருவு கந்தனருள் மைந்தனாம்
ЄѣDI(Up86 தீரன் எழுதுங் காகிதம் செப்புதைய தாரகைப் பத்திரமச் சிற்பதித் திட்டுபிர சித்தி செய்யும்
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
திகழ்முகா மைக்காரர் எதிர் கொண்டு
துயர்விண்ைடு சித்தமகிழ் கொண்டு காண்க தக்கசனிநீரா டெனும் அவ்வை யார்மொழி தனக்குரைதனைப் பகரிடிற் சனிவார மதிலெண்ணையிட்டவெந்நீரினிற் றலை முழுக வென்பதாகுஞ் சத்திய விசித்திரகவிஞர்க்களு சிதப்ரபல்ய சற்குண மகத்துவமிகும் தணிகைவளர் கந்தப்ப தேசிக னளித்திடுஞ் சரவணப் பெருமாளெனும் மிக்கபுலவனு மிங்கன முரைவகுத்தனன் மிகுசோதிடங்களாலும் வித்தக வறப்பளிச் சுரசதக முதலான வேறு பல நூல்களாலும் மேலான பொருளிதெனவேயுணர்கவேறுசில வீனர் பொருள் வேறு பகர்வார் மெய்மையைப் பற்றிவஸ்.ஞவர்சொன்
மூன்றாங்குறள்
விளங்கிர்ை போனுமன்றே."5
எம்மால் தடித்த எழுத்துக்களாக்கப்பட்ட பகுதிகள் இரண்டில், முதலாவதிற் காணப்படும் புகழ்ச்சிக் கூறுகள் சம்பந்தரின் தற்புகழ்ச்சிக் கூறுகளோடு ஒத்த தன்மையது என்பதும் இரண்டாவதில் உள்ள கண்டனம் சமண பெளத்தருக்கு எதிராக சம்பந்தர் மேற்கொண்ட கண்டனங்களை ஒத்த தன்மையது என்பதும் வியாக்கியானம் வேண்டா அளவு வெளிப்படை யானவை. "செப்பு உதயதாரகைப் பத்திரம் அச்சிற் பதித்திட்டு பிரசித்தி செய்யும் திகழ் முகாமைக்காரர் எதிர்கொண்டு துயர்விணடு சித்தம் மகிழ்கொண்டு காண்க" என்பதிலுள்ள "குத்தலையும் கண்டு நயக்கலாம். நாவலர், சம்பந்தரை ஒப்ப நடாத்திய போராட்டமும் அதிற் கண்ட வெற்றியுமே அவரை ஐந்தாம் குரவராகக் கருதவைத்தன என்பது இவ்விடத்து மனங் கொள்ள வேண்டியது.
-G17)

Page 19
பாரதியார் நடாத்திய போராட்டம் ஆறுமுக நாவலரது போன்று சமயச்சார்பானதாக அமையாது தேசீயம், சமூகம் சார்ந்ததாய் அமைந்தது. தமிழ்ச் சமூக, இலக்கிய வரலாற்றில் பாரதியார் ஏற்படுத்திய புரட்சி அதுவரையில் தமிழகம் காணாதது.
அப்புரட்சியை ஏற்படுத்துவதற்கு பாரதியார் வெள்ளைக்காரர்களை விட "յ5ւքւնւյծ சுதேசிகளுக்கு எதிராகவும் அதிகம் போராட வேண்டியிருந்தது. அப்போராட்டத்தை நடாத்தி வெற்றிகாணத்தக்க அறிவுதன்னிடத்தே உண்டு என்று உறுதியாக நம்பினார் பாரதியார். "சுடர் மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்" என்று கூறியே சிவசக்தியிடம் தான் போராடுவதற்கான வல்லமையை வேண்டி நின்றார் அவர். பாரதியாருடைய பாடல்களைப் போலவே அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளும் அவரது திமிர்ந்த ஞானச் செருக்கைப் புலப்படுத்துவனவாய் விளங்குகின்றன. தான் வறுமையுற்றநிலையில் எட்டயபுரம் சமஸ்தான மன்னரிடம் உதவி கேட்டு எழுதிய ஓலைத் தூக்கும் பாரதியாரது அத்தகு செருக்கையே தாங்கி நிற்கின்றது.
வாசமிகு துழாய்த்தாரன் கண்ணனடி மறவாத மனத்தான், சக்தி தாசனெனப் புகழுவளர் சுப்ரமண்ய பாரதிதான்சமைத்த தூக்கு மன்னவனே!.
புவியனைத்தும் போற்றிட வான் புகழ்
படைத்துத் தமிழ் மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லை எனும் வசை என்னாற் கழிந்ததன்றே "சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
சொற்புதிது, சோதிடமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை என்று நன்கு
பிரான்ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டில் உயர் புலவோரும் பிறரும் ஆங்கே விராவு புகழ் ஆங்கிலத்தீங்கவியரசர் தாமும் மிக வியந்து கூறிப் பராவி என்தன் தமிழ்க் கவியை
மொழிபெயர்த்துப் போற்றுகின்றார் பாரோர் ஏத்தும் தராதிபனே இளசை வெங்கடேசுரெட்டா! நின்பால் அத் தமிழ் கொணர்ந்தேன்?
மேற்கண்ட இருவரதும் கூற்றுக்கள் தம்மைப்பற்றிய 'மிகை மதிப்பீடுகள் அல்ல என்பதை அறிவுலகம் ஒத்துக்கொள்ளும். இவர்கள் இருவரும் தம்மைத்தாம் வியக்கும் 'மனவிகாரம் உடையவர்களும் அல்லர். எனவே, தம் புகழைத்தாமே கூறவேண்டியதான தவிர்க்க முடியாத நிலைமை யொன்றின் சூழ்ச்சிக்கு இவர்கள் ஆட்பட்டார்கள் என்றே அமைதி கான
8ഖങ്ങf(BLD.
அதுபோன்றதொரு சூழ்நிலையின் விளைவே சம்பந்தரின் நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞான சம்பந்தன்', ஞானத்துறை ஞானசம்பந்தன் என்பன முதலான தன்வியப்புரைகளும், தாம் முன்வைக்கும் மார்க்கத்தைப் பின்பற்றுவோருக்குப் பெரும்பயன் கிட்டுவது நிச்சயம் என்று உறுதி வழங்கும் நம்பிக்கையுரைகளுமாம்.
"ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே”
என்று பெரியதொரு இலட்சியத்தோடு பேராற்றலும் செல்வாக்கும் மிக்க அவைதீகர்களுக்கு எதிராக
G18)

Page 20
மக்களை அணிதிரட்டும் ஒரு தலைவனுக்குரிய தன்மையெல்லாம் பொருந்தப் பெற்றவராகச் கழுரைக்கிறார் சம்பந்தர்.
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே" (2:84:t)
"ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வார் ஆணை நமதே"
(2:85:1)
"சிந்தைசெய வல்லார்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வெய்தி இமையோர் அந்த உலகெய்தி அரசாளும் அதுவே சரதம் ஆணை நமதே" (378-1)
"வானிடை நிகழ்வர் மண்ணிடைப் பிறவார் மற்றதற்கு ஆணையும் நமதே" (3:1810
இத்தகைய ஆணையிடும் ஆளுமையை சைவத்தையோ வைணவத்தையோ சார்ந்த பிற பக்திப் பனுவலாசிரியர் எவரிடத்தும் காண்பதரிது. அந்த உண்மையை உணர்ந்தே நம்பியாண்டார் நம்பி,
"முத்திப் பகவன் முதல்வன் திருவடியை அத்திக்கும் பத்தரெதிர் 'ஆணை நமது
என்ன வல்லான்”
எனச் சம்பந்தரை வியக்கிறார். சம்பந்தரை “ஆனை நமதென்ற பெருமாள்” என்று உலக வழக்கிலும் குறிப்பிட்டார்கள். பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு “ஆணை நமதென்ற பெருமாள்" என்று பெயரும் கட்டினார்கள். சம்பந்தரின் இத்தகு கழுரைகள் அக்கால
ཁམཁལ་བ། ཁ་བ། ཁ་བ། ཁ་བ་གང་ན་ཁལ་བ། 《ལ་
தாம்இன்புறுவது உலகுஇன்
காம்2றுவர் கற்றுசிறிந்தா -ཁག།མ་མཁའ། མཁའ། མཁའ། མཁའ། མ་ཁ།
(ஐப்பசி 2011 }
 

சங்கத்தமிழ்
மக்களை எவ்வளவு துரம் கவர்ந்திருந்தன என்பதையே இச்செய்திகள் புலப்படுத்துகின்றன. இக் கவர்ச்சிக்குக் காரணம் மக்களுக்குச் சம்பந்தர்மேல் உண்டான நம்பிக்கையே. அந்த நம்பிக்கையை உண்டாக்கி வைத்தவை சம்பந்தரின் செயற்றிறனும் தம்மைத்தாமே பிரசித்திப்படுத்திய புகழுரைகளுமே.
போராட்ட முன்னெடுப்பினதும் அதில் வெகுசனத்தை ஈர்க்கமுயலும் முயற்சியினதும் தவிர்க்க முடியா வெளிப்பாடாகத் தற்புகழ்ச்சி அமைந்து விடுகிறது என்பதையே நாம் இங்கு விளங்கிக்கொள்ள வேண்டியவர்களாகிறோம். அதை விளங்கிக் கொள்கிறபோதுதான் "தான் தற்புகழ்தல் தகுதியன்றே" என்ற விதிக்கு வகுத்த புறநடை விதியின் யதார்த்தத் தன்மை நன்கு புலப்படும்.
அடிக்குறிப்புகள் நன்னூல், நூற்பா 52 2. யாப்பருங்கக்ை காரிகை - குணசாகரர் உரை, கழக
வெளியீடு, சென்னை, 1965 பக் 3,4 3. நன்னூல், நூற்பா. 53 4. அ.சண்முகதாளம், பதிகம் தோற்றமும் வளர்ச்சியும்" தமிழியல், உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம் சென்னை 1986, Liáš. 91 5. ஆறுமுகநாவலர் பிரபந்தத்திரட்டு, இந்துசமய காைசார
அனுவல்கள், திணைக்களம், கொழும்பு, 1996, Lë. 184, 581 6. பாரதிபாடல்கள் - ஆய்வுப் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர், 1987, பக்.516-518 7. க.வெள்ளைவாரணன், பன்னிரு திருமுறை வரலாறுமுதற்பகுதி (மறுபதிப்பு), அணர்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1994, шф. 642
i.
ལ། 《ལགས། ཁལགས། ཁལ ། ཁལ་བ། ཁལ གཡཁ
புறக்கணித " - குறள்

Page 21
மருதூர்ச்
ஏழத்துத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றிலே அறுபதுகள் (1960) ஒரு முக்கியமான காலகட்டப்பகுதி என்பது இலக்கிய ஆர்வலர் அறிந்ததொரு விடயமே. ஐம்பதுகளின் ஆரம்பத்தில் தி.மு.க. எழுத்துக்கள் ஈழத்து இலக்கிய உலகில் ஏற்படுத்திய செல்வாக்கின் அலைகள் (மொழிநடை - பரந்த வாசிப்பு, சமூகப் பார்வை) ஓய்ந்து, முற்போக்கு சங்கத்தின் எழுத்தாளர் செல்வாக்கு (வர்க்கப்பார்வை, தேசிய இலக்கியம், மணி வாசைனை) பரவத் தொடங்கிய காலமாகவும், உயர்கல்வி தாய்மொழியில் பயில்வதற்கு ஏற்பட்ட வாய்ப்பினால் ‘கிராமத்துப் பையன்கள் பல்கலைக்கழகம் சென்ற காலமாகவும் இது அமைவது கண்கூடு. இத்தகைய சூழலில் இலக்கிய உலகினுள் பிரவேசித்தவரே மருதுர்க்கொத்தன்.
முகம்மது இஸ்மாயில் எனும் இயற்பெயர் கொண்ட மருதூர்க்கொத்தன் (935 - 2004) அனுராதபுர மாவட்டத்திலுள்ள கலாவெல (சம்மாந்துறை) எனும் கிராமத்தில் சின்னமுத்து வாப்பு மரைக்காயர் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். தாயை இளம் வயதில் பறிகொடுத்த
மருதுTர்க்கொத்தனின் சிறுபிராயம் திருகோணமலையில் கழிந்தது. பின்னர் தகப்பனின் LDD LD600TLĎ 85 Tjg60OTLDT85
மருதமுனையில் தொடர்ந்தது. மருதமுனை மீது கொண்ட பற்றே அவரது புனைபெயரிலும் வெளிப்பட்டது. 1976 லிருந்து தமிழாசிரியராகக் கடமையாற்றிய மருதூர்க் கொத்தன் சிறுகதைகள் மட்டுமன்றி கவிதை, நாடகம், உருவகக்கதை, இலக்கிய விமர்சனம் எனப் பல துறைகளிலும் ஈடுபட்டவரென்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட இலக்கியச் சூழலோடு, கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் செயற்
(ஐப்பசி 2011

கைாத்தனின் சிறுகதைகள் ஒரு கண்ணோட்டம் -
- பேராசிரியர் செ. யோகராசா -
பாடுகளும், நீலாவணன், வ.அ இராசரத்தினம், எஸ்.பொ. ஆகியோரது தொடர்புகளும் தமிழாசிரியத் தொழிலும் மருதூர்க் கொத்தனின் ஆளுமை உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியிருந்தன.
அதிக எண்ணிக்கையளவில் எழுதாவிடினும் குறைந்தளவிலே எழுதிநிறைந்த புகழும் முக்கிய கவனிப்பும் பெற்ற கிழக்கிலங்கை முஸ்லீம் எழுத்தாளர்களுள் முதன்மைக்குரியவர் மருதூர்க் கொத்தன்.
"மருதமுனையைக் களமாகக் கொண்டு கிழக்கிலங்கையின் முஸ்லீம்களின் வாழ்வியல் யதார்த்தத்தை, அதன் வெட்டு முகத்தோற்றத்தை அற்புதமாகக் கலையாக்கியவர். அவ்வகையில் ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் அவருக்கு நிரந்தரமான ஓர் இடம் உண்டு. குறைவாக எழுதி நிலையான இடம் பெற்ற மிகச்சில எழுத்தாளர் களுள் கொத்தனும் ஒருவராக இருப்பார் என்பதில் ஐயமில்லை" என்று மருதூர்க் கொத்தன் பற்றி மதிப்பிடுகிறார் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்
ஆக, கிழக்கிலங்கை முஸ்லீம்களுள் மருதமுனை சார்ந்த முஸ்லீம் மக்களது வாழ்வியலின் பன்முகங்களையும் உயிர்த் துடிப்புடன் முதன்முதலாக வெளிப்படுத்தி, ஈழத்து வாசகரை மருதமுனை நோக்கித் திருப்பச் செய்தவரான மருதூர்க் கொத்தன் விரிவான கவனத்திற்குரியவராகின்றார்.
கிழக்கிலங்கையில் நெசவுத் தொழிலுக்குப் பேர்போன கிராமங்களுள் முதலிடம் பெறுவது மருதமுனையே. இந்நெசவுத் தொழில் செய்வோர், அவர்களிடம் வாங்கி வியாபாரம் நடத்துவோரின் கழ்ச்சி, சுரண்டல் பற்றி சிறுகதையூடாக முதன்முதல் பதிவு செய்திருப்பவர் மருதூர்க் கொத்தனாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகிப்பதில் தவறிருக்க முடியாது
G20)

Page 22
இவ்விதத்தில் அமைந்த சிறுகதைகளுள் இரண்டு கவனத்திற்குமுரியவை. ஒன்று, 'இராவணக்கம் மற்றொன்று அல்லும் பகலும் பிஸினஸ்’ இவற்றுள் 'இராவணக்கம் தனித்து தறி நெய்து, நெசவு வியாபாரம் நடத்துகின்ற முதலாளியின் கழ்ச்சிக்குட்படுகின்ற ஏழையான காதர் பற்றியது. மற்றையது, நெசவுநூற்கடைமுதலாளியிடம் நூல் கடன்கேட்டு ஏமாற்றமடைகின்ற இன்னொரு காதர் பற்றியது. முதலாளிகளுக்கு எதிராக எதுவுமே செய்ய முடியாத கையாலாகாத இரு பாத்திரங்களை இச்சிறுகதைகளில் சந்திக்க முடிகின்றது.
மருதமுனை மீன்பிடித் தொழிலாளரின் வாழ்வியல் மரையாம் கொக்கு", "ஒளி" “ஆற்றுப்படை ஆகியவற்றில் சித்திரிக்கப்படு கின்றது. இவற்றுள் மரையாம் கொக்கு, மீன் பிடிக்கும் தொழிலாளரின் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை - மகன் ஆகியோரின் தொழிற் செயற்பாடுகளாகக் காட்டுகின்றது 'ஒளி', “ஆற்றுப்படை, முதலாளியின் சுரண்டலுக்கு எதிராகக் கலகக் குரலெழுப்புகின்ற ஒரு மீனவன் பற்றியது.
பாயிழைத்துசீவியம் நடத்துகின்ற முஸ்லீம்கள் கிழக்கில் அதிகம் பேருள்ளனர். அத்தகையவளும் கைம்பெண்ணுமான ஒரு தாயினதும் அவளது மகளினதும் அன்றாட வாழ்வியலை புதியதொரு கோணத்தில் படம் பிடிக்கின்றது மூக்குத்தி என்ற சிறுகதை. அதாவது, மூக்குத்தி போட்டுத் தன் அழகை வெளிப்படுத்த முனைகின்ற மகளின் ஆதங்கத்தை அயல் வீட்டில் வாழ்கின்ற மாமி - மருமகள் உறவுச் சிக்கலுடன் தொடர்புபடுத்தி மனதை நெகிழவைக்கின்ற விதத்திலே அமைந்துள்ளது அது. பாயிழைத்து வாழ்கின்ற அவ்வாறான இன்னொரு தாயையும் (பாடசாலை செல்கின்ற) மகளையும் அறிமுகப்படுத்துகின்ற சிறுகதையாக கருமுகில், மனதைத் தொடுகின்ற விதத்தில், கலாபூர்வமாக எழுந்த மருதூர்க் கொத்தனின் சிறுகதைகளில் குறிப்பிடத் தக்கதொன்றாகிறது.
(gúuá) 2011)
 

சங்கத்தமிழ்
அன்றாடம் தெருவோரத்தில் நாம் சந்திக்கின்ற சில பாத்திரங்களும் மருதூர்க் கொத்தனின் எழுத்தினுடாக நிலையான வாழ்வு பெற்றுள்ளார்கள். இவ்வித்தில் பிச்சைக்காரர்களை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட 'மழை", ‘வெட்டுமுகம் ஆகிய இருபடைப்புகளும் கவனத்திற்குரியவை. மழையில் வருகின்ற நெய்னா முகம்மது குடும்ப நினைவுகளையும் உறவுசார்ந்த உணர்வுகளையும் எவரிடமாவது வெளிப்படுத்தத் துடிப்பவன்!
பாடசாலை ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியவரான மருதுTர்க்கொத்தன், பாடசாலையைக் களமாகக் கொண்டு சிறு கதைகள் எழுதுவது தவிர்க்கவியலாததே. இவ்வாறான இரு சிறுகதைகளுள் ஒன்றாகிய சாய்ந்த கோபுரங்கள் UTLaFT60D6Disg 6 gri LD6) நின்று விட்ட கெட்டிக்கார மாணவியொருத்தியின் தாய், மாணவியின் படிப்புப் பற்றி ஆசிரியருக்கு "போதிப்பது." பற்றியது. அத் தாய் முடிவில் ஓரிடத்தில் இவ்வாறு கூறுகின்றாள்.
"கீழ் கன்றுகளான முணு கிணாட்டைகளும் பள்ளிக்குப் போகுதுகள் ஐயா. எண்ட புள்ள குளத்தில் மீன் புடிச்சு, நாணல் காட்டில கொக்குக் குருவி புடிச்சித் தான் எங்கட கனாயகத்துக் கழிகிறது நானும் அல்லயில பண்புடுங்கி அவனடைகைய இணைப் பாத்துறன். வகுத்துப் பசிய ஆத்துறதுதாங்கா வாப்பா எங்களுக்கு இப்ப முக்கியம்” என்று விளக்கிக் கூறிவிட்டு பெருமூச்சுவிட்டாள். நான் இந்தா ஊட்டுக்குள்ள என்ர புள்ள மனசைப் போட்டு, மாங்கமாஞ்சி யோசித்துத் தான் இந்த முடிவுக்கு வந்திருக்கான். சட்டியோட போச்சுதாம் பிலால்நாத்தம், ஊட்டுட்டுப் போங்க வாப்பா"
மற்றொரு சிறுகதையான 'சிரேஷ்டமான பகிடிவதை, முற்றிலும் வேறுபட்டதொரு தளத்தில் இயங்குகின்றது. பாடசாலையைக் களமாக்கி, கடமையே கண்ணாகச் செயற்படும் மூத்த தலைமுறையினரான அதிபர், ஆசிரியர்
G210

Page 23
குழாத்தினருக்கும் பாடசாலை மேற்பார்வைக்கு வரும் கல்வி அதிகாரிகளுக்குமிடையிலான தலைமுறை முரண்பாடுகள் பற்றியது! இவ்விதத்தில் இதையொத்த (அதாவது பாடசாலை பற்றிய) ஏனைய சிறுகதையாசிரியர்களது சிறுகதைகளைவிட வித்தியாசமான உள்ளடக்கம் பெற்றுள்ளது.!
சமகால உலக மாற்றங்களுக்கமைவாக முஸ்லீம் சமூகத்தில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் பற்றிய அவதானிப்பும் மருதுTர்க் கொத்தனிடம் காணப்படுகின்றது. இவ்விதத்தில் 'வேலி சிறுகதை முதற்கண் குறிப்பிடத்தக்கது.
இத்தா வேலியை தம்பிக்காரன் பிரிக்கச் சொன்ன போது "புள்ளகுட்டிகளெல்லாம் பேயறைஞ்சது போல முளிக்குதுகள்”
தொடர்ந்து கதை பின்வருமாறு முடிகிறது. “என்னதம்பிநீங்ககேக்கிறது? ஒங்கம்மாக்குஇத்தா
வேலிகட்டுறம் “எனக்கும். இருபது வயதாகுது-நான்தானட எங்கம்மாக்குக் கடைசிப் பிள்ளை - இத்தா இருக்கிற நோக்கந் தெரியுமா உங்களுக்கு?
"நீதான் ஒதிப் படிச்சவன் - ஒன்னட எங்களுக் கென்ன தெரியும் உலக வழக்கத்தச் செய்யுறம்” “எனக்கெல்லாம் தெரியும் நீங்க வேலியப்
ിujiങ്ക"... é6oor LT6oor GS ST6o DTa5 SO Läs as Lu LGB வந்துள்ள தொழிலாளர் மத்தியிலிருந்து எதிர்ப்புக்குரல் எழுவதனை “கோடரிகள் கூராகின்றன” வெளிப்படுத்துகின்றது!
முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் கலந்து வாழ்ந்த கிழக்கிலங்கைச் சூழலையும் ஓரிரு சிறுகதைகளில் கொண்டு வருகின்றார் மருதூர்க்கொத்தன். இனவாதம் முகிழ்க்கத் தொடங்கிய வேளையில் மூவின மக்களிடையேயும் பேதங்களை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அப்புஹாமி முதலாளி,
(ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
மூவின மக்களுக்கிடையிலான பிணைப்புக் காரணமாகத் தோல்வி எய்துவதைக் காட்டும் சாதிகள் இரண்டே இவ்விதத்தில் நினைவு கூரத்தக்கது.
மேலே இறுதியாகக் கூறிய இருவகை களுக்கும் உள்ளடங்கும் சிறுகதைகள் தவிர்ந்த அதற்கு முற்கூறப்பட்ட வகைப்பாட்டிற்குள் அடங்கும் பல சிறுகதைகளையும் இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது அவை கிழக்கு முஸ்லிம் மக்களது வறுமை மிக்க வாழ்வியலை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்து கின்றனவாக அமைவதைக் கண்டுகொள்ளலாம்! அதற்கு மேலாக, அவற்றினுாடே முஸ்லீம் பெண்களது துன்ப துயரங்கள் நம்பிக்கைகள் ஆளுமைகள் முனைப்புறுவதையும் கான முடிகிறது. மருதுTர்க் கொத்தனை ஏனைய முஸ்லிம் எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது இது. இவ்விதமான முற்கூறப்பட்ட சிறுகதைகளுள் கருமுகில், மூக்குத்தி முதலானவற்றோடு 'இருள்..? முதலியனவும் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் இருள் ஆண்டாண்டு காலம் கணவனிடம் அனுபவித்த 'S -L6) if T fr" அவஸ்தைகள் 2-lulஅனைத்தையும் துறந்து வீட்டைவிட்டு வெளியேறும் சுலைகா பற்றியது. அவள் அவ்வாறு வெளியேறுவதற்கு முற்பட்ட கழல் எத்தகையது என்பது நமது கவனத்தைக் கவருகின்றது.
“எங்கே போகிறாள்..கோடிப்பக்கமா? என்ர சக்கரப் பொண்டாட்டியல்லவா? வரட்டும் ஆறுதலா வரட்டும் அவ ஆசையாய் போட்ட பாய் ஆறுதலாய் படுப்பம்" சுலைகா வருகிறாள்.
எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைக்கிறாள்.
రీ. . . . . .ஆ..இவளன்றோமனைவி..... இருளை ஊடுருவிக் கொண்டு பழைய காட் சாரன் இமயமாய்ப் புடைத்து
G22)

Page 24
குடையாய் நிமிர்ந்து நிற்கின்றது. தெய் வத்துக்கு திரோகமெங்கும் பாணன் போறாணையின் காங்கை,
தோளிலே குழந்தையைச் சுமந்த வண்ணம் படலையைத் தறிக்கிறாள்
ré0D6D85FT. ...." மரைக்கார் என்ற ஆளுமைமிக்க பிரகிரு தியின் சொத்தை அபகரிக்கும் சூழ்ச்சிக்கு முன்னால் முகங்கொடுத்து நிற்கின்ற மனை வியும் மகளுமான இரு பெண்கள் பற்றிய (இறுதி வெற்றி யாருக்கு என்பது தெரியாது) ‘ஹத்து, ஊரார் சந்தேகத்திற்கும் தூற்றுதலுக்கும் எதிர்ப்புகளுக்குமுள்ளாகின்ற நிராதரவான ஒருபெண் பற்றியதாகிறது. (பித்தனது சிறு கதைகளில் வெளிப்படும் முஸ்லீம் பெண்கள் வேறொரு நிலையினராகக் காணப்படுவர்.)
இதுவரை கூறப்பட்ட முக்கிய வகைப்பட்ட உள்ளடக்கங்கள் நீங்கலாக ஏனைய சிறுகதைகள் பலவும் பல்வேறு விடயங்கள் சார்ந்தவை. கொழும்பு நகர் வாழ்க்கை, மட்டக்களப்பு மக்களது வாழ்வியல் மாறுதல், காதல் உறவு, பெண் பார்க்கப் புறப்பட்ட அனுபவம், எழுத்தாளர் வாழ்வு என்றவாறு தலா ஒவ்வொரு சிறுகதையாக e60D6) இனங்காணக் கூடியவையாக இருப்பதோடு அவை பற்றி அதிகம் விதந்துரைக்க வேண்டிய தேவை இல்லாதவையுமாகின்றன.
சுருங்கக்கூறின், ஒரு காலகட்ட, கிழக் கிலங்கை முஸ்லீம் மக்களது (பெயர் குறிப்பிட்டாலும் குறிப்பிடாவிட்டாலும்) மருத முனைக் கிராமம் சார்ந்த மக்களது - அன்றாட வறுமை தோய்ந்த வாழ்வியலின் பன்முக அசைவுகளும் கோடுகளாகவன்றிகோலங்களாக ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் நிலைத்த இடம் பிடித்துள்ளன என்பதில் தவறில்லை.
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
இவ்விடத்தில் மருதுTர்க்கொத்தனது மொழிநடையின் தனித்துவம் பற்றியும் கூறுவது eleléulb.
இவ்விதத்தில் முக்கியமாக இருவிடயங்கள் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும் ஒன்று, கிழக்கிலங்கை முஸ்லீம்களின் குறிப்பாக மருதமுனை பிரதேசம் சார்ந்த முஸ்லீம் மக்களின் பேச்சுமொழி உயிர்த்துடிப்பு விரவ, அச்சொட்டாய் இவரது சிறுகதைகளில் வெளிப்படுவது.
gD -L ib
பேச்சுமொழிப் பிரயோகம்
"பத்துப் பன்னிரண்டு தறிமாலில போய் அசுப்புப் பாத்தம் எல்லோரும் முளிச்சுக் கிட்டுத்தான் இருக்காணுகள். ஒண்டும் செய்ய ஏலாமப் போச்சி” ஒருவன் ஆற்றாமையை வேதனையோடு வெளியிட்டான்.
"LB . . . . . . . என்ன செய்யிற இண்ைடைக்கு அமைச்சது அவ்வளவுதான் அஞ்சியாவும் கொணர்ந்துதானே இருக்கும்”
"ம்.எணர்டாம் பறுவாயில்லை. முழுப் பாவாத்தான் இருக்குது - கூடிப்போனா ரெண்டு சாம்புதான் நெஞ்சுறுத்திருப் பானுகள்” என்றார் மாணாக்கர், புருவத்தைச் சுருக்கி மகிழ்வு பிடிபட்டவராக, "இதை எங்கடா அறுத்தயள் என்று G35 LTT
“கோணாவாயன்ர காதர்ர சாப்புக்குள்ள” என்றான சுமை இறக்கியவன்
(-இராவணக்கம்)
மேற்கூறியவற்றோடு, முற்குறிப்பிட்ட 'சாய்ந்த கோபுரங்கள் 'கித்தா ஆகிய சிறுகதைகள் பற்றித் தரப்பட்ட உதாரணங்களையும் இவ்வேளை நினைவுகூர்வது பொருத்தமானது
மருதூர்க்கொத்தனின் மொழிநடையிலே காணலாகும் மற்றொரு சிறப்பு, ஆசிரியர் கூற்றாக அமையுமிடங்களிலே பழந்தமிழ் இலக்கிய மணம் வீசுவது.
G23)

Page 25
趣
D - b - O1
தோற்ற விபரிப்பு
“தவக்கோலத்திற்குரிய அடையாளங்களான சடாமுடி சடைத்த நெடுந்தடி, மெலிந்த மேனி, துவராடை கைதாங்குகோல், பக்கத்தில் கமண்டலம்... எதுவுமில்லை. சூபிகளின் சங்கதிகளான பச்சைத் தலைப்பாகை, பச்சை ஜிப்பா, கம்பளிப் போர்வை அவையுமில்லை. மறுகா? ஆடித்தபடி தவக் கோலம்? ஐகவிரல்களாலே விறைப்பான துரிகை யாலோ குழப்பிவிட்டதைப் போல் நெற்றியில் படர்ந்து கிடக்கும் அடர்ந்த கருமுடி. அடித்தாலும் உதைத்தாலும் அகலமாட்டேன் 66OT அடம்பிடிக்கும் வாலிப மிடுக்கு. கவிந்த முகம் முழங்கைக்குமேல் மன்னிவிடப்பட்ட விலை யுயர்ந்தசேட், விலையுயர்ந்த கலர் சட்டை, பட்டியணிந்த இடை, பக்கத்தில் பாத்றும் LITLLIT. ...”
(-சித்தம் அழகன்)
-- b O2
ஊர் பற்றிய விவரணம்
“பசும்பூங்கா என்றும் திறம் தேசம் என்றும் பெயர்பெற்றதெல்லாம் பழம் கதையாகி மரணப்பகுதி என்று உரைக்கத்தக்கதாகி அவலப்படுகின்ற மாணிக்கபுரி நாட்டின், குணதிசை அங்கத்தின் அழகிய பாறை எனப் பெயரிய ஜில்லாவின் வனப்பு மிக்க கடற் கரை. பொங்கும் அலைகள், கொஞ்சி மகிழும் மருதமூரின் பொன்மணல்திட்டு, பூரண சந்திரன் மொழியும் அந்தக் குளிர்நிழலிரவில், மருதமூரின் கடற்கரை மகா செளந்தர்ய முற்றுக்கிடந்தது. தழைத்து வளர்ந்த தாழை மரங்கள் பல இடங்களில் சிறு தோப்பாகக் கிடந்தன."
(-சித்தம் அழகன்)
(gúuf 2011}-

சங்கத்தமிழ்
-- D - O3 தகட்டுக்களத்தில் அரிந்த பப்பாசிப் பழத் தேறலாகப் பொலிகின்றது, றஜப் மாதத்து எட்டாம்பிறை. அது சிந்துவது பெருமளவில் நீர் கலந்து நிறம் பேதலித்த பால் போன்ற ஊமை நிலவுதான். ஏன் நாலு அதுவே அதன் சக்திக்கேற்ற சேவைதானே. முதுமையினைக் குத்தகையெடுத்து விட்ட தேகத்தில் இளமையின் மதாளிப்பை மீண்டும் பெறும் நப்பாசை அவர்களுக்கு இல்லை. ஆனாலும் யெளவன வேடந் தாங்கியதான மனோரதத்தில் ஊர்ந்த வாலிபத்தின் நெறநெறுப்புடன் குலவிய இன்ப நாடகத்தின் ஒரு காட்சி களையாவது ஒத்திகை பார்க்காமல் அவர்களால் இருக்க முடியவில்லை. குடும்ப வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக நிகழக் கூடிய புறவாழ்க்கைக் கிருத்தி யங்களிலேயே மானசீகமான சிருங்காரசத்தை அனுபவிக்கும் முதுதம்ப க்கு ஊமை நிலவும் வெள்ளை மணலும் பொருத்தமான பகைப்புலம். கன்னியின் கதுப்பாகச் சிவந்து கனிந்த பழப்பாக்கை பாக்கு வெட்டியில் வைத்து நறுக்கென்று வெட்டுகிறார் அகமது வெல்வை ஹாஜியார்.
(-elgit-)
gD -L b — O4
நிகழ்ச்சி சித்திரிப்பு
எங்கோ தொலைவில் கண்ணிவெடிவெடித்த முழக்கம் அதிர்ந்து கேட்டது. கண்ணிவெடித் தெருக்கூத்து. செல்லடித்த தவில் வாசிப்பு, துவக்கு வெடியின் கிண் கிணிநாதம். விமானங்களின் மத்தாப்புப் பொரி என்று வெடிகளின் மங்களம் பொங்கும் மணி, சாய்ந்த கோபுரங்கள்.
D - D - O5
மன உணர்வு வெளிப்பாடு
தனது மாணவ உள்ளத்தின் இலட்சியக் கனவுகளை, கனவை நனவாக்கி மகிழக் கருதி
G24)

