கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழுந்து 2005.04

Page 1
உலக மகளிர் தினத்தை ஒட்டி, பால் இனம் இவற்றை கடந்து மானுடம் பாடும் பெண் படைப்பாளிகளின் படைப்புஎா அறிமுகம் செய்து வைக்மூடி'ஓர் முயற்சியாக "திசைகள்" இயக்கம் மார்ச் மாதம் 23-ம் திகதி மாலை 6 மணிக்கு
சென்னை மயிலை பாரதி வித்
தியாபவன் அரங்கில் வைகைச் செல்வியின் கறிவேப்பிலை செடியும் நெட்டிலிங்க மரங்களும் என்ற சிறுகதைத் தொகுதியை எழுத்தாளர் திலகவதியும், திலகபாமாவின் "கூர் பச்சையங்கள்"
காசமும் விமர்சன பார்வையுடன்
அறிமுகப்படுத்தினார்கள்."
"திசைகள்" சார்பில் விழாவை ஏற்பாடு செய்திருந்த புகழ் பெற்ற பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திரு. மாலன் விழாவை தொடக்கி வைத்து உரையாற்றும் போது "ஆண்டாண்டு காலமாக இச் சமுதாயத்தைப் பலர் வேறுபட்ட தளங்களில் நின்று மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டே நோக்கினர். மொழி, இலக்கியம், சமயம், சமூக உணர்வுகள் முதலியவை கூட வித்தியாசமான பார்வைக
சென்னையில் திசைகள் மாலன் ஏற்பாட்டில் நடந்த இலக்கிய விழாவில், எழுத்தாளர்கள் வைகைச் செல்வி, அந்தனி ஜீவா, பத்மா சோமகாந்தன், பா. செயப்பிரகாசம், திலகவதி ஆகியோர்.
என்ற கவிதைத்தொகுப்பை எழுத்தாளர் பொன்னிலதும், இலங்கை எழுத்தாளர் பத்மா சோமகாந்தனின் "மாண்புறு மகளிர்" கட்டுரைத்தொகுப்பை செ. கணேசலிங்கனும், அந்தனிஜிவா தொகுத்த இலங்கையின் 25 பெண் படைப்பாளிகளின் "அம்மா"சிறுகதைத்தொகுப்பை படைப்பாளி பா. செயப்பிர
ளுக்கு உட்பட்டவையாக இருந்துள்ளன. இந்து சமயத்தில் சைவம், வைஷ்ணவம், தமிழ் மொழியில் மணிப்பிரவாளம், தனித் தமிழ், இலக்கியத்தில் பண்டைய இலக்கியம் நவீன இலக்கியம் என வேறுபாடுகள் நிலவின. ஆக்க இலக்கியப் படைப்பாளிகள் மத்தியில் கூட
கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்
 
 
 

மாலன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
பவர்கள், ஏற்காதவர்கள் என்ற வேறுபாடுகள் நிலவுகின்றன. இவற்றையெல்லாம் அறிதல், ஆக்கல், பகிர்தல் என்ற அடிபபடையில் "திசைகள்" இயக்கம் கருத்தில் கொண்டு இயங்கி வருகிறது.
5.00 ரூபாய்
சென்ற 2004 ஆம் ஆண்டின் உலக மகளிர்தினத்தையொட்டி முழுவதுமே பெண் கவிஞர்கள் பங்கு பற்றிய நிகழ்ச்சியாகக் கொண்டாடியது. இவ்வாண்டு மூன்று பெண் படைப்பாளிகளையும் அவர்களின் நூல்களையும் பாராட்டிக் கெளர விப்பதில் மகிழ்ச்சியடைகிறது. அவ்வாறு பாராட்டப்படுபவர்களில் தமிழ் நாட்டின் எல்லைக்கும் அப்பால், கடல் கடந்து இலங்கையைச் சேர்ந்த பிரபல பெண் எழுத்= தாளரான பத்மா சோமகாந்தனை அழைத்து இங்கு பாராட் டக்சுடிய வாய்ப்புக் கிடைத்திருப்பது எமக்குப்பெருமகிழ்ச்சி தருகிறது.
அத்துடன் அந்தனிஜிவா தொகுத்த இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதை களைக் கொண்ட "அம்மா"
தொடர்ச்சி பக்கம்7ல்
ஜெயகாந்துறுக்கு ஞானபீட விருது
- நவீன தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளரும் மிகச் சிறந்த படைப்பாளியும் சிந்தனையாளருமான த. ஜெயகாந்தன் (71) 2002-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதுத்துக்குத்
sa
தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது பெறும் அவருக்கு ரூ 5 லட்சம் ரொக்கம், பாராட்டிதழ், வெண்கலச் சிலை ஆகியவை பரிசாக வழங்கப்படும்.
1975 ஆம் ஆண்டில் "சித்திரப்பாவை" நாவலுக்காக எழுத்தாளர் அகிலனுக்கு இவ் விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு ஞானபீட விருது பெறும் இரண்டாவது தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் என்பது குறிப் பிடத்தக்கது,
ஞான பீட விருதுக்கான தேர்வுக் குழுக்கூட்டம் தலைவர் டாக்டர் எல்.எம். சாங்வி தலைமையில் தில்லியில் நடந்தது.
தொடர்ச்சி பக்கம்5ல்

