கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அங்கையன் கயிலாசநாதன்

Page 1

லிஸ்சரன்
திப்பகம்
豪
* 홍, 幻 § 似

Page 2

அங்கைலன் கலிஸ்ாசநாதர்
(கட்டுரைத்தொகுப்பு)
பதிப்பாசிரியர்
இராசலட்சுமி கயிலாசநாதன்
2
அங்கையன் பதிப்பகம்

Page 3
நூற் பெயர் 66D 5 பதிப்பு பதிப்புரிமை முகவரி
ISBN Qu கணனிப் பதிப்பு
பக்க வடிவமைப்பு:
அச்சுப்பதிப்பு பக்கங்கள் விலை
Title Type Published by First Edition
Publishing Right .
ISBN
Layout Printing
Pages Price
Computer typing
நூல் விபரம்
அங்கையன் கயிலாசநாதன் கட்டுரைத் தொகுப்பு அங்கையன் பதிப்பகம் இராசலட்சுமி கயிலாசநாதன் H 1/2, அரச தொடர்மாடி, கொழும்பு - 04, இலங்கை. தொலைபேசி: 0112581047 978-955-52875-0-0 மதுராளினி குலசிங்கம் நிர்மலா கெளரி அச்சகம், 011 2432477 i - xii + 1-93
ரூபா 150/=
Ankaiyan Kailasanathan Collection of Articles Ankaiyan Pathippaham October, 2010 Rajalakshmi Kailasanathan H 1/2, Government Flats, Colombo- 04, Sri Lanka. Tel: 0112581047 978-955-52875-0-0 Mathuralini Kulasingam Nirmala
Gowriy Printers 011 2432477
i - xii + 1-93
RS. 150/=

(UD60g)6OJ
பல்துறைப் படைப்பாளி அங்கையன் கயிலாசநாதன்
அறுபதுகளில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சில இலக்கியப் படைப்பாளிகள் முகிழ்ந்தனர். இவர்களில் செ.கதிர்காமநாதன், அங்கையன் கயிலாசநாதன், செ.யோகநாதன் போன்ற சிலர் ஆரோக்கியமான சிறந்த படைப்பாளிகளாக வளர்ச்சியடைந்தனர். ஆனால் நெல்லுக்குள் இருக்கும் பதர்களாகவும் சிலர் இருந்தனர். இவர்களில் இரண்டொருவர் இலக்கிய வியாபாரிகளாகவும் மோசடிக்காரர்களாகவும் இன்றுவரை ஊழல் மிக்கவர்களாகவும் இருக்கின்றனர். அன்று ஒரு விரிவுரையாளர் வகுப்பில் கொடுத்த விரிவுரைக் குறிப்புக்களை தனது சொந்தப் பெயரில் பாடநூலாக அச்சிட்டுப் பணம் பண்ணியவர், இன்று கூட இவர் தன்னை ஒரு இலக்கிய ஜாம்பவானாகப் பாவனை பண்ணி வருகின்றார். ஆனால் அங்கையன் கயிலாசநாதன் போன்றவர்கள் கலை இலக்கியத் துறைக்கு தங்களை ஆத்ம சமர்ப்பணம் செய்தவர்கள்.
செ. கதிர்காமநாதன், அங்கையன் கயிலாசநாதன், செ. யோகநாதன் ஆகிய மூவருடனும் நான் நீண்ட காலம் நெருங்கிப் பழகியவன். இவர்களில் கதிர்காமநாதனும் கயிலாசநாதனும் கலை இலக்கியத் துறையில் சத்ய வேட்கையுடன் செயற்பட்டு வந்தனர். கயிலாச நாதனைப் பொறுத்தவரையில் அவர் தனித்தன்மை வாய்ந்தவர். பல்வேறு கலை இலக்கியத் துறைகளில் தடம் பதித்தவர். அவர் பல்துறை விற்பன்னர். அங்கையன் அச்சுக்கலை, பத்திரிகைத்துறை, ஒலிபரப்புத்துறை ஆகியவற்றில் தடம் பதித்தவர். இதற்கும் மேலாக கலை இலக்கியத் துறையில் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், விமர்சனம், ஆய்வுக் கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் கால்பதித்து குறிப்பிடத்தக்களவு பங்காற்றியுள்ளார். ஈழநாடு, விரகேசரி ஆகிய இரு பத்திரிகைகளிலும் துணை ஆசிரியராகப் கடமையாற்றி யுள்ளார். இரு இலக்கிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இருந் துள்ளார். அத்துடன் பிரிட்டிஷ் தூதராலயத்தில் அவர் மொழி பெயர்ப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார். கயிலாசநாதன் கவிதைத் துறையில்தான் ஆழமாகத் தடம் பதித்துள்ளார் என்பது எனது

Page 4
அபிப்பிராயம். அவரது கவிதைகள் இலகு தமிழில் அமைந்துள்ளன. பாமரனும் படித்து ரசிக்கக் கூடிய வகையில் தனது கவிதைகளைப் புனைந்துள்ளார். அவரது கவிதைகளில் மென்மை, இனிமை, அழகு மிளிர்கின்றது. அதேவேளை அவரது அனைத்துக் கவிதைகளிலும் ஆத்மசோகம் இழையோடி உள்ளதுடன் ஒசையும் இசைத் தன்மையும் பொதிந்துள்ளன.
அங்கையனது நாவல்களில் செந்தணலும் கடற்காற்று நாவலும் ஈழத்து நாவல் துறையில் குறிப்பிடத்தக்கதாகப் புனையப்பட்டவை. செந்தணல் நாவல் கொழும்பு வாழ்வியலைப் பிரத்தியட்சமாகப் பிரதி பலிக்கின்றது. கடற்காற்று நாவலில் கடல் வாழ்வியல் யதார்த்தமாகவும் உயிரோட்டத்துடனும் சித்திரிக்கப்பட்டுள்ளது. அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்டைதீவுக் கிராமம் கடல் பிராந்தியமாக இருந்தமை கடல் வாழ்வியலை கலாரூபமாகச் சித்திரிக்க அடிநாதமாக அமைந்துள்ளது.
அங்கையனுடைய சிறுகதைகளைப் பொறுத்தவரை மனித வாழ்வை, அதிலுள்ள பிரச்சினைகளை அவற்றுக்கு முகங் கொடுப்பதற்கான போராட்டங்களை பிரத்தியட்சமாக, கலா ரூபத்துடன் புனைந்துள்ளார். அங்கையன் தனது நாவல்களிலும் சிறுகதைகளிலும் அடிமட்ட மக்களது துன்ப துயரங்களையும் ஆசாபாசங்களையும் அம்மக்களது உணர்வுகளையும் நுணுக்கமாக கலைத்துவத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். பதினான்கு வருடங்கள் மாத்திரம்தான் கலை இலக்கியப் படைப்புத் துறையில் அவரால் ஈடுபட்டிருக்க முடிந்தது. இக்குறுகிய காலகட்டத்தில் கயிலாசநாதன் குறிப்பிடத்தக்க சாதனை களை நிலைநாட்டியுள்ளார். அவர் ஒரு பல்துறைப் படைப்பாளி என்பதை அவரது படைப்புக்கள் எடுத்தியம்புகின்றன.
அங்கையன் கயிலாசநாதன் இலங்கை வானொலியில் பணியாற்றி வந்தார். நான் அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மொழி பெயர்ப்பாளராகக் கடமையாற்றிவந்தேன். இரு அமைப்புக்களும் அருகருகாமையில் அமைந்திருந்தன. நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்போம். இச் சந்திப்புக்களின் போது நீண்ட நேரமாக கலை இலக்கியம் சம்பந்தமாக உரையாடல்களை நடத்துவோம். இவ் வேளைகளில் நான் எனது இலக்கியக் கோட்பாடுகளையும் செயல்பாடுகளையும் எடுத்துக் கூறுவேன். அவர் பொறுமையுடன் செவிமடுப்பார். அவர் தன்னுடைய சுதந்திர நிலைப்பாட்டை எடுத்துக் கூறுவார். எங்கள் படைப்புக்கள் பற்றி நாம் கலந்துரையாடுவோம்,

விவாதிப்போம். ஆனால் ஒருவரது கருத்தை மற்றவர்மீது நாம் இருவரும் என்றுமே திணிக்கவில்லை. திணிக்க முயற்சித்ததுமில்லை. அவர் நிலைப்பாட்டில் அவர். எனது நிலைப்பாடில் நான். இருவரும் சுயமான நிலைப்பாட்டில். ஆனால் அங்கையன் என்றுமே எந்த ஒரு அணியையும் சார்ந்திருக்கவில்லை; சுயமாக, சுதந்திரமாகவே செயல்பட்டு வந்தார்.
“நீர்வை உமது "உதயம்’ சிறுகதையை நான் வானொலி நாடகமாகத் தயாரிக்க எண்ணுகிறேன். உமக்கு ஆட்சேபனை உண்டா?” என்று ஒரு நாள் திடீரென என்னைக் கேட்டார். “இல்லை” என்று நான் கூறினேன். அவர் நாடகத்தைத் தயாரித்தார். ஒலிபரப்பானது ‘உதயம்' நாடகம். இதனால் நேயர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது. ஆனால் நிர்வாக மட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அவர் எதையும் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. அடுத்து எனது உலைக்களம்' சிறுகதையை வானொலி நாடகமாக்கினார். இந்த நாடகம் ‘சேகுவரா இயக்கப் பாணியில் கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் கதை அமைந்துள்ளது என்று காரணத்தைக் காட்டி ஒலிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டது.
விபவி மாற்றுக் கலாசார மையத்தில் நான் இணைப்பாளராகச் சேவையாற்றினேன். இக்காலகட்டத்தில் அங்கையன் கயிலாசநாதனின் கவிதை நூலுக்கான ஆய்வரங்கொன்றை ஏற்பாடு செய்தேன். இந்த ஆய்வரங்கு 2002 ஏப்ரல் 20ம் திகதி பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வரங்கத்திற்கு தகவம் அமைப்பின் தலைவர் வ. இராசையா தலைமை தாங்கினார். சமுதாயம் பற்றி மேமன் கவி, பெண்மை பற்றி கமலினி செல்வராசனும், கவித்துவம் பற்றி செங்கதிரோனும் ஆய்வு செய்தனர்.
அங்கையனின் ‘சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும்' என்ற நாவல் பற்றி ஆய்வரங்கொன்று விபவியின் ஏற்பாட்டில் பெண்கள் கல்வி நிறுவன கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வரங்கிற்கு காவலூர் இராசதுரை தலைமை தாங்கினார். கே.எஸ்.சிவகுமாரன், தெளிவத்தை யோசப், கமலினி செல்வராசன், சித்ராஞ்சன், சண்முகலிங்கன் ஆகியோர் ஆய்வு செய்ததுடன் ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. இதில் செல்வி திருச் சந்திரனும் நீர்வை பொன்னையனும் பங்குபற்றினர்.
வீரம் விளைந்தது' என்ற உன்னத நாவலைப் புனைந்த நிக்கொலாய் அஸ்றோவஸ்கி தமது 30 வது வயதில் மரண

Page 5
மெய்தினார். மார்க்கிஸ இலக்கியவாதிகளான றல்வ் 'பொக்ஸ், ஃபிறாங்ஹாடி ஆகிய இருவரும் தமது முப்பதுகளில் ஸ்பானிஷ் பாசிசத்துக்கு எதிரான யுத்தத்தில் வீர மரணம் எய்தினர். வங்கப் புரட்சிக் கவிஞன் சுகந்தோ பட்டசார்யா தமது இருபதாவது வயதில் மரணமெய்தினார். ஈழத்து முற்போக்கு இலக்கிய இளந்தாரகையும் சிறந்த சிறுகதை ஆசிரியனுமான செ.கதிர்காமநாதன் தமது 30வது வயதில் மரணமானார். இந்த கலை இலக்கிய தியாக தீபங்களைப் போல எமது பல்துறைக் கலை இலக்கியவாதியான அங்கையன் கயிலாசநாதனும் தமது 33வது வயதில் அகால மரணமானார். இவரது இழப்பு நமது ஈழத்து கலை இலக்கிய உலகத்துக்குப் பெரிய இழப்பாகும்.
நீர்வை பொன்னையன்
24.09.2010

பதிப்புரை
"அங் கையன்’ என்ற புனைபெயரைத் தனது பெயருடன் அடையாளப்படுத்திக் கொண்ட திரு.வை.அம் பலவாணர் கயிலாசநாதன் மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒர் இலக்கியப் படைப்பாளி. இவர் 1958ம் ஆண்டிலிருந்து சுயமாக தனது கற்பனா சக்தியினால் எழுத்துத் துறையில் காலடி பதிக்கத் தொடங்கியவர். 1962ல் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் நடத்திய குறுநாவல் போட்டிக்கு எழுதிய இவரது ‘கடற்காற்று' வெள்ளிப் பதக்கப் பரிசில் பெற்றது. சிறு வயதிலிருந்தே அவதானித்து மனதில் உருப் போட்டிருந்த மண்டைதீவு மீனவர் வாழ்க்கை இதற்குக் கருவூலமானது. இந்நிகழ்வே அவர் எழுத்துத் துறையில் தொடர்ந்து ஈடுபட உத்வேகம் அளித்தது. ‘ஈழநாடு’ பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தபோது அதில் தொடராக வெளிவந்த (1964) கடற்காற்று நாவல் ஏராளமான வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. பின்னால், ‘வீரகேசரி' யில் துணை ஆசிரியராகக் கடமையாற்றியபோது எழுதிய ‘செந்தணல்' என்ற நீண்ட நாவல் ‘மித்திரன்’ பத்திரிகையில் இரண்டு மாதங்கள் தொடராக 1968 இல் வெளிவந்து ஆயிரக் கணக்கான வாசகர்களை ஈர்த்தது.
அங்கையன் ஒரு பன்முகப் படைப்பாளி. அறுபதுகளிலிருந்து சிறுகதைகள், கவிதைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புக்கள், நாடகங்கள், மெல்லிசைப் பாடல்கள் ஆகியவற்றை எழுதி, தனது நேரிய போக்கினாலும் ஆளுமையினாலும் இலக்கியப் பரப்பில் தனக்கென ஒரு தடம் பதித்தார். இவரது ஏராளமான படைப்புக்கள் வீரகேசரியிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையில் பணியாற்றிய காலத்திலுமே வெளிவந்து இவரின் திறமை எங்கும் பிரபல்யமானது. இவ்வாறாக, 1960 லிருந்து 15 வருடங்களில் பல்துறைகளிலும் தரமான படைப்பிலக்கியங்களை எழுதிய இக்கலைஞன் தனது 33வது வயதில் (1976) அகால மரணமடைந்தது, ஈழத்து இலக்கிய உலகுக்குத் தொடர்ந்து இவரது அனுபவ முதிர்ச்சியின் ஆக்கங்களை ரசிக்க முடியாத பெரும் இழப்பாகியது.
அங்கையன் மறைந்தபோது, 1972 இல் இவர் தனது அச்சகத்தின் மூலம் வெளியிட்ட ‘கடற்காற்று மாத்திரமே நூலுருவில் வெளியாகி

Page 6
இருந்தது. அவர் எழுதிய ஏனையவை பத்திரிகைத் துணுக்குகளாகவும் கையெழுத்துப் பிரதிகளாவும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு பொருளடக்கம் இட்டு, சமர்ப்பணம் எழுதி, இரண்டுக்கு அட்டைப்படம் கூட வரையப்பட்டு இருந்தன. அவற்றின் பெறுமதியை உணர்ந்த நான் அவற்றைப் பக்குவமாக அலுமாரியில் பாதுகாத்து வைத்தேன். திடீரெனத் தந்தையை இழந்த எமது மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பில் முழுமையாக ஈடுபட வேண்டி நேரிட்டது. என்றாலும் எனது குடும்பச்சுமை இறங்கி பணவசதி ஏற்படும் காலத்தில், அங்கையன் மனதில் உருப்போட்டவாறு, அவரது ஆக்கங்களை ஒவ்வொன்றாக நூலுருவில் வெளியிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் அடங்கிக்கிடந்தது.
இறைவன் கிருபையால், அங்கையன் படைப்புக்களாகிய ‘செந்தணல் (நாவல்) மற்றும் ‘அங்கையன் கதைகள்’ 2000ம் ஆண்டிலும், சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும் (நாவல்) 2001ம் ஆண்டிலும், 2002 இல் ‘அங்கையன் கவிதைகளும் வெளியிடப்பட்டன. அகால மரணமடைந்த இப்படைப்பாளி இறந்து 24 வருடங்களின் பின்பும், எழுதி 30-35 வருடங்களின் பின்பும் வெளிவந்த போதும், இந்நூல்களுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இவ்வைந்து நூல்களுக்கும் முன்னுரை, அணிந்துரை வழங்கிய கவிஞர்கள், பிரபல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் ஒவ்வொரு நூலிலும் காணப்படும் சிறப்பியல்புகளைக் கூறியுள்ளனர். மற்றும் இந்நூல்கள் யாவும் தனித் தனியே கொழும்பில் நடத்திய இலக்கியக் கருத்தரங்கு, நூல் நய நிகழ்வுகளில் பல சிந்தனையாளர்களின் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. கனடாவில் வெளிவரும் ‘முழக்கம்' பத்திரிகையில் 24-06-2005 அன்று ‘கலங்காத கண்கள்’ என்ற அங்கையனின் சிறுகதை (எழுதி 43 வருடங்களின் பின்) வெளிவந்ததைக் கண்டு நான் பிரமிப்படைந்தேன். இது 'அங்கையன் கதைகள்’ தொகுதியில் காணப்படாத ஒன்றாகவும் இருந்தது. பின்னால், 'அக்கினி' என்ற கனடா மாதப் பத்திரிகையில் ‘கடற்காற்று 2007 இல் தொடராக வெளிவந்தது. மேலும் அதில் அவரது ‘தீரம் சிறுகதை மற்றும் பொருத்தமான சந்தர்ப்பத்துக்கேற்ப இவரது கவிதைகளும் வந்ததை நான் அங்கு இருந்தபோது வாசித்துள்ளேன். இவ்வாறாக அங்கையன் வாழ்ந்த காலத்திலல்லாது வெகு காலங்கடந்து தனித்தனி நூல்களாக இடையிடையே வெளிவந்த நூல்களின் தனிச்சிறப்புக்களை மறந்து மறைந்து போய் இருக்கின்றவற்றை ஒருங்கு திரட்டி வாசகர் முன்
viii

ஒரு நூலாக ஆவணப்படுத்தி எழுத்தாளனைப் பற்றிய முழுப் பார்வையையும் வெளிக் கொணர்வதே எனது நோக்கம்.
மேலும், இந்நூல்களைத் தனித்தனியே ஆய்வு செய்வதற்கும் இது உதவும். ‘அங்கையன் புனை கதைகள்' பற்றி 2007 இல் ஆய்வு செய்த திருமதி ரா.குணசாந்தி பேராசிரியர்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளார். நவீன துரித தொழில்நுட்ப, இலத்திரனியல் வளர்ச்சியால் தமிழ் நூல்கள் முழுமையாக இணையத் தளத்தில் சேர்க்கப்படுகின்றன. ‘அங்கையன் கவிதைகள்' நூலைத் தனது இணையத்தளத்தில் சேர்த்துள்ளதாக 2009 இல் ‘மேமன் கவி' என்னிடம் கூறினார். சில மாதங்களுக்கு முன், மூத்த எழுத்தாளர் நீர்வை பொன்னையன் எனது வீட்டுக்கு வந்து அங்கையனின் நூல்களைப் பெற்றுச் சென்று அவற்றை நூலகம்' என்ற இணையத் தளத்தில் போடக் கொடுக்கப் போகிறேன் என்றார். போகிற போக்கில், இந்நாட்டில் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலுமுள்ன கல்வி மான்கள், சிந்தனையாளர், ஈழத்தில் வெளியாகும் தரமான நூல்களைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் காலம் வரும். அப்பொழுதும் 15 வருடங்களுள் தனது படைப்பாற்றல் திறமைகளை வெளிப்படுத்தி அகால மரணமடைந்த அங்கையன சாகாவரத்துடன் தமிழ் உள்ளவரை வாசகர் நெஞ்சங்களிலும் மெல்லிசைப்பாடல்கள் மூலம் காற்றின் ஒசையிலும் கலந்து, வாழ்வான் என்ற நம்பிககை எனக்குண்டு. அத்தகைய ஓர் இலக்கியத் தடம் பதிப்பதே, அங்கையன் பற்றிய இந்நூலின் விளைவாக இருக்க முடியும் என மீண்டும் கூற விரும்புகிறேன்.
இந்நூலைப் பதிப்பிக்கும் எனது எண்ணம் மங்கிப் பிற்போட்டிருந்த நிலையில் தற்செயலாக என்னைச் சந்தித்த இலக்கிய நண்பரும் சட்டத்தரணியுமான சோ.தேவராஜா செய்த உதவியினால் உற்சாகம் ஏற்பட்டு பிரகாசிக்கத் தொடங்கி, ஒரு மாத காலத்துள் உருவாகியதே இந்நூல். இதனால் ‘நான்’ அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரது தமிழ் இலக்கியத் தொண்டு மென்மேலும் வளர வேண்டும். முன்னுரையை யாரிடமிருந்து பெறுவது எனச் சிந்தித்திருந்த வேளை மிகப் பொருத்தமானவராக வந்தமைந்தார் மூத்த எழுத்தாளன் நீர்வை பொன்னையன், தனது கொள்கையிலிருந்து மாறாது நேர்மையாக எழுதுபவர் எனப் பாராட்டப்படும் அவரது காத்திரமான முன்னுரையை வரவேற்கிறேன். சிரமங்கள் மத்தியிலும்

Page 7
முன்னுரை தந்த மூத்த எழுத்தாளருக்கு எனதுரையால் எழுத்தால் மட்டும் நன்றி சொல்லி முடியாது.
விடயங்களைக் கொடுத்த மாத்திரத்தில் தாமதம் ஏதுமின்றி முறையாக கணனி தட்டச்சு செய்து தந்த மதுராளினி குலசிங்கத்துக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். குறுகிய காலத்தில் கொடுத்த படங்களையும் சேர்த்து அழகாக நூலுருவாக்கித் தந்த கெளரி அச்சகத்தினருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
இனியும் வாசகர்களுக்கிடையில் தடையாக இருக்காமல், 33 வருடங்கள் மாத்திரமே வாழ்ந்து அதற்குள் நிறைய எழுதி, காலங்கடந்து நூலுருவில் வெளியாகிய அங்கையனின் படைப்புக்கள் பற்றிய தரத்தை அறிந்து ரசிக்க, உள்ளே நுழைய வழி விடுகின்றேன்.
இராசலட்சுமி கயிலாசநாதன்
H 1/2, அரச தொடர்மாடி,
கொழும்பு - 04. அக்டோபர், 2010

அங்கையனின் கல்வி, தொழில் மேம்பாடு
சம்பந்தமான முக்கிய கட்டங்கள்
1942-08-14
1957 வரை
1958-1959
1960-1964
1964-1965
1965-1966
1966-1969
1969-1970
1970-1972
பிறப்பு, மண்டைதீவு
மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.
யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரக் கல்வி கற்றார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று சிறப்புப்(தமிழ்) பட்டதாரியாகத் தேறினார்.
யாழ்ப்பாணத்தில் ‘ஈழநாடு' வாரப்பத்திரிகை யில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
கொழும்பு பிரித்தானிய தூதராலயத்தில் Commonwealth Today 6T6D LDTg5& F65.60560)u ‘சாம்ராஜ்யம் இன்று' என்ற தலைப்பில் மொழி பெயர்த்து வெளியிட்டு வந்தார். ‘வீரகேசரி’ பத்திரிகை நிறுவனத்தில் துணை ஆசிரியராகக் கடமையாற்றினார்.
'சமூக தீபம்’ என்ற காலாண்டு சமூக இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டார்.
ஓர் அச்சுக்கூடத்தை வாங்கி "உதயம் புத்தக நிலையம்' என்ற பெயரில் தனிப் பொறுப்புடன் நடத்தி வந்தார்.
1972-07-15 - 1976-04-03 வரை
1976-04-05
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையில் நாடகத் தயாரிப்பாளராக நியமனம் பெற்று கடமையாற்றினார்.
ஏப்ரல் 3ந் திகதி இரவு காலி வீதியில் வாகன விபத்தில் சிக்கிய இவர் கொழும்பு பெரியாஸ்பத்திரியில் 05 ந்திகதி மரணமடைந்தார்.

Page 8
இதழினுள்ளே.
பக்கம்
கடற்காற்று நாவல் பற்றி. O1
நினைவாஞ்சலிகள். காலத்துக்குக் காலம். O7
அங்கையன் கவிதைகள் பற்றி. 37
அங்கையன் சிறுகதைகள் பற்றி. 44
செந்தணல் நாவல் பற்றி. 48
‘சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும்’ நாவல் பற்றி. 61
மறைந்து 25 வருடங்கள் கழிந்த பின். 76
அங்கையன் கயிலாசநாதன் படைப்புகள் 82
(இலக்கியக் கருத்தரங்கில் கேட்டவை)
ஏனைய சில தகவல்கள். 90

அங்கையும் கலிஸ்சநாதர்
1. கடற்காற்று நாவல் பற்றி.
என்னுரை
இந்த நாவல் என்னுடைய முதலாவது படைப்பன்று. கன்னி முயற்சியுமன்று. நான் எழுத வேண்டும் என்ற இனிய ஆவலைப் பெற்று 1959ம் ஆண்டு முதல் சவலைப் பிரசவம் செய்திருந்ததும் பெயர் விளம்பரத்துக்காக மட்டுமே அதனையே உரைத்துணர்த்தும் தரமாகக் கருதி - கதைகளைப் படைத்தவர்களுடைய கதைகளை மட்டுமே கரம் நீட்டி அணைப்போம் என்ற கவைக்குதவாப் பத்திரிகைகளின் புறமுதுகைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டதுடன் என் எழுத்தாசை ஒத்தாசையின்றி முடிவுற்றது.
பத்திரிகைகள் தாம் கதாசிரியனைத் தீர்மானிக்கின்றன என்ற பத்தாம் பசலிக் கனவை மறுத்து, உத்வேகம் உள்ள எவனும் எழுதலாமே என்ற உணர்வு பெற்று இந்த நாவலுக்கு முன்பு ஒரு முழு நாவலை எழுதி முடித்து, அதனை அழகாகப் படியெடுத்து, என் நூல் நிலையப் பெட்டிகளின் அடியிற் பக்குவமாக வைத்திருந்தேன். எனது ஒலை வீட்டில் நீக்கமற நிறைந்துள்ள கறையான்களுக்கு அக் கதைத்தாள்களுட் பெரும்பாலானவை இரையாகிவிட்ட சோகம் அண்மையில் தான் தெரிய வந்தது.
ஓ! கறையானுக்குத் தமிழ் நூல்கள் என்றால் மிகவும் பிடிக்குமா?
இந்த நாவல் 1962ம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகம் நடாத்திய குறுநாவற் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்ற அவசராவசரத்தில் ஆரம்பத்தில் எழுதப்பட்டு, பதக்கத்தையும் பெற்றுவிட்டு, ‘ஈழநாடு” வார மஞ்சரியில் வெளிவந்து இந்த நாட்டின் தரமான வாசகர்களின் நெஞ்சங்களில் தவழ்ந்து வந்தது.
தொடர்கதையாக வந்த இதனை வாசித்து விட்டு சில அன்பர்கள் என்னைப்
பாராட்டினார்கள். நண்பர்கள் முகமலர்ந்து குறைகளையும் நிறைகளையும் சுட்டிக் காட்டினார்கள். அந்தக் குறைகளையும் நிறைகளையும் நிறுத்த

Page 9
அல்கைலர் கலிஸ்ாசருதஷ்
விடத்துப் பின்னையதே பலமாக இருந்தது எனச் சிலர் கூறிப்
பெருமைப்பட்டார்கள். எல்லோர்க்குந் திருப்தியை ஏற்படுத்த முனையும்
ஒரு முயற்சியின் அறுவடையாகக் கடற்காற்று மெருகிடப்பட்டது.
அது தான் இது!
இலங்கையில் நூல் வெளியிடுவது ஒரு பிள்ளை சீதனத்துக்குச் சமம். இந்நிலையில் இத்துறையில் உழைக்க எவரும் முன்வருவதில்லை; முன்வந்தவர்கள் மறுபடியுஞ் செய்வதில்லை. இதனால் கற்பனையாழமும், சமூகப் பிரச்சினைகளை இலக்கியக் கண்கொண்டு நோக்குந் திறமை, அழகான தமிழை அவ்வாறே எழுதும் அறிவும், இன்னும் பிற இலக்கிய நுட்பமும் கொண்டு இலக்கியஞ் சமைப்போரின் தொகை இலங்கையில் அருகிவருகின்றது; இதற்கு நூல் வெளியீட்டில் இடராக்குங் காரணமே காரணம் எனலாம்.
பாடநூல்கள் எவ்வாறாயினும் நிச்சய விற்பனையையும் நிரந்தர வருவாயையும் கொடுப்பன என்பதற்காக அதிக சிரத்தையெடுத்துப் பணத்தை மாய்த்து வரும் இலங்கை புத்தக அச்சக சாலைகளின் அதிபர்களுக்கு ஒரு சிறந்த இலக்கிய படைப்புக்குப் புத்தக வாழ்வு கொடுக்கும் இலக்கியக் கருணையோ தாராளமோ இல்லை. அன்ப! இது உங்களுக்குத் தெரியும்!
உங்கள் நாசித் துவாரங்களையும் பிய்த்தகற்றிக் கொண்டு அதோ புறப்படுகின்றதே அந்தப் பெருமூச்சு! அது எனக்கு நன்றாகத் தெரிகிறது.
எனக்கு மட்டும் என்னவாம்?
எந்த ஒன்றும் உருவாவதற்குப் பின்னணியான காரணங்கள் பெரிதும் துணை நிற்கின்றன.
முன்னணியின் பெருமையே பின்னணிதான். இக் கதைக்குப் பின்னணிகள் 6).
இந்தக் கதை எங்கள் ஊரில் என்றோ இருபது ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும். அத்துடன் இதே

அல்கைலன் கலிஸ்4சருதஷ்
கதை இற்றைக்குச் சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு, வெளிவந்த கதையென்பதையும் மனதிற் கொள்ள வேண்டும்.
இதன் படிவத்தைப் பார்த்த மாத்திரத்தே வியந்து, இரசித்து மகிழ்ந்து இதனை ‘ஈழநாடு' வாராந்தரியில் வெளியிட்டதுடன் எல்லா வழிகளிலும் என்னை ஊக்குவித்த பெருந்தகை திரு.இராஜஅரியரத்தினம் அவர்களுக்கும், என் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டிய திருமதி ராதா - அரியரத்தினம், ஆசிரியை அவர்களுக்கும் இதனை வெளியிட்டுத் தந்த மதுரகவி இநாகராஜன் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி உரித்தாகுக என்று இறைஞ்சுகிறேன்.
வை. அ. கயிலாசநாதன்
மண்டைதீவு - 1972

