கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அங்கையன் கதைகள்

Page 1

,
,

Page 2

6 O o 9 cGIS GOatl. GOT
&B60556T

Page 3
(C) இராசலட்சுமி கயில ந:
0 ‘அங்கையன் கதைகள்’
0 சிறுகதைத் தொகுதி
0 அங்கையன் பதிப்பகம்,
எச் 12 அரசாங்கத் தொடர்மாடி, கொழும்பு - 04
D அச்சாக்கம் - “மூன்றாவது மனிதன்” வெளியீட்டகம்
0 பக்கங்கள் - V+105
0 முதற்பதிப்பு 2000
0 விலை - ரூபா 140.00
O Ankayan Kathaiga O short story Collection O First Edition2OOOO Ankayan Fathippagan, H 1/2 Government Flatø, Colornbo 4O Printing - Moontravathu Manithan publication O Pages 1V + 1O5 Price- Ke, 14-O.OO

செழுமையான வரவு
இப்போது நினைக்கிறபோதும் சற்று முன்னரே அங் கையனுடன் பேசிக்கொண்டிருந்தாற் போல பிரமை உண்டாகிறது. இலக்கியத்தை வாசிப்பை எழுத்தை கவிதையை நாடகங்களை இசையை நேசித்த அற்புதம். மொழி பெயர்ப்பை விரும்பிய இயல்பால் தமிழுக்கு புதுமை செய்யக் கனவு கண்ட அற்புதம். வெளிச்சமாகப் படரத் துடித்த போது மங்கி அணைந்து போய்விட்ட அற்புதம், இலங்கைத் தமிழ் எழுத்தில் இரணர் டு வெளிச் சங்கள் இப் படி அரும் பி பிரமிப்பை ஊட்டிக் கொண்டிருக்கையிலேயே சட்டென்று அணைந்து போயின. ஒருவர் செ. கதிர்காமநாதன். மற்றவர் அங்கையனி கயிலாசநாதன்.
சமகாலத்திலே இருவரோடும் நெருங்கிய நேயம். படைப் பின் எல்லைகளைத் தொட முயணிற ஆவேசமும், சிறந்த பத்திரிகையை நடத்த வேணி டுமெனி ற இலட்சியக் கனவும் இவர்களின் பொதுத் தன்மையாக இருந்ததைக் கணிடு வியந்திருக்கிறேன். சந்தித்த வேளையெல்லாம் இதுவே பேச்சின் முழுத் தொனியாகவும் ஒலித்தது.
பாரதி எமக்கு பலவழிகளில் ஆதர்சம். கனவுகள் காண்பதிலுந்தான். தமது ஆக்கங்கள் தீப்பெட்டி போல எங்கும் இருக்க வேண்டுமென்று பாரதி ஆசைப் பட்டான். வாழ்ந்த காலத்திலே அது கனவாய்ப் போயிற் று. விட்டுச் சென்ற ஆக்கங்களை முழுமையான கைப் பிரதியாகவே வைத்துச் சென் றிருக்கிறார் அங் கையன். அவற்றைப் பத்திரமாக வைத்திருந்து அழகிய நூல்களாய் தமிழுக்குத் தருகிறார் அவரது துணைவியார். வரவேற்போம்

Page 4
அங் கையனின் எழுத் திண் ஆதார சுருதி சாமானிய மனிதரின் வாழ்வுதான். அவரின் மனம் அவர்களைத் தொட்டது. தேடியது. நேசித்தது. அவர்களின் அவல வாழ்வின் மூலாதாரங்களைத் தேடி, அழுக் கிடையேயுள்ள அவர்களினி பரிசுத்தத்தை அடையாளம் காட்டிற்று. தன் கதைகளின் நாயகராக்கிற் று. எதிர்க் குரலாக விகாசித்தது. ஒலித்தது. ஒலிக்கின்றது.
அவரின் ‘செந்தணல்’ நாவல், கொழும்பு வாழ்வை வெளிக்குக் கொண்டு வந்தது. இன்னொரு நாவலான ‘கடற்காற்று தமிழில் கடல் வாழ் வினைப் பற்றி எழுதப் பட்ட முதல் நாவல் என்ற தகைமையைப் பெற்றது. இன்னும் நூலுருப் பெறாத அவரால் மொழிபெயர்க்கப் பட்ட சர்வதேசப் படைப் பாளிகள் - இவான் துர்க்கனேவ் போன்றோரின் ஆக்கங்கள் நூல் வடிவம் பெறின் ‘அங்கையனின் இன்னொரு பாய்ச்சல் தெரியவரும். முழுக்கணிப்பு வடிவம் பெறும்.
கதைகளிலே பிரச்சினைகளை தொடவும் முடிச்சுப் போடவும், முடிச்சவிழ்க்கவும் மனித வாழ்வை நேசத்தோடு அணுகவும் முயல்கிற போக்கு கலாரீதியாக நிதானமாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. தனது எழுத்து நடையை தனித்துவமுள்ளாதாக நிறுவ முயலும் படைப் பாளியின் ஆர்வத்தையும் கேட்க முடிகின்றது.
அறுபதுகள் தற்கால இலக்கியத்திற்கு செழுமையான வரவுகளைத் தந்ததென்பது வரலற்றின் பதிவு அங்கையனின் எழுத்துக்கள் அதை நம்பிக்கையோடு உறுதி செய்கின்றன, இன்னொரு முறையும்.
செ. யோகநாதன் 15.08.20 OO
 

பதிப் புரை
எனது துணைவரின் அச்சில் வெளியாகும் நான்காவது தொகுதி இது.
தன்னுடைய படைப்புகளை புத்தகக் கலாசாரத்தின் உயர்ந்த தரமாக வெளியிட வேண் டுமெனி பது அவரது வாழ்வின் கனவாகவும் நினைவாகவும் இருந்தது. தனது தொகுதிகளை எவ்விதம் வெளியிடுவது என்பதை சிறப் பாக வடிவமைப் புச் செய்து வைத்திருந்தார் அவர். தமிழின் துரதிருஷ்டம் , அவரது வாழ்க்கைக்காலத்திலே அவரது புத்தகக்கனவென்பது நனவாகாமலே போயிற்று. ஆனாலும் இலக்கிய வரலாறு அவரைப் பதிவு செய்து வைத்துள்ளது.
மானிடத்தை நேசிக்கும் அவரது ஆக்கங்களை வெளியிடுவதில் பெருமையும் நிறைவும் கொள்கிறோம் நாம்.
இராசலட்சுமி கைலாசநாதன் 6ਲੇ 1/2 அரசாங்கத் தொடர்மாடி கொழும்பு - 04
2000

Page 5
"அங் கையன் கயிலாசநாதனின் நூல்கள் -
Ol.
O2.
O3.
04
வைகறை நிலவு செந்தனல் கடற்காற்று அங் கையன் கதைகள்
 

கண்களிலே ஒளியிருந்தும், கதுப்புக்களிலே வெடித்த கோபத்தின் கனலில் தன்னையும், தான் சார்ந்த உலகத்தையும் தன்னை மீறிய வெறுப்போடு நோக்கியவண்ணம் வீட்டின் முன் கூடத்திற்கு வந்து; விழிகளில் முதல் விழுந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள் புவனேஸ்வரி அம்மாள்.
நல்ல தாய்க்கு மகளாகவும், புகழ் சிறந்த தந்தையின் செல்வமாகவும் இந்தப் பூமிக்கு ஒரு ஜன்மமாக வந்து, படித்து, பட்டம் பெற்று ஆசிரியையாக பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றி ; இளைத்துவிட்ட இந்த நாற்பத்தியொரு வயதில் இந்து மகளிர் கல்லூரியின் அதிபதியாகிவிட்ட ஒரு களை அவளின் முகத்தில் தட்டிக் கொண்டிருந்தது.
நடக்கக் கூடாதே என்று கட்டும் காவலுமாகக் காத்து வந்த ஒரு விஷயம் நடந்து விட்டால் ஏமாற்றம் மட்டுந்தான் ஏற்படும். அந்த ஏமாற்றத்தை வெளிக்காட்டுகின்ற அடி உணர்வுகள் முகத்தைக் கருமையாக்க, ஏமாற்றம் கவலையாக உருக்கொள்கையில் கண்கள் பனிக்க.
இது பெண்களுக்கு இயற்கை
ஆனால் அத்திவாரமிட்டு, புதுமையாக வாழ்ந்துவிட்ட - வாழ்ந்து கொண்டிருக்கின்ற
தங்கள் வாழ்வில், தன் கணவர் பழமையோடு பழமையாகி வந்த ஒரு பண்பை நிலைநாட்டுவதற்கு முயற்சிப்பார் என்று அவள் எதிர்பாக்கவே இல்லை.
நடக்காது என்று நம்பியிருந்த அந்த உத்திரத்தில் விழுந்த இடி அது!

Page 6
மென்று மென்று விழுங்கப்படுகின்ற சோளம் பொரிபோல நினைவுகள் உள்ளே உள்ளே சென்று உதரத்தில் உறைந்து கிடந்தன. அநுபவமற்ற ஒருவன் கஷ்டப்பட்டு உள்விழுங்கிய பீர், அதை - அந்த நெடியை - மறைக்க தாம்பூலம், பெப்பமின்ட் எல்லாம் போட்டு சொற்ப நேரம் நிம்மதியாகின்ற வேளை - அது மேற்கொண்டு புரட்டி வந்து, அவன் செய்த அந்த தீங்கினை உலகுக்கு வெளிக்காட்டுவதுபோல, உறைந்தவை யாவும் மீண்டு வந்து கொண்டிருந்தன.
வீட்டின் முன்புறத்தில் வெளி ‘கேட் வரை ஒளிபரப்பிக் கொண்டிருந்த அந்த ஒற்றை விளக்கில் கணிசமான பருமனுடனும், காதுப்புறங்களாக நரைத்த ஒருவரைப் பார்த்தவர் கைஎடுத்து கும்பிடாத குறையில் தம்மையும் அறியாத ஒரு மதிப்பைக் கொடுத்து, விலகிச் செல்வர்.
அமர்ந்திருந்த ‘காம்பட்டேபிள் கதிரையின் மேற்புறங்களிலிருந்து இடையை நோக்கி வழிந்து வந்து ஒன்றுடன் ஒன்றாக ஐக்கியமாகிவிட்டிருந்த கைகளை மேலும் மேலும் நெரித்தாள் அவள்.
சிலை வடித்த கால்கள் ஒன்றை மற்றொன்று முட்டியும் முட்டாம்லும் அடக்கமாக முன் நீண்டு ஆறுதலாகிக் கொண்டிருந்தன.
பெண்மைக்கு எந்தவிதமான கேடும் ஏற்படாத நிலையிலும், அமைதியற்ற மனமும், அலை பாயும் சிந்தையுமாக இருந்த புவனேஸ்வரியின் இறுகி இருந்த வாயைத் திறப்பதற்கு அங்கு யாருமே வரவில்லை.
வரவேண்டியவர்கள் தாமாக வராதவரையும் புவனேஸ்வரி அம்மாள் பேசுவதற்கு எத்தனையோ இருந்தும் பேசாமலேயிருந்தாள்.
இடையிடையே வெறிகாரர்களுடைய கண்களைப் போல் மேல் நோக்கிப் பிதுங்கும் அந்த விழிகளையும், மூச்சுக்கே அமைதியில்லாத அந்த இதழ்களையும் அந்த வீட்டிலுள்ள யாராவது பார்த்தால் நிச்சயம் பயந்துதான் போவார்கள். அவர்கள் கணவராய் இருந்தாலும் சரி; அன்புக்கும் ஆசைக்கும் என்று இருக்கிற மகனாய் இருந்தாலும் சரி; அல்லது எங்கோ பிறந்து இங்கு வீட்டில் ஒருத்தியாய் வந்து வளர்கின்ற வேலைக்காரியாக இருந்தாலும் சரி.
கூடத்தின் மூன்று சுவர்களிலும், அந்த வீட்டு மனிதர்களின் கடந்த கால நல்ல நிகழ்ச்சிகளை தத்ரூபமாக எடுத்துக் காட்டியபடி, வரலாற்றுச் சின்னங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கின்ற புகைப்படங்களை ஆறுதல் தேடிய அவள் விழிகள் ஒரு முறை சுற்றி வந்தன.
மருத்துவக் கல்லூரியில் வைத்தியப் பட்டம் பெற்ற அன்று, தனது கணவர் மகாசிவம் கறுப்புக் கவுணுடன் நின்று எடுத்த படம் கண்களிற் பட்டது. கைதேர்ந்த டாக்டர்
 

மட்டுமல்ல, கைராசிக்காரர் என்றும் ஊரார் - அந்த யாழ்ப்பாண மாவட்டத்தார் பேசிக் கொண்ட பெருமையான பேச்சுக்கள் அவள் காதுகளில் தேன்மாரி பெய்த வேளைகளில் - மறுபடியும் பிறந்து, மறுபடியும் கன்னியாகி அந்த மகத்தான புருஷருக்கு மாலை போடவேண்டும் என்று கனவு கண்ட நாட்கள் பிறவாத நாட்களாகிக் கொண்டிருந்தன.
புவனேஸ்வரி அம்மாள் மகளிர் கல்லூரிக்கு அதிபராகப் பதவி ஏற்ற சமயம் ஊராரும், பிறரும் மனம் உவந்து அளித்த வாழ்த்துப் பத்திரம் பல வர்ணங்கள் கொண்ட ஒரு சித்திரமாகத் தெரிந்தது.
பின்பு 'தமிழ் மாதர் கலாச்சார மன்றம்' என்ற புதுமையான ஒரு சங்கத்தை ஆரம்பித்து, தானே அதற்குத் தலைவியானபோது, பேசிக் கொண்டிருக்கையில் எடுத்த படம்.
மலடி என்ற பெயர் உருவாகாமல் தன்னை மகிழ்விக்க வந்த தன் மகன் குமரனுடைய uLúb.
''T6'
உலகை மறந்து ஒரு கணம் விழிகளால் உலவிவந்த புவனேஸ்வரி அம்மாள் மீறி வந்த ரெளத்திரத்தை அடக்கி அடக்கி ஏற்பட்ட களைப்பை, அப்படி அழைத்ததன் மூலம் தீர்த்துக் கொண்டாள்.
ஒரு கணத்துள் ஏற்பட்ட விசனத்தை ஒரு கணத்திலேயே மறந்து, கூடத்தின் ஒரு மூலையில் கை கூப்பியபடி நிற்கும் ஓர் உருவம். ULEDT86 3255,5 GUTCLP5)LD, பக்தியும் கனிவும் நிறந்த பார்வையுடன் தன் வேலைக்காரி கமலம்மாவின் தகப்பன் குப்புச்சாமி நிற்பதைக் கண்டதும்
புவனேஸ்வரி அம்மாளுக்கு அழவேண்டும் போல் தோன்றியது.
கருணையின் முன்பு அன்பு அழுவது இயற்கை. குப்புச்சாமி அவளைப் பற்றிக் கொண்டிருந்த அபிப்பிராயம் அது. இப்பொழுது கருணை வடிவமாய், அன்பு ஒளியாய் அவளையே கும்பிட்டபடி நிற்கின்ற அந்த உருவத்துக்கு முன் அவள் அடிமையாகி, ஒரு விதத்தில் குற்றவாளியாகி, கூனிக் குறுகி நின்றுகொண்டிருந்தாள்.
குப்புச்சாமியின் படத்தைப் பார்த்ததும் புவனேஸ்வரி அம்மாளின் சாட்சி விழித்துக் கொண்டாற் போன்றதோர் உணர்வு. இளமை சாய்ந்து விட்ட இருக்கையை விட்டு எழுந்து படத்தின் அருகே நடந்தாள்.
“குப்புச்சாமி”

Page 7
புவனேஸ்வரி அம்மாளின் அதரங்கள் மட்டும் அசைந்தன. வற்றிவிட்ட நாவில் தவழ்வதற்கு முனைந்த ஒலிக்குழந்தைகள் வாய்க்குள்ளேயே பிணமாகி விட்டன.
புனிதமானவற்றின் பெயரை உரத்து அழைக்கும் திருப்தியில் புனிதமாகிவிட்ட உணர்வைப் பெறுவதற்கும் புவனேஸ்வரி அம்மாளுக்குச் சந்தர்ப்பமாகவில்லை - நினைவுகளைப் பசுமையாக்கியமுறையால் நாநிரும் வற்றியிருந்தது. தன் குரலால் குப்புச்சாமியின் பெயரை அழைக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் குடிபுகுந்தது.
“அம்மா! அவவம் போயிட்டாங்க. இனிமே இந்தக் கொழந்தைக்கு இந்த உலகத்தில யாருமே இல்லங்க. தாயும் தகப்பனும் எண்டு உங்க ரெண்டு பேரையுந்தான் நம்பி விட்டிட்டுப் போறன். நான். சாவு நிச்சயந்தானே. அப்படிச் செத்துப் போனா. இவவை ஒங்க குழந்தையாகவே பாவிச்சிடுங்க. இவவுக்கு அப்பன் எண்ணு. குப்புச்சாமின்னு. ஒருத்தன் இருந்ததை மறந்திடுங்க. இது ஏனென்னு வேலைக்காரி என்னு. ஏதாவது தப்புத்தண்டா கமலாம்மா நான் வரட்டுமா.” குப்புச்சாமி எட்டு வருஷங்களுக்கு முன்பு கூறிய வார்த்தைகள் புவனேஸ்வரி அம்மாளின் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலிபரப்பிக் கொண்டிருந்தன.
மலைநாட்டு உழைப்புச் செழிப்பதற்காக, தன்னையே பசளையாகக்கின்ற தியாக சிந்தையுள்ள ஒரு தீரனின் தினக்குரல்.
உலகத்தை நன்றாகப் புரிந்துவிட்ட அந்த முதியவர் அன்று எதிர்பார்த்தது இன்று நடந்து விட்டதே என்று நினைக்கையில் புவனேஸ்வரி அம்மாள் உண்மையில் 'கோ'வெனக் கதறிவிட்டாள்.
மூடியிருந்த உலைமூடி அடுப்பில் விழுந்து நொறுங்க, வேகின்ற அரிசி கொதித்தாற் போல், கொதித்து யாரிடமோ பழி தீர்க்க முனையுமாய் போல் நினைவுகள் மறுபடியும் கொதித்தன.
ஏதாவது நடந்து விட்டால் தானே பொறுப்பு என்று பழிபோட்டு விட்டு, இன்று செத்து மறைந்த குப்புச் சாமியை ஒரு விதத்தில் பாராட்டாமலும் அவளால் இருக்க முடியவில்லை.
கமலாம்மாவின் கைகளையன்றிப் பிறர் கைப்படிருக்காத குப்புச்சாமியின் படத்தில் முதன் முறையாக புவனேஸ்வரி அம்மாளின் நடுங்குகின்ற கரங்கள் தடவி வந்தன.
G
'உத்தமர்களுக்கு ஒரு வார்த்தை. நானே பொறுப்பேற்று முடிக்கிறன். நீங்கள் நிம்மதியாக இருங்கள்"
புவனேஸ்வரி அம்மாள் முனகிக் கொண்டே தான் இருந்த இடத்துக்கு வந்தாள்.
"gರ್ł
 
 
 
 

அவர்களுடைய வீட்டுக்கு வந்து வந்து போவோருடைய செளகரியத்துக்காக அமைக்கப் பெற்றன போல் காணப்பெற்று, 'இன்', "அவுட்' முறையில் பிரிந்திருந்த முற்றத்து - வெளிக் கேட்டுகளில் ஒன்றைத் தகர்த் தெறியுமாப்போல் ஒரு கார் உள்ளே வந்து நின்றது.
உத்தரவை எதிர்பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமற்ற அவளுடைய கணவர் மகாசிவம் வருகிறார் என்று காரின் அடையாளத்தைக் கண்டு கொண்டதும், வெறுப்பு பன்மடங்காகியது.
அவர் வித்திட்டு வைத்த செய்கை தந்த விளைவை புவனேஸ்வரி அம்மாள் எண்ணும் பொழுது கணவர் என்ற மதிப்பை அளிக்கவே தயங்கிக் கொண்டிருந்தாள்.
ஆண்டாண்டுகளாக வளர்ந்து பூத்து கனிந்த தாம்பத்திய அன்பு, இடைநடுவே அந்த அன்புக்கே குறியாக வந்த ஒன்று அதனை மறைக்கின்ற செயலைச் செய்துவிட்டால் பொறுக்கக் கூடியவர்கள் இருக்கமாட்டார்கள்.
குற்றம் எத்தன்மையது என்ற ஒன்றுதான் புவனேஸ்வரி அம்மாளுக்குக் கவலையைத் தருவதாக இருந்ததே ஒழிய, குற்றத்தைச் செய்தவர், அல்லது அப்படிச் செய்வதற்குத் தூண்டுதலாக இருந்தவர் எத்தன்மை உடையவர் என்பது அவளுக்குப் பிரச்சினையாக இருக்கவில்லை. அவர் கணவராக இருந்தாலும் சாதாரண மனிதன் நிலைக்கே ஏற்றப்பட்டு விடுகிறார்.
கணவர் மகாசிவம் செட்டுக்குள் காரை நிறுத்திவிட்டு, தீர்க்கமாக நடந்து வந்து, தன் முன்னே நிற்பதைக் கண்டும் கவனியாது இருந்தாள்.
பகற்போது ஏற்பட்ட பயங்கரமான அந்த இயற்கை நிகழ்ச்சியின் தாக்குதலில் இருந்து தன் மனைவி இன்னும் மீளவில்லை என்று தன் வரையில் எண்ணிக் கொண்டு மெதுவாக உள்ளறைக்குட் சென்றார் மகாசிவம்.
நெடுநாட்டுகள் ஒருமித்து வாழ்ந்த வாழ்வில் அவளைப் பற்றி நிறையப் படித்திருந்தார் மகாசிவம். பண்பாடு, பண்பாடு என்று தொட்டதற் கெல்லாம் தந்த அநுபவத்தைச் சுட்டிக்காட்டி அவளை அமைதியாக்க அவர் எடுத்த முயற்சிகள் அத்தனையுமே தோற்றுப்போனதை அவர் மறந்திருக்க முடியாது.
உடைகளைக் களைந்து கட்டிலில் போட்டுவிட்டு, சாரத்தை உடுத்துக் கொண்டு ஸ்டுலில் அன்றைய தினப் பத்திரிகையை கையிடுக்கில் மாட்டிவைத்தபடி முன் கூடத்துக்கு வந்த மகாசிவம், தம் மனைவி அழுது தீய்த்து நாசி நீர் கொட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
தம்முடைய தவறுகள் எவையாயிருந்த பொழுதும் அழுபவள் மனைவி என்ற எளிமை தோன்றியதும், தொண்டயை ஒருவாறு சரிப்படுத்தியபடி, ‘என்ன இப்ப

Page 8
நடந்து போச்சு. இவ்வளவு நேரமாக நீ அழுது கொண்டா இருக்கிறாய்?" என்ற கேட்டார் மகாசிவம்.
புவனேஸ்வரி அம்மாள் கலங்கிச் சிவந்து போன விழிகளை அப்படியே மேலே உயர்த்தி வெறுமையான பார்வையை அவர் மீது விழுத்திவிட்டு, மறுபடியும் விம்மத் தொடங்கினாள்.
‘அழுது அழுது வாதிக்கிறது குழந்தைகளுக்கு முடிஞ்ச விஷயம்; அல்லாட்டி இளசுகளுக்கு ஏலக்கூடிய விஷயம். நீ தானே பெரிய மனுவழியாச்சே அழுது எதைச் சாதிக்கப் போகிறாய்?"
ஆரம்பத்தில் கோழையாக இருந்தவன் இடைக்காலத்தில் ரெளடியாக வாழ்ந்த வளர்ச்சியை புவனேஸ்வரி அம்மாள் புரிந்து கொண்டாள். தன்வாய் பேசாதிருக்கும் வரை அவர் வீரராகிக் கொண்டே இருப்பார் என்பதும் அவளுக்குத் தெரிந்த ஒன்று.
“உங்களுடைய சுயமரியாதையையும், உங்க மகனின்ரை மனுஷத் தன்மையையும் நினைச்சு ஆனந்தக் கண்ணிர் வடிக்கிறன். நான் அழயில்லை”
“புவனேஸ். மத்தியானமே நான் சொன்னேன். நடந்தது நடந்து போச்சு. இனிமேலாச்சும் கவனமாக இருப்பம். இல்லாட்டி..” என்று கூறிக்கொண்டே மனைவிக்கு எதிராக் காணப்பட்ட மற்றொரு கதிரையில் வந்து அமர்ந்தார் மகாசிவம்.
கையிலிருந்த பத்திரிகையை அவசரஅவசரமாகப் புரட்டியபடி தன் முகத்தை மறைத்துக் கொண்டார். தான் சொன்னவற்றுக்குக் கிடைக்கப் போகின்ற பதிலை எண்ணி அஞ்சிக் கொண்டிருந்தார் அவர்.
“இல்லாட்டி. என்ன செய்யப் போறீங்களாம்? இந்தக் கொடுமையை ஆதரிக்கிற நீங்கள் வேறை எதைச் செய்யமாட்டீங்கள். அவளைக் கொலை செய்துவிட்டுத் தற்கொலை எண்டு தீர்ப்பு வழங்கப் போறிங்களா”
“புவனேஸ். உஸ்” ஆத்திரத்தைக் கொட்டி விட்ட களைப்பில் உடல் தளர்ந்து கொண்டிருந்த புவனேஸ்வரி அம்மாள் கணவரை மதிக்க முடியாமற் போன உணர்ச்சிகளை நொந்தபடி நடுங்கினாள். மேலும் கணவருடைய அந்த அதட்டல் அவளை என்னவோ செய்தது.
‘நான்ஸன்ஸ். எடியுகேட்டட் இடியட்ஸ் வில் டாக் லைக் திஸ்!” “என் கண்முன்னாலையே ஒரு பெம்பிளைப் பிள்ளை அவலப்படுகிறதை என்னாலை சகிக்கமுடியாது. அப்பிடி ஒரு சந்தர்ப்பம் வந்திட்டுதெண்டால் என்னை இங்கே பார்க்கமாட்டீங்கள். உங்களுக்கு கணக்க சொல்லத் தேவையில்லை. அவ்வளவுதான்!”
 

“புவனேஸ். காம் டவண். பிளிஸ். லிஸின்ட் டு மீ. உனக்கு தமிழிலை அறிவு இருந்தா - அந்தத் தமிழிலே உள்ள அத்தினை பண்பாடுகளும் வாழ்க்கையிலை வைக்கலாம் எண்டு கனவு காணாதை. ஆப்டர் ஆல். தமிழிலையும் இதே விஷயம் நடந்திருக்கெண்டு நான் கேள்விப்பட்டிருக்கேன், ஸோ யூ டோன்ட் பீ அன் ஐடியலிஸ்ட்! பட் பீ ஏ றியலிஸ்ட்!”
மனைவியின் வார்த்தைகள் வரம்பை மீறியும், மடிந்தும் போவதைக் கண்டதும் தம்மைப் பெட்டிப் பாம்பாகக் காட்டத் தொடங்கினார் மகாசிவம் தான் அமைதியாகப் பேசுவதன் மூலம் ஆத்திரக்காரரை அடக்கிவிடலாம் என்ற மனோதத்துவரீதியில் அவர் பேசத் தொடங்கினார்.
“என்னத்தைக் கேள்விப்பட்டீங்கள்.?” கணவரின் பணிவுக்கு ஒரு பணிவாக இந்தக் கேள்வி பிறந்தது. தாம் எதிர்பார்ப்பதே நடக்கின்றது என்ற மகிழ்ச்சி உதடுகளின் கோடியில் ஒரு முறை மட்டும் மின்னி மறைய, அவர் சொன்னார்.
* ஒருத்தியை ஒருத்தன் காதலிக்கிறதும், களவாக இரண்டு பேரும் சந்திக்கிறதும், இன்னும் என்னன்னமோ செய்யிறதும் உலகத்திலே சாதாரணமாக நடக்கிற சமாச்சாரங்கள். இதைப் பெரிசா அந்தக் காலத்து மனுஷங்கள் பாடி வச்சாங்களே அதுதான் எனக்கு ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம் என்னன்டால், அந்த விஷயத்தை இந்த சென்ஸரியில் வாழுறவங்கள் பெரிசு படுத்திப் பேசுறாங்களோ, அதுதான்
கூறிவிட்டு புவனேஸ்வரி அம்மாளுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தார் மகாசிவம். அழுது காய்ந்த கன்னங்களில் முன்பிருந்த ஜொலிப்பு உருவாக்கிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு அவர் முகத்தில் தெரிந்தது. அந்தத் திருப்தியில், மனைவி தன் வழிக்கு வருகின்றாள் என்ற நம்பிக்கையில் - தொடந்தார்.
"உனக்கு தெரியும் நீ என்னை ‘மாரி பண்ணினதாலைதான் நம்மஞக்கு குமரன் எண்டு ஒரு பிள்ளை பிறந்தது. அப்படி அத்தினை பேரும் ஒன்றாகிறதாலைதான், அவங்களைப் போல எத்தனையோ பிறக்குதுகள்."
“நான் ஒரு பிள்ளையைப் பெத்தவன். அதே காலத்திலை ஆயிரம் பிள்ளையஸ் பிறக்கிறதுக்கு இந்த ரெண்டு கையாலை உதவினவன். அந்த ஆயிரங் குழந்தையளிலை நூற்றுக்கு பன்னிரண்டு வந்ததும் வராததுமாகத் திரும்பிப் போயிடும் அப்படி அந்தக் குழந்தைகள் பிறந்து சாகிறதும் பிறக்காமல் சாகிறதும் நட்டம்தான். ஆனா தாய்க்கு ஒரு பிரசவ வேதனையைக் கொடுக்காமல், அவளுடைய உடம்பிரைல இருக்கிற கட்டைக் கெடுக்காமல் வந்தமாதிரியே அழிஞ்சு போறதை நான் விரும்புறன்.99
தாம் நினைக்கின்ற விஷயத்தை வெளிவிடுவதற்கு அனுமதி கேட்பவர்போலச் சற்று நிறுத்தினார் மகாசிவம்.

Page 9
“அதுக்காக?" புவனேஸ்வரி அம்மாள் தன்னுடைய பொறுமை முடிந்துவிட்டதைக் காட்டத் தொடங்கினாள்.
‘மாத்திரை போடுவீங்கள்! நான் மறக்கயில்லை. ஆனால் உங்கடை உத்தம புத்திரன்செய்த இந்தப் பாவத்தை எந்தக் கடலிலை கொண்டு போய் கொட்டப் போரிங்கள்? அப்படி நீங்கள் பிராயச்சித்தஞ் செய்தாலும் அது தீர்ந்திடுமா? அப்படி நினைக்கிறீங்களா?
'சரி அப்பிடித்தான் சிசுக்கொலை செய்தாலும், உங்க மகன் - அவள் மேலும் சும்மா இருப்பினமா? ஏதோ ஸைக்கோலொஜி பேசுறிங்களே அடிக்கடி! இந்த விஷயத்தை பற்றி உங்கடை ஸைக்கோலொஜி ஏதாச்சும் சொல்லுதா?”
புவனேஸ்வரி அம்மாளின் ஒவ்வொரு கேள்வியும் அவரைக் குலுக்கிக் கொண்டிருந்தது. தம்மைச் சமாளித்தபடி, ‘அவளை சொந்த ஊருக்கே. ’ என்றார்.
“அனுப்பிப் போடலாம் எண்டா சொல்லப் போறிங்கள்? சரிதான். அவளுக்கு இந்த உலகத்திலை இருந்த ஒரே ஒரு உறவு அவளுடைய அப்பன்தான். அவரும் போயிட்டார். அப்படியெண்டா எந்த ஊருக்கு அனுப்புறகாக யோசனை?”
“புவனேஸ் அளந்து பேசு.!”
அளந்து நடக்கிறவங்களட்டைத் தான் அதைச் செய்யலாம். நம்மளட்டை முடியாதே.
“உம்க் மூண்டு மாசம். மத்தியானம் சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக அவள் வாந்தி எடுத்தாளே. அந்த வேதனையை..”
புவனேஸ்வரி அம்மாள் அழுதாள். மகாசிவம் அவளைச் சமாதானப்படுத்தவழி வகைகளைத் தேடிக் கொண்டிருந்தார்.
“இட் ஈஸ் ஆல் ரைட்! புவனேஸ்! இப்ப குமரன் எங்கே?' கமலம்மாவினுடைய கதை காரசாமாகப் போய்க் கொண்டிருந்ததற்கு முடிவற்ற ஒரு முடிவைக் கண்டவர்போல், பேச்சை வேறு பக்கம் திருப்பினார். அதுவும் பழைய கதையின் பாதியாகவே நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
'குமரன். நல்ல பேரைத் தேடி வைச்சீங்கள்! அவள் வாந்தி எடுத்த அந்த நேரத்துக்குப் பிறகு நான் காணயில்லை. கமலம்மா எல்லா விஷயத்தையும் சொல்லிக் கொண்டிருந்தாள். அவ்வளவுதான். நான் திரும்புறதுக்கிடையிலை ஒடியிட்டான். இன்னும் வரயில்லை”
 

மகனைக் காணவில்லை என்பதை மனைவி இவ்வளவு பொறுப்பில்லாமல் சொல்கிறாளே என்று நினைக்க அவராற் பொறுக்கமுடியவில்லை.
“அட கஷ்டமே! எங்கை போனானோ? உனக்குப் பயந்து ஒரு வேளை தற்கொலை கூடச் செய்துடுவானே. அவனை நீ கோபிச்சியா? ஒளிக்காதே! உள்ளதைச் சொல்லு எனக்குத் தலையெல்லாமே சுத்துது. எனக்கு வெறிபிடிச்சுதென்டால் என்ன செய்வன் எண்டு தெரியாது. கமோன் ஸ்பீக் ஆப்!”
“ULef!'
கன்னத்தை மெதுவாகத் தடவியபடி: "நான் ஆருக்குப் பதில் சொல்லுறது?" என்ற சொல்லி நிறுத்திவிட்டு, கண்களை மறைத்த கண்ணிரை துடைத்து விட்டாள் புவனேஸ்வரி அம்மாள்.
அவள் அழுதாள்!
“வீட்டிலை ஒரு பிள்ளை போல இருந்தவளை காப்பாத்த முடியாமல் தவறவிட்ட என்னை நம்பி இரண்டாயிரம் பெம்பிளைப் பிள்ளையஸ் படிக்குதுகளே. அதுகளின்ரை தாய் தகப்பமாரிலை பாதிக்கு மேலே எங்கடை குப்புச்சாமியைப் போல நிலைமையிலை உள்ளதுகள் தான். அதுகளின் வாழ்க்கைக்கு என்ன ‘கரண்டி கொடுக்கப்போறன்? நாளைக்கு இது தெரியவந்தா. ஐய்யோ. தமிழ்மாதர் கலாச்சார மன்றம். அதுக்குத தலைவி. தெய்வமே!...”
புவனேஸ்வரி அம்மாள் பித்துப் பிடித்தவள்போல் தலையில் வாரி வாரி அடித்துக் கொண்டாள்.
“ஆர் யூ மாட்?" என்றலறியபடி அவளுடைய கைகளை இறுகப் பற்றிக் கொண்டார் மகாசிவம்.
அவர்கள் இருவரும் ஏதோ பேசுகிறார்கள் என்ற நினைப்பில் தன்னைத் தானே தனியனாக்கிக் கொண்டிருந்த கமலாம்மா ஆரவாரித்த அழுகையொலியைக் கேட்டதும் குசினியை விட்டு ஓடிவந்தாள்.
“guijuJIT!....... என்னங்க. அம்மா அழுறாங்களே. Sg.....ul.....(3ust'
“அதுக்காக நீ அழாதை இப்பிடி நீங்க இரண்டு பேருமா எங்களை அழவைச்சிங்களே அது நல்லதுதான். ஆதரவில்லை எண்டு வந்த உனக்கு அடைக்கலம் தந்த இவளுக்கு நீ செய்த நன்றி இது. பெத்து வளத்ததுக்கு அவன் செய்த நன்றி இது. போதும். நீ பேசாமல் போ!.