Page 2
ஏப்ரல் 2005
கொழும்பில் 60-70 களில் தமிழ் நாடகங்கள் என்பது வாரந்தோறும் இரண்டுக்குக் குறையாமல்,
கொட்டாஞ்சேனை சென் பெனடிக்ஸ், மேட்டுத் தெரு கமலாமோடி மண்டபம், பஞ்சிகாவத்தை மத்திய பாடசாலை, மாநகர சபுை மேல் மாடி, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபம், பொரளை எம்பீன் என பரபரப்பாக நாடக நிகழ்வுகள்.
அந்த 60 ல் என் வயது 23 அப்பொழுது தான் நாடகத்துறை ஆர்வம் விஸ்வரூபம் எடுத்திருந்தது.
அதே சமயத்தில் ஆங்கிலத் திரைப்படங்களுக்குக் கூட்டிப் போகிற பழக்கத்தை மலையகத்தின் முத்தான எழுத்தாளர் என். எஸ். எம். ராமையா, ரெயின்போ ஆர். கனகரத்தினம் ஆகியோர் கொண்டிருந்தனர்.
அந்த வகையில் "டயல் "எம்" போர். மர்டர்" லிபர்டியில் பார்த்தேன்.
அல்பிரட் ஹிட்ச்சாக் என்ற ஒரு டைரக்டர் நடிக நடிகைகளை நம்பாமல் ஜடப் பொருட்களையும் பெரிதாக நினைத்து தொலைபேசி ஜன்னல் திரைச்சீலை - சாவி - கதவு கத்தரிக்கோல் இவற்றை வைத்துக் கொண்டு துப்பறியும் கொலைப் படமொன்றைப் பிடித்திருந்தார்.
கொலைக் கதை என்ற போதிலும், மனிதனின் மதிநுட்பங்களை விவரிப்பதாயும், இயற்கை நியதிகளுடன் மனிதன் போராடி போட்டியிட்டு
எவ்வாறு தோற்றுப் போகிறான் என்பதை விளக்கும் ஒரு சமூகப் படமாகவும் அமைந்திருந்தது.
"புதுமை" செய்ய வேண்டும் என வெறி கொண்டிருந்த நான் "டயல் "எம்"மைத் தமிழ் மேடைக்குக் கொண்டுவரும் கனவில் மிதந்தேன்.
அப்பொழுது என் மூலமாக இலங்கை வானொலிக்குள் அடியெடுத்துப் புகழுடனிருந்த எஸ். எம்.ஏ. ஜப்பார், முஸ்லிம் நிகழ்ச்சிநாடக ஒலிபரப்புகளில் கொடி கட்டிப்பறந்த சி.பீ.எம். காசிம் இருவருடனும் "டயல் "எம்"மைத் தமிழில் கொண்டு வரும் முயற்சியைப் பற்றிப் பல இரவுகள் விவாதித்தேன்.
"அஞ்சவேண்டியதில்லை. நல்ல விஷயம் தெரிந்த ஒருவரிடம் ஒப்படைத்துத் தயாரிப்
கலாபூஷணம்
போம்" என்ற முனைப்புடன் அப்பொழுது கொழும்பு ஸாஹி. ராவில் ஆசிரியராகவிருந்த கலாநிதி கா. சிவத்தம்பி அவர்களை அணுகினோம். ஆனால் துரதிஷ்டம்! எங்களுடைய முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் கரங்குவித்து வணங்கி ஆசி கூறிய திரு. சிவத்தம்பி அவர்களுக்குத் தாங்கமுடியாத வேலைப்பளுவினால் நெறியாள். கைப் பொறுப்பை ஏற்க முடியாது போயிற்று. ஆரம்பித்து விட்ட பிறகு என்ன செய்வது? நாங்கள் மூவருமே எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டோம்.
"புதுமை அரங்கு" என்ற நாடகக்குழு பிறந்தது. மர்மக்கதை மன்னன், "கல் கண்டு தமிழ்வாணன் வாழ்த்துக்கூறி கைப்பட கடிதம் அனுப்பி எங்களைச் சிலிர்க்கச் செய்தார்.
1960 ஆண்டு பெப்ரவரி 27ம் நாள், கறுவாக்காட்டு லயனல் வெண்ட் தியேட்டரில் புதிய வரலாறு பதியப் பெற்றது. ஓர் ஆங்கில அரங்கில் தமிழ்நாடக மொன்று மேடையேற வாய்ப்பு
 
 

கொடுக்கப்பட்டது. அடுத்த நாளும் அது தொடர்ந்தது.
ஒரே ஸெட் அமைப்புமுறையில் தமிழ் நாடகங்கள் தமிழ் நாட்டில் கூட பரீட்சார்த்தமாகவேனும் அரங்கேறாத நிலையில் "கற்றுக்குட்டிகள்" மூவர் சேர்ந்து இலங்கையில் செய்தோம்!
"கல்கி" சஞ்சிகையில் விமர்சகர் "சோமன்" கூட தமிழக நாடக சபாவினரிடம் குறைபட்டிருந்த வேளை அது!
நாமோ முந்திக் கொண்டோம்! டைரக்டர் கே. பாலசந்தர், எடிட்டர் பி. லெனின் போன்றோரால் "சதுரங்கம்" முதலிய நாடகங்கள் எட்டிப்பார்த்தது நமது முயற்சிக்குப் பின்தான்.
இலங்கையின் g560Ꭷ6u சிறந்த இலக்கிய விமர்சகரான
கவிஞராகவும் தான்தோன்றிக்
மானா மக்கீன்
கவிராயர் அருமையான (சில்லையூர் செல்வராசன்) "வீரகேசரி"யில், இப்போதைய 'தினக்குரல்" ஆலோசகர் திரு. ஈ. வி. டேவிட்ராஜ் நடத்திய கலைப்பக்கத்தில் பதித்திருந்த பல வரிகளுள் சில இங்கே தகவலுக்காக "இலங்கையில் தமிழ் நாடக அபிமானிகளின் நாடித்துடிப்பைப் பிடித்துப்பார்த்துப்
பழக்கப்பட்டவர்கள், "இந்த
நாடகம் எடுபடுவது சிரமந்தான்" என்று எண்ணியிருப்பார்கள். ஆனால் நாடகம் முடிவடைந்ததும், இந்த எண்ணத்தை அடியோடு மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. உண்மையில் குழிவிழுந்த பழைய பாதையின் சுவட்டிலிருந்து விலகி, இலங்கைத் தமிழ் நாடக இரசிகர்களுக்குப் பழக்கப்படாத கதைக்கருவைக் கொண்ட (PCB நாடகத்தை, நடிப்புத் திறமையாலேயே முற்றிலும் இரசிகரஞ்சகமாக்கிவிட்டார்களென்று சொன்னால் புதுமை அரங்கின. ருக்கு இது ஒரு சாதனையே தான். இலங்கையில் தமிழ் நாடகங்கள் நடைபெற்று வந்த
தோரணையில் நிச்சயமாக இது ஒரு திருப்பம்,
இப்படி சில்லையூர் செல்வராசன் குறித்த குறிப்பு நான் பெற்ற "கலா பூஷணத்தை" விடப் பெரியது!
இந்த "டயல் எம்" - 1960, ஏப்ரல் 17 லில் வை எம் பீஏ மண்டபத்தில் மறுபடி அரங்கேறி 1962 - டிசம்பரில் ஹவ்லொக் லும்பினியில் சிங்கள வடிவமானது.
பின்னர், பத்தாண்டுகள் கழித்து சகோதரர் அந்தணி ஜீவா அவர்களது இடைவிடா உந்துதலின் காரணமாக அவரது "லிட்டில் ஸ்டேஜ்" மூலமாக 1971ல் நான்காவது தடவையாக மேடையேற்றினேன்.
அத்தோடு என்னை ン*
"லிட்டில் ஸ்டேஸ்" குழுவிசிே தலைவராக்கினார். மேலும் அவரது "ஆஸ்தான கலைஞர்" அமரர் ரீசங்கரை "டயல் எம்" மின் துப்பறியும் சிஐடி இன்ஸ்பெக்டராக்கி அவரது நடிப்புக்குப் புதிய பரிமாணம் கொடுத்தேன்.
மற்றும் அந்தனி ஜீவா கண்டெடுத்த சுசில் குமார் (இப்பொழுது லண்டனில்) இந் நாடகத்தின் மூலம் சரியாக அடையாளம் காணப்பட்டார். ஹிலேரியன் பெர்ணான்டோ என்ற மற்றொரு திறமைசாலியும் ஜொலிப்பாய் ஜொலித்தார்.
இதேபோல, மறைந்த لے۔
குமார் அதுவரையில் ஹிரிே வாக கலைச்செல்வன் நாடகங்களில் சக்கை போடு போட்டவர் எனக்காகவும் அந்தணி. ஜீவாவுக்காகவும் "கொலைகாரனாக மாறினார். (வில்லன்!). இப்படி பற்பல மலரும் நினைவு
இறுதியாக இன்னும் இருவரைக் குறிப்பிட்டாக வேண்டும். அது தங்கவேலாயுதம், போல் கிறிஸ்டி! இவ்விருவரும் திரைக்குப் பின்னால் நின்று, "டயல் எம் மின் மேடையேற்றத்தை வெற்றி கரமாக்கி இன்னும் என் இனியவர்களாக இருக்கிறார்கள்.
இனி, ஐந்தாவது அரங்கேற்றம் உண்டா? அந்தக் கலைத் தாய்க்கே வெளிச்சம்!