Page 10
அல்கைலர் கலிஸ்ாசருதஷ்
காணிக்கை
தந்தைக்குத் தந்தையாய் தாய்க்குத் தாயாய், தெய்வத்துக்குத் தெய்வமாய் என்னைப் பெற்று வளர்த்து, பெயரிட்டு, உற்ற கல்வி யூட்டி, உல கத்தில் நான் ஒருவன் என நிற்க வைத்து நிழல் போல் மறைந்து விட்ட என் அன்னையின் சீரிய
பாதங்களுக்கு.
பதிப்புரை
நினைவில் நிறைந்திருக்க வேண்டியவை எவை? என்ற கேள்விக்கு இன்று விடை பலவிதமாகக் கிடைக்கும். ஒவ்வொரு மனிதனும் தன் உள்ளுணர்வின் பாற்பட்ட ஏதோ ஒன்றைப் பற்றியே நினைவைப் படர விடுகிறான்; இது இயற்கை. இதை எவராலும் மாற்றிவிட முடியாது. எனவே; இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவது வியாத்தமான செயல்.
அமரகவி பாரதி ‘பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானிலும் நனிசிறந்தனவே என்று பாடினான். இந்தத் தனியுண்மை அவனது பாடல்கள் அனைத்திலுமே பரிபூரணமாகத் திகழ்கின்றது. அவனது நெஞ்சில் நிறைந்திருந்தது பாரதநாடு. அந்தப் பாரதநாடு அவன் மூச்சு; உயிர்மூச்சு.
பாரதியின் இந்த உண்மையை அடியொற்றி எழுந்ததே அன்பர் வை. அ. கயிலாசநாதனின் கடற்காற்று. மண்டைதீவினைச் சுற்றி நீலத்திரை சதா ஒலித்துக் கொண்டிருக்கும்; அந்த நீலத்திரையிலே இழைந்துவரும் காற்றே கடற்காற்று. காற்றின் இதத்தை மட்டும் இங்கு நாம் அனுபவிக்கவில்லை. அந்தக் காற்றையெதிர்த்துத் தினசரி வாழ்வுக்காகப் போராடும் ஜீவன்களை எவரும் நினைப்பதில்லை. அப்படி அந்தப் போராடும் ஜீவன்களை மறந்து விட்டவர்களுக்கு நினைவூட்டும் சின்னமாக இந்த நாவல் விளங்குகிறது!.
திரு.வை.அ.கயிலாசநாதனை விட ‘அங்கையன்’ என்ற பெயர் பத்து ஆண்டுகட்கு முன்னர் பத்திரிகைகளில் பிரபலம் பெற்ற பெயராகும். அங்கையன் என்ற புனைபெயருள் தன்னை மறைத்துக் கொண்டு கயிலாசநாதன் ஆரம்ப காலத்தில் தீட்டிய நாவலே ‘கடற்காற்று'. இன்று இலங்கையில் பிரபலம் பெற்று விளங்கும் எழுத்தாளர்கள் சிலர் இலங்கைப்

அங்கையும் கலிஸ்ாசருதஷ்
பல்கலைக்கழகத்தில் பயின்று இலக்கியத்தின் தனிப் பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார்கள்.
அந்தப் பாரம்பரியத்திலே தனக்கு ஒரு தனியிடம் வகித்து நிற்பவர் இவர். சிறப்புப் பட்டதாரியான இவரின் எழுதுகோல் சமீபகாலத்தில் பிரபலம் பெற்றவர்களிலே தனித்த இடத்தைப் பெற்றது. நல்ல நாவலாசிரியர், நல்ல ஆராய்ச்சிக் கட்டுரையாளர், நல்ல சிறுகதை ஆசிரியர் என்ற புகழுக்கு அப்பால் உணர்ச்சியும் உயிர்த்துவமும் இலக்கணச் சுத்தமுமான பண்பும் மிக்க கவிதைகளைப் படைக்கும் கவிஞனாகவும் விளங்குகிறார்.
சிந்தையிலே நிறைந்திருக்கும் கருத்தைத் திட்டவட்டமாகச் சொல்லும் உறுதி இவர் சொல்லில் இழைகிறது. நேரிய நெறியும், கூரிய கொள்கைகளும் கூடி நிற்கும் இவரது படைப்புகள் பலவாயினும் நமது முன்னே இதுவரை எந்த நூலும் கிடைக்கவில்லை. இலங்கையில் பிரபலம் பெற்றுள்ள பத்திரிகைகளிலே காலத்துக்குக் காலம் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்பன வெளியாகி இவரது பெயரை வாசகர்கள் நெஞ்சில் நிலைக்க வைத்துள்ளன.
ஈழநாடு, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி நல்ல பத்திரிகையாளன் என்ற தகுதியையும் இவர் பெற்றுள்ளார். இலங்கை பிரிட்டிஷ் தூதுவராலயத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றித் தன் தமிழ்த் திறமையைக் காட்டியுள்ளார். இவற்றிற்கு மேலாக மேடைகளிலே தக்கார் போற்றும் வகையில் உரையாற்றியிருப்பதோடு, பல கவியரங்குகளில் பங்குபற்றி நல்லதொரு கவிஞனாகவும் விளங்கியுள்ளார்.
இந்தக் கடற்காற்றைப் படைத்த பின்னர், காலத்தின் வளர்ச்சியுடன் அவர் கருத்துகள் பழுத்திருப்பினும் காலத்தினெல்லையாகவே இதனை வெளியிடுகின்றார்.
செந்தமிழ்த்தாயின் இலக்கியச் சோலையில் மலர்ந்த இந் நறுமலரை வாசகர்கள் நுகர முன் வைக்கின்றோம்.
தமிழ் வாழ்க!
இ. நாகராஜன்
2-06-72

Page 11
அங்கையர் கலிஸ்ாசநாதர்
கடற்காற்று
நித்திய, மனிதப் போராட்டங்ள் நிறைந்த சுவையான நாவல். சத்தியத்துக்காகப் போராடும் அன்னாவின் சஞ்சலத்தின் நிழல் இது.
ஆண்மைக்கும் மேன்மைக்கும் எழுந்த அவமானக் கேள்வி.
பெண்கள் பல்லாயிரவர் இதனைப் படித்து முடிந்ததும் கண்களை ஒற்றிக் கொண்டனர்.
சாதாரண கிராமத்தின் சாதாரண மீனவ மக்களின் சாதாரண சம்பவங்களின் வருணனைச் சித்திரம் ‘கடற்காற்று. உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிகரமான மொழிநடை
கயிலாசநாதன் அவர்களுக்கே கைவந்த பாணி. ஈழத்திலும், தமிழிலும் முதன் முதலாகக் கடற்றொழிலைப் பற்றியும், மீனவர்களின் சிக்கல்களைப் பற்றியும் வெளிவந்த முதலாவதும் முதன்மையானதுமான நாவல்.
இதில் காதல் இருக்கிறது. கண்ணிரும் இருக்கிறது.
புதுமையான கதை. அழகான மொழி நடை. சுவையான சம்பவங்கள்.
உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறந்த ஒரு நாவல் ‘கடற்காற்று.
நவீனன்
1972

அல்கைலன் கலிஸ்ாசருதஷ்
2. நினைவாஞ்சலி.
‘கேட்டிருப்பாய் காற்றே" அமரர் அங்கையன் கயிலாசநாதனுக்கு அஞ்சலி நிகழ்ச்சி
ஈழத்தின் பிரபல தமிழ்க் கவிஞரும் எழுத்தாளருமாகிய அங்கையன் கயிலாசநாதன் அமரராகிவிட்டார். அங்கையன் கயிலாசநாதன் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஈழத்தின் தமிழ் எழுத்துத் துறையில் ஈடுபட்டு, சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் முதலாம் ஆக்க இலக்கியங்களைப் படைத்ததுடன், சிறந்த விமர்சகராகவும் இசைப்பாடல் ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
இலங்கைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாகிய இவர் எழுதிய ‘கடற்காற்று' என்ற நாவல் நாவற்போட்டி ஒன்றில் வெள்ளிப் பதக்கப் பரிசு பெற்றது. நூலுருவில் வெளிவந்துள்ள இந்த நாவலைத் தவிர ‘செந்தணல் என்ற இவரின் மற்றொரு நாவல் அபரிமிதமான பாராட்டுக்களைப் பெற்றது.
இலங்கையின் முக்கிய முன்னணித் தேசியப் பத்திரிகைகள் இரண்டில், துணை ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்த அங்கையன் கயிலாசநாதன் ஏராளமான இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், தனிக் கவிதை களையும், சிறுகதைகளையும் பல்வேறு பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் படைத்தவர். இரண்டு சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்து அவற்றை நடத்தி ஓர் இலக்கிய பரம்பரையையும் உருவாக்கியவர் என்று பாராட்டுப் பெற்ற அங்கையன், இலங்கையின் தேசிய இலக்கிய வளர்ச்சியை இலட்சியமாகக் கொண்டு உழைத்தவர்.
வானொலியில் பல கதை நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியுள்ள இவரின் மெல்லிசைப் பாடல்களும் கவிதைகளும் இவருக்குத் தனிப் புகழைச் சம்பாதித்துக் கொடுத்தன. கவிதைத் துறையிலே தான் அவருக்கு மிகுந்த ஈடுபாடு. கவிதைகளை ஆராய்வதிலும் ரசிப்பதிலும் அவர் மிகவும் ஈடுபட்டு வந்தவர். அவருடைய ஆத்மாவின் மணிக் குரலாகத் திகழ்ந்ததே கவிதை என்று சொல்லலாம். கவிதையை நயப்பதில் அவருடைய குரல் இவ்வாறு ஒலித்தது.

Page 12
அல்கைலர் கலிஸ்சநாதர்
“கவிச் சக்கரவர்த்தி கம்பரை உங்கள் எல்லாருக்கும் தெரியும். அவர் ஒரு நாள் தோட்டங்களின் வழியாகப் போய்க் கொண்டிருந்தாராம். எங்களைப் போல ஏர் பிடித்து உழுவதும், பட்டைக் கிடங்குகளில் துலாக் கொடியையும் பீலிப் பட்டையையும் பிடித்து துலா மிதித்துத் தண்ணிர் இறைப்பதுமாக, கமக்காரர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சூரியன் உதிக்க முன்னமே அவர்கள் எல்லாரும் வேலைக்குப் போயிருந்தார்கள். மூங்கில் மர இலைகளிலே பனிபடர்ந்திருந்ததாம். கம்பனுக்குக் காலையிலேயே கவிதை பிறக்கத் தொடங்கிவிட்டது. எடுத்த எடுப்பிலேயே “மூங்கில் இலைமேலே தூங்கு பனிநீரே” என்று அடியெடுத்த கம்பருக்கு அடுத்த அடி எடுக்க முடியவில்லையாம். ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த கமக்காரர்கள் தங்கள் களைப்பை மறப்பதற்காகப் பாடத் தொடங்கி னார்களாம். கடலிலே மீன்பிடிக்கப் போகின்ற மீனவ மக்களும் ஏலேலோ பாடுவார்கள் தானே! அதேபோல உழவ மக்களும் பாடினார்களாம். “மூங்கில் இலை மேலே தூங்கு பனிநீரே" என்று ஒருவன் பாட மற்றொருவன் அந்தப் பாடலை உடனே பூர்த்தி ஆக்கி விட்டானாம். 'தூங்கு பனிநீரை வாங்கு கதிரோனே” இப்படி இவர்கள் பாடியதைக் கேட்டதும் கம்பர் அப்படியே பிரமித்துப் போனாராம். ‘அடடா கிராமிய மக்களிடம் இத்தனை உயர்ந்த கற்பனா சக்தியும் கவிதா சக்தியும் குடிகொண்டிருக்கின்றன. என்னுடைய சிந்தனைக்குக் கூட இந்தக் கற்பனை தட்டுப்படவில்லையே” என்று வியந்து பாராட்டினாராம். இது கதையாக இருக்கலாம். அல்லது உண்மையாகவும் இருக்கலாம். ஏனென்றால் எல்லாரும் எக்காலத்திலும் வல்லவர்களாக இருப்பதில்லையே! இதிலிருந்து நாங்கள் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்கின்றோம் அல்லவா? கல்வியிற் பெரியவனான கம்பனிடம் காணக்கிடைக்காத கற்பனை நயங்கள் கூட, கிராமிய மக்களிடம் அதிக அளவாக மண்டிக் கிடக்கின்றன என்பதே அந்த உண்மை, பெருங் கவிஞர்களிடம் காணக்கூடிய இலக்கிய சுத்தமான சொல்லாட்சியும் செய்யுள் அமைதியும் கிராமிய மக்களிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுடைய பாடல்களில் உண்மையான உணர்ச்சிகளும் ஆசாபாசங் களும் அபிலாஷைகளும் வெளிப்படையான மனப் பக்குவமும் வெகுவாகப் பரிணமிக்கின்றன. அத்தகைய மக்கள் மொழியில், மக்களால், மக்களுக்காகப் பாடப்பெற்ற சில நாட்டுப் பாடல்களில் ஈடுபாடு கொண்ட அங்கையன் கயிலாசநாதன் இந்த இலட்சியத்தை அடி நாதமாகக் கொண்டு எழுதிய கவிஞர்கள் என்று கருதப்படுகின்ற கம்பரிலும் பாரதியிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர்களைப் பின்பற்றி மக்களுக்காக மக்கள் மொழியில் கவிதைகள் பாடுவதில் ஈடுபாடு காட்டி வந்தவர்.

அல்கைலர் கலிஸ்ாதரர்
பாரதியின் பாடல்களில் ஒன்றில் ‘கேட்டிருப்பாய் காற்றே" என்ற சொற்றொடர் வருகிறதல்லவா? அந்தச் சொற்றொடரையே தலைப்பாகக் கொண்டு தொடர்ந்து, பல இனிமையான ரசனை சொட்டும் கட்டுரைகளை தமிழர்களைப் பற்றியும் தமிழர்களின் வாழ்க்கை பற்றியும் அவர்களின் கலை, சமூகம், சமயம் போன்ற துறைகளில் நிலவியுள்ள சூழல்கள் பற்றியும் உருக்கமான விமர்சன ரீதியான ஆராய்ச்சி அடிப்படையுள்ள கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். ‘கேட்டிருப்பாய் காற்றே” என்ற அந்தச் சொற்றொடரே அவர் இலக்கியத் துறையில் ஆற்றிய சில பணிகளுக்குப் பல விதத்திலும் பொருத்தமானதாக அமைகிறது.
காற்றோடு அவருடைய ஆத்மாவின் மணிக்குரல் கலந்து விட்ட போதிலுங்கூட அந்தக் குரல்கள் பலர் நெஞ்சங்களிலும் பலர் செவிகளிலும் என்றும் நிறைந்துதான் இருக்கின்றது. அவரது கவிதைகளிலே ஒருவிதமான ஆத்மசோகம் இழையோடுகிறது. பாடுபடும் மக்களுக்காகவும் கிராமத்து ஜனங்களுக்காகவும் குழைந்து உருகும் பாடல்கள் பலவற்றை அவர் யாத்த போதிலும் குடும்பப் பாங்கான மெல்லிசைப் பாடல்களிலே லேசாக இழையோடும் சுவைகள் மிகவும் மனோரம்மியமானவை. பட்டு இதழ் விரித்து சிரிக்கும் வட்டமுகம் ஒன்றினைப் பார்த்து அவர் இப்படிப் பாடுகிறார்.
1. பட்டு இதழ் விரித்து - சிரிக்கும்
வட்ட முகம் அணைத்து - நான் தொட்டு மகிழ்ந் திருப்பேன் - உன்னைத் தெய்வ மென உரைப்பேன் (பட்டு)
2. வட்ட நிலா முகமும் - நெஞ்சில்
வாஞ்சை எழும் சுகமும் - உன்னைத் தொட்டதால் வந்த தம்மா - சுவை சொட்டிடும் தேன் பழமே (பட்டு)
3. கான மயில்களின் ஆட்டம் - உன்றன்
கைகளிலே அங்கு தோற்றும் - தேவ கானக் குயிலின் பாட்டும் - நிந்தன் கிள்ளை மொழி நினை வுட்டும் (பட்டு)
ஆங்கில இலக்கியத்திலும் பிறமொழி இலக்கியங்களிலுங் கூட அங்கையன் கயிலாசநாதன் மனம் ஈடுபட்டுத் திளைத்தவர். பல வெளிநாட்டு

Page 13
அங்கையர் கஸ்ாrதழர்
இலக்கியங்களைத் தமிழிலே மொழி பெயர்த்து அளித்தவர். இவான் துர்கானோ (Ivan TurgenOV)வின் ‘கரும்பூமி’ என்ற நாவல் அவருடைய சிறப்பான மொழிபெயர்ப்பாக வெளிவந்து பலரின் பாராட்டுதல்களையும் பெற்றது. வெளிநாட்டுத் தானிகர் அலுவலகத்தின் தமிழ்ப் பிரிவிலும் வானொலித் துறையிலும் தொழில் புரிந்த அங்கையன் கயிலாசநாதன் ஆங்கிலத்திலும் தமிழ்க்கலை பற்றி எழுதி வந்தார்.
இத்தகைய நவீன இலக்கிய ஈடுபாடு கொண்ட அங்கையன் கயிலாசநாதன், பழந்தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த பரிச்சயம் கொண்டவர். சங்க இலக்கிய நூல்கள் பற்றிப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை அவர் எழுதினார். குறிப்பாக, சங்க இலக்கியத்தில் அகத்திணைப் பிரிவுகள் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் ரசமானவை. அகத்திணை என்றால் அங்கையன் கயிலாச நாதனுக்கு ரசனை சற்று அதிகம். அவருடைய பாடல்கள் பலவற்றிலும் மெல்லிசைப் பாடல்கள் பலவற்றிலும் இந்த ரசனை சொட்டும்.
இதோ ‘காலை மலரே கனிவுடைய செண்பகமே
சோலைக் குயிலே சுவைநிறைந்த தேன்பழமே”
என்று அகத்திணைப் பாடல் ஒன்றில் அவருடைய மணிக்குரல் இவ்வாறு ஒலிக்கிறது.
1. காலை மலரே கனிவுடைய செண்பகமே
சோலைக் குயிலே சுவைநிறைந்த தேன்பழமே வேலைப் பழிக்கும் விழிபடைத்த பொற்குடமே நூலைப் பறித்து நுண்ணிடையில் ஏன்வைத்தாய்?
(காலை மலரே)
2. ஆனந்த ராகத்தின் அற்புதத் தேனிசையே
நானந்தப் பொருளென்றே நாவாற் சுவைதருவாய் தேனுந்தன் இதழென்றே தெவிட்டாத இதமளிப்பாய் ஏனுந்தன் இதழ்ச் சிவப்பை விழியேற்றுக் கொண்டதுவோ
(காலை மலரே)
3. அன்னம் நடைநடக்கும் உன்னடையைக் கண்டதனால் ஆதவன் ஒளிபெற்றான் உன்னெழிலைக் கேட்டதனால்

அல்கைலர் கலிஸ்சநாதர்
தென்னன் தமிழ் நிலைத்தாள் உன்குரலின் இனிமையதால் இன்னும் எதைச் சொல்ல என்னிதயத்தின் ஒளியே? (காலை மலரே)
தன்னம்பிக்கை மிகுந்தவர் அங்கையன் கயிலாசநாதன். நாவல்கள் பலவற்றை அவர் எழுதி இருந்தாலும் ‘கடற் காற்று அவருடைய முக்கியமான நாவல். அந் நாவலின் முன்னுரையில்,
‘இந்த நாவல் என்னுடைய முதலாவது படைப்பன்று. கன்னி முயற்சியுமன்று. நான் எழுத வேண்டும் என்ற இனிய ஆவலைப் பெற்று 1959ஆம் ஆண்டு முதல் சவலைப் பிரசவம் செய்திருந்தும் பெயர் விளம்பரத்துக்காக மட்டுமே அதனையே உரைத்துணர்த்தும் தரமாகக் கருதி கதைகளைப் படைத்தவர்களுடைய கதைகளை மட்டுமே கரம் நீட்டி அணைப்போம் என்ற கவைக்குதவாப் பத்திரிகைகளின் புறமுதுகைப் பார்த்துப் பெருமூச்சு விட்டது கிடையாது” என்று அடித்துச் சொல்கிறார்.
‘பத்திரிகைகள் தாம் கதாசிரியனைத் தீர்மானிக்கின்றன என்ற பத்தாம் பசலிக் கனவை மறுத்து, உத்வேகம் உள்ள எவனும் எழுதலாமே என்ற உணர்வு பெற்று, இந்த நாவலுக்கு முன்பு ஒரு முழு நாவலை எழுதி முடித்து அதனை அழகாக படியெடுத்து, என் நூல் நிலையப் பெட்டிகளின் அடியிற் பக்குவமாக வைத்திருந்தேன். எனது ஒலை வீட்டில் நீக்கமற நிறைந்துள்ள கறையான்களுக்கு அக்கதைத் தாள்களுட் பெரும்பாலானவை இரையாகிவிட்ட சோகம் அண்மையில் தான் தெரிய வந்தது. ஓ.! கறை யானுக்குத் தமிழ் நூல்கள் என்றால் மிகவும் பிடிக்குமா?” என்று எழுதுகிறார்.
கடற்கரை சார்ந்த மண்டைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அங்கையன் கயிலாசநாதன் கடற்காற்று என்ற நாவலை எழுதியிருப்பது தான் வாழ்ந்த சூழலிலே வாழும் மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதில் அவருக்கிருந்த அக்கறையை எடுத்துக் காட்டுகிறது. தான் பிறந்து, வளர்ந்து, விளையாடி மகிழ்ந்து வாழ்க்கையில் பங்கு கொண்டு உறவாடிய மக்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை அவர் தன்னுடைய மெல்லிசைப் பாடல்களிலுங் கூடப் படம் பிடித்துக் காட்டினார். மழை சிந்தும் கடலோரத்தில் இளநண்டு ஒன்று படம் கீறும் காட்சியினை அவர் இவ்வாறு வர்ணிக்கிறார்.

Page 14
அல்கைலன் கலிஸ்ாசநாதர்
1. 'மழை சிந்தும் கடலோரம் இள நண்டு படங் கீறும் நிலை கண்டு என் நெஞ்சில் நிதம் உந்தன் நினைவுறும்.’
2. கலை கண்ட உருவாகிக்
களி கொண்ட நிலவே - உன் கழல் சிந்தும் ஒளி கண்டு கவியென்று மகிழ்வேன் (மழை சிந்தும்)
y
(மழை சிந்தும்)
3. நிலை மாறும் புவிமீதில்
நிதியாக வந்தாய் - உன் நிழல் மீது என் வாழ்வும் நிலையாகு மென்பேன் (மழை சிந்தும்)
காதல் திருமணம் செய்து கொண்ட அங்கையன் கயிலாசநாதனின் குடும்பப் பிணைப்பு அவருடைய இலக்கிய ஆக்கங்களிலும் பிரதிபலிக்கத் தவறவில்லை. ‘முக்கண்ணன், ‘புதுமைப் பண்டிதன் முதலாம் பல்வேறு புனைபெயர்களிலுங் கூட அவர் பல்வேறு பொருள்கள் பற்றி இலக்கியப் படைப்புக்களை ஆக்கியிருந்தாலும் 'லட்சுமிநாதன்' என்று தம் இல்லாளின் பெயரையும் தம் பெயரோடு இணைத்து அவர் எழுதிய கட்டுரைகள், கவிதைகள் அவர் எவ்வளவு தூரம் தம் குடும்பத்தில் பிணைப்புக் கொண்டிருந்தார் என்பதனை விளக்கும். அவர் எழுதிய மெல்லிசைப் பாடல்கள் பலவற்றில் தெறிக்கும் காதற் சுவை அவருடைய சுய வாழ்க்கையின் ரேகைகளைக் காட்டுவது என்று கருதலாம். “கண்ணுக்குள் தவழ்ந்து வந்த ஓவியமே.” என்று தொடங்குகின்ற பாடல் மிகவும் நுட்பமான மென்மையான காதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு மெல்லிசைப் பாடல் இதோ!
1. கண்ணுக்குள் தவழ்ந்து வந்த ஓவியமே - என்
கருத்துக்குள் மறைந்து நின்ற காவியமே பெண்ணுக்குள் புகுந்து வந்த போதிலும் நான் - உன் எண்ணத்துள் நீந்திடத் துடிப்பேனடி
(கண்ணுக்குள்)
2. வாழ்வது உனையன்றி வேறு இல்லை - உன்
வரவது தவிர்ந்தங்கு பாதை இல்லை

அல்கைலர் கலிஸ்சநாதர்
சூழ்வது உனையன்றிச் சுற்றம் இல்லை - என் சுகத்துக்கு உனையன்றி யாரும் இல்லை
(கண்ணுக்குள்) 3. கரும்பென்றால் உன் குரலின் கனிவு அன்றோ? - இரு
கயலென்றால் உன்விழியின் சாயலன்றோ? அரும்பென்றால் உன்முல்லைக் கோலமன்றோ? - என் அறமென்றால் உன்னோடு வாழ்தலன்றோ?
(கண்ணுக்குள்) என்று பாடுகிறார் அங்கையன் கயிலாசநாதன்.
தம் மனைவி, தம் குழந்தைகள், தம் குடும்பம் என்ற அகத்திணை வாழ்வின் சாயல்களை அவருடைய பாடல்கள் பெரும் அளவிற்கு எடுத்து ஒதும். மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான அங்கையன் கயிலாசநாதன் குழந்தைத் தெய்வங்களின் குரல் ஓசையைத் தம் வாழ்க்கையின் இன்ப ஈடேற்றத்தை அளிக்கும் உவகை என்று கருதுபவர். “ஓ! மணிக்குரல் ஒலித்ததே" என்று அந்தக் குழந்தைகளின் குரல்களையே அவர் பாடுகிறார்.
1. ஓ! மணிக்குரல் ஒலித்ததே
நினைத்ததும் உணர்ந்ததும் மணந்ததும் நடந்ததே ஆ! ஆ! அது இனிமை
(ஓ! மணிக்குரல்)
2. பொன் நிகர்த்தநம் கனாக்கள் கைகூடும் நாளிதே
கனிந்த கன்னி வாழ்விலே
நினைத்தவர் அகத்திடை சுகித்திடும் முகூர்த்தமே
(ஓ! மணிக்குரல்)
3. நல் வாழ்க்கையின் இன்பம் ஈடேற்றும் ஓசையே
குழந்தைச் செல்வம் வீட்டிலே களிப்பிேை. உதிர்த்திடும் சிரிப்பினில் ஒலிக்குமே ஆ1 ஆ! அது இனிமை
(ஓ! மணிக்குரல்)
களிப்பிடை சிரிப்பினை உதிர்த்த திலகங்கள், குழந்தைகள் வாழ்ந்த தம் குடும்பமாகிய சின்னஞ்சிறு உலகத்தை மட்டுமன்றி பரந்த உலகத்தைப்

Page 15
அல்கைலர் கலிஸ்4சருதஷ்
பார்த்து பஞ்சை பராதிகளுக்காகவும் பாடல்களும் இலக்கியங்களும் ஆக்கி மறைந்த அங்கையன் கயிலாசநாதன் எழுதிய ‘செந்தணல்' என்ற நாவல் மக்களுக்காக அவர் எவ்வாறு உள்ளங் கொதித்து உருக்கமான பார்வையினைச் செலுத்தி இலக்கியங்களைப் படைத்தார் என்பதனை வெளிப்படுத்தும். “உலகத்தைப் பார்ப்பதுடன் மட்டுமல்லாமல் அந்த உலகம் இப்படிப்பட்டது தான் என்று அனுபவித்து அறிவதிலும் இன்பம் இருக்கிறது” என்று ‘செந்தணல்’ நாவலிலே ஓர் இடத்தில் அவர் குறிப்பிடுகிறார். உலகத்தில் இன்பங்களை அனுபவித்து அறிவதிலும் நாட்டங் கொண்டு விளங்கிய அங்கையன் கயிலாசநாதன் தமிழுக்காகச் செய்த சேவைகள் குறிப்பிடத் தக்கவை. அவரே ஒரு கவிதையிற் குறிப்பிட்டது போல,
“தண்ணளித் தமிழைக் காத்துத்
தரணியிற் புகழிற் பூத்து விண்ணுயர் பெருமை சேர்த்து விளங்கிடும் கவிஞன் தன்னை எண்ணியே தமிழின் மக்கள் இரங்கியே நிற்கும் போது மண்ணிலே ஈரஞ் சேர மாந்தர்கள் அழுவார் தாமே”
அவருடைய பாடலே அவருக்குப் பொருந்துவதாக ஆகிவிட்டது. அவருடைய குரல் காற்றிலே கலந்து விட்டது. ஆனால், அவருடைய கருத்துக்களோ எங்கள் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றன.
ஆக்கம் : சில்லையூர் செல்வராசன் தயாரிப்பு : எம்.ஏ.குலசீலநாதன்
(இது அங்கையன் கயிலாசநாதனின் அகால மரணத்தையடுத்து 10-04-76 இல் காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவையில் ஒலிபரப்பாகிய அஞ்சலி நிகழ்சியாகும்.)

அல்கைலன் கலிஸ்ாசருதஷ்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மா அதிபர்
திரு. றிஜ்வே திலகரத்ன அங்கையன் கயிலாசநாதனின் முதலாண்டு நினைவு தினத்தையொட்டி அன்ஞரது குடும்பத்தினருக்கு அனுப்பிய அனுதாபச் செய்தி
ilth March, l977.
When young Kailasanathan joined us at Broadcasting five years ago, it would appear that he had already distinguished himself through his many-faceted contribution to the Tamil Arts. As a journalist, poet and dramatist he seemed to possess the right background for a oareer in Broadcasting.
It is sad to think that his tragic untimely death has deprived the Corporation of a talented broadcaster and the country of a promising young artist.
On the occasion of Kailasanathan's first death anniversary our thoughts go to Mrs. Raj Kailasanathan and children with a deep sense of the “tears of things'
Sgd. Ridgetwap tillekeratne Director-General Sri Lanka. Broadcasting Corporation.