Page 10
எங்கோ பார்த்தபடி, மனைவியை அணைத்த கைகளை நகர்த்திக் கொண்டே மகாசிவம் சொன்னார். விடுபட்ட கைகள் 'தொப்பெனறு மடியில் விழ, தலையைக் கவிழ்த்தபடி இளைத்தாள் புவனேஸ்வரி அம்மாள்.
அவருடைய துணைக்கு மதிப்புக் கொடுக்க இரண்டடி பின்புறமாக நகர்ந்த கமலம்மா, அன்பு மேலிட்டால் ஓடிவந்து புவனேஸ்வரி அம்மாளே இறுக அணைத்துக் கொண்டாள்.
புவனேஸ்வரி அம்மாளின் மடியில் முகம் புதைத்து, கால்களை இறுகக் கட்டிப் பிடித்திருந்த கமலம்மாவின் அடர்ந்த கேசத்தை தன்னையும் மீறிய வாஞ்சையுடன் தடவிவிட்டாள் புலனேஸ்வரி அம்மாள்.
செம்பவள நிறத்துடன் சிங்காரமாக வளர்ந்திருந்த அவளை, வீட்டுக்கு வந்த விருந்தினர் “உங்கடை மகளா? இப்பிடி ஒரு பிள்ளை இருக்குதெண்டு தெரியாதே" என்று வியந்த கேள்விகள் அவள் நெஞ்சில் உரமிட்டு நின்றன.
கமலம்மா குளியறையிலிருந்து தன் மானத்தை காத்தபடி, ஈரப்புடைவையுடன் தன்னுடைய அறைக்கு ஓடுகின்ற காட்சிகளை பெருமையோடு நின்று புளகாங்கிதப்பட்ட புவனேஸ்வரி அம்மாள், அவளுடைய உடலை ஒரு முறையாவது தொட்டு மகிழவேண்டும் என்று துடித்த பாசத்துடிப்புக்கள் நினைவில் புடமிட்டன.
அதற்குக் கிடைத்த சந்தர்ப்பம் போல், அவளே தானே வந்து கால்களில் விழும்பொழுது அதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள் புவனேஸ்வரி அம்மாள்.
மகாசிவம் தம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தாம் கண்டு துணிந்த ஒரே முடிவு நிறைவெய்திக் கொண்டிருப்பதை மனதார ரஸித்துக் கொண்டிருந்தார்.
அந்த ஆனந்தத்தின் குளிர்மை சித்தத்தையும், அது நிறைந்த செயல்களையும் குளிர்வித்துக் கொண்டிருந்தது.
“நீ வாழ வேண்டியவள் கமலா, உனக்கு ஒரு தீயதும் வராது. உங்கப்பருக்கு நான் என்டைக்கும் துரோகம் நினைக்கமாட்டன். எல்லாம் அவன்ரை தலைவிதி. ஒருத்தனாகப் பிறந்து இவ்வளவு சொத்துக்கும் அதிபதியாகி, படிச்சு நாளைக்கு பெரிய மனிஷனாகி. நல்ல பெரிய இடத்திலை பெண் எடுத்தாலும். அந்த மருமகள் பெம்பிளைப்பிள்ளை' இல்லாத எனக்கு பிள்ளையாக இருப்பாளோ தெரியாது.”
“நம்பிக்கையிலே வாழுவதை விட முட்டாள் தனம் சந்தேகத்திலே வாழுகிறது புவனேஸ் அப்பிடி அநத மருமகள் இருக்கமாட்டாள் என்றெ வைச்சுக்கொள்ளண்.
yy
 

புவனேஸ்வரி அம்மாள் பேசிக்கொண்டே சென்றதைக் குறுக்கிட்டுத் தடுத்துக் கூறினார் மகாசிவம்.
திடீரென்று எழுந்து, கார்செட்டுப் பக்கம் விரைந்தார் மகாசிவம்.
நல்லது நடக்கையில் வேண்டியவர்கள் இல்லாத போது அது குறையான ஒன்றாகப்படுவது மனிதசுபாவம். மதிய வேளை விஷயம் தெரியவந்ததை அறிந்து தன் மகன் போயிருக்கக் கூடிய இடம் என்று தாம் நினைத்திருந்த இடத்துக்குப் போகத்துடித்தபடி காரை எடுத்தார்.
அவரையும் அறியாத வேகம் ஒன்று மனதிற் கூடி, உடலில் ஓடிக்கொண்டிருந்த இரத்தம் வேகம் குறைந்து உறைவதுபோலாகிக் கொண்டிருந்தது.
ஒன்றை ஒரு பக்கமாகப் பார்க்கும் பொழுது அது அழகாயிருந்தால், அதன் மறுபக்கத்தைப் பற்றிக் கவலைப்படாத ஒரு தத்துவம் நிலைத்துக்கொண்டிருந்தது.
ஒன்றின் வேகம் தணியும் பொழுது மற்றொன்றின் வேகம் அதிகரிக்கின்றது. ஒட்டமாக வந்தவன் தன் ஓட்டம் முடிந்ததும், உடம்பில் ஏற்படுகின்ற வேகத்தை உணர்ந்தாற்போல் மகாசிவம் உணர்ந்து கொண்டிருந்தார்.
அவருடைய கார் வெளிக் "கேட்டால் திரும்பி வீதியில் ஏறமுனைந்த பொழுது, மற்றேன்று உள்நுழைவதை அவர் பார்க்காமல் விடவில்லை.
திகில் பிடித்த உணர்வில் தமது காரை "பட்டென்று வீதியிலேயே நிறுத்திவிட்டு, ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வந்தார்.
குமரனுடைய நண்பன் பாலா அந்த வந்த காரிலிருந்து இறங்கினான்.
அவனைக் கண்டதும் குமரனைக் கண்ட ஆவலோடு அருகில் சென்றார் மகாசிவம்.
“நீ போ அம்மா உள்ளே” என்று கமலாவை தன் வாழ்வில் முதல் தடவையாக
அழைத்துக் கூறிவிட்டு இனி என்றும் அழைக்கும் உறுதியுடன் நடந்து வந்தாள் புவனேஸ்வரி அம்மாள்.
பாலா வாயைத் திறக்கக் கூடாது; திறந்தால் அது நல்ல முடிவாகவே இருக்க வேண்டும் என்று வேண்டாத தெய்வங்களையும் அப்பொழுது வேண்டிக்கொண்டிருந்த, பலகோரங்களை கண்ணாற் கண்டும் சற்றும் கலங்காத மகாசிவமும் "கு.கு.மரன்!” என்று உணர்ச்சிகளையும், பிரார்த்தனைகளையும் மீறிக் கத்திவிட்டார்.

Page 11
“என்னைப் பார்க்கிறதுக்கு வந்தவன், எனக்கே தெரியாமல் தன்னை மறைச்சுப் போட்டானே.மா.மா." என்று அலறியபடி மகாசிவத்தின் கால்களில் விழுந்தான்
UT6).
“கு.ம.ர.ன்" - ஏகோபித்த மூச்சில் உருவாக்கி ஏகோபித்த முடிவில் வாழ்வையுங் கொடுக்க நினைத்த மகாசிவமும், புவனேஸ்வரி அம்மாளும் இரத்த ஒலி எழுப்பினார்கள்.
பாலா மண்ணிலே புரண்டு, அழுது கொண்டிருந்தான்.
“ஐ டிட் மை லெவல் பெஸ்ட். மகா!” என்று மகாசிவத்தின் தோட்களைத்
தட்டிதேற்றியபடி டிரைவர் ஸிட்டிலிருந்த பாலாவின் தகப்பனும், மகாசிவத்தின் சக டாக்டருமான சிவநேசன் வந்தார்.
“சே! வாட் ஏ புவர் வேர்ட்?" என்று வெறுத்துவிட்டு, “எங்களுக்குத் தெரியாமலே “லாப் புக்குள்ளை போய் பொட்டாஸியம் ஸைனைட்டை எடுத்திருக்கிறானே. இது விதியா?.' கலங்கினார் சிவநேசன்.
“குமரன்!” என்ற அழைப்பு ஒன்றுடனேயே தனது ஒலியை நிறுத்திக் கொண்ட புவனேஸ்வரி அம்மாளை கமலா தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் கங்கை ஊற்றெடுத்திருந்தது.
வார்த்தைகள் கிடைக்காமல் அழுது கொண்டிருந்தார் மகாசிவம்.
கமலா மீது அத்தனை கண்களும் திரும்பின.
புவனேஸ்வரி அம்மாளை தான் அணிந்திருந்த துண்டுத் தாவணியைக் கழற்றி, அதன் மீது வளர்த்திவிட்டு, ஒடிப்போய் காரின் பின் கதவைத் திறந்தாள் கமலா.
“என்னைச் சாக வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டு, நீங்க போயிட்டிங்களா..? என் அவள் அலறத் தொடங்கியதும், அத்தனை கண்களும் அழுவதை நிறுத்தி அகலத் திறந்தன.
பின் சீட்டில் நீண்டிருந்த உடலை விழுந்து தழுவி, கண்ணிரால் கழுவிக் கொண்டிருந்தாள் கமலா.
“அய்யாவும் அம்மாவும் உங்கடை எண்ணப்படியே சம்மதிச்ச பிறகும் சாகத் துணிஞ்சீங்களா?” என்று கமலா அழுதுகேட்ட பொழுது, அத்தனை கண்களும் மறுபடி அழுதன.
 

મજ ர்ை ၄hအံ၊၄
யுகத்தின் கணவேகச் சுழற்சியில் ஒன்றுமே அறியாத சிசுவைப் போல, விழி பிதுங்கி அழுதாள். அவளைத் தேற்ற அப்பொழுது ஒருவருமில்லை.
மற்றையவர்கள் அழுவதைப் பார்த்துச் சிரிப்பதும், சிரிப்தைப் பார்த்து எரிவதுந்தானே இந்தப் பிறப்பு எடுத்து எல்லோரும் கண்ட அனுபவம்?
அவளுடைய குழந்தைகள் மூன்றும் கதிகலங்கிவிட்டன! நான்காவது என்று மூச்சற்றுப் பேச்சற்று வயிற்றிலேயே உருவாகிக் கொண்டிருற்த அடுத்த குழந்தையை அடித்து அழவைத்தாள் பார்வதி.
வயிற்று நோவுடன் தன்னையே தான் வருத்திக்கொண்ட வலி வேறு அவளைப் போட்டுச் சித்திரவதை செய்து கொண்டிருந்தது.
“அட! பாவியளே! நீங்கள் நல்லாயிருப்பியளா எப்படி வாழ்ந்த எங்கடை குடும்பத்தை வேரோடை சாய்க்கப் பாக்கியறியயேள்!”

Page 12
“இந்த மூண்டு குஞ்சோடை, நாலாவதையும் வைச்சண்டு என்னை என்ன செய்யச்சொலுறியள். கடவுளே! இவங்கடை அக்கிரமத்தைச் சகியாமல் நீயும் தூரப் போயிட்டியே கண்கெட்டவங்கடை காரியங்களுக்கு எட்ட நின்டு கொண்டு ஒத்தாசை புரியிறையோ?. ஐ.ய்.யோ!
பார்வதி யாரையோ அப்படித் திட்டிக் கொண்டிருந்தாள். உலர்ந்து வற்றிப்போன அவளுடைய முகம் கண்ணிர்க் கறைகளால் நிரம்பிக் கறுத்துவிட்டது.
அவள் அழுதுகொண்டேயிருந்தாள். பிறந்தது முதல் இன்று வரை தேவைக்காகப் பார்வதியின் முகததைப் பார்த்த அந்த மூன்று குழந்தைகளுக்கும், அவள் ஏன் அழுகின்றாள் என்பது விளங்கவில்லை.
'அய்யாவுக்கு எதாச்சும் நடந்திருக்குமோ? மனத்திலும் உணர்வுகள், நினைவுகள் தோன்றும் என்பதை மொழியால் அறியாத அவருடைய மூத்த மகன் நினைத்தான்.
தன்னையே கேட்டுப்பார்த்தான். தம்பியையும், தங்கையையும் ஏக்கத்தோடு பார்த்தான். ஏன்? என்பது தெரியாமல் அவர்களும் அழுது கொண்டிருந்தார்கள்.
“ஏன் மணி அழுறே?” அவன் தம்பியைத் கேட்டான். 'அம்மா அழுறா" அந்த மூன்று குழந்தைகளும் காரணம் தெரியாமலேயே அழுது கொண்டிருந்தார்கள்.
அலைகள் வந்து கரையிலே மோதி மடிந்தன. சிலாபத்தின் மாண்புமிக்க காட்சிகளைக் காணமுடியாமல், இந்து சமுத்திரத்தைத் தாண்டி வந்த மயக்கத்திலும், களைப்பிலும் அவை மடிந்து விட்டன.
இந்துமகா சமுத்திரத்தை நீந்தி வருபவையெல்லாம் சிலாபத்திலே மாண்டு போக வேண்டும் என்பது இயற்கையின் நியதியா? என்ன?
கதிரேசன் தன்னுடைய இடுப்பில் கட்டியிருந்த நீளமான 'தேடாவளையத்தை அவிழ்த்துத் தோணியின் அணியத்திலே போட்டான்.
அவன் அப்பொழுதுதான் கடலுக்குக் கீழே போய் மீண்டு வந்திருந்தான்.
“கதிரேசு” இன்னொருக்கா போய்ப் பாத்திட்டு வா’ ஏதாவது பிளைப்புக்குக் கிடைக்கலாம்” தோணிக்குள்ளே இருந்தவர்களுள் ஒருவர் கூறினார்.
“என்னப்பா இப்பக் கொஞ்சம் முந்தித்தானே போயிட்டு வந்தன். பேந்தும் போகச் சொன்னா. நான் என்ன பண்ண முடியும்?”
கதிரேசனுக்கு அலைகளோடு பொருந்திய களைப்பு, அப்படி அலுக்க வைத்தது விட்டது.
 

அவனை அப்படிக்கேட்டவர் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.
“இந்தா எத்தினை வருசமா இந்தத் தொழிலை மனிசன் செய்யிறான். ஏதோ சங்கம் நடத்துறாங்களாம் அதாலை எங்களுக்கு என்ன நன்மை கிட்டிப் போச்சுது”
“மனிசனாப் பிறந்து மனிசன் படுற வேதனை கொஞ்ச நஞ்சமல்லப்பா! சங்கு குளிக்கிறதெண்டு கீழே போற போதாவது மூச்சுப் பறியுதா கைதானாகவே கயிற்றைப் பிடிச்சு ஆட்டுதில்லே,”
கதிரேசனுக்கு இருந்த வெறுப்பு வார்த்தைகளில் கோலமிட்டது.
‘ஏம்பா அப்பிடிச் சொல்லுறே! நீ வாழற மனிசனாச்சே! உன்கிட்டேயே துணிச்சல் இல்லாட்டி வேறை யாருகிட்டே அதை எதிர்பார்க்கமுடியும்?”
முன்பு பேசியவரே, மீண்டும் சொன்னார்; ‘சங்கு சங்குன்னு குளிக்கிறமே. மழையெண்டு கிடக்கிதா! வெயிலெண்டு பாக்கிதா. எல்லாம் எங்களுக்கெண்டு சமுத்திரத்திலே பாய்ஞ்சு தேடுறம். கூப்பன் எடுக்கிறதுக்கே மனிசனுக்குப் பெரும்பாடு. சேச்சே! வீட்டை மனிசி, குழந்தை குட்டியளுக்கு வயிறுரச்சோறு போட முடியாத நமக்கு எதுக்கையா வீண்பேச்செல்லாம்”
கதிரேசன்'தேடாவளையத்தை எழுந்து மறுபடியும் கூட்டியபடி, சங்குப்பையையும் தூக்கினான்.
கடலில் குமிழிகள் சலசலத்தன. கதிரேசன் கீழே போய்விட்டான்.
O 0 0
இருட்டி விட்டது பகலெல்லாம் இந்த வையத்தைப் பார்த்து எரிந்து கொளுத்திவிட்டு இளைப்பாறத் தொடங்கினான் சூரியன். வெய்யிலின் கொடுமையைச் சொல்வது போல் காற்று வீசத்தொடங்கிவிட்டது.
நீரோடு சேர்ந்த குளிர் உடல் வெடவெடக்க வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான் கதிரேசன்.
கடல்நீரில் நனைத்துவிட்ட அவனுடைய அரைத்துண்டு அப்படியோ இடுப்பில் ஒட்டியிருந்தது. சாரத்தைதலையில் சுற்றிக் கட்டியிருந்தான் கதிரேசன். அதன் மடிப்புக்களில் ஒன்றில் இரண்டு ரூபாத் தான் சொருகப்பட்டிருந்தது.
அதை நம்பி எதிர்பார்த்திருக்கும் நான்கு உயிர்களுக்காக, தென்னைந் தோப்புக்களையும் மணற்பெருவெளியையுங் கடந்து வந்து கொண்டிருந்தான் அவன்.

Page 13
‘போன கிழமைக் கூப்பனிலை விட்ட அரிசி இரண்டு கொத்தையும் வாங்கினா அம்பது போயிடும். மிச்சம் ஒன்றரைக்கும் கறியைப் புளியை வாங்கலாம். பொழுது போயிடும்."
‘என்ரை கடைசியாள். கையையே பார்த்தண்டிருப்பாளே. ஒரு பெண்குஞ்சு. அதுக்கு ஏதும் வாங்க வேணுமே.99
கதிரேசன் சாறத்தை அவிழ்ந்து, காசை எடுத்துக் கொண்டான். ஈரத் துண்டை மீண்டும் ஒரு முறை பிழிந்துவிட்டு, தோளில் சால்வையாகப் போட்டான்.
கூப்பன் கடையை நோக்கி அவனுடைய கால்கள் போய்க் கொண்டிருந்தன.
அவனுக்குள் திக்கென்றது! கடை பூட்டப்பட்டிருந்தது. ‘என்ன அநியாயம்? ஆறு மணியும் ஆகயில்லை கடையைப் பூட்டிப் போட்டாங்கள்பாவியள்.
நினைத்துக் கொண்டு ஏமாற்றத்தோடு திரும்பியவனுக்கு சந்தியின் ஒருமூலையில் வெளிச்சம் விழுகிறது தெரிந்தது.
‘சுப்பையர்ரை கடை திறந்திருக்கு. சரி மாவையாவது வாங்கிக் கொண்டு போவம்.”
உள்ள பணத்திற்கு ஒரு சதம் மிச்சம் இல்லாமல், மாவும், சீனியும் மகளுக்கு மிட்டாயும் வாங்கிக் கொண்டான்.
நிவுைகள் வீட்டிற்குச் சென்று விட்டன. “பார்வதிதான் பாவம் எங்கையோ கூடுவிட்டு கூட வந்த எனக்கு அடைக்கலந்தந்து. என்னையே முடிச்சிட்டி. ஆனா, ஒரு சுகத்தையும் இன்னும் காணயில்லை
‘போதாக் கஸ்டத்துக்கு மூண்டு. நாலு குழந்தையள்
*
“பார்வதி
அவனுடைய அழைப்பைக் கேட்டு வழமையில் குழந்தை போல ஓடிவந்து அவளை வரவேற்கும் பார்வதியை அவன் காணவில்லை. என்றும்போல மகள் வந்து மிட்டாயை பெற்றுக் கொண்டாள்.
அணையப் போகும் வாழ்வில் ஒளியை மினுங்கி மினுங்கிக் காட்டிக்கொடுத்தது கைவிளக்கு.
 

“பார்வதி” கதிரேசனுடைய குரலில் ஒரு வித நடுக்கம் ‘என்ன. ஏன் பேசமாட்டியா என்ன நடந்தது. சொல்லன் பிள்ளையாள் எங்கை.
“நித்திரை". துக்கம் வந்து அடைத்து இறுக்கியிருந்த அவளுடைய அதரங்கள பிளந்தன.
“நீ இன்னும் தூங்கவில்லியாம்மா!" மகனைப் பார்த்துக் கேட்டபடியே அவனின் நாடியைப் பற்றினான் கதிரேசன்.
புலன்களில் மலர்ச்சி!
கதிரேசன் தோளில் இருந்த ஈரத்துணியை வெளியே கட்டியிருந்த கம்பியிற் காயப்போட்டான். பார்வதி கணவன் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டு குசினிக்குகிட்ட சென்று விட்டாள். அடுப்புப் புகையத் தொடங்கியது! கதிரேசன் அறிந்து கொண்டான். அவளுடைய நெஞ்சம் கருகியது; அதை அவனால் உணரமுடியவில்லை.
மகளைத் தூக்கி நெஞ்சில் இருத்தியபடி முற்றத்திற் கிடந்த தென்னேலைப் பாயில் சாய்ந்தான்.
மழலை இன்பம் அவனுக்கு பொழுதைக் கழித்தது. சமையலும் முடிந்துவிட்டது.
வயிறுகள் நிரம்பின. ஒரு சாண் வயிற்றை நிரப்ப எத்தனையோ மைல்கள் கடந்து வந்தான். அவருக்குத் தப்பி, இவரிடம் பிழைத்து அவன் வந்து கண்டதென்ன?
அக்கரைக்கு இக்கரை பச்சை என்பதைத்தான் கண்டான். இந்த உண்மையை ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன் அவன் அறிந்து விட்டபோதிலும், இதமான இல்லறத்தை விட்டு அவனால் பிரிய முடியவில்லை.
“எத்தினை பேர் கலியாணம் முடிச்சுப் பிள்ளையஞம் பெத்துப் போட்டு, விட்டுட்டு ஒடியிட்டாங்க . பார்வதியையும் என்றை குஞ்சுகளையும் தவிக்க விட்டுப் போட்டு நானும் போக மடையனே!
கஷ்டங்களின் ஊடே மனித நிலையை அவன் மறந்ததுண்டு. பின் அவனுடைய உள்ளத்தில் ஊறிய அன்பு வெள்ளம் வந்து கெட்ட எண்ணங்களைக் களைந்து
விடும்.
கதிரேசன் மனிதனாக மாறிய வேளைதான் அடுத்தவர்கள் மிருகமானார்கள்.
“பார்வதி ஏன் ஒரு மாதிரி இருக்கிறே' ஏப்பம் விட்டபடி கேட்டான் கதிரேசன்.

Page 14
ܕܕ
அவள் விம்மத் தொடங்கினாள். “நம்மளை அனுப்பப் போறாங்களாம் "எங்கை?" - திகைப்பு.
"இந்தியாவுக்கு." - சுருக்கம்.
"உன்னையுமா?" - சிரிப்பு.
“உங்களை." - ஏக்கம்.
கதிரேசனுக்குதலை சுழன்றது. “நடராசாவின்ரை வேலையா இது?" உணர்ச்சியற்ற மரக்கட்டையாய் நின்ற கதிரேசனின் வாயிலிருந்து உதிர்கின்றன இவை.
“அவன் நல்லாயிருப்பானா?” “காட்டிக் கொடுக்கின்ற கயவர்கள் எங்க மத்தியில் தான் அதிகம். பெரியவை சொல்லுவினம். சரித்ரத்திலேயும் இது தான் அதிகம் எண்டு”
“பார்வதி. நான் ஒண்டு சொல்லுறன் நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை முனிஸ்வரன் நம்மளைக் கைவிடமாட்டான். நம்மடை நாலு பிஞ்சுகளையும் காயவிடமாட்டான். நம்பு. என்னை நம்பாட்டாலும் அவனை நம்பு!”
“கடவுளே!.ம்" இருவருடைய நெஞ்சங்களும் பொருமின; அவற்றிலிருந்து புறப்பட்ட மூச்சுக்கள் ஒன்றுடன் மற்றொன்று காற்றோடு கலந்தன.
ஒரு வருடமாகி விட்டது!
கதிரேசன் சங்கு குளிப்பதை நிறுத்தவில்லை. முனிஸவரன் மீது பழியைப் போட்டபின்பும் அவனுக்கு என்ன வந்துவிடபோகிறது?
ஆனால். ஒரு நாள் திடீரென்று பொலீசார் அவனுடைய வீட்டைச் சோதனை போட்டார்கள். அவன் திருடவில்லை. "கள்ளத்தோணி அந்தப் பட்டம் பெற்றுவிட்டான். அது தான் அவன் செய்த குற்றமா? சக வர்க்கமும் சதா கேட்கும் பெயர் இது தானே?
கதிரேசனால் நிலைமையைச் சமாளிக்கமுடியவில்லை. சுங்க இலாகாவினர்ைப் போல அவனும் படித்திருக்கிறானா குறுக்குக் கேள்விகளை அள்ளி வீசி, வழி தெரியாமல் அனுப்பிவைப்பதற்கு.
நெஞ்சிலே வலி பொங்க, மிரள, மிரள விழித்தான்.
"ஓய். உன்ரை பாஸ்போஸ்ட் எங்ஹே?” ஒரு பொலிஸ் வீரன் தமிழ் பேசினான். 'அது எனக்கெதுக்கு வேணுமாம்” “யாரை ஓய் கேக்கிறே? கூப்பனும் இல்லை?” ந்ேத வீரன் விழுந்து கிடந்த தென்னங் குற்றியில் தனது ‘பூட்ஸ்' காலால்
 

உதைத்தான். கதிரேசனுக்கு விழுந்திருக்க வேண்டியதை அந்தக் குற்றி தானே வாங்கிக் கொண்டு, தியாகியாகி விட்டது.
“அதுவும். கடையிலே.”
கொண்டு காவும் பஞ்சியைப் பார்த்து கூப்பன்கள் அத்தனையையும் கடையிலேயே வைத்திருந்தான் கதிரேசன்.
ஞாயிற்றுக்கிழமை கடையைத் திறக்கவும் மாட்டார்கள். கதிரேசனால் நிலைகொள்ள முடியவில்லை.
பார்வதி மூலையில் நின்று அழுதுகொண்டிருந்தாள். அவள் விசும்பல் எங்கும் பரவியது.
‘'நீ எங்களுக்கு டிமிக்கி குடுக்கிறே? ஏறுடா வான்லே'
அதே வீரன் கதிரேசனைப் பின்னால் பற்றித் தள்ளிவிட்டான். நிலை தடுமாறி நிலத்தில் வீழ்ந்தான் அவன்.
“ஐ.ய்.யோ. என்ரை ராசா.” என்று அலறியபடி அவன் மீது வீழ்ந்தாள் பார்வதி. குழந்தைகள் மூன்றும் கண்களைப் பிசைந்தன.
மூத்தவன் - ஐ.ய்.யா. ஆஆஅ." என்று அழத்தொடங்கினான். அவனுக்கு அழத்தெரியும். மற்றக் குழந்தைகள்.
‘பா.ர்.வ.தி என்ரை செல்வங்கள். ஐ.ய்.யோ!. முனீஸ்வரா?.
தென்னந்தோப்பினுடே பறந்து கொண்டிருந்த போலிஸ் வண்டியிலிருந்து இந்த வார்த்தைகள் மிதந்து, தேய்ந்து, அழிந்து கொண்டிருந்தன.

Page 15
രtک66ك dه لاره ملا
பழுக்கக் காய்ச்சிய இரும்பை நெற்றியின் அண்டையில் வைத்துப் பிடித்தாற் போல எறித்துக் கொண்டிருந்த வெய்யில் முகத்தில் கரிக்கோடுகளை கீறிக் கொண்டிருக்க, அந்த எரிப்புணர்வைக் கைக் குட்டையால் துடைத்துக்கொண்டே நடந்து கொண்டிருந்தான் அவன்.
கொழும்பு வீதிகளை மிகவும் கஞ்சத் தனமாக முற்றுகையிட்டு, நடைபாதைகளையும் தாம் மட்டும் ஓங்கி உயர்ந்த கம்பீரத்துடன் நின்று கொண்டிருந்த அந்தக் கட்டிடங்கள் அவனுக்கோ, அவனைப் போன்று ஏதேதேதோ காரணங்களுக்காக அங்குமிங்குமாகவும் அவசரஅவசரமாகவும் போய்க்கொண்டிருக்கிற மனித கூட்டத்திற்கோ கிஞ்சித்தும் நிழலைக் கொடுக்காமல் இருந்து ஒன்றும் இந்த நூற்றாண்டுக்கு அதிசயமான காரியமல்ல.
தனக்கென்று எல்லாம் உடையவன் தனக்கென்றே எதுவும் இல்லாதவனுக்குக் கொடுத்துத் தான் தீரவேண்டும் என்பது ஆண்டவன் கட்டளையா? என்ன?
தூரத்தே தெரிந்த மணிக் கூண்டுக் கோபுரமும் அதற்கு எதிர்ப்புறமாகச் சென்ற கடைத்தெருவும் அவன் கண்களை விட்டுப் பின்னோக்கிக் கொண்டிருந்தன.
 

காலையில் ஊரறிய உலகறிய உத்தியோகத்தன் போல களிசான் ஷர்ட் எல்லாம் ‘டிப்டொப் பாக அணிந்து, காசு முட்டியைத் தடவி மனைவி பொறுக்கிக் கொடுத்த சில்லறைகளுடன் கோட்டைக்கு வந்து, பதினொரு மணி மட்டும் ரத்திரம் போன்றுள்ள ஓர் அஸோஸியேஸன் கட்டிடத்துக்குள் நின்று அன்றைய தினசரிகளையும், ஆங்காங்கே குழுமி செஸ், பில்லியாட்ஸ் என்று விளையாடுவோரையும் வேடிக்கையாகப் பார்த்துவிட்டு, அவன் போகத் தொடங்கியதுந்தானா, மந்த வெய்யில் அப்படி எறிக்க வேண்டும்?
வழமை போல அவன் நடந்து கொண்டிருந்தான். ஓர் இராணுவ வீரனின் கம்பிரமான நடையை இயல்பாக ஏற்படுத்திக் கொண்ட அவனுடைய உடலில் உள்ள கபிரம் மனதில் இல்லாததால்தானோ என்னவோ, அவன் தனது பிஸினஸ்க்கு உகந்தவையும் தெரிந்தவையுமான முகங்களை, அவை ஆணாக இருந்தாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன - அவன் தேடிக்கொண்டும் அப்படி ஒன்றிரண்டு தெரிந்தால் சிரிந்து அறிமுகம் செய்து கொண்டும் நடந்து கொண்டிருந்தான்.
வீட்டிலே காலங்காத்தலை அவள் அவனுடைய மனைவி கொடுத்திருந்த 'லிஸ்டை அவன் நினைத்துப் பார்த்தபொழுது, தலையே சுழன்று விடும் போலிருந்தது. அவ்வளவுக்கு ஜனநெரிசலில் ஒரு பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கும் ஒரு தங்கச் சங்கிலி மீதோ, சைட் பாக்கட் தொக்குத்தொக்கென்றடிக்கப் பாங்குக்குப் போகும் ஒரு பணக்காரனின் பை மீதோ கைபோட்டால் அவனுடைய சில நாட் பிரச்சினைகள் தீர்ந்து விடும்.
ஆனால்.
அப்படி அவன் செய்துவிட்டால், செய்து ஒரு வேளை பிடிபட்டால் பொலிஸிடம் வாங்கும் அடிக்கும் உதைக்கும் மருந்து கட்டவே திருடும் பொருள் போதாமல் இருக்கலாம் என்று அவன் நினைத்து, எக்காரணங்கொண்டும் அப்படியொரு வேலையைத்தான் செய்யக் கூடாது என்று தீர்மானித்துமிருந்தான். அதனால் அந்த அவனுடைய பிஸினஸ்ஸ"க்குத் தானே தரகனாக அவன் நடந்து கொண்டிருந்தான்.
மத்தியான வேளை. அசாங்க மாடிகளிலும் அலுவலங்களிலுமிருந்து விடுபட்ட பறவைகளைப் போல, வீட்டுக்கும் ஹோட்டல்களுக்குமாக உத்தியோகத்தர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். அவனுடைய பழைய "கொண்ராக்” குகளும் வெளியில் வரும் வேளை அது என்றதும், கடலோரமாக அடைந்த அந்த நாற்சந்தியை நோக்கி விரைந்து கொண்டிருந்தான் அவன்.
டியூஸன் பீஸ் கட்டவில்லை என்பதற்காகப் பாடசாலைக்கே போகமாட்டேன் என்று அடம் பிடித்த அவனுடைய மகளும், மாற்றி உடுக்க ஆனமுறையில் டைட்' களிசான் இல்லை என்று சிடுசிடுத்து, காலையில் பேக்கரியிலிருந்து பெரும்பாடுபட்டு
"সম্প্রস্থল

Page 16
இறக்குமதி செய்திருந்த பாண்துண்டையே துச்சமென மதித்து பட்டினியாகவுே பாடசாலைக்குச் சென்ற மகனும் வீடு திரும்புவதற்கு முன்னர் அவன் சாதிக்க வேண்டிய அந்தக் காரியம் தலையைக் குடைந்து கொண்டிருந்தது.
வீட்டிலே அவனுடைய வரவை, அவன் பணத்துடன் வீடு வரும் அந்த வரவைப் பார்த்திருக்கும் மனைவியின் நினைவும், அவள் இப்பொழுது பட்டினியாகவே கிடப்பாள் என்ற உணர்வும் அவனை வாட்டத் தொடங்கிய வேளை, நடை பெயராதவனாக அந்தக் கட்டிடத்தின் படிகளில் இளைத்து, இளைத்து ஏறி தூணுடன் தோள் சாய்த்து நின்றான் அவன்.
பக்கத்தால் நடந்து கொண்டிருந்த யாரோ ஒருவன் லயிப்புடன் இழுத்த சிகரட் புகை வெளிவந்து, அவனுடைய முகத்தில் பட்டபொழுது, அவனுடைய நாசி அந்த நெடியை நுகர்ந்து ஒரு சிகரட்டுக்கும் வழியற்றவாறு ஆக்கிவிட்ட தன் நிலையை நினைத்து வருந்தவைத்தது.
பாக்கட்டில் இதுவரையும் கிலுங்கியது மட்டுமல்லாமல், நான் இருக்கிறேன் என்று அவனுடைய நெஞ்சில் அவன் ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும் போது அடித்து அடித்து உறுத்தி, உணர்த்திய சில் சில்லறைகளை, கீழ்கண்ணால் பார்த்தான்.
பறுவாயில்லை! ஒரு பிளேன் டீக்கும் சிகரட்டுக்கும் பஸ்ஸஸுக்கும் மேல் மிச்சமாகக் கிடந்த சில நாணயங்கள் சிரித்ததும், தவழ்ந்த குழந்தை படியிற் சறுக்கியது போல் அப்பால் உள்ள ஒரு டீக் கடைக்கு புகுந்தான் அவன்.
அந்தக் கடைக்காரன் அவனை அடிக்கடி பார்த்ததாலும், தொழில் உதவி புரிவதாலும் பழக்கப்பட்டு விட்டதால், அவனை சிரித்த முகத்துடனும் சிரித்த கண்களுடனும் வரவேற்றதை பூரிப்புடன் ஏற்றுக் கோண்டான் அவன்.
“என்ன, ரொம்ப நாளாச்சு. ஏது இந்தப் பக்கமே வரல்லையே” என்ற கடைக்காரன் கேட்டதும், கனநாட்களாகத் தான் பொலிஸ் பாதுகாப்பில் விளக்கம் முடியும் வரையும் இருந்த கதையை எப்படிச் சொல்வது என்று திணறினான். பின்னர், கேள்விக்கு எவன் ஒழுங்காகப் பதில் அளிக்கிறான் என்று நினைத்தவன் போல கூறினான்
966.
“சும்மா தெரியாதா! பயணமொண்ணு போயிருந்தேன். பிளேன்டி ஒண்ணு. அப்புடியே சிகரட். உம் .உஸ். என்ன வெய்யில். மனிதனை அதுவுமில்லியா துன்னப் பாக்குது என்ன மொதலாளி” என்றபடி நீட்டாகப் போடப்பட்டிருந்த வாங்கிலில் அமர்ந்தான்.
“ஏன். சோடா குடிக்கிறீங்களா?” என்றபடி சோடாப் புோத்தலை எடுத்துத் திறக்காத குறையில் முதலாளி கேட்டதும், “சேசே வானாம்!” என்றான் அவன்.
 

அவன் கொடுத்த சிகரட்டைப் பற்றி வாயில் வைத்து ஒரு ‘தம் இழுத்த பொழுது, தான் எதிர்பார்த்து வந்த அவள் வந்து கொண்டிருந்ததைக் கண்டு, பற்றிய சிகரட்டை மாறி வாயில் வைத்தவன் போல் துடித்து, எழுந்து ஒடினான் அவன்.
“ஏய்! சல்லி குடுக்கலியே. பிளேன்டி வானாமா?” முதலாளி உரத்துக் கத்தியபொழுது” கொஞ்சம் பொறு” என்று ஒடிக் கொண்டே சைகைகாட்டிய அவன் அவளருகில் வந்து தான் மூச்சை விட்டான். இவ்வளவுக்கும் கைளிலிருந்த சிகரட்டும், நினைவிலிருந்த உழைப்பு வெறியுமே அவனிடமிருந்தன.
“லில்லி. இன்னிக்கு ஏதாச்சம் ஒதவி பண்ண முடியுமா?" என்று அவன் கேட்ட பொழுது, சற்று நிதானித்து, பின்னும் முன்னும் சித்தே பார்த்த லில்லி சொன்னாள்.
“உடம்புக்குச் சரியில்லை. யார் வந்திருக்கான்?"
“பெரிய தொரை. நோமல் பீசைக்காட்டிலும் கூட்டிக் கேட்க்கலாம் ஆமா!" . குழந்தைக்கு மிட்டாய் ஆசை காட்டுவது போல, தனது அரை மாதச் சம்பளமான ஐம்பது ரூபாவுக்கும் மேலாகக் கிடைக்கும் என்ற ஆனந்தத்தில் அவள், மெல்லச் சிரித்ததாள்.
“என்ன லில்லி?” இடிவிழுந்த உணர்வுடன் கேட்டான் அவன்.
“ஒண்ணுமில்லே. எனக்குச் சொகமில்லை. அது தான்” லில்லி வேதனை வழியக் கூறியதும், அவன் அழுதே விடுவான் போலிருந்தது.
காலையிலே அஸோஸியேஷன் கட்டிடத்தில் தனக்காகக் காத்திருந்து, சந்தித்து விட்டு, ‘சோட்லீவில் வீட்டுக்கு வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற அந்தத் துரையை நினைத்ததும், இதுவரையும் யாரையுமே திருட்டுத் தனமாக ஏமாற்றாதிருந்த தன் நேர்மைக்கு மறுபடியும் களங்கம் வந்து விடுமோ என்று அஞ்சினான் அவன்.
“ஒண்ணு பண்ணலாமா? சொகமோ சொகமில்லியோ. நீ தான் எண்ணு காட்ட ஒருக்கா வந்து போயேன்” என்று அவன் கெஞ்சியதும் லில்லி மறு பேச்சின்றி உடன் பட்டாள்.
சாதாரணமாக விருப்பமற்ற அல்லது தேவையற்ற வேளைகளில் அவனுடைய மற்றும் “பேற்றன்கள்” காட்டும் கிருபையைத் தான் லில்லியும் 'சுகமில்லை” என்று கூறிக் காட்டினாளா என்று ஏங்கிய அவனுக்கு. அவள் உடன் பட்டது ஆறுதலையளித்தது.
பாக்கட்டுக்குள் கிடந்த சில்லறையை எண்ணி, முதலாளிக்கு இருபத்து மூன்று சதத்தைக் கொடுத்துவிட்டு, அவர்கள் புறப்பட்டதும், அடிக்கடி ஓடிக் கொண்டிருந்த பஸ் வேலைநிறுத்தஞ் செய்தது போல் வராமலே விட்டது.

Page 17
அவர்கள் வெகு நேரமாகப் பஸ் ஹோல்டில் காத்துக் கொண்டு நின்றார்கள்.
அவள் சொன்னாள்: “இரவில் ஒண்ணுமே செய்ய முடியாமே இருக்கு. பொலிசுத் தொல்லை பெரிய தொல்லையாய் போயிட்டு. வேலைக்கும் வழியில்லை. காசுக்கும் வழி இல்லே. நல்லா பிஸ்னஸ் நடந்தப்போ எல்லாமே நல்லா இருந்துச்சு. பொலிசு பிடிச்சதும் எல்லாரும் பயப்புடுறாங்க. இப்ப பகல் தான் ஒரு கதி. ஆக்களும் குறைவு."
“நானும் ஊருக்குப் போன தோடை ஒரு வாரம் லீவு அடிச்சிட்டேன். ஒடம்பு தாங்குதில்லே' லில்லி கூறிவிட்டு, ‘ஆக்கொட்டினாள்.
அப்பொழுது வெளித்த மேகங்களுக்கிடையே சூரியன் தகித்துக் கொண்டிருந்தது.
'நாலு நாளா பாண் தான் சாப்பாடு. பிள்ளைங்க சோறு திண்டு ஆசைப்பட்டுப் போச்சுதுகள். அதுகளைப்படிக்க வைக்கோணுங்கறதுக்கு நானும் பத்மினியும் படுற பாடு கொஞ்சமில்லே. என்ன பண்ணுறது. எல்லாம் தலை எழுத்து. பார்த்த காஷியர் வேலையை ஒழுங்காப் பார்க்க முடிஞ்சிடிச்சா? கள்ளன் பட்டந்தான் கடைசியிலே கெடைச்சிச்சு."
பத்மினி என்று அவனுடைய மனைவியைக் குறிப்பிட்டு அவன் சொன்னதும் லில்லி கேட்டாள். "ஆமா!” அவங்க சொகந்தானே. என்ன வடிவான பொம்பிளை. உங்க வீட்டிலே நான் தங்கி நின்னப்போ வர்ரவங்கல்லாம் அவவைப் பத்தியே கேட்டுக்கிட்டிருப்பாங்க."
அவள் சொன்னவற்றை அவனே உணர்ந்திருந்தவன் போல, அதைப் பொருட்படுத்தாமல் கூறினான்.
“எனக்கு அது பாவம்ன்னு படுது. நான் என்ன பண்ண முடியும்?” அவன் கூறியதை விளங்காதவளாக இமைகளைச் சுருக்கி, உதடுகளை அமுக்கி அவனைப் பார்த்தாள் லில்லி. பின்னர்.
“எது எப்படியும் ஆகட்டும். ஆமா. நான் வந்து ஓங்க தொகையை ஏமாத்தினேன்னு அவர் கோபிக்க மாட்டாரா?”
“சே! ஒண்ணும் நடக்காது. செற்பண்ணிட்டா அவரு சந்திச்சுக்குவார். பத்மினி இருக்கிற இருப்பிலே துட்டுக்கும் வழியில்லேன்னா பொசுக்கிப்புடுவா. பொசுக்கி. காத்தாலே சில்லறை குடுத்தா. அப்ப என்ன சொன்னா தெரியுமோ. ஒரு கெழடையா ஏமாத்துனேனாம். இன்னிக்கும் ஒண்ணுமில்லாட்டி, என்னையே வுட்டுக்கு வரப்புடாதுன்னுட்டா."
‘அப்பிடியா?”
 