Page 3
)
உலகத் தமிழ் நாட
கலைமாமணி வி.கே.டி.
9索
ĝ0 — லகத்த்மிழ் நாடக விழாவினை அடுத்த ஆண்டு ஜன. வரியில் சென்னையில் நடத்த உள்ளேன். அதற்கான பணிகளை இப்பொழுது இருந்து செயற்படுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறேன்."
இவ்வாறு மதுரா டிரவல்ஸ் அதிபரும், நாடகக் கலைஞருமான வி.கே.டி. பாலன் தனது மாருதி காரை ஒட்டியபடி சொல்கிறார்.
U நாங்கள் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முரளிதரன் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வி.கே.டி. பாலனின் காரில் பயணமாகிறோம். அரு
கில் புகழ்பூத்த கலைஞர் சாத்
தான் குளம் அப்துல் ஜபார் அமர்ந்திருக்கிறார்.
மதுரா டிரவல்ஸ் அதிபரும், ஒரு காலத்தில் எழுபதுகளில், எண்பதுகளில் கொழும்பு நாடக மேடையில் தனித்துவமிக்க கலைஞராக நம்பிக்கை நட்சத்திரமாக வி.கே.டி.பாலன் திகழ்ந்தார்.
கொழும்பில் வி.கே.டி.
ஆலன் வாழ்ந்த காலத்தில்
தான் நடிக்கும் நாடகத்திற்கு மாத்திரமின்றி, ஏனைய கலைஞர்களின் தயாரிப்புக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
நான் எழுதி நெறிப்படுத்திய "சாத்தான் வேதம் ஒதுகிறது" என்ற நாடகத்தின் தயாரிப்பாளர் வி.கே.டி பாலன்.
நான் நண்பர் வி.கே.டி. பால னிடம் சென்னையில் நடத்த விருக்கும் நாடக விழாவை நடத்த விரும்புகிறீர்களே. அதுப்பற்றி சொல்லுங்களேன். என்றேன்.
கலைஞர் வி.கே.டி. பாலன் காரை ஓட்டியபடி. "என்ன சொல்வதா? உலகத் தமிழ் நாடக விழாவை சென்னையில்
நடத்தவுள்ளேன். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன" என்று பதில் வந்தது. விளக்கமாக சொல்லுங்கள் என்று துண்டினோம்.
வி.கே.டி. uтарсії
"அடுத்த வருடம் சென்னையில் உலகத்தமிழ் நாடக விழாவை முதல் தடவையாக நடத்த இருக்கிறேன். தமிழக, இலங்கை நாடகக் கலைஞர்கள் மட்டுமின்றி பிஜி, சிங்கப்பூர், மலேசியா, தென்னாபிரிக்கா, மொறிவழியஸ் போன்ற தமிழர் வாழும் நாடுகளில் உள்ள தமிழ் நாடகக் கலைஞர்களும் இவ் விழாவில் கலந்து கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து சென்று ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா போன்ற உலக நாடுகளில் பரந்து வாழும் தமிழர்களும் இந் நாடக விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற உலகளாவிய எண்ணத்துடனேயே நாடக விழாவை ஏற்பாடு செய்து வருகிறேன். சென்னையில் கோலாகலமாக இவ்விழா நடைபெறும், சிறந்த நாடகம், சிறந்த நாடகப்பிரதி, சிறந்த நடிகர், நடிகை, ஒப்பனை எனப் பல பிரிவுகளில் தெரிவுகள் நடத்தப்பட்டு கெளரவம் செய்யப்படும் " என்று தனது
 
 
 
 

க விழா
U/TGGof
திட்டத்தை விகேடியார்.
விவரித்தார்
"இவ்விழா ஒரு முறை மட்டும் நடத்தப்பட்டு மறக்கப்படுவதற்காக ஏற்பாடு செய்யப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு கால் எல்லைக்குள் உலகின் வெவ்வேறு நாடுகளில் உலகத் தமிழ் நாடக விழா தொடர்ந்து நடத்தப்படவுள்ளது என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன்" என்றும் சொன்னார்
பாலன். -
கலைஞர் வி.கே.டி. பாலன் சொல்வதை ஆமோதிப்பது போல சாத்தான் குளம் அப்துல் ஜபார்.
"சென்னையில் 历6DL பெறும் நாடக விழாவில் இலங்கை கலைஞர்களை பங்குபற்றும் படி நீங்கள் செயல்பட வேண்டும். என்றார்
மேலும், கலைஞர் வி.கே.டி. பாலன் தொடர்கிறார்.
"சினிமாப் படங்களைப் போல நாடகங்கள் வெறும் பொழுதுபோக்கு சாதனம் அல்ல. அவை ஒரு நாட்டின், சமூகத்தின், கலை, கலாசாரத்தின் ஏன் வரலாற்றின் பதிவுகள் என்பதே சரி.
ஏப்ரல் 2005
நாடகம் என்றால் அது சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடகங்களாக இருக்க வேண்டும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விட்டோம். ஒரு நாட்டில் நாடகக்கலை உறுதியாக நிலைத்திருக்குமானால் அது-அந்நாட்டின் கலை, கலாசார, பண்பாட்டின் இருப்பையும் வளர்ச்சியையும் உறுதி செய்வதாக ஏன் காவல்நாயாக இருக்கும் ஏன்பதே சரி.
இன்று தமிழ் மொழியும் இலக்கியமும், கலாசாரமும் பல சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
எனவே உலகத் தமிழரின் தாயகமான தமிழகத்தில் உலகத்தமிழ்நாடக விழாவைநடத்துவதற்கும் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு அதை இயக்குவதற்கும் முன்வந்தேன். இதற்கு இலங்கை நாடகக் கலைஞர்கள் ஆதரவு தரவேண்டும்" என்று அவர் விளக்கம் அளித்து வேண்டுகோளையும் முன்வைத்தார்.
இந்நாடக விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் தமது விவரங்களைத் தெரிவித்து பதிவு செய்து கொள்ள விரும்பினால் வி.கே.டி. பாலன் மதுரா டிரவல்ஸ் சர்விஸ் லிட், 11-3 காந்தி இர்வின் ரோட், இம்பாலா கம்ப்ளக்ஸ், எழும்பூர், சென்னை 600 008. தமிழ் நாடு என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.
நாடகக் கலைஞர் திருக்கோணமலை
|திற்கு ரூபா ஐம்பதி னாயிரமும், விருதும்
கலாசார அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் வழங்கினார். இதே தினத்தில் சகோதர சிங்கள கலைஞர் குணதிலகா அவர்கட்கு விருதும் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