Page 16
3ங்கையர் கலிஸ்சநாதர்
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, திருமதி கயிலாசநாதன் அவர்களே, அவருடைய அன்புச் செல்வங்களே, நண்பர்களே,
கயிலாசநாதன் அவர்களுடைய நினைவாக நடைபெறுகின்ற இந்தக் கூட்டத்தை அவருடைய மறைவை ஒட்டிய இரங்கல் உரையாக நிகழ்ச்சிகள் அமைந்து விடக் கூடாது என்பதிலே எனக்கொரு அக்கறை உண்டு. ஏனென்றால் வாழ்க்கை முழுவதும் உல்லாசமாக, எவ்வித வாழ்க்கைச் சிக்கல்களையும் துன்பங்களையும் பொருட்படுத்தாமல், அழுத்துகின்ற பாரங்களையெல்லாம் தூவென்று உதறித் தள்ளுகின்ற ஒரு மனோ பாவத்தோடு உயிர் வாழ்ந்த உண்மையான, கவிஞனுக்குரிய இலட்சியங்களோடும், கவிஞனுக்குரிய போக்குகளோடும் பண்புகளோடும் உயிர் வாழ்ந்த ஒரு நண்பன் அங்கையன் கயிலாசநாதன்.
அங்கையன் கயிலாசநாதன் யார் என்பது பற்றி, பலரும் பலவிதமான அபிப்பிராயங்களைச் சொன்னார்கள். இங்கே குழுமியிருக்கிற அத்தனை பேரும், பெரும்பாலும் அவரோடு நெருக்கமாக நேரடித் தொடர்பு கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஒவ்வொருவருக்கும் அவரைப் பற்றிய ஒவ்வொரு முகம் தெரிந்திருக்கலாம். அவர் பல முகங்களைப் பலருக்கும் காட்டிப் பழகியவர். ஏனென்றால் அத்தனை விதமான தன்மைகள் படைத்தவர். பெரும்பாலும் எந்த மனிதனுமே அப்படித்தான் இருப்பான் என்று நினைக்கிறேன். ஒரு மனிதனுக்கு நிரந்தரமான ஒரு பக்கத்தைக் கூறிவிடுவது சிரமம். ஒரு மனிதனை யார் என்று கேட்டால் வெறுமனே அவனுடைய பெயரைக் குறிப்பிட்டு அவன் இன்னான் என்று அடையாளங் காட்டிக் கூறிவிடுவது சிரமம். ஏனென்றால் அவனோடு பழகுகின்ற ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு சமூகத் தொடர்பு முறையிலும் பழகுகிற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தைக் காட்டி ஒவ்வொரு மனிதனும் வாழுகிறான். அங்கையன் கயிலாசநாதன் தன்னுடைய தாய்க்கு ஒரு மகனாக மட்டும் தென்படுகிறவனாக இருந்திருப்பான், தன் மனைவிக்கு ஒரு கணவனாக மட்டும் தென்படுகிறவனாக இருந்திருப்பான், ஒரு நண்பனுக்கு அந்தக் குறிப்பிட்ட நண்பனின் பண்புகளுக்கேற்ப அவனோடு பழகுகிற அம்சங்களை

அங்கைலர் கஸ்சருதஷ்
மட்டும் காட்டிப் பழகிய ஒரு நண்பனாக இருந்திருப்பான், குழந்தைகளுக்கு ஒரு தந்தைக்குரிய லட்சணங்களோடு மட்டும் விளங்கியிருப்பான். இந்த வகையில் ஒருவருக்குத் தெரிந்த அங்கையன் கயிலாசநாதன் மற்றொருவருக்கு வேறொரு மனிதனாகத் தென்படுவது இயல்பு. என்னைப் பொறுத்தவரையில் எனக்குத் தெரிந்த அங்கையன் கயிலாசநாதன் தனிப்பட்ட விதத்தில் தனித்துவம் வாய்ந்த சில பண்புகள் உடையவனாக விளங்கினான்.
அங்கையன் கயிலாசநாதன் எனக்கு முதன் முதல் அறிமுகமான சம்பவம், முருகையன் அவர்கள் குறிப்பிட்ட கண்டியிலே நடைபெற்ற அந்தக் கூட்டத்துச் சம்பவம். அந்தச் சமயத்தில் இலக்கியத்தில் ஒரு வரையறையோடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கின்ற அமைப்பு ஏற்பட்டு, இயற்கை ரீதியாகச் சில எண்ணங்கள் முன்வைக்கப்பட்டு அவை காத்திரமான ஒரு உருவத்தை அடைந்த கட்டத்திலே கண்டியிலே நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்த சிறந்த நண்பர் நவசோதி உட்பட வெவ்வேறு விதமான எண்ணக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு லட்சிய ரீதியடைந்து கலை இலக்கியத் துறைகளிலே தீவிரமாக ஈடுபாடு காட்டி வந்த சமயம். அப்பொழுது கண்டியில் நடைபெற்ற அந்தக் கூட்டத்திலே பல்கலைக்கழக மாணவர்களோடு மாணவராக அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த அங்கையன் கயிலாசநாதன், முருகையன், நான் போன்ற எழுத்தாளர்களோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டு பழகுகின்ற ஒரு ஆரம்ப நிலையை உருவாக்கினார் என்று சொல்லலாம். அதன் பிற்பாடு, பல்கலைக்கழகத்திலிருந்து பட்டதாரியாகிக் கொழும்புக்கு வந்திருந்த சமயத்தில் அவரோடு பழகுகின்ற வாய்ப்புக் கிடைத்தது. இடையிடையே அஞ்ஞாதவாசம் போவது போல தொடர்பற்றுப் போன கயிலாசநாதன் மீண்டும் கலைத்துறையிலும் இலக்கியத் துறையிலும் மற்றும் பொது வாழ்க்கைத் துறையிலும் பல கட்டங்களிலே வந்து நெருக்கமாக என்னோடு பழகுகின்ற சூழல் ஏற்பட்டது.
வேலையில்லாமல் இருந்த காலம் என்றொரு காலத்தைக் குறிப்பிட்டார் திருமதி யோகா பாலச்சந்திரன். அவர்கள் குறிப்பிட்ட அந்தக் கட்டத்திலும், பிற்பாடு சொந்தத்தில் அச்சுக் கந்தோர் ஒன்று வைத்து நடத்த முயன்று அதிலே பல சிக்கல்களுக்கு உள்ளான கட்டத்திலும், வீரகேசரிப் பத்திரிகை ஸ்தாபனத்தில் வேலை பார்த்த அந்தக் கால கட்டத்திலும், பிரித்தானிய தூதராலயத்தில் கடமையாற்றிய காலத்திலும் அதன் பிற்பாடு இலங்கை

Page 17
அங்கையர் கலிஸ்ாசருதஷ்
வானொலி நிலையத்தில் கடமையாற்றிய காலத்திலும் அவரோடு பல்வேறு மட்டங்களிலும் பல்வேறு தோரணைகளிலும் பழகுகின்ற வாய்ப்புக் கிடைத்தது.
அங்கையன் கயிலாசநாதன் இளமைப் பருவத்திலிருந்து இறுதிக் கட்டத்தை அடையும் வரையில் தொழில் அடிப்படையிலாகட்டும் சொந்த வாழ்க்கை அடிப்படையிலாகட்டும் எப்பொழுதும் கலைத்துவம் வாய்ந்த ஒரு வாழ்க்கையிலிருந்து விலகாமல் தொடர்ந்து இந்த அம்சங்களிலேயே சொந்த வாழ்க்கையை, பணம் சம்பாதிக்கின்ற துறைகளிலுங் கூட ஈடுபட்டு வந்தது புலப்படும். உத்தியோகம் இல்லையென்று பட்டதாரியாக இருந்த அங்கையன் கயிலாசநாதன் எந்தத் தொழிலும் பார்த்து விடலாம் என்று இறங்கவில்லை. கலைத்துறையோடு சம்பந்தப்பட்ட ஒரு தொழிலிலேயே ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் காரணமாக அந்த நாட்டத்தைக் கொண்டு அந்தத் துறையிலே ஈடுபடுவதற்கு முயன்று வந்தார். பத்திரிகையில் கடமையாற்றிய காலத்தில் அவர் செய்த இலக்கியச் சேவைகள் யாவற்றுக்கும் முதல் மூலகமாக அமைந்தது அவர் பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்திலே நடைபெற்ற சிறுகதைப் போட்டி ஒன்றில் பரிசு பெற்றதன் காரணமாக அத்துறையில் தீவிரமாக ஈடுபாடு கொண்டு பின்னர் ‘மையைத் தொட்டவன் கைவிடுவது கஷ்டம்” என்று சொல்லுவதற்கு ஒப்ப தொடர்ந்து அத்துறையிலேயே ஈடுபட்டு வாழ்நாள் முழுவதும் இலக்கிய சேவையையே இதய தாகமாகக் கொண்டு அவர் உழைத்தார்.
வீரகேசரியில் கடமையாற்றிய காலத்தில் பத்திரிகையில் அவர் எழுதி வந்த இலக்கியம் சம்பந்தமான கட்டுரைகள் இலக்கணம் சம்பந்தமான கட்டுரைகள், கலைத்துறையோடு சம்பந்தப்பட்ட கோட்பாடுகள் பற்றிய கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனங்கள் குறிப்பாக நாடகம் திரைப்படம் போன்றவை பற்றி எழுதி வந்த விமர்சனங்கள் - இவை அனைத்தும் பரவலாக அவர் பல கலைத்துறை அம்சங்களில் ஈடுபாடு காட்டி வந்ததைக் காட்டினாலும், குறிப்பாக கவிதைத் துறையிலேயே அவர் செய்த ஆக்கங்கள் மிக தாக்கம் வாய்ந்ததாக அமைந்தன. அவர் எழுதிய ‘கடற்காற்று' என்ற குறுநாவலும் ‘செந்தணல்' என்ற நாவலும் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்ற நாவல்கள். ‘கடற்காற்று' என்ற நாவலையே அவர் நூலாக, தான் வாழ்ந்த காலத்தில் வெளியிட்டிருந்தாலும், அவர் தாக்கமாக ஆற்றிய இலக்கிய சேவை என்று குறிப்பிடக் கூடிய கவிதைகளை நூலாக அவர் வாழ்ந்த காலத்திலே வெளியிடுவதற்கான வாய்ப்பு

அங்கைலர் கலிஸ்சருதஷ்
ஏற்படவில்லை. அவர் செய்யத் தவறிய ஒரு காரியத்தை அவருடைய திருமதி செய்து இந்தக் கவிதைத் தொகுதியை வெளியிடுவது மிகவும் பொருத்தமான ஒரு காரியமாக அமைகிறது. உயிர் வாழ்ந்திருந்தால் அவர் இந்தக் காரியத்தை ஆற்றியிருப்பாரா என்பது கொஞ்சம் சந்தேகந்தான். பெரும்பாலும் எழுதிய பிற்பாடு அந்தக் கவிதைகள் தனக்குச் சொந்தமல்ல என்று நினைக்கிற ஒரு போக்குக் கொண்ட கவிஞராக அவர் விளங்கி வந்தார். அதன் பிற்பாடு எதை எழுதுகிறேனோ எழுதிய அத்தனையும் பொது மக்களுக்குச் சொந்தம் என்கின்ற ஒரு தோரணையிலே அவற்றைப் பற்றிய லோகாயரீதியான கவலை, ஈடுபாடு காட்டாமல் பொருட்படுத்தாமல் உதாசீனமாக விட்டுவிடுகின்ற ஒரு பண்பு அவருக்கு இருந்து வந்தது. பெரும்பாலும் கவிஞர்களுக்கும், தீவிரமான உண்மை இலக்கியவாதிகள் கலைஞர்கள் என்று குறிப்பிட்டார்களே இங்கு பேசிய போது, அவர்களுக்கும் அவ்வாறு சில இயல்புகள் இருக்குமோ என்னமோ தெரியவில்லை.
முருகையன் அவர்கள் குறிப்பிட்டார்களே - காலி வீதியிலே சாமம் சாமமாக கால்நடையாகச் சென்று அப்பக் கடைகளிலும் தேநீர்ச்சாலைகளிலும் உண்டி அருந்தி, இலக்கியம் கலை சம்பந்தமாகப் பேசித் திரிகின்ற ஒரு வாய்ப்புத் தமக்குக் கிடைத்ததென்று - அதுபோல சாமப் பறவைகளாக இரா வேளைகளிலே வீதிகளில் இலக்கியம் பேசியபடி கலை சம்பந்தமான விஷயங்களைக் கலந்துரையாடியபடியும் திரிகின்ற வாய்ப்பு எனக்கும் அவரோடு கிட்டி இருந்தது. ஆனால் அந்தச் சமயங்களிலெல்லாம் பெரும்பாலும் அவர் மனமுடைந்தவராகப் பல விஷயங்களைப் பற்றி உரையாற்றியதை நான் கேட்டதுண்டு. இலக்கியத் துறையிலும் கலைத் துறையிலும் பெரும்பாலும் நேர்மையாகவும் உண்மையாவும் உழைக் கிறவர்கள் அதற்குரிய பயனையும் புகழையும் பிரதி உபகாரங்களையும் பெறுவது இன்றுங்கூட கைகூடிய காரியமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
திருமதி யோகா பாலச்சந்திரன் அவர்கள் சொன்னார்கள் - கயிலாசநாதன் வானொலியில் பெரும் சாதனைகளைப் புரியக் கூடிய ஒரு வாய்ப்பைப் பெற்று, பெரும் கலைவாதியாக மலரக் கூடிய ஒரு சந்தர்ப்பத்திலே மறைந்து போய் விட்டார் என்று. ஆனால் உண்மையிலே நடந்தது - அவர் வானொலியில் சேர்ந்து அப்படி மாறக்கூடிய ஒரு சந்தர்ப்பம் என்று அவர் நினைத்த சந்தர்ப்பம் அவருக்குக் கிட்டாமல், அப்படி மாறவே முடியாமல் ஏற்கனவே அவர் செய்த சாதனைகளும் சிதறடிக்கப்பட்டு இயல்பாகவே

Page 18
அல்கைலர் கலிஸ்ாசநாதர்
இருந்த கலைத்துறை, இலக்கியத்துறை முயற்சிகளில் தொடர்ந்து இயங்கக் கூடிய அந்த உற்சாகம் குன்றிப்போன ஒரு நிலையிலே, மனமுடைந்தவராகத் தான் அவர் மாறி இருந்தார் என்று சொல்ல வேண்டும். உண்மையில் சமூகக் கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் அமைப்புகள் சிலவற்றுக்கு ஓரளவிற்கு எதேச்சையான பண்புகள் கொண்ட இலக்கியவாதிகளும் கலைவாதிகளும் கவிஞர்களும் கட்டுப்பட்டும் மட்டுப்பட்டும் நடப்பது கொஞ்சம் கஷ்டமான காரியம்தான். அதனால் அந்தக் கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களும் வரையறைகளும் இருக்கக் கூடாது என்று சொல்வதும் சரியல்ல என்பதும் உண்மையே. ஆனால் இலக்கிய, கலைத்துறை ஆரோக்கியத்தை முன்னிட்டு இருக்க வேண்டிய கட்டுப்பாடுகளும் சட்டதிட்டங்களுமாக அவை அமையாமல் பெரும்பாலும் திறமைசாலிகளும் இயல்பாக சமூகத்துக்குப் பல சாதனைகளையும் சேவைகளையும் ஆற்றக் கூடியவர்களை மலர விடாமல் அமுக்கி விடுகின்ற தன்மை கொண்டவையாகவும் அவை அமைகிற போது ஒரு உண்மையான இலக்கியவாதி கலைவாதி செந்தணலில் பட்ட மலர் போல கருகி விடுவது இயல்பு. ஆனால் இந்தச் சூழ்நிலையில் தான் அங்கையன் கயிலாசநாதன் இறுதியில் எழுதிய கவிதைகளும் அவருடைய இசைப் பாடல்களுமே உண்மையில் அவருடைய இலக்கிய ஆக்கங்களில் சிறந்தவையாக அமைந்தன என்று குறிப்பிட வேண்டும்.
அவர் மறைந்த சமயத்தில் உடனடியாக, அவர் காலமாகி இரண்டொரு தினங்களில் ஒரு நிகழ்ச்சியினை வானொலியில் அரைமணிநேர நிகழ்ச்சியாக ஒலிபரப்பினார்கள். அந்த நிகழ்ச்சியை எழுதித் தயாரித்து வானொலியில் வழங்கினோம் என்று தலைவர் கலாநிதி நடராஜா அவர்கள் குறிப்பிட்டார்கள். உண்மையில் அந்த நிகழ்ச்சியை முழுமையாகத் தயாரித்து ஒலிபரப்பிற்கு வழங்கியவன் நான். அங்கையன் கயிலாசநாதன் மறைந்து இரண்டொரு தினங்களில் அவருடைய சேவைகள் அனைத்தையும் நினைவு கூர்ந்து பிரதியாக எழுதித் தயாரிக்கக் கூடிய ஒரு சூழ்நிலை இல்லாத காரணத்தால் என் நினைவுகளை வைத்து, தொடர்புகளை ஞாபகமூட்டி உடனடியாக பிரதி இல்லாமலே அந்த நிகழ்ச்சியினைத் தயாரித்தோம். நண்பர் பரராஜசிங்கம் அவர்கள் வானொலியில் ஒலிபரப்பாகிய அவருடைய பாடல்களைக் கொண்டு வந்து நண்பர் சங்கீத பூஷணம் எம். ஏ. குலசீலநாதன் அவர்களின் துணையோடு அந்தப் பாடல்களை வைத்து அந்தப் பாடல்களின் அடிப்படையில் அவற்றை இழையோடச் செய்கின்ற ஒரு தொகுப்பு நிகழ்ச்சியாக அரைமணி நேர நிகழ்ச்சி ஒன்றைத் தயாரிக்க ஏற்பாடு

அல்கைலர் தஸ்கிருதஷ்
செய்தார்கள். அந்த நிகழ்ச்சியினை உடனடியாகத் தயாரித்து நாம் ஒலிபரப்பினோம். அதனை ஒரு நூலாக, அங்கையன் கயிலாசநாதனின் நினைவாஞ்சலியாக அந்த நிகழ்ச்சியிலே இடம்பெற்ற பிரதியை நூலாக வெளியிட்டு இங்கு விநியோகிப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் திருமதி அங்கையன் கயிலாசநாதன் அவர்கள். அந்த நிகழ்ச்சியை நூலாகப் படிப்பது மட்டுமன்றி அதனைத் திரும்பவும் கேட்கக் கூடிய ஒரு சூழலை ஏற்படுத்த விரும்பி அந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு நாடாவை இங்கே வைத்திருக் கிறார்கள். இந்தக் கூட்டம் முடிகின்ற கட்டத்திலே அதனைப் போட்டு ஒலிபரப்ப ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியிலே அங்கையன் கயிலாசநாதனைப் பற்றிய கூடுதலான நெருக்கமான சில தொடர்புகளை நான் வெளியிட்டிருக்கிறேன்.
இன்று ஒரு வருடம் கடந்த நிலையில் திடீரென்று சில அபிப்பிராயங்களைத் தொகுப்பாகச் சொல்வது கஷ்டமாக இருக்கிறது. திருமதி யோகா பாலச்சந்திரன் அவர்கள் அவரோடு நெருக்கமாகப் பழகியவர்கள் கூடுதலான அபிப்பிராயங்களைச் சொல்லலாம் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் உண்மையில் மிக நெருக்கமாகப் பழகியவர்களுக்குத் தான் அப்படிச் சொல்ல முடியாத சங்கடம் ஏற்படும் என்று நினைக்கிறேன். மிக நெருக்கமாகப் பழகிவிட்ட காரணத்தால், ஒன்றில் எந்தச் சம்பவத்தைக் குறிப்பாக எடுத்துச் சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காடுகின்ற ஒரு கட்டமும், எந்த அம்சம் முக்கியமானது மற்றவர்களுக்கு என்று நிதானித்துக் கொள்ள முடியாமல் ஏனென்றால் பெரும்பாலும் அவரோடு நெருக்கமாகப் பழகியவர்களுக்கு அவரோடு சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களுமே பிரதானமானவையாகவும் சுவையானவையாகவும் நெஞ்சைத் தொடுகின்ற பண்பு வாய்ந்தனவாகவும் தென்படும். ஆதலால் அமர்ந்து விட முன்பு அவரோடு மிக நெருக்கமாக இறுதிக் காலங்களில் பழக வேண்டிய ஒரு சூழல் இருந்தமையால் பல விஷயங்களை நான் உடனடியாகத் தொகுத்துச் சொல்ல முடியாமல் இருக்கிறது. எத்தனையோ எண்ணங்கள் மனதிலே சுடர்விடுகின்றன. இலங்கை வானொலியில் புதிதாக நிகழ்ச்சிகளைச் செய்ய வந்து சேர்ந்திருக்கிற பலரும் வாத்தியார் என்று என்னை அழைப்பதுண்டு. அங்கையன் கயிலாசநாதன் காணும் பொழுதெல்லாம் ‘வாத்தியார்” என்று மரியாதைப் பன்மை போட்டு என்னை அழைப்பதில்லை. ‘வாத்தி' என்று உரிமையோடுதான் அழைப்பார். அவருடைய நட்புரிமைத் தாக்கத்தைப் பற்றி இங்கு குறிப்பிட்டார்கள். அப்படி அழைப்பது மட்டுமல்ல. வாத்தி

Page 19
அங்கைலன் கலிஸ்சநாதர்
என்று ஓரிரு கட்டங்களில் "வாடா, போடா' என்று ஏக வசனத்தில் பேசுகின்ற ஒரு பழக்கமும் கொண்டிருந்தார். சட்டைப் பையிலே கையைப் போட்டு எப்பொழுது வேண்டுமானாலும் எவ்வளவு ரூபாயென்றாலும் எடுத்துக் கொள்ளுகிற உரிமையையும் கையாளுவார். அதேபோல எந்தச் சமயத்திலும் பணம் இல்லையா என்று கேட்டுத் தன் பொக்கற்றிலிருந்து பணத்தை எடுத்து சட்டைப் பையில் கணக்குப் பாராமலே திணித்துவிட்டுப் போகின்ற பண்பாடும் அவரிடம் இருந்தது. அவ்வாறு மிக நெருக்கமாக ஒருவித தாரதம்மியம் இல்லாமல் ஒரு தனிப்பட்ட தோரணையில் ஒரு பொதுவுடைமையைப் பின்பற்றுகின்றவர் போன்ற ஒரு பண்பாளனாக அவர் விளங்கி வந்தார். யாரோடும் எந்த விதமான பேதங்களும் பாராட்டாமல் சமத்துவமாக எதேச்சையாகப் பழகுகின்ற ஒரு பண்பு அவரிடம் இருந்தது.
அத்தகைய அங்கையன் கயிலாசநாதன் பற்றிய நினைவுகள் மனதிலே மிகவும் நெஞ்சைத் தொடுகின்ற குமிழிகளாக இருந்து வருகின்றன. அவற்றை மனதிலே போற்றிக் கொண்டு இங்கு வெளிப்படுத்திய செயலால் பிரச்சினைகள் பலவற்றையெல்லாம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டி வந்து விடுமோ என்ற ஆதுரத்தால் இத்தோடு நிறுத்திக் கொண்டு அவருடைய நினைவை மனதிலே பிரதிஷ்டை செய்யும் முகமாக எழுப்பப்பட்ட இந்த அஞ்சலிக் கூட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து, கூட்ட முடிவிலே இடம்பெறும் அந்த அஞ்சலி நிகழ்ச்சியினைக் கேட்டுச் செல்லுமாறு கேட்டு விடைபெறுகின்றேன்.
சில்லையூர் செல்வராசன்
25-03-1977

அங்தைலன் கலிஸ்ாசநாதர்
வானொலி, பத்திரிகை முலம் எழுதும்
திறமையை உலகறியச் செய்தவர்
கயிலாசநாதனின் நினைவு விழாவில் திரு.கே.எஸ்.நடராசா
яр -60pЈ
கலை, வாழ்வுக்கு ஒரு குத்து விளக்கு. கலை இல்லாத வாழ்வில் களையில்லை. கலைச்சுவடுகள் இல்லையேல் ஒருவரை நாம் தொடர்ந்து நினைவு கூருவது கஷ்டம். காலஞ்சென்ற அங்கையன் கயிலாசநாதன் கலை அடிச்சுவடுகளை விட்டுச் சென்றுள்ளதால் அவற்றை உற்றுப் பார்த்து அவரை நாம் இன்று நினைவு கூருகிறோம்' என இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை பணிப்பாளர் திரு.கே.எஸ்.நடராஜா கூறினார்.
அமரர் அங்கையன் கயிலாசநாதனின் ஓராண்டு ஞாபகார்த்த தினக் கூட்டம் நேற்றுமாலை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த வைபவத்துக்குத் தலைமை தாங்கி திரு.கே.எஸ்.நடராஜா உரை நிகழ்த்தினார்.
அவர் தொடர்ந்தும் பேசுகையில், “திரு.கயிலாசநாதன் வானொலி, பத்திரிகை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தித் தமது எழுதும் திறமையை உலகறியச் செய்தார். கலைஞர்களைத் தமது கலைத் திறமையினால் அவர் கவர்ந்தார், கலையினால் பிணைக்கப்படும் பிணைப்பே நீண்ட காலம் நிலைக்கக் கூடியது, இதை நிரூபித்தவர் கயிலாசநாதன்.
‘கயிலாசநாதனின் படைப்புகள் எங்கணும் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை
ஒன்றுபடுத்தி நூலுருவில் தந்துள்ளார் அவரது மனைவி. இம் மாதரசியின் செய்கை ஏனைய மனைவியர்க்கே எடுத்துக் காட்டாகும்’ என்றார்.
வீரகேசரி வார வெளியீடு ஆசிரியர் திரு.பீ.ராஜகோபால் பேசுகையில்,
காலம் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்தக் காலச் சுழற்சியின் வேகம், அடித்துச் செல்லக் கூடாதவர்களை எல்லாம் அடித்துச் செல்கிறது.

Page 20
8tdijeo80jdä 846q)M•ʻyaydi
இந்தக் கால வேகம் ஒரு காரின் வேகத்தில் திரு.கயிலாசநாதனையும் அடித்துச் சென்று விட்டது' என்றார்.
கவிஞர் இ.முருகையன் பேசுகையில், 'விஷயஞானம் உள்ள கயிலாசநாதன் எவையெல்லாம் தரம் வாய்ந்தவை எனப் பகுத்தறியும் திறமை பெற்றிருந்தார், இந்தியப் பத்திரிகைகளுக்கு எழுதிக் கொண்டிருந்த என்னை, இலங்கைப் பத்திரிகையான வீரகேசரிக்கும் எழுதத் தூண்டியவர் அவரேயாகும். அவர் இயற்றிய கவிதைகளில் இசைத்தன்மை மேலோங்கி நிற்கின்றது' என்றார்.
திருமதி யோகா பாலச்சந்திரன் பேசுகையில், 'முன்னோடிக் கவிஞராக, தீர்க்கதரிசன எழுத்தாளராக, துடிப்பான இளைஞராகத் திகழ்ந்தவர் என்றார்.
பல்கலை வேந்தன் திரு. சில்லையூர் செல்வராசன் பேசுகையில், 'இளம் பருவத்திலிருந்து இறப்பு வரை கலைத்துறை தொடர்பு கொண்டிருந்த கயிலாசநாதனின் ஆக்கங்கள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. தாக்கமாக அவர் ஆற்றிய கவிதைத் தொகுதி அவரது மனைவியாரால் வெளிக் கொணரப்பட்டுள்ளது. எழுதிய பின்னர் கவிதைகள் தமக்குச் சொந்தமானவை அல்ல என்பது திரு.கயிலாசநாதனின் கருத்து. அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்று இந்தக் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்குமோ என்பது சந்தேகமே என்றார்.
இந்த வைபவத்தில் திரு.கயிலாசநாதனுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக இரண்டு நிமிட நேரம் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது.
அன்னாரின் ‘வைகறை நிலவு” கவிதைத் தொகுதியும் வெளியிடப்பட்டது. இந் நூலின் முதல் பிரதியை திரு.ராஜதுரை வாங்கினார்.
வீரகேசரி - சனிக்கிழமை
26-03-1977

அங்மகலர் கலிஸ்ாசநாதர்
என் நெஞ்சில் நிதமுந்தன் நினைவூறும்
‘மழைசிந்தும் கடலோரம் இள நண்டு படம்கீறும் நிலை கண்டு என் நெஞ்சில் நிதமுந்தன் நினைவூறும்.”
என்றோ ஒருநாள் நீ எழுதிய கவிதை இது. அன்றொருநாள் நீஇந்த
அழகான கவிதந்து
நன்றான இசையில்
LJTLLIT! 6T6ërg5'LTuj! ஆனந்த ராகத்தில் நான் பாடப்பாட அழகாக, மேசையில் நீதாளம் போட ஆனந்தலோகத்தில் மிதந்தோமே அண்ணா!
இன்றும் அதே பாட்டை என்னுள்ளே இசைக்கின்றேன். ஆனந்தமில்லை. அழகான ராகமில்லை. அன்போடு கேட்டுத் தாளமிட நீயில்லை. என்றாலும்.
இந்த உலகும் இனிய கவின்கலையும் இருக்கின்றநாள் வரையில் நீயும் வாழ்வாய் எந்தனின் அண்ணன் நீஎன்றும் வாழ்வாய் 'கலைஞன் கயிலாசநாதன்”
என்றே நீ ஒளிர்வாய்!

Page 21
அங்கையர் கஸ்தரர்
'மழை சிந்தும் கடலோரம் கிளை நண்டு படம் கீறும் நிலை கண்டு என் நெஞ்சில் நிதமுந்தன் நினைவுறும்”
இப்பாடல் அங்கையன் கயிலாசநாதன் அகால மரணமடைந்ததை அறிந்து ஆற்றொணாத் துயரில் மூழ்கிய திரு. என்.சண்முகலிங்கன் மனமுருகி எழுதி, வீரகேசரி வார வெளியீட்டில் (11-04-76ல்) வெளியாகியது. இப் பாடலுக்கு குரல் கொடுத்தவர் என். சண்முகலிங்கனே என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீரகேசரி
11-04-1976

அங்கைலர் கலிஸ்சநாதர்
வாழ்வில் கலை ஏற்படுத்தும் பிணைப்பே
நீடிக்கக் கூடியது அங்கையன் ‘வைகறை நிலவு நூல் வெளியீட்டு விழாவில்
பேச்சு
‘வாழ்வில் கலை ஏற்படுத்தும் பிணைப்பே நீடிக்கத் தக்கது. பலகாலம் சிந்திக்கப்படக் கூடியது. வாழ்வுக்குக்கலை, குத்துவிளக்கு போன்றது. கலை இல்லாத வாழ்வு களை அற்றதாகவே இருக்கும்”.
இவ்வாறு, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற காலஞ்சென்ற அங்கையன் கயிலாசநாதனின் ஓராண்டு நினைவு தினத்தன்று அவர் எழுதிய கவிதைத் தொகுப்பான 'வைகறை நிலவு நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங்கிப் பேசுகையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் நிகழ்ச்சி அதிகாரி திரு.கே.எஸ்.நடராஜா குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில் கூறியதாவது:
“அங்கையன் கயிலாசநாதன் பல கலை அடிச்சுவடுகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார். பத்திரிகைகளையும் வானொலியையும் தன்னுடைய எழுதும் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான சாதனங்களாகப் பயன்படுத்தியவர். கட்டுரைகள், கவிதைகள், இசைக் கவிதைகள் ஆகியவற்றின் மூலம் தனது ஆற்றல்களை நிரூபித்துக் காட்டியுள்ளார்.”
“அவர் யாத்த பாடல்களை அவ்வப்போது பார்த்த நாம் அவை அனைத்தையும் ஒருங்கு சேர்த்துப் பார்க்கும் வாய்ப்பு இருக்கவில்லை. அந்த வாய்ப்பினை இன்று அவரது பாரியார் அளித்துள்ளமைக்காக அவருக்கு நன்றி கூறுவோம். திருமதி கயிலாசநாதன் தமது எழுத்தாளரான கணவனின் ஓராண்டு நினைவாக அவரின் நினைவு எல்லோர் மனங்களிலும் நிலைக்க ஏதுவாக அவரது கவிதைகளை நூலுருவாக வெளியிட்டிருப்பது பெருமைக்குரியது. ஏனைய மனைவிமாருக்கும் ஓர் எடுத்துக் காட்டாக அமைகின்றது’.