“அதையேங் கேக்கிறே! மொதல்லே வூட்டுக்கு ஒருத்தியைக் கூட்டிபோனப்போ என்ன பாடுபட்டா. சோ! இதுவே பாவம் புண்ணியம்னு ஒண்ணுமில்லை. பணமும் சந்தோஷமுந்தான் இருக்குன்னு நான் சொன்னேன். ஆறு வயசுப் பொண்ணை வெச்சிக்கிட்டுச் செய்தால் அவவும் நாளைக்கு இப்புடித்தான் பண்ணுவான்னு அழுதா. பத்மினியைத் திருப்ப நான் பட்டபாடு. அப்புறம் ஒரு மாதிரியா காலம் போயிடிச்சு. இப்ப என்னடான் னுா பொம்பளைங்க வந்தாலும் ஆம்பளைங்க வேணாமின்னுறாங்க.. காலமே மாறிப் போயிடிச்சி." என்று கூறிவிட்டு, அவளைப் பார்த்தான் அவன்.
லில்லி எங்கோ வெறித்துக் கொண்டு நின்றாள். கட்டிடங்களையும் கடந்து வீசி வந்த கடற்கரைக் காற்று, அவளுடைய முந்தானையையும் இடம் நகர்த்திவிட்டு அப்பால் செல்வதை அவதானிக்காதவள் போல் அமைதியாக நின்றாள் அவள்.
எப்படியோ பிறந்து எப்படியோ வளர்ந்து எதற்காகவோ உத்தியோகம் என்று கம்பனியொன்றில் மிக அற்பமான தொழிலின் மூலம் மிகமிக அற்பமான சம்பளத்தைப் பெற்று வயிறு வளர்க்க நேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைப் போன்ற அவள், தன் ஏழ்மையையும் அந்த ஏழைமையை நாகரீகம் என்ற மேன்மையால் மறைக்கப் பார்க்கும் தாழ்மையையும் எண்ணி நோகின்றாளா என்ற வியப்புடனும், மனவேதனையுடனும் அவன் அவளைப் பார்த்தான்.
நெடுநேரமாகப் பேச்சரவங் கேட்காது போன திகைப்பில் சுயநிலை பெற்றவளாக, தனது மேலங்கங்களை வெறித்து இரசித்து நிற்கும் சில ஆண்களிடமிருந்து அவற்றை மறைக்கத் துடித்தவளாக, "லபக் கென்று தாவணியை அள்ளித் தோளில் இட்டாள். பின்னர் ஒன்றும் அறியாதவள் போலச் சிரித்த லில்லியைப் பார்த்துக் கேட்டான் அவன். "மாடு வெச்சுப் பால் கறக்கிறானுகளோ, கோழி வெச்சு முட்டை எடுக்கிறானுங்களே. அதுல்லாம் பாவமில்யைா லில்லி. நான் ஒன்னைப் போல ஆக்களை வெச்சு நம்ம எல்லோருடைய பொழைப்பையும் பார்த்தா. சட்டம்னு வர்ராங்க. சட்டம்னு."
அவன் சொல்லி முடிப்பதற்குள் அங்கு பஸ் ஒன்று வந்து, காத்திராப் பிரகாரமாக நின்றதும், இருவரும் அதில் ஏறிக் கொண்டனர்.
பஸ் போய்க்கொண்டிருந்தது. அவன் லில்லியோடு உராய்ந்தபடி அமராது சற்றே விலகியபடி, குனிந்து, குரலைத் தாழ்த்திக் கேட்டான்.
"ஆமா! பஸ் ஹோல்டிலே ஏன் மூஞ்சியை ஒரு மாதிரி வைச்சிருந்தே?”
“ஒண்ணுமில்லே. எங்க கதையை யோசிச்சேன். சில பொண்ணுங்க வயித்தை வளக்கப்பாடுபடுறாங்க. மத்தவங்க பணஞ் சேத்து கம்முன்னு வாழப்பாக்கிறாங்க. இன்னும் ஆக்கள் ஆசைவைச்சா அங்க இங்க போறாங்க. அது தான் யோசிச்சேன்.” என்று கூறிவிட்டுச் சிரித்தாள் லில்லி.

Page 18
தனது கிளுக்கென்ற சிரிப்பொலி அநாவசியமாக யாருடைய பார்வையையும் இழுத்ததா என்ற சிவந்த மணிக் கழுத்தை வெட்டிப் பார்த்துவிட்டு, அந்த வேளை பஸ்ஸில அதிக சனமே இல்லை என்ற உணர்விலும், திருப்தியிலும் தொடர்ந்து கூறினாள்;
“ஒலகம் போற போக்கிகைப் பாத்தா என்னன்னமோல்லாம் நடக்கும் போலிருக்கு. இல்லியா?” அவன் தலையை அசைத்து ஆமென்றதும் அவள் கூறினாள்.
“நான் தான் ஒறிஜினல் ஏழை. ஒங்க கதை பாவமாயிருக்கு. அது தான் ஒடம்பு சொகமில்லைன்னு பொய் சொல்லியும், மனசு கேக்கல்லே. ரொம்ப அசதி. அவ்வளவு தான். உதவி பண்ணனும் போல இருந்துது. வந்துட்டன். அத்தோட நானும் போயி ரொம்ப நாளாவுது.”
அவன் வியப்புடனும், நன்றியுணர்வுடனும் நிர்க்களங்கமாக அவளைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.
“நீங்க ஒருத்தரும் சரி போகாட்டி, அப்புடியே கோல்பேஸிலே விழுந்துடறதுன்னு முடிவு பண்ணித்தான் நின்னேன். வீட்டிலே பத்மினி படுற பரிதாவத்தைப் பாக்க ஏலாது. பிள்ளைங்க, கடன்காரங்க ஒருபக்கம் நசல் போடுறாங்க."
அவன் அப்படிக் கூறும் பொழுது அவனுடைய குரல் தழதழுத்ததை லில்லி உணர்ந்து கொண்டாள்.
“ஒங்கட சம்சாரம் ஒழுங்கா இருக்கிறதினால தான் நீங்க இந்தப் பாடு படுறிங்க. இல்லியா?” என்று அவள் கேட்டதற்கு, கண்களை மூடி, உதடுகளைப பிதுக்கித் தலையசைத்தான் அவன்.
அவர்கள் அவனுடைய வீட்டை நெருங்கும் பொழுது நேரம் இரண்டு மணியாகியிருந்தது.
பாடசாலைக்குச் சென்ற பிள்ளைகள் திரும்புவதற்கு இன்னும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் இருந்ததால், அவனுக்குப் பெரும் ஆறுதலாயிருந்தது 99.
லில்லிக்கு மெதுவாக வரும்படி சைகை காட்டிவிட்டு தான் முன்பாக நடந்து, வீதிக்குப் பக்கமாக உள்ளே ஓர் ஒற்றையடிப் பாதைவழியாக நடந்தான் அவன். அவள் அருகில் உள்ள குறுக்கு வீதியின் முடக்கில் காணப்பட்ட கடைக்குச் சென்று டிஸ்பிறினும் சாக்கலெட்டும் வாங்கிக் கொண்டு விருந்தினர் போல் அவனது வீட்டை நோக்கி நடைபோட்டாள்.
வீடு வழமைக்கு மாறாக முழுவதும் பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. தனியே வீட்டில் தவித்துக் கொண்டிருந்த பத்மினி எங்கே
 

என்ற கேள்விக் குறியுடன் சற்று நின்று பற்றைகள் நிறைந்த பின் வளவுக்குள் விழி வீசிய அவன், வீட்டின் பின் புறமாகவே சென்று கோடிக் கதவின் உட்புறமான தாளைத் திறக்க முயன்றான்.
அப்பொழுது உள்ளே கேட்ட பேச்சரவமும், சிணுங்கல் குழம்பல் ஒலியும் அவனைத் திகைக்க வைத்தன. பின்னர் வெறி கொண்டவன் போல அந்தச் சத்தம் வந்த அறையின் பக்க ஜன்னலால் ஏறி உள்ளே பார்த்தான்.
அவனுடைய கைகள் கம்பிகளைப் பற்றத் திராணியற்றனவாக உதறின. கால்கள் பதிந்திருந்த சீமெந்துக் கட்டுத் தகர்ந்து விழுவது போல் உணர்வும், எது செய்வது என்று ஆராய்ந்து கடைசியில் ஒன்றுமே செய்ய வழியில்லாது கீழே வீழ்ந்தான் அவன்.
அவனுடைய தொழிலற்ற வாழ்க்கையில் எத்தனையோ உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்திருப்பான். அப்படி அவனுடைய அந்த உறவுகளுட் சிக்கியவர்கள் அப்பொழுதோ பின்னரோ யார் யாருக்கோ, மனைவியாகத் தான் இருப்பார்கள். ஆனால் தன் பேடிமையை, மிகைப்படுத்தி ஆண்மையையே அவமதித்து தன் மனைவியே நடப்பாள் என்று அவன் நம்பியிருக்கவில்லை.
அவன் கண்கள் குதம்ப, நீர் வழியக்கட்டோரத்துடன் கிடந்த கோலத்தைக் கண்ட, லில்லி திகைத்து, அந்த யன்னலைப் பார்த்தாள்.
அறைக்குள்ளிருந்து அவளுக்குப் பழக்கமான துரையும், பத்மினியும் வெளியே பார்ப்பது தெரிந்தது.
அவர்கள் பகலை இரவாக்கியது பொய்யோ என்னவோ, அந்தப் பகலே இரவாகிவிட்ட அந்த நபுஞ்சகத் தன்மை அவனுடைய கண்களில் தெரிந்தது.
இனி எனக்கு வேலை இல்லை என்று முணுமுணுத்தபடி லில்லி வெளியேறினாள்.
அது அவன் காதுகளில் விழவில்லை!

Page 19
3. (?レー
அல்லும் பகலும் உழைத்து, அலுத்து அயர்ந்து தூக்கிக் கொண்டிருந்தான் சுப்பிரமணியம். அவனுடைய தூக்கத்தைக் கலைக்க விரும்பாமல், அவனருகே அவன் உசும்பிப் புரளும் வேளை வரை விழி பதித்து அமர்ந்திருந்தாள் இராசநாயகி.
அமைதி பொங்குகின்ற அந்த நடுநிசியில் அத்தனையும்அவனாகிக் கிடந்த சுப்பிரமணியத்துக்கும் சோறு கொடுக்கவேண்டும். மனைவியின் அந்தக் கடமையில் மனம் லயித்திருந்தவள், நீண்ட நேரப் பொறுமையை இழந்தாள். மறுகணம் அவனுடைய நெற்றியை மெல்ல நெருடினாள்.
பகல் முழுவதும் கொட்டிய மழையில் உடல் வெல வெலத்துப் போயிருந்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் வயலில் வரம்புகளைக் கட்டினான். பொழுது படும் வேளையில் உலகம் இருட்டில் மூழ்கத் தொடங்கியது. புல்வெளியிற் கட்டியிருந்த தனது பசுக்கன்றுகள் இரண்டையும் அவிழ்த்துக் கொண்டு வீடு வந்த சேர்ந்தான் அவன். அவற்றை மாட்டு மாலிற் கட்டிவிட்டு முகங் கழுவி தன்னுடைய கஷ்டங்களிற் பாதியைக் கடவுளுடன் பகிர்ந்தான். அதன் அடையாளமாக நெற்றி முழுவதும் திருநீறு பதித்து, சோற்றுக்காக அடுக்களைக்குச் சென்றான்.
6 6. jJाgub'
 

அவனுடைய அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து தேநீர்க் கோப்பையை ஏந்தியபடி அடுக்களையை விட்டு வெளியே வந்தாள். கொஞ்சம் வேகமாக வந்த சுப்பிரமணியத்துடன் அவள் மோதியதால் தேநீர்க் கோப்பை “தடால்” என்று நிலத்தில் வீழ்ந்தது. அவர்களுடைய கால்களில் ஊற்றுண்டது. அவசரப்பட்டுத் தான் வந்ததை எண்ணிய வருத்தத்தில் சிலையாகிச் சற்று நின்றாள். அதே வேளையில் காற்றிலிருந்து இறங்கிய பட்டம் புோல், நிலை குலையமல் அவனுடைய கால்களைக் கைகளால் வருடி விட்டாள்.
சுடுநீர் பட்டும் உள்ளத்தைப் போல் உரமும் வலுவும் பெற்றுவிட்ட அவனுடைய உடலின் கால்களுக்கு அந்தச் சூடு பெரிதாகத் தெரியவில்லை. தான் வேதனைப்படுவதாக காட்டிக் கொண்டால் ராசத்தின் முகம் கலங்கிப் புலம்பத் தொடங்கிவிடுமே என்ற காரணம் அவனைச் செயலறச் செய்தது.
“பறுவாயல்லை நீ எழும்பிப் போய் இன்னொருக்கா ஊத்து. நான் திண்ணையிலை இருக்கிறன்.”
அதரங்கள் குவிந்து அடுக்கிக் கொண்டிருந்தன. அவன் மெல்லக் குனிந்து அவள் புயங்களைப் பற்றித் தூக்கிவிட்டான். அவள் கைகள் ஒடிந்த சிலைபோல் அவனுள் தானாகி அயர்ந்தாள்.
99
“ராசம் ஏன் நிக்கிறியாம்?.
99.
“உம். சீனி இல்லை. கடைக்குப் போயிட்டு வாறத்துக்கும்.
“காசில்லை.ம். நீயும் நானும்தான் இருக்கிறம் சாப்பிட்டால் என்ன சாப்பிடாட்டி என்ன, உனக்கும் எனக்கும் தான் பசிக்கும். ஏ. சீனி இல்லாட்டிப் பறுவாயில்லை. சோத்தைப் போடு."
“இந்தக் குளிருக்கை சம்பலும் பச்சை அரிசிச் சோறும். என்ன செய்யிறது? எல்லாம் எழுத்து."
அவளுடைய அந்த உதடுகள் உள்ளும் புறமும் பிதுங்கத் தொடங்கின. ஒருச் சாய்ந்து கவிந்து மண்ணை முகாமிட்டிருந்த அந்த விழிகளின் கடைப்புறங்களில் கசிவு.
"இராசம் மிளகாய் கிடக்கோ?”

Page 20
yy
“கொஞ்சம். கொஞ்சம்.
‘அப்ப! நீ படலையைக் கட்டிப் போட்டு இரு. நான் இந்தா வந்திட்டன்.”
சுப்பிரமணியம் அசுர வேகத்தில் அடுக்களைக் கோடிப்பக்கமாகச் சென்றான். அவனுடைய கைகள் வீட்டு வளையில் பாய்ச் மரத்துடன் “மண்டா"வை எடுத்தன. தோரணங்கட்டி வைக்கப் பெற்றிருந்த ஓர் உமலையும் கையோடு சுருட்டி எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.
ராசம் அவனுடன்தெருவரை பின் சென்று, அவனை வழியனுப்பி விட்டு, படலையை உட்புறமாகத் தெண்டி விட்டு வீட்டுக்குள் வந்தாள்.
வாசற்படியில் அடக்கமாக வந்து அமர்ந்த ராசத்தின் நினைவுகள் கடலை நோக்கி ராஜநடை போட்டுக் கொண்டிருக்கும் கணவனைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
“இவளை முடிச்சுப் போட்டு என்னடா செய்யப் போறாய். ஒரு சதத்துக்கும் வழியில்லாத பிச்சைக்காரி. சும்மா மேனி மினுக்கத்தைப் பார்த்துச் சாகும் வரையும் கஷ்டப்படப் போறியா?”
“எஸ்.எஸ்.ஸி. படிச்சுப் போட்டு மண்வெட்டி பிடிக்கிறியே. என்ரை அப்பன் இருந்தார் எண்டால் உன்னை இப்பிடியா வைச்சிருப்பார். அறுதலி வளத்த பிள்ளையடா நீ! அப்பிடித்தான் செய்வே."
சுப்பிரமணியத்தின் தாயாருடைய மணவாழ்த்துக்கள். ராசத்தையும் வைத்துக் கொண்டு அவள் சொன்ன இந்த மொழிகளில் எத்தனையோ அர்த்தங்கள் இருக்கின்றன. அத்தனைக்கும் எத்தனையோ மட்டும் விளக்கங் கொடுத்துத் தாய் என்ற மதிப்போடு அவன் அமைதியாக நின்றான்.
ஆறுமாதங்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்ச்சி ராசத்தை இன்னும் என்னவெ செய்து கொண்டிருந்தது.
தாமோதரம்பிள்ளையின் நான்கு பெண்களில் மூத்தவளாகப் பிறந்து, காணக்கூடாத கஷ்டங்களையுங் கண்டு தினமும் செத்து கொண்டிருந்த அவள் ஒரு நாள் சாக நினைத்த போது.
‘பைத்தியக்காரத் தனத்தைவிட வேறை ஒண்டுமில்லை. இந்த இருட்டிலை தன்னந்தனியனாக வந்து கிணத்துக்கை விழுற அளவுக்கு உனக்கு என்ன நடந்து போச்சு.”
மண்டைதீவு வயல்களுக்கு நடுவேயுள்ள ஆலமர விழுதுகளை அரணாகக் கொண்டு,
 

காவல் தெய்வமாக அமர்ந்திருந்த பிள்ளையார் சிலைக்கு முன்பு, கட்டப்பெற்றிருந்த கிணற்றுள் விழுந்து, தன்னுடைய உயிரை எடுக்க எத்தனித்துத் தத்தளித்துக் கொண்டிருந்தவளின் மிடறொலி கேட்டு அந்த அவஸ்தையிலிருந்து காப்பாற்றிய வேளை, அவளைத் தன் கைகளில் தாங்கியபடி சுப்பிரமணியம் கேட்டான்.
முன் பின் முகமும், உறவுந் தெரிந்திருந்தும் முகங்கொடுத்தே பேசியிருக்காத ராசத்தை இருட்டில் முகம் பார்த்துக் கேட்டான்.
அவனிடமிருந்து தன்னை அமைதியாடு விடுவித்துக் கொண்ட அவள் விக்கி விக்கி
விம்மி விம்மி அழுதாள். பிள்ளையார் சிலைக்கு முன் காற்றில் ஆடிக்கொண்டிருந்த விளக்கு அவர்களுடைய உருவத்தை மட்டும் காட்டிக் கொண்டிருந்தது.
“ஏன் அழுகிறாய்? உங்கடை குடும்பம் கயிட்டப்படுகிறதென்டால் நீ சாகிறதாலை அந்தக் கயிட்டத்தைத் தீர்க்க முடியுமா?. சாவிட்டுச் செலவு மட்டும் கொஞ்சம் நகைக்கெண்டாலும் போதுமே”
“ஊரெல்லாம் அடிப்பட்ட கதை உங்களுக்கு மட்டும் தெரியாதா”?
ராசம் தன்வரையில் தவறில்லை என்பதை நிரூபிப்பதற்காக அந்த ஒரு நிகழ்ச்சியை நினைவு படுத்தினாள்.
“அதுக்கா?” சுப்பிரமணியம் சற்றுக் கடுமையாகவே கேட்டான்.
“நான் என்ன செய்யிறது? பெம்பிளை, கடவுள் என்னை ஆம்பிளைப்பிள்ளையாகப் படைச்சு இருந்தாலும் சிங்கள நாடு காணப் போய் ஒரு கடையிலையாவது நிப்பன்”
ராசம் அழுது கொண்டே சொன்னாள். “கொக்குவிலிலை சுருட்டுக் கொட்டிலிலை
வேலை செய்யிறவராம். நகையும் தோட்டக் காணியும் கேட்டு செய்து வைக்கச் சொல்ல அதுக்கு. அதுக்கு."
“இருக்கிற குமரைக் கடலிலை தள்ளுறதோ எண்டு சொன்னாராம்.”
é é ஆரு.?”

Page 21
வந்த ஆவேசத்தில் எல்லோரையும் வெட்டித் துண்டம் போட வேண்டும் என்ற நெகிழ்ச்சி. அவன் அவள் முன்பு மறுபடியும் அமைதியாகி சொன்னான்.
“உலகத்திலை மூத்த பிள்ளைக்குத் தான் நல்லாச் செய்து குடுக்கிறாங்கள். அவளுக்கு வருகிறவனைப் பார்த்துத்தான் மற்றவங்களும் நல்லவங்களாக வருவாங்கள். உங்கடை கதை தலைகீழாகத்தான் இருக்கு.ம். ஈரத்தைத் துடை"
தான் உடுத்தியிருந்த சாரத்தைக் கொய்து பிழிந்து விட்டான். கிணற்றுக் கட்டின் மீது புோட்டிருந்த துவாயை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அவள் தயங்கிக் கொண்டிருந்தாள்.
“உம். நான் தீர்மானித்துவிட்டேன். உனக்கு வாழ ஆசைதானே?”
அவள் இரவைப் பகலென்று நினைத்தபடி தலையை ஆட்டினாள். எரிந்து கொண்டிருந்த விளக்கில் அது தெளிவாகத் தெரிந்தது.
“இஞ்சை! என்னைப் பார்! என்னை. என்னுடைய நடப்புகளை உனக்குப் பிடிக்குதா?”
“அட! பிடிக்குதான்னா? வெக்கப்படுகிறியே. நீ சாகக் கூடாது. வாழ வேணும்! என்னால உனக்கு வாழ்வு தரமுடியும். நானும் ஒண்டிக் கட்டை தான்!”
ராசம் அடிபெயர்ந்து விழுதுகளில் தங்கிய பக்கத்து ஆலமரம் போல் “அவக்” கென்று சரிந்து அவன் இடை நிலைகளைச் சுற்றிப் படர்ந்தாள்.
“உண்மையாகவா சொல்லுறியள்! உங்களைக் கேக்கலாம் எண்டு அம்மா சொன்னா. நீங்கள் இருக்கிற இருப்புக்கு மாட்டம் எண்டு சொல்லுவியள் எண்டு ஐயா சொன்னார்.”
அவள் சிரித்து அழுது சொல்லிக் கொண்டிருந்தாள்.
சுப்பிரமணியம் தன் கால்களோடு கட்டுண்டு சாய்ந்த சுமையின் பசுமை இனக் கன்னத்தை மெல்லத் தடவி அவளை மேலே தூக்கி நிறுத்தியபடி சொன்னான்.
“நான் ஆம்பிளை”
 

“எனக்கு ஒரளவுக்கெண்டான்ன அறிவை என்னைப் படைச்சவன் தந்திருக்கிறான். என்னுடைய உடம்பும் மனமும் எதையுந் தாங்கும்.ஆனால் ஒண்டு!”
அவன் திடீரென்று நிறுத்தியதும் ராசம் பீதியுடன் பார்த்தாள். அவளுடைய உள்மூச்சு அவன் கன்னத் திடல்களைச் சுட்டது.
‘'நீ எனக்கு மனைவியாக மட்டும் இருந்தால் போதும். அது தான் உன்னிடம் கேட்கும் சீதனம். நான் எண்டைக்கும் மனிஷன்தான். அதிலே யாருக்குமே சந்தேகம் ஏற்ப்பட்டதில்லை”
அவள் அவனை வாரி இறுக அணைத்தபடி "தெய்வமே!” என்று மூச்சிழுத்தாள். ராசம் கண்களின் கோடியிற் கசிந்து வந்த திவலைகளை ஒரு வித மகிழ்வோடு துடைத்தபடி நிமிர்ந்தாள். உட்புற மண் சுவரின் மேல் "செத்தை" யில் சாய்ந்து விட்ட பிள்ளையாரின் படத்தைப் பார்த்தாள்.
அவளுடைய கண்கள் நன்றிப் பெருக்கோடு பார்த்தன. அதரங்கள் முணுமுணுத்தன.
அவள் அடுக்களைக்குள் எழுந்து சென்று கறிக்கு வேண்டியவைற்றைத் தயார் செய்தாள். சிறிது நேரஞ் சென்றபின், மத்தியானம் சமைத்திருந்த சோற்றையும் சூடேற்றி வைத்தாள்.
அவன் வந்தான்!
υπετιδι'
““guiu!”
“என்ன நித்திரை கொண்டாச்சோ"
“நீங்கள் வராமையா?”
“அது தானே!”
“ராசம் என்னுடைய ராசி - ராசம் எண்டு கொப்பா பேர் வைச்சாரோ என்னவோ. எனக்கு இண்டைக்கு நல்ல உழைப்பு. மற்றவர் கையைப் பார்க்காமல் வாழுறதுக்கு வயலும் கடலும் இருக்கு. உழைப்பு எண்டு பார்த்தா வெக்கம் எண்டது இல்லை.
ஹய்யா!”
“பாப்பம். சும்மா கேலியை விட்டுப் போட்டுக் கழட்டுங்கள்!”
“எதை?”

Page 22
நடுங்கியபடி, கடல் நீரில் நனைந்த சாரத்தை உரிந்து முற்றத்தில் கிடந்த கிடுகில் போட்டான். தோளிற் கிடந்த துவாயை எடுத்து உடலைச் சுற்றிக் கொண்டான்.
அவள் குறும்பாகச் சிரித்தது அடுக்களைக்கும், வீட்டுக்கும் ஒளித் தூது செய்து கொண்டிருந்த “லாம்பு” வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது.
ராசம் மீன் உமலுடன் அடுக்களைக்குள் போனாள்.
“காலமை சாப்பிட்டதுதான் அது பழஞ்சோறு. இந்த குளிருக்கை இப்படியும் ஒரு கூத்தா?”
தனக்குள் நினைத்தபடி அவற்றைப் பதப்படுத்தி அடுப்பையும் எரித்துவிட்டாள்.
சமையல் முடிந்தது!
உடலின் அலுப்பைச் சற்றுத் தணிக்க வேண்டி திண்ணையிற் கிடந்த பாயிற் சரிந்த சுப்பிரமணியம் தூக்கத்தில் நிறைந்து விட்டான்.
அந்தக் குளிர் காற்றுக்கிடையே உள்ளிருந்து வீசிய புது நினைவுடனும், தெம்புடனும் வந்தவன் ராசத்தின் வேலைக்குத் தடையாகக் கூடாது என்ற நினைப்பில் தூங்கிவிட்டான். ராசம் அவனைச் சோற்றுக்காக எழுபடிவாள் என்பது அவனுடைய எண்ணம்.
அவள் மறுபடியும் அவனுடைய நெற்றி மேட்டை விரல்களால் உழுது கொண்டிருந்தாள். கன்னங்கள் வழியேயும் கைகள் வளைந்தன.
வேலைகள் முடிந்ததும் முகம் கழுவி வந்த அவளுடைய கைகளிலிருந்து வந்த மணம் அமைதியான சூழலில் எதையோ நினைக்கத் தூண்டியது.
சுப்பிரமணியம் கண்களை மூடியபடி இதழ் திறந்து சிரித்தான். அவளும் சிரித்தாள் என்பதை அவன் பார்க்கவில்லை. தனது விரல்களால் மோவாயைச் சீண்டி விட்டு
எழுந்துவிட்டாள்.
அவளைத் தாவிப் பிடிக்க முனைந்த போது தான் தூக்கம் முழுவதும் கலைந்தது. அவள் சமயம் பார்த்துக் கூறினாள்.
"சாப்பிட வாருங்களேன். இண்டு முழுக்கச் சிவபட்டினி”
'உம். அது சரி. ஒரு கிழைைமக்குக் கிட்ட பட்டினியாகக் கிடக்கிறியே. அலன்ன ஆகுமோ.
y
 

ராசம் இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்தியபடி, தலையைத் தாழ்த்தி நின்றாள். கைகளின் இடை வெளியில் அவளுடைய பற்கள் ஒளி உமிழ்ந்தன.
“சாப்பிட வாருங்கள்!"
சுப்பிரமணியம் கண்களை அடிக்கடி இமைத்தான். கண்மேற் புறங்களில் குளிரையும் கொல்லும் சூடு அதை உணர்ந்து தணியாத வேகத்தில் அவளை நோக்கி போனான்.
ராசம் அவன படுத்திருந்த இடத்தைத் தாவிப்பிடித்தாள்.
வீசிய காற்றில் “லாம்பு" ஆடிக் கொண்டிருந்தது. அவனை விட்டுப் பிரிந்த சாரம் தண்ணிரில் தோய்ந்த பின் திண்ணைக் கொடியில் உலர்ந்து கொண்டிருந்தது. அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மீன் கறி ஆறி வெம்மை காய்ந்து கொண்டிருந்தது.
வானம் வெளிறிவிட்டது முகந்திருந்த நீரைப் பூமிக்கு வழங்கித் தனது பணியை முடித்த நிறைவில் வெண்முகில்கள் வடக்கு நோக்கி அசைந்து கொண்டிருந்தன.
மழை கொடுத்த நீரை வாவிகளும்,ஏரிகளும், வயல்களிலுள்ள ஓடைகளும் கடல்களும் ஏற்றுத் தக்க அளவில் மிகுந்து நின்றன.
அந்த வளவில் உள்ள ‘ஓடை" மட்டும் வெய்யிலிலும் வற்றாமலும், மழையில் பெருகாமலும் காட்சி தந்தது.
“இனியாவது சாப்பிட வாருங்கள் வேலைக்குப் போக நேரமாச்சு.”
கண்களை உறுத்தி, கூசச் செய்கின்ற எட்டு மணி வெய்யிலுக்குக் கையால் ஒதுக்குக் கொடுத்தபடி ராசம் அழைத்தாள்.
அவன் மெளனியாகி அவள் பின்னே அடுக்களையை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

Page 23
آنم کیمیا 6 کناہٹ بالا لنک
அவசரமும் பசியும் மதுரநாயகத்தை உலுக்கியெடுத்துக் கொண்டிருந்தன!
பகல் பன்னிரண்டு நாற்பத்தைந்துக்கு மதிய போசனத்துக்காக அடித்த கல்லூரி 'பெல்’ மறுபடியும் அடிக்க ஒரு மணித்தியாலம் வழமைபோலிருந்தது. அந்தக் கல்லூரிக்கு மூன்று மைல்களுக்கு அப்பாலிருக்கும் தனது வீட்டுக்குச் சென்று அன்றைய மதியம் வயிற்றைக் கழுவி விட்டு மறுபடியும் வந்து, தனது ஆசிரியத் தொழிலை மேற்கொள்ள வேண்டுமென்ற உந்தலில் சைக்கிளை மிதித்து, வீட்டுக் குசினி ஒரமாக நிறுத்தியபடி நேரே குசினியை எட்டிப்பார்த்த மதுர நாயகத்துக்குக் கிடைத்த வரவேற்பு.
அவன் அதை நினைத்து வெல வெலத்துப் போனான்.
அவனுடைய முழுவாழ்க்கையிலுமே இந்த முப்பது ஆண்டுகளிலேயே என்றுமே எங்குமே நேர்ந்திருக்காத அவமானம் அன்று தன் வீட்டிலேயே நடந்தது என்னவோ போலிருந்தது.
“சே சே! வர வர எல்லாம் ஒரு மாதிரி யாத்தான் போச்சு. ஆளைத் தெரியாமல் இருந்ததுகளுக்கு இப்ப கண்ணுந் தெரியாமல் போச்சு. மின் கழுவின தண்ணியாலை ஆலாத்தி."
மரக்கறிப் பிரியத்தோடு சைவனாகிவிட்ட அவனுக்கு, ஒரு முருங்கைக்காயுடன் சமையலை முடித்து விட்டு, ஏலவே வாங்கியிருந்த மீனை அப்பொழுதுதான் அறுக்கிக் கழுவிய அவன் மாமியார், பாக்கியம் வெளியே பார்க்காது வீசிய தண்ணிர் - அந்தக் கழுவல் நீர் - அவன் மீது - அவன் அணிந்திருந்த அந்த வெள்ளைவெளேரென்ற வேட்டி நாஷனல் மீது பட்டதும் அவர்களுடைய அந்த உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் உணர்ச்சிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது.
pianosugi zooga of
 

“ஆரு எப்ப வருகினம் எண்டு பாத்து ஊத்த அது மட்டையாலை அடிச்ச குசினியா? சுத்திவரச் சுவர். கிணத்தடிப் பக்கமாக யன்னல். நான் என்ன செய்ய?”
உள்ளே குந்தியிருந்தபடி முழந்தாழ்களில் முழங்கைகளை ஊன்றி எதுவும் தப்பித்தவறியேனும் பேசிவிடக் கூடாது என்பது போல் மெளனியாகி, சிலையாகி மரக்கட்டையாகி இருந்தாள் அவன் மனைவி கோகிலா.
*கோ.கி.லா!”
மதுரநாயகத்தின் அதட்டலும் கண்டிப்பும் நிறைந்த அழைப்பு என்ன செய்துவிடப் போகிறது என்று பேசாதிருந்தாள் அவள்.
‘'கோகிலா! எங்க வீடு பனைமட்டையாலும் தென்னை ஓலையாலும் அடைச்சு மேஞ்சது தான். ஆனால், புருஷனை தெய்வமாக மனுஷனாகப் பாவிக்க பெண் தெய்வங்கள் உள்ளே இருக்கும். கேவலம். இந்த உடம்பை வளர்க்கிறதுக்காக அதுகள் ஆடு மாடு எண்டு வெட்டுறதில்லை. அதுகள் பிறவிச் சைவம். விளங்கிக்கொள்!"
பாக்கியம் சூத்திரமாகச் சொன்னதை வெறுப்போடு புரிந்து கொண்ட மதுரநாயகம் ஆவேசத்துடன் கத்தினான்,
அவனுடைய உடம்பிலிருந்த நெஷனல் கையிலாடிவிட்டு, முற்றத்தில் போய் "தொப் பென்று விழுந்தது. சில சில்லறைக்காசுகள் விபத்து ஏற்பட்ட பிரயாணிகள் போல சிதறுண்டன.
உடுத்திருந்த வேட்டியை உரிந்து ஒரு கையால் பிடித்தபடி, சாரத்தை எடுத்து உடுத்துக் கொண்டு, கறுவியபடியும், தனக்குள் ஏதோ சொல்லியபடியும், நெஞ்சு வேகக் கிணற்றடிக்குப் போனான் மதுரநாயகம்.
அந்த வேளையை எதிர்பார்த்திருந்தவள் போலக் கோகிலா தாயைக் கடிந்தாள். “என்னம்மா! இது ஆக அநியாயம், நீங்கள் அப்பிடிச் செய்திருக்கக் கூடாது"
‘'நீ சும்மாயிரு கோகிலா! எல்லாம் எனக்கு தெரியும். பூனை மாதிரி வாறதும் போறதும் என்ன இது? ஆ? நாங்கள் என்ன கதைக்கிறம் எண்டு ஒட்டுக் கேக்கத்தான். அல்லது இஞ்சை என்ன நடக்குது எண்டு இரகசியமாகப் பார்க்கத்தானா அப்பிடி வாறது. வந்தது கண்டனான். ‘கேற்றைத் திறந்து மெல்லமாகச் சாத்திப்போட்டு சைக்கிளையும் இங்கேயே விட்டிட்டு வாறார். எப்பிடியிருக்கும் எனக்கு - உக்ம்"
பாக்கியம் சற்று உரத்தே பேசினாள். இதற்குப் பிறகும் மதுரநாயகம் மான ரோஷம் கெட்டு அந்த வீட்டில் இருப்பானா என்பது தான் பாக்கியத்துக்கு உள்ளுர இருந்த கேள்வி.