Page 4
ஏப்ரல் 2005
என். செல்வராஜா
நூலகவியலாளர்.
பூவரசம் வேலியும் புலுனிக்
குஞ்சுகளும்" என்ற கவிதைத் தொகுதி அண்மையில் வெளிவந்திருக்கிறது. தமிழகத்து
ஒவியர் ட்ரொஸ்கி மருது 2003 இல் வரைந்த புதுவை இரத்தின்துரை அவர்களின் கோட்டுச்சித்தரிரத்தை அட்டைப் படமாகக் கொண்டுள்ள இந் நூலின் உள்ளேயும் ஆங்காங்கே ட்ரொஸ்கி மருது அவர்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன.
கவிஞர் புதுவை இரத்தின. துரை அவர்கள் மிக ஆழ்ந்த கருத்துச் செறிவோடு இந் நூலின் தலைப்பைத் தெரிவு செய்துள்ளார். இக்கவிதைத் தொகுதியின் உள்ளடக் - கத்தை நூலின் தலைப்பு துல்லியமாக நறுக்குத்தெறித்தாற் போல விளக்கியிருக்கின்றது. பனைமரம் எவ்வாறு யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பிரதியீடாக அமைகின்றதோ, பூவரசும் புலுனிப்பறவைகளும் அவ்வாறே எமது தாயகத்தின் மிக முக்கியமான பிரதியீடுகளாக அமைகின்றன. பூவரசு எமது மக்களின் வளவுகளின் எல்லைக்காவலாக பூவரசம் வேலிகளாக இருக்கின்றன. காலம்காலமாக கிடுகு வேலிப் பாரம்பரியத்தில் ஊறித்திழைத்த எமது மக்களின் காணி எல்லைகளை புலப்படுத்தி நிற்பவை பூவரசம்வீேலிகள். ーlól போலவே புலுணிகள் எக்காலத்திலும் புலம் பெயர்ந்து பறந்தோடாது எமது மண்ணிலேயே தங்கி வாழ்கின்றன. இது ஒரு வகையில் மண்ணோடிணைந்த எமது மண்ணிலேயே தங்கி வாழ்கின்றன. இது ஒரு வகையில் மண்ணோடிணைந்த எமது மக்களையும், அவர்களைக் காக்கின்ற போராளிகளையும் உருவகப் படுத் துகளின்றன. புதுவை இரத்தினதுரையின் கவிதைகளும் தன் மண்ணையும் மக்களையும் மண்ணைக் காக்கும் போராளிகளையும்
பாடும் மண்ணின் கவிதைகளாகவே அமைந்திருப்பதால் இக் கவிதைத் தொகுதிக்கு வழங்கப்பட்ட பூவரசம்வேலியும் புலுனிக் குஞ்சுகளும் என்ற தலைப்பு கச்சிதமாகப் பொருந்துகின்றது.
- வெளிச்சம் இதழில் கார்த்திகை 1993 இல் வெளிவந்த "தூரப்பறந்து விட்ட துணிவுப் பறவைகளே" என்ற கவிதையில் தொடங்கி, வெளிச்சம்
சஞ்சிகையின் மாசி 2005 இல் வெளியான "இருந்ததும் இல்லையென்றானதும்" என்ற கவிதை வரை 12 ஆண்டுகளில் கவிஞர் புதுவை இயற்றிய மொத்தம் 155 கவிதைகள் இத் தொகுப்பில் இடம் பிடித்திருக்கின்றன.
இந்நூலையும் நூலாசிரியரையும், நூலாசிரியரின் கவித்துவ வளர்ச்சிப்படிநிலைகளை. யும் கவிஞரின் இலக்கிய வர. லாற்றினையும் ஆழமாக அறிமுகம் செய்வதாக அமைந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி
 
 

அவர்களின் 28 பக்கங்கள் கொண்ட விரிவான விமர்சனக் கட்டுரை இந்நூலுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளது. இக் கட்டுரையின் வாசிப்பின் பின்னதான பகைப்பலத்தில் நின்று புதுவையின் 155 கவிதைகளையும் சுவைக்கும் போது கவிதைகளை ஆழமாகவும் அர்த்தபுஷ்டியுடனும் சுவைக்க முடிகின்றது. ஒரு நூலுக்கு முன்னுரையின் அவசியம் பற்றிய
தேவை பற்றியதொரு கருத்தை ஆணித்தரமாகப் பதியவைப்பதற்கு இந்நூல் எதிர்காலத்தில் உதாரணமாகக் கொள்ளப்படலாம். அவ்வளவு துரம் "பூவரசம் வேலி" என்ற பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் திறனாய்வுரை அமைந்துள்ளது. அவரது உரையில் எனது கருத்தைக் கவர்ந்த முக்கியமான இரு விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
முதலாவது, இந்நூலில் 155 கவிதைகளுள்ளும் சேர்க்
கப்படாத இரு பாடல்களை, புதுவை இரத்தினதுரை என்ற கவிஞனைப் பற்றிய தேடலை தாயகத்தின் போராட்ட வாழ்வியலில் பின்னிப்பிணைந்து நின்ற எம் மக்கள் மனத்தில் எழவைத்த அந்த ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டை பேராசிரியர் அவர்கள் தேடி எடுத்துத் தனது கட்டுரையில் சேர்த்திருக்கின்றார்.
வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் - கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ff/D தள்ளிவலை ஏற்றிவன்எ7ம் போகும் - மின்ே அள்ளிவர நீண்டநேரம் ஆகும் என்ற பல்லவியுடன் தொடங்கி,
"ஊருறங்கும் ச7மத்தில்ே //09/900 ബ്രക്രക്രിബ) க77ருட்டில் பட கெடுத்துப் பே7வே7ம் - நேவி
கண்டு விட்டால் கடலில்
ந//ங்கள் சாவோ"
என்று சரணமாகத் தொடரும் ஒரு பாடல் பல நேயர்களின் மனதில் நிலை கொண்டிருக்கக்கூடும். இப்பாடல் பற்றிய மற்றொரு செய்தியும் பின்னர் நான் சொல்லவிருக்கின்றேன்.
பேராசிரியர் தன்னுரையில் தந்திருக்கும் மற்றொரு பாடல்,
இந்த மணன் எங்களின் சொந்தமனன் - இதன் எல்லைகள் மறிய7ர் வந்தவன் நிர்வள7ம் உண்டுநிலவளம் உண்டு நிம்மதி ஒன்றுதான் இல்லை" என்ற பல்லவியுடன் தொடங்கும் வீரப்பாடல், ஈழவிடுதலைப் போராட்டம் உத்வேகம் கொண்ட வேளையில் சாதாரண மக்களும் உச்சரித்த பாடல்கள் இவை. புதுவை இரத்தின. துரையை இந்தப்பாடல்களின் வரிகளிலே தான் எம் மக்கள் காணத் தொடங்கினார்கள் என்று நம்புகின்றேன்.
இவ்விரு பாடல்களும் பேரா சிரியரின் முன்னுரையில் அவரால் சேர்க்கப்பட்டிராவிட்டால், "பூவரசம் வேலியும் புலுணிக் குஞ்சுகளும்" என்ற புதுவையின் கவிதைத் தொகுதி முழுமை