Page 22
அல்கைவர் கலிஸ்மதமும்
திரு. இராஜகோபால் பேசுகையில், “காலம் தனது வேகத்தில் அடித்துச் செல்லக் கூடாதவர்களையெல்லாம் அடித்துச் சென்று விடுகிறது” என்றார்.
கவிஞர் இ.முருகையன் பேசுகையில், “அநேகமாக இந்தியப பத்திரிகைகள், சஞ்சிகைகளிலேயே எழுதிக் கொண்டிருந்த என்னை, ஈழத்துப் பத்திரிகையில், ஈழத்து மக்களுக்கு ஏற்ற விதத்தில் எழுதவும் தூண்டுதலாக இருந்தவர் திரு. கயிலாசநாதன், காலஞ்சென்ற திரு. 'மஹாகவியும் கயிலாசநாதனும், நானுமாக அப்போது இலக்கிய ஆக்கங்களில் ஒன்றுபட்டிருந்தோம். இப்போது ஒலிபரப்பாகின்ற ஈழத்துப் பாடல்களிலே திரு.கயிலாசாதனின் பாடல்களிலேயே இசைத் தன்மை மேலோங்கி நிற்கின்ற ஒரு தனித்துவத்தை அவதானிக்கலாம்"
எனறார.
திருமதி யோகா பாலச்சந்திரன் பேசுகையில், ‘‘வைகறை நிலவு நூலை வெளியிடுவதன் மூலம் திருமதி கயிலாசநாதன் தமது கணவனுக்கு ஒரு பெண் செய்யக் கூடிய அதி உயர்ந்த அஞ்சலியைச் செய்திருக்கின்றார் ” என்றார்.
சில்லையூர் செல்வராசன் பேசுகையில்; எழுதிய பின் எதுவும் எழுத்தாளனுக்குச் சொந்தமல்ல; இவை பொது மக்களுக்கே சொந்தமானவை என்று சொல்பவர் திரு.கயிலாசநாதன் என்றும் அவர் உயிரோடு இருந்திருந்தால் இந் நூல் வெளிவந்திருக்குமா என்பது சந்தேகமே என்றும் கூறினார்.
ஈழநாடு - புதன்கிழமை
30-03-1977

அங்கைலர் கலிஸ்ாசருதஷ்
கவிதாஞ்சலி
அங்கையனாம் கைலாசநாதனவர் அருங் கவிதை நயம் பாட அகிலமெலாம் நிறைபவனே அன்பர் தொழு கணபதியே அந்தி சந்தி எப்பொழுதும் அடியேனை ஆண்டருளே
அற்புதனே அங்கையனே அருங் கவிதைகள் தந்தவனே தீந்தமிழில் நீ செய்த திறமான பாடல்கள் சிந்தனைக்கு மெருகூட்டி என்தனையே ஈர்த்தனவே
காந்தி மகான் போதனைகள் கவிவடிவில் வடித்த உன்தன் வாழ்வுதான் வழி காட்டும் வளமாய் நாம் சிந்திக்க, திக்கெல்லாம் ஒளி பரப்பும் தீபம் தான் நீ அன்பா! அறியாமை எனும் இருளை அகற்றி வைத்த அரும் கவியே, தீண்டாமை எனும் நோய்க்கு திறமான மருந்தாகும் உன்பேனா; ஒரு போதும் வற்றாது -
உன் புகழும் எப்போதும் மாறாது.
மங்காப் புகழுடை யோய் மனிதருள் மாணிக்கமாய் கவிஞருள் கற்கண்டாய் கலைவாணி அருளாலே

Page 23
அல்கைலர் கலிஸ்சநாதர்
கன்னித் தமிழ் வளர்த்தோய் கனகாலம் நிலைத் திருப்பாய்.
அயராது உழைத்தவனே அருங் கவிதைத் திறம் காட்டி, அன்பரையும் நண்பரையும் அழகாகக் கவர்ந்தவனே, மண்ணுலகப் பிழை திருத்தி விண்ணுலகை மேன்மை செய தேவர் உனைக் கவர்ந்து விட்டார்.
ஆழி உள காலமெல்லாம் அங்கையனே நின் புகழை நங்கை தமிழ்க் கன்னி நன்றாகக் காத்து நிற்பள்.
வாணி விழாக் கொண்டாடும் வாரமாம் இவ்வாரம், நவ நாட் பூஜைகளில் நான் கேட்டவரம் சொல்வேன் வடிவாகக் கேள் அன்பா.
அங்கையனே உன் புகழ்தான் அகிலமெலாம் பரந்திருக்க, நித்தியனாம் நின் ஆத்மா நிலவு எங்கும் ஒளி பரப்ப நாள் தோறும் வைகறையில் நான் அமர்வேன் தியானத்தில் அமரராம் உம் நாமம் அருவி போல் மருவி வர ஆனந்தம் பொங்கி வர பேரானந்தம் பெற்றுய்வேன்; பாரினிலே, பரமானந்தம் பருகி நிற்பேன்.

அல்கைலன் கலிஸ்ாசருதஷ்
ஆத்மா அழியாது அங்கையனின் அருங் கவியும் அழியாது; அந்நிலையில் நீ வாழும் அரும் நிலையை, அறிபவருள் அடியேனும் ஒருவனையா!
உன் ஆத்மா, மகாத்மா மட்டுமல்ல, உலகு நிறை பரமாத்மா ஆனதையா, அங்கையனே! என் அருமைத், தமிழ்ச் சோதரனே.
காலத்தால் அழியாத காவியங்கள் படைத்தவனே ஞாலத்து ஞானியர்க்கும் பாலத்தை அமைத்தவனே சிந்தனைக்கு விருந்தாகும் சீருடைய நின் பாக்கள் மாக்கள் பல பேரை மனம் மாறவைக்கு மன்றோ! மனிதகுலம் இவ்வுலகில் மகிழ்வுடனே வாழுமன்றோ!
கற்றோரும் மற்றோரும் கசிந்துருகிக் கடைத் தேற கவிகள், கட்டுரைகள், கதைகள் மட்டுமல்ல, நாவன்மையாலே, பல 'நாவல்களும் தந்தவனே நாமகளின் கடாட்சம் நன்றாகப் பெற்றவனே!
நாமகளைக் கொண்டாடி நம் மகாத்மா காந்தியையும் கொண்டாடும்

Page 24
அல்கைலர் கலிஸ்ாசநாதர்
நன்நாளும் இவ்வாண்டில்(1995); ஒன்றாக வந்ததையா.
மகாத்மாவின் கொள்கைகளை சிந்தனைக்கு விருந்தாக்கி தமிழராம் எங்களுக்குத் தயங்காமல் தந்தாய் - எம் தந்தாய்! அருங் கவியே! அங்கையனே.
அக்ரோபர் 2ஆம் ஒய்யார நன் நாளில், ஓங்கு புகழ் காந்தி மகான்
உதித்திட்ட இந்நாள் தான்
உத்தமனாம் உன்தனது கலைஞானப் பொக்கிஷங்கள் உயர்வேறி, மென்மேலும் மெருகேறும் நன்நாளாய் நினைத்ததனால்; இங்கிருந்து நான் எழுதும் இதயக் கீத மது ஒக்டோபர் 2ல் ஒருங்கிணைந்து ஒர்குரலாய், கயிலாச நாதனுடன் கயிலாசநாதனாய்க் கலந்தொலிக்கும் அங்கையனின் அருங் கவிக்குள் - ஒன்றிணைந்து கலந்து நின்று; ஆண்டவனாம் உன் செவிக்குள் ஒய்யாரமாய் ஒலிக்க - ஆண்டாண்டு தோறும்
ஆண்டவனை வேண்டி நிற்பேன், ஆத்மாவை ஆள்பவனை அடியேன் நான் அன்புடனே வேண்டி நிற்பேன்.
திரு. சண்முகநாதன்
அக்டோபர் 02, 1995
(வத்தளையில் வசித்த திரு. சண்முகநாதன் 1995 சரஸ்வதி பூசையின் போது பெற்ற ‘வைகறை நிலவை வாசித்த பின் மனமுருகி எழுதித் தந்த கவிதை).

அங்கைலன் கலிஸ்ாசருதஷ்
அங்கையன் பற்றி.
‘கலை என்பது செயல் திறமையைக் காட்டுவதும், அழகு ஏற்படும் வகையிற் செய்வதும் சுவைபயக்க வல்லதும் பற்றிய பல காரியங்களுக்கு உதவுவதுமான அறிவையும் ஆற்றலையுமே குறிப்பதாகும். ஆகவே, கலையிற் செயல், பயன், திறமை, அழகு, சுவை என்ற அம்சங்கள் உள்ளன.”
(இந்து தருமம், பேராதனைப் பல்கலைக் கழகம், பக்கம் 45)
இவ்வாறு காலஞ்சென்ற அங்கையன் கைலாசநாதன் 1962ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மாணவனாயிருந்த காலத்திலே எழுதினார். பல்கலைக்கழக மாணவனாயிருக்கும் போதே ஆய்வுக் கட்டுரைகள், கவிதை, சிறுகதை ஆகியன எழுதுவதிலே வல்லவராயிருந்த அங்கையன், எனது பல்கலைக்கழக நண்பராகவும், மாணவராகவும் இருந்தார்.
பட்டம் பெற்றபின் பத்திரிகை, அச்சகவியல் ஆகிய துறைகளிற் பெற்ற அனுபவமும் ஆக்க இலக்கியத் திறனும் உடையவராக அவர் இறுதியாகக் கடமையாற்றிய ஒலிபரப்புத் துறையுட் புகுந்தார். பிறமொழிக் கதைகளை வானொலி நாடகங்களாக்கித் தயாரித்து வெற்றியும் கண்டுள்ளார். அவருடைய வானொலி மெல்லிசைப் பாடல்கள் பலரும் அறிந்தவை. கலையுணர்வும், முயற்சி ஊக்கமும் கொண்டிருந்த காரணத்தாலே, அங்கையன் எப்படியாவது புதிய விடயங்களை வானொலி ரசிகர்களுக்கு அளிக்க வேண்டுமென்று செயல்பட்டவர். சிந்தனையிலே தோன்றும் கருத்துக்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பதில் ஆர்வம் மிகுந்த அவரை 33 வயதிலேயே இழந்து விட்டமை இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு ஆகும்.
கலாநிதி. அ. சண்முகதாஸ்
தமிழ்த்துறை, யாழப்பாண வளாகம். 1976

Page 25
அங்கையர் கலிஸ்ாசருதஷ்
மறைந்து 10 ஆண்டுகள் கழிந்த பின். அங்கையன் கயிலாசநாதன்
நினைவுகள்
கால வெள்ளத்திலே அழியக் கூடாத நினைவுகளும் கூட அடித்துச் செல்லப்படுவதுண்டு. அங்கையன் கயிலாசநாதன் என்ற அந்த அன்புக் கலைஞன் மறைந்து இன்று பத்து ஆண்டுகளாகின்றன என்பதை நம்பமுடியவில்லைத் தான்.
'மழை சிந்தும் கடலோரம் இள நண்டு படம் கீறும் நிலை கண்டு என் நெஞ்சில் நிதமுந்தன் நினைவூறும்.’
இந்தக் கவிதையை இசைத்து அதிலே நாம் எனக்கரைந்த நினைவலைகள் என்னுள் ஆக்கிரமிக்கின்றன.
‘அண்ணை’ என்று அன்புடன் அவனை அழைத்து நின்ற நினைவுகள் நெஞ்சிலே இன்றும் கனக்கின்றன. முப்பத்து மூன்று வயதில் சடுதியாய் அவன் எங்களை விட்டுப் போன போது ஒரு கலைஞனின் இழப்பு என்பதற்கும் மேலாக ஓர் அன்புள்ளத்தின் இழப்பு என்பதே மேலோங்கி நின்றது.
அங்கையன் படைப்புக்கள் என்று இன்று நமக்குக் கிடைப்பவை ‘கடற்காற்று என்ற பரிசு நாவலும், மறைவின் பின் தொகுக்கப்பட்டட வைகறை நிலவு என்ற கவிதை நூலும் தான். நூலுருப் பெறாத நாவல்கள், சிறுகதைகள், கலை இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், காற்றோடு காற்றாகப் போய்விட்ட வானொலி நாடகங்கள் என அவனது படைப்புக்களின் பட்டியல் நீளும்.
இரண்டு தேசியப் பத்திரிகைகளின் துணை ஆசிரியராகவும், பின்னர் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் அங்கையன் கலை இலக்கியக் களம் விரிந்திருந்தது. ‘கலையானது, செயல், பயன், திறமை, அழகு,

3ங்கையர் கலிஸ்ாசநாதர்
சுவை என்ற அம்சங்களைக் கொண்டது என ஓரிடத்தில் குறிப்பிடும் அங்கையன், தெளிந்த தன் கலை நோக்கின் பிரதிபலிப்பெனக் கலை இலக்கியப் படைப்புக்களைத் தந்து நின்றவன்.
காதல், குடும்பம், குழந்தை என வாழ்வின் இனிய பக்கங்களை நுண்ணுணர்வுக் கவிதைகளின் மூலம் தந்து புகழீட்டியவன் அங்கையன்.
வானொலி மூலம் மெல்லிசைப் பாடல்களாக இவை இன்றும் உலகளப்பன. ஆனாலும் அவனது சமூக நோக்கிலான படைப்புக்கள் முக்கியத்துவம் பெறாமற் போய் விட்டது துரதிஷ்டவசமானதே. ‘செந்தணல் என்ற நூலுருப் பெறாத நாவல் அவனது சமூக உணர்விற்குச் சான்றாக அமைவது. இன்னும் கைக்கெட்டும் சில கவிதைகளிலும் கூட அவனது தூர தரிசனங்களைக் காண முடியும்.
‘மாவிட்டபுரத்தில் வாழும்
மான்விழிக் கன்னி வேந்தே பாவிட்டுக் கேட்ப தொன்று பாரினிற் பொதுமை ஓங்க ஆவிட்ட சாணத்தாலே அடிபடுமுன்னர் நீயும் பூவிட்ட கோயில் வாசல் பொலிந்திடத் திறந்திடாயே’ என்று -
அன்று சாதி இருள் மூடிய மாவைக் கந்தன் கதவு திறக்கப் பாடியவன். சாதி இருளை மட்டுமன்றி தமிழ்ச்சாதியைப் பிடித்திருந்த அனைத்துத் துன்பங்களையும் கண்டு மனம் நொந்து பாடியவன் அவன். தமிழர் களிடையிலான பிராந்தியப் பிளவுகளைக் கண்டு வேதனைப்பட்டு,
‘மட்டக்களப்பினில் ஓர் குலம் - வட
மாநிலத்தோன்றலும் ஓர் குலம் வட்ட நிலாவினைத் தொட்டிடும் - வண்ண மாமலை மக்களும் ஒர்குலம்’ என்று ஒருமைக் குரலானவன்.

Page 26
அங்கைலர் கஸ்ாசதாதஷ்
சாதி சமயப் பிராந்தியப் - பேதம் சாற்றும் இலக்கியம் யாவையும் மோதி யொதுக்கியகற்றியே - பொருள் மேன்மைகொள் நாட்டினை ஆட்சியை ஒதியுணர்ந்தவர் யாவரும் - முன்னே ஒன்றுதிரண்டு படைகொளப் பாதை வகுத்தலே நன்று காண்...! என்று பாதை காட்டியவன். ஓ! அந்த மணிக்குரல், பொன் நிகர்த்த நம் கனாக்கள் கைகூடும் நாளிதே...!
என்று பராவின் குரலினுTடு நம்பிக்கையூட்டி ஒலித்த அண்ணன் கயிலாசநாதனின் ஆத்ம அலைகள் ஒய்வதில்லை. அவை தழுவி நின்ற இலட்சிய தரிசனங்களில் அவனும் வாழ்வான்.
என். சண்முகலிங்கன்
‘ஈழநாடு 06-04-1986

அங்கலர் கலிஸ்ாசருதஷ்
3. ‘அங்கையன் கவிதைகள்’ பற்றி.
இந்நூலின் முன்னுரை
‘கவிதை என்பது மேம்பாடுற்ற பேச்சு என்பது பிரபல விமரிசகர் ஒருவரது கருத்தாகும். பேச்சு எவ்வாறு மேம்பாடு உறுகிறது? சாதாரண பேச்சு மொழியில் வரும் சாதாரணமான சொற்கள், கவிதையில் வருகையில் மேம்பாடு பெறுவது எப்படி? இதுபற்றி விரிவாக விளக்குவதானால், அது கவிதைக் கலை பற்றிய ஆராய்ச்சி ஆகிவிடும். அத்தகைய ஆராய்ச்சியில் இறங்காது, கவிதைச் சொல் மேம்பாடு பெறுவதற்கான ஒரு வழி ஓசை ஒழுங்காக்கம் என்னும் உண்மையை மாத்திரம் இங்கு கருதுவோம்.
கவிதையில் வரும் ஓசை ஒழுங்காக்கம் பல்வேறு படித்தரங்களில் நிகழும், பேச்சோசையை ஒட்டி அதற்கு மிகவும் கிட்டிய விதத்தில் நிகழும் ஒழுங்காக்கம் ஒரு வகை. இவ்வாறு பேச்சோசையை ஒட்டி எழும் இயற்பாக்கள் நவீன கதையின் பிரதான கிளையாக வளர்ந்து வருகின்றன. இக் கவிதைகளில், பேசும் குரலை அடிப்படையாகக் கொண்ட ஓசையைக் கவிஞர்கள் தம் கருத்து வெளியீட்டின் பொருட்டும் கையாளுகின்றனர். ஒசை ஒழுங்காக்கத்தின் பிறிதொரு வகை இசைக்கலையை - அதாவது சங்கீதத்தை - மிகவும் தழுவிய ஒன்றாகும். இவ்வித ஒழுங்காக்கத்தின் பூரண நிலையை, சங்கீத சாகித்தியங்கள் என்னும் இசைப்பாக்களில் நாம் காண்கிறோம்.
அங்கையன் கயிலாசநாதனின் கவிதைகள் சங்கீத சாகித்தியங்கள் அல்ல. எனினும் அவை இசைத்தன்மை மிக்கனவாக உள்ளமையை - அவை பாடுங்குரலை ஆதரிசமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளமையை - பாடற் சுவைஞர்கள் நிச்சயம் உணர்வார்கள். அவரது பாடல்கள் சில, மெல்லிசை அமைத்துப் பாடுவதற்கென எழுந்தவை என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும். இந்த வகையில், ‘மணிக்குரல் ஒலித்ததே’ என்னும் பாட்டும், 'மழை சிந்தும் கடலோரம் இள நண்டு படங்கீறும்’ என்னும் பாட்டும், பட்டு இதழ்விரித்து என்னும் பாட்டும் மக்கள் மனத்தில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளவை எனல் பிழை ஆகாது. இவை பொருத்தமான இசையுடன் வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாவது பெருமைப்படத்தக்க செய்தியாகும்.

Page 27
அங்கையர் கலிஸ்ாசருதஷ்
அங்கையன் மெல்லிசைக்கென முழுக்க முழுக்க எழுதிய பாடல்களைத் தவிர்ந்த ஏனைய பாடல்களிற் கூட இசைப் பாவினத்துக்குரிய பண்புகள் முதன்மை பெற்று நிற்பதையே நான் காண்கிறேன். கண்ணதாசன் போல மிகப் பல இசைப் பாடல்களை எழுதிக் குவிக்காவிட்டாலும், கயிலாசநாதனும், தம் பாட்டுக்களிலே, இலகுவில் மக்களை ஈர்க்கும் இதமான சொற் பிரயோகங்களைக் கையாளும் வழக்கம் உடையவர். ‘சோமு’ என்னும் மீ.ப.சோமசுந்தரம் அவர்களின் பாட்டுக்களிற் காணப்படுவது போன்ற ஏக்கசோக-இனிமை-இசைக்கலவை அங்கையனின் பாடல்களிலும், சிற்சில இடங்களிலே தலைகாட்டுகின்றன. சோமுவைப் போலவே அங்கையனும் வானொலியுடன் தொடர்பு பூண்டு இருந்தமையை நாம் நினைவு கூரலாம். ஆயினும், வானொலிப் பணியைத் தொடங்கு முன்னரே அங்கையன் தம் கவிதைகளிற் பலவற்றை எழுதி முடித்து விட்டார் என்பது கருதத்தக்கது.
இனி, இசைப்பாக்கள் சிறந்த கவிதைகள் ஆகுமா என்ற ஐயமும் சிலரிடையே எழுதல் கூடும். காலம் சென்ற சிங்களக் கவிஞர் மகா (G.கமசேகர) அவர்கள் சிறந்த பாடலாசிரியரே எனினும், கவிஞர் என்று பார்க்கும் போது அவர் இரண்டாந் தரத்தவரே என்றும் சிலர் வாதிக்கிறார்கள். அது எவ்வாறாயினும், ஈழத்துத் தமிழர் ஆக்கி, ஈழத்துக் கலைஞர்கள் இசையமைத்து, ஈழத்துப் பாடகர்கள் குரல் கொடுத்து ஒலிப்பதிவான ஈழத்துப் பாடல்கள் என்னும் புதிய கலைத்துறை இப்பொழுது உருவாகி வருவதனை எவரும் மறுத்தல் இயலாது. இத்துறையின் தொடக்க காலத்திலே, பல தயக்கங்களும் மயக்கங்களும் இருந்தன. இசைவாணர் எப்படிப் பாடுவரோ என்ற எண்ணம் எதுவும் இல்லாத புலவர்கள் இயற்றிய பாட்டுக்களை, சங்கீத வித்துவான் ஏதோ ஒரு தாளத்தில், ஏதோ ஒரு ராகத்தில், தாம் தமது குருவிடம் கற்ற ஏதோ ஒரு கிருதி அல்லது கீர்த்தனத்தின் மெட்டிற்குள்ளே திணித்துப் பாடிவிட்டுப் போகும் போக்கே ஆரம்ப காலத்தில் இருந்தது. ஆனால், ஆரம்ப காலத்துப் போக்குள் பல இன்று மாறிவிட்டன; தயக்க மயக்கங்கள் பல நீங்கி விட்டன. இன்றைய ஈழத்துப் பாடலாசிரியர், இசைவாணரின் போக்குகளை உணர்ந்தே எழுதுகிறார். இசைவாணரும் கவிஞரின் எண்ணவோட்டங்களையும் உணர்ச்சிச் சுழிப்புக்களையும் மனங் கொண்டே இசையமைக்கிறார். ஆதலால், ஓரளவு திருப்திகரமான பாடல்கள் உருவாகி வருகின்றன. எஸ். பே. பரராஜசிங்கம், ஆர்.முத்துச்சாமி, ரி.வி.பிச்சையப்பா முதலான இசையமைப்பாளர்கள் உருவாகி வருகின்றனர்.

அங்கையும் கலிஸ்ாசருதஷ்
இசைப்பா ஆசிரியர்களும் நூற்றுக்கணக்கிலே தோன்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இசைவாணர்களும் கவிஞர்களும் ஒருங்கே அமர்ந்து தமது படைப்புத் தொழிலில் ஈடுபடத்தக்க நெருக்கமான சூழல் இன்னும் தோன்றவில்லை. அப்படியொரு நல்லுறவு ஏற்படுமாயின் திறமான பல ஈழத்துப் பாடல்கள் பிறப்பெடுக்கும் என்பதில் ஐயமில்லை. அங்ங்னம் பிறப்பெடுக்குமாயின், ஈழத் தமிழ் மெல்லிசைக் கலை புதிய பரிமாணங்கள் பலவற்றைப் பெற்று விருத்தியடையும். அங்ங்ணம் விருத்தியடையும் இசைக்கலை வரலாற்றில் அங்கையன் கயிலாசநாதனின் பாட்டுக்களும் திடமானதோர் இடம் பெற்றுத் திகழும் என்பது நிச்சயம்.
கயிலாசநாதனின் கவிதைப் பொருள் பற்றியும் இங்கு சில சொற்கள் கூறுதல் வேண்டும். காதலும், குடும்ப வாழ்க்கையும் குழந்தைப் பேறும், கலையின்ப நுகர்வும் இவரது கவிதைகளின் உள்ளடக்கமாகத் திகழ்கின்றன. சமுதாயச் சச்சரவுகள் நீங்கி அமைதி பிறத்தல் வேண்டும் என்ற பொதுப்படையான நல்லெண்ணமும் அவர் கவிதைகளில் உண்டு. அத்துடன் இயற்கையை நயக்கும் போக்கும், அழகியல் ஈடுபாடும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இறையன்பும் ஈடுபாடும் சில கவிதைகளிலே தெரிகின்றன.
இன்னும் மிகப் பல கவிதைகளையும் பிற கலையாக்கங்களையும் செய்து, தமிழ்க் கலையுலகைக் கயிலாசநாதன் வளம்படுத்துவார் என்று ஈழத் தமிழுலகம் நம்பியிருந்தது. காலத்தின் கொடுமையால் அந்த நம்பிக்கை பாழாகி விட்டாலும், அவரது ‘ஆன்மநாதம் நூலுருப் பெற்று வருவது தேறுதல் தரும் செய்தியாகும். வரவேற்று உவந்து நயக்கத்தக்க இந்த நூலை அறிமுகம் செய்யும் பேற்றை எனக்கு அளித்தமைக்காக, நூல் வெளியீட்டாளருக்கு என் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.
கவிஞர் இ.முருகையன் 31/1, சிறிபால றோட்,
கல்கிசை - 1997

Page 28
அங்மேகலன் கலிஸ்ாசநாதர்
சமர்ப்பணம்
எண்ணினால் நெஞ்சம் வேகும்
எழுதினால் கைகள் நோகும் அன்னைபோல் என்னைக் காத்து
அப்பனாய்க் கல்வியூட்டி மண்ணிலே தவிக்க விட்டு
மண்ணையே மறந்து போன என்னருந் தமைய னேயுன்
இருமலர்ப் பாதம் போற்றி கண்ணிரால் உதிரத் தாலே
கலந்துநான் செய்த விந்த வண்ணமாந் தமிழை ஐயா
வழங்கினேன் உன்றனுக்கே.
(தன்னை ஆளாக்கிய அகால மரணமடைந்த, பாசமிகு சின்னண்ணன் வை.அ.சிதம்பரநாதனின் நினைவாக ‘அங்கையன்’ எழுதி வைத்த சமர்ப்பணம்).

அங்கைலர் கலிஸ்ாசநாதர்
பாமகள் போலொரு தெய்வமில்லை. அவள்
பெண்மையைக் கண்டவர் சாவறியார்
வை.அ.கயிலாசநாதன் படைத்த கவிதைகள் ‘அங்கையன் கவிதைகள்’ எனும் தொகுப்பாக டிசம்பர் 2002 இல் வெளிவந்திருக்கிறது. அமரத்துவம் எய்திவிட்ட கவிஞரின் அரும் துணைவியாரின் முயற்சியினால் இந்நூல் உருவாகியுள்ளது. அங்கையன் ஒரு கவிஞர் என்ற அடைமொழிக்குள் அடைத்து ஒதுக்கி வைக்க வேண்டியவர் அல்லர். கலை இலக்கியத் துறையின் பல்துறைகளுக்குள்ளும் நுழைந்து தனது ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றி கண்டவர்.
நாவல், சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரை, கவிதை, நாடகம், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் எனப் பன்முக பரிமாணத்திலும் தமிழ் மொழிக்குத் தனது பங்களிப்பை நல்கியவர்.
பல்துறை இலக்கியத்திற்குள்ளும் இவருடைய ஆற்றல் வெளிப்பட்ட போதும் கவிதையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய ரசிப்பும், ஈடுபாடும் கவிதைத் துறையில் ஆழமாகவே வேரோடியிருக்கிறது. இலக்கிய ஆர்வலரிடையே இவருடைய புகழுக்குக் காரணமாக மெல்லிசைப் பாடல்களும், கவிதைகளுமே மூல காரணிகளாகத் திகழ்கின்றன. இது தொடர்பாகப் பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன் குறிப்பிடுகையில் அங்கையனின் ஆத்மாவின் மணிக்குரலை கவிதைகளே வெளிப் படுத்துவனவாகத் திகழ்ந்தன என விதந்துரைத்துள்ளார்.
‘அங்கையன் கவிதைகள்’ 105 பக்கங்களில் 38 கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. அங்கையனின் கவிதை உணர்வு பற்றிய பிரக்ஞையை வெளிப்படுத்தும் விதத்தில் கவிஞர் இ. முருகையனின் முன்னுரையும் இடம் பெற்றிருக்கிறது. அங்கையன் கவிதைகள் குறித்து குறிப்பிடும் போது கவிதைகள் சங்கீத சாகித்தியங்கள் அல்ல, எனினும் அவை இசைத்தன்மை மிக்கனவாக உள்ளமையை அவை பாடுங்குரலை ஆதரிசமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளமையைக் கொண்டு பாடற் கலைஞர்கள் நிச்சயம் உணர்வார்கள்’ என கவிஞர் முருகையன் முன்னுரையில் எழுதுகிறார். 'நாமகள் போலொரு தெய்வமில்லை. அவள் பெண்மையைக் கண்டவர்

Page 29
அங்கைலர் கலிஸ்ாசநாதன்
சாவறியார்’ என்ற கவிதை வரிகள் அங்கையனுக்குரியவை. இத்தகைய சிறப்பான கவிதைகளை ஒரு தொகுப்பாக வாசிப்பதற்கு வழிவகுத்தவர் திருமதி இராசலட்சுமி அம்மாள் கயிலாசநாதன்.
எழுதியபின் எதுவும் எழுத்தாளனுக்குச் சொந்தமல்ல. அவை பொது மக்களுக்கே சொந்தமானவை என்ற அங்கையனின் கருத்தினை நினைவு கூரும் திருமதி கயிலாசநாதன் கணவரின் படைப்புக்கள் பலவற்றையும் பதிப்பித்து தமிழ்ப் படைப்பிலக்கியத்துறைக்குச் சிறப்பான போற்றுதற்குரிய சேவையினைப் புரிந்துள்ளார்.
1976இல் தமது முப்பத்தி மூன்றாவது வயதில் கயிலாசநாதன் அமரத்துவம் எய்தினார். அவர் இறுதியாகத் தன் மகளின் சார்பாக ‘அன்னை’ எனும் கவிதையை எழுதினார். மூன்று வாரங்களின் பின்னர் அவர் இவ்வுலகை நீத்தார் என்பது தமிழ் இலக்கியத் துறைக்குப் பாரியதொரு இழப்பாகும். 26 வருடங்களுக்குப் பின்னர் அங்கையன் கவிதைகள் எனும் இந்நூல் வெளியாகியுள்ளது. திருமதி கயிலாசநாதன் அரிய உழைப்பின் அறுவடை இது. மேலும் சில தொகுதிகள் வெளிவருவதற்கு வாழ்த்துக்கள்.
கே. விஜயன்
20-06-2003 வீரகேசரி

அங்கைலன் கலிஸ்ாசருதஷ்
1968 இல் கொழும்பு
விவேகானந்த சபை மண்டபத்தில்
கொழும்பு இலக்கிய வட்டத்தின்
ஆதரவில் நடைபெற்ற ‘பாரதிதாசன் விழாவில்

Page 30
அங்கையர் கலிஸ்ாசருதஷ்
4.அங்கையன் சிறுகதைகள்' பற்றி.
செழுமையான வரவு
இப்போது நினைக்கிற போதும் சற்று முன்னரே அங்கையனுடன் பேசிக் கொண்டிருந்தாற் போல பிரமை உண்டாகிறது. இலக்கியத்தை வாசிப்பை எழுத்தை கவிதையை நாடகங்களை இசையை நேசித்த அற்புதம், மொழிபெயர்ப்பை விரும்பிய இயல்பால் தமிழுக்குப் புதுமை செய்யக் கனவு கண்ட அற்புதம், வெளிச்சமாகப் படரத் துடித்த போது மங்கி அணைந்து போய்விட்ட அற்புதம். இலங்கைத் தமிழ் எழுத்தில் இரண்டு வெளிச்சங்கள் இப்படி அரும்பி பிரமிப்பை ஊட்டிக் கொண்டிருக்கையிலேயே சட்டென்று அணைந்து போயின. ஒருவர் செ.கதிர்காமநாதன். மற்றவர் அங்கையன் கயிலாசநாதன்.
சமகாலத்திலே இருவரோடும் நெருங்கிய நேயம், படைப்பின் எல்லைகளைத் தொட முயன்ற ஆவேசமும், சிறந்த பத்திரிகையை நடத்த வேண்டுமென்ற இலட்சியக் கனவும் இவர்களின் பொதுத் தன்மையாக இருந்ததைக் கண்டு வியந்திருக்கிறேன். சந்தித்த வேளையெல்லாம் இதுவே பேச்சின் முழுத் தொனியாகவும் ஒலித்தது.
பாரதி எமக்குப் பலவழிகளில் ஆதர்சம். கனவுகள் காண்பதிலுந்தான். தமது ஆக்கங்கள் தீப்பெட்டி போல எங்கும் இருக்க வேண்டுமென்று பாரதி ஆசைப்பட்டான். வாழ்ந்த காலத்திலே அது கனவாய்ப் போயிற்று. விட்டுச் சென்ற ஆக்கங்களை முழுமையான கைப் பிரதியாகவே வைத்துச் சென்றிருக்கிறார் அங்கையன். அவற்றைப் பத்திரமாக வைத்திருந்து அழகிய நூல்களாய் தமிழுக்குத் தருகிறார் அவரது துணைவியார். வரவேற்போம்.
அங்கையனின் எழுத்தின் ஆதாரசுருதி சாமானிய மனிதரின் வாழ்வு தான். அவரின் மனம் அவர்களைத் தொட்டது. தேடியது. நேசித்தது. அவர்களின் அவல வாழ்வின் மூலாதாரங்களைத் தேடி, அழுக்கிடையேயுள்ள அவர்களின் பரிசுத்தத்தை அடையாளம் காட்டிற்று. தன் கதைகளின் நாயகராக்கிற்று. எதிர்க்குரலாக விகாசித்தது. ஒலித்தது. ஒலிக்கின்றது.