Page 26
கர்மயோக வைராக்கிய சித்தனாய் நாளெல்லாம் பாடம் படித்து சேமித்த விடய ஞானத்தை வறுமை எனும் எலிப்பொறியின் பற்களுக்குட் சிக்கிய அழுத்தலினையே கற்கும் பணிக்குத் தன்னை அடைவ சாட்டிய அவாவை இத்தனைக்கும் தன்னை 'உசி கட்டியதன் உணர்வுகளை எல்லாம் சிலுவையில் அறைந்து விட்டதான பிரமை அவனுக்கு.
செய்தித் தலைப்பெனும் துருவிலை இதயத்தைத் தேங்காய்ப் பாதியாக்கி விட்ட நிலவு அவன் தேகமெல்லாம் பரவுகிறது. பாதங்களிற்கு சாத்து சீமெந்துத் தரையை ஊடுருவிவேர் பாய்ந்த நிலையில் நிர்ச்சலன சோபிதனாக நிற்கும் அருளப்பனின் கண்கள் செய்தியை மேய்கின்றன. செய்தியைப் படிக்கப் படிக்க பனிப்பாறை இடுவலில் சிக்கிய உணர்வு இழைகிறது."
(குழிபறிப்பு) இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயத்தை வற்புறுத்துவது அவசியமாகிறது. மருதுர்க்கொத்தன் கையாண்ட மேற்கூறிய இலக்கியச் செல்வாக்கிற்குட்பட்ட நடையானது சில சந்தர்ப்பங்களிலே அன்னாரது சிறுகதைகளின் தங்குதடையற்ற ஓட்டத்திற்குத்தடையாக நிற்பதாகவும் சில சந்தர்ப்பங்களில் அநாவசியத் தலையீடாக அமைவதாகவும் சில சந்தர்ப்பங்களில் நீண்டுசெல்வதாகவும் சிலசந்தர்ப்பங்களில்யதார்த்த ரீதியான சித்திரிப்பிற்கு பாதகமாக அமைவதாகவும் வெளிப்படுவதனை மறந்துவிடக்கூடாது. வ. அ.இராசரத்தினத்தின் சிறுகதைகளிலும் அத்தகைய நடையதார்த்தப்பாங்கின்முழுமைக்குப் பேரிடர் விளைவிப்பதும் கவனத்திற்குரியது.
சிறுகதைகள் சிலவற்றிற்கு அவரிட்ட தலைப்புகள்கூட அவரது பழந்தமிழ் இலக்கிய
ང་གང་ལ་ལ་ཡང་། ཁལ ཐག་དང་། ཐལ་བ་གང་། ཁལ་བ་ཡང་། ཁལ་བ། ཁལ་
"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்யாமையாலும் கெரும்"
محسن حبس محسن حبس محس.اس
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
வாசிப்பின் செல்வாக்கைக் காட்டுகின்றமை நினைவுகூரத்தக்கது.
2 --Lib
சித்தம் அழகன்
ஆற்றுப்படை
பதியின் பிழையன்று
வேறுசில தலைப்புகள் அன்றைய கால எழுத்தாளர் சிலர் போன்று இரண்டெழுத்து அல்லது மூன்றெழுத்து சொல்லில் அமைந்தி ருப்பதும் கவனிக்கத்தக்கது. உ-ம் இருள், வேலி, அதர், கானல், ஒளி, மழை, கழிப்பு.
இதுவரை மருதூர்க்கொத்தனின் மொழிநடை பற்றிய சற்றுவிரிவாக வெவ்வேறான எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கியமை மருதுTர்க் கொத்தனின் சமகால எழுத்தாளர் பலரிடமும் மேற்கூறிய மொழிநடை பண்புகள் பலவும் (உ-ம் 1,2 தவிர) காணப்படவில்லை என்பதைப் புலப்படுத்துவதற்காகவே. அதாவது, ஊர்பற்றிய விவரணம் (உ-ம் 3) இயற்கை வர்ணனையும் பாத்திர மன உணர்வுகளும் (உ-ம் 4) பற்றிய விவரிப்பு, நிகழ்ச்சித் சித்திரிப்பு (உ-ம் 5) மன உணர்வு வெளிப்பாடு (உ-ம் 6) ஆகிய யாவும் பல்வேறு இலக்கியச் சிறப்புகள் விரவிய தராதரத் தமிழ் நடையில் வெளிப்பட்டுள்ளன. இவை ஒரு விதத்தில் மருதூர்க்கொத்தனின்நடையாற்றலுக்கு, எழுத்தாற்றலுக்கு எடுத்துக் காட்டாக அமைவது குறிப்பிடத்தக்கது. அதே வேளை அது யாதார்த்த வெளிப்பாடு முழுமைபெறத் தடையாக அமைந்துள்ளது என்பதனையும் மறந்து விடக்கூடாது. மநதுார்க்கொத்தன் தமிழ் ஆசிரியராக விளங்கியமையே இதற்குக் காரணமென்பதில் தவறில்லை. *
ད། ཁལ། ཐལ། ཁལ་དག་ན། ཁ་བ་གང་། ཁལ་གང་ཁ செய்தக்க
گیبس محسن حبس محسن حبس محس

Page 27
தலைப்பு :-
ஆசிரியர் :- பதிப்பு :- விலை :-
இலங்கைச் சமூகம் பற்றிய சமூகவியல் மானிடவியல் அடிப்படையிலான ஆய்வுகள் தமிழ் மொழியில் மிகவும் குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம். ஆங்கிலத்தில் அத்தகைய ஆய்வுகள் பல உள்ளன. பிறைஸ் றயானின் நவீன இலங்கையில் சாதி மாற்றமடையும் ifriss6T FITg5 eleCDLDLL (Caste in Modern Ceylon: The Sinhalese in Transition, 1953) 60 LD556b பேங்ஸின் யாழ்ப்பாணத் தமிழர்களின் சமூக Spjel60T eigOLDUL (The Social Organization of Jaffna Tamils, 1957), gbi TÜ uu6ÖLDT6ofl6ơT e Jag LDuggadráp (Under the Bo Tree: Studies in Caste, Kinship, and Marriage in the Interior of Ceylon, 1967) என்பன இதில் முன்னோடி முயற்சி களாகும். நூர் யல்மானின் மாணவரான டேனிஸ் மக்கில்விரே 1970களில் அக்கரைப் பற்றுப் பகுதியில் கள ஆய்வு செய்து கிழக் கிலங்கைத் தமிழ், முஸ்லிம் மக்கள் பற்றிய மானிடவியல் நோக்கிலான பல ஆய்வுக் கட்டுரைகளும் நூல்களும் வெளியிட்டுள்ளார். இவரது கலாநிதிப் பட்டத்துக்கான ஆய்வு "இலங்கையில் சாதியும் தாய்வழிக் குடியமைப்பும் (Caste and Matriclan Structure in Sri Lanka) என்பதாகும். இத்துறைசார்ந்த அவரது சமீபத்திய நூல் முரண்பாட்டின் உலைக்களம்' (Crucible of
(ஐப்பசி 2011
 

றிமுகம்
எம்.ஏ.நுஃமான்
இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும் ச.சண்முகலிங்கம் குமரன் புத்தக இல்லம் eb.4OO.OO
Conflict2008), இந்நூல் கிழக்கிலங்கையின் சமூக அமைப்பும் இனமுரண்பாடும் பற்றிமானிடவியல் நோக்கில் விரிவாகப் பேசுகின்றது. அண்ட்ரூ கென்னத் டேவிட் யாழ்ப்பாணக் கிராமங்களில் சமூக பண்பாட்டுக் கட்டமைப்பில் காணப்படும் (36 puri(656ir (The Bound and the NonBound: Variations in Social and Cultural Structure in Rural
Jaffna, 1972) பற்றி மானிடவியல் நோக்கில் விரிவாக ஆராய்ந்துள்ளார். ஜனிஸ் ஜிஜின்ஸ் சிங்களவரின் அரசியலில் சாதியும் குடும்பமும் (Caste and Family in the Politics of the Sinhalese, 1979) பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். இலங் கையை மையமாகக் கொண்டு சமூகவியல், மானிடவியல் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் பிறிதொரு முக்கியமான ஆய்வாளர் யொனாதன் ஸ்பென்சர். சிங்களக் கிராமங்களில் ஏற்பட்டுவரும் சமூக மாற்றங்கள் பற்றிய ‘A SinhalaVillage in a Time of Trouble: Politics and Change in Rural Sri Lanka 6T6örgOb &6 Jgs DJT6i மிக முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. பஃ பன்பேக் கரின் தமிழ்ப் பண்பாட்டில் சாதி பற்றிய (Caste in Tamil Culture: The Religious Foundation of Sudra Domination in Tamil Sri Lanka, 1982) நூலும் இவ்வகையில் குறிப்பிடத் தக்கது.
G26)

Page 28
இவர்கள் எல்லோரும் மேலை நாட்டினர். இவர்கள் தமது கலாநிதிப் பட்டத்துக்காகவும் அதைத் தொடர்ந்த வெவ்வேறு ஆர்வத் தேவைகளுக்காகவும் இந்த ஆய்வில் ஈடு பட்டிருந்தாலும் வெளிநாட்டார் என்ற வகையில் இலங்கையின் சமூக அரசியல் மதிப்பீடுகளுக்கு வெளியே நின்று புறநிலையாக ஆய்வில் ஈடுபடும் வாய்ப்பு இவர்களுக்கு இருந்தது.
இவர்களைத் தவிர இலங்கையர் சில்ரும் புறநிலையான ஆய்வு நெறிமுறைகளுக்கு அமைவாக இலங்கைச் சமூகம் பற்றிய இத்தகைய அறிவியல் ரீதியான ஆய்வுகள் பலவற்றை வெளியிட்டுள்ளனர். கணனாத் ஒபயசேகர, எச்எல்செனிவிரத்ன, எஸ்.ஜே.தம்பையா, சித்தார்த்தன் பேரின்பநாயகம், வலண்ரைன் டானியல், நியுட்டன குணசிங்க, மைக்கல் றொபேர்ட்ஸ் போன்றோர் சர்வதேச அளவில் அறியப்பட்ட இலங்கையச் சேர்ந்த சமூகவியல், மானிடவியல் அறிஞர்களாவர். இலங்கைச் சமூகம் பற்றிய இவர்களின் ஆய்வுகள் மிகுந்த முக்கியத்துவமுடையன.
ஆயினும், இந்த ஆய்வுகள் எவையும் தமிழ் வாசகர்களுக்குக் கிடைப்பதில்லை. தவிரவும் தமிழில் இத்தகைய மூல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் அரிதாகும். இந்நிலையில் ஆங்கிலத்தில் உள்ள இந்த ஆய்வுகளை ஏதோ ஒரு வகையில் தமிழ் வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்வது மிகுந்த பயனுடைய முயற்சியாகும்.
சண்முகலிங்கத்தின் “இலங்கையின் இனவியலும் மானிடவியலும் என்னும் இந்நூல் அவ்வகையில் மிகுந்த முக்கியத்துவம் உடையது. தமிழ் வாசகர்களை இது ஒரு புதிய ஆய்வுலகத்துள் அழைத்துச் செல்கின்றது. இலங்கைச் சமூகத்தின் உள் அமைப்பு, குறிப்பாகச் சாதிக் கட்டமைப்பு, அது சார்ந்த அதிகார அடுக்கு, சாதி, வர்க்கம் என்பவற்றுக்கு
(ஐப்பசி 2011)
 

(TItilagig5L6lp
இடையிலான ஊடாட்டம், சமூக மேல் நிலையாக்கம் என்பன தொடர்பான நுட்பமான, விரிவான தகவல்கள் பலவற்றை இந்நூல் தருகின்றது. இலங்கைச் சமூகம் பற்றிய நமது அறிவை விசாலப்படுத்து வதோடு வளப்படுத்துகின்றது.
நூலாசிரியர் நண்பர் க.சண்முகலிங்கம் இலங்கையின் முக்கியமான ஆய்வறிவாளர் களுள் ஒருவர். கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாக சமூக அறிவியல், கலை இலக்கியம், பண்பாடு தொடர்பாக எழுதிவந்தி ருக்கிறார். இத்துறைகள் சார்ந்த முக்கியமான ஆங்கில நூல்கள், கட்டுரைகளை மொழி பெயர்த்தும் கருத்துக்களைச் சுருக்கியும் தழுவியும் தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். காலனித்துவ இலங்கையில் முதலாளித்துவ 66Tjöré Lugby Su "Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in SriLanka' என்னும் குமாரி ஜயவர்த்தனவின் மிக முக்கியமான நூலை "இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். சமீபத்தில் வெளிவந்துள்ள இவரது 'கருத்தியல் என்னும் பனிமூட்டம்: வரலாறும் கருத்தியலும் என்னும் நூல் இவ்வகையில் மிகவும் முக்கியமானது.
நண்பர் சண்முகலிங்கத்தின் இந்தப் புதிய நூல் "இலங்கையின் இனவியலும் மானிடவி யலும்’ என்ற பொதுத் தலைப்பைக் கொண்டி ருந்தாலும், மேல்நிலையாக்கம் என்ற கடைசிக் கட்டுரை நீங்கலாக, சிங்கள, தமிழ் சமூகங்கள் மத்தியில் நிலவும் சாதிக் கட்டமைப்பு பற்றியே சமூகவியல், மர்னிடவியல் அடிப்படையில் விரிவாகப் பேசுகின்றது. அரசியல் நோக்கில் இதுபற்றிப் பேசுவதற்கும், சமூகவியல், மானிடவியல் நோக்கில் இதுபற்றிப் பேசுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கும் அதை விளக்குவதற்கும்
G27)

Page 29
சமூக, மானிடவியல் ஆராய்ச்சி உதவும். அந்தப் புரிதலின் அடிப்படையில் யதார்த்தத்தை மாற்றுவதற்கு அரசியல் உதவும். ஆய்வை அடிப்படையாகக் கொள்ளாத அரசியல் அதிக பயனைத் தாரது.
சாதிபற்றிய கருத்துநிலை தமிழ்ச் சூழலில் பல சூடான வாதப் பிரதிவாதங்களுக்கும் மோதல்களுக்கும் வன்முறைகளுக்கும் வழிவகுத்திருக்கின்றது. அதுபற்றிய தமது பொதுச் சொல்லாடல் மிகுந்த உணர்வு பூர்வமானது. நம்மில் பலர் அதுபற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு விரும்புவதில்லை என்றாலும் நமது சமூக யதார்த்தத்தில் அது ஆழவேரூன்றியுள்ளது. சாதிக் கட்டமைப்பும் சாதிப்பாகுபாடும் சாதிரீதியான ஒடுக்குமுறைகளும் தென்னாசி யாவுக்குப் பொதுவானது எனினும் இதுபற்றிய எதிர்கொள்ளல் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. இந்திய சமூகத்தில் நிலவும் சாதி அடுக்கு அரசியல் சட்டரீதியான கணிப்பைப் பெற்றுள்ளது. கல்வி, தொழில் வாய்ப்பு முதலியவற்றில் சாதி அடிப்படையிலான ஒதுக்கீடு அங்கு சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனால் குடிசனக் கணக்கெடுப்பில் அங்கு சாதி ஒரு அலகாக உள்ளது. ஆனால், இலங்கையில் நிலைமை வேறானது. சாதி வேறுபாட்டுக்கு இங்கு சட்ட அங்கீகாரம் இல்லை. சாதிரீதியான ஒதுக்கீடு களுக்கு இங்கு சட்டத்தில் இடம் இல்லை. குடிசன மதிப்பீட்டில் இங்கு சாதி ஒரு அலகல்ல. அதனால் சாதி அடிப்படையிலான புள்ளிவிபரம் எதையும் நாம் இங்கு பெறமுடியாது. சட்டத்தைப் பொறுத்தவரை இங்கு சாதி அடுக்கு என்று ஒன்று இல்லை. அப்படி இருந்தால் அது யாழ்ப்பாணச் சமூகத்தில் மட்டுமே இருக்கிறது. 1957இல் இயற்றப்பட்ட'சமூக இயலாமைத்தவிர்ப்புச் சட்டம் (Social Disabilities Act) &b55 as600r(360OTITL55 லேயே அமைந்தது. சிங்கள பெளத்த தேசிய வாதிகளைப் பொறுத்தவரை சிங்கள சமூகத்தில்
ஐப்பசி 2011 }
 

சங்கத்தமிழ்
சாதி அடுக்கு இல்லை. இக்கருத்தையே அரசும் பிரதிபலிக்கின்றது.
ஆயினும், காலனித்துவ காலத்திலும் சுதந்திர இலங்கையிலும் சிங்கள சமூகத்தில், அதன் அரசியலில் சாதி ஒரு முக்கிய இடம் பெற்றுவந்திருக்கின்றது என்பதை பல ஆய்வுகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. சிங்கள இளைஞர் மத்தியில் தீவிரவாத இயக்கம் தோன்றுவதற்கு சாதி அடுக்கும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் சில ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. சிங்கள சமூகத்தில் சாதி பற்றிய ஜயதேவ உயங்கொடவின் ஒரு முக்கியமான ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பை உள்முற்றம்: இலங்கையில் சாதி, நீதி, சமத்துவம் பற்றிய அரசியல் சொல்லாடல் என்ற தலைப்பில் "பிரவாதம் முதலாவது இதழில் ஏற்கனவே (2002) வெளியிட்டுள்ளேன் என்பதையும் இதுதொடர்பாகக் குறிப்பிடலாம். உயங்கொடவின் கட்டுரை சாதியின் அரசியல் தொடர்பானது.
இந்த நூலின் சுமார் அரைவாசிப் பக்கங்கள் சிங்கள சமூகத்தில் நிலவும் சாதி அமைப்பு பற்றியே பேசுகின்றன. குமாரி ஜயவர்த்தன, மைக்கல் றொபர்ட்ஸ், ஜனிஸ் ஜிஜின்ஸ், நியூட்டன் குணசிங்க ஆகியோரின் நூல்கள், கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு இங்கு தகவல்கள் தொகுத்து விளக்கப்படுகின்றன. தமிழ் வாசகர்கள் சிங்கள சமூகம் பற்றிய தமது இறுக்கமான இனத்துவக் கண்ணோட்டத்துக்கு வெளியே நின்று சிங்கள சமூகத்தின் உட்புறத்தை, அதன் உள்முரண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு இந்த ஆய்வுகள் மிகவும் உதவும் என்றுநம்புகின்றேன். இனத்துவம் (Ethnicity) என்பது ஒரு சமூகக் குழுவின் உள்அடுக்குகளை, முரண்பாடுகளைப் புறக்கணித்து அல்லது மூடிமறைத்து ஆதிக்கமுடைய சமூகக் கண்ணோட்டத்தில் அதனை ஒரே அலகாகக் கட்டமைக்கின்றது. சாதி பற்றிய ஆய்வுகள் அதன் முரண்பட்ட உள்
G28)

Page 30
“සුප්
அடுக்குகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன.
இந்த நூலின் மிகுதி அரைவாசிப் பகுதி தமிழர் சமூகத்தில் - மலையகத் தமிழர், யாழ்ப்பானத் தமிழர், மட்டக்களப்புத் தமிழர் - நிலவும் சாதி அமைப்புப் பற்றியது. ஒட்வார் ஹோலப், மக்கில்வரே, மைக்கேல் பாங்ஸ், ஏ.ஜே.வில்சன், அண்ட்ரூ கெனத் டேவிட் ஆகியோரின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டது. மட்டக்களப்பு முஸ்லீம்கள் பற்றி மக்கில்ஷ்ரேயின் நூலில் விரிவான ஆய்வு உண்டு. ஆயினும், அவர்கள் பற்றி மிகச் சுருக்கமான ஒரு குறிப்பே இந்நூலில் இடம் பெற்றுள்ளது. முஸ்லிம் சமூகத்தில் சாதிக்கட்டமைப்பு இன்மை இதற்கு ஒரு காரணமாகலாம்.
இந்நூல் சாதியை அரசியல் நோக்கிலன்றி சமூகவியல், மானிடவியல் நோக்கில் ஆராய்கின்றது. அந்தவகையில் சாதி ஒரு சமூகத் (35mpp justLITSG36 (Social Phenomenon) இந்நூலில் அணுகப்படுகின்றது. அது சாதிக் கட்டமைப்பைப் புரிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டது. அது பற்றித் தீர்ப்பு வழங்குவது இதன் எல்லைக்கு அப்பாலானது. அது அரசியல் நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டியது.
இந்நூலின் கடைசிக் கட்டுரை சற்று வித்தியாசமானது. இந்திய சமூகவியலாளரான சிறிணிவாஸின் பிரசித்திபெற்ற Sanskritization என்ற விடயம் பற்றிய இக்கட்டுரை அவரது ஆங்கிலக் கட்டுரையொன்றைத்தழுவித்தமிழில் எழுதப்பட்டுள்ளது. இந்தியச் சூழலில் சமூக அசை வியக்கம் பற்றிப் பேசுவதற்கு சமஸ்கிருத மயமாதல் என்ற எண்ணக் கருவைப் பயன்படுத்துகிறார் சிறிணிவாஸ். இதையே இந்நூலாசிரியர் மேல்நிலையாக்கம் எனக்
ஜப்பசி 2011
 

சங்கத்தமிழ்
குறிக்கின்றார். நமது சூழலில் சமூக அசைவியக்கத்தைப் புரிந்துகொள்வதற்கு இந்த எண்ணக்கரு உதவும் என்பது ஆசிரியரின் கருத்து. ஆயினும், சமஸ்கிருதமயமாதல் என்பது பார்ப்பணிய மேலாதிக்கத்தின் பிறிதொரு வெளிப்பாடு என்று கருதுவோரும் உளர்.
மேல்நிலையாக்கம் கட்டுரையின் இறுதியில் பிற்குறிப்பு என்ற பகுதியில் இந்தியாவின் நவீன காலச் சமூக மாற்றங்களை விளக்குவதற்கு சமூகவியலாளர்கள் முரண்பாட்டு அணுகுமுறை, அமைப்பியல் அணுகு முறை, படிமலர்ச்சி அணுகுமுறை, பண்பாட்டு அணுகுமுறை என்ற நான்கு வகை அணுகு முறைகளைக் கையாண்டனர் என்றும் எம்.என்.சிறிணிவாஸ் பண்பாட்டு அணுகு முறை என்ற வகைக்குள் ol Löb நோக்கு முறையொன்றை பிரயோகித்தார் என்றும் கட்டுரையாசிரியர் கூறுகிறார்.
இந்நூலில் உள்ள கட்டுரைகளுள் நியுட்டன் குணசிங்கவின் 'தெலும் கொடவில் சாதியும் வர்க்கமும்’ என்னும் நீண்ட கட்டுரையே முழுமையான மொழிபெயர்ப்பு. ஏனையவை மூல ஆசிரியர்களின் கருத்துக்களைச் சுருக்கியும் தழுவியும் தமிழுக்கு அறிமுகப்படுத்துபவை. இந்நூலில் இடம்பெற்றுள்ள மூலக் கட்டுரைகளின் ஆசிரியர்கள் இத்துறையில் உலகளாவிய நிலையில் நன்கு அறியப்பட்டவர்கள். அவ்வகையில், தமிழில் சமூகவியல், மானிடவியல் துறைகள் சார்ந்த அறிவிலக்கியத்துக்கு இந்நூல் ஒரு அரிய பங்களிப்பு என்பதில் ஐயம் இல்லை. இத்துறைகள் சார்ந்த உயர் கல்வி மாணவர்களும் பொது வாசகர்களும் இந்நூலைப் பெரிதும் வரவேற்பர் என்று நம்புகின்றேன். நூலாசிரியர் நண்பர் சண்முகலிங்கம் நம் பாராட்டுக்கு உரியவர். *
-G29)

Page 31
சங்கப்பாடல்களை
- சிக்கல்க
திமிழின் தொண்மையினையும் தமிழிலக் கியங்களின் சிறப்பினையும் அவை பண்டைய கிரேக்கம், லத்தீன் போன்ற உலக மொழிகளில் தோன்றிய தொன்மையான இலக்கியங்களுடன் ஒப்புநோக்கும் அளவுக்குக் கருத்து வளமும் கற்பனைத் திறமும் வாய்ந்தன என்பதனையும் உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்திய பெருமை மொழிபெயர்ப்புப் பணிக்கு உண்டு. உலகளாவிய நிலையில் பல்வேறு நாடுகளில் தமது மொழித் தொடர்பும் பண்பாட்டு அடையாளமும் அறாது வாழும் தமிழ் ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாது பிறமொழியினருக்கும் தமிழ்ப் பாண்பாட்டின் ஆணிவேரான இலக்கியப் பாரம்பரியத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை மொழி பெயர்ப்புக்களும் தமிழ், தமிழ் இலக்கியம் தொடர்பான பிற ஆங்கில மூல எழுத்துக்களும் வழங்கியுள்ளன.
இந்தப்பணியைத் தமிழியல் அறிஞர்கள் மாத்திரமல்லாது ஆரம்பகாலத்தில் மேற்கத்தைய அறிஞர்கள் பலரும் மேற்கொண்டனர். நவீன தமிழாராய்ச்சியின் ஆரம்பம் ஐரோப்பியர் வருகையோடு, பதினேழாம் நூற்றாண்டின் பின்னர் ஆரம்பமாகிறது. காலனித்துவத்தின் பின்னர் செய்யப்பெற்ற மொழிபெயர்ப்புமுயற்சிகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. பிரெஞ்சு, ஜேர்மனிய, பிரித்தானிய அறிஞர்கள் செய்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் இவ்வகையில் குறிப் பிடத்தக்கவை. பத்தொன்பதாம் நுாற்றாண்டில் ரொபர்ட் கால்டுவெல்லின் "திராவிடமொழிகளின் gill soi,5600TLD" (A Comparative Grammar of the Dravidian Languages - Robert Caldwell) இந்தியக் கற்கைகளில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு முன் குறிப்பாக வடமொழியும் அது சார்பான நாகரிகமுமே
(ஐப்பசி 2011 }

இங்கிலத்தில் வமாழிவபயர்த்தல் ளும் அவதானிப்புக்கள் சிலவும்
ம, நதிரா
இந்தியா என்ற எண்ணம் மேலோங்கியிருந்த நிலையில் இவ்வாய்வு திராவிட மொழிகள் மீது முக்கிய கவனத்தை ஏற்படுத்தியது. இந்தியப் பண்பாடு என்பது வடமொழிப் பண்பாடு மாத்திரமல்ல தென்னிந்தியப் பண்பாட்டையும் உள்ளடக்கியது என்பதனைப் புலப்படுத்தியது.
இக்காலகட்டத்தில் இடம்பெற்ற அடுத்த கட்ட முயற்சிகள் சங்க இலக்கியங்கள் கண்டு பிடிக்கப்படுவதும் பின்னர் அவற்றின் பதிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுமாகும். இதன் காரணமாக சங்க இலக்கியங்கள் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதோடு உலகளாவிய கவனத்தையும் பெற்றன. வின்ஸ்லோ, ஜி.யு.போப் உட்பட கமில் சுவலபில், ஜோர்ஜ்.எல்.ஹார்ட், ஜே.ஆர். மார், டேவிட் லட்டன், ஏ.கே ராமானுஜன் போன்றோர் தமிழின் சிறப்பையும் இலக்கிய வளத்தையும் தமது மொழிபெயர்ப்புக்கள் மூலம் உலகளாவிய ரீதியில் வெளிப்படுத்தினர்.
1980களுக்குப் பின்னர் உலகப் பொருளாதார ஒழுங்கில் ஏற்பட்ட உலகமயமாக்கலும் அதன் விளைவாக உலகப் பண்பாட்டு உறவுகளில் திடீரெனத் தோன்றிய நெருக்கமும், கொடுக்கல் வாங்கல்களும் சில நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளன. பண்பாடுகளின் தனித்துவங்களை ஏற்றுக்கொள்ளவும் பேணவும் கூடிய உலக ஒழுங்கை, அவ்வொழுங்கை முன்னிறுத்தும் கோட்பாட்டை நிராகரிக்கின்ற வகையிலான பண்பாட்டு, இலக்கியச் செல்நெறிகள் புதிய உலக ஒழுங்கில் தோன்றியுள்ளன. பதிப்புத் துறை வெறும் வர்த்தக நோக்கச் செயற்பாடாக உருபெற்றுள்ளது. வேற்றுமொழிகளில், குறிப்பாக e Easleo GLDruguleô "best zseller" 66op வர்த்தகத் தகுதியைப் பெற்ற பலநூறு நூல்கள்
G30)

Page 32
趣
அவற்றின் தரம், ஆங்கில மொழிபெயர்ப்பின்தரம் 6T60TuéOT 85.600fs 85 LILITLD65 தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மேற்குலகச் சந்தை மதிப்பைக் கருத்திற் கொண்டு பழந்தமிழிலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வெளியிடப் படுகின்றன. இந்நடவடிக்கைகள் எவ்விதமான கருத்தியற் கடப்பாடுகளுமின்றி புலமைசார் நெறிப்படுத்தலுமின்றி முற்றிலும் வியாபார நோக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பின்னணியிலேயே, சமீப காலங்களில் மொழிபெயர்ப்புக் கற்கையென்பது உலகளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களில் ஒரு தனித் துறையாகப் பரிணமித்திருக்கிறது.
தமிழில் 'மொழிபெயர்ப்பு' என்ற சொல் லாக்கத்தில் உள்ள 'பெயர்ப்பு' என்ற பதம் முக்கியமானது. "பெயர்" என்ற சொல்லுக்கு மீண்டும் வருதல் என்ற கருத்தும் உள்ளது. (உம்: பருவப் பெயர்ச்சி, பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள், பெயரன்) இன்றும் யாழ்ப்பாணத்து வழக்கில் பேந்து (எ-டு: பேந்தும் வந்தான்) எனத்திரிந்து வழங்குகிறது. "பெயரன்" என்ற சொல்லே மீண்டவன் மீண்டும் பிறந்தவன் என்ற அர்த்தம் கொண்டதாகும். எனவே தமிழில் "மொழிபெயர்ப்பு என்ற தொடர் மொழி மாற்றம்' என்ற அர்த்தத்தைக் கொண்டதல்ல. மொழி மாற்றம் என்பதற்குப்பதிலாக பிரதியின் கருத்தை இன்னோர் மொழியில் மீளளித்தல்/ மீளக்கொண்டு வருதல் என்றே இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமான கருத்தாகும்.
மொழிபெயர்ப்பென்பது ஒரு பிரதியில் (text) காணப்படுகின்ற சொற்பொருள் (lexican), 66035600Táss L60LDLL (grammatical structure). இலக்கிய வழக்கு, ஓசை நயம் போன்ற ஏனைய இலக்கிய உத்திகளையும் பிரதியில் காணப்படுகின்ற பண்பாட்டுக்கூறுகளையும்
ஐப்பசி 2011 }

சங்கத்தமிழ்
இன்னொரு மொழியில் (அதாவது அப்பிரதி மொழிபெயர்க்கப்படும் மொழியின் - இலக்கு மொழியின்) காணப்படுகின்ற இலக்கிய மரபு, பண்பாட்டுப் பின்புலம் என்பவற்றையும் உள்வாங்கிச் செய்யப்படுவதாகும். அவ்வாறு மொழி பெயர்க்கும் பொழுது மூலப் பிரதியின் மொழித் தனித்துவத்துவத்தையும் சிறப்படம் சங்களையும் இயன்றளவு பேணுகின்ற வகையில் அமைதல் வேண்டும்.
சமீபகாலமாக மொழிபெயர்ப்புத் துறையில் பண்பாட்டுக் கோட்பாடு முதன்மை பெற்றுள்ளது. வெறும் வார்த்தைகள், அர்த்தங்கள், மொழிமாற்றம் என்பவற்றுக்கு அப்பால் பிரதியின் பண்பாட்டுச் சூழலை விளங்கிக் கொள்வது அவசியமாகிறது. அப்பிரதியின் வார்த்தைகளுக் கிடையே பண்பாட்டின் பல்வேறு அம்சங்கள் தொக்கி நிற்கின்றன. இதனை மொழிபெயர்ப்பினுள் கொண்டு வராவிட்டால் மொழிபெயர்ப்பென்பது ஒரு இயந்திரமயமானதாக அமைந்துவிடும் என்று தற்கால மொழிபெயர்ப்புக் கொள்கை கூறுகிறது. இக்கொள்கை பிரதிக்குரிய u600TLJITGB (source language/culture), 6LDrug பெயர்ப்புச் செய்யப்படும் மொழிக்குரிய பண்பாடு (target language/ culture) 6T60fueligibles (5 முக்கியத்துவம் கொடுக்கின்றது. இப்புதிய கொள்கையின்படி மொழிபெயர்ப்பாளரை'cultural mediator" என்றே ஆங்கிலத்தில் பயன்படுத்து வதைக் குறிப்பிடலாம்.
அத்தோடு மொழி என்பது பண்பாட்டின் ஒரு கூறு மட்டுமல்ல. அது பண்பாட்டின் பல்வேறு கூறுகளினாலும் உருவாக்கப்படுகிறது. ஒரு சமூகத்தின் புவியியற் தன்மைகள், தாவரங்கள், விலங்குகள், புழங்கு பொருட்கள், சடங்குகள், மத நம்பிக்கைகள், கலை வடிவங்கள் என விரிந்து செல்லும் பண்பாட்டின் பல்வேறு கூறுகளால் உரு வாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வருவது. எனவே மொழிபெயர்ப்பை ஒரு மொழி சார்ந்த செயற்பாடு
-G31)

Page 33
f
esse
என்பதை விடப் பண்பாட்டுச் செயற்பாடாகக் கொள்வதே பொருத்தமானதாகும். ஆகவே மொழிபெயர்ப்பு என்பது ஒற்றை நிலைப்பட்ட ஒரு செயற்பாடல்ல. அது பன்முகப்பட்ட செயற்பாடாகும். அது பல்வேறு நுட்பங்களையும் குறிப்பாகச் சம்பந்தப்பட்ட இரு பண்பாடுகளின் பல்வேறு கூறுகளையும் மனங்கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு பிரதி (text) குறிப்பிட்ட அப்பண்பாட்டின் அங்கமாக இருப்பதனால் வெறுமனே அதனைத் தனித்துப் பிரித்தெடுத்துப் பார்க்க முடியாது.
எனவே ஒரு பண்பாட்டுத் தளத்திலிருந்து வார்த்தைகளை, அவற்றின் பொருளை அவற்றின் ஒழுங்கமைப்பு, ஓசை நயம், படிமங்கள் போன்ற பல்வேறு இலக்கிய உத்திகளை மற்றோர் பண்பாட்டுத்தளத்திற்கு எடுத்துச்செல்லுதல் என்பது, அவ்விரு பண்பாடுகள் மீதான ஆழமான புலமையுடையோரால் மட்டுமே சிறப்பாக, முழுமையாக மேற்கொள்ள முடியும். எனவே மொழி பெயர்ப்பாளர் மூலமொழி (source anguage), இலக்கு மொழி அல்லது பெறுமொழி (target language or recepter language) &ailu இரண்டிலும் புலமை பெற்றவராக இருத்தல் G$660drGBL b.
மேலும் மொழிபெயர்ப்பில் சம்பந்தப்படும் குறிப்பிட்ட அவ்விரு மொழிகளுக்கிடையிலான அதிகார உறவு என்பது மிகவும் முக்கியமான தொரு விடயமாகும். குறிப்பாகக் காலனிய ஆதிக்கச் சிந்தனை உடைய ஒரு சுழலில் செவ்விலக்கியத்தின் மரபுரீதியான அம்சங்களை ஆங்கிலம் போன்ற நவீன மொழிகளுக்குள் எடுத்துச்செல்கின்றபோது மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். உலகப் பொருளாதார, அரசியல், மற்றும் கருத்தியல் அதிகாரக் கட்டமைப்புக்களில் ஆங்கிலம் உள்ளிட்ட நவீன மொழிகளே முதன்மை பெற்றுள்ள நிலையில் காலணிய ஆதிக்கத்திற்கு ஆளான, காலனிய
ஐப்பசி 2011

சங்கத்தமிழ்
மனோபாவம் இன்னமும் முற்றாக நீங்காதநிலை யில் செவ்விலக்கிய மொழிபெயர்ப்பு என்பது புலமைசார் செயற்பாடாக அமைவது அவசிய மானதாகும். சங்கப் பாடல்களில் காணப்படும் பழந்தமிழரின் மரபுகள், வாழ்வியற் கருத்துக்கள், உயரிய பண்பாட்டுக் கூறுகள் என்பன தற்கால நுகர்வுப் பண்பாட்டின் நவீனம்/ பழமை அல்லது விலைப் பெறுமானமுள்ளன/இல்லாதன என்ற மொழிக்குள்ளான &J 60L-615 pisodoo (binary opposites) மற்றும் கருத்தியற் துருவ நிலைப் (polarization) படுத்தலுக்குள்ளாகும் போது மொழிபெயர்ப்பு ஆரோக்கியமானதாக அமையாது.
மொழிபெயர்ப்புப் பணியின் போது தொடர் புடைய இரு மொழிகளதும் இலக்கிய வரலாறு மற்றும் மரபு பற்றிய நுண்மாண் நுழைபுலம் அவசியமானதாகும். அது மட்டுமன்றி மொழிபெயர்ப்புச் செய்யப்படும் பிரதி உருவாக்கப்பட்ட காலத்தைய இலக்கிய மரபுகள், பண்பாடு பற்றிய முழுமையான அறிவு அவசியமானதாகும். அதேபோல சங்ககாலக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பொழுது ஆங்கிலக் கவிதை மரபு, அதன் பண்பாட்டுக் காரணிகள் என்பனவும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். மிகக் கனதியான சங்கக் கவிதைகள் சரியான முறையில் மொழிபெயர்ப்புச் செய்யப்படவில்லையெனில், அவற்றின் முழுமையான கவித்துவத்தையும் தனித்துவத் தையும் இழந்து விடுகின்றன.
இக் கட்டுரை செவ்விலக்கியமாகிய சங்கக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்கின்றபோது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களைக் குறிப்பிடுவதோடு, மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டுள்ள கவிதைகளை எடுத்துக்காட்டாகக் கொண்டு அவற்றில் காணப்படுகின்ற சிக்கல்களை ஆய்வு செய்கின்றது.
G32)