Page 5
பெற்றிருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதாகும்.
இரண்டாவதாக இம் முன்னுரையிலிருந்து நான் கண்டெடுத்த மற்றொரு விடயம், கவிஞர் புதுவை இரத்தினதுரையின் இசைப் பாடல்வரிகளில் சாதாரண பொதுமகன் எவ்வாறு ஆகர்ஷிக்கப்படுகின்றான் என்பதற்கு கண்கண்ட சாட்சியமாக விளங்கும் ஒரு சம்பவமாகும்.
முன்னுரையில் பேராசிரியர் குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை அப்படியே தருகின்றேன்.
"1993ம் ஆண்டில் அதிகாலை வேளையில் நான்கு _மணியளவில் யாழ்ப்பாணத்தில் வியாபாரத்திற்காகச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் திருநெல்வேலிச் சந்தியில் இறங்கித் தேனீ குடித்து - சுருட்டுப்பற்றவைத்துக்கொண்டு குளிருக்காக, தலையையும் காதையும் மறைத்துத் தான் போட்டிருந்த போர்வையுடன் சைக்கிளில் ஏறிய நேரம், எங்கிருந்தோ "வெள்ளிநிலா
விளக்கேற்றும் நேரம்" என்ற
புதுவையின் பாடல் ஒலிபரப்பாகியது. பாடலைக் கேட்டதும் சைக்கிளில் அப்படியே நின்றபடி அப்பாடலை ரசிக்கக் கேட்டதை என் கண்ணால் ) கண்டேன். உண்மையில் .ெ இப்பாடலை எழுதியவர் யார் என்ற கேள்வி அந்த மக்கள் நிலையிலேயே தொடங்கியது" இவ்வாறு பேராசிரியர் எழுதிய வரிகள் புதுவை இரத்தினதுரை எப்படி மக்கள் கவி. ஞராக படிப்படியாக மலர்ந்தார் என்பதைக் காட்டி நிற்கின்றது.
இந்நூலில் புலுனிக்குஞ்சு என்ற தலைப்பில் கவிஞர் அவர்கள் தனது கருத்துக்களையும் சுருக்கமாக இரண்டு பக்கங்களில் பதிவு செய்திருக்கின்றார். அதில் சில வரிகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
"காலநதிக்கரையில் கால் நனைத்தவாறு நீள நடக்கின்றேன். கரையோரம் என் சுவடுகள் கிடக்கின்றன. கவிதை
களாக, நாளாந்தமான புதிய
விதிகளின் பிறப்பில் என்
கவிதைகளிலும் வேண்டியன நிலைத்தும், வேண்டாதன அழிந்தும்போக எஞ்சியவற்றில் வாழ்வேன். நான் என் வாழ்வும் 616öt எழுத்துமே நான் உலகுக்குச் சொல்லும் செய்தி. இவை இரண்டையும் மீறி என்னைப் பிரகடனப்படுத்துவது தேவையற்றது. மனுக்குலத்தின், என்னினத்தின், நான் வாழும் காலத்தின் மகிழ்ச்சி, துயரம், வெற்றி, தோல்வி, வாழ்வு இவை தரவிர, தனிப்பட்ட வாழ்வும், உணர்வும் எனக்கில்லை. இவற்றைப் பாடி நகர்கிறது என் கவி நதி."
இப்படியாகத் தன் முன்னுரையைத் தொடர்கிறார் கவி. ஞர் புதுவை இரத்தினதுரை
95) T356T.
1970 முதல் கவிதை நூல்களை இவர் வெளியிட்டிருக்கின்றார். ஆறு கவிதை நூல்களாகவும் இரண்டு இறுவெட்டுத் தொகுதிகளாகவும் இவை வெளிவந்துள்ளன.
"வானம் சிவக்கிறது" என்ற இவரது முதல் கவிதைத் தொகுதி 1970 இல் வெளியானது. 1976 இல் "ஒரு தோழனின் காதல் கடிதம்" என்ற தொகுப்பும் 1980 இல் "இரத்த புஷ்பங்கள்" என்ற தொகுப்பும் வெளியாகின. 1989 இலும் 1997 இலும் "களத்தில் மலர்ந்தவை" என்ற இவரது பாடல்களின் இசைவடிவம் இரண்டு தொகுதிகளில் வெளியாகின. இதன் இடைப்பட்ட காலத்தில் தான் 1993 இல் "நினைவழியா நாட்கள்" என்ற பிரபல்யமான கவிதைத் தொகுதி நூலுருவில் வெளியாகியிருந்தது.
2003 இல் "வியாசனின் உலைக் களம்" வெளிவந்திருந்தது. விடுதலைப்புலிகள் அதிகாரபூர்வ ஏட்டில் அவ்வப்போது வியாசர் என்ற புனைபெயரில் கவிஞர் புதுவை இரத்தினதுரை சமகால நிகழ்வுகள் பற்றி கவிதை எழுதி வந்திருக்கிறார். அந்தந்தக் காலங்களிலான சமூக அரசியல் நிலைமைகளையும் ஒரு
 

ஏப்ரல் 2005
கவிஞனின் அதன் மீதான பார்வையையும் தரிசிக்க வைக்கும் வகையில் உணர்வு வெளிப்பாடாக இந்தக் கவிதை வரிகள் உலைக்களம் என்ற கவிதைப் பகுதியில் இடம்பெற்றது. பாரதப் போரை வியாசர் எழுதியது போல எமது ஈழப்போர் பற்றிய பதிவுகளை அவ்வப்போது உடலைக் களத்தில் வியாசராக உருமாறித் தந்திருந்தாலும், வியாசராக கவிபாடுவது யார் என்ற செய்தி ஒரு பகிரங்க
இரகசியமாகவே அங்கு இருந்து வந்திருக்கின்றது என். பது உலைக் களம் நூலுக்கு தி.ச. வரதராஜன் என்ற வரதரின் வாழ்த்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்பொழுது 2005 இல் வெளியாகியுள்ள "பூவரசம் வேலியும் புலுணிக்குஞ்சுகளும்" என்ற கவிதைத் தொகுதி புதுவை இரத்தினதுரை அவர் களின் மிக அண்மைக்காலப் படைப்பாகும்.