Page 24
காதில் அத்தனையும் விழுந்ததும் தோய்ந்து கொண்டிருந்த மதுரநாயகம் நீரைக் கடிந்து பார்த்தான்.
வாளியின் அசைப்பில் தளம்பிக் கொண்டிருந்த கிணற்று நீரில் முகம் தெளிவாகத் தெரியவில்லை. கலங்கியிருந்த தன் மனதிலும் நல்ல முடிவு தெரியாது என்பதால், அவன் எதனையோ சிந்தித்தப்படி குளித்து முடித்தான்.
*கோகிலா'
ஈரத்தை உலர்த்திக் கொண்டே அழைத்தான். அவளுடைய “உம்!” என்ற பதிலுக்காக காத்திராமல், தான் அழைத்தது நிச்சயம் கேட்டிருக்கும் என்ற நினைப்பில் “உள்ளே போய் வேட்டியை எடுத்தண்டு வா!" என்றான்.
“மீன் வெடுக்கோடை உள்ளே போகலாமா? தோய்ஞ்ச பிறகு போகக் கூடாதோ?” பாக்கியம் புறுபுறுத்தாள்.
“நான் கல்யாணம் முடிந்தது கோகிலாவை" மதுரநாயகம் பொறுமையை இழந்து கூறிவிட்டு, கால்களில் ஊறிய மண்சீமெந்துத் தரையெல்லாம் படிய, உள்ளே சென்று ஆடையை மாற்றினான். பின்னர் அப்படியே ‘சிவ சிவா!" என்று முற்றத்தில் விசுண்டு கிடந்த நாணயங்களையும், பேனையையும் பொறுக்கி எடுத்து, மாட்டியிருந்த சட்டைக்குள் திணித்தான்.
நேரத்தைப் பார்த்து, “உம் ஒண்டரை மணியாச்சு!” என்று மூச்செறிந்த அவன் வெளியே கிளம்பும் பொழுது பாக்கியம்கூறினாள், 'கோகிலாவைக் கலியாணம் முடிச்சவையாம் கலியாணம். அவளின்ரை மொக்கு அப்பன் பூலோகம் எல்லாம் திரிஞ்சு கண்டுபிடிச்ச மாப்பிளை. றெயின்ட் சட்டம்பிக்கு டாக்குத்தர் மாற்றை சீதனம். இருக்கிற கல்வீடு, நாப்பதினாயிரம் ரூபா சீதனம். 6T66)TLDs (5 லட்சம் பெறும். கோகிலாவை முடிச்சவை. உம்க்! அதுக்கும் சொன்னபடி நகையிலை மூண்டு பவுண் குறைஞ்சு போட்டு தெண்டு கலியாணத்தை நிறுத்தச் சொன்ன ஆக்கள். பெரிய மனுஷராட்டம் எல்லே கதை தூ!”
“கோ.கி.லா!”
“கோகிலா! உங்கம்மாவை வாயைப் பொத்தச் சொல்! உங்கடை சீதனத்தை நான் கேட்டு வரயில்லை. பண ஆசை பிடிச்ச எங்கப்பன் செய்த வேலை. என்னைப் பாழிடத்திலை விட்டது.”
“கோகிலா நான் ஏன்வாய்பொத்த வேணும்? சட்டம்பி உத்தியோகத்துக்கு மரியாதை
வேணுமெண்டால் வாயைப் பொத்த வேணும் ஆரு தெரியுமே!.
கங்கையின் கன்தகள்"
 

பாக்கியம் மிகவும் கேவலமாக அபிநயம் பிடித்துக் கூறினாள். கன்னங்கரெலென்று காணப்பட்ட தன் உதரங்களைப் பிதுக்கி, கைகள் இரண்டையும் முன்னிட்டி அவள் கூறியதை பார்த்துவிட்ட மதுரநாயகம் தவணைச் சோதனை வேறு நடக்குது! எல்லாத்துக்கும் ஒரு முடிவு காணத்தான் வேணும்! என்று நினைத்துக் கொண்டே சைக்கிளை எடுத்தான்.
அவன் போகும் வரை பார்த்திருந்து விட்டு, அவன் போயே விட்டான் தானா என்று நிச்சப்படுத்துவதற்காக “கேற்’ வரை வந்து வீதியை எட்டிப்பார்த்த பாக்கியம், “பொறுக்கியளடை நினைவு. என்னையெல்லாம் வாய்பொத்தட்டாம்!” என்றபடி குசினிக்குள் வந்தாள்.
கோகிலா அப்பொழுதும் சிலையாகவே இருந்தாள். எரிந்து கொண்டிருந்த அடுப்பில் வெந்து கொண்டிருந்த மீன் கறிக்கு மேலும் விறகுகளை இட்டபடி, திருவுபலகையில் முழந்தாழ்களை உயர்த்தியபடி அமர்ந்திருந்த அவள் தாயை ஒருமுறை மேலோட்டமாகப் பார்த்துவிட்டுச் சலனமற்று இருந்தாள்.
காலையில் வெளியே போய் கல்லூரி மூன்றே முக்காலுக்கெல்லாம் முடிந்தும், தாய்வீடு என்றும் வாசிகசாலை என்றுமு பொழுதைப் போக்கிவிட்டு இராச் சாப்பாட்டுக்கும் கட்டில் அணைப்புக்கும் சரியாக வரும் கணவனுக்காக, பகல் முழுதும் தாயிடம் ஏச்சு வாங்கிப் பிராணனை வதைக்க விரும்பாத கோகிலா, மெளனம் சிறந்த மொழி என்று காட்டி வந்தாள்.
அந்தக் கல்விட்டில் சீவியம் காட்டிச் சீதனம் எழுதியதும், அவளுடைய தந்தையார் கண்ணை மூடியதும், அம்மாவாகவும், ஆயாவாகவும் வளர்த்த அம்மாவுடன் பகையை வளர்க்க அவள் விரும்பவில்லை. பல தடவைகள் எங்காவது சென்று குடியிருப்போம் என்று மதுரநாயகம் கேட்டிருந்தும், 'உதவிக்கு ஆளில்லை' என்று சாக்குப் போக்குச் சொல்லி, தட்டிக்கழித்தாள் கோகிலா.
அம்மாவை வெறுப்பதற்கு அவள் என்ன காரணங்களையும் கூறமாட்டாளோ, காரணங்கள் கணவனை விரும்புவதற்கும் அவளால் காரணங்கள் காட்டமுடியாது. அவனும், உள்ளவரையில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் உமாவைத் தவிர வேறு எதையுமே கொடுக்கவில்லை என்று அவள் எண்ணியிருந்தாள்.
ஆரம்பத்தில் மருமகனைப்பற்றி பாக்கியம் கூறியவற்றை மண்ணுக்கேற்ற குணத்தால் மறுத்து வந்தவள், தனக்குக் கொடுத்த சீதனப் பணத்தை மதுரநாயகம் தனது வாளா வெட்டியாக இருந்த தங் கையொருத்திக் குக் கொடுத்து ‘விலைப்படுத்தியதிலிருந்து அவளுக்கு என்னவோ வெறுப்பு.
அன்றிலிருந்து அவள் கணவன் வீட்டுக்குப் போனதுமில்லை. அவர்கள் வந்தாலும் வரவேற்பதுமில்லை. மதுரநாயகத்தின் தம்பி ஒரு முறை அண்ணன் வீடு வந்ததும்,

Page 25
‘அண்ணனுடைய சட்டம்பிச் சம்பளம் அவருக்குச் சைவச்சாப்பாடு போடவே காணாது! நாங்கள் ஏழை எளியதுகள்! ஏதும் ஒரு மீன்உறைப்போடை சிக்கனமாக முடிச்சிடுவம். நூறு மரக்கறி அவிச்சு குண்டோதரனுக்குப் போட்ட மாதிரி இனி வாறவைக்கும் செய்ய எங்கை போறது? என்றாள். பாக்கியம் குத்தலுடன்.
வெளியில் செல்லும்பொழுது தன் உலக வாழ்க்கையில் உண்மையான அன்பு செலுத்தும் உமா நித்திரை செய்து கொண்டிருந்தாலும் அணைத்து முத்தமிட்டுவிட்டுச் செல்லும் அவன், இன்று அப்படிச் செய்யாமல் புறப்பட்டதைப் பெருங்குறையாக எண்ணிப் புழுங்கினான். கேவலம் வயிற்றுப் பசியை ஒரு 'கப் பிளேன் டீ யுடன் அடக்கிவிடும் சக்திமிக்க அவனுக்கு, அந்த அன்பு மகளின் அணைப்பினைக் கட்டுப்படுத்தவோ, தீர்க்கவோ முடியாதிருந்தது.
IPதுரநாயகம் தாய் வீடு சென்று, சகோதரியை மெல்ல அழைத்து மத்தியானம் நடந்ததைக் கூறியதும், வீடே அதிரும் படி அவள் ஓலமிட்டு, உள்ளிலிருந்த மற்றவர்களுக்கு விஷயத்தைக் கக்கி விட்டாள்.
விடே அழுதது!
தியாரும், சதோதரி தம்பி முதலியோரும் கலங்கியதை எண்ணித் தானும் கண்ணிர் விடித்தான் மதுரநாயகம்.
'தம்பி! உங்கப்பர் செய்த மோசமான காரியம் உன்ரை கல்யாணம். உழைச்சுத் தேடி உன்ரை தங்கச்சிக்குச் சீதனம் கொடுக்கப் பயப்பிட்ட அந்த மனுஷன் உன்னை வித்தார். இப்ப உன்ரை மானம் இப்பிடி விலை போகுது, இந்த உயிருக்கையே நல்ல பிள்ளையாய் இருந்த உனக்கு இப்பிடி ஒரு வாழ்க்கையோ! விதியே விதியே!”
தாயார் மரிக்கொழுந்து தலை தலை என்று அடித்து, “பெத்த வயிறு பத்தி எரியுதடா!” என்று ஒலமிட்டு வயிற்றிலும் நைய அடித்து, அழுதாள்.
s!...lib.LDIT!" அதட்டியபடி உறுமினான் மதுரநாயகம். “அதுக்கு இப்ப என்ன செய்யச் சொல்லுறியள்? எங்கையாவது போய்ச் செத்துத் துலையுறன். நீங்கள் அழவேண்டாம்!”
‘ஐயோ! அவன் சொல்லுறதைப் பாத்தீங்களா: நீயேன் சாகவேணும்? இருக்கட்டும் இவளவையளுக்குப் பாடம் படிப்பிக்கிறன்?” மரிக்கொழுந்து பற்களை அழுத்தமாக மென்றபடி கூவினாள்.
‘அண்ணா! உழைப்புப் பிழைப்பு இல்லாதவங்களையே என்னமாதிரி மதிக்குதுகள் உலகத்திலே! அண்ணி இதுக்கு என்ன சொன்வை?”
 

“அவள் என்னடி சொல்லுறது? மரக்கட்டை மாதிரி தாயைப் பாத்தண்டு இருந்திருப்பாள். கோகிலாவுக்குப் புருஷன் எண்ட மதிப்பே இல்லை. பெரிய மனசு வைச்சுப் பிள்ளையொண்டைமட்டும் பெத்தெடுத்துப் போட்டாள். தங்கய்யவுண் மாதிரி நிறத்திலையும் குணத்திலையும் உள்ள என்ர ஆம்பிளைப் பிள்ளையை வித்தாரே உங்கப்பர். ஐயோ! சிவனே!”
மரிக்கொழுந்து அழுதாள்.
அழுது, அழுது ஒப்பாரி வைத்து ஓய்ந்த மரிக்கொழுந்து எதையோ நினைத்துக் கொண்டவள் போல நிதானமாகச் சொன்னாள்.
‘'தம்பி! இனி நீ அங்கை போகவேண்டாம்
*அம்மா”
“ஓமடா! நீ இனியாவது கொஞ்சம் மான ரோஷம் பாரடா! போகாதே. அவள் உனக்கு இனி வேண்டாம்!”
‘அம்மா! அவளை வேண்டாம் எண்டால் விட்டுப் போடுறன். ஆனால். உமா! அம்மா உமா என்னை எப்பிடி நேசிக்குது தெரியுமா?"
'பிள்ளையும் குட்டியுந்தான்! நானும் எட்டுப் பெத்தனான். ஐஞ்சைத்தாரை வார்த்துக் குடுத்திட்டன்தானே. அது செத்துப் போச் செண்டு இரு. நீ உன்ரை வேலையைப் LITT (8шт!”
தாய் கண்டிப்பாகச் சொன்னாள். அவன் மெளனியாகி நின்றான்.
ஒரு கிழமை சென்றது!
கல்லூரி விடுமுறை விடப்பட்டிருந்ததால், சாவகாசமாக வாசிகசாலைக்குச் செல்வது, வேளை வேளைக்கு மரிக்கொழுந்து பழையபடி அகப்பைக் காம்பை வைத்து அவனை உறுக்கி உறுக்கி நன்றாகச் சாப்பிடவைப்பதும் ‘என்ன மாதிரி இருந்த உடம்பு! இப்பிடியா வளர்த்து அவளவையட்டைக் குடுத்தனன். என்னமாதிரிக் கொட்டுண்டு போனாய் தெரியுமோ? சாப்பிட்டால் உடம்பு வைக்கும்.” என்ற மரிக்கொழுந்தின் புத்திமதிகளும், ஆறுதல் வார்த்தைகளும் அடிக்கடி இடம்பெற்றுக் கொண்டிருந்தன.
உமாவின் நினைவு மதுரநாயகத்தை என்றும் உலுக்கியபடி இருந்தது. இந்த ஒரு

Page 26
கிழமைக் குள்ளேயே சிவந்த அவளுடைய முகம் வாடியிருந்தது, ஊருக்கும் நன்றாகத் தெரிந்தது. பாக்கியம் கூறுகிற வசைமொழிகளுக்கு மரிக்கொழுந்து கேட்டதன் பெயரில் பதிலடி கொடுக்கப் பழகி, பின்னர் அதுவே நாளாந்த வாழ்க்கையாகி அதில் ஊறிவிட்ட அவனுக்கு அந்த வாழ்க்கை பெரிதும் கவலைப்படுத்தவில்லை.
அவனுக்கும் ஆண்மை என்பது இருக்கின்றது என்ற மகத்தான கெளரவத்தை ஊரறியச் செய்து பிறந்த உமாவை நினைக்கும் பொழுது அவனுடனேயே தூங்குவேன் என்று அடம் பிடித்து தனது கால்களை அவனுடைய இடுப்பில் இட்டு ஒரு கையால் அவனைக் கட்டிப் பிடித்தபடி, ‘அப்பா நான் நித்திரை போனதும் எழும்பக்குடாது." என்று உத்தரவும் பிறப்பித்தபடி துயிலும் அவளை நினைக்கும் பொழுது உள்ளமெல்லாம் பிரிவுத் துயரால் வெந்தது.
“உமா! என் கண்ணே!”
அரைத்தூக்கத்தில் கிடந்த அவன் புலம்பியபடி எழுந்து உட்கார்ந்திருந்ததை அந்த வீட்டில் யாருமே கவனிக்காததால், சைக்கிளை எடுத்தபடி அந்த இரவில், அந்த பனியில், உமாவை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அப்பாவைத் தேடித் தேடி அழுது கண்கள் குளமாகிச் சிவந்திருந்த உமாவை அடித்துப் படுக்க வைக்க முயன்று கொண்டிருந்த தாயும் மகளும் மதுரநாயகத்தைக் கண்டதும் ஒரு கணம் துணுக்குற்றனர். பின்னர் 'அது' மதுரநாயகம் தானே என்றதும் பாக்கியம் மகளைப் பார்த்துக் கூறினாள்.
“அது சரி கோகிலா! மீன் தண்ணிபட்டிட்டுது எண்டு காசி கதிர்காமம் சேது சிதம்பரம் என்டெல்லாம் போய் தீர்த்தமாடினதாக்கும்.”
பாட்டியின் குரல் தணிந்து கேட்டதும், ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்த உமா ‘அப்பா!" என்று சிரித்தபடி கூவிவந்து, அவன் தூக்கி அணைத்துத் தலையைக் கோதியதும் ‘அம்மம்மா! அம்மா எல்லாரும் அடிக்கினம் அப்பா! அப்பாவோடை நானும் வாறன் அப்பா!” என்று அழுதாள்.
மறு பேச்சின்றி மகளுடன் திரும்பிய மதுரநாயகத்தை ஓடி வந்து வழி மறித்த கோகிலா “எங்கை கொண்டு போறியள்? என்ரை உயிர் போனாலும் போகும். அவளை விடமாட்டன். நீங்கள் போனமாதிரிப் போங்கள். இனி இஞ்சை வரவேண்டாம். என்ரை விஷயத்தைக் கோட்டிலை பாக்கிறன்” என்று கத்திக் கொண்டே, உமா வீரிட்டு அழுததையும் பொருட்படுத்தாது, பறித்தாள்.
நிலத்தில் இறக்கிவிட்டு, உமாவை இரண்டு கையாலும் மாறி மாறி அடித்தாள்.
 

பின்னர் தற தற' வென்று உள்ளே இழுத்தச் சென்று, அறைக் கதவைச் சாத்திக் கொண்டாள் அவள்.
0 0 O
“உமா! இந்தத் தவணையிலிருந்து “மொன்ர சொறிக்குப் போறாளாம்!” வீட்டார் சொன்ன சேதி, மதுரநாயகத்துக்கு மதுரமாயிருந்தது.
உமாவை எப்படியும் வழி தெருவில் காணலாம் என்று புளங்காகித்தான் மதுரநாயகம். அதேவேளை அவனுடைய சந்தோஷத்தை, மானத்தைக் கெடுப்பது போல் தாபரிப்பு வழக்கு கட்டளையும் வந்திருந்தது.
‘அம்மா! இனி நீங்க சொன்ன மாதிரி கோகிலா செத்தே விட்டாள். நான் எடுக்கிற முந்நூறு ரூபா சம்பளத்திலே மாதா மாதம் அவளுக்கு மாசியம் செய்யப் போறன்". அழுதுகொண்டே சொன்னான் மதுரநாயகம்.
‘'நீ ஏன்அழுகிறாய்? ஆம்பிளை அழலாமா?” மரிக்கொழுந்து தேற்றினாள்.
“நான் ஆம்பிளையாக வளர இல்லையே! அழுவதைத் தவிர வேரை வழி என்ன இருக்குது?”
“சும்மா அலட்டாமல் பேசாமல் இரு, உனக்கு வேறை பொம்பிளை பாத்திருக்கிறம். நீ வாழத்தான் போறாய்?” மரிக்கொழுந்து யாரையோ பழி வாங்கிய பெருமிதங் கலந்த மகிழ்ச்சியுடன் கடறினாள்.
மதுரநாயகம் ஒன்றும் பேசவில்லை!
கல்லூரியில் “அக்கா" என்று வகுப்பு மாணவர்கள் காதறிய அழைத்து அவர்களைத் தண்டிக்கச் சக்தியற்று, ‘என்ன பேச்சு இது?” என்று சிரித்தபடி கூறும் அவனுக்கு தெம்பெல்லாம் தும்புக்குச் சமானம்.
“உமா!” அவன் அப்பொழுது நிலவிய மெளனத்தைக் கலைத்தபடி முணுமுணுத்தது அங்கு கேட்கவே, ‘ அதெல்லாம் வழக்கிலை சொல்லி, கோட்டாலையே
பாரமெடுப்பம். நீ கல்யாணத்துக்கு ஒமெண்டு சொல்லு என்ன?” என்று தாய் கேட்டதும் உமாவின் நினைவில் ஒம்!’ என்றே விட்டான் அவன்.
0 0 0
“நீங்கள் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ மறுப்பதாலும், தொடர்ந்து வெறுப்பு நிறைந்த வாழ்க்கையே வாழ்ந்தீர்கள் என்று நிரூபிக்கப்பட்டதாலும், பிரதிவாதி மாதம் நூற்றிருபது ரூபா தாய்க்கும் பிள்ளைக்கும் கட்ட வேண்டும் என்று

Page 27
தீர்ப்பளிக்கப்படுகிறது. குழந்தை உமா சிறு பிள்ளையாதலால் பராயம் முடியும் வரை தாயின் பராமரிப்பிலேயே இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கருதுகிறது.”
முதலியார் தீர்ப்பை வாசித்ததும் குறுக்கிட்ட மதுரநாயகம், "ஐயா! என் பிள்ளை” என்று அழுவான் போல கேட்டான்.
“மாதம் இருமுறை பார்க்கலாம்.” நீதிபதி கூறிவிட்டு 'அடுத்த வழக்கு” என்றார்.
நீதிமன்றத்தைவிட்டு வெளியேறியதும் கலங்கியிருந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் மதுரநாயகம்.
அவன் கட்டவேண்டிய பணம் செலவு எதுவுமேயற்ற அவனுக்குப் பெரியதல்ல. அது உமாவுக்கும் எப்படியும் சுவறும் என்று அவன் நம்பினான். ஆனால் அவளை ஒரு மாதத்தில் இரண்டு தடவைகள் பார்க்கலாம் என்ற உத்தரவை எண்ணியபொழுது நெஞ்சு கணத்தது. தொண்டை மிடற்றியது.
“மாதமிருமுறை எவ்வளவு மணித்தியாலம்.’’ என்று அவன் தன்னுள் கேள்வி எழுப்பிய படியே, கூடவந்திருந்தவர்களுடன் நகரத் தொடங்கினான்.
உமா பள்ளிக்குப் போகும் பொழுதும், பள்ளியால் வரும் பொழுதும் எப்படியாவது பார்க்கலாம் என்றிருந்த மதுரநாயகத்துக்கு அது கிடைக்கவில்லை. அவ்வேளைகளில் அவன் கல்லூரியிலிருக்க வேண்டிய நிர்ப்பந்தமிருந்தது.
அவன் தவிதவித்து ஒரு வருடம் வரை ‘வாழ்ந்து களைத்ததும், மஞ்சுளா அவனுக்கு மற்றொரு துணையானாள்!
சமூகம் என்பது தாய் வீடு மட்டும் தான் என்று அஞ்சிய மதுரநாயகம் அந்தச் சமூகத்தையுயும் உள்ளடக்கி, வேறொரு சமூகம் இருப்பதையோ, அல்லது அது “மரிக்கொழுந்து, குடும்பத்தைக் கெடுத்துவிட்டாள் கைகேயி. சூர்ப்பனகை!” என்று ஏசியதையோ, "மஞ்சுளா! என்னத்தைக் கண்டு மயங்கிவிட்டாள்?” என்று நையாண்டி செய்ததையோ உணராமல் ஏதோ ஒன்று தடுத்துவிட்டது.
“ஓ! அதுவா? மஞ்சுளா குடித்துவிட்டு ஊரெல்லாம் வம்புக்கு இழுபட்டு உலுத்தனாகத் திரியும் அப்பனைத் தவிர, மற்றப்படி அநாதை!”
ஊர் அவளை அறிமுகஞ் செய்தது!
“அந்தளவுக்கு அவளுக்குப் பறுவாயில்லை" சமூகம் சொல்லி ஆறுதலாகியது.
கட்டிலில் புரண்ட மதுரநாயகம் ‘உமா! கிட்ட வா! விழுந்திடப் போறாய்?”
"அங்கையன் கதைகள்
 

என்றபடி மஞ்சுளாவை இழுத்தணைத்ததை அவள் வெட்கத் துடனும், கணவனையிட்ட வேதனையுடனும் ஏற்றுக் கொண்டாள்.
நித்திரை கலைந்த அவன் கையிற்பட்ட அந்த மென்மையான ஆனால் வளர்ந்த உடலை ஸ்பரிசித்ததும், நாணி எழுந்து, தலைக்குள் கைபுதைத்து இருந்தான்.
மஞ்சுளா விசும்பினாள்!
அந்த விசும்பலில் தான் எத்தனை அர்த்தங்கள்?
கன்னிமையின் மூச்செல்லாம், கனவெல்லாம் ஏழ்மையின் பெயரால் அங்கு அடியெடுத்து வைத்து விட்ட அவளுக்குத் தீரும் என்ற அவள் தனிப்பட்ட முறையில் எண்ணி, எண்ணி ஏங்கியிருந்ததொல்லாம் பெருமூச்சாகவும், பகற்கனவாகவும்
போகத்தான் வேண்டுமா?
“ஏன் என்னை வெறுக்கிறியள்?” எங்கோ வெறித்தபடி கேட்டாள் மஞ்சுளா!
‘ம் நான் ஆரையும் வெறுக்கயில்ேைல என்னைத்தான் எல்லோரும்." - அவன்
பிள்ளை போல் அழுதான்.
“சே! என்ன இது? ஏன் நீங்கள் அழுகிறியள்?" என்று கேட்டபடி கட்டிலில் எழுந்திருந்து, தன் அழுத கண்களைத் துடைத்துவிட்டு, அவனைத் தன் மடி மீது சாய்க்க முனைந்தாள் மஞ்சுளா!
அவர்களுடைய கரகரத்த ஆனால் விசும்பல் செறிந்த குரலைக் கேட்டு கதவைத் திறந்த மரிக்கொழுந்தைக் கண்டதும் இருவரும் துணுக்குற்று எழுந்து நின்றனர்.
“என்னடா தம்பி உமாவைப் போல எத்தினை உமா வேணும்? உமா?. மஞ்சுளாவும் பெண்தான். அதுகும் அழகான பெண் பேசாமல் படு”
மரிக்கொழுந்து போய்விட்டாள்!
“உமாவைத் தருவியா?" - அந்த அம்மா பிள்ளை செல்லமாகக் கேட்டான். “ஆம்!” என்று தலையசைத்தான் மஞ்சுளா!
‘விடி!” என்றால் விடியாத இரவு தன் வழியே, என்றும் போல் விடிந்து கொண்டிருந்தது.
அ! அவனைத் தவிர!
அங்கையன்கதைகள்

Page 28
১uw-njnেথৈলা৷ صورة2
தாம்பத்யம் என்பது எவ்வளவு சிக்கலானது என்று பரமானந்தத்துக்கு ஏற்கனவே தெரிந்திருந்தும், அதை அநுபவிக்க நேர்ந்த பொழுது அதன் மேடு பள்ளங்கள் எவ்வளவு கொடுரமானவை என்பதையும் உணர்ந்து கொண்டான்.
அந்தராத்துமாக்களின் இணைப்பில் ஆனந்த மயமான ஒரு வாழ்க்கை தொடராகத் தொடர்ந்து அந்தியஷடமாகும் என்பது அவன் கண்டிருந்த கனவு. ஆனால் அது வெறும் பிரமை மட்டுமல்ல, இலட்சியவாதிகளுக்கு ஒவ்வாத உன்று என்றும் அவன் எண்ணியிருந்த பொழுது, சற்று கடினமான ஒன்றைச் செய்துவிட்டதாகவும், அதனால் தானே தன்னைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி விசாரணை செய்வதாகவும் அவன் எண்ணிப் புளுங்கிக் கொண்டிருந்தான்.
முன் கூடத்தின் ஒரு மூலையில் கிடந்த சாய்வு நாற்காலியில் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்த அவனுக்கு நேரே முன்புறமாக அமைந்து, அவனுடைய கோலத்தை அப்படடமாக வெளிக்காட்டிக் கொண்டிருந்த கண்ணாடியில் அவன் தன்னை மறுபடியும் தரிசித்துக் கொண்டான்.
மனைவி சசிகலாவின் சிபார்சின் பெயரில் பெருவிலை கொடுத்து வாங்கப் பெற்ற அந்தக் கண்ணாடி கூட அவனுடைய அலங்கோல பாவங்களைக் குத்திக் காட்டி நிற்பது போலப் பட்டது அவனுக்கு.
அவனுடைய ஆத்மா வேதனைத் தீநறுக்குகளின் இடையே ஆழ்ந்து, தாங்காத வேதனையுடன் விலகிக் கொண்டிருந்தது.
பாடசாலை நேரத்துக்கே முடிந்து விட்டதால் அவனுடைய வேலையும் முடிந்து விட்டது.
 

அவன் மற்றவர்களைப் போல பொழுதை வீணே போக்கடிக்க விரும்பாமல் வீட்டுக்கே வந்திருந்தான்.
காலையில் அவனும் சசிகலாவும் புறப்பட்டதும் வெறிச்சொடிப் போய்க்கிடந்த அந்தக் கொழும்பு வாடகை வீடு, அவன் மாலை வந்ததும் வீட்டில் ஏற்படக்கூடிய களையைப் பெற்று, ஏதோ ஒருவித பொலிவுடன் காணத்தான் செய்தது. அந்தப் பொலிவு வார்த்தையளவிலேயே நின்று விட்டதால், அவன் தனிமையில் வெந்து கொண்டிருந்தான். அவனுடைய நெடும் பயணத்தில் ஏற்படவிருந்த தனிமை நோயைத் தீர்ப்பதற்கு அவனைப் போலவே படித்து பட்டம் பெற்று, அரசாங்கத்திலும் வேலை பார்க்கின்ற ஒருத்தியை அவனுடைய பெற்றோர்கள் கைப்பிடித்துக் கொடுத்த போது, ஏற்பட்ட ஆனந்தத்திவலைகள் பெரு வெள்ளமாகாது குமிழிகளாகவே மறைந்துவிட்ட பிரமை அவனை அடிக்கடி வெறுப்புறச் செய்து கொண்டிருந்தது. கைம்மை நோற்பவன் போல, அவன் ஆண்மகன் என்ற உயரிய நிலையையும் இழந்து வருந்திக் கொண்டிருந்தான்.
வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக மத்தியானம் வலிந்து உண்ட பாண் துண்டுகளின் விருப்பத்தை அவன் எதிர்பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை விடவும் அவனைக் கொல்லும் உணர்ச்சிகளாக மனக்கடலில் உதித்த ஆசைகளை அன்றாடம் தணிப்பதற்கு சசிகலாவின் சம்மதம் தேவைப்பட்டது வாஸ்தவம் தான். அது இயற்கையும் கூட.
முதல் நாள் இரவு நடந்த நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பாக, சசிகலா காலையில் சொல்லிக் கொள்ளாமலே காரில் ஏறிப்போன காட்சி அவன் இதயத்தைப் பிழிந்தெடுத்தது. எது எப்படியானாலும், கணவன் முன் பெண் மனைவிதான். அத்தகைய நிலையில் உள்ள ஒருத்தி அவனை யாரோ ஒருவனாக, விரும்பத்தகாதவனாக மதித்து இன்று நடந்தது சற்று விரக்தி மயமான தொன்றாகவே அவனுக்குப் பட்டது.
பரமானந்தத்தின் கண்கள் வெறித்தவாறே நிலைக் கண்ணாடியில் குத்தி நின்றன. கன்ன உச்சி எடுத்து வாரிவிட்டிருந்த கேசம் யாருக்காகவோ தலை வாருபவனைக் போல ஒடிக் கொண்டிருந்தது. சசிகலா கொழும்பு நாகரிகத்திற்கேற்றாற் போல் அவனுக்கு வாங்கிக் கொடுத்திருந்த டெரலின் சட்டையின் கை மடிப்புகள் அவன் விட்ட இடத்தில் நிற்காமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மடிந்துநின்றன.
அவனுடைய கரடு முரடான முகத்தைப் போலவே, கருமையும் ஊத்தையும் படிந்து பிரகாசமற்றுக் காணப்பட்டன அந்த ஜோடி சப்பாத்துகள். எதிலுமே ஒய்யாரம், நாகரிகம் என்பனவே அற்றுக் காணப்பட்ட தன்னுடைய நிலையை அவன் வெறுத்தான்.
“சே! உங்களை யாராவது பார்த்தால் பட்டதாரி என்ற சொல்லுவாங்களா? நீங்கள் யூளிவர்ஸிட்டியிலே எப்படி இருந்தீங்களோ?”

Page 29
கண்களை ஏளனமாகக் குறுக்கி, இதழ்களை அடிக்கடி ஒதுக்கி சசிகலா அவனை நெற்றிக்கு நேரே எள்ளும் பொழுது, அவன் தன் வாழ்க்கையை நினைத்து ஒருமுறை மனதால் அழுது, அவளை விட்டு விட்டு வெளியே போவான். ஆண் உதிரம் என்ற ஆக்ரோஷம் எழும் பொழுது, “கேவலம் பெண்" உயரிய மனப்பாங்கு தோன்ற தினவு எடுத்த கைகளை மடக்கியபடி வெளியேறுவான்.
சசிகலா செய்வதறியாமல் விழிப்பாள். பொறுமையை மீறிப் பேசுவது போலவே, தன்னையும் மீறி அழுவாள். புலம்புவாள்.
கூடத்தில் இருந்த சுவர்க்கடியாரம் மூன்றடித்து ஓய்ந்தது. அவன் எழுந்து தன்னை சற்று அலங்காரஞ் செய்து கொண்டான்.
அவள் வரப்போகிறாள் என்பது தான் அவனுக்கு அப்பொழுதிருந்த அவசரம். தன்னுடைய வகுப்பு மாணவி பாடம் கேட்பதற்காக வரப் போகிறாள் என்ற கலவரத்தில் எழுந்து சென்று முகத்தைக் கழுவி, துடைத்து, பவுடர் பூசி, தலைக்கும் இலேசாகக் கிரீம் பூசி, சீவி விட்டபடி உடுப்புப் பெட்டியைத் திறந்து இயந்திர வேகத்தில் ஆடைகளையும் மாற்றிக் கொண்ட அவன், தனது சப்பாத்துக்களையும் பாலிஷ் பண்ணி விட்டான்.
அவனுக்கு அவனுடைய மனைவியின் போக்குகளும் கதைகளும் பிடிக்காமல் போனதால், தன் வாழ்க்கையில் தான் கொண்ட பிடிப்பு இருக்கவே செய்தது. மனைவி மீது அன்பு குறைந்ததும், அந்த அன்பை யாரிடமோ செலுத்ததுவதன் மூலம் அவன் திருப்தியடைய துடித்து கொண்டிருந்தான்.
“மாலதி என்னட்டை இங்கிலிஷ் படிக்க வருகுது.” அவனுடைய நினைவுகள் அரும்பிய வார்த்தைகளைக் கேட்ட அதரங்கள் சற்று முறுவலித்தன. இனம் புரியாத வேதனையை மனம் கலந்து விட்டது.
“உங்களுக்கு இந்த உலகத்திலை என்ன தான் தெரியும். இங்கிலிஷ் மீடியம் கிறாயூவேட் இங்கிலிஸிலை ஆராச்சும் பேசினா, உங்களுடைய செந்தமிழிலை பதில் சொல்லுறீங்கள். இந்த லட்சணத்துக்கு டிரெளஸர் வேறை.”
*சசிகலா!”
அவன் ஒரு முறை செத்துப் போனான்.
இப்படிப் பல நிகழ்ச்சிகளுக்கு முடிவாக மாலதிக்கு ஆங்கிலங் கற்றுக் கொடுக்க முடிவு செய்தான் டியூஷன் என்ற போர்வையில்.
மாலதி வந்து விட்டாள்.
HE
 

மாணவி என்ற நிலைக்கும் மேலாக வளர்ந்து அங்கமெல்லாம் திரண்டிருந்த மாலதியின் சதைக் கைகள் புத்தகங்கள் இரண்டைக் குழந்தையைத் தூக்கினாற்போல் தாங்கிக் கொண்டிருந்தன. அவள் அதற்கும் தயாராக இருப்பவள்போல - அதையே எண்ணி ஏங்கி நிற்பவள் போல அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
கன்னங்கள், மார்புகள், அடிவயிறு, முழந்தாள்கள் என்பவற்றில் கலன்டியிருந்த சதைக் கோளங்களில் அனைத்தையுமே இழந்தவனாக நின்று கொண்டிருந்தான் பரமானந்தம். அவளுக்கு ஆசிரியனாகி பல நாட்களாகி விட்டன. எனினும், அந்த நாட்களில் இல்லாத மனோநிலை அன்று ஏற்பட்டது எதிர்பாராத நிகழ்ச்சியாகவே அவனுக்குப் பட்டது.
‘அறைக்குள்ளே போய் இரும்!” என்று அவளுக்குக் கூறிவிட்டு, அவன் கூடத்தில் புத்தக அலமாரியில் இருந்த இரண்டு நூல்களை எடுத்தபடி, அவளைத் தொடர்ந்து சென்று, அறைக் கதவை சாத்துவது தெரியாமல் கால்களால் மெல்ல அசைத்தபடி, அவள் நினைவைக் கட்டுப்படுத்த தொடங்கினான்.
“மாலதி! நேற்று பேர்னாட்ஷோவுடன் ஆங்கில வரலாறு முடிந்து விட்டது. இனி அவர் காலத்திலிருந்து படிக்கலாம். அது சரி! பேர்னாட்ஷோவைப் பற்றி என்ன நினைக்கிறீர்?" பாடத்தில் கவனம் இருந்த பொழுதும், மனதில் ஏற்பட்ட சஞ்சலத்தை ஒரு புதுமலரின் மறுமொழியிலேனும் போக்கலாம்; அல்லது சற்று மறக்கலாம் என்ற நம்பிக்கையில் கேட்டான்.
“அவருக்கு என்ன? அவருடைய இலக்கிய அறிவே ஒரு தனி உருவத்தில் இல்லாத அழகு அவருடைய அறிவில், உள்ளத்தில் இருப்பதை நான் உணர்கிறேன்." “அதாவது?." அவன் இழுத்தான்.
“உங்கைைளப் போல..!"
“மாலதி." அவள் களங்கமற்றுச் சொன்ன வார்த்தைகளில் சுய தரிசனத்தைப் பரீட்சித்ததை அவமானமாகக் கருதிய அவன் சற்று கடினமாகவே கத்தியதும், பாம்பு நெளிவது போல் தன் கால்களை ஏதோ பின்னுவதை இன்னதென்று உணர்ந்தபடி, தலையைத் தாழ்த்திக் கொண்டான்.
அது அன்பு
'LDToog."

Page 30
நிமிடங்கள் நகர்ந்து கொண்டிருக்க இருவரும் அமைதியற்றுப் போய் விட்டவர்களாக, பேசாமலே இருந்தார்கள். மாலதியின் பக்கமாக இருந்து வீசிய காற்றுடன் மூச்சை விடுத்து அவனும் ஏதோ வித பிரார்த்தனையில் ஆழ்ந்து விட்டான்.
அவன் நெஞ்சில்மறுபடியும் அன்றிரவு நிகழ்ச்சி புடமிட்டது. அத்தகைய தொரு செயலை - ஆசைக் கனவின் நிறைவேற்றத்தை மனைவியிடமே செய்ய வேண்டும் என்ற பிராப்தம் அவனுக்கு ஏற்பட்டதையிட்டு, தன்னுடைய உணர்ச்சிகளை நொந்து கொண்டிருந்த அவனுக்கு, கால்கள் இன்னும் இன்னும் இசைந்து ஆறுதலை அளித்துக் கொண்டிருந்தன.
அவன் மெளனத்தை கலைத்தபடி சொன்னாள்.
“தன்னை அலங்காரமாக வைத்திருப்பவன் தான் பெண்ணையும் அப்படி வைத்திருப்பான் என்று சிலர் நம்புகிறார்கள். ஏதோ எனக்கு அப்படி நம்பிக்கை இல்லை."
“மாலதி உம்மை எப்படி வாழ்த்துவதென்றே தெரியவில்லை அம்மா!”
பரமானந்தம் சில வார்த்தைகளே பேசினான். தன்னையும் காதோரங்களின் கதகதப்பில் உணர்ந்து கொண்டவன் அவள் வந்த நோக்கத்தை அர்த்தபுஷ்டியுடன் தெளிவாக்க நினைத்து, தனது கைகளை மேசையின் அடிவாரங்களின் ஊடாக முன் நீட்டி அலைந்த பொழுது, அவள், “எனக்கு என்னவோ செய்கிறது - நாளைக்கு வருகிறன்” என்ற படி எழுந்து விட்டாள்.
“ஆணை உணர்ச்சி மயமானவனாக்கி விட்டு, தன் உணர்ச்சிகளைக் கொன்றபடி வேடிக்கை பார்க்கின்ற ஜீவனுக்குப் பெயர் பெண்ணா?”
அவனுடைய ஆசைகளை உரிமையுள்ளவளாக வந்தவளாலும் தீர்க்க முடியவில்லை. எங்கோ இருந்து வந்து, எப்படியோ ஆகிவிட்ட மாலதி, தனது உணர்ச்சிகளுக்குப் புகலிடம் கேட்டு விட்டு, தானே தன்னை அவற்றிலிருந்து விடுவித்துக் கொண்டது அவனுக்கு புதிராக இருந்தது.
கபாலங்களின் நாலா பக்கங்களும் இதயங்களாகி, அடித்துக் கொண்டிருந்தன. அவன் நிலை தவறாத குறையாக அவளுக்கு முன்னே எழுந்து சென்று விட்டான்.
99
“நான் போயிட்டு வாறன். உங்களுடைய மிஸஸ் வருகிற நேரமாச்சு.
மாலதியின் தயக்கத்தில் குடியிருந்த பொருளை உணர்ந்தவன் போல தலையை அசைத்தான் பரமானந்தம். “நாளைக்கு கட்டாயம் நேரத்துக்கே வருகிறேன்.” சொல்லிக் கொண்டே மாலதி போய்விட்டாள்.
 