அல்கைலர் கலிஸ்ாசநாதர்
அவரின் ‘செந்தணல் நாவல், கொழும்பு வாழ்வை வெளிக்குக் கொண்டு வந்தது. இன்னொரு நாவலான ‘கடற்காற்று தமிழில் கடல் வாழ்வினைப் பற்றி எழுதப்பட்ட முதல் நாவல் என்ற தகைமையைப் பெற்றது. இன்னும் நூலுருப் பெறாத அவரால் மொழிபெயர்க்கப்பட்ட சர்வதேசப் படைப்பாளிகள் - இவான் துர்க்கனேவ் போன்றோரின் ஆக்கங்கள் நூல் வடிவம் பெறின் ‘அங்கையனின் இன்னொரு பாய்ச்சல் தெரியவரும். முழுக்கணிப்பு வடிவம் பெறும்.
கதைகளிலே பிரச்சினைகளைத் தொடவும் முடிச்சுப் போடவும், முடிச்சவிழ்க்கவும் மனித வாழ்வை நேசத்தோடு அணுகவும் முயல்கிற போக்கு கலாரீதியாக நிதானமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தனது எழுத்து நடையைத் தனித்துவமுள்ளதாக நிறுவ முயலும் படைப்பாளியின் ஆர்வத்தையும் கேட்க முடிகின்றது.
அறுபதுகள் தற்கால இலக்கியத்திற்குச் செழுமையான வரவுகளைத்
தந்ததென்பது வரலாற்றின் பதிவு. அங்கையனின் எழுத்துக்கள் அதை நம்பிக்கையோடு உறுதி செய்கின்றன, இன்னொரு முறையும்.
செ.யோகநாதன்
*ஆதவன் 15-08-2000

Page 31
அல்கைலன் கலிஸ்ாசருதஷ்
நூல் அறிமுகமும் விமர்சனமும்
அங்கையன் கதைகள்
அறுபதாம் ஆண்டுகளில் தமிழ்ப் படைப்பிலக்கியத் துறைக்குப் பெரிய கனவுகளுடன் இருவர் வந்தனர். ஒருவர் செ. கதிர்காமநாதன், மற்றவர் அங்கையன் கைலாசநாதன். இருவரின் கனவுகளும் பொதுத் தன்மை கொண்டவை. சிறந்த படைப்பாளனாக, மொழிபெயர்ப்பாளனாக பத்திரிகையாளனாக பதிப்பாசிரியனாக திறனாய்வாளனாக என்பது இவர்களின் கனவு. அங்கையன் இன்னும் ஒரு படி மேலே போய் கவிஞனாகவும் இசையாளனாகவும் நாடகவியலாளனாகவும் பரிணமித்தார். மரணமும் அவர்களை அகாலத்திலேயே பறித்துச் சென்றது மிகவும் குரூரமாக,
தான் கண்டுணர்ந்து தன்னைப் பாதித்ததை தன் படைப்புலகின் ஆதாரமாக்கினார் அங்கையன். கடற்காற்று, செந்தணல், வைகறை நிலவு என்ற தொகுதிகளும் அச்சில் வராத சிட்டுக் குருவியும் வானம்பாடியும் ஆகிய நாவல்களும் இந்த இயல்பு கொண்டவையே. வாழ்வுப் போக்கை யதார்த்தமும் கலைத்துவமும் செறிந்திடப் படைப்பிலக்கியம் ஆக்கினார் அங்கையன்.
ஒரு தலைமுறை காலந்தாண்டி தொகுக்கப்பட்ட இந்தத் தொகுதியிலுள்ள கதைகளைப் படிக்கும் போது அங்கையனின் மானிடப் பரிவையும் சீற்றத்தையும் கண்டு கொள்ளலாம். வாழ்வின் சாதாரண அடிமட்ட மக்களையும் அவர்களினது சூழலையும் போராட்டங்களையுமே அங்கையன் தனது கதைக் கருவாகத் தேர்ந்தெடுத்துள்ளார். இவ்விதத்திலே ஒவ்வொரு கதையும் தனித்தனிப் பிரச்சினைகளை விசாரம் செய்கின்ற கருத்துக்களை முன்வைக்கின்றன. ‘அலையைத் தாண்டி’ என்ற கதை கடல் வாழ்வினைப் பின்னணியாகக் கொண்டது. அதோடு அப்போதைய மலையக வாழ்வின் துயரையும் இணைத்தது. முதல் வார்த்தையிலேயே துன்பம் தொனிக்கின்ற குரலில் கதைக்குள் வாசகர்கள் போய் விடுகிறார்கள். இது அங்கையனின் பண்பட்ட கதைசொல்லால் சாத்தியப்படுகின்றது. கொழும்பின் இருள் செறிந்த வாழ்வுப் பக்கத்தை வெகு யதார்த்தமாகச் சித்தரிக்கின்றது. "மேகங்கள் இருண்டு கிடக்கின்றன என்ற கதை, கீழ்மட்ட மனிதன் ஒருவனின் வறுமை விபச்சாரத்

அங்தைலன் கலிஸ்ாசருதஷ்
தொழிலுக்கு அவனை நிர்ப்பந்திக்கிறது. வாழ்வின் அவல நிலையிலும் விபச்சாரி ஒருத்தியின் குணாதிசயம் எவ்விதம் அமையும் என்பதை மனதைத் தொடும் விதத்திலே சித்திரமாக்கியுள்ளார். அது மட்டுமல்ல இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முற்பட்ட கொழும்பு படைப்புலத்தை இக்கதை தெளிந்த ஒவியமாகப் பிரதியெடுத்திருக்கிறது. 'அவன் வர்க்கம் என்ற கதை அப்போதைய யாழ்ப்பாணத்தினைக் கண்முன்னே கொண்டு வருகிறது. ‘மலவண்டியைத் தள்ளிச் சென்று புதைக்கும் தொழிலாளி ஒருவனைப் பற்றிய நெஞ்சினை உறுத்தும் கதை.
தொகுதியிலுள்ள கதைகளைப் படித்து முடிக்கின்ற போது பல கேள்விகள் நெஞ்சினுள்ளே எழுகின்றன. இன்றைய சில அரைகுறை வேக்காட்டு விமர்சகர்கள், கதையிலே இருந்து கதையை எடுத்துவிட்டு கதை எழுதுவோம் என்று சொல்லும் மாய் மாலத்திற்கான அடிப்படைக் காரணம் தெளிவாகிறது. தன்முன்னேயுள்ள மனித வாழ்வைப் பற்றி எந்தப் பிரக்ஞையுமின்றி அதன் மீது நேயமின்றி மனவக்கிரத்துடன் வாழ்கிறவனே மேற்கூறிய வாக்கு மூலங்களைச் சொல்ல முடியும்.
இந்த நிமிடத்துக்கும் அங்கையனின் கதைகள் உயிர்ப்பும் தெளிவும் கருத்துச் செறிவும் கலை நுட்பமும் சேர்ந்ததாகப் பொலிந்து நிற்பதற்கு அங்கையன் ஒடுக்கப்பட்ட மக்களின் மேற்கொண்ட பரிவுமிக்க நேயமுமே காரண மாகினதென்பதை உறுதியோடு கூறலாம்.
செ.யோகநாதன் *ஆதவன்
2-11-2000

Page 32
அல்கைலர் கஸ்ாசருதஷ்
5. ‘செந்தணல் பற்றி.
அங்கையன் கைலாசநாதனின் ‘செந்தணல்
இருநூற்று நாற்பத்தொரு பக்கங்களைக் கொண்ட ஒரு நீண்ட நாவல் ‘செந்தணல்'. இதனை எழுதியவர் மறைந்த எழுத்தாளர் அங்கையன் கயிலாசநாதன். இவர் வாழ்ந்ததே 33 வயதுகள் தான். அருமையான எழுத்தாளர். வயதுக்கு மீறிய அனுபவமும், அறிவும், ஆற்றலும் கொண்டு விளங்கியவர். பத்திரிகை, வானொலி ஆகிய இரு ஊடகங்களிலும் புதுப் புனைவாக அமையும் விதத்தில் பங்களிப்புக்களைச் செய்தவர். பேராசிரியர் அ.சண்முகதாஸ், கவிஞரும், திறனாய்வாளருமான இ.முருகையன், மற்றும் சிலர் கயிலாசநாதனின் ஆற்றலை ஊடுருவிப் பார்த்து நுண்ணிதாக எழுதியுள்ளனர்.
அங்கையன் கயிலாசநாதனின் ‘செந்தணல்’ நாவல் உடனிகழ்கால ஐரோப்பிய நாவல்களைப் படித்துப் பயன்பெற்றதனால் எழுந்ததொன்று எனக் கூறலாம். குறிப்பாக கலை தொடர்பான வியாக்கியானங்கள் அத்தகைய பாங்கைக் கொண்டவையாக அமைந்துள்ளன. மிகவும் சுவாரஸ்யமான கதை. மனித உறவு முறைகளை, சந்தர்ப்பத்தின் கைதிகளான இக்கதை மாந்தர் மூலம் கதாசிரியர் அற்புதமாகத் தீட்டிடுகிறார். நீண்ட நாவலாயிருந்த போதிலும், கட்டம் கடடமாக இரசித்துப் பயன்பெறும் விதத்தில் ஒவ்வொரு அங்கமும் விபரிக்கப்பட்டுள்ளது. இன்று 2001இல் கதை நிகழ்வு சிறிது வேறுபட்டதாகத் தோன்றக் கூடும். ஆனால், கடந்த சகாப்தங்களின் வாழ்நிலை கூறும், சமுதாயமும் அவ்வாறுதான் இருந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்நாவல் தொடர்பான பகுப்பாய்வு இங்கு மேற்கொள்ளப்படவில்லை. அது திறனாய்வு வழியைச் சாரும், பத்தி எழுத்துகளில் இதனை மேற்கொள்ள (UP9U Tigil.
இன்னுஞ் சொல்லப் போனால், செந்தணல் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வுக்கு உட்பட வேண்டியதொரு நாவல்.
கே.எஸ்.சிவகுமாரன் 'தினக்குரல் ’ 03-09-2001

அங்மேகலன் கலிஸ்ாசருதஷ்
செந்தணல் பற்றி சில வார்த்தைகள்.
செந்தணலைப் படிக்கும் போது நமக்கு ஏற்படும் முதல் எண்ணம் இந்த நவீனம் நேற்றோ, முன்தினமோ எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும். ஏனென்றால் அதிற் கையாளப்பட்டுள்ள கருப்பொருள் ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள குடும்ப பந்தமாகும். இந்தக் குடும்ப உறவு கால, தேச எல்லைகளையெல்லாம் கடந்ததொன்று. லியோ டொல்ஸ்டாயின் அன்னா கரினினா என்னும் நவீனம் காலத்தால் மரியாது இன்றும் பேரிலக்கியமாக நின்று நிலைப்பதைப் போலவே கயிலாசநாதனின் செந்தணலும் ஈழத்து நாவல் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என நம்புகிறேன்.
செந்தணலில் காணப்படும் மற்றொரு சிறப்பம்சம் ஒழுக்க நெறி மீது கயிலாசநாதனுக்கு இருந்த கரிசனை. இந்த நவீனத்தில் வரும் கதாநாயகனான கமலேஸ்வரன் இந்தக் கரிசனையின் பிரதிநிதியாகப் படைக்கப்பட்டிருக்கிறான். அவன் ஓரிடத்தில் இவ்வாறு சொல்கிறான்; ‘நான் இயற்கையை இயற்கையாக நம்புறன். இயற்கையை உள்ளபடி தான் சித்தரிப்பேன். எனக்கு மொடேர்ன் ஆர்ட் பிடிக்காது. ஆபாசம் பிடிக்காது. அப்படி ஆபாசமான ஒவியங்களைத் தீட்டி, ஆபாசமான இந்த உலகத்திலை வாழுறதிலும் என்னுடைய மணிக் கட்டை அறுத்து, சுடுதண்ணியிலை கையை வைச்சு அதிலை பெருக்கெடுக்கிற இரத்தத்திலைதான் அந்த ஆபாசத்தைக் கீறுவன்”
இப்படிச் சொன்ன அந்தக் கதாநாயகன் கடைசியில் அப்படியான ஆபாசப் படங்களை வரைந்து வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். அந்த வேளையில் அவன் தன் சுட்டு விரலை பிளேட்டினால் அறுத்து அதிலிருந்து பெருகிய இரத்தத்தைச் சிவப்பு வர்ணமாக்கி ஆபாசப் படங்ளை வரைந்து முடிக்கிறான். அதன் மூலம் தன் ஆண்மைக்கும், ரோசத்துக்கும் மானத்துக்கும் ஏற்படவிருந்த இழுக்கைத் தவிர்த்துக் கொண்டதாக அமைதியடைகிறான்.
செந்தணலில் காணக் கூடிய மூன்றாவது சிறப்பு அதன் கட்டுக்கோப்பும்
பாத்திர வார்ப்புகளும் என்று சொல்ல வேண்டும். இந் நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள செங்கை ஆழியான் குறிப்பிட்டுள்ளவாறு, மிகமிக மெதுவாகத்

Page 33
அல்லதலர் கலிஸ்சநாதர்
திரைப்படம் ஒன்றின் நுட்பமான நகர்வாக செந்தணல் விரிகின்றது. சூழலைக் கண்முன் கொண்டு வருவதில் ஒரு புகைப்படப் பிடிப்பாளரின் கலைத் துவத்தோடு இயங்கியுள்ளார். உண்மையில் இக் கதை ஒரு கைதேர்ந்த திரைப்பட நெறியாளரின் இயக்கத்தில் மிக நேர்த்தியான, அதேவேளையில் வணிக அடிப்படையில் பெரும்பொருள் ஈட்டக்கூடிய, திரைப்படமாகவோ, தொலைக்காட்சி நாடகமாகவோ தயாரிக்கப்படக்கூடிய செம்மையுடையதாகும்.
மற்றொரு சிறப்பம்சத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எழுத்தாளனுக்குப் பொதுவாக எழுத்தாற்றலுடன் வாழ்க்கை அனுபவமும் முக்கியமென்பார்கள். 33 வயதில் எம்மைப் பிரிந்த கயிலாசநாதன் சுமார் 27 வயதுப் பிராயத்தில் இந்த நவீனத்தைப் படைத்திருக்கிறார் என்பது எம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. கணவன் மனைவி ஆகியோரின் உறவில் ஏற்படும் முரண்பாடுகள், அவசரங்கள், ஏக்கங்கள், அவலங்கள் ஆகியவற்றைச் சித்தரித்துள்ள பாங்கு வாழ்க்கையை, வாழ்க்கைத் தத்துவத்தை அவர் எவ்வளவு கூர்மையாக நோக்கினார் என்பதைப் புலப்படுத்துகிறது. ஒரு மாபெரும் படைப்பாளியை இளமையில் இழந்தமை எமது துர்பாக்கியமே.
காவலூர் ராசதுரை
20-08-2000

அல்கைலர் கலிஸ்ாசருதஷ்
முன்னுரை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பல்கலைக்கழகப் புதுமுக வகுப்பில் ஒருங்கே கல்வி கற்ற எண்மரில் ஒருவராக எங்களுடன் திகழ்ந்த, அங்கையன் கயிலாசநாதனை இன்று எண்ணிப் பார்க்கின்றேன். தோற்றத்தில் எங்கள் அனைவரிலும் மிக இளையவராகவும், விடய ஞானத்தில் எங்களை விட மிக உயர்ந்தவராகவும் விளங்கினார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உருவாக்கிய படைப்பாளிகளான செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், அங்கையன் கயிலாசநாதன் ஆகிய மூவரும் ஒரே வகுப்பில் ஒரே காலகட்டத்தில் கல்வி கற்றோம். திருவாளர்கள் வை.ஏரம்பமூர்த்தி, க.சிவராமலிங்கம், மு.கார்த்திகேசன் ஆகியோர் எமது இலக்கியத் தடத்தைக் கருத்தோடு அமைத்துத் தந்தனர். பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கும் ஒன்றாகவே வந்தோம். அங்கு பேராசிரியர்கள் கைலாசபதி, வித்தியானந்தன் ஆகியோர் இலக்கியச் செல்நெறியைச் சுட்டிக் காட்டினர்.
பல்கலைக்கழக மாணவ நிலையிலேயே அங்கையன் கயிலாசநாதன் தன்னையொரு படைப்பாளியாக அடையாளம் காட்டிக் கொண்டார். இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் எனப் பல்துறையிலும் தனது முத்திரைகளைப் பதித்துள்ளார். அவருடைய ‘கடற்காற்று' என்ற குறுநாவல் நூலுருவில் வெளிவந்த போது, பலரது பார்வையும் அவர் மீதுபட்டது. நுணுக்கமான அவதானிப்புடன் கூடிய யதார்த்தப் படைப்பாகக் கடற்காற்று விளங்குகிறது. சுமூகத்தின் அவலங்களை நுட்பமாகச் சித்திரிப்பதோடு, சமூகத்தின் சின்னத்தனங்களை விமர்சிக்கவும், அந்த விமர்சனமூடாக ஒரு சமூகம் எப்படியிருக்கக் கூடாதென்பதைச் சுட்டிக் காட்டவும் அங்கையன் கயிலாசநாதனால் முடிந்திருந்தது. ‘செந்தணல்' என்ற இந்த நாவலும் அவர் வரித்துக் கொண்ட படைப்பிலக்கிய வகைக்குரியதாகவே விளங்குகின்றது.
ஈழத்து நாவலிலக்கியத்தின் நவீன வடிவாக்கம் இளங்கீரன், செ.கணேசலிங்கம், கேடானியல் முதலானோரின் வருகையுடன் அமைந்தது. அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக அவர்களின் நாவல்கள் மிளிர்ந்தன. வர்க்கியம், சாதியம் எனும் கருப்பொருட்கள், யதார்த்தமாயும் மண்வாசனையோடும் மார்க்சீயப் பார்வையில் அவர்களது படைப்புக்களில்

Page 34
அல்கைலர் கலிஸ்ாசருதஷ்
வெளிக் கொணரப்பட்டன. அடுத்த காலகட்ட நாவலாசிரியர்களாக அடையாளம் காணப்பட்ட செங்கை ஆழியான், செ.யோகநாதன், செம்பியன் செல்வன், தெணியான் என்போர் வரிசையில் அங்கையன் கயிலாசநர்தன் அமைகிறார். 1969இல் அவர் எழுதிய ‘செந்தணல்’ என்ற இந்த நாவல், வகைமாதிரிச் சமூகம் ஒன்றின் துன்பியல் நாடகமாக விளங்குகிறது.
‘செந்தணல் நாவலை மீண்டும் படித்துப் பார்த்த போது எனக்கு ஏற்பட்ட நிலை அங்கையன் கயிலாசநாதனின் படைப்பனுபவத்தைத் தரிசித்த உணர்வாகும். வெறும் கதை படிப்பவர்களுக்குச் ‘செந்தணல் திருப்தியைத் தராது. ஏனெனில், கதை சொல்வது அங்கையன் கயிலாசநாதனின் எண்ணமாகச் ‘செந்தணலிலில்லை. அதற்காகச் ‘செந்தணலில் நாவலிற்கான கதை இல்லையென்று அர்த்தமன்று. மிகமிக மெதுவாகத், திரைப்படம் ஒன்றின் நுட்பமான நகர்வாக, ‘செந்தணல்’ விரிகின்றது. இந்த நாவலினுாடாகப் பல்வேறு சமூகப் பெறுமானங்களை அங்கையன் கைலாசநாதன் கூறிவிடுகிறார். கதை படிக்கின்ற சாதாரண வாசகனுக்குச் சிலவேளைகளில் கதாசிரியரின் சமூகப் பெறுமானக் கூற்றுக்கள் தடையாகவிருக்கலாம். ஆனால், ஏற்றவிடத்தில், ஏற்றமாதிரி அவற்றை இந்நாவலினுடே சொல்லியிருப்பது தான் இந்த நாவலின் சிறப்பென நான் கருதுகின்றேன். அவற்றினுடாகவே கயிலாசநாதனின் படைப்பனுபவத்தினைத் தரிசித்த உணர்வு எனக்கு ஏற்படுகின்றது.
ஈழத்தமிழ் நாவல்களைப் பிரதேச வகையினவாகப் பாகுபடுத்தி ஆராயும் மரபு விமர்சகர்களிடையே இன்றுள்ளது. வன்னிப் பிரதேச நாவல்களாகக் காட்டாறு', ‘நிலக்கிளி, மலையகப் பிரதேச நாவல்களாக, மலைக் கொழுந்து', 'குருதிமலை’ என்பன போல, கொழும்புப் பிரதேச நாவலாகச் ‘செந்தணலை அடையாளங் காணலாம். கொழும்பு வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் மிக நுட்பமான அவதானிப்புடன் அங்கையன் கயிலாசநாதன் இந்த நாவலில் விபரித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து தொழில் காரணமாகக் கொழும்பில் வாழ நேரும் மக்கள் எதிர்நோக்கும் பல்வகைச் சமூகச் சிக்கல்களை இந்த நாவல் பேசுகின்றது. கொழும்பு நகரின் குடும்ப உறவு, தொழில் பார்க்கும் பெண்கள் அலுவலகங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள், குடும்ப முறிவு போன்றவற்றிற்கு இந்த நாவலில் அழுத்தம் தரப்பட்டுள்ளது.

அல்கைலர் கலிஸ்சநாதர்
‘செந்தணலில் அங்கையன் கயிலாசநாதன் சம்பவப் பகைப் புலங்களை மிக அவதானமாகச் சித்திரித்துள்ளார் என்பேன். சூழலைக் கண்முன் கொண்டு வருவதில், ஒரு புகைப்படப்பிடிப்பாளரின் கலைத்துவத்தோடு இயங்கியுள்ளார். இந்த நாவலில் வகைமாதிரிப் பாத்திரங்கள், கதையின் வளர்ச்சிக்குத் துணை புரிகின்றன. செல்வராணியின் அழகை இரசிக்கும் ஆடவர் கூட்டம், அவளது இதயத்தை நேசிக்கவில்லை. அவளை உணர்வுள்ள ஒரு பெண்ணாகக் கருதவில்லை. அவளுடைய வாழ்க்கையில் குறுக்கிடும் ஆடவர் அவளை ஒரு போகப் பொருளாகவே பார்க்கின்றனர். கணவன் கமலேஸ்வரனும் அவ்வாறென உணரும் போது அவள் துடித்துப் போகிறாள். ஆர்ட்டிஸ்ட் கமலேஸ்வரன் சாதாரண யாழ்ப்பாணத்து வாலிபன். அவனால் அவனது மனைவியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. முரண்பாடுகள் குடும்பத்தில் ஏற்பட, பற்றுக் கோடற்ற நிலையில் இருவரும் வேறு பற்றுக் கோடுகளை நாட முயற்சிக்கிறார்கள். உண்மையில் சந்தர்ப்ப சூழ்நிலைக்குப் பலியாகிப் போகும் இருவரின் கதையாகச் ‘செந்தணல் அமைகின்றது. பல்வேறு முரண்படாப் பாத்திரங்களின் சங்கமத்தில் செல்வராணி - கமலேஸ்வரன் வாழ்வை, அங்கையன் கயிலாசநாதன் ‘செந்தணலில் சித்திரித்துள்ளார்.
இலக்கியத்தின் சமூகப் பணி, ஒரு சமூகம் இப்படி இருக்கிறது என்று சித்திரிப்பதோடு நின்று விடுவதில்லை. எப்படி ஒரு சமூகம் இருக்க வேண்டுமெனச் சித்திரிக்காவிடினும், எப்படி ஒரு சமூகம் இருக்கக் கூடாதென்றாவது சுட்டி நிற்க வேண்டும். அவ்வகையில் செந்தணல் சமூகத்திற்கு ஓர் எச்சரிக்கையாக அமைகிறது. முகமூடிகளோடு பழகும் கொழும்பு மாந்தரை, சிறப்பாக யாழ்ப்பாணத்துக் கொழும்பு மாந்தரை, அங்கையன் கயிலாசநாதன், அவர்களின் குணவியல்பு விகாரங்களைச் சிறப்பாகச் சித்திரித்துள்ள பாங்கு சுவையானது. ஓர் ஆணும் பெண்ணும் பேசுவதைப் பழகுவதைத் தப்பாக ஏறிட்டுக் கதைகட்டுதல், வதந்திகளைப் பரப்புதல், ஆடம்பரமான நாகரிக வாழ்வுக்கு அடிமைப்படல், கிடையாத வற்றிற்காக ஏங்குதல், பிரதிபலன் எதிர்பார்க்காத நட்பு போன்ற இன்னோரன்ன குணவியல்புகளோடு ‘செந்தணலில் வரும் பாத்திரங்கள் கமலேஸ்வரன் செல்வராணியின் குடும்பத்தை எவ்வாறு சீரழிவிற்கு இட்டுச் செல்கின்றன என்பதையும், இருளில் ஒரு ஒளிப் புள்ளியாக நின்று உதவுகின்ற தென்பதையும் அங்கையன் கயிலாசநாதன் செந்தணலில் வார்த்துத் தந்துள்ளார்.

Page 35
அல்கைலன் கலிஸ்ாசநாதர்
இந்த நாவலில் அங்கையன் கயிலாசநாதன் வாழும் சமூகத்தின் சின்னத்தனங்களை வார்த்தைகளாற் கடுமையாகத் தாக்கும் இடங்கள் பலவுள்ளன. பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் இடிபடும் அவலங்கள், அலுவலகங்களில் பணிகள் சரிவர நேரத்தோடு நடைபெறாத நிலைமைகள், ஆசிரிய மாணவ தப்பான உறவுகள், மேலதிகாரிகளின் தவறான போக்குகள் போன்ற விடயங்கள் நாவலில் வரும்போது கடும் வார்த்தைப் பிரயோகங்களால் அச் சின்னத்தனங்களைச் சாடும் படைப்பாளியாக மாறிவிடுகிறார். நாவலின் சமூகப் பார்வையில் இவ்வாறான அம்சங்கள் இயல்பாகப் பொருந்தி, பாத்திரங்களின் வாயிலாகவும் அவர்களின் நடத்தைகளினாலும் புலப்படுத்தப்படில் சிறப்பாக அமையுமெனினும், ‘செந்தணலில் அவை ஆசிரிய கூற்றுக்களாக வெளிவந்திருப்பது நாவலின் சிறப்பிற்குக் குறைவை ஏற்படுத்தவில்லை.
அங்கையன் கயிலாசநாதன் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கொண்ட பட்டதாரி. அதனால் ‘செந்தணலில் உரை, நடை எளிமையாகவும், அதேவேளை இலக்கண சுத்தமானதாயும் அமைந்திருக்கின்றது. பாத்திரங்களின் உரையாடல்களில் பேச்சுவழக்குச் செம்மையாக விழுந்துள்ளது.
அங்கையன் கயிலாசநாதனின் ‘செந்தணல் என்ற இந்த நாவல் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்திற்குக் கிடைத்திருக்கும் ஆரோக்கியமான புதியதொரு வரவாகும். இளவயதிலேயே எங்களை எல்லாம் விட்டுப் பிரிந்து விட்டார். அவர் எங்களுடன் இன்றும் இருந்திருக்கில் ஈழத்துப் புனைகதை இலக்கியத்திற்கு இன்னமும் பல அற்புதங்களைத் தந்திருப்பார்.
செங்கை ஆழியான், க.குணராசா
பதிவாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்
28-03-2000

3ங்கைலர் கலிஸ்ாசநாதர்
அணிந்துரை
நெருக்கமான ஒரு கூட்டாளியை நினைந்து.
அங்கையன் கயிலாசநாதனுடைய ‘செந்தணல் இப்பொழுது புத்தக வடிவம் பெற்று உங்கள் கைகளில் உள்ளது. இந்த நாவலை எழுதியவர் எனக்கு மிகவும் நெருக்கமானதொரு கூட்டாளி.
அது 1965-1967 காலப்பகுதி என்று நினைக்கிறேன். அப்பொழுது நான் பம்பலப்பிட்டியில் ஓர் அறையிலே தங்கியிருந்தேன். ஏறத்தாழ, கிழமையில் மூன்று தடவைகளாவது கயிலாசநாதனை நான் சந்திப்பதுண்டு. அவர் என் இருப்பிடத்துக்கு வருவார். நாம் இருவரும் பம்பலப்பிட்டிக் கடற்கரையில், மாலை வேளைகளில் உலாவி வருவோம். அப்போது அவர் ‘வீரகேசரி’ ஆசிரியர் குழுவிலே பணியாற்றிக் கொண்டிருந்தார். பல்கலைக்கழகத்திலே தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் பட்டம் பெற்ற ‘புதிசு'. ஆய்வறிஞர் என்று பெயர் பெற்று அன்று எழுதிக் கொண்டிருந்த பலர் பற்றியும் அரட்டை அடிப்பது எங்கள் இருவருக்கும் பிரியமானதொரு பொழுது போக்கு. அங்கையன் மிகவும் சிறந்த உரையாடற்காரர். கனதியான விடயங்கள் பற்றியும் கேலி - கிண்டற் போக்கிலும் பலவற்றையும் நாம் நம்மிடையே பகிர்ந்து கொள்வோம். சுயாதீனமாக எது பற்றியும் சிந்தித்து, மனம்திறந்து பேசும் அங்கையனின் போக்கு எனக்கு மிகவும் பிடிக்கும்.
அக்காலப் பகுதியிலே கதை, கட்டுரை, கவிதை என்று பல துறைகளிலும் கயிலாசநாதனின் அக்கறை படிந்திருந்தது. ‘வீரகேசரிக்கென்று' கவிதைகளையும் கட்டுரைகளையும் என்னிடமிருந்து பெற்றுச் சென்று வெளியிடுவிப்பது அவருடைய பழக்கமாக இருந்தது. ஒரு சமயம், 'தொல்காப்பியமா, தொல்கோப்பியமா? - ஓர் ஐய வினா’ என்று ஒரு பகிடிக் கட்டுரையை நான் எழுதியிருந்தேன். இது கயிலாசநாதனை மிகவும் கவர்ந்தது. 'டாக்டர் சீ.சீ.சும்மாவனார்’ என்ற புனைபெயரில் இது வெளியாயிற்று. ‘வீரகேசரியில் இதைப் பார்த்த கயிலாசநாதன், இதைப் பாராட்ட வேண்டும் என்ற ஆசையினால் உந்தப்பட்டு என் இருப்பிடத்தை விசாரித்து அறிந்து நேரிலே என்னைக் கண்டார். அதுதான் எங்களுடைய முதலாவது சந்திப்பு என்று நினைக்கிறேன். அதே பாணியில் இன்னும் சிலவற்றை எழுதும்படி அவர் ஊக்கப்படுத்தினார். தமிழியல் ஆய்வாளர்களின்