Page 34
III செவ்விலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்யும் பொழுது பின்வரும் விடயங்களை மனங்கொள்ளல் வேண்டும்.
1. ஒவ்வொரு மொழியும் தனித்த ஓசை முறைமைகளைக் கொண்டிருக்கின்றது. ஒசைநயம் செவ்விலக்கிய மொழிக்கும், மொழிபெயர்ப்புச் செய்யப்படும் மொழிக்கும் மாறுபடும். குறிப்பாக சங்கக் கவிதைகளில் வரும் ஓசை நயத்தை மொழி பெயர்ப்பில் கொண்டு வர (Մ»ւՔս III 5l. ஏனெனில் 68lb GLDT.g. இலக்கியங்களில் ஒசைகள் அதிகம். நவீன மொழிகளில் ஓசைகள் குறைவு.
உதாரணம் : தமிழ்- ங், ஞ, ண, ந, ம, ன English - N, M, G
2. யாப்புமுறை, அணியிலக்கணம் என்பன ஒவ்வொரு மொழிக் கவிதை மரபுக்கும் வேறுபட்டவை. ஆங்கிலத்தில் இறுதி அடி, இறுதிச் சொல்லில் (syllable) தான் சந்தம் வரும். ஆனால் தமிழில் இரண்டாவது அடியில் முதல் சொல்லில் வருகின்றது. எனவே மூலமொழியில் உள்ள எதுகை, மோனை போன்ற சந்தம் (rhyme) தரும் கூறுகளை இலக்கு மொழியில் கொண்டு வருவது கடினமானதாக அமைகின்றது.
3. செய்யுளின் / கவிதையின் சொல் 860dLDL (Upoop (word order) g666). Tib மொழிக்கும் தனித்துவமானது. நவீன மொழி selbig bloodeouT6OT 6&T6b elsOLD L (fixed word order) 6f 6ft 35. காரணம் (9606 உருபுகளற்றவை ஆனால் சங்க இலக்கியச் செய்யுள் அமைப்பு அப்படி அல்ல.
4. சொற்களுக்கிடையிலான உறவு என்பது son u6Otöruumi'GBŠ 560fjög56p6ODLuug5). (cultural Specific) சமூக, பண்பாட்டு, புவியியல் காரணிகளே இவற்றைத் தீர்மானிக்கின்றன. எனவே பொருத்தமான அல்லது நிகரான Garib FLD60s Slasgöörs6061Tds (word equivalent)
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
கண்டறிவது அவசியமானதாகும். மூல மொழிச் சொல்லையும் கருத்தையும் புலப்படுத்த இலக்கு மொழியில் தேர்ந்தெடுக்கப்படும் பொருத்தமான 6.5mgo &6b6ogs 65TL FLD60s Slaspect (equivalent) எனப்படும். எனவே மூல மொழிக்குரிய சொல் அல்லது சொற்றொடர் இலக்கு மொழியில் பொருத்தமுற அமைய வில்லையெனில் 6lLIIIC56006OLD S60DL6626rf (Semantic gab) ஏற்பட்டுவிடும்.
5. பொருள், பொருள்கோள் முறைமை (lexical and Semantics) 6T60ru6OT g666 indb மொழிக்கும் தனியானது என்பதுடன் பண்பாடு சார்ந்தது. எனவே இதனை வெறுமனே அகராதியை மட்டும் பார்த்து விளங்கிக்கொள்ள முடியாது. எடுத்துக் காட்டாக தாவரங்கள், so luffsOTIris6ir (flora and fauna). D6 cup6OD (kinship system) 6T60TLJ6)gib60Dás (855, LSL6OT b. படைப்பாளி தனது மொழியுடன் தொடர்புடைய மக்கட் பெயர்கள், உறவுப்பெயர்கள், தனது நிலத்திலுள்ள தாவரங்கள், பறவைகள், விலங்கினங்கள், உணவுப் பழக்கங்கள் என்பவற்றைப் பதிவுசெய்தல் தவிர்க்க முடியாததாகும். எனவே மொழிபெயர்ப்பில் இவற்றைக் கவனத்தில் கொள்ளாது இலக்கு மொழியின் பெயர்களை எழுதினால் இரு மொழிச் சூழலுக்குமிடையே உள்ள பூகோளப்பின்புலத்தில் பொருள் மாறிவிட வாய்ப்பேற்படும். மேலும் கடவுட் பெயர்களில் சமஸ்கிருதமயமாக்கலின் பின் வந்த அதிகாரத்திற்கேற்ப கருத்து மாற்றம் (assimilated) ஏற்பட்டுவிட்டது.
(எ-டு) மாயோன் - திருமால், சேயோன் - முருகன் என்பன. இத்தன்மைகள் மொழி பெயர்ப்பாளர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்து விடுவதைக் காணலாம்.
6. இலக்கு மொழிக்குரிய கவிதை LDJLS60D6015 (poetic tradition) 65rflyb5555 வேண்டும். எடுத்துக்காட்டாகச் சங்கப்
G33)

Page 35
趣
பாடல்களைப் பொறுத்தவரையில் : அகம் - புறம், தினை - துறை ஆகிய பகுப்பு முறைகள், முதல் - கரு - உரிபோன்றன முக்கியமானவை. இந்த 66Disilu 6hlypig,5606ITL) (poetic convention) புரிந்து கொள்ளாத ஒருவர் இன்னொரு மொழியில் மொழி பெயர்ப்பது சாத்தியமற்றது.ஏனெனில் சங்கப் பாடல்கள் மேற்கூறப்பட்ட செய்யுள் மரபு களாகிய மொழியினாலேயே அர்த்தம் பெறுகின்றன. கவிதையை அதற்குரிய இலக்கிய 6higpaig556lbágyi (contextualizing the text) பொருத்திக் கூறுதல் அவசியமானதாகும். சங்கக் கவிதைகளைப் பொறுத்த வரையில் கவிதையில் வரும் படிமங்களின் ஒரு பகுதியாக முதல் - கருஉரி, வழக்காறுகள் என்பனவருகின்றன. மேலும் புறத்திணைக் கவிதை வாய்மொழி மரபுடன் இணைகிறது. (bardic poetry) அதனால்திணை, துறை என்பவற்றுக்கு அப்பால் வாய்மொழிமரபும் மொழிபெயர்ப்பில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
7. பிரதிகளுக்கிடையிலான தொடர் பாடல் (intertexuality) 6T6drug,60D60Tub 356)6O1556) கொள்ளவேண்டும். ஏனெனில் சங்கப் பாடல்களைப் பொறுத்தவரையில் ஒரே புலவரின் பாடல்கள் வெவ்வேறு தொகுதிகளிலோ அல்லது ஒரே தொகுதியினுள்ளோ காணப்படலாம். மொழிபெயர்க்கும்போது இவை அனைத்தையும் மனங்கொள்ளல் வேண்டும். ஏனெனில் ஒரே ஆசிரியர் ஒரே திணை, துறையில் எழுதிய வெவ்வேறு கவிதைகளுக்குள் மெல்லிய மன உணர்வுகளின் பல்வேறு படிநிலைகளைச் சொல்லுவதைக் காணலாம். அப்பொழுது அக்கவிதைத் தொகுதியில் இருந்து ஒரு கவிதையை மட்டும் மொழிபெயர்த்தால் அதன் அர்த்தத்தின் பெரும்பகுதியை இழந்து விடுகின்றோம். (எ-டு) - ஐங்குறுநூறு
8. சங்கக் கவிதைகளின் அமைப்பு (structure) முக்கியமானது. ஒரு கவிதையை தனித்தனியே பிரிக்கக்கூடிய அமைப்பு உள்ளது.
ஐப்பசி 2011

சங்கத்தமிழ்
6LDITUglä (5 6LDITg éleot DüL (Up6op மாறுபடுவதால் மூல மொழியின் வடிவத்திலிருந்து இலக்கு மொழியின் வடிவம் மாறுபடவே செய்யும். எனவே மூலநூல் எதற்கு அழுத்தம் கொடுத்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் மூல நூலாசிரியரின் நடையையும் (style) ஓரளவு கவனத்தில் கொள்ள வேண்டும்.
9. கவிதைக்குள் சொற்களுக்கான கருத்துக்கள் /அர்த்தங்கள் மாறுகின்ற தன்மை காணப்படுகின்றது. உவமை, உவமிக்கப்படும் பொருளாக, படிமமாக கவிதையில் வருவதனைக் கூறலாம்.
(எ-டு) ஆண் மயில் - மயில் போன்ற பெண்ணைக் குறிக்கின்றது. எனவே கருத்தைக் கவனியாது சொல்லுக்குச் 68 T6Ö மொழிபெயர்க்கும் பொழுது மூலத்தின் பொருண்மையும் உணர்வும் சிதைந்து இலக்கிய நயமற்றதாகிவிடும்.
1O. மூல மொழியின் சிறப்பு வழக்குகள் (idioms) உவமை, உருவகங்கள் மற்றும் மூல மொழிக்கேயுரிய மொழியியற் கூறுகள், பண்பாட்டுக் கூறுகள், உரையாடல் அமைப்புக்கள் ஆகியவற்றை மொழிபெயர்க்கும் போது மூலமொழிக்கு நிகரான இலக்கு மொழி வழக்குச் சொற்களைக் கொண்டு செய்தல் வேண்டும். ஏனெனில் மூல மொழியின் ஒரு சொல் உணர்த்துவதை இலக்கு மொழியில் ஓர் உருபன் உணர்த்தலாம். இதற்கு நேர் மாறாகவும் eleo Du Jeo Tib.
பெரும்பாலான மொழிகளில் உருவகம் அமைந்து காணப்படுகிறது. ஆனால் மொழிக்கு மொழி அதன் பண்பாட்டுக் கூறுகளுக்கு ஏற்ப இது மாறுபடுகின்றது. உருவகம் கவிதைக்கு அழகு சேர்ப்பதுடன் கவிதையை மறைபொருளில் விளக்குவதற்கும் பயன்படுகின்றது. ஒரு மொழியில் உருவகமாக வழங்கப்படும் குறியீட்டுச் சொல் பிறிதொரு மொழியில் வேறு பொருளை
G34)

Page 36
re
உணர்த்தலாம். எனவே இவற்றிற்கு நேரடியான பொருள் தருவது தவறான 6LDT.g பெயர்ப்பாகிவிடும். எனவே இவ்வாறான வழக்குகளை இலக்கு மொழியிலுள்ள அவற்றிற்கு நிகரான வழக்குகளின் மூலம் மொழிபெயர்க்கும் போது மூல மொழியின் உணர்வுகளையும் இலக்கிய நயத்தையும் வெளிப்படுத்த முடியும்.
மேலும் ஆங்கிலத்தில் வாக்கியத்தில் பேசப்படும் சொல் அழுத்தம் (intonation) கருத்தைக் கூறுகின்றது. செவ்விலக்கிய மொழிகளில் இத்தன்மை வேறுபட்டதாக அமைகின்றது.
11. மொழிபெயர்ப்பாளர் சொற்களுக்கான பொருணர்மைகளை தெரிந்திருப்பதோடு பண்பாட்டுப் பின்னணியையும் அறிந் திருப்பது அவசியமாகும். ஏனெனில் ஒவ்வொரு மொழியும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான மொழிக் குறியீடுகள் மூலம் எண்ணற்ற அனுபவங்களை வெளிப்படுத்துகின்றது. ஒரு மொழி ஓர் அனுபவத்தை வெளியிடக் கையாளும் மொழிக் குறியீடுகள், பிறிதொரு மொழி அதே அனுபவத்தை வெளியிடக் கையாளும் மொழிக் குறியீடுகளினின்றும் வேறுபட்டன. எனவே இவ்விரு மொழிகள் சார்ந்த பண்பாட்டுச் சூழல் (cultural Context) பற்றிய அறிவு முக்கியமானதாகும்.
12. மொழி பெயர்ப்பில் பணி பாட்டுப் பக்கச்சார்பு (cultural bias) இருத்தல் கூடாது. ஏனெனில் அதிகாரக் கருத்துநிலைகள், மொழிபெயர்ப்பாளரின் காலத்தைய அதிகார அரசியல், மொழிபெயர்ப்பில் அவரது சார்புநிலை என்பன செவ்விலக்கிய மொழி பெயர்ப்பை ஊறு செய்யும் தன்மையன.
III
பல ஆரம்ப கால/சமகால மொழிபெயர்ப் பாளர்கள் தமக்குத் தெரிந்த மொழிநடையில் மிகக்
(ஐப்பசி 2011

சங்கத்தமிழ்
கனதியான சங்கக் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளனர். சில மொழிபெயர்ப் புக்கள் பிரதியுடன் ஒத்துப் போவதையும் சில அப்பாடல்கள் மீதான ஆங்கில உரை போல (interpretation) elecDLD555u60DE5ulf காணலாம். சில எடுத்துக் காட்டுகளுடாக இவற்றை விளங்கிக் கொள்ளலாம்.
(6r-G) - O1 குக்கூ வென்றது கோழி அதனெதிர் துட்கென்றன் தூய நெஞ்சம் தோள் தோய் காதலர் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே, (அள்ளுர் நன்முல்லை, குறுந்தொகை 157)
The rooster Cries "kuckoo" right away my purest heart is full of fear, thinking davvnhas come, like a saw that splits me from the lover who has caressed my shoulders.
(Shanmugampillai, Ludden)
Co coo
Crowed the cock and my poor heart missed a beat that the Sword morning came down to cut me off my lover twined in my arms (Ramanujan, A.K.)
மேற்கூறப்பட்டி இரண்டு மொழிபெயர்ப்புக் களையும் அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது சண்முகம்பிள்ளை, லட்டன் (Ludden) ஆகியோர் “கோழி என்பதற்கு 'Rooster' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். இது நல்ல வார்த்தை எனினும் ஓசைநயம் இல்லை. ஆனால் 9J.G8a5.6SJTLDTgæ6ơT “crowed the cock” vd
G35)

Page 37
*
"Cock" என்ற சொல்லை ஒசைநயத்திற்காகப் பயன்படுத்துகின்றார். வைகறை என்பதற்கு ஏ.கே.இராமானுஜன் "morning" 6T60L56060Tub சண்முகம்பிள்ளை, லட்டன் முதலியோர் "dawn" என்பதனையும் பயன்படுத்தகின்றனர். இங்கு "daWn" என்பது பொருத்தமான வார்த்தையாகும். தோள்தோய் என்பதற்கு "caressed" என்பதனை விட ஏ.கே.இராமானுஜன் பயன்படுத்தும் "twined" என்பது அழகிய கவித்துவம் நிறைந்த 6)TÜġ6oogBuffa5 é96ODLD5g56T6TTg5. "rightaway my purest heart is full of fear". 6T60fp 6 flas6ir தேவையற்ற நீட்சியுடையதாக அமைகின்றன. ஆனால் ஏ.கே.இராமானுஜன் பயன்படுத்தும் "my poor heart missed a beat" 6T60Tugs &rdb55Lib நிறைந்ததாகவும் ஆங்கில மரபை ஒட்டியதாகவும் elsoLD560rpg).
தேன்மயங்கு பாலினும் இனிய- அவர்நாட்டு உவலைக் கூவற் கீழ் மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே (கபிலர்- அன்னாய் வாழிப்பத்து, குறிஞ்சி, 2O3)
Bless you! friend listen Sweeter than milk mixed with honey from our gardens is the leftover water in his land,
low in the water holes
covered with leaves
and muddied by animals (Ramanujan.A.K) இம் மொழிபெயர்ப்பில் ஏ.கே.இராமானுஜன் தேன் மயங்கு பாலினும் இனிய என்பதனை 'sweeter than milk mixed with honey from our gardens" என்ற வரிகளாலும் உவலைக் கூவற் கீழ், மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே 6T6drug60p60T low in the water hole, covered with
ஜப்பசி 2011 }

சங்கத்தமிழ்
leaves, and muddied by animals' 6T6or D வரிகளாலும் அழகாக ஆங்கிலத்தில் கொண்டு 6). Béprj. 'water holes, covered, muddied' என்பவற்றை அகமரபு வழுவாது குறிப்பால் உணர்த்திக் காட்டுகின்றார். ஏ.கே.இராமானுஜன் இந்தியப் பண்பாடு, கவிதை மரபு மற்றும் ஆங்கிலப் பண்பாடு, கவிதை மரபு என்பவற்றை உணர்ந்தவராதலால் கவித்துவமும் பொருளும் மொழி பெயர்ப்பில் வந்துள்ளன.
(6T-G) - O3
கன்றுமுண்ணாது கலத்தினும் படாது
நல் ஆவின் தீம்பால் நிலத்து உக் காங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணி இயர் வேண்டும்
திதலை அங்குல் என் மாமைக் கவினே
(கொல்லன் அழிசி, குறுந்தொகை 27)
The sweet milk of a good cow
if not drunk by a calf
falls wasted on the ground
like this
The beauty of my dark body
with its passion on my loins
is no use to me
no to my lover
but,
must be eaten away
by pallor (Shanmugampillai, ludden)
இம் மொழிபெயர்ப்பில் நல் ஆவின் தீம்பால்" என்பதற்கு இணையான கவித்துவ வளம் the Sweet milk of a good Cow' 66örp 6 fusco 666060."like this 6T6öp66DiscOOT 660 Di 60Li, பயன்படுத்துவதால் கவித்துவம் சிதைகிறது. பசலை என்பதற்கு நிகரான பதம் ஆங்கிலத்தில் இல்லை. 'palor என்பது ஆங்கிலமரபில்மருத்துவரீதியான சொல்லாக இருப்பதனால் கவிதையில் பயன்படுத்தி
G36)

Page 38
(6t-G) - O4)
யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே.
(செம்புலப்பெயனிரார் குறுந்தொகை-40)
whatkin was your mother to mine? what way my father to your anyway? and how did you and I meet ever? But our hearts areas red earth and pouring rain
mingled
beyond parting. (Ramanujan, A.K) ..Your mother and my mother how are they related? your father and my father what are they to
one another?
you and I,
how do we know each other?
like the rain
and red earth our loving hearts are mingled
aS Ole. (Shanmugampillai, Ludden)
My Mother and Yours What were they to one another? My father and yours,
Whatkin?
I and You, how did we come to know each other? and yet
like rain falling on red fields our loving hearts
have mixed together (L.Hart)
ஐப்பசி 2011 H
 

சங்கத்தமிழ்
இங்கு ஏ.கே.இராமானுஜன் 'பெயல் நீர்" 6T6drugsbgs 'pouring rain' 6T60rp UUJ60rUCB55 யிருப்பது பொருத்தமாக உள்ளது. ஆனால் ‘புலம்’ என்பதற்கு"earth' என்ற சொல் பொருத்தமற்றதாக உள்ளது. "field' என்ற வார்த்தையே பொருத்தமானதாகும். உணர்வு ஒன்றுவதற்கு இருவரும்'minged' என்று பயன்படுத்தியிருப்பது பொருத்தமாக அமைந்திருக்கிறது. ஜோர்ஜ். 6T6ö. sprTÜL “mixed together' 6T6ơ gol பயன்படுத்துவதும் பொருத்தமாக உள்ளது. எந்தை, நுந்தை என்பதற்கு வளமான, இணையான சொல் ஆங்கிலத்தில் இல்லை.
எனவே இறுக்கமான கட்டமைப்பும் செழிப் பான இலக்கிய மரபும் பண்பாட்டுடன் இரண்டறக் கலந்ததும் அதைப் புரிந்தவர்களுக்கே பல பரிமாணங்களில் அர்த்தங்களைக் கொடுக்கும் சிறந்த கவிதைகளான சங்கக் கவிதைகளை மொழிபெயர்க்கும் போது இவ்விரண்டு மொழிகளினதும் மொழியியற், பண்பாட்டுக் கூறுகளிலும் புலமை பெற்றவராக இருந்தாலே சிறந்த மொழிபெயர்ப்பை வழங்க முடியும்.
துணைநின்ற நூல்கள்: 1. Hart, G.L. III. 1975, The Poems of ancient Tamil - Their milieu and Their Sanskrit Counterpart, University of California Press, Berkeley. 2. Marr, J.R. 1985, The Eight Anthology,
Institute of Asian Studies, Madras. 3. Pope, G.U. 1975, Tamil Heroic Poems, The South Indian Saiva Siddhantha Works Publishing Society, Thirunelveli. 4. Ramanujan, A.K. 1999, The collected essays of A.K. Ramanujan, Vinay Dharwadker (editor), Oxford, University Press, New Delhi. 5. Zvelabil, K. 1973, The smile of Murugan on Tamil literatue of South India, Leiden, E.J.Bril 6. Zvelabil, K. 1986, Literary Conventions in Akam Poetry, Institute of Asian Studies, Madras.
G37)

Page 39
மலர்மிசை
மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் கடவுள் வாழ்த்தின் மூன்றாம் குறள் இது. மலரின் கண்னே சென்றவனது மாட்சிமைப் எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்க மேற்குறளுக்கான பரிமேலழகரின் உரை இது. இவ் உரையைப் படிக்கும்போது இரு இடங்களில் ஐயங்கள் எழுகின்றன.
elei euilasoolT, பரிமேலழகர் தீர்த்து வைக்கும் அழகு அலாதியான அதுகாண்பாம்.
-- - --
Upg56ò eBuulub, மலரின் கண்ணே சென்றவன் என இக்குறளில் இ மலரின் கண்ணே சென்றவன் என இறைவன் சுட் இம்முதல் கேள்விக்கு பரிமேலழகரிடமிருந்து தெளி அப்பதில் பின்வருமாறு,
அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண், அவர் நினைந்த வடிவோடு விரைவில் சேர்வதால், இறைவன் மலர்மிசை ஏகினான் எனப்பட்டான் என இங்கு வள்ளுவர் மலர் என்றது. அன்பரது உள்ளக் கமலத்தினையே என்பது பரிமே மலர்மிசை ஏகினான் எனும் தொடரிற்கு பரிமேல குறளின் உலகப்பொதுமையை உட்கொண்டு அதன் மலர்மிசை ஏகினான் எனும் தொடரிற்கு குறித்த குறள் குறித்த ஒரு மதத்திற்குள் எல்லைப்பட்டு விடு மலர் எனும் சொல்லிற்கு அன்பால் நினைவாரது உ பரிமேலழகர் செய்யும் உரை, எல்லா மதத்தாராலும் ஒப்பப்படுவதோடு, குறளின் உலக வியாபகத்தை நிச்சயிக்கிறது.
-- + --
இங்கு அவரே மற்றொரு கேள்வியையும் எழுப்பி ! மலர்மிசை ஏகினான் எனும் தொடரில் வரும், ஏகினான் எனும் சொல் இறந்தகாலத்தைக் குறிப்பது அன்பால் நினைவாரது உள்ளத்துள் இறைவன் வ சொல்லத்தலைப்பட்ட விடயம்,
(ஐப்பசி 2011

ஏகினான்
கம்பவாரிதி இ. ஜெயராஜ்
பட்ட அடிகளைச் சேர்ந்தார். ண்ை அழிவின்றி வாழ்வார்.
நம் மனதில் தெளிவின்மை தோன்றி,
றைவனைப் பரிமேலழகர் சுட்டுகிறார். டப்பட்டதன் காரணம் என்ன?
வான பதில் பிறக்கிறது.
ர்கிறார் பரிமேலழகர்.
}லழகர் கருத்து,
ழகர் செய்த இவ்வுரை, னைப் பெருமை செய்கின்றது. ஒரு கடவுளின் பெயரை உரைப்பின்,
b.
உள்ளக் கமலம் என,
அதற்காம் விடையையும் தருகிறார்.
. ருவான் என்பதுவே,

Page 40
趣
ஏகினான் எனும் இறந்தகாலச் சொல், அன்பால் நினைவாரது உள்ளத்துள் இறைவன், முன்னர் வந்தான் எனப் பொருள் தந்து விடுகிறது என்றும் நிகழும் விடயத்தை எதிர்காலச் சொல்ல “முயன்றவன் வெல்வான் "என்றுரைப்பின்,
அது எக்காலத்தும் பொருந்தும் விடயமாய்க் கருத “முயன்றவன் வென்றான்” என உரைப்பின், குறித்த ஒருவன் பற்றிய செய்தியாய் அது அமைந் நிகழ்காலத்தும் வருங்காலத்தும் அது நிகழுமா? இக்கருத்தின் அடிப்படையில் மேற் குறளில், மலர்மிசை ஏகுவான் என்றே சொல் அமைக்கட் ஏகினான் என வள்ளுவர் சொல் அமைத்தது தவ வினா பிறக்கும், விடை தேடுகிறது நம் உள்ளம்.
-- - -
மேற் குறளில் வள்ளுவன் இட்ட ஏகினான் எனு தொல்காப்பிய இலக்கணச் சூத்திரம் ஒன்றினால் அது காண்பாம், நிகழ்கால எதிர்கால செய்திகளைப் பேசும் போது இறந்தகால முடிவுகொடுத்து ஒருவர் பேசினால், அது விரைவுக்குறிப்பினை உணர்த்தும் என்பது, தொல்காப்பியச்சூத்திரம். வீட்டிலிருக்கும் ஒருவனை அவனது நண்பன் ெ உணவுண்டு கொண்டிருந்த உள்ளிருந்தவன் இ வந்துவிட்டேன் எனும் சொல் இறந்தகாலத்தைக் உள்ளிருந்தவன் வருகிறேன் என்றோ வருவேன் அதுவரை வராத அவன் வந்துவிட்டேன் என இர உரைக்கலாம் என்பது இலக்கணம் தரும் அனு வெளியே நின்ற நண்பனுக்கு, விரைவாய் வருகிறேன் எனும் குறிப்பை உணர் வந்துவிட்டேன் என இறந்தகாலத்தால் அவன் உ இலக்கிய வழக்கும், உலகியல் வழக்குமாம். இவ் இலக்கண அடிப்படையைச் சார்ந்து, ஏகினான் எனும் வள்ளுவனின் சொல்லுக்கு, பொருளுரைக்கிறார் பரிமேலழகர்.
-- -(- --
அன்பினால் ஒருவர் நினைந்தால், அவர் மனத்துள் இறைவன் விரைவாய்ப் புகுவா
(ஐப்பசி 2011

சங்கத்தமிழ்
l ல் குறிப்பிடுவதே முறைமை,
35 எனும் ஐயத்தை எழுப்பும்.
பட்டிருக்க வேண்டும். றன்றோ?
ம் சொல் தவறானதன்று என்பதனை, நிறுவுகிறார் பரிமேலழகர்.
வளிச் செல்ல வாசலில் நின்று அழைக்கிறான், தோ வந்துவிட்டேன் என்கிறான். 拳
குறிப்பது.
என்றோ உரைப்பதே சரியானது. றந்தகாலத்தால் உரைக்கலாமா?
மதி
த்த, ரைப்பது,
ன் எனும்,
G39)

Page 41
வேகக் குறிப்பினைக் காட்டவே, மலர்மிசை ஏகினான் என வள்ளுவர் தொடர் அை பரிமேலழகர் செய்யும் உரைவிளக்கம், குறளின் கருத்தினை சொல்லாலும், பொருளாலும் நம்மை வியக்க வைக்கிறது. பரிமேலழகர் தமிழில், மேல் தொடருக்கு அவர் தரும் உரைக்குறிப்பு இதே அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின் சேரலின், ஏகினான் என இறந்தகாலத்தால் ச நிகழும் காலத்தும், ஒராங்கு வரூஉம் வி6ை கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புல வினை.44)என்பது ஒத்தாகலின்.
4>ག4> >
இக்குறள் உரையில், நிலமிசை நீடு வாழ்வார் எனும் தொடரின், நிலம் எனும் சொல்லிற்கு, எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகு என பரிமே இங்கும் நம் மனதில் ஒரு வினாப் பிறக்கிறது. நிலமிசை எனும் சொல்லுக்கு, இவ்உலகத்தின் கண்ணே என, பரிமேலழகர் இல அங்ங்ணம் பொருள் கொண்டிருப்பின், இறைவனின் மாண்புற்ற அடியைச் சேர்ந்தவர்கள் பொருளுரைத்திருக்க முடியும். இங்கும் பரிமேலழகரின் நுண்ணறிவு புலனாகிற இறைவன் திருவடியைச் சேர்ந்தவர்கள் உலகில் நீ நீடு என்ற சொல்லிற்கு அழிவின்றி என்பது பொரு மேற் தொடரில் நீடு வாழ்வார் என வந்தமையால், உலகு எனும் சொல் அழிவின்றி வாழும் உலகிை இவ் உலகும், பதங்களாய் உரைக்கப்படும் எவ்வுலகும், என்றோ ஒருநாள் அழிவனவேயாம். என்றும் அழியா உலகு வீட்டுலகு ஒன்றே, எனவே தான், நிலமிசை நீடுவாழ்வார் எனும் ஈற்றடியில் வரும் வீட்டுலகையே குறிப்பதாய்க் கொண்டு பரிமேலழக ஆழ்ந்த அவரின் பார்வைக்கு இவ்வுரையும் ஒரு
-(- - -0.
ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
மத்ததாய்,
நேர் செய்து,
BT, கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து வறினார். என்னை? "வாராக் காலத்தும் னச்சொற்கிளவி, இறந்தகாலத்துக் குறிப்பொடு வர்." (தொல்காப்பியம் சொல்லதிகாரம்
லழகர் பொருளுரைக்கிறார்.
)குவாய் பொருள்கொள்ளாமல் விட்டது ஏன்?
இவ்வுலகில் நீடு வாழ்வர் என இலகுவாய்ப்
5.
நீடு வாழ்வார் என்பது குறட் கருத்து, sir.
னயே குறித்தல் வேண்டும்.
நிலம் எனும் சொல், ர் உரை செய்தனர். சான்றாம்.

Page 42
201ஆம்ஆண்டுசெய்டெம்பர்மாதம்25ஆம் ୪ சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தலைவர் திரு பெற்ற சங்கத்தின் *டுப்பொதுக் கூட்டத்
2O11 - 2012 ஆண்டுக்கு தலைவர்
பொதுச் செயலாளர்
நிதிச் செயலாளர்
துணைச் செயலாளர் துணைத் தலைவர்கள்
துணைநிதிச் செயலாளர் உறுப்புரிமைச் செயலாளர் நிலையமைப்புச் செயலாளர் நூலகக்குழுச் செயலாளர் கல்விக்குழுச் செயலாளர் இலக்கியக்குழுச் செயலாளர்
ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.அகமது ஜின்னாஹம் ஷரிபுத்தீன் திருமதி வசந்தி தயாபரன் திரு.உடப்பூர் வீரசொக்கன் திருமதி பத்மா சோமகாந்தன் திருமதி ரஜனி சந்திரலிங்கம் திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா 8 திரு.க.இரகுபரன் x திரு.எஸ்.எழில்வேந்தன் திரு.ப.க.மகாதேவா திரு.த.மதுகதனன் திரு.கதிர்வேலு மகாதேவா * திருமதி சந்திரபவானி பரமசாமி
(ஐப்பசி 2011 }
 
 
 
 
 
 
 
 
 

சங்கத்தமிழ்
பொதுக்கூட்டம்
திகதி(ஞாயிற்றுக்கிழமை)காலை1O.OOமணிக்கு 5.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமையில் தில் புதிய ஆட்சிக் lui L5. 膝*エ*
ரிய புதிய ஆட்சிக்குழு விபரம்
திரு.மு.கதிர்காமநாதன்
திரு.ஆ.இரகுபதி பாலருரீதரன்
திரு.செல்வ திருச்செல்வன்
திருதம்பு சிவசுப்பிரமணியம்
செல்வி சற்சொரூபவதி நாதன் திரு.ச.இலகுப்பிள்ளை திரு.ஆ.குகளுழர்த்தி திரு.ஜி.இராஜகுலேந்திரா திரு.வ.மகேஸ்வரன் திரு.மா.தேவராஜா
திரு.தி.ஜெயசீலன்
டாக்டர் சி.அனுஷ்யந்தன்
திரு.மா.சடாட்சரன்
திரு.மா.கணபதிப்பிள்ளை
திரு.க.க.உதயகுமார்
திரு.தி.ஞானசேகரன்
திரு.இ.மூரீஸ்கந்தராஜா திரு.ந.உருத்திலிங்கம் திரு.க.ஞானசேகரம் திரு.எஸ்.அந்தனி ஜீவா திரு.ச.பாலேஸ்வரன் திரு.தி.கோபாலகிருஷ்ணன் திரு.சி.கந்தசாமி திரு.அ.பற்குணன் திரு.க.நீலகண்டன் திரு.வே.கந்தசாமி சைவப்புலவர் சு.செல்லத்துரை

Page 43
தமிழ்க் கவிதையைப் பற்றிப் பேசவோ அன்றேல் எழுதவோ புறப்படுகின்ற பொழுது தவிர்க்கமுடியாதபடிக்கு முதலில் நினைவுக்கு வருகின்ற பெயராகக் கம்பனுடைய பெயர் அமைந்து விட்டிருக்கிறது.
சுமார் இருபதற்கும் மேற்பட்ட நூற்றாண்டு கால இலக்கிய வரலாற்று நீட்சி கொண்ட தமிழ் இனத்தில், எத்தனையோ கவிஞர்கள் வாழ்ந்து முடித்திருக்கிறார்கள். அவர்கள் பல்லாயிரக் கணக்கான படைப்புகளைக் காலத்தின் கைகளிடம் ஒப்படைத்து விட்டுப் போயிருக் கிறார்கள்.
இப்பெருந்தொகைப் படைப்புகளுள் கம்பராமா யணத்துக்குக் கிடைத்துள்ள முதன்மை வெறுமனே அதிர்ஷ்டத்தால் வந்தது அன்று.
காலத்தால் தன்னை விட மூத்த கவிஞர்கள் பலரை விடவும் கம்பன் முன்வரிசையில் வந்து அமர்ந்திருக்கிறான் என்றால், அத்தகுதிப்பாடு அவனது 'இராமாயணம்" என்கிற ஒற்றைப் படைப்பாலேயே வந்தது எனல் வேண்டும்.
இராமாயணம் அமைப்புக் கருதி ஒற்றைப் படைப்பு எனச்சுட்டப்படுகிறதேஜழிய, உண்மையில் அது பல்விதமான பரிமாணங்களையும் தன்னகத்தே கொண்டதாகவே விளங்குகிறது. அப்படைப்புள் அடக்கப்படாத கருத்துலகம் இல்லை எனும் படிக்கு கம்பன் காவியத்தைக் கட்டி அமைத்துள்ளன்.
来来米
தமிழ்க் காவிய உலகின் சிகரமாக, கம்பராமாயணம் பத்து நூற்றாண்டுகளாக நின்று நிலைபெற்று, படித்தவர் முதல் பாமரர் வரை அவரவர் வேண்டுகிற தரத்துக்கு விடயங்களைச் சுரந்து கொண்டிருக்கிறது.
ஒரு காவியத்தின் இத்தகைய ஆயுள் நீட்சியானது, காவியத்துள் வைக்கவெனக் கவிஞன் எடுத்துக்கொண்ட பொருட்சிறப்பிலும்,
கவிஞனது படைப்பாற்றல் திறனிலும் மட்டுமே தாங்கியிருப்பதில்லை.
(ஐப்பசி 2011

கற்பினுக்கு அரசு - சீதை தீக்குளிப்புக் குறித்த புதிய நோக்கு
கலாநிதி யூனி. பிரசாந்தன்
விரைவில் அடங்கிவிட முடியாதபடிக்குத் தன்படைப்பில் ஒரு கவிஞன் கிளப்பி விடுகின்ற 'முடிவிலிச் சர்ச்சையாலும், அது தருகிற சுவாரசியத்தாலும் கூட ஒரு படைப்புத் தொடர்ந்து, நீண்ட ஆயுளுடையதாகி விடுகிறது.
ஆனால், பெரும்பாலான படைப்பாளிகள் தம் படைப்பில் சர்ச்சையை உருவாக்குவதன் மூலம்
தம் படைப்பே சர்ச்சைக்கு ஆளாவதைப் பெரிதும் விரும்புவதில்லை. தாம் சர்ச்சைக்கு அப்பால் நின்றுவிடவே விரும்புகிற இவர்கள் விமர்சனங்களைக் bഞ്ഞ് (B uuÜ படுபவர்களாகவும், தமது பிரதான நேர்முகப் பாத்திரங்கள் விமர்சிக்கப்பட முடியா புனிதர்
G42)