வழமைபோல “ஹார்ண்” பண்ணி விட்டு, அவர்களது வீட்டுக்கு முன்னே காரை நிறுத்தினார், சசிகலாவைத் தினமும் ஏற்றிக் கொண்டு போய்வரும் அக்கவுண்டன்.
“தாங் யூ! குட் நைட்” என்ற வார்த்தைகளைக் கிளியிடம் கற்றுக் கொண்டவள் போலக் கூறி விட்டு, கையில் தொங்கிக் கொண்டிருந்த கைப்பையை அலாக்காக ஆட்டியபடி துள்ளி நடந்து சென்ற சசிகலா, கூடம் இருண்டிருப்பதைக் கண்டு சுவிட்சைத் தட்டி விட்டாள்.
கூடத்தின் மூலையில் கிடந்த அந்தச் சாய்வு நாற்காலியில் மறுபடியும் அவனாகிக் கண்களை மூடியபடி சிந்தனையில்ஆழ்ந்திருந்தான் பரமானந்தம்.
“இஞ்சேருங்கோ. என்ன படுத்திருக்கிறியள்?” என்றபடி அவனருகே சென்று நெற்றிப் புடகுகளில் விரல் பதித்த அவள், அவனுக்குக் காய்ச்சல் அல்ல என்ற திருப்தியில் உள்ளறைக்குட் சென்று உடைகளைக் களைந்தாள்.
பரமானந்தத்துக்கு பக்தியையே சந்தேகிக்கின்ற நிலை ஏற்பட்டது. அவன் திறந்த விழிகள், நிலைபெற்று நின்ற கண்ணாடியில் விழுந்து கிடந்தன.
உள்ளறையில் பகல் முழுவதும் அவளுடன் ஒட்டியிருந்து விட்டு விடை பெற்றுக் கொண்டிருந்த அரைக் கை ஜாக்கெட், பின்னல், சாரி அனைத்தும் கட்டிலுக்கு குடியேறிக் கொண்டிருந்தன.
“நாகரிகம். வேஷம்.ஆன்ம பலத்தைப் புரிந்து கொள்ளச் சக்தியற்றவளுக்கு இவை ஆதாரங்களா,
பரமானந்தம் ஒரு முறை அசைந்து, முன் போலவே திரும்பவும் படுத்துக் கொண்டான்.
சசிகலா முகத்தைக் கழுவி, தனது அதரங்கள் தாங்கியிருந்த செஞ்சாயத்தை கஷ்டப்பட்டுத் துடைத்தபடி முருகன் படத்துக்கு முன்பாக வந்து நின்றாள். தன்னைச் சிறிது அமைதிப் படுத்தியவாறு திருநீற்றைப் பூசியபடி, பரமானந்தத்தைத் திரும்பிப்
பார்த்தாள்.
அவன் தனது கிடக்கையை விட்டு எழுந்து சென்று, வெளியே காணப்பட்ட மற்றொரு கதிரையில் சாய்ந்தான்.
நேரங்கள் தாழ்ந்து கொண்டிருந்தன. சசிசலா தேநீர், பிஸ்கட்சகிதம் தன் முன்வந்து நிற்பதை அப்பொழுதுதான் விழி திறந்த அவன் கண்டதும், இருக்கையையே நம்பாத உணர்சிகளில் துடித்தான். துன்பத்தை ஒரேயடியாக அனுபவித்த பின் இடையில் ஏற்படும் இன்பத்தை இனங்கண்டு கொள்ளவே முடியாத மந்தநிலை.

Page 31
“குடியுங்கள்!” அவள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் இருந்தாள். கடந்த நாட்கள் திரும்புகின்றனவா?
*சசி!...” அவன் வாயார ஒரு முறை அழைத்துப் பார்த்தான். அவளுக்கு அது கேட்கவில்லை.
“உங்களடைய தேவைக்ள் என்ன என்பது எனக்குத் தெரிஞ்சு போச்சு இரவெல்லாம் நான் கண்ட முடிவு இதுதான். உங்களுக்கு அன்பு பிடிக்காது. தேவைதான் பிடிக்கும். தேவை தேவையான இடத்தில் அன்பு செத்துவிடும். இது என் அனுபவம்" அவள் சொல்லியபடி முன்பாக இருந்த ஸ்டுலை இழுத்து அதன் மீது தேநீர் தட்டை வைத்து விட்டு, இமையடிவாரங்களை விரல்களால் தடவி விட்டாள். பின்பு அவளே பேசினாள்.
“பொலிஸ்காரன் திருட நேரிட்டாலும் திருடக் கூடாது. நீதிபதி பொய் சொல்லக் கூடாது. பலவந்தம் மனைவியிடம் அல்ல. அத்தான்!"
“சசிகலா! உனக்கு என்ன பிடித்து விட்டுது?" பரமானந்தம் கேட்டான்.
“இரவு என்ன நடந்தது? நான் உங்களுக்குச் சொன்னேன் - முழுகியிருக்கிறன். இப்ப வேண்டாமென்று நீங்கள் கேட்டீங்களா? என்னைச் சந்தேகிச்சீங்கள். இப்ப சொல்லுங்கள். உங்களுக்கு என்ன வேணும்? ம்!”
அவள் நிதானமாகப் பேசிக் கொண்டேயிருந்தாள். பரமானந்தம் குற்றஞ் செய்து விட்டவனைப் போலக் குறுகினான்.
“உங்களுடைய பசியைத் தீர்ப்பதற்காகத்தான் கடவுள் பெண்ணைப் படைச்சிருந்தால் பெண் வர்க்கமே அழியட்டும். இஞ்சை பாருங்கள் !. நான் போற்றுவதற்கும் போற்றப்படுவதற்குமாகப் பிறந்தவள். அவ்வளவு தான்"
கண்களை மறைத்த கண்ணிரைத் துடைத்து விட்டாள். பின்பு நிலத்தில் மண்டியிட்டு, கதிரையைப் பற்றியபடி அவன் கால்களில் சாய்ந்தாள் சசிகலா. நடுங்கிக் கொண்டிருந்த தன் கைகளால் அவள் கன்னத்தை வருடி விட்டான் அவன்.
பரமானந்தம் திடீரென்று எழுந்து வெளியே போனான். அவனை இரண்டு கைகளாலும் பற்றிபடி சசிகலா கேட்டாள் - "எங்கே போறியள்?”
“உம்! மாலதியை இனிமேல் டியூஷனுக்கு வர வேண்டாம் என்று சொல்லப் போகிறேன்.” அவன் நிதானத்துடன் கூறிக் கொண்டே, தனது சட்டையைச் சரி செய்தான்.
 

니 ந்ெ) 20
யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு முன்னால் நிரை நிரையாக உயர்ந்து வளர்ந்திருக்கும் மலை வேம்புகளின் கிளைகளில் காகங்களின் கரைவு காதைக் குடைந்து கொண்டிருந்தது.
வீதிக்கு இடப்புறமாக ஆஸ்பத்திரி மதிலுடன் அண்டி அமைக்கப்பட்டிருந்த நடை மேடையில் பிரயாணிகள் போக்கு வரவு செய்து கொண்டிருந்தனர். கறுத்து உருகிப் பரந்திருந்த தார் வீதியில் காகங்கள் எச்சம் போட்டு வெண்புள்ளி அடித்திருந்தன.
நடைபாதையின் புற மேடையில் வழியை மறித்துத் தன்னுடைய குழந்தையைத் தரையிலே பிறந்த மேனியோடு வளர்த்தியிருந்தாள் கமலி. காய்ந்து கறுத்திருந்த சூரியக்கதிர்கள் ஒளிபாய்ச்சிக் கொண்டிருந்தன. மதிய வேளையின் தகிப்பைத் தான் தாங்கிக் கொண்டாலும், தன் சிசு தாங்கமாட்டாதே என்ற தவிப்பில் மேற்சட்டையின்றிப் போர்த்தியிருந்த தாவணியால் நெஞ்சை இறுக்கி, அதில் மீதங்கண்டு, பிள்ளையின் முகத்திலும், உடம்பிலும் வெய்யிற் படாமற் பாதுகாத்துக் கொண்டாள் அவள்.
உணர்ச்சி மலையின் எரிவு உள்ளிருந்தே அவளைக் கரித்தது. வெளியே கோடை வெய்யிலின் கொதிப்பு உடம்பைத் தகித்தது. இரண்டு வெம்மைச் சுடர்களுக்கும் மத்தியில் வெளியே அலறாத ஊனக் குரலில் உள்ளே மறைந்து, மறைந்து புலம்பிக் கொண்டிருந்தது நெஞ்சம்.
வாயிலிருந்தும் பேசாத பொண்ணுருவில் வந்து, உறவு என்ற பாசக்கடலில் ஒரு கணநேரந் திளைத்து, விளைந்த சிறுமலரின் வாட்டத்தைக் காணச்சகிக்காத அந்தப் பெண்ணின் கண்களடியில் பாய்ந்த இரண்டு சொட்டுக் கண்ணிர்த் துளிகள் கன்னமேடைகளில் வீழ்ந்து தெறித்தன.
மத்தியான வேளை ஆஸ்பத்திரிக்குப் போவோர் வருவோருைைடய நடமாட்டம் வீதியையும், மேடையையும் நிறைத்தது.
அவளுடைய அந்த நிலைக்கு உரியதான காரணத்தை அவர்களில் ஒருவராவது எண்ணியதாகவோ கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. சுயநலம் என்ற

Page 32
கோட்டைக்குள்ளே துரும்பைக் கூட உள்ளே விடாமல் இறுகப் பூட்டடியிருந்தனா நெஞ்சக் கதவுகளை. அவர்களுக்குத் தங்களைப்பற்றிய கவலையைத் தவிர உலகைப் பற்றி, தம்முள்ள மனித உருவங்களாக எலும்புந் தோலுமாக, மனிதனே தனக்கென்று வகுத்து கடைசியில் அவனையே கருவறுக்கும் மானத்தைக் கூடக் காக்க முடியாமல் தவிக்கும் பெண்ணைப் பற்றியும், அருகதையற்ற அவளை நம்பி வந்த குழந்தையைப் பற்றியும் கவலைப்பட யார் இருக்கப் போகிறார்கள்?
அவள் நிதானமாகக் கண்களில் வழிந்த நீரை விரல்களினால் சுண்டி எறிந்துவிட்டு, ஏதோ அமைதி பெற்றுவிட்டவள் போல் நிலையான சிலையானாள்.
சினிமாத் தியேட்டருக்கு அருகில் அவள் மனநுகர்வில், மாலைமயக்கத்தில், பெண்கள் - ஆண்கள் பெருமைப்பட்டு, வெறுமனே கிடக்கும் அவளுடைய தகரத்தையும், பசியால் வாடும் அந்த இரண்டு சிறுமை வயிறுகளையும் நிரப்பியிருப்பார்கள்.
அவள் ஆஸ்பத்திரிக்கு அருகில் வந்திருந்ததன் மர்மம் அல்லது சூக்குமம் இந்த மண்ணவர்களுக்குத் தெரியவே தெரியாது. தெரிய வந்தாலும் நாங்கள் பெற்றவர்களை இழந்து, பெற்றவற்றை இழந்து தவிக்கையிலே, பிச்சை போடுவகற்கு என்ன செய்வது என ஆறி, மானசிகமாகத் தர்மசிந்தையராகி மறைந்திருப்பார்கள்.
“ஐ.ய்.யோ பாவம்."
கடவுளுக்கு ஏன் இந்த அநியாயமாம்? பெண்ணாகப் பிறந்தவள் மானங்கெட்டு இந்தச் சனப் புழக்கத்தின் மத்தியில் இருக்கிற இருப்பு உலகம்!”
"அவளுக்கு என்ன! புருஷனைக் கொண்டிருப்பாள். அல்லது பத்துப் பேருக்குப் பத்தினியாயிருப்பாள். இந்தக் கலியுகத்திலை பெம்பிளை பிச்சை எடுத்தால் இதுகளிலை ஒண்டை அவள் செய்திருக்க வேணும்.”
“சும்மா பழிசுமத்தாதையணை. உனக்கு ஊரிலையுஞ்சரி எங்கையுஞ் சரி உந்த வசை வைக்கிற குணம் மட்டும் போகாது. நீ மருந்துக்கு வந்தா மருந்தை வாங்கியண்டு பேசாமல் போவன். வஸ்ஸ"ம் வெளிக்கிடப் போகுது.”
பழி சொன்னவைளுக்குப் பதில் சொல்லிய படி அவளுடன் நடந்து கொண்டிருந்தாள். அவர்களில் ஒருவராவது கமலிக்கு ஒரு காசு கூடப்போட எண்ணவில்லை. ஏக்கத்தை விழிகளிற் சாய்த்து, தனக்குப் புதிதாகக் கிடைத்த வசை மொழியை நெஞ்சக்கடலில் கட்டி எறிந்து விட்டு தரையில் கிடந்த புதல்வனைப் பார்த்தாள்.
அவனோ, தாயின் முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டு உள்ளிழுக்கும் வயிற்றின் மேல் கைபதித்தபடி கூசுகின்ற வானத்தில் கண்களைப் புதைத்திருந்தான்.
'நீ செய்ததையா இவர்கள் சொல்கிறார்கள்,' என்பது போலப் பட்டது அவனுடைய பார்வையும், அந்த இனம்புரியாத அலட்சியமும், கமலியால் குழந்தையின் அந்தப் பஈர்வைக்கு அப்படித்தான் கற்பிதஞ்செய்யமுடியும்.
 

அவளைப் பொறுத்தவரையில் மனச்சாட்சி என்பது மனிதனால் கற்பிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. எத்தனையோ விபரீதச் செய்கைகளைச் செய்துகிவிட்டு வெள்ளாடைக்குள் மறைந்து புனிதாத்துமாக்கள் என்ற பெயரை இல்வசமாக அடைகின்ற ஆயிரக் கணக்கான பெரியவர்களை அவள் கண்கூடாகக் கண்டிருக்கிறாள். பேசத் தெரியாத தன்னுடைய மகனின் பொருளற்ற பார்வைக்குத் தன்னையும் உணராத மன உந்துதல் புது விளக்கம் கொடுத்தது.
‘ம்‘ என்ற ஒலியைத் தொடர்ந்து அவளின் முன்னிலையில் வைக்கப்பட்டிருந்த பழைய ‘கவ் அன் கேற் பேணியை நோக்கிக் கவிந்த கை ஒரு காசுக் குற்றியுடன் பதிந்தது.
பலமாக வீசிக் கொண்டிருந்த காற்றில் அடிக்கடி சிலிம்பிக் கொண்டிருந்த முந்தானையை அசையாமல் பிடித்தபடி இருந்த கையை நகர்த்திப் பேணியைத் தூக்கி அந்த தர்மத்தை ஏற்றுக் கொண்டாள் கமலி.
‘டங்' என்ற ஒலியுடன் விழுந்த பத்துச் சத நாணயம் அந்தப் பேணிக்குள் வேறு ஒன்றும் இல்லை என்று பறைசாற்றிவிட்டு அடங்கியது.
அந்தக் கணத்தில் புதுவரவில் மகிழ்ந்து சற்றுத் தன்னை மறந்த கமலியின் மார்பகங்களை மூடியிருந்த தாவணிச் சேலை ஆபாசக் காட்சி ஒன்றை வீதியின் நடுவில் இடைவெளியில் தங்கள் ‘கார்’களை நிறுத்தி விட்டு என்ஜின் பக்கமாச் சாய்ந்து வேடிக்கை பார்த்தபடி நின்ற சில இளசுகளுக்குக் கண்விருந்து அளிக்க எத்தனித்த மாத்திரத்தே அவள் மறுபடியுங் தானாகிலபக் கென்று தன் மேற்புறத்தை இழுத்து மூடிக் கொண்டாள்.
ஆரம்பமே சேற்றிலும் சுரியிலும் தொடங்கியிருப்பின் கமலிக்கு வாழ்வு கசந்திருக்காது. தெளிந்த நீரோடையில் துள்ளும் மீனாகிக் குழந்தையாய்க் குமரியாய் வளர்ந்த அவள், வளர்த்தவர்கள் வாழ்க்கைத் துணை ஒன்றை அவளுக்குத் தேடித் தந்து வாழவைத்த வேளை கிடைத்த சுகம் முழுவதும் கிடைக்காததால் துணைக்குத் துணைதேடியது அவனிள் தவறாமோ? அல்லது அவளுக்குத் துணையாக வந்த துணையின் இயலாமை ஒரு பொல்லாப்பு ஆகுமா? அந்த இருவருக்கும் தான் தெரியும்.
உருண்டு திரண்டு வசீரமான இருந்த கமலியின் அங்கங்கள் கண்கள் படைத்தவர்களுக்கு இனிப்பாக இருந்தால், அது அவள் செய்த குற்றமல்ல. ஆனால், காட்சியோடு மாத்திரம் கண்டவர்கள் நின்றிருந்தால் அவள் அன்றும் அமைதியாக இருந்திருப்பாள்.
தன்னுடைய அழகைத்தானே தெரியாமல் இருந்த அவளுக்கு அவளின் பெருமையை எடுத்துணர்த்திய அந்த 'ரஸிகனுக்கு அவள் ஒரு நாள் ‘நன்றி செலுத்தியது என்னவோ உண்மைதான். அதற்தகாக அவளுடைய வாழ்வு இன்று இப்படிப் போகவேண்டும் என்றோ, போகும் என்றோ இதுவரை யாரும் எண்ணவில்லை.

Page 33
அடிக்கடி காற்றில் அலைப்புண்ட அங்கவஸ்திரம் அருகே நின்ற கார்ச்சாரதியின் இல்லாமையைச் சிறிது நிரப்பத்தான் செய்தது. தன் உணர்வில் இன்பங்கண்டு தனியே தவித்த அவனுக்கு ரிஸ்ஸ’ போட்ட பண்டந்தான் இனிக்கும் என்பதில்லை. அவன் தன்னுடைய 'பாக்கெட்டில் விரல்களை நுழைத்து வெளியே வந்து பணச்சுருள்களில் பத்து ரூபாவை வெளியே எடுத்தபடி அவளை நோக்கி அச்சநடை GustLT6.
ஒருநாள் கமலி தவறியதற்கு அவளுடைய புருஷனைத்தான் காரணஞ் சொன்னாள். முழுமைக்காக ஏங்கிய அவள் மூன்று ஆண்டுகாலமாக முத்துவதற்கு ஒரு ‘குஞ்சு இல்லாமல் கடவுளிடம் போகாமல் தன்னுடைய கடையில் வேலை பார்த்தவனிடம் போனாள். கடவுளிடம் பெற்ற பிள்ளைவரத்துக்குத் தூய்மைக் கிரீடஞ்சூட்டும் அந்தக் குருடுகள், மனிதனிடம் பெற்றதற்கு மாசு கற்பித்தது கமலியின் தத்துவத்தில் *பட்டிக்காட்டு மரபாகவே இருந்து.
“நீ ஏனணை பிள்ளை இந்த முடிவுக்கு வந்த நீ? கடவுளேயெண்டு ‘கட்டும் காலாய் இருக்கிறே, ஆரேன் எண்டாலும் என்ன, உன்னைப் பார்க்கக் கூடிய ஒருத்தனைப் பாத்தண்டு சும்மா இருந்து விட்டுப் போட்டு இப்படி வெக்கம் இல்லாமல், வந்து றவுணுக்கை பிச்சை எடுக்கறியே. இந்தா.”
சொல்லிக் கொண்டே ஒரு நாணயக் குற்றியை உருட்டிவிட்டாள் ஒருத்தி. கமலியின் இதழ்களின் கோடியில் சிறுகக் சிறுகக் குறுகி வெளிப்பட்ட வரட்டு முறுவல் அவளுக்கு பதில் கொடுத்து மறைந்தது.
‘என்னட்டை என்ன இருக்கெண்டு நானே நம்பிக்கையோடை அறிஞ்சிருக்கிறன். ஏதோ புதிசாக இந்த மனுவழி சொல்லிப் போட்ட நினைப்பிலை போகுது. என்னுடைய சபதம்..? நான் மறுபடியும் வாழ ஆசைப்பட்டுத்தானே இஞ்சை வந்திருக்கிறன்.
கமலி முதல் முறையாக நினைக்கத் தொடங்கினாள். அவளுடைய முகத்தில் நம்பிக்கை வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. அதனைப் பிரதிபலித்து நெடு மூச்சு ஒன்று துன்பக் களையுடன் வெளியே புறப்பட்டது.
“சேச்சே! இந்தப் பட்டணம் வரவர மெத்த மோசம், பெம்பிள்ளயைளின்ரை
துணிச்சல். அப்பப்பா இந்த ஊரிலை இருந்தா நம்மடை மானமும் போயிடும்.
பதினெட்டு அங்குலத்துடன் தன்னுடைய முழுப்பாரத்தையும் தாங்கியபடி கொடிக்கம்பத்தில் சுற்றி வைத்த சேலை போன்ற தோற்றத்துடன், முழங்கையில் 'அல மலக்காக ஆடிக் கொண்டிருந்த கறுப்பு நிற அழகுப்பையுடனே நின்ற ஒருத்தி அரற்றிக் கொண்டாள்.
‘இந்தா உன்னைத்தானே! உனக்கு அப்படி ஒரு “பிளவுஸ் வாங்கக் காசு கிடைக்கல்லியா,”
| ۶ ||;rfiزند. || |
 

*நீ சும்மாயிரடி ரூபா!
“ஆரெண்டால் என்ன எப்படியாவது போகட்டும். நீ வா நாமள் போவம்?” ரூபாவுடன் கூடிவந்த மற்றவள் கூறியபடி அவளை இழுத்தாள்.
“ஏன் தாயே முதலிலை நீ ஒரு சட்டையை வடிவாகத் தையன். அதுக்குப் பிறகு என்னைச் சொல்லு. நான்தான் வசதியே இல்லாமல் தைக்கவில்லை. உனக்கும் உன்ரை பகட்டுக்கும் என்ன வந்தது?”
கமலிக்கும் பேசத் தெரியும் என்பதை அவள் காட்ட நினைத்த போது, 'டாங், டாங்’ என்று மணி ஒசை போல் பேணிக்குள் கிடந்தவை கமலியைப் பார்த்து
சிரித்தன.
கமலி இந்தப் பிச்சைத் தொழிலை ஆரம்பித்து மூன்று நாட்கள் தான் முடிந்திருந்தன. ஆனால் அந்த மூன்று நாட்களிலும் அவளுக்கு நிறைய அநுபவங்கள் கிடைத்திருந்தன. வெறும் வார்த்தை அபிஷேகங்களும், வீண்வார்த்தைமாரிகளும், பேச்சற்ற தர்மங்களும்.
புரியாத உலகத்தை ஓரளவு வெளிவாரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பிச்சை எடுப்பது தான் ஒரு வழி. வெள்ளைக்கும் கறுப்புக்கும் வித்தியாசம் கண்ணளவில் மட்டுமல்ல, மனத்தளவிலும் உண்டு என்பது தெரியவரும்.
கமலி ஆரம்பத்தில் பிச்சையை ஒரு 'பிஸினஸ்' என்று கருதவில்லை. அப்படிச் செய்ய அவளுக்குத் திராணி இல்லை. தன்னிடமில்லாத ஆத்மபலத்தை அழகு மறைத்ததனால், அந்த அழகு நிறைந்த உடலை அர்ப்பணிப்பதன் மூலம் தன்னை வளர்க்கலாம் என்ற எண்ணமும் அவளுக்கு இல்லாமல் இல்லை. அதனால் பிச்சை 'பிஸினஸ"க்கு ஒரு லைஸன்ஸ்' என்ற அவள் கருதியதில் தவறில்லை.
சாரதி மெல்ல மெல்ல நடந்து அவளை அணுகி வந்தான். மத்தியானவேளை கடந்து விட்டதால், மறுபடியும் ஐந்து மணிவரை அந்த வீதியில் சனநெருக்கடி இருக்காது என்பதை மெய்ப்பித்தபடி, வந்தவர்கள் எல்லோரும் விரைந்து போய்கொண்டிருந்தார்கள்.
அவனுக்கு அது ஆறுதலை அளித்தது. ஒரு கையில் மடக்கியிருந்த பத்து ரூபாவை இலக்கந் தெரிய மடிய வைத்து விட்டு, கையில் சில சதக் குற்றிகளை எடுத்தான் அவன்.
சாரதியின் நெஞ்சு அடிப்பு அதிகரித்துக் கொண்டிருந்ததை விரல்களின் நுனியின் நடுக்கம் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தது. முகத்தின் அடிவாரங்களில் ‘ஷேட் கொலர் வரை வியர்வை வழியத் தொடங்கியது, அவன் அசாத்தியத் துணிவில் அவளைக் கேட்டான்.

Page 34
“இந்த வெய்யிலுக்குள்ளே ஏன் சும்மா கிடக்கிறாய், ஏறன் காரிலை. நல்ல இடத்துக்குப் போவம்.”
& G
உம்.” கமலி முறைத்தாள்.
சாரதியின் துணிவு சற்று அதிகரித்தது. கையிலிருந்த பத்து ரூபாவைச் ‘சரக்சரக் கென ஒலியெழுப்பியபடி மெதுவாக அவள் பக்கமாகக் குனிந்து "இதோடை இன்னும்” என்றான்.
நீண்ட நாட்களுக்குப் பின்பு பெரிய இலக்கத்தை கண்டது ஏதோ "மகிழ்ச்சியாக இருந்தாலும், மீண்டும் அதே பிழையைச் செய்யக் கூடாது என்று உள்ளிலிருந்து ஏதோ சொல்வது போன்றிருந்தது அவளுக்கு. பழமை நினைவில் ஆவேச நினைவு வந்ததும், தன்னுடைய புது நோக்கு திணற அவனுடைய கன்னத்தில் அறைய எத்தனித்தவள், மறுபடியும் பெண்ணாகித் தலைசாய்ந்தாள். ஆத்மாவுக்குப் பலம் கிடைக்காத வரையும் அவளுடைய அழகு வென்று கொண்டே இருக்கும். அதனை உணர்கின்ற அளவுக்கு கமலி வளர்ச்சியடைந்திருந்தாள்.
இவை எல்லாவற்றையும் அவளுக்கு எதிர்ப்புறமாக இருந்த கடையின் பணப்பெட்டியருகில் அமர்ந்திருந்தவன் கண்டு என்ன செய்கிறான் என்பதை கண்களைத் தியாக்கி விறைத்துப் பார்த்தாள் கமலி.
அவன் சாரதியையும், கமலியையும் சுட்டுப் பொசுக்குமாப் போல் பார்வையைச் செலுத்தியிருந்து விட்டு, கமலி தன்னைப் பாத்தும் வேடிக்கை உணர்வில் கடையின் மேற்பகுதியையும், சுற்றிவர தொடங்கினான்.
"துரோகி”
கமலி கத்திய சத்தம் சாலையைக் கலக்கியதுடன் சந்தேகத்தையும் அளிக்கவே, அவன் அவளை விட்டு விலகி, தன்னுடைய கார் நின்ற இடத்துக்கு வந்தான். புதிய நிலையில் இருந்த இருப்பில், இன்னொருவன் தன்னை வென்றுவிட்டான்என்ற ஏமாற்றத்தின் பழியுணர்ச்சியுடன் காருக்குள் அமர்ந்து, முன் கண்ணாடி மூலம் கடைக்காரனையும் கமலியையும் பார்த்தபடி இருந்தான் சாரதி.
கடைக்காரனுக்கு சமயம் சரியாகவேபட்டது. தான் இருந்த இடத்துக்கு தன்னுடைய வேலையாளைக் கூப்பிட்டு அமர்த்திவிட்டு, படிகளில் இறங்கி விரைந்து வந்தான். அவனுடைய நடையில் இருந்த வேகம் அவளைக் கொலை செய்யும் நினைப்புடன் வந்தாற் போல் சற்று விறைப்பாகவே தெரிந்தது.
சாரதி இதனைப் போல் எத்தனையோ ‘கேஸ்களைக் கண்ட அனுபவசாலி. இந்தக் கடைக்காரனைச் ‘சும்மா’ விடுவதான எண்ணம் அவனிடம் இருந்ததாகத் தெரிவில்லை.
, 'h' í ' ''ht fóð ár, örri gög,6ir
 

‘‘அடிபாவி உனக்கு வெக்கமில்லையோ? உன்னை மாதிரிப் பெம்பிளையளை ஏன் அவமானப்படுத்தியண்டு, என்ரை உயிரையும் வாங்குகிறாய்? என்னைத் தெரிஞ்சவங்கள் இந்தப்பக்கமாக இல்லை. அல்லாட்டி என்ரை மானமே போயிருக்கும். இன்னும் உன்ரை குணம் மாறவில்லையே. எங்கேயாவது போய்ச் செத்துத் தொலையேன். பிள்ளையை வேணுமெண்டா நான் வளர்க்கிறன். y
சாரதிக்குக் கேட்காமல் இருக்கவேண்டும் என்ற உந்தலில் அவன் பற்களை நறும்பித் தன்னுடைய ரெளத்திரத்தைத் தீர்த்தபடி, பேசிக் கொண்டிருந்தான்.
கமலி கண்கள் தாரையாகப் பொழிய மகனை மடியில் சாத்தி, இருந்த நிலை குலையாமல், விழிகளை உயர உணர்த்தி அவனைப் பார்த்தபடி இருந்தாள். அவளுடைய அடங்காத அழுகைக்கு ஒத்தாசையாக இதழ்கள் விநாடிக்கு விநாடி துடித்துக் கொண்டிருந்தன. கண்டக் குழியில் வரண்டு போகும் நாவை நனைக்க மிடறு எடுக்கும் சத்தம் பெரிதாகக் கேட்டது.
“கிளிநொச்சி ராச்சியமிருந்து கடையையும் மாத்தியண்டு இஞ்சை வந்தனான், இந்தக் கண்ணராவியைப் பார்க்கத்தானே? உன்னாலை போக முடியாட்டிச் சொல்லு, நானாவது இந்த உலகத்தை விட்டுப் போறன். எனக்கு இதல்ல. இன்னும் வேணும்.”
கடைக்காரன் குழந்தையாகி வாய்விட்டு அழத்தொடங்கினான்.
சாரதியின் கண்கள் கண்ணாடியூடாகப்பார்வையிலிருந்தன. ஒலிகள் காதுகளுக்கு எட்டவில்லை. அவன் காரைவிட்டு இறங்கி நடுவீதி நீளம் நிறுத்தியிருந்த கார்ச்சாரதிகள் சிலரிடம் ஏதோ சொல்ல, 'இரை கிடைக்கப் போகும் ஆனந்தத்தில் அவர்கள் அனைவருமே கூட்டாக நடைபோட்டு வந்து கமலியையும், கடைக்காரனையும் வளைத்துக் கொண்டார்கள்.
கமலியின் கண்களிலிருந்தும், கடைக்காரனின் கண்களிலிருந்தும் நீர் பெருகிக் கொண்டிருந்ததைக் கண்ட சாரதிகள் சற்றுப் பின் வாங்கினர். ஏமாற்றத்தால் அடிபட்ட அவன்மட்டும் வெறிபிடித்தவனாகி, கடைக்காரனைப் பிடித்து உலுக்கினான்.
“என்னாய்யா! இதென்ன ஆஸ்பத்திரிறோட்டா, இல்லை உன்னுடைய வீடா? என்ன பிச்சைக்காரிஎண்டாப் போலை. அவளை ‘ஷேப் பண்ணுறியா? உங்க தரவளியள் வெலிக்கடையிலே இருக்க வேணுமடா"
கடைக்காரன் பயந்து ஓடி விடுவானென எதிர்பார்த்தான் சாரதி. அவன் கண்ணிரைத் துடைத்தபடி சாரதியயிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, 'பளி என்று கன்னத்தில் விழுந்தது.

Page 35
கமலிக்கு அறிவு கலங்கியது. “அட பாவி. ஏன் சும்மா நிண்டவரை அடிக்கிறாய்?” என்று அலறிக்கொண்டு, மகனைத் தூக்கியபடி கடைக்காரனை ஒரு கையால் தாங்கினாள்.
“ஊக்! விஷயத்துக்கு முந்தியே இவ்வளவு ஒற்றுமையா?” என்றபடி கமலிக்கு அடிக்க ஓங்கிய சாரதியின் கையை, அவர்களின் ஒருவன் தடுத்து நிறுத்தினான். “அவளைத் தொடாதே!” கடைக்காரன் உணர்ச்சியைப் பலமாக்கிக் கத்தினான்.
‘'நீ ஆரடா. அதைக் கேட்க.?”
"நான். ம் அவளுடைய." கடைக்காரன் ஏதோ நினைத்தவனாய் மெளனியானான்.
“இவர் என்னுடைய புருஷன். உங்களைப் போல ஆக்களாலே தான் நாங்கள் இப்படியானோம்!”
கமலி விக்கி விக்கி அழுதாள்.
அவன் அழுதான்.
நல்ல வீதிகளில் மாத்திரம் தங்களுடைய காரைச் செலுத்த விரும்பும் மனம் படைத்த அவர்கள், மனத்தையும் அப்படிச் செலுத்த முடியாது கண்ட தோல்வியில் தலை கவிழ்ந்தனர்.
கமலி வழிந்த கண்ணிரைத் துடைத்து விட்டு, “நான் உங்களோடை வாறன். எத்தினை காயிதம் போட்டன். ஒண்டுக்கும்பதிலிலை, பிறகு நானேவந்தன். என்னை பிடிச்சு வெளியே விட்டீங்கள். அதுதான் இப்படிச் செய்தனான். அது வேறையாய் முடியபாத்தது. சாக நினைச்சன். மறுகாலும் வாழ்வு தந்திட்டிங்கள்!” என்று கூறினாள்.
மேலங்கியற்றுக் கிடந்த பின் புறத்தேகங்களில் அணைத்திருந்த கைவிரல்களினால் ஸ்பரிசித்து குழந்தையை ஒரு கையாலும் மனைவியை மறுகையாலும் தாங்கியபடி நடந்தான், அவளுடைய கணவன்.
“பிழைவிட்டு வருந்துகிறவர்களை மன்னிச்சு அவர்களுக்கு வாழ்வு கொடுக்கிறவர்கள் உண்மையிலை கடவுள் அண்ணே’ என்ற படி, தான் காஷியர் பெட்டியருகில் முதலாளிக்கும் கமலிக்கும் இடம்விட்டு நகர்ந்து நின்றான் அந்த ஒருவன்.
புதிதாக ஏற்பட்ட வாழ்வில் புதிதாக ஏற்பட்ட நாணத்தில் உடல் குறுக, தனது
மேலாடையை எடுத்துப் போர்த்தியபடி குசினியை நோக்கி நடந்தாள் கமலி.
 

P
யாழ்ப்பாணத்து முற்ற வெளியில் முக்கால் வாசியையும் தனதாக்கிக் கொண்டு உறங்கிக் கிடக்கின்றது கோட்டை. அதனிடையே ஓங்கி வளர்ந்த வெள்ளரசு மரம் அதன் மீளா உறக்கத்திற்குச் சாமரை வீசுகிறது. கிழக்கே உயர அமைக்கப்பட்ட
மதில்கள் காலை வெய்யிலைக் கோட்டையின் ஒரு புறத்திலும் விழாதவாறு தடுக்கின்றது.
கோட்டைக்கு வடக்கே படமெடுத்து ஓய்ந்த பாம்பு போல் படுத்திருக்கின்றது பண்ணை விதி. அதனிடையிலே இன்பமாக வந்து சேர்ந்து காணப்படுகிறது காங்கேசன் வீதி.
இவற்றின் முனைப்பிலே அங்குமிங்கும் நடமாட்டம். உயிரற்றன போல் காணப்படும் இந்த இரு வீதிகளில் வாகனங்களும், பாதசாரிகளும் போய்க் கொண்டிருக்கின்றன.
‘கடகடா என்று பேரிரைச்சல் எழத்தள்ளுவண்டிகள், யாழ்ப்பாண நகரத்து நாசக் கழிவுகளை யெல்லாம் பண்ணைக் கடலில் தான் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்ற அலைப்புடன் உருண்டு கொண்டிருக்கின்றன.
“சீ. சனியன் பிடிச்சதுகள்! கொஞ்சம் வெள்ளணையாக எழும்பி வந்து இந்தச் சவங்களையெல்லாங் கொண்டு போய்க் கொட்டினால் என்னவாம்?"
“ஓமடி ஒன்பது மணிக்குப் பிறகு தான் இவங்களுக்கு விடியிறது. மனிசர் றோட்டாலை போக வழியில்லை. பட்டணம் எண்டு மட்டும் பேர்! ஆனால் கிராமக் குளக்குட்டைகளிலும் படான்! மோசம்!”
கைவண்டிகளின் அசைவின் இடையே அரசல்படாமல் அரசல்பட்டு விட்ட சில பள்ளி மாணவிகள் சரசரத்துக் கொண்டு செல்கின்றனர்.

Page 36
இந்த வார்த்தைகளிற் பாதி கைவண்டியுடன் சென்று கொண்டிருக்கும் கணபதியின் காதில் வந்து வீழ்கிறது. முகத்தில் வழிந்து நெஞ்சுக் கோளறைகளை வாய்க்காலாக்கிப் பாயும் வியர்வை வெள்ளம் அடிவயிற்றில் அனற் பிழம்பாக
மாறிச் சுடுகிறது.
“அவை கொட்டுவினம்.? நாங்கள் தான் சுமக்க வேணும். பேந்து கதையைப் பார். நன்றிகெட்ட சனங்கள்."
அவன் கைவண்டியுடன் கடற்கரையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான்.
காலையிலே வேலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும் உத்தியோகஸ்தர்களுடைய கார்கள் வண்ணம் அற்ற சிறிது விறைப்பான காலை வெய்யிலிற் பள பளத்தவாறு ஒடுகின்றன. உஸ்' என்ற அவற்றின் இயக்கநாதம் கிளப்பிய துர்நாற்றம் அதே வேளையில் முகத்தைப் பிளக்கின்றது.
“தூஊஉப்!"
காற்றின் காட்சியற்ற அலைகளுடன் சேர்ந்த சிதறிப் பறந்த உமிழ் நீர்த் துளிகள் கணபதியினுடைய முகத்திலும் படிகின்றன.
“சி பெரிய மனுஷன்? திமிரைப் பார்!’ தன்னிலேயே கறுவியபடி ஏசுகின்றான் கணபதி,
கைவண்டி கோட்டைத் திருப்பத்துக்கு வந்து விட்டது. சத்திரக் கிணறு திரும்பி, பொன்னம்மாவின் ‘மில்லைத் தாண்டி, பண்ணைக் கடல்வீதியில் மனித பாவச் சின்னங்களுடன் திரும்ப முனைந்தது.
“கிறீச்.”
''F6ITT'
“எட பண்டி! நீ தான் அதோடை நாள் முழுக்க கிடக்கிறையெண்டால் மற்ற மனிசரையும் அதுக்கை விழுத்திப் போட்டியே..! உன்ரை."
“கோதாரியிலை போவாங்கடை வஸ்ஸும் கண்டறியாத பயணமுந்தான்."
வார்த்தைகள் புற்றிசல்களாகின்றன. கைவண்டி ஒரு புறமாகப் புரண்டு, "கீப்லெப்டு என எழுதப்பட்டிருந்த சீமெந்துத் தூணுடன் சாய்ந்து கிடக்கிறது.
 