Page 36
அல்கைலர் கலிஸ்கிருந்தர்
பாணியிலே கற்பனையான அடிக்குறிப்புகள், மேற்கோள்களையும் சேர்த்து, ‘பாரதியார் காலம் யாது? என்னும் ஒரு நையாண்டிக் கட்டுரையை நான் எழுதிக் கொடுத்தேன். 'டாக்டர் சீ.சீ.சும்மாவானார்’ என்ற பெயரில், இந்தக் கட்டுரையும் ‘வீரகேசரியில் சிறப்பான முறையில் வெளியாயிற்று.
நையாண்டிக் கட்டுரைகளை மட்டுமல்லாமல், கனதியான கட்டுரைகள் பலவற்றை நான் எழுதிடுவதற்கும் வை.அ.க. காலாக இருந்திருக்கிறார். ஒரு சமயம் 'இன்றைய ஈழத்தில் தமிழ்க் கவிதை' என்று தலைப்பிட்டுக் கட்டுரையொன்றை எழுதிக் கொடுத்தேன். கயிலாசநாதன் அதற்குத் தந்திருந்த துணைத் தலைப்பு என்ன தெரியுமா? ‘சோமசுந்தரப் புலவரின் கவிதைகளில் நவீனத் தன்மை இல்லை! இது ஒருவகைப் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. இதோ, அவர் இட்ட துணைத் தலைப்புகளுக்கு மேலும் சில உதாரணங்கள் 'பழந்தமிழ்ப் பாண்டித்தியமே மொழி நடையை இறுக்குகிறது, ‘கவிதைக் கலை மந்திர சக்தியுடன் தொடர்புடையது', 'பொருளுக்குச் சொல் அடிமை. பத்திரிகையாளர் என்ற வகையில், வாசகர் உளவியலை நன்கு மோப்பம் பிடித்து வைத்திருந்தவர் வை.அ.க. என்பது கண்கூடாக விளங்குகிறது அல்லவா?
பத்திரிகையாளர் என்பது மாத்திரமல்ல; ‘கயிலாயர் ஒரு கவிஞர், கதைஞர், கலைஞர் என்பனவுங் கூடத்தான். அவருடைய இரசனைக்கும் ஆக்கத் திறனுக்கும் ஏதுக்களாய் அமையலாயின. ‘வைகறை நிலவு என்ற கவிதைத் தொகுப்பும், ‘கடற்காற்று என்ற பரிசு நாவலும் அவர்தம் கலைத்திறத்துக்குக் கட்டியம் கூறின.
பின்னர் அவர் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக மாறித் திகழ்ந்த காலத்தில், அவருடைய ஆளுமையின் வேறு முகங்களும் வெளிப்பட்டுத் துலங்கின. மெல்லிசைப் பாடல்கள் ஈழத்திலே உதயமாகிய காலத்தில், பாடலாக்கத்திலும் இவர் கணிசமான பங்களிப்பைச் செய்யலானார். இன்னும், ஒலிச்சித்திரங்கள், நாடகங்கள் முதலியவற்றின் உருவாக்கத்தின் போதும் இவருடைய திறமைகள் விளங்கித் தோன்றின. சுந்தா சுந்தரலிங்கம், இராஜேஸ்வரி சண்முகம், சில்லையூர் செல்வராசன், எஸ்.கே.பரராஜசிங்கம் முதலியவர்கள் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளிலே பிரகாசித்த காலப்பகுதியில்,

அங்கைலர் கலிஸ்ாசநாதர்
எழுத்துருப்படைக்கும் ஆற்றலுள்ளவர்களை இனங்கண்டு அவர்களை முயற்சியில் இறங்குமாறு ஊக்கியதுடன், தயாரிப்புப் பணிகளிலும் பொறுப்பெடுத்துத் தோள் கொடுத்து இயங்கினார் என்பது, பதிவு செய்யப்பட வேண்டியதோர் உண்மையாகும். இவை எல்லாம் நமக்கு எவற்றை உணர்த்துகின்றன? கயிலாசநாதனின் கலை நெஞ்சத்தையும், நகைச்சுவை உணர்வையும், படைப்பாக்க உந்தலையும் - எல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய மதிப்பீடுகளின் செம்மைப்பாட்டையுமே ஆகும்.
இப்படிப்பட்டதொரு நல்ல படைப்பாளியை இடைவழியிலே ‘காலம்’ நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு போய்விட்டது. இது என்ன கொடுரம்! யாருமே எதிர்பார்த்திருக்காத விதத்திலே வண்டி விபத்தொன்றிலே நாம் கலைஞர் கயிலாசநாதனை இழந்தோம். அவர் இன்று வரை இருந்தால், இன்னும் என்னென்ன சாதனைகளை நமக்குத் தந்திருப்பார் என்று நினைத்துப் பார்க்கும்போது, அவரை அறிந்துணர்ந்தவர்கள் நிச்சயம் வேதனைப் படுவார்கள்.
கலைஞர் கயிலாசநாதனின் அகால மறைவு இத்தனை துயர நினைவுகளை நமக்கென விட்டுச் சென்றாலும், அவருடைய பங்களிப்புக்களைப் போற்றிப் பேணுவதும் நினைவு கூருவதும் கலையுலகின் கடமைகள் ஆகின்றன. அவற்றுக்கான முயற்சியின் பேறாகத் தான், இப்போது வெளிவந்து நம் கையில் அமர்ந்துள்ள புத்தகம் விளங்குகிறது.
‘செந்தணல் அங்கையன் கயிலாசநாதனால் 1969இல் எழுதப்பட்டது. ‘மித்திரன்’ இதழில் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது. இது கணிசமான நெடுமை உடையது. புத்தகம் இப்பொழுது வாகசர் கைகளில் உள்ளமையால், இதுபற்றி முன்கூட்டியே அதிகம் கருத்துரைகள் சொல்வதைக் காட்டிலும், நூலின் உள்ளே, எந்த ஒரு முன் முடிவும் இல்லாமல், திறந்த மனத்துடன், நுழைந்து உலாவி வருமாறு வாசகர்களுக்கு இடமளிப்பதே நல்லது.

Page 37
அங்கையர் கலிஸ்ாrதழர்
அப்படியானால் நூலாசிரியர் பற்றியும் எதுவும் கூறாமல் விட்டிருக்கலாமே என்று சிலர் கேட்கலாம். உண்மையில் இன்று, மேலோங்கி நிற்கும் திறனாய்வுக் கோட்பாடுகள் சில, அந்த நிலைப்பாட்டைத் தான் உரத்துக் கூறுகின்றன. எழுத்தாக்கம் ஒன்றின் பாடப்பகுதியை மாத்திரந்தான் திறனாய்வாளர் பரிசீலனை செய்ய வேண்டும், புத்தகத்துக்கு அப்பால் உள்ள சங்கதிகள், வரலாற்றுச் சூழல், சமூக நிலைமைகள் உட்பட்ட சகல தரவுகளும் விமரிசகனுக்கு எதுவிதத்திலும் தேவை இல்லை என்று அந்தக் கோட்பாட்டினைச் சிக்கெனப் பிடிப்பவர்கள் வாதிடுவார்கள்.
நவீனப் பின்னியத் திறனாய்வு நியதிகள் சிலவற்றின்படி, ஒரு படைப்பின் உட்பொருள் பற்றியோ, அதன் பண்புகள் பற்றியோ விளக்கம் தருவதற்கு, அதைப் படைத்தவனுக்குக் கூடத் தனி உரிமை ஏதுமில்லை. இந்த நியதிக் (335|TLJTL960601. The authoris dead' (saffluj 9pbg5 6i LT5) 6T6irp வடிவத்திலே ஒரு பொன்மொழி போல அடித்துக் கூறுவதுண்டு.
ஆனால், உண்மை என்ன? ஒரு படைப்பைப் பகுத்தாயும் போது, அது தோன்றிய வரலாற்றுச் சூழல், நூலாசிரியர் பற்றிய பிற செய்திகள், விவரங்கள் என்பன, அதன் ஆய்விலே எந்த விதத்திலுமே உதவிடக் கூடாது என்பது ajurr?
மதிப்பீடு சரியாக இருக்க வேண்டுமானால், மதிப்பீட்டுக்கு உள்ளாகும் பொருள் இயலுமளவு நன்கு அறிந்துணரப்பட வேண்டும் என்பது ஓர் அடிப்படை முன்தேவை ஆகும். அவ்வாறு விளக்கம் பெறுவதற்கு, நூலாசிரியர் பற்றிய வரலாற்றுச் செய்திகளும் உதவுமானால், அந்தத் தகவல்கள் நம்பகமான முறையிலே கிடைக்கும் என்றால், திறனாய்வாளர்
அவற்றை எல்லாம் பார்க்க மாட்டேன்’ என்று அடம் பிடிக்கலாமா?
பாடப் பகுதியின் சொற்களை மட்டும் ஆதாரமாக வைத்துத்தான் மதிப்பீடு
செய்யப்படல் வேண்டும் என்பது நூலாசிரியரின் உத்தேசம். அது பற்றிப் பிரச்சினை இல்லை. ஆனால், இருண்ட சில இடங்களைப் புறச்சூழற்

அங்கைலர் கலிஸ்ாசருதஷ்
செய்திகள் துலக்கக் கூடுமானால், வெறும் ஊக்கங்களை விட அவை பெறுமதி மிக்கவை என்று கருதுவது புத்தியீனம் ஆகாது. புறச்சூழற் செய்திகள், திறனாய்வாளரிடம் விபரீதமான முன் முடிவுகளை ஏற்படுத்தாது தற்காத்துக் கொள்ளும் முதிர்ச்சியும் பக்குவமும் இல்லாத ஒருவர், நல்ல விமர்சகராவது எப்படி? இன்னும் சொல்லப் போனால், அவர் நல்ல வாசகராகக் கூட இருக்க முடியாதே!
ஆகவே, திறனாய்வுக் கோட்பாடுகள் பற்றிய புதுமோகம் என்ற மாயையிற் சிக்காத, பொதுமதி படைத்த எவருக்கும், நூலாசிரியர் பற்றிய புறச்சூழற் செய்திகளும் பயன்படும் என்பது கண்கூடு. அந்த வகையிலே, சென்ற நூற்றாண்டின் எழுபதுகளின் நடுப்பகுதியிலே திடீரென மறைந்து விட்ட கலைஞர் ஒருவரைப்பற்றிய புறநிலைத் தரவுகளைத் தெரிவிப்பது, அவரைப்பற்றிய சரியான மதிப்பீட்டுக்குத் தடையாக அமைய மாட்டாது; மாறாக, முழுமையான மதிப்பீட்டுக்குத் துணையாய் நிற்கும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையிலே தான், அ. க. பற்றிய செய்திகள் சிலவற்றை இங்கு நினைவு கூர்கிறோம்.
‘செந்தணலை நேரே சென்று கண்டுணரும்படி வாசகர்களுக்கு வழிவிட்டு
நாம் விலகி நிற்கிறோம். திருமதி கயியிலாசநாதனின் வெளியீட்டு முயற்சிகள் வெற்றி தருவனவாய் அமையட்டும்.
இ. முருகையன்
நீர்வேலி தெற்கு, நீர்வேலி, இலங்கை. ஜூலை 2000

Page 38
அங்கை)ஷ் கலிஸ்ாசருதஷ்
‘அங்கையன் கயிலாசநாதனின் நூல்கள் வெளியீட்டு விழா அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது காவலூர் ராசதுரை ஆய்வு நிகழ்த்துவதையும், சமய கலாசார அமைச்சின் மேலதிகச் செயலாளர் திருமதி இ.கயிலாசநாதன் நூல்களின் முதற் பிரதிகளைத் தேசபந்து வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளையிடம் வழங்குவதையும் படத்தில் காணலாம்.
தினகரன் வாரமஞ்சரி 03.12.2000 (பம்பலப்பிட்டி தினகரன் நிருபர்)
அங்கையின் கயிலாசநாதன் ក្រុងវិស្ណុ 通二眶
8:8:gs: x 38 x 383
அமரர் ‘அங்கையன்’ கயிலாசநாதனின் நூல்கள் வெளியீட்டு விழா, அண்மையில் கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெற்றபோது, பேராசிரியர் சிதில்லைநாதன் உரை நிகழ்த்துவதை முதல் படத்திலும் மேடையில் பேராசிரியர் கா. சிவத்தம்பி, திருமதி அன்னலட்சுமி இராஜதுரை, திரு.செ.யோகநாதன், திரு. காவலூர் ராசதுரை, திருமதி கயிலாசநாதன் ஆகியோர் அமர்ந்திருப்பதையும் அமரர் கயிலாசநாதனின் புத்திரர் நன்றியுரை கூறுவதையும் படத்தில் காண்க.
(பம்பலப்பிட்டி தினகரன் நிருபர்)
 
 
 

அங்கைலர் கலிஸ்ாசருதஷ்
6. ‘சிட்டுக் குருவிகளும் வானம்பாடியும்’
நாவல் பற்றி.
முன்னுரை
இலங்கையில் நாவல் இலக்கியம் தமிழகத்துடன் ஒப்பிடும் போது பின்தங்கிய நிலையில் உள்ளது என்ற கருத்து முற்றிலும் நியாயமற்றதல்ல, படைப்பாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் படைப்புக்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் அக்கருத்தை மறுக்க முடியாது. பரீட்சார்த்த நாவல்கள் எனப்படுகிற வகையில் நோக்கினால் தமிழகத்தில் பரீட்சைக்காக எழுதுகிறவர்கள் நிறையப்பேர் உள்ளனர். படைப்பு எதைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பதைக் கவனித்தால் தமிழகத்தில் நிலவும் பார்வைக்கும் இங்கு உள்ளதற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. மற்றப்படி எந்த வகையான ஆக்க இலக்கிய வடிவத்தைப் படைப்பாளிகள் நாடுகிறார்கள் என்பது புழக்கத்தில் உள்ள ஊடக வசதிகளால் கணிசமான அளவுக்குத் தீர்மானிக்கப்படுகிறது.
இலங்கையில் நாவல் இலக்கியத்தைப் பொருளாதார இழப்பின்றி ஆதரிக்கக் கூடிய வெளியீட்டு வசதிகள் இல்லை. முழுநேர ஆக்க இலக்கிய எழுத்தாளர்கள் எனக் கூறக் கூடியவர்கள் எனக்குத் தெரிய இல்லை. எனவே நூல்கள் பெருமளவும் படைப்பாளிகளது ஆத்ம திருப்திக்காகவும் சில சமயங்களில் நூல் வெளியீட்டுக்கான நிறுவனங்களது ஆதரவின் விளைவாவும் பல சிரமங்களிடையே வெளிவருகின்றன. இதற்குள் வணிக நோக்கில் தமிழகத்திலிருந்து குறுக்கிடும் பதிப்பாளர்கள் உள்ளனர். ஈழத்து நாவல் இலக்கியம் இன்றைவிடச் செழிப்புடன் இருந்த காலம் ஒன்று இருந்தது. அக்காலம் ஈழத்துத் தமிழ் எழுத்தின் தனித்துவம் பற்றிய உணர்வு எழுச்சி பெற்றிருந்த காலம். தமிழகத்துக் குப்பைச் சஞ்சிகைகளின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் பலரை முதற் தடவையாக ஈழத்துப் புனைகதைகளை வாசிக்கச் செய்தன. இந்த அறிமுகம் பின்பு ஒரு வலிய வாசகர் தளமாகியது. அது அயலிலிருந்து வந்த மலிவான பதிப்புக்களின் மத்தியிலும் நிலைத்து வலிவும் விரிவும் பெற்றது.

Page 39
அங்கையர் கலிஸ்ாசநாதர்
1977க்குப் பின்பு இந்த மண்ணில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார மாற்றங்களை அவற்றை இயலுமாக்கிய ஒரு சமுதாய நெருக்கடியிலிருந்து பிரித்து நோக்க முடியாது. அவற்றின் பின் விளைவுகளின் நடுவே இன்று நமது சமுதாய நெருக்கடியையும் போராட்டங்களையும் கூற முனைகிற இலக்கியங்கள் 1970களின் நடுப்பகுதி வரை வந்த இலக்கிய மரபின் தொடர்ச்சியையும் அதனுடான ஒரு முறிவையும் தம்முட் கொண்டுள்ளன. இன்று, சமூகப் பார்வை இல்லாத ஈழத்துத் தமிழ் இலக்கியம் அடையாளமற்றது. இந்தச் சமூகப் பார்வைக்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி உள்ளது. அதை மறந்து இன்றைய ஈழத்தமிழ் ஆக்க இலக்கியத்தை முழுமையாக அறிய முடியாது.
நூல் வெளியீட்டு வசதிகளின் போதாமை காரணமாகப் பல படைப்பாளிகள் செய்தி ஏடுகளின் வாரப் பதிப்புக்களையும் சில சமயம் நாளாந்த வெளியீடுகளையும் தமது களங்களாகப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே தொடர்கதையாக வருகிற நாவலுக்குரிய சில நிர்ப்பந்தங்கள் பலவற்றை ஏற்றே படைப்புக்களை உருவாக்க முடிந்தது. ஒப்பிடத்தக்க நீளமுடைய அத்தியாயங்களும் ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் அடுத்த அத்தியாயம் பற்றிய எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமான இறுதிப் பகுதிகளும் ஆழமான சமூக அக்கறையோ இலக்கிய ஈடுபாட்டையோ கொண்டிராத வாசகனையும் தன்பால் ஈர்க்கக் கூடிய உள்ளடக்கமும், இன்றுவரை, இத்தகைய ஆக்கங்களில் அவசியமாகின்றன.
இலக்கிய உன்னதங்கள் பற்றி உரக்கப் பேசுவோர், நமது படைப்பாளிகள் பலர் இந்த வரையறைகட்கு உட்பட்டுத் தமது படைப்பாற்றலையும் சமூக உணர்வையும் வெளிப்படுத்தினர் என்பதைக் கணிப்பிற் கொள்வதில்லை. பணத்துக்கும் புகழுக்குமான இலக்கியச் சமரசங்களுடன் படைப்புக்கான களத்தைப் பெறுவதற்கான சமரசத்துடன் ஒப்பிடுவது நியாயமாகாது. படைப்பாளியின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான இத் தடைகள் மொழி நடையையும் கதையமைப்பையும் பாதிக்கின்றன. அப்படிப்பட்ட பாதிப்பின்றி எழுதாமல் இருக்க, படைப்பாளி எழுதாமலே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை எதிர்நோக்கலாம். வாசகரைச் சென்றடைந்து வாசிப்பின் தரத்தையும் வாசிப்பவர்களின் தொகையையும் விருத்தி செய்வது வெறும் மலிவான ரசனைக்குரிய எழுத்தையொத்த காரியமல்ல.

அதுைைலவு லைலாசநரடி
கயிலாசநாதனின் எழுத்து ஈழத்துப் படைப்பிலக்கிய வளர்ச்சியை அடையாளப்படுத்துகிற எழுத்து என்பதையும் எழுத்தாளர் என்ற வகையில் அவர் தன்னை அடையாளப்படுத்தி வளர்ச்சி பெற்று வந்த ஒரு காலச் சூழலில் மிகவும் வருந்தத்தக்க விதமாக அவரது மறைவு நிகழ்ந்தது என்பதையும் நோக்கும் போது அவரது ஆக்கங்கள் இன்று நூலுருப் பெறுவது அவரது நினைவுக்காக அவரது மனைவியார் செய்யும் பணியாக மட்டுமல்லாமல் அவர் வாழ்ந்த காலத்தின் தமிழ் ஆக்க இலக்கியத்தின் ஒரு முக்கியமான பகுதியின் பதிவாகவும் அமைகிறது.
ஈழத்துப் புனைகதையின் அமைப்பின் மீது வெளியீட்டுக்கான களங்கள், வாசகர் உருவாக்கம் என்பன ஏற்படுத்திய தாக்கம் ஒரு புறமிருக்கத் தமிழகத்துப் படைப்பிலக்கியங்களின் பாதிப்பை, குறிப்பாகச் சொற் பிரயோகத்தின் மீதான செல்வாக்கை, முற்றாகவே விலக்க இயலாமையை நாம் இன்று வரை பல நல்ல ஆக்கங்களிற் கூடக் காண்கிறோம். நம் பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்குமிடையான இடைவெளி, தமிழகத்து எழுத்தைச் சிறிதேனும் சார்ந்திருக்கும் தேவைக்கு இடமளிக்கிறது. கயிலாசநாதனின் மொழிப் பிரயோகத்திலும் இப் பண்பைச் சற்றுக் காண நேருகிறது. அவரது எழுத்தின் முனைப்பு அடிப்படையிலும் பொருளளவிலும் இம் மண்ணினது என்பதை மீறியே இது நிகழ்ந்துள்ளது. இன்று இலங்கையின் படைப்புலகின் நலிவும் வாசிப்பின் போதாமையும் தமிழகத்தின் மிக மோசமான எழுத்தின் ஆதிக்கத்தை இங்கு மீளவும் நினைவூட்டத் தொடங்கியுள்ள நிலையில் கயிலாசநாதனுடைய காலத்தின் எழுத்து நமது படைப்பாளிகட்குப் பரிந்துரைக்கப்பட வேண்டியதாகிறது.
“சிட்டுக் குருவிகளும் வானம்பாடியும்’ நாவலில் வருகிற மனிதர்கள் நிசமானவர்கள். அவர்களது உணர்வுகள் நிசமானவை. அதேவேளை அவர்களின் பண்பின் சாதகமான அம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை உத்தமமான பாத்திரங்களே கதையில் உலா வருவதான ஒரு மயக்கத்துக்கு இடமளிக்கின்றன. கதைக்குரிய சமூகச் சூழல் தமிழ் நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கம் சார்ந்தது என்ற அளவில் கதைச் சூழலுக்கு அப்பாற்பட்டு முழுச் சமூகமும் சார்ந்த ஆசிரியரின் சமூகப் பார்வையை விரிவுபடுத்த இப்படைப்பு அதிக இடமளிக்கவில்லை. எனினும் மனிதநேயம் என்பது கீழ்த்தரமான பொருளியற் கண்ணோட்டத்தை மீறி நிற்க வேண்டும் என்ற பார்வையை நூலில் பொதுவாகவே நாம் காண முடிகிறது.

Page 40
амовоф вебомryy4
தரமான ஈழத்துப் படைப்பிலக்கியத்தின் கணிசமான ஒரு பகுதி இன்னமும் நூலுருப் பெறாமலே உள்ளது. அது இன்னும் சில ஆண்டுகளில் நூலுருப் பெறாது போனால் அநேகமாக மறக்கப்பட்டும் இழக்கப்பட்டும் போகும் என்பது உண்மை. இந்த நிலையில் கயிலாசநாதனின் படைப்புக்கள் நூல் வடிவு பெறுவது ஒரு சிறு ஆறுதல். இவ்வாறான முயற்சிகளுக்கு இந்த முயற்சி ஒரு தூண்டு கோலாக இருக்கும் என எண்ணுகிறேன்.
திரு.சி.சிவசேகரம்
பேராசிரியர் - இயந்திர பொறியியல் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம 2001

அங்கைலர் கஸ்ாசருதஷ்
“சிட்டுக் குருவிகளும் - வானம்பாடியும்’ நாவல் ஆய்வரங்கிலிருந்து.
எழுத்து என்பதைத்தான் கலைகளில் எல்லாம் தலைசிறந்த கலை எனச் சான்றோர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள். எக்காலத்திலும் நிலைத்து நிற்பதோடு ‘எழுத்தாளன்’ எனும் கெளரவத்தை சமுதாயத்தில் பெற்றுத்தந்து ஒரு எழுத்தாளனை அடையாளப்படுத்துவது அவனது எழுத்துத் தான் என்பதில் மிகை ஏதுமில்லை.
அண்மையில் வெள்ளவத்தை தர்மாராம வீதியிலுள்ள, பெண்கள் ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்ற அங்கையன் கைலாசநாதனின் “சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும்’ எனும் நாவலுக்கான ஆய்வரங்கு நடைபெற்றது.
தன் மனதில் உதித்த சொந்தக் கருத்துக்களை, தன்னிலை நடையோடு மக்களுக்காக எழுதும் எழுத்தாளர்கள்தான் எழுத்தாளர்களுள் சிறந்தவர்களெனக் கருதப்படுகின்றனர். இவற்றைத்தான் “படைப்பிலக்கியம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர் என்ற கூற்றை ஆமோதிப்பது போல நிகழ்ந்தது ‘சிட்டுக் குருவிகளும் வானம்பாடியும்” எனும் நாவல் நூல் ஆய்வரங்கு.
நிகழ்வுக்குத் தலைமை தாங்கி நிகழ்வை நெறிப்படுத்தினார் ஈழத்தின் சிரேஷ்ட எழுத்தாளரான காவலூர் இராசதுரை.
விபவி கலாசார மையம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில்,
ஆய்வாளர்களாக கே.எஸ்.சிவகுமாரன், தெளிவத்தை ஜோசப், கமலினி செல்வராசன், சித்திராஞ்சன், சண்முகலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நெறியாளர் தனது ஆரம்ப உரையில்:
“சுமார் 30 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டட நாவல் இது. இன்றைய
வாழ்க்கைச் சூழலிலும் இந்த நாவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற சக்தி வாய்ந்தது என்பதை நாவலைப் படிப்பவர்கள் உணர முடியும் என்றார்.

Page 41
அங்மலர் கலிஸ்ாசநாதர்
ஒரு தொலைக்காட்சி நாடகத்தை விறுவிறுப்பாகப் பார்க்கின்ற போது ஏற்படுகிற மன நிலையை ஏற்படுத்தும் நாவல் இது” என்று நூலை அறிமுகப்படுத்தினார் அவர்.
நூலாசிரியரின் துணைவியார் நூலின் பதிப்புரிமைக்குரியவரான திருமதி இராசலட்சுமி கயிலாசநாதன் உட்பட மேலும் இரண்டு பெண்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஆசிரியரின் பெண்ணிய நோக்கு எனும் பொருளில் நிகழ்வில் ஆய்வுரை செய்ய வந்தார் கமலினி செல்வராசன். 'கயிலாசநாதன் காணும் சமுதாயம் எனும் தலைப்பில் கே. எஸ். சிவகுமாரன் ஆய்வுரை நிகழ்த்துகையில்:
இளம் வயதில் மரணித்த சில பிரபல எழுத்தாளர்களை நினைவு கூர்ந்ததோடு, அந்த வரிசையில் தனது 33வது வயதில் அகால மரணமடைந்த இந்த நாவல் ஆசிரியரையும் சேர்த்துக்கொண்டு ஆய்வை நகர்த்திச் சென்றார்.
“சமூகத்தின் தாக்கத்தினால் தனிமனித உலைச்சல்களையும் பிரத்தியட்ச வாழ்வியல் நோக்கங்களையும் அக உலகப் பார்வைகளின் தீட்சண்யத் தையும், சமூகப் பிரக்ஞையின் அடிப்படை உண்மை நிலைகளையும் வெகு நேர்த்தியாக சிட்டுக்குருவிகளும் வானம்பாடியும் நாவல் நமக்குத் தொட்டுக் காட்டுகிறது” என்றார் அவர்.
கே.எஸ்.சிவகுமாரன் தனது ஆய்வுரையில் 'இந்த நாவலின் ஆரம்பம் முடிவு இரண்டுக்கிடையிலேயும் விரிந்துபடுகின்ற பாத்திரங்கள் நாம் ஒவ்வொருவரும் எங்கோ சந்தித்த, நமக்கு மிகச் சமீபமாக வாழ்ந்து தொடக்கத்திற்கும் முடிவிற்கும் பாரிய வித்தியாசங்கள் இல்லாது நடமாடுகின்ற மனிதர்களாகப் படைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு நாவலாசிரியரின் உழைப்பின் வெற்றி அது இந்த நாவலில் தோற்றுப் போகாமல் சமுதாய அங்கத்தவர்களாக பாத்திரங்கள் உலாவி வருவது பாராட்டப்பட வேண்டியது” எனக் குறிப்பிட்டார்.
'நாவலின் நடையும் உத்தியும்” எனும் தலைப்பில் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் உரையாற்றுகையில் :
“எழுத்தாளன் தான் சொல்ல வருகின்ற கருத்தைச் சாதுரியமாக மொழிநடையின் மூலமும், அற்புதமாக நிகழ்வுகளைக் கண்முன்னே கொண்டு

அல்கைலர் கலிஸ்செருதஷ்
வருகின்ற சூத்திரமும் தெரிந்து கொண்டுள்ளான். எழுதுவதில் ஒரு கருத்து மாறுபட்ட எண்ணங்கள் உள்ளவர்களையும், எழுத்தாளன் சார்ந்த கருத்திற்கு ஒப்புதல் வாக்குமூலம் தருகின்ற அளவுக்கு நிர்ப்பந்திக்க முடியும். மொழியும் எழுதும் நடையும் செழுமையாக கையாளப்படுகிற போது நாவலை வாசிக்கிற வாசகனை அதற்குள்ளேயே கட்டிப் போடுகிற வித்தை மொழிநடைக்கு நிச்சயம் உண்டு. அந்த அருங்கலையில் ‘அங்கையன் கயிலாசநாதன் வெற்றி பெற்றுள்ளார்.
'நீர் ஒரு மனுஷனா?” - நாவலின் ஆரம்ப வசனம் இது. வாசகனைப் பார்த்துக் கேட்பது போல முதலில் தோன்றும். கோவில் ஐயர் எத்தனையோ கேள்விகளை வந்தும் வராததுமாகக் கேட்டிருந்தார்.
வாசகனை நிலைகுத்தி வைத்து தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிற இந்த மொழி நடைதான் நாவலின் உத்தி. அதில் நாவலாசிரியர் பெற்றது சித்தி. ஏராளமான நாவல்கள் தமிழகத்தில் வெளிவந்த போதிலும், அதிசயமாகவும், அற்புதமாகவும் மிகவும் பிரயோசனமான கருத்துக்கள் அடங்கிய எழுத்தாளர்கள் நமது நாட்டில் எழுதினார்கள். எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எழுதப் போகிறார்கள் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டு, தற்போது அச்சுப் பதிப்பில் வெளியாகியுள்ள, இந்த காலச் சூழலில் ஒன்றிப் போகும் இப்படைப்பு நமக்குத் தெளிவுபடக் கூறுகிறது.
நடை, உத்தி இரண்டும் பரவலாக மிகவும் கைவந்த சிலாக்கியமாக நாவலை வாசிக்கின்ற போது நமக்கு உணர்த்துகிறது என அவர் தெரிவித்தார்.
ஆசிரியரின் பெண்ணிய நோக்கு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்த திருமதி கமலினி செல்வராசன் பின்வருமாறு குறிப்பிட்டார்.
‘பாத்திரப் படைப்புகளில் பெண் பாத்திரங்களின் யதார்த்த நிலையுடன் இந்த நாவல் நகர்த்தப்பட்டிருந்த போதும், சில பாத்திரங்கள் பெண்ணியம் பற்றி பெருமை பேசவோ அன்றி அவர்கள் சம்பந்தப்பட்ட சுய உணர்வுகளின் வெளிப்பாடுகளின் தன்மையை சம நிலைப்படுத்தவோ முயலவில்லை. வெறும் உணர்ச்சிகளின் அடிமைத் தனத்தில் மூழ்கடிக்கப்படுவதாக சித்தரிக்கப் பட்டிருப்பது பெண்ணியல் நோக்கில் பெண்கள் சார்பாக சர்ச்சைக்குரியவனாகவே கணிக்க முடிகிறது.