Page 44
களாக இருக்க வேண்டுமென அவாவுறுபவர் களாகவும் இருக்கின்றனர்.
இந்த அவா, இவர்களுடைய நாயகப் பாத்திரர்களை மிகவும் உயர்த்திக்காட்ட முயற்சிக்கின்ற பொழுது, ஒரு பாதகம் நேர்ந்து விடுகிறது. அது, அப்பிரதான நாயகர்களை சாதாரண வாசக யதார்த்தர்கள் தம் மோடு ஒன்றி உணரமுடியாத அமானுஷ்ய நிலையைத் தோற்றுவிக்கிறது.
வாசகர்கள் தாம் வேறு, தாம் படிக்கிற நாயகர்கள் வேறு என்பதைத் தெளிவாகவே விளங்கிக் கொண்டு விடுகிறார்கள். இந்த விளங்கிக்கொள்ளுதல் பெரிய அந்நிய இடைவெளியை உருவாக்கி விடுகிறது. வெளி விழுந்த பிறகு, நாயகர்களூடு எத்துணை அறத்தை எடுத்துக்காட்டினாலும் இது எமக்கானது அன்று' என்கின்ற மனநிலையில் வாசகர் அப்போதனையைக் கடந்து போய்விடுகின்றனர். எனவேதான் காவிய நாயகர்களுக்கும் அவர்களில் ஈடுபடுகின்ற வாசகர்களுக்கு மிடையில் யதார்த்தபூர்வமான ஓர் இடையறா நெருக்கத்தை உருவாக்க வேண்டியது உன்னத படைப்பாளிகளின் கடமையாகிறது.
‘இந்த நாயகன் என்னால் பின்பற்றத் தகுந்தவன்தான் என்கின்றநினைப்பு ஒவ்வொரு வாசகன் எண்ணத்திலும் தோன்றும் வண்ணம் தமது நாயகர்களை யதார்த்தப் பண்புக்ளூடு படைப்பது படைப்பாளிகளின் கடமையாகும். இவ்வாறு படைக்கும்போது அப்பாத்திரர்கள் மீது விமர்சனம் முன்வைக்கப்படுவதும், அப்பாத் திரரது செயலை முன்னிறுத்திச் சர்ச்சை கிளம்புவதும் இயல்பே.
இவ்வாறு கிளம்பும் சர்ச்சை பெரும்பாலும் குறுகிய காலத்தில் அடங்கிவிடும். ஒன்றில் காவிய நாயகர்களை நியாயப்படுத்தியோ அல்லது காவிய நாயகர்கள் செயல் தவறு என மறுத்தோ அச் சர்ச்சை முற்றுப்பெற்று விடும்.
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
ஏதோ ஒரு கட்சிக்கான / வாதத்துக்கான அகச்சான்றைப் படைப்பாளிகள் தம் படைப்பில் தெளிவாகவே ஓர் இடத்திலாவது சுட்டிக் காட்டுபவர்களாக இருப்பர். வரையறுக்கப்பெற்ற படைய்யாளுமையால்அவர்கள்கிளப்புகிறசர்ச்சைகள்
வந்து விடுகின்றன.
来来来
ஆனால், கம்பன் இத்தகைய படைப்பாளி களை விட்டும் இவ்விடத்தில் இன்னும் மேலுயர்பவனாக இருக்கிறான். தான் மிகவும் நேசிக்கிற இராமனில் கூட யதார்த்தத்தைக் காட்ட விழைவது மாத்திரமல்லாமல், அவ்வாறு காட்டும்பொழுது ஏற்படும் சர்ச்சையை எவரும் இலகுவில் தீர்த்துவிட முடியாதபடிக்கு சித்திரிப்புச் கட்சுமத்தை பொதித்துவைத்தும் விடுகின்றான்.
சர்ச்சையில் தான் இன்ன கட்சியைச் சார்ந்தவன் என்கிற பிரகடனத்தைக் கம்பன் ஒருபோதும் செய்ததில்லை. இராமனுக்குச் சாதகமாகக் கருத்துச் சொல்பவர்களுக்கு ஏற்றபடியும் மேற்கோள்களை வைத்திருக் கிறான். இராமன் தவறு எனக் குற்றம் சாட்டு பவர்களுக்குத் துணையாகவும் மேற்கோள்கள் வைத்திருக்கிறான்.
இவ்வாறு இரு கட்சிகளுக்கும் பாடி யுள்ளானே. ஒன்றோடு ஒன்று முரண்படுமே என்று எண்ணிகம்பனை நகைப்போம் ஆயின், பாவம் நாம் ஏமாந்தோம்.
மிக நுண்ணிய ஓர் இடத்தில், தனக்கே உரித்தான அதியுயர் ஆளுமையால், தனது இரண்டு மேற்கோள்களுமே ஒன்றுக் கொன்று முரணானவை அல்ல என்பதற்கான காரணக் குறிப்புகளைக் கம்பன் பதுக்கியிருப்பான். அப்பதுக்கலில்தான் தன்நாயகன் செய்த செயலின் அறத்தைப் புரிய வைத்திருப்பான் அவன்.
அப்பதுக்கல்களைக் கண்டறிவதே காலா காலமாகக் கம்ப அறிஞர்களின் பணியாக இருக்கிறது. எத்தமிழ்க் கவிஞனுக்கும் இல்லாத
G43)

Page 45
趣
படிக்குக் கம்பனுக்கு என்று பல கழகங்கள் இயங்கி ஆண்டுதோறும் விழா எடுத்து ஆராய்ந்து வருவதும் இப்பதுக்கல் களைத்தாம்.
சர்ச்சையெண்பது கம்பனைப் பொறுத்த வரை ஒரு பார்வை விலங்கு. வாசிக்கிற யதார்த்தர்கள் அனைவரையும் இப்பார்வை விலங்காகிய சர்ச்சைக்குரிய செயல்களைக் காட்டித்தான் நாயகர்களை நோக்கி நெருங்கிவரச் செய்கிறான். நெருங்கி வரவிட்டு, பின்னர் நாயகர்களது அறத்தினால் வாசகர்களைக் கைப்பற்றி விடுகிறான்.
இப்படித்தான், கம்பனது இராமனை விமர்சிப்பதற்காகவேனும் கம்பராமாயணத்தைத் தொடுபவர்கள் பின்னர் தமிழறம் உணர்ந்த சான்றோர்களாகிவிடுகிற ரசமாற்றம் நேர்கிறது. 米米米
இவ்வடிப்படையிலேயே, நடையில் நின்றுயர் நாயகன் இராமனில், அவனை வழிபட்டுத் துதிக்கிற கம்பன் யதார்த்தக் கூறுகளைச் சில காட்சிகளில் அமைத்துள்ளான். வாலிவதை, அக்கினிப் பிரவேசம் என்பன அக்காட்சிகளுள் முக்கியமானவை.
இவற்றுள் இராமனுடைய புற வாழ்வியல் வீரத்தை விமர்சிப்பது "வாலிவதை’. அகவாழ்வியலாகிய காதலைச் சர்ச்சைக்கு உள்ளாக்குவது அக்கினிப் பிரவேசம். சுருதி நாயகன் வரும் வரும் ..." என ஏங்கிக் கொண்டிருந்த மனைவியை, 'இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்’ என்றுரைத்த கணவன் வெறுப்பது போலப் பேசுகிற கட்டம் அக்கட்டம்.
இக்காட்சியானது கம்பராமாயணத்துக்கு அவசியமற்றது எனச் சிலர் கூறுவது முனடு. இதனை அமைக்காமலேயே இராமாயணத்தைக் கொண்டு நடத்தியிருந்தாலும் அப்படைப்பு உயர் படைப்பாகவே விளங்கும் என்பது அவர்கள் கருத்து.
(ஐப்பசி 2011 }

சங்கத்தமிழ்
எனினும், இக்காட்சியிலும் கம்பன் தன் தனி இலச்சினை பொறித்திருப்பதைக் காண்பவர்கள், "இவ்வாறான ஒரு காட்சியே காவியத்துக்கு அவசியமில்லை’ என்று கடம் பனைப் புறங்கூறமாட்டார்கள். ஏன் இந்த 'அக்கினிப் பிரவேசக் காட்சியை - இத்துணை எதிர்ப்புவரும் என்று அறிந்த பின்பும், கம்பன் அமைத்துள்ளான் என்பதைக் காணுதல் வேண்டும்.
来来来
போர்க்களத்தில் இராவண வதம் முடிந்த பின்னர், வீடணனைப் பார்த்து இராமன், சீதையை அழைத்து வரும்படி சொல்கின்றான். சீரொடும் தா நம தேவியை என்பது இராமன் வார்த்தை. கதைப்படி பார்த்தால் இவ்விடத்தில் தான் அக்கினிப் பிரவேசம் தொடங்குகின்றது. ஆனால், உண்மையில், இதற்கான தனது க்ட்சுமத்தைக் கம்பன் முன்னரே தொடங்கி விட்டான் என்பதை இராமாயணத்தை ஊன்றி நோக்குகின்ற பொழுது அறிய முடிகின்றது. சீரொடும் தா நம தேவியை என்பதில் அக்கினிப் பிரவேசம் தொடங்கவில்லை. இதற்தான மூல விதை ஆரண்ய காண்டத்திலேயே இடப்பட்டு விட்டது. தனித்திருக்கிற சீதையை இராவணன் நோக்குவதைக் கம்பன் பதிவு செய்துள்ள பின்வரும் பாடலைக் காண்பவர்கள் இதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.
“வெற்பிடை மதம் என வியர்க்கும் மேனியன் அற்பின் நற்றிரை புரள் ஆசை வேலையன் பொற்பினுக்கு அணியினைபுகழின்சேக்கையை கற்பினுக்கரசியை கண்ணின் நோக்கினான்” இராவணனால் சிறைப்படுத்தப்பட முந்தைய சீதை பற்றிய வருணிப்பு இது. இனி, சிறையிலிருந்து மீண்டு வருகின்ற காட்சியை யுத்தகாண்ட நிறைவில் கம்பன் காட்டுகிறான். இராமன் சீதையை நோக்குவதை பின்வரும் பாடலில் படம் பிடிக்கின்றான்.
G44)

Page 46
" கற்பினுக்கு அரசினை பெண்மைக் காப்பினை பொற்பினுக்கு அழகினை புகழின் வாழ்க்கையை தற்பிரிந்து அருள்புரி தருமம் போலியை அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான்" சிறைப்படுத்தப்படுவதற்கு முந்தைய நிலைச் சீதையையும், சிறையிலிருந்து வெளிவந்த சீதையையும் காட்டுகிற கம்பன், மாபெரும் கவித்துவ அவதானிப்பை நிகழ்த்த எம்மைப் பணிக்கிறான். இவ்விரு பாடல்களையும் ஒப்புநோக்குபவர்கள் ஏன் அக்கினிப் பிரவேசம் அவசியமாயிற்று என்பதனைக் கண்டறிந்து தெளிவதோடு ஏன் கம்பன் கவிச்சக்கரவர்த்தியாகப் போற்றப் பெறுகிறான் என்பதையும் உணர்ந்து கொள்ளுவர்.
சிறைப்பிடிக்கப்பட முன்னர், சீதை - கற்பினுக்கு "அரசி. ஆனால், வெளிவருகிற பொழுதோ கற்பினுக்கு அரசு. கற்பெண்கின்ற நாட்டை ஆளுகிற அரசியாகத்தான் முன்பு சீதை இருந்தாள். ஆனால், பின்போ கற்பு எனப்படுகிற அரச தத்துவமாகவே அவள் வளர்ந்து உருக்கொண்டுவிட்டாள்.
அரசியர் மாறிக்கொண்டிருப்பர். அரச தத்துவமோ மாறாது. கணவனோடு இருக்கிற நிலையைவிட பிரிந்திருக்கிற நிலையிலேயே மனைவியின் மாணர்புடைமை பெரிதும் வெளிப்படுகிறது. அவளின் அகத்திண்மை அப்பொழுதான் மென்மேலும் உறுதிபெறுகின்றது. சீதையின் வாழ்க்கையிலும் நடந்தது இதுதான்.
இராமனுடன் இருந்த காலத்தில் அவனுடைய பேணுதலின் கீழ், சீதையின் அகத்திண்மை வெளிப்பட வேண்டிய தேவை வரவில்லை. ஆனால், இராவணனால் வஞ்சமாகக் கவர்ந்து செல்லப்பட்ட பின்னர், காமம் மிக்கிருந்த அவனுடைய சிறையில் தனித்திருக்க நேரிட்ட பொழுது, சீதையின் LD60T6)gig5ulf, பெண்மையின் ஏற்றமும் அடிக்கடி வெளிப்பட நேரிட்டன. இதனால், கணவனுடன் இருந்த
(ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
பொழுது மெல்லியளாய் வலம் வந்த அவளுடைய பாத்திரம், பெண்மையின் இயல்பு குன்றாமலே மிகுந்த வன்மை பெற்று வளர்ச்சி அடைகின்றது. இவ்வளர்ச்சி கற்பினுக்கு "அரசியாக இருந்த சீதையை, கற்பினுக்கு ‘அரசு' என உயர்த்தி விட்டது.
இவ்வாறு, சிறைப்பட்டதால் ஏற்பட்ட பிரிவானது, சீதையை அரச தத்துவமாகவே மாற்றிவிட்டதை அமைய நோக்கிய இராமன், சீதை தான் இனி உயர் எல்லை" என்பதை உணர்ந்து 65TeOof (3- அக்கினிப் பிரவேசத்துக்கான தூண்டுதல் நாடகத்தை ஆரம்பிக்கிறான்.
வெறுமனே ஒரு மனைவியாகிய சீதை ஒருத்திக்கு இந்நிலை அவசியமில்லை. அது கணவன் இராமனோடு மட்டும் எல்லைப்பட்ட விடயம். ஆனால் கற்புத் தத்துவ மாகிவிட்ட சீதைக்கு இது அவசியம். இதற்கு மேற்பட்டநிலை இனி இல்லை. எனவே உயர் வரையறையை உணர்த்த இப்படி ஒரு பரிசோதனை நிகழ்த்திப் பெண்மை ஆற்றலை வெளிப்படுத்திக்காட்ட இராமன் விரும்புகிறான்.
来来来
தனியே இந்தவொரு “கற்பினுக்கு அரசு’ என்கிற சொல்லில் மட்டும் கம்பன் இதை உணர்த்தி அமையவில்லை. தொடர்ந்தும் தன் வித்தையைக் காட்டுகிறான்.
முன்பு"பொற்பினுக்கு அணி என இருந்தவள், பின் பொற்பினுக்கு அழகு என மாறிவிட்டதைக் கம்பன் உணர்த்துகிறான். அதாவது, பொற்பினுக்கு 'ஆபரணமாக இருந்தவள் அழகாக மாறிவிட்டாள். காட்சிப் பொருளாக இருந்தவள் கருத்துப் பொருளாகிவிட்டாள்.
இவ்வாறே, "புகழின் சேக்கையாக (சேக்கை - இருப்பிடம்)-ஒரு காட்சிப் பொருளாக இருந்தவள். பின்பு "புகழின் வாழ்க்கையாக -கருத்துப் பொருளாக வளர்ந்துவிட்டாள்.
G45)

Page 47
趣
கணவனோடு இருக்கிற பொழுதினும், கணவனைப் பிரிந்து இருக்கிற பொழுதில்தான் பெண்மை அறம் துலங்குகிறது. தவறுகிற வாய்ப்பு அருகே வந்திருந்து இடர் செய்கையில், கணவனாகிய கொழுகொம்பு இல்லாமலே மனைவிக் கொடி தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தேவை அப்போதுதான் ஏற்படுகின்றது. இதை உணர்ந்த கம்பன், இத்தகைய பேரிடரான சந்தர்ப்பம் ஒன்றைநன்கு வென்று வெளிவந்த சீதையை பெண்மைக் காப்பு என்றும், தருமப் போலி என்றும் அழைப்பதைக் 85IT600T6OIT b.
தன் மனைவியிடம் நிகழ்ந்த இத்தகைய வளர்ச்சியை அமைய நோக்கியுணர்ந்த இராமன் - தன்னைப் பிறர் பழிப்பர் என்பதைத் தெரிந்தபோதிலும் இவ்வாறு நடந்துகொண்டான் என்று கூறுவதே முறை.
来来来
இராமன், மென்மையோடு, நிலைமையைச் சீதையிடம் விளக்கிக்கூறி-கடு வார்த்தைகளை விலத்தி, "தீப் புகுந்து உலகுக்கு உயர் கற்பின் ஆற்றலை உணர்த்திக் காட்டு” என்று கேட்டிருந்தாலும் சீதை செய்தே இருப்பாள். ஆனால் அவ்வாறு செய்விப்பதில் சீதையின் ஆற்றல் பூரணமாக உலகத்தினர்க்குப் புரியாது. 9ఐయి. வருணனைக் கட்டுப்படுத்திய
Sr “ஆங்கிலம் வணிகத்தின் மொழ மொழியென்றும், கிரேக்கு இசையின் மொழியென்றும், பிரெஞ்சி தூதின் ெ மொழியென்றும், ஆரியம் வீரத்தின் இவ்வாறே தமிழும் இரக்கத்தின் மொ இரங்குவது போல் வெறெம்மொழி இரப்பதுபோல் வேறெம்மொழியில் இ தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ் ஆான்ற நூல்கள் தமிழிற்றோன்றுவது
-ed.
ஜப்பசி 2011

சங்கத்தமிழ்
வீரனல்லவா இராமன்? அவனது இயற்கையை வெல்லும் இயல்பை அறிந்துகொண்ட அக்கினிஇராமனது வீரத்துக்குப் பயந்து தான் சீதையை ஒப்புக் கொண்டான் என்றாகிவிடும். அவ்வாறு, காவியத்தை நகர்த்துவது மீளவும் ஆண்மை ஆற்றலைத்தான் காட்டுமே அன்றி பெண்மை ஆற்றலை உணர்த்தாது.
ஆகவேதான், தான் தற்காலிகமாகச் சீதைக்கு எதிர்நிலை எடுப்பது போலக்காட்டி, பெண்மை ஆற்றலை வெளிப்படச்செய்கிறான்.இராமன்.கம்பன் காட்டியபடிபார்க்கிறபோதுதான், வீரன் இராமன்கூட உதவிசெய்யாதநிலையில்இயற்கையைத்தனிஒரு பெண் நின்று வென்று, பெண்மை ஆற்றலைப் பெரிதும் வெளிப்படுத்தினாள் என்கிற விளக்கம் நமக்கு வருகிறது.
இவ்வாறு பெண்ணில் பெருந்தக்க யாவுள' என்கிற அறத்தின் விளக்கத்தையே கம்பன் தன் அக்கினிப் பிரவேசக் காட்சியில் வெளிப்படுத்தித் தன் மேதைமையை மீண்டுமொருதரம் உறுதி செய்துள்ளான்.
கம்பன் உருவாக்கிவிட்ட ஒரு காட்சியும், அதன் சூட்சுமங்களும் எத்தனையோ மகாமேதைகள் நுழைந்து ஆராய்ந்த பின்னரும் முடிச்சவிழ்க்கப்படாமல் இருக்கிறது என்பதிலேதான் கம்பனின் வெற்றி வெளிப்பட்டுத் தெரிகிறது.
0
ழியென்பர். இனி, இலத்தின் டஃ மொழியென்றும், ஜெர்மன் தத்துவத்தின் மாழியென்றும், இத்தாலியம் காதலின் மொழியென்றும், கூறுவது வழக்கம். ழி அல்லது பக்தியின் மொழி தமிழில் பிலும் இரங்குவது அரிது தமிழில் ரப்பதுTஉம் அரிது. எனவே பரிபாடல், விய பிரபந்தம், திருப்புகழ், திருவருட்பா
இயல்பேயாம்.” i
ob
-G46)

Page 48
2GO
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் மக்களின் நாகரிகச் சிறப்பையும், பண்பாட்டுப் பெருமையையும் விளக்கிக் காட்டுவதில் தலைசிறந்து விளங்கும் நூல் புறநானூறு ஆகும். இது கலை, நாகரிகம், வீரம், அரசியல் போன்ற அறிவுத் திறன்களின் களஞ்சியமாகும். தமிழ் நாட்டை ஆண்ட, படைத்திறம் வாய்ந்த பெருவேந்தர், கொடைத் திறம் வாய்ந்த வள்ளல்களாகவும் விளங்கினர். இத்தமிழ் மன்னர்கள், புவிச் செல்வத்துடன், கவிச்செல்வமும் உள்ளவர்களாகப் புகழுடன் திகழ்ந்தனர். பாரை ஆண்ட இக்காவலர்களின் அருமை பெருமைகளையும் அறிவாற்றல் களையும் வீர தீரங்களையும் பாவலர்கள் பாடுதலையும், பாவலரின் பெருமைகளையும், புகழையும், பண்பாடுகளையும் நாவலர் எடுத்தியம்புதலையும் புறநானூறு அடுக்கடுக்காக அழகாக விளக்கிக் காட்டுகிறது.
பழமையும், பொருட்செறிவும் நிறைந்த புறநானூற்றில் வீரமும், தீரமும், அருளும், eb6Odör6ODLDu-Jib, L6Oöljb LIFTBfLpb, LunT6Qlib LunT616ob ib, இசையும் இசைப்போரும், அரசும்நாடும், மக்களும் மன்னரும், உயிர்ப்புடன் உலாவுகின்ற காட்சியைக் கண்டு மகிழலாம். இவ்இலக்கியம் சற்றேறக்
பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்களால் பாடப்பட்டது. கடைச் சங்க காலத்தில் தொகுக்கப்பட்ட எட்டுத் தொகை நூல்களுள் புறநானூறும்
நற்றினைநல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரி பாடல் கற்றறிந்தார்ஏத்தும் கலியோடு. அகம்புறம்என்று இத்திறத்த எட்டுத்தொகை,
(ஐப்பசி 2011

க இலக்கியம் புறநானூறு
புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன்
நற்றினை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அக நானூறு புறநானூறு என்பன எட்டுத்தொகை நூல்களாகும். புறநானூறு அறமும் பொருளும் கூறும் புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள் அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டதால் புறநானூறு என்னும் பெயர் பெற்றது. இதனைப் புறப்பாட்டு என்றும் LADLĎ எனவும் வழங்குவதுண்டு. இந்நூலின் கடவுள் வாழ்த்து, பாரதம் பாடிய பெருந்தேவனாரால் இயற்றப்பட்டது. மற்றப் பாடல்கள் முரஞ்சியூர் முடிநாகராஜர் முதல் கோவுர் கிழார் இறுதியாகவுள்ள புலவர் பலரால் பாடப்பட்டுள்ளது. இந்நூலைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் யாவர் என்பது தெரியவில்லை. இந்நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் அகவற் பாக்கள் ஆகும். புறநானூற்றுப் பாடல்கள் நூற்றி ஐம்பத்தேழு புலவர்களால் பாடப்பட்டுள்ளது. பதினாலு பேர்நாடாளும் அரசராகவும், பதினைந்து பேர் பெண் புலவர்களாகவும் இருக்கின்றனர். கடவுள் வாழ்த்து உட்பட முந்நூற்றி தொண்ணுற்றெட்டு பாடல்கள் உள்ளன. இருபாடல்கள் கிடைக்கவில்லை. புறநானூற்றுப் பாடல்கள் ஒரு காலத்தில் பாடப்படவில்லை. முதல், இடை, கடை முச்சங்கப்பாடல்களும் இதில் இருக்கின்றன. புலவர்களிலே அரசர்கள் உண்டு. குறுநில மன்ன்ர்கள் உண்டு. ஒளவையார், காக்கை பாடினியார் காவற்பெண்டு, குறமகள், நப்பசலையார் போன்ற பெண்புலவர்களின் பாடல்களும் உண்டு.
புவைர்களின் செல்வாக்கு
புறநானூற்றில் வாழ்க்கையின் பல்வேறு துறைகளைப் பற்றிப்பாட்டுக்கள் உள்ளன. தமிழ்
G47)

Page 49
තඝ
வேந்தர்கள் வீரம் நிறைந்தவர்களாகப் போருக்கு அஞ்சாதவர்களாக விளங்கியது. போலவே அன்பு நிரம்பியவர்களாகவும் நீதிக்கு கட்டுப்பட்டவர் களாகவும் விளங்கினர். அவர்களிடம் புலவர்களுக்குப் பெருஞ் செல்வாக்கு இருந்தது. அரசர்கள் புலவர்களின் அறிவுரைக்கும் செவி கொடுத்து பணிந்தார்கள். அதனாலேயே சிறந்த பாடல்களும் தோன்றின. பண்டைத் தமிழ் புலவர்கள் அரசன், குடிமக்களின் உயிராய் இயங்கி நானிலம் போற்றும் நல்லாட்சி செய்யவேண்டும் என விரும்பினர்.
உலகிற்கு மன்னனே உயிர்
உலகிற்கு நெல்லும் உயிர் அன்று. நீரும் உயிர் அன்று. இப்பரந்த உலகம் மன்னனைத் தான் உயிராகக் கொண்டிருக்கிறது. ஆகையால் நான்தான் இவ்வுலகிற்கு உயிர் என்பதை அரசன் உணர்ந்து அதற்குத் தகுந்தபடி, நடந்து கொள்வது அரசன் கடமையாகும்.
'நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால் யான்உயிர் என்பதை அறிகை வேல்மிகுதானை வேந்தற்கு கடனே இங்கு தமிழ் பாவலர் மோசிகீரனார் நாட்டுக் காவலரின் கடமையை உரிமையுடன் அறிகை என வலியுறுத்துகிறார்.
அறநெறி அரசு
மதுரை மருதன் இளநாகனார், அரசாட்சியின் வெற்றி, சிறந்த அறநெறியை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்வதனாலேயே, கிடைக்கும் எனத் தன் புறநானூற்றுப் பாடலில், "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" என எடுத்துக் கூறுகிறார்.
alpfl epaflCBL5 unties
அடுத்த அரசியல் வல்லுநர் புலவர் பிசிராந்தையார் தாம் பாடிய பாடலில் அரசன்
(ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
மக்களுக்கு முறை அறிந்து வரியைக் குறைவாக விதிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மக்களும் வாழ்வார்கள். நாடும் தழைக்கும். கோடிக் கணக்கான செல்வமும் குவியும். ஆனால் குடிமக்களிடம் பொருள் பறிப்பதையே நோக்கமாகக் கொண்டால், எல்லாம் பாழாகும். வரி விதிப்பைக் கவிஞர் விளக்க பொருத்தமான உவமையை முன் வைக்கிறார். யானைக்கு வயலில் விளைந்த நெல்லைப் பக்குவமாக அறுவடை செய்து, பின் அதனை அரிசியாக்கிச் சமைத்து, உணவாக்கிக் கொடுத்தால், சிறிதளவு நெல்லும் பலநாட்களுக்கு உணவாகும். ஆனால் அவ்விளைச்சலில் யானை தானே இறங்கி உழக்கி உழக்கி உண்ணத் தொடங்கினால் அவ்வளவும் பாழாகும். பிகிராந்தையார் இப்பாடலில் குடிமக்களிடம் வரியைப் பக்குவமாக அறவிடும் பாங்கை அழகாகக் கூறுகிறார்.
6lerLijeариоштвот ćeš,tail
மற்றோர் கவிதையில் (Մ»ւքաՄ&601 தொண்டைமான் இளந்திரையன், மொழி யரசனாக, நின்று மக்களின் உள்ளமறிந்து, நடக்கவல்ல அரசனே, நாட்டிற்குத் தேவையென சங்க காலத்திலே சனநாயகத்தை நடை முறைப்படுத்துகிறான்.
வண்டி செலுத்தும் ஒருவருக்கு செல்லும் வழியின் தன்மைகள் நன்கு தெரிந்திருந்தால் தான் அதில் செல்வோர் இனிமையான பயணத்தை மேற்கொள்ள முடியும். அதே போல மக்களின் உள்ளங்களை அறிந்த, அரசனாலேயே செம்மையான மக்கள் ஆட்சியை நடத்த முடியும். திறமையற்ற வண்டிக்காரனால், வண்டி சேற்றிலும், சகதியிலும் அழுந்தித் தடைப்படும். அது போலத் தெளிவில்லாத அரசனின் ஆட்சி பகையென்னும் சேற்றிலே அழுந்தி பல துன்பங்களைத் தரும். தெளிந்த சிந்தனையுடன் உயர்ந்த அரசியல் நெறிகாட்டும் சங்கப் புலவர்கள்
G48)

Page 50
இவை போன்ற பல பாடல்களால் அரசர்களை நல்லாட்சி நடாத்த நெறிப்படுத்தியுள்ளனர்.
கொடுந்தணர்டனைக்குத் தடை
நீதிநெறிமுறை தவறித் தண்டனை வழங்க, முற்பட்ட கிள்ளிவளவன் அரசனைக் கவிஞர் கோவுர் கிழார் உரிமையுடன், கேட்டனை யாயின் நீகேட்டது செய்ம்மே என இடித்துரைத்து செங்கோல் நிலைக்க வழிப்படுத்துகிறார். கிள்ளிவளவனுடன் செய்த போரில் திருமுடிக்காரி தோற்று விட்டான். போரில் வென்ற கிள்ளிவளவன் திருமுடிக்காரியின் இரு குழந்தைகளைச் சிறைப்பிடித்தான். சிறைப்பிடித்த அவ்விரு குழந்தைகளையும் யானைக் காலில் கிடத்தி கொல்லும் கொடுந் தண்டனையை நிறை வேற்ற ஆயத்தமான பொழுது கோவுர்கிழார் தடுத்து நிறுத்தினார்.
குழந்தைபோல் வளர்
நரிவெரூ உத்தலையார் கோப்பெருஞ் சேரலிரும் பொறைக்கு கூறும் அறிவுரை தமிழ் நாட்டில் நல்லாட்சி நடந்த செம்மைப் பாங்கைக் காட்டுகிறது. “அரசே சிற்றின மக்களோடு சேராதே, நீ காத்து வரும் நாட்டை குழந்தை வளர்ப்பது போல் வளர்த்துப் பாதுகாப்பாய்” என்கிறார். இப்பாடல் புற நானுற்றில் ஐந்தாம் பாடலாக அமைந்துள்ளது.
675մքւմա I5ււ!
நாடாளும் அரசனும், பாட்டுப் பாடும் புலவனும், தோழமை உணர்ச்சியோடு கெழுமிய நட்புடன் தமிழ் நாட்டில் உலா வியதைப் புறநானூறு படம் பிடித்துக் காட்டுகிறது. கபிலரும் சேரமான் கடுங்கோவும் உற்ற நண்பர்கள். இருவரும் தோழமை உணர்ச்சியோடு கைகளைப் பற்றி குலுக்கி அன்பையும் மகிழ்வையும் வெளிப்படுத்தினர். அப்பொழுது
ஜப்பசி 2011 }
 

சங்கத்தமிழ்
அரசன் கவிஞரை நோக்கி உங்கள் கை மென்மையாக இருக்கிறது. ஆனால் எனது கையோ பகைவனைக் கொல்லும் யானையை அடக்க அடிக்கடி அங்கும் ஏந்துதல், அகழியைத் தாண்ட குதிரையின் கடிவாளக் கயிற்றை இழுத்துப் பிடித்தல்; முதுகில் அம்புறாத் தூணி யைத் தாங்குதல் தேரில் நின்று அடிக்கடி போர் செய்யும்போது வில்லில் நாணிடல் இவற்றால் வடுவாகிக் கடினம் அடைந்துள்ளது. இப்பாடலில் அரசன் கூற்றாகப் L6D6).j நட்பின் 6&up6OLD60uu| fð அரசனின் (3UT வலிமையையும் திறம்பட உரைக்கிறார்.
அன்புப் பணிசெய்த அரசன்
சேரநாட்டை ஆண்ட பெருஞ் சேரலிரும் பொறை அரசன், மோசிகீரனார் என்ற புலவருக்கு, அன்புப் பணிசெய்த பாங்கு படிப்போர் உள்ளத்தை நெகிழச் செய்கிறது. வறுமையால் வருந்திய மோசிகீரனார் அரண்மனைக்குச் சென்றார். அப்பொழுது போர் முரசம் நீராட்ட 66әш6fСёш கொண்டு செல்லப்பட்டது. மெல்லிய பூம்பட்டு விரித்த முரசம் வைக்கும் மஞ்சம் அங்கே இருந்தது. அது முரசு வைக்கும் கட்டில் என்பது புலவருக்குத் தெரியாது. புலவர் அதனைக் கட்டில் என எண்ணி களைப்பு மிகுதியால் அதில் படுத்தார். அதில் அவர் நல்ல நித்திரையானார். மன்னன் திரும்பி வந்த போது, மஞ்சத்தில் கண் வளர்ந்த செஞ்சொற் கவிஞனைக் கண்டார். அவன் நன்றாக உறங்குமாறு கட்டிலின் அருகே நின்று கவரி வீசினான். புலவர் கணி விழித்தபோது அரசன் செய்த அருஞ்செயலும் தான் செய்த பெருந்தவறும் அறிந்து மனம் குழைந்தார். அரசனை மனமாரப் போற்றிப் பாடினார். முரசு கட்டிலில் நித்திரை செய்தால், வாளால் இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும். வாளின் கூர்மையை என்மீது காட்டாது நற்றமிழ் முழுதநிந்த, வெற்றி மிக்கு
G4g)

Page 51
விளங்கும் தலைவ! இங்கு சாமரை வீசுகிறாயே என மோசிகீரனார் உள்ளம் குழைந்து பாடுகிறார்.
நென்னிக்கனி உவந்து அளித்த வள்ளல்
சொற்றமிழ் புலவரோடு உறவு பூண்ட மற்றொரு சிற்றரசன் அதியமான் நெடுமான் அஞ்சி. ஒருமுறை மலையிடத்துச் சென்ற போது, அரிதின் முயன்று அமிர்தம் சுரக்கும் ஒரு நெல்லிக்கனியைப் பெற்றான். அதனை உண்டால் நெடுங்காலம் வாழலாம் என்பதை அறிந்தான். ஆனால் அந்தத் தீங்கனியைதான் நெடுநாள் வாழும்படியாக உண்ணாது முகமலர்ந்து ஒளவையாரிடம் கொடுத்தார். அக்கனியின் தன்மை அறியாது ஒளவையார் உண்டார். அக்கணியின் பெருமையை அதியமான் எடுத்துரைத்தான். அதைக்கேட்ட ஒளவையார் இன்பமும் துன்பமும் ஒருங்கே அடைந்தார். அமுதமாகிய கனியைத் தான் உண்ணாது தனக்கு உவந்தளித்த வள்ளண்மையை நீல மணிமிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே" என அவர் அவ்வள்ளலை வாயார வாழ்த்தினார்.
உயிரையும் உவந்தளித்த நண்பர்
நாட்டை ஆண்ட காவலரும் பாட்டுப் பாடிய பாவலரும் விழுமிய நோக்குடன் கெழுமிய நட்புடன் செழுமையாக வாழ்ந்தனர். அவர்களது உயர்ந்த நண்பர் உயிர்துறந்த போது, புலவர்களும் உயிர்துறந்த மெய்சிலிர்க்கும் நிகழ்ச்சிகளையும் புறநானூறு கூறுகிறது. பறம்பு மலையையம் அதனை அடுத்த முந்நூறு ஊர்களையும் பாரி ஆண்டான். பாரிமனதிலே அருள்; நாவிலே இல்லையென்ற சொல் இல்லை. காட்டில் குழைந்து கிடந்த முல்லைக் கொடி ஒன்றை கண்டு, மனம் தளர்ந்து, அது தழைத்துப் படர்வதற்கு தன் அழகிய தேரை, அதனிடத்தே விட்டுச் சென்ற பாரியின் மனப் பான்மையைத்
(ஐப்பசி 2011