Page 6
ஏப்ரல் 2005
முத்தமிழில் மூத்த தமிழ்நாட கம் பண்பாட்டின் பிரதிபலிப்பு seign ஒட்டுமொத்த நாட்டின் அகம், மக்களின் புறம், என்பவை பொதுவாகச் சொல்லப்படும்
விளக்கங்கள்- வியாக்கி
யானங்கள்.
இதில் எது உண்மை?
எல்லாமா, அல்லது ஏதாவது ஒன்று என்பது அவரவர் ரசனை, சிந்தனை அணுகுமுறை அறிவு ஜிவித்தனம் ஆகியவற்றைப் பொறுத்தது.
சிலருக்கு இது உயிர் வேறு சிலருக்கு இது பிழைப்பு இன்னும் சிலருக்கு இது பொழுது போக்கு மற்றும் சிலருக்கோ, இது வைத்தியமே செய்ய முடியாத பைத்தியம்
ஐம்பதுகளில் இத்தகைய நால்வகை மாந்தரும் இலங்கை எங்கும் வியாபித்திருந்தனர் என். பது "மலரும் நினைவு"களுக்கு மகிழ்வூட்டும்மகத்தான விஷயம்.
"சானா" சண்முக நாதன் "ரேடியோ மாமா" சரவணமுத்து பேரா: கா. சிவத்தம்பி எம்.எஸ். ரத்தினம், பெண்கலக் குரலோன் வி. சுந்தரலிங்கம், ஏரி. பொன்னுத்துறை மாஸ்டர் சோதிநாதன் மாஸ்டர், "மயிலு" சிவலிங்கம், பரிமளா தேவி விவேகானந்தா, திரா ஆறுமுகம், ஆனந்தி சூர்ய பிரகாஷ், என்று யாழ். சொல் வழக்கு நாடகங்களில் கொடி கட்டிப்பறந்த வானொலிநாடகக் கலைஞர்கள் ஒரு பக்கம்,
றி.எஸ். பிச்சையப்பா, GJITáFTuĚu (3 UT : frfl6mü), (33FTLDசுந்தரம், நான், கணபதி, தாசன் பர்னாந்து சி.பி.எம். காசிம், ஃபிலோமினா சொலமன், பஞ்ச பேர்ணம் லகூழ்மணன் ராஜேஸ்வரி சண்முகம் விசாலாட்சி ஹமித், ஜோசஃபின் புஷ்பம் சின்னையா சரசாம்பிகை சுப்பிரமணியன், வசந்தா அப்பாதுரை, வனிதா ஜோக்கிம், என்று இந்திய சொல் வழக்கு மற்றும் சரித்திர நாடகங்களில் முழுக்க, @p(gయేలేర్ வானொலியில் முத்திரை பதித்த கலைஞர்கள் இன்னொரு பக்கம்,
சாத்தான் குளம்
லடீஸ் வீரமணி, தாலிப், கலைச் செல்வன், விக்டர் கலை தாசன் என்று விரல் விட்டு எண் ணக்கூடிய மேடைக் கலைஞர்கள் வேறோர் பக்கம்,
இத்தனை பேர் தான் என்றில்லை. எத்தனையோ பேர் சட்டென்று நினைவில் வந்த பெயர்களை மாத்திரம் குறிப்பிட்டுள்.
இவர்கள் அனைவருமே நான் முன் சொன்ன வர்ணனைக்கு அப்படியே அச்சொட்டாக பொருந்தக் கூடியவர்கள்.
பல்கலைக்கழக கொழும்பு மற்றும் பேராதனை வளாகங்களின் பங்களிப்புகள் ஆண்டு தோறும் கொழும்பு மேடைகளை அலங்கரித்த கலா சிருஷ்டிகன் மேட்டுக் குடியினரான கலா ரசிகள்களுக்கு மட்டுமே தினிபோட்ட இவை பொது மக்கள் எனப்படுபவரிடமிருந்து சற்று தள்ளியே
 
 
 

நின்றன. மற்றபடி மேடை உத்திகள் முதலானவை இவற்றின் சிற ப்பு அம்சம் என்றால் மிகையல்ல.
வானொலி நடிகர்கள் மேடைக்கே லாயக்கில்லை. என்கிற ஒரு பொய்யால் புறம் தள்ளப்பட்டவர்கள். நான் ரொசாய்ரோ பீரிஸ், சோம சுந்தரம், தாசன் பெர்னான்டோ சி.பி. எம். காசிம், ராஜேஸ்வரி, விசாலாட்சி ஆனந்தி ஆகியோர் விதி விலக்கு.
லடீஸ், தாலிப் போன்றவர்கள், மிகையான நடிப்பையும், சிறப்பான வசன உச்சரிப்பையும், ஆர்ப்பாட்டமான அங்க அசைவுகளையும் மட்டுமே நம்பி மேடையை கலக்கியவர்கள் மேடை உத்திகள், அடிப்படை இலக்கணங்கள், ஆகியவை பற்றி இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்க்கும் கவலைப்பட்டதே கிடையது.
எனினும், புற்றிசல் போல நாடக மன்றங்கள் அவர்களுக்கு என்று ஒரு வட்டம் ஒரு கூட்டம்!! தென்னிந்திய பாணியில் புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை இவர்களுடையது!!!
லடீஸ் தன்னை இலங்கையின் "நடிகவேள்" என்று வர்ணித்துக் கொண்டதும்தாலிப் தன்னை இலங்கையின் சிவாஜி என்று அழைத்துக் கொண்டதும் சரியா, தவறு என்பது பிரச்சனையல்ல. அவர்களே "கான மயில்கள்" என்று தங்களை வர். ணித்துக் கொள்ள தகுதி படைத்தவர்களாக இருந்தும் பிறகு ஏன்தங்களை வான்கோழி களாக வர்ணித்துக் கொண்டார்கள் என்பது எனக்கு இன்று வரை புரியாத புதிர்.
மன்னார் எச்.எம். ஷரீஃப், எழுதிய "ஹிஜ்ரி 1500" மலையக எழுத்தாளர் என்.எஸ்.எம். ராமையா எழுதிய "ஒரு மின்னல்" மக்கின் தயாரித்த "டயல் எம். ஃ பார் மர்டர்" இவை மூன்றும் நான் இயக்கி பிரதான பாத்திரத்தில் நடித்த நாடகங்கள். "சானா" இயக்கி நான், ரேடியோ மாமா, காசிம், விசாலாட்சி ஹமித் ஏறி.
பொன்னுதுரை மாஸ்டர் சோதிநாதன் மாஸ்டர் ஆகியோர் நடித்த "பதியூர் ராணி" ரொசாய்ரோ பீரிஸ் இயக்கி நான் பிரதான பாத்திரத்தில் நடித்த "நிதியெல்லாம் நீயே" ஆகிய நாடகங்கள் உயர்வான இயல்பான நடிப்புக்கும், சிறப்பான கனகச்சிதமான, உயர் தொழில் நுட்ப மேடை உத்திகளுக்கு இலக்கணம் வகுத்தவை.
இலங்கையர் கோனால் எழுதப்பட்டு ராஜேஸ்வரியின் கணவர்சி, சண்முகத்தால்தத்து எடுக்கப்பட்ட "லண்டன் கந்தையர் "சானா" எனப்படும் சாகா வரம்பெற்ற கலைஞனின் வெற்றி வாகனம், ஒப்பனை கிடையாது, உடை அலங்காரம் கிடையாது மேடை அமைப்புகள் கிடையாது.* மிக முக்கியமாக ஒத்திகை கிடையாது. எனினும் யாழ் குடா நாட்டிலும் கொழும்பிலும் மிக, மிக அதிகமாக மேடை ஏற்றப்பட்ட நாடகம் இதுவாகத்தானிருக்க வேண்டும்
யாழ் நகரமேயராக இருந்த அல்ஃப்ரட் துரையப்பா ஏற்பாட்டில்யாழ்நகரமண்டபத்தில்பகல் மேட்னி மாலை, இரவு காட்சிகள் என்று ஒரேநாளில் மூன்றுமுறை மேடை யேற்றப்பட்ட நாடகம் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும். அது ஒரு சாதனை.
இன்றைய இளைய தலை
முறையினருக்கு ஒன்று சொல்வேன்.நீங்கள்நாடகத்துறையில் சில-பல புதுமைகளை நிகழ்த்தக்கூடும். பற்பல வெற்றிகள் உங்களை வந்தடையலாம். நிதானம் இழந்து விடாதீர்கள். உங்களை விட அய்யனான ஜாம்பவான்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை எந்தக் காலத்திலும் எந்தக் கட்டத்திலும் மறந்து விடாதீர்கள் - அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
மாறாக அவர்களை முந்தவேண்டும். என்று எண்ணுங்கள். தப்பில்லை. அடக்கம் அமரருள் உய்க்கும் என்கிற அணுகுமுறை வெற்றிகளை உங்கள் கரங்களில் கொண்டு வந்து சேர்க்கும் நம்புங்கள்.
(9