Page 42
அல்கைலர் கலிஸ்சதுரஷ்
'பாலியல் உந்து சக்தியால் தன் வயதிற்கும் குறைந்த சிறுவனை பயன்படத்துகிற ஆசிரியையின் பாத்திரம்' வெகுவாக சிந்திக்க வைக்கிறது இந்த அடிப்படையில், தமது ஆய்வுரையை கமலினி செல்வராசன் நிகழ்த்தினார்.
‘ஆசிரியரின் பாத்திரங்கள் பற்றி ஆய்வு செய்த சித்ராஞ்சன் சண்முகலிங்கம், பாத்திரங்கள் ஏராளமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதையும், பெயர் குறிப்பிடப்படாத கதாபாத்திரங்கள் வந்து போவது, நிறையவே குடும்ப அங்கத்தவர்கள் நிழலாடுவதையும் சுட்டிக்காட்டினார். சில பாத்திரங்களின் தன்மைகள் வயதுக்கு மீறிய சம்பவ நிகழ்வுகளினால் சோடைபோகிற பாங்கு பற்றி யெல்லாம் விரிவாக ஆராய்ந்து ஒரு அறிக்கையையே சமர்ப்பித்தார் அவர்.
எது எவ்வாறாயினும் சமுதாய நெருக்கடிகளையும், போராட்டங்களையும் அதன் ஊடே வாழ்க்கையின் அத்தியாவசிய மூலப் பிரச்சினைகளையும் கூற முனைகிற இலக்கியப் பாத்திரங்களாக இவை கொள்ளப்பட வேண்டியவை என முத்தாய்ப்பு வைத்தார் சித்ராஞ்சன்.
மாறுபாடான அபிப்பிராயங்களை நிச்சயம் இந்த நாவலை வாசிப்பவர்கள் அனுபவிக்க நேரிடும்.
சபையோர்களின் கலந்துரையாடல் வேளையில், பல ஆரோக்கியமான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கின.
தினகரன் வாரமஞ்சரி இதையடுத்து கருத்துத் தெரிவித்த கலாநிதி செல்வி சிவச்சந்திரன், பெண்ணியம், பெண் சமத்துவம் பற்றியெல்லாம் பேசப்படுகின்ற இந்த நவயுகத்தில், பெண்கள் சம்பந்தமான கருத்துக்களை அலசி ஆராய்கிற வேளை, அந்த கலந்துரையாடல்களில் பெண்களைப் பற்றி ஆண்கள் பேசி தம் கோணத்தில் கருத்துக்கள் வைத்தால் என்ன? அவற்றை ஏன் பெண்களிடம் வழங்கிவிட வேண்டும்? என வினா தொடுக்க எழுத்தாளர் நீர்வை பொன்னையன் ‘அப்படி ஒரு எண்ணம் இல்லை. இனிவரும் காலத்தில் ஏற்பாடுகள் செய்கின்ற நிகழ்வுகளில் இவை நேர்த்தியாகச் சேர்த்துக் கொள்ளப்பட ஆவன செய்வதாகத் தெரிவித்தார்.
நூலாசிரியரின் துணைவியாரான திருமதி இராசலட்சுமி கயிலாசநாதனின் கருத்துக்களோடு நிகழ்வு நிறைவெய்தியது.
சுபத்ராமணியன்
தினகரன் வாரமஞ்சரி 06-0-2002

அங்லமலர் கலிஸ்ாசருதஷ்
சிட்டுக் குருவிகளும் வானம்பாடியும்
கயிலாசநாதன் காணும் சமுதாயம்
அங்கையன் கயிலாசநாதன் அவர்கள் 1942 முதல் 1976 ஆண்டு வரை இலங்கையில் பிறந்து வாழ்ந்து அகால மரணமடைந்த திறமைசால் எழுத்தாளர். இவருடைய எழுத்துக்கள் இவர் மறைவின் பின்னரே வெளிவரத் தொடங்கியுள்ளன. இதற்காக இவருடைய துணைவியார் இராசலட்சுமி அம்மாளுக்கு நாம் நன்றி தெரிவித்தேயாக வேண்டும்.
1960களில் தமிழ் மொழி மூலம் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற புதிய எழுத்தாளர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வளம் சேர்க்கத் தொடங்கினர். இவர்களுள் சிலர் இன்று உடனிகழ்கால ஈழத்துத் தமிழ் எழுத்துலகின் முன்னணிச் சிற்பிகளாகத் திகழ்ந்து வருகின்றனர். இவர்களுள் மூன்று நான்கு பேர் முகிழ்ந்து கனியுமுன்னரே இளவயதில் காலமானார்கள். செ.கதிர்காமநாதன், ‘அங்கையன்’ என்ற புனை பெயரில் எழுதி வந்த கயிலாசநாதன், க.நவசோதி, கலா பரமேஸ்வரன், இன்னும் ஓரிருவர் இவர்களுள் அடங்குவர்.
இவர்களுள் கயிலாசநாதன் சிறிது வித்தியாசமானவர். இவர் தமிழ் இலக்கிய உலகுடன் மாத்திரம் தமது பரிச்சயத்தை மட்டுப் படுத்தவில்லை. அதற்கும் மேலாக பிறமொழிக் கலை இலக்கியங்கள் தொடர்பான தேடல்களையும் மேற்கொண்டார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற முயன்றார். இது காரணமாக புற உலகப் பார்வைகளும், அக உலக நுழைபுலங்களும் இவர் ஆளுமையைப் பன்முகப் பாங்காக வளரத் துணை புரிந்தன. இருந்த போதிலும் இவர் ஆற்றல்களை இவர் வாழ்ந்த காலத்திலேயே ஆற அமர இருந்து நம்மால் கணிக்க முடியாமற் போய்விட்டது. அவசர உலகிலே, உதிரி, உதிரியாகப் பத்திரிகைகளில் வெளிவந்த இவர் ஆக்கங்களையோ, வானொலி மூலமான பங்களிப்புக்களையோ அவ்வப்போது அவதானித்தோமே யன்றி, கனதியான கணிப்புக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தப் பகைப்புலத்தின் பின்னணியில் "சிட்டுக் குருவிகளும் வானம்பாடியும்
என்ற இவருடைய குறு நாவலில், ‘கயிலாசநாதன் காணும் சமுதாயம் தொடர்பாகச் சில அவதானிப்புக்களை இங்கு பதிவு செய்வோம்.

Page 43
அங்கையர் கலீலாசநாதர்
முதலிலே ‘சமுதாயம் என்ற சொல் பற்றிய ஒரு விளக்கம். தலைசிறந்த தமிழ் நாட்டு எழுத்தாளர்களுள் ஒருவரான ஜெயகாந்தன் அவர்கள் ‘சமூகம் என்பது நாலு பேர்’ என்றொரு நாவல் எழுதியிருப்பது இங்கு நினைவுக்கு வருகிறது. இங்கு நாம் சமுதாயம், சமூகம், தோழமை, சமதருமம், கூட்டு வாழ்வு போன்ற தமிழ்ச் சொற்கள் உணர்த்தி நிற்கும் கருத்துப்படி மக்களையும் மனதிலிருத்த வேண்டும்.
இவற்றின் அடிப்படையிலே நாம் நோக்குகையில் ‘சமுதாயம்' பற்றிய ஒருவரின் விளக்கம் ஒரே சீரானதாக ஒரே வாய்ப்பாடு கொண்டதாக அமையாமலும் இருக்கலாம். ஏனெனில் ‘சமுதாயம்’ என்பது பல தனிமனிதர்களை உள்ளடக்கியது. இருந்த போதிலும் தேவை கருதி, ஒருமைப்பாடு கொண்டதாகச் சமுதாயம் பெரும்பாலும் செயற்படுகிறது. சமுதாய நீரோட்டத்தினின்று விடுபட்டு எதிர் நீச்சல் மேற்கொள்பவர்களும் இருக்கிறார்கள். புதுப்பாதைகளை அமைத்துக் கொடுக்கும் தனிமனித ஆளுமை கொண்ட கலைஞர்களும் எழுத்தாளர்களும் சம்பிரதாயங்களை மீறிய படைப்பாளிகளாக விளங்கியிருக்கின்றனர்.
இவர்களுடைய நோக்கில், சமுதாயப் பார்வை இருவிதமாக அமையலாம். ஒன்று: பிரத்தியட்ச வாழ்வு தொடர்பான இவர்களுடைய நோக்கு. இது புற உலகம் சம்பந்தப்பட்டது. இரண்டு; இவர்களுடைய அக - உலகம் இந்த அக - உலகத்தில், இவர்கள் காணும் சமுதாயம், புற உலகத்தினின்றும் வேறுபட்டதாக அமையக் கூடும்.
அங்கையன் கயிலாசநாதனிடம் 1970களில் வலியுறுத்தப்பட்டு அனேகமாக எல்லா ஈழத்து எழுத்தாளர்களிடையேயும் வேரூன்றிய சமூகப் பிரக்ஞை இருந்தமை எதிர்பார்க்கப் பட்டதொன்றே.
எழுத்தாளனோ, கலைஞனோ, சமூகத்தினின்று முற்றாகவே தனிமைப்பட்டு விளிம்பு மனிதராய் இருக்க முடியாது. யாவருமே சமூகத்தின் தாக்கங்களுக்கு உட்பட்ட விளை பொருள்களே. ஆயினும், சாமான்யமானவர்கள் போல கலைஞர்களும், எழுத்தாளர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். இவர்கள் சற்று வித்தியாசமாக இருப்பதனாலேயே இவர்களுடைய படைப்புகள் மூலம் புதுப் பரிமாணம் கொண்ட அறிவையும், அனுபவத்தையும் நுகர்வோர் பெறுகின்றனர்.

அங்கையர் கலிஸ்ாசருதஷ்
இந்த இடத்திலே, ஒரு விஷயத்தை நாம் ஒதுக்கி வைக்க முடியாது. நாகரிகம் என்ற போர்வையில் நமக்குள் சில ஒழுக்க சீலங்களை நாம் கடைப்பிடித்து வருகிறோம். அதனால் அந்த விஷயம் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. அதுதான் பால் இயல்பூக்கம் எனப்படும். Sex Instinct. இணைவிழைச்சு எழுச்சி எனப்படும் SexurgeLibido எனப்படும். இந்தப் பாலுணர்ச்சியில் உந்துதல் அக்காலம் தொடக்கம் இக்காலம் வரை சகல கலைஞர்களிடமும் எழுத்தாளர்களிடமும் இருப்பதும் அவர்கள் படைப் பாளிகளாயிருப்பதற்குக் காரணம் எனலாம். ஆனால் ஒன்று: காமஞ்சார்ந்த படைப்புகள் நேர்த்தியாக வடிவம் பெறும். இதனை Erotic Literature என்பார்கள். அதேசமயம் இழிபொருள் இலக்கியமும் உண்டு. இத்தகையவை ஆபாசமான வருணனை கொண்டவை. இதனைத்தான் Pornography என்கிறார்கள். பின்னையது கண்டிக்கத்தக்கவை. முன்னையது ஏற்றுக் கொள்ளத் தக்கவை.
கயிலாசநாதன் 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் உலகெங்கும் இடம்பெற்ற சமூக வாழ்நிலை மாற்றங்களினால் ஓரளவு கவரப்பட்டவர். Permissiveness எனப்படும் கட்டாய வற்புறுத்தல்களினின்றும் விடுபட்ட தாராளப் போக்கு, திரைப்படங்களிலும், நாடகங்களிலும் உடலின் முற்பகுதிகளை நிர்வாணமாகக் காட்டும் Frontal Nudity போன்றவை மேற்குலகில் சகஜமாக இடம் பெறத் தொடங்கின.
தமிழராகிய நாம் நமது பாலுணுர்ச்சிகளை மறைத்து, அடக்கி வைக்கப் பழகிக் கொண்ட சமுதாயத்தினர். எனவே, கட்டுப்படுத்தப்பட்ட வரையறைக் குள்ளேயே இத்தகைய பாலுணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய வர்களாகவும் இருக்கிறோம்.
அதேசமயம், சமுதாயம் என்பது தேக்க நிலையிலுள்ள ஒன்றல்ல. Society is not static. It is dynamic Quéængop6ð Gæff60öLg5).
கயிலாசநாதனின் இந்தக் குறுநாவலில் ஆசிரியரின் புறவயம் சார்ந்த சமுதாயப் பார்வையையும், அகவயம் சார்ந்த பார்வையையும் நாம் காண்கின்றோம். அதாவது கயிலாசநாதன் காணும் சமுதாயம் இன்னது தான் என்று நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பொருள் கொண்டு விளங்கிக் கொள்கிறோம். நான் எவ்வாறு பொருள் கொண்டுள்ளேன் என்பதை விளக்க, இக்குறு நாவலிலிருந்து சில எடுத்துக் காட்டுக்களைப் பார்ப்போம்.

Page 44
அங்லமலர் கலிஸ்ாசநாதர்
இந்த நூலுக்கு முன்னுரை வழங்கிய பேராசிரியர் சி. சிவசேகரம் குறிப்பிட்டுள்ள சில வரிகள் நினைவுபடுத்தத் தக்கவை. அவர் கூறுகிறார்,
"சிட்டுக் குருவிகளும் வானம்பாடியும் நாவலில் வருகின்ற மனிதர்கள் நிசமானவர்கள். அவர்களது உணர்வுகள் நிசமானவை. கதைக்குரிய சமூகச் சூழல், தமிழ் நடுத்தர, உயர்தர வர்க்கம் சார்ந்தது.
இக் கூற்றின்படி இக்கதை யதார்த்தபூர்வமானது எனப் பெறப்படுகிறது. கயிலாசநாதனின் சமுதாயப் பார்வை அக நோக்கிலும், புற நோக்கிலும் அவர் படைத்துள்ள கதை மாந்தர்கள் வழியாகவே வெளிப்படுகிறது.
இக்கதை நிகழும் காலம் 1970கள் எனக் கூற இடமுண்டு. அதாவது, ஏறத்தாழ இன்றைய காலகட்டத்தில் சமூகம் என்பது பெரிதும் மாறுபடத் தொடங்கி விட்டது. முன்னைய சமூக மதிப்புகள், விழுமியங்கள், தலைகீழாகி விட்டன என்று எனது வயதுக்காரர்கள் கூறக்கூடும். ஆகையால் 1975க்குப் பின் உதித்த இளம் பராயத்தினருக்கு இக்கதை மூலம் கதாசிரியர் காட்டும் சமுதாயம் மிகவும் பிற்போக்குத் தனமான உணர்ச்சிக் கனிவு காட்டுவதாகத் தோன்றக் கூடும். நமக்கும் கூட, இது ஒரு Sentimental ஆன Idealistic ஆன Romantic கதை போல தோன்றுவது இயல்பே. சென்ரிமென்ரல் என்பதை உணர்ச்சிக் கனிவு என்றும் ஐடியலிஸ்ரிக் என்பதை இலட்சிய நோக்குடையதென்றும் ரொமான்ரிக் என்பதைச் சிருங்காரப் பாங்கானது என்றும் பொருள் கொள்வோம்.
அப்படியிருந்துங் கூட, இக்குறு நாவல் சித்திரிக்கும் காலப் பகுதியையும், இது எழுதப்பட்ட காலப் பகுதியையும் நாம் புறக்கணித்து இக்கதையை ஆய்வுக்கெடுத்துக் கொள்ள முடியாது. ஒரு படைப்பை நாம் அணுகும் பொழுது அதன் contextஐ சூழமைவை கருத்திற் கொண்டே மதிப்பீட்டை வழங்க வேண்டும் என்பது இலக்கியத் திறனாய்வு நெறிமுறைகளில் முக்கியமானதென்பதை நாம் அறிவோம்.
இக்கதை நிகழும் காலகட்டத்தில் பல்கலைக் கழக மாணவர்கள் பழகிய முறை, யாழ்ப்பாண, கொழும்புச் சமூக நிலைமைகள், ஏற்றத் தாழ்வுகள், நலிந்தோர் வாழ்நிலை, தியாகங்கள் போன்றவற்றை யதாார்த்தபூர்வமாக ஆசிரியர் சித்திரிக்கிறார் எனவே நாம் கொள்ளல் வேண்டும். அவருடைய

அல்கைலர் கலிஸ்சநாதர்
சமூக நோக்கு வலியோருக்கும், மெலியோருக்குமிடையே நடைபெறக் கூடிய ஒரு சிறு போராட்டமாகவே வெளிப்படுகிறது. எனவே கயிலாசநாதன் காணும் சமுதாயம் யதார்த்தபூர்வமாக இருக்கும் அதேவேளையில் ஓர் இலட்சியப் பாங்கானதாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். ஆசிரியரின் கனவு இலட்சியம் சார்ந்தது. இதனைத் தான் சி. சிவசேகரம் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘பாத்திரங்களின் பண்பின் சாதகமான அம்சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை, உத்தமமான பாத்திரங்களே கதையில் உலா வருவதான ஒரு மயக்கத்துக்கு இடமளிக்கின்றது. கதைக்குரிய சூழலுக்கு அப்பாற்பட்டு முழுச் சமூகமும் சார்ந்த ஆசிரியரின் சமூகப் பார்வையை விரிவு படுத்த இப்படைப்பு அதிக இடமளிக்கவில்லை
இது சி. சிவசேகரத்தின் கூற்று, உண்மையே ஆயினும், கதாசிரியன் தான் எடுத்துக் கொண்ட பொருளுடன் நின்று விடுவது சிறப்பு என நான் கருதுகிறேன். சிவசேகரம் அவதானிப்பது போல மனித நேயம் என்பது கீழ்த்தரமான பொருளியற் கண்ணோட்டத்தை மீறி நிற்க வேண்டும்' என்ற பார்வையை நூலில் பொதுவாகவே நாம் காண முடிகிறது.
கயிலாசநாதன் போன்று பல எழுத்தாளர்கள் அக்காலத்தில் மு. வரதராசன், அகிலன், நா. பார்த்தசாரதி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, லஷ்மி, அனுத்தமா, ஆர்.வி. போன்ற தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் இலட்சிய நாவல்களிலும் சாண்டிலியன், எல்.ஆர்.வி. போன்ற சிருங்கார வருணனைகளை எழுதியவர்களின் ஈர்ப்புக்கும் உட்பட்டேயிருந்தனர்.
கயிலாசநாதன் காணும் புறவயச் சமுதாயம் நிதர்சனமாகவும், இலட்சியப் பாங்காகவும் அமைந்த அதேவேளையில் அகவயமாக அவர் கண்ட சமுதாயம், தமிழ் மரபு என்ற கட்டுக் கோப்பை மீறிய உளவியல், உடலியல் பாங்காகவே அமைந்தது. புஷ்பாவும் செந்திலும், (பார்க்க பக்க27) கொள்ளும் உடற் ஸ்பரிஸம், அக்காலத்தில் சமுதாய முரண் கொண்டதாக இருந்திருக்கும். அதேபோல, செந்தில் - தவம் ஸ்பரிஸம் (பார்க்க பக்கங்கள் 44-50) செந்தில் - புனிதா உறவுகள் - இதனைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
கே. எஸ். சிவகுமாரன்
‘மல்லிகை 37வது ஆண்டு மலர் ஜனவரி - 2002

Page 45
அங்கைலன் கலிஸ்ாசநாதன்
வானம்பாடி. (சிறுகுறிப்பு)
வானம்பாடி வானத்தில் பறந்து திரியும் பறவையாகும். பூமியில் இறங்கித் தான் இரை தேடுகின்றது. மனிதனும் தன் மனதை இறை மண்டலத்தில் சஞ்சாரம் செய்ய விட்டு இந்தக் கர்மபூமியில் வாழும் வரை தன் கருமங்ளைச் செவ்வனே செய்ய வேண்டும்.

«бола (196і
21↑al rᏓ ,Ꮄ ( ᏗᏟm Ꭳ
(199ĪT Ļ09ơi (se :ql-in)
‘quaglagolo q9$$7III q.hnúcoorng)??ē LLLLLLLL LLLLL00Z YLTZ SLL0LLLLLLLL SLLLLLL0000C0 L0L0 L SLLLLL 00Y0KS00 S00 LLLLST T00 SLLLLL 0000 SLLLLSLL SL00 LLLLLL LL00LL00LLLL0 LLL SLLLLLL LLLrT LTLLLT0 TLLL SLL0LLLLLSLLL LL SLLLLLYT LLLLL LLLLL LLLLLLL S000000S00YY LLLL LTLTT

Page 46
அங்கைலர் கலிஸ்ாசநாதர்
7. மறைந்து 25 வருடங்கள் கழிந்த
பின்.
“ஆற்றல் மிக்கவன் தடைகளைத் தாண்டி ஆளுமைகளைப் பதிப்பான்' அங்கையன் கயிலாசநாதன் ~ நீங்கா நினைவுகள்
1970ஐ அடுத்து வந்த சுமார் பத்தாண்டு காலம் இலங்கைத் தமிழ் ஒலிபரப்புத் துறையின் பொற்காலம் எனலாம். அதற்கு முன்னரும் வர்த்தக ஒலிபரப்பு மூலமாக இலங்கை ஒலிபரப்பு கடல் கடந்த நாடுகளிலும் பிரசித்தம் பெற்றிருந்ததென்பது உண்மையே. ஆனால், அந்தக் கீர்த்தி ஜனரஞ்சக மயமானதொன்றாகும். ஆனால் 1970ஐ அடுத்த காலப் பகுதியிலே வானொலி என்னும் ஊடகத்தை அறிவு வளர்ச்சிக்கும் மேம்பாட்டு முயற்சிக்கும் அறிவுபூர்வமாகப் பயன்படுத்தும் எத்தனம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் விளைவாக அதுகாலவரை வானொலி நிகழ்ச்சிகளை ‘ஏனோதானோ' என்று அரட்டை செய்தவர்கள் பலர். நிமிர்ந்து உட்கார்ந்து ஆர்வத்தோடு கேட்கவும், விமர்சிக்கவும் முற்பட்டனர்.
கலைக்கோலம், கால சங்கமம், கவியரங்குகள், இசைச் சித்திரங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வறிவாளர்கள், இசைப்பிரியர்கள் ஆகியோருக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தன. அவ்வாறே, கிராம சஞ்சிகை, கிராம வளம், பயிர்வளம் பெருக்குவோம், தொழில்வளம் பெருக்குவோம், உடல் நலம் பேணுவோம் போன்ற நிகழ்ச்சிகளும் நாட்டின் அபிவிருத்தி முயற்சிகளை விளக்கும் விவரணச் சித்திரங்களும் வானொலியை மக்கள் ஊடகமாக்கின.
இந்தக் காலப்பகுதியில் வானொலி நிலையத்திலே தொழில் புரிதல் மனநிறைவூட்டும் ஆக்கப் பணியாகவும் கருதப்பட்டது. பட்டம் பெற்றவர் பலர் வானொலி நிலையத்திற் புதிதாக வந்து சேர்ந்தனர். அங்கையன் கயிலாசநாதன் ஏலவே வீரகேசரியின் ஆசிரியர் பிரிவிலே பணி புரிந்து

அங்கைலர் கலிஸ்4சருதஷ்
வந்தார். இலக்கிய கர்த்தாவான அவர் பத்திரிகைத் துறையிலிருந்து விலகி வானொலித் துறையில் நுழைந்தமை மின்னியல் ஊடகத்திற் தம் ஆற்றலை வெளமிப்படுத்த அவர் விரும்பினார் என எண்ண வைக்கிறது.
கயிலாசநாதனுக்கும், எனக்கும் தொடர்பு வானொலி நிலையத்திலே தான் ஏற்பட்டது. நாட்டின் அபிவிருத்தி தொடர்பான நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கும் ஒப்பந்தத் தயாரிப்பாளனாக நான் பணியாற்றிய காலப் பகுதியிலேயே. தான் கயிலாசநாதன் தயாரிப்பாளராகச் சேர்ந்து கொண்டார். என்னுடைய கணிப்பின்படி அவர் எதிர்பார்த்த வாய்ப்பு வானொலி நிலையத்தில் கிடைக்கவில்லை. ஏனென்றால், தமிழ் நிகழ்ச்சிப் பிரிவின் அமைப்பு முறை அத்தகையது. நான் குறிப்பிட்ட காலப்பகுதியிலே தமிழ்ப் பிரிவு தமிழ்ச் சேவை என்றும், வர்த்தக சேவை என்றும் இரு கூறாக இயங்கி வந்தது. இந்த இரண்டு சேவைக்கும் பல வேறுபாடுகள் நிலவின. வர்த்தக சேவையில் பணி புரிவோர் தம் பெயரைப் பிரசித்தம் செய்தல் சுலபம்; சம்பளத்துக்குப் புறம்பாகச் சம்பாதிக்கும் வாய்ப்புகளும் செல்வாக்குப் பெறும் சந்தர்ப்பங்களும் அதிகம். இவை யாவற்றையும், தம்மை அதிகம் அலட்டிக் கொள்ளாமலே அவர்கள் சாதித்து விடலாம்.
தமிழ்ச் சேவையில் பணி புரிவோர் எழுத்தாற்றல், கலை - இலக்கியகலாசாரத்துறைகளில் பரிச்சயம் ஆகிய தகைமைகளைப் பெற்றிருத்தல் அவசியம். அவர்கள் வர்த்தக சேவைக்குக் குரல் கொடுத்தலாகாது. கயிலாசநாதன் வானொலிச் சேவையில் புகுந்த காலப்பகுதியில் இருந்த நிலைமை இது.
பத்திரிகைத் தொழிலிலிருந்து வானொலித் தொழிலுக்குக் காலடி வைத்த கயிலாசநாதனுக்கு வர்த்தக சேவைத் தயாரிப்பாளர் என்ற நியமனம் கிடைத்தது. இந்த நியமனம் அவருக்கு ஓரளவு ஏமாற்றமளித்ததென்று சொல்ல வேண்டும். ஏனென்றால் வர்த்தக சேவையில் அறிவிப்பாளர் போன்று தயாரிப்பாளருக்கு அதிக ‘செல்வாக்கு இருக்கவில்லை. படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பிருக்கவில்லை. எனவே ‘வெட்டிச் சம்பளம் பெறுவதான உணர்வு சில காலம் அவரைப் பீடித்தது. ஆயினும், காலக் கிரமத்தில் எம்.ஏ.குலசீலநாதன், எஸ்.கே.பரராஜசிங்கம், கே.எம்.வாசகர், சேனா ஜெயபாலன், ஏ.ழரீஸ்கந்தராஜா போன்றவர்களின் நட்பின் பயனாக

Page 47
அல்கைலர் இஸ்மநாதன்
உற்சாகம் பெற்று பல்வேறு வானொலி நிகழ்ச்சித் தயாரிப்புகளிலும் ‘தொண்டனாய்’ பங்கு கொண்டார்.
இதே காலப்பகுதியில் திலக் ஜெயரத்ன, ஆரிய விமல் போன்றவர்களின் நட்பும் அவருக்குக் கிடைத்தது. இவ்விருவரும் சிங்கள ஒலிபரப்புத் துறையில் சாதனைகள் புரியத் துடித்தவர்கள். முன்னையவரின் ‘எங்கள் அப்பா கண்டிக்குப் போய் விட்டார்’ என்னும் பொருள்படும் சிங்கள நாடகத்தைக் கயிலாசநாதன் 'பிள்ளை மனம் என்ற பெயரில் தமிழ்ச் சேவை நாடகமாகத் தயாரித்தளித்தார். (கயிலாசநாதன் அகால மரணமடைந்ததைக் கேள்வியுற்ற ஆரிய விமல் அவர் வீடு சென்று இரவு முழுதும் கண்விழித்திருந்து அழுது புலம்பிய காட்சி இன்றும் என் முன் பளிச்சிடுகிறது. அவரும் இள வயதில் காலமானமை சிங்களக் கலைஞருக்கு ஓர் இழப்பாகும்).
ஆற்றல் மிக்க எழுத்தாளன் எத்தகைய தடைகளையும் தாண்டித் தன் ஆளுமையை நிலைநாட்டும் வல்லமை படைத்தவன் என்பதற்கு அங்கையன் கயிலாசநாதனின் வாழ்க்கை ஒர் உதாரணமாகும். வானொலித் துறையில் சொற்ப காலமே அவர் பணி புரிந்தாராயினும் தமிழ் ஒலிபரப்புக்கு அவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது. இது தவிர, ‘வைகறை நிலவு, ‘கடற்காற்று, ‘செந்தணல் போன்ற நூல்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் தனியாக ஆராயப்படத்தக்கன.
காவலூர் ராசதுரை
'தினக்குரல்" 08-04-2001

அதுகைரடி கலைசருதஷ்
பதினைந்து வருடங்களில் பன்முக சாதனை
படைத்த இலக்கியவாதி ‘அங்கையன்’
இலக்கியவாதி ‘அங்கையன் கயிலாசநாதனின் 25வது
சிரார்த்த தினத்தையொட்டிய கட்டுரை இது.
ஈழத்து நாவல் இலக்கியத்தின் சிரேஷ்ட படைப்பாளிகளான செங்கை ஆழியான், செ.யோகநாதன், செம்பியன் செல்வன் வரிசையில் அங்கையன் கைலாசநாதன் குறிப்பிடத்தக்கவர். சமூகப் பெறுமானங்களை வைத்து வடிக்கப்படும் இவரது நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் 69களில் சிறப்பாகத் திகழ்ந்தவை. பல்வேறு துறைகளில் ஈடுபட்டு சமூக மேம்பாட்டுக்காகப் பணி செய்த ‘அங்கையன்’ சுமார் 15 வருடங்கள் ஈழத்து இலக்கியத் துறையில் மிளிர்ந்தவர்.
1962இல் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் நடாத்திய குறுநாவல் போட்டிக்கு இவர் எழுதிய ‘கடற்காற்று வெள்ளிப் பதக்கப் பரிசினைப் பெற்றது. அடுத்து இக் குறுநாவல் ‘ஈழநாடு' வார மஞ்சரியில் வெளிவந்து வாசகர் நெஞ்சங்களைக் கவர்ந்தது. இந்நாவல், மண்டைதீவு மீனவரது அன்றாட வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. தமிழில் முதன் முதலாக மீனவர் வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட நாவல் இதுவேயாகும். அத்துடன் இதன் சிறப்புக் காரணமாய், தமிழ் ஆசிரியர் பயிற்சிப் பாடநெறி நாவல் பிரிவுக்கு இந்நூல் தேசிய கல்வி நிறுவனத்தினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
ஈழநாடு, வீரகேசரி ஆகிய இரு தேசியப் பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பல ஆண்டுகள் கடமையாற்றியவர் கயிலாசநாதன். அக்காலப் பகுதியில் பல இலக்கிய ஆய்வுகள், விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், நகைச்சுவைக் கட்டுரைகள் என ஏராளமானவற்றை எழுதிப் பிரபல்யம் அடைந்தார். ‘முக்கண்ணன்', 'புதுமைப் பண்டிதன்', 'கயிலாஷ், 'லட்சுமிநாதன்' என்ற பல புனைபெயர்களில் எழுதி வந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்த ‘அங்கையன் என்ற புனைபெயரே அவர் பெயரோடு நிலைத்து விட்டது.