சங்கத்தமிழ்
தமிழ் உலகம் வியந்து புகழ்ந்தது. பயன்கருதாது கொடுத்த பாரியை
"பாரி பாரி என்று பல ஏந்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி
ஒருவனும் அல்லன் மாரியும் உண்டு கண்டு உலகு புரப்பதுவே." எனக் கபிலர் பாடுகிறார். மூவேந்தர் சூழ்ச்சியால் பாரி இறந்தார். அவரது உயிர் நண்பரான கபிலர் ஆறாத் துயர் அடைந்தார். அவர் பாரியின் மகளிரை அந்தணரிடம் அடைக்கலம் கொடுத்து விட்டு பெண்ணை ஆற்றின் கரையில் உயிர்துறந்தார். கோப்பெருஞ் சோழ அரசனின் உயிர் நண்பர் பிசிராந்தையார். சோழன் ஊரின் வடக்கே சென்று உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர்நீத்தான். பிசிராந்தையார் சோழமன்னன் மாய்ந்தது கண்டு தாமும் அதே இடத்தில் உயிர் நீத்தார்.
மக்கள் ஆட்சி மலர மாண்புடன் ஆண்ட மன்னரையும் அவருக்கு உறுதுணையாக, உற்ற நண்பனாக, உயிரையும் உவந்தளித்த புலவர்களையும் சொல்லோவியங்களாக புறநானூறு தருகிறது.
சிற்றரசர்களின் கொடை மடம்
பேரரசர்களிலும் சாலப் புகழ் பெற்ற சிற்றரசர்களையும் புறநானூற்றில் காணலாம். குன்று சார்ந்த நாடுகளில் இரப்போர்க்கு இல்லையென்னாது, வரையாது கொடுத்த அரச வள்ளல்கள் பலர் இருந்தனர். பொதிய மலையை ஆண்ட அரசன் ஆய் கடையெழு வள்ளல்களில் ஒருவன். அவன் வறுமையால் வாடி வந்தடைந்தவர்களைத் தாயினும் சாலப்பரிந்து &b5yf55 6Lidb60DLD60du,
'இம்மை செய்தது மறுமைக்குஆம் எனும் அறவிலை வணிகன் ஆயலன் என முடமோசியார் பயன் கருதாது கொடுத்தலே உண்மையான கொடையாகும். பலன் கருதாது
G50)

Page 52
ඝ
வாரி வழங்கிய ஆய் வள்ளலின் சிறப்பான 685 TeodLuloor தன்மையை நன்றாக விளக்குகிறார். ஆய் இப்பிறப்பிற் செய்தது மறுபிறவிக்குப் பயன்படும் எனக் கருதிப் பொருளைக் கொடுத்து அறத்தை வாங்கும் வியாபாரி அல்லன்.அவனது கொடை சான்றோர் சென்ற நெறியைப் பின்பற்றியதுயாகும். பரணர் என்ற புலவர் ஓர் இரவலனைக் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகனிடம் செல்ல வழி காட்டுகிறார். கொடையின் நோக்கம் கொடுத்தல் நல்லதெனக் கொண்டு மறு பிறப்பை நோக்கியது அல்ல பிறரது வறுமையை நோக்கியதாகும் என மயிலுக்குப் போர்வை அளித்த (3u856Oféor 6856060D நெறிப்படுத்துகிறார் பரணர். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி கொல்லி மலைப்பிரதேசத்தை ஆட்சி செய்த ஓரி, முதிர மலையை ஆட்சி செய்த குமணன், குதிரை மலையை ஆண்ட கடியநெடு வேட்டுவன் ஆகியோர் இரப்போர்க்கு வரையாது வாரிவாரி வழங்கிய சாலப் புகழ் பெற்ற சிற்றரசர்களாவர். இவர்கள் படைத்திறத்திலும் கொடைத் திறத்திலும் பேரரசர்களை விடப் பெருமை வாய்ந்தவர்கள். உயர்ந்த உணர்வுடன் கொடை, மடம்படச் செடிகொடி, விலங்கு, மனிதர் என வேற்றுமை காணாது; பலன் நோக்காது; கொடுத்தலையே கொள்கையாக்கிய வள்ளல் களைச் செந்நாப்புலவர்கள் சிறப்பாகப் பாடி உள்ளனர்.
நாடாளும் நல்ல மன்னர்களையும் பார்போற்றும் பாவலர்களையும் போலத் தமிழ் நாட்டு மக்களும் யாதும் ஊரே யாவரும் கேளிர் எனப் பரந்து விரிந்த நோக்குடன் வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கையை உலக இலக்கியமாம் புறநானுற்றுப் பாடல் சித்தரிக்கின்றது. மக்களின் வாழ்க்கை தத்துவ ஞானிகள் கண்ட சிறந்த முடிவாக அமைந்திருக்கிறது. இதனை நல்லிசைப்
(ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
புலவர் கணியன் பூங்குன்றனார் தெளிவாக உணர்த்துகிறார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
“எல்லாம் நம் ஊரே, மக்கள் எல்லாரும் உறவினர்களே. ஒருவருக்கு ஏற்படும் தீமையோ நன்மையோ பிறரால் வருவனவல்ல. முற்பிறவியில் நாம் செய்த நன்மை தீமைகளே, சுகதுக்கங்களாக அனுபவிக்கப்படுகின்றது. சாதல் என்பதும் புதுமையானது அல்ல. வாழ்தல் இன்பமானது என்று யாம் மகிழ்ந்ததும் இல்லை. வெறுப்பால் வாழ்க்கை துன்பமானது என்று ஒதுங்கியதும் இல்லை. பெரிய ஆற்றில் நீர் ஓடும் வழியில் ஒடும் தெப்பம்போல, உயிர் வாழ்க்கை இயற்கை முறைவழியே நடக்கும் என்பதைத் தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். ஆகையால் உலகில் பிறந்து வாழ்வோரில், சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை, பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை," என உயர்ந்த உணர்வுக்கு அழகிய வடிவம் தந்துள்ளார். கணியன் பூங்குன்றனார்.
தமக்கென வாழாச் சான்றோர்.
அடுத்து பாண்டியன் இளம்பெருவழுதி அரசனின் செய்யுள் சான்றோர்களின் உயர்ந்த பண்புகளை எடுத்துக் கூறுகிறது. தன்னலமே இல்லாமல் பிறர்நன்மையே நாடி உழைக்கும் சான்றோர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இருக்கிறது, தேவ அமிழ்தம் கிடைத்தாலும் இனியது என்று அதைத் தனியே உண்ணமாட்டார்கள். யாரிடத்தும் வெறுப்புக் கொள்ளமாட்டார்கள். பிறர் அஞ்சும் துன்பங்களுக்காகத் தாம் அஞ்சி உறக்கமும் இல்லாமல் வருந்துவார்கள். புகழ் என்றால் அதைப் பெறுவதற்காகத் தம் உயிரையும் கொடுப்பர்கள். பழிவருவதானால், உலகமுழுவதும் பெறுவதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டாள்கள். சோர்வு அடையமாட்பர்கள். அத்தகய
G51D

Page 53
சிறப்புக்கள் உடைய, தன்னலம் அற்றசான்றோர்கள் இருப்பதால்தான், இந்த உலகம் இருக்கிறது. கவிஞர் உயர்ந்த உண்மையை, ஆழ்ந்த கருத்துக்களால் தெளிவாகவும், திட்பமாகவும், இப்பாடலில் நுட்பமாகவும் கூறியுள்ளார்.
“உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர் அமிழ்த மியைவ தாயினு மினிதெனக் தமிய ருண்டது மிலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் புகழெனினுயிருங் கொடுக்குவர் யழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலரயர்விலர் அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்கென முயலுநருண்மை யானே.”
ஒப்பற்ற வாழ்க்கை
சிறந்த புலவராகிய பிசிராந்தையார் தமிழ்மக்களின் ஒப்பற்ற வாழ்க்கையை சிறந்த இலக்கியமாகத் தமது பாடலில் தருகிறார். “யாண்டுபல சென்றும், நரையில்லாது, திரையில்லாது, கவலையின்றி வாழ்க்கை மகிழ்வாக நடக்கிறது. காரணம் என் மனைவி மாட்சிமையுடையவள். மக்கள் அறிவு நிரம்பியவர். ஏவலர் யான் காண்பது போன்று எதனையுங் காணும் கலந்த இயல்பினர். எம் பாண்டிய அரசனும் அறமல்லவை செய்யானாக,
பின் அட்டை வெளிப்புறம் முன் அட்டை உட்புறம் பின் அட்டை உட்புறம் உட்பக்க விளம்பரம் (முழு) உட்பக்க விளம்பரம் (அரை)
விளம்பரதாரர்களே! “ சங்கத்தமிழ் ஏட்டின் வளர்ச்சிக்கு விளம்பரங்கள்
“சங்கத்தமிழ் -
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
முறையே காத்துவருகின்றான். இவற்றிற்கு மேலாக கல்வி கேள்வி நிறைந்த பலர் நமது ஊரில் வாழ்கின்றனர். இதனால் இன்பமாக வாழ்கிறேன், என்று செம்மை வாழ்க்கையைச் செயற்படுத்துகிறார் கவிஞர். நாட்டில்மேலே கூறப்பட்டவாழ்க்கைமுறை ஒழுங்காக அமைந்தால் மக்கள் மகிழ்ச்சிகரமான ஒப்பற்ற உயர்ந்த வாழ்க்கை வாழ்வர் என்பது 2 60õ6OLDUT&b.
முச்சங்கப் பாடல்களும் இடம்பெற்றுள்ள புறநானூறு தமிழ் இலக்கியம் தமிழன்னையின் செழிப்புநிலையை உள்ளது உள்ளவாறு ஓவியம் C3LT6) விளங்கியுள்ளது. காலத்தின் கண்ணாடியாகத் திகழும் புறநானூறு, இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன் தமிழ் நாட்டில், நாட்டை ஆண்ட காவலர்களும், பாட்டுப் பாடிய பாவலர்களும், செம்மையாக வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர்களும் எப்படி வாழ்ந்தனர் என்பதை பாடல்கள் மூலம் பிரதிபலிக்கிறது. பிரதிபலிக்கும் இப்பாடல்கள் ஒல்காப்பெரும்புகழ் தொல்காப்பியம், கூறுவது போல நுண்மையும், சுருக்கமும், ஒளியும், மென்மையும் பொருந்திய கெம்பீரநடையில் அமைந்துள்ளன. புறநானூறு உலகச் செம்மொழி இலக்கியமாக உண்மையின் பக்கத்தில் இருந்து, கால வேற்றுமையால் குறையாது எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் என்றும் உலக இலக்கியமாகத் திகழும். *
sústribuyä asi LSBOT
ரூபா 7,000/= (நான்கு கலர்) ரூபா 5,000/= (தனி ஒரு கலர்) ரூபா 5,000/= (தனி ஒரு கலர்) | ரூபா 4,000/= ரூபா 3,000/= கலை இலக்கிய மேம்பாட்டு
தந்து உதவுங்கள்.
G52)

Page 54
'சிலப்பதிகாரம் தமிழில் முதல் எழுந்த காவியம் என்ற பெருமைக்குரியது. இது காறும் கிடைத்துள்ள நூல்களில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் சிறப்பை எடுத்தியம்பும் "முத்தமிழ்’க் காப்பியமாக சிலப்பதிகாரம் விளங்குகின்றது. தமிழ் இலக்கியங்களுள் தனித்துவமான பல சிறப்புகள் சிலப்பதிகாரத்துக்கு உண்டு. தமிழக மண்ணில் மலர்ந்து, தமிழக நிகழ்வைத் தெரிவிக்கும் தமிழகக் காப்பியமாகப் புதுமைக் கருத்துக்களைத் தந்து நிற்கின்றது. இளங்கோவடிகளின் சிருஷ்டியாற்றலையும், அழகுணர்ச்சியையும் விண்டு காட்டும் காப் பியமாகச் சிலப்பதிகாரம் சிறப்புப் பெறுகிறது.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் ஊழ்வினை உருத்து வந்துTட்டும்’ என்ற கருத்துக்களை வலுவுட்டும் நோக்கில் புனையப்பட்டுள்ளது.
மக்கள் காவியம் என்ற வகையில் அன்றைய சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டும் வகையிலும் சிலப்பதிகாரத்தின் புனைவு அமைந்துள்ளது. படைப்பின் கர்த்தா துறவியாக இருந்தபோதிலும் அவர் சமுதாயத்தை நோக்கிய
(ஐப்பசி 2011
 

வநஞ்சை அள்ளும் சிலப்பதிகாரநாயகி தெய்வமாகிறாள்
தமிழ்த்தென்றல் தம்பு சிவசுப்பிரமணியம் துணைச் செயலாளர்
கொழும்புத் தமிழ்ச்சங்கம்
பார்வை புதுமையானதாக உள்ளது. எல்லா விடயங்களையும் அவர் நுணுக்கமாக நோக்கி யுள்ளார். சங்க இலக்கியங்கள் காட்டிவந்த மரபை மாற்றி புரட்சி செய்தவர் என்ற வகையில் அவ ருடைய எண்ணங்கள், எழுத்துக்கள் மதிக் கப்படுகின்றன. கடவுள் வாழ்த்துப் பாடாத ஒரு இலக்கியம் சிலப்பதிகாரம்.
தமிழகத்தின் இயற்கை வளமும் அதனோடு ஒன்றியமைந்த வாழ்க்கை முறைகளும் பண்பாட்டுக் கோலங்களும் அற்புதமாக வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. உயர் குழாத் தினரால் ஓரங்கட்டப்பட்டவர்களின் ஜீவனோ பாயங்களும், பழக்க வழக்கங்களும், வழிபாட்டு முறைகளும், ஆடல்பாடல்களும் உன்னிப்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சீர் இளமைத் தமிழ்மொழியின் எளிமை யினையும் நெகிழ்ச்சியினையும் பெருக்கும் வகையில் தமிழ் மொழியின் வளத்தை எடுத்துக்காட்டும் 'முத்தமிழின் பாடல்" முழுமைபெற்று நிற்கின்றது.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் அரசாட்சி செய்த நாடுகளையும், தமிழ்வேந்தர் மூவரையும் சிலப்பதிகாரம் கூறி நிற்கிறது. காவியநாயகி
G53)

Page 55
கண்ணகி தன் சோழ நாட்டின் பெருமையை இயம்புவதையும், வல்வினை வளைந்த கோலைத் தன் உயிர்கொடுத்து நிமிர்த்துகிற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனையும், கண்ணகிக்குச் சிலையெடுத்துப் பத்தினி வழிபாட்டுக்கு 85 Teš (35TelfGlf சேரன் செங்குட்டுவனையும் இணைத்துக் காவியம் படைத்த இளங்கோவடிகள் சிலம்பை" முன்னிலைப்படுத்தி தம் காப்பியத்திற்குச் சிலப்பதிகாரம் என்னும் பெயரைச் சூட்டினார்.
"தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சி நடை பெற்றதற்குச் சான்றாக உள்ளது சிலப்பதிகாரம். எத்தனை இலக்கியங்கள் இருந்தாலும், சங்க இலக்கியத்திற்கும் பிற்பட்ட காலத்திற்கும்பாலமாகச் சிலப்பதிகாரம் உள்ளது" என்றுதினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்கள் தமிழ் மருதம்" இதழில் எடுத்தியம்பியுள்ளார்.
இளங்கோவடிகள் ஆக்கிய குடிமக்கள் காதை கூறும் காப்பியமான சிலப்பதிகாரத்தில் சான்றாண்மைப் பண்பு என்னும் சீரிய பண்பைப் பேணும் அறிஞர்கள் அக்காலத்தில் அக்கறை காட்டியுள்ளமையைக் காணமுடிகிறது. கற்பின் வலிமையையும் பெண்ணின் பெருமையையும் கூறும் அதே வேளை, மக்களை நேசிக்கும் மன்னன் நல்லாட்சி செலுத்தியதையும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார். மக்களும் மன்னர்களும் காவிய நாயகர்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
சுருங்கச் சொன்னால், சிலப்பதிகாரம் என்னும் தமிழ்க் காப்பியம் பெண்களின் கற்பைமட்டும் சொல்லவில்லை; மன்னனுக்குரிய அறம், உலகோர் வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிகாட்டல்கள் ஆகியவற்றைச் சொல்வதுடன் அக்காலத்தைய நாகரிகம், பண்பாடுகளையும் எடுத்துச் சொல்கின்றது.
"சொல்லும் பொருளும் சுவைமிகுந் தூற்றிட
வெல்லும் வகையான் விளம்பிய இளங்கோ அடிகளார் நெய்தநல் அருந்தமிழ்ச் சிலம்பின் அடிகள் ஒவ்வொன்றும் அருந்தமிழ்த்தேறலாம்"
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
என்று தமிழ் அறிஞர் புலியூர்க்கேசிகன் சிலப்பதிகாரத்திற்கு வாழ்த்து வழங்கியுள்ளார்.
தமிழ் மண்ணிற்கான காவியத்தைச் செதுக்கிய சிற்பி இளங்கோவடிகள். படைப்புக்குள் ஒரு படைப்பாளி பேசுவன யாவும் அவருடைய கருத்துகளே. கதை மாந்தர்கள் வாயிலாகப் படைப்பாளர் பேசுவதே நடைமுறை. இதற்கப்பால் படைப்பாளி ஒருவர் அகத்தும் புறத்தும் நின்று பேசும்போது அதற்கென ஒரு தனித்துவம் ஏற்பட வாய்ப்புண்டு. கதை மாந்தர்களின் சொல்லாடல்கள், அணுகுமுறைகள் இவற்றி னுாடாகப் படைப்பாளி தன் குரலைப் பதிக்கின்றார்.
மரபுக்கு எதிராக - வழக்கத்திற்கு எதிராக - பழமைக்கு எதிராக - காலச்கழலுக்கு எதிராக - இன்ன பிறவற்றுக்கு எதிராக முதன் முதலில் அப்படைப்பாளி சொல்லெடுக்கும் சூழலில் மாற்றம் உருவாவதை உணர்ந்து கொள்ள முடியும். இதற்கேற்ற வகையிலேயே இளங்கோவடிகளும் செயற்பட்டுள்ளார்.
“தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்! பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்குமின், தெய்வம் தெளிமின்."
என்ற வரிகள் வாசகரைப் பார்த்து இளங்கோவடிகளால் கூறப்பட்டவை. அவை இளங்கோவாக - ஒரு பாத்திரமாக - அல்லாமல் படைப்பாளியாக இருந்து சொல்லியவையாகும்.
சிலப்பதிகார காப்பியத்தின் காவியநாயகியாக கண்ணகி சித்திரிக்கப்பட்டுள்ளாள். அவளை ஒரு தனித்துவம் மிக்க பாத்திரமாக இளங்கோவடிகள் முன்னிறுத்தியுள்ளார். சாந்தமும் பொறுமையும் மிக்க பெண்ணாக அறிமுகம் செய்த இளங்கோவடிகள், 85.600T660s 9 luflü பறிக்கப்பட்டதும், 6hung60DLD இழந்து கொதித்தெழுந்து உரிமைகேட்கும் பெண்ணாக போராடத் துணிந்தவளாகக் காட்டியுள்ளார்.
மதுரையில் சிலம்பு விற்கவந்த கோவலன் கொலையுண்ட செய்தியறிந்து, அல்லற்பட்டு
G54)

Page 56
relig
ஆற்றாது அழுத கண்ணிரோடு நெறி தவறிய மன்னனை நேரிற்கண்டு நீதி கேட்பேன் என உரைத்து அரண்மனை நோக்கி அனல் பொங்கும் ஆவேசத்துடன் கண்ணகி செல்கிறாள். உடலெங்கும் புழுதி படிந்திருக்கும் நிலை, குலைந்து கிடக்கின்ற கருங்கூந்தல், கண்களிலிருந்து பொங்கி வரும் கண்ணிர், எல்லைமீறிய வேதனையால் பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் நெஞ்சத்தின் குமுறல், கையில் ஏந்தியிருக்கும் ஒற்றைச் சிலம்பு - இத்தகைய தோற்றத்தோடு, பாண்டிய மன்னன் நெடுஞ்செழிய முன்னேபோய் நிற்கிறாள் கண்ணகி
அவளைக் கண்ட மன்னன் “நீர்வார் கண்ணை எம் முன் வந்தோய்! யாரையோ நீ?" எனக் கேட்கிறான். "தேரா மன்னா! பசுவின் துன்பத்திற்காகத் தன் மகனையும், புறாவின் துன்பத்திற்காகத் தன்னையும் ஈந்து நீதியை நிலைக்கச் செய்த மாமன்னர்கள் ஆண்ட புகார் நகரமே எனது ஊர்” எனக் கூறி “என் காற்சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பாற் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி கண்ணகி என்பது என் பெயரே!” என்கிறாள்.
அதற்கு மன்னன் "கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று" என்று கூறுகின்றான்.
கனல் வீசும் கண்களுடன் கண்ணகி மன்னன் முன்னால் தன் காற்சிலம்பை உடைத்திட, மன்னன் வாய் முதல் தெறித்த மணியினைக் கண்டவுடன்,
“மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது, கெடுக என் ஆயுள்!"
எனக் கூறிக் கொண்டே மயங்கி வீழ்ந்து மடிகின்றான் மாவேந்தன்.
கற்புக்கரசி கண்ணகியின் தோற்றத்தாலும் சொல்லாலும் நாடாளும் மன்னனே அறம் பிழைத்ததனால், நடுங்கி மடிகின்ற நிலை ஏற்படுகின்றது. இந்தக் காட்சியை இளங்கோவடிகள் தனது சொல்வளத்தால் அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
"மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் கையிற் தனிச்சிலம்பும், கண்ணிரும் -
வையைக்கோன் கண்டளவே தோற்றான், அக்காரிகைதன்
சொற்செவியில் உண்டளவே தோற்றான், உயிர்” இளங்கோவடிகளின் கவித்திறன் இங்கு வெளிப்படுகின்றது. அதாவது உடம்பில் புழுதி, விரித்த கூந்தல், கையில் சிலம்பு, கண்ணில் கண்ணிர் கண்ணகியின் இத்தோற்றம் நாட்டின் காவலனையே தோற்கடிக்கிறது. கண்ணகியின் வாதம், அவன் உயிரையே விட வைத்துவிட்டது. மாமன்னனையே அறத்தால் வெற்றி கண்ட மாதரசி கண்ணகியின் கோபம் அத்துடன் தணியவில்லை. "வாழ்தல் வேண்டி வந்த இருவரையும் அம்மதுரை மாநகர் வாழவிடவில்லை. அந்த மனக் குமுறலோடு.
“பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில் ஒட்டேன், அரசோடு ஒழிப்பேன், மதுரையும்" எனச் சூளுரைத்து சுடர்முகம் துTக்கிச் சுழன்றடிக்கும் சூறாவளியாகக் கிளம்புகிறாள். கண்ணகிவிடும் சுடு மூச்சு மதுரை மாநகரையே சுட்டெரிக்கிறது.
“கீழ்த்திசை வாயிற் கணவனோடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கு."
என்னும் காவியநாயகி கண்ணகியின் கூற்று, அவளின் கனத்த இதயத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறது. கண்ணகியின் உலக வாழ்வை, வானவர்வுபூர்தி ஏறினாள் எனக் கூறி மதுரைக் காண்டத்திலேயே முடித்து வைக்கிறார். வரலாற்றை முடித்து இறுதியாகக் கூறும் வெண்பாவில் கண்ணகியைத் தெய்வமாகப் பாடிச் சிறப்பிக்கின்றார் இளங்கோவடிகள்.
"தெய்வந்தொழாஅள் கொழுநற்றொழுவாளை தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால் -
65ue LDTu மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து"
G55)

Page 57
பிற தெய்வத்தை வணங்காமல், தன் கணவனையே வணங்குபவளைத் தெய்வமும் வணங்கும் தன்மை உறுதியுடையதாம். அதனால் கண்ணகி தெய்வமாகி வானின் கண் விண்ணக மாதர்களுக்கு விருந்தாயினள் என்று விளக்குகிறார்.
சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் கோயிலை வலம் வந்தான் என்றும், ஆரிய மன்னரும், குடக நாட்டுக் கொங்கரும், மாளுவ நாட்டு வேந்தனும், கடல் கழ் இலங்கைக் கயவாகு மன்னனும் கண்ணகியை வணக்கித் தொழுதனர் என்றும் வரந்தரு காதையில் சொல்லியுள்ளார்.
“வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவன் நின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும் கடல்கழி இலங்கைக் கயவாகு வேந்தனும் எந்நாட் டாங்கண் இமய வரம்பனின் நந்நாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீகென்றே வணங்கினார்."
இளங்கோவடிகள் தம்முடைய சிலப்பதிகாரக் காப்பியத்தின் தொடக்கத்தில் எந்தத் தெய்வத்தையும் வாழ்த்தி வேண்டாமலேயே காப்பியத்தைத் தொடங்குகிறார். திங்களையும், ஞாயிறையும், மாமழையையும், நாட்டையும் போற்றித் தொடங்குகிறாரே யொழியத் தெய்வத்தைப் போற்றவில்லை. கடவுளை வாழ்த்த வில்லை. காப்பியத்தின் தொடக்கத்தில்தான் தெய்வந் தொழாமல் தொடங்கியது மட்டுமன்றி, “காமன்கோயிலைத்தொழுவது பீடு அன்று” எனக் கண்ணகி சொல்வதாகக் கூறி கண்ணகியையும்
"தெய்வம் தொழாஅள் கொழு பெய்யெனப் பெய்யும் மழை”
(ஐப்பசி 2011 }
 

சங்கத்தமிழ்
தெய்வம் தொழாத வளாகவே எமக்குக் காட்டுகிறார்.
இளங்கோவடிகள் காப்பியத்தின் தொடக் கத்தில் கடவுளை வாழ்த்தாமல் விட்ட காரணங்களுள் கண்ணகியின் தெய்வத் தன்மையும் ஒன்றாக, முதன்மையானதாக இருந்திருக்கக் கூடுமோ என எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில், அவர் தம் சிலப்பதிகாரக் காப்பியத்தில் கண்ணகியின் சிறப்பை படிப்படியாக உயர்த்திக் காட்டி இறுதியில் தெய்வமாகவே போற்றுகின்றார்; வழிபடுகின்றார். கயவாகு மன்னனால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கண்ணகி வழிபாடு, இலங்கை முழுவதும் வாழ்கின்ற மக்களால் முன்னெடுக்கப்படுகின்றது. பத்தினித் தெய் வழிபாட்டில் சிங்கள மக்களும், கண்ணகித் தெய்வ வழிபாட்டில் தமிழ் மக்களும் ஈடுபாடு காட்டி வருகின்றார்கள். கோயில்கள் பல இலங்கையெங்கும் இன்றும் இருக்கின்றன. வழிபாட்டு முறையில் வேறுபாடுகள் இருந்த போதிலும் கண்ணகியை முன்னிலைப்படுத்தியே இத்தெய்வ வழிபாடு நடைபெற்று வருகின்றது.
கண்ணகி அம்மன் வழிபாடு இன்று இலங்கையில் சிறப்பாகக் கிழக்கு மாகாணத் திலும், வடக்கே குறிப்பாக வற்றாப்பளையிலும் இருந்து வருகின்றது. விசேட வழிபாட்டு முறைகளும் உள்ளன. கிழக்கு மாகாணத்தில் கண்ணகி வழக்குரையும், வற்றாப்பளையில் சிலம்பு கூறலும் வருடந்தோறும் படிக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்ட கண்ணகி அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன.
சிலம்புச் செல்வி கண்ணகி தன் கற்பின் வலிமையால் காவிய நாயகி என்ற பெருமை யுடன், வழிபாட்டுக்குரியவளாகிறாள். *
நன் தொழுதெழுவாள்
- குறள்

Page 58
ஆழ்வார்கள்-ப
கலாநிதி முதுநிலை விரிவு
1. முகவுரை
பல்லவர் காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் சைவசமயத்தையும் வைணவ சமயத்தையும் பரப்புவதையே நோக்காகக் கொண்டனர். ஆழ்வார்கள் கண்ணனின் பக்தியில் ஆழ்வார்கள், முதல் மூவாழ்வார்களும் சங்கமருவிய காலத்தில் வாழ்ந்தவர்கள். மற்றைய ஆழ்வார்கள் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்கள். ஆழ்வார்கள் கண்ணனின் பக்தியில் திளைத்து பக்தி அனுபவங்களை தமது இலக்கிய வடிவங்கள் ஊடாகத் தருகின்றனர். பாரதி கி.பி. 1882 இல் பிறந்தவர். அவர் வாழ்ந்த காலப் பகுதி பல மாறுதல்களுக்கு உட்பட்ட காலம், பாரதி தீவிரவாதியாக செயற்பட்டவர். கண்ணனை முழுமுதற்கடவுளாகவும் பாடுகின்றார். கண்ணன் பாட்டின் ஊடாக சமூக சிந்தனையை வெளிப் படுத்துகின்றார். ஆழ்வார்களும் பாரதியும் கண்ணனை எவ்வாறு நோக்குகின்றனர்
ஐப்பசி 2011
 

ாரதி நோக்கில் கண்ணன் தி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்,
ரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
என்பதை ஆய்வு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
2.காலப் பின்னணி
சமண பெளத்த மதங்களை எதிர்த்து சைவ வைணவ சமயங்களை மக்களிடையே பரப்புவதற்காக நாயன்மார்களும் ஆழ்வார்களும் பெரும்பாடுபட்டார்கள். ஆழ்வார்களும் நாயன் மார்களும் இறைவன் புகழை மக்களுக்குச் சொல்லவேண்டியவர்களாகவும் மக்களை சைவ வைணவத்திற்கு திரட்ட வேண்டியவர்களாகவும் இருந்தனர். ஆழ்வார்கள் வைணவ சமயத்தை பரப்புவதை நோக்கமாகக் கொண்டவர்கள். இறைவன் பெருமையை வைணவ தத்துவத்தை பல்வேறு இலக்கிய வடிவங்களின் ஊடாக வெளிப்படுத்துகின்றனர். முதல் மூவாழ்வார் களும் சங்கமருவிய காலத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய ஆழ்வார்கள் 7, 8, 9 நூற்றாண்டினை
G57)

Page 59
re
சேர்ந்தவர்கள். கண்ணனின் பக்தியில் ஆழ்ந்தவர்கள். இதனால் தான் அவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.
பாரதியார் கி.பி 1882 இல் பிறந்தார். பெரிய சமூக மாற்றம் நிகழ்ந்த காலத்தில் பாரதி வாழ்ந்தவர். பாரதியின் காலத்துச் சமுதாயம் அந்நியர் ஆட்சியால் ஏற்பட்ட உணர்ச்சி அறிவுப் போராட்டங்களில் இருந்து மீளும் வலிமையற்றிருந்தது. சமூகமாற்றம் பாரதியின் கவிதையிலும் மாற்றத்தை உண்டு பண்ணின. நிலப் பிரபுத்துவக் கருத்துக்களை எதிர்க்க வேண்டிய தேவை பாரதிக்கு ஏற்பட்டது.
நாட்டு மக்களின் நலனின் அக்கறை கொண்டவர், நாட்டின் விடுதலைக்காக, சாதி வேறுபாடு காட்டிய சமூகத்தை எதிர்த்து நிற்கவேண்டிய தேவை, பெண்ணடிமை மக்களின் வாழ்வுக்கு இடையூறாக இருந்து வந்த கொடுமைகளை எதிர்க்க வேண்டிய சூழலில் பாரதி வாழ்ந்தவர். தீவிர உணர்ச்சி அவரது கவிகளில் வெளிப்படுகின்றது.
பாரதியார் ஆழ்வார்களின் பாடல்களை நன்கு கற்றிருந்தார். பாரதி ஆழ்வார்களின் இறைபக்தியை அரவிந்தருக்கு உணர்த்தினார். கீதையின் உபதேசத்தை அரவிந்தர் வாயிலாக பாரதி உணர்ந்தார். பாரதிக்கு கண்ணன் மீது காதல் வர ஆழ்வார்கள் பாடல்களின் பயிற்சியும் ஒரு காரணமாகும். பாரதி பராசக்தி மீதும் கண்ணன் மீதும் அதீத பக்தி கொண்டவர். பராசக்தியும் கண்ணனும் தன்னை ஆட்கொண்டதாகப் பாடல்களில் குறிப்பிடுவார். பாரதி அறுபத்தாறு உபதேசங்களில் கடவுள் எங்கே இருக்கின்றார்.
"நல்லதொருமகன்சொல்வான்தூணிலுள்ளன்
நாராயணன் துரும்பினுள்ளன் என்றான் வல்ல பெருங்கடவுளிலா அணுவொன்றில்லை
மஹாசக்தியில்லாத வஸ்துவில்லை”
(பாரதி பாடல் - அறுபத்தாறுபா-15)
பாரதி இப்பாடலில் கண்ணனையும் மகாசக்தி யையும் முதற் பொருள்களாகக் காட்டுகின்றார்.
(ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
3.சமூக நோக்கு
ஆழ்வார்களின் ஒரே நோக்கம் இறை சிந்தனையே.
"உண்ணும் சோறு பருகும் நீர்தின்னும்
வெற்றிலையுமெல்லாம். கண்ணன்எம்பொருமான்என்றென்றே கண்கள்
நீர்மல்கி (நால. தி 7 7 - 1)
இந்த இடத்திலே ஆழ்வார்கள் உலகத்தைப் பற்றியும் சூழ்நிலை பற்றியும் அக்கறை இல்லாமல் வாழ்ந்தார்களா? என்ற கேள்வி எழுகின்றது.
*ணதர் Sப்பால்லுற்றார்
எண்ணுறாத துயர்விளைக்கும் இவையென்ன
உலகியற்கை”
(நாலாயிரம் திவ்வியபிரபந்தம் 4 - 9 - 0
இவ்விடத்திலே உலகத்தைப்பற்றி மக்களின் இயல்புகள் பற்றியும் அறிந்திருந்தனர். இறைவன் புகழ் அவர்களின் நோக்காக இருந்தது.
ஆழ்வார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதியை சேர்ந்தவர்கள். பெரியாழ்வார்வேயர் குல அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர். (மூங்கிலைச் சார்ந்த பார்ப்பனர் குடியினரை வேயர் என்று அழைத்தனர்) திருமங்கையாழ்வார் கள்வர் குலத்தைச் சேர்ந்தவர். குலசேகர ஆழ்வார் சேரநாட்டு அரச குலத்தைச் சேர்ந்தவர். திருப்பாணாழ்வார்பானவம்சத்தைச் சேர்ந்தவர். நம்மாழ்வார் வெள்ளாள சிற்றரசர் வம்சத்தைச் சேர்ந்தவர். தொண்டரடிப் பொடியாழ்வார் பிராமண குலத்தைச் சேர்ந்தவர். ஆழ்வார்கள் காலத்தில் சாதிப்பாகுபாடு இருந்தது. ஆனால் சாதி வித்தியாசம் வைணவ சமயத்தில் பார்ப்பதில்லை. அதனால் ஆழ்வார்கள் சாதியமைப்பை எதிர்த்து பாடவேண்டிய தேவை ஏற்படவில்லை. பாரதி எதிர்க்க வேண்டிய சூழலில் இருந்தவர். சாதி வெறியை கொழுத்துவோம் என ஆவேசமாக சொல்வதை கவிதைவரிகள் காட்டுகின்றன.
G58)

Page 60
f2.
|-
ஆழ்வார்களில் இருந்து வேறுபட்டு பாரதி தீவிர உணர்ச்சிக் கவிதைகளை எழுத அக்கால சமுதாய அமைப்புக் காரணமாகின்றது.
4.இலக்கிய வடிவம்.
முதலாழ்வார் மூவரும் திருமால்மேல் மூன்று திருவந்தாதிகள் பாடியுள்ளனர். இவை வெண்பாவினால் அமைந்தவை. திருமழிசை யாழ்வாரின் நான்முகன் திருவந்தாதியும், நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியும் வெண்பாக்களால் அமைந்தவை. நம்மாழ்வாரின் திருவிருத்தம் கட்டளைக் கலித்துறை யாப்பால் அமைந்தது. நம்மாழ்வாரின் திருவாசிரியம் eflrfluu Li LunT வகையில் அமைந்தது. திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை ஆசிரியப்பாவிலும் பெரிய திருமடல் சிறிய திருமடல் கலிவெண்பாவினாலும் அமைந்தவை. பெரியாழ்வாரின் திருமொழி ஆண்டாளின் திருப் பாவை, நாச்சியார் திருமொழி என பல வகைப்பட்ட இலக்கிய வடிவங்களினுTடாக ஆழ்வார்கள் கண்ணனின் பெருமையை வெளிப்படுத்துகின்றனர். பாரதி கண்ணன் பாட்டு என்ற கவிதையினுTடாக கண்ணனின் பெருமையைப் பேசுகின்றார். சங்ககால இலக்கியங்களை பாட்டு என்ற அழைத்தனர். பாடல் என்ற வடிவம் பாட்டு என்றமைந்தது. சங்கப்பாட்டு எனவும் பத்துப் பாட்டு எனவும் கொள்ளப்படுகின்றது. அந்தப் பாட்டு மரபினை பின்பற்றி பாரதி கண்ணன் பாட்டு என்று சொல்கின்றார். கண்ணன் நெடும் பாட்டாக அந்தப்பாட்டு அமைகின்றது.
5. D-pa (up6op
கண்ணன் பாட்டில் கண்ணனைத் தோழ னாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காதலியாக ஆண்டாளாக குலதெய்வமாகப் பாவனை பண்ணிப் பாடுகின்றார்.
(ஐப்பசி 2011)

சங்கத்தமிழ்
கண்ணனைத் தாயாகப் பாவனை பண்ணிப் பாடும் போது பாரதி குழந்தை உணர்வினைப் பெற்றுள்ளார். குருவாகப் பாவனை செய்யும் போது சீடனாகவும் சேவகனாகப் பாவனை செய்யும் போது (கவிஞர் பாரதி) ஆண்டானாகவும் மாறுவதைக் காணலாம். தனது உணர்வினை மாற்றிஅமைத்துக் கொள்கிறார். ஒவ்வொரு உறவு முறையிலும் ஒவ்வொரு முறையாக தனது மன உணர்வினை மாற்றிக் கொள்கிறார் பாரதி.
கண்ணனைத் தலைவனாகக் கொண்டு பாடுவதும் குழந்தையாகக் கொண்டு பாடுவதும் பாரதிக்கு முன்னர் ஆழ்வார்கள் பாடி வந்த மரபு. பாரதி கண்ணனைத்தாயாகவும் தந்தையாகவும் சீடனாகவும் சேவகனாகவும் (கண்ணனை கண்ணம்மா ஆக்கி) தலைவியாகவும் பாடுவது புதுமையானது கண்ணனை ஆழ்வார்கள் பாடிய முறையில் இருந்து கூடுதலான மனித உறவுகளுடன் பாரதி பாடுவது நோக்கத்தக்கது. கண்ணன் என்ற குறியீட்டின் மூலம் (தெய்வம் - மனிதன்) பாரதி அக்கால சமுதாயத்தையும் கண்ணன் மீது உள்ள பக்தியையும் வெளிப்படுத்துகின்றார்.
“சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற் புதிது சோதி மிக்கநவகவிதை
யெந்தாளுமழியாத மகாகவிதை"
பாரதி புதியநோக்கில் புதிய பொருள் படைப்பவர். ஆழ்வார்கள் பாவனை முறையில் பக்தி நிலையில் பல்வேறு உறவுமுறைகளில் கண்ணனைத் தரிசித்தனர். பாகவதத் திறனுள்ளும் பகவத்கீதையினுள்ளும் இருந்த கண்ணன் பாரதியின் பாட்டில் இறங்கி வந்திருக்கிறான். கண்ணனை ஆழ்வார்கள் கொண்ட உறவு முறையில் மேலும் ஒரு படி சென்று பாடுகின்றார். சமகால சமூகத்தின் பல்வேறு நிலைகளை கண்ணன் உறவு முறையின் ஊடாகப் போதிக்கின்றார். அரசியல், நீதி ஏற்றத்தாழ்வுகள் எல்லாவற்றையும் கண்ணன் பாட்டின் வாயிலாக குறிப்பிடுகின்றார்.