போகத்துடித்த தன் உயிரைப் போக விடாமல் ஒரு கையால் பிடித்த படி தார் விதியில் நெஞ்சழுத்திய வேதனையுடன் புரள்கின்றான்.
அவனை சுற்றி.
கச்சேரிக்குச் செல்லும் உத்தியோகத்தர்களைச் சுமந்து கொண்டு கண்டி வீதியில் ஏற முனைந்த பஸ்ஸாக்குக் கிடைத்த இரை.
கைவண்டி. கணபதி
சூரிய ஒளியை உமிழ்ந்து சிரிக்கும் சப்பாத்துகளும் வண்ணநிறக் காலணிகளும் பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடுகின்றன. பஸ்வண்டியின் செம்மை படிந்து விட்ட முகம் முழுவதும் மஞ்சள் கலந்த குழம்பு.
பிண நாற்றம்!
கொன்று குவித்த உயிரினங்களின் சடலங்களின் சமீகரிப்பு.
கணபதி புரள்கிறானா.
அழைப்பில் சத்திரக் கிணற்றடியால் வந்து திரும்பிய இரு கைவண்டிகள வேகமாக உருள்கின்றன.
அவர்கள் -?
இரத்தமும் உடலும் கழிவுக்குள் புரள்வதை கண்டு பரிதவிக்கும் மனிதர் கூட்டம் அங்கு இல்லை. நின்றவர்கள் நாகரீக காலத்து ‘இலங்கை மக்கள்.
சாரதி கத்துகிறான். அவனுடைய கைகள் என்றுமில்லாத ஒருமைப்பாட்டுடன் ‘ஹார்ணைப் பற்றி அமுக்கின்றன. கொலைக் கைகளில் அகப்பட்ட சிசுவைப் போல வீரிடுகிறது பஸ். அதன் பயங்கர ஒலத்தைக் கேட்க சகியாத கூட்டம் முற்றவெளியில் நின்ற வண்ணம் காதுகளைப் பொத்துகின்றது.
y
“இஞ்சை வாடாப்பா பஸ்ஸுக்கு முன்னுக்கை கிடக்கிற வண்டிலை இழு.
வந்தவர்களில் ஒருவனை நோக்கி அதிகார மிடுக்குக் குழைந்த குரல் பாய்கிறது
சாரதி சொன்ன வார்த்தைகளிற் கவனம் சென்றும் செல்லாதவாறு நின்ற அந்த
இருவரும் கணபதியைத் தூக்குகிறார்கள். கைவண்டியின் முன் வாளிகளில் அதிர்த்த பஸ்ஸின் விசை அவனுடைய நெஞ்சையும் பதம் பார்த்துவிட்டது. நெஞ்சைத்
கைன் கதைகள்: व्छ।

Page 37
தடவித் தடவி வலியைத் தாங்க முடியாமல் நொந்து கொண்டிருந்தான் கணபதி.
“டேய் உன்னைத் தான்!. இதை இழுத்து விடு எண்டால். என்ன மாடு மாதிரி
ÉibafDITuit?"
“சரியாச் சொன்னியள் மாடு எண்டு. ஏனெண்டால் மாடு அடிவாங்கியும் ரோசமில்லாமல் பேந்தும் பேந்தும் வண்டியில் இழுக்குதே. அந்த மாதிரி இந்த வண்டிலையும். உங்கள் ஆக்கினைகளயும் பொறுத்தண்டு இழுத்துத் தள்ளுகிறமே! இது இல்லை. இன்னுமின்னும்."
“டேய் இழு எண்டால் இழுக்கிறதை விட்டுப்போட்டு ஏலம் பேசறியா?”
‘இனி "இழுக்கத்தான் வேணும்.
“வேணுமெண்டா நீ இழுத்துவிடன். இஞ்சை இவனைக் கொண்டு போட்டியே!”
முற்றவெளியில் நின்று கொண்டிருக்கும் பிராயாணிகளின் முகங்களில் அனைத்தையும் மறந்த நகையாட்டம் தோன்றி மறைகிறது. அவர்களுள் ஒருவர் முணுமுணுக்கிறார்!
“நல்லாச் சொல்லடா பயலே! நல்லாச் சொல்லு” சாரதி தன்னைச் சமாளித்தபடி,
“கொண்டு போட்டேனா? அவனுக்கு என்ன வெறியோ? காலமையிலும் குடிச்சுப் போட்டா வாளி எடுக்கிறவர்கள்.?” என்று கேட்கிறான். மக்கள் கூட்டத்தில் அவனுடைய விழிகள் ஆதரவு தேடுகின்றன.
அனைவரும் மெளனியாகுகின்றனர்.
சாரதி பழியைப் போடுகிறான். அதமத்தின் சவக்குழியை மூடுவதற்குப் பயன் படும் ஒரே நிலைதான் அது.
தன்மீது பட்டிருந்த கழிவு துண்டுகளை இழித்துத் துடைத்தபடி எழுந்து வருகிறான் கணபதி.
முடியவில்லை.
அவனுக்கு நெஞ்சில் வலி நடக்க முனைந்ததும் கால்களிற் பட்ட அடியிலிருந்து குருதி கசிகிறது. வீதியின் உராய்ப்பில் முண்டிய கணபதியின் முழந்தாள்கள் வெம்மையில் மூழ்கிக் கிடக்கின்றன.
 

‘ஆருக்கு வெறி.? நீ எங்களை என்னண்டு நினைச்சை.? நீ.நீ.!?”
அவனாற் பேசமுடியவில்லை. வார்த்தைகளின் வெளி வராத குறை முடிவு தொண்டைக் குழியில் ஆழ்கிறது.
“இஞ்சை வாருங்கள்! ஆரெண்டால் என்ன கால்வாயிக்கை தண்ணி கிடக்குது. கொண்டந்து பஸ்ஸைக் கழுவி விடுங்கோ”
“நாங்கள் கக்கூஸ் கிளினர். பஸ் கிளினரில்லை.”
“டேய்! இப்ப செய்யப் போறியா இல்லையா?”
“கொஞ்சம் பொறு! அவசரப் படுறியே! இஞ்சியப்பன்வரட்டும்!"
புற்றரைகளில் நடந்து திரிகின்ற பாதவணிகள் ஒரு நிலை பெற்று நிற்கின்றன. அவற்றின் சொந்தக்காரர்களுள் ஒருவராவது பிடித்த மூக்கை விடவில்லை.
அத்தனை பேருக்குங் குடலைப் புரட்டுகின்ற உணர்வு முகத்திற் பரிணமிக்கின்றது. அதனை நாள் தோறும் செய்து வருகின்ற கணபதிக்கு.?
அவனும்.
தார் வீதியில் உருண்டதால் மேலும் உராய்வு பெற்ற தனது நாசியை மெல்ல வருடி, நோ தெளிந்தும் உள்ளவாறே விடுகிறான் கணபதி.
அவனுக்குச் சுகந்தமா?
செய்தி அறிந்தோ, என்னவோ முனியப்பரையும் அவமதிக்காதபடி பறந்து வருகிறது ஒரு 'ஜிப் வண்டி. இது வரையும் அந்த மூவரையும் தனது வார்த்தைகளால் விரட்டிக் காரியம் பெறுவிக்க முயன்ற சாரதியின் கண்களில் பயங்குடிபுகுகின்றது.
சட்டத்தின் கைக்குள் தூணும் அசல்ப்படும்; துரும்பும் அலசப்படும். அத்தனைக்கும் ஒரே நிதி; ஒரே தீர்ப்பு சாரதி இதனை உணராமல் இருக்க நியாயமில்லை.
'ஜிப் நெருங்குகிறது!
“இந்தா பொலிஸ் வருகுது. உங்களை ஒரேயடியாகக் கோட்டைக்கை இருந்து கக்கூஸ் எடுக்க வைப்பன். இந்த வண்டிலை இழுத்து விழுங்கடா" வார்த்தைகளில் அச்சங் கலந்த உக்கிரந் தொனிக்கின்றது.

Page 38
அவர்கள் அசையவில்லை.
“ஒய்! என்ன காணும் பண்ணிக் கொண்டு நிக்கிறியள்?”
அதிகாரியின் மிரட்டல் அந்த மூவரையும் ஒரு கணம் உலுக்குகின்றது.
கணபதிக்குக் கண்கள் இறுக்க. நாசித் துவாரங்கள் அகன்று விரிய. உதடுகள் இறுக. பற்கள் நறும்ப.
கோபம் வருகிறது!
"
“றைவரைக் கேளுங்கள்
“ஏன் ட்றைவர். எங்கை பஸ் நிக்குது? ஆ! 'றோங்சைட்டாலை பஸ்ஸைவிட்டு அந்தத் தள்ளுவண்டியிலை இடிச்சிருக்கிறியள் போலை இருக்கு."
சாரதி கண்களை விழிக்கின்றான்!
“இல்லை ஐயா!. ட்றைவர் வந்தது சரி! அவன் தான் குடிகாரன் மாதிரி முறட்டுத் தனமாக வண்டிலைத் தள்ளியண்டு வந்தான். பஸ்ஸும் வண்டிலும் அடிப்பட்டுப் போச்சு."
‘'நீர் கொண்டக்டர் தானே? உம்மை விசாரிக்கையிக்கை சொல்லும். இப்ப பேசாமல் நில்லும்!”
அமைதி
சாரதியும், 'கொண்டக்டரும் ஒருவர் மற்றவரைப் பார்த்து மிரள்கின்றனர். கூடிநின்ற மக்கள் கூட்டம் அவர்களைப் பார்த்து நகைக்கின்றது.
“நீங்கள் ஏன் நிக்கிறியள்? எல்லோரும் ஒடுங்கள்!”
“எங்கடை காசு - ?” கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்கின்றார்.
"அப்படிக் கேளுங்கள் இவர்கள் தலைகால் தெரியாமல் பஸ் ஓடுகிறது. எங்களுக்குத தான் நட்டம். பஸ் காசைத் திருப்பித் தந்தால் நாங்கள் போகிறோம்”
“பத்துச் சதக்காசுக்காக உயிரை விடாதையுங்கள். அங்காலை போகச் சொன்னால் போங்களன்!”
##:#}
 
 

கொண்டக்டர் இவ்வளவு நேரமும் பேசாமல் நின்று விட்டுப் பணஞ்சம்பந்தமான பிரச்சினை தம்முடையது தான் என்ற நினைப்பில் அந்தக் கூட்டத்தைப் பார்த்துச் சொல்கிறார்.
கூட்டம் சிதறுகிறது!
அதிகாரி எழுதத் தொடங்கிளார்.
‘பஸ் நம்பர். சாரதி பெயர். கைவண்டி. கணபதி. சாட்சிகள். கையெழுத்துக்கள்."
“இந்தா வண்டியை அங்காலை இழு!” சாரதி கணபதிக்கு விட்ட கட்டளை.
‘'நீ இழுக்கத்தானே போனாய்? இப்பவே இழன். உங்களுக்கு எண்டு தண்ணிமுறையிலை ஒண்டைக் கூட்டுங்களேன். அப்பிடியும் இல்லாமல் வாளியளிலை வழி நெடுக எங்களைச் சுமக்க வைச்சு. எங்களை நாயிலும் கேவலமாக நடத்த வேண்டாம். றோட்டிலை போறவைலயும் பெரிய சங்கடப்படுகிற மாதிரி அதைப்
பிடிச்சு. இதைப் பொத்தி.”
கணபதியுடன் கூட நிற்பவன் தான் பேசுகிறான். மீறி வந்த வெறுப்பில் வார்த்தைகள் தடம் புரள்கின்றன. அவனால் பேச முடியவில்லை.
இந்த மூவரில் மூன்றாமவன் கைவண்டியை இழுத்து விலக்கி விடுகிறான்.
அதிகாரியின் பொறுப்பில் நடைபெற்ற வழக்கில் சாரதிக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவன் உள்ளே போய் என்ன செய்வான் என்பது தெரியாது!
ஆனால் - ?
கணபதி ஒவ்வொரு நாளும் - காலையில் கைவண்டியைத் தள்ளிக் கொண்டுதான் போகிறான்.
y

Page 39
! 25, ര്. ငြှုဒဏု၏
நினைவுகளே கனவாக, கனவுகளே வாழ்வாக எண்ணியிருந்த பொழுதும் புலர்ந்துவிட்டது.
சுந்தரலிங்கத்துக்கு இந்த வாழ்வு கொடுத்த பரிசு. நிமிண்டி நிமிண்டி உடலை வளைத்து கணுக்காலுக்கு மேலேயும் காற்புறங்களின் சுற்றாடலிலும் கருகிவிட்ட புண்கள் மறுபடியும் மறுபடியுமாக கொப்புழங்களாக உமிழ்ந்திருந்தன. அவற்றை நகங்களினால் சொறிந்து சொறிந்து கண்ட அற்ப இன்பத்தின் மறுபாதியாக அவை மறுதலித்து எரிந்து கொண்டிருந்தன.
"ஐயோ! அம்மா எரிகிறதே! சாந்தி கொஞ்சம் சுடுதண்ணியாச்சும் தாவேன். எங்கோ எப்பொழுதோ எதற்காகவோ அன்பென்ற சொல் கலந்து அவன் அழைத்ததைக் கேட்டு துடித்துப் பதைத்து ஓடி வந்த சாந்தியின் இளமை அவளை விட்டுப் போய் ஆண்டுகள் பலவாகிவிட்டன. இல்லாமையும் இயலாமையும் நிறைந்து விட்ட இந்த வேளையில் தன் இளமையை, செல்வத்தைக் கரைத்துவிட்ட குற்றவாளியாகிய கணவனுக்குப் பணிவிடை என்ற கைங்கரியத்தை அவள் செய்ய வேண்டுமென்ற உந்தலில் இருக்கவில்லை.
பெற்றெடுத்த இரு பெண்களாகிய சாந்தினியையும், சரோஜினியையும் யாரோ பெற்று வளர்த்த இருவர்க்குக் கட்டிக் கொடுத்து ஜிவகடன் முடிந்து விட்டது என்ற முற்றுணர்வில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் சாந்தி தன் பெண் மக்களை உறவுக்கோ, உதவிக்கோ அழைத்ததில்லை.
அழைத்தாலும் அவர்களை ஆட்கொண்டு விட்ட மருமக்கள் அதனை அனுமதிப்பார்களா என்பது கேள்வியாகவிருந்தது. கேள்விக்குக் கிடைக்கும் விடை எப்படி என்பது தெரியாத சந்தேகத்திலும் பார்க்க அந்தக் கேள்வியையே கேட்காது விட்டு விடுவது எவ்வளவோ மேல். சாந்தியும் அதனையே செய்தாள்.
rosnሽፈጽነጠበ6ቫ ሐ6ናቖጫ6ኽ ̈-----------
 

இப்பொழுது அவள் தனியள். கட்டிலுடன் மெத்தையாக முடங்கிவிட்ட ஆசிரியர் அந்தஸ்திலிருந்து ஓய்வு பெறுவதன் மூலம் அதனையிழந்துவிட்ட இளமை வளமெல்லாம் எங்கோ கேட்ட ஒலியாக மடிந்து முதுமையின் மடியில் சாவின் எல்லையை நோக்கி விட்ட அவள் கணவன் சுந்தரலிங்கத்துக்கு, சிலவற்றில் அவரைப் போன்ற நிலையைப் பெற்றுவிட்ட அவள் தான் என்ன உதவியைச் செய்து விடப் போகிறாள்.
“உங்களையெல்லோ கேட்கிறன். ஏன் சும்மா ஊளையிட்டுக் கொண்டிருக்கிறியள். கடவுளுக்குப் பாரமாக இருக்கட்டும். கடைசி காலத்திலை மணிசரைக் கொஞ்சம் நித்திரையாவது கொள்ள விடுங்கள்.
சுடு நீருடன் தள்ளாடித் தள்ளாடி வந்து பக்கத்தில் அமர்ந்து அந்த நீரில் ஒரு துணியைத் தோய்த்துச் சீழ்வடியும் கால்களில் ஒற்றணம் கொடுத்து தன்னை அன்று நோக்கிய காதல் விழிகளால் - கருணை மொழிகளால் தேற்றுவாள் என்ற அந்த இனிய நிவுை சுந்தரலிங்கத்தின் மிடறைப் பிடுங்கியவாறு மறைந்து விட்டது.
‘சாந்தீ!
சுந்தரலிங்கம் தீனமாக அழைத்தார்.
‘அன்றிருந்த என் பெயர் எங்கே? உறவு எங்கே.
இதயத்தை நசுக்கிய இந்தக் கேள்விகளில் வேதனையைச் சற்றேனும் தீர்க்கலாம் என்ற நப்பாசையில் அவர் மெல்லக் கண்களை மூடினார். கொல்கின்ற இரவு விடிய இன்னும் சில மணித்தியாலங்கள் தான் இருந்தன. அதன் கொடுமைக்கு ஒத்தாசையாக மழை வேறு கொட்டத் தொடங்கியது.
இருந்து இருந்தாற்போல் அவர் படுத்துறங்க முனைந்து கொண்டிருந்த கூடத்தின் கதவுகளை நிவிக் கொண்டு இரண்டு உயிர்கள் உள் நுழைந்தன. ஒரத்தில் மின்னிக் கொண்டிருந்த மின்னொளிக்கற்றையில் அவருடைய சோடி நாய்கள் உள்ளே வருவது தெரிந்தது.
பாதி நனைந்திருந்த அந்த நாய்கள் இரண்டு தம் உறக்கத்தை மறுபடியும் தொடர்ந்து கொண்டிருந்தன.
‘சாந் தீ! “உங்களுக்கு என்ன இழவே பிடிச்சிட்டுது. அறுபது செண்டதும் அறளை
குறைவில்லை. அட சிவனே! ஒரு மூன்டு கிழமை எவ்வளவு நிம்மதியாக இருந்தன். இண்டையிலிருந்து பழையபடி சனியன் காலைச் சுத்தியிட்டுது'
": IRITTITr '':ा රිථි

Page 40
வார்த்தைகளை வரம்பிக்கக் கூறி விட்டு சுந்தரலிங்கத்தின் அருகில் வந்து ‘என்னனை? என்றாள் சாந்தி.
‘சே! சாந்தி என்ற காந்தியப் பெயருக்கேற்றாற் போல் என்னை அறிந்து தெளிந்து காதலித்து மணந்து ஒரு சாந்தியைத் தந்த என் சாந்தியும் மாறுவாளா?
‘நோய் வந்தால் அதைத் தொடர்ந்து துர்நெடி வந்தால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாதா?
‘எப்படி முடியும்? நீரழிவின் கொடுரத்தை அந்த அசிங்கமான மணத்தை என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்வைலயே! சாந்தியால் எப்படி முடியும்?
சாவிலும் வாழ்விலும், நினைவிலும் கனவிலும், செயலிலும் அனைத்திலுமே நாம் LTL LLL LLLLLLTTG LLTLLL TTTTTTLTLLL TTT TT
நினைவுகளின் நெகிழ்ச்சியில் தவித்த அவர் திடீரென்று சிரித்தார். வெளியே கேட்டுக் கொண்டிருந்த முகிலின் இடியையே நகைப்பதாக இருந்தது அந்தச் சிரிப்பு,
"இப்பிடிச் சத்தம் போட மனுசனாலை ஏலுது. தானே எழும்பிப் போய் அதிலை தண்ணி வைச்சு காலைக் கழுவ முடியாது.
அவருக்கு அணித்தாக உறங்குவதற்கு அவரின் காற்புண்ணில் இருந்து எழும் துர் நாற்றத்தைச் சகிக்கின்ற சக்தியற்றே அவள் கூடத்துக்கு அப்பால் உள்ள ஓர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள். அவரின் அலறல்கள் வேறு காதைக் குடையும். இவற்றை இப்பொழுது பொருட்படுத்தாதவளாக அருகில் நின்ற சாந்தி சொன்னாள்.
‘இந்தா! உங்கடை பொன் (புண் என்று அர்த்தம்) னை வைச்சு இஞ்சை கட்டி அழாதையுங்க. வேணுமெண்டால் பேந்தும் ஆஸ்பத்திரிக்கப் போங்கள். அவங்கள் துண்டு வெட்டினா வேறை செல்லச் சந்நிதிகாணப் போய்க் கிடவுங்கள். என்னுடைய கண்ணிலை மட்டும் முழிக்காதீங்க.
‘சாந்தி அழைத்து அவர் மெல்ல சிரித்தார். அதன் மூலமேனும் தன் வேதனையை அகற்ற அந்த இதயம் முனைந்து கொண்டிருந்தது. ‘உனக்கு நினைவிருக்கா. என்றபடி நிறுத்தினார் சுந்திரலிங்கம்.
“எது?’ என்ற கேட்பது போல் அவரைப் பார்த்தபடி ஐஸில் உறையவிட்ட மீன் ஆனாள் சாந்தி.
‘உன்னை நான் நேசிக்கிறேன் என்ற செய்தி வீட்டாருக்கு எட்டியதும் என்னை வெட்டிப் போடுவது போல வதைத்தார்களே. அந்த வதை பொறுக்காமல் நான்
"கங்கைiன் கன்திகள்"
 

ஹோட்டல்களில் தங்கி பள்ளிக்கூடமே தஞ்சம் எண்டு இருந்த காலம். உனக்கு நினைவிருக்கிறதோ சாந்தி”
அவள் சமைந்து விட்டாள்.
"அப்பொழுது எனக்கு இருவத்தைஞ்சு வயசு. இப்ப.’ என்று நிறுத்திவிட்டு மறுபடியும் சிரித்தார். சாந்தியின் குரல் கண்கள் சடாரென்று கீழே வீழ்ந்து காற்புண்களையும் நமைந்திருந்த கைகளையும் பார்த்தன. அவர் சொன்னார். இப்ப எனக்கு வயசு அறுபத்தைஞ்சு ஹஹற்ஹஹா. நாற்பது வருசம் என்னுடைய
நாயகியோடை வாழ்ந்திட்டன். இனி. நடுத்தெருவிலை. 5Tul......
‘அப்ப ஏன் இஞ்சை கிடக்கிறியள்?’ என்ற சாந்தியின் குரல் கேட்டு அவருடைய உடல் நடுங்கத்தான் செய்தது.
‘சாந்தி!' என்னால் எத்தனையோ பிள்ளையஸ் நல்லா இருக்குதுகள். நான் பெற்றதுகள் கூட என்னுடைய வார்த்தையை வேதமாகக் கொண்டு எப்பிடியோ வாழ்க்கையை ஒட்டுதுகள். ஆனால்.’
‘ஆனால் எனது இந்தத் தோற்றத்தில், குணத்தில், பேச்சில் அன்று மயங்கி என்னையும் என் குடும்பததையும் பிரிச்சு எடுத்து என்னையே கல்யாணமும் செய்து கொண்ட நீ, இப்ப மாறியிட்டியே. இது தான் வேதனையாயிருக்கு.
‘சமமாகத் தன்னோடை படிச்சவளை அல்லது வேலை செய்தவளைக் கல்யாணஞ் செய்யிறது ஒரு விதத்தில் ஆபத்தானது. உன்னை நான் காதலிக்க நேர்ந்தது ஒரு விபத்தினாலே தான். ஆனால் ஆபத்தா முடியுமெண்டு நான் கனவிலும் நினைக்கவில்லை.
*மனித வாழ்க்கையே நினைக்கிறதை நடப்பாகக் கொண்டதல்ல. அது எனக்கு நல்லாத் தெரியும். இளமைப் பருவத்தில் எதிர் காலத்தின் இன்ப நினைவுகளைக் கனவு கண்டேன். முதுமைக் காலத்தில் கடந்த காலத்தில் நடந்து முடிந்த சில இன்ப நிகழ்ச்சிகளை மீட்டி, மீட்டிப் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டேன். இதெல்லாம் மனிசனுக்கே பொதுவானதுதான். இது தவறுமல்ல, ஏனேண்டால் மனிதனுடைய வாழ்க்கையே சற்று. நிறுத்தினார் சுந்தரலிங்கம்.
சாந்தியும் ஒரு காலத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவள். அந்நாட்களிலும் இந்நாட்களிலும் தன் சிந்தையில் கருத்துக்களைத் தன் அன்பிலிருந்து விடுபட்டு பந்தம் என்ற போர்வையில் மட்டும் முடங்கிக் கிடக்கும் கணவன் சொல்லும் பொழுது, சற்று கவனத்தைத் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தாள். தனது நித்திரை அந்த அந்நிய இரவில் குழம்புகின்றதே என்பது தான் அவளுக்கு இப்போதிருந்த 6(55.5LD.

Page 41
போனார்.
அவருடைய குரலில் தள தளப்பும், வெளியே பெய்து கொண்டிருற்த மழையின் வெல வெலப்பும் சேர்ந்து அவரின் உடற் பலஹினத்தைப் பொட்டிட்டன. ஆனால் சுந்தரலிங்கம் இன்னம் மன உறுதியானவர் என்பது அவருடைய வார்த்தைகளில் தெளிவாகத் தெரிந்தது.
‘சாந்தி. ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும்தேவைப்படுவது உடம்பிலே ஏற்படுகிற பசிக்கு எண்டும், அதுதான் காமம் எண்ட கோட்டைக்கு நுழைய முன் உள்ள நடைபாதையான காதலைத் தோற்றுவிக்குது எண்டும் பலபேர் அபிப்பிராயப்படுகிறார்கள். அது தவறு. அந்திய காலங்களில் ஒருத்தருக்கொருதர் துணையாக இருப்பம் எண்டு உறுதி பூண்டு ஏற்படுகித்துகிற பந்தம் தான் கல்யாணம் ஒருத்தனுக்கு கடைசி காலத்திலை ஏதாச்சும் வேணுமெண்டா அவன் மனைவி அவனுக்கு எட்டு, பத்து வயசு இளையவளாயிருக்க வேணும், அல்லது சம வயசு மனைவி எண்டால் அதிகம் பிள்ளைகள் பெற வேண்டும். இந்த இரண்டுமில்லாத என் போல ஆக்களுக்கு.99
இடையில் தன் பேச்சை நிறுத்தி விட்டுச் சிரித்தார் சுந்தரலிங்கம். அவரின் அந்த வழமையான வேதனைச் சிரிப்பு தன் சிறுமையைத்தானே எள்ளி நகையாடும் பான்மையில் தெரிந்தது.
‘தன்மானம் ஒண்டாவது பிறக்க வேணும். அப்பத்தான் மனைவி எண்டவள் மாறாக நடக்க ஆரம்பித்ததும் கூறாமல் தன்னையே கொலை செய்து கொண்டு நிம்மதியாகலாம். உன்னை அடிச்சு உதைச்சு வருத்தப்படுத்த எனக்கு இதயம் இடம் தராது. நான் அப்படிச் செய்யவுமில்லை. செய்யப் போவதுமில்லை. என் வேதனையை நானே சுமக்கிறேன். நானே சுமக்கிறேன்;
சுந்தரலிங்கத்தின் கால்களிலிருந்து வலி பிறக்கிறது என்பதை அவரது முகத்தின் கோணங்கள் முத்திரையிட்டுக் காட்டின. அந்தத் துன்பச் சாய்வின் ஓட்டத்தைச் சமாளித்துத் திரும்பியவர் தன் வார்த்தைகளை அவள் விடும் மூச்சாக மதித்தபடி முன்பாகவுள்ள சாய்மனையில் உறங்கி குறட்டை விடுவதைக் கண்டதும் உண்மையிலே பொறுக்க முடியாதவரானார்.
உடலில் ஏற்படும் வலியைப் போக்க மருந்து வகையைக் கண்டு பிடித்த மனிதன், மனவலிக்கு எதையுமே காணமுடியவில்லையே! அவரின் இடது கை நெஞ்சை அழுத்தியதிலிருந்து இது தெரிந்தது.
சுந்தரலிங்கம் பின் புறமாகக் கழுத்தைப் பெயர்த்துப் பார்த்தார். கண்களின் கோடியில் இனம்புரியாத கசிவை ஏற்படுத்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த
 

தன் கடுவனுக்குப் பக்கத்தில் துணையாகக் கிடந்த அவருடைய பெட்டை நாய் அவரைப் பார்ப்பது தெரிந்தது.
"வள்ளி என்று மெல்ல அழைத்தார் சுந்தரலிங்கம். வாலைக்குழைத்தடி எழுந்து வந்தது வள்ளி. அவருடைய தோற்பட்டையை நசுக்கிவிடாமல் ற ராசியபடி நின்ற வள்ளியின் தலையை மெல்ல வருடி விட்டபடி அமைதியானார் கந்தரலிங்கம்,
‘நாய்கள்
அவரது அதரங்களின் முணுமுணுப்பில் இருந்த சுமைகள் பீறிட் படி வெளியே பொரிந்தன.
வள்ளி தன் பக்கத்தில் இல்லை என்பதை உணர்ந்துவிட்ட கடுவன் சுந்தரலிங்கமும் வள்ளியும் இருந்த கூடத்துப் பக்கமாகச் சோம்பியபடி நடந்து வந்தது.
நேற்று எழுதின காயிதம் சாந்தினிக்குக் கிடைச்சிருக்கும். சரோஜினிதான் கொழும்பிலை இருக்கிறாளே. அவள் தூரத்துத் தண்ணிர். சாந்தினிக்கு இண்டைக்குப் பள்ளிக் கூடமில்லை. கட்டாயம் வருவாள். என்னுடைய மூத்த பெம்பிளைப் பிள்ளை எண்டாலும் இரக்கமுள்ளது. தாயைப் போல நடிக்க மாட்டுது.
சுந்தரலிங்கம் கனவில் திளைத்துக் கொண்டிருந்தார்.
‘சாந்தினி வந்ததும் வராததுமாக என்னுடைய ஈனத்தைப் பார்த்துக் கலங்குவாள். நாங்கள் எல்லாம் மலைபோல இருக்கிற போது, ஏன் நீங்கள் கலங்க வேண்டும்? எண்டு கேட்டு எனக்குப் பக்கத்தில் இருந்து கால்களைச் சுடுதண்ணியாலை கழுவியபடி அழுவாள். நான் அதைத் தேத்துவேன்.
'உலகத்திலை ஒண்டு இல்லாட்டி ஒண்டை எண்டாலும் ஆண்டவன்
கொடுத்திருக்கிறான்.
'ஆண் நிழலிலை நிண்டு போ! பெண் நிழலிலை இருந்து போ எண்டு அறியாமலே சொல்லுறவங்கள். என்னுடைய சாந்தினி எவ்வளவு ஆறுதலாய் இருப்பாள். இண்டைக்கும் நாளைக்கும் நான் நாளையண்டைக்குப் பேந்தும் ஆஸ்பத்திரிலை போய்க்கிடப்பன்.
நினைவுச் சுழல்களின் எற்றலில் ஒல்லிபோன்று அசைந்த சுந்தரலிங்கம் வெளியே கார்ச் சத்தம் கேட்டதும் தலையை எம்பிப் பார்த்தார். தனது வீட்டுக் கதவு முன்பு அது வந்து நின்றதும், அவருடைய உள்ளம் சிறிது கனிந்தது. எதிர்பார்த்திருக்கும் சேவையை நிறைவேற்றித் தனக்கு ஆறுதலாக இருக்கத்தான் ஆசைக்குப் பெற்ற மகளே வருகிறாள் என்று ஒரு முறை எண்ணியதும் உடலே பூரித்தது. மனித

Page 42
மனத்தின் கண்ணாடியை சுந்தரலிங்கம் பிரதிபலித்தார். தனக்கு இயைந்ததையும் உகந்ததையும் மட்டுமே உவக்கின்ற பலவீனம் மனிதனுக்குச் சொத்தான ஒன்றா? சுந்தரலிங்கத்தின் மகிழ்ச்சி ஆமென்று கூறியது.
அங்கு வந்திருந்த காரிலிருந்து சாந்தினி இறங்கினாள். கைகள் நிறைந்த முட்டாசிப் பொட்டலங்களுடன் மெல்ல நடந்து வந்த அவள், வீட்டின் முன் கூடத்தில் அசையாது கிடந்த சுந்தரலிங்கத்தைக் கவனித்தாளோ தெரியாது. பின்னர் அவருக்குத்தானே சேவை செய்யப் போகிறேன் என்ற நினைப்பில் தாயைத் தேடிய வண்ணம் உள்ளறையை நோக்கி நடந்திருக்க வேண்டும்.
‘அம்மா!’ என்ற சாந்தினியின் குரல் கேட்டு ஒப்பாரியுடன் பதில் கொடுத்தாள் சாந்தி வந்திட்டியாம்மா சாந்தினி என்னாலை இஞ்சை ஒரு நிமிஷங்கூட இருக்க (tplԳեւ ITՖ]. அறுவது செண்டிட்டால் அறளை எண்டு சொன்னதைக் கேள்விப்பட்டிருக்கிறன். இந்த மனுஷனோடை என்னாலை அண்டலிக்கேலாது. நான் உயிரோடை இருக்க வேண்டுமென்றால் என்னைக் கூட்டிக் கொண்டு போயிடு!
Ф—tD...... சாந்தி அழுது வடித்தாள்.
சுந்தரலிங்கம் இந்த நிகழ்ச்சியுடன் ஒரு முறை செத்துப் பிழைத்தவரானார். மனைவியும் மகளும் சந்தித்த காட்சியும், சொல்லிய வார்த்தைகளும் அவரைக் குருடாக்கின. உள்ளம் மேலும் ஊனப்பட்டது. "இந்த மனுஷனோடை அண்டலிக்க ஏலாது!’ என்ற சாந்தியின் வார்த்தைகள் அவரைக் குழப்பின. கண்களில் என்றுமில்லாத வேதனையில் கீறல்களும், அவற்றால் கசிந்த நீர்மையும் தெளிவாகத் தெரிந்தன. அவர் தான் கிடந்த அந்தச் சாய்மனைக் கட்டிலுடன் மறுபடியும் சிலையானார்.
சாந்தினி சொன்னாள்: ‘அம்மா! உங்களுக்கு ஒண்டு எண்டால் நாங்கள் அதைப் பார்த்தண்டு, சும்மா இருப்பமா? அழாதையுங்கள்! நான் இஞ்சை நிக்கிறதுக்கு வரயில்லை உடனே உங்களையும் கூட்டிக் கொண்டு போறன். அவரட்டையும் இஞ்சை நடக்கிற அநியாயத்தைப் பற்றிச் சொன்னனான். நீங்கள் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வாருங்கள அம்மா? நாங்கள் போவம்!
‘சாந்தினி
சுந்தரலிங்கம் கிணற்றுள் விழுந்த அவலத்துடன் அழைத்தார்.
‘வாறன்..!" என்ற சாந்தினியின் குரல் வந்த மூன்று நிமிடங்களின் பின் அவள் அவர் முன் வந்து, இடுப்பில் ஒரு கையிட்டு நின்றாள்.
‘அம்மா சாந்தினி. நீ உங்க அம்மாவை கூட்டிக்கொண்டு போறியா அம்மா? நான் தண்ணி வென்னி குடிச்சு இரண்டு நாளாச்சுது. உனக்குப் பிரியம் எண்டால்
 

பாரமாகவும் இருக்க விரும்பயில்லை. என்னாலை நடக்க ஏலாது. அதாலைதான் கேக்கிறன். எப்பிடி யெண்டாலும் ஆஸ்பத்திரிக்காவது போய் அங்கை கிடக்கப் பார்க்கிறன்?.
அவர் கண்களில் நீர் வழிந்தது.
சாந்தினி உள்ளே சென்று அங்கிருந்த சுடுநீர்ப் போத்தலை எடுத்தபடி வெளியே சென்றாள். சிறிது நேரத்தின் பின் திரும்பி வந்து, "டிரைவரை அனுப்பியிருக்கிறேன். அப்பா: இப்ப தேத்தண்ணி வாங்கியந்திடுவான்’ என்றாள்.
‘சரியம்மா’ என்றார் சுந்தரலிங்கம். அவருக்கு வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது. அதைத் தன் மகள் பார்த்து விட கூடாதே என்ற நினைப்பில் மேல் துண்டால் மறைத்து ஒருவாறு அடக்கினார்.
மானிடர் தொடர்பே ஓர் அர்த்தமில்லாத சேர்க்கைதானே? பெற்று வளர்த்ததும் பின்னர் பெயருடனும் புகழுடனும் வாழவைத்ததும் செல்லாக் காசுச் சம்பவங்களா? மரத்துக்கு இட்ட நீர் ஏதோ ஒரு வழியால் கைம்மாறாகக் கிடைக்கும். ஆனால் மனிதனுக்கு இட்டவை யாவும் அன்பு என்ற சொல்லாக வேனும் கிடைக்கமாட்டாவா? சுந்தரலிங்கம் குமுறினார். சாந்தி புறப்பட்டுவிட்டாள். சாந்தினி அவளை வழி நடத்தி வந்தாள்.
‘அப்பா!' அம்மா என்னோடை வந்து இருக்கப் போறாவாம். நான் கூட்டிக் கொண்டு போறன். கொஞ்ச நாளைக்குத்தான். நீங்கள் எப்பிடியும் குணமாகியிடுவீங்கள். அடிக்கடி கடிதம் எழுதங்கள் அப்பா!'
அவள் சொல்லி முடித்தாள். சுந்தரலிங்கம் அவளை ஒரேயொரு முறை பார்த்தபடி சரியென்று தலையசைத்தார். கார்ச் சாரதி தேநீருடன் அங்கு வந்தான். அதனை அவனிடமிருந்த பெற்று, அவர் அருகில் வைத்தபடி 'நான் வாறன் அப்பா' என்றாள் சாந்தினி. அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
ஓடமுடியாமற் பழுதுபட்டதும் தன்னை குப்பை ஓடையில் விட்டெறிவார்கள் என்பதை உணரச் சக்தியற்ற அந்த மோட்டார் வண்டி, சுந்தரவிங்கத்தின் செவிகளில் உரமாக ஒருமுறை உறுமியடித்துவிட்டு, ஒடி மறைந்தது.
சுந்தரலிங்கத்துக்கு அவர்கள் பின்னால் செல்ல வேண்டும் - அவர்கள் போவதையே பார்க்க வேண்டும் என்று ஆசை தோன்றியது. சாய்மனையை விட்டு எழுந்தார்.
தோன்றுகின்ற ஒவ்வோர் ஆசைக்கும் ஈடு கொடுத்து நிறைவேற்ற மனிதன் முற்பட்டதனால் தான் மீளாத நட்டமும் மாளாத சோகமும் அவனை அண்டுகின்றன போலும். சுந்தரலிங்கம் எழுந்ததும் எழாததுமாக நிலைகெட்டுவிழுந்தார்.