Page 7
盏
1ம் பக்கத் தொடர்ச்சி
Geraireme Tuileið SaorŘEMES எழுத்தாளர்களுக்கு.
தொகுதியையும் இவ் விழாவில் அறிமுகம் செய்ய கிடைத்தது சிறப்பம்சமாகும்.
பிரபல எழுத்தாளர் திலகவதி ஐ.பி.எஸ். பேசுகையில், பெண் கல்வி கற்றால் விடுதலை கிடைத்து விடுமென பாரதி காலத்திலிருந்தே பேசப்பட்டது. கல்வி கற்ற பின்னும் பெண்ணுக்கு விடுதலை கிடைக்கவில்லை. ஆணாதிக்க விலங்கு கல்வி கற்ற பெண்களால் கூட இன்னும் நொருக்கப்படவில்லை என்பதை ஒரு உயர் பொலிஸ் அதிகாரி என்ற வகையில் என். 4 ல் அறிய முடிகிறது. பெண்கள் படித்து விட்டால் மட்டும் சகல சுதந்திரங்களையும் எய்தி விட்டார்கள் என்று கூற முடியாதுள்ளது. இன்னும் தாண்ட வேண்டிய தடைக்கற்கள் நிறையவேஉண்டு. அந்தச் சிந்தனை
யோட்டத்தைக் கொண்ட இம்
لجنة
மூன்று பெண் படைப்பாளிகளை இனங் கண்டு இங்கு பாராட்டுவதற்காக மாலனுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன். சர்வதேச மகளிர் தினத்தை வெறும் சடங்காகக் கொண்டாடாமல், இது போன்ற பயனுள்ள முறை1பில் நினைவு கூர்தல் மிகுந்த
பனைத் தரும் என்பதில் வேறு கிருத்துக்கு இடமில்லை கூறினார்.
பிரபல நாவவலாசிரியர் பொன்னீலன் தமது உரையில், இலக்கியத் தம்பதியரான சோமகாந்தனும், திருமதி பத்மாவும் சிறந்த எழுத்தாளர்கள். நான் சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்குச் சென்றிருந்த போது அவர்களின் இலக்கிய
எனக்
ஆளுமையையும் இலக்கிய வளர்ச்சிக்கான செயற்பாடுகளையும் கண்டு வியந்து போனேன்.
கவிஞர் திலகபாமாவின் கவிதை அவரது ஆற்றலையும் ஆ ஞ  ைம  ைய யு ம' வெளிப்படுத்துகிறது.
மூத்த நாவலாசிரியரான செ. கணேசலிங்கன் உரையாற்றுகையில், பத்மா சோமகாந்தன் தமது மாணவப் பருவத்திலேயே எழுத்துலகப் பிரவேசஞ் செய்து, இன்று தமிழ் கூறும் நல்லுலகம் எங்கணும் தமது ஆக்கங்களினுடாக மிகவும் கணிப்புக்குரிய எழுத்தாளாராக விளங்குபவர். இவரின் சிறு கதைத் தொகுதிகளான கடவுளின் பூக்கள் புதிய வார்ப்புகள், வேள்வி மலர் ஆகியவற்றிலுள்ள கதைகளில் அநேகமானவை பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவை பெண்களின் அவலங்களைச் சித்திரிப்பவை. இப் படைப்புகள் பலராலும் பாராட்டப் பெற்றிருப்பதுடன், தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பரிசுகளையும் பெற்றுள்ளன. இலங்கையிலுள்ள பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி வரும் அவர் சென்ற ஆண்டில் வெளியிட்டுள்ள "ஈழத்து மாண்புறு மகளிர்" என நூலில், இலங்கையில் பல்வேறு துறைகளில் முன்னணியில் விளங்கும் 24 பெண்மணிகள் புரிந்து வரும் பணிகளை மிக அற்புதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். என்றார்.
மூத்த படைப்பாளர் பா. செயய்பிரகாசம், அந்தனி ஜீவா.
RM
$ نکعحو
ృహో لاکلام
R. W. G.
Manufactures of PVC, Pipe Fit
Water Conduits Drainag.
32O/1, 1 St Floor, Old
Tel: 2445099, 24

ஏப்ரல் 2005 இாடுந்து
வினால் தொகுக்கப்பட்ட ஈழத்தின் 25 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்ட "அம்மா" என்ற நூலை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையில், ஈழத்தமிழர்கள் கொடிய யுத்தத்தின் அவலங்களையும், இழப்புக்களையும் அனுபவித்தவர்கள். ஈழத்தின் எழுத்தாளர்கள் அவற்றை தமது படைப்புகளில் உணர்ச்சிகரமாகப் பதிவு செய்துள்ளனர். இந்நூலில் உள்ள பத்மா சோமகாந்தனின் சிறுகதை அவ்வாறானதொன்று. யுத்த அரக்கனுக்கு தனது கணவனைப் பலி கொடுத்து விட்டு, பிள்ளைகளுடன் புலம் பெயர்வதற்காக விமா
அறிமுக விழாவில் மதுரா டிராவல்ஸ் அதிபர் வி.கே.டி பாலன் புரவலம் ஹாசிம் உமரிடம் முதல் பிரதியை வழங்குகிறார் |படத்தில் நூலின் தொகுப்பாசிரியர் அந்தனி ஜீவா, கலைஞர்
அப்துல் ஜப்பார் ஆகியோர் காணப்படுகின்றனர்.
னம் ஏறும் ஒரு பெண்ணின் சோகத்தை அவர் அற்புதமாகச் சிறு கதையாக்கியுள்ளார். அக் கதையைப் படித்தபோது, சோகம் என் இதயத்தைத் தொட்டது எனக் குறிப்பிட்டாள்.
படைப் பாளிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார். கள். விழாவில் படைப்பாளி. களையும், உரையாற்ற வந்தவர்களை சிறப்பான முறையில் கவி தாயின் தமிழச்சி சுமதி கவிதை வரிகள் மூலம் அறிமுகப்படுத்தினார். பத்மா சோமகாந்தன், திலகபாமா, வைகைச் செல்வி, அந்தனி ஜீவா ஆகியோர் ஏற்புரை நிகழ்ச்சினார்கள்.
O
CENTRE
tings (Fanrication) Suppliers of P V.C. s & Rain Water Gutter Fittings. Moor Street, Colombo-12. 1329 19 Fax. 2432191