Page 61
mananašøMa
தீவிரமான உணர்வுகள் வெளிப்படுகின்றன. அழகியல் உணர்வுகள் கண்ணன் பாட்டின் ஊடாக வெளிப்படுகின்றது.
பாரதியார் அத்வைதக் கோட்பாட்டைப் பின்பற்றுபவர். விவேகானந்தர், நிவேதிதாவும் அத்வைதக் கோட்பாட்டை உடையவர்கள். விவேகானந்தரின் காலத்தில் சோசலிசக் கொள்கை தீவிரம் பெற்ற காலம். எல்லோரும் சமம். ஆண்டான் அடிமை முறையை எதிர்க்கும் கோட்பாடு இவர்களுடையது. பாரதியார் இறைவனும் ஆண்மாவும் ஒன்று என்ற நிலையில் கவிபாடியவர். உலகத்தில் உள்ள ஆன்மாக்கள் எல்லாம் சம அந்தஸ்து உடையது என்ற கொள்கையுடையவர். பாரதி கண்ணன், பராசக்தி மீது கொண்ட பற்று தேசபக்தியாக மலர்கின்றது. பாரதியின் அத்வைதம் பிரபஞ்சம் மனிதன் பற்றிய ஒருமைப் பார்வையை 2d 60Lugs.
ஆழ்வார்கள் பரமாத்மாவின் கல்யாண குணங்களை பிரித்து நின்று சுவைப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் ஆழ்வார்கள். இரண்டறக்கலத்தல், கலந்தபின்புமீண்டு பிரிந்துநின்று சுவைத்தல்என்ற மூன்றுநிலையில்நின்றுபாடுவர். பாரதிஇரண்டறக் கலத்தலில் நின்று பாடுவார்.
திருமங்கையாழ்வர், கண்ணப்பன்,நந்தனார் போன்றோர் ஆண்டான் அடிமைமுறையில் உறவு கொள்கின்றனர்.
“என் ஆண்டவரே வறுமை பிணி துயர் தீர்த்து சுகமருள வேண்டுமையே உனக்கே யான் அடிமை, காடுகழனியாக காத்திடுவேன், காலிகள் மேய்ப்பன் முதலில் பாடுபடச் சொல்லி என் பக்குவம் பார் ஆண்டே தோட்டங்கள் கொத்திச் செடி வளர்க்கச் சொல்லிச் சோதனை பாராண்டே"
இப்பாடலில் கண்ணனை ஆண்டானாகவும் தன்னை அடியவனாகவும் கொண்டு பாரதி பாடுகின்றார். தன்னுடைய துன்பத்தை தீர்க்கும். படியும், தனது நாட்டில் உள்ள வறுமைப்பட்ட
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
மக்களின் துயரங்களை நீக்கும் படியும் கண்ணனிடம் அடிமை முறையில் வேண்டுகிறார். ஆண்டானாக கண்ணனும் அடிமையாக பாரதியும் நிற்பதை பாடல் காட்டுகின்றது. ஆண்டான் அடிமை முறையை இதனூடாக பாரதி காட்டுகிறார். சாதியமைப்பினை குறிப்பாக இதனூடாகக் காட்டுகின்றார். வெள்ளையர்கள் இந்தியர்களை ஆண்ட காலமும் நினைவு கொள்ளத்தக்கது. ஆண்டான் அடிமை முறையை நீக்குவதை நோக்காகக் கொண்டு பாடியிருக்கிறார். கண்ணனை தெய்வவடிவமாகவும் மனித வடிவமாகவும் நோக்குவதைக் காணலாம். கண்ணனிடம் பக்தன் அடிமை முறையில் வேண்டுவதாகவும் அமைகின்றது. கண்ணன் என் அரசன் என்ற பகுதியில் கண்ணனை அரசனாகக் காட்டுகின்றார் பாரதி. அரசனிடம் திண்ணை வாயில் கூட்டவும், ஏவல் செய் வதற்கும் வந்தவனை தன் மந்திரி ஆக்கினான் அரசன்.
கண்ணன் என் சேவகன் என்ற பகுதியில் எங்கிருந்தோ வந்தான் ஒருவன் இடைச்சாதிநான் என்றான். வீட்டில் எல்லா வேலைகளையும் தான் சேவகனாக இருந்து செய்வதாகக் சொன்னான். தன் பெயர் கண்ணன் என்றான் தாலி கட்டும் பெண்டாட்டி சந்ததிகள் அவனுக்கில்லை, காதல் பெரிதெனக்கு, காசு பெரிதில்லை என்று சொன்னான். அதனால் கவிஞர் அவனை தன் வீட்டுக்குச் சேவகனாக ஏற்றுக் கொண்டார்.
கவிஞரின் குடும்பத்தை கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல காத்துவந்ததாகப் பாரதி குறிப்பிடுகின்றார்.
"நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய் எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நான் என்றான்”
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்.
கண்ணனை நான் ஆட்கொண்டேன் கண்ணன் தன்னகத்தே கால் வைத்த நாள் முதலாய் அறிவு, கவிதை, சிவயோகம் தெளிவே
G60)

Page 62
வடிவாம் திருஞானம் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண் சேவகனைப் பற்றிய உலக நடப்பியலும் அதே நேரம் கண்ணனின் திருவருள் தன்னகத்தே வந்த நாள் முதல் எல்லா அருளும் பெற்றதாக இறைவனின் பெருமை பேசுகிறார்.
(பாரதி பாடல் - என்சேவகன் பா - O4)
கண்ணன் தன்னகத்தே கால் வைத்த நாள் முதலாக எல்லாச் செல்வமும் பெற்ற தாகக் கூறுகிறார். கண்ணன் தன்னை ஆட் கொண்டதாக பாரதி குறிப்பிடுகிறார். கண்ணன் மேல் வைத்த இறைபக்தியும் காட்டப்படுகின்றது. வேலைக்காரனைக் கீழான சாதிக்காரன் என்று தாழ்வாக நடத்துகின்ற சமுதாய வாழ்க்கையைக் காட்டுகின்றார். கண்ணனைச் சேவகனாகப் பாடுவதும் புதுமையானதாகும். ஆழ்வார்கள் நெறியில் நின்று வேறுபட்டுச் செல்கின்றார்.
திருமங்கையாழ்வார்தன்னைநாயகியாகவும் கண்ணனை நாயகனாகவும் கொண்டு பாடல்கள் பாடியவர். பழைய காதல் இலக்கிய மரபுகளை ஒட்டி அவர் இலக்கியம் படைத்துள்ளார். சங்ககாலத்தில் காதலில் ஏமாற்றம் உள்ள ஒரு தலைவன் தன்னைத் தானே வருத்திக்கொண்டு உயிர் விடத் துணியும் துறையினை மடல் எனக் கூறுவர். மடல் ஏறுதல் ஆண்களுக்கே உரிய மரபாக சங்க காலத்தில் இருந்தது.
திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல், பெரிய திருமடல் என மடல் பாட்டுப் பாடியிருக் கிறார். பெண்ணாக இருந்தும்மடல் ஏறுவேன் என திருமங்கையாழ்வார் கண்ணனுக்குக் கூறுவதாக அமைகின்றது. திருமங்கையாழ்வார் பெண்கள் மடல் ஏறுவதில்லை என்ற மரபை மாற்றியுள்ளார்.
"கூவாய் பூங்குயிலே குளிர் மாறி தடுத்து கந்த மாவீாய் நீண்ட மணி வண்ணனை வரக் கூவாய் பூங்குயிலே”
குயிலை அழைத்து மணிவண்ணனை வரக்கூவாய் என்றும் பல்லியை கண்ணன் வருமாறு ஒலி செய் என திருமங்கையாழ்வார்
(ஐப்பசி 2011 H
 

சங்கத்தமிழ்
கூறுவதாக பாடல்கள் அமைகின்றன. நம்மாழ்வார் தன்னை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் கொண்டு பாடல்கள் பாடியவர் நீர் நிறைந்த வயலில் இரைதேடும் பறவையே என் நாயகள் ஏழு உலகங்களையும் அருள் கொண்டு காப்பாற்றுகிறார். தன் ஒருத்திக்கு அருள் செய்தல் அவரால் முடியாதா? நீ நிறைந்த கண்களோடு புலம்பும் எனக்காக ஒரு சொல் அவரிடம் போய்ச்சொல்லி உதவமாட்டாயா? என பறவைகளை தூதாக அனுப்புவதாக இப்பாடல் அமைகின்றது.
முதலாழ்வார்கள் சங்கமருவிய காலத்தில் வாழ்ந்தவர்கள். மற்றைய ஆழ்வார்கள் எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் பன்னிருவரும் கண்ணனை வழிபட்டு பாடிய பாடல்கள் நாலாயிரத் திவ்விய பிரபந்தமாகத் தொகுக்கப்பட்டது.
பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகக் கற்பனை செய்து பக்திப்பாடல்கள் பாடியுள்ளார். கண்ணனுடைய பிறப்பினை மகிழ்ந்து பாடும் பாடல் பத்துப்பாடல்களாக உள்ளன. பெரியாழ்வார் நிலாவைக்காட்டி குழந்தையோடு விளையாட வருமாறு அழைத்தல், மார்பில் பால் உண்ணுமாறு தாய் குழந்தையை அழைத்தல், காது குத்தி அணிகலன் பூட்டுதல் போன்ற தாய் குழந்தையை எவ்வாறு பராமரிக்கின்றார்களோ அதே மாதிரி பெரியாழ்வார் கண்ணனை விளிப்பதைக் காணலாம். பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக வைத்துப் பாடிய பாடல்கள் பல பிற்காலத்தில் குழந்தைப் பாடல்கள் பாடுவதற்கு வழிகாட்டியாக அமைந்தன. ஆண்டாள்தன்னைநாயகியாகவும் கண்ணனை நாயகனாகவும் கொண்டு பாடல்கள் பாடியுள்ளார். ஆண்டாள் தான் நேராகக் கண்ணனைக் காணாமல் அவுனைத் தேடிச் செல்பவளாய் என் கண்ணனைக் கண்டதுண்டோ என்று எதிர்ப்பட்டவர்களை கேட்பவளாய் ஆம் கண்டதுண்டு கண்டதுண்டு என வினா விடை வடிவில் பாசுர அமைப்பு அமைகின்றது. வினாவெழுப்புவதும் விடை கூறுவதுமாக அமைவது ஆண்டாளின் பாடல்களிலே தான்
G61)

Page 63
அமைகின்றது. ஆணர்டாள் பெண்ணாகவே நின்று பாடுகிறாள். திருமங்கையாழ்வார். தன்னைத் தலைவியாகப் UT66D60T பண்ணுகிறார். பாரதியும் கண்ணன் தன் காதலன் என்ற பகுதியில் தன்னை தலைவியாகப் பாவனை செய்து பாடுவதை நோக்கலாம். ஆண்டாள் கண் ணனை நினைத்து உள்ளுக்குள்ளே கரைந்து நைந்து போகின்றவளாகக் காணப்படுகின்றாள். ஆண்டாளின் விரகவேதனையைப் பாடல்களில் காணலாம். ஆண்டாள் கண்ணன் மேல் வைத்த காதல் ஏனைய காதல் அனுபவங்களைவிட வேறுபட்டது. உடல், உள்ளம் இரண்டினாலும் வேதனைப்படுவதை ஆண்டாள் பாடல்கள் காட்டுகின்றன.
கண்ணன் என் காதலன் என்ற பகுதியில் கண்ணன் காதலனாகவும் பாரதி காதலியாகவும் நின்று பாடுகிறார். கண்ணன் என் காதலி என்று சொன்னால் இலக்கணப்பிழை ஏற்படும் என்பதால் கன்ைனனை பெண்பால் ஆக்கி கண்னம்மா என் காதலி என்று பெயரிடுகின்றார். கண்ணம்மா என்பதை பலவாறு விமர்சிப்பர். கண்ணம்மா என்ற ஒரு பெண் இருந்ததாக பாரதியின் வரலாற் றில் இல்லை. கண்ணம்மா என்றது கண்ணனை என்பது அவரது பாடல்களை தொகுத்து ஆய்வு செய்யும் போது வெளிப்படுகின்றது. கண்ணன் பாட்டில் கண்ணனை எல்லா உறவுமுறையிலும் பாடியவர் காதலி உறவை மட்டும் ஏன் அவர் புறக்கணிக்க வேண்டும் அதனால் பெண் பாலாக்கி பாடுகிறார். கண்ணம்மா என்றவுடன் விமர்சகள் தடுமாறுகின்றனர். ஆழ்வார்கள் பேரை மாற்றாமல் உறவுமுறையில் பாடினர். பாரதி பெயரை மாற்றிப் பாடுகிறார். புதுமையாக கண்ணம்மா ஒரு பெண் என்று விமர்சகர் கூறுவதற்கு காரணமாக உலகியல் காதல் கூடுதலாக அமைகின்றது. பாரதி சாதாரண மனிதக் காதல் ஊடாக கண்ணனைப் பார்க்கிறார். என்பதே பொருத்தமானது.
கண்ணன் என் காதலன், கண்ணம்மா என் காதலி என்ற இரண்டு உறவுநிலைகளில் பாரதி ஆழமான காதல் அனுபவங்களைப் பேசுகின்றார்.
(ஐப்பசி 2011 }
 

சங்கத்தமிழ்
காதல் அனுபவங்கள் அழகியல் உணர்வுடன் வெளிப்படுகின்றன.
கண்ணே எனதிருகண்மணியே-உன்னைக்
கட்டித்தழுவ மனம் கொண்டேன். சோர்ந்தே படுத்திருக்கலாமோ? நல்ல
துண்டக் கறிசமைத்துத்தின்போம் - சுவை தேர்ந்தே கனிகள் கொண்டு தருவேன். - நல்ல
தேங்கள்ளுண்டினிது களிப்போம். (கண்ணன் பாரதியார் பாடல் : கண்ணன் என் காதலன் பா. 6-7)
சாதாரணமான உலகியல் காதல் அனுப வங்களைப் பேசிய பாரதி இறுதிவரியில்
கண்ணா வேடனெங்கு போனான்? உனைக் கண்டே யலறி விழுந்தானோ? மணி வண்ணா என தபயக்குரலில் - எனை வாழ்விக்க வந்த அருள் வாழி (பாரதியார் பாடல் : கண்ணன் பாட்டு பா. 12)
தன்னை வாழ்விக்க வந்த அருள் என கண்ணனை விழிக்கின்றார்.
கண்ணம்மா என் காதலி என்ற பகுதியில்,
"காதலடி நீயெனக்கு காந்தமடி நானுனக்கு
வேதமடிநீயெனக்குவித்தையடிநானுனக்கு போதமுள்ள போதினிலே பொங்கிவருந்
தீஞ்சுவையே நாதவடிவானவளேநல்லவுயிரே கண்ணம்மா (பாரதியார் பாடல் : கண்ணன் பாட்டு பா. 21 6)
கன்னிவயதி க்கண்டதில் &T-86dbollf
கன்றி சிவக்க முத்தமிட்ட தில்லையோ 550 bLpsitefood 时 - இரன்ை டாவியுமொன்றாகுமெனக் கொண்ட
தில்லையோ" (பாரதியார் பாடல் : கண்ணன் பாட்டு பா. 19 - 4)
G62)

Page 64
இரண்டறக்கலத்தல் என்ற அனுபவத்தை பாரதி இங்கு மிகுதியாகவே பாடுகின்றார். பரமாத்மாவேறு, ஜீவாத்மா வேறு என்று இல்லாமல் இரண்டு ஒன்றே தான் என்ற அத்வைத தத்துவத்தை விளக்குகின்றார். உள்ளே இருக்கும் ஆத்மாவும் இறைவனும் ஒன்றே என்ற கொள்கையில் நின்று பாடுகின்றார். ஆழ்வார்கள் இரண்டறக் கலத்தல் நிலையில் நின்றாலும் ஆன்மா வேறு இறைவன் வேறு என்று எண்ணுபவர்கள் இரண்டறக் கலந்தாலும் இன்பத்தைத் தனித்து நின்று சுவைப்பவர் களாவர்.
இறைவனின் பரமாத்மாவின் கல்யாண குனங்களைப் பிரித்துச் சுவைப்பதில் விருப்பம் உடையவர்கள் ஆழ்வார்கள். பாரதி பாடலில் உலகியல் காதலுடன் ஆத்மீக காதலும் இணைக்கப்படுகின்றது.
கண்ணம்மா என் குழந்தை என்ற பகுதியில் கண்ணனைப் பெண் குழந்தை உறவுமுறையில் வைத்து பாடுகின்றார்.
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக்களஞ்சியமே என்னைக்கலிதீத்தே
உலகில் ஏற்றம் புரிய வந்தாய்
(பாரதியார் பாடல் : கண்ணன் பாட்டு பா. 8)
கலிதீர்த்து உலகில் சிறக்க வைக்க வந்தாய் என சாதாரண குழந்தை உறவில் கண்ணனின் தெய்வீக சிந்தனை சொல்லப்படுகின்றது. என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வைத்தாய் என்ற வரி ஒரு சாதாரண மனித குழந்தையிடம் கூறும் பேச்சைவிட உயர்ந்த பேச்சாக ஒலிக்கின்றது.
கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
உன்மத்தமாகுதடி" (பாரதியார்பாடல்:கண்ணன்பாட்டு பா. 6-8)
ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
பாரதி பாடல்களில் சொல் புதிது பொருள் புதிதாக அமைத்திருக்கிறார். சிறு குழந்தையை முத்தமிட்டால் ஏன் கள்வெறிகொள்ளுது என்று சிலர் கேள்வி எழுப்புவர். பாரதிகள்வெறி என்றது (கள் - தேன்) கள் என்பது இங்கு தேன் என்பது தேனைக்குடித்தால் ஏற்படுகின்ற மகிழ்வைப் போன்றது என்கிறார். கண்ணனைக் குழந்தை உறவில் பாடும் பொழுது சொல், பொருள் புதிதாகவே தோன்றும்.
கண்ணன் பாட்டில் வரும் கண்ணம்மா எனது குலத்தெய்வம் என்றுபாடுகின்றார். கண்ணனைக் கண்ணம்மாவாக்கி எனது குலதெய்வம் என்கிறார். பாரதிக்கு பராசக்தியும் குலதெய்வம் கண்ணனும் குலதெய்வம். இங்கு பாரதி கண்ணனையே கண்ணம்மா என்கிறார்.
jLiaofusi Carisis தோல்வியில் அன்புநெறியில் $கள்வளர்த்திடநல்லதுதியது நாமறியோ மன்னை
நல்லது நாட்டுக தீமையை யோட்டுக
(பாரதியார் பாடல் : கண்ணன் பாட்டு பா. 23)
கண்ணனைத் தோழனாகக்கொண்டு பாரதி பாடுகிறான். உலக வாழ்க்கையில் தோழமை நட்புறவு என்பது முக்கியமான ஒன்று. அன்னி யோன்னியமாகப் பழகுபவர்கள் ஆத்மார்த்தமாக பழகுபவர்கள். துன்பத்தில் இன்பத்தில் பங்கு கொள்பவர்கள் நண்பர்களிடையேயுள்ள அன்பு சக்தி நண்பர்களை; பண்படுத்துகின்றது. அன்புப்பிணைப்பினை பாரதி கண்ணன் என் தோழன் என்ற பகுதியில் குறிப்பிடுகின்றார்.
"கண்ணன்தன்னையிழந்துவிடில்ஐயகோபின் சகத்தினில் வர்ழ்வதிலேன்"
பாரதி கண்ணனைப்பிரிந்து வாழ்வதில்லை என்கிறான். தீமைகளையும் துன்பங்களையும் அழித்து அவனது அகங்காரத்தையும் நீக்கிஞான நெறியின் தோழன் உறவில் கண்ணன்.
G63)

Page 65
கண்ணனைக் சற்குருவாகவும் கவிஞர் (பாரதி) சீடனாகவும் நிற்பதைக் காணலாம். குருவினால் தான் உண்மை ஒளி உண்டாகும். என்பதை உணர்ந்த பாரதி குருவைத் தேடி செல்கிறார். உலகப் படைப்பின் மறை பொருளையும் வாழ்க்கையின் குறிக்கோளையும் உணரும் வகையில் குருவை நாடி நிற்கிறார். உலகத்தைப் பொய்யென்று உரைக்கும் சாத்திரங்களைத் தள்ளிவிடு என்றும் பற்று நீங்க தொழில் செய்வதே சிறந்த கர்ம யோகம் (கீதை உபதேசத்தை) குரு (கண்ணன்) சீடனுக்கு (பாரதிக்கு உணர்த்துவதைக் காணலாம்.
பாரதியார் கண்ணனைச் சீடனாகவும் சற் குருவாகவும் ஏற்றுக் கொள்கின்றார். கண்ணன் சீடனாக வரும் பொழுது கவிஞர் (பாரதி) குருவாக நிற்கிறார். பாரதியின் சீடன் உலகத்திலே இருக்கும் சீடர்களைவிட வேறுபட்டவன் பாரதியின் சீடன் தனித்தன்மை கொண்டவன். கண்ணன் சீடனாக தன்னிடம் வந்து சேர்ந்ததையும் அந்த சீடனை நன்னிலைப் படுத்துவதற்குதான் மேற்கொண்ட முயற்சிகளை எல்லாம் கவிஞர் (பாரதி குரு) சொல்கிறார். குரு சொல்வதற்கெல்லாம் எதிர்மாறாக சீடன் செய்கின்றான்.
* இன்னது செய்திடேல் இவரொடு பழகேல்
இவ் வகை மொழிந்திடேல்
இணையன விரும்பேல்
இன்னது கற்றிடேல் இன்ன நூல் கற்பாய்
இன்னவர் உறவு கொள், இன்னவை
விரும்புவாய்” (பாரதியார் பாடல் கண்ணன் பாட்டு பா.
O6)
இவ்வாறு சீடனை நல்வழிப்படுத்துபவராக அறிஞர் (பாரதி) விளங்குகின்றார். குருவின் சொல்லுக்கு எதிராக நடந்து அவருக்கு ஆத்தி ரத்தையும் சினத்தையும் உண்டு பண்ணு பவராக சீடன் விளங்குகின்றான். இறுதியில்
ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
தனது குருவின் (பாரதியின் அகந்தையை நீக்கி அவரை நல்வழிப்படுத்துகின்றார்).
"தோற்றேன் என நீஉரைத்திடும் பொழுதிலே
- ിങ്ങി (Bഖങ്ങ S D. ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்க நீ (பாரதியார்பாடல்: கண்ணன் என்சீடன்பாட்டு 6)
உண்மையை உணர்த்தும் ஞான குருவாக சீடன் அமைகின்றான். (கண்ணன்) நல்ல சொல் உரைத்து பின் மறைந்தான் நெஞ்சிலே தோன்றி நின்று நிகழ்த்துவான் என சீடனாக நின்ற கண்ணனின் செயலைப் பாரதி குறிப்பிடுகிறார். கண்ணன் அந்தர்யாமியாக ஆத்மாவினுண் உறைவதாக பாரதி குறிப்பிடுகின்றார்.
கண்ணனைத் தாயாகக்கொண்டு பாவனை பண்ணிப்பாடுகிறார் பாரதி. கண்ணன் பெண்ணாக பெயர் வடிவம் பெறுகின்ற பொழுது கண்ணம்மா ஆகிறாள். ஆனால் இங்கு கண்ணன்- என்தாய் என்றே கூறுகிறார். காதலி, குழந்தை குலதெய்வம் என்று பாவனை பண்ணும் போது கண்ணம்மா என்கிறார். கண்ணன் என் தாய் என்று கூறுகின்ற பொழுது இலக்கணப்பிழை வருகின்றது. ஆனால் பாரதியின் கவி சொல் புதிது பொருள் புதிதாகவே அமைகின்றது.
"உண்ண உண்ணத் தெவிட்டாதே அம்மை
உயிரெனும் முலையினில் உண்ர்வெனும் பால்
வண்ணமுற வைத்தெனக்கே என்றன் வாயினிற் கொண்டுட்டு
மோர் வாண்மையுடையாள் கண்ணனென்னும் பெயருடையாள்"
(பாரதியார் பாடல் : கண்ணன் என் தாய் LпL (B 2)
கண்ணன் தாய் வடிவில் குழந்தைக்கு
(பாரதிக்கு) பால் ஊட்டுவதாகக் கூறுகின்றார். பல காட்சிகளை காட்டுவாள். பல மொம்மைகளைத்
G64D

Page 66
தருவாள். வேண்டியது தந்து அண்ணனான அண்ணன் அருச்சுனன் போலாகுவாள் என்கிறார். கண்ணன் என்ற தாய் பொய்வேதங்களையும் மதக்கொலைகளையும் அரசர்களின் கூத்துக்களையும் பெரியோர்களின் பொய்யான வாழ்க்கையையும் இளையோர்களின் மூடத்தனமான வாழ்க்கையையும் கவலை யையும் வேடிக்கை பார்த்து நகைப்பதற்கு வைத்தாள் பாரதி என குறிப்பிடுகிறார். இதனூடாக கண்ணன் என்ற தாய் எல்லாவற்றையும் கொடுப்பவள் என்பதையும் சமுதாயத்தில் நிகழும் நிகழ்வினையும் இதனூடாகக் காட்டுகின்றார்.
கண்ணனைத் தந்தையாகக் கொண்டு பாரதி கவியியற்றியுள்ளார். வான் வெளியில் உலகங்கள் சுற்றுகின்றன. அனைத்திற்கும் சாமி என் தந்தை. அவன் நாமத்தை உரைக்க நாவில்லை. கண்ணன் ஈசன் என்று உலகோர் சொல்வர். சமுதாயத்தில் நிலவும் சாதியமைப்பை கொழுத்த வேண்டும். என்ற கருத்தை இதனுடாக பேசுகின்றார். தந்தை நாலு குலங்களை அமைத்தான் என்றும் அதை மனிதர் நாசமாக்கினர் என்று கூறுகிறார். பாரதி சீலம் அறிவு, கருமம் ஆகியவைகளில் சிறந்தவர் மேலோர் எனவும் கூறப்பட வேண்டும் எனவும் வெறும் வேடத்தையும் பிறப்பையும் வைத்து மேலவர் கீழவள் என வகுக்கும் போலிச்சுவடிகளை கொழுத்த வேண்டும் என பாரதி சாடுகின்றார். துச்சாதனன் பாஞ்சாலியின் துயிலினை உரிந்தான். பாஞ்சாலி சபதத்தை பாரதி புது நோக்கில் பார்க்கிறார். பாஞ்சாலி பட்ட துன்பத்தை தாங்க முடியாமல் கண்ணன் வருகிறான்.
"ஹிரி ஹிரி ஹரி என்றான்
அபய அபய முனக் கபய மென்றாள்" (பாரதியார் பாடல் பாஞ்சாலி சபதம். பா. 70)
நம்பிநின்னடி தொழுதேன் - என்னை
நாணழியா தீங்கு காத்தருள்வாய்” (பாரதியார் பாடல் பாஞ்சாலி சபதம். பா. 7O)
(ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
கண்ணனின் திருவருள் கிடைத்தது. பெண்ணைத் தெய்வமாக மதித்தவர் பாரதி பெண் பட்ட துன்பம் பாரதியைத் தொட்டது. இவ்விடத்தில் கண்ணன் ஓடோடி வருகிறான். பெண்ணின் துன்பமும் கண்ணன் மேல் உள்ள பக்தியும்தான் பாரதி பாஞ்சாலி சபதத்தை எழுதக்காரணமாகின்றன.
ஜீவாத்மாவேறு. பரமாத்மா வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றேதான் என்ற நிலையில் பாரதி பாடுகின்றார். கண்ணனும் நமது ஆத்மாவும் வேறு இல்லை; ஒன்றே என்ற தத்துவம் வெளிப்படுகின்றது. ஆழ்வார்கள் ஜீவனும் பரமாத்மாவும் ஒத்த குண முடையவர்கள் என்றாலும் இறைவன் ஆத்மாவிலிருந்து வேறுபட்டவன் என்பதை வெளிப்படுத்துகின்றனர். ஆழ்வார்கள் கண்ணனையே முழுமுதற் பொருளாகப் பாடுகின்றனர். பாரதி எல்லா தெய்வங்களையும் ஏற்றபோதிலும் கண்ணனையும் பராசக்தியையும் முழுமுதற் பொருளாக ஏற்றுக்கொள்கின்றார். ஆழ்வார்கள் கண்ணனின் பக்தியை பக்திப்பாசுரம் ஊடாக வெளிப் படுத்துகின்றனர். பாரதி கண்ணனின் பக்தியுடாக சமூக நோக்கையும் இணைத்துக் காட்டுகிறார்.
உசாத்துணை நூல்கள்
1. கோபாலாசிரியர் (பதிப்பாசிரியர்), 1959, ஆழ்வார்கள் அருளிச் செய்த திரவிட வேதமாகிய நாலாயிரம் பிரபந்தம் (நா.பி), இலத்தினநாயகர் ஸண்ஸ், திருமகள் விலாச அச்சகம், சென்னை.
2. பாரதியார் கவிதைகள், 2004, ருநீசெல்வவிநாயகள்
ஒப்செட் பிரிண்டர்ஸ், குமரன் பதிப்பகம், சென்னை.
3. சண்முகதாஸ் அ. 2OO1, “கண்ணன் பாட்டில் அணிநயம், தமிழ்மொழியியல், இலக்கிய பண்பாட்டு ஆய்வுக்கட்டுரைகள், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
G65)

Page 67
பத்திரிகை மூலவரும்
பத்திரிகைகள் அன்றன்றைய செய்திகளைப் புதுப்புது விடயங்களை வாசிப்போருக்கு அறியத்தருவதோடு மட்டும் தமது நோக்கத்தைக் கொண்டிராமல், அறிவுபூர்வமான பொழுது போக்கிற்கும் வளர்ச்சிக்குமாகவுமன்றி சமூக சீர்திருத்தத்தையும் கூர்மையாகக் கவனித்து மாற்றங்களைக் காணவேண்டுமென்ற துடிப்போடும் செயல்படுபவர்களால் வெளியிடுத்தப் படுகின்றன. அத்தகைய பத்திரிகையாளர் சிலருள் முதலிடம் வகிப்பவர் சென்னையில் 'ஹிந்து பத்திரிகை 'சுதேசமித்திரன்’ பத்திரிகை ஆகியவற்றின் ஆசிரியப் பணியிலிருந்தவரான திரு.ஜி.சுப்பிரமணிய евшј. சமுதாய மாற்றத்திற்குச் செம்மையான கனதியும் காத்திரமுமான அடித்தளமொன்றை இட்டு வைப்பதற்கான வகையில் ஜாதி ஒழிப்பு, பெண் ஒடுக்கு முறை, பால்ய விவாகம், விதவை மறு மணம் போன்ற விடயங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து சமூக சீர்திருத்தப் பிரசாரத்திற்கு ஏற்றதக்ககளமாகப் தான்பணிசெய்த பத்திரிகை களைச் சிறப்பாகக் கையாண்டார். இதனால் பத்திரிகைகளின் பணி மேன் மேலும் சிறப்புற்று நல்ல வரவேற்பையும் பெற்றது.
திரு.சுப்பிரமணிய ஐயருக்குச் சமுதாயத்தில் பல்வேறு தளங்களிலுமுள்ள மக்களிடமிருந்து பெரும் வரவேற்பும் மதிப்பும் ஏற்பட்டிருந்தமைக்கு முக்கியமான காரணம், அவர் தன் மனதில் எத்தகைய சீர்திருத்த உளப்பாங்குடன் விளங்கினாரோ, அதிலிருந்து கிஞ்சுத்தும் மாறுபடாமல் அப்படியே அவை அவரது செயற்பாடுகளிலும் பிரதிபலித்தன. எனவேதான் புரட்சிக்கவி பாரதியார் அவர்கள், "ராமலிங்க சுவாமிகளும் "சுதேசமித்திரன்" சுப்பிரமணிய ஐயரும் அவர்களைப் போன்ற மகான்களும் தமிழ் நாட்டின் புதிய விழிப்புக்கு
(ஐப்பசி 2011 )