Page 43
சீழ் வடிந்து. அழுக்கேறி வலுவிழந்து போன அவருடைய கால்கள் நிலத்தின் உரைபட்டு இரத்ததைப் பீறிடச் செய்தன. வேதனையால் துடித்தார் அவர்.
ஒன்றும் புரியாதவராக சுடுநீர்ப் போத்தலில் இருந்த தேநீரில் மேல் துண்டைத் தோய்த்து கால்களை ஒற்றினார். ஒரு சுகம் தென்பட்டது. பீறிட்ட இரத்தம் வெந்நீரில் மேலும் பெருகத் தொடங்கியது. மயக்கமுறும் நிலை. சாய்மனயின் கால்களை ஒரு கையாலும் தன்காலொன்றை மறுகையாலும் பற்றியபடி கீழே சாய்ந்தார் சுந்தரலிங்கம்.
எங்கோ ஒரு மூலையில் கிடந்து நடப்பவற்றையெல்லாம் கடவுள் போல் பார்த்திருந்த வள்ளியும் கடுவனும் அவரை நெருங்கி வந்தன. கடுவன் அவரை மோந்தது. வள்ளி அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் வாயில் வீழ்நீர் பெய்து கொண்டிருந்தது.
வள்ளி மெதுவாக வந்து சுந்தரலிங்கத்தின் கால்களை நக்கத் தொடங்கியது அந்தக் கால்களில் ஏறியிருந்த மண்ணையும் தூசியையும் அகற்றுவது போல தொடர்ந்தும் நக்கியது. கடுவன் வள்ளி செய்கின்றாற் போலவே தானும் மற்றக் காலை மெல்ல மெல்ல நக்கியது.
சுந்தரலிங்கத்துக்கு இருந்த ஆசையெல்லாம் சாந்தினியும் சாந்தியும் போகின்ற காட்சியைப் பார்க்க வேண்டும் என்பது தான். தன்மீது அவர்கள் கொண்ட காதலும் பாசமும் பக்தியும் இருந்த நிலையை எண்ணியபடி அவர் அவர்கள் பின்பே சென்றுவிட்டார். அவருடனேயே அவருடைய காலத்துப் பசுமை நிறைந்த நினைவுகளும் காய்ந்துவிட்டன.
 

nேடி
‘ஹால்டிங் பிளேஸ்' அல்லாத இடத்தில் வந்தும் வராததுமாகப் ‘பஸ் திடீரென்று நின்றது. சிறிது அமைதியாக இருந்த பிராணிகளிடையே தம்மையறியாத பரபரப்பு ஏற்பட்டது. “பெல்லை அமுக்கி,அமுக்கி அடித்தாலும் உரிய இடத்தில் நிற்பாட்டாத சாரதி யாருக்காகவோ பரிந்து இடையிலே நிற்பாட்டியது சிலருக்கு வியப்பை அளித்தது.
முன் சீட்டில் அமர்ந்திருந்த கருணாகரன் தனது யோசனை வெள்ளத்துக்கு ஒரு கையணை இட்டவாறே மெல்லத் தலையைத் திருப்பி வாசற்புறமாக வெளியே பார்த்தான். ஒருவரும் இறங்கவில்லை. நேரமுஞ் சிறிது கழியவே இயந்திரப் பாகத்தை உற்றுப் பார்த்தான். சாரதியின் முகம் விகாரக் கடலில் தோய்ந்து நிமிர்ந்தது தெரிந்தது.
“என்ன பாருங்கள் . ஏன் நிற்பாட்டிப் போட்டியள்”
“பிறேக் டவுனாப் போச்சு” சாரதி மிகவும் தன்மையாகப பதிலளித்து விட்டு அமைதியானார்.
சாவகச்சேரிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த பஸ் நாவற்குழி வெளியிலே பாலத்தருகில் தவஞ் செய்யத் தொடங்கியது. நிரம்பி வழிந்த சனக்கூட்டம் 'தொப் தொப்' பென்று பஸ்ஸை விட்டுக் குதித்தது. இறங்கிய ஒவ்வொருவரும் ஏதேதோ முனகிக் கொண்டார்கள்.
இவங்கள் என்னவாவது சொல்லித் துலையட்டும் நான் இப்ப வீட்டை போறத்துக்கு வழி?

Page 44
கருணாகரனுடைய நினைவுத் தொடரைத் தொடர்ந்து அவனுடைய இடது கரம் சட்டைப் பையைத் தடவியது. ‘கொண்டக்டர் கொடுத்த ‘பஸ் டிக்கட் மாத்திரமே கிடந்தது.
வைத்த கை வாங்கும் போது இதயம் பலமாக அடிப்பதை உணர்ந்து கொண்டான் கருணாகரன். அத்தனை அணையதுறைகளிலும் தோல்வி கண்டவனின் நெஞ்சம் இளகித் துடியாமல் வேறு என்ன செய்யக்கூடும்?
"இங்கிருந்து நுணுவில் மட்டும் போறதெண்டால் நடக்கவேணுமே! வான் காரிலை போறதெண்டால் - ம்..!"
“என்னப்பா! என்ன செய்யுரீங்கள்? இத்தினை சனங்களையுங் கொண்டு போறத்துக்கு வேறை வழியில்லையா?” அடுத்த பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போகின்ற புதிய தெம்பில் ஒருவர் கேட்டார். கூட்டம் அவரை ஆதரித்தது.
“கொஞ்சம் பொறுங்கள். நாங்கள் வேணுமெண்டு பஸ்ஸை நிற்பாட்டயில்லை. எங்களை ஒடச் சொல்லித் தந்த பஸ் தானாக நின்டு போச்சு. எங்களை அதுக்கு என்ன பண்ணச் சொல்லுறியள்? வேறை பஸ் ஏதும் வந்தால் பாப்பம் .”
கொண்டக்டர் பலவித உணர்வுகளை மனத்திற் கொண்டவராகச் சொல்லி முடித்தார்.
"சேச்சே! யாழ்ப்பாணத்துக்கு மனுஷன் வருவானா? உலகத்திலையுள்ள வசதிகளிலே போகங்களிலை ஒண்டுமே இல்லாத கஞ்சபூமி’ பத்திரிகை மூலமாக உலகைச் சுற்றி வந்த ஒருவர் சொன்னார்.
கருணாகரன் சொற்பதுாரந் தள்ளித் தெரிந்த பெரிய பாலத்தை நாடி நடந்தான்.
விமலா இண்டைக்கு வெள்ளைணையாக வரச் சொல்லிச்சுது. பாவம் ! வருத்தக்காறக் குழந்தையும் அவளும் என்ன பாடுபடுகுதுகளோ?
மேற்குவானம் குருதி பரப்பி ஓய்ந்தது. அதன் வெட்டிடங்களில் காய்ந்த புண்ணைச் சுற்றிய கருமை கவ்வத் தொடங்கியது. விழிகள் உயர்ந்து மேற்றிசையைப் பார்க்க, பார்க்கக் கருணாகரனுடைய மனமும் வேதனையில் துடிதுடிக்கத் தொடங்கியது.
அவனுடைய கண்கள் அப்படியே வனத்தினின்றும் பூமியிற் படிந்து கிடந்த தார் வீதியிற் படிய - தூரத்தில் வந்து கொண்டிருந்த வாகனத்தின் ‘கூட்லைட்'டின் மூலம் பஸ்தான் என்று தெரிற்து கொண்டாள். மள மளவென்று பஸ் நின்ற இடத்தை நோக்கி நடை போட்டான்.
 

“எல்லோரும் நிரையாக வாருங்கள்!” வந்த பஸ்ஸின் கொண்டக்டர் உத்தரவிட்டார். வெள்ள அகதிகளுக்கு மா மூடைகளையும், பாண்பட்டர் சரைகளையும் விமானங்களிலிருந்து உருட்டிவிட்ட அமெரிக்கள் ஒருவர் இப்படிச் சொல்லியிருப்பாரோ என்னவோ?
கருணாகரன் ஒருவாறு தொத்திக் கொண்டு வீடு வந்து சேர்ந்து விட்டான். இந்த பஸ்ஸை விட்டால் வேறு கிடைக்காது என்பது அவனுக்குத் தெரியும். எனவே, கொண்டக்டருக்குப் பற்களை அடகுவைத்து முதலாவதாக ஏறினான். அதளால் தான் பயணத்தைத் தொடர்ந்தவர்களிற் பாதிப்பேரை விட்டுவிட்டு அவனும் சிலரும் வந்துவிட்டனர்.
“சிச்சிச்சி - கண்டறியாத உத்தியோகம் - நாளாந்தமாக பளில் பயணம் செய்யிற தெண்டால் முடிஞ்ச காரியமா?” கருணாகரன் அலுத்துக்கொண்டதைக் கேட்ட அவனுடைய மனைவி விமலா, “என்ன, வந்ததும் வராதுமாகப புறுபுறுக்கிறீங்கள்" என்றபடி வந்தாள்.
“ஒண்டுமில்லை. இந்த பஸ்காரங்கடை திருவிளையாட்டை நினைச்சன்."
“அட! அது தெரிஞ்ச விஷயமாச்சே!" விமலா அலட்சியமாகச் சொன்னாள்.
*ம்ம்! ம்ம் பிள்ளைக்கு எப்படியிருக்கு”
தான் பஸ்காரரைப் பற்றிச் சொன்னதை, "டிப்போ மனேஜர்' மாதிரியே அலட்சிய பாவத்துடன் தன் மனைவியும் எடுத்துக் கொள்வாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றத்தைச் சுமந்தபடி பிள்ளையைப் பற்றி விசாரித்தான்.
‘என்னை செய்யிறது? நம்ம தலையெழுத்து! யாழ்ப்பாணப்பரியாரி ஆரட்டையு மெண்டாலும் கொண்டு போகாமல் ஏலாது போலிருக்கு. ஒருக்கா ஜூரம் கூடுது. பிறகு ஒருக்கா குறையுது. புது மருந்துச் சாமானையாவது வாங்கலாம் எண்டால் ஆளில்லை. கையிலை ஒரு சதமும் இல்லை."
விமலா இயல்போடு அடுக்கிக் கொண்டே போனாள். கருணாகரன் காதைப் பொத்தாத வரையில் கேட்டுக் கொண்டிருந்தான்.
“இஞ்சேருங்கோ, உங்களாலை முடியாததும் இருக்குமா? தம்பித்துரை கடையிலை, குடிநீர்ச் சாமானையாச்சும் வாங்கியாங்களன். அவன் பூட்டியிருக்க மாட்டான்.”
‘மண்ணாங்கட்டி" வெறுப்போடு கூறினான் அவன்.
“மத்தியானம் ஒரு கப்ரீயோடை காலங்தள்ளிப் போட்டு கிடந்த முப்பது சதத்தையும் பஸ்ஸ"க்குக் கொடுத்தன்; கிடக்கிறது பஸ் டிக்கட்தான். வேணுமெண்டால் எடு!
b'

Page 45
"என்ன பகிடியோ பண்ணுறியள்?"
"அப்ப என்னை என்னதான் செய்யச் சொல்லுறாய்?”
‘போய்க் கேட்டுப் பாருங்களன்.”
y என்னாலை ஏலாது!
"அப்ப பிள்ளை?”
"செத்துத் தொலையட்டும்.”
“ஆங்!” அவள் விம்மி விசும்பினாள்.
கருணாகரன் உடுப்புக்களைக் களைந்து அங்கங்கே எறிந்து விட்டு, சாரத்தை உடுத்தபடி வெளியே வந்தான். தான் வெறுப்போடு சொன்ன வார்த்தைகள்
மறுபடியும் திரும்பி வந்து இதயத்திற் சம்மட்டியாக அடித்த வேதனையுடன் நடந்தான்.
கருணாகரன் பத்திரிகாலயம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தான். பட்டதாரியாக இருந்தும் அதற்குரிய வேலையோ, அன்றி சம்பளமோ இன்னும் அவனுக்குக் கிடைக்கவில்லை. நெடுநாள் வேலையில்லாமல் இருந்தவன், இருந்த எழுத்தார்வத்தை முன் வைத்து ‘கலாபூமி’ பத்திரிகையிற் போய்ச் சேர்ந்தான்.
அவனுக்குக் கிடைக்கும் நூற்றி நாற்பது ரூபாவைக் கொண்டு ஒரு தாய், ஒரு மனைவி, ஒரு பிள்ளை, தான் என்ற நான்கு உயிர்களுக்குச் சோறு போட வேண்டிய சங்கடமான நிலைமை. அதைவிடப் பட்டதாரி என்ற அந்தஸ்தைக் காப்பாற்ற வேறு, வேறு தொல்லைகள்.
கருணாகரனைப் பொறுத்த வரையில் இந்த உலகம் அவ்வளவு இனிப்பாகத் தோன்றவில்லை. நாளுக்கு நாள், மணிக்கு மணி கவலைகளும் தொல்லைகளும் அவனைச் சூழ்ந்தன.
“இனியும் இனியும் உயிரோடை இருப்பதே ஆபத்து. எனக்கு மட்டும் ஒண்டும் வராது. வேலையும் நல்லதாயில்லை வாழ்க்கையும் - ம் உப்பைவிடக் கொஞ்சம் இனிப்பு. நான் சாகவேண்டியதுதான். எண்டைக்காவது ஒருநாள் சாகப் போறவன். ஆமாம் இண்டைக்கே போயிட வேண்டியதுதான்.”
தன்னையும் மீறி வார்த்தைகளை உதிர்த்தபடி நடந்து கொண்டிருந்தான் கருணாகரன்.
அது 'அங்கொடைப் பல்கலைக்கழக வீதியில் நடந்தாற் போலிருந்தது.
நினைவுகள் சூழ்ந்தன.
"பெத்த பிள்ளையை. அதுகும் ஒண்டே ஒண்டெண்டு வந்ததைச் செத்துப்
 

போகட்டும் எண்டு சொன்ன பாவி. நான் செத்தாத்தான் திரும். சே! விமலா என்ன பாடுபட்டிருப்பாள்.'
‘ஆரட்டைப் போய்க் கேக்கிறது! கடன் தண்ணியெண்டு வாங்கினால் குடுக்கவும் வழி வேணுமே. நூற்றுநாற்பது ரூபாவோடை முப்பது நாட்களை ஒட்ட வேணுமே.
‘எட சேமிப்புத்தான் இல்லை. திருப்தியோ இல்லையா - சாப்பிட்டண்ைடாவது இருக்க விதி இல்லையோ? குழந்தையொன்டு அதுக்கெண்டு வருத்தம் பிணி வேறு.?
கருணாகரன் நினைவுச் சுமையுடன் சந்திக்கு வந்து விட்டான். சந்தியின் திருப்பத்தில் கண்ணுக்குப் புலப்பட்ட படிப்பகத்தின் போர்ட் பலகை கண்ணில் விழுந்தது.
கண்களின் திருஷ்டிப் பாதையில் கால்கள் நடக்க எத்தனித்த வேளை, மனம் தண்டவாளப் பாதைக்கு இழுத்தது. அவனுடைய மனத்தின் துன்பச் சுமைகளை அங்கேயே இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாகக் கண்ணை மூடிவிடலாம் என்ற நினைப்பு அறுத்துக் கொண்டிருந்தது.
வாசிகசாலைக்குள் நுழைந்தால் அங்கேயிருந்து அரட்டையடிப்பவர்களுடைய பேச்சின் லயிப்பில் சிறிது மூழ்க ஒரு வேளை மனம் மாறலாம் என்ற கருத்தும் அவனைக் குடைந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் பாதை விளம்பரத்துடன் சாய்ந்தான்.
சந்தியின் மின்சார விளக்கு அவனுடைய முகத்திற்படிந்திருந்த கறையையும் கழுத்துப் புறமாக வடிந்தோடிய வியர்வையையும் ஏனையவர்களுக்கும் காட்டிக் கொடுத்தபடி காற்றில் இங்குமிங்கும் ஆடியது. அது தன்னுடைய அந்தரந்தெரியாமல் மற்றவர்களைப் பற்றிச் சிலாகிக்கும் சில பிறவிகளின் நினைப்பை அவனுக்குக் கொடுத்தது.
கருணாகரன் ஏதோ முடிவுக்கு வந்தவனாகப் படிப்பகத்துள் நுழைந்து வெறுமனே கிடந்த வாங்கில் அமர்ந்தான். யாரையோ கெடுக்க, கொலை செய்யத் திட்டமிட்டிருந்தவனின் பாவங்கள் கருணாகரனின் முகத்திலும் நிழலாடின. பற்களை அழுத்தியவாறே சுவர்க்கடிகாரச் சங்கிலி முள்ளைப் போன்று கண்களை அங்குமிங்கும் அடிக்கடி அலயவிட்டான்.
பத்திரிகையைக் கையில் வைத்திருந்த ஒருவர், "காதலியை இழந்து நான் மட்டும் வாழ்வதா? பிரிவு தாங்காமல் இளைஞன் பொலிடோல் அருந்தி மரணம்” என்று வாசித்தார்.
“இல்லையண்ணை தெரியாமல் கேக்கிறன். இவங்களுக்கென்னவாம்? ஆ? ஆம்பிளைப் பிள்ளையஸ் எங்கையன் நாடுபெரிய தேசங் காணப் போய்ப் பிழைக்கிறதுதானே! ம்! காதலியாம் - அவள் செத்திட்டாள் எண்டால் இவனும் சாகவேணுமே?.
99

Page 46
படித்ததை நிறுத்திவிட்டு விமர்சனஞ் செய்தார் அவர்.
‘உதுக்கை உந்தத் தீவுச் சனங்கள் மெத்தமோசம். சொல்ல வேண்டாம். மனிசிக்கு அடிச்சுப்போட்டு தாங்கள் பொலிடோல் குடிப்பாங்கள். அவங்களுக்கெண்டு பொலிடோலும் வந்து கிடக்கு.99.
* எண்டாலும் தன்னைத்தானே கொலை செய்கிறது பாவம் மட்டுமில்லை. அப்பட்டமான சுயநலமுங் கூட, ஏனெண்டால் சாகிறதாலை தன்ரை பிரச்சினைகளை கஷ்டநஷ்டங்களைச் சமாளிக்கலாம் எண்டு நினைக்கிறாங்கள். அது முட்டாள்தனம் இருக்கிறதுகளுக்குக் கவலையையும் கஷ்டத்தையும் உண்டாக்க தானஞ்செய்யிறாங்கள் இப்பிடித் தற்கொலை செய்யிற ராஸ்கல்கள்.9ʻy
கருணாகரனுக்கு என்னவோ போலிருந்தது. அப்படியே எழுந்து வெளியே போனான். “என்ன தம்பி பேசாமல் போறியள்" என்று அலுவர் கேட்டதும் அவனுடைய காதுகளுக்குக் கேட்டதாகத் தெரியவில்லை.
இவங்களுக்கென்ன கம்மா இருந்தண்டு அலட்டுறாங்கள். தலையிடியுங் காய்ச்சலும் தனக்குத் தனக்கு?
‘ஆருக்குத்தான் வாழ ஆசையில்லை. எனக்கு மட்டுமென்ன? படித்த போதெல்லாம் எத்தனை கனவுகள்? எத்தனை கற்பனைகள்!! பல்கலைக்கழகத்தாலை வெளிக்கிட்டிதும் இந்தப் பத்திரிகைத் தொழிலையா செய்வன் எண்டிருந்தன்? கார் என்ன? பங்களா என்ன? சேச்சே! அத்தனையுங் கனவு!’
‘நான் முட்டாள் பந்தங் கிந்தம் எண்டு படிச்சிருந்தாலாவது ஒரு மாதிரி உயர்ந்திருப்பன், இப்ப அதுகுமில்லை காதலிச்சதுக்குத் தண்டனையாக விமலா எனக்கு மனைவி. அவளோடை வாழ்ந்ததுக்குத் தண்டனை வருத்தக்காறக் குழந்தை?
‘நான் இல்லாட்டி இவை வாழமாட்டினமா? அம்மாவுக்கு நான் மட்டுமா பிள்ளை. இன்னும் ஐஞ்சு பேர் நல்லாத்தானே இருக்கினம். அவையோடை போய் இருக்கட்டுமன். விமலா - ? ம் என்ன நினைவிலை பிள்ளைப் பெறுகிறவையாக்கும் மாமா மாமியவை பென்ஷனோடை சுகமா இருக்கினம். மகளையுங் கூட்டி வைச்சிருக்கலாம் தானே.
“மொத்திலை நான் ஒண்டிக்கட்டை. போதும் போதாததுக்கு ஆயிரம் தெரிஞ்ச மணிசர்கள். ஒவ்வொருத்தரும் குசலம் விசாரிக்கிறதோடை - ’
கருணாகரனுடைய கால்கள் சிலிப்பர்க் கட்டைகளைத் தாவித்தாவித் தாண்டிக் கொண்டிருந்தன. அந்த நடைக்கு ஒத்திசையாக நினைவுகளும் விட்டு விட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தன. மனஉளைச்சல் மிஞ்சிப் போனதால் தொடர்ந்து தீர்மானிக்க அவனால் முடியவில்லை.
 

"ஏன் வீண் யோசனை? யாழ்ப்பாணத்திலையிருந்து இப்ப மெயில் கோச்சு வரும். ஸ்டேஷனை விட்டு இன்னுங் கொஞ்சந் தள்ளிப் போனால் விஷயம் சரி. என் கதையும் சரி -
தீர்க்கமான முடிவுடன் நடந்து கொண்டிருந்தான் கருணாகரன். அவனுடைய கண்கள் நேரே நோக்கிய வண்ணம் இருந்தன. மெயில் வருவது போலவும், தான் அசையாமற் படுத்திருப்பது போலவும் கற்பனை செய்து பார்த்தான். அடுத்தடுத்த நினைப்புக்களில் மனம் வைரமாகிக் கொண்டேயிருந்தது.
கருணாரன் ஒரு மைல் தூரத்தைக் கடந்து விட்டான். புகையிரதப் பாதையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்து காட்டுக் கற்றைகள் புதிய உலகை அடிக்கடி நினைவுபடுத்தின. பாதையெங்குங் கவிந்திருந்த காரிருட் போர்வை அகலாத கண்களை மேலும் விரிய வைத்தது. ஒன்றுமே புரியாத உணர்வில் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.
கண்டி வீதியிற் சென்று கொண்டிருந்த வாகனங்களின் வெளிச்சம் அவன் நிற்பதைக் காட்டிக் கொடுத்தது. உயர்ந்து வளராத பற்றைகளின் தோற்றத்துக்கமைய, தண்டவாளத்தில் இருந்தான் அவன்.
அருகே, சிறிது தூரத்தில் முனகல் கேட்டது. கருணாகரனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அது ஒரு பெண்ணின் விசும்பல் ஓசை என்ற உணர்ந்ததும் ஒலியை நாடி விரைந்தான்.
யாரது?”
கருணாகரன் கேட்ட அதிர்ச்சியில் துடித்துப் பதைத்து எழுந்த அப்பெண்ணுருவம், அவனை அந்த இருட்டில் அடையாளங் கண்ட வேகத்திற் பாதைவழியே ஒடத் தொடங்கியது.
“இந்தா! உன்னைத்தான் நில். நில்.” கருணாகரனுடைய அழைப்புச் சென்ற வேகத்தில் அவளுடைய ஒட்டமும் மெயில் வண்டியைப் பார்த்து அதிகரித்தது.
கருணாகரன் தன் முழுப் பலத்தையும் பயன்படுத்தி ஓடத் தொடங்கினான். தண்டவாளப் பாதையை ஊடறுத்த தார் வீதிச் சந்தியைப் பெண்ணுருவங் கடப்பதற்கும், கருணாகரன் 'லபக் கென்று அவளைப் பிடிப்பபதற்குஞ் சரியாக இருந்தது.
முகத்தை மூடியிருந்த தாவணியை விலக்கினான்.
*og...u...03u!"
தெய்வமாக அவனுக்கு கொடுத்த படிப்பினையோ என்னவோ? ஒருநாளுங் கலங்காத அவனுடைய கண்கள் வெடித்த இதயத்து இரத்தத்தைப் பெருக்கத் தொடங்கின.
தைகள்
јанibići jastitoji ih

Page 47
“ஐயோ விதியே - இதுவம் ஒரு சோதனையோ?”
“என்னை மன்னிச்சிடுங்கள்! அழாதீர்கள் என்னாலே தாங்க முடியுதில்லை,”
“அழாமல் என்ன செய்ய? நீயே இப்பிடித் துணிஞ்ச பிறகு - ”
‘நானா துணிஞ்சேன்! நீங்கள் எண்டு சொல்லுங்களன். பொருளில்லாட்டி உலகத்திலை இருக்கக் கூடாது எண்டு ஆரு சொன்னான்? பிறக்கையிக்கை பணத்தைக் கட்டியாண்டா பிறக்கிறாங்கள்? பிள்ளைக்குக் குடிநீர் வாங்கித்தரச் சொன்னது எங்களுக்குப் பெருங் கஷடமாய்ப் போச்சு. கடன்படக் கூடாதெண்டீங்களே! அரசாங்கமே நாட்டுக்கு நாடு பிச்சை எடுக்கிற மாதிரிக் கடன் படுகுது. நீங்கள் பட்டால் என்னவாம்? அரசாங்கக் கடன் திருப்பிக் கொடுக்காமல் விடலாம். நீங்களும் திருப்பிக் கொடுக்க மாட்டிங்களா?”
'' 6....D....6) T2"
‘அன்பாக ஆசையாக இரண்டு பேருடைய இளமையின் ஆசைகளை, கனவுகளை உருவமாக்கி வந்த பிள்ளையை. ஐயோ அத்தான் எந்த மனசோடை செத்துப் போகட்டும் எண்டு சொன்னிங்கள். அதுதான் போகட்டும். காதலோடு காதலாக நாங்களாவது மிஞ்சியிருக்கிறம் எண்டு மனமாறலாம். றோட்டிலை வந்தப்போ உங்களுடைய எண்ணத்தைக் கடவுள் எனக்குக் கேட்க வைச்சார். எங்கை போறிங்கள் எண்டு எட்டிப் பாத்தன். அப்ப. அப்ப.’ என்று விமலா விக்கி விக்கி,விம்மி விம்மி அழுதாள்!
** என்ன விமலா?”
ஒரு பெண்ணுக்கு இந்த உலகத்திலை புருஷன்தான் கடவுள். அவனுடைய இன்பந்தான் அவளுக்கு இன்பம். அப்படியிருக்க நீங்கள் உங்களுடைய துன்பத்தைச் சுமந்து கொண்டு சாகத் துணிந்தபோது நான் மட்டும் இருக்க வேண்டுமா..? உங்களை உயிரோடு பலி கொடுக்கவா உங்களை அன்று முதல் நேசித்தேன்? ஒன்றாகப் படிக்கும் போதும் என் உயிரையே மானசீகமாகத் தந்தேன! இல்லை! இல்லை”
‘நீங்கள் போன பிறகு, உங்களுடைய அன்பு போன பிறகு நான் உயிரோடை இருக்கிறதிலை கொஞ்சமும் பொருளில்லை. அறுதலி என்று காதில் விழாமலும், விதவை எண்டு காதில் விழவும் என்னைக் கொல்லாமற் சொல்வார்களே? எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு நான் இருப்பேனா?”
‘பைத்தியக்காரி நான் சும்மா ஏதாவது கதையெழுதப் புளட் கிடைக்கும் எண்டு வந்தால்.நீ”
| அங்ஸ்கய்ன் கதைகள்'
 

கருணாகரன் சாமாளிக்க முயன்றான். மனச்சாட்சி உறுத்தியது. தம்மைத் தாமே மென்றபடி கண்கள் நீர் பெருக்கின.
அவன் அழுதான்!
“விமலா. விமலா. உன்னை உயிரோடு பிணமாக்கி இருந்தேனே. உன்னை உயிரோடு. என்னை மன்னிச்.”
விமலா அவனுடைய வாயை மூடினாள். “மன்னிக்க வேண்டியவர் நீங்கள். நானில்லை! உங்களை நீங்கள் மன்னிப்பீங்களா?. அது முடியுமா?”
“அதுக்காகத்தான் உங்களுக்கு முந்தியே நான் போய்விட நினைச்சன். தோட்டங்களுக்காலை வந்து. வந்து." அவள் மறுபடியும் வெதும்பத் தொடங்கினாள். கருணாகரனுடைய கைகள் நீண்டன. விமலா ஒடி முன் பெயர்ந்தாள்.
இரவும் பகலும் மறுபடியுஞ் சந்தித்தன.
'விமலா. என் உயி. வார்த்தைகளிற் சொல்ல முடியாமல் கைகளாற் சொல்லி அணைத்தான் அவளை.
அவனுடைய நினைவில் பஸ்ஸில் நடந்த நிகழ்ச்சி தான் முதலில் விழுந்தது.
“ஆமாம்! பயணந் தொடர்ந்தவர்கள் ஒரே நேரத்திலே தொடங்கினாலும், ஒரே நேரத்திலும் ஒன்றாகப் போய்ச் சேர்வதில்லை. வாழ்க்கையென்ற ‘பஸ்' தான் இடையிலே நிற்கும். காலமென்ற வீதி நெடுகலும் போய்க் கொண்டேயிருக்கும்."
கருணாகரன் வாய்விட்டுச் சொன்னான்.
“என்னங்க புளட் கிடைச்சுட்டுதா?” என்றபடி சிரித்தாள் விமலா.
“வாயைப்பாரன் என்று கொண்டே அவளை அணைத்த கை நெகிழாமல் சீண்டப் போனான் கருணாகரன்.
ஒளிவெள்ளத்தைத் தள்ளிக்கொண்ட வந்த மெயில் வண்டி ‘பூம் பூம்” என்ற ஓசையுடன் அவ்விருவரையுந் தாண்டிச் சென்றது. அது அவர்களையே எள்ளிய நாதமா? - அவையேன்ன ஒன்றா - இரண்டா?

Page 48
P
1-(
‘போனால் ஐம்பது. வந்தால் எழுபதினாயிரமே! நானைக்கு உருட்டுற ஆஸ்பத்திரி சுவீப் டிக்கட்! வாங்குங்கள்! கமோன். கமோன்..!
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் என்றும் இல்லாதவாறு இன்று கூட்டம் நிறைந்து வழிகின்றது. வெய்யில், மழை போன்றவற்றிலிருந்து பிரயாணிகளைக் காப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அந்தக் கூடாரத்துக்கு வெளியே அவன் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.
‘அப்பாடா! என்ன வெய்யில்? என்ன புழுக்கம்?” என்று கொட்டகைக்குள் ஓடி வந்து ஒருவர் நிற்கின்றார். அவரையும் அறியாமல் அவருடைய கண்கள் இருப்பதற்காக இடங்தேடுகின்றன. திக்குக்கு ஒன்றாகப் போடப்பட்டிருந்த வாங்குகளில் பஸ்வண்டியில் உண்டாகும் நெரிசலுடன் பார்க்கக் கூடிய நெரிசலுடன் ஆட்கள் அமர்ந்திருக்கின்றார்கள்.
வந்தவருடைய கண்கள் இசையோடு கலந்த விளம்பர ஒலி வந்து உறைகின்ற வழி நீளம் செல்கின்றன.
99
“போனால் ஐம்பது. வந்தால் எழுபது.
r eiriitioi iossoi " .
 

அவன் வெய்யிலையோ. புழுக்கத்தையோ கவனித்ததாகத் தெரியவில்லை. அல்ல - உணர்கிறான் என்று சொல்வதற்கும் இல்லை. அப்படி இருக்கிறது அவனுடைய தொழில் மீது கொண்ட வேகம்.
“அது சரி பாருங்கோ! இந்த ஆள் இருக்கே இவனுக்கு இதிலை என்ன உழைப்பு இருக்கு. ஆள் ஏதோ படிச்சவனாட்டம் இருக்கிறான். போயும் போயும் சுவீப் டிக்கட் விற்கவேணும்.?”
அருகில் அமர்ந்திருப்பவரைப் பார்த்துக் கேட்கின்றார் வந்தவர். பத்திரிகையைப் புரட்டிக்கொண்டிருந்த அவர் கேட்டவருக்குக் காது கொடுப்பதாகத் தெரியவில்லை. அசட்டையாக இருந்துவிடுகிறார். கேட்பவர் இடங்கிடைக்காமற் போனது ஒரு புறம் இருக்க தம்முடைய கேள்வியை இருப்பவர் கவனிக்கவில்லையே என்ற கவலையோடு மெளனியாகி விடுகிறார்.
அவன் ஓயாமற் கூவிக்கொண்டிருக்கிறான்.
“போனால். வந்தால்.”
“நீங்க சோதிடத்தை நம்புரீங்களா?”
இருந்தவர் கேட்கின்றார்.
‘என்ன சொன்னிங்க.”
பதில் கிடைக்காமற் போனதற்காகச் சிறிது கவன்ற அவர் சடுதியாகக் கேட்டுவிடுகின்றார்.
“இல்லை. நீங்க சோதிடத்தை நம்புறீங்களா என்றேன்.”
b...... நம்பாமல் என்ன? கடவுளுக்கு ஆராய்ச்சி செய்து விட்டு இப்ப, சோதிடத்துக்கும் வேறை வந்துட்டினமா? என்ன?”
“அப்பிடியொண்டுமில்லை.!" என்றபடி சிரிக்கின்றார் ஆசனத்தில் அமர்ந்திருப்பவர். வந்தவர் கொஞ்சம் நகைச்சுவையாகப் பேசிவிட்டதாக அவர் நினைப்பு.
“கொஞ்சம்..” என்று தமது கையை ஒரு பக்கமாக அசைத்து, அமர்ந்திருப்பவரை நகர்ந்திருக்கும்படி கேட்கின்றார் வந்தவர்.
அவர் நகைக்கின்றார்.
‘இந்த மனுஷனோடை போய் கதைச்சோமே! அட..!' - இருந்தவருடைய உள்ளத்தில் இப்படியும் ஒரு நினைப்பு ஊறுகிறது.

Page 49
குரல் கம்மிப்போகும் வண்ணம் அவன் கத்துகின்றான். இது வரையில் ஒரே ஒருவர் மட்டுந்தான் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கையுள்ளவர் என்பதை அவன் உணர்கிறான்.
“இஞ்சை பாருங்கோ, இந்த மனுஷன் இப்பிடிச் செய்தால் என்ன?”
அவனையே வைத்தவிழி வாங்காமற் பார்த்துக் கொண்டிருந்த அந்த வந்தவர் புது “ஐடியா பெற்றுவிட்டவர் போலக் கேட்கிறார்.
8 & எப்பிடி’
“தன்னிட்டை உள்ள எல்லா ரிக்கட்டுகளையும் தானே எடுத்துக் கொண்டு அதிலை அடிக்கிற காசோடை சோக்காக வாழுறதுக்கென்ன?”
‘அசல் மூளையைய்யா! அத்தனை டிக்கட்டுகளையும் வாங் அவனட்டைப் பணமிருந்தா இந்தத் தொழிலையா செய்வான். நீரும் ஒரு ஆள்தான்!..?”
அவன் குரல் சிறுத்து வருகிறது!
ஒவ்வொரு பஸ்நிற்பாட்டுமிடங்களுக்கும் அவனுடைய கால்கள் மாறி,மாறி நடந்து
வருகின்றன.
“கலீர்.” என்ற சதங்கைச் சிரிப்பு.
அந்த அரவம் இருந்து வருகின்ற இடத்தை நோக்கிக் கண்களைச் செலுத்துகின்றார் இருந்தவர்.
“சரோ! ஏனப்பா. சுவீப் ரிக்கட்டாமே. போனால் ஐம்பது சதந்தானே? வந்தால்”
இரு நாரீமணிகள் பஸ்நிலையமே மயங்கும்படி சிரிக்கின்றார்கள்.
ܕܙܕ
“எழுபதினாயிரம். அப்பாடா! ஏழு பிள்ளை சீதனம்
வயது வந்த பிள்ளைகுட்டிகளின் பொறுப்பில் தாங்கமுடியாத சுமையை தாங்கிநிற்பவளைப் போலக் கூறுகின்றாள் அவள்.
மறுபடியும் நகை அரவம்!
கைகளிலே அழகுப்பை, குடை சகிதங்காணப்பட்ட அவளுடைய அதரங்களின் இடையே அவள் பற்கள் முறுவலிக்கின்றன. அந்த அழகுறு முறுவலை
 

மிகைப்படுத்துவது போல இதழ்களின் சாயம் சூரியஒளியில் பட்டுப்போல மின்னுகிறது. குதிரைவாலையன்றிய பிறவற்றை உவமைகாட்ட முடியாத அவளுடைய கூந்தல் அங்கும், இங்கும் ஆடுகிறது.
‘சுவீப் டிக்கட் கமோன். யூ வோண்ற் வண்?”
அவன் கேட்கிறான். அரிசி சாப்பிட்ட காமாளைப் பிள்ளையின் தோற்றம் போல வெண்மை படிந்து காணப்படுகிறது அவன் கடைவாயில். அந்த அருவருப்பில் மயங்க முடியாது திணறுகின்ற இரு இளமங்கையர் முகத்தைத் திருப்பிக் கண்களை வேறு எங்கோ செலுத்துகின்றனர்.
ஏமாற்றம்!
அவனுக்கு இன்று பிழைப்பேயில்லை.
வாய் உளைச்சல் எடுக்கும் வரை கலந்து - கத்து எனக்கத்தித் தொண்டையும் வரண்டு விடுகிறது. இலாபம் இல்லாத வியாபாரத்துக்கு நட்டம் வைத்துவிடுவதற்காக அவன் அருகே பெரிய விளம்பர பலகையுடன் காணப்படுகின்ற தேநீர்க்கடைக்குட் புகுகின்றான்.
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அவனையே வேடிக்கையாகப் பார்த்து நிற்கின்றனர். சிலர் தமக்குள் “பகிடி விட்டுக் கொள்கின்றனர்.
யாழ்ப்பாணத்தின் முன்னேற்றத்திற்கு ஊனம் விளைக்காத சிரிப்பொலி எங்கும் பரந்து கேட்கிறது. கூடவே எச்சில் இலைக்காக ஏங்கித் திரியும் காகங்களின் கரைவும் சேர்ந்து கேட்கிறது.
“உ!” என வாயை ஒடுக்கிப் புழுக்கத்தின் கொடுமையைப் புலப்படுத்துகின்றான் அவன். கையில் இருந்த சுவீப் டிக்கட் தட்டை மேசை மீது வைத்து விட்டு, வியர்த்து வழிகின்ற தன் மேற்சட்டையை மெல்ல உதறிவிடுகின்றான்.
அவனைப் பொறுத்தமட்டில் உலகத்தில் எந்தவித இனிய உறவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ மற்றவர்கள் வாழ்கிறார்கள்; அவனும் வாழ்கின்றான்.
ஒரு வெறும் தேநீர் அடங்கிய கோப்பை அவன் முன் வந்து சரணடைகிறது. குடித்து விட்டு, தன் மத்தியானப் போசனத்தை முடித்த நினைப்போடு வெளியே வருகின்றான் அவன்.
கொதிக்கும் வெய்யில்
i. 89 |

Page 50
அவனுடைய கால்களில் அந்த உணர்வ இல்லை. கண்கள் தாம் மற்றவர்கள் படும் அவதியைப் பார்த்து, மனத்துக்குச் சொல்லிக்கொள்கிறது. அக்கம் பக்கம் வெப்பந்தான்!
மறுபடியுந் தொழில்!
*போனால்.”
எல்லோருடைய கண்களும் அவனையே திரும்பிப் பார்க்கின்றன.
வந்தவரும், இருந்தவரும் இன்னமும் புறப்படவில்லை.
“எனக்கொண்டு கொடப்பா!"
வந்தவர் தமது பெயரில் ஐம்பது சதக் குற்றியொன்றை அவனது கையில் திணித்து விட்டு, தாமே ஒரு சுவிப்டிக்கட்டைப் பரிசீலனை செய்து எடுத்துக் கொள்கிறார்.
அவனுக்கு களிப்பும், சலிப்பும்.
காரைநகர். என எழுதப்பட்டிருக்கும் அறிவித்தல் அருகே நின்றபடி உறுமுகிறது - கொழும்பு நகரை ஒரு கலக்குக் கலக்கி விட்டு வந்த “யாழ்ப்பாணத்து டபிள்டெக்கர்
அதிலே அமர்ந்திருந்த ஒருவருக்கு அவசரம். இறங்கி விட்டால் வெயில் சுடும்! அதேவேளையிற் சொல்லி வைத்தாற்போல இடமும் போய்விடும்.
வண்டியில் இடமற்ற நெருக்கம், வியர்வை, புழுக்கம்.
“இந்தப்பா சுவீப் டிக்கட் இஞ்சை வா!”
தன்னுடைய பெயர் மற்றைய சில பிரமுகர்களைப் போன்று பிரபலமடையவில்லையே என்ற ஏக்கம் முகத்தில் வழிகிறது. தான் கொடுக்கப் போகும் கணக்கிற்குக் கிடைக்கும் கமிஷன் தொகைகூடி, இன்றைய உழைப்புக்கும் பெருக்கம் ஏற்படப்போகும் மகிழ்ச்சி அதனை மறைக்கிறது.
“பார்த்தெடுக்கிறிங்களா? நான் ஒண்டைக் கிழிக்கட்டுமா?"
"நீயே கிழி பார்ப்பம்!”
பஸ் உறுமிவிட்டு ஆற்றாமையோடு புகையைக்கக்குகின்றது.
| அங்கையன் கதைகள்
 

அவருடைய முகத்தைப் பார்த்து 'எதை விரும்பக்கூடியவர்' என்ற தவிப்பில் கண்களைச் செலுத்துகின்றான் அவன்.
கை - ஒரு துண்டைக் கிழித்துவிடுகிறது!
பஸ் நகர்ந்துவிட்டது!
அவன் பிழைப்பு என்ற பெயரில் அதன் பின்னே ஓடுகிறான்.
அவன் மனிதன்.
பஸ் இயந்திரம்.
“சே! சோம்பேறிச் சனங்கள் மனிஷன் யாழ்ப்பாணத்துக்குப் பிழைக்க வாறானே! ஐ.ய்யோ.ஐய்யோ!"
அவனுடைய உதடுகள் முணுமுணுக்கின்றன; முகம் தொய்ந்து விடுகிறது. உணர்ச்சிகளை வார்த்தைகளின் மூலம் வாயை விரல்கள் மூடுகின்றன.
‘இதை எப்பிடியும் இனிவிற்கஏலாது! ஒருத்தரும் வாங்கமாட்டினம். சே! அந்தக் கண்ணறாவிபிடிச்ச மனிஷன் காசை எடுக்க எவ்வளவு நேரஞ்செண்டுது'அவன் நினைவுகள் தடுமாறுகின்றன.
சட்டைப் பைக்குள் கையைவிட்டுத் துளாவிபார்க்கின்றான். பதினைந்து டிக்கட்டுகள் விற்ற பணம் - அதிலே தேநீர்க் காசு போக - மீதி இருக்கின்றது.
‘எப்பிடியாவது கமிஷனில் கழிச்சுப்போடலாம்
கிழிந்த டிக்கட்டை மடித்துத் தன் சொத்தாக எண்ணியபடி சட்டைப்பைக்குள் பதனமாக வைக்கின்றான். அது அவனுக்கு ஒருவேளைச் சோறு போடும் பணமல்லவா?
மனம் உடைந்து விடுகிறது.
உள்ளத்திலே இருந்த தைரியம், வெய்யிலிலே வரண்டு விட்ட உணர்வு அவனை
வாட்டுகிறது. கூடாரத்தின் உள்ளே சென்று போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்தபடி, தகரத்துடன் சாய்கின்றான். அவனுடைய சொத்து - கிழித்த டிக்கட்!
நேரமும் ஒடக் காலமுங் கழிகிறது.
எல்லோரும் கலைந்து விடுகிறார்கள். வந்வர் போய்விடுகிறார். இருந்தவர் எப்பொழுதோ போயிருக்கவேண்டும்.