Page 48
அங்கையர் கலிஸ்ாசரஷ்
பழந்தமிழ் இலக்கியங்களிலும், கம்பரிலும் பாரதியாரிலும் பெரும் ஈடுபாடு கொண்ட ‘அங்கையன் ஆங்கில மொழியில் நல்ல பரிச்சயங் கொண்டவர். இலங்கையிலுள்ள பிரித்தானியத் தூதராலயத்தில் சேர்ந்து சில காலம், ‘சாம்ராஜ்யம் இன்று” என்ற தலைப்பில் மாதாந்தத் தகவல் சஞ்சிகையினை எழுதி வெளியிட்டார். சில வெளிநாட்டு இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்த இவர், இவான் துர்கானோ (Ivan TurgenOV)வின் நாவலொன்றை "கரும்பூமி’ என்ற தலைப்பில் மொழி பெயர்த்து அது பத்திரிகையில் வெளிவந்த போது பலரின் பாராட்டுதல்களையும் பெற்றது.
ஏறத்தாழப் பதினைந்து வருடங்களாகத் தமிழிலக்கியத்தின் பல்துறைகளிலும் தன் படைப்பாற்றலின் முத்திரை பதித்தவர் அங்கையன் கயிலாசநாதன். சிறுபராயம் முதற் கொண்டே பல கஷடங்களையும் சவால்களையும் எதிர்கொண்ட அங்கையன், அதனால் உத்வேகம் கொண்டு நேரிய ஒழுக்கம், நிலையான கொள்கைகளுடன் செயற்பட்டவர். தன்னம்பிக்கை மிக்க அங்கையன், தான் கண்டு, கேட்டு, உறவாடி அனுபவித்தவற்றைத் தனக்கே உரித்தான கலைப்பாணியில் துணிச்சலோடு எடுத்துக் கூறத் தயங்குவதில்லை.
அவரது சிறுகதைகளிற் பெரும்பாலானவை வாழ்க்கையில் கஷ்டப்பட்டு நாளாந்தச் சீவியத்தையோட்டப் போராடும் ஏழை மக்களையே கருப் பொருளாகக் கொண்டவை. அவரது கவிதைகள், நாவல்களிலும் போலி வாழ்க்கையையும் சமூகச் சீர்கேடுகளையும் தன் கூற்றாகச் சாடும் துணிச்சல் மிக்கவர்.
1972இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக நியமனம் பெற்ற பிறகு, உரைநடைச் சித்தரங்கள், நாடகங்கள் எழுதித் தயாரிப்பதில் பெரிதும் ஈடுபட்டார். அத்துடன் கவித்துவம், இலக்கிய நயம், கலையம்சங்கள் கொண்ட மெல்லிசைப் பாடல்களை இயற்றவும் இது நல்லதோர் தளமாக அமைந்தது. மெல்லிசைப் பாடலாசிரியர்களுள் இவர் ஒரு மூத்த கலைஞனாகக் கணிக்கப்படுகிறார். சிட்டி பாபுவின் வீணை இசைக்குப் பாடல் அமைக்க முடியாது என்ற சவாலுக்கெதிராக எழுதப்பட்டதே இவரின் “ஓ மணிக்குரல் ஒலித்ததே.” எனத் தொடங்கும் இனிய மெல்லிசைப் பாடல். இடையிடையே வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வரும் இவர் இயற்றிய மெல்லிசைப் பாடல்கள் இன்றும் பலரால் ரசிக்கப்படுகின்றன. வானொலி நாடகங்கள் எழுதித் தயாரித்து

அல்கைலன் கலிஸ்சநாதர்
வழங்குவதிலும் இவர் சிறந்து விளங்கினார். ‘அபே தாத்தா - நுவற கியா' என்ற சிங்கள நாடகத்தைப் 'பிள்ளை மனம் எனத் தமிழில் எழுதித் தயாரித்தளித்த பெருமையும் இவருக்குண்டு.
பல தடைகளுக்கூடாகக் கடின உழைப்பினால் தமிழுக்கு அணி செய்த அங்கையன் தனது 33வது வயதில் வாகன விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தார். என்றாலும் சகல துறைகளிலுமுள்ள அவரது படைப்புக்கள் காலத்தால் அழியாத தன்மை கொண்டவை. அவர் வாழ்ந்த போது 1972இல் வெளிவந்தது, அவரால் அவரின் அச்சகத்திலே அச்சிடப்பட்ட ‘கடற்காற்று ஒன்றுதான்.
அன்னாரது முதலாவதாண்டு நினைவஞ்சலியை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவைப் பிரிவு நடத்திய போது அவரது கவிதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘வைகறை நிலவு என அவரே இட்டிருந்த தலைப்புடன் ஒரு சிறு கவிதை நூல் அவரது மனைவியாரால் வெளியிடப்பட்டது. பின் மிக நீண்ட இடைவெளியான 24 வருடங்கள் கழிந்த நிலையில் ஆகஸ்ட் 2000இல், பலரின் பாராட்டுதல்களைப் பெற்ற ‘செந்தணல்’ என்ற நெடு நாவலும், அன்னாரின் 13 சிறுகதைகள் கொண்ட, தொகுப்பாகிய ‘அங்கையன் கதைகளும்', ‘கடற்காற்றின் 2ம் பதிப்பும் வெளியிடப்பட்டன.
இன்னும் அவர் எழுதி வைத்துச் சென்ற சிட்டுக் குருவிகளும் வானம்பாடியும்' என்ற இனிய நாவல் இந்த வருடம் வெளிவர உள்ளது. அதைவிட அவரது கவிதைகள் முழுவதும் அடங்கிய தொகுப்பும் 'சொர்க்கமும் நரகமும்’ என்ற மிக நீண்ட நாவலும் வெளிக் கொணரப்பட இருக்கின்றன. இந்த நூல்கள் வெளியீட்டினால் அங்கையனின் சமகாலத்தவரும் இன்றைய இளைஞரும் அன்னாரின் சிந்தனா சக்தியையும் எழுத்துத் திறனையும் உணரக் கூடியதாய் இருப்பதோடு, ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சியில் பதிவு செய்யக் கூடியதாகவும் அமையும்.
தமிழன்னைக்குச் சிறப்பும் புதுமையும் செய்யத் துடித்தவர் அமரர் அங்கையன் கயிலாசநாதன். இவ்வாறான ஒரு படைப்பாளியை நினைவு கூருவது தமிழ்க் கலை இலக்கிய உலகு செய்யும் கடமையாகும்.
ஆகலைவன் 'தினகரன்’ வாரமஞ்சரி O-04-200

Page 49
அல்கைலன் கலிஸ்4rருதஷ்
8. ‘அங்கையன் கயிலாசநாதன்
படைப்புகள்
இலக்கியக் கருத்தரங்கில் கேட்டவை
'கலை என்பது செயல் திறமையைக் காட்டுவதும் அழகு ஏற்படும் வகையில் செய்வதும் சுவை பயக்க வல்லதும் பற்றி பல காரியங்களுக்கு உதவுவதுமாக அறிவையும் ஆற்றலையே குறிப்பதாகும். ஆகவே, கலையிற் செயல், பயன், திறமை, அழகு, சுவை என்ற அம்சங்கள் உள்ளன' கலையை இப்படியாக வரைவிலக்கணப்படுத்தியவர் - கலையின் பல்துறைகளிலும் தன் ஆற்றலை ஊன்றி - கலை, இலக்கியப் பணி செய்த அமரர் அங்கையன் கயிலாசநாதன், அமரர்களாகிவிட்ட ஏனைய நாடு போற்றும் கலை, இலக்கியவாதிகளைப் போல் அங்கையனும் மிகக் குறுகிய காலமே (33 ஆண்டுகள்) இம் மண்ணில் வாழ்ந்தும் தனது நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் என்பவற்றால், கலை, இலக்கியவாதிகளின் நெஞ்சங்களில் ஆழமான பதிவுகளை ஏற்படுத்தியவர். ஈழத்து நெய்தல் நில மக்களது அவல வாழ்வைச் சித்திரித்து வெளிவந்த முதல் ஈழத்து நாவல் இவரது ‘கடற்காற்று என்றே ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். அங்கையன் யாழ்ப்பாணம் மண்டைதீவைச் சேர்ந்தவர்.
அங்கையன் காலமாகி 34 ஆண்டுகள் கடந்து விட்டன. இருந்தும் ‘தமிழுக்குப் பணி செய்வோர் சாவதில்லை’ என்பதற்கு அமைவாக அவரது துணைவியார் திருமதி இராசலட்சுமி கயிலாசநாதன் ஏற்பாட்டில் 16-05-2009ஆம் திகதி, கொழும்பு, தமிழ்ச் சங்க மண்டபத்தில் அங்கையன் கயிலாசநாதன் படைப்புகள் பற்றிய இலக்கியக் கருத்தரங்கு நடைபெற்றது. இக் கருத்தரங்கிற்கு நாடறிந்த எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் தலைமை தாங்கினார்.
பிரபாசினி கந்தசாமியின் தமிழ் வாழ்த்தோடு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

3ங்கையர் கலிஸ்ாசருதஷ்
வரவேற்புரை : இராசலட்சுமி கயிலாசநாதன்:
இங்கு வந்திருக்கும் ஒரு சிலருக்குத் தான் அங்கையன் கயிலாசநாதனை நேரில் தெரியும். ஆனால், அவரது படைப்புகள் மூலமாக அவரை அறிந்தவர்கள் பலர் இருக்கின்றனர். 1960ஆம் ஆண்டு தொடக்கம் 17 ஆண்டுகள் கவிதை, நாவல், சிறுகதைகள் மூலம் தமிழ் வாசகர் மத்தியில் நீங்காத இடத்தைப் பெற்றவர். 1972இல் ‘கடற்காற்று' நாவல் மட்டுமே பிரசுரமாகி இருந்தது. அவரது பல ஆக்கங்கள் சிதைந்து விட்டன. 2000ஆம் ஆண்டின் பின் அங்கையன் சிறுகதைத் தொகுப்பு, நாவல் பிரசுரமாகின. காலந் கடந்தே வந்தன. இருந்தும் நல்ல வரவேற்புக் கிடைத்தது. இரு நூல்களை ‘விபவி இலக்கிய அமைப்பு ஆய்வுக்குட்படுத்தியது. தமிழ்ச் சங்கமும் அதைச் செய்தது. பிரபல திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் அங்கையன் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார். மூத்த எழுத்தாளர் காவலூர் ராசதுரை - தினக்குரலில் எழுதிய கட்டுரையில் அங்கையனின் படைப்புக்கள் தனியாக ஆராயப்படத்தக்கவை எனக் கூறியிருக்கிறார்.
2000, 2001இல் வடகிழக்கு மாகாண சபை அவரது சிறுகதைத் தொகுப்புக்கும் சிட்டுக் குருவிகளும் வானம்பாடிகளும்' என்ற நாவலுக்கும் பரிசு கொடுத்துக் கெளரவித்தது. அவரது ஆக்கங்கள் இன்றும் காலம் கடந்தும் பேசப்படுகின்றன, நின்று நிலைக்கின்றன. தமிழை சிறப்புப் பாடமாகக் கற்ற குணசாந்தி ராசரூபன் என்ற பல்கலைக்கழக மாணவி அங்கையன் புனைகதைகள் பற்றி ஆய்வு செய்திருக்கிறார். மிக அருமையான ஆய்வு. அவரைப் பாராட்ட வேண்டுமென கனகாலமாக நினைத்திருந்தேன். அது இன்று நிறைவேறுகின்றது. 4 வருடங்களாக அங்கையன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நாடகத் தயாரிப்பாளராகக் கடமை புரிந்தார். ஈழத்தின் மெல்லிசைப் பாடல் முன்னோடி அங்கையன். 2004இல் நான் கனடா சென்ற போது ஒலி நாடாக்களைப் பெற்று CDயாக மாற்றினேன். அதனை ராசரூபன் பொறுப்பேற்று ஆக வேண்டியதைச் செய்தார். இதில் அங்கையனின் 9 மெல்லிசைப் பாடல்கள் உண்டு.
தானாக முன்வந்து பத்மா சோமகாந்தனே இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்தார்.

Page 50
அல்கைலர் கலிஸ்சநாதர்
தலைமையுரை : எழுத்தாளர் பத்மா சோமகாந்தன்:
அமரர் அங்கையன் மீது துணைவியார் வைத்திருக்கும் அக்கறையைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இச் சபையில் அங்கையனும் அமர்ந்திருக்கிறார் என்றே எனக்குப் படுகிறது. 33 வயதில் அவர் காலமாகினார். படைப்புக்களை ஆய்வு செய்த மாணவியைப் பாராட்டுவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். நாமெல்லோரும் நன்கறிந்த, மகாத்மா காந்தி எந்தவொரு பெரிய இழப்புக்கும் அழமாட்டார். ஆனால், அவரது மனைவி கஸ்தூரிபாயை எரித்த பொழுது அழுதாராம். அதைப் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டுக் கேட்ட போது சாதாரண காந்தியை மகாத்மா ஆக்கியது கஸ்தூரி என்றாராம். காந்தியை நினைவுகளில் விதைத்து விட்டவர் கஸ்தூரி. தனது துணைவருக்காக இராசலட்சுமியும் பெரும்பாடு படுகிறார். சந்தோஷமாக இருக்கிறது. பெண்களது உழைப்புச் சொல்லப்படுவதில்லை. இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. இந்திய சுதந்திரக் கொடியை வடிவமைத்தவர் ஒரு பெண் என்று எத்தனை பேருக்குத் தெரியும். இவைகள் சொல்லப் படுவதில்லை. அன்னமலர் என்ற பெண் கப்பலை வடிவமைத்துக் கடலில் ஓடவிட்டார். பெண்கள் புரியும் சாதனைகள் பெரிதாக்கப்படுவதில்லை. இது தவறு. 1930இல் நவீன இலக்கியம் தோற்றம் பெற்றது. மணிக்கொடி, மறுமலர்ச்சி சஞ்சிகைகள் வெளியீட்டுக் களங்களாகின. வரதர், அ.செ.முருகானந்தம் ஆகியோர் நவீன இலக்கியங்களைப் படைத்தனர். எழுத்திற்குத் தனித்துவம் வேண்டும். நன்கு ஆழமாகச் சிந்தித்து எழுதுவதே நல்ல இலக்கியமாகும். ஒருவரது நோக்கு இன்னொருவருக்குச் சாதாரண நடைமுறை வாழ்க்கையில் இருப்பதில்லை. உண்மையும் அழகுமே இலக்கியமாகும். மரபு, வாரிசுத் தன்மை என்ற தடத்தில் செல்வது இலக்கியமாகாது.
மரபை மீறுவதும் மரபுக்குள் நிற்பதும் கத்தியில் நடப்பது போன்றதாகும். நல்ல சிருஷ்டியை நியாயப்படுத்த எழுத்தாளர் படாத பாடு படவேண்டி இருக்கின்றது. எழுத்தைக் காத்திரமாக்க காத்திரமான விடயங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எழுத்தை நேசிப்பவர்கள் நிறைய வாசிப்பது அவசியம். வாசிப்பு பல்வேறு தன்மையுடையது. வாசகன் தேர்ந்த வாசகனாக இருக்க வேண்டும். தரமான நூல்களை வாசிக்க வேண்டும். தனித்துவம், கருத்துப் பேச்சில் இருக்க வேண்டும். எதுகை மோனையோடு பேசுவது நல்ல பேச்சாக இருக்காது. சிந்தனையைத் தூண்டக் கூடிய நல்ல எழுத்தை

அங்கைலர் கஸ்தூதர்
வாசிக்க வேண்டும். அச்சில் வெளிவரும் நூலெல்லாம் நூலல்ல. எழுத்துக்காக முற்று முழுதாகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர் அங்கையன். சகல துறைகளிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். வாழ்ந்திருந்தால் நல்ல எழுத்தாளராக மலர்ந்திருப்பார்.
கருத்துரை: கவிஞர் மேமன் கவி (அங்கையன் படைத்த கவிதைகள்)
எனது புத்தகக் குவியல்களுக்குள் அங்கையன் கவிதை நூலைத் தேட முடியாது போய் விட்டது. அவரை நாம் உகந்த முறையில் அடையாளப்படுத்தத் தவறி விட்டோம். சுபத்திரன் போன்ற கவிஞர்களோடு ஒப்பிடத்தக்கவர். அவரது ‘மணிக்குரல் ஒலித்தது கவிதை இன்னமும் என் மனதில் ஒலிக்கின்றது. கவிதைகள் ஊடாகக் கலகக் குரலை, போர்க் குரலை, ஒலித்தவர். அவரது மெல்லிசையை மட்டுமே சிலர் கண்டு கொள்கின்றனர். தேசியம், வர்க்கம், சாதியம் என்பவைகளின் தாக்கம் அவரது பாடல்களில் ஒலித்தது. அந்த விடயங்களில் உரத்த ஈடுபாடு காட்டி கவிதைகளைப் புனைந்தார். அவைகளைக் கையாண்ட விதம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது. மக்களின் சீர்திருத்தம் பற்றிய கரிசனையும் இருந்தது. பாரதி, பாரதிதாசன் போன்ற புகழ் பெற்ற கவிஞர்களில் மனஈர்ப்பைக் கொண்டிருந்தார். தமிழ் வாழ்வில் அக்கறை வைத்து அதை மாற்ற விளைந்தார். கனவு கண்டார். சமூகங்களிடையில் நிலவிய பிளவுகளைச் சரிசெய்து சமூக இணக்கப்பாட்டுக்கான பாடல் எழுதினார். உச்சமான பிரச்சினைகளையும் தொட்டார். பெண்ணியத்திலும் அவரது நோக்கு சென்றிருக்கிறது. ‘பெட்டைக் கனவும் பலித்திடும் பேதைகள் வாழ்வும் பலித்திடும்' எனப் பாடினார். வாழ்ந்திருந்தால் இன்று அவர் முக்கியமான கவிஞராக இருந்திருப்பார். ‘வைகறை நிலவு அவரது கவிதை நூல். ஆய்வாளர்கள் அவரது கவிதைகள் குறித்து இன்று வரை ஆய்வுகளை மேற்கொள்ளாதிருப்பது கவலையைத் தருகிறது.
கருத்துரை: தகவம் மு. தயாபரன் (அங்கையன் நாவல்கள்)
கவிதையை விமர்சிக்கக் கவிஞர்கள் முக்கியமானவர்கள். சிறுகதையெனில் அதற்குப் பத்திரிகை ஆசிரியர்கள் தான். நாவல்களை வாசிப்பது வாசகர்கள்

Page 51
அல்கைலன் கலிலாசநாதர்
தான். அவை மிக நீண்டவை. பத்துப் பக்கங்களை வாசித்தும் ஒரு நாவலில் கவர்ச்சி ஏற்படவில்லையாகில் அதைத் தூக்கி எறியத்தான் வேண்டும்.
நான் செ.யோகநாதன் காலத்திலிருந்து எழுதத் தொடங்கியவன். அங்கையனின் ‘சிட்டுக் குருவிகளும் வானம்பாடிகளும் 2001இலும் ‘செந்தணல் 2000இலும் 'கடல்காற்று 1972இலும் பிரசுரமாகின. 'சொர்க்கமும் நரகமும் அவர் எழுதிய நான்காவது நாவல். ‘செந்தணல் 1968இல் படைக்கப்பட்ட பிரதேச நாவல். இது கொழும்பு நகர வாழ்வைச் சித்திரிப்பது. 1970களில் கொழும்பு வேலைக்கு வருபவர்கள் சமறிகளில் தங்குவதுண்டு. இக்காலத்தில் அவர்களுக்குத் திருமண ஏற்பாடுகளும் நடக்கும். இந்நாவலை வாசித்த பொழுது நகரத்து நாவலோ என்ற உணர்வும் பிறந்தது. பிரச்சனைக்குரியது கொழும்பு வாழ்க்கை, மிக அருமையாக அங்கையன் எழுதி இருக்கிறார். நடுத்தர வர்க்கத்தினன் திரிசங்கு சொர்க்க வாழ்க்கை நிலை யதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. மேல்தட்டு மனிதரது வாழ்வை விமர்சிக்கும் வர்க்க நாவல். மிக மெதுவாக நகர்ந்தாலும் சொல்ல வேண்டியவைகளை மிக அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார். மித்திரன் வார மலரில் தொடராக வெளிவந்தது. அருமையான சினிமாப் படத்துக்கான கதை. வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அருமையாகச் செல்கிறது. சிட்டுக் குருவிகளும் வானம்பாடியும் பல்கலைக்கழகக் காதல் கதை. பல்லைக்கழகக் காதல் பெரும்பாலும் பல்கலைக்கழகத்தோடு நின்று விடும். இந் நாவல் ஒரு வித்தியாசமான வர்க்க முரண்பாட்டை உருவாக்குகிறது. பிரச்சினைகளோடு மோதித்தான், ஆண்மையை வெளிப்படுத்த வேண்டும். துன்பங்களைக் கண்டுவிட்டு ஓடாமல் தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து காட்ட வேண்டும். மிக அருமையான நாவல். கடல்சார் மக்களின் கதையே ‘கடற்காற்று' என்ற நாவல். அங்கையன் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்தது.
1962இல் பல்கலைக்கழகப் போட்டியில் பரிசு பெற்ற 94 பக்கங்களையுடைய நாவல். இரண்டாவது பதிப்பையும் கண்டது. விவசாயிகளின் ஆதிக்கத்தை ஊடுருவிச் செல்கிறது. நான் பேருவளையில் உத்தியோகம் பார்த்த போது பேருவளைக் கடற்கரைக்குச் செல்வதுண்டு. அங்கு அழுகுரல்கள் கேட்கும். கதறி அழுவார்கள். தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் வராததே இதற்குக் காரணம். தமது அழுகுரல்களை கடல் அன்னை கேட்பாள் என்பதற்காகவே இப்படி அழுவதாகச் சொல்லப்பட்டது. போனவர்கள் திரும்பி வந்தவுடன்

அங்கையர் கலிஸ்ாசநாதர்
பெரிய கொண்டாட்டம் நடக்கும் எனவும் சொன்னார்கள். சிலவேளைகளில் 2 நாட்களின் பின்னர் கூட வராதிருப்பாராம். இதுவே கடல் வாழ் சமூகத்தவரது வாழ்க்கை. மிகவும் கஷ்டமானது. ஆனால், இவர்கள் நம்பிக்கையில் வாழ்கின்றனர். அனுபவித்து எழுதுகிறார். அதிசயப்பட வைக்கிறது. உண்மையும் அழகுந்தான் இலக்கியம். அதுவே கடல் காற்றில் இருக்கிறது. வர்க்கப் பிரச்சினையைப் பெரும் கோஷமாக்காமல் மெதுவாக எழுதி இருக்கிறார்.
அங்கையனின் மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இறுவட்டைத் திரு டபிள்யூ.ஏ.செந்தில்நாதன் வெளியிட முதல் இறுவட்டை திரு மகாநந்தன் பெற்றுக் கொண்டார்.
அங்கையனின் சிறுகதைகளை ஆய்வு செய்த ஆய்வாளர் திருமதி குணசாந்தி இராசரூபனுக்குப் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கித் திருமதி இராசலட்சுமி கயிலாசநாதன் கெளரவித்தார்.
ஆய்வாளர் குணசாந்தி இராசரூபன் உரை:
அமரர் அங்கையனின் படைப்புகள் ஆய்வு செய்யப்படாதிருப்பதை அறிந்தேன். அவைகளின் தரம் என்னை ஊக்குவித்தது. பேராசிரியர் அருணாசலம் எனக்கு உதவினார். படைப்புகளை எடுப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. அங்கையனின் கவிதைத் தொகுப்பைப் படித்துக் கொண்டு போன பொழுது தொலைபேசி இலக்கமொன்று அதில் காணப்பட்டது. அது எனக்கு அதிர்ஷ்டமும் வாய்ப்புமாகிவிட்டது. அந்தத் தொலைபேசி எண்ணின் மூலமாகவே இராசலட்சுமி அம்மாவோடு தொடர்பு கொண்டேன். அவர் எனக்குச் சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் செய்து தந்தார். அவருக்கு நன்றியுடையவளாக இருக்கிறேன். அங்கையன் சிறந்த கட்டுரை ஆசிரியர். நகைச்சுவையாக எழுதக் கூடியவர். சிறந்த தமிழ்ப் பற்றாளர். வீரகேசரியில் ‘கேட்டிருப்பாய் காற்றே" என்ற நாவலை வெளியிட்டார். பிழைகளைக் கூற அஞ்சாதவர். எழுத்துக்களில் அஞ்சாது தனது கருத்துகளை வெளியிட்டவர்.
வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதினார். அவரொரு சிறந்த மொழிபெயர்ப்பாளர். சிங்கள நாடகம் ஒன்றையும், தமிழில் மொழி பெயர்த்

Page 52
அங்கைலர் கலிஸ்ாசருதஷ்
திருக்கிறார். சிறந்த சஞ்சிகை ஆசிரியர். ‘சமூக தீபம்’ என்ற சஞ்சிகையை வெளியிட்டவர். இவைகளுக்கும் மேலாக அங்கையன் சிறந்த ஓவியர். நூல்கள் மூன்றிற்கு அட்டைப் படமும் வரைந்துள்ளார். வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகள் அவரது சிறுகதைகளை வெளியிட்டிருக்கின்றன. கார்ட்டுன் சித்திரங்கள் வரைந்ததாகவும் அறிய முடிகின்றது. யாழ்ப்பாணம் மட்டுமல்ல இந்நாட்டின் ஏனைய சில பிரதேசங்களின் வாழ்க்கையின் அக முரண் பாடுகளைக் கலை நயத்தோடு சிறுகதை ஆக்கி இருக்கிறார். மிகத் தரமான கதைகள், அவரது நாவலான ‘கடற்காற்று பாடப் புத்தமாக இருக்கிறது.
திருமதி இராசலட்சுமி கயிலாசநாதன் நன்றியுரை நிகழ்த்தினார்.
LDIT.LJIT.d.
'தினக்குரல் 23-05-2009

அங்கைலன் கலிஸ்ாசருதஷ்
ಜಿ&wx
3: * × ॐ 8x8 is 88: மிழ்ச் சங்கம்
An SANGAM
iGOOT b (Trophy) 88: க்கு பொன்னாடை போர்த்தி கிண்ண ಅಣ8ಣೆ ಡಿ.19:ಅರುಣನ್ತೋ

Page 53
அல்கைலர் தஸ்சருதஷ்
9. ஏனைய சில தகவல்கள்
அங்கையன் கயிலாசநாதன் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்
அமரர் அங்கையன் கயிலாசநாதன் படைப்புகள் பற்றிய இலக்கியக் கருத்தரங்கு நிகழ்ச்சி நிரல்:
് ക്ല **్క tశీణిr 'ഭൃ ('(. es
 
 

அல்கைலர் கலிஸ்ாசருதஷ்
GoCom --O-
epigro epismasual añora gargafal umlinga
பற்றிய இலக்கியக் கருத்தரங்கு
இடம் கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபம் !
காலம் : 16.05.2009 சனிக்கிழமை மாலை 4.30 மணி
தலைமை : பத்மா சோமகாந்தன்
தமிழ் வாழ்த்து கலைமாமணி பிரபாலினி கந்தசாமி
வரவேற்புரை இராசலட்சுமி கமிலாசநாதன்
தலைமையுரை பத்மா சோமகாத்தன்
கருத்துரைகள் மேமன்கவி — амёнов
க. தேவகெளரி க சிறுகதை முதயாபரன் - நாவல்
அங்கையன் கைலாசநாதன் இயற்றிய மெல்லிசைப் பாடல்களடங்கிய இறுவட்டு வெளியீடு
வெளியிடுபவர் திருடபிள்யு.எண். செந்தில்நாதன்
அங்கையன் கைலாசநாதனின் ‘புனைகதை இலக்கியம்' பற்றி ஆய்வு செய்தமைக்கான பாராட்டு
பாராட்டைப் பெறுபவர் திருமதி குணசந்தி இராஜகுபன்
நன்றியுரை இராசலட்சுமி கயிலாசநாதன்
கலை இலக்கிய நண்பர்கள்
sooCKOH-O-

Page 54
அல்கைலன் கலிஸ்ாசருதஷ்
 

அங்கைலன் கலிஸ்ாசநாதர்
நூலுருவில் வெளிவந்தவை
எழுதிய ஆண்டு வெளியீடு கடற்காற்று (பரிசு நாவல்)
1962 1972 முதற் பதிப்பு
2000 இரண்டாம் பதிப்பு .
வைகறை நிலவு (கவிதை) 1977
செந்தணல் (நாவல்) 1968-69 2000 ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
அங்கையன் கதைகள்* (சிறுகதைத் தொகுதி) 1962-1972 2000 −_-്യ
சிட்டுக் குருவிகளும், வானம்பாடியும்(நாவல்) 1972 2001
அங்கையன் கவிதைகள் 2002 1975-1962 ܢ
fi8 f) f '72 - 2 oes / آبادی بھی , در

Page 55


Page 56
கலைஞன்
"கலை என் காட்டுவதும்,
செய்வதும், சுன காரியங்களுக்கு ஆற்றலையுமே கலையிற் செய
என்ற அம்சங்க
இந்து தரு
மகாகவி பா. ஆக்கங்கள் நூ கண்ட கலைஞ தமிழில் முதலி இவர், இன்னும் தொட்டவர். ந
இப்போது வசட்
"கயிலாசநாதன தனித்தன்மை இலக்கியத் து
பல துறை
அச்சுக்கலை,
றை ஆகியவ O6)T55. 55606) நாவல், கவிதை கட்டுரை, கால பதித் து பங்காற்றியுள்ள
ISBN: 978-955-52875-0-0
PRICE: 150/=
 

பற்றி .
பது செயல் திறமையைக் அழகு ஏற்படும் வகையிற் வ பயகக வலலதும பறறிய பல உதவுவ துமான அறவையும குறிப்பதாகும். ஆகவே, ல், பயன், திறமை, அழகு, சுவை ள் உள்ளன.”
- அங்கையன் கைலாசநாதன் மம் பேராதனைப் பல்கலைக்கழகம் - 1962
ரதியைப் போன்றே, தனது லாக வேண்டுமென்று கனவுகள் ன் அங்கையன். கடல் வாழ்வை ல்ெ எழுதிய பெருமை பெறும் ம் பல படைப்புச் சிகரங்களைத் ாம் அதை அறியும் காலம்
பட்டிருக்கிறது.
- செ. யோகநாதன்
னப் பொறுத்தவரையில் அவர் வாய்ந்தவர். பல்வேறு கலை றைகளில் தடம் பதித்தவர். அவர் ற் பணி னர். அங் கையன் பத்திரிகைத்துறை, ஒலிபரப்புத் ற்றில் தடம் பதித்தவர். இதற்கும் இலக்கியத் துறையில் சிறுகதை, த, நாடகம், விமர் சனம், ஆய்வுக் மாழிபெயர்ப்பு ஆகியவற்றில் குறிப் பிடத் தக் களவு
TTT.
நீர்வை பொன்னையன்
|
9 7895.55 2875OO