சீர்திருத்தச் செம்மலுமான ரு. ஜி. சுப்பிரமணிய ஐயர்
பத்மா சோமகாந்தன்
ஆதிகர்த்தாக்களாக விளங்கினர்" எனப் பாராட்டியுள்ளார் "சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்” என்ற நூலிலே அதன் ஆய்வாளரான நூலாசிரியர் திரு.பெ.சு.மணி அவர்கள் பாரதியாரின் பாராட்டினை மேற்கூறியவாறு குறிப்பிட்டுள்ளதோடு, ஐயர் பற்றித்தன்வாசகமாக, “இத்தகைய பாராட்டினைப் பாரதியாரிடமிருந்து பெற்ற திரு.ஜி.சுப்பிரமணிய ஐயர் தமிழக சமூக சீர்திருந்த இயக்கத்தின் சக்திவாய்ந்த தலைவர்களுள் மூத்த முன்னோடி ஆவார்” என்றும் கூறிச் செல்லுகின்றார்.
கருத்தளவில் அரசியல், சமூக சீர்திருத்தங் களை, தான் ஆசிரியராக இருந்த "ஹிந்து", “சுதேசமித்திரன்” ஆகிய பத்திரிகைகளில் கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள், பந்தி யெழுத்துக்கள், கார்ட்டூன்கள் மூலம் தீவிரமாக அறிவுறுத்தித் தெளிவுபடுத்திக் கொண்டிருந்த சுப்பிரமணிய ஐயர் ஏனைய பத்திரிகை யாசிரியர்களிலிருந்து மிகவும் வேறுபட்டவராகவே 5600TÜ LuTÜ. £ 600r 60DLD பொதிந்த வாசகங்களெல்லாம் வெறும் உபதேசத்துக்கான அலங்காரங்களேயன்றி உனக்கில்லையடி எனக் கூறுவது போல சிலருடைய உபதேசங்கள் புத்திமதிகளெல்லாம் வெறும் மேடைப் பேச்சாகப் பிறருக்குப் புத்திசொல்வதாக அமையாது தாம் சொல்வதைத் தாமே தம் வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகிய சிறப்பே இவரது தனிச்சிறப்பாகும். சொல்வதொன்றும் செய்வது இன்னொன்றுமாக வாழும் பலதலைவர்கள், சீர்திருத்தவாதிகளின் மத்தியில் பெரிதும் வித்தியாசமான இவர் தாம் எதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்திப் பேசினாரோ அதனை அச்சொட்டாகத் தமது செயற்பாடுகளில் ஏற்றிச் செய்யும் செம்மையர் எனப் பலராலும் போற்றப்பட்டார். அதாவது சொல்லிய வண்ணம் செய்யும் சிறப்பு
G66)

Page 68
இவருடைய உண்மைத் தன்மையை மேன்மேலும் உயர்த்தியது.
பத்திரிகைத்துறையின் மூலமாகத் திகழ்ந்த சுப்பிரமணிய ஐயர் அவர்கள் தீண்டாமை ஒழிப்பு. பால்யவிவாகம், சீதனக் கொடுமை, விதவைகள் மறுமண ம , போன ற வரிடயங் களில சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்காகப் பத்திரிகைகளைச் சிறந்த ஊடகமாகப் பெரிதும் பயன்படுத்தினார். இதனால் ஐயரின் எடுகோள்கள் வலிமையும் பொலிவும் பெற்று விளங்கினாலும், இவை பழமைவாதிகளின் மத்தியில் பத்திரிகை விற்பனையைப் பெரிதும் பாதிக்குமே எனப் பத்திரிகையின் நிர்வாக இயக்குநராகியோர் நாடியில் கையையுன்றி யோசித்தபோதிலும் பதற்றப்பட்டபோதிலும் இவர் காரியமே கண்ணாக இருந்து சிறிதும் பின்வாங்காமல் தனது கொள்கையைப் பிரகடனப்படுத்தியபடியே வாழ்ந்தார். இவருடைய இந்த நேரிய போக்கினால் பெரும் ஆய்வாளர்கள் அறிவாளிகள் போன்றோர் இவரை நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் கூடிய சமூக சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம் ஆகியவற்றில் மிகத் தீவிரமாகப்பாடுபட்ட தேசியத் தலைவர்களுள் முதன்மை வாய்ந்தவர் எனப்பாராட்டுவர்.
ஒரு தேசியப் பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பில் உள்ளவன் ஒரு கப்பலை நடத்திச் செல்லும் தலைவனுக்கு ஒப்பானவனென்பர். எத்தனை இடர்களை எதிர் நோக்கினாலும் அடைய வேண்டிய எல்லைக்குக் கப்பலையும் அதனோடுள்ள மக்களையும் கொண்டு செல்ல வேணர்டிய மாபெரும் பொறுப்பைச் சுமந்துள்ளானோ அதே போல் பொறுப்பினை உணர்ந்தே பத்திரிகையையும் நடத்திச் செல்லவேண்டும். அதற்கிசையவே இவரும்தான் ஏற்றிருந்த ஆசிரியப் பொறுப்பினை ஹிந்து பத்திரிகையிலும் சரி, சுதேசமித்திரனிலும் சரி மெத்தப் பெளவியமாகவே நடந்து கொண்டார். இக்கருத்தினை இப்பத்திரிகைகளில் பின்னர் ஆசிரியப் பொறுப்புகளை ஏற்றுப்பணி செய்தோர்
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
வியந்து பாராட்டியிருப்பதே தகுந்த சான்று களாகும். அதில் தேசியக்கவி பாரதியாரின் வியப்பும் பாராட்டும் குறிப்பிடத்தக்க தொன்றுமாகும்.
ஒரு தடவை ஜாதிக் கொடுமையைச் சாடி "பஞ்சமர் முன்னேற்றம்’ என்ற தலைப்பில் அன்னிப்பெஸண்ட் அம்மையார் அவர்கள் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியிருந்தார். அவர் தமது உரையிலே, "நமது வகுப்பாரை நாம் தாழ்மையாக நடத்தி அவர்களுக்கு எவ்வித சுதந்திரமும் கிடைக்காமல் செய்து வரும்போது கல்விகற்ற நமக்கு மாத்திரம் சுதந்திரம் வேண்டுமென்று ராஜாங்கத்தாரைக் கேட்பது நியாயமில்லை. நம்மைச் சேர்ந்தவர்களை நாம் அடிமைகள்போல . அன்றி நமக்குச் சரிசமானமாகவும் நடத்தினாலன்றி நமக்குச் சுதந்திரம் தகாது” என்ற கூற்றை அப்படியே பத்திரிகையில் பிரசுரித்து அவருடைய சீர்திருத்தமான கருத்தைப் பல எதிர்ப்புகளின் மத்தியிலும் அழுத்தமாக வெளிப்படுத்தி தன் பிரச்சாரப் பணிக்கு மேலும் வலுவூட்டினார்.
இப்படியே, இளம் வயதுக் கன்னிப்பெண் ஒருத்தியை மறுமணம் செய்ய முன்வந்த முதியவரை மனமேடையில் பார்த்ததும் அப்பெண் மூன்றோ நாலாந்தாரமாக மணம் புரிய வந்த இந்த வயதானவரைத் திருமணம் செய்யமாட்டேனெனக் கூறி அவ்விடத்தை விட்டு வெளியேறியதும் ஒரு செய்தியாகவே சுதேசமித்திரன் பத்திரிகைக்குக் கிடைத்தது. இச்செய்தியை மையமாக வைத்துக் கொண்டே dig D600flu евшј & GuoOoreOofeo துணிச்சலையும் முடிவையும் பாராட்டியது மல்லாமல் இத்தகைய சீர்திருத்தங்களுக்கு முதன்மை கொடுத்து ஒரு பத்திரிகையின் உயிர் நாடியானதன் ஆசிரியத்தலையங்கத்தில் “ஏழைப் பெண்கள் பாபத்தைக் கொட்டிக் கொள்ளயத்தனம் செய்யும் கிரிசைக் கெட்ட பணக்காரப் பினங்களுக்கு மனதில் அச்சமுண்டாகச் செய்யும் &ë 5LöuéhjLë. ஆகையால்
-G67)

Page 69
இப்பெண்ணின் மனோதைரியத்தையும், சாமர்த்தியத்தையும் எவ்வளவு மெச்சிக் கொண்டாடினாலும் அது அளவுக்கு மிஞ்சினதாகா தென்பது நம் துணிவு.” என்ற வார்த்தைகளுட்பட அருமையான ஒரு ஆசிரியத் தலையங்கத்தையும் தீட்டி இத்தகைய முறையற்ற திருமணங்களை நன்கு சாடியுள்ளார். இவையெல்லாம் சமுதாய சீர்கேட்டினை உற்று நோக்கும் அவரது உள்ளார்ந்த மனப் போக்கையும் சீர்திருத்தமான சமுதாயமொன்றை LDT) uéOLDis85 வேண்டுமென்ற அவரது அவாவினையும் நன்கு தெரிவிக்கின்றது. வகைக்கு ஒன்றிரண்டாக இவற்றை இங்கு குறிப்பிட்டோமேயன்றி இப்படி எத்தனை எத்தனையோ ஆணித்தரமாக கருத்துக் களை அவர் அநாயாசமாக அள்ளிச் சொரிந் துள்ளாரென்பதே உண்மையாகும்.
“சுதேசமித்திரன்” பத்திரிகையில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றிருந்த காலத்தில் 1914 ஆண்டளவில் "ஆசாரதிருத்த வியாசங்கள்” என்றொரு நூலை எழுதி வெளியிட்டார். இரு நூற்றி ஐம்பது பக்கங்கள் கொண்ட இந் நூலைச் சுதேசமித்திரன் வெளியீடாக வெளியிட்ட போது, சுதேசமித்திரன் பத்திரிகையிலே இந்நூல்பற்றிய விளம்பரம் ஒன்றும் பிரசுரமாகியிருந்தது. அவ்விளம்பரத்திலே இந்நூல் “ஸ்திரீகளுக்கு அவசியமான புத்தகம்” என்ற வாசகம் பிரதானப்படுத்தப்பட்டிருந்தது. காரணம் இந்நூல் ஸ்திரீகளும், ஜாதிய நிகழ்ச்சியும், இந்துப் பெண்கள் கல்வி, ஹிந்துஸ்திரீகளுக்குள் நவீன சக்தி, ஸ்திரீகளும் தேச விருத்தியும், ஹிந்து ஸ்திரீகளின் முன்னேற்றம், இந்துவிதவைகளின் நிலைமை, கைம் பெண்களின் கல்வி என இருபத்து நான்கு தலைப்புக்களைக் கொண்ட 6L 6oo 6oofuub GFTÜ Lu T6oT Uu6o 6ÍLuun as 6oo6TT உள்ளடக்கியதாக அந்நூல் அமைந்திருந்ததென அறிகிறோம். விதவை மறு மனத்தை ஊக்குவிக்கவும், பிரசாரம் செய்யவும் கூட இந்து இதழை இவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
இது தொடர்பான இவரது கட்டுரையொன்றின் ஒரு பகுதியில்,
"இந்தியாவில் 9வயதிற்குள்ளான விதவைகள் at DIT 8O,OOO
4. வயதிற்குள்ளான விதவைகள் 2OO,OOO85g) b CSLD6)
இவர்கள் அனுபவிக்கும் தொல்லை துயரங்களை புத்தியுள்ள எவரும் மறுக்க இயலாது. இக்கொடிய வழக்கம் இந்துக்களின் மூடநம்பிக்கையாலும், மகமதிய ஆட்சியின் கொடுங்கோன்மையாலும் ஏற்பட்டுவிட்டது. நமது பண்டைய புனித நூல்களில் குழந்தை மணத்திற்கு அனுமதி தரப்படவில்லை. சிதைந்துவரும் சமயமும், அரசியல் அடிமைத் தனமும் ஒன்று சேர்ந்ததால், இக்கொடிய வழக்கம் வளர்ந்தது. வேறெந்த நாகரிக நாட்டிலும் இக்கொடிய வழக்கம் இல்லை. ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு அளிக்கப்படும் மரியாதையும், உயர்வும் நம்மவர்களுக்கு இச்சமூக களங்கத்தைத் துடைத்தெறியத் தூண்டுதல் அளிக்க வேண்டும். நம் கிளர்ச்சி தொடரவேண்டும்" எனத் தனது கருத்தை அப்பட்டமாகவே தெரிவிக்கின்றார்.
சீர்திருத்தம் பெற்ற சமுதாயத்தைத் தன் கண் முன்னிலையிலேயே காண வேண்டுமெனத் துடிப்புடன் செயற்பட்ட இவருக்கு, இவர் குடும்பத்துக்குள்ளேயே பிரச்சினை தலை நீட்டியது. 10 வயதில் திருமணமான இவரது செல்வமகள் சிவப்பிரியாம்பாள் 12 வயதிலேயே விதவைக் கோலம் பூண்டு வீடு வந்துவிட்டாள். சோகம் ஒரு புறம் குவிய உற்றார் உறவினர் மனைவி என யாவருடைய எதிர்ப்பையும் மீறி ஜாதி கடந்து மகளுக்கு மறுமணத்தை ஒரு பொது நிகழ்ச்சியாக வெறும் சடங்குகளுடன் பல சீர்திருத்தவாதிகளின் முன்நிலையில் நடத்தி வைத்தார். கோபாலகிருஷ்ண கோகலே என்பவர் முதல் ஒருத்திஇருக்கவும் இரண்டாம் திருமணம் செய்து ରଥsteOditLITy]. ரானடே என்ற முற்போக்காளரும் முதல் மனைவி இறக்கவும்,
G68)

Page 70
ஒருவிதவையைத் தேடிப் பிடிக்காமல், இளம் கன்னி யொருவருக்கே கணவனானார். இந்தச் கழலிலே ஐயர் சொல்வீரராக மட்டுமன்றிச் செயல்வீரராகவும் வலம் வந்தார்.
தனது சொந்த வாழ்க்கையில் சுப்பிரமணியம் ஐயர் பரீட்சித்த புரட்சிகரமான செயல்களை அவதானித்த பாரதியார் 'சந்திரிகையின் கதை என்ற முடிவு பெறாத தனது நாவல் முயற்சியிலே ஐயரின் சீர்திருத்தப் போக்கை உள்ளடக்கிப் பின்வருமாறு தன் கதையை நகர்த்துகிறார்.
"..தமது சொந்த மகளொருத்தி இளம் பிராயத்திலே விதவையானதும், பிறகுதாம் அவளுக்குப்பம்பாயிலே தென்னாட்டு வைதிகப் பிராமணரொருவருக்கு விவாகம் செய்து கொடுத்ததும், அம்மகள் தன் கணவனுடன் நீடு சுகித்து வாழும் பாக்கியம் பெறாமல் மிகு விரைவிலே மடிந்ததும் தம்முடைய தர்ம பத்தினி உயிர் துறந்ததும் - ஆகிய இச்செய்திகளெல்லாம் ஜி.சுப்பிரமணிய ஐயரின் ஞாபகத்துக்கு வர, அப்போது சிங்கத்துக்கும், இடிக்கும் அஞ்சாத அவருடைய வீர நெஞ்சம் இளகி அவர் பச்சைக் குழந்தை போல் விம்மி விம்மி அழத் 5606DJULITJ."
என பாரதியாரே குறிப்பிட்டு இச்சம்பவத்தை வியந்து கூறுவது ஐயரின் சீர்திருத்தச் செயற்பாட்டினால் கவிஞனின் மனதில் ஏற்பட்ட நெகிழ்வையும், இரங்கலையும் துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அந்தளவு வைராக்கியத்தோடேயே தனது சீர்திருத்தக் கருத்துக்களை ஐயர் முன்னெடுத்த பாங்கு பலரையும், அதிர்ந்து நோக்க வைத்தது.
எனினும் ஐயருக்கு உறவினரின் கொடு மையான ஏச்சும் பேச்சும் நச்சரிப்புக்களும் அதிகரிக்கவே செய்தன. உறவினர் உட்பட உடன் வேலைசெய்தோரும் இவரது சீர்திருத்தப் போக்கைச் சகியாமல் விட்டு நீங்கினர். இவரின் சாத்திர, சம்பிரதாய சாதி விரோதப் போக்கைக்
(ஐப்பசி 2011)-

சங்கத்தமிழ்
கடுமையாக எதிர்த்தனர்; பகிஷ்கரித்தனர். பல மதிப்பும் மரியாதையும் மிக்கோர் இவரைத் தூவித்தனர்.
இவற்றைத்தாங்கிக்கொள்ளமுடியாத, மகளின் விதவை மறுமணத்தை எதிர்த்த இவரது மனைவி மீனாட்சியம்மாள் மனநலம் பெரிதும் பாதிக்கப்பட்டு LD856fl6or g55LD6OOTLD (Uppi55 5T6OTLD LD5(3LD காலமானார். அவரது ஈமச்சடங்குகளை நிறைவேற்ற ஆள்தேடுவதே ஐயரின்ஜாதிப்பிரஷ்ட சீர்திருத்தக்கருத்துக்களல், பெரும்பாடாக முடிந்தது. ஒரு சில ஆண்டுகளின் பின் மகள் சிவப்பிரியாம்பாளும் இயற்கையெய்தவே ஐயர் தனித்துவிடப்பட்டார். குடும்பத்திலேற்பட்ட தவிர்க்கவொண்ணாத சோகங்கள், முதுமை, கண்பார்வைக் குறைவு, தொழுநோய் என்பன இவரை மிகவும் இக்கட்டான நிலையில் இருத்திவிட்டன. எனினும் மனத் துணிச்சலைச் சீர்திருத்தமான சிந்தனைகளை மண்பதைக்குச் செய்யவேண்டிய பணிகளை மறந்திலராக சுதேசமித்திரன் காரியாலயத்துக்குச் செல்வார். தனது எண்ணங்களை எழுத்தில் வடிக்க முடியாத சூழ்நிலையிலும் வாய்மொழியாகச் சொல்லிப் பிறரைக் கொண்டு எழுதுவித்துச் சுதேசமித்திர னுக்குக் கனதி சேர்த்தார்.
பல சிந்தனையாளர்களாலும், அறிவார்ந்த ஆய்வாளர்களாலும் இந்தியநாட்டின் தலைசிறந்த சீர்திருத்தச் செம்மல், சிந்தனைக்குவியலும் சீரிய செயல் வீரமும் மிக்க தீரர் எனப் போற்றப்பட்ட ஜி.சுப்பிரமணிய ஐயரைப் பற்றி "இந்து" பத்திரிகையிலே 1914ம் ஆண்டு பாண்டிச்சேரி யிலிருந்து மகாகவி பாரதியார் ஒரு இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். அதிலே அவர் ஜி.சு.வைப் பற்றி, "மனித பரிமான வளர்ச்சிக்கு உதவி செய்கிறவர்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் தெய்வம் மிகுந்த துன்பத்தைத்தருகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார். இதைவிட மேலாக ஜி.சு.வைப் பற்றி நாம் என்னதான் கூறிவிட முடியும்? *
G69)

Page 71
யாழ்ப்பான
சிரேஷ்ட விரிவுரைய
1. முன்னுரை
ஏழத்துத் தமிழ் மக்களின் வரலாற் றுணர்வினை எடுத்துக் காட்டுவனவாகக் குறிப்பிடத்தக்க வரலாறுசார் படைப்புக்கள் அவர்கள் மத்தியிலே எழுந்துள்ளன. தமிழர்களுக்கெனத் தனியானதொரு அரசுரு வாக்கம் நிகழ்ந்த காலம் முதற்கொண்டே இவ்வாறான படைப்புக்கள் தோன்றியிருத்தல் நோக்கத்தக்கதாகும். 60066DITULL DIT6OD6D, கோணேசர் கல்வெட்டு, வையாபாடல், பரராசசேகரன் உலா, இராசமுறை என்பன யாழ்ப்பாணத்தரசர் காலத்திலும் யாழ்ப்பான வைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம் என்பன ஐரோப்பியர் ஆட்சிக்காலத்திலும் தோற்றம்பெற்ற வரலாறுசார் படைப்புக்களாகும். பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டுகளில் உரைநடை வளர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து தமிழர் வரலாற்றை மட்டுமன்றி அவர்களின் சமயம், கலை, இலக்கியம், சமூகம் சார்ந்த வரலாறுகளையும் பதிவு செய்து வைக்கும் முயற்சிகள் பல மட்டங்களிலும் நிகழ்ந்துள்ளன. எனினும், இக் கட்டுரையில் யாழ்ப்பான மன்னர் காலத்தில் எழுந்த வரலாறுசார் படைப்புக்கள் மட்டுமே ஆழ்ந்து நோக்கப்படுகின்றன.
2. இலக்கியத் தோற்றம்
பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கும் பதினேழாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியைப் பொதுவாக யாழ்ப்பான மன்னர்கள் காலம் எனக் கூறிக்கொண்டாலும் யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதையண்டிய தீவுப்பகுதியிலும் மன்னார், பூநகரி எனும் பிரதேசங்களிலும் மட்டுமே யாழ்ப்பாண மன்னர்களின் செல்வாக்கு இருந்து வந்தது. ஏனைய குடாநாட்டை அடுத்துள்ள வன்னிப்
(ஐப்பசி 2011 )

மன்னர்கால வரலாறுசார் படைப்புக்கள்
ஈஸ்வரநாதபிள்ளை குமரன் ாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
பெருநிலப்பரப்பிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், கற்பிட்டி எனும் தமிழர் வாழ்பிரதேசங்களிலும் தனித்தனியான வன்னிச் சிற்றரசுகள் தோற்றம் பெற்றிருந்ததைக் காணமுடிகின்றது. இங்ங்ணம் தமிழர்வாழ் பிரதேசங்களில் உருவாகிய உறுதியான அரசியற் பின்புலத்தில் அங்கு சிறந்த இலக்கியப் படைப்புக்கள் தோன்றத் தொடங்குகின்றன.
அக்காலப்பகுதியில் எழுந்ததாக அறியப் படும் இலக்கியங்களுள் மேலே சுட்டப்பட்ட நான்கு படைப்புக்களும் வரலாறு சார் படைப்புக்கள் என விதந்து கூறத்தக்க வகையில் அமைந்துள்ளன. இவற்றுள் பரராசசேகரன் உலா அல்லது இராச முறைமை என்னும் நூல் இன்று கிடைக்கப் பெறவில்லை. ஏனைய மூன்று நூல்களும் பலவிதமான இடைச் செருகல்கள், சேர்க்கைகள், பாடபேதங்கள் என்பவற்றுடன் இணைந்த நிலையில் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நூல்களில் காணப்படும் இவ்வாறான இடையீடுகளே மேற்படி இலக்கியங்களின் தோற்றக் காலந்தொடர்பான பல முரண்பாடான கருத்துக்களுக்கு வழிகோலி இருப்பதைக் 85 Te00T6DIT b.
3. தோற்றப் பின்புலங்கள்
வரலாறு சார்ந்த விடயங்களைப் பதிவு செய்து பேணவேண்டும் என்னும் விருப்புணர்வு தமிழ்மக்கள் மத்தியில் முளை கொள்ளுதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம் போலத் தோன்றுகின்றது.
(1) வரலாறு சார்ந்த விடயங்களைத் தேடித் தொகுத்துப் பேணிக் கொள்ளுவதற்கு வரலாற்றுப் பேணுகையில் அக்கறை கொண்ட நிறுவன ரீதியான
-GZO)

Page 72
அமைப்பொன்றின் பின்புலம் மிக அவசியமானதாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றிருந்த ஆரியச் சக்கரவர்த்திகளின் அரசு இத்தகைய பின்புலத்தை வழங்குவதாக அமைந்திருந்தது. மிகக் குறுகிய காலத்தில் தென்னிலங்கை அரசுக்கே அச்சுறுத்தலைத் தரும் வகையில் வளர்ச்சி பெற்ற இவ்வரசு காலத்தில் ஈழத்துப் புலமையாளர்களுக்குக் கிடைத்த ஆதரவும் ஊக்குவிப்பும் அவர்களை வரலாறு சார்ந்த விடயங்களிலே அக்கறை செலுத்தத் தூண்டியிருக்கலாம். (i) ஆரியச்சக்கரவர்த்திகள் தமிழ் இலக்கியங்களையும் வைத்தியம், சோதிடம் எனும் அறிவியல் துறைசார் விடயங்களையும் தேடித் தொகுத்துப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர் களாக விளங்கினர். அந்தவகையில் வரலாறு சார்ந்த விடயங்களையும் புலமையாளர்களைக் கொண்டு இவர்கள் பாதுகாக்க முனைந்திருக்கலாம். (i) பாண்டிய மன்னரின் படைத் தளபதிகளாக ஈழத்துக்கு வந்தவர்கள் ஆரியச்சக்கர வர்த்திகள். இவர்கள் ஏலவே வடபுலத்தை ஆட்சிசெய்து வந்த மன்னரை அல்லது மன்னர்களைப் புறங்கணர் டே அப்பகுதியின் ஆட்சியாளர்களாக மாறியிருக்க வேண்டும். இந்நிலையில் தமக்கு வடபுல அரசின் மீதுள்ள உரிமையை எடுத்துக்காட்ட (36600rg வரலாறு சார்ந்த விடயங்களைப் புலமையாளர்களைக் கொண்டு தொகுப்பிக்க முயன்றிருக்கலாம்.
ஜப்பசி 2011 H
 

சங்கத்தமிழ்
"குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் தமது சமூக நிலைப்பாடு பற்றியும் அதன் புவியியற் களம் பற்றியும் சிந்திக்கத் தொடங்கும் பொழுது வரலாற்றுணர்வு ஏற்படுகிறது. அதாவது தம்மை நிலையான குழுவினராகக் கொள்ளும் போதுதான் வரலாறு தோன்றும். இது ஆட்சியாளரின் வர்க்க நிலைப்பட்ட உணர்வாக முகிழ்க்கும் என்பர். இக்காலத்திலேயே யாழ்ப்பாண வரலாற்று மூலங்களென இன்று கொண்டாடப்பெறும் வையா UITL-gub, 6860TLD606Dub(336ö550T." எனப் பேராசிரியர் கா. சிவத்தம்பி குறிப்பிடுவது நோக்கத்தக்கதாகும். (iv)பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியி லிருந்து யாழ்ப்பாண ef போர்த்துக்கேயரின் தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தது. கைலாயமாலை, வையாபாடல் ஆகிய நூல்கள் இதேகாலப் பகுதியில் அல்லது ஏறத்தாழ இதற்கு அண்மித்த நிலையில் தோற்றம் பெற்றதை நோக்கும் போது வரலாற்றுரிமை யையும் மரபையும் எடுத்துக் காட்டி மக்கள் மத்தியிலும் அரச குடும்பத்தவர்மத்தியிலும் அந்நியர் ஆக்கிரமரிப்புக்கு எதிரான ஆத்ம பலத்தைஏற்படுத்தும்நோக்கம்இவற்றுக்கு இருந்திருக்கலாம் போலத் தோன்று கின்றது.
“ஆளும் வர்க்கத்தினரின் செல் வாக்கு உயர்நிலையில் இருக்கும் காலத்தில் மாத்திரமன்றிஅதுசரியும் அபாயம் தோன்று மிடத்தும் அரசசார்பான, அரசர்களின் வ்குடிஇருப்பைநியாயப்படுத்தும் வகையிலான வரலாற்று சார்பான நூல்கள் தோன்றுவது இயல்பாகும்"
-CZ)

Page 73
எனப் பேராசிரியர் எஸ்.சிவலிங்க
ராஜா குறிப்பிடுவது இங்கு சுட்டிக் காட்டத்தக்க தாகும். (V) தமிழில் வரலாறு சார்ந்த நூல்கள்
தோற்றம் பெறும் முன்னரே பாளி மொழியிலும், சிங்கள மொழியிலும் ஈழத்தையாண்ட மன்னர்களதும் பெளத்த சங்கத்தினதும் வரலாறுகள் தொடச்சியாக எழுதிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. மகாவிகாரை முதலான சமய நிறுவனங்கள் ஆரம்பகாலம் முதற் கொண்டே இத்தகைய வரலாற்று எழுது முயற்சிகளுக்கு ஆதரவும் ஊக்கமும் தந்து வந்தன. இதன் பின்னணியில் தீபவம்சம், மகாவம்சம் ராஜாவலிய, பூஜாவலிய முதலான வரலாற்றிலக்கியங்கள்தோற்றம்பெற்றன. பாளிமொழியிலும் சிங்கள மொழியிலும் எழுதப்பட்ட இவ்வரலாற்று நூல்கள் ஈழத்துத் தமிழ்ப் புலவர்களுக்கு வரலாற்றிலக்கியங்களை எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும் ஆவலையும் ஏறபடுத்தியிருக்கலாம். அல்லாமலும் இவர்களுக்கு அந்நூல்கள் முன்மாதிரியாகவும் விளங்கியிருத்தல் θοι (BLib.
(vi)பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை°
(ஐப்பசி 2011
ஈழத்தமிழர்கள் மத்தியில் வரலாறு சார்ந்த நூல்கள் தோற்றம் பெற்ற மைக்கு வேறொரு காரனம் ஒன்றையுங் குறிப்பிடுகின்றார்.
"தகராறு இருந்து உரிமை நிறு வப்படும் போது உறுதி எழுதி வைக்கும் எண்ணம் ஏற்படு கின்றது. இலங்கையில் வர லாற்றுத் தொடக்க காலத்திலே தகராறு இருந்து உரிமை பெற்ற சிங்களவரிடையே தீபவம்சம்,
 

சங்கத்தமிழ்
மகாவம்சம், குளவம்சம் என்பன தோன்றின. இடைக்காலத்திலே தகராறு இருந்து உரிமை பெற்ற தமிழரிடையே கைலாய மாலை, 60D6hlum untL6), கோனேசர் கல்வெட்டு, மட்டக்களப்பு மான் மியம், யாழ்ப்பாண வைபவ மாலை முதலியன தோன்றின” என்பது அவரது வாதம். (Vi)திருக்கோணேஸ்வர ஆலயம் சம காலத்தில் Gugby BB5 6Ub60DLDLLD
புகழும் பொருளாதார ரீதியாகப் பெற்றிருந்த வளமும் அத்தலத்தின் பின்னணியில் கோணேசர் கல்வெட்டுத் தோற்றம் பெற வழிவகுத்திருக்கலாம். அங்கு நிலவிய சுதந்திரமான வன்னி யராட்சிச் சூழலும் இதற்கு உறுதுணையாக இருந்திருக்கக் கூடும். பதினாறாம் நுாற்றாண்டினர் இறுதிப் பகுதியில் இருந்து திருகோணமல்ை வன்னி மையின் மீது கண்டி மன்னரின் மேலாதிக்கம் ஏற்பட்டது. பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துக் கேயர் திருகோணமலையைக் கைப் பற்றி அங்கு தம் கோட்டையைக் கட்டினர் . இங்ங்னம் 16ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக ஏற்பட்ட ஆக்கிரமிப்புச் சூழலில் கோணேசராலயம் தொடர்பான ஒழுங்கு முறைகளைப் பதிவு செய்து
வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கக் கூடும். இதன் பின்புலத்தில்கோணேசர்கல்வெட்டுஎழுத
பட்டிருக்கலாம் போலத் தெரிகின்றது. எவ்வாறாயினும் கலாநிதி துரை.மனோகரன்' குறிப்பிடுவது GuT6D, தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது இலங்கையிலே தமிழரசு ஒன்று நிறுவப்பட்ட வேகத்திலேயே இந் நாட்டுத்
Cz2)

Page 74
Trigg
தமிழரின் வரலாற்றைப் பேணும் முயற்சிகள் ஆரம்பிக்கத் தொடங்கி விட்டமை ஒரு சிறப்பம்சமாகும்.
4. யாழ்ப்பாண மன்னர்கால வரலாறுசார்
UGCDLLS6ir
ஈழத்தமிழர் மத்தியில் மேற்கிளம்பிய வரலாற்றுணர்வு யாழ்ப்பான மன்னர் காலப் படைப்புக்களான கைலாயமாலை, வையா பாடல், கோணேசர் கல்வெட்டு என்பனவற்றில் எந்தளவு தூரம் பதிவாகியுள்ளது என்பதைத் தனித்தனியே நுனித்து நோக்குவது இவ்விடத்தில் அவசியமானதாகும்.
4.1. 6D56DTULDT6D6D
கைலாயமாலை முத்துராஜ கவிராயர் என்பவரால் செய்யப்பட்டதாக அந்நூலின் ஈற்றிலே அமைந்துள்ள வெண்பா குறிப்பிடுகின்றது. கி.பி 1604க்கும் கி.பி 1619க்கும் இடைப்பட்ட காலத்தில் அல்லது அதற்குச் சற்றுப் பின்னதாக இந்நூல் தோன்றியிருக்கலாம் என முதலியார் செ.இராசநாயகம்" கருதுவது ஏற்புடையது போல் தோன்றுகின்றது. இந்நூல் இரண்டு முக்கியமான நோக்கங்களைக் கொண்டது. 1. முதலாம் சிங்கையாரியனின் முடி சூட்டு விழா பற்றியும் அவன் யாழ்ப்பான அரசின் நிர்வாக ஒழுங்கமைப்பைக் கட்டமைத்தமை பற்றியும் விபரித்தல் 2. சிங்கையாரியன் நல்லூரில் கட்டுவித்த கைலாசநாதர் ஆலயம் பற்றியும் அங்கு நடைபெற்ற குடமுழுக்குவிழா பற்றியும் வர்ணித்தல். என்பனவே அந்நோக்கங்களாகும். இவற்றுள் சிங்கையாரியனின் பெருமை பேசும் முதற்பகுதி மெய்க்கீர்த்தி உலா எனும் பிரபந்த அமைப்புக்கள் ஒன்றுகலந்தவகையில் பாடப்பட்டுள்ளது. இப்பகுதியிலேயே யாழ்ப்பாணத்தரசர் காலத்தைச் சேர்ந்ததும் அதற்குச் சில காலங்களுக்கு
(ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
முற்பட்டதுமான வரலாறு சார்ந்த தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலாம் சிங்கையா ரியனுக்கு முன்னதாகவே யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட அரசுருவாக்கம் தொடர்பான தகவல் கள், சிங்கையாரியன் யாழ்ப்பாண இராச்சி யத்துக்கு மன்னனாகியதன் பின்னணி, அவனது LJLITCSLTULDPT6OT பூட்டாபிக்ஷேகம், உலாச்சிறப்பு என்பன மிக விலாவாரியாக இங்கு பாடப்பட்டுள்ளன.
சிங்கையாரியனுக்கு முற்பட்ட யாழ்ப்பான அரசுருவாக்கம் பற்றிய தகவல்கள் என்ற வகையில் மாருதப்புரவீகவல்லி, யாழ்பாடி என்போருடன் தொடர்புபட்ட கதைகளை கைலாயமாலை எடுத்துக்காட்டுகின்றது. யாழ்ப்பாணத்து அரசுருவாக்கந் தொடர்பாகத்தன் காலத்துக்கு முன்னர் நிலவிவந்த சில கர்ணபரம்பரைக் கதைகள் அல்லது ஐதீகங்களை மையப்படுத்தியே மேற்படி விடயங்களை முத்துராசர் பாடியுள்ளார். ஏறத்தாழ இதே விடயங்களே வையாபாடலின் தொடக்கத்தில் காணப்படுவதை நோக்கும்போது மேற்படி ஐதீகங்கள் மக்கள் மத்தியிலும் அக்காலப் புலவர்கள்மத்தியிலும் பெற்றிருந்த செல்வாக்கைக் காணலாம். வரலாற்றுத் தொடர்ச்சியைக் கட்டமைத்துக் கொள்ளுகின்ற நோக்கிலும் யாழ்ப்பாணத்தரசின் பழமையை வலியுறுத்தும் வகையிலும் மேற்படி கதைகளை வையாபுரி ஐயரும் முத்துராஜ கவிராயரும் சேர்த்திருக்க வாய்ப்புள்ளது. இக் கதைகளுக்கூடாக யாழ்ப்பான அரசின் தொடக்க வரலாற்றைத் தேடமுடியா விட்டாலும் ஆரியச் சக்கரவர்த்திகளின் வருகைக்கு முன்னிருந்த அரசுருவாக்கந் தொடர்பான ச்ெய்திகளை அறியக் கூடியதாக இருப்பது பெரியதொரு வரப்பிரசாதமேயாகும்.
சிங்கையாரியன் யாழ்ப்பாணத்துக்கு வந்ததன் பின்னணி பற்றியும் விசேடமான சில தகவல்களை கைலாயமாலை தருகின்றது. யாழ்பாடி அல்லது கவிராசன் காலத்துக்குப்
Czg)