Page 8
Gilfigje; ISDit
கலைஞர் ஏ.ரகுநாதன்
1947) ஆண்டு ஜூன் மாதத்
தின் இறுதி நாட்கள், யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக்கல்லூரி இல்லப் போட்டிகள் சூடு பிடித்துக் கொண்டு வந்த
நேரம். விளையாட்டுப் போட்டி
கள் தவிர அனைத்தும் முடிவடைந்து இறுதியாக நாடகப் போட்டி நடைபெறும் நாள் ஜூலை மாதம் நான்காம் நாள். வெற்றிக்கொடியைக் கைப்பற்ற இறுதிப் புள்ளிகளைப் பெற நான்கு போட்டி நாடகங்கள்.
திருவிழாக்களைப் பார்த்து,
விட்டு, நாதஸ்வரக் கோஷ்டி போலவும், திரைப்படங்களைப் பார்த்துவிட்டு, அந்தப் பாணி வசனங்களை அமைத்து நாடகம் என்றும், அயலவர் வீட்டுத் திண்ணைகளில் அவன் அரங்கேறியிருப்பினும் ஒழுங்காக ஒரு மேடையில் திரளான மாணவர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் அவன் மேடையேறிய நாள்.
தமிழ் உணர்வுகள், தூய தமிழ்ப் பிரயோகம் சுடர்விட ஆரம்பித்த நாட்கள். தமிழ: கத்தில் பெரியாரும் அண்ணா
வும் தம்பிகளும் சமூகப் புரட்சி
செய்த காலம். பகுத்தறிவுப் பிரச்சாரம் அனலாகப் பற்றிக் கொண்ட வேளை.
கலைஞர் மு. கருணாநிதி எழுதிய "தூக்குமேடை" நாட கத்தில் தான் அன்று அவன் நடித்தான். அவனை மற்றவர். களுக்கு இனங்காட்டிய, இன்ன. மும் அவன் மன ஆழத்தில் அழியாமல் பதிந்துவிட்ட அந்த உரைநடை, கோழையான அந்தப் பாத்திரம், "ரத்தத்தைக் கண்டாலே எனக்கு மயக்கம்
வந்திடுமே சார்" என்று அவன்
பயத்துடனும், நயத்துடனும் உச்சரித்த பாங்கு. அவனைக் கலைத் துறையில் நிலைக்க விட்ட வார்த்தைகள். படுவேகமாகப் பேசும் அவனைப் பயங்காட்டி, மிதமாகப் பேசவைக்க, ஆசிரியர் எஸ்.ரி. சாறி அவர்கள் கையில் பிரம்புடன் பக்கத்தட்டியில் கண்ணாடிபோட்ட முகத்துடன் கடுப்பாக நின்ற தோரணை. நாடகம் முடிந்தது. அவனை நடிகன் என்றார்கள். பல நாட்கள் தொடர்ச்சியாக அவன் பேசிய வசனங்களைப் பேசி அவனை உயிர்ப்பித்தார். கள். அவனுள் மறைந்து கிடந்த தாகத்தை, தாக்கத்தை புஷ்பித்தார்கள்.
அந்த உணர்வுகள் - எப்படி அவன் மேடையேறினான்? ஏன் ஏறினான்? யாரால் ஏற்பட்டான்? அவன் கலைத்தாகத்தால் ஈர்க் கப்பட்டானா? பதில்? இன்னமும் அவனுக்குப் புரியவில்லை. 58 வருடங்கள் அவன் வாழ்ந்து முடிந்தும், தன்னை ஒரு கலைஞனாக இன்னமும் அவனால் எண்ணமுடியவில்லை. தான் என்ன செய்து சாதித்து விட்டேன் என்று தன் நிலையை, தன் சுயத்தை விமர்சிக்கத் தெரிந்த அவனுக்கு தெரிகின்றது. இதை அவனுக்குக் கற்
கொழுந்து ஆசிரியர் எஸ். அந்தனி ஜீவா அவர்களினால் ெ
 
 
 

rünnað 2005
றுக் கொடுத்த அவன் குரு, ஈழத்தின் ஒப்பற்ற éb 6u) IT (3 LD 60) g5 , கலையரசு சொர்ண லிங்கம் ஐயா அவர்
சகல தொடர்புகளுக்கும்
ஆசிரியர் த.பெ. எண் 32 கணிடி
களையும், நினைத்துப் பிரமிக்கிறான், அந்தப் பேராசான் முன் தன் சாதாரணத்தையும் புரிந்து கொள்கிறார். அவன் தாய் வயலின் வாசிப்பார், ஹார்மோனியம் வாசிப்பார், அவன் மூத்த சகோதரி நடனம், நடிப்புக்காக பரிசில்கள் பல பெற்றவர். வீணையும் வாசிப்பார். அவனுங்கூட பள்ளிக்கூடப்பாடல் போட்டியில் சங்கீத மேதை எம்.எஸ். சுப்பு லக்ஷ்மியின் "காற்றினிலே வரும் கீதம்" ஒப்பித்திருக்கிறான்.
எட்டு ஒன்பது வயதுச் சிறுவனாக கட்டுடை சுரட்டிப்பனை அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த கோவலன் கண்ணகி இசைநாடகத்தை வயல் வரப்புகளால் நடந்து, அயலின் பெரியவர்களின் துணையுடன் சென்று பார்த்துப் பிரமித்திருக்கிறான். சி.ரி. செல்வராஜா என்ற அருங்கலைஞன், தான் அறிமுகமாகும் முதல் காட்சியில் திறந்த வெளியரங்கில், ஆயிரக் கணக்கான ரசிகர்கள் முன், ஒலிவாங்கி இன்றியே உள் மேடையிலிருந்து மேல் சுருதி யில் பாட ஆரம்பித்து, பின்னர் பரபரவென மேடைக்கு வந்து, சபையை வணங்கி விட்டு, மிகப் பெரிய ஹார்மோனியப் பெட்டி முன் நின்று (அவன் வீட்டில் இருந்ததோ சிறிய ஹார்மோனி யப் பெட்டிதான்) அதை வாசித் துப் பிற்பாட்டும் பாடும் பொன்னு சாமி என்னும் கலைஞருடன் போட்டி போட்டு பாடிய "குக சரபணபவ” சிவபாலா - பாடல் இன்னமும் அவன் செவிப்பறை யில் தேன் சொரிகிறது.
அந்த அழகான சிரித்த
முகங்கொண்ட மாபெருங் கலைஞன் சி.ரி. செல்வராசா இன்னமும் அவன் உள்ளத்தில் வாழ்கிறான். அவனைத் தொடர்ந்து பிற் கோவலனாக வந்து உணர்ச்சி பொங்கப்பாடி நடித்த சின்னையா தேசிகர்
என்ற மற்றுமோர் ஒப்பற்ற
கலைஞன் கண்ணகிய , கன்னிகா பரமேஸ்வரி என்ற அற்புதமான பாடகி, நடிகை. அந்தத் தாக்கங்கள் தான் அவனைப் பாதித்தா?
இல்லை, இளவாலையில் கம்பீரமான "ராஜபாட்" நடிகர் நாட்டுக்கூத்துச் சக்கரவர்த்தி, பூந் தான் ஜோசப் அவர்கள் நடித்த "கருங்குயில் குன்றத்துக் கொலை" நாட்டுக்கூத்து ஏற்படுத்திய பாதிப்பா..?இயற்கையாகவே உள்ளடங்கிக் கிடந்த உணர்வுகள் அணை உடைத்தவுடன் பொங்கிப் பிரவாகித்ததா? தன்னை முற்றுT முழுதுமாக நாடகத்துறையி,
சேவைசெய்யப் பிறந்தவன்
என்று எண்ணிக் கொண்டு, கலைக் கடலில் கரைத்துக் கொண்டான். பைத்தியக்காரன் என்றும் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ளாதே என்றும் படிப்பில் திறமைசாலியானவன், பாழாய்ப் போகிறாயே என்றும், பெண்களின் அன்புக்கு முதலிடம் கொடுக்கத் தெரியாதவன் என்றும், பேராசை பிடித்தவன் என்றும், நேரிலும், பின்னாலும் அறிவு சொன்னவர்களும், கேலி பேசியவர்களும், அவனை விட்டுப் பிரிந்தவர்களும், யாருமே அவனைச் சலனப்படுத்த முடியவில்லை.
(. மீண்டும் தொடரும் )
வள்ளவத்தை டெக்னோ பிரிண்ட் அச்சகத்தில் அச்சிடப்பட்டது
ཁག་། །
۔۔صسمبر