Page 51
வருவதும், போவதும் வியாபாரம்
அவனுக்குப் புதுப்புது முகங்கள். பஸ்ஸில் இருந்து போக்கிரித்தனம் செய்துவிட்ட ஆசாமியின் முகம் அவனுள் ஆழமாகப் பதிகிறது.
இத்தொழிலில் இறங்கி இண்டைக்குத் தான் ஒரே ஏமாற்றம். சுவீப் டிக்கட் விற்க முடியுமே தவிர, அதிலை ஒன டைணெண்டாலும் என்ரை பிறப்பிலை
வாங்கியிருக்கமாட்டேன்! இதென்ன சங்கடமோ?
பையினுள் இருந்த துண்டு பெரும் பாரமாவும் இருக்கின்றது. இடையிடையே அதைத் தொட்டும் பார்க்கின்றான்.
இருள்கின்றது!
தான் சுவீப் டிக்கட்டுகளைப் பெற்ற இடத்திற்குச் சென்று மீதானவற்றை எண்ணிக் கணக்குக் கொடுத்துவிட்டு, கிடைத்த பணத்தோடு திரும்புகின்றான்.
G6 Oj60)LD!
யாழ்ப்பாணம் அமைதியில் மூழ்கிக் கிடக்கிறது.
தெருவோரங்களில் தூங்கி வழியும் சில கட்டாக்காலி மாடுகள், வாகனங்கள் நிறுத்தப்படும் கோட்டில் கிடந்து இரை மீட்கின்றன. அவற்றின் மிடற்றொலி எங்கும் பரவலாகக் கேட்கிறது. சந்தையின் மறுகோடியில் சில நாய்களின் ஒன்றை மற்றொன்று கடிக்கும் ஆவேச மூச்சும் தெளிவாகக் கேட்கின்றன.
“நாளை விடிந்தால் - அதிருஷ்டப் பரீட்சை அவன் நினைக்கின்றான். அவனையும் அறியாமல் அந்த சுவீப் டிக்கட்டை அவனுடைய விரலகள் தொட்டுப் பார்த்து ஆயிரம் ரூபாவை ஸ்பரிசித்த மகிழ்வோடு கீழே சாய்கின்றன.
O O O
மறுபடியும் யாழ்ப்பாணம் தொடர்ந்து விழித்துக் கொண்டபொழுது ஓர் அதிசயம்.
அவனை வழமையில் காண்பவர்க்கு'அவன் காட்சியளிப்பதில்லை. “ஏன் என்று கேட்டால் “தெரியாது” என்கிறார்கள்.
“பத்தாயிரம் ரூபாவுக்கு சுவீப் விழுந்திருக்கிறது” என்கிறார்கள் சிலர். விபரம் தெரியாது.
 
 

ܟܰ
‘எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்
அந்த மூன்று நாய்களைப் பொறுத்த மட்டில் ‘இது பொய்தான். அவை ஒன்றையொன்று பார்த்து "வாள் வாள்' என்று குரைத்துக் கொண்டிருந்தன.
அவை - கறுவல், வெள்ளை, புள்ளி. கறுவல் கொஞ்சம் ‘சோம்பேறி” தான். குரைக்கவும் பலமில்லை, மற்றவைகளைப் போல விழுந்தடித்து, வாயிலே கிடைப்பவற்றை உண்ணவும் முடியாமை. வெள்ளை நாய் தான் அந்த இரண்டிற்கும் தலைவன். புள்ளி தந்திரசாலி. வெள்ளைக்கு வாலை ஆட்டும்; கறுவலைக் கண்டால் மெல்ல உறுமும். கடிக்கமாட்டாது. நல்ல நாய்.
அந்தச் சந்தியில் தெரு விளக்கில் அம்மூன்று நாய்களும் தங்கள் நைற்டியூட்டியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தன. வெள்ளைநாய் லீடர்'. யாரோ ஒரு மனிதன் இரண்டாம் சாமத்தில் படம் பார்த்துவிட்டுப் பிரதான வீதிவழியே ‘விர் ரென்று சைக்கிளிற் பறந்து வந்து கொண்டிருந்தான். அவன் பார்த்த படத்தின் பாட்டை உதடுகள் மெல்ல - ஆனால் சைக்கிளின் வேகத்திற்கும் மேலாகப் பாடிக் கொண்டிருந்தன.

Page 52
வெள்ளை நாய்க்குப் பொறுக்கவிலலை. தன்னுடைய 'ஆட்சியில் வேறு ஜீவன் குறுக்கிடுவது போன்ற உணர்வு. உடனே, வந்து கொண்டிருந்த சைக்கிளை முன்புறமாகப் பாய்ந்து மறித்தது. மனிதன் பக்கத்து வேலியோடு மோதிய படி நினறான். அவனுக்குப் பயம். கால்களைத் தூக்கிக் ஹான்டிலில் வைத்து வேலி மரக்கிளையைத் தாவிப் பிடித்தான்.
வெள்ளை நாய் என்னை வீரமற்றதா? துணிச்சல்தான் இல்லையா? புள்ளி ‘வொள்வொள்' என்று உரத்துக் குரைத்தது. கறுவல் பாவம் விளக்கொளியில் வீதியில் விழுந்த தனது உடலின் நிழலில் 'ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருந்தது. கறுப்பின் பச்சை வெளிச்சத்தில் கறுப்பாகவே விழுமா?
மனிதன் அலறினான். வெள்ளைநாய் அவனைக் கடித்துவிட்டது. இரத்தம் பீறிடத் தொடங்கியது. புள்ளி இடத்தைவிட்டு நழுவி விட்டது. கறுவல் இருந்த பொந்தில் மறைந்து நின்று கொண்டு நடப்பதைக் கவனித்தது. இருளில் இருந்து ஒளியைப் பார்க்கலாமா? ஒளியில் இருந்து இருளைப் பார்க்கலாமா? கறுவலுக்கு “ஏதோ தெரிந்திருக்கவேண்டும்.
மறுநாட் காலை மூன்று நாய்களுஞ் சந்தித்தன. அதே இடம். ஆனால் தெருவிளக்குக்குப் பதிலாக உலக விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
காலையிலே வேலைக்குச் செல்வோருடைய அரவம், மூன்று நாய்களுக்கு சங்கடம். வெள்ளை வழமை போல் ‘லிட்' பண்ணியது: சந்தியின் முனையில் இருக்கும் தேநீர்கடையின் பின்புறமாக நழுவின மூன்று நாய்களும் பக்கத்துக்கிணற்றிலிருந்து வந்து பாய்ந்த அழுக்கு நீர் மண்ணுடன் கலந்து, துர் நாற்றமடித்தது. வெள்ளைக்கு என்னவோ போல இருந்தது. ஊத்தை பிடித்து விடுமோ என்ற பயமாக இருக்கலாம்.
மனிதன் சாப்பிட்டு விட்டு எச்சில் இலையைக் கொண்டு வந்து பின் சாக்கடையில் வீசி எறிந்தான். மிச்ச உணவு சிதறிவிட்டது. வெள்ளைநாய் அவனைப் பார்த்து உறுமியது. புள்ளி வாலையாட்டியபடி இலை போய் விழுந்த இடத்தை நாடி ஓடியது. மிச்ச உணவிற் பெரும்பகுதி எச்சில் இலையுடன் ஒட்டியிருக்குமா?
கறுவல் அந்த இரண்டு நாய்களின் உண்ணும் அழகைப் பார்த்திருந்தது. அதற்குக் கடும்பசி, தனக்குச் சொண்டு இல்லையே என ஏங்கியது. விழுந்து சிதறி விட்டிருந்த உணவுத்துணுக்குகளை நாநூனியால் ஒட்டணித்தது. பசி அடங்கவில்லை; விரக்தியும் உக்கிரமும் பொங்கின.
வாசலைப் பின்பாகத்தால் மறைத்து மறித்தபடி வெள்ளை, புள்ளியையும் விரட்டிவிட்டு உணவு உண்பதை ரசித்த படி, நாநீர் சிந்த இளைக்கத் தொடங்கியது.
 

‘தீக்!’
கறுவல் நொண்டிப்பாய்ந்தது. வெள்ளையையும், புள்ளியையும் காணவில்லை. எச்சில் இலையும் கிடந்த இடத்தில் இல்லை.
அவை வீதிமுனையில் நின்று உண்டன. அது கறுவலுக்கு நன்றாகத் தெரிந்தது.
அழாத குறையாக, வழங்க மறுத்த பின் காலைத் தூக்கியபடி "நொண்டி நொண்டி நடைபோட்டது.
புள்ளியும் வெள்ளையும் மறைந்துவிட்டன.
கறுவலுக்கு அழுகையே வந்துவிட்டது! விளக்குக் கம்பத்துடன் தலையைச் சாய்த்த வண்ணம் வலித்துக் கொண்டிருந்த காலை ஒரு கல்லில் வைத்துச் சுகப்பட்டது.
‘சரக்
“ஹிஹி!.
கறுவலின் முதுகோடு உலர்ந்து ஒட்டியிருந்த வயிற்றில் பெரிய செங்கற்கட்டி வந்து விழுந்தது.
*நாய்ச் சனியன்களாலை பெரிய தொல்லை" கல்லால் எறிந்த மனிதன் தன் காலில் புதிதாகக் கட்டுப் போட்டிருந்த காயத்தில் வேட்டி உரசாமல் தூக்கியபடி,
மறுபடியும் கடைக்குட் சென்று விட்டான்.
‘அட கடவுளே என்னை ஏன் நாயாகப்படைத்தாய். வெள்ளையானையைப் போல வாய்க்காரனாகவாவது படைக்கக்கூடாதா?
கடவுளை இப்படித்தான் கறுவல் நினைத்துக் கேட்டிருக்கும்.
கறுவல் ‘சிந்தனை செய்தது!
அதைக் கெடுப்பது போல அடிபிடி வீதியிலே ஒருவனைப்புரட்டிப் புரட்டி இரண்டு பேர் அடித்தார்கள். உதைத்தார்கள்.
கறுவல் இடத்தைவிட்டு நழுவி, கிணற்றுக் கட்டின் அருகில் போய்ப்படுத்தது. பக்கத்திலே ஊர்ந்து வந்த நீரிலே ஒரு செம்மை. துணுக்குற்றுப் பார்த்தது. அதனுடைய காலில் இருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது, ஆஸ்பத்திரிக்குப் போகலாமா? அனுமதியில்லையே!

Page 53
கறுவலுக்கு நரம்புவலி ஏற்பட்டுவிட்டது. நூற்றுக்குக் குறையாத மாட்டிலையான்கள் தாம் இப்போது கூட்டாளிகள். வெள்ளையையும் புள்ளியையும் கறுவல் மறந்தே போய்விட்டது.
கறுவல் சிந்தனை செய்தது! கொஞ்ச நாட்கள் கழிந்தன: அதாவது கறுவலின் காலில் ஏற்பட்ட புண்ணில் இருந்து அழுகல் மணம் குடலைப் புரட்டத் தொடங்கிவிட்டது. அதனால் எல்லோரும் அதை அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.
விரட்டினார்கள்! - கறுவல் ஒட முயன்றது.
எறிந்தார்கள் - அப்பொழுது தப்ப முனைந்தது.
அத்தனையிலும் தோல்வி. காயங்களின் மேல் காயம். வேற்று மனிதர்கள் அதைச் சொல்லி அழைப்பது அதற்கு விளங்காமல் இருக்க நியாயமில்லை.
கறுவல் சிந்தனை செய்தது! அந்தச சந்தியை விட்டு எங்கும் போகவில்லை. ஆனால்.
எல்லோரும் அதனைப் போக்காட்ட முயன்று தோல்விகண்டார்கள்.
“என்னடா! இந்தச் சொத்தி நாய்க்கு இவ்வளவு திமிர் எண்டால் மணிசருக்கு எப்பிடியிருக்கும்?"
யாரோ கூறியபடி கல்லால் அடித்தார்கள்.
கறுவல் முதன் முறையாக உறுமத் தொடங்கியது. பின்புபடிமுறையாகத்தனது ‘வர்க்கத்தொழிலை நடத்த ஆரம்பித்தது. அதனைக் கண்டு மனிதர்கள் அஞ்சினர் சிறுவர்களின் நடமாட்டம் துண்டாக இல்லை. பெரியவர்களும் இரண்டாவது சாமப்படம் பார்க்கப் போவதும் இப்பொழுது அருமை.
கறுவல் உழைப்பால் உயர்ந்தது, அதற்கு முடிசூட்டிக் கெளரவிக்கத்தான் வெள்ளையும் புள்ளியும் இங்கில்லை, என்றாலும் மனிதர்கள் இருக்கவே இருக்கிறார்கள். எதற்கும் குலம் இனம் நாடு என்ற அடிப்படையில் மட்டும் அல்லது வேறு பல வழிகளிலும் மாலை சூட்டுவதற்காக.
கறுவலுக்கு பெரிய “கெளரவம் அதற்கு இப்பொழுது மனிதர்கள் மதிப்பு அளித்து அழைக்கும் பெயர் இதுதான். - கறுவல் - விசர் நாய்.
 

صا\* )ة ) له نا په سا2
ஊரிக் காட்டிலிருந்து விடுபட்ட உடுப்பிட்டி வீதி வழியே வல்வெட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த இராணுசவ ஜீப் சிவகாமியைக் கண்டதும் திடீர் என நின்றது.
கடையில் அரை இறாத்தல் சீனி தேயிலைப் பாக்கட்டும் வாங்கி சிவந்த அவளுடைய கைகளுள் திணித்திருந்த அவள், ஜிப்பில் இருந்த காப்டன் ஜோசேப்பை கண்டதும் துணுக்குற்றபடி அந்த சீனிச் சரையை இறுகப்பற்றினாள்.
கடைக்காரனுக்கு இளநகையால் விடை பெற்ற படி வீதியில் ஓரடி வைக்க முனைந்த அவள் வெளிச்சம் இன்றி அந்த ஆறு மணிப் பொழுதில் உறுமி வந்த ஜிப்பை உற்று நோக்கியதும் சிறிது கலங்கிப் போனாள்.
ரன்க்யன்கதைகள்:

Page 54
காப்டன் ஜோசப் ஜீப்பின் முன் ஆசனத்தில் அமர்திருந்த படி சிவகாமி மீது நெடுநாளாக தன்னிடம் வந்து புகுந்து அந்த ஆசைக் கண்களை வீசிய படி சொண்டுக்குள் இலேசாகச சிரித்தான். சிரித்த அக்கணப்பொழுதே வன்மம் பாய்ந்த அவன் முகம் சுருகிக் கொண்டிருந்த அந்நேரம் போல் மேலுமாய் கருகியது. நாசித் துவாரங்களை அகலப் பிய்த்தபடி வெளியேறிய மூசிசில் ஏதோ தொனி தோற்றியது. தனது இடப்புறமாக பயத்துடனும் உத்தரவுகளை உடனே நிறைவேற்றும் வேகத்துடனும் இருந்த சாரதியை பார்க்காமலே ஜிப்பைக் கடைப்பக்கமாக விடும்படி சைகை காட்டினான் ஜோசப்.
ஜீப் உறுமியபடி சிவகாமியின் அருகில் வந்ததும் நெற்றி முதல் தன் மெல்லிய பாதங்கள் வரை பனிக்கத் தொடங்கிய வியர்வையை முந்தானையால் தேய்த்தபடி பின்புறமாக நடந்து கடைப்படிகளில் நின்றாள்.
கடைக்காரனுக்கு இராணுவத்தினரின் செய்கை எந்தவித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. உள்ளே நின்ற சிறுமிக்கும் அவள் தாய்க்கும் வேண்டியவற்றைக் கொடுத்த வண்ணம் நின்றான் அவன். சிறுமியின் மிரண்ட விழிகள் கடைக்காரன் தாய், சிவகாமி, ஜோசப் ஜீப் சாரதி என்றெல்லாம்சுற்றி வந்தன. அவள் இன்னும் சில விநாடிகளில் கிலி பிடித்தே அழுவாள் போலத் தாய்க்கும் பயம் ஆட்டியது. கடைக்காரன் தனது பொருள்களின் விலையையும் நிலையையும் எண்ணியபடி அசைகின்ற பொம்மையானான்.
சங்கைக்காக மறுபடியும் " நான் வாறன் அண்ணை’ என்று கடைக்கானிடம் விடை சொல்லிப் புறப்பட ஆயத்தமானாள் சிவகாமி.
அந்தக் கடையிலிருந்து ஏழு வீடுகள் தாண்டினால் இராணுவ வாகனங்களின் உறுமல்களுக்கும், இராணுவத்தினரின் அநாகரிகச் செயல்களுக்கும் இலக்கான வீதியில் அமைந்த அவளுடைய வீடு வரும். வீட்டையே இலக்காக வைத்துபடி வெளியே சென்றிருந்த கணவனையும் ஒற்றை பல்ப்பின் ஒளியில் வீட்டில் மரணபயத்துடன் அம்மா, அப்பா ஆகியோாரின் வரவை எதிர்பார்த்துக் கிடக்கும் நான்கு பெண்குழந்தைகளையும் எண்ணிய படி அவள் விறுவிறுவென நடந்தாள்.
அவளுடைய கால்கள் சின்ன வயதில் ஓடிய பழக்கததில் இப்பொழுதும் ஒட எத்தனித்தன. மனமும் அதற்கு ஒத்தாசையாக இருந்த போதும் அவளையும் அறியாமல் அவளை ஏதோ ஒன்று தடுத்தது.
தன்பிடரியையும் அதனை மூடியிருந்த பெரிய கூந்தலையும் அள்ளியேறிவது விழுந்த ஒளிக்கிற்றுகளையும் வழமையான இயந்திர உறுமலையுந் தொடர்ந்து வந்த ஜிப்பின் ஓட்டத்தை உணர்ந்தபடிமேலும் நடையைக் கூட்டினாள்.
'உன் புருஷன் எங்கே? நீண்ட நாட்களாக யாழ்ப்பாணம் மண்ணின் சுமையை
 

அறிந்து அநுபவித்திருந்த ஜோசப்பின் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாதவளாகச் சிவகாமி சிறிது திணறினாள்.
மெளனம் சம்மத்தை மட்டுமன்றி சந்தேகத்தையும் கிளறி விடும் என்று அறிவால் தன்னைச் சமாளித்த படி 'அச்சுவேலிக்குப் போயிருக்கிறார்' என்றாள்.
'எதுக்கு?
‘தெரியாது’
‘தெரியாது! சரி சரி பாக்கிறேன்' என்றபடி காப்டன் ஜோசப் ஜீப்பை எடுக்கும் படி சைகை காட்டினான்.
ஜிப் எதிரேயுள்ள முடக்கால் திரும்பி எங்கோமறைந்ததும் சிவகாமியின் உதிர ஓட்டத்தைப் பெருக்கிக் கொண்டிருந்த ஒரு காட்சி மறைந்தாலும் மனத்தில் குழப்பமும் கொந்தளிப்பும் புதிதாக ஏற்பட்டன.
‘இவருக்கெண்டு இண்டைக்குத் தான் அவங்களும் வந்தாங்கள். போன மனுஷனை
இன்னமும் காணேன்.
நினைவலைகளின் கதகதப்பில் நெகிழ்ந்து கொண்டிருந்த அவள் மனம் காய்ச்சி வார்த்த இரும்பின் பலத்தை எட்டிப் பிடிக்கத் தொடங்கியது.
‘இன்னமும் காணேன், இன்னமும் காணேன் என்ற ஏக்கப் பெருமூச்சில் இயைந்து விடாத அவள் கணவனை அவன் சொல்லிச் சென்ற இடத்தில் சந்திக்க வேண்டும் என்றும் துடித்தாள்.
உயிர் அல்லது மானம் போக் கூடிய அந்த ஊரில் தப்பித்தவறிப் பிறந்து விட்ட சில ஜீவன்களுக்கு நிரந்தரமாகச் செய்யக் கூடிய சமூகத் தொழில் ஒன்றுமே இல்லை என்ற நிலை இன்று உருவாகி விட்டதால் குறுக்கு வழியில் வாழ்வு தேட ஆரம்பித்தது, அவளைப் பொறுத்த வரையில் பெருங்குறையாகவே இருந்தது.
இவங்களுக்கு ஒண்டில் கடல்தொழில் தெரியவேணும் அல்லது கமத்தொழிலாவது தெரிய வேணும். இரண்டும் கெட்டான் நிலையிலை ஊரை விட்டு எங்காவது போயாகிவிட்டு இவங்கள் எண்டால்.
சிவகாமி தான் கற்ற மகளிர் பாடசாலை அளித்த கல்வியின் வளர்ச்சியின் விளைவாகத் தன்னுள் ஏற்பட்ட சிந்தனைகளை கணவனுக்கு இப்படித்தான் எடுத்துரைப்பாள்.

Page 55
'சிவகாமி ஒன்றம் வேண்டா மெண்டு கடையிலாவது நிக்கச் சொன்னாய், நானும் நிண்டன். இப்ப என்னை விலத்திப் போட்டாங்கள். நான் என்ன செய்யிறது.
நேற்றிரவு குருநாகலில் இருந்து வந்த தனது கணவன் சொன்ன வார்த்தைகள் நெஞ்சிற் புடமிட்டன.
'சிவகாமி! உனக்கும் எனக்கும் உள்ள ஒரேயொரு வித்தியாசம் இதுதான். இநத உலகத்திலை பணத்ததைத் தான் எல்லேரும் மதிக்கிறாங்கள். நியோ கடவுள் மானம் எண்டேல்லே பிசத்துறாய். நான் சொல்லிப்போட்டன். சுதந்திரமாகத் தொழில் பார்க்கப் போறன்’
‘சுதந்திரமாகவா?
“பின்ன என்ன? பி.ஏ. படிச்சதுகள் கூட இதிலை இப்ப இறங்கியிட்டுதுகள். கணவனின் இழுப்பில் குழந்தைத் தனத்தைக் கண்டசிவகாமி மெல்லச் சிரித்தபடி, அதுகளும் வேலையில்லாமல்தான் இதைச் செய்யுதுகள் என்றாள்.
அதுதானே நீ என்ன சொன்னாலும் சரி! நான் வேம்படி வினாசியின்ர மக்களோடை சேரப்போறன்.
அவன் அப்படிச் சொன்னதும் சிவகாமியின் கண்கள் குளமாகத் தொடங்கின. நித்தமும் கலங்கிக் கலங்கி சிவந்திருக்கும் அவளுடைய கண்களும், நேரிதாக அவளோடு பிறந்து இப்பொழுது நீர் செறிந்து நிறைவதால் சீறப்பட்டுச் சிவந்த நாசிக்கும் மறுபடியும் நோவு.
*அழாதை சிவகாமி! நேத்தைக்கு வந்தன். இண்டைக்குப் போறன். இனி என்ன நடக்குமோ தெரியாது. இதுக்குள்ளை உன்னை, உன்னுடைய அழகை வடிவாய் பார்க்க வேணும் போலையும் கிடக்கு. அழாதை சிவகாமி கரகரத்து வந்த குரலை சரிப்படுததியபடி அவன் சொன்னான்.
அடுத்ததாவது ஆம்பிள்ளைப் பிள்ளையாய் பிறக்கடும் எண்டு இருந்து, இருந்து நாலு பெம்பிளைப் பிள்ளையளை பெத்துப் போட்டம். மூத்தது, மஞ்சுளா இக்கணம் பெரிய பிள்ளையாகும். நானோ கதியற்றவன். பணத்திமிர் பிடிச்ச ஊரோடை போட்டி போட்டு ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்க்க எங்களாலை முடியுமே!
“ஏதோ நாலு காசைச் சம்பாரிச்சுவைச்சிருந்தாத்தான் நாளைக்கு, பின்னடைஞ்ச காலத்திலை தலை நிமிர்ந்து இருக்கலாம்.
*உனக்குச் சொல்லுறன். நம்மடை ஊரிலை ஒற்றுமை மட்டும் இருக்குமெண்டால் இந்த இலங்கையே விலைக்கு வாங்கிற அளவுக்கு நிலைமை இருக்கும். சில
| அங்கையன்கதைகள்
 

போக்கிலியள் இருக்கிறாங்கள். தாங்கள் கடலைத் தாண்டுவாங்கள். மற்றவன் போறானாம் எண்டு அறிஞ்ச உடனை பொலிசுக்குச் சொல்லிப் போடுவாங்கள்.
‘நான் போறதைப் பற்றி எவன் ஆரட்டைச் சொன்னாலென்ன. நான் போறது போறது தான்.
சிவகாமி நிலத்தை வெறித்தபடி நின்றாள்.
நான்கு பிள்ளைகளுக்கும் தாயாகி நலுங்காத அவளுடைய மேனியின் தசைக் கோளங்கள் அணிந்திருந்த சட்டையையும் பிய்த்துப் பிதுங்க அவள் வெதும்பத் தொடங்கினாள்.
‘நீங்கள் நல்லாவாறது எண்டால் நாம எல்லாரும் தானே சந்தோஷமாக இருக்கிறது. நான் உங்களை மறிக்க இல்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் நடந்தால். ஐ.ய்.யோ..!நான்.நான்.
'பயித்தியக்காரி நீந்துறதுக்கு மீன் குஞ்சுகள் என்னட்டைப் பிச்சை கேக்க வேணும். காலமை அடைவுவைக்க எண்டு வாங்கின உன்னுடைய நகையளை வித்திருக்கிறன். மூவாயிரம் ரூபா காசு சேந்திருக்கு. இந்த மூவாயிரமும் முப்பதாயிரம் ரூபாவை நாளைக்குக் கொண்டு வரும். அந்தமுப்பதாயிரமும் மறுக்காப்போனா மூண்டுலட்சத்தைக் கொண்டு வரும்.
*சும்மா இல்லை சிவகாமி மூண்டு லட்சம் . அவன் குரல் சொல்லிச் சொல்லி சிறுத்தது.
‘அம்மா!' என்ற குழந்தைகளின் ஒருமித்த அழைப்பைக் கேட்டுச் சிவகாமி ஒவ்வொருவருடைய முகத்தையும் வேதனையோடு நோக்கினாள்.
தங்கப்பாளங்கள் போன்று அந்த மின்னொளியில் ஜொலித்த அபபெண்குழந்தைகளை அணைத்த படி - "இந்தநாலு லட்சங்களையும் விட்டுப் போட்டு அவர் மூண்டு லட்சம் தேடப்போயிட்டார். என்று முணுமுணுத்தாள் அவள்.
காட்டிக் கொடுக்கின்ற கயமையிலேயே இன்பத்தையும் காசையும் தேடுகின்ற ஊர் மக்களின் களிப்பை போல நேரம் ஓடியோடி களித்துக் கொண்டிருந்தது.
“நாளைக்குப் பள்ளிக்கூடம் எல்ல. போய்ப்படுங்கள் உம். மஞ்சுளா தங்கச்சியை ஒராட்டிப் படுக்கவை. நான் தேதண்ணி கொஞ்சம் வைக்கப்போறன்’ என்ற படி குசினிக்குள் புகுந்தாள் சிவகாமி.
*ஆனந்தன்' என்ற அழைப்பைக் கேட்டதும், 'ஆரது?’ என்றபடி வெளிப்படலைக்கு வந்தாள் சிவகாமி.

Page 56
  

Page 57
‘உன்புருஷன்.” தன்னை அவள் திமிறி விடுவிக்கப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கையில் கூறினான் காப்டன் ஜோசப்.
தன் நிலையையும் சற்று மறந்து 'என் புருஷனுக்கு என்ன? என்ன?” என்று
விசும்பியபடி கேட்டாள் அவள்.
“ஒண்ணுமில்லை. சாறியளோ ைபத்திரமா பிடிபட்டிருக்கான்.” ஜோசப் நிதானமாகக் கூறினான். அவள் மறுபடியும் திமிறவே, ‘நான் உன்னை விடப்போவதில்லை; உனக்கு உதவயாரும் வரமாட்டார்கள். உன் புருஷனை விடுதலை செய்து சாறிகளும் தருவேன். நீ எனக்கு உதவ வேண்டும்" என்றான்.
சிவகாமிக்குத் தன்னிலை ஒருவாறு தெளிந்தது. எவ்வளவு தவறான காரியத்தை தான் செய்துவிட்டதாகக் கலங்கினாள். அவளின் கலக்கம் தணியுமுன்பே ஜோசப் தன் நெடுநாள் ஆசையைப் பூர்த்தியாக்க முயன்று. முயன்று வென்று கொண்டிருந்தான்.
கலங்கிய அந்த மணல் திடலை நம்பிக்கையோடு விட்டு அவன் வெளியேறுகையில், 'நீ வீட்டுக்குப் போ..! உன் புருஷனை நானே கொண்டுவந்து விடுகிறேன்.” அன்போடும் ஒரு வித கணைப்புடன் கூறியது அவளுடைய காதில் பட்டும் படாமலும் விழுந்தது.
சிவகாமி தன்னைச் சரிசெய்து கொண்டு எழுந்து நடக்க எத்தனித்தாள். தன் அங்கங்களில் பட்டு ஒட்டியிருந்த மண்ணை ஒருவாறு தட்டிவிட்டாள் அவள். மண்ணை மட்டுமே அவளால் தட்டிவிட முடிந்தது.
ஜோசப் கூறியதில் நம்பிக்கையற்றவளாய் வீடு செல்லவேண்டும், சென்று கணவனைக் காணவேண்டும் என்று துடிதுடித்தாள்.அவள். கனவில் நடப்பது போல் அவள் கால்கள் முன்னும் பின்னும் பக்கமுமாக நடந்து கொண்டிருந்தன.
முள்ளொன்று காலின் மேற்புறத்தில் குத்தியது போன்ற உணர்வு, ‘முத்துமாரி அம்மாள்! நீயும் பெண்தானே ஈனஸ்வரத்தில் காலைத் தடவியபடி சொன்ன அவள் மேலும் நடக்க எழுந்தாள். கையில் இதுவரையிருந்த டோர்ச்லைட்டும் அவளை விட்டுப் பிரிந்த நிலையில், அவள் ஒருவாறு வீதிக்கு வந்துவிட்டாள்.
தள்ளாடித்தள்ளாடி நடந்துகொண்டிருந்த அவளை அவள்தான் என்று ஊகித்து உணர்ந்து கொண்ட ஒருகுரல் “சிவகாமி.” என்று உரிமையோடு அழைத்ததை உதட்டுச் சிரிப்பளவில் வரவேற்ற அவள் உள்ள வேதனையும் உடல் நோவும் மிக வீதியில் விழுந்தாள்.
'சிவகாமி. என்று அவலமாக அழைத்தபடி அருகில் ஓடிய விவேகானந்தன்
FIFFF
| orțiofilisi nofagi. .
a = E is i i .
 

அவளைத் தாங்கிய வண்ணம் வீடு நோக்கி நடந்தான்.
“சிவகாமி. சிவகாமி. நான் சொன்னேனே. இந்த மூவாயிரமும் முப்பதாயிரம் ரூபாவை நாளைக்குக் கொண்டுவருமெண்டு. நான் கொண்டாந்துவிட்டன் சிவகாமி. ஆமியள் எங்களைப் பிடிச்சிட்டாங்கள். பேந்து காப்டன் வந்து எங்களை விடுதலையாக்கினான். அவனே விடுவரைக்குமே துணையாக வந்தான் சிவகாமி. சிவகாமி.”
விவேகானந்தன் கூறியவை எவையுமே அவள் காதில் கேட்கவில்லை. அவனை மெல்ல, ஆனால் திடமாக அணைத்தபடி, அவனது தாங்கலில் நடந்து கொண்டிருந்தாள் அவள்.
வீட்டுக்குச் சென்று விளக்கைப் போட்டதும் விவேகானந்தனின் முகம் சுருங்கியது. நாளைக்கு ஆயிரமாயிரம் ரூபாவுனக்கு அதிபதியாகப் போகிறோம் என்ற களிப்பு நீங்க, கண்களில் சந்தேகம் புகுந்தது.
சிவகாமியின் மூடியிருந்த கண்களை நீவிப் பார்த்து அவன் திகைத்தான். முகம் முழுவதும் நீலம் பாய்ந்திருந்தது. உடல் விறைத்திருந்தது.
சிவந்த அவளுடைய மேனியில் ஏற்பட்டிருக்கக் கூடிய வடு என்ன என்று அவன் தேடினான். அவளுடைய கன்னக் கதுப்புக்களில் இரத்தம் கண்டியிருந்தது. மேற்சட்டை கிழிந்திருந்தது.
விவேகானந்தனுக்கு மன உளைச்சல் அதிகமாகியது. அவளது காற்புறச்சேலையை மெல்ல நகர்த்திக் கால்களை வருடினான். கையில் ஏதோ கசிவது போன்றிருந்ததும் காலைப்பார்த்த அவன். ‘சிவகாமி. ஐ.ய்.யோ இரத்தம். என்று வாய்விட்டே கதறினான்.
தந்தையின் அழுகுரல் கேட்டு எழுந்து வந்த மஞ்சுளாவை ஏக்கத்தோடு பார்த்த வண்ணம். மஞ்சு. மஞ்சு அம்மாவைப் பார்த்தியம்மா..! அவ.அவ.ஐய்யோ. தெய்வமே.
வார்த்தைகள் வாய்க்குள் சிக்கிய தவிப்பில் சிவகாமியின் கையை உயர்த்தி தன் முகத்தில் புதைத்தான் விவேகானந்தன்.
அவனிடமிருந்து விடுபட்ட சிவகாமியின் அந்தக் கை நிலத்தில் “தொப்” பென விழுந்தது.
அங்கையின் கதைகள்
C5

Page 58


Page 59
இப்போது நினைக்கிற அங் கையனுடன் பேசி
பிரமை உண்டாகிறது. எழுத்தை கவிதையை நேசித்த அற்புதம், மெ இயல்பால் தமிழுக்கு கன ட அற்புதம். வெ போது மங்கி அணைந் இலங்கைத் தமிழ் எ சங்கள் இப் படி 9 (CDL கொண்டிருக்கையிலேே போயின. ஒருவர் செ. 9t. 60) sugo Buenong
 

போதும் சற்று முன்னரே கொண்டிருந்தாற் போல இலக்கியத்தை வாசிப்பை நாடகங்களை இசையை
ழி பெயர்ப்பை விரும்பிய
புதுமை செய்யக் கனவு ச் சமாகப் படரத் துடித்த து போய்விட்ட அற்புதம். த்தில் இரண்டு வெளிச் பி பிரமிப்பை ஊட்டிக் ய சட்டென்று அணைந்து கதிர்காமநாதன். மற்றவர்