Page 75
பின்னதாக யாழ்ப்பான அரசினை ஆள்வதற்கென்று எவரும் இல்லாத பின்னணியில் அதனை ஆளவும் நிர்வகிக்கவும் எனப் பாண்டிமழவன் என்பவனால் சிங்கையாரியன் அழைத்துவரப்பட்டதாகக் கைலாயமாலை கூறுகின்றது'. யாழ் பாடிக்குப் பின்னர் உருவான அரசியல் வெற்றிடம் பற்றி முத்துராஜகவிராயர் இலக்கியச் சுவை தோன்றப் பின்வருமாறு பாடியுள்ளார்.
“... கவிராசன் காலங் கழிய - அவிர் கிரன சந்திரனில் லாதவெழிற் றாரகைபோல் வானரசாள் இந்திரனில்லாத விமையவர்போல் - விந்தை கரைசேரிடம் மாநகர்க்கோர் காவலரணி செய்யுந் தரையரச னின்றித் தளம்ப. ...... 9Y3» யாழ்ப்பாணத்தரசையாள அரசர் இல்லாத தினாலேயே சிங்கையாரியன் வரவழைக்
8
கப்பட்டான் எனக் கைலாயமாலை தரும் தகவல்கள் நம்பிக்கைக்குரியனவல்ல. அன்றியும் அவை இரண்டாம் பேரரசுப் பாண்டியர் காலச் சாசனங்களுடன் முரண்படுகின்றன. சிங்கையாரியன் வருகைக்கு ஒரு காரணத்தைக் கற்பிக்க வேண்டி முத்துராஜ கவிராயர் இக்குறிப்பைத் தன் நூலில் சேர்த்திருக்க வேண்டும். அன்றியும் தமிழ்நாட்டிலிருந்து வந்த சிங்கையாரியனுக்கு யாழ்ப்பாண அரசில் உரிமையும் "ஆள் தகுதியும் வழங்கும் ஒரு முயற்சியாகவும் இதனைக் கருதலாம். இதனால் இலங்கையின் வடபகுதியில் பன்னிரெண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட பாண்டிய மேலாதிக்கப்படர்ச்சிகள், படையெடுப் புக்கள், ஆரியச்சக்கரவத்திகளின் ஆதிக்கச் செல்வாக்குகள் முதலான தகவல்கள் மறைக்கப்பட்டு ஒரு 'அமைதியான அரச மாற்றம்' பற்றி முத்துராஜர் இங்கு பேச விழைகின்றார். தொடர்ந்து வரும் பகுதிகளில் சிங்கையாரியனின் குலகுடிப் பெருமைகள். அழகு, செளந்தர்யம்,
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
வீரம், வெற்றி, கொடை, ஆட்சிச்சிறப்பு, என்பவற்றை அவர் அடுக்கிக் கொண்டு செல்வதையும் அவன் நல்லூரில் கட்டுவித்த அரண்மனையின் எழிலார்ந்த தோற்றம் படாடோபமான முடிகட்டு விழா என்பவற்றை வர்ணித்துச் செல்வதையும் நோக்கும் போது முத்துராஜர் சமகால ஆளும் வர்க்க நலனில் கொண்டிருந்த அக்கறை எமக்குப்புலனாகின்றது. அன்றியும் 'அரசவை இலக்கியமோ என வியக்கத்தக்க வகையில் ஆளும் வர்க்கத்துக்கு அனுசரணையான பிரசாரத்தை அவர் முன்னெடுத்திருப்பதைக் கானலாம். சிங்கையாரியன் தலைநகரில் கட்டுவித்த கைலாசநாதர் ஆலயத்தின் பிரமாண்டமும் அங்கு நடைபெற்ற சிறப்புமிக்க கும்பாபிக்ஷேகம் பற்றிய விபரணங்களும் மேலும் இக்கூற்றை அரண் செய்வதைக் காணமுடிகின்றது. இவற்றுக் கூடாக யாழ்ப்பாண இராச்சியத்தில் சிங்கையாரி யனின் ஆட்சிக்குப் பலந்தேட முத்துராஜர் முனைகின்றார்.
சிங்கையாரியனின் முடிகட்டு விழாவைத் தொடர்ந்து யாழ்ப்பாண இராச்சியத்தின் நிர்வாகத்தை அவன் ஒழுங்கமைத்த முறை பற்றி முத்துராஜர் தருந்தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏறத்தாழ உண்மையான தகவல்களை மையமாகக் கொண்டே மேற்படி விடயங்களை விபரித்திருப்பதைக் காணலாம். தமிழ்நாட்டிலிருந்து சிங்கையாரியனால் வரவழைக்கப்பட்டு யாழ்ப்பானத்தின் பல பகுதிகளிலும் தமது அடிமை குடிமைகளுடன் குடியேற்றப்பட்ட வேளாளப் பிரபுக்கள் யாழ்ப்பான இராச்சிய நிர்வாகத்தின் முதுகெலும்புகளாக 6ofileTTFjölu6OLD பற்றி 60556TDT660 விபரிக்கின்றது. பிரபுக்கள் குடியேறிய இடங்கள் அவர்களது குடி. குல மரபுகள் அவர்களுக்கு என வழங்கப்பட்ட சின்னங்கள், விருதுப் பெயர்கள், அதிகாரங்கள் என்பனபற்றியெல்லாம் முத்துராஜர் மிக விரிவாகப் பேசுகின்றார். நிர்வாக நட
GZAD

Page 76
வடிக்கைகளை இலகுபடுத்தயாழ்ப்பாண இராச்சியம் பாகுபடுத்தப்பட்டிருந்த முறை (வடபற்று, மேற்பற்று, கீழ்ப்பற்று) அதன் நிர்வாகப் பொறுப்புகள் கையளிக்கப்பட்டிருந்த வகை என்பன பற்றியும் கைலாயமாலையில் சுட்டப்படுகின்றன. ஒட்டு மொத்தத்தில் யாழ்ப்பாண மன்னர் காலம் பற்றிய தகவல்களை ஐதீகங்கள் இலக்கிய மாயைகள் என்பனவற்றுடன் கலந்த நிலையில் கைலா யமாலை கூறிச் சென்றாலும் யாழ்ப்பாண மன்னர் கால வரலாற்றினைக் கட்டமைத்துக் கொள்வதில் அதன்பங்களிப்புதவிர்க்க முடியாததாகவேயுள்ளது.
4. 2. 6.D6 huu umTLumTL6ó:
'வையாபாடல்', 'வையா கல்வெட்டு', 'வையா என்னும் பெயர்களால் வழங்கப்பட்டு வரும் நூலை இயற்றியவர்வையாபுரிஐயர். இந்நூலின் அகச்சான்றுகள் கொண்டு நோக்குகின்றபோது இந்நூல் ஆரம்பத்தில் "இலங்கை மண்டலக் காதை என்றே வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனத்தெரிகின்றது". பதினெட்டாம் நூற்றாண்டில் இந் நூலை வசனஞபமாகச் செய்த சிலர் அதன் பெயரினை யாழ்ப்பான நாட்டு வளப்பம்" எனப் பதிவு செய்திருப்பதாகப் பேராசிரியர் பத்மநாதன்" அவர்கள் குறிப்பிடுவார்கள். யாழ்ப்பாண மன்னர் காலத்தின் பிற்பகுதியில் எழுந்ததாகக் கருதப்படக் கூடிய இந்நூலின் தோற்றக் காலத்தைச் சரிவரத் தீர்மானிப்பதற்குப் போதுமான ஆதாரங்களில்லை. வையாபாடல் யாழ்ப்பாண அரசின் தோற்றம் பற்றிய தகவல்களை ஆரம்பத்தில் குறிப்பிட்டுச் சென்றாலும் அதன் முக்கிய நோக்கம் காலந்தோறும் அடங்காப்பற்றில் ஏற்பட்ட வன்னியர் குடியேற்றங்கள் பற்றி விபரிப்பதே யாகும். இந்நூலாசிரியர்வையாபுரி ஐயர், நூலின் தொடக்கத்திலே,
"இலங்கை மாநகரரசியற்றிடுமர சன்றன் குலங்களானதுங்குடிகள்வந்திடுமுறைதானுந் தலங்கள் மீதினிலிராட்சதர்தமையடுதிறனுந் நலங்க ளாருநேர் நாடர சாகிவந்ததுவும்?
(ஐப்பசி 2011)
 

சங்கத்தமிழ்
எனக் கூறுவது கவனிக்கத்தக்கதாகும். யாழ்ப்பாணத்தரசின் வரலாற்றைக் கைலாய மாலை மாருதப்புரவீகவல்லி - வாலசிங்கன் வரலாற்றுடன் தொடங்க, வையாபாடல் இதற்கு ஒருபடி மேலாகச் சென்று இராமாயண காலச் சம்பவங்களுடன் தொடங்குகின்றது. இராமன் இலங்கைக்கு வந்தது இராவணனை வென்றது விபீடணனை ஈழத்தின் அரசனாக்கியது எனத் தொடங்கி முதலாம் சிங்கையாரின் யாழ்ப்பாணத்தின் அரசனாகிய காலம் வரையான வரலாறு களைச் சுருக்கமாக ஐதீகங்கள், செவிவழிக் கதைகள் என்பவற்றின் மூலமாக வையாபுரி ஐயர் கட்டமைத்துச் செல்கிறார். தொடர்ந்து வன்னியர் குடியேற்றம் பற்றி ஆசிரியர் அதிக அக்கறை காட்டுகிறார். யாழ்ப்பாண வைபவ மாலை வன்னியர் குடியேற்றங்கள் இரண்டு கட்டங்களாக நிகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது". இவற்றுள் முதலாவது குடியேற்றம் குளக் கோட்டன் காலத்தில் ஏற்பட்டதென்றுமீ இரண்டாவது குடியேற்றம் பாண்டிநாட்டால் வந்த ஐம்பத்தொன்பது வன்னியரின் வருகை யோடு ஏற்பட்டதென்றும் சுட்டப்படுகின்றது. இவற்றுள் இரண்டாவதாக நடைபெற்ற வன்னியர் குடியேற்றம் பற்றியே வையாபாடல் விபரிப்பதைக் 85T600T6DTLD.
இந்த இரண்டாவது குடியேற்றம் யாழ்ப் பாணத்தையாண்ட தமிழ்வேந்தர் காலத்தில் நடைபெற்றதாகக் கூறும் வையாபாடல் அது தொடர்பான சம்பவங்களையும் விரிவாகவே விபரிக்கின்றது. யாழ்ப்பானத்தை ஆண்ட செயதுங்க வீரவரராஜசிங்கனின் மன வினையின் பொருட்டு, மதுரை மன்னன் தனது மகள் சமதாதியையும் அவளின் பாதுகாப்புக்காக அறுபது வாட்படை வன்னியரையும் ஈழத்துக்கு அனுப்பி வைத்தான் என்றும், திருமணத்தின் பின்னர் வீரவரராஜசிங்கன் &Dug வன்னியரையும் அடங்காப்பற்றில் சென்று வாழும்படி பணித்தான் என்றும் அறுபது
Cz5)

Page 77
வன்னியரும் மேலும் தம் இனத்தவர் பலரைத் தென்னிந்தியாவிலிருந்து வரவழைத்து அவர்களின் உதவியுடன் அடங்காப்பற்றில் ஏலவே வாழ்ந்தோரை அடக்கி ஆட்சிபுரிந்தனர் என்றும் வையாபாடல் கூறுகின்றது". வீரவரராஜசிங்கன் காலத்தில் வந்த அறுபது வன்னியரும் அடங்காப்பற்றில் வாழ்ந்த பூர்வீக குடியினரை அடக்கினர் எனக் கூறப்படுவதால் அவர்களது வருகைக்கு முன்னரே அடங்காப்பற்றில் மக்கள் குடியேற்றங்கள் இருந்தமை புலனாகும். யாழ்ப் பாண மன்னர்களுக்கும் பாண்டி நாட்டுக்கும் இடையே இருந்து வந்த உறவின் பின்னணியில் ஏற்பட்ட இப்புதிய குடியேற்றமும் வன்னிமைகள் மீதான புதிய மேலாதிக்கப் படர்ச்சியும் கி.பி 13 ஆம் நூற்றாண்டளவில் நிகழ்ந்திருக்க வாய்ப்புண்டு.
யாழ்ப்பாண மன்னர் காலப்பகுதியில் அடங்காப்பற்றிலும் யாழ்க்குடாநாட்டின் பலபகுதிகளிலும் அவ்வப்போது குடியேறிய மக்கள் கூட்டத்தினர், அவர்களது சாதிகள், குலவரன்முறைகள், தொழில்கள், பற்றியெல்லாம் வையாபாடல் விரிவாக விபரிக்கின்றது. அன்றியும் அடங்காப்பற்றின் மேல் யாழ்ப்பாணமன்னர்களின் அதிகாரம் நிலை நாட்டப்பட்டமை பற்றியும் வையா பாடலில் தகவல்கள் உள்ளன. குறிப்பாகப் பரராசசேகரமன்னன் காலத்தில் (இவன்நல்லூரை ஆண்ட எட்டாம் பரராசசேகரனாக இருக்கலாம்) அடங்காப்பற்றின் மேல் யாழ்ப்பாண மன்னனின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டமை பற்றிய விரிவான தகவல்கள் வையாபாடலில் உள்ளன. யாழ்ப்பான மன்னர்களின் மேலாதிக்கத்தை அடிக்கடி ஏற்றுக்கொள்ளாது கிளர்ந்தெழும் வன்னியர்கள் பரராசசேகர மன்னன் காலத்திலும் தமது எதிர்ப்பைக் காட்டினர் என்றும் அவர்களது கிளர்ச்சியை அடக்கிய பரராசசேகரன் தொடர்ந்தும் வன்னிப் பிரதேசத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக முள்ளியவளையில் ஓர் உய தலை நகரத்தை ஸ்தாபித்திருந்தான் எனவும்
ஐப்பசி 2011
 

சங்கத்தமிழ்
வையாபாடல் சுட்டுகின்றது". முள்ளியவளை யில் பரராசசேகரன் இருந்த காலங்களில் நல்லூர் இராசதானியைநிர்வகிக்கும்பொறுப்புசெகராசசேகர மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல வன்னியின்மற்றொரு பகுதியின்நிர்வாகப்பொறுப்பு (வாவெட்டி) சங்கிலியின் கையில் தரப்பட்டது". பரராசசேகரன்முள்ளியவளையில்ஸ்தாபித்த மூத்த விநாயகர் ஆலயம் பற்றியும் அவ்வாலயத்திற்குரிய விக்கிரகங்களையும் பூசகர்களையும் தென்னிந்தியாவிலிருந்து அவன் தருவித்தமை பற்றியும் விரிவாகப் பேசும் வையாபாடல்" பரராச சேகர மன்னனின் இறப்புடன் தன் வரலாற்று விபரிப்பை முடித்துக்கொள்கின்றது. வையாபாடலின் பிற்பகுதியை நோக்குகின்ற போது அது பரராசசேகரமன்னனின் துதிபாடுவதாகவே கொள்ளக்கிடக்கிறது. பரராசசேகரனின், வீரம், நிர்வாகத்திறன், மதாபிமானம் என்பன குறித்த செய்திகளே அங்குவிலாவாரியாகத்தரப்பட்டுள்ளன. வையாபாடலின் இலக்கியப் பெறுமதியை இந்த இறுதிப்பகுதியே பேணி நிற்கின்றது எனலாம். நூலின் இடையே வரும் பறங்கியர் பற்றிய குறிப்புகள் எல்லாம் வையாபாடலில் நுழைந்த இடைச் செருகல்களே”
4.3. கோணேசர் கல்வெட்டு
கோணேசர் கல்வெட்டை எழுதியவர் கவிராஜவரோதயர். இன்றைய நிலையில் இந்நூல் மூன்று பகுதிகளாகக் கிடைக்கப் பெற்றுள்ளது. அவை முறையே விருத்தப்பா வானும் அகவற்பாவாலும் உரைநடையாலும் ஆக்கப்பட்டுள்ளன. விருத்தப் பகுதி கோணேசரலாயத்துக்குக் குளக்கோட்ட மன்னன் செய்த திருப்பணிகளை விபரிக்கின்றது. அகவற்பகுதி கோணேசராலயத்துக்கு வருகை தந்த கஜபாகு மன்னன் அவ்வாலய நிர்வாக ஒழுங்கு முறைகளைச் சீர்படுத்தி வழங்கிய தானங்கள் பற்றிச் சுட்டுகின்றது. கோணேசராலயத்தின் நிர்வாகம், விழாக்கள் தொடர்பாகக் காலந்தோறும் ஏற்பட்டு வந்த
Cze)

Page 78
மாற்றங்களையும் புதிய சேர்க்கைகள்ையும் உரைநடைப்பகுதி பதிவுசெய்துள்ளது. இவற்றுள் கவிராஜவரோதயரால் எழுதப்பட்டது விருத்தப்பாவால் அமைந்த பகுதியே எனலாம். இதுவே கோணேசர் கல்வெட்டின் மூலப்பகுதி எனக் கொள்ள இடமுண்டு. கவிராஜ வரோதயர் கோணேசர் கல்வெட்டின் சிறப்புப் பாயிரத்தில்
“சொல்லுற்ற சீர்க் குளக்கோட்டு மன்னன் சொற்படி சொல்லெனவே கல்வெட்டுப் பாட்டென்னப் பாடினன்...... 19 எனப் பாடுதலால் குளக்கோட்டு மன்னனின் திருப்பணிகள் பற்றிய தகவல்களை மட்டுமே அவர் பாடியுள்ளமை புலனாகின்றது. ஏனைய கஜபாகு மன்னனின் வருகை, கோணேசராலய நிர்வாகந் தொடர்பாடான பகுதிகள் பிற்காலத்தில் வேறு யாராலேயோ எழுதப் பட்டுச் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். கவிராஜவரோதயர் செப்பேட்டுப் பெரிய வளமைப்பத்ததியில் சொல்லப்பட்ட விடயங்களையே இலக்கியப் புனைவுகளுடன் கல்வெட்டாகப் பாடியுள்ளார் எனக் கூறப்படுகின்றது°.
கவிராஜவரோதயர் எழுதிய விருத்தப் பாவாலான பகுதி இரண்டு நோக்கங் களையுடையது ஒன்று கோணேசராலயம் தொடர்பாகக் குளக்கோட்ட மன்னன் மேற் கொண்டநிர்வாக ஒழுங்கமைப்பினை விபரிப்பது. இரண்டாவது குளக்கோட்டன் வெட்டுவித்த கந்தளாய்க் குளம் பற்றிய தகவல்களைத் தருவது. இவ்விரு பகுதிகளிலும் வரலாற்றுச் செய்திகள் பல உள்ளன. குளக்கோட்டன் ஈழத்திற்கு வந்தமை, கோணேசராலயத்தில் திருப்பணி களைச் செய்தமை, ஆலயத் தொண்டிற்காகப் பல்வேறு சாதியினரையும் தென்னிந்தியா விலிருந்து வர வழைத்துக் குடியேற்றியமை, அவரவர்க்குரிய கடமைகளை வகுத்துத்தந்தமை, கோணேசராலயப் பூசனைகளையும் விழாக்களையும் நிர்வாக ஒழுங்கு முறைகளையும் திட்டம் செய்தமை பற்றி முதற்பகுதியில் விரிவாக எடுத்துரைக்கப்
ஜப்பசி 2011
 

சங்கத்தமிழ்
பட்டுள்ளன. கந்தளாய்க் குளத்தை அமைப்பித்த வரலாறும் அதன் காவலுக்கென காவல் தெய்வங்களைப் பிரதிகூழ்ட்டை செய்து அவற்றுக்குரிய பூசனைகளை ஒழுங்கு செய்தமை பற்றி இரண்டாவது பகுதியில் விரிவாக நோக்கப் பட்டுள்ளன. இறுதியில் குளக்கோட்டன் சிவனுடன் ஐக்கியமாகிய சம்பவ விபரிப்புடன் கோணேசர் கல்வெட்டின் விருத்தப்பகுதி நிறைவுறுகின்றது. குளக்கோட்ட மன்னனின் மரபையும் புகழையும் கொடைச்சிறப்பையும் முதலிலும் இடையிலும், கடையிலும் பொதிந்து எழுதப்பட்ட இந்நூல் சமகாலத்தில் தமிழகத்திலும் சிங்கள மொழியிலும் எழுந்த தனிமனிதரின் (மன்னர், படைத்தலைவர் முதலானோரின்) ஆளுமை களைச் சித்திரிக்கும் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கதாகும். இலக்கியப் பெறுமானம் நிரம்பிய நிலையில் இந்நூல் பாடப்பட்டிருந்தாலும் சமகாலத் திருகோணமலைப் பிரதேசத்தின் அரசியல், சமூக, பொருளாதாரப் பண்பாட்டுக் கட்டுமானங்களை இன்று விளங்கிக் கொள்ளப் பேருதவி புரிகின்றது.
5. Վpւք6յ6օՄ
மேலே விரிவாக எடுத்துக் காட்டப்பட்ட மூன்று படைப்புக்களும் ஈழத்தமிழர் மத்தியில் காணப்பட்ட வரலாற்றுணர்வினை ஓரளவுக்கு இனங்காட்டியுள்ளன. எனினும் இவற்றை முழுமையான வரலாற்றுப் படைப்புக்களாகக் கொள்ள முடியாதுள்ளது. மாறாக இவற்றை 'வரலாறுசார் படைப்புக்களாகக்" கொள்வதே பொருத்தம் போல் தோன்றுகின்றது. பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா" இவற்றை 'வரலாற்று வரன்முறை கூறும் நூல்கள் எனச் சுட்டுவார். வரலாற்று வரன் முறை கூறுதலை இவை தமது உபநோக்கமாகவே கொண்டிருத்தலைக் காணலாம். கைலாயமாலையிலும் கோணேசர் கல் வெட்டிலும் இந்த உபநோக்கு மிகத் தெளி வாகப் பதிவாகியுள்ளது. சிங்கையாரியன்,
-GZ7)

Page 79
குளக்கோட்டன் என்போரின் பீடும், பெருக்கும், 65 IT60DLLL Lib, மதாபிமானமும் பற்றிப் பேசவிழைந்த இவ்விலக்கியங்கள் தம் நோக்கின் ஒரு பகுதியாக மேற்படி ஆட்சியாளர் காலப்பகுதியுடன் தொடர்புபட்ட வரலாற்றுத் தகவல்களைப் பதிவு செய்துள்ளன. வையாபாடலில் ஒப்பீட்டளவில் வரலாற்றுணர்ச்சி அதிகமானதாக இருந்தாலும் அதிலும் இலக்கியப் பண்புகள் ஊருடுவிநிற்பதை மறுப்பதற்கில்லை. மெய்க்கீர்த்தி, உலா, சாசனச் செய்யுள் மரபுகளைத் தழுவி எழுதப்பட்ட இப்படைப் புக்களில் இயல்பாகவே இலக்கியப் பண்புகள் ஊடுருவி நிற்பதைக் காண முடிகின்றது. இலக்கியத்திற்கேயுரிய அதிலும் குறிப்பாக அரசவை இலக்கியங்களில் காணப்படக் கூடிய தனிமனித வணக்கம்' அல்லது "வீர வணக்கம் இப்படைப்புக்களையும் தாராளமாகவே பாதித்துள்ளது. இலக்கியங்களில் மிதமிஞ்சி வரும் வர்ணனைகள், கற்பனைகள், வெற்றுப் புகழ்ச்சிகள், ஆலாவர்ணனைகள் என்பன இப்படைப்புக்களையும் நிறைத்துள்ளதைக் காணலாம். SfTLÖ புகழ விரும்பிய கதாநாயகர்களை அமானுகூடி நிலைப்படுத்திக் காட்டும் போக்கையும் அவை பலகட்டங்களிலும் பின்பற்றியுள்ளதைக் காணமுடிகின்றது.
மேற்படி இலக்கியங்களில் பதிவாகியுள்ள வரலாற்றுத் தகவல்கள் யாவும் நம்பிக்கைக் குரியவை என ஏற்றுக் கொள்வதற்கில்லை. இந்நூல்களின் ஆசிரியர்கள் தாம் அறிந்த வற்றையும் தர்ம் கேட்டறிந்தவற்றையும் வைத்துக்கொண்டே இவ்விலக்கியங்களைப் படைத்துள்ளமை தெரிகின்றது. வையா பாடலாசிரியர் தான் கண்டறிந்தவற்றையும் சுபதிட்டு முனிவர் பால் கேட்டறிந்தவற்றையும் வைத்துக்கொண்டே இலக்கியம் படைத்ததாகக் கூறுகின்றார். கோணேசர் கல்வெட்டாசிரியருக்கு அவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்த பெரியவளமைப் பத்ததி
(gúufl 2011}-
 

சங்கத்தமிழ்
இலக்கியத்தைப் படைக்க உதவி செய்துள்ளது. கைலாயமாலை ஆசிரியர்தான் கண்டவற்றையும் அறிந்தவற்றையும் விட பலகாலமாக நிலவிவந்த ஐதீகங்களையும் செவிவழிக் கதைகளையும் தன் இலக்கிய ஆக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளார். மேற்படி ஆசிரியர்கள் நேரடியாகக் கண்டறிந்து பதிவு செய்த விடயங்கள் நம்பிக்கைக்குரியவை என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் பிறர் வாயிலாகக் கேட்டு அறிந்து எழுதிய விடயங்கள் աI6)յլճ உண்மையானவை எனக் கொள்வதற்கில்லை. அவற்றில் கற்பனைகளும் புனைவுகளும் சேர்க்கைகளும் நிரம்பியிருக்கச் சாத்தியங்கள் உள. இன்னும் மேற்படி ஆசிரியர்கள் வரலாற்றுத்தகவல்களை இலக்கியப் புனைவுடன் கூறிச் செல்கின்றபோது பல இடங்களில் வரலாற்றுக் குழப்பங்களும் ஏற்படுகின்றன. தகவல்களைத் திரட்டிக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் மேற்படி ஆசிரியர்கள் இட்டு நிரப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவை எல்லாவற்றையும் விடக் காலந்தோறும் ஏற்பட்ட இடைச் செருகல்களும் சேர்க்கைகளும் முற்றுமுழுதாகப் பல இடங்களில் இலக்கியத்தின் தனித்தன்மையைப் பாதித்திருப்பதைக் 85T6OOT6DIT b.
எனவே இவ்வாறான இலக்கியப் புனைவுகள், இட்டு நிரப்பல்கள், இடைச்செருகல்கள் சேர்க்கைகள் முதலான இன்னோரன்ன பல இடையூறுகளுக்கு மத்தியிலிருந்தே மேற்படி இலக்கியங்களிலிருந்து வரலாற்றுத் தகவல்களைத் திரட்டிக் கொள்ளவேண்டியுள்ளது. இதனால் இந்த இலக்கியங்களை மூலாதாரமாகக் கொள்ள முனைவோர் மிகுந்த எச்சரிக்கை உணர்வு உடையவர்களாக இருத்தல் அவசியமானது. வரலாற்றறிவு, இலக்கியப் புலமை, மூலபாடத் திறனாய்வு பற்றிய போதிய அறிவு, பயிற்சி முதலானவற்றுடன் இவ் இலக்கியங்களை அணுகுகின்றபோதே நம்பிக்கைக்குரிய வரலாற்றுத் தகவல்களை
Cze)

Page 80
ஒருவர் திரட்டிக் கொள்ளமுடியும். இல்லாவிடின் புனைவுகள், சேர்க்கைகள், கர்ண பரம்பரைச் செய்திகள் என்பனவற்றை உண்மையென நம்பும் ஆபத்தும் ஏற்படச் சாத்தியமுண்டு.
எவ்வாறாயினும் மேற்படி இலக்கியங்களே இருள் சூழ்ந்த ஈழத்தமிழர் வரலாற்றை ஓரள வுக்குத்தானும் ஒளிமயமாக்கியுள்ளன என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. இதனாலேதான் பிற்காலத்தில் ஈழத்தமிழர் வரலாற்றை எழுதியவர்களும் எழுதுகின்ற வர்களும் தவிர்க்க முடியாமல் இவ்விலக்கி யங்களைப் பிரதான மூலங்களாக ஏற்றுக் கொண்டனர். அரசியல் வரலாறேயன்றி ஈழத்தமிழரின் சமய, சமூக, பொருளாதார பண்பாட்டு வரலாறுகள் சார்ந்த பல தகவல்களைத் தரும் புதையல்களாக இந் நூல்கள் உள்ளன. இவற்றை உரிய முறையிலுடன் நுணுகிநோக்கிச் செல்லும் போது ஈழத்தமிழரின் வரலாறு, பண்பாடு, சார்ந்த எத்தனையோ பல புதிய செய்திகளை வெளிச் சத்துக்குக் கொண்டுவர முடியும் என்பதில் ஐயமில்லை.
米米米冰冰
அடிக்குறிப்புகள்: 1. சிவத்தம்பி, கா. ஈழத்தில் தமிழ் இலக்கியம்,
தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1978, ப. 18.
2. சிவலிங்கராஜா, எஸ். ஈழத்துத் தமிழ் இலக்கியச்
செல்நெறி. தனலக்குமி புத்தகசாலை, யாழ்ப்பாணம், 2OO1, Lu. 27
'சங்கத்தமிழ் - சஞ்
இலங்கை : தனிப்பிரதி ரூபா 10 இந்தியா : ஒரு வருடம் இந்திய ஏனைய நாடுகள் : ஒரு வருடம் சந்தாக்காரர்கள் தங்கள் சந்த Colombo Tamil Sangam So
கணக்கு gu : 1100014906 Commercial Bank Galismts
செலுத்
(ஐப்பசி 2011)
 

1.
2O.
21.
சங்கத்தமிழ்
வேலுப்பிள்ளை. ஆ. தொடக்ககால ஈழத்து இலக்கியமும் அவற்றின் வரலாற்றுப் பின்னணியும், தொடக்கப் பேருரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1986, ப. 13 மனோகரன், துரை. இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி. கலைவாணி புத்தக நிலையம், கண்டி, 1997, ப.14 இராசநாயகம், செ.கைலாயமாலை ஆராய்ச்சி முன்னுரை, கைலாயமாலை, சாந்தி அச்சுக்கூடம், சென்னை, 1939, பக். W-V கைலாயமாலை, (பதிப்பு) ஐம்புலிங்கம்பிள்ளை, சே.வே. சாந்தி அச்சுக் கூடம், சென்னை, 1939, கண்ணிகள் 1-43 கைலாயமாலை கண்ணிகள் 79-88
ങ്ങ8ബruLDITങ്ങബ bങ്ങങ്ങിങ്കണി: 149-212 வையாபாடல். (பதிப்பு) நடராசா. 2001, செய்யுள். 7 பத்மநாதன் சி. ஈழத்து இலக்கியமும் வரலாறும், குமரன்புத்தகநிலையம், கொழும்பு, 2004, ப. 43 வையாபாடல், செய்யுள். 3 யாழ்ப்பாண வைபவமாலை, (பதிப்பு) குணராசா.க. கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம், 2001, ப.10 வையாபாடல், செய்யுள்கள்: 21-28 வையாபாடல், செய்யுள்கள்: 86-88,96 வையாபாடல், செய்யுள்கள். 96.99 வையாபாடல், செய்யுள்கள்: 89-97 606JustLITL6), 68Lju6ft: 33 கோணேசர் கல்வெட்டு (பதிப்பு) வடிவேல்.இ. இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1993, முன்னுரை.ப.39 கோணேசர் கல்வெட்டு சிறப்புப்பாயிரம் சிவலிங்கராஜா, எஸ். மு.கு.நூ. 2001, ப.27
சிகையின் சந்தா விபரம்
/= ஒரு வருடம் ரூபா 600/= ரூபா 450/-
20 அமெரிக்க டெர்லர்
T66
2iety Ltd.
பத்தை என்ற கணக்கில் தும் வண்ணம் வேண்டுகிறோம்.
-GZ9)

Page 81
இவ்வருட அரச 8 சாஹித்திய ரத்னா !
பேராசிரியர் சபாரத்தினம் GguЈJтант
பேச்சுவன்மையும் எழுத்தாற்றலும் மதிநுட்பமும் 6 வளர்ச்சியில் பெரும் ஈடுபாடு காட்டி கல்வியியல் துை களைத் துணிவுடன் முன்வைப்பதில் முதன்மைய உலகுக்கு உடனுக்குடன் தருவதில் சமர்த்தர். கொழு உயர் ஸ்தானத்திலிருந்து அதீத பங்களிப்புகள் நல் பட்டத்தை அவர்கள் கொண்டவராக திகழ்கின்றார். முப்பத்தைந்துக்கும் முதுமெய்யியில் பட்டம் பெற வழிகாட்டியாக திகழ்ந் கல்வி உளவியற் துறையில் புதிய கண்டுபிடி நூற்பட்டியல் நிறுவனம் 2004ஆம் ஆண்டு வழ விருது, கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கிய ச வழங்கிய இலக்கிய கலாநிதி பட்டம் இவரின் தனி அரச இலக்கிய விழாவில் சாஹித்திய ரத்னா விரு பெருமை கொள்ளச் செய்கிறது.
(ஐப்பசி 2011)
 
 
 

நிலக்கிய விழாவில் டயர் விருது வறும்
புகழ் பெற்ற ஆளுமைகளைக் கண்ட யாழ் இணுவையுரில் பிறந்த பேராசிரியர் & ITU.682up ITEFIT (194O) unplutoDOT) u6) கலைக்கழகத்தின் கல்வியியல் துறைப் பேராசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற வராவார்.
u uV půUANTGOOI u LodaisGODODësētype5 SÈy WADB 6ös நுண்கலைப் பீடத்தின் பீடாதிபதியாக இருந்த போது அத்துறைசார்ந்த புதிய பாடநெறிகளை உருவாக்கி வெற்றிகண்டவர். மார்க்சியம் சார்ந்து உளவியல், மானுடவியல், கல்வியியல், கலையியல் கருத்துக்களை முன்னிறுத்தி U6) நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். உலக புகழ்பெற்ற New Frontiers in education LDDDLD The Mythical Journal 565 floodasas6fg|LD கட்டுரைகள் வரைந்துள்ளார்.
மார்க்சியம், உளவியல், மானுடவியல், கல்வியியல், கலை இலக்கிய திறனாய்வு, நாட்டாரியம், நுண்கலைகள், மொழி பெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், கவிதை என பல துறைகளில் 40க்கும் மேற்பட்ட நூல்கள் அவரின் ஆளுமைக்குச் சான்றாக வெளிவந்துள்ளன. வாய்ந்த ஒர் அறிஞர். யாழ் பல்கலைக் கழகத்தின் றயை மேம்படுத்தியவர். ஆணித்தரமான கருத்துக் ானவர். சமகால சர்வதேச சிந்தனைகளை தமிழ் ழம்புதமிழ்ச் சங்க வளர்ச்சியில் நிர்வாகக் குழுவின் கி வருபவர். யாழ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி இதுவரை ஐயாயிரத்துக்கு மேலான மாணவர்களை அதிகமானவர்களுக்கு கலாநிதிப் பட்டம் மற்றும் துள்ளார். பபுகளை மேற்கொண்ட பெருந்தகை. அமெரிக்க itsu (3LD60T 66il 5 &uj (Man of the Year) ங்கச்சான்றோர் விருது, யாழ்.பல்கலைக் கழகம் F சிறப்பினை நிரூபிக்கின்றது. அத்தகைய ஒருவர் னை பெற்றுக் கொள்வது தமிழ் பேசும் மக்களை
G80)

Page 82
கொழும்புத் தமிழ்ச் சங்க 6
மேன்மேலும் வளர்ந்தோங்
Cy's A
C T S அக்கடமியி
சகல வகுப்புக்களும்
CMS N
CTS A
No. 61, 3 Colom PhOne : O

வளியீடான ‘சங்கத்தமிழ்
க வாழ்த்துகின்றோம்.
Cلeلاكك
'6)
ம் நடைபெறுகின்றன
لا"علمaن
ademy, 7th Lane, bO – 06. 11 3159302

Page 83

Mawatha, Colombo - 06
་་་་་་་་་་་་་་
క్తి కొకై ། हूँ ಟ್ತಿ 窦 খ্রী ܝ̈ ፫m 奖
s ප්‍රී 马 只
క్షి 은 త్రి వై ইিঞ্জ O
இல் § 《 ፫em
వ్రో క్తే
s